கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புனித பூமியிலே

Page 1

னோஹ்'ஒஸ்த்தின்

Page 2


Page 3

கவிதை :
"ஜின்னாஹ்' ஷரிபுத்தீன்
மூலக்கதை :
2_
'ഊണ്ഡങ്ങ്
ചെയ്തെ அன்னை வெளியீட்டகம்
மருதமுனை, பூரீலங்கா

Page 4
PUNITHA BHOOMIYLE
(Tamil Epic)
By Dr, A JANNAH SHERIFUDEEN (C) All rights reserved
First Published in October 1996
By
ANNAI WELIYEETTAKAM
**TAMLAKAM"
MARUTHAMUNA, Sri Lanka
| Pfs. 125/-
Printed by: MILLATH PRINTERS 16, Appu Maistry St,
Madras-600001. S. India.
 

இந் நூல்
முன்னவன் வகுத்த வாறென முகிழ்த்து முற்றிலும் பொருந்திடும் பாங்காய் என்னகத் துறைந்தே இருமன மொன்றி இல்லற மியற்றிடு மனையாய் தன்னல மற்ற தாயினுக் குவமை தானென வாழ்ந்துமற் றோர்க்கும் இன்னலி லுதவும் என்துணை "ஃபரிதா' இசைவினுக் கர்ப்பணிக் கின்றேன்

Page 5
"மஹற்ஜமீன்" "புனித பூமியிலே" மூலக்கதை ஆசான் செய்யது முஹம்மது "ஹஸன்"
மூலநற் காதை தந்த முதுபெருமறிஞர் தம்மை ஞாலமே யறியுஞ் செய்யும் நற்றமிழ்ப் பணிகளாலே சாலவே பொருந்து மிந்நூல் தன்னிலுமவரைக் கூறல் காலத்தால் மறக்க வொன்னா"ஹஸன்" எனும் நாமத்தோரே
தென்னக முஸ்லிம் மாந்தர் தாய்மொழி தமிழுக் கீந்த தன்னிகரில்லா ஞானத் திருவெலாம் மறைக்கப் பட்டே வன்மனங்கொண்டோர் வார்த்தை விளம்பிடா திருக்குங் காலை உண்மையை உலக மொப்ப உதவிய "ஹஸன்" பேர் வாழி
செல்லரித்திற்றுப் போன சிறந்தநற்றமிழ்நூல் தேடிச் சொல்லுக்குச் சொல்விடாது சேர்த்தெடுத்தேபதித்துச் செல்வங்கள் இவைநம்முன்னோர் செந்தமிழ் மொழிக்குத் தந்த பல்வகைப் பரிசா மென்னும் பேர் ஹஸன்" நீடு வாழி
செந்தமிழ் நாடாண்டோர்கள் சிறந்ததோர் நாவலென்றே "சிந்துநதிக்கரையிலெனுமவர் நெடுங்கா தைக்குத்
தந்தனர் பரிசிலன்னார் சாதனைக் கொன்றே போதும் இந்த நூற் கதையினோடே இனும்பல "ஹஸன்" செய்
ரே
நன்றிகொன் றார்களாவோம் நாம் "ஹஸன்" பணிம றந்தால் என்றுமந் நாமம் வாழும் இசுலாமுந் தமிழுமொன்றாய்த் தொன்றுதொட்டிருத்தல் போலுந்தொடருநாள் வரையுமுண்மை என்றணின் நன்றிதம்மை இந்நூலாற் சமர்ப்பித் தேனே
 

அல்ஹாஜ் டாக்டர் எம்எம் உவைஸ், MA, Ph.D. JP. அவர்கள் வழங்கிய
வாழததுரை
இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றை எடுத்துக் கொண்டால் அங்கே ஒன்றுக்கு மேற்பட்ட காப்பியங்கள் இயற்றிய புலவர்களைக் 'ಸ್ತ್ರ್ಯ?: பட்டனத்து சைகு அப்துல் காதிர் நயினார் லப்பை ஆலிம் புலவர் நான்கு காப்பியங்களை இயற்றி உள்ளார். குத்பு நாயகம், திருக்காரணப் புராணம், திருமணிமாலை, புதூகுஷ்ஷாம் என்பன புலவர் நாயகம் என்றும் சேகுனாப் புலவர் என்றும் வழங்கப் பெற்ற அந்தப் புலவரினால் இயற்றப்பட்டவை யாகும். அதே போன்று இராஜநாயகம், குத்பு நாயகம், தின் விளக்கம் என மூன்று காப்பியங்களை இயற்றியவர் மதுரை, மீசல் வண்ணக் களஞ்சியப் புலவர் அவர்கள். நாகூர்ப் புராணம், ஆரிபு நாயகம் என்னும் இரண்டு காப்பியங்களையும் முகாஷபா மாலை என்னும் ஒரு சிறு காப்பியத்தையும்
சிரியராகத் திகழ்ந்தவர் நாகூர் குலாம் காதிறு நாவலர் அவர்கள். ங்ஙனம் ஒன்றுக்கு மேற்பட்ட காப்பியங்களை இயற்றிப்
புகழீட்டியவர்கள் முஸ்லிம் புலவர்கள். இது ஒரு மாபெருஞ் சாதனை. இந்தச் சாதனையை மீறியவர்கள் வேறு சமூகங்களில் இருந்தனரா என்று கூறி விட முடியாது. இது தமிழ் பேசும் முஸ்லிம் பேரறிஞரின் பெரும் ஆற்றலைச் சுட்டுவதாகக் கொள்ளலாம்.
இந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது கவிஞர் ஜின்னா சரிபத்தின் அவர்கள் இத்தகை சிறப்பப் பெற்றவர் எனக் கூறலாம். முத்துநகை, பாலையில் வசந்தம் என்னும் கவிதை நூல்களைத் தந்தவர். தொடர்ந்து "மஹற்ஜபின் காவிய"த்தை இயற்றினார். இப்பொழுது "புனித பூமியிலே" என்னும் காவியத்தை யாத்துள்ளார். மஹற்ஜபின் காவியத்துக்கும் புனித பூமியிலே காவியத்துக்கும் முன்னோடியாக அமைந்தவை சையது முகம்மது (ஹஸன்) அவர்களால் இயற்றப்பெற்ற வரலாற்றுப் புதினங்களான மஹற்ஜபின், புனித பூமியிலே என்பனவாகும்.
தொன்று தொட்டுத் தொடரும் இலக்கிய மரபு பண்டைய கவிதை நூல்களுக்கு உரை வகுப்பதாகும். இந்த முறைமையை நேர்மாறாக மாற்றியவர் கவிஞர் ஜின்னாஹ் சரிபுத்தின் அவர்களேயாவார்.உரைநடைநூல்களை அடிப்படையாகவைத்து அவர் கவிதை ஆக்கி உள்ளார். காவியம் பாடி உள்ளார். அங்ஙனம் தொடர்ச்சியாக இரண்டு காவியங்கள் பாடிய பெருமையும் கவிஞர்

Page 6
Vi
ன்னாஹ் அவர்களையே சாரும். இந்த வகையில் இவர் ஸ்லாமியத் தமிழ் இலக்கிய பாரம்பரியத்துக்குப் புத்துயிர் ஊட்டி உள்ளார். புது மெருகளித்துள்ளார்.
மஹற்ஜபின் காவியத்துக்கும் புனித பூமியிலே காவியத்துக்கும் பொருளாக அமைந்தது சுல்தான் சலாகுதின் அவர்களின் வீர தீரச் செயல்களேயாகும். பிற்கால இஸ்லாமிய வரலாற்றிலே சுல்தான் சலாகுதின் அவர்களுக்கு சிறப்பு மிக்க ஓர் இடமுண்டு. பகைமை பூண்ட ஒர் அரசன் நோய் வாய்ப்பட்டிருக்கும் பொழுது பகைமையைப் பாராட்டாது மாறு வேடம் பூண்டு அந்த அரசனுக்கு மருத்துவ சிகிச்சை அளித்த பெருமை சுல்தான் சலாகுதின் அவர்களை மாத்திரமே சாரும். அத்தகைய பெருமகனாரின் ஆட்சியில் நிகழ்ந்த சம்பவங்களே இந்தக் காவியங்களுக்குப்பொருளாக அமைந்துள்ளன.
அந்தச் சம்பவங்களைக் கவிதையாக்குவதற்குச் சொல்லாட்சி றப்பாக அமைதல் வேண்டும். பொருட் செறிவு கருத்தாழமுள்ளதாக இருத்தல் வேண்டும். ஒசை நயம் ஓங்க வேண்டும். உவமை, உருவக அணி சிறந்திருத்தல் வேண்டும்.
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டே கவிஞர் ஜின்னாஹ் சரிபுத்தின் அவர்கள் தமது காவியங்களைப் படைத்துள்ளார். தமிழ் இலக்கிய மரபை மீறாது இஸ்லாமிய வரம்புக்கு அப்பால் செல்லாது சுவைக்கத் தக்க முறையில் புனித பூமியிலே என்னும் தமது காவியத்தை இயற்றித் தந்துள்ளார்.
கவிதை இயற்றும் ஆற்றல் மிக்க பரம்பரையில் வந்தவர் "நூறுல் பன்னான்" "புலவர்மணி" ஆமு. சரிபுத்தின் ஹாஜியார் அவர்கள். அவருடைய தவப் புதல்வராக வந்தவர் கவிஞர் ஜின்னாஹ் அவர்கள். அதன் காரணமாக இயற்கையாகவே கவியியற்றும் ஆற்றல் பெற்றவர்.
ஒப்வே இல்லாத தமது மருத்துவப் பணியோடு கவிதை இயற்றும் பணியையும் சலியாது கடைப்பிடித்துக் காவியங்களைப் படைத்துள்ளமை போற்றுதற்குரியதொன்று மாத்திரமல்ல பின்பற்றற்குரியதுமான ஒரு தொண்டுமாகும்.
இன்னும் பல்லாண்டு காலம் வாழ்ந்து பயனுடைய இலக்கிய, சமய, சமுதாயப் பணி புரிந்து உடல் நலத்துடன் திகழ எல்லாம் வல்ல அல்லாஹ"த் த ஆலா நல்லருள் புரிவானாக. ஆமீன்.
- ம முகம்மது உவைஸ் 'மர்க்களறி ஹேனமுல்லை, பாணந்துறை, பூரீலங்கா.

Wii
பிரபல நாவலாசிரியர் ஜேஎம் g-Ital), M.A.
அவர்கள் வழங்கிய
வாழததுரை கவிஞர் ஜின்னாஹம் ஷரீபுத்தின் அவர்களின் மஹற்ஜமீன் காவியம், முத்துநகை, பாலையில் வசந்தம் கிய கவிதை இலக்கியங்களை ஒரு சேரப் படித்துச் சுவைக்கும் இனிய வாய்ப்பு அண்மையில்தான் எனக்குக் கிடைத்தது. எழுத்தாளன், பத்திரிகையாளன் என்ற முன்னைய பொறுப்புகளிலிருந்து ஏறத்தாழ விடுபட்டு முழுநேரச் செய்தி ஆசிரியனாகிவிட்டதால் புதிய படைப்புகளை உடனுக்குடன் படிக்க முடிவதில்லை. வெளிநாட்டு வாழ்க்கைச் சூழலும் இதற்குக் காரணம் எனினும் என்னை நினைவில் கொண்டு தமது "புனித பூமியிலே" காவியத்திற்கு அணிந்துரை, கருத்துரைஅல்லதுவாழ்த்துரை எழுதி அ E கவிஞர் ஜின்னாஹற் கேட்டுக் கொண்டது
ழ்ச்சியளித்தது
எழுத்தாளர் ஹஸன்" அவர்களின் "புனித பூமியிலே" சரித்திரப் புதினத்திற்கு முன்னுரை வழங்கும் வாய்ப்பு பல ஆண்டுகளுக்கு முன் எனக்குக் கிடைத்தது. இஸ்லாமிய சரித்திரப் புதினத் துறையில் ஹஸன் அவர்களின் மஹற்ஜமீன், புனித பூமியிலே கியவை சிறப்பிடம் வகிப்பவை. முன்னுரையில் அவற்றின் " ...„ சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன். அந்தப் புதினங்களைக் காவியமாக்க கவிஞர் முன்வந்ததை எண்ணும் போது வியக்காமல் இருக்க முடியவில்லை. காரணம், இது காவிய காலமோ, கனமான படைப்பிலக்கிய காலமோ அல்ல. இது கணினி எனும் கம்ப்யூட்டர்-தகவல் தொழில் நுட்ப யுகம், கவிதை படிப்பவர்கள் அருகிவிட்ட இந்த நாளில் காவியத்தைப் படைப்பதற்குத் துணிவும் பெருமுயற்சியும் வேண்டும். அந்த முனைப்பாற்றலுடன் "மஹற்ஜபின் காவியம்" படைத்து விட்டு இரட்டைக் காவியத்தைத் தரும் வேட்கையில் "புனித பூமியிலே" காவியத்தை தமிழுக்கு வழங்குகிறார் கவிஞர்.
மஹற்ஜபின் காவிய அணிந்துரையில் டாக்டர் சிலம்பொலி செல்லப்பனார் அவர்கள் விடுத்துள்ள வேண்டுகோளை ஏற்று புனித பூமியிலே புதினத்தையும் காவியமாக்கி இரட்டைக் காப்பியங்களைத் தந்த பெருமையைப் பெறுகிறார் கவிஞர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இஸ்லாமியத் தமிழ் லக்கிய உலகில் காவியச் சுடர் ஏற்றி வைக்கிறார் நம் கவிஞர் என்பது என் கருத்து இஸ்லாமியத் தமிழ்க் காவியங்களை

Page 7
Viii
இருபத்தைந்து ஆண்டுகளுக்குமுன் சிங்கப்பூர் தமிழ்முரசு நாளிதழில் தொடராக அறிமுகம் செய்து பின்னர் நூலாக வெளியிட்டேன். அந்த அறிமுக ஆய்வில் சாரணபாஸ்கரன் அவர்களின் யூசுப்-ஜுலைகாவையும் சிராஜ் பாகவி அவர்களின் நெஞ்சில் நிறைந்த நபிமணியையும் நம்காலக் காவியங்களாகச் சேர்த்துக் கொண்டேன். அந்த அணியில் கவிஞர் ஜின்னாஹற் அவர்களின் இனிய இரட்டைக் காப்பியங்கள் இப்பொழுது இடம் பெறுவது மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் தருகிறது. புதுக்கவிதை மோகம் பொங்கிப் பெருகிவரும் இந்த நேரத்தில் காவியம் படைக்கும் தனிப்பெரும் மரபுக் கவிஞராக மார்தட்டிக் கொண்டு புறப்பட்டுள்ள எழுச்சிக் கலைஞர் ஜின்னாஹற்வை மனம் திறந்து பாராட்டுகிறேன். இவரைப் போன்ற இலட்சியக் கவிஞர்கள் விரல்விட்டு எண்ணும் நிலையில் கூட இன்று தமிழ் இலக்கிய உலகில் இல்லை என்பது என் கருத்து.
புனித பூமியிலே புதினத்தைப் படித்த அதே வேகத்தில் கவிஞர் அனுப்பி வைத்திருந்த காவிய அச்சுப் பிரதியையும் படித்துச் சுவைத்தேன். திறனாய்வு உரையை வழங்க முடியும் என்றாலும் அந்தப் பணியை அறிஞர் பெருமக்கள் யாரும் செய்வார்கள் என்பதால் என் கருத்தை வாழ்த்துரை என்ற வரம்புக்குள் வைத்துக் கொள்ளவே விரும்புகிறேன்.
முழுநேர மருத்துவரான ஜின்னாஹற் ஷரிபுத்தின் அவர்கள் மூத்த # பாரம்பரிய்த்தில் வந்தவர். அவருடைய காவியங்களும் கவிதை நூல்களுமே அதற்குச் சான்று. "மருத்துவக் கவிமணி" என்ற விருதைப் பெறும் திறனும் தகுதியும் அவருக்கு உண்டு. அவர் தம் இலக்கிய, மருத்துவ, சமுதாய நற்ப நெடுங்காலம் தொடர இறையருள் துணை நிற்க வேண்டும் என இறைஞ்சி, இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்களை வழங்குகிறேன்.
அன்புடன் சிங்கப்பூர் ஜேஎம் சாலி, எம்ஏ, (சிங்கப்பூர் தமிழ்முரசு, ஆனந்த விகடன் ஆகியவற்றின் முன்னாள் துணை
ஆசிரியர், பன்னூல் ஆசிரியர், சிங்கப்பூர் ஒலிபரப்புக் கழகத்தின் செய்தி ஆசிரியர்)

Xi
கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் இலக்கியச் செம்மல்" செ குணரத்தினம்
அவர்கள் வழங்கிய வாழ்த்துப் பா
ஜின்னாஹற் ஷரிபுத்தின் சிந்தை கவர்ந்தவொரு மன்னாதி மன்னன் கவிக்கலையில் - என்றே சிவநாயகச்செம்மல் செப்பினார் நானும் உவந்தேற்பேன் உண்மை அது.
மரபுக் கவிச்செம்மை வண்மைமிகு பாவின் உரந்தந்தார் தாதை அதனால்-அறவோர் சிரம்வைத்தேசிராட்டும் சீர்கவிதை செய்யும் வரம்பெற்றார். வேறா ருளர்
எழும்பரிதிகாலை எழுவானிலன்ன செழுங்கவிதை சொல்லவல்ல செல்வன்-கொழும்புத் தமிழ்ச்சங்கம் ஏற்ற 'கவித்திலகம் "வாழ்க அமிழ்தாம் தமிழ்செய்தே ஈண்டு.
- தெ. குணரத்தினம்

Page 8
மூலக்கதை ஆசிரியர் செய்யது முஹம்மது "ஹஸன்"
அவர்கள் வழங்கிய
வாழ்த்துப் பா
"புனிதபூ மியிலே" என்றன்
புதினத்தைக் காவ்யமாக இனியநற்றமிழால் பாடி
யளித்திடும் எண்ணங்கொண்டு கனியமுதென்ன யாரும்
கருத்தினில் ஏற்கும் வண்ணம் தனிப்பெரும் படைப்பாய் ஈங்கு
தந்திட்ட கவிஞன் வாழி
கண்டுதான் வேண்டுமென்றே
கடைதொறும் கேட்டும்கிட்டா தென்றனர் ஏனென்றேனோர்
இன்றமிழ்க் கவிதை நூலைக் கண்டினம் கண்டு நாணிக்
கரைந்ததாய்ச்சொன்னாரென்ன கண்டிவாழ் புலவன் அன்று
*கதைத்ததிந்நூற்கும் ஏற்கும்!
இனியஇக் காவ்ய வாக்கம்
இளமையும் எழிலும்பூண்டு வனப்புற்றுப் புதினம் தன்னை
வளைந்திடச் செய்தலாலே இனிஅது எடுபடாது!
எனினுமிப் படைப்புக் கஃதே தனியொரு முன்னூலாகும்
தகுதியொன்றதற்குப்போதும்!
* கிழக்கரை அப்துல் மஜிதுப் புலவரின் "ஆசாரக் கோவை"நூலினைப் புகழ்ந்து
கண்டி "அருள்வாக்கி அப்துல் காதிறுப் புலவர் பாடியது

நூன் முகம் சுல்தான் ஸ்லாஹ"த்தீன் பதிகம்
(எஸ். டி சிவநாயகர் பத்து)
எல்லாம் வல்ல இறையோனின்
இணையில் இறுதிமார்க்கத்தை பொல்லார் அழிக்கப் புகுகால்தம்
புயபலம்கொண்டேஎதிர்த்தழித்த வல்லார் சுல்தான் ஸலாஹ சத்தின்
வரலாற்றைநான் ஒதிடற்றன் சொல்லால் செயலால் உதவியகோன்
சிவநா யகர்சீர் பாடுதுமே
பகைவன் நோயுற்றானென்றே
போர்களத்தறிந்து பரிவோடே வகையாய்ப்பிணிக்கென்றவுடதங்கள்
வழங்கிய சுல்தான் ஸலாஹாத்தின் மிகையில் லெளிமை வாழ்வுதனை
மனுக்குல மறியப் பாவுரைக்க தகைசேர்த்துதவியதமிழறிஞர் சிவநா யகர்சீர்பாடுதுமே

Page 9
நீதிநேர்மைதழைத்தோங்க
நல்லர சோச்சி வாழ்நாளில் வேதங் கூறும் வழிமுறையில்
வாழ்ந்தேயுயர்ந்தஸலாஹாத்தின் திதறச் செய்ததியாகங்கள்
தேர்ந்துலகறியக் கவிசெய்யச் சாதகமான எண்தையன்
சிவநா யகர்சீர் பாடுதுமே
எத்தனைசெல்வம் இருந்திடினும்
ஏழ்மை வாழ்வே உயர்வென்று நித்தியன் அன்புக் காயேங்கி
நெறிபிறழாதே அரசோச்சி சத்தியங்காத்தபேரரசர்
சலாஹ"த் தினைப் பாடுதற்கு வித்திட்டேவழிநடாத்துசிவ
நாயகர் சீரினைப் பாடுதுமே
பகைவரெனினும் ஆபத்துட்
படுவரெனினவர் துயரறிந்தே தகைசெய்யுயர்பண்புடைசுல்தான்
தனைக்கவிநாயகனாய்க்கொண்ட மிகையிலா துண்மைச்சரிதத்தை
முறையாப்ஒதிடுந்திறன்கொள்ள வகைசெய்தேவழிநடாத்துசிவ
நாயகர் சீரினைப் பாடுதுமே

நிராயுதபாணிகளைப்போரில்
நெறிபிறழ்ந்தெதிரிகள் சிரச்சேதப் பெரும்பழிகொள்ளக் கண்கண்டும்
பொறுமைக்கிலக்கணமாயிருந்தே மருவிய இடர்களைந்துயிர்பறித்த
மாற்றாருயிரையுங்காத்தவுயர் திருவைப் பாடத் தூண்டியகோன்
சிவநா யகர்சீர் பாடுதுமே
யாரெதற்குவப்பரெனவோர்ந்தே
ஏற்றநற்பதவிகள்தமைத்தந்தே பாருவந்தேற்றும் பாங்கினிலிப்
பாராண்டுயர்ந்தபெருமகன்போல் யாரெவரெத்திறனுடையாரென்
றாய்ந்தறிந்தவரவர்க்குவந்ததுபோல் சீரிய வழிசெலத் துணைசெய்யுந்
சிவநா யகர்சீர் பாடுதுமே
தமிழறியாது தமிழ்செய்த
தவறுந்திருந்தித்தமிழ்கற்கத் தமதுயர்தமிழேடதனிலெனைத்
தமிழ்க்கவிசெய்யத்தயைகூர்ந்து தமிழெனுமமுதிற்றான்றோய்ந்தே
தகைமைகொண்டதுபோலெனைவளர்த்த தமிழேயுயிரென வாழுதிரு
சிவநா யகர்சீர் பாடுதுமே

Page 10
எனைப்போல் நீயும் வாழியென
இதயங்கனிந்துவாய்மலர்ந்தே எனையிடர்குழும்போதெல்லாம்
இறையருளாக முன்நின்று மனையாள் பிள்ளைகளென்சுற்றம்
மதித்தேற்றிடத்தன்பேரன்பு தனையெம்பாலளித்திடுமையன் சிவநா பகர்சீர் பாடுதுமே
எந்தைக்குவந்தபெருமகனார்
எழுத்துலகின்னொருதலைமகனார் எந்தைவடிவில் நான்காணும்
இணையில் அன்பின் திருவுருவம் சொந்தமகவைப்போலென்னைச்
சேர்த்தே நல்வழிபிறழாது சிந்தித் தேகப் பணித்துவரும்
சிவநா யகர்சீர் பாடுதுமே

பாயிரம்
பாவல்லான் இவன்
நான்பார்த்தகவிஞரிலே நல்லதொருகவிஞன்
நான்தேர்ந்த நண்பரிலே நல்லதொரு பண்பன் தேன்வார்த்தசொற்களினால்தெவிட்டாதகருத்தைத்
"தென்றலென வீசியுளஞ்சிலிர்த்திவிடுஞ் சித்தன் கூன்நிமிர்ந்த தண்மதியம் பொழிநிலாவைப் போலே
குளிர்பாயும் கற்பனையால் உலகாளும் புலவோன் மான்தோற்றகண்ணுடையாள் என்தங்கைபரிதா
மனம்நிறைந்தமன்னவன்:நற்குடும்பத்தின் தலைவன்
துன்பமுற்றோர்க்குதவுகின்றமருத்துவனாம்தொழிலில்
துலங்குதமிழ் கற்றறிந்த புலவர்மணிசரிபுத் தினென்னும் புகழ்பூத்த ஆசிரியன் மைந்தன்
தினிஸ்லாம் காப்பதற்கு எதிரிகளை வென்று எண்திசையும் கொடியுயர்த்திஆண்டபேர் அரசன் ஏற்றமிகுசலாகுத்தின் காலத்தேவாழ்ந்த மின்னழகி மஹற்ஜப்பீன் காதல்மிளிர் கதையை
மிகத்தெளிந்த ஓவியமாய்க்காவியத்தில் தந்தோன்
மூலத்தில் கதைதந்தமுதறிஞர் ஹஸனால்
"முதற்கதையிக் காவியமோ!" என்றுவியப் பெய்தி நாலைந்து பக்கத்தில் நாவாரப் போற்றி
நல்லதொருமுகவுரையும் நல்கினாரென்றால் காலத்தைவென்றவொருகாவியத்தைத்தந்த
கவி ஜின்னாஹ வின்பெருமை கழறிடற்கும் எளிதோ! நூலாகத் தொடர்ந்துவரும் மா"புனிதபூமி"
எனும்நூலும் புகழ்பெறுமே ஐயமிதிலுண்டோ!

Page 11
ஒருநாளில் எழுபத்துக்கவியெழுதவல்லான்
ஒருநூறு எழுதுவதும் இவனுக்கு இலகாம்! வருநாளில் ஜின்னாஹற்வின் பெயர்கவிதை வானில்
வரகவியென்றேயொளிரும் அட்டியதற் கில்லை. அருட்கவியாய்ப் பரிணமிக்கும் கவிகா மு ஷரீபும்
அன்பொழுகFங்கிவனை "மணிக்கவிஞ"னென்றார் ஒருக்காலும் மறையாதே உள்ளத்தே உறையும்
ஒண்கவிதை இவன் கவிதை திண்ணமிது என்பேன்
சிலம்பினொலி செல்லப்பன் செந்தமிழில் மேதை
செப்பிய ஆலோசனையை சென்னிமிசை கொண்டு நலமுடனே "மஹற்ஜபின்" காவிய'த்தின் பின்னே
நற்கவிதையால் "புனித பூமிதனைப் படைத்தான் இலக்கியமெனும்விரிந்த பாக்கடலினுள்ளே
இரட்டைக்காவியமாக இவையிரண்டுமிலங்க பலவறிஞர் பாராட்டைப் பக்குவமாய்ப் பெறுவான் "பாவல்லான் இவன்"என்றே பாருலகம் ஏற்கும்.
எஸ்டி சிவநாயகம்
கொழும்பு முந்நாள் 'சிந்தாமணி"ஆசிரியர் 15.12.1993. இந்நாள்'சூ டாமணி"ஆசிரியர்

இறை துதி
எண்ணிலாக்கோள்கள் இடம்பெயராதவை ஏற்றவழி விண்ணினிலேக வகுத்தவை மாறியே வேறொருகோள் நண்ணாதியக்கும் நிகரிலா தாற்றல் நிறைந்தவுயர் பன்ைனவனேயுன் பதம்பணிந்தேன்நின் பயன்பெறவே.
சங்கமமாகுமீர் சாகரஞ்சேர்ந்திடு சங்கமத்தில் சங்கமமாகிடா தவ்வவைதத்தம் தனித்துவத்திற் றங்கவே செய்யத் திரையிட்டவனே தனிமுதலோப் பொங்குபேராழியில் நின்திறன் காட்டினாய் போற்றுவனே.
நிலம்படைத்தேயசையாததுவென்றும் நிலைத்திருக்க மலைபடைத் தேயருள் பாலித்தவனே மிகப்பெரியோய் அலைகடலுஞ்சேர்ந்துலகொருகோளாய் அமைத்ததனில் நலம்பல நல்கினாய் நானில மேற்றிடும் நாயகனே
தாதைதாயற்றொருதாதையைப்பின்னொருதாயுமற்றே ஆதமினென்பினால் ஆக்கினை "ஹவ்வா"வென் னன்னையையும் தாதையிலாது "மர்யம்'மினைத்தாயெனத்தன்திறத்தால் ஏதுவாய்ச் செய்தவனேயுன் பதம்பணிந்தேற்றுவனே.
ஆழ்கடல் மீன்வாயகப்பட யூனூஸ்" அருள்நபியை வாழ்வொடுங்காதுமீண்டேவரச்செய்திடவைத்தவனே ஊழ்வினை மாற்றும் உரிமையும் உன்வசம் உன்னை நிதம் தாழ்பணிந்தேற்றினேன் றன்நிகரில்லாத்தயாபரனே

Page 12
10.
கைத்தடிகொண்டுபேராழியைத் தட்டியீர் கூறுசெய்தே உய்த்தகன்றேகரை யேகிட "மூஸா'உதவிமொழி பொய்த்திடாதாழ்கடலாழ்த்திய "பிர்அஊன்"பொய்யுடலை வைத்தனையன்றுபோலின்றுமே யுன்பதம் வாழ்த்துவனே.
நீரறக்காய்ந்தபாலைவனத்தேயொரு நீர்ச்சுனையை பாரெலாம் அள்ளிப் பருகிடத் தோற்றியுன் பேரருளின் காரணங் காட்டினை "ஸம்ஸம்"மெனுமக் கிணறிதுகால் ஒரளவேனுங் குறைவிலா தூறுவ துன் சிறப்பே.
கொழுந்துவிட்டேயெரி தீயினில் வீசிக் கொடுமைசெய விழுந்ததில் வெந்திடா தூனுடல் காத்துநின் வல்லமையால் குளிர்ந்த பணியென வாக்கி இபுறாகீம் நன்நபியை அழுந்திட வைத்திடா ஏகனே நின்பதமேற்றுவனே.
கண்ணிமைப் போழ்துபல் லாயிர மாயிரங் காதவழி விண்ணினை நோக்கிவிரைந்திடத் தூதருன் வல்லமையை மண்ணினோர் ஒர்ந்திடச் செய்தனையுன் அயல் மாநபியும் நண்ணிடும் பேறளித் தாய்பணிந்தேன்நிதம் நற்பதமே.
படைத்தெனையத்தனை பேறுமே பெற்றிடப் பேரருளைக் கொடுத்தனை கொற்றவாகோனுனக்கென்கடன்செய்திலனே விடுத்திடாதேதொடர்ந்தன்னவைதந்தருள் வேண்டிநின்றேன் மடைத்தலை விண்டிடு நீரினுக் கொக்கவே முன்னவனே.

புனித பூமியிலே
காவியம்
காப்பு எல்லாமே வல்ல இறையே உணதருளால் சொல்ல விழைந்தேனிக் காவியத்தைச் - சொல்லில் கருத்துஞ் சுவையுங் கலந்தொன்றச் செய்வாய் இரந்துனை வேண்டினேன்நின் காப்பு
அவையடக்கம்
வானுயர் கான்மரக் கொம்ப ரிற்றேன்
வதைகவர்ந் திடுபவன் கண்டதுபோற் றானுமி யற்றிட வாசைகொளுந்
ததியிலா முடவனைப் போலவே நான் ஞானமி லாதவ னாகிடினும்
நலந்தரு மிக்கவிநூலியற்றப் போனதா மென்றிடிற் பொய்யிலையிப்
புவியினில் அறிஞரும் வாழ்கையிலே, 1
பேரரசர் சலாஹுத்தீன் சரிதங் கூறும்
புதினத்தை “ஹஸன்" பெரியார் “மஹற்ஜ பீனாய்ச் சீர்பெறுசெந் தமிழினிலே எழுத நானும்
சிற்றறிவு கொண்டதனைக் கவிகளாக்கப் பேரறிஞர் கொண்டுபுதுக் கோட்டை மண்ணில்
பழம்பெரிய சிற்றிலக்கியங்களோடே ஊரறியச் செய்தனரோ ராயி ரத்து
வொன்பது நூற் றோடுதொண்ணுாற்றிரண்டாமாண்டே2

Page 13
10 புனித பூமியிலே காவியம்
எனது சிறு காவியத்தைப் படித்தோ ரெல்லாம் இறையருளே எனவாகப் புகழ்ந்து கூற மனமுவந்த “சிலம்பொலிசெல் லப்பன்" ஐயா
மீண்டுமதன் தொடரான “ஹஸனார்" நாவல் "புனிதபூமி யிலே" தன்னைக் கவிக ளாக்கப்
பணித்தார்கள் பாக்கியமாய்க் கொண்டே னந்தப் புனிதரின்நல் லாசியொடு “ஹஸனார்" ஆசி
பெற்றிதனை யுருவாக்கத் தொடங்கினேனே.
முன்னரிரு கவிநூல்கள் செய்தே னஃதில்
முதற் "பாலை யில்வசந்தம்" அதைத்தொடர்ந்தே என் கவிதைச் சரம் “முத்து நகை” யாம் கையில்
இருப்பதுவும் “ஹஸன" வர்கள் உலகுக் கீந்த “புனித பூமியிலே' யென்னும் நாவலுக்குப் பேரரசர் ‘ஸலாஹcத்தீன் பெருமை கூற மனமோர்ந்து “மஹற்ஜபீனி னோடு பாடும்
மற்றுமொரு பாமாலை மனங்கொள் வீரே.
உலகெங்கும் இன்றுமுஸ்லிம் சமூகத் திற்கு
ஒர்ந்திட்டால் சோதனைகள் மிகுந்த காலம் பலவாறாய் மாற்றாரால் தொல்லை கொள்ளை பாதியிறை பக்தியில்லாக் கார ணந்தான் நிலையில்லா வாழ்வினையே முதலாய்க் கொண்டு
நித்தியனை மறந்தின்று வாழுகின்றோம் திலகமெனுஞ் சுல்தானின் வாழ்வை மக்கள் தெரிந்திட்டால் நன்மைபல பிறக்கு மாமே.
முன்னோரின் சரிதங்கள் அறிதல் யார்க்கும் முற்றுமுயர் வாகுமவர் இறைவனுக்காய்த் தன்னிகரே இலாதபெருந் தியாகத் தாலே
தரணியிலே இஸoலாத்தை நிலைக்கச் செய்தார் இந்நாளில் எமக்குற்ற சோத னைக்கும்
ஏற்றவழிகாட்டுமவை ஓர்ந்த றிந்தால் என்னுமுயர் எண்ணத்தால் “புனித பூமி -
யிலே' யென்னும் காவியத்தைப் படைத்திட் டேனே

புனித பூமியிலே காவியம்
பற்பலகற் றறிந்தவுய ரறிஞ னில்லை
புலவனெனும் பெயர்கொள்ளுந் தகவு மற்றோன் குற்றங்கள் செய்திருப்பேன் இலக்க ணத்தில்
குறைகிலவும் செய்துள்ளேன் கற்போர்க் காக உற்றவவை மறந்து நன்றென் றொன்றை மட்டும்
உளங்கொள்ள வேண்டுமென நாடு கின்றேன் நற்றமிழென் னெழிலாட்குச் சொற்பூ கோத்து
நான்சூடும் பாமாலை ஈதேற் பாளோ 7
மருதமுனை பெற்றெடுத்த புலவர் அல் - ஹாஜ்
முஹம்மது 'ஷரீபுத்தீன்"ஆயிஷா உம்மா" பெருமையுறும் இல்லறத்தின் பயனே என்னைப்
பாரினுக்கென் றிறைப டைத்தான் - படைத்தோன் தந்த அரிய தமிழ் அறிவாலே அவனுக் காக
ஆத்ம சுத்தியோடுழைத்த சுல்தான் வாழ்வைப் பிரியமொடு பிறர்கற்றுப் பயனுங் கொள்ளப்
படைத்திட்டேன் காவியமாய்ப் புகழிறைக்கே
8
வல்லவனை யுந்தட்டும் வழுக்கும் பாறை
விலகிடவுங் கூடுமடி கரிக்கும் என்றன் சொல்லினுறும் பிழைதோன்றல் ஆகும் நானோர் திறன்மிகுநற் புலவனிலாப் போழ்தினாலே "அல்-அஸுமத்" என்னினிய நண்பர் இந்நூல்
ஆய்ந்தறியத் தந்தேன்முன் கூற்றினாலே வல்லவவர் அதுவாறே செய்துந் தந்தார்
வரையில்லா நன்றியவர்க் குரிய தாமே. 9
அட்டைப்பட ஓவியத்தை “றொஷன் ஹாமித்"
அழகுறவே வரைந்தளித்தார் என்றன் பிள்ளை மட்டில்லா தருள் வழங்கும் இறையோன் என்றன்
மக்கள் நால் வருக்குமருள் சொரிய வேண்டும் அட்டதிக்கும் புகழ்பெற்றீர் உலகப் பேறும்
அடைந்திடநற் கருணையொடு திருவும் வேண்டும் இட்டமுடன் இந்நூலைப் பதித்த “மீரான்"
இளவலுக்கும் அதுவாறே சேர்க மாதோ, 10
11

Page 14
12 புனித பூமியிலே காவியம்
1. ஏற்றமிகு இளைஞர் படை
கிழக்குவான் றனைக்கி ழித்துக்
கொடுஞ்சரம் வீசிக் காய்ந்தே அழித்தனன் இருளை வெய்யோன்
அடையலர் தமைக்க ளத்தில் ஒழித்திட நெஞ்சு யர்த்தி
ஓங்குவாள் சுடர்க்கத் தம்மின் முழுத்திறன் கூட்டிப் பாயும்.
மேதகு வீரன் போன்றே.
பகலெலாங் காய்ந்தே தேகப் பலமிழந் தொளிய டக்கிப் பகலவன் மேற்கே சாயும்
பொழுதுதன் போர்வை யாலே செகத்தினைப் போர்த்தித் தானும் துயிலகொண்ட இருளரக்கன் முகஞ்சுளித் தகன்றான் சோம்பல்
முறிக்கவும் பொழுதி லாதே.
கவ்விய இருள்மாய்ந் தோடக் கானக வழியினூடே இவ்விரண் டாகச் சேர்ந்தோ ரிருநூறு குதிரை வீரர் செவ்வையாய் அணிகள் பூண்டு
சென்றனர் சமருக் கென்றே எவ்வரும் அஞ்சுங் கோலம்
ஏற்றவர் இருந்தா ரன்றோ.
வெற்றியை நாடிச் செல்லும் ரரின் கைகள் தாங்கும் பொற்புறு வேல்கள் கொண்ட
புதுமுனைத் தடங்களெல்லாம் கற்புடைப் பெண்டீர் கோபக் கனலுமிழ் விழிகளொப்ப பொற்கதிர் வீசிக் காட்டிப்
பொலிவுறக் கதிரோன் காய்ந்தான்.

ஏற்றமிகு இளைஞர் படை 13
விண்ணவன் மீது கொண்ட
விசுவாசத் தோடு நெஞ்சின் திண்மையும் நேர்மை தூய
யாகநல் லுணர்வுங் கொண்டே
மண்ணினில் எவர்க்கும் அஞ்சா
மாசறு வீரர் சென்றார் கண்ணியர் அனைத்துப் பேருங்
காளையர் முஸ்லிம் தீரர். 5
இருபது வயதே கொண்ட
இளவலே தலைமை தாங்கி வருபடை முன்னே சென்றான்
வடிவமோ வேங்கைக் கொப்பாம் சொருகியே இருந்த பாகைச்
சிறகொன்றே பிரித்துக் காட்டும் உருவினில் எளிமை தோன்றும்
உடையினான் சுல்தான் மைந்தன். 6
படையினர் தொடர முன்னே
பாராளு பதியின் மைந்தன் அடையலர் தம்மைத் தேடி
றாத சினத்தி னோடே @aసేనీ உடைவாள் தொங்க இருப்பெனும் நெஞ்சு யர்த்தி கடுகினான் காத தூரங்
கணப்பொழு திடையி லம்மா 7
தொடருமல் வீரர் கூடத்
தலைவனுக் கிணையாய்த் தாமும் கடுகதி கொண்டார் காற்றைக்
கிழித்து முன் பறந்தார் மண்ணிற் படுநிலை யற்றுப் பாதம்
போனதோ வெனுமா றன்னார் முடுக்குதற் கேற்பச் செல்ல
முயன்றன பரிக ளன்றே. 8

Page 15
14 புனித பூமியிலே காவியம்
பன்நெடு காத தூரம்
பறந்துமப் பரிகள் முற்றுந் தன்தன துடல்மேல் வீரர்
தனையொக்கக் களைப்பை வென்றே மின்னலின் வேகங் கூட்டி
மிதந்தன வளியி னோடே அன்னவை பிறப்பால் மேலாம்
அறபுமண் ணென்ப தாலே. 9
பறங்கியர் தம்மைத் தேடிப்
புறப்பட்ட வீரர் கூட்டம் சிறுமையை ஒடுக்க வென்னுஞ்
சங்கற்பங் கொண்ட தாலே பிறவுணர் வற்றே சென்றார்
போரொன்றே கருத்தாய்க் கொண்டார் நெறிபிற ழாதே வாழும்
நன்மக்கள் முஸ்லிம் வீரர். O
காடொடு மலையும் பாலைக்
கானலின் வெளியுந் தாண்டி நாடிடு திக்கு நோக்கி
நெடுவழி தொடர்ந்தோர் கண்டார் காடொடு வயலும் மற்றுங்
கண்கவர் சோலை மக்கள் வீடொடு பிறவும் எங்கும்
வீணர்கள் அழித்த கேட்டை 11
போகுந்தம் வழியில் பொல்லாப் பறங்கியர் கூட்டஞ் செய்த ஆகாத செயல்க ளாலே
அறிந்தனர் முஸ்லிம் வீரர் ஏகியோர் மடங்கு பல்லாம்
எம்மிலும் என்றே வெற்றி வாகைகொண் டிடத்தம் நெஞ்சில்
வரித்தனர் சபதம் மாதோ, 12

ஏற்றமிகு இளைஞர் படை
மலையிடை வழிக டந்தே
மாபெரும் படைநடந்த நிலைதனைக் கண்டா ரெங்கும் நிலமழிந் திருத்தல் கண்டார் பலநாழி தொடர்ந்தே யோரூர்ப்
பதிகண்டார் தொடர்ந்தா ராங்கே செலவிழைந் தறிந்தார் நன்நீர்ச்
சுனையுமொன் றிருப்ப தென்றே.
பறங்கியர் கடந்து சென்ற
பாதையில் இருக்கு மந்தச் சிறுபதி 'பீருல் ஜவ்ஷன்"
சென்றிடில் அயர்வு நீங்க நறும்புன லருந்திச் சோர்வு
நீங்கிடக் குதிரை கட்கும் அருந்திட நீருங் காட்டி
அகலலா மெனநினைந்தார்.
செல்லுமஷ் வழியில் நெஞ்சுச்
செருக்கினாற் பறங்கிக் கூட்டம் அல்லல்கள் செய்தி ருப்பர்
அங்குள மாந்த ருக்கப் பொல்லாரின் கைப்பி டிக்குட் பிடிபடா தெவரும் மிஞ்சி இல்லாது போகார் காணின்
இளைத்தவை யுரைப்பா ரென்றார்.
ஊரினுட் புகுந்த வீரர்
ஒருவரு மிலாது கண்டே பேரதிர் வடைந்தார் எங்கும்
பீறிட்டுக் காய்ந்திருந்த காரிய குருதி காணக்
கலங்கினார் நேற்றிங் கேயோர் போர் நடந் திருக்கு மென்றே
பெருந்துயர் கொண்டிட் டாரே
13
14.
15
16
15

Page 16

ஏற்றமிகு இளைஞர் படை
கல்லெனும் நெஞ்சு கூடக்
கனிந்திடும் நிலையா மாங்கே பொல்லாரின் செய்கை கண்டு
பொங்காத விழிகளுண்டோ? வல்லமை யற்ற மக்கள்
வாட்பலியானார் இன்னுஞ் சொல்லொணா அவமா னத்தாற்
றுயருற்றார் துணையற் றோரே.
தாங்கொணத் துயரத் தாலே
தலைவன்றன் நயனஞ் சிந்தத் தேங்கிய விழிநீர் தம்மைத்
துடைத்திட்டான் மற்றோர் கண்டார் ஆங்கிரு செந்த ழல்கள்
அழற்றுதல் சினத்தால் நெஞ்சம் நீங்குறாப் பழியைக் காட்டும்
நிலைக்கண்ணா டியாகும் வாறே.
நெஞ்சிலே விஞ்சுங் கோப
நிழலிலும் அவிவார் மாற்றார் அஞ்ஞான்றி லாங்கி ருப்பின்
அவன்வெறியடங்கா தோனாய் “நஞ்சுண்டார் போலா மன்னார் நாசமே இனிய வர்க்கே அஞ்சிடேன் தொடர்வே னென்றான்
அனலெனச் சொற்கள் சீற.
வாளின் கைப் பிடியைப் பற்றி வாக்குரைத் தானே யந்தத் தோள் வலுக் கொண்ட வீரர்
தலைவன்"இன் ஷாஅல் லாஹற்“வப் பாழ்படு நெஞ்சோர் தம்மைப்
பழிகொள்வேன் நானு" மென்றே தோழருஞ் சேர்ந்தார் ஒன்றித்
துணையாகச் சபதங் கொண்டார்.
21
22
23
24
17

Page 17
18 புனித பூமியிலே காவியம்
சிறைகொண்ட பெண்டீர் தம்மை
“ஷவ்ஃபுல் ஆமிர்“ரென்னுரில் பறங்கியர் கொண்டு சேர்த்த
படியறிந் திருந்த முஸ்லிம் இறைவழிச் சமர்வீ ரர்கள் ஏற்றதம் சபதம் தீர்க்க உறையுறைந் திருந்த வாளை
உருவினார் பரிமீ தூர்ந்தார்.
ஒருநாள்முன் சென்றவ் வூரார்
உயிர்பறித் துடைமை யெல்லாம் சிறிதுமே விடாது சேர்த்துச்
சிறுமைகள் புரிந்த பின்னே வெறிகொண்டே ஆர்ப்ப ரித்தார் வெற்றியாற் பறங்கி வீரர் குறைவிலை ஆயி ரம்பேர்
கொண்டதக் கொடியோர் கூட்டம்
கண்டனர் கயவர் தம்மைக்
காசறு மறவர் நெஞ்சிற் கொண்டவெஞ் சினத்தாற் றேகம்
கொலைவெறிக் கடிமை யா அண்டமே யதிரச் செய்தார்
"அல்லாஹ0 அக்பர்" என்றே தண்டனைக் குரியோர் மீதே
தாவினார் தருமங் காத்தார்.
எதிரிக்குச் சிறிது கூட
எதிர்த்திட இயலா வாறு விதிதனை முடித்தார் முஸ்லிம்
ரர்கள் செயம்பெற்றார்கள் அதிசயம் இறந்தோர் போக
அனைவருங் கைதியானார் விதித்ததோ இவற்றிற் கெல்லாம்
விரல் சுண்டும் போழ்தே யம்மா,
25
26
27
28

ஏற்றமிகு இளைஞர் படை 19
சற்றுமே நினையா வேளை
தமைச்சுற்றி வளைத்துக் கூறின் முற்றுமே யழிந்த பாங்காய்
மாற்றினோர் தமைநினைந்தே அற்பரப் பறங்கி யோரில்
அகப்பட்டோர் மனமொ டிந்தார் சொற்பமும் அறிவி லாது
செய்ததீர் மான மெண்ணி 29
கடற்கரை நகர்"ஹை ஃபா'வில்
கரைகொண்ட தமதினத்தைக் கடலோடி முஸ்லிம் வீரர்
கொன்றொழித் ததனை மீட்டே தொடருவ ரெமையெ னத்தான்
தோன்றிய தவர்க்கா மானால் நடந்தது வேற தாக
நிலைத்திட வதிர்ந்திட்டாரே. 30
நான்கிலோர் பகுதி கொண்டோர்
நான்குபங்கினரைக் கொன்றும் தான்வந்த வழியில் மீண்டு
தவித்தோடச் செய்து மீளும் பான்மைகொண் டிருப்ப ரென்றே
பறங்கியர் நினைந்தாரில்லை 'வீண்அவர் எண்ணம் என்றே
விரைவினில் உணர்ந்திட்டாரே. 3.
கண்கண்ட இடங்க ளெல்லாம்
கண்ணுற்ற கொடுமை நெஞ்சைப் புண்ணுண்ட தாக்கி யெங்கும்
புரைகொண்டு Ljjr@ါ၊ ဓါjr† திண்கொண்ட தோள்கள் தம்மைத்
திணவெடுத் துறுத்தச் செய்ய எண்கண்டும் அஞ்சா வீரர்
இமைப்பினுள் வாகை கொண்டார். 32

Page 18
2O புனித பூமியிலே காவியம்
துறைமுகக் கோட்டை "அக்கா"
சுற்றியே வளைக்கப் பட்டுப் பறங்கியர் கையுட் சிக்கப்
படைகொண்டு சுல்தா னந்தப் பறங்கியர் தமையுந் தம்மின்
படைகொண்டு சுற்றி நின்றார் பெறவுண வற்றே பஞ்சம்
பிடித்திடச் செய்திட்டாரே
பஞ்சத்துக் கஞ்சி முஸ்லிம்
பகுதியில் இருந்து செல்வம் கொஞ்சிடு "ஹைஃபா தன்னைக்
கடல்வழி சென்று பற்றி மிஞ்சிடா தெதுவங் கொள்ளை
முறைகெட்டோர் செய்தார் பின்னே எஞ்சிய குறையைத் தீர்க்க
ஈனர்கள் சிற்றுார் சென்றார்.
சிற்றூர்கள் தம்மைத் தாக்கிச்
சென்றவப் படையி னோரே உற்றனர் "பீருல் ஜவ்ஷன்"
ஊடாக "ஷவ்ஃபுல் ஆமிர்" முற்றுமப் படையை முஸ்லிம்
மறவர்கள் துவம்சம் செய்தார் பெற்றவவ் வெற்றி யின்பின்
புல்லர்தம் செயலறிந்தார்.
எங்கவர் சென்ற போழ்தும் இழிகுணப் பறங்கி வீரர் மங்கையர் தமைக்கெ டுத்தே
மற்றவர் தமைய பூழித்தார் பொங்குபே ராசை யந்தப்
பொருட்களைச் சூறை யிட்டார் தங்களின் இனத்தைக் கூடத் தருக்கர்கள் விட்டி லாரே.
33
34.
35
36

ஏற்றமிகு இளைஞர் படை 21
உள்நாட்டின் கிறிஸ்த்த வர்கள்
உடன்யூதர் தமையுஞ் சேர்த்தே கொள்ளையர் கொன்றார் செல்வங்
கொடுத்திடில் விடுவோ மென்றே ள்ளிய ஆசை யாலே
வீணர்கள் சிறையிட் டோரைக் கள்ளமில் முஸ்லிம் வீரர்
கருணைகொண் டேக @၍ါ၊ '_L_IT†. 37
சிறையுளோர் தம்மை மீட்கச்
சென்றவர் அறிந்தார் ஆங்கே பறங்கியர் பலர்ப யத்தால்
பிறவிடம் பெயர்ந்தா ரென்றே புறமுது கிட்டே யோடும்
போததி லொருவன் கூடச் சிறையினி லிருந்தோர் பெண்ணைச்
சிறைகொண்டு பறந்தா னென்றே. 38
யாரெவ்வூ ரென்றே யாரும் இயம்பில ரறியார் அந்த வீரனால் கவரப் பட்ட
வஞ்சியோர் முஸ்லிமாகும் ஊரவ ரோடு சேர்த்தே
ஒன்றெனச் சிறையுட் பட்ட பூர்வீக மறியாப் பெண்ணைப்
பறங்கியன் கவர்ந்தா னென்றார். 39
சொன்னவை அனைத்துங் கேட்டச்
சேனையின் றலைவன் பக்கம் நின்றவோ ரிளைஞ னோடு
“நீசெவி கொண்டிட் டாயோ?" என்றுமே வினவ "ஆமாம் -
இதோபுறப் பட்டே" னென்றான் மின்னலை விஞ்சு வேகம்
மேற்கொண்டான் பின்தொடர்ந்தான். 40

Page 19
22 புனித பூமியிலே காவியம்
2. பறங்கியர் வைத்த தீ
சலனமற்றுத் துயிலுகின்ற கடலைத் தட்டித்
துயிலெழுப்ப வேண்டுமென்றோ காற்றும் தன்னைப் பலமாக அசைத்த "தக்கா'த் துறையை நோக்கிப் படிப்படியாய் வேகத்தைக் கூட்டிற் றன்றோ அலையடங்கிக் கிடக்கவதன் மீது சற்றே
அசைந்துவரும் ஆரணங்கின் எழிலைக் காட்டி நிலைகொண்டு நின்றபல மரக்க லங்கள்
நீண்டுயர்ந்து பாய்மரங்கள் விரிக்கக் செய்யும். 41
பட்டுமஞ்சந் தனிலுறங்கிக் கண்வி பூழித்தே பக்கமிரு கையுயர்த்திச் சோம்பல் நீக்கும் கட்டழகுப் பெண்களைப்போல் காற்றைக் கண்டு
காத்திருந்த கப்பல்கள் பாய்விரிக்க திட்டமிட்டுக் கருமமொன்று செய்ய வெண்ணித் தங்கியவை யுள்ளிருந்தோர் துரித முற்றார் அட்டதிக்கும் அஞ்சுமந்தச் செயலி லுள்ள
ஆபத்தை அவரன்றி அறிவா ருண்டோ 42
நீண்டநெடு மலைத்தொடர்க ளோர்பு றத்தே
நிலைகொண்ட பெருங்காவற் கோட்டை தன்னைப் பூண்டிருந்த தவ்வியற்கைத் துறைமு கம்முன் பேரா “ஈ” கோட்டையெனும் வாற தாக வேண்டாதோர் மரக்கலங்கள் நுழையா வண்ணம்
விழிமூடா திருந்தனரே வீரர் ஆங்கே தீண்டமுடி யாதபடி நகருங் கூடத்
ண்மைமிக்க அரண்களினால் சிறப்புக் கொள்ளும் 43
ஜெரூஸலத்தின் அருகிருந்த "அக்கா" மிக்கச் சிறப்புற்ற பெருநகரம் துறைமுகத்தால் பெருமையுற்ற ததுவந்நாள் சுற்றி யுள்ள
பிறநகர்க ளனைத்தினிலும் விடமே லாகத் திருவெல்லாங் கொண்டிருந்த தாலே யாருந்
தம்வயமாய்க் கொண்டிடவே நினைந்தார் மற்றும் ஜெரூலத்தை மீட்பதற்கும் எளிதே "அக்கா'த்
துறைகொண்டால் என்றும்மது விருந்த தன்றே. 44.

பறங்கியர் வைத்த தீ 23
தொண்ணுறு வருடங்கள் முன்கி றிஸ்த்தோர்
தம்வயமாய்க் கொண்ட“ஜெரூஸலத்தை" சுல்தான் தன்னிகரே இல்லாத்தம் வீரர் செய்த
தியாகத்தின் பலனாக மீட்டெடுத்தார் அன்னார்க்கு வெற்றிகொண்ட பின்னும் ஏதோர்
இன்னலுமே செய்யவில்லை முடிந்த மட்டும் மன்னுயிரைக் காத்ததொடு மாற்றா ருக்கு
மனமுவந்து நன்மைகளே செய்தா ரன்றோ. 45
சண்டையிலே தோல்விகண்டு பிடியுண் டோர்கள்
சிறிதேனுங் குறைவின்றித் தான்த மக்குக் கொண்டபொரு ளத்தனையும் எதிர்ப்பில் லாது
கூடவெடுத் தேகினரே ஆயுதங்கள் கொண்டுசெலத் தடையுமவர்க் கிருக்க வில்லை
குடிபெயர்ந்தோர் “திரிப்பொலிக்கும்" - "டைர்" கோட டைக்கும் சென்றடைந்தார் படைபலத்தைப் பெருக்கிக் கொண்டார்
சுல்தானின் பெருமனத்தால் பயனுற் றாரே. 46
இரண்டாண்டு சுல்தானின் பாது காப்பில்
இருந்த 'கைடி லூஸினான்"பின் “பைபிளின்"மேல் கரம் வைத்துச் சத்தியமுஞ் செய்தான் “வாழ்வின்
கடைசிவரை சுல்தானை எதிரேன்" என்றே ஜெரூஸலத்தின் மன்னனவ னோடு கூடச் சேர்ந்துபிடிபட்டசிறு நாடாள் வோரும் உரிமையிடச் சென்றதன்பின் ஒன்றாய்ச் சேர்ந்தே
ஒர்பெரிய சேனைதனைத் திரட்டி னாரே 47
மூபஃதி னாயிரம்பேர் கொண்டோர் சேனை
முஸ்லிம்கள் தமக்கெதிராய்த் திரண்ட தந்தப் பாபத்திற் கஞ்சாத பறங்கிப் பேரின்
படைமுதன்மை தனையேற்றான் "லூஸி னானும் ஆபத்தை அறியாதோர் 'அக்கா' மீது
அணிதிரண்டார் முற்றுகையிட்டிருந்தார் காயந் தீபத்தின் சுடரணைய முன்னர் தோன்றும்
திரியினொளி போலவர்கள் மகிழ்ந்திட்டாரே 48

Page 20
24. புனித பூமியிலே காவியம்
பற்பலவாய்ப் பிரிந்தெங்கும் "பலஸ்த்தீ ன“த்தில் பரவிநின்ற படைப்பிரிவில் சிலதை மட்டும் வெற்றிக்கு வித்தான திட்டந் தீட்டி
வேந்தர்'ஸலா ஹCத்தீனும் அழைத்திருந்தார் தெற்கினிலே தானுந்தன் தமையன் பிள்ளை
தகியத்தீன் தனைவடக்குக் களத்தில் ஏற்றே அற்புதங்கள் செய்தாராங் கிறைவன் வெற்றி
அவர்கரத்தி லேற்றிடவென்றுதவி னானே. 49
சுற்றிவளைத் திருந்தவரைச் சுற்றி எல்லாத்
திசைகளிலும் முஸ்லிம்போர் வீரர் சூழ்ந்தே முற்றுகையைக் களைந்தெறியும் நோக்கி லொன்றாய்
முன்னேறி அழித்தார்கள் பறங்கியர்கள் வெற்றிபெறா இயலாத நிலையு ணர்ந்து
வழிமாறியோடமுயன்றார்கள் அஃதும் வெற்றிபெறா தெனவறிந்து களத்தை மீண்டார்
வெட்டுண்டே பிணக்காட்டில் ஒன்றித் தாரே. 50
பதினாயி ரம்பறங்கிப் போர்வீ ரர்கள்
பலியானார் படுதோல்வி கண்டார் ஆனால் எதிரிகளின் முற்றுகையோ ஒய வில்லை
எங்கும்பிணக்காடாய் இருந்த வேளை புதிதாக மழைக்காலம் தோன்ற மாய்ந்த
பறங்கியரின் உடலங்கள் அழுகி யெங்கும் விதம்விதமாய் நோய்பரவத் துர்நாற் றத்தால்
வேறிடத்தை நாடும்படியாகிற் றன்றோ. 51
மழைக்காலம் முடியுமட்டும் "அய்யா லீயா"
மலைப்புறத்திற் கழிக்கவென படையைத் தம்மோ டழைக்தேகி னார்சுல்தான் ஐரோப் பாவில்
அக்காவின் பெருந்தோல்வியறிந்திட்டாரே பழிதீர்க்க வேண்டுமெனப் படைதி ரட்டி
பதினாயிரம்பேரை அனுப்பி வைத்தார் அழிந்தவர்போய் எஞ்சியிருந் தோரி னோடே
அக்காவந் தொன்றித்தா ரவர்களம்மா. 52
 

—
பறங்கியர் வைத்த தீ 25
புனிதபூமி தனில்மீண்டும் முஸ்லிம் கள்தம்
பதம்பதித்தா ரெனுஞ்செய்தி ஐரோப் பாவைச் சினங்கொள்ளச் செய்ததெங்குஞ் சுல்தான் நாமம் செறிந்துளங்க ளனைத்திலுமே பதிந்த தன்றோ இனப்பகையைத் தூண்டிவிட்டார்"போப்"பும் மக்கள் எல்லோரும் வரிசெலுத்த வேண்டு மென்றார் தனதுழைப்பின் பத்திலொன்றை ஸலாஹமத் தீனைத்
தாக்கவெனச் சேர்வரியாய் அளிப்பீரென்றார். 53
சேர்த்தெடுத்த செல்வத்தின் உதவி யோடே
றந்த பெரும் படையொன்றை மன்னர் கூடிச் சேர்த்தெடுக்க வேண்டுமது கொண்டு சுல்தான்
செருக்கொடுக்க வேண்டுமெம தாட்சிக் குள்ளே சேர்த்தெடுக்க வேண்டும் நாம் ஜெரூஸ் லத்தை ஸ்லாஹCத்தீன் தனைவிரட்ட ஐரோப் பாவைச் சேர்த்தெடுக்க வேண்டும்மத உணர்வை ஊட்டிச்
செயல்படுத்த அனைவருமே முயல்வீரென்றார். 54
ஜெர்மனியின் மாமன்னன் "பிரட ரிக்'கும்
சேர்ந்தவனோ டிங்கிலாந்தின் ரிச்சாட் வேந்தும் பிரஞ்சுநாட்டின் பேரரசன் பிலிப்பும் ஒன்றிப் பற்பலசிற்றரசரையுங் கூட்டினார்கள் பறங்கியர்கள் "அக்கா"வில் மாண்ட பூழிந்த
பேரதிர்ச்சி தாங்காது "ஹென்றி யென்னும் பெருவீரன் தலைமையிலே சேர்த்தெ டுத்த
படையொன்றை யுடன்"அக்கா" அனுப்பி வைத்தார். 55
முந்தியாங்கே இருந்தவரோ டொன்றி "அக்கா" முற்றுகையைப் பறங்கியர்கள் பலப்படுத்த தந்திரமாய் வளைத்தவரைப் படைகு வித்தார் திறமைமிகு தளகர்த்தர் சுல்தான் வேண்டும் சந்தர்ப்பம் வரும்போது முன்னே சென்று சாதுரிய மாய்த்தடுத்தார் கோட்டை மீது எந்தவொரு கடுந்தாக்கும் நேரா வாறே
எதிரிகளின் பலங்குன்றச் செய்தா ரன்றோ. 56

Page 21
26 புனித பூமியிலே காவியம்
கடலூடாய் வந்தெதிரி நுழையா வாறு
கடற்படையொன் றிருந்ததாங்கே "ஹoஸ்ஸா முத்தீன்" படைத்தலைமை பூண்டிருந்தான் முற்று கையால்
பறங்கியரோ உணவின்றிப் பரித வித்தார் இடைஇடையே எகிப்திருந்து முஸ்லிம் கட்கு எப்போதுங் குறையாது கடல்மார்க் கத்தால் தடையின்றி உணவும்பிற வனைத்துஞ் சேரத்
தாங்காத சினங்கொண்டார் கிறிஸ்த்தோ ராமே.
கோட்டைக்குள் ளிருப்போர்க்குக் கடல்மார்க் கத்தால்
கிட்டுகின்ற உதவிதனைத் தடுக்க வென்றே தீட்டினரோர் திட்டமதன் முடிவே யாங்குத்
தோன்றினவம் மரக்கலங்கள் துறைமு கத்தே கோட்டையின்மீ தெறியவெனத் தீப்பந் தங்கள்
கொள்ளைகொள்ளை யாயடுக்கியொன்றி னோடு மூட்டைகளாய் எரிபொருட்கள் ஏற்றி யொன்றும்
மிகக்காய்ந்த விறகுகொண்ட வொன்றும் மூன்றாம்.
தொடர்ந்துநின்ற தோர்பெரிய கப்ப லஃதைத் துளைத்தம்பு செல்லவழி இலாத வாறு தடித்தமரப் பலகைகளால் கூரை வேய்ந்து தக்கபடி பாதுகாப்புஞ் செய்து கொண்டே அடுத்தடுத்துக் கப்பல்களைத் தொடர்ந்தே இன்னும்
அளவறியாப் படகுகளும் வீரர் தாங் மடைத்தலையிற் காத்திருக்கும் கொக்கி னம்போல் மிகப்பொருந்தும் வேளைவரக் காத்தே நின்றார். “ஈக்" கோட்டை தனைநெருங்கி அவர்கள் முன்னர்
எறிகின்ற பந்தங்கள் எரிக்கத் தீயின் நாக்கினுக்கு நல்லமுதாய் வெடிம ருந்தை
நல்குவதோ டதனடுத்த முயற்சியாகத் தாக்கவரும் முஸ்லிம்கள் தயங்கி யோடத் தக்கபடி விறகுகொண்ட கலங்க ரையை நோக்கிடச்செய் திடவேண்டும் நெருப்பை யேற்றி
நிலைகொண்ட மற்றவர்கள் தொடர வேண்டும்.
57
58
59
60

பறங்கியர் வைத்த தீ 27
பறங்கியர்கள் திட்டமிட்ட படியே யெல்லாம் பக்குவமாய் முதலில்நடை பெற்ற தானால் சிறுபொழுதில் அத்தனையும் மாறி யெண்ணம்
தவிடுபொடி யாயிற்றென்றறியா ருண்டோ துறைமுகத்தில் வந்திறங்கும் பறங்கி யர்கள்
திரும்பவியலாதாங்கே அழிவுற்றார்கள் அரைநொடிக்குள் விழிப்படைந்த முஸ்லிம் கள்தம்
ஆழிப்படை அடையலரை நெருங்கிற் றன்றோ. 61
கரையிருந்து வருகின்ற கப்பல் கண்டு
காத்திருந்தோர் கப்பலினைக் கொளுத்தி விட்டே கரைநோக்கிச் செல்லவிட்டார் படைத்த லைவன்
கணப்பொழுதில் அவர் திட்டம் புரிந்து கொண்டான் விரைவாகக் கப்பலினை நோக்கித் தம்மின்
வீரர்களை ஏவிவிட்டான் படகிற் சென்றே அரைகுறையாய் எரிந்துவிட்ட வதனில் மோதி
அனுப்பியவர் திசைநோக்கிச் செல்ல வென்றே. 62
தமதுயிரை மதிக்காத முஸ்லிம் வீரர்
தீரமிக்க செய்கையினால் தம்பொறிக்குள் தமதுயிரே போமென்னும் நிலைமை தோன்றத்
தவித்தார்கள் பறங்கியர்கள் எஞ்சி நிற்கும் தமதுபிற மரக்கலங்க ளோடு வீரர்
தீயுண்டு மடியாது காக்க வென்றே தமதுதிற னத்தனையுஞ் சேர்த்துக் காத்தும்
தனியவனின் தீர்ப்பதற்கு மாறாயிற்றே. 63
தீப்பந்தங் கொண்டிருந்த கப்ப லுக்கும்
திரண்டவெடி மருந்துமரக் கலத்தினுக்கும் நாப்பண்ணே சென்றதவர் எரிய விட்ட
நாவாயும் வெடித்திடையிற் சிதறிற் றன்றோ காப்பாற்ற எவராலும் இயலா வாறு
கருகியவை மூன்றுமொன்றாய் அழிந்தே போக ஆப்பிழுத்த மர்க்கடம்போ லானார் காப்பு
அரண்கொண்ட கடலூர்திக் குள்ளிட் டோரே. 64

Page 22
28 புனித பூமியிலே காவியம்
மூடுகப்பல் முஸ்லிம்கள் இடையிற் சிக்க முயன்றனரே கைப்பற்ற முஸ்லிம் வீரர் தேடியவர் பறங்கியரைக் கொன்றொ ழித்தார்
தீயொளியிற் பெருஞ்சமரும் நடந்த தாங்கே ஓடமுடி யாதபடி சேத முற்று
ஒடுங்கியது சமுத்திரத்துள் அதுவுங் கூட நாடிவந்த செயல் தமக்கே நாசம் செய்ய
நிலைகுலைந்தே மாண்டொழிந்தார் நடந்த தென்னே 65
3. நள்ளிரவில் நடந்தது
முற்றுகைத் குள்ளி ருந்த
முஸ்லிம்கள் மனத்தின் தீரம் சற்றெனினுங் குறையாப் போழ்து
சலிப்புற்ற பறங்கி யானோர் வெற்றிகொண் டிவரைத் தங்கள்
வசம்'அக்கா" பெறும்வரைக்கும் சுற்றியோர் நகர மைத்தார்
சுகபோக வாழ்வுக் கென்றே 66
புதுமையாம் புனித மண்ணில்
புகன்றிட வரிதா யோர்பேர் புதுநகர் தோன்றி மேற்கின்
புதுமைகள் அனைத்துந் தாங்கி இதுகாறும் இல்லா வாறே
இழி செயல் பலவுங் கூடி விதிபிறழ்ந் திடுமா றுற்ற
வாகினைக் கூறு வாமே 67
புறநக ரொன்ற மைத்தார்
போர்வீரர் தமக்கா யாங்கே குறையென வெதுவு மில்லை
கேட்பது கிடைக்கும் வாழ்வாம் பெறுவது போக வின்னும்
பெறவிழை வோருக் கென்றே நிறைவுறப் பொருட்கள் கொண்ட
நெடுங்கடை வீதியோடே 68

நள்ளிரவில் நடந்தது 29
தனித்தனி யாக வொவ்வோர்
தலம்பிரித் தமைத்தார் தத்தம் மனத்தினுக் குவந்த வற்றை
கவெளி தாகக் கொள்ள அனைத்துமே யுண்டா மாங்கு
அரிதில்லை என்ப தொன்றே நினைத்ததும் கண்டால் வாங்க
நினைப்பதும் நிறைந்த வாறே 69
நாடுவெவ் வேறா யாங்கே
நிலைகொண்டோர் புனித மண்ணில் நீடுநாள் வாழு கின்ற
லைவரின் அதற்கு வாகாய் வீடுகள் சாலை மற்றும்
வர்த்தகத் தலங்கள் தத்தம் நாடிய வாறு வேறாய்
நிலைபெறச் செய்திட் டாரே 70
படையினர் தங்க வென்றும்
பரிகளி ஒட்டைக் குங்கால் நடைகளுக் கென்றுந் தங்கு
நிலைகளைத் தொலைதொ லைவில் அடையலர் அமைத்தார் நீரால்
அல்லல்கள் தோன்றா வண்ணம் குடிபுனற் கிணறுஞ் செய்தார்
குறையற வெனுமா றாங்கே 71
மல்லாடு வீரர்க் கென்றோர்
மிகப்பெரு மேடை யுத்த வல்லாரின் பயிற்சிக் கென்றும்
வீர ரைப் பயிற்று தற்கும் எல்லையின் ஒர்பு றத்தே
ஏற்றமை தான மொன்றும் பொல்லாரப் பறங்கிப் பேர்கள்
படைத்தனர் புதிதா யாண்டே 72

Page 23
30 புனித பூமியிலே காவியம்
கேளிக்கை கூத்துக் கூடம்
குடியொடு ஆடுஞ் சாலை நாழிக்கோர் மாதில் இன்பம்
நுகர்ந்திடத் தனியாய் இல்லம் வேளைக்குத் தப்பா துண்ண
வகைவகை உணவு கொண்ட கூடமுண்ணுந் தலங்கள் கூடக் கொண்டதந் நகரா மம்மா
ஓய்வினைக் களிக்க மாத ரோடுற வாடத் தக்க தாய்மலர் வனமும் உண்டு
திளைத்திட வகைவ கையாய்க் காய்கனித் தோப்பும் உண்டக் கண்கவர் நகரி னுள்ளே வாய்மொழி யுண்டோ செப்ப
விந்தைகள் பலவா மாங்கே
துணிமணி வகைகட் கொன்றும் தேனினி லினிசொல் மாதர் அணிகலன் தமக்கு மென்றுந்
ஆண்கள் போர்க் களத்தின் மீது அணிகலன் வாள்வேல் வில்லும்
அம்பொடு பிறவுக் கென்றும் தனித்தனி யாக வேறு
தலமமைத் திருந்தா ராங்கே
ஊன்வகைக் கென்று வேறாய்
ஒர்புறம் ஆங்கு வெவ்வே றுான்பசு ஆடு ஒட்டை
உரித்துவைத் திருந்தார் இன்னும் கான்முயல் காடை கோ
கட்டைக்காற் பன்றி நாரை மீன்வகை பலவு மாங்கே
மிகைப்பட விருந்த தன்றோ
73
74
75
76

நள்ளிரவில் நடந்தது 31
கோதுமை அரிசி சோளம்
குரக்கன்நல் லிறுங்கு கம்பு
வாதுமை உளுந்து சாமை
வகைவகைப் பயிறோ டெள்ளும்
மாதுளை திராட்சை ஆப்பிள் மாபலா வாழை தோடை
தீதிலா வெவ்வே றுண்ணுந்
திரவியம் நிறைந்தாங் கொன்றாம் 77
கிடைத்திட வேண்டும் எல்லாங்
கிறிஸ்த்தவ வீரர்க் கென்றே கடைத்தெரு முழுதுங் கண்ணைக்
கவருநற் பொருள்களோடே மடைதிறந் தோடு மாப்போல்
மதுப்புனல் வழியுஞ் சாலை துடியிடைப் பெண்டீர் கூடத்
தனியில்லுஞ் சமைத்திட்டாரே. 78
சுல்தானின் நாமங் கொண்டே
சேர்த்தபொற் குவிய லெல்லாம் சுல்தானை அழிக்க வந்தோர்
சுகம்பெற ஆறா யோட்டி இல்லைஈ தன்றி இன்னும்
இன்பங்களுலகி லென்றே சொல்லிட மகிழ்ந்தி ருந்தார்
சொர்க்கவாழ் வெனநினைந்தார். 79
புரியவோ வந்த தன்னார்
"புனிதநல் யுத்தம்" என்றே புரிவதோ பாவம் புல்லின்
பனிதொங்கு நுனியத் தேனும் புரிந்திடார் நன்மை தம்மைப்
போதைக்குட் புதைத்தே நின்றார் புரியாத புதிரிம் மாந்தர்
புல்லருட் புல்ல ராமே. 8O

Page 24
32 புனித பூமியிலே காவியம்
பிரஞ்சினை ஆண்ட மன்னன்
“பிலிப்'பெருஞ் சேனை யோடு கரைவந்து சேர்ந்தான் வெற்றி
கண்டமா விர னாக வருகிறான் ரிச்சாட் என்றே
விபரத்தால் லூஸி னானும் வரவேற்க "சைப்பி ரஸ்"க்கே
விரைந்தனன் வருமுன் ஆங்கே
இங்கிலாந் தரசன் "ரிச்சாட்"
இடைவழிப் பயணத் தின்பால் பொங்குமா கடல்சூழ் 'சைப்பிரஸ்" போலுடன் "சிசிலித் தீவை தங்களின் அடிமை நாடாய்த்
தாக்கியே வென்றெடுத்தான் அங்கிருந் "தக்கா" நோக்கி
அவன்படை தொடர்ந்த தன்றோ.
பகுதிக்கென் றொருவ ராகப்
பாசறை அமைத்துக் கொண்டே சுகபோக வாழ்வு வாழ்ந்தார்
சுற்றிமுற்றுகையிட்டாள்வோர் மிகப்பெரு வீர னான
“மார்க்குவிஸ் கான்ராட்"டைரின்" பகைமைசூழ் அதிபன் கூடப்
பங்குற்றான் அவர்களோடே
காரிருள் கவ்விக் கானக்
கருக்கலில் உலகு றங்க நாரிய ரணைப்பிற் போதை
நனைவினிற் பறங்கி வீரர் தேரிலா தெதுவ மென்னுந்
தெளிவிலா நிலையிற்றுாங்க ஒரிரு பேர்கள் மட்டும்
உறங்காது காவல் செய்தார்.
81
82
83
84.

நள்ளிரவில் நடந்தது
முன்னிருட் போர்வை யுள்ளே
முகம்பதித் திரவு துஞ்ச தன்னுடல் போர்த்தி யாருந்
தனையறியாத வாறே மன்னவன் கான்ராட் வாழும்
மாளிகை தன்னை நோக்கிச் சென்றதோ ருருவம் காவல்
செய்பவர் உறங்க லுற்றார்.
ஒவ்வொரு சாள ரத்தும்
உட்புகுந் தலைந்து மீண்டே எவ்வித பயனு மற்று
இறுதியிலோரிடத்திற் கவ்விய பொருளைக் கண்கள்
கவனமாய் உற்று நோக்க அவ்விடந் தரித்த தந்த
அதிசய வருவஞ் சற்றே.
சாளரத் தூடே நோக்கிச்
சயனத்தி லாழ்ந்திருக்கும் ஆளெவ ரெனவ றிந்த
அடுத்தகால் நொடிக்குட் குற்று
வாளினைக் கையி லேந்
வந்தவவ் வுருவ முள்ளே
நாழிகை தரிக்கா தேக
நடந்தவை யுரைப்ப மம்மா.
மங்கலாய்த் தீப மொன்று
மினுங்கிட வோர்புறத்தே பங்கய மொன்றோ தந்தப்
பதுமையோ வென்னும் பாங்காய்ச்
சிங்காரக் கட்டி லொன்றில்
செகத்தையே மறந்தோர் பெண்ணாள்
பொங்கிடும் அழகு நெஞ்சைப்
பிழிந்திடத் துயில்கொண் டாளே.
85
86
87
88
33

Page 25
34 புனித பூமியிலே காவியம்
மூடிய இமைகள் ஆழி
முத்துறை சிப்பிக் கொப்பாய் வாடாத மலரா மன்ன
வதனத்திலுறைந்திருக்கத் தோடுடைச் செவிகள் பக்கந் துலங்கிட வைரம் மின்ன நாடியங் குற்றோன் கண்டே
நண்ணினான் தனையிழந்தான்.
விரல்சுண்டு வேளை தானவ்
வாறவன் நின்றான் வந்த கருமத்தை எண்ணிக் கையிற்
கைக்குட்டை சிலவெடுத்தே மருகிடத் கண்வி ழித்த
மங்கைவாய் கதறு முன்னே சொருகின னவற்றி லொன்றைத்
திறந்தவாய் மூடு முன்னாம்.
பிணைத்தனன் கையி ரண்டைப் போலது வாறே காலைப் பிணைத்தனன் பேசி னாலோ
பிளக்குமுன் நெஞ்சு மென்றான் கணத்தினுள் நடந்த திந்தக்
காரிய மனைத்துங் கண்டே பிணத்தினைப் போலும் சாய்ந்தாள்
பூங்கொடி அச்சத் தாலே,
அள்ளியே எடுத்தா னந்த
அழகொளிர் சிலையைச் சின்னப் பிள்ளையைத் தோளிற் றாங்கும்
பாங்கினிற் றாங்கித் தம்மை மெள்ளவவ் வறையி ருந்தே
மீட்டனன் கண்டா ரில்லை கள்வனாய் வந்த வன்றன்
கவர்பொருளோடொ னிந்தான்
89
90
91
92

முஸ்லிம் வீரர் மூவர்
4. முஸ்லிம் *செவிவாங்கி னாயோ கேட்ட
செய்தியை" யென்ன"ஆமாம் செவிகொண்டேன் இப்போ தேநான்
செல்கிறேன்" என்ற வீரன் நவின்றசொல் நாவி ருக்க
நாயகன் நோக்க றிந்தே கவண்விடு பட்ட கற்போல்
கடிதினில் அகன்றா னன்றோ.
சிறைக்தைதி யானோர் தம்மைச்
“ஷவ்ஃபுல்லா மீரிற் காத்துச் சிறைப்பட்டுச் சென்ற பெண்ணின் சேதியை யறிய வென்றே மறைமுக ஆணை கொண்டு
மிகவிரைந்தவனு மேக பறந்தன தொடர்ந்தி ரண்டு
பரிகளும் அவன்பின் னாலே,
முன்னவன் 'ஸைபுத் தீன்" பின்
முடுகிமற் றிருவ ரொன்றாய்ப் பன்நெடுங் காத தூரம்
பறந்தனர் காண்போர் கண்ணில் மின்னலைப் போலத் தோன்றி
மறைந்தனர் ஓர் நாள் சென்றும் சின்னவோர் தடய மேனுந்
தெரிகிலா துளம்நொந் தாரே.
பலமணி நேரம் முந்திப்
பறங்கியர் போன தாலே இலகுவி லவரை யண்ட
இயலாத நிலையுணர்ந்து கலங்கினான் 'ஸைபுத் தீ“னக் காரிகை கயவர் வாழுந் தலமடைந் தாளே யானால் தம்பணி சிரம மென்றே.
வீரர் மூவர்
93
94.
95
96

Page 26
36 புனித பூமியிலே காவியம்
செந்தணற் பரிதி மேற்கின்
திசையணு கிட்ட வேளை எந்தவோர் முடிவு மில்லா
திருக்கையில் உடலஞ் சோர அந்தியைக் கழிக்கக் கண்முன்
அகப்பட்ட சோலை யொன்றுள் வந்தமர்ந் தார்கள் சற்று
வாட்டமும் நீங்க வென்றே. 97
சோலையுட் புகுந்து சற்றுத்
தெம்புடல் பெற்ற பின்னர் மாலையின் தொழுகை நோற்று
மனச்சுமை நீக்கி யாங்குச் சோலையின் கனிக ஞண்டு
சோர்வொடு பசியும் நீங்கி மேலென்ன செய்வ தென்றே
விபரித்தான் ஸைபுத் தீனே. 98
"அக்கா"வின் புறந கர்க்கும்
அதிலுறை பறங்கியர்க்கும் பக்கமே யுள்ளோம் நம்மைப் போலவர் தம்மைச் சுற்றித் திக்கெட்டும் முஸ்லிம் வீரர்
திரண்டுள்ளார் கண்டிருந்தால் இக்கண மப்பெண் தப்பி
எம்மிடஞ் சேர்வா ளென்றே." 99
அவ்வித மில்லை யாயின்
அன்னியர் வசமே இன்னும் ஒவ்வாது தாம தித்தல்
உடன்புறப் படுவோ மெம்மோர் எவ்வித மேனும் மீட்க
உடன்வரு வார்கள் நாங்கள் வெவ்வேறு திசைகள் நோக்கி
விரைந்துதே டிடலா மென்றான். 1 OG

முஸ்லிம் வீரர் மூவர் 37
ஒன்றாக முடிவு கொண்டே
ஒரடி வைக்கு முன்னர் பன்நூறு பரிக ளந்தப்
பாதையில் வருதல் கண்டார் தன்னினத் தாரோ வென்று தோன்றிட மாறாய் நிற்க என்னதான் வரினு மஃதை
ஏற்றிடத் துணிவுற் றாரே. 101
குதிரைகள் கனைக்கக் கேட்ட
கொடியவப் பறங்கிக் கூட்டம் எதிரிகள் இருப்ப ரென்றங்
கெண்ணியே யுட்பு குந்தார் புதியவர் தம்மைக் கண்டு
புரிந்தனர் முஸ்லிம் என்றே விதிதனை முடிப்போ மென்றார்
வாளினை உருவ லானார். 102
மூவர்தா னென்றிட் டாலும்
முஸ்லிம்கள் அஞ்சிடாது தாவினர் முன்னே சண்டை
தமக்கெதிர்ப் பலனே சொர்க்கம் போவது திடமென் றாலும்
போர்செயத் துணிந்தார் சென்னி சீவினர் எதிரி யானோர்
திகைத்தனர் பலபேர் மாண்டார். 103
இருபது வீரர் தம்மை
இழந்தனர் எதிரிக் கூட்டம் ஒருவரே முஸ்லிம் வீரர்
உயிர்ந்துறந் திறைய டைந்தார் பெருவழிப் பயணத தாலே
பாதிதம் முடல்களைத்த இருவர்கை தானார் ஸைபுத்
தீனுட னிறுதிப் போரில் 104.

Page 27
38 புனித பூமியிலே காவியம்
5. பழிக்குப் பழி
மருவியே இருளை மோக
வலையினுற் றிளைப்பாள் போன்றே கருமையி லுழன்றாள் பூமிக்
காரிகை நடுச்சா மத்தே உருவினி லவளை யப்போ
தொத்தவுள் ளத்து மாந்தர் பறங்கியர் முஸ்லிம் கள்தம்
பாசறை மீது பாய்ந்தார்.
நிராயுத பாணி கள்மேல்
நெறியிலார் இரவு நேரம் பொருதுவ தொன்றும் அன்னாள்
புதிதிலை எனினும் சின்நாள் வராதவ ரிருக்கக் கண்டு
வராரென மறந்து நெஞ்சங் கருதியே இருந்த வேளை
கயவர்கள் வந்துற் றாரே.
நள்ளிராப் போழ்தில் வந்தே
நிராயுதர் தம்மைத் தாக்கிக் கொள்ளலாம் வாகை யென்ற
குறிதனில் வந்தோ ரெண்ணம் எள்ளள வேனும் அற்றை
ஈடேற மாட்டா நிற்க உள்ளதும் இழந்தே யோடும்
ஒதரு நிலைக்குள் ளானார்.
இரவெலாம் மதுவும் மாதும்
என்றுவாழ் பறங்கியர்போல் திருமறை யுணர்ந்தோ ரில்லா
தேகனைத் துதித்திருந்த ஒருங்கினால் பகைவர் வந்த
ஒருகணத்துள்ளெதிர்க்கும் பெருந்திறன் கொண்டார் வல்லோன்
பேரருள் புரிந்திட்டானே.
105
106
107
108

பழிக்குப் பழி 39
பலமுறை இதுபோ லந்தப்
பறங்கியர் போர்தொடுத்தும் இலகுவில் வெற்றி கொள்ள
இயலாது தோற்றே சென்றார் பலரினை இன்றும் போரில்
பறிகொடுத் தோடும் போது சிலர்பிடி பட்டார் அன்னார்
சிறைகொண்ட இருவ ரோடே 109
குதிரைகள் இரண்டிற் கட்டிக்
கொணர்ந்திருந்தார்களாங்கே எதிரிகள் இரண்டு முஸ்லிம்
இறைநேசர் தம்மை அன்னார் புதியவ ரல்ல முன்னர்
பிடிபட்ட 'ஸைபுத் தீனும் உதவியாய்ப் பெண்ணைத் தேடி
உடன்வந்த வீரனுந்தான். 110
மகிழ்ந்தனர் முஸ்லிம் வீரர்
மன்னர்தங் குமாரர் 'தாஹீர்" அகம்நிறைந் தாச்சர் யத்தால் "ஆநீஈங்கெங்கு வந்தாய் சகேர்தரர் "அஸிஸ்"தா மெங்கே
சென்றநீர் "ஹைஃபா" தன்னில் வகையென்ன செய்தீ" ரென்றே
வினாப்பல தொடுத்திட்டானே. 111
நடந்தவை எடுத்தோ துங்கால்
"நாமினிப் பொறுத்த லாகா உடன்புறப் படுவோ" மென்றான்
உணர்ச்சிபொங் கிடவே தாஹிர் “பிடிபட்ட முஸ்லிம் பெண்ணைப் பறங்கிய ரிடத்தில் மீட்டே கொடியவவ் வரக்கர் தம்மைக்
கொன்றொழித் திடுவோ" மென்றான். 112

Page 28
40 புனித பூமியிலே காவியம்
உடனொரு படையல் வேளை
உயிர்பொருட்டில்லை யென்றே நடுநிசி பெய்ன்றும் நோக்கா
நெறிகேட்டோர் முகாமை நாடிக் கடுஞ்சினங் கொண்டே சென்றார்
கூண்டொடு மழிப்பதென்றப் படையினில் ஸைபுத் தீனும்
பங்குற்றான் நண்பனோடே
பழிவாங்கு நோக்கி னோடும்
பெண்ணினை மீட்க வென்றும் வழிதொடர்ந் தடைந்தா ராங்கு
வாட்பலி தொடங்கிற் றன்றோ அழிவன்று பறங்கி யர்க்கோ அளவிட முடியா வாறாம் மொழியிலை சேதஞ் சொல்ல
முஸ்லிம்கள் செயம்பெற்றாரே.
தேடிநாம் வந்த பெண்ணுந் திடமாக இங்கிருப்பாள் பேடையர் அனைவ ரையும்
பிடித்துடன் அழைத்துச் செல்வீர் கூடார மொவ்வொன் றாகக்
கூர்ந்துநோக்குங்கள் தப்பி ஓடாத பறங்கி யர்கள்
ஒழியலாம் என்றான் தாஹிர்.
தன்னொடு பதின்ம ரைத்தோட்
துணையெனத் தவிர்த்து மற்றோர் முன்செலப் பணித்தான் பின்னர்
மேலுமங் கெங்குந் தேடிச் சொன்னவப் பெண்ணில் லாது
திரும்பிடு போழ்து கானப் பின்னலுட் புகுந்தார் ஏதும்
புதுச்சேதி கிட்டு மென்றே.
113
114
115
116
 

புனித பூமிக்கு போகும் வழி
பின்னிராக் கழிந்து காலை
புலரவென் றியற்கையுந்தத் தன்னுடன் வீர ரோடு
தாஹீர்முன் சென்றான் கானுள் மன்னிடும் போது கேட்ட
மங்கையின் அலற லாலே தன்னிலை மறந்தான் அந்தத் திக்கினிற் பறந்திட்டானே.
புனித பூமிக்கு போகும் வழி
'நாவார்"நாட் டரசன்மகள் “பெரங்கே ரிப்யா" நாரியருட் பேரழகி “ரிச்சாட்" நாட்டின் காவலனா யாகுமுன்னே ஐரோப் பாவைக்
கண்டுகளித் திடச்சுற்றி வந்தான் அந்நாள் பாவையவள் மீதுமையல் கொண்ட போதும் பாரறியக் கைப்பித்தா னில்லை யோர் நாள் நாவாரின் மன்னனிட மிருந்தோர் சேதி
நாடியவன் சமுகம்வரப் பெற்றிட்டானே.
பலவாண்டு கழித்துமன்னன் ரிச்சாட் எங்கும்
பெருவீர னெனும்புகழைக் கொண்டா னன்று சிலுவையத்தம் புரியவென ஆயத் தங்கள்
செய்யுங்கால் பெற்றனனச் செய்தி தன்னை நிலமாளும் மன்னனுக்கு மன்னன் பெண்ணை
ச்சயித்து மணம்முடிக்க வேண்ட அன்னை “எலீனர்"முன் புறப்பட்டுச் சென்றாள் தானும்
இளவரசி தனைப்பார்த்துக் கொணர வென்றே.
திரும்பியன்னை வருமுன்னர் ரிச்சட் தம்மின் தாய்நாடு விட்டகன்ற செய்தி கேட்டு மருமகளாய் வருபவளை யுடன ழைத்து
வந்தனளே தாய் வழியில் இத்தா லிக்கு வருவனென மகன் அன்னை காத்தி ருக்க வந்தவனோ படைகளுடன் சிசிலித் தீவில் கருமமொன்றை நாடியாங்குக் காலூன் றப்போய்க் காரியங்கள் வெவ்வேறாய் நடந்த தன்றோ.
117
118
119
120
41

Page 29
42 புனித பூமியிலே காவியம்
"சிசிலி'மன்னன் வில்லியத்தை மணந்தி ருந்தாள் ரிச்சாட்டின் தங்கை"ஜோன்"அவன்மரிக்க வசமான தாட்சி'டாங்ராட்" என்னும் மன்னன்
வாரிசுக்கு மக்கட்பேறிலாததாலே இசையாத போதுஞ்"ஜோன்" தனைம ணக்க
இட்டமுற்றான் 'டாங்ராட்"டும் வெறுத்த வன்கை வசமாகா திருக்கவென அண்ண னுக்கு
வருகவென “ஜோன்“தூதொன்றனுப்பினாளே. 121
தங்கைமனம் அறிந்திருந்தும் ரிச்சாட் மன்னன்
தானுவக்கும் பொருட்களுக்காய்ப் பேரம் செய்தான் தங்கமெடை இருபதினா யிரத்தி னோடு
தங்கமேசை நாற்காலி பட்டா லான தங்குகின்ற கூடாரம் மரக்க லங்கள்
தானியங்கள் திராட்சைமது வவற்றை யுண்ணத் தங்கத்தாற் கிண்ணங்கள் தாம்பா ளங்கள்
தந்திடில்ஜோன் தனைத்தருவதாயு ரைத்தான். 122
மிகுபொன்னுந் தானியமும் வேண்டு மென்று
மன்னனிட்ட நிபந்தனையைக் கேட்ட 'டாங்ராட்" இகழ்வதுபோற் பழம்படுக்கை யோடு கைப்பொன்
எண்ணிச்சில கொடுத்தவளை அனுப்பி வைத்தான் வெகுண்டெழுந்த "ரிச்சாட்"அந் நாட்டைத் தாக்கி
வேண்டுவன வேண்டியதைச் சூறையாட அகம்மாறி “டான்ராட்"பொன் அவுன்சு நாற்ப
தாயிரத்தைக் கொடுத்ததனைத் தடுத்திட்டானே. 123
பொன்பெற்றுச் சமாதானஞ் செய்து கொண்ட
பின்"ரிச்சாட்" ஜோனையுடன் சேர்த்துக் கொண்டான் அன்னை இள வரசியுடன் இத்தா லீயில்
அவனுக்காய்க் காத்திருக்குஞ் சேதி கொண்டு தன்னோடு சிசிலிக்கே அழைத்து வந்தான்
தனக்குமுன்னர் பிரஞ்சுமன்னன் புனித பூமி சென்றுவிட்டா னெனவறிந்தே தானும் ஆங்குச்
செல்லவெனப் புறப்பட்டான் தாய்த விர்த்தே. 124
 

புனித பூமிக்கு போகும் வழி
இங்கிலாந்தை நோக்கியன்னை திரும்பிச் செல்ல
இளவரசி "பெரங்கேரியா"வுஞ் “ஜோனு'ம் தங்களொடு வரட்டுமெனப் பரிவா ரங்கள்
தம்மோடு புறப்பட்டான் ரிச்சாட் மன்னன் பொங்குகடற் பரப்பிடையிற் கண்ணிற் கண்ட பிறிதுமிரு தீவுகளைப் பணிய வைத்துத் தங்காது பலஸ்த்தீனக் கரைவந் தாங்கே
தரித்ததன்பின் “சைப்பிரஸ்' மேற் பாய்ந்திட்டானே 125
பொன்பொருள் மேற் பேராசை கொண்ட ரிச்சாட்
பெருஞ்செல்வம் அந்நாட்டில்உண்டா மென்றும் நன்நிலத்தாற் பலவளமுங் கொண்ட தென்றும்
நன்கறிவான் கொள்ளையிடப் பொருத்த மாகத் தன்னளவில் பொருந்துமொரு கார ணத்தைத்
தெரிவித்தான் சுல்தானை நாடாள் கின்ற மன்னனுக்கு நண்பனென்றான் கிறிஸ்த்த வர்கள்
மிகத்துன்பம் அடைகின்றா ரென்றுஞ் சொன்னான். 126
அணையுடைத்துப் பெருக்கெடுக்கும் தேக்க நீர்போல்
ஆங்குவந்தே பொருதுகின்ற ஆங்கிலேயர் இணையற்ற பெரும்படைக்கண் டெதிர்த்து நிற்க
இயலாத போதீற்றில் சைப்ரஸ் மன்னன் பணிந்தனனே யானாலுஞ் சிறையே சென்றான்
பொக்கிஷங்கள் அத்தனையும் ரிச்சார்ட் கொண்டான் இணைந்தவனை அழைத்தேக "லூஸி னா"னும்
ஜெரூஸலத்திலிருந்தாங்கு வந்துற் றானே. 127
வெற்றிபல தொடர்ந்து பெற்று ரிச்சாட் வெற்றி
வீரனென வெட்கமற்று நாடு நாடாய்க் குற்றங்கள் செய்து கொள்ளை யடித்துச் செல்வம்
கொள்ளைகொள்ளை யாய்க் குவித்த போது தன்னைப் பெற்றவளின் துணையோடு தேடி வந்த
புதுமணப்பெண் “பெரங்கேரியா"வைத் தம்மின் உற்றதுணை யாய்க்கொண்டான் 'ஸைப்ரஸ்" தீவை
ஒருசிறிய சுவர்க்கம்போல் அலங்கரித்தே. 128
43

Page 30
44 புனித பூமியிலே காவியம்
பெருஞ்செல்வம் புதுமனைவி புகழ னைத்தும் பெற்றமன்னன் போதையிலே மயங்கி வந்த கருமமென்ன வென்பதையும் மறந்தே இன்பக்
களிப்பினிலே மிதந்திருந்தான் அப்போ தாங்கே வருகைதந்தார் பாதிரிமார் “போப்"பின் தூதாய்
வன்மையுறக் கண்டித்தார் செய்கை கண்டே திருச்சபையின் வருத்தத்தைச் செப்பி னார்கள் தீயவனோ சற்றுமதை மதித்தா னில்லை.
மதப்பற்றுக் கொண்டவனாய் இருந்தி ருந்தால்
மனம்மாறிப் போயிருப்பான் நோக்க மெல்லாம் விதம்விதமாய் புகழ்கொள்ள வேண்டு மென்றே
வெற்றிவீரனாய்த்திகழத் துடித்திட்டானே எதுகூறி னாலுமவன் மனதிற் கொள்ளா
திகழ்ந்துரைத்தான் எரிச்சலுற்றான் ஏச்சும் பேச்சும் பதிலாக இருந்ததவன் வார்த்தை கேட்ட
பாதிரிமார் உளம்நொந்து திரும்பினாரே
விடைகொண்டு பாதிரிமார் சென்ற பின்னர்
வந்ததந்தச் சேதி"ரிச்சாட்" உணர்வு கொள்ள “படைநடத்தப் போகின்றான் பிரஞ்சு மன்னன்
“பிலிப்" "அக்கா"க் கோட்டையின்மேல்" என்பதாக அடைந்தாலோ வெற்றியதில் புகழின் உச்சி
அவன்கரத்தில் தானென்ற பெருமை தோன்ற தடையாகும் தனதுபெயர் உலக ளாவத்
தாமதித்தல் தகாதென்று துணிந்திட்டானே.
“புறப்படுங்கள்" என்றுபடை வீர ருக்குப்
பொறாமைகொண்டு கட்டளையு மிட்டான் ரிச்சாட் துறைமுகத்தில் நின்றமரக் கலங்க ளெல்லாம் துரிதகெதியோடுபுறப் படலாயிற்றே குறையறவே உணவுவகை மதுமா தோடு
கொள்ளைகொள்ளை யாயுத்தத் தளவாடங்கள் நிறைந்திருந்த தவையனைத்தும் வீர ரோடே
நீண்டகடற் பயணத்தைத் தொடர்தற் கென்றே.
129
130
131
132

நோவாவின் கப்பல்
மத்தித்த ரைக்கடலோர் கடலோ வன்றி
மாளிகைகள் நிறைந்தபெரு நகரோ வாங்கே எத்திக்கும் மரக்கலங்கள் நிறைந்து நீரே
இலையென்னு மாறுசெய்த தாரோ நாப்பண் தத்திக்கும் சொர்க்கத்தின் தந்தப் பேழை
தனிலுரும் பேராரோ சுவனத் தாரோ மொத்தத்தில் நயனவடுப் படும்போலன்ன
மாப்பெரிய நாவாய்கள் பரந்தே செல்லும்,
புவனத்தி லிதுபோலு முண்டோ வென்று
பார்ப்போர்கள் அதிசயிக்கும் பாங்காய்த் தூய சுவனத்தின் மாளிகைபோல் சுற்றிச் சூழச்
சேர்ந்தபல கலங்களுடன் வருங்க லத்தில் பவனிவந்தான் ரிச்சாட்தம் இராணி யோடே
பிறிதொன்றில் ஜோன்வந்தாள் கூட வின்னம் அவரிருவ ருடன்பிறந்தாள் மக்க ளான
"ஆத்த"ரொடு இளவரசி ஆனும் வந்தாள்.
புதிதாகப் புலருமந்தக் காலைப் போழ்தில் புதியமணத் தம்பதியர் பார்த்தார் தம்மின் எதிராகத் தோன்றுகின்ற பலஸ்த்தீ னத்தை
இனங்காட்டும் நிலப்பரப்பை அப்போ தாங்கே புதிராகத் தோன்றியவோர் மரக்க லத்தைப்
பார்த்தரிச்சாட் பேரொலித்தான் "பீட்டர்" என்றே “எதிரேபார் தோன்றுவது என்ன" வென்றான் இருவருமே யோர் திசையை நோக்கினாரே
Z நோவாவின் கப்பல்
கண்ணெதிரில் தோன்றுகின்ற கப்பல் கண்டே
கணப்பொழுதில் தலைவனைத்தன் அருகழைத்து “எண்ணமுனக் கென்னவது யாரா கும் நம்
எதிரிகளோ வேறெவரோ அறிவா" யென்றான் உண்மைதனை அறிந்துவந்தே உரைப்பே னென்றே உடனகன்றான் தலைவனுந்தன் னிடத்தை நோக்கி மண்ணாள்வோன் மனையாளோ டாங்குற் றேதன்
மனத்துள்ளே பதில் தேடி அலைந்திட்டானே.
133
134
135
136
45

Page 31
46 புனித பூமியிலே காவியம்
பலஸ்த்தீனம் வந்தடையும் முன்னர் கண்ட
பிரஞ்சுநாட்டுக் கப்பலொன்றை வழிநிறுத்தி நிலைமைபற்றி விசாரித்தான் "அக்கா" அன்று
நேர்கொண்ட படையெடுப்பை அறியும் நோக்கில் பிலிப்மன்னன் பிரஞ்சுமன்ன னென்ப தாலே
பெரிதுபட அவன்திறனை எடுத்துக் கூறி வலுப்பட்டுப் போயிருக்கும் அவன்கை "அக்கா"
வீழ்ந்திருக்கும் என்றுமவர் கூறக் கேட்டான். 137
“பிரஞ்சுமன்னன் படையெடுப்பைத் தாங்கொணாது
பெருந்துன்பப் படுகின்றார் முஸ்லிம் வீரர் விரைவில் "அக்கா" கோட்டைதனை வென்று வெற்றி
வீரனெனப் பெயர்கொள்வா"னெனவுங் கூற “அரியவிந்தப் பேறெனக்கே கிட்ட வேண்டும்
ஆண்டவரே அருளுக"வென்றிரந்தே ரிச்சாட் பெருஞ்சேனை தாங்கிவரும் கப்பற் கெல்லாம்
பொறுமையின்றிக் கட்டளையும் பிறப்பித் தானே. 138
பறந்தனவோ அன்றியவை சேனை யோடு
பாய்ந்தனவோ யாரறிவார் ஆணை கேட்டு திறந்தவிழி மூடிப்பின் திறக்கு முன்னே
தொலைகாதம் போனதென்றால் புதுமை யன்றோ அறிந்திலரே யாருமந்த மரக்க லங்கள்
அத்தனைக்கும் இறக்கைகளே தோன்றிறாற்போல் எறிந்தசிலைக் கொப்பாக ஒவ்வொன் றுந்தன்
எதிர்த்திசையை நோக்கிப்புனல் கிழித்த வாகை, 139
மன்னன்தன் கப்பலிலே முன்னே செல்ல
மிகவண்மிக் காவற்படை யனைத்துஞ் செல்ல பின்தொடர்ந்து படைவீரர் கலங்கள் செல்ல
பெருங்கலத்தில் உணவுபிற சேர்ந்தே செல்லும் அண்மியவை தம்மோடே அடுக்க டுக்காய் ஆயுதங்கள் தாங்கியநா வாய்கள் செல்ல விண்ணோடு நீரதிரும் வாகாய் நீரை
விண்டவையஞ் சென்றனவே வேகத் தோடே 140

நோவாவின் கப்பல் 47
பசிகொண்ட வேங்கைகள்போ லவையுஞ் செல்ல போர்வெறியோ டதில்வீரர் பயணஞ் செல்ல அசைந்தாடித் தொடர்ந்ததுயின் வந்த கப்பல்
அதில்“ஜோனும்" "ஆத்த"ருடன் "ஆணு"ஞ் சென்றார் திசைமாறிப் போகாது சேர்ந்து வந்த
சிறியமரக் கலங்களுமொன் றாகிச் சற்றும் விசைகூட்டிச் செல்லாமல் ஊர்ந்த தாலே
வெவ்வேறாய்ப் பிரிந்துசெல்ல நேர்ந்த தன்றோ. 141
தனையழைத்து மன்னனிட்ட கட்ட ளைக்குத்
தலைபணிந்து தாம்கண்ட கப்பல் தன்னை அணுகவெனச் சிறுகலத்தில் ஏறிப் 'பீட்டர்"
ஆணையிட்டான் ஆழ்கடலைக் கிழிக்க வென்றே அனுகூலஞ் செய்யாத காற்றி னாலே
அமைதியொடு நகர்ந்ததந்தக் கப்பல் பின்னால் கனவிசையிற் றொடருகின்ற கலத்தைக் கூடக்
காணாத பாங்கினிலே கடலின் மீதே 142
மிகஅருகிற் சென்றுமந்த மரக்க லத்தை
மட்டிடவே முடியாத “பீட்டர்" கண்கள் அகலவிரிந்த தனவேதம் யுட் காலம்
அனைத்திலுமே கண்டதில்லை அதுபோ லென்றே செகமறியாப் புதுமையது சொர்க்கக் கூறே
செல்கின்ற தெனவிதயஞ் சொல்ல உள்ளத் திகைப்படைந்தான் பெருங்குன்றம் ஒன்றின் கீழே
தான் தனித்தே நிற்பதுபோல் உணர்ந்திட்டானே 143
பாய்மரங்கள் மூன்று பெருஞ் சிறகு போலும் பறக்கவிரு புறத்தினிலும் முன்னும் பின்னும்
வாய்ப்பாகப் பெருங்கடலின் பெரும்ப ரப்பை வசமாக்கிக் கொண்டு சென்ற ரதுதானோட
ஆய்ந்திதுயார் கப்பலென அறியப் "பீட்டர்
அமையாத வாய்ப்பெண்ணி வருந்தினாலும்
நேயரெவர் தமக்குமிது சொந்த மாக
நிச்சயமாயிருக்காதென்றுறுதி கொண்டான். 144

Page 32
48 புனித பூமியிலே காவியம்
தனதெண்ணந் தனைமன்னன் முன்னே வைக்கத்
தானுமது போலெண்ணந்தனைத்தான் கொண்டேன் எனக்கூறி னான்மன்னன் எதற்கும் நீபோய்
எமதுகப்பல் பத்தினைமுன்னனுப்பென் றானே கணநேரப் பொழுதுள்ளே காரி யங்கள்
கைகூடக் கண்டனரே "அக்கா" நோக்கி முனைகின்ற முஸ்லிம்கள் கப்ப லென்றே
மிகத்தெளிவாய் "ரிச்சாட்டும்" "பீட்டர்" தாமும் 145
“நூஹ"நபி யென்றவர்கள் அழைக்கின் றார்கள் "நோவா"வின் கப்பல்போ லன்றோ விஃது போகாது மறித்ததனைத் தடுக்க வேண்டும்
பெருநாவாய் "அக்கா"சென் றடைந்திட்டாலோ ஆகாதே நம்மவர்தான் அழிவர் கொண்ட
அத்தனையும் ஆயுதங்கள் என்றான் மன்னன் ஏகாந்த மாய்வந்த திதனைக் கொள்வோம்
இலையென்றால் அழித்தொழிப்போம் எனவுரைத்தான் 146
"யாக்கூப்-அல் ஹலபி யெனும் ஆழிச் சேனை
இணையில்லாப் பெருவீரன் தலைமை தாங்க நோக்கி "அக்கா" செல்லுமந்த நாவாய் முற்றும் நிறைந்திருந்த துணவுடனே ஆயுதங்கள் காக்கவென்றே முற்றுகையால் உள்ளி ருந்தே
கவஷ்டமுறும் முஸ்லிம்கள் உயிரை யென்னும் நோக்கோடு "பெய்ரூத்தின் தரையி ருந்தே
நேராக வந்த "தக்கா" நோக்கியஃதே 147
அக்காவை நோக்குமந்தப் பெரு"நா வா"யை அண்மிச்சூழ்ந் திட்டமரக் கலங்கள் தாக்கச் சக்திமிகக் கொண்டிருந்தும் எதிர்க்க வொண்ணாத்
திறனற்றுப் பின்வாங்கி நகர நாவாய் மிக்கசக்தி கொண்டிருந்த ததனி லுள்ளோர்
முஸ்லிம்கள் தேர்ந்தெடுத்த வீரருற்றார் திக்கெட்டுஞ் சூழ்ந்தாலும் ஆரம் பத்தில்
தோல்விகண்டும் பறங்கியர்கள் தொடர்ந்திட்டாரே 148

நோவாவின் கப்பல் 49
அறுநூற்றோ டைம்பதுபேர் வீர ரந்த
அகன்றுயர்ந்த மரக்கலத்தில் நிறைந்திருந்தார் பொறுக்கியெடுத் திருந்தார்கள் திறமை கொண்ட பெருவீரர் தமைமுஸ்லிம் தளகர்த் தர்கள் குறுக்காக வந்துவழி மறிந்தோ ரிந்தக்
குறுகியதோர் படையினரின் எதிர்ப்பைத் தாங்கா, மறுகியொதுங் கிடக்கண்டான் ரிச்சாட் கோபம்
மிகக்கொண்டே அன்னவரை விளித்துரைப்பான் 149
“வெற்றிவாகை பலசூடிக் கொண்டே வந்த
வீரர்களே! என்னவிது வெட்கம் வெட்கம் முற்றாகப் பலமிழந்து போன தென்னே
முஸ்லிம்கள் தனைமுதலில் கண்ட போழ்தே வற்றாத கருணைகொண்ட கர்த்த ரேதான்
வரவைத்தார் இதனையெங்கள் முன்னால் நீங்கள் சற்றேனுஞ் சிந்திக்கா தேனோ விந்தச்
சந்தர்ப்பந்தனைநழுவ விடமுனைந்தீர். 150
சிலுவையினைக் கையேந்திக் கர்த்த ருக்காய்ச்
செய்கின்ற யுத்தத்தில் நமது கையை வலுவடையச் செய்வதற்கே “தேவ மைந்தன்" வரவைத்தார் நம்மெதிரில் துணிவு கொள்வீர் பலமிழந்திக் கப்பலைநாம் போக விட்டால்
பாவமொடு தண்டனையுங் கிட்டும் முன்னக் கலத்தினைநம் வசமாக்க முயலுங் கள் ஓர்
கணப்பொழுதுந் தாமதிக்க வேண்டா" மென்றான் 151
அச்சமுற்றார் பறங்கியர்கள் தங்கள் மீது
"ஆண்டவரின் பிள்ளை'சபிப் பாரே யென்றும் ரிச்சாட்டின் சினத்திற்கும் ஒதுங்கிப் போனோர்
செய்யவழி யற்றவராய் மீண்டுஞ் சென்றார் துச்சமுயிர் என்றெண்ணி மோது கின்ற
துணிவுமிக்க முஸ்லிம்கள் கலத்தைச் சுற்றி கச்சிதமாய் ஓர் வலயம் அமைத்தார் தங்கள்
கலங்களிலே இருந்தொன்றித் தாக்கினாரே, 152

Page 33
50 புனித பூமியிலே காவியம்
கயிறெறிந்து முன்பின்னா யிழுத்துக் கப்பல்
கண்டபடி அலையவிட்டார் கிறிஸ்த்த வர்கள் உயிரினைக்கை யேந்திக்கடல் தனிற்கு தித்தே
ஓராது சென்றவர்கள் மாண்டொழிந்தார் தயவின்றி நெருங்கியவர் தலையைக் கைகால்
தனித்தனியே வாங்கினரே முஸ்லிம் தீரர் அயராது நாற்பதிற்கும் அதிக மென்னும்
அளவுகப்பல் சேர்ந்தெதிர்த்தும் தோல்வி தானே
பிற்பகலைத் தாண்டியுமக் கப்பல் தங்கள்
டியிலகப் படாநிலையில் வெகுண்டான் ரிச்சாட் அற்புதமவ் வழகியநா வாயென் கையுள்
அகப்படச்செய் திடவேண்டும் எனநினைந்தான் மற்றுமாங்கு வந்தவவன் கப்ப லெல்லாம்
முயன்றனவே சேர்ந்தொன்றி யதனை வீழ்த்த கொற்றவனும் அதிசயித்தான் மாய மென்றே
குறிதவறிப் போமோவென் றையுற் றானே
தீவைத்துக் கைப்பற்ற முனைந்தார் அம்பில்
தீயேற்றி ஏவிவிட்டார் தைத்துந் தீண்டித் தாவாத நிலைகண்டே அதிச யித்தார்
தெரிகிலரேன் காரணமென் றாங்கிலேயர் தேவைக்குத் தக்கதுபோல் காடி நீரில்
தோய்த்துலர்த்தி வண்ணமிட்ட தோலைக் கப்பல் மேவிடவே கவசமிட்டு வைத்த தாலே
முயற்சிபலனற்றதுவாய்ப் போயிற் றன்றோ
சுற்றிநின்று தொடர்ந்தவர்கள் தாக்கத் தாமும்
சோராது நின்றெதிர்த்த போதும் ஈற்றில் முற்றாக ஆயுதங்கள் தீர்ந்து போக
முடியாது தனித்துநிற்க இனிமே லென்றே ஒற்றுமையாய் ஒருமுடிவு செய்தார் தம்மில்
ஒருவருமே எஞ்சாது போனா லுந்தான் சற்றுமிவர்க் கிடமளிக்கக் கூடா கப்பல்
சரணடையா நாமேயிங் கழிப்போ மென்றே
153
154
155
156

யூதர்களின் சூழ்ச்சி 51
திட்டமிட்ட படிகலமும் நீரில் ஆழ
திகைப்படைந்தார் பறங்கியர்கள் அதிர்ந்தே போனார் ஒட்டிநின்ற மரக்கலங்கள் படகி லெல்லாம்
ஓர்மையுடன் முஸ்லிம்கள் பாய லானார் வெட்டியவர் குவித்தபிணக் கூட்டத் துள்ளே
வீரநடை பயின்றவருஞ் சொர்க்கஞ் சேர்ந்தார் மட்டற்ற சேதமன்று "ரிச்சாட்" டிற்கு
முஸ்லிம்கள் மிகச்சிலரே சிறைப்பட்டார்கள் 157
உயிர்ச்சேதம் பெரிதென்ற கார ணத்தால்
உளம்வருந்தினான்ரிச்சாட் கப்பல் கூட வயமாகா தாழ்கடலில் மூழ்கிப் போக
விசனமுற்றான் புனிதமண்ணை மிதிக்கு முன்னே செயலெல்லாந் தோல்வியிலே முடிந்த தாலே
சினங்கொண்டான் அபசகுன மென்று ரைத்தான் தொடர்ந்துவந்த செய்தியினைக் கேட்டுத் துன்பந்
தொடருகின்ற தேயென்றான் துயருற் றானே 158
8 யூதர்களின் சூழ்ச்சி "கான்ராட்"டின் மாளிகையுட் புகுந்தே யாங்கோர்
கட்டிடத்தின் அறையினிலே துயின்ற பெண்ணை காணாது பிறர்கண்ணில் மன்னைத் தூவிக்
கவர்ந்துவந்த மனிதன்தன் அச்சம் நீங்கி கானகத்து வழிநடந்தான் யாருந் தன்னைக்
கண்டிடவோர் வழியுமிலை யென்பதாலே வானகமும் உதவியதே ஒளிசிந் தாது
வாய்ப்பையெண்ணி மகிழ்ந்தவனாய் நடக்க லானான். 159
மரஞ்செறிந்த பெருவனமாய் இருந்த தாலும் மையிருளில் வழிதேடிப் போவதாலும் கரந்தாங்கத் தோள்சுமக்குஞ் சுமையி னாலும்
கனதூரங் கால்நடந்த களைப்பினாலும் சிரத்தையின்றிப் பிறர்காணா ரென்ப தாலும்
சித்தமின்னும் தெளிவடையாப் பெண்ணி னாலும் உரத்தவள்தான் உணர்வடைந்தே கூவி னாலும்
ஒருவருமே வராரென்றே மெல்லச் சென்றான் 16 O

Page 34
52 புனித பூமியிலே காவியம்
எண்ணியது தவறென்றே இயம்பு தல்போல் இருசாமங் கழித்தவிராப் போழ்தில் பக்கம் எண்ணரிய புரவிகள்பாய்ந் தோடுஞ் சப்தம்
எஃகியகா னிடையுள்ளும் புகுந்தே கேட்கும் மண்ணாகிப் போமோவென் முயற்சி யென்றே
மனமஞ்ச மெள்ளமெள்ளப் பதுங்கியெங்கும் கண்காணா தொளிந்துகொளப் பாது காப்பாய்க்
காரிருளில் இடமொன்றைத் தேடி னானே 161
தேடியெங்கும் ஒளிந்துகொள இடங்கா ணாது தொலைதூரம் நடந்துகளைத் தலுத்த போது மூடியதன் இருட்போர்வை நீக்கி மெல்ல
முகம்மலரும் உலகுகண்டே அச்ச முற்றான் தேடியெவ ரேனும்வந் துற்றா லென்ன
செய்வதென மனங்குழம்பும் வேளை யாங்கே நாடியது கிடைத்திடவே மகிழ்ந்தான் காட்டின்
நடுவிலொரு பாழ்வீட்டைக் கண்ணுற் றானே 162
சென்றதனுள் நுழைந்தவன் தோள் சுமந்து வந்த
சுமையினைக்கீழ் இறக்கிவிட்டோர் நெடுமூச் செய்தி கொன்றனனே ஆயாசம் அப்போ தாங்கே
குளிர்த்தென்றல் வீசிடப்பெண் உணர்வு பெற்றாள் நன்றாகக் கண்தூங்கி விழித்தாள் போல
நடந்ததறியாதவளாய் விழிசுழற்றி ஒன்றாக நினைவுகளை ஒருசீ ராக்கி
ஒர்ந்தனளே நடந்ததென்ன மாய மென்றே 163
பட்டுமஞ்சந் தனிலுறங்கும் போது வந்த
பயங்கரவம் மனிதனையும் அச்சத் தால்வாய் விட்டலறப் போகையிற்கைக் குட்டை யாலே
வெளிவாரா தோசைதனைத் தடுத்துக் கைகால் கட்டியதை யோர் சிறிது நினைந்தாள் பின்னே கண்மூடிச் சிந்தித்தாள் விழித்த போது கிட்டநின்ற உருவத்தைக் கண்ணுற் றேவாய்
கூவினளே 'ஆ நீயா" என்ற வாறே 164

யூதர்களின் சூழ்ச்சி
புன்னகைக்க முனைபவன்போல் முகத்தைக் காட்டிப் பேசினனே "ஆம் நானே தான்பார்" என்றான் “என்னையெதற் காகவிங்கு எடுத்து வந்தாய்"
என்றனளே "பழிவாங்கத் தானே" யென்றான் “என்னபழி எதற்" கென்றாள் இங்கே என்னை
என்னசெய்யப் போகின்றாய்" என்றாள் மீண்டும் “என்னசெய்வ தென்றெனக்குந் தோன்றி னால் நான்
இதுவரையுஞ் செய்திருப்பேன்" என்றிட்டானே
“முன்பிருந்த மனவுறுதி இருந்தி ருந்தால்
மூர்க்கனைப்போல் வதைசெய்து கொன்றிருப்பேன் பொன்மேனிப் பேரழகேiபலநா ஞன்னைப்
பார்த்ததனால் மனவமைதி இழந்தேன் இன்றுன் கன்னியுடல் கைப்படவென் கருத்தை மாற்றிக் களங்கமற்ற மனத்தோடு கைப்பிடிக்க எண்ணியுள்ளேன் எனையேற்று வாழ்வா யன்றி இறப்பதுவா வெனமுடிவு செய்வா" யென்றான்
வஞ்சியுளம் பதைபதைத்தாள் அவனை நோக்கி "நான்வாழ வேண்டிடிலுன் மனைவி யாக
நேருமென்றே கூறுகிறாய்" என்றாள் - சொல்வான் "நான்செய்யும் பேருதவி யுனக்காம் இக்கால் நோற்கின்ற சபதமுமே முறிப்பேன் எங்கள் வாணாளின் இறுதிவரை யொன்றாய் வாழ
வாய்ப்பளிப்பேன் சம்மதிப்பாய்" எனவு மன்னாள்
“இணங்கிடநான் மறுத்தால்நீ யென்ன செய்வாய்"
என்றவள்வாய் மூடிடமுன் பாய்ந்தே" இந்தக் கணத்திலுன்றன் உயிர்பறிப்பேன் காண்பா' யென்றோர்
கட்டாரி தனையுருவிக் கையெடுத்தான் "பிணமாவாய் என்னைநீ வெறுத்திட் டாலோ
பார்க்கவிங்கு யாருமிலை" யென்றான் வஞ்சி தணலிலிட்ட புழுப்போல துடித்தாள் அச்சந்
தாங்காதே "ஐயோ!"வென்றலறி னாளே
165
166
167
168
53

Page 35
54 புனித பூமியிலே காவியம் Ν
விண்ணதிர அலறியவள் விழிநீர் சிந்த
வினவினளே விசித்தவனை நோக்கி "ஐஸக் அண்ணனுனக் கிழைத்திட்ட கொடுமை எண்ணி
அடாததுநீ எனக்கிழைத்தல் தகுமோ“ வென்றே "அண்ணனெனும் பாக்கியத்தை இழந்தே னுன்றன்
அண்ணனெந்தன் தங்கையினை அழித்த தாலே எண்ணியெண்ணி அவனுமழ வேண்டும் என்போல்
இழந்துன்னை யென்பதனால் கொணர்ந்தே" னென்றான்169
“வேண்டாமிப் பாதகத்தைச் செய்ய என்னை விட்டுவிட்டால் அண்ணனிடங் கூறி நீயும் வேண்டுபொரு ளத்தனையும் பெற்ற எளிப்பேன்
வாக்களித்தேன் மாறு செய்ய மாட்டே" னென்றாள் “வேண்டுவது தந்திடிலும் தங்கைக் கஃது
லையாகா துன்னைநான் மணந்தி டென்றே வேண்டிடினும் நீயுமதற் கீடா காய்நான்
வழங்குகின்ற வாய்ப்பென்றே மனங்கொள்" என்றான் 170
“எப்படிநான் உன்மனைவி யாவேன் "ஐஸ்க்"
என்மதமோ கிறிஸ்த்துமதம் நீயோ யூதன் அப்படியே விரும்பிடினும் நான்நா டாளும்
அரசபரம்பரையிலுதித் தவளா மன்றோ நப்பாசை கொள்கின்றாய்" யென்றா ளந்த
நிலையினிலும் இகழ்ச்சிபொங்க 'ஹெலன்'அவ் வார்த்தை செப்பவிய லாதபெருஞ் சினத்தைத் தூண்டச்
சீறினனே ஐஸக் கண் சிவக்கப் பின்போல் 171
"கான்ராட்டின் தங்கையென்ற கர்வத் தாலோ கண்டபடி யுளறுகிறாய் நீங்கள் எம்மேல் பூண்டுள்ள வெறுப்பினைப்போற் றாமே நாமும்
ண்டவெறுப் புங்கள்மே லறிவா" யென்றன் “வேண்டிடினில் உயிரின்மேல் உவப்பு னக்கு
வருவாயோர் நொடிதானுந் தாம திக்க வேண்டாமீங் கிருப்பதுபே ராபத்“ தென்றே
வஞ்சியின்கை பற்றினனே "வாவா" வென்றே. 172

யூதர்களின் சூழ்ச்சி 55
பிடியுண்ட கைதன்னை விடுவித் கத்தன்
பலங்கொண்ட மட்டுமிழுத் தாளே யோரீர் அடிகூடப் பின்வாங்க வியலா வாறே
அவன்பிடியுள் அகப்பட்ட நிலையுணர்ந்தாள் "முடியாதோ யாருமெனைக் காக்க" வென்றே
மிகுவொலியிற் குரல்கொடுத்தாள் கேட்ட "ஐஸ்க்" இடியிடியென் றேநகைத்தான்" இங்கே யாரும்
இல்லையுனைக் காப்பாற்ற வா"வென்றானே 173
யாருமிலை யுனைக்காக்க வாவென் றான்வாய்
இன்னுமொரு வார்த்தைசொல முன்னராங்கே சேருமொரு கணத்திலெனும் வாறாய்க் கேட்கும் குளம்பொலிகள் காதடைக்கக் கலக்க முற்றான் பேரதிர்ச்சி யால்வதனம் விகார முற்றுப்
பெருஞ்சினத்தால் கண்களுமே சிவக்க அன்னாள் நேரெதிராய் மகிழ்வுற்றாள் காலைப் போழ்தில்
நெகிழுகின்ற பங்கயத்தை வென்றிட்டாளே 174
மகிழ்வுகண்டு மிரண்டெழுந்தான் மிரட்டும் பாங்காய்
“மூச்சுவிடா தென்னோடு வாநீ யன்றேல் வகுந்திடுவேன் இருகூறாய் உன்றன் நெஞ்சை
வருவினைக்கு நானஞ்சேன்" எனப்பணித்தான் மிகவருகில் கரம்பற்றிக் காதி னுள்ளே
மந்திரம்போல் உச்சரிக்கச் செய்வா னென்றே நகர்ந்தனளப் பொல்லானின் பின்னே "ஏய்யார்
நில்நில்நீ" எனுமதட்டல் கேட்க நின்றார் 175
அதட்டலினால் அதிர்ந்திட்ட "ஐஸக்" நின்றோர் அடிநகர மாட்டானாய்த் திரும்பி நோக்கப் பதட்டமுற்றான் இருமுஸ்லிம் வீரர் முன்னே பரிகளிலே வீற்றிருக்கக் கண்டதாலே அதிட்டமென்றன் பக்கத்தே வந்த தென்று
அச்சமழிந்தவன்பிடியில் விடுபட் டேதன் எதிர்நின்ற வீரர்முன் ஒடிச் சென்றே
“எனைக்காப்பீர்' என 'ஹெலனும்" வேண்டி னாளே 176

Page 36
56 புனித பூமியிலே காவியம்
குதிரையின்மீ திருந்துமுதற் குதித்தி றங்கிக்
கோமகன்"தா ஹிர்" அவளின் கரங்கள் பற் “மதிசோர வேண்டாம்நீ பெண்ணே யந்த
முரடனைநாம் கவனித்துக் கொள்வோ" மென்றான் சதிதோற்றுப் போனதனால் விதிமா றிப்போய்ச்
சங்கடமுஞ் சூழ"ஐஸ்க்" நின்றிருந்தான் அதிகார தோரணையில் அவனை நோக்கி
ஆணையிட்டான் “கைதுசெய்க" என்றே தாஹிர்
ஆணையிட்ட பின்னருகில் நின்றி ருந்த
அழகுமகள் தனைத்தனது விழியுள் வாங்கி நாணமுற்று தரை நோக்கச் செய்தான் அன்னாள்
நன்றிபொங்க நின்றிருந்தாள் முகஞ்சி வந்தாள் வானிருளை நீக்கியொளிக் கதிரில் மூழ்கும்
வேளையதில் வஞ்சிமனக் கவல பூழிந்தே தானிருக்கும் நிலைமறந்தாள் 'தாஹிர்" என்னும்
தாரகைநெஞ் சுறைந்தொளிர மகிழ்ந்திட்டாளே
9. ராணியின் கப்பல்
பிரஞ்சுமன்னன் பிலிப்முதலில் சென்ற தாலே
பொறாமைகொண்ட ரிச்சாட்தன் படையினர்க்கு விரைந்துசெலப் பணித்ததனால் மரக்க லங்கள்
வெகுதூரம் முன்சென்று மறைந்து போக வருவழியில் கண்ணுற்ற தீவொவ் வொன்றின்
வற்றாத பேரழகில் மயங்கி ஈற்றில் ஒருகலமே தனித்தததில் பயணஞ் செய்தாள்
உடன்பிறந்தாள் மக்களொடு "ராணிஜோ" னும்
தடுத்தான்முன் தலைவன்பின் செல்லல் மிக்கத் தவறென்றே யானாலும் மக்களுக்காய்த் தடுத்தாள்"ஜோன்" வேகத்தைக் கூட்டிச் செல்லத்
தமைநோக்கும் ஆபத்தை அறிந்தா ளில்லை அடுத்துவரும் பலஸ்த்தீனக் கரையை எண்
அச்சமிலை எனத்தலைவன் நினைவு கொள்ள அடுத்தந்தச் சோதனையாம் அனைத்துப் பேரும் அல்லலுற வைத்தபெரும் அழிவா யிற்றே
177
178
179
18O
 

ராணியின் கப்பல்
இடைவழியில் முஸ்லிம்கள் மரக்க லத்தை
எதிர்த்தழிக்கும் முயற்சியிலே அதனை நோக்கிப் படையேவி விட்ட"ரிச்சாட்" போரின் போது
படுதோல்வி கண்டதனால் கலங்கி நிற்க உடன்வந்த கப்பல்களில் ஒன்று மட்டும்
ஒன்றிவர வில்லையெனுஞ் சேதி கேட்டான் விடைகாண வுடன்பணித்தான் வராக்க லத்தில் வந்தவர்தம் குடும்பத்தா ரென்பதாலே
மீண்டுசென்று வந்தவழி தனைத்து ழாவி
மீட்டுவர வேண்டுமென ஆணையிட்டான் வேண்டாத வார்த்தைகளால் அங்குள் ளோரை
வைதிட்டான் வாய்க்குவந்த வாறே பொல்லான் நீண்டகன்ற கடற்பரப்பின் திக்கெல் லாமே
நாவாய்கள் ஒடட்டும் என்றான் கண்முன் தோன்றியவை நொடிக்குள்ளே தோன்றாத் தூரம் தேடிமறைந்தனவார்த்தை முடியுமுன்னே
பொழுதடையப் போவதற்கு முன்பே வானம்
பொறுமையற்றுக் கறுத்ததுவோ தான்தனித்தே வழிசெல்லுங் கப்பலுக்கு வருமுன் கேட்டை
வலிந்துரைக்க வென்றாமோ இயற்கைச் சீற்ற மொழிமுதலோ முஸ்லிம்கள் தமையொ ழிக்க
முயலுகின்ற கிறிஸ்த்தவரின் மனத்தின் பாங்கோ தழுவியதேன் வான்மகளைக் கருமே கத்தாள் துலங்கிநின்ற கதிரவனை மறைத்திட்டாளே
வேறு
கருமை கொண்டு வானி ருண்டு
கயவர் நெஞ்சம் போலவே உருவங் கொண்டு வொளிம றைத்திவ்
வுலக மிருளில் மூழ்கிடக் கருவிற் சுமந்த நீரை யேந்திக்
கரிய முகிலின் கூட்டமே உருகி வடிவ தோவெ னும்வா
றோங்கிக் பொழிந்த தெங்குமே
57
181
182
183
184

Page 37
58 புனித பூமியிலே காவியம்
கரிய மலையி னுருவி லொன்றுங் கரியும் பரியும் போலுமே பெரிய தாயுஞ் சிறிய தாயும்
புரண்டு வான வீதியில் உருவம் மாற்றி - ஓடும் முகில்கள்
ஒன்றை யொன்று மோதுங்கால் சொரியும் மழையி னோடு இடியும்
மின்னல் தோன்றி மறையுமே 185
காற்று வலுவி னால லைகள்
கடலின் நீரை யள்ளியே சீற்ற மோடு கப்ப லெங்குஞ்
சிதறியோடச் சாடிடும் மாற்று வழிய மாக நீரை
மொண்டு வெளியில் வீசுவோர் தோற்றுத் தரையில் புரண்டு வீழ்ந்து
துடிதுடித்து மாய்ந்தனர் 186
பொங்கு கடலின் பரப்பி னிடையிற்
பட்ட கப்பல் ஆழியில் அங்கு மிங்கும் அலைக்க பூழிந்த தாடும் கறங்கு போலவே தெங்கி னுயரப் பேர லைகள்
திக்க னைத்தும் ஓங்கியே முங்கி யெழுதல் போல நீருள்
மறைத்தொளித்துக் காட்டுமே. 187
கலமும் பெரிய தான தாலே
கடலில் மூழ்கிடாதுதோள் வலிமை மிக்க வீரன் போல
வாரி தீயை வென்றது நிலையி லாது சுழற்றிக் கடலின்
ரில் மூழ்க வைக்கவே
பலம னைத்துங் கூட்டி முயன்றும்
பலனி லாது போனதே 188
 

ராணியின் கப்பல்
தாங்கி வந்த மனித ரோடு
தளம்நிறைந்த பொருளெலாம் ஓங்கி வீசுங் காற்றி னாலே
உருண்டு புரண்டு சிதறிடக் தேங்கு நீரைச் சேர்த்தெ டுத்துச்
சிலர கற்ற முயன்றனர் ஆங்க வர்கள் முயற்சி தோற்றே ஆழ்கடற்குள் மூழ்கினார்
காற்ற டித்த வேகத் தோடு
கடலலைகள் கலத்திலே சீற்றங் கொண்டு மோதி யகலத்
தோன்று மொலியுஞ் சேர்ந்திட நாற்பு றங்க ளும்பொ ருட்க
ளுருளு மொலியுங் கூடியே போர்க்க ளத்தை யொத்தி ருந்த
பயங்க ரத்தைப் புகலுவாம்
ஒருபு றத்தி லிருந்த வர்கள்
ஓங்கி வீசுங் காற்றினால் மறுபு றத்தி லொதுங்கும் போது மரங்க ளோடு பொருள்களும் உருள மோதி யுயிரி ழப்ப
ஒதுங்கு முடல்கள் நீரொடும் புரளு மங்கு மிங்கு மாகப்
பார்க்கொணாத கோரமே
வேறு
பின்னிரவு வரை தொடர்ந்து வீசிக் காற்று
பேரிழப்பையுண்டுபண்ணி னாலும் ஈற்றில் வன்மையழிந் தொடுங்கிடவே புயலால் கப்பல்
விபரமறியாதிருளில் மூழ்கி நிற்கும் இன்னலழிந் ததுவெனினும் இருப்ப தெந்த
இடத்திலெனத் திசையறியா "மீகா மன்" பாய் பின்னிவைத்த சுருக்கவிழ்த்தே விட்டா னஃது போகுவழி போகட்டும் எனநினைந்தே
59
189
190
191
192

Page 38
60 புனித பூமியிலே காவியம்
படிந்திருந்த இருளழியப் பகல வன்றன்
பொற்கதிர்கள் தனைவீசிப் புன்ன கைத்தான் கொடியவன் கைப் பட்டுடலை இழந்து கற்பைக்
கொடுத்தவள்போல் நிற்குமந்தக் கப்பல் கண்டே விடிந்ததன்பின் வேறுவழி யற்று முன்னர்
வருங்கரையை அடைவதுவே நன்றென் றெண்ணி தொடர்ந்தான்தம் பயணத்தைக் கிழக்கு நோக்கித்
தொடுகின்ற கரைசேர லாகு மென்றே 193
கிறிஸ்த்தவர்கள் வாழுகின்ற பலஸ்த்தீ னத்தின்
கரையொதுங்கினாலதிட்டந் தானே யன்றி மறுத்தொருகால் முஸ்லிம்கள் வாழ்பு லத்துள்
மண்டியிட்டுச் சரணடைந்த போதும் நன்றே துறக்காது கடலிலுயிர் தப்பிப் போதல்
தெய்வவருள் பிடியுண்டால் பின்னோர் நாளில் சிறைமீண்டு விடுதலையும் பெறலா மென்றே
ந்தனையும் வலுப்பெறவோர் கரையடைந்தார் 194
10. இவரோ சலாஹ சத்தீன்?
“எத்தனைநாள் மறைத்துவைக்க முடிய மென்ற எண்ணத்தில் உண்மைசொல மறுக்கின்றீர்கள்
சத்தியத்தை மூடிவைக்க இயலா தென்னுஞ்
சான்றோரின் வாக்கறிய மாட்டீ ராமோ
இத்தனை நாள் யாரென்றே சொல்லா நீங்கள்
இன்றேனும் வாய்திறப்பீர் சொல்வீர்" என்றான்
சுல்த்தானின் மகனான “அஸிஸ்"தன் முன்னே
சொல்லொன்றுஞ் சொல்லா தோர் தமைவிழித்தே 195
தன்னெதிரே வீற்றிருப்போர் யாரென் றின்னும் தெரியாத “மலிக்குலஸிஸ்" வினாத்தொடுக்க "இன்னுமென்ன சொல்லவுண்டு நாங்க ளெல்லாம்
இங்கிலாந்து மன்னருக்கு வேண்டி யோர்கள் சொன்னதுபோல் பிரபுவம் சத் தோர்க ளன்றி ടിg' ||18. எதுவுமில்லை புதிதாய்க் கூற மன்னர் மகன் வேண்டுவது இதுத் விர்த்து
வேறென்ன வெனவினாவாற் பதிலுரைத்தார் 196
 

இவரோ சலாஹ சத்தீன்?
சிசிலிமன்னன் துணையாள் "ஜோன்" முன்னி ருக்கச்
சேர்ந்தவளோ டின்னுஞ்சில பெண்களோடு அசையாது வவன்முகத்தைப் பார்த்த வாறே
அமர்ந்திருந்தாள் "ஆன்"அண்ணன் 'ஆத்த" ரோடே திசைமாறி வந்தவர்கள் சேர்ந்த தெந்றும்
துணைசெய்யும் மனங்கொண்ட முஸ்லிம் கள்தம் வசமிருந்த கடலோரப் பிராந்தி யத்தில்
விருந்தினர்போல் உபசரிக்கப் பட்டா ரன்றோ 197
தயவுசற்று மிலாதகொடுங் கோலன் செய்யுந் தண்டனைபோல் பின்னிரவு வரையடித்த புயலோய்ந்து கடலமைதி கொண்ட பின்னர்
பாயவிழ்த்தே கரைநோக்கி வந்தோர் சற்றுப் பயமோய்ந்த நிலையினிலும் தலைவன் சொல்வான்
"பேராபத் தழிந்தாலும் ஒடிந்த கப்பல் செயலிழந்து போனாலோ ஆபத் தேதான்
சேர்ந்துகரை தொட்டபின்னே விடிவாம்" என்றே 198
கரைசேர மாட்டோமோ சேரு வோமோ கடலோடு கடலாகிப் போமோ வென்ற புரியாத நிலையினிலே கரையைக் காணப்
பெருமகிழ்வு கொண்டார்கள் வினாடிக் குள்ளே அறியாத ஆபத்தில் மனமொ டிந்தார்
"ஆழிக்கல்" லொன்றோடு கப்பல் மோதிக் குறையாக இருந்தபெரும் பழுதை யெல்லாங்
கூட்டிடவே பிளவுண்டு கமிழ்ந்த தாலே 199
பறங்கியரைக் கண்டிக்க "ஹைஃபா' வுக்குப்
பேரரசர் மகன்"அஸிஸை" அனுப்பி வைக்கப் புறங்கண்டான் "ஷவ்ஃபுலாமீர்" என்னும் ஊரில்
பறங்கியரை எனவறிந்தோம் முன்னோர் போது சிறைகொண்டு சென்றபெண்ணைத் தேடிப் பின்னால் செல்கவென 'ஸைபுத்தீன் தனைப்பணித்தே மறுபடியும் "ஹைஃபா'வந்த தடைந்தா னாங்கே
மன்னவரின் மற்றும்ஒர் ஆணை கண்டான் 2OO
61

Page 39
62 புனித பூமியிலே காவியம்
மிக்கதிறன் கொண்டபெரு வீர னாயும் மிகுதந்திரத்தினனுமான "ரிச்சாட்" தக்கபெரும் படையோடு பலஸ்த்தீ னத்தின் தரைநோக்கி வருகின்றா னெனவ றிந்தே "அக்கா"வின் துறைமுகத்தென் கரைதொ டங்கி
அறுதி"ஹைஃபா வரைதம்மின் ஆதிக் கத்தைச் சக்திமிக்க தாக்கவென “அஸிஸை" மன்னர்
சலாஹுத்தீன் பணித்திருந்தார் ஆணை அஃதே 201
உத்தரவு பெற்றமகன் வீர ரோடே
ஒரெறும்பு வூர்ந்தாலும் அறியும் பாங்கில் சித்தமொன்றிக் கண்கணித்தான் கடலோ ரத்திற்
சஞ்சரிக்கும் படகுகளைத் துணையாய்க் கொண்டான் அத்தகைய படகுகளி ளொன்று “ஜோனின்"
அந்தரித்துக் கரையொதுங்குங் கப்பல் கண்டே வத்தியுண்ட வெடியுண்டை போலும் நீரை
வகிடெடுத்துச் சென்றததன் விபரம் ஆய 2O2
ஆரெவரென் றறிகின்ற நோக்கில் வேகம்
அத்தனையுங் கூட்டிவந்த படகிருந்தோர் பாறையிலே மோதுண்ட கப்பல் கண்டே
பாதுகாக்க வேண்டுமென முடிவு கொண்டார் நீரறுத்து வருமதனைக் நோக்கி விட்ட
நாவாயின் றலைவன்"ஜோன்' தனைவி விரித்தே கூறிடுவான் “மஹாராணி கர்த்தர் தம்மின்
கருணையினால் தப்பவழியுண்டா" மென்றே 2O3
"வருகின்ற படகிருப்போர் நம்மைக் காக்க
வாய்ப்புண்டு நீங்களுங்கள் குடும்பத் தோடு கரையேறி விடுங்கள் நாம் நீந்திச் செல்வோம்
கவலையில்லை வருவோர்நம் மதத்தோ ராயின் மருவுமவர் முஸ்லிம்க ளெனிலோ" வென்று
மீகாமன் வாய்முனங்க ராணி ஜோனும் "ஒருவருமே யாரெவர் நாம் என்ற உண்மை
உரைத்திடவே கூடா"தென் றானை யிட்டாள் 2O4.

இவரோ சலாஹ சத்தீன்?
மரத்துண்டஞ் சிலவற்றை ஒன்றாய்க் கட்டி மாதர்க ளனைவரையும் ஏறச் செய்து வருகின்ற படகினுக்காய்க் காத்தி ருக்க
வந்தவர்கள் தம்மோடு சேர்த்துக் கொண்டார் கரைநோக்கி நீத்தியவர் ஆங்கி ருந்த
காவலர் கைப் பட்டுடனே கைதியானார் அரசர்குலத் தோடுடனே பெண்க ளெல்லாம்
ஆதரவு பெற்றார்கள் அஸிஸி னாலே 2O5
கடலினிலே மூழ்கியிறக் காது காத்துக்
கரைசேர்த்த வீர ரொடு "அஸீஸoம்" சேர்ந்தே
உடனழைத்து வந்தான் “ஜோன்' 'ஆத்தர்” “ஆனை"
ஒருதீங்குஞ் செய்யாது பாசறைக்கே
டைகாண முடியாத கேள்வி யொன்
வரித்ததவ னுளத்தினிலே இவர்யார்? என்றே
இடையூறு வத்தனைக்குள் ளான போதும்
இராஜகுலத் தோரனைய வாகு கொண்டே 2O6
மன்னனது தங்கையென்றும் மருக ரென்றும்
முஸ்லிம்கள் அறிந்து கொண்டால் விடுதலைக்குப் பின்னமுரு வாகுமெனும் எண்ணத் தாலே
பொய்யுரைக்கப் பணித்திருந்தாள் சிசிலி ராணி என்னவொரு இடர்வரினும் யாருந் தம்மை
இங்கிலாந்து மன்னர்தம் சொந்த மென்றே தன்னையறி முகஞ் செய்ய வேண்டா மென்றாள்
தக்கதென மற்றோரும் ஒப்பி னாரே 2O7
“பிரபொருவர் குடும்பத்தார் நாங்க" ளென்றே
பொய்யுரைத்த “ஜோன்'வார்த்தை பொய்யே யென்று உறுதிகொண்ட “அஸிஸ்" அவரை நோக்கிச் சொல்வான்
“உண்மைசொல மறுக்கின்றீர்" என்றே யின்னும் “உரியபடி செய்தியொன்றை மன்ன ருக்கு
உடனனுப்பி வைத்தேன் நான் பதில்கிடைத்த பிறகேதான் தொடர்ந்தென்ன செய்வ தென்று
புரியுமது வரைபொறுப்பேன்" எனவு ரைத்தான் 208

Page 40
64 புனித பூமியிலே காவியம்
'தூதனுப்பு முன்நீங்கள் யார்தா மென்று
தெரிந்திருந்தால் தந்தையதை அறிந்திருப்பார் ஏதுசெய்ய வேண்டுமென ஆணை கூட
இட்டிருப்பா ரெனினுமோ ருறுதி சொல்வேன் தீதெதுவும் நடந்திடநாம் விடவே மாட்டோம்
திடமாக நம்பிடுவீர்" எனவு ரைத்தே மோதியதன் விழிகளையீர் விழிகள் மீது
மீட்கவியலாதவனாய் மீட்ட கன்றான்
அசையாது பொன்வண்ணச் சிலையைப் போல
அவன்பேசும் அழகினிலுந் தோற்றங் கண்டும் பிசகாத விழிமலரில் பட்ட தூய
பார்வையெனும் பனித்துளியால் உணர்வு கொண்டே பிசகொன்றை நெடுநேரஞ் செய்தி ருந்த
பாங்கினளாய் வெள்கிமனம் மாற 'ஆனும்" திசைமாற்றி னாள்பார்வைத் தேனை யுண்டே
தியங்கியதன் விழியகற்றி "அலீஸும்" சென்றான்
யாரின்மேல் யார்மயங்கி னாரோ யாரை
யார்மயக்கி னாரோயார் அறிகுவாரோ தேராத மனவுணர்வில் பிரிந்தார்; தம்மைத்
தாமிழந்த நிலையினிலே “அஸிஸும்" "ஆனும்" பேராபத் தாழ்கடலில் நிகழ்ந்த போது
பயந்தமனம் நினைந்ததனை மகிழ்ந்த தின்றே நேராது போயிருந்தால் புயலன் றின்று
நிகழாதிச் சந்திப்பென்(று) "ஆன்நி" னைந்தாள்
நிகழ்ந்ததெலாங் குறித்துத்தன் தந்தை யார்க்கு
ருபமொன்றை யனுப்பியதன் பதிலுக் காக மிகவார்வங் கொண்டுமன்னர் மகனி ருந்தான்
மகாராணி தனைக்கண்ட மறுநாள் "அக்கா’ப் பகுதியினி லிருந்தே "அல்-மலிக்குல் ஆதில்"
பேரரசர் தம்மிளவல் வந்தே “ஈங்கு வகையாகச் சிக்குண்டோர் யாரா ரென்ற
விபரமறி வாயோ' வென் றஸிஸைக் கேட்டார்
209
210
211
212

ஹெலனின் அண்ணன்
“இதுவரையுந் தெரிந்துகொள்ள முடிய வில்லை
என்று மகன் பதிலளிக்கச் சிறிய தந்தை "அதையுனக்குத் தெரிவிப்பேன் வாவென் னோடே
அவர்களுறை பதியடைவோ"மெனவுரைத்தார் புதிதாகக் கண்டவரை யுற்று நோக்கிப்
புன்முறுவல் செய்துசற்று முன்னே சென்று எதிரிருக்குஞ் “ஜோன்" வதனம் நோக்கி மற்றோர்
எதிர்பாரா வார்த்தைகளை விளம்பி னாரே 213
“சரியாக உபசாரஞ் செய்திட் டானோ
சிசிலிமகா ராணியாரே என்றன் பிள்ளை உரியபடி செய்திருப்பான் “ஆனுக்" கெந்த
ஊறும்வர விட்டிருக்க மாட்டா" னென்றார் பரிகாச மற்றுமெள்ள முறுவ லித்தே
பாசத்தோ டண்டை சென்று முதுகைத் தட்டி அருகிருந்த இளவரச னிடம்வி எளித்தார்
"ஆத்தரிள வரசர் சுகந் தானோ" வென்றே 214
அனைவருக்கும் பெருவியப்பாம் "அலீஸி' னோடே "ஆத்த"ருடன் "ஆனு'க்கும் “ஜோன்'ரா னிக்கும் தனித்தனியே ஒவ்வொருவ ரிடத்தும் வந்து தேகநலம் கேட்குமவர் செய்கை கண்டே மனத்திலொரு முடிவுகொண்டாள் "அஸிஸை" நோக்கி மகனென்று விளித்ததனால் “ஜோன்'மா மன்னர் எனப்போற்றப் படும் சுல்தான் இவர்தா னென்றே
இதயத்துட் புதுமையாயோ ருணர்வினோடே 215
11. ஹெலனின் அண்ணன்
G
“மார்க்விஸ்கான் ராட்" டென்னும் “டைர்" கோட் டையின்
மதியூகம் மிக்கவீரர் தலைவன் முன்னாள் போர்முறைகள் அனைத்திலுமே ஆற்றல் மிக்கோன்
பலமொழிகள் கற்றவுயர் அறிஞனாவான் சீரிளமை கொண்டதிரு வருவன் வார்த்தைச்
சிலம்பாடிப் பிறரைவெல்லுந் திறமை யாளன் தேர்ந்திருந்தான் "உளவியலை எவர்க்கும் அஞ் சாத்
துணிவடையோன் எனும்பெயரும் பெற்றிருந்தான் 216
65

Page 41
66 புனித பூமியிலே காவியம்
முன்னொருத்தி மனையாளாய்த் துணையி ருக்க மற்றொருத்தி கரம்பற்றி னானே நண்பன் தன்னிளமைத் தங்கையினைத் தந்தி ருந்தான்
தனக்கொருகாற் போரிற்றோள் தந்ததாலே "கொன்ஸ்ட்டான்டி நோபிளுக்கு மன்னன் அன்னான்
கொதித்ததன்று கிறிஸ்த்துலகம் கலங்கா"கான்ராட்" என்னவரி னும்மெதிர்த்துத் துணிந்தே நின்றான்
இரும்பான நெஞ்சினனாய் அற்றை நாளில்,
"கன்ராட்டின் தந்தை “வில்யம்" சுல்தான் கையில்
கட்டுண்டு சிறையினிலே வாழ்ந்த நாளில் பன்நூறு முஸ்லிம்கள் கிறிஸ்த்தோ ராலே
படுகொலைக்குள் ளானார்கள் நெஞ்சம் விம்மித் தன்வசமா யுள்ள"வில்யம்" போன்றோ ருக்குத்
தண்டனையாய்க் கொன்றுவிட சுல்தான் ஏவிப் பின்னதனைச் செய்யாதும் விட்டால் உள்ளப்
பரிவுமிகக் கொண்டதனால் விடுவித் தாரே
கொலையுண்ட முஸ்லிம்கள் குடும்பத் தார்க்குக்
கொடுக்கவென நவஷ்டமுதல் தருவோர் வேண்டின் செலலாமென் றாணையிட்டார் சுல்தான் கான்ராட்
சிறிதேனும் மனமிளகா துரைத்தான்" இன்னும் உலகிருந்து பயனில்லை கொல்லப் பட்டால்
ஊர்போற்றும் தியாகியென வென்றே மன்னன் விலைகொள்ளா தவனைப்பின் விடுவித் தார்தன் வழக்கம்போல் தயாளகுணங் கொண்டதாலே.
முதற்சிலுவை யுத்தத்தில் பலஸ்த்தீ னத்தை
முறியடித்து ஜெரூஸலத்தை ஆண்டு வந்தோர் மதத்தோடே இனத்தாலும் "கான்ராட்" டிற்கு
மிகநெருக்க மானவர்கள் தவிர வின்னும் மிதமிஞ்சிப் பேராசை கொண்டான் தன்னை
மன்னனென ஜெரூஸலத்துக் காக்க வென்றே விதம்விதமாய்ச் சூழ்ச்சிபல தொடர்ந்துஞ் செய்தான்
வாகாகச் சிலரதற்கும் உதவி னாரே
217
218
219
220

ஹெலனின் அண்ணன் 67
கொற்றவராம்" ஸலாஹCத்தீன்" ஜெரூஸ லத்தைக் கைப்பற்றும் போது"கைடி லூஸி னானின்" உற்றதுணை யாயிருந்து விடுத லைக்கும்
உதவியவள் மகாராணி"லிபில்லா" பின்னர் முற்றுகையின் போது'அக்கா" கோட்டை யுள்ளே
மரணமுற்றாள் சிலகாலம் வாழ்ந்திருந்தே சற்றேனும் உரிமையில்லா "லூஸி னா"னோர்
சக்கரவர்த் தியானதவள் உரிமை கொண்டே 221
ஏற்கனவே உரிமையற்ற "லூஸி னான்"தான் ஏற்றிருந்த பதவியினை மனைவி மாண்டும் மேற்கொள்ள லாகாதே ஆட்சி யன்னாள்
மாற்றாந்தாய் மகளான"இஸபெல் லா"வின் பாற்சேர வேண்டுமெனக் கான்ராட் கூறிப்
பதவிக்கு வரத்துடித்தான் “இஸபெல் லா'வை ஏற்றிடவுந் தந்திரங்கள் செய்தான் எண்ணம்
எளிதாகியவளுமவன் வலையில் வீழ்ந்தாள் 222
குறுநிலத்து மன்னனான “ஹம்ப்ரே தோரன்" கரம்பற்றி “இஸபெல்லா" வாழ்ந்து வந்தாள் உறும்பெண்மைக் குணத்தினனாம் அவனை விட்டு
ஒதுங்கிடவுந் துணிந்தனளே "கான்ராட்" டாலே சிறுவயதில் பருவமுற முன்னர் என்றன்
சம்மதத்தைப் பெறாததிருமணமோர் நாளும் உறுதிகொண்ட தாகாதின் றெனக்கு கந்த
ஒருவனை நான் கைப்பிடிக்க வேண்டு மென்றாள் 223
மணந்தவனைத் துறந்தவளோர் மாற்றா னோடு
மறுவாழ்வு தொடங்கமதத் தலைவர் முன்னர் இணங்காத நிலைகண்டு மறுத லித்தே
“இஸபெல்லா" மனுவொன்றைக் கொடுத்திருந்தாள் பிணக்கறுக்கப் பாராளும் மன்ன ரோடு
பாதிரிமார் கூடினரே “இஸபெல் லா"வின் கணவனொடு கான்ராட்டும் அவளுங் கூடக்
காத்திருந்தார் கருத்தறிய வேண்டு மென்றே 224

Page 42
68 புனித பூமியிலே காவியம்
காரசார மானவாதப் பிரதி வாதம்
கலகலக்கச் செய்ததந்த அவையை முன்னர் ஏராள மாய்"கான்ராட்" கொடுத்த லஞ்சம் “இஸபெல்லா'ப் பக்கத்தே பரிவு காட்ட சாராது தனிமனிதன் பக்கம் நீதி
தனையெடுத்துச் சொன்னவர்கள் முடிவில் தோற்கத் தீராத பிரச்சினைக்குத் தீர்வு கண்ட
திருப்தியொடு கலைந்ததந்தச் சபையு மன்றே.
முன்னரிரு பெண்டீரைக் கொண்ட கான்ராட் மூன்றாவதாயவளைக் கரம்பிடிக்க வன்மையாக எதிர்ப்பிருந்த போழ்தும் ஈற்றில்
வெற்றிகொண்டான் எதிர்த்தவர்கள் மெளன மானார் என்னசெய்த போதுமது சரியே தூய
எண்ணத்தோ டியேசுமதங் காக்க வந்தோன் தன்னையெதிர்ப் பதுகூடப் பாவ மென்றான் தாழ்ந்ததங்கு நீதிஇலஞ் சப்பேய் முன்னே
மிகவிரைவில் “இஸபெல்லா" கான்ராட் மன்னன் மூன்றாவதில்லத்துட் புகுந்தா ளன்னாள் மிகச்சிலரே மன்னர்கள் அவன்செய் கைக்கு மாறாக இருந்தார்கள் மக்களுள்ளே மிகுவாக வேயிருந்த தெதிர்ப்பும் மன்னன்
மாளிகையுள் மகிழ்ச்சியிலே திளைத்திருந்தான் மிகையாகா துரைப்பிலவன் கடமை யோடு
மறந்தனனே தான்வந்த நோக்க மென்னில்
மன்னனுக்குப் பகையானோர் விரோதந் தன்னை
முடிந்தவரை முடுக்கிவிட்டார் மக்களுள்ளே இன்னல்செயத் துணிந்தவரும் செய்தார் நாளும்
எதிர்ப்பாங்கு பன்மடங்காய்ப் பெருகிற் றன்றோ “கன்ராட்டின்" உடன்பிறந்தாள்" ஹெலனை" "ஐஸ்க்"
கடத்தியதும் விரோதத்தாற் றானே அஃதை முன்னரொரு சம்பவத்தில் அறிவோம் இங்கு
மீண்டுமதைத் தொடர்வதுவப் பாகு மன்றோ.
225
227
228

வெற்றி யாருக்கு? 69
12. வெற்றி யாருக்கு?
தக்க தருணத் துதவிய தாலுளம்
மிக்க நன்றியால் மிகைத்துள போழ்து மே
ரொக்க புயத்தின னாண்மையும் வீரமும்
மிக்க வருகினில் நின்றிட நாணினாள் 229
சங்குக் கழுத்தினி லிருந்துயர் சிரத்திலம்
மங்கை மலர்முகத் தொன்றிஈர் நயனமும்
புங்கம் நிகர்த்தொரு பார்வையால் சாடியுட்
பொங்குங்களிப்பினைப் புரிந்திட வைத்தன 230
பூவினில் வீழ்ந்ததன் நறைநுகர் பொன்னளி
மேவிய மலரெனும் வாறென வாகினாள்
மேவலர் புறத்தொரு மாதெனத் தேர்ந்துமே
நாவுரை மறுத்தனன் நயனவாய் செப்பவே 231
ஹெலனெனு மவ்விள மேனியாள் தாஹிரின்
வலையினில் வீழ்ந்தன ளோவவ னன்னவள்
நிலவெனுஞ் செவ்விதழ் பதித்தவெண் முகத்தினில்
நிலைமறந் தானனோ வெவரறிவாரரோ, 232
முற்றும் மறந்தனர் மேவலர் தாமென
சற்றும் இடைமனத் திடையிலா தொன்றினார்
வற்றாச் சுனையுளக் காதலை யள்ளியே
எற்றி நனைந்தன ரிருவரு மாமரோ. 233
வேறு
“மெத்தவும் நான் பரிதாபங் கொண்டேன் யூத
மதத்திளைஞன் தனையெண்ணி என்ன செய்வான் சத்தியமாய் இளவரசி யவன்ம னத்தைச் சபலமுறச் செய்துபெரும் பித்த னாக்கி இத்தகைய துணிகரத்தைச் செயலிற் காட்ட
ஏவியதுன் பேரழகே வேறொன்றில்லை எத்தனைதான் பழிவரினுந் துணிவார் யாரும்
ஈடற்ற எழில்கண்டா" லென்றான் தாஹிர். 234

Page 43
70 புனித பூமியிலே காவியம்
சொன்னான்தன் வதனத்தில் நிழலாய் ஒடுஞ்
சிந்தாத முறுவலொன்றை மின்ன லாக்கிக் கன்னங்கள் செவ்வண்ணம் பூசிக் கொண்டு
கதிரவனின் T:¬ மிளிரப் பெண்ணாள் தன்னிலையை மறந்தொருகால் நின்று சற்றுத்
தாமதித்தே விடைபகர்ந்தாள் கடைக்கண் நோக் என்னழகா லன்றாமிள வரசே நெஞ்சில்
ஏற்றபழிதீர்த்திடத்தா னவனா மென்றே
"பழியாலோ" எனவியந்தே “யுன்றன் மீது
பழிகொள்ளக் காரணந்தான் என்ன" வென்றான் "பழிதீர்த்துக் கொள்வதென்றன் அண்ணன் மீது
பகைகொண்ட காரணத்தா" லென்றாள் தன்னை அழித்தொழிக்கும் நோக்கோடு கொணர்ந்தே பின்னர்
அகம்மாறி மனைகொள்ள வார்த்தை யாலே இழிகுணத்தோன் எதையெதையோ பிதற்றி னான்நான்
இணங்கமறுத் தேன்கொல்ல முயன்றா"னென்றாள்
“எண்ணியது சரியேநான் இந்த மண்ணில்
எவரிருப்பார் இம்மலரைக் கிள்ள" வென்றே கண்ணில்லா ரிருந்தும் நின் அழகு காணார்
கவர்ந்துவரக் காரணம்வே றுண்டோ" வென்றான் “மன்னவரின் மைந்தனுக்கு நன்றி யென்றே
மலர்ந்திடவாய் நோக்காது நோக்கி மென்மைக் கன்னங்கள் கனிந்தசெம்மா துளைபோ லாகக்
காரணம்வே றுண்டென்றே கூற லானாள்.
“கொலைசெய்யும் எண்ணத்தை மனதிற் கொண்டே
கொண்டுவந்தான் மனம்மாறி அழைத்த போது மலைபோல நானிருந்தேன் பிடிவா தத்தை
மாற்றாது போயிருந்தால் கொன்றிருப்பான் நிலைமாறிப் போனதுங்கள் வரவா லந்த
நீசனெண்ணம் பலிக்காது போயிற் றன்னான் வலையிருந்து காத்தீர்கள் நன்றி யென்றே
வரலாறொன் றெடுத்துரைத்தாள் செவிம டுத்தார்
 

-
வெற்றி யாருக்கு? 71
தன்தமையன் கான்ராட்டைப் பற்றி யெல்லாத்
தகவலையும் கூறினளே அவனைக் கொல்ல பன்முறைகள் முயன்றுபலர் தோல்வி கண்ட பலவுமவள் தாஹிரிடம் எடுத்துக் கூறி தன்னையங்கு கொணர்ந்தவனின் தந்தை 'ஏப்ராம்"
தமையனுக்கு வைத்தியனாய் இருந்தா னந்நாள் வன்முறைசெய் தோர்களவன் துணையை நாடி
விடமிடவுஞ் செய்தசதி விளக்கினாளே 259
விடமிட்டுக் கான்ராட்டைக் கொன்று விட்டால் வெகுமதியாய் வாழ்நாளில் கண்டிராத படிசெல்வந் தருவோமென் றாசை காட்டிப்
பணியவைத்தார் “ஏப்ரா'மும் பணிந்தா னஃது நடைபெற முன் சூழ்ச்சியினைத் தெரிந்தே யன்னான்
நன்றிகெட்ட செயலாலே வெறியுங் கொண்டு விடாதவரைக் கண்கணிக்க ஆளும் வைத்தான்
வலையுள்ளே மகள்"சாரா" சிக்குண் டாளே 240
“சாரா"வை நானறிவேன் தமைய னோடு
தந்தையரண் மனைக்கழைத்து வருவா ரென்னில் ஓராண்டே வயதுமூத்தாள் அழகி"ஐஸ்க்"
ஒருவனுடன் பிறந்தவன்தாய் இறந்து போனாள் காரியத்தை நிறைவேற்ற முன்னர் சூழ்ச்சி
கசிந்துவிட்ட தென்றறிந்த “ஏப்ராம்" அன்னாள் ஊரிலிலா திருந்ததனால் தப்ப "ஐஸ்க்"
ஒடிமறைந்தவருடனே ஒன்றிக் கொண்டான் 241
பழிதீர்க்கும் வெறிகொண்ட அண்ணன் கையிற் பிடியுண்ட 'சாரா" வை நினைத்த வாறே பழிதீர்க்க வென்றொருவன் கையிற றந்தான்
பார்க்கவியலாதகருங் குரூபியானோன் இழிகுலத்து மூடனவன் அரக்கன் “கான்ராட்" இட்டபடி யவளைவதை செய்தா னந்த இழிவுதனைப் பொறுக்கவிய லாத பெண்ணாள்
இன்னுயிரை மாய்த்தனளே இரண்டோர் நாளில் 242

Page 44
72 புனித பூமியிலே காவியம்
“டைர்“கோட்டை தனிலிருந்து “அக்கா" வந்த தமையனுமம் முற்றுகையிற் சேர்ந்து கொள்ள உயிர்காக்கும் பணியிலவ னுடனி ருக்க
உவந்துவந்தேன்"என ஹெலனும் உரைப்பக கேட்டே “உயிர்காக்க வந்தவிள வரசி நீங்கள்
உங்களெதிர் தரப்புமன்னன் மகனின் நெஞ்சின் உயிராக வருமாறி வெற்றி கொண்ட
தோர்விருப்ப நிறைவன்றோ "வென்றான்" தாஹிர் 243
பேச்சினிலே பொதிந்திருந்த பொருளை நன்கு
புரிந்தனளோ புரியாதோ புங்கக் கண்ணின் வீச்சினிலே யவனையொரு பித்த னாக்கி
வெட்கித்தலை குனிந்தவளாய் உரைக்க லானாள் "ஆச்சரிய மன்றோவிள வரசே நானே
அடிமையெனக் கைதியாகி வரும்போ துங்கள் பேச்சினிலே தவறாக வெற்றி யென்றன்
பக்கமென கூறுவது புதுமை" யென்றே 244
தக்பீரின் பேரொலியுள் திக்க னைத்துந்
தோன்றுமொலி சங்கமித்துக் போகும் வாறே மிக்கவர வேற்பளிக்கப் பட்ட தாங்கே முன்சென்ற வீரர்கள் ஒன்றி நின்றார் பக்கத்தில் இளவரசி "ஹெலன்செல் லத்தன்
பரிமீது இளவரசன் 'தாஹிர்" சென்றான் அக்கணத்தில் வீரருள்ளோர் பரப ரப்பை
அரசரிளங் குமரனவ தானித் தானே. 245
13. மன்னனின் மனநோய்
“பிரஞ்சுமன்னன் பிலிப்புடைய கூடா ரம்தான்
போகுவழிதனில்முதலில் தோன்று தாங்கே நிரையாக மலையடியில் தோன்றும் மூன்றும்
நமதெதிரிப் படையினரினுடையதாகும் அருகில்நமக் கிருப்பதுவே "தகியத் தீன்'முன்
"அக்காப்"போர் தனிலெம்மைத் தோல்வி கண்டோன் பெருராஜ தந்திரராம் மலிக்கு லாதில்
பின்னிருப்ப தே"சுல்தான் ஸலாஹcத் தீ“னே." 246

மன்னனின் மனநோய்
வடபகுதிக் கரையணுகும் வேளை "அக்கா
வந்துமுன்னே தங்குபவர் தம்மைச் சுட்டி உடனிருக்கும் "ரிச்சாட்'டுக் குரைத்தான் சென்று
உபசரித்தே அழைத்துவரும் "லூஸி னானும் படையோடு வந்திருந்த பிரஞ்சு மன்னன்
பல்லாயிரம்வீரர் சகித னாகக் கடலோரம் வந்தவரை வரவவேற் றான்முன்
குண்டுதாரை தப்பட்டை ஒலிக ளோடே
“புனிதபூமி தனைமீட்கப் பிதா வெமக்குப் பாலித்த தூதரிங்கு வந்தா" ரென்ற தொனிவிஞ்சி எண்ணிரண்டு கோணத் தேயும்
தொடர்ந்துபல நாழிகைகள் ஒலித்த தம்மா கனிவான வதனமொடு முன்னே வந்து
கட்டியனைத் திட்டானே “பிரஞ்சு" மன்னன் மனவுணர்வை வெளிக்காட்டா "ரிச்சட்" தானும்
மகிழ்வினிலே திளைத்தவன்போல் அணைத்துக்
கொண்டான்.
நெஞ்சமெலாம் வஞ்சகத்தால் நிறைந்தி ருக்க நேர்மாறாய் இருவருமே நண்பர் போல நஞ்சுடைமை வார்த்தைவரா வாறு நீண்ட
நேரமிருந் தளவளாவினார்களாங்கே வஞ்சியரும் வீரர்களும் மதுவை யுண்டு
டியம்வரை தமைமறந்தே யாடினார்கள் கொஞ்சியவர் குலவிடவும் ஏது வாகக்
கொழுந்து விட்டே எரிந்தனவே தீபக் கூட்டம்.
பலலட்சந் தீபங்கள் ஒளியைச் சிந்திப்
பகல்போலும் இரவினையுந் துலங்கச் செய்ய நிலமதிர மதுபோதை கொண்டே வீரர்
நெடுநேரந்தமைமறந்தே யாடினார்கள் நிலைகுலையாப் பெருவீரர் சலாஹுத் தீனை
நிலைகுலையச் செய்யவென்றே யார்ப்பரித்தார் நிலைகுறைந்த தவரில்லை கோட்டை யுள்ளே
நீண்டநெடு நாள் கிடப்போர் மனந்த ளர்ந்தார்.
73
247
248
249
250

Page 45
74 புனித பூமியிலே காவியம்
மகிழ்ச்சிவெள்ளம் பெருக்கெடுக்க இங்கி லாந்தின்
மன்னவனே காரணமென் றிருக்க "ரிச்சாட்" மகிழ்ச்சியற்றுத் துன்பத்துள் மிதந்தான் தங்கை
மரக்கலத்தைச் சமுத்திரத்தில் இழந்த தாலே வெகுவிரைவில் வருந்தகவல் என்றி ருக்க
வாராது மனம்நொந்தான் வீரருள்ளே வெகுவிரைவிற் பரவியதச் சேதி மன்னன்
வருந்திமனந் தளர்ந்துள்ளான் எனும்வாறாக,
14 அன்பளிப்பு
வீரருக்குப் பொற்காசு மூன்று மூன்றாய்
வழங்கினனே பிரஞ்சுமன்னன் திங்களுக்குத் தாராள மனங்கொண்டோன் எனும் நா மத்தைத்
தனதாக்கிக் கொண்டிருந்தான் அறிந்த "ரிச்சாட்" ஓர்பொன்னை அதிகமதாய்த் தருவ தாக
ஊரறியப் பறையறைந்தான் பெருமை யாலே வேரறுந்து போனதவர் உறவு "ரிச்சாட்"
வந்திரண்டு நாளினிலே வளர்ந்த தன்றோ
கோட்டையினைத் தாக்கவென முடிவு செய்து
கட்டளையும் பிறப்பித்தான் “பிலிப்'வீரர்க்குக் கேட்டனனோர் ஒப்புக்காய் போரில் ரிச்சாட்
கலந்துகொள்ள வேண்டுமென வவன்மறுத்தான் "நாட்களிரண் டேதான்நான் இங்கு வந்து
நலிவுற்றுப் போனதுடல் மற்றும் வீரர் கூட்டமொன்றும் வந்தின்னுஞ் சேர வில்லை
குறையனைத்தும் நீங்கியதும் பார்ப்போ" மென்றான்.
மறுத்ததனால் மகிழ்வுற்றான் “பிலிப்'புங் கோட்டை மதிலுக்குள் அடைந்துள்ளோர் தம்மை யெண்ணி பொறுத்திருந்தார் இத்தனைநாள் "ரிச்சாட்" வந்த
றகவர்கள் துணிவற்றுப் போனாருள்ளம் உறுத்துகின்ற கிலியாலே சரண டைந்தால்
உறுபுகழும் எனக்கேதான் என்றே யெண்ணி குறித்தபடி போர்தொடுத்தான் கோட்டை மீது குறிதவறிப் போகுமென வறிகி லானே.
251
252
253
254
 

அன்பளிப்பு
நூறுநூறு பேராகக் கூடிக் கூடி
நெருங்கினரே கோட்டையினைப் பிரஞ்சு வீரர் ஆறுபெருக் கெடுத்ததுபோல் அண்டி னார்கள்
ஆரவராம் அம்மம்ம ஆழி தோற்கும் வீறுநடை கொண்டுவீரர் வில்லும் அம்பும்
வேறுவேறு படைக்கலமும் சுமந்தே சென்றார் கூறிடயா ருளரோவப் போரி லன்னார்
கொள்ளைகொள்ளை யாயபூழிவ ரென்பதையோ,
கரைகாண முடியாத பெருவெள் ளம்போல்
கடுகினரே கோட்டைமதில் மீது மோதிச் சரித்திடவென் றவர்செய்த முயற்சி யெல்லாம்
சக்தியற்றுத் தோல்விதனைத் தழுவிக் கொள்ளத் துரிதமாக மேலிருப்போர்“நகாரா' தட்டத் தூரவுள்ள முஸ்லிம்கள் பாசறைக்குள் பெருஞ்சேனை தனைத்தாண்டி ஒலிப றந்தே
புகுந்துறைந்தோர் செவிப்புலனைச் சாடிற் றம்மா.
பாசறைகள் தோறுமொலி புகுந்தே முஸ்லிம்
போர்வீரர் செவிகளிலே தேனாய்ப் பாய நாசகரை யொழிப்போமென் றவர்கள் தத்தம்
நத்தியுள்ள படையணியோ டொன்றி அம்பின் விசைகூட்டி முன்சென்றார் பின்னி ருந்த
வாறவரைத் தந்திசையிலிமுத்துப் போரின் திசைமாற்றி இருபுறத்துந் தாக்க வென்றே
ட்டமிட்ட படியனைத்தும் நடந்த தன்றோ.
உள்ளிருந்தும் புறத்திருந்தும் தீப்பந் தங்கள்
ஒருநொடிக்குள் ஆயிரமாய் வந்தே வீழ கொள்ளிவைத்த கான்மரம்போல் கவணை வீசுங் கோபுரங்கள் பற்றியெரிந்தழிந்தே போகும் கிள்ளியெறிந் தனர்வாளால் சிரசை யெல்லாம்
கிறிஸ்த்தவப்போர் வீரர்தொகை குறைய வென்றே கொள்ளையிட்டால் உயிர்களினை உயிர்த விர்த்தே குவிந்தவுடல் களத்திடையில் மலைகள் போலாம்.
255
256
257
258
75

Page 46
76 புனித பூமியிலே காவியம்
சுல்தானின் போர்வீரர் களத்தி லெங்குஞ்
சுற்றுகின்ற பம்பரம்போற் சுழன்றார் தங்கள் வல்லமையை நொடிநொடிக்குள் உயிர்ப றித்தே
வெறிகொண்ட வேங்கைகள்போ லுலவ லானார் வெல்லவொரு வாய்ப்புமிலை யெனவ றிந்தே வீரமற்ற எதிரிகள்பின் நோக்கினார்கள் சொல்லவொரு மொழியிலையே ஒருநாட் போரில்
செய்திட்ட சாகசமம் முஸ்லிம் வீரர்.
மெய்சோர மனஞ்சோர மதியுஞ் சோர
மேற்கொண்ட முயற்சியிலே தோல்வி சேரக் கைசோரக் கரங்கொண்ட வாளுஞ் சோரக்
கவல்மிகவே உளந்தளர்ந்து நடையுஞ் சோரச் செய்யவினி எதுவுமிலை யெனநி னைந்தே
செருக்கடங்கச் சிரங்கவிழ்ந்தே ஏது மற்றுப் பையநடை பயின்றனனே பிரஞ்சு மன்னன்
பாசறையுள் நுழைந்துதலை யொளிந்து கொண்டான்.
“பிலிப்'போடு "ரிச்சாட்"டுஞ் சேர்ந்தால் கோட்டை
பிடிபடுவதுறுதியதன் பின்னே நாங்கள் இலகுவினில் முன்னேறி ஜெரூஸ் லத்தை
எட்டிவிடலாமென்றுட் கோட்டை கட்டி பலவாறு வெற்றிதனை நினைந்தி ருந்த
போர்வீரர் மாறாக நடந்த தெண்ணி நிலைதளர்ந்து போனார்கள் இனியு மென்ன
நடக்குமென மனம்வருந்திக் கலங்கி நின்றார்.
பெருந்தோல்வி கண்டதிர்ந்த பிரஞ்சு வீரர்
படைதுறந்து “பிலிப்'மன்னன் தனைவிடுத்தே பொருந்தினரே பொற்காசு வொன்றிற் காகப்
பெருந்திரளாய் "ரிச்சாட்"டின் படையி னோடே இருந்து மென்ன “ரிச்சாட்"தம் மனங்கு ழம்பி
எல்லையற்று வருத்தமுற்றான் ராணி "ஜோனை" இருந்தவிடந் தெரியாது திரும்பி வந்த
இங்கிலாந்தின் படைவீரர் தம்மி னாலே.
259
260
261
262

அன்பளிப்பு 77
கடும்புயலில் சிக்குண்ட கடலைக் கண்ட
காரணத்தைச் சென்றுவந்தோர் செப்பக் கேட்டுக் கடும்புயலில் தவிக்கின்ற கலம்போல் நெஞ்சங்
கலங்கினனே தம்மவரை எண்ணி மன்னன் கடுங்கோபங் கொண்டான்தன் வீரர் தம்மைக்
கண்டபடி வைதான்முன் கண்ட நோயும் கடுமையுற மனத்தோடு உடலுஞ் சோர்ந்தான்
கவல்மிகவே பாசறையுள் ஒடுங்கி னானே. 263
“அக்கா"வின் மீது"பிலிப் படையெ டுக்க
அவன்துணையாய் "ரிச்சாட்"டாங் குதவா நிற்கத் தக்கதொரு காரணமுண் டாக வேண்டும்
தானதனை அறிந்திடவும் வேண்டு மென்றே மிக்கதிறன் கொண்டதம்மின் ஒற்றர் தம்மை
மாமன்னர் "ஸ்லாஹCத்தீன்" அனுப்பி வைத்தார் பக்கமிருந் தறிந்தவர்போ லவருஞ் சொல்வார்
பகைகொண்ட "ரிச்சாட்"நோ யுற்றா னென்றே. 264
நோயுற்றான் பகைவனென வறிந்து நெஞ்சம்
நெகிழ்வுற்றார் மாமன்னர் கருணை தோன்ற நோயற்றுப் போகவுடன் மருத்து வத்தை
நாமளிப்போ மென்றுமொரு தூது விட்டே வாயற்றுப் போயெதிரி வியப்புங் கொள்ள
வேண்டுவன வனுப்பிவைத்தார் பரிசா யாங்கு போயுற்றார் கண்டவனே யதிர வென்றே
பிடியுண்டார் தமையுமவர் அனுப்பி னாரே 265
மாமன்னர் பெருந்தன்மை பற்றி முன்னர்
மன்னனறி வானெனினும் நேரிலன்று தாமறிந்தான் பகைவர்க்கும் உதவும் பண்பைத்
தன்னளவில் அவருயர்ந்த நிலையுங் கண்டான் தாமாக வந்துதமக் குதவி செய்து
தனதுடல் நோய் தீர்த்ததொடு மனமகிழ்ந்தே ஏமாந்தே இல்லையெனப் போயி ருந்த
இனத்தவரும் ஒன்றிடநெஞ் சுருகி னானே. 266

Page 47
78 புனித பூமியிலே காவியம்
15. சுல்தானின் விருந்தாளிகள்
நோய்தீர்க்கும் மருந்தாக மலையிற் சேர்த்த
நீர்க்கட்டி யோடுகனி வகையுங் கூட்டிப் “போய்வருக வெனவிடையுங் கொடுத்தார் “ஜோனும் புறப்பட்டாள் "ஆணுடனும் "ஆத்த" ரோடும் வாயார நன்றியொன்றிக் கூறித் தம்மை
வழியனுப்பி வைத்த சுல்தான் கூட நின்ற நேயரையும் நோக்காது நோக்கி னாள்“ஜோன்"
நெஞ்சுறைந்த இளவலை "ஆன்" நோக்கினாளே.
உடலுக்கு மருந்தோடே உளநோய் தீர
உடனனுப்பி வைத்திருந்தோர் தம்மைக் கண்டு விடைகாண முடியாத அதிர்ச்சி யோடும்
விழிமலர மகிழ்வோடும் எழுந்தான் "ரிச்சாட்" கடல் தந்த துயரினையும் கரையொ துங்கக்
காத்துதவி செய்தவர்நல் நடத்தை யையும் அடிமுதலாய் இறுதிவரை யெடுத்து “ஜோனும் அண்ணனுக்குக் கூறினனளே அவன்வியக்க
நடந்தவற்றை ஜோனெடுத்துச் சொல்ல ஆனும் நடுவிலிடை புகுந்திளவல் அஸிஸைப் பற்றித் தொடர்ந்துபல முறையுரைக்க ஜோனும் நெஞ்சைத்
தொட்டமன்னரிளவலையும் கூற லானாள் கடல்கொண்ட புயல்தந்த பயங்க ரத்தைக்
காட்டிலுமஷ் விருவருமே தமக்கு வந்தோர் உடலழகு வீரதீர விவேகங் கூறும்
உற்சாகங் கண்டுமன்னன் வியந்திட்டானே.
உற்றவருக் குதவியநல் லுள்ளங் கண்டு
உலகிலிவர் போலுமுண்டோ வெனநினைந்தே கொற்றவனாம் "ரிச்சாட்"தான் எதிரி யென்றுங் கொள்ளாது செய்தநன்மை தனைம தித்தான் வற்றாத ஆசைகொண்டான் விரைவி லந்த
வீரமகா புருஷரைநேர் கொள்ள வென்றே முற்றாது போயினது களத்தி லேனும்
கக்கடிதில் மார் பொருத எண்ணி னானே
267
268
269
270

சுல்தானின் விருந்தாளிகள் 79
“மலிக்குலஸிஸ்" இளவரசி ஆனைக் கண்ட
மாத்திரத்தே மனமிழந்தான் ஆனைப் போன்றே நிலைத்துளத்தே ஒருவர்மற் றொருவர் தம்மை
நினைவாக வேயிருந்தார் மறந்தாரில்லை சிலைபோன்றாள் இளம்விதவை “ஜோனும்" "ஆதில்"
சுல்தானின் தம்பியின்மேல் காதலுற்றாள் பலகாலங் கேள்வியற்ற மன்ன ரென்றே
பார்த்தமுதல் நாளெண்ணி மனங்கொண் டாளே. 271
மன்னரவ ரில்லையென வறிந்த போதும்
“மலிக்குலாதில்" தனைமறக்க வில்லை “ஜோனும்" தன்னையவ ரிடத்தினிலே இழந்தாள் பேதை
தலைவனெனக் கொண்டிடவும் மனந்து னிந்தாள் பெண்மையாங்கு வென்றதின மதபே தங்கள் பகையுணர்வுந் தோற்றதவர் வீரக் கோலம் கண்ணெதிரில் மாறாது நின்ற தாலே
கருத்தெல்லாம் அவராக்கிக் கொண்டிட்டாளே. 272
பறங்கியரின் பாசறையில் உலவி வந்த
போதுளவர் சேகரித்த தகவல் மன்னன் உறவினர்கள் ஏறிவந்த கப்பல் எங்கோ
ஊரறியாத் திசைநோக்கிச் சென்ற தென்றே சிறையுண்டார் சிலரென்ற “அஸிஸின் செய்தி
சேர்ந்தந்தப் போழ்தினிலே மன்னர் மன்னர் அறிந்தழைத்து வருகவென “ஆதில்" தம்மை
அனுப்பிவைத்தார் ஆங்கவரை “ஜோனு'ங் கண்டாள். 273
எதிரிமுகாந் தனிற்கிடைத்த உபசா ரங்கள்
ஏற்கனவே கேட்டதற்கு மாறாய் நிற்கப் புதிராக விருந்ததாங்கி லேய ருக்குப்
பாதிரிமார் சொன்னதெலாம் பொய்யா யிற்றே சதியாக வேயன்றி வேறொன் றில்லை
சீரியர் நம் மினத்தோரை விடவுயர்ந்தோர் அதிமேன்மை யானபண்பு பழக்கங் கொண்ட
அன்புடையோர் என“ஆத்தர்"ஆன்"நினைத்தார். 274

Page 48
8O புனித பூமியிலே காவியம்
இறுதியிலே நிபந்தனைகள் ஏது மின்றி
ஏகவிடையளித்தவர்கள் விரும்புகின்ற பெறுமதிவாய்ந் துயர்ந்தபெரும் பரிசில் தந்தே யவியலாதவர்கள் பிரிய வைத்த முறைகண்டே சுல்தானை மனத்தாற் போற்றி
மாமனிதர் இவரன்றோ வெனநினைந்தார் சிறிதேனும் செல்லமன மற்றே " G. s.
சிற்றன்னை “ஜோனும்) 'ஆத்தர்" பிறரினோடே
16. ரிச்சாட்டின் திட்டம்
பூரணமாய் உடநலம்பெற் றெழுந்த "ரிச்சாட்"
பிரஞ்சுமன்னன் தோல்விகண்டு மகிழ்ச்சியுற்றே கருமமது கண்ணாயி னானே "அக்கா"க்
கோட்டையினைத் தனித்துக்கைப் பற்ற வென்றே பெருமையெலாந் தனக்காக வேண்டும் மற்றோர்
புகழ்ந்தென்றும் போற்றும்படி செய்தல் வேண்டும் தருணமிது தானதற்கு வாமென் றெண்ணித்
தக்கவெலா முயற்சிகளுஞ் செய்திட்டானே.
வருவழியில் சிசிலியில்தான் வென்றெ டுத்த
வானளாவி யுயர்ந்தகவண் கோபுரத்தைப் பிரித்துடனே கொணர்ந்திருந்தான் பூட்டி யாங்கே
பெருங்கோட்டைச் சுவரருகில் நிறுத்தச் செய்தான் மருவிமதில் தனைவிஞ்சி நின்ற தஃதை
மையமெனக் கொண்டுபெருஞ் சேனை யொன்றை பொருதிடச்செய் தான்"ரிச்சாட்" தலைமை ஏற்றுப்
பெருந்திட்ட மொன்றைமணங் கொண்டா னம்மா.
"அக்கா"வின் மதிலிலிடை யுண்டு பண்ணி
அதன்வழியே கோட்டைக்குட் புகுவதென்றே தக்கதெனத் திட்டமொன்றை வகுத்தே "ரிச்சாட்" தனதுபடை வீரருக்கும் எடுத்துரைத்தான் சக்திமிக்கோர் மதிலேறிக் கற்பா றைகள்
சரித்துள்ளே நிற்கின்ற முஸ்லிம் வீரர் அக்கணமே இறந்தொழியச் செய்ய வேண்டும்
அன்னவர்க்குப் பொற்காசுங் கிடைக்கு மென்றான்.
275
276
277
278

சுல்தானின் விருந்தாளிகள்
உடைத்தெறியும் பாறைக்கல் லொவ்வென் றிற்கும்
உரித்தாகும் பொற்காசும் ஒவ்வொன் றென்றே படையிருந்த இளைஞ்ரெலாம் அறிந்த போது
பேராசை மிதமிஞ்சப் பறந்தே வந்தார் தடையேது மிலாதவர்கள் மதில்மி தேறித்
தமதுபணி கொள்ளக்கவண் கோபுரத்தில் இடையில்லா மற்றொடராய்க் கல்லும் அம்பும் எறிந்தவண்ண மிருந்தனரே வேறு வீரர்.
வேறு
கண்டனர் உள்ளி ருந்த
கருமவீரர்கள் நெஞ்சிற் கொண்டனர் சூழ்ச்சி வெல்லுங்
கொள்கையை வஞ்சந் 蠶 விண்டலம் பறப்ப தொப்ப
வேங்கைபோற் பாய்ந்தார் என்றுங் கண்டில ரெவரு மன்னார்
காட்டிய வீரம் அன்றே.
கணத்திடை யுணர்ந்தார் தம்மைக் கடுகுபே ராபத் தையோர் கணத்தினி லொடிக்க வென்றே
கடுகினார் காற்றாய் மேலே பிணத்தினைக் குவித்தா ரந்தப்
பறங்கியர் தலைகள் கொய்தே மனத்திட மழிய மாற்றார்
மேலெறிந்தார்க ளன்றோ.
கற்களை யுள்ளெ றிந்த
காரணத் தாற்ற லைகள் கற்களாய் மாறி யந்தக்
கிறிஸ்த்தவர் மீது வீழச் சற்றுமே எதிர்நோக் காதச்
சாடலால் அஞ்சிப் போனார் முற்றுமே திசைமா றிப்போர்
மோதினோர் அழிவுற் றாரே.
279
28O
281
282
81

Page 49
82 புனித பூமியிலே காவியம்
வெட்டுண்டு வீழ்ந்தோர் போக
வாளெடுத் திருப்போர் சென்னி கொட்டுணக் களைந்தார் தேகம்
குடைசாய்ந்து வீழ்ந்த தெங்கும் மட்டிலா வீரந் தேக்கி
மதிலினை யுடைத்த பேரை கட்டைக ளாக்கிப் போந்தார்
கடுகிய முஸ்லிம் வீரர்.
தொடக்கமே திட்டம் வெற்றி
தந்திடும் போலிருந்தும் திடுக்கிடும் வாறு தோல்வி
சைமாறி வருதல் கண்டே படைத்திறங் கொண்ட வீரர்
பலநூறு பேரைத் தூண்டித் தடுத்திடப் பணித்தான் ரிச்சாட் தமையதும் அணுகா வாறே.
பிரஞ்சுடைப் படைகள் வீரம்
பெரிதென மதியா மன்னன் அருஞ்செய லல்ல தோல்வி
அடையமுஸ்லிம்கள் செய்தார் வருஞ்சமர் தன்னில் நானே
வாகைகொண் டிடுவே னென்றோன் பெருஞ்சினங் கொண்டான் போரின்
போக்குணர்ந் தஞ்ச லானான்.
அம்மம்ம இவர்க ளென்ன
அரக்கரோ வெறிபிடித்த சிம்மங்க ளாமோ நெஞ்சிற்
சிறிதெனும் அச்சமில்லா வெம்பசி கொண்ட வேங்கை
வாய்ப்படு வுயிரின் மீதே தம்பசி தீர்க்கப் பாய்தல்
தாமெனத் தாவி னாரே
283
284
285
286

சுல்தானின் விருந்தாளிகள் 83
வீரத்தைக் குறைத்தெண் ணப்போய் வருவினை தனையரும்பாய் ஓராது நினைந்த தாலே
உயிர்ப்பலி யதிகமாகி நேராத தனைத்தும் நேர
லைகுலைந் தானே ரிச்சாட் GLUTTfaffe), “GlcNS L'I“ GOLUL" GELUIT GAOL’
புறங்காண வெள்கினானே. 287
புறமுது கிட்டே யோடும்
படிவருமாமோ வென்றே வெறிகொண்டு முழுவே கத்தில்
ரரைத் தூண்டித் தானும்
திறன்மிகு முஸ்லிம் வீரர்
தம்மினுட் புகுந்தான் "ரிச்சாட்" சிறிதவன் எண்ணம் வெற்
சேர்ந்திடத் துணிந்திட்டானே. 288
இருதிறத் தார்க்குஞ் சொல்ல இயலாத வாறு சேதம் வருவது கண்டு மேலும்
வேகத்தோ டெதிரா னோரைப் பொருதினர் நிலத்தி லெங்கும்
பிணமழை பொழிந்தாற் போலாம் ஒருவரை யொருவர் விஞ்ச
உயிர்ப்பலி பெரிதா கிற்றே 289
மதிலின்மேல் ஏறி வந்தோர்
மறுபடி சென்றா ரில்லை புதியவர் வரினுஞ் சுண்டு
பொழுதெனும் நிலைத்தாரில்லை விதிமுடிந் தழியு முன்னே
ரோதிகள் சிலரைக் கொன்று
பதிலவர்க் களிப்போ மென்றே
போரிட்டார் கிறிஸ்த்து வீரர். 29 O

Page 50
84 புனித பூமியிலே காவியம்
கல்லுடன் அம்புஞ் சேர்த்துக் காற்றோடு கலந்து வீச அல்லலுற் றார்கள் முஸ்லிம் அறச்சமர் வீரர் "ரிச்சாட்" வல்லமை காட்ட நின்ற
வானுயர் கோபுரத்தின் தொல்லையே யதுதொ டர்ந்துந் திகிலுறச் செய்த தம்மா.
கோட்டையுள் ளிருந்தோர் மிக்க
குறைந்தளவேயாம் போரில் வாட்பலி போக எஞ்சும்
வீரரோ சிறுதொ கைதந் தோட்பலம் இருக்க மட்டுந்
தொடரலாம் போரைப் பின்னர் ஆட்பலம் வேண்டு மென்றே அஞ்சினார் முஸ்லிம் வீரர்.
அடையாள வொலியெ முப்பி
ஆபத்தை யுணர்த்தினாலும் படைவரா நிலையுங் கண்டே பயமுற்றார் முஸ்லிம் வீரர் நடைமுறை "நகாரா" கேட்பின் நண்ணிப்பின் புறத்திருந்தே அடையலர் தம்மைத் தாக்
அழிப்பதப் போரின் உத்தி
என்றும்போல் பின்வாங் காது
இருப்பது கண்டே ஐயம் கொண்டனர் மனந்த ளர்ந்தே
குலைந்திட வெளியில் நோக்க விண்டலம் நோக்கித் தீயால்
வெந்திடுங் கோபுரத்தைக் கண்டனர் முஸ்லிம் வீரர்
கவலழிந் துறுதி கொண்டார்.
291
292
293
294

ஹெலனும் ஜெமீலாவும்
இனிப்பாது காப்பே இல்லை
எனவுணர்ந் தாங்கிலேயர் தனித்தாங்கு நிற்கச் சற்றும்
திராணியே இலாதோராகி முனைந்தாங்கே ஒடப் பின்னால்
முஸ்லிம்கள் துரத்திச் சாய்த்தார் நினைத்தாங்கு வொன்றி ருப்ப
பதிவே றாகக் கண்டார்.
17 ஹெலனும் ஜெமீலாவும்
இளவரசி "ஹெலனுடனே இளவல் 'தாஹிர்" இணைந்தொன்றி வரக்கண்ட வீரர் மிக்க அளவில்லா மகிழ்வோடு "தக்பீர்' கூறி
ஆரவாரித் தேயவரை வரவேற்றார்கள் முழுநிலவின் வதனவிதழ் புன்ன கைக்க
மிகவண்மி வந்தனளே பெருந்தோள் வீரன் இளமேனிக் கேற்றபடி இருந்தா ளந்த
இதயங்கள் ஒன்றியதை அறிவாருண்டோ.
தன்னுடனே இருந்த'ஸைபுத் தீனை நோக்கித் தோழருடன் தனைவிடுத்துப் பாசறைக்கு முன்நடக்கப் பணித்திருந்தான் 'தாஹிர்" பின்னே என்னநன்மை செய்தனனோ ஸைபுத் தீனாங்
கெதிர்கொண்ட புதியவரைக் காணுதற்கு முன்னரவன் ஏற்றப தனைத்தன் கையால்
முடிக்கவொரு சந்தர்ப்பங் கிடைக்கக் கண்டான்.
கிராமமொன்றில் பிடிபட்டுக் கடத்தப் பட்டோர்
கிராமத்தின் கொடுஞ்சிறையில் சிலநாள் வாடிப் பரங்கியரால் பின்கவர்ந்து செல்லப் பட்ட
பேதையினைக் காத்துவர முன்னோர் போது இருவீரர் துணையோடு "அஸிஸின்' ஆணை
ஏற்றுவந்த 'ஸைபுத்தீன்" இன்றே தம்மின் பெரும்பொறுப்பை நிறைவேற்ற வாகு கொண்டான்
பிடியுண்ட பெண்ணோடு மூவர் வந்தார்.
85
295
296
297
298

Page 51
86 புனித பூமியிலே காவியம்
கட்டுண்டு குதிரையொன்றின் மீதி ருந்த
கன்னியினைக் கண்டதுமே வெறிகொண்டோனாய்ச் சட்டென்றே யவர் முன்னே பாய்ந்து வாளால்
சாடினனே முன்வந்த வீரர் தம்மை வெட்டியுடல் சாய்த்தவர்கள் தூக்கி வந்த
வண்ணமயில் தனையெடுத்து முகாமிற் சேர்த்துக் கட்டவிழ்த்தான் உபசரணை செய்தான் மூர்ச்சை
கலையவவள் நடந்ததெலாஞ் செப்பி னாளே. 299
தேடிவந்த பெண்ணவளே யெனவ றிந்து
'ஸைபுத்தீன்" இறைவனுக்கு நன்றி கூறி நாடியது கைகூட மகிழ்வார் போல
நெஞ்சமெல்லாம் விஞ்சிடுபேருவகை கொண்டான் வாடாத செம்மலர்போல் தோன்றி னாலும்
வழியிலவள் கண்டபெருந் துன்பத் தாலே வாடியபோ லிருந்தனளே கிராமப் பெண்ணின்
வனப்பனைத்தும் உடல்தேக்கி விளங்கினாளே. 300 அழகியெனும் பெயர்கொண்ட "ஜமீலா" அழகுத்திரு நாமத்தைத் தாங்கு மந்த அழகிமிக அழகாக அழகி யர்க்குள்
அழகியெனும் வாறிருந்தாள் அவளை விஞ்ச அழகுடையோ ருண்டோவென் றெண்ணி னானவ் வழகியினைத் தேடிவந்த அழகன் தன்முன் அழகுருவ மாய்நின்ற அவளைக் கண்டே
அதிசயித்தான் நடந்தவற்றைக் கேட்டறிந்தான். 301
வென்னும்
நடந்தவற்றைக் கூறவவள் கேட்டுத் தானும்
நடந்ததெலாம் எடுத்துரைத்தான் அவளு ரைப்பாள் கடந்துவந்த நெடுந்தூரத் துணையாய் ஐந்து கல்நெஞ்சப் பறங்கியர்கள் வந்தா ரென்றே தொடர்ந்துவந்தோர் மூவரிரு பேர்கள் தத்தம்
தோழரொடு சண்டையிட்டே மடிந்தார் மற்றோர் அடர்ந்தபெரு கானவழி தேர்ந்தார் முற்றும்
ஆபத்தில் இருந்ததமைக் காக்க வென்றாள். 3O2

ஹெலனும் ஜெமீலாவும்
என்னதவஞ் செய்தேன்நா னிவ்வா றாக
எனையிறைவன் அனுப்பிவைக்க நானு மின்னும் என்னகைம்மா றியற்றுவனோ என்னை நீங்கள்
எதிரிவச மிருந்தெதிர்த்துக் காக்க நானோர் அன்னையிலாப் பெண்தந்தை உறவி னர் கை
ஒப்படைத்தே சுல்தானின் படையிற் சேர்ந்தார் மன்னுலகில் எனக்காக யாரு மில்லை.
மாற்றாரால் உறவினரும் அழிந்தா ரென்றாள்.
"அக்கா"வின் கோட்டையுள்ளே இருக்கும் வீரர்
அணியினிலே என்தந்தையுள்ளா ரென்றாள் துக்கத்தால் நெஞ்சுநிறைந் தழுதாள் அன்னாள்
துயர் கண்டே யாங்குள்ளோர் மனங்க சிந்தார் தக்கதுணை யாருமிலை யென்றாள் கேட்டு
'ஸைபுத்தீன்" மனம்வருந்திச் சொல்வான் உன்போல் திக்கற்றோர் தமைத்தம்மின் பெண்போல் காத்துத்
துணைசெய்வார் சுல்தான்நீ கலங்கே லென்றே.
பொறுமையொடு மனந்தளரா திருப்பா யிங்குப்
பேரரசர் மகன்வருவார் அவரோ டுன்னைக் குறைவில்லா வாழ்வுபெற சுல்தா னின்பால்
கொண்டுசெலக் கோருகிறேன் எனவுரைக்க நிறைவான மனத்தோடு நேர்நே ராக
நீலவிழி சுழற்றினளே நன்றியோங்க நறைநுகர்ந்த வண்டாகி அவனும் நெஞ்சு
நேசத்துக் குகந்தவளாய் நினைக்கலானான்.
பார்வையினால் நன்றிசொன்ன பாவை நோக்கில்
பதித்தவிழி மீட்டெடுத்த 'ஸைபுத் தீன்"தன் ஆர்வமெலாம் ஒன்றிடவே நினைவு கூர்ந்தான்
அரசர்மகன் 'தாஹி"ருடன் 'ஹெலனை"ச் சேர்த்தே நேரிழையாள்'ஹெலனை"முதற் கண்ட போழ்தே நினைவழிந்து மன்னர் மகன் நிற்க வந்தக் காரிகையும் அவனுருவில் மயங்கிப் போனாள்
கண்வழியே தூதுவிட்ட காட்சி கண்டான்.
303
3O4.
305
306
87

Page 52
88 புனித பூமியிலே காவியம்
பாசறைக்கு வந்ததுமே இருவ ருக்கும்
பாரியதோர் வரவேற்புத் தந்தே தங்கள் பாசத்தைத் தெரிவிக்கப் பணித்தான்"கான்ராட்"
பிரிந்தவுடன் பிறந்தாளிங் கிணைந்தா ளென்றான் நேசமுற்ற இருவருமே முதல்மு றையாய்
நோக்கிய நோக் கினிலன்றே மீண்டுஞ் சொல்வான் தேசுடைய நாயகனுக் கேற்ற நல்ல
திருமேனித் துணையாமப் பெண்ணா ளென்றே. 307
புதிதாக இணைந்தவிரு வுள்ளங் கண்டே
பெருமகிழ்வு கொண்டாராங்குள்ளோ ரெல்லாம் புதிதான செய்தியொன்றை அறிந்து 'தாஹிர்" புளகாங்கி தம்மடைந்தான் ஒன்றுக் கொன்று எதிராக இருப்பவனின் தங்கை யோடே
இதயத்தால் தானிணைய'ஸைபுத் தீனும் எதிர்பாரா தாங்குற்ற “ஜமீலா" வென்னும்
ஏந்திழையா ளோடுமணஞ் சேர்ந்த தாலே, 3O8
அதையடுத்து முஸ்லிம்கள் பாச றையில் அன்போடு சிலநாட்கள் தரித்திருந்தே
இதயத்தில் வெவ்வேறாய் உணர்வும் பெற்றாள் ஏற்றிருந்த தப்புணர்வும் நீங்கலுற்றாள்
மதவுணர்வும் பண்பாடும் மிகவு யர்ந்த
மாறாத கலாச்சாரச் சிறப்பும் தம்மோர்
உதவாத கொள்கைக்கு மாற்ற மென்ற
உணர்வுபெற்றாள் “ஹெலன்" மனதில் மாற்றங் கண்டாள்.309
தனியான கூடார மொன்றில் 'தாஹிர்"
தங்கவைத்தான் "ஹெலன்'னோடு "ஜெமீலா தன்னை மனமொன்றி இருந்தார்கள் இருபே ரும்தம் மார்க்கங்கள் பற்றியநல் வாதஞ் செய்தார் கணநேர மேனுமவர் பிரிந்தா ரில்லை
கருத்துவேற்று மைமறந்தார் மெள்ள மெள்ள தனதுநிலை மாறுவதை ஹெலனு ணர்ந்தாள்
துணைநின்ற திதற்கெல்லாம் ஜெமீலா வன்றோ. 310

ஹெலனும் ஜெமீலாவும்
தனித்திருக்கும் போதுதவிர்த் தடுத்த வேளை
தாஹிர்தன் துணைநாடி வருவான் போல மனங்கவர்ந்த ஜெமீலாவை ஸைபுத் தீனும்
மறவாது கண்டுகதைத் தேகு வான்பின் தனித்திருபெண் தோழியரும் தங்கள் தங்கள் தலைவர்களைப் பற்றியுரையாடு வார்கள் கனிந்ததிரு காதலங்கு தேனும் பாலும்
கலந்ததெனில் காதலித்தோர் ஒப்பு வாரே. 311
வான்நோக்கி ஒளிசிந்தும் மதியைக் காட்டி
"வட்டநிலா போலுந்தன் வதன" மென்றான் “ஏனென்றன் முகத்திலென்ன கறைகண் டீர்கள்
ஏளனமேன்" என “ஹெலன்" பொய்க் கோபங் கொண்டாள் “தேன்சிந்துங் கனியுன்றன் அதர“மென்றான்
"தெவிட்டுமென்ற நினைப்பாமோ அதுபோ லென்றாள் "கானமயிற் றோகையுன்றன் குழலா" மென்றான்
"கண்களுண்டோ கூந்தலிலே பொய்யே" யென்றாள். 312
“பங்கயம்போல் விரல்களுனக்" கென்றான் ‘மாலைப் பொழுதடைய வாடிடுமே அவைக"ளென்றாள் "சங்கொத்த கழுத்துனக்கா" மென்றான் “ஊதச்
சேர்ந்தொருவாய் அதிலிலையே' யென்றாள்" வில்லின் புங்கமுன திருவிழிகள்" என்றான் “நெஞ்சைப்
பிளக்குங்கொடு வினைசெய்யா தவையா" மென்றாள் “செங்கரும்பின் பாகுன்றன் மொழியா" மென்றான்
“சிலநாளில் வெறுக்குமது போலோ" வென்றாள். 313
"துரும்பிலுமுன் இடைசிறிதா"மென்றான்" நீங்கள்
தொட்டணைக்கக் கூடாதே அதனா “லென்றாள் “பெருங்குன்றம் நெஞ்சணைகள் “என்றான் வெட்கிப் போங்களெனப் புறங்காட்டித் திரும்பி நின்றாள் “பறந்தவன்றன் முதுகென்ன பட்டா டைக்குள்
பதுங்கியபொற் பெட்டகந்தா னென்ன வென்றான் “நிரந்தரமாய் நானுங்கள் சொந்தம் ஏன்நான்
நாணவிங்கு பேசுவது முறையோ" வென்றாள். 314
89

Page 53
90 புனித பூமியிலே காவியம்
"நாணமுற அன்னியனோ நானிங்" கென்றான்
“நமைப்பிறகண் நோக்கிடுமே யதனா லென்றாள் “காணுபவர் கண்படுமுன் அழகை யென்னால்
கண்டும்வாய் மூடவியலாதே" யென்றான் “ஆண்மைக்கு நாணமென்ப திலையோ'வென்றாள்
"ஆண்டவனின் படைப்பைஇக ழாதே" யென்றான் "வாணாளில் அறியாத திவையா" மென்றாள்
“வேண்டியதும் நானுமதைத் தானே" யென்றான். 315
மனங்கொண்டாள் அழகுதனில் மயங்கித் 'தாஹிர்"
மதுவுண்டான் போலாகித் தவறா தெல்லாத் தினமுமவள் தங்குமிடம் வருவான் பேசித்
தனைமறந்து நெடுநேரம் மகிழ்ந்திருப்பான் மனமார அவளழகை வருணிப் பான்நேர்
மாறாகப் பதிலுரைக்க மேலுஞ் சொல்வான் தினமுமிது போற்சிலநாள் தொடர்ந்த தோர் நாள்
திடீரெனவே பிரியநிலை வந்த தன்றோ. 316
'தாஹி"ரொடு "ஹெல" னொன்றிக் குலவு வேளை
தனியாக வேறிடத்தில் "ஜமீலா தன்னை ஏகாந்த மாக்கியொரு நாளி ருந்தாள்
இதயத்துள் 'ஸைபுத்தீன்' மெலப்பு குந்தான் மேகத்துள் நிழலாடும் மஞ்ச மொன்றில்
மலர்தூவி அமர்ந்திருந்தான் அவளைக் கண்டே ஆகா யென் பேரெழிலே வாவா" என்றே
அழைக்கவவன் அருகினிலே ஒடி னாளே. 317
பக்கத்திற் சென்றாளம் மலர்மஞ் சத்தில்
பற்றிக்கை இழுத்தருகே அமரச் செய்தான் வெட்கத்தால் கரங்கூட்டி முகம்பு தைத்தாள்
வகிடெடுத்த கருங்குழலை நீவி னானே செக்கமுகஞ் சிவக்கத்தன் தலையு யர்த்தித்
திரண்டவவன் தோளினிலே சரிந்தாள் யாரோ புக்கியமெல் லொலிகேட்டே உணர்வுங் கொண்டாள்
பின்னாற்றன் னுளம்புகுந்தோன் றனைக்கண் டாளே.
3.18

தளபதி தகியுத்தீன்
பகற்பொழுதிற் கனவுலகில் சஞ்ச ரிக்கும்
போதாங்கே 'ஸைபுத்தீன்" நிற்கக் கண்டு திகிலடைந்தாள் காண்பதிலெஃ துண்மை யென்றே
தெரியாது நிற்கையிலே அருக மர்ந்தே செகத்தைமறந் தெங்குற்றாய் “ஜமீலா உன்னைத் தேடியலைந் தேனென்றான் மென்கை பற்றி அகம் பொங்கும் ஆசையொடு அவளும் அன்னான் அகன்றபெரும் மார்பினிலே சாய்ந்திட்டாளே.
18 தளபதி தகியுத்தீன் "அக்கா"வின் கோட்டையினைத் தாக்கும் எண்ணம்
அறுதிபெற்ற தன்னியரின் கோபுரத்தை மிக்கதுணி வோடு முஸ்லிம் வீரர் தீமுன்
மண்டியிட வைத்ததனால் அந்த வேளை தக்கபொழு தங்குசுல்தான் படைவீ ரர்கள்
தாக்காத காரணத்தை அறியா நின்றார் மிக்க மகிழ் வற்றாரப் போழ்து கண்ட
மாமன்னர் வீரர்தம் வீரந் தன்னை,
யுத்ததந்தி ரத்தில் மிக்க "ரிச்சாட்" மன்னன்
ஒர்ந்திருந்தான் கோட்டையினைத் தாக்கும் போது நத்திவந்து பின்நின்று தாக்கு கின்ற
நடைமுறையை யதைத் தடுக்க வேண்டு மென்றே மெத்தவலுப் பொருந்தியவோர் படையை யாங்கு
முஸ்லிம்கள் வருவழியில் நிறுத்தி வைத்தான் புத்திமிக்க செய்தியது வானா லென்ன
புறங்கண்டததுஈற்றில் சுல்தா னாலே.
கவண்கோபு ரத்திருந்து தாக்கு வோர்கள்
கோட்டைமதில் மீதிருப்போர் தம்மைக் காத்துக்
கவண்கோபு ரத்தினையுங் காக்க வென்றே
காப்பரணாய்ப் படையொன்றை ரிச்சாட் வைத்தான்
அவன்திறனை யறிந்தசுல்தான் வியந்தா ரஃதை
ஆட்கொள்ளத் திட்டமொன்றும் வகுத்தா ரந்தக்
கவண்கோபு ரத்தையொழித் தாலே வெற்றி
கைகூடும் எனவறிந்து செயல்பட்டாரே
91
319
320
321
522

Page 54
92 புனித பூமியிலே காவியம்
இடுப்பொடிந்த நிலைதானே ஆங்கி லேயர்
இழப்பரெனில் கோபுரத்தைக் கோட்டை தப்பும் தடுத்துநிற்கும் அவன்படையோ சிறந்த வீரர்
தமைக்கொண்டதாகுமதை யுருவிச் சென்றே முடிப்பதென்ப தெளிதில்லை எனினு மஃதை
மீறியுடன் செய்திடவும் வேண்டு மென்றே எடுத்ததனை முடித்துவெற்றி காண வல்ல
இணையில்லா வீரனையும் சுல்தான் தேர்ந்தார். 323
சிலுவையுத்தம் தொடங்கியநாள் முதலாய்க் கொண்டு
செயற்கரிய சாதனைகள் பலவற் றைமுன் நிலைநிறுத்திக் காட்டியவன் நிகரில் வீரன்
நெறிபிறழா மன்னருடன் பிறந்தார் பிள்ளை அலைபோலும் படைவரினும் அஞ்சா நின்றே
அழித்தொழித்து வாகைகொண்ட அறப்போர் வீரன் நிலைதளரா தெடுத்ததனை முடிக்கும் வல்ல
நம்பி"தகி யுத்தீனை" மன்னர் தேர்ந்தார். 3.24.
வேறு
கூறு போட்டுடல் குவித்த னன்வரும்
ஸ்த்த வப்படை நடுங்கிட ஆறு போலசெங் குருதி யோடிட
அங்க மங்கமாய்க் களைந்தனன் தாறு மாறெனச் சடல மாங்களந்
தனித்து நின்றவன் பொருதினான் வேறு எவரது போல்நி கழ்த்துவார்
வெற்றி வீரனாய்ச் சுற்றினான். 3.25
சண்ட மாருதம் போல்வி ரைந்தனன்
சார்ந்து வீரரும் எதிரியைத் துண்ட துண்டமாய் வெட்டிச் சாய்த்துடல்
துவம்சம் செய்துமே சென்றனர் கண்ட விடமெலாங் காலுங் கையொடு கழுத்த றுந்ததாற் றலைகளும் முண்டம் விலகியே முழுது டம்பிலா
மார்பின் துண்டமாய் எஞ்சின. 326
 

தளபதி தகியுத்தீன் 93
இலக்கு நோக்கியவ் வீரன் வீரரை
இட்டுச் சென்றனன் எதிரிகள் கலக்க முற்றுப்பின் வாங்கி யோடினர்
கடுக வஞ்சியக் களத்திலே நிலைக்கு மவன்புகழ் நீடு நாள்வரை
நித்தியன்பணி யோற்றதால் சிலைக்கு வழிபடுஞ் சிலுவை வீரர்கள்
செய்வதறிகிலா தேங்கினார். 327
உயர மானவோர் பரணி ருந்துமல் ஒப்பில் வீரன்செய் சாகசம் வியப்பி லாழ்த்திட வேறு நோக்கிடா
வசியமாகி"ரிச் சாட்"டுமே அயல வன்திறன் கண்டு போற்றிடும் அகத்து டையவன் என்பதால் செயல ருஞ்செயல் செய்யும் வீரனின்
திறனை எண்ணியே மதித்தனன் 328
யார வன்பெரு வீரன் “ஸலாஹஸ்தீன்" ஈன்ற செல்வனோ வென்றுதம் வீர ரையவன் வினவி னானவர் விபரங் கூறி"அக் கா"விலே பேரி ழப்படைந் தெம்ம வர் இழி
பட்டு மாய்ந்திடக் காரணன் யாரு மறிகுவார் தீரன் “தகியதீன்"
என்னும் பேர்பெறு மறவனே. 329
“கரைநெ ருங்கிடு போது லூஸினான் காட்டி யுரைத்ததிவ் வீரனோ ரைவி லவனையோர் வடுவி லாதுமே
வெற்றி கொண்டுநீரென்னிடம் தருக" வென்றவன் தளப திக்குரை
தந்த னன்பல நூறுபேர் ரைந்த னருடன் வளைந்து கைப்பட
வேண்டி முயன்றுமே தோற்றனர். 330

Page 55
94 புனித பூமியிலே காவியம்
தனைப்பி டிக்கவோர் தருக்கர் கூட்டமத் தலத்திலுறைந்ததை அறிந்துமே நினைத்த விடமெலாம் நீச ரின்தலை
நிறைந்தி டக்களந் தெளிந்தனன் அனைத்து வீரரும் அண்டி டில்லவன்
அசுர வாட்கிரை யாயினர் வினையின் பயனது தானென் றாலெவர்
வருந்தியும்பய னில்லையே 3.31
சிறிது சிறிதுமுன் னேறி யேகவண்
கோபுரத்தினை நெருங்கியே குறித வறிடா தெய்த னர் சரங்
கொண்ட தீயதில் தாவவே எறியும் வேலிலும் எய்ய மம்பிலும்
இணைத்துக் கந்தகப் பொடியைமுன் எறிந்த தீயினில் எய்து நின்றனர்
இலக்குந் தவறிடா தமையவே. 332
பட்ட விடமெலாம் பற்றி யெரிந்திடப்
பரவிச் சென்றது தீயதன் இட்டம் போலவே எழுந்து யர்ந்துவான்
எட்டிடத்துடி துடித்தது மட்டி லாதுசெந் நாக்க ளெங்குமே
மிகைக்கக் கோபுரஞ் சரிந்தது திட்டம் போலவே செயல்ந டந்திடச்
சேர்ந்து மகிழ்ந்தனர் வீரரே 333
தீயி லவிந்தழிந் தோர்கள் போகவே
லகப்பட அஞ்சியோர் பாயு வார்நிலம் பட்டி டத்தலை
பொடிந்திடமடிந் தடங்குவார் தீய மனத்துடைத் தீய வர்பெருந்
லழிந்தனர் கண்டுமே தூய வன்வழி தொடரும் வீரர்கள்
திறனை வியந்துதீ பரந்ததே 334 .

தளபதி தகியுத்தீன்
காத்து நின்றவக் கோபு ரத்தினைக் கருக்கியழித்ததால் மதிலுளோர் காத்தி ருப்பதிங் காபத் தெனத்தமைக்
காத்திடக்குதித் தோடிடும் மாத்தி ரத்தடுத் தோர்க ளும்முயிர்
மீது கொண்டுள ஆசையால் நீத்த னர்களம் நிறைந்தி ருந்தவர்
நாடி னர் ருடன் கூடமே.
வேறு
தன்னுயிரைப் பெரிதென்றே எண்ணா வீரன் "தகியத்தீன்" செய்தபெருஞ் சாக சத்தால் மன்னுயிர்கள் பலவழிந்த போதும் "அக்கா"
முஸ்லிம்கள் கைகடக்கா திருந்த தானால் சின்னாளே தொடர்ந்திருக்க முடிந்த துள்ளே
சேர்ந்துபெரும் இன்னல்கள் வந்த தாலே முன்னிலும்முற் றுகைகூட இறுகிப் போக
முஸ்லிம்கள் உளந்தளரத் தொடங்கினாரே
ஈராண்டு காலமுள்ளே இருந்து பல்வே
ரிடர்களையும் அனுபவித்து மனத்தாற் சோர்ந்து தீராத வாறுபெரும் உணவின் பஞ்சம்
தாக்கியதால் உடல்தளர்ந்தும் போகச் சுற்றி ஏராள மாய்"ரிச்சாட்" வருகை யாலே
ஐரோப்பியர்படையில் நிறைந்து சேர வாராது போயின ஊன் ஆயு தங்கள்
வருத்தமுற்றார் முஸ்லிம்கள் கோட்டையுள்ளே,
பெரும்படையும் ஆயுதமும் உணவும் மற்றும் பிறபொருளும் புறநகர்க்கு வந்து சேர ஒருகுறையும் இலாதாங்கு பறங்கி யர்கள் உல்லாச வாழ்வியற்ற வள்ளிருப்போர் பெருந்துன்பம் அனுபவித்தார் இவைகள் யாவும் பெறமுடியா திருந்ததனால் துயரம் விஞ்சி நிருபமொன்றை அனுப்பி வைத்தார் சுல்தா னுக்கு
நிலைமைகளை விளக்கியன்று புறாக்கள் மூலம்
95
335
336
337
338

Page 56
96 புனித பூமியிலே காவியம்
தினந்தோறுங் குவிகின்ற படைகள் இன்னும் தேவைக்கும் மிகையாக ஆயுதங்கள் அனந்தமங்குத் தானியங்கள் உணவுக் காக ஆறாக வோடியதே மதுவுங் கண்டு மனந்தளர்ந்தார் முஸ்லிம்கள் இம்மாச் சேனை
மிகைத்தழித்து வருவதென்ப தெளிதோ வென்றே இனந்தெரியா தச்சமுமுள் மனத்திற் றோன்ற
எழுதினர்பின் வருமாறு மடலி லாமே. 339
உடனுதவி யனுப்பியெமைக் காப்பாற் றுங்கள்
உண்ணவுண வற்றிங்கே வாடு கின்றோம் படைபலமும் இலையெமக்கு மாற்றார் போன்றே போரிடநல் லாயுதமும் எமக்கிங் கில்லை முடியாது போமென்றால் எதிரி யோடு
முறையான சமாதான உடன்படிக்கை தொடரவனு மதியேனுந் தருக" வென்றே
தாழ்மையுடன் கேட்டுமடல் முடித்திட்டாரே. 340
மடல்கண்ட சுல்தானம் மக்கள் கொண்ட
மாப்பெரிய சோதனையை எண்ணி நெஞ்சக் கடல்மீது மோதுதுன்ப அலைக ளாலே
கவல்மிகவே கண்ணீருஞ் சிந்தி னாரே உடனுதவி வரும்"மிஸ்ரு" நாட்டி ருந்தே
ஒருசிலநாட் பொறுத்திருங்கள் வந்த தும்என் கடமையுடன் செய்கின்றே னெனவ ரைந்தோர்
கடிதமவர்க் கனுப்பிவைத்தார் சுல்தா னன்றே. 341
நீரடியில் நீந்துவதில் வல்ல "ஈசா"
நிறைந்த பொன்னின் காசுகளை உடலில் கட்டி நேராக “அக்கா"சென் றடையத் தம்மின்
நண்பரொடு புறப்பட்டான் பணிப்பை ஏற்றே பேரரசர் போர்த்திட்டம் பலவுஞ் சேர்த்துப்
போயினரஃ தொப்பப்பல் நாட்கள் முன்னும் நீரடியாற் சென்றவர்தா மவர்கள் நீந்த
நிகரற்ற வீரரெனும் பெயர்கொண் டோரே. 342
 

காதலர் பிரிவு
சகலவித சலுகைகளுங் கொண்டி ருந்தார் சுல்தானின் ஆட்சியிலே பிறமதத்தோர் மிகையாக விலைகூறிப் பொருளை விற்றும்
மறைத்துமவர் சேர்த்துவைத்தார் முஸ்லிம் கட்கு வகையில்லை அவ்வாறு செய்யச் சட்டம் வலுவாக விருந்ததனால் வாங்கு தற்கும் தொகைதொகையாய்ப் பொன்வேண்டி இருந்த தாலே
பேரரசர் பொற்காசை அனுப்பினாரே
அதுமட்டுங் காரணமாய்க் கொள்ள லாகா
"அக்கா"வில் சீர்கேடு விஞ்சிப் போக இதுகாறும் உலகறிந்த உண்மை யெங்கும்
எப்போதும் எவ்வினத்தா ருள்ளும் பொல்லாச் சதிகாரர் வாழ்ந்துள்ளார் அதுபோ லன்றுஞ்
சிலரிருந்தார் முஸ்லிமென நாமங் கொண்டே அதிகமிலை ஒன்றிரண்டே ஆனா லும்மவ்
வீனர்களால் விளைந்தநவஷ்டம் பெரிதா மன்றோ.
19. காதலர் பிரிவு
பேரரசர் "சலாஹOத்தீ னோர்நாள் 'தாஹிர்"
பாசறைக்கு வந்துற்றார் “ஹெலனை'க் காணுங் காரணமாய் மகனுடனே அவளி ருக்குங்
கூடாரஞ் சேர்ந்ததடைந்தார் கண்டே யன்னாள் பேரதிர்ச்சி யுற்றனளே எதிர்பா ராதப்
போதாங்கே மாமன்னர் வருகை யாலே சேர்ந்திருந்த “ஜமீலா'வும் அச்சத் தாலே
தனைமறந்து நின்றொன்றிக் கணஞ்செய் தாளே.
அதிர்ச்சியுற்று நின்றவிரு மங்கை யர்க்கும்
அமைதியுறப் பணித்தசுல்தான் அவர வர்தம் கதையென்ன வென்றவரின் வார்த்தை யாலே
கேட்டறிந்து புலன்கொண்டார் அமைதியாக விதியாலே தாமடைந்த காத லர்கள்
விபரமுரைத் திடும்போது மாற்றங் கண்டே மதியூகம் மிக்கமன்னர் மனத்தை ய்ந்தார்
மறைந்தொளிருங் காதலினை மதித்திட்டாரே.
343
544
345
346
97

Page 57
98 புனித பூமியிலே காவியம்
சிறுபொழுது தாமதித்தே “அறிவா" யோவுன்
சகோதரனெங் கிருக்கின்றா" னென்றே மன்னர் உறவினையே மறந்திருந்த "ஹெலனை'க் கேட்க
ஒன்றுமறியாதவளாய் “அறியேன்" என்றாள் பொறுமையற்றுப் “பாசறையில் இலையோ" வென்றாள் “போய்விட்டார் “டைர்" கோட்டை" என்ற்ார் மன்னர் “மறுபடியும் வருவா"ரென் றுரைத்தாள் மங்கை
“மீள்வதில்லை யெனவறிந்தேன்" என்றார் மன்னர், 347
“ஏனென்று நீங்களறி வீர்க" ளென்றே
ஏந்திழையாள் கேட்கமன்னர் மீண்டுஞ் சொல்வார் தானேதான் ஜெரூஸலத்தின் மன்ன னாகத்
தவிக்கின்றார் உனதண்ணன் அதனாற் றானே மூன்றாவ தாக"இஸ் பெல்லா" வைத்தன்
மனையாளாய் வரித்தெடுத்தார் இவையனைத்தும் நானுரையா தறிவாய்நீ இன்னும் கேள்நீ
நினதண்ணன் பற்றிச்சில தகவல்" என்றார். 348
“பிரஞ்சுமன்னன் ஆதரவு கிடைத்தும் "ரிச்சாட்" பேச்சுக்கே மதிப்புண்டாம்" என்றே கூறி அரசுரிமை “கைடிலுளி னானுக்" கென்றே
அவருரைத்து விட்டதனால் கோபங் கொண்டு திரும்பி"டைர்" கோட்டைக்குச் சென்ற தாகத் தானறிந்தேன் “எனமன்னர் செப்பக் கேட்டு ஒருகணம்பே சாதிருந்து தன்னைத் தானே
உட்படுத்திக் கொண்டனளோர் வினாவுக் குள்ளே, 349
"அண்ணனறி வாரோநான் இங்கே" யென்றே
அவளையவள் வினாவொன்றால் கேட்க மன்னர் "உண்மையறி வாருந்தன் அண்ணன்" என்றார்
ஓங்குமுளத்தாசைமிகுந் "தெவ்வா" றென்றாள் திண்ணமிது நானேயோர் தூது விட்டேன்
தங்கையினை அனுப்புகவென் றென்னை வேண்டி மண்ணாளும் உனதண்ணன் விண்ணப் பித்தார்
மனமுண்டோ போக"வென மன்னர் கேட்டார். 350

காதலர் பிரிவு 99
போகமன முண்டோவென் றரசர் கேட்டுப்
புன்முறுவல் செய்யவது ஹெலனை நோக்கி மோகமுற்ற வென்மகனை மறந்தே போக
மனம்வருமோ வனக்கென்றே கேட்ப தொப்ப ஊகமுற வைத்ததவள் நாணத் தாலே
ஊடுருவி னாள்நிலத்தை விழிகளாலே ஏகமன மிலாதிருந்த போதுந் “தங்கள்
இட்டம்போற் செய்கின்றேன்" எனக்குழைந்தாள். 351
தோகைபதில் கேட்டுமனங் கொதித்தான் தாஹிர்
தமயனிடம் போகமறுத் திங்கே தங்கும் வாகாகப் பதிலுரைத்தல் கூடு மன்றோ
வேண்டுமென்றே வெனைவருத்த நினைந்தா ளிந்த ஆகாத விடைபகர்ந்தாள் அரசர் முன்னே
அஞ்சினளோ மறுத்துரைக்க வென்றே யெண்ணி மாக்கோபத் தோடவளை நோக்கப் பெண்ணாள்
மனமறிந்தே மனச்சலனங் கொண்டிட் டாளே. 352
"தகுந்ததுணை யோடுன்னை யனுப்பி வைப்பேன்
தயாராக இருமகளே' என்று கூறி மகனிருக்குந் திசைநோக்கி சுல்தான் சொல்வார்
மிகவிரையில் “ஹலபு" நோக்கிப் புறப்ப டென்றே வகையான நிலைகண்டோர் "அமீரு" மாங்கு வாகைகொள சிறுபடையோ டுற்றா ரென்றே தகவ லொன்று வந்ததின்று சென்றே யந்தத்
தருக்கனைநீ தடுத்திடுதல் வேண்டு மென்றார். 353
"சொன்னபடி செய்கின்றேன் என்ற னோடு 'ஸைபுத்தீன்" வரலாமோ“ எனவினாவ அன்னவனைப் பிறிதோர்நற் றேவைக் காக
அனுப்பவுளேன் அவனெங்கே அழைப்பீரென்றார்" . சொன்னவிரு வினாடிகளே யதிகம் அஃதுள் சுல்தானின் அருகிலவன் நின்றான் கண்ட மன்னவரின் பிள்ளைமனங் கொண்டான் தம்மின்
மனங்கொண்டாள் உடன்செல்லப் பணிப்பா ரென்றே. 354

Page 58
1 OO புனித பூமியிலே காவியம்
அருகிருந்த ஸைபுத்தீன் தன்னை நோக்கி
அரசருரை செய்திடுவார் "அக்கா" வுள்ளே “கராகுஷ"மண் டலப்பதியாய் உன்றன் தந்தை கோட்டைக்குத் தளபதியாய் இருந்த போதும் வரவரவே சீர்கேட்டுக் குள்ளாய்ப் போகும்
வாகறிந்தேன் முற்றுகையின் பெருக்கத் தாலே ஒருவாறும் நினைத்தபடி யவர்கள் பால்நாம்
உதவிடவும் முடியவில்லை யென்றா ரின்னும்
பொறுமையுடன் இன்னுமொரு வாரம் "அக்கா’ப்
பொதுமக்கள் இருப்பரெனில் பிரச்சினைக்கும் உறுதிமிக்க முடிவொன்றை எடுக்க லாம்நாம்
உட்புகவோ வழிகிடைக்கும் "மிஸ்ரி னோடே குறுநிலத்து மன்னர்களும் படைகள் கூட்டிக்
கடல்வழியே நெருங்குவதாய்த் தகவல் கொண்டோம் திறமைமிகு வொருவராங்கு வேண்டும் என்றன்
ட்டமொன்றும் உண்டென்றே உரைப்பாரின்னும்,
'திட்டமிட்ட படிதிங்க ளொன்றின் முன்னர்
துணைக்கவர்கள் வந்திருந்தால் "அக்கா' வைநாம் திட்டம்போல் முற்றுகையை முறிய டித்தே
தம்வசங்கொண்டிருக்களளிதாகும் நம்மால் திட்டமிட முடிந்தாலும் நடப்ப தெல்லாஞ்
சிலபோது தோற்றுவிடும் இறைவன் போடுந் திட்டமொன்றே வெற்றிபெறும் தெய்வ நீதி
தப்பாது நடப்பதெலாம் நன்மைக்"கென்றார்.
“ஈமானின் பலத்தாலே இருந்தார் மற்றும்
எவரேனும் இத்தனைநாள் பொறுக்க மாட்டார் தாமாகச் சென்றுசமா தானஞ் செய்யும்
தன்மையிலும் பொறுமையுடன் வாழுகின்றார் நாமாகச் சென்றுதவி செய்ய மட்டும்
நல்லடியாரவர்களுடல் உள்ளத் திற்கு ஈமானே உறுதியளிக் கின்ற தன்றி
எதுவுமிலை வேறொன்'றென் றியம்பி இன்னும்
356
357
358

காதலர் பிரிவு 101
“இந்நிலையில் உன் போன்றோர் வீரன் சேவை
இருப்பதங்கு வேண்டும் நீ செல்ல வேண்டும் மண்வழியிற் செல்வதின்று விவேக மாகா
மாற்றுவழி கடலடியில் மூழ்கிச் செல்லல் திண்ணமதைச் செய்வதுனக் கெளிதே நீயும்
திறனுடையோன் "ஈசா"வைப் போல நீந்தும் வன்மைமிக்க தீரனென்று பெயருங் கொண்டோன்
விரைவாகப் பயணத்தை மேற்கொள்" என்றார். 359
உடனேகு வாயென்றே மன்னர் கூறி
உரைப்பாரங் குன்னுடைய தந்தை தம்மின் கடமைக்குப் பலமாக இருந்து மக்கள்
கருத்தினிலே நிலைமைதனை விதைப்பா யென்றார் திடமாக இன்னுமொரு வாரத் துள்ளே
துணைப்படைகள் வருமென்றே கூறு பின்னர் அடையலர்க்குப் பாடமொன்று புகட்டு வோம்நாம்
அல்லாஹற்வின் அருளோடு செல்வா யென்றார். 360
இறைநாமம் உரைத்து மன்னர் வாழ்த்துங் கூறி
இக்கணமே புறப்படென்றே ஆணையிட்ட மறுகணமே 'ஆணைக்குப் பணிந்தே"னென்று
மிகப்பணிவாய் நின்ற 'ஸைபுத் தீ"னைத் 'தாஹிர்" இறுகவணைத் துரைத்திடுவான் " நண்ப னே
இறையருளால் செல்லுனக்கு வெற்றி கிட்ட இறைஞ்சுகிறேன்" என “ஜமீலா" ஆமீ னென்றாள்
இணைந்து “ஹெலன்" கூட "ஆமென்" எனப்பகர்ந்தாள்.361
காதலனின் பிரிவெண்ணிக் கலங்கும் பெண்ணாள்
கையுயர்த்தி "ஆமீ“னென்றுரைக்க வொன்றி ஒதினளே "ஆமென்'னென் றே “ஹெ லன்"தன்
உளமுருக மன்னரதை நோக்க லுற்றார் பாதியிலே விட்டசேதி தொடர்ந்தார் சுல்தான்
புறம்பான விடயமொன்றை “ஜமீலா பற்றிப் பூதலத்திற் பெறாப்பேறு பெற்றாள் போன்றே
பெருமையுற்றாள் “ஜமீலா"வச் சேதி கேட்டே 362

Page 59
102 புனித பூமியிலே காவியம்
கோட்டையுள்ளே இருக்கின்ற போர்வீ ரர்கள்
கூட்டத்தில் "ஜமீலா"வின் தந்தை பற்றிக் கேட்டறிந்து பாரவர்முன் போரில் சொர்க்கக்
குடைநிழல்சென்றடையாதாங் குயிரோ டுற்றால் வாடாத புதுமலராய் "ஜமீலா" வென்றன்
வாஞ்சைமிகு மகளாக "முனீஸா’ வின்னோர் கூடவவ தரித்தவளாய்க் குறைக ளின்றிக்
குதுகலமாய் இருப்பதையுஞ் சொல்லென் றாரே 363
தனதுமகள் “மூனீஸா' வோடு தன்னைச்
சேர்த்தரசர் மகளென்று கூறக் கேட்டு மனமுருகிப் போனாளே “ஜமீலா" நன்றி
மிகமன்னர் முகம்நோக்கிக் கண்க சிந்தாள் இனங்கான முடியாத வேத னைக்குள்
இழப்பொன்றை எண்ணிநெஞ்சந்தி ளைக்கத் தம்மின் மனங்கொண்டான் பிரிவாலே கசிந்த கண்கள்
மடையொடித்துப் பெருகிடவே விம்மி னாளே. 364
நேரெதிர்த்த உணர்வுகளால் நெஞ்சந் தோன்றும்
னைவுகளை யவள்வதனம் பிரதி செய்யப் பாராளும் மன்னரொடு 'ஸைபுத் தீனைப்"
பார்த்தழுதாள் “ஜமீலா'தன் நிலைமறந்தாள் காரேறு மனங்கொண்ட எதிரி யானோர்
கையிருந்து கோட்டைதனை மீட்ப தென்ற தீராத வெறிகொண்டே 'ஸைபுத் தீனும்
தனைப்பிரித்தாங் கிருந்துவிடை பெற்றிட் டானே. 365
விசித்தழுத "ஜமீலா"வின் அருகிற் சென்று
வாஞ்சையொடு "ஹெல"ண்ணைக்க மன்னர் யார்கை வசம் 'ஹெலனை" யொப்புவிப்பார் என்றே 'தாஹிர்"
விபரமறிந் திடமுயன்றே வினவ மன்னர் உசிதமதற் குன்னையன்றி வேறா ருண்டாம்
உடனழைத்துச் செல்லென்றார் குறும்பாய் நோக்கிப் பசித்திருந்தோன் தீனிகண்ட பாங்காய் உள்ளம்
பேருவகை கொள்ளவவன் 'ஹெல"னைப் பார்த்தான், 366
 

=
காதலர் பிரிவு 103
கடற்கரையை ஒட்டிநிலப் பரப்பிற் சென்று
கான்ராட்டின “டைர்" கோட்டை தனையண் மித்தே உடனழைத்துச் செல்லுகின்ற "ஹெலனை" ஆங்கே உள்ளவர்களிடந்தருவாய் அதற்கு வேண்டும் நடவடிக்கை யனைத்தையுமே யெடுக்கும் வண்ணம்
நானவர்க்குத் தூதுவிட்டேன் வந்திருப்பார் வடகிழக்கை நோக்கிப்பின் நீயு முன்றன்
வழிப்பயணந் தனைத்தொடர்ந்தே “ஹலபை"ச் சேர்வாய்"367
கோட்டையுள்ளே சென்று"கான்ராட்" தன்னைக் கண்டு
கையளித்து வரக்காலம் போதா தன்றேல் நாட்கள் சில கழித்துவரப் பணித்தி ருப்பேன்
நட்பினைநீ பெறத்தோதாய் அமைந்திருக்கும் தோட்துணையாய் நம்மோடு சேர்ந்து கொள்ளும் திட்டமவர்க் குண்டென்று தேர்ந்தே னென்றன் நாட்டமுமஃ தாயிருப்ப தாலே நம்முள்
நலஞ்சேரச் சந்தித்தல் நன்றே" யென்றார். 368
“பறங்கியரின் பாசறையில் இருப்போ ரெல்லாம் பொதுவான எதிரிகளே அவரும் நாமும் வெறுக்கின்ற கூட்டமவை என்ப தாலே
விரும்புகிறார் நம்முறவைப் போலும் நட்பும் இறுக்கமுற "ஹெலனெ"மக்காய் முயலக் கூடும்
இயன்றநல்ல உதவிகளைச் செய்தல் கூடும் மறுக்காதெம் இளவரசி செய்வா ரென்று
மன்னர் சொல மகிழ்ந்து "ஹெலன்" தலைய சைத்தாள். 569
அன்றேதம் பயணத்தைத் தொடர்ந்தான் மன்னர்
ஆணையது வாறிருந்த தாலே தாஹிர் ஒன்றாக "ஹெலன்"வருவ தெண்ணி நெஞ்ச
உணர்வுகளிற் சிறையுண்ண முன்னே சென்றான் என்றுமிலா வாறுஹெலன் மகிழ்ச்சி யுற்றாள்
இணைந்து செலும் பாக்கியத்தைப் பெற்ற தாலே நன்றாக உதவியதா பயணம் உள்ளம்
நெருங்கியுற வாடிடவவ் விருபேருக்கும் 370

Page 60
104. புனித பூமியிலே காவியம்
கோட்டையினை நெருங்கவர் மனங்கள் ஏதோ கேடுவந்த தொப்பவெண்ணிக் கலக்க முற்றார் வாடியுளஞ் சோர்ந்தழுதாள் "ஹெலன்"ஈ தென்ன
விதியாமோ வெனத்தாஹிர் விதியை நொந்தான் கூடிடுநாள் வருவரையும் இருவ ரும்தம்
காதலினை மறப்பதில்லை யென்றே கைகள் கூடவொரு சபதத்தை ஏற்றார் கண்கள்
குளமாக அசைவற்று நின்றிட்டாரே. 3.71
வரவேற்கப் பலநூறு வீர ராங்கே
வந்திருந்தார் அன்னவரை நோக்கிப் பார்வைச் சரந்தொடுத்தாள் "ஹெலன்" நன்றாய்த் துருவி ஆய்ந்தே
சந்தேகங் கொண்டவளாய் வதனஞ் சோர்ந்தாள் “வரவிலையோ தங்களுடன் பிறந்தான் "என்றே
வினவினனே தாஹிரவள் நிலைமை கண்டே வராததவர் மட்டுமல்ல வந்தி ருப்போர்
விவரமும் நானறியனெனப் பதில்சொன் னானே. 372
அழாதகுறை யாகவவள் பதிலு ரைக்க
“அதற் கென்ன நானழைத்துச் செல்வே “னென்று முழுவுரிமை யோடுமன்னன் மகனு ரைக்க
மறுத்துரைத்தாள் இளவரசி வேண்டா மென்றே “பிழையன்றோ மன்னராணை மீறல் நீங்கள்
புறப்படுங்கள்" எனக்கூறிப் பிரிந்தா ளென்றும் அழியாத நினைவுகளை யுள்ளந் தாங்க
அகன்றதிருவள்ளங்கள் அறிவா ராரோ. 373
கோட்டைக்குச் செல்லுகின்ற பாதை யின்னோர் குறுக்குவழி தோன்றுவதில் அவர்கள் செல்ல நோட்டமிட்ட இளவரசி அச்ச முற்றே
"நீங்கள் செல்வதல்லவழி இதுவென்" றாளே கேட்டதுமல் வார்த்தைகளை இரண்டு வீரர்
கடுகியவ ளருகினிலே வந்து மிக்க மேட்டிமையாய் நெஞ்சுயர்த்திப் பரிக ளோட்ட
மனமொடிந்தாள் 'ஹெலன்'தவறை யுணர்ந்திட்டாளே374
 
 
 

மூன்று துரோகிகள்
20. மூன்று துரோகிகள்
திட்டமிட்ட படி யெளிதில் "அக்கா"க் கோட்டை
தனதுகைக்குக் கிடைக்கும் நான் பிரஞ்சு மன்னன் பட்டதுபோ லிழிவுபட மாட்டே னென்றே
பேரெண்ணங் கொண்டிருந்தான் "ரிச்சாட்" ஈற்றில் கட்டவிழ்த்துத் துரத்திவிட்ட கடாக்கள் போலும்
கண்டதிக்கில் வீரர்கள் சிதறியோட வட்டியொடு முதல் கூட்டி வாங்கிக் கொண்டான்
வாணாளில் என்றுமிலா வாறா மன்றோ
கலக்கமுற்ற ரிச்சாட்தன் படுதோல் விக்குக் காரணரா யானசுல்தான் தன்னைக் காண விலக்கமுடி யாதபெரும் ஆசை கொண்டே
வேண்டியற வாடவொரு தூதுவிட்டான் “மலிக்குலப்ஸ்" லிடஞ்சென்ற தூதன் பின்னர்
மன்னரிள வல்மலிக்குல் 'ஆதில்" மூலம் வலக்கரத்தா லிடுவதிட மறியா வேந்தர்
வள்ளலர்கோன் ஸலாஷமத்தீனிடஞ்சென்றானே
சேதியறிந் தேமன்னர் தூத னுக்குத்
தெரிவித்தார் சமாதானஞ் செய்த பின்னே மோதலிலா நிலைதோன்றும் மனங்க ளொன்றி
முன்னனைத்தும் மறந்துறவு கொள்ளல் கூடும் ஆதலினால் நீ சென்றே கூறு நம்முள்
ஆகுமுடன் படிக்கையின்பின் சந்திப் பிற்கு ஏது செய்வோம் மனந்திறந்து பேச லாமெம்
இருசாரா ருக்கமஃ தேற்ற தென்றே.
பேரரசர் பதில்கொண்டு சென்ற தூதன்
பின்னுமொரு முறைவந்தே “சிச்சாட்" சொன்ன காரணத்தை முன்வைத்தான் சந்தித் தாற்கை கூடுமுயர் சமாதான வழிக ளென்றே யாருடனும் வலிந்துபகை கொள்ளா வேந்தர்
இணங்கியதும் மீண்டுசென்றான் இரண்டு நாட்கள் ஓர்முடிவு மிலாது கழிந் திடவோர் சேதி
ஒற்றர்களால் மன்னருக்குக் கிடைத்த தன்றோ.
375
S76
377
378
105

Page 61
106 புனித பூமியிலே காவியம்
பறங்கியரின் பாசறையில் மற்றுள் ளோர்கள்
பிரியமுற வில்லையென்ற செய்தி கேட்ட மறுதினமே ரிச்சாட்டின் தூதன் வந்தே
"மலிக்குலாதி" விடமவனின் தூது சொன்னான் மறுத்துரைத்தான் வதந்திகளைத் தான்நி னைத்த
முடிவினிலே மாற்றமிலை யெனவுரைத்தே சிறந்தநல்ல பரிசுதரத் தான்வி ரும்பும்
செய்தியையும் தூதுவன்பா லறிவித் தானே. 379
"நாம்விரும்பி அனுப்புகின்ற பரிசில் தம்மை நயப்பீரோ" வெனத்தூதன் வினவ ஆதில் "நாமுமக்குத் ஏற்ப தாயின்
நயப்பதிலோர் மறுப்பில்லை" எனவுரைத்தார் "நாம்நயப்ப தெதுவென்றே யுரைப்பே னஃது
நோயுற்ற ೩ಲಕ್ಷ್ பறவை கட்கு நாமுட்ட உண்ணச்சிறு கோழிக் குஞ்சாம்
நலம்பெற்ற பின்னவையே பரிசாம்" என்றான். 380
விசித்திரமாத் தோன்றியதக் கோரிக் கைதாம்
விரும்புவதை யவன்சொன்ன போழ்தே ஆதில் “பசித்திருக்கும் ராஜாளிப் பறவை கட்கா
பிரியமவை யுண்ணவுங்கள் மன்னருக்கா புசிக்கவவை தருவோம்நாம் வேண்டு வோர்க்குப்
பங்கிட்டே யளியு"மெனக் கூறித் தூதன் உசிதமற்ற வேண்டுதலுக் கொப்பாய்க் கிண்டல்
ஒன்றப்பதில் சொல்லியவன் வாய டைத்தார். 3.81
வெட்கமுற்ற போதுமதை வெளிக்காட் டாது வெவ்வேறு சிலவற்றைப் பேசி ஈற்றில் நட்புரிமை போல்"தங்கள் விருப்ப மென்ன
நவின்றிடுவீ" ரெனவினவ “மலிக்குல் ஆதில்" "உட்பொருள்தா னென்னவுங்கள் உறவுக் கென்றே
ஒர்ந்தறிதல் வேண்டும்நீர் நம்மை முந்தி நட்பாட வந்ததனைப் புரிந்த பின்னே
நம்விருப்பந்தனைச் செப்ப லாகு"மென்றார். 382

மூன்று துரோகிகள்
அரசரொடு பேசமிக விரும்பினாலும் தவறாது முஸ்லிம்கள் உறுதி தன்னைத்
தெரிந்துகொள வேண்டுமெனத் தானே தூதை இவணனுப்பி வைத்தார்கள் ஆய்ந்த றிந்தே
மன்னரொடு சமாதானஞ் செய்து கொள்ள
மிகவிரும்பி னான்"ரிச்சாட்" டென்ற போதும் இன்னுமொரு புறத்தினிலே கோட்டை மீது
இரவுபக லாய்த்தாக்கல் நடந்த தன்றோ முன்னிலுமிப் போதுநிலை மோச மாக
மிகவிநயமாயுள்ளே இருப்போர் தம்மின் இன்னுயிரைக் காக்கவெனப் புறாக்கள் மூலம்
இலிகிதமொன் றரசருக்கு வனுப்பி வைத்தார்.
“இனியுமெம்மால் எதிர்க்கமுடி யாதே யுள்ளே இருப்பவரோ டுடன்தொடர்புக் கேது செய்து மன்னுயிரை அழிவிருந்தே காக்க வேண்டும்
முடியாத போதெம்மை நாமே காக்க அன்னவரோ டொப்பந்தஞ் செய்து கொள்ள
அனுமதிக்க வேண்டு"மென இறுதியாக மன்னவர்க்கக் கடிதத்தில் குறித்தி ருந்தார் மிகநொந்து போனமன நிலையினாலே.
இடையற்ற எதிரிகளின் தாக்கத் தோடே
ஈமானைக் கொன்றமுஸ்லிம் துரோகியர்தம் தொடரான துரோகங்கள் விஞ்ச விஞ்சத்
துயருற்றார் கோட்டைக்குள் ளிருந்த மாந்தர் அடையலருக் குதவிசெய்து முஸ்லிம் வீரர்
அழிவுறவுங் காரணராய் இருந்தா ரன்னார் கடைமாந்த ரவராலே நேர்ந்த துன்பங்
கரைகடக்க வுள்ளிருந்தோர் சோர்வுற் றாரே.
“விவரமெலாம் மன்னருக்குச் சொல்வேன் மீண்டும்
வருவேன்நா"னென்றுரைத்துத் தூதன் செல்ல அவர்நோக்கம் அறிந்திட்டார் "ஆதில்" "ரிச்சாட்"
இங்கிருந்தே யகன்றிருப்பா னெனவுணர்ந்தார்.
107
383
384
385
386

Page 62
108 புனித பூமியிலே காவியம்
“இஸ்ஸுத்தீன் அர்ஸ“லென்பா னொருவன் மற்றோன்
“இப்னுல்ஜா வலி"யென்ற கயவன் இன்னும் முஸ்லிம்கள் துரோகி’சுங்கூ ரல்வ ஷாக்கி" மூவருமே பதவிகளால் "அமீர்"களாவார் விசுவாசங் கொண்டிருந்தும் இனத்தைச் சாடும் வேற்றவருக் குதவுகின்ற ஈனப் பண்பால் தசையழிந்து போனாலுஞ் சரித்தி ரத்தில்
தமதுபெயர் தமைப்பதித்தார் நரகப் பேரே, 387
“கடல்போன்ற பெருஞ்சேனை தனையே திர்த்தே
கண்டபடி வீரர்களை இழப்பதாலே மடமையொன்றைச் செய்கின்றார் சுல்தான் இஸ்லாம் மார்க்கத்தை அழிக்கின்றார்" என்றே தம்மின் உடலாலும் உளத்தாலுஞ் சோர்ந்தே போன
உண்மை முஸ்லிம் வீரரிடை விஷம மாகத் தொடர்ந்தனரத் துரோகிகள்தம் பிரச்சா ரத்தைத்
தூய"ஈமான்" கொண்டவர்கள் பணிந்தாரில்லை. 388
அறியாதோ ரிலைமுஸ்லிம் வீரர் சுல்தான்
ஆற்றுகின்ற பெருஞ்சேவை இஸ்லாத் திற்காய் உறைகாணா வாளோடே உயிரை முற்றும்
உதாசீனஞ் செய்தவராய்ப் போர்கள் செய்தார் முறைகேடர் முயன்றாலும் இவற்றை யெல்லாம்
முஸ்லிம்கள் மறக்கவில்லை மாறா யன்னார் குறைகண்டே வைதனரக் கொடியோர் தப்பிக்
கோட்டைவிட்டே ஓடும்வகை வெறுக்க லானார். 389
கோட்டைவிட்டே யோடியவர் பறங்கி யர்கள் கூடாரஞ் சேர்வதற்கு முயன்ற போது நாட்டத்தில் தோல்வியுற்றான் “இப்னு ஜா'தன் நண்பர்கள் தப்பிவிடப் பிடியுண் டானே வேட்டையிலே தோல்வுற்ற ஞமலி கள்போல்
வாயடங்கிக் கிடந்தவந்தப் பறங்கிக் கூட்டம் தோட்பலங்கொண் டாரன்னார் துரோகத் தாலே
தொடர்ந்துபல பாதிப்புஞ் செய்திட்டாரே 390

இறுதிச் செய்தி
21 இறுதிச் செய்தி
துரோகிகளும் ஓடிவிடத் தலைவர் கூடித்
தொடர்ந்து தங்கள் பணியென்ன வென்றே ஆய்ந்தார் வரவில்லை நாம்கேட்ட வுதவி இன்னும்
வந்தசெய்திப் படி"ஈஸா' வரவு மில்லை ஒருநாளும் தானேற்ற பொறுப்பை "ஈஸா"
ஒழுங்குறவே செய்யாது விடவும் மாட்டான் பொருள்வாங்கப் பொன்னோடு போர்த்திட் டங்கள்
பேரரசர் அனுப்பியதாய்ச் செய்தி கொண்டோம்.
வெறுத்தாலும் துரோகிகளைச் சோர்வ டைந்த ரர்கள் என்னசெய்வார் தப்பு தற்குப் புறம்பான வழியுமில்லை என்றோ வோர்நாள் பறங்கியர்கள் சரணடையச் செய்வர் நம்மை முறையாகத் தூதுவிட்டுப் பார்ப்போம் அன்னார்
மனங்கொண்ட தென்னவென அறிவோ மென்றே நிறைந்திருந்த கூட்டத்தை "கராகுவஷ்" நோக்கி
நேரிடையாய் வினாவொன்றை விடுத்திட்டானே.
மண்டலத்தின் அதிபதியாம் “கராகுஷ" ஆங்கு
முன்னிருந்தோர் தனைவிளித்து வினவ நாங்கள் “கண்டபடி தொடர்புகொள்ளல் தப்பாம் சுல்தான்
கட்டளையொன் றிலா தெதுவுஞ் செய்த லாகாது) என்று'அஹற்மத் அல்மவஷ்தூப்" படைத்த லைவர் இயம்பிடவே அதிபதியுஞ் சொல்வார் "தீமை ஒன்றுமில்லை அவர்களெண்ணம் அறிதல் மன்னர் ஒப்புதலி லாதெதுவும் செய்யோ" மென்றே.
ஒப்பந்தஞ் செய்வதெனில் அதற்கு முன்னே ஒர்ந்தறிந்து பார்த்தல் மிக உசிதமாகும் எப்படியன் னார்சொல்லும் நிபந்த னைகள்
எனவினவில் நன்றென்றே பெரும்பா லானோர் ஒப்பிடவே படைத்தலைவர் தாமும் ஒன்
ஒர்குழுவை அனுப்பிவைத்தார் பறங்கியர்கள் செப்பியபொல் லாப்பதிலைக் கேட்பின் முஸ்லிம்
துரோகிகளின் சிரங்களையத் தோன்று மன்றோ.
391
392
393
394
109

Page 63
110 புனித பூமியிலே காவியம்
துரோகிகளின் சேர்க்கையினால் பறங்கியர்கள்
துணிவுகொண்டார் செருக்குற்றே இறுமாப் போடு "தரவியலா தெந்தவொரு பிடியும் நீங்கள்
திறந்துவிட்ட போதும்வழியத்தம் செய்தே உரியபடி வெற்றிகொண்ட நாட்டி னுள்ளே
உட்புகுதல் போலவே நாம் செல்வோம் யார்க்கும் பரிவுகாட்டும் நோக்கமெமக் கில்லை நீங்கள்
போய்வரலாம்" எனப்பதிலுங் கூறினாரே 395
சினங்கொள்ள வைக்கின்ற பதிலி னோடே
திரும்பிவந்தார் தூதுவர்கள் அப்போ தாங்கே மனங்கொள்ள மாட்டாத சேதி யோடும்
மாமன்னர் தகவலொடும் தடைகள் தாண்டிக் தனதுபணி தனைத்தாங்கி வந்தான் கோட்டைத்
தளபதியின் மகன்'ஸைபுத் தீன்'முன் நேர்ந்த வினையனைத்தும் எடுத்துரைத்தான் உதவி கேட்டும்
வாராத காரணத்தை விபரித் தானே. 396
வருவழியில் தான்கண்டே அதிர்ச்சி யுற்று
வருந்துமொரு சேதியையுஞ் சொன்னான் "ஈசா" கரையொதுங்கிக் கிடக்கின்றான் நண்ப ரோடே
கடலடியிற் பொன்கொண்டு வந்தோ னென்றான் பெருந்துயரங் கொண்டார்கள் ஆங்குற் றோர்கள்
பேர் பெற்ற சுழியோடி உயிர்க்கஞ் சாது கருமமெது வானாலும் முடிக்கும் வீரன்
கடலுக்கேன் இரையானான் அந்தோ வென்றே. |39|7
தன்னிகரே இல்லாத நீச்சல் வீரன்
தயவதனால் பலநல்ல காரியங்கள் முன்னரெல்லாம் நடந்ததன்னான் இழப்பி னாலே முஸ்லிம்கள் பெருநஷ்டங் கொண்டா ரென்றார் என்னவந்த போதுமதற் கஞ்சி டாதே
எடுத்ததனைத் தொடர்ந்துமுடித் திடுநற் றீரன் தன்னுடனோர் திறமைமிகு கூட்டத் தாரைத்
தலைமைவகுத் தியங்கிவந்தான் தியாகி யென்றார். 398
 
 

இறுதிச் செய்தி
வரலாறே அறியாத தியாகஞ் செய்தான்
வல்லாளன் "ஈசா"தந் தோழ ரோடே சிரங்கொண்ட பணிதன்னை நிறைவு செய்யத்
தனதுயிரை இழந்தனனே மறக்க லாமோ மருவார்கைப் படாது முஸ்லிம் மாந்தர் வாழும்
மண்ணினிலே சேர்த்துவிட்டான் உடலோ டொன்றிச் சொருகிவந்த சொர்ணவெள்ளிப் பணத்தை யெல்லாம்
சேருவோர்க்குச் சேர்த்துவிட்டே இறைசேர்ந் தானே.
எண்ணியதை விடநிலைமை மோச மாக
இருந்ததந்தக் கோட்டையுள்ளே மக்க ளெல்லாம் உண்ணுமுண வோடுபிற பொருள னைத்தும்
உயர்ந்தவிலை யாற்கொள்ள இயலாதுற்றார் எண்ணரிய துன்பங்கள் வந்த போதும்
எல்லாமே தாங்கிமனவுறுதியோடு விண்ணவனின் வழிகொண்ட இறைநே சர்கள்
வாழ்ந்ததனை எண்ணியுளம் மகிழ்ந்திட்டானே.
படைத்தலைவ ரானதந்தை "அஹற்மத் மவஷ்தூப்" போர்ச்சபையின் சம்மதத்தைப் பெற்றுப் போரை நடைப்படுத்தப் பணித்தார்தம் மகனைத் தேக
நலமற்றுத் தானிருந்த காரணத்தால் கொடுத்தபடி காலமுமோர் வார மேக
காத்திருந்த படியுதவி கிடைக்கா மக்கள் அடுத்தென்ன நடக்குமென அகமும் நொந்தார் அமைதியற்றுப் போனாரென் செய்கு வாரோ.
சபைகூட்டி முடிவுசெய்து தானே தூது
சென்றனனே 'ஸைபுத்தீன்" பிரஞ்சு மன்னன் அவைக்கேகி எடுத்துரைப்பான் "நாங்கள் வென்றே
ஆட்சிசெய்யும் நாடெல்லாங் கிறிஸ்த்த வர்கள் எவ்ரெனினும் இன்னலுற வில்லை தங்கள்
இட்டம்போல் வாழுகிறார் அதுபோல் நீங்கள் எவர்க்குமொரு தீங்கிழைக்கா திருப்பின் நாங்கள்
இன்றேயெம் கோட்டையினை அளிப்போ" மென்றான்.
399
400
4O1
4O2
111

Page 64
112 புனித பூமியிலே காவியம்
“நீங்கள் முன் பிடித்தளித்தோர் அடிமை யாட்கள்
முன் Dடிததளத\6தாா அடி ங்களுமெம் அடிமைகளே யாவீர் கூறின் நாங்களறி வோமெங்கள் அடிமைப் பேரை
நடாத்துவதெவ் வாறென்றே யவ்வாறன்றி ங்களுரைத் திடும்பாங்கில் நிபந்த னைக்
莎 நத @ ன்றெழுத நாமென்றும் அடிமை யாமோ தீங்கிழைப்ப திலையென்றே வாக்கு மக்குத்
தருவதில்லை" யெனக்கர்வத் தோடு ரைத்தார்.
கேட்டபதில் செவிப்பறையில் நெருப்பாய்த் தாவக்
கோபத்தால் விழியிரண்டுஞ் செங்கோ ளாகிச் சாட்டையடி பட்டஇளஞ் சிறுத்தை யொக்கத் தினவெடுத்துத் தோளிரண்டுந் துடிதுடிக்க தீட்டியவாள் முனைபோல வார்த்தை கோத்துத்
தாவிச்சில வடிமுன்னே சென்று ரைப்பான் “கேட்பீர்கள் நான்செய்யுஞ் சபத மிஃது
சந்திப்போம் போர்க்களத்தி" லென்றே யின்னும்
“உடலிலொரு துளிக்குருதி யோடு மட்டும்
உமையெதிர்த்துப் போராடி மடிவோம் கேண்மின் கடைசியிலோர் எச்சரிக்கை ஒவ்வோர் முஸ்லிம் கடமைவீரனுந்தமது வுயிர்போ முன் நின் படையினரின் ஐம்பதின்மர் சிரசு சீவிப்
பந்தாடா துடலைநிலம் வீழ்த்த வொப்பான் விடைகொண்டேன் செல்கின்றேன் வாட்குத் தீனி
வேண்டிப்பின் வருகின்றேன்"எனவ கன்றான்.
பிரஞ்சுமன்னன் பதில்கேட்டுக் கொதிப்ப டைந்த
படைத்தலைவன் போர்ச்சபையைக் கூட்டி யார்க்குஞ் சிரஞ்சாய்ப்ப தில்லையெனும் வெறியி னோடே
செய்தியொன்றைச் சுல்தானுக் கனுப்பி வைத்தான் ஒருபோதும் கோட்டையினை எதிரி கையில்
ஒப்படையோம் இறுதிவரை எதிர்த்தே மாள்வோம் நிருபமிது தானிறுதி யாகும் நீங்கள்
நேரமறிந் தெமக்குதவ வேண்டு மென்றே.
403
4O4.
405
4O6

நரக நெருப்பு 113
நெஞ்சினிலே தைத்தசரம் போலச் சேதி
லைகுலையச் செய்திடவே பதிலாய் மன்னர் 'அஞ் சாதீர் இதுகண்ட வுடனே யுத்த
ஆரம்பஞ் செய்யுங்கள் சிலுவைப் போரில் எஞ்ஞான்றும் இல்லாத வாறே சுற்றி
எதிர்த்துங்கள் தொடர்பு கொள்வோம் உதவி கொண்டோம் பஞ்சாகிப் போகுமவர் முற்று கையும்
பண்ணவனின் அருளா" லென்றுறுதியோடே 407
தீயிட்டுத் தணலான இருப்புக் கம்பித்
தொகையெடுத்துத் தனைச்சுற்றிப் பூணா ரம்போல் வேயவிட்டே செங்கதிரோன் மறுநாட் காலை
விடிவுக்காய் விழித்தெழுந்தான் அப்போ தென்ன மாயமிதா மெனமுஸ்லிம் படையோ ரஞ்சு
மாறுமுன்னோர் காட்சிகண்டார் தமது நெஞ்சைத் தீயிட்டு வேகவைத்த தொப்ப மிக்க
திகிலடைந்தார் பெருந்துன்பங் கொண்டிட் டாரே. 4.08
22. நரக நெருப்பு குறிப்பிட்ட வோரிடத்தைச் சிலுவை வீரர்
குறிவைத்துத் தாக்கினரே தினந்தோறும்ஈர் புறமிருந்துந் தாக்கவல்ல வசதி யாக
பொருந்தியிருந்தனவிரண்டு சுவர்களாங்கே பறங்கியர்கள் நம்பினரோர் நாளி லிந்தப்
பெருஞ்சுவரை உடைத்துள்ளே புகலா மென்றே திறனையெலாந் தேக்கியவர் தொடர்ந்தா ரோர்நாள்
திறந்ததுவாய் அன்னவர்கள் நினைந்த வாறே. 4.09
உயர்ந்தபெருஞ் சுவரிரண்டாய் வாய்பி ளந்தே உருமாறிப் போயிருக்கச் சிலுவை வீரர் செயவரிய செயலொன்றில் ஒன்று பட்டார்
துணிந்துசுவரடியினையும் தகர்க்க லானார் வயமாகப் போனதது மெள்ள மெள்ள
வெளிப்புறமாய்ச் சரிந்திட்ட காரணத்தால் செயல்தப்பி யோரடியாய் வீழ்ந்தி ருந்தால்
செத்திருப்பார் பலநூறு வீர ராங்கே 410

Page 65
114 புனித பூமியிலே காவியம்
சுற்றியுள்ள பேரகழி தோறும் முன்நாள்
செத்தபிணக் குவியல்களைச் சேர்த்தெடுத்தே முற்றாக மூடினரே சிலுவை வீரர்
மேலுமவை நிறைக்கவென மதிலில் பெற்ற கற்களையும் மண்ணோடு சேர்த்து வந்தே
கொட்டியதைக் கெட்டி செய்தார் சுவரின் கீழே புற்புதரை விறகுகளை நிறைத்துத் தீயைப்
பரவவிட்டார் பொழுது மொன்றிப் புலர்ந்த தம்மா 411
மதிலோடு சேர்ந்தேவான் நோக்கி யாங்கே
மற்றோர்பே ராபத்தாய்ச் செப்பினாலே புதுமுறையிற் கவசமிட்டு நின்ற தென்ன
ரமிக்கத் தக்க"கவண்" கோபுரந்தான் புதிதாக அகழ்தூர்த்த பாதை யாலே.
பறங்கியர்கள் கொண்டதனைச் சேர்த்திருந்தார் இதுகாறும் போலில்லா தெதிர்ப்பைத் தாங்கும்
இறுமாப்போ டிருப்பது போற் றோன்றிற் றஃதே. 412
மதிலடியில் உருவான குழிக ஞள்ளே
மரங்குவித்துத் தீவைக்க இடையிலெங்கும் பொதிபொதியாய்த் திணித்திருந்த வெடிம ருந்திற்
பரவியவை வெடித்தெங்குந் தாவி யோங்கும் முதலிலவர் முயற்சியினால் பிளந்தி ருந்த
மதிற்கவரும் இனித்தாங்க வியலா தென்றே சிதறியது சிறுசிறுகற் றுண்ட மாகச்
சேர்ந்துயர்ந்த கோபுரமுஞ் சரிந்த தன்றோ. 413
நினையாத போதுமதில் இடிந்து வீழ
நேர்ந்தவினை யறிந்துள்ளே இருந்த வீரர் கணநேர மேனுமுடல் தரியா தாங்குக்
கண்ணுறுபேரிடைவெளியை மூட வென்றே கனமான பொருட்களொடு கையிற் பட்ட
கற்களையுஞ் சேர்த்தெடுத்து வீசினார்கள் சினங்கொண்ட தோதீயும் அவர்செய் கைக்குத்
தாவியவர் பணிதடுக்க முயன்ற தன்றோ 414

நரக நெருப்பு
பற்றியதீ யுள்ளிருப்போர் தம்மை யன்றிப்
புகமுயன்ற கிறிஸ்த்தவரைக் கூட வுள்ளே சற்றடிமுன் வைத்திடவும் இடந்த ராது
சீறிப்புறம்மணைத்தே யுயர்ந்தே செல்ல கற்றைகற்றை யாய்ச்சரமுங் கல்லுந் தீயும்
கவண்கோபுரத்திருந்தே வந்து வீழும் முற்றுமவை மறந்தவராய் மதிற்பு றத்தை
மூடுவதில் முனைந்தனரே முஸ்லிம் வீரர்.
பறங்கியரைச் சூழ்ந்திருந்த முஸ்லீம் கள்தாம்
பார்த்திர்ந்த காட்சிதனை எண்ணி இன்று உறுதிபெற்ற தாங்கோட்டை வீழ்ச்சி யென்றே
உடனதற்குப் பரிகாரஞ் செயநினைத்தார் வெறிகொண்டு தாக்குமவர் தனைத்த டுப்போம்
வெற்றியிலா தெனிலவர்க்குப் பெருஞ்சே தத்தை இறுதிவரை போரிட்டுத் தருவோ மென்ற
எண்ணத் தோடறைந்தனர்போர் முரச மம்மா.
உடநலமி லாதிருந்த மன்னர் மன்னர்
ஒய்ந்துறங்கா தோர்குன்றிற் பரண மைத்தே நடப்பதனைக் கண்கணித்துக் கொண்டி ருந்தார்
நேரிடையாய் ரிச்சாட்போர் தனிற்கு தித்தான் கடுஞ்சண்டை நடந்ததன்று முன்னர் போலப்
கோட்டைக்கு முன்னேறா வாறு முஸ்லீம் படைவீரர் தனைத்தடுத்தார் கிறிஸ்த்து வீரர் பேரழிவு இருபுறத்துந் தொடர்ந்த தாமே.
செப்புக்கவண் கோபுரத்தாற் கோட்டை கொண்ட சொல்லரிய ஆபத்தை யுணர்ந்த முஸ்லிம் “இப்னுநஜ்ஜார்" என்றபொறி யியலில் வல்லான்
ஏற்றதொரு திட்டத்தை வகுத்தான் அஃதை ஒப்புதற்காய்" ஸைபுத்தீனிடமு ரைக்க
ஒர்ந்துமணங் கொண்டவனும் அனுமதிக்க தப்பாது குறிவைத்தே கவணில் மண்ணாற்
செய்தசிறு கலங்களினை வீசினாரே!
115
415
416
417

Page 66
116 புனித பூமியிலே காவியம்
குறிவைத்தே எறிந்தகல மனைத்துஞ் சென்று கோபுரத்தின் செப்புறையில் மோத வுள்ளே நிறைந்திருந்த குழம்பொத்த பதார்த்தம் மேவி டத்துள் உலர்ந்துதிட்டாய் நின்ற தஃதை வெறும் பொருளாய் எண்ணினரெத் தீங்கு மின்றி வந்தவைமேல் வீழ்ந்ததனாற் சிலுவை வீரர் சிறிதுபின்னால் வரப்போகும் பயங்க ரத்தைத்
தெரியாதே ஹோ ஹோ வென்றார்ப்பரித்தார் 419
பெருஞ்சிரமத் தோடுடைந்த சுவர்ப்பு றத்தை
பாதுகாக்கும் முயற்சியிலே பலரும் மற்றோர் சரந்தொடுப்ப தொப்பக் கவண் கோபு ரத்தைச்
சாடினரே மட்கலங்கள் பன்நூ றாலே விரைந்து சென்று மோதியவை யுள்ளி ருந்து
வெளியான பொருளையதில் விரவி வீழ உறைந்துகவண் கோபுரத்தின் தகட்டி லஃது
ஒருநொடியில் காய்ந்தொன்றி நின்ற தம்மா. 420
கரகோஷஞ் செய்துநகைத் தார்க "ளென்ன
கேடுவந்தே யுற்றதிந்த முஸ்லிம் கட்குச் சிரங்கெட்ட செய்கையினைச் செய்கின் றார்கள்
தீர்ந்ததுவோ படைக்கலங்கள்" என்றே கூறி வருவினையை அறியாத கார ணத்தால்
வசைபாடிக் கூச்சலிட்ட வீணர் போரின் உருமாறிப் போவதனைக் காணக் கோட்டை
உள்ளிருப்போர் சரமாரி பொழிந்திட்டாரே 421
தீட்டியதன் திட்டத்தில் "இப்னு நஜ்ஜார்"
துகள் செய்த கந்தகத்தைக் கற்பூரத்தில் கூட்டியின்னும் எரிபொருளுஞ் சேர்த்தெ டுத்துக் குழம்பாக்கிக் கவண்மீது எறியச் செய்தான் கோட்டையினுள் ளிருந்துவந்த தீச்ச ரங்கள்
கோபுரத்தின குழம்புபட்ட இடங்க ளெல்லாம் போட்டியிட்டு மோதினவே ஒவ்வொன் றாகப்
பட்டவிட மனைத்துந்தீ பரவிற் றன்றோ. 422

நரக நெருப்பு
கொழுந்துவிட்டே எரிகின்ற நெருப்பு வானைக்
கொளுத்திவிடு மாமோவென் றஞ்சத் தாவி விழுந்தடிதே யோடினர்கீழ் நின்றோர் மேலே வகையாக அகப்பட்டோர் கருகி மாண்டார் அழுந்தியுயிர் விட்டவர்பல் லாயி ரம்பேர்
அரையுயிரோ டல்லலுற்றார் இன்னும் பல்லோர் அழிந்த கவண் கோபுரம்வீழ்ந் துயிரி ழந்தோர் ஆயிரம்பல் லாயிரமாம் அறிவா ராரோ.
ஓராபத் தழிந்தாலுஞ் சுவர்த கர்ந்து
ஊடுருவப் பறங்கியர்கள் முயலும் மற்றோர் பேராபத் தைத் தடுக்க முஸ்லிம் வீரர்
பெருமுயற்சி செய்யுநிலைக் குள்ளாய்ப் போனார் சோராது மூவாண்டு காலஞ் சுற்றித்
தொடர்ந்தமுற்று கையும் போர் எதிர்ப்புந் தாங்கி நேராத துயரன்று வந்த போதும்
நிலைகுலையாப் பெருவீரர் துணிந்தே நின்றார்.
ஆறாயி ரம்பேரே முஸ்லிம் வீரர்
அம்மம்ம எதிரிகள் நூறாயிரம்பேர் ஆறாகப் பெருகிவரும் அவரைக் கண்டே
அதிர்ச்சியுற வில்லையங்கு கோட்டை வீரர் ஆறாத மனத்தழும்பாம் ஆண்டு மூன்றாய்
அடையுண்ட காரணத்தால் சென்னீர் சிந்தி ஆறாக ஓடவைத்தார் எதிரி யானோர்
அழிவது கண்டின்னுமின்னும் அழித்திட்டாரே
பின்னிருந்து தாக்கவந்த சுல்தான் வீரர்
பறங்கியரின் போர்த்திறனைக் கண்டே இன்னும் பன்மடங்கு வேகத்தோ டெதிர்த்தார்-கைகால் பதறியுடல் தலைவீழச் சிரங்கு வித்தார் என்னமுயன் றாலுமன்று சிலுவை வீரர்
எண்ணிலடங் காதவுயிர்ப் பலிக்குள் ளானார் மன்னுயிரின் அழிவுகண்டு பொறுக்கா வெய்யோன்
மேற்கடைந்தான் மனமுருகிப் பொறுமை யற்றே
117
423
424.
425
426

Page 67
118 புனித பூமியிலே காவியம்
அன்றுசண்டை அத்தோடே முடிந்து போக
அதற்குமேலுங் கோட்டையினைக் காக்க வொண்ணா தென்றுணர்ந்தார் சுல்தானுள் ளிருக்கும் பேரை எவ்வாறு காப்பதென்றே கவலை கொண்டார் என்றுமிலா வாறுசுல்தான் நெஞ்சம் நொந்தே
இறையையெண்ணித் தொழுது "துஆ" இறைஞ்சினார்தம் கன்றையிழந்த திடுநிலையிற் காரா போன்று
கவல்கொண்டே மாமன்னர் கலங்கினாரே, 427
கையிருப்பில் இருந்தயுத்தத் தளவா டங்கள்
கடுமெதிர்ப்பை முறியடிக்கத் தீர்ந்து போகச் செய்தவறி யாதுகோட்டை யுள்ளி ருப்போர்
சேர்ந்தொன்றாய் முடிவெடுத்தார் இனிமேற் றங்கள் மெய்யுடைமை யுயிர்காத்த லொன்றிற் கேனும் மாற்றாரோ டுடன்படிக்கை செய்வதென்றே உய்யவழி யாமென்றன் றிருந்த தாலே
ஊரவரும் ஒன்றிச் செயல் பட்டிட் டாரே 428
கோட்டையினைக் கிறிஸ்தவர் கை கொடுப்ப தென்றும்
குறைந்தளவாய் இரண்டு லட்சம் பொன்னை மன்னர் கேட்டபடி பிணைப்பணமாய்த் தருவ தென்றும்
கைதிகளாய் உள்ளவரில் ஈரெண்ணுறும் “நைட்'டுகளில் தாம்குறிக்கும் நூறு பேரும்
நெடுநாளாய் வைத்திருக்கும் சிலுவையையும் மீட்டிடவும் வேண்டுமெனச் சம்ம தித்தே
முஸ்லிம்கள் ஒப்பந்தஞ் செய்திட்ட டாரே 429
யேசுபிரான் அறையுண்ட சிலுவை யென்றே
எண்ணியவர் வழிமறந்து வாழ்வோர் கூறும்
"நிஜசிலுவை" தனைத்தரவும் வேண்டு மென்னும் நிபந்தனையே நிபந்தனையுட் கடினமாகும்
சுவாசங் கொண்டமுஸ்லிம் வீரர் முன்னர்
வெற்றிகொண்ட “ஹித்தீன்" போர் தன்னிற் பெற்ற
"நிஜமற்ற" மரத்துண்டந் தானே யஃது
நடுவிலின்று நிபந்தனைக்குள் முந்தி நிற்கும் 430
 

இளவரசி எங்கே? 119
இறுதியிலே வருகின்ற சமாதா னத்தில்
என்பக்கம் உதவுமென்றே மன்னர் மன்னர் வெறுமரத்தின் துண்டமென்ற போதுங் காத்து
வந்திருந்தாரின்றதனை இழக்க நேர்ந்தார் பொறுமையொடு தூதுவன்கை யளித்த வோலை படித்துமன அதிர்ச்சியுற்றார் அதையும் விஞ்ச மறுசிலநாள் கோட்டையுள்ளே நடந்த சேதி
மிகவருந்தத் தக்கவையாய் இருந்த தன்றோ 451
23. இளவரசி எங்கே?
கோட்டை யொன்றை வெற்றி கொள்ள
கோடி கோடி உயிர்களை கூடு விட்டே யோட வைத்த
கேடு கெட்ட மாந்தர்கள் காட்டில் வாழும் உயிரி னங்கள் கண்டு நானும் பாங்கிலே ஆட்ட மாடி னார்கள் கள்ளின்
ஆறு புரண்ட தாமரோ - 4.32
கப்பல் கப்ப லாக மதுவுங் கடல்கடந்தே வந்திடத் தப்பு வழியிற் பிறந்த மாதர்
தப்பிழைக்கக் கூடினார் செப்ப வியலு மாறி லாத
செயலுமாங்கு மலிந்திட இப்பூ தன்னி லொரு நரகம்
இதுவென் றோது வாம ரோ 4.3.3
நாண மற்றுப் பெண்ணு மானும்
நகர்ப்புறங்க ளெங்கனும் காணு வோர்கண் கூசு மாறு கண்ட படியே சுழன்றனர் பேணு முடலின் பாகம் பிறரின் பார்வை தன்னில் மோதவே ஊனை விற்கும் ஒரை யர்கை
ஓங்கி நின்ற தாமரோ, 434

Page 68
2O புனித பூமியிலே காவியம்
சீர ழிந்த வாழ்வு முறையுந்
தொடங்கி"அக்காக்" கோட்டையுள் கோர தாண்ட வம்பு ரிந்த
கேடு சொல்ல வாகுமோ போர ழிந்தே அமைதி தோன்றிப்
போன தென்று யாருமே தேரி டாத வாறு மக்கள்
துயர டைந்தா ராமரோ.
இறுதி நபியின் வழிதொ டர்வோ
ரெவரெ வர்தா மவரவர் சிறுவ ரோடு பெண்டீ ரொன்றிச்
சிற்ற டிமைகளாகினர் சிறையிற் பட்ட முஸ்லிம் கள்தம்
சேனை வீரர் வாடினர் உறைவி டங்கள் பறித்த டையார்
உரிமை கொண்ட ராமரோ,
கொடுமை கண்டு கொதிப்ப டைந்த
கோட்டைத் தலைவன் ஸைபுத்தீன் கடுமெ திர்ப்பை "ரிச்சாட்" முன்னே காட்டியெதிர்த்துரைத்தனன் மடைமை யெங்கள் ஆட்சி யை
மறுத்துரைத்த லென்றுமே உடன வன்தன் பதில எளித்தான்
ஓங்கு கர்வுத் தாலரோ,
சிலுவை வீரர் வெற்றி கொண்டு
சேர்ந்து மகிழ்ந்தே யாடிடத் தலைவ ரிடையிற் பதவி மோகம்
தலைவிரித்து நின்றதே நிலைமை தீரச் சபையுங் கூடி நீதி வாதஞ் செய்தனர் பலமாய் எதிர்ப்பும் பக்கச் சார்பும்
பக்கம் பக்க மாமரோ.
435
436
437
4.38
 

இளவரசி எங்கே?
இறுதி முடிவாய் அன்ன வர்கள்
இணங்கினார்கள் "லூஸினான்" ஜெரூஸ் லத்தை ஆள்வ தென்றும்
தொடர்ந்த வன்பின் "கான்டிராட்" உரிமை கொள்வார் தொடர்ந்து பலரும்
உயிரிழப்பின் "ரிச்சாட்"டே பிற கெ வர்தா னென்று ரைக்கும் பொறுப்பினன்னென்றாமரோ,
பதவி கிட்ட மாட்டி டாத
பழியால் "ரிச்சாட்" மீதிலே புதிய குற்றம் பலசு மத்திப்
பகைமை கொண்டான் “கான்டிராட்" எதிரி வசத்தி லிருந்து நங்கை
“ஹெலனை"க் காத்து 'ஸலாஹஸ்தீன்" பதிய னுப்ப வவளை "ரிச்சாட்"
பறித்தா னெனவு மாமரோ.
உடன்பி றந்தாள் தன்னைக் காத்த உதவி கூறிக் "கான்டிராட்" உடன்ப டிக்கை செய்து கொண்டான்
உயிர்ப்ப கைவரோடு என் னுடன்பி றந்தாள் மகளைக் கூட ஒளித்து வைத்தே இருப்பதும் உடன்ப டாத செய்கை யென்றே
உரைத்தான் "ரிச்சாட்" டாமரோ,
ஒருவ ரொருவ ரைப்ப கைத்து
ஒது வார்த்தை யிடையிலே பெருமை கூறி னார்கள் சுல்தான் பேருதவியுஞ் செய்ததாய் இருவ ருடன்பி றந்த வர்கள்
இன்னலுற்ற போதிலே உரிய நன்மை செய்த தெல்லாம்
உலக மறிய மாமரோ,
439
440
441
4.42
121

Page 69
122 புனித பூமியிலே காவியம்
24. படுகொலைக்குப்பின்
மாமன்னர் அனுமதியைப் பெறாம லேயே
மாற்றாரின் நிபந்தனைகள் ஏற்று வீரர் தாமாக முன்வந்தார் "அக்கா"க் கோட்டை
தனைக்கிறிஸ்த்தோர் கரமளித்துத் தம்மைக் காக்க ஏமாறா தார் சுல்தா னென்றிட் டாலும்
இரக்கசிந்தை கொண்டவரல் விக்கட் டெண்ணி நாமாகச் செய்துகொண்ட ஒப்பந்த தத்தை
நிராகரிக்கும் உரிமையவர்க் கிருந்த போதும்.
எண்ணிரி னாயிரம்போர் வீரர் தம்மை
ஏகவிட லோடுநஷ்டத் தீடா யின்னும் பொன்னீரி லட்சமவர்க் களிப்ப தொன்றும்
பெரிதன்றா மாகிடிலும் அன்ன வர்கள் உண்மையென்று நம்புகின்ற சிலுவை தன்னை
ஒப்புவிப்பதொன்றேதான் சுல்தானுக்குத் தன்னளவில் நிறைவேற்ற முடியா தோர்பேர்
திட்டமெனச் சிந்தனையுள் ஆழ்ந்திட்டாரோ.
கோட்டையுள்ளே அடையுண்டு கிடப்போர் தம்மைக்
காப்பாற்ற வேண்டிலிந்த நிபந்தனையின் கோட்பாட்டிற் கடிபணிய நினைந்திட் டாலும்
கிறிஸ்த்தவர்கள் வாக்குமாற்றஞ் செய்வா ரென்றே ஆக்கமுள்ள தகவல்சில தெரிய வெண்ணி
அன்னவர்க்குத் தூதனுப்பிச் சுல்தா னன்னார் நோக்கமென்ன வென்றறியச் செய்தா ரந்த
நெறிகெட்டோர் பதிலொன்றும் அனுப்பினாரே
விசுவாசங் கொண்ட முஸ்லிம் சமூகத் தின்மேல் விரோதித்து வாளேந்த மாட்டே னென்று விசுவாசப் பிரமாணம் செய்து முன்னர்
விடுதலைபெற்றே"கைடி லூஸி னா'ன்றன் திசைமாறி வாக்கினுக்குப் பங்கஞ் செய்து
சென்றடுத்த சிலநாளுள் பிழையுஞ் செய்தான் இசைவதுபோ லிசைந்தவர்கள் மாறு செய்யும்
இயல்புடையோர் எனசுல்தான் அறிய வாரே
443
444
445
446

படுகொலைக்குப்பின்
நிபந்தனைகள் மூன்றினையும் நிறைவு செய்ய
ருணயிக்குங் காலவரை தனையுஞ் செய்யின் நிபந்தனைக்குத் தக்கபடி கிறிஸ்த்த வர்கள்
நடக்கத்தரும் உறுதியையும் அறியச் சென்றோர் விபரமறிந் தேவந்தார் தொடராய் முன்னே
வருகின்ற மூன்றுதிங்களுள்ளே யொவ்வோர் பந்தனையை முஸ்லிம்கள் திங்கட்" கொன்றாய் நிறைவேற்ற வேண்டுமென்றுங் கூறினாரே,
கிறிஸ்த்தவர்கள் தாம்விதிக்கும் நிபந்த னைகள்
கூறினரே யன்றிசுல்தான் கேட்டவாறு உறுதி யொன்றுந் தராதிருக்க மேற்கொண் டென்ன
இயற்றுவதென் றெண்ணிசுல்தான் இருக்குங் காலை மறுதிறந்தோர் எதிர்பார்த்தார் சிலுவை யைத்தான்
முதலளிக்க முன்வருவரென்றே நாளும் பொறுமையற்று வழிபார்த்தார் ஏமாந் தார்பின்
பேரரசர் நிருபமொன்றைப் பெற்றிட்டாரே
எங்கள் வசம் உள்ளகைதிப் பேரை நீங்கள்
ஏற்கவழி செய்கின்றோம் அதற்கு வாய்ப்பாய் உங்கள்வச முள்ளமுஸ்லிம் வீரர் தம்மை
உடனனுப்பி விடவேண்டும் அதுதவிர்த்தே தங்கியுள்ள நிபந்தனைகள் இரண்டை யும்நாம்
தீர்த்துவைப்போம் அதுவரையும் “ஜாமீ" னாக எங்களிலோர் தகுந்தவரைத் தருவோம் நீங்கள் ஏற்றிடவும் வேண்டுமெனக் கூறினாரே,
“விரும்பாது விடிலிதற்கு மாறாய் நீங்கள்
வேண்டுவது போற்றவணை யொன்றே ஏற்று உரியநல்ல ஜாமீனைத் தரவும் வேண்டும்
ஒப்புதலை யுரைக்க" வென்றே சுல்தான் கூற “தரமுடியா தெந்தவொரு "ஜாமீ" னெங்கள்
சொல்லைத்தான் நம்பிடுதல் வேண்டும் நீங்கள், சரியாக அனைத்தையுமே செய்யின் பின்னே
சிந்திப்போம் முஸ்லிம்கள் பற்றி யென்றார்.
447
4.48
449
450
123

Page 70
124 புனித பூமியிலே காவியம்
தகவல்களின் பரிமாற்றம் நடந்த தாலே
தவணையொன்றின் காலக்கெடு முடிந்து போக வெகுண்டெழுந்தான் ரிச்சாட்தன் வெறியைக் காட்டும்
வாகாயோர் முடிவெடுத்தான் சரித்திரத்தில் அகலாத கறையாய்த்தன் வீரத் திற்கும்
அவப்பெயரைத் தோற்றுவிக்கும் வாறாய்ப் பின்னர் செகமறியச் சிலுவையுத்தந் தனையு ரைக்குஞ் சரித்திரவல் லாரிகழ்ந்தே கூறும் வாறே.
மூவாயி ரம் முஸ்லிம் வீரர் தம்மை
முறைகேடாய்ச் சிறைப்பிடித்து வைத்திருந்தோர் ஏவலுக்குத் தகவேஈ ராயி ரத்தோ
டெழுநூறு பேரைக்கை கட்டி யாங்கே யாவருமே பார்த்திருக்க மதில்மி தேற்றி
இதயங்கல் லார்நெஞ்சுங் கசியும் பாங்காய்த் தாவியுயிர் பறித்தார்கள் தலைக முத்தைத்
தவிர்ந்துநிலம் வீழ்ந்திடமெய் தொடரும் வாறே.
மனுநீதிக் குவக்காத மிருக நோக்கில்
கபாத கச்செயலாய்க் கோழைப் பாங்காய்ச் சணத்திடையிற் ரிச்சாட்டின் ஆணை பற்றிச்
சிரமரிந்த செய்கையினைத் தொலைவிருந்தே அனைத்து முஸ்லிம் வீரர்களுங் கண்டார் நெஞ்சில் அனல்வார்த்த வாறுணர்ந்தே அடங்காப் பேராய்ச் சினங்கொண்டே கிறிஸ்த்தவர்கள் கைதி யாகிச் சிறைகொண்ட தலம் நோக்கி ஓடி னாரே
"தோழர்களே! நில்லுங்கள் வேண்டாம் யுத்தத்
தருமத்தை மீறிடவுங் கூடா தந்தக்
கோழைகளின் செயல்போல நாமுஞ் செய்தல்
குற்றமென்றே அறிவீர்கள் நிராயுதர்தம்
வாழ்வையழித் திடுதல்பெரும் பாவம் நம்பால்
வருமொருநாள் அதுவரையும் “ஸப்ரு" செய்வோம்
ளாத துயரத்தைக் கொண்டோம்" என்றே
மனமுருகி வழிதடுத்தார் சுல்தான் ஆண்டே
451
452
453
454.
 

படுகொலைக்குப்பின்
நிராயுதரை அழிப்பதொன்றே பாவம் நாங்கள்
நேர்கொள்வோம் ஆயுதங்கொள் பறங்கியோரை தரியோம்நாம் இப்போழ்தே பழியுந் தீர்ப்போம்
தருக்கர்களை மாய்க்காது திரும்போ மென்றே வரைகூற முடியாத வாறே வீரர்
ரைந்தார்கள் எதிரிப்படை முகாம்கள் நோக்கி அரைநாழிக் குள்ளடைந்தார் காண்போர் சென்னி அரிந்துகுவித் தேநிலத்திற் கபிஷே கித்தார்.
சுற்றியுள்ள தத்தனையுஞ் சுழற்றிச் சாய்த்துச்
றிவரும் பேய்க்காற்றை நிகர்ப்பச் சென்றோர் பற்பலரைத் தனித்தனியே கொன்று தீர்த்தே
பழிதீர்த்தும் போதாதென் றின்னு மின்னுஞ் சுற்றிவந்தார் தொகைதொகையாய் உயிர்ப றித்தார்
சூறையிட்ட பொருட்களையுஞ் சேர்த்தே வந்தார் அற்பருக்குப் புகட்டியவப் பாடத் தோடே
அடங்கியது போரலைகள் சிலநாளாங்கே
பிரஞ்சுமன்னன் “பிலிப்'பும் "கான் ராட்டும்" "ரிச்சாட்
படுபாத கச்செயலை வன்மை யாக வெறுத்துரைத்தார் தாம் கொண்ட பணிக்குத் தீரா
வடுவொன்றைத் தோற்றுவித்தா னெனப்பு கன்றார் பொருந்தாது தொடர்ந்தவனோ டொன்றிப் போதல்
பிரிந்துதத்தம் நாடேகல் உவப்பென் றெண்ணி
அறியவைத்தார் கிறிஸ்த்தவரும் அதிர்ந்தே போனார்
அவரிடையிற் பெரும்புயலுந் தோன்றிற் றன்றோ
புனித நகர் மீட்டெடுத்துப் புனிதப் பள்ளி
புகுந்துதரிசனஞ்செய்யா திங்கிருந்தே அணுவேனும் நாடுநோக்கி நகரோ மென்மால்
அடம்பிடித்தா ரனைவருமே அவற்றிற்கெல்லாம் இனங்காத “பிலிப்' சொல்வான் வேண்டு மாயின்
எனதுபடை தங்கட்டும்" என்றே கேட்டு மனதினிலோர் ஐயமுற்ற ரிச்சட் அஃதை
மற்றவரும் அறியவென விளம்பி னானே.
456
G
457
458
125

Page 71
126 புனித பூமியிலே காவியம்
நாடுசெலும் “பிலிப்'நானிங் கிருப்ப தாலே
நம்பியாளுந் தன்நாட்டைத் தாக்கித் தங்கை யோடுகொணர் வானென்றே ஐய முற்றே
உடன்யுத்தச் சபைகூட்டிச் “செய்யே"னென்று நாடுசெலும் முன்வாக்குச் சபையோர் முன்னே
நவின்றிடுதல் வேண்டுமென வரைப்ப“எந்தக் கேடும் நான் செய்யே“னென் றவனுங் கூறி
குறித்ததினத் தாங்கிருந்தே யகன்றிட்டானே. 459
கொலையுண்டு "ஷஹீதான வீரர் போக
காவலிலே இருந்தமற்ற முஸ்லிம் கட்குத் தலைக் கொவ்வோர் தொகைபிணையாய் நிர்ண யித்தார்
தங்கநாணயங்களென அக்காக் கோட்டைத் தலைவனுக்கு மூபத்து நூறுஞ் சேனைத்
தளபதியாம் சைபுத்தின் தனக்க டுத்தும் விலைகொண்டார் கிறிஸ்த்தவர்கள் ஸைபுத் தீனை
வாதாடிக் கான்ராட்டும் பெற்றுச் சென்றான். 460
"கான்ராட்டும்” “பிலிப்'பும்தம் நாடு செல்ல கேட்பாரற்றதிகார மமதை கொண்டு தான்தானே தனித்தலைவன் நினைந்த வாறு
தோன்றியதைச் செய்திடலாம் என்றே "ரிச்சாட்" வான் பெருமை சேருமெனக் கேதா மன்றி
வேறொருவர்க் கில்லைஜெரூஸலத்தைக் கொள்வேன் போனவர்கள் போகட்டும் எனப்போ ருக்குப்
புதுத்திட்டம் பலவகுக்கத் தலைப்பட்டானே. 461
அலட்சியமாய் சுல்தானும் இருந்தா ரில்லை
அவன்திட்டம் அறிந்ததற்கு மாறாய்ச் செய்தார் பலமுறைகள் கான்ராட்டி னிடமி ருந்து
பேரரசர் தூது பெற்றார் காணா துற்ற ஹெலன்பற்றித் தெரிந்திடவே “அலைப்போ" சென்ற தாஹீரை எண்ணிமனம் வருத்தங் கொண்டார் பலநாட்கள் முன்னரவன் வந்த தாகப்
புறாக்களின்பாற் செய்திபெற்ற காரணத்தால், 462
KG

சுல்தானின் கவலை
25 சுல்தானின் கவலை
தன்வழியில் இடையிடையே புறங்கி யர்கள்
தமதாக்கிக் கொண்டபல கோட்டை யோடே பன்நெடுநாள் தொடர்ந்தியங்கும் “ஹவவேன்ே" என்னும்
பயங்கரரும் இருந்ததனால் மகனுக் கேதும் இன்னலுற்ற தோவென்றே யெண்ணி நெஞ்சம்
ஏங்கிடவே யதனோடு "ஹெலனும்" "ஆனும்" மன்னருள வருத்தத்தை மிகைப்ப டுத்த
மாற்றாரால் கவர்ந்துசெலப் பட்டிட் டாரே 463
தங்கைமனந் 'தாஹீரின்" வயமென் றண்ணன் தெரிந்திருந்தான் அதுபோல மாமன் னர் அம் மங்கையுந்தன் மைந்தன்மேற் காமுற் றாற்போல் மகனுமவள் மீதன்பு கொண்டா னென்னும் சங்கதியை அறிந்திருந்தார் அதனால் நன்மை சேருமிரு திறத்தாரும் புனித மண்ணில் பங்கமறுத் தொன்றாக வாழு கின்ற
பாக்கியமுங் கிடைக்குமென எண்ணி னாரே 464.
இருமணங்க ளொன்றியதை இருசா ராரும்
ஏற்கனவே அறிந்திருந்ததாலே "கான்ராட்" மருவிவர மன்னவரும் அவன்பால் நட்பை
மேவிடவே யதன்பயனாய் “அலெப்போ" சென்ற திருமகனை வரவழைத்தார் "ஹெல" னி ழப்பைத் தாங்காத காரணத்தால் அவனோ வின்னும் வருதலிலா நிலைகண்டு வருத்த முற்றார்
வழியிலுள்ள பேராபத் துணர்ந்த தாலே. 465
பறங்கியரோர் புறமதுபோல் “ஹவவேன்ே" என்னும் பொல்லாரும் மறுபுறத்தே இருந்தா ரன்னார் இறப்பதற்கும் அஞ்சாதோர் தலைவர் சொல்லை
இறைவேத வாக்காக எண்ணும் பேர்கள் குறிவைத்துக் கொன்றொழிக்குங் கொள்கை கொண்டோர் குணம்மாற்ற "ஹவஷே" என்னும் போதை வஸ்தை நிறையவுண்ணுங் காரணத்தால் “ஹவவேன்ே" என்ற
நாமத்தைப் பெற்றிருந்தார் எதற்கும் அஞ்சார் 466
127

Page 72
128 புனித பூமியிலே காவியம்
நூறாண்டின் வரலாறு கொண்டோ ரந்த நிட்டூரப் பேர்வழிகள் சுல்தானோடே ஆறாத பகைகொண்டார் இருகா லன்னார்
ஆட்பலியிற் றனைசுல்தான் காத்து வென்றார் வேறாக கலீபாக்கள் தமையெ திர்த்து
வந்தவர்கள் “வயோ"க்கள் வழித்தோன்றல்கள் மாறான வவர்தம்மை அடக்கி "மிஸ்ரை"
முஸ்லிம்கள் ஆட்சியுள்சுல் தான்கொணர்ந்தார்.
மலைப்பெரியார் எனுஞ் "செய்குல் ஜப்"லே யந்த
மலைமறைந்து வாழுகின்ற கூட்டத் தார்க்குத் தலைவரென விருந்தார்யார் தனக்கு மாறாய்
துணிந்தாலும் வாழவொட்டா தொழிப்பா ரன்று நிலைமைதலை மேற்செல்ல நீடு விட்டால்
நெறிபுரண்டோர் கொடுமைவிஞ்சிப் போகு மென்றே மலைக்கோட்டை தனை"சுல்தான்" முற்று கைக்கு
முன்வந்தார் முடிவொன்று காண்ப தற்கே.
காடுசெறிந் தேவளர்ந்த மலையின் மீது
கடுகவொண்ணா நிலப்பரப்பிற் கோட்டை தன்னைக் கேடுசெய்யும் “ஹவவேன்ே"கள் கொண்டி ருந்தார்
கைப்பற்ற வொருநாளும் இயலா வாறே. ஈடுசொல்ல வியலாவா றெங்கும் சுல்தான்
எல்லையறப் படைகுவித்தார் ஈற்றில் “ஷெய்கும்" நாடிவந்தே சமாதானஞ் செய்து கொண்டார் நடந்திருபதாண்டுகளுங் கழிந்த தன்றோ.
ஒப்பந்தம் நடந்திருப தாண்டு கட்கும்
ஓரசட்டு நிகழ்வுகளும் தோன்றாப் போழ்தும் அப்போது நிலைமைவெகு மாறாய்த் தோன்றும்
அறிகுறிகளோடுபுது “ஷெய்கு'ந் தோன்றி செப்பவிய லாத பெருந் தொல்லை யெல்லாஞ்
சிலுவையுத்தத் தால்மன்னர் கொண்டா ரென்ற ஒப்புமுண்மை தனையுமறிந் திருந்தார் அஃதே
உளம் வருந்தச் செய்ததன்று சுல்தானுக்கே
4.67
468
469
470

சுல்தானின் கவலை 129
இரண்டுபெரும் இரகசிய இயக்கம் வேறு
இருந்ததன்று சிலுவையுத்த வீரருள்ளே ஒருசாரார் “ஹஸ்பிடலர்ஸ்" மற்றோர் “டெம்ளர்ஸ்"
உயர்பங்கு கொண்டவரப் போரிலன்று "துறவிப் போர் வீர“ரென நாம மேற்றே
துணிவுடனே மதவெறியும் வலுவுங் கொண்டோர் சரித்திரமே மாறியது இவர்க ளாலே
சூரியனே மறையாத தேசத் துள்ளே, 471
முன்னவர்கள் சிலுவையுத்த வீர ருக்கு
முன்னின்றே யுதவிசெய்தார் மற்றோர் மிக்க வன்மனத்தோர் ஆதிக்க வெறிபி டித்தோர்
ரும்பியவா றத்தனையுஞ் செய்ய வல்லார் கன்நெஞ்சங் கொண்டவனைத் தலைவ னாகக்
கொண்டிருந்தார் “கிராண்மாஸ்ட்டர்" என்னும் பேரில் மன்னவர்"ஸ லாஹூத்தீன்" மீதும் மற்றும்
முஸ்லிம்கள் மீதுமவர் பகைகொண் டோரே. 472
மதவெறிகொண் டவரினத்தோ ரல்லா தோரை
மிகவெறுத்த இயக்கத்தோர் சுல்தான் மீது சதாபகைமை கொண்டிருந்தார் மன்ன ரோடு
சேர்ந்துறவு கொண்டவரை எதிர்த்தும் வந்தார் சதியாலே கொல்வதன்றி முடிந்த மட்டும்
தீங்கிழைப்ப தெனவவர்கள் செயற்பட்டார்கள் விதிவசத்தால் “கான்ராட்டும்" டெம்ளஸ்" ஸாரின்
வெறுப்புக்குள் ளானவரில் ஒருவனானான். 473
“கர்த்தரு'க்குச் செய்கடனை மறந்து “கான்ராட்"
கோட்டைக்குட் புகுந்துகொண்ட தன்றி முஸ்லிம் வர்க்கத்தோ டொன்றுபட்டு நடப்ப தாலே
“வேண்டாத துரோகி"யெனக் கூறியந்தச் சர்ப்பகுணம் படைத்தபொல்லார் "கான்டி ராட்"டின் சிரங்களைய“ஹவவேன்ே"கள் துணையை நாடத் துர்க்குணத்தோ ரானவவர் எண்ணந் தன்னைச்
"சுல்தானும்" ஒற்றர்களால் அறிந்திட்டாரே. 474.

Page 73
3O புனித பூமியிலே காவியம்
தனக்கெதிரி யானவரைத் திருப்தி செய்யத்
தான்“ஷெய்குல் ஜபல்"சிலுவை வீர ருக்கு மனங்கொண்டா ருதவவென வெண்ணி மன்னர்
மகனுக்குத் தீங்குசெய்ய லாகு மென்றே நினைந்திடுங்கால் "கான்ராட்டும்" "ஹெலனை'ப் பற்றி
நினைந்ததனைத் தெரிவித்தான்" டெம்ப்ளர்ஸ்" கூட்டம் தனைக்குற்றஞ் சாட்டினனே அச்சத் தோடே
தங்கைதனைக் கவர்ந்தவர்கள் அவர்தா மென்றே. 475
காணாது போன'ஹெலன்' 'தாஹிர் மீது
காதலுற்றா ளதுபோன்றே "அலீஸின்' மீது
காணது போன"ஆனும்" காமுற் றாளக்
களங்கமிலா வுறவுகளை மன்னர் தேர்வார்
தூணாக இருக்குமவர் உறவு பின்னர்
திருத்தலத்தில் கிறிஸ்த்துமுஸ்லிம் ஒன்றாய் வாழ
ணான பகைமைகளும் ஒழியும் என்றே
விரும்பிமன மொப்பினரே “சுல்தா" னன்றே. 476
குமாரரிரு வரையுமிள வரசி மார்கள்
காதலிப்பதறிந்துமன்னர் இணங்கினாலும் சமாதானம் விரும்பாத "ரிச்சாட்" "ஆனைத"
தரவிரும்பான் என்றுமவர் உணர்ந்திருந்தார் தமதாசை நிறைவேற வேண்டு மாயின்
தேடியவரிருவரையுங் கொணர வேண்டும் அமையுமெனில் நற்றருணம் அவர்க ளாலே
அமைதிவர வாய்ப்புண்டென் றெண்ணி னாரே 477
துப்பறியச் சென்றவரோர் சேதி சொன்னார்
திடமாக "ஆஸ்த்திரிய" மன்னன் “ஆனை'க் கப்பியதன் சினந்தீர்க்கக் கவர்ந்தா னென்றே காரணமு முண்டதற்கு "ரிச்சாட்" முன்னர் தப்பறிந்துஞ் செய்தபெருந் தவறி னாலே
தகுதிக்குங் களங்கமுற்ற தோடு பின்னர் செப்பவிய லாதபெரு மிடையூ றிற்கும்
தவிர்க்கவியலாதுதனை யாக்கிக் கொண்டான். 478
 

சுல்தானின் கவலை
"அக்கா"வைக் கைப்பற்ற முதலில் வந்த
அரசர்களுள் "ஆஸ்த்திரிய மன்னன் "லியோபால்ட்" தக்கவிடந் தனக்குண்டு போரை வெல்லத்
தகுதியிலே நான்பிறர்க்குக் குறையே னென்றே மிக்கவுயர்ந் தேபறக்க விட்டான் தம்மின்
மண்ணையறிந் திடுங்கொடியைக் கண்ட "ரிச்சாட்" ஒக்காது வீழ்த்தியதை மிதித்தான் "லியோபால்ட்"
உள்ளத்தில் மாறாதோர் தழும்புந் தோன்ற 479
துடிதுடித்தார் "ஆஸ்த்திரிய" வீரர் "ரிச்சாட்"
தாழ்வான செய்கைகண்டே மன்னன் நெஞ்சுந் துடிதுடித்த தாயினுந்தன் சினங்காத் தாங்கே
தோன்றவந்த பழியினையுந் தவிர்த்து நின்றான் அடிகோலும் பகைமைக்கென் றெண்ணா தன்று
அவமதிக்கும் ரிச்சாட்டின் செய்கை மற்றோர் அடிமனத்திற் சிலையெழுத்தாய் ஆகிற் றென்றும்
ஆறாத வடுவாகிப் போயிற் றன்றோ. 48O
தொடர்ந்து "சுல்தான்" தேடுவதைத் தொடரா வாறே
திசைதிருப்பிச் சென்றதன்று நிலைமை "ரிச்சாட்" படை நடத்திச் செல்கின்றான் புனித மண்ணைப் பிடிக்கவெனச் செய்திகளும் வரலாயிற்றே கடைசிநிலை யாகவவன் ஜெரூஸ் லத்தைக்
குறிவைத்து முற்றுகையைத் தொடங்கத் தெற்கின் தடைநீக்க முற்சென்றான் சொல்ல வொண்ணாத்
தொகையினரோ டென்றுமவர் அறிந்திட்டாரே 481
அறுபதுகற் றொலையுள்ள ஜெரூஸ் லத்தை
அடையமேற்கே பெருங்கடலும் "அக்கா" வின்தெற் குறுநகர மத்தனையும் முஸ்லிம் கள்தம்
உரிமையென விருந்ததவை முதன்மை யாகத் துறைமுகத்தைக் கொண்ட'கைஸ ரீயா" பின்னர்
தொடர்வ "தர் சூப்' அதையடுத்தாய் மேற்கு நாட்டோர் துறைசேர்ந்து “ஜெரூஸா'லத்தை அடையும் "யாப்பாத்
துறைநகருமாகுமவை யோடே யின்னும் 482
131

Page 74
132 புனித பூமியிலே காவியம்
தெற்கினிலே “சிரியாவின் மணப்பெண்" என்னும்
சிறப்புமொழி பெற்றிட்ட "அஸ்க்க லா"னோர் பொற்புறுநன் நகராகக் கோட்டை யோடும்
பிறவனைத்துங் கொண்டுசிறந் திருந்த தாங்கே அற்புதநல் லமைப்புடைய கட்டி டங்கள்
அழகுமிகு கோபுரங்கள் உயர்ந்தே நிற்க மற்றவெலா நகர்களிலுந் தான்த னித்து
ளிர்ந்ததுடன் துறைமுகமும் அழகு செய்ய 483
கடற்கரையின் ஒரமதாய் முன்னே சென்று
கண்காணுந் துறைமுகங்கள் அனைத்தும் வென்றே அடையுங்கால் “யாப்பா"வை அங்கி ருந்தே
அருகமைந்த ஜெரூஸலத்தைப் பிடிப்பதென்னும் திடமோடு செல்லுகின்ற "ரிச்சாட்" ஆங்கே
தொடருமலைக் கணவாயினூடே செல்லும் படியாகு மென"சுல்தான்" அறிவா ரேற்பப்
படையொன்றை யனுப்பிவைத்தார் இலக்கை நோக்கி 484
26 படுகொலைக்கு பழிவாங்கினர்
தனக்குமுன் னோர்படை தனையனுப் பினனவன்
தொடர்ந்துபின் னவனுஞ் சென்றான் சனக்கட லாமதோ வெனப்பல வாயிரம்
சைத்ரியரதிலிருந்தார் வனத்திடை பெருமலைத் தொடர்கழிந் தேகினார்
வருந்துயரறிகி லாரே தனைவிடப் பெரியவ ரிலையென வெண்ணிடுந்
தலைவனைத் தொடருவோரே. 485
முழுப்பலத் துடனொரு படையடுத் திடமா
மன்னரோர் புறந்தொடர்ந்தார் அழித்தவர் தமையழித் திடவென வீரரும்
அகப்பழி சுமந்து சென்றார் வழித்துணைக் கெதிரிகள் இழிகுல மாதரை
வரித்தனர் மதுவினோடே விழிப்புணர் வோடிறை துணைப்பல மொன்றிட
விரைந்தனர் முஸ்லி மானோர். 486

படுகொலைக்கு பழிவாங்கினர்
"அக்கா"வி னுள்ளிலும் வெளிப்புற நகரிலும்
ஆனந்தக் கூத்த டித்தோர் பக்கமா யிருந்துண்டு களித்த பரத்தையர்
போர்க்களஞ் சேர்ந்து செல்ல மிக்கவே மதுவுமவர் கூடவே நகர்ந்தது
மதியழித் துவகை யூட்ட தக்கதிலை யதுவெனத் தவிர்த்திட ரிச்சாட்
துரிதமாய் இயங்கி னானே.
மாதரொடு மதுவொன்றி மதிகெடுத் திடவவர்
மெள்ளவழி தொடர்ந்த தாலே தீதுவென் றெண்ணியது தொடரா திருக்கவே
தக்கவழியாக வாங்கு போதியது போகவதி லதிகமா யுளமாதர்
பெருங்குடி கார ரோடே பாதிவழி வந்தாலும் மீதிவழி தடுத்துடன்
பின்நோக்கு மாறு ரைத்தான்.
கண்ணுக்குத் தெரிதொலை தூரத்தி லாழியின்
கரையோடு மரக்க லங்கள் நண்ணின பறங்கியர்க் குணவுடன் ஆயுதம்
நிறைமதுக் கலங்கள் தாங் கண்மறைந் தொருபெரும் படையொடு மலைவழி
கடந்துவந் தாரே முஸ்லிம் மண்புகழ் மாமன்னர் ‘ஸலாஹாத் தீன்"தலை
மனிதராய் முன்னே சென்றார்.
வேறு
கரையோர மாய்ச்செல்லும் பறங்கியர் படையினைக்
கண்கணித் திடவென வனத்தில் நிரைநிரை யாகவான் தொடுமரங் களிலே
நின்றுற்று நோக்கினர் கீழே இரைகொளப் பதுங்கிடும் புலிகளாய் முஸ்லிம்
இணையிலாப் போர்வீரர் நகரத் திரையிட்டு மறைத்ததோ திண்ணிய கானகம்
துணைசெயற் கவர்க்கெனும் வாறே.
133
487
488
489
490

Page 75
134 புனித பூமியிலே காவியம்
முன்சென்ற "ரிச்சாட்"டின் படைவீரர் கானிலே
முற்புற மரங்களைச் சரித்தே முன்னேறி னாரவர் முட்புதர் செடிகளை
முற்றாக வழித்ததன் பயனாய்ப் பன்நூறு கோடியாய்ப் பாம்புதேள் பரவியே
பாதையுட் புகுந்துபின் சென்ற வன்மனப் பறங்கியர் வழிதொடர்ந் திடத்தடை
விதித்தன விதிசெய்த சதியாய்,
காரிருள் கவிந்ததுங் கானக விலங்குகள் கணக்கிலா தொருபுறம் வதைக்க வேரிலா மரம்போல் பேய்பிசா செனும் பொய்
விசுவாசம் நெஞ்சினை அழுத்த தேராத போதெமைச் சுற்றிவந் தேபழி தீர்ப்பரோ முஸ்லிம்க ளென்றே ஓராது முன்செய்த தீங்கினை எண்ணியும்
உளம்பயந் திருந்தன ரன்றோ.
பற்பல காரண காரியங் களினால்
பயந்தவரடங்கிடப் பயத்தை அற்றிடச் செய்யவென் றுபாயமொன் றறிந்தே
ஆணையுமிட்டனன் "ரிச்சாட்" முற்றுமே இருள்சூழ்ந் திடுமுன் முகாம்களை
முறையான இடந்தேடி யமைத்தே உற்றிடும் பசிமறந் திடவுன வும்மவர்
உறங்குமுன் பெறவேண்டு மென்றே.
உண்டபின் அன்னவ ருறங்கிடு முன்னரோர்
உயர்படை நாயகன் வந்தே "புண்ணிய ஜெரூஸலப் பள்ளியே எமக்கருள்
பாலிப்பா" யெனக்குரல் கொடுப்பான் விண்ணதிர்ந் திடவாங் கிருந்திடும் வீரரும்
வாய்விட் டலறுவர் தொடர்ந்தே கண்படு தொலைவினுக் கப்பாலு முள்ளவர்
காது தொட்டலறிட வென்றே.
491
492
495
494.
 

படுகொலைக்கு பழிவாங்கினர்
ஒருகோடி தொடங்குமக் குரல்மறு கோடியை
ஒன்றிடப் பலநூறு நாழி அருகிடும் மீண்டுமஃ தராம்ப மாகியே அடுத்துமுன் போலவே பரவும் மருவாது கானக மிருகங்க ளவ்வொலி
மிகுந்திட வொளிந்திடு மென்றும் உருவாகு மோருளத் தென்புமப் பக்தி
ஓசையா லெனநம்பி னாரே
நினைந்தது போலவே நிகழ்கினும் ஒலிவழி
நடந்ததும் வேறொன்று முண்டாம் வனவழி தொடர்ந்துமே வருமுஸ்லிம் படையினர்
வாயொலி கேட்டிட மறிந்தார் தினந்தினம் பொறுத்தொரு தோதான நாளினைத்
தெரிந்திட "ஸ்லாஹCதீ விருந்தார் முனமொரு படையினை யனுப்பிய தாலதன்
முடிவையுமறிந்துளங் குளிர்ந்தார்.
முன்னணிப் படையொன்றை அனுப்பவே "ரிச்சாட்"
முயல்கிறா னெனவறிந்ததற்கும் முன்னதா யோர்பெரும் படையினை மன்னரும்
மறைந்தெதிர்த் தேகிடப் பணித்தார் அன்னிய மண்ணிலோர் மண்வளம் மிக்கவூர்
அகப்பட அங்குவந் துற்றோர் திண்ணமாய்ப் பறங்கியர் வருவராங் கென்றே
தாமதித் தெதிர்நோக்கி நின்றார்.
வளம்மிக்க நகரினைக் கண்டிடில் பறங்கியர்
வழக்கமாய்த் தந்தொழில் மறந்தே களவோடு கொள்ளையுங் கற்பழித் திடலுயிர்க்
கொலைகளுஞ் செய்வரென்றறிந்தே வளமிக்க நகரொன்று வரவாங்கு முஸ்லிம்கள்
வாகான இடந்தேடி யொளிந்தே களவாளும் பறங்கியர் கண்படு வரையங்குக்
காத்திருந் திடவவர் வந்தார்.
495
496
497
498
135

Page 76
136 புனித பூமியிலே காவியம்
விரைவிலாங் குற்றவப் பறங்கியப் படையினர்
வழியெலாங் களிகொளத் தாங்கள் இரைகொளத் தக்கதோர் இடமிது தானென
எண்ணியே தலைவனின் ஆணை வருவரை காத்திடும் பொறுமையும் இன்றியே
வில்விடு வெஞ்சிலை யாகி தெருத்தெரு வாகவே யோடினர் சூறையில் தேர்ந்ததம் செயல்தொடர்ந் திடவே
அந்திசாய்ந் திடுமந்த வேளையிற் பரங்கியர்
அகப்படு பொருள்களைச் சுருட்டிச் சொந்தமுங் கொண்டனர் சிற்சில ஊரவர் சேர்ந்தகைப் பொருள் களினூடே சொந்தவீ டுடைமைகள் தனித்திட வோடினர்
துரத்தியே பிடித்தவைக வர்ந்தார் பந்தமோ பாசமோ விலாதவப் பாவிகள்
பகைத்தவரைக்கொலை புரிந்தார்
ஈட்டிய பொருட்களைச் சுமந்தவர் ஆகையால்
இன்னுமின் னுமென்றே தேடி ஒட்டமா யோடினர் ஒன்றிய போழ்தினில்
ஒளிந்திருந் தேமுஸ்லிம் வீரர் வேட்டைகண் டேபாயும் வேங்கையாய்ச் சுற்றியே
வளைத்தவர் தம்மையுமழித்தார் கோட்டையில் நிராயுத முஸ்லிம்க ளையவர்
கொன்றதற் காய்ப்பழிதீர்த்தார்.
நாற்புற மிருந்தும்போர் வீரர்கள் வந்தாங்கு
நாசங்கள் செய்தவர் தம்மைக் கூற்றுவர் போலுயிர் கொண்டனர் கொள்ளையே
குறியெனக் கொண்டவர் மாண்டார் ஏற்றதம் இழிசெய லாலவர் ஒன்றிடா
தெங்கணுஞ் சிதறியதாலே போர்த்திற னறிந்துவந் தோர்தமக் கேதுவாய்ப்
போனதே பழிகொள வன்றே.
499
500
5O1
502
 

படுகொலைக்கு பழிவாங்கினர் 137
தப்பிட வழியிலா தெதிர்க்கவும் வாகறச் சுற்றியே வளைத்திட்ட முஸ்லிம் ஒப்பிலா வீரர்கள் ஒருவர்பின் னொருவராய்
உலகவாழ் வொழிந்தேகச் செய்யத் துப்பற்று நின்றவப் பறங்கியர் எதிர்ப்பதைத் தொடர்வதோ தவிர்ப்பதோ தம்மை ஒப்படைத் தேசர ணடைவதோ வென்றுமே
ஒர்ந்திடு முன்சிரமிழந்தார். 503
நினைத்ததில் பாதியே நினைந்தனர் மீதியை
னைப்பதற் குட்தலை புரள வினைப்பய னெய்தின ராமவர் பிறரினை
வருந்திடச் செய்ததி னாலே அனைத்தும் அடங்கிட ஆனதை நோக்கில்:ஐ
யாயிரம் பேரழிந் திருந்தார் முனைப்பதில் பயனிலை யெனச்சர ணடைந்தோர்
மூவாயிரம்பெயராமே. 504
குற்றுயி ரானவர் போகவாங் கோர்சிலர்
காணாது ஒளிந்துபின் னோடி பற்றியே தொடருமோர் பெரும்படை யினர்க்கும்
பாதகன் "ரிச்சாட்"டினிடத்தும் சுற்றியே வளைத்தெமைச் சேர்ந்தபோர் வீரரில்
சிலபேரை மட்டுமே தவிர்த்து முற்றும பூழித்தனர் முஸ்லிம்க ளெனவே
முறையிட்டுக் கலங்கிநின்றாரே. 505
வசைமாரி பொழிந்தனன் ரிச்சாட்தன் வீரரை
வாய்வந்த வாறிழித் துரைத்தான் திசைமாறிப் போனவவர் கொள்கையே காரணம்
தீராத அவமானம் என்றான் இசைவோடு "சுல்தானின்" நடமாட்ட மறிந்திட
ஏவினான் ஒற்றர்கள் அம்பின் விசைகூட்டி ஏகியே மீண்டனர் தம்வழி
விரைகிறார் அவருமென்றுரைத்தார். 506

Page 77
SSSDSSS S
138 புனித பூமியிலே காவியம்
முன்னணிப் படைக்குநேர்ந் ததுபோற்ற மக்குமே
முஸ்லிம்கள் படைசெய்யுமென்றே எண்ணமும் மேலுற ஏற்றநல் வழிகளை
எற்பாடு செய்கவென் றாங்கே மன்னனை வேண்டினர் மற்றுள தலைவர்கள்
மதித்திடா தொதுக்கின னவனும் பின்னதை ஏற்றிடும் படியவ னாயினான் புதியதோர் நிலைவந்த போழ்தே
படைக ளுடன்" கை ஸரியா'த் துறைமுகப்
பட்டினஞ் சேர்ந்தடைய உடையவ ரற்றவோ ரில்லம் போலது
யாருமி லாதிருக்க அடையல ரோர் சில நாட்களே தங்கினர்
ஆங்கிருந் தேயகன்றார் விடைபெற வூரவர் தமைப்பணித் திருந்தார்
வேந்தராம் "ஸ்லாஹஸ்தீனே"
போகும் வழியினில் பரந்தவோ ரிடத்தில்
பார்த்தனர் பெரும்படைதாம் போகும் வழியினைப் பற்றியே தொடரும்
புதுமையைக் கண்டயர்ந்தார் வேகங் கூட்டியே பரிப்படை யொன்றும்
வந்துமே சரந்தொடுக்க சாக வரம்பெற் றோர்கள் மடிந்தார் தப்பினோர் முன்நடந்தார்.
சேதம வர்க்கோ சிறிதிலை யாயினுஞ்
தொடர்ந்தவர் வழிநடக்கும் போதுதம் படையினை முப்பிரி வாகவே
பகுத்துமே மலையடுத்தே தீதுவ ரின்முதற் றாக்கிட வென்றுமே
காலாட் படையினரை பாதமே வாகன மாகிடப் போகப்
பணித்தார் பறங்கியரே.
507
508
509
510
 

பலப் பரீட்சை 139
வில்லாள் வீர ராமவர் தேவைகள்
வேண்டிடில் சிலைகோத்தே வில்லாண் டெதிரிகள் தமைத்தடுத் திடமுன்
வரிசையில் வழிசெல்ல பொல்லாப் புயபலங் கொண்டோ ரெனுமால்
பின்வருவாட்போரில் வல்லா ருந்தொடர்ந் தேகினா ரழித்திட
வம்மும் பகையினையே 511
கிறிஸ்த்தவப் படைக்கு முதுகெலும் பானவர்
குதிரைப் படையிருப்போர் திறன்மிகு “நைட்டுக" ளானதா லவர்க்குத்
தகுந்தவோர் காவலென முறையாய்க் காலாட் படையினை முதல்வரி
மீதிருத்தினரவரைத் துறந்தே னும்முன் னவருயிர் காப்பது
தேவையென்றேயுணர்ந்தே 512
உணவும் பிறவுந் தாங்கிய கழுதைகள்
உடன்வர நோயடைந்தோர்
துணையாய் வருவோர் சுமக்கும் வண்டிகள்
தொடர்ந்தே கடலோரம்
அணியாய் வரவதி லிருப்போர் காலாள்
அணியொடு இடையிடையே
இணைவார் வருவார் இணைவா ரெனவே
இருப்பரே இறுதிவரை 513
தொடர்ந்தே முஸ்லிம் வீரர்க ளவரைத்
துன்புறுத் திடவெகுண்டே தொடர்ந்தனர் விற்போர் தமையதை "ரிச்சாட்"
தொடர்ந்திடப் பணித்ததனால் கடும்போர் மூண்டது காரிருள் கவியுங்
காலமும் வரவந்நாள் விடையொன் றின்றியே முடிந்ததே தோல்வியோ
வெற்றியோ இலாதெவர்க்கும். 514

Page 78
140 புனித பூமியிலே காவியம்
வருநாள் தொடர்ந்திடு போரினில் “டெம்ளர்ஸ்"
ரர் வருவரெனத் தெரிவா ரதனால் திறனோடு பொருதத்
துணிந்தவர் முயன்றனரே பரிமீ தமர்ந்தே போர்செய் தவருடைப்
பரிகள் தமையொழிக்க இருபுறத் திருந்தும் ஈட்டிக ளெறிந்தார்
இலக்கிலும் வென்றனரே.
மீண்டுமே "ரிச்சாட்" தன்படை யோடு
மோதினன் முன்வந்தே
தோன்றினன் டெம்பிளர்ஸ் வீரரி னிடையே
துணிவளித் திடவென்றே
மாண்டவர் தொகையும் மிகையது போன்றே
மரித்தன குதிரைகளும்
ண்டவப் போரும் நிறைவுறப் பாசறை
நாடினரனைவருமே.
போரினில் மாண்ட பரிமா மிசத்தைப்
பங்கிடவியலாது போரிட் டனரே யுனக்கெனக் கென்றே
பறங்கியர் தமதிடையே தீரா தெனப்பகை யாமென "ரிச்சாட்"
தெரிந்ததும் ஆங்குற்றே சீராக் கின்னே சிறுமதி கொண்டோர் செய்கையை இழித்துரைத்தே.
விடிந்ததும் மீண்டும் சிலுவைப் படையினர்
வழிப்பயணந்தொடர்ந்தார் மடிந்தவர் போக மற்றுளோர் செறிந்தே
மண்ணிடையிலாதுசென்றார் பிடித்தகை ஈட்டியபல் லாயிரம் உயரமுட்
பன்றிய முடல்சிலுப்பி நடப்பது போலிருந் ததுவாம் “அர்சூப்"
நோக்கினர் பறங்கியரே.
515
516
517
518

பலப் பரீட்சை 141
பக்க மிருந்தும் பின்னும் முஸ்லிம்
படையினர் தாக்கிவர மிக்க வுயிர்ப்பலி தோன்றிய தாயினும்
மாறா திடத்திருந்தே “எக்கா ரணத்திலும் இடம்பெய ராதீர்"
என்றிடும் ஆணையினுக்கு ஒக்க நடந்தார் இருப்பினும் பொறுமை
எல்லையைக் கடந்ததுவே. 519
சேதம் பெரிதா மெனினும் இருப்புக்
கவசம் இருந்ததனால் சேதங் குறைவே ஒப்பிடில் முஸ்லிம்
ரர்கள் தாக்குதலை
போதும் பொறுமை இனியெனப் பின்னணிப்
படையினர் வெகுண்டெழுந்தார் தூதாய் இருதலை வர்கள் மன்னனைத்
தேடியுஞ் சென்றனரே. 520
“அரசே பகைவர் தொடர்ந்தெமைத் தாக்கி
அழிவுஞ் செய்யுகையில் மரமாய் உணர்வற வெவ்வா றிருப்போம்
மானமிழப்பதுவோ உரியநல் வழியொன் றுரைத்திட வேண்டும்
ஒர்வீ" ரெனப்பணிந்தார் எரிவாய் புகுந்த எஃகினை நெஞ்சில்
ஏற்றப தில்கொண்டார். 521
"தாக்கிடு வோரைத் தாக்கா திருக்கத்
தடுத்தவ ரெவராமோ தாக்கிடுந் திறனுமக் கிலையென் றால் என்
தவறிலை யறியீரோ போக்கிட மிலாதோ வென்னிடம் வந்தீர்
போவீர்" எனவுரைக்க நாக்குர மற்றோர் போலவே மீண்டு
நகர்ந்தனர் தலைவர்களே 522

Page 79
142 புனித பூமியிலே காவியம்
மன்னனு ரைத்த பதிலினை யேற்று
மீண்டவர் பிறரிடத்தும்
சொன்னனர் கேட்டோர் தலைகுனிந் தனரச்
சிறுமொழி மனத்துறுத்த
வன்மனத் திருந்தே வருமொழி யதனால
வருந்தினர் சினங்கொண்டார்
இன்னுமே பொறுத்திட வேண்டா தவர்கள்
இதயம் மாறினரே
இதயம் மாறிப் போர்க்குர லெழுப்ப
எண்ணிடும் போதினிலே எதிரில் வருமொரு வெளியினைக் கண்டார்
எதிரிப் படைவீரர் முதலே ஆங்கதை அறிவார் சுல்தான்
மோதலுக்குரியதென விதியை நிருணயஞ் செய்யவோ வனைவரும்
வந்தாங் குறைந்தனரே
பொறுமையை இழந்த “நைட்டு'கள் இருவர்
போர்க்குரலெழுப்பியவா றுறுவவை யுறட்டு மெனமுஸ் லீம்"கள்
உட்புகுந் தெதிர்த்தனரே கறுவிய வாறங் கிருந்த கிறிஸ்த்தவர்
கடல்போ லுள்நுழைய உறுமிஃதென் றெண்ணா திருந்தவ ருறவே
ஒர்கணம் நிலைகுலைந்தார்.
சிறுபொழு தேதான் தோன்றிய மாற்றம்
ர்க்கம் பெற்றதுடன் மறுதிக் கிருந்தே வந்தனர் முஸ்லிம்
மறவர் மிகவிரைந்தே கிறிஸ்த்தவர் நிலைமை கீழ்மே லாகிக்
குழப்பமும் தோன்றியதால் குறிமா றிப்போய்ச் சேதமும் பலமாய்க்
கொண்டனர் தவறிழைத்தார்.
523,
524.
525
526
 

mmmmmmm
143
"ரிச்சாட்" டுந்தன் பரிமீ தேறி ஏகினான் வெகுதூரம் அச்சமற் றவனைத் தொடர்ந்தே பலரும்
அதிவிரைந்தேகினரே துச்சமென் றுயிரை மதித்தத னாலே
துணிவொடு போர்செய்தார் எச்சரிக் கையடைந் தே"முஸ் லிம்"களும்
எதிரியைச் சாடினரே 527
இருப்புக் கவசம் அணிந்தத னாலே
இடைபுகுந் தெதிரிகளால் பொருதிட முடிந்தது புண்படா துடலில்
பாதப் படையினருள் பெருந்திர ளானோர் அழிந்தனர் கவசம்
பெறாதாங் குற்றதனால் குதிரை வீரர் குறைவே முன்னாள்
கொலையுண்டிருந்ததனால் 528
போரின் வேகங் கண்டிட வுணர்வு பகலவன் கொண்டனனோ நேராய் உச்சிக் கிறங்குவன் போன்றே
நெருப்பாய்க் காய்ந்தனனே கூரிய தீச்சரம் எய்தான் நிலமிசை கொடுமை வெறுத்ததனால் சீரிய கொள்கை கொண்டவர் தமக்கது
துணையென வுதவியதே. 529
இருப்புக் கவசத் துள்ளிருந் தோர்கள்
இரவியின் கொடுமையினால் நெருப்பினைப் போர்த்திய தாகவே யுடலம்
நொந்திட வெந்தனவே சிரத்தை குறைந்தது போரினில் தேகஞ்
சுடுபடக் கிறிஸ்த்தவர்க்குச் சிரமங் குறைந்தது முஸ்லிம் கட்கவர்
சிரங்களைந் திடுவதற்கே 530

Page 80
144 புனித பூமியிலே காவியம்
சிரமுங் கரமுங் காலும் உடலுந்
சிதறியே போர்க்களத்திற் பெருகிய குருதி யுறைந்திட வதன்மேற்
பகலவன் கொடுமையினால் உருகியே வடியும் வியர்வைநீர் சிந்தியே
ஒன்றிட நதியாகித் துரிதமாய்க் களத்தைக் கழுவியே சுத்தஞ்
செய்ததோர் புதுமையன்றோ.
பேரலை சேரிரு சாகர மிரண்டு
புறத்திருந் தோடிமோதிச் சேருவ தொப்பத் தாமிரு படைகளுந்
திரண்டே மோதுகையில் பாரெவ ரென்பதை எடுத்துரைத் தனவவர்
ஏற்றிடு துணிமணிகள் நீரொடு நீர்கலந் தாலதூ தோன்றிடா
நிலைமையில் வேறதுவே.
போர்மிகுந் தோங்கிடு போழ்தினி லாங்கே
பெரும்படை தொடர்ந்துவர நீர் கிழித் தோடும் நாவாய் நிகர்ப்ப
நடுக்களத் துட்புகுந்தே வேர்தவிர்த் தரிந்த வாழையின் மரம்போல்
வெட்டுண் டுயிர்பிரிய தீரன் “தகியத் தீ“னுடல் அரிந்தான் தோழர்கள் துணையோடே
மாலை வந்ததும் போரும் முடிந்திட முகாம்கள் அடைந்தனர்தம்
வேலை முடிந்ததாய் விலகியொ விரிந்தனன்
வாரிதியுட்பக லோன்
சாலச் சிறந்த வீரர்கள் செத்துஞ்
சுவனமும் ஏகியதால்
ஞாலம் இருண்டது போலு மிருந்தது
ஞாயிறு பிரிவாலே.
531
532
533
534

பொசுக்கல் திட்டம் 145
போரில் அழிவைப் பொறுக்க வியலாப்
போதுதம் படையோடே ஊரினை விட்டே யோடினன் "ரிச்சாட்"
இரவோ டிரவாக சேர்ந்தனன் “அர்சூப்" பட்டின மாங்கே
சிலநாட் தங்கியேதன் சோர்வை இழப்பை மறந்திட நினைந்தான்
சேர்த்ததும் உதவியதே. 535
"அக்காக்" கோட்டை முற்றுகை முடிந்ததும்
ஆரம்ப மோதலிரு பக்கத் தினர்க்கும் மற்றவர் பலத்தைப்
பார்த்திட வுதவியது தக்க தருணம் “தகியத் தீன்"தன் தோழரின் துணையோடு மிக்க வுயிர்ப்பலி கொண்டனன் கிறிஸ்த்தவர்
மிகவதிர்ந் திட வன்றே. 536
புதிதாய்த் திட்டம் பலவகுத் திட்டார்
புண்ணிய நகர்நோக்கி எதிரிகள் செல்வதைத் தடுத்திட சுல்தான்
எதிர்பாராதமையாய் முதலில் “யாப்பா" "அஸ்கலான்" இரண்டையும்
மண்டியிடச்செய்தே எதிரிகள் “ஜெரூஸலம்" செல்வா ரென்றே
எண்ணம் வலுத்ததனால் 537
28 பொசுக்கல் திட்டம்
“புனிதநகர் மீட்கின்ற பணியில் நாங்கள்
பெரும்பாலும் இறுதிக்கே வந்து விட்டோம்
இனி "யாப்பா’ப் பட்டினம்நம் கையில் மிக்க எளிதாக வந்தடையும் ஆங்கிருந்தே
நனிபோற்றும் "ಕ್ಷ್ ஒரீர் நாளில்
நாம்சென்று தரிசிக்க வாய்ப்புண் டாகும்"
எனவீரர் மத்தியிலே "ரிச்சாட்" கூற
இடியிடித்த தொப்பவவர் ஆர்ப்பரித்தார். 538

Page 81
146 புனித பூமியிலே காவியம்
பழுத்தபழங் கரத்தினிலே வீழ்வ தொப்பப்
பார்த்திருந்த தே"யாப்பா" முன்போல் “அர்சூப்" முழுக்கவெறிச் சோடிநின்ற "கைஸ ரிய்யா"
ஸ்லிம்கள் கையிருந்த நகர்கள் போல வழிநோக்கி நின்றிருந்த "துர்க்மா னீய
வீரர்வரத் தாமதித்த காரணத்தால் அழிக்க மன்னர் விரும்பவில்லை கையி ருக்கும் அரசபடை வீரர்களைப் போர்தொடுத்தே
“அர்சூப்"பின் அருகிலுற்ற மோதல் தந்த
அனுபவத்தால் அழிவுக்கும் அஞ்சி மன்னர் “ஜெரூஸலத்தைக்" கைப்பற்றும் இறுதிப் போரில்
செம்மையடி கிறிஸ்த்தவர்க்குத் தரவென் றெண்ணி பொருதாது தாமாக “யாப்பா" தன்னைப்
பகைவர்வசங் கொடுக்கவென முடிவு கொண்டார் ஒருவருமே யாங்கில்லா வாறு வேறுார்
ஒதுங்கிடவும் பணித்திட்டார் “ஸலாஹமத் தீனே"
யாப்பாவின் கோட்டைமதிற் சுவரை யெல்லாம்
இடித்துத்தரை மட்டமிடச் செய்தார் மன்னர் வாய்ப்பாக வமையுமவர் தமக்கு நாங்கள்
வலிந்துசமர்க் கிழுத்திடுங்கால் வாய்ப்புத் தோன்றின் காப்பாற்றிக் கொள்வர்தமை மதிலொ விரிந்தே காலவிரயத்தோடே கவஷ்டம் என்றே மூப்பில்லா ஞானத்தின் முதல்வர் சுல்தான்
முற்காப்புத் திட்டமொன்றைச் செய்திட்டாரே.
தொடர்ந்துசுல்தான் இட்டபணி கேட்டு வீரர்
திடுக்கிட்டார் நிறைவுசெய்ய வஞ்சி நின்றார் நடந்ததென்ன சுல்தானுக் கின்று சொந்த நிலைமாறிப் பேசுகிறா ரெனவியந்தார் மடமையன்றோ “சிரியாவின் மணப்பெண்" என்றே மகிமைகொண்ட "அஸ்கலானை' அழிப்பதஃது கடல்சார்ந்த துறைகொண்ட நகரஞ் செல்வம்
கரைபுரளும் பூவுலகச் சொர்க்க மென்றே.
539
540
541
542
 

பொசுக்கல் திட்டம் 147
அஞ்சிநின்ற வீரரினை நோக்கி "சுல்தான்"
"அறிவீர்கள் நான் சொல்வதெனத்தொடங்கிக் “கொஞ்சமெனுஞ் சந்தேகங் கொளாதீர் நானென்
கருத்தழிந்து பேசுவதாய் எண்ண வேண்டாம் வெஞ்சமரில் வெற்றிகொள வேண்டு மாயின்
வேண்டுமிந்தத் தியாகத்தை நாங்கள் செய்யப் பஞ்சிடையில் வீழ்ந்தகனற் பொரியாய் நெஞ்சைப்
புண்படுத்துஞ் சேதிஈதென்றறிகுவீரே. 543
“என் சொந்தக் குழந்தைகளில் மேலாய் நேசம்
எனக்குண்டாம் "அஸ்கலா"னில் இஸ்லாத்திற் காய் ஒன்றையிந்த விரண்டில் நான் இழப்ப தாயின்
ஒப்பற்ற "அஸ்க்கலானை'க் காக்க வென்றே என்னருமை மக்களை நான் இழக்க வென்றும்
எள்ளளவுஞ் சிந்திக்க மாட்டேனுண்மை தின்மைக்குச் சாவுமணி யடிப்ப தாயின்
தியாகமிதைச் செய்வதன்றி இல்லை" யென்றார். 544.
உள்ளபடி "அஸ்கலானை" எதிரி கையில்
ஒப்படைத்தால் விளைவதென்ன புனித மண்ணைக் கொள்ளைகொளும் ஆபத்தை நினைந்து பாரீர்
கொடியவர் கைப் படில்மீண்டோர் "அக்கா" தோன்றும் எள்ளளவும் இடங்கொடுக்க லாகா தின்றே
இங்கிருந்தே புறப்பட்டென் ஆணை கொள்வீர். முள்ளைமுள்ளா லெடுப்பதுபோல் முறைகெட் டோரை
முடிந்தவரை தந்திரத்தால் வெல்வோ மென்றார். 545
வீடுவாசல் தவிரமற்றப் பொருட்கள் தம்மை வாங்குதற்கும் விற்பதற்குங் காலந் தந்தார் கூடுமான விலைகொடுத்து வீர ருக்கும்
கொள்ளுபவை கொள்ள மன்னர் இடமளித்தார் பாடுபட்டே யுழைத்துமக்கள் சேர்த்த செல்வம்
பன்னெடுநாள் வாழ்ந்தபதியனைத்தும் விட்டு நாடிடவுந் துணிந்தாரங் குள்ளோர் சுல்தான்
நாட்டத்தை நிேைவற்றுங் கடமை யாலே 546

Page 82
48 புனித பூமியிலே காவியம்
சுற்றிவளைத் திருந்தமதிற் சுவர்க ளெல்லாம் சுக்குநூறாய்ப் போனதுயர் மாட மெல்லாம் முற்றுமடி சாய்ந்தொடிந்து வீழ்ந்த தெங்கும்
மேலோங்கி வளர்ந்தபெருமாளிகைகள் வெற்றுடலப் பித்தனைப்போல் வீதி தோறும் வெந்தழிந்தே நின்றனதியுண்டதாலே பொற்புறுமந் நகரத்தின் கோலங் காண்போர்
பேரதிர்ச்சி கொண்டேநாப் பிணமாய் நிற்பார்.
நீர்நிறைந்த பொய்கையெல்லாம் கண்ணை யள்ளி
நீந்தியபொன் மீனினங்கள் சுற்றித் தீயின் போர்நாவுக் கிரையாகி மரங்க ளெல்லாம் பற்றியதால் நிலமகளுங் காய்ந்த தாலே வேரோடும் உட்டணத்தால் புனல்கொ தித்து
வரண்டிடவே அவிந்தெங்குங் காணும் அஃதைக் கூர்வாயால் உயிர்வாழ்ந்த காலை தேடிக்
கொத்தியுண்ட பறவைகளும் நாடா வாறே.
வண்ணவண்ண மலர்களினை ஆடை யாக்கி
வளைந்தமரக் கரமெல்லாங் கொடிகள் தாங்கப் பண்ணிசைக்கும் வண்டினத்தை உடல மெல்லாம்
பவனிவர விட்டிருந்த பூம்பொழில்கள் கண்ணிமைக்கும் பொழுதுள்ளே கானத் தீபோல்
கடுகியசெந் தழலாலே கருகிப் போக மண்ணெல்லாம் நிறம்மாறிக் கருமை கொண்டே
மாற்றாரின் மனம்போன்றே தோன்றிற் றன்றோ.
செறிந்துவளர்ந் திருந்தகனி மரங்க ளுண்ணச்
செய்கைபண்ணி முற்றியநற் றானியங்கள் நறும்புனலை நல்கியநீர்த் தலங்கள் நாட்டின் நலங்குன்றா திருந்திடச்செய்தனவா மின்று சிறுபொழுதுள் இருந்தவிட மறியா வாறு
சொப்பனம்போல் மாறியதே நெருப்பினாலே சிறுமையென்ப ரிதைமற்றோர் யுத்த காலத்
தந்திரமீ தென்றவர்கள் அறிகுவாரோ,
547
548
549
550

பொசுக்கல் திட்டம் 149
வழிவழியாய் வாழ்ந்துவந்த மனைகள் விட்டு
வேற்றுரை நோக்கி"சுல்தான்" ஆணை காக்க வழிகோத்த கண்ணீர்வெண் முத்தாய்ச் சிந்த
வேதனையுந் தாளாது "அஸ்கலா"னில் எழில்கொஞ்சுந் திருநகரில் வாழ்ந்த மாந்தர்
எதிர்காலச் சூனியத்தைக் கண்டும் முன்னே விழிநடந்தார் சிற்சிலராய்க் கூடிக் கூடி
வருமிடரைத் தாங்குநெஞ்சின் உரத்தினோடே 551
வாழவிட மற்றதனால் மக்கள் வேறுார்
வழிநடந்தார் அதுவாறே பறவைக் கூட்டம் வாழவிட மாற்றதனால் கூடிக் கூடி
வான்வெளியிற் சிறகடித்த திங்கு நாங்கள் வாழ்ந்ததொன்றி யதுபோன்றே வாழ்வோம் வேற்றுார் வருகின்றோம் வழித்துணையாய் நிழலுமாகத் தோழமைக்கே இலக்கணம்நாம் தாமே யென்ற
தோரணையிற் கண்டால்நெஞ் சுருகிப் போமே. 552
பொன்நகரம் மண்ணோடு மண்ணாய்த் தீயில்
பொசுங்குண்டு போகவதைக் கண்டு "சுல்தான்"
உண்ணாத தோடுறக்கம் நீத்தார் நெஞ்சில்
ஓங்கிநின்ற கவலையினால் உடல்தளர்ந்தார்
தன்னுடைய மார்க்கத்தின் வெற்றிக் காகத்
தானாகத் தேடியவிவ் விழப்பை யெண்ணி
மன்னவனும் "ரிச்சாட்"டும் வியந்தான் "சுல்தான்"
மனவுரத்தை மனமாரப் போற்றி னானே. 553
சுல்தானின் நெஞ்சுரத்தைப் போற்றி னாலும்
தமக்குவந்த இழப்பையெண்ணி"ரிச்சாட்" மன்னன் எல்லையிலாக் கவலையுற்றான் "அஸ்க லானை"
இருந்ததெலாம் இருந்தபடி பிடித்திருந்தால் நல்லபெருந் துணையாக இருந்தி ருக்கும்
நாடுவன வனைத்துமாங்கே இருந்ததாலே சொல்லாது போயினரே முன்ன ரென்று
தகவல்தரும் ஒற்றர்களைக் கடிந்திட்டானே. 554.

Page 83
150 புனித பூமியிலே காவியம்
ஒற்றர்படைத் தலைவர்களைக் கடிந்தான் ரிச்சாட்
உறுமீதென்றறிந்துவந்து தன்னிடத்தே முற்கூட்டி யுரையாத கார ணத்தால்
முடியாதே தடுக்கவதை யெனவறிந்தும் அற்றறுந்து போனவொன்றைத் தவிர்த்துக் கையில்
அகப்படுமொன்றினைக்கொள்ளல் நலமென் றெண்ணி
முற்றாகப் படையினரை "யாப்பா" நோக்கி
முன்னேறப் பணித்தான்பின்னாங்குற் றானே.
இயற்கைவளம் மிகுந்தெங்கும் பசுமை யோங்கி
இருந்ததந்த நகர்வனப்பின் சிகரமாக செயற்கையெழில் இன்னுமின்னும் புதுமை கூட்டச்
சொர்க்கமிதோ வென்றெண்ணத் தோன்றிற் றாங்கே நயக்குமெலாங் கிடைத்தனவுல் லாச வாழ்வை
நாடுகின்ற கிறிஸ்த்தவர்க்கு முற்றுங் கேடே பயக்குங்களி யாட்டங்கள் கூத்தும் மாதர்
பொருந்திடவும் பொருந்துமென எண்ணி னாரே
அக்காவின் வெற்றிக்குப் பின்ன ராங்கே
ாக மதுவோட மாத ரோடே
విష్ణవే "ಕ್ಲಿ": : @@yabouTub
மிகுதுன்பங் கொண்டார்கள் “யாப்பா' வுள்ளே
புக்கியதும் மீண்டுமந்த ஆசை தோன்ற
பழையநிலை மீண்டார்கள் சிலபேர் கூடி
"அக்கா'வுக் கேசென்றார் படகி லேறி
அடங்காத அவாவெறியாய் ஆன தாலே,
நீண்டநெடு வீதிகளிர் அயலும் நெஞ்சு
னைந்ததனைக் கொள்ளுங்கடைப் புறங்கள் சாலை பூண்ட“அணி கலன்"போன்றே நிறைந்தி ருக்கப் பங்கயங்கள் போல்மாதர் துணைவ ரோடே வேண்டுவன பெறவங்கு மீங்கு மாக
விரைந்தனர்பின் பொருள்சுமக்குங் கூலியாட்கள் வாண்டுகளுஞ் சிட்டாகப் பறந்தார் "யாப்பா"
வளம்மிக்க திருநாடென்றுரைப்பார் போன்றே
555
556
557
558

பொசுக்கல் திட்டம் 151
காய்கனிகள் நிறைந்தபெருந் தோட்டம் உள்ளங் கவருமெழிற் பூவனங்கள் வற்றா தென்றும் தூயபுன லூறுகின்ற சுனைகள் உண்ணத்
தெவிட்டாத தேன்வதைகள் தொங்குங் கானம் ஓயாது காலமெலாந் தானி யங்கள்
உவந்தளிக்கும் நன்நிலங்கள் களங்க மற்றுத் தேயாத மதிமுகத்து மாதர் கூடித்
தென்றலுடன் ஆடுவெளி கொண்ட தஃதே. 559
நகர்மீது கொண்டிருந்த வனப்பிற் றாங்கள் நாடிவந்த காரணத்தை மறந்து வீரர் இகபோக சுகமனைத்தும் அனுப விக்கும்
எண்ணத்திற் காலூன்றி நின்றார் கூடி வகைவகையாய்க் கொணர்ந்திருந்த மதுவு முண்டு வழிகெட்ட மாதரொடு களிகொண்டார்கள் வெகுசினமுங் கொண்டிட்டான் "ரிச்சாட்"டிந்த
வகைகெட்ட செய்கைகளைக் கண்டதாலே, 560
படையினரோர் புறமிதுபோற் கால மோட்டப் படைத்தலைவர் பாதிரிமார் ஒன்று கூடி இடையிடையே கலந்துரைத்தார் இனித்தொ டர்ந்தே
ஏதுசெய்த லாகுமென இறுதியாக உடையுண்டு போனமதிற் கோட்டை தம்மை உடன்கட்டி முடிப்பதெனத் தீர்மானித்தார் தடையின்றித் தொடங்கியதல் வேலை யானால்
தாமதமாயத் தொடர்ந்ததவர் இழிவாழ் வாலே. 561
சீரழிந்து போனவிவர் வாழ்வு கண்டே
சினத்தாலுஞ் செய்யவொன்றும் இயலா"ரிச்சாட்" தீராத மனக்குழப்பங் கொள்வான் சற்றுத்
தொலைவினிலே முகாமிட்டுக் கிறிஸ்த்த வர்தம் ஒரசைவும் நீங்காதாங் குன்னிப் பாக
உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் முஸ்லிம் வீரர் சீரான வாழ்வுதனை நெஞ்சி ருத்திச்
ந்திப்பான் தமையெண்ணிவெள்கு வானே. 562

Page 84
152 புனித பூமியிலே காவியம்
ஒருவருடன் ஒருவரொன்றி வாழு கின்ற
ஒற்றுமையும் ஒழுங்குமிகு வாழ்வும் என்றும் மருவுபகை யழித்திஸ்லாம் மேலோங் கத்தாம்
மாய்ந்திடவும் அஞ்சாத தியாக நெஞ்சும் கருமமொன்றே கண்ணாகக் கொள்ளும் பண்பும் கண்ணியமுங் கடமையிலே கட்டுப்பாடும் தருமத்தின் வழிமாறாப் போக்கும் "ரிச்சாட்"
தனைக்கவர்ந்த தெனில்மிகையே இல்லை யம்மா.
மனத்துறைந்த மதிப்பாலே "ரிச்சாட்" மன்னன்
மன்னர் "ஸலா ஹமத்தீனைக்" கண்டே தம்மின் தனிப்பட்ட உறவுதனைச் சேர்த்துக் கொள்ளத்
தேவையற்றான் பின் ஆசை தவிர்த்துக் கொண்டான் இனத்தவர்கள் ஐயுறுவர் "துரோகி யென்றே
எண்ணிடுவர் எஞ்சியுள்ள ஒற்று மையும் கணத்துள்ளே அழிந்துவிடும் ஜெரூஸ் லத்தைக்
கைப்பற்றும் புகழுமிலா தாகு மென்றே.
ஜெரூஸலத்தைக் கைப்பற்றும் புகழுக் காக
தினந்தினமுங் காத்திருந்தான் அவ்வப்போது வருஞ்சிறிய வாய்ப்பினையுந் தவிர்க்கா துன்னி
வேண்டுமென்றே சமராடத் துணிவான் "ரிச்சாட்" ஒருநாள்தன் உடல்காக்கும் வீர ரோடே ஒன்றாத பகைநாடி வெகுதூரம்போய் மருவாத நிலையாலே வெறுப்புற் றேயோர்
மனமீர்க்குந் தோப்புள்ளே நுழைந்திட்டானே.
களைப்பாறத் தோப்புள்ளே நுழைந்த மன்னன்
கண்ணயர வோரிருவர் தவிர மற்றோர் களைப்பாறத் துயில்கொண்டார் விழித்தி ருந்தோர்
கூச்சலிட உணர்வுகொண்டே எழுந்தா ராங்கே வளைத்தவரை நின்றிருந்த வீரர் கண்டே
வேண்டிவந்த சந்தர்ப்பங் கிடைத்த தெண்ணி ஒளிந்துறையுட் துயில்கொண்ட வாட்க ளைக்கை
உருவினரே ஊணவைக்கும் ஊட்ட வென்றே.
563
564
565
566

பொசுக்கல் திட்டம் 153
கடுஞ்சண்டை மூண்டதங்கு கைவாள் மோதி
கனற்பொறிகள் சிதறினவே கண்ணிற் போன்றே
உடைகளிலே அனைவருமோர் விதமாய்த் தோன்ற
உருத்தெரிவதரிதாகி னானே "ரிச்சாட்"
டமாக உரைமுடி யாத போதும்
தொடர்ந்துபல ரொருவனுக்காய் உயிரிழக்க
மடியவிடா தவனையுட னெடுத்துச் செல்ல
கமுயன்றார் முஸ்லிம்கள் மன்னன் என்றே. 567
இறுதியிலே போர்முடியும் போது நால்வர் எஞ்சியிருந்தார்கிறிஸ்த்து வீரருள்ளே பொறுமையற்றே பாய்ந்தொருவன் முன்னே வந்து
“பாராளும் மன்னன்நான் தானே" யென்றான் உறுதியுடன் அவன்பகர்ந்த வார்த்தை கேட்ட
உடனிருந்தோர் வேறொன்றும் பேசாப் போழ்து மறுவார்த்தைக் கிடமளியா முஸ்லிம் வீரர்
மற்றவரை விடுத்தவனைக் கவர்ந்தே சென்றார். 568
உண்மையிலே அவன்"ரிச்சாட்" ஆகான் மன்னன் உயிர்காக்கத் தனதுயிரை மதிக்கா"வில்யம்" எண்ணாத போதாங்கு முன்னால் வந்தே
எதிரிவசம் தனைத்தந்த தியாகியன்று “மன்னாள்வோன் நா"னென்ற வார்த்தை யாலே
மாற்றாரின் கைகடந்து மன்னன் வந்தான் உண்மைதனை அறிந்துமற்றோர் ஆட்சே பித்தார்
உவப்பற்ற செயலரசன் செய்கை என்றே. 569
வழமையிலும் நிலைமைமுற்றிப் போதல் கண்டு
வெகுண்ட மன்னன் பொறுமையிழந் தானே"சுல்தான்" வழிதனது தொடர்புதனைக் கொள்ள மீண்டும்
விரும்பியொரு தூதுவிட்டான் "ஆதில்" வந்தார் பழையநிலை மறந்தவரோர் நாளாங் குற்ற
போதினிலே உடனிருந்த ரிச்சாட் மன்னன் விழியசையா திமையுயர மூச்சே நிற் கும்
வாறாயோர் திட்டத்தைச் செப்பி னானே. 570

Page 85
154 புனித பூமியிலே காவியம்
29. காதலனைக் கண்டாள்
"இளவரசே! நீங்களாஈங் கிவர்களிடம் எவ்வாறு
சிக்கினீர்கள்" என்றே கேட்க இளவரசி "ஹெலன்"எண்ணி னாளேயப் போழ்துநிலை
யுணர்ந்தேவாய் புதைத்தா ளாங்கே இளவரசன் 'தாஹீரை" யுடன்சேர்த்து மாளிகையுள்
இட்டுவந்த “டெம்ப்ளர்ஸ்" வீரர் இளவரசி தங்குமறை யருகினேலே செல்லவது
இமைதாண்டிப் புகுந்ததாலே, 57.1
சிலுவைலீரர் கோட்டையெனப் பெயர்கொண்ட வவ்விடத்திற்
சிறைகொண்ட "ஹெலன்“குமாரி சலுகைமிகக் கொண்டிருந்தாள் கோட்டைக்குள் எங்கணுமே
சுற்றிவரத் தடைகளின்றி வலியதொரு திங்களினை மனமொப்பா தோட்டியேதான்
விடுதலையுங் கொள்ளே னென்ற நிலையெண்ணி வருந்துங்கால் கண்டாளந் நிதர்சனத்தை
நெஞ்சினிக்க மகிழ்ந்திட்டாளே.
கண்கண்ட காட்சியினால் மனமுவக்க இளவரசி
களிகொள்ளும் போழ்து 'தாஹிர்" கண்காண வில்லையந்தக் கனியிதழின் சுவையள்ளிக்
கொடுத்தவளைக் கடந்தே சென்றான் எண்ணங்கள் விரிவடைய முன்நடந்த நிகழ்வுகளை
இதயத்துள் மீட்டிட்டாள்தான் எண்ணாத நிகழ்வாங்கு நடப்பதனை மீண்டுமவள்
எண்ணியெண்ணி மகிழ்வுற் றாளே. 573
“டைர்“கோட்டை அடையுவரை தன்துணையாய் வந்தவனைத்
தொடர்ந்துவர வேண்டா மென்றே உயர் காதல் கொண்டவவன் தனைத்தடுத்த தாலுற்ற
உபத்திரவந்தனைநினைந்தே
துயர்கொண்டாள் தனித்திருந்த போதெல்லாம் ஹெலனுமென்றோ
'தாஹி"ரினைக் கண்டே கண்முன்
துயர்மறந்தா ளானாலுந் தாமதித்தால் வரக்கூடுந்
தீங்கையெண்ணித் துயருற் றாளே. 574
 

காதலனைக் கண்டாள்
அரசியலாஞ் சதுரங்க விளையாட்டிற் பகடைக்கா
யொன்றாக வென்னைக் கொண்டே வருவார்க ளாதலினால் தீங்கொன்றுஞ் செய்யாது
விடுவார்கள் என்றாலுந்தன் மருவார்கள் சுல்தானின் மேலுள்ள பகைமையினால்
மகன்'தாஹிர்" உயிருக் கேதும் பெரிதாகத் துன்பமிழைப் பாரோவென் றெண்ணமுளம்
புகுந்திடவே கவலை கொண்டாள். 575
"தாஹி" ரொடு வருவதறிந் தேயிடையில் மறித்தவளைக்
கவர்ந்துவந்த “டெம்ப்ளர்ஸ்" வீரர் போகவழி யிலாதுசிறை வைத்தனரக் கோட்டையினுள்
பிறையொன்றுங் கழிய நாடு ஏகிய"கான் ராட்"டவளைத் தேடிடத்தன் படைகொண்டு
இயன்றவரை முயன்று மொன்றும் ஆகாத நிலையினிலும் தொடர்ந்துமுயன் றானொருநாள்
அகப்படுவாள் தன்கை யென்றே. 576
"அக்கா"வின் வெற்றியிலே "கான்ராட்டின்" கைகீழே
யகப்பட்ட 'ஸைபுத் தீனும் "அக்கா"வின் போர்வீர ராயிருந்த 'நூருத்தீன்"
அவனிதயங் கவர்ந்தாள் தந்தை ஒக்கவுற்றார் மாமன்னர் அனுப்பிவைத்த சேதியினால்
உறவுகொண்டே ஒன்றி வாழ்ந்தார் தக்கபடி முதியவரின் நலங்காத்தான் 'ஸைபுத்தீன்"
சுல்தானின் வார்த்தை கொண்டே 577
கைதியென 'ஸைபுத்தீன்" டைர்கோட்டை தனிலிருக்குங்
கால்'ஹெல"னுங் காணா துற்ற செய்தியறிந் தானவளைத் தேடிடவென் றே “அலப்போ"
தனிலிருந்து மீண்டா "தாஹிர்க்" கெய்தியது யாதென்றும் இருக்குமிடம் அறியாதும்
போனதென்றே கேள்வியுற்றுத் துய்யநட்பின் காரணத்தாற் றுயருற்றான் 'தாஹிரி"னைத்
தேடமனத் துணிவுற் றானே. 578
155

Page 86
156 புனித பூமியிலே காவியம்
《蔷,蔷
தேடுவதென் றுறுதிகொண்ட 'ஸைபுத்தீன்" "கான்ராட்"டின்
துணைநாடி நட்பைக் கூ காடுதனிலே பூதனிடம் "ஹெலன்'மீள 'தாஹிர்" ரொடு
காரணனாய் நின்ற தோத கூடுமிவ னால்சுல்தா னோடேதான் கொண்டிருக்கும்
கூட்டின்னும் பெருக வென்றே நாடுதனில் விடுதலையும் நல்கினனே சுல்தானை
நாடிடவும் வாய்ப்பளித்தான். 579
விடுதலைபெற் றாலுமவன் சுல்தானைக் கண்டிடமுன்
விபரமற்றுப் போன 'தாஹீ"
ருடன்" ஹெலனை"த் தேடுமெனும் முயற்சியிலே ஈடுபட்டான்
உறுதுணையாய் “நூருத் தீனை"
விடுதலைசெய் திடவேண்டி னான்கான்ராட் மனமொப்பி
விடுவித்தான் முயன்றா ரொன்றி
உடன்வந்த கான்ராட்டின் வீரரொடு மூரூராய்
உலவினரோர் துப்பு மற்றே 580
இனமறியாக் கிறிஸ்த்தவப்போர் வீரர்க ளோர்பெண்ணை
உடன்சேர்த்து முகத்தை மூடி மனமுரண்டாய் “அக்காவும்" டைருக்கும் “இடைகடலின்
மணற்பரப்பிற் சென்றா ரென்றே தனக்குவந்த தகவலினைக் கேட்ட'ஸைபுத் தீனுடனே
தனைச்சார்ந்த வீர ரோடே மனவேகந் தனைக்கூட்டிப் பறந்தனனே அவர்கண்ட
மாது'ஹெல" னாகு மென்றே. 581
தொடுகடலில் நங்கூர மிட்டிருந்த கப்பலினைக்
கண்ணுற்றோர் வீரர் கூட்டம் கடுகுவதைக் கண்டதனால் 'ஸைபுத்தீன்" உடன்வந்த
காவலரோ டனுக வாங்கே விடுபடவென் றுன்னியொரு பெண்முகத்தை மூடியதால்
வதையுண்ணும் நிலைமை கண்டே கடிதிலவள் தனைமீட்க வேண்டுமெனப் பாய்ந்தனனே
கரங்கொண்ட வாளி னோடே 582
 

காதலனைக் கண்டாள்
வீரவெறி கொண்டவரைத் தாக்கியதால் முன்சென்றோர்
வெகுநேரம் எதிர்க்க வொண்ணாக் காரணத்தாற் கவர்ந்துவந்த பெண்மகளைக் கைவிடுத்தே
கண்டகண்ட திக்கிலோட ஓரிருவர் பிடியுண்ணப் பலர்மாள முகத்தைமூடி
இருந்ததிரை விலக்கியப்பெண் யாரெவரென் றேயறிய முயன்றனளே நன்றியொடு
தனைக்காத்த பேர்க ளென்றே 583
உதவியவர் யாரென்றே யுளம்நிறைந்த நன்றியுடன்
உவந்தவளும் நோக்கக் கண்முன் உதவியவர் கிறிஸ்த்தவரா யிருந்துமதில் இருமுஸ்லிம்
உடனிருக்கக் கண்டே நெஞ்சுள் புதியவுணர் வுற்றனளே வியப்படைந்தே விழிவிரித்தாள்
புதுமையென்ன வாமே யென்றே அதுவேளை யவர்யாரோ வென்றவளைக் காத்தவரும்
அறியவென்றே அவாவுற் றாரே 584
இவள் மன்னர் குலநங்கை தானெனினும் எமக்குவேண்டும்
இளவரசி"ஹெல"னே யல்ல எவளாக விருப்பளிவள் ஏனிவளைக் கவர்ந்துசெல
எத்தனித்தா ரவருமாரோ இவையறிய வேண்டியவ ரன்னவளோ டுரையாடி
யாரென்ன வவளு ரைப்பாள் “புவியாளும் "ரிச்சாட்"டின் உடன்பிறந்தாள் பெற்றமகள்
பெயர்"ஆன்"என் றன்ன வர்க்கே 585
“தனித்தொருநாள் உலவவெனப் பரிமீது வெகுதூரம்
திரிந்தேனென் மாளிகைக்கு நினைத்தபடி வரவென்னா லியலாது வழிதவறி
ன்றேனம் மாலைப் போழ்தில் முனமொருகால் என்மாமன் தம்நாட்டின் கொடிமிதித்து
முறைகேடாய் நடந்த தாலே சினங்கொண்ட ஆஸ்த்திரிய வீரர்கைப் பட்டிட்டேன்
தெரிந்தென்னைக் கொணர்ந்திட்டாரே' 586
157

Page 87
158 புனித பூமியிலே காவியம்
ஒருமாதம் முகாமிலெனைக் காத்துவைத்துப் பராமரித்தார்
ஒர்நாளோ மன்னர் ஆணை கருதியுட னனுப்பிவைக்கத் தம்நாட்டின் கப்பலண்டை
கவர்ந்தேகுந் காலே நீங்கள் பொருதியவ ரோடென்னை மீட்டீர்கள் என்றாளோர்
பொருளினையுள் மனம்பு தைத்தே உருவமிலா துள்ளுறைந்த காதலனைத் தேடியேதான்.
உலாச் சென்றா ளெனவா மஃதே 587
அறிந்திருந்தான் “ஆனை"முன்ன ரோர் போழ்ந்து கடலொதுங்கி
அண்ணனொடும் அத்தை யோடும் நெறிதவறா மன்னர்'ஸலா ஹலத்தீனால் மாமன்கை
நகர்ந்தாளந் நாளி லென்றே அறிவனவ னதுபோன்றே மாமன்னர் மகன்மலிகுல்
அஸிஸ்உள்ளங் கவர்ந்தாளென்றும் அறிந்தனனே அவளைக் "கான் ராட்" "ரிச்சாட்" டிடமனுப்ப
அனுமதியும் மறுந்தா னென்றே 588
“ஹெலனை'யவர் பெறவேண்டின் "ஆனை'யங்குதடுத்துவைக்கக்
காத்திடக் கான் ராட்டுங் கூற நிலைமையுணர்ந் தே'ஸைபுத் தீனும்'ஆ னி°டத்தினிலே
சென்றுதனைப் பற்றிச் சொன்னான் “மலிக்குலஸிஸ்" உடன்பிறந்த"தாஹீ“ரென் நண்பனாவான்
முடிந்தவரை உதவுவேன்நான் “கலக்கமுறா திரு"வென்றே கான்ராட்டால் தீங்கெதுவும்
கடுகாது காத்திட்டானே. 589
தன்மீது பகைகொண்ட “டெம்ப்ளர்ஸார்" கோட்டையிலே
சிறையுண்டாள் "ஹெலனும் என்றே முன்னறிந்த தகவலினால் மேற்சொன்ன வாறுகான்ராட்
முன்னுரைக்க வேற்பாய் அன்னார் தன்மீது பகைகொண்ட போதிலும்"ரிச் சாட்"டிடத்தே
தோழமைகொண் டோர்கள் “ஆனை" முன்வைத்துத் தங்கைதனை மீட்கவழி உண்டாமென்றே
மனந்துணிந்தே அமைதியுற்றான். 590
 

குகையில் கண்ட அதிசயம் 1.59
“ஹெல"னோடு 'தாஹி"ரையுந் தேடுகின்ற பணியினைமுன்
கொண்டுஸைபுத் தீன்முயன்றான் “ஹெலன்"சிலுவை வீரர்வசம் இருப்பதுவாய்ச் செய்தியொன்றை
அறிந்து"கான்ராட்" உறுதி செய்தே சிலநாள்பின் 'ஸைபுத்தீனிடமுமது கூறவவன்
மகிழ்ந்திட்டான் ஆனாலும்தான் நலம்நாடும் நண்பனுக்காய் வருந்தினனே நடந்ததென்ன
நண்பனுக்கென் றஞ்சி னானே. 591
30. குகையில் கண்ட அதிசயம் மலைக்கோட்டை மாளிகையுள் சிலுவை வீரர்
மறைத்துவைத்த தனியறையுள் தனித்தே 'தாஹிர்" “ஹெல"னெங்குச் சென்றிருக்கக் கூடு மென்றே
கலக்கமுற்றான். பகலிரவாய் நினைந்திருந்தான் "அலப்போ'வி லிருந்து"டைர்" கோட்டை நோக்கி
அவன்தனித்து வருகையிலே “டெம்ளர்ஸ்" வீரர் வலைக்குளகப் பட்டான்பன் னுாறு வீரர்
வலுப்பகைமை தவிர்த்தவரோ ருடன்வந் தாளே. 592
பிடிபடமுன்"ஹவஜீவன்ே"கள் வாழு கின்ற
பெருங்கானப் பரப்பிற்றன் பரியை யோட்டி இடையூறு காணாது வழிதொ டர்ந்தான்
எதிரிகள் கண் படவிலைநா னெனநினைந்தே தடையேதுஞ் செய்யாத போதும் மர்ம
"ஷெய்குஜபல்" அவன்போக்கை அறிந்தார் பின்னே தொடர்ந்துசென்ற "ஹவவேன்ே"க ளாலே ஏதும்
தீங்கிழைக்கக் கூடாதென்றுறுதியோடே 593
பேரரசர் ‘ஸலாஹCத்தின்" புதல்வ ரென்று
புரிந்ததனால் தீங்கெதுவுங் தோன்று மென்ற
காரணத்தாற் கைதுசெய்தே "டெம்ப்ளர்ஸ்" வீரர்
கொணர்ந்திருந்தார் தங்கோட்டை மாளிகைக்கே
நேராத விடையூறு நேர்ந்த தாக
நினைந்தாலும் 'தாஹீ"ராங் கிரண்டு சாரார்
சேராது தனித்தனியே அவனைக் காக்கத்
துணைசெய்த தறியாது துயருற் றானே. 594

Page 88
160 புனித பூமியிலே காவியம்
தனித்திருந்த போதுமவன் தன்னோ டொன்றித்
திளைத்தவளின் நினைவினிலே சுகித்திட்டாலும் மனத்தொருமை குன்றிநிதம் அவளுக் கென்ன மாற்றாரால் விளைந்ததுவோ வெனவருந்தித் தினமிரவு பகலிரண்டுந் துயில பூழிந்தே
தனைமறந்து எண்ணமெலாம் "ஹெல"னாய் நிற்க கனத்தவிருட் போர்வைக்குள் நிலவைப் போலுங்
காட்சிதந்த வதனத்தால் அதிர்ந்திட்டானே 595
யாரையெண்ணி வருந்தினனோ வவளே முன்னால் இருப்பதுபோல் விழியுணர்த்த சந்தே கத்தால் “யாரதுநீ" என்றதட்டி னானே மெல்ல
“உஸ்.நான்தான் ஹெலன்"என்ற குரலைக் கேட்டான் காரணமே யில்லாது மனந்து டிக்கக்
காண்பதுபொய் யென்மனத்துப் பிரமை யென்றே நேராதோ விதுவுண்மை யாக வென்றே
னைக்கவவள் கரம்பற்ற மலைத்திட்டானே. 596
“நானேதான் இளவரசே சப்தம் வேண்டாம்
நம்பிக்கை கொள்கவிது நிசமே யென்றாள் ஏனோவப் போதுமவன் இதயம் அஃதை
ஏற்காது கனாவென்றே எண்ணி நிற்க தேனாகச் சொல்லினிக்கச் செவிக்குள் மெள்ள
தனக்குவந்த இடரெல்லாஞ் சுருங்கக் சொன்னாள் மானோடு கலைசேர்ந்த பாங்கா யந்த
மையிருளில் இருமனங்கள் ஒன்றிற் றம்மா. 597
பிரிந்தவுயிர் மீண்டுமுடல் தொற்றி னாற்போல்
புதுத்தெம்புங் கொண்டானப் போழ்து 'தாஹிர்" சுருங்கவிருந் ததாமவர்கள் சந்திப் பன்று
துணைதவிர்த்து “ஹெலனகன்றாள் தோன்றிடாதே பெருங்கோட்டை யாயிருந்துங் காவல் வீரர்
பெரிதல்ல எண்ணிக்கை குறைவே யென்று தெரிந்திருந்தாள் காதலனைக் காக்கத் திட்டந்
தோன்றுவரை சிந்தனையுட் புதைந்திட்டாளே 598

குகையில் கண்ட அதிசயம்
தனையொன்றுஞ் செய்யாது விடுவ ரென்னுந்
துணிவோடு காதலனைக் காக்க வென்றே முனைந்தாளவ் விளமங்கை முற்று மாங்கே மாற்றாரின் நடமாட்டங் கூறலானாள் தினமுமவர் வருவதுபின் னிரவி லென்றும்
ரும்புவது மவ்வேளை தானே யென்றும் மனமுவந்தா னிடத்தினிலே "ஹெலன்'வி ளக்கி மீண்டிடநல் லுபாயமொன்றுஞ் செப்பி னாளே.
ஓரிரவு 'ஹெலன்'வந்தாள் “டெம்ப்ளர்ஸ்" வீரர்
உடையுடனே பின்னிரவில் அதைய னிந்து யாருமறி யாதபடி எல்லை தாண்டி
“ஏகுக"வென்றன்போடே யுறுத்திச் சொன்னாள் ஒரடிய மெடுத்துவைக்க மாட்டே னிங்கே
உனைத்தனித்து விட்டகலேன் என்றான் 'தாஹிர்" நேருகின்ற இடரெடுத்துச் சொன்னாள் வீணே
நாடுவதுங் கூடாது போகு மென்றே.
பிடிபட்டுப் போவோம் நா மொன்றிச் சென்றால்
பிடியுண்ணா திருந்தாலும் இலக்கை நோக்கித்
தொடர்ந்துபல காதம்நாம் செல்லல் வேண்டும்
தப்புவதும் எளிதல்ல எனவுரைத்தே
திடமாக எனக்கொன்றும் தீங்கு நேரா
தயங்காது புறப்படுங்கள் என்றாள் நெஞ்சம்
இடந்தாராய் போழ்திலுமந் நிலைமை யெண்ணி
இடம்பெயர்ந்தான் இதயத்தை இழந்தான் போன்றே
இடையூறு வாராது தன்னைக் காத்தே
ஏற்கனவே அறிந்திருந்த வழியுட் புக்கித் தடைதாண்டி னான்'தாஹிர்"விடிய முன்னே
தொலைதூரங் கடந்திருந்தான் இன்னு மந்த உடையோடு செல்வதுநன் றென்றன் றேதான்
உணரும்போ திரண்டாகப் பாதை செல்ல முடிவாகத் தான்செல்லும் பாதை யோர்ந்து
மறுபாதை தனிற்சிறிது பயணஞ் செய்தான்.
16
599
600
6O1
6O2

Page 89
162 புனித பூமியிலே காவியம்
சிறிதுதொலை செல்லவாங்கோர் தோப்பைக் கண்டு
தாமதித்தே இளைப்பாறி உடையும் மாற்றி மறுப்டியும் வந்தவழி பரியை ஒட்டி
முச்சந்தி வந்தடைந்தே பிரிந்து செல்லும் மறுபாதை வழியாகக் காற்றை வெல்ல
முயன்றனனே பரியுமதை யுணர்ந்தாற் போன்றே குறிதவறா தெய்தசரம் போலுங் காலின்
குளம்புநிலத் தூன்றாது விரைந்த தன்றோ. 603
தேடிவரின் வருவோர்முன் சென்ற திக்கிற்
செல்லட்டும் என்றேயல் யுத்தி செய்தான் நாடியது வாறேதான் நடந்த தெங்கும்
நிகழாத தடையுதவ வழிதொடர்ந்தான் காடுகடந் தானோர்நாள் முழுதும் ஈற்றில்
கண்டனனே "திப்ரிய்யாப்" பிரதேசத்தை வீடடடையப் பொழுதுமுகங் கருக்கக் கண்டே
வருமிரவோ டுறையவிடந் தேடி னானே. 604
தொடர்ந்து முஸ்லிம் கிறிஸ்த்தவர்கள் மாறி மாறித் தனித்தனியே வாழுகின்ற வூர்கள் தாண்டிக் கடந்துவிட்ட காரணத்தால் கண்ணிற பட்ட
குகை யொன்றினுட்புகுந்தான் தங்க வென்றே இடம்பொருந்தக் குதிரையினை மேய விட்டே
இமைகளொன்று கூட்டிளனே உடற்களைப்பும் விடைகொள்ளும் வரைதுயின்றான் அருணன் மீண்டும்
வந்துடலைச் சாடக்கண் விழித்திட்டானே 605
கதிரவனின் ஒளிச்சரங்கள் குகையுட் பாய்ந்தே கண்விழிக்கச் செய்யவுடன் எழுந்த 'தாஹீர்" எதிரிருந்த பொருட்களினை நோட்ட மிட்டான்
ஆங்காங்கே ஜாடிபல இருக்கக் கண்டான் புதிராக இருந்ததவை உள்ளே ஆயப்
போந்தவனின் கைகளிலே ஆட்டுத் தோலிற் செதுக்கிவைத்த "பைபிள்கள்" கிடைக்கக் கண்டே
தனைமறந்தே அதிசயத்தில் ஆழ்ந்திட்டானே. 606
 

பாழ் மாளிகையின் உள்ளே
ஹிப்ருமொழி “பைபிள்கள்" தம்மைக் கண்டு
கடுவியப்புக் கொண்டாலும் அவைப டிக்க ஏற்புடைத்தாய் ஒளி குகைக்குள் நுழையும் வாய்ப்பை எண்ணியதும் அதிசயித்தான் அதனை ஆய்ந்து பார்ப்பதற்காய் நோக்கினனே வியப்போ முன்னில் பன்மடங்கு பெருகியதே யதற்கும் மேலாய் நாப்பேசும் வலுவிழந்தான் உள்ளே சென்று
நயனங்கள் தரிசித்த காட்சியாலே. 607
31. பாழ் மாளிகையின் உள்ளே
வெளியிருந்து நோக்குங்கால் மலைத்தொ டர்கள்
வெகுதூரம் படர்ந்திருக்கக் குகையினுள்ளே ஒளிசற்றும் இராதென்றே நினைக்கத் தோன்றும்
உள்நுழைந்தால் அதிசயமே எஞ்சி நிற்கும் ஒளிவந்த நுழைவுகளி னுாடே பார்வை
ஊடறுக்கச் செய்தனனே 'தாஹிர்" கண்டான் வளமோடு முன்னொருகா லிருந்த தன்ன
மாளிகையை அதன்சுற்றுப் புறங்களோடே 608
அரண்மனையின் அருகினிலும் புறத்தும் நன்றாய் அடர்ந்தசெடி கொடியோடு மரங்கள் கூடப் பெரிதாகச் செழித்துவளர்ந் திருக்க நாப்பண்
புனலள்ளிச் சொரியுமெழில் அருவி கண்டான் மருவியவன் நின்றசுவர்ப் பாறை யொன்றை முயன்றுதள்ளி விட்டாலோ உட்பு குந்தே அரியபெரும் உண்மையறிந் திடலா மென்னும்
அவாவுந்த எண்ணியதைத் தொடரலானான் 609
சுவரிலிரு கற்களினை நெம்பித் தள்ளத்
தோன்றியதோர் வழியந்த மாளிகைக்குள் எவரோமுன் போகவரச் செய்த தாக
இருப்பதுகண்டுள்நுழைந் தான் 'தாஹீ"ராங்கே புவியியற்கை தந்தபெருங் கொடையைச் சூடிப்
பேரெழிலாய்த் தோன்றியவன் உளத்தைத் தன்பால் கவியவைக்க முயலுவதை எண்ணித் தெய்வக்
கடாட்சத்தை வியந்துமணம் மகிழ்ந்திட்டானே 6.10

Page 90
164 புனித பூமியிலே காவியம்
தப்பிவந்த போதுமவன் தந்தை யாட்சி
தாங்குகின்ற நிலஞ்சேரா திருந்தா னந்தச் செப்பரிய வழகுமிக மாளி கையைத்
துருவியாய்ந் திடநெஞ்சின் ஆசை கொண்டான் ஒப்பில்லாச் சூழலிலே அமைந்தி ருந்த உன்னதவப் பேரழகை அன்றிருந்து தப்பில்லா தேபத்து நூறாய் ஆண்டு
தாண்டியதாய் எண்ணிமனம் வியந்திட்டானே. 611
வானுயர்ந்த மாளிகையின் வனப்பைக் கூற
வார்த்தைகள்தாம் உண்டாமோ இளைஞர் கூடி கானிடையிற் தந்திறனைப் போட்டி யிட்டுத்
காட்டியிருந்த தார்நோக்கும் புறமெல் லாமே காணுங்கண் இமைப்பிழந்தே நிலைத்து நிற்குங் காட்சிகளை வண்ணத்திற் பதித்தி ருந்தார் சாணிடையும் இலாதுவெள்ளைச் சலவைக் கல்லால்
செப்பனிட்டுத் தரையினையும் அமைத்தி ருந்தார் 612
சுற்றியெங்குங் கோபுரங்கள் விண்ணை எட்டத் துடிக்கின்ற தூபிகளும் கைவண் ணத்தால் முற்றும் அழ காகஅலங் காரம் பெற்று
முன்னோரின் கலைத்திறனை எடுத்துக் காட்ட கற்றுண்கள் இடையிடையே நிறுத்தி மேலே
கற்கலங்கள் வைத்திருந்தார் கொடிகள் பூக்க பொற்புறுமஷ் வெழில்கண்டால் விழிவாங் காது
பார்த்திருக்கத் தோன்றுமெனில் மிகையா காதே 613
கடைந்தெடுத்த கற்களினால் சாள ரளங்கள்
கற்றூண்கள் கதவுதொங்கு நிலைகள் அஃதில் கடைந்தவுயர் வேலைப்பா டனைத்துஞ் செய்த
கலைஞரின் கைத் திறனையின்றும் எடுத்தே யோத கொடைபெரிதே அன்னவரின் கைக ஞக்குக்
கொடுத்தானிறை யெனத்தாஹிர் வியந்தே நின்றான் தடையின்றி யொவ்வொன்றாய் ஆய்ந்தான் சுல்தான்
தனையன்றன் நிலையினையும் மறந்திட் டானே 614

பாழ் மாளிகையின் உள்ளே
கானகம்போல் வளர்ந்திருந்த பூவ னத்துட்
காட்சிக்காய் வைத்திருந்த கற்சி லைகள் வானகத்துப் பெண்டீரை துகில் இல் லாது
வடித்தெடுத்த பாவத்தில் கொண்டி றிருக்க மான்விழியா ரோடாண்கள் குலவு தற்கு
மலர்ச்செடிக ளிடையிடையே இருக்கை கண்டான் மீன்சுழலும் பொய்கைகளும் நீரைப் பீச்சும்
முகடுகொண்ட குடங்களையும் கண்ணுற் றானே 615
கன்னியர்கள் களவாகக் காத லர்கள்
காட்சிக்காய் வந்துலவ மாடி தோறும் அன்னங்கள் சிலையாகிப் புறத்தி ருக்க
ஆங்காங்கு நிலாமுற்றம் பலவந் தோன்றும் தன்னைமறந் திவற்றினெழில் தனிலே தாஹீர்
திளைத்திருந்தான் நினைவினிலே ஹெலனும் வந்தாள் முன்னிருந்த பலகனிகள் அனைத்தின் மீதும்
மங்கையவள் முகம்பூத்த எழில்கண் டானே 616
நாற்புறமும் மலைசூழ்ந்த நிலப்ப ரப்பின்
நாப்பண்ணோர் அழகுமிகு மாளிகையைத் தோற்றுவித்த தெவ்வாறென் றெண்ணி ஈற்றில்
தெளிவடைந்தான் முன்னொருகால் யாரோ மன்னன் ஏற்றவழி யொன்றிருக்க அமைத்திட் டாலும்
இடையிலுரு வானபெரும் பூகம் பத்தால் மாற்றமுற்றுப் போனதங்கும் மலையின் கூறு
மூடிவிட்ட தெனத்'தாஹிர்" முடிவு கொண்டான். 617
காலநெடும் பயணத்தில் மெள்ள மெள்ளக் கண்படாது போனவந்த மாளிகைபோல் தோலேட்டு “பைபிள்கள்" தாங்கி நின்ற
தொன்மைமிகு குகைமக்கள் நினைவில் முன்னோர் தூலமிலாப் பேய்வதியும் பதியென் றாகித்
தொடர்ந்துமறந் திடப்பட்ட தோடே யந்நாள் சீலமற்ற ரோமான்யர் வாழ்ந்த காலச்
சரித்திரமுஞ் சொல்லுவதாய்த் 'தாஹிர் காண்டான், 618
165

Page 91
166 புனித பூமியிலே காவியம்
மதம்நம்பா ரோமான்யர் அற்றை நாளில்
மிகக்கொடுமை செய்தார்கள் யூத ருக்கும் முதற்காலக் கிறிஸ்த்தவர்க்குந் துறவி மார்கள்
மறைந்தொதுங்கி வாழுநிலைக் காகினார்கள் அதற்கான சான்றுகளை ஆங்குக் கண்ட
அரசமகன் அறிந்திருந்தான் துறவி மார்கள் எதற்காக மாளிகையை மறைத்தா ரென்னும்
ஐயத்துக் குள்ளாகி ஆய்ந்திட்டானே. 619
ஐயமற மாளிகையின் பகுதி யெல்லாம் ஆராயும் போதாங்கே அரசியர்கள் மெய்மறைக்க வடைமாற்றும் அறைகல் லாலே
மறைத்தடைத்துச் சாந்திட்ட வடிவம் கண்டான் செய்யவிதற் கேதேனும் கார ணங்கள்
தப்பாதே இருந்தாக வேண்டு மென்று பையவொரு கூர்கொண்டே உடைத்தா னுள்ளே
பார்வைதனைச் செலுத்தியவன் அதிர்ந்திட்டானே 620
மனிதர்களை உயிரோடு புதைத்துக் கட்டி
மறைத்திருப்பரெனநினைந்தே யுடைத்தா னுள்ளே தனித்தனியாய்த் தோற்பையின் அடுக்குக் கண்டே திகைத்தொருகால் நின்றேயின் ஆவல் உந்த இனும் சிலகற் பாறைகளைப் பெயர்த்தெ டுத்தே
இறங்கியுள்ளே சென்றொன்றை எடுத்து வந்தே கனமாக இருந்தவதைப் பிரித்தான் "ಸ್ಧಿ
கண்களையே நம்பாது நோக்கி னானே. 621
விண்மணியைச் கூறிட்டே பையி லிட்ட
வாறாக வுள்ளிருந்தே ஒளியை அள்ளி மண்விளங்க வீசினவாம் இரத்தி னங்கள்
மாமன்னன் மகன்கூட ஏங்கிப் போனான் என்னவிது புதுமையிந்தப் பாழி டத்தில்
எவரிதனைச் சேர்த்திருப்பர் என்றே எண்ணிப் பின்னுமவை இருந்தவிடஞ் சென்றே மற்றப் -
பொதிகளையும் விரித்தகற்றிப் பார்த்த திர்ந்தான். 622

பாழ் மாளிகையின் உள்ளே 167
சிங்களத்து நவமணிகள் பதித்துப் பொன்னால்
செய்தமணி யாரங்கள் மேகலைகள் வங்கத்தின் கடல்முத்துக் கோத்த மாலை
வளையல்கள் வான்பிறையின் நெற்றிப் பட்டம் தங்கத்தட் டிகைவைரத் தோடு காலின்
தண்டைபாத சரங்கொலுசு காறை மெட்டி சங்குவடம் மூக்குத்தி அல்லுக் குத்துச்
சொர்ணவெள்ளி மோதிரங்கள் கண்டா னின்னும் 623
கண்கவரும் அணிகலன்க ளோடே வேறாய்க்
கணக்கில்லா வாறேபொற் காசுங் கண்டே மண்ணாளும் பதிமகனும் அதிர்ந்தே நின்றான் மட்டில்லா திதுபோன்ற திருவை என்றும் தன்வாழ்வில் கண்ணுற்றா னில்லான் போன்றே
தந்தைதம் கருவூலத் தென்றுங் கொள்ளாப் பொன்னோடு மணிகளுமாங் கிருத்தல் காணப்
புதுமையிது பெரும்புதுமை எனவியந்தான். 624
பறங்கியரோ டுண்டான போர்க ளாலே பேரரசர் கருவூலம் வரண்டே போகத் திறனிருந்தும் பொருள்பற்றாக் குறையே விஞ்சித் திட்டமிட்ட வாறெதையுஞ் செய்ய வொண்ணா விறல்கொண்ட வீரர்சில வேளை வெற்றி
வாய்ப்பினையும் இழந்திருந்தார் இம்மாச் செல்வம் அறப்போர்கள் செய்யுங்கா லிருந்தி ருந்தால்
அடையலரை யொடுக்கியிருப்பாரே யன்றோ. 625
இருந்துமென்ன இவையனைத்தும் எம்மைச் சேர்தற்
கேற்றவழி செய்திடுதல் வேண்டும் இந்தப்
பெருந்திருவை முன்போன்றே காத்து வைத்துப் பின்னொருபோ தீங்குவர வேண்டு மென்னுங்
கருத்தோடே அன்னியர்கை வசமி ருக்கும்
- குகையைவிட்டுச் செல்லவிழைந் தானே 'தாஹிர்"
இருந்தவைமுன் இருந்தபடி இருக்கச் செய்தான்
இதைச் செய்த தெவரென்று நினைந்த வாறே. 626

Page 92
168 புனித பூமியிலே காவியம்
யாரிதனைச் செய்திருப்பர் சொந்தம் யார்க்கோ
எதற்கிதனைச் செய்தார்கள் ஏனிங் காமோ காரணமொன் றிருக்காதும் போமோ ராஜ
குடும்பமொன்றின் உடையமையதாய் இருத்தல் வேண்டும் போரணுகும் போதச்சங் கொண்டே யிந்தப்
பொன்பொருளைக் கொணர்ந்து வைத்திங் கிருத்தல் கூடும் ஓரிருவர் மட்டுமிவை சொற்ப சொற்பம்
உள்மறைத்தே வந்திருப்பர் ஒளித்திருப்பார் 627
புரியாத புதிராக இருந்த தந்தப்
பொருள்வந்த மாயமவன் சிந்த னைக்குக் கருவாக நெடுநேரம் இருந்த போதும்
காரியத்தைத் தொடர்ந்துமவன் நிறைவு செய்து மருவுமுடற் களைப்பினைமெய் யுறையா வண்ணம்
மனமுறங்கா துடலுறங்கச் செய்தா னந்தத் தருணமொரு புதுநினைவு தோன்ற வெண்ணச்
சகடைமுன்னோடவைத்தான் விழிப்புற்றான்ே. 628
சட்டென்று நெஞ்சுதித்த நினைவி னாலே
தனதுதுயில் கலைந்தெழுந்த 'தாஹிர்" எண்ணம் விட்டவிடத் திருந்து தொடர்ந் தான்முன் கேட்ட
விபரங்கள் தனைத்தொகுத்தே நோக்க லானான் திட்டமாயிப் பிரதேசம்"திப்ரிய் யா"வின்
தொடர்மலைகள் கொண்டவிடம் அவ்வாறாயின் கட்டிவிட்ட பொய்யென்றே தான நிந்த
காதையுண்மை யாயிருக்கு மெனநினைந்தான். 629
முன்னொருகால் "திப்ரிய்யா" ராஜ நங்கை
முஸ்லிம்போர் வீரனொடு காதல் கொள்ள
அன்னவளின் உறவினர்கள் எதிர்த்தார் நெஞ்ச
அதிர்ச்சியினால் நோயுற்றே இறந்தும் போனாள்
தன்னுடைமை யானசெல்வம் அனைத்துங் கூட்டித்
தான்வெறுத்த தன்னினத்தார் காணா வாறு
பின்னொருநாள் காதலனங் குற்றாற் சேரப்
புதைத்துள்ளாள் என்பதந்தச் சேதி யாமே. 630
t
t

பாழ் மாளிகையின் உள்ளே 169
f
நம்பிக்கைக் குரியசிலர் உதவி செய்ய
நடந்ததிவை அன்னவர்கள் ஓர்போ தேனும் தம்சொந்தத் தேவைக்குத் துரும்பைத் தானும் தொடலாகா வெனவாக்கும் பெற்றிருந்தாள் அம்முதலாஞ் செய்தியொடு வேறோர் செய்தி
அறிந்திருந்தான் 'தாஹிர்'தன் தந்தை யோடு தம்மரிய திறனாலே போர்க்க ளத்தில்
தலைமையுற்றுப் போர்செய்த வீர னொன்றி. 631
"திப்ரிய்யா" மலைப்புதைய லதனைப் பற்றித்
தெரிந்திருந்தா னெனும் ஐயத் தாலே முன்னர் அப்பெருநல் வீரனொரு காலம் மாற்றார்
அரசசிறைக் கூடத்தில் அடைக்கப்பட்டான் தப்பிவரு வழியிலொரு மாதா கோயிற்
றலைமைக்குரு வானவரைப் புதையல் பற்றிச் செப்பாத காரணத்தால் தாக்கி யோரைத்
தாக்கியவர் தனைக்காத்தா னெனவும் இன்னும் 652
மலைப்புதையல் தனையறிந்த மாதா கோயில் மதத்தலைவர் தனைமீண்டுந் தாக்கியோரே கொலைசெய்தார் உயிர்பிரியும் போது தம்மின் கன்னிமகள் தனைவீரன் கையிற் றந்தே பலகாலங் காத்துவைத்த ரகசி யத்தைப்
புகன்றிடவா உன்கையில உயிர்பிரிந்தே சிலையாகிப் போனாரம் மனிதர் வீரன்
“ஸயீத்" மகளைக் கரம்பற்றி "மிஸ்ரு" சென்றான். 633
கேள்வியுற்ற சேதியெலாம் நினைவி லிட்டுக்
கண்டதந்தப் புதையலையென்றுறுதி கொண்டே நாள் கடத்தா துடனகன்று தந்தை முன்னே
நடந்ததெலாம் நவிலவென வெண்ணித் 'தாஹிர்" வேளைவரும் வரையார்க்குஞ் சொல்லா துள்ளம்
வைத்திருக்க வேண்டுமென முடிவுங் கொண்டான் ஊழித்தீ போலுதரம் எரிய வாய்க்கு
உவந்தகனி சிலவுண்டே பசியுந் தீர்த்தான். 634.

Page 93
170 புனித பூமியிலே காவியம்
பசியோடு களைநீங்கப் பெற்ற 'தாஹிர்"
பிரயாணந்தனைத்தொடர முன்நாள் மாலை பசிநீங்கப் புல்மேய விட்ட தம்மின்
பரிதேடி வெளியேற முயன்றான் மிக்க விசையோடு குகைநோக்கிக் குளம்பின் சப்தம் வரக்கேட்டுத் திடுக்கிட்டே மறைவைத் தேடி அசையாது காத்துநின்றான் எதிரி யாயின்
அரியவெனக் கரங்கொண்ட வாளி னோடே 635
மேயவிட்ட குதிரையினைக் கண்ட வன்னார்
மறைந்திருக்குந் தனைத்தேடி குகையை நாடி வாயுதனை விஞ்சுகின்ற வேகங் கூட்டி
வருகின்றார் பார்ப்போமோ கரந்தா னென்றே போயொளிந்து கொண்டவர்க்காய்க் காத்து நின்ற
பேரரசர் மகன்'தாஹிர்" உள்ளே வந்த நேயமுகங் கண்டயர்ந்தான் ஒடிச் சென்றே
நெஞ்சாரத் தழுவியுளம் மகிழ்ந்திட்டானே. 636
32. சுல்தானின் மர்மப் புன்னகை ஆங்கில மன்னன் அனுப்பிவைத்த
அழைப்பினை ஏற்றுப் பெருவீரந் தாங்கிய சுல்தான் உடன்பிறந்த
தம்பியாம் "ஆதில்" சென்றிருந்தார் வேங்கையி னுருவாய் வந்தவரை வரவேற்றிடவே உயர்நட்பின் பாங்கொடு முன்வந் தான்"ரிச்சாட்"
பரிவாரம்புடை சூழ்ந்திடவே, 637
மலிக்குல் ஆதில் தனைக்காண
மன்னன் "ரிச்சாட்" தன்னோடு குலத்தா லுயர்ந்தோர் தமைமட்டுங்
கூட்டிச் சென்றான் ஆங்குற்றோர் மலைக்குயர் வாறே மதிப்பளித்து
க்குயர் அன்பாய் நடத்தினனே பலநாட் பழகிய நண்பரெனப்
பார்ப்போர் நினைந்திடும் பாங்கினிலே, 638
 

சுல்தானின் மர்மப் புன்னகை 171
பெருநட் போடே யுரையாடும்
போழ்தே ரிச்சாட் மனந்திறந்தே இருசா ரார்நாம் நெடுங்காலம் எதிரிகளாகப் போர்செய்து பெருவீ ரர்பலர் மடிந்தொழியப்
பகைப்புல மானோம் ஆதலினால் பரங்கிய ரோடே சமாதானம்
புரிவது நன்றென் றெடுத்துரைத்தான். 639
வந்தது நாங்கள் அன்னவர்க்கு
வேண்டும் உதவிகள் செய்திடவே முந்திய பகைமை உமக்கிடையே
முறிந்தால் அமைதி தோன்றிவிடும் எந்தத் தேவையும் இலாதிங்கே
இருந்திட மாட்டோம் சென்றிடுவோம் சிந்தித் தெனக்கோர் பதிலைநீர்
செப்பிட வேண்டு மெனப்பகர்ந்தான். 640
போரினிற் போன்றே பேச்சினிலும்
பேரரசர்தமைப் போல்"ஆதில்" வீரரோர் புன்னகை முகஞ்சிந்த
வினாவுக் கெதிர்வினாச் சரந்தொடுத்தார் நீரெதிர் பார்க்குஞ் சமாதான
நிபந்தனை என்னவென்றுரைத்தால் நாம் தீரவஃ தோர்ந்தே முடிவதனைத்
தெரிவிப் போமென்றெடுத்துரைத்தார். 641
நிபந்தனை மிகவும் எளிதேதான்
நீண்டநாட் போரினைத் தவிர்ப்பதற்குச் சுபமாய் அனைத்தும் முடிந்துவிடும்
“ஜெரூஸல" நகரை எமக்களித்தே உபாதைகள் மீண்டும் தோன்றாமல்
உங்கள் படையொடு “ஜோர்தானுக்" கப்பால் சென்றிட வேண்டுவதே
அன்றிவே றொன்றும் இலையென்றான். 642

Page 94
172 புனித பூமியிலே காவியம்
சொல்லிய சொல்வாய் கடந்துமொரு
துளிப்பொழு தேனுஞ் சாய்த்திடுமுன் வில்லெனும் புருவம் நெளிந்திகழ்ச்சி வதனத் தெங்கும் இழைந்தோடக் கல்லாம் புயங்கள் நொடிப்பொழுது
குலுங்கிட வுடலம் விறைத்தேயோர் சொல்லே யுரைத்தார் நெஞ்சத்தில்
சுருக்கென் றேறிட “ஹoம்" என்றே. 643
ஒற்றைச் சொல்லின் உறுதியையும்
உணர்த்திய பதிலையும் ஓர்மை யையும் முற்றுந் தொனித்த கர்வத்தில்
மேவிய இகழ்வின் மின்னலையும் உற்றறிந் திட்டான் "ரிச்சாட்"பின்
ஒன்றா தெதையோ வவர்பேசச் சற்றும் மதியா நிலைகண்டு
தனக்குள் அதிர்ச்சிய முற்றனனே. 644.
விடைபெற் றேகி சுல்தான்முன்
விபர முரைத்தார் ஆதில்பின் தொடர்ந்தும் அழைப்புகள் வந்திடிலோ செல்லுவ துவப்பாம் எதிரிகளின் நடைமுறை மனநிலை யறிந்திடலாம்
நமைநாம் காத்திட வழிபிறக்கும் அடையலர் தமையும் அணுகியறிந்
தெதிர்த்திடில் எளிதென்றுரைகேட்டார். 645
மீண்டும் "ரிச்சாட்" அழைப்பொன்றை
முறையாய் அனுப்பினன் "மலிக்குலாதீல்" ஆண்டே புக்கினார் உயர்ஜாதி
அரிகளி னோடும் ஒட்டையொடும் வேண்டும் பரிசுப் பொருளோடும்
வேறாய்த் தங்கும் அமைப்போடும் பூண்ட நட்பைக் காட்டவெனப்
பெருவிருந்தளிக்கும் பொருளோடே 646

சுல்தானின் மர்மப் புன்னகை 173
துயோன் நாமத் தோடறுத்த
செம்மறி ஆடுகள் தோலுரித்தே வாயூற் றெடுக்கச் 'சைலானின்"
வாசனைப் பொருட்கள் மிகத்தூவிக் காயா தளவாய் நெய்யூற்றிக்
கைவிரலி டையுதிர் பதமாகத் தூய்தாய் அவித்துத் தட்டுகளில்
தனித்தனியாக வைத்தனரே 647
பன்னி ரிட்டே அவித்தெடுத்த
புதுவெண் சம்பாச் சாதத்தில் பொன்னின் பற்பம் தூவியுயர்
பருப்பொடு வற்றற் கனிகூட்டி முன்னவர் பதமிட் டெடுத்திருந்த
மாமிசத் துட்டதைத் தெடுத்தார்யார் கண்ணிலும் படாத வாறுமுஸ்லிம்
கைப்பதமறிந்த ஊணாளர் 64.8
காய்ச்சிய ஓட்டைப் பாலினிலே கருக்கிய கருப்பஞ் சாறுாற்றி காய்ந்துறை யகற்றிய முந்திரிகைக்
காய்விதை பொடித்துக் கலக்கியதை வாய்க்குநல் லுவப்பாய்ச் செய்தெடுத்து வாசனைப் பன்னிருடன் கூட்டி வாய்ப்பாய் உணவின் பின்னருந்த
வைத்தனர் முஸ்லிம் சமையலரே. 649
விருந்தின ராக வந்தவர்கள்
விருந்து படைக்க முயலுகையில் விருந்தினர் தமக்கு விருந்தளிக்க
ரும்பினன் "ரிச்சாட்" தம்மவரை அருந்தக் கனிச்சா றுடன் நல்ல - அறுசுவை மிக்க பண்டங்கள் பெருந்தொகை யாகச் செய்துபரி
மாறிட மன்னன் பணித்தனனே. 650

Page 95
174 புனித பூமியிலே காவியம்
இருசா ராரும் பதஞ்செய்த
எல்லா வுணவையுஞ் சேர்த்தெடுத்தே பெரிதா யோரிடந் தனிற்பரத்திப்
போயின ரனைவருஞ் சேர்ந்துண்ண உருகிய நெய்யின் மணத்தோடே
ஒன்றிய வாசனைப் பொருள்மணமும் விரவிடக் காற்றும் மணத்தததை
வாங்கிய வுடல்களும் மணத்தனவே.
தனித்தனி யொவ்வோர் ஆடுவைத்த
தாம்பா ளங்கள் இரண்டெடுத்து “மன்னன்" “ஆதில்" இருவருக்கும்
மற்றிருந் தோர்க்குப் பொதுவாயும் இன்சுவைப் பானம் பழங்களொடும்
இசைவாய் இன்னும் பற்பலவும் முன்னிலை வைத்தார் காண்பவர்கண்
முதலில் உண்டு களித்தனவே.
பருத்தே வளர்ந்த கடாக்களவை
பதின்மர் பங்கிட் டுண்டிடலாம் ஒருத்தர் கொன்றென் றிருந்ததனால்
உண்ணா தனைவரும் பார்த்திருக்கக் கருத்தை யுணர்ந்தே கையெடுத்த
கத்தியை "ஆதில்" வயிற்றடியில் பொருத்தியோர் இடத்தைக் கீறிடவே பிரிந்தே விரிந்ததல் வாடிரண்டாய்.
விரியாத் தெங்கின் பூப்போல
வெண்ணெயிற் பொரிந்த மென்சாதம் சொரியத் தட்டின் சுற்றெல்லாம்
சுகந்தம் பரவக் காற்றுண்டு தெரியாத் தொலைவில் இருப்பவர்க்கும்
சுமந்தே நுகர்புலன் தமைத்தடவ அரிதா மீதென் றகமெண்ண
ஆதிலைத் தொடர்ந்தார் மற்றோரே.
651
652
653
654

சுல்தானின் மர்மப் புன்னகை 175
சுவையாய்க் கதைபல செவிக்குணவாய்ச் சொல்லிய வாறே நாவினுக்குஞ் சுவையாய் உணவினைத் தன்வாக்கில்
சுவைத்தேயுண்டார் "ஆதி" லவண் அவையில் இந்த "அரச"னொடும்
ஆங்கிலப் பிரபுகள் “நைட்டு'களும் அவைபோற் சுவையூ ணவர்வாழ்வில்
அறிந்திலர் போலுடன் உண்டனரே. 655
அனைத்தையும் உண்டிட மனமிருந்தும் ஆவலுக் கேற்ப வயிறிசையாத் தனத்தால் நான்கி லோர்பங்கும்
தீர்ந்திடா நிலையில் பிறரிருக்க இனத்துக் கொன்றாய் ஆங்கிருந்த எல்லா வுணவிலும் ருசித்துண்டு தனக்குமுன் னிருந்த ஆட்டினிலும்
தவிர்த்ததோ "ஆதில்" எலும்புகளே. 656
ஊனுண வின்பின் உயர்கனிகள்
உண்டுடன் பழரசம் பாலருந்தி ஆனவை யொன்று மிலாதவர்போல் ஆங்கிருந்தெழுந்தே நடமாடத் "தீன்'மிகுந் ததனால் எழுந்திருக்கத்
திராணியற் றிருந்தோர் திகைப்படைந்தார் சானுடல் தாமெமக் கடிவர்க்குச்
சரீர மனைத்தும் அகடென்றே 657
கூர்மதி யோடுயர் கல்விநகைச்
சுவையொடு பேசிடு வல்லமையும் சீரிய பண்பும் சொற்றிறனுஞ்
சேர்ந்தே வீரமும் ஒருங்கிணைந்த பேரர சர்'ஸலா ஹcத்தீ’ வின்
பின்பிறந்தார்தம் முடன்"ரிச்சாட்" ஓரிரு முறையுரை யாடியேதன்
உளத்தினில் வைத்தவர் தமைமதித்தான். 658

Page 96
176 புனித பூமியிலே காவியம்
பிரபுகள் அன்னாள் கல்விபெறப் பாதிரி மார்தடுத் திருந்ததனால் உரியநல் லறிவைப் பெறாதவர்கள்
ஊனர்களானார் அவரோடு பெரிதுங் காலங் கழித்தலுத்துப்
போனதால் "ரிச்சாட்" "ஆதி"லினைப் பெரிதும் உவந்தான் பேசியதோர்
புத்தனு பவமென் றுணர்ந்தனனே.
புண்ணிய பூமியில் அமைதிவரப்
பொருந்தும் வழியறிந் திடமுயன்றே எண்ணிய வற்றுள் இறுதியிலே
ஏற்றதென்றுள்ளங் கொண்டதனைத் திண்ணமாய்ச் செய்திட வேண்டுமெனத் தூதொன் றனுப்பினன் ஆங்கிலமண் மன்னனும் "ரிச்சாட்" "ஆதி"லுக்கு
மறுநாள் மதித்தவர் வந்திருந்தார்.
தன்செவி தனையே நம்பாது
திகைப்படைந் திட்டார் "ஆதில்"முன் மன்னவ னிருப்பதை மறந்தொருகால்
மனத்தினை வருடிய நினைவினிலே எண்ணமும் அலையத் தனைமறந்தே
இருந்தார் காரணம் "ரிச்சாட்"தன் என்னமு ரைத்தான் அவரையவன்
இளையாள் கரம்பற்றிடவென்றே.
பல்லாண் டுகளாய் நடக்கின்ற
போரினை நிறுத்தத் தம்மிடையில் இல்லறத் திருவர் இணைந்தாலோர்
இணக்கந் தோன்றும் அமைதிவரும் நல்ல ததற்கு"ஜோன்' 'ஆதில்"தம்
நாயகியானா லெனநினைந்தே சொல்லினன் அழைத்தே தம்முடிவைத்
திகைத்திட வவருந் துணிவுடனே
659
660
661
662

சுல்தானின் மர்மப் புன்னகை
மாப்பெரு வீரர் மதியூகம்
க்கவர் அழகர் கைபற்ற மாப்பே ரழகி சிசிலிமன்னன்
மனையாய் இருந்தவள் உகந்தவளே ஏற்பா ரிருவருந் தனித்தனியே
இதயங் கவர்ந்திருந் தாரதனால் பார்ப்போம் முயன்றென் றுறுதிகொண்டே
G. G.
பேசினான் "ரிச்சாட்" "ஆதி"லிடம்
புயலில் பட்டுயிர் பிழைத்தீற்றில்
புகலிடங் கொண்டொரு கால்தம்மின்
தயவி லிருந்தவப் போழ்து முதற்
KK KK R_4 & GGK
றடவையாய் “ஜோன்"ஆன்"ஆத" ரொடும்
அயலி லிருக்க அண்ணன்மகன்
“அஸிஸிடம் உரை செய்திடும்போதே வயமாய் விழியுள் ளகப்பட்ட
விந்தையை "ஆதில்" நினைந்தாரே.
அழகிய “ஜோனை' மனத்திரையில் ஆரபதித்தக மகிழ்ந்திருக்க குழப்ப மடைந்தான் "ரிச்சாட்"தன்
கூற்றுக் குகந்தவரிலையென்றே அழுத்தியே வார்த்தைக் குரங்கூட்டி
அடுத்தொரு வினாவுடன் தொடுத்தான்'ஏன் விழைவிலை யோடுவென் வேண்டுதலில் வாயுரை செய்க" எனவிளித்தே.
தன்னுணர் வடைந்தார் "ஆதில்"பின்
தயங்கா துடன்பதிலெடுத்துரைத்தார் “என்னுடைப் பொருத்தம் உண்டேதாம் இறுதித் தீர்வென் கரத்திலிலை சொன்னால் நலமே திருமணத்தைத்
தொடர்ந்துடன் பாட்டின் திட்டமதை மன்னவ ரிடத்தி லுரைத்தவரும்
மனமொன்றுவரேல் சரி"யென்றே.
663
664
665
666
177

Page 97
178 புனித பூமியிலே காவியம்
“சீரிய திட்டம் உண்டிந்தத்
தூயமண் தனிலெம் வசமுள்ள ஊர்கள னைத்துமெம் சார்பாயும்
உம்வசமுளவெலா முஸ்லிம்கள் சார்பினில் நானும் சுல்தானும்
சீதன மாயும் பரிசாயும் சேர்ந்தே தருவது தாமஃது
சிலுவையைத் தருவது ஓர்விதியாம்.
“ஜெரூஸலம்" தன்னைத் தலைப்பதியாய்த் தேர்ந்திப் புனித மண்ணையெலாம் அரசாண் டிடலாம் ரிருவர்
ஆட்சிப் பொறுப்பினைப் போலீங்குச் சரிசம மாகக் கிறிஸ்த்தவரும்
சேர்ந்தே முஸ்லிம் இனத்தவரும் உரிமையுங் கொண்டே பொதுத்தலமாய்
ஒன்றிவணங்கிடலா"மென்றான்.
"அத்தொடு சுல்தான் வசமிருக்கும்
அதிபுனிதச்சிலுவைதனையெம் சொத்தாய் மீண்டுந் தரவேண்டும்
சிறிதோர் நிபந்தனைத் தளையுமற்றே" சுத்தம னத்தின னாய்"ரிச்சாட்"
சொல்லிய வனைத்தும் மனத்தூன்றி மெத்தவி யந்தார் ஆதிலவை
கையிலை அனைத்தும் உண்மையென்றே.
“ஒப்புயர் வற்ற திட்ட மென
உணர்வேன் மன்னரும் உவந்திடுவார் இப்பெரு நாட்பகை மாண்டெமக்குள்
இனியநல்லுறவும் பிறக்கும் “ஜோன்" ஒப்புதல் பெற்றிட வேண்டும்நீர்
உமதுடனரசரும் இணங்குவரோ செப்புவீர் மன்னா" என் றாதீல்"
சொல்லிட “ரிச்சாட்" பதில்சொல்வான்.
667
668
669
67O

சுல்தானின் மர்மப் புன்னகை 179
“நங்கையின் உளத்தினை நானறிவேன்
நான்சொல் வதையவள் மறுத்துரையாள் உங்களை அறிந்த நாள்முதலாய்
உளம்பறிபோனவளாகினளே பொங்கிடு மெதிர்ப்மெம தரசரிடம்
புரியுமெனக்கும் அவையெல்லாம் தங்கா வெயில்கான் பனிபோலென்
திறன்முன்" னென்றான் துணிவுடனே. 671
விடைகொண் டாதில் மன்னரிடம்
விபரமுரைத்தார் உடன்மன்னர் அடிநிழற் றோழர் அந்தரங்க
ஆலோசகர்'ஸலா ஹCத்தீனின் நெடுநிலப் பெருவாழ் வனைத்தையுமே
நிகரிலாச் சரிதமாய் எழுதியே பேர் முடிவிலாப் புகழ்கொள் ‘பஹாவுத்தீன்"
மனவினா முகமுரைத் திடநின்றார். 672
எதுவித சலனமு மில்லாமுன்
இருந்திடு நம்பியை விழித்தே"யில் விதிவரின் நின்நிலை யுரை“யென்றே
வினவினார் “சுல்தான்" இளையவரும் அதுவழி யமைதி யுருவானால்
ஆட்சேபனையெனக் கிலை"யென்றார் பதிலுரை கேட்ட “பஹாவுத்தீன்"
“பதியுடன் பாடோ வதற்°கென்றார். 673
"ஆமா" மெனமும் முறைசுல்தான் ஆமோதித்திட விதழருகில் தாமா யோர்சிறு நகையரும்பித்
தந்திரமாக மறைந்ததனைத் தூமதி யூகத் திருமன்னர்
துணையாம் “பஹாவுத்-தீன்"கண்டும் ஏமாந் தார்பொரு ளறியவிய
லாதவரானார் என் செய்வார். 674

Page 98
||
18O புனித பூமியிலே காவியம்
33. தாஹிர் திணறினான்
உள்நுழைவோன் தனைவந்து தாக்கு முன்னர் உயிர்பறிக்க வாளேந்திக் காத்து நின்றோன் எள்ளளவும் எண்ணாத வாறு தம்முன்
எடுத்தவடி மெதுவாய்முன் வைத்தே தேர்ந்த கள்வனைப்போற் றனைக்காக்கும் பாங்கிற் சுற்றிக் கட்புலனை மேயவிட்டு வந்தான் கண்டே கொள்ளைமகிழ் வற்றான் தன் குறிகோள் மாற்றிக்
கொண்டவனைப் பெயர்சொல்லி அழைத்திட்டானே. 675
தணலாகக் காய்கின்ற வெய்யோன் தூவும்
செங்கதிரின் தகதகப்பிற் பயணஞ் செய்து சணப்பொழுதுள் மாற்றியதற் கெதிர்மா றான
சூழலுக்குப் பார்வைதனைச் செலுத்தச் சற்றும் இணக்கமிலா விழிகள்தம் இயல்புக் கேற்ப
இருட்குகைக்குத் தக்கனவாய்ப் பிறப்பெடுக்கச் சுணங்காது புகுந்தானுள்'ஸைபுத் தீ னைச்
சந்தர்ப்பந் தனில் 'தாஹிர்" கண்ணுற்றானே. 676
குரல் கேட்டாங் கழைத்ததுதன் நண்ப னென்றே
கண்டுகொண்ட 'ஸைபுத்தீன்" முன்னே செல்ல ஒருநொடிக்குள் 'தாஹீ"ரும் அருகில் வந்தான்
ஒருவருட னொருவர்நெஞ் சொன்றி னாரே மருவியவாறிளவரசே நீங்க ளிங்கோ
மறைந்திருந்தீர்" என 'ஸைபுத் தீன்" வினாவ அரசரிளங் குமரரும்“நீ அக்காக் கோட்டை
அகன்றுவந்த தெப்படி"யென்றறியக் கேட்டான். 677
எனைப்பற்றி யனைத்தையும் நான் பின்னே சொல்வேன்
எங்கிதுநாள் வரைமறைந்தே இருந்தீர் நாங்கள் மனம்நொந்து போயிருந்தோம் எங்கெல் லாமோ
முயன்றுமொரு பதிலுமின்றி வாடி நின்றோம் எனதிட்டம் எனையிங்கே இறைகொ ணர்ந்தான்
இருவரும்நாம் சந்திக்கச் செய்தான் என்றே தனதுள்ளக் கவலழிந்த 'ஸைபுத் தீன்'முன்
'தாஹி"ரிடம் எடுத்துரைக்க அவனுஞ் சொல்வான் 678

தாஹிர் திணறினான் 181
அன்னியர்கை வசமடைய முன்னர் "அக்கா"
அகன்றமுது லன்றுவரை நடந்த தெல்லாம் சொன்னனன்தன் நண்பனிடம் 'ஸைபுத் தீன்"ஆன்"
சிறைப்பட்ட போதவளைத் தனைக்க வர்ந்த பொன்னழகுச் சிலை"ஜமீலா" தந்தை "நூர்தீன்"
பெருவீர ரோடொன்றிக் காத்து மீட்டே “கன்ராட்"டின் வசமடைக்க"ஹெல"னுக் காகக்
காத்தவன்வைத் திருப்பதையும் விளக்க லானான். 679
“ஹெலனை"த்தான் தனித்துவிட்டு வந்த தாலே
கவலைமிகக் கொண்டிருந்த 'தாஹிர்" “ஆனை" ஹெலனுக்குப் பிணையாகக் கொண்ட சேதி
கவலழியச் செய்ததனால் அமைதி கொண்டான் ஹெலனையவள் கண்டதனால் சாட்சி யாக
கூறிடினோ கான்ராட்டும்"டெம்ளர்ஸ் ஸா'ர்க்கு ஹெலனையுட னனுப்பிடத்து தனுப்ப லாகும்
திடமாகப் பலனுண்டென் றெண்ணி னாரே, 68O
எதிர்பாரா ததுவாமெம் சந்திப் பீங்கே
இருப்பீர்களென்றேநா னெண்ண வில்லை அதிசயமே வருவழியில நேற்று மாலை அங்கவடையாளங்கள் நானு ரைக்க முதல்முதலாய் இதுகாறும் இலாத வாறு
மொழிந்தனரிவ் வழியாகச் சென்றா ரென்றே அதுநீங்க ளாயிருந்தால் நமது மண்ணை
அடைந்திருக்க லாமெனநான் நினைந்தே னென்றன். 681
எனினுமிவ் வழியிலொரு விடருந் தோன்றா
திருந்ததெனவுறுதிசெய்யும் எண்ணம் மெள்ள முனைந்துவரும் போதீங்கே பரியைக் கண்டு
மனத்திலையந் தோன்றிடநா னுள்ளே வந்தேன் தினமொன்று கழிந்திருந்தால் நீங்கள் சுல்தான் துயர்மாறச் சென்றடையக் கூடு மன்றோ எனவாமோ காரணமீங் கிருக்க வென்றே
எண்ணியதை 'ஸைபுத்தீன்" வினவ லானான். 682

Page 99
182 புனித பூமியிலே காவியம்
திடிரென்றவ் வினாத் தோன்றத் 'தாஹிர்" சற்றுத்
திணறினனே பதிலுரைக்க நினையாப் போதும் படிந்ததவன் பார்வையொரு கணமு மந்தப் பாழடைந்த மாளிகைசெல் புறத்தின் மீதே நொடியிலொரு முடிவுகொண்டான் புதையல் பற்றி
நண்பனிடங் கூடவப்போ துரைக்க லாகா திடமாகத் திடசித்தங் கொண்டோர் தாமும்
தமதுநிலையிழப்பரது காணி லென்றே.
கண்ணுற்ற போதவனின் நிலையைச் சற்றுக்
கருத்தினிலே கொண்டான்தன் தந்தை யோடும் உண்மையுரைப் பதுவோமா றாக வொன்றும்
உரையாது மறைப்பதுவோ எனநினைந்தே எண்ணத்தின் போராட்டந் தோன்ற வைத்த
எல்லையில்லாப் பெருந்திருவை நினைந்தான் ஒரீர் கண்ணிமைக்கும் வினாடியுட்டன் முடிவாய் யார்க்குந் தெரிவிப்பதில்லையெனுந் திடங்கொண் டானே.
முன்னொருகால் தந்தைசொன்ன வார்த்தை நெஞ்சில் முகைவிடவே புதையலினைக் காத்து வைத்தால் பின்னொருகால் தனக்குதவும் எனநி னைந்தே
பிறர்க்குரையா திருக்கமனந் துணிந்தான் சுல்தான் தன்னுடைய ஆட்சியின்பின் மக்க ளொவ்வோர்
திசையாள வேண்டுமெனச் சொன்ன போது பொன்னோடு மணிமிகுவப் புதையல் கொண்ட
பிரதேசம் அவனுக்கென்றுரைத்திருந்தார்.
பேராசை யோர்கணமே மறுவி னாடி
பெருந்தவறவ் வெண்ணமென வுணர்ந்த"தாஹிர்" நேரான செய்கைமிக விரைவாய்ச் சென்று
நடந்ததெலாந் தந்தைக்குக் கூற லென்னும் சீரான முடிவுகொண்டான் அவற்றை யெண்ணிச்
சிந்திக்கும் போதுவினாத் தொடுத்த நண்பன் காரணம்யா தெனைமறந்து நெடுநே ரந்தன்
கற்பனைத்தே ரோட்டுகிறா னெனவியந்தான்.
683
684
685
686

தாஹிர் திணறினான்
“என்னஇள வரசேநின் நினைவெல் லாம்"டைர்"
இளவரசி வசமாகிப் போன தோநான் சொன்னதற்குப் பதிலுரையா தெதைநீ யெண்ணிச் ந்தித்தா"யெனக்கேலி செய்ய நண்பன் தன்னலத்துக் குதுவுமந்த விகடப் பேச்சை
சாதகமாய்க் கொண்"டில்லை"ஆமாம்" சொல்நீ என்னவினாக் கேட்டாய் நீ சொல் சொல்" என்றே
ஏற்றபடி நடித்தொருநற் பதில்பு கன்றான்.
"நேற்றிங்கு வந்ததுண்மை இரவெல் லாம்நான்
நித்திரையில் லாததினால் சற்று றங்க போற்கணைபோற் பட்டவெய்யோன் கிரணத்தாலே
புறங்கண்டு துயிலகலக் கண்விழித்தேன் நாற்புறமும் பாரிங்கே நிறைந்தி ருக்கும்
நீண்டபெருஞ் சாடிகளுள் மறைந்திருக்கும் தோற்படிவங் காண்பாயிங் கோர்கா லத்தில்
துறவிகள் வாழ்ந் திருந்தாரென்றறிவே“னென்றான்.
“கிறிஸ்த்துமத வேதத்தின் உண்மை யான
கிரந்தத்தின் வரிகளிவை இதற்கும் இன்று கிறிஸ்த்தவர்கள் வைத்திருக்கும் வேத நூற்கும் கனவேறுபாடுண்டாம் இவற்றில் காணும் இறைவசன மெமது"திரு மறை"க்கும் ஏற்பாய்
இருப்பதனால் “தவ்ராத்தும் “ஸபூ"ரும் இந்தக் கிறிஸ்த்தவரால் சிதைவுற்ற தென்னும் நம்மின்
கொள்கைக்கும் உதவுமிவை"யெனவுரைத்தே.
“சரித்திரத்தின் உண்மைக்கும் மதநீ திக்கும்
சிறந்தபெருஞ் சான்றிவையாம் இப்போ திவ்வண் இருக்கட்டும் இதில்வாழ்ந்து மடிந்து போன
இறைநேசர் ஆவிகளை எண்ணி யாரும் வருகைதாரார் வந்தாலுந் தொடவும் மாட்டார்
வேறொருநாள் நாமிவற்றைப் பெறலா மென்றே பெரும்பொழுதைக் கழித்துவிட்டேன் இங்கி ருந்து புறப்படவுந் தாமதித்தே னெனப்பு கன்றான்.
687
688
689
690
183

Page 100
184 புனித பூமியிலே காவியம்
சொன்னதெலாம் அறிந்த 'ஸைபுத் தீன்"வியந்தே
தொடர்ந்துமங்குத் தரித்திருக்க மாட்டா தோனாய் மன்னரினை யுடன் சென்று காணு மாறு
மிகவேண்டிக் கொண்டானாங் கிருக்கும் பேர்கள் என்னவான தோவுமக்கென றறிய நெஞ்சம்
ஏக்கமுற்றே இருக்கின்றார் நான்"டைர்"சென்றே கான்ராட்டைச் சந்தித்து விபரங் கூறிக்
கடுகெதியில் மீளுகிறேனெனவுரைத்தான். 691
“வேண்டாமென் தாதைக்கு விவரஞ் சொல்ல
வழிகள் பல வுண்டோநா மிருவ ரொன்றி இன்றே"டைர்" கோட்டைக்குச் செல்வோம் சென்று இளவரசி "ஹெலன்" வருநாள் வரையிருப்போம் அன்றெந்தை "ஹெல"னோடு "டைர்" கோட் டைப்பால்
அனுப்பிவைத்த பணிதவறிப் போன தாலே இன்றுள்ள நிலைக்கானாள் பாவம் அந்த
இளமயிலைச் சந்திப்போம் முதல்நா " மென்றான். 692
"கவர்ந்துசெலப் பட்ட"ஹெலன்" தனைத்தே டிப்போய்க்
கண்டுபிடித் தழைத்துவரத் தானே தந்தை அவசரமாய்த் தகவலெனக் கனுப்பி வைத்தார்
"அலெப்போ"விலிருந்துடன்வா என்பதாகத் தவறன்றோ நல்லமுடி வோடல் லாது
தந்தைசமுகத்திற்போய் நிற்ப"தென்றான் அவப்பெயரைத் தடுக்கவழி யதுவே யென்றே
அறிந்தவர்கள் “டைர்" நோக்கிப் புறப்பட்டாரே. 693
பேரதிர்ச்சி காத்திருந்த திருவ ருக்கும்
போய்சேரு முன்'ஹெலன்" போய்ச் சேர்ந்திருந்தாள் காரணமு மறிந்தார்கள் "ஹெலன்" "டெம் ளர்சார்
கோட்டையகப் பட்டதனை யறிந்து "கான்ராட்" நேராக “கிராண்ட் மாஸ்ட்டர்" தமக்குத் தூது நங்கையினை விடுவிக்கும் பொருட்டனுப்ப வீரர்கள் செய்தபிழைக் காய்வ ருந்தி
விடுதலையந் தந்தனெனும் உண்மை தன்னை 694
A.

தாஹிர் திணறினான் 185
நல்லுள்ளத் தோடல்லாப் போழ்தும் தாங்கள்
நடாத்துகின்ற சூழ்ச்சிநிறை வேறும் போழ்து சொல்லுகின்ற பழிஹெலனைக் கடத்த லாலே
சரியாகிப் போமென்றே அஞ்சி மிக்க நல்லவனாய்க் “கிராண்ட் மாஸ்ட்டர்" நண்பன் போல
நடந்துகொண்டான் “கான்ராட்"டும் அறியா வாறே பொல்லாத பகைகொண்டே இருந்தார் “டெம்ப்ளர்ஸ்"
புரட்சியியக் கத்தோர்கள் கான்ராட் மீதே, 695
பிரிந்திடையிற் சேர்ந்துமறு முறைபி ரிந்த
பாசமிகுவுளங்கள்பின் ஒன்று சேரின் பரந்தவுல காழ்கடலுஞ் சிறிதே யன்னார்
பொங்குமனமகிழ்வினொடு சேர்ந்து நோக்கின் மருந்தாகிப் போனதவர் சந்திப் பன்று
மனத்திருந்த சோகவடு தூர்ந்தே போக அருந்தவத்தால் நினைத்தவரங் கொண்டார் போலும்
அகமகிழ்ந்தார்"ஹெலன்'தாஹிர்" ஒன்றி னாரே 696
ஒளிவுமறை விலாது"கான்ராட்" பிரபு கூட
உவந்துரைத்தான் 'தாஹி"ரைத் தனது தங்கை உளமார நேசிக்கும் நிலைமை கண்டே
ஒருநாள் பின்னவள் கணவனாவா னென்றே இளவரசன் 'தாஹீ" ரும் மற்றோ ராங்கே
இருப்பதையும் வெறுப்பதையும் உணரா தன்னான் விளையாட்டா யன்றியுண்மை யாகப் பேசும்
விபரீதங் கண்ணுற்றே அதிர்ந்திட்டாரே. 697
உறவினருந் 'தாஹீ“ரும் அதிர்ச்சி கொள்வது)
உணர்ந்திட்ட "கான்ராட்"பின்னதையும் விஞ்சும் பிறிதொன்றைச் சொன்னனாங் குற்றோர் பேசப் பதிலில்லாப் பார்வைகளைப் பகிர்ந்திட்டாரே "குறையென்ன" ஹெல"னோடு 'தாஹீ" ருள்ளங்
கொள்ளைகொண்டதால் மணத்தல் சிலுவை வீரர் திறன்மிக்க தலைவரெனும் மன்னர் "ரிச்சாட்"
தங்கையினை "ஆதி"லுக்குத் தருவா"ரென்றே. 698

Page 101
186 புனித பூமியிலே காவியம்
மாமன்னர் உடன்பிறந்தார் “ஜோனை"த் தம்மின்
மணமகளாய்ப் பெறுவரென்ற சேதி யோடே மாமன்னர் மருமகளாய் “ஹெல"னோ டின்னோர் மன்னர்குலப் பேரழகி சேர்வா ளென்றான் தாமாகப் பிறர் வினவ முன்னர் சொல்வான் "திடமாயின் நானறிந்த தகவல் சுல்தான் மாமனென வாவாtங் கெம்மோ டிந்த
மன்றத்துள்ளிருக்கின்ற "ஆனு'க் கென்றே.
மன்னரவை வீற்றிருந்த அனைவர் கண்ணும்
முண்டியடித் தொன்றையொன்று விஞ்சி “ஆனை" மின்னலிட்ட போதவளும் நாணத் தாலே
முகஞ்சிவக்க அச்சமொன்றி வியர்த்தும் போனாள் அன்னங்கள் நடமிடுபொய் கைத்த லத்தில்
அலர்ந்திட்ட தாமரையில் பனிமுத்துக்கள் மின்னினவோ வெனுமாறு துலங்கக் கண்கள் மிரண்டனவே மலர்மொய்த்த அளிகளாக
பனிமுத்துத் தாங்கியசெம் பங்க யம்போல்
பாவைமுகம் மாறியதே அவையினோர்க்கு தனியான விளக்கமொன்று வேண்டா வாறு
தோற்றிடவே "ஈதென்ன புதுமை"யென்றார் தனதளவில் இதுபோன்ற சம்பந் தங்கள்
தேவையென்றான் புனிதமண்ணில் அமைதி தோன்ற இனமதபே தங்களற்றுப் போயின் யுத்த
இருளழிந்தே அமைதியொளி பிறக்கு மென்றான்.
தொடர்ந்துமவன் சொல்வான் “நான் சுல்தா னோடு செய்துகொண்ட உறவினைநீரறிவீ" ரென்றே "திடமாக இன்றென்றன் நல்லெண் ணத்தைத்
தெரிவிக்க "ஹெலனை'யும் "ஆன்" இருவரையும் உடன்சேர்த்துத் 'தாஹி"ரொடு “ஸலாஹcத் தீனின்"
உயர் சமுகம் அனுப்பிவைப்பேன் "ஆனோ"எந்தத் தடையுமுரை திடாதவளின் விருப்பத் தோடே செல்கின்றா"ளெனவவனுஞ் செப்பி னானே.
699
700
701
702

ஜோன் நடுங்கினாள்
முசுலீம்கள் முகாமிற்குச் சென்ற டைந்தார்
மன்னர்குலப் பேரெழிலார் இருவர் எந்தத் திசையுற்றா ரென்றறியா திருந்த 'தாஹீர்"
'ஸைபுத்தீ" னுடன் "அக்கா" கோட்டை தன்னை அசையாது பலகாலந் தாங்கி நின்ற
ஆற்றல்மிகு படையுற்ற "நூருத் தீனும்" விசுவாசங் கொண்டமுஸ்லிம் படையி னோர்கள்
வரவேற்றா ரன்னவரை மகிழ்வற்றாரே.
34 ஜோன் நடுங்கினாள்
தந்தை யுடனே ஸைபுத்தீன்
சேர்ந்தே வருவது கண்டுபெரு விந்தை ஈதென் றெண்ணியுளம்
வியந்தே மகிழ்வாற் றனைற்றானே சொந்தம் இழந்தாள் “ஜெமீலா"பின்
சோர்ந்தே மூர்ச்சையாகினளே புந்தி துலங்கிய போதுமனம்
புகழ்ந்திட இறையைத் துதிசெய்தாள்.
கண்ணுறு கணத்தின் முன்வரையும்
காணே னினியென் தந்தையையிம் மண்ணுறு வாழ்வில் என்றேதன்
மனத்தில் வரித்த முடிவுதனை எண்ணின ளோர்துளிப் போழ்திடையில்
எப்படி நன்றியுரைப்பதென மண்ணாள் பதிக்கும் மனங்கவர்ந்த
மாசறு ஸைபுத் தீற்கு மென்றே.
சுல்தான் "ஸலாஹமத் தீன்'மகளார்
சேர்ந்தே "ஜெமீலா"ஆன்" ஹெல"னும் நல்லுளத் தோடொரு வரையொருவர்
நன்குணர்ந்ததனால் மகிழ்ந்திருந்தார் சொல்வினை யனைத்திலும் புதுச்சூழல்
சிறந்தே இருக்க "ஆன்"ஹெலனும் இல்லையென் றெதுவும் இலாதவராய்
இசைவொடு நாள்கழிந் திடவிருந்தார்.
187
703
704
705
7O6

Page 102
188 புனித பூமியிலே காவியம்
மதுவும் மங்கையும் மனமொப்பா
மாசுடை வாழ்கையுங் கண்டவர்க்குப் புதிதாய் வாய்த்த நற்சூழல்
பண்புடைத் தாகத் தோன்றியதால் அதிவிருப் புற்றார் ஆண்டவனின்
அருட்கொடை இன்னும் "நம்மிருவர் விதிப்பயன்" என்றார் தொடர்ந்தாங்கு
வாழ்வது வென்றுந் துணிந்தனரே
"மலிக்குல் ஆதில்" “ஜோன்"அரசி
மணவினை யெண்ணி மகிழ்ந்திருந்த சுல்தான் படையினர் கிறிஸ்த்தவரின்
குலமகளிருவர் மாமன்னர் இலத்தினுக் குகந்த மருமக்க
ளாவ தறிந்தே குதுகலத்தால் நிலம்பதம் பதியா தந்தரத்தில்
நின்றனர் அடிப்படை வேறொன்றே
முத்திரு மணத்தா லொத்தொருநல்
முடிவுண் டாமத் தலத்திலினி நித்திய மமைதி சாத்தியமே
நெடுநாள் யுத்தம் முடிந்துவிடும் நத்தின ரத்தனை வீரர்களும்
நாடிட வவரவர் வீடுகளை சத்தியம் வென்றிட வஃதொருநற்
சான்றாயமைந்திடுங் காலென்றே
பெற்றெடுத் தாரைப் பெண்டீரைப் பிள்ளை களைத்தம் சுற்றத்தை உற்றா ருறவினர் ஊரவரை
ஒன்றிட வவந்தார் வீரர்களே முற்றிலு மமைதி தோன்றுதற்கு
முடிவுறுந் திருமண மேமுடிவாம் வெற்றியுந் தோல்வியும் இலாதுநலம்
ரும்புவதாலவை நலமென்றார்
707
708
709
710

ஜோன் நடுங்கினாள் 189
மன்னன் "ரிச்சாட்" "ஜோனுடைய
மணவினை பற்றிய தீர்வுதனைச் சொன்னதும் நங்கை வெறுப்பின்றிச்
சம்மத மொழியாய்த் தலைகுனிந்தாள் என்னருந் தியாகத் தால்மக்கள்
எதிர்ப்பின்றி “ஜெரூஸலம்" புகுவரெனின் தன்னலங் கருதா தொப்புவதென்
தலையாங் கடமை யெனவுரைத்தாள் 711
பெரும்பால் சிலுவை வீரர்"ஜோன்"
புதுமணக் கலப்பினுக் கெதிர்ப்புரையா திருப்பினும் பாதிரி மார்கொதித்தே
இயக்கம் ஒன்றைத் தொடங்கினரே "சரியே யென்முடி" வென"ரிச்சாட்" சதிசெய்யினினும் அஞ்செனென வருவதை எதிர்கொளும் மனத்திடத்தை
வரித்தவன் பதிலும் உரைத்தனனே 712
தமைமதி யாத ரிச்சாட்மேல்
தணியா தெதிர்ப்பும் மீறிடநெஞ்சு) அமைந்த வெறுப்போ "டினியிவனோடு)
எதுவுரைப் பினிலும் பயனிலையென்று) இமைதுயி லழித்தே முயன்றார் "ஜோன்" இசைவினை மாற்றிடப் பாதிரிமார் தமதுள மேற்காப் போதிலும் பொய்
துணிந்தே யுரைத்தனர் செயமுறவே 713
பொல்லாப் புனைகதை பலகூறிப்
பாதிரி மார்கள் ஜோனுளத்தைக் கல்லாய்ச் சமைத்தார் திருமணத்தைக் கடுகள வேனும் விரும்பாதே சொல்விட முண்ட ஜோனவர்க்குச்
சம்மத முரைத்தாள் அண்ணனுக்கோ எல்லையும் மீறிச் சினம் பொங்கி
எரிந்தான் ஆயினும் பயனிலையே. 714.

Page 103
190 புனித பூமியிலே காவியம்
கிறிஸ்த்தவ ரல்லாக் காரணத்தால்
குருமார் வெறுப்பது மெய்யாயின் கிறிஸ்த்தவ ராக “ஆதிலை"நாம்
கேட்டால் அனைத்தும் சரியென்றே மறுத்திடா ரென்னும் மனத்தோடு
மிகப்பணிந் திரந்தான் “ஆதிலே" நீர் கிறிஸ்த்தவ ராக மதம்மாறிக்
கொள்வது நலமென்" றே"ரிச்சாட்"
தங்கையின் கரம்பற் றிடமதத்தைத்
துறந்திடக் கேட்க "ஆதி"லுளம் பொங்கிப் பிறந்த பெருநகையை பிறரறியாதுப் சீரணித்துச் சங்கை மிகுந்த மார்க்கத்தைத்
தவிர்த்திட வியலா தெனவிளக்கி அங்கிருந் தகன்றார் மன்னன்தன்
ஆத்திர மடங்கா தொதுங்கினனே.
சுல்தான் முகாமில் "ஆன்"உற்ற
செய்தி யறிந்ததுடன்"அஸிஸின் இல்லம் புகவவள் சம்மதித்த
இன்னோர் செய்தியும் அறிந்துமனம் நல்லதென் றுரைக்கப் பாதிரிமார்
நடத்தைக் கீதோர் பாடமென்றே பொல்லாச் சினத்தோ டிருந்த"ரிச்சாட்"
பெரிதும் உவந்தான் திருப்தியுற்றான்.
முடியும் எனவிருந் தொடிந்திட்ட
“மலிக்குல் ஆதில்" "ஜோன்" கரத்தைப் பிடிக்கும் நிலைமை உறுதிபடப்
பேரரசர்தம் கருத்துரைத்தார் உடனிருந் தரசர் தோழர்'பஹா
உத்தீன்' 'ஆதில்" நினைந்தனர் முன் நடந்தவோர் நிகழ்வின் பொருளதனை நாடாள் பதியுரை கேட்டதுமே.
715
716
717
718

ஜோன் நடுங்கினாள் 191
“மலிக்குல் "ஆதில்" ஜோன்பற்றி
மன்னன் "ரிச்சாட்" உரைத்ததனைப் பலிக்கும் எனும்மன நினைவோடே
பேரர சர்முன் னுரைக்குங்கால் நிலைக்கா வாசை யதுவென்றே
நெஞ்சுரை செய்ய விரும்புதல்போல் “நலம்நீ விரும்பின் செய்'யென்றார்
நமுட்டுச் சிரிப்பொன் றுதிர்த்தவராய் 719
அன்றப் புன்னகை யின்பொருளை
அறியார் "ஆதில்“பஹாஉத்தீன்" இன்றவர் கூறக் கேட்டறிந்தார்
“எனக்கிது தெரியும்" எனவுரைத்தே “ஒன்றித் திருமணம் நடைபெறினோ உவக்கார் பாதிரி மாரறிவேன் நன்றே நடப்பின் கிறிஸ்த்தவரின்
நாமம் இழிவுறுஞ் செய“லென்றாம். 720
இருமதத் தார்க்கிடை நடக்கின்ற யுத்தம் ஈதென்றவர்கூறி "ஜெருஸ்லே மோர்நாள் நம்மவரால்
செயம்பெறு மெனவுரை செய்தபடி வரலாம் திருமணத் தாலமைதி
வந்திட லாகா அதைவிடவும் இருக்கும் நிலையே மேலென்றும்
எண்ணுவ ரெனநான் உணர்ந்திருந்தேன்" 721
வேறு
இரவுபக லென்றில்லா வாறு "யாப்பா"
இடியுண்ட கோட்டைமதி லனைத்தும் மீண்டும் பெருமுயற்சி யாற்புதிதாய் மாற்றங் கொள்ளப்
பொங்கிவரும் பெரும்படையோ டதன்கிழக்கே ஜெருஸலத்தை அடையமுயன் றார்கள் தம்மால் ஜெயிப்பதெளிதல்லவென வறிந்தும் வீரர் திருப்தியுற வேண்டுமெனத் தொடர்ந்தார் நத்தை
தொலைகடக்குங் குறுவேகத் தோடே யம்ம. 722

Page 104
192 புனித பூமியிலே காவியம்
鲁
பன்னிரண்டு கற்றொலைவில் சுற்றி நின்ற
பெருமலைகள் தமிலிருந்தே“ஜெரூஸ ல"த்தை மன்ன்ர்"ஸலா ஹமத்தீனின் பெரும்ப டைகள்
முகாமிட்டுக் காத்திருந்தார் அடிவாரத்தில் முன்னேறி வந்தவெதிர்ப் படையோர் தங்கி
மலைமறைந்த புனிதநகர் தனைநினைந்தே பின்வருமா றுளமுருகிப் பிரார்த்தித் தார்கள்
பற்பலவூரிருந்ததனைக் காண வந்தோர்.
“புனிதவிறை பள்ளியேநாம் விரைவி லுன்னைப்
பார்க்கவருள் செய்தருள்வாய் உன்னை நாங்கள் மனங்குளிரக் காணவென்றே வந்தோம் எங்கள்
மாசறுநற் பெருந்திருவே அருள்வாய்" என்றார் நினைத்தபடி ஜெரூஸலத்துட் செல்ல சுல்தான்
நிறுத்தியுள்ள பெரும்படையும் விடாதே என்று அனைவரையும் "அஸ்க்கலானை" நோக்கிச் செல்ல
ஆணையிட்டார் சிலுவையுத்தத் தலைவரன்றே
வீரர்களின் கவனத்தைத் திசைதி ருப்ப
வேண்டுமெனச் சுல்தானின் "பொசுக்கல் திட்டக்" காரணத்தால் முற்றாக அழிந்து போன
கவழகு நகரான "அஸ்க்க லானைச் சீரான காலநிலை இலாத தாலே
தொடர்ந்துமுன்னே செல்லவிய லாதே யென்னும் ஒருகந்த பொய்யுரைத்துத் திருத்து மாறு
ஏவிவிட்டார் அன்னவருந் திரும்பிச் சென்றார்.
காலத்தைச் சபித்தபடி கிறிஸ்த்தோர் செல்லக்
கோடைவரை வராரென்றே மூன்று மாத காலத்துள் மீளுகவென் றனேக ரையூர்
கடுகவென மாமன்னர் பணிக்கும் அந்தக் காலவிடை யுள்ளேயோர் செய்தி வந்து
கலங்குகிறான் "ரிச்சாட்"டென்றறிந்தார் சுல்தான் காலத்துக் குவந்ததது சிலுவைப் போரின்
குறியையுமே மாற்றுமென்றும் உணர்ந்திட்டாரே.
723
724.
725
726
 

தலைமையில் மாற்றம் 193
35. தலைமையில் மாற்றம் திட்டமிட்டே அழித்திட்ட "அஸ்க்க லானை"த்
திரும்பவுருவாக்குகின்ற நோக்கினோடே கட்டவிழ்த்து விட்டமந்தைக் கூட்டம் போலும்
கண்டபடி சென்றார்கள் சிலுவை வீரர் ஒட்டாத மனப்பாங்குங் கொண்டா ரன்னார்
ஒவ்வொருநாட்டிருந்துவந்த காரணத்தால் சட்டமொழுங் காங்கவர்க்குள் இலாது வார்த்தை
சமரோடு கைகலப்புங் கொண்டிட் டாரே. 727
“கையினிலே மதுக்கலசந் தாங்கித் தாசிக்
கணிகையரினிடையினிலே திணறுகின்ற பொய்வீரர் வாளேந்துங் குலத்துக் 蠶
பிரஞ்சுமண்ணிற் பிறந்தோ"ரென் றாங்கிலேயர் வைவதனைத் தாங்கமன மொப்பாப் போது
வரித்தபகை மிகைத்ததனால் பிணக்குந் தோன்ற செய்கவெனச் சென்றசெய லாற்றச் சென்றோர்
சிறுதொகையாய்ப் போகமற்றோர் பிரிந்திட்டாரே 728 "அஸ்க்கலானின்" கோட்டையுள்ளும் அதுவா றாக அன்னியராய் வெவ்வேறு நாட்டோர் தம்முள் ஒக்காத நிலையாலே தெருக்கள் தோறும்
ஒற்றுமைக்குப் பங்கமுறப் பொருதிக் கொண்டார் தக்கதிலா நிலையறிந்து வெகுண்ட "ரிச்சாட்"
தானேமுன் சென்றானந் நிலையை மாற்ற மிக்கமனம் அதிர்ந்திட்டான் நினைத்த தற்கும்
மிகைத்திருந்த சீரழிவைக் கண்டதாலே 729
மன்னனங்கு வந்ததனால் நிலைமை சற்று
மாறியது தானெனினும் விட்டுச் சென்றால் முன்னர்போல் நிலைமாறித் தெருச் சமர்கள்
மலிந்துவிடும் அமைதியுமாங் கழிந்தே போகும் தன்குற்றம் தலைமைதனைத் தகுந்த வாறு
தாபரியா திருந்ததுவும் இவற்றிற் கெல்லாம் முன்நானே யென்றெல்லாம் மனதுக் குள்ளே
மிகவருந்திச் சிந்தித்தான் முடிவுங் கொண்டான். 730

Page 105
194 புனித பூமியிலே காவியம்
படைத்தலைவ ரோடுமதத் தலைவர் கூடிப்
பேசியொரு முடிவுபெற வேண்டு மென்றே உடன்கூட்டி னானவையைக் கூடி னோர்கள்
ஒரேமுடிவாய்த் தலைமைதனை மாற்றச் சொன்னார் நடைமுறையில் “ஜெரூஸலத்தின்" மன்ன னேதான்
நாயகனாய் இருப்பதன்று "லூஸி னானே' படையனைத்தின் தலைவனென விருந்தான் உள்ளுட்
பூசலையுந் தடுக்குந்திறனற்றோ னாக 731
ஒற்றுமையை நிலைநாட்டத் திராணி யற்ற
ஒருவனைநாம் தவிர்த்தற்குப் பதிலாய் “கான்ராட்" கொற்றவனாய் ஆகட்டும் ரிச்சாட் கூடிக்
கொழுந்துவிட்ட பகைத்தீயை அழித்திடட்டும் வெற்றிபெற வேண்டுமெனில் “ஜெரூஸ லத்தை" வேறுவழி இலையென்றார் “டெம்ளர்ஸ்" வீரர் முற்றுமதை எதிர்த்தார்கள் "கான்ராட்" சுல்தான்
மிகவொன்றிப் பழகுமிரு பேர்களென்றே. 732
புதிதாக இங்கிலாந்தி லிருந்து வந்த
பாதிரியார் புகைத்துவிட்ட தகவலொன்றால் பதவிதனைத் தொடரவினி முடியா தென்றோர்
பேரய்யங் கொண்டிருந்தான் ரிச்சாட் மன்னன் நிதியாளும் அமைச்சரினை நீக்கி நாட்டின் வசமாக்கிக் கொண்டதான சதியொன்றைத் தான்தனக்காய் நியமம் செய்த
தம்பிசெய்த தாயதுவும் இருந்த தன்றோ 733
அரசனுக்குப் பிரதிநிதி யாக வைத்த
ஆட்சிக்கு வாரிசெனும் “ஜான்'தன் அண்ணன் உரிமைதனை அபகரித்து மன்ன னாக
ஊன்றுகின்ற முதல்வித்தே அஃதென் றெண்ணி விரைவினிலே நாடுசெல்ல வேண்டும் வேளை
வருமென்றே எண்ணிநொந்தான் "ரிச்சாட்" அன்றேல் உரிமைபறி போகுமவன் உடன்பி றந்தான்
ஊராளும் பதியாகக் கூடு மென்றே. 734.
 

இஸபெல்லாவின் மூன்றாம் கணவன்
எத்தனைதான் பகைகொண்ட போதுங் “கான்ராட்"
எனையடுத்துச் சிலுவையுத்தத் தலைவருள்ளே மெத்தவுகப் பானவனாம் தலைமை ஏற்க
மிகப்பொருத்தம் ஜெரூஸலத்தின் மன்னனாக ஒத்தடுத்தோர் கருத்தோடு தன்க ருத்தை
ஒப்புவித்தான் "ரிச்சாட்"அவ் வவையினோர்கள் சித்தமொன்றி மகிழ்ந்தார வாரஞ் செய்தார்
சிதைந்தமனத் தோடிருந்தான் "லூஸி னானே. 735
மனமொடிந்த "லூஸினானை" "ஸைப்பிரஸ்" நாட்டின் மன்னனாக்கி அமைதியுறச் செய்தான் "ரிச்சாட்" அனைவருமே முடிசூட்டு விழாவுக் காக
ஆயத்தம் பற்பலவுஞ் செய்ய லானார் கணையாகத் தூதுவர்கள் பறந்தார் செய்தி
"கான்ராட்டை" அடையவென சிலநாளுள்ளே கணத்துள்ளே கண்பெற்றான் இழந்தான் போன்றோர்
காரியமும் நடந்ததவர் கலங்கினாரே 736
36. இஸபெல்லாவின் மூன்றாம் கணவன்
ஜெரூஸலத்தின் மாமன்ன னாகக் “கான்ராட்" மகுடமிடுஞ் சேதியினால் மகிழ்வு கொண்ட ஒரூரின் பாதிரியார் விருந்த எளிக்க
உவந்ததனை யுண்டுவழி திரும்புங் காலை காரிருளில் அருகிருந்த மாதா கோயிற்
கட்டிடத்துள் இருந்துவந்த துறவி கண்டே ஓராது அவரழைக்க அருகிற் சென்றான்
உடனிருந்த வீரர்களைத் தனிக்க விட்டே 737
பரிநின்றுங் கீழிறங்கி அருகிற் செல்லப்
பாதிரிபோல் வேடமிட்ட ஓரிளைஞன் சொருகினனே கான்ராட்டின் மார்ப கத்துள்
சொடுக்கிவிரலெடுக்குமுன்னோர் குத்து வாளைக் கருத்தினிலே நினையாத செய்கை யாலே கடுகிவிட்ட ஆபத்தைச் சிறிது கூட நிறுத்தவிய லாதுதரை வீழ்ந்தான் “கான்ராட்"
195
நிலைகுலைய நெஞ்சிற்கை யணைத்த வாறே. 738

Page 106
196 புனித பூமியிலே காவியம்
துணைக்குவந்த வீரர்கள் அதற்குட் தாவிச்
செல்லமுயன்றோடுமந்த இளைஞ னையோர் கணத்துளகப் படச்செய்தார் சிலபேர் மாதா
கோயிலுக்குட் "கான்ராட்டை"த் தூக்கிச் சென்றார் அணைத்தகரம் அணைத்தபடி நெஞ்சி ருக்க
றாகக் குருதிநிலம் வழிந்தே யோடப் பிணத்தினைப்போற் கிடந்தானே பாரோர் போற்றும்
பெருவீரனான"கான்ராட்" பிரபு மாங்கே 730
குழப்பநிலை அதிகரித்த தங்கு மிங்கும்
குதிநிலத்திற் பதியாதே அலைந்தார் வீரர் முழுமுயற்சி செய்தார்கள் உயிரைக் காக்க
மாற்றாராங் குற்றாரென்றாய்ந்தி லாரே விழிமூடி விரியுமொரு சணத்தி னுள்ளே
வேறொருவன் மறைந்திருந்தே பாய்ந்தான் நெஞ்சில் அழுத்தியொரு முறைபதித்தான் குறுக்கு வாளை
"ஆ"வென்றே வாய்பிளக்கக் 'கான்ராட்" மாண்டான். 740
பிடியுண்ட இருவரையும் வீரர் நையப்
புடைத்தவரை ஏவியவர் யார்தா னென்றே தொடுத்தவினா வொன்றிற்கு "ரிச்சாட்" மன்னன்
தானெம்மைத் தூண்டினனென் றுரைத்தார் வேறாய் அடுத்தொன்றும் அறியவிய லாத வாறே
அடியுதையால் ஆவிபிரிந் தடங்கினார்கள் உடுத்தவுடை கிறிஸ்த்தவர் போ லெனினும் அன்னார்
உண்மையிலே “ஹவவேன்ே"களாகுவாரே. 74.1
பிடியுண்டோர் கொலைக்கு"ரிச்சாட்" உடந்தை என்று
பொய்யுரைக்கப் பிரஞ் சுவீரர் நம்பினார்கள் அடிமுதலாய் “கான்ராட்டின் மீது அன்னார்
ஆதரவு கொண்டிருந்தார்; ஆனால் மற்றோர் திடமாக நம்பமறுத் தார்கள் "ரிச்சாட்"
தேடானே "ஹவஜீவன்ே"கள் உதவி தன்னை தொடர்பென்றும் இருந்ததில்லை அவர்க ளோடு
துணைகொண்டா னெனிற்பொய்யென்
றொதுங்கினார்கள். 742

இஸபெல்லாவின் மூன்றாம் கணவன்
"டெம்ப்ளர்ஸார்" சூட்சியென நம்பி னோர்கள்
சொல்லவஞ்சினார்களது போல "ரிச்சாட்" "டெம்ப்ளர்ஸார்" மீதுகுற்றஞ் சொல்லச் சற்றுந்
துணிவடைய வில்லைகொலை செய்த பேர்கள் வம்பாகத் தன்பெயரைச் சொன்ன தாலே வரிப்பரெனைக் குற்றத்தின் பால தற்கு நம்புமொரு பொய்யுரைக்க வேண்டு மென்று
நாடினனே அவதூற்றைப் போக்கிக் கொள்ள,
திட்டமிட்ட படி"ரிச்சாட்" கடித மொன்று
தயார்செய்தான் “ஷெய்குல்ஜபல்"வரைந்த தொப்ப "திட்டமிட்டு நாமேயிக் கொலையைச் செய்தோம் சிறிதுமதில் ரிச்சாட்டின் பங்கொன்றில்லை திட்டப்படி ஜெரூஸலத்தின் முடியைக் கான்ராட்
ரமேற்றால் நாம்கொண்ட பகைமைக் காக திட்டமிட்டுத் தீங்கிழைப்பான் எனவே கொல்லத்
துணிந்தோம்நாம் என்றெழுதி ஒப்பமிட்டான்.
பொய்யாகச் சிருஷ்டித்த கடிதந் தன்னை
பிறர்நம்ப மறுத்தார்கள் அதற்கு மாறாய் மெய்யாக இருந்திடுமோ "ரிச்சாட்" தம்மின்
முயற்சியிலே வென்றுயிரைப் பறித்தா னென்றே ஐயமுற்றார், அடாதபழி வெல்லத் தாமும்
அதுபோன்றோர் செய்கைக்காய் முயன்றா லீற்றில் செய்யவிழைந் ததுதோற்றுப் போகும் உண்மை
செயலிழக்கும் என்பதுவும் நிஜமாயிற்றே.
பெருவீர னான"கான்ராட்" இறந்த தன்றோர்
பேரிழப்பே யானாலுங் கிறிஸ்த்த வர்க்கு ஒருவகையில் நன்மையென வாகிற் றன்னார்
உட்பூசல் ஒழிந்தொருமைப்பாடு தோன்ற பிரஞ்சுமன்னன் மருகனெனும் "ஹென்றி யாங்கோர்
புதுநிலையைத் தோற்றுவிக்க வந்தே சேர்ந்தான் அரசாளுந் தகுதியினி அவனுக் கென்றே
அவன்சார்ந்தோர் முடிவுசெய வாகி னானே.
743
744.
745
746
197

Page 107
198 புனித பூமியிலே காவியம்
ஜெரூஸலத்தின் மகாராணி “இஸபெல் லாவை"
ஹென்றிமணஞ் செய்தேமா மன்னனாகும் உரிமை கொண்டு குறுநிலத்து மன்னர்க் கெல்லாம் உயர்தலைமைப் பீடத்தில் அமர வென்றே பிரஞ்சுவீர ரனைவருமே குரல்கொ டுத்தார்
பிரியமுற்றான் “ஹென்றி" மதத் தலைவர் கூடச் சரியென்போர் போலமாந்தார் "ரிச்சாட்" நீங்கச்
சேர்ந்தபிறரனைவருமே ஒப்பினாரே 747
விரும்புவனோ மறுத்தேது முரைப்ப னோதாம் விரும்புவதால் விரும்பாதே ஒதுக்கு வானோ “பிரஞ்சின“ரைப் போட்டியாள ராய்நி னைக்கும்
போததற்கு மாறாக முயலுவானோ உரியபதில் வேட்டைநின்று வந்த பின்னர்
உரைக்கமுன்னால் ஒவ்வொன்றாய் நினைவிற் கொண்டார் சரியான போதிலாங்கே "ரிச்சாட்" வந்தான்
தனதுபதில் எடுத்துரைத்தான் மகிழ்வுங் கொண்டார். 748
37. ஜெரூஸலத்தை நோக்கி
பிரஞ்சுமன்னன் “பிலிப்'பினுக்கு மருகன் "ஹென்றி" பிறப்பாலே "ரிச்சாட்"டின் அண்ணன் செல்வன் உரிமைகொளத் தகுந்தவன்மா மன்ன னாக உவப்பரனை வருமவனை யென்பதாலே கருதினராங் குள்ளவர்போல் மன்னன் "ரிச்சாட்" கருதிமன மொப்புவனென் றவனு மன்னார் கருத்தினுக்கு மதிப்பளித்தான் “இஸபெல் லா"வைக்
கரம்பிடிக்கச் சம்மதமும் தெரிவித் தானே. 749
திருமணத்தின் பின்'ஹென்றி மகுடங் கொண்டு
சிலுவையுத்தப் பணிகளிலே முயல வேண்டும் மருவுபகை வெல்லத்தன் படைக ளோடு
முன்நின்று களங்காண வருதல் வேண்டும் உரியபடி இவையனைத்தும் நடப்ப தாயின்
ஒப்புகிறேன் என"ரிச்சாட்" உரைத்தான் யாவும் விருப்பமுற்ற வாறேதான் நடந்த தெல்லா
வீரர்களும் ஓர்கொடிகீழ் ஒன்றி னாரே, 750
 

ஜெரூஸலத்தை நோக்கி 199
புத்துணர்வும் ஒற்றுமையும் படைக ளுள்ளே
புகுந்தசெய்தி அறிந்துசுல்தான் கலங்கி நாங்கள் எத்தகைய நிபந்தனையை த்த போதும்
ஏற்றுவழி வருவரென "ரிச்சாட்" எண் உத்தமநன் நகரையும்முன் கவர்ந்து சென்ற
உண்மையென்று நம்புநிஜச் சிலுவை யையும் பத்திரமாய்ச் சேர்க்கவெனத் தூத னுப்பிப்
பதிலுக்காய்க் காத்திருந்தான் பதிலுங் கொண்டான் 751
வந்திருந்த தூதுவனை நோக்கிச் சுல்தான்
வருமாறு பதிலுரைத்தார் எடுத்துச் செல்ல “எந்தநிலை வந்துற்ற போதும் நாங்கள்
ஜெரூஸலத்தை கிறிஸ்த்தவர்த்தாய் விடவே மாட்டோம் சொந்தமெனக் கொண்டுள்ள சிலுவை தன்னைத்
தரவிழையோம் வெறுமரத்தின் துண்டென் றாலும் சந்தர்ப்பம் வருங்காலை இஸ்லாத் திற்காய்ச்
சிறந்தபொருள் பேரத்திற்"கென்று ரைத்தார் 752
“சோ"வென்று கொட்டுமழை காலம் நீங்கி
சொரிகின்ற பனிக்காலம் தொடர்ந்தே செல்ல “வா"வென்றே நெஞ்சையள்ளிக் கொஞ்சு கின்ற வசந்தத்தின் பொற்காலம் தவழும் வேளை பூவனங்கள் வகைவகையாய்ப் பூத்தி ருக்க
பசுந்தளிரால் ஆடைகட்டு மரங்க ளாட நாவினிக்குங் கனிகளெங்குஞ் சிதறி வீழ
நாற்புறமும் பசுமைபொங்கிக் களித்த தன்றோ 75.3
பொற்கரங்கள் வீசியுடல் தழுவும் வெய்யோன்
பிறப்பதற்கு முன்கமலப் பூக்கள் பூத்த அற்புதந்தா னென்னவவை மதுவைத் தேடும்
அளிகள் செய்த வினையாமோ அறிவார் யாரோ முற்றாத கதிர்வீசி முகமன் கூறி
முறுவலித்த பகலவனக் காட்சி கண்டே "துற்குணன்யார் உனைத்தழுவி னான்சொல்" என்றே
தாமரையைக் கேட்பதுபோல் காரித் தானே 754.

Page 108
|
200 புனித பூமியிலே காவியம்
வயல்களெலாம் நெற்கதிர்கள் விளைந்து பூமி
வழங்கியநற் கொடைக்காக நன்றி கூறும் செயல்போல தலைசாய்த்து நின்ற தந்தச்
செழுங்கதிர்கள் முற்றியதால் பொன்போல் மாற வெயில்காய்ந்தே யவைtது ஒளியைச் சிந்தும்
வந்தமருங் குருவியினம் மகிழ்ந்தே யுண்ணும் இயல்பாக நடக்குமிவை கண்டே நெஞ்சம்
இன்பத்தில் ஆழ்ந்திடாதாங் கிருப்பா ராரோ
உடல்கொழுத்து நடைமெலிந்து கால்ந டைகள்
ஒன்றாகப் புல்மேய இடையிடையே "அடடாவோ வசந்தத்தின் பொலிவைக் காட்ட
ஆவினமுஞ் சேர்ந்தனவோ" என்னும் பாங்காய் மடிமுட்டப் பால்தேக்கி கன்றி னோடு
முலையூட்டி நின்றனவே பசுக்கள் தெய்வக் கொடையாமோ வீதென்று மகிழத் தோன்றும்
காட்சியிது போலின்னும் பலவா மாங்கே
பொங்குமெழில் கண்டுதத்தம் நெஞ்ச மெல்லாம்
பூரித்த கிறிஸ்தவரின் படைவீரர்கள் தங்களுள்ளும் நம்பிக்கை தனைவ ளர்த்தார்
தடையில்லை வெயில்காலம் வந்த தும் போர்ச் சங்கொலிக்க வேண்டுமெனப் புனித மண்ணைச்
சமராடிப் பெறவேண்டுந் தேவ பள்ளித் துங்கமுத தரிசனத்தைப் பெறவு மென்றே
துணிவு கொண்டார் பாதிரிமார் தூபமிட்டார்
பொய்யான புனைகதைகள் கூறிக் கூறிப்
பாதிரிமார் படையினரை ஊக்கு வித்தார் துய்யபள்ளி தொழவந்த சுல்தா னோர்நாள்
தோன்றாத கரமொன்று விளக்கை யெல்லாம் நெய்யூற்றி ஏற்றுவது கண்ட யர்ந்தே
னைவற்றுப் போனதுவாய்க் கிறிஸ்த்த வர்கள் மெய்யாக வந்துறுவ ரெனவ வவர்க்கு
முதற்காட்டாம் அதுவென்றுங் கூறினாரே
755
756
757
7.58
 

ஜெரூஸலத்தை நோக்கி 201
பொய்யுரையும் புனைகதையும் போர்வீ ரர்தம்
புறஅறிவை மழுங்கவைத்தே உண்மை யாகி மெய்யாய்மெய் யுணர்வுகளைத் தூண்டச் செய்ய
மகிழ்வுற்றார் பாதிரிமார் இன்னு மென்ன செய்யவிய லாமவர்க்கென் றாய்ந்தே செய்தார்
சிலுவைப்போர் வீரருளத் துணிவுங் கொண்டார் கையயர்ந்த நிலையிலுளம் இருந்த வீரர்
கதைகேட்டே யுளமாற்றம் பெற்றிட்டாரே. 750
நம்பிக்கை யோடுறுதி கொண்ட வீரர் நலிவுற்றே முன்போல மாறிடாமல் தம்பிரியம் போற்கொள்ளை யிடவே முஸ்லீம்
சிற்றூர்கள் தமக்கழைத்துத் தலைவர் சென்றார். வம்பருக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பை ஏற்று
விருப்பம் போற் சூறையிட்டார் முஸ்லிம் கள்முன் வம்மிடினோ சிரமரிந்தார் தேடிக் கொன்றார்
வரலாற்றிற் செங்கறையைப் பூசினாரே 760
நேரமிது வாறுகழிந் திடுங்கால் "ரிச்சாட்"
நிலைபற்றி வதந்திகளுந் தோன்றிற் றாங்கே போர்க்களத்தி லிருந்து சென்ற “பிலிப்"ரிச் சாட்டின் பின்பிறந்தான் “ஜோன்" உடனே கூட்டுச் சேர்ந்து பாராள உதவினனென் றறிந்த தாலே
புறப்படுவான் முடிமீட்க என்றுந் தூய போரைமுடித் தவன்வாகை சூடிப் பின்தான்
போவனென்றும் பலவாறாய்ப் பரவிற் ரன்றோ. 761
வதந்திகள்போல் நம்பகர மான சேதி
வந்துகொண்டே இருந்தனவச் சோகத் தாலே நிதமதனை நினைந்தபடி படுக்கை யிற்றான்
நேரத்தைக் கழித்தனனே "ரிச்சாட்" மன்னன் எதுவரினும் ஜெரூஸலத்தை மீட்போ மென்றே
எடுத்தசபதத்தோட இருந்திட்டாலும் பொதுவான அச்சமொன்றங் குலவிற் றஃதப்
பெருவீரன் சென்றிடுவான் என்பதாக 762

Page 109
2O2 புனித பூமியிலே காவியம்
அவனையன்றி வேறொருவ ராலே என்றும்
இயலாதே ஜெரூஸலத்தை மீட்க வென்ற கவலையுற்றுப் பாதிரிமார் இருந்தார் ரிச்சாட்
கவனத்தை யதிலொருவர் கவரக் கண்டான் அவனோடு புனிதமண்ணை நாடி வந்தார்
அவனிளமைப் பருவமுதல் அறிந்த வர்தான் அவலமுற்ற நிலையிலவர் அவனைக் காண
அலைந்துதிரிந் தகலக்கண் டழைத்திட்டானே.
கண்ணிரொடு நின்றிருந்த அவரைக் கண்டு
கையசைத்தே அருகழைத்துக் கார ணத்தை என்னவென வினவவவர் எடுத்து ரைப்பார்
இமைகொட்டா திருந்து ரிச்சாட் செவிமடுத்தான் “கண்ணியத்துக் குரியமன்னா! இங்குள் ளோர்கள் குறைபட்டுக் கொள்வதெல்லாம் நீங்க ளிந்த மண்ணைவிட்டுப் போவதென்னும் முடிவைத் தானே
மனந்திறந்து பேசுகிறேன் எனத்தொடங்கி
"புன்மைதனை அழித்தெங்கள் பூமி தன்னைப்
பகைவர்கை தொடர்ந்திருக்கா தெம்மைச் சேரத் தன்னிலமி லாதுபடை நடாத்தி வந்தோம்.
தாங்கள் வழி மீண்டிடிலோ தாங்கி டோமே சின்னவய திருந்துங்கள் வல்ல மைகள்
தெரிந்தவன்நான் நானறியக் குறுநிலத்து மன்னர்பலர் புறமுதுகிட் டோடி னார்கள்
மிகள்ளிதாய் கர்த்தராட்சிப் பொறுப்புந் தந்தார்"
“இங்கிலாந்தின் மன்னரென ஆன பின்னர்
இலகுவிலே “மெஸ்ஸினா" நகரம் வென்றீர் சங்கிலியாற் பிணைத்துவந்தீர் “ஸைப்பிரஸ்"ஸின் சக்கரவர்த் தியைக்கர்த்தர் கிருபை யாலே தங்களுக்கே புகழ்தந்தார் கர்த்தர் "அக்கா'த்
துறைமுகநன் நகரைவென்ற தாலே இன்றும் உங்களையே தேவரெதிர் பார்க்கின் றார்நம்
உத்தமமண் மீண்டெடுக்கும் பணியைச் செய்ய"
765
766
 

காரவன் பாதையிலே
"அன்னியரின் வசமுள்ள புனித மண்ணின்
ஆலயத்தை மீட்டெடுத்த பெருமை யெல்லாம் தன்வயமாய்க் கொள்ளநீங்கள் வேண்டும் என்றே
தேவரது விருப்பமதைப் புறக்க ணரித்து மன்னரேநீர் செல்வதுதான் நியாய மாமோ
மற்றவர்கள் நமைக்காட்டிக் கொடுப்ப ரன்றோ தன்நாடு தனைமீட்ப தெளிதே முன்னர்
தேவபள்ளி தனை மீட்க வேண்டு"மென்றார்.
சொல்லுவதைச் சொல்லிவிட்டுக் குருவுஞ் செல்லச்
சிந்தனையில் ஆழ்ந்திருந்தே மறுநாட் காலை நல்லமுடி வொன்றினைமற் றோர்க்குச் சொல்ல நாடியது வாறுபறையறைந்திட்ட டானே “செல்வதில்லை" ஈஸ்ட்டர் “திரு நாள்வ ரைக்கும்
தொடர்ந்துமுழு மூச்சுடன் நாம் முயற்சி செய்து வெல்லுவதெம் புனிதநகர் தனைமாற் றாரின்
வசமிருந்தும் காப்போமென்றுறுதி கொண்டே
"பெத்நோபிள்' நகரினைவந்த தடைந்தா ராங்கே போருக்கு வேண்டு “பொறி" ஆயுதங்கள் மெத்தவுமே செய்வதென முடிவுங் கொண்டார் முற்றுகையிட்டிருந்துபின்னே தாக்கு தற்கும் ஒத்ததெலாஞ் செய்திட்டா ரன்னாள் "ரிச்சாட்" உவக்குமொரு தகவலினை வேவு காரர் நத்திவரச் செவிகொண்டு வீர ரோடே
நகர்ந்தனனே நாடுதிசை நோக்கி யாண்டே
38 காரவன் பாதையிலே
தூரத்தே நோக்கிலந்தப் பாலை மண்ணில் தொடராகப் பலகாத தூரம் மெள்ள ஊருகின்ற ஒட்டகைகள் எறும்புக் கூட்டம் ஒன்றன்பின் ஒன்றாகச் செல்லல் போலும் சோராது அவை வழியைத் தொடர ஒட்டிச்
செல்லுபவர் பாட்டிசைத்தார் செவிக்குத் தேனாய் சீராக இலாத மணற் பரப்பின் மீது
செல்லுமந்தக் “காரவான்"கண் கவர்ந்த தன்றே
203
767
768
769
770

Page 110
204 புனித பூமியிலே காவியம்
நெடுங்கழுத்தல் கோவேறு கழுதை யோடு
ண்டிருந்த “காரவானில் உணவுக் காக அடுக்கடுக்காய்ப் பெரும்பொதியிற் றானி யங்கள் அதற்குவந்த கறிவகையும் ஊனுந் தேனும் உடுக்கவெனத் துணிமணியும் வீரர் ஆளும்
உபகரணம் பற்பலவும் இன்னு மின்னும் எடுத்தேகத் தொடர்ந்தேபல் லாயி ரம்பேர்
இணைந்துசென்றார் இரவுபகல் நோக்கி லாரே 771
மத்தியிலே ஒட்டகங்கள் சுமந்து சென்ற
மிகப்பெரிய பொதிகளிலே அற்றை நாளில் மெத்தவுயர் வாகவுல கெங்குங் கீர்த்தி
மேவிநின்ற இந்து'மணப் பொருட்க"ளோடே உத்தமப்பொன் வெள்ளிமணி நகைகள் பட்டும் உயர் சரிகை இன்னும்பல சேந்திருக்கப் பத்திரமாய்ச் சென்றதந்தக் “கார வானும்"
பெரும்பாலை வெளிதாண்டிப் பலநாள் சென்றே. 772
எகிப்திருந்து சுல்தானின் ஆணைக் கேற்ப
இட்டதொரு பகுதியதில் மற்றை யெல்லாம் பகுத்தொவ்வோர் வர்த்தகர்க்குஞ் சொந்த மான
பொருட்களவர் வியாபார நோக்கிற் சென்றார் மிகுசெல்வஞ் சுமந்துசெல்லுங் கார வானில்
மங்கையருங் குழந்தைகளுஞ் சென்றார் “மக்கா" புகுந்திறையில் தரிசிப்போர் கூடச் சொந்தம்
பார்க்கவெனச் சென்றவரும் ஆங்குற் றாரே. 773
வணிகருக்காய் அரசுதரும் பாது காப்பின்
வகையாக நாட்டுடைமைக் காகப் போரின் அணிதாங்கி வீரர்களுஞ் சென்றா ரன்னாள்
அமைதியற்றுப் போர்கள் பல நடந்த தாலே தணியாத போர்மேகக் கருக்கற் கஞ்சித்
தமதுவழி தனைமாற்றிச் சென்றா ரன்னார் துணையாகப் போர்வீரர் வந்த தாலே
துயரழிந்தே வழிப்பயணந் தொடர்ந்திட்டாரே. 774
 

காரவன் பாதையிலே 205
மழைக்காலம் முடிந்தெகிப்து நாட்டி ருந்து
முதற்புனித நகர்நோக்கி வந்தோர் செல்லும் வழியிலிடை யூர்கள் சில பகைவர் கையின்
வசமிருந்த தாற்சுற்றுப் பாதை கொண்டார் வழமையிலே செல்லுகின்ற திக்கில் மூன்று வீரர்களும் புனிதநகர் விரைந்தார் மிக்கப் பழம்பெருமை வாய்ந்தமிஸ்ரு நாட்டைச் சேர்ந்தோர்
பிறப்பாலே "வயோ"க்களாகுவாரே. 775
"எகிப்தொருகால் "வயோ"க்கள் ஆட்சிக் குள்ளே இருந்ததுயின் சுல்தானால் "பக்தா" தின்கீழ் புகுத்திவிடப் பட்டததன் கார ணத்தால்
பெருவெறுப்புக் கொண்டாரவ் வினத்தினோர்கள் பகைதீர்க்க இயக்கமொன்றை நாட்டி னுள்ளே பேரரசர்க் கெதிராகத் தோற்று வித்தார் மிகக்கொடிய துரோகிகளா மவர்க ளிந்த
மூவருமல் வினத்தினிலே அடங்கு வாரே. 776
"பெத்நேபிள் " வந்தடைந்தம் மூன்று பேரும்
புகன்றசெய்தியால்மகிழ்ந்த "ரிச்சாட்" மன்னன் யுத்தவீர ரோடுபுறப் பட்டான் வானில்
ஒளியுமிழ்ந்து வெண்ணிலவும் உதவி னாளே சத்துருவின் வருகையினை முஸ்லிம் ஒற்றர் தெரிந்திடவும் முடிந்ததந்த மதியி னாலே எத்தியுடன் வைத்தனர்சுல் தானி டத்தே
ஏதுசெய்ய வேண்டுமென்றும் பதில்கொணர்ந்தார். 777
“வழக்கமான பாதைவிட்டுத் தனித்துப் பாலை வனத்தொதுங்கி வேறுவழி செல்க" என்னும் அழுத்தமான கட்டளையைத் கார வானில்
அனைவருமே அறியவைத்தார் தூதுவர்கள் பழுத்தயத்த தந்திரராம் சுல்தான் ஆணை
பற்றமறுத் தெதிர்த்தனரல் வெகிப்தியர்கள் பழித்துமவ ருரைத்தனரே சுல்தான் மிக்க
பயங்கொண்ட மனிதரென்றும் பாவி மாந்தர். 778

Page 111
2O6 புனித பூமியிலே காவியம்
“கிறிஸ்தவர்கள் தாக்கவரின் எதிர்த்த பூழிக்கக்
கூடுமொரு படையனுப்பி வைக்கா தெம்மை வறுத்துடலை வாட்டிடும்நீர் இல்லாப் பாலை
வனத்துள்ளே செல்லவெனப் பணித்த தேனோ மறித்துவழி தடுக்கவரும் புறத்தி யாரை
மறுத்தழிக்கப் படைவீரர் அதிக மெம்மின் புறத்துமுள்ளார் ஏனஞ்ச வேண்டு" மென்றும்
புகன்றனரல் வறியாப்பேர் பழிதொடர்ந்தார். 779
அனைவருமே போர்வீர ராயின் ஆணைக்
கஞ்சியடிபணிந்தொழுகியிருப்பா ரானால் குணத்திலிழி குணத்தவராம் எகிப்தி யர்கள்
கோனாணை கொள்ளமறுத் தெதிர்ப்புஞ் செய்தார் நினைத்தபடி முன்னேறி னார்க ளோரூர்
லைகொண்டார் “குவைலிஃபா' என்பதஃதாம் வினைப்பயனோ வவர்தவற்றின் விளைவோ ஆங்கே
வந்துதரித் திடத்துணிந்தார் விவேக மற்றே. 78O
பின்னிரவின் போதுறக்கங் கலைத்தே யோங்கும்
பரிக்குளம்பின் ஒலிகேட்ட வீரர் தம்மை முன்னோக்கி வருவோரைத் தடுத்தே நிற்க
முயன்றே “யார் நில்லுங்கள்" என்ற தட்ட “பனூஅஹற்மத்" கோத்திரத்தைச் சேர்ந்த நாங்கள்
“பதவீ"கள் நாடோடிக் கூட்டத் தோர்கள் எனவுரைத்தே முன்வந்தார் வீர ரோடே
ஏற்கின்ற பொய்வுமவர் செப்பி னாரே 781
"அஸ்கலா'னின் பக்கம்போய்த் திரும்பு கின்றோம்
அங்குள்ள கிறிஸ்த்தவர்பால் கொள்ளை நோக்கில் விஸ்வாசங் கொள்ளுங்கள் நாங்க ளெல்லாம்
வெறுங்கையோ டாமுற்றோம் அவர்களெல்லாம் முஸ்லிம்க ளல்லாதோர் அறிவீர் ‘பைத்துல்
முகத்தஸ்'ஸை நோக்கியகன் றிட்டா ரென்றார் “இஸ்லாத்தின் விரோதிகளோ" என்றார் வீரர்
'யா' அல்லாஹற். இலை"யென்றே நழுவினாரே 782
 

காரவன் பாதையிலே
வீரர்களை ஏய்த்துநம்பச் செய்து முன்னே வந்தவர்கள் நீர்ச்சுனையைக் கண்டி றங் நேராகச் சென்றதனைச் சுற்றி வந்தே
நிம்மதியோ டிடம்பெயர்ந்தார் வழிமாற்றிப்போய்த் தூரஞ்சற் றகலவொரு காட்ட ராபி
“சந்தேகங் தீர்ந்தததுவோ மன்னா" என்றான் ஒர்வார்த்தை "ஆம்" என்றே பதிலு ரைத்தான் உடன்வந்த ரிச்சாட்டுரு மாறி நின்றோன்.
“பதவிகள் போல் வேடமிட்ட ரிச்சாட் மன்னன் பாதுகாவல் வீரரையும் அதுபோ லாக்கிப் “பதவிகளில் சிலரையுந்தன் னோட ழைத்தே புலனாய வந்திருந்தான் அற்றை நாளில் “பதவிகளென் றழைப்புற்ற பொல்லார் மிக்க
பயங்கரராய் கொள்ளைகொலை செய்தாரந்தப் “பதவிகளி லொருவனேதான் வீர ருக்குப்
பதிலுரைத்தான் “யாஅல்லா இல்லை" என்றே.
கொள்ளைகொலை செய்யுமந்தக் கொடியோர் கெட்ட
குறிக்கோளை முதலாக வைத்தே "ரிச்சாட்" கொள்ளைகொலை செய்யக்கரு வானார் அந்தக் “காரவனின்" வருகையையுங் காட்டி வைத்தார் எள்ளளவும் நம்பவில்லை முதலில் "ரிச்சாட்"
எமையேய்க்க வந்தவரோ வெனநினைந்தான் உள்ளத்தி லோர்சபலம் பின்னே தோன்ற
உளவறியப் புறப்பட்டான் உண்மை கண்டான்.
முகமடைந்த மன்னன்தன் வீரர் தம்மை
முடுக்கினனே யுடன்வரவென்றவருஞ் சேர்ந்தார் “சஹ“ருடைய நேரத்தில் மீண்டு வந்தே
தம்வினையைத் தொடங்கிவிட்டே தானுஞ் சேர்ந்தான் பகுதியிரண் டாய்ப்பிரிந்தே ஓர்சா ராரைப்
போர்வீரருடன்பொருத விட்டு மற்றப் பகுதியின ரோடுதுயில் கொள்வோர் மீது
பாய்ந்தனனே சூறையிடப் பாவி மன்னன்.
783
784.
785
786
2O7

Page 112
208 புனித பூமியிலே காவியம்
“காரவானில்" இருந்தசில “எகிப்து’ வீரர்
ஸ்த்தவரில் பற்பலரைக் கொன்று தாமும் ரசொர்க்க மடைந்தார்கள் பெண்டு பிள்ளை வானதிரக் கூச்சலிட்டே அழுதார் நீண்ட தூரமவர் பரவியாங்கே இருந்த தாலே
தொட்டதொட்ட மாய்ச்சிலபேர் பொருத மற்ற வீரரொடும் காட்டரபிக் கொடியோர் கூடி
வாய்த்ததெனக் கொள்ளையிடத் தொடங்கினாரே 787
வான்வெளுத்து மெள்ளவிருள் ஒளிவாய் மீள
வந்தவர் கையொடுங்கிடுமுன் பின்னிருந்தே ஈனர்களைப் பழிதீர்த்தார் முஸ்லிம் வீரர்
இருபுறத்தின் எதிர்ப்புகளால் பலபேர் மாண்டார் கானல்வெளிப் பக்கத்தே சுமைகள் தாங்கும்
கழுதையொட்டை யனைத்தையுமே சிலபேர் சாய்த்தார் கானிருட்போற் பகைவீர வெளியால் மாய்ந்த
கதையாகப் பகைவர்புறங் கண்டிட் டாரே. 788
அதற்குப்பின் ஆங்கிருப்ப தாபத் தென்றே
அறிந்த "ரிச்சாட்" அகப்பட்ட கொள்ளை யோடும் குதிரையினைத் திருப்பிவந்த வழியி லோட்டிக்
கொண்டேதன் வீரருக்கும் ஆணையிட்டான் எதிரிகளின் தீங்கிருந்து தப்பச் சுல்தான்
இட்டகட்ட ளைமதிக்கப்படாததாலே அதிபொருளின் இழப்புமுயில பலியு மந்நாள்
ஆனதன்றோ எகிப்தியர்க்குக் கிறிஸ்த்தோ ராலே. 789
காவற்படை வீரர்களின் தீரத் தாலும்
கடமையிலே அவர்கொண்ட கருத்தினாலும் யாவுமிழந் திடுநிலையி லிருந்து தப்பி
எதிரிகளோர் சிறுபங்கோ டோடினார்கள் தேவைக்கா யானபடி உணவுப் பண்டம்
திருடவந்தோர் கைப்பட்ட தெனினுமஃது யாவிலுமோர் காற்பங்கே இருந்த தென்றால்
எகிப்திருந்து வந்தபொருட் கிலையொப் பன்றோ. 700
 

முஸ்லீம்களின் பாதுகாவலர்கள் 209
வீரவர வேற்பளித்தார் கொள்ளை யர்க்கு
வேண்டியவாறுணவுபண்டங் கொணர்ந்த தாலே “காரவானை' நினைத்தபடி சூறை யாடக்
கொண்டவெண்ணம் பலிக்காத போது மன்னன் பேரதிர்வுஞ் சஞ்சலமுங் கொள்ளு மாறு
போர்ச்சேதி சிலவறிந்தான் நெஞ்சத்துள்ளே தீராத கவல்கொண்டான் தான்செய் திட்ட
தீங்கிற்குத் தண்டனையென் றெண்ணி னானே. 791
39 முஸ்லிம்களின் பாதுகாவலர்கள்
"பெத்நேபி' விருந்து செல்லும்
பாதையின் புனலூற் றெல்லாம் மொத்தமாய்த் தூர்க்கப் பட்ட
முஸ்லிம்கள் செய்கை கேட்டு மெத்தவும் வருத்தங் கொண்டான்
மனத்தாலும் எண்ணாச் சேதி அத்தனை மண்ணுந் தங்கள்
ஆசையில் வீழ்ந்த தென்றான். 79.2
புறப்பட்ட வேகத் தோடே
போயிருந்தாலோ யாரும் நிறுத்திட வியலா தெம்மை
நேர்ந்தவை நிகழ்ந்திருக்கா பொறுத்திங்கு நின்ற தெல்லாம்
பெரும்பிழை கொள்ளை கூட வெறுத்திடுஞ் செய்கை யென்றார்
விரும்பாத பிரஞ்சு வீரர். 793
வருவது வரட்டும் இன்றே
வழிதொடர்ந் திடுவோம் கர்த்தர் கருணையோ டருள்வார் எந்தக்
கவஷ்டமும் வராது காப்பார்" திருநிலங் காண வென்றே
துடித்தவர் பக்தி விஞ்சப் பெருங்குரல் கொடுத்தார் மிக்க
பிடிவாதஞ் செய்திட் டாரே 794

Page 113
21 O புனித பூமியிலே காவியம்
பகைவரின் முயற்சி யாலே
பரிகளும் நாமும் வீணே வகையிலா தழிய நேரும்
வாய்ப்புன லேது மற்றே நகைக்கிட மாகும் நீங்கள்
நினைப்பதைச் செய்யின் என்றான் பகைப்புல மறிந்து பின்னே
போவதாய் நினைந்தே "ரிச்சாட்"
நீரறத் காய்ந்த பாலை
நிலத்தினைத் தாண்டியெங்கள் பாரிய சேனை யோடு
புறப்படல் மடமை யென்றே காரணஞ் சொன்னான் மன்னன்
கருத்தொரு மித்தார் “டெம்ப்ளர்ஸ்" வீரரும் பிறரும் வேறு
வழியிலா திருந்த தாலே,
அந்தரத் திருப்ப தொப்ப
னவன் நிலையிலன்னார் வெந்துளங் கருகி நிற்க
வேந்தருள் வேந்தர் சுல்தான் மந்திரா லோச னைக்கு
மற்றோரை அழைத்தார் யுத்த தந்திரத் துயர்ந்த தீரர்
தன்னிகரிலாத பேரே,
“ஜெரூஸலேம்" "அக்கா" போன்று சிறைப்படலாமோ வென்று பெரும்படி முஸ்லிம் மாந்தர்
பயத்தினிற் குள்ளாய்ப் போக வருந்திடேல் என்னும் பாங்காய்
வீரரைத் தூண்டி னாற்போல் திரிந்தெங்கும் பார்வை செய்தார்
சோர்வற்றுச் சுல்தா னன்றே.
795
796
797
798
 

முஸ்லீம்களின் பாதுகாவலர்கள்
சுற்றிலுங் கோட்டை கொண்ட சுவர்களை யுயர்த்திக் கட்ட முற்றிலும் வீரர் - தம்மை
முயன்றிடச் செய்த சுல்தான் சற்றுமே தரித்தி ராது
தனையுமப் பணியிற் சேர்த்தார் கற்களுஞ் சுமந்தார் வேலை
கடிதினில் முடிய வென்றே.
வற்றிடாக் கிணறு கள் நீர்
வறந்திடாப் புனலூற் றுக்கள் உற்றவாய்க் கால்கள் எல்லாம்
உடனழித் திடப்ப பணித்தே முற்றுகைக் கிடைஞ்சல் செய்ய
மாமன்னர் விரும்பினாராங் குற்றவர் கருத்தால் வேறொன்
றுணர்ந்தவை கூட்டி னாரே,
கோட்டைக்கு வெளியி ருந்து
காப்பதோ வன்றி முற்றாய்க் கோட்டைக்குள் ளிருந்தே முற்று
கையினை வெல்வ தென்றோ நாட்டங்கள் வெவ்வே றாக
நிலைத்திட உள்ளிருக்கும் நாட்டத்தைக் கொண்ட சுல்தான்
நாடினார் சபையைக் கூட்ட
மந்திரா லோச னைக்காய்
மன்னர்“போ ரவை"யைக் கூட்ட முந்தியே மலிக்குல் ஆதில்
மாமன்னர் ஆணை யேற்றுச் சிந்துசெந் நீரின் யுத்தஞ்
செய்திடு"ஷயாப்" பேரை முந்திடப் பக்தாத் சென்றார்
மன்றத்திலன்றி லாதே.
211
799
800
801
802

Page 114
212 புனித பூமியிலே காவியம்
என்றுமல் வவையி ருக்கும்
இன்னுமோர் முகமும் அன்று சென்றிலா திருக்கக் கண்டார்
செகம்போற்றும் வீரன் அன்னான் வென்றவன் களங்கள் சுல்தான்
வீரவாள் போன்றோன் ஆங்கே இன்றிலா னானான் இந்த
இகத்திலும் இலாததாலே
தாமுமஷ் வீர னோடே
சமரிட வேண்டு மென்று பூமியாள் பறங்கி மன்னர்
பலரன்னாள் ஆசை கொண்ட மாமன்னர் நிழல்போ லான
“மலிக் தகியத்தீ" னாம்தன் நாமத்தைச் சரித்தி ரத்தில்
நன்கூன்றிப் பதித்த தீரன்.
தோல்வியே கண்டி ராத
தோள் வலுக் கொண்டோன் மாற்றார் தோல்விகண் டோட்ட வேறோர்
திக்கினிற் சென்றிருந்தான் தோல்விகாட் டிட்ட தாங்கோர் தீயநோய் மெய்யுறைந்தே தோல்வியே இலாதான் ஏகன்
தானெனக் காட்ட வென்றே.
சேதியை அறிந்த சுல்தான்
தாங்கொணாத் துயரினாலே ஏதுமே தோன்றா தோராய் ஏகாந்த மாகி வாழ்வெப் போதுமே இலாத வாறு
புலம்பியே யழுதார் கையால் கோதினார் துயர்சு மந்த
கடிதத்தை வாஞ்சை யோடே
803
804.
805
806
 

முஸ்லீம்களின் பாதுகாவலர்கள்
வாளினைக் கையி லேந்தி
வலம்வருவானே யாயின் ஆளிலார் எதிர்க்க அஞ்சி
அகன்றோடு வாரே யுண்டாம் தோட்பலம் நம்பி யாரும்
துணிந்துமுன் வருவாராயின் வேளையோர் நெடியென் றாலும்
வாழ்க்கையைத் தொடர்ந்தி டாரே.
எதிரிகை யோங்கு காலை
எண்ணிடவியலா வாறே எதிரியே எண்ணிப் போற்றும் இணையிலாச் சாக சத்தால் எதிரியை யொடுங்கச் செய்யும் ஈடற்ற வீரன் தம்முள் எதிரியே இலாதோன் சுல்தான் இதயத்தைக் கவர்ந்த தீரன்
வழக்கமாய் அவனி ருக்கும்
வரிசையில் இருக்கை யன்னான் இழப்பினைச் சுட்டு மாப்போல்
இடையினிற் றனித்திருக்க விழிப்புனல் முத்திட் டேகண்
வாங்கிடு பொருள்ம றைத்து வழிந்திட முன்து டைத்தார்
வேந்தராங் கெவருங் காணார்.
எக்காலும் போலல் லாதே
இருப்பவரிலாதும் வேறாய் அக்காவின் தளப தீயாம்
"அஹமதல் மவஷ்தூப்" இன்னும் முக்கிய மானோ னாக
“மஷிதூப் பின் ஸைபுத் தீனும் ஒக்கவே யிருந்தார் சுல்தான்
உரையினைத் தொடங்கினாரே
807
808
809
810
213

Page 115
214
புனித பூமியிலே காவியம்
வேறு
இன்றைய இஸ்லாத் துயர்கா வலரே! இன்றைய இஸ்லாத் துயர்கா வலரே நன்றே நானீங்(கு) உரைப்பது கேண்மின் அன்றி லிருந்திந் நாள்வரை நாங்கள் கண்டிராப் பெரும்படை யோடுநாம் பொருதக் கொண்டுளோம் அறிவீர் கொடியவர் தம்மை வென்றிட இறைவன் வல்லமை அருள்வான் பகைவரை அழித்தொழித் திடாவிடி லெம்மைப் பகைவர்க ளழித்தொழித் திடுவரிம் மண்ணை சிறுதோற் றுண்டினைச் சுருட்டுத லொப்பச் சுருட்டியே தம்வச மாக்கியே கொள்வர் கடமையில் நாங்கள் தவறிடி னதுபோல் மடமையு மிலையே மறுமையி லிறைவன் முன்னிலை குற்றம் புரிந்தவ ராக வன்மையாய்த் தண்டனைக் குரியவ ராவோம் இஸ்லாத் துயர்வுந் தாழ்வுமின் றெங்கள் வசமுண் டாமினித் தொடர்ந்திங் கெம்மோர் வாழ்வதா வன்றி மடிவதா வென்னும் கேள்விக் குரியநற் பதிலும் கரத்தே சிந்தித் துரைப்பீர் சிந்தித் துரைப்பீர். டிவினைக் கூறுவ தும்கட னாகும் என்றெடுத் தோதியே சுல்தான் தன்னுரை முடித்தமர்ந் திட்டார் மாதோ,
வேறு
மாமன்னர் சபையி னோரின்
முன்வைத்த கருத்தா லுன்னித்
தாமாக எழுந்தா ராங்கு
FF DIT
தரித்தவை இருந்த பேர்கள்
னின் உறுதி விஞ்ச
எடுத்தவா ளுயர்த்தி "அல்லாஹ்"
நாமத்தை யுரைத்தார் நெஞ்சை
நெகிழ்திட வைத்த தஃதே.
812
 

முஸ்லீம்களின் பாதுகாவலர்கள்
"ஓர் துளிக் குருதி யெங்கள் உடலினி லோடு மட்டும் நேர்நின்றே எதிர்போம் இஸ்லாம்
நிலைத்திட வுழைப்போம் நாங்கள் போர்செய்ய அஞ்சோம் யார்க்கும்
பயந்தடங் கிடவும் மாட்டோம் சேர்ந்துங்கள் தலைமை யில்நாம்
சமரிடத் துணிந்தோ" மென்றார்.
கூறிட்ட சபதத் தோடே
குரலொன்றி வான்பிளக்கக் கூறினர் இறைநா மத்தைக்
கொற்றவர் சேர்ந்து கொண்டார் நீறிடை நெருப்பாய் நின்ற
நெஞ்சழல் பொங்க ஆங்கே வேறுணர் வற்றுப் போரின்
வேகமே நிலைத்த தன்றோ.
சமரிடும் உறுதி யோடே
சபைகலைந் திட்ட போழ்தும் அமைதியற் றரசர் கண்துஞ்
சாதுமே பின்னிராவில் தமதுற்ற தோழர் பின்னாற்
றொடர்ந்திட "அல்-அக்ஷா" வில் சுமைகுறைந் துள்ளந் துய்யத்
தொழவெனச் சென்ற டைந்தார்.
உடன்சென்ற நண்பர் “பஹற்ஹா உத்தீன்"சுல்தானை நோக்கி “அடலரி அஞ்சும் மன்னா
அறிவேன்நானுங்கள் உள்ளம் படுகின்ற கவல தற்குப்
பரிகாரம் உண்டாம் அஃது கொடுமையை வெல்ல ஏகன்
கருணையை இறைஞ்ச" லென்றார்.
813
814
815
816
215

Page 116
216 புனித பூமியிலே காவியம்
“இன்றுநாள் வெள்ளி கேட்கும்
எலாமவன் ஏற்றே ஈவான் நன்றிரு "ரகாஅத்" நீங்கள்
“நஃபிலை"த் தொழுத பின்னர் ஒன்றிய உள்ளத் தோடே
உளம்நைந்தே பிரார்த்தியங்கள் வென்றிடச் செய்வான் வல்லோன்
வருமிடர் பணிபோற் போமே"
“நல்லதை நினைவு கூர்ந்தீர்
நண்பரே" யென்றே சுல்தான் “வுளூ"ச் செய்தே “நஃபில்" தொழுகை
வரித்துமே “ஸஜ்தா' மீது தொல்லையுந் துயருந் தீரத்
தூயனை நினைந்திருந்தார் எல்லையற் றுதிர்கண் ணிரால் ஈரமாய் “முஸல்லா" மாற.
எந்தநாள் போலும் மாலை
இணைந்திடு சபைக்கோர் ஒலை வந்ததஃ தெதிரி யானோர்
விபரமுந் தாங்கிக் கண்ட புந்திசால் மன்னர் மன்னர்
புன்னகை பூத்தார் “அல்லாஹற்" தந்தநற் பலனை எண்ணித்
தாழ்ந்து" அல்ஹம் துலில்லாஹ" என்றார்.
பிடித்தவவ் வோலை தன்னைப்
“பஹாஉத்தீன்" பக்கம் நீட்டிப் படித்திதைப் பாரு மென்னப்
படித்தவ ருரைப்பர் "மன்னா கிடைத்தது பலனும் “அல்லாஹற்"
கிருபையுஞ் செய்தான் என்றார் அடுத்தவர் துடித்தார் சுல்தான்
"அனைவர்க்கும் உரைநீரென்றார்"
817
818
819
82O

சிலுவை வீரர் செய்த முடிவு 217 40. சிலுவை வீரர் செய்த முடிவு
சிலுவைப்படைத் தலைவரெலாம் ஒன்று கூடிச்
செய்வதினி என்னவென ஆலோ சித்தார் வலுவான வாதமங்கு நடந்த தொவ்வோர்
தம்விதமாய் எண்ணங்கள் பரிமாறிற்று நிலைமாறா நின்றார்கள் பிரஞ்சு வீரர்
நோக்கமவர் ஜெரூஸலத்தை அடைவ தென்றே பலமாக எதிர்த்திட்டான் "ரிச்சாட்" சேர்த்தோர்
பக்கபல மாயிருந்தார் விபரங் கேட்டே 821
எச்சரிக்கை போலுமவன் சொல்வான் நீங்கள்
ஜெரூஸலத்தை நோக்குவது மடமை வாழ்வைத் துச்சமென மதித்தாலும் அறிவீ னத்தால்
தோன்றுகின்ற இழப்புமிக அபத்தம் என்றே நிச்சயமாய் நானதற்குத் தலைமை தாங்கேன்
நிர்க்கதியாய் விட்டும்நான் அகலேன் என்றேன் எச்சரிக்கை மீறிநீங்கள் செல்வ தாயின்
ஏற்றவொரு தலைமையைத்தேர்ந்தெடுங்களென்றான். 822
"புதிதாகத் தேர்ந்தெடுக்கும் தலைவன் ஆணை
பற்றியொரு போர்வீரனாக நானும்
எதிர்கொள்வேன் தோன்றுகின்ற எதிர்ப்புக் கஞ்சேன் என்னுடைய தலைமையிலோர் படைநடந்தே
சிதறியழிந் தொழிந்ததெனும் அவப்பேர் சூழச்
சிறிதேனும் நானொப்பேன் நீங்கள் வேண்டின்
விதியதுதா னென்றெண்ணி வருவே" னென்று
வாக்களித்தே தன்நிலையை "ரிச்சாட்" சொன்னான். 823
முடிவற்று முதல்நாளன் றவைக லைய
மீண்டுமவர் தேர்ந்தகுழு ஒன்றாய்க் கூடி முடிவாக ஜெரூஸலத்தைத் தாக்குந் திட்டம்
முறையற்ற தொன்றென்றே முடிவுங் கொண்டு படைபிரிந்து ஒன்றையொன்று முந்திக் கொண்டே
புறப்பட்டு விட்டதெனுஞ் செய்தியேயக் கடிதத்தில் இருந்தததை "பெத்நே பிள்'ளில்
கொண்டிருந்த படைத்தலைவன் குறித்திருந்தான் 824

Page 117
218 புனித பூமியிலே காவியம்
சுல்தானின் ஆணைப்படி “பஹாஉத் தீ“னச்
சேதியினைப் படித்துமுடித் திடவாங் குற்றோர் “அல்லாஹ0 அக்ப“ரென மகிழ்வி னாலே
அண்டமதிந் திடவிடிபோற் குரல்கொடுத்தார் வல்லவனின் செயலெண்ணி வாழ்த்து ரைத்தார்
வரலாற்றில் அதிர்ச்சிதருஞ் சேதி யென்றார் சொல்லவிய லாதபெருந் தோல்வி தாங்கிச் சென்றனர்தம் பகைவரெனப் பூரித் தாரே
பலலட்சம் வீரர்படை நடாத்தி வந்தே
படாதபெரும் பாடுபல பட்டே ཨོ་ 9 சிலகழிந்த யுத்தத்தின் இறுதி நாளில்
சிறுகாத வழித்தூரம் இருக்கும் வேளை நிலைமாறிச் சுல்தானின் உறுதி முன்னே
நீர்க்கோலமானதவர் வலிமை வீரம் இலையதுபோ லோர்நாள் வாழ் நாளில் மன்னர்
இன்புற்ற மகத்தான தினமா மம்மா “எந்நாளுஞ் சத்தியமே வெல்லு" மென்ற
இயல்பினுக்குள் ளமைந்தன்று சிலுவை வீரர் பின்வாங்கிப் பிரிந்துதத்தம் இலக்கை நோக்கிப் போயினரே தோல்விதனை ஏற்றார் போன்றே வன்மனத்தோ டிருந்தார்கள் பிரஞ்சு வீரர் வேறாக யாப்பாவில் சிலபேர் தங்க இன்னுமொரு பிரிவிலுள்ளோர் "அக்கா" தாண்டி ஏகினரே வடக்கெல்லை நோக்கி யாண்டே
துறவிவீர ரான "டெம்ப்ளர்ஸ்" ஹாஸ்பி டளாஸ்"
தமக்குவந்த பகுதிகளைப் பாதுகாக்கப் பிறவனைத்துப் பேருந்தம் விருப்புக் கேற்பப் பிரிந்துசெல ரிச்சாட்தன் ராஜ்ஜியத்தை மறுபடியுந் தம்பியிடம் மீட்டெ டுக்கும்
மிதமிஞ்சம் ஆசையிலே துடிதுடித்தான் வெறுங்கையோ டேகாது ஜெரூஸ் லத்தை
வணங்கியெனும் செலநினைந்தும் உருகினானே
825
826
827
828
 

கட்டவிழ்ந்த காளையர்
ஒப்பந்தம் ஒன்றுசெய்யும் நோக்கி னோடே
ஊர்விடுத்துச் சென்றிருந்த "மலிக்குல் ஆதில்" எப்போது வருவாரென் றாவல் கொண்டே
எதிர்பார்த்துக் காத்திருந்தான் "ரிச்சாட்" மன்னன் நப்பாசை யொன்றுமவன் கொண்டான் “பெய்ரூத்"
நகரினையுங் கைப்பற்றப் பிரஞ்சு வீரர் செப்பினரே பரிகசித்தோர் பாட்ட மைத்துக்
“கோழைமன்னன் காதை"யென "ரிச்சாட்" பேரில்
அறிந்திருந்தார் இவையனைத்தும் சுல்தான் தம்மின்
அமீர்களொடு வீரரெலாம் சிலுவை வீரர் வெறுங்கரத்தோ டேகியதால் கொண்டிருந்த
வரையில்லா உற்சாகந்தனையுங் கண்டார் பொறுமைகடந் தேகியது முஸ்லிம் வீரர்
புஜபலத்தைக் காட்டவழி இலாததாலே துறுதுறுக்குந் தோள்கள்தம் தினவ டக்கத்
துடிக்குமவர் நிலையினையும் அறிந்திட்டாரே
மறுப்பெதுவுந் தெரிவிக்க மாட்டா ராக
மாமன்னர் இருப்பதுகண்டறிந்த வீரர் சுறுசுறுப்பும் அதிகரிக்க ஜெரூஸ லத்தைச் சுற்றியுமுள்ளிருந்தும்பல் லாயிரம்பேர் வெறும்பாது காப்பைமட்டும் செய்யா தொன்றி
வளைத்தவில்லில் கோத்துவிட்ட நாணை யொக்க பறந்தனரே “யாப்பா"வை நோக்கி மன்னர்
போகமறுத் திடாதுதனைக் காத்துக் கொண்டார்
41. கட்டவிழ்ந்த காளையர்
இருபதி னாயிரம் பேராங் கிருந்தனர்
எதிரிகளெனவறிந் திருந்துமே துணிந்தனர் பொருதிடு பலமிருந் ததுவெனி லும்மொரு
பொறுப்பொடு திட்டமி லாதுமே சென்றனர் உருவிய கட்டிருந் தோடிடும் ஏறுகள்
ஒன்றிமுன் விளைவுகள் யாதென நோக்கிடா பொருசினத் தொடுபாய்ந் திடுவன போலுமே
போயினர் “யாப்பா" நகரினை நோக்கியே
219
829
830
831
832

Page 118
22O புனித பூமியிலே காவியம்
கட்டுக் கடங்கிடாக் காளையர் போர்வெறி
கட்டுண்டிருந்ததாற் கனலெனப் பற்றியே மட்டற் றெதிரிகள் மீதுவெஞ் சினத்தினை
மாய்த்திட வென்றுமோ ருணர்வினிற் பறந்ததால் திட்ட மிலாதவர் செல்வதத யஞ்சியே
தோன்று மிடரினை நினைந்தமா மன்னரும் கட்டளை யொன்றினைக் கணத்தினில் விடுத்திடக்
காளையர் மூவரக் கரும மியற்றினர்
“மலிக்கு லஸி'ஸெடு 'தாஹிரும் ஸைபுதீன்" மூவரும் மன்னரின் முன்வந் திருந்தனர் இலக்கொன் றிலாதுநம் வீரர்கள் செல்கிறார்
எதிரிகள் பின்வாங் கினரென்றனதால் விலக்கலுற் றோம்படைச் சட்டத் திருந்துமே
வேண்டுவதனைத்துமே செயவிட முண்டென வலுக்கு மெனிலவர் செய்கைக ளெனிலவை
வேண்டும டக்கிட" வெனச் செவி கொண்டனர்.
பிரிந்திருந் தொன்றிய போதுல கொன்றிலாப் பாங்கினிற் களித்திருந் தாரிளஞ் சோடிகள் பெருந்திரு வுலகினிற் காதலே என்னுமால்
பாசத் துழன்றனர் பிறவெலாம் பொய்யென அருந்தவப் புதல்வர் மா மன்னரீர் செல்வமாம்
“அஸி'ஸொடு 'தாஹிரும் அன்னவர் துணைகளும் பொருந்தின ரவரோடு 'ஸைபுதீன்" ஜெமீலா"
பேசிட லாகுமோ புகழிறைக் காகுமே.
சோடிகள் மூன்றுமொன் றாகின அடிக்கடி
சேர்ந்து மகிழ்ந்தன தேனோடு பாலென நாடினர் மன்னரந நிலைமிகுந் தேமன
நலம்பெறும் நாளினை நெருக்கவென்றறிந்துமே கூடிலொன் றாயிளங் காளையர் வெற்றிதாங்
கொளாதவரைமண மிலையெனக் கூறினர் நாடிய வாறவர் நடந்தது “யாப்பா"
நோக்கிட மன்னரோ ராணையிட்டாரரோ
833
834.
835
836

கட்டவிழ்ந்த காளையர் 221
வாளொடு வாள்பொருந் திடவெதிர்ப் படையினர்
வெட்டுண் டழிந்திட வாகைகொள் வீரர்தம் தோளோடு தோள்நின் ருயிர்பறித் திடுதலைத்
தாங்களுங் காணவென்றாசைகொண் டாரிளந் தோழியர் மூவருந் துணிந்தனர் போர்க்களந் துணைவரச் சம்மதங் கேட்டுமே பெற்றனர் வேளைவந் துற்றதும் விருப்பொடு நண்ணினர்
வேங்கைநிகர்த்தரு வீரரோ டாமரோ 837
ஒர்பதி னாயிரம் வீரரே வந்தவர்
உள்ளிரு பங்கா யெதிரிகளாகுவர் போரினி யிலையென எண்ணிய கிறிஸ்த்தவர் பார்த்திராப் போதுவந் துற்றிட வதிர்ந்தனர் தேருவ ரேயவர் சூழ்ந்தவர் தம்மவர்
தொகையினிலரைதா மெனவவர்தம்மையோர் காரழிந் தொளிசூழ் கால வரையினுள்
கடுகிய பூழித்திடலாமென வாமரோ 838
தம்மிலும் அரைப்பங் காகுவ ரானதால்
தாக்கியழித்திடலாமென எண்ணியே வம்மினோர் சேதிய மனுப்பினர் "ரிச்சாட்"
வந்தவர்க் குதவிட வேண்டுமா மென்றுமே செம்மையாய் இவர்க்கொரு பாடமொன் றுணர்த்திடச் செய்வதெங் கடமையென் றெண்ணிய கிறிஸ்த்தவர் சும்மையக் கோட்டையுள் ளிருந்துமுன் வந்தனர்
சோர்ந்திலா ராங்குவந் துற்றமுஸ்லிம்களே 839
வந்தவ ரிருந்தவ ரோடுவாங் கெங்கணும்
வேங்கைகளொன்றையொன் றேபழிதீர்த்திட முந்துத லொப்பவே பொருதின ராமொரு
முடிவினைக் காணுதல் வேண்டுமென் றெண்ணியே விந்தையில் லுள்ளுறை வெறுப்பினைக் கரம்பிடி 620 வாள் நுனியோடுபொருத்தியே வீசினர்
கந்தையைப் போலுடல் கிழிந்து சரிந்தனர்
கேட்பவ ரற்றவராகவீர் புறத்துமே 840

Page 119
புனித பூமியிலே காவியம்
வேறு
எட்டிக் கரம்பிடி வரிசிலை விட்டுப் பலிகொளும் அளவற மட்டில் லுயிர்பறித் தெடுத்துட லயராதே
முட்டிப் புயபல மறிந்திடக் கட்டிப் புரண்டெழுந்த தொழுந்தவ ரிட்டம் நிறைந்திட முயன்றுமே வியலாதே
வெட்டிச் சரிதலை யுடன்கரம் கொட்டிக் களம்முழு வதும்நிறைந் தொட்டிக் குவிந்தொரு சிறுமலை வடிவாக
அட்டத் திகைகளு மொருமணி இட்டுத் துலங்கிட வெனவிடம் விட்டுக் கொடவிலை யவர்புவி நிறைந்தாரே
கட்டக் கருகரி பரிநிறை ஒட்டைப் படையொடு கடலென
வெட்டைப் பெருவெளி இருபுற மவர்சேர
பட்டப் பகலொளி தவிர்கரு
முட்டம் வரைகுரு தியந்தரை கொட்டிச் சமர்புரிந் தவரவர் திறன்காட்டி
நெட்டக் கதிரேறி பகலவன் கொட்டுஞ் சுடரினி லவருடல் சுட்டுப் பொசுங்கிடு பொழுதுமே &FLOUTITLq
நட்டம் பெரிதவ ரிருதிறத் துட்போர் முடிவுற விலையொரு கட்டத் தொருவரை யொருவரும் மிகைத்தாரே
841
 

கட்டவிழ்ந்த காளையர் 223
கிறிஸ்த்தவ “நைட்'டுக ளோடுமுஸ் லிம்களில் குறித்தபோர் வீரரும் போர்க்கள மீதினில் சிறுத்தைகள் போலுமுட் சென்றனர் மாற்றவர் உயிரோட்ட
அறுத்தெறிந் தேகைவாள் ஞடல்களை விற்சரம் குறித்திடந் தைத்துயிர் உண்டது முண்டிட முறிந்தன வென்புகளுள்ளுடல் நைந்துமே உயிரோட்ட
புறத்தொரு குன்றினில் "ஆன்" ஹெலன் " தோழியும் வெறுத்துல கன்னவர் விரமா வீரரும் மறத்தொடு சாடிடு மாண்பினைக் கண்டுளம் மகிழ்ந்தேற்ற
நிறுத்திடாத் தம்முயிர் போயினும் போமெனும் கருத்தோடு 'தாஹிர“ லீஸ“வன் தம்பியும் மறித்துயிர் கொண்டனர் “ஸைபுதீன்" நண்பனின் துணையோடே
ஒருமுறை மாற்றவர் கைப்பல மோங்கிட வரும்பலம் மீண்டுமே வெற்றியும் நின்னென மருவிடுந் தீயவர் யாருமே மீண்டிட வகைகாட்டார்
ஒருமுனை சென்றவர் மீண்டிடச் செம்புனல் ரருவியா மென்றுமே ஒட்டிட மாற்றவர் குருதியில் வீழ்ந்திடக் கூர்மைவாள் சுற்றியே LJ60558-II La
இறுதியில் வெற்றிமுஸ் லீம்கர மாகிடச் சிறுமையற் றேபினும் மாகினர் கோட்டையின் புறமவர் தம்மவர் வந்திடு கால்வரை விரைவாக
அறுதியி லாங்கொரு தூசெனும் எஞ்சிடா
வெறுமையுற் றேகளத் தேயிருந் தன்னியர்
உறுபெரு மாட்பலிக் கஞ்சியே ஒடியே மறைந்தாரே
842

Page 120
224 புனித பூமியிலே காவியம்
வேறு
நாள்முழுதும் எரித்தவெயில் அனல்காற் றெல்லாம் நொடிப்பொழுதும் உடலுணர மாட்டா வாறே தோள்வலுக்கொண் ரவரவர்தம் காத லர்கள்
துணிந்தியற்றுஞ் சாகசங்கள் நோக்கி நின்ற தோழியர்கள் மூவரும்போர் இடையில் நிற்கத்
திரும்பினர்தம் முகாம்களுக்குக் கண்டன் னாரை வாழியென வாழ்த்தினரன் றவர்கள் செய்த
ரவிளையாட்டினையும் போற்றி னாரே, 843
கதிரவனை யுண்டுகளித் திருந்த கங்குல்
களையுண்ண வெற்றிகண்டே பிடியிருந்து புதிதாகப் பிறப்பவன்போல் பாங்கு காட்டிப்
புறப்பட்டான் மீண்டுமவன் அப்போழ் தாங்கே எதிராளிக் குதவவென "யாப்பா" நோக்கி
ச்சாட்டின் படைகடலால் வருமென் றெண்ணி மதியூகத் தோடுமதிற் கோட்டை மீது
மன்னரிளஞ் சிங்கங்கள் தாக்கச் சென்றர். 84.4
அம்பெய்தார் மேலிருந்து கற்க ளோடே
அனைத்தையுமே பொருட்படுத்தா திடித்தார் பந்நாள் வெம்பசியற் றிருந்த"அரி" ஊனைக் கண்ட வாறாகச் செயற்பட்டார் வேகத் தாலே தும்பாகிப் போனமரக் கதவு வீழத்
தூள்தூளாய்ப் போய் மதிலின் தொடருஞ் சாயச் செம்பருதி வான்முகட்டை எட்டும் வேளை
செயங்கண்டார் முஸ்லிம்கள் உட்புகுந்தார் 845
முன்வாயிற் புறத்தினிலே முஸ்லிம் வீரர்
முன்னேறிக் கிறிஸ்த்தவரைக் கொன்றே செல்லப் பின்வாங்கிப் பிறகதவால் "அஸ்க்க லானை'ப்
போயடைய முயன்றாரன் னாரல் வேளை பின்வாயில் தனையடைந்தார் சென்றோர் போக
பிடியுண்டார் எஞ்சியபேர் “யாப்பா" கோட்டை தன்னைத்தான் முஸ்லிம்கள் கைப்பி டிக்குள்
தந்தகதியாகிற்றன் நிகழ்வினாலே 846

சுல்தானின் முன் யோசனை
“யாப்பா"வின் கடற்றுறையின் ஒர மாக
இருந்தமலைக் கோட்டையுள்ளே ஆயிரம்பேர் காப்பாற்றிக் கொளவோடிப் புகுந்து கொண்டார்
கடல்வழியாய்த் தப்பவியலாததாலே காப்பாற்று வார்கடலின் மார்க்க மாகக்
கரைகண்டோர் அஸ்கலானின் "ரிச்சாட்"மன்னன் “யாப்பா"வை நோக்கிவரு வானென் றன்னான் எண்ணிமனஞ் சோராதுள்ளுறைந்திருந்தார்
42. சுல்தானின் முன் யோசனை
கோட்டைபிடி பட்டாலும் ஆயி ரம்பேர்
குடிகொண்ட “மலைக்கோட்டை" தனைக்காப்பாற்ற ஆட்பலத்தோ டாங்குறுவான் "ரிச்சாட்" என்றே
அறிந்துசுல்தான் முன்சென்றே முகாம மைத்தார் நாட்டத்தில் கைகூடும் என்றே மன்னர்
நினைந்திருந்தார் திடமாக அந்நாள் அன்னார் நோட்டம்போல் நடந்ததங்கு தவறு மீண்டும்
நடவாது வழியுமவர் செய்திட் டாரே
உணவின்றிக் கோட்டையுள்ளே இருப்போர்க் காக
உளமிரங்கினார் சுல்தான் அன்னார் கூட இணங்கிவந்தார் சரணடையத் தூதும் விட்டார் இறங்கிவெளியேறிடவுஞ் சம்மதித்தார் குணக்குன்றாம் மன்னரவர் வேண்டு மட்டும்
கொண்டு செல்லும் உடைமைகட்கும் அனுமதித்தார் பிணங்கியெவர் தாமுமவர்க் கிடைஞ்சல் செய்யாப்
பாதுகாப்புந் தந்தனுப்பி வைத்திட்டாரே
மூட்டைமுடிச் சோடுமக்கள் மனைவி சுற்றம்
முடிந்தவரை யுடன் கூட்டி முதற் கூட்டத்தார் கோட்டையினை விட்டிறங்கிச் சென்றார் கூடக்
காவலருஞ் சென்றார்பின் தொடர்ந்திறங்க மாட்டாத நிலைகண்ட 'தாஹீ" ரந்த
மருமத்தை அறிந்துவர ஆள லுப்பிக் கேட்டசேதி யாலவனும் அயர்ந்தே நின்றான்
காரணத்தை யூகிக்க முனைந்திட்டானே.
225
847
848
849
850

Page 121
226 புனித பூமியிலே காவியம்
முதற்கூட்டம் வெளியேறும் போதி ருந்த
மனநிலையில் இல்லாது வீறாப்பாகப்
புதுத்தெம்போ டாங்குற்ற வீர ரெல்லாம்
பேசினராம் போரணிகள் அணிந்த வாறே
அதற்கான காரணத்தை அறிந்தான் அண்மி
அலைகடலில் தோன்றுகின்ற கப்பற் கூட்டம்
உதவிக்கு வருவதுவே யதுவென் றஃதை
உடன்சுல்தான் தாமறியச் செய்திட்டானே 851
தான்நினைத்த வாறேதான் படைக ளோடு
தருணத்தில் வருகின்றான் "ரிச்சாட்" என்றே
தானையொன்றை "மலிக்குலஸிஸ்" தலைமை யின்கீழ்
தரைமார்க்க மாகசுல்தான் அனுப்பி வைத்தார்
ஏனோவோர் காரணத்தை எதிர்பார்த் தாங்கே
“யாப்பா'வுக் கருகினிலே சிலநா வாய்கள்
சேனைவிர ரோடுகாத்து நிற்கக் கண்டார்
திறன்கொண்ட மாவீரர் "ஸ்லாஹஸ்த் தீனே" 852
மலைக்கோட்டை மீதிருந்த கடலை நோக்கி மரக்கலங்கள் தனைக்கவரக் கூச்ச லிட்டர் அலைகளின்பே ரிரைச்சலதைத் தடுத்த தொன்றி
“அல்லாஹ0 அக்ப“ரென்ற "தக்பீ" ரோடே இலையந்தக் கோட்டையுள்ளே எவரு மென்றே எண்ணினனே "ரிச்சாட்"டும் கூடி நின்ற தலைவரிடம் எடுத்துரைப்பான் எதிர்க்காற் றாலே
தாமதித்த தேயெங்கள் வருகை யென்றே 853
தாக்குதலைத் தாங்காது தப்பி யோடித்
தகவலினைத் தந்தார்கள் "யாப்பா"வீரர் நோக்கத்தை மாற்றிடவுஞ் செய்தார் "பெய்ரூத்"
நகரத்தைப் பிடிக்க "ரிச்சாட்" முனைந்த போது சாக்குரைத்தார் இத்தாலி யோர்த விர்ந்தோர்
தமக்கியலா தென்றவனின் அழைப்பைக் கோட்டை காக்கவென வந்தவரும் வராது கண்டே
கடுஞ்சினத்தால் கறுவின்னே "ரிச்சாட்" மன்னன் 854

அமீர்களின் இரகசியத் திட்டம் 227
இத்தாலி நாட்டுப்படை வராது நிற்க
இங்கிலாந்து மன்னன்வெஞ் சினமுங் கொண்டே “சத்தியத்தை முறித்தவர்கள் வராது மீண்டு
சென்றிருந்தால் அன்னவர்கள் நிறுவியுள்ள வர்த்தகத்திற் கானநிலை யங்க ளெல்லாம்
விட்டுவையா தொழித்தேநான் நாடு செல்வேன் ஒத்துழைக்க ஒப்பியவர் மாறு செய்தால்
உரியதண்டனையதுதா"னெனவு ரைத்தான் 855
கடல்மார்க்க மாகநாங்கள் வருவோம் நீங்கள் கரைமார்க்க மாகவரின் ஒன்று சேர்ந்தே கடலாலுங் கரையாலும் தாக்கி "யாப்பா"
கோட்டையினை மீட்டிடலாமெனவந் தோரை இடைமறித்த "மலிக்குலஸிஸ்" தரையால் வந்த
இத்தாலிப் படையினரை அழித்த தெல்லாம் கடுகளவும் அறியாத தாலே "ரிச்சாட்"
கறுவினனே யவ்வாறங் குற்றோர் முன்னே. 856
முன்னொருகால் சுல்தான்முன் தூதாய் வந்த
மதத்தலைவர் ரிச்சாட்முன் தோன்றித் தங்கள் இன்னல்களை மனமுருக எடுத்து ரைத்தார்
இதயத்தீ கொழுத்துவிடற் கவனுரைப்பான் “என்னவந்த போதும் நான் மீட்பேன் "யாப்பா"
எதிரிவசம் இருக்கவிடந் தரவே மாட்டேன் சொன்னவாக்கை மீறிய“இத் தாலி" யர்கள்
துணையின்றி வெல்வ“னெனச் சூழ ரைத்தான் 857
43. அமீர்களின் இரகசியத் திட்டம்
“இரவுடன் இரவாய் நீங்கள்
எதிர்ப்பினுக் கஞ்சா தொன்றிக் கரையடைந் திடவும் வேண்டும்
கோட்டையை மீட்க வென்றே வரு ட ரெதுவென் றாலும்
வெற்றியை நோக்கி முன்னே தொடருக" வென்றான் "ரிச்சாட்"
தொடர்ந்தவன் பணிகொண் டானே 858

Page 122
228 புனித பூமியிலே காவியம்
யாருமே எண்ணா வாறன்
றெடுத்ததை முடிப்பதென்றே காரிய மனைத்துஞ் செய்தான்
கருத்திலா திருந்தார் முஸ்லிம் வீரர்க ளதனா லுற்ற
விளைவுகளறிந்த போதே ஓராதே எதிரி யைத்தாம்
ஒடுக்கியே மறித்த கேட்டை
எளிதாகக் கோட்டை தம்கை
இடைப்பட இறுமாப் புற்றே விழிப்பிலா திருந்தா ரஃதை வேந்தரும் அறிகி லாரே கழிந்தது நள்ளி ராவும்
கடற்கொந்தளிப்பும் நீங்க வழிதொடர்ந் தார்கள் மாற்றார்
வந்ததை எவரும் நோக்கார்
கரைக்கரு காமை கப்பல்
கடுகிடக் கணக்கிலாது துரிதமாய்ப் படகில் வீரர்
துடுப்படித் தேயொதுங்க ரைந்தனன் ரிச்சாட் முன்னால்
வீரர்பின் தொடர்ந்தார் நோக்கி
வருவதாங் கெதுவென் றாலும்
வென்றிடும் உறுதி யோடே
எண்ணிடாப் போழ்து பன்நூ
றெதிரிகள் வந்து சூழக் கண்ணிமைப் பொழுதுள் முஸ்லிம் காவலர் நிலையுணர்ந்தே விண்ணவன் நாமங் கூ
வந்துற்ற பகையெதிர்த்தார் அண்மிய பகைய தற்குள்
அடியூன்றிப் படர்ந்த தம்மா
860
861
862

அமீர்களின் இரகசியத் திட்டம்
முன்வந்த வீரர் முஸ்லிம்
ரரைத் தாக்குங் காலை பின்பெரு வெள்ள மாகப்
பகைவர்கள் குவிந்தார் "ரிச்சாட்" மன்னவன் தீரச் செய்கை
மிகைத்ததாற் குழப்பஞ் சூழ மின்னலாய்க கோட்டை தன்னை
மீட்டிடப் பகைவர் சென்றார்
நள்ளிராப் போழ்தி லஃது
நடந்ததால் "ரிச்சாட்" வெற்றி கொள்ளவப் போழ்தை நன்றாய்க்
குறிவைத்தே பயனுங் கொண்டான் பள்ளத்திற் பாய்பு னல்போல்
படைகளுங் குவிந்த தாங்கே கொள்ளையாம் கிறிஸ்த்தோர் கோட்டை
கொண்டவர் மீண்டு சேர்ந்தார்
பெருமள வாகுஞ் சேதப்
பங்கன்று முஸ்லிம் கட்காம் இருப்பினும் இயன்ற மட்டும்
எதிரியை மாய்த்தே சென்றார் அருகிட வெற்றி வாய்ப்பு
அங்கிருந்த தகல்வ தொன்றே சரியெனக் கொண்டார் மீண்டார் சமர்க்களத் திருந்தன் னாரே
தன்வழி நிலைமை மாறத்
தணியாத வேகத் தோடே முன்னேறி னானே "ரிச்சாட்"
முஸ்லிம்கள் தனைத்தொடர்ந்தே பின்பற்றிக் கோட்டை சூழப்
பாசறை யமைத்தான் செய்கை நன்மையாய் மாறிற் றன்றேல்
நோக்கத்திற் பிழைத்திருப்பான்
865
864.
865
8cm。
229

Page 123
230 புனித பூமியிலே காவியம்
சிலமணி நேரத் துள்ளே
தொடராது முடிந்த தெல்லாம் பலங்கொண்ட போது முஸ்லிம்
படையினர் கோட்டையுள்ளே நலங்கெட நடந்த தாலே
நிமலனுங் கோபங் கொண்ட பலனென நினைந்தார் சுல்தான்
பிறிதியற் றியலாப் போழ்தே
சிறுதொலை யிடைமு காம்கள் தோன்றின உதயமாக உறுவினை யறிந்தும் அஞ்சா
வளத்தொடு படைநடாத்தித் றமையாய் வெற்றி கொண்ட
ரனாம் "ரிச்சாட்" தன்னை மறுபுறத் தமீர்கள் காண
முயன்றனர் நோக்க லானார்
நோக்குவோர் நோக்கும் நோக்கை நோக்கியே நோக்கறிந்து நோக்கினான் "ரிச்சாட்" நோக்கும்
நோக்குவோர் நோக்கொக் கப்போய்த் தூக்கியே கரம சைத்தான்
தன்னிடம் வருக வென்றான் தாக்கியே அழிக்க வந்த தன்மத் திடம பூழித்தே
அரசனின் அழைப்பிற் கேற்ப
அமீர்களுஞ் சென்றார் கண்டார் பெருவிருந் தோடே ஆட்டம்
பாட்டெலாம் நடந்த தாங்கே சிரமசாத் தீயமே யான
செய்கையில் வெற்றி கொண்ட பெருமையைப் போற்ற வென்றாய்
பாசறை தோறு மன்றோ
867
868
869
870
 

அமீர்களின் இரகசியத் திட்டம் 231
ளமதுவழிந் தாறா யோட
மாதருங் கூடியாட மதுவிலுங் கொடிதாய் நாதம்
மிகைத்திடு இசையும் பொங்க விதவித வுணவை யுண்டே
வேடிக்கை பலவுஞ் செய்தார் அதிதிகள் தம்மை மன்னன்
அன்பொடு வரவேற் றானே. 871
அன்பொடு "ரிச்சாட்" வந்த
அமீர்களை வரவேற்றான்முன் அன்னவர் சிலரைத் தானும்
அறிந்ததால் நாமங் கூறித் தன்னிருப் பிடம மர்த்தித்
தானன்று வந்த வேகந் தன்னைய முரைத்தான் அஃது
தனக்குமே வியப்பா மென்றான் 872
“எதிர்பார்த்த வாறே யாங்கும் இத்தாலி வீரர் வாரப் புதிரொடு கோட்டை யுற்ற
பாதிரி முறையீடொன்றிக் கொதித்தது நெஞ்சம் எந்தக்
கேடுவந் துற்ற போதும் எதிர்த்ததை வென்று கோட்டை
ஏற்றிடத் துணிந்தே" னென்றான். 873
இத்தாலிப் படையி னோர்கள்
இடையினில் மறிக்கப் பட்டே செத்தழிந்த தொழிந்தா ரென்ற
சேதியை அமீர்கள் கூற உத்தம மாயிற் றஃது
உணர்ச்சியின் வசப்பட்டேன்நான் இத்தகை கருமஞ் செய்தேன்
இலையெனிற் றோல்வியென்றான் 874

Page 124
232 புனித பூமியிலே காவியம்
விடைபெற முன்"அ மீர்"கள்
வேந்தனும் அவரை நோக்கி “நடைமுறைக் குகந்த தொன்றை
நானுரைத் திடுவேன் சென்று டைகொணர்ந் திடுக "சுல்தான்"
விரும்புவ ராயி னென்றே தொடர்ந்தனன் வருமா றுள்ளம்
தேர்ந்ததை யவருங் கேட்டார் 875
“புனிதவிப் பூமி தன்னைப்
டித்தர சோச்சு மெண்ணம்
எனதிலை சுல்தான் கையில்
இருக்குமோர் ஆலயத்தை மனமுரண் டில்லா தெங்கள்
மதவழிபாடு செய்ய தன8 கை மாற்றி எம்கை
இந்திடில் நலமா" மென்றே 876
"மு னமொரு கால்நான் "ஆதில்"
முன்வைத்த நிபந்தனைகள் தனைமறந்த திடுவேன் சுல்தான்
சம்மதித் திடுவராயின் இனுமொரு போர்நாம் செய்தே
இழப்பதோ வீரர் தம்மைச் சினமழிந் திதனைச் சற்றுச்
ந்திக்கக் கூறு" மென்றான். 877
வேறு
ரிச்சாட் அனுப்பிய செய்திக் கரசர் அச்சண மேபதில் அறிந்திடத் தந்தார் “நானென் மனைவி மக்களி னோடே வானோ னருளால் மகிழ்வாய் வாழ்கிறோம் உலகினி லாசை உளத்திருந் தகற்றி நலமே மார்க்க நற்பணி செய்யும் எண்ணத் துடனென் வழிநான் தொடர்ந்து கண்மூ டிடவுங் கருத்தோ டுள்ளேன்
 

அமீர்களின் இரகசியத் திட்டம் 233
இச்சிறு சேவை தனையிறை யோனும் நிச்சய மேற்பான் எனும் நல் லுறுதி கொண்டவ னாகக் குறிக்கோ ளதிலே வென்றோ வன்றி வீரநல் மரணம் நன்றே வரினம் நானதை ஏற்பேன் இறுதி வரையென் இலட்சியப் பாதை சிறிதும் மாறா தேதொடர் வேன்நான் என்னுடைய வீரர்க் கிதுவோர் சிரமம் என்றிலை மழைவெயில் கால மனைத்தும் வெவ்வே றாக வந்தீங் கிருப்பர் இறுதியில் மன்னர் என்றோ வோர் நாள் உறைபதி செல்ல வுவப்பது நியதி அந்நாள் வரிலிம் மண்ணெலா மெங்கள் சொந்தம் என்பதை செகமே அறியும் பலவா யிரங்கல் கடந்தீங் குற்ற நிலம்புதி யோர்க்கு மழையும் பனியும் பொருட்டிலை யாயின் எம்மவர் தமக்கு ஒருபோழ் தேனும் ஒவ்வா தாக அனைத்திலும் மேலாய் ஆண்டவன் எவர்க்குத் தனதரு ளைத்தரு வானோ அவர்க்கே வெற்றியு முண்டா மென்பதி லெனக்குச் சற்றேனும் ஐயம் இலையதை யேற்பேன் என்றன் நிருபம் இருந்ததா மம்மா 878
வேறு
சுல்தானின் பதில்கண் டேதன்
சிந்தனைப் பரியீர் நாட்கள் பல்வகைத் திக்கு மோடப்
பதிலிலா திருந்தான் ரிச்சாட் சொல்லிய வாறாய் "ஹென்றி"
“ஜெரூஸல" மன்னனக்கால் 6J 6) Guo G36AJIT GEG: GS) GOT GELLIT GEL
வந்துற்றான் உதவிக் காங்கே 879

Page 125
234 புனித பூமியிலே காவியம்
அப்பொழு தெதிர்ப்பு றத்தில் அமிர்களும் ஒன்று கூடித் தப்பான திட்ட மொன்றைத்
சுல்தானும் அறியா வாறே. ஒப்பியே முடிவுங் கொண்டார்
உளம்பழிவாங்கத் தூண்டச் செப்பிட வியலா தன்னார்
தோல்வியால் கொண்ட வஞ்சம் 88O
44. சமாதான வேட்கை
இரகசியத் திட்டத்தை வகுத்த பேருள்
இருந்தனர்முன் "ரிச்சாட்"டைக் கண்டு வந்தோர் சரியான காவலிலா தவனி ருக்கச்
சந்தர்ப்பம் அதுதானென் றெண்ணி யாரும் தெரியாத வாறிரவில் கவர்ந்து வந்து
தமதுவசங் கொள்ளவென எண்ணினார்கள் புரியாத பேரவர்கள் புரியா வாறே
புரிந்திருந்தான் ரிச்சாட் முன் நோக்கும் போதே. 881
தன்னோடு பேசுகையில் சுற்று முற்றும்
திரும்பியங்கு நிலைமைகளை நோட்டமிட்ட அன்னவரைக் கண்ணுற்ற அரசன் மிக்க
அவதானத் தோடிருக்கப் பணித்திருந்தான் கண்ணயர்ந்து தூங்குகின்ற நடுச்சா மத்தில்
கூடாரம் நோக்கிஐந் நூறு வீரர் மன்னவனைக் கவர்ந்தேகச் சுற்றி வந்தார்
மாற்றாரால் சூழ்வதவரறிந்தி லாதே. 882
தாமறியாப் போதுதமைச் சுற்றி வந்த
தந்திரத்தைக் கண்டயர்ந்த முஸ்லிம் வீரர்
தாமேதம் தவறாலே தேடிக் கொண்ட
தேட்டத்தை எண்ணிமனம் வருந்தினார்கள்
ஏமாறா தாங்குற்றான் "ரிச்சாட்" போருக்
கேற்றவுடை தரித்தவனாய் அவரை நோக்கி
ஏமாந்து போனீர்க ளாவென் பான்போல்
ஏளனமாய் வினாவொன்றைத் தொடுத்திட்டானே. 883

சமாதான வேட்கை
“எனையழைத்துப் போவதற்கா இந்த வேளை
இங்குவந்தீர் அமீர்களேநீ" ரென்று மன்னன் னமடக்கி நையாண்டி செய்யக் கேட்டுச்
சினமுற்றார் அமீர்கள்தாம் சுல்தான் தம்மின்
அனுமதியைப் பெறாதிந்தக் காரி யத்தில்
அடியெடுத்து வைத்தபிழை எண்ணி நொந்தார்
மனமாற்றா தவர் சுற்றி நின்ற மாற்றார்
மீதுபழிதீர்க்கவெனப் பாய்ந்திட்டாரே
கடுஞ்சண்டே மூண்டதாங்கே இருபு றத்தும்
கண்டபடி உயிர்ச்சேதம் விளைந்து வானைத் தொடும்வாறு கூக்குரலும் கூடிற் றஃதைத்
தாங்கியேகாற் றலைகளெங்கும் பரவிச் செல்லும் உடனதனைச் செவிகொண்டார் முஸ்லிம் வீரர் ஒதினார்போய் சுல்தானின் சமுகத் தேயோர் படையுடனே புறப்படவுஞ் செய்தார் சுல்தான்
பெரிதுமந்தச் செய்திக்காய் வருந்தி னாரே
தொடர்ந்துமொரு படைசெல்ல நிலைமை மாறித்
தோல்விகாணும் நிலைதோன்றக் கிறிஸ்த்து வீரர் படைகோட்டைக் குட்புகுந்த ததைப்பின் பற்றிப் போனசுல்தான்படையும் துரத்திக் கொண்டே நடைபெற்ற நிகழ்வுகளை அறிந்த ரிச்சாட்
நேராகக் கடற்கரைக்கு விரைந்தான் ஆங்கே படகுகளில் ஒளிந்தோட ஏறு கின்ற
படையினரைக் கண்டுமன வெறிகொண் டானே
ஒளிந்தோட முயலுகின்ற வீரர் கண்டே
உணர்ச்சிபொங்கக் "கோழைகளா இறங்கிக் கோட்டை வெளிச்சென்று போரிடுக" எனச் சினக்க
வார்த்கைளாற் செவிபொசுங்கிக் கிறித்து வீரர் தெளிவடைந்தார் மன்னன்முன் நின்ற தாலே
துணிவுகொண்டே போரிடவுஞ் சென்றார் மன்னன் களம்புகுந்தான் கடல்தங்குங் கப்பல் கட்குக்
கடிதினி லோர் ஆணைதனை விடுத்த வாறே
884.
885
886
887
235

Page 126
236 புனித பூமியிலே காவியம்
கடற்பரப்பிற் காத்துநின்ற படையி னோர்க்குக்
கரைநோக்கி வருகவெனப் பணித்து முன்போற் படையோடு களம்புகுந்தான் ரிச்சாட் மீண்டும்
பழிவாங்கும் உணர்வோடு சமரிட்டானே அடைந்தான் உட் கோட்டையுள்ளே ரிச்சாட் என்றே
அறிந்தமுஸ்லீம் படையினர்கள் அங்கிருந்தே இடம்பெயர்ந்தார் வெற்றியெவர்க் கென்றே யெண்ண
இயலாத வாறுயுத்தந் தொடர்ந்த தன்றோ
உயர்ஜாதிக் குதிரையின்மேல் ஈட்டி பாய்ந்தே
உயிர்கொள்ள வழியின்றி “ரிச்சாட்" மன்னன் அயல்நின்ற வீரன்பரி தனைக்கொண் டேபோர்
அரக்கனுக்குத் துணைநின்றான் அந்தப் போழ்தில் உயர்ஜாதி அசுவங்க ளிரண்டி னோடே
ஒருகையில் வெண்கொடியைத் தாங்கி யாங்கே அயல்வந்தா னொர்வீரன் இவற்றை 'ஆதில்"
அன்பளிப்பாய்த தந்தாரென்றுரைத்த வாறே
கிறிஸ்த்தவரின் படைவீரர் எச்ச ரித்தார்
கேடுண்டாம் இதிலென்றே ‘பரிக ளைநீர் பெறவேண்டாம் உமைச்சுமந்த அவையின் மீண்டும்
பகைவர்வசம் மீளு"மென்றே கேட்ட மன்னன் “வெறிகொண்ட பசாசெனினும் நன்றே இங்கு
வேண்டியதோர் பரியெனக்கா"மென்றே கூறி பொறுமையிலா ததிலொன்றைப் பற்றி னான்பின்
பாய்ந்தேறிக் கொண்டுகளஞ் சுழல லானான்
மாலைவரை போர்நடந்த திருத ரப்பும்
மாறிமாறி வெற்றியின்பால் நகர்ந்தே மீண்டார் காலைவாரி விடும்யுத்தம் என்னும் வேளை
காற்றலையைத் தக்பீரின் ஒலிபிளக்கும் வேலையிலும் ஈடுபட்டார் அமீர்கள் வீரர்
வீறுகொண்டார் இறைநாமங் கேட்டதாலே காலமுதிர்ந் தழிந்ததுபோல் விரைவாய்ப் போரிற்
கணக்கின்றி வீரருயிர் இழந்திட்டாரே
888
889
890
891

சமாதான வேட்கை
அதுமுடிவுப் போராட்ட மென்ப தாலோ
அதிகமுயிர்ச் சேதமிரு புறத்தா ருக்கும் முதிர்ந்தவிராப் போழ்திருந்து மறுநாள் மாலை
முன்வரையும் நிகழ்ந்ததந்தப் போரும் வீரர் அதிசோர்வுக் குள்ளானார் வெயிலின் வேகம் அதிகரிக்க ஆங்கிலேயர் பாதிப் புற்றார் பொதுவாகப் போனதன்று போரும் வெற்றிப்
பெருமையெவர் பக்கத்தும் நிலைக்கா வாறே.
வெற்றிதோல்வி யற்றுப்போர் முடிந்து மன்னன் வந்துமுகா மடைந்தமறு நாளிற் காலை வெற்றிகாண்ப தென்றமன வுறுதி தன்னை
வரித்தவனாய்த் துயில்கொள்ள முயன்றிட்டானே கொற்றவனோ பகலவனைக் காணா வாறு
கொடுஞ்சுரமொன் றன்றிரவே தாக்கிற் றஃது மற்றவரும் எழுந்திருக்க இயலா வாறு
மேவியது பாசறைகள் பலவற்றுள்ளே
கிறிஸ்த்தவரின் பாசறைகள் சாக்கா டாகக்
கிடப்பதனைக் கண்கணிக்க சுல்தான் சென்று அறிந்துவரத் தூதுவனை அனுப்பி னாராங் கரசனுடல் நிலையறிந்து வருத்த முற்றார் வெறுத்தாலும் ஆபத்தில் உதவி செய்ய
வேண்டுமெனும் மனங்கொண்டே அவனு வக்கம் நறுங்களிக ளோடுபனிக் கட்டி "ஷர்பத்'
நிறைந்தபெரும் பொதிகளினை அனுப்பி னாரே
வெட்பதட்ப நிலையுவப்பா யில்லா தொன்றே
வேந்தனுடல் நிலைக்குரிய ஏது வென்று கட்டாயஞ் செய்தனராங் குற்ற மற்றோர்
கோட்டைக்குத் திரும்பிடவே வேண்டி நின்றார் உட்டணமுங் குறைந்துமன்னன் சுகமுங் கொண்டான்
உளமாறக் கொண்டிட்டான் சமாதா னத்தை நட்பினையுங் கொள்ளவெண்ணி சுல்தா னுக்கு
நிருபமொன்றும் அனுப்பியவன் வைத்திட்டானே
892
895
894.
895
237

Page 127
238 புனித பூமியிலே காவியம்
45 போர் நிறுத்த ஒப்பந்தம் புரிந்திருந்தார் ரிச்சாட்டின் குணத்தை சுல்தான்
புதிதாயோர் போர்க்கவனுந் துணியா னென்றே தெரிந்தாலும் எந்நிலைக்குந் தயாராய் வீரர்
தமையிருத்திக் கொள்ளுமொரு எண்ணங் கொண்டு ஜெரூஸலத்தை அடைந்துபடைப் பிரிவை மாற்றி எகிப்திருந்து வந்தபடை யுதவி கொண்டார் உரியவருக் குரியவிடங் கொடுத்தார் சேவைக்
குதவாதோர் தமைநீக்கிச் சீர்செய் தாரே.
நெடுநாட்கள் இராணுவத்தில் சேவை செய்தோர் நீங்கவதற்க் கேற்றபடி புதியோர் ஒன்றப் பிடியுண்ட இடங்களிலே கொள்ளை போன்ற
பாதகங்கள் செய்தோர்கள் விலக்கலுற்றார் கடும்போர்தான் வரினுமதை யெதிர்த்தே வெற்றி
கொள்ளவல்ல படையொன்றை சுல்தான் சேர்த்தார் முடிவாகி இவையனைத்தும் இருக்கும் போதே மறுபுறத்தின் தூதுவனாங் கேகி னானே.
கிறிஸ்த்தவரின் ஆதிக்கத் திருந்த ஒரீர் குறுநிலமுந் தப்பாது மீட்ப தென்னும் குறிக்கோளே மிகைத்துசுல்தான் இருக்கக் கண்டு
கொதிப்படைந்த கிறிஸ்த்தவர்கள் ஒன்று சேர்ந்தார் பறியுண்ட ஜெரூஸலத்தைக் கூறு போட்டுப் பகுதிபகுதியாயாண்ட சிலபே ரோடு நிறைந்திருந்தார் கிறிஸ்தவர்கள் தலைமு றையாய்
நெடுங்காலம் வாழ்ந்துரிமை கொண்ட பேரே,
மற்றவர்கள் மதவுணர்வால் தூண்டப் பட்டு
மன்னர்'ஸலா ஹலத்தீனின் பிடியிருக்கும் பொற்புறுமப் பூமியெலாம் மீட்ப தென்னும்
பெருநோக்கோ டாங்குற்றார் "இங்கிலாந்தும் மற்றுமுள “ஜெர்மனி"யும் "ஆஸ்த்தி ரீயா"
மேலும் “இத் தாலியர்கள் இன்னும் பல்லோர் ஒற்றுமையாய் வந்ததெரிர்த்தார் எதிரி யாக
ஒப்பியது முஸ்லிம்கள் தனைத்தா னன்றே.
896
897
898
899
 

போர் நிறுத்த ஒப்பந்தம்
எல்லோரும் ஒன்றிவந்தே எதிர்த்த போதும்
இணையில்லாப் பெருவீரர் “ஸலாஹcத் தீனின் சொல்மாறா முஸ்லீம்கள் படையி னாலே
துவம்சமடைந் திடவவரின் ஒற்று மையும் நில்லாது போனதொடு நினைந்தே வந்த
னைவுகளும் கனவாகிப் போன தன்னள் வல்லவரென் றிருந்தவரும் தோல்வி கண்ட
விதியையெடுத் துரைப்பதும்பேரிழிவா மம்மா
பலருமெதிர் பார்த்திருந்த வாறாய் "ரிச்சாட்"
புறப்படுவான் விரைவிலவன் நாட்டுக் கென்றே நலம்நாடித் தூதனுப்ப நினைத்தார் சுல்தான்
நீடித்த போராட்டம் அப்போதைக்குச் சிலகால மேனுமொரு முடிவு கொள்ளுஞ்
சிறப்புறவிம் மண்ணையுரு வாக்கல் கூடும் இலட்சியத்தைப் பின்னொருகால் நிறைவு செய்ய இயலுமெனுந் திருப்தியினால் இருந்திட்டாரே
"ஆதி"லினை அழைத்துவரு மாறு தூது
அனுப்பினனே சமாதானம் வேண்டி ரிச்சாட் போதுமான பதில்கிடைத்த பின்னே தம்மின்
பின்பிறந்தார் தமையனுப்ப நினைந்தார் சுல்தான் ஏதுவவன் நிபந்தனைகள் எம்மீ தின்றென்
றறிந்துவரத் தூதுவிட்ட மாமன் னர்போல் தூதுவரை ரிச்சாட்டும் அனுப்பி வைத்தான்
தொடர்ந்துசெய்தி பரிமாறப் பட்ட தன்றோ
இருசாரா ரும்மவர்கள் வசமா யுள்ள
இடங்களினை அதுவாறே கொண்டிட்டாலும் திரும்பவளித் திடவேண்டும் "அஸ்க லான்ைன"ச்
சுல்தானின் வசமென்ற நிபந்தனைக்கு விரும்பாது தன்முடிவில் ரிச்சாட் நின்றான்
வேந்தருந்தன் முடிவினையே மீட்டுச் சொன்னார். ஒருவாறு இறுதியிலே சுல்தான் கொண்ட
உறுதியின்முன் "ரிச்சாட்"தன் திடந்த ளர்ந்தான்
9 OO
901
902
903
239

Page 128
240 புனித பூமியிலே காவியம்
சுற்றியுள்ள மதில்களினைத் தகர்த்து யாருஞ் சென்றுவர லாமென்ற நிபந்தனைக்கு முற்றுமவ ரிணங்கினரே பொதுவா யஃது
மூன்றாண்டு காலம்வரை யாகும் எங்குஞ் சற்றுமச்ச மின்றியிரு தரப்பி னோரும்
சுதந்திரராய்ச் சென்றுவர அனுமதிப்பைப் பெற்றவரே ஜெரூஸலத்துட் புகலாம் ஆனால்
பொழுதடையுமுன்மீளல் கடனென்றாரே 904
ஆயிரத்தோ டொருநூற்றத் தொண்ணுாற் றொன்று அறுதிபெறத் தொடர்மும் மூன்றான திங்கள் நேயரொடு மன்னருடன் பிறந்த "ஆதில்"
நட்பேந்தி "அக்கா"வின் கோட்டை சென்றார். தூயமண்ணின் சிற்றரசர் பலபே ரோடு
சேர்ந்திருந்தார் “ஹாஸ்பிடளர்ஸ்" "டெம்ளர்ஸ்" ஆனோர் நோயுற்றுப் படுத்திருந்தான் "ரிச்சாட்" மன்னன்
நாடியவா றொப்பந்தந் தயாரா யிற்றே. 905
ஒருவர்பின் ஒருவரெனப் பிரமா ணத்தில்
ஒப்பமிட்டார் ஒப்புதலைத் தெரிவித் தோராய் அருகமர்ந்து "ரிச்சாட்"டின் செவிக ஞக்கும்
அறிவிக்க முயன்றிட்டா ரொருவ ரஃதை எரிச்சலுடன் கையசைத்து நிறுத்தக் கூ
ஏற்பதுவாய்க் கையொப்பமிட்டான் மீண்டு வருவேனில் வொப்பந்தம் முறிய மண்ணை
வென்றெடுப்பேன் எனச்சபதஞ் செய்த வாறே. 906
கிறிஸ்த்தவர்கள் ஒப்பமிட்ட மறுநாள் சுல்தான்
ஜெரூஸலத்தின் வெளியில்தன் முகாமிருந்தே கிறிஸ்த்தவரின் தலைவர்களின் முன்னாற் தானும் கையொப்பமிட்டுறுதி கொண்டா ராங்குக் குறித்தில்லா திருந்த"பொஹி மாண்'டின் ஒப்பம்
கொடும்பகைவன் “அந்தகீயா" அரசன் ஒப்பம் உறுத்தியவர் ஒப்பமிட வைத்த பின்னே
ஒப்பமிட்டார் மாமன்னர் "ஸ்லாஹமத் தீ"னே 907

SLSLSLSLSLSLSLSL
போர் நிறுத்த ஒப்பந்தம் 241
காற்றினிலிச் செய்திதனைக் கரைத்தே எங்கம்
கொண்டுசெலப் பணிந்ததுபோல் குறும்போழ் தில்போய்ச் சாற்றியதார் செவிகளிலே புனித மண்ணில்
சுதந்திரராய் மறுகணமே மனிதர் மாறி வேற்றுணர்வே யற்றவராய் எதிர்ப்பு றத்து
வலம்வந்தார் விஷமமொன்றும் நிகழா வாறே நேற்றுவரை எதிரிகளாய் இருந்தோ ரின்று
நேயமுற ஒப்பந்தங் காலாயிற்றே 908
நெடுநாள்தாம் கொண்டிருந்த சை விஞ்ச
நிபந்தனைக்குட் பட்டபடி கிறிஸ்த்த வர்கள் படைகொண்டார்“ஜெரூஸலத்தைத் தரிசித் தார்கள்
பிறநாட்டார் முன்னுரிமை பெற்றிட்டாரே உடல்தேறிக் கொண்ட "ரிச்சாட்" தன்னை நோக்கி
உடனிருந்தோர் உரைத்திடுவார் அவனுஞ் சென்றே தடையில்லாப் போழ்தினிலே ஜெரூஸ் லத்தைத்
தரிசித்து வருதல்நலம் என்ற வாறே. 909
புனிதமண்ணை வந்தடைந்த "ரிச்சாட்" நெஞ்சில் பூத்தனவி ராசைகள்தான் ஜெரூஸலத்தின் புனிதமிகும் ஆலயத்தைத் தரிசித் தேபின்
பேரரசர் சுல்தானைக் கண்ப தென்றும் எனினுமிவை இரண்டுந்தான் ஜெரூஸ் லத்தை
என்வசமாய்க் கொண்டபின்னே எனவிருந்தான் கனமுயற்சி செய்துமது கைகூ டாது
காத்திறுதி வரைசுல்தான் தடுத்திட்டாரே 910
சந்தர்ப்பம் பார்த்துஜெரூ லத்தைச் சென்று
தரிசிக்கக் கூறமன்னன் மறுத்தான் முன்னர் எந்தநிலை வரினும்என் வாட்ப லத்தால்
இல்லாது செல்லேனென்றுறுதி கொண்ட தந்நிலையை அவர்களுக்குக் கூறி னான்யார்
தயவாலும் சென்றிடநா னொப்பே னென்று சந்ததமுஞ் சிந்தனையி லாழ்ந்தான் "ஹைபா"
சென்றங்கே தரித்திருந்தான் அமைதியற்றே. 911

Page 129
242 புனித பூமியிலே காவியம்
எல்லையற்ற துயர்மனத்தைச் சாடும் போது
ஏற்கின்ற வேதனையை போக்க நெஞ்சை மெல்லிசையால் வருடவெனத் தனித்தி ருந்தே
மன்னவன்தன் பாடகனைப் பாடச் சொல்வான் அல்லலினை மறக்கச்சில வேளை வேட்டைக்
கழைத்தேகும் ராஜாளியோடு கான எல்லைதாண்டிச் சுற்றிவரு வானே காலம்
எப்படியுங் கழியட்டும் எனும்பங்காக 912
திருமணத்தின் பின்மனவிை “பெரன்கோ ரிய்யா" சேர்ந்தவனோடிருக்கமுதல் கிடைத்த பேற்றை உரிமையுடன் அனுபவிக்க எண்ணுங் காலை உதாசீனத் தாலவளை வருந்தச் செய்வான் மருவியவள் பணிவிடைகள் செய்தல் கூட
மிகவெறுப்பை பூட்டுவதா யிருந்ததாலே எரிந்துவிழு வானவளின் இனிய சொல்லும்
இதயத்தைத் தைக்குஞ்சர மாய்க்கொண் டானே 913
அமைதியற்று "ஹைபா'வில் அவனி ருக்க
ஆயிரங்க ளாயிரமாய் யாத்திரீகர் சும்மைஜெரூ ஸலத்துள்ளே செல்ல வென்று
சேர்ந்தொன்றிச் சென்றபடி இருந்தார் மன்னர் அமைத்திருந்த சத்திரங்க ளில்ல வர்தம்
அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்தார் இமைப்பொழுதும் ஓய்வின்றி முஸ்லிம் வீரர்
இட்டபணி மேற்கொண்டே உதவி னாரே 914
சுல்தானின் அனுமதியைப் பெற்றுள் ளேபோய்த் தெய்வபள்ளி தரிசித்தே வருவோர் நாவில் சுல்தானை இகழ்ந்தபழிச் சொல்லே எஞ்சி இருந்ததவ ரதைமீட்கக் கொடாததாலே பொல்லாமை கொண்டதனால் "ரிச்சாட்" மன்னன் “பிரஞ்"சினரை அனுமதிக்க வேண்டா மென்று சொல்லியொரு தூதுவிட்டான் அதனை சுல்தான்
சிறிதேனும் மனங்கொண்டா ரில்லை யன்றே 915

243
"எல்லோருங் கிருஸ்தவரே ஏற்றத் தாழ்வே
இலைசிலுவை வீரருள்ளே அனைவருக்கும் நல்லதொன்றே நான்செல்வேன்"என்றே சுல்தான்
ருமொன்றை ரிச்சாட்கை பற்றச் செய்தார் நல்லபடி உபசரித்துப் பரிசும் தந்தார்
நாடிவரும் பாதிரிமா ரனையோ ருக்கும் எல்லோரும் போல்வந்த ‘பிஷப்"பைத் தம்மின்
இருப்பிடத்திற் கழைத்துயர்வு செய்திட்டாரே. 916
எதுதானும் நிறைவேற்றி வைப்பேன் நீங்கள்
எண்ணுகின்ற தொன்றையென சுல்தான் கூறச் சதாகால மும்மிரண்டு வேளை நாளும்
ஜெரூஸலத்துப் பள்ளியிலே பூசை செய்ய உதவிடவும் வேண்டுமதற் குகந்த வாறே
உள்ளிரண்டு பாதிரிமார் தங்க வேண்டும் இதுவேயென் ஆசையென ‘பிஷப்"பும் கூற
இன்றிருந்தே தொடர்கவெனப் பணித்திட்டாரே 917
திரண்டுவரும் யாத்திரிகர் கூட்டம் கண்டே
தனது "ஹஜ்ஜூ"க் கடமைதனை இதுநாள் மட்டும் புரியாது விட்டகுறை யுணர்ந்தர் "ரிச்சாட்"
போனபின்பு “திமிஷ்க்"கடைந்து ஆட்சி தன்னைச் சரிசெய்த பின்னடுத்து வரும்"ஹஜ் ஜை'த்தான் செய்வதெனத் தீர்மானங் கொண்டார் சுல்தான் உரியவந்நாள் வருமுன்னே மக்க ளுக்கு
உற்றதுணை சேர்த்துவைக்க நினைந்திட்டாரே. 918
ஒன்றோடின் ஒன்றாக உளங்க ளொன்றி
உடலனுகாக் காதலினால் இன்புற்றோரை ஒன்றாக்க நினைந்துடனே சுல்தான் ஏற்ற
ஒழுங்குகளை மேற்கொள்ளப் பணிப்பு ரைத்தார் நன்றேயக் காதலர்கள் "அஸி"ஸoம் "ஆனும்"
நல்லிளவல் 'தாஹீ“ரும் “ஹெல"னும் சேர்ந்தே ஒன்றாக 'ஸைபுத்தீன்" "ஜமீலா" வாழ்வும்
ஒருங்கிணைய நாள்குறித்துச் செயற்பட்டாரே 919

Page 130
244 புனித பூமியிலே காவியம்
நீண்டநெடுங் காலம்போர் புரிந்து மாற்றார்
நினைந்துவந்த மனக்கோட்டை தகர்த்தே யன்னார் மீண்டுதங்கள் தோல்விதனை ஏற்றுச் செல்ல
முஸ்லிம்கள் செய்தபெருந் தியாகந் தன்னை ஆண்டவனின் அருளென்றே கொண்டு மந்த
அருட்கொடையின் நினைவாக நாங்கள் போற்ற வேண்டுமென நினைந்தசுல்தான் மணவி ழாவை
விமரிசையாய்ச் செய்வதென எண்ணி னாரே
எண்ணப்படி திருமணத்தின் நாள்கு றித்தே ஏற்பாடு மிகச்சிறப்பாய்த் தொடர சுல்தான் கண்ணியமாய் அழைப்பொன்றே விடுத்தார் "ரிச்சாட் கலந்துகொண்டு வாழ்த்துரைக்க வேண்டும் என்றே புண்ணுண்ட மனத்தினனாய் இருந்த தாலும்
புண்ணியவப் பூமியினைத் தான்வெல் லாது மண்மிதிப்ப தில்லையெனுஞ் சபதத் தாலும்
மன்னனந்த அழைப்பேற்க மறுத்திட்டானே.
“என் தங்கை ஜோனுக்கும் உங்க ளன்பின்
இளையவராம் స్ట్రేఖ திரும ணத்தை முன்பொருகால் செய்விக்க முனைந்து தோற்றேன் மாமன்னர் நீங்களதை அறிவீர்கள்"ஆன்" என்னுறவுப் பெண்ணென்ற கார ணத்தால்
ஏமாற்றஞ் சிறிதுகுறைந் திடும தைப்போல் மன்னர்மகன் 'தாஹீ"ரும் "ஹெலனை" ஏற்கும்
மணவினையும்" எனக்கூறித் தொடர்வா னின்னும்
“எனதுமன விருப்புப்பே ராழி போலாம்
இருப்பினும்நான் எவ்வாறு சபதம் மீறிப் புனிதமண்ணை மிதிப்பேனென் னுணர்வில் மானம் பேரலையாய் வீசுகையில் இருந்தும் என்றன் மனம்நிறைந்த ஆசிகளை மணமக் கட்கு மானசீகமாகவிதன் மூலஞ் சொல்வேன் இனுஞ் சிலவாண் டேகிடநான் மீளவே னென்றன்
இதயத்தில் ஏற்றபெருஞ் சபதம் தீர்ப்பேன்"
922
923
 
 
 

போர் நிறுத்த ஒப்பந்தம்
பேரரசர் அழைப்பிற்கு ரிச்சாட் மன்னன்
பதிலாக அனுப்பிவைத்த ஒலை கண்டு பேரரசர் பதிலொன்றும் அனுப்பி வைத்தார் பாராட்டும் வாழ்த்துக்கும் நன்றி கூ “நேரிட்டால் நானிந்த மண்ணி ழக்க
நிச்சயமாய் விரும்பிடுவேன் ரிச்சாட் மன்னன் போரிட்டுக் கைக்கொள்வா ராயின்" என்றும்
பொறித்திருந்தார் நிருபத்தின் முடிவில் அன்றே.
உயிரோடே இருக்குங்கால் நிலப்ப ரப்பில்
ஓர் சிறிய பகுதியையும் சுல்தான் மாற்றார் வயமாக விடவில்லை ரிச்சாட் மன்னன்
வரித்தசப தத்தினையும் முடிக்க வில்லை புயபலத்தை மட்டிலுமே நம்பா(து) ஏகன்
பேரருளை நம்பியேவாழ்ந் திருந்தார் சுல்தான் புயபலத்தை மட்டிலுமே நம்பி ரிச்சாட்
புகழழிந்தே இழிவுற்றான் பழியுங் கொண்டான்.
புண்ணிய பூமி மீது
பிறந்தநற் பயனா மென்றோ கண்கவ ரழகை யெல்லாங்
கவர்ந்துதன் னகத்தே யேற்று மண்வளங் காட்டி யந்த
மலர்வனந் திகழ்ந்த தாங்கே எண்ணத்திற் குடிகொண் டோனை
எதிர்பார்த்தே "ஆன்"இ ருந்தாள்.
வருவனென் றெண்ணி வீதி
வழிவிழி பதித்தி ருந்தாள் திருமுக வெழில்கா ணாதே
தவித்தவன் வரவுங் கண்டாள் உருவினி லழக னந்த
ஊராளு பதியின் செல்வன் மருவிடு முன்ன வன்பால்
ட்டனள் தனை"ஆன்" சற்றே.
245
924
925
926
927

Page 131
246 புனித பூமியிலே காவியம்
காதலன் வருகை கண்டு
கண்மலர் பூக்க ஆனும் பாதிமுன் நடந்தாள் சுல்தான்
ள்ளையும் அருகி லானான் ஏதுபே றுடைத்தேன் நானும்
இம்மாபே ரழக னென்றன் காதலுக் கேங்க வென்னுங்
கருத்துந்த நண்ணி னாளே. 928
போர் வடு நிறைமார் தோள்கள்
பெருமலைக் குன்றங் கண்கள் சீரிய ஞானங் கூறும்
திவ்விய பிம்பம் நெஞ்சின் ஓர்மையின் பாங்கு காட்டி
ஊன்றிடும் பதங்க ளோடே காரிகை முன்வந் துற்றான்
கடுகினாள் நெஞ்சு றைந்தாள். 929
நெஞ்சோடு அணைத்தான் நங்கை
நடுங்கினள் உணர்வும் விஞ்சத் தஞ்சமென் றவன்க ரத்துட்
றனையிழந் தவனுள் ஆனாள் அஞ்சினாள் பிறர்கண் பட்டால்
அரசரும் அறிவா ரென்றே பிஞ்சுடல் தவிர்த்தாள் நாணம்
பீறிட நின்றிட் டாளே. 930
அங்கையுள் முகம்பு தைத்தே
"ஆன்" தலை குனிந்தாள் வெட்கிப் பயங்கயத் துள்ளோர் நாகம்
படம்புதைத் திருக்க லொக்க நங்கையின் அருகில் நண்ணி வினான் குழலை நம்பி சங்கொத்த கழுத்து யர்த்திச்
சிரித்தனள் கவிதை போன்றே. 931

போர் நிறுத்த ஒப்பந்தம் 247
அலையடித் தோய்ந்து மற்றோர்
அலைகரை வருமுன் தோன்றும் அலைவாயின் கரையை ஒக்கும்
அழகினின் கருமை தோற்ற அலையலை யாய்ப்ப டிந்த
அழகுறு அழகை "ஆன்" முன் அலையவிட் டகன்றாள் நெஞ்சின்
அசைவினுக் கசைந்த தன்றோ 932
அகத்தியின் மலரி ரண்டின்
அடிகளைந் தெதிர்த்தெ திர்த்தே மிகைத்திடா திளஞ்செஞ் சாந்தை
மேவிடச் செய்திட் டாற்போல் சிகைதொடங் கிடமி ருந்தீர்
செவிவரை நீள்நு தல்தம் மிகையெழில் கண்டான் மன்னர்
மகன்மனம் ஏங்கி னானே. 933
அழகுறு நுதலின் கீழே
அமைந்தவீர் புருவ விற்கள் வளைந்ததேன் நயன அம்பை
விசைத்திடத் தாமோ அன்றி விழிமல ரிரண்டின் சோபை
விஞ்சிடத் துணைசெய் தற்கோ எழிலினுக் கெழிலாய் நீண்டே
இருபுறத் திருந்த தம்மா. 934
கூரிய கைவாள் கொண்ட
கொடுமுனைத் தடம்போல் நீண்ட காரிரு விழிக ஞம்மை
கொண்டின்னுந் துலங்கப் பக்கம் சீரிய வடிவில் வைரத்
தோடுடைச் செவிகள் மின்ன காரிகை நின்றாள் காண்போர்
கண்படு பாங்கி லாங்கே 935

Page 132
248 புனித பூமியிலே காவியம்
கனியுமுன் மாது ளையைக்
கவர்ந்தெடுத் தவற்றின் முத்தைக் கனியிதழ்ச் செவ்வா யுள்ளே
கோத்துவைத் திருப்ப தொப்ப அணியிரண் டாகப் பற்கள்
அமைவுறக் கொண்டாள் கண்டே தனைமறந் திருந்தான் சுல்தான்
தனையன் "அல் அஸீஸ்" அஞ் ஞான்றே
பூவிதழ் மென்மை செம்மை
படர்ந்தவா கொளிரு பான்மை நாவினி னமுத மொன்றி
நனைவுறச் சுவையின் மேன்மை மேவிய விதழாள் 'கைத்தேன்" மாறென நின்றாள் கண்டே தாவினான் பற்ற அன்னாள்
தவிர்த்திடம் விலகி னாளே.
கன்னமீர் கணிக ளொக்கும்
#F சங்கை யொக்கும் முன்னமீர் மார்பி னேற்றம்
மலைமுனை வடிவ மொக்கும் சின்னமென் னிடையோ தென்றல்
தடவிடத் துவள்வ தாகும் மென்றளிர்க் கரமோ வெய்யோன்
மருவிடு மலர்போ லாமே.
தனைத்தவிர்த் தவனை விட்டுத்
தாவினாள் இடையின் கீழே கனத்தபிற் பாகம் பட்டுள்
காணாது மறைந்த போழ்தும் மனத்தினைக் கவ்வி ஈர்க்கும்
மாயமுங் காட்டிற் றன்றோ பனைப்பழம் இரண்டாங் கொன்றிப்
பதுங்கிய பாங்கு போன்றே.
936
937
938
939

போர் நிறுத்த ஒப்பந்தம்
அண்டின மலரென் நோக்கில்
அளிகளும் மென்றாள் பார்த்தே தண்டைகள் குலுங்க அஞ்சித்
திசைமாறித் திரும்பி யோடும் கெண்டையென் றெண்ணிக் கண்ட
கொக்கொன்றும் உற்று நோக்கித் தண்டலை யன்றே இஃது
தரையென மனம்மா றிற்றே.
எங்கணும் மரங்க ளாங்கே
இடையிடை செடிகள் கால்போல தொங்குமால் விழுது தோறும்
சுற்றியே கொடிகள் பூக்க பங்கயம் மலர்ந்து காணப்
பண்ணொடு குயில்கள் பாட செங்கதிர் ஒளிதெ எளிக்கத்
தேசுடைத் தோட்டத் துற்றார்
தோட்டத்து மலர்க ளோடு
தோன்றினாள் ஆனோர் காலத் தோட்டத்தின் மலரொன் றென்றே
கைத்தனன் அஸிஸும் கண்கள் காட்டிய திக்கில் மெல்லக்
கால்பதித் தகன்றான் நெஞ்சின் நாட்டமும் பலியா வாறு
நகர்த்தனள் கண்ணுற் றாளே.
ஒவ்வொரு மலராய்க் கொய்தே
ஒப்பிட்டாள் விரலோ டஃதைப் பவ்விய மாக "ஆனும்"
::*ಸ್ಟೆ சொல்வான் “கொவ்வைவாய் கிளியே உன்றன் காந்தளை வெல்வி ரற்கு அவ்வகை யொவ்வா நீயோர்
அதிசயப் பிறவி யென்றே.
940
941
942
945
249

Page 133
250 புனித பூமியிலே காவியம்
இருவரு மொன்றா யந்த
எழிலுறும் பூவ னத்துள் திருமண நாளை யெண்ணித்
திளைத்தனர் மகிழ்வால் வானில் இருள்கவிந் திடுதல் கண்டே ஏந்திழை அச்சத் தாலே பிரிந்திட விழைந்தாள் கூறிப்
பறந்தனள் மாளி கைக்கே.
"ஆனொ"டு “6 ہدیےr$“6fu۔DLف “தாஹீர்" அகம்நிறை “ஹெல"னும் 'ஸைபுத் தீனோடு ஜமீலா வுஞ் சேர்
திருமண நன்நா ளொட்டி வானோடு மண்ணும் பொங்கி
வழிந்தன மகிழ்வாலன்னார் தேனோடு பாலு மொன்றாய்ச்
சேருவ தெனுமா லன்றே
வீதிகள் தோறுந் தீயின்
வத்திகளாலே மின்னி ஏதிரா வெனுநாற் சாமம்
இலையெலாம் பகலே யென்ப சோதியை அள்ளி வீசிச்
செகத்தினைப் 'பளிச்"சென்றாக்க யாதுமே மின்னிற் றந்த
அழகுறு நகர மெல்லாம்
வெண்ணிலாக் காய்ந்த தென்ற
விபரமே அறியார் மாந்தர் மண்ணதன் ஒளிக்காய் ஏங்கும்
மாறிலை இல்லந் தோறும் எண்ணெயில் திரிகள் தோய்ந்தே எரிந்தன நிலவை விஞ்சக் கண்ணந்தக் கால மெல்லாங் காரினைக் காணா வாறே.
945
946
947
 

போர் நிறுத்த ஒப்பந்தம் 251
வகைவகைத் தோர ணங்கள்
விளங்கின வாகா யெங்கும் மிகையழ கம்ம இஃது
மறுமையின் சொர்க்க மாமோ தொகையறி வார்தாம் யாரோ திரும்பிடுதிக்கெல் லாமே புகுவழி சாலை யென்னும்
பேதமென் றிலாத வாறே 948
பல்வண்ண மலர்க ளாலே
பெரும்பெருஞ் செண்டு செய்து இல்லங்கள் தோறும் பெண்கள்
இதயத்தின் மகிழ்வைக் காட்ட முல்லையின் நகைப்பி னோடே
முன்றில்கள் தோறும் நின்றார் இல்லையீ தொப்ப அன்றும்
என்றுமே யெனும்பாங் காமே. 949
மன்னரின் மக்க ளுக்கோ
மாநகர் வாழும் மாந்தர் தன்தன தாகுஞ் செல்வர்
தமக்கது வாமோ ஈது என்னவோர் புதுமை யார்தான்
இன்றுநாள் மணஞ் செய்வோரை உண்மையாய்ப் பெற்றோ ரென்றே
உரைப்பரோ அறிவார் யாரோ 950
தாய்க்குலம் அனைத்தும் தாயாய்
தந்தையர் தந்தை யாய்நெய் தோய்ந்தகார் குழலிற் பூச்சூழ்
தோகையர் திண்தோள் வீரர் நேயராய் உடன்பி றப்பாய்
நினைந்துமே மகிழ்ந்தார் அன்பிற் றோய்ந்தவாழ்த் தொலித்தார் நீடு
தாரணி வாழ்க வென்றே. 951 y

Page 134
252 புனித பூமியிலே காவியம்
பகைவர்கள் தோற்று மீண்டு
போனதை நினைவு கூரும் வகையிலத் திரும ணங்கள்
விழாக்கோலங் கண்ட தெங்கும் முகைவெடித் தலர்ந்த தன்ன
மகிழ்ச்சியும் மலர்வா யொக்கும் மிகைமிகை அனைத்தும் அன்னாள்
முன்பென்று மிலாத வாறே
கோயில்கள் தோறும் ஆரா
தனைகளும் நடக்கப் பள் GNIJIET u Slaiò3, GaTT GbaorTLiċ
வேண்டியே இறைது தித்து தூயநல் லுள்ளத் தோடே
ருமணஞ் சிறக்க மக்கள் வாயார வாழ்த்தி னார்கள்
வாழ்கபல் லாண்டு வென்றே
திருமண விருந்துக் காகத்
தனித்தனியுணவுப் பண்டம் பெருந்தொகை செய்தார் வந்தோர் பொருந்துவ துண்ண வென்றே அருந்திடப் பானம் வேறாய்
அதனொடு பழங்கள் கண்ட விருந்தின ரயர்ந்தார் எந்த
வகையினை உண்ப தென்றே
அரிசியும் பாலும் வெல்லத்
தோடிணை “ஷெரிபின்ச்" தூய பருப்பினால் செய்த “பாஹித்"
பாற்கோதுமையின் “ரொட்டி" பொரித்தநெல் லுள்ளிட் டோடே பயிறுடன் ஊன்கலந்து நெரித்தெடுத் தவித்த “கீமா"
நெய்யினில் வறுத்த "ஆடு"
954
955
 

போர் நிறுத்த ஒப்பந்தம்
கோதுமை இறைச்சி கொண்ட
“கவல்க்"கீரை யாலே “ஸாகு" “வாதுமை" திராட்சை" "பிஸ்த்தா"
வகையாக மாவில் செய்து போதவெங் காயம் உப்பு
L၂gးLဂ်ါ@IT ၂ါ၊ '_L_ ““့်ငါဠိ၌ ရ္ဟိ|°° கோதுமை நெய்யில் காரம்
குழைத்தெடுத் தவித்த “தூலி"
ஆட்டினை நெய்யில் வாட்டி
அகட்டினைப் பிளந்து உள்ளே ஊட்டிடப் பூச்"சம் வா"வால் உள்ளீடு செய்தார். பாலில் கூட்டிய சைலான் ஏலம்
கிராம்பொடு கறுவா மஞ்சள் போட்டவித் தெடுத்தார் வேண்டும்
பன்னீரை யுங்க லந்தே
கருக்கிய பாலில் வெல்லங் கலந்ததில் ஏலம் இட்டு திராட்சையின் வற்ற லோடே
துகள் செய்த பாதாம் கூட்டி அருந்திடப் பானம் செய்தார்
அடுத்துண்ணப் பழங்க ளாகத் திராட்சை"மா துளை"நல் 'வாழை"
"தேமா"வின் கனிகள் சேர்த்தார்.
4
வகைவகை யாகச் செய்த
வெவ்வேறு உணவை புண்டு தொகைதொகை யாக மக்கள்
திரண்டாங்கு மீண்டார் உண்ட வகைவகை உணவிற் கேற்ப
வந்தவர் மேனி யெல்லாம் வகைவகைச் சுகந்தம் சிந்தும்
வியர்ேையா டொன்றி யாமே
956
957
958
959
253

Page 135
254 புனித பூமியிலே காவியம்
இறைவிதிப் படிம ணங்கள்
எண்ணிய வாறே சற்றுங் குறையற நடந்தே றப்பின்
கொற்றவர் குமாரர் அன்பாற் சிறையுண்ட துணைக ளோடே தேன்நில வனுபவிக்க உறைபதி விட்ட கன்றார்
ஒவ்வொரு திக்கிலன்றே. 96.O
திங்களொன் றிதழு ரிந்தே
தேய்ந்திடத் தினந்தினம்மோர் சங்கதி வந்து வந்தே
சேர்ந்திட அறிந்தான் "ரிச்சாட்" தங்கரங் கொண்டான் நாட்டைத்
தம்பியென்றவனைச் சார்ந்தார் தங்கரத் தசைவுள் நின்று
துணைசெய்த பிறரு மென்றே 961
பகைகொண்டான் சிலுவைப் போரில்
பின்னவன் நின்றோர் தம்மின் வகையிலா திவ்வா றோர்நாள்
வருமென எண்ணி னானோ சகவுடன் பிறப்பே துரோகஞ்
செய்திடில் மாற்றா ரென்ன அகக்கனல் கொண்டான் நாட்டை
அடைந்திட முடிவுஞ் செய்தான் 962
மரக்கலத் தேறி மன்னன்
மற்றவர் கண்ணோக் காதே இருக்கவென் றவன றைக்குள்
இருந்தனன் தனித்தே தன்னால் உரித்தெனக் கொள்ள வொண்ணா
தோர்நிலப் பரப்பை மீண்டும் வரித்திட விழியுள் வேண்டான்
வருந்தினான் உள்ளுறைந்தான் 96.3

போர் நிறுத்த ஒப்பந்தம் 255
தொடர்ந்தவன் ஆழி மார்க்கந்
தொடர்ந்திடா தொதுங்கிப் பூமி தொடர்ந்தனன் பயணம் மாறு
தோற்றத்தைக் கொண்டா னாகித் தொடர்ந்தது ரதிஷ்டம் காணச் செய்ததே 'ஆஸ்த்திரீயா" அடைந்திடப் பிடியுண் டாங்கே
அடையுண்டான் சிறைத்த லத்தே 964
சிறைகொண்டார் "ஆஸ்த்தி ரீயர்
"ரிச்சாட்"டை முன்பே "அக்கா புறங்கண்ட போது செய்த பேரவ மானத் திற்காய் மறுதலித் தொன்று செய்ய
முயன்றனர் பணயங் கேட்டார் சிறுமையுற் றடையுண் டான்தான்
செய்வினைப் பயணி னாலே. 965
ஏற்பட்ட சமாதா னத்தால்
இடைப்பட்ட திங்க ளொன்றின் பாற்பட்ட காலத் துள்ளே
பற்பல பள்ளி வாயில் நூற்கல்வி பெறுங்கூ டங்கள்
நோய்கொல்லும் பணிமனைகள் தோற்றுவித் தாரே சுல்தான்
துரிதமாய் ஜெரூஸலத்தே 966
சென்னறன் "ரிச்சாட்" என்று
தெரிந்ததன் பின்னே சுல்தான் சென்றாங்குச் சுற்றி யெல்லாஞ்
சீர்செயப் பணித்தார் தோதாய் ஒன்றுமே பிரச்ச னைக்கென்
றுவந்திடா வாறே எல்லை நன்றென வகுத்தார் பின்தன்
நாடேகும் முடிவுங் கொண்டார் 967

Page 136
256 புனித பூமியிலே காவியம்
மக்கமா நகரை நோக்கி
முன்சென்ற "ஹஜ்ஜூக்" கூட்டம் முக்காலும் அழிக்கப் பட்ட
மாக்கொடுஞ் செய்கை யாலே தக்கதோர் முடிவு கொண்டத்
தகவிலாச் செயல்புரிந்தோர்
சக்தியை யொடுக்க வென்றே
தொடங்கிய போரா மஃதே 968
ஒன்றன்பின் னென்றாய் அந்தப் பேர்பெறு புனித மண்ணின்
பற்பல பகுதியையும் தார்கொண்ட நெஞ்சார் சுல்தான்
தம்வசமாக்கி ஈற்றில் சீர்பெறு ஜெரூஸ லத்தை
தனதாட்சியுட்கொணர்ந்தார். 969
ஓராறு மாதத் துள்ளே
வேறு
ஆயிரத்தி ஒருநூற்று எண்பத் தொன்ப
தாண்டளவிற் றொடங்கியவச் சிலுவை யுத்தம் ஆயிரத்தி ஒருநூற்றுத் தொண்ணுாற் றிரண்டில்
அடங்கியது மூன்றாவ தெனும்பே ரோடே ஆயிரங்கள் முந்நூறு கொண்ட வீரர்
அழிந்தார்கள் கிறிஸ்த்தவருள் முஸ்லிம் வீரர் ஆயிரங்கள் ஐம்பதெனுந் தொகையி னோரே
அழிந்தாலும் வெற்றிகொண்ட வரலாறான்ார். 970
வெற்றிவாகை கொண்டபெரு வீர ராக
வரலாற்றிற் சொர்ணவரிக் குரியோ ராக கொற்றவர்க்குங் கொற்றவராய்க் கொடுமை கண்டு கொதித்தெழுந்த அரிமாநேர் தலைவராக முற்றும்பிற ஆசைகளைக் கொன்றே நாட்டின்
முடிகொண்டும் எளிமையின்மாற்றுருவ மாக வற்றாத கருணையின்பே ரூற்று மாக
வந்தடைந்தார் "திமிஷ"கினைசுல்தானந் நாளே. 971 .
 

போர் நிறுத்த ஒப்பந்தம்
போர்முடிந்து நாடுவரும் மன்னர் கோனைப் பார்க்கவெனப் பேராவல் கொண்ட மக்கள் ஊரூராய் ஒன்றிவந்தார் தலைந கர்க்கே
உணர்விழந்தார் முதலவரைக் கண்ணுற்றோர்கள் சீரான அழகுருவம் மாறித் தோன்றத்
தொடர்ந்துநெடு நாள் கடந்த போர்த்தாக் கத்தின் காரணமாய்த் தளர்வுற்றுப் போன தென்று
கலங்கினரே யங்குவந்த அனைத்து பேரும். 972
அங்கைகள் வான்நோக்கக் கையு யர்த்தி
அருவியெனப் பொழிவிழிகள் அரைக்கண் மூடிப் பொங்குகின்ற மனத்துயரத் தோடே மக்கள்
பள்ளிகள் தோறும் அரசர் நலனை நாடிச் "சங்கைமிகு ரஹற்மானே! எமது மன்னர்
சுகம்பெற்று முன்போன்றே உடலந் தேறி எங்களைமுன் நின்றுவழி நடாத்திச் செல்தற்
கிரங்கிடுவாய்" எனக்கனிந்து வேண்டி னாரே 973
கனிந்துமன முருகிமக்கள் வேண்டு மாறு
காவலருந் தேகநலங் குன்றி நின்றார் எனினுமவர் போர்களினால் அலைக்க பூழிந்த
இறைமறையின் மாதநோன்புதனையும் மீட்டார் தனைத்தடுத்த மருத்துவர்க்குந் தன்தோ ழர்க்கும் தன்னுடலை யுயிர்விட்டுப் போகு முன்னே அனைத்தையும் நான் நிறைவுசெய்ய வேண்டும் வாழ்வின்
இறுதியினை யாரறிவா ரெனப்பு கன்றார் 974.
சோர்வுற்ற தேகமவர் விரதத் தாலே
தொடர்ந்தின்னும் சோர்வுற்றுப் போயுங் கெய்ரோ ஊரிருந்து "ஹஜ்ஜூ"க்காய்ச் செல்வோ ரென்று
ஒன்றுவரோ "திமிஷ்க்"கென்றே காத்திருந்தார் வாராதோ வெனக்காத்தே நின்ற கூட்டம்
வரவவரை யெதிர்கொண்டார் சுல்தான் பின்னால் யாருமிலை யாமில்லத் தென்னு மாறே
எல்லோரும் பின்தொடர்ந்தார் பேதமற்றே 975
257

Page 137
258 புனித பூமியிலே காவியம்
கண்டது மக் “காரவானை" நெஞ்சி லுற்ற
“ஹஜ்"ஜேகும் எண்ணத்தில் வலுவுந் தோன்றி என்றுமிலா வாறுமணம் மகிழ்வா லுந்த
எடுத்தடிகள் முன்வைத்தே நெருங்கினார்முன் கண்டாராங் குற்றவரில் கனபேர் தாம்முன்
“காஹிரா"விற் கண்டறிந்தோர் எனவே சுல்தான் அண்டியவ ரோடளவ ளாவி நாட்டுள்
அழைத்தேகியுபசரிக்கப் பணித்திட்டாரே.
நெடுநேரம் பரியின்மீ திருந்த தாலே
நோயுற்ற சரீரத்திற் சோர்வுந் தோன்ற விடைபெற்றார் நண்பர்"பஹா உத்தீ“னோடே
விரைவாக மாளிகையை அடைந்திட்டாரே கடுஞ்சுரமுங் கண்டதவர்க் காறீர் நாட்கள்
காய்ந்துடலை வாட்டியது நினைவுங் கூடத் தொடராக இல்லாது மாறி மாறித்
திரும்புவதுஞ் செல்வதுமாய் இருந்த தன்றோ.
பேரரசர் சுகவீன முற்ற சேதி
பஞ்சிலிட்ட கனலொக்கப் பரவிற் றெங்கும் ஊரூராய் மக்களாங்கு கூடி னார்கள்
உடல்நிலையை அவ்வப்போ தறிய வென்றே நீர்சிந்தும் விழிகளோடு நினைவெல் லாமே
நிறைந்திருந்த சுல்தானின் நலத்திற் காக பாராளுந் தனியோனை வேண்டி னார்கள்
"பகலிரவென் றவர்நோக்கார் பசிம றந்தார்.
மாளிகையைச் சுற்றியெங்கும் மக்கள் வெள்ளம் மிகநிறைந்து வழிந்ததுவூண் உறக்க மற்றே வேளைதவ றாதுதொழு திறையை வேண்டி
வந்தனரே இரவுபகல் பிராத்தித் தார்கள் தோழர் “பஹா உத்தீனின் வருகைக் காக
சேர்ந்திருந்தோர் காத்திருந்தார் சேதி கொள்ள ஆளும்பதி சலாஹுத்தீன் நிலைமை காண
ஆங்குற்றார் எனவறிந்தார் அமைதி யுற்றார்.
976
977
978
979
 

போர் நிறுத்த ஒப்பந்தம் 259
"அல்-காதி" யோடு “பஹா உத்தீன்" நாளும்
அரசமாளி கைசென்று நிலைய நிந்து சொல்லிவந்தார் மக்களுக்கம் மக்க ளெல்லாம்
தாங்கவொணாத் துயரத்தில் மூழ்கி னாரே பொல்லாவப் பிணிதினமும் மன்னர் தம்மின்
புறவுடலை வாட்டிடினும் நெஞ்சம் மட்டும் வல்லோனின் நினைவாலே நிறைந்தி ருக்க
வாயவனின் நாமத்தை யுரைத்த தன்றோ. 98O
வெள்ளியன்று மாலைசுல்தான் நிலைமை மிக்க
வேறுபட்டுக் கண்டதுடல் பலவீ னத்தோ டுள்ளுடலில் சுரம்மிகுந்து அவஸ்த்தை விஞ்சி
உபாதையினால் நலிவுற்றுப் போயி ருந்தார் நள்ளிரவின் பின்னின்னுங் கூடி மற்ற
நாள் கவலைக் கிடமாகிப் போயிற் றஃதை எள்ளளவும் வெளிக்காட்டா திருக்க சுல்தான்
இயன்றவரை முயல்வதையும் பிறர்கண் டாரே. 981
ஆறாம்நாள் சுயவுணர்வோ டிருந்தார் சுல்தான்
அருந்திடநீர் தரச்சிறிது பருகி னார்பின் தேறாத நிலைக்கேழாம் நாள்தொ டங்கி
தொடர்ந்து மூன்று நாளிருந்த தேநி னைவும் மாறியது மன்னருக்கு ஒன்ப தாம்நாள்
கநிலைமை அசாத்தியமாய்ப் போயிற் றேநோய் வீறாக உடல்பற்றி மாமன் னர்ஒர்
வார்த்தையேனும் விளம்பவிய லாதுற் றாரே. 982
மருந்துகளின் நற்பயனால் இறைநாட் டத்தால்
மாற்றமுற்ற தேயுடலம் பத்தாம் நாளில் மருத்துவரும் அதிசயித்தார் வியர்வை யாலே
மன்னருடல் உடையோடு நனைதல் கண்டார் அருந்திடவோர் பானகத்தைத் தரவும் உண்டார்
அனைவருமே மகிழ்வுற்றார் பிழைப்பா ரென்றே இருந்துமென்ன அதுதொடர வில்லை முன்னர்
இருந்தநிலை மீண்டார் தன் னுணர்வி ழந்தார். 983

Page 138
260 புனித பூமியிலே காவியம்
அருகிருந்து "அபூ-ஜாபர்" இறைம றையின்
அர்த்தமுள்ள வரிகளினை எடுத்தே யோத கருத்தோடே செவிமடுப்பார் நினைவி லெல்லாம்
காத்தருள்வோன் நிறைந்திருக்க வேண்டு மென்றே. "திருக்கலிமா" தனையுமவர் நினைவு கூரச்
சொல்லிடுவார் சுல்தானும் வாய சைப்பார் வருத்துமுடல் நோயிருந்தும் இறைவன் நாமம்
வாய்மொழிய மகிழ்ச்சியினால் பூரிப் பாரே.
மன்னருக்கு நோய்கண்ட பன்னி ராம்நாள்
மாலைகடந் தேகியபின் “பஹா உத் தீனை மன்னர்மகன் "அல்-அப்தல்" அழைத்தி ருந்தார் மார்க்கஞானி "இபுனுஅஸ் ஸ்கீ"யி னோடே சென்றிருந்த அவ்விருவர் தனையுந் தம்மின்
துணையாக இருக்கும்படி "அப்தல்" கூற நன்றன்று வென்றவர்கள் தனித்து மீண்டார்
நாட்டுமக்கள் தமையெண்ணி அஞ்சி னாரே,
GGK
"அவனேதான் இறைவன்வே றொருவ னில்லை
அவனறிவான் வெளிப்படையும் மறைவா யுற்ற எவையு "மெனும் இறைவேத வாக்கி யத்தை
இயம்பியவர் இறைகருணைக் காக வேண்ட புவியாண்ட மாமன்னர் ஸலாஹமத் தீனோர்
புன்னகையை முகந்தவழ விட்டே தம்மின் செவியுண்ட சொற்களினால் முகம்பொ லிந்தே
செகவாழ்வை அக்கணமே துறந்திட் டாரே.
முடிகின்ற தோர்புனித சரித மென்று
முகமனுரைப் பான்போன்றே இராவி ருக்க விடிவினுக்காய்ப் பொழுதுபுலர்ந் திடுமுன் "சுஃப்ஹ'
வணக்கத்தின் வேளைமுடிந் தேகும் வேளை ஒடுக்கத்துப் புதன்பிறைநாள் இருபத் தேழோ
டொன்றுதிங்கள் "ஸ்பர்'ஹிஜிரி ஐந்நூறொன்றி தொடர்ந்தவெண்பத் தொன்பதிலே சுல்தா னென்னுஞ்
சோதியணைந்துலகிருளில் மூழ்கிற் றம்மா.
G
984
985
986
987

போர் நிறுத்த ஒப்பந்தம் 261
பொலிந்துமுகம் முறுவலிக்க விழிகள் சோர
பாருலக வாழ்வதனை முடித்த செய்கை நிலமாண்ட பூபதியை நித்தி யன்றன்
நேசரெனப் பொருந்திவிட்டான் எனக்கூ றிற்றே சிலபோழ்துள் மாமன்னர் பிரிவு நாட்டின்
திசையெல்லாம் பரவியதும் மக்கள் வெள்ளம் அலைகடல்போற் பெருகியதே மாளி கைக்குள்
அடங்கமுடி யாதபெருந் தொகையா மம்மா. 988
உடலத்தைக் குளிப்பாட்டிக் கபணுஞ் செய்ய
உற்றநண்பர் பஹாஉத்தீன் றன்னைக் கூற "திடமெந்தன் உள்ளத்திற் கேது அஃதைச்
செய்யவிய லாதென்றே" யவரு ரைத்தார் கடமையதை முடித்துவைத்தார் வேறோர் தோழர்
கபனிட்டுச் “சந்தூக்கில்" வைத்தே மக்கட் கடலிடையே கொண்டுசென்றார் கண்டோ ரெல்லாம்
கதறியதைக் காண்பரின்றிக் கதறி னாரே 989
யாரிடத்தில் யார்சோகம் உரைத்து நெஞ்ச
ஆறுதலைப் பெறுவாரோ அவருஞ் சோகப் பேருருவ ராகவிருந் தழுவ தாலே
பிறர்க்குரையார் தனித்தனியே புலம்ப லானார் தேராரோ தாமுமன்று தம்மைத் தாமே
தேற்றுதற்கும் மற்றவரைத் தேற்று தற்கும் வேரறுந்த செடிகொடிபோ லானார் மக்கள்
"வேந்தர்ஸ்லாஹCத்தி"னின் பிரிவி னாலே 990
தம்முயிரே இழந்ததொப்பத் தவித்தார் மக்கள்
தமதுயிராய் வாழ்ந்த சுல்தான் இழப்பி னாலே அம்மம்ம எடுத்துரைப்ப தெளிதோ அன்னார்
அரசர் மேற் கொண்டிருந்த பாசந் தன்னை நிம்மதியற் றலைந்தார்கள் வீதி தோறும்
நீர்பொழியும் விழிகள் சிவந் தொளியி ழக்க இம்மையின்வாழ் வினியெதற்கென் றழுதார் தம்மின்
இதயத்தின் இயக்கமன்றே இழந்தார் போன்றே. 991

Page 139
262 புனித பூமியிலே காவியம்
நண்பகலின் தொழுகைவரை மக்கள் கூட்டம்
நிறைந்துவழிந் ததுமன்னர் மாளி கைக்குள் எண்ணிலடங் காரேயத் தொகையி னோர்கள் எங்கிருந்து வந்தனரோ அறிவா ராரோ விண்ணேகி னாலுமுயிர் உடலை யேனும்
விழிகாண வேண்டுமெனும் ஈற லோடு நண்ணினரோ மன்னரைமீண் டொருநாள் காண
நேராதே எனநினைந்தோ இரண்டு மாமோ. 992
இறைவனடி சேர்ந்தசுல்தான் தனைய டக்க
ஏற்கின்ற செலவுக்காய்க் கூட நாட்டின் திறைசேரிக் கியலாது போன தாங்கோர்
"திர்ஹ"மெனும் எஞ்சியதாய் இருக்க வில்லை மறைகூறு வழிநடந்த மாமன் னர்தம்
மிஞ்சவைத்த சொத்தாகப் பொற்கா சொன்றும் சிறுதொகையாய்ச் செல்வமென நாற்பத் தேழு
"திர்ஹ"முந்தான் வேறெதுவும் இலையா மன்றோ. 993
உடல்பொருளோ டாவியினை அர்ப்ப னித்தற்
குதாரணமிவ் வுலகினிலே சுல்தா னன்றிக் கிடையாதே வேறொருவர் ஆட்சி செய்த
"குலஃபாயே ராஷிதீன்கள்" தமக்குப் பின்னே அடைந்தபெரு நஷ்ட்டம்முஸ் லிம்க ளுக்கீங்
கீடுசெய வியலாவொன் றென்றிட்டாலோ தடையின்றி யதுசுல்தான் இழப்பே யாகும்
தரணிக்கும் பேரிழப்பே யெனிலோ வண்மை. 994
புறவாழ்வில் மாவீர ராயும் மிக்க
புகழ்கொண்ட பேரரசராயும் நெஞ்சுள் அறவாழ்வின் இலக்கணமாய் வாழ்ந்தார் சுல்தான்
அறிவினிலே பேரறிஞராவா ரின்று மறுமையின்பால் சுவர்க்கத்தை வேண்டி "திமிஷக்கு"
மண்ணினிலே "உமையாமஸ் ஜித்"தின் ஒரம் இறைவேத வொலியோடே “அதானின் ஒசை
இதமுட்ட மண்கலந்து போயுள் ளாரே. 995

போர் நிறுத்த ஒப்பந்தம் 263
வலிமைமிகு சுல்தான்சாம் ராஜ்ஜி யத்தை
வெவ்வேறாய்ப் பிரித்தெடுத்து மக்க ளோடே “மலிக்குலாதீல்" மன்னருடன் பிறந்தார் அன்று மிகுதிறனாய் ஆண்டுவந்தார் “சிரியா"தேசம் “மலிக்குலப்ஸல்" பெற “எகிப்த்தை" அஸிஸoம்"-"ஹலப்பை"
“மலிக்தாஹிர்" பெற்றனரே “ஈராக்" நாட்டை "மலிக்குலாதீல்" ஆண்டாரீர் பத்தாண் டன்னார்
மகன் “காமில்" தொடர்ந்திருபதாண்டாண் டாரே. 996
கீர்த்திமிகு பேரரசர் "ஸ்லாஹமத் தீனின்
கீர்த்திமிக்க ஆட்சிதனை மதியூகத்தைப் போர்த்திறனை நிகரில்லா மார்க்கப் பற்றைப்
பகைவர்க்கும் உதவுகின்ற மனிதப் பண்பை நேர்த்திமிகு நெடுங்காதை யாக விந்த
நிலம் போற்றப் "புனிதபூமியிலே' யென்னும் வார்த்தையிரண் டுள்ளாக்கித் தந்தே வென்றார்
வரலாற்றுக் காதையின்கோன் “ஹஸன்" என் போரே 997
முயற்சியிலே “ஹஸன்" வாகை கொண்டா ருண்மை
மேன்மக்கள் போற்றுகிறார் அதுவே சான்று முயன்றேன்நான் நாவலைப்"பா" வடிவில் காட்ட
முயற்சியிலென் நிலையெதுவோ அறியேன் கற்போர் அயர்ச்சியுறா திதனோடே “மஹற்ஜ பீ“னென்
னற்புதநந் நாவலொடென்"காவிய"த்தை நயப்பரெனின் சுல்தானின் வாழ்வைச் சற்று
நிறைவாகத் தேர்ந்திடலாம் புகழிறைக்கே 998
பலநூறாய் இறைதூதர் தேன்றி வாழ்ந்த
புனிதமண்ணில் “மிஹற்ரா"ஜின் முதற்ற லத்தில் நிலைகொள்ள முயன்றோரைப் புஜப லத்தால்
நிர்மூல மாக்கியேதான் வாகை கொண்டு சலியாது போர்கள்பல செய்தே இஸ்லாம்
தரணியிலே நிலைபெறச்செய் திட்ட செம்மல் “ஸலாஹCத்தீன்" பேரரசர் இறைத லத்தின்
சிறந்தென்னும் “பிர்தொளஸைப்' பெற்றே வாழி 999

Page 140
264 புனித பூமியிலே காவியம்
ஒப்பிலாப் பூபதியாம் "ஸ்லாஹcத் தீனின்
உயர்சரிதந் தனைக்கருவாய்க் கொண்டே காதை செப்பியபே ரறிஞர் "ஹஸன்" பல்லாண் டின்னும்
செகவாழ்வு வாழ்ந்துபின்னே மறுமை நாளில் தப்பாதே சுவனத்தில் "சுல்தா" னோடே
சேர்ந்திருக்கும் பாத்தியத்தைப் பெறவும் வேண்டி இப்"பாநூல்" நிறைவுசெய்தேன் ஏக னேயென்
இறைஞ்சுதலை ஏற்றருள்நீ செய்வாய் ஆமீன்.
 


Page 141


Page 142
கவி
LI FTIT AT ALI மார்க்க காவியம் வர். தி ஐந்தாம் நிலையி *சபுனித முஸ்லிம் காலம் இப்போ அவற்றிற்கான பரிகாரங்களையும் பற். கிறேன்," என எழுதியுள்ளார். கவி "மஹ்ஜயீன் புதினத்தைக் காவியமாக்கிய புதினத்தையும் காவியமாக யாத்து, இல களைத் தந்த பெருமைக்குரியவராக வேண் ஆர்வத்துடனும் தெரிவித்துக் கொள்கிறேன்
பவல்லான் இவன்
சிலம்பினொலி செல்லப்பன் செந்தமிழில் ே செப்பிய ஆலோசனையை சென்னிமி நலமுடனே ? "மஹ்ஜயின் காவிய'த்தின்
நற்கவிதை யால் புனித பூமி'தனை இலக்கியமெ அம்விரிந்த பாக்கடலி னுள்ே இரட்டைக்கா வியமாக இவையிரண்டு பலவறிஞர் பாராட்டைப் பக்குவமாய்ப் ெ 'பாவல்லான் இவன்" என்றே பாரு
தமிழ்ப்பேரறிஞர்-திரு-எஸ்
 
 

இரட்டைக் காப்பியம்
ஞரின் அருந்தொண்டினை மனமாரப் டுகிறேன். வளமான கவிதை நடை: ச் சிந்தனைகளிலே தோய்ந்து உருகி இக் எழுதப்பட்டுள்ளதைப் படிப்பவர் உணர் திரு. ஹஸன் அவர்கள் இப் புதினத்தின் பதிப்பிற்கான முன்னுரையில், இந்த ல் இதனையும் இதன் தொடரான பூமியிலே!" என்னும் நாவலையும் கள் படிப்பது, தமது முந்தைய பொற் பற்றி அவர்கள் தெரிந்து கொள்ளவும் தைய வீழ்ச்சிக்கான காரணங்களையும், றிச் சிந்திக்கவும் உதவும் என்று நம்பு ஞர் ஜின்னாஹ் ஷெரிபுத்தீன் அவர்கள் து போலவே, "புனித பூமியிலே' எனும் க்கிய உலகிற்கு இரட்டைக் காப்பியல் ாடும் என்ற என் விருப்பத்தை அன்புடனும்
5. ாக்டர் சிலம்பொலி சு. செல்லப்பனும் அவர்கள்
மேதை சை கொண்டு
பின்னே 'ப் படைத்தான் ளே!
மிலங்க
பறுவான் நலகம் ஏற்கும்.
9.டி. சிவநாயகம் அவர்கள்