கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தீரன் திப்பு சுல்தான் காவியம்

Page 1
Guial
 


Page 2

தீரன்திப்பு சுல்தான்
asTbius
ஜின்னாஹர் ஷரிபுத்தீன்
அன்னை வெளியீட்டகம்
மடுகுடுனை

Page 3
நூலின் பெயர்
ஆசிரியர்
uglyLifloodLD ) floodLD வெளியீடு
முதற் பதிப்பு அட்டைப்பட ஓவியம்
< 60)L &leOLDL
பக்கங்கள்
விலை
Title of the book Author
Copyright Published by
First published in Printers
Cover Art Cover design Pages
Price
தீரன் திப்பு சுல்தான் காவியம் டாக்டர் அகமது ஜின்னாஹற் ஷரிபுத்தீன் ஹம்ஸியா பரீதா ஷரிபுத்தீன்
அன்னை வெளியீட்டகம்
LDB5(Up60601
12.11.2O1O
மணியம் செல்வன் டும.செ)
ஷப்ராஸ் முஹம்மத் ஷரிபுத்தீன்
372
eBUTL 5OOf
Theeran Tipu Sultan Kaviyam Dr. Ahamed Jinnah Sherifuldeen.
C) Ms. Hamziya Farida Sherifudeen Annai Veliyeetakam Marutham unai.
12.11.2010.
Kleen PrinterS Regd. No. 242048 No 16, School Avenue Off Station Road, Dehiwela Tel 011-2730378 Maniam selvam (Ma. Se.) Shafraz Mohamed Sherifudeen
372
SBN 978-955-96932-4-6
barCord : 9789559 693246
RS. 500 / -

“செம்மறிபோல் நூறாண்டு சீவித்த லில்லொருநாள் வெம்புலிபோல் வாழ்ந்தழிதல் மாண்பு"
- திப்புசுல்தான்
eFLDjueOOTLib
தொழிலதிபர் சமூகத்தின் மீது பற்றுத் தோய்ந்ததன்பால் தொண்டுசெய்யும் தொண்டர் மேலாம் விழுமியங்கள் கொண்டுதமிழ்ப் பணியினூடே வரலாறு படைக்கின்ற சாதனைப்பேர் அழியாத வரலாறாய் அண்ணல் பேரில் ஆனதிருக் காவியப்பேர் விழாவொன்றாக்கி எழுத்துலகில் நன்னாமம் பதித்த அல்ஹாஜ் ஏவீ.எம். ஜாபர்தீன் தமக்கா மிந்நூல்

Page 4
தந்தையார் புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன் அவர்கள் அளித்த e38flü Lut
பாரம் பரியம் பழுதாகா தென்மக்கள் பேரர் முதலோர் தமிழ்க்கவிதை - சீராக ஆக்குந் திறம்பெற்றமைகின்றாரத்திறமை பூக்க விறையே துணை.
செந்தமிழிற் சீர்கவிதை செப்பமுடன் செய்துநலம் சொந்தமெனப் பல்பரிசைத் தொட்டுவரும் - என்தனயன் வைத்யக் கலாநிதி ஜின்னாஹ ஷரிபுத்தீன் சித்தம் மலர்க சிறந்து.
வெண்பாவகவல் விருத்தம் பலவகையும் பண்பாகப் பாடும் திறம்படைத்து - நன்றாக நாட்டிற் பெயரும் புகழுஞ் சிறந்தமைக ஏட்டிற் குலப்பேர் வரைந்து.

தீரன் திப்பு சுல்தான் காவியம்
ஞானத் தந்தை எஸ்.டி.சிவநாயகம் அவர்கள் அளித்த பொதுப் பாயிரம் (இரண்டாவது காவியமான புனிதபூமியிலே காவியத்திற்காக அளித்தது) பாவல்ஸ்ான் இவன்
நான்பார்த்த கவிஞரிலே நல்லதொரு கவிஞன்
நான்தேர்ந்த நண்பரிலே நல்லதொரு பண்பன் தேன்வார்த்த சொற்களினால் தெவிட்டாத கருத்தைத்
தென்றலென வீசியுளம் சிலிர்த்திவிடுஞ் சித்தன் கூன்நிமிர்ந்த தண்மதியம் பொழிநிலாவைப் போல
குளிர்பாயுங்கற்பனையால் உலகாளும் புலவோன் மான்தோற்ற கண்ணுடையாள் என்தங்கை பரீதா
மனம்நிறைந்த மன்னவன்நற் குடும்பத்தின் தலைவன்
துன்பமுற்றோர்க் குதவுகின்ற மருத்துவனாம் தொழிலில்
துலங்குதமிழ் கற்றறிந்த புலவர்மனி ஷரிபுத் தீனென்னும் புகழ்பூத்த ஆசிரியன் மைந்தன்
தீனிஸ்லாம் காப்பதற்கு எதிரிகளை வென்று எண்திசையுங் கொடியுயர்த்தி ஆண்டபேர் அரசன்
ஏற்றமிகு சலாஹத்தீன் காலத்தே வாழ்ந்த மின்னழகி மஹற்ஐப்பீன் காதல்மிளிர் கதையை
மிகத்தெளிந்த ஓவியமாய்க் காவியத்தில் தந்தோன்
மூலத்தில் கதைதந்த மூதறிஞர் ஹஸனால்
"முதற்கதையிக் காவியமோ என்றுவியப் பெய்தி நாலைந்து பக்கத்தில் நாவாரப் போற்றி
நல்லதொரு முகவுரையும் நல்கினாரென்றால் காலத்தை வென்றவொரு காவியத்தைத் தந்த
கவிஜின்னாஹற்’ வின்பெருமை கழறிடற்கும் எளிதோ! நூலாகத் தொடர்ந்துவரும் மாபுனித பூமி
எனும்நூலும் புகழ்பெறுமே ஐயமிதி லுண்டோ!
V

Page 5
ஜின்னாவூர் லுரியுத்தீன்
ஒருநாளில் ஏழுபத்துக் கவியெழுத வல்லான்
ஒருநூறு எழுதுவதும் இவனுக்கு இலகாம்! வருநாளில் ஜின்னாஹற்வின் பெயர்கவிதை வானில்
வரகவியென்றேயொளிரும் அட்டியதற்கில்லை அருட்கவியாய்ப் பரிணமிக்கும் கவிகா.மு. ஷரீபும்
அன்பொழுக ஈங்கிவனை மணிக்கவிஞனென்றார் ஒருகானும் மறையாதே உள்ளத்தே உறையும்
ஒண்கவிதை இவன்கவிதைதின்ைணமிது என்பேன்
சிலம்பொலிசெல்லப்பன் செந்தமிழில் மேதை
செப்பியஆலோசனையைச் சென்னிமிசை கொண்டு நலமுடனே மஹற்ஐப்பீன் காவியத்தின் பின்னே
நற்கவிதையால்புனித பூமிதனைப் படைத்தான் இலக்கியமெனும்விரிந்த பாக்கடலினுள்ளே
இரட்டைக்காவியமாக இவையிரண்டுமிலங்க பலவறிஞர் பாராட்டைப் பக்குவமாய்ப் பெறுவான்
பாவல்லான் இவனென்றே பாருலகம் ஏற்கும்.

தீரன் திப்பு சுல்தான் காவியம்
நவீன கவிதை வடிவில் காவியங்கள் பல படைத்தளித்தவரும் தமிழ்சினிமா உலகில் தனக்கெனத் தனித்தொரு சிம்மாசனத்தை நிரந்தரப்படுத்திப் புகழ்கொண்டவருமான மாண்புறு "கவிப்பெருஞ்சோதி " வாலி அவர்கள் அளித்த
வாழ்த்துரை காலம் கடந்து நிற்கும் காவியம்
என் "உள்ளம் கவர்ந்த கள்வர்" திரு. உமர் அவர்கள். மிகச்சிறந்த பண்பாளர். தமிழ் பாலும், தமிழ்த் திரையிசை பாலும் மிகுந்த பற்றுடையவர். திரைப்படத் தயாரிப்பாளரும் கூட. திரையுலகம் பற்றி திரு. உமரவர்கள் எழுதியுள்ள நூல்கள் ஆவணங்கள்போல் வருங்கால அய்வாளர்களுக்கு உதவவல்லவே! திரு. உமர்மூலம்தான் இந்த நூலாசிரியர் எனக்கு அறிமுகமானார். நூலாசிரியர் திரு. ஜின்னாஹற் ஷரிபுத்தீன் அவர்கள், மிகச் சிறந்த கவிஞர் பெருந்தகை என்பது. இந்தநூலின்கண் துலாம்பரமாகத் துலங்குகின்றது. மரபுவழி விருத்தங்களும், இறைச்சிப் பொருளும், ஏரார்ந்த எதுகை மோனைகளும், உவமான உவமேயங்களும் புத்தகம் பூராவும் பார்க்கக் காண்கின்றோம். ஆற்றொழுக்கான நடை, வாசகனை ஈர்த்து: எடுத்த புத்தகத்தை கீழே வைக்கவிடாது : அவனைத் தன்வசப் படுத்திக் கொள்வதுதான் ஒரு படைப்புக்குப் பெருமை சேர்க்கும். அத்தகு தகவு இந்தப் படைப்புக்கு நூறுவிழுக்காடு இருக்கின்றது. காப்பும், அவையடக்கமும் அற்புதமான வெண்பாக்கள்.
vii

Page 6
ஜின்னாவூர் ஷரியுத்தீன்
"தீரன்திப்புசுல்தான்காவியம்” கவிஞர் பெருமான் திரு.ஜின்னாஹற் ஷரிபுத்தீனின் திருப்பெயரை காலம் உள்ளளவும் ஓதிநிற்கும்.
"மனிதருள் ஏற்றத் தாழ்வு மலிந்திருந் திழிந்த காலம் மனிதருள் பேதம் இல்லை மதத்தினால் உயர்வும் இல்லை மனிதரை ஒன்று சேர்த்தல் மன்னனின் கடனாம் என்ற மனிதத்தை மதித்த வேந்தர் மனுக்குலத் தேந்தல் திப்பு"
இவ் அறுசீர் விருத்தம் ஒன்று போதும் இன்றைய மாந்தரிடை சமயப்பொறையை, இமயப் பொறையாய் வளர்க்க.
திப்பு சுல்தான் வரலாற்றை இளையதலைமுறை அறிந்துகொள்ள மனிதர்களை மதங்கள் பழிதீர்க்காமல், மனங்கள்வழி பார்த்து நேசிக்கஇத்தியாதி, இத்தியாதி நன்மைகள் இந்த நூலால் நாட்டுக்குக் கிடைக்கும்.
இந்தக் காவியத்தைப் பள்ளிப் பாடநூலாக வைத்தால் தமிழின் தகவும், தமிழ்மண்ணை ஆண்டவர் தகவும் ஒருசேரத் தெரியவரும். மாணவருலகு நல்ல மாண்புகளை எய்தும்.
விருத்தங்களால் ஆன கம்பராமாயணம் எங்ங்ணம் இன்றளவும் நிலைத்து நிற்கிறதோ அதுபோல் இந்த நூலும் நிற்கும். இதனைக் காலம் தின்னாது. கறையான் அரிக்காது.

தீரன் திப்பு சுல்தான்காவியம்
இக்காப்பியத்தின் சிறப்புகளை : வரிக்குவரி நான் சுட்டிக்காட்டி விவரிப்பின் விரியும் என அஞ்சி நான்பெற்ற இன்பம், நீங்களும் வாசித்துப் பெறுங்கள் என்று சொல்லி, கவிஞர் பெருந்தகை திரு.ஜின்னாஹற் ஷரிபுத்தீன் அவர்கட்கு என் வாழ்த்தையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
- வாலி
2.11. O9

Page 7
ஜின்னாவூர் லுரியுத்தீன்
கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் பேராசிரியர் சபா ஜெயராசா அவர்கள் அளித்த தகவுரை கவிஞர் டாக்டர் ஜின்னாஹற் ஷரிபுத்தீன் - அவரின்
ஆக்கப்புலக் காட்சி
வளம்மிக்க மரபுவழித் தளத்தில் நின்று ஒருபுறம் செவ்வியல் தழுவிய எழுத்தாளராகவும் மறுபுறம் நவீனத்துவமும் மனோரதியப் பாங்குடைய படைப்பாளியாகவும் விளங்குபவர் கவிஞர் டாக்டர் ஜின்னாஹற் ஷரிபுத்தீன் அவர்கள் தந்தையாம் புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன் ஹாஜியாரின் வழிநின்று செவ்வியல் மரபுகளை ஆழ்ந்தும் சுவைத்தும், புனைந்தும் மீளவலியுறுத்தியும் வருபவர். செவ்வியல் மரபு என்று கூறும்பொழுது இலக்கணச் செம்மை, யாப்பொடு நிற்றல், உருவத்தினதும் உள்ளடக்கத்தினதும் சமச்சீர்மை, பொருட்புனைவின் ஆழம், கலையாக்கத்தின் கவின் வளம் முதலாம் கலைப்பரிமானங்கள் பொதியப்பெற்று நிற்றலைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. "யாப்பொடு நிற்றல்” என்ற செவ்வியல் செயற்பாட்டில் யாப்புத்தளத்தில் நின்று "செய்யுள்” இயற்றல் என்ற ஒரடுக்குப் பரிமாணத்தில் மட்டும் கவிஞர் ஜின்னாஹற் ஷரிபுத்தீன் கட்டுப்பட்டவரல்லர். “செய்யுள்" தளத்தில் நின்று “கவிதை" புனைபவராகவே அவர் விளங்குகின்றார்.
அதாவது செய்யுளின் இலக்கணப்பொறி முறைக்குள் மட்டும் அவர் உள்ளடங்கி நிற்கவில்லை. வளமான உள்ளடக்கப் பொலிவு, கவின்மிகு எடுத்தியம்பல், பொருளொடு ஒன்றித்து நிற்கும் கற்பனைகள் கலைச்சுவைக் கையளிப்பு என்ற பரிமாணங்கள் அவரது ஆக்கங்களிலே எழுச்சிகொள்கின்றன. அவரது ஆக்கங்களை விளங்கிக்கொள்வதற்கு செய்யுள் என்ற எண்ணக்கருவுக்கும் “கவிதை” என்ற எண்ணக்கருவுக்குமிடையேயுள்ள பரிகோட்டினைத் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டியுள்ளது. இந்த அடிப்படையில் பதினாயிரம் கவிதையாக்கங்களை எட்டிப்பிடித்துள்ள பெரும் ஆக்கமலர்ச்சி கொண்டவராக அவர் விளங்குகின்றார்.

தீரன் திப்பு சுல்தான் காவியம்
காப்பியம் புனைதல் என்பது ஆக்கச் செயல்முறையின் கடினமான பணியாகும். நீண்ட கதைப்புலம் பற்றிய தெளிவு, கதைவளர்ச்சிக் கூறுகளை ஒன்றிணைத்தல், முரண்விசை எடுப்புக்களை தெளிவுற இழைத்தல், கவிதை வழியான எடுத்துரைப்பு நுட்பங்களை ஒழுங்கமைத்தல், கட்டுமானச் செம்மையாக்கல். பாத்திர இயல்புகளை கதைவழியாக நேர் மற்றும் எதிர்நிலைப்படுத்தல், கதை நிகழ்புலத்தின் சமநிலைப்பாங்கு முதலாம்பல்வேறு பண்புகளை மணிக்கோவையாக்கிக் காவியம் புனைதல் அத்துணை எளிதான கலைச்செயற்பாடு அன்று. கலையாக்கமும் சமூகம்பற்றிய அறிகையாக்கமும் காவியத்திலே சங்கமிக்கவேண்டியுள்ளன. இவற்றையெல்லாம் தொகுத்து நோக்கும் பொழுது சமகாலத்தின் காவிய வல்லுனராகவே கவிஞர் ஜின்னாஹற் ஷரிபுத்தீன் அவர்கள் விளங்குகின்றார். அவரது கவிதைகளினதும், காவியங்களினதும் உள்ளார்ந்த விசையாக மானிட நேயம் மேலோங்கி நிற்கின்றது.
சிறுமை கண்டு பொங்குதலும் அதன் அடிப்படையாக இழையோடி நிற்கும். சகோதரத்துவப் புலக்காட்சியும் ஆக்கங்களின் உட்பொருளின் இணைகூறுகளாகவுள்ளன. அவர் ஆழ்ந்துநிற்கும் புனித இஸ்லாத்தின் வழியெழும் அன்பும், இரக்கமும் சகமனிதருக்கு நிகழும் அல்லல்கண்டு ஆதரவுக் கரங்கள் தருதலும் சிறுகதைகளிலும், கவிதைகளிலும் மேலோங்கி நிற்கும் அறப்பண்புகளாகின்றன. மரபு வழுவாத் தமிழ் LDJl fledt மொழிப்புனைவோடு அப்பண்புகள் இயல்பாக ஒன்றித்துவிடுகின்றன.
சமூக நீதியானது பாத்திரங்களின் நிழல்களாக இவரது ஆக்கங்களிலே தொடர்கின்றன. பாத்திரங்கள் வழியாக நீதியின் எடுத்துரைப்பு முன்னெடுக்கப்படுதல் இலக்கிய முனைப்பின் தொடுவானத்தை எட்டி நிற்கின்றது. அந்த முனைப்பின் வழியாகத் தனக்கென உரிய தனித்துவமான எழுநடையை (Style) D6hirröd is கொள்கின்றார். ஆக்கத் திறன்களோடும் எடுத்தியம்பலோடும் அந்த எழுநடை சங்கமித்துக் கொள்கின்றது.
xi

Page 8
ஜின்னாளுர்ஷரிபுத்தீன்
கவிதை வருணனைகளிலே மரபுவழிவாய்ந்த யாப்புக் கட்டமைப்பு மட்டுமன்றி தமிழ்தழுவிய மனோரதியமான சிந்தனைகளின் செல்வாக்குகளும் இழையிட்டு நிற்கின்றன. தமிழ் இலக்கண மற்றும் இலக்கியப் பரப்புகளில் அவர் கொண்டிருக்கும் அறிகையின் பிணைப்புக்களே அவை துல்லியப்படுத்துகின்றன.
இயற்கையின் நேர்ப்பரிமாணங்களை இன்புற்று நோக்குதல், சமூகத்தின் நேர்ப்பரிமாணங்கள்மீது ஈடுபாடு காட்டல், முதலிய மனோரதியப் பாங்கான பரிமாணங்கள் அவரது கவிதையாக்கங்களிலே இழையிட்டு நிற்கின்றன. ஆனால் அவ்வாறு நேர்பரிமாணங்களை நோக்கி இன்புற்று நிற்கும் நிலையில் எதிர்ப்பரிமானங்களின்
இழைகளை அவர் ஒதுக்கித் தள்ளிவிடவில்லை. ஆக்கங்கள் பெருக்கெடுத்துச் செல்லும் வேளை அவற்றின்தரக் காப்பீட்டை அவர் கைவிடவில்லை. ஆக்கவுலகில் இதனையொரு முக்கியமான பரிமாணமாகச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. அதிகம் எழுத முனையும் எழுத்தாளர்கள் தரக்காப்பீட்டினும் அதிக கவனம் செலுத்தவேண்டிய தேவை வலியுறுத்தப்படுதல் உண்டு. ஆனால் அதற்கு விதிவிலக்காக அதிக கவிதைகளைப் புனைந்து கொண்டிருக்கும் ஜின்னாஹற் அவர்கள் அவற்றின் தரத்திலும் ஊடுகவனம் செலுத்துதல் அவற்றைப் படிக்கும் பொழுது மேலெழும் அனுபவமாகவுள்ளது.
பதினாயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளைப் புனையும் அவரது உந்தலும், சிறுவர் இலக்கியம், புனைகதை இலக்கியம், கட்டுரை இலக்கியம் முதலிய துறைகளிலே தடம் பதிக்கும் அவரது புலமைச் செயற்பாடுகளும் நீண்ட ஆய்வுகளுக்குரியவை.
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் இலக்கியச் செயலாளர், பொதுச் செயலாளர், துணைத் தலைவர் முதலாம் பெரும் பொறுப்புக்களை ஏற்றுத் தமிழியல்சார்ந்த வினைப்பாடுகளை முன்னெடுத்தமை நூலாசிரியர் ஆக்கப் பரிமானங்களின் பிறிதொரு பரிமாணமாகின்றது. அவரின் கலைவளமும் தமிழியல் வினைப்பாட்டு வளங்களும் மேலோங்கிச் சறப்புற எமது வாழ்த்துக்கள்.
xii

தீரன் திப்பு சுல்தான்காவியம்
நூலைப் பரிசீலித்துச் சிறப்புப் பாயிரமும் பாடியளித்த நபிக்குறள் கோக்கும் நாடறிந்த பெருங்கவிஞர் அல்-அஸ்சிமத் அவர்கள் வழங்கிய சிறப்புப் பாயிரம்
மாவலி நாட்டின் மகாகவி தூயயிறை நினைந்து தொடங்கும் இச்சிறு பாயிரம் நூலின் பதச்சோ றெனலாம் சமைத்த வுடனே கலத்தை எண்ணிடம் சமர்ப்பணம் செய்தார் ஷரிபுத்தீன் ஜின்னாஹற் ஆய்வின் காவியத் தக்கலம் முழுவதும் தாயின் பாலெனத் தருக்கிநான் உண்டேன் அட்சய பாத்திரம் அக்கலம் என்பதால் அற்புத மாயது ஆங்குமீள் நிறைந்தது கோடி கோடியாய்க் குவலயத் தமிழர் நாடியுட் கொளினும் நலியாக் கலமிது பன்முகங் கொண்ட பாரத நாடு மண்ணை மாந்தரை மதங்களைக் காக்கும் வீரர் பலரை விளைத்துத் தந்தது. தீரர் திப்பு திறந்ததோர் நூலாய் மண்ணுக் காகவும் மக்கட் காகவும் அண்ணலாய் வேந்தராய் ஆட்சிபுரிந்தனர் வரலாறவரை வாழ்த்திய போதும் திறனாய் வாளரோ தெளிவிலா துளரே கண்டுங் காணாக் கற்பினைப் போற்றும் தொண்டராய் வாழச் சூழுரைத் துளரோ? புதைந்து போயவப் பொன்வர லாற்றைச் சிதையா நிலையிற் சேரத் திரட்டிக் காவிய உருவிற் கற்றோர் உளமிடும் பாவலர் ஜின்னாஹற் பாமலை இமயமே!
xiii

Page 9
ஜின்னாவூர் லுரிபுத்தீன்
பொறியின் விரைவிற் போவதால் வாழ்க்கை துறையினி இலையே தொடர்நிலைக் கவிக்கெனச் சாற்றும் சிறுகவிச் சார்பினர் நாப்பண் ஆற்றல் மிக்கவோர் ஆண்மையர் ஜின்னாஹற். காவிய நிலையிற் கணிக்கப் படினோ மாவலி நாட்டின் மாகவி இவரே.
இந்தியத் தினர்க்கும் இஸ்லாத் தினுக்கும் நந்தீ விலங்கை நாடுளர் தமக்கும் பேரும் புகழும் பேறும் ஈந்திடும் தீரர் திப்புவின் சிறப்பிணிக் காவியம். மணியுரை நடையின் “மஹற்ஐபீன் காவியம்”, "புனித பூமியில்", போல்வன தொடர்ந்து பாகுடைக் கலைஞரின் “பன்ைடார வன்னியன்” ஆகிய நூல்களை அருந்தமிழ்க் கவிதையிற் காவிய மாக்கிக் கவிகலை வளர்தவர் ஏழாம் காவியம் இஃதோர் ஆய்வின் ஆழியாய்த் தமிழில் அமைதல் காண்கிறேன் காமுறும் ஏழாம் காவிய மாகத் திப்புவின் வாழ்வைத் தேரினில் வைக்கிறார். எப்புறம் கணிப்பினும் ஏழொரு மேலெண். ஏழேழ் நாடுகள் இனித்த முதன்மொழி வாழுகை கொள்ளும் வணமினும் பலப்பல வளர்தெம் மொழியிம் மானிலம் வளைத்திடச் செய்கென வாழ்த்தி அமைகிறேன்.
பிரார்த்தனை குற்றங் களைந்து குறைநீக்கிப் பாயிரமும் பொற்புறவே செய்தளித்த பாவேந்தி - நற்றமிழின் வித்தகனாம் அல்-அஸ்லிமத் வையகத்தும் ஆகிறத்தும் சித்தம் சிறக்கவிறை காப்பு. - ஜின்னாஹற் -
xiv

தீரன் திப்பு சுல்தான் காவியம்
இக்காவியம் உருவாகக் கரந்தந்துதவிய எண் நன்றிக்குரியோர்
முற்றும் உடனிருந்துதவிய மனைவி ஹம்ஸியா பரீதா ஷரிபுத்தீன்,
தூண்டிய தோடு ஆங்கில நூல்களும் தந்த ஜனாப், ஈரோடு கு.ஜமால் முஹம்மத்
நூல்கள் தந்த ஜனாய். கம்பம் முகம்மதலி நாவலாசிரியர் தோப்பில் முகம்மது மீரான்
வாழ்த்துரை வழங்கிய “கவிப்பெருஞ்சோதி” கவிஞர். வாலி
தகவுரை தந்த கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் பேராசிரியர் சபா ஜெயராசா
ஆய்வுப் பயணங்கள் மேற்கொள்ள உடன் வந்தவர்களும் நூலுருவாக்கத்தில் உதவி செய்தவர்களும்
பேராசிரியர் முனைவர் மு.இ. அகமது மரைக்காயர் பேராசிரியர் முனைவர் நசீமா பானு அகமது மரைக்காயர் கவிஞர் அல்-அகருமத்
கவிஞர் அஷ்ரஃப் சிஹாப்தீன் பொறியியலாளர் கவிஞர் நியாஸ்.ஏ.ஸமத் கவிஞர் டாக்டர் தாஸிம் அகமது
ஜாபர் சாதிக் பாக்கவி செல்வி. ஐரீனா அகமது மரைக்காயர்
XV

Page 10
ஜின்னாவூர் ஷரிபுத்தீன்
கணினிக் கட்டுரைகள் தேடியளித்த செல்வி முரீபெருமாள் (கவிஞர் லுணுகலை முரீ)
முற்றிலும் பொருளுதவி செய்துதவும்
எமது மக்கள், மருமக்கள்
தரிக் தாஹா காசிம். அர்ஷத் முஜீப் ஷரிபுத்தீன், றோஷன் ஹாமித் ஷரிபுத்தீன், ஷப்ராஸ் முஹம்மத் ஷரிபுத்தீன், குர்ஷித் ஷாமிலா தரிக் காஸிம் பாத்திமா ஷரீபா ஷரிபுத்தீன். ஷானாஸ் அலம் ஷரிபுத்தீன், பாத்திமா ஷிர்ஷிமா ஷரிபுத்தீன்,
Reference :
Tippu Sultan : By Dr. Sheikali Tiger Sultan : By Rahman Azar Tippu Sultan the Tiger of Mysore : By Dr. Samuel Strandberg s Sweden] The T.V. Serial “The Sword Of Tipu Sultan'
xvi

தீரன் திப்பு சுல்தான் காவியம்
தீரன் திப்பு சுல்தான் காவியம்
அத்தியாயங்கள்
காப்பு, அவையடக்கம், இறையருள் வேட்டல், ஆக்கியோன் பற்றி, நூன் முகம்
bTLGBLUL6olb இந்தியா,மைகசூரின் புவியில் அமைப்பு. ஆட்சி அமைப்பு திப்புவின் தந்தை ஹைதர் அலி புலியொன்று பிறந்தது வெற்றிமேல் வெற்றி விளையும் பயிர் நாட்டில் ஏற்பட்ட மாறுதல்கள் இளமைக் கல்வி யுத்த முனையும் திப்புப் புலியும் பதினைந்து வயதில் போர்முனை காணல் சமாதானத் தூது சுயநலத்தால் தோற்றுப்போன தூதும் -திப்புவின் வெற்றியும் தொடர்ந்து வந்த தொல்லைகளும் திப்புவின் தீரமும் முக்கூட்டு ஒப்பந்தம் ராணா ஒப்பந்தம் திப்புவின் திருமணம் இரண்டாவது மைகர்ப் போர் ஹைதரின் இறுதிக் காலம்
புலியின் வருகை
. செங்கோலும் மணிமுடியும்
மங்களூர் ஒப்பந்தம் திப்புவின் ஆட்சித் திறன்
கல்விக்கு உரமளித்த காவலர் . இயற்கையில் ஈர்ப்பு நிருவாகத் திறன் ... BIT p6ir UITg515still bu60LL16Duplib

Page 11
ஜின்னாவூர் லுரியுத்தீன்
3O.
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
4O.
41.
42.
43.
44.
45.
46.
47.
48.
49.
5O.
51.
52.
53.
54.
55.
56.
57.
58.
59.
6O.
61.
62.
if IL6.601 u60LL LIGOLD ஏவுகணை நுட்பத்தின் முன்னோடி திப்புசுல்தான் 5L-pu60DL
மக்களின் காவலன் மாதருக்கு வாழ்வளித்த மன்னர் திப்பு திப்புவின் சிந்தனைகளும் செயற்பாடுகளும் திப்புவின் கொள்கைகள் கின்னனுர் ஆட்சியில் குறுக்கீடு காலத்தைப் பேசும் கட்டுமானப் பணி பிற நாட்டுத் தொடர்புகள் திரைமறைவில் துரோகத் தீ அரசகட்டிலும் அறப்போர்களும் ஆனந்த்பூர் கோட்டையும் - அடலர்தம் வெற்றியும் கேணல் மத்யூவின் தோல்வியும் பழிதீர்த்த கொலையும் வெற்றி வாகையுஞ் சோக மேகமும் மீண்டுமொரு திருமணம்
மதங்களின் காவலர் திப்பு சுல்தானின் சிருங்கேரி மடத் தொடர்புகள் சிவன் கோயிலும் சுல்தானின் ஜீவகாருண்யமும் வணக்கத்தல மான்யங்களும் நன்கொடைகளும் இந்துக்களும் ஆட்சிப் பொறுப்புக்களும் காஸிகான் என்னும் அரசவிசுவாசி கொன்றிட முயன்றார் கொடியவர் அமைச்சர்கள் சந்தித்தனர் வெள்ளையரின் சூழ்ச்சி பாலம்பூர்வரை வந்தார் பறங்கியர் வெள்ளையரின் அட்டகாசமும் திப்புவின் போர்க் கொடியும் பெரும்படையும் வீர முழக்கமும் கிழத்தியின் களிப்பு
தாயமுதும் தீரர் திப்புவும் சிறுவனின் தீரமும் திப்பு செய்த சங்கையும் திப்புவின் மனிதாபிமானம் பெருமை சேர்க்கும் பிரயத்தனங்கள்
xviii

தீரன் திய்யு சுல்தான்காவியம்
63.
64.
Ꮎ5.
ᎾᏮ.
67.
68.
69.
7O.
71.
72.
73.
74.
ア5.
76.
77.
78.
79.
8O.
81.
82.
83.
84.
85.
86
87.
88.
89.
9O
91.
சாவனூர் பட்ட அடி மராட்டியரின் கொள்ளையும் திப்புவின் சவாலும் செங்குருதிச் சாக்காட்டில் மராட்டியர்கள் குலப்பெருமையும் குறுகிய மனமும் புதிய கவர்னர் கான்வாலிஸ் பறங்கியர்க்குக் கற்பித்த பாடம் காஸிகானுடன் ஒரு கலந்துரையாடல் கோபக் கனலிடை கான்வாலிஸ் "நிசாம்" "வோலிஸ்" சந்திப்பு மராட்டியர் சம்மதம் திப்புவின் சீற்றம் எரிநெருப்பில் கனிந்தமழை போருக்குத் தயாராகும் பறங்கியர்கள் நடந்தது என்ன? ஒப்பந்தமும் பிள்ளைப் பிணையும் மைசூர் மக்களின் மனக்குமுறல் நம்பிக்கைத் துரோகமும் நாடுகடத்தலும் மூன்றாவது மைசூர்ப் போர் கிருஷ்ணாராவின் துரோகமும் -
கைகடந்த கோட்டையும் நான்காவது ஆங்கில மைகர்ப் போர் காதல் மனைவியுடன் கடைசிச் சந்திப்பு இறுதி யுத்தம் எகிறிற்று துரோகிக்குக் கிடைத்த தண்டனை சீரங்கப் பட்டினத்தின் தெருக்கள் திப்புவின் இறுதிநாள் போருக்குப் பின் போருக்குப் பின்மைகரின் ஆட்சி மாற்றம் வேலூர் கலவரமும் திப்பு சுல்தான் குடும்பமும் பிரார்த்தனை
xix

Page 12
வெளியீட்டுரை
O
இதுவரை கவிஞர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களின் பல்துறை சார்ந்த பத்தொன்பது நூல்களை அன்னை வெளியீட்டகம் சார்பாக நாம் வெளியீடு செய்துள்ளோம். தொடர்ந்தும் அவரது ஏழாவது காவியமான தீரன் திப்பு சுல்தான் எனும் இக்காவியத்தையும் பதிவு செய்வதில் நாம் பெருமை கொள்கிறோம்.
இது இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மறக்க முடியாத ஒரு வீரத் தியாகியின் வரலாறாகும். தமது மண்ணைச் சொந்தம் கொண்டாட வந்த அந்நியரை நாட்டை விட்டுத் துரத்தும் குறிக்கோளோடு போராடி, தமது மண்ணுக்காக களத்தில் உயிர்நீத்த வீரபுருஷன் திப்பு சுல்தான்.
வரலாற்று நாயகர்களான சுல்தான் சலாஹCத்தீன், பண்டார வன்னியன் போன்றோருடன், இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் பேரிலும் நூஹ் நபி பேரிலும் இறைநேசர் உவைஸoல் கர்னி அவர்களின் பேரிலும் இவர் இயற்றிய காவியங்கள் முன்னர் எமது வெளியீட்டகத்தால் பதிப்பிக்கப்பட்டு வாசகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
அதுபோல் இக்காவியமும் வரவேற்பு பெரும் என்று நாம் பெரிதும் நம்புகின்றோம். வாசகர்களின் ஆதரவு எமது வெளியீட்டு முயற்சிகளுக்கு பக்கபலமாக அமையுமென ஆசிக்கின்றோம்.
- ஹம்ஸியா பரீதா ஷரிபுத்தீன் அன்னை வெளியீட்டகம்
மருதமுனை

ஜின்னாவூர் ஷரிபுத்தீன் O 1 o
தீரன் திப்பு சுல்தான் காவியம்
காப்பு
அந்நியரைத் தம்மணன் அடிதழுவ மாட்டாதே
செந்நீர்மண் சிந்தித்தனையீந்த - இந்தியனாம்
திப்புசுல்தான் வாழ்வுதனைச் செய்பவந்தேன் வல்லவனே
ஒப்பில்லா உன்னருளே காப்பு. O1
அவையடக்கம்
வான்பரிதி செய்யும் வினைகண்டு மின்மினியும் ஏன்முயன்ற தாமோ ஒளியுமிழ - கானிருளை ஓட்டத் துணிந்ததற் கொப்பாம்நான் காவியங்கள் தீட்டத் துணிந்த செயல். O2
இறையருள் வேட்டல்
உருவிய வாளி னோடுடே உலகஞ்சச் சமர்க்க ளத்தில் பெருவீராங் காட்டி வெள்ளைப் பறங்கியர் தமையெதிர்த்த திருமகன் இந்தியாவின் தென்புலச் சிங்கம் திப்புப் பெருமையைச் செப்பல் வேண்டிப் பண்ணவன் றனைப்பணிந்தேன்
O3 திப்புவின் வாழ்வு தன்னைத் திரித்துப்பொய் சாற்றி வைத்தார் கப்பிய களங்கந் தன்னைக் களைந்திட வேண்டி நானும் ஒப்பினேன் ஜமால் முஹம்மத் ஈரோடு இளையான் கூற்றைத் தப்பின்றிப் பாட வல்லோன் துணைவேண்டிப் பணிகின் றேனே
O4 மருவிய இடர்களெல்லாம் மண்ணுறச் செய்து நாட்டில் தருமங்கள் காத்து மக்கள் சகலமும் பெற்று வாழ உரியன அனைத்தும் செய்த ஒப்பிலான் கோவோர்க் குள்ளென் பெருமையும் கொண்டான் தம்மின் புகழ்கூற இறைபணிந்தேன்
O5

Page 13
தீரன் திப்பு சுல்தான் காவியம் C2O
இனமத பேதமற்றே எல்லோரும் ஒன்றா மென்னும் மனத்தினன் கொள்கை தன்னில் மாசுகற்பித்தோர் தம்மின் இனவெறித் தடமளித்தே இயல்புவென்றறிதல் வேண்டி முனைந்தனன் நாணிந் நூலை முதலவன் றனைப்பணிந்தே
O6
தோல்வியை ஒப்பா வெள்ளைத் தோலினர் வெள்கிப் பொய்யை வால்செவி கண்ணும் மூக்கும் வலிந்துமே பொருத்தி உண்மை சால்வது இதுதாம் என்னச் செப்பினர் பிறருங் கூடி போலியாய்ச் சரிதம் சொன்னார் பழிநீக்க இறைபணிந்தேன்.
O7 இனமத பேத முற்றோர் இழிவுறுநிலைக்குள் இன்று மனுக்குலம் குருதி சிந்தும் மனப்பொறிக் கடிமை யானார் இனப்பகை மறத்தல் செய்ய இயம்பினேன் இந்நூல் திப்பு இனத்திடை அறம்வளர்த்த இயல்பேற்ற இறைபணிந்தேன்
O8
உழுபவர் தமக்காம் சொந்தம் உழுநிலம் எனமுஹம்மத் தொழுவதற்கேற்றோன் தூதர் சொல்லிய போதம் தன்னை வழுவிலா தியற்றி மண்ணின் வழிமுறைச் சீர்மை காட்டி ஒழுகிட வைத்த திப்பின் ஓர்மையைச் சொலப்பணிந்தேன்
O9
மார்பினை மறைத்தல் கூடா மரபென்று மலபார் பெண்டிர் சீர்மைக்குத் தடைவிதித்த சிறுமையைத் தடுத்தே திப்பு வேரொடும் ஒழிந்து போக வேண்டுமென்றாணை யிட்டு நாரியர் மானங் காத்த நலங்கூற இறைபணிந்தேன்.
O
தன்மானம் காத்த லோடு தன்னுடைநாட்டின் மேலாம் மண்மானம் காக்க முஸ்லிம் மதத்தவன் என்றும் நோக்காத் திண்மையோ டெதிர்த்தான் நிஜாமைத்தோற்றோடச் செய்தான்மார்பில் புண்ணுண்ட வீரன் திப்பு புகழ்சொல இறைபணிந்தேன்
11

ஜின்னாவூர் லுரியுத்தீன் < 3 D
குருதியிற் றோய்ந்த தோளும் கொடும்பகை கொண்ட மாற்றான் குருதியிற் றோய்ந்த வாளும் கொண்டநற் புகழும் வீரப் பெருமையால் வரலாற்றின்கண் பொறித்திட்ட பேறு கொண்டோன் அரும்பெரும் தியாகந் தன்னை அறைந்திட இறைபணிந்தேன்
12
ஆக்கியோன் பற்றி
வெண்பாவில் புலியென்றான்றோர் விளம்பிய புலவர் மார்க்கப் பண்பாளர் ஷரிபுத் தீன்தம் பாகமாய்க் கொண்டு வாழ்ந்த மண்புகழ் ஆயிஷா உம்மா மகவெனப் பிறந்த ஜின்னாஹற் விண்புகழ் திப்பு சுல்தான் வாழ்வினைப் பாடினேனே
13
உடன்பிறப் பானோர் பத்தோ டேழுபெண் ஒன்பதாகும் உடனெட்டாம் ஆண்கள் ஈன்றோர் ஒன்றேதாய் தாதை யாகும் திடனொடு வாழ்ந்தார் தாதை தொண்ணுறும் இரண்டும் ஆண்டு உடனன்னை வாழ்ந்தார் எண்பத்தைந்தாண்டுக் காலம் சீரே.
14. ஆயிஷாவென் நாமங் கொண்டே அமைந்தது மனையும் ஒன்றச் சேய்களாய் ஆண்கள் நால்வர் தனித்தொன்றே பெண்ணாம் பேரர் வாய்த்தனர் பலராய் இன்னும் வழிவழி இறைவன் நல்க வாய்த்திட வேண்டும் மக்கள் வளருயர் சந்ததிக்கே
15 உரைநடை கண்டதன்னாள் உயர்காவியங்கள் மாறாய் உரைநடை காவியத்தின் உருக்கொண்ட முதன்மைச் சீர்மை மருவியதாகும் என்றன் “மஹஜபீன்” காவியத்தால் உருவாகும் இதனினோடும் ஒரேழென்றாகு மாமே
16
முதன்முதல் "மஹற்ஜ பீன்”பின் முறைதொடப் "புனித பூமி” கதைகளம் அவற்றின் மூலர் "ஹஸன்”என்பார் "நபிகள் நூஹற்”இன் அதியுயர் வாழ்வும் சூஃபி “உவைசுல்கர் னிதம் வாழ்வும் கதைகளாய் நானே ஆக்கிக் காவியம் இரண்டுஞ் செய்தேன் 17

Page 14
தீரன் திப்பு சுல்தான் காவியம் C4D
தமிழக முதல்வர் செய்த செந்தமிழ்ப் புதினம் தன்னை அமைப்பினில் சிறிது மாற்றி ஆக்கினேன் “பண்டார வன்னி இமைப்பிலான் வெள்ளைப் பேரை எதிர்த்தவன் காதை அஃதும் அமைந்தது மறுமைக் கான ஆவணம் அடுத்தாம் சொல்வேன்
18 இறுதிநந் நபியின் வாழ்வை எழுபது நாட்களுக்குள் உறுத்திடும் உடல்உ பாதை உணர்ந்திலேன் வடித்தெடுத்தேன் பெறுமதில் மூவை நூறு பாக்களாம் மனத்தடத்தில் நிறைந்தது சொர்ணக் காவில் நிலைத்தது மறுமைக் கென்றே
19 கவிதைகள் கொண்ட நான்கு கோப்புநூல் கூட வின்னும் கவிதைகள் பன்னூறாகப் படைத்துளேன் சிறுகதைகள் நவவழிப் படைப்பாய் இரண்டு நூல்களும் புதின மொன்றும் உவந்திடும் சிறுவர் நூல்கள் என்புறம் நான்கதாகும்
2O மகாகவி இக்பால் கோத்த முத்துக்கள் "ஐவாயே வழிக்வா” வகைசெய்தேன் தமிழில் கற்க மொழிமாற்றக் கவிதை யாக செகம்படைத் தாளுகின்ற தனியன்பால் கேட்கும் கேள்வி உகந்ததாய் அவன்சொல் வாம்போல் பதிகளும் ஞான நூலே
21 அரசுசால் அமைச்சர் டாக்டர் ஏ.சீ.எஸ். ஹமீத்செய் ஞான விருந்து"அன்பின் கருனையின் பேரூற்று" என்னும் நூலை மருந்ததாம் மனுக்கு லத்தின் மாசுகொன்றிடவென் றெண்ணி பொருந்தும்பாற்றமிழில் செய்தேன் பெரும்பணி புகழிறைக்கே
22

