கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திருநபி காவியம்

Page 1
శ్లో
ః 豪
ä ଛୁର୍ଭୁ శ్లో
 


Page 2


Page 3

திருநபி காவியம்
- ஜின்னஹ் ஷரிபுகுதீன் - இந்நூல் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் 2006 ஆண்டு இராமநாதபுரம் பரமக்குடியில் நடத்திய இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பெருவிழாவில் வெளியிடப்பெற்றது.
Co
ジ
அன்னை வெளியீட்டகம்

Page 4
திருநபிகாவியம்
O
கவிதைகள்
எழுதியவர்
பதிப்புரிமை
பதிப்பும் வெளியீடும்
பிரதிகள்
முதற்பதிப்பு
அட்டை வடிவமைப்பு
கணனி வடிவமைப்பு
6il60Ꭰ6Ꭰ
ISBN
Tittle
Author -
Copy Right
Printing & Published
Number of Copies
First Published in
Cover Design Type Setting
PriCe
ISBN
ஜின்னாஹற் வடிரிபுத்தின்
திருமதி. பரீதா ஜின்னாஹற் வடிரிபுத்தின் இல, 16, பாடசாலை வீதி, தெகிவளை, இலங்கை.
அன்னை வெளியீட்டகம்,
மருதமுனை.
1000
2006
ஆவழிப் புஹாரி
ஜெலீலா காதர் முகையதின்,
மருதமுனை.
400/- (இலங்கை விலை)
955 - 97349 - 7 - O
THRUINABI KAVIYAM
(POEM)
Dr. A. Jinnah Sherifudeen
Mrs. Hamsiya Fareeda Jinnah Sherifudeen No. 16, School Avenue Off. Station Road, Dehiwala.
Sri Lanka.
Annai Publication, Maruthamunai.
1000
2006
AShif Buhari
Jeleela Cader Mohideen, Marutham unai.
400/- (Sri Lanka)
955 - 97349 - 7 - 0

"gn് ഓഖിu് കെഞ_bug aങ്ങഖന്ദ്രLങ്ങ്
தாய்
தோற்றம்
தோற்றம் O4-10-1909 27-01-1921 மறைவு ԼՕ6ԾՈD6ւ 16-11-2000 O8-09-2006
பெருமானார் காவியத்தை நூலாய்ச் செய்ய
பொருளுதவி செய்தவள்என் அன்னை ஆயிஷா புரவலராய்ப் பாக்கியமும் பெற்றார் பின்னாள்
“பிள்தெளஸ்'என் சொர்க்கம்இறை நல்க வேண்டும் அருமைநபி வாக்கு நன்னூல் செய்வோ ருக்கு
அதன்பொருட்டால் நன்மைகள் சேரும்”என்றாம் உருவில்லான் என்தாய்க்கும் எனக்கும் இந்த
உத்தமநற் காவியத்தால் அருள்செய் வானே.
வங்கத்துக் கடலலைகள் சுற்றித் தட்ட
வாரிதிசூழ் வாழ்புலமாம் இலங்கைத் தீவின் செங்கதிரோன் தோன்றுகுணக் கரைய மைந்த
தமிழோதும் முஸ்லிம்கள் செறிந்தே வாழும் சங்கைமிகு மருதமுனைக் கிராமம் தன்னில்
தோற்றமுற்ற மாதரசி ஆயிஷா உம்மா திங்கள்நிகர் நபிசரிதம் பதிக்கப் பொன்னைத்
தந்தவராம் என்றுமவர் நாமம் வாழி.

Page 5
ஆயிரத்துத் தொளாயிரத்து இருபத் தொன்றில்
அவதரித்தார் என்தாயார் இறைப தத்தை நோய்நொடிகள் எதுவுமின்றிச் சடுதி யாக
நாடினரே வாழ்ந்ததெண்பத் தைந்தே யாண்டு சேய்களென பதினேழு பெற்றார் சேய்க்குச்
சேய்அதற்குச் சேய்அதற்குச் சேய்கள் பெற்றார் வாய்த்ததெலாப் பேறுகளும் என்றன் தாய்க்கு
வரலாற்றுப் பெருமகளார் சொர்க்கக் கன்னி.
அலைதாண்டித் தமிழ்நாட்டில் அறிஞர் முன்னே
அரங்கேற்றம் பெற்றதிந்நூல் தமிழ்மா நாட்டில் இலையன்று எனதன்னை இரண்டே நாள்முன்
இறைவனடி சேர்ந்திருந்தார் இலங்கை மண்ணில் சொலிலந்நாள் இரண்டாயி ரத்து ஆறின்
செப்டெம்பர் திங்களெட்டாம் நாளாம் வல்லோன் நலம்விரும்பிச் செய்தசெயல் நற்பே றெய்த
நபிபேரில் காவியம்நான் செய்த தாலே.
புலவர்மணி வடிரிபுத்தீன் புனித வாழ்வு
பொலிவுபெறக் காரணமென் தாய் அவர்க்கு நலஞ்சேர்க்கும் மனையாளாய் வாய்த்த தாலே
நாமுமவள் வழிசிறந்தோம் என்றன் அன்னை உலகுவிட்டுப் போனாலும் புகழால் வாழ்வார்
உத்தமநந் நபிகாவ்யம் வாழு மட்டும் அலைஓயா ஆழியுள்ள வரைக்கும் வாழும்
அன்னைசெய்த கொடையாலே அவரும் வாழ்வார்.
கம்பனுக்குச் சடையப்ப வள்ளல் அப்துல்
காஸிம்உமர்ப் புலவருக்குக் கொடைவள் ளல்கள் எம்பெருமான் காவியஞ்செய் என்ற னுக்கு
எனதன்னை ஆயிஷாதான் ஏற்றம் பெற்றார் இம்மைக்கும் மறுமைக்கும் ஏக நாயன்
இவ்வுலகப் பாக்கியத்தை ஈந்தாற் போன்று சும்மையருள் மறுமையிலும் தாதை யோடு
சேர்ந்துகொள்ளும் பேற்றினையும் நல்க ஆமின்.

நவி asustutö
ағodtбола отб
என்னருறைச் செல்வங்கள்
அர்ஒத் முஜீப் றோஒன் ஹரமித் Uஹ்டு முஹ்மூத் ஒர6லாதாரிக் ஒப்ராஸ் முஹம்மத்
ஆகியோருக்கு

Page 6
திருநபி காவியம்
தாகுையின் ஆசியா
பாரம் பரியம் பழுதாகா தென்மக்கள் பேரர் முதலோர் தமிழ்க்கவிதை - சீராக ஆக்குந் திறம்பெற் றமைகின்றா ரத்திறமை பூக்க விறையே துணை
செந்தமிழிற் சீர்கவிதை செப்பமுடன் செய்துநலம் சொந்தமெனப் பல்பரிசைத் தொட்டுவரும் - என்தனையன் வைத்தியக் கலாநிதி ஜின்னாஹ் ஷரிபுத்தீன் சித்தம் மலர்க சிறந்தது
வெண்பா வக்வல் விருத்தம் பலவகையும் பண்பாகப் பாடும் திறம்படைத்து - நன்றாக நாட்டிற் பெயரும் புகழும் சிறந்தமைக ஏட்டிற் குலப்பேர் வரைந்து
புலவர்மணி ஆ. மு. வடிரிபுத்தின்
1989

திருநபி காவியம்
மறைந்த தமிழ்ப் பேரறிஞர் பத்திரிகை ஆசிரியர் மாண்புமிகு எஸ். டி. சிவநாயகம் அவர்கள் வழங்கிய
பொதுப்பாயிரம்
நான்பார்த்த கவிஞரிலே நல்லதொரு கவிஞன்
நான்தேர்ந்த நண்பரிலே நல்லதொரு பண்பன் t தேன்வார்த்த சொற்களினால் தெவிட்டாத கருத்தைத்
தென்றலென வீசியுளஞ் சிலிர்த்திவிடுஞ் சித்தன் கூன்நிமிர்ந்த தண்மதியம் பொழிநிலாவைப் போல
குளிர்பாயும் கற்பனையால் உலகாளும் புலவோன் மான்தோற்ற கண்ணுடையாள் என்தங்கை பரீதா
மனம்நிறைந்த மன்னனவன் நற்குடும்பத் தலைவன்
ஒருநாளில் ஏழுபத்துக் கவியெழுத வல்லான்
ஒருநூறு எழுதுவதும் இவனுக்கு இலகாம்
வருநாளில் ஜின்னாஹற்வின் பெயர்கவிதை வானில்
வரகவியென் றேயொளிரும் அட்டியதற் கில்லை
அருட்கவியாய்ப் பரிணமித்த கவி கா. மு. ஷரீபும்
அன்பொழுக ஈங்கிவனை மணிக்கவிஞன் என்றார்
ஒருக்காலும் மறையாதே உள்ளத்தே உறையும்
ஒண்கவிதை இவன்கவிதை திண்ணமிது என்பேன்.
எஸ். டி. சிவநாயகம் (பிரதம ஆசிரியர், தினபதி, சிந்தாமணி, சூடாமணி) 15-12-1993

Page 7
திருநபி காவியம்
தாஜுல்அதிப் - கலாபூஷணம் - இஸ்லாமிய இலக்கியக் காவலர் எஸ். ஏ. ஆர். எம். செய்யித் ஹஸன் மெளலானா அவர்கள் அளித்த
சிறப்புப் பாயிரம்
ஜின்னாஹற் ஷரிபுத்தீன் செப்புமுயர் காவியந்தான் மின்மீன்வா னத்து விளக்கம்போல் - என்றென்றும் கற்றபேர் உள்ளங் கனிந்து கசிந்துருகி உற்றபொருள் காணும் உவந்து
கவியா லுரைத்த புகழ்பெறும்
கவிதை மன்னன் ஜின்னாஹற் புவிவாழ் இலக்கிய கர்த்தா
புகன்ற திருநபி காவ்யம் நவியார் சுவர்க்க பதியின்
நாயக வாழ்வை விளக்கும் செவிநுகர் கனிகள் இன்பச்
சுனைநீர்த் தடாக மென்போம்.
(வேறு)
திருநபிகா வியமியம்பும் நாயக வாழ்வை
செகதலத்தின் தூதுரைக்கும் மதின வாழ்வை அருளாளர் மணவாழ்வை அவனி புரக்கும்
அறிவுக்கு அறிவான ஞான வாழ்வை பொருளுணர்ந்து தெளிவடைந்து புனிதங் காணும்
பொன்னுலகப் பொருளான மனித வாழ்வை பெரும்புலவர் ஜின்னாஹற்சொல் பாவ ணங்கள்
பேசுகின்ற காலமெலாம் வாய்மை பெற்றோம்.

திருநபி காவியம்
புவனத்தின் வாழ்க்கைக்கு விளக்க மென்ன
புதுமைக்கு வழிகாணும் கொள்கை யென்ன அவலங்கள் தொடர்தற்கு அமைதி யென்ன அயலாரின் உறவுக்கு அர்த்த மென்ன பவநோய்கள் தவிர்க்கின்ற மார்க்க மென்ன பண்புக்கும் பரிவுக்கும் பகர்வ தென்ன கவினுடைய நபிவாழ்க்கைத் தத்து வத்தைக்
கற்கவரும் சிந்தனையில் விடைகள் காண்போம்.
சரந்தீபின் வரலாற்றில் நபிகள் நாதர்
சரிதைசொலுங் காவியமிந் நாள்வரை யாரும் தரவில்லை யென்னுமுரை நீங்கிற் றென்ற
தாய்நாட்டின் கவிமன்னன் ஜின்னாஹற் வாழ்க மருதமுனை பெற்றெடுத்த மண்ணின் மைந்தன்
“மானிலத்தின் மணிவிளக்கு நபிகள்” என்ற பெருமைமிகு உவமைக்கு இலக்கியம் காணும்
பெட்புடைய புலமை நெஞ்சம் என்றும் வாழ்க.
என்றனுயர் மாணாக்கன் பத்தாம் ஆண்டில்
இலக்கணமும் இலக்கியமும் தெரியக் கற்று சொன்னயமும் பொருண்ணயமும் கவித்து வத்தில்
தொடர்கின்ற கலையுணர்வும் நிறையப் பெற்று இன்றுஉயர் காப்பியங்கள் படைத்த ளிக்கும்
ஏற்றமிகு ஆற்றலினைப் பெற்ற வர்க்குப் பண்ணுமுயர் சிறப்புப் பா யிரத்தால் வாழ்த்திப்
பல்லாண்டு தொடர்கஜின்னாஹற் தமிழ்ப்பணி யென்பேன்.

Page 8
திருநபி காவியே
“உலகுக்கோர் அருட்கொடையாம் நபிகள் நாதர்”
உவந்தபேர் வாழ்விலென்றும் உயர்ந்த பேராம் இலக்கியவழி இஸ்லாம்சொல் கவிஞ ருள்ளே
எழுத்துலகை யாளும்ஜின் னாஹற்ஷரி புத்தீனின். குலவுதமிழ்ப் புலமைக்குப் புலவ னாக
குன்றமெனத் திகழ்கின்ற வாய்மை யாளன் நிலவுகின்ற இலட்சியத்தை வாழ்வில் பெற்று
நிமிர்கீர்த்தி வழிகாட்டும் சால்பு வாழ்க.
(வேறு)
வாழையடி வாழையென வந்ததிருக்
கூட்டத்தின் வாரிசு ஜின்னாஹற் ஆளுகின்ற தமிழ்ச் சங்கம் மரபுவழி
ஐந்திணையின் கவிதை யுள்ளம் வாழ்வளிக்கும் நபிசரிதை காப்பியம்
வையத்துக் கீந்ததனால் வாழ்வு பெற்றார். நாளுமுயர் சிந்தனைகள் நவில்கின்ற
நாற்பொருளின் இலக்கியத்தை படித்து ணர்வோம்.
செந்தமிழில் இஸ்லாத்தின் இலக்கி யங்கள்
செய்தளித்த முஸ்லிம்கள் மரபு காப்போம்.

திருநபி авгтябlut5
ஓய்வுபெற்ற அதிபர், தமிழறிஞர் அல்ஹாஜ் ஏ. எச். முஹம்மத் அவர்கள் அளித்த
வாழ்த்துரை
கம்பராமாயணத்தை நான் கற்பித்தபோது இலக்கியத்தில் மிக்க ஆர்வங் கொண்ட மாணவர்களில் இந்நூலாசிரியர் ஜின்னாஹற் ஷரிபுத்தீனும் ஒருவர். இன்று அவர் தமிழிலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் கால்பதித்து உயர்வது கண்டு நான் பூரிப்படை கின்றேன்.
காவியம் படைப்போர் அருகிப்போய்விட்ட இக்கால கட்டத்தில் இது இவரது ஆறாவது காவியம் என அறியும்போது மகிழ்வு இரட்டிப்பாகின்றது. இவ்வரிய முயற்சியில் இன்னும் இவர் ஈடுபட்டு வெற்றிபெற வேண்டுமென இறைவனை வேண்டி மனதார ஆசீர்வதிக்கின்றேன்.

Page 9
ஜின்னாஹற் என்றொரு மேதைமை
பொதுச்செயலாளர், உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு இலங்கை - 2002 “யாத்ரா” கவிதைக்கான சஞ்சிகை ஆசிரியர் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள் வழங்கிய அறிமுக உரை.
புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தின் ஒரு ஞானவான். அவரது தமிழ்ப் புலமை அன்றும் இன்றும் சான்றோரால் மிகவும் மதிக்கப்படுகிறது. தந்தையின் புலமைக்கு எந்த விதக் குறைவும் ஏற்படுத்தாத இன்னுஞ் சொல்லப் போனால் அதைப் பாதுகாக்கும் விதத்தில் இன்னுஞ் சொல்லப் போனால் அதைப் பெருமைப் படுத்தும் விதத்தில் தனது இலக்கியப் பணியை மேற்கொண்டுள்ளார் கவிஞர் ஜின்னாஹற் ஷரிபுத்தீன்.
இலங்கையில் இன்றைய நிலையில் டாக்டர் ஜின்னாஹற் ஷரிபுத்தீனின் தமிழ்ப் புலமைக்கு நேர் நிற்கும் இன்னும் இரண்டொருவர் இருக்கலாம். ஆனால் உட்கார்ந்த இடத்தில் தளை தட்டாமல் சீர் அறாமல் இலக்கண விதிகளில் பிறழ்வு இல்லாமல் நூறு பாடல்களை ஒரே முறையில் எழுதும் திறமை ஜின்னாஹற்வுக்கு மட்டுமே இருப்பதாக நான் உணர்கிறேன்.
ஏறக்குறைய முப்பது வருட கால அவரது இலக்கியச் செயற்பாடுகளின் அறுவடையாக சிறு நூலகத்தை உருவாக்கும் நூல்களைத் தமிழுக்குத் தந்துள்ளார் ஜின்னாஹற். நாவல், சிறுகதை, கவிதை, சிறுவர் இலக்கியம், கட்டுரை, இலக்கிய இயக்கச் செயற்பாடுகள் என எல்லா இலக்கியப் பாதைகளினூடும் தனது பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ள இவர் அகில இலங்கை ரீதியாக பெற்றிருக்கும் பரிசில்களின் பட்டியலும் இவருக்குக் கிடைத்துள்ள கெளரவங்களின் பட்டியலும் மிக நீண்டவை. இந்த இலக்கியப் பணிகளுடும் தனது தொழிலுக் கிடையிலும் பல்வேறு அமைப்புகளில் அவற்றின் தீர்மானிக்கும் சக்தியாக நின்று உழைத்திருப்பது ஆச்சரியத்துக்குரியது.
 

இலக்கியத்துள் நுழையும் பலர் ஒரு குறிப்பிட்ட கால வாசிப்போடும் எழுத்தோடும் அல்லது ஒரு நூலை வெளியிட்டதோடும் சோர்வடைந்து போய்விடுவதுண்டு. அல்லது ஏதாவது ஒன்றை மட்டும் தொடர்ச்சியாக மேற்கொண்ட படி ஏனைய செயற்பாடுகளைக் குறைத்துக் கொள்வதுண்டு. ஜின்னாஹற் இதில் மிகவும் மாறுபட்டவர். இன்றும் இலக்கியக் கூட்டம் என்றால் நேரத்துக்கு ஆஜராகி விடுகிறார். இன்றும் படித்துக் கொண்டிருக்கிறார். இன்றும் இலக்கியவாதிகளுடன் தொடர்பில் இருக்கிறார்.
இனம், மதம், வயது என்ற வித்தியாசத்துக்கப்பால் எல்லோருடனும் அன்பு பாராட்டுவதும் நட்புடன் இருப்பதும் அந்த நட்பைப் பழுது படாமல் காத்து வருவதும் ஜின்னாஹற்வின் சிறப்புக் குணமாகச் சொல்லலாம். தன்னை விட வயதில் குறைந்தவருக்கு ஒரு வழிகாட்டியாகவும் தனது கால இலக்கிய அன்பர்களுக்கு ஒரு ஆலோசகனாகவும் விளங்குகிறார். தன்னிடம் நட்புப் பாராட்டும் ஒரு நபரிடம் உள்ள திறமையைப் புரிந்து கொண்டாரென்றால் அந்தத் திறமையை வளர்க்கும் நோக்கில் அந்த நபரை ஊக்கப்படுத்துவதில் கண்ணுங் கருத்துமாக நின்று செயற்படுவார். அதற்கு தன்னால் என்ன தியாகங்களை மேற்கொள்ள முடியுமோ அதற்கெல்லாம் துணிந்தவராகவே அவரை நான் காண்கிறேன். இவ்வாறு மற்றவர் மீது அக்கறை கொண்டு செயற்பட்டு அவர் நஷ்டமும் கஷ்டமும் அடைந்ததையும் அறிவேன்.
ஜின்னாஹற் ஒரு விடயத்தைப் பொறுப்பேற்றுக் கொண்டாராக இருந்தால் அந்த விடயம் உரிய தேதியில் உரிய வேளைக்கு நிறைவேறும் என்று சர்வ நிச்சயமாகச் சொல்ல முடியும். அவர் எக்கணத்தில் பாரமெடுத்தாரோ அக்கணத்தில் அந்த விடயத்துக்கான வேலைகள் ஆரம்பித்து விடும். அதைச் சரியாகவும் சிறப்பாகவும் செய்து முடிக்கும் வரை ஒயமாட்டார்.
தனது தொழிலுக்குத் தானே எஜமானாக இருப்பதும் அவரது வாழ்க்கைத் துணை அவரது முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பதும் அவரது வெற்றிகளுக்குப் பெரிதும் உதவுகின்றன. பொதுவாக இலக்கியத் துறையில் பெயர் பெற்ற பலருக்கு வாழ்க்கை வசப்பட்டதில்லை என்று சொல்வதுண்டு. தன்னார்வத் தொண்டு

Page 10
நிறுவனத்தில் தன்னை இணைத்துக் கொண்டு மக்கள் சேவையிலுள்ள மனைவி, தங்கள் சொந்தக் காலில் நிற்பதற்கு வலுவூட்டப்பட்ட பிள்ளைகள், இலக்கியம், எழுத்து, புத்தகம், கூட்டம் என்று சதா பேசியபடியிருக்கும் இலங்கை மற்றும் இந்திய இலக்கிய நண்பர்கள் என்று ஜின்னாஹற்வின் வாழ்க்கை அமோகமானது. அர்த்தம் நிறைந்தது.
ஒவ்வாதன ஒதுக்குதல், ஒரு நேர்மையான படைப்பாளிக்கே உரிய சினம். உறுதியான-நேரான பேச்சு, ஒரு தாயின் பரிவு, விசாலித்த மன நட்பு, உச்சக் கட்ட உபசரிப்பு, எளிமையான வாழ்க்கை-இவை ஜின்னாஹற்விடம் நான் கண்ட பண்புகள். இன்று வரை இப்பண்புகளில் எவ்விதக் குறைபாட்டையும் என்னால் அவதானிக்க முடியவில்லை.
சென்னையில் 1999ல் நடந்த உலக இஸ்லாமியத் தமிழிலக்கிய மாநாட்டுக்கு என்னை அவர் அழைத்துச் சென்றிருந்தார். இவ்வாறான மாநாடு ஒன்றை இலங்கை மண்ணில் நடத்த வேண்டும் என்ற என் ஆதங்கத்துக்கு, சாத்தியம் அசாத்தியம் பற்றியெல்லாம் பேசாமல் எடுத்த எடுப்பிலேயே அவர் சொன்ன வார்த்தை நாம் நடத்துவோம்’ என்பதுதான். அதற்கான முதல் அத்திவாரத்தை இடுவதற்கான கூட்டத்தை அங்கேயே நடத்திக் காட்டினார் ஜின்னாஹற். இலங்கை திரும்பியதும் இரண்டு தினங்களுக்கொரு முறை நண்பர் தாஸிம் அகமதுவின் மருந்தகத்தில் மேல் மாடியில் மாநாடு குறித்த முழுத் திட்டத்தையும் தீட்டினோம். அதன் பிறகே அதைச் செயல்படுத்தும் வழிவகைகள் குறித்து முனைப்புகளை மேற்கொண்டோம். 2002ல் கொழும்பில் நடந்த மாநாட்டுக்கு தனது அனுபவத்தைக் கொண்டு எம்மை நெறிப்படுத்தி வழிகாட்டியவர் ஜின்னாஹற்.
ஜின்னாஹற்வின் புலமையின் ஆழம் அறிந்தவர்களில் மூத்த தமிழறிஞர்கள், இலக்கியவாதிகள், கல்விமான்கள் என்று பலர் இருக்கிறார்கள். குறிப்பாக தொண்ணுாறுகளுக்குப் பின் அவரைப் பற்றி பெருமளவில் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பை ஜின்னாஹற் ஏற்படுத்தவில்லை என்றே சொல்வேன். தனது எழுத்துக்களைப் பத்திரிகை, சஞ்சிகைகளுக்குத் தருவதில் அவர் ஈடுபாடு காட்டவில்லை. அவருடைய ஆறு காவியங்களில் குறைந்தது இரண்டு காவியங்களாவது தொடராக ஏதேனும் ஒரு பத்திரிகையில் வெளிவந்திருக்க வேண்டும்.

தமிழ் இலக்கிய வரலாற்றில் தமிழில் ஆறு காப்பியங்களைப் பாடிய பெருமை டாக்டர் ஜின்னாஹற் ஷரிபுத்தீனுக்கே உண்டு. இலக்கியத்தில் இத்தகையதோர் இம்ாலய சாதனையை இதன் பிறகு யாரும் நிகழ்த்துவார்கள் என்றும் நான் எண்ணவில்லை. ஜின்னாஹற்வைப் போன்ற ஒரு தகமையாளன் இலங்கை மண்ணில் வாழ்வது இலங்கையில் தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட அனைவருக்கும் பெருமை. அவர் பிறந்த மருதமுனை என்ற இலக்கிய மண்ணுக்குப் பெருமையிலும் பெருமை. ஜின்னாஹற்வின் தமிழ்ப் புலமைக்காகவும் அவரது இலக்கியச் சாதனைக்காகவும் தமிழ் கூறும் நல்லுலகின் ஏதாவதொரு பல்கலைக் கழகம் அவருக்குக் கலாநிதிப் பட்டம் வழங்கிக் கெளரவிக்க வேண்டும்.
அனுபவங்களில் இருந்தே படிப்பினைகளை மக்கள் சமுதாயம் பெற்றுக் கொள்கிறது. பழமையிலிருந்தே புதுமைகள் தோன்றுகின்றன. புதுமைகள் எத்தனை வர்ணங்களைப் பூசிக் கொண்டு வெளியே வந்தாலும் பழையவற்றுக்கு உள்ள பெருமையும் புகழும் அழிந்து போவதில்லை. இலக்கியம் காலத்துக்குக் காலம் வித்தியாசமான தோற்றங்களில் தன்னை வெளிப்படுத்திய போதும் ஒரு காவியத்தில் நாம் காணும் மொழியின் செழுமையையும் மாந்தர் பண்பாட்டையும் காலத்தின் பதிவையும் புதியவற்றில் நாம் முழுமையாகத் தரிசித்துவிட முடியாத நிலையே காணப்படுகிறது. இந்த அடிப்படையில் தமிழ் மொழித் தொண்டுக்காக ஜின்னாஹற்வுக்கு தமிழ் பேசும் சமூகம் கடன் பட்டிருப்பதாக நான் கருதுகிறேன்.
ஒட்டு மொத்த உலக முஸ்லிம் சமுதாயமும் தங்கள் உயிரை விட மேலாக நேசிக்கும் முஹம்மத் (ஸல்) அவர்களைப் பற்றிய காவிய நூலின் ஓரிரு பக்கங்களில் எனது ஏழ்மை மிகுந்த வார்த்தைகளைப் பதிவு செய்யும் பாக்கியத்தைத் தந்தமைக்காக ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களுக்கு நானும் கடன் பட்டிருக்கிறேன்.

Page 11
என் கண்தொலைநோக்கி கண்டவை தத்துவக் கவிஞர். தமிழ்மாமணி இ.பதுருத்தின் அவர்கள் வழங்கிய நயவுரை இறையில்லமான க அபத்துல்லா, இபுராஹீம் நபியவர்களால் கட்டப்பட்டது.
தாஜ்மஹால், மன்னல் ஷாஜஹான் அவர்களால் கட்டப்பட்டது.
அன்றும் இன்றும் கட்டடக் கலை என்பது வெவ்வேறு வடிவம் பூண்டு வருகிறது. இது தவிர்க்க முடியாதது.
கட்டடக் கலைகள், அவரவர் இயல்புக்கும் விருப்புக்கும் ஏற்ப உருப்பெற்றது போல, கவிதைக் கலையும், அக்கக் கால
சூழலுக்கேற்பவும், சிலபோது பழமையில் புதுமை மெருகேற்றப்பட்டு நிறுமாணிக்கப்பட்டு வருகின்றது.
இறைவனால் பேரன்பு கொண்டு மி.ராஜிக்கு அழைக்கப்பட்ட ஒரே நபியாகிய முஹம்மது எனும் புகழ்மிகு இறைத் தூதர் மீது கவிஞர்கள் அன்பு கொள்வது இயற்கை.
அந்த அன்பின் வெளிப்பாடாய் நபி (ஸல்) அவர்களின் முழு வாழ்க்கை வரலாற்றை எழுத வாய்ப்புக் கிடைக்கப் பெற்றோர் வெகு சிலரே ஆவர்.
அதுவுமல்லாமல் புலவர் பரம்பரையிலிருந்து பிறந்து வந்தவர்கள் கவித்துவம் பெற்றவர்களாக இருப்பது அரிதாகும்.
நபி (ஸல்) அவர்களுக்கு எப்படி நபித்துவமானவர்களின் அடித்தளம் இருந்ததோ, அதைப்போல கவித்துவமானவர்களின் அடித்தளங்கொண்டவராக நம் கண்முன் காணப்படுவோர் இருவர்.
ஒருவர் எம்.ஆர்.எம். அப்துற் றஹீம்
மற்றொருவர் ஜின்னாஹற் ஷரிபுத்தீன்.

-
ரஹீம் சாஹிப் அவர்களின் தந்தையாரும் ஒரு கவித்துவம் கொண்டவர். ஜின்னாஹற் அவர்களின் தந்தையாரும் புலவர் மணியெனப் போற்றப்பட்டவர்.
காவியக் கவிஞர்களிருவரும் தங்களது காவியங்கள் உருபெற்ற காலவரையைக் குறிப்பிட்டுள்ளனர்.
ரஹீம் சாஹிப் தமது பாரதூரமான காவியத்தை எழுத எடுத்துக் கொண்ட காலம் 1965 முதல் எழுதத் தொடங்கி 1985ல் தீவிரமாக எழுதி முடிக்க விரைந்திருப்பதாகக் குறிப்பிடுகிறார்.
ஜின்னாஹற் அவர்கள் 2006ல் காவியம் எழுதத் தொடங்கி எழுபது நாட்களில் நிறைவு கண்டிருக்கிறார்.
அல்ஹம்து சூரா, ஏழு வரிகளில் ஆனவை என்பதும் ஜின்னாஹற் எழுபது நாட்களில் எழுதி முடித்தனர் என்பதும் இங்கு ஒப்பிட்டுப் பார்த்து மகிழத் தோன்றுகிறது.
மேலும் ஜின்னாஹற் அவர்களே தமது முன்னுரையில் இறந்த பின்னும் நம்மோடு நாம் கொண்டு செல்லத் தக்க ஏழு உயர் பணிகளில்.’ என ஏழின் சிறப்பை உணர்ந்தவராக இருக்கிறார் என்பது எண்ணத் தக்கது. -
ஜின்னாஹற் அவர்கள் ஏற்கெனவே ஐந்து காவியங்கள் எழுதியவர். எனவே காவியங்கள் எழுதக் கைவரப் பெற்றவர். எனினும் அவர் தமது அவையடக்கப் பாடலில் 'சூரியன் முன்னே சிறு அகல்
விளக்கு போல்-புலவர்கள் முன்னே தம்மைக் கருதச் சொல்கிறார்.
எனினும் இந்த அகல் விளக்கின் சுடர், ஒரு வைகறை வெளிச்சம் போல் வரவேற்கத் தக்கதாகவே இருக்கிறது. ஏனெனில் நூரே முஹம்மதியாவெனும் பேரொளியைப் பாடத் தொடங்கினார் அல்லவா?
அரபு நாடென்றாலே பாலை நிலம் தான் எல்லார் பார்வைக்கும் தோன்றும். அது உண்மையென்றாலும் சோலை வனங்களும் ஆங்காங்கே உண்டு. இதற்குக் காரணம் அல்லாஹற்வின் அளப்பருங் கருணையே என வியந்து பாராட்டுகிறார், இப்பாடலில் -

Page 12
கருணையின் கடலாம் அல்லாஹற்
கொடுமைசெய் வானோ ஆங்கும்? கருணையைப் பொழிந்தே யுள்ளான் கூறிடிற் புதுமை யம்மா! பெருவெளி போவோர் மீது
பரிவுகொண் டவர்த மக்காய்ப் பருகிய நீரும், ஆறப்
பசுந்தரை படைத்தும் உள்ளான் இந்த ஒரு அறுசீர் விருத்தப் பாடலின் மூலம் அல்லாஹற்வின் கருணையையே கவிஞரின் கண் நோக்குகிறது என்பது மட்டுமன்று. அவர்தம் இறையீடுபாட்டையும் நமக்கு உணர்த்துகிறது.
அக்கால அரபியப் பெருங்குடியினர், தமது பிள்ளைச் செல்வங்களைப் பாலுட்டி வளர்க்க செவிலித் தாய்களை விரும்புவர். அதைப் போலவே பாலூட்டி வளர்க்க ஒரு குழந்தையைத் தேடி செவிலித் தாய்மார்களும் வருவர்.
இதனை நம் கவிஞர் குறிப்பிடும்போது அழகான ஒரு உவமையைக் கையாளுகிறார். அந்த செவிலித் தாய்களின் தேடல்கன்றினைத் தேடி ஓடும் காராம்பசுக்கள் போன்று காட்சியளித்ததாம்.
பொதுவாக, தாய்ப்பசுவைத் தேடித்தான் பசித்த கன்றுகள் ஓடிவரும். இங்கோ கன்றினைத் தேடிப் பசுக்கள். அதுவும் காராம் பசு. கருநிறப் பசுக்களின் பாலே சிறப்பு அம்சங்கொண்டவை. ஆகவே காராம் பசு பாராட்டப்படுகிறது.
ஆம்; சிறப்புகள் பல பொருந்திய ஹலீமா தாயார் அவர்கள் சிறப்புகள் பல பொருந்திய பாலகர் முஹம்மது அவர்களுக்குப் பாலூட்ட வாய்ப்பு ஏற்பட்டது என்ற செய்தியைக் கவிஞர் அவர்கள் இவ்வுவமை மூலம் பளிச்சிடப் பதிவு செய்கிறார்.
இதுபோல் ஆங்காங்கே சிறப்பான உவமை நயம் எனும் நெய், பெய்யப்பட்டு இந்நூல் முழுவதும் மணங் கமழ்கிறது.
இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் படைப்பாளர்கள் வரிசையெனும் அட்டிகையில்-பட்டியலில்-ஜின்னாஹற் அவர்களும் ஒரு வைரக் கல்லாகத் தம்மைப் பதிப்பித்து ஜொலிக்கிறார்.
அவரை மன்முவந்து வரவேற்போம்; வாழ்த்துவோம்.

திருநபி காவியம்
காவியம் பிறந்த காதை
என்னுடைய இதயத்தில் முற்றிப் போன
இடர்பாடு; இருப்பதுவாய் மருத்து வர்கள் சொன்னார்கள் குருதியோட்டம் தசைக்குக் குன்றிச்
சட்டென்று நின்றுவிடும் ஆபத் தென்றார் என்னசெய்ய வேண்டுமென்றும் இயம்பி னார்கள்
எலாம்புரிந்த தென்றனுக்கும் மருத்து வன்நான் சொன்னபடி சிகிச்சைக்கும் ஒப்புக் கொண்டேன்
திறந்தநெஞ்சக் கூட்டறுவைச் சிகிச்சை அ.தே.
இரண்டாயிரத்தைந்தாம் ஆண்டு திங்கள்
இறுதி முதல் நாள்: மாலை நவலோ காவிலே உரியபடி அத்தனையும் இறைநாட் டம்போல்
ஒன்றலாஹி எனும்நிபுணர் வெற்றி கண்டார் சரியாக மூன்றுமாத ஓய்வு வேண்டும்
சிகிச்சைமுற்றும் பயனளிக்க என்ற கூற்றை முறையாகக் கடைப்பிடித்தேன் அப்போழ் தேதான்
மாநபியின் சரிதத்தைப் பாட லானேன்
நவலோகா : மருத்துவ மனை - லாஹி : மருத்துவர்
அறுபத்து மூன்றுவயதான போழ்தும்
அணுவளவும் சோம்பலற்று எறும்பு போல சுறுசுறுப்பாய் இருந்தவன்நான் ஒய்வு கொள்ளச்
சொன்னார்கள் அவசியத்தால் அப்போ தென்றன் மறுபிறப்பொன் றானநிலைப் பேற்றைப் போற்ற மாநபியின் சரிதத்தைக் காவ்ய மாக்கும் உறும்பணியைக் கொள்கவென எனது நண்பர்
ஒ. கே. குண நாதன்என்பேர் உரைத்திட் டாரே.

Page 13
திருநவி காவியம்
நண்பரிட்ட வேண்டுகோளை நயந்து போற்றி
நன்றிகூறி நற்றமிழின் துணையி னோடு விண்ணவனின் அருள்கொண்டு காவ்யம் செய்தேன் வரிசையிலே ஆறாவதாகும் அ.தே எண்ணளவில் இரண்டாயிரத்து ஆறு
ஏற்றமுதற் றிங்கள்நாள் ஒன்று தொட்டு எண்ணிக்கை ஏழுபத்து நாட்கள் பாட
எலாம்பாக்கள் ஆயிரத்து ஐந்நூ றாகும்.
காவியங்கள் இதனோடு ஆறு செய்தேன்
கவிதைகளோ பல்லாயி ரங்கள் தேறும் நாவினிக்கும் பாடிடநெஞ் சினிக்கும் என்றே
நவின்றனரே கற்றுயர்ந்தோர் ஆய்வுஞ் செய்தார் பாவினங்கள் அனைத்திலுமே பாடி யுள்ளேன்
படைத்தவற்றுள் என் நெஞ்சப் பதியின் மீது பூவிரித்த மஞ்சத்தில் வாழ்வ திந்தப்
பூமானின் காவியமே புகழ்இ றைக்கே
திருநபிமேல் காவியமொன் றியற்ற என்னைத்
தூண்டிவிட்டு ஊக்குவித்தார் இலக்கி யத்தில் சிறுவருக்காய்ப் பல நூல்கள் படைத்த ளிக்கும்
தம்பி ஓ.கே குணநாதன் வாழ்த்துச் செய்தார் குருவாக வாய்த்தெனக்குத் தமிழ்த்தேன் ஊட்டிக்
கவிதைசெயக் காரணராம் முஹம்மத் ஆசான் மறைவழியிற் குறள்தந்த பதுருத் தீன்என்
மனங்கொண்ட பாவல்லான் இவரோ டென்றி
பாயிரத்தைப் பாடியுள்ளார் ஹஸன்மெளலானா
பண்டைத்தமிழ் முஸ்லிம்கள் இலக்கி யத்தை ஆயமுதற் காரணராம் இலக்க ணத்தை
அறிந்து கொண்டேன் அவரிடமும் : காவியத்தை நேயமுடன் பார்வைசெய்தார் கனக ரத்னம்
நற்றமிழின் வித்தகனார் புலவர் என்மேல் தூயதமிழ் நெஞ்சத்தால் துணையா னோர்கள்
சேர்கஇவர் அனைவருக்கும் நன்றி மாதோ,
ஜின்னாஹ் ஷரித்தீன்

எனையறியாப் பேர்களுக்கும் என்னைச் சொல்ல
ஏற்றனனே என்நம்பி அஷ்ரஃப் சேர்ந்து நனிபுகழ இலக்கியமா நாடு ஒன்று
நடத்திவென்றோம் இரண்டாயி ரத்து ஐந்தில் துணைநின்றார் கலையன்பன் காவியத்தின்
தோன்றலுக்கு ஊக்குவித்தார் தாஸிம் அஹ்மத் மனைமக்கள் உதவியபேர் அனைவருக்கும்
மாநபியின் ஷபாஅத்துக் கிடைக்க வேண்டும்.
பின்அட்டைக் குறிப்பெழுதித் தந்தார் மாமன்
படைத்தளித்த நூலுக்குப் பேரா சான்றன்
கன்னற்றமிழ்க் கவித்திறத்தால் பாக்கள் செய்யும்
கவிச்சுடராம் அகமது மரைக்கார் வாழ்வில்
தன்னகத்தே தமிழ்மணியாய்ப் பெயரும் பெற்ற தாய்வழிசெந் தமிழ்கொண்ட சீரார் நம்பி
பொன்னள்ளி வெறுங்கலத்துட் பொழிந்தாற் போலாம்
பெருமைமிக்கோர் தந்தவிவை யனைத்தும் மாதோ
பாச்சரத்தைக் கோத்தெடுத்தேன் அச்சி லேற்றிப்
பதிவுசெய்யத் துணைநின்றார் உவமைப் பித்தன் பாச்சரங்கள் பலகோத்துத் தமிழ்த்தாய் மார்பைப்
பாங்குறவைத் தேற்றமுற்ற முனிய முத்து தீச்சுடராய்க் குளிர்பணியாய் மரபுள் நின்று
செந்தமிழை வாழவைக்கும் கவிதைச் சித்தன் பூச்சரம்போல் நன்றிகளைத் தொடுத்தெடுத்துப்
பூணித்து மகிழ்கின்றேன் நாமம் வாழி

Page 14
பதிப்புரையும், வெளியீட்டுரையும்
கவிஞர் ஜின்னாஹற் ஷரிபுத்தீனின், பாலையில் வசந்தம், முத்துநகை, பனிமலையின் பூபாளம் ஆகிய கவிதைத் தொகுதிகளையும், மஹற்ஜமீன் காவியம், புனித பூமியிலே காவியம், பிரளயம் கண்ட பிதா, தாய்க்கென வாழ்ந்த தனயன், பண்டாரவன்னியன் காவியம் ஆகிய காவியங்களையும், பெற்ற மனம் சிறுகதைத் தொகுதியோடு, கருகாதபசுமை என்னும் நாவலையும் நாம் பதிப்பித்து வெளியிட்டுள்ளோம்.
தவிரவும், அகப்பட்ட கள்வன், கடலில் மிதக்கும் மாடிவீடு, எங்கள் உலகம் என்னும் சிறுவர் இலக்கியங்களையும் எமது அன்னை வெளியீட்டகம்
சார்பாய் நாம் பதிப்பித்து வெளியிட்டுள்ளோம்.
இந்நூல்களின் மூலம் எமக்குக் கிடைத்த ஆதரவு கொண்டு திருநபி காவியம் என்னும் இந்நூலையும் பிரசுரித்து வெளியீடு செய்கின்றோம். முன்னர் போலவே இந்நூலுக்கும் வாசகர்களின் ஆதரவு முழுமையாய்க் கிடைக்குமென நாம் நம்புகின்றோம்.
பரீதா ஜின்னாஹற் ஷரிபுத்தீன் 16, பாடசாலை வீதி "அன்னை வெளியீட்டகம்” தெஹிவலை LD(bg5(LJD60)60T

திருநபி காவியம்
திருநபி காவியம்
காப்பு
கற்றறியா "உம்மி”எங்கள் காருண்ய நாயகர்க்கு முற்றுமுயர் ஞானம் மொழிந்தவனே - கற்றோர் உவந்தேற்க அன்னார்மேல் ஓங்குகவி பாட உவந்தளிப்பாய் ஞானம்நீ காப்பு.
அவையடக்கம்
பகலவன்றன் பேரொளியிற் பங்குகொள்ள ஏங்கும் அகல்போன்றே நானும் புலவோர் - வகைவகையாய்ச் செய்ததமி ழோடொன்றச் செய்யுந் தமிழி..தாம் துய்யதமிழ் ஏற்கவென்றே தான்.
நூன் முகம்
அருளாளன் அன்புடையோன் அகிலத் தோர்க்கு
அருட்கொடையாய் அண்ணலாரை அனுப்பி வைத்தான்
அருட்கொடையாய் அவர்மூலம் அல்குள் ஆனை
அருளினனே வழிகாட்ட அகிலம் உய்ய
பொருட்செறிவுங் கவிச்சுவையும் பொருந்தப் பல்லோர்
பெருமானார் வாழ்வுதனைப் பாடலுற்றார்
அருட்திருவாம் அன்னவரின் அகில வாழ்வை
அழகுதமிழ் கொண்டுரைக்க அவாவுற் றேனே.
பற்பலபேர் நபிவாழ்வைப் பாடி னாலும்
புதுப்புதிதாய்ப் பாடுதற்குப் பொருளுண் டந்த அற்புதரின் ஆறுபத்து மூன்று ஆண்டின்
அகிலவாழ்வின் அணுவணுவும் ஆழி போன்றாம் முற்றுமவை மொழிந்திடத்தான் முடியு மாமோ
முயன்றுபலர் சிற்சிலதே மொழிந்துள் ளார்போல் கற்றறியான் நானும்என் கண்ணின் மேலாம்
கருணைநபி தனைப்பாடக் காத லுற்றேன்.
O1 ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 15
திருநபி காவியம்
பாலை நிலம்
(வேறு)
செஞ்சுடர்க் கதிர்கள் தன்னைச்
சுற்றிடத் தீப்பி ழம்பாய் வெஞ்சினங் கொண்டான் போன்றே
வான்வெளி ஆண்டான் வெய்யோன் அஞ்சினள் பூமி மண்ணை
அவிப்பனன் என்றே அன்னான் விஞ்சிடும் உட்ட ணத்தின்
வேகத்தை உணர்ந்த தாலே. 5
வேகமாய் வீசுங் காற்று
வாரிய மண்ணை வேறோர் பாகத்திற் குவித்து மேடாய்ப்
புதியதோர் மாற்றங் காட்டும் மேகங்கள் சுற்றுங் காய்ந்த
மணற்றரை கண்டும் பெய்யா சோகமே பார்க்க அந்தச்
செம்மணற் பரப்பாம் அந்தோ 6
கதிரவன் கிரணம் பட்டுக்
காய்ந்தமண் மீதி ருந்தே கொதித்தெழுங் கானல் நீர்போல்
கண்களைப் பொய்க்கச் செய்யும்
பதித்திட இயலு மாமோ
பதங்களைப் பொசுக்கு மன்றோ விதித்த.). ததுதான் பாலை
வெளிக்கிறை புறத்தா லாகும். 7
எல்லையீ தென்று செப்ப
இயன்றிட வொண்ணாப் பாங்கில்
கல்பல தொடர்ந்து காணும்
கானக வெளியின் மண்ணில்
O2
ஜின்னாஹ் வழfபுத்தீன்

திருநபி காவியம்
புல்லெனுந் தோன்றா வாறே
பரத்தினன் நிலத்தை வல்லோன்
சொல்லொணா வெம்மை யொன்றே
சொந்தமம் மண்ணுக் காமே. 8
கருணையின் கடலாம் அல்லாஹற்
கொடுமைசெய் வானோ ஆங்கும் கருணையைப் பொழிந்தே யுள்ளான்
கூறிடிற் புதுமை யம்மா பெருவெளி போவோர் மீது
பரிவுகொண் டவர்த மக்காய்ப் பருகிட நீரும் ஆறப்
பசுந்தரை படைத்தும் உள்ளான். 9
பாலையிற் பயணஞ் செய்வோர்
பசிதாகம் போக்கி ஆறப் பாலையின் இடையி டையே
படைத்தவன் படைத்தான் காய்க்குஞ் சோலைகள் தம்மை வல்லோன்
செய்கைதான் என்னே மாந்தர் பாலுள்ள கருணை தன்னைப்
புகலற்கு அரிதா மன்றோ 10
நாப்பண்ணேர் பொய்கை செய்து
நன்னீரின் ஊற்று வைத்தே சாப்பிட்டுப் பசியும் போக்க
சுற்றிலுங் கனிம ரத்தின் தோப்பையும் படைத்தான் ஒட்டைத்
தீன்வகைப் புல்லுஞ் சேர்த்தான் காப்பவன் நானென் மீது
கடமைய. தென்ப தாலோ 11
O3
ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 16
திருநபி காவியம்
பசுந்தரை அழகைப் பார்ப்பின்
படைத்தவன் செய்கை எண்ணி விசித்திரம் என்றே நெஞ்சு
விம்மிடும் வழுத்தத் தோன்றும் புசித்திட உணவும் உண்டு
பருகிடப் புனலும் அந்தப் பொசுக்கிடும் பாலை மண்ணில்
படைத்துளான் பாரைக் காப்பேன்.
கணிதரு மரங்கள் சோர்வு
களைந்திடும் நிழல்ம ரங்கள் மனுதவிர்ந் துயிர்கள் வாழ
மரஞ்செடி கொடிகள் புற்கள் இனிதுற வீசுங் காற்றை
இளந்தென்ற லாக்கும் விந்தை மனதினுக் கினிமை யூட்டும்
மாயத்தை என்னென் போமோ
வண்ணப்பூச் செடிகள் மீது
வண்டுறைந் துண்ணுஞ் செந்தேன் பண்ணிசை பாடும் ஆங்கு
பறந்திடுங் குருவிக் கூட்டம் கண்ணினைக் கொள்ளை கொள்ளும்
கனிதொங்கு குைைலகள் இ.து பண்ணவன் அருளா மன்றிப்
பிறிதென்ன ஏற்கா ருண்டோ.
இடையிடை மலைகள் கூட
இறைபடைத் துள்ளான் பாலைத் தொடர்புரண் டிலாதி ருக்குந்
தடைக்காமோ பாறை கொண்டே தொடர்ந்தவை இருந்த தொன்றித்
தனித்தனி வேறாய்க் காணும் குடைந்ததார் குகைகள் அந்தக்
கற்குன்றம் பதிகள் போன்றே.
12
13
15
O4
ஜின்னாஹ் வழfபுத்தீன்

திருநபி as Tssus
“ஹிரா’க்குகை “தெளர்'என் றின்னுங்
குகைபல கொண்ட தாகும் பெருமைகொண் டனவாம் அவ்வீர்
பருவதப் பதிகள் ஞால இறுதிநாள் வரையும் மக்கள்
எண்ணுவர் மனத்திற் கொள்வார் மறைவந்த தொன்றில் மற்றும்
மாநபி ஒளிந்த தொன்றில். 15
அரேபியா
(வேறு)
பூவுலகின் வரைபடத்தின் மத்தி யாகப்
படையுண்ட பெரும்பாலைப் பரப்பு மண்ணால் மேவியது குன்றுகளும் நிறைந்த பூமி
மிகச்சொற்ப மேயாங்கு வாழ்ந்தார் மக்கள் தேவைக்கு ஏற்றபடி புனலில் லாத
தலம்பாலை வனமெனவும் பெயருங் கொள்ளும் தூவாது மேகங்கள் கருணை கொள்ளாச்
சூடான சீதோஷ்ணக் கண்ட மொன்றாம். 16
இருகூறாய்ப் பிரிந்ததது சிரியாப் பாலை
இணையாது அரேபியாவின் பாலை யோடு தெரியாத மர்மமான விசித்தி ரத்துள்
தனையடக்கிக் கொண்டிருந்த தந்த நாளில் புரியாத ஏகாந்தப் பெரும்பு லம்போல்
பக்கத்து மனுவாழ்வும் ஆட்சி தாமும் ஒருவினையும் அன்னவர்க்கு இடையூ றாக
ஒன்றவில்லை அதுதணியாய்ப் பிரிந்த மண்ணே. 17
O5
ஜின்னாஹ் இழரித்தீன்

Page 17
திருநபி காவியம்
பெரும்படைகள் கடந்ததனைச் சென்றிட் டாலும்
பாதகங்கள் விளைந்ததில்லை பார சீகத்(து) உருப்பெற்ற பிறரோடான போர்கள் கூட
உணர்ச்சிபெறச் செய்யவில்லை அவற்றை எல்லாம் கருத்தினிலே கொள்ளவில்லை அரேபி யர்கள்
கண்ணயர்ந்து துங்குவர்போல் வாழ லானார் விருத்தியென்ப தில்லாத மண்ணாய் அந்நாள்
விளங்கியது அறியாமைக் காலம் அ.தே 18
Diodo
பிரிந்திருந்த தன்னாளில் ஐந்து கூறலாய்ப்
பாலைவனப் பிரதேசம் 'ஹிஜ்ஜாஸ்' ஒன்றாம் அருகதற்குச் செங்கடலாம் அதனில் மூன்று
ஆனநகள் “மக்கா', 'மதீனா’, 'தாயிப்” என்தாம் பெருமையுறு 'மக்கா’ முன் "பக்கா’ என்ற
பேர்பெறுமே நகர்களுக்குத் தாயென் றாகும். உருவான தாகுமது "ஹிஜ்ஜா'ஸ்"க்கு
உவந்ததலை நகராக அற்றை நாளில் 19
கிறிஸ்துவுக்கு முன்னிரண்டா யிரகமா மாண்டில் காப்பவனின் கட்டளைக்கு அடிப னிந்தே இறைதூதர் இபுறாகீம் தமது மைந்தர்
இஸ்மாயீல் தனைத்தாயின் துணையி னோடு வரண்டேநீர் அற்றவந்தப் பாலை தன்னில்
விட்டகன்றார் 'ஜிப்ரீலின் உதவி யோடு சுரந்ததுவாம் ’ஸம்ஸம்'என் புனலின் ஊற்று
தாகத்தைப் போக்குகின்ற பெரும்பே றாக, 20
ஏகதெய்வ வணக்கத்தின் பொருட்டு மண்ணில்
ஏற்பட்ட முதற்பள்ளி "கட்பா' வாகும்
வாகாகப் புதுமைபெற்ற(து) இஸ்மா யீலின்
வழிதந்தை உதவியொடு இறைபால் அன்னார்
O6
ஜின்னாஹ் வழfபுத்தீன்

திருநபி காவியம்
போகுநிலை உண்டாக மெல்ல மெல்ல
புதுப்புதிதாய் உருவங்கள் தோன்றிற் றாங்கே நிறைந்துமுன்னுற் றறுபதெனச் சிலைகள் கூட
நபிஇபுறா கீம்மகனார் சிலைகள் சேரும். 21
திருமறையிற் சொல்லுவபோல் "அலக் அல்” “உஸ்ஸா’
தம்மோடு "ஜிப்பல்”போல் இன்னும் வேறாம் இறையவனின் மகள்மார்கள் என்றும் வேறாய்
இருந்தனவாம் விண்ணின்கோள் எனவாய் வெள்ளி கறையோட்டுஞ் சூரியனுஞ் சந்திரன் தானும்
காட்டுமரம் போன்றவையும் கல்லும் மண்ணும் இறைவடிவ உருக்கொண்டு புனித க.பா’
இழிநிலைக்குள் ளானதந்த அறியார் காலம். 22
பத்துமுறை கட்டுண்ட தாகும் க.பா
புனிதமிகு மலக்குகளால் முதன்மை யாக எத்தகையும் அடித்தளத்தில் மாற்ற மற்றே
இறைபடைத்த முதன்மனிதன் மீண்டுஞ் செய்தார் உத்தமநந் நபிசீதால் பின்இப் றாகீம்
உருவாக்க "அமல்’குலத்தார் மீண்டுஞ் செய்தார் புத்துயிர்தந் தார்கள்பின் "ஜுர்ஹம்’ பேர்கள்
பின்செய்தார் “குவை”யென்போர் அதன்பின் னாலே 23
குறைவழிகளின் காலத்தில் கட்டி னார்கள்
குலச்சண்டை தோன்றாது நபிகள் நாதர் இறைபள்ளி நிர்மாணப் பணியில் சேர்ந்தார்
'ஹிஜ்ரத்'தின் அறுபத்து நான்காம் ஆண்டில் மறுமுறையும் 'அப்துல்லாஹற் இப்னு ஸ்பைர்’
முற்றாகப் புதுப்பித்தார் "ஹஜ்ஜாஸ் யூசுப்” இறுதியாக "சுல்தான்முறாத்” ஏற்றார் “க.பா’
எழிலுறவே தோன்றுநிலை கண்டிட் டாரே. 24
O7
ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 18
திருநபி காவியம்
மதீனா
“யத்ரீப்” எனும் பெயர் கொண்டு இருந்த தன்னாள்
இறைதூதர் புக்ககமாய்க் கொண்ட தாலே “மதீனத்துல் நபி'யென்றே "மதீனா’ வாகி
மாநபிக்குப் புகழ்சேர்க்கும் நகர மாகும் முதல்"அமாலி கள்’பின்னர் யூதர் ஆண்டார்
முடிவாக "அஸ்த்”குடிகள் கைக்கொண் டார்கள் மதீனாவாய் ஆனபின்னர் முற்றும் எம்மான்
முடிவில்லா ஆட்சிக்குள் ஆன தன்றோ. 25
தாயிப்
பெரும்பாலைப் பரப்பினிலே சோலை யாகப்
பசுமைகொண்ட பொற்றரையாம் தாயிப் அந்நாள் வருமொவ்வோர் கோடையிலும் அராபி யர்கள்
வந்துகுடி யேறிமகிழ்ந் திருப்பா ராங்கே மரஞ்செடிகள் புற்பூண்டு மற்று மெல்லா
மனத்திற்கு இதமளிக்குஞ் செழுமை கொஞ்ச இருந்ததன்றும் இன்றும்பிற் காலத் தேயும்
இறையவனின் அருள்பெற்ற மண்ணாம் அ.தே. 26
சீதளத்துத் தென்றலொடு சேர்ந்தே காயும்
செங்கதிரோன் ஒளிக்கதிர்கள் இளவெப் பாக ஒதுவகைக் கனிவர்க்கம் அனைத்தும் ஆங்கு
உற்பத்தி ஆகி மக்கள் பசியைத் தீர்க்கும் ஆதுலரே இலாதசெல்வப் பூமி தாயிப்
அளிப்பதனைக் கொள்வதற்கு யாரு மற்றே. பூதலத்தின் பொற்பதியாம் என்னும் பாங்காய்
பரிணமித்த தாமற்றைக் காலப் போழ்தே. 27
O8
ஜின்னாஹ் ஷரித்தீன்

திருநபி காவியம்
சூழரையும் செயற்பாடும்
(வேறு)
மக்கமா நகரை நோக்கி வருபவர் தமக்குத் தண்ணிர் தக்கவா றளித்தே அன்னார் தாகத்தைத் தணிக்குந் தொண்டு அக்காலத் துரித்தாம் முற்றும் அப்துல்முத் தலிபென் போக்கு மிக்கதோர் புனலின் பஞ்சம் மேவிய தோர்கால் ஆங்கே. 28
"ஸம்ஸம்” கிணறக் காலை தூர்ந்துபோய் இருந்த தாம்முன் "ஸம்ஸம்” கிணறு)இஸ் மாயீல் தூதரால் தோன்றிற் றென்றே தம்வசச் சான்றி னோடு சென்றப்துல் முத்த லீபும் மும்மையும் அறிந்தோன் க.பா முறைசெய்வோ ரிடத்தி லாண்டே29
சிலைகளை வணங்கு வோர்க்குத் துணைதரும் பூச கள்முன் நிலைகொண்டார் முத்த லீப்தன் நிலைதனை உரைப்பார் ஒர்கால் சிலையிடை மறைந்தி ருந்த "ஸம்ஸம்’மைக் கனவிற் காட்டி உலகினுக்(கு) அருள்செய் தானிவ் வுலகாளு முதல்வன் அந்நாள் 30
வல்லவன் பால்நான் நெஞ்சால் வாக்குரை செய்தேன் என்றன் செல்வங்க ளான மக்கள் தம்மிலோர் உயிரை மாய்க்க எல்லோரும் இங்குற் றார்கள் இவர்தமில் ஒருவ ரைநான் சொல்லிய வாறு செய்யும் திடனொடு வந்தேன் என்றார். 31
பதின்மர்என் மக்கள் இங்கென் புறத்தினில் உற்றார் அந்தப் பதின்மரின் பெயர்கள் சீட்டில் பதித்துப்பின் நீரே ஒன்றை விதிப்பயன் அறியத் தேர்ந்து விடினவர் தனைநான் என்றன் பதிக்கென்று பலிபீ டத்தின் பங்கெனத் தருவே னென்றார். 32
முத்தலிப் சொன்ன வாறே மதகுரு செய்தார் அ.தில் "அப்துல்லாஹற்’ என்னும் நாமம் அமைந்திட ஆங்குற் றோர்கள் சப்தமிட்டு) அழுதார் வானைத் தொடுங்குரல் எடுத்தே சோர்ந்தார் முத்தலிப் மனமுங் கூட முடிவுகண்டு) அதிர்ச்சி கொள்ளும். 33
09 ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 19
திருநபி காவியம்
பதின்மரில் இளையோன் என்றன் பாசத்தின் முழுமை தன்னை விதிவழி பலியி டப்போம் வாகுற்ற தென்றே சற்று மதியிழந் தாரே அ.தே முறைமையென் றிருப்ப நொந்தார் புதுமையாம் ஆங்குற் றோர்கள் புதுவழி பகரக் கேட்டார். 34
செய்ததம் சூழு ரைக்குத் தக்கவா றியற்றா விட்டால் பொய்யனாய்ப் போவேன் வல்லோன் பெரும்பழிக் குள்ளா வேன்நான் வையமே கலங்கி னாலும் வாக்கினை மாற்றேன் என்றார். தெய்வத்தின் தலத்தில் அன்றோர் சோகநாள் போல்மா றிற்றே. 35
உற்றவர் அனைத்துப் பேரும் ஒன்றிட வேண்டி னார்கள் மற்றுளார் தாமும் கூட மன்றாடி ஒன்று சேர்ந்தார் கொற்றவன் பாலும் கொள்கை கைகூடும் மகற்கு ஈடாய் மற்றொரு உயிரைக் கொன்றால் மாசிலை என்றி ட்டாரே. 36
இஸ்மாயீல் நபிக்கு ஈடாய் ஏற்றனன் ஆட்டை வல்லோன் விசுவாசங் கொண்ட நாமவ் விபரங்கள் அறிவோம் என்றே இசைவான கருத்தைக் கூற இணங்கினார் முத்த லீபும் தசைப்பிடிப் பான நூறாம் தொகையொட்டை பலியா கிற்றே. 37
பணயமாய் ஒட்ட கைகள் பலியிட்டார் அப்துல் லாஹற்வை அனைத்தனர் முத்த லீபும் அனைவரும் அகம கிழ்ந்தார் இணையிலான் ஏற்பா னென்னும் எண்ணத்தில் திருப்பதி கண்டார் கணத்தினுட் சோகம் மாறிக் களிமிகுந் திட்ட தம்மா. 38
இருண்டவா னிடையே சட்டென் றிரவிதோன் றிட்ட வாகாய் மருண்டுபோய் நின்றோர் சோகம் மூழ்கிய வதன மெல்லாம் விரிந்தன மலர்கட் கொப்பாய் விழிபொழிந் திட்ட கண்ணிர் பொருந்திய தாகும் சோகம் பின்மகிழ் விரண்டி னுக்கும். 39
உடன்பிறந் தோரும் உற்றார் உறவினர் தாமும் நெஞ்சங் குடிகொண்ட சோகம் நீக்கிக் களிகொள்ள வானின் சோதி உடன்படு பாங்காய்க் காய்ந்து ஒளியினை உமிழ்ந்தான் அந்நாள் விடைபெறு மட்டும் மக்கா வசத்தினில் தனித்தோன் போன்றே. 40
10 ஜின்னாஹ் வழfபுத்தீன்

திருநபி ສre4tມບໍ່
அறிகிலர் எவரும் பின்னாள் அப்துல்லாஹற் வழியில் தோன்றும் மறுவிலா அறிவின் சோதி மானிலம் உய்யச் செய்யும் இறைவழிப் பேற்றை அந்த இறையொன்றே அறிவா னென்ன நிறைவுற்ற தனைத்தும் வல்லோன் நாட்டத்தின் பேறா மன்றோ. 41
ஆமினா அப்துல்லாஹ் திருமணம்
ஒட்டகை நூறு ஈந்தே உயிர் பிழைத்திட்ட செம்மல் கட்டழ கோடு முற்றுங் கண்கவர் இளைஞ ராகத் திட்டமுங் கொண்டார் தாதை தக்கதோர் பெண்ணைத் தேடிக் கட்டிடத் திரும ணத்தால் காலமுங் கனிந்த தன்றோ. 42
குறைவழிகள் குலத்து தித்த குலக்கொழுந்(து) அப்துல் லாஹற்வை குறைவழிகள் போலு யர்ந்த குலத்தினிற் சேர்ப்ப தொன்றே நிறைவுறுஞ் செய்கை என்றே நினைந்தனர் தந்தை அன்னார் முறையான தேடலுக்கு மறையோனும் அருள் செய்தானே. 43
யதிfபு நகரில் "ஜொஹற்ரா” எனுங்குலத் துதித்த பெண்ணாள் சதியெனும் பொருத்தப் பாட்டில் சீர்பெற இருபா லாரும் மதியொன்றித் திரும ணத்தை முறைப்படி செய்வித் தார்கள் புதியதோர் வாழ்வு அன்று புலர்ந்தது புவியின் பேறே. 44
கண்மணி மகனா ருக்குக் கிடைத்தபெண் வாழ்வுக் கேற்ற பெண்ணெனக் கண்ட தந்தை பேறெங்கள் பாலி றைவன் கண்கொண்டான் எண்ம கிழ்ந்தே களிப்பினிற் றிழைத்தார் போன்றே பெண்தந்த பேரும் உற்றார் புகழிறை பாலிற் சேரும். 45
அழகிய ஆமி னாவும் அப்துல்லாஹற் அழக ரும்தம் அழகுறு வாழ்வு தன்னை அமைத்துவாழ்ந் திருந்தார் கூடி பழுதறு இல்ல றத்துள் புகுந்துவாழ் வியற்ற யார்தம் இழிவிழி பட்ட தாமோ இடர்வந்து சூழ்ந்த தம்மா 46
ஜின்னாஹ் விழரித்தீன்

Page 20
திருநபி காவியம்
ஆண்டொன்று கழிந்த தன்னார் அகமொன்றி வாழ்ந்தார் முற்றும் பூண்டனர் மகிழ்வு வாழ்வின் பூரணங் கண்டார் அந்நாள் வேண்டாத வாறு மற்றோர் வரலாறுந் தோன்றிற் றாங்கே ஆண்டவன் ஆல யத்தை அழித்திட முயன்ற செய்கை. 47
ஆப்ரஹாவின் யானைப் படையெடுப்பு
(வேறு)
வரலாறு கண்டிலா வாறுமுன் மேன்மைகொள் வானவன்றன் பெருமைகொள் "க.பா’வென் பொற்புறு பள்ளியின் மீதுளதன் பொறாமையால் 'ஆப்ரஹா’ என்றிடும் பாழ்படு மன்னனொரு பெரும்படை கொண்டே அழித்திட வந்தனன் போர்தொடுத்தே 48
பற்பல நாட்டினர் போய்வரும் பாதை பெருநகராய் உற்றதால் பொன்பொருள் ஒன்றும் வணிகநற் பூமியென வற்றிடாச் செல்வமும் வேறு வளங்களும் விள்ளுவதால் முற்றும் மனக்கவல் முற்றினன் மாசுடை நெஞ்சினனே. 49
அரபுமண் மீதுறை மாந்தர் அணிதிரண் டாங்குவந்தே ஒருமுறை கூடுவர் ஒப்பிலா மக்காத் திருநகர்க்கே உருவிலான் முன்னோன் உயர்குலம் க.பாத் தரிசனத்தைப் பெறுதலுக் காமவர் புண்ணியம் நாடிப் புகழிறைக்கே. 50
கூடிடும் மக்களின் கூட்டத்தைத் தன்நகள் தம்வழிபால் நாடிடச் செய்யின் நலம்பெறும் தன்நகள் மேன்மையுறும் கோடிப்பொன் கூடும் கொணரும் புகழும் எனும்நினைவால் தேடினான் தீதுபல் லாயிரம் கொண்டான் துணிந்தனனே. 51
மாதா கோயிலொன் றாக்கி வழிபட மக்கள்தமைச் சாதக மாக்கித் திருத்தல மொன்றதே சிறந்ததென ஓதி மதகுரு மார்களும் அதன்படி ஒற்றியற்ற ஒதினான் வெல்லத் தொடர்ந்தனன் பற்பல ஒன்றிடவே. 52
12 ஜின்னாஹ் விழரித்தீன்

திருநபி காவியம்
யாதுதான் செய்திட்ட போழ்திலும் க.பா இறைத்தலத்தில் ஆதர வுற்ற அரேபிய மக்களைத் தன்வழியின் மீதுறச் செய்யும் முயற்சியில் தோற்றனன் 'ஆபிரஹா’ நீதமி லாதோர் நிலைமையை நாடினான் நாசகனே. 53
கடவுளின் ஆலயம் "க.பா'வை முற்றும் அழித்தலொன்றே முடிவிதற் காமென் முடிவுகொண் டானே முதலவனின் முடிவுவே றாமென முற்றும் அறிந்திலன் மூர்க்கணவன் முடிவினை முற்றும் முதலவன் தன்கரம் மாற்றினனே. 54
பன்னுாறு யானைகள் போர்க்கலந் தாங்கிப் பெரும்படையைத் தன்னொடு கூட்டினான் தோள்வலுக் கொண்டமா வீரர்களும் பன்னூறு ஆயிரம் பேர்களும் ஒன்றப் பெருமை கொண்டான் தன்னையார் வெல்லுவர் தாரணி என்றே திமிர்த்தனனே. 55
"ஆப்ரஹா’ போர்க்கென அண்மினன் என்றே அறிந்ததனால் சோர்ந்தது மக்கா நகரமே அதிர்ந்தது ஆங்கிருந்தோர் காப்பிடம் நோக்கிக் கலைந்தனர் தம்முயிர் கைப்பிடித்தே காப்பவன் காப்பனே க.பாவை எண்ணார் கடிதகன்றார். 56
யாதுதான் செய்வ(து) என்றே அபூதாலிப் இங்கிருப்பின் சாதலே தாம்இறைப் பள்ளியைக் காப்ப தெமக்கியலா பாதுகாப் பாயுன தாலயம் தன்னைநீ பேரிறையென்(று) ஓதி உருகி ஒடிந்துளங் கண்கணிர் உகுத்தினரே. 57
வான்சுழல் மேகமொன் றாகிமண் மீதில் படிந்ததெனத் தான்பெரு பாலை இருந்தப் பெரும்படை வந்திடுங்கால் தோன்றிய தூசிப் படையினால் தோன்றுவ தோன்றிலாதே தோன்றிய தில்லைக் கரிகளும் சொல்லவுஞ் சொல்லிலையே. 58
குன்றுகள் பற்பல காலூன்றி ஒன்றாய் நடைபயிலும் என்றவா றாயின எண்ணிலா யானைகள் ஏற்றபடை சென்றன என்றுமே தேரிலார் மக்காத் திருப்பதியோர் அன்றே இறுதிநாள் அன்னவைக் கென்றெவர் அறிகுவரோ 59
13 ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 21
திருநபி காவியம்
எள்ளிடை தானுமே இல்லையென் றாமவை எ.கியபோற் கொள்ளையாய்க் குஞ்சரக் கூட்டமொன் றொன்றொடு ஒன்றிவரும் விள்ளுதற் கில்லையாம் வார்த்தைகள் வேகம் வரும்படைக்கு தெள்ளிய ஞானத் திருவுரு வானோன் திறன்பெரிதே. 60
படையொடு வந்தவப் பாதகன் போர்பறை கொட்டிடமுன் இடையோர் இடத்தினில் இட்டனன் பாசறை ஏவலரை அடிபணிந் திட்டிட ஆணை அனுப்ப அவர்விரைந்தார் மிடிதொடர்ந் திட்டமை தேரான் முடிவினில் மாள்பவனே. 61
காத்திருந் தானே குறைவழிப் புறமிருந்(து) யாரெனினும் ஊர்த்தலம் விட்டவன் ஒன்றும் புலம்வர ஒப்பிடற்காய் காத்தது போக்குவா றாங்கொரு வர்வரக் களிப்படைந்தான் பார்த்தான் அபூதாலிப் தானவன் பார்வையிற் பட்டவரே. 62
சரணடைந் தோமெனுஞ் சேதியைத் தாங்கியே சேர்ந்ததுவாய் ஒருமணங் கொண்டனன் உண்மை உணர்ந்திடான் ஓங்குதொணிச் சரம்விடுத் தானவன் வந்ததன் நோக்கினைத் தானறிய உரம்படு நெஞ்சார் உரைத்ததைக் கேட்க உறைந்தனனே. 63
வந்ததன் காரணம் வார்த்தையிற் கோக்க விடைபெறுவான் வந்ததென் ஒட்டை வழிமறந் திப்புறம் வந்திருப்பின் வந்தவா றென்னொடு வீடுகொண் டேகிட வந்தனன்நான் வந்திடக் காரணம் வேறில என்றுசொல் வைத்தனரே 64
சீறினான் எண்ணிச் சினத்தனன் சிம்மமாய்ச் செந்தனல்போல் மாறின கண்கள் முறையிலா வார்த்தை மொழிந்தனனே கூறுவான் வந்ததுன் ஒட்டகை தேடியோ மண்டியிடும் வாறுநான் நாடினேன் வீனது போலெனின் வீண்பழியே. 65
இறைவனின் ஆலயம் என்னும்"க. பா’வினைத் காப்பதெனும் உறுதியில் வந்ததாய் ஒன்றினேன் உள்ளத்தில் ஊர்ப்பெரியோய் அறிகிலாய் யாரென்(று) இடிப்பேனுன் தெய்வத்தின் ஆலயத்தை முறித்திட வாகின் முனையுவீர் என்றே முடித்தனனே. 66
14 Sßös6III0ß OpffläDö6)

திருநபி காவியம்
ஒட்டகை என்னுடைத் தாகுமாம் காப்போன் கடமை"க.பா’க் கட்டிடம் ஆம்இறைக் காமவன் பள்ளியைக் காத்திடுவான் திட்டமாய் அ.தவன் செய்யுவான் நீவிர் தேர்ந்தறிவீர் இட்டமெ." தோவ. தியற்றுக என்றே இயம்பினரே. 67
கொதித்தது செம்புனல் தீயெனச் சுட்டவவ் வார்த்தைகளால் உதிர்த்தன வாய்ச்சொல் உடனழித் திட்டிட ஓலமிட்டான் மதித்தவன் ஆணை முடித்திட முன்படை முன்நடக்கும் எதிர்ப்பவ ரின்மையால் ஏகின படையும் எதிர்முகத்தே. 68
சண்டமா மாருதம் தோன்றிமுன் சென்றதோ சொல்லிடுங்கால் அண்ட முகடொடிந் தேபுவி வீழ்ந்ததோ ஆழிசினங் கொண்டுவான் தொட்டிட வேயுயர்ந் தோங்கியே பொங்கியதோ கண்டதென் னாமெவர் கூறுவார் ஒப்பதற் கீடிலையே. 69
(வேறு)
பறந்தன கரிக ளொன்றிப் பண்ணவன் 'க.பா’ தன்னைக் குறியெனக் கொண்டு துவம்சக் கொடுஞ்செயல் புரிதல் எண்ணி அறிந்திலை அவையின் நேரும் அவலங்கள் ஏதாம் என்றே அறிந்தவன் அனைத்தும் முற்றும் அமைதியாய்க் காத்திருந்தான். 70
சுற்றியே வளைத்தார் 'க'பா'ச் சுவர்களைத் தகர்க்கும் நோக்கில் வெற்றிடம் கண்டார் இல்லை வெறிகொண்ட கரிகள் அன்றி கொற்றவன் 'அல்லாஹற்’ அந்தக் கேடரை நெருங்கா வண்ணம் சிற்சிறு கற்கள் கொண்டச் சேனையைத் துவம்சம் செய்தான். 71
குருவிகள் கூட்டம் ஒன்று குறுங்குறுங் கற்கள் கொண்டே பறந்துவான் சுற்றி அந்தப் பெருங்கரிப் படையின் மீது எறிந்தன இறைவன் ஆணை ஏற்றதால் என்னே விந்தை அறிந்திலாப் போழ்து அந்த அதிசயம் நடந்த தன்றோ. 72
15 ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 22
திருநபி assesíulö
துடித்தன யானைக் கூட்டம் தாங்கொணா வலியி னாலே துடித்தனர் வீரர் எ.குத் துண்டங்கள் வீழ்ந்தார் ஒப்ப மடிந்தன அனைத்தும் ஓர்ஈர் மணித்துளி அடங்கு முன்னாம் படைத்தவன் முடிவு அந்தப் பாவிகள் அழிதல் ஒன்றே 73
'ஆமுல்பீல்” என்றே அந்த ஆண்டினை நாமம் இட்டு பூமியுள் ளளவும் பேசும் படியான(து) அவ்வாண் டில்தான் "ஆமினா’ வயிற்றி ருந்தே அண்ணலார் முஹம்மத் எம்மான் பூமிக்குக் கொடைய தாகப் படைத்தவன் அளித்திட் டானே. 74
சிறுமையின் சிகரம் என்றே செப்பிடுஞ் செய்கை கொண்டும் பெருமானார் பிறந்தா ரென்னும் பெருமையவு வாண்டுக் குண்டாம் சிறுமையைக் கொல்ல வந்த சீரியர் அவதா ரத்தால் மருவிய களங்கம் முற்றும் மறைந்ததென் றுரைப்பின் மெய்யே. 75
குஞ்சரப் படைய பூழிந்து “க.பா'வை இறைவன் காக்க அஞ்சிவாழ்ந் திருந்த அந்நாள் அரேபிய மக்கள் முன்போல் துஞ்சிட மறந்தார் தத்தம் தொழில்களிற் தாகம் உற்றார் பஞ்சமும் பசியும் ஒன்றிப் பறந்தன மக்கா விட்டே 76
முன்னர்போல் மீண்டும் மக்கா முழுமையாய் வாணி பத்தில் தன்னைமுன் நடத்திச் செல்லத் தொழில்வழி பிறநாட் டாரும் பொன்பொருள் கொணர்ந்தார் மக்காப் பொருள்பெற்று மீண்ட வாறே தன்னுடைப் பொருள்கள் மக்காத் தலத்திருந் தெங்குஞ் செல்லும், 77
வாணிபத் தலமாய் மீண்டும் வீறுகொண் டிலங்குங் காலை வாணிபத் தொழிலில் தம்மை வரித்தபேர் குறைவழி மாந்தர் வாணிப நோக்காய்த் தூர வழிகடந் தகன்று வந்தார் வாணிபம் அப்துல் லாஹற்வின் விதியையும் மாற்றிற் றன்றோ 78
சிரியாவை நோக்கித் தத்தம் தொழில்தனை மேற்கொண் டோரில் இருந்தனர் அப்துல் லாஹற்வும் இருபத்து நான்காம் ஆண்டு பெருந்திரு கொண்டு செல்வம் பெருக்கிடும் நோக்கிற் சென்றார் உருவிலான் விதியோ மாறாம் உணர்ந்திலார் சிரியா சென்றார். 79
16 ஜின்னாஹ் வழfபுத்தீன்

திருநபி காவியம்
மாதங்கள் ஒன்றி ரண்டு மறைந்தோடிப் போன தோர்நாள் தீதான சேதி யொன்று தாதையை வந்து சேர ஒதொணாத் துயரத் தாலே உளம்நெர்ந்தார் முத்த லிபு யாதுசெய் திடுவேன் என்றே இருவிழி பொழிந்திட் டாரே. 80
அழைத்தனர் மகனை “ஹாரித்' அறிவையோ உன்றன் தம்பி வழிவரும் போழ்து “யத்ரீப்' வந்துற நோயுற் றாராம் விழிமடல் கொப்ப விக்க வார்த்தையால் தடுமா றுற்றே மொழிந்தனர் சென்று ஈங்கு மீட்டுவா என்றிட் டாரே. 81
தந்தையின் ஆணை பற்றித் தம்பியைக் கொணர வேண்டி வந்தனர் "ஹாரித்’ ஆனால் விளைவுவே றாகல் கண்டார் அந்திமம் அப்துல் லாஹற்வின் ஆவிக்கு ஆங்கு என்னும் சிந்தையை மாய்க்குஞ் சேதி தெரிந்திடப் புலம்பி னாரே, 82
உயிருடன் தம்பி தம்மை உடன்கொணர்ந் திடுவ மென்னும் செயலுரு வோடு சென்ற தமயனால் உட்டலைத் தானும் வயப்படுத் தில்லம் சேர்க்கும் வாகிலாப் போழ்து உற்ற துயரினை மட்டுந் தாங்கி சென்றடைந் தாரே தம்மூர். 83
அறிந்தனர் அபூதா லிப்தன் அருந்திரு மகனார் மண்ணுட் செறிந்தனர் என்னுஞ் சேதி துயர்விஞ்சத் துவண்டே போனார் மறுபுறத்(து) அமீனா தானும் மணவாளர் மரணங் கேட்டே இறுதிமூச்(சு) இழந்த தொப்ப எண்ணித்தன் உடலஞ் சோர்ந்தார். 84
வாழ்ந்ததோர் வருட காலம் வழியவர் பொருட்டால் தம்முள் வாழுமோர் உயிருக்(கு) எட்டு வளர்திங்கள் முற்றிற் றன்னார் வாழ்வதேன் இனியும் என்றே வருந்தினார் தம்வ யிற்றுள் வாழ்ந்திடும் ஜீவ னுக்காய் வாழ்ந்திட வாழ லானார். 85
17 ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 23
திருநபி as Tssful
பெருமானார் பிறந்குனரே
சுற்றியே அமைதி சூழ்ந்து செங்கதிர் மரித்த வேளை சிற்றுயிர் கூடச் செல்லுஞ் சலனமற் றிருந்த போழ்து பற்றிலான் திங்கள் காரைப் புறந்தள்ளிப் பிறந்தான் சூழ உற்றது ஒளியும் ஆங்கே உறைபதி யோடு சுற்றம் 86
காரிருள் மெல்ல மெல்லக் கரைந்தது கதிரோன் தோன்ற வீரியம் அற்றுத் தென்றல் வீசிடுங் கானல் மண்ணின் கோரத்தைச் சிறிய போழ்து குறைத்தோய்வு கொள்ள வைக்கச் சேர்ந்தன விண்மின் கூட்டம் தேசுடை இயற்கை ஓங்கும். 87
(வேறு)
மெய்வெள்ளி காரிக்கும் வேளை
மெல்லவான் கதிரொளி தோன்றும் குய்யெனும் இராக்குயில் அழகாய்
கிளர்ந்திடுஞ் சுகந்தரு போழ்து தையலும் ஆணும்ஒன் றாகித்
தேராத மொழிகளிற் பேசும் மையலுள் மக்காவின் அடிவான்
மேவிடும் ஒளியினால் ஒன்றும் 88
இத்தனை நடந்திடும் போழ்தும்
இதயத்துக்(கு) எட்டாத மெளனம் மொத்தமாய்க் குடிகொண்ட தந்த
மக்கமா நகர்ப்புறத் தாமே அத்தனை மக்களுந் துயிலில்
ஆழ்ந்திருந் தார்களே ஆனால் உத்திமி ஆமினா மட்டும்
உறும்வலி தாங்கிக்கண் துஞ்சார். 89
18 ஜின்னாஹ் வழfபுத்தீன்

திருநபி காவியே
மெல்லென மெல்லென வலியும்
மேவியே உக்கிரங் கொள்ளும் சொல்லொணா இதந்தருஞ் சுகந்தம்
தோன்றிட ஒளிப்பிழம் பாக மெல்லிய லார்பலர் உள்ளே
மிதந்தனர் ஆமினா கண்டார் இல்லாத புதுமையாம் அன்னார்
எவ்வாறுள் நுழைந்தனர் என்றே. 90
மாதங்கள் ஈரைந்து காலை
மிதமான ஒளிசிந்தும் வேளை பூதலத்(து) அருட்கொடை நாதர்
பிறந்தனர் ஆமினாத் தாய்க்கு மாதமாம் றபியுல் அவ்வல்
முறைவரு பன்னிரண் டாம்நாள் ஏதான தாமிறை எண்ணம்
என்பதால் பூமகள் உய்ந்தாள். 91
(வேறு)
பூம டந்தையைப் போர்த்திய ஆழ்கடல் பூம டந்தையைப் பேரலை கொண்டுஎண் சாம முந்தொடர்ந் தேயறைந் தார்த்தனள் ஈமா னுரைக்கவென்(று) ஏந்தலர் பிறந்ததால். 92
விண்னெ லாம்ஒளி நாகங்கள் பூத்தன எண்ணி லாவிளக்(கு) ஏற்றிய பாங்கதாய் மண்ணி ருள்ஒளி கண்டுமே மாய்ந்தது விண்ம ணிக்கரம் வீசுதல் போலுமாம். 93
பூவ னங்களில் அத்தனை பூக்களும் ஏவல் உற்றவா(று) ஒன்றியே பூத்தன தாவி நறையுனும் அளிகளும் அன்றுநாள் நாவு அடக்கின மலர்க்கரங் காக்கவே. 94
19
ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 24
திருநபி காவியம்
தீச்சு டர்க்கரஞ் சிந்திடும் வெய்யவன் பாய்ச்சு தன்சுடு கிரணவேல் தம்மினை பாய்ச்சி னன்குளிர்ப் பணியினுள் ஆழ்த்தியே காய்ச்சி லான்புவி கண்ணியர் பிறந்ததால் 95
கான வெம்மணல் கோதியே தன்மதிக் கான வேற்றிடம் சேர்த்திடுங் காற்றுவோர் ஞான ரையுல(கு) எய்திய மகிழ்வினால் மோன மாகவே வீசிய தாமரோ. 96
பெயர் சூடீடு விழா
(வேறு)
முழங்கின முரசம் எங்கும் மகிச்சியின் ஆர வாரம் முழங்கின பெண்டீர் நாவும் மிகுவொலிக் குரவை யாலே முழங்கினர் கவிஞர் தத்தம் மிகைப்படா வாழ்தி னோடே முழங்கினர் பாவா ணர்கள் மென்னிசை நறைகோத் தாண்டே 97
கைதட்டிக் கும்மிகொட்டிக் குதுகலித் தாடப் பெண்கள் கைகொட்டி ஆண்கள் தாமும் களிமிகுந் தாடி னார்கள் கைகட்டி யாரும் ஆங்கே கடத்திலர் காலந் தன்னைக் கைபட்ட கருவி கொண்டே கலைத்திறன் காட்டி னாரே, 98
மகிழ்ச்சியின் வெள்ளம் அந்த மண்டபம் நிறைந்தே ஒடும் மகிழ்ச்சியின் எல்லை ஈதென் மாறுநாள் கழிந்த தன்றே மகிழ்ச்சிக்குக் கார ணம்என் மொழிந்திடில் முற்றுங் கேட்போர் மகிழ்ச்சியால் திழைப்பர் தூய மழலையின் பிறப்பா லென்றே 99
புத்தாடை புனைந்தே யாங்கண் படுபவர் அனைத்தும் பெண்கள் புத்தாடை யோடு பொன்னின் பூணாரம் பூண்டி ருக்கப் புத்தாடைப் பொலிவில் பாலர் புன்னகைப் பூவாம் என்னும் புத்தாடை போர்த்தி நெஞ்சம் பூரிக்க ஆடி னாரே. 100
20 ஜின்னாஹ் வழfபுத்தீன்

திருரவி காவியம்
பெருஞ்செல்வர் வணிகர் மக்காப் பதியுயர் குடிப்பி றந்தோர் சிறுவர்கள் பெண்டிர் செல்வச் சீருடைக் குலத்தி னோர்கள் அறிஞர்கள் ஆட்சி மேலோர் அண்டை நாட்டு) அழைப்பி னோர்கள் நிறைந்தனர் அபூதா லிப்பின் அலங்காரப் பதியில் அம்மா. 101
விருந்துண்ண அழைக்கப் பட்டோர் வரையிலார் வாழ்த்த வந்தார் விருந்துமோர் மண்ட பத்துள் வகைவகை வரிசை கொள்ளும் விருந்தினர் தமைஅ வைக்குள் வரவேற்றோர் வரவேற் றார்கள் விருந்தினர் விரும்பும் வாறு வேண்டுவ தனைத்துங் கண்டார். 102
ஒட்டகை ஆடு மாடு ஒருபுறம் பறவை ஊன்கள் கொட்டகைத் தலங்கள் மீது குவித்துவைத் திருந்தார் இன்னும் மட்டறக் கோது மையின் மாக்கொண்டு ரொட்டி வேண்டின் இட்டமெவி வுணவோ அ.தும் இலையெனா திருத்தல் கண்டார். 103
உண்டபின் அருந்த வென்றே உயர்வகைக் கனிகள் பானம் கொண்டிருந் தனவே ஊன்கொள் கொட்டகை தன்னில் வந்தோர் உண்டனர் அகடு முட்ட உணவொடு பிறவும் சேர்த்தார் பெண்டிருக் கென்றெ வேறொர் புறத்தினில் அனைத்தும் அம்மா 104
வந்தவர் அனைத்துப் பேரும் வயிறாற உண்டார் என்னும் சந்தோஷத் தாலே பாட்டன் சிரித்ததன் வதனம் மாறார் எந்தவோர் குறையும் அற்றே எலாமுமே முற்ற ஒன்றி வந்தவர் இருந்தோ ரெல்லாம் வரவேற்கும் அறையுட் சேர்ந்தார். 105
அனைவருங் கூடி ஆங்கு அமர்ந்துள்ள அவைக்கண் நின்றே அனைவர்க்கும் நன்றி கூறி அப்துல்முத் தலிபும் சொல்வார் சனங்களே இன்று என்றன் திருப்பேரர் தம்மின் நாமந் தனையுங்கள் முன்ன தாகச் செப்பிட விளைந்தேன் என்றே. 106
திருமகன் றன்னைத் தூக்கித் தன்நெஞ்சோ டனைத்து முத்திப் பெருமையோ டுரைப்பார் 'முஹம்மத்” பெயரிவர்க் காகு மென்ன இருந்தபே ரனைவரும் ஒன்றி இசைத்தனர் 'முஹம்மத்” என்றே கிருபையாய் இறைய எளித்த கொடையிவர் எனப்பு கன்றார். 107
21 ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 25
திருநபி காவியம்
ஒவ்வொரு பேராய் வந்து உண்டனர் விழியால் பிள்ளை கொவ்வையின் வண்ணந் தோய்ந்து குறுநகை புரிதல் கண்டார் நவ்வையின் கனிபோற் கண்கள் நோக்குவார் நோக்க லுக்குப் பவ்விய மாக நன்றி புகல்வதாய் உணர்ந்திட் டாரே. 108
கைகொண்டு கன்னந் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டார். வையத்தின் அருட்கொடைக்கு வாழ்த்துப்பூச் சொரிந்தார் சொல்லால் மையலில் திளைத்தார் பெண்கள் மகவிதெம் மகவா மென்றே எய்தினார் அனைத்துப் பேரும் என்றுமற் றிலாம கிழ்வே. 109
அமுதூடீடும் பருவம்
பெருங்குடிப் பிறந்தோர் தம்மின் பிள்ளைகள் தமையந் நாளில் கிராமத்துச் செவிலித் தாயின் கரந்தந்தார் அமுதம் ஊட்ட பெருங்குடிப் பிறந்த முஹம்மத் பாலூட்டும் பொருட்டாய் ஆங்கோர் கிராமத்துச் செவிலித் தாய்தம் கரங்கொண்டார் அமுதம் உண்டார். 110
என்றும்போல் கிராமத் துப்பேர் ஏகினார் மக்கா நோக்கி கன்றினைத் தேடி ஓடும் காராம்ப சுக்கள் போன்றே ஒன்றியே சென்றார் ஆங்கு ஒருபெண்ணே தனித்தார் ஏறிச் சென்றதம் ஒட்டை தம்மின் துணையற்றுப் போன தாலே. 1
முந்தியாங் கேகி னோர்கள் முந்தினர் பெருஞ்செல் வர்தம் சந்ததிச் சிசுக்கள் தம்மைத் தாங்கிடப் பொருளி னோடே பிந்திய “ஹலீமா’ என்னும் பெண்தமக் கெவரும் அற்றே அந்தரப் பட்டார் ஈற்றில் அவர்கொண்ட பேறாம் பேறே. 112
யாருமே இல்லாப் போழ்து என்செய்வ(து) என்றே தோன்றாக் காரணத் தாலே நெஞ்சக் கவல்கொண்டு சிலநாட் தங்க யாரோவோர் பெரியார் தம்மின் இருப்பிடம் நெருங்கிக் கேட்பார் வாரீரோ எமது இல்லம் வளர்சிசு வொன்றுண்டு) என்றே. 113
22 ஜின்னாஹ் வழfபுத்தீன்

திருநபி காவியம்
தாதையற் றிருக்கும் பிள்ளை தாயொன்றே அநாதை என்றும் சேதியுஞ் சொன்னார் யாருந் துணிந்(து) ஏற்கா நிலையுஞ் சொன்னார். ஏதுமே இன்றி ஊருக்(கு) ஏகிட நாட்டம் அற்றே. மாதுளங் கனிந்தார் அந்த மகவினைத் தருவீர் என்றார். 114
வந்தவர் அபூதா லிப்தன் வழிப்பேரர் தம்மைத் தம்மின் சந்ததிக் கொழுந்தைச் சேர்க்க “ஹலீமா'வை அழைத்துச் சென்றார். விந்தையாம் ஹலீமா முஹம்மத் வசீகரங் கண்ணுற் றென்ன சிந்தையிற் கொண்டிட் டாரோ சிலையெனச் சமைந்தே நின்றார். 115
பிஞ்சினைக் கையில் ஏந்திப் பாலூட்ட நினைந்த போழ்து நெஞ்சத்தீர் கலச மும்பால் நிறைந்தன நீரூற் றாம்போல் பஞ்சமுற் றிருந்த தாலே பசிவாட்ட அமுது குன்றி அஞ்சியே வந்த தாய்க்கு அ.தொரு கொடைபோ லாச்சே, 116
ஏற்றிட்ட சிசுவி னோடே என்சிறு மழலைக் கும்பால் கோற்பதென் விந்தை என்றே கொண்டவோர் வியப்பில் ஆழ்ந்து ஏற்றனர் ஹலீமா அந்த இறைப்பெருங் கொடையை நெஞ்சால் போற்றினார் தந்தோன் றன்னைப் புகழவன் பாலா மென்றார். 117
இளமைக் காலம்
ஊர்செல அங்குள் ளோர்கள் ஒன்றினர் மகவைக் கண்டார். யாரிவர் செவ்வா னத்தின் எறிக்கதிர்ப் பகலோன் போல்வார் பேரென்ன முஹம்மத் என்றால் புகழப்பட் டவரா மன்றோ கூரிய கண்கள் காட்டும் குளிரொளி கருணை யாமோ. 118
கண்டவர் அனைத்துப் பேரும் கண்களால் உண்டார் யார்கண் கண்டதோ அவர்தம் நெஞ்சிற் களிகொண்டார் கனிவு கொண்டார் விண்டலத்(து) அமரர் தாமோ வசீகரம் யார்க்குண் டாமோ வண்டினம் மொய்க்கும் பூப்போல் வளர்ந்தனர் முஹம்மத் யாண்டே 119
23 ஜின்னாஹ் வழfபுத்தீன்

Page 26
திருநபி காவியே
பஞ்சினைத் தீயுண் டாற்போல் போயின ஹலீமா வீட்டின் பஞ்சமும் பசியும் ஒன்றிப் பறந்தன வளமொன் றிற்றே தஞ்சமென் றாகிற் றின்பம் தாயுள்ளம் மகிழ்ந்த தந்தப் பிஞ்சுடைப் பொருட்டா லெல்லாம் படைத்தவன் அருளி னாலே. 120
தன்வயிற் றுதித்த மக்கட் செல்வங்கள் தனிலும் முஹம்மத் தன்வசம் அன்பு கொண்டார் தான்பெற்ற பேறாம் என்றார் என்செய்தேன் பேறு நானிவ் வினியநல் மகனைக் கொள்ள என்றெண்ணி ஹலீமா ஏக இறைவனை வழுத்தி னாரே. 121
வளர்ப்பன்னை மக்க ளோடு விளையாடு நாளொன் றில்அவ் இளஞ்சிட்டுக் குற்ற சேதி இயம்பினார் ஹலீமா மக்கள் முழுமையும் வெள்ளை ஆடை வரித்தஈர் பேர்கள் வந்து இளையவர் தமைக்கீழ் சாய்த்து ஏதேதோ செய்தார் என்றார். 122
ஓடோடிச் சென்றோம் என்ன உற்றதென் றறியக் கேட்டோம் வாடிய வதனத் தோடே விபரங்கள் எடுத்துச் சொன்னார் நாடினார் எனைக்கி டத்த நெஞ்சினைப் பிழந்தார் உள்ளே கூடிய வொன்றைத் தூய்தாய்க் கழுவியே வைத்தார் என்றார். 123
எங்கெங்கு தேடிப் பார்த்தும் எவருமாங் கில்லாப் போழ்து அங்கத்தில் குறைக ளேதும் ஆனதோ என்றும் நோக்கப் பங்கமொன் றில்லா தன்னார் பூரண ராக நின்றார் திங்களை வெல்லும் அந்தத் திருமுகந் துலங்கிற் றன்றோ. 124
பின்னொரு காலந் தன்னில் பிள்ளைகள் வளர்ந்த போழ்து சொன்னார்கள் நடந்த வற்றை திரிபற நடந்த வாறே சொன்னவை முன்னர் போன்றே தாமது உண்மை என்னும் தன்மைக்குச் சான்று என்றுஞ் சரித்திரம் புகலுஞ் சேதி. 125
ஆண்டிரண் டானபோது அமுதூட்டுங் காலம் நீங்க வேண்டுமன் னாரைத் தாயின் வசமடைத் திடவென் றெண்ணிப் பூண்டனர் ஹலீமா சோகப் புண்ணுளம் செய்வ தென்னே ஆண்டவன் விட்ட வாறு ஆகுமென்(று) அமைதி கொண்டார். 126
24 ஜின்னாஹ் ஷரித்தீன்

திருநபி காவியம்
குறித்தநாள் வந்த போழ்து கொண்டுசென் றன்னை கையில் உரித்தளித் தாரே நெஞ்சம் உருகிடத் தவித்தார் தாயோ மரித்ததன் கணவர் தோற்றம் முற்றிலும் அமைந்த சேயை உரிமைகொண்ட ணைத்தார் கண்கள் இழந்தவன் பெற்றான் போன்றே 127
பச்சிளஞ் சிசுவாய்த் தந்த பாலகன் தன்னைக் கட்டி உச்சிமோந் தழுதார் கண்ணிர் உகுத்தினார் மகிழ்வி னாலே எச்சமி. தொன்றே என்றன் இல்லற வாழ்வில் முஹம்மத் நிச்சயம் இறைய எளித்த நிகரிலாப் பேறாம் என்றார். 128
என்னதான் இருந்தும் அந்த இன்பத்தை நுகரா வாறு முன்னவன் அணையிட் டானோ மக்கமா நகரில் அந்நாள் வன்மையாய்த் தொற்று நோய்தன் வீறுகொண் டிருந்த(து)அஞ்சி தன்வயம் தவிர்த்தார் செவிலித் தாயுடன் அனுப்பி வைத்தார். 129
(வேறு)
நோயற்றுத் துய்தாய் மக்கா
நகள்வரு மட்டும் என்றன் சேயினை அழைத்துச் செல்வீர்
ஹலீமாநின் மக்க ளோடே நேயமாய் வாழச் செய்வீர்
நல்வழி காட்டும் என்றே போய்வர விடையுந் தந்தார்
பதறிடும் மனத்தி னோடே. 130
மீண்டுந்தன் னோடு முஹம்மத்
மகவினை ஹலீமா கூட்டி மீண்டிடும் பாக்கி யத்தை
முதலவன் தந்த தாலே வான்தொடு வாறாம் உள்ளம்
வரித்தபே ருவகை தீனின் கோனென வாகும் பிள்ளை
கையொடு வந்தார் மாதோ 131
25 ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 27
திருநபி artsstub
ஹலிமாவின் சேய்க ளோடு
கூடிநல் ஒழுக்கங் கற்று இலகுவில் மொழியைப் பேசும்
ஏற்றமுங் கொண்டார் முஹம்மத் சிலகாலந் தாமே இது
தொடர்ந்தது ஆண்டு நான்கு செலமிண்டும் மக்கா செல்லும்
நிலைவந்த தாமே சென்றார். 132
அழைத்துவந் தாரே அன்னை
அகமகிழ் வுற்றார் மைந்தன் மொழிந்திடும் வார்த்தைத் தேனை
மாந்தினார் புளக முற்றார் விழிபூத்த தழகு கண்டு
வளர்ச்சியின் செழுமையாலே முழுமைகொண் டிருந்தார் செல்வன்
முஹம்மதை உடல ணைத்தார். 133
கண்ணுறு தோறும் மைந்தன்
கணவரை நினைவிற் காட்ட எண்ணினார் யத்ரீப் செல்ல
இளையவ ரோடே அன்னை திண்ணமாய்க் கணவன் தன்னைத் தவிப்பினில் ஆழ வைத்தே மண்ணுறைத் தலத்தைச் செல்வன்
முகங்காண வேண்டு மென்றே. 134
26 ஜின்னாஹ் வழfத்தீன்

திருநபி காவியம்
ஆறு வயதினில் அனாகுையானார்
போய்வரத் துணையாய் ஒருநற் பெண்ணையுங் கூட்டித் தம்மின் சேயையும் அழைத்தார் யத்ரீப் சென்றிட ஆமி னாதன் தாய்வழிச் சொந்தம் மைந்தன் தந்தையின் அடக்கத் தானம் நீயாங்கு காணல் வேண்டும் என்றிட மகனுஞ் சேர்ந்தார். 135
வய(து)ஆறு என்றிட் டாலும் வழிப்பயம் அற்றே தாயின் தயவொடு யத்ரீப் நோக்கிச் செல்லமுன் நடந்த தெல்லாம் நயமாக எடுத்து மைந்தன் நினைவினிற் பதித்தார் அன்னை இயல்பினில் ஞானம் பெற்ற இளவலும் இதயங் கொண்டார். 136
கல்பல கடந்து யத்ரீப் கடுகியாங்(கு) அப்துல் லாஹற்வின் கல்லறை தம்மைக் காட்டிக் கண்கணிர் சொரியத் தாயார் வல்லவன் விதியை எண்ணி வாடினார் மைந்தர் தந்தை கல்லறை மீழ மாட்டாக் கவல்மிக வாடி னாரே. 137
யதிரீபு நகரில் தாயின் இனசனம் தம்மைக் கண்டு புதியநல் உறவும் பூண்டு பலநாட்கள் தங்கி மீண்டும் பதிநகள் ஆமி னாவும் புறப்பட்டார் மைந்த ரோடே விதிவழி இறைவன் என்ன வகுத்துளான் எனத்தே ராரே 138
நெடுந்துாரப் பயணம் பாதி நிறைவுற்ற காலை தாயின் உடல்மிகக் களைப்புற் றேநோய் உபாதையும் விஞ்சி மக்கா அடைந்திட முன்னர் மிக்க அவதியுங் கொண்டார் அன்னை இடைவழி ஆங்கு யாரும் இலாதுற்றார் உதவிக் கென்றே. 139
துணைக்கென வந்த பெண்ணும் தன்வழி முயற்சி எல்லாம் குணங்கான வென்றே செய்தும் கொடுநோயின் பிடியி ருந்து குணம்பெற மாட்டா ராகிக் கொழுநன்பால் செல்ல வல்லோன் இணங்கின னாமோ என்னே! இடைவழி உயிர்து றந்தார். 140
27 ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 28
திருநபி காவியம்
தாய்வயிற் றிருக்குங்காலை தந்தையை இழந்த நம்பி தாயொடும் வாழ மாட்டாத் தடையையுங் கொண்ட தாலே மாயமாம் உலகில் பெற்றோர் மாய்ந்திடத் தனித்தே வாழும் சேயென வானார் அந்நாள் துணையற்ற அநாதை ஆனார். 141
அன்னையை இழந்து மக்கா அடைந்ததும் பேரர் கண்டே தன்னைத்தான் இழந்தா ரொப்பத் தவித்தாரே பாட்டனாரும் என்னதான் இறைவன் நாட்டம் ஏற்பதே வேறொன்(று) இல்லை பண்ணவன் விதியென் றாகில் பற்றுதல் முறையென் றானார். 142
தந்தையும் தாயு மாகத் தானேதான் இருப்ப தென்னும் சிந்தைகொண் டிருந்த போதும் தள்ளாத வயதை எண்ணிப் புந்தியிற் கலக்க முற்றார் பின்யார்தான் துணையாம் என்றே சொந்தத்துள் ஒருவ ரைத்தான் தேடினார் விடையுங் கொண்டார். 143
தக்கதோர் நாளில் மக்கள் தமையெலாம் அழைத்துச் சொல்வார் தக்கதோர் துணைஎன் பின்னால் தேவையில் மகவுக்(கு) யார்தான் ஒக்குமென் றுங்கள் வாயால் உரைத்திடு வீர்கள் என்ன மிக்கசெல் வந்தர் “உஸ்ஸா’ மனமொப்பி ஏற்பே னென்றார். 144
கூறிய வார்த்தை கேட்டுக் கண்களை இறுக மூடி அறிவேன்நான் நீயோ செல்வன் அநாதைகள் துன்பந் தேராய் அறிவேன்நீ கோபக் காரன் அவர்மனம் நோகச் செய்வாய் பிறரெவ ருள்ளார் நீவீர் புகலுவீர் எனப் புகன்றார். 145
மனமொப்பி னாலும் “உஸ்ஸா’ மனமொப்ப வில்லைத் தந்தை எனநினைந் தாரோ அன்னார் இஸ்லாத்தின் விரோதி யாக தனைமாற்றி இறைவன் சாபம் தாங்கிய "அபூல ஹப் தான் மனமொப்பி ஏற்க வந்த மகன் “உஸ்ஸா’ என்னும் பாவி. 146
தாதையின் வார்த்தை கேட்ட தனையருள் அபூதாலிப்பின் ஒதுவார் நானோ ஏழை ஒப்புவேன் முஹம்மத் என்றன் மீதன்பு கொண்டு ஏற்றால் முக்காலும் பொறுப்பா வேன்நான் தீதறக் காப்பேன் என்பால் தாருங்கள் எனப்ட னிந்தார். 147
28 ஜின்னாஹ் வழfபுத்தீன்

திருநபி காவியம்
மகன்சொன்ன சொற்கள் நெஞ்சில் மகிழ்வினை ஊட்டினாலும் அகமெவர் பாலில் உண்டு அகமதர்க்(கு) என்றே கேட்க முகமலர் பூக்கச் சொல்வார் முஹம்மதர் அபூதா லிப்பே இகவாழ்வில் எனக்கு மிக்க ஏற்புடை தவராம் என்றே 148
மகிழ்ந்தனர் அபூதா லிப்தன் மடிதனில் ஓடி வந்தே நெகிழ்ந்திட வைக்கு மாறு நொடியினுள் அமர்ந்து கொண்ட அகமதர் தம்மைக் கட்டி அணைத்ததும் தந்தை சொல்வார் செகத்தினில் இவர்க்குத் தாயும் தந்தையும் நீள்தான் என்றே. 149
தந்தையை அறியார் அன்புத் தாயன்புங் கிட்டா துற்றார் சொந்தமென் றுடன்பி றப்பாய்த் தானுமோர் துணையு மற்றார். பந்தமென் றெம்மை அன்றிப் பிறிதெவர் தாமும் இல்லை சிந்தையில் இவைகொள் எந்தத் துயரும்அண் டாதே காப்பாய். 150
ஒப்புவித் தேன்நான் உன்மேல் ஒப்புவித் தேன்நீ கொள்வாய் ஒப்புவித் தேன்நான் தெய்வ உறுதுணை யோடே யென்ன ஒப்பினேன் நானும் என்மேல் ஒப்புவித் ததனை என்றார் ஒப்பிலான் உவந்தான் இந்த ஒப்புதல் தனையா மம்மா 151
கல்வி
பொறுப்பேற்ற பெரிய தந்தை பெருந்தனக் கார ரன்று பொறுப்பேற்ற வாறு எல்லாப் பணிசெய்த போதும் கல்விப் பொறுப்பினில் ஈடு செய்யும் பணியினில் இயலா துற்றார் பொறுப்புற்றான் இறைவன் அந்தப் பணிக்கென அறிகி லாரே. 152
கற்றறி(வு) அற்ற போதும் கல்வியைக் கேள்வி ஞானம் பற்றிட வளர்த்தார் மற்றப் பிள்ளைகள் தனினும் மேன்மை உற்றதாய் இருக்க நாயன் உவந்தனன் உலரா ஊற்றாய்ப் பெற்றனர் இறைபால் ஞானம் புண்ணியர் முஹம்மத் என்பார். 153
29 ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 29
திருநபி காவியம்
விளையாட்டில் மற்றோர் போல விருப்பமுற்(று) அலையார் வாழ்வை விளையாட்டுக் கென்றா வல்லோன் வழங்கினன் எனத்தான் எண்ணி நிழலிலான் தனைமுக் காலும் நினைவினில் இருத்தி வந்தார் முளையினிற் காண்போர் இ.தோர் விளைநிலம் எனச்சொல் வாரே. 154
ஒழுக்கமும் பணிவும் யார்க்கும் உதவிடும் பண்பும் நெஞ்சம் முழுக்கவும் இருந்த தந்த முழுமதி வதனத் தார்க்கு பழுத்தநல் அறிவுக் கூர்மை, பாலகப் பருவந் தன்னில் வெளுத்தபால் தோற்கும் தூய வெள்மனத் தார்க்காம் அம்மா. 155
முகுல் வானியப் பயணம்
(வேறு)
பன்னிரு வயதுவப் பாலகள் தமக்கொரு நாளில் முன்னொரு போதுமே முகங்கொளா வாறுதம் முற்றந் தன்னிலோர் வாணிபச் சுமைசுமந் தேபல ஒட்டை கண்ணுற அயர்ந்தார் காண்பதென் புதுமையென்(று) அஹமத் 156
ஓடியே சென்(று)அபூ தாலிபை அண்டிஈ தென்ன நாடிய தெங்குநீர் நகர்ந்திட வாணிபஞ் செயவோ கூடியே நான்வரக் காட்டுக கருணையென் றியற்ற கூடுமோ சிறுவரைக் கூடநான் ஏற்பதோ என்றார். 157
என்னைநான் காத்திட இயலுமிவ் வயதினில் நானோர் பன்னிரு வயதினன் பாலகன் இலையே பிரிந்தே என்னவா றிங்குநான் இருப்பனோ தந்தையே என்ன என்னாலும் இயலாது என்செய வாமென இசைந்தார். 158
மக்காவின் உற்பத்தி முழுமையிற் பற்பல வகையும் மக்காவில் விற்பனைக் காகவே வந்தவை பலவும் தக்கபொன் இலாபமாய்க் கிட்டுமென் றானவை கூட்டி மக்கமா நகள்விடுத் தேகினார் சிரியாவென் நகர்க்கே. 159
30 ஜின்னாஹ் விழரிபுத்தீன்

திருநபி காவியே
பசுமையே இன்றிவெண் பாலையாய்க் கிடந்தமண் ணிருந்தே பசுமையே நானெனப் பேசிடும் நகர்க்கவர் வருகை பசுமையாய்ப் பதித்ததப் பாலகள் நெஞ்சினில் வாழ்வின் பசுமையைக் கண்டிடார் புதுமையீ தென்றுமே புகன்றார். 160
வாணிப நோக்கொடு வந்தவப் பயணந் தனிலே வாணிபம் வெற்றிகொண் டானபே றுடனொரு நிகழ்வும் தானமைந் ததுவாம் தவத்திரு மதன்வழிச் சேதி ஞானராம் "புஹைரா நபித்துவம் பற்றியோர் நவிலல். 161
சிரியாவின் "புஸ்ரா'வென் நகரினை அடைந்தவக் கூட்டம் பெரியவர் ஒருவரின் தரிசனத் துள்ளிட அன்னார் மரியமின் மகன்நபி ஈசாமுன் மொழிந்ததை உணர்ந்தே அரியதோர் உண்மையை அறைந்தனர் முஹம்மதர் கண்டே 162
முந்திய நபியுரை முற்றுமே பொருந்தும் முறையில் வந்தவக் கூட்டத் திருந்தனர் முஹம்மத் வியந்தே சொந்தமம் மகள்க்(கு)அபூ தாலிபென் றறிந்தே அவர்பால் புந்தியொன் றுரைத்தார் பாதிரி யார்புஹை ராவண். 163
இறுதியாய் ஒருநபி இவ்வுலகு) உதிப்பரென்(று) ஈசா உறுதியாய்ச் சொன்னவர் உம்மொடு வந்தவிம் முஹம்மத் உறுதுணை யாயிருந் தன்னவர் தமையழைத்(து) ஊர்க்குத் திரும்புவீர் என்றனர் தாலிபும் அவர்சொலை ஏற்றார். 164
இறுதியில் வருகின்ற இறைதூதர் இவரென எண்ணிப் பெருமையால் குதித்தது பொங்கிய தேயுளம் தந்தை மருவிடா தொருகுறை யாயினும் மகள்க்கவர் கண்போல் கருதினார் காத்திடக் கடமையீ தென்றுமே கொண்டார். 165
பூரித்த நெஞ்சொடு புண்ணியர் தமைக்கடு கேனும் காரித்தி டாதிடர் காப்பதே கடனெனக் கொண்டு யாருக்கு மவரரு காமையில் வந்திட மாட்டா தூருக்கு மீண்டனர் உடன்மக வண்டியே தாதை. 166
31 ஜின்னாஹ் ஷரீபுத்தீன்

Page 30
திருரவி காவியம்
சுடுகொடு வான்சுடர் தாவினாற் புண்ணியர் தேகம் சுடுபடு மென்றுமே தக்கநற் காப்பினைச் செய்து அடிநிலம் படிந்திடா தேற்றவோர் ஓட்டையில் ஏற்றிக் கடிவளம் தனைத்தமின் கைகளிற் பற்றியே கடந்தார் 167
வீடுவந் தடைந்திடு வரையுயிர் கரம்பிடித் தவராய் பாடுறு வாறவர் பயந்தனர் பகைவர்கண் படுமென வாக வீடுவந் தடைந்ததும் வரித்தது அமைதிதன் மீதே கூடிய பொறுப்புளங் கனத்திட மீண்டது சுமையே. 168
அன்னையுந் தந்தையும் அறிந்திடில் தம்மக வுலகில் முன்னவன் தூதராய் மலர்வரென் முறைமையைக் கொள்ளும் உன்னதக் களிப்பினை தன்னகத் திருத்திய தாலிப் எண்ணினர் சோகம் இணைந்திட வருந்தினர் அந்தோ, 169
உரைத்திடார் மகனிடம் உண்மையைப் பிறர்க்குமஷ் வாறே உரைத்திடார் மனத்தினுள் ஊன்றினார் மற்றவர் அறிந்தால் விருப்புறார் உயிரினைக் கொள்ளவும் உடன்படு வாரென் கருத்தினால் அறிந்ததைக் காத்திடுங் கொள்கையைக் கொண்டார். 170
O O O O மக்காவில் யுத்கும்
(வேறு)
ஊர்வந்து ஓர்சில நாட்களே ஆகின ஊர்த்தலத்தே போரொன்று தோன்றிப் பரவிய தாமுயிர்ப் பேரழிவாம் காரண மானதன் நாளில் முஹம்மதர் கண்டமுதற் போரதாம் பின்பலப் போர்களைக் கண்டவப் பேரினுக்கே. 171
வாளொடு கேடயந் தாங்கி வெறிகொள வீட்டிருந்து வாளொடு கேடயந் தாங்கிவந் தோரினை வெற்றிகொள தோளொடு தோள்த்துணை யாகிக் குறைஷியர் திக்கனைத்தும் வாளொடு வாட்சமர் செய்தனர் வீதிக் களமமைத்தே. 172
32 5366) TOIB opf b56

திருரவி காவியே
வந்தோர் தமையாங் கிருந்தவர் கொன்றார் இருந்தவரை வந்தவர் கொன்றார் வழியெலாஞ் செந்நீர் வழித்தடமே முந்தியோர் வாணிபர் மக்காக் குறைவழிகள் கொன்றதனால் வந்தன ராம்பழி வாங்கிட வேற்றுமண் மீதிருந்தே. 173
வெட்டுண் சிரம்நிலம் வீழமுன் மற்றோர் சிரமுருளும் கொட்டுண் ணுடல்தனித் தேதுடித் துந்துடித் தேயடங்கும் மட்டிது வென்றிலா வானுயிர் போக்க வான்பறக்கும் கெட்டகே டென்னவீ தென்றுமே நல்லார் குளம்பினரே. 174
தோல்விகண் டோடினோர் சென்றனர் க.பாத் தலத்தருகே சால்பிலை யாமவர் தம்மைக் கொலைசெய்தல் தர்மமில்லை கோலினும் மறுத்தார் கொண்ட பகைமை வளர்த்தவராய் கால்மறுத் தேகினர் வந்தவர் மீண்டும் வருமென்றே. 175
தொடர்ந்துநான்(கு) ஆண்டுகள் சேர்ந்தன இது தொடர்ந்திடுகால் நடப்ப துயிர்ப்பலி வேறிலை என்றே தெளிவுபெற்றுக் கொடுத்தனர் வேண்டிய ஈட்டை வணிகள் கையெடுத்தார் அடுத்தவாண் டாங்கு அமைதி விளைந்ததோர் அற்புதமே. 176
புதிய அனுபவம் பிள்ளைப்ப ராய முஹம்மதர்க்கு பதிந்தது நெஞ்சினில் பின்வருங் காலத்திற் போர்களிலே மதிகொளக் காரண மாகின யுத்த முறையறிய எதிரியை வீழ்த்த இளமையிற் கண்ட படிப்பினையே. 177
33 ஜின்னாஹ் விழரித்தீன்

Page 31
திருநபி காவியம்
இளமைப் பருவம்
வளர்பிறை போன்றே வளர்ந்தனர் வாலிபம் வளர்ந்ததவர் இளமை முறுக்கும் எழிலுமே ஒன்றிய(து) அன்னவரின் அழகில் அழகள் அழிவில் அழகென் றதிசயித்தார்
முழுமையாய் வல்லோன் முஹம்மதர்க் க.தை அளித்தனனே.
கனிவுறு பார்வையுங் கண்கவர் தோற்றமும் கண்டுமொழி இனியநற் பண்புடன் ஈடிலா ஞானம் எவர்க்குமிலா மனுநேய மும்மவர் வாக்கினை மாறா வழிமுறையும் தனையோர் தனித்தவர் தாமெனக் காட்டிடச் செய்தனவே.
நம்பிக்கைக் கானநற் பண்பால் குறைவழிகள் போற்பிறரும் நம்பினார் எந்தப் பொருளையும் நம்பி வசமளித்தார் நம்பிக்கைக் கானரென் நாமமும் அன்னார் நவின்றனரே நம்பினோர் நம்பிட நல்வழி கொண்டனர் "அல்அமீனே’
'அல்அமீன்’ என்னும் அடைமொழி கூறார் அறபுமண்ணில் இல்லையாம் என்றவா றானது அத்தனை பேர்புகழாம் சொல்லிடிற் சொல்தவ றாதவர் தூயர் எனவிளித்துஞ் சொல்லினர் பின்பகை தோன்றிய காலையும் சொன்னவரே
பொருட்களை வாங்கிடப் போய்வரும் வேளை பிறர்க்குதவும் பொருட்டாய்ப் பிறரிடம் பேசுவார் வேண்டுவ பெற்றுவர விருப்புடன் ஏற்றவர் யார்க்கும் உதவும் இயல்புடையோர் அருட்கொடை யான முஹம்மத் அதிசயர் அன்னவர்க்கே.
எல்லோர்க் குதவும் இயல்பினை ஏற்கார் அபூசுபியான் சொல்வார் குலத்தார்க் கிழிவுநீர் செய்தீர் குறைஷியரின் செல்வாக்கு உன்றனால் சீரழிந் திட்டதென் றாரிளவல் நல்லதே செய்கின்றேன் நால்வர் நலம்பெற நன்றதென்பார்.
178
179
180
181
183
34 ஜின்னாஹ் வழfபுத்தீன்

திருநபி காவியம்
ஏழைகள் என்றும் இருப்பவ ரென்றும் இலையெவரும் தோழமை கொள்ளத் தக்கவ ரேயாம் சமமெனக்கு வாழுவ தோர்சில காலமே வேற்றுமை வேண்டுவதேன் தாழுஞ் செவிமுன் திருவிலார் பக்கமென் றுரைத்தனரே. 184
இலாதவர் இன்னல் துடைப்பதும் ஏழ்மையால் எவ்வுறவும் இலாதார் தமக்குள ஆறுதல் சொல்வதும் ஒற்றுமையாய் இலாதா ரிடத்தே இணக்கங்கள் ஏற்றிடச் செய்வதுவும் இலாதார்க் கிரங்கும் இறைவழி பற்றி இயங்கினரே. 185
கஃபாவின் அழிவும் புதுப்பொலிவும்
பெருவெள்ளம் ஒன்றால் பிளவுண்ட க.பாச் சுவர்களெல்லாம் உருக்குலைந் திட்டன. ஒன்றா ரெவரும் உவந்ததனை மெருகிட வல்லோன் முதற்பதி அ.து எனும்பயத்தால் உருவிலான் அ.தை முழுமையாய் நீர்கொண் டழித்தனனே. 186
இறைபுறத் தாலே இடிந்திட ஆங்குளோர் தத்தமது திறமையைக் காட்டக் குலங்குல மாகவே கூடியதை மறுமுறை ஆக்க முனைந்தனர் வேலையின் மும்முரத்தால் பொறாமையும் பூசலும் பொங்கிய தாமவர் மத்தியிலே. 187
சுவர்க்கத்துக் கல்லின் உருவினில் வந்ததோர் சச்சரவு எவரதை எற்ற இடத்தினில் வைப்ப தெனும்படியாய் கவுரவம் நோக்கினர் கல்லினை வைக்கும் கருமமதில் நவவினை முற்றும் நின்றது பாதியில் நோற்பரற்றே. 188
வேகமாய்ச் சென்றவல் வேலைகள் முற்றும் வெறுமையுற பாகமோர் பாகமாய்ப் பாதியில் நிற்கப் பணிதொடரும் தாகமோ நெஞ்சிற் தவித்திட்ட போதும் குலப்பெருமை மோகம் முதலென வாகினார் மக்கா நகர்பதியோர். 189
35 ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 32
திருநபி காவியம்
சுவர்க்கத்துக் கல்லாம் “ஹஜருலஸ் வத்”முன் தரித்திருந்த சுவரினில் யார்குலம் சேர்ப்பது என்பதே சிக்கலுக்கு அவர்கொண்ட காரணம் ஆகும் வழியெது தீர்ப்பதற்கு எவர்நல் முடிவு இயற்றுவார் என்றுமே ஏங்கினாரே. 190
பிரச்சினை முற்றிப் பகைவெடித் தன்னார் பிறிதொருவர் சிரங்களை யாம்நிலை தோன்றிட ஆங்கிருந் தோர்முதியார் பொருந்தும் முடிவு புகன்றிட்டார் பற்றும் படியமைக்க கருத்தினில் கொண்டார் குலப்பகை தோன்றாக் கருத்ததுவே. 191
காலையில் யார்முதல் க.பா நுழைவரோ அன்னவரே சாலப் பொருந்துவார் தீர்க்க முடிவொன்று சொல்லுதற்கே சாலுமென் றாகிடில் செய்குவீர் என்பதென் தீர்பதென்றார் வேலொடு வாள்பிற வில்லொடு அம்பும் விடைபெறவே. 192
காரிருள் ஆழக் கதிரவன் தோன்றக் கருதுமுன்னே ஒருரு பள்ளியி னுள்நுழைந் தேசெலப் பற்பலரும் தேருவார் யாரெனத் தோன்றிடாப் போழ்ந்தும் தனித்தொருவர் யாரெவர் தாமெனத் தேர்ந்திடச் சென்றார் தெரிந்தனரே. 193
"அல்அமீன்” “அல்அமீன்” “அல்அமீன்' என்றனர் ஆங்குசென்றோர் நல்லதாம் என்றார் நலம்விளைந் தேற்கும் நிலைமைவரும் சொல்லுஞ் செயலும் சிறந்தநற் தூயவர் தம்வரவால் நல்லதோர் தீர்ப்பு நமக்களிப் பாரென நம்பினரே. 194
என்ன பிரச்சினை என்று அறியா முஹம்மதர்முன் என்னவென் றாய்ந்திட எண்ணினார் அன்னார் எடுத்தியம்ப பின்னமேன் இது பிரச்சினைக் காகா பரிந்துரைப்பேன் சொன்னவா றியற்றிடில் சொல்லுக என்றனர் தூயவர்க்கே. 195
தோள்த்துணி தன்னைத் தரைவிரித் தார்பின் தரைகுனிந்தே மீழ்வைத் திடுங்கல் மலர்கரம் பற்றினார் முற்றுமாங்கே ஆழ்ந்திருந் தோர்விழி செய்வதென் றேயறி யாதிருக்க மீழவைத் தார்துணி மத்தியில் பின்வாய் மொழிதலுற்றார். 196
36 ஜின்னாஹ் ஷரித்தீன்

திருரவி காவியம்
பற்றுக ஒவ்வோர் பிரிவின் தலைவரும் பின்னுயர்த்திப் பற்றுக என்றார் பதித்திடுங் கல்கொள் புறம்வரையும் ஒற்றுமை கொண்டார் உயர்த்தினார் கல்லை உரியஇடம் பெற்றிடச் செய்தார் பெரும்பழி நீக்கினார் புண்ணியரே. 197
குலப்பகை கோத்திரக் கேடாங்கு கொண்டே குருதிமழை நிலத்தினை நாடுமுன் நாடிய நற்பயன் நல்லறிவின் பலத்தினால் ஆனது வெய்யவன் கண்ட பனித்துளிபோல் நிலத்தினில் மாறா நினைவினில் நின்ற நிகழ்விதுவே. 198
உருவ வழிபாடின் உறைவிடம்
(வேறு)
தனித்தோர் இறையைத் துதிக்க எழுப்பிய திருத்தலத்தில் தனித்தனி யொவ்வொரு நாளுந் துதித்திடத் தெய்வமென தனித்தனி யாயொரு சிலையினை வைத்தனர் திருக்க.பா தனித்ததே சிலைகளால் சிலையிலாத் திக்கறத் தீச்செயலே. 199
வருடங்கள் தோறுமாங்(கு) ஒன்றுவர் வழிபடக் கற்சிலைகள் தரும்பெரும் பாக்கியம் தீயநோய் மனப்பிணி அகற்றுமென்றே கருதினர் கற்பனைக் கடவுள்கள் தாம்தமைக் காக்குமென்றே கருதினார் உருவிலான் காப்பவன் எனுமுண்மை கொண்டிடாரே. 200
கூட்டத்துக் கோர்கல்லைத் தெய்வமாய்க் கொண்டனர் தத்தமது நாட்டத்தை நிறைவேற்று வாமென நம்பியே நாட்டிவைத்தார் போட்டிக்குப் போட்டியாய்ப் பெருகின சிலைகளும் சிலைவணங்கும் கேட்டினைத் தம்வழி கொண்டவர் பவப்பெயர் கூறிடிலே. 201
மூன்றுநூ றோடாறு பத்தெனச் சிலைகளாம் க.பாவுள்ளே மேன்முகட் டேயொரு பெருஞ்சிலை 'ஹ'பல்”என வீற்றருக்கும் மான்களைப் போலிரு பக்கமும் காவலாய் வேறிரண்டு தோன்றிடில் சண்டைகள் சொல்வதவி "ஹ"பல்”தம் நாமமதே. 202
37 ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 33
திருநபி காவியே
தூரத்தில் வாசகம் செய்பவர் தினந்தினம் க.பாவின்பால் வாரா திருப்பினும் வரித்தனர் தனித்தனி தத்தமக்கோர் காரணங் கருதியே கல்லினை மரத்தினைக் கடவுளெனக் காரிய மாற்றினர் கருத்தினில் பொருத்தியே கீழ்நிலையே. 203
மக்கமா நகரன்றி மிகவண்டி யும்வெகு தொலைவினிலும் இக்கொடும் பவம்மிகு மூடரின் செய்கைகள் இடம்பெயர்ந்தும் மிக்கவே பரவியாங் குற்றவர் தாமுமே மூழ்கினராம் தக்கபேர் தோன்றினார் தீதிவை அழித்திடத் தெரிகிலாரே. 204
பெண்ணெனச் சிசுவொன்று பிறந்திடிற் பிறந்தநாள் பிள்ளையினை அன்னையாள் தவித்திடப் பிரித்ததை மண்ணிடை புதைத்திடுவார் பெண்ணினை மனிதராய்ப் போற்றிடார் போகப் பொருளெனவே - எண்ணினார் எள்ளள வேனுமே இரக்கமி லாதவரே. 205
அஞ்ஞான இருள்
சூதொடு களவுபொய் குடிகாமம் கொலையெலாம் அன்னவர்க்கு பாதக மென்றிலா தியற்றிடும் படியவர் நிலைத்தனரே தீதெது நன்மைதா மெதுவெனத் தேறிடார் தீதிழைத்தார். ஏதறி வாமிவை எண்ணிட இவர்தமக் கிழிகுலரே. 206
சண்டையின் போதவர் சபதங்கள் செய்குவார் எதிரிதமின் மண்டையோ டதனில்நான் மதுவுண்ணு வேனெனச் சூழுருரைப்பார் கொண்டவச் சபதமும் கெடாதுளம் கொண்டொரு வாகுவரின் கொன்றுயிர் போக்கியச் சபதமும் நீக்குவார் கொடியவரே. 207
போதையுட் படுவதோர் புனிதநற் செயலெனப் போற்றிடுவார் போதையுட் படாதவர் பலனிலார் புவிக்கெனப் பரிகசிப்பார் போதையுட் பட்டவர் பண்ணிடும் பவங்களோ பாவிகளின் போதையுட் கட்டகண் பார்த்திடா பாவத்தின் பிறப்பிடமே. 208
38 ஜின்னாஹ் வழfபுத்தீன்

திருநவி aրeճնtծ
மூடப்ப ழக்கத்தின் முழுமையும் அன்னவர் மனங்களிலே கூடிக்கி டந்தன கொள்கையி லாதவ ராயிருந்தார் ஆடுமா டொட்டகம் போலவர் வாழ்க்கையும் அமைந்திருப்ப நாடோடி வாழ்க்கையும் கொண்டனர் பற்பலர் நலங்கெடவே. 209
உடற்பலன் கொண்டவன் ஓங்குவான் தன்கரம் ஊரடங்கும் படித்தவன் பாமரன் பாலொரு பேதமும் இலையவர்க்குள் அடுத்தவர்க்(கு) உதவிடும் அழகிய பண்புமில் லாதவராம் நடத்தைகள் ஒழுக்க நன்னெறி யற்றதாம் நாசகரே. 210
ஒருத்தியைப் பலர்படப் புணருவார் பிறந்திடும் பிள்ளையினுக் குரியவர் தந்தையார் என்பதைத் தாயே முடிவுசெய்வாள் மருவிடப் புகலுவார் மற்றவர் தமைத்தம துடையவளை மிருகமும் மனிதரும் மாற்றிலை யன்னவர் மனத்தினிலே 211
தந்தைகை விட்டபெண் தாயெனும் உணர்வில்லார் தாம்கொளுவார் சொந்தவீர் பிறப்பினைச் சேர்த்தே மணவினை கொண்டிடுவார் பந்தமீ தனைத்துமே பவமென எண்ணிடார் பேய்க்குணத்தார். புந்தியில் இவைகொளப் பாவியர் வாழ்புலம் புகன்றிடிலே. 212
சிரியாவை நோக்கிய வானியப் பயணம்
(வேறு)
அக்கால அரேபி யாவின் அதிபெரு வணிகப் பேருள் மிக்கபேர் கொண்டி ருந்தார் மாதொரு விதவைப் பெண்ணார் தக்கவோர் தலைவர் தம்மைத் தேடினார் திறமை மிக்கார் எக்கணங் கிடைப்பார் என்றே எதிர்பார்த்தே காத்தி ருந்தார். 213
பெருந்திருக் கொண்டி ருந்த பெருமாட்டி கதீஜா ஒர்நாள் பொருத்தமாய் ஒருவர் ஆங்கு பண்புடைத் தோராய் நேர்மைத் திருவென இருப்ப தாகச் சொல்லிட அறிந்தார் தம்பால் வரும்படி அழைத்துக் கொள்ள விரும்பினார் விபரம் கேட்டார். 214
39 ஜின்னாஹ் வழfபுத்தீன்

Page 34
திருநபி ssrsíulö
சொல்லினில் நேர்மை தான்செய் தொழிலினில் பொறுப்பு வணிக வல்லமை கொண்டார் நம்பி வேண்டுவ தளிக்க வல்லார் "அல்அமீன்' என்று நாடே அழைத்திடும் பேர்மு ஹம்மத் எல்லோர்க்கும் நல்லார் மேன்மைக்(கு) இலக்கண மாவார் என்றார். 215
சொன்னவை அனைத்தும் தம்மின் செவிவழி புக்கச் சிந்தை சொன்னதப் பேரே மிக்கச் சிறந்தவர் எனவாம் ஒப்பும் சென்றவர் தம்மை மிக்க தாழ்மையாய் அழைப்பீர் என்றே தன்பணி யாள ருக்கு சொல்லிட அவருஞ் சென்றார். 216
"தூய்மையாம் பெண்டிர்’ என்னுந் தொனிப்படு நாமங் கொண்ட 'தாஹிரா’ என்னுஞ் செல்வச் சீமாட்டி கதீஜா தானப் பேர்பெறு குலத்து தித்த பெருமாட்டி அழைப்பை ஏற்று 'நூர்”எனும் ஒளிப்பி ளம்பாய் நாயகர் அவர்முன் நின்றார். 21 7
தோற்றத்தின் சீர்மை கண்ணில் தோன்றிடு வசீக ரம்மும் போற்றுதற் குரிய வாறு பேசிடும் இனிய பேச்சும் சாற்றிடில் எனக்கு வேண்டும் தொழில்வழித் தலைமை தாங்க ஏற்றவ ரிவரே என்றே எண்ணிட்ட கதீஜா சொல்லார். 218
வருங்காலம் என்ற னுக்கு வணிகநற் றுணையாய் நீங்கள் சிரியாநன் நகர்பாற் சென்று செயற்பட லாமோ மாற்றார் தருந்தொகைக் கதிகம் மேலாய் தரவெனனால் ஊதி பத்தைத் தரவியன் றிடுமே உங்கள் சம்மதம் வேண்டு மென்றே. 219
சரியென உடனாங் கொப்பல் சரியல வென்றே தம்மின் பெரியதந் தைதம் மோடு-பேசிநான் முடிவு செய்து உரியநாற் பதிலு ரைப்பேன் ஒப்புக என்றே கூறிப் பிரிந்தனர் முஹம்மத் அன்னை பார்வைவிட் டகன்றிட் டாரே. 220
நடந்தவை அனைத்துந் தந்தை நேர்முகங் கண்டு பேச அடைந்தனர் மகிழ்வு வெற்றி அடைந்திட வாழ்த்துஞ் சொன்னார். முடிந்தவா(று) அன்னார் தம்மின் வாணிபந் தனையு யர்ச்சி அடைந்திடச் செய்வீர் மேன்மை அறிவுரை பதிலாக கிற்றே. 221
40 ஜின்னாஹ் ஷரிபுத்தீன்

திருநபி காவியம்
விடைபெற்றுத் தந்தை யாரின் வார்த்தைகள் சிரமேற் கொண்டு அடைந்தனர் கதீஜா இல்லம் ஆங்கவர் விருப்பஞ் சொன்னார் தொடர்ந்தன பணிகள் செல்லச் சேர்த்தனர் பொருட்கள் முற்று அடைந்திடச் சிரியா நோக்கி அசைந்தது வணிகச் செல்வம் 222
மக்காவில் விளைந்த மிக்க விலையுயர் பேரீந் தண்டைப் பக்கத்து வட்டா ரத்து பழங்களும் பிறவுங் கூட்டி தக்கதோர் துணையாய்ச் கூடச் செலவைத்தர் 'மைச ரா'வை முக்கிய தேவை எல்லாம் முஹம்மதர்க் களிக்க வென்றே. 223
மாதங்கள் இரண்டு மூன்று மறைந்தோடி னாலும் எந்தச் சேதியும் வராதி ருக்கச் சிரியாவின் திக்கை நோக்கும் வீதியில் தினமும் தம்மின் விழிபதித் திருந்தார் ஆங்கு யாதுதா னுற்ற தென்றே அறியாது கதீஜா நின்றார். 224
நாட்களுங் கடக்கச் சற்று நெஞ்சினிற் கவல டைந்தார் வாட்டிய துள்ளம் சென்றோர் வரவெண்ணிக் காத்தி ருக்க கூட்டமொன் றோர்நாள் அந்தக் கானக வழியில் கண்டார் வாட்டமும் அகன்றார் தம்மின் வணிகள்தாம் அதுவென் றாமே. 225
வந்தனர் ஒட்ட கைகள் வரிசையாய் வணிக ரோடே வந்தனர் முஹம்மத் முன்னால் வாசலில் இறங்கி நின்றார் சுந்தரர் கண்டு கண்கள் சிரித்தன வாழ்த்துக் கூறி வந்திட அழைத்தார் உள்ளே வாஞ்சையோ டவரும் வந்தார். 226
களைப்புற்று வந்த பேரைக் கனிவொடு உபச ரித்துக் களைப்பாறி உணவுங் கொள்ளக் கூறிய பின்னர் ஆறி அழைத்தனர் 'மைச ரா'வை அவரொடு முஹம்மத் வந்தார் விளித்தனர் அனைத்தும் அற்றை வாணிபம் பற்றி யாமே 227
விற்றவை பெற்ற லாபம் வாங்கிய பொருட்கள் மற்றும் உற்றதம் செலவீ னங்கள் ஒன்றிய கையி ருப்பு முற்றுமே விளங்கச் சொன்னார் முஹம்மதர் கதீஜா கேட்டார் கற்றிலார் என்ற போழ்தும் கணக்கினிற் பிசகில் லாதே. 228
41 ஜின்னாஹ் விழரித்தீன்

Page 35
திருநபி காவியம்
வார்த்தைக்கு வார்த்தை அன்னார் விபரித்த வாகு தன்னைப் பார்த்திருந் தார்கள் கேள்விப் புனலொன்ற விழிகள் பூக்க கோத்தபா வரிகள் போல குரலினில் இனிமை கொஞ்சும் நேர்த்தியாம் பேச்சு தேனில் நனைந்தவா றிருந்த தன்றோ. 229
அறிந்துவைத் திருந்த வாறு அலவிவர் அதற்கும் மேலாம் நிறைந்தபே ரறிவும் தம்மை நம்பிய பேர்க்குச் சற்றுங் குறைவிலா வாறு லாபங் கொணருநன் நோக்குங் கொண்டார் இறைதந்த பரிசாம் இந்த இளவலென் றெண்ண லுற்றார். 230
தன்பணி முடிந்த தெண்ணித் தரித்திரார் ஆங்கி ருந்தே சென்றிட விடையுங் கொண்டார் துணைசென்ற மைஸ் ராவும் சென்றிலர் பிராட்டி யோடு சிறுபொழு தவ்வண் தங்கி சென்றநாள் முதற்கொண் டன்று தொடர்ந்தவை அனைத்துங் கூற 231
கண்கண்ட தில்லை இந்தக் கண்ணியர் போல மாந்தர் பண்டங்கள் அனைத்தும் விற்றுப் புதியவை அறிந்து வாங்கி வென்றனர் முற்றும் இந்த வாணிபந் தன்னில் லாபம் கொண்டிடக் கார ணர்நற் குணத்தினிற் குன்றாம் என்றார் 232
செவிகொண்ட அனைத்தும் அன்னார் கேள்வியோ டொன்றில் லாதே கவிந்தது மனத்துள் ஆழங் கொண்டுமே முஹம்மத் மீது கவிந்ததோர் விருப்பும் நெஞ்சக் காதலாய்க் கனிவுங் கொள்ள குவிந்தன இமைகள் வெள்கிக் கோமகன் நினைவி னாலே. 233
திருமணம்
முன்னரீர் திரும ணங்கள் முடித்திருந் தாரே மூன்று கண்ணனை மக்க ளன்னார் கணவரின் வழியி ருந்தும் பின்னரோர் மணஞ்செய் கின்ற பற்றிலா திருந்தார் முஹம்மத் அண்ணலார் வருகை அன்னார் அகத்தினை மாற்றிற் றன்றோ 234
42 ஜின்னாஹ் ஷரித்தீன்

திருநபி காவியே
தன்தொழிற் துணையாய்த் தேர்ந்த திருமகன் சீர்மை கண்டு தன்வாழ்வின் துணையாய் ஏற்கும் திருவுளங் கொண்டார் நாச்சி தன்னிலும் வயது குன்றித் தானவர் இருந்தா ரென்னும் உண்மையும் அறிவார் ஒர்ந்தும் உளம்பறி கொண்டிட் டாரே. 235
சிந்தித்தார் பலநாள் ஏது செய்வதென் றெண்ணித் தம்மின் சொந்தமென் றாக்க யார்தான் துணைசெய்வார் எனவும் தேரார்
வெந்துளஞ் சோர்ந்தார் உள்ள விருப்பினை அறியச் செய்யும் மந்திரஞ் சொல்வா ரற்றே மனக்கவல் காண்டா ரந்தோ 236
இறுதியில் தனக்கு வந்த ஏவல்செய் பெண்ணின் மூலம் பெறவிளைந் தாரே அன்னார் பிரியத்தை அறிந்து கொள்ள முறையாக அப்பெண் மூலம் முஹம்மதர் தமக்குத் தூது
அறியவென் நனுப்பி வைத்தார் அவள்தாங்கிச் சென்றிட் டாளே. 237
கேட்டதும் சேதி என்ன கூறுவ தென்றே தோண மாட்டாதே அதிர்ந்து நின்றார் முதன்முறை அனுப வத்தால் காட்டாதின் முகத்தில் பாவம் காருண்யர் உரைப்பர் என்றன் வீட்டாரைக் கேட்டே நானோர் விடைதர முடியு மென்றே. 238
பெருந்திருக் கொண்ட அந்தப் பெருமாட்டி என்றன் மீது விருப்புற்றார் என்ற தான விடயத்தைப் பெரிய தந்தை கருத்தினில் ஏற்ப ராமோ கூறுவ தெவ்வா றென்றே
சிரத்தினிற் பொருத்தி ஆய்ந்தார் செய்வதென் றறிகி லாரே. 239
சேர்ந்ததோர் தருணம் தந்தை தனித்தொரு புறத்தி ருக்க வார்த்தைகள் கோத்து மெல்ல மொழிந்தனர் நடந்த தெல்லாம் மூத்தவர் வயதில் என்ற மட்டிலுந் தானே யன்றி சேர்த்துடன் வாழ முற்றுஞ் சிறந்தவர் என்றார் தந்தை. 240
ஏற்றனர் பெரிய தந்தை எனுஞ்சேதி தூது மூலம் ஏற்றனர் கதீஜா என்றும் ஏற்றிடா மகிழ்வு கொண்டார் போற்றுதற் குரிய பேர்கை பற்றிடும் நாளை எண்ணித் தோற்றத்தில் இளமை புக்கார் தனித்துளம் பூரித் தாரே. 241
43 ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 36
திருநபி காவியம்
ஊரவர் ஒன்று கூட உறவினர் சுற்றஞ் சேர பேரரு ளாளன் பேரால் புனிதவத் திரும ணத்தைப் பூரண 'மஹராய்’ திர்ஹம் பத்தைந்து நூறு தந்தே சீர்பெற அபூதா லிப்பும் செய்துவைத் தின்பங் கண்டார். 242
திருமண நாளின்போது சேர்ந்தபேர் அனைத்தி னர்க்கும் திருமண விருந்த எரித்துச் சுகித்தனர் வந்தி ருந்தோர் ஒருமணங் கொண்டு வாழ உவந்துவாழ்த் துரைத்து மீண்டார் கருணையின் கடலாம் வல்லோன் கிருபைசெய் தருளி னானே. 243
செல்வத்தில் திளைத்தி ருந்த சீமாட்டி சிறிதுஞ் செல்வம் இல்லாத பேரைத் தங்கை இணைந்தபின் தனது செல்வம் எல்லாமே அவர்க்குஞ் சொந்தம் என்னுமால் கைய எளித்தார் வல்லவன் வகுத்த வாறாம் வள்ளலெம் முஹம்ம தர்க்கே. 244
இல்லற வாழ்வில் எல்லா இன்பமும் ஒன்று சேர நல்லற மியற்றி னார்கள் நாயகி யோடு முஹம்மத் செல்வம்வந் துற்ற பொழ்தும் சிறிதெனும் வாழ்வில் மாற்றம் இல்லாது வாழ்ந்தார் வாழ்வின் இலக்கணம் பேணிக் காத்தார். 245
திருமண வாழ்வின் பேறாய்த் தோன்றினர் அறுவர் மக்கள் இருவர்ஆண் ஒருவர் “காஸிம்’ மற்றவர் 'அப்துல் லாஹற்வாம்’ இருவரும் இளமைக் கால இகவாழ்வை நீத்து வல்லோன் திருவுளம் போன்றே அன்னான் திருத்தலஞ் சேர்ந்தா ரந்தோ, 246
பெண் மக்கள் 'ஸைனப் 'ருகையா' 'பாத்திமா 'உம்மு குல்தும் மண்ணினில் நெடிது காலம் வாழ்ந்திடும் பேறு கொண்டார் தன்னிரற் கொழுந்தா மென்று தந்தையால் போற்றப் பட்ட அன்னையார் பாத்தி மாவை அலிரலி கரங்கொண் டாரே. 247
44 ஜின்னாஹ் ஷரித்தீன்

திருரவி assrsíulö
நாற்பது வயதில் நாடுடைக் கோம் (வேறு)
தீதெது வுள்ளதோ வத்தனை தீதையும் தீதென அறிந்துமே செய்தனர் தகவிலார் மேதினி வாழ்வுவே றொன்றிலை என்றவர் சோதனைக் கஞ்சிடார் செய்பவம் கொள்ளையே 248
போகப் பொருளெனப் பெண்டிரைக் கொண்டனர் போகப் பொருளெனப் பெண்டிரும் எண்ணினார் தேகச் சுகமிரு பாலரும் வேண்டினர் மோகமே வாழ்வென மதியிலார் பற்றினார் 249
தாக சாந்தியாய் ஆயின மதுவகை தாக மேற்படு முன்னதைத் தீர்த்தனர்
பாகு போலவர்க் காமிதீர் பாலரும் பாகு பாடறப் பருகியே திளைத்தனர். 250
சூது வீதிகள் தோறும் நடந்தன ஏது வாயினும் ஏற்றவர் ஆடுவார் நீதி இலைத்தடை நோற்றிட அன்னவர் வேத மும்மதை விலக்கிட வில்லையே 251
கொள்ளை இடுவதும் களவுகள் செய்வதும் கொள்ளை ஆசைக்(கு) உவந்த செயல்களாம் தெள்ள அறியுவர் தகாதது வென்றுமே. உள்ளத் திருத்திடார் உவந்துமே செய்குவார். 252
பொய்யு ரைசெயப் பக்குவ மாணவர் பொய்யைப் பொய்யினால் பொய்ய தாக்குவார் பெய்யும் மழைபிழை யாகுமே அன்னவர் பெய்யும் பொய்யதால் புகலல் ஆகுமோ. 253
45
ஜின்னாஹ் Spரித்தீன்

Page 37
திருநபி காவியம்
வாக்க ளிப்பது வெற்று வாய்ப்பதம் வாக்கு மாறுதல் வழிவழி யானது நோக்கு பிறரைஏ மாற்றுத லாதலால் வாக்க ளிக்கவாய் கூசிடார் தாமரோ.
கொலைவெ றிக்கவர் காவலர் யாரையும் கொலைக்கு வப்பரே கடுகள வாயினும் விலைக்கு வாங்குவர் வேற்றவர் இன்னுயிர் சிலைக்குத் தெய்வத் திருமுறை செய்குபேர்
சாலை யோரமெல் வேளையுஞ் சேருவார் வேலை யற்றபேர் வம்பளப் பார்களே காலை மாலையென் றன்னவர்க் கில்லையே ஆலை வாய்படும் அன்னவர் வாய்களே
கூடி நின்றுபல் லோர்குரல் செய்திட
ஆடி மகிழுவர் ஆங்குடன் பெண்களும்
கூடி யுடனவ ரோடுமே சேர்ந்திடச் சோடி சேருமே செயலிழி வாமரோ
கட்ட விழ்ந்த கடாக்களாம் காளையர் இட்டம் போலவர் ஏதேதுஞ் செய்யலாம் தட்டி வினவிடு தாதையும் அவ்வழி கெட்ட பூழிந்திடில் கேட்பவ ரில்லையே
வீட டங்கி:டு வனிதையர் வீதியில் கூடு விட்டகல் கிளிகளை ஒப்பரே தேடு வாரிலைத் தாய்வழி ய..ததால் நாடு நிலைகெடு நிலைக்கெவர் பழியரோ,
254
255
256
257
258
46
ஜின்னாஹ் வழfபுத்தீன்

திருரவி காவியம்
நீடித்கு குவம்
(வேறு)
நாடு சீர்கெட் நடப்பவை நடந்திட நெடுநாள் தேடு வார்தனைத் தோற்றிய தாரென முஹம்மத் நாடு வார்தனி நிஷட்டையில் நிலைத்திடத் தலமும் காட டர்ந்தவோர் குகைதனைத் தேர்ந்தார் செலவே 260
உச்சி மலையினில் உறைந்தக் குகை'ஹிரா' வாங்கே அச்ச மற்றனர் எவர்தானும் அணுகார் எனவாம் அட்ச ரம்அறி யாதவர் ஆதியின் நினைவால் பட்ச முற்றனர் பொருந்தும.". தாமென முஹம்மத் 261
யாரு மேவரார் ஏற்றநற் குகையென விருப்பத் தேரு வாரது தோதது தானெனத் தெளிவாய்ப் பார்பிற படைத்தாள் பண்ணவன் பாற்புலன் பதித்தே சீர்பெறு தவமேற் கொண்டிட வாமெனத் தேர்ந்தார். 262
தனித்தே பலநாள் தொடர்ந்தும் பலநாள் தனியோன் மனத்தில் இருப்ப மற்றொரு எண்ணமும் முளையா நினைப்பில் நிலைத்தார் நிமலன் நல்லருள் நல்கும் கணத்தை ஏற்றிடக் கண்துயில் மறந்தார் கருத்தாய். 263
கண்ணென் றேதங் கணவரைக் கதீஜா கருதி விண்ணோன் பாலவர் வேண்டுதல் அறிந்தே விரும்பி உண்ண உணவும் உதவுவ வனைத்தும் உதவி மண்ணே உய்த்திட வாய்த்தவர் தமக்கென வரித்தார். 264
(வேறு)
வாரங்க ளொன்றி மாத மாகிச் சீராக மாதங்கள் சிலவு மேகி
தேராத புதிராகத் தினமும் ஏங்கி ஆராத னைதொடர்ந் திருந்தா ராங்கே 265
47
ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 38
திருநபி காவியம்
ஊரார்கள் அறிகிலார் உண்மை தேரார் காரணர் காரியக் கருத்தில் உய்த்தார் பாராளு வோன்திருக் கிருபை வேண்டிச் சீராளர் முஹம்மத் தனித்தி ருந்தார். 266
யாரோடும் எ.தெனும் இயம்பார் சேர்ந்தே நீரோடு ஊனுமொன் றாத பேராய் வேரோடு சாய்ந்தவோர் மரமா மன்ன தீராத சோகத்தே திளைத்தி ருப்பார் 267
வணங்கவென் றொருவனே வேறாம் இல்லை வணங்குவேன் அவனன்றி வேற்றை யன்றே இணங்கியே எனக்கவன் அருள் பாலிப்பான் சுணங்கிடு போழ்திலும் தனக்கென் பாரே. 268
தன்னை வருத்திடு தவத்தால் முஹம்மத் தன்னுரு தன்னையும் இழந்தார் மாறாய் முன்னமி ருந்தநல் லுடலம் நீங்க அன்னவர் உருமாறிப் போனா ரந்தோ 269
கனிவில் கண்ட உருவம்
(வேறு)
ஓடியது காலம் ஒர்நாள் உறக்கத்தில் இருக்கும் வேளை நாடியோர் உருவந் தம்முன் நிற்பது கண்டார் கண்கள் மூடிய நிலையில் அன்னார் முகங்காண மாட்டா தோராய் வாடினார் உள்ளம் யாராம் வந்ததென் றேங்க லானார். 270
வான்பூமி இரண்டி னுக்கும் விரவிய தேகம் கண்ணால் காண்பதற் கியலா வாகாய்க் கொண்டவோர் ஒளிப்பி ளம்பு வான்துாத ராமோ அன்றி விண்ணவன் "ஜிண்ணோ” என்றே தோன்றிடா(து) அமைதி யற்றே துன்பத்திற் திளைக்க லானார். 271
48 ஜின்னாஹ் விழரித்தீன்

திருரவி காவியே
பற்பல நாட்கள் அந்தப் பேருருத் தோன்றித் தோன்றி நிற்பதும் மறைந்தே தம்மை நினைவிழந் திடவுஞ் செய்ய கற்பனை என்றும் இல்லைக் காண்பது உண்மை என்றே பற்பல வாறு எண்ணிப் பரிதவித் திடவு மானார். 272
நடந்தவை அனைத்துஞ் சொல்ல நினைந்திட்ட போழ்தும் யாரும் உடன்பட மாட்டடார் பொய்யென் றுரைப்பரோ எனவும் அஞ்சி கடத்தினார் காலந் தன்னைக் கூறாது மறைக்க லானார் அடுத்தடுத் தின்னுந் தோன்ற அன்னைபால் கூறிற் றாரே. 273
கொள்ளுங்கள் அமைதி அச்சங் கொளவேண்டாம் புதுமை உங்கள் உள்ளத்திற் கொண்ட ஐயம் ஒர்ந்திடில் கண்ட(து) ஏக வள்ளலாம் இறைவன் பாங்கில் வந்தவோர் தூத ராகும் எள்ளளவேனும் "ஜிண்ணாய் இருவப்பரென் றெண்ணல் வேண்டாம். 274
ஆறுதல் வார்த்தை கூறி அன்னையார் கதீஜா தேற்ற தேறுதல் அடைந்தார் உள்ளத் தெம்புமே கொண்டார் முஹம்மத் கூறுவார் ஒருநாள் உங்கள் கண்களில் காட்சி கொள்ளும் 'நூர்’தனை யார்நான் என்றே நாட்டுவார் அமைக என்றே. 275
ஒளி பிறந்குது
என்றும்போல் அன்றும் ஓர்நாள் ஏகனை மனத்தி ருத்திக் கொண்டுகண் மூடி முஹம்மத் கடுந்தவ மியற்றுங் காலை விண்டலம் ஒடிந்து வீழும் வீறுகொள் ஒசை யொன்று அண்டையில் கேட்க அஞ்சி அகலக்கண் திறக்க லானார். 276
செவிப்பறை வெடித்துத் தம்மின் செவிகளுங் குருடாயப் போக அவித்ததென் விழிகள் பார்வை அற்றறுந் திட்ட வாறாம் புவிப்பெருஞ் சோதி வெய்யோன் தன்னொளி அடக்கு மென்ன கவிந்ததோர் ஒளியின் வெள்ளம் குகையினுட் காய்ந்த தன்றோ 277
49 ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 39
திருநபி காவியம்
பேரொளிப் பிளம்பாய் ஆங்கு பார்த்தவவ் வுருவே முன்னர் பேரொளிப் பிளம்பாய்த் தோன்றிப் பன்முறை அச்சங் கொள்ளக் காரண மான தென்று கண்டனர் முஹம்மத் அந்தப் பேரொளி "ஜிப்ரீல்’ என்னும் பேருண்மை அறிந்தி டாரே. 278
அச்சத்தால் உடல மெல்லாம் ஆடின வியர்வை கோத்து உச்சிகால் உடலஞ் சிந்தி உடைநனைத் தோட அன்னார் பச்சிளம் பிள்ளை யொக்கப் பார்த்தகண் பார்த்த வாறே நிச்சயம் அற்றே நின்றார் நிற்பதார் எனத்தோ னாரே. 279
வானுயர் ஒளிப்பி ளம்பாம் வானோர்கோன் ஜிப்ரீல் கண்டு சாணென உடல்கு றுக்கிச் சக்தியற் றிருக்கும் வேளை தானேமுன் பேச லானார் தனியவன் அனுப்பி வைத்த வானவர் "வஹி”கொ ணர்ந்தே வழங்குவோர் விளங்கும் வாறே. 280
"ஒதுவீ ராக’ என்றே ஒதிடப் பணித்தார் முஹம்மத் "ஓதிட அறியேன்” என்றார் ஓரெழுத் தறியா நாதர் “ஒதுவீர்” என்றார் பின்னும் உடலணைத் திட்ட பின்னே “ஒதநான் அறியேன்” என்றார் ஒதிட மாட்டா ராக. 281
மீண்டுமோர் முறையுஞ் ஜிப்ரீல் மார்போடு அணைத்தார் சொல்வார் "ஆண்டவன் நாமத் தாலே ஒதுவீ ராக” வென்றே தோன்றிடா தெதுவும் முஹம்மத் கூறுவார் எதனைத் தான்நான் வேண்டுவ வாறு ஓத வேண்டுமென் றியம்பச் சொல்வார். 282
“ஒதுவீ ராக எல்லாம் உருவாக்கி வைத்தோன் பேரால் ஒதுவீ ராக மனுவை உதிரத்தி லிருந்து செய்தோன் ஒதுவீ ராக எழுத எழுதுகோல் கொண்டு சொன்னோன் ஒதுவீ ராக அறியா அனைத்தையுங் கற்றுத் தந்தோன்” 283
ஒன்றுமே அறியேன் என்று உரைத்தவர் செவியுள் வாங்கிக் கொண்டவை அனைத்தும் நெஞ்சுள் கடிதினில் ஊன்றி ஜிப்ரீல் சொன்னவா றொப்பு வித்தார் செவிகொண்டார் வானோன் தூதர் அந்நிலை தம்முள் தோன்றும் அதிசய மாற்றந் தேர்ந்தார். 284 50 ஜின்னாஹ் விழரித்தீன்
 

திருநபி காவியம்
படைத்தாளும் இறைவன் பேரால் பேரருள் உடலம் பாய அடைந்தனர் தெம்பு முஹம்மத் அச்சமுந் தீர்ந்தார் முன்னே இருட்குகை போன்றி ருந்த இதயமும் ஒளியால் விஞ்சும் அருட்கொடை யுணர்ந்தார் காணார் ஆங்குமுன் நின்ற பேரை 285
தேடினார் தன்முன் நின்ற தேசுடைப் பேரை எங்கும் ஓடினார் மீண்டுங் காணும் உந்தலால் கண்டா ரில்லை வாடியே உள்ளஞ் சோர வந்துற்ற நிகழ்வால் யாரும் ஈடிலான் நாமந் தன்னை எண்ணிவாய் பூத்தா ரன்றோ 286
புதியதோர் அனுப வத்தால் புலனைந்தும் அடங்கி நேர்ந்த கதியென்ன வாமி. தென்றே கலங்கிய வாறி ருந்து மதிதெளிந் தெழுந்த காலை மின்னொளி பாய்ச்சி வெய்யோன் புதியவ னாகத் தோன்றிப் பணிகொள்ள மேலெ முந்தான். 287
விடிந்ததும் வீடு நோக்கி விரைந்தனர் நபிகள் நாதர் கடுங்குளிர் காலம் போன்றே குலுங்கினார் குறுகி நின்றார் திடமறக் காலி ரண்டுந் துவண்டன நிலைத்து நிற்க முடிந்திடா வாறு வீட்டின் முன்வாசல் தட்டி னாரே. 288
தட்டிய கதவின் ஓசை செவிகொண்ட கதீஜா அன்னை தட்டிய தாரோ வென்று தேர்ந்திடத் தாழ கற்றக் கட்டிய கணவன் தன்முன் கொண்டவக் கோலங் கண்டே சட்டெனத் தன்கை தாங்கிச் சென்றனர் இல்உள் ளாமே. 289
"போர்த்துங்கள் என்னை நன்றாயப் போர்த்துங்கள்’ என்றவாறே ஆர்த்திடப் பணித்தார் போர்வை அடங்கிடாக் குளிர்கண் டோராய் போர்த்தினார் அன்னை அண்டிப் பதறிடும் உடலை தன்னில் சேர்த்தணைத் தார்கள் என்ன சொல்லுங்கள் உடலுக் கென்றார் 290
ஏக்கமும் பயமும் ஒன்றி இருந்திட்ட போதுங் கண்ணில் தேக்கிய ஒளியால் வண்ணத் திருமுகம் புதுமை காட்டும் வாக்கினில் பதித்த வார்த்தை வளத்தினால் ஞான வெள்ளம் தாக்கிய தாமோ நெஞ்சம் சுடர்கொண்டு துலங்கி வென்றே 291
51 ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 40
திருநபி காவியே
நேர்ந்தவை என்ன வென்றே நபிகளார் தம்மை நோக்கி பார்வையில் அதிர்ச்சி பொங்கப் பரிவொடு வினவச் சொல்வார் பார்த்தேனப் பேரை என்னைப் பலமுறை தொடர்ந்து வந்து சேர்த்தவர் அச்சம் நெஞ்சில் தோன்றிடச் செய்தோ ரைநான் 291
நடந்தவை அனைத்தும் முற்றாய் நீக்கமற் றுரைக்க அன்னை ஒடிந்திட வேண்டாம் உள்ளம் உண்மையில் ஆங்கு வந்தார் திடம்இறை பாலி ருந்து தங்களைக் காண வந்த அடியவர் மலக்காம் என்றார் தூதரும் நம்பி னாரே 293
கண்ணயர்ந்(து) இறைவன் தூதர் கடிதனில் துயில ணைக்க எண்ணமுங் கொண்டார் அன்னை இவைபற்றி அறிய முற்றும் முன்னைய மார்க்க மெல்லாம் மேட்டிமை யாயறிந்த தன்முறைத் தமயன் றன்பால் சென்றிடத் தொடந்திட் டாரே. 294
வேதங்கள் கற்று ஒர்ந்த "வரக்கா இபுனு நெளபல்” தோதான பேரி தற்கோர் சீரான விளக்கங் கூற ஒதுவா ருண்மை ரூபம் ஒதுக்கியோர் வணங்க மாட்டார் தீதிலை அவரி டத்தே சொல்லுதல் அனைத்தும் என்றே 295
சென்றனர் ஆங்க வள்பால் செப்பினார் அனைத்துங் கேட்டு ஒன்றுமே உரைக்க மாட்டா(து) உணர்சியற் றிருந்தார் ஒர்கால் முன்னைய வேதமான பைளின் பக்க மெல்லாம் கண்முன்னே வருதல் கண்டார் கருத்தொன்றிப் பொருந்தி னாரே, 296
52 ஜின்னாஹ் ஷரித்தீன்
 

திருரவி காவியே
இப்ராஹீம் நபியும் இஸ்மாயீல் நபியும் செய்கு பிரார்த்குனை
எங்கள் இறைவனே (என் சந்ததியினரான) அவர்களிலிருந்தே அவர்களில் ஒரு தூதரை அனுப்புவாயாக
அவர்களுக்கு அவர் உன்னுடைய வசனங்களை ஒதிக்காண்பித்து வேதத்தையும் ஞானத்தையும் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்து அவர்களைப் பரிசுத்தமாக்கியும் வைப்பார்.
நிச்சயமாக நீயே (யாவரையும்) மிகைத்தவன் தீர்க்கமான
அறிவுடையவன் என்று பிரார்தித்தார்கள். (குர்ஆன் 2:129)
(வேறு)
எமதிறைவா அவர்களுக்கு உன்னுடைய
உயர்வேத வசனங்களை ஒதிக் காட்டி உமதுமறை யோடுஞானங் கற்றுத் தந்து
ஒன்றிடத்துாய் மையவர்மேல் வைக்கத் தக்க தம்மிடையே தமக்கென்று அவர்க ளுள்ளோர்
தூதரைநீ எழுந்தருளச் செய்வா யாக உண்மையதாய் மிக்கவல்லோன் நீயே மிக்க
நுண்மதியுங் கொண்டவனாவாய் இருப்போ னாவாய் 297
53 ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 41
திருரவி ssrsíulö
இறுதி நபியற்றி ஈசா நபியின் முன்னறிவித்குல்
DTu(p60)Lu LD56ö FF3FT (இஸ்ராயீலின் சந்ததிகளை நோக்கி) இஸ்ராயீலின் சந்ததிகளே! மெய்யாகவே நான் உங்களிடம் அனுப்பப் பெற்ற அல்லாஹற்வுடைய ஒரு தூதன் நான் எனக்கு முன்னுள்ள 'தவ்றாத்’தையும் உண்மைப்படுத்துகின்றேன் எனக்குப் பின்னர் "அஹற்மத்” என்னும் பெயர் கொண்ட ஒரு தூதர் வருவதைப் பற்றியும் நான் (உங்களுக்கு) நன்மாராயம் கூறுகின்றேன் என்று கூறியதை (நபியே! நீர் அவர்களுக்கு) ஞாபகமூட்டும் (அவர் அறிவித்தவாறு அத்துாதர்) தெளிவான அத்தாட்சிகளுடன்
அவர்களிடம்
வந்த சமயத்தில்
இது
தெளிவான சூனியம் என்று அவர்கள் கூறினர். (குர்ஆன் 61:6)
மர்யமுடைய மகன்ஈசா இஸ்ரா யீலின்
முறைவந்த வழியினரை நோக்கிச் சொல்வார்
"மெய்யாய்நான் உங்களிடம் அனுப்பப் பெற்ற
முதலவனாம் அல்லாஹற்வின் தூத னாவேன்
54 ஜின்னாஹ் ஷரித்தீன்
 

திருநபி காவியம்
மெய்ப்படுத்து கின்றேன்நான் என்னில் முந்தும்
'தவ்றாத்’தை எனக்குப்பின் "அஹற்மத்” என்னும்
துய்யோனின் தூதர்வருஞ் செய்தி யையும்
சொல்லியேநன் மாராயம் கூறுகி ன்றேன்’. 298
வ்றுத்”, “ இன்ஜிலில்’ நபிவருகை பற்றி
எவர் எழுத்தாற்றலற்ற (நம்) தூதராகிய இந்த நபியைப் பின்பற்றுகின் றார்களோ அவர்கள் தங்களிடமுள்ள தவ்றாத்திலும் இன்ஜிலிலும்
இவரைப்பற்றி எழுதப் பெற்றிருப்பதைக் காண்பார்கள் (இத்தூதரே)
96). T8560) 6T நன்மையான காரியங்களைச் (செய்யும்படி) ஏவி பாவமான காரியத்திலிருந்து அவர்களை விலக்குவார் நல்லவைகளையே அவர்களுக்கு ஆகுமாக்கி வைப்பார் கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்துவிடுவார்
அன்றி அவர்களுடைய பழுவை அவர்களை விட்டுப் போக்கி அவர்கள் மீதிருந்த விலங்குகளையும் (இறைவனுடைய கடினமான - பல கட்டுகளையும் -
55
ஜின்னாஹ் வழfபுத்தீன்

Page 42
திருநபி காவியம்
இறைவன் அனுமதி கொண்டு) நீக்கிவிடுவார் ஆகவே எவர்கள் அவரை (மெய்யாகவே) விசுவாசித்து அவர்கள்மீது அருளப்பெற்ற ஒளிமிக்க
(இவ்வேதத்தைப்) பின்பற்றுகின்றார்களோ அவர்கள்தாம் சித்தி பெற்றவர்கள் (குர்ஆன் 7:157)
எவரெழுத ஆற்றலற்ற எமது தூதர்
இந்நபியைப் பின்பற்று வாரோ அன்னார் அவர்வசத்தில் உள்ள 'தவ்ராத்” இன்ஜில் தம்மில்
இவர்பற்றி எழுதியுள்ள வற்றைக் காண்பர் அவர்தம்மை நன்மையின்பால் ஏவிப் பாவத்(து)
இருந்தவரை விலக்கிடுவார் நல்ல வற்றை அவர்களுக்கு ஆகுமாக்கி வைப்பார் கேட்டை
அவர்களுக்குத் தடுத்துமவர் வைப்பா ராகும். 299
அவர்தம்மின் பழுவையவர் விட்டுப் போக்கி
அவருறைந்த விலங்குகளை நீக்கி வைப்பார் எவரவரை மெய்யாக விசுவா சித்து
அவர்தம்மைப் பலப்படுத்தி உதவி செய்து அவர்மீது அருளப்பெற் றுள்ள தான
ஒளிமிக்க இவ்வேதம் தனைப்பின் பற்றும் அவர்கள்தான் சித்திபெற்றோர் (என்றே தவ்றாத்
இன்ஜிலில் இறைவசனம் உண்ட தாமே) 300
(வேறு)
தெளிவுபெற் றுணர்ச்சி பொங்க சிலிர்த்துடல் துள்ள நெளபல் களிப்படைந் துரைப்பார் வார்த்தை “குத்துாசுன் குத்துஸ்” என்றே வெளிப்படை "மூசா’ "ஈசா’ மாதவத் தூத ருக்கு வழிபடு வேதத் தூதை வழங்கியோர் இவர்தா மென்றே. 301
56 ஜின்னாஹ் வழfபுத்தீன்
 

திருநபி காவியம்
இறுதியாய் உலகி னுக்கு இறைவன்பா லிருந்து தோன்றும் மறைதூதர் இவரே உங்கள் மணவாளர் முஹம்ம தேதான் அறுதியிட் டுரைப்பேன் நீங்கள் ஐயமுங் கொள்ள லாகா அறிந்திட உரைப்பீர் அன்னார் அறிவுக்கண் திறந்த தென்றார். 302
ஒடியே வீட டைந்து உறங்கிடும் நபியை நோக்க நாடினார் நபிக ளாரின் நாயகி கதீஜாப் பிராட்டி வாடாத மலரா மன்ன முகத்தெளி வுற்ற பேராய் மூடிய விழிகள் கண்டார் மனத்தினில் அமைதி கொண்டார் 303
சிறுபொழு தண்ண லார்மேல் தன்விழி பதித்து நோக்கி உறுமொரு மாற்றங் கண்டார் உடல்வியர்த் தசைதல் கண்டார் மறுமுறை இறைவன் தூது மாநபி தமக்கு வந்த(து) அறிகிலார் அன்னை தன்னை அண்டிடா திருக்கச் செய்தார். 304
(வேறு)
மீண்டுமிறை தூதுவரத் தொடங்கிற்(று) ஏகன்
முஹம்மதரை நபியாக ஏற்றஞ் செய்தான் தூண்டினனே மக்களுக்குத் தனது வேதம்
தெரிந்தறியச் செய்கவென அவருஞ் செய்தார் ஆண்டவனின் புறத்திருந்து அருள்வாக் குகள்
அகமதரை வந்தடையும் ஜிப்ரீல் மூலம் ஆண்டடுத்து வந்திரு வாக்கி யங்கள்
அறைகூவ லாகியது அதுபின் வாறே 305
போர்வையால் போர்த்திக் கொண்டிருப்பவரே எழுந்து நின்று
(மக்களுக்கு) எச்சரிக்கை செய்யும் உமது இறைவனைப் பெருமைப் படுத்தும் உம்முறைய உடைகளைத்
57 ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 43
திருநபி காவியம்
தூய்மையாக வைத்துக் கொள்ளும் தூய்மையற்றவற்றை விட்டுத் தூரமாக்கிவிடும்
பிறருக்கு நன்றிசெய்துவிட்டு
பகரமாக -
அவரிடமிருந்து அதிகம்பெற எண்ணாதீர் உன்னுடைய இறைவனுக்காக இன்னல்களைப் பொறுத்திரும்
போர்வையினால் போர்த்தியுள்ள பேரே நீவீர்
பொதுமக்கள் தமைநோக்கி எச்ச ரிக்கை கூறிடுவீர் உமதிறையைப் பெருமை செய்வீர்
கறையகற்றி உடைகளில்நீர் தூய்மை கொள்ளும் தூரமாகி விடுந்துாய்மை அற்ற வற்றில்
செய்தநன்மை தமக்கதிகம் எதிர்பார்க் காதீர் நீருன்றன் இறைவனுக்காய் இன்னல் தாங்கி
இரும்பொறுமை காத்திடுவீர் (என்ற வாறே) 306
யாரிடத்தில் எடுத்துரைப்பேன் என்னை யார்தான்
இறைதூதர் எனநம்பப் போவா ரென்றே நீறுபூத்த நெருப்பாக நெஞ்சத் துள்ளே
நின்றதொரு வினாநபிகள் மனையாள் நோக்கிக் கூறினரே வந்தஇறை வசனந் தன்னைக்
கதீஜாநந் நாயகியார் கருத்திற் கொண்டார் ஆறுதல்தான் கொள்வீர்கள் ஆண்ட வன்றன்
அறுதிநபி எனவொப்பி னேன்நான் என்றார் 307
“வணக்கத்துக்குக் குரியவனாம் அல்லாஹற் அன்றி
வேறில்லை முஹம்மதவன் தூதர் என்றே
இணங்குகின்றேன்” எனஅன்னை இயம்பக் கேட்டு இறைதூதர் பூரித்தார் இன்னும் யார்தான்
58
ஜின்னாஹ் இpரித்தீன்

திருநபி காவியே
இணங்குவரோ எனைநபியாய் ஏற்க என்றே
எண்ணிமனம் ஏங்குகையில் எல்லாம் வல்லோன்
இணங்க வைப்பான் எதிர்காலம் உங்கள் கையில்
எனவுறுதி கொளப்புகன்றார் அன்னை யாரே. 308
தொடர்ந்தவர்கள் நபிகளாரை விளித்து நெளபல்
சொன்னவெல்லா விபரங்களும் எடுத்துச் சொன்னார்
அடுத்ததொருநாள் நெளபலினை க.பா வின்கண்
அண்ணலாருங் கண்ணுற்றார் நபியை நோக்கித்
தொடுத்தாரோர் கேள்விதனை நடந்த தெல்லாஞ்
சொல்லுங்கள் எனஅதற்கு நிகழ்ந்த வற்றை
எடுத்துரைக்க ஒவ்வொன்றாய்ச் செவிமடுத்தே
இருவிழியும் நீர்சொரிய நின்றிட் டாரே. 309
"எவன்கையில் என்றனுயிர் உளதோ அந்த
ஏகனின்மேல் ஆணையிட்டுச் சொல்வேன் நீவீர் அவன்பொருட்டால் அறுதித்திருத் தூத ராக
அனுப்பிவைக்கப் பட்டவரே அன்றி இல்லை புவிஆள்வோன் புறத்திருந்து தூது சொல்லும்
பேர்"ஜிப்ரீல்’ எனும்வானோர் தலைவ ராகும் கவலழிவீர் இவையனைத்தும் நான்முன் கற்ற
காவலனின் மறைகளிலே கற்ற' தென்றார். 310
“பொய்யரென்பர் பித்தரென்பர் புழுக ரென்றும்
புகலுவரே மாந்தரும்பால் கோபங் கொண்டு மெய்யாகத் துன்பங்கள் செய்வார் நாட்டை
மறந்தோடச் செய்வார்கள்’ என்றும் 'முந்நாள் வையகத்தின் பேறாக இறைய னுப்பி
வைத்தவெல்லாத் தூதருக்கும் விளைத்த வாறாம் ஐயோ!நான் இளைஞனாக இலையே உம்மை
இறுதிவரை காப்பதற்கு” எனநொந் தாரே. 311
59
ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 44
திருரபி காவியம்
வரகாசொல் லத்தனையுங் கேட்டு நெஞ்சுள்
விவரிக்க இயலாத வாறே கேள்வி
சுரக்கநபி வினவிடுவார் “ஊரை விட்டுந்
துரத்துவரோ’ எனஅவரும் ஆமாம் என்றார்
ஒருபுறத்தால் நபித்துவத்தால் மகிழ்வும் துன்பம் ஒன்றுமென்ற காரணத்தால் துயரம் சேர
கருணைநபி கலங்கினரே இறைநாட் டம்போல்
கூடுவது கூடட்டும் எனவி ருந்தார். 312
பலநாளாய் இறைதூது வராதல் கண்டு
புண்ணுற்ற மனங்கொண்டார் தாங்காச் சோகம் நிலைகொள்ள அச்சமுற்றார் என்றன் மீது
நம்பிக்கை இழந்தனனோ இறைவன் என்ன இலையுங்கள் மீதிறைவன் கொண்ட அன்பு
என்றென்றும் மாறாதே நபியாய்த் தேர்ந்த நிலைவந்த பின்னரும்ஏன் கவலை என்றே
நபிவாட்கைத் துணைகதீஜா நபிக்குச் சொல்வார் 313
நெஞ்சுருகிப் பிரார்த்திப்பார் நபிகள் நாதர்
நாயகனே எனைமறவேல் கருணை செய்வாய் துஞ்சாது எனக்கிட்ட கடமை செய்வேன்
தூயவனே தூதனுப்பித் துணிவுந் தாராய் பிஞ்சுமணப் பிள்ளையைப்போல் பணிந்தே வேண்டப்
பண்ணவனும் இரங்கினனோ மீண்டுந் தூது சஞ்சலத்தைப் போக்கியதே தூது வர்தோன்
'ஜிப்ரீலும் “வஹி'யேந்தி வரவு செய்தார். 314
60
ஜின்னாஹ் விழரித்தீன்
 

திருரபி காவியம்
முற்பகலின் ஒளிமீது சத்தியமாக மறைத்துக் கொள்ளும் இரவின்மீது சத்தியமாய் உமதிறைவன் 9) I D60)LD5 கைவிடவுமில்லை வெறுக்கவுமில்லை
9 LD55) பிந்திய நிலைமை முந்திய நிலைமையைவிட நிச்சயமாக உமக்கு மேலானதாக இருக்கின்றது உமதிறைவன் பின்னும் உமக்கு பல உயர்ந்த பதவிகளை அளிப்பான் நீர் திருப்தியடைவீர்
அநாதையாக உம்மைக் கண்ட அவன் தங்குமிடம் அளித்துக் காக்கவில்ைைலயா
g) D60)LD வழியறியாதவராகக் கண்ட அவன் வழிகாட்டினான்
g) Libó0)LD வறுமையில் கண்ட அவன் தனவந்தராக ஆக்கி வைத்தான். ஆகவே நீர் அநாதைகளைக் கடிந்து கொள்ளாதீர்
61
ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 45
திருநபி காவியம்
யாசிப்பவர்களை
விரட்டாதீர்
உமதிறைவன் அருட்கொடையை
அறிவித்துக் கொண்டிருப்பீராக
(குர்ஆன் 93ம் அத்தியாயம்)
"முற்பகலின் ஒளிமீது மறைத்துக் கொள்ளும்
மாவிருளின் மீதினிலும் சத்ய மாக (கொற்றவனாம்) இறைவனுன்னை வெறுக்க வில்லை
கைவிடவும் இல்லையுன்றன் பின்னைக் காலம் முற்றிலுமே முன்னைவிட மேல தாகும்
மிகப்பெரிய பதவிதரத் திருப்தி கொள்வீர் நிற்கதியாய் உமைக்கண்டான் தங்கு தற்கு
நல்கினனே இடமளித்துக் காத்தா னன்றோ 315
திகைப்புற்று வழியறியா நின்ற போழ்து
சேர்த்தனனே நேர்வழியில் முடைப்பட் டோராய் வகையற்று வறுமையிலே திளைத்த காலை
வரித்தனனே செல்வத்தை எனவே நீவீர் வகையில்லா அனாதைகளை கடிந்தி டாதீர்
வந்திரப்போர் தமைவிரட்ட வேண்டாம் என்றும் செகமாளும் வல்லவனின் அருட்கொ டையை
செகத்திற்கு அறியச்செய் வீராம்” என்றே 316
ஊரறிந்கு உண்மை
(வேறு)
இறைதூது வந்த சேதி எவ்வாறோ குறைவழி யர்க்கு அறியவந் துற்ற போது அதிர்ந்தனர் புதிய மார்க்கம் குறித்தவர் கொதித்தார் முஹம்மத் கொள்கைதா னென்ன வென்றே அறிந்திடத் துடித்தார் கோப அக்கினிக் குட்பட் டாரே. 317
62 ஜின்னாஹ் ஷரித்தீன்
 

திருநபி காவியம்
ஊரெலாம் அதுவே பேச்சு உறைந்தது அற்றைப் போழ்து காரிருட் கோட்டைக் குள்ளே கேடுற்ற வாழ்வைக் கொண்டோர் தேரிலார் இஸ்லாம் என்னும் தூயநல் ஒளியால் வாழ்வின் பேறவர் கொள்ளப் போகும் பாக்கியம் அறியா துற்றார். 318
ஒன்றன்பின் ஒன்றாய் மெல்ல ஒன்றினார் ஊரார் தம்மைக் கொன்றொழித் திடுவ ரந்தக் குறிைவழிகள் என்றே அஞ்சி ஒன்றாது ஒதுங்கி யோரும் ஒன்றினார் வேத வார்த்தை வென்றதன் னார்தம் நெஞ்சை வரித்திட வாஞ்சை யுற்றார் 319
ஏழைகள் தாமே முன்னர் இறைவழி பற்றி னார்கள் பாழ்படு நெஞ்சங் கொண்ட பணத்திமிர் பிடித்த பேர்கள் ஏழைகள் தம்மை நோக்கி ஏழனம் செய்த தோடே வாழ்விட்ம் அறிந்து தொல்லை வழங்கவுஞ் செய்திட் டாரே 320
கூடியே நபிக ளோடு கூட்டமாய்ச் செல்வோர் கண்டு கூடியே நகைப்பர் எச்சில் கூட்டியே உமிழ்வர் யாரும் நாடியப் புதிய மார்க்கம் நண்ணிடா வாறு செய்ய நாடினார் வகைத்த தெல்லாம் நபிதொடர் வார்க்கி ளைத்தார் 321
மூன்றாண்டு இறைமார்க் கத்தை மறைத்துரை செய்த போழ்து ஆண்டவன் பணித்தான் உம்மை அண்டிய உறவி னோர்க்கு வேண்டும்நீர் அச்ச மூட்டி வழிவர எச்ச ரிக்கை தோன்றிடச் செய்க வென்றே தூதரும் பணிந்திட் டாரே 322
தொடர்ந்தது போல வாக்குத் தொடர்ந்தது நபிக ளார்க்கு எடுத்துரை செய்வீ நாம்முன் ஏவிய தனைத்தும் என்றும் விடுத்திடும் உறவைக் கல்லை வணங்குவோ ரிடத்தும் என்றே விடுத்தனன் அழைப்பும் நாதர் வெளிப்படை யாகச் செய்தார். 323
63 ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 46
திருரவி &froấtulỗ
குொழுகை வந்கு வரலாறு
இரவினிற் பாதிப் போழ்து இலையதிற் குறைவா யேனும் திருமறை தமைத்தி ருந்தத் தெளிவாக ஓதி ஆளும் ஒருவனாம் எனைவ ழுத்த உவப்பீர்கள் எனப்ப டைத்தோன் அருளினான் ஆணை கொண்டார் அதன்படி ஒழுக லுற்றார் 324
தொழுதனர் கல்லை மண்ணைத் தோன்றுசெங் கதிரோன் றன்னை இழிகுணர் மக்கா வாழ்ந்தோர் இறைவனென் றியற்றுங் காலை தொழுதனர் நபிகள் சேர்ந்து தொழுதனர் கதீஜா அன்னை வழுவிலான் தம்மைச் சொன்ன விதிப்படி வழுத்தி னாரே. 325
இருவரும் விழித்தி ருந்து இரவினில் தொழுதல் கண்டார் மருகராய் நபிக்குப் பின்னர் வாய்த்தவர் அலியென் பிள்ளை உரிமையோ டவரை நோக்கி உரைப்பரே யாரை நீங்கள் சிரம்பணிந் திறைஞ்சு கின்றீர் சொல்லுவீர் எனப்ப னிந்தே. 326
உருவிலா தொருவ னைநாம் உவந்தனம் வழுத்த வேறு ஒருவரும் இணையாயக் கொள்ள ஏற்றிடார் முற்று மானோன் திருவுளங் கொண்டான் என்னைத் தூதராய்க் கொள்ள நீரும் மருவுவீர் இஸ்லா மென்னும் மார்க்கத்தின் பாலென் றார்கள் 327
அளவற்ற அருளன் நிகரில் அன்புடை யோனு மாவான் இளவல்நீ அறிவாய் என்ன இன்றேநாள் இணைந்தே னென்றே தொழுதிட வுகந்தோன் அன்னான் தனித்துவே றொருவ ரில்லை உளத்தினா லேற்றேன் நீங்கள் ஒப்பிலான் தூதர் என்றார். 328
ஏற்றவர் இஸ்லாந் தன்னை இளமையில் அலியே பின்னர் ஏற்றனர் 'ஸைத்’ உம் மூன்றாய் ஆனது ஒப்பி னோர்கள் ஏற்றவர் முதலில் தம்மை இணைந்தவர் முறைமைக் காரர் ஏற்றனர் பிறரும் சேர்ந்தே இணைந்தனர் தொடர்ந்து மாமே. 329
64 566), TOB Opfijio,

திருநபி காவியம்
சிலைவெறுத் தொதுக்கி ஏக தெய்வத்தின் பால தாக அலிவிசு வாசங் கொண்டார் எனத்தந்தை அறிந்த காலை மலையடி வாரம் நோக்கி முஹம்மதர் இருப்பா ரென்றே செலவாங்கு கண்டார் தம்மின் செல்வனை அன்னா ரோடே 330
நபிகளா ரோடே அன்னார் நாயகி கதீஜா மற்றும் நபிவழி அலியுங் கூடி நின்றிறை வணக்கஞ் செய்ய நபிகளை நோக்கிக் கேள்வி நிகரில்லாச் சினமுங் கொண்டே அபூதாலிப் வினவ லானார் அறிகிலார் உண்மை தேரார் 331
என்னயி தென்ன மார்க்கம் இயம்புவீ ரென்றார் அண்ணல் சொன்னார்கள் இட்து முன்னாள் திருநபி இபுறா கீமும் தன்வழி கொண்ட மார்க்கம் தேருக புதிதொன் றில்லை பின்வரு வோரும் ஏற்கும் பண்ணவன் வழியா மென்றே 332
கேட்டவவ் விடையால் தம்மின் கோபமும் அவிய மீண்டும் கேட்டனர் கேள்வி யாகக் கூறுவீர் நீர்யா ரென்றே மாட்சிமைக் குரியோன் தூதர் மறையோனின் அடியான் நானுங் காட்டிடும் வழியை நீங்கள் கைக்கொள்க வெனவி ரந்தார். 333
உம்முடை உண்மைத் தன்மை உணருவேன் நானென் றாலும் எம்முடை முன்னோர் மார்க்கம் எப்படிக் களைவேன் நீர்நும் நம்பிக்கை கொண்ட மார்க்கம் நேசிப்பீர் பிறர்க்கு ரைப்பீர் நும்வழி நம்ம னோர்தம் நெருடலற் றிருக்கக் காப்பேன். 334
என்னுடை மூச்சுக் காற்று என்மூக்கில் இருக்கு மட்டும் உன்னைநான் பாது காப்பேன் உனக்கெதும் நேரா வண்ணம் கண்ணெனக் கொள்வேன் என்றன் கடமையும் அதுவா மென்றே சொன்னார்கள் அலியை நோக்கிச் செல்லலாம் வாவென் றாரே, 335
இல்லைநான் வரவே மாட்டேன் இறைதூதர் வழியிற் றான்நான் சொல்லுவேன் அவர்த மக்குத் தோள்த்துணை யாவேன் என்றார் வல்லவன் தூதர் அந்த வாய்மொழி கேட்டு ரைப்பார் இல்லைநீ விரும்பி னாலோ ஏகலாம் எனப் பணித்தான். 336
65 ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 47
திருநபி காவியே
இறையவன் தனக்கும் அன்னான் இறைதூதர் தமக்கும் எந்தக் குறைதனும் வாரா வாறு கடும்பணி இயற்றிப் பின்னும் மறையருள் வேத வாக்கின் முறைசெலத் துணிந்தே னென்றார் / நறைபொழிந் தன்ன தாம்அந் நம்பிகோத் துரைத்த வார்த்தை 337
மறுத்துரை செப்பக் கேட்டு மகன்பிடி வாதங் கண்டு வெறுத்திலார் தந்தை முஹம்மத் வழிபிறழ்ந் தொழுகா ரென்னும் உறுதியில் திளைத்தார் முற்றும் உடன்பட்டார் அலியை விட்டு அறுத்தனர் வாய்ச்சொல் மீண்டு அகம்நோக்கிச் செல்ல லானார். 338
சன்மார்க்கத்தின்பால் அழைப்பு
பகிரங்க மாக மார்க்கப் பணிசெயத் துணிந்த வேளை பகிரங்க மாக மான பங்கங்கள் செய்தார் தம்மின் அகங்கொண்ட ஏக தெய்வ அறைகூவல் தன்னை மக்கள் அகங்கொள்ள வைக்கப் பட்ட அவதிகள் அதிக மம்மா. 339
அஞ்சிடார் பொருட்ப டுத்தார் அனைத்தையும் பொறுத்தார் கண்கள் துஞ்சிடார் சோத னைக்குத் துணிந்தவர் ஒன்று சேர்ந்தார் கஞ்சினுக் கில்லா ஏழைக் கூட்டமே யதுவென் றாலும் நெஞ்சுரங் கொண்டார் வல்ல நாயனை நம்பி னாரே 340
உறவினர் தமக்கு மார்க்க உபதேசம் செய்க வென்னும் இறையாணை வந்த போது ஏற்றவா றியற்ற எண்ணி உறுத்தினார் அலிக்கு ஒர்நல் ஒட்டகை தனைய றுத்து விருந்துக்கு அழைப்புச் செய்ய வழிவழிச் சொந்தத் தார்க்கே 341
குலத்தவர் அனைத்துப் பேரும் கூடினர் உறவுக் காரர் நலந்தகு விருந்துண் டேக நாடிய போது நாப்பண் புலத்தினில் எழுந்து நின்றே பேசிட நபிகள் நோக்க கலைத்தனன் அமைதி 'அபூல ஹப்’ எனும் கொடிய பேரே. 342
66 ஜின்னாஹ் விழரித்தீன்

திருநபி காவியம்
உறவினில் பெரிய தந்தை உத்தமத் தூதின் வைரி மறுத்துரை செய்தான் எம்மை முஹம்மதே அழைத்த தேன்நீர் விருந்துண்ணத் தானே அன்றி வேறென்ன உரைதான் வேண்டும். பொருத்திதைக் கருத்தி லென்றே புறப்பட்டான் பிறர்தொ டர்ந்தார் 343
ஏமாற்றம் எல்லை யற்று இருந்திட்ட போதும் கொண்ட ஏமாற்றந் தவிர்க்க மீண்டோர் ஏற்பாட்டை அலியுஞ் செய்வார் ஈமானில் உறுதி கொண்ட ஏந்தலர் மறுநாள் வந்தோர் தாமாகப் பேசு முன்னே சட்டென உரைசெய் தாரே. 344
அறிகிலேன் நீரிப் போது அடையநான் கொணர்ந்தி ருக்கும் பெருமகிழ் வுட்ட நல்ல புதுச்சேதி தம்மை யொக்க அரபிகள் எவரென் றாலும் அதற்குமுன் கொணர்ந்தா ரென்றே உறவினோர் சொல்வீ ரென்றே உரைதனைத் தொடங்கி னார்கள். 345
இருமையும் உங்க ளுக்கு ஏற்றநல் வழியைக் காட்ட உரியன சொல்ல வந்தேன் எனதிறை பணித்தான் அ.தே அருகனின் பணிப்புக் கேற்ப அவ்வழி உதவு வோர்கள் இருப்பரோ ஈங்கு என்றால் இயம்புக எனவி பூழித்தார். 346
ஒருவரின் முகத்தை மற்ற ஒருவர்கண் நோக்க மாறி இருவரும் தமக்கு முன்னே இருப்பவர் தம்மை நோக்க எரிகின்ற தீயில் வாரி எண்ணெய்யை வார்த்தாற் போன்றே கருகினால் மனத்தால் கேள்வி கணையெனத் தைத்த தாலே 347
சினங்கொண்டார் அனைத்துப் பேரும் சொலவார்த்தை யற்றுப் போனார் மனங்கொண்ட வெறுப்பைத் தானும் வாயுரை மொழிந்தா ரில்லை இனங்காண மாட்டா தாங்கே இணைந்தது அமைதி யாரோ கணிரென குரல்கொடுக்க கண்களாங் குறைய லாய்ச்சே, 348
இறைவனின் தூதே நீங்கள் எவருக்கும் அஞ்ச வேண்டாம் அறைகூவு கின்றேன் இன்றே ஆரெவ ராகி லென்ன மறைவழி செல்லுவோர்க்கு முரண்பட்டு வருவா ராயின் உறையாது என்வாள் சென்னி உருட்டிச் செய்வேன் என்றே 349
67 ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 48
திருரவி காவியே
நோக்கிய புறத்தி லாங்கே நின்றனர் அலியென் நம்பி வாக்கினில் தொனிக்கும் வீரம் விழிகளில் கனலாய்ப் பாயும் தேக்கினார் வதனம் மீது சுந்தர நகைப்பை நாதர் வாக்குரை செய்த பேரை வாஞ்சையோ டனைத்திட் டாரே 350
வேரறுந் திறந்த நாட்கள் வாரங்கள் சிலவாய் மாற ஊரினை அழைத்தார் கூவி ஒருவரோர் நாளின் போதே வாருங்கள் வாருங் கள்ளோர் விபரத்தைச் சொல்ல வென்றார் ஊரொன்றி "ஸ்பா'குன் றின்கண் ஒன்றினர் நபியைக் கண்டார். 351
குறைவழிகள் ஒன்றுகூடக் கூட்டிய நபிகள் கோமான் அறையுவீர் நானென் றும்பொய் உரைத்ததைக் கேட்ட துண்டா இறைநபி வார்த்தை கேட்டோர் இல்லையென் றியம்பி னார்கள் பறையறைந் தொலியெ முப்பும் பாங்கினில் இருந்த த.தே. 352
மறைந்தொரு படையு மிந்த மலையினுக் கப்பால் எம்மை குறிவைத்து நிற்ப தாகக் கூறிடில் நம்பு வீரோ அறிந்திட வுரைப்பீ ரென்றே அடுத்தொரு வினாத்தொ டுத்தார் உறுதியாய் நம்பு வோம்நாம் என்றுரை பகர்ந்திட் டாரே 353
ஏகநா யகனாம் அல்லாஹற் என்றொப்பிச் சிலைவ ணக்கம் ஆகாதென் றொழிக்கா விட்டால் அன்னவன் வேத னைக்குள் ஏகுவீர் என்று நானின் றெச்சரிக் கைசெய் கின்றேன் நோகாதார் பிறருள் ளத்தை நவின்றிடச் சினத்திட் டாரே 354
மாலைச்செவ் வானம் போன்றே மாறிய விழியும் நெஞ்சுள் வேலைக்கூர் பார்த்த பாங்கும் வெந்தணல் காய்ந்த எ.கின் கோலைத்தம் செவிக்குட்புக்கிக் குடையுமா றப்போழ் தாங்கே ஆலமுண் டோரு மானார் அண்ணலார் சொல்லி னாலே 355
அண்ணலார் பெரிய தந்தை ஆனவன் 'அபூல ஹப்’ நாப் பண்ணுறு வார்த்தை கொண்டு பொழிந்தனன் நபியை நோக்கி மண்ணள்ளி இறைத்தான் பூமான் முகந்தன்னில் பாவி யானோன் கண்கொண்டு காண வொண்ணாக் காட்சியால் தூதர் நொந்தார். 356
68 ஜின்னாஹ் விழரித்தீன்

திருநபி காவியம்
பகிரங்க மாக மார்க்கப் போதனை தொடங்கிற் றன்றே அகங்களில் குறைவழி யானோர் அவிந்தனர் வளர்ச்சி கண்டே தகுந்தவோர் பாடம் முன்னர் செய்யாத பழியை எண்ணி வெகுண்டனர் தம்மைத் தாமே வைதனர் வழியுந் தோணார் 357
முளையிலே கிள்ளா துற்ற மடைமையால் வேரும் ஊன்றி கிளைவிட்டு நிழலுங் காட்டக் காரணம் நாம்தாம் என்றே அழலிடைப் பட்ட பாங்காய் அங்கலாய்ப் புற்றார் யார்மேற் பழிதனைப் போடு வாரோ பவத்திடைப் பட்ட பேராம். 358
குொடர்ந்து வரும் துன்பங்கள்
வழிநடந் திடுங்காற் பின்னால் வழிபற்றிப் பரிக சித்தே இழிந்தபேர் என்பார் பித்தள் என்றும்வாய் மொழிவார் பொய்யாய்ப் பழிகூறி நகைப்பார் மாயப் பாதகள் சூன்யக் காரர் வழிகேட்டின் பக்க லெம்மை வரச்சொல்லும் வீணர் என்பார் 359
பற்பல இழிசொற் சேர்த்தே பேசுவார் சிறுவர் கூட்டிக் கற்களால் அடிக்க வைப்பார் கூட்டிய குப்பை கூழம் பொற்றிரு மேனி தன்னில் போடுவார் போகும் பாதை கற்களை முள்ளைச் சேர்த்தே கால்கள் புண்ணாகச் செய்வார்கள் 360
குறைவழிகள் கொடுமை கண்டு கொதித்தபூ தாலிப் அந்தக் குறைவழிகள் செவிபொ சுங்கக் கூறுவார் "இனியா ரேனும் உறுத்துவ ராயின் முஹம்மத் உடலுக்குத் தீங்கு நேரின் பொறுத்திடோம் குடும்பம் ஒன்றிப் பாதுகாத் திடுவோம்’ என்றே 361
சிலகாலம் தீங்கு செய்தல் தொடராத போதும் மீண்டும் சிலைவழி பாடு செய்வோர் தொல்லைகள் தொடங்கிற் றன்றோ கலையாத உறுதி வைரக் கொள்கையும் கொண்ட நாதர் இலையஞ்ச மறைவாய் மார்க்கம் எடுத்துரை செய்ய லானார். 362
69 ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 49
திருநபி காவியம்
தம்பியின் மகன்செய் கின்ற செயலினைத் தடைசெய் யாது அன்புளம் காட்டு கின்ற அபூதாலிப் மீது உள்ளம் வெம்பினர் குறைவழி மாந்தர் வியப்புற்றார் செய்கை கண்டே
தெம்பிலார் வெறுத்தொ துக்கத் தக்கதோர் வழியைத் தேர்ந்தார் 363
தேர்ந்தவவ் வழியாம் கூடித் தூதொன்றை அபூதா லிப்பால் சேர்ந்திடச் செய்தல் ஒன்றே துணைசெய்யும் எனவும் உன்னி போந்தனர் அவரைக் கண்டார் பழியெடுத் தோதி னார்கள் ஒர்ந்தனர் இல்லை அ.தோர் உதவாத முடிவா மென்றே
அறிவீர்நீர் அபூதா லிப்பே அடிவழி நாங்கள் செய்யும் முறைமையாம் சிலைவ ணக்கம் மடித்துன்றன் தம்பி மைந்தர் முறைகெட மக்கள் தம்மை மாற்றொரு வழிக்குத் தூண்டும் அறிவற்ற செயலை நீரேன் அடக்கிடா துள்ளிர் என்றார்
முட்டாள்கள் என்று நம்மை முனிவதும் நமது முன்னோர் முட்டாள்கள் என்றும் தாமே மதிமிகு அறிஞ ரென்றும் திட்டமாய்ச் சிலைகள் எல்லாம் செயலாற்ற கற்கள் என்றும் கொட்டிடும் வார்த்தை கேட்டுக் கோபமேன் கொள்ளா துற்றீர்.
ஒதுவீர் அவர்க்கு அந்த ஒவ்வாத வழிவி டுக்கும் கோதறு செயலைச் செய்ய குறைவழிகள் தம்மைக் காப்பீர் தூதுசென் றோர்க ளொன்றி செய்தவப் பழிகள் கேட்டுச் சாதுவாய்ப் பதிலொன் றோதித் திருப்பினர் அபூதா லிப்பே
அறிந்தனர் நபிகள் அந்த அறிவினர் பெரிய தந்தை புறஞ்சென்றார் என்னுஞ்சேதி பலனற்றுப் போன தெல்லாம் எறிந்தகல் நீரின் ஆழம் ஏகுத லொப்ப ஞானம் செறிந்தது மக்கள் நெஞ்சில் செயல்வலுப் பெற்ற தன்றோ.
எப்படி முயன்றும் வெற்றி இலாதொழிந்(து) இஸ்லாம் மக்கள் ஒப்பிடு வாறு முஹம்மத் உரைப்பது கண்டு நொந்தார் ஒப்பினார் மீண்டும் ஒர்கால் உரைசெய அபூதா லிப்பைக் கப்பிய துயர்க்கு மாற்றுக் கொண்டிட குறைவழி மாந்தர்.
364
365
366
367
368
369
70 ஜின்னாஹ் வழfபுத்தீன்

திருநபி காவியம்
அழகிலும் அழகு மிக்க அழகிய இளைஞ ரோடே வழிசென்றார் அபூதா லிப்பின் வீடடைந் தவரை நோக்கி அழகராம் இவரை உங்கள் அன்புடைச் செல்வ ராக வழங்குவோம் முஹம்ம தைநீர் வழங்குவீ ரெனவி ரந்தார் 370
பிள்ளைக்குப் பிள்ளையாகப் பெறுகவில் விளைஞ ரைஉம் பிள்ளையை எம்வ சத்தில் பொறுப்பேற்கச் செய்வீர் உன்றன் பிள்ளையைத் திருத்த நீரும் பொருந்தவே இல்லை அந்தப் பிள்ளையும் திருந்த எங்கள் பங்கினைச் செய்வோ மென்றார் 371
செந்தணல் அள்ளித் தம்மின் செவிகளுட் கொட்டி னாற்போல் வெந்திடச் செய்த தாமவ் வார்த்தைகள் அபூதா லிப்பின் சொந்தமும் இழந்தார் கோபச் சுடர்விழி வழியு மிழ்ந்தார் தந்திரம் இ.தென் றெண்ணித் தெறித்தன சொற்கள் மாதோ, 372
என்னநீர் நினைந்தீர் இந்த இளைஞன்யார் யார்க்கென் சொந்தம் என்னரும் பிள்ளைக் கெங்கே ஈடிவன் ஏன்நான் என்றன் பொன்னையும் பொருளையும் ஏன் பிறர்பிள்ளைக் காக ஈவேன் முன்னிலை நில்லா தீர்என் முகமன்நீர் வராதீர் என்றார் 373
கானகத் திட்ட தீநா கொழுந்துவிட் டெரிமால் இஸ்லாம் ஆனவெண் திக்கும் மேவி ஆழநெஞ் சகங்கள் தோறும் ஞானவேர் பாய்ச்சி யூன்ற நேர்வழி கண்டார் மாந்தள் தீனெனும் ஒளியின் வேகம் சொல்லுதற் கரிதா மம்மா 374
இறுதியாய் மீண்டும் ஒர்நாள் ஏகினார் அபூதா லிப்பின் அறுதிச்சொல் அறிய வென்றே அபூசுப்யான் தலைமை ஏற்றார் உறுதியாய் இன்று ஒர்நல் லிணக்கத்துக் குளாதல் அன்றி வெறுமையாய் வருவ தில்லை வரித்தனர் வைரம் நெஞ்சே, 375
கூறுவார் அபூசுப் யானும் கொண்டதம் கருத்தைத் தாலிப் ப்ொறுமையாய்ச் செவிமடுத்தார் பகைவளர் நிலைமை கண்டார் மரியாதைக் குரியீர் உங்கள் மகத்துவம் அறிவோம் நாங்கள் உரியநல் கெளர வத்தை உங்களுக் களித்தோம் என்றே. 376 71 ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 50
திருரவி கரனியம்
இதுவரை கால மும்நாம் ஏற்றனம் பொறுமை நாங்கள் எதுவரை பொறுமை கொள்வோம் எல்லையொன் றுண்டா மன்றோ முதியவர் நீங்கள் முன்னர் மதித்துவந் துதவி கேட்டும் எதுவித நலனு மற்றோம் எனக்கூறி இன்னுஞ் சொல்வார் 377
வழிபடும் எங்கள் தெய்வ விக்கிர கங்கள் மீது பழித்துரை செய்வ தெம்மைப் புண்ணுறச் செய்வ தாலே விழித்தனம் உமைநாம் ஒன்று வீண்செயல் நிறுத்தும் அன்றேல் அழித்திடும் உறவை ஒரம் அடங்குவீர் எனவுஞ் சொல்வார். 378
வாக்கினால் வாராத் தீர்வு வாளினாற் பெறலாம் உங்கள் போக்கினிற் போவ தாயின் போரொன்றே தீர்வு காட்டும் நோக்கம.". தாம தாயின் துணியுங்கள் முடிவு மட்டும் பார்க்கலாம் ஒருகை என்றார் புறப்பட்டார் விடைநோக் காதே 379
இருகரந் தீநாக் கொண்ட எ.கிடை நிற்பார் போன்றே இருந்தனர் அபூதா லிப்பும் என்செய்வ தறியா துற்றார் பொருந்தினால் முஹம்மத் பக்கம் பேரிடர் சூழும் அன்றிப் பொருந்தினால் எதிர்த்த ரப்பில் பிள்ளையைப் பிரிதல் வேண்டும்.380
இறுதியாய் முடிவொன் றுக்குள் இணங்கிய தன்னார் உள்ளம் மறுநொடி அழைப்பை ஏற்று முஹம்மதர் வந்து நின்றார் குறைஷியர் முடிவைக் கூறிக் கண்கணிர் பொழியச் சொல்வர் நிறைவுசெய் இனியும் போக்கை நம்குலங் காக்க வென்றே. 381
நிலம்பிழந் துடலம் மண்ணுள் நுழைந்தவா றிருந்த தேமெய் பலமற்றுச் சோர்ந்து வீழும் படியான தேபு லன்கள் சிலநொடி அடங்கி மீழப் பதிலுரை தேரா தோராய் நிலமருள் பெறவென் றுற்ற நபிகளார் சிலைபோ லானார் 382
ஆதர வளித்துத் தம்மை அரவணைத் திருந்த தந்தை ஆதர வினிஇல் என்றே அகம்நொந்த போதும் வல்லோன் ஆதர வொன்றி ருக்கும் அருளெண்ணித் துணிந்தார் மட்டும் ஆதர வளித்துக் காத்தோன் அவனென்ற கருத்தி னாலே. 383
72 ஜின்னாஹ் வழfபுத்தீன்
 

திருநபி காவியம்
கையொன்றில் பரிதி மற்றக் கையில்வெண் மதியைத் தந்து செய்யாதீர் எனச்சொன் னாலும் தவிர்த்திடேன் பிரசா ரத்தை மெய்யதாய் வருத்த முற்றேன் மாற்றுரை பகர்தற் கென்றே செய்வது அதுவா மன்றி செயலொன்றும் இலையாம் என்றார் 384
கட்டினர் இருபேர் நெஞ்சுங் கலந்தன இருத யங்கள் கிட்டநின் றொன்றோ டொன்று கூறின சோப னங்கள் விட்டகன் றிடநான் மாட்டேன் வாழிநீ தொடர்வாய் என்றே கட்டிய கரங்கள் நீக்கார் கூறுவார் அபூதா லிப்பே. 385
தந்தையின் ஆசியோடே தொடர்ந்தது பிரச்சா ரங்கள் விந்தைகொள் வாறு மார்க்கம் விரிவுகண் டதுகண் டோர்கள் சிந்தைகள் கலங்கிற் றென்ன செய்வதாம் என்றே எண்ணிச் சந்ததம் வேறு வேறாய்த் திட்டங்கள் வகுத்திட் டாரே. 386
இறைவனின் மீதும் வல்ல இறைவனின் தூதர் மீதும் சிறிதும்நம் பிக்கை யற்றோர் தொடரும்இந் நிலைமைக் கென்ன உறும்பொருள் உலக ஆசை ஒன்றன்றி வேறொன் றில்லை வறுமையின் கோட்டில் வாழும் முஹம்மதர்க் கெனநி னைந்தார் 387
காரணம் ஏதென் றாய்ந்து கொண்டது போக்கின் முற்றுந்
ஊரவர் ஒன்றுகூடி “உத்பா'வைத் தூத னுப்பி தேரவர் வேண்ட லென்ன தெரிந்துவாக் களியும் என்றார். 388
தூதராய் நபியி டத்துச் சென்ற“உத் பாஇ றைவன் தூதரின் முகதா சென்று தனித்தவர் தம்மி டத்தே ஏதுதான் கார ணம்நீர் எடுத்தவை முற்றும் எம்முன் ஒதுவீ ராயின் செய்வோம் இயம்புக எனவு ரைத்தார் 389
உயர்குடிப் பிறந்த வர்நீர் உயர்குலத் துதித்த பேராம் நயப்பது பொருளென் றாகில் நவிலுக ஓரி ராவுள் வியத்தகு வாறு வும்மின் வறுமையைப் போக்கிச் செல்வம் துய்த்திடச் செய்வோம் கோடித் தொகையெனுந் தருவோ மென்றார் 390
73 ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 51
திருநபி ສraftມນີ້
ஆட்சியின் பொறுப்பை ஏற்று அரசராய் வாழ வேண்டின் கேட்டிடும் செய்வோம் நாட்டின் கோனெனக் கொள்வோம் அன்றி மேட்டிமை அழகு கொண்ட மாதரை இல்ல றத்தில் கூட்டிட வேண்டில் சொல்வீர் கொடுத்துமை மகிழச் செய்வோம். 391
பொன்னொடு பொருளும் ஆட்சிப் பொறுப்பொடு அழகு மிக்க
சொன்னவா றனைத்தும் உன்றன் தாளடி கொணர்வோம் நின்றம் சென்னியில் ஒளிர்வ தென்ன தோற்றுக செய்வோ மென்றார் 392
இத்தனை தந்தும் வேண்டா துளமுமக் கிருக்கு மாயின் பித்தரே நீரல் லாது பிறிதென்ன வுரைப்ப தற்காம் சத்தியம் அதுவென் றாயின் தேர்ந்தவோர் மருத்து வத்தால் பித்தத்தைத் தீர்ப்போம் நீரும் பிதற்றலை நிறுத்து மென்றார் 393
சொன்னவை அனைத்தும் எம்மான் செவிப்பறை ஓங்கித் தட்ட புன்னகை யோடு சொல்வார் பொன்பொருள் ஆட்சி மாதர் என்விருப் பன்று நானோர் இறைவனின் தூதர் வாழும் மன்பதை உய்யத் தூதை மொழிபவன் என்றுங் கூறி 394
என்வழி இறைவன் ஆணை ஏற்றுநீர் வழிந டந்தால் நன்மையிர்ஆஉலகப் பேறும் இரங்குவான் அன்றி நீங்கள் என்னைப்பொய் யுரைப்போர் என்று இழித்துரை பகர்வீ ராயின் அன்னவன் பொறுப்பிற் சாட்டி அமையுவேன் தீர்ப்புச் செய்வான் 395
இறைவனின் எழிலு ரைநான் இயம்புவேன் ஆன்மீ கச்சீர் பெறுவீர்க ளென்றே வல்லோன் புகன்றுளான் மொழி'அ ரப்பில்’ பெறுவீர்கள் நன்மை அ.தைப் பற்றிவாழ் வோர்க ளன்றிப் பெறுவீர்கள் தண்ட னைகள் பின்பற்றா திருப்பி னென்றார். 396
உத்பாவின் வருகைக் காக ஊர்கூடிக் காத்தி ருந்தார் நத்திய தென்ன முஹம்மத் நீருரை செய்வீ ரென்ன சத்தியம் அவர்சொல் லொன்றுஞ் சூனியத் தில்லை செப்பின் வித்தையும் இல்லை என்சொல் விபரத்தைக் கேள்மின் என்றார் 397 74 ஜின்னாஹ் ஷரித்தீன்
 

திருநபி காவியே
விட்டிடு வோம வர்தம் வாக்கினில் வெற்றி கண்டால் திட்டமாய் அவர்க்கல் லாதித் தேசமும் சீர்மை கொள்ளும் பட்டிடில் தோல்வி இந்தப் பாரழிந் திடுமே நாங்கள் திட்டமிட் டேதுஞ் செய்யா திருப்பதே நன்றா மென்றார் 398
உத்பாவின் தூது தோல்வி உற்றதால் சினங்கொண் டோர்கள் சத்தியத் தூதர் தம்மின் தேகத்திற் கூறு செய்ய மெத்தவும் முயன்றிட் டார்கள் முன்நின்றான் அபூல ஹப்பே ஒத்துட்ன் மனைவி சேர்ந்தாள் “உம்முஜ மீ”லென் பாவி. 399
வரும்வழி முட்கள் தம்மை வாரியே இறைத்து வைப்பாள் திருநபி பதங்கள் முன்னால் தீண்டுண வருந்து வார்கள் கருணையே இல்லா வன்னாள் கொடுமையால் உளமும் நோகும் வரும்பிறர் தம்மைக் காக்கும் வழிசெய்வார் நபிக ளாரே. 400
கணவனோ டவளுஞ் சேர்ந்து கூறொனாத் துன்பஞ் செய்ய வணங்கிடத் தக்கோன் கோப வழிப்பட்டான் ஜிப்ரீல் மூலம் இணங்கொணா இன்னல் செய்யும் இருவர்க்கும் அழிந்து போக இணங்கினான் வேத வாக்கு இறக்கிடச் சாப மிட்டே. 401
அழியட்டும் அபூலஹப்பின் இருகரங்கள் அவனுமே அழியட்டும் அவனுடைய பொருளும் அவன் சேகரித்து வைத்திருப்பவைகளும் அவனுக்கு யாதுமொரு பயனுமளரிக்கா அதிசீக்கிரத்தில்
S)|6).1601 கொழுந்துவிட்டெரியும் நெருப்பை அடைவான் விறகு சுமக்கும்
75 Sß66IIIOB 6Pflä5ö6)

Page 52
திருரவி காவியே
அவனுடைய மனைவியோ அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய
ஈசங்கயிறுதான் அதனால் சுருக்கிடப்பட்டு அவளும் அழிவாள். (11 1:1-5)
(வேறு)
'அழியட்டும் அபூலஹப்பின் கரமி ரண்டும்
அவன்கூட அழியட்டும் அவன்கொள் செல்வம் முழுதுமவன் சேகரித்து வைத்த வைகள்
முற்றுமெந்தப் பயனுந்தர மாட்டா அன்னான் கொழுந்துவிட்டு எரிகின்ற நெருப்பைச் சேர்வான்
கூடுகெதி தனில் விறகு சுமக்கும் பெண்ணாள் கழுத்தினிலே முறுக்கேற்றப் பட்ட ஈச்சங்
கயிறேதான்’ எனவாகும் வேத வாக்கே. 402
(வேறு)
திருவச னங்கள் வந்த சேதியைக் கேட்ட தாலே பெருசினஞ் சதிப திக்குட் தோன்றிடத் திட்ட மிட்டார் திருநபி மக்கள் தம்மைத் திருமணஞ் செய்தி ருந்த இருமக்கள் தமையும் பந்தம் ஒடித்திடப் பணிப்ப தென்றே 403
உத்பாவை றுகையா ஏற்க உதைபாவை உம்மு குல்தூம் ஒத்துவாழ் வியற்றி னார்கள் உட்பகை தோன்றப் பெற்றோர் சித்தமுங் கொண்டார் அன்னார் திருமணப் பந்தம் போக்க ஒத்தனர் மக்கள் பெண்கள் உடன்விட்டுப் போமென் றாரே 404
பந்தத்தைப் பிரித்திட் டாலும் பாசத்தின் சுனையாம் தந்தை பந்தத்துள் ஒன்றா னார்கள் பெண்மக்கள் பின்மற் றோரின் சொந்தமாய் இறைவ னாகச் செய்தனன் தீர்ப்புச் செய்வோன் விந்தையில் அபூல ஹப்போல் வீணர்கள் செய்கை யம்மா. 405
76 ஜின்னாஹ் விழரித்தீன்

திருநபி காவியம்
தினந்தினம் நபிகள் க.பா சென்றுநல் வணக்கஞ் செய்யும் மனத்தினைக் கொண்டி ருந்தார் மாற்றார்மேல் அச்ச மற்றே தினமொரு தீங்கைச் செய்வார் சுற்றியாங் கொன்று கூடும் சனத்திரள் நகைக்கக் கண்டே திருப்தியில் திளைத்திட் டாரே 406
ஒட்டகைக் குடலை அள்ளி உத்தமர் கழுத்தின் மீது கொட்டுவர் தொழுகைக் கென்று குனிந்திடும் போழ்து அந்தக் கெட்டவர் செய்கை தம்மைக் கோன்வழித் தூதர் ஒன்றும் சட்டைசெய் திட்டா ரில்லை தினம்க.பா வருகை செய்வார். 407
துணியொன்றை எடுத்து எம்மான் தொண்டையைச் சுற்றிக் கோபம் தணியுமென் மட்டில் ஒர்நாள் திருகினான் ஒருவன் மற்றோர் அணிதிரண் டாங்கு நின்று ஆனந்தக் கூச்சலி ட்டார் துணிந்தொரு நல்லார் சென்றார் தூயநந் நபியைக் காத்தார். 408
ஏகனின் தூத ருக்கும் இறைவழி பற்றி னோர்க்கும் தேகவன் முறைகள் செய்தார் தொடர்ந்துமே செய்தும் நன்மை ஆகிய தொன்றும் இல்லை அன்னவர் ஈமான் கொண்டோர் - சாகவுந் துணிந்தார் நெஞ்சத் துணிவுற்றார் திடங்கொண் டாரே. 409
வெங்கான மண்ணில் தூக்கி வீசுவர் வெற்றுத் தோலில் பொங்கிடும் கொப்பு ளங்கள் பாவிகள் விடவும் மாட்டார் அங்கையில் முதுகில் தீயில் அவித்தெடுத் திட்ட கோலை தங்கவைத் திழுப்பர் அ.து தசையொடு மீழு மன்றோ 410
அடிமையென் றாகில் செய்யும் அட்டூழி யங்கள் கொள்ளை அடிப்பள்கை ஒயு மட்டும் அவர்படுந் துன்பங் கண்டே குடித்தாடி மகிழ்வர் ஒன்றிக் குற்றுயி ராகு மட்டும் அடிப்பார்கள் அவர்கள் செய்கை அம்மம்ம கொடிதா மன்றோ 411
கட்டினார் கால்க ளையீர் கயிறுகள் கொண்டி ரண்டு ஒட்டகை யோடு வேறாய் ஒன்றிடப் பிணைத்துப் பின்னர் தட்டியே விட்டார் வேறு திக்கிரண் டவைகள் ஒட பட்டது உடலிர் கூறாய்ப் பாவிகள் செய்கை அந்தோ 412
77 ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 53
திருநபி காவியம்
உடைகளைக் கழைந்து எ.கின் உடையணி வித்தே தீயாய்ச் சுடுவெங் கானத் தோடச் செய்குவர் துவண்டு வீழ்வார் அடிமையாய் இறைவ னுக்கு ஆனபேர் தமக்கா மிந்தக் கொடுமைகள் என்ன செய்தும் குறிதவ றிற்றோ ரானார். 413
தணலினில் படுக்க வைத்துத் தன்காலை நெஞ்சில் ஊன்றி திணறியே தவிக்கப் பார்த்துத் திருப்திகொண் டொருவன் நின்றான் கணமெனுந் துஞ்சா ரில்லைக் காபீர்கள் இஸ்லாம் தீபம் அணைந்திட வேண்டு மென்ற அழிவுறுந் தாகத் தாலே. 414
கழுத்தினிற் கயிற்றைக் கட்டிக் கூடிய தெருச்சி றாரை இழுத்திடச் செய்தார் கண்டத் திருந்துசெந் நீராய்ச் சிந்தும் அழுத்திடுங் கயிற்றால் மூச்சு அடங்குமால் திணறும் போதும் பழிக்கஞ்சாப் பாவி யர்கள் "பிலாலினை விட்டா ரில்லை. 415
என்னதான் செய்த போதும் ஈமானில் உறுதி கொண்டோர் துன்பங்கள் அனைத்துந் தாங்கித் தனித்தவன் அல்லாஹற் என்றே சொன்னனர் சிலைக ளெல்லாம் சிலைகளே என்றுஞ் சொல்வார் இன்னல்கள் தொடர்ந்திட் டாலும் இஸ்லாமும் வளர்ந்திட் டன்றோ. 416
குற்காப்புத் குேடி
கொடுமைகள் உச்ச மெய்தக் கவல்மிகுந் தண்ண லாரை அடிதொடர்ந் தேகு வோர்கள் அண்டினர் அவர்கள் கொண்ட கொடுமைகள் அனைத்துங் கூறிக் கண்கணிர் பொழியச் சொல்வார் விடையொன்று தருக நாங்கள் வருமிடர் காக்க வென்றே. 417
பெற்றவர் உற்றார் சுற்றம் பிள்ளைகள் இனச னத்தை முற்றுமே பிரிந்து இஸ்லாம் மார்க்கத்தில் நுழைந்த தாலே அற்பர்கள் செய்யு கின்ற அனைத்தையும் பொறுப்போம் எம்மின் தற்பாது காப்புக் கேனும் தருகவோர் விடைதான் என்றார். 418
78 - ஜின்னாஹ் ஷரித்தீன்
 

திருநபி காவியம்
பொறுத்திருப் பீர்கள் ஆணை பெறும்வரை என்றார் அண்ணல் இறையாணை வந்த தன்றே "இன்னல்கள் பொறுத்து நீங்கள் உறுதியோ டிருங்கள் முன்வந் திருந்தவெந் தூதர் போன்றே” இறையாணை நபிகள் வாயால் இயம்பிடப் பதிலா கிற்றே. 419
பிறந்தவிம் மண்ணை விட்டுப் பிறநக ரெங்கென் றாலும் இறத்தலைத் தவிர்க்க நாங்கள் ஏகிட லாமோ வென்ன மறுத்திலார் நபிகள் நாதர் மொழிந்தனர் அபிஸி னிய்யா பொருத்தமாம் என்றுஞ் சொன்னார் புறப்பட விடையுந் தந்தார் 42
பதினைந்து பேர்கள் கொண்டோர் போய்ச்சேர்ந்தார் அபிஸி னிய்யா சதிகாரர் அறிந்தார் இ..தை தொடர்ந்தனர் முதலில் ஆங்கே மதபோத கர்தம் மோரை மண்டியிட் டுரைப்பா ரிங்கே சதிகாரக் கும்ப லொன்று சேர்ந்துளார் மக்கா விட்டே 421
வேண்டிய பரிசில் தந்து வேண்டுவார் நாளை நாங்கள் தோன்றுவோம் மன்னர் முன்னே சொல்லவென் போழ்து நீங்கள் ஊன்றுவீர் உம்சொல் மன்னர் உளத்தின் பதியும் பாங்காய் சான்றுநீர் என்றால் மன்னர் சத்தியம் எனக்கொள் வாரே 422
மன்னரின் மன்றில் முன்னே மற்றைநாள் குறைவழி யர்கள் சொன்னனர் போத கர்க்குச் சொன்னபொய் போலு மன்னார் என்னாணை கொணர்க வென்றார் ஏற்பவர் ஏற்றுச் செய்தார் முன்னிலை வந்தார் முஸ்லிம் மதம்புகுந் தேற்றம் பெற்றோர். 423
கூறுவார் எங்கள் தெய்வக் கோட்பாடும் நீங்கள் பற்றும் கிறிஸ்த்தவம் இரண்டும் பொய்யாம் கொண்டுளார் புதிய மார்க்கம் ஊறுவந் தெய்தும் என்றே ஊர்நின்றுந் துரத்தி விட்டோம் வேறொரு வழியும் அற்றோர் வந்துளார் ஈங்கா மென்றார் 424
என்னவீங் குரைப்ப தெங்கள் இறைவழி பாட்டை யுங்கள் முன்னவர் வணக்க மெல்லாம் முற்றும்பொய் யென்றீ ராமோ தன்னையோர் நபியென் றோதித் தோன்றினோர் புதுமார்க் கத்தை பின்கொளல் வேண்டு மென்றும் புகன்றிரோ எனவி பூழித்தார் 425 79 ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 54
திருநபி ssrsíulö
நாடாளும் பதியாம் மன்னர் "நஜ்ஜாஷி” வினாவிற் கேற்ப நாடினார் பதிலுஞ் சொல்ல நபிநம்பி 'ஜாபீர்’ வந்தார் நாடாளும் பதியே நாங்கள் நேர்வழி கொண்டோம் முஹம்மத் நாடிய வழியாம் வல்லோன் நலம்பெறு வழியு மென்றார் 426
சீரற்ற வாழ்வு வாழ்ந்தோம் சிலைகளைத் தெய்வ மென்றே ஓராது நம்பி னோம்நாம் ஒருவனே இறைவ னென்றும் பார்பிற படைத்துக் காக்கும் பண்ணவன் அவனே என்றும் தேர்ந்திட வைத்தார் முஹம்மத் தமைப்பற்றி வாழ்கின் றோம்நாம் 427
பாதகம் ஐந்தும் எங்கள் பழக்கத்தில் இருந்த தன்னாள் திதவை என்று நாங்கள் தெரிகிலா தொழுகி னோம்எம் மீதுற்ற பாசத் தாலே முதலவன் அவரைத் தம்மின் தூதராய் அனுப்பி வைத்தான் திருத்திநாம் வாழச் செய்தான் 428
நேர்வழி பற்றும் எம்மை நோவினை செய்வ தாலே ஓர்கண மேனும் நாங்கள் உடனவ ரோடு வாழ ஏராத கார ணத்தால் இங்குற்றோம் உங்கள் ஆட்சிச் சீர்மையில் நபியே எம்மைச் செலப்பணித் திட்டா ரென்றார் 429
சொன்மொழி கேட்ட மன்னர் சொல்லுவார் உங்கள் வேதம் என்னவென் றறிய வுண்டா எடுத்ததை ஒதும் என்றார் கன்னலின் இனிய பாங்காய் குர்ஆனை ஜப்பார் ஒத தன்னையே மறந்தார் மன்னர் தெவிட்டாநல் அமுதம் என்றே 430
எங்களின் “பைபிள்” போன்றே இம்மறை இருப்ப தாலே சங்கைகொள் ஒளிப்பி ளம்பின் கூறிரண் டிவைக ளாகும் பொங்கிடும் உவகையாலே பூரித்துப் போனார் மன்னர் தங்குக இங்கு எந்தத் தடையுமில் லுமக்கா மென்றார் 431 எண்ணத்தில் தோல்வி யுற்றோர் இதயத்துள் நஜ்ஜாஸ் மன்னர் எண்ணத்தை மாற்ற வேறோர் ஏற்புடைக் கார ணத்தை எண்ணினார் மறுநாட்காலை ஏகினர் அரச வைக்கு கண்ணியமிக்க வேந்தே கேளுங்கள் எனப் பணிந்தார் 432
8O ஜின்னாஹ் ஷரித்தீன்

திருநபி காவியே
கிறிஸ்த்துவின் தெய்வத் தன்மை கண்கொளார் இவரி ருந்தால் கிறிஸ்த்தவம் தமக்குப் பங்கம் கூடிடும் என்றோர் பொய்யைக் குறித்தனர் முறைப்பா டாகக் காதினில் வாங்கி மன்னர் புறத்தொரு ஆணை தோன்றப் பிறந்தனர் ஈமான் கொண்டோர் 433
யேசுவை இறைவன் செல்வர் என்பதை மறுத்து ரைத்தால் நாசமே நஜ்ஜாஸ் ஏற்கார் நடப்பது நலமென் றாகா யோசனைக் குள்ளா னார்கள் ஏதுசெய் திடுவ தென்றே தூசென மதித்துச் செல்லும் துணிவினைக் கொண்டிட் டாரே. 434
மீண்டுமோர் அழைப்பை ஏற்று வந்தவர் தம்மை நோக்கி பூண்டதென் எண்ணம் யேசு புறத்துமக் கெனவி பூழிக்க ஆண்டவன் தூதர் என்றும் அவனடி யார்தாம் என்றும் சான்றுரை இறுதித் தூதர் செய்துளார் எனப்பு கன்றார் 435
பதிலுரை கேட்டு மன்னர் பெருஞ்சினங் கொள்வார் என்றே அதிபயங் கொண்டு வந்தோர் அதிசயங் கொள்ளு மாறு இதமான புன்னகையை இதழ்களில் பொருத்தி மன்னர் புதிதாக இலைநீள் சொன்ன பதிலுக்கு மாறாய் என்றார் 436
நடந்ததிவ் வாறிருக்க நஜ்ஜாஸி மன்னர் பின்னர் தொடர்ந்துமே ஜாப ரின்பால் சென்றிஸ்லாம் தமைய ஹிந்தே உடன்பட்டு உரைப்பார் ஒர்நாள் உறுமெனில் காலம் கோமான் அடிபணிந் துழைப்பேன் என்றார் அடிமனத் துதித்த சொல்லாம். 437
பின்னவர் இஸ்லாத் தின்பாற் புகுந்துநந் நபியைக் காண சென்றனர் கடலில் மூழ்கித் தமதுயிர் நீத்தார் சேதி முன்னவன் தூதாய் எம்மான் மன்றிலில் அறியப் பெற்று கண்ணியஞ் செய்யப் பட்டார் கூடிய தொழுகை யாலே 438
81 566). TOIB op fib55

Page 55
திருநபி காவியம்
உமரின் புனர்வாழ்வு
இருவரில் ஒருவ ரையென் இட்டத்துக் கருள்வா யென்றே உருகியே இறைபால் கைகள் உயர்த்தியே நபியி ரந்தார் ஒருவராம் உமர்மற் றொன்று உவந்தது அபூஜ ஹிலே தருவையேல் இஸ்லாம் இந்தத் தரணியிற் பூக்கச் செய்வேன். 439
எதிர்ப்பதில் பலமாம் அந்த இருவரும் எவருக் கந்த விதிவரும் எனவ றிந்தோன் வல்லவன் அவனே யாகும் பதிலெவ ரானார் கேட்ட பிராத்தனை தனக்கு என்றே உதிர்ந்ததோர் விடைய தற்கு உடன்மறு நாள தாமே 440
செங்கதிர் பிளந்தி ரண்டு துண்டங்க ளாகிப் பொல்லா வெங்கரம் பாய்ச்ச லொப்பும் வாறாகிக் கண்கள் மின்னப் பொங்குவெஞ் சினத்தால் ஊறிப் போனவன் பாங்கில் நின்றான் துங்கநந் நபிமேற் கொண்ட சினத்தினால் அபூஜ ஹிலே. 441
சுற்றியே குறைவழிக் கூட்டம் கூடியே இருக்கும் வேளை சொற்சரம் எறிந்தான் உள்ளோர் துடிதுடித் துணர்ச்சி பெற்றார் முற்றும்நாம் சொரணை யற்ற மனிதர்க ளாகிப் போனோம் பொற்புறுங் காலந் தன்னைப் பாழாக்கு கின்றோம் என்றான் 442
ஆண்களென் றிங்கு யாரும் இல்லையோ நம்மைச் சுற்றித் தோன்றிடும் இருளைப் போக்கத் துணிவெமக் கில்லை யாமோ ஊன்றிடும் புதிய மார்க்கம் உடனழிக் காது போனால் ஈண்டுநாம் வாழ்வ தெம்மா இழிவென இன்னுஞ் சொல்வான் 443
பண்டைய முறைமை யெல்லாம் பின்பற்றா தெம்ம னோர்கள் கொண்டனர் முஹம்மத் மார்க்கக் கொள்கைபால் சரண டைந்தார் தெண்டித்தோ மில்லை நாங்கள் திருநபி யென்னும் பேரைக் கொன்றிடுந் துணிவு மற்றுக் காலத்தை நகர்த்து கின்றோம் 444
82 ஜின்னாஷ் லுரித்தீன்
 

திருநபி காவியம்
ஒன்றிரண் டென்று முன்னர் ஒன்றினார் இன்றோ பன்நூ றென்றவா றொன்று கின்றார் ஒர்ந்திடில் மக்கா முற்றும் தன்வய மாக்க வல்ல சூழ்ச்சியில் முஹம்மத் வெல்லும் முன்னரன் னாரை நாங்கள் முந்துதல் வேண்டு மென்றான் 445
கொடுமைகள் அனைத்துஞ் செய்தும் குறைந்ததோ இல்லை முஹம்மத் அடிதொடர் கூட்டம் விஞ்சும் அபாயத்தை அறிகி லீரோ விடைபெற உலக வாழ்வை வைத்தலால் அன்றி மற்றோர் விடையிலை இதற்காம் யார்முன் வருவாரோ உரைப்பீர் என்றான். 446
முஹம்மதின் தலைகொ ணர்ந்து மக்கமா நகரைக் காப்போர் அகம்நிறைந் திடநான் நூறு ஒட்டகைகள் பரிச விரிப்பேன் வெகுமதி பெறுதற் கென்னும் வாஞ்சையுற் றோரென் றாலும் தகுமிங்கு வருக என்சொல் தவறிடேன் வாக்கு ரைத்தான் 447
கொதித்தனன் எரிம லைபோல் குமுறினான் மண்ணிற் பாதம் மிதித்திலன் சினத்தால் காற்றில் மிதந்தனன் கூட்டத் தின்கண் பதித்தனன் ஒவ்வோர் பேராய்ப் பார்த்தனன் பதிலற் றோனாய்க் குத்தனன் கூவி னன்வாய் குளறினான் வெறிகொண் டோனே 448
இல்லையோ ஒருவ ரீங்கு ஏற்கவிப் பணியை என்றன் சொல்லெலாம் வீன தாமோ தோட்பல மற்ற பேரோ கொல்லுதற் கஞ்சின் ஏன்தான் கொண்டுளிர் வாள்வில் அம்பு சொல்லுக என்றான் வார்த்தை சுடுஞ்சரம் போலா மென்றோ 449
ஏனிலை நானிங் குள்ளேன் ஏற்கின்றேன் பணியை எம்முள் ஆனபே ரிழப்பை முற்றும் அகற்றுவேன் இனத்தைக் காப்பேன் மானமே பெரிதாம் என்று முன்வந்தார் ஒரி ளைஞர் தேனுகர் பாங்காய் வார்த்தை செவிகொளத் திணறி னானே. 450
பரந்தகன் றிருந்த மார்பும் பெருமலைக் குன்றத் தோளும் கரந்தனில் வாளும் நெஞ்சிற் கொண்டபோர் வெறியும் வீரம் பொருந்திய நடையும் கண்ணில் பொழிகின்ற சினமுங் கூட்டி தெரிந்தனன் இளைஞன் பார்த்துத் தேர்ந்தபேர் உமரென் றாரே 451
83 ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 56
திருநபி காவியம்
வீரராம் உமரின் தோற்றம் வருவினை முஹம்ம தர்க்கு பேரழி வாகு தற்காம் பிறிதிலை என்ற வாறே ஊரொடு அபூஜ ஹிலும் ஒன்றித்து மகிழ்வு கொண்டான் தேராரே இறைவன் நாட்டம் தனையவர் தோல்வி கண்டார் 452
தலையொடு வருவேன் முஹம்மத் தனையொழித் திடாது மீழேன் இலையொரு பணியெ னுக்கு இப்போதே விட்ட கன்றேன் கொலைவெறி விழியிற் பற்றக் குதிரையிற் குதித்த மர்ந்தார் சிலைகளென் றானார் மற்றோர் செலும்வழி விழிகள் மொய்க்க 453
சீறிடும் புயலின் சீற்றம் தோற்றிடும் மாரி காலக் காரிடை மின்னும் மின்னற் கோலமாம் நாண்வி டுத்தே சேரிடம் நோக்கிப் பாயும் சிலைதோற்கும் பாங்கு கண்டே தேரிலார் பரியின் வேகம் சென்றவர் உமர தாமே 454
ஆகாத செயலுக் கன்றி அத்தனை வேகங் கூட்டிப் போகாரவி விளைஞர் என்று புரிந்தவோர் நண்பர் கண்டே ஏகுமெஷ் விடமா மென்றே இடைமறித் தவரைக் கேட்க - வேகத்தைக் குறைத்தார் எல்லா விபரமுங் கூறினாரே. 455.
செவிமடுத் தவரின் செய்கை தவறென எடுத்து ரைக்கத் தவித்தது மனது நண்பர் தாழ்மையாய் உமரை நோக்கி பவித்திர மாக வார்த்தை பொழிந்திட உவந்தார் அன்றேல் அவிந்திடுங் கோபத் திற்கு ஆளாவோம் நாமென் றாமே 456
போகுமுன் ஒன்று கேண்மின் புலன்கொள்வீர் உமரே இன்று வேகமாய்ப் பரவும் இஸ்லாம் வழியுன்றன் உடன்பி றந்தாள் ஏகினாள் கணவ ரோடே அதைமுதற் தடுப்பீர் பின்னர் போகலாம் நபியைக் கொல்லப் புறப்படும் எனமொ ழிந்தார். 457
இடியொலி கேட்ட நாகம் என்றவா றுமறு மாகி கடிதினிற் பரியி றங்கிக் கண்டத்தைக் கையுட் பொத்தி எடுத்தனர் வாளை என்ன இயம்பினி என்றார் மீண்டும் விடுத்தாரவி வார்த்தை நண்பர் வியர்த்துடல் நடுங்கி னாரே 458
84 ஜின்னாஹ் ஷரித்தீன்
 

திருநபி காவியே
கேட்டவை கூராய் நெஞ்சைக் குடைந்திடக் கொடுஞ்சி னத்தால் வேட்டைக்குட் பட்ட மான்போல் விழித்திடும் அவரை நோக்கி மூட்டைச்சொல் லாகி லுன்சொல் முடிப்பேனுன் வாழ்வை என்றே காட்டினார் வாளைப் பின்றன் பிடிவிடுத் தகன்றிட் டாரே 459
திசைமாற்றி உடன்பி றந்தாள் தெருவொன்றி வீட டைந்து பசிகொண்ட வேங்கை யொப்பப் பரிவிடுத் தகன்று நின்றார் இசையொடு ஒது கின்ற இறைமொழி செவியுட் புக்க அசையாது சிலைபோ லாகி ஆங்குற்றார் தனித்தார் பின்னர் 460
தட்டினார் கதவை வீட்டின் தாழொடிந் திடுமால் யார்தான் தட்டினர் அறியாத் தங்கை செவிதீட்டி யார்தான் என்றார் தட்டியோன் நானே யுன்றன் சகோதரன் உமராம் என்ன மட்டறு பயமுள் ளேற மயங்கிடு நிலைகொண் டாரே 461
கூடவே இருந்த நாதர் குரல்கேட்டு நடுந டுங்கி ஒடியே ஒளித்தார் வல்லோன் உரைமொழி கண்கா ணாதே தேடியே வந்த பேர்தன் சினத்தினுக் கஞ்சி மூலை நாடினார் மறைத்தார் தம்மை நங்கைதாழ் அகற்றி னாரே 462
உள்நுழைந் துமரு ரைப்பார் உள்ளதைச் சொல்வீர் நீங்கள் உள்ளமொன் றாகி முஹம்மத் 'உம்மத் தென் றாணி ராமே எள்ளன வேனும் பொய்ம்மை இயம்பிடு வீர்க ளானால் கொள்ளுமென் வாளு முங்கள் குருதியை உயிரை என்றார். 463
ஒப்பினால் வாளால் தம்மின் உயிர்போகும் இலையா மென்று ஒப்பினால் பாவஞ் சூழும் உரைப்பதென் றறிகி லாதே செப்பிட வார்த்தை யற்றுத் திணறினார் இருபே ரும்உள் கப்பிய சீற்ற மோங்கக் கூறுமென் றுமர்க டிந்தார் 464
வரும்வழி சேதி கொண்டேன் வந்திங்கே மொழிசெ வித்தேன் தருவாய்நீ என்ன நீங்கள் சேர்ந்தொன்றி இசைத்த தென்ன தருவதற் கில்லை அது திருமறை வசன மென்றார் கருவான தச்சொல் அண்ணன் கைப்பலங் காண்ப தற்கே 465
85 ஜின்னாஹ் விழரித்தீன்

Page 57
திருநபி காவியே
அடியுண்ட உடலங் கீழே அடிதளர்ந் தழுதே வீழ மடுத்தவர் சொல்வார் இல்லை முறைகெட ஏதுஞ் செய்யேன் படித்தபின் தருவேன் என்பால் தருகவென் றுரைப்பார் கேட்டுக் கொடுத்தனர் படித்தார் கண்கள் குளமென வாகிற் றன்றோ. 466
ஒவ்வொரு சொல்லும் நெஞ்சுள் ஊன்றியே பதிந்த துள்ளங் கவ்விய மாற்றத்தாலே கால்கரம் நடுங்கிற் றி..தோர் பவ்வியம் கூறும் வேதம் பொய்யன்று என்றே ஒர்ந்தார் கொவ்வையாம் விழிகள் சோர்ந்து கனிந்தன நீர்ப்பூ கொட்டும் 467
சிந்திய கண்ணிர் கன்னந் தொட்டுமார் பணைக்குங் கோப வெந்தணல் மாய்ந்தே யுள்ளம் வெண்பனிக் குளிர்மை கொள்ளும் புந்தியின் துலங்கல் வேதம் புரிந்தசா கசமா மென்னும் விந்தைகண் டயர்ந்தே நின்றார் வேதநூல் தந்தோ ராங்கே 468
அண்ணனின் மாற்றங் கண்டு அச்சமுந் தவிர்த்தார் அண்ணன் புண்ணியர் பதம்பற் றேகும் பாற்படு வார்போ லென்னும் எண்ணமுங் கொண்டார் நங்கை இசைவினை அறிய உன்னிக் கண்ணொடு கண்க ளொன்றிக் கூர்ந்திடக் களிகொண் டாரே 469
உண்மையில் வேதம் நெஞ்சை உருக்கிடுஞ் சொற்கூட் டங்கள் உண்மையில் இறைவ னொன்றே ஒப்பிடற் கிலாதான் முஹம்மத் உண்மையில் அவன்து தள்தாம் ஒப்பினேன் உமரு ரைப்பார் உண்மையை ஒர்ந்தார் சொல்வார் ஒப்பிலான் தூத ராண்டே 470
சென்றனர் நபிகள் கோமான் திருமுகங் காண வென்றே அண்டிட முன்ன ராங்கே அறிந்திருந் தனராம் உற்றோர் கண்டதும் உமரைக் கைவாள் கரம்பற்றி னார்கள் தேகந் துண்டுதுண் டாக்க வென்று துணிந்துமுன் வரமு யன்றார் 471
அண்டிடப் பிறர்முன் முந்தி அண்ணலார் உமரைக் கட்டிக் கொண்டனர் உமரே உன்றன் கருத்தினில் இருப்ப தென்ன பண்டையச் சிலைவ ணக்கம் புரியவா இல்லை உண்மை கொண்டிறை பாலி லும்மைக் கொடுக்கவா எனவுங் கேட்டார். 472
86 ஜின்னாஹ் ஷரித்தீன்
 

திருநபி காவியே
உண்மைகொண் டுங்கள் மார்க்கம் ஒப்பிட வந்தேன் என்ற உண்மையவி வீரர் வாயால் உரைத்திட நபிகள் கோமான் "பண்ணவன் பெரியோன்’ என்றே புகன்றனர் பிறருங் கூடிப் "பண்ணவன் பெரியோன்’ என்று பெருங்குரல் தந்திட் டாரே. 473
மறைவிடம் இருந்து செய்த மார்க்கபோ தனைகள் அன்னார் இறைவழி வந்த பின்னர் இரவியின் ஒளிபோ லாகி உறும்பகைக் கஞ்சா வாறு உலகெலாம் ஒளிவிட் டோங்க கறுவினர் நெஞ்சுக் குள்ளே காபிர்கள் ஈமா னற்றோர் 474
புறமொன்றில் ஹம்ஸா மற்றப் புறத்தினில் உமரும் ஒன்ற அறவழி கொண்டோர் பின்னே அணியணி யாகக்கூட இறைபள்ளி க.பா நோக்கி ஏந்தலர் சென்றார் முன்னர் அறிந்திலார் யாரு மந்த அதிசயக் காட்சி யம்மா. 475
ஒளிந்துவாழ்ந் திருத்தல் வேண்டாம் ஒருவனை வணங்க யாரும் ஒளிந்தொளிந் தேகங் கூடா ஒன்றிநாம் க.பா செல்வோம் மொழிந்தது உமர்தான் வீர மொழியதாம் செவியுள் ளேக ஒளிந்தனர் எதிர்ந்தோர் இல்லம் உடன்பட்டோர் உறுதி பூண்டார் 476
நாடுவிட் டகன்ற பேரும் நாடினார் மக்கா மீண்டார் நாடிய அமைதி கொண்ட நிலையின்று என்றே எண்ணி வாடிய பயிர்கள் நீரை வரித்ததும் துளிர்த்தல் போலாம் கூடிட வில்லை அந்தக் குதூகலம் நெடுநாள் அந்தோ. 477
குலத்குையே ஒதுக்கிய கொடூரம்
முயற்சியில் முற்றுந் தோற்று முடிவினில் முடிவு கொண்டார் "செயற்பட லாகா எந்தத் தொழிற்பாடும் கொடுக்கல் வாங்கல் நயத்தலும் வேண்டாம் பேச நாடவுங் கூடா எங்கள் வயத்தினில் முஹம்மத் தம்மை விடாரெனில் பனுாஹா விம்கள்’ 478
87 ஜின்னாஹ் ஷரீபுத்தீன்

Page 58
திருநபி காவியம்
தொங்கிட வைத்தார் ஒலை திருக்க.பா தன்னில் மேலே தங்கிய வரிக ளோடு தடுத்திட ஒன்றி வாழ்வோர் பங்கமுற் றவர்கட் குள்ளே பகையுண்டு பண்ணும் நோக்கில் பங்கமுற் றார்கள் அந்தப் பாவிகள் தோல்வி கண்டார். 479
குலத்தினை ஒதுக்கி வைத்த கேட்டினால் பனுாஹா வழிம்கள் குலத்தினர் ஒற்று மையைக் காட்டிட அவர்க்குண் டான நிலத்தினில் ஒன்று சேர்ந்தார் நீசனாம் அபூல ஹப்பு குலத்தினுக் கிழிவு செய்த கேடனாம் தனைத்த விர்த்தான் 480
தனித்தொரு பள்ளத் தாக்கில் சேர்ந்தொன்றி வாழ்ந்த போழ்து நினைத்தவா றுணவு கொள்ளும் நிலைமாறிப் பஞ்சம் சூழ்ந்தும் மனத்திடம் மாற்றா ரானார் மாநபிக் குலத்தோர் தம்மின் இனத்துடை மானங் காத்து இடர்தாங்கி வாழ்ந்திட்ட டாரே. 481
மூன்றாண்டு காலந் தம்மை முழுமையாயக் கொன்று தீர்க்கத் தோன்றிய நிலைமை கண்டு துயருற்ற சிலபே ரொன்றி ஊன்றினார் மனத்தி லந்த ஒலையைக் கிழிப்ப தென்றே தோன்றிய வாறு செய்தார் சினத்தனர் தொங்க வைத்தோர் 482
உண்டிட உணவு மின்றி உடுக்கவெத் துணியு மற்றுத் தண்ணிரும் இன்றி வாழும் துயர்கண்டு நாங்க ளிங்கு எண்ணம்போல் வாழும் வாழ்கை இழிவுற்ற தாகு மென்றார் கண்ணிய ரொருவர் நல்லோர் கூடினார் அவர்தோள் தாங்க 483
கிழித்தனர் ஒலை தன்னை ஹாஷிம்கள் மக்கா மீழ அழைத்தனர் வந்தார் மீண்டும் அவரவர் இல்லஞ் சேர்ந்தார் துளிர்த்தது வாழ்வு மீண்டும் துயரழிந் திட்ட தாலே களிப்பினால் நெஞ்சம் பூத்தார் காப்பவன் தனைப்பு கழ்ந்தார் 484
கிழித்தெறிந் திட்ட வந்தக் கட்டளைப் படிவந் தன்னில் மொழிந்தவை அனைத்தும் பூச்சி மென்றிருந் தனவே ஒன்றே அழிந்திலை அ.து “அல்லாஹற்” அருட்திரு நாம மாகும் கிழித்திட முன்னர் நாதர் கனவிலும் இதுதோன் றிற்றே 485
88 ஜின்னாஹ் வழfபுத்தீன்

திருநபி காவியம்
முன்னரே மொழிந்தி ருந்தார் மாநபி கனவைப் பற்றி முன்னவன் நாம மன்றி மற்றவை கறையான் ஒன்றித் தின்றிருக் கும்மாம் என்ற சேதியைப் பலர றிந்தார் என்னவோர் விந்தை இட்து ஏகனின் திறனா மன்றோ. 486
இரு பேரிழப்புக்கள்
பேரரண் போலி ருந்தார் பெருமானார்க்(கு) அபூதா லிப்பும் ஊரொன்றிக் கூடிச் செய்த உபாயங்கள் தோற்றுப் போகக் காரணர் இறைக்குப் பின்னர் காத்தவர் அவரே மூப்பின் காரண மாக வாழ்வின் கடைகண்டார் உயிர்து றந்தார் 487
தகப்பனின் உடன்பி றந்த சகோதரர் என்ப தன்றி மிகப்பெரும் எதிர்ப்புத் தோன்றி முஹம்மதர் உடலைச் சாய்க்க வகைப்பட்ட போதி லெல்லாம் வந்துமுன் நின்ற காப்பான் இகவாழ்வு நீத்த தோர்கை இழந்தவ ராக்கிற் றன்றோ 488
பெருங்கானத் திடையில் விட்ட பிள்ளைபோல் தவித்தார் நாதர் செருக்களத் திடைமார் காப்புத் தவறிய வீரன் போலாம் கருக்கலில் ஒளியி ழந்த கண்களின் நிலைமை யுற்றார் திருக்'கலி மா'வின் பேரால் 'தீன்’வழி காட்டி நின்றோர் 489
இறுதிமூச் சடங்கும் வேளை இனத்தவர் தம்மைக் கூட்டி உறுத்தினார் அபூதா லிப்தன் இளையவர் பிள்ளை தன்னை வெறுத்திடீர் அவரைக் காப்பீர் வாக்கினில் சீலர் மார்க்கங் குறித்தவர் சொல்வ தெல்லாம் கற்றவர் ஏற்பா ரென்றார் 490
நம்பிக்கை கொள்ளு மாறு நபிவழி தன்னை என்றே தம்மினத் தோர்க்கு ஒதும் தருணத்தில் நபிகள் நாதர் நம்பிக்கை நீங்கள் கொள்ள நாடுங்கள் என்று வேண்டத் தம்பியின் மகனை நோக்கிச் சொல்லுவார் அபூதா லிப்பே. 491
89 ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 59
திருநபி காவியம்
இறப்பினுக் கஞ்சியேதான் இசைந்தனன் என்று மற்றோர் குறைமொழி பகள்வர் என்னைக் கட்டாயம் செயாதீர் நானென் பிறப்பினில் கொண்ட மார்க்கப் படிவிழி மூடு கின்றேன் மறுத்ததை எண்ணி நீவீர் மனக்கவல் கொளாதீர் என்றார்.
விருப்பம. தாயி லென்றால் வழிநகர்ந் திட்டேன் உங்கள் மறுமைப்பே றெண்ணி நானென் முதலவன் றன்பா லென்றன் இருகரம் ஏந்திக் கேட்பேன் எனநபி சொல்லிச் சோர இருவிழி பெருகிற் றன்னார் இழப்பினை நினைந்த தாலே
காப்பரண் போலிருந்து காத்ததன் பெரிய தந்தை காப்பவன் பக்க லேகக் கலங்கிமெய் உள்ளஞ் சோர்ந்து காப்பவன் தூதர் நிற்கக் கவல்மிகு மற்றோர் தாக்கம் காப்பவன் தந்தான் எம்மான் குற்றுயி ராகிப் போனார்
உடல்பொருள் ஆவி யெல்லாம் உங்கள்பால் என்றே தந்த கிடைத்தலுக் கரிய பெண்ணார் “காத்தமுன் நபி' யின் பாகம் கிடைத்ததும் தூது வத்தை கொண்டவர் முதலு மானார் அடைந்தனர் மறுமை வாழ்வை அண்ணலார் இடிந்தே போனார்
பேரிளம் பெண்ணாய் வாழ்வில் பண்ணவன் தூத ருக்கு பாரியாய் ஆனார் நன்கு பெண்மகள்க் கன்னை யானார் சோராது நபிகள் தம்மின் சன்மார்க்கப் போதம் ஊன்றக் காரண மான அன்னை கதீஜாமண் மறைந்திட் டாரே.
கனப்பெருஞ் செல்வங் கொண்ட கதீஜாநற் பிராட்டி யானோர் மனைக்குகள் மனைவி யாக வாழ்ந்தனர் நபிகளாரின் இணைக்கரம் அவரே ஆனார் இறுதிமூச் சடங்கு மட்டும் துணைக்கவர் இல்லா துற்ற துயர்பெரி தாகு மன்றோ
492
493
494
495
496
497
90 ஜின்னாஹ் வழfபுத்தீன்
 

திருநபி காவியம்
குாயிப் நகர் நோக்கித் திருத்துகுர்
கொடுமைகள் எல்லை விஞ்சிக் கொண்டேக நபிகள் நாதர் அடுத்தொரு நகரை நோக்கி அருளொளி பரப்ப வென்றே விடுத்தனர் மக்கா தன்னை வழித்துணை யாக "ஸைது” புடத்திலிட் டெடுத்த பொன்ஆம் புனிதரோ டொன்றி னாரே 498
எழுபத்து மூன்று கற்கள் இறைதூதர் நடந்தே தாயிப் செழும்பதி அடைந்தார் உள்ளச் செழுமையற் றோர்க ளன்னார் வழத்திட உகந்தோன் ஏக வல்லவன் என்ற உண்மை அழுத்திநெஞ் சுறுத்த வென்றே ஆங்குசென் றார்க ளன்றோ 499
வல்லவன் தூதை ஏந்தி வந்ததம் தூது சொல்ல பொல்லாதார் புரிந்தா ரில்லை பரிகசித் திகழ லானார் "நல்லதோர் சேதி உம்போல் நாதியற் றோரா உன்றன் வல்லவன் பெற்றான் வேறு பேரற்றுப் போன தென்னே’ 500
சுட்டனர் வார்த்தை யாலே திருநபி நெஞ்சம் நோகத் திட்டினார் ஓட ஓடத் துரத்தினர் வீணர் கூடிக் கொட்டினர் மண்ணை மேனி கனற்றிட சிறாரை ஏவி விட்டனர் வேண்டுந் துன்பம் விளைந்திட அனும தித்தார் 501
ஏவிய சிறுவர் ஒன்றி ஏந்தலர் பின்னால் ஓடி கூவினர் பித்த ரென்றே கொட்டிக்கை சிரித்துக் கல்லால் பாவிகள் அடித்தார் மேனி புண்ணுறக் குருதி சிந்தும் நாவினா லுரைக்க வொண்ணா நெறிகெட்டோர் செயல்க ளம்மா 502
ஓடுவார் சிறிது தூரம் உடல்வலுக் குன்றும் போழ்து நாடுவார் நிலத்தில் குந்த நாசகர் விடாரே மீண்டும் ஓடுவார் கல்லின் மாரி உற்றதால் உறைந்த புண்ணில் ஓடிடுங் குருதி அன்னார் உடைகளை நனைத்த வாறே 503
91 ஜின்னாஹ் இழரித்தீன்

Page 60
திருநபி காவியம்
வெற்றுக்கால் ஓட ஓட விரட்டிய தாலே வீதிக் கற்கள்தம் பங்குக் கென்றே குத்திடக் குருதி பூசி முற்றிலும் வண்ணம் மாறி முகிழ்ந்தன செம்பூப் போன்றே குற்றுயி ரானார் தூதர் கொடுமைகள் தொடர்ந்திற் றன்றோ 504
சோர்ந்தவர் வீழத் தூக்கிச் செல்லுன்றன் நகரம் நோக்கி வேரூன்ற விடோமுன் மார்க்கம் வழிகேட்டைப் பற்ற மாட்டோம் சேருமுன் பதிக்கா மென்றே சொல்லியே தள்ள முன்போய் காருண்யர் வீழச் செய்வார் காருண்ய மற்ற பேரே. 505
மூன்றுகற் றொலைவு மட்டும் முடிவிலா தியற்றிச் சோர்ந்தோர் வான்மறைத் தூதர் தம்மை விட்டகன் றிட்டார் இன்று ஆனது போது மென்றே அகம்நிறை வாகி எம்மான் தீனுரை செப்பச் சென்ற தலத்தினில் ஆன தி.தே 506
மக்கமா நகரி லுற்றோர் மாநபிக் கிளைத்த துன்பம் ஒக்குமோ இதற்கு என்றால் ஒர்ந்திடில் அதிக மாகும் சுக்குநூ றாக உள்ளந் துன்புறு இழிசொல் லோடு வக்கிரங் கொண்டோர் தேக வன்முறை விஞ்சு மாமே 507
துன்பத்தின் எல்லை தன்னைச் சொல்லிடில் நபிகள் ஒர்கால் தன்னிலை என்ன வென்று சொல்லுவார் “அன்று நாளில் என்னைநான் இழந்தேன் எங்கு இருந்துநான் வந்தேன் எ.தை முன்னோக்கிச செல்வே னென்றோ மறந்திட்டேன்’ என்ற வாறே 508
தாயிபை விட்டுத் தப்பிச் சென்றொரு இடத்தில் தங்கித் தூயோனை வேண்டி னார்கள் திருநபி கைக ளேந்தி "தாயிபின் மக்கள் தம்மைச் சீர்வழி செலுத்து அன்னார் போயினுஞ் சந்த திப்பேர் பற்றட்டும் இஸ்லாம்” என்றே 509
திராட்சையின் தோட்ட மொன்றுள் சேர்ந்ததால் தொடர்வா ரற்றார் வராரினி என்று நெஞ்சம் வரித்ததால் தரித்து நின்றார் உரிமைக்கு உரியோர் மக்கா ஊர்த்தலத் தாராம் கண்டு திராட்சையின் கனியோர் தட்டில் தந்திடப் பணித்தி ருந்தார் 510 92 ஜின்னாஹ் இழரித்தீன்

திருரவி காவியம்
மெய்கொண்ட ரணங்க ளுக்கு மருந்திட்டார் ஸ்ைது ஆங்கே கைகொண்ட கணிக ளோடு கடிதினில் பணியாள் வந்தார் வையகம் உய்க்க வந்த வள்ளலார் தம்மை நோக்கி செய்யுக பசிக்குச் சாந்தி தோழரோ டெனப் பணிந்தார். 511
நன்றியோ டவர்மு கத்தை நோக்கிய நபிகள் நாதர் என்றனுக் களிக்கு மாறு யாரிதைத் தந்தா ரென்ன என்றணின் எசமான் தோட்டம் எவர்க்குரித் தாமோ அன்னார் என்றனர் நபிகள் நன்றி எனக்கூறிக் கணியெ டுத்தார் 512
'அளவற்ற அருளா ளன்தான் நிகரற்ற அன்பு கொண்டோன் "அல்லாஹற்’வின் திருநா மத்தால் ஆரம்பம் செய்யுகின்றேன் உளமார வார்த்தை கூறி உண்டிடக் கண்டார் தந்தார் முளைகொண்ட வியப்பை நீக்க முனைந்தவர் வினாத்தொ டுத்தார் 513
உண்ணுமுன் சொன்ன சொற்கள் உரைத்திடும் பொருள்தான் என்ன கண்ணியம் மிக்க நீங்கள் கூறுக எனவுங் கேட்க உண்ணுமுன் நல்லவற்றை உவக்குமுன் அல்லாஹற் வைநாம் எண்ணுதல் அவன்நா மத்தால் எனத்தொடங் குதல்தா மென்றார் 514
எங்களின் கிறிஸ்த்து மார்க்கம் ஏற்பவி துண்டா மென்று பொங்கிடு வியப்பால் உன்னிப் பேசுவார் ஊழி யர்தாம் தங்கிடும் வேற்று மைகள் சொல்லுக உங்கள் மார்க்கம் எங்களின் மார்க்கத் தோடு இணைத்தென நபிகள் சொல்வார் 515
ஆண்டவன் ஒருவ னென்றும் அவன்தேவை அற்றோ னென்றும் பூண்டிலான் பெற்றோர் யாரும் பிறந்திலை அவன்பா லென்றும் சான்றுரை பகலு தெங்கள் திருமறை அதுவே இரண்டும் பூண்டுள வேற்று மைதாம் பிறிதிலை எனப்பு கன்றார் 516
செவிகொண்ட சொற்கள் கைகள் தொட்டவை முத்தித் தேபின் நவின்றிடச் செய்த(து) ஈமான் நிலைத்திடக் கலிமா தன்னை உவந்திவை நடந்த பின்னர் உத்தம நபிகள் கோமான் தவிர்த்தனர் தோட்டம் மக்கா சென்றிட முடிவு கொண்டார் 517 93 ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 61
திருநபி காவியம்
தாயிபை விட்டு வந்து தனைஹிரா குகையிற் சேர்த்து போயொரு பேரின் பால்நான் புறப்பட்டு க.பா செல்ல வாய்ப்பினை அறிந்து வாரும் வகைசெயக் கோரும் என்றே தூயநந் நபிப னித்தார் “ஸைத்’மக்கா தனைய டைந்தார்
பாதுகாப் பளிக்க யாரும் பிரியமுற் றிராத போது ஒதுவார் ஒருவர் நானே உடன்பட்டேன் என்று பின்னர் தீதெதும் நேரா வண்ணம் தனதிரு மகரை நோக்கி பாதுகாப் பளிக்கக் க.பா புறப்படப் பணித்திட் டாரே
ஆயுதந் தாங்கி மக்கள் அண்மிடக் க.பா தன்னைப் போயினர் ஹிராவை நோக்கி பெருமானார் தனைய ழைக்க வாய்மொழி செய்தார் க.பா வந்ததும் முஹம்ம தர்க்கு நேயமாய்ப் பாது காப்பு நான்தந்தேன் எனவாம் அன்னார்
பெரும்பணி ஏற்ற வாறே பகலிர வென்று நோக்கார் உருவத்தின் நிழலைப் போல உடனிருந் துதவி செய்தார் கருமத்தில் கண்ணா யான கண்ணியர் தம்மை மக்கள் பொருந்தாத சொற்க ளாலே பகைதனைக் கொட்டி னாரே
பாதுகாப் பளிக்க வந்த பெரியவர் தமக்குத் தன்னால்
சோதனை தோன்ற லெண்ணித் துன்புற்ற நபிகள் நாதர்
நீதியில் லீது வென்றே நினைந்தனர் இறைவன் ஈயும் பாதுகாப் பெண்ணி அன்னார் புறமிருந் தொதுங்கத் தேர்ந்தார்.
மூக்குடையeட மார்க்க விரோதிகள்
பெருமானார் பிரசார ரத்தில் பூரணப் பொருத்தங் கொண்டார் வருகைசெய் தோர்க ளெல்லாம் வியாபார நோக்கில் மக்காத் தெருவினில் நின்று மார்க்கம் சொல்லிடும் நபிகள் கண்டு
518
519
520
521
522
தெரிந்திட விளைந்தார் சொல்லுஞ் சொல்லெது தானாம் என்றே 523
94 ஜின்னாஹ் விழரித்தீன்

திருநபி காவியம்
கூடிடுங் கூட்டங் கண்டு கறுவினார் அந்நாள் மக்கா நாடிவந் தோர்கள் தம்மை நாடிப்பொய் யுரைத்ததார் ஒர்நாள் கோடிப்பொன் கொண்ட செல்வர் கண்படக் கைப்ப டுத்திக் கேடுடை நெஞ்சார் எம்மான் குறையெனப் பலதுஞ் சொன்னார் 524
முஹம்மதென் றொருவர் இங்கு மக்களைத் திசைதி ருப்பி தகாதன உரைக்கின் றார்நீர் சந்தித்தால் அவர்தம் பேச்சை புகவிடா திருப்பீர் காதின் புறந்தடுத் திடுவீ ரன்றேல் அகங்கெட்டுப் போவீர் என்றார் அவரதை நம்பினாரே 52.5
புறநகர்ப் புறத்தி ருந்து பக்காவந் திருந்த செல்வர் உறுத்தினி நன்றே முன்னர் ஒப்பினேன் உம்சொல் என்றார் இறைத்தூதர் ஒருநாள் வீதி இடைப்படு தலத்தி ருந்தே மறைமொழி ஒதக் கேட்டு மனம்மாற ஈமான் கொண்டார். 526
என்றுமே கேட்டி ராத இறைமொழி செவியுள் வாங்க சென்றதுள் சிந்த னைக்குத் தீனியாய் மாறிப் பொய்ம்மை கொன்றது ஏகதெய்வக் கொள்கையை நிலைப் படுத்தி வென்றது உளத்தைச் செல்வர் மனம்மாறக் கருவா கிற்றே 527
பேரறி வாள ரென்று புகழ்கொண்ட ஒருவர் எம்மான் சீர்பெறு சந்தி தானத் திருந்துரை கலந்த போழ்தில் தேர்ந்ததன் ஞானங் காட்டச் சொல்லுவார் லுக்மான் போதம் தேர்ந்தவன் நானா மென்றே தனைமிகைப் படுத்தும் பாங்கால் 528
லுக்மானின் அறிவு ரைகள் சிலவற்றை ஓதிக் காட்ட “ஹக்கனின் தூதை ஒதிக் காண்பித்தார் நபிகள் நாதர் சிக்கெனப் பற்றிற் றுள்ளம் சிந்தனைத் தெளிவு கொண்டார் அக்கணத் தேகை பற்றி இஸ்லாத்துள் நுழைந்தும் கொண்டார் 529
மந்திர தந்தி ரத்தில் மிகவல்லோன் எனப்பேர் கொண்டோர் வந்திருந் தாரே மக்கா வாழ்புலம் "எமன்’என் றாகும் தந்திரஞ் செய்தார் தூதர் தமையழித் திடக்கா பீர்கள் மந்திரக் காரர் பாதம் மண்டியிட் டிரந்தா ரன்றோ 530 95 ஜின்னாஹ் ஷரீபுத்தீன்

Page 62
திருநபி காவியம்
குறைவழிகள் விருப்புக் கேற்ப கூறுவார் மந்தி ரத்தால் இறைநபி என்னும் பேரை இலாதொழித் திடுவேன் என்றே அறைகூவிச் சென்ற பேர்முன் அண்ணலார் இறைவே தத்தை நறைபொழி பாங்காய் ஒத நெஞ்சுறைத் திடுவார் சொல்வார் 531
ஓதுக மீண்டு மென்றே ஒருமுறை ஒத மீண்டும் ஓதுக எனவுங் கூறி உளத்தினில் அனைத்தும் வாங்கி வேதமே இது இறைவன் வார்த்தையே எனவும் ஒப்பி ஒதினார் கலிமா ஏகன் ஒருவனே எனப்பு கன்றார் 532
மூக்குடை பட்டார் மார்க்கம் முரண்பட்ட காபி ரீன்கள் ஏக்கமுங் கொண்டார் எல்லாம் இலவுகாத் திட்ட வாகாம் தீக்குணர் மீண்டும் மீண்டும் தொடர்பவை அனைத்தும் தோல்வி சேர்க்கையில் செய்த தென்ன தெரிகிலார் சினங்கொண் டாரே. 533
திருநபியும் மறுமணமும்
(வேறு)
திருநபியின் முதன் மனைவி கதீஜா வாழ்வைத்
துறந்திறைபால் சென்றபின்னர் நபிகள் வாழ்வில் பெரியதொரு இடைவெளியுந் தோன்றிற் றன்னார்
பிள்ளைகளும் தாயில்லாப் பிள்ளை யானார் மருவிவந்த இடரனைத்தும் தாங்கித் தம்மின்
முயற்சியிலே வெற்றிபெறத் தோள்தந் துற்ற பெருந்துணையை இழந்ததென்ப துறுதி யற்றுப்
போனபெரு விருட்சத்துக் கிணையா கிற்றே 534
வீடுவந்து சேர்ந்ததுமே வாஞ்சை யொடு
வழிபார்த்துக் காத்திருந்து சேவை செய்யும்
பாடுகொள்வார் யாருமற்றுப் போர்க்க ளத்தில்
பற்றியவாள் பறியுண்ட போர்வீ ரர்போல்
96 ஜின்னாஹ் ஷரித்தீன்
 

திருநபி காவியம்
ஈடுசெய்ய இயலாத இழப்பால் சோர்ந்து
இருந்தார்கள் நபிபெருமான் அவர்க ளோடு
கூடிவாழ ஆயிரம்பேர் காத்தி ருந்தும்
கவலழியார் கரம்பிடித்த கருணை நாதர் 535
தோட்துணையாய்த் தோழர்கள் பலரி ருந்தும்
தேவையொரு துணைவாழ்வில் இல்லங் காக்க ஆட்பேர்க்கு என்றன்றி வேண்ட லுற்றார்
அண்ணலிள மக்களுக்குத் துணைவேண் டிற்றே கேட்பாரற் றொருபெண்ணார் “ஸெளதா’ முன்னர்
கலிமாவை முன்மொழிந்தோர் கணவ ரற்று வாட்கைக்குத் துணைவேண்டி நின்றார் வாழ்வில்
வல்லவனின் அருள்கொண்ட பேரன் னாரே 536
ஆரம்ப காலத்தில் மக்கா விட்டு
அபிஸினிய் யாசென்ற முஸ்லிம் கட்குள் சேர்ந்திருந்தார் 'ஸெளதா”வும் கணவ ரோடே
திரும்பிமக்கா வந்திருந்தார் துணையி ழந்தார் சேர்த்தாரோ இல்லையுற்றார் துணையி ழந்தார்
தாபரிக்க எவருமற்று இருந்தார் கேட்டு தார்மீகப் பொறுப்பேற்றார் தருமத் தூதர்
தங்கரத்தின் பிடிகொண்டார் இறைநாட் டம்போல் 537
முதல்மனைவி கதீஜாதம் மரணத் தின்பின்
மாநபிகள் கனவொன்று கண்டார் ஒருபேர் பொதியொன்றைச் சுமந்துவந்தார் பட்டால் சுற்றி
பாருங்கள் திறந்திதனை யென்றுஞ் சொன்னார் அதுவென்ன வாயிருக்கும் எனநெஞ் சுந்த
அண்ணநபி திறந்ததனைப் பார்த்தா ராங்கே புதுமலர்போல் ஆயிஷாவை அண்ணல் கண்டார்
பொதிகொணர்ந்தோர் இதுவுங்கள் மனைவி என்றார் 538
97
ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 63
திருநபி காவியே
ஆறேதான் வயதுஆயிஷாப் பிராட்டி யார்க்கு
அண்ணலுக்கோ ஜம்பதையும் தாண்டிற் றன்னார் கூறினாரே தனக்குத்தான் இறைவன் நாட்டம்
கொள்வனெனில் முடித்துவைப்பான் என்ப தாக வேறொருநாள் நித்திரையில் இருந்த போதோர்
வானவரப் பொதியினொடு வருதல் கண்டார் கூறிடுவார் எனக்கதனை காட்டு மென்றே
கண்டார்கள் ஆயிஷாவை முன்போற் சொன்னார் 539
உதுமானிப்ன் மஸ்ஊதின் மனைவி “கவ்லா”
உறுதுணையாய் இருந்தார்கள் நபிக ளாரின் பொதுவான தேவைகளை நிறைவு செய்ய
பார்விடுத்து கதீஜாமண் மறைந்த பின்னர் புதிதாக மனையொன்றைக் கொள்க வென்று
புந்தியுரை பகன்றாரோர் நாளில்"கவ்லா’ கதியார்க்கு உண்டாமோ என்றார் ஆயிஷா
கணவரற்ற “ஸ்ெளதா”வும் உளரா மென்றார் 540
இருவரையும் கைப்பிடிக்க ஆயத் தங்கள்
ஏற்றிடுக என்றுநபி கூறக் கேட்டு திருநபிக்கு "ஸெளதா'வை ஹாதிப் என்போர்
திருமணமுஞ் செய்துவைத்தார் அபூபக் கர்தன் திருமகளார் ஆயிஷாவை திட்டம் போல
சேர்த்துவைத்தார் மனைவியின் போது அன்னை இருந்தார்கள் இல்லைசிறு பிள்ளை அன்னார்
இறைவனது நாட்டமது போலா யிற்றே. 541
*மிஷ்ராஜ்’ (விண்னேற்றம்
நள்ளிரவில் நபிகள்பிரான் க.பா நோக்கி
நடந்தார்கள் தொழுகையின்பின் சிறிது தூக்கம்
கொள்ளவெனச் சாய்ந்தார்கள் யாரோ தம்மின்
கால்களினைத் தட்டிவிடக் கண்வி பூழித்தார்
98
8866)||167B oprft|5öör

திருநபி as Tssu (5
உள்ளாரங் கெவருமிலை மீண்டுங் கண்கள்
உறக்கத்தில் ஆழ்ந்திட்டார் மீண்டுங் காலைத்
தள்ளியதுங் கண்விழித்தார் எவருங் காணார்
தொடர்ந்துமூன்று முறையிதுவா யாகிற் றன்றோ 542
எழுந்துநின்றார் பக்கத்தே நின்ற பேர்தம்
இருகையில் ஒன்றுபற்றி பள்ளி வாயில் அழைத்தேக அங்குஒரு மிருகங் கண்டார்
அதன்தோற்றங் கோவேறு கழுதைக் கொப்பாம் அழகியவெண் மிருகமது சிறகி ரெண்டு
அணைந்திருந்த திருபுறமும் கால்கள் நான்கும் வெளித்தொங்கி நின்றனவே கண்காண் தூரம்
விசித்திரமாம் இறையளித்த வாக னம்மே 543
"புராக்” என்னும் பெயர்கொண்ட வாக னத்தில்
பெருமானார் ஏறியமர்ந் திட்டர் கூட அருகினிலே வழிகாட்ட ஜிப்ரீல் உற்றார்
அடைந்தது ஜெரூஸலத்தை ஆங்கி ருந்து பெருமானை நபிமார்கள் வரவேற் றார்கள்
பேருரைக்க இப்றாஹீம் மூசா ஈசா பெருந்தொகையாய் முன்வந்த தூத ரெல்லாம்
புகழ்நபியைச் சந்தித்தார் புகழ்இ றைக்கே 544
தொழுதார்கள் நபிமார்கள் தொடர்ந்து எம்மான்
தொழுவித்தார் தொழுகையின்பின் பருகு தற்கு அளித்தார்கள் திராட்சைரசம் பாலும் ஒன்றாய்
அண்ணல்பால் தனைப்பருக ஜிப்ரீல் நோக்கி “வழிகாட்டப் பட்டீர்நீர் பண்டைக் காலப்
பேர்பெறுநல் நிலைமைக்கு உம்மத் தார்க்கும் வழிகாட்ட வேண்டும்நீர் திராட்சைச் சாறு
விலக்குண்ட பானமுமக் கென’வு ரைத்தார் 545
99
ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 64
திருரவி காவியம்
சுவனளவில் உயரவைத்தான் நபிக ளாரைத்
தனியவன்முன் இல்யாசை ஈஸா போன்றே சுவன்செல்லத் “தீரதத்தை'த் தந்தான் எம்மான்
செல'புராக்”கை வாகனமாய் ஆக்கி வைத்தான் சுவன்நோக்கி சுயஉருவில் ஜிப்ரீல் மாறிச்
சென்றார்கள் உடன்நபியும் உயர்த்தப் பட்டார் அவண்ஏழு வான்கடந்தும் முன்னர் கண்ட
அருகனருட் தூதர்களைக் கண்ணுற் றாரே 546
முன்உலகில் கண்டதுபோல் இலாது மாறி
மேலுலகின் தோற்றத்தில் அவரி ருந்தார் அன்னவர்க்குந் நந்நபிகள் அதுபோற் காட்சி
அளித்தார்கள் அதிசயித்தார் நபிகள் கோமான் வெண்ணிலவின் முகப்பொலிவில் நபிகள் 'யூசுப்’
வசீகரத்தின் பாதிக்கதி பங்கி னோராய்க் கண்டனரே அவர்'ஹாரூன்” கவர்ச்சி பற்றிக்
கலந்துரைத்தார் என்றுந்நபி வாய்மொ ழிந்தார் 547
சுவனத்தின் சோலைகளை சுவைக்கச் சொல்லிச்
சூரியனை விஞ்சுகின்ற சுடரைக் கூறி சுவனத்தின் மங்கையர்க்கு தோற்றம் பெற்றால்
தரைதொட்டு வான்வரையும் ஒளியாய் நிற்பார் கவர்ந்திடுவார் பரப்புகின்ற சுகந்தத் தாலே
கண்டுவந்த அற்புதங்கள் பலவுஞ் சொன்னார் இவையனைத்துங் கூறிநபி பெற்று வந்த
இன்னுமொன்றைச் சொல்லிடுவார் கொடையாம் அ.தே 548
கிடைத்தவந்தக் கொடைதொழுகை யாகும் ஐந்து
காலத்தில் தொழுவதுவாம் ஆரம் பத்தில் கிடைத்ததுவோ தினம்வேளை ஐம்ப தாகும்
கடைவானில் நபிமூசா கண்ணில் பட்டு கிடைத்தவிதி என்னதினம் தொழுகைக் காகக்
கொண்டகாலம் எத்தகைத்தாம் என்றே கேட்டார் கிடைத்ததுவே பத்தைந்து வேளை என்றார்
கடிததுவும் மக்களுக்கு மூசா சொல்வார். 549 1 OO ஜின்னாஹ் ஷரித்தீன்
 

திருநபி காவியம்
சென்றிறைவன் பாலிறைஞ்சும் சுமக்க வொண்ணாச்
சுமையதுவும் மக்களுக்குக் குறைக்கக் கேளும் என்றதுமே நபிஇறைபால் மீண்டுஞ் செல்வார்
எனதுமக்கள் இச்சுமையைத் தாங்கா ரென்றார் நன்றென்று ஈரைந்து குறைக்க மீண்டும் நாடிவர நபிமூசா வழிம றித்துச் சென்றிடுவீர் இன்னுமெனச் சென்றார் ஈறில்
தேறியதே ஐவேளைத் தொழுகை யாமே. 550
தொழுதாலும் ஐவேளை கிடைக்குங் கூலி
சிறிதெனினுங் குறையாதே ஜபத் தாக
தொழுவதனால் உண்டாகும் கூலிக் க."து
தெளிவான உளத்தோடும் அச்சத் தோடும்
முழுமுற்றாய் விசுவாசங் கொண்டு வல்லோன்
மேலான அருளினிலும் பட்சங் கொண்டால்
பிழையாது நற்கூலி படைத்தோன் ஈவான்
பெருமானார் வார்த்தையது பற்று வோர்க்கே 551
விண்ணுலக யாத்திரையின் பின்'ஜிப் ரீலும்
வள்ளநபி இருபேரும் ஜெருச லத்தின் குன்றினிலே இறங்கியபின் மக்கா நோக்கி
கொண்டவழி மீண்டார்கள் வரும்போ தன்னார் கண்டார்கள் தெற்குநோக்கிச் செல்லு கின்ற
கூட்டத்து வணிகர்களைக் கடந்து சென்றார் கொண்டானோ விழிக்கவவன் இல்லை வெய்யோன்
கட்பாவை நபியடையும் போழ்தி லம்மா 552
'உம்முஹானி’ அபூதாலிப் மகளார் வீட்டில்
உறக்கத்தில் இருந்தநபி எழுந்து க.பா
தம்மையன்று சென்றடைந்தார் மிட்ரா ஜின்பின்
திரும்பியதும் அவரில்லாம் தனக்காம் ஆங்கு
101 ஜின்னாஹ் வழfபுத்தீன்

Page 65
திருரவி assrøílulö
உம்முஹானி தனையெழுப்பித் தொழுதார் பின்னர்
உரைத்தார்கள் நீர்கண்டாற் போல நேற்று
உம்வீட்டு வெளியினிலே மாலை நேரம்
ஒன்றினேன்நான் தொழுகையிலே என்றே சொல்லி 553
பின்னர்நான் ஜெரூஸலத்துார் சென்றேன் அங்கும்
படைத்தவனைத் தொழுதேன்நான் என்று ரைத்துத் தன்னையந்த இடத்திருந்து பிரிக்க எண்ணிச்
செலமுயன்ற போதுதங்கை தடுத்தே சொல்வார் முன்னவனின் துதேநீர் சொல்ப வற்றை
மொழியாதீர் மற்றோர்பொய் என்பா ரென்றே சொன்னார்கள் பெருமானார் இறைநா மத்தால்
சொல்லிடத்தான் போகின்றேன் என்ற கன்றார் 554.
பள்ளிசென்று நபிநாதர் ஜெருஸ் லத்திலன்
பள்ளிசென்று வந்ததனை எடுத்து ரைக்க எள்ளிநகை யாடினரே ஈமா னற்றோர்
என்னஇது விந்தை யென்றார் வர்த்த கர்கள் உள்ளபடி "ஸிரியா’ சென் றடைய மாதம்
ஒன்றாகும் வரமீண்டும் மாதம் ஒன்றாம் எள்ளவும் உண்மையில்லை இரவொன் றிற்குள்
எப்படித்தான் போய் வந்தார் எனஇ கழ்ந்தார் 555
இப்பொழுது உமதுநண்பர் பற்றி யென்ன
இயம்பிடுவீர் அபூபக்கர் நீரா மென்றே தப்பிதர்கள் கேட்டார்கள் அவருஞ் சொல்வார்
திருத்துதர் செப்பிடுங்கால் உண்மை என்றே அப்பப்போ தன்னவர்க்கு வானி ருந்து
அருள்வாக்கு வருவதனை நானுந் தேர்வேன் ஒப்பிடுவேன் வார்த்தைதனை ஒருக்கா லேனும்
உரையார்பொய் உம்மிநபி என்றிட் டாரே. 556
102
ஜின்னாஹ் வழfபுத்தீன்
 

திருநபி காவியம்
"சத்தியத்தின் மேன்மைக்குச் சாட்சி” என்னுஞ்
சொல்வரிக்கு உரித்தானார் “ளRத்தீக்” என்றே சத்தியத்தின் தூதர்அபூ பக்கள் பேரில்
திருநாமம் வாய்மொழிந்தார் தொடர்ந்திற் ற.தே வர்த்தகர்கள் பற்றியவர் சொன்ன தெல்லாம்
வரிக்குவரி மெய்யாதல் கண்ணுற் றோர்கள் ஒத்துடன்பா டுற்றார்கள் “மி.ராஜ்' பற்றி
ஒருபோதும் அன்றுநபி உரைத்தா ரில்லை. 557
யுத்ரீப் மக்களுடன் உடன்பாடு
(வேறு)
வழமைபோல் ஹஜ்ஜ" மாதம் வந்தது மக்க ளெல்லாம் குழுமினர் "அகபா'என்ற கானற்பேர் வெளியில் வானின் முழுமையும் வெள்ளி பூத்து விளங்கிய இராப்போழ் தொன்றில் குழுமிய கூட்டத் துள்ளோர் குழுவினர் பிரிந்து சென்றார் 558
அருகினிற் கணவாய் அண்டி அனைவரும் ஒன்றுகூடி வரவொன்றிற் காக வேண்டி வழிபார்த்து நின்ற காலை மருவின இரண்டு ஒட்டை மகிழ்ந்தனர் காத்தி ருந்தோர் திருநபி யோடு அப்பாஸ் சேர்ந்துவந் திடுதல் கண்டார் 559
நல்வழிப் பட்ட யத்ரீப் நகரவா சிகளைக் கண்ட நல்வழி காட்டும் நாதர் நிகரிலா மகிழ்வு கொண்டார் தொல்லைகள் செய்த ஊரார் துரத்திட விழைந்த போது நல்வர வளிக்கும் பேராய் நின்றனர் நல்லோ ராமே. 560
வருகவே எங்கள் யத்ரீப் வளம்பெற உபதே சங்கள் தருகவே நெஞ்சில் ஈமான் சிறக்கவே என்ற ழைத்து உருகிய மனத்தின் பேறாய் உகுத்தனர் வார்த்தை கேட்டே பெருமானின் சிறிய தந்தை புகன்றனர் சொற்கள் கோத்தே 561
103 ஜின்னாup opரித்தீன்

Page 66
திருநபி காவியே
அன்பான சோத ரர்காள் அறிவீரோ முஹம்ம தைநாம் கண்ணெனக் காப்ப தெங்கள் குலத்தினில் உயர்ந்த பீடந் தன்னையும் அளித்து எந்தத் துயரிலுந் துணையாய் நின்று பன்னலம் புரிந்து வாழ்தல் புரியுவி ராமோ என்றும் 562
எங்கள்பால் மதிப்பு மிக்கோர் எமக்குமன் னாரின் மீது சங்கை சால் உறவும் உண்டு சக்தியில் மிக்கோ ராவர் உங்கள்பால் வரவு கொள்ள உறுதிகொண் டுள்ளார் வேறு எங்கணும் போகார் நீங்கள் எமக்கென்ன உறுதி சொல்வீர் 563
முற்றிலும் அறிவீர் நீங்கள் முஹம்மதை அழைத்துச் சென்றால் பற்றிட வாகுந் துன்பம் பெரும்பழி பொறுப்பு எல்லாம் உற்றிடும் பகைமை வென்று உயிர்காக்க இயலு வீரேல் சற்குணர் வரவு முற்றும் சாத்தியம் என்றுங் கூறி 564
இயலுமென் றாகில் மட்டும் இயம்புவீர் எ.தென் றாலுந் துயர்வரும் அவருக் கென்றால் சொல்லுங்கள் தவிர்ப்போம் என்ன வயங்கொள வந்த பேர்கள் வார்த்தையில் உரமுங் கூட்டி பயங்கொளல் வேண்டாம் நாங்கள் புரிந்துதான் வந்தோம் என்றார் 565
இன்னல்கள் இடுக்கண் எம்மால் ஏற்றிடும் வகைகள் கூடும் துன்பங்கள் துயரங் கூடத் தோன்றிடும் அறிவோம் நாங்கள் என்னவந் துற்ற போதும் இறைவனின் தூத ரைநாம் கண்ணெனக் காப்போம் என்றார் குரலொன்றி மொழிந்திட் டாரே 566
அண்ணலார் தம்மை நோக்கி அவருரை செய்வார் உங்கள் எண்ணந்தான் என்ன வென்றே இயம்புக நிபந்த னைகள் உண்டெனில் அதற்கும் நாங்கள் உடன்பட்டுப் பணிகள் செய்வோம் திண்ணமி தென்று ரைத்தார் சத்திய வாக்காம் அ.தே. 567
வதனத்தில் முறுவ லொன்று விரவிடப் பிரசா ரத்தில் உதவிகள் செய்வீ ராமோ உங்கள்தம் மனைவி மார்கள் எதுவிதத் துயரு மற்று இன்னலில் காப்பீர் போன்றே எதுவந்த போதும் என்னை இசைவீரோ எனவுங் கேட்டார். 568 104 ஜின்னாஹ் வழfபுத்தீன்

திருநபி காவியே
குருதியில் வீரஞ் சேர்ந்த குலத்தினர் நாங்கள் நீங்கள் கருதிட வேண்டாம் ஈறில் கைவிடும் பேர்க ளென்றே பெருமானே வாக்கு ரைத்த வாறுசெய் திடுவோம் என்றே ஒருகுர லாக அன்னார் ஒதினார் நபிம கிழ்ந்தார் 569
கூட்டத்தில் ஒருவர் மட்டும் குறுக்கிட்டு இறைவன் துாதே நாட்டத்தில் வெற்றி பெற்று நீங்களே வெற்றி கொண்டால் காட்டிடுங் கருணை மாற்றிக் கொளல்சாலு மாமே யென்ன காட்டினார் நகைப்பூ வொன்றைக் கருத்தொடு நபிக ளாரே 570
என்னுடைக் குருதி யுன்றன் இரத்தமும் இன்றி ருந்தே ஒன்றுதான் குறிக்கோள் கூட ஒன்றேதான் நீங்க ளெல்லாம். என்னுடைத் தாவீர் நானும் என்றுமும் முடைத்தோ னாவேன் தன்னுடைப் பகைவர் நண்பர் சேருவார் மற்ற வர்க்கே 571
மேற்சொன்ன வாறு தூதர் மொழிந்ததும் யத்ரீப் மக்கள் சாற்றுவார் உறுதி யன்னார் திருக்கரம் பற்றி முற்றும் ஏற்றனர் பொறுப்பு என்றும் இணைந்தொன்றி வாழ்வ தற்காய் கொற்றவன் அருளும் அந்தக் கணத்தினில் ஒன்றா கிற்றே 572
பரிசென்ன கிடைக்கும் எங்கள் பொறுப்பினில் நாங்கள் முற்றும் இருப்பினில் என்றாங் குற்ற ஒருவர்தம் வினாத்தொடுக்க சுருக்கமாய் நபிகள் நாதர் “சுவர்க்கமே” என்றார் கேட்டோர் கருக்கலில் சோதி கண்ட களிப்பினிற் றமைம றந்தார் 573
பன்னிரு பேரைத் தேர்ந்து பெருமானார் தன்ப னிக்கு முன்னிலை வகிக்கச் சொன்னார் மார்க்கத்தை யத்ரீப் மக்கள் முன்னின்று உபதே சிக்கும் முக்கிய பணிய தாகும். பின்னொரு நாளில் தானே பொருந்துதல் அறியா தோராய் 574
யதிரீபு மக்க ளோடு இணைந்தொரு ஒப்பந் தத்தை புதிதாகச் செய்தா ரென்று புரிந்திட்ட குறைஷிப் பேர்கள் அதனுண்மை அறிந்து கொள்ள அண்மினார் "அகபா”வுக்கு எதுவுமே அவ்வா றிங்கு இலையெனப் பதில்கொண் டாரே 575
105 ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 67
திருநபி காவியம்
மனத்தொடு மனமொன் றிப்போய் முற்றிய உடன்பாட் டின்பின் தினந்தினம் யத்ரீப் நோக்கிச் சென்றனர் விசுவா சித்தோர் முனைந்திலர் யாருங் கண்காண் முறையினில் வெளியா தற்கு சினங்கொண்ட குறைஷி யர்கள் தீங்கிளைப் பார்க ளென்றே
பன்னூறு பேர்கள் செல்லப் புறப்பட்டார் உமருங் கூட தன்னைப்போர் வீரர் போல தயார்செய்தார் க.பா சென்றார் முன்னிலை வருவீர் என்னை மறித்திடு வோர்கள் யத்தரீப் சென்றிட விளைந்தேன் என்றார் சிம்மம்போற் கர்ஜித் தாரே.
மனைவியை விதவை யாக்கி மக்களை அனாதை யாக்கி தனையென்றன் கைவா ளுக்குத் தானமாய்த் தரவி ரும்பும் முனைப்பெவர்க் கிருக்கு மாமோ முன்வந்து தடுப்பீ ரென்றார் தனித்துமோ சேர்ந்தோ வென்றே சொல்லியே புறப்பட் டாரே
ஒன்றொன்றாய் யத்ரீப் மண்ணில் உறைந்தனர் விசுவா சித்தோர்
ஒன்றினார் நபிக ளோடு உடன்அலி அபூபக் கள்தாம் நன்றன்றோ நாமும் செல்லல் நபியிடம் தோழர் கேட்டார் இன்றல்ல இறைவன் ஆணை ஏற்றதும் செல்வோ மென்றார்
அண்ணலார் பதிலைக் கேட்டு அபூபக்கள் திடமுங் கொண்டார் திண்ணமாய் யத்ரீப் செல்லுந் திட்டமொன் றுண்டா மென்றே பண்ணவன் ஆணை கொண்டே பயணமுந் தொடங்கு மென்று எண்ணினார் பயணத்துக்காய் இருஒட்டை தாயர்செய் தாரே
எண்ணிய வாறு ஒர்நாள் இறைநபி அபூபக் கர்தம் முன்னிலை தோன்றிச் சொல்வார் முதலவன் ஆணை தன்னை என்னையீங் கிருந்து யத்ரீப் ஏகிடப் பணித்தா னென்றார்
576
577
578
579
580
சொன்னவாய் மூடு முன்னே செவிகொண்டார் வார்த்தைக் கூட்டே581
என்னையும் உங்க ளோடே ஏகிடப் பணிப்புண் டாமோ என்னுமஷ் வினாவுக் கெம்மான் இணங்கினன் இறைவன் என்றார் பின்னவர் இல்லம் நோக்கிப் போயினர் இரவைப் போக்க முன்னவன் ஆணை ய..தாம் மாநபி செயலா யிற்றே
582
106 ஜின்னாஹ் ஷரித்தீன்
 

திருரவி காவியம்
இதற்குமேல் முஹம்மத் ஈங்கு இருப்பதோ ஐயம் என்று மிதந்ததோர் சேதி காற்றில் மனங்கொண்டார் அதிர்ச்சி யுற்றார் சுதந்திர ராக எங்கும் சென்றிட விட்டால் ஆங்கும் பதிந்திடும் அவர்தம் மார்க்கம் பொங்கினார் குறைவழிப் பேர்கள் 583
எப்படி எனினும் முஹம்மத் இலாதொழித் திடுதல் வேண்டி ஒப்பினார் ஒன்று கூடி ஒருவழி ஆய்ந்து கொண்டார் கப்பிய இரவின் கண்நாம் குடும்பத்திற் கொரு வராக தப்பாது ஒன்று சேர்வோம் சூழ்ந்தவர் இல்லஞ் சேர்வோம் 584
சேர்ந்தொன்றிக் காத்தி ருந்து சூரியன் உதித்த வேளை வேரொடு சாய்ப்போம் ஆவி வாங்குவோம் எனத்து னிந்தோர் காரினில் பெண்கள் வாழும் குடிசைக்குள் செல்வ தென்றும் நேரிலை என்னுங் கொள்கை நமக்குண்டு என்ப தாலே 585
திட்டத்துக் கமைய அன்றே சேர்ந்தனர் நபிகள் இல்லம் வட்டமாய்ச் சுற்றிக் காத்தார் விண்மணி தோன்று மட்டும் திட்டமாய் முஹம்மத் வாழ்வு தீர்ந்திடும் இன்றோ டென்றே கட்டினர் கோட்டை உள்ளம் குதுகலித் திட்டா ரன்றோ 586
சூழ்ச்சியில் வெற்றி கண்ட திடத்தொடு காத்தி ருந்தோர் சூழ்ச்சியை முறிய டிக்கத் திடங்கொண்டார் தனித்தோன் அன்னார் சூழ்ச்சியில் பிறரை வெல்லும் சூழ்ச்சிக்குச் சொந்த மானோன் சூழ்ச்சியில் வென்றான் நாதர் தப்பிடத் துணையுஞ் செய்தான் 587
கொன்றிடத் திட்ட மொன்று கொண்டனர் குறைவழிக் கூட்டம் அன்றிராப் போழ்தே நீங்கள் அகலுங்கள் மக்கா விட்டென்(று) ஒன்றிடச் செய்தான் உள்ளம் உடன்'வஹி’ மூலம் வல்லோன் நன்றென்று நபிகள் ஆணை நிறைவேற்றும் முடிவு கொண்டார். 588
தான்துயில் கொள்ளும் பாயில் தூங்கிட "அலி’க்குக் கூறி தான்கொண்ட அடைக்க லங்கள் தமையுரி யோர்க்குச் சேர்ந்தே நான்செல்லும் யத்ரீப் நோக்கி நீங்களும் வருக வென்றார் வான்சென்று மீண்ட எங்கள் வள்ளலார் நபிகள் நாதர் 589
107 ஜின்னாஹ் விழரித்தீன்

Page 68
திருநபி காவியம்
காத்திருந் தோர்கள் கண்கள் கணமெனும் இமைக்கா தூன்றிப் பார்த்திருந் தனவே காலைப் பரிதியின் வரவு மட்டும் காத்தவர் காத்த வாறே காத்திருந் தார்கள் கண்கள் பார்த்தவா றிருக்கும் போழ்தே பதிவிடுத் தகன்றார் தூதர் 590
தோன்றினான் இரவி தன்னைச் சுற்றிய துகில்க ளைந்தே வேண்டிநின் றோர்கள் வாளை வரித்தனர் கரங்கள் தம்மில் ஆண்டவன் தூத ரென்போர் அழிந்தனர் என்றே கூவித் தாண்டினர் க்தவின் தாழ்கள் தெறித்திட அலியைக் கண்டார் 591
கண்டனர் அலியைக் கோபக் கனல்விழி யுமிழ எங்கு உண்டாருன் அண்ணன் என்றே உறுத்திட அவரு ரைப்பார் விண்டலப் பதிகொண் டோனே விபரங்கள் அறிவான் நீங்கள் கண்டிலை என்றால் சுற்றிக் காத்ததேன் கோட்டை விட்டீர் 592
அறிந்திலை நானும் என்ற அலிசொலைக் செவிகொண் டோர்கள் வெறிகொண்டார் வீடு முற்றாய் வலுவினில் தேட லுற்றார் திறந்திடாத் தாழ்ப்பாள் கண்கள் திறந்தவெம் பார்வை தாண்டி அறிந்திடா வாறு சென்ற அதிசயங் கண்டார் சேர்ந்தோர் 593
சுற்றிநின் றோர்கள் பார்வை சூன்யத் தூள்நின் றாடக் கொற்றவன் காத்தான் நாதர் கடிதனில் அகன்றார் தம்மின் நற்றுணை அபூபக் கள்இல் நோக்கியே அவரோ டொன்றிப் பற்றினார் யத்ரீப் போகும் பாதையிற் பதம்ப தித்தே. 594
இரவோடு இரவாய்க் கால்கள் இளைப்பாற மாட்டா வாறு இருவரும் நடந்தார் மக்கா எல்லையைத் தாண்ட வென்றே மருவிய "தெளர்'என் கான மலைக்குகை கண்டே நெஞ்சம் கருதினார் அதனுட் புக்கக் கதிரவன் தோன்றி னானே. 595
எங்குசென் றுற்றார் முஹம்மத் எனளங்குந் தேடித் தேடி செங்கதிர் தோன்றி மாலைத் திசையண்டு மட்டும் ஓடிப் பங்கமுற் றாரே யன்றிப் போக்கிடங் காண்பா ரற்றார் துங்கநந் நபிதம் தோழர் துணையொடு "தெளர்’உற் றாரே 596 108 ஜின்னாஹ் ஷரித்தீன்

திருநபி காவியே
மலைக்குகை தன்னி னுள்ளே மாற்றார்கண் காணா வாறு கலங்கிய உள்ளத் தோடு கவல்மிகுந் திருக்கும் வேளை நிலமதிர் ஒலியைக் கேட்டர் நாடிடுங் குளம்பின் ஒசை பலபடச் செவிகொள் ளாதே பதிந்திடப் பயங்கொண் டாரே 597
ஒட்டகைப் பரிசில் கிட்டும் உவப்பினால் கூடிக் கூடி திட்டமிட் டொவ்வோர் திக்கில் சென்றனர் கூட்ட மொன்று கிட்டவந் துற்ற தென்றே கருதினார் ஒருவர் கண்ணிற் பட்டாலும் போதும் நம்மைப் பிடிப்பது சுலபம் என்றே 598
திருநபி தம்மை நோக்கித் தோளரும் உரைப்பார் நாமோ இருவரே இங்குற் றோம்நம் எதிரிகள் அதிகம் என்றார் மருவிய அடைய லார்தம் மிகையறிந் திட்ட போதும் திருநபி யுரைப்பார் வல்லோன் தன்னொடு மூவ ரென்றே 599
இறைவனின் துணையை எண்ணி இருந்தவவ் வேளை யாங்கே அறிந்திடா வாறு மற்றோர் அதிசயம் நடந்த தன்றோ உறைகுகை வாயில் தன்னை உண்டுசெய் வலையால் முற்றும் மறித்ததோர் சிலந்தி கண்ணில் மண்தூவுஞ் செயலா யிற்றே 600
போயுள்ளே பார்ப்போ மென்று புகன்றனன் ஒருவன் மற்றோன் போயென்ன பார்ப்ப தாங்கே பார்வையில் சிலந்திப் பின்னல் வேய்ந்துபல் லாண்டாய்ப் போல வடிவமுற் றிருத்தல் காண்பாய் போய்வேறு திக்கில் அந்தப் பேரினைப் பார்ப்போ மென்றான். 601
வந்தவர் மீண்டார் தோழர் வரித்தனர் மீண்டும் மூச்சை எந்திரம் போலி ருந்த இதயமும் துடிப்பை நாடும் குந்தகம் எதுவு மற்றுக் காத்தனன் இறைவன் என்றே வந்தனை செய்தார் பின்னர் வருவினை அறிந்தி டாதார். 602
குகையினுள் நுழையு முன்னர் கொண்டுள குறைகள் தீர்க்கும் வகையினில் அபூபக்க கள்முன் விரைந்தனர் தூய்மை செய்தார் இகபரத் தரசன் தூதர் இடரறத் தங்க வென்னும் கருத்தினை மனமிருத்திக் கொண்டார்பின் துயருற் றாரே. 603
109 ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 69
திருரவி காவியே
நிலத்தினில் கல்லை முள்ளை நீக்கினார் சுவரின் பொந்து பலவற்றின் வாய்கள் மூடிப் பூச்சிபொட் டுள்வ ராதே நலங்காத்து நபிக ளாரை நித்திரைக் கழைத்தார் சோர்ந்த நிலங்காக்க உதித்த எம்மான் நண்பர்பின் உள்நு ழைந்தார் 604
கால்நடை யாக வந்து களைப்புற்ற நபிக ளைத்தம் கால்மடித் தணையாய்க் கொண்டு கூறினார் துயில்க வென்றே காலொன்று மூடி டாத குகைப்பொந்திற் பதித்தி ருக்க வாலறி வன்றன் தூதர் வரித்தனர் கண்ண யர்ந்தார் 605
கால்பதித் திருந்த பொந்தில் கருநாகம் ஒன்றி ருந்து கால்தீண்ட விடத்தின் வேகங் கூடினும் தாங்கி நின்றார் சாலாது கால சைத்தால் துயில்கலைந் திடுமென் றஞ்சிச் சீலராம் அபூபக் கர்தம் தூயநல் லுளந்தா னென்னே 606
உடலெல்லாம் விடமுற் றந்த உள்வலி தாங்கொ ணாது விடுபட்ட கண்ணிர் நாதர் வதனத்தில் வீழ முற்றும் விடுபட்ட துயிலால் கண்கள் விரிந்தன நிலைய ஹிந்தார் உடனுமிழ் நீரைத் தொட்டு உபாதையைப் போக்கி னாரே 607
பசிபோக்க எதுவு மற்ற பொதும்பினில் மூன்று நாட்கள் வசித்தனர் அபூபக் கர்தம் வேலையாள் மூலம் பாலைப் புசித்திடப் பெற்றார் போகும் பயணத்தின் பொருட்டு மிக்க உசிதமாய் இரண்டு நல்ல ஒட்டையும் பெற்றிட் டாரே 608
செல்வழி அறிந்த "அரீகக்' தனைத்துணை யாகக் கொண்டு கல்பல கடந்தார் வெய்யோன் காய்ந்தனன் கனற்பி ளம்பாய் இல்லையோ இடமொன் றெங்கும் இளைப்பாறிச் செல்ல வென்றே சொல்லொணா வெயிலின் கோரம் தேடிடச் செய்த தன்றோ. 609
நிழல்மரம் ஒன்றைக் கண்டார் நினைந்தவா றதன்கண் சென்று அழல்நீங்கி உடலம் ஆறி ஆறினர் பசியும் பின்னர் வழிதொடர்ந் தார்கள் பின்னால் வருமொரு பரியைக் கண்டார் விழிபதித் தார்கள் யாரோ விரைகிறார் தம்பால் என்றே 610 110 ஜின்னாஹ் வழfபுத்தீன்

திருநபி காவியம்
மக்கமா நகரில் எங்கும் முஹம்மதர் தம்மைத் தேடித் தக்கதோர் முடிவு காணார் செய்தனர் முரசம் யதார்தான் இக்கணம் சென்று அன்னார் இருப்பிடம் அறிந்து மீட்டால் மிக்கநல் நூறு ஒட்டை மறுப்பின்றிப் பெறுவர் என்றே 611
பேராசை கொண்ட பேர்கள் பலர்துணிந் திட்ட போதும் தூரவெங் கானம் நோக்கிச் சென்றிட்டார் தமக்குள் தாமே ஊரெலாந் தேடி னார்கள் ஒருவர்தம் பரியை யத்ரீப் ஊர்செல்லும் பாதை நோக்கி ஏகிடப் பணித்திட் டாரே 612
பெருமானார் செல்லும் பாதை புந்தியில் துலங்கத் தம்மின் பரியினை வளியின் வேகப் பாங்கினில் செலுத்திச் சென்றார் மருவிவந் துற்ற பேரை முஹம்மதர் அருகில் கண்டார் "சுராகா”வே ஒட்ட கைக்கு தன்மனம் இழந்த பேராம் 613
அண்டிவந் துற்றாள் வாளை உருவினார் அவரைப் போன்றே கொண்டதோ வெறியக் காலை குதிரையும் தன்மீ துற்ற வண்டரை எ.'றி மண்ணில் வீழ்த்திட முயன்ற தென்றுங் கொண்டிலை அ.'தவ் வாறே குறிதனில் சுராகா மீண்டார் 614
மீண்டுமோர் முறைமு யன்றும் முன்னடி வைக்கா தேபின் மீண்டது புரவி தன்மேல் மின்னல்பாய்ந் திட்ட வாறே சீண்டினார் வாட்பு டத்தால் சினத்துமுன் செல்லு மென்றே வேண்டாத வினையாய்த் தூக்கி வீசிட மண்பு ரண்டார் 615
நிலத்தினில் வீழ்ந்த சுராகா நிலைதடு மாறிப் பாதம் நிலத்தினில் ஊன்றத் தன்னை நிதானிக்கும் வேளை தன்னுள் பலத்தினை இழந்தார் போன்றே பதறினார் நடுந டுங்கி மலைத்தெதிர் நின்ற பேரை மன்றாடி வேண்ட லானார். 616
தன்னையோர் சக்தி முட்டித் தள்ளிய வாறுந் தன்னுள் மின்னலாய் ஏதோ வொன்று மருவியாட் கொண்டாற் போன்றுந் தன்மையில் தாழ்ப னிந்தார் திருத்துாதர் தமையி ரந்தார் வன்சாவு வருமுன் அ.தே வழியென உறுதி பூண்டே 617 111 ஜின்னாஹ் இழரித்தீன்

Page 70
திருநபி காவியம்
இரங்கினார் நபிகள் நாதர் இருகரம் பற்றி உம்மேல் இரங்கினேன் இறைவன் காத்தான் எனும்வாறு முறுவல் செய்தே "வருநாளில் பார சீக வேந்தனின் பொற்காப் புன்னகை வரும்” எனக் கூறித் தங்கள் வழிபற்றித் தொடர லானார் 618
தன்வழிப் பயணந் தன்னில் திரும்பிய சுராகா தேடி முன்வரும் பேருக் கெல்லாம் மொழிந்தனர் வெகுதூ ரம்நான் சென்றுதான் திரும்பு கின்றேன் சென்றிலை இம்மார்க் கத்தில் ஒன்றுக மக்கா என்றே உடன்மற்றோர் திரும்பி னாரே 619
கூபாவை வந்த டைந்தார் குதுகலங் கொண்டார் மக்கள் தீபங்கள் ஒளிர்ந்த தொப்பத் தேக்கினார் விழிகள் நாதர் சோபையில் மயங்க வாய்கள் சோபனஞ் சொல்லுந் தம்மைக் காபந்து செய்ய வந்த கோமானே வருக வென்றார். 620
மூன்றுநாள் முழுமை யாக மக்களின் அன்பில் தோய்ந்து தோன்றாது நிலைத்து வாழும் திவ்வியன் பேரில் பள்ளி தோற்றினார் நபிகள் அ.தே தொழுகைக்கென் றாக இஸ்லாம் தோற்றிய முதன்மைக் கூடம் சரித்திரப் பதிவு கொள்ளும் 621
வெள்ளியின் காலைப் போழ்தில் வள்ளலார் மதீனா நோக்கி உள்ளினர் செல்லக்கூட ஒன்றினார் தோழர் தாமும் தள்ளியோர் வெளியிற் கூடிச் சேர்ந்திருந் தோர்க ளோடே வெள்ளியின் குத்பா நோற்றார் வரலாற்றில் முதன்மை அ.தே 622
நூறுபேர் அளவில் அன்று நோற்றனர் தொழுகை எம்மான் ஏறினார் "கஸ்வா' என்னும் ஒட்டகை தன்னில் மற்றோர் கூறிரண் டாகிப் பக்கம் காவலர் போன்று சென்றார் கூறிய சபதம் ஒன்றைக் கருத்தினிற் கொண்டிட் டாரே 623
மக்காவில் ஒர்கால் அப்பாஸ் மாநபிச் சிறிய தந்தை தக்கவா றுறுதியொன்று தருகவென் றுரைத்த போழ்து எக்குறை தாமு மின்றி இன்னலும் இன்றிக் காக்கும் பக்குவம் கொண்டோ மென்ற பதிலுக்கு நிகரா யிற்றே 624
112 ஜின்னாஹ் ஷரித்தீன்

திருரவி காவியம்
மக்கமா நகள்வி டுத்து மாநபி வந்தா ரென்றே திக்கெலாம் பேச்சு யத்ரீப் திருவிழா கண்டாற் போன்றாம் எக்கணம் வருவா ரென்றே ஏங்கினார் அனைத்துப் பேரும் புக்கிடக் கண்டா ரில்லை பலநாட்கள் ஊர்ந்த தன்றோ 625
வருவழி தன்னில் கண்கள் வைத்தெதிர் பார்த்தி ருந்தார் ஒருதினம் இரண்டு ஒட்டை ஊர்ந்திடக் கண்ணுற் றார்கள் பெருந்திர ளாகக் கூடிப் போனார்நல் வரவு கூற இருந்திலை எவரும் எஞ்சி யத்ரீபு நகரி லம்மா. 626
கண்டனர் நபிகள் கோனைக் களிப்பினில் திளைத்தார் ஒன்றி அண்டமே அதிரச் சொன்னார் "அல்லாஹ" அக்பர்'என்றே பெண்டிர்கள் குரவை காதைப் பிளந்தன நபிக ளாரை அண்டினர் அனைத்துப் பேரும் அருட்திரு வதனங் கண்டார் 627
சுட்டிடும் வெய்யோன் அன்று சுடர்க்கரம் ஒடுக்கி வான்பூக் கொட்டிடும் வாறு காய்ந்தான் காற்றுந்தன் பங்கிங் காக பட்டனள் மேனி தென்றற் பாங்கினில் வீறு குன்றித் திட்டமாய் அதுஎம் மானைச் சங்கிக்கும் வாகா லம்மா 628
ஓடுவார் கொடிபி டித்து ஒருவர்தன் தலைப்பா கையால் பாடுவார் ஆண்பெண் கூடிப் "பயகம்பர்’ வருக வென்றே ஆடுவார் சிறுவர் மூத்தோர் அண்மிக்கை கோத்து வாழ்ந்த கூடுமாங் கின்பங் கொள்ளை கூறிடக் கூடு மாமோ 629
மகிழ்ச்சியின் ஆரவாரம் மீதுற நபிகள் நாதர் புகுந்தனர் யத்ரீப் எல்லை பதித்தனர் பதமம் மண்ணில் செகத்தினுக் கருளாய் வந்தோர் தம்மினை உயர்வு செய்ய முகிழ்ந்தது புதிய நாமம் "மதீனத்துந் நபி'யென் றாக 630
நபிகளின் வருகை யாலே நிமலனின் அருளுங் கொள்ளும் நபிகளார் நகர மென்று நாமங்கொள் பூமி பின்னர் அபயந்தந் துதவிற் றேகன் அடிதொழும் மக்காப் பேர்க்கு அபயனின் மார்க்கம் ஆங்கு ஆல்போல நிலையா கிற்றே 631 113 ஜின்னாஷ் லூரித்தீன்

Page 71
திருரவி காவியே
செருக்களம் மீதில் வெற்றிச் சாகசம் புரிந்து வாகை பொருந்திய மார்பி னர்போல் படைத்தருள் செய்வோன் தூதர் ஒருக்கணித் திருந்தார் "கஸ்வா' ஒட்டகை தம்மில் நீண்ட தெருக்களின் ஒர மெல்லாம் சனத்திரள் காண்கொ ளாதே. 632
வருகவெம் இல்லம் எங்கள் வீட்டின்பால் வருக ஒன்றி வருகவெம் பதிக்கு நம்மின் வதிமனை வருக அன்பாய் வருகவெம் குடிசை வாழும் கொட்டில்பால் வருக என்றே வருகைக்காய் வேண்டி னார்தம் வசிப்பிட வசதிக் கேற்பாய் 633
எவரில்லஞ் சென்று தங்க எவரில்லந் தவிர்க்க உள்ளோர் அவரவர்க் கேற்ற வாறு அழைப்பினை விடுத்தார் ஈற்றில் உவந்தெங்கு சென்று ஒட்டை ஒடுங்குமோ அங்க என்றே தவிர்த்தனர் கடிவா ளத்தை தன்வழி சென்ற த.தே. 634
எதிர்பார்த்தார் அனைத்துப் பேரும் ஏந்தலர் ஒட்டை தம்மில் மிதிதளர்ந் தொன்று மென்றே முடிவினில் “கஸ்வா' போயோர் பதிமுகத் தமர வீட்டார் பறந்தோடி உபச ரித்தார் மதிமுகத் தழகள் அந்த மனையுள்ளே புக்கி ட்டாரே 635
பள்ளியொன் றமைக்கு மட்டும் பெருமானார் அவ்வில் தன்னில் பள்ளிகொண் டிருந்தார் வீட்டார் பொறுப்பொடு உபசரித்தார் உள்ளதில் பெரும்பா கத்தை உவந்துதம் பசிம றந்து வள்ளலார் தமக்க ளித்து வயிற்றழல் தாங்கி னாரே 636
பள்ளியொன் றமைத்தார் ஒட்டை பதிந்தவவ் விடத்தைத் தேர்ந்து கொள்முதல் செய்தார் சொந்தம் கொண்டவர் அநாதை ஈர்பேர் வள்ளலார் தமக்குக் கைப்பொன் வேண்டாது இனாமாய்க் கொள்ள உள்ளங்கொண் டார்கள் எம்மான் உடன்பணந் தந்து பெற்றார் 637 பள்ளிக்குச் சுவர்கள் சுற்றிப் பச்சைக்கல் ஈத்தங் கூரை உள்நிலம் பருக்கைக் கற்கள் ஒன்றி ஈர்சிறு அறைகள் பள்ளியைக் கட்டும் எல்லாப் பணியிலும் பங்கு கொண்டு வள்ளலார் உதவி னார்கள் வரலாற்றுப் பதிவாம் அ.தே. 638
114 ஜின்னாஹ் ஷரித்தீன்
 

திருரவி காவியம்
தாமுந்தம் மனைவி மாபெம் சேர்ந்தொன்றி வாழ வேண்டித் தாமாந்த அறைகள் வாயில் தாழ்ப்பாளோ கதவோ இல்லை பூமான்எம் நபிகள் 'ஸெளதா’ புதுமணப் பெண்ணாம் ஆய்வடிா சேமமாய் வாழ்ந்தார் ஊரார் துணைக்கரம் நீட்டி னாரே, 639
அகதிகள் பிரச்சினை
ஒன்றிரண் டென்று அ.து ஒருநூறு இருநூ றாகி ஒன்றினர் ஈமான் கொண்டோர் உறுவினைக் கஞ்சி மக்கா நன்றாகத் தொடர்ந்து வாழ நபிவழி மதீனா சென்றால் நன்றென்று வருவோர் சேர்க்கை நிதம்நிதம் அதிக ரிக்கும் 640
குறையற்று எலாமுங் கொண்டு கவலின்றி வாழ்ந்த மக்கள் வறுமையின் பிடியிற் சிக்கி வாடினர் ஊணும் அற்றே அறுசுவை உண்டி கொண்டோர் அறவழி கொண்ட தாலே உறையவும் இல்லில் லாது ஊரெலாம் அலைந்தா ரன்றோ 641
அலங்கார உடைய னிந்தே அழகுறத் திரிந்தோ ரின்று இலையொரு மாற்று ஆடை இருப்பது ஒன்றே என்னும் நிலைமைக்குள் ளாதல் கண்டு நிமலனின் தூதர் நெஞ்சு கலங்கினார் ஈடு செய்யக் கூடிய வழிதே ராதே. 642
ஆத்மீகத் தலைமை யொடு அரசியல் முதன்மை தாங்கும் பாத்தியத் திரந்தார் மக்காப் பதிதுறந் துற்ற பேரைக் காத்திடும் கடப்பா டென்மேல் கொண்டதென் றுணர்வு கொண்டார் நேத்திரங் கூம்பார் அன்னார் நினைவொன்றே நினைவிற் கொண்டார் 643
என்னதான் செய்வ திந்த இன்னலில் இருந்து மீட்க என்றிறை தூதர் எண்ணி ஏற்றதோர் முடிவுங் கொண்டார் முன்னிலை அழைத்தார் மக்கா மதீனத்து மாந்தர் தம்மை அன்னாரும் ஓரிடத்தில் அண்ணல்முன் தோன்றி னாரே. 644
115 ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 72
திருரவி காவியே
வந்தவர் அனைத்துப் பெரும் வள்ளலார் வதனம் நோக்கி வந்திடச் செய்த தென்ன விபரமும் அறிய வேண்ட சொந்தமென் றாவீர் நீங்கள் சகோதரர் ஒன்றுக் கொன்றாய் இந்தநற் கணத்தி ருந்தே எண்ணுங்கள் என்றே கூறி 645
மக்காவில் இருந்து வந்த முஸ்லீமை மதீனா முஸ்லிம் தக்கவா றுபச ரித்துத் தனதுடன் பிறப்பா யெண்ணி விக்கினத் திருந்து காக்கும் வகைகொள்ள வேண்டு மென்றார் மக்கதோர் மனங்கு எளிர்ந்தார் மதினத்தோர் சபதங் கேட்டே 646
உத்தம நபியே இன்றே உங்களின் ஆணை கொண்டோம் சத்தியம் நாங்கள் எங்கள் சகோதரர் தம்மைக் காப்போம் எத்துணை துயரும் அண்டா(து) எம்பொருள் சொத்தில் பாதி ஒத்தவர்க் களிப்போம் என்றே ஓங்கிட உரைத்திட் டாரே. 647
சொன்னவா றகதிப் பேர்க்குத் தந்தனர் சொத்தில் பாதி பின்னையோர் போழ்து யூதர் புறத்திருந் தேற்ற வற்றை அண்ணலார் அவர்க்கே தந்தார் அகதிகள் துன்பந் தீர்க்க முன்னைநீர் தந்த வற்றை மீட்டிடப் பணித்தார் கொள்ளார் 648
கிடைத்தவை அனைத்தும் அன்னார் கொள்ளட்டும் எங்கள் மூலம் கிடைத்தும் அவர்க்கே மீண்டுங் கொள்ளநாம் இணங்கோம் என்றார் கிடைத்தது மீண்டும் பஹற்றைன் கைக்கொண்ட போது செல்வம் கிடைத்தவை கைதந் தோர்க்காம் கூறினார் நபிக ளாரே 649
மதீனத்து மக்கள் சொல்வார் மாநபி தம்மை நோக்கி இதில்பாதி அகதிகட்கு அளிப்பதென் றாலே நாமும் ஒதுக்கிடும் பாதி தன்னை ஒப்புவோம் என்றே கேட்டு நிதித்திரள் இரண்டு கூறாய் நபிபிரித் தளித்திட் டார்கள். 650
துணிக்கடை வியாபா ரத்தைச் செய்தார்கள் அபூபக் கள்ஓர் கனின்கடை வைத்(து) உத் மானுங் காலத்தை ஒட்ட லானார் வணிகமே உமருஞ் செய்தார் வகையிலார் பலங்கொண் டோர்கள் துணைத்தொழில் செய்தார் வாழ்வைத் தக்கவைத் திடும்பாங் காமே 651
116 ஜின்னாஹ் ஷரித்தீன்
 

திருரவி காவியம்
கிடைத்திடும் இலாபந் தன்னில் கொண்டதம் தேவை நீங்க அடுத்ததை இல்லார்க் காக அளித்தனர் பொதுநி திக்காய் அடுத்தவர் பசியைப் போக்க அண்ணலார் ஏவுங் காலை கொடுத்தனர் உணவை மக்கள் கைநனைத் திடாது காய்ந்தே. 652
பள்ளியின் ஒரும ருங்கில் பணிவிடை செய்வேர் தங்கிக் கொள்ளவென் றமைத்த பாகங் குடிகொண்டார் பணிசெய் வோர்கள் உள்ளவர் யாரு மற்றோர் உறவினர் குடும்பம் என்றே பள்ளியே தஞ்சம் தெய்வப் பணியொன்றே கருத்தாய்க் கொண்டோர் 653
உண்டிட உணவு யாரும் உவந்தளித் தாலே ஆகும். கொண்டனர் பசியே போக்கக் கிடைப்பதில் திருப்தி காண்பார் எண்டிசைப் புகழ்கொள் நாதர் ஏற்றிடும் பரிசில் எல்லாங் கொண்டனர் அவரே எம்மான் கனல்புனல் ஆற்றும் பாங்காம், 654
கூடீடுத் குொழுகையும் குொழுகைக்கான அழைப்பும்
நினைத்தவர் நினைத்த வேளை நேரத்துக்(கு) அடங்க மாட்டார் தனித்தனி தொழுதார் பற்றி சேர்ந்தொன்றித் தொழுதா ரில்லை முனைந்தார்கள் நபிகள் நாதர் முன்னின்று ஐந்து வேளை தனியோனைக் கூட்டாய் ஒன்றித் தொழுதிடும் ஒழுங்கைப் பேண 655
தினம்ஐந்து வேளை ஒன்றித் தொழுதிட ஒன்று கூட்ட எனவழி செய்வ தென்று எண்ணினார் தோழ ரோடே மனமொன்றிப் பேசி ஏற்ற முடிவொன்றைக் கண்டா ரட்து தினமைந்து வேளை'அதானைச் சொல்லுதல் என்ப தாகும். 656
அல்லாஹற்வே பெரியோன் மிக்க அல்லாஹற்வே பெரியோன் என்று சொல்லுதல் முறைகள் நான்கு தொடர்ந்துபின் வணங்கத் தக்கோன் அல்லாஹற்வே வேறொன் றில்லை அவன்தூதர் முஹம்ம தென்று சொல்லுதல் முறையி ரண்டு தொழவாரீர் முறையி ரண்டாம். 657
117 ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 73
திருநபி காவியே
வெற்றிகொண் டிடவா ரீர்கள் வேண்டுதல் முறையி ரண்டாம் உறக்கத்தில் தொழுகை மேலாம் எனக்காலைத் தொழுகை மட்டும் முறையிரு வேளை மீண்டும் மொழிந்திட வேண்டும் முன்போல் பெரியவன் இறைவன் முஹம்மத் பண்ணவன் தூத ரென்றே. 658
உமரவர் கனவில் கண்டார் உரைமொழி அதானுக் கென்றே சமமாக மற்று மோர்பேர் “மனா’விலும் கண்டிட் டாரே அமைந்தது அதுவே வேளை ஐந்திலும் உரைக்கப் பூமி தமைஇறை அழிக்கு மட்டும் தொடர்ந்திடும் மாறா வாறே 659
கூட்டத்தில் ஒருவர் "அதானை'க் கூறிடு வழிமொ ழிந்தார் கேட்டதை நபிகள் நாதர் கருத்தினில் கோத்து ஏற்று நாட்டமுற் றார்கள் அன்றே நவின்றிட “பிலாலை’ நோக்கிக் கேட்டார்கள் உரைப்பீ ரென்றே குரல்வளம் இருந்த தாலே 660
சுற்றிடும் உலகில் ஒவ்வோர் திக்கிலும் ஐந்து வேளை சொற்படும் தொடர்ந்து அ.தால் துளிப்பொழு தில்லை அதானின் பொற்புறு ஒசை இன்றிப் பிறிதுண்டோ இதுபோல் வேறு அற்புதம் உலகத் தி.து அறுதிநாள் மட்டு மாமே. 661
யூதர்களோடு உடன்படிக்கை
பலம்மிக்க சக்தி யாக பயன்கொள மதினா வேண்டி நலம்பெறுந் திட்ட மொன்றை நபிகளார் மனத்தில் ஏற்று வலுவினில் யூதரோடு வரித்தனர் உடன்பா டொன்றை இலையவர் மறுத்தார் நெஞ்சுள் இருந்ததோ வேறொன் றாமே 662
நல்லெண்ணங் கொண்டி ருந்தார் யூதர்கள் நபிகள் மீது நல்வர வேற்புந் தந்தார் நபியத்ரீப் வந்த போழ்து பல்லினத் தோர்கள் வாழும் பெரும்புலம் அறபு மண்ணில் வல்லவோர் யூத ஆட்சி வரித்திடும் நோக்கி னோடே. 663
118 ஜின்னாஹ் விழரித்தீன்

திருரவி காவியே
உதவுவார் அதற்கு முஹம்மத் ஒருபெருஞ் சக்தி யாகப் புதியதோர் மார்க்கத் தோடு பரிணாமம் பெறுவ தாலே சதியுளத் திருந்திட் டாலுந் தோற்றிடா வாறு ஏற்று உதவிட உடன்பட் டார்கள் ஒப்பந்தம் உருவா கிற்றே. 664
யூதர்தம் வேதத் தோடு யூதரின் தூதர் தம்மை தூதர்எம் முஹம்மத் ஏற்ற தன்மையும் ஜெரூஸ் லத்தை யூதர்போல் நோக்கிச் செய்யும் இறைவழி பாடும் ஏற்க ஏதுவா யமைந்த தொன்றாம் இணைந்திடக் கூட்டுச் சேர 665
வருமாறு ஒப்பந்தத்தில் வரித்தனர் விதிகள் வாழ்வோர் ஒரேநாட்டின் மக்க ளாக ஒப்பிடப் படுவர் தத்தம் விரும்பிய வாறு தெய்வ வழிபாடு செய்ய லாகும் ஒருவருக் கொருவர் மாறா உள்ளன்பு கொள்ளல் வேண்டும். 666
பகைவரின் எதிர்த்து ஒன்றிப் பகைவெல்ல வேண்டும் வேண்டின் வகைப்படும் யுத்தம் அன்றி வரித்திடும் உடன்பா டென்றால் நகத்தொடு தசைபோ லாகி நல்லதோர் முடிவு காண உகத்தலும் வேண்டும் முஸ்லிம் யூதர்கள் தாமென் றாகும் 667
ஒப்பந்தஞ் செய்யு கின்ற யூதர்தம் உரிமை யாவுந் தப்பாது காத்தல் முஸ்லிம் தரத்தினர் கடமை யாகும். ஒப்பிட வேண்டும் அன்னார் உவந்துளோர் மீதும் அ.தே கப்பிய பொறுப்பாம் என்றுங் கொண்டவவ் வுடன்பா டின்னும் 668
மக்கத்துக் குறைவழி யர்க்கு மனமொன்றி உதவல் கூடா தக்கதாம் தண்ட னைகள் தவறிழைத் திடுங்கால் ஒன்றாம் பக்கவெவ் விளைவும் இந்தப் பொருந்துதற் குண்டா குங்கால் தக்கவர் முடிவ செய்யத் திருநபி தனித்தாம் என்றே 669
ஏற்றனர் முழும னத்தாய் யூதர்கள் மதீனா வாழ்வோர் ஏற்றிட வைத்தார் எம்மான் யூதரைப் புறத்தில் வாழ்வோர் முற்றிலும் உடன்பாட் டாலே மாபெருஞ் சக்தி யாக உற்றது மதீனா அந்நாள் உத்தமர் வெற்றி கொண்டார். 670
119 ஜின்னாஹ் வழfத்தீன்

Page 74
திருரவி காவியே
பெருமானார் மதீனா மண்ணைப் பதியெனக் கொள்ளு முன்னர் பெருமதிப் புற்றி ருந்தான் பெயர்அப்துல் லாஹற்இப் னுஉபை பொருந்தினர் மன்ன னாக்கப் பொன்முடி ஒன்றுஞ் செய்தார்
መ )ን 66
பொருந்தியோர் “ஒளஸ்” “கஸ்ராஜ்' எனப்பெயர் கொண்ட கூட்டம் 671
மன்னனாய் முடிகொள் ஞம்நாள் முடுகிய காலத் தேதான் மன்னுல குய்ய வந்த மாநபி மதீனா வந்தார் முன்னுள நிலைமை மாறி முடிசூட்டு விழாவும் நீங்க வன்மனங் கொண்டான்'உபை” தன் வெறுப்பினைப் புதைத்தும் வைத்தான் 672
ஆறாத புண்ணாய் நெஞ்சுள் அடங்கிய வஞ்சத் தோடு கூறினான் பொய்யாய் ஈமான் கொண்டவன் நானும் என்றே வோறக இருந்த தன்னான் விருப்பமும் மண்ணில் இஸ்லாம் ஊன்றாது அழித்த லொன்றே வேறிலை"முனாபிக்” ஆவான் 673
மதீனாவை அடைந்த பின்னர் முஹம்மதர் வளர்ச்சி கண்டு
கொதித்தனர் குறைவழி யர்கள் கடிதமொன்(று) உபைதம் நெஞ்சில் பதித்துடன் செயலுங் கொள்ளும் படிவலி யுறுத்திக் கொண்டோன் சதிசெயத் தூண்டு கோலாய்த் தானது அமைந்த, தன்றே 674
கடிதத்தில் இருந்த சொற்கள் கூறிடில் அடைக்க லம்நீர் கொடுத்துள்ளி எம்ப கைவர் கூடிவாழ்ந் திடவும் பக்கல் கடிதினில் அவரை நீக்கள் கொன்றொழித் திடவோ அன்றி விடுத்தகன் றிடவோ செய்வீர் வீண்பழி கொளாதீர் என்றும் 675
செய்யாது விடிலோ நாங்கள் தொடருவோம் உம்மேல் யுத்தம் - பொய்யாது உமைய பூழித்துப் பெண்டிரைப் பங்கம் செய்வோம் மைவடித் திருந்த சொற்கள் மிகுந்தவோர் உற்சாக த்தை மெய்யாக உபைக்குத் தந்து மக்கள்முன் செல்லச் செய்யும் 676
மக்களின் பேர வைமுன் மண்டினான் உபைதன் கைகள் மக்கத்துக் குறைஷிப் பேரின் மடலொடு விபரஞ் சொன்னான் தக்கதித் தருணந் தான்தன் சூட்சியால் வெல்ல என்றும் அக்கணத் தெண்ணி னான்முன் அருள்நபி தோன்றி னாரே 677 120 ஜின்னாஹ் ஷரிபுத்தீன்

திருநபி காவியம்
அறிந்தனர் குறைஷி யர்தம் அஞ்சலைப் பற்றிச் சேதி பறந்ததோ பதமும் கேட்டுப் 'பயகம்பர் அவைமுன் நின்றார் குறித்தவக் கடிதம் பற்றிக் கூறுவார் அஞ்ச வேண்டாம் வெறுமனே அச்சமூட்டும் வார்த்தைகள் சூழ்ச்சி என்றே 678
பயங்கொண்டால் பணிந்து விட்டால் பேரழி வுண்டு பண்ண தயங்கிடார் நமக்குள் நாமே தோற்றுவோம் அழிவை யூதர் வயப்பட்டார் எம்மினோடு வரும்பகை ஒன்றி வெல்ல புயபலங் கொண்டெ திர்ப்போம் பொருள்உயிர் காப்போ மென்றார் 679
உரம்மிகு வார்த்தை கேட்டு உரம்பெற்றார் மதீனத் தோர்கள் ஒருமன தாக ஏற்றார் உத்தம நபியின் வாக்கை மருவிய வாய்ப்பும் மாறி மாநபி பக்கஞ் சாய சிரங்குனிந் திட்டான் “உபை'தன் சூழ்ச்சியில் தோல்வி கண்டே680
ஈசாநந் நபியை ஏற்றி இறைதூதர் புகழ்வ தோடு ஈசாவுக் கெதிராய் யூதர் இளைத்தது தவறு என்றும் பேசுதல் யூதர் நெஞ்சைப் புண்ணுறச் செய்த தெல்லாம் மாசுறச் செய்ய யூதர் மாறுசெய் திடத்து னிந்தார் 681
யூதர்கள் பலர் இஸ் லாத்தை ஏற்றதும் பொறுக்க மாட்டார் யூதரின் ஆட்சி யொன்றை ஏற்படுத் திடுந்தந் திட்டம் காதொடு போன தாலுங் கவல்கொண்டார் ஒப்பந் தத்தில் மீதுற்ற கடமை தன்னை மறுத்தனர் வழிகெட் டோரே. 682
முன்னர்போல் ஜெரூஸ் லத்தை முகம்நோக்கி தொழுதல் மாறி முன்னவன் ஆணை பற்றி மக்காவின் க.பா நோக்கிச் சென்னியைத் தாழ்த்தும் பாங்குஞ் சகித்திடார் யூதர் எம்மான் தன்னையும் வெறுத்தார் இஸ்லாம் தனைவெறுத் திட்டார் போன்றே 683
மதீனாவில் நடப்ப தெல்லாம் மறுநொடி குறைவழி யர்க்கு அதிவிரை வாகச் சேரும் அறிவிப்போர் யூதர் யுத்தம் மதினாவின் மீது கொண்டால் முழுமையாய் உதவத் தாமும் சதிவலை பின்னி னார்கள் திருத்தூதர் அறியு வாரே. 684
121 ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 75
திருநபி காவியே
இருதலை நாகம் போன்று இருந்தனன் “உபை'முஸ் லிம்கள் பொருந்திய சபையில் தானும் பற்றுடைத் தோனாய்க் காட்டி இருந்தன ராயின் மாற்றார் எற்காதான் போலு மாவான் கருத்தினில் இருந்த தெல்லாங் காபிர்கள் கருத்த தாமே. 685
ரூசியல் முகுன்மை
சூழ்ச்சியும் வஞ்ச னையும் துரோகமும் சதியும் விஞ்சி ஆட்சிசெய் கால மொன்று அண்மிய போது அ.தை வீட்சியின் பாலுற் றேக வேண்டுவ செய்ய எம்மான் ஆட்சியின் தலைவ ராக அறங்காக்கும் பணிமேற் கொண்டார் 686
கருணையின் மறுபி றப்பாய் கண்டநம் நபிகள் நாதர் இரும்பிலுங் கடினமாக எ.கிய இதயங் கொண்டார் வரும்பழி எதையும் வென்று விசுவாசங் கொண்ட பேரைக் கருத்தினில் உன்னி வீரக் கவசமும் மனத்தில் ஏற்றார். 687
இளமையில் அபூதா லிப்பின் இளைஞரோ டொன்று கூடி பழகிய போர்மு றைகள் பார்த்தபோர் இவைக ளெல்லாம் வெளிவரா துள்அ டங்கி வளர்ந்திட்ட போதும் அன்னார் முழுமையும் அமைதி காக்கும் மனிதராய் இருந்தா ரின்றோ. 688
முள்கொண்டே முள்ளை நீக்க முடியுமென் றுணர்ந்த தாலே வள்ளல் போர்த் தந்தி ரத்தின் வழிமுறை கைமேற் கொண்டு உள்ளினர் உளவாள் வைத்தே உறுவன அறிந்து கொள்ள தெள்ளிய சிந்த னைக்குஞ் சோதனை வந்த தம்மா 689
போருக்கென் றாயத் தங்கள் புரிகிறார் குறைஷி யர்கள் வேரொடு இஸ்லாந் தன்னை வன்முறை கொண்ட பூழிக்க சீரிய தகவல் பெற்ற திருத்தூதர் அப்துல் லாஹற்என் பேரது முதன்மை கொண்டு பன்னிரு பேரைக் தேர்ந்தார் 690
122 ஜின்னாஷ் ஷரித்தீன்

திருநபி காவியே
"நக்லா’வில் தங்கி நீங்கள் நடப்பவை அனைத்துந் தேர்ந்து தக்கவா றவ்வப் போது தந்திட வேண்டு மென்ற ஹக்கனின் தூதர் தம்மின் கட்டளை ஏற்றுச் சென்றார் ஒக்காத நிகழ்வு ஒன்று ஒன்றிடப் பிழைத்த த..தே 691
உளவுகொண் டிடச்சென் றோரின் ஒட்டகம் இரண்டு தம்மின் வழிமறந் தெங்கோ செல்ல வழிதேடி இருவர் சென்றார் பழியொன்று எதிர்த்த த.'து பெரும்பொருள் வணிகள் கூட்டம் உளவாளர் தமைப் பிடித்தார் உடன்சேதி பரவிற் றன்றோ 692
அறிந்தனர் அப்துல் லாஹற்தன் அரைவாளைக் கையி லேந்தி உற்றமற் றோரு டன்போய் உறுபழிக் கஞ்சி டாதே சற்றைக்குட் சமர்தொ டுத்தார் தம்மவர் தமையும் மீட்டார் பெற்றனர் கொள்ளைச் செல்வம் பொருளொடு மதீனா சேர்ந்தார் 693
சண்டையிற் கொலையுண் டோரில் "ஹல்ரமி' என்பார் நற்பேர் கொண்டவர் குறைஷி யர்க்குள் கடத்திவந் துள்ள பேரும் கொண்டவர் குடும்ப மேன்மை குலத்தினில் உயர்ந்தோர் மிக்க கண்டனத் துரிய செய்கை கேடுகுழ் நிலைமை யாமே. 694
வெற்றியின் முழக்கத் தோடு வந்தவர் தாம்கொ ணர்ந்த முற்றையும் நபிகள் முன்னே வைத்தனர் நடந்த வற்றை வெற்றியின் மகிழ்வி னோடே மொழிந்தனர் நபிகள் கோமான் சற்றுமப் பக்கம் நோக்கார் சீற்றத்தால் கொதித்தா ரன்றோ 695
கனல்கக்கும் விழிகள் சேர்ந்தே கானவெங் காற்றாம் மூச்சு சினத்தினை இதுபோ லென்றும் தேரிலார் அங்குற் றோர்கள் அணைத்துமே குறைஷிக் கூட்டம் ஆத்திரங் கொள்ளுஞ் செய்கை தினமதோ ரஜபுத் திங்கள் தூயநல் மாத மாகும். 696
புனிதவிம் மாதந் தன்னில் போர்செய்யச் சொன்னே னாநான் எனதுமுன் இவற்றை யெல்லாம் ஏன்வைத்தீர் நோக்கே னென்றார் என்னுடைக் கரமும் பற்றா இங்கிருந் தகற்றும் என்றார் பொன்மனச் செம்மல் உள்ளம் புண்ணுற்றுப் போன தன்றோ 697 123 ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 76
திருநவி காவியம்
இனியென்ன செய்வே னென்று இறைபாற்றன் கைக ளேந்தி புனிதநன் மாதம் யுத்தம் புரிந்திட்ட கார ணத்தால்
இனியவர் பொறுக்க மாட்டார் எதிரிகள் பலங்கொள் வார்கள் தனியனே எனக்கு நல்ல திசைகாட்டு எனவி ரந்தார் 698
சிறப்புற்ற மாதங்களிற் போர் செய்வது பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள் (நீர் கூறும்) அவற்றில் போர்புரிவது பெரும் குற்றமே
ஆனால் அல்லாஹற்வுடைய பாதையைவிட்டும் அவனை ஏற்க மறுப்பதும் நீங்கள் தடுப்பதும் நிராகரிப்பதும் க.பாவுக்கு வரவிடாது தடுப்பதும் அதில் வசிப்போரை அதிலிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹற்வினிடத்தில் அதைவிட மிகப் பெரிய குழப்பங்களாக இருக்கின்றன தவிர
56)5LD
கொலையை விட மிகப் பெரியது (குர்ஆன்)
124 ஜின்னாஹ் இpfபுத்தீன்
 

திருநபி காவியே
சிறப்புற்ற மாதங்களில் போர்கள் செய்தல்
தமைப்பற்றி உம்மிடத்தில் கேட்கின் றார்கள் பெரும்பாவம் அதுவென்று கூறும் ஆனால்
பண்ணவனின் மார்க்கத்தில் சேரு வோரைத் (கருதொன்றித்) தடுப்பதுவும் நிராக ரிப்புக்
கொள்ளுவதும் க.பாவுள் செல்லு வோரை மறுப்பதுவும் உற்றோரை விரட்டு தல்லும்
மாபெரிய பாவமதில். (குர்ஆன்) 699
மேற்சொன்ன வாறு வேத மொழிவந்த போது வெய்யோன் பாற்பட்ட பங்க யம்போல் பெருமானார் வதனம் மாற
மாற்றமுங் கொண்டார் முஸ்லிம் மக்களும் மகிழ்வி னாலே சாற்றுதற் கரிதே அந்தத் திருப்பத்தின் விளைவு மாதோ, 700
“ஹல்ரமின் கொலைக்கு முன்பே குறைவழிகள் மதீனா சுற்றி புல்மேய்ந்த கால்ந டைகள் கணக்கிலா வாறு மக்கா செல்வழி ஒட்டிச் சென்ற செயலொன்றும் இருந்த தன்னாள் பல்வழி யாக அன்னார் பொருள் சேர்க்கும் யுக்தி அ.தே 701
மதீனாவின் மீது யுத்தம் மேற்கொள்ளும் நோக்கி னோடே அதிபொருள் திரட்ட வேண்டி அங்குள்ள பெண்டி ரெல்லாம் நிதிவேண்டித் தம்மில் எல்லா நகைகளும் விற்றுத் தந்தார் எதுவகை யுண்டோ எல்லாம் ஏற்றனர் குறைவழி மாந்தர் 702
ஆயிரம் ஒட்ட கைகள் அணிசேர அவற்றின் மேற்பல் லாயிரம் பொருட்கள் ஏற்றி அபூசுப்யான் தலைமை கொள்ள போயினர் சிரியா நோக்கி பெருநிதி கொள்ளும் பேறாய் வாய்க்கிரை வேண்டு மட்டும் வரித்ததவ வராகக் கூட்டம் 703
வருவழி தன்னில் "ஹல்ரமி” வாட்பலி யுண்ட செய்தி தெரிந்ததும் அபூசுப் யானின் தோள்தின வெடுக்கக் கோபம் விரிந்தது உடல மெல்லாம் வெறிகொள்ளத் துடிது டிக்க தெரிந்திட வைத்தார் தாங்கள் தொல்லைசூழ்ந் துள்ளோம் என்றே 704
125 ஜின்னாup opரித்தீன்

Page 77
திருநபி காவியம்
வழிப்பறிக் கொள்ளை யொன்று வந்துறும் மதீனத் தோர்கள் வழிமறித் திடமுன் காக்க வேண்டுமோர் படையென் றாகும். மொழிகேட்ட குறைஷி யர்கள் மாபெரும் படையைச் சேர்த்தார் இழிகுணன் அபூஜ ஹிலும் ஹிந்தாவும் குரல்தந் தாரே. 705
‘புத்ரு யுத்கும்
பெரும்படை கூட்டி யுத்தப் பேரிகை முழங்க அன்னார் வருகின்றார் என்ற சேதி வந்ததும் நபிகள் நாதர் ஒருங்கழைத் தார்கள் தோழர் ஒன்றினர் விபரம் சொன்னார் பொருந்தினர் அனைத்துப் பெரும் போர்கண்டு அஞ்சாத் தீரர் 706
எதிர்கொள்ளும் போரில் என்றன் இன்னுயிர் போக்க நானும் இதுமுதற் றுணிவு கொண்டேன் எனஅபூ பக்கர் ஸித்தீக் மிதியுண்ட நாகம் போல முதன்மொழி சொல்ல எம்மான் பதிலுக்கு ஆங்குற் றோரில் பார்வையைச் செலுத்த லானார். 707
ஆண்டவன் தூதே எம்மை அண்டிடும் போரில் நாங்கள் வேண்டிடோம் துரோகம் செய்ய விண்ணவன் மீது ஆணை மாண்டொழிந் திடிலும் உங்கள் மொழிக்கடி பணிவோம் நீங்கள் வேண்டிடில் கடலில் பாய வினையுடன் நடக்கு மென்றார் 708
கூறினார் ஒருவர் முன்னர் கூறிய வாறு மற்றோர் வீறுகொண் டெழுந்தார் யுத்த வெறிவிழி வழியாய்ப் பாயும் நீறுபூத் திருந்த தீயில் நெய்யூற்ற எரிதல் போன்ற வாறாவர் இருந்தார் போரை வரித்திடத் துணிவு கொண்டார் 709
நீதிக்குப் புறம்பாய்க் போரில் நிற்பவர் தமையெ திர்த்து நீதியைக் காத்தப் போரில் நின்றிட இறைவன் வேதம் ஒதிய தோடு தம்மின் உதவியுங் கிட்டு மென்ற சாதகப் பதிலுங் கொண்ட திருநபி திடமுங் கொண்டார் 710
126 ஜின்னாஹ் விழரித்தீன்

திருநபி காவியம்
முந்நூற்றுப் பதின்மூன் றேதான் முஸ்லிம்கள் மக்கா நோக்கி வந்தனர் மதீனா வுக்கு வெளியிலே சண்டை செய்யும் நந்நோக்குக் கொண்ட தாலே நாடினர் அஞ்சா தோர்கள் அந்நோரில் இளைஞ ரோடு முதியோருஞ் சேர்ந்தி ருந்தார் 711
கைகொண்ட ஆயு தங்கள் குறைந்தள வாகும் ஆறே மெய்காக்குங் கவசம் எட்டு வாட்களும் பயணம் ஒன்றிச் செய்திடப் பரிஏழ் பத்தும் போதாதென் றான போழ்தும் துய்யநல் ஈமான் தந்த துணிவொடு முன் சென்றாரே 712
"பத்ள்” எனும் இடத்தில் மாற்றார் பாசறை அமைத்தார் என்று
முதலறறிந் திருந்த தாலே மறுபுறம் தாமுந் தங்கி எதிரிகள் நோட்டங் காண ஏவினர் உளவா ளர்க்கு
விதியெது வாகு மென்று வல்லவன் அறியு வானே. 713
உளவுபார்த் திடவென் றன்று ஏகியோர் வழியிற் கண்டார் இளஞ்சிறு இடையர் தன்னை எங்கெனுங் கூட்ட மாக உளசனங் கண்ணுற் றீரோ எனவவர் கேட்கச் சொல்வார் தளமொன்று கண்டேன் என்னத் தூதர்பால் அழைத்துச் சென்றார். 71.4
சிறுவர்கள் தமைத்தம் பக்கம் சேர்த்தணைத் திறைவன் தூதர் அறிவிரோ உணவுக் காக அவர்கொல்லும் ஒட்ட கைகள் உறுந்தொகை என்ன வென்ப ஒன்பதும் பத்தும் என்றார் அறிந்தனர் வந்தோர் எல்லை ஆயிரம் ஆகுமென்றே. 715
வந்துளோர் யார்யார் என்ற விபரங்கள் உரைப்பீ ரென்னத் தந்தனர் சிலபேர் தாங்கள் தெரிந்தவர் என்ப தாலே. பந்தியில் முந்தி யோர்கள் பேர்பெறுவீர ரெல்லாம் வந்துளார் என்னும் உண்மை விபரித்தார் நபிக ளாரே 716
வாணிபக் கூட்டம் தப்பி வந்ததால் திருப்தி யுற்று வீணினி யுத்தம் செய்தல் வேண்டாவே எனச்சு பிய்யான் கோணினார் வால்சு ருட்ட விளைந்தனன் அபூஜ ஹில்லே ஆணவங் கொண்டான் யுத்தம் ஆவது உறுதி என்றான் 717 127 ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 78
| | | | | | | | |
| | | | |
| |
திருநவி காவியம்
போரென வந்து பின்னர் பின்வாங்கிச் செல்வ தென்றால் ஏற்பதார் வீர மற்ற இழிகுலப் பேரோ நாங்கள் தேருமின் அபூசுப் யானே தோட்தின வடக்க வேண்டின் போரொன்றே முடிவு என்றே பிதற்றினான் அபூஜ ஹிலே 718
வெறிகொண்ட கூட்ட மொன்று வாய்ப்பறை அறைய ஒரீர் நெறிமுறை அறிந்த நல்லோர் நவின்றனர் செந்நீர் சிந்தல் முறையல “ஹல்ர'முக்காய் முதல்பெற்று ஈடு கொள்வோம் சிறந்தது அதுவே என்றார் சிலரொப்புக் கொண்டிட் டாரே 719
'ஹல்ர'மின் கொலைக்கு ஈடாய்க் கொலைப்பழி தீர்க்க வென்றே வில்சரம் வாளும் வேலும் வரித்தனம் மீண்டு செல்லல் புல்லரின் செய்கை யாகும் புயபலம் அற்றோர் செய்கை சொல்லினிற் கனலைப் புக்கிச் சபித்தனன் அபூஜ ஹீலே. 720
ஊட்டினான் விடத்தை "ஹல்ரம்' உடன்பிறந் தானின் உள்ளம் கூட்டிய வார்த்தை யாலே கொலைப்பழி கொலையால் தீர்க்க சாட்டையின் சொடுக்குண் டாற்போல் தம்பியும் துடித்தெ ழுந்தான் காட்டினார் ஒருமை உற்ற குறைஷிகள் பெரும்பா லானோர் 721
நீரறக் காய்பு லத்தில் நிலைகொண்ட நிலைமை மாற்றி நீர்ச்சுனை கொள்நி லத்தில் நபித்தோழர் விருப்புக் கேற்ப சேர்ந்தனர் முஸ்லிம் வீரர் புனல்கொண்டார் நெறிகெட் டோரும் போருக்கு முன்னி ராவில் பூரண அமைதி கொண்டார். 722
பகலவன் தோன்று முன்னே புனிதனை வணங்கிப் பின்னர் இகபரங் காப்போன் பேரால் இயற்றிடும் போரால் கூடும் புகலிடம் சொர்க்கம் என்றே புகன்றிட்டார் நபிகள் நாதர் அகங்களில் ஊன்றிற் றந்த அருள்மொழி வீர ருக்கே. 723
நானிடும் ஆணை பற்றி நடவுங்கள் முன்னர் போல வீண்குரல் எழுப்பா தீர்கள் வல்வன் நாமங் கொண்டு பூணுங்கள் அமைதி யாகப் போர்செய்ய வேண்டு மென்றார் வாணாளில் யுத்தம் ஒன்றும் வரித்திலார் ஞானம் மிக்கார் 724 128 ஜின்னாஹ், ஹரிகதீன்

திருநபி assisíulö
பார்த்தனர் குறைவழிக் கூட்டம் பெரிதெனத் தோன்றிற் றாங்கே சேர்ந்தவ ரோடு யுத்தத் தளபாடம் அதிக மாகும் போர்த்திறன் மிக்க தீரர் பற்பல பேர்கள் எம்மைச் சார்ந்தவர் மூன்றி லொன்றே முஸ்லிம்கள் அஞ்சி லாரோ 725
தோல்விவந் துற்றா லும்நாம் சொர்க்கத்தின் பேறு கொள்வோம் சாலுமன் னார்க்குக் கெட்ட நரகமே என்னும் எண்ணம் காலூன்ற நெஞ்சில் வீரம் கொதித்தது முஸ்லிம் வீரர் பாலிறை கொண்ட ஈமான் பலங்கொள்ள வைத்த தன்றோ 726
நமக்கெது நேர்ந்த போதும் நபிகளைக் காக்க வென்று தமக்குள்ளே கொண்ட கொள்கை தனைமனத் தேற்றி அன்னார் தமக்கென அமைத்த கொட்டில் தங்கிடச் செய்தார் கூட இமையென விழிக்குத் தோழர் அபூபக்கள் தமைவைத் தாரே 727
குடிலினுட் சென்ற கோமான் குப்புற வீழ்ந்து வல்லோன் அடிபணிந் திறைஞ்சி னார்கள் “ஆக்கவும் அழிக்க வல்லோய் படைபலம் அற்றோம் நாங்கள் பகைவரோ அதிகம் உன்றன் கொடையருள் பாவிப் போரைக் கொன்றொழித் திட'வாம் என்றே. 728
இறைஞ்சலின் போது கண்ணி இருவிழி புரண்டு வீழ இறைஞ்சினார் இறைவன் தூதர் எண்ணிலாப் போழ்து கண்ணில் நிறைந்ததோர் துயிலாம் அ.து நொடிப்பொழு தவர்வி பூழித்தே மறையொளி கிடைத்த வாறாய் மனநெகிழ்(வு) அடைந்தே சொல்வார் 729
அஞ்சிடேல் அபூபக் கர்நீர் ஆண்டவன் அருள்பா லிப்பான் பஞ்செனப் பறக்கும் போரில் பாவிகள் படைகள் என்றார் நெஞ்சினில் பூரிப் பெய்த நபிவழித் தோழர் முன்னால் வெஞ்சமர்க் கஞ்சா வீரர் வாகெனத் தோன்றி னாரே. 730
வெற்றிநம் கையில் சொர்க்க வாயிலும் திறந்த தென்று உற்சாக மிகுதி யாலே உரைத்தநந் நபிசொல் கேட்டு ஒற்றையர் பத்துப் பேர்தம் உடற்பலங் கொண்டார் உள்ளம் கற்பொறை கொண்ட தந்தக் குறைவழிகள் அழிவ தற்கே. 731 129 ஜின்னாஹ் வழfபுத்தீன்

Page 79
திருநபி காவியம்
நேரெதிர் கொண்டு சேனை நின்றன போருக் கென்று யார்வரு வார்க ளென்று எண்ணிய வேளை “உத்பா' ஏற்பது யார்ச வாலை என'ஷைபா’ வலிது’ங் கூடச் சேர்ந்தனர் "அவ்ப்'முன் வந்தார் துணைக்கவர் தம்பி நின்றார் 732
யார்நீங்கள் என்றான் உத்பா நேர்நின்றோர் பதிலு ரைத்தார் நீரெங்கள் எதிரி யல்ல எங்குலத் தாரே எம்முன் போருக்கு வருதல் வேண்டும் பார்க்கலாம் ஒருகை யென்றான் தேர்ந்தனர் நபிகள்"ஹம்ஸா’ தோள்தர 'அலி'உ பைதா” 733
உத்பாவுக்கு) உபைதா வென்றும் ஷைபாவை ஹம்ஸா வென்றும் புத்திரர் வலிதுக் காகப் பாய்ந்தனர் அலியும் போரில் மெத்தவும் பொழுதேற் காது மடிந்தனர் வலீது ஷைபா உத்பாவின் வாள்வீச் சுக்கு உபைதாதன் காலி ழந்தார் 734
மும்முனைப் போராட்டத்தின் முடிவினில் உத்பா சாக தம்முடையப் பேரைத் தாங்கிச் சென்றனர் மற்றீர் பேர்கள் எம்மானின் முன்கி டந்த உதைபாதன் இறுதி வேளை தம்வழி வீர சொர்க்கம் தகுமோவென்’ றிரக்க லானார். 735
"நிச்சயம்” என்ற வார்த்தை நபிதிரு வாய்மொ ழிந்தார் அச்சணம் உபைதா கண்கள் அமைந்தன அந்தப் போழ்தில் துச்சர்கள் கூடா ரத்தைக் குறிவைத்து அம்பு எய்தார் கொச்சையச் செயலால் தர்மம் குலைந்தது நபிகள் ஒர்ந்தார் 736
முதன்முதற் களத்திற் பாய்ந்தும் மாற்றாரால் ஒதுங்கிக் கொண்ட விதத்தினால் வருத்த முற்ற வீரராம் 'அவ்ப்'தம் நபியை நோக்கி எதுஇறை அடியா ரோடு இன்புறச் செய்யும் செய்கை அதுதனை உரைப்பீ ரென்றார் அண்ணலார் பதிலு ரைப்பார் 737
கவசமற் றெதிரி முன்னே களத்தினில் பாய்வ தென்றார் கவசங்கள் நீக்கிப் போரில் கலந்திட்டார் அந்தப் போழ்தே கவந்தனர் கற்கள் எம்மான் காபீர்கள் நோக்கி வீசி அவர்தமைச் சபித்தார் அ.தை ஆண்டவன் ஏற்றிட் டானே. 738 130 ஜின்னாஹ் விழரித்தீன்
 

திருநபி காவியம்
வெற்றியே நோக்காய்க் கொண்டு வீரர்கள் களத்தை நோக்கி பற்றிய வாட்க ளோடு பாய்ந்தனர் உமைரும் அவ்பும் முற்றிலுங் கவச மற்றே மோதினார் உயிர்கு டித்தார் சொற்சிறைப் படுமோ அன்னார் தீரத்தைச் சொலவி ழைந்தால்
போர்க்களத் திடையே புக்கிப் பயங்கரச் சமரின் கண்ணே ஈர்பெரும் வீரர் ஒன்றி எங்கவன் உள்ளான் என்றே பார்வையைச் சரம்போ லாக்கிப் பார்த்தனர் அபூஜ ஹிலை பார்வையிற் பட்டான் அன்னான் பாய்ந்தவன் உயிர்கு டித்தார்
தந்தையின் உயிர்ப றித்த தாபத்தைத் தாங்கொ ணாது புத்திரர் பாய்ந்து அந்தப் படைவீரர் “முஆதின்’ கையின் சந்திடை வாளைப் பாய்ச்சி சரித்தனர் தொங்கிற் ற,'தே விந்தையே அவர்தொ டர்ந்தும் வீரப்போர் செய்ய லானார்
இக்ரிமா வாளுக் கந்த இளைஞரின் கைக ழன்று தொங்கியே நிற்க அட்தைத் தன்காலால் மிதித்த கற்றி வக்கிரப் போர்பு ரிந்தார் வரலாற்றிற் பேருங் கொண்டார் இக்ரிமா பின்னோர் போழ்து இஸ்லாத்தின் பால்மாய்ந் தாரே
களத்தினிற் போரின் ஆட்சி கொடுரமாய் இருந்த வேளை இழந்தவாள் தனக்கு மாறாய் இன்னொன்றைக் கொள்ள வந்த ஒளிச்சுடர் மார்க்கம் ஒப்பி உயிருக்கும் அஞ்சாத் தீரர் விழித்தனர் நபிபால் கைக்கோர் வாள்வேண்டும் என்ப தாக
தரவென ஆயு தங்கள் தம்வசம் இல்லா வேளை மரத்தடி ஒன்றைக் கையில் மாநபி தந்தா ர.தோ உருக்கின்வாள் தனையும் விஞ்சி எதிரிகள் உயிரைப் போக்கச் செருக்களம் குருதி தோய்ந்து சகதியாய் மாறிற் றன்றோ
"இதைக்கொண்டு யுத்தம் செய்யும்’ என்றுவாய் மலர்ந்து தந்த கதைகொடும் வாளாய் மாறிக் களத்தினை 'உக்ஷா” ஆண்டார் அதுபின்னும் பலபோர் கண்ட ஆயுத மாகிற் "அல்-அவ்ன்' விதித்தபேர் அதற்கு எம்மான் "தெய்வீகத் துணை’யாம் என்றே
739
740
741
742
743
744
745
131 ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 80
| | | | | | | | | | | | | |
திருநபி ສprefiມນີ້
வாக்களித் திருந்த வாறு வானவர் தம்மை அல்லாஹற் காக்கவென் றனுப்பி வைத்தான் காருண்யர் அறிந்தி ருந்தார் வாக்குரை செய்தி ருந்தான் வானவர் தமக்கு நீவீர் தேக்குக உறுதிப் பாட்டை தூதர்தம் படைக்கா மென்றே 746
நிராகரிப் போர்கள் மீது நிச்சயம் திகிலுண் டாக்கப் பொருந்தினான் அல்லாஹற் அன்னார் புறமுது கிடவுஞ் செய்தான் அறிந்தனர் அனைத்துப் பேரும் அமரர்கள் வருகை தன்னை புரிந்தது வெவ்வே றாகப் பார்த்தவர் சிலரே யாகும். 747
விண்ணவர் தலைவ ராக வந்தவர் ஜிப்ரீல் தம்மைக் கண்ணுற்றோர் தலையிற் பாகை கொண்டதைக் கண்டார் மஞ்சள் வண்ணத்தில் மற்றோர் வெள்ளை வண்ணமாம் பரியின் கால்கள் மண்ணினில் படாத வாறு மேவுதல் நோக்கி னாரே 748
இறுதியில் வெற்றி முஸ்லிம் இறைவழி கொண்ட போர்க்காம் புறமுது கிட்டார் மாற்றார் பெருமானார் தம்மை நோக்கி "எறிந்தது நீரே யல்ல அல்லாஹற்வே எதிரி மீது எறிந்தனன் கல்லை’ என்று இறைமொழி இறங்கிற் றன்றே 749
போரினில் தோல்வி யுற்றுப் பின்வாங்கி ஓடி யோர்கள் பாரிப்பாம் இறந்து பட்டோர் பிடிபட்டுக் கொல்லப் பட்டோர் சேருவர் நூறுக் கண்மி தொகைஏழு பத்தாம் கையில் சேர்ந்தவர் கைதி யாக தீன்வழி பன்னீர் பேரே, 750
புத்ரு யுத்குத்தின் பின்
கோத்திரத் தலைவர் இன்னும் குடியுயர் முதல்வ ரெல்லாம் நீத்தனர் உயிரை என்னும் நிலைவர மக்கா மாந்தள் ஆத்திர முற்றார் எங்கும் அழுகையின் ஒலியே கேட்கும் போர்த்திறன் வீரங் கொண்டோர் பெருகிய போதுந் தோற்றார் 751
132 ஜின்னாஹ் வழfபுத்தீன்
 

திருநபி காவியம்
போரின்பின் கைதி யான பேர்களைக் கொன்றொ ழிக்க ஒருவழி உரைத்தார் அன்று உமருடன் சொந்த மான பேர்களே கொல்ல வேண்டும் படியுமே வற்பு றுத்த ஏற்றிலார் அபூபக் கர்நல் லுரையொன்று பகர்ந்திட் டாரே 752
பிடிபட்டோர் அனைத்துப் பெரும் பெரும்படி உறவி னோரே கொடுத்திடச் சொல்வோம் ஈடாய்க் கொள்முதல் கொண்டு செல்ல விடுத்தலே நன்று என்று வானவன் தூதர் ஏற்றார் எடுத்ததோ தலைக்கு நான்கு ஆயிரம் திர்ஹம் பொன்னே 753
பணப்பலம் இல்லா தோர்கள் பின்னொரு போழ்தும் இஸ்லாம் இணங்கிடாக் கேடு செய்வ தில்லையென் றுறுதி கூறி இணங்கிடப் பட்டார் செல்ல இறைநபி வாகு செய்தார் இணங்கினார் கற்றோர் கல்வி இலாதவர்க் களித்த லுக்கே. 754
விடுதலை செய்வீர் என்றன் வீட்டினில் ஐந்து பெண்கள் இடர்படு வார்கள் நானோ இங்கிருந் திட்டா லென்ன அடலரென் றான போதும் அருள்நபி மனமி ரங்கி விடுதலை செய்தார் மாற்று வழியிலாப் போழ்து நாதர் 755
அண்ணலார் சிறிய தந்தை அப்பாசும் மகள்ஸை னப்பின் கணவரும் ஈடாய் திர்ஹம் கொடுத்தேதான் மீட்சி கொண்டார் பின்னொரு காலம் ஸைனப் பதி'அபுல் ஆஸ்’ம் இஸ்லாம் தன்வழி வந்தார் யாருந் துன்பமுற் றார்க ளில்லை. 756
யுத்தத்தின் பின்கி டைத்த எலாவகைப் பொருள்க ளுக்கும் மொத்தமாய்த் தீர்வு ஒன்றை முதலவன் “வஹி’யின் மூலம் உத்தம நபிக்கு ரைத்தான் ஒருவர்க்குங் குறைவி லாது சத்தியங் காத்தார் நாதர் சமபங்கு எலாருங் கொண்டார் 757
முக்கிய எல்லைக் கல்லாய் முடிந்தது பத்ரு யுத்தம் மக்கமா நகரில் கொண்ட மாபெருஞ் சோத னைக்குத் தக்கதோர் பரிசாய் வல்லோன் தந்தனன் வெற்றி வாழ்க்கைச் சக்கரம் தடைக ளற்றுச் சுழன்றது அமைதி யோடே 758
133 ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 81
திருரவி காவியே
வேரூன்றி கிளைப ரப்பி விரிந்தபேர் விருட்ச மாக பேரொளிப் பிளம்பாய் இஸ்லாம் புதுப்பொலி வுற்ற தன்னாள் காரழித் திடப்பி றந்த கதிரவன் தோற்றான் நெஞ்சக் காரழிந் திட்ட மாந்தர் கொள்ளையைக் கண்ட போழ்தே. 7.59
வெற்றியின் பின்ந பிக்கு வேதனை யூட்டுஞ் சேதி அற்றைநாள் வந்த தண்ணல் அன்புடைச் செல்வி றுகையா பெற்றனர் சுவன வாழ்வின் பேறினை அடைந்தா ரன்றே உற்றனர் சோகம் அன்னார் உதுமானின் மனைவி யாரே 760
அலியவர் பத்ருப் போரில் ஆற்றிய வீர தீரம் நிலைத்தது அந்நாள் எல்லோர் நாவிலும் நபியின் ஈரற் குலையென நபிகள் சொன்ன கண்மணி பாத்தி மாவளி அலையினால் செவியுற் றார்கள் அலர்ந்தது வதன மம்மா. 761
அழகுருக் கொண்ட நங்கை அன்னைபாத் திமாதன் தாயின் அழகொடு பண்பை யெல்லாம் அணிகல னாகக் கொண்டார் இளையவர் அலியே அன்னார்க் கிணையான கணவ ரென்றே உளங்கொண்டார் நபிகள் முன்னே அலிகளுந் தோன்றி னாரே. 762
மகளிடம் விருப்பம் பெற்று மாநபி அலிக்கு வேண்டும் "மகரி”னைக் கொண்டு தூய மணவாழ்வுக் கிணங்கச் செய்தார் நிகரிலாப் பொறுமை கொண்ட நாயகி அலியா ரோடு திருமண வாழ்வில் உய்த்தார் இருமகள்க்(கு) அன்னை யானார் 763
யுத்தத்தின் போது ஹப்ஸா உமர்மகள் கணவர் மாண்டார் சத்தியத் தூதர் ஹப்ஸா தனைக்கரம் பிடித்தார் மக்கா அத்தனை பெருந்த லைகள் அழிந்ததால் சோகங் கொள்ள புத்துயிர் பெற்றாற் போல பொலிந்தது மதீனா மண்ணே. 764
L3(LP55) கிட்டு அன்று பத்ருப்போர்க் களத்தில் தப்பி வெறுமையாய் வந்த பேர்கள் விபரித்த சேதி யெல்லாம் உறுத்தின மக்கத் தோரின் உளங்களை அபூல ஹப்பும் இறுதிமூச் சடங்க மக்கா இளவுவீ டாகிற் றன்றோ. 765 134 ஜின்னாஹ் வழfபுத்தீன்
 

திருநபி காவியே
மரணத்துக் குள்ளா னார்கள் முக்கிய குறைவழிப் பேர்கள் மரணித்துப் போனார் உள்ளம் மக்கத்தில் இறுதி யானோர் உருகினாள் "ஹிந்தா” தாதை உடன்பிறந் தாரி ழப்பால் சரிசெயேன் கூந்தல் என்றன் சபதம்வெல் மட்டு மென்றாள் 766
குறைவழிகள் தலைமை ஏற்கும் கடப்பாடு அபூசுப் யானின் சிறைப்பட்ட தனைத்துப் பேரும் சேர்ந்தொன்றி விரும்பி னார்கள் மறைமுக மாக வேறு வழிகளில் முஸ்லிம் பேரால் நிறையவே பாதிப் புற்ற நிலையினால் ஏற்றிட் டாரே, 767
குடும்பத்தில் தந்தை யோடு கூடவே உடன்பி றந்தான் அடுத்துமோர் சிறிய தந்தை அனைவரும் போரில் செத்தார் முடித்திடேன் கூந்தல் அந்த மூவர்க்காய்ப் பழிவாங் காதே துடித்தனன் 'ஹிந்தா” பொல்லாச் சபதமுங் கொண்டிட் டாளே. 768
பழிவாங்க வேண்டும் முஸ்லிம் படையினை அழிக்க வேண்டும் பழிகொண்டார் ஹம்ஸா எம்மோர் போரினில் அழித்தற் கென்னும் அழித்தவர் ஈரல் தன்னை அக்கணம் சுவைத்தா லன்றி அழியாது கோபம் என்றாள் அபூசுப்யான் மனைவி அன்னாள் 769
சிரியாவில் இருந்து மக்கா கொணர்ந்தசொத் தனைத்தும் போருக் குரியன படைதி ரட்டும் பொறுப்பினுக் கர்ப்ப னிப்போம் விரிவான திட்ட மொன்று வகுத்தனர் எதிரிப் பேர்கள் ஒருக்காலும் எம்மை வெல்ல இடந்தரக் கூடா தென்றே. 770
நபியைக் கொல்லச் சதி
குறைவழியர் தலைவர் சொந்தம் கொன்றொழி பட்ட தாலே இறப்பது வன்றி வேறு இல்வழி என்றே நொந்து வெறுத்தஈர் இளைஞர் வாழ்வின் குறிக்கோளை இழந்தோ ராக வெறுத்துரை செய்தார் ஸப்வான் சேர்ந்தவ ரோடு)உ மைரே 771
135 ஜின்னாஷ் லூரித்தீன்

Page 82
திருநபி காவியே
என்னுடைக் கடனும் நாதி இலாதவென் குடும்பத் தாரும் என்பொறுப் பில்லை யாயின் இன்றேநான் நபியென் பேரை கொன்றொழித் திடுவேன் என்மேற் கவலிலை எனக்காம் என்றே சொன்னானே உமைருங் கேட்டுச் சட்டெனச் ஸப்வான் சொல்வான் 772
உன்னுடைக் கடனென் மேலாம் உன்வழிக் குடும்பம் உற்றார் என்னுடைத் தாகும் எந்த இடுக்கணும் வராது காப்பேன் உன்பணி தொடர்க என்றான் உமைர்அதை ஏற்றுக் கொண்டான் பின்விடந் தோய்ந்த வாளைப் பற்றியே மதீனா சென்றான். 773
உமைர் யத்ரீப் அடைந்த போது உத்தம நபிகள் கோமான் அமர்ந்திருந் தார்கள் பள்ளி அவைதனில் அவனைக் கண்ட உமர்தடுத் திட்டார் அண்ட உடன்பாடா திருந்தார் கண்டே அமைதியாய் நபிகள் சொல்வார் அனுமதி தருக வென்றே 774
அருகினிற் சென்றமர்ந்து அளியுங்கள் பாது காப்பு கருமணங் கொண்டோ னிந்தக் காதகன் நம்ப வேண்டாம் திருநபிக் கேது மொன்று தீங்கினை இளைப்பா னென்றே வருந்தினார் உமர்தம் எண்ணம் வரிவரி சரியா யிற்றே. 775
வந்ததன் நோக்க மென்ன விபரிக்க நபிகள் கூற வந்ததென் மகனை மீட்க விடைவர கைவாள் பற்றி வந்ததேன் என்றார் நாதர் வழியிலா தவனுஞ் சொல்வான் இந்தவாள் தம்மால் நாங்கள் என்பயன் கொண்டோ மென்றே. 776
உண்மையைச் சொல்லும் நீரிங் குற்றதன் கார ணத்தை உண்மைநான் அறிவேன் நீரட் துரையாத போது மென்றே கண்ணியத் தூதர் சொல்வார் கொலைசெயும் நோக்கி னோடே நண்ணினி ஸப்பா னோடு நீர்செய்த உடன்பா டுற்றே 777
பட்டவுன் கடனை உன்றன் பொறுப்புள்ள குடும்பம் றன்னை விட்டவர் பொறுப்பில் வந்தீர் விபரங்கள் அனைத்தும் எம்மான் கட்டவிழ்த் திட்டார் ஒர்சொல் குறைவிலா(து) உமைர் அதிர்ந்தே எட்டிய தெவ்வா றெம்மோ டெவருமே இலாப்போழ் தென்றான் 778
136 gĝő56TTTGIB OpföỞő)
 

திருநபி காவியே
அனைத்துமே ஜிப்ரீல் மூலம் அறிந்தனன் என்றார் நாதர் பனித்தன கண்கள் வாயும் புகன்றது வணங்கத் தக்கோன் தனித்தவன் அல்லாஹற் அன்றித் தனைவிட வேறு இல்லை பண்ணவன் தூதர் முஹம்மத் பற்றினேன் மார்க்கம் என்றே 779
பத்ரினில் இழப்புக் காகப் பழிதீர்க்கும் எண்ணம் மக்கள் சித்தமாய் இருந்த தெல்லாத் தரப்பிலும் ஒன்றுகூடி பத்தினர் புதிய மார்க்கம் பெருகாது பற்றி யோரை மொத்தமாய் அழிப்ப தென்னும் முடிவொடு செயற்பட் டார்கள் 780
பெண்களும் யுத்தஞ் செய்யப் புறப்படல் வேண்டும்மென்று ஆண்களால் உதவி வேண்ட அதற்கு"ஹிந்தா”தலைமை ஏற்றாள் தோன்றிய இடங்க ளெல்லாம் தூபமிட் டலைந்தாள் நெஞ்சில் ஊன்றினாள் அபூசுப் யானின் உறுதிக்கும் உரஞ்சேர்த் தாளே. 781
உவறது யுத்கும்
பழிவாங்கும் உணர்ச்சி யெங்கும் பற்றிடக் காணற் தீபோல் விழிமடல் மூடா தந்த வீணர்கள் மீண்டும் யுத்தப் பழிக்கென ஆயு தங்கள் பலப்பட உணவு தான்யம் வழிநெடு பயணஞ் செல்ல வாகனம் பலவுஞ் சேர்ந்தார். 782
மகிழ்சியின் நிழலுங் கூட மக்கமா நகரிற் காணார் தகித்திடுங் கானல் காற்றுந் தோற்றிடும் வேகங் கூட்டி தொகுத்தனர் அனைத்தும் நெஞ்சிற் தாங்கிய பழியு ணர்வால் அகத்திருள் கொண்டோர் பின்னர் ஆவது அறிந்தி லாரே 783
நடப்பது அனைத்தும் அப்பாஸ் நபிகளார் பெரிய தந்தை வடித்தனர் ஒலை ஒன்றில் விபரமாய்த் தூதர் மூலம் கொடுத்திட அவருஞ் சேர்வார் கோமானும் விபரந் தேர்வார் அடுத்தென்ன செய்வ தென்று அருண்நபி சிந்தித் தாரே. 784
137 ஜின்னாஹ் விழரித்தீன்

Page 83
திருநபி காவியே
மதீனாவின் புறங்க ளெல்லாம் மேய்ந்திடும் மந்தைக் கூட்டம் மதீனாவின் எல்லைக் குள்ளே மீண்டிடச் செய்தார் முன்னம் மதினாவை நோக்கி வீரர் மூவாயி ரம்பேர் கூட்டி எதிரிகள் வருவ தாக இறைநபி உளவும் பெற்றார் 785
எழுநூறு கவச வீரர் இருநூறு குதிரை வீரர் அழிதொழில் செய்ய வேண்டும் ஆயுதச் சுமைக ளோடு முழுப்பொலி வாக அன்னார் மதினத்தை அண்மி விட்ட பழுதறு சேதி கேட்டுப் பதைத்தன மக்கள் நெஞ்சே. 786
கல்மூன்று தொலைவில் வந்து காலூன்றி விட்டா ரென்னும் சொல்கேட்ட நபிகள் நாதர் தோழர்கள் யூதர் கூட்டி பல்வகை யாக எண்ணப் பரிமாற்றம் செய்தார் ஈறில் செல்லாது வெளியே நின்று தற்காப்புச் செய்வோ மென்றார். 787
பெண்டிரை வயதில் மூத்தோர் பிள்ளைகள் அனைத்துங் கூட்டி அண்டிய கோட்டை யுள்ளே அடைக்கல மாக்கிப் பின்னர் அண்டிடும் அடலார் தம்மை அழிப்பதே நன்று என்றார் உண்டது இல்லைத் தோல்வி ஒருபோதும் மதீனாக் கென்றே 788
அப்துல்லாஹற் உபையென் போனும் ஆங்குற்ற யூதப் பேரும் ஒப்பினார் அதுவே நல்ல உத்தியாம் என்றிட் டாலும் ஒப்பினர் இல்லைச் சற்று ஒதுங்கிநின் றிளைஞர் கூட்டம் செப்பினார் தமக்குட் தாமே தருணமொன் றிழந்தோ மென்றே 789
முன்னைய பத்றுப் போரில் முஸ்லிம்கள் தரப்பின் நின்று அன்னியர் சென்னி தம்மை அரிந்திடக் கிடைக்காப் பேறு பின்னின்று வந்த தென்று புயபலத் திறமை காட்டும் உன்னலில் நின்ற பேர்க்கு உவந்திடா முடிவாம் அ.தே 790
கொதித்தனர் உள்ளம் ஒன்றிக் குமிறினார் கிடைத்த வாய்ப்பை மதித்தனர் வீரங் காட்ட முறுக்கினர் கைகால் நெஞ்சிற் பதித்தனர் போரின் வேகம் புயலெனச் சீற்றங் கொண்டும் மதித்தனர் நபிகள் வார்த்தை மீறிட மாட்டார் சோர்ந்தார். 791
138 ஜின்னாஹ் வழfபுத்தீன்

திருநபி காவியே
போர்க்களஞ் சென்று வீரப் போர்புரிந் திடாதொ ளிந்து சேர்ப்பதோ இழிசொல் எங்கள் தீரத்தின் நிலைதான் என்னே ஊர்ப்பழி சேருஞ் நெஞ்சில் உறுதியற் றோர்க ளென்றே கார்குழற் பெண்டிர் செய்யும் காரியம் இதுவாம் என்றார் 792
முன்னைய போரில் வெற்றி முழுமையாய்த் தந்த வல்லோன் பின்னையேன் நமது கையைப் பலப்படச் செய்ய மாட்டான். அன்னவன் வெற்றி தோல்வி அனைத்துக்கும் பொறுப்பு மாவான் மன்னுயிர் அழிந்திட் டாலும் மறுமையில் சுவர்க்கம் தானே 793
சொன்னசொல் அனைத்தும் எம்மான் செவிகளில் ஊர்ந்த தென்று அன்னவர் அறிந்தி லாரே அவர்தமக் கவருட் பேச்சாம் உன்னித்தார் நபிகள் அன்னார் உள்ளுறை ஆதங் கத்தை தன்னிலை மாற்றிப் போர்செய் திசையையும் மாற்றி னாரே. 794
காலையின் தொழுகை முற்றிக் காப்பவன் கருணை வேண்டி மேலங்கி இருப்பால் கொண்டு முற்றுமே போர்க்கோ லத்தின் வாலறி வானின் தூதர் வெளிப்பட்டார் கண்டார் மக்கள் ஓலமிட் டார்கள் அல்லாஹற் உயர்ந்தோன் உயர்ந்தோ னென்றே,795
ஆயிரம் பேர்கள் கொண்ட அடலேறு வீரரர் முன்னே போயினர் நபிகள் நாதர் படைமுகம் நோக்கி ஓங்கி வாய்மொழி பகர்ந்தார் ஒன்றி வல்லவன் பெரியோன் என்றே காய்ந்தனன் வெய்யோன் காலைக் கரத்தினால் வீரம் பாய்ச்ச 796
சற்றேதான் கடந்தார் தூரம் தன்சொல்லுக் குடன்ப டாது முற்றுந்தம் முடிவுக் கேற்ப முன்னேறத் துணிந்த தாலே பிற்பட்டான் “உபை'யும் யூதர் படையொடு இடையில் விட்டே பிற்பட்டோர் முன்னு றேபேர் படைதனில் குறைவு பட்டார் 797
படைபலங் குறைந்த தெண்ணி புகைந்தது அச்சம் பின்னர் படையிடை மேலும் வீரம் பொங்கவும் கருவா கிற்றே இடைநடு வழியில் செய்த இழிசெயல் கனலை நெஞ்சில் படிந்திட வைக்க வீரர் பலம்பெரி தாகிற் றன்றோ 798
139 ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 84
திருரவி asrg6u5
இறைநபி எம்மனோடு இருப்பதும் இறைவன் பாதைக்(கு) உறுதுணை அவனே என்ற உந்தனும் நெஞ்சில் விஞ்ச விறல்செறி வீரர் வெற்றி வகைப்படும் உறுதி யோடு செருக்களம் நோக்கிச் சென்றார் தோட்பலங் காட்டுதற்கே 799
உருக்கிவார்த் தெடுக்கப்பட்ட ஒன்றெனும் "உஹது’க் குன்றின் இருபுறம் ஒன்றுக் கொன்று எதிர்த்தவா றிருந்த சேனை பெருஞ்சமர் ஒன்றுக்காகப் பார்த்திருந் தனவே கோத்த கருத்தெலாம் வெற்றி நம்பாற் கூடிட வேண்டு மென்றே 800
படையினைச் சீர்மை செய்யும் பொருட்டொரு வீரர் தம்மின் இடையிடை புகுந்த சென்று இறைநபி நோக்குங் காலை படுகிழம் ஒன்றும் எட்டுப் பாலகர் தாமுங் கண்டார் இடந்தர மறுத்தார் நோக்கி ஏகுக இல்லம் என்றார் 801
முதுகிழ மனிதர் சொல்வார் முன்னைய பத்றுப் போரில் விதிசதி செய்து என்னை வரவொனா தியற்றிற் றென்றன் உதிரத்தின் சாரம் மைந்தன் உயிர்நீத்தான் கனவில் தோன்றி அதியுயர் வாழ்வுக் காக அழைத்தனன் என்று மாதோ 802
ஆகட்டும் என்றுரைத்து அங்குற்ற சிறாரை நோக்கி போகாதேன் நின்றீ ரென்னப் படையினில் ஒருவர் வந்தே வேகமாய் வில்லை ஆளும் வித்தையில் வல்லோன் என்றே "ராக்பீ'யைச் சுட்ட நாதர் சரியெனச் சேர்த்துக் கொண்டார். 803
மல்லாடும் வித்தை யில்நான் மிக்கவன் "ராக்பீ’யைநான் சொல்லொன்று மொழியு முன்னே தோற்றிடச் செய்வேன் என்றே சொல்லாடி னான்'ஸமூரா” செய்யென்றார் செய்து காட்ட நல்லதென் றவனுஞ் சேர நபிமற்றோர் செலப்ப னித்தார். 804
நடந்தவில் விருநி கழ்வும் நபிவழி ஈமான் கொண்டோர் திடத்தினைக் குருதி கொண்ட தீரத்தைக் காட்டி நிற்கும் அடலர்கள் கண்ணுற்றாலோ அதிர்ச்சி கொண்டிருப்பர் எண்ணின் திடமது ஈமா னுக்குச் சான்றெனச் சாற்ற லாமே 805 140 ஜின்னாஹ் வழfபுத்தீன்
 

திருநபி காவியம்
இணக்கமாய் ஒவ்வோர் பேர்க்கும் ஏற்றநற் பொறுப்ப விரித்துக் கணவாயைத் காக்க வென்று குறிப்பிட்ட சிலரைக் கூட்டி அணிகலைந் திடாது என்றன் ஆணைவந் துறுகால் மட்டும் இணைந்தாங்கு இருத்தல் வேண்டும் என்றனர் உறுதி யோடே. 806
வலப்புறம் வலீதன் மைந்தர் வீரர்க்குத் தலைமை மற்றப் புலமதில் அபூஜ ஹிலன் புத்திரர் நின்றார் மொத்தத் தலைமையும் அபூசுப் யானின் கைவசங் கொண்டு நின்றார் சிலைகளும் படைக்கு முன்னால் சேர்ந்தொன்றி நின்ற தாமே 807
பதின்நான்கு பெண்க ளோடு பறையறைந் தெதிரில் வந்தாள் முதன்முதல் அபூசுப் யானின் மனையவள் "ஹிந்தா” சொல்வாள் எதிரியை வெட்டிச் சாய்த்து இலாதொழித் திடுங்கள் அன்றேல் மதித்திடோம் உங்க ளைநாம் மானத்தைக் காப்பீ ரென்றே 808
நெஞ்சொடு அனைத்து இன்பம் நல்குவோம் நீங்க ளொன்றி அஞ்சாது போரிட் டுங்கள் அடலாரை வென்று வந்தால் பஞ்சணை மீது எங்கள் பாதங்கள் பவனி செல்லும் தஞ்சமென் றாவோம் உங்கள் தோள்வலுக் காட்டு வீரே 809
பரியொன்றின் மீது ஏறி படைத்தள கர்த்தர்க் கெல்லாம் உரியன எடுத்து ஓதி ஒளிவேகங் கூட்ட வெங்கும் இருப்பது நானே என்று எண்ணுதற் குரியோ ராக செருக்களம் முற்றும் நாதர் திருமேனி துலங்க லாச்சே, 810
(வேறு)
குறைஷிகள் கொடியைக் கையினில் தாங்கி
தல்ஹா என்பவன் முன்வந்தான் அறைகூவி நின்றான் யார்முன் வருவீர் நரகம் புக்கிட எனப்புகன்றே “இறைவனின் வாள்'என இறைநபி சொன்ன
ஏந்தலர் அலியும் முன்வந்தே முறையுன தாகும் முதலில் நரகம்
முன்னே வாஎன மொழிந்தனரே. 81
141 ஜின்னாஹ் வழfபுத்தீன்

Page 85
|
|
திருநபி காவியம்
பாய்ந்தனர் அலிமுன் பற்றிய வாளின்
பசிதீர்த் திடவென ஒருநொடியுள் சாய்ந்தனன் தல்ஹா தரையில் இரண்டு
துண்டென வீழந்து மடிந்தனனே ஒய்ந்தது தந்தை வாழ்வென அவன்மகன்
உயர்த்தினன் கொடியை அவனுயிரை மாய்ந்திடச் செய்தார் மாவீரர் ஹம்ஸா
மும்முர மாய்ப்போர் முற்றியதே 812
'அலி'யெனும் புலியும் அரி"ஹம் ஸா'வும்
"அபூதஜ னா”வும் அமர்க்களத்தை கிலிகொள வைத்தார் கிட்டிய உடல்களைக்
கூறிட் டேமுன் சென்றனரே பலிகொண் டுயிர்கள் பறந்தன வான்வெளி
போகிய இடமெலம் பிணக்குவியல் வலியால் அலறிய வாயொலி காற்றின்
வகைப்பட எங்கும் விரவியதே. 813
அண்ணல் பெருமான் அவருடை வாளை
அங்கையுட் கோத்தே அறைந்திடுவார் பண்ணுவர் யாரிதன் புனிதக் கடமையைப் பாங்குற வென்று பார்த்தவர்கள் நண்ணினர் பற்றிட நான்நீ யெனவே
நபிமுன் அபுதஜ னாவொருவர் அண்ணலார் வாளை அளித்தது அவர்கரம்
அது'உஹத்” களத்தை ஆண்டதுவே 814
கண்படு வோர்தம் குருதியிற் குளித்தே
கறைபடு வாளை இன்னொருவர்
புண்பட வைத்தப் பழிதீர்த் ததனால்
புதிதென மாறிப் பளபளக்கும்
142
ஜின்னாஹ் விழரித்தீன்
 

திருநபி as Tssuts
அண்டிய எவரும் அபுதஜ னாவின்
அரிதொழில் வாய்ப்பட் டலறிடுமுன்
துண்ட மிரண்டாய்ச் செம்புனல்சீற
தரையில் வீழ்ந்து மடிந்தனரே 815
தலையொரு புறமும் உடலொரு புறமும்
தனித்தனி பிரிந்த உறுப்புக்களும் மலையெனக் குவிந்தன மருவலர் தொகையோ
மாண்டதில் பெருந்திரள் மிகைப்படுமே கொலைவெறி கொண்ட காபிர்கள் பலபேர்
குற்றுயி ராயுங் கிடந்தெழுப்பும் ஒலிகட லலையை ஒத்திடும் எவர்தம்
உதவியு மின்றி அலறினரே. 816
மற்றொரு புறத்தில் மாவீரர் ஹம்ஸா
முன்பின் பக்கம் வருபவரை அற்றுயிர் வான்செல அனுமதி தந்தார்
அடலேறு ஆம்அவர் அமர்க்களத்தே சற்றுஞ் சோர்வறச் செய்யுஞ் சாகசம்
சொல்லுள் அடங்கா சொல்வதற்கே பற்றிய வாள்கரம் பிடியிற் தளராப்
பாங்கினில் உறைந்தது புயபலமே. 817
தன்னுடைத் தாதை தமையன் பத்ரில்
செத்தழிந் திட்ட செயலதனால் வன்மனங் கொண்ட சுபியான் மனைவி
"வஹற்ஷி” என்றொரு அடிமையினை தன்வயப் படுத்தி விடுதலை வாங்கித்
தருவேன் எண்மனம் பொருந்தினளே பின்னிருந் தாயினும் போக்கிட ஹம்ஸா
பிராணனை அவனும் பின்தொடர்ந்தான். 818
143
ឆ្នា កpfl)

Page 86
திருநபி காவியம்
முன்னிருபோழ்து செய்தனள் சபதம்
மாய்த்துயிர் போக்கி ஈரலினை தின்னுவே னதன்பின் தானென் கூந்தல்
தனைவாரி முடிப்பேன் என்பதுவாய் பன்முறை முயன்றான் வஹற்ஷி அவரைப்
பின்புற மிருந்து தாக்கிடவே என்னதான் வினையோ ஏற்றொரு பொழுது
ஈட்டியை வீசி எறிந்தனனே. 819
வீசிய ஈட்டி வஹற்ஷியின் பலத்தால்
வீறுகொண் டேகிப் பின்புகுந்து மாசுறுஞ் செய்கை வீரத் திழுக்காய்
முரண்பட இயற்றிட மாநபியின் பாசத் தின்மிகு சிறியதந் தையரின்
பிராணனை வாங்கிடத் தரைபுரண்டார் கூசா தவரின் உடலினைப் பிழந்து
ஹிந்தா தன்பழி தீர்த்தனளே 820
குறைவழியர் கொடியைத் தாங்கிய ஒவ்வோர்
குறைவழியும் வாளுக் கிரையாக இறுதியில் யாரும் இலாதுமே போனார்
ஏந்திடக் குருதிச் சேற்றினிலே புரண்டது அதுவும் புறமுது கிட்டுப்
போனார் பகைவர்கள் போர்க்களத்தில் திரண்டனர் முஸ்லிம் படையினர் தேறிய
திரவியம் சேர்க்கும் நோக்கினிலே 821
தம்வழி வெற்றி தலைசாய்ந் ததுவென
தோழர்கள் முற்றும் நம்பியதால் தம்வழி பொருட்கள் சேர்த்திடும் நோக்கில் சென்றனர் களத்தின் பாலருக்கே அம்மவ ருள்ளே ஆகினர் கணவாய்
அகலா திருக்கப் பணித்தவரும் எம்மா தவறினை இயற்றினர் அவர்கள்
இறுதியில் நடந்தவை இயம் பிடுவாம் 822 144 ஜின்னாஹ் ஷரித்தீன்
 

திருநபி காவியம்
தடுத்தனர் போகா திருந்திட ஜுபைரும்
தலைமைக் கடிபணி யாதவர்கள் தடுத்திட வில்லை தம்வழி வெற்றி
தாழ்ந்தபின் நிற்க வென்றுரைத்தே விடுத்தனர் ஒட்டம் வகைந்தன கொள்ள
வெற்றியின் பால்நாம் உற்றோமென கிடைத்தவர் பதின்மர் தாமே ஜ"பைரும்
கணவாய் காக்கும் பொறுப்பினிலே 823
கணவாய் வெறுமை கண்டதைக் கண்ட
'காலித்’ தனது படைகளுடன் சணத்துள் அவ்வழி புகுந்தார் போரின்
திசையும் முற்றாய் மாறியதே அணைத்தது வெற்றி ஆம்இனி நமக்கென
ஆகும் வேளையில் ஆசையினால் இணைந்தது மறுபுறம் எண்ணிலா வீரர்
இறையடி சேர உயிர்துறந்தார் 824.
எண்ணிய வாறு இலாதே யுத்தம்
இடும்பைக் குட்பட மாறியதால் அண்ணலார் களத்துள் இறங்கினர் தம்புறம்
அழைத்தனர் வீரரை அவர்களுடன் பண்ணவன் தூதரைப் பழிவாங்கும் நோக்கில்
பகைவரும் ஒன்றிக் கூடிவர கண்ணிமைப் போழ்துள் குறிகள் நபிபால்
காபிர்கள் வைத்தனர் கொடும் நிலையே 825
கொடியினைக் தாங்கி நின்றவோர் முஸ்லிம்
குறைவழியன் ஒருவனின் கைப்படுவாள்
அடியினால் வீழ்ந்தார் அவர்நபி போன்ற
அசைப்பினில் இருக்க அவர்நபிதான்
145
ஜின்னாஹ் விழரித்தீன்

Page 87
திருநபி காவியே
146
மடிந்தன ரென்றே எண்ணினன் அதனை
மிகவோங்கு குரலில் பறையறைந்தான்
கடிதினில் அதனைக் குறைஷிகள் நம்பினர்
கொண்டதம் வேட்கை தீர்ந்ததென 826
நின்னொளி எங்கும் மின்னிட ஒளிரும்
மாறிது களத்தில் பரவியதால்
தன்னுரர் விற்றார் தோள்வலு விழந்தார்
தூதாரின் சார்புறு தீரர்களே
என்னதான் வரினும் ஏற்றபோர் தன்னில்
எதிரியை மாய்ப்பது கடமையென
வன்மத் தோடோ வாள்சுழற் றினரே
வெண்மணல் செம்மணல் ஆகியதே. 827
சுற்றியே நின்று தூதரின் உடலில்
சிறிதொரு வடுவும் தோன்றலினை
முற்றுந் தவிர்த்திடு வாகினில் நின்றார்
விற்சிலை வாள்கை ஈட்டியுங் கற்களும்
வரையறை யின்றித் தொடர்ந்துவர
கற்சிலை யாகவே கடுகெனும் அசையார்
காத்தனர் காத்தவர் உயிரிழந்தார் 828
சடுதியாய் ஒருவன் தனதுடை வாளை
சுழற்றிய வாறே முஸ்லிம்களுள் கடிதினில் நுழைந்தான் கண்ணிமைப் போழ்துள்
கவிழ்ந்தன உடல்பல கையிருந்த உடைவாள் தனைநபி மீதெறிந் தானவன்
உடைந்தது முகத்தின் கவசமதால் வடிந்தது குருதி வள்ளலார் முகத்தில்
வந்தவோர் கல்லுந் தாக்கியதே 829
ஜின்னாஹ் pெரித்தீன்
 

திருநபி காவியம்
தாக்குதல் உக்கிர மடைந்தது நபிகள்
தம்மினைக் காக்கும் முனைப்பினிலே போக்கும் உயிர்க்குப் பிறிதோர் உயிர்முன்
பதிலுக் கவ்விடம் போய்ச் சேரும் யார்க்குந் தம்முயிர் இழப்பதில் கவலை
இலாதவர் போன்றே நபியுயிரைக் காக்கும் பணியில் கருத்தொரு மித்தார்
குறைவழிகள் கண்டதிர் வுற்றனரே 830
தன்னுடை முதுகைக் கேடய மாக்கி
தந்தார் வீரர் அபூதஜனா முன்னொரு கால்நபி வாளினைப் பெற்ற
மாபெரும் வீர மறவரவர் இன்னொரு பேர்தம் கரங்களி னாலே
இறைநபி தன்னைக் காத்திருக்கத் தன்னிரு கைகளுந் தறியுண் டதனால்
தரையினில் சாய்ந்தார் குற்றுயிராய் 831
முகத்தினில் தண்ணிர் தெளித்திட விழிமடல்
மெல்லென விரிய முதல்மொழியாய் “அகமது நபிக்கு ஆனது என்ன
அறிந்திடச் சொல்க” எனவிழித்தார் சுகமாய் நபிகள் இருக்கின்றா ரென்றே
துணைக்கமர்ந் திருந்த அபூபக்கள் தகுமொழி தந்தார் திருப்திகொண் டதரம்
தனியோன் தனக்கே புகழென்றார் 832
தம்மைச் சுற்றிய தாக்குதல் மிகைக்க
தூதர் தம்தோள் சுமந்திருந்த
அம்பறாத் தூணியைத் தோழர்கை தந்தே
ஆற்றுக நின்பணி எனவுரைத்தார்
147
ஜின்னாஹ் விழரித்தீன்

Page 88
செம்புனல் சிந்திச் சிவந்தபோர்க் களத்தில்
சென்றனர் பின்னே நபிசென்றார் வெம்பிய துள்ளம் வேதனை தாங்கார்
வார்த்தைகள் மீறி வந்தனவே 833
எந்தவோர் மக்கள் இறைவனின் தூதர்
இரத்தம் முகத்தில் ஒலித்தோடச் சொந்தமென் றாவரோ வெற்றி யவர்க்குச்
சொந்தமென் றாகுமோ” எனப்புகல வந்தது வேத வரிகள் நபிக்கவர்
வார்த்தைக் கெதிர்மறை யாகிடவே “எந்தவோர் உரிமையும் இல்லை உமக்கு
இதுபற்றி யுரைக்க” எனும் வாறே. 834
போரின் உக்கிரம் பெரிதென் றாயினும்
பலங்கொண் டெதிர்ப்பைக் காட்டியதால் காரியம் தோல்வி கண்டிட அடலார்
கைப்பலங் குன்றிடப் பின்நகர்ந்தார் சீரியர் தம்மின் தோழர்க ளோடே
சேர்ந்தனர் குன்றின் மேற்பரப்பு வாரியே அள்ளி வீசினர் கற்களை
வழிதொடர்ந் திடாதே குறைவழியர்கள் 835
கல்மழைப் பொழிவையும் கருத்தினிற் கொள்ளார் காதகன் ஒருவன் மலையேறி கொல்லும் நோக்கிற் குறிகொண் டவனாய்
கருணை நபிமுன் பாய்ந்துவர செல்லவி டாது தடுத்திட முயன்றார்
தோழர்கள் நபிகள் தனித்த வர்தம் எல்லையில் நெருங்க எறிந்தனர் ஈட்டியை
எலும்பொடித் தவனைத் துரத்தியதே 836
148
ஜின்னாஹ் வழfபுத்தீன்
 
 

திருரவி காவியம்
பத்றுப் போரில் பிடிபட்டு மீண்டு
போனவன் அவன்'உபை” பேர்கொண்டோன் சத்தியம் செய்தான் திருநபி உயிரைத்
தானே பறிப்பேன் எனவாக உத்தமத் தூதர் உடன்பதில் உரைத்தார்
உன்னுயிர் என்னால் இறைவிரும்பின் செத்துட லழிந்து சேர்ந்திடும் வேறிடம்
செல்லெனப் பணித்தனர் சென்றனனே 837
99
வீசிய ஈட்டி விலாவெலும் பொடித்திட
வந்த வழியவன் மீண்டனனே கோஷமெ ழுப்பிக் கொண்டே ஓடினான்
கொண்ட ரணஞ்சிறி தாகிடிலும் நாசமே நானவர் நாவுமிழ்ந் திருப்பினும்
நீங்கா வேதனை யால்துடித்தே பேசினான் இதுபோல் பார்த்திரேன் என்றும்
பெருந்துயர் என்றான் பின்மடிந்தான் 838
நெய்யினில் வீழ்ந்த நெருப்பென நபிகள்
நிமலன் வசமடைந் தார்களெனும் பொய்யுரை காற்றில் கலந்தே மக்கள்
புலன்களை முற்றுஞ் செயலிழக்கச் செய்தது மதீனா மாந்தர்கள் சமர்க்களம்
சேர்ந்தே பறந்தனர் சரங்களென வையத் தரசரின் வாழ்வின் பின்னென்
வாழ்வாம் நமக்கென ஏகினரே. 839
கண்களால் நபியைக் காண்கிலோம் என்னும்
கையறு நிலைமை வந்ததென
எண்ணினார் அனைவரும் ஏற்றது பொய்ப்பட
இருப்பினும் இருக்குமென் றுளமுரைக்க
149
ஜின்னாஹ் வழfபுத்தீன்

Page 89
திருரவி காவியம்
பெண்களும் ஒன்றிப் போயினர் உஹதுப்
போர்க்களம் நோக்கிப் பாலகரும்
அண்ணலார் மேலுள அன்பினால் கூடினர்
அண்டமே அதிர்ந்தது அழுகையினால் 840
செவிப்புலன் கொண்ட சேதியால் நபிகள்
திருமகள் தாமும் களம்நோக்கித் தவிப்பொடு தம்பதம் தரைபடா வாறே
தாவினர் காற்றில் சென்றடைந்தார் புவிப்பயன் இறைவன் பகர்ந்தநந் நபிகளைப் பார்த்தனர் பாத்திமா உயிருடனே நவின்றிடப் பெறுமோ நாயகி கொண்ட
நிலையினை மனத்தால் நெகிழ்ந்தனரே 841
செத்தவர் தம்மைச் சேர்த்துப் புதைத்தபின் சேர்த்த சூறைப் பொருட்களுடன் ஒத்தெலாக் குறைவழியர் ஊர்வழி செல்ல
உஹது மலையின் சாரலிலே சத்தமாய் நின்று அபூசுபி யானுங்
குரல்கொடுத் தாரே மலையைநோக்கி உத்தம நபிகள் உறைந்தது ஆங்கென
ஒர்ந்தறிந் ததனால் உரைத்திடுவார் 842
உனக்கே போற்றுதல் உனக்கே போற்றுதல்
“ஒஹ"பைல்’ உன்மதம் நீகாத்தாய் எனஅவர்தம் சிலையினைப் புகழ்ந்து இரைந்தார்
இறைநபி செவிபட வேண்டுமென்றே தனியொரு இறைவனைத் தாழ்மைப் படுத்தும்
தோரணை யில்நபி மனம்நோகும் மனத்துடை யோராய் மொழிந்தனர் அதனை
மாநபி பதிலுரை புகலவைத்தார் 843
150
ஜின்னாஹ் விழரித்தீன்
 

திருநபி காவியம்
"அல்லாஹற் பெரியவன் அல்லாஹற்வே பெரியவன்
அவனே உயர்ந்தவன்’ எனப்புகலச் சொல்லினர் நபிகள் தோழராம் உமரைச்
சொல்லிய வாறே அவர்மொழிந்தார் சொல்மொழி கேட்ட அபூசுப் யானும்
சொல்லுவார் எம்மிடம் 'உஸ்ஸா’ வுண்டு இல்லை எதுவும் உம்மிடம் என்றார்
இதற்கும் ஏற்றநற் பதில்கொண்டார் 84.4
எம்மினைப் பாது காத்திட அல்லாஹற்
இருக்கிறான் உமக்கு எவருமில்லை எம்மான் உரையை எடுத்துரை செய்தார்
இறைநபி தோழர் இதைமடுத்து உம்மினைப் பழிதீர்த் திட்டனம் நாமே
உற்றது பத்ருப் போர்க்களத்தில் எம்மினோர் சுவர்க்கம் எய்தினர் நரகம்
ஏற்றனர் உம்மோர் உமர்புகன்றார். 845
அடுத்தாண்டு உம்மைப் பத்ருக் களத்தில்
அழிப்போம் என்றார் அபூசுப்யான் முடிந்தால் ஆகுக என்றனர் உமரும்
முடிந்தது அவர்கள் சூழுரைகள் தொடர்ந்தனர் மக்கா நோக்கிக் குறைஷிகள் தம்வழி மாண்டோர் தமையடக்கம் நடத்திட முஸ்லிம் நபித்தோ ழர்கள்
நோக்கினார் சமர்க்களம் சேர்ந்தனரே. 846
மரணித் தோரின் உடல்க ளனைத்தும்
மொத்தமாய் ஹம்ஸா உடலருகில் தருவித் தனரே சேர்த்தவை தம்மை
தேண்டிய குழிகளுள் இரண்டிரண்டாய் மருங்கினில் வைத்து மண்ணால் மூடினர்
முதலவன் பதியவர் சேர்ந்துவிட்டார் திருநபி அனைவர்க்குந் தனித்தனி யாகத்
தொழுகையும் முடித்திறை பாற்பணிந்தார். 847 151 ஜின்னாஷ் லூரித்தீன்

Page 90
திருநபி காவியம்
குொடர்ந்து வரும் சோகுனைகள்
மதீனத்தில் வாழும் மற்ற மதத்தினைச் சேர்ந்த பேர்கள் மதித்தனர் இல்லை உஹதின் மோதலின் பின்னர் முன்னர் பத்ரினில் பெற்ற வெற்றி மாண்பினைச் சேர்த்தி ருந்தும் கதிமாறிப் போன தின்று காபீர்கள் துணிவு கொண்டார். 848
மீண்டுமோர் படையெ டுத்து முஸ்லிம்கள் தம்மை முற்றும் பூண்டொடு அழிப்ப தென்றே புளகமுற் றிருந்தார் மாற்றார் வேண்டாத போதி லெல்லாம் விசுவாசங் கொண்ட பேர்க்குள் தூண்டினர் தூப மிட்டார் சமருற வேண்டு மென்றே. 849
பொய்யான வதந்தி தம்மைப் பரப்புவர் குறைஷிக் கூட்டம் மெய்யாகப் படைதி ரட்டி வருகின்றார் என்ப தாக கையகல் ஆயு தங்கள் கூடவே வாழு மாறு செய்தனர் முஸ்லிம் கட்குச் சோதனைக் காலம் அ.தே 850
யூதருங் கிறிஸ்த்துப் பேரும் இணைந்தனர் ஒன்றாய் இஸ்லாம் மீதுறுங் காழ்ப்பு ணர்வால் முறைகெடப் பலவுஞ் செய்தார் ஆதர வளித்த பேர்க்கும் அகதியாய் வந்த பேர்கும் மோதலைத் தூண்டி விட்டு மகிழ்ந்தனர் பாவிப் பேர்கள் 851
தூண்டுவார் ஒருபு றத்தை தூண்டிப்பின் மறுபு றத்தைத் தூண்டுவார் ஒன்றுக் கொன்று தொடர்பிலாக் கருத்தை யூட்டி ஆண்டவன் தூத ராலே அவைதோற்றுப் போகும் மீண்டும் வேண்டிய தவர்க்கு அந்த விளையாட்டே வீணர் கூட்டம் 852
யுத்தத்தால் மட்டு மன்றி யூதரும் பிறருந் தத்தம் யுக்திக்கு ஏற்ற வாறு இடர்செய ஒருவன் ஒர்நாள் பக்திகொண் டெங்கள் கூட்டம் பின்பற்ற வேண்டின் நீங்கள் சத்தியத் தூது ரைக்கத் தருகவோர் சிலரை என்றான் 853
152 ஜின்னாஹ், ஹரித்தீன்

திருநபி காவியம்
வந்தவன் பேரில் ஐயம் வீழ்ந்தபோ தவனுஞ் சொல்வான் வந்திடில் அனைத்துப் பேர்க்கும் வகைநானே என்றாம் நாதர் அந்தவோர் வார்த்தை நம்பி ஏழுபத் தோரைக் கூட்டித் தந்தனர் ஏக தெய்வத் தீன்வழி பரப்ப வென்றே 854
கூட்டத்தின் தலைவ னுக்குக் கடிதமொன் றெழுதித் தந்து கூட்டிச்சென் றிட்ப்ப னித்தார் குறித்தவுர் சென்ற டைந்தார் சாட்டிய இலிகத் தோடு சென்றபேர் தனையுங் கொன்று வேட்டையிட் டானே மற்றோர் வாழ்வையுந் தலைவ னானோன் 855
நிராயுத ராகச் சென்றோர் நிர்க்கதி யானார் தீங்கு வராதெனும் நம்பிக் கைக்கு வந்தவோர் கேடதாகும் இராதொரு தீங்கும் என்று எண்ணிப்போய் மற்றோர் கூட்டம் சரமாரிக் குட்பட் டோராய்த் திரும்பினர் சிலபேர் எஞ்சி 856
அப்துல்லாஹற் இப்னு உபைளன் ஈனனே முஸ்லிம் கட்கு எப்போதுந் தோழ ரோடு இம்சைகள் செய்து வந்தான் கப்பிய கோபத் தோடே கூறுவார் உமறு ஹத்தாப் இப்போதே அவன்றன் சென்னி இலாதுடல் பிரிப்பேன் என்றார் 857
தப்பது வேண்டா மென்றே தடுத்தனர் நபிகள் நாதர் ஒப்பாது உலகம் நாங்கள் உடன்கூட்டிச் சென்று கொன்ற தப்பான பழிச்சொல் தன்னைத் தாங்கிடல் கூடு மென்றே ஒப்பினார் அவன்தன் பிள்ளை உறுவினை தம்பால் ஏற்க. 858
தந்தையைக் கொல்லும் எண்ணம் தலைதுாக்கக் கேள்வி யுற்று எந்தையைக் கொல்லுஞ் செய்கை என்னிடந் தருக வென்றே விந்தையாம் மகனே வந்தார் வாள்தனைக் கைப்பி டித்தே தந்தனை இல்லை வாக்குத் தருமத்தின் தூத UTGD 859
யூதரின் கொடுமை விஞ்சி இஸ்லாத்தைச் சேர்ந்தோ ருக்கு பாதகந் தோன்றத் தோன்ற பெருமானார் பொறுமை மீறி யூதரின் பாலோர் லிகிதம் எழுதியே யனுப்பக் கண்டு யூதர்கள் அஞ்சி னார்கள் உரைத்தவன் வார்த்தை பார்த்தே. 860
153 ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 91
திருநபி காவியம்
என்னுடன் செய்து கொண்ட ஒப்பந்தந் தன்னை மீறி என்றனைக் கொல்லச் சூட்சி இடைவிடா தியற்று கின்றீர் சொன்னவா றொப்பந் தத்தைத் தவிர்த்தநீர் பத்தே நாட்குள் என்னுடை மண்ணை விட்டு இடம்பெயர்ந் தகல்வீ ரென்றாம் 861
பெருமானார் இலிகிதம் கண்டு பேதலித் திருந்த யூதர் திருமுகங் கண்டார் உபையே தூதர்பால் அனுப்பி வைத்தான் ஒருவரும் அஞ்ச வேண்டாம் உங்களின் மண்ணை விட்டு ஒருஅடி யேனும் நீங்கள் ஊர்ந்திடல் வேண்டா மென்றும் 862
என்னுடைப் படையில் இன்று இரண்டாயி ரம்பே ருள்ளார் அன்னவ ரோடு இன்னும் அரேபியர் தம்மைக் கூட்டி முன்வரு வேன்நான் உங்கள் முழுமையுங் காப்பேன் என்று சொன்னவா றிருந்த த.'து துணிவுற்றார் யூதக் கூட்டம் 863
அப்துல்லாஹற் இப்னு உபையின் ஆதர வுண்டா மென்றே தப்பான முடிவு கொண்டு தரித்தனர் கோட்டை யுள்ளே ஒப்பிய வாறு நாட்கள் ஒடியே பத்தைத் தாண்ட கப்பிய இருள்போற் கோட்டை கொண்டதே முற்று கைக்குள் 864
நாட்களும் ஒடி ஒடி நகர்ந்தன கோட்டை யுள்ளே நாட்களைக் கழிப்ப தென்ப நடவாத செயலு மாகி தோட்துணை அளிப்பே னென்று சொன்னவன் செயாது விட்டான் ஆட்பலி ஆகு மென்னும் ஆபத்துந் தோன்றிற் றன்றோ 865
தூதுவர் ஒருவர் மூலம் சேதியொன் றனுப்பி யூதர் ஒதுவார் எமக்கும் எங்கள் உரியவை தமக்கும் நீங்கள் ஆதர வளிப்ப தாயின் அகலுவோம் என்ப தாக பாதகள் தமக்கும் அன்பு பாராட்டும் நபிகள் ஏற்றார் 866
தீங்கெதும் நேரா நீங்கள் செல்லலாம் ஆயு தங்கள் ஆங்குவிட் டகலு வீர்கள் அனைத்துநின் பொருட்க ளெல்லாம் தாங்களே கொண்டு செல்லத் தகுமெனப் பதிலு ரைக்க நீங்கினார் கைபர் நோக்கி நீசர்கள் யூதப் பேரே. 867 154 ஜின்னாஹ் ஷரித்தீன்
 

திருநபி காவியம்
கண்டதும் முகமன் கூறும் கருத்தினில் நபியை யூதர் கண்டதும் உரைப்பார் வார்த்தை கறைபடும் படியாய் கேட்டு மண்டலத் தரசர் தம்மின் மனைவியார் ஆயிஷா அன்னை கொண்டனர் கோபம் ஒர்நாள் காபீரைச் சபித்திட் டாரே. 868
"அஸ்ஸலாமு அலைக்கும்” என்றால் அமைதியுண் டாவ தாகும் "அஸ்ஸலாமு அலைக்கும்’ என்பின் அழிவுண்டா கட்டு மாகும் முஸ்லிம்கள் முகமன் கூறும் முறைமுன்னர் சொன்னவாறே விசுவாசங் கொள்ளா யூதர் வரித்தது மற்றை யொன்றே. 869
இழிவுசெய் நோக்கி னோடு இகழ்மொழி கூறித் தம்மின் பழிதீர்க்குஞ் செய்கை யூதர் பலபடச் செய்ய லானார் வழிவந்தோர் போலுங் காட்டி வேஷங்கள் செய்வார் பின்னால் அழிமதி செய்ய அன்னார் அஞ்சினார் இல்லை யந்தோ. 870
எத்தனை இழிவு செய்தும் இறைதூதர் வெகுண்டா ரில்லை செத்தவர் பிணத்தைத் தூக்கிச் செல்லுங்கால் எழுந்து நிற்கும் உத்தமச் செயலுஞ் செய்வார் உவந்திடா முஸ்லிம்கட்கு “இத்தனை நாளும் அ.தில் இறையாத்மா இருந்த” தென்பார் 871
குறைவழிகள் தங்கள் மீது கோபிப்பர் என்னும் அச்சம் நிறைந்தது யூத ருக்கும் நேர்கெட்ட “உபை'க்கும் அந்நாள் குறைவழிகள் உதவி என்றும் கிட்டுமென் றிறைவன் தூதர் அறிந்திடத் தீங்கு செய்யும் அகந்தையும் பெற்றிட் டாரே. 872
நடந்ததோர் நிகழ்வு ஒர்நாள் நபிவழிப் பெண்க டைக்கு நடந்தனள் அழகு கண்டே நீசர்கள் பலதுங் கூறிக் கெடுக்கவுஞ் செய்தார் கண்டு கொதிப்புற்ற முஸ்லிம் அந்தக் கொடியோனை அடித்தார் யூதர் கூடியன் னாரைக் கொன்றார் 873
சேதியை அறிந்த தூதர் சென்றனர் யூதர் நோக்கி ஒதுவார் இறைக்கு அஞ்சி ஒழுகுவிர் அன்றில் பத்ரின் போதுற்ற வாகாம் உங்கள் பிராணனும் போகு மென்றே கோதறு நபிகள் வார்த்தை கேட்டதும் யூதர் சொல்வார் 874
155 ஜின்னாஹ் வழfபுத்தீன்

Page 92
திருநபி காவியம்
பெருமானின் எச்ச ரிக்கை புண்ணுறச் செய்யச் சொல்வார் கருதாதீர் நாங்க ளந்தக் குறைஷிகள் போலா மென்றே வரினொரு யுத்தம் எங்கள் வீரத்தை அறிவீர் செய்த ஒருமைப்பா டுடைந்த தின்று யுத்தமே பதிலென் றாரே. 875
வலிந்தொரு யுத்தம் வேண்டி வருநிலை தோன்றக் கோட்டைப் புலத்தினை வளைத்தார் யூதர் புகவர இயலா வாறே பலத்தினைக் காட்ட வென்று பறையறைந் தோர்கள் முற்றும் பலமிழந் திருந்தார் தூதுப் பணியொன்று நடந்த தாமே. 876
உடன்பாடும் வேண்டாம் அன்னார் உறவதும் வேண்டாம் இன்றே அடியொடு அழிப்ப தொன்றே அடுக்குமோர் செயலாம் என்று துடித்தனர் முஸ்லிம் வீரர் தூதர்முன் "உபை'யும் வந்தே விடுவிப்பீர் அவர்கள் தம்மை வேற்றிடஞ் செல்வார் என்றான். 877
கேடுடைப் பேர்கள் எம்மான் கொடுத்தனர் சலுகை பெற்றே நாடினார் சிரியா நோக்கி நூறேழு தொகையைக் கொண்டோர் கூடிடா யுத்த மொன்றால் குருதிவீண் விரய மாகி ஓடுதல் தவிர்த்தார் இந்த உலகினுக் கருளாய் வந்தோர் 878
பிறிதொரு யூதக் கூட்டம் பண்ணிய ஒப்பந் தத்தை முறித்தனர் முஸ்லிம் பேரை முறையறக் கொன்ற தாலே பெறுமுதல் வந்தி கொள்ளப் போயினர் தோழ ரோடே முறையாக வரவேற்ப் பொன்றும் வழங்கினார் நபிக ளார்க்கே. 879
யூதர்கள் தலைவ னோடு உரையாடிக் கொண்டி ருக்க யூதரில் ஒருவன் மாடிக்(கு) ஓடினான் நோக்கில் மிக்க தூதரின் கண்ணில் அன்னான் தோன்றினான் தனக்கு மேலே ஏதுவாய்ப் பாறை யொன்றும் இருத்தலுங் கண்ணுற் றாரே. 880
கண்டதைக் கண்ணுற் றாற்போல் காட்டிடார் தனையொ துக்கிக் கொண்டனர் அறிந்தால் ஆங்கோர் கலகமே தோன்று மென்று விண்டாரை விட்டு மெல்ல விரைந்தனர் மதீனா நோக்கி உண்டொரு துரித வேலை உடன்செல வேண்டு மென்றே. 881
156 ஜின்னாஹ் ஷரித்தீன்
 

திருநபி காவியே
அறிந்தனர் சேதி அன்றே அண்ணலார் எடுத்துக் கூற வெறிகொண்ட சிங்கம் போல வீறுகொண் டெழுந்தார் முஸ்லிம் மறவர்கள் நபித டுத்தே முறையாக நடப்போ மென்றார் குறியொன்று தவறிப் போன கருத்தினால் பொறுமை ஏற்றார். 882
வருமாண்டு பத்ரில் உம்மை வதைத்திட வருவோ மென்சூழ் உரைசெய்து சென்ற சுப்யான் வகுத்தநாள் வந்த போழ்தும் பெருபஞ்சம் வந்த தாலே புகன்றவா றியற்ற எண்ணார் இருப்பினும் அச்ச மூட்ட ஏவினார் தூதொன் றாமே. 883
முற்றுமிவ் வறபு நாடு முயன்றாலும் வெற்றி கொள்ள அற்றதோர் நிலையில் நாங்கள் அதிபெரும் படையோ டுற்றோம் முற்படு வோர்கள் போரில் முடி(வு)"உஹத் தந்த வற்றில் அற்பமே காண்பர் என்றே அறைந்திருந் தார்கள் அ.தில் 884
எச்சரிக் கையென் பாங்காய் எழுதிய தூதின் வார்த்தை அச்சத்தை மதீனத் தோருள் ஆக்கிய துணர்ந்த எம்மான் நிச்சயம் நீங்கள் யாரும் நேரெதிர் கொள்ள அஞ்சின் துச்சமென் உயிரெ னக்குத் தனித்தெனுஞ் செல்வே னென்றார் 885
பெருமானார் சீற்றம் என்றும் பார்த்திரா வாறி ருக்க கருக்கொண்ட துள்ளம் போரைக் கொண்டிடும் வேட்கை யாலே செருக்கொடு சுபியான் செய்த சபதத்துக் கஞ்சி நாங்கள் இருப்பதாய் எண்ணு கின்ற இழிநிலை தவிர்க்கப் போந்தார் 886
வரட்சியால் மிகுந்த காலம் வளமற்று நிலங்க ளெல்லாம் கருகிய நிலையில் தம்மின் குதிரைகள் ஒட்ட கைகள் பருகிட நீரும் உண்ணப் புல்லுமற் றிருந்த லாலே போரிடும் எண்ணந் தன்னில் பின்நின்றார் அபூசுப் யானே. 887
சூழுரை செய்த பின்னர் திரும்பியே செல்வ தாயின் சூழுமோர் பழிக்குத் தன்னைத் தொடர்புறச் செய்வரென்று தோழரை அணுகிச் சுப்யான் திட்டமொன் றியற்றிச் செய்வார் மூழாது யுத்தந் தன்னை முறியடித் திடும்பே றாக 888 157 ஜின்னாஹ் ஷரீபுத்தீன்

Page 93
திருநபி காவியம்
குறைவழியாய் இல்லா மக்காக் குடிபதி "நூஜம்” என்பேரை முறையற அனுப்பி வைத்தார் முஸ்லிம்கள் அச்சங் கொள்ளும் முறையினில் பேசி யுத்த மன்றிலுக் கண்டா வண்ணம் மறித்திடும் நோக்காய்க் கொண்டு முயற்சியில் தோல்வி கண்டார் 889
எதிர்கொண்டால் தோல்வி என்னும் எண்ணத்தில் வலுப்பா டுற்ற எதிரிகள் மக்கா நோக்கி இடம்பெயர்ந் தகன்றார் ஆங்கே துதிபாடி னார்கள் வார்த்தைச் சரங்களால் வெள்கி யோர்கள் பதிலுரை பகர மாட்டார் புண்ணுண்டார் மனங்க ளாலே 890
நடந்தவை இவைகள் போக நாட்டமுற் றாரே வேறோர் இடம்பதி கொண்ட பேர்கள் இறைதூதர் தம்மைத் தாக்கக் கடிதினில் அறிந்தார் போரும் கண்டது களத்தில் அன்னார் மடிந்தவர் பெரும்பா லானோர் முஸ்லிம்கள் வாகை கொண்டார் 891
புறமுது கிட்ட பேர்கள் புறம்விட்டார் மனைவி மக்கள் சிறைப்பட்டார் பொருட்க ளெல்லாம் சூறையிற் சேர்ந்த தன்றோ சிறைப்பட்ட பெண்டி ருள்ளே ஜூவைரிய்யா என்னும் பெண்ணார் நிறைபெருங் குலத்து மாது நின்றனர் நாணத் தோடே 892
என்னுடைக் குலத்துக் கீனம் என்மகள் சிறைப்பட் டேகல் மன்னித்து என்பா லேக முறைசெய்க என்றே தந்தை தன்னையே தாழ்த்தி வேண்டத் தூதரெம் பெருமான் சொல்வார் அன்னவர் விருப்பந் தன்னை அவர்வழி விடுக என்றே. 893
சென்றுமே ஜ"வைரிய் யாவின் திருமுகம் நோக்கித் தந்தை என்றனுக் கிழிவு தோன்றா(து) ஏற்றவோர் பதிலைக் கூறின் உன்றனின் விடுத லைக்கு உதவும. தென்று ரைப்ப நன்றுநான் நபிக ளார்க்கு நலஞ்செய விளைந்தேன் என்றார் 894
அன்னையர் விருப்பத் தோடே அவர்கரம் நபிகள் பற்ற அன்னையார் குடும்பத் தோர்கள் அடிமையாய் இருத்த லாகா என்றெண்ணி அனைத்துப் பேரும் இறைநபி விடுவித் தார்கள் நன்றியின் பாற்பட் டோர்கள் நபிவழி பற்றி னாரே. 895
158 566) IOB Opfiabiör
 

திருர காவியம்
அகழ் யுத்கும்
மதீனத்து மண்ணி ருந்து முஸ்லிம்க ளால்வி ரட்டிப் பதிதனைக் கைபர் தன்னில் "பணிநதீர்” யூதர் கூட்டம் புதிதாக அமைத்துக் கொண்ட போதிலும் மீண்டும் வந்து மதீனாவை அடைவ தற்கே மனங்கொண்டார் உறுதி பூண்டார் 896
என்றிருந் தாலும் இஸ்லாம் இலாதொழித் திடவே செய்யும் புன்மதி கொண்டு மக்காப் புலம்வாழும் குறைவழி யர்கள் இன்னுமோர் யுத்தஞ் செய்ய இடைவிடா துழைப்பர் என்றே எண்ணினர் யூதர் தாமும் இணைந்திட முடிவு கொண்டார் 897
ஒன்றித்து உங்க ளோடு உயிர்ப்பலி கொடுக்க நாங்கள் என்றுமே தயாரா யுள்ளோம் என்னுமோர் உறுதிப் பாட்டைச் சென்றொரு தூதுக் கூட்டம் தந்திடக் குறைஷி யானோர் நன்றென்று மகிழ்ந்தொப் பந்தம் நடத்தினார் ஒன்று சேர்ந்தார் 898
நாடிவந் துற்ற யூதர் நயம்பட உரைத்த வார்த்தை கேடுடைக் குறைவழி யர்க்கு கைப்பலங் கொண்டாற் போன்றாம் கூடினர் க.பா தன்னில் கொண்டனர் சபதம் என்றும் நாடிடோம் பிரிவை என்றே நெஞ்சுறப் பொருத்தங் கொண்டார் 899
தமைச்சுற்றி வாழும் யூதர் தம்மையும் மனத்தால் மாற்றி அமைத்தனர் படையொன் றென்றும் அமைந்திடாத் தொகையில் அன்னார் இமைப்பிலார் ஆயு தங்கள் ஏறிச்செல் வாக னங்கள் சுமைசுமை யாக வேண்டுந் தானிய வகையுஞ் சேர்த்தார் 900
அபூசுப்யான் தலைமை யிற்றான் அமைந்ததப் படையும் முஹம்மத் நபிதனை அவர்தம் மார்க்கம் நிலைபெறா தொழித்த லொன்றே நிபந்தனை ஒவ்வோர் பேர்க்கும் நெஞ்சினில் உறைந்த தாகும் அபத்தமம் முடிவு என்றே அறிந்திலார் முயன்றிட் டாரே. 901
1.59 ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 94
திருநபி காவியம்
போருக்கு ஆயத் தங்கள் பெரிதென நடக்குஞ் சேதி யாருக்கும் அறியா வண்ணம் இறைதூதர் தமக்கு "அப்பாஸ்” சேர்ந்திடச் செய்தார் காலம் சிறிதுள தாகும் எம்மான் சேர்த்தனர் அனைத்தும் உள்ளோர் தமைத்திட்டம் தீட்டுதற்கே, 902
தனித்தனி ஒவ்வோர் பேரும் தத்தமக் குதித்த வாறு புனிதப்போர் தன்னை ஏற்க புகன்றனர் கருத்தை அ.தில் அனைத்திலும் சிறந்த தாக அமைந்ததோர் யுக்தி உற்றோர் அனைவரும் ஏற்றார் முற்றும் ஒழுகிடச் சித்தங் கொண்டார். 903
ஸல்மானுல் பார்சி சொன்ன திட்டமாம் அகழி வெட்டல் எல்லைகள் மூன்று நன்றாய் அரண்செயப் பட்டி ருப்ப இல்லாத புறமொன் றில்ஓர் அகழியை வெட்டி யந்தப் பொல்லாரை உள்வ ராது பாதுகாத் திடுதல் அ.தே 904
உன்னத திட்ட ம.தை உடனொப்புக் கொண்ட வாறே முன்நின்றார் அனைத்துப் பேரும் முடித்திடுந் திடமுங் கொண்டார் வன்முறைப் போரை வெல்ல வாகான முடிவா மென்றே முன்னவன் தூதர் ஒன்றி முயற்சியில் வெற்றி கண்டார் 905
அகலமாய் ஆழ மாக அமைந்தது இடைத்து ரத்தை புகவொரு வழியில் லாது பூரணப் பொலிவி னோடே மிகத்துரி தாகச் செய்தார் மருவலர் மருவா வண்ணம் அரண்களாய் கோட்டை யோடே அமைந்தன மலைக ளம்மா 906
அகழியை வெட்டும் போது அதனிடடைப் பாறை யொன்று அகற்றிட முடியா வாறு அமைந்திருந் ததுவாம் செய்ய வகையறி யாது நின்றார் வேலையுட் பட்டோர் நீங்க வகைசெய்தார் நபிகள் நாதர் வியப்புறும் நிகழ்வாம் அ.தே 907
கோடரி ஒன்றைக் கையில் கொண்டதன் புறத்தாற் கல்லில் சாடினார் நபிகள் கல்லில் சிறியதோர் வெடிப்புத் தோன்ற கூடிநின் றோர்க ளோடு குரலொலி செய்தார் நாதர் "ஆண்டவன் பெரியோன்’ என்னும் “அல்லாஹ" அக்பர்’ என்றே 908
160 ஜின்னாஹ் ஷரித்தீன்

திருநபி காவியம்
மும்முறை கல்லின் மீது மாநபி சாடக் கல்லும் செம்மையாய்ப் பிளவு பட்டுத் தகர்ந்தது அகழும் வேலை தம்மைமுற் றாகச் செய்தார் திருநபி துணைநின் றார்கள் வெம்பகை யுற்ற பேர்கள் வந்துவீழ்ந் தழியு மாறே. 909
ஒவ்வொரு சமூகத் திற்கும் ஒவ்வொரு பகுதி தன்னைச் செவ்வையாய்ப் பிரித்த ளித்துத் தந்தார்கள் நபிகள் நாதர் ஒவ்வொரு நாளும் காலை உதயத்தின் தொழுகை தொட்டுக் கவ்விடும் இருள்வ ரைக்கும் கடமையிற் கண்ணாய் நின்றார் 910
பிறருடன் தானுஞ் சேர்ந்து பணிகளில் பங்கு கொண்டு நிறைவுறச் செய்தார் எம்மான் நிலைத்தொரு போழ்தும் நில்லார் நிறைந்தமண் கூடை தன்னை நபிநாதர் தோள்சு மக்கும் மறைதந்த பெருமா னார்தம் மகத்துவம் பெரிதா மன்றோ 911
பகலெலாம் உழைப்ப தாலே பசிவிஞ்சும் உணவு வேண்டும் அகடுகள் நிரப்பத் தானும் அன்னமற் றிருந்த போழ்து மிகமெலிந் திருந்தார் ஒர்நாள் மாநபி கண்ட ஜாபீர் அகத்தினாள் தன்னி டத்தே அதுபற்றிக் கூற லானார் 912
உண்டதோ ஏதும் உண்ண உவந்துநாம் அவர்க்க ளிக்க கொண்டதிவ் ஆடுஞ் சற்றுக் கோதுமை தாமு மென்றார் நன்றது போதும் உண்ண நல்லது செய்க என்றே சென்றவர் நபிக ளாரைத் தனதில்லம் அழைக்க லானார். 913
இருள்சூழ வீடு நோக்கி ஏகிட நாடி மற்றோர் பொருந்திடும் வேளை ய..து பெருமானார் அவரை நோக்கி விருந்துண்ண வாரீர் ஜாபீர் வீட்டிற்கு என்ற ழைத்தார் பொருந்தினர் அனைத்துப் பேரும் புதுமையொன் றான தாங்கே 914
உள்ள்தோ சொற்பம் அன்னார் உடன்வரு வோர்கள் கொள்ளை அள்ளொன்று கொண்டாற் கூட ஆகாத நிலைமை என்றே உள்ளத்தில் உறுத்த யாது உறுமெனும் அச்சத் தோடு உள்ளதை நபிகள் முன்னே உவந்துமே ஜாபீர் நின்றார் 915
161 ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 95
திருநபி காவியம்
தன்னொடு பத்துப் பேர்கள் தரையமர்ந் துணவு கொள்ள பின்னுமோர் பத்துப் பேரை பெருமானார் அழைத்தார் அன்னார் முன்னவர்போல உண்டு மகிழ்ந்தனர் எஞ்சியோரும் தன்னிறை வடைந்தார் மீதந் தனையுமே ஜாபீர் கண்டார் 916
அகழியின் வேலை முற்றி ஆயத்த மாகும் வேளை பகைவர்கள் பலவா றாகப் பிரிந்துமுன் னேறுஞ் செய்தி வகைப்பட்ட துளவார் மூலம் வீடுகள் வெறுமை யாகி தகுந்தவோர் இடத்தில் பெண்கள் சிறுவர்கள் காக்கப் பட்டார் 917
தேர்ந்தெடுத் திருந்தாற் போல “ஸால்’ மலை அடிவா ரத்தைச் சார்ந்தவர் பாச றைகள் தோன்றின குறைவழி யர்கள் போர்ப்படை உஹதை அண்டிப் பாசறை அமைக்க அன்னார் சார்புடைப் பேரும் வேறாய் தரித்தனர் அருக தாமே. 918
யத்ரீபைச் சுற்றி யுள்ள இடங்களில் பயிர்க ளெல்லாம் சுத்தமாய் அறுவ டைக்குட் சேர்ந்ததால் குறைஷி யர்கள் மெத்தமும் அஞ்சி னார்கள் மேய்வன தீனி யற்றுச் செத்தழிந் திடுமே யென்றாம் தம்வசம் உளவும் தீர்ந்தால் 919
உடனடிப் போர்தொ டுத்து ஓரிரு நாளி னுள்ளே கிடைத்திடும் வெற்றி தன்னை கண்டிடுந் தாகம் உந்த அடைந்தனர் நகரை ஆங்கு அன்னவர் கண்டார் மாற்றார் படையதுங் கானுந் தூரம் பார்த்திருப் பதனை யாமே 920
குன்றுடைப் பிரதே சத்தில் குழுகுழு வாகத் தம்மை ஒன்றுசேர்த் திருப்பார் என்னும் உறுதியில் வந்தோர் ஊரின் முன்றலில் இருத்தல் கண்டார் முற்றிலும் படையைக் கொண்டு கொன்றொழித் திடுதல் கூடும் கணத்திடை எனநி னைந்தார் 921
நெருங்கிவந் துற்றோர் கண்டார் நீண்டபே ரகழி யொன்றை சரந்தொடுத் தழிக்கும் வீரர் தொகைமறு புறத்தில் நிற்க பெருவியப் படைந்தே ஏது புரிவது என்றி லாது அருகினிற் செல்லக் கூட அஞ்சினார் துணுக்குற் றாரே 922
162 ஜின்னாஹ் ஷரித்தீன்
 

திருநபி காவியம்
மெய்காக்குங் கவசம் பூண்டு வீரர்கள் மறுபு றத்தில் கைகொண்ட வில்லுந் தோளில் கூரிய அம்பின் கூடும் எய்திடத் துடிக்கும் நெஞ்சும் ஏறென நோக்கும் நோக்கும். ஐயத்தைத் தோற்று விக்க அடலர்கள் அயர்ந்து போனார். 923
வந்தவர் குதிரை வந்த வேகத்தை உடன்நி றுத்தி எந்திரம் போல நிற்க எதிர்தரப் பிருந்து மாரி வந்ததோ வென்னும் பாங்காய் வரிசிலைக் கும்பல் பெய்ய வந்தவா றகன்றார் அன்று விதித்தபோர் அதுவொன் றாமே. 924
பின்நோக்கி வந்தோர் ஏது புரிவது இனியென் றாக பன்நிலைப் பாட்டில் நின்றார் புதுப்புது யுக்தி செய்த பின்னொரு முடிவு கொண்டார் 'பனிகுரை' லாக்கள் யூதர் தன்னொடு உறவு கொண்டு திசைமாற்றிப் போர்தொ டுக்க 925
மதீனாவை அணுகா வாறு மறைத்திருந் ததுவாம் அன்னார் மதிற்கோட்டை தென்கி ழக்கு மார்க்கத்தில் அவரோ டொன்றின் அதிவேக மாகப் போருக் கணையிட்டு வாகை கொள்ளும் சதியொன்றைத் தீட்டி னார்கள் துணைக்கொரு யூதன் வந்தான். 926
மதீனாவை வெற்றி கொள்ள மக்கத்துப் படையோ டொன்றி எதிரியாய் கைபர் நாட்டின் யூதர்கள் வந்தி ருந்தார் புதிதான திட்டத் திற்கு பொருந்தினான் தலைவன் நான்போய் எதிரணி யூதர் தம்மை எம்வழி கொணர்வே னென்றான் 927
பெருமகிழ் வுற்றார் சுப்யான் பொருந்தினார் உடனே யந்தக் கருமத்தை ஆற்றக் கூறக் கைபரின் தலைவன் சென்று உருமாற்றஞ் செய்தான் யூதர் உடன்படா திருந்த போது பெருநிதி யளிப்போ மென்னும் பொருத்தத்தால் பொருந்தினாரே 928
சேதியை அறிந்த நாதர் தெரிந்தறிந் திடச்சென் றோர்தம் சேதியில் உண்மை ஒர்ந்து துயருற்ற போழ்தும் உள்ளப் பாதிப்புக் கொண்டா ரில்லை புத்துணர் வுற்றார் உள்ளே பாதிப்புத் தோன்றா வண்ணம் புதியதோர் முடிவுங் கொண்டர் 929
163 566) TOIB (prflyfö6

Page 96
திருநபி காவியே
படைப்பிரி வொன்றை உள்ளே பாதுகாப் பெண்ணி வைத்தல் உடன்செய்ய வேண்டு கின்ற யுக்தியென் றறிந்து நூறு படைவீரர் தமைஅ கழ்மேற் புறத்திருந் தழைத்து இன்னும் உடன்பலர் கூட்டி 'ஸைதை” இணைத்தனர் தலைமை ஏற்க 930
புதிதான செய்தி யொன்று பிறந்தது இரவு வேளை சதிகாரக் "குரைலா’க் கள்தம் கோட்டையுட் புகுந்து மத்திப் பதிதனை வென்று உற்ற பெண்களைச் சிறாரைக் கைக்கொள் வதுவென்ப தாமே அ.து வகைத்திடா துற்ற தாமே. 931
இரவுகள் தோறும் வீரர் இறைநாமம் ஓதி ஓதி உருவிய வாட்க ளோடு உலவிட வேண்டும் வீதி வருவது காண்போ ருக்கு வல்லவோர் பாது காப்பு இருப்பது போன்ற எண்ணம் ஏற்பட வேண்டு மென்றே 932
அகழியின் பாது காப்பு அவசியம் ஆன தாலே பகலிர வென்றி லாது போர்வீரர் கண்கா னித்தார் மிகநேரம் பணிமேற் கொண்டு மிகுகளைப் புற்றார் வீரர் நகர்ந்தன நாட்கள் மேலும் நேர்கொண்டார் முஸ்லிம் தீரர் 933
அகழியின் ஒர்பு றத்தே அதிகாப்புக் குறைந்த வேளை புகவழி பார்த்தி ருந்தோர் பலன்கொண்டார் “இக்ரீ மா”வே வகைவர இன்னும் மூவர் வந்தனர் தொடர்ந்து கண்டே பகைவரை அலிமுன் பாய்ந்து பின்வரும் நிலைத விர்த்தார் 934
வந்தவர் வந்த வாறே வரமுயன் றோர்கள் பின்னே குந்தகம் வருமென் றஞ்சிக் குதிரைகள் நிறுத்தி நின்றார் முந்தியோர் தனில்”அம்” என்போன் மோதிட அழைத்தான் கண்டு வந்தனர் அலிமுன் அம்ரின் வாளொடு வீரங் காட்ட 935
அலிப்புலி வருதல் கண்டு “அம்ர்’ எடுத் துரைப்பான் உந்தை பலகாலம் என்றன் நண்பன் பாலகன் நீயெ னக்கு விலகிப்போ என்றே மீண்டும் வலிந்திட ஏற்றார் முன்னே புலியெனப் பாய்ந்த லீதன் புயபலங் காட்டி னாரே 936
164 ஜின்னாஹ் வழfபுத்தீன்
 

திருரவி காவியம்
பரிகளிர் புறத்தி ருந்தும் பாய்ந்தன வாளும் வாளும் பொருதின தீக்க ணங்கள் பறந்தன சுற்றி யெங்கும் மருவியே முன்னும் பின்னும் மாறின பரிகள் வீரர்
உருவிய வாளி ரண்டும் ஓய்ந்தன வில்லை யம்மா 937
மண்ணினைப் புரட்டிக் காலால் மிதித்திடப் புழுதி யெங்கும் கண்ணொளி மங்கும் வாறாய்க் கிளர்த்தது நோக்க மாட்டா வண்ணமாய்ச் சிலக ணத்துள் வாயொலி கேட்ட தாங்கே.
"விண்ணவன் பெரியோன்’ என்சொல் "அல்லாஹ" அக்பர்” என்றே 938
வீரப்போர் தன்னை மற்ற வீரர்கள் பார்த்தி ருக்குங் காரணங் கண்ட மற்றீர் குறைவழிகள் வெளியிற் பாய வீரியங் குன்றிக் கால்கள் வளைந்திடப் பரியி ரண்டும் சோர்ந்தன அகழி யுள்ளே புரண்டன கண்டார் வீரர் 939
நடந்தவிந் நிகழ்வி னாலே நினைந்தனர் குறைவழி யர்கள் கடப்பது அகழை மிக்க கடினமே ஆன போழ்தும் முடியாத தொன்றாம் இல்லை மனத்துணி வுற்றார் நாள்போய்த் தொடர்ந்தனர் மறுநாள் வெய்யோன் தோன்றுமுன் போரை மாதோ 940
பல்வேறு புறத்தி ருந்தும் பரந்தது தாக்கு தல்கள் நல்லாசி புகன்றார் நாதர் நம்புறம் வெற்றி யொன்ற சொல்லொன்றே வீர ருக்குத் துணிவொடு வீரங் காட்ட நல்கிய சக்தி யாகும் நீசரைச் துவம்சம் செய்ய 941
மற்றொரு புறத்தி லுற்ற மாதரார் செய்கை நெஞ்சைப் பற்றிடும் வாறாம் பெண்கள் பாதுகாப் படைய வென்றே தற்பரன் தூதர் வேறாய்த் தனித்தொரு கோட்டை யுள்ளே முற்றுமாய்ச் சேர்த்து வைத்தார் முறைக்காவல் இருவர் நின்றார் 942
கோட்டையைத் தாக்கும் நோக்கில் குறைஷியர் உளவு கொள்ளும் நோட்டத்தில் ஒருவ னைமுன் நாடிடப் பணித்தி ருந்தார் கோட்டைவாய் தனிலப் பேரைக் கண்டனர் "ஸ்பீய்யா’ அன்னை கேட்டனர் அவனைக் கொல்லக் காவலில் நின்றிட் டோரை 943
165 ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 97
திருநபி காவியம்
மறுத்துரை செய்தான் அப்பேர் மறவனல் லேன்நான் என்றே சிறுத்தையின் வீரங் கொண்டார் “ஸ்பீய்யா” ஒர்தடியெ டுத்துப் புறமொன்றில் ஒதுங்கி நின்று பிளந்திட்டார் சிரசைச் சாய்ந்தான் அறுத்தவன் தலையைக் கோட்டை அப்புறம் எறிந்திட் டாரே 944
தடைகளைத் தாண்டி முன்னே தாவிடக் குறைஷி யர்கள் துடித்தனர் பன்மு றைகள் தோற்றனர் முயற்சி யெல்லாம் கடைவழி சென்ற தன்றோ காரிருள் சூழ வெய்யோன் விடைபெற இருபு றத்தும் விரைத்தனர் பாச றைக்கே. 945
அன்றுநாள் பகலின் போழ்து அண்மிடத் தொழுகை நேரம் சொன்னார்கள் தோழர் இன்னுந் தொழவில்லை நாங்க ளென்றே முன்னவன் பேரால் நானும் முடித்திலை என்றார் நாதர் பின்னேரப் போழ்தும் போரின் பாலது கழிந்த தன்றோ 946
விதியான நாளி ருந்து விடாதொரு பொழுதைத் தானும் விதியாக்கிக் கொண்டோ ரன்று வருந்தொடர்த் தாக்கத் தாலே பத்தனைப் பணிந்தா ரில்லை பொதுவினில் ஒன்று கூட்டி முதன்மையாய் நபிகள் நிற்க முடித்தனர் இறையே சாட்சி. 947
முற்றுக்கை தொடர்ந்த தாலும் முழுப்பலத் தோடு தாக்கல் சற்றெனுங் குறையா வாறு சேர்ந்துவந் துற்ற தாலும் பற்றுள உணவுந் தீர்ந்து போகிடும் நிலையி னாலும் கொற்றவன் தூதர் தாமாய்க் கொண்டனர் முடிவாய் ஒன்றே 948
எதிரிகள் புறத்தி லுள்ள ஒருசாரார் தம்பு றத்தின் கதிவரச் செய்ய வென்னுங் கருத்தொடு தமது மண்ணில் எதிர்கொள்ளும் விளைச்சல் தம்மில் ஏற்புற மூன்றில் ஒன்றை பதிலுக்காய்த் தருவ தாகும் பெருமானார் முடிவாம் அ.தே 949
தான்கொண்ட முடிவை மற்றத் தோழருக் குரைக்க “ஸாஆத்” ஏனிந்த முடிவு “அல்லாஹற்’ ஏவலின் பொருட்டோ அன்றி தானாக நீங்கள் எம்பால் தயைகூர்ந்து கொண்ட தொன்றா ஏனென அறிய எம்பால் இயம்புக எனப்பு கன்றார். 950
166 ஜின்னாஹ் வழfபுத்தீன்
 

திருநபி காவியே
இறைவனின் ஆணை யாயின் எதிர்த்தொரு வார்த்தை கூற அறிகிலோம் நாங்கள் உங்கள் அறிவுக்குட் பட்ட தாயின் பெறுகவெம் கருத்தைத் தாமும் பின்காண்போம் முடிவு என்றார் மறையவன் தூதர் இ.தென் மனத்தினில் உதித்த தென்றார் 951
கல்லையும் மண்ணை யும்நாம் கடவுளென் றிருந்த காலை இல்லையோர் கனியைக் கூட ஏற்றநற் கிரய மற்று வல்லார்க்கும் அளித்த தில்லை வானவன் தூதே உங்கள் நல்வழிப் பயணம் பற்றும் நாங்களா தருவோம் என்றார். 952
வழங்கிட வேண்டு மாயின் வாள்வீச்சு ஒன்றே இன்று வழங்கிட வேறொன் றில்லை வள்ளலே என்றார் மீண்டும் முழங்கிய வார்த்தை கேட்டு மாநபி மிகம கிழ்ந்தே வழியது தாமென் றாகில் விரும்புதல் தவிர்ப்போ மென்றார் 953
நாட்களும் ஒவ்வொன் றாக நகர்ந்தன தாங்கள் கொண்ட நாட்டமுஞ் சிறிது கூட நிறைவேறாப் போழ்தில் வல்லோன் நாட்டமும் வேறொன் றாகி நிகழ்த்தினான் இயற்கைப் பேற்றை நாட்டிய ததுவும் நாயன் நினைந்தவா றாகு மம்மா 954
காற்றொடு மழையுங் கூடிக் குமுறியே கொட்டத் தேகத் தோற்புறம் உறையும் வாறு சொரிந்தது பனியும் தாங்க ஏற்றிடாக் குதிரை ஒட்டை இறந்தன கூடா ரத்தின் மேற்புறம் வானை நோக்கி மறைந்தன வளியி னோடே 955
இயற்கையின் சீற்றத் தோடே இரண்முங் குறைதல் கண்டு செயற்படுஞ் செய்கை தேரார் தாக்கிட வந்த பேர்கள் தயக்கமுற் றார்கள் போரைத் தொடர்வதா இலையா வென்றே வயப்படு முடிவொன் றில்லார் வெற்றியை மறந்திட் டாரே 956
எதிரிகள் புறத்தி ருந்து எம்மானை அண்மி யோர்பேர் மதிமாறி முழும னத்தாய் முஸ்லிம்மாய் மாறி னேன்நான் விதித்தவா றெதையுஞ் செய்ய விருப்புற்றென் சொல்க வென்றார் மதித்தனர் வதனங் காட்டும் மனத்தினை ஒர்ந்த தாலே 957
167 ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 98
திருநபி காவியம்
என்னதான் இயலு மின்று எதிரிகள் இடையே கூட்டுத் தன்மையை உடைத்த லன்றித் தனித்தவோர் மனித ராலே சொன்னனர் நபிகள் கேட்டுத் துணிந்தனர் “நயீம்'என் பேராம் தன்னையோர் தூத னாக்கிச் சென்றனர் குரைலார் கண்ணே 958
சூட்சியைச் சூட்சி யாலே சுட்டிடல் கூடும் என்னும் மாட்சியால் உந்தப் பட்டு முறைப்படி தலைவர் தம்மைக் கேட்டிடச் செய்தார் அன்று கொண்டுள நிலைமை சொன்னார் மீட்சிக்கு வழிகள் கூறி விபரங்கள் உரைக்க லானார் 959
உங்களின் நலனை எண்ணி உரைப்பது கேண்மின் வெற்றி தங்கிடில் உங்கள் பக்கல் தவறிலை செய்கை ஆனால் இங்குள நிலைமை வேறு எவர்பக்கம் வெற்றி சாரும் பங்கமுற் றீர்க ளென்றால் பின்னுங்கள் கதிகே டாமே 960
முடிவெது வாகி னாலும் மக்கத்துக் குறைஷிப் பேர்கள் கடிதினில் அகல்வார் நீங்கள் கூடிவாழ் வோர்க ளிங்கு உடனுள்ள முஸ்லிம் கள்தாம் குறைவழிகள் அல்லர் என்றார் முடிவொன்றைச் சரியாய்க் கொள்வீர் மற்றொன்றுங் கூறி னாரே 961
குறைஷிகள் பேரில் நீங்கள் குறைந்தது இரண்டு மூன்று பெறுமதி மிக்க பேரைப் பகரமாய்ப் பெற்றுப் போரில் உறுதியாய் வெற்றி கொள்ளின் உறும்விடு தலையாம் என்று பெறுவீர்கள் அன்றேல் உங்கள் பாட்டினில் அவர்சொல் வாரே 962
கைவிட்டுப் போயின் உங்கள் கதிதனை எண்ணிப் பாரீர் கைவிட்டுப் போரை மீழும் கொள்கையும் உண்டா மென்று மெய்யான சேதி யொன்று மருவிற்று என்செ விக்கு செய்வதை உணர்ந்து செய்வீர் சொல்கேட்டோர் விழிப்புற் றார்கள் 963
தொடர்ந்தவர் குறைவழி யர்தம் தொடர்பினைக் கொண்டு சொல்வார் உடன்பாடு கொண்டுள் ளோம்நாம் யுத்தத்தில் உதவி செய்ய கடன்பட்டார் 'பனிகு றைலா’ கூட்டத்தார் எம்மி னோர்க்கு உடன்பாட்டை முறித்தா ரென்றும் ஒர்செய்தி அறிந்தேன் என்றே. 964
168 ஜின்னாஹ் ஷரிபுத்தீன்

திருநபி காவியே
முஹம்மதோ டவர்கள் முன்னர் மேற்கொண்ட உடன் படிக்கை பகைகொண்ட எம்மால் முற்றும் பலாத்காரம் செய்யப் பட்டு வகைப்படா துற்ற தின்று வேறொரு முடிவுக் கன்னார் வகைப்பட்டார் என்னும் வாறாம் வந்ததச் சேதி யென்றும் 965
மீண்டும்தம் உடன் படிக்கை மீட்டிட உவக்க முஹம்மத் பூண்டுளார் உறவு பேரம் பேசியுள் ளார்கள் எம்மில் வேண்டிடில் மூன்று பேரை வயந்தரப் பணய மாக மாண்டிடச் செய்வீ ரன்னார் மூவரைப் பழிகொள் ளற்கே. 966
பின்னர்நாம் இருபு றத்தும் பொதுப்படை ஒன்று கூட்டி அன்னியக் குறைஷப் பேரை அழித்தொழித் திடலாம் அன்றேல் பின்னமே நமக்கு நம்மண் பறிபோகும் எனக்கு றைலார் சொன்னதாய் அறிந்தே னென்றும் செப்பினார் நயிமும் ஆண்டே 967
நம்பினார் குறைஷி யர்கள் நச்சுவித் ததுவென் றோரார் தம்வழி உயர்மட் டத்தோர் சேர்ந்தனர் ஆய்வு செய்தார் எம்மவர் சிலரை உண்மை எதுவென்று ஆய்ந்து கொள்ள தும்பரின் பக்கங் செல்லத் தூண்டுவோம் எனவி ளைத்தார் 968
இக்ரிமா தலைமை தாங்க இணைந்தனர் சிலபோர் தூது புக்கிட பனிகு ரைலாக் குடிகளின் முகம னுக்கே தக்கவா றெடுத்து ரைத்தார் தலைவர்கள் புகட்டி வைத்த ஒக்குமோர் கார ணத்தை உவந்தன ரில்லை அன்னார் 969
குளிர்தாங்க மாட்டா ஒட்டை குதிரைகள் இறப்பும் நாட்கள் அளவுக்கு அதிக மானால் அளவிலாத் துன்பம் நீங்கள் கொளவரும் உணவுப் பஞ்சம் கூடவே தொடரும் நாளை பிளவிலா தொன்று கூடிப் போரினை வெல்வோ மென்றார் 970
நன்றது போல நாங்கள் நாளையே ஒன்று கூடி வென்றிடும் முயற்சி தன்னில் வாகைகொண் டிடுவோம் ஆனால் வென்றதும் எம்மை நீங்கள் விட்டேகல் கூடு மென்ற ஒன்றுண்டு ஐயம் தீர்க்க ஒருவிதி ஏற்பீ ரென்றார் 971
169 ஜின்னாஹ் விழரித்தீன்

Page 99
திருநபி காவியே
உங்களின் தலைவர் மூவர் உடன்பட வேண்டும் இன்றே எங்கள்கை வசமி ருக்க ஏற்றன செய்தல் வேண்டும் அங்ங்ணம் தலைவன் கூற அது'நயீம்” வார்த்தை தன்னில் தங்கிய கருத்துக் கொக்கத் தானிருப் பதனைக் கண்டார் 972
அவ்விதம் பிணைகள் வைக்க ஆகாது எம்மா லென்றே கவ்விய சினத்தி னோடு குறைவழிகள் மறுத்து ரைத்தார் அவ்வித மாயின் உங்கள் அணியினில் போரி யற்ற எவ்வித மாகும் எம்மால் இயலாது என்சொல் கேட்டார் 973
எண்ணிய வாறு அன்றி ஏமாற்றங் கொண்டார் வந்தோர் மண்வாரித் தலையில் போடும் மதகரிக் கொப்பா னார்கள் புண்ணிய நபிக ளோடு போர்செய்ய நம்மி னோர்கள் திண்ணமாய் மறுத்து ரைக்கத் தோட்பலம் இழந்திட் டாரே 974.
பெருங்காற்றின் வேகம் முஸ்லிம் பாசறைப் பற்றுக் கட்டில் பெரும்பலங் காட்டாப் போழ்தும் பணிக்குளிர் பிறர்க்குப் போலாம் வருந்தினர் முற்று கையால் வளியொடு குளிருஞ் சேர சிரமத்தின் எல்லை தாங்குஞ் சக்தியை இழக்கச் செய்யும் 975
பெருமானர் இரவு நேரப் பொழுதெலாம் பிரார்த்தித் துப்பின் அருகினில் இருந்தோர் பக்கம் அண்மியே சொல்வார் "யார்தான் விரும்புவீர் எதிரி கள்தம் வதிவிடஞ் சென்று சேதி தெரிந்துவந் திடவாம் என்றன் தோழமை சுவனில் கொள்வீர்” 976
பதிலேதுங் கிட்டாப் பேரில் பெருமானார் தம்மை நோக்கி அதிகுளிர் பசியால் நாங்கள் அயர்வுற்றோம் எழுந்து நிற்கும் விதியற்றோம் எம்ம னோர்க்கு வாகறு நிலையா மென்றே பதிலுரை "ஹ"தைபா” சொல்ல பெருமானார் அவள்பால் சொல்வார் 977
வருகரீர் ஹ"தைபா சென்று விபரங்கள் அறிவீ ரென்ன ஒருவார்த்தை பதிலு மற்று உடனவர் பணிமேற் கொண்டார் செருக்களந் தாண்டி மாற்றார் தரிப்பிடம் சேர்ந்தார் கண்டார் உருக்குலைந் தனைத்தும் அன்னார் உயிர்ப்போரில் உள்ளா ரென்றே 978
170 ஜின்னாஹ் வழfபுத்தீன்
 

திருநபி காவியே
அதிகாலை வேளை காற்றின் ஆற்றல்சற் றடங்கல் கண்டு எதிரிகள் தளகர்த் தள்தாம் இடைப்பட்ட துன்பங் கூறி சதிசெய்தார் குரைலார் எம்பால் துரோகமுஞ் செயத்து னிந்தார் விதியது வாகி லின்னும் வருவினை தடுப்போம் என்றார். 979
ஒட்டகந் தன்னி லேறி ஓங்கிய குரலில் இன்றே கட்டுங்கள் போர்க்க லங்கள் கூடிட மக்கா வென்ற திட்டத்தை சுபியான் கூறி தனைமுந்திக் கொள்ள எண்ண மட்டமிச் செய்கை நீவீர் முந்துதல் எனுஞ்சொல் கேட்டார் 980
வெட்கித்துத் தலைகு னிந்து வீரர்கள் போகு மட்டும் ஒட்டைவிட் டிறங்கி நின்று எலாருமே சென்ற பின்னர் கட்டினார் பயணம் அந்தக் குறைஷிகள் தலைவர் என்றும் பட்டிலா அவமா னத்தால் புழுங்கினார் மனத்தால் மாதோ 981
குறைஷிகள் அனைத்துப் பேரும் கொண்டதம் தோல்வி யோடு மறைந்ததும் "ஹ"தைபா” 'கதபான்’ கூட்டத்தார் பாச றைக்கு அறிந்திடச்சேதி சொல்ல ஆங்கெவர் தாமு மற்றே வெறுமையாய் இருத்தல் கண்டார் விபரங்கள் நபிக்குச் சொன்னார் 982
அதிகாலைத் தொழுகைக் கான அழைப்பினை 'பிலா’லுங் கூற புதிதான உணர்வு கொண்ட பண்ணவன் தூதர் தானே விதியான “சுபஹ’ வேளைத் தொழுகையை நடாத்தி வைத்தார் இதமான ஒளியைப் பாய்ச்சி இரவியுந் தோன்றி னானே 983
கதிரவன் ஒளியி னுாடே கண்டனர் அகழின் அப்பால் எதிரிகள் எவரு மற்று ஏகாந்த வெளியை உள்ளம் புதுத்தெம்பும் மகிழ்வுங் கொண்டு புளகாங்கி தம்முங் கொள்ள வதியிடம் நோக்கி னார்கள் வீரர்கள் சுவனப் பேர்கள் 984
போர்முடி வுற்ற பின்னர் பெருமானார் அடுத்துத் தம்மின் போர்வீரர் தம்மை நோக்கிப் பனிகுறை லாக்கள் கோட்டை சேர்வீர்கள் சூழ்ந்து கொள்வீர் துரோகங்கள் செய்தார் அன்னார் தேர்வார்கள் எமது வெற்றி தொடர்வது அவர்கள் மீதே. 985
171 ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 100
திருநபி assrsíulö
உடன்பாடு மீண்டுஞ் செய்யும் உத்தேசம் இல்லா யூதர் உடன்பட்டார் போரின் பாலே ஒருகரம் பார்ப்போ மென்றே திடங்கொண்டார் நபியைக் கொல்லத் திட்டமுந் தீட்டி னார்கள் தொடர்ந்ததோர் மாதஞ் சுற்றிச் சூழ்ந்தமுற் றுக்கையாம் ஆண்டே 986
இறுதியிற் பணிந்தார் யூதர் இதற்குமேல் இயலா தென்றே உறுதியொன் றளித்தார் நாங்கள் உடன்படு வோமே நேர்மை நெறிகொண்ட "ஸாஆ'தின் வார்த்தை செவிக்கொள்வோம் என்று ரைக்க மறுவுரை செய்யா நாதர் மனமொத்தார் கருத்து வேறே 987
தம்முடை நண்ப ரென்ற தகுதியால் “ஸாஆ'தின் தீர்ப்பு எம்மைச்சார்ந்(து) இருக்கு மென்றே எண்ணினார் யூதர் நீதி தம்மைச்சார்ந் திருக்கும் 'ஸாஆத்” ஓர் தூயவர் நேர்மை யாளர் உண்மையே உரைப்பா ரென்று ஒப்பினார் நபிகள் கோனே. 988
என்னுடைத் தீர்ப்பை நீங்கள் இருபுறத் தாரும் ஏற்கும் முன்னுரை தந்தால் மட்டும் முடிவொன்றை மொழிவேன் என்ன சொன்னனர் இருபு றத்தும் சரியென்றார் தீர்ப்புக் கூற உன்னுங்கால் விழிக ளெல்லாம் ஒன்றின அவர்கண் பாலே. 989
வேதத்தின் கட்ட ளைநான் விளம்புதல் யூதர் என்றால் நீதிக்குப் பணித லாகும் நேர்மைக்குத் துரோகஞ் செய்தால் ஒதிடுஞ் சிரச்சே தந்தான் உடன்பொருள் பெண்கள் பிள்ளை நீதியின் பாற்பட் டோர்க்கே நெறிகெட்டோர் கைக டப்பார் 990
தீர்ப்பினைக் கேட்டு ஆங்கே சிலகணப் பொழுது மெளனம் ஆர்த்தது சற்றைக் கெல்லாம் ஆண்பெண்கள் சிறார்கள் கூடி மார்பினில் முகத்தில் தட்டி மரணத்தின் ஒலங் கொண்டார் ஏற்பது அன்றி வேறு இலையொரு முடிவா மன்றே. 991
172 ஜின்னாஹ், ஹரித்தீன்

திருரபி காவியம்
மக்காவை நோக்கி
கனவினில் கண்டார் நாதர் க.பாவுள் நுழைவ தொப்ப தனதுகை தன்னில் க.பாத் திறவுகோல் இருப்ப தாயும் புனிதமாமம் யாத்தி ரைக்குப் புறப்படும் இறையா ணைதான் எனவொன்றித் தோழருக்கு ஏற்பாடு செய்க வென்றார் 992
எழுபது ஒட்ட கங்கள் இறைவழி பலிசெய் தற்காய் பழுதறத் தேர்ந்தெடுத்தார் பங்கிட்டு அங்கு வாழும் வழியிலார் தமக்கு ஈயும் வகைசெய்யும் வாகும் நோக்கி அழைப்பினை ஏற்றோர் தம்மை ஆயத்தஞ் செய்ய லானார் 993
வேட்டைக்குத் தேவை யென்று வேண்டிடும் ஆயு தங்கள் கூட்டுறை வாளும் மட்டுங் கொண்ர்கவென் றண்ணல் சொல்ல வேட்டினார் உமருஞ் 'ஸாஆ'தும் வேண்டாமோ போர்க்க லங்கள் நாட்டமுற் றார்க ளாயின் நமைக்கொல்ல நமைநாம் காக்க 994
ஆயுதம் எதையும் பூணும் அகமிலை எனக்கு நாங்கள் போயிறை பணிவ தன்றிப் பிறிதிலை என்றார் எம்மான் வாயிலார் மறுக்க மக்கா வாழ்குறை வழிப்பேர் தம்முள் காய்தலுற் றிருப்ப ரென்றே கருத்தினால் வினாத்தொ டுத்தார் 995
அடையாள மிட்ட மாலை அணிவித்து ஒட்டை யொன்றை விட்டனர் அர்ப்ப னித்தார் வாகுமற் றனைத்துஞ் செய்ய உடனிருந் தோரை ஏவி உளவறிந் திடவோர் பேரை விடைபெறச் செய்தார் “கஅப்” இன் கிளையினில் ஒருவர் சென்றார் 996
தைத்திடாத் துணியி ரண்டில் தன்னிடை சுற்றி யொன்றும் மொய்த்துடல் மூடியொன்றும் மாநபி அணிந்து பின்னர் துய்த்தனர் தொழுகை தன்னைத் தனியனுக் கர்ப்ப னித்தார் வைத்ததன் னுறுதிக் கொக்க வகைத்தனர் அனைத்தும் மாதோ 997
173 ஜின்னாup opரித்தீன்

Page 101
திருரவி காவியம்
யாத்திரைக் கோஷந் தன்னை எழுப்பினர் நபிகள் நாதர் யாத்திரைக் குட்பட் டோரும் இறைநபி போலு ரைத்தார் தோத்திரம் விண்ணை மண்ணை திசையெட்டை தாண்டிச் செல்லும் வார்த்தையில் உரைப்பார் வல்லோன் வந்தோமுன் சேவைக் கென்றே 998
புறப்பட்டார் மதீனா விட்டுப் பெருமானார் தோழ ரோடு அறந்துய்ப தெண்ணி மக்கா அண்டினார் என்னுஞ் சேதி அறிந்தனர் குறைவழி யர்கள் அஞ்சினர் ஒன்று சேர்ந்தார் இறைதூதர் எதிர்பார்த் திட்தை இருந்தனர் இயலு மென்றே 999
நோக்கினா ரில்லை என்றும் நேர்ந்தவில் விக்கட் டொக்க வாக்கிலைத் தடுப்ப தற்கும் வரண்முறைக் கொள்வா க.பா காக்கின்ற பொறுப்பி ருந்தும் கொளரவத் திழுக்குச் செய்யின் போக்கிட மற்றார் கொள்கைப் பாலுறக் குறைகிப் பேரே 1000
மதீனாவின் தோல்விக் கி.து மகுடமாய்ப் போகுஞ் சுற்றி வதியுவோர் ஏழ னத்தை விலைகொண்டு பெறுத லொக்கும் எதிரியை உள்ளே செல்ல இணங்கிடில் முஹம்ம தர்க்குப் பதிந்ததும் ஆகும் என்றே புழுங்கினார் நெஞ்சத் துள்ளே 1001
பழம்பெரும் மார்க்கந் தன்னைப் புறந்தள்ளிப் போனோர் இன்று வழிவந்தார் புதுமார்க் கத்தின் வகைப்பட இப்ரா ஹிமின் வழியெங்கள் வழியு மென்று வாதித்து நிலைநி றுத்தும் பழிக்கும்நாம் உடந்தை யாதல் பேரிழி வாமே யென்றார் 1002
உயிருள்ள வரைய வர்கள் உட்புக வாய்ப்ப விரித்தல் செயத்தகு செயலே யல்ல தடுத்திட வேண்டு மென்றே முயன்றனர் பணித்தார் செல்ல முன்னோக்கிப் பரிகொள் வீரர் வயப்பட வில்லை யன்னார் வருவதை உளவாள் சொன்னார் 1003
காலிதின் தலைமை கொண்டு கடுகினர் குதிரை வீரர் ஏலவே அறிந்த தாலே இறைதூதர் வழியை மாற்றி சால்புடைத் தானபாதை சென்றிடப் பணித்தார் சென்றும் ஏலாது போன தன்றோ எதிரிகண் மண்ணைத் தூவ 1004
174 566)IIIOP Opflöć)
 

திருநபி காவியம்
எதிர்த்தேதுஞ் செய்யும் வாய்ப்பு இல்லாத வாறு தூசை எதிர்தரப் பஞ்சும் வாறு எட்றினர் யாத்தி ரீகள் எதிர்த்தேதுஞ் செய்ய மாட்டா இயலாமை கண்டு அஞ்சி எதிர்த்திசை நோக்கி னார்கள் எச்சரிப் புரைசெய் தற்கே 1005
குறைவழியர் தமக்குப் போக்குக் காட்டிய பின்தொ டர்ந்து குறுகிய கணவா யூடே "ஹ"தைபிய்யா” செல்லுங் காலை மறுகியோர் இடத்தில் செல்ல மறுத்தது எம்மான் ஒட்டை குறிப்பெதோ உணர்ந்த த.து 'களில்வா'என் நாமம் கொள்ளும் 1006
பிரயாணஞ் செய்யும் வேளை பெருமானார் பிரியங் கொள்ளும் பிராணியாம் "கஸ்வா' செய்கை புரிந்ததால் நபிகள் நாதர் பிரயாணந் தனைமு டித்துப் பாசறை அமைக்கச் செய்தார் மிருகத்தின் செய்கை இன்று முன்னேற வேண்டா மென்றாம் 1007
நீரறக் காய்ந்த தந்த நிலமது தங்கு தற்கு சீரற்ற தென்று தோழர் சிந்தித்த போது ஆங்கே ஊருணி இரண்டு கண்டார் ஒருசில கைகொள் நீரே சேரும. தொன்று கூட்டின் செப்பினார் நபிகள் சொல்வார் 1008
சேர்த்ததைக் கொணர்க வென்றே திருக்கரம் பற்றிச் சற்று வார்த்தனர் வாயில் மீண்டும் வட்டியுள் உமிழ்ந்தே அ.தை சேர்ப்பீர்பின் மீண்டும் ஆங்கே கலக்கிட வேண்டு மென்றோர் கூர்ச்சரங் கையிற் தந்தார் கொண்டவர் பணிதொ டர்ந்தார். 1009
சொன்னவா றவருஞ் செய்யக் குழிவிட்டு மீழு முன்னர் உன்னியே வாயு டைத்து ஊற்றுக்கண் திறந்து நீருந் தன்வழி பாய்ந்து மேலே தாவிடப் பலரும் உண்டார் கன்னலின் சுவையா ம.து குறையறப் பெருகிற் றன்றோ. 1010
வயிறாற உண்ட நீரின் விடாயகன் றதேபோல் தங்கள் வயிறாற உண்ண வேண்டும் வகையினில் இருப்போர் ஈந்த உயிர்களாம் ஒட்டை ஆடு உதவிற்று நாடோ டிப்பேர் தயவிலாந் தலைவர் அன்னார் தோழராம் நபிக ளார்க்கு 1011
175 566).TIOB op fluid 65

Page 102
திருநபி காவியம்
சேதியொன் றறிந்தார் தூதர் தமைக்காண வந்த வள்பால் ஒதிய தாக அன்னார் உயிருடல் இருக்கு மட்டும் போதலுக் கிடம ஸ்ரிக்கப் போவதில் லென்றாம் கேட்டு மோதலுக் கல்ல வந்தோம் மதக்கடன் செயவென் றாரே 1012
யாரெவர் எம்பா தைக்கு இடர்செயத் துணிவா ராகில் பாரோம்நாம் எவர்தா மென்றும் பகையறுத் துள்நு ழைவோம் ஒரவ காசம் மட்டும் ஒதுக்கினோம் ஒப்பந் தம்போல் சீராக ஒதுங்கிக் கொள்ள திருப்தியோ டனுமதிப் போம் 1013
அறிந்திட நபிக ளார்க்கு அறிவித்தல் தந்த "புதைல்’ உம் அறிந்தவை குறைஷி யர்களும் அறிவித்தார் இவர்கொ தித்தார் குறிப்பவர் தமக்கு யுத்தக் கேடல்ல யாத்தி ரைதான் பொறுப்பொடு நடந்து கொள்ளும் படிவகை தந்தா ரென்றார் 1014
கொதிப்படைந் தோருள் “உள்வா’ கூறுவார் இ.து எம்மை ஒப்படைத் திடுதல் போலாம் ஒவ்வாது என்றுந் தானே இப்போதே உளவு கொள்ள இணங்கினேன் எனவு ரைக்க ஒப்பினார் குறைவழி யர்கள் ஒன்றுமுன் நடந்த தோர்வார் 10 15
நாடோடிக் குழுக்க ளெல்லாம் நாடினர் ஒன்று கூட நாடினர் "ஹ"லைஸ்'ஐத் தம்மின் நாயக ராக்கிக் கொண்டார் கேடுடைக் குறைவழி மாந்தர் "ஹ"லைஸி’னைத் தூதனுப்பி நாடினர் உண்மை தேர நபிமுகம் அவர டைந்தார் 1016
நாடிமுன் வந்த பேரை நோக்கினில் நபிகள் நாதர் கேடிலார் பக்தி கொண்டோர் நல்லவர் எனவு ணர்ந்து கூடிடச் செய்தார் ஒட்டைக் கூட்டத்தை அவர்தம் முன்னே நாடிட வைத்தார் கண்டார் நோக்கத்தின் பொருளை வந்தார் 1017
ஒட்டைகள் கழுத்தில் தொங்கும் ஒவ்வொரு மாலை தோறும் கட்டிய முத்தி ரைகள் காட்டின அர்ப்ப ணத்தின் திட்டத்தைக் கண்ட "ஹ"லைஸ்' காரணம் அறிந்து மீண்டும் எட்டினார் குறைஷிப் பேரை யாத்திரை நோக்கம் என்றார் 1018
176 ஜின்னாஹ் வழfபுத்தீன்

திருநபி காவியம்
குறைவழிகள் நேச ரான குழுக்களின் தலைவர் "ஹ"லைஸ்” இறையில்லத் தரிசிப் புக்காய் எவர்வந்த போதும் யாரும் மறித்திட லாக என்னும் முறைமையை அறிவீர் நீங்கள் மறுத்திடில் என்றன் வார்த்தை முற்றுமெம் உறவாம் என்றார் 1019
தூதராய் உளவாள் வோராய்ச் சென்றிட்ட “உள்வா’ என்பார் தூதரை அண்மித் தாமும் தூதரின் நிலைக்கொப் பாக ஆதர வாளர் போன்று அண்ணலின் தாடி யைத்தான் கோதிட லானார் கண்டே கோபத்தால் சினத்தார் “மு.ரா” 1020
தட்டினார் கையை வாளின் துடையினால் மீண்டுஞ் செய்யத் தட்டினார் உரைப்பார் கையுன் சொந்தமென் றிருப்ப தாயின் தொட்டிட வேண்டா மென்னுந் தொனிப்பினில் உள்வா தன்னை விட்டகற் றிட்டார் சற்று விலக்கலால் கரத்தைக் காத்தார். 1021
நோக்கினார் கவர்ந்த அம்சம் நோக்கிடா அம்சம் இன்னும் நோக்கிடா எண்ணா அம்சம் நோக்கலில் நோக்கி உள்வா தேக்கினார் மனத்துள் ஆங்கு தோன்றுவ தனைத்தும் நெஞ்சத் தாக்கத்தை உண்டு செய்ய திரும்பினார் மக்கா சேர்ந்தார். 1022
தூதுவ னாக “கிஸ்ரா” “ஸிஸர்' "நஜ் ஜாஸி” போன்றோர் மீதுபன் முறைகள் நான்போய் மீண்டுவந் துள்ளேன் ஆனால் ஈதுவா றெங்கும் கண்டேன் இல்லைநான் முஹம்ம தர்மேல் மீதுறு கெளர வத்தை மிகையிலை உண்மை என்றார். 1023
கட்டளை இடுவா ராயின் கூறுஞ்சொல் நாவி ருக்க இட்டதை முடிக்கின் றார்கள் இறைதொழக் கழுவும் நீரை கொட்டாது நிலத்தில் ஏந்திக் கொண்டிட முந்து கின்றார் கட்டவிழ் வார்த்தை அன்னார் குரலைவிஞ் சிலையே என்றார் 1024
நேர்நின்று வதனம் நோக்கும் நிலையற்றும் பார்வை பூமி சார்ந்திடப் பேசுகின்றார் தலைமைக்குச் சான்றே முஹம்மத் ஒர்ந்திடு வீர்கள் அன்னார் உவந்தது போன்றே நீங்கள் சார்ந்தவர் தமக்கு யாத்திரை செலவழி செய்க வென்றார் 1025
177 ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 103
திருரபி காவியம்
“உள்வா’வந் திருந்த வேளை உத்தமர் இறைவன் தூதர் “கிராஷ்'என்னுந் தூதர் தன்னைக் குறைவழிகள் பால னுப்பி தெரிந்தறிந் திடவன் னாரின் தன்மையை எனவ னுப்ப பிரிந்தவர் வந்தார் தப்பிப் பாதுகாப் பளித்தார்’ ஹ"லைசே. 1026
நடந்ததோ அவர்க்குக் கேடர் நவின்றிட இயலா வாறு கொடும்வனை யாகும் அன்னார் கொண்டுசென் றிருந்த ஒட்டை நடந்திட இயலா வாறு நான்குகால் களையும் வெட்டி அடுத்தவர் தனையுங் கொல்ல. அண்ணலார் செயல்வே றாமே 1027
“உள்வா’வின் வார்த்தை கேட்டு ஒர்ந்திடத் தலைவர் கூடச் சேர்ந்தார்கள் இளைஞர் முன்பின் தேராதோர் பொறுப்பும் அற்றோர் ஆர்வத்துள் உடன்சி னத்துள் ஆட்படுங் கொதிப்புக் கொண்டோர் கூர்மதி யற்றுக் கொண்டார் கையறு திட்ட மொன்றாம் 1028
திட்டமுங் கொண்டார் ஒன்றிச் சென்றெதிர்ப் பாச றைக்குட் சட்டெனப் புகுந்து உட்போர் தோற்றிடின் போர்கை கூடும் இட்டத்துள் அமையும் என்றே இணங்கினார் எண்ப தாம்பேர் கிட்டாத முயற்சி யென்று கொண்டிடார் தோல்வி கண்டார் 1029
"முஹம்மத்பின் மஸ்ல மா’தான் முஸ்லிம்கள் பாது காப்பு முகாமைக்குத் தலைவர் கைக்குள் முடங்கினார் அனைத்துப் பேரும் முஹம்மதர் முன்ன ழைத்து மேற்கொள்ளும் செயலைக் கேட்க பகைவரை விடுக வென்று பகர்ந்ததாம் செயலும் அ.தே 1030
தப்பிவந் திருந்த தூதர் திருநபி தம்மை நோக்கி ஒப்பான ஒருவ ரைத்தான் உங்களின் சார்பாய் நீங்கள் அப்பேர்கள் பால னுப்பல் அவசியம் என்று ரைக்க ஒப்பிலான் தூதர் தோழர் உமரைப்போய் வருக வென்றார் 1031
என்னுடை நிலைமை ஆங்கே எதிர்ப்பினில் முதன்மை மற்றும் என்னுடை யார்கள் எந்த இடுக்கண்வந் துற்ற போதும் முன்வரப் பலமற் றோர்கள் மற்றும்நான் தனித்துப் போவேன் என்னிலும் 'உத்மான்’ மிக்க ஏற்றவர் எனப்பு கன்றார் 1032
178 ஜின்னாஹ் ஷரித்தீன்

திருநபி காவியம்
அதிகமாய் உறவி னோரும் அதிபாது காப்பும் மிக்க உதுமானை அனுப்ப ஆங்கே உறவினர் வரவேற் றாலும் பொதுவாகக் குறைவழிப் பேர்கள் பதில்முறை யற்றி ருக்க உதுமானுந் திரும்பி வந்தார் ஒருபலன் தானு மற்றே.
விரும்பினால் நீங்கள் மட்டும் விளைகடன் முடிக்க லாகும் பொருந்தினர் இதுபோல் "உபை'க்கும் பெருமானார் அற்று நாங்கள் ஒருகாலுங் கடமை செய்யோம் என்றனர் அறிந்த நாதர் பெருமையும் மகிழ்வுங் கொண்டார் பாசத்தால் திளைத்திட் டாரே 1033
வறுகுையிய்யா உடன்படிக்கை
வேறு
மக்காவில் தோழர்உத்மான் இருந்த போது
மாநபிகள் சுயநினைவு இழந்தார் போன்றே இக்கட்டில் இருந்தார்கள் இறைவன் தூது
ஏற்றிடுங்கால் இருந்ததுபோல் இருந்த த..தே தக்கசுய நிலைவந்த போது தோழர்
தமக்கென்றோர் ஏவலினைச் சொலப்ப னிந்தார் முக்காலும் பணிந்தனரே அனைத்துப் பேரும்
மாநபியின் கைபற்றி வாக்கு ரைத்தார் 1034
தூய ஆத்மா நபியிடத்து வந்து உங்கள்
தாழ்பணிதல் தனைவேண்ட ஆணை யிட்டுப் போயுளது எனவேரீர் அனைவரும் போய்
பண்ணவன்பேர் கொண்டுவாக்கு அளிக்க வேண்டும் நாயகத்தின் பணிப்பினையோர் தோழர் எல்லா
நபித்தோழர் தமக்குமவர் குடில்க ளுக்குப் போயுரைத்தார் செவிமடுத்தோர் நொடிக்குள் அ.தை
புரியவென அணிவகுத்தார் பெருமான் முன்னே 1035
வசந்தகாலச் செழுமைகொஞ்சத் துளிர்த்தி ருந்த
வேலமர நிழலிலே நபியி ருக்க இசைந்தேவந் தொவ்வொருவர் தாமுஞ் சீராய்
இறைநபியின் கைபற்றி வாக்கு ரைத்தார் 179 ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 104
|
|
திருநபி காவியம்
"வசமுள்ள தெதுவோநின் உளத்தி ல.'தின்
வசப்பட்டேன் எனவாக்குத் தந்தேன்’ என்றார்
பசுமரத்தில் அறைந்தமுளை போல நெஞ்சுட்
பதித்தேதான் புகன்றார்கள் பற்றில் மிக்கார் 1036
"பொருதுநிலை அடங்கிடிலும் இருசா ராரும்
பொருந்தியொரு உடன்படிக்கை செய்ய ஒப்ப “அருளாளன் அன்புடையோன் அல்லாஹற் நாமம்
ஆசித்துத் தொடங்கு கின்றேன்’ எனத்தொ டங்க “உரியதந்தச் சுலோகமுமக் காகும் நாங்கள்
ஒப்பவில்லை கடவுளுன்றன் பெயரால்” என்று வரிதொடங்கு வீரென்றே "சுஹைல்’ என் பேர்தன்
வார்த்தைகளைத் தொடங்க அலிவிசன முற்றார் 1037
பொறுமைகொள வைத்(து)அதுபோல் எழுது மாறு
பணித்தார்கள் நபிஅலியை அவர்ப னிந்தார் "உறுமிந்த ஒப்பந்தம் இறைவன் தூதர்
உத்தமநந் நபிக்கிடையும் குறைவழி கட்கும் உறுவ”தென எழுதமுன்போல் “வேண்டாம் நாங்கள்
ஒப்பவில்லை முஹம்மதுவை இறைவன் தூதாய்” மறுப்புரைக்க மீண்டும்அலி வெகுண்டெ முந்தார்
மாநபிகள் தடுத்தார்கள் அவரு ரைப்பார் 1038
"அவரோடு அவர்தாதை பெயரும் மட்டும்
அழித்தெழுதப் படவேண்டும்” என்றே கூற எவரேற்றுக் கொண்டாலும் இலாவிட்ட டாலும்
இறைதூதர் நானென்றே நபிகள் கூறி அவர்விருப்பப் படியெழுத ஏவி னார்கள்
அப்படியே எழுதினாரே அலியும் அ.தை எவருமொப்ப வில்லைமுஸ்லிம் ஆன பேர்கள்
இறைநபிக்காய்ப் பொறுமைகொண்டார் இணங்கிப் போனார் 1039
ஜின்னாஹ் ஷரித்தீன்

திருநபி காவியே
அழித்தெழுத இணங்காத போது எம்மான்
ஆங்கெங்கே அவ்வரிகள் உண்டா மென்று எழுத்தறிவு இல்லாத கார ணத்தால்
இனங்காட்டச் சொன்னார்கள் அலியுங் காட்ட அழித்தார்கள் தங்கரத்தால் அண்ண லாங்கு
அமைதிகாக்கப் பொறுமைகாட்டி வழிகாண் பித்து முழுமைபெறச் செய்தார்கள் ஒப்பந் தத்தை
மேலான பாடமது உலகத் தோர்க்கே. 1040
வேறு
பத்தாண்டு யாரும் யுத்தம் புரிவது இல்லை அந்தப் பத்தாண்டு இருசா ராரும் பாதுகாப் போடி ருப்பர் பத்தாண்டுள் குறைஷி யாரும் பெருமானார் புறம்வந் தாலோ பத்திர மாக அன்னார் புறம்மீட்க வேண்டும் என்றும் 1041
குறைவழிகள் பக்கம் வந்தால் கொடுபடார் மீளார் யாரும் குறைவழிக ஞடன்ஒப் பந்தம் செய்யலாம் அதுபோல் வேண்டின் குறைவழிகள் கூடச் செய்தல் குற்றமே இலையாம் அன்றிக் குறைவழியோ முஸ்லிம் பேரோ கபடஞ்செய் திடுத லாகா 1042
ஒப்பந்தம் முடிந்த பின்னர் ஒதுவார் குறைஷி யானோர் ஒப்பிடோம் இவ்வாண் டும்மை உள்நுழைந் திடவாம் நாங்கள் ஒப்பினோம் அடுத்த ஆண்டு ஊர்விட்டு நாங்கள் செல்வோம் ஒப்பந்தம் ஒடியோம் நீங்கள் உள்நுழைந் திடலாம் என்றார் 1043
மூன்றேநாள் மட்டும் நீங்கள் முறைப்படி ஹஜ்ஜின் பின்னர் வேண்டும்விட் டகல மக்கா வாசத்தைத் தவிர்த்தல் வேண்டும் வேண்டிடில் உறையும் வாளும் வரிக்கலாம் உம்மோ டன்றி வேண்டாதீர் ஆயு தங்கள் விரும்பியும் மோடு கொள்ள 104.4
கைகூடி வந்த ஹஜ்ஜுக் கைகடத் திட்ட தாலே கையொடிந் திட்ட பேராய் கவல்கொண்டார் நாடி வந்தோர் செய்வதொன் றறியா துள்ளம் தகித்திட உமர்த வித்தார் வையத்தின் அருளாய் வந்த வேந்தரோ அமைதி காத்தார் 1045
181 ஜின்னாஹ் வழfபுத்தீன்

Page 105
திருநபி காவியம்
முற்றிலுங் குறைவழி கள்தம் மனமொப்பு வாறு எல்லாம் முற்றின பெரிதும் முஸ்லிம் மாந்தர்கள் மனமொ டிந்தார் சற்றுமே எதிர்பா ராத திருப்பமுற் றிருந்த தாலே அற்றனர் ஹஜ்ஜுச் செய்ய அடலாரின் சூட்சி யாலே 1046
ஹ"தைபிய்யா உடன்ப டிக்கை கொண்டதால் முஸ்லிம் கள்தம் இதயத்துள் இருவா றாக எண்ணங்கள் பரிமா றிற்று சிதைவுற்றார் மனத்தால் சில்லோர் திருப்தியுற் றார்கள் பல்லோர் துளிகூட ஐய மற்றார் திருநபித் தோழ ரன்றே 1047
உடன்பாட் டின்ம தீனா ஊர்நோக்கி அரேபி யர்கள் இடையூறு அற்றுத் தத்தம் இனத்தவர் சனத்தைக் காண தடையற்றார் வணிகள் கூடத் தத்தமக் கியைந்த வாறு மடையொடிந் திடச்செல் நீர்போல் வரச்செய லானார் சென்றார் 1048
குலங்குடி கோத்தி ரத்தைக் கண்கொளா திருந்த பேர்கள் நிலப்பகை நீங்கச் சொந்தம் நாடியே வந்துஞ் சென்றும் விலங்கறுத் திட்ட பாங்காய் வேரறுந் திடுமோ வென்னும் நிலைமறந் தார்கள் ஒன்றி நட்பினை வளர்த்திட் டாரே 1049
மதீனாவுள் நுழைவோ ராங்கு முஸ்லிம்கள் வாழ்சிர் கண்டு மதிநிறை வுற்றார் தம்மின் மூடநம் பிக்கை தன்னை ஒதுக்கவுஞ் செய்தார் இஸ்லாம் ஒன்றேநல் மார்க்க மென்றும் புதுவழி ஓர்ந்தார் ஈமான் பற்றிடப் பிரியங் கொண்டார் 1050
எக்காலத் தேனும் இல்லா இணங்கலில் இஸ்லாந் தன்னை மக்கத்துக் குறைவழி யர்கள் மனங்கொண்டார் ஈமான் கொண்டார் சக்தியொன் றில்லை அ.தைத் தடுத்திட அற்றை நாளில்
1051
இக்காலத் திற்றான் "ஹாலித் இப்னுவ லீ”தென் சிம்மம் புக்கனர் இஸ்லாம் கூடப் புகுந்தனர்.அம் ரிப்னுல் ஆஸ’ம் மிக்கவோர் சக்தி இந்த மாவீரர் சேர்ந்த தன்று சக்தியுந் துணிவும் சேர்ந்து துணைநிற்ற போலாம் மாதோ 1052
182 ஜின்னாஹ் வழfபுத்தீன்
 

திருரபி காவியம்
அடைக்கலந் தேடி வந்தார் அபூபஸிர் என்னும் முஸ்லிம் கிடைத்ததத் தகவல் மக்காக் குறைவழிகள் தமக்காம் முற்றும் உடன்பாட்டிற் கேற்ற வாறு உடனவர் தம்மை எம்பாற் கிடைத்திடச் செய்க வென்று குறைஷிகள் தூது வந்தார் 1053
ஆறுதல் மொழிகள் கூறி அபூபஸிர் தம்மைச் செல்லக் கூறினார் நபிகள் நாதர் குறைவழிகள் அழைத்துச் செல்ல ஊறவர்க்(கு) இடையிற் செய்தே ஒன்றினார் மதீனா கண்டே கூறினார் மீண்டுஞ் செல்லக் கேட்டவர் வேறுார் சேர்ந்தார் 1054
கடலோரப் பகுதி யொன்றில் குடிகொண்டார் அவரென் செய்தி உடனறிந் தார்கள் மக்கா உறைபதி கொண்ட முஸ்லிம் தொடர்ந்தனர் அவரும் அந்தச் சிற்றுாருக் கங்கி ருந்தே இடர்பல செய்தார் தம்மை இடருக்குள் ளாக்கி யோரை 1055
தொகைதொகை யாக ஆங்கு சென்றவர் அதிக மாகி வகைப்படு போதி லெல்லாம் வாணிபக் குறைஷி யர்க்கு பகைகொண்டு வஞ்சம் தீர்க்கப் பொருட்களைச் சூறை யாடி மிகப்பெரும் இடைஞ்சல் செய்தார் மருண்டனர் மக்காப் பேரே. 1056
ஒப்பந்தஞ் செய்து கொண்ட உடன்பாட்டின் பேரில் மக்கா தப்பிவந் தோரை மீண்டுந் தந்திட வேண்டு மென்ற ஒப்புதல் நீக்கக் கோரி ஒன்றிய பேர்க்கு எம்மான் ஒப்புதல் தந்தார் முன்னர் உடன்பட வொண்ணா தொன்றே 1057
எவ்விதி முஸ்லிம் கட்கு இழிவினைத் தருமென் றெண்ணி ஒவ்வாதென் றுரைசெய் தாரோ அவ்விதி குறைவழி யர்க்கு ஒவ்வாத தாகிப் பொல்லா உபத்திரம் தந்த தாலே கவ்விய துன்பம் போக்கக் குறைவழிகள் வேண்டி நின்றார் 1058
எந்தவோர் வெற்றி தானும் இல்லையாம் ஹ"தைபிய் யாவில் சொந்தங்கொண் டான வெற்றி தம்மிலும் பெரிதாய் என்றே சிந்திப்பின் நம்ப லாகும் தூயநந் நபியின் தீர்க்க சிந்தையின் தோற்றம் அ.து தெளிவான வெற்றி யாகும் 1059
183 ஜின்னாஹ் விழரித்தீன்

Page 106
திருரவி காவியம்
உடன்பாடு எழுதும் போழ்தே உற்றதோர் சோத னைதான் உடன்பட்டு வந்த தெம்மான் உளத்தினில் பலத்தைக் காண உடன்பட்டு ஒப்பந் தத்தை ஒருக்கிணைந் தியற்ற வந்த உடன்பட்டார் மைந்தன் இஸ்லாம் உடன்பட்டார் ஓடி வந்தார் 1060
வந்தவர் "அபூஜந் தல்'முன் வரிசையில் மாற்றார் சார்பில் வந்திருந் தோராம் “சுஹைலி’ன் வழிமகன் ஈமான் கொண்டோர் சந்ததம் குறைவழி யோரால் தாழ்விலங் கிடப்பட் டேமெய் நொந்தவர் உளமும் நொந்தோர் நபிதனை நாடி யுற்றார் 1061
அடைந்தனர் நபியி டத்தே அடைக்கலம் சுஹைல்கண் ணுற்றே கொடுத்திட வேண்டும் இந்தக் கொள்கைபால் எனச்சொல் லாட முடிந்திட வில்லை இன்னும் முற்றுமே என்றார் நாதர் அடுத்தவ ருரைப்பார் என்னில் அடிகொளோம் இதனை என்றே 1062
ஒருகணஞ் சிந்தித் தேபின் உடன்பட்டடார் நபிகள் தந்தை விரும்பாத பாங்காய் மற்றோர் விழிமுன்னே அடித்தி ழுத்து வருகவென் னோடு என்ன விழிகளில் கண்ணிர் பெய்ய கருணைசெய் வீரர்கள் என்னைக் கொடுக்காதீர் எனஇ ரந்தார் 1063
நம்பிக்கை கொண்ட என்னை நம்பிக்கை யற்றோர் கையில் நம்பியேன் தருகின் றிர்கள் நபிகளே எனமன் றாட வெம்பினார் உள்ளம் எம்மான் வாடினார் மனம்முஸ் லீம்கள் தம்பதத் திருப்புக் கொள்ளார் சினத்(து) உமர் சிறுத்தை யொத்தார் 1064
கண்கண்ட காட்சி யாலே கடுஞ்சினங் கொண்ட தோழர் அண்ணலை நோக்கித் தம்மின் அடங்கிடாச் சினங்கு றுக்கி பண்ணவன் தூத ரன்றோ பகருக நீங்கள் என்ன அண்ணலும் உரைப்பார் "ஆம்நான் அவனடி யாரு”மென்றே 1065
நேரான வழியா மன்றோ நம்வழி என“ஆம்’ என்றார் சீரற்ற வழியன் னார்தம் செல்வழி எனவும் ஒப்ப பேரற்றுப் போக நாமேன் பணிவதாம் அவர்க்கு என்றார் தேருமின் இறைவன் என்னைத் திடமாகக் காப்பா னென்றார். 1066
184 ஜின்னாஹ் வழfபுத்தீன்

திருநபி காவியம்
மறையவன் தூதர் சொன்ன மறுமொழி வருந்தச் செய்ய அறைந்தனர் நடந்த வற்றை அபூபக்க ரிடத்தில் அன்னார் இறைவழி அமைந்தி ருக்கும் இறைதூதர் செய்கை என்றார் குறைகண்டார் உமர்தம் மீது கருத்துவே றுற்ற மைக்கே. 1067
என்றுமே இலாத வாறு எதிர்த்துரை செய்த தெண்ணி துன்புற்றார் உமர்தம் வாழ்வின் தொடரெலாம் பிரதி கூலம் கொண்டிடத் தொழுகை தர்மம் கூடவே அடிமை வாழ்வைக் கொண்டவர் தமையும் மீட்டார் காப்பவன் அறியு வானே. 1068
ஆரசர்களுக்குத் திருமுகங்கள்
ஆறாவ தாண்டு ஹிஜ்ரி அண்ணலார் ஹ"தைபிய் யாவில் தேறிய உடன்பாட் டோடு திரும்பினார் அரபு மண்ணில் வேறுண்ட நாடுகட்கு வரைந்திடக் கடிதம் அன்னார் பேறுகொண் டிடட்டும் இஸ்லாம் புகுவதால் எனவாம் அன்றே 1069
வல்லவன் தூதர் தாமோர் வெள்ளிமுத் திரையுஞ் செய்தார் ”அல்லாஹற்வின் தூதர் முஹம்மத்’ ஆனசொற் றொடரினுாடே இல்லாது போனால் செல்லும் இலிகிதத்தில் தமதா மென்னும் வல்லமை இலாது போமென் விதியினால் சான்று மாக. 1070
உரோமான்யப் பூேரசர் ஹேர்குயிலிஸுக்கு
வேறு
உரோமான்யப் பேரரசர் ஹேர்குயிஸ் என்பார்
ஒருபயணத் தேசிரியா வந்தி ருந்தார் சிரியாவின் தலைநகரில் அவர்அ வையில்
தந்தாரோர் திருமுகத்தை முதல மைச்சர் கரமேற்ற கடிதத்தை கண்ணுள் வாங்கிக்
கொண்டதுமே வியப்புற்றார் மேனி யெல்லாம் உரமிழந்து போனதுபோல் உணர லானார்
உள்ளனரோ அரேபியர்கள் இங்கா மென்றார் 1071
185 ஜின்னாஹ் விழரித்தீன்

Page 107
திருரவி asrsíulö
ஆமென்றார் ஆங்கிருந்தோர் அழைக்கும் ஆணை
அடுத்தரசர் நாவிருந்து அகலச் செய்யத் தாமேதாம் அரேபியர்கள் வணிகர் என்ற
தோரணையில் சிலர்வந்தார் அழைப்பின் பேரில் ஈமானை வெறுத்தொதுக்கி நபிக ளாரின்
எதிரியென வாழ்ந்திருந்த அபூசுப் யானும் பூமானின் முன்வந்தோர் தமிலி ருந்தார்
பேரரசர் வினாத்தொடுத்தார் பதிலுங் கொண்டார் 1072
உறவினராய் எவருமுண்டோ உங்கள் நாட்டில்
உண்மைநபி தாமென்று உரைக்கும் பேர்க்கு உறவினன்நான் என்றுமுன்னே அபூசுப் யானும்
உடன்வரவே அரேபியரை நோக்கி மன்னர் "அறிவிக்க வேண்டும்நீர் பொய்யு ரைத்தால் அறிந்திடுக” என்றவரை எச்ச ரித்துப் பறந்தொரு கேள்விமுன்னே பதிலுக் காகப்
பற்றியுடன் பதிலுரைத்தார் அபூசுப் யானே. 1073
தன்னைநபி என்றுரைப்போர் குடும்பத் தாரின்
தகுதியென்ன எனவதற்கு அரபு நாட்டின் தொன்மைமிகு புகழ்கொண்ட குடும்பம் என்றார்
திருத்தூதர் என்றிதற்கு முன்னால் யாரும் தன்னைமொழிந் திருந்ததுண்டோ இவர்க ளுள்ளே
சொல்லுமென இல்லையென்றார் விடையி றுத்தார் பின்பற்று வோர்கழேழைப் பேரா அன்றிப்
பணம்படைத்த பேராவென்ப ஏழை என்றார் 1074
பின்பற்று வோர்தொகையும் நாட்கு நாளாய்ப்
பெருகுகின்ற தாமோஇலைக் குறைவ தாமோ என்றதுமே அவருரைப்பார் பன்ம டங்காய்
ஏற்றமுற்றுப் போகின்றது என்றே மன்னர் என்றேனும் பொய்யுரைக்கக் கண்டுள் ஸ்ரீரோ
என்றுமில்லை என்றுமில்லை என்றார் யுத்தம் ஒன்றேனுஞ் செய்ததுண்டா என்ன ஆமாம்
இயற்றியுள்ளோம் வெற்றிதோல்வி இருபாற் குந்தான் 1075
186
ஜின்னாவp opfபுத்தீன்

திருநபி காவியம்
கேள்விக்கு ஏற்றபதில் கொண்டார் மன்னர்
"ஹேர்குயிலிஸ்’ அவையினரை நோக்கிச் சொல்வார் கேள்விக்குப் பதிலனைத்தும் உண்மை என்றால்
கட்டாயம் நாணின்று இருக்கும் இந்த ஆள்பதியின் ஆசனத்தில் என்னை வென்று
அவரிருப்பார் அவர்பாதம் தனைக்க முவ்வும் ஆளாக நானிருப்பேன் என்று கூறி
அரேபியரை அனுப்பி வைத்தார் அவருஞ் சென்றார் 1076
தான்கண்ட கனவொன்றின் விபரங் கூறித்
தனைக்கண்டோர் ஒப்புவித்த தகவல் கூறி 'கான்ஸ்தாந்தி நோபி’ளிலே வாழு கின்ற
கற்றறிந்த ஞானருக்கு அனுப்பி வைக்க வானவன்து தொருவர்வரு வாரிந் நாளில்
வரவேற்கக் காத்திருந்தோம் அவரே இம்மான் கூண்பிறையின் நுணியளவும் ஐய மில்லை
கொள்கஅவர் வழியென்றே பதிலுங் கொண்டார். 1077
சேதிகொண்ட மாமன்னர் குலங்கள் கொண்ட
தலைவர்களைக் கொலுமண்ட பத்த ழைத்து பாதியிலே எவருமெழுந் தேகா வண்ணம்
பலகணிகள் கதவுகளைப் பூட்ட வைத்தே ஒதினராம் உரோமர்களே! வெற்றி நேர்மை
உயர்ந்தவழி காட்டலுக்கு இம்மண் வேண்டின் தீதகல இந்நபியைப் பற்றி ஏகத்
தலைசாய்ப்பீர் என்றுரைத்தார் திகிலுற் றாரே 1078
கூறியவை அத்தனையும் விளங்கிக் கொண்டோர்
கடிதத்தின் தார்ப்பரியம் அறிந்த தாலே மாற்றினர்தம் உடலங்களைக் கதவை நோக்கி
முன்னேற நினைக்கையிலே பின்னுஞ் சொல்வார் சாற்றியது அனைத்தும்நான் உங்க ளுள்ளச்
சத்தியத்தை அறிந்திடவே என்றார் நெஞ்சுள் வேறொன்றே பதிந்தது ஒருகா லத்தில்
வீழுமிந்தச் சாம்ராஜ்யம் என்ப த..தே 1079
187
ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 108
திருநபி காவியம்
மன்னர்தம் மாற்றத்தைக் கண்டோ ரெல்லாம்
மனம்மகிழ்ந்தே அவள்பாதம் பணிந்து நின்றார் இன்னிலையில் இவர்கிதனை எடுத்துக் கூறின்
ஏற்காரிம் மடமக்கள் என்ப தாலே தன்னிலையை உடன்மாற்றிக் கொண்டார் மன்னர்
தவிரவொரு வழிகாண இயலா துற்றே பின்னொருகால் அவருரைபோல் நடந்த உண்மை
பாரறியும் பிறிதுரைக்க வேறொன் றுண்டோ, 1080
பறுசீகப் பூேரசருக்கு
பாரசீகப் பேரரசன் தமக்கும் இஸ்லாம்
பக்கம்வரக் கடிதமொன்றை இறைவன்தூதர் நேராகத் தூதுவர்தம் மூலஞ் சேர்க்க
நோக்கியதுங் கொதித்தெழுந்தான் சினத்தி னாலே ஆரம்பம் அல்லாஹற்வின் பெயரி னோடு
அண்ணல்நபி பெயர்கண்டு தனது நாமம் சேராத காரணத்தால் வெகுண்டான் வார்த்தை
தப்பிதமாய்ப் பிறந்ததன்றோ புல்லன் சொல்வான். 1081
எனதடிமை என்றனுக்கு எழுதும் போது
இவ்வாறோ எழுதுவது என்றன் நாமம் முன்னதாக இலாதெழுதி இருப்ப தென்ன
மதிக்காத காரணமோ என்றே கூறிப் பன்மடங்காய்க் கிழித்தெறிந்தான் கேள்வி யுற்ற
பெருமானார் சபித்தார்கள் அவன்றன் ஆட்சி சின்னாபின்ன மாகுமந்தக் கடிதம் போல
சொன்னபடி நடந்தது இறைபே ராலே. 1082
அத்தோடு நின்றனனே இல்லை தம்மின்
ஆத்திரத்தை அடக்கவென யெமன்நாட் டிற்றன்
உத்தரவின் பேரிற்செயற் படுவோ ருக்கு
உடனாணை பிறப்பித்தான் நபிக ளாரை
188
ஜின்னாஹ் வழfபுத்தீன்
 

திருநபி காவியம்
இத்தலத்தில் நிறுத்திடுக கைது செய்தே
எனும்வாறாய் ஏவலர்கள் தாமுஞ் சென்றே
உத்தரவுக் கடிபணிக அன்றேல் நாட்டின்
உடமைக்கும் உங்களுக்கும் அழிவே என்றார் 1083
பொறுத்திருங்கள் நாளைவரை என்ற வர்க்குப்
பதிலுரைத்துத் தங்கவைத்து இரவு முற்றும் மறையவனைக் கனிந்துருகி வேண்டி னார்கள் மாற்றுவழி இதற்களிப்பாய் என்ப தாக இறைதூது கனவுருவில் தோன்றிற் றன்னார்
இளவரசன் தன்னாலே மன்னன் ஆவி பறியுண்டு போனதென மறுநாட் காலை
மாநபிகள் தூதுவரை அழைத்துச் சொன்னார் 1084
அண்ணல்நபி முன்வந்த தூது வர்க்கு
அறிந்திடுக உங்களாட்சித் தலைவன் மாலை விண்ணுலகு சென்றுவிட்டான் மகனே கொன்றான்
விதிமாறிப் போனதனை விண்டு ரைத்தார் புண்ணுண்டார் வந்தவர்கள் நபியின் சொல்லால்
புரிந்துரைப்பீர் பேசுவதைப் புகல்வோம் மன்னர் எண்ணிடுங்கால் எனவிளையும் எண்ணிப்பாரும்
என்றனரே இறுமாப்பு எ.றிற் றன்றோ 1085
இயன்றதனைச் செய்திடுங்கள் ஏற்றுக் கொள்வேன்
இஸ்லாத்தின் பேராட்சி சொற்ப நாட்குள் பயின்றிடுமே உம்மண்ணில் புரிந்து கொள்வீர்
போய்வருக என்றாணை நபிகள் செய்தார் செயற்கெதுவும் இயலாது சென்றார் தூதர்
சொன்னபடி நடந்ததனைப் பின்ன றிந்தார் வயப்பட்டார் யெமன்நாட்டின் ஆட்சி யாளர்
வரித்தார்தம் வார்த்தைகளில் கலிமா தன்னை 1086
189
ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 109
திருநபி காவியம்
எகிப்து நாடின் மன்னருக்கு
எகிப்துமன்னர் தமக்குமொரு இலிகிதம் தன்னை
எழுதியதைத் தூதுவர்பால் அனுப்பி வைக்க மகிமை செய்தார் மன்னரந்தத் தூது வர்க்கும்
வகைசெய்தார் கரியின்வெண் தந்தத் தாலே வடிவமைத்த பேழைக்குள் பாது காக்கத்
தகைசாரப் பதிலொன்றும் எழுதி யந்தத் தூதுவர்பால் அனுப்பநபி கரங்கொண் டாரே 1087
முஹம்மதிப்னு அப்துல்லாஹற் தமக்கு எகிப்து
மன்னர்'முகெள இஸ்’வரையும் மடலாம் இது
இகபரத்தோன் சாந்தியுங்கள் மீதுண் டாக
எழுதியநின் கடிதத்தைப் படித்த றிந்தேன்
அகங்கொண்ட தென்னன்மை அழைக்க என்ப(து)
அறிவேன்நான் அறிந்திருந்தேன் இறைவன் தூதர் இகத்துதிக்க வுளாரென்றும் சிரியா நாட்டில்
என்றும்நான் எண்ணியிருந் தேனாம் என்றும் 1088
பெருமையுறச் செய்கின்றேன் உங்கள் தூதைப்
பெருமதிப்புக் கொண்டிங்கு வாழு கின்ற அரியவிரு பெண்டிரைத் தங்கட் காக
அனுப்பியுள்ளேன் அத்துடனே பரிசி லோடு ஒருகோவே றுக்கழுதை அன்ப விரிப்பாய்
ஒன்றவென்றுஞ் செய்துள்ளேன் உங்கள் மீது மருவட்டும் சாந்தியென்றும் எகிப்து மன்னர்
மடலினிலே குறிப்பிட்டு அனுப்பி வைத்தார் 1089
ஜின்னாஹ் இழரித்தீன்

திருரவி asrsíulö
பஹ்ரைன் நாடீடின் ஆளுநர்க்கு
”முன்திர்பின் சவா’பஹற்ரைன் ஆளு நர்க்கு
மாநபிகள் இஸ்லாத்தின் பால ழைத்து சென்றடையச் செய்தார்கள் ஒர ழைப்பைத்
திருத்தூதர் பதிலொன்றுங் கொண்டிட் டார்கள் முன்னவனின் தூதுவரே கடிதம் கண்டேன்
மக்களினை இஸ்லாத்தின் புறம ழைத்து என்னவரில் சிலரேற்றார் சிலர்ம றுத்தார்
என்னபரி காரம்நான் செய்வ தென்றே 1090
அளவற்ற அருளாளன் நிகரு மற்ற
அன்புடையோன் அல்லாஹற்வின் நாமங் கொண்டு எழுதுகின்றேன் அவன்தூதர் முஹம்மத் பஹற்ரைன்
ஆளுபதி'முன்திர்பின் சா’வென் பேர்க்கு பொழிக சாந்தி உங்கள்மேல் படைத்து ஆள்வோன்
மாண்புமிக்கோன் எல்லாமே வல்லோன் என்றும் உளம்பதிக்கத் தூண்டுகின்றேன் உமையு முன்றன்
உடன்மக்கள் தமையுமென்றும் இன்னுங் கூட 1091
யாரவர்தம் நன்மைக்காய் விசுவா சித்து
என்துாதை ஏற்றதுபோல் நடக்கின் றாரோ சார்ந்திடுவர் என்னுடைய அறிவு ரைபால்
சொன்னார்என் தூதுவர்உம் மேன்மை பற்றிச் சார்ந்திருக்க இன்றையநின் தலத்தில் இஸ்லாம்
சமயத்தைப் பற்றிப்பின் உபதே சிப்போர் சாராது இடையூற்றில் உதவி செய்க
தூதருரை செய்வார்கள் இலிகிதந் தன்னில் 1092
ஒப்புகின்றேன் பஹற்ரைனின் மக்கள் பற்றி
உங்களது சிபாரிசுக்கள் குற்றம் செய்வோர்
தப்புகளை மன்னித்தேன் எனவே அன்னார்
தப்புகளை நீவீரும் மன்னிப் பீரே
191
ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 110
திருநபி காவியம்
ஒப்பாத யூதர்கள் மற்றை யோர்கள்
உவந்தபடி வணங்கிடட்டும் ஆனால் அப்பேர்
தப்பாது வரிசெலுத்த வைப்பீர் என்று
தூதர்பதில் ஆளுநர்க்கு அனுப்பி வைத்தார் 1093
அபிசீனிய நாடீடு மன்னர் நஜ்ஜாஸுக்கு
அருளாளன் அன்புடையோன் திருநா மத்தால்
அல்லாஹற்வின் தூதர்முஹம்மத் அபிஸி னிய்யா அரசர்நஜ் ஜாஸிக்கு அனுப்பு கின்ற
அஞ்சலிது சாந்தியுண் டாகி டட்டும் சரியான வழிகாட்டல் பற்று வோர்க்காம்
சொல்லுகின்றேன் புகழுரைகள் அல்லாஹற் அன்றி ஒருவரில்லை வணங்குதற்கு தூய்மை யானோன்
உரியவனாம் சாந்திதரச் சாந்திக் கும்மாம் 1094
நம்பிக்கையின் வழிகாட்டி பாது காப்போன்
நான்சாட்சி கூறுகின்றேன் ஈசா மர்யம் தன்மகனாம் இறையவனின் ரூஹி ருந்தும்
தூயகன்னி மர்யத்தின் உடலில் ஊத அன்னைப்பே றடைந்தனரே கருத்த ரித்தே
ஆண்டவனே தன்கரத்தால் சிருஷ்டி செய்த முன்மனிதன் ஆதம்போல் சுவாசம் பெற்றார்
முதலவன்பால் உம்மைநான் அழைக்கின் றேனே. 1095
எனைத்தொடர்வீ ராகஇறை என்பால் தந்த
எல்லாமே நம்பிடுவீர் எனைத்து தாக நினைந்திடநீர் வேண்டுமது வல்லோன் பக்கல்
நானும்மை அழைக்கின்றேன் மக்க ளோடு எனைச்செவிசாய்த் தென்மொழிகள் ஏற்பீ ராக
எனதிளவல் "ஜாபரி’னை சிலபே ரோடு அனுப்பியுள்ளேன் கண்ணியமாய் நடத்தித் துன்பம்
அடையாது பாதுகாப்பும் அளிப்பீ ரென்றாம் 1096
192
ஜின்னாஹ் ஷரீபுத்தீன்
 

திருநபி காவியம்
கடிதத்தைக் கண்டமன்னர் நபிக ளார்க்கு
கடிதிலொரு பதில்கடிதம் அனுப்பி வைத்தார் கடிதத்தில் நஜ்ஜாஸி யிடமி ருந்து
காப்பவனின் தூதரான முஹற்ம துக்கு கிடைத்திடட்டும் நபிகருணை ஆசீர் வாதம்
கடவுளில்லை அல்லாஹற்வைத் தவிர என்றே கிடைத்தவுங்கள் கடிதத்தில் ஈசா பற்றிக்
கூறியுள்ள வாறன்றி வேறொன் றில்லை 1097
உலகத்தைச் சுவர்க்கத்தை ஆட்சிசெய்யும்
ஒருவனல்லாஹற் மீதாணை உண்மை அ.தே எலாமும்நாம் ஏற்றுள்ளோம் தந்த வற்றை
எம்வசத்தில் வந்தநம்பி "ஜாபர்’ மற்றோர் நலமாக ஆதரிக்கப் படுவர் எம்மால்
நபியாக ஏற்றுறுதி கூறு கின்றேன் எல்லாமே வல்லவன்பால் சரண டைந்தேன்
என்பதையும் தம்பிவசம் வாக்கு ரைத்தேன் 1098
அகதிகளாய்ச் சென்ற"ஜாபர்’ மக்கா மீண்டு
அளித்தார்கள் கடிதத்தை நபிகள் கையில் இகவாழ்வை முடித்து நஜ்ஜாஸ் இறைபாற் சேர்ந்தார் இறுதிநபி அவர்மரணத் தொழுகை நோற்றார் நிகரில்லான் தூதர்புது மன்ன ருக்கும்
நிருபமொன்றறை அனுப்பிவைத்தார் அதனை ஏற்றுப் புகுந்தாரோ இலையோவென் றறிந்தா ரில்லை
புதுமன்னர் இஸ்லாத்தின் பால தாமே. 1099
டமாஸ்கஸ் ஆரசருக்கு
"அல்ஹாரித்’ டமாஸ்கஸின் மன்னருக்கு
அண்ணல்நபி கடிதமொன்றை அனுப்பி வைத்தார்
வல்லவனாம் அல்லாஹற்வின் மார்க்கந் தன்னை
வரித்திடுமா ற,'தினிலே குறித்தி ருந்தார்
193
ஜின்னாஹ் வழfபுத்தீன்

Page 111
திருரவி asprsálu 3
எல்லாமே வல்லவனின் நாமங் கொண்டு
எழுதியவந் நிருபத்தில் நபிகள் நாதர்
சொல்லியவை தமைக்கேட்டு டமாஸ்கள் மன்னன்
சீற்றமுற்றுத் தகாதசொற்கள் வீசி னானே 1 100
சரியான வழிகாட்டல் தம்மைப் பற்றித்
தொடந்துவழி படுவோர்க்குச் சாந்தி சேர்க்க உருவில்லான் அல்லாஹற்வை நம்பு வீர்நீர்
ஒருதுணையும் இல்லாதான் அவன்பால் வாரீர் மருவிடினோ உமதாட்சி எஞ்சும் உம்பால்
மாநபிகள் எழுதியி ருந்தார்கள் கண்டு இருவிழியுஞ் செந்தணலாய்க் காயச் சொல்வான்
எனதுமண்ணில் எனையகற்ற யாருண் டென்றே. 1101
எமன் நாடீடு ஆளுநர்க்கு
எமன்நாட்டு ஆளுனன்'ஹெள டான்பின் அலி’க்கு இஸ்லாத்தின் பாலழைப்பு நிருப மொன்று எம்மான்ந பிமுஹம்மத் எழுதி வைத்தார்
ஏற்றதது வரிகள்பின் வருமா றாகும் தமதாக எவர்சரியாம் வழியைக் கொண்டு
செல்லுவரோ அவர்மீது சாந்தி சேர்க. எமதுடைய மார்க்கமின்று எண்தி சையும்
ஏற்றமுற்று வளருவதை யுமக்குச் சொல்வேன் 1 102
ஏற்றிடநீர் வேண்டும்இஸ்லாம் தன்னை உம்பால்
இருக்கின்ற அனைத்தும்உம் வசமா மென்ற கூற்றிற்கு உடன்பதிலைக் கொண்டார் எம்மான்
கூறுமது அழைப்பினிலே திருப்தி கொண்டு ஆற்றல்மிகு கவிஞன்நான் பேச்சில் வல்லோன்
அரேபியர்கள் மத்தியில்பேர் புகழும் மிக்கோன் ஏற்றிடுவீ ராயின்நின் அரசாங் கத்தில்
என்னையுமோர் பங்காக என்றுங் கூறி 1 103
194
ஜின்னாஹ் ஷரீபுத்தீன்
 

திருநபி காவியம்
195
ஏற்றிடுவேன் நின்அழைப்பைத் தொடர்ந்தி யற்ற
இணங்கிடுவேன் என்றவனும் ஒப்பி னானே ஏற்கவில்லை நபிநாதர் நிபந்த னைக்கு
என்றுமது போலான வேண்டு கோளை ஏற்றதில்லை பெருமானார் அனைத்தும் வல்லோன்
இசைவினிலே எவர்க்குஅவன் தன்நி லத்தை பெற்றிடச்செய் திடவிரும்பி வானோ ஏற்பார்
எனக்கூறி மறுத்தார்கள் அவன பூழிந்தான் 1 104
ஒமானின் மூசருக்கும் அவர் கும்பிக்கும்
ஒமானின் அரசர்"ஜப்பார்’ தமக்குந் தம்பி
'அப்த்பின்அல் ஜூலைன்தி’க்கும் நபிகள் நாதர் ஈமான்கொள அழைக்கக் கடித மொன்றை
எழுதினார்கள் பிறர்க்கும்போல் இலிகிதந் தன்னில் தாமாக எவருண்மை வழிகாட் டல்பால்
செல்லுவரோ அவர்மீது சாந்தி சேர்க ஈமான்கொண் டிடவும்மை இஸ்லாத் தின்பால்
இணைந்திடநான் அழைக்கின்றேன் ஏற்பீ ராவீர் 1 105
பூவுலகின் படைப்பினத்தின் பொதுவாய் என்னைப்
படைத்தவனே தூதுவராய் அனுப்பி யுள்ளான் ஏவிடச்செய் திடஅவனை அஞ்சும் வாறு
இதயத்திற் பணிவற்ற படைப்பு கட்காம் ஈவிரக்கம் அல்லாஹற்வை மறுத்தா லில்லை
எந்தவித மன்னிப்பும் அவரைச் சேரா ஏதுகொள்வீர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால்
இடைப்படும்உன் ஆளுமைக்குள் உன்றன் நாடே 1106
ஏற்காது விடிலென்றன் அழைப்பை நீங்கள்
இழப்பீர்உம் உடைமைகளை என்றன் சேனை
ஏற்கவரும் உமது மண்ணை எமதாய்க் கொள்ளும்
எனக்குரிய நபித்துவம்உம் ஆட்சிப் பேற்றில்
ஜின்னாஹ் வழfபுத்தீன்

Page 112
திருநபி காவியே
ஏற்றமுடைத் தாகுமென நினைவிற் கொள்வீர்
எனநபிகள் வரைந்திருந்தார் இன்னும் மன்னர்
கோற்சபையில் நடந்ததொரு சொல்லா டல்'அப்த்”
கோனிளையார் தமக்கும்'ஆஸ்’ தமக்கு மாமே 1107
"அமர்பின்அல் ஆஸ்'என்போர் தூது செல்ல
அனுப்பிவைக்கப் பட்டார்கள் ஒமா னுக்கு “அம்ர்'முதலில் கண்டது'அப்த்” மன்னர் நம்பி
அமைதிமிக்க சுபாமவர் கொண்டா ரென்றே ”அம்ர்’அவையில் 'அப்த்’துடனே பேச்சுக் கொண்ட
அத்தனையும் பின்னரவர் எடுத்துச் சொல்வார் அமைந்தது வரலாற்றில் அரசர் கட்கு
அழைப்புவிட்ட அழைப்புகளை ஆயுங் காலே 1108
உனையும்உம் அண்ணனையும் காண வந்த உத்தமநற் தூதர்தம் தூது வன்நான் எனக்கடிதம் கொண்டுசென்ற அம்ர்உ ரைக்க
என்அண்ணன் தனக்கதனைப் படித்துக் காண்மின் என்வயதில் மூத்தவராய் ஆட்சிப் பேற்றில்
எனைமுந்தும் பேரவரே என்ற 'அப்த்’பின் என்னவுன்றன் தூதுவத்தின் கார ணம்சொல்
என்றதுமே காரணத்தை ஆஸ்"ஞ் சொல்வார் 1 109
"அல்லாஹற்வை நம்பும்படி உங்க ளைநாம்
அழைக்கின்றோம் இணையற்றோன் நீள்வ ணங்கும் எல்லாமே பொய்யவற்றை அழித்து விட்டு
ஏற்பீர்கள் முஹம்மதரின் தூது வத்தை” சொல்லஅது கேட்டு'அப்த்’ தொடர்வார் ஓஅம்ர்
சீரியநற் குடும்பத்திற் பிறந்த வர்நீர் சொல்லுமுன்றன் தந்தைதம் நிலைப்பா டிந்தத்
தூதுவத்தின் பாலென்றார் இன்னுஞ் சொல்வார் 1110
196 ஜின்னாஹ் விழரித்தீன்
 

திருநபி காவியம்
197
நாமுன்றன் தந்தைவழி செல்லு வோர்கள்
நீரறிவீர் என்றதுமே 'அம்ர்” உரைப்பார் சாமுந்திக் கொண்டதவர் இஸ்லாம் மண்ணில் திருத்தூதர் வழிமுற்ற முன்இ ருந்தால் தாமாக முன்வந்து நம்பிப் பற்றித்
தொடர்ந்திருப்பார் நம்புகின்றேன் நானுந் தந்தை நாமத்துக் கேற்றமகன் இறைநாட் டத்தால்
நல்வழியாம் இஸ்லாத்தை ஏற்ற தாலே. 1111
நீரெப்போழ்(து) இஸ்லாத்தை ஏற்றிர் என்ன
நஜ்ஜாஸின் அவையிலவர் போலாம் என்றார்
ஊர்மக்கள் நிலையென்ன என'அப்த்”கேட்க
உடன்பட்டார் மன்னர்போல் அவரும் என்றார்
சேர்ந்தனரோ பாதிரிமார் மதகு ருக்கள்
சொல்கவென்றார் 'அப்த்’அதற்கு "ஆஸ்’ஞ் சொல்வார்
சேர்ந்தவர்கள் இஸ்லாத்தில் அவர்க ளுந்தான்
தொடர்கின்றார் மார்க்கத்தை என்றார் பின்னும் 1112
பொய்யுரைகள் புகலாதீர் மற்ற வற்றுள்
பெருத்தஅவ மானமது என்றார் 'அப்த்’ஆஸ்’ பொய்யுரையேன் நானென்றன் மார்க்கம் என்றும்
பொய்புகல அனுமதித்த தில்லை என்றார் துய்யநபி தேர்ந்திருந்தார் அம்ர்பின் அல்ஆஸை
தூதுவராய்ச் சிறந்ததவர் தாமா மென்றே கைகொண்ட பணியை அம்ர் கருத்திற் கொண்டு
கேள்விகட்கு ஏற்றபதில் அளிப்பார் மீண்டும் 1113
மன்னர்"நஜ் ஜாஸ்'இஸ்லாம் ஏற்ற செய்தி
மாமன்னர் 'ஹர்குயிலிஸ்’ தமக்குத் தூதாய்ச் சொன்னனரோ என்றார்'அப்த்” “ஆஸ்’வி டையாய்
சந்தேக மறச்சொல்லப் பட்டா ரென்றார் என்னவகை கொண்டதைநீர் அறிந்தீர் என்ன
இஸ்லாத்தை ஏற்கும்வரை மாமன் னர்க்கு மண்வரியைச் செலுத்திவந்தார் ஏற்ற பின்னர்
மறுத்துரைத்துச் சத்தியஞ்செய் தாரா மென்றும் 1114
ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 113
|
|
திருரபி காவியம்
மறுத்துரைத்த செய்திகேட்ட மன்னர் நம்பி
முறையான நடவடிக்கை எடுக்கு மாறு உறுத்தினராய் மன்னர்பதில் மறுத்துச் சொல்வார்
உற்றதவர் நிலையெனக்கும் என்றால் அ.தே நிறுத்திடுவேன் நானும்நான் அரச போகம்
நிலைத்திருக்கும் ஆசையற்றேன் எனவு மாக அறிந்திருந்தோம் என்றார்"ஆஸ்’ 'அப்த்’பின் கேட்பார்
ஆணையிட்ட தென்னநபி யுமக்கா மென்றே. 1 115
ஆணையிட்டார் அல்லாஹற்வைப் பணிக வென்றும்
அவனெல்லாம் வல்லவன்பரி சுத்த மானோன் பேணிடுவீர் நல்லுறவைக் குடும்பத் தோடு
பிறர்கொடுமைக் குள்ளாகச் செய்ய வேண்டாம் பூணாதீர் விபச்சாரக் கேடு போதை
பணிவின்மை சிலைவணக்கம் சிலுவைப் பக்கம் வாணாளை அர்ப்பணித்தல் வேண்டா மென்றும்
வள்ளல்நபி யுரைத்தார்கள் என்றார் அம்ரே. 1116
எம்மைநீர் அழைக்கின்ற மார்க்கம் நல்ல
ஏடுடைய நம்பிக்கைக் குரிய தாகும் தம்மையுமென் போலொன்றி உடன்பி றந்தார்
சேர்ந்திடலாம் இஸ்லாத்தில் நபியை ஏற்று உண்மையவர் ஆட்சியின்பால் ஆசை மிக்கார்
ஒருவருக்கும் ஆட்சியில்பங் களிக்கா ரென்ன எண்ணுவரேல் இஸ்லாத்தின் பாலொன் றாக
ஏற்றிடுவார் உரிமைபல என்றார் ஆஸ்ே 1117
தனவந்தர் தம்சொத்தில் ஏழை பங்கு
சேர்த்தெடுத்து உரியவர்க்கு வழங்கு கின்ற அனைத்துரிமை தனையுமவர்க் களிப்பா ரென்ன
அதுநன்றே ஏழைவரி என்றே நீவிர் சொன்னதென்ன என'அப்த்’பின் வினவ 'ஆஸ்'உம்
தெய்வீகக் கட்டளையாம் அ.து செல்வர் தன்னளவில் போகளஞ்சி இருப்ப வற்றில்
சேர்த்தேழை தமக்களிக்கும் செயலு மென்றார் 1118
198
ஜின்னாஹ் ஷரீபுத்தீன்
 

திருநபி காவியம்
செயற்படுத்த முடியுமாவித் திட்டத் தைஎன்
சொந்தமண்ணில் எனத்தம்மின் ஐயம் கூற முயன்றார்'ஆஸ்” மன்னன்ஜய் பர்’ரைக் காண
முயற்சியிலே தோல்வியுற்றுப் பின்வாய்ப் பேற்றார் வயங்கொண்ட கடிதத்தை வாங்கிப் பார்த்து
வினவிடுவார் 'ஜய்பர்”ஆஸ்’ தன்னை நோக்கி நயந்தனரோ குறைவழியர்கள் நிகழ்ந்த தென்ன
நாடிவந்தார் பற்பலபேர் என்றார் இன்னும் 1119
தம்சொந்த விருப்போடு பலரும் யுத்தச்
செயற்பாட்டின் பின்பலரும் அகக்கண் பூத்துத் தம்மற்ற வழிபாடு தமைத்து றந்து
தேர்ந்தார்கள் இஸ்லாத்தை இதுகால் மட்டும் அமிழ்ந்திருந்த இருளகற்றி ஒளியுங் கொண்டார்
அனைவருமே உமைத்தவிர இறையாட் சிக்குள் அமையாத புறத்தினிலே எனவே உம்மை
அறிவுறுத்தி னேன்இஸ்லாம் பற்ற வென்றே 1120
ஏற்றுவிட்டால் இஸ்லாத்தைப் பாது காப்பு
ஏற்படும்உம் நாட்டிற்கும் உன்ற னுக்கும் சாற்றினரே "ஆஸ்’ அதனைக் கேட்டு முன்னர்
சொற்களிலே கடுமைகொண்ட போதும் பின்னர் ஏற்றார்கள் இருவருமே இஸ்லாந் தன்னை
இளையவரின் முயற்சி யண்ணன் மாறு தற்கு ஏற்றதுவாய் அமைந்ததென அறிந்தார் "ஆஸ்’பின்
அண்ணல்நபி வசம்வந்தார் வெற்றி யோடே. 1121
199 ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 114
திருநபி sfrgíulö
கைபர் யுத்கும்
மதீனாவில் விரட்டப் பெற்று மனைகொண்டார் யூதர் கைபர் வதிபுலத் திருந்து வேண்டும் வகையெலாஞ் செய்தார் நெஞ்சிற் பதிகொண்ட குரோதம் பூக்கப் பழிக்கொரு பழிதாம் கொள்ளப் புதியதோர் படையுஞ் சேர்த்தார் பக்கத்தில் வாழ்ந்தோர் கூட்டி 1122
பெரும்படை திரட்டி யூதர் புறப்பட்டார் என்னுஞ் சேதி பெருமானார் செவிக்குத் தந்தார் புலனாய்வோர் நபிகள் நாதர் ஒருசிறு தொகையி னோரை உடன்சென்று கைபர் வாழும் மருவலர் தலைவன் றன்னை முறைப்படி அழைக்கச் சொன்னார் 1123
குருதிசிந் தாதி ருக்கக் கொண்டவோர் திட்டத் தோடு விரும்பினர் பேச்சுக் கொள்ள வரவுக்காய்க் காத்தி ருந்தார் வருவழி தன்னில் ஐயம் விளைந்ததோர் யூத னுக்கு அருகினில் வந்தபேரின் அரைவாளைப் பிடுங்கப் பாய்ந்தான் 1124
பரியினைத் தட்டி விட்டுப் பற்றாது வாளைக் காத்து ஒருசிறு தொலைவில் முந்த ஓடினான் தொடர்ந்தவ் யூதன் மருவியே அவரைக் கொல்ல முயன்றனன் அவர்வாள் முந்தச் சரிந்தனன் நிலத்தில் முஸ்லிம் தீரரும் புண்ணுண் றாரே 1125
சரிசம மாக யூதர் தொகையதும் இருந்த தாலே பொருதினர் இருசா ராரும் புரிந்தவக் கேட்டி னாலே ஒருவனைத் தவிர மற்ற யூதர்கள் கொலையுண் டார்கள் இருந்தவெம் பகையி தன்மால் எல்லையை விஞ்சிற் றன்றோ 1126
முன்னிலும் பன்ம டங்கு முஸ்லிம்கள் மீது யூதர் வன்மணங் கொண்டார் எம்மான் விருப்பமோ அமைதி யொன்றே கன்மணங் கொண்ட “உபை'யும் கூடினான் யூத ரோடே தன்வழி தூது வொன்றைத் திருநபி அனுப்பி னாரே 1127
200 ஜின்னாஹ் ஷரித்தீன்

திருநபி காவியம்
அனுப்பினான் சேதி யொன்று அண்ணலார் தூது கேட்டே மனத்திகில் கொள்ள வேண்டாம் முகம்மதர் கைவ சத்தில் சனத்திரள் கொண்ட சேனை சேர்ந்திலை ஆயு தங்கள்’ என“உபை” அறிந்த யூதர் இறைநபி மறுத்திட் டாரே. 1128
பலபட ஆயு தங்கள் படைத்தனர் போருக் காக பலபடக் கோப மூட்டும் படிவினை செய்திட் டார்கள் கலைத்துடன் ஒட்டிச் சென்றார் கால்நடை பலவும் மேய்ப்பான் கொலைசெயப் பட்டார் யூதக் கொடியவர் கரத்தி னாலே 1129
வில்லாள வல்ல முஸ்லிம் வீரர்கண் கொலையைக் காண பொல்லாரைத் துரத்திச் செல்லப் பயந்தவர் சரத்துக் கஞ்சி நில்லாது ஓடி னார்கள் நபியிடம் சென்ற வீரர் சொல்லுவார் எனக்கு நூறு தோட்துணை தருக வென்றே 1130
தந்திடில் நூறு வீரர் சென்றுநான் யூதப் பேரை பந்தாடி வருவேன் என்று புகன்றிட நபிகள் சொல்வார் “வந்திடில் வெற்றி யுன்பால் வரித்திடும் உவப்பு’ என்றே தந்தனர் விடையும் வீரர் தடம்பெயர்த் தகன்றிட் டாரே. 1131.
நடந்தி.து நாட்கள் மூன்று நகர்ந்தன கைபர்ப் போரும் தொடங்கிய தாகும் முன்போல் 'திரண்டுமே வருக என்று” இடும்ஆணை நபிகள் நாவில் எழவிலை 'விரும்பி யோர்கள் படைதனில் சேர்க” என்றே பேசினார் வீரர் சேர்ந்தார். 1132
பெரும்படை திரண்ட தெம்மான் புறப்பட்டார் கைபர் நோக்கி செருக்களம் நோக்குந் தீரர் சேர்ந்தொன்றி இறைவன் நாமம் உரத்திட மொழிந்தார் விண்ணே உதிர்ந்திடும் பாங்காய்ச் சொல்வார் கருத்தினிற் கொள்வீர்”அல்லாஹற்’ கூடவே உள்ளான் என்றே 1133
இறைவனைக் கொண்டே யன்றி இலைமனு ஆற்றல் என்றே குறைகொண்ட மனிதன் பற்றிக் கூறுவார் ஒருவர் கேட்டு மறுமைக்குப் பேறு காட்டும் மாநபி யுரைப்பார் இ.து "கருவூலஞ் சுவன நாட்டின் கூறினில் ஒன்றாம்” என்றே 1134
2O1 ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 115
திருரபி காவியம்
கைபரின் கோட்டை தன்னைக் கண்டது படைகள் ஆங்கே செய்யறு செயலாம் இ.தென் தோற்றத்தில் கண்கள் பூக்கச் செய்திடு வாறாய் ஆறு தோன்றின கோட்டை கள்உள் ஐநான்கு ஆயிரம்போர் அடலருஞ் சேர்ந்தி ருந்தார். 1135
ஆயிரம் பரிவீ ரர்க்கு அவனொன்றே போது மென்னும் காயவன் மையுங் கொண்டோன் கருதுமால் “மர்ஹப்’ என்போன் நாயக னாக நின்றான் நேர்கொண்டே முஸ்லிம் வீரர் காயாது வெய்யோன் சாயக் கண்டதும் மறுநாள் காத்தார் 1136
இருளினில் தாக்குதல்கள் இயற்றுதல் நேர்மைக் கொவ்வா திருநபி பணித்திட் டார்கள் தங்கிடும் வழிகள் செய்ய ஒருவித மாவில் நீரை ஊற்றியே கரைத்து ஊணாய்ப் பருகினர் இரவின் சாமம் ஏகிட "அதான்’ முழங்கும். 1 137
முன்காலைத் தொழுகை யின்பின் மாநபி கைக ளேந்தி முன்னவன் தனையி ரந்தார் மாற்றாரை அவர்தம் நாட்டின் நன்னலம் விரும்பு கின்றோம் நாமவர் பொல்லாங் கின்பால் பின்னிடா திருக்கச் செய்வாய் பாராளும் தனியோய் என்றே 138
அராபியர் மகிழ்வு கொண்டார் அறுதிதான் இனிமு ஹம்மத் இரையாவார் கூட்டத் தோடே இப்பெருஞ் சேனை முன்னே சிறுபடை என்ன செய்யும் சிற்றகழ் முன்னே எங்கள் பெரும்படை தோற்ற தன்று பஞ்சிவர் வளிமுன் என்றார் 1139
யூதர்கள் துணிவு கொண்டார் இறப்பன்றி வாழ்வு என்றே
ஏதுவாய்க் கோட்டை ஒன்றுள் இனத்தவர் சனத்தை வைத்துப்
பாதுகாப் பளித்தார் மற்றோர் புறக்கோட்டை கருவூ லங்கள் ஏதுவாய் அமைந்து ஒன்ற இறுமாந்தார் களம்பு குந்தார் 1140
முற்றுகை தொடர்ந்த தொவ்வோர் மாற்றாரின் கோட்டை தாமும் வெற்றிக்குள் அடங்கிற் றொன்றே வசம்வரா தொதுங்கி நிற்கும் தற்பரன் தூதர் முற்றும் சிந்தனை வயப்பட் டோராய் வெற்றிக்கு வழிகள் நோக்கி விழிமூடாார் துயில்ம றந்தார் 141
2O2 ஜின்னாஹ் வழfபுத்தீன்

திருநபி காவியம்
எவர்கரம் வெற்றி வல்லோன் ஏற்றிட அருள்செய் வானோ அவர்கரம் என்பதாகை ஏற்றிடச் செய்வேன் நாளை புவியாளும் வல்லோன் தூதர் புகன்றனர் வார்த்தை கேட்டோர் குவிந்திடா வழிக ளோடு கதிரோனைக் காத்தி ருந்தார். 1142
புலர்ந்தது பொழுது எம்மான் படைநோக்கி முகந்தி ருப்பி 'அலியெங்கே” எனழு ழங்க அரைநொடி அவரங் குற்றார் பலங்கொண்ட அலிக ரத்தில் போர்க்கொடி தந்தார் அண்ணல் புலியென வானார் சொற்கள் பறந்தன சரங்கள் பொன்றே 1143
"யூதரை வெற்றி கொண்டு இஸ்லாத்தை ஏற்கச் செய்ய ஒதுவீர்” என்று வேண்ட உன்னதர் நபிகள் சொல்வார் "யூதரை வெற்றி கொண்டு உபதேசஞ் செய்வீர் ஒன்றே யூதரென் றாகி னாலும் ஒக்கும்பல் ஒட்டைக்” கென்றே 1,144
பாய்ந்தனர் களத்துள் வீரப் பிரலா பங்கூறி முன்னே பாய்ந்துவந் துற்ற "மர்ஹப் பெரும்பலத் தீரன் சென்னி சாய்ந்திட வைத்தார் மண்ணுஞ் செம்புனல் பருக வாளும் ஒய்ந்திலை சுற்றி வந்தோர் உயிகுடித் துயிர்கள் தேடும் 1145
அறிந்தனர் யூதர் "மர்ஹப்" அழிந்தனன் என்றே யொன்றிப் பறந்தனர் பேர்க்க ளத்தின் பாலுயிர் பறிக்க வென்றே துறந்தன அலியின் வாளின் சுழற்சியில் உயிர்கள் தேகம் இறந்தவர் தொகையை எண்ண இயலுமோ இழிவுற் றாரே 1146
ஒருக்கரங் கொடியும் மற்ற ஒருக்கரம் வாளும் கொண்டு உருக்கினிற் கடைந்தெடுத்த உடலினில் வீரங் காட்டி செருக்களஞ் சுழன்ற வீரச் செயலினைக் கண்ணுற் றோர்கள் பெருக்கினர் மனத்துள் அச்சம் புறமுது கிட்ட கன்றார் 1147
தலைவரைப் பற்றி வீரர் தொடர்ந்தனர் போர்க்க ளத்தே கொலைத்தொழில் கொண்டார் மாற்றார் குறுகினர் தொகையில் மாய வலைக்கிடைப் பட்ட பேராய் வந்தவர் மீளார் என்னும் நிலைவர அபயந் தேடி நின்றவர் உயிர்பி ழைத்தார் 1 148
2O3 ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 116
திருநபி காவியம்
முற்றுகை வெற்றி பெற்று முஸ்லிம்கள் வசமாய் கைபர் முற்றுமே ஆகத் தோற்றோர் முனைந்தனர் அமைதி நாட பற்றிடும் விளைச்சல் தம்மில் பாதியை வருடந் தோறும் பெற்றிடச் செய்வோ மென்று புகன்றனர் தூது சென்றார் 1149
கப்பத்தை ஆண்டு தோறும் கைப்படச் செய்வோம் எம்மை ஒப்புக கைப ரில்முன் உறைந்தவா றுறைந்து வாழ செப்பினர் வாக்குக் கொண்டு திருநபி இணங்கி னார்கள் தப்பிழைத் தோர்த மக்கும் தீங்கெண்ணா இறைவன் தூதர் 1 150
சிறைப்பட்டார் உயர்கு லத்துச் சபிய்யாவின் கணவர் தந்தை இறப்புற்றார் போரில் யாரும் இலாதவோர் நிலையில் நிற்க மறைவழி காத்த எம்மான் மறுமணஞ் செய்தார் தீனின் புறம்வந்தார் விசுவா சித்தோர் போற்றிடுந் தாயு மானார் 1151
நஞ்சூடிடப்படீடார் நபிகளார்
கைபரின் வெற்றி கொண்ட காலத்தில் ஆங்கி ருந்த துய்யநந் நபிக்கு யூதர் தந்திட விடம்வி ளைந்தார் தையலைத் துணையாய்க் கொண்டு செய்தவச் சூட்சி முற்றும் பொய்யாகிப் போனதேகன் பெருமானைக் காத்திட் டானே 1 152
விருந்துண்ண அழைத்தாள் ஓர்பெண் முஸ்லிம்கள் சிலரினோடு பொருந்தினர் நபிகள் ஏற்றல் பண்பெனுங் கார ணத்தால் அருந்திடக் கவள மொன்றை ஐவிரல் கொண்டு வாயில் பொருத்திட அறிந்தார் அ.தில் பெருவிடம் உண்டா மென்றே 1153
உண்டவோர் தோழர் ஆங்கே உடனுயிர் நீத்தார் கண்டே விண்டதோர் கேள்வி உண்மை விளம்புவாய் விடம்வைத் தாயோ தண்டனைக் கஞ்சி யன்னாள் தன்பழி தலைமேற் கொண்டாள் கொண்டவம் முயற்சி யூதர் காட்டிய வழிதா மன்றோ 1154
204 ஜின்னாஹ் ஷரித்தீன்
 

திருநபி காவியம்
ஒப்பினார் யூதர் தாமே உறுவினைக் குடந்தை என்றே தப்பாது கொல்லும் உம்மைச் சொல்வது பொய்யென் றாகில் தப்புவீர் விடத்தி ருந்து தூதர் நீர் தாமே யென்றால் செப்புதல் செவிம டுத்தும் திருநபி மன்னித் தாரே. 155
வெற்றிகொள் வீர ராக வந்தார்கள் மதீனா கைபர் வெற்றிபோல் மகிழ்வு சேர்க்கும் விதமாக அபிஸி னிய்யா உற்றதம் இளவல் 'ஜ'.பர் ஊர்வந்தே இருத்தல் கண்டார் வற்றாத வாஞ்சையோடு வள்ளலார் உடல ணைத்தார் 1156
அமைதிக்கு இலக்க ணம்மாய் ஆனது மதீனா அந்நாள் இமைத்திடும் நொடிக்குட் பல்லோர் இஸ்லாத்தின் பால்நு ழைந்தார் தமைத்தாமே வெறுத்தார் யூதர் தோல்விவாய்ப் பட்ட தாலே அமைந்தது ரமழலான் மாதம் அருகினில் ஹஜ்ஜ" நேர்க்க 1157
ஏழாண்டு கழிந்த தோடி இறைபள்ளி கண்டு மக்கா வாழ்ந்தவர் தமக்காம் மீண்டும் வகைத்தது காலங் காண தோழரீ ராயி ரம்பேர் சேர்ந்திடப் புறப்பட் டார்கள் தோழரின் மகிழ்வி னோடு திருநபி யொன்றி னாரே 1158
மதீனாவில் ஆத ரித்தோர் மிகுஆவல் கொண்டிட் டார்கள் இதுகாறுங் காணா துற்ற இளைபற்றி தம்மி னோடு வதித்தவுர் நபிகள் மன்னர் மக்காவைக் காண வென்றும் நதிகடல் நோக்கி யோடும் நிலைவேகங் கூட்டிச் சென்றார் 1159
மக்காவின் அருகில் வந்த மக்காவைப் பதிகொண் டோர்முன் மக்காவில் வாழ்ந்த வாழ்க்கை வரலாறு மதீனத் தோர்க்கு துக்கமும் மகிழ்வுங் கூட்டிச் சொல்லினர் ஆரம் பத்தில் வெட்கிடும் வாழ்வும் பின்னர் வாழ்ந்தநல் நபிசொல் வாழ்வும் 1160
ஆரம்ப வாழ்வு முற்றும் அறங்கெட்ட வாழ்வாம் பின்னர் நேரிய வாழ்வு கொண்டோம் நபிவழி பற்ற லாலே கார்மனங் காண்ட பேரால் கூடுவிட் டகன்ற மான்போல் ஊர்விட்டு ஊரும் வந்தோம் உபசரித் துதவி செய்தீர் 1161
205 ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 117
திருரவி afraấtuổ
இன்றுபோ லென்றும் உள்ளம் இன்புற்றா ரிலைமுஸ் லீம்கள் துன்புற்றார் மாற்றா ரென்றுந் துன்புறாப் பாங்கி லன்று தன்னொடு ஒருவ ரொன்றச் சென்றவர் முஹம்மத் இன்றோ பன்நூறு பேரி னோடே புறப்பட்டு வருதல் கண்டார் 1 62
சொட்டுச்செந் நீள்தான் கூடச் சிந்திடா வாறு மக்கா விட்டகன் றிட்ட முஹம்மத் வெற்றிகொள் வீர ராக உட்புகுஞ் செய்கை அன்னார் உடன்பாடு ஹ"தைபிய் யாவில் பட்டதால் தானே ஏன்தான் புரிந்தனம் எனநொந் தாரே 1 163
கண்டவக் காட்சி நெஞ்சைக் கரிக்கிடச் செய்யக் கண்டோர் அண்டிட முன்னர் விட்டு அகன்றிடும் எண்ணங் கொண்டே அண்டிய குன்று கள்மேல் அவரவர் குடும்பத் தோடு மண்டினர் தரித்தால் முஹம்மத் மனமாற்றச் செய்வா ரென்றே 1164
நுழைந்ததும் க.பா கொண்ட நிலத்தினில் ஒன்றுகூடி தொழுதனர் நபிக ளார்தம் தோழர்க ளோடு கண்டே பழியென்ன செய்தோம் இ.தைப் பார்த்திட என்றே தத்தம் விழிகளை நொந்தார் என்றான் வரித்ததிக் காட்சி யென்றே. 1165
கல்லெறி பட்டு மக்காக் கடைத்தெரு வெல்லாஞ் சுற்றி இல்லாது ஒருவர் தானும் இசைந்துகை தராதி ருந்தோர் வல்லமை மிக்க பேராய் வேகமாய் வளர்ச்சி கொண்டு கல்லெறி பட்ட மண்ணில் கால்பதித் திடுதல் கண்டார் 1166
தன்கையால் பதித்த சொர்க்கக் கருங்கல்லை நபிகள் முத்தி பின்னேழு முறை'க.பா'வைப் பணிவொடு சுற்றி வந்து முன்னவன் தனைவழுத்த மற்றவர் தாமுஞ் செய்தார் பின்வரு மாறு வாயும் புகன்றிடத் தொடர்ந்தார் மற்றோர் 1 167
“வணக்கத்துக்குரிய நாயன் வேறிலை அல்லாஹற் அன்றி இணங்கியே வெற்றி தந்தான் எதிர்த்தவர் தனை”யென் றோத கணந்தனுந் தரியார் மற்றோர் கூடியே தாமுஞ் சொல்வார் இணைந்ததவி வொலியொ விரிந்து இருப்பவர் செவிப்ப றைக்கே 1168
206 ஜின்னாஹ் ஷரித்தீன்

திருரபி காவியம்
மறுநாள்தம் தோழரோடு வணங்கிய காட்சி கண்டு பொறுமையற் றிகழ்ந்தார் க.பாப் பதிகொண்ட சிலைதம் கண்கள் வறந்தன வாமோ சக்தி வெறுத்தவை அழிக்க எண்ணும் புறத்தினர் தமையொ ழிக்கும் பலமற்றுப் போன தென்னே. 1169
இந்நாளில் பெருமா னார்தம் இசைவினை வேண்டி அப்பாஸ் வந்திருந் தார்கள் தம்மின் விருப்பத்தின் பால்ம னையாள் சொந்தத்தின் நங்கை தன்னைத் திருமணஞ் செய்து வைக்க பந்தமொன் றமைந்த தன்றே பெருமானார் மைமூ னாவும் 1 70
ரோமருக்கெதிராய் யுத்கும்
நன்மார்க்கதந் தன்னில் சேர நபிகளார் அழைப்புக் கண்டு வன்மனங் கொண்ட பேருள் வழிகேடன் புஸ்ரா மன்னன் சென்றவத் தூதர் தன்னை சாவின்பால் போக்கித் தூது ஒன்றிய கடிதந் தன்னை உடன்கிழித் தவம தித்தான் 1171
மதினாவின் மக்க ளந்த மதிகெட்டோன் செய்கை கேட்டுக் கொதித்தனர் பழிவாங் கற்காய்ப் புறப்பட வேண்டு மென்றார் விதித்தது அதுவா மென்றால் வேறிலை வழியா மென்று மதித்தனர் மக்கள் வார்த்தை மறுநொடி படைகூ டிற்றே 1172
போர்தொடுத்த திடமுன் செய்த பழிதனை ஏற்றுக் கொண்டு சீர்வழி இஸ்லாம் பக்கல் சேர்ந்திடப் பணிக்கு மாறு போர்ப்படை நாய கர்க்குப் பணித்தனர் மறுத்து ரைத்தால் போரொன்றே முடிவாம் என்றும் புகன்றனர் நபிகள் கோனே 1173
படைத்தள கர்த்த ராகப் பெருமானார் “ஸைத்’ஐத் தேர்ந்தார் அடிமையாய் இருந்து மீண்ட அண்ணலார் வீரத் தோழர் கொடுத்தவப் பதவி ஈமான் கொண்டவ ரிடத்தில் என்னும் இடமிலைப் பேத மென்னும் ஏற்றத்தைச் சாற்று தற்கே 1174.
2O7 5őTGITTGITT Gprfly 5555

Page 118
திருரவி காவியம்
போரினிற் 'ஸைத்’இ றந்தால் பொறுப்பினை “ஜட்பர்’ கொள்க சேரினிற் சொர்க்கம் அன்னார் தலைமையை 'ரவாஹா ஏற்பார் தேர்ந்திட உரிமை உண்டு சென்றிடும் படையி னோர்க்கு ஒர்வரை 'ரவாஹா' மாண்டால் உத்தர வாகு மி..தே 1175
விடைதந்து அனுப்பும் போது வள்ளலார் ஆணை யிட்டார் மடிந்திடச் செய்தல் வேண்டாம் மகளிரை இளஞ்சி றாரை ஒடித்திடக் கூடா வீடு ஒருமரந் தானும் உம்மால் அடிபுரண் டிடவும் ஆகா அவையுத்த தர்மம் என்றார் 1176
வரலாற்று நிகழ்வாய் இட்து வரித்திடப் பெற்ற தன்று அரேபியர் ஒருவர் ரோம அரசனுக் கெதிராய்ப் போரில் செருக்களம் புகுந்த செய்கை திருநபி தொடுத்தா ரன்னார் சரித்திரம் இன்றுஞ் சொல்லுஞ் சான்றொடு புவியி னோர்க்கே 1177
ஒரு லட்சம் போர்வீ ரர்கள் ஒன்றினர் "முத்தா”வின்பால் பெருமானார் படைய தற்குப் பயங்கொள வில்லை நெஞ்சில் உரங்கொண்டார் துவம்சம் செய்ய ஒருவர்நாம் சதம்பேர்க் கென்றே கருதினார் ஈமான் தந்த கவசம. தன்னா ருக்கே 11 78
கொண்டிடல் வெற்றி அன்றேல் கைப்படும் சொர்க்கம் என்றே கொண்டநல் லுறுதி அன்னார் குருதியிற் கொதிக்கத் தேகம் கொண்டது பெரும்ப லத்தைக் கடுகினர் களத்தை அச்சங் கொண்டது பகைவர் சேனை கடுஞ்சமர் கூடிற் றன்றோ. 1179
மேகங்கள் ஒன்றோ டொன்று மோதிடும் பாங்காய் வெற்றி மோகங்கொண் டிரண்டு சேனை மோதின முழக்கம் போன்றே ஆகிய தாகும் ஓசை ”அல்லாஹ" அக்பர்” என்றே நாக்குரல் செய்த செய்கை நபிவழித் தோழ ராலே 1 180
பெரும்படை யோடெ திர்த்துப் போர்செய்யப் பலப்ப ரீட்சை பொருதலில் விஞ்சிற் றெங்கும் பிணங்களே காட்சி யாகும் விருந்துகொண் டெல்லை மீற வேண்டாமென் றிகழப் பூமி குருதியாற் புறங்கு எளித்த காட்சிபோற் களஞ்சி வக்கும் 1181
208 ஜின்னாஹ் விழரித்தீன்

திருநபி காவியே
இருபுறத் தாரும் வீரர் இழப்பினால் குன்றி னார்கள் மருவாரின் வாளால் 'ஸ்ைதும் முதல்வன்றன் சொர்க்கம் சேர கரம்பிடித் துயரத்திச் சென்றார் கொடியினை 'ஜ.பர் நெஞ்சின் உரத்தினை எடுத்துச் சொல்லின் எழுத்தினில் அடங்கா தன்றோ 1182
சோராது துணிந்து நின்று தம்முயிர் பெரிதென் றெண்ணா வீரர்கள் பொருதி னார்கள் வெற்றியே குறியாய்க் கொண்டார் போர்முற்றி எதிரி வாளின் சுழற்சியால் வலது கையை வேரொடு இழந்தார் ஜட்பர் வரித்ததே கொடியி டக்கை 11.83
இடக்கையிற் கொடியை ஏந்தி எதிரிகள் தமையெ திர்த்துத் தொடர்ந்திட யுத்தந் தன்னைத் தூண்டிடும் போது தம்மின் இடக்கையும் வாளினுக்கு இரையாக நெஞ்சி னோடு கொடியினை அணைத்தார் சென்னி தகர்ந்தது மறுக ணத்தே 1184
கட்டளைக் கேற்ப வெற்றிக் கொடியினை 'ரவாஹா’ ஏந்தி உட்புகுந் தாரே சென்னி உருட்டினார் பலநூ றாக தொட்டிடுந் தலைகள் பூமி தொடர்ந்திடும் உடல்கள் அப்பால் வெட்டினன் எதிரி வீரன் வீரராய்ச் சொர்க்கஞ் சேர்ந்தார் 1185
முப்பெருந் தலைகள் வீழ மறுகணம் படையி னோர்கள் செப்பினார்"காலித்’ தம்மை தலைமையை ஏற்பீ ரென்றே ஒப்பினார் அவரும் யுத்தம் உடன்திசை மாறிமுன்னர் தப்பிதஞ் செய்த மன்னன் செருக்கினை அடக்கச் செய்யும் 1186
இடதுகை கொடியைத் தாங்க எதிரிகள் வலது கைவாட் பிடியினுள் அடங்கிப் போனார் பம்பரச் சுழற்சி காட்டித் துடிதுடித் தெதிரிப் பேரைச் சமர்க்களங் குவித்தார் 'காலித்’ அடுத்தது வெற்றி யந்நாள் அவர்கரத் திரவி சாயும் 1187
மறுநாளின் போரின் போக்கை மாற்றினார் காலித் வீரர் சிறுசிறு குழுக்க ளாகத் தனித்தனி சுற்றி நின்றார் பொறுத்திலன் பகலவன்போர்ப் புதுமையைக் காண வென்றோ நிறுத்தினான் வானில் ஆட்சி நோக்கினார் எதிரிப் போரே 118.8
209 ஜின்னாஹ் வழfபுத்தீன்

Page 119
திருநபி காவியம்
புதிதாகப் படைகள் சேர்ந்த பாங்கினில் வீரர் தோன்ற அதிர்ந்தனர் எதிரி யானோர் எதிர்த்திடில் அழிவே என்று மிதிதளர்ந் திடம னத்துள் மேவிடு அச்சங் கூட்டி ஒதுங்கினார் முதுகு காட்டி ஓடினார் தோல்வி ஏற்றார் 1 189
வெற்றியும் அதனோ டுற்ற வரையறு பொருட்க ளோடும் வெற்றிக்கு முதன்மை யான வீரர்தம் உடல்க ளொன்ற உற்றனர் மதீனா காலித் உத்தம நபியைக் கண்டார் வெற்றியால் மகிழ்ந் திட்டாலும் வருந்தினர் நபிகளாரே 1 190
மகிழ்ச்சியின் ஆரவாரம் மதீனாவிற் பரவி னாலும் அகத்தினிற் சோகங் கொண்டார் அண்ணலார் இறந்தோ ராலே செகவாழ்வைத் துறந்த போதும் சொர்க்கவாழ் வடைந்தா ரென்றார் வகைசெய்தார் அடக்கஞ் செய்ய வேண்டினார் இறைபால் மாதோ. 1191
ஒப்பந்கு மீறலும் முடிவுகளும்
ஒப்பந்தந் தன்னை மீறி உகந்தவா(று) உயிர்ப்ப லீகள் தப்பென்று அறிந்தும் மாற்றார் செய்திட்டார் செய்யச் செய்தார் கப்பிய கழங்கந் தன்னைக் கொன்றிட நபிக ளாரும் ஒப்பினார் தோழர் கூட்டி ஒர்ந்துநல் முடிவு கொண்டார் 1.192
'பணிகஅப்” பிரிவி னோர்கள் பெருமானர் தமக்கோர் தூது அனுப்பினார் உதவி கோரி அண்ணலார் வாக்க ளித்தார் கனத்தது சென்னி கண்கள் கோபமே யுருவ மாக மனத்திடன் கொண்டார் அந்த மாந்தருக் குதவும் பாங்காய் 1 193
தொடர்ந்தும்தம் மக்கள் ஒன்றிச் செய்கின்ற கொலைகள் எண்ணி அடிமனக் கலக்க முற்றார் அரேபியர் தூத னுப்ப முடிவுசெய் தார்கள் செல்ல முதன்மையாய் அபூசுப் யானை விடைதந்து அனுப்பி னார்கள் வந்தவர் நபியைக் கண்டார் 1 194
210 ஜின்னாஹ் வழfபுத்தீன்
 

திருரவி ສrafiມນີ້
கண்டதும் நபியை நோக்கிக் கூறுவார் ஹ"தைபிய் யாவில் உண்டிலை நானொப் பந்த உடன்பாட்டில் ஒப்ப மில்லை கண்டிலை அதனை நானும் கூறிய தறிந்தேன் அ.தை உண்டுள வாறு மீண்டும் உயிர்பெறச் செய்வோ மென்றார் 1 195
வினாவுக்கு வினாவாய் எம்மான் வினவினார் ஏன்அ தற்கு என்னதான் வேண்டும் உம்மோர் ஏதுபங்கம் செய்தா ரென்றே முன்னைய காலந் தன்னை மிகைப்படச் செய்தல் வேண்டும் என்றனர் அபூசுப் யானும் ஏற்றநற் பதிலுங் கொண்டார். 1196
அமைதியை இழந்தார் சுப்யான் அண்ணலார் தொடர்ந்தார் சொல்வார் எமைநாங்கள் உடன்ப டிக்கைக் கேற்றவா றியற்று கின்றோம் அமைந்ததை அணுவற் றேனும் அகற்றிடோம் சேர்க்க மாட்டோம் உமக்கிது போது மென்றார் ஒன்றும்பின் உரையா துற்றார் 1197
பெருமானர் போகில் ஒன்றும் புரியாத நிலையில் சுப்யான் நெருங்கினார் அபூபக் கர்தம் நேசத்தைப் பெறுதற் கென்றே பொருந்தாத போராட் டங்கள் பொருத்தத்தை முறித்த தென்னும் கருத்தவர்க் கிருந்த போதும் கொண்டனர் முயற்சி தன்னை 1 198
பகைமையை வளர்த்துச் செந்நீர் பாய்ந்திடும் நிலைமை போக்க வகைசெய்யுஞ் செல்வர்க் குற்றோர் செய்திடும் உறுதி மூலம் தகைமைசால் அபூபக் கள்முன் சொல்லிய வார்த்தை கேட்டு மிகையாக ஏதும் இல்லை மாநபி சொல்சொல் லென்றார் 1 199
தோழர்கள் பலரும் இ.தே சொன்னார்கள் இறுதியாக தோழராம் அலியி டத்துச் சென்றனர் அவருஞ் சொல்வார் பாழான துன்மு யற்சி பெருமானார் வார்த்தை மீறி தோழராம் நாங்கள் ஏதும் செய்திடற் கியலோம் என்றே 1200
முயற்சியில் முற்றுந் தோற்று மக்காவை நோக்கி சுப்யான் முயன்றனர் நபிகள் போரின் முடிவொன்றில் உறுதி பூண்டான் செயற்படா தொப்பந் தத்தைத் தூர்ந்திடச் செய்த பேர்க்கு செயத்தகு பாடம் யுத்தம் தானென மனங்கொண் டாரே 1201.
211 ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 120
திருநபி காவியம்
குறைஷியர் மீதே யுத்தம் கொளவுளோம் உளத்தில் நீரும் மறைத்திடும் எமது திட்டம் மற்றவர் அறிதல் வேண்டாம் அறத்தினைக் காக்க என்று அபூபக்கள் தம்மி டத்தே இறைதூதர் இயம்ப அட்தை ஏற்றனர் தோழ ராமே - 1202
தம்மொடு இணைந்து யுத்தம் செய்திடக் கூடு மென்ற தன்மையோர் தமக்குத் தூது சென்றிடப் பணித்து அன்னார் முன்வரு திங்கள் வந்து மதீனாவில் சேர்வ தென்னும் முன்னறி வித்த லொன்றை முறைப்பட அனுப்பி வைத்தார் 1203
பலநூறு ஒட்ட கைகள் பலநூறு பரிகள் என்றும் இலையது வாறு என்பர் இணைந்தபத் தாயி ரம்போர்க் கலைதனின் வல்லார் ஒன்றாய்க் கூடினார் போரின் போக்கை இலையவர் அறிந்தார் எம்மான் ஏவலால் கூடி னாரே 1204
சென்றன படைகள் எங்கு செல்கின்றோம் எனத்தோன் றாதே சொன்னார்கள் நபிகள் என்னுந் திசைநோக்கிச் செல்லும் போழ்து முன்னிலை கண்டார் அப்பாளில் மதீனாவை நோக்கும் நோக்கில் என்னுடன் இணைக என்றார் இறைநபி அப்பாஸ் சேர்ந்தார் 1205
படைநடை கொள்ளும் போழ்து பார்த்தனர் நாயொன் றாங்கே இடையினிற் குட்டி கட்கு இன்னமு தூட்டுங் காட்சி தடைசெய்தார் கருணை வள்ளல் கடுகெனுந் தீங்கு நேரா இடைவிட்டுச் செல்க வென்றே இணையிலாக் காட்சி அ.தே 1206
"குதைத்'என்னும் இடத்தில் சேர்ந்தார் கூடவே 'பனிசு லைம்பேர் குதிரைகொள் படைவீ ரர்கள் கணக்கினில் தொளாயி ரம்மாம் எதிரிகள் எவரென் றாலும் இலாதுசெய் தொழிக்கும் எண்ணம் புதைத்தவர் மனத்தி லன்னார் புகன்றனர் நபியை நோக்கி 1207
உறவினில் உங்க ளுக்கு ஒன்றிய பேர்கள் எங்கள் திறனினை நீங்கள் காணத் தாமொன்றி வந்தே யுள்ளோம் திறன்மிகு குதிரை வீரர் சேணம்விட் டகலாப் பேர்கள் மறவர்கள் நாங்கள் யுத்த மன்றிலிற் காண்பீ ரென்றார் 1208
212 ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
 

திருநபி sfrgíul5
புறப்படு முன்னர் நோன்பு பிடிப்பவர் பிடிக்கட் டும்பின் குறைதனை நிவர்த்தி செய்யக் கடமைப்பா டுடையீ ரென்னும் முறைமையை வீர ருக்கு மொழிந்திருந் தார்கள் தாமோ முறையாக நோன்பி ருந்தார் முனைப்பாடு கொள்ளு மட்டும் 1209
புனிதநற் றலம்வ ரைக்கும் பிடித்தனர் நோன்பு அண்ட இனிமுதல் வேண்டா மென்றார் இறைநபி எதிரிப் பேரின் சனிப்பினை முடிக்க வேண்டுஞ் சக்தியைப் பெறவென் றெண்ணும் முனைப்பினால் நபிகள் வார்த்தை முற்றிலும் பற்றி னாரே 1210
யாரெங்கள் எதிரி என்று எவருமே அறிந்தி லாது காரணங் கருதித் தன்னைக் 'கஅப்இப்னு மாலிக்” என்போர் கருணையின் கடலாம் அண்ணல் காத்தமுன் நபியின் முன்னே இருந்தொரு கவிதை சொன்னார் இறைநபி நகைப்பூ செய்தார் 1211
"உருவிய வாளி னோடு ஒன்றிய வீரர் தம்முன் மருவியே அழிவ தென்னும் முறையெவர் குண்டா மென்னப் பொருதவே நிற்கின் றார்கள் பேசும்வாய் இருந்தால் வாட்கும் வருமொழி யதுவே யாகும் வள்ளலே’ எனப்பு கன்றார். 1212
புன்சிரிப் பொன்றே தம்மின் பதிலென நபியி ருக்க தன்வழி கஅப்பின் சென்றார் காரியங் கைகூ டாதே என்னதான் நபியின் நோக்கு என்றொன்றை அறியத் தானே பின்புலம் முஸ்லிம் கட்கு பதறினார் குறைஷிப் பேர்கள் 1213
பதினாயி ரம்பேர் கொண்ட படைபலத் தோடு யத்ரீப் பதியிருந் தருகி லொன்றிப் போயினர் என்னுஞ் சேதி கதிகலங் கிடும்பாங் காகக் குறைஷியர்க் கிருந்த போழ்தும் எதிரிகள் தாயிப் நோக்கி ஏகின்றார் எனநி னைந்தார். 1214
தாயிபே நோக்கு என்று தாமுளத் திருப்தி கொண்டும் ஓயாத தொல்லை தந்து உறுதியை முறித்த தாலே காய்தலுங் கூடும் நம்மை திருநபிப் படைக ளென்று காய்ந்தனர் உள்ளம் அரபுக் குறைஷிகள் அச்சங் கொண்டார் 1215
213 ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 121
திருநபி as Tssful
அஞ்சுவர் எனவ றிந்தும் அச்சத்தை வளர்க்கும் நோக்கில் செஞ்சுடர் பரத்த வென்று தீநாபல் லாயி ரங்கள் விஞ்சிடுங் கனல்ப றக்க வளர்த்திட ஆணை யிட்டார் பஞ்சுபோற் புனித வுள்ளப் பெருமானார் நிறைவே றிற்றே 1216
எண்ணிய வாறில் லாது இஸ்லாத்தின் சேனா வீரர் எண்ணறப் பெரிதா மென்று எண்ணிய குறைவழி யர்கள் எண்ணினார் மீண்டுந் தூது இறைநபி வசம னுப்ப எண்ணச்செய் ததுவத் தீயின் எரிநாக்கள் நபியின் யுக்தி 1217
முன்னர்போல் அபூசுப் யானே முன்வந்தார் தலைமை தாங்க தன்னொடு 'புதைல்’ ‘ஹகிமை” தோழமைக் கழைத்துக் கொண்டார் வன்முறை செய்த பேர்கள் வழிமாறி இரப்ப தற்குச்
சென்றனர் சொல்வ தற்குச் சீரறு செயலா ம.தே 1218
ஒட்டகை கனைக்கும் ஓசை உணர்ந்தன செவிகள் அன்னார் கிட்டவந் துற்றா ரென்னும் கணத்தினில் முன்னி ருந்தோர் ஒட்டகை வெண்ப தாகை ஒன்றுடன் வருதல் கண்டார் ஒட்டையில் வீரர் அப்பாஸ் ஒன்றக்கண் நோக்கி னாரே 1219
பெருமானார் பாசறைக்குட் புகுந்ததும் சுப்யான் கேட்பார் பெரும்படை கூட்டி வந்தீர் போர்செய உமது சொந்த உருத்துடை யோர்க்கு மாறாய் உவக்குமோ எம்ம னோர்க்குத் தெரிந்தவர் தெரியா தோர்கள் சேர்ந்துளார் அதனி லென்றார் 1220
நெறிமுறை தவறி நீங்கள் நடந்துகொண் டுள்ளீர் முற்றும் இறைத்தலம் புனித மண்ணை இடையறக் களங்கஞ் செய்தீர் அறிந்துமே "ஹ"தைபிய் யாவின்' அறத்தினைச் சிதைத்தீர் இன்னும் நிறையவே செய்துள் ஸ்ரீர்கள் நபிவிடை பகன்றிட் டாரே 1221
பேச்சினைப் புறந்தி ருப்பப் பேசுவார் சுப்யான ஏன்நீர் ஒச்சிடக் கூடா துன்றன் உளப்பகை "ஹவாஸின்' கள்மேல் மூச்சிலும் உன்றன் மீது மேவிடும் பகைமை கொண்டோர் நீசர்கள் அவர்க ளென்றார் நந்நபி புலன்த விர்த்தார் 1222
214 ஜின்னாஹ் வழfபுத்தீன்
 

திருரவி காவியம்
நம்புவேன் எனக்கி றைவன் நலமெலாம் அருள்வா னென்றே நம்புவேன் மக்கா மீது நான்கொள்ளும் வெற்றி மீதும் நம்புவேன் இஸ்லாம் கொள்ளும் நிகரிலா வெற்றி மீதும் நம்புவேன் ஹவாஸின் பேர்கள் நாடிடுந் தோல்வி மீதும் 1223
என்றனர் நபிகள் பின்னே எதிர்தரப் பினாரை நோக்கி ஒன்றிலை வணங்க அல்லாஹற் ஒருவனைத் தவிர நானோ அன்னவன் தூத ராவேன் அறிந்ததை ஏற்பீ ரென்றார் சொன்னனர் மீண்டும் அட்தைத் தோழராய் வந்த பேரே. 1224
புதைலொடு ஹகீமும் சேர்ந்து புனித இஸ்லாத்தில் சேர அதிகாலை வரையெ னக்கு அவகாசந் தருவீ ரென்றே மதிசோர்ந்த நிலையில் சுப்யான் மாநபி தம்மைக் கேட்டார் எதிரியென் றறிந்தும் தம்மின் இருப்பிடம் அணைத்திட் டாரே 1225
அதிகாலைத் தொழுகை காண அழைப்பொலி கேட்டு நெஞ்சுள் புதியதோர் உணர்வு தோன்றப் புத்துயிர் பெற்றார் சுப்யான் எதிரியாய் வந்த பேரின் இதயத்துள் ஈமா னென்னும் மதுபாய்ந்து கலிமாச் சொல்லி முஸ்லிமென் றாகி னாரே 1226
நபியொரு வாக்குத் தந்தார் நாம்மக்கா அடைந்த பின்னர் சுபியானின் வீட்டுள் தத்தம் சொந்தமாம் இல்லந் தன்னில் அபயத்தை வேண்டிப் பள்ளி அடைவரோ அவர்க்கு ஏதும் நிபந்தனை அற்று அன்னார் நலங்காப்போம் என்ப தாக. 1227
பெருந்திமிர் தற்பெ ரும்மை பொருந்தியோர் சுப்யான் என்று கருதிய அப்பாளில் எம்மான் கருணையை வேண்டிப் பெற்ற ஒருபெருஞ் சலுகை அ.தாம் உதவிற்றுப் பின்னோர் போழ்து திருமக்கா முஸ்லிம் கள்கை சேர்ந்துற்ற நாளில் மாதோ 1228
215 566), TOIB op flies6

Page 122
திருநபி காவியம்
மக்காவின் வெற்றி
தரிப்பிடம் விட்டு நோக்குந் தலம்நோக்கிப் படைகள் செல்ல பரிப்படை ஒட்டைச் சேனை பாதாதிப் படையுஞ் சேரும் விரிந்தவோர் கடலா மன்ன வீரர்கள் சொல்லுள் மாளார் சரித்திரம் ஒன்று கூறும் செயல்நோக்கிச் செல்கின் றாரே 1229
கண்டாரே சுப்யான் வீரர் கூட்டத்துள் தமது நண்பர் வண்டலர் இஸ்லாத் தின்பால் விரோதித்துக் கொடுமை செய்தோர் விண்டுசென் றார்கள் வார்த்தை "வல்லவன் ஒருவ னென்றே’ கண்டிலை இம்மா சேனை கூறிடற் கரிதா மன்றோ 1230
கொடுமையாய் எதிர்த்துச் செய்யும் கொடுமைகள் அனைத்துஞ் செய்து இடுகாட்டுக் கனுப்பும் எண்ணம் இதயத்துள் பொதிந்து வைத்தோர் அடிதொடர்ந் திறைவன் தூதர் ஆணைக்குள் அடங்கி நிற்கும் படியான தென்ன அப்பாஸ் பதிலுரை தந்திட் டாரே. 1231
இதயத்துள் இஸ்லாம் ஜோதி இணைந்ததால் தோன்றும் மாற்றம் புதுமையே இல்லை ஈமான் புகுந்திடில் நடப்ப தி.தே விதியுமக் கதுவாய் ஆகும் வாய்ப்பினை அளித்தான் என்றார் எதிரியும் மன்னிப் பெய்தும் இறைநபி கருணை யாலே 1232
படையினர் அனைத்துப் பேரும் போனபின் அபூசுப் யான்பின் அடைந்திட்டார் மக்கா தம்மை அண்மிடும் ஆபத் தைத்தம் உடையவர் தமக்குச் சொன்னார் உருக்குடை அணிந்த வீரர் படையொன்று மக்கா நோக்கிப் புறப்பட்ட சேதி ய..தே 1233
பத்தாயி ரம்பே ரந்தப் படையினில் உள்ளா ரென்றார் ஒத்துடன் பட்டா லன்றி ஒருவரும் எஞ்சோ மென்றார் எத்தகைத் தீங்கும் நேரா என்னில்லம் புகுந்தால் பள்ளி தத்தம தில்லம் புக்குத் தாழிட்டோர் தமக்கா மென்றார் 1234
216 ஜின்னாஹ் ஷரித்தீன்

திருரவி காவியம்
படையினை நான்கு கூறாய்ப் பிரித்துநாற் புறத்தி ருந்தும் அடைந்திட வேண்டும் ஒன்றாய் ஆணையின் பின்ந கர்க்குள் திடமாக இரத்தம் சிந்தல் தவிர்த்திடல் வேண்டு மென்ற முடிவொடு சென்றார் தீயோர் முறைகெடப் பொருதி னாரே 1235
சிறுபடை ஒன்றைக் கூட்டித் தாக்கிட முனைந்தார் முஸ்லிம் புறத்தினில் காலித் வீரத் தளகர்த்த ராக வந்தார் சிறுபொழு தாகும் அன்னார் தாக்கலோ உயிரி ழந்தும் புறமுது கிட்டும் ஓடிப் போயினர் தோல்வி கண்டார் 1236
நகரினுள் நுழைந்த வேளை நபிகளார் யுத்தம் பற்றித் தகவல்கள் அறிந்த போது துன்புற்றார் தனக்குள் தானே இகபரத் தரசன் தீர்ப்பு இதுவென்றால் செய்வ தென்ன தகுமது நன்மை யின்பால் சேரட்டும் எனநி னைந்தார் 1237
தொழுகையை முடித்துப் பின்னர் சிறுதுயில் கொண்டு க.பா எழுந்தருள் செய்தார் எம்மான் எழுமுறை வலமும் வந்தார் கழியொன்று கொண்டு ஆங்கே கொண்டுள்ள சிலைகள் தம்மை இழுத்தனர் ஒவ்வொன் றாக இடம்விட்டு வீழச் செய்தார் 1238
"சத்தியம் தளைத்த தேஅ சத்தியம் அழிந்த தேஅ சத்தியம் அழியும்” என்று சொல்லிய வாறு ஆங்கு மொத்தமாய் இருந்த கல்லின் முந்நூற்று அறுப தாம்பொய்ப் பக்திக்கு ஆன தெய்வப் பிண்டங்கள் வீழ்ந்த தம்மா 1239
பலநூறு ஆண்டு தெய்வப் பெருமைகொண்டி ருந்த தெல்லாம் சிலநொடிக் குள்ள தாகச் சிதறின துகள்க ளாக சிலையொடு உள்ளி ருந்த சித்திர வகைகள் கூடக் கலைந்தன கழுவிச் சுத்தங் கண்டன சுவர்க ளெல்லாம் 1240
அருந்திட “ஸம்ஸம்’ நீரை அண்ணலார்க் களித்தார் அப்பாஸ் பொருந்தினர் ஹாஷிம் கட்கே புனல்தரும் பணியை முன்போல் திருமக்காத் திறவு கோலை தொடர்ந்துகை வசமி ருந்த ஒருகுலத் தாரில் உஸ்மான் உடன்தரப் பெற்றுக் கொண்டார் 1241
217 ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 123
திருரவி sfrslut5
கதவினைத் திறக்க உஸ்மான் கண்ணிய நபிமுன் செல்ல உதவியாய் “பிலால்' உ ஸாமா உடன்சென்றார் சிறிது நேரம் கதவினை மூடித் தங்கி கர்த்தனை வணங்கிக் க.பாப் பதிதனைத் திறந்து மக்கள் புறம்நோக்கிப் பேச லானர் 1242
"அல்லாஹற்க்கே புகழ னைத்தும் அவன்தந்த வாக்கின் வாறு எல்லாமே இயற்றி யுள்ளான் எதிர்ப்பினைத் துவம்சம் செய்து பொல்லாரை மாற்றி இஸ்லாம் புகழ்பெற வைத்தான் அந்த அல்லாஹற்க்கே புகழனைத்தும்” என்றனர் பிறருஞ் சேர்ந்தார் 1243
பள்ளியின் பாது காப்பில் புகுந்திருந் தோர்கள் வீட்டின் உள்ளிருந் தோர்க ளெல்லாம் ஒன்றினர் க.பா சுற்றி வள்ளலார் அவரை நோக்கி வினவுவார் ‘என்ன உங்கள் உள்ளத்தில் இருப்ப தெ.தை இயம்பி நினைந்தீ ரென்றே. 1244
நன்மையை நினைக்கின் றோம்நாம் நன்மையை நாடு கின்றோம் உன்னதர் நீங்கள் உங்கள் உள்ளத்தின் கட்ட ளைக்கு சென்னிசாய்த் திடுவோம் முற்றுந் தீர்மானம் உங்கள் கையில் என்றனர் ஒன்று கூடி இறைநபி செவிகொண் டாரே. 1 245
“நிச்சய மாக நானும் என்சகா யூசுப் போன்றே உச்சரிக் கின்றேன் கேண்மின் இன்றைய தினத்தில் உம்பால் எச்சிறு குற்றந் தானும் இல்லையாம் இறைபொ றுப்பான் பட்சமிக் கோரி லெல்லாம் பெரியவன் அல்லாஹற்’ என்றார் 1246
சுக்குநூ றாகிப்போன "ஹ"பல்’ எனுஞ் சிலையி னோடு மிக்குள பிறவும் தீயின் மீதுற்று அழிக்க ஏவி தக்கிய இல்லந் தோறும் தரித்திருப் பவையுங் கூட இக்கணத் திருந்த பூழித்தல் இறைநபி ஆணை அ.தே 1247
எஞ்சிமக் காவி லுற்றோர் எலோருமே ஈமான் கொண்டார் அஞ்சினாள் "ஹிந்தா” “ஹம்ஸா’ ஈரலை மென்ற பெண்ணாள் வஞ்சகன் "அபூஜ ஹி'லின் வழிவந்த "இக்ரீ மா”வும் வெஞ்சினன் "அபூல ஹப்பின் வழிமக்கள் அடங்கு வாரே. 1248
218 ஜின்னாஹ் விழரித்தீன்
 

திருநபி காவியே
என்பதி ஊரை விட்டு எங்குசென் றாரோ தேரேன் தன்மனப் பயத்தி னாலே தங்கள்பால் எனஇக் ரீமாவின் இன்மனக் கிளத்தி சொல்லி இருந்தனள் மன்னிப் பேற்று மன்னித்தேன் என்றார் நாதர் மாதவள் மகிழ்ந்து சென்றார் 1249
தேடியே ஒடித்தம்மின் துணைவரைக் கண்டு சொல்வாள் நாடினேன் நபியை உம்பால் நயந்திட அவர்மன் னித்தார் கூடியே வருவீர் என்னக் கலிமாவை முன்மொ ழிந்து நாடிவந் தார்.இக் ரீமா நபியதை அறிந்திட் டாரே. 1250
இஸ்லாத்தை அழித்தொ ழிக்கும் எண்ணத்தைத் தந்தைக் குப்பின் ப்சுமரத் தெழுத்துப் போல பதித்திடர் செய்த பேர்தம் வசம்வரல் கண்டு எம்மான் வரையிலா மகிழ்வு கொண்டார் திசைநோக்கி எழுந்தார் தம்மின் தோள்ஆடை கைக்கொண் டாரே 1251
மேலாடை தனையெ டுத்து மகிழ்ச்சியின் வெளிப்பாடாக ஆலம்போல் இருந்த பேர்க்கு அணிவித்தார் நபிகள் நாதர் காலத்தின் மாற்ற மாமோ கலிமாவின் பலமோ அன்றி சீலரெம் நபிக ளாரின் சிறப்பதோ அறிவார் யாரோ. 1252
வறுனைன் புத்கும்
குறைவழிகள் தம்மை வீழ்த்திக் க.பாவைக் கைக்கொண் டாலும் மறைமுக மாக மற்றோர் முயற்சியும் நடந்த தன்னார் குறையறப் பெரும்ப டையைக் கூட்டினார் "ஹவாசீன்’ கூட்டம் இறைவழிப் பேரை இம்மண் இலாதொழித் திடுதல் நோக்கே 1253
ஹவாசீன்கள் தாக்க நோக்குஞ் சேதியை அறிந்து முன்பே ஹவாசீன்கள் திக்கு நோக்கித் திருநபி படைசெ லுத்த நவமாக ஈமான் கொண்ட நபித்தோழர் தமையுங் கூட்டி இவண்கொண்ட படையி னோடு ஏகினார் தரிப்ப டைந்தார் 1254
219 566) IOE opf, 65.

Page 124
திருநபி காவியம்
எதிரிகள் படைக்கு மாலிக் இணையிலா வீரர் தாமே பதியெனக் கொண்டி ருந்தார் போர்த்தலத் தவரின் சேனை முதலாகிப் பொருத்த மாக மேட்டினைப் பற்றிக் கொண்டு எதிர்கொள்ளக் காத்தி ருந்தார் எண்ணம்முன் ஈடே றிற்றே 1255
கடுஞ்சமர் மூண்ட தன்று குன்றினில் இருந்த வாறு கொடுத்தனர் கணைகள் வானே சரங்களால் மறைந்த தொப்ப எடுத்தகை தொடுக்க முன்னர் எதிரிகள் கைகள் முந்த விடுத்தனர் உயிரை முஸ்லிம் வீரர்கள் சிக்குண் டாரே 1256
எதிர்பார்த்தி ராத வேளை எதிரிகள் தாக்கு தல்கள் அதிபலம் வாய்ந்த தாக அறிந்திடாப் புலத்தி ருந்து வதைதரத் தாங்க வொண்ணா வீரர்கள் சீர்கு லைத்தார் இதனிடை நபிகள் நாதர் இருப்பெனத் தளரா துற்றார் 1257
தன்னுடன் வந்து சேர்ந்து செயற்பட அழைத்தும் வீரர் பின்னத்தில் செவியுறாது போயினர் வெகுண்ட அப்பாஸ் தன்பெருங் குரல்கொ டுத்துக் கூவினர் செவியுட் கொண்டோர் பின்வந்து சேர்ந்தார் நூறு பேரதில் எஞ்சி னாரே 1258
அப்பாஸின் அழைப்பைக் கேட்ட அன்ஸாரி முஹாஜி ரீன்கள் தப்பியவாறு மீண்டுஞ் சேர்ந்தனர் நபிக ளோடே ஒப்பியே வந்து கூடி ஓர்மையோ டெதிர்த்தார் தூசு கப்பிய தெங்கும் ஒடும் குதிரைகள் ஒட்டை யாலே 1259
சேணக்கை மிதிப்பில் ஏறித் திக்கெட்டும் நோட்டம் விட்டு
காணத்த குந்த தாகக் கண்ணுற்றார் எதிரி வீரர்
பூணுதல் புதிதாய்ப் பாயும் புலிகளாய் ஒன்று சேர்தல் தோணிட இறைபாற் கைகள் தூக்கியே பிரார்த்தித் தாரே 1260
"உன்றன்வாக் குறுதி யைநான் உவந்திருக் கின்றேன் அல்லாஹற்’ என்றவா றோர்கை மண்ணை எதிரிகள் நோக்கி வீச அன்றவர் பத்றுப் போரில் ஆற்றிய தொப்ப வாகும் நின்றவா றேதோ வாகி நிலைதலை கீழாய் மாறும். 1261
220 ஜின்னாஹ் வழfபுத்தீன்
 

திருநவி காவியம்
யுத்தத்தின் முன்னர் வேவு இயற்றிடச் சென்ற வீரர் புத்திபே தலித்த பேராய் போய்மாலிக் கிடத்திற் சொன்னார் சத்தியம் உலகு சாராச் சேனையொன் றிருத்தல் கண்டோம். புத்தியில் அவர்க ளோடு போர்செய்தல் என்னும் வாறே 1262
கருமையோ டொன்றி வெள்ளை கலந்தன வாய்ப்ப ரீகள் பெருந்தொகை வெண்ணி றத்து வீரர்கள் தாங்கி நிற்கத் தெரிந்தனர் கண்டோம் என்று கூறிய வாறாய் யுத்தம் புரிந்திடும் போது காபீர்ப் படைகளும் கண்ணுற் றாரே 1263
இறையருள் பாது காக்க ஏற்பட்ட மாற்றங் கண்டு இறுதியில் மலிக்தம் வீரர் இணைந்தொரு கூட்ட மாகி மறுதலித் தோடித் தாயிப் மண்ணடைந் திட்டடர் கண்டு உறுதிகொண் டிட்டார் முஸ்லிம் உம்மத்தோர் ஒன்று சேர்ந்தார் 1264
பெரும்படை கொண்டு வந்தும் பாராத போது யுத்தப் பொருதலுந் தொடர்ந்தும் வெற்றி பொறதுயின் முதுகு காட்டி பெருமுயிர்ச் சேத முற்றும் போயினர் போன பின்பும் பொருந்தினார் இல்லை எம்மான் பாசறை தரிக்கக் கூட 1265
தாயிபின் கோட்டைக் குள்ளே தப்பிப் போய்ச் சரண டைந்தார் தாயிபைப் பத்தீர் நாட்கள் சுற்றியே காத்தி ருந்தும்
6) ITU Tg5) வெற்றியென்னும் வகையுற மக்கா நோக்கிப் போயினர் நபிகள் கொண்ட பொருளொடும் படைக ளோடும் 1266
சபித்திடப் புகன்றார் மக்கள் தாயிபில் வாழு வோரை சபித்திடார் இறைபாற் கெஞ்சித் தன்கரம் உயர்த்தி வேண்டி நபிகளார் இரப்பார் இவர்க்கு நல்வழி காட்டு என்றே சபித்திலார் வாழ்வில் என்றும் தூயநந் நபிக ளாரே 1267
கைவிட்டுச் சென்ற சொந்தம் கைப்பொருள் மந்தைக் கூட்டம் கைக்கொள வருவா ரென்று காத்திருந் தாலும் எண்ணம் பொய்த்தது எவரும் வாராப் போழ்தினில் முற்றும் மக்கள் கைத்தலம் பங்கீட் டின்பாற் போனது முஸ்லிம் கட்கே, 1268
221 ஜின்னாஹ் வழfபுத்தீன்

Page 125
திருநபி காவியம்
இருபத்தெண் ணாயி ரம்மாம் எண்ணிக்கை ஒட்ட கைகள் பெருந்தொகை ஆடு நான்கு பத்தாயி ரம்மு மாகும் இருந்தனர் கைதி யானோர் ஈர்மூன்று ஆயிரம் பேர் பெருந்தொகை வெள்ளிக் காசும் பெற்றனர் பங்கீட் டொன்ற 1269
கிடைத்தவை அனைத்தும் பங்குக் கொடுப்பன வாகச் சற்றுக் கிடைத்தது புதிதாய் வந்தோர் கைகளில் அதிக மாக அடைந்தனர் சிலபேர் பங்கில் அதிர்ப்தியுற்றார்க ளென்று கிடைத்தது செய்தி நாதர் கூட்டத்தைக் கூட்டி னாரே 1270
"ஆதர வளித்த புேரே! அறிந்தனன், பங்கீட் டில்நான் நீதியாய் நடக்கா துற்ற நினைவினில் சிலபேர் உள்ளீர் போதியகார ணத்தைப் புரியவைத் திடவே வேண்டி ஒதினேன் அழைக்க என்பால் ஒன்றுக புலனை என்றார் 1271
உங்கள்பால் நானே என்னை ஒப்படை திருந்த காலை சங்கையற் றிருந்தீர் நீங்கள் தூயவன் அருளி னாலே பங்கமற் றுயர்ந்தீர் சீராம் பாதையிற் செல்ல லானிர் தங்கிய வறுமை போக்கித் தயாபரன் அருளுஞ் செய்தான் 1272
பகைமையும் பிணக்குங் கொண்டு பலபலக் கிடந்த நெஞ்சில் தகையொடு நட்புந் தோன்றச் செய்தனன் இறைவன் என்ன அகநிறை வோடு அன்னார் ஆம் ஆம் எம்மீதி றைவன் மிகவருள் கொண்டான் அன்னான் மாநபி கூட வென்றார் 1273
ஆதர வளித்தபேரே! அறைதலுங் கூடும் நீங்கள் ஆதர வற்ற போது அபயந்தந் துதவி செய்தோம் தூதரென் றுங்க ளைநாம் திட்டமாக நம்பி னோம்எத் தீதுவந் துற்ற போதும் தோள்தந்தோம் என்று கூற 1274
கூறிடில் அதனைநானுங் கூறுவேன் உண்மை என்றே ஆறுதல் கொள்வார் ஏதும் அற்றவை ராக வந்தோர் தேறிடில் அவர்க்குச் சற்றுச் சேர்வதில் அதிகம் என்றால் வேறிலைப் பொருள தற்குப் புரியுங்கள் நானுங் கட்கே. 1275
222 ஜின்னாஹ் வழfபுத்தீன்

திருநபி காவியம்
ஆடொடு ஒட்டை தம்மை அவரில்லங் கொண்டு செல்ல வீடொடு நீங்கள் உங்கள் வானவன் தூதர் தம்மை கூடவே கொண்டு செல்லும் கைப்பாடு கொண்டீ ரன்றோ நாடிடேன் என்றும் நீங்கள் நட்டாற்றில் தவிக்க வென்றார் 1276
ஆதர வளித்த நீங்கள் அடிதொடர் பாதை அன்றி மீதுறேன் பிறர்செல் பாதை முற்றும்நான் உங்கள் பாலே ஆதர வளித்த பேர்க்கு அல்லாஹற்வுன் அருட்பி ழம்பை மீதுறச் செய்வாய்” என்றே முடித்தனர் அண்ண லாரே. 1277
பெருமானர் வார்த்தை கேட்டுப் பொங்கிடும் கண்ணி வெள்ளம் உருகிடும் நெஞ்சின் பேறாம் ஒன்றிலை அழாத பேர்கள் பெருமானே நீங்க ளொன்றே போதுமாம் எமக்கு என்று ஒருமித்துக் குரல்கொ டுத்தார் ஏந்தலர் முகம்ம லர்ந்தார் 1278
நபிகளார் செவிலித் தாயின் நன்மகள் 'ஷைமா’ கூட அபலைகள் கூட்டத்துள்ளே அடிமையாய் நின்றி ருந்தார் நபியிடம் வந்தோர் மீட்க நாங்களும் உறவுக் காரர் அபயந்தந் தெம்மை மீட்க அருள்செய வேண்டு மென்றார் 1279
ஏதுநான் செய்வேன் ஏல எல்லோர்க்கும் பங்கு செய்தேன் ஏதுவொன் றுண்டு என்றன் இனத்தவர் தமக்கும் என்பால் மீதுற்ற பேரை வேண்டின் மன்னித்து விடுவேன் ஒன்று ஏதுவாம் தொழுகைப் போழ்தில் இறையில்லம் வந்தால் என்றார் 1280
தொழுகையின் பின்னர் பள்ளி திரண்டுவோர் முன்னே சென்று விழுப்பத்தை உரைப்பீ ரானால் வேண்டுதல் பலித்தல் கூடும் தொழுகையின் பின்ன வர்கள் சேர்ந்தனர் பள்ளி தன்னில் வெளிவந்தார் ஈமான் கொண்டோர் வந்துளோர் தம்மைக் கண்டார் 1281
முறையீடு செய்தார் தாழ்ந்து முஸ்லிம்கள் தம்மை நோக்கி இறைதூதர் பதில எளித்தார் எனைச்சார்ந்தோர் தம்மை என்னால் துறந்திட அடிமை யென்னுந் தலத்திருந் தென்றே மற்றோர் துறந்தனம் நாமும் எம்பால் சேர்ந்துளோர் தமையு மென்றார் 1282
223 ஜின்னாஹ் ஷரீபுத்தீன்

Page 126
திருரவி காவியம்
விடுதலைப் பணங்கொள் ளாது வள்ளலார் செய்கை பற்றி விடுதலை செய்தார் தாமும் விசுவாசங் கொண்ட பேர்கள் நொடிப்பொழு துள்ளே முற்றும் நடந்தன விடுபட் டோர்கள் நடைகொண்டார் தத்தம் இல்லம் நிம்மதிப் பெருமூச் சோடே 1283
குபுக் யுத்கும்
மக்காவை வெற்றி கொண்டு முஸ்லிம்கள் தொகையுங் கூடி திக்கெல்லாம் பரவல் கண்டு திகைப்புற்ற சிரிய மன்னன் தக்கபல் லுதவியோடு திரட்டிய படையோ டொன்றி பக்கத்தி லொன்றி னானென் புதுச்சேதி பரவிற் றன்றோ 1284
தற்பாது காப்புக் காகத் தொடர்ந்தவன் வருமுன் னர்போய் முற்படல் வேண்டும் போரில் முறியடித் தோடச் செய்ய முற்பட்டார் நபிகள் நாதர் மூபத்து ஆயி ரம்பேர் சிற்சில நாட்க ளுள்ளே சேர்ந்தனர் இறைபேற் றாலே 1285 போருக்கு வேண்டு கின்ற பொருள்வாங்கப் பொன்தி ரட்ட ஊருக்கு அறிய வைத்தார் உத்தமக் குடிச னங்கள் வார்த்தைவாய் வந்த தோவென் வாகினில் ஐயங் கொள்ளுஞ் சேர்த்தனர் கோடா கோடி தனியவன் அருளி னாலே 1286
அறிந்தனர் பெண்கள் தம்மின் அன்றணி நகையுங் கூட்டி இறைநபி முன்னால் வைத்தார் இலாதபேர் ஏழை தம்மின் நறைசொரி ஈந்தின் சோற்பம் நல்கிட மனமு வந்தார் குறையறப் பொருட்கள் சேர காப்பவன் உதவி னானே 1287
திருநபி மருகள் உத்மான் தொளாயிரம் ஒட்டை யோடு திர்ஹங்கள் பதினா யிரம்மும் தந்தனர் உமறு ஹத்தாப் பெருநிதி தம்மில் பாதி போருக்கென் றொதுக்க ஸித்திக் இருந்தவை அனைத்துந் தந்தார் இறைவழிக் கொடையா மென்றே 288
அறிந்தனர் நபிகள் தோழர் அபூபக்கர் செய்கை தன்னை
224 - ஜின்னாஹ் இpரித்தீன்

திருநபி ssresíulö
துறந்ததேன் அனைத்தும் வீட்டில் தரித்ததோ எதுவும் என்ன இறைவனும் அவனின் தூதர் இருபேரும் இருக்க அங்கு குறையேதும் இல்லை என்றார் குறுநகை புரிந்த வாறே 1289
அலியினை தமக்குச் சார்பாய் அமர்த்தினார் மதீனா காக்க பலங்கொண்ட படையி னோடு போயினர் சிரியா நோக்கி பலகாதங் கடந்து ஈற்றில் படை”தபூக்’ எனுமி டத்தில் நிலைகொண்ட தறிந்தான் மன்னன் தலைதப்பி ஓடி னானே 1290
ஈர்பத்து நாட்கள் தங்கி இருந்தனர் படையி னோடு போருக்கா யான எந்தப் பாதிப்பும் இலாது கண்டு ஒருயிர் இழப்பு மின்றி ஒருயிர் போக்க லற்றே ஊர்வந்து சேர்ந்திட்ட டார்கள் உத்தமத் தூதர் மாதோ. 1291
பாரெல்லாம் புத்கு மணம்
புனிதமாம் ஹஜ்ஜுக் கென்னும் பயணத்துக் குரிய காலம் இனிதுற்ற போது எம்மான் அபூபக்கள் தம்மி னோடு முந்நூறு பேரைக் கூட்டி மக்கமா நகர்க்குச் செல்லச் சொன்னார்கள் கூட்டத் தோடு சென்றனர் அலியும் ஒன்றாய் 1292
கடமையை வழிநடத்தும் கருத்தினில் அபூபக் கர்ரும் உடையின்றிக் க.பா சுற்றும் ஒழுக்கக்கே டகற்ற முன்னர் நடைபெற்ற சிலைவ ணக்கம் நடக்காது தடுப்ப தற்கும் விடைபெற்று அலியுஞ் சென்றார் வழக்கங்கள் மாற்றிற் றன்றோ 1293
இஸ்லாத்தின் வெற்றி எல்லோர் இதயத்தும் அச்சமூட்ட விசுவாசங் கொள்வோர் கூட்டம் விரவிய தெங்க ணும்மே முசுலிம்கள் வாழ்வும் நோக்கும் வள்ளலார் மீது கொண்ட அசையாத பற்றும் மக்கள் அறிந்தனர் தாமும் கொண்டார் 1294
225 ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 127
திருநபி காவியம்
மதீனாவைச் சுற்றி யுள்ள மாநிலம் தொலைதுா ரத்தில் எதிரியாய் எண்ணி வாழ்ந்த எலாநாட்டு மக்கள் தாமும் புதிதாக ஈமான் கொண்டு புனிதஇஸ் லாத்தில் சேர்ந்தார் மதியுடை மாந்தள் உண்மை மார்க்கத்தை அறிந்த தாலே 1295
முன்னொரு போது தாயிப் முற்றுகை முடிந்து வந்த பின்னவர் மீது சாபம் புரிந்திட வேண்டி நிற்க முன்னவர் இவர்க ளுக்கு முறையான வழிகாட் டென்றே சொன்னதன் பலனை நாதர் தேர்ந்தனர் இற்றை நாளில் 1296
தாயிபின் தூதரொன்றிச் சென்றனர் நபியைக் காண நேயமுங் கொண்டார் முற்றும் நிர்க்கதி யானார் அன்னார் ஆயதோர் போழ்து எம்மான் அவையினில் கூடி னார்கள் வாய்மொழி மாற்ற மொன்று வழங்கிடச் சால்பா யிற்றே 1297
இணைந்திட விளைந்தோம் நாங்கள் இஸ்லாத்தில் என்றார் கூடி இணைந்ததோர் வார்த்தை "ஆனால்’ என்பதாய் வினாவிற் றொக்கி இணைந்திட விளைந்தீள் சால இட்டமே"ஆனால்” என்று இணைந்தசொல் கொள்பொ ருள்தான் என்னவென் றறியக் கேட்டார் 1298
விலைமாத ரோடு கூடும் வழிமறித் திடுதல் வட்டி நலந்தரும் பேற்றை முற்றும் நீக்கவும் மதுவை யுண்ண விலக்கலும் வேண்டாம் என்றார் வந்தவர் வார்த்தை கேட்டோர் கலங்கினர் இது என்ன கேடென நபிகள் ஆய்ந்தார். 1299
முடியாது என்றோர் வார்த்தை மட்டிலும் மலர நாவில் அடுத்தவர் சரிநாம் ஏற்போம் இஸ்லாத்தில் பிணைவோம் என்றே விடுத்தனர் விநயமாக வேண்டுகோ ளொன்றை மீண்டும் ஒடித்தழித் திடாதீர் தெய்வ உருவங்கள் தமையா மென்றே 1300
கொதித்தனர் உமர்சி னத்தால் கொண்டதென் எண்ணம் நீவீர் விதிக்குமோ இரண்டு தெய்வ வழிபாடு கற்க ளைநீர் மதிப்பதால் கொள்ளும் லாபம் முற்றிலும் பூஜ்ய மேதான் மதிமுக வதனத் தாரோ "முடியா”தென் றொன்றே சொன்னார் 1301
226 ஜின்னாஹ் வழfபுத்தீன்
 

திருரபி காவியம்
பூஜிக்கும் எங்கள் பெண்கள் புண்ணுறு வாரே உள்ளம் நேசிப்பால் பொறுக்க மாட்டார் நின்வழி தகர்ப்ப தாயின் யாசித்தோம் மூன்று திங்கள் இடைவெளி ஈதல் வேண்டும் யோசிப்பீர் என்றார் நாதர் இசைவிலார் உரைக்க லானார் 1302
ஒளியொடு இருளு மொன்றி இருப்பதெவ் வாறு அல்லாஹற் முழுமுதல் என்றிருக்க மண்கல்லாலர் ஆன வைகள் தொழுவுரு வாக ஏற்றல் செயத்தகு வாமோ நாங்கள் முழுமையாய் வெறுத்தோம் வேண்டாம் முடிவிது தானே யென்றார் 1303
அண்ணலார் முடிவில் கல்லாய் ஆனது கண்டோர் ஈறில் பண்ணவன் தன்னை நாங்கள் பணிதலில் தவிர்ப்பீ ரென்ன உண்மையிற் பொருளென் னாகும் உம்வழி இஸ்லாம் என்றால் விண்ணவன் ஏற்கான் றன்னை வணங்கிடாப் போரை என்றார் 1304
ஈற்றினில் இஸ்லாத் தைநாம் ஏற்றனம் எனறார் வந்தோர் மாற்றமுற் றார்கள் என்னும் மகிழ்வொடு நபிகள் நாதர் ஏற்றதோர் பேரை அன்னார் இஸ்லாத்தைப் புரிந்து கொள்ள சாற்றிடும் பாங்காய்க் கூடச் சென்றிடப் பணித்திட் டாரே 1305
தொழுவுரு தம்மைத் தம்மால் தகர்த்தெறிந் திடமாட் டாது வழுவினர் அதற்கு மாட்டாய் “முகீரா'வை பொறுப்ப விரித்து முழுவதும் அழிப்பீர் சுப்யான் மக்காவில் சேர்ந்து கொள்வார் தொழுவதற் குகந்தோன் அல்லாஹற் தாமெனப் பணித்த பேரே 1306
முகிரா'வின் கோத்தி ரத்தார் முன்னின்றார் பாது காப்பாய் வகையாக லாகு மெந்த வன்முறை தாமு மென்றே தொகையாகக் கூடி மாதர் சிலையுடை படுதல் கண்டே சிகைவிரி கோல மாகத் தேம்பியே அழுத்திட் டாரே 1307
நஜ்ரானின் போத கள்கள் நாடினார் நபிக ளாரை மஸ்ஜிதில் அவர்கள் தம்மை மனமுவந் திருக்கச் செய்து இஸ்லாத்தில் ஏசு நாதர் எத்தன்மை வாய்ந்தார் என்று விசுவாசங் கொண்டோ மென்னும் விபரங்கள் சொல்லி னாரே, 1308
227 Sös6IIIOB 6Pföß6)

Page 128
திருரவி arsáiluib
ஏற்றிடாக் கிறிஸ்த வர்கள் இணைவரி செலுத்த ஒப்பி ஏற்றவா றெமக்கு நீங்கள் இடையூறு தோன்றா வண்ணம் போற்றுதல் வேண்டும் எங்கள் புதுவுற வென்றுங் கூற ஏற்றனர் நபிகள் நஜ்ரான் ஏகினார் மீண்டிட் டாரே. 1309
யமனிலோர் மாகாண த்தில் “தை”யெனுங் கூட்டத் தார்கள் அமைதியைக் குலைத்தார் முஸ்லிம் அன்றாட வழ்வில் அண்ணல் அமைதியை நாட்ட வென்றே அலியவர் தலைமை ஏற்க அமைத்தனர் படையொன் ற.தை அத்திசை அனுப்பி வைத்தார் 1310
வெற்றிகொண் டமைதி தோற்றி வரையிலார் கைதி யானார் உற்றிருந் தாரோர் நங்கை உபகாரி ஹாதிம் தா’யின் பொற்புடைச் செல்வி எம்மான் பக்கலில் தோன்றிச் சொல்வார் முற்றுமென் விடுத லைக்கு முஹம்மதே பொறுப்பா மென்றே 1311
அறியுவிர் நபியே எந்தை ஆற்றிட்ட தர்மம் நீங்கள் அறியுவிர் பெண்மைக் கெந்தை அளித்திட்ட பெருமை உண்மை அறியுவிர் மாற்றார் கண்ணிர் அகற்றிய நலம னைத்தும் அறியுவி இன்று நானோர் அநாதையாய் நிற்குங் கேட்டை 1312
தண்டலை யாடுங் கெண்டை சாலவே கண்ணி ரண்டும் கொண்டவவ் விளையாள் வார்த்தை கேட்டநந் நபிகள் நாதர் உண்டிருந் ததுவாம் உந்தை உள்ளத்தில் உயர்ந்த பண்பு கொண்டனை விடுத லைநீர் களிப்பொடு செல்க என்றார் 1313
நான்மட்டுந் தனித்துப் போக நாடிலேன் என்னோர் தம்மை ஏன்விட்டுச் சிறையில் வாட இணங்குவேன் கருணை கொண்டு மான்விடு வித்த துதே மற்றவர் தமையுங் கூட தான்வர அனும திக்கத் தயவருள் செய்க என்றாள் 1314
சேர்ந்தவா றனைவ ருக்குஞ் சென்றிட அனும தித்தார் பாரினுக் கருட்கொ டையாம் பெருமானார் அப்பெண் சென்று சேர்ந்தனள் மீண்டும் எம்மான் சந்நிதி தமைய னோடு சார்ந்திடப் புதிய மார்க்கம் தம்சொந்த விருப்பி னோடே 1315
228 - ஜின்னாஹ் வழfபுத்தீன்

திருநபி காவியம்
தேடிவந் திஸ்லாம் ஜோதி சுடர்விட மனத்தில் தூய்தாய் கூடியோர் போக இஸ்லாம் கிளைபரந் தெங்குஞ் சேர நாடிய பெருமான் பூவின் நாற்றிசை மீதும் தோழர் நாடிடச் செய்தார் மார்க்க நலமோதப் பணித்திட் டாரே 1316
நாடுகள் பலவற் றிற்கும் நபிகளார் ஆணை ஏற்று நாடினார் நபித்தோ ழர்கள் நன்மார்க்கப் பணிசெய் தற்கே நாடுக அமைதி யாரும் நிர்ப்பந்தஞ் செய்த லாகா நாடிடீர் வெறுப்பை உங்கள் நடத்தையால் என்றுஞ் சொல்லி 1317
துன்புற்றோர் முனிவு செய்யின் திரையிலை இறைவன் முன்னே அன்பொடு நடந்து கொள்ளல் அவசியம் அஞ்சிக் கொள்வீர் வன்முறை வேண்டாம் உங்கள் வார்த்தைகள் இனிதா கட்டும் என்றுமே உரைத்தார் நாதர் ஏற்றவர் பணிதொ டர்ந்தார் 1318
யமன் நாட்டின் தலைவ ராக இறைநபி'முஆத்'ஐத் தேர்ந்தே “உமதாட்சி எதுவா றாக உண்டாகும்” எனவி னாவ “அமைந்திடும் குர்ஆன் ஒதும் ஆணைக்குள்’ என்றார் மீண்டும் “அமைந்தது குர்ஆ னுக்குள் அடங்கிலை யாகி’ லென்ன 1319
"அண்ணலார் போத முண்டு அதன்படி யென்றார் மீண்டும் "எண்ணிய வேண்டு தற்கு இசைவிலா ததுவும் போனால்” "பண்ணவன் மறைக்கும் தூதர் போதமும் ஏற்கும் வாறு எண்ணியே கருமம் செய்வேன்’ என்றதும் நபிம கிழ்ந்தார் 1320
பலதெய்வ வழிபாட் டைநாம் புறக்கணித் திட்டோம் இஸ்லாம் பலமாகப் பற்றிக் கொண்டோம் பெருமானே என்ப தாக நலமான சேதி யொன்று யமன்நாட்டி லிருந்தும் மற்றும் பலபுதுத் தேசத் தோடும் புகன்றீமான் கொள்ள ஏற்றார் 1321
திருமுகம் அனுப்பி இஸ்லாந் தனையேற்ற பேருக் கெல்லாம் திருமுகம் அனுப்பி இஸ்லாந் தனைப்புரி வகைகள் கூறி வருந்தூதர் தமைம தித்து வகையெலாஞ் செய்க என்றே பொருந்தினர் வார்த்தை மாற்றார் புரிந்திடு பாங்காய் எம்மான் 1322
229 ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 129
திருநபி காவியே
முஸ்லிம்கள் கிறிஸ்த்தோர் யூதர் முறையாக வரியைப் பேண வசமுங்கள் வருவர் கொள்வர் வரித்தொகை அளித்துத் தம்மின் விசுவாசங் கொண்ட யூத கிறிஸ்த்துவ மதங்கள் தம்மை பிசகில்லா தொழுகு வோர்க்கும் பாதுகாப் புண்டா மென்றார் 1323
வருகைதந் துற்ற எல்லா வர்க்கத்தார் தாமும் முற்றும் பொருந்தினார் இல்லை ஆtர் புறத்தலை மத்து வத்தின் பதி”ஆமீர் இப்னு துபைல்” பலவந்தப் படுதல் செய்ய மதீனமா நகள்வந் தெம்மான் முகமனில் பேச லானார் 1324
முரடராய்ச் சுபாவங் கொண்ட மனிதராம் ஆமிர் வார்த்தைச் சரமெனச் சீறிப் பாயும் திருத்தூதர் தன்னை நோக்கி திருநபி வாரி சாகச் சேர்த்தெனைக் கொள்வ தாயின் மருவுவோம் இஸ்லாம் மார்க்கம் முஹம்மதே எனவு ரைத்தார் 1325
உரித்தல்ல உமக்கோ உன்றன் உடையபேர் தமக்காம் அ.து புரியுவீர் எனவு ரைக்கப் பகருவார் கூடா ரத்தில் இருப்பவர் எனக்காம் நாடு எங்கணும் செல்வோர் உம்மால் இருக்கட்டும் என்றார் ஆமிர் இறைநபி அவரை நோக்கி 1326
சிறந்ததோர் குதிரை வீரர் தாமென வுள்ளி உம்பால் சிறக்கட்டும் பரிப்ப டைகள் தலைமையைத் தருவேன் என்ன பிறிதெதும் பெறேனா என்று பேசினார் ஏமாற் றத்தால் மறுமொழி அமைதி ஒன்றே மாநபி வாய்பு தைத்தார் 1327
உன்றனுக் கெதிராய் இந்த உலகத்தைப் பரிப்ப டையால் ஒன்றிடச் செய்வே னென்று உறுதியொன் றுரைத்துத் தன்னில் ஒன்றிய ஏமாற் றத்தை உரையாது உரைத்த ஆமிர் சென்றதும் நாங்கள் வல்லோன் தயவினை நாடி னாரே 1328
“யாஅல்லாஹற் பனிஆ மீர்கள் பவவழி நீங்கி வாழ நீயெல்லா நலனுஞ் செய்வாய் நின்மதம் இஸ்லாம் தன்னை தூயவா காப்பாய் இந்தத் துபையிலின் மகன்பா லென்றார் போயில்லஞ் சேருமுன்னே பரிதாபம் ஆமிர் மாண்டான் 1329
230 ஜின்னாஹ் ஷரித்தீன்
 

திருநபி காவியம்
ஆமீரின் இறப்பின் பின்னே ஆeர்கள் கோத்தி ரத்தார் தாமாக மீண்டு வந்து செய்தனர் உடன்பா டொன்றை ஈமான் கொண் டாரவர்ருள் இணையிலாக் கவிஞர் லாபீத் பூமியில் இறைமார்க் கத்தைப் புகன்றனர் கவிக ளாலே 1330
வாரிசு வரவும் இழப்பும்
"மாரியா கிப்தியா'வின் மகப்பேற்றுக் காலம் அண்ம விரும்பினார் நபிக ளாரின் வழிமக்கட் பேற்றுக் கெல்லாம் மருத்துவம் பார்த்த 'ஸல்மா’ வயதான போதும் தானே மாரியா கிப்தி யாவின் மகப்பேற்றுக் குதவி வென்றே 1331
பிடிவாதம் செய்த அந்தப் பாட்டியின் விருப்புக் கேற்ப உடனிடம் மாற்றப் பெற்றார் உடனிருந்(து) உபச ரிக்க நடந்தது இறைவன் மேலாம் நாட்டத்துக் கேற்ப வெய்யோன் கடந்தேகி இரண்டாம் சாமம் கூடிய போழ்தில் அம்மா 1332
வந்தனர் வான வர்கோன் விளித்தனர் இப்ரா ஹீமின் தந்தையே! எனும்வா றாகத் தொடர்ந்திடும் முறைமை மாற்றிச் சந்தோஷச் செய்தி சொல்லும் சார்பிலாம் ஸல்மா கூட உந்தினர் கணவ ருக்கு உடன்சேதி சொல்க வென்றே 1333
அதிகாலைத் தொழுகை யின்பின் அண்ணலார் தோழர் நோக்கி இதமான சேதி சொன்னார் எனக்கொரு ஆண்கு ழந்தை உதித்தது எந்தை பேராம் இப்ராஹிம் நாமந் தன்னை பதித்துளேன் அவர்க்கு என்றார் பொழிந்தது மகிழ்வு ஆங்கே 1334
பாலூட்டச் செவிலித் தாய்மார் போட்டியிட் டார்கள் ஆனால் பாலூட்டும் பாக்கி யத்தைப் பெற்றதோர் கொல்லார் மாதே காலோடும் தினமும் பிள்ளைக் கணியமு துற்ற வீடாம் பாலகன் ஈர்ப்பால் நாதர் பெரும்பொழு தங்குற் றாரே 1335
231 ஜின்னாஹ் விழரித்தீன்

Page 130
திருநபி காவியம்
தந்தையார் இருக்கும் இல்லம் தனையனைக் கொணர்வார் ஒர்நாள் சந்ததிப் பேற்றைப் பார்இச் செல்வன்என் போலா மென்றே பந்தத்தால் உரைத்தார் ஆயிஷா பார்வைக்குத் தந்த போது விந்தையாய் எதுவு மில்லை வழக்கம்போல் என்றிட் டாரே 1336
எத்துணை வெண்மை தேகம் என்னவோர் அழகு தேசு அத்தனை தாமு மொன்றி ஆனது காண்கி லாயோ உத்தம நபிகள் கூற ஒட்டகப் பால்கு டித்தால் அத்தனை பேரும் காண அழகாக விருப்ப ரென்றார் 1337
பதினெட்டே மாதம் வாழ்ந்த பாலகர் இப்ரா ஹிம்நோய் வதைப்படப் பிழைக்க மாட்டா வாறவர் நிலைமை கண்டு பதைத்தனர் உள்ளம் எம்மான் பச்சிளம் பால கர்தம் விதிமுற்றிப் போன போது வருந்தினர் கண்சொ ரிந்தார் 1338
மறைவினைக் குறித்து மக்கள் வாயொலி செய்வ தற்கு இறைநபி தடுத்தி ருக்க இன்றவர் அழுதல் கண்டு முறைகெட முன்னர் கொண்ட விளக்கத்தை மனத்தில் கொண்டு குறைபட ஒருவர் சொன்னார் காண்பவர் தொடர்வ ரென்றே 1339
சப்தமிட் டழாதீர் என்று சாற்றிய வார்த்தை தன்னை தப்பாக அர்த்தங் கொண்டார் துயரத்தை வெளிக்காட் டல்லோர் தப்பான செய்கை யென்று தான்நபி சொன்ன தாக ஒப்பிலை ஒலியெ முப்பல் உகுத்துங்கண் ணிருக் கன்றாம் 1340
நீண்டபோழ் தழுது நின்ற நபிகளார் எடுத்து ரைப்பார் வேண்டாமென் றுரைத்த திந்த வகையல உள்ள ம.தில் மென்மையால் கருணை யாலும் மேவிடும் உணர்வு இ.தாம் கண்கொளப் படமாட் டார்கள் கருணையற் றிருப்போ ரென்றார் 1341
ஒன்றரை வருட காலம் உள்ளத்தில் பூத்தி ருந்த பொன்மலர் ஒருநொ டிக்குள் போனதென் றெண்ணும் போழ்து தன்தடை தாண்டிக் கண்கள் சொரிந்தன இறைவன் ஆணை என்னதென் றறிவார் யாரோ இலையிந்தப் பூவின் மீதே 1342
232 ஜின்னாஹ் ஷரித்தீன்
 

திருநபி காவியம்
மீண்டும்நாம் ஒன்று சேர்வோம் மறுமையில் என்னும் வாக்கு ஆண்டவன் அருளா துற்றால் ஆசைக்திரு மகனே நாங்கள் நீண்டபேர் சோகங் கொள்வோம் நெஞ்சாறா இழப்பாம் என்றே
பூண்டனர் அமைதி மற்றோர் பின்பற்றும் வாறே எம்மான் 1343
கழுவியே சுத்தம் செய்து “கப்ரினில்” வைக்கு முன்னர் தொழுகையை நபிக ளாரே தொடர்வோர்முன் நின்றி யற்றி தெளித்திடச் செய்தார் நீரைத் தரையமர்ந் திறைஞ்சி னார்கள் முழுவாழ்வில் இந்நாள் போன்று மனங்கவல் கொண்டா ரில்லை 1344
திருநபி மகனார் தம்மைச் சேர்த்துமண் ணறையுள் வைத்த ஒருசில நிமிடத் துள்ளே ஒன்றிவான் தோன்ற வெய்யோன் கிரகணம் மக்க ள.தின் காரணம் இதனா லென்ன பெருமானர் பிழையென் றோதிப் பற்றுக தொழுகை என்றார் 1345
இறுதி ஹஜ்ஜும் உபகுேசமும்
துல்க..தா மாதம் ஒன்றத் தொடர்ந்திடும் ஹஜ்ஜுக் காக பல்வகை முயற்சி தாமும் புரிந்திடத் தொடங்க மக்கள் வல்லவன் தூதே எம்மை வழிகாட்டி டப்போம் செய்தி சொல்வழி அறிந்தார் நெஞ்சுள் துளிர்த்தது மகிழ்வின் ஊற்றே 1346
மதீனாவில் மட்டு மன்றி மணற்பூமி அனைத்தும் அ.து எதிரொலி செய்த தெல்லா இடத்திருந் தோரும் சேர்ந்தார் முதிர்ந்தபல் லாண்டு கால முறைமையில் இருந்து வேறாய் அதிசிறப் பான திந்த அறுதிஹஜ் அகிலத் தோர்க்கே 1347
கேள்வியுற் றனைத்துப் பேரும் கூடினர் மதீனா மண்ணில் வாழ்வினில் கிடைக்கும் பேறாய் வரித்தனர் மனத்துள் ஆண்பெண் ஏழைப்பேர் சீமான் என்றோர் இடைவெளி இல்லா தொன்றி நாள்வரக் காத்திருந்தார் நற்றவப் பேற்றால் உய்த்தார் 1348
233 ஜின்னாஹ் வழfபுத்தீன்

Page 131
திருரவி காவியே
சென்றனர் மக்கா நோக்கித் திருநபி தோழ ரோடே சென்றனர் நபிக ளாரின் திருமணப் பந்தத் தாரும் ஒன்றிலை மனிதர் மக்கா ஏகாதார் என்னும் பாங்காய்ச் சென்றனர் மதீனா வெற்றுத் தலமெனில் பொய்ய தாமோ 1349
மூபத்து ஆயி ரம்பேர் முதன்மையில் நபிகள் செல்ல பாபத்தின் கறைகள் நீங்கிப் புனிதராய் மாறும் எண்ணத் தாபத்தால் நெஞ்சம் விம்மத் தாழ்பதித்(து) இறையில் லத்தைத் தீபத்தை நாடுங் காருள் நின்றபேர் போலு மானார் 1350
புறப்பட்ட பத்தாம் நாளில் பகலவன் மறையும் வேளை இறைநபி க.பா வைத்தன் இருவிழி நோக்கக் கைகள் மறையோனை எண்ணி வான்பால் நோக்கியே எழவந் தன்னை அறியாது கண்கள் நீரைக் கொட்டிடப் பிரார்த்தித் தார்கள் 1351
வல்லவா இறைவா இந்த வானவன் பதியின் மேன்மை சொல்லொணாக் கெளர வத்தை செல்வத்தை மக்கள் தம்பால் நல்கிடும் பக்திப் பேற்றால் நாயனே பெருகச் செய்வாய் கல்லெனுங் கருகும் பாங்காய் காருண்யர் வேண்டி னாரே 1352
ஒரேழு முறைகள் கஃபா ஓடின சுற்றிற் கால்கள் பாராளும் பதியை நெஞ்சம் பூரிக்க வணங்கி மீண்டு ஒரேழு முறைகள் தொங்கு ஒட்டமும் சபாமர் வாவை பூரணஞ் செய்தார் ஓடிப் பகருவாய் மொழித லோடே 1353
தனித்தொரு வீட்டில் தானுந் தங்கிட இணங்கார் பள்ளி தனிற்பிற ரோடு தங்கித் தோன்றுவான் பிறையின் எட்டில் அனைத்தவர் தொடர எம்மான் அடைந்தனர் 'மினாவை’ தங்கித் தினகரன் தோன்ற "அறபா’தனைநோக்கிப் பயண மானார் 1354
பதின்மூன்று கற்றொ லைவில் பரந்தவவ் வெளியில் தங்கும் விதி முன்னர் இப்ரா ஹீமின் வழிவந்த தாகும் இந்த விதிதனைக் குறைவழி யர்கள் வழிகொளா திருந்த மக்காப் பதிவிட்டுப் போகும் அந்தப் பழக்கத்தை மறுத்தி ருந்தார் 1355
234 ஜின்னாup opரித்தீன்

திருநபி காவியம்
தாயின்பின் மலைத்தொடர்கள் தமையிரு புறத்துங் கொண்ட தாயிருந் ததுவாம் அந்தத் தனிவெளி நாப்பண் குன்றொன்(று) ஆயது "கருணைக் குன்று’ ஆம் அதன் நாம மாகும் போயாங்கு தான்த ரித்தார் புண்ணியர் வந்தோ ரோடே 1356
வேறு
பெருங்கட லெனநிறை சனங்களி னிடையொரு
பேருரை நிகழ்த்தவென் றெண்ணி திருநபி ஒட்டகை மேலிருந் தெட்டுத்
திக்கதும் நோக்கிட மக்கள் மருவினர் திருவாய் மலர்ந்தே மொழிவது மனதினிற் பதிக்கவென் றெண்ணி உருக்கிடும் வெயிலின் உக்கிரந் தாங்கி
உறுதியோ டவரங்கு நின்றார் 1357
மக்களே யென்மொழி செவிமடுத் திடுவீர்
மற்றொரு முறையிது வாறே தக்கவோர் சமயம் சேருமோ அறியேன்
தயவொடு நானுரைப் பதனைத் திக்கெலாஞ் சேர்ந்திடச் செய்வது கடனே
தீன்வழி தொடருமெம் மாந்தர் எக்கால முமறிந் தொழுகிடச் செய்குவீர்
எனத்தொடங் கினர்நபி மாதோ 1358
235 ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 132
திருநவி asrsíulö
வேறு
நேரிசை ஆசிரியப்பா
என்னுடை மக்காள் என்னுடை மக்காள் இன்றுநா னுரைக்கும் நன்மொழி யதனை நன்றெனக் கேள்மின் நலம்பெற வறிவீர் இன்னொரு முறைநா மிவ்விடந் தனிலே இணைவோ மெனநா னறிகிலே னின்னாள் தூயநன் நாளித் திங்களு மதுபோற் றுாயதிம் மண்ணுந் தூயது அறிவீர் இன்றே போன்றும் உயிர்பொரு ளாவி என்றுந் தூய்மைத் துடைத்ததா யமைக இங்கில் லார்க்கு மெனதுய தேசம் எங்கிருந் தாலு மெத்திநீர் வைப்பீர் மறுமையு மும்மை நெருங்குமிவ் வேளை மனதினிற் பதியவென் றுரைப்பது கேட்பீர் வட்டியும் பழிக்குப் பழியெனக் கொலையும் திட்டமாய் நீங்கள் தவிர்ப்பது கடனே இபிலி சவனுக்கடி பணியாதீர் இறைவனை யென்றும் மறந்திட வேண்டாம் பெண்டிர் பதியி னடைக்கலப் பொருளாம் பிரியமா யவரொடு நடந்துகொள் வீரோ ஈமான் கொண்டோ ரொருவருக் கொருவர் உடன்பிறப் பென்பதை யுணர்ந்திட வேண்டும் பிறர்பொரு ளதனைக் கவரா திருப்பீர் அடிமைக ளோடு அன்பா யிருந்து தேவை யறிந்து செய்யுக வுதவி அறபிகள் தமக்கு மஜமிகள் தமக்கும் சிறிதள வேனுந் தாழ்வுயர் வில்லை ஆதி பிதாவு மானது மண்ணால் அவர்வழி மனிதரு மானது மண்ணால் திருமறை யோடு வென்னுப தேசம் இரண்டையு மும்மிடம் விட்டகல் கின்றேன்
236
ஜின்னாஹ் ஷரித்தீன்

திருரபி காவியம்
இருவிழி யெனவிவை கொள்வீ ரென்றும் சிறிதெனும் வழிகெட மாட்டீ ரறிவீர் உரையது நிகழ்த்தி யோய்ந்ததும் நபிகள் அங்குற் றோரை அருளொடு நோக்கி “என்திருக் கட்டளை யனைத்தையு முமக்கு என்திருத்தூத ரெடுத்தியம் பினரோ என்றிறை வினவி னெதுபகல் வீரோ எனநபி வினவ இருந்தோ ரனைவரும் "நபிபெரு மானே நாயகன் கட்டளை யனைத்தையும் நீங்க ளணுவள வேனும் குறையற வரைத்து குவலயம் பிறந்த பணிதனைச் சீராய் முடித்ததை யவன்முன் சான்றது பகர்வோ’ மெனவெடுத் துரைத்தார் இவ்விடை கேட்டு விறைவனின் தூதர் விண்ணினை நோக்கி யிருகர மேந்தி “இறைவா விதற்கு நீயே சான்று இறைவா விதற்கு நீயே சான்று இறைவா விதற்கு நீயே சான்று” எனழும் முறைக ளியம்பிட விறைவன் "இன்று உமக்கா யுமது மதத்தை நிறைவது செய்தேன்’ னென்னுந்திரு வசனம் தனையறி வித்தா னென்ப சரித்திரங் கூறும் சான்றுக ளாமே. 1359
சிறியதோர் பிரசங் கத்தைச் செய்தபின் கடமை யான இறைவழி பாட்டைச் செய்து இறைவனை இறைஞ்சி வெய்யோன் மறைந்திடும் வேளை முற்ற மக்காவை நோக்கிச் செல்லுந் புறத்தினில் ஒட்டை தன்னைப் போகிடப் பணிந்திட் டாரே 1360
பகலவன் மறைந்தான் இராவின் பொழுது'முஸ்த் தலீபா” தன்னில் இகபரத் தரசர் தங்கி இருந்தாங்கு மினாவில் உள்ள 'அகபா’வில் மூன்று தூண்கள் மூலமாய் நிலைபெற் றுள்ள பகைவனாம் 'ஷைத்தானுக்கு புடைத்திடக் கற்கள் சேர்த்தார் 1361
237 55 (ST67B 6prflö556

Page 133
திருரவி காவியம்
முன்காலைத் தொழுகை தன்னை'முஸ்த்தலீ பா’வில் செய்து முன்சென்றார்"அகபா’நோக்கி மற்றுளோர் பின்தொ டர்ந்தார் கன்மாரி ஷைத்தா னுக்கும் கொட்டிய பின்னர் “குர்பான்” தன்னையன் னார்.கொ டுத்தார் தலைக்கேசம் நீக்கி னாரே 1362
யாத்திரை சென்றோ ரெல்லாம் இறைபள்ளி தரிசித் தன்றும் சேர்த்திரு இரவும் 'மினா’விற் தங்கிட வேண்டும் என்று பூத்தனர் வார்த்தை எம்மான் பகல்வரை ஆங்கே தங்கி யாத்திரை மேற்கொண் டார்கள் இணங்கிமற் றோருஞ் சென்றார் 1363
மக்காவை அடைந்து அன்றே முறையான தவாபும் செய்து மக்காவில் மதிய நேரம் முடித்தனர் தொழுகை தன்னை அக்காலை “ஸம்ஸம்’ நீரை அளித்திடும் பொறுப்புக் கொண்ட தக்காரை அணுகி மொண்டு தருகநிர் என்றுண் டாரோ 1364
பனுஅப்துல் முத்த லீபே பணித்திலா நானே இந்தப் பணிதனை இயற்ற லாகும் பின்னொரு காலம் மக்கள் எனைத்தொடர்ந் தவர வர்கள் இட்டம்போல் நீரைக் கொண்டால் உனக்குரித் தான தொன்றாம் உரிமையைக் கொள்வ தாகும். 1365
பரம்பரைப் பொறும்பாம் அந்தப் பணிஅப்துல் முத்த லீபின் பரம்பரை தமக்கு அன்றும் பொறுப்பினில் அவரே யுற்றார் இருந்திடில் மாற்ற மொன்று இலாதுபோம் உரிமை மாறும் இருந்திடல் கூடா தென்றே இறைநபி விரும்பி னார்கள். 1366
238 ஜின்னாஹ் ஷரித்தீன்

திருநபி காவியம்
O O O O நிரந்குர மணம் வீசும் நாயகர்
வேறு
ஹிஜ்ரத்தின் பின்பதினோ ராவ தாண்டு
திங்கள்’ஸ்பர்” இறுதியிலே நபிக ளார்க்கு அசுகத்தின் அறிகுறிகள் தோன்றிற் றன்னார்
அறுதிஹஜ்ஜை நிறைவேற்றி வந்த காலை இசுலாத்தின் போதனைகள் அனைத்தும் முற்றி
இறையவனும் அவர்பணியை ஏற்ற தாக விசுவாசித் தருள்செய்து வாக்கும் பெற்ற
வருடமது சோகத்தின் வரலாற் றாண்டே 1367
மனைவியரில் அனைவருமே ஏற்றுக் கொள்ள
மாநபிகள் ஆயிஷாவின் இல்லந் தங்கி தனைவருத்தும் நோய்க்கான பால னத்தைச்
செயவிருந்தார் இறுதிவரை அன்னார் வீட்டில் மனம்விரும்பும் மனைவியவர் என்ப தாலே
மாதரசித் தாய்மார்தம் முறைத வித்தார் தினம்நபிகள் தேகநிலை சற்றுச் சற்றாய்ச்
சோர்வடைந்து போவதனை ஆயிஷா கண்டார் 1368
எத்தனைதான் உடலிளைத்துப் போனபோதும்
இறைவணக்கந் தனைநடத்தப் பள்ளி வாசல் உத்தமநந் நபிநாதர் உவந்தே சென்றார்
ஒருபோழ்து உடல்களைத்துச் சோர்ந்து காய்ச்சல் மொத்தவுருக் கொண்டதுபோல் நபியைத் தாக்க
மிகச்சிரமத் தோடு பள்ளி சேர்ந்தார் ஆங்கே சித்தமற்றுப் போனார்கள் தொழுகை தன்னை
தானேமுன் நின்று செய்யும் திராணி யற்றே 1369
அன்னைஆயிஷா தனையழைத்து உன்றன் தந்தை
அபூபக்கள் தனையெனக்குப் பகர மாக
முன்னின்று தொழுகைதனை நடத்து மாறு
மாநபிகள் உரைசெய்ய அன்னை ஆயிஷா
239
ஜின்னாஹ் இpரித்தீன்

Page 134
திருநபி காவியம்
என்பிதாவோ இளகியநெஞ் சுடையார் உங்கள்
இடத்திருந்து பணிசெய்யுந் துணிவு மற்ற
பின்னத்துக் குள்ளாவார் திருக்குர் ஆனின்
பேசுமொழிக் குருகிடுவார் அழுவா ரென்றார் 1370
என்றனுக்குப் பகரமாக அவரே நின்று
ஏகன்வழி பாட்டிற்குத் தலைமை தாங்கச் சொன்னதுவாய்ச் சொல்கவென அவருஞ் சொல்லச்
சிலநாட்கள் அபூபக்கள் தொடர்ந்துஞ் செய்தார் தன்னுடலில் தெம்பொருநாள் தேறல் கண்டு
திருநபிகள்'அலி'அப்பாஸ்” இருவர் தாங்க முன்வாயில் தனையடைந்தார் அபூபக் கர்தான்
முன்னின்று தொழுவிக்கும் நிலைமை கண்டார் 1371
கண்ணெதிரே கண்டவந்தக் காட்சி நெஞ்சைக்
குதுாகலிக்கச் செய்ததுதன் பின்னும் இந்தக் கண்கொள்ளாக் காட்சிதொடர்ந் திருக்கும் என்றே
கருணைநபி மனநிறைவால் பூரித் தாரே விண்ணவன்முன் பள்ளிமுற்றத் தோழர் ஒன்ற
வணங்குகின்ற காட்சியது வழக்கம் போற்றான் அண்ணல்நபி அன்றில்லாப் போழ்தும் மக்கள்
அருகன்பாற் கொண்டபத்தி அணைகொள் ளாதே. 1372
பெருமானார் வந்துற்றார் எனஓர் வாறு
புரிந்துகொண்ட அபூபக்கள் தன்னைச் சற்று அருகமர்த்திக் கொண்டார்கள் நபிக ளார்க்கு
அளிக்குமிடந் தருகவென அறிந்த எம்மான் கருமத்தைத் தொடர்கவெனச் சைகை செய்யக்
குறித்தநேரத் தொழுகைதொடர்ந் தியற்ற நாதர் அருகிருந்து அபூபக்கள் தனைத்தொடர்ந்தொ டர்ந்தார்
ஆண்டவன் முன் அனைவருமே சமமென் றானார் 1373
240
ஜின்னாஹ் வழfபுத்தீன்
 

திருநபி காவியம்
பள்ளிவாயில் வந்துதொழும் படியாய்த் தேகம்
புத்துணர்வு கொண்டதனைக் கண்ட தோழர் உள்ளமெல்லாம் பூரிப்பால் திகைத்துப் போனார்
ஒன்றியதம் தொழில்களுக்காய்ப் பிரிந்து போனார் எள்ளளவும் மனத்தளர்வு இல்லா தன்று
இருந்தார்கள் நபியவர்கள் மதீனா அண்டி உள்ளதங்கள் உறவினரைக் காண வென்றே
உத்தரவு பெற்றுஅபூ பக்கள் சென்றார் 1374
மயக்கத்தில் அன்றுமுழு நாளும் அண்ணல்
மிதந்திருந்தார் அடிக்கடிதன் சுயமி ழந்தார் துயரத்தின் எல்லைவரை ஆயிஷா அன்னை
தூதர்தம் அருகிருந்தார் பல்து லக்கப் பயனுறுமோர் குச்சியினை அபூபக் கர்தம்
பிள்ளையப்துல் லாஹற்விடத்தில் கண்டு தம்மின் வயமதனைத் தருமாறு வழிக ளாலே
வேண்டவதைத் தரஆயிஷா பெற்றுக் கொண்டார் 1375
கைகொண்ட குச்சியினை மிருது வாக்கித்
கொடுக்கநபி பல்துலக்கி அருகி ருந்த பையிலுள்ள நீரள்ளி முகந்தெ எரித்துப்
பின்னர் ஆய்வடிா நாயகியின் மடியில் சாய்ந்து “வையத்தைப் படைத்தாளும் வல்ல வாயில்
வதைதன்னை எளிதாக்கு” எனமொ ழிந்தார் வையத்தின் அருட்கொடையாம் நபிகள் நாதர்
வாயுரைத்த இறுதிமொழி யதுவ தாமே 1376
241
ஜின்னாஹ் இழரித்தீன்

Page 135
திருநபி காவியம்
நபிகளாரும் பoகுரு மனமும்
பலதார மணம்புரிந்தார் நபிகள் நாதர்
பாருக்கோர் வழிகாட்டும் பாங்காம் அ.து நலமான காரணங்கள் ஒவ்வொன் றிற்கும்
நிதர்சனமாய் உண்டாமே அதுவு ரைப்பின் எலாருமதை ஒப்புவரே அக்கா லத்தில்
இருந்தநிலை உணர்ந்திடுங்கால் வழிகாட் டல்தான் புலங்கொள்ள வேண்டுமதைப் புரியாப் பேர்க்கும்
புரியவைத்தல் கடனாகும் முஸ்லிம் கட்கே 1377
தனில்வயது பதினைந்து மூத்த பெண்ணைத்
திருமணத்தால் ஒன்றித்தார் இணைந்து வாழ்ந்த இனிதான ஈர்பத்து ஐந்து ஆண்டில்
எவரையுமே மணந்ததில்லை இதுவோர் பாடம் புனைந்ததிலே ஒருவரன்றி மற்றோ ரெல்லாம்
புனிதருக்கு முன்மணத்தால் ஒன்றி வாழ்ந்தோர் இனிதாகும் விதவையர்க்கு வாழ்வ ளித்தல்
என்பதனைக் கற்பிக்கும் பாட மாகும் 1378
யுத்தத்தால் ஆண்கள்தொகை குறைந்த போது
ஏற்பாரற் றிருந்தார்கள் இளம்பெண் ணார்தம் பத்திரத்தின் பொருட்டவர்க்கு பாது காப்பும்
பசிக்குணவும் உடுதுணியும் இருக்க வீடும் நித்தியமற் றிருக்குங்கால் நபிக ளாரும்
நபித்தோழர் பலரும்பல் மணங்கள் செய்தார் சத்தியத்தின் தூதர்தம் வழிகாட் டல்முன்
தலைசாய்ந்தார் இளைஞர்களும் தாமுஞ் செய்தார் 1379
மனிதகுல முன்னுவமை முஹம்ம தள்தான்
மணம்புரிதல் தனிலுமவர் முதன்மை யானார்
தனைமூத்த பெண்ணைமணம் செய்த தோடு
தம்துணையால் விடுபட்டோர் தவிர்த்துக் கைம்பெண்
242
ஜின்னாஹ் விழரித்தீன்

திருநபி காவியம்
தனையுமவர் கரம்பிடித்தார் அடிமை யாக
தன்வசமாய் ஆனபெண்ணைக் கூட எம்மான்
தன்னினிய மனைவிளக்காய் ஏற்றா ரென்றால்
திருத்தூதர் வழியின்றுந் தொடரச் சாலும் 1380
இளமைக்காய் அழகிற்காய்ச் செல்வத் திற்காய்
இனங்கண்டு பெண்கொள்ளல் தனிலும் அன்னாள் களங்கமில்லா நெறிகண்டு கொள்ளல் மிக்க
காத்திரமாய் அமையுமென வாழ்வில் என்று இளவயதில் எண்ணியவர் நபிகள் நாதர்
எல்லோர்க்கும் எடுத்துரைத்தார் தான தற்கு களங்கமில்லா உதாரணமாய்த் திகழ்ந்தார் இந்நாள்
கைப்பிடிக்குங் காலமென்றுங் கொள்ள லாமே 1381
மாதர்தம் பாதுகாப்பு முதன்மை யாகும்
மாதரசி "ஹப்ஸா’பெருங் கோபக் காரர் ஆதரவு பெற்ற "ஸெளதா” வயதில் மூத்தார்
அடுத்தசிலர் வீடுவாசல் அற்றோர் உண்ணப் போதுமான உணவுமற்றுத் தவித்த பேர்கள்
பாராமுக மற்றிருந்தோர் பிழைப்பு மற்றோர் ஏதுவிவர்க் கடைக்கலமென் றெண்ணி நாதர்
ஏற்றார்கள் மணவாழ்வில் இறைநாட் டம்போல் 1382
மனைவியருள் ஆயிஷாவே இளமை யானோர்
மதிநுட்பம் மிக்கவராம் நபிக ளாரின் மனைவியருள் முஸ்லிம்கள் பேரன் புக்கு
முற்றுமுடைத் தானவராய் ஒருந பிக்கு மனைவியென்னுந் தானத்துக் குரிய எல்லாம்
மொத்தமாக அவரிடத்தே கண்டார் மக்கள் மனைவியருள் மிகஅதிகம் நபிகள் போதம்
மனப்பாடம் செய்தவரும் அவரே யாகும் 1383
243
ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 136
திருநபி காவியம்
சமயகுல கோத்திரத்தால் இஸ்லாத் திற்குச்
சொல்லொணாத இடைஞ்சல்கள் வந்த தன்று அமைந்தவற்றுள் யூதர்களின் தொல்லை மிக்க
அதிகமவை தவிர்த்தலுக்காய் ஜூவைரிய் யாவை தமதுமனை யாக்கியதோடு) யூதர் தம்மின்
தலைவரென ஆனவரின் விதவை சபிய்யா அமைந்தார்கள் மணவாழ்வில் இதனால் போர்கள்
அடங்கினவாம் அந்நாளில் நலந்தோன் றிற்றே 1384
எகிப்திற்கும் மதீனாநந் நகரி னுக்கும்
ஒருமைப்பா டுடனேநற் புரிந்து ணர்வும் வகிப்பதற்கு காரணமாய் ஆனார் அன்னார்
வழங்கியபெண் மாரியத்துல் கிப்தி யாவால் தகுதியிலே உரிமை பெற்ற அடிமைப் பெண்ணார்
தலைவனுக்கும் அடிமைக்கும் பேதம் இல்லாப் பகுத்தறிவுக் கொள்கையதால் பரவிற் றன்னார்
பின்பற்றின் இன்றுமது பொருந்து மன்றோ 1385
வேறு
பன்னிரு பேரை எம்மான் பதிவாழ்வின் துணைாய்க் கொண்டார் நன்னோக்கு ஒவ்வொன் றிற்கும் நிலைத்திடுங் கார ணங்கள் முன்னைய நாளிற் பெண்கள் முற்றிலும் அடிமை வாழ்வைத் தன்னகம் கொண்டி ருந்தார் தூதரால் விடிவும் பெற்றார். 1386
கைப்பிடித் தொருத்தி தன்னைக் காப்பாற்ற இயலு வோர்கள் மெய்ப்பட வேண்டும் தன்னை மணவாழ்வில் ஒன்று சேர்க்கத் துய்யவாழ் வமைய சமூகத் தரமோங்க வாழ்வில் உய்ய செய்கவென் றுரைத்தார் எம்மான் திருமண பந்தமென்றே 1387
244 ஜின்னாஹ் ஷரித்தீன்

திருநபி assresíulö
அன்னை கதீஜா
சொன்னதோ டொன்றித் தானுஞ் செய்துமே காட்டி னார்கள் முன்னவர் கதீஜா அன்னை முதியவர் பதினைந் தாண்டு கன்னலின் நிகராம் வாழ்வு கதீஜாவி னோடு எம்மான் இன்னொரு பெண்ணை ஏற்றார் இலையவர் மறையு மட்டும் 1388
தூயவிசு வாசம் உண்மை சட்டென விளங்கும் ஆற்றல் தூயநற் பழக்கம் முற்றுந் தெளிவான அறிவுக் கூர்மை ஆயவற் றோடு அள்ளி அளித்திடும் வள்ளற் றன்மை நாயகர் மனைவி கொண்ட நற்பண்புட் சிலவாம் மாதோ. 1389
இறைவனால் ஜிப்ரீல் மூலம் இறைபி வழியாய் வாழ்த்துப் பெறுமுயர் பாக்கி யத்தைப் பெற்றபெண் முதலு மாவர் உறுமவர் பெயரே முன்னர் உயர்நான்கு பெண்டிர் பூவில் மறுபெயர் “பாத்தி மா’மர்யம் 'ஆசி யா’வென் பேரே 1390
சொர்க்கத்தின் முதற்பெண் ணான தாய்பாத்தி மாதம் தாயார் சொர்க்கத்தின் முதன்மைச் செல்வர் “ஹஸன்ஹ"ஸைன் தாயின் தாயார் பெரும்பொருட் செல்வர் குவைலித் புறத்துதித்திட்ட செல்வி பெருமானார் நபித்து வத்தைப் போற்றிய முதற்பெண் ணானோர் 1391
ஈராண்கள் பெண்கள் நால்வர் இறைநபி பொருட்டால் பெற்றார் பாரினில் தாஹிர் காஸிம் பாலகர் சிலநாள் வாழ்ந்தோர் நேரிளைப் பெண்கள் ஜைனப் பாத்திமா றுகையா குல்தும் மாரியா வயிற்றில் பின்னர் மகவொன்றுந் தூதர் கொண்டார் 1392
245 ஜின்னாஹ் வழfபுத்தீன்

Page 137
திருநபி காவியம்
அன்னை ஸெஎகுா
முதல்மனை கதீஜா வாழ்வு முற்றுற நபிகள் நாதர் கதியிரு மணமாகாத கன்னியர் பொறுப்புள் ளானார் விதிவழி 'ஸெளதா தம்மின் வாழ்துணை யற்ற காலை புதுவாழ்வுக் கிணையாய் எம்மான் பற்றினார் அவள்கை மாதோ 1393
தியாகத்தின் உருவாய் அன்னை திகழ்ந்தார்கள் தாயாய் வாழ்ந்தார் உயரிய பண்பு கொண்டோர் உவந்துதம் உரிய நாளை வயப்படச் செய்தார் ஆயிஷா வள்ளலார் கரங்கொள் காலை செயல்நபி ஆயிஷா மீது தோற்றிய பாசங் கண்டே 1394
அன்னை ஆயிஷா
கன்னிப்பெண் ணாக நாதர் கரங்கொள்ளும் பேறு கொண்டார் மனோதிடம் உறுதி மிக்க மாதுயர் தரும சிந்தை தனைமனம் நிறைத்துக் கொண்டார் சமூகநற் சேவை செய்தார் நினைவாற்றல் மிக்கார் எம்மான் நபிமொழி அதிகம் தந்தோர் 1395
திருமறை தன்னில் ஆயிஷா தம்வழி பல'சூ றா’க்கள் வருவதற் கான மேன்மை வரித்தவர் சுவர்க்கந் தன்னில் திருமணப் பொருத்தம் அல்லாஹற் தேர்ந்தனன் இறைவன் தூதர் மறைவினில் மடியினில் தாங்கும் மகத்துவம் பெற்ற தாயே 1396
நேரடி யாக ஜிப்ரீல் நாயனின் தூதர் வாழ்த்தும் பேர்பெறு பேறு கொண்டோர் பெருமானார் வாயி னாலே சீர்பெறுஞ் சொர்க்கம் கொள்ளும் சிலாக்கியம் பெற்ற தாகக் கூறிடக் கேட்டார் எம்மான் கண்மூடு போழ்தி லாமே 1397
பெருமானார் இறுதிப் போழ்தில் பதிசுற்றித் தேவதூதர் பெருகினார் பின்னர் கூடப் பரிசுத்த மான அன்னார் பெருகினார் அன்னை ஆயிஷா பூமிவாழ் விறுதி மட்டும் பெருகிய திறைவன் ஆசி பெருகிய தவரில் லத்தே. 1398
246 ஜின்னாஹ் வழfபுத்தீன்
 

திருரபி காவியம்
அன்னை ஹப்ஸா
பத்ருப்போர் தன்னில் தம்மின் பத்தாவை இழந்தார் உமரு ஹத்தாபின் மகளார் வாழ்வில் இளமையில் விதவை யானார் உத்தம நபிக ளாரும் உவந்தவர் கரம்பி டித்தார் புத்தியும் அறிவும் மிக்கார் படைப்பறி வுடையார் அந்நாள் 1399
எழுத்தாற்றல் பேசும் வன்மை இயல்பாகக் கொண்டி ருந்தார் எழுத்தினில் வடிவம் பெற்ற இறைமொழித் தொகுப்பு குர்ஆன் முழுமைசெய் முயற்சி யில்தன் மனமொன்றிப் பங்கு செய்தார் தொழுகையும் நோன்பு நோற்கும் சீரிய பண்பும் கொண்டார் 1400
அன்னை உம்முஸல்மா
குறைஷிகள் தலைவர் உமையா கொண்டபெண் மகளார் முன்னர் இறைவிசு வாசங் கொண்ட இருவர்தம் கணவ ரோடே இறைவழி உஹதுப் போரில் ஏற்பட்ட ஊறி னாலே இறையடி சேர்ந்தார் அன்னார் இன்னுயிர்க் கணவன் ஆஸாத் 1401
பெற்றோரால் ஒதுக்கப் பட்ட போதினில் மக்க ளோடு உற்றவர் துணையு மற்று உறுநிலை வந்த போது கொற்றவன் தூதர் தன்னைக் கொண்டனர் அன்னை மாருள் முற்றிய திவர்தம் வாழ்வே முடிவுற்ற தாகும் என்பார் 1402
கல்வியின் மேன்மை ஞானம் கவனிப்பு நினைவின் ஆற்றல் வல்லபங் கொண்டதாலே வனிதையர் தமக்கு மார்க்கம் சொல்லிடும் பேச்சாண் மைக்குத் தனையர்ப் பணித்தி ருந்தாள் மெல்லிய லார்வ ணங்க முன்னின்று நடத்து வாரே. 1403
247 ஜின்னாஹ் விழரித்தீன்

Page 138
திருரவி காவியம்
அன்னை ஜைனப்
அறிவுடை யோர்தமக்கு அன்னையென் நாமம் கொண்டோர் முறைப்படி நபிக்கு மாமி மகளாவார் குலத்தின் மேன்மை முறித்தது வாழ்வை முன்னர் முஹம்மதர் வளர்ப்பு மைந்தன் பொறுப்புடைத் திருந்தார் நீங்கப் பெருமானார் கரம் பிடித்தார் 1404
அன்னையார் ஆயிஷா பின்னர் அகமது நபிக்கு வாய்ப்பாய்த் தன்னையே கொண்டி ருந்தார் சிறியவர் அழகு மிக்கார் முன்கோபி நேர்மை யாளர் முற்றும்வெண் மனத்தைக் கொண்டோர் பின்னல்செய் துழைத்து மிக்க பணஞ்சேர்க்கும் முயற்சி யாளர் 1405
ஏழையர் அன்னை என்னும் இடுபெயர் கொண்ட அன்னை ஏழ்மையின் காரணத்தால் இடருற்றார் உஹதுப் போரில் வாழ்வில்தன் துணையி ழந்தார் வயதோமுப் பதுதான் எம்மான் வாழ்வினில் இணைந்தார் வேண்டிப் பலர்வந்தும் மறுத்திட் டாரே 1406
அன்னை வறுவைரிய்யா
அரேபியர் தலைவர் ஹாரித் அருஞ்செல்வி யாவார் இஸ்லாம் மறைந்தொழிந் திடவென் றெல்லா முயற்சியும் செய்தார் பெண்ணாள் இறைவழி எதிர்த்த போரில் இழந்தவர் கணவர் தன்னைச் சிறைப்பட்ட மாதருள்ளே ஜூவைரிய்யா சேர்ந்தி ருந்தார் 1407
விடுதலை வேண்டி வந்தார் வம்சத்தின் தலைவர் அன்னை தொடர்ந்திறை தூதரோடு சேர்ந்தொன்றி வாழ வேண்ட அடிமையின் தளையை நீக்கி அவர்கரம் நபிகள் பற்ற விடுதலை பெற்றோ ரெல்லாம் வரித்தனர் இஸ்லாம் மார்க்கம் 1408
தனிமையை விரும்பி வாழ்ந்தார் தன்மையில் அடக்கம் மிக்கார் தனைமுழு மனத்தோ டொன்றித் தீனின்பால் அர்ப்ப னித்தார் தினம்நெடு நேரம் நின்று தொழுபவர் நோன்பி ருப்பார் அன்னைஆய் ஷாவின் மீது அன்புடை யாரன் னாரே 1409
248 ஜின்னாஹ் விழரித்தீன்

திருநபி காவியம்
அன்னை உம்மு ஹபீப்ா
இஸ்லாத்தின் முதன்மைக் காலம் இறைவழி கணவ ரோடு விசுவாசங் கொண்டார் சுப்யான் வழிமகள் கணவர் பின்னே விசுவாசந் தவிர்த்த தாலே விலகினார் மணவாழ் வைப்பின் விசுவாசங் கொண்டோர் தாயாய் வள்ளலார் கைக்கொண் டாரே 1410
பிறர்மீது அன்பும் அன்னார் பால்நலம் விரும்பும் பண்பும் இறையச்சம் மிகுந்தும் என்றும் இறைவழி பாடுஞ் செய்தும் இரட்சிப்பும் வேண்டி நிற்பார் ஈமான் கொண் டோர்க்கு மாக கருணைகொண் டுழைத்தார் அனாதைக் குழந்தைகள் மீது மாமே 1411
gies 60601 OLDEp60TT
இறைதூதர் தமைய பூழிக்க எண்ணங்கொண் டிருந்த"ஹவாஸின்' முறைவழிப் பெண்ணாம் அன்னை மைமூனா நபிகள் நாதர் முறையாக மணம்மு டிக்க முனைந்தனர் மறுத்தார் மக்காக் குறைவழியர் ஈற்றில் அன்னார் கண்டனர் தோல்வி யாமே. 1412
அடிமைகள் தளைய றுக்க ஆர்வமுங் கொண்டார் அன்னை கடன்பட்டுஞ் செய்தார் ஈற்றில் கடன்பழு அதிக மாக கொடுப்பது எவ்வா றென்றோர் கேள்வியுந் தோன்றக் கேட்டு கொடுப்பதாய் எடுப்பின் அல்லாஹற் காட்டுவான் வழியென் பாரே 1413
அன்னை ஸ்பிய்யா
மதீனாவில் நபிக ளார்க்கு மிகப் பெருங் கொடுமை செய்த சதிகாரர் பனுந ஸிர்கள் தலைவனின் மகள் ஸபிய்யா மதீனாவில் இருந்து அன்று மக்களால் துரத்தப்பட்டு பதிகொண்டார் கைபர் தன்னில் பிறந்தமண் துறந்த தாலே 1414
249 ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 139
திருரவி காவியம்
கைபரின் வீழ்ச்சி யின்பின் கைப்பற்ற பட்ட பேரும் கைப்பொருள் தாமும் பங்கு கொளப்பட்ட போது ஸ்பீய்யா கைப்பற்ற பேருள் நீங்கள் குலத்தினில் உயர்ந்த பேரை கைப்படு அடிமை யாகக் கொளாதீர்கள் நபியே யென்ன. 1415
விடுதலை செய்யப்பட்டு வள்ளலார் ஏற்றுக் கொண்டார் அடுத்துள்ள மனைவிமார்கள் அவரையோர் யூத ரென்று விடுத்தனர் சொல்லம் ப.தில் விஷேடமாய் ஆயிஷா அன்னை படைத்தவன் தூத ருக்குப் புகன்றிட மனம்நொந் தாரே 1416
ஆயிஷாவை நோக்கி அண்ணல் அறிவுரை செய்வார் கூறும் சேயாக ஹாறுானுக்கு சொல்மூசா பெரிய தந்தை தூயநற் கணவர் முஹம்மத் சொல்லிடில் ஒன்றே நாங்கள் ஆயபேர் அனைத்தும் களிகொண் டான ஆதத்தின் வழித்தோன் றல்தாம் 1417
அன்னை மாரியா கிப்தியா
எகிப்துநாட் டரசர் தங்கள் இருநாட்டின் நட்புப் பேண அகமகிழ்ந் தனுப்பி வைத்தார் அடிமைகள் இரண்டு பேரை முஹம்மதர் அதிலோர் பெண்ணை மாரியா கிபிதி யாவை அகங்கொண்டார் அவர்பே ராலே அடிமைக்கும் வாழ்வு தந்தார் 1418
மரியாவின் மூலம் எம்மான் மகவொன்றைக் கண்டார் அண்ணல் பெரிதாக வளரு முன்னே படைத்தவன் எடுத்துக் கொண்டான் உரியபே றடைந்தார் கதீஜா உத்தமத் தாய்க்குப் பின்னர் ஒருமக வீன்ற விரிக்கும் உயரிய தாயா மன்னார் 1419
திருநபியின் திருமேனித் குோற்றப்பாங்கு
பெருமானார் அழகுதனைப் புகலப் போயின்
பகன்றிடலாம் தோழர்கள் புகன்ற வாறே
மெருகூட்டா துரைத்தபடி உரைக்க லாகும்
மாநபியின் அழகிற்கு அணியே தற்கோ
250 - ஜின்னாஹ் வழfபுத்தீன்

திருநபி காவியம்
திருநபியின் உருவை 'அலி' "அபூஹ" ரைரா”
"ஸ்மூரா” அல்பரா"ஜாபர்’ அனஸ்பின் மாலிக்”
'அர்ரட்பி” ”அபூஅத்து பை” இப்னு அப்பாஸ்”
அழகுறவே சொல்லியுள்ளார் அறிதல் நன்றே 1420
காதுவரை நீண்டசற்றுச் சுருண்ட கேசம்
கடைசிவரை கருமையது விரிந்த நெற்றி தோதாக அதற்குநீண்ட புருவம் கண்கள்
தீட்சண்யம் மிக்கனவாய் கரிய வண்டாய் மீதுற்ற இமையுரோமம் நீண்ட தாகும்
முனையுயர்ந்த நாசியோடு பக்கக் கன்னம் மாதுளையின் கனிச்சாற்றின் வண்ணம் சற்றும்
மிகையில்லா நேர்த்தியொடு விளங்கிற் றாமே 1421
தாடியொடு கூடியனம் மானின் நாடி
சிறிதுமல்ல பெரிதுமல்ல முகத்துக் கேற்பக் கூடியதாய் அமைந்திருக்கக் கழுத்துத் தூய்தாய் காண்பதற்கு அழகாக அமைந்தி ருக்கும் மேடுபள்ளம் அளவான மார்பில் முற்றும்
மிகையற்று நாபிவரை பரந்த ரோமம் கூடியதோள் உயர்ந்தவிரு மருவ தங்கள்
கையிரண்டும் நீண்டனவாம் கரத்தோ டொன்றும் 1422
அதியுயர்ந்த மென்பட்டில் மிருது வாக
அமைந்தஅங்கை கொண்டகரம் குளிரில் தோய்ந்தாம் குதிவரையும் நீண்டிருக்குங் கால்கள் மிக்கக்
கச்சிதமாய் உறுதியொடு கூடிக் காணும் பதியாதும் பதிந்ததுமாய் உள்ளங் கால்கள்
பாதத்தை அழகுசெய்யும் நடக்கும் போழ்து மிதியூன்றிச் சற்றேமுன் சரிந்தே செல்வார்
மாநபிகள் பள்ளத்திற் போகும் பாங்காய் 1423
251
966IIOsß 6Pffòö6)

Page 140
திருநபி காவியம்
அதியுயரங் கொண்டவரோ அல்ல எம்மான்
அண்ணல்நபி குட்டையான பேரு மல்ல அதிபருமன் அல்லஉடல் மெலிந்தும் அல்ல
அதிநேர்த்தி யாயுடலங் கொண்டி ருந்தார் மதிமுகத்து வள்ளலாரின் வண்ணம் வெண்மை
“மழைகால மின்னல்போல் வதனம்’ என்றே உதிர்த்தாரோர் கவி கவிஞர் 'அபூக்க பீராம்
உவந்ததனை அன்னஆயிஷா பாடு வாராம் 1424
“ஹரம்பின் சினா’னுக்கு நபியைப் பற்றிக்
கூறுகையில் "ஸ"ஹைர் சொல்லை உமருஞ் சொல்வார் “சராசரியாம் மனிதரிலும் புறம்பாய் எங்கு
சொரிகின்ற வெண்ணொளிகொள் இராவின் போழ்து பிரகாசஞ் செய்கின்ற மதிக்கொப் பார்கள்
பண்ணவனின் தூதரது தானாம்” என்று சிரிக்குங்கால் எம்மானின் சிரிப்பு பூக்கும்
சிறுநகைபோல் சிந்திடுமாம் மிகையே இல்லை 1425
'சிறுவனாக நானிருந்த போது கன்னம்
தொட்டுக்கரந் தடவுகையில் நானு ணர்ந்தேன் இறைநபியின் அங்கைகள் குளிராம் வாசம்
இணைந்திருந்த தாகுங்களில்த் துரி தோற்கும்” அறிவித்தார் "ஜாபிர்பின் ஸ்மூராஹற்” மற்றோர்
அறிவிப்பில் “அபூஹ"ரைரா’பனிக்கல் போன்றும் நிறைந்தமணம் தோற்குங்களில்த் தூரி யென்றும்
நவின்றதுவாம் உண்டாமே இன்னும் போன்றே 1426
"அம்பரிலோ கஸ்தூரி தனிலே வேறு
அகங்குளிரச் செய்கின்ற சுகந்தத் துள்ளோ எம்பெருமான் உடல்கொண்ட மணத்தைப் போன்று
என்றும்நான் நுகர்ந்ததில்லை’ அனஸ்சொல் வார்கள் தம்வழியே நபிசென்றால் நுகருங் காற்றால்
'திருநபிகள் சென்றவழி’ இதுவாம் என்றே நம்பிடுவர் பின்செல்வோர் என்றே 'ஜாபிர்’
நபிகளாரின் வாசனையை நவின்றுள் ளார்கள் 1427
252
ஜின்னாஹ் ஷரீபுத்தீன்
 

திருரவி asrgíulö
முதுகினிலே புயமிரண்டும் ஒன்றாய்க் கூடும்
மத்தியிலே நபித்துவத்தின் முத்தி ரையை பதித்துவைத்தான் இறைவனது புறாவின் முட்டை
போலுளவாம் சிறுபுள்ளி கொண்டி ருக்கும் விதிவழியே இறைவன்பால் சென்ற காலை
வள்ளலாரின் தலைதாடி இரண்டில் கூட்டிப் பொதுவாக நரைமுடிகள் இருப தேதாம்
பார்த்தே”னென "அனஸ்இப்னு மாலிக்” சொல்வார் 1428
பெருமானாரும் பண்புகளும்
ஆளுமையும் அனுபவமும் மிக்க எம்மான்
அதிகாரம் அனைத்துங்கை கொண்டி ருந்தும் முழுமையும்நற் பொறுமைமிக்க மனங்கொண்டோரால் மனத்துறுதி கொண்டுமன்று வாழ்திட் டார்கள் வழுவாதார் நீதிபொது பக்கஞ் சாரார்
வரித்ததெல்லாத் திறமைகளும் உயர்ந்த பண்பும் ஆளுபதி அல்லாஹற்வால் அருளப் பெற்ற
அருட்கொடையாம் அண்ணலுக்கு அதுவும் அன்றி 1429
கனிவான மனமுடையார் நபிகள் நாதர்
கண்ணறுங்கால் அச்சமொடு கண்ணி யஞ்செய் மனமேற்குந் தோற்றமுற்றார் நபித்து வத்தின்
முத்திரையும் அவராவார் நபிமா ருள்ளே மனவுறுதி கொண்டெதையும் எதிர்த்து வெல்லும்
மாண்புடையார் தாராளத் தன்மை மிக்கார் நினைவாற்றல் மதியூகம் நாண யம்மும் -
நாடியோர்க்கு உவந்தளிக்கும் மனமுங் கொண்டார் 1430
நபித்தோழர் அபூபக்கள் நபியைக் கண்டால்
நாடுவரே கவியுரைக்க அவருஞ் சொல்வார்
"நம்பிக்கைக் குரியவராம் மன்னித் தற்கு
நாயகனே தேர்ந்தெடுத்தான் இருளின் கண்ணே
253
ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 141
திருநபி காவியம்
அம்புலிபோற் பிரகாசங் கொண்டா ரட்து
அதிதொலைவில் இருள்விட்டு உளதாம்” என்று
சுபவேளை மகிழ்விண்கால் சந்தி ரன்போல்
தோன்றுவதாய் 'மாலிக்’குஞ் சொல்லு வாரே. 1431
துன்புறுத்தப் பட்டிட்ட போதுங் காயம்
தாங்கியுடல் வருத்தமுற்ற போதுந் தூதர்
மன்னித்தார் பொறுமை கொண்டார் பிறரின் மீது
முகங்கோணார் சினப்பதிலே இறுதி யாவார்
தன்னிறைவு காண்பதிலே முதன்மை ஆவார்
தருமத்தில் ஈடுகொள மற்றோ ரற்றார்
என்னளவர் இரந்தாலும் இல்லை என்னார்
இருப்பதனை முழுமையாக இடுவா ரன்றோ 1432
அஞ்சாது எதையுமெதிர்த் தியற்றும் ஓர்மை
அணுகுகின்ற சிக்கல்களை ஆளும் பான்மை நெஞ்சுயர்த்திப் போரினிலே காட்டுந் தீரம்
நாணத்தில் கன்னியரை வெல்லுஞ் சீலம் பஞ்சினிலும் வெள்ளைமனம் தாழ்ந்த பார்வை
பிறர்முகத்தை ஊடுருவி நோக்காப் பண்பு நஞ்சூட்டிக் கொல்லமுயன் றிட்டோர் தம்மை
நோகாதே மன்னித்த பண்புங் கொண்டோர். 1433
நீதிமிக்கார் பெருமானார் நேர்மை மிக்கார்
நம்பிக்கைக் குரியார்நல் லொழுக்கம் மிக்கார் ஒதுவதில் உண்மையன்றி வேறொன் றில்லை
உரையாட வருமெதிரி கூட எம்மான் தீதுரையார் அவர்பண்பில் திருப்தி கொள்வார்
திருத்தூது வருமுன்னும் அவ்வா றேதான் மாதருக்கு வாழ்வளித்த வள்ளல் தம்மின்
மேன்மைக்கு இன்னும்பல சொல்ல லாமே 1434
254
966)IIIOB 6Pföße)

திருநபி s[rsíulö
பாதணிகள் தமைத்தாமே பழுது நீக்கிப்
பாவனைக்குக் கொள்வார்கள் தமதா டைகள் மீதுற்ற கறைபோக்கக் கழுவு வார்கள்
முடைவார்கள் கிழிந்ததனை அணிந்து கொள்ள பேதமற்று அடிமையொடுஞ் சேர்ந்து உண்பார்
பற்றுடையார் குடும்பத்தில் நலமுங் காப்பார் சாதார ணமானவொரு மனிதர் போற்றான்
சீவித்தார் நபிநாதர் எடுத்துக் காட்டே 1435
தன்பின்னால் பிறிதொருவர் நடப்ப தின்பால்
திருப்திகொள்ளார் தனைச்சிறிதும் மற்றோர் தம்மில் அன்னியமாய் ஆக்கிமிகை கொள்ள மாட்டார்
அடிமைக்குஞ் சேவகர்க்கும் தம்மைப் போன்றே முன்னுரிமை உணவிலும் உடையிற் றானும் மாநபிகள் தந்திடுவார் தமக்கு ஏற்கா என்னவுண வாகிடிலும் இகழார் மற்றோர்
இடுவதனில் பங்குகொண்டே புசிப்பா ரன்றோ 1436
அரபுமொழி தனிலவர்கள் மேதை போல்வார்
அருவிநிகள் சொற்பொழிவ கைகூ டிற்றே சரியான உச்சரிப்பும் சொற்செ பூழிப்பும்
திருநபிக்கு இறைகொடுத்த சன்மா னங்கள் கிராமப்புற மக்களுக்கும் நகரில் வாழ்வோர்
குலகோத்திரப் பிரிவுக்கும் ஏற்ற வாறு பெருமானார் அவரவர்கள் பேசு கின்ற
பேச்சுமொழி தனிற்பேசும் திறன்கொண் டாரே 1437
அதிகளவில் பேசுவதை வெறுத்தார் வேண்டும்
அவசியத்தில் மெளனித்தும் இருக்க மாட்டார் ஒதுவதை வாய்திறந்து பிறர்க்குங் கேட்க
ஒப்பற்ற வார்த்தைகளால் உரையுஞ் செய்வார் அதிகளவில் பெருமானார் சிந்த னைக்கு
ஆட்படுவார் பெரும்பாலும் மார்க்கம் சார்ந்தே தீதறியார் திருநபியின் பண்ப னைத்துஞ்
தொடர்பவர்க்கும் சொர்க்கசுகங் கிட்டு மாமே. 1438
255
ஜின்னாஹ் ஷரித்தீன்

Page 142
திருநபி ofroấtulỗ
ஆக்கத்துணை நூல்கள்
1. நபிகள் நாயகம் - அப்துர் றஹீம்
2. Muhammad - Martin Ling
3. Islam - Mohaideen A. Cader
4. The Sealed Nectar - Sahi-Ur-Rahman
5. SahihAl-Bukhari - Translated by
Muhammad Mushin Khan
6. A. Glance at the Life
of the Holy Prophet of
Islam - Islamic Propagation Organization
256 ஜின்னாஷ் ஷரித்தீன்


Page 143


Page 144
வீரிய கவிதையின் விரிந்த எ ஈராயிரம் ஆண்டுக்காலக் க கூடாது என்கிற இறுக்கமான யாப்புடையாப் பாப்புனைதலி 68B5F6OOTL6)lff.
வெறுஞ்சொற்களால் விளைய அர்த்தச் சொற்களால் அனை நெய்யும் ஆற்றலர்.
அறிதலுக்கும் புரிதலுக்கும் த விரியும் இவரது கவிதைகை பூச் சொரிகிற சுகம் பூரிக்கும்.
காப்பியத்திற்கு உரை என்ற உரைக்குக் காப்பியம் செய்த
தமிழ் இலக்கிய வரலாற்றில் ஆக்கி அருஞ்சாதனை படை
இவர்தம் கவிதைகளின் செய கருத்தறிவித்தலாயிராமல் உ
இவரது கவிதைகளின் உள்6 மானுட நேயம் மணம் வீசுட மானுடநேயமே காவியமாய்
பேராசிரியர் மு.அ. அகமது ம
BN: 955 - 97349 - 7 - 0
 

56.606016OTT6io
ல் தம்மை ஆட்படுத்திக்
LUFTLITLD6io SILřiğögßuur T60T த்து வகைச் செய்யுளையும்
டையிலா நிகழ்த்தலாய் ள நுகரும்போது மனதுக்குள்
(Up60. D LDITgibJr5) முன்னோடி
ஆறு காப்பியங்க த்துள்ள ஆளுமையாளர்.
பற்பாடு வெறும் -ணர்வுட்டலாய் ஒளிரும்.
if frti
Dogš5TUi M.A. M.Phil. B.Ed,