ஜின்னாவூர் லுரியுத்தீன் Oslo
நூன் முகம்
முன்னர்ஆறு காவியங்கள் செய்தேன் என்று மொழிந்துள்ளேன் காரணங்கள் வேறு வேறாம் கன்னல்மொழி தமிழுக்காம் என்னா லான கடுகளவு பங்காகும் அழிவை நோக்கி முன்னர்போலல்லாது படைப்பாக் கங்கள் முடங்கலுற்ற காரணத்தால் கடமை ஓர்ந்தேன் என்னன்னை மொழிக்கன்னை தனக்குச் செய்யும் ஏவற்பணி போலாகும் இதுவா மன்றோ
23
பண்டார வன்னியன்னென் நாட்டு மன்னன் பேரறிஞர் கலைஞரவன் புகழைப் பாட “பண்டாரக வன்னியன்"என் நாமங் கொண்டு புதினமொன்றை ஆக்கிவைத்தார் புகழ்ச்சி நாமம் கொண்டிட்டான் “பாயும்புலி எனவாம் நானும் கோத்தெடுத்த இந்நூலும் பதிலுக் காம்போல் தென்நாட்டின் திப்புசுல்தான் தனது வாழ்வைத் தேர்ந்தெடுத்துப்பாடுகின்றேன் ஈழத்தோனே
24 மொழியாலே ஒன்றுபட்டோர் தமிழர் நாங்கள் மாறுபட்ட போழ்தினிலும் வாழ்புலத்தால் அழியாது தாய்மொழியைக் காப்ப தெங்கள் அனைவரதும் பொறுப்பாகும் பழைமை பேசும் இழிநிலையில் இல்லாதே புதிய ஆக்கம் ஏற்புடைத்தாயச் செய்தளித்தல் வேண்டும் அன்றேல் பழிசொல்லும் சந்ததியும் புதுமை என்றே பற்பலவும் நுழைந்துதமிழ்ச் சீமை கொல்லும்
25

Page 15
தீரன் திப்பு சுல்தான்காவியம் C 6 D
பற்பலவாய்ப் பிறநாட்டுச் சித்தாந்தங்கள் புகுந்தெங்கள் தாய்மொழியின் தனித்து வத்தை முற்றுமழித் தொழிக்கின்ற கொடுமை தன்னை மனத்துணர்ந்தேன் மனஞ்சோர்ந்தேன் இன்று எம்முள் கற்றறிந்த அறிஞரெனப் பேர்கொண்டோரும் கீழ்மைக்குத் துணைநின்றார் எதிர்காலத்தோர் பற்றற்றுப் போவாரே தமிழின் மீது பார்த்திருத்தல் பாவமென்றென் பங்கைச் செய்தேன்
26
காலத்தால் அழியாதே காவியங்கள் கம்பனின்றும் வாழுகின்றான் சீறா சொன்ன சீலன்உமர்ப் புலவனின்னும் சீவிக்கின்றான் செந்தமிழ்தேன் தந்ததனால் இன்னும் பல்லோர் சாலவுவப் பானபல நூல்கள் செய்து தமிழோடு சேர்ந்தொன்றி வாழுகின்றார் காலூன்றி வாழுமவை காலா காலம் கற்றவர்க்கு முதுசொமென நானும் செய்தேன்
27
மறைந்தாலும் மறையாத புகழைக் கொண்ட மாமனிதர் திப்புசுல்தான் மேமாதத்தில் இறைவனடி சேர்ந்தாரதன் நான்காம் நாளில் எனதுதந்தை புலவர்மணிஷரிபுத் தீனும் பிறந்ததந்த நாளில்தான் நூற்றுப் பத்துப் பெருவருட இடைவெளிக்குப் பின்னதாகும் ஒருவகையில் பொருந்துமது நினைவில் கொள்ள ஒன்றியந்த நாள்வரும்போழ் தென்ற னுக்கே
28

ஜின்னாவூர் ஷரிபுத்தீன் C7o
நாட்டுப் படலம்
Sjösum
கூர்முனை தெற்க தாகத் தோற்றத்தில் முக்கோணத்தாய் நீரினால் முப்புறத்தும் நிலமொரு புறமுங் கொண்ட பாரதம் பரந்த கன்ற பெருநிலப் பரப்பேதிப்பு காரணர் பிறந்த நாடாம் கீழ்த்திசைத் தேசமாகும்
29
அரேபியக் கடலாம் மேற்கே இந்துமா ஆழி தெற்கே மறுபுறம் கிழக்கில் வங்க விரிகுடாப் பரப்பும் ஒன்றும் பெரும்புலம் பீட பூமி பெருமலைத் தொடர்கள் நீரின் அரண்கொண்டதாகும் திப்பும் அவதரித் தாண்ட நாடாம்
3O
வான்தொடு மலைகள் நாட்டின் வளஞ்சிறந்தோங்க வென்னும் பான்மையில் புனல்பெருக்கிப் பெருநதியோட்டும் ஆங்கே கான்தொடர் இயற்கை தந்த கொடையெனப் பரந்து காணும் தேன்சிந்து கனியி னோடே தெவிட்டாத நறையுங் கொண்டே
31 நதிதரு புனலும் வான்பெய் நீரும்மண் செழிக்கச் செய்யக் கொதிதிரைக் கடல்கள் தம்மின் குறைதீர்க்கும் திரவியங்கள் வதிபுல மாந்த ருக்காய் வாரியே வழங்கும் வாறாம் முதலவன் கருணை கொண்ட மாபெரும் நாடீ தாமே
32
பல்மொழிபேசும் நாடு பல்லின மக்கள் சேர்ந்தே இல்லொரு பகைமை எம்முள் என்னுமால் வேறு வேறாம் பல்வகைக் கலாசாரத்தின் பற்றுதல் கொண்டும் வாழும் தொல்புகழ் நாகரீகச் சீர்மையுங் கொண்ட நாடே
33

Page 16
தீரன் திப்பு சுல்தான்காவியம் O8 O
உலகத்தின் அதிசயத்தின் ஒன்றெனுந் தாஜ்மஹாலும் உலகத்தின் உச்சியாகும் “எவறெஸ்ட்"டும் உடைத்த நாடு கலைகளின் முதன்மை பாரோர் கட்புலன் செவியும் மாந்தப் பலகலை வடிவ மோங்கும் பாரதப் புனித நாடு
34 மனுப்பலம் முதன்மை நாட்டின் முன்னேற்றம் காண மக்கள் சனத்தொகை குன்றின் நாடு செழிப்புறா செய்வாரற்றே மனுக்குலம் இந்தியாவின் மாபெரும் பலமாம் தம்மின் அனைத்துடைத் தேவைமுற்றும் அவர்களின் கரத்தால் சாலும்
35
கைத்தொழில் வளமும் சேர்ந்து கடல்படு வாணிபம்மும் பொய்த்திலை என்றும் மண்ணில் பெறுவளம் அதற்கும் மேலாம் செய்திறன் கொண்டோ ரென்றும் தாய்மண்ணின் வறுமை கொல்வார்
கைத்தலம் கொண்ட மூலம் காணுமே கையேந்தாதே
36
ஐவகை நிலமாம் நெய்தல் அதனொடு குறிஞ்சிமுல்லை செய்பயிர் விளைக்கும் மருதம் செந்தழற் பாலை மண்ணும் வெய்யோனின் சீற்றம் காணா வெண்பனிக் குளிர்ரோ ருட்ணம் கைபடுத் துலகை ஈர்க்கும் தனித்துவம் கொண்ட நாடே
37

ஜின்னாவூர் ஷரியுத்தீன் C9 o
மைகரின் புவியில் அமைப்பு
மலைத்தொடர் கிழக்கும் மேற்கும் மைகரின் அரண்க ளாகும் மலபாரே மேற்கின் எல்லை மிகப்பெரு மலைத்தொடர்கள் நிலைத்தமண் கிழக்கிற் கூட நீண்டதாம் பருவ தங்கள் நிலப்புலம் இதுவே பத்தோ டேழாம்நூற்றாண்டுக் காலம்
38
இயற்கையின் எல்லை யாக இருந்தன மலைத்தொடர்கள் இயைபுறு மழைக்கும் அஃதே ஏற்றதாய் அமைந்து போக வயப்படலான தாங்கே வாகுறக் குளிர்மை சீத மயப்படும் இயற்கை கொஞ்சும் மைகரின் நிலப்பரப்பே
39
திப்புவின் காலம் மைகர் தலைநகர் அவரே பின்னாள் ஒப்பினார் வடக்கை நோக்கி ஒருபத்துக் கற்கள் தள்ளிச் செப்பமாய் அமைந்திருந்த தீவினைத் தலையாய்க் கொள்ள அப்புலம் காவேரிக்கும் அருகமைந்திருப்பதாகும்
4. Ο தீவினோர் புறத்தில் முன்னோர் தோற்றிய கோட்டை யொன்று யாவுமே பொருத்த முற்றும் உறுதியோ டமைந்திருக்கக் கோவுடன் பட்டா ரஃதைக் கொண்டனர் தலைநகர்க்கே
பூவியற் பாது காப்பும் பொருந்திய தால தாகும்
41
சீரங்கப் பட்டண மென்னும் திருநாமம் கொண்ட தம்மண் ஓரங்கள் வயல்களாலும் ஒன்றிய கான்களாலும் சாருமே மலைகளும்பூதாழ்வுற்ற பள்ளத் தாக்கும் காரணம் இவைகளும்தான் கொண்டவம் முடிவுக் கன்னாள்
42

Page 17
தீரன் திப்பு சுல்தான் காவியம் O10O
ஆட்சி அமைப்பு
பெருநிலப் பரப்புக் கொண்ட "மராட்டியாம்” வடக்கில் “பூனா”
திருநகரதற்கு முற்றுந் திறன்படு படைபலத்தோடு)
இருந்தது வடக்கே மற்றோர் இருக்கையாய் “ஹைத்திராபாத்” அரசராய் நிஜாம்"தான் ஆட்சி இயற்றினார் முஸ்லிம் பேரார்
43 மேற்கெல்லை மலபார் ஆட்சி முற்றுமொன்றாக வன்றி தோற்முற்றிருந்த தன்னாள் சிதறியே பலபேர் ஆண்டார் சாற்றுவர் திருவாங் கூரே சக்திமிக் கதுவாம் மன்னர் ஏற்றமுற்றிருந்தார் மற்றோர் திறைவரிசெலுத்தினாரே 44
படைபலம் இருந்ததாலே பாளையத்தார்கள் அஞ்சி கொடுத்தனர் ஆட்சிதம்மைக் கைகடத்திலாதிருக்க அடுத்தவர் சிதறி வாழ்ந்தால் அதுவேதாம் வாய்ப்பென்றெண்ணும்
கொடியவர் ஆங்கிலேயர் கழுகுக்கண் காலம் நோக்கும்
45
குறிவைத்துப் பாயும் கொம்பு கொண்டகான் வராகன் கூட்டம் உறும்வகை நோக்கிக் காத்தே உன்னித்து இருப்பான் போன்றே பொறுத்திருந்ததுவாம் வெள்ளைக் கும்பனி அற்றை நாளில் அறிந்திலர் இந்தியர்கள் அடாதுவந் துறுகால் மட்டும்
46 ஒற்றுமை யற்றே மற்றும் ஒருவரை அழிக்கும் பாண்மைப் பற்றிழி குணத்தினோர்கள் பாழ்படக் கடல்கள் தாண்டிக் கொற்றமுற்றாள வந்த கொள்ளையர் வெள்ளைப் பேர்கள் முற்றிலும் பரந்து தம்மின் மேலாண்மை வலுக்கச் செய்தார்
47
சென்னையை முதன்மை யாக்கிச் செயற்பட்டார் பறங்கியர்கள் சென்னையில் “சென்ஜோன்ஸ்” கோட்டை சக்திமிக் கதுவாய் அன்னார் முன்னிலை நோக்க மான வியாபார முயற்சி கட்கே
உன்னதப் பொருத்தம் அஃதென் றுணர்ந்ததால் கொள்ளைக் காரர்
48

ஜின்னாவூர் லுரியுத்தீன் C11o
கடலண்டு பிரதேசங்கள் குறுநில மன்னர் பேரால் தொடர்ந்தன ஆட்சி மாற்றார் தயவொடு கால்கள் பற்றி அடிமைகள் போலு மன்னார் ஆகினர் வெள்ளையர்தம் கொடுமைக்கும் அஞ்சினாரோ கொள்கையற்றிழிவு பெற்றார்
49
பதினெட்டாம் நூற்றாண் டஃதின் பிற்காலில் பிரஞ்சுக் காரர் ததிகெட்டு நாட்டை விட்டுத் துரத்திட ஓட்டங் காண அதுமுதல் வெற்றி கொண்ட ஆங்கிலப் பெருச்சாளிப்பேர் அதிபதி யானார் ஆங்கும் ஆட்சியிற் பலமுங் கொண்டார்
5O பிறிதொரு தளமுமாகப் பம்பாயிற் பறங்கிக் காரர் உறுதிகொண்டிருந்தார் எல்லா உத்தியும் ஆங்கிருந்தே முறைகொண்டதாகும் திப்பு மன்னனை வீழ்த்து தற்காம் குறியவர்க் கதுவே தம்மைக் கதிகலங் கிடச்செய் பேரால்
51 உடைமைக ளனைத்தும் சேர்த்தே ஒன்றிடக் காத்து வைக்க உடையநற் பாது காப்பும் உள்ளதாய்க் கல்கத்தாவை உடன்பட்டார் வெள்ளையர்கள் ஒன்றிய ஆட்சி ஏற்று நடைமுறைப் பட்டார் "கவர்னர்” நிலைத்துமே என்ற தாலே
52 பொருளிட்டும் நோக்க மன்றிப் பிறிதொரு காரணத்தை வருகையின் போது முன்னாள் வெள்ளையர் கொண்டாரல்லர் பெருகிய வருவாய் கண்டு பேதலித்தவர்கள் தம்மை நிரந்தரமாக்கும் எண்ணம் நிலைபெற மாற்ற முற்றார்
53 தற்காப்பு வேண்டும் என்ற தக்கதோர் காரணத்தால் உற்பத்தியான தொன்றே ஒன்றிய படைக்கூறாகும் பற்பல பிரிவாய் ஆட்சிப் பொறுப்பினில் சுதேசியோர்கள் கொற்முற்றிருந்த போதும் கைப்பல மற்றே வாழ்ந்தார்
வந்தேறு குடிகளாக வாழ்ந்தவர் பிற்காலத்தில் சொந்தமே கொள்ள எண்ணம் தோன்றிட இந்தியர்தாம் பந்தமுற்றார்கள் வீழ்ச்சிப் பாதைக்கும் கால்கோளானார் சொந்தத்துள் பகைமை கொண்ட தாழ்வினை கருவாகிற்றே 55

Page 18
தீரன் திப்பு சுல்தான்காவியம் C12O
ஒவ்வொரு பிரிவுக் குள்ளும் ஒட்டுண்ணி போல்நுழைந்து செவ்வையாய் அதிகாரத்தின் துணைபெறச் சூழ்ச்சி செய்தே பவ்விய மாக வெற்றிப் பதாகையும் உயர்த்தினார்கள் அவ்வினை அறிந்த திப்போ அரியெனச் சினத்திட்டாரே
56
பதினாறாம் சதவாண் டின்கால் பாரதப் பெரும்பு லத்தின் அதிபெரும் பகுதி டெல்லி ஆட்சிக்குள் அடங்கிற் றன்னாள் அதிகாரம் மொகலாயர்கை ஆயினும் வெள்ளையர்க்கே அதிகாரம் சோரம் போன அவலமும் நடந்த கேடாம்
5ア மொகலாயர் முஸ்லிம் தங்கள் மதத்தினால் சிறுபான் மையோர் அகலக்கால் விரித்துத் தம்மின் ஆட்சியில் பலங்கொண்டார்கள் தகைத்திருதிப்பு சுல்தான் தந்தையும் முஸ்லி மேதான் வகைத்திலை அவர்தம் சார்பு வெள்ளையர் தமக்கா மன்றே
58 அடிபணிந் திடாத போதும் அந்நியர் அச்சங் கொள்ளும் படிஹைதர் அலியும் அன்னார் புத்திரர் திப்புவும்பேர் இடைஞ்சலாய் ஆனார் வெள்ளை ஆட்சிக்கு விரோதம் செய்தார் படைகொண்டும் ஆங்கிலேயர் பயந்தனர் அவர்களுக்காம்
59 தொடர்பற்றுப் போனார் தம்மின் நாட்டொடு வெள்ளை மாந்தர் தடையான தொலைதூரத்தில் தங்கிவாழ்ந்திருந்ததாலே நெடுநாட்கள் பிடித்த தெந்தத் தகவலும் வந்து சேர கடல்வழித் தொடர்பு ஒன்றே காலத்தின் நியதியாகும்
6Օ மேலிடக் கட்டளைகள் வந்துசேர்ந்திடவும் தங்கள் பாலிருந் தெந்தச் செய்தி போயடைந் திடவும் நாட்கள் வேலியாய் அமைந்ததாலே விருப்பம்போல் "கவர்னர்” தம்மின் வேலையில் சுயமாய் நின்றார் வேண்டியதியற்ற லானார்.
61 தன்னிட்டப் படியே ஆட்சி செய்திடக் கிடைத்த தாலே அன்னியர் ஆட்சி கீழ்மை அராஜக வழியில் செல்லும் மன்னர்கள் இந்தியர்கள் மண்டியிட் டவர்கள் பின்னால் சென்றதும் வேரூன்றற்கு வித்திட்ட தாகிப் போகும் 62

ஜின்னாவூர் லுரியுத்தீன் C13 o
திப்புவின் தந்தை ஹைதர் அலி
திப்புவுக்கு அரசுரிமை சேர்வதற்குத்
தந்தைவழி காரணமாம் அவர்தம் தந்தை ஒப்பாரும் மிக்காரும் அற்ற வீரர்
உயர்பதவி படைப்புலத்தில் கொண்டிருந்தார் செப்பரிய வெற்றிபல கொண்டு மைகர்ச்
சேனைக்குப் புகழ்சேர்த்து நாடுங் காத்த ஒப்பரிய செயல்பின்னர் நாட்டை ஆளும்
உயர்வினையுந் தந்ததவர் ஹைதர் மன்னர்
63 ஆயிரத்தோ டெழுநூற்று இருபத் தொன்றில்
அவதரித்தார் ஹைதர்அலி மைகர் மண்ணில் காயபலம் மிக்கவராய்த் திகழ்ந்தார் சற்றுங்
கற்றறியாதவரெனினும் மைகர் மன்னர் நேயமுற்றார் அவர்திறனில் தம்ப டைக்கு
நலஞ்சேர்க்கத் துணைத்தலைவர் பதவிதந்தார் ஆயபலன் கிட்டியது நினைந்த வாறே
ஆளுமைக்கே உவமையென அலியிருந்தார்
64 "பங்களூர்க்கு வடக்கிருந்த "தேவஹல்லிப்
பிரதேசச் சிற்றரசை வெற்றி கொள்ளும் பங்கினிலே அவர்தம்மின் ஆற்றல் கண்டு
பதவியிலே உயர்ச்சிபெற்றார் தலைமை ஏற்றார் சிங்கமெனப் போரினிலே திகழ்ந்த தோடே
சிறந்தநிருவாகியெனும் பெயருங் கொண்டு சங்கைமிகு தலைவரென மக்கள் ஏற்கும்
சிலாக்கியமும் கொண்டிருந்தார் ஹைதர் அன்றே
65 துணைவியையும் வழமைக்கென் றுகந்த வாறாய்த்
“தேவஹல்லி” யுத்தத்தின் போது ஹைதர் இணைந்தழைத்துச் சென்றிருந்தார் அப்போழ் தேதான்
இவ்வுலகின் தரிசனத்தைத் திப்பு பெற்றார்

Page 19
தீரன்தியு சுல்தான் காவியம் O 140
அணையாத புகழினுக்கே ஆகும் பிள்ளை
அவதரித்த போதன்னை தாதை நெஞ்சம் இணைந்தார்கள் மகிழ்ந்தார்கள் எதிர்காலத்தின் ஏற்றமிகு விடிவெள்ளி தோன்றிற் றென்றே
66 கற்றறிந்த பண்டிதராம் பூரணய்யா
ஹைதருக்கு நண்பரென வானார் ஆட்சி பெற்றதுமஷ் வறிஞருக்கு முதன்மைத் தானம்
புந்தியுரை மந்திரிமார் தமக்குட்தந்தார் சொற்றிறனும் தொலைநோக்கும் தெளிந்த ஞானச்
சுரங்கமெனும் வாகவரும் அமைந்ததாலே உற்றபல இடர்களைய உறுதுணையாய்
உடனிருந்தார் ஹைதர்தம் உளந்தேர்ந்தாரே
67 புலியொன்று பிறந்தது
ஹைதர்அலி முதல்மனைவி ஷாபாஸ் பேகம்
செல்வமெனப் பெண்னொன்றைப் பெற்ற பின்னர் செய்கையற்றுப் போனதுடற்பாக மொன்று
தன்னிச்சைக் கியையவுடல் மறுத்த தென்ப துய்யமனங் கொண்டவராம் அன்னை தம்மின்
துயர்தாங்கி வாழ்ந்தாலும் கணவர் வாழ்வு பொய்யாகிப் போமென்று வருத்தங் கொண்டார்
பதிக்குமொரு துணைவேண்டிப் பாடுற்றாரே
68 ஆட்சிசெய்ய ஆண்மகவு வேண்டு மென்னும்
அவசியத்தை அவருணர்ந்தார் தம்மனத்தை ஆட்சிசெய்யும் கோவிடமும் எடுத்துச் சொல்ல
ஆதரவாய்ப் பதிலற்றே அதிர்ந்து போனார் தீட்சணியம் மிக்கவவர் நோக்கினுக்குச்
சம்மதியாக் கணவரிடம் எதிர்காலத்தில் நாட்டிற்குத் தலைமைதாங்க ஆண்வேண் டாமோ
நிர்க்கதியாய்ப் போகாதோ நினைவீரென்றார் 69

ஜின்னாவூர் ஷரியுத்தீன் C15 lo
உன்னுடனே நான்வாழ்ந்த காலம் இன்றே
ஓய்ந்ததுவோ எனக்கேனோர் புதிய வாழ்வாம் சொன்னதனை மறந்துவிடு எதிர்காலத்தைத்
தீர்மானம் செய்வதிறை எனமறுக்க மன்னவனின் கடனொன்றும் உண்டாம் தம்பின்
முறையான ஆட்சிக்கு வாரி சொன்றைத் தன்னளவில் தயார்செய்தல் மறுக்கலாமோ
தனக்கென்றோர் மகவிருந்தால் சாலும் என்றார்
7O பன்முகமாய் அவசியத்தைப் புரியச் செய்யப்
பாடுபட்டார் பலநாட்பின் பதியும் ஒப்பத் தன்னெடுநாள் தோழி பஃருன் நிசாவைத் தேர்ந்தே
தலைவனுக்குத் தரவவர்தம் விருப்பம் கேட்டார் மன்னவரின் மனையாதல் புறமி ருக்க
மனமொன்றி வாழ்ந்திருந்த தோழி வாழ்வில் தன்னையொரு பங்காக்குந் திரானியற்றே
தோழிமனத் தாசைக்குத் தடைசொன் னாரே
ァ! “உயிராக உன்னைநான் நேசிக்கின்றேன்
உறுதுணையாய் இருப்பதென்றன் பணியதாகும் செயவிளையேன் துரோகமொன்றும் நிர்ப்பந்தம்நீர் செய்யாதீர் தேர்ந்துவேறோர் பெண்ணைக் -
கொள்வீர் தயைகூர்ந்து மறுப்பதற்காய் இதுநாள் மட்டும்
தோழமையாய் இருந்ததெண்ணி மன்னிப்பேற்பீர்” நயமாக எடுத்துரைத்தார் பஃருன் நீசா
நாயகியோ மனங்கனிய வேண்டி னாரே
ア2 நம்பிக்கை யுள்ளவளாய் நானுன் னைத்தான்
நாடுகின்றேன் நாயகரை நன்றாய்க் காக்கும் செம்மைக்கும் உனையன்றி உகந்த பெண்ணாய்
தேரேன்நான் மற்றொருபெண் ஓர்ந்தே உன்றன்

Page 20
தீரன் திப்பு சுல்தான் காவியம் C16 O
சம்மதத்தைத் தாவென்னைத் தவிர்த்தல் செய்யாய் தாய்த்தானம் பெற்றேயோர் மகவை ஈன்றே
இம்மண்ணைக் காத்தலுக்காய் இணங்கும் என்ன
ஏற்பதன்றித் தோழிவழியற்றுப் போனார்
73
மன்னவரும் மணப்பெண்ணும் விருப்பை ஏற்க
மணவினையும் நடைபெற்ற திறைநாட் டம்போல் இன்புற்றார் மனத்தளவில் "ஷாபாஸ் பேகம்”
எதிர்காலம் ஒளிமயமாம் எனமகிழ்ந்தார் என்னமனு வேட்கையான போதும் காக்கும்
இறைநாட்டம் உடன்பலனைத் தள்ளி வைக்கத் தன்வழியில் கருத்தரிக்கப் பஃருன் நீசா"
தாமதத்தைக் கொண்டிருந்தார் வருடம் ஐந்தாம்
74
ஆண்டைந்து கடந்துசெல அச்சம் கொண்டார்
ஆகாதோ மகவொன்றை கொள்ள "ஷாபாஸ்" பூண்டிருந்த நம்பிக்கை பொய்யாய்ப் போகும்
பாடாகும் எனவெண்ணி வருந்துங் காலை ஆண்டவனின் நல்லடியார் "திப்பு”ம் ஆங்கு
அடக்கமுற்ற தலத்துக்குச் சென்று அன்னார் வேண்டுதலை இறைவன்பால் ஒப்பு விக்க
விளைகவெனப் பிறர்சொல்ல விருப்பங் கொண்டார்
75
படைத்தவனே அனைத்துக்கும் போது மாவான்
பண்ணவனின் நல்லடியார் பொருட்டி னாலே கிடைக்கட்டும் இறையருளால் மகவு என்னுங்
கருத்துன்ன கணவருடன் "ஸியாரத்” செய்ய படைத்தவனும் விரும்பினனோ "பஃருன் நீசா”
புண்ணியனின் புண்ணியத்தால் கருவொன றேற்றார் அடைந்தஇன்பம் கொஞ்சமல்ல “அல்லாஹற்” வேநாம்
அடிபணிந்தோம் எனக்கனிந்து வழுத்தினாரே 76

ஜின்னாளுர்ஷரிபுத்தீன் C_17 כ
படைப்பவனின் பேரருளால் பண்பில் மிக்க
பஃருநிசா பிள்ளையொன்றைப் பெற்றெடுத்தார் அடைந்தபெரு மகிழ்வுக்கோர் அணையே இல்லை
ஆண்குழந்தை ஆட்சிக்கு அணிசெய்வாறாம் கொடையிறைவன் தந்தவருள் என்றே நன்றி
கூறுவபோல் இறைநேசர் "திப்பு மஸ்த்தான்” அடிநாமம் தனைப்பெயராய்த் "திப்பு” என்றே
அம்மகர்க்கப் பெயர்கட்டி அழைத்திட்டாரே
77
பத்தீர்நாள் பதினோராம் திங்கள் ஆண்டு
பற்றியதோ ராயிரத்து எழுநூற்றைம்படுது) ஒத்ததிங்கள் துல்ஹஜ்ஜூ பத்தாம் நாளில்
ஓராயி ரத்தறுப தோடு மூன்றில் இத்தரையின் புகழ்கொள்ள நாட்டை ஆள
இறைகொடுத்த கொடையாகப் பிறந்தார் திப்பு “பத்தேஹற்அலி திப்பு”பங்களூரில் "கோலார்”
பிரிவினிலே “தெவனஹல்லி பிறந்த ஊராம்
78
கட்டியனைத் தார்மகனைக் கையிலேந்திக்
குதுகலித்தார் மனைவிமுகம் நோக்கிச் சொல்வார் திட்டமிவன் வெள்ளையரைத் துவம்சம் செய்தே
திசைகெட்டு ஓடிடவுஞ் செய்வா னென்றார் மட்டில்லாப் பெருமகிழ்வு தாய்க்கும் தானோர்
மகனின்ற பெருமையினால் பதியை உற்றுப் பட்டகட னிறுத்தேன்நான் அரசிக் கென்றன்
பதியாக உமைத்தந்த பேற்றுக் கென்றார்
79 நோயுற்றுப் போனதனக் கீடாய் மற்றோர்
நங்கையினைக் கணவனுக்கு மனையாய்த் தந்து தாயுறவு கொண்டேயோர் மகவைத் தாங்கத்
தோழியினைத் தேர்ந்தளித்தார் “ஷாபாஸ் பேகம்”

Page 21
தீரன் திப்பு சுல்தான் காவியம் C 180
சேயினைத்தாய் கண்டதுமே நினைவிற் கொண்டார்
செய்தவினை முதல்மனைவி எண்ணம் போன்றே தாயாகி மகனின்ற பேற்றோ டொன்றித்
தலைவனையும் மகிழ்வித்த காரணத்தால்
8O
தலைவிக்கு மகவொன்று பிறந்த தெண்ணித்
தோழியரும் மகிழ்ந்தார்கள் தொட்டி லிட்டு விலையில்லாப் பெருந்திருவைத் தாமே பெற்ற
வாகினிலே குதுகலித்தார் ஆடினார்கள் குலஞ்செழிக்க வந்தசெம்பொற் சிலையா மன்ன
சிறுமகவை முத்துசொர்ண அணிகள் பூட்டி அலங்காரம் செய்தார்கள் ஒன்றிநின்று
ஆராரோ ஆராரோ பாடினரே
8 ஆராரோ ஆராரோ ஆரீராரோ
ஆராரோ ஆராரோ ஆரீராரோ ஆராரோ ஆராரோ ஆரீராரோ
ஆராரோ ஆராரோ ஆரீ ராரோ சீராளா திப்புமகன் தெய்வப் பேறே
செம்மலரே கண்ணுறங்கு தந்தை தம்மின் பேர்வழங்க வந்தவனே கண்ணுறங்கு
பஃறுநிசா பெற்றபொன்னே கண்ணுறங்கு
82
வீரத்தின் வார்ப்பேமெஞ்ஞான ஊற்றின்
விழியேயிம் மண்ணுய்ய வந்த கோவே தீரத்தின் புதுப்பொலிவே சிம்மம் ஈன்ற
சிம்மவிளங் கன்றேரீகண்ணுறங்கு பூரணனின் பொக்கிஷமே கண்ணுறங்கு
பெற்றமனம் அமைதிபெற நீயுறங்கு ஆராரோ ஆராரோ கண்ணுறங்கு
அழகுமணி ஆரமேநீகண்ணுறங்கு 83

ஜின்னாவூர் ஷரிபுத்தீன் O 19)
தாய்ப்பேறு தந்தவனே ஆரீராரோ
தாய்மண்ணின் புகழ்க்கொடியே ஆரீ ராரோ வாய்முறுவல் பூப்பவனே மணியே முத்தே
வண்ணமலர் பூங்கொத்தே விழிகள் ஆறு காய்கின்ற வெண்மதியே கண்ணே ராரே
கனிந்தபுது மாதுளையே கொம்புத் தேனே வேய்குழலின் நாதவொலி சிந்துஞ் செல்வா
வெற்றித்திருக்குலக்கொழுந்தே விழியுறங்கு
84 தோழியர்கள் தாலாட்டுப் பாட்டி சைத்துத்
துயிலவைக்க முயன்றார்கள் தொடர்ந்தார் நீண்ட வேளையழிந்தேகியதேயன்றித்திப்பு
விழிமூட மறுத்தேதன் கைகால் வீச நீளவீழி பூத்தன்னை புகல்வார் தந்தை
நெஞ்சத்தில் கொண்டவினை வெள்ளைப் பேரை ஆழிகடந்தோடவைத்தல் அதனைச் செய்ய
அவனின்றே துணிந்தான்நீர் அகல்வீரென்றே
85 வெற்றிமேல் வெற்றி
"நனன்ஜராஜ்” “தேவ்ராஜ்"என் றிருவர் மைகர்
நாட்டின்பெரு செல்வாக்குப் பெற்றிருந்தார் முனைந்தார்கள் மந்திரிமார் சகோதரர்கள்
மைகரின் மகாராஜாதனையன்னாரின் பணிமுடக்கி ஆட்சிவளம் தனைத்தம் மாக்கப்
பெற்றார்கள் வெற்றியதில் நனன்ஜ ராஜே தனைமுதன்மை ஆக்கிமைகளுர் ஆட்சி தன்னைத்
தொடர்ந்தனனே ஆட்சிதிசை மாறிற் றன்றோ
86 அடிக்கடிபோர்க் களங்கண்டார் அண்ணன் தம்பி
ஆட்சிவலுப் பெற்றிட்ட நாளிருந்தே ஒடுக்கவென முனைந்தார்கள் "ஹைத்தி ராபாத்”
ஒரத்து ஆட்சியினை நிசாமை வீழ்த்தக்

Page 22
தீரன் திப்பு சுல்தான் காவியம் O 20 O
கிடைத்ததொரு சந்தர்ப்பம் வெள்ளை யோரைக்
களமுனையிற் சந்திக்க ஹைதர் அந்தப் படையணிக்குத் தளபதியாய் இருந்தார் வெள்ளைப்
பறங்கியரின் போர்முறைகள் தெளிந்திட்டாரே
87
காலத்தைச் சிறிதேனும் விரயம் செய்யாக்
காரணத்தால் படைப்பலமும் பெருகிற் றன்னாள் ஆலைகளும் பெருகினவே ஆயுதங்கள்
அதிநவீன வடிவத்தில் பிரெஞ்சுக் காரர் சாலவவர்க் குதவினரே ஹைதர் அன்னார்
தொழில்நுட்ப அனுபவத்தைப் பயனாய்க் கொண்டார் வேலைதந்தார் அன்னவர்க்குப் போர்நுட்பங்கள்
விளக்கப்படை வீரருக்கு வெற்றி நோக்காம்
88
வெற்றித்திருவென்றிருந்த வாகால் மைசூர்
விரும்பியது திண்டுக்கல் பிரதேசத்தை முற்றுமவர் பரிபால னத்துள்ளாக்க
முழுப்பொறுப்பும் ஹைதர்பெற்றுச் சீர்மை செய்தார் அற்றையநாள் வரிவசூல்கள் செய்தோர் கொண்ட அசமந்தப் போக்கினின்று விடுகை பெற்று அற்றறுந்து கைலஞ்சம் போகச் செல்வம்
அதிகரிக்கப் பாடுபட்டார் வெற்றி கண்டார்
89 வழமைக்கு மாறாக முப்பாங்கேற்றம்
வரித்திட்ட வரியோடு மைக ருக்கும் கொழுத்ததொகை கிடைத்திடவும் ஹைதர் செய்தார்
கோன்முறையும் உன்னதத்தின்நடையுங் காணும் பழுத்தபெரு ஞானத்தார் போலும் மண்ணைப்
பாலித்தார் படிப்பறிவே இல்லாப் போழ்தும் முழுப்புலனும் நிருவாகப் பொறுப்பினுக்கும்
மண்காக்கும் கடமைக்கும் செறிந்த தன்றோ 90

ஜின்னாவூர் ஷரிபுத்தீன் O2 lo
நடைமுறையில் ஆட்சிநிருவாகந் தன்னை
நனவாக்கிக் கொண்டிருந்த அண்ணன் தம்பிக்கு) இடையிலொரு யுத்தகாரணத்தினாலே
இயல்புநிலை இல்லாதோர் இணக்க பேதம் உடன்படவே சிக்கலுரு வாகிற் றன்னாள்
உரியபல மற்றிருந்தார் மன்னர் தாமும் கடனாகப் படையினர்க்கும் இருந்ததாட்சி
காலியுறத் திறைசேரி காய்ந்த தாமே
91
ஈதறிந்த ஹைதர்அலி சகோதரர்க்குள்
இணக்கமொன்றை ஏற்படுத்தி மன்னருக்கும் தோதான வாகினிலே அபயங் காட்டிச்
சொந்தமாகக் கொண்டிருந்த சொத்தினாலே யாதுமொரு நிலுவையுமற் றனைவருக்கும்
ஏற்றகடன் தரப்படையோர் திருப்தி கொண்டார் போதுமான தொகைப்பணத்தை யுத்த வெற்றிப்
பொருளினின்று ஹைதரஅலி சேர்த்திருந்தார்
92
மராட்டியர்கள் மைகர்மேல் படைநடத்த
முன்னின்று தளபதியாய் ஹைதர் வெல்ல வராததோல்வி மைசூரைக் காத்த தென்ற
வண்மைக்குப் பரிசாகப் "பங்களூரைத் தரவிழைந்தார் மன்னர்”ஹைதர்"கைக் கொண்டார்
சகோதரர்கள் இருவருமே இல்லை ஆங்கு மரணித்தா ரொருவர்மற்றவரும் சேவை
முற்றுவைத்து ஒதுங்கிவெளி அகன்றிட் டாரே
93 கலையார்வங் கொண்டவராம் மைசூர் மன்னர்
கணிகையரின் ஆட்டத்தில் மயங்கித் தானும் புலனழிந்து நடனமாடும் போழ்து ஒர்நாள் பரிதாபமாகவுயிர் பிரிய மாண்டார்

Page 23
தீரன் திப்யு சுல்தான் காவியி O 22)
நிலையான ஆட்சியற்ற நிலைமை தோன்ற
நிருவாகம் அரசிகையின் பலமா கிற்று வலுகூட்டித் தன்பலத்தை யுறுதி செய்ய
வரித்தாரோர் வஞ்சகனை பிராமனப்பேர்
94
பொறுப்பாக இருந்தாட்சி நடத்தி யோர்கள்
பேரற்றுப் போனதனால் ஹைதர் ஆட்சிப் பொறுப்பேற்க வேண்டியொரு பொறுப்புஞ் சேரப்
பொறுப்பேற்றார் பொறுப்புடனே அரசு யியற்றப் பொறுப்பேற்ற நாட்களிலே பொறுப்பற் றேயோர்
பேரவர்க்கு நம்பிக்கை யாயிருந்தே பொறுப்போடு நடந்திருந்தும் பதவி ஆசை
பெருநெருப்பாய்ப் பற்றச்சதி செய்திட் டாரே
95
கந்தாராவ் என்றவந்தப் பிராமணன்மேல்
ஹைதர்அலிநம்பிக்கை கொண்டிருந்தார் முந்திநிருவாகிகளாய் இருந்த வர்கள்
மறையஅலி பொறுப்பேற்கப் பொறுக்க மாட்டாச் சிந்தையினால் சதியொன்றை அரசியோடு
சேர்ந்தியற்றி வெற்றிகண்டார் சிலகாலந்தான் புந்தியிலாச் செய்கையினால் ஹைதர் மீண்ட
போழ்துபெரும் தண்டனைக்குள் சிக்கி மாண்டார்
96 சதியின்பின் ஏற்பட்ட சிக்கல் காலாய்ச்
சீரங்கப்பட்டினத்திலிருந்து சில்நாள் ஒதுங்கியொளிந் திருக்கின்ற நிலைமை தோன்ற
ஊர்கண்ணில் படாதிருந்தார் "பங்களூரில் விதிவசமே குடும்பத்தைத் தனிக்க விட்டு
வதிந்ததுவும் அப்போழ்தே உறவுக் காரர் உதவியுடன் புதியபடை யொன்று கூட்டி
உட்புகுந்தார் மைகருள் வெற்றிகண்டார் 97

ஜின்னாளுர்ஷரிபுத்தீன் C23 o
விளையும் பயிர்
இந்நாளில் நடந்தவொரு நிகழ்வைக் கூறின்
இளமையிலே திப்புசெய்த மயிர்கூச் செய்தும் விந்தைமிகு சாகசத்தை விளக்க லாகும்
வீரத்தின் விளைநிலமாய் அவரைச் சாற்றும் தந்தையினைப் பிரிந்திருந்த சிறுவர் ஈர்பேர்
திப்புவுடன் தம்பிகரீம் என்பார் ஆய்ந்து கந்தாராவ் வந்திருந்தான் சதிசெய்தோனாம்
கைதுசெய்து மறைத்துவைத்தான் காண்பாரற்றே
98
உயரமிகு கோட்டையொன்றுள் பாது காப்பாய்
உயரியநல் உபசரணை யோடு வைத்தான் பயக்கும்நற் பலனிவரைப் பாது காத்துப்
பாலித்தால் எனநினைந்தான் பலனில் தோற்றான் செயற்கரிய செயலொன்று செய்தார் திப்பு
தம்பியுடன் தப்பிவிட்டார் வயதோ பத்து செயலறிந்தான் கந்தாராவ் காவல் செய்தோர்
தலையுருளச் செய்தனனனே சதிகாரப்பேய்
99
கருவினிலே திருவுடையோர் கல்லாப் போழ்தும்
கருத்துணர்ந்து செயற்பட்டு வெற்றி காண்பார் கருவிலுரு வானதிரு கற்றால் விஞ்சும்
கல்வியிலே கானுபலன் இதுவதாகும் உருவானார் திப்புபெரு வீராங் கொண்ட
உதிரத்தில் ஹைதருக்குப் பிள்ளை யானார் பருவத்தில் சிறுத்தாலும் அன்று செய்த
பொறிஐந்துங் கலங்குசெயல் பிறப்பா லன்றோ
1OO

Page 24
தீரன் திப்பு சுல்தான் காவியம் C24D
அடைத்துவைத்துக் காவலரண் செய்திருந்தும்
அச்சமுற வில்லைதிப்பு ஒருவாறாகப் படைப்பணியாள் ஒருவன்தம் பரிவினாலே
புறத்திருந்தோர் கயிறுதனைப் பற்றிக் கொண்டார் அடித்தளத்தை நோக்கித்தம் தம்பி தோளை
அனைத்திருக்கத் துவாரமொன்றால் கீழிறங்கி மடிந்தொளிந்து தப்பித்தோர் மறைவிடத்தை
மன்னன்மகன் தேடியதோர் வரலாறாமே
1O1 உயர்ந்தபெருங் கோட்டையினோர் அறையினுள்ளே
ஒளித்தவரை வைத்திருந்தார் காற்றுள்ளேக இருந்தபெருஞ் சாளரமே நுழைவாயில்லை
இறுகமூடித்தாளிட்டுக் காவல் செய்தார் அருந்துதற்கு நீர்வேண்டிக் காவ லாளை
அழைத்தாரோர் வீரன்உள் அண்டை வந்து தருபுனலைக் கையேந்தி அவனை நோக்கித்
தனக்குதவி செய்கவெனச் சார்ந்து கேட்டார்
1Ο2 மறுத்திட்டான் வீரன்முதல் பின்னும் வேண்ட
மனமிரங்கினான்சிறியோர் வதனங் கண்டே உறுத்தியது நெஞ்சம்நான் உண்ணும் ஊணின்
உபயமவர் தாதையென உணர்ந்த தாலே பொறுத்திடுக எனச்சொல்லி வெளியிற் சென்று
பற்றிவெளியேறுதற்காய்க் கயிறொன் றோடும் மறுத்தவனே மனமுவந்து கையளித்தான்
மார்க்கமுரைத் தகன்றானே தப்பு தற்கே
1O3
கடுங்காற்றும் அடைமழையும் கூடி யார்க்கும்
கோபுரத்துள் நடப்பதனை அறிய மாட்டாப்
படிவீசிப் பொழிந்ததனால் சிறுவர் செய்கை
படைத்தவனுக் குகந்ததுவாய் இருத்த லொக்கும்

ஜின்னாவூர் லுரியுத்தீன் C2so
விடிவதற்குள் தப்பித்துச் செல்லல் என்னும்
விரதமவர் நெஞ்சத்துள் பதிந்ததாலே அடைமழையைப் பெருங்காற்றை அணுவத் தேனும்
இலட்சியஞ்செய்தாரில்லை அகந்துணிந்தார்
1O4 படைவீரன் கைதந்த கயிற்றை ஆங்குப்
புறத்திருந்த சாளரத்தின் இருப்புக் கோலில் முடிந்துவிட்டு முடுக்கிடையில் முதற்பு குந்து
மன்னன்மகன் தம்பிதனைத் தோளில் தாங்கி அடுத்தெவர்க்குந் தெரியாத காருள் மெல்ல
அரவமின்றித் தொங்கிக்கீழ் இறங்கிக் கானில் பிடிக்கவொரு பிராணிதனை அண்டுகின்ற
புலிபோலும் பதுங்கிவெளிப்புறத்த கன்றார்
1O5
தப்பித்த சேதிதனைக் கேள்வியுற்றுச்
சினங்கொண்டான் கந்தாராவ் சிம்மமாகித் தப்பிடச்செய்தவன்யாரென்றறிந்த வன்றன்
தலைசீவ ஆணையிட்டான் செயலா கிற்றே நப்பாசை கொண்டிருந்தான் சிறுவர் தம்மை
நினைந்தபடி பயன்கொண்டு ஹைதர் மூச்சைத் துப்புரவு செய்திடலாம் உடல்விட் டென்று
துணிவோடு தோல்வியுற்றான் துரோகத் தன்னான்
1O6 துரும்புபுக முடியாத துவாரத் துள்ளும்
துருவுகவென்றாணையிட்டான் தேடினார்கள் அரும்புகளே கண்காணா வாறு தம்மின்
அலங்காரம் நீக்கிப்பொய் உருவங் கொண்டார் பொருந்தாத தோற்றமஃ தென்றிட்டாலும்
பொருந்தியது பகைவர்கன்ை படாதிருக்க பொருந்தினனே இறையவனும் பகைவர் நோக்குள்
பதிந்திடவொட் டாதிருக்கப் பாது காப்பை 1O7

Page 25
தீரன் திப்பு சுல்தான் காவியம் C260
நகரத்தின் மூலைமுடுக் கத்தனையும்
நாடியவர் தேடியுமே பலன்கிட் டாது முகங்கருகிப் போனார்கள் கோபத்தாலே
மறைவிடத்தைக் கண்டுகொள்ளத்திராணியற்றோர் பகைவர்கண் படாதிருக்கக் குடும்ப மொன்று
பாசத்தோடுதவியது பதுங்கிக் கொள்ள வகைத்தவிடந்தனையறிந்து கொள்ள மாட்டார்
விபரங்கள் கிணற்றிலிட்ட கல்லைப் போலாம்
1O8 உண்ணவுன வளித்தார்கள் மீட்டுத்தந்தை
உடன்சேர்த்துக் கொள்ளுகின்ற நாள்வரைக்கும் பெண்பிள்ளை யொருத்தியவர் பால்துணிந்தே
பற்பலவாய்த்தின்பண்டம் தந்தா ரென்பார் பின்னொருகால் அவளேதான் திப்பைத் தன்கை
பற்றிடவைத் தவளாகும் என்றோர் காதை சொன்னதுவும் உண்டாமே குழந்தைக் காலச்
செய்தியது திப்புவாழ்வில் நடந்த தென்பார்
1O9
நடந்தகதை யிதுவாகும் தப்பிக் கொண்ட
நள்ளிரவில் காஸிகான் அவரைக் கொண்டு படகுத்துறை யொன்றினிலே ஒளித்து வைத்துப்
பத்திரமாய் இருக்கவுமே பணித்துத் தம்மின் உடற்றோழன் "லால்மியானைக் காக்கு மாறே
ஒருதகவல் மகளிடத்தில் வைத்துச் சென்றார் அடுதவர்க்குப் பணிபலவும் இருந்ததன்றி
அரசபடை அவர்தலைக்கும் அலைந்த தன்றே
11O
தந்தைவர மகள்செய்தி சொல்லச் சேதி
தலைமேலே தற்கொலையே தொங்கி னாற்போல்
சிந்தையுற்றார் லால்மியானப் பயங்க ரத்தைத்
தானுணர்ந்த காரணத்தால் தலைமேற் கொள்ள

ஜின்னாவூர் ஷரியுத்தீன் O27 lo
முந்தாதே அமைதிகொண்டார் குடும்பத் தோடு
முடிந்துவிடும் வாழ்வென்றும் மொழிந்தார் கேட்டுப் புந்திமிக்க மகள்சிறுமி தானே யந்த
பணிதன்னை ஏற்றிடவும் பலாங்கொண் டாளே
111 பிள்ளைகளைக் காப்பாற்ற முயன்றால் நேரும்
பின்விளைவை மனைவியிடம் எடுத்துக் கூறி உள்ளவழி ஒன்றுமில்லை இறைவன் பக்கல்
உறுவினையே உறுமென்று உளம்நொந்தோராய் உள்ளத்தைக் கல்லாக்கி உறங்கப் போனார்
உரையாடல் கேட்டமகள் றுகையா பானு கள்ளமில்லாப் பிஞ்சுளத்தாள் கவலை தோய்ந்தாள்
காப்பாற்றும் வழிதன்னை ஆய லானாள்
112 நெடுநேரம் தூங்காது விழித்திருந்து
நடுநிசியில் எழுந்துபிறருனரா வாறு உடன்கொண்டாள் உணவுசில கணிக ளோடே
ஊர்துங்கும் வேளையது கழுகு கோட்டான் கொடுங்குரலில் குரலெழுப்பக் கைகால் ஆடக்
கடுங்குளிரில் உடல்விறைக்கக் குறித்ததிக்கில் நடந்தனளே நெஞ்சுரமுங் கொண்டதாலே
நாடியவத்தலஞ்சேர்ந்தாள் நயனம் பூத்தாள்
113 தன்மடியில் தம்பியினைத் தூங்க விட்டுத்
தனித்துவிழித் திருந்ததிப்பு தன்னைக் கண்ட சின்னவளின் மனங்களிக்கக் கொண்டு சென்ற
தின்பண்டம் தனைத்தந்து தானும் உண்டாள் முன்னிரவில் துயிலழிந்து பசியுந் தாங்கி
முயற்சியிலே வெற்றிகண்டாள் பூரிப் புற்றாள் அன்னைகுலப் பண்புதனைக் காத்தாள் அஃதோர்
அழியாத கல்லெழுத்துப் பதிவாகிற்றே 14.

Page 26
தீரன் திப்பு சுல்தான்காவியம் O28)
தன்னருகில் துயின்றமகள் தனைக்காணாத
தாயதிர்ந்து துடித்தெழுந்துத் தேடிப் பார்த்துங் கண்காணா நிலைகண்டு பதறியோடிக்
கணவரிடம் முறையிட்டாள் அவருஞ் சோர்ந்தே உண்டான தென்னவென உணர்ந்ததாலே
ஊர்க்கோடி தனிலிருந்த நீர்த்துறைக்குக் கண்ணொடிக்கும் பொழுதுள்ளே சென்றடைந்தார்
கண்மணியை இழந்துபெற்றார் போல்வா -
ரானார் 115 துச்சமெனத் தன்னுயிரை மதித்துத் திப்பு
தனைக்காக்க மகள்கொண்ட நெஞ்சு ரத்தை துச்சமென மதிக்கவொணனாத் தந்தை நெஞ்சுள்
சிலாகித்த போழ்தும்பின் தொடர வுள்ள சொச்சத்தை நினைந்ததுமே மனம்ப தைக்கச்
செய்வதன்றி யொன்றில்லை எனவு மாக அச்சத்தைப் புறமொதுக்கித் துணிவுங் கொண்டார்
அடைகாக்கும் பேடையெனத் தானு மானார்
116
பொலபொலென வான்வெளுக்கச் சேவல் கூவப்
படர்ந்துவரும் ஒளிவெள்ளம் பரவ வெய்யோன் அலங்காரம் பூமிகொள அவதரித்தான்
அதுகோலித் திருவிழாவும் அமைந்த காலம் பலவண்ணத் தூள்தூவி வண்ண நீரைப்
பிறர்மீது இறைத்துத்தம் மீதும் வாங்கிக் கலகலத்து நகைத்துமகிழ்ந் திடவென்றேங்கிக்
கண்துஞ்சா திருந்தவர்கள் களத்துள்ளானார்
117 வீதியெலாம் ஆண்பெண்கள் இளமைப் பேர்கள்
வண்ணவண்ணப் பொடிகளோடு திரண்டிருந்தார் தீதறியாச் சிறுவர்களும் சிறுமியோரும்
சேர்ந்தொன்றி வலம்வந்தார் தெருக்கள் மொய்த்தார்

ஜின்னாவூர் லுரியுத்தீன் O29 lo
ஈதேதான் தருணமென இடையிற் புக்கி
இனங்கானா வாறுதம்மில் வண்ணம் தாங்கி தோதான இடம்நோக்கி நகர்ந்தார் ஆங்குந்
தேடியலை காவலரைக் கண்ணுற்றாரே
118 பார்வையிலே பட்டபடை வீரர் தம்மின்
பார்வையிலே படாதிருக்க அருகிருந்த சீருடைகொள் அங்காடிக் கடையிற் கண்ட
சிறுத்தைமுக முகமூடி தம்மை வாங்கி யாருமறியாதபடி வேடம் பூண்டார்
இல்லத்தை யடையுவரை எதுவும் பேசார் ஊரேபேரமர்களத்தில் உறைந்ததாலே
உத்திவெற்றி பெறலெளிதாய்ப் போன தன்றே
119
இல்லத்தா ளிடத்திலன்று நடந்த தெல்லாம்
எடுத்துரைத்தார் லால்மியானும் தமது பெண்ணாள் வல்லபத்தை எண்ணியன்னை பூரிப் பெய்தி
வாஞ்சையொடு நெஞ்சணைத்தே உச்சிமோந்தாள் சொல்லவொண்ணா மகிழ்விமயந் தொட்ட வாறாம்
சொரிந்தனவாம் விழிகள்தம் மடையொ டித்தே நல்லசெயல் உயிர்ப்பணயம் ருகையா செய்கை
நீண்டகால வரலாற்றின் பதிவுமாகும்
12O
தொடர்ந்தாங்கு தரித்திருத்தல் ஆபத் தென்று
தெரிந்துகொண்ட லால்மியான்புன் அடலர் தம்மின் பிடியிருந்து தப்பித்து நாட்டின் எல்லைப்
புறந்தாண்டிக் கொண்டுசெலத் திட்டந் தீட்டிக் கடந்தாரே காவிரியைச் சிறுவ ரோடு
கல்யாண ஊர்வலத்தின் குழாமில் கூடி படைகண்ணில் மண்தூவிப் போவதற்கு
பாடுற்ற செய்கைகள் புகலற் கொண்ணா 121

Page 27
தீரன் திப்பு சுல்தான்காவியம் C30 O
நாட்டில் ஏற்பட்ட மாறுதல்கள்
புதிதாக ஆட்சிகொண்டோர் மீதே ஆட்சிப்
பொறுப்பிருந்த பலபேர்க்கு வெறுப்புத் தோன்ற எதிரானார் ஒன்றுகூடி முடிவொன்றுக்காம்
உடன்பட்டார் முடிவுஹைதர் பதவியேற்க உதவுவதே என்பதுவாம் “பூர்ண அய்யா"
உறுதுணையாய் இருந்தவருள் முதன்மை யானார் பதவிவழி பின்னரவர் ஹைதருக்குப்
பொறுப்பானார் முதலமைச்சைத் தாங்கு தற்கே
122 வீரமொடு மதிநுட்பம் நிருவகிக்கும்
விவேகமுடன் ஆட்சிசெய வேண்டும் ஆண்மை சேரவொன்றித் தனித்துவமாய்க் காணும் ஹைதர் தானன்று வேண்டுபவரான தாலே சீரியநல்லறிவுகொண்ட ஆன்றோர் கூடித்
தக்கதொரு முடிவாகத் தம்முள் ஒன்றித் தீர்வாய்ந்து செய்தமுடிவாகும் ஹைதர்
தொடரவவர் பதவிதனைத் தருவதற்காம்
123 உறுதிகொண்ட படையொன்று புறத்தும் உள்ளும்
உருவான தொன்றிஹைதர் ஆட்சி மீட்க அறுதியுற்ற தெதிரிகளின் பலமும் நாட்டின்
அரசியொடு காந்தாராவ் முதலமைச்சன் முறையற்றுச் சூழ்ச்சிசெய்தோன் மண்டியிட்டார்
மன்னரென ஹைதர்முடிதாங்கிக் கொண்டார் இறைமுடிவும் அதுவாக அமைந்ததாலே
இணைந்தார்கள் பிரிந்திருந்தோர் குடும்பப் பேர்கள்
124 தந்தையில்லம் சென்றுமீள வழியு மற்றுச்
சோகத்தில் தவித்திட்டதாயும் தம்மின் தந்தையொடு தாயுறவுந் தனித்துப் போகத்
துயருற்ற திப்பு"கரீம் மக்கட் பேரும்

ஜின்னாவூர் ஷரிபுத்தீன் O310 வந்தினைந்தார் ஹைதரொடு வெற்றியின்யின்
வெவ்வேறு திக்கிருந்தாம் விதியின் பாதை சொந்தங்கள் பிரிந்தொன்றித் துன்பம் மாயச்
செய்ததிறை நாட்டுமக்கள் துணைநின்றாரே
125 தணைவிடுத்து நடந்ததெலாங் கேட்டறிந்து
திப்புவையும் தம்பியையும் காத்த பேரை மனம்நெகிழ வாழ்த்துரைத்தார் ஹைதர் நன்றி
மாறாத மனங்கொண்டார் “றுகையா பேகம்” துணிவினையும் செய்கையையும் தெரிந்த போது
தாய்தந்தை இருவருமே அதிர்ந்தார் திப்பு மனத்துறைந்தாள் அறிவாரோ அவளாம் என்ற
மர்மத்தை முதலவனே சாட்சி யானான்
126
நன்றியொடு இளையவளை நெஞ்சணைத்து
நலஞ்செய்தாய் மகளேயென் மக்கள் தம்மைக் கொன்றிருப்பர் கொடியோர்கள் தாய்போல் காத்தாய்
காலத்தால் செய்தபெரும் உதவியாகும் என்றுமுனை மறவேன்நான் என்றாள் அன்னை
இருவிழிகள் பொழிந்தனவே மனம்நெகிழ்ந்தே ஒன்றிணைந்த தாமன்றே கண்கள் நான்கு
உடனிருந்தோர் பார்வைதமைக் கொன்ற பாங்கே
127 வாய்ப்பிருக்கும் போதெல்லாம் எங்க ளில்லம்
வரவேண்டும் நீங்களெல்லாம் என்றார் மன்னர் வாய்ப்புவரும் வரைகாக்க வேண்டாம் வாய்ப்பை
வரவழைத்து வரவேண்டும் என்றார் ராணி காய்கனிந்து போனதுபோல் மகிழ்ந்தார் மக்கள்
கூடிவிளையாடிடலாம் என்பதாலே ஓய்வுகொண்ட துரையாடல் அத்தோ டன்னார்
உடனகன்றார் உறவுக்கும் வித்தொன்றிட்டே
128

Page 28
தீரன் திப்பு சுல்தான் காவியம் O32O
ஆட்சிதனைக் கைப்பற்றுந் தீய எண்ணம்
அணுவளவும் ஹைதருக்கோ இருந்ததில்லை தோட்பலத்தால் எதிரிகளை மாய்த்த தோடே
தாய்மன்ைனின் கோன்மைக்குத் துரோகஞ் செய்ய நாட்டமுற்றுப் பாதிவெற்றி கொண்ட பேரை
நசுக்கியொழித் திட்டவரே யவருமாவார்
சாட்டியதால் பெருமக்கள் ஏற்றார் நாட்டைத்
தாங்குதிறன் தன்வசத்தில் இருத்தல் ஓர்ந்தே 129 மைகரைக் கையேற்ற பின்னும் கழ்ச்சி
மையமெனத் தானிருந்த அரசி தன்னைக் கைசோர விடவில்லை ஹைதர் வேண்டும்
கொடுப்பனவு முற்றிலுமே கரங்கள் சேரும் ஒய்யார வாழ்வியற்றி வாழ்ந்த பேர்க்கும்
உகந்தவைகள் முற்றிலுமே கிடைக்கும் வாகாம் துய்யமனங் கொண்டஹைதர் செய்கை யார்க்கும்
தீங்கிழைக்கக் கூடாவென்றியம்பல் போலாம்
13O எக்குறையும் இல்லாதே முன்போல் வாழ்வு
ஏற்றிருந்த போழ்தினிலும் அரசி நெஞ்சுள் வக்கிரமோ தணியவில்லை நீறு பூத்த வெந்தனல்போல் பகைமையொளிந் திருந்த -
தன்றோ
தக்கவொரு சந்தர்ப்பம் கைகூடுங்கால்
தலைபுரட்டி ஆட்சிதனைத் தன்கை பற்ற பக்கபலம் தேடிடவே செய்தார் அந்தோ
பரிதாபம் கைகூட வில்லை யஃதே
131

ஜின்னாவூர் லுரிபுத்தீன் O33 o
இளமைக் கல்வி
இளவயதில் இருந்தேதன் மகனைக் கல்வி
ஏற்றிடச்செய்தார்"ஹைதர்” ஆரம்பத்தில் முளைவிடட்டும் மார்க்கஞானம் என்பதாலே
மார்க்கஅறி வுட்டவைத்தார் இலக்கியத்தை மொழியறிவு வேரூன்றக் கற்கச் செய்தார்
மிகவிரைவில் வாசிக்க எழுதக் கற்றார் அழியாத செல்வமஃ தொன்றே யென்றும்
அறிந்ததனால் "ஹைதர்”ஒன்றுங் கல்லாதாரே
132 இளமையிலே திறமைகொண்டே இருந்தார் திப்பும்
எழுத்தணிக்க லைதன்னில் குதிரை யேற்றம் களத்தினிலே எதிரிகளைத் துவம்சம் செய்யக்
கடும்யுத்தப் பயிற்சிகளும் கற்றறிந்தார் உளப்பலமும் உடற்பலமும் ஒருங்கே சேர
உயிர்க்கஞ்சா வீரரெனும் உரமுங் கொண்டே முளையரும்பித்தளைத்ததொரு பெருவி ருட்சம்
மைசூரின் புலியெனப்பின் நாமங் கொள்ளும்
133 மார்க்கஞானம் பெறுவதற்காய்த் திறன்மிகுந்த
மார்க்கஞானச் சான்றோர்கள் நியமம் பெற்றார் ஓரறிஞர் முஸ்லிம்மற் றொருவர் ஹரிந்து
ஒன்றியிரு மதத்தினரும் மைகர் மண்ணில் சீராக வாழ்ந்ததனால் ஆட்சியேற்போன்
சமமாக இரண்டினையும் மதிக்க வென்னுங் காரணத்தால் அரும்பிருந்தே கற்கச் செய்த
ஹைதர்அலி மனப்பரப்புக் கூறல் சாலா
134. திருமறையின் மொழிஅறபு பாரசீகம்
தென்னாட்டின் கன்னடமும் உறுதுங் கற்றுக் கரைகண்டார் மொழிகளிலே திப்புச் செல்வன்
களிகொண்டார் தந்தைதம் மகனின் ஞானத்

Page 29
தீரன் திப்பு சுல்தான் காவியம் O34D
திறன்கண்டே பூரித்தார் எதிர்காலத்தில்
தனக்கடுத்து வீரமொடு புத்தி கூர்ந்து பிறறெவரின் உதவிகொள்ள வாறு நாட்டைப்
பாலிக்கும் திறனேற்பார் என்பதாலே
135
புத்தகங்கள் படிப்பதுவே பொழுது போக்குப்
பலனற்று நேரத்தைக் கழிப்பதில்லை வித்தாகி ஞானத்தின் வேரு மாகி
விரிந்தகன்ற விருட்சமென வாகுங் “குர்ஆன்" உத்தமநந் நபிகள்தம் போத மோடே
உயரியசித்தாந்தங்கள் மார்க்க நூல்கள் அத்தனையும் தம்அறிவுப் பசியைப் போக்க
ஆய்ந்தறிந்தே கற்றுணர்ந்தார் இளமைப் Guಙ್ಗ யுத்தகளப் பயிற்சிக்காய்க் “காஸிக் கான்"ஐ
ஏற்படுத்திப் பயிற்றுவித்தார் ஹைதர் திப்பவ் வித்தையிலே காட்டியமெய்த் திறமை கண்டு
வித்தகரே அதிசயித்தார் வேறு பட்ட சத்திரியக் குலக்கொழுந்தே இவராம் என்றே
திறன்கண்டு விதந்துரைப்பார் சொல்லில் மாளா சுத்தவீரர் குணங்கொண்ட அவர்தம் செய்கை
செப்பச்சில் உதாரணங்கள் தேரலாமே
137 விளையாட்டில் வெற்றிகொண்டால் ஆரவாரம்
வீறாப்பு எறும்பளவும் ஏற்ப தில்லை விளைவுபிறர்க் காமென்றால் மகிழ்வார் தம்மை
வென்றவரை வாழ்த்திமகிழ்வடையச் செய்வார் அழியாதோர் பறவையெனும் அவர்கை யாலே
அன்புடையார் உயிரினத்தில் சுடும்பயிற்சி முழுமையுற்ற போழ்தினிலும் குறிவைத் தொன்றை
மரணிக்கச் செய்தவரலாறற்றாரே 138

ஜின்னாவூர் லுரியுத்தீன் O3so
எண்ணம்போல் மகன்கல்விகேள்விதம்மில்
இணையில்லாப் பெருஞானம் கொண்டதாலே மண்ணாளும் பொறுப்புக்கோர் மகனை வேண்டி
மன்றாடி இறைவனிடம் பணிந்து நின்ற மன்றாட்டம் பலித்ததுவாய் மகிழ்வு கொண்டார்
மண்ணாளும் பூபதியாம் ஹைதர் வீரம் ஒன்றான பெரும்பேறும் மகன்பால் ஒன்ற
ஒப்பில்லான் தனையுளத்தால் வழுத்தி னாரே
139
பிற்காலம் திப்புபற்றிச் கூறுஞ் சேதி
பற்பலநூல் கற்றபெரும் பண்டி தர்தம் உற்றபெருங் களஞ்சியமாயப் பாது காத்த
ஒன்றாகும் நூல்நிலையம் தன்னில் கொண்ட பற்பலவாம் நூல்களிலீர் ஆயிரங்கள்
பலமொழிகள் கொண்டிருந்த தென்றே அஃதில் முற்றுமவை அறிவுசார்ந்த கருவு, லங்கள்
மனுக்குலத்தின் வேண்டுதற்கும் உரித்தாம் என்றே
14O தன்னளவில் அவரொருநற் கவிஞ ரென்றும்
சரிதமுரை செய்யுமவர் போர்முறைச்சீர் இன்னதெனப் புகல்"பதஉல் முஜாஹரிதீன்"ஐ
இயற்றியதோ டவர்வெள்ளிக் கிழமை தோறும் சொன்னவுரை பள்ளியிலே தொகுத்தெடுத்த
தொகுப்பாக "முவாயிஸ்-உல் முஜாஹிதீன்"ஐ பின்னவரின் நலன்கருதிக் கோத்தா ரென்றும் பாதுகாத்த ஆவணங்கள் புகலு மாமே
141

Page 30
தீரன் திப்பு சுல்தான் காவியம் O36D
யுத்த முனையும் திப்புப் புலியும் பதினைந்து வயதில் போர்முனை காணல்
கல்விகேள்வியோடுயுத்தப் பயிற்சியுங்கொள்
காலத்தில் தன்னையொரு தன்னே ரற்ற வல்லவராய் மாற்றிடத்தன் பங்கை முற்றும்
வழங்கியிருந்தார்திப்புத் தந்தை தம்மின் வல்லபத்திற் கிணையான வீர ராக
வலுப்பெற்றார் கூர்மதியுள் இளைஞராக சொல்செயலில் முதிர்ச்சியுமுற்றிருந்தார் தார்கொள்
தீரரெனப் பின்னாளில் பேசற் காமோ
142
போருக்குப் பஞ்சமில்லாக் கால மஃது
பொறாமைகொண்டார் அருகிருந்த சமஸ்த்தா -
னத்தார் காரணமொன்றில்லாது கிடைத்த போழ்து
கரமுயர்த்தினார்களவர் யுத்தஞ் செய்ய போரிட்டு மைகரைத் தம்பி டிக்குள்
பெற்றிடவென்றவாவுற்றார் பேடிப் பேர்கள் கோரினரே வெள்ளையரின் உதவி தன்னை
"ஹைத்ராபாத் நிசாம்"மராட்டிக் கோழையோரும் 143
தனைப்போலுந் தண்மகனுந் துணிவு மிக்க
தீரனென வளர்த்தெடுக்கத் தந்தை ஹைதர் தனதருகே இருத்தித்தன் திறமை கட்குத்
தெய்வத்தின் அருளோடு யுத்த ஞானம் முன்னிற்கும் படியாகும் என்றே யுத்த
முறைகளையுங் கற்பித்தார் மகனுங் கேட்டார் பின்நிற்க வேண்டாவே யுத்தம் செய்யப்
பிறவிவீரன் தனக்கதுதான் பொருந்தும் என்றார்
144

ஜின்னவூர் லுரியுத்தீன் C37 o
எப்போது போர்தொடுக்க வேண்டும் யார்மேல
எதையெண்ணிப் போர்தொடுக்க வேண்டும் யுத்தம் எப்போது தவிர்த்திடவும் வேண்டும் போரை
ஏன்தவிர்க்க வேண்டும்நல் வினையை நோக்கி எப்படித்தம் பாலமைதி வேண்டு வோரை
இனங்கண்டு செயற்படவும் வேண்டும் என்றும் எப்படியெப் போததனை இயற்றல் என்ப
எலாமுமவர் கற்பித்தார் இளைஞருக்கே
145 யுத்தத்தின் போதுகடைப் பிடிக்க வேண்டும்
யுத்ததந்தி ரங்களினைக் கற்பித் தாற்போல் யுத்தத்தில் கடைப்பிடிக்கும் தர்மம் நீதி
ஓதிவைத்தார் தந்தைதன் மகனுக் கன்றே எத்தனைதான் தம்பக்கம் வெற்றி சாய்ந்தே
ஏற்குநிலை வந்தாலும் எவர்தம் மீதும் புத்திக்குப் பொருந்தாத செயற்பாட்டின்பால்
போகாதே யென்றுரைத்துப் பதியச் செய்தார்
146
வயோதிபர்க்குத் துன்பமிழைத் திடுதல் வேண்டா
வனிதையர்க்கும் அதுவிதியே சிறுபராய வயதினர்க்கும் கொடுமைசெய்தல் கூடா மக்கள்
வயிற்றழலைப் போக்குகின்ற விளைபயிர்கள் உயிரினங்கள் தமையழித்தல் ஒவ்வாச் செய்கை
யுத்தத்தில் பங்குபெறார் தம்மைக் கொல்லல் செயத்தகாத செயல்கல்விக் கூடந்தன்னை
தெய்வவழிபாட்டில்லம் தகர்த்த லென்றார்
147 போர்நெறியில் ஹைதருக்கு நிகராயன்றோர்
பேரெனினும் இருந்ததில்லை சமயம் நோக்கித் தேர்வாரோர் முடிவுதனை வெற்றிக் கஃது
துணைதந்து வாகைகொள வைத்த தன்னாள்

Page 31
தீரன் திப்பு சுல்தான் காவியம் O38)
போருக்கே அஞ்சாதார் போர்செய்யுத்திப்
படிமுறைகள் முற்றுமறிந்திருந்தார் செல்வன் தேர்வதது கடமையென எண்ணிப் போர்க்குத்
தன்னுடனும் அழைத்தேகிப் பயிலச் செய்தார்
148
ஆட்சிதனை ஏற்றமற்ற ஆண்டே ஹைதர்
அமர்க்களமே நிலைக்களமாய்க் கொண்டார் யுத்தக் காட்சிகளே திப்புவின்கண் கண்டதன்னாள்
கூடவவர் தந்தையொடு சென்றதாலே வீழ்ச்சியுற்ற தன்னியர்தாம் வரித்த போர்கள்
வாகைகொண்டார் ஹைதரலிஅனைத்திலும்தான் கோட்டைவலுப் பெற்றதெல்லை விரிவடைந்தே
கரைப்புலமும் மைகரின் கையா கிற்றே
149
மராட்டியரே முதன்மையுற்றார் வலிந்து வந்தே
மண்கவவினார்போரில் மலபார் ஒரக் கரைசார்ந்த அரசுகளும் தூண்டிப் பார்த்துக்
கைதுடைத்துப் போயொளிந்தார் கரையோரங்கள் உரித்தாகிக் “கொச்சினோடு “பங்களூரும்”
உடன்சேர்ந்த துறைமுகத்து நகர்களாக விருத்தியுற்றதாட்சிநிலை வலிமை யோடே
வரலாற்றில் சொர்ணவரித்தடங்களாமே 15O
பதினைந்தே வயதான திப்பு போரில்
பங்குகொளும் வாய்ப்பதனைப் பெற்றுத் தானோர் அதிசிறந்த யுத்தவீரராகக் காட்ட
அவர்பொறுப்பில் சிறுபடையொன் றியங்க லாகும் பதவிக்குப் பொருந்துவதாய் வீர தீரப்
பண்புகளில் மிகைத்தேநற் பெயருங் கொண்டார் புதிதான மனப்பலமும் சேர்ந்த தொன்றிப்
போர்தந்த பாடமதாம் இளமைப் போழ்தே 151

ஜின்னாளுர் ஷரிபுத்தீன் O39 lo
காஸிகான் திப்புவையோர் நாளழைத்துக்
கொணர்ந்தவர்தந்தந்தைமுன்நிறுத்திச் சொல்வார் “மாசறவே யுத்தமுறை அனைத்துஞ் சொல்லி மாவீரனிவனென்று மாற்றா ரொப்பிப் பேசுப்படி செய்துள்ளேன் வேண்டு மாயின்
போர்ப்பணிக்கு வெள்ளையரைப் புறங்கா னற்கு கூசாமல் களங்காணக் கூட்டிச் செல்க
கொற்றவரே நின்புதல்வன் இதோவென்றாரே
152 சிங்கத்தின் முன்னேயொரு புலிதன் மேனி
சிலிர்த்தபடி நின்றதுவோ எனும்பாங்காக அங்கமெலாம் வீறுகொண்டே அடலர் மார்பை
அரிந்திடுநெஞ் சுரத்தோடும் அவர்முன் நிற்கப் புங்கமுனைக் கூர்ப்பார்வை கோத்துத் தம்மின்
குருதியின்வாய்ப் பெற்றமகன் தன்னை ஹைதர் «9r h5Jœ6LDI f5I85 LDfIa66Q6)I6ODL 6haE6T60öTLfTjj 85IT6mÖ
அறைந்ததெலாம் மெய்யோவென்றறியும் வாகே
153 எட்டியொவ்வோர் அடியெடுத்து வைத்தார் முன்னே
ஏறுநடை யென்பதிது வாமோ வென்ன கிட்டவர மகனுமோரீர் கால்முன் வைத்தார்
களிறையண்டும் ஆண்வீரக் குட்டி போன்றே கட்டியனைத் திருகரமும் ஒன்றாய்க் கோத்துக்
காயபலம் கணித்திட்டார் ஹைதர் பின்னாள் பட்டத்துக் குகந்தவனோ பகைமை துர்க்கும்
பலாங்கொண்ட புலியோவென் கணிப்புக் கொண்டே
154
பகைவெல்லத் தந்தையோடு போருக் கேகும்
பலம்கொண்டான் தன்புதல்வன் திப்பும் என்றே
மிகமகிழ்ந்தார் வீரத்தாய் பஃருன் நீசா
மனத்தாலே தெய்வத்தை வழுத்த லானார்

Page 32
தீரன் திப்பு சுல்தான் காவியம் O40D
இகபரத்தின் முதலவனே என்றன் பிள்ளை
எதிரிகளைத் தாமடக்கி வாகை கொள்ள வகைசெய்வாய் தந்தைக்குத் துணையாய் நின்று
வாழ்நிலத்தின் புகழ்பெருக்க அருள்செய் யென்றே
155
பயங்கரப்போர் ஒன்றினிலே பங்கு கொள்ளப்
புதல்வரையும் உடனழைத்துச் சென்றார் ஹைதர் பயன்கொள்ள லாம்வேண்டின் எனநினைந்து
பிற்படுத்தி ஒருபடையை மைந்தர் தம்மின் வயந்தரிக்க வைத்தவர்க்குத் துணைய தாக
விட்டகன்றார் திப்புவுக்குப் படைப்பயிற்சி பயிற்றுவித்த ஆசானைக் “காஸி கானைப்
பரிப்படையீராயிரம்பேர் கொண்ட தஃதாம்
156
மணியொன்றுக் கொன்றுசெய்தி வருமென்றோதி
முன்சென்றார் சமர்க்களத்தை நோக்கித் தந்தை மணியொன்றா யிரண்டுமூன்றாய் ஆன போழ்தும்
மன்னர்சே தியனுப்பா நிலையில் ஆங்கே விண்ணுயரப் பேரொலிகள் செவியுட் புக்க
வெருண்டதுள்ளம் திப்புவுக்கும் ஐயங் கொண்டார் திண்ணமேதோ தவறொன்று நடந்திருத்தல்
சாலுமென மனங்கொண்டார் துரித மானார்
157
ஆயிரத்தோ டைந்நூறு வீர ரோடும்
அமர்க்களத்தை நோக்கித்தம் ஆசான் “கானைப் போயுதவி செய்கவெனப் பணிந்து கூறப்
பறந்ததவர் படைவளியைப் புறத்தில் தள்ளி ஒயவில்லை ஏற்பட்ட மனவுளைச்சல்
உடல்தினவால் துடிக்கதிப்பு ஆணையிட்டார் வாயுவுடன் கலந்தார்கள் எஞ்சியுள்ளேர்
வனப்புலத்தை வழியாகக் கொண்டிட் டாரே 158

ஜின்னாளுர் ஷரிபுத்தீன் C4D
ஒன்றையொன்று முந்தவழி பரிகள் ஒட
உண்டான குளம்போசை கான கத்தே குன்றனைய கரிகளொடு மான்கள் பன்றி
குலைநடுக்கம் கொண்டனவோ பிறவும் தங்கள் நின்றவிடம் தவிர்த்தோட்டம் கொள்ள வானை
நிறைத்ததுவாம் பேரோசை முன்னால் திப்பு கொன்றாரே வினாடிகளை நொடிக்குள் நூறு
காதத்தை கடந்தவினை போலு மாக
159 காட்டுவழிகளம்நோக்கிவந்த வீரர்
கண்ணுற்றார் கானகத்தைத் கடந்த பின்னர் கூட்டாக அமைந்திருந்த கூடாரத்தின்
கொள்ளையினைப் பெண்களுக்காய் அமைத்த -
வைதாம் வேட்டுவனின் வலைப்பட்ட பறவைக் கூட்ட
வரலாறாய்ப் போயிருக்கும் வேறோ ராயின் காட்டினரே கருணையவர் மீதுதிப்பு
கறைபடியும் நிலையவர்க்குத் தோன்றா வாறே
16O காவலுக்கு நின்றெதிர்த்த பேரைக் கொன்று
கைப்பிடிக்குள்ளானார்கள் பெண்கள் தப்பிச் சாவுக்கு விடைகொடுத்தோர் வீரன் ஒடிச்
சேதிதனைத் தம்மவர்க்குச் சொல்லி வைத்தான் மேவியவோர் இருள்முட்டத் துட்பட்டாற்போல்
மாற்றார்கள் நிலைப்பட்டார் வழியே இன்றித் தாவினவே வெண்கொடிகள் வானை நோக்கித்
திகைப்புற்றார் ஹைதர்நிலையறியா தாரே
161 சமாதானக் குறியாக வெண்ப தாகை
தோன்றியது மறுபுறத்தே என்றே எண்ணி அமைதியுறப் பணித்தார்தம் படைவீரர்க்கும்
அமர்க்களத்தை ஆட்சிசெய்த ஹைதர் மன்னர்

Page 33
தீரன் திப்பு சுல்தான் காவியம் O42D
தமக்குரியார் மாதர்கள் திப்பு வின்பால்
தஞ்சமுற்ற சேதிகொண்ட பகைப்புலத்தோர் இமைப்புக்குள் முடிவுகொண்டார் யுத்தம் தன்னை
இறுதிக்குக் கொண்டுவர நடந்த தஃதே
162
கொதிகடலின் கோரத்தில் நடந்த யுத்தக்
கெடுபிடியில் இருந்ததனால் சொன்ன வாறு கதியென்ன களத்திலெனும் சேதி தன்னைக்
கூறமாட்டா நிலைமன்னர் கொண்டிருக்க மதியுகம் கொண்டுதிப்பு நிலையுணர்ந்து
மறக்களத்தை நோக்கியதால் ஏற்ற வேளை விதிமாறிப் போனதன்று மாற்றார் தோல்வி
வசமாக்கிச் சமாதானம் வேண்டு தற்கே
163
யுத்தமொரு புறத்தினிலே ஓய்ந்து போக
ஒன்றியதே சமாதானம் இருந்த போதும் யுத்தத்தில் கைதான மாதர் பாலோர்
ஒழுங்குமீறல் தொடரவழி ஒப்பிற் றன்றே சத்தியத்தின் உருவான இளைஞர் திப்பு
தன்னளவில் ஏற்றவொரு பொறுப்பி னாலே வித்தாகா துற்றதது பின்னோர் போழ்து
வரலாறாய் மாறியது நோக்கலாமே
164
சொந்தம்தம் பால்வெற்றி என்னுகின்ற
செருக்கினிலே நிலைமறந்து மாதர் கொண்ட அந்தப்புரத்தினிடை புகுந்தோர் வீரன்
அரசர்தம் மனைவியினைக் கரத்திற் பற்றிச் சொந்தமுறத் துணிந்தனனே கண்ட திப்பு
தடுத்திடப்புன் நகைகாட்டி ஆணை மீறி வந்துறையும் எதிர்வினையை மனங்கொள்ளானாய்
வன்முறைக்குத் துணிந்தனனே தொடரலானான
165

ஜின்னாளுர்ஷரிபுத்தீன் O43 lo
புந்தியிலான் காமுகனாய் மாறிப் பண்பைப்
புறந்தள்ளித் தாய்மைக்குக் களங்கம் சேர்க்க முந்தியதால் பொறுக்கவொண்ணாநிலைமை தோன்றும்
மனச்சாட்சி வெற்றிபெறும் அவனை நோக்கி சிந்தியதோர் சிறுபருக்கை கைத்துப் பாக்கி
துப்பியதால் வீரன்தலை சிதறு தூளாம் சொந்தமதற்கானதிப்பு மாதர் நோக்கிச்
செய்கைக்கு வருந்துவதாய்ச் செப்பினாரே
166 நடந்தவைகள் அனைத்தையுமே கண்ணால் கண்ட
நாடாள்வோன் மனைசிலைபோல் மலைத்து நிற்க கடந்துசில அடிகள்முன் வந்து நின்று
கவல்கொண்ட வதனத்தில் கனிவு காட்டி நடந்துவிட்ட தவறுக்காய் எம்மோர் சார்பாய்
நான்நின்பால் மன்னிப்புக் கோருகின்றேன் துடைத்தெறிக அச்சத்தை இனிமேல் எந்தத்
தீங்குமுங்கள் பக்கல்வரா எனப்பு கன்றார்
167 மானத்தைக் காத்தவிளஞ் சிங்கந் தன்னை
மாற்றானின் மனையரசி கண்கலங்க தேனிகர்த்த வார்த்தைகளால் நன்றி யென்றாள்
செல்வனேநீநல்லாருள் நல்லாய் என்றாள் ஏனிந்தப் புகழ்ச்சிநீவீர் எந்தா யொத்தீர்
எனதுகடன் செய்தேன்நான் பெண்மை காத்தேன் ஈனருக்குக் கற்பித்த பாட மஃது
என்றுரைக்க இருவிழிநீர் பொழியக் கண்டார்
168
தாயென்ற வார்த்தைதனைத் திப்பு சொல்லத்
தன்வயிற்றுப் பிள்ளையிவ னென்பாலுள்ளந்
தோயுவதைத் தாயவளும் உணர்ந்தாள் கண்ணால்
தனதாக்கிக் கொண்டவரை நாழிநின்றாள்

Page 34
தீரன் திப்பு சுல்தான் காவியம் O44D
வாயுதிர்ந்த வாழ்த்துகளோ டருகிற் சென்றே
வாஞ்சையொடு கைபற்றி மகனே உன்னைக்
காயமொடு உயிருள்ள வரைநான் நெஞ்சுள்
கொண்டிருப்பேன் நீயென்றன் பிள்ளை யென்றாள்
169 அடிமனத்துள் வேரூன்றிப் பதிந்த தந்த
அன்னைமொழி பாசத்தைக் குழைத்தெடுத்து மடிமீது வைத்தூட்டு வாமென்றாக
மனத்துன்னி மகிழ்ந்தாரே திப்புச் செல்வர் கடந்தாலுங் காலமந்த நிகழ்வு நெஞ்சுள்
கனியுஞ்சில போழ்துகளில் கண்ணுள்ளாடும் இடமறியார் யார்புறத்திலிருந்திட்டாலும்
இளநகையொன் றுதிர்ப்பாரே இன்பத்தாலே
17 Ο
நிறைவுற்ற யுத்தத்தால் அமைதி தோன்ற
நாரியரும் திப்புவினால் நலம்பெற்றேக மறுதரப்பில் மன்னவரும் அருகல் வந்து
மிகப்பணிந்து கூறிடுவார் “உங்கள் தந்தை திறல்கண்டென் அச்சத்தால் பணிந்த தென்றன்
சிரசவர்க்கே ஆனாலோ உங்கள் தம்மின் அறங்கண்டு பணிகிறதாம் என்றன் சென்னி
ஐயநின் செய்கைக்கென் நன்றி என்றார்
171 மற்றொருகால் இதுபோன்றோர் நிகழ்வை நெஞ்சில்
மீட்டிடுங்கால் திப்புசுல்தான் மதிநுட்பத்தை உற்றுணர்தல் சாலுமது யுத்தத் தின்போழ்டுது)
உண்டான தாகுமதாம் உடைமை யானார் கொற்றவண்பால் பெண்டிர்கள் கொள்ளை யாக
கவலுற்றார் யாதுநிலை பெறுமென்றாக சற்றுமவர்க் கின்னல்கள் தோன்றா வாறும்
சமாதானம் நிலைபெறவும் திப்பு செய்தார்
172

ஜின்னாவூர் ஷரிபுத்தீன் C45 lo
கைகடக்கும் நிலையிருந்த சமாதா னத்தைக்
கொணரவெனப் பிடிபட்ட மாதர் நோக்கிக் கைகடந்து நீவீர்நும் கணவர் தம்பால்
கைதிநிலை தவிர்த்தடைய வேண்டுமாயின் கைகொடுக்க வேண்டும்எம் முயற்சிக் கஃது
கருத்தொன்றல் அமைதிக்காம் வழியைக் காணல் கைதருவீர் அவரண்டை தூது விட்டுக்
கருத்தொன்றச் செய்கவென்றார் அவர்மேற் -
ஷ கொண்டார் 173 ஆங்கிலேயர் திட்டமொன்றை வகுத்தார் அந்நாள் ஆயிரத்துத் தொளாயிரத்து அறுபத்தேழில் வேங்கையினை அடக்குதற்காம் மராட்டியர்கள்
வழிநிசாமும் துணைநின்றார் முக்கூட்டாக பங்கறியார் ஹைதரவர் புகும்வரைக்கும்
புதுமையது வென்றாலும் நிலைமை ஒர்ந்து தாங்கியது சிந்னையோர் தெளிவு யுத்தம்
தவிர்த்தாளல் மனுஅழிவைத் தவிர்க்கு மென்றே
174 தனித்தனியாய் வந்திருந்தால் நிலைமை வேறு
திட்டமிட்டுத் தந்திரமாய் நுழைந்ததாலே தனித்தனியாய்ப் பிரித்திவரைக் கையாள் தற்குத்
திட்டமொன்றை வகுத்திட்டார் ஹைதர் முன்னர் தனித்தழைத்தார் மராட்டியரை நீங்கள் என்மேல்
தொடுத்தயுத்தம் தவறில்லை ஆங்கிலேயர் தனித்துவர மாட்டாராய் உம்மீர் பேரின்
துணைகொண்டார் உங்களுக்கும் இதுசெய்வாரே
75 இன்றுங்கள் பேரிலெம்மை அழிக்க வென்றே
இணங்கியவர் இதுபோன்றே மற்றோர் போழ்தில் இன்னொருவர் துணைகொண்டு உமைய பூழிக்க
இசையாரோ இதையெண்ணிப் பாரீர் நாங்கள்

Page 35
தீரன் திப்பு சுல்தான் காவியம் O460
முன்வருவோம் சமாதான உடன்படிக்கை
முறையாகச் செய்திடுவோம் எனவு ரைக்க அன்னியரைப் புறந்தள்ள மராட்டியர்கள்
"ஆம்"என்றார் அவ்வாறே நடந்திற்றன்றே
176
சமாதானத் தூது
நடந்ததனைக் கேள்வியுற்ற ஹைத்திராபாத்
நிசாம்திப்புதனையழைத்தார் பேரம் பேச உடன்தந்தை போகவெனப் பணித்தார் சென்றோர்
உடன்பாட்டுக் கவரைவரச் செய்க என்றார் நடந்தமுதற் போரில்வாள் ஏந்தி வீர
நாயகராய்நாடுவந்த திப்பு வெள்ளைக் கொடியேந்திச் சமாதானத் தூது சென்றார்
காலத்தின் மாற்றமிது கூறுங் காலே
177 அழைப்பையேற்று திப்புவைத்தன் தூத ராக
அனுப்பிவைத்தார் ஹைதரலி தனித்தல் லாது விழிப்புடனே மூவிரண்டு ஆயிரம் பேர்
வழித்துணைக்காய் அவர்கூடப் பரிப்படைப்பேர் அழித்தவர்தான் உடன்பிறப்பைப் பதவிக்காக
அறிந்திருந்தார் நிசாம்செய்த அராஜகத்தை பழிச்சுமைக்கும் அஞ்சாதார் என்பதாலே
பாதுகாப்புத் தூதருக்குப் பெறவேண்டிற்றே.
178 பதினேழே வயதுவந்த இளைஞருக்குப்
புத்திக்கூர் மதியூகம் நிதான மெல்லாம் கதியென்று கிடந்ததவர் வீரத்துள்ளே
காவலிறை கொடுத்தபெரும் அருள்களாகும் அதிகாலைப் பொழுதொருநாள் “சுபஹற்”இன் பின்னே
அரசழைப்பை ஏற்று"ஹைதர்” மன்னர் முன்னே எதுதானோ காரணமென்றறிய வேண்டி
இன்முகத்தினார்திப்பு "சலாம் உரைத்தார் 179

ஜின்னாவூர் லுரிபுத்தீன் O47 o
சலாத்திற்குப் பதிலுரைத்து வாழ்த்துங் கூறிச்
சரிசமமாய் தன்னருகே அமரச் செய்து சிலையன்ன பார்வையினைத் தம்மின் செல்வன்
திறந்தவிழி யூடாகச் செறியச் செய்தார் புலிவிரந் தனிலென்ற போழ்தும் மைந்தர்
புந்தியதன் ஆழத்தை புரிதல் வேண்டி நிலைத்ததுவோ சிலபொழுது தந்தை நோக்கு
நுண்ணறிவுக் கூர்மையினை நோக்கு தற்கே
18O வரவழைத்த காரணத்தை வினவ மாட்டா
வாறிருந்தார் விவரத்தை அறியும் வாஞ்சைச் சிரத்துணர்வை அரித்திட்ட காலுந் தந்தை
செப்புவரை பொறுத்திருத்தல் வேண்டு மென்றே கருத்துன்னிச் செவிமடுக்க வார்த்தை கோத்துக்
காரணத்தை எடுத்தோதக் கடமை தம்மின் பொறுப்புணர்ந்தார் களப்போரில் காட்டும் வீரம்
பொடியளவே கொள்ளுமிந்தப் பணியில் என்றே
181
சமாதானப் பேச்சுவார்த்தை யொன்றை நாடித் தூதொன்று நிஜாம்புறத்து வந்த தின்று நமைநாடி வந்ததொன்றை நிராகரித்தல்
நன்றன்று நல்மகனே நீயே சென்றோர் அமைதிக்காய் உகந்தவழி கண்டு வாராய்
'அல்லாஹற்வின் திருப்பொருத்தம் அமைவதாக சுமைபெரிதே வயதிற்குத் திறமை மிக்காய்
சென்றேவா வென்றேவா என்றிட்டாரே
182
கட்டளையைக் காதேற்றுப் பேச்சு வார்த்தை
கைகூடு வாறேநல் லுபதே சங்கள்
திட்டங்கள் பற்பலவும் தேர்ந்தறிந்தே
தந்தையிடம் விடைபெற்று திப்பு சுல்தான்

Page 36
தீரன் திப்பு சுல்தான்காவியம் C48)
விட்டகன்றார் ஹைத்ராபாத் நோக்கித் தம்மின்
வருகையினைத் தூதனுப்பித் தொடர்ந்தார் தூதாய் மொட்டொன்று வருவதனை நிஜாமறிந்தே
மகிழ்வுற்றார் தம்கரந்தான் ஓங்கு மென்றே
183
வருபவனோ சிறுபொடியன் விபர மற்ற
வயதினனென் வயதினிலும் அனுபவத்தும் ஒருதுளிக்கும் சமமாக மாட்டான் என்றே
உடனிருந்த அமைச்சனுக்கு நிசாமு ரைக்க பெருவீரர் ஞானத்தில் கல்லா மேதை
பெற்றெடுத்த பிள்ளைதிப்பு தந்தை போல இருந்திடலாம் எனவவரும் பதிலுரைக்க
ஏளனப்புண் ணகையொன்று நிசாம்பால் மின்னும்
184 தந்தையிட்ட கட்டளையைத் தலைமேல் கொண்டு
தனதுமுதல் தூதுதனைச் செயலில் காட்ட சந்திப்புக் கேற்றபடி வழமைக் கொப்ப
சேர்த்தளித்த பரிசுப்பொருள் தமையுங் கூட்டி மந்திரத்தார் சிலரொன்ற மன்னர் செல்வர்
மாடவழி கடந்துநிசாம் எல்லை தாண்டி வந்தமைந்தார் மாளிகைக்கு முன்பதாக
வரவறிந்த மன்னர்கால் வழியை நாடும்
185
மேல்மாடம் தனிலிருந்துநிலத்தை நோக்க
மிகப்பெரிய சேனையொன்று அணிவகுத்த கோலத்தைக் கண்டநிசாம் அதிசயித்தார்
கரிஆறும் குதிரைபத்தும் மணியும் பொன்னும் சாலத்தன் னோடுகொண்டு சென்ற திப்புத்
தூதரையும் கண்ணுற்றார் பேச்சு வார்த்தைக் காலத்தைக் குறித்தனுப்பி வைத்தார் சொன்ன
காலத்தில் நினைந்தபடி நடந்ததன்றே 186

ஜின்னாவூர் ஷரிபுத்தீன் C49 o
நேர்நேராய்த்திப்புவினை நிசாம்கண்ணுற்ற
நிமிடத்தே அவர்தம்மின் இளமைத் தோற்றம் காரழிக்கும் பகலவன்போல் மனத்தை ஈர்க்கக்
கண்ணியமாய் வரவேற்றாங் கமரச் செய்து நேரிடையாய்ச் சமாதானப் பேச்சு வார்த்தை
நிறைவேற்றத் தொடங்கினரே திப்பு தம்மின் கூர்மதியின் விலாசத்தைக் கண்டார் முற்றும்
கரங்கோக்க முடிவவரும் கொண்டிட் டாரே
187 நிதானமுடன் தான்வந்த காரணத்தை
நிசாமுக்குப் புரியவைத்தார் அவரும் மிக்க நிதானமுடன் செவிமடுத்தார் சமாதானத்தைத்
தோள்தாங்கி வந்தேனெனக் கூறி நீங்கள் உதவுவது நன்றல்ல ஆங்கிலேயர்
உங்களுக்கும் எதிரிகளே நமது நாட்டுள் விதிமாற்ற வந்துள்ள புற்று நோய்தான்
விலக்குவது நம்பொறுப்பே என்றுஞ் சொல்வார்
188 இன்றெம்மை அழிப்பதற்கு உங்கள் பாலே
உதவிதனை நாடுகின்றார் ஆங்கிலேயர் பின்னுங்கள் தனையழிக்க மற்றோர் பேரை
பங்காளி யாக்கிடுவர் நினைவில் கொள்வீர் கன்னமிட வந்தவர்கள் கூட்டுச் சேர்ந்தால்
காரியத்தில் வெற்றிகொண்ட கையினோடு பின்னமுறு வார்கள்தம் கைகிடைத்த
பகுதியிற்பங் கிடவேண்டும் என்பதாலே
189 நாடுகொள்ள வந்தவர்நம் மக்கள் தம்மின்
நலன்நோக்கார் அடிமைகளாய் வரிப்பர் அஃதால் கேடொன்றே விளையுமன்றி நன்மை தேறா
கொற்றவரின் கடன்குடியைக் காப்பதாகும்

Page 37
தீரன் திப்பு சுல்தான் காவியம் C500
தேடிடுங்கால் வெள்ளையரின் உறவை நாங்கள் தம்மைத்தாம் அழிப்பதற்குச் சமம தாகும் வேண்டாமவ் வினைநீங்கள் எம்மினோடு
வரிக்கும்பகை இருபேர்க்கும் அழிவைச் சேர்க்கும்
19 O கூறியதைச் செவிகொண்ட நிசாமும் தம்மின்
கொள்கையிலே மாற்றமுறார் தாமும் அஃதை அறிந்திருந்த போதினிலும் ஆள்பரப்பை
அதிகரிக்கும் ஆசைவிஞ்சக் கூட்டுச் சேர்ந்தார் குறியிருந்த தவர்தமக்கு ஹைதர் தம்மைக்
கவிழ்ப்பதற்கும் தமையழிக்கக் கூடு மென்றே நிறைவான படையிருந்தும் கொண்டிருந்த
நெஞ்சுரத்தை கண்டஞ்சித் தவிர்த்திருந்தார்
191 சுயநலத்தால் தோற்றுப்போன தூதும்
திப்புவின் வெற்றியும்
மராட்டியரும் ஹைத்திராபாத் நிசாமும் தம்மை
முற்றாகக் கைவிட்டார் எனவ றிந்தும் பெரும்படையோ டண்மிவரும் பறங்கிப் பேரைப்
பார்த்திடுவோம் கையொன்றென்றுறுதி பூண்டார் அருகிருந்தோர் அகன்றதனால் ஆங்கிலேயர்
ஆருமற்றுத் தனித்தார்கள் என்றே எண்ணிப் போருக்கு முகங்கொடுக்கத் துணிந்தார் ஹைதர்
போர்க்களத்தில் குருதிமழை பொழிந்த தம்மா
192
வழமையான போர்க்கருவிவில்வா ளம்பு
வினாடிக்குள் உயிர்குடிக்கும் கைத்துப் பாக்கி
குழுக்குழுவாய்க் கொண்றொழிக்கும் பீரங் கிப்பேய்
கொள்ளையரின் புறத்தினிலே வலிமை கூட

ஜின்னாவூர் ஷரிபுத்தீன் O510
கிளைத்திருந்த தவர்களிடம் எண்ணிக் கைக்குள்
கொணரமுடியாதளவில் ஹைதர் சற்றும் விளைவிதுவா யிருக்குமென நினைந்தாரில்லை
வருவதனை எதிர்கொள்ளும் வீறு கொண்டார்
193
பொருதினவே படையிரண்டும் கடலிரண்டு
பேரொலியை வானதிரப் பரப்பி விண்டே ஒரேவெறியில் ஒன்றுக்குள் ளொன்று வீறாய்
ஊடுருவிப் புணர்ந்ததுபோல் செந்நீர் ஆறாய்ப் பெருகியது சமர்க்களத்தைச் சகதியாக்கும்
பாங்கினிலே கைதலைகால் முண்டம் வேறாய்ப் பிரிந்துதணித் தனியாகப் பிணங்க ளென்று
பிரித்தொன்றைப் பார்க்கவியலாத பாங்கே 194 ஓங்கியவாள் உக்கிரமாய் ஒன்றோ டொன்றில்
ஒன்றுவதால் தோன்றுகின்ற ஒளியால் கண்கள் தாங்காது மூடுகையில் அடுத்துத் தாக்கத்
தந்தம்புலம் தெரியாது தவித்தார் வீரர் வேங்கையெனப் புரவியிலே ஹைதர் ஆணை
விடுத்தவராய் வாள்சுழற்றி சிரங்களைந்தார் ஆங்கெவருந்தப்பவில்லை அவர்கண் பட்டோர்
அடிதுவண்டார் வெள்ளையர்கள் அரியுண்டாமே 195 இருபுறத்தும் துப்பாக்கி உமிழுந் தோட்டா
இருபுறத்தும் உயிர்குடிக்கும் கைத்துப் பாக்கி அருகிருக்கும் எதிர்த்தரப்பு வீரன் ஆவி
அமைதிகொள நிரந்தரமாய் விடையளிக்கும் பெருகிவரும் படையையொன்றித்துவம்சம் செய்யப்
பீரங்கிக் குண்டுகளும் பங்கைச் செய்யும் மருவிவரும் ஆபத்தை அறிந்த ஹைதர்
மாற்றுவழி யொன்றுக்கு மனந்து னிந்தார் 196

Page 38
தீரன் திப்பு சுல்தான் காவியம் O52O
மகன்திப்பு தனையழைத்துப் படையொன் றோடு மற்றுமொரு புறமாகத் தாக்கு தற்கு வகைசெய்தார் காளிகான் துணையாய் நின்றார்
வெற்றிக்கும் வாகாக வழியுஞ் சொன்னார் பகைவர்களை இயன்றமட்டில் போக்குக் காட்டிப் பின்னவரைத் தாக்குகின்ற தந்திரத்தை வகைப்படுத்தக் கூறிவாழ்த்தியனுப்பி வைத்தார் வெற்றிகொளப் பறந்ததது காற்றினோடே
197
செங்குருதித் தாகத்தால் வாள்கள் ஏங்கச் சமராடும் வெறியேடு வீரர் ஏங்கப் பொங்கியெழுந்தார்ப்பரிக்கும் பேரலைபோல்
பாய்ந்ததுவோர் பரிப்படையும் பகைவர் நோக்கும் புங்கத்தின் வேகமன்ன வேக மாமோ
படைநடத்தும் திப்புவின்வெண் குதிரைக் கீடோ தங்கவில்லை எங்குமொரு தரிப்பில் தானும்
சேர்புலத்தைச் சென்றடைந்தார் சிலநொடிக்குள்
198 வந்தபணி வெற்றியுடன் முடிந்த பின்னர்
விரைந்தாரே "திருவண்ணா மலை"க்குத் திப்பு வந்தசேதி மீண்டிடவும் செய்த தாங்கே
வெள்ளையரை ஹைதரலி எதிர்த்துநின்றார் தந்தைவயம் வெற்றிதலை சரியா தென்றுந்
தாக்குதலைத் தாங்கவொண்ணாநிலைமை -
யென்றும் அந்தரத்தில் பறக்கவைத்த தவரைத் தாதை
ஆவலது தேவையஃதே அறிந்தவாறே
199 “சென்னை”தன் கைப்படுமென் றெண்ணங் கொண்டு
சென்றவர்தம் தந்தைநிலை அறிந்து மீள முன்னெதிர்த்தார் வெள்ளையர்கள் முனையிரண்டில்
முற்றுமவர் தமையழித்து வெற்றி கொண்டு

ஜின்னாவூர் ஷரிபுத்தீன் Os3 o
தன்னைவிரைந் திடவைத்தார் தந்தை பாலே
தோல்விக்கு விடைகொடுக்க வாகை கொள்ள எண்ணியபோல் நடந்ததது வெற்றி மீண்டு
இணைந்ததவர் திருக்கரத்தில் இறுதித் தீரஜ உக்கிரமமாகப்போர் நடந்த வேளை
ஊகித்தும் அறியவொணன்னா வாறே மின்னல் ஒக்கவந்த படைபோரின் நிலையை மாற்றி
உடன்ஹைதர் பக்கமதன் சார்பு காட்ட திக்கெட்டும் வெற்றியின்பே ரொலியால் விஞ்சும் திப்புவதன் காரணராம் எதிர்த்த பேர்கள் சுக்குநூறாய்ப் போனார்கள் திடீர்த் தாக்கத்தால்
தந்தையுள்ளம் களிப்பினுச்சி கண்டதன்றோ
2O1 தோல்விகண்டோர் புறமுதுகிட் டோட மற்றோர்
செத்தவுடற் கூறுகளாய் களத்தில் தேங்க கோல்கொண்ட மாமன்னர் ஹைதர் மைந்தர்
கைகொண்ட வாகையொடு தாதை முன்னே தூலவுடற் பொறைமின்னத் தோற்றங் காட்டிச்
சலாமுரைத்து வழிமொழிக்காய்க் காத்து நின்றார் நாலுபடைத் தளகர்தோர் உடன்நின்றார்கண்
நிறைந்தவெழிற் காட்சியது மன்னர் பாலே
வெற்றித்திருவாகத்தன் முன்னே நின்ற
வாரிசுவை நெஞ்சணைத்து ஹைதர் சொல்வார் சற்றுமெதிர் பாராத வேளை போரைத்
திசைதிருப்பி வெற்றிகொண்டாய் தீரச் செல்வா முற்றும்நீ பொருந்துவையே மகுடந் தாங்க
மாற்றாரை வெற்றிகொண்டு வாகை சூட பெற்றதிந்த மண்ணுன்னால் பெருமை வீரம்
பதம்பணிந்த துன்னிடத்தில் இறையா லென்றே
2O3
2 O2

Page 39
தீரன் தியு சுல்தான் காவியம் O540
தொடர்ந்து வந்த தொல்லைகளும் திப்புவின் தீரமும்
தொடர்ந்து வந்தன தொல்லைகள் பற்பல அடலர் அவரவர்க் கானவாறியற்றினர் திடமும் வீரமும் திறமையும் யுக்தியும்
கொடைய தானதே தாதை தனயர்க்கே
2O4
தந்தை பிள்ளையாம் இருவரும் சேர்ந்தனர் வந்த இடர்களை வென்றனர் ஒன்றியே வந்து சேர்ந்தது "வாணியம் பாடி"யும் செந்தமம் ஆனது "திருப்பத்தூர்க்" கோட்டைகள்
2O5 ஆண்டொன் றென்றுமே ஆகிடாப் போழ்தினில் தோன்று பொறாமையால் தொற்றிய பகைமையின் சான்று நிசாமெனும் செருக்கினர் வெள்ளையர்
ஊன்று நஞ்சினை உண்டது கீழ்மையே
2O6
நிசாமின் தொல்லைகள் தொடர்ந்தன மீண்டுமே திசையும் மாறினார் தம்மனக் கொள்கையில் விசால மற்றநெஞ் சுற்றவராதலால்
இசைவு கொண்டனர் வெள்ளைய ரோடுமே
2O7
போரே வாழ்வெனப் போனதன் தந்தையைப் போரிலிருந்துசற் றோய்வுகொண்டோய்ந்திடுங் காரணத்தவராகினார் திப்புதன்
பேரிலப்பொறுப்பேற்றினா ராமரோ
2O8
வீர வேங்கையென்றானதன் பிள்ளையின் ஒரு மைதனை உளத்தினி லூன்றியே நேரிடைப்படை நடத்தி வென்றிடச் சேருமனுமதி தந்தன ராமரோ 2O9

ஜின்னாவூர் லுரிபுத்தீன் Osso
நிசாமினெதிர்ப்பினை நசுக்கி அகந்தைகொள் நிசாமினென்பெலாம் நடுங்கிட ஆசைகள் வசலை யாக்கிய வீர சாகசம்
திசையெண் மீதிலும் சேர்ந்ததென்றாமரோ
21O
“வொட்ஸன்” “காவின்” “ஸ்மித்”எனும் வெள்ளையர் கட்டளைத்தள கர்த்தரின் படைகளை ஒட்ட ஒழித்தவ ரோடிட வைத்துமே
கொட்ட மொடுக்கிய காரன ராமரோ
211
தொடர ஆண்டுகள் நான்கென வானபோர் தொடரமை கர்முதற் போரெனச் சாற்றுவார் அடங்க மாட்டிலார் அடங்கிட வைத்தசிர்
அடங்க லாக்கிய அற்புதமாகுமே
212
பெற்ற பிள்ளையின் புஜபலம் போர்களின் வெற்றி கொண்டுமே விளங்கிட ஹைதரும் உற்ற மகிழ்வினுக் கொப்பென ஒன்றுமே உற்றதில்லையே உரைத்திடி லாமரோ
213

Page 40
தீரன் திப்பு சுல்தான் காவியம் O56D
முக்கூட்டு ஒப்பந்தம்
குடகுமலைப் புறபமிருந்தே காவேரித்தாய்
கடல்நோக்கிப் பவனிவந்தாள் இருபுறத்தும் அடர்ந்தமரக் காடுகளும் மலையுங் குன்றும்
அழகுசெய்தததனழகை அலங்க ரிக்கக் கடந்துவரும் புறமனைத்தும் களனி யோங்கக்
குடிப்புலத்து மாந்தர்களும் கவலற்றேற்றக் கொடையருள்வாள் புனலாலே மண்செழிக்கும்
கருணைமிகு மனங்கொண்டாள் அன்னை -
போன்றாள் 214
வானோங்கு பருவதங்கள் இயற்கை தந்த
வரமாகத் தொடர்ந்திருக்கச் சிறுகுன்றங்கள் காணுமவை யிடையிடையே கரிக்கூட்டம்போல் கண்களுக்கு விருந்தாகும் மரங்களாலே கானகங்கள் பரந்துவிரிந்தெழில்கொழிக்கும்
கவலையின்றியுயிரினங்கள் கூடி வாழும் வானாளொன்றாகாதே மன்னுயிர்க்கு
வற்றாத பேரழகை மாந்து தற்கே
215
யானைபுலி கரடிபன்றி ஓநாய் மான்கள்
இடம்பெயர்ந்து பாய்ந்தலையும் மந்திக் கூட்டம் கானமுயல் காட்டெருமை விலங்கினோடு
கண்கவரும் மயில்கூவும் குயில்போல் பன்னூ றானவனப் பறவைகளும் மகிழ்ந்து வாழும்
அளிமாந்தத் தேன்சுரக்கும் பூக்கள் பூக்கும் கானமிசைக் கின்றவண்டு குருவிக் கூட்டம்
காணுகின்ற காடுகளே பலவென்றாகும்
216

ஜின்னாவூர் லுரிபுத்தீன் C57 o
நீர்தேங்கி உயிரினங்கள் பருகி வாழ
நிலங்கொண்ட குளங்களிலே முதலைக் கூட்டம் சேருமவை ஒன்றின்மே லொன்று தொற்றிச்
சேர்ந்துவிளையாடும்பின் புரண்டே வீழும் ஊர்வனவவ்வோடுமலை யரவம் பாம்பும்
உடும்பாமென் னுயிரினங்கள் கான கத்தே பேரறியா வாறெனவும் வாழும் கூறப்
புகிலொன்றோ விரண்டாமோ பலநூறாமே
217
“கடம்பா"ரென்னினத்தவர்கள் குடகில் வாழ்ந்தார்
காடுவளர் ஏறுகள்போல் வீரம் மிக்கார் அடிபணியார் அன்னியர்க்கும் அடங்காப் பற்றார்
ஆட்சியிலே பெரும்பாலுந் தனித்தே நின்றார் இடையிலொரு காலத்தில் ஹைதர் ஆட்சி
ஏற்றிருந்த போழ்தவர்கள் அன்னியர்க்குக் கொடுக்கும்படி யானார்கள் கப்பம் மைகர்
கோண்மீதும் பகைகொண்டார் சருவினாரே
218
பலதடவை எல்லைகளில் மோதல் செய்த
போததனைப் பொருட்படுத்தா தொதுக்கினாலும் நிலாதுபல தொல்லைகளைத் தந்தார் இன்னும் நாம்வாழா திருத்தலிழிவாகு மென்றே நலமாயோர் நாள்வரட்டும் பொருந்தும் வாறாய்
நல்லதொரு பாடமவர்க் கியற்றித் தம்மின் பலமறியச் செய்யவெனக் காத்திருந்தார்
பற்றியதே வாரிசுப்போர் ஹைதர் வென்றார்
219
குடும்பத்துள் பகைதோன்ற ஒருவன் ஹைதர்
புறஞ்சாய்ந்தான் உதவிக்கரம் வேண்டு வோனாய்க்
கிடைத்ததொரு தருணமெனக் கொண்டு மன்னர்
கைகொடுத்தார் படைதிரட்டித் திப்பு சென்றார்

Page 41
தீரன் திப்பு சுல்தான் காவியம் O58D
இடையொடிந்தான் ஆட்சிசெய்த மன்னன் பால
இராஜப்பா மைசூருக் கேற்ற பேரை உடனாட்சிப் பொறுப்பேற்கத் தந்து திப்பு
ஊரடைந்தார் வாகைகொண்ட புலியைப் போன்றே 22O பொருந்திவந்த சந்தர்ப்பந்தனைத்தனக்குப்
பயன்கொண்ட தோடுமன்னர் ஏற்ற வாறு அரசியலில் மாற்றமுமே செய்தார் தம்மின்
ஆட்சிக்குப் பலமுமதால் ஏற்றதாகும் சருவிவந்த இடருமதால் தணிந்த தேற்ற
சாட்டையடி கொடுத்ததனால் வாரி சுப்போர் நெருங்காதும் பாதுகாப்பு செய்தார் அஃதால்
நலம்பெற்றார் நாட்டுமக்கள் அமைதி தோன்றும்
221 முடியிழந்த ராஜப்பா பழியைத் தீர்க்க
முயன்றான்தன் முயற்சிகளுக்கேற்ற பேரை அடைந்தான்முன் மைகரின் அரசி காலில்
அடைக்கலமும் வேண்டிநின்றான் அவளும் -
ஏற்றாள் முடிந்ததில்லை முன்னொருகால் ஆட்சி பற்றும்
முயற்சிஹைதர் மன்னித்து மைகர் வாழக் கொடுத்ததையும் மறந்திட்டாள் மீண்டும் மீண்டும்
கூட்டிணைந்தாள் வெள்ளையருங் கைகோத்தாரே
222 முக்கூட்டு நடவடிக்கை தோன்றிற் றன்று
மூக்குடைந்த ராஜப்பா மைகர் ராணி தக்கவைத்துக் கொண்டுதம தாட்சி மூலம்
கறையிடக் காத்திருக்கும் வெள்ளைப் பேய்கள் வக்கிரமுங் கொண்டார்தம் உள்ளத் தேயெவ்
வாகினிலும் ஹைதரினை ஒழித்துத் தம்மின் பக்கலிலே மைகரின் ஆட்சி சாயப்
பாடுபட்டார் பகலிரவாய் பயனற்றோரே 223

ஜின்னாவூர் ஷரியத்தீன் C59 o
ராணா ஒப்பந்தம்
ஆயிரத்தோர் ஏழுநூற்றின் எழுபத்தாறின்
இறுதிவரை தஞ்சாவுர் ஆட்சி ஹைதர் நேயத்துக் குரியதுவாய் இருந்த தஃதை
நொடியவைத்தார் வெள்ளையர்தம் கழ்ச்சியாலே வாய்க்குமொரு வேளையெனக் காத்திருந்து
வெள்ளையரைத் தொடர்புகொண்டாள் மைகர் -
greOof காய்த்ததொரு கனியவர்கள் தமக்குள் ளாகக்
கூட்டுமுறை ஒப்பந்தம் பிறருஞ் சேர்ந்தார் 224 தஞ்சாவூர் மண்ணிலது வேரூன்றிற்று
தீய"ரானா ஒப்பந்தம்” கொள்கை முற்றும் வஞ்சகமாய் ஹைதரினை ஒழித்துத் தங்கள்
வசமாக்கி மைகரின் உயிர்ப்பிழந்தே பஞ்சையாகிப் போயிருந்த ஆட்சி தன்னைப்
புதுப்பித்தே ராணிவழி யொருவருக்காம் ஒஞ்சரிப்பதாகுமது போல மக்கள்
உள்ளுணர்வை ஹைதர்பால் வெறுத்தலொன்றாம்
225
வெள்ளையரே முதன்மையுற்றார் திட்டத்தில்தாம்
வெற்றிபெற வேண்டுமெனப் பாரதத்தில் வெள்ளையின ஆட்சிநிலை பெறுவதற்கும்
விரிந்தகன்று பரவுதற்கும் இடையூறாக உள்ளபெருந்தடைஹைதர் என்பதாலே
உதவிக்கே பிறர்தம்மைக் கூட்டுச் சேர்த்தார் எள்ளளவும் பிறர்நன்மை கருத்தி லற்ற
இடும்பர்கள் ஈதறியார் ஏமாந்தார்கள்
226

Page 42
தீரன் திப்பு சுல்தான் காவியம் O60
மைசூரின் நாளாந்த நகர்வொவ் வொன்றும்
மாற்றாரின் கருத்திற்குத் தெரியச் செய்தார் கைசோர விட்டவர்கள் ஆட்சிதம்மைக்
கயமைக்குக் கைகோத்தோர் ஓய்விலாரே தையலெனிலும்கழச்சி தலைமுற்றாகச்
சேர்த்திருந்த முன்மைகர் அரசி "ராணா கையொப்ப மானமுதற் கொண்டு துஞ்சாள்
கருமத்தில் கண்ணானாள் சோர்விழந்தாள்
227 ஆயிரந்தான் கூடியவர் கூழ்ச்சி செய்தும்
அவரைவெல்லப் பேரிறைவன் சூழ்ச்சி செய்தான் தூயவனின் கழ்ச்சிவென்ற போழ்து ஹைதர்
திப்புசுல்தான் இருவருமே அண்டை யெல்லாம் ஓயாது படையெடுத்து வெற்றி கொண்டே
ஒருங்கிணைத்தார் மைகரின் கொடியின் கீழே வாயடைத்துப் போனார்கள் மராட்டியர்கள்
வெள்ளையர்கள் நிஜாம்போன்றோர் வெற்றி -
கண்டே
228 பெரும்பங்கு கொண்டிருந்தார் திப்பும் எல்லாப்
போர்களிலும் பங்குகொண்டார் தந்தையோடும் ஒருவரெனத் தான்மட்டும் படைநடத்தி
உலகத்தின் பார்வைக்குள் ஊன்றிப் போனார் பரவியது புகழ்சொந்த மண்ணைத் தாண்டிப்
பறங்கியரால் மேல்நாடும் புரிந்த தஃதை வரமழிந்த நிலைகொண்டோர் துடித்துப் போனார்
வெற்றியின்மேல் வெற்றிகரம் பெற்றதாலே
229 கூறிடுவர் சேதியொன்று அற்றை நாளில்
கேட்கநகை கொள்ளவரும் சேதியஃதாம் வேறுவழியில்லையெனில் அடங்க மாட்டா
வயதிலிளம் குழைந்தைகளை வெள்ளைத்தாய்மார்

ஜின்னாவூர் லுரியுத்தீன் O61 o
கூறுவராம் "திப்புப்பேய் வருகு துன்னைக்
கடித்தெடுத்துத் துண்டுதுண்டாய்க் கூறு போட்டு மறுகணமே தின்றுவிடும் சத்த மின்றி
வாய்பொத்தி தூங்கிவிடு” என்பதாக
23O திப்புவின்பால் வெள்ளையர்கள் கொண்டிருந்த
தன்னச்சம் காரணமாய் அவரை மீறி ஒப்புவிக்கும் வார்த்தைகளாம் அவைகளென்றால்
உண்மையது வேறில்லை போர்க்க ளத்தில் தப்பியோடிப் போனவர்கள் தம்மை யன்றித்
தலைதப்பி யில்லையொரு பேரும் என்ற மெய்ப்பிலதூ தோன்றியதாம் பெண்கள் கூட
மனத்திலச்சம் கொண்டிருந்தார் அறிந்ததாலே
231
நினைந்தாலும் பிறரஞ்சும் வீரராக
நெஞ்சத்தில் நிலைபெற்றார் மாற்றார் பேரில் பனையுறுதி கொண்டவுடற் பலத்தால் திப்பு
பகைவரினைப் பந்தாடும் புதுமை கண்டே சினங்கொண்ட சிங்கமவர் களத்தில் வாழ்வில்
சமாதான நோக்குடைய தரும சீலர் தனைத்தனித்தே தந்தைவழி சென்றார் கொள்கை
தாய்மண்ணைக் காப்பதென்னும் துணிவினோடே 232
பரந்துவிரிந் தொருபெரிய நிலப்பரப்பைப்
பெற்றதந்த நாளினிலே மைசூர் ஆட்சி ஒருக்காலும் இருந்ததில்லை அவ்வாறென்றே
உலகவரலாறுரைக்கும் உண்மை அஃதாம் சரித்திரத்தில் நாயகராய்ப் பரத நாட்டின்
சுதந்திரத்தின் முதற்குரலாய்ப் பெரும்பே ருக்கே உரித்தானார் தந்தைமகன் இருபேரும்தான்
ஓங்குபுகழ் இறைவனுக்கே நெஞ்சில் வாழ்வோர்
233

Page 43
தீரன் திப்பு சுல்தான் காவியம் O62O
திப்புவின் திருமணம்
மனம்மு டித்திடு வயதுமே யானதும் மனம்மு டித்திட மன்னவர் வேண்டிட மணம்முடித்திடும் மனையுமே தேர்ந்ததால்
மணம்மு டித்திட மகனுமொப் பினாரரோ
234
பதியின் விருப்பமுற் றாமெனத் தன்மகன் பதிலுரைத்ததைப் பஃறுன்நி சாமனப் பதிவிலேற்றிறை பணிந்து உயரதி
பதியை யுளத்தினால் புகழந்தன ராமரோ
235
ஹைதர் திப்புவின் கைகொளத் தேர்ந்தபெண் "ஹைரென்றானதும் கருத்திலுறைந்தபெண் ஹைதர் மகனுரை செய்ததும் அதுவுமே "ஹைரென்றோதினார் கோனிரு பேரரோ
(ஹைர் நலம்)
236 பிஞ்சு வயதினில் படகுத்து றையினில் அஞ்சி டாதிருள் வேளையில் தன்பசி துஞ்சலகற்றியே தீர்த்தபெண் றுக்கயா வஞ்சிகரங்கொள விரும்பினா ராமரோ
237
மதகுரு மகளொரு மனையென வானனள் மதிகொளு மகளொரு மனையென வாகினாள் மதமதற் கொப்புதல் தந்ததால் ஈர்மனை மதித்து வாழ்ந்துமகிழ்ந்தன னாமரோ 238
வேறு
திருமணப் பந்த மொப்பித் தனயனும் பதிலுரைக்க ஒருமனங்கொண்டார் தாயும் தந்தையும் உளம்மகிழ்ந்தார் பெருவிழாக் காண மக்கள் பகலிரவாக நாட்டின் ஒருதெரு வற்று முற்றும் அலங்காரம் செய்திட்டாரே
239

ஜின்னாவூர் டிரிபுத்தீன் O63 o இருமதஞ் சார்ந்தோர் ஒன்றாம் எனவொன்றி வாழும் நாட்டில் இருமதத் தாரும் தம்மின் எதிர்கால மன்னர் கொள்ளும் திருமண நாளை எண்ணிச் சிறந்தனர் மனத்தால் தத்தம் விருப்பினுக் கியைந்த வாறு விழாகொளத் திடமுங் கொண்டார்
24O கன்னியர் மலர்தொடுப்பார் காளையர் கழிகள் கொண்டே முன்னமே பரண்கள் கட்டி மலர்த்தொடை வருங்கால் மட்டும் புன்னகைப் பரிசில் ஈந்து பாவையர் தம்மைச் சீண்டி கன்னங்கள் சிவக்கச் செய்வார் காண்பவர் கண்காணாதே
24
மலர்கொண்டு மாட மெல்லாம் மகளிர்தம் மலர்க்க ரத்தால் அலங்காரப் பந்த லாக்க அளிகள்மொய்த்தவர்கண் கைகள் சிலவவைக் குள்ளாம் என்றே தொற்றிடுஞ் சிலிர்த்தே அன்னார் நிலைகுலைந்தலறியோடல் நாட்டியம் போலு மாமே
242 அலறிடுங் குரல்கேட் டாங்கே ஆனது என்ன வென்னும் நிலையறிந்திடத்தாய் மார்கள் நாடியே பாதம் வீசக் கலகல வெனச்சிரிப்பர் கன்னியர் கரமொ லித்தே கிலிகொள வைத்த கோபங்கொண்டிடத் தாய்மார் மீள்வார்
243
வான்தொடு கம்பந் தோறும் வீசிடுங் காற்றுக் காடத் தோன்றிடும் பதாகை கொள்ளை தெருத்தெரு வெங்குங் காணும் பூண்டபொன் வளைகளோடே பார்க்கக்கண் பறிக்கச் செய்த தூண்களொவ்வொன்றுஞ் சாலைச் சேவகம் செய்வார் போலாம்
244 மாவிலைத் தோரணங்கள் மலர்ச்சர வரிகள் வீட்டை மேவின கண்க ளிக்க மணமுமிழ்ந்திதயம் ஈர்க்கும் பூவிதழ் நயன மாதர் புத்துடை அணிந்து சொர்க்கத் தேவியர் போலு முற்றார் தெருநோக்கில் வாயில் தோறும்
245
பகலிர வென்றில் லாது பகலவன் காய்ந்தான் போன்றே அகல்களுந் தீநாக் கோலும் ஆனதம் பணிமேற் கொள்ள அகன்றோடுங் காங்குல் காற்றின் அசைவினால் சுடர்கள் ஆடும் மிகையலங் காரத்தாலே மிளிர்ந்தது"சீரங்கம்”மே
246

Page 44
தீரன் திப்பு சுல்தான் காவியம் O64D
ஆளணி ஊர்வலங்கள் அழகியர் குரவை பாட்டு கேளிக்கை குதூக லங்கள் காளையர் சாக சங்கள் வாளெடு வாள்மோ துண்டு விளையாட்டு வீரப் போர்கள் தோளொடு தோள்பொருத்திச் செய்சமர்க் களங்கள் காணும்
247 செடிகொடி மரங்கள் பூத்துச் சொரிந்தன இயற்கை கூடக் கடிகமழ் மணத்தில் தன்னேர் கடமையை யுரைத்தாற் போன்றே துடியிடை அரம்பையர்கள் சேர்ந்தொன்றி நாடு புக்கி மடையொடித் தழகு காட்டும் மாயையைத் தோற்றும் பாங்கே
248 தாய்மாருந் தந்தை மாரும் தம்மகர்த் திருமணத்தின் வாய்ப்படு வாகா யுன்னிவரித்துநல்லனைத்துஞ் செய்வார் தூயநல் மனத்திளைஞர் தம்முடன் பிறப்பா யெண்ணி ஆயன வியற்றினார்கள் அன்னைமண் ஆள்பதிக்கே
249 வேய்குழல் தோற்கும் வாகாய் வனிதையர் வாழ்த்துப் பாடத் தாயனைப் பெண்டிர் தந்தைத் தரத்தினோர் புகழ்ந்தே யேற்றச் சேய்பெற்ற செல்வன் கொள்ளுந்திருமணத் திருநாளென்றே வாய்ச்சொற்கள் குளற மூத்தோர் வாழ்த்துரை வழங்கினாரே
25O புள்ளினம் புறாக்கள் பச்சைப் பசுங்கிளி பட்டு டுத்திக் கொள்ளையாம் ஒன்றோ டொன்று கூடியே மகிழ்வ தென்னே கிள்ளையோ அனைத்தும் பேசும் கனிமொழிநறையோ பாகோ வெள்ளையாம் அவற்றினுள்ளம் வேடிக்கை மழலைக் கூட்டம்
251 நெய்யுண்ட கூந்தல் வாகாய் நீவியே மலர்கள் கடி மையிட்டார் நயன மீன்கள் விளங்கிடப் புருவம் தீட்டிக் கையகம் செம்மை கொள்ளக் கீறினர் மருதாணிப்பூ தையலர் இளையோர் தம்மின் திருமணத் திருநாட் போன்றே
252
வீதிகள் தோறும் உண்ண விடுதிகள் தாக சாந்திக் கேதுவாய் நன்னீர்ப் பந்தல் நல்ஆவின் அமுது சீத வேதுவெவ்வேறாய்ப்பான வகைளும் வழங்கினார்கள் யாதொரு இல்லத் துள்ளும் இலையடுப் பெரித லன்னாள். 253

ஜின்னாளுர் லுரியுத்தீன் O6so
ஈர்மதப் பேர்களும்மாங்கிணைந்தொன்றி வாழ்ந்தார் பேதம் சேர்ந்திலை மனத்துள்ளன்னார் சகோதரர் இந்து முஸ்லிம் ஒரன்னை வயிற்று தித்த உடன்பிறப் பனையார் கொள்கைச் சீரியர் திப்பு சுல்தான் செங்கோலினாட்சிப் போழ்தே
254 ஊணினில் வேறு வேறு உவப்பதால் அவரவர்க்கு வேணுமென்றான தொன்றை விரும்பியுண் டகடு கொள்ள ஆனொடு பெண்களொன்றா தமைவுறு தலங்கள் மீதே ஊண்வகை பெருக்கி வைத்தார் ஊருண்டு மகிழ்ந்த தம்மா
255 இந்துக்கள் உண்ண வென்றே இலைகளைப் பரத்திச் சாதம் சிந்திடா வாறு நாப்பண் தேவைக்கு ஏற்றவாறு தந்தனர் நெய்யும் வார்த்தார் சற்றுமே புலாலு மற்று வெந்தநற்கீரையுங்காய் கிழங்கும்பல் வகைகளமே
256 பசியினைத் தூண்ட நாவில் புளிப்புறைப் பொன்றி நீரைக் கசியவைத் திடநல்லூறு காயுடன் புறத்தே உப்பும்
கசிவின்றி மொறுமொறுப்பாய்க் காய்ந்தஅப் பளமும் வைத்தார்
25ア பசும்மிளகாயினுள்ளே பாய்ச்சிய உள்ளீட் டோடு பசுத்தயிர் தன்னுள் ஆழ்த்திப் பகல்மூன்று ஊற வைத்துப் பிசுபிசுப் பகலு மட்டும் பகலவன் சுடரில் காய்த்துப் புசிக்கவும் தந்தார் நன்கு பொரித்தபின் சோற்றோ டேற்றே
258 வடையொடும் இட்லி தோசை வாணலி பொரித்த பூரி கடலையில் செய்த கூட்டுக் காய்கறி கொண்ட சாம்பார் தொடுவதற்காகச் சட்னித் துவையலுந் தனித்து வைத்தார் தடையிலை எவர்க்கு மெஃதும் தெரிந்துண்ணத் தந்திருந்தார்
259 உண்டபின் பாய சத்தை உட்கொளத் தந்தார் அஃதில் துண்டுதுண்டாக வெட்டிக் குறுக்கிய பருப்பும் காய்ந்தே அண்டிய பழவற்றல்கள் அளவொடுஞ் சேரக் கூட்டிப் பண்டங்கள் வேறுந் தந்தார் பலநாட்கள் பசிதோன்றாதே 26 O

Page 45
தீரன் திப்பு சுல்தான் காவியம் C 660
பல்வகை இறைச்சி மீன்கள் புசிப்பதற்கேற்றவாறு பல்விதமாகப் பாகம் பண்ணினர் எவரும் எஃதும் இல்லையென்றுரைசெய்யாதே எலாமுண் டெனப்பு சிக்க வல்லபேர் ஊனாளர்கள் வாகுறப் பரத்தி வைத்தார்
26 மணப்பொருள் மிளகாய்த் தூளில் மட்டொடு கலந்து நீரைக் கணக்கொடு ஊற்றிச் செய்த கூட்டினில் அவித்த கோழி கணக்கிலைத் தொகையில் தோய்ந்து காய்ச்சிய நெய்யில் காயும் இணக்கமாயதனுக்கேற்ப இணைக்கறி பலவுஞ் செய்தார்
262 ஒட்டையின் இறைச்சி ஆட்டி னுடனாவின் தசைப்பற் றோடு மட்டிலை அளவு வேறு வேறென ஆனத் துள்ளே கொட்டியே அவித்தெடுத்தார் “குறுமா”நெய் பொரித்த ஊன்கள் இட்டமாய் உண்ன வென்றே ஏற்றநற் பதத்திலாகும்
263 மைகளுரின் பருப்பு மைகர் மக்கள்நா ஏற்கும் வாறு செய்தனர் உடன்சேர்த் துண்ணச் சுவைபடக் கிழங்கு முட்டை நெய்தனில் பொரிந்த தாங்கே நிறையவே விதைகள் ஒன்றும் கைப்பதம் இதுதா னென்னும் கூற்றினை நாசி பேசும்
264 வெண்மலர் மொட்டுப் போலாம் வடித்தநல் லரிசிச் சோறு மணன்வளப் பெருமை கூறு மாறெனத் துலங்கும் அஃதுள் எண்ணெய்யில் பொரித்தெடுத்த இலவமும் ஏலம் பட்டை பண்ணுறச் சேர்த்தார் கூடப் பருப்புவெண் காயம் வேறாம்
265 துண்டங்களாகக் கோழித் தசையரிந்தவற்றைக் கூட்டி அண்டாவி லிட்ட வித்து அதனொடு குழம்புக் கான பண்டங்க ளனைத்துஞ் சேர்த்துப் பன்நீருங் கலந்தார் பின்னே ஒன்றெனச் சாதத் தோடே உழக்கியே உண்ண வைத்தார்
266 உண்டபின் குடிக்கப் பாதாம் உள்ளிட்ட ஆவின் பாலை சுண்டவே காய்ச்சி நன்கு சர்க்கரை ஏலம் இஞ்சி வண்ைணத்துாள் கூட்டி யஃதை வடித்தெடுத் தூற்றி வைத்தார் உண்டவர் போதை யுண்டார் போலுமே கிறங்கினாரே 267

ஜின்னாவூர் ஷரியத்தீன் C 67-כ
உண்டிடா ரெவரும் இல்லை உப்பிய தகடு என்மால் உண்டனர் அனைத்துப் பேரும் உடல்நிறை உயர்ந்த தென்றார் உண்டநல் உணவு உள்ளே ஒன்றிய தாமோ தேகம் உண்டவவ்வுணவின் கந்தம் ஒன்றிடநகர்ந்தார் ஊர்ந்தார்
268 “சீரங்கப்பட்டினத்தின் தெருவெலாம் திருவிழாவின் காரணம் போல வாகிக் களிப்புறுநிலையில் மன்னர் சீருறு மாளிகையின் தோற்றமோ சொர்க்கம் போலாம் தாரணி மார்பன் செல்வன் திருமணத் திருநாளன்றே
269 மலர்மணம் வேறும் அம்பர் மணப்புகை வேறு பெண்டிர் விலையுயர் அத்தர் பூச வருஞ்சுகச் சுகந்தம் வேறு பலவவை ஒன்றி ஒன்றைப் பலபட வாக்கும் தென்றல் நிலமிசை எங்கு மள்ளி நிறைத்தது தோள்சுமந்தே
27 O மணவறையுள்ளே மாதர் மிகையொலி சதங்கை யொக்கக் கிணிகினி யென்றொலிக்கும் காதுகள் தேனை யுண்ணும் அணங்கையர் அட்ட காச ஆனந்தக் களிப்பு விஞ்சும் மணமகள் அலங்கா ரத்தின் மீதுறு போழ்தா மஃது
271 சீனத்துப் பட்டாற் செய்த சேலையில் வைரக் கற்கள் வானொளிர்த்தார கைகள் வந்தொன்றி மிளிர்தல் போலாம் சானுடம் பேனும் மாற்றார் தெரிகையிற் படாத வாறே பூணினர் மணப்பெண் சொர்க்கப் பதியிருந்துதித்தாள் போன்றே
272 மரகதம் பதித்த மாலை முத்துக்கள் கோத்த கோவைச் சரங்கழுத்தலங்கரிக்கத் தோடுகள் பசுங்கல் தாங்கிச் சிரமசை வுறுங்கால் ஆடும் தீபங்களொளியில் மின்னும் கரங்கொண்ட சொர்ணக் காப்பும் கனன்றிடுங் கற்களாலே
273
பொன்னினில் வார்த்த கைப்பூண் பதித்தநல் மணிகள் கூடி மின்னின மோதிரங்கள் மிகையுற அழகு சேர்க்கும் அன்னமென்றசையக் கால்கள் அணிந்தபொற் கொலுசால் பாதம் இன்னுந்தம் அழகில் விஞ்சி எழில்தரும் மணப்பெண்ணுக்கே 274

Page 46
தீரன் திப்பு சுல்தான் காவியம் C680 அஞ்சன மிட்டார் கண்கள் அழகுறப் புருவந் தீட்டி அஞ்சுகச் சொண்டா மன்ன அழகிய நாசி மீது செஞ்சுடர் தெறிக்கும் பாங்கிற் சேர்த்தனர் மூக்குத் தீயும் வஞ்சமில்லிறையளித்த வாகினை வாகு செய்தார்
275 கோவையாய் மாலை ஏழு கோத்துமே கலையி டையை மேவியே ஒளிரும் அஃதின் மணிகளின் புதுக்கோ லத்தால் காவிடைப் புட்பத் துள்ளே கோவென ரோஜா போன்றாம் கோவைவாய் மாதர் நாப்பண் நிலவினள் மணப்பெண்ணாளே
276 கேசத்தில் தொடங்கிக் காலின் குதிவரை அலங்காரத்தால் காசகல் கிழத்தி தன்னைக் குலத்திளம் கன்னியர்கள் பாசமே முழுமை கொள்ளும் பாங்கினர் புதுமை செய்தார் பேசுதற் கரிதே யந்தப் பொற்சிலை தோற்றப் பாங்கே
277 நாளைநீயவர்கரத்துள் நெளியுவாய் இன்று மட்டும் தோழியர் எங்க ளோடு தரித்திரு விடநாம் மாட்டோம் வேளையீ தன்றி வேறு வாராவோர் பொழுது என்றே தோளினைப் பற்றி யோர்பெண் சிறுக்கியும் சொல்வா ளின்னும்
278 "புன்னகை செய்யு மிந்தப் பூவிதழ் என்ன வாகும் கன்னமென் கனிகள் அந்தோ! கொள்வதென் பாடோ உன்றன் மென்னிடை ஒடியப் போமோ மலர்க்கரம்..” எனத்தொடங்க தன்விழி சுழற்றிப் பெண்ணாள் "சீபோடி” எனக்குனிந்தாள்
279 “வெள்குவாய் இன்று மட்டும் விண்னேறும் நாளை” என்றே கள்ளக்கண் பார்வை கூட்டிக் கொஞ்சுவா ளொருத்தி கேட்டு உள்ளமே குலுங்க ஆசை உன்னிடப் பொறுக்க மாட்டாள்
தள்ளடி" என்றாள் பொய்யாய்ச் சீற்றமுற்றாளே போன்றாம்
28O ஒன்றொன்றாய் ஒவ்வொருத்தி உரைப்பனள் கேலிப் பேச்சுச் சென்றநாள் நினைவனைத்துஞ் சேர்ந்துமீழ் பிறவி கொள்ளும் கன்னியர் ஒன்றின் கொள்ளும் குதூகலம் மணநாளன்று முன்னிலும் விஞ்சிநிற்க மகிழ்ச்சியின் உச்சஞ் சென்றார் 281

ஜின்னாவூர் ஷரியுத்தீன் C69 lo
மணமகன் மணக்கோ லத்தில் மணவரங்கலங்கரிக்க அணிகலன் வீர மார்பில் ஆண்மையின் கோன்மை காட்ட இணையுறத் தனிமை கொல்லும் இன்பத்தில் வதனம் அப்போழ்கு) திணைகரம் விடுத்த செம்மைத் தாமரை தோற்கும் பாங்கே
282 தந்தையோர் புறத்தும் வீரத் தோள்த்துணைப் பேர்புறத்தும் புந்திசால் மதிசொல் பேர்கள் மதப்பெரியோர்கள் மற்றும் தந்தைதாய்ப் புறத்தோர் பெண்ணின் தரத்திருந்தனைத்துப் பேரும் சந்தித்தாங் கிருந்தா ரந்தச் சபையினுக் கானோர் முற்றும் 283 சட்டத்திற் கமைய மார்க்கச் சீர்மைக்கு உட்பட் டாக பெட்புற அனைத்தும் செய்தார் பெண்ணுக்காம் 'மஹர்"உம் தந்தார் கட்டாயம் "வொலிசொல் லல்பெண் கொடுப்பவர் தரத்தில் தந்தை கட்டாயர் செய்தார் சாட்சிக் கையொப்ப மீர்பே ரிட்டார்
284 (மஹர் மணமகன் மணப்பெண்ணுக்களிக்கும் கட்டாயத் தொகை) (வொவி’ மனப்பெண்ணின்தந்தை மணமகனுக்குத் தனது மகளைக்கையளித்தலுக்கான வாக்குமூர்ை) சடங்குகள் அனைத்தும் முற்றித் தெருவழி ஊர்கோ லத்தின் தொடக்கமாய்க் கரியின் மீது திப்புவெண் குடையின் கீழே மிடுக்கொடும் அமர்ந்திருக்க மன்னவர் ஹைதர் செல்வன் அடுத்தணி சேர்ந்து வந்தார் ஆண்மையின் பிறப்பாம் போன்றே
285 வீதிகள் தோறும் மக்கள் வாழ்த்தொலி வான்மு கட்டை மோதிய தாமோ வென்ன விண்டெழுந் திடத்தம் மாடம் மாதிளம் பேர்கள் கூடி மறைத்துமே வதனங் காட்ட மாதுளங் கனிகள் காய்த்த மாடங்க ளெக்கக் காணும்
286 கூடினர் ஆண்கள் வீதி கொண்டிட மாட்டா வாறே ஆடவர் பிரிவிலெல்லா அணியிலுஞ் சேர்ந்திருந்தார் தேடிடற் கரிதே தம்மைத் தவறவிட் டகன்ற பேரை ஈடிலை இதற்கோர் வேறு எஃகிய சும்மைக் கூட்டம் 287

Page 47
தீரன் திப்பு சுல்தான்காவியம் C700
போக்கிடம் நோக்கார் நோக்கிப் போமிடம் போவோ மென்றே தேக்கிய உணர்வினோடு தெரிகிலார் செல்லுந்திக்கை வாக்கிலை திரும்பு தற்கும் விடும்மூச்சைப் பெறுதற் கும்போல் தேக்கிய இடத்தில் தேங்கித்தகைந்தனர் துணிந்தே வந்தோர்
288 கைதனை யுயர்த்தி வீதி கண்கைது செய்த பேர்க்குப் பொய்யிலா முறுவ லோடு பதிலுக்கு அசைத்துக் காட்டி வையத்தின் பேறா யுற்ற வள்ளலர் மக்கள் செல்வர் பையமுன் நகர்ந்தார் மக்கட் பெருங்கடற் பிளவினூடே
289 மாடத்திலிருந்து மாதர் மலரள்ளி வீச வாசற் கூடத்திலிருந்து மூத்தோர் குலுக்கினர் பன்னிர் ஆங்கு வாடிடாப் பூவின் வாடை வீசிய பன்னீர்க் கந்தம் கூடின விரண்டு மொன்றிக் கடைவீதி மணக்கச் செய்யும்
29O கொம்பன்மீதம்பா ரிப்பல் லாக்கினில் ஆரோ கஞ்செய் நம்பியைக் காண வெங்கும் நங்கிையர் நிறைந்தார் மாடிக் கும்பலோ பிஞ்சிளம்பேர் கட்டவிழ்ந் திடாத மொட்டுத் தும்பிகள் பார்வைப் பூவைத் தூவினர் திப்பு மீதே
291 மணமகள் இல்ல டைந்தார் மணமகன் மலர்கள் தூவி அணிவகுத் திடையாற் செல்ல அரும்புகள் குழந்தைப் பூக்கள் பணித்தன தலையைச் சற்றுப் போகவென்றிடமளித்தே கனிந்தன இதழ்கள் திப்பு கண்களித் திட்ட பாங்கே
292 இளமையில் உயிரைக் காத்த ஏந்திளை றுகையா பேகம்’ வளர்ந்தெழிற் குமரியாகி வண்ணச்சித்திரம்போல் மஞ்சம் மிளிர்ந்தனள் கண்டார் திப்பு வான்மதி படாம்போர் வைக்குள் உள்ளுறைந்திருத்தல் போலாம் ஒளிர்முகம் உடல்சிலிர்த்தார்
293 குனிந்ததன் தலையைத் தூக்குங் கருத்துள்ளத் திருந்தும் நோக்காள் பனித்தன வியர்வை முத்து பரல்களும் பாவை நெற்றி தனித்ததன் நிலைமை எண்ணித் தவித்ததோ உடல மன்றி இனித்ததோ வேளை யந்த இளையவன் சுவாசம் பட்டே 294

ஜின்னாவூர் ஷரிபுத்தீன் C7o வரவறிந்தாளே வாசல் விரிந்திடும் ஒலியினாலே ஒருவரே உள்நுழைந்த உணர்வவள் நெஞ்சுள் பூத்தும் அரவமற் றருகில் வந்ததறிந்திலாள் தன்னுள் பொங்கி விரவிடும் புதிய தீயின் வீரியந் தோய்ந்தாள் சாய்ந்தாள்
295 வெள்கினள் என்றே எண்ணம் விளைந்தது மனத்துள் உண்மை வெள்கியதாலும் வந்தோன் வரித்தலும் சமமாய் வேண்ட கள்மலர் வண்டுக் கென்று கரமொடித் திடும்போல் காணும் உள்ளுறை எண்ணம் வேறும் உண்டதோ தேர்வார் யாரோ
296 மூடிய விழிகள் தோன்றா வாகினில் அங்கை பொத்த நாடிய கரங்கள் மெல்ல நங்கைகைப் பின்னல நீக்குந் தோடுடைச் செவிகள் மட்டும் தொடர்ந்திடும் நயனம் மெல்லக் கூடுடைத்திதழ்கள் பூக்குங் கருவிழி துடிக்கக் கண்டார்
297 அச்சத்தின் பாங்கோ அன்றி ஆண்மைக்கை பற்ற லாலே இச்சித்த உணர்வோ வேறு என்னதான் புதுமை யஃதோ பச்சிளம் பிள்ளை பாராப் புதிதொன்றை பார்த்த வாறே உச்சிதொட் டுடலம் முற்றும் ஒன்றிட வியர்த்த தென்னே!
298 பருவம்வந் துற்றகாலப் போழ்திருந்தின்று மட்டும் ஒருபிற ஆட வர்தம் ஒருவிரற் பரிச மேனும் அறிந்திலாப் பெண்ணாள் ஆங்கோர் அங்கையின் அள்ளல் கொள்ளப் புரிந்திட மாட்டாத் தேகப் பதட்டத்துள் புதையுண் டாளே
299 நீண்டநாள் காணாதுற்ற நிலவினைக் கண்ட அல்லி பூண்டதாம் மகிழ்வு போலப் புளகமும் பற்றி யென்ன வேண்டாத அச்சம் தோன்றி வஞ்சியைக் கொன்ற தப்போழ்(து) ஆண்மையின் வேகம் அன்னாள் அச்சத்தைத் தன்னுள் வாங்கும்
3OO பிஞ்சிளம் பருவந் தன்னில் படகடித் துறையி ராப்போழ்கு) அஞ்சிடா துற்றுத் தம்மின் அகட்டழல் கொன்ற பெண்ணாள் தஞ்சமென்றானாளின்று திப்புதன் சொந்த மேற்றார் செஞ்சோற்றுக் கடன் கழித்த சீலமென்றாதல் போன்றே 3O1

Page 48
தீரன் திப்பு சுல்தான் காவியம் O72)
அருகினில் அமர்ந்தார் பூமி ஆய்ந்திடும் வதனந் தன்னை ஒருகரத் தேந்தி தண்பால் உயர்த்தினார் வெள்கி மீண்டும் நெருங்கின இமைகள் மூட இடங்கொடார் மணப்பெண் நோக்கி முறுவலித் திருகை பற்றி மறுகணம் வார்த்தை கோத்தார்
3O2 “என்னருந் தேவி" என்றார் "ம்"என்றாள் இளமான் மெல்ல கன்னங்கள் சிவக்க நாணம் கொலுமுற்றுங் கொண்டாள் போன்றே “பின்னமென் பேச என்மேல் பற்றிலை யாமோ” என்றார் தன்னிலை மறந்தாள் எட்டிச் சொன்னவாய் மூடி னாளே
3O3 "ஏனிது வாறாம் வார்த்தை யார்பற்றொன்றிலையா மென்றார் நானுங்கள் சொந்தம் என்மேல் ஏண்பழி வேண்டும்” என்றாள் தேனினில் குழைத்த செற்கள் தெறித்தவக் கணமே வாய்ப்பாய் ஆனது ஏக்கங் கொண்ட இளவலுக் கிரண்டற்றாரே
3O4
இரண்டாவது மைகர்ப் போர்
கங்குல்வர வெண்ணினனோ அச்சங் கொண்டு
கதிரொடுக்கி வெறியடங்கி மெல்ல மெல்லச் செங்கதிரோன் மேற்குவானில் ஒளிந்து கொள்ளத்
தயார்நிலையில் தணைநகர்த்தித்தீத்துண்டம்போல் மங்கியழிந் திடுமுன்னே சுடருந் தீநா
மாறனைய வாகுசெய்தான் அவ்வாறோர்நாள் “சங்காமக்” கணவாயில் கண்ட காட்சி
சரித்திரத்தை மாற்றமுதற் தொடக்க மாகும்
3O5 பகலெல்லாங் காய்ந்தகதிர்ச் சூடு மண்ணில்
படிந்தநிலை மாறாது தகித்த வேளை திகைத்திடுமால் வான்வெடித்துச் சிதறும் பாங்கில்
திசையெட்டும் செவியொடுக்கும் ஒலியைக் கேட்டார் புகைமூட்டம் கணவாயின் புறத்திலெல்லாம்
பரவியவாறெங்கணுமே இருளாய்க் காட்ட வகைந்ததென்ன காரணமோ வீறுகொண்டு
வந்தபெருஞ் சேனையின்பால் விளைந்த தென்பார் 306

ஜின்னாவூர் லுரியுத்தீன் C73 lo
குறும்பறையின் அறைத்தலொலி செவியுட் புக்கிக்
கூறியது சமர்க்களத்தை ஆட்சி செய்ய வரும்படையின் சங்கதியை வெற்றி முன்னே
வரித்ததுபோல் வாழ்த்தொலியும் விண்ணை மேவும் அறிந்திலையார் புறத்திருந்தே அடலர் நோக்கி
அடிநகரும் படையதுவா மென்றே பார்வை திறந்தாலும் தெளிவில்லா நிலைமை ஓங்கும்
செம்புழுதி மண்டலத்தால் கண்கள் மங்கும்
3O7 பலநூறு குதிரைகளின் குளம்பின் ஓசை
பேரிடிபோல் ஒன்றியந்தப் புறத்தை ஆள கொலைவெறியோ டாங்கவற்றின் மீது வீரர்
கடுகினரே கணவாயின் தலத்தினூடே அலைகடலோ அணையொடித்துப் பெருகும் ஆற்றின்
அடக்கவொண்ணப் பெரும்புனலோ அதற்கும் மேலோ இலையொன்றாம் உவமிக்க என்னே! யந்த
ஏற்றமிகு மனுத்திரள்வின் வாக தாமோ
3O8 வீரமிகு பரிகள்கண் நோக்கு தற்கு
வச்சிரத்தால் வார்த்தெடுத்த வண்மை காட்டும் போருக்கு அஞ்சாத வீரர் தங்கும்
பெருமையினால் குதிபதியா துன்னும் தாங்கும் வீரர்தம் புயபலத்தைப் பிறர்க்கு ஒதும்
வாகிலவை காலுயர்தி விண்ணில் தாவும் தோர்வாரவ் வீரர்கள் அவற்றை ஆளும்
தந்திரத்தைச் சேணத்தை இறுக்கினாரே
3O9 பரிகளிலே வரும்வீரர் இடையில் வாளும்
பொருதுகையில் வாள்தடுக்க கேடயம்மும் ஒருகையில் நீண்டகர ஈட்டியும்தம்
உயிர்காக்கும் கவசமும்மார் பணிந்திருந்தார்

Page 49
தீரன் திப்பு சுல்தான் காவியம் O740
கரிவாயில் பட்டகரும் பாகு மன்னார்
கைப்பட்ட எதிரிகளும் உயிர்பிளைக்கார் பெருவீரர் பயிற்சிமிக்கார் பொருதும் போரில்
பங்கிவர்க்கு முதன்மைநெஞ் சுரங்கொண்டோரே
31O
இடையிடையே கரிகள்தனித் தனியாய்க் குன்றம்
அசைந்தணியில் நகர்ந்தனவாம் போலு மாக படைவீரர் தமைமுதுகில் தாங்கி ஓங்கும்
பிளிறலொடு வீறுநடை பயிலும் கூட வெடியுண்டை கோத்தெடுத்த மாலை மார்பில்
வலமிடமாய் தொங்கத்தம் நெஞ்சு யர்த்தி நடைவீரர் துப்பாக்கி தோளில் தாங்க
நீண்டகன்ற வரிசைகளில் பின்தொடர்ந்தார்
31 நீண்டகுழாய் கொண்டபெரும் பீரேங் கித்தேர்
நுழைந்ததனுள் பின்பீறும் கற்பேருண்டை வேண்டுமிடம் குறிவைத்துத் தாக்க வல்ல
வன்மைமிகு ஏவுகணை வெடிமருந்தும் ஊன்வேண்டின் உண்பதற்கு ஆடும் மாடும்
ஒட்டகையும் சமைத்துண்ைணப் பேரண் டாக்கள் வேண்டுவன அத்தனையும் குறைவில் லாதே
வரித்திருந்தார் திங்கள்பல தேறும் வாறே
312
உண்பதற்காம் உணவுபொதி பொதிகளாக
உடன்சுமந்து வந்தனவாம் ஏற்று வண்டி ஒன்றிரண்டோ இல்லைப்பன் நூறு நூறாம்
இணைந்தனவவ்வாறாக ஆயுதங்கள் கண்னெட்டாத் தொலைதூரம் தொடர்ந்த தஃது
கண்படுகால் கலங்குவரே பகைமைக் கூட்டம் பின்தொடர்வார் ஏவல்செய் பணியாளர்கள்
பிணிக்குதவும் மருத்துவரும் பிறபே ரும்மே 313

ஜின்னாளுர் டிரிபுத்தீன் C75 o
வெண்ணரபிக் குதிரையின்மேல் படையின் முன்னே வந்ததொரு சிம்மம்றன் நெஞ்சு யர்த்திக் கண்ணிரண்டும் கூரம்பின் வாகி னோடு
கட்டுடலோ இருப்பையெள்ளிநகைக்கும் பாங்காம் தின்ைமைமிகு கரத்தில்சேன்ை அரையில் போர்வாள்
தோளிரண்டின் இடையில்பின் புறத்தே தேகம் புண்ணடையா வாறகற்றும் வட்டக் காப்பு
போரணியோ வீரத்தின் பேருரைக்கும்
314
வயதறுப தானதென்ற போதும் தோற்றம்
வாலிபத்தைத் தாண்டாத வன்மை காட்டும் புயபலத்தின் கோன்மையினைச் சரிதம் கூறும்
பொன்றாத புகழவர்தம் பொற்பைப் பேசும் அயராத முயற்சியினை மண்ணைக் காக்க
அடலருமே விதந்துரைப்பர் ஆட்சி நேர்மை நியாயத்தின் பாற்படுமாம் வெள்ளைப் பேரை
நிர்மூலமாக்கலொன்றே நோக்காய்க் கொண்டார் 315
அருகினிலே மக்களிரு பேரும் வந்தார்
அரியணையின் வாரிசெனுந்திப்பு வோடு கரீம்இளையான் தந்தைக்குக் காவ லொக்கும்
காரணராய்த் தோன்றினரே அவரினோடு பெருவீரர் காதிர்காண் பூரணய்யா
படைநடத்துந் தளகர்த்தர் பலரும் வந்தார்
முற்றுமவர் முகங்களிலே துலங்கலாச்சே
316
ஆயிரத்து எழுநூற்று அறுபத் தொன்ப
தாண்டுமுதற் போரினிலே ஹைதர் மன்னர்
நேயவுடன் பாடுசெய்தார் வெள்ளை யோரை
நெருங்கவைத்த போதினிலும் நயவஞ் சர்கள்

Page 50
தீரன் திப்பு சுல்தான் காவியம் O76D
வாயளவில் பேசியதோடன்றி முற்றும்
வழிகடந்தார் வெறிகொண்டார் மன்னர் பின்னே வாய்த்தபழிதானிரண்டாம் மைசூர் யுத்தம்
வரலாற்றில் தந்தைமகன் பேர்பதிக்கும்
317
ஆயிரத்து எழுநூற்று எழுபத் தெட்டில்
"ஆரணிசேர் "காஞ்சிபுரம்” ”பரங்கிப் பேட்டை” வாய்த்ததுடன் "திருவண்ணா மலை"யுங் கூடி
வெற்றிகொண்ட ஹைதரிடம் வெள்ளையர்கள் நோயுற்றுப் போனார்கள் மனத்தின் போரால்
நேர்ந்தவெற்றிதிப்புவுக்கும் உரித்ததாகும் ஓயாது யுத்தகளங் கண்டார் தந்தை
உடன்பட்ட மகனும்பின்னவர்போ லானார்
318 பத்தாயிரம்வீரர் தம்மோ டொன்றப்
படைநடத்தி இரண்டாண்டின் பின்னர் சுல்தான் வித்திட்டார் வெற்றிக்குக் "காஞ்சி நோக்கி
வந்த"கேர்னல் பெய்லி"தனைத் தடுத்ததாலே அத்துடனே "பொழிலூரில்" அவனோ டொன்ற
அதிகாரியானபல பேர்களையும் மொத்தமாகக் கைதுசெய்து சீரங்கத்தின்
மனுச்சிறைக்குப் பரிசளித்தார் தாதை யேற்றார்
319
சிறியதொரு படையோடு வருவதாகத்
தெளிவற்றே இருந்தார்கள் வெள்ளையர்கள் அறியார்கள் தந்தைபால் வீரர் பத்தின்
ஆயிரம்பேர் பின்வந்து சேர்வார் என்றே சிறுதொகையென் றெண்ணியதைத் துவம்சம் செய்யும்
துணிவுடனே காத்திருந்தான் “கேர்ணல் பெய்லி" பொறுமையற்ற திப்புபடை வருங்கால் மட்டும்
பொறுத்திருக்க மாட்டாராய்ப் போர்தொடுத்தார் 32O

ஜின்னாவூர் லுரியுத்தீன் C 77-כ
"காஞ்சிபுரத்”தருகிருந்த பேரம் பாக்கம்
களமாகிப் போனதன்றாம் இருபடைக்கும் வாஞ்சைகொண்டு வேட்டைப்பொருள் மீது பாயும்
வேங்கையென வெள்ளையர்மேல் பாய்ந்தார் திப்பு பூஞ்சையிலே ஒட்டுண்ட பூச்சிகள்போல்
பரிதவித்தார் வெள்ளைப்படை வீரர் மந்தி பூச்சரத்தைப் பிய்த்தெறிதல் போல மைகர்ப்
போர்வீரர் பறங்கியரைப் பழிதீர்த்தாரே
321
சிறுபொடியன் என்றேதான் எண்ணினோம்நாம் சிறிதேதான் படைகூட வெனவிருந்தோம் சிறுவனல்ல திப்புபெரும் புயலா மெம்மைப்
பஞ்சுபஞ்சாய்ப் பிய்த்தெறிந்து வெற்றி வாகை பெறுநிலைக்கு வந்துவிட்டார் தோல்வி எங்கள்
பக்கந்தான் என்றாலும் எஞ்சியுள்ளோர் சிறுதொகையே நாமேனுந் தப்பு தற்குத்
தக்கவழி செய்கவெனச் சேதி சொல்லும்
322 "பெய்லி"யிடம் பெற்றசேதி "முன்ரோ" விற்குப்
பேரதிர்ச்சி தந்தாலும் தாமதித்தால் கைவசத்தில் உள்ளவரும் கைக டப்பர்
கண்டறியாத் தோல்வியினைக் காண நேரும் செய்யவுண்டு சிறுபடையொன்றனுப்ப லொன்றே
செயல்பட்டான் “முன்ரோ"வாம் தளகர்த் தாவென் செய்தாலும் பயனற்றுப் போகு மென்றே
தேராதான் அனுப்பிவைத்தான் சென்றடைந்தார்
323 இருந்தவரோ ரொனிடவந்தோரனைத்துப் பேரும்
இரையானார் வாளிட்டிவில்லம் பிற்கும் பெருந்தொகையாய்க் கொன்றொழிக்கும் பீரங்கிக்கும் பலவகையாம் துவக்கு 'கைத் துப்பாக் கிக்கும்

Page 51
தீரன் திப்பு சுல்தான் காவியம் C78)
தெரிந்தில்லான் "பெய்லி"யாங்கு நடப்ப தெஃதும்
செங்குருதிக் காட்டாற்றில் தமது வீரர் சரிந்தழியும் வாகினையும் தலைகாலற்றே
சிதறுண்டு போவதையும் தியங்கிப் போவான்
324
யுத்தத்தின் வழிமுறையை மாற்றி மாற்றி
உகந்ததெதாம் அவ்வப்போ தெனவறிந்தே யுக்தியுடன் படைநடத்தி எதிரிப் பேரை
எதிர்கொள்ள மாட்டாதே பதறச் செய்த வித்துவத்தைப் பார்த்தவெள்ளைப் பறங்கியர்கள்
வீரமொடு விவேகமும்தன் வயமாய்க் கொண்ட இத்தகைப்பேர் கண்டதில்லை எனவி தந்தார்
இயலாமைக் குட்பட்டார் இழிவுற்றாரே
325
ஆட்டுமந்தைக் குட்பட்ட சிறுத்தை போலும்
அலறவவர் துடிதுடிக்க வாள்சுழற்றிக் காட்டியதென் சாகசமோ திப்பு சுல்த்தான்
கண்ணிமைப்புள் பன்னூறு பேரழித்தார் வேட்டுவர்கைப் பட்டசிறு முயல்கள் போல
வெள்ளையர்கள் துடிதுடித்தார் மைகர் வீரர் மேட்டிமைப்போர் ஆளுமையை வார்த்தை கூட்டி
மொழிவதற்கு மொழியுண்டோ மொழியொன் -
றில்லை 326 போர்தொடங்கி நாளிரண்டு கடந்த போது
பேரழிவில் புதைந்திருந்தார் வெள்ளையர்கள் வேரறுந்த நிலையவர்க்கு “முன்ரோ”தம்பால்
வரவளைத்தான் மற்றுமொரு படையை ஆங்கே காரழிந்த நிலைகொண்டார் விளக்கம் போல
கண்ணுற்ற படையதனால் வெள்ளையர்கள் தாரணிந்த மார்பனுக்குத் தந்தை பேரால்
சேர்ந்தபலம் அறிந்ததுமே சோர்வுற்றாரே 327

ஜின்னாவூர் ஷரிபுத்தீன் C79 o
செத்தழிந்தோர் தொகைபோக உயிருக் காகத்
துடிதுடித்தோர் பலநூறாய்த் தவித்தார் வேட்டை மொத்தத்தில் தம்பக்கம் ஆன போதும்
மனமகிழ்ச்சியுறவில்லை திப்பு சுல்தான் கத்துகுரல் வேதனையின் பாற்பட்டாளக்
கடையொலியில் முனகுகுரல் தாகத் தாலே சத்தமின்றி அனுகுகுரல் நெஞ்சழுத்தச்
சோகத்தால் மனமுருகித்தவித்திட்டாரே
328
வேதனையின் பாற்பட்ட மகனை நோக்கி
வருத்தத்தின் காரணத்தை வினவத் திப்பு ஏதுவதற்கின்னதென்று இயம்ப ஹைதர்
எடுத்துரைப்பார் யுத்தத்தில் இதுதா மென்றே சாதனையொன்றியற்றியுள்ளீர் தருக்கர் கூட்டம்
தந்தவறை யுணரவைத்தீர் நாமா யன்னார் மீதுகொண்ட யுத்தமல்ல நம்மை நோக்கி
வலிந்தவர்கள் தொடுத்ததென விபரஞ் சொன்னார்
329 யுத்தத்தின் கதியிதுதான் என்றிட் டாலும்
உயிரழிவை எண்ணிடுங்கால் வருத்தம் நெஞ்சைக் குத்தியது என்றிட்டார் தந்தை சொல்வார்
காரணரே நாமில்லை எனவாம் மீண்டும் எத்தகைதான் காரணங்கள் என்றிட்டாலும்
இதயமொன்று வுண்டல்லோ நமக்கு மென்றார் சத்தியத்தைக் காப்பதெனில் செயலி லொன்றுந்
தவறில்லை எனப்புகன்றார் தந்தை சென்றார்
33O மன்னுயிரைப் பறிப்பதுவே வெறியாய்க் கொண்ட
மறக்களத்தில் இதுவன்றி வேறொன் றுண்டோ துன்புற்றோர் தம்மவரோ டெதிரிப் பேரும்
சேர்ந்திருந்தார் சிகிச்சைக்காய் வேண்டி நின்றார்

Page 52
தீரன் திப்பு சுல்தான் காவியம் O80D
அன்னியர்கள் பகைவர்கள் என்றிட்டாலும்
ஆகுநிலை இருபேர்க்கும் ஒன்றதாலே தன்னவர்க்கும் அன்னவர்க்கும் மருத்துவத்தை
GFLDLDITBö 65ü1866).J60 GW6006OOT ulLLIIÜ
331 மைகரின் மருத்துவர்கள் காயமுற்றோர்
மீதவர்தம் கடமைகளை முறையாய்ச் செய்தார் மெய்யுதவி செய்வோரும் முழுமையாக
முன்னின்றார் வேண்டியன முற்றுஞ் செய்தார் செய்வதெலாம் சீரியதாய்ச் செய்ய வேண்டித்
தேவைகொண்ட அத்தனையும் தரப்பணித்து மெய்வருத்தம் நோக்காதே திப்பும் அந்த
முதலுதவிப் பணிகளிலே முன்னின்றாரே
332 கும்பகோணத் தருகில்"அன்னக் குடி”யில் வெள்ளைக்
"கேணல்-பிரய்த் வைட்"டைவென்று கைது செய்தார் தம்மோடு பிடியுண்ட நூறு வெள்ளைச்
சிப்பாய்கள் இந்தியர்கள் ஆயிரத்தோர் சும்மையுறும் ஆயுதங்கள் தளவாடங்கள்
சேர்த்தெடுத்து சீரங்கம் கொண்டு வந்தார் அம்மட்டோ டல்லாது வெள்ளையர்கை
ஆன"சித்தூர்” திப்புகரம் ஆகிற்றன்றே 333 பிடியுண்டோர் "ஹைதர்முன் கொணர்ந்த போது
பேசிடுவான் “முன்ரோ”வவர் தம்மை நோக்கி “அடைந்தாலும் மகன்வாகை என்றிட்டாலும்
அதில்பெரிதே எம்மையவர் கதிக லக்க விடுத்தயுத்த வழிமுறைகள் விந்தை” என்றே
வாயார விபரித்தான் வைரியாயும் பிடிக்கரத்துள் நின்றிட்ட போதும் மெய்யைப்
புகன்றிடும்வாறானநிலை பெற்றிட் டானே 334

ஜின்னாவூர் ஷரிபுத்தீன் C81 lo
முடிவுற்ற தாமிரண்டாம் மைசூர் யுத்தம்
மங்களூர் உடன்படிக்கையோடு அஃதே அடிபற்றி வெள்ளையர்கள் இந்தியாவின்
அரசர்தம் நிபந்தனைக்கு வந்த தொன்றாம் கொடியுயர்த்தித் தன்மானம் காத்த பேற்றைக்
கொண்டதது மாத்திரமே திப்பு சுல்தான் விடிவெள்ளி போல்துலங்கி வாழ்ந்த கால வரலாறு அதுவாகும் வீரம் பேசும்
335 ஹைதரின் இறுதிக் காலம்
ஆர்க்காட்டின் வடக்கே ஈரெண் ஆகுகற் றொலைவில் தன்பாற் சேர்நரசிம்ம ராயன் பேட்டையின் பாசறைக்குள் பாராண்ட வீரர் ஹைதர் படுக்கையிற் புரண்டார் மற்றோர் ஊர்ந்தனர் உயிரற் றோராய் உளங்களுஞ் செத்த பாங்கே
336 இராஜர்க்கு இராஜராக இராஜங்கம் செய்த சிங்கம் இராஜப்பிளவ்வை கண்டு இனங்கொனா வலியினாலே நிராயுதபாணி மாற்றான் நைதலின் கொடுமை கண்டுந் திராணியற் றெதிர்க்க மாட்டாத் தன்மையில் ஹைதர் சோர்ந்தார்
337
ஓய்விலாப் போர்ககளாலே உடல்வலுக் குன்றாப் போழ்தும் நோய்தரு வேதனைக்குள் நொடிந்ததன் நிலைமை வல்லோன் காய்வன னாகில் வென்று கடைத்தேற மாட்டா வென்மெய்
தோய்ந்திட இறைபாலச்சம் செறிந்திட ஹைதர் ஒர்ந்தார்
338
தனக்கிஃது இறுதி என்னுந் திடமுளஞ் செறியத் தம்மின் தனயனைக் காணுமாசை துளிர்விடும் சனத்துள்ளோங்கும் நினைவறும் பின்னுந் தோன்றும் நயனங்கள் மகனைத் தேடும்
கணம்நெடும் பொழுதாய்க் கொல்லும் கையறுநிலைபோ லுண்டோ
339

Page 53
தீரன் திப்பு சுல்தான் காவியம் C82)
தனக்குமுன் நிற்பான் செல்வன் தாமென ஒருகா லெனன்ன மனக்கவலழிந்தார் போல மன்னவர் வதனம் மாறும் முனங்கிடும் அதரம் திப்பு வாவென அழைப்பார் போன்றே கனத்தன உள்ளங் கண்டோர் கண்களுங் கலங்கிற்றாமே
34. Ο மெய்வலிதாங்க மாட்டா வேகமுட் பொதிந்தே கொல்லச் செய்திறனற்ற மேனி துவண்டிடும் கண்கள் பெய்யும் பொய்யுடல் இதுவாம் நெஞ்சப் பலமதற் கில்லை யென்னும் மெய்தனை உணர்த்தும் பாங்காய் மாவீரர் துண்பந் தோய்ந்தார்
341 வந்தனோ மகனென் றேங்கும் வாகினில் விழிகள் பேச மந்திரி பூர்ண ஐயா மன்னரின் அருகி லேகி வந்திடல் கூடுஞ் செய்தி விரைந்ததாம் எனவாய் சப்பப் புந்தியிற்றுலங்கி னாற்போல் பிரிந்தன நயனப் பூக்கள்
342 அருகினிலமர்ந்த தம்மின் அமைச்சரின் கைகள் வாங்கிக் கருவிழி சுழற்றி நோக்கிக் கனிந்தமென் முறுவல் காட்டி உருகியே வீழ்ந்த முத்துத் துளிகளுங் கன்னம் வீழக் குரலறுநிலையில் பேசுங் குறியினால் அதரம் விம்மும்
343 புரிந்ததென் கூற வேண்டும் பொருளெனப் புகலாப் போழ்தும் 'அருந்தவப் புதல்வன் உண்பால் அடைக்கலம் இனியா மென்ப வருந்திடல் வேண்டாம் உங்கள் விருப்பமென் பொறுப்பா மென்றார் புரிந்ததோ இலையோ கண்கள் பூரித்த நிலைமை கண்டார்.
344 தினமட லொவ்வொன்றாகத் தன்வழி யுதிரும் மன்னர் மனமுட லிரண்டும் சோர்ந்து முற்றுமே செயலு மற்ற வினைபடத் துயின்றார் சுற்றி வளைத்தொரு சிலரும் நின்றார் தணைவிடுத் துடலம் நீங்கிச் சென்றதே ஆவி மீண்டே
345
பற்றிய கரத்தில் நாடி புலப்படாதிருக்கக் கண்கள் முற்றிலுஞ் செயலிழந்து மடலகல் நிலையில் ஊன்றச் சொற்பல மற்றார் தம்மின் திறன்பொய்த்த மருத்து வர்கண் உற்றதும் உரைக்க மற்றோர் உணர்ந்தனர் உண்மை ஒர்ந்தே 346

ஜின்னாவூர் லுரியுத்தீன் C83 lo
பதினேழு நூறின் ஆண்டு பத்தெட்டோ டிரண்டுங் கூடி உதிர்ந்தகால் "டிசெம்பர்” திங்கள் ஒன்றிய நாளில் ஹைதர் விதிமுடிந் திறைபா லேகி விண்படு சொர்க்கங் காண
புதியதோர் பகலோன் தோன்றப் பாதைவிட்டகன்றாற் போன்றே
347
உடன்மகனில்லாப் போழ்தில் உற்றவந்நிலையை மற்றோர் உடனறி வாரேயாயின் உறுநிலை தெளிந்த பேர்கள் கடனென நினைந்தார் யாருங் காதுகொள் வாகு நீக்கக் குடமொழித் திட்ட தீபங் காணுமாம் மறைத்திட்டாரே
348
யாருமே அறியா வாறே இருள்மையுள் சேதி தோய்த்த காரணம் பொல்லார் கூடிக் கலவரம் செய்தல் கூடும் நீர்மடை யொடித்துப் பாய்ந்த நிலவரமாகும் தீதே
சேருமென் றாங்கிருந்தோர் தம்வழி மனம்பு தைத்தார்
349
தூதுவர் பலபேர் தத்தந் தனிவழி பறந்தார் செய்தி ஓதிடத்திப்பு கொண்ட தலமொன்றே குறியதாகும் யாதெனுந் தீங்கு தோன்றி இடைவழித்தஞ்சமானால் ஏதொன்று கிடைக்கும் என்ற எண்ணத்திற் பலபே ரானார்
35O
புலியின் வருகை
கருக்கிய உருக்கைக் காதுட் கொட்டிய கொடுமைக் கொப்ப உருக்கியதாகும் செய்தி ஒன்றிய நொடியில் தேகம் சுருக்கியோர் சாணாய்க் குன்றிச் செயலழிந்துறைதல் போல்வாம்
ஒருக்கணம் உயிரே யற்ற உணர்வினைத்திப்பு கொண்டார்
351
பிரிந்ததாம் உயிரென்றோலை புகன்றிடு சேதி நெஞ்சிற் பொருந்திடா வாறே அஃதோர் பொய்யென மறுத்தொலிக்க வருந்தலும் மாற்றும் வேறாய் வந்துளப் பதியில் சிக்கிப் புரிந்திட மாட்டா துற்றார் பலமுறை உறுதி செய்தார் 352

Page 54
தீரன் திப்பு சுல்தான் காவியம் O84D
தாமதம் தவிர்த்தல் வேண்டித்தாவின படைகள் தங்கால் பூமியிற் பதியா வேகம் பெற்றன புரவிப் பேய்கள் சாமங்கள் பலக டந்தே தொடந்துதம் வழியைப் பற்றி ஈமக்க டன்கள் செய்ய எதிர்கொண்டார் பக்க லன்றே
353 வாகைகொண் டன்னை மண்ணை வந்தடை போதிலெல்லாம் தாய்க்கரம் அணைத்த லொப்பத்தாதையே நெஞ்சணைத்து தோய்களி கண்ணிற் பொங்கச் செய்திடு வரவேற் பொன்றின் வாகிலா நிலைமை நெஞ்சை வாட்டிடத்திப்பு நின்றார்
354 அமைச்சராம் பூர்ண ஐயா அழைத்தவர் தம்மையுள்ளே இமைப்பொழிநிலையிலுற்ற ஏந்தலினருகிற் சேர்க்கத் தமையொரு கணத்துள் இல்லாத்தன்மையிற் சமைந்தார் திப்பு தமைத்தனித் திறைபாலுற்ற தாதையை யெண்ணிச் சோர்ந்தார்
355 தனியொரு வீர ராகச் சிறுபடைத் தலைவராக இணையிலாப் பெருஞ்சேனைக்கோர் ஈடிலா முதல்வராக எனப்பல தகைமை கொண்டு ஈற்றினில் மைசூர் மண்ணின் சனத்தினை ஆளும் பேற்றைத் தரவேற்றுக் கொண்ட தீரர்.
356 மலையொன்று புரண்டு மண்மேல் மல்லாந்து கிடத்தல் போலும் சிலையெனப் பஞ்சணைமேல் சரிந்தவர் கிடந்த காட்சி அலைகடற் சேனை கண்டும் அஞ்சிடாத்திப்பு நெஞ்சை நிலைகுலைந் திடச்செய் கோலம் நிமலனின் விதியென்றாகும்
357 தாமொன்று நினைக்கத் தெய்வந் தானொன்று நினைத்த வாறாய்ப் பூமியாள் பொறுப்பைத் தந்தை பால்பயில் வேண்டு காலம் தீமைகழுலகிற் றன்னைத் தனித்திடச் செய்த கன்ற பான்மையை எண்ணி நெஞ்சுட் புழுங்கினார் மன்னர் மைந்தர்
358 மந்திரச் சுற்றத் தாருள் முதல்வராம் "பூர்ண ஐயா" வந்தவரருகில் நின்றார் வாய்புதைந் தெதுவுச் சொல்லார் செந்தழல் விழிகள் உள்ளச் சோகத்தின் இமயங்காட்டத் தந்தைபால் செறிந்த பாங்கைத் திருப்பினார் அமைச்சர் நோக்கார்
359

ஜின்னாவூர் லுரியுத்தீன் O85 lo இளவலின் அருகிற்றம்மின் இமைநிலங் குவித்துநின்ற நிழலெனத் தந்தைக் கென்றும் நுண்மதியுரைத்த பேரை விழிகொள வாங்கி மெல்ல வார்த்தைகள் கோத்தார் மைந்தர் வழியெனச் சீரங்கத்தை வித்துடல் சேர்க்க வேன்றே
36O எவர்தனும் அறியா வாறாய் இடம்பெயர்ந் துடலஞ் சேர்க்க எவைதகும் வழிக ளென்றே யோர்ந்ததன் திட்டந்தன்னைச் செவிநுகர்வாறாய் அண்மிச் சொன்னதும் ஏற்றே ஆணை நவின்றிட அனைத்தும் நன்றே நடைபெற லாகிற் றன்றே
361 படையின ரறியா வாறு பாசறை யுள்ளே மன்னர் உடலினைப் பல்லக் குள்ளே உறங்கிடு வாறாய்ச் சாய்த்தும் அடிதொடர் படைக்குத் தந்து அதனுடன் தாமும் சேர்ந்தார் விடிதலைக் காணு முன்னே வீரர்தம் இறக்கை சோர்ந்தார்
362 தலைநகர் தன்னில் தம்பி சேர்ந்தொன்றித் தளகர்த்தர்கள் பலமதப் பெரியார் சுற்றம் மந்திரச் சான்றோர் மக்கள் நிலைபெற அவரை நோக்கி அடைந்தது “பல்லக்” கின்னும் கலைந்திலை மெளனம் யாரும் கடந்ததென்னறிகி லாரே
363 அதிகார பூர்வமாக ஆட்சிகை மாறு மட்டும் எதுவிதத் தாலும் மன்னர் இழப்பினை அறிய மாட்டா மதியூகம் மிக்க பேர்கள் மறைத்திடச் செய்தார் திப்பு அதிகாரம் கொண்ட பின்னே அறிந்தனர் அதிசயந்தான்
364 மன்னவர் இறந்த சேதி மக்களும் அறியச் செய்த பின்னரோ நடந்த வற்றைப் பேசுதல் சொல்லில் மாளா தன்னையே தானிழந்த தவிப்பினில் தனித்த தொவ்வோர் மன்னுமே சீரங்கத்தை மறந்ததாம் என்னு மாறே
365 பிறந்தமண் தானே ஆண்ட பெரும்புலம் சீரங்கத்தில் இறந்திலாப் புகழ்நாமத்தை ஏற்றவவ் வுடலம் தன்னை உறைந்திடச் செய்தார் மக்கள் ஒலமிட் டழுதார் தம்மை அறிந்திலார் அயலர் நோக்கார் அடியறு மரம்போல் சாய்ந்தார் 366

Page 55
தீரன் திப்பு சுல்தான் காவியம் O86D
சுதந்திரக் காவலர்தம் துய்யதாம் ஆவி வின்ைபால் சுதந்திரம் பெற்றே செல்லத் தவித்தனர் சுதேச மன்னர் மிதந்தனர் சோகத் துள்ளே வீரர்கள் வீராங் காத்த பதிதமைப் பிரிந்ததாலே பொறுத்திலார் புலம்பலானார்
சான்றோரும் அழுதார் மார்க்கத் தலைவரும் அழுதார் ஞான
ஆன்றோரும் அழுதார் செப்பின் அனைவரும் அழுதார் அந்நாள்
ஈன்றதாம் சிசுவும் நீங்கா தழுததும் அவர்க்கென்றாமோ தோன்றிலை கண்ணிர் சிந்தார் சீரங்கப் பட்டினத்தே
ஆவிவிண்னேக எச்சம் ஆகுடல் மண்பதிக்குப் போவது பொதுவாம் யார்க்கும் பிறிதென வென்றொன்றில்லை மாவீரர் தமக்கும் பூவாள் மன்னர்க்கும் ஆது லர்க்கும் ஈதெனுஞ் சமத்துவத்தை ஏற்றிடு பொழுது காணும்
மந்திரச் சபையோர் மார்க்க முதன்முறைச் சான்றோர் மற்றும் சொந்தமாம் குடும்பத்தார்கள் சேர்ந்துமே உறவுக் கானோர் வந்தெஃகிக் கூட மக்கள் வரையற அலையாய் மோதித் தந்தனர் இறுதிச் சோகச் சோபனம் விழிநீர் கோத்தே
திருமறைத் தேன்வான் மேவிச் சிதறிடும் செவிவாய் கவ்வும் பெருநிலப் பதியின் ஆவி பண்ணவன் பால்நற் பேறு மருவிடக் கைகள் ஏந்தும் மனமொன்றிப் பணியும் வேண்டும் உருவிலாய் உயர்நற் சொர்க்கம் ஒன்றிடச் செய்வாய்' என்றே
“கும்பாஸ்"என் அழகுக் கோயில் கண்கவர் பாங்கிலுற்ற செம்மையில் காணும் ஆங்குத் தாமுடல் பதியங் கொள்ளும் இம்மையில் செய்நலங்கள் எலாமுமென்றாகிச் சொர்க்கம் தம்வழி காணுமட்டுந் தரித்திடும் வாகிலாமே
அறிந்தனர் வெள்ளையர்கள் அகாலத்தில் ஹைதர் வாழ்வு முறிந்தது வென்னுஞ் சேதி மகிழ்ச்சியோ ஆழிக் கொப்பாம் கிறிஸ்மஸ்"ஸ/க் கால மஃது களியாட்டம் கிறிஸ்த்த வர்க்காம் முறைமையோ டிதுவுங் கூடி விஞ்சிய திரட்டிப் பாமே
367
368
369
37. Ο
371
372
373

ஜின்னாவூர் லுரியுத்தீன் C 87 o
விடமுடலேறு வாகு விரிந்திடும் வெள்ளையாட்சி தடையிலா தொங்கும் ஓங்கச் செய்திட லாகும் ஹைதர் குடைசரிந் திட்டதாலே குறுக்கெவர் தாமு மில்லை முடிந்தது திப்பின் வீரம் தந்தையோ டெனநினைந்தார்
374 செங்கோலும் மணிமுடியும்
கோனிலா மண்ணில் நீதிக் கோல்வளைந்தழியும் மன்னர் வானேகி வெறுமையுற்ற வாகினில் மைசூர் பாங்குந் தானான நிலைமை கண்டார் தருமத்தைக் காக்கும் பேரார்
ஆனது செய்தார் மைந்தர் ஆட்சியை ஏற்றிட் டாரே
375
அகாலத்தில் தந்தை தம்மின் ஆவியைத் தெய்வங் கொள்ள மிகவிளம் வயதில் நாட்டின் மணிமுடி பூண வேண்டுந் தகைவரத் தம்பாலுற்ற சுமையினை யுணர்ந்தார் திப்பும்
அகந்துணிந் தோர்மை கோத்தார் ஆதியின் பொருட்டவ்வாறே
376
மணிமுடித் தரிப்பை ஓங்கு மாறெனச் செய்ய நாட்டின் சனப்பெருக் கோடு கூடிச் சேர்ந்தனர் கற்ற பேர்கள் மனமொப்ப வில்லை திப்பு முடிகட்ட விழாவை அன்னார்
நினைந்தவாரியற்றத் தந்தை மரணத்தை மனத்திலேற்றே 3
77
"வழக்கென்றொன்றுண்டா மஃதை வழிகொளல் வேண்டும் தந்தை இழப்பினைக் கருத்தில் கொண்டு ஏற்றிட மறுத்தல் வேண்டா” அழுத்தமாயுரைத்தார் ஆன்றோர் அமைச்சர்கள் மறுக்க மாட்டா
அழுத்தத்தால் சரியென் றொப்ப ஆயத்தம் பலமாயிற்றே
378
நாற்படையணிவகுப்புநீழ்நெடு தோரணங்கள் வேற்றுமண் அரசர் தூதர் வருகையும் பரிசிற் சும்மை பாற்படுவாறு மக்கட் பெருந்திரள் வாழ்த்தும் ஈதாம்
போற்பல வழக்கமாகிப் பொருத்தினர் மகுடம் அன்றே
379

Page 56
தீரன் திப்பு சுல்தான் காவியம்
கோவிலில் மணியொ லிக்கக் குர்ஆனின் வாச கங்கள் மேவியதாகுங் காற்றில் முழங்கின வெடிகள் விண்ணைத் தாவின வாழ்த்துப் பூக்கள் செவிப்புலன்களிப்பால் வீங்கத் தூவிய மலர்மனத்தால் செறிந்தது மன்றில் அன்றே
பூவிழி மடவா ரோடும் புகழ்ந்தேற்றப் புலவோர் கூட்டம் நாபொழி தேன்பா சிந்த நாரியர்க் குழாமும் சும்மை வேய்குழல் யாழ்பே ரோசை வழங்கிடு முரச மார்த்தும் தூமொழி மறையே யந்தச் சடங்கினில் மேலோங் கிற்றே
சடங்கினில் மன்னர்க் கான சீருடை முத்தாற் கோத்த வடம்பல கழுத்தைச் சுற்றி வாரணம் பொருத மார்பில் இடம்பெறு மணிகள் தாங்கும் எழிலுறு சரங்கள் திப்பின் உடையலங் காரம் காண்போர் உளத்தினை ஈர்க்குஞ் சீரே.
சிம்மாசனத்தின் மீதோர் சிம்மம்வீற்றிருக்கும் பாங்காய்த் தம்முடல் நிமிர்த்தித்திப்புச் செங்கோலைக் கொளவிருக்க அம்மயி தொன்ன விந்த ஆண்மையின் தோற்ற மென்றே வம்மியோர் வியந்தார் கண்டு வாய்பொத்தி இமைப்பொழிந்தார்
மதவழிபாட்டின் பின்னே மணிமுடி தனையெடுத்துப் புதியவர் நாட்டின் வேந்தர் பொறுப்பினை பெறவென்றாக மதப்பெரியார்முன் சென்றார் மன்றிலை அமைதி யாளும் பதித்திடச் சிரசில் ஆங்கு பேரொலி வாழ்த்தால் விஞ்சும்
சிரசினில் பாகை யொக்குந் திருமுடி மகுடம் நாப்பண் விரிசுடர் மாணிக் கம்வெண் வைரக்கல் முத்துக் கோவை பரவலாய் அலங்க ரிக்கப் பட்டினால் ஒளிரும் பொன்னின் ஒருதனி நூலு மற்ற உருவினில் ஆனதஃதே
பகைவரின் உடல்கூறுண்டு போமென எண்ணு முன்னே வகுந்திடு தொழில்மேற் கொண்ட வாளிடைக் கச்சை மீதும் அகன்றிட மாட்டா தொன்றி ஆண்மையின் மாட்சி காட்டும் வகையினில் நெஞ்சு யர்த்தி வேங்கைபோல் கண்ணுற்றாரே
38O
38
382
383
384
385
386

ஜின்னாவூர் ஷரியுத்தீன் C89 lo
உச்சிதொட்டுள்ளங் கால்மட் டோடிடு வீரம் கண்ணில் அச்சிட்டு வைத்தாற் போன்றே அமைவுற அவையின் கண்ணே வச்சிராங் கொண்ட தோள்கள் விம்மிடநின்றார் மாற்றார் அச்சமுற்றடிபற்றேவல் ஆற்றுவர் கண்ணுற்றாலே
387 நாற்படை முதல்வர் வீரர் நாடாளு நெறிபு கல்வோர் போற்றுதற்குரிய சான்றோர் பண்டிதர் மதத்தலைவர் போற்பலர் சூழ்ந்த மன்றிற் புலமதில் முதன்மை யாகச் சாற்றிட லானார் திப்பு தனதாட்சிக் குறிக்கோளோர்ந்தே.
388
சாற்றிய தனைத்தும் பின்னாள் செயலுருப் பெற்ற தஃதைச் சாற்றுதல் சிறப்பாம் ஒன்றித் தனித்தனி விளம்பல் வேண்டேன் மாற்றமே காவியத்தின் முறைமைக்குக் கற்போர் நன்மை போற்றிடச் செய்தேன் வேண்டும் போதினில் எதிர்கொள் வீரே 389
மங்களூர் ஒப்பந்தம்
நம்பினார் வெள்ளையர்கள் நாட்டுடை நிருவாகத்தில் தம்புல னனைத்தும் திப்பு செலுத்துவார் அதிகாரத்தை வம்மிடு வெதிர்ப்பு ஒன்றா வழியினில் ஹைதர் பின்னே தம்வழி ஆட்சி கொண்ட தொடக்கநாட் பொழுதி லன்றோ
39 O. வெள்ளையர் தம்மை யோட்டும் வேள்வியில் உள்ளம் முற்றும் கொள்ளிட மாக நிற்கக் கொடும்பகை ஒடுக்க வேண்டித் தெள்ளிய சிந்தை யோடு திட்டங்கள் வகுத்தார் திப்பு வெள்ளையர் அறியார் தம்முள் விரவிய இடரால் நைந்தார்
391
'அனந்த்பூரிலிருந்துதிப்பு அகலக்கால் விரித்தார் போரை நினைந்தவாறியற்ற வென்றே நண்ணினார் மங்களூரை அனந்தமாம் இழப்பு வெள்ளை அடலலர் தமக்கு யானை நினைந்தவாறழித்த சேனை நிலமெனப் போனா ரன்றோ 392

Page 57
தீரன் திப்பு சுல்தான் காவியம் O90)
"கடப்பா"வை அடைய முன்னர் காப்பரண் செய்ய வென்னும் கடப்பாடும் நிறைவேறாது கைகொண்ட கோட்டை விட்டு கடந்தோடு நிலைக்குள் ளானார் கைப்பட்டான் வெள்ளையர்க்குக் கடப்பட்டுத் துரோகஞ் செய்த கயவனாம் சையத் முகம்மத்
393 பிடிபட்ட துரோகி மைசூர் போர்வீரர் பன்னூ ரொன்றி மடிந்திடக் கார ணன்னாம் மாற்றார்க்கு அவ்வப் போது கொடுத்தவன் துப்பு திப்பு கைப்பட முன்னே நின்றான் அடுத்தவர் துடித்தார் கொல்ல ஆணையால் பிழைத்திட்டானே
394 பற்பல இடர்கள் சென்னைப் பதியாண்ட வெள்ளை யர்க்காம் பற்றுதல் வேண்டும் அந்தப் போழ்தினில் சமாதானத்தை முற்றுமந் நிலைக்குள் ளன்னார் மாறினர் காரணங்கள் சொற்களுள் ளடங்கா வாறே துயருற்றார் கலங்கினாரே
395 பொருளாதார வீழ்ச்சி பெரிதெனும் பாற்பட் டன்னார் வருவாயுங் குன்றிநாட்டில் வறுமையும் விஞ்ச மக்கள் வரிதரும் வசதியற்றார் வளங்களும் குன்றிப் போகப் புரியாத சூன்யத்துள்ளே பாடுற்றார் வெள்ளைப் பேர்கள்
396 பலகால நிலுவை அன்று படையினர் தமக்காம் ஆட்சி அலுவலர் தமக்கும் காவல் அதிகாரப் பொறுப்பினோர்க்கும் வலுவுற்ற முரண்பா டோடே வெள்ளைப்பேர் விசுவா சத்தில் நிலையிலார் என்னுங் கெட்ட நிலைமையுந் தோன்றிற் றன்றோ
397 மங்களூர் முற்று கைதம் படைகளின் பின்வாங்கல்கள் தங்கள்பால் மராட்டி யர்தம் தவறான நடைமுறைகள் இங்கிலாந் துயர்மட் டத்தில் ஏற்பட்ட திருப்தியின்மை பங்கமுற்றிருக்கச் செய்த பிறபல காரணங்கள்
398
திப்புவுக் கெதிரா யுள்ள சிறுசிறு ஆட்சியாளர் ஒப்புவர் ஒன்று கூட உறுதியஃ தென்னுகின்ற நப்பாசை கொண்டார் ஒவ்வோர் நிருபத்தை யனுப்பி வைத்தார் உட்பகை ஓர்ந்து தம்பால் ஒன்றுவர் என்பதாலே 399

ஜின்னாவூர் லுரியுத்தீன் C910
அனைவரும் ஒன்று கூடி ஆக்கிரமிப்பொன்றேற்றால் மின்னிடைப் போழ்துள் திப்பு மண்கல்வலியற்ற லாகும் என்னதானியலு மும்பால் இயற்றுக மீதி யெல்லாம் சென்னையின் ஆட்சியாளர் தம்பொறுப் பாகு மென்றார்
4OO உங்கனைப் பாது காக்க உறும்பணி எம்மதாகும் எங்களின் பிடியில் முற்றும் எனுநிலை வந்த பின்னே உங்களின் நிலையில் முன்போல் உறையலாம் மேலும் நீங்கள் எங்களின் பால்நிறைந்த ஏற்றமுங் காண்பீர் என்றார்
4O1 இருகரம் நீட்டினார்கள் இணைத்திட திப்பு சார்பில் பெரும்பணியாற்றுவோரை பெருபணம் பதவி லாபம் தருவதாய் ஆசை காட்டித் துரோகநஞ் சூட்டி யந்தக் கருமத்தில் முயன்றுந் தோல்வி கண்டதே முடிவாகிற்றே
4 Ο2 முத்தொடு வைரம் தங்கம் மட்டிலாநிலப்பரப்பும் ஒத்தனர் தருதற் கன்னார் ஒன்றிவந் துற்றால் நாங்கள் சத்தியம் காப்போ மென்றும் தாள்பணிந்திரத்த லெக்கச் சத்தியம் வரைந்தார் செல்வோர் தாங்கிய நிரூபந் தன்னில்
4O3 திப்புவின் பொறியில் மாட்டித் திகைத்திட்ட போழ்தில் செய்தி ஒப்பினார் வெள்ளை யர்கள் உயரிடத் திருந்தாம் அஃது செப்பிடில் நறையுண் டாற்போல் தோன்றிய சமாதானத்தின் ஒப்புதல் பிரஞ்சு வெள்ளை ஊரவர் தமக்குள் ளென்றே
4O4 தேனுண்ட களிப்புக் கான தோதந்தச் சமாதானத்தால் ஊனமுற்றழியும் திப்பு உடன்கொண்ட நட்பாம் பிரெஞ்சார் தானுண்டு நீர்வே றென்று தனிதலும் தம்மினோடே பூணநட் பென்றும் தோன்றும் படிநிலை அமையுமென்றாம்
4O5 எண்ணியவாறே மாற்றம் இயல்புற வெகுண்டார் திப்பின் நண்பரி லொருவர் பிரெஞ்சார் நடத்தையில் பழிசுமத்த நண்ணுவதனைத்தும் நன்றே நம்படை தனித்த தொன்றாம் நண்ணிடும் எதிர்ப்பைநாமே நேர்கொள்ளல் வேண்டும் என்றார்
4O6

Page 58
தீரன் தியு சுல்தான்காவியம் O92 O
திப்புவை ஒழிக்க வேண்டித்தம்மொடு சேர்ந்து கொள்ள ஒப்புதல் வேண்டிச் செய்த ஒரழைப் பேனும் மற்றோர் ஒப்புதற்க் குட்படாது ஒதுக்கிய நிலைமை கண்டு செப்புதற் கரிய வாறு தனித்தனர் பறங்கிப் பேர்கள்.
4O7 சரணடைந் திடுதலன்றி செயற்பட யாது மற்றோர் கரம்படு வெண்பதாகை கொண்டிடு கோலங் கொண்டார் வரவினை ஏற்றார் திப்பு வந்ததென் வினாத்தொடுக்க விரும்பிடு சமாதானத்தின் வாகினால் எனப்பு கன்றார்
4O8 மங்களூர் கோட்டை நீண்ட முற்றுகைக் குட்பட்டாலும் தங்களின் பலத்தைக் காட்டத் தவறிடா "கமாண்டர் காம்பெல்' சிங்கந்தன் கூண்டுள்பட்டுஞ் சினத்திடு பாங்கில் நின்றார் பங்கமுற் றடிமை யாகும் பிழைபட வேண்டா வாறே
4O9. வாரங்கள் கடந்தே மாத வரவுபல் லொன்றத் தம்மின் போரணி பெருக்கி யுத்தம் புரிவதில் கருத்தாய் நின்றார் சார்ந்திடும் வெற்றிதம்பாற் றாமென வெண்ணாப் போழ்தும் வீரத்தில் தாழ்ந்து போகும் விருப்பற்றார் வெள்ளை வீரர்
41O கோட்டைக்குச் செல்லும் பாதை காத்திடில் உணவில் லாத பாட்டினால் சரணடைவார் போர்முற்றும் என்றறிந்தும் நாட்டமுற் றாரோ இல்லை நல்லெண்ணங் கொண்டார் திப்பு மேட்டிமை கண்டார் மாற்றார் வீரத்தை மதித்திட்டாரே
411 தொடர்ந்திடு முற்று கைக்குத் தம்வழிசோர்வு காண உடன்படு சமாதா னத்தின் உட்படுநிலைமை முற்ற உடன்பட்டார் கம்வெல் கோட்டை உறைவிடம் தவிர்த்தே வந்தார் திடனொடு எதிர்த்து நின்றுந் தோல்விவாய்ப் பட்டதாலே
412 கீரியும் பாம்பும் போல கொள்கையால் மாறு பட்டுப் போரினைத் தொடர்ந்த போதும் பணிந்திட மனமற்றோராய் வீரமுந் துணிவுங் காட்டி வெற்றியே இலக்காய்க் கொண்ட பேரினைத்திப்பு சுல்தான் புகழ்ந்திட அவர்மகிழ்ந்தார் 43

ஜின்னாவூர் லுரியுத்தீன் C93o திப்புவின் ஆட்சித் திறன்
ஆட்சிசெய் காலந் தன்னில் அஞ்சாப்போர் மறவனாக மாட்சிமைக் குரிய சீர்கொள் மன்னனாய்ப் பகைவருக்குக் காட்சிகொள் வேங்கை போலும் கடமையில் உறுதி கொண்ட தோட்பலத் தேந்தல் திப்பு திகழ்ந்ததோர் சரித மாவார்
414 வெள்ளையர் பிடியிருந்த வரலாற்றை மாற்றித் தம்மண் எள்ளளவேனும் மாற்றான் இடும்பைக்குள் அகப்படாதே வள்ளிசாய்த் தனித்து நின்றோர் வீரத்தின் இமய மென்று கொள்ளத்தன் உயிரைத் தந்த கோன்முதல் திப்பு வேந்தன்
415
தன்னையோர் மக்கள் தொண்டன் தானென மனத்தி லேற்றுப் புண்மைக்குச் சங்கூ தற்கே தோற்றினான் இறைவன் என்றே தன்னுடைப் படைக்கும் வீரத் "திருப்படை” எனும்நாமத்தைச்
சொன்னவன் மண்ணின் மானம் முதன்மையென்றுழைத்த கோனே
416
பகைவரை வெறுத்தாற் போன்று பகைவரைத் தேர்ந்த கற்றிப் புகைந்திடிற் துரோகம் ஒர்ந்தே பூண்டோடு பிடுங்கித் தூர்த்தார் பகைவரோ டுறவு கொண்ட பேரெனில் மன்னிப் பில்லை வகையதே ஆட்சியூன்றும் வழியெனத் தேர்ந்த தாலே
417 நிருவாகச் சீர்மை நாட்டில் நிலைகொளப் பலவாறாக நிருவாகத் துறைகளேற்று நாட்டவர் நிருவகிக்கப் பரவலாய்ப் பொறுப்பை மக்கட் பாலெனத் தந்து தானே சிரமதற்காக நின்றும் செயற்பட்டார் திப்பு சுல்த்தான்
418 நாடுகாத்திடும்பொறுப்புநிலைப்பதோ இராணுவத்தின் பாட்டினில் நிதிநிர்வாகம் பற்றிடும் வருவாய் செல்வம் தேடிடும் வணிகம் சட்டத் துறைகடற் துறைதம் நாட்டிற் கூடுசெல் வம்சேர் காப்பு கொள்பணத் துறைகளென்றே
419

Page 59
தீரன் திப்பு சுல்தான்காவியம் O94)
கடற்றுறை வேண்டும் என்ற கரிசனை தனையந்நாளில் கொடுத்திலர் பாரதத்தின் கொற்றவர் எவரும் திப்பு கடல்கடந் தெம்மை ஆளும் கொள்கையோர் தமைத்த டுக்கக் கடல்வளத் துறையின் தேவைக் காத்திரம் உணர்ந்திட்டாரே
42O ஊராட்சிதனையுங் கூட ஒழுங்குற நிருவகிக்கத் தேர்வானார் தலைவர் ஊரில் சேர்வரி செலவு நோக்க ஓர்அதிகாரியும்தன் உத்தரவனைத்தும் ஏற்றே காரியம் இயற்ற வென்னும் கருத்தொடும் தேர்வு பெற்றார்
421 மாவட்டந்தோறும் மன்னர் மக்களின் குழுக்கள் தோற்றி ஆவன செயப்பணித்தோர் அதிகாரம் தந்திட்டாலும் தேவையென்றாகில் தம்மைத் தரிசித்து நீதி கோர யாவர்க்கும் உரிமை தந்தார் இடைத்தர கற்றவாறே
422 அதிகார வரம்புக்குள்ளே அரசரோ டாட்சி பற்றிப் பொதுவாகப் பேசி வாதம் புரிவதற்கிணக்கம் தந்தார் அதிகாரத்தாலோ அன்றி அவர்வாதத் திறத்தினாலோ மதியுரைப் போர்கள் வார்த்தை மறுத்திடார் மன்னர் ஏற்பார்
423 சாலைகள் அமைத்தார் மக்கள் தங்கித்தம் களைப்பு நீக்கச் சாலைக ளருகில் ஓய்வுச் சாலைகள் நிறுவச் செய்தார் வேலையற் றெவரும் இல்லா வழிபெறத் தொழில்முனைவோர் காலூன்ற வழியும் செய்தார் கடன்தொழில் முனைவர்க் கீந்தே
424 உழுபவன் தனக்கே பூமி உரியதாம் எனவுரைத்தே உழவரின் வாழ்வை மாற்றி உயர்த்திடச் சட்டம் ஏற்றி வழியிலாத் தலித்து மாந்தர் வளம்பெற நிலமும் ஈந்தார் தொழில்வழிப் படையினோரும் சொந்தமுற்றார்கள் அன்றே
425 வாக்குரை செய்ய வைத்தார் வருவாய்கொள் துறையினோர்கள் "வாக்கினால் செயலால் ஏழை விவசாயி தமக்குக் குற்றம் சேர்க்கிலோம்” என்பான் போன்று சட்டமும் வகுத்தார் யாரும் யார்க்குமே கூலி யின்றி எத்தொழில் தவிர்த்தல் நீக்க 426

ஜின்னாளுர் ஷரியத்தீன் C9so முதலீடு செய்வார் இலாபம் முறைப்படி கொள்ள நீதி விதித்ததன் வாறாய் மக்கள் வளம்பெற ஊக்கு வித்தார் முதலீடு சிறிய தாயின் மிகுதியும் இடுதல் முற்றும் அதிகமாயிருப்பின் இலாப அளவினில் குறைவு மாகும்
427 மதுவினால் மக்கள் வாழ்வு மாசுறும் மனித தேகம் விதிவரும் முன்னதாக விடைபெறும் நிலைமை ஏற்குங் கதிவரும் வறுமை தோன்றும் கூடிவாழ் இல்லறத்தில் சதிபதிப் பிணக்குக் கண்டே சீர்கெடும் எனவுணர்ந்தார்
428 உற்றபொன் வருவாய் குன்றும் உபாதையை நோக்கிடாதே முற்றுமே மதுவிலக்கை முறைப்பட அமுல்ப்படுத்திப் பற்றிய தொழிலாய்க் கொண்டோர் புதுத்தொழில் பற்றச் செய்தார் உற்பத்தியற்றதாலே உடன்பலன் கனியா கிற்றே
429 மக்களின் சுகநல் வாழ்வு ஆன்மீக மேன்மை தம்மைத் தக்கவைத் திளைஞர் பண்பின் திறனழீத் திடாது காத்தல் மிக்கபேர் நன்மை காட்டும் மதுதரு திருவின் மேலாம் ஒக்காது குடியென் கொள்கைக் குடன்படா தெனவுஞ் சொல்வார்
43O போதையைத் தூண்டும் கஞ்சாப் பயிரினை வெள்ளை யர்கள் தீதறிந்திருந்த போதும் தூண்டினர் பயிர்செய்தர்க்கே ஒதினார் திப்பு செய்தால் உண்டுதண்டனையாம் என்றே சாதித்தும் காட்டினார்அச் செய்கையை இலாதொழித்தே
431 பக்தியில் முக்தி யென்று பக்தர்கள் தேர்க்கால் வீழ்ந்து அக்கணத் துயிரை மாய்க்கும் அறிவிலாச் செய்கை மாற்றி வக்கிலா ஏழைப் பெண்டிர் விபச்சார வழியில் உந்தும் விக்கினம் போக்கக் கோயில் தாசியர் தொழில்தடுத்தார்
4.32 அரண்மனைச் சுவர்கள் தம்மில் அமைந்ததாம் வாசகங்கள் திருவுடைத் தாகும் அஃது திப்புவின் மனித நேயம் உருக்கொண்ட பாங்கிலாகும் ஒப்பினுக்கிலாத தொன்றே ஒருவருக் கொருவர் நேசம் ஒன்றிட உபதே சிக்கும் 433

Page 60
தீரன் திப்பு சுல்தான் காவியம் O96)
"நம்முடை மக்க ளோடு நாம்செய்யும் பினக்கு நாமே
நம்மொடு பொருதல் போன்றாம் நம்மவர் கவசம் அன்னார் நம்மெலார் தமக்கும் எல்லாம் நல்குவோர் அவரே யாகும் நம்வணு வெறுப்பு முற்றும் நம்பமிலார் எதிரி பாலே"
434 மதத்திடை ஆட்சி மூழ்க மனமொப்ப வில்லை திப்பு மதித்தார்தம் மதம்போல் மற்ற மதத்தையும் மேலாம் வேற்று மதத்தவர் தமக்கும் ஆட்சி முறைமையில் பங்கு தந்தார்
மதத்தினால் இடுக்கண் தோன்று மாறிலா தமையும் வாழ்வே
435
நீதியில் பிறழ்தல் மக்கள் நலத்தினைக் கொல்லும் தீர்த்த நீதியில் அவர்மேல் நீதிநாடிடில் வழிகள் வேண்டும் கோதிலா தறத்தைக் காக்கக் கேள்விகொள் விசாரணைகள்
நீதியில் திளைத்தல் வேண்டும் நாடிய நீதி அஃதே
436
முரண்படின் மக்களோடு முரண்பாடு நம்மில் நாமே அரணவர் நமக்குக் காக்கும் ஆயுதம் வேலும் வாளும் உரிமையில் நுழைதல் அன்னார் உரிமைக்கும் எதிர்ப்போர் செய்தல் பரிவொடு காத்த லொன்றே பாராள்வோர் கடனென்றோர்ந்தார்
437 வெற்றிகொண் டிடிலோர் நாட்டை வன்மித்துக் கொள்ளை செய்தல் முற்றுமே இழுக்கதாகும் மன்னர்க்கும் படைக்கும் மீறிச் சற்றெனும் மக்களுக்குத் தீங்குறல் நாடல் கூடா பற்றுக நீதி யுத்தம் போர்க்களத் தோடாம் என்பார்
438 மாதர்கள் வயோதி பர்கள் வயதிளம் சிறார்கள் தம்மை தீதுசெய்யாது காத்தல் தருமமாம் பகைப்பு லத்தும் ஒதினார் வயல்கள் மக்கள் உணவுக்காம் பயிர்கள் மற்றும் தீதறுகால்நடைகள் தம்மையும் காப்பீரென்றார்
439

ஜின்னாவூர் லுரியுத்தீன் O97)
கல்விக்கு உரமளித்த காவலர்
கற்றறியா மேதைக்குப் பிள்ளை யாகக்
காசினிக்குக் கொடையாக இறைவன் தந்த கற்றறிந்த மேதைசுல்தான் கல்விக் கென்று
காட்டியதாம் கரிசனையை உலகம் ஏற்கும் பொற்புடைத்தாம் மனுக்குலத்தின் மேன்மைக் கென்றே
படிப்பறிவின் உன்னதத்தைப் போற்றி நாட்டோர் கற்பதற்கும் வழிசமைத்தார் தானுங் கற்றார்
காத்துவைத்த நூல்நிலையம் அதற்கோர் சான்றே
41O நாடெல்லாம் கற்பதற்குக் கல்விக் கூடம்
நிறுவிடச்செய்தார்பொதுவாய் அனைத்துப் பேர்க்கும் கூடுமுயர் கல்விக்காய்க் கலாசாலையும்
கட்டவைத்தார் முஸ்லிம்கள் மார்க்கக் கல்வி தேடவென மதரசாக்கள் தோற்றி யாங்கு
தேர்ந்தறிந்த ஞானர்களை வரவழைத்துப் பாடமோத வைத்தார்தம் மக்க ளெல்லாம்
படிப்பறிவு மிக்கவ்ராய் ஆவதற்கே
பாதுகாப்பு நலன்கருதி யுத்தப் பள்ளி
போர்முறைகள் கற்றறிய நிறுவி யாங்கே ஒதுவிக்கத் தகுந்தவரைத் தேர்ந்தெடுத்தே
உபாத்தியாயம் செய்யவைத்தார் இந்தியாவின் மீதுற்ற முதற்பள்ளி அதுவே யாகும்
மன்னர்திப்புதானதற்கும் முதன்மை யானார் ஒதவெனப் "பதனுடல்முஜாஹிதீன்"ஐ
உருவாக்கி யுத்தமுறை கற்கச் செய்தார்
412 கொள்ளையிட்ட வெள்ளையர்க்குக் கிடைத்த செல்வம்
கணக்கிலடங் காதனவாம் திப்பு சுல்தான் கொள்ளரிய பொக்கிஷங்களாகச் சேர்த்த
கல்விக்கரு வுலங்கள் அவற்றில் சேரும்

Page 61
தீரன் திப்பு சுல்தான்காவியம் O98)
உள்ளனவென்றிருந்தனவாம் நூலகத்தில் உலகப்பேரறிவினுயர் தேடல் காலம் கொள்ளையிட வொண்ணாத ஞான வுற்றின்
கணக்கற்ற பெருந்திருவென்றோதுவாரே
443 திருமறையும் திருமறையின் வழிகளோதும்
தொகைநூல்கள் சித்தாந்தம் மனிதக் கால வரலாறு வானவியல் சட்ட நூல்கள்
விஞ்ஞானம் அகராதி மொழிசால் நூல்கள் மருத்துவநூல் போரறிவு ஆயுதஞ்செய்
முறைகூறு நூல்களொடு கணிப்பொருட்கள் பிரித்தாய்வு செய்யவழி சொல்லும் நூல்கள்
பற்பலவாம் பெருந்தொகையப் படிப்பகத்தே
444 திருமணத்தின் போது தந்தை மகனிடத்தே
தந்தைவழிப் பரிசென்ன வேண்டு மென்றே விருப்பத்தை அறியவொரு வினாத்தொடுக்க
வேண்டுமொரு நூல்நிலையம் என்றிட் டாராம் அருமையறிந்திருந்தாரே திப்பு கல்வி
அழியாத செல்வமென அனைபேருக்கும் திருநபியின் போதமுமஃ தாமே என்றும்
தெரிந்திருந்தார் பிறர்க்கெடுத்தும் ஒதுவாராம்
445 இயற்கையில் ஈர்ப்பு
“இயற்கையிறை எழுதியநல் ஏடாம்” என்றே
இயம்பிடுவார் திப்பு:விழி பசுமை காணின் வயப்படுவார் அதன்பக்கல் களத்திற் கஞ்சா வீரதீரப் பராக்கிரமர் என்றிட்டாலும் இயல்பினிலே பிஞ்சுமணங் கொண்ட வர்தான்
இயற்கைப்பற்றதற்குநல்ல சான்றாம் அன்னார் செயற்பாட்டில் சிற்சிலவீங்குரைப்பின் கூற்றின்
சத்தியத்தை யுனர்த்திடலாம் தெரியார் மாட்டு
44-6

ஜின்னாவூர் ஷரியுத்தீன் C99 o
தேவையற்றுப் பிராணிகளின் உயிர்பறித்தல்
தோற்றுவிக்கும் இயற்கைச்சமச் சீர்மை கொல்லும் பாவமெனச் சுட்டியவர் புறக்கணித்தார்
புலிகளின்மேல் அளவில்லாப் பாசாங் கெண்டார் ஏவினரே புறாக்களுக்காய் ஏற்றவாறே
இருப்பிடங்கள் அமைக்கவெனப் பள்ளி வாயில் மேவுமெழிற் கோபுரங்கள் தோறும் இன்றும்
வரலாறு புகலும்படி அவையுண்டாமே
447
மரஞ்செடிகள் கொடிவகைகள் மலர்த்தோட்டங்கள்
மிகுபலனை நல்குமென வளர்க்கத் தூண்டி அரியபல செடிவிதைகள் அயல்நாட்டின்பால்
ஆனமட்டும் பெற்றவற்றை நாட்டில் நட்டும் உரியபரிபாலனத்தால் பசுமை யோங்க
ஊக்குவித்தார் உரமளித்தார் திப்பு சுல்தான் கருணையுள்ளங் கொண்டவரே இயற்கை மீது
காமுறுவர் எனிலவுரே முதல்வராவார்
தோட்டங்கள் பலவமைத்து மாளிகைகள்
தேசுடைத்தா யிருக்கவெனப் பராமரித்தும் நாட்டமுற்றார் வீதிகளும் அழகு கொள்ள
நெடுஞ்சாலை நடைபாதை யனைத்தும் பச்சை மேட்டிமையாய் ஒளிரவென மரங்கள் நட்டார்
மாற்றுநிலத் திருந்துமவை வரவழைத்தே காட்டுமவை மன்னவரின் இயற்கைப் பற்றைக்
கனன்களுக்கும் விருந்தளித்துக் கவல பூழித்தே
449 கண்கவரும் அழகியமின் வகைகள் மீது
கவர்ச்சிகொண்டார் மாளிகையின் சுற்று வட்டம் வண்ணவண்ண மீன்பலவுங் கொண்ட தொட்டி
வடிவமைந்து வதிபுலத்தை அழகு செய்யும்

Page 62
தீரன் திப்பு சுல்தான்காவியம் C10O
திண்ணியநெஞ் சுடைத்தவர்தா னென்றிட்டாலும்
தெய்வத்தின் கொடையென்னும் இயற்கை மீது பண்ணவனின் அருளெண்ணிப் பூரிப் பெய்திப்
புகழுரைப்பார் புகழுரைப்பார் புகழு வாரே
45O நிருவாகத் திறன்
போரினில் புலியென்றாலும் பாராளு திறத்தில் திப்பு சீர்சொலப் புக்கி னஃதோர் சிறந்தநற் பாடமாகும் நேர்மையும் மதியு கத்தின் நுண்மையும் செயலில் காட்டும் ஓர்மையும் ஒர்ந்தா லின்றும் உலகினுக் கொப்பும் வாறாம் 45
முற்போக்குக் கொள்கை நாட்டை முன்னேற்றப் பாதை தன்னில் நற்பயன் கொள்ளச் செய்த நலத்தினை கருத்தில் தோய்த்தால் முற்றிலும் மக்கள் வாழ்வின் மலர்ச்சியே வேரென்றாகும் கொற்றவன் மாட்சிக் கென்றெக் காரியம் இலைகண் கூடே
452 தன்னுடைத் திட்டத் தோடு தலைமுறை வழியாய் வந்த மண்ணுடை சீர்முறைக்கும் முதன்மையாய் வழிசமைத்தே என்னென்ன முறைகள் எங்கே இருந்திடி லதுவும் பற்றிப் பின்னவர் தமக்கும் ஏற்ற பயன்பெறு வழியில் ஆண்டார் 453
இறைவனின் திருநாமங்கள் எண்ணிக்கைக் கேற்ப ஆட்சி நிருவாகந் தன்னைத் தொண்ணுற்றொன்பதாய்ப் பிரிவு செய்தே பொருந்துவா றமைய மண்ணைப் பிரித்துமே மூன்றதாக்கிச்
சிறுசிறு தாலுக் காவும் தனியென வகுத்திட்டாரே
454
கடலொடு கடல்சார்ந் தொன்று கூறுவர் "சுபாயெம்" என்றே நடுநிலம் மலையுங் காடும் நவில்பெயர் "சுபாது ரூன்"ஆம் இடைநிலைச் சமதரைகள் ஏற்றபேர் "சுயாகப் ரானென்
னுடன்படு வாறு திப்பும் இட்டார்நல் நாமம் ஒர்ந்தே
455

ஜின்னாவூர் லுரியுத்தீன் C101.o
தொடங்கிடும் நிருவாகங்கள் சிற்றுார்கள் தமிலிருந்தே அடங்குமாம் குறுவட்டங்கள் அவையொன்றி மாவட்டங்கள்
நெடுநிலம் தாலுக் காவென்றாகுமொன்றனைத்துங் கூடி அடங்கிற்று அன்னாள் மைகர் ஆட்சியுள் நிருவா கத்தே
456 நிழல்தரு மரங்கள் சாலை நீர்நிலை சுற்றுக் கோட்டை வழிகாட்டு கம்பம் ஆட்சி வரிகொளும் இல்லம் மற்றும் முழுமையாய்ப் பிறவும் ஒன்றும் மாவட்டந்தோறு மாங்கே தொழிலதிகாரங் கொண்ட தலைவரின் பால தாமே
457
மாவட்டத் தலைவரோடு மற்றும்பல் லுதவி மேலார் சேவகம் செய்தார் ஒவ்வோர் துறைசார்ந்த பொறுப்பினுக்கும் காவலர் வேறாய் அன்னார் கடமைக்குப் பொறுப்பாய்க் கோட்டைக் காவலர் தளகர்த்தர்போல் கொண்டயல் பதவியாங்கே
458 சீரங்கப் பட்டினத்தில் தலைமைகொள் ளொவ்வோர் பீடம் காரியப் பொறுப்பை முற்றுங் கொண்டமைந்திருந்த தஃதின் பேரினில் முதன்மைப் பேராய்ப் பதவியில் "திவான்"இருந்தார் நாடாளு நிபுணர் மன்றில் நாயகர் “மீர்அஸப் ஆவார்
459
ஆகிடும் தீர்மா னங்கள் அரசுசார் ஆணை முற்றும் ஆகிடும் ஒழுங்கு மாறா தமைவுறும் கையெழுத்தின் வாகிலாம் துறைத்த லைவர் திவான்தலை திவான்பின் சுல்தான் ஆகாது எதுவும் இந்த ஒழுங்குபின் பற்றாப் போழ்தே
46Օ களத்தினி லதிக காலம் கடத்திய போதும் நாட்டின் வளத்தினைக் கருத்திற் கொண்டே வாழ்ந்துவந்திருந்த காலை வெளிக்களச் செயலகத்தை வைத்ததன் மூலம் ஆட்சிக் களப்பணி தொடர்ந்தார் ஏதுங் குந்தகம் தோன்றா வாறே
461
ஆட்சியின் மொழியாய்ப் பார்சி "கன்னடம் இரண்டு மாகும் வேட்டலில் இரண்டின் கூட மராட்டியும் "உர்தும் சேரும் கூட்டியிம் மொழிகளோடு கூடவும் அறிவார் திப்பு மேட்டிமை ஞானங் கொண்ட மன்னவர் பாரதத்தே 462

Page 63
தீரன் திப்பு சுல்தான் காவியம் C102)
அரசாங்க வரிக்க ணக்கும் அவைசார்ந்த பிறவும் ஆட்சிக் குரியதாம் மொழியிலாகும் உரியவர் தேவை எண்ணி மராட்டியும் உருதும் மாற்று முறைநகல் படிவ மேற்கும்
கருமங்கள் ஒழுங்காய்ச் செய்யக் கொண்டநல் முறைமை யஃதே
463
இனமத வேறுபாடு இலாதெவர் எதர்க்கென்றாய்ந்தே கனதியும் பெறுவர் தத்தம் கொண்டிடும் பதவி தன்னில் வினையொழுங் கற்றால் மாற்று வழிகாண்பர் சார்பு காட்டார் அணையாதே நீதி குற்றம் ஆற்றுவோர் தண்டிப்பேற்பார்
464.
சட்டமும் ஒழுங்கும் நாட்டில் சரிவரத் தர்மம் ஓங்கத் திட்டங்கள் வேண்டு மென்னும் திண்மையிலூன்றித்திப்பு சட்டங்கள் வகுத்தார் நாட்டின் சான்றோரின் துணையி னோடே இட்டம்போல் எவரும் ஏதும் இயற்றிடாப் பொறுப்பு மேற்றர்
465
நாட்டின் பாதுகாப்பும் படைபலமும்
நாட்டுடைப் பாது காப்பு நலம்பெறா திருப்பின் ஓநாய் வேட்டைக்குள் ளடங்கும் குட்டி வெள்ளாட்டின் நிலைமை யாமென் பாட்டினை யுணர்ந்ததாலே பலங்கொண்ட படைப்ப லத்தின் தேட்டத்தில் முதன்மை கொண்டார் திப்புதன் ஆட்சிப் போதே
466 உடற்பலங் கொண்ட ஆண்கள் ஒவ்வொரு பேரும் வேண்டும் படைத்திறப் பயிற்சி கற்கப் பணித்திருந் தாரே திப்பு உடைத்தவரவரும் தந்தை ஊட்டிய காரணத்தால் கொடுத்தவர் காளமி கான்தான் குருத்துவம் அவர்பால் சேரும் 467
பயிற்சியோ டன்ன வர்கள் புதுப்புதுப் போர்முறையும் பயின்றிடப் பொருந்தும் நூலைப் பதிப்பித்தார் "ஜெயினுல் ஆப்தீன் வியத்தகு வாறாய்ப் போரின் வகைகளைப் போர்நுட்பத்தை
நயந்திடச் செய்தார் நுண்மாண் நுழைபுலச் சீர்மை கொண்டே
468

ஜின்னாவூர் லுரியுத்தீன் C103 o
பதினெட்டுப் படலங் கொண்ட பொற்புறு போர்நிகண்டோ அதிகாரப் பதவி வாகில் அவர்தமின் கடமை போரின் விதவித முறைகள் தாக்கும் வர்ணனை ஆயுதங்கள் எதுவெலாம் எதற்காம் எங்கே ஏற்றதாம் என்றும் கூறும்
469 படையணிப் பிரிவு வேறு வேறென வாகும் காலாட் படைபரிப்படையோ டொன்றும் பீரங்கிப்படையும் ஏவற் படையிவை யொவ்வொன்றிற்கும் பற்பல பிரிவும் உண்டாம் படைமுதற் தலைமை நாட்டின் பதிக்கெனக் கூறும் நூலே
47O ஆயுதக் கிடங்கின் சாலை அதுசார்ந்த துறையின் பாலாம் ஆயுதம் வெடிமருந்தும் அதற்கான பிறவும் உண்ண ஆயன அனைத்தும் பங்கை அளித்திடும் பொறுப்புச் சேரும் வாயது அமைந்த தோடே வேண்டுவதனைத்துங் கொள்ளும்
471 கடற்படைத் துறையுந் திப்புத் தோற்றிய தொன்றாம் முற்றும் முடிவுறும் முன்னர் வாழ்வு முடிந்ததால் தேங்கிற் றஃது தொடக்கமே அவரா மென்னும் சரித்திரம் உண்டாம் நோக்கம் முடக்கிட வாணிபத்தை முற்றிலும் தம்பாற் கொள்ள
472 நாட்டுடை அமைதி பேண நரருயிர் பொருளைக் காக்க வேண்டுவதாகும் காவல் விரிவுற வெண்பதாலிப் பாட்டுடைத் தலைவன் திப்பு பெருங்காப்பு வலயம் செய்தார் நோட்டங்கள் அறிய வேவுத் துறையொன்றும் இருந்ததாகும்
473 கடமையில் தவறியோர்கள் காவலர் என்றிட்டாலும் உடனதற்கேற்ற வாறே ஏற்பரே தண்டனைகள் இடமிலை எவர்க்குங் குற்றம் இயற்றிட இயற்றின் நோக்கும் தண்டனை தாங்க வேண்டும் தவிர்த்திட மார்க்கம் இல்லை
474 உரியதற்குரியரான ஒருவரை ஓர்ந்தறிந்தே உரித்துடைத் தாக்கினார்கள் உயர்பெரும் பதவி தேர்தல் உரியதாம் மன்னர் கொண்ட உரிமையில் ஒன்றா மென்றே வரித்தவம் முறைகள் எவ்வோர் வழுவரா திருக்கும் நோக்காம் 475

Page 64
தீரன் திப்பு சுல்தான் காவியம் C104 O
திப்புவின் படைப் பலம்
பெரும்படை இருந்த தன்னாள் பாராளுஞ் சக்தி கொண்டே இருந்தனர் வீரர் மூன்று இலட்சத்துக் கதிகமாகும் கருமலை போலு மன்ன கரிகளா யிரமும் ஒட்டை
பெருந்தொகை ஆறி ரண்டின் பெருக்கமாம் ஆயிரங்கள்
476
அரபியப் பரிகள் கால்நூறாயிரம் கால்நடையின் பெருக்கமோ நான்கின் இலட்சம் துப்பாக்கி மூன்று இலட்சம் உருக்குவாள் இரண்டு இலட்சத் திருபத்தைந்தாயிரங்கள் பெருங்குழற் குண்டு பாய்ச்சும் பீரேங்கி பன்நூறாகும்
477
ஏராளம் வெடிமருந்து எல்லையில் துவக்குச் சன்னம் கூர்முனை கொண்ட ஏவுகணைகளும் கொள்ளை யாகும் வேரொடு பெயர்த்து வீசும் பீரேங்கிக் குண்டு கூடச்
சாருமே அவற்றி னோடே தொகையறியாத மட்டே
478
புலிகளைக் கூட வன்னாள் போருக்காய்ப் பழக்கும் எண்ணம் புலிக்கொடி மன்னர் நெஞ்சப் பதிகொண்டதாகு மென்பர் இலகுவி லாகா தென்னும் எண்ணமும் முயன்று கண்டார்
நலம்பெற்ற தான தஃது நாட்டுடைப் பொருட்காப் பிற்கே
479
படையணியனைத்தும் கொண்ட புலிவரி யுடைகள் காப்புத் தடையெனும் கவசம் வாளைத் தடுத்திடும் கேடயங்கள் அடலரைக் குறிவைத் தெய்யும் அம்புகள் வில்லோ டீட்டி
கடலனைக் கொள்ளை யாகும் கணக்கறிந்திடாத வாறே
48O
பீரங்கி செய்யும் நுட்பம் படைத்தவர் பிரெஞ்சுக் காரர் சீராகத் தம்மோர் கற்குஞ் செய்முறைப் பயிற்சி கொள்ள ஆரம்பம் செய்தார் மன்னர் அதற்கென்றோர் தொழில்சார் பீடம் காரணம் கருதி யன்னார் கூட்டினைத் தம்பா லீர்த்தார்
481

ஜின்னாவூர் ஷரிபுத்தீன் C10so
ஏவுகணை நுட்பத்தின் முன்னோடி திப்புசுல்தான்
ஏவுகணைத் தொழில்நுட்பம் இந்தியாவின்
ஏற்றத்தை உலகளவில் இன்று பேசும் பூவுலகின் முதல்கணையைத் தோற்று வித்த
புகழ் "திப்பு” மன்னரையே முதலில் சாரும் ஏவுகணைக் காணவொரு பிரிவுங் கூட
இருந்ததன்னாள் அரசரது படைத்த லத்தில் சேவைக்கென்றாயிரங்கள் ஆறாம் வீரர்
தளபதிகள் மூவொன்பதாகு மாமே
482 இரண்டுதசம் இரண்டு “கிலோ கிராமாம் ஒன்று
இணைந்தின்னும் ஐந்துதசம் ஐந்தாம் ஒன்று செருக்களத்தில் எதிரிகளைச் சின்னா பின்னஞ்
செய்ததவை இரண்டுமூன்று கற்கள் தூரம் பறந்துசென்று தாக்கவல்ல சக்தி மிக்க
போராயுதம்மாகும் அற்றை நாளில் குறிவைத்தே ஏவுவராம் ஏவும் திக்கில்
கொண்டபடை சிதைந்தழிய வேண்டு மென்றே
483 இரண்டாவதானமைசூர் யுத்தத்தின்கண்
ஏற்றமுதல் ஏவுகணைத் தாக்கம் பின்னாள் பெருவளர்ச்சி கொண்டததற்காக வென்றோர்
பட்டறையும் பெருமளவில் திப்பு கொண்டார் உருவான தாம்இரும்புக் குழாய்களுள்ளே
ஓங்குசக்தி கொண்டவெடி மருந்தும் வாள்போல் ஒருநீண்ட பட்டயமும் ஒன்றிச் சேர
உயரியதாம் தொழில்நுட்பம் உலகோ ருக்கே
484 தோல்வியின்பின் சீரங்கப் பட்டினத்தில்
சேர்த்தெடுத்தார் பெரியனவாய் ஏழு நூறும் போல்சிறிய தொளாயிரமும் அனைத்துங் கூட்டிப்
பறங்கியர்கள் தம்மோடு திருடிச் சென்றார்

Page 65
தீரன் திப்பு சுல்தான் காவியம் O1060
காலவெளி இரண்டேகால் நூற்றாண்டின்று
கடந்தாலும் அத்தனையும் பாது காப்பாய் மூலத்தைச் செப்புவதாய் ஐரோப் பாவில்
முடக்கிவைக்கப்பட்டுளது பார்வைக் கென்றே
வேறு 485
ஆலையொன் றிருந்ததாகும் அதற்கெனச் சீரங் கத்தே மூலமத் தொழில்நுட்பத்தின் முதலவர் திப்பு சுல்தான் காலத்தால் விரிவடைந்து கனபரிமாணம் பெற்றின்டு) ஞாலத்தில் புதுமை செய்யும் நிலைக்குயர் வடைந்த தன்றோ
486 "தரமண்டல் பேட்டை" தாமத் தலத்தினுக் குரிய நாமம் அருகிலாத் தொலைவில் அஃது அமைந்தது பாது காப்பைக் கருதியே வெடிமருந்தும் கொள்கலன் பிறவு மாக இருந்தனர் வீரர் வேறாய் இயக்குதற் பணிக்கென்றாமே
48ア அங்குலத் தெட்டு நீழம் அதன்சுற்று மூன்றதாகும் தங்கிடு வெடிமருந்தோ செறிந்தொரு இறாத்தல் எஃகின் சங்கமக் குழாய்பின் வாலில் சேர்ந்தது மூங்கில்ச் சட்டம் அங்கதன் நீட்சி நான்கு அடிகள்வே றமைப்பும் உண்டாம்
488 முதலவை மூங்கிலாலும் முன்னேற்றத் தொழில்நுட்பத்தால் விதம்வித மாகச் செய்தார் வலியதாய் இருப்பினாலே அதிகூர்மை கொண்ட கத்தி அமைந்தது வால்போல் பின்னே சிதைத்திடப் பகைவர் சென்னி சேர்த்துடல் கூறு போட
489 தனித்தனியாக மற்றுஞ் சேர்தொரு முறையில் ஏவும் முனைப்பினில் பலவும் கூட மிகநுட்ப மாகச் செய்தார் கணையெதிர் முனையை நோக்கிக் காற்றினைக் கிளித்துத் தாவும் வினையதைக் கருத்தில் கொண்டே வடிவமுற்றனவோ வேறோ
49C) சக்திக்கும் பருமனுக்குஞ் சேர்ந்தவாறெல்லை தாண்டி உக்கிர வேகங் கூட்டி ஒன்றரை இருகல் தூரம் புக்குமாம் புகுந்து வீழும் புலத்தினைத்துவம்சம் செய்யும் சக்தியும் கொண்டதாகும் செயற்றிறன் விவரஞ் சொல்வார் 491

ஜின்னாவூர் லுரியுத்தீன் Q107-כ சென்றது வீழ்புலத்தில் சுழன்றிடும் தொடுவாள் சுற்றித் தன்தொழில் செய்யும் ஆவி துடைத்துடல் சாய்க்கும் ஆங்கோர் மின்னிடி வீழ்ந்த தொக்கும் வாகினில் கருகும் தீயின் பின்னமும் சேரும் ஒன்றப் பிரளயம் போலு மாமே
492
கடற்படை
பீரேங்கி அறுப தேற்றும் போர்க்கப்பல் ஒன்று கூடச் சேருமாம் மூபத் தேற்றும் சமர்ப்பட கையாறாகும் ஈரிரண் டேற்றும் வாகாய் இருபதும் அவற்றோ டொன்ற
விரீயம் கொண்டதான வாரிதிப் படைகொண் டாரே
493
கடற்படை யோடு கப்பல் கேடுறின் செப்பன் செய்ய உடன்படு துறையும் செய்தார் ஒத்ததாய்ப் புதிய வீரப் படையினர் பயிற்சி கொள்ளப் பள்ளியும் அமைத்தார் திப்பு கொடுத்ததோ கோடிப் பொன்னாம் காரணம் பாது காப்பே
494
கடலோடி வந்தோர் கொண்ட கடற்படைப் பலத்தைத் தூர்க்கும் படியொன்று தாமுங் கொள்ளும் பொறுப்பினை யுணர்ந்ததாலே உடனதன் தேவைக் கேற்ப உரியன செய்தார் அன்னாள் அடுத்தொரு அரசுங் கொள்ள ஆரம்பமாகும் அஃதே
495
மக்களின் காவலன்
நாட்டுவலம் வரும்போது ஒருநாள் கண்டார்
நிறைந்தபெருஞ் சனக்கூட்டம் பிணங்க ளோடு கூட்டாக வருவதனை அதிர்ச்சி கொண்டே
காரணத்தை அறியதிப்பு முயன்ற போது கேட்டசேதி உளங்கலங்கச் செய்த தோடே
கொடுஞ்சினமுங் கொளவைத்ததாகும் “சானூர்” கூட்டிமக்க ளெடுவீடு வாச லெல்லாம்
கடலுக்கே இரையானார் என்பதாக 496

Page 66
தீரன் திப்பு சுல்தான் காவியர் O1080
கடலோரம் அணைகட்ட வேண்டு மென்று
கட்டளையு மிட்டிருந்தார் சொன்ன வாறு நடைபெறாத நிலையறிந்தே சீற்றங் கொண்டார்
நம்பியவர் துரோகமிழைத் திருந்தார் அன்றே நடைபெற்றதாகுமவர் "தர்பார்” நேர்ந்த
நிலையறியக் காரணமாம் “கமாலுத்தீனே" உடந்தை “மீர் சாதிக்கும் ஆனார் சொந்த
உறவினர்கள் உடல்கொண்ட வியாதி போன்றோர்
497 கண்டறிந்த உண்மைகளால் கொதிக்க நெஞ்சம்
கூட்டினரே அரசவையை காரணத்தார் தண்டனைக்குள் ளாகுவது தர்மம் என்றே
தப்பிளைத்த இருவருமே அழைக்கப் பெற்றார் விண்டதொரு வினாவவர்கள் செவியைத் தீய்க்க
விடைகாணும் நோக்குடனே ஈனப் பேர்கள் திண்டாடிப் போனார்கள் திப்பு மன்னர்
சினந்தாங்க மாட்டாராய் தலைகு னிந்தார்
498
கமாலுத்தீன் நடந்ததென்ன கூறும் என்றே
கேட்கவவர் கூறிடுவார் கடலலையின் சுமைதாங்கா தணைக்கட்டு குடைசாய்ந்திற்று
காரணம்வே றொன்றில்லை என்றார் கேட்டே இமையொடிக்கும் போதுள்ளே இருந்த கோபம் &LDuj6LD60T (3LDG36DITshilasas 8560draf 61855 எமையேய்க்கத் துணிந்தீரோ அணைக்கட் டொன்று
எழுந்திலையே பொய்யுரைத்தீர் எனக்க டுத்தார்
499
உண்மைவெளிப் பட்டதுமே உடல்நடுங்க
ஓடிமன்னரருகினிலே சென்று நின்று
மன்னிக்க வேண்டுமெனை சுல்தான் நானோ
மாதவறு புரிந்துவிட்டேன் இனிமேல் செய்யேன்

ஜின்னாவூர் ஷரியுத்தீன் C109) பொன்னுக்காய் ஆசையுற்றேன் பழிசுமந்தேன்
பெருந்துரோகம் உங்களுக்கும் புரிந்து விட்டேன் என்னளவில் குற்றத்தை ஏற்றேன் மீண்டும்
இறைஞ்சுகின்றேன் எனைப்பொறுக்க வேண்டும் -
என்றார்
5OO நம்பிக்கைத் துரோகமிழைத் தீர்கள் என்றன்
நற்பெயரைக் கெடுத்தீர்கள் ஏழை மக்கள் தம்முயிரைக் கடல்பறிக்கச் செய்தீர் சொன்ன
செயல்தவிர்த்தீர் ஆணைதனை உதாசீனித்தீர் உம்வழியில் நீர்புரிந்த கேட்டினுக்கோ
உரியதுவே தலையரிதல் தாமே நீங்கள் எம்மவரே இல்லையென வானிர் செய்த
இழிசெயலால் இறைபழியைக் கொண்டீரென்றார்
5O1 நீதிவிசாரணையொன்று நடத்த வேண்டும்
நடந்ததென்ன வென்றறிய எனக்"காளிகான்” ஒதிடுவாரதைக்கேட்டுத்திப்பு சுல்தான்
உடன்செய்க வெனப்பணித்தார் நடந்த தஃதே ஏதன்னார் மட்டுமல்லர் மீர்சாதிக்கும்
இடங்கொண்டார் அதிலென்றே பங்கா யேற்ற தீதுவழித் தேட்டமெல்லாந்திரும்பி யேற்கும்
சந்தர்ப்பம் கிடைத்ததந்தச் செய்கை யாலே
5O2 மக்களுக்கா யானபணம் மீர்சாதிக்பால்
மொத்தம்ஆறு இலட்சம்பொற் காசு கூடப் பக்கலுற்ற தாம்கமாலுத்தீனின் கையில்
பதினைந்தின் ஆயிரம்பொற் காசு மற்றோர் பக்கலிலும் இருந்ததொகை மீண்டதாகும்
பெரும்தொகையாம் மோசடிக்குள் ளான செல்வம் தக்கபொழு தறிந்ததனால் திறைசேரிக்குத்
திரும்பியது மீண்டுமந்த தேவை சால 5O3

Page 67
தீரன் திப்பு சுல்தான்காவியம் O110
மீண்டதொகைப் பணங்கொண்டோர் அணைக்கட் -
டைத்தன் பார்வையிலே கட்டவழி செய்க வென்று தோன்றியதோர் ஆணைமன்னர் நாவிருந்தே
தொடங்கியது பணிமுன்னர் பிழையிழைத்தோர் நீண்டகாலச் சேவையினைக் கருத்திற் கொண்டு
நம்பிக்கைப் பத்திரத்தில் சத்தியத்தைத் தாண்டோமென்றுரைசெய்தே ஒப்ப மிட்டார்
தண்டனையிலிருந்துமவர் தப்பித்தாரே
5O4
மக்கள்பால் திப்பரசர் கொண்டிருந்த
மாசற்ற அன்பிற்குச் சான்றொன்றிஃதாம் ஒக்கவிது போற்பலவும் இருந்திட்டாலும்
ஒன்றுபதச் சோறாக உரைத்தற் கொண்டேன் எக்கால மும்தம்மின் இருப்பை மக்கள்
இடங்கொண்டார் மக்களுக்காய் வாழ்ந்தார் திப்பு முக்காலத் திடையொருவர் இவரைப் போன்று
முதுபுவியில் பிறந்துறைந்த வரலாறுண்டோ
5Ꮕ5
மாதருக்கு வாழ்வளித்த மன்னர் திப்பு
மலபாரில் தாழ்ந்தகுல மாதர் தம்மின்
மார்பகங்கள் மூடுவதை உயர்குலத்தோர் பலகாலம் தடுத்துவைத்துக் கீழ்மை செய்தார்
பழக்கத்தைக் கேட்டறிந்த திப்பு மன்னர் நிலைமாற்றி உடல்மறைக்க ஆணை இட்டார்
நடைமுறையில் கண்டபெரும் மாற்றத்தாலே கொலைவெறியே கொண்டார்கள் குலத்து யர்ந்தோர்
கட்டளைக்குக் கட்டுண்டார் கடைசிப் போழ்தே
5O6

ஜின்னாவூர் லுரியுத்தீன் C11o
ஒரேபெண்ணைப் பலஅண்கள் மணந்து கொள்ளும் ஒவ்வாத வழக்கத்தைச் "குடகு" மக்கள் சரிகண்டு வாழ்ந்ததனைச் சட்டம் போட்டுத்
தடுத்திட்டார் திப்புமன்னர் பெண்களுக்குப் பொருந்தாத வாழ்க்கைமுறை அதுவென்றோதிப்
பெண்மைக்குப் பெருமைதந்தார் கோவில் சார்ந்த நரபலியும் தவிர்ந்தவர் சட்டத்தாலே
நாட்டில்மது விலக்குங்கை கூடிற் றன்றே
5O7 கோவில்களில் தேவதாசி என்னும் பேரில்
காலத்தைக் கடத்திவந்த பெண்களுக்குக் காவலரண் தந்தாரப் பழக்கம் மாதர்
கெளரவத்தைப் பாதிக்கும் செயலாம் தம்மின் ஏவல்செய் பணியோடு இன்பம் துய்க்க
ஏற்றதுவாய் ஆண்குலத்தோர் ஆக்கிக் கொண்ட பாவச்செயல் என்றறைந்தார் தடுத்தார் பெண்டிர்
பெருமைதனை மேலோங்கச் செய்திட்டாரே
5 Ο 8 திப்புவின் சிந்தனைகளும் செயற்பாடுகளும்
அரியணை ஏறி ஆட்சி அமைத்தவர் பதினாறாண்டிற் பெரும்பொழுதுதிர்ந்த தாம்தன் பகைவரை மழுங்கச் செய்ய மரணம்வந் துற்றென் மேனி மண்ணினுக் குணவாய் மாறும்
வரைவெள்ளைப் பறங்கியோரை விடேனெனவுறுதி கொண்டார்
5O9
களத்திடைக் குருதிநீரில் குளித்திட்ட போதும் தம்மின் உளத்தினிற் சுமந்த தெல்லாம் ஓங்குதன் மக்கள் வாழ்வே தொழிற்றிறன் தன்னில் வீரத் தோட்பலந் தன்னில் மக்கள் முழுத்திறன் காட்டி வெல்ல வெண்டுமென் றுறுதி கொண்டார்
51Ο

Page 68
தீரன் திப்பு சுல்தான் காவியம் O112 D
சமுதாய முன்னேற்றத்தைச் சீரிய திருத்தங் கொண்டே இமயத்துச் சிகரம் போன்றும் ஏற்றமுற் றுயர்த்த வேண்டி இமைப்பிலார் சிந்தித்தார்தான் இவ்வுல குதிக்கச் செய்த அமைப்பதன் காரணம்வே றிலையென எண்ணி னாரே
511 சுயமரியாதை யற்றோர் சுதந்திரப் பாது காப்பின் வயப்படார் என்னுகின்ற விழிப்புணர் வேற்று மக்கள் நயத்தகு வாகாய் நெஞ்சில் நாட்டுப்பற்றேற்று வாழும் சுயச்சார்பு நிலைமை தோன்றச் செய்வதில் ஆர்வங் கொண்டார்
512 உழுபவர் தமக்குப் பூமி உரித்தெனும் கொள்கை தன்னை அழுத்தமாய் முன்வைத் தஃதை அமுலிலும் காட்ட நாட்டில் விளைப்பிலா திருந்த மண்ணை விவசாயி தமக்களித்தார் பிழைப்பிலார் இலாதொழிக்கப் பயன்பெற லாகு மென்றே
513 வரிவசூல் செய்வதற்கோர் வரன்முறை வகுத்து நேர்மை வரித்திடைத் தரகர் தம்மை விட்டகன் றிடவுஞ் செய்து கருத்துடன் உழவருக்காம் கடன்தரப் பணித்தார் இன்னும் சரித்திரம் படைத்தார் திப்பு செயற்றிறங் காட்டி னாரே
514 களனிகள் விளைய நீரின் கொள்கையொன் றுதய மாக்கிக் குளம்அணை வாய்க்கால் செய்து கனிமரம் விளைபயிர்கள் அளவற விவசாயத்தின் அவசியம் உணர்ந்து தந்தார் தொழிலுயர் வடையத் தானும் திட்டமிட் டியற்றி னாரே
515 வளருறும் நாட்டின் மொத்த வளர்ச்சியில் வணிகப் பங்கோ அளவிடற் கரிதாம் அஃதின் ஆதாரச் சுருதி என்றே முழுமையாய் வணிகந் தன்னை மன்னர்கை ஏற்றார் யாரும் வெள்ளையர் பொருளைத் தாமே விலைகொளத் தடைசெய்தாரே
516 வெள்ளையர் ஆதிக் கத்தில் விளைபொருள் விற்க வாங்க உள்ளதை மாற்றித் தம்கை உரித்தென ஆட்சி கொள்ளக் கொள்ளையில் இருந்து நாடு கைகடத் திட்ட தன்னார் உள்ளிடப் பொருட்கள் கூட உறைந்தன களஞ்சியத்தே 517

ஜின்னாவூர் ஷரிபுத்தீன் C113 o
வாசனைத் திரவியத்துள் வழங்கேலம் மிளகு மற்றும் பூசுசந்தனம்மும் யானைத் தந்தங்கள் அனைத்துங் கூட்டித் தேசியக் களஞ்சியத்துள் சேர்த்தெடுத்தரேபியர்க்கும் நேசமுற்றிருந்த சீனா நாட்டிலும் விற்கலானார்
518 பட்டுநூற் செய்கை தன்னைப் பெருக்கிடப் பலவாறாகத் திட்டங்கள் தீட்டி வேண்டும் தொழில்நுட்பத் தெளிவு கொள்ள பட்டுநூ லியலில் வல்லோர் பிறநாட்டுப் பதிகொண்டோரை இட்டமுற்றழைத்தார் நாட்டின் ஏற்றத்தை மனத்திற் கொண்டே
519 தரமான இரும்பைக் காய்ச்சித் தேவைக்கென் றுகந்த தேற்க உருக்காலை நாட்டின் பல்வேறிடங்களில் உண்டு பண்ணிப் பெருக்கினார் ஆயுதங்கள் பண்ணவன் பெயர்பொறித்தே
செருக்களம் ஆண்ட தாங்கு செய்தவை தாமாம் அன்றே
52O
பிரஞ்சுநாட்டவர்களோடே பற்றுடைத்திருந்தார் சுல்தான் பிரஞ்சுசார் தொழில்நுட்பத்தைப் பயன்கொண்டு உதவி பெற்றும் உருவாக்கம் செய்தார் நாட்டோர் ஓங்குபீரங்கி மற்றும் பெருசிறு வகையிற் கைகொள் துப்பாக்கி வகைகள் தாமும்
521
கடலோடக் கப்பல் கட்டிக் கரைகடந்தயல்நா டேகி அடிதொடர் வணிகந் தன்னை அந்நியர் கரம்பறித்து விடுதலும் வேண்டு மென்ற வேணவாக் கொண்டிருந்தார் அடிதொழார் எவர்க்கும் என்றோர் அருந்திருக் கொண்ட தீரர்
522
மனிதருள் ஏற்றத் தாழ்வு மலிந்திருந்திழிந்த காலம் மனிதருள் பேதம் இல்லை மதத்தினால் உயர்வும் இல்லை மனிதரை ஒன்று சேர்த்தல் மன்னனின் கடனம் என்ற மனிதத்தை மதித்த வேந்தர் மனுக்குலத் தேந்தல் திப்பு 2
523

Page 69
தீரன் திப்பு சுல்தான் காவியம் O140
திப்புவின் கொள்கைகள்
பதினெட்டாம் நூற்றாண்டின்கண் பகலவன் தோன்றி னாற்போல் அதியுயர் பிம்பமாக அமைந்தவர் திப்பு சுல்தான் சுதந்திரப் பாரதத்தைத் தம்முடைச் செந்நீராலே புதித்திட முயன்ற தீரர் பன்முக வேட்கை கொண்டே
524 தன்னுடை மக்கள் யார்க்கும் தலைகுனிந்திடுதல் வேண்டார் அன்னவர் அறிவு மிக்க ஆளுமை கொண்ட பேராய் முன்னேற்றம் காண்ப தோடே முழுமையாய்ச் சுதந்திரத்தின் கன்னலைச் சுவைக்க வேண்டும் கொள்கையால் நிலைப்புற்றாரே
525 சுதந்திரம் வதிபுலத்தில் தரித்திடல் போல ஆட்சிச் சுதந்திரம் சமூக வாழ்வின் சுதந்திரம் பொருளாதாரச் சுதந்திரம் கலாசாரத்தின் சுதந்திரம் போன்றாம் வேண்டும் சுதந்திரம் அனைத்தும் பெற்றே சுகம்பெற அவாவுற்றாரே.
526 பட்டினி முற்றாய் நாட்டில் பலமற்றுப் பஞ்சம் நீங்கி விட்டகன் றோட வேண்டும் வறுமையும் அறியா மையும் திட்டமாய் அழிய வேண்டும் தெடர்ந்திடும் மூடக் கொள்கை கட்டோடு தூர்ந்தே மக்கள் கடைத்தேற வழிகள் கண்டார்
52ア பிறந்துயிர் வாழ்வதாயின் பயன்பெறும் காரணத்தின் புறம்பதிந்திருத்தல் வேண்டும் பெயர்நிலை பெறுதல் வேண்டும் மறைந்ததும் மன்பூ வாழ்வும் முற்றும்மண் விடுகை வேண்டி சிறந்ததோர் உவமை யாம்மணன் திப்புவின் சரிதம் மாதோ
528 "ஓராண்டு ஆட்டைப் போல உயிர்வாழ்தல் தனிலும் மேலாம் சீராகப் புலியைப் போல்நாள் சீவிதம் செய்த லென்பார்” யாரெனும் போழ்தும் அஞ்சார் இறைவனை அன்றிதிப்பு வீரியர் எண்ணம் போல வாழ்ந்துமே காட்டிச் சென்றார்
529

ஜின்னாளுர்ஷரிபுத்தீன் C1so
பாதுகாப் பெதுவுமில்லைப் பிறந்தபின் மனித வாழ்வில் ஏதுக்கள் உண்டாம் வெற்றி ஏற்றிடப் பயனுங் கொண்டால் ஒதுவார் திப்பு சுல்தான் உயர்போதம் அதுவாம் கைமேல் தீதற வெற்றி சேரும் சரித்திரம் பேசும் என்பார்
53O கனிதரு மரத்தைக் கைவாள் கொண்டரி வார்க்கு நாளை கணியிலை சுயநலத்தால் கண்டவன் கைவாள் போல்வான் தனைத்தம தரசி னோடே சேர்ப்பவன் அழிவான் என்பார் சினைபெறு கதிர்க்கண் தோன்றும் சல்லடைப் புழுப்போ லாமே
531 மக்களின் மகிழ்ச்சிக்கான முன்னேற்ற வளர்ச்சி காணத் தக்கதாம் வழிகள் கொண்ட சொர்ணப்பூ பரதம் என்பார் தக்கதாம் பணிகள் தேர்ந்து செய்தவர் மண்வளத்தை மிக்குறச் செய்தார் போகம் மும்முறை விளைந்த தஃதே
532 சொந்தமண் தன்னில் வாழ்வோர் தம்மிடை ஒன்று கூடார் வந்துவிந் நாட்டையாள விரும்பியே சுதேசிப் பேராம் இந்தியர் தமையொடுக்கி ஏகமும் கைக்கீழ் கொள்ள தந்திரம் செய்தான் ஒட்டச் சேராரே யெனவுணர்ந்தார்
533 வெள்ளையன் மேலாதிக்கம் விரிவுறுதந்திரங்கள் கொள்ளையாம் படைப்ப லம்சேர் கூடிடும் சுதேசக் கூட்டு உள்ளத்தின் சுமைகளாக உறுத்தின நிலைப்பா ரென்றே விள்ளுமஷ் வண்மை தன்னை வேரறுத் திடத்து னிந்தார்
534 எந்தவோர் மன்னன் கூட எண்ணிலாப் பீடை தன்னை சொந்தமண் இறைமை காக்கும் துணிவினைப் பெறாத காலை சந்ததம் நெஞ்சிருத்தித் துணிவுடன் செயற்பட்டார்தன் தந்தையின் வழியில் நின்றார் சுயத்தினை நிறுத்தி நின்றார்
535 எறும்புபோல் சுறுசுறுப்பு இலாததொன்றுருவாக் குஞ்சீர் திறம்படு புதுமைச் செய்கை செய்வதில் ஆர்வம் சற்றும் உறங்கலும் ஓய்வும் அற்றே உறும்திட்டம் வெலவு ழைத்தார் மறைந்தும்பின் வாழும் திப்பு முடிகொண்ட காலப் போழ்தே 536

Page 70
தீரன் திப்பு சுல்தான் காவியம் O1160
மண்ணுடை மானம் காக்கும் மாபெரும் பணியை யேற்று
தன்னுடை மக்க ளெல்லாம் தம்வழிதிரள வைத்தே அன்னியன் தன்னை யோட்டும் அறப்பணி தொடரச் செய்தார் புண்ணுண்ட உடலார் மார்பில் பெருவாகை கொண்ட ઈooj
537 நாட்டுடைப் பற்று ஒவ்வோர் நரனிலும் குருதியோடு பூண்டிட வேண்டும் கொள்கை பற்றுதல் கடனாம் என்றே வேண்டுவார் சுல்தான் தாமும் வரித்ததக் கொள்கை யொன்றே காட்டினார் செயலில் மக்கள் காவலன் பின்தொடர்ந்தார்.
538
கின்னனுர் ஆட்சியில் குறுக்கீடு
கின்னனுர் மன்னன்தன் மனையாள் செய்த
களங்கமுறு செயல்களினால் மனம்நொந் தோனாய் தன்னுயிரை இழந்திட்டான் சோகத் தாலே
தனக்குப்பின் வாரிசொன்றைத் தத்தாய்க் -
கொண்டோன் கன்னமிட்டான் குடும்பவாழ்வில் "நாமய் யா”வும் காதலனாம் அரசிக்கு மன்னன் பின்னே தன்னையவள் பாகமெனத் தனித்தான் அன்னாள்
திவான்பதவி தந்தவனைத் துணையாய்க் -
685 TeodiLT6ir
539
தனக்கிடைஞ்சல் தத்தெடுத்த பிள்ளை யென்றே
தாய்ப்பாசம் இல்லாதாள் தத்தைக் கொல்ல மணந்துணிந்தாள் அதற்கான வழியுஞ் செய்தாள்
முடிந்ததென எண்ணிமனம் மகிழ்ந்து போனாள் அனர்த்தமதைச் செயப்பணித்த பெண்கள் ஒன்றி
அவளறியா வாறுமொரு யுக்தி செய்து வினைமுடித்த பாங்குகாட்டித் தப்பச் செய்தார்
வருங்கால முடிக்குரியோன் வேற்றுார் சேர்ந்தான் 54O

ஜின்னாவூர் ஷரிபுத்தீன் C117)
சிலகாலம் ஒளிந்திருந்து திப்பு சுல்தான்
சன்னிதிக்கு வந்தேதன் நிலைமை கூற நலஞ்சேர்க்க உறுதிதந்தார் நேர்மை யற்ற
நாட்டத்தை வென்றிருந்தார் என்பதாலே உலைவைத்தார் உரிமைக்கு வஞ்சகத்தால்
ஊராளும் பொறுப்பேற்றார் கின்னூர் ராணி இலாதொழிக்க அநீதிதனை இசைவு கொண்டார்
எஞ்ஞான்றும் நீதிக்கும் இசைவா மென்றே
541
படைநடத்திவந்தாரிளம் அரசரோடே
போருக்குத் தயாரானாள் கின்னூர் ராணி அடைந்துவிட்டார் வாயில்வரை திப்பும் என்றே
அறிந்ததுமே கோட்டைதனை எரிக்க ஆணை விடுத்தாளே யானாலும் கோட்டை வாயில்
விரிந்துவழி விட்டதுவாம் எதிர்ப்பு மற்றே இடைநடுவில் தப்பிக்க வழியுண் டென்றும்
இயம்பினனே நாமையா இயலாதுற்றார்
542
பிடியுண்டாள் அவளோடு நாமய்யாவும்
பிடியுண்டான் பலர்முன்னே தலைகவிழ்ந்தே அடியுண்ட நாகத்தின் அச்சாய் நிற்க
ஆட்சிக்கென்றானவனும் அவையிருந்தான் படைகொண்டும் போரின்றி வெற்றி தன்கை
பணிந்தநிலை திப்புசுல்தான் வீற்றிருந்தார் உடன்கேட்டான் இளவரசன் இவர்கட் கென்ன
உண்டான தீர்ப்பென்றே மன்னர் சொல்வார்
543 பெற்றாலும் பெறாதுவளர்த் திட்டாலும்தாய்
பெற்றவளுக் கொப்பாவாள் இருபேரும்தாம் முற்றிலுமே யுரிமையுடைத்தவர்களாகும்
மகன்வழியில் என்பதனால் தாய்முன் செய்த

Page 71
தீரன் திப்பு சுல்தான் காவியம் O118 O
குற்றமெலாம் மன்னிப்புக் குரியதாகும்
குனம்நாடல் மக்கள்தம் கடனு மாகும் உற்றதனை மறந்திடுதல் வேண்டும் தாயை
உமதுவழி கொள்ளென்றார் அவனும் ஏற்றான்
544 தாயண்டை சென்றுநின்று தன்னை யேற்கத்
தாள்பணிந்தான் ஏற்பதுபோல் தாயும் ஏற்றாள் நேயமுற்றோ னவளோடு நிழல்போல் நின்றான்
நியாயமென்ன இவன்வழியில் என்ன திப்பு வாய்ப்புண்டாம் உன்றனுக்குத் தீர்ப்புக் கூற
வேண்டியதைச் செய்யென்றார் அவனுஞ் -
சொல்வான் போய்விடுவென் கண்முன்னே நில்லாய் என்றான்
பற்றியவன் கைப்பிடித்தார் சிறைசெய்வோரே
545 மறுநாளே முடிகட்டு விழாவைத்திப்பு
மங்களமாய்ச் செய்துவைத்தார் மைசூர் ஏக உறுதிகொண்டார் புதியமன்னன் சிலநாள் தங்கி
உபசரணை ஏற்கும்படி நயந்து கேட்கப் பொறுப்பதிகம் உள்ளதென்று மறுத்திட்டாலும்
பணிந்தவரை வேண்டிநின்றாள் ராஜ மாதா ஒருநாளென்றாகிடிலும் தரித்துச் செல்ல
உவந்திட்டாள் உள்நோக்கு வேறா மன்றோ
546 திப்புவினைக் கொன்றொழித்து வஞ்சம் தீர்க்கத்
திட்டமவள் நெஞ்சத்துள் தீயாய்ப் பற்ற ஒப்புதலை வேண்டிநின்றாள் உபசாரத்தை
உவந்ததனால் உடன்பட்டார் திப்பு சுல்தான் எப்புறமுந் தடங்கலில்லா வாறே ஓர்நல்
ஏகாந்தப் பெருமுற்றம் தன்னில் சீராய்ச் செப்பமிட்ட மாளிகையில் விருந்துக் கான
சகலவுயர்த் தேட்டமுமே சமைந்திற் றன்றோ
547

ஜின்னாவூர் லுரியுத்தீன் C119 o
மாளிகையின் இருபுறத்தும் மெழுகு வர்த்தி
மூடியகாரிருளைத்தம் ஒளியுள் வாங்கப் பாழடையா வாறுவெளிப் புலங்கள் தீயின்
பந்தங்க ளாளொளிரும் சுற்றியெங்குந் தாழிடாத சாளரங்களூடே தென்றல்
தாமாக நுழைந்துகுளிரூட்டச் செய்யும் தோழமையின் பெருமைதனை மதிக்கும் பங்கின் தோற்றமஃ தலங்காரம் சிகரம் போன்றாம்
548 தங்குவதற்கானவெல்லாந் தயாராம் என்ற
சேதிதனை மன்னனுக்கு அறிவித்தாள்தாய் சங்கைமிகத் திப்புவிடம் சென்று மைந்தன்
தாயுரையை எடுத்துரைத்தான் திப்பு தம்மின் பங்கொன்றாம் காஸிகான் தம்மினோடும்
படைமுதல்வர் சிலரோடும் மாளிகைக்குள் சிங்கநடை பயின்றிட்டார் கின்னூர் மன்னன்
சிறுபொழுது தரித்துப்பின் தனைப்பிரித்தான்
549
நாட்டுமன்னன் விடைகொண்டு சென்று நாழி நாலைந்தோ சற்றுச்சில வதிக மாமோ கேட்டதாங்கு பேரோசை நெருப்பைக் கக்கி
sóje p6o LDT6OTg55g5 LDT6s 60DE5uuTLb கோட்டைமதில் எதிரொலிக்க மக்க ளெல்லாங்
கூடினரே எவருமரு குற்றா ரில்லை வேட்டுவைத்துத் தகர்த்துள்ளார் அந்தோ!திப்பு வரலாறு முடிந்ததெனக் கலங்கினாரே
55O மற்றுமொரு மாளிகையின் நிலாமுற்றத்தில்
மகிழ்சிபொங்கக் குதுகலித்தார் இருபேர் தம்மின் வெற்றியந்த மாளிகையின் அழிவால் வந்த
வினையெண்ணிக் களித்தாளே ராஜ மாதா

Page 72
தீரன் திப்பு சுல்தான் காவியம் C12O
மற்றொருவன் நாமய்யா காதற் பாகன்
மனைகெடுத்த குற்றத்தைப் புரிந்தோன் கூண்டில் பெற்றிருந்த தண்டனையை முடிக்கு முன்னே
பாவமனை கொண்டோளால் வெளியில் வந்தோன்
551
நடந்ததனை எண்ணிமகிழ்ந் திருக்கப் பின்னால்
நடையொலியைச் செவியுணரத் திரும்பி நோக்க மடிந்தரென நினைந்தவர்கள் கண்முன் தோன்ற
மாயமிதாம் என்றெண்ணி அதிர்ந்தார் ஒன்றித் துடித்தனகை கால்களெலாம் இருபேருக்கும் செய்வதறியாதுபுலி கண்ட தேபோல் அடிசோர உடல்தளர்ந்தார் உடலம் வேர்வை ஆற்றாலே மூழ்கியதாம் அச்சத்தாலே
552
தப்பிக்க விட்டவரைத் தொலைக்கத் திட்டந் தீட்டியதைத் தாமாக யூகித் தேதாம் தப்புதற்குத் திட்டமிட்டார் திப்பு சுல்தான்
சூழ்ச்சியினைச் சூழ்ச்சியினால் வென்றார் அன்னாள் ஒப்புதலைக் கேட்டிடுங்கால் விழியில் முற்றி
ஒன்றியதாம் வஞ்சகத்தை நகையுங் காட்டச் செப்பினரே நண்பரிடம் சூது கொண்ட
செயலொன்று தொடருமென வழியுங் கண்டார்
553
காலத்தைப் பேசும் கட்டுமானப் பணி
தேசத்தின் அழகில் முற்றும் தன்முனைப் புற்ற திப்பு தேசுடைத் தாக்கச் செய்த திருப்பணி சொல்லில் மாள ஆட்சியில் இருந்த காலை அமைத்தவை சிலமட்டுந்தான் பேசுமின்றவர்தம் நாமம் பாலனப் பொறுப்பு மற்றே 554

ஜின்னாவூர் லுரியுத்தீன் C12O
தொழுகைக்கென்றான பள்ளி சுற்றிய கோட்டை நாட்டின் செழுமையைச் செப்பும் மாடத் தலங்களும் நகர்ப்புறத்தே வழிகளும் மக்கள் ஒன்றும் வலயமும் பூங்கா தோறும் அழகிய வேலைப் பாட்டின் அணியென வடிவங் காட்டும்
555 கட்டிடக் கலையில் மிக்கார் கைவண்ண ஓவியர்கள் திட்டமிட்டளித்த வற்றைத் திறம்படச் செயலிற் காட்ட மட்டிலாச் சோபை கொண்டு மிளிர்ந்தன மாளிகைகள் பொட்டணிப் பொய்யி டையார் போலவவ் வொன்றுங் காணும்
556
பீச்சிவான் புனல்தெறிக்கும் புனற்குமிழ் காவின் நாப்பண் காய்ச்சிய கரும்பொன் கொண்டு கடைந்தெடுத்தமைத்து வைத்தார் பூச்சுனை கமலப் பொய்கைப் புறத்திலும் பதித்தார் நீரைப் பாய்ச்சின சாம மெட்டும் பூவெடி வானம் போன்றே
557 வீதிகள் தோறும் கொண்ட வளைவுகள் சிற்பச் சீரை ஓதின உருவ மற்ற உறைகலை வடிவத்தாலே பாதையின் புறத்தும் காணும் பல்வகைக் கோபுரங்கள் சோதியின் வடிவாய்த் தோன்றும் செங்கதிர் மாய்ந்த காரில்
558
புள்ளினம் அவற்றுள் வண்ணப் புறாக்களும் தொகையாய் வாழக் கொள்ளிடம் கூடத் திப்பு கட்டிவைத் தழகு கண்டார் உள்ளன அவையும் தம்முள் ஒன்றிய கலைப்பெருக்கின் உள்ளமை காட்டு மாப்போல் ஒன்றல்ல ஊர்முற் றாமே
559 கூறுவர் கோயிலண்டை கலையெழில் மிளிரும் பாங்கின் வாறெனத் திப்பும் ஆங்கோர் வதிவிடம் அமைத்தார் என்று நீறெனத் தரையோ டொன்றி நீசரின் செய்கையாலே கூறுமற்றழிந்த தென்றாம் கடைமகர் கண்ணற்றோரே
56O
சிற்பிகள் ஓவியர்கள் தொழில்நுட்ப வல்லுனர்கள் கற்பொறியியலார் நீர்கொள் கலப்பணி வடிகால் ஆள்வோர் முற்றிலும் மதிக்கப் பட்டார் முன்னேற்றப் பணிக்கென்றான பொற்பவர் பொறுப்பா மென்னும் பாண்மையால் சீரங் கத்தே 561

Page 73
தீரன் திப்பு சுல்தான் காவியம் O122 O
வெள்ளையர் பதம்பதிக்கும் வரையவையனைத்தும் கண்ணைக் கொள்ளையிட்டிருந்த தென்னக் கூறுவர் ஆய்ந்தறிந்தோர் கொள்ளையர் வெள்ளைத் தோலர் காட்சிக்கா யான எல்லாம் அள்ளியே சென்றதாயும் அறைந்தனர் அவையாங் குண்டாம்
562
கோட்டை
தீவதன் மேற்கின் எல்லைத் தொலைவினில் ஒருகல் தூரத் தாவதாயமைந்த தன்னாள் திப்புவின் கருங்கற் கோட்டை ஓதிடில் அதேகல் தூரத்தானது நேரே "லாஸ்பாக்" ஈதிடைப் பட்ட தாகும் தவ்லத்பாக்" இன்னும் உண்டாம் 563
கோட்டைக்கும் “லால்பாக்” கிற்கும் கொடுமுனைப் போரின் முன்னே நீட்டிய நெடுந்து ரத்து நிலப்பரப் பனைத்தும் மக்கள் வாட்புலம் அமைந்திருந்த வரலாறும் உண்டாம் இன்று காட்டிடக் "கஞ்சம்” மட்டும் காட்சிக்கா யான தாகும்
564 திப்புவின் நினைவு கூறத் தோன்றுவதின்று கோட்டை ஒப்பிய சிலகூ றொன்றும் உள்நுழைவாயில் தாமே கப்பிய கலைக்கூ றெல்லாம் கண்காணா தழிவுற்றாலும் செப்பிடும் பழைமை காணின் கண்கசிந் துருகு மன்றோ 565
வெள்ளையர் விழிக்குத் தப்பி விட்டதென் காரணத்தோ உள்ளதா மின்றும் பொல்லார் உறைசிறைச் சாலை அங்கே வெள்ளையர் "கேனல் பெய்லி “பிரத்வைற் - "பேய்த்ஜெனாரால்"
தள்ளியே பூட்டுண் டான சேதியை நினைதற் கென்றோ
566
கட்டிய போல இன்றும் காணலாம் சிறைக்கூடத்தை உட்புறம் இருண்டதாக உருவகம் செய்தலுற்று வெட்டையாய் முன்புறத்து வளைவுகள் கொண்டுள்ளேயும் கட்டியும் வைத்துள்ளார்கள் கைதிகள் அடங்க வென்றே 56
ア

ஜின்னாவூர் ஷரிபுத்தீன் C123 o
தனித்தனி அறைகளேதும் தாங்கிலாச் சிறையினுள்ளே தனித்தனிப்பாக முண்டு தொடர்ந்தவை பலவாம் யாரும் முனைந்திடில் தப்ப வொண்ணா முற்றிலும் பாது காப்பாய்
வனைவுறச் செய்துள்ளார்கள் வலியதாய் சீரங் கத்தே 568
பூமியின் பரப்பிருந்து பலவடி உயரம் ஆங்கே பூமியை அகழ்ந்த வாறாய்ப் பெருங்குழி வடிவில் செய்து பூமியின் மேற்பரப்புப் பொருந்துமாறாகப் பின்னர் பூமியைத் தொடுவதாயும் படிகளை அமைத்துள்ளார்கள்
569 ஒருபுறம் கங்கை ஒடும் உள்ளிருந்தாழ நோக்கின் பெரும்பள்ளத் தாக்கில் நம்கண் பார்த்திட உள்ள மஞ்சும் மறுபுறம் மலையின் ஆழமடியெனத் தாழும் வீதி ஒருபுறம் மட்டும் தானே உள்வெளிவரப்போ தற்கே
57O
மஸ்ஜித் - இ - அலா
சிற்றிளம் பருவத் தோர்நாள் திப்புவைக் கண்டோர் “பக்கீர்" முற்றிலுஞ் சிறந்த வோர்நல் மன்னனாய் அரசேற் பீர்நீர் கொற்றவம் பெற்ற பின்னென் கால்பதித்துள்ளிம் மண்ணில் உற்றிடச் செய்யோர் பள்ளி ஒரிறைபணிதற் கென்றார் 571
பெரியவர் விருப்புக் கேற்பப் பதவிகொண் டாளுங் காலை உரியவாராயிரத்தேழ் நூற்றுப் பன்னி ரேழில் உருவானதாகும் "மஸ்ஜித் இ-அாை வானுயர்ந்தே
ஒருவனாம் தனியோன் தன்னை உளத்துறைத் தேற்றற் கென்றே
572
வான்தொடு வாறாய் நீண்டு வரலாறு கூறும் பாங்கில் தோன்றின “மினாறாக் கள்ளிர் துணையெனப் புறமிரண்டும் ஆன்றறிந்தமைத்திருந்தார் அத்துறைச் சான்றோ ரன்னாள்
சான்றுரை செய்யுமின்றும் சரித்திர வரலாற்றிற்கே 5ア3

Page 74
தீரன் திப்பு சுல்தான்காவியி O124O
வர்ணப்பூவண்ணம் காணும் வகைவகைத் தோற்றத் தோடே சொர்ணமுஞ் செஞ்சாந்தும்சேர் தூரிகைப் பந்தல் போலாம் நிருணயம் போலு மாப்போல் நீளகல் சுவர்களெல்லாம்
ஒருவிதமாகத் தோன்றும் உயர்கலை வடிவம் நோக்கின்
574
நிலைகத வனைத்தும் ஒன்றின் நிழலுரு வாகக் காணும் கலையழகேற்றிருக்கும் கண்ணிமை கூடா நோக்கும் வலியகான் மரங்கள் கொண்டு வடித்திருந்தார்கள் அன்னாள் பொலிவினைக் கூற யாரும் புதுமொழி பெறுதல் வேண்டும்
பள்ளியின் முகடு திராட்சைப் பழக்குலைக் கொடிக ளொன்ற உள்ளழ கூட்டும் வண்ண உருவத்தின் எழிலால் கொஞ்சும் உள்ளதோர் கதவும் இன்றும் உள்நுழைந் திடாது காத்தே பள்ளியுள் திப்பு வந்து போகவென்றமைந்ததன்றே
576
கூறுவார் தொழுகைக் கான காலம்வந் துறுங்கால் கங்கை ஆற்றிருந்தாங்குறையும் ஆழநீர்த் தாங்கியுள்ளே தோற்றுமாம் புனல்வந் துற்றோர் தூய்துறக் கழுவிக் கொள்ள மாற்றொரு சேதி கூட மொழிகுவார் மெய்ய தாமோ!
57.7
திப்புயிர் வாழு மட்டும் தித்தித்த புனலூற் றொன்று திப்புவின் மரணத்தின்பின் தன்சுவையற்றதாக ஒப்புதல் மறுத்தல் ஒவ்வோர் உளத்தின்கண் உரிமை யாகும் செப்புதல் ஒன்றே நாமுந் தெரிந்ததைத் தவிர்த்தலற்றே
578
தொழுகையின் காலப் போழ்து தேர்ந்திடக் கடிகாரங்கள் முழுமையாய் உபயோகத்தில் முறையிலாக் காலம் அந்நாள் பொழுதினைக் குறியாய்க் கொண்டு பார்த்திட வகைசெய்தார்கள் வழுவிலா தேற்ற நேரம் வழுத்திட வேண்டு தற்காய். 579

ஜின்னாவூர் ஷரியுத்தீன் C12so கும்பாளம்
சதுரமாய் ஆனதாகும் தாய்தந்தைக் காக வென்று பொதுவினில் செய்த கூடம் பிரிவின்பின் அடக்கம் செய்ய அதுதமக் காகு மென்றே அறிந்திலார் திப்பு ஈற்றில் விதித்தபோல் புலமாங்கேதான் வேந்தரும் அடங்கினாரே
58O கரியதாம் சலவைக் கற்கள் கற்தூண்களாக வோங்க உருவமுற்றிருப்ப தந்த உறைபதி உடலந் தாங்கிக் கருமரத் துண்டம் வெள்ளைக் கூறென யானைத் தந்தம் பொருந்திடக் கதவு காணும் பூவன்ன வேலைப் பாட்டில்
581 அழகிய செம்பட்டாலே அடங்கிய அடக்கத் தானம் முழுமையாய் மூடிக் காணும் மூன்றுமே வேறு வேறாய் விழிமடற் சிறைக்குள் ளொன்றாய் வாங்கிடத் தேகம் முற்றும் தொழிலறுநிலைமை கொண்டு சிலையென மாறிற் றன்றோ
582 இறைவனின் பாதை தன்னில் இன்னுயிர் நீத்தார் திப்பு மறைவழி வாழ்ந்த தீரர் மாசிலா ஆட்சியாளர் அறையொன்றுள் அடங்கிப் போன அடக்கத்தைக் காண்பினுள்ளம் சிறையிடைப் பட்ட பாங்கில் தவித்திடல் தாங்கொணாதே
583 தந்தைதாய் அருகில் மீளாத் துயிலினில் திப்பு சுல்தான் செந்தழல் வீரச் சிங்கம் துயிலுறுங் காட்சி நெஞ்சை வெந்திடச் செய்ய வீசும் வெம்மையால் கண்ணிரண்டும் உந்துநீர் சொரிய லான உணர்வினை எங்கண் சொல்வேன்
584
புலியென வாழ்ந்த சுல்தான் பதிவுண்ட "கபுருஸ்த்தானைப் புலிவரிக் கொண்ட செம்மைப் போர்வையர் மூடி யுள்ளார் உலகினில் வாழ்ந்த காலை உவந்ததல் வரிகள் இன்று இலாதுமண் மறைந்த போதும் இருப்பதாய்க் காட்டும் வாறே 585

Page 75
தீரன் திப்பு சுல்தான் காவியம் O1260
சுற்றியே திப்பு சுல்தான் சொந்தங்க ளான பேரின் வெற்றுடல் பதிய மிட்டு வைத்துளார் பெயர்களோடே சற்றருகாமை யில்லோர் தொழுகைக்காம் பள்ளியுண்டு அற்புதம் முகடனைத்தும் அழகிய வேலைப் பாடே
586 லால் மஹால்
முநீரங்கநாதர் கோயிற்றிருத்தலத் தருக மைந்த ஒருபெரும் மாளிகைதான் உன்னத அழகு காட்டி இருந்தது "லால்மஹால்"என் றேற்றநற் பெயரி னோடே பெருவிருந்தான தஃது பார்ப்பவர் கட்புலத்தே
587
கட்டிவைத் திருந்தார் ஹைதர் கலையழகோடு மென்பார் வெட்டையாம் நிலமொன்றின்முன் வீரர்தம் அணிவகுப்பின் முட்டமும் இருப்ப தாங்கே மலர்க்காடு பின்னால் காணும் திட்டமிட்டமைந்த தென்னுஞ் சான்றுக்கு நிகர்ப்பதாக
588 தனித்தவர் தங்கு மிந்தக் கோட்டையை வடிவமைத்தோர் தனித்தொரு புறத்தை விட்டுத் திரிபுறத் திருமா டிக்கும் தனித்தவப் புறத்தை மாடி தவிர்த்துமே அமைத் திருந்தார் தனித்தவப் புறமே திப்பு "தர்பார்”உம் ஆகிற்றன்றே
589
"தர்பார்"இன் இடப்பரப்பைத் திப்புதன் அமைச்சர் தம்மை உரையாடக் கொண்டார் ஆங்கே உற்றதாம் சுவர்களெல்லாம் திருமறை வசனங் கொண்டு தெய்வீக மணம்பரப்பும் அருகினில் படைஞர் பள்ளி அமைந்துமே இருந்த தென்பார்
59C) ஈரானின் நிலவி ரிப்போ டெழில்காட்டும் நிலத்தில் ஆங்கு சீராக வெண்பட் டாலே செய்ததாய்த் திரைச்சீலைகள் ஓரங்கள் தழுவு மாப்போல் உயர்ந்தசாளரங்கள் மீது பூரண மறைப்பாய்த் தொங்கும் பயன்கொள்ளு புலங்கள் முற்றும் 591

ஜின்னாவூர் லுரியுத்தீன் C127כ ஒளிசிந்தச் சரவிளக்கில் ஒன்றிய மெழுகுத் தீபம் பளபளப்பாக மின்னும் பல்வகைத் தோற்றங் காட்டும் இளக்கிய செப்பால் வன்ன எழில்கொஞ்சு வடிவத் தோடே விளைத்தன வவைக லைப்பண் விற்பனர் வேலைப் பாடாம்
592 செம்மலர்ப் படுக்கை யாங்கு சுவரெலாம் ஓவியர்தம் செம்மையைச் செப்பும் வாகாய்த் தூரிகைப் பொழிவு காட்டத் தம்மையே மறப்பர் காண்போர் தேசுகண் டயர்ந்தே போவார் அம்மlவிஃ தெனனே யார்தம் அற்புத ஆற்ற லென்பார்
593 சைப்பிரஸ் நாட்டின் ஊசிச் சரவிலை மரங்க ளெங்கும் வைப்பினால் சோலை சொர்க்க வளாகம்போல் காட்சி காட்டும் கைப்படு வாகாய் ஒட்டுக் கனிமரம் கனிகள் காய்த்துப் பிய்த்திடு மாந்தென்றுற்றோர் ஒர்ந்திடத் துலங்கு மாமே
594 பற்பல வண்ணம் போலும் பற்பல வடிவம் கொண்டோர் அற்புதம் அற்பு தந்தான் இறைகொடை எனவாய் மெல்லப் பொற்புறு மழகு காட்டிப் பூம்பொழில் மனத்தைப் பிய்த்துத்
தற்புறங் கொள்ளும் பாங்கு சொல்லுதற் கரிதா மன்றோ
595
"தாரியாதவ்லத் பாக்”
கோட்டையின் அருகில் ஹைதர் கட்டிடத் தொடக்கித் தந்தை நாட்டத்தை மகன்முடித்த நிறைவினை இன்னுஞ் சொல்பூந் தோட்டமொன்றழகு சேர்க்கும் துணையென வான சீர்மைத்
தேட்டமாம் மரத்தி லான "தாரியா தவ்லத் பாக்கே
596
மரத்தினாலான வந்த மாளிகை தரத்திலோர்ந்தால் மரத்தொழில் நுட்பந் தன்னின் முதன்மையை எடுத்துக் கூறும் சரித்திரம் படைத்த வீரன் சரித்திர அடையாளத்தின் உரித்ததாம் பாலனத்தின் உதவியற்றழியு தின்றே 597

Page 76
தீரன் திப்பு சுல்தான் காவியம் O128)
வண்ணத்தா லோவியங்கள் வரைந்துளார் யுத்தக் காட்சித் தொன்மையை எடுத்துக் காட்டும் தந்தையும் மகனும் போரின் திண்மையிற்றிழைத்தல் பூக்கள் செறிந்ததாய்க் காட்டுங் கோலம் உண்மையோ விவையுமென்றே உணர்வறச் செய்தல் போலாம்
598
பதினொரு வருடங் கொண்டு பணித்ததாம் மனையை என்பர் அதிதிகள் சந்திப் பாங்கே அமைவுறும் பிரத்தியேகப் பதியது திப்பு சுல்தான் பேரிலோர் நினைவுக் கூடம் அதனிடை அமைத்தேயுள்ளார் ஆர்வலர் நோக்கற்பாலே
599
பதினெட்டாம் நூற்றாண் டீற்றிற் பற்றிய எழுபத் தெட்டில் அதனுரு வாக்கல் தொட்டும் அமைந்தது ஹைதர் திப்பு புதுமையாய் அமைத்தா ரஃதைப் பொற்புறத் தமது நோக்கில் சிதைவுறு நிலையிலின்று தோன்றுதல் சகிக்கா துள்ளம்
6 OO
லால் பாக் மாளிகை
திப்புவின் மாளிகைக்குள் தனித்துவங் கொண்ட திஃதாம் ஒப்பிலா வழகினோடே எடுப்பான தோற்ற மென்பர் செப்புவர் களிமண் கொண்டே தனித்துவே றொன்று மற்று திப்புநம் கீழைத் தேயத் திறன்காட்டச் செய்ததாகும்
6O1
மாடிகள் இரண்டு கொண்ட மாளிகை மேற்ற ளத்தில் கூடிய பிரிவினோடு கொண்டது முற்ற மொன்றும் பேடியர் வெள்ளைப் பேய்கள் பயனுறா தொழிக்க வென்றே நாடினர் முற்றா யஃதை நாசமுஞ் செய்திட்டாரே
6 Ο2

ஜின்னாவூர் லுரிபுத்தீன் C129 o
பங்களுர் திப்புசுல்தான் கோடை மாளிகை
மரத்தினாலான தோர்நல் மாளிகை "டெய்ரா தவ்ாை" தரத்தொரு மித்த சோபை சொல்லிடும் வாயில் ஐந்தாம் வர்ணத்தால் மிளிரும் எம்மை வரவேற்ற லொக்க திப்பு சொர்க்கத்தின் நுழைவாய் என்று திருப்பெயர் வைத்திருந்தார்
6O3 இரண்டடுக் காகும் மேலே இருந்துகீழ் நோக்கு வாறு மரத்தினாலான மாடி முன்தடுப் புடனே தச்சர் கரத்திறன் உறுத்தல் போலாம் கண்கவர் வேலைப் பாடு பொருத்தமாய் மாளிகையின் பெட்பினை மிளிரச் செய்யும்
6O4 இருபுறத் தருகும் மாடி ஏறிடப் படிகள் காணும் மரத்தினால் தாமு மஃதே மலேசியத் தேக்கிலாகும் கருத்தினைக் கவரும் கோலம் கடைச்சல்வே லைமரத்தில் பெருக்கியேயிருந்தார் சிற்பி பொளிந்தநற் சிலைகள் போலாம்
6Ꮕ5 தூண்களும் மரமே ஒவ்வோர் தனிமர்ந்தனைக்க டைந்து காண்பதற் கழகாய் தூணின் கழுத்திடை குறுக்கிச் சுற்றிப் பூண்கள்போல் செதுக்கி ஏற்ற பாங்கினில் வண்ணம் பூசி நீண்டுயர்ந்திருக்க நட்டு நிலைபெறச் செய்திருந்தார்
6O6 ஒன்றினைப் போலாம் ஒன்றென்னுருவினில் வடிவங் காட்டி ஒன்றினை ஒன்று தொட்டே உடன்படு வாறு கூட்டி பொன்றாத அழகு வேலைப் பாட்டுடன் தூண்கள் காணும் இன்றிது போலா மென்றால் என்னிலை யன்ற தாமோ
6O7 கல்லினால் சுவர்கள் பூமி கருங்கல்லின் துண்டக் கூட்டு வல்லமை கொண்டதாக விளங்கிடச் சேர்த்திருந்தார் பல்வகைச் சித்திரங்கள் பூக்களின் அழகு காட்டும் கல்லிலும் மரமே விஞ்சும் கோடைவாசலத்தின் கண்ணே 6Օ8

Page 77
தீரன் திப்பு சுல்தான் காவியம் C130
கிருஷ்ணகிரி கோட்டை
செங்குத்தாய் நிமிர்ந்து நிற்கும் தோரணை கொண்டதாகும் முக்கியம் வாய்ந்த தொன்றாய் மதித்தவர் திப்பு அன்னாள் தக்கதாய் "பலக்குல் அஸ்ஆம்” “தொலையுயர் வானம்" என்றே மக்களும் அறிவர் இந்த மகோன்னதப் படைப்பை அன்றே
6O9 அடக்கமுற்றுள்ள தீங்கீர் அரசிளங் குமாரர் வீரச் சடலங்கள் திப்பு மக்கள் சையத்சுஷா பஹாஉத்தீன் உம் அடுத்தவர் 'சஹாபுத் தீனும் அமர்க்களச் சிறுத்தையர்கள் உடன்சிர சற்ற தேகம் உள்ளதாய்ப் புகலுவாரே
61O பூமிக்கு அடியிலுள்ள பாதாளக் கூடந் தன்னில் கோமானுக்குரித்தாம் மன்றம் கோல்நீதி ஒச்சுந்தர்பார்” பூமிக்கு மேலே நான்கு புனற்பொய்கை உண்டதாகும் ஆமிவற்றோடு இன்னும் அழகுறு பலவும் உண்டாம்
611 கோட்டையின் உச்சி மீது கால்பதித் துற்ற சுற்றம் நோட்டமிட் டிடுங்கால் பார்க்க நேருமாம் நகரை முற்றாய் காட்சிகொள்ளழகாம் கிருகூழ்ண கிரியுடன் மலையின் சாரல் மாட்சிமை பெரிதே கண்ணுள் மலர்ந்திடும் சுகமோர் பேறே
612 வான்தொடு மலைகள் மீது வளர்ந்துள பசுமைக் கானம் தேன்நுகர் வண்டு மொய்க்கும் தூமலர்ப் பொழில்கள் ஆங்கக் கானுறை யுயிர்கள் உண்ணுங் கனிமுதற் பலவும் நீரும் வானவனருளால் காணும் வளத்தினை நோக்கற் பாலே
613 தாக்கியே அழிக்க வொண்ணாத்திடமிகு கோட்டை தன்னில் நோக்கிடு மிடங்க ளெல்லாம் நிலைத்தன ஓவியங்கள் தூக்கிடு மழகு கையால் செதுக்கிய உருவத் தோற்றம் சீக்கிலா அளவு ஒவ்வோர் சிற்பத்தின் சீர்மை காட்டும்
614

ஜின்னாவூர் லுரியுத்தீன் C1310 கரிஎலி மீன்களாமை குரங்குபோற் பலவும் தெய்வ உருவங்கள் உருவைப் போற்றும் உடனொன்றி வாழ்வோர் செய்கை உருவத்தை வணங்காத்திப்பு உவந்திலை அழித்தொழிக்க தருமமஃதில்லை மாற்றார் தெய்வத்தைப் பழித்த லென்றே
615 அணைக்கென நாட்டிய அழக்கல்
விவசாயம் பெருக வேண்டின் வயல்நிலம் புனலை வேண்டும் அவசியம் உணர்ந்தார் திப்பு அதற்கொரு முடிவுங் கண்டார் புவிவளம் அறிந்ததாலே பொருந்திடும் வகைகள் ஓர்ந்து நவதொழில்நுட்பம் சேர நாடினார் அணையொன்றாக்க
66
கட்டிட வேண்டும் நீண்ட காவிரிநதிமேல் முற்றுங் கெட்டியாய் அணையொன் றென்ற குறிக்கோளும் மனதில் உந்தத் திட்டமொன்றுருவாகிற்று தண்புனல் தடுத்துக் கால்வாய் விட்டிட நீரை நெல்கொள் வயல்நிலம் செழிக்க வென்றே
617 தொண்ணுற்றியோராம் ஆண்டு சேர்பதினெட்டாம் நூறில் அணைக்கான அடிக்கல் நட்டு ஆரம்பம்செய்திட்டாலும் சுணங்கிற்று வேலை யுத்தந் தொடர்ந்ததால் பின்னர் கூட இணங்கிட வில்லைக் காலம் இயற்றிடாக் கனவா கிற்றே
நாட்டிய சாசனக்கல் நிலைபெற்றே யுள்ள தின்றும் கூட்டியே பதித்துள்ளார்கள் “கிருக்ஷண ராஜ சாகர்” மேட்டணைச் சுவரின் மீது மன்னரின் எண்ணம் பின்னாள் நாட்டமுற் றதுவாம் வெள்ளை நாட்டவர் பொருட்டி னாலே
619 பிரயான வசதிக் காகப் பாதைகள் நாடு முற்றும் உரியவாறமைத்தார் நாட்டின் உற்பத்திப் பெருக்கம் வேண்டிக் உருக்காலை கரும்பு ஆலை உடைக்கான நெசவுச் சாலை பெருக்கினார் கால்நடைகள் பெருகவும் வழிசமைத்தார்.
62O

Page 78
தீரன் திப்பு சுல்தான் காவியம் C132)
திப்புவின் சிம்மாசனம்
எண்கோண வடிவத்தில் தங்கத்தாலே
ஆனதுசிம் மாசனமும் அழகைக் கூட்ட எண்ணரிய மணிகள்கொண்டிருந்த தஃது
இருப்பினெலாப் பகுதியிலும் புலிச்சிலைகள் உண்மையுரு வாகவதில் வைரம் “ரூபீ”
உடன்பச்சை மரகதங்கள் புலிப்பா தங்கள் கண்கவரச் செய்திருந்தார் கைதேர்ந்தோர்கள்
கடைசிவரை அதில்திப்பு அமர்ந்தாரில்லை
62 சிவந்தமணிக் கண்களோடு சினத்தைக் கக்கும்
தோரணையில் புலிகள்எண் புறமும் தோன்ற பவித்திரமாய் மகுடம்போல் நாப்பண் தோன்றும்
பறவையொன்று புடமிட்ட தனிச்சொர் ணத்தில் நவின்றிடிலோ முற்றுமது மாணிக் கங்கள்
நிறைந்தவொரு பொற்குவைபோல் அழகு காட்டும் கவர்ந்துசென்றார் கொள்ளையிட்ட கள்வர் கூட்டம்
கூறவொண்ணாப் பெறுமானங் கொண்ட தாமே
622 அழகான வடிவத்தில் அமைந்த தஃது
அரசர்தம் ஆணைப்படி அனைத்தும் கூடும் பழைமைக்கும் புதுமைக்கும் பொருந்தும் பாங்கில்
பெரிதான அமைப்பினிலே கலைநுட்பத்தின் முழுமையுங்கொண் டமைக்கவைத்தார் மன்னர் தம்மின்
மதிநுட்பந்தனையுமது கூறும் பாங்கில் எழிலுக்கெழில் சேர்க்கின்ற கொலுவிருக்கை
இன்றில்லைக் காண்பதர்க்கு ஈன ராலே
623 பஞ்சணையி னோடுசுற்றிப் பட்டா லான
படாங்களிலே புலியுருவம் பதிந்த தோடு குஞ்சங்கள் சுற்றிவரத் தொங்கும் கண்கள்
குளிர்வண்ண நூலிளையின் கற்றை யாலே

ஜின்னாவூர் லுரியுத்தீன் C133 o
எஞ்சியுள்ள இடமெல்லாம் புலியின் தேகத்
திடைப்பட்ட வரிகளச்சமூட்டும் வாகாம் அஞ்சாத நெஞ்சுடையார் திப்பு சுல்தான்
அமராத இருக்கையது அவர்பேர் சொல்லும்
624 வெள்ளையரை வெளியேற்றும் நாள்வரைக்கும்
வீற்றிருக்க மாட்டேனம் மஞ்சம் என்றே உள்ளத்தால் உறுதிகொண்டே இருந்தார் திப்பு
ஒன்றவில்லை வாய்ப்பதற்கு மாண்ட அன்றே கொள்ளையர்கள் துண்டுதுண்டாய் உடைத்தெடுத்துக்
கொண்டுசென்றார் தமதகத்திக்கின்று மஃது உள்ளதுபல் கூறுகளாய் ஐரோப் பாவில்
உரிமைகொண்போர் பற்பலராய் வரலாறாகும்
625 திப்புவின் புலி
வெள்ளையரின் மீதுகொண்ட வெறுப்பைக் காட்டும்
வாகிலொரு பொறிதன்னைத்திப்பு சுல்தான் கொள்ளைமதிநுட்பமொடு செய்திருந்தார்
கொலைவெறிகொள் புலியொன்று குரலெழுப்பி வெள்ளையன்மேல் பாய்வதுபோல் அவனோ அன்னான் விதிமுடிந்து போகவுள்ள நிலைமை யாலே முள்ளிலகப் பட்டவொரு பன்றி போல்கை
மேலுயர்த்தி கத்துவதைக் காட்டும் பாங்கே
626 ஒரேமுறையில் ஈருயிர்கள் ஒலியெழுப்பும்
உத்தியது வெறிகொண்ட புலியின் பொல்லா உறுமலொடு மூச்சடங்கும் வெள்ளை யன்தம் உதவியற்ற நிர்க்கதியின் இயலா ஒலம் பொருந்துவபோல் இசைக்கருவி தன்னில் தோன்றப்
படைத்திருந்தார் புலியுடலில் பொருத்தி வைத்தார் விருந்தாகும் இன்றுமது காண்போ ருக்கே
வரலாறு பேசுமொரு சின்ன மாக 627

Page 79
தீரன் திப்பு சுல்தான் காவியம் O134D
வெறுப்பையுமிழ் கின்றபடி அமைந்திட்டாலும்
வெள்ளையரும் வியக்கின்ற வடிவமைப்பை முறையான பொறிநுட்பந் தன்னைத் தாங்கி
மன்னர்திப்பின் எண்ணத்தின் பிம்ப மாக உருவாக்கி இருந்தார்கள் பிரெஞ்சுக் காரர்
உயிர்கொண்ட ஈருடல்கள் ஒன்றி லொன்று இருப்பதுபோல் ஆனதது எதிர்காலத்தும்
எடுத்துரைக்கும் திப்புவின்மெய் ஞானந் தன்னை
628
திப்புவின் உடைவாள்
நீளத்தில் நாற்பத்தீர் அங்கு லங்கள்
நீண்டதொடு கைப்பிடியில் சொர்ணஞ் சுற்றி ஆழப்பதித்திருந்ததாகும் கற்கள்
அழகியதாம் மரகதங்கள் பச்சை வண்ணம் கழவதில் வைரமொடு சிவப்பு "ரூபி
சேர்த்துமெருகூட்டினவாம் “இறைவன் ஆட்சி நீளலகில் பதித்தவிரு சொற்கள் வாளில்
நிமலனருள் வேண்டியதாய்நிகரில் அஃதே
629
அடலார்தம் சிரசரிந்து வாகை கொண்டு
ஆட்சிதனை நிலைநிறுத்தத் துணையளித்தே உடலோடு பிணைந்திருந்த உடைவாள் ஈற்றில்
உயிர்போகுந் தறுவாயில் பற்ற வந்த கொடியவெள்ளையரக்கனையும் இருகூறாகக்
கூறிட்டே இன்றுமவர் வீரம் செப்பும் உடலழிந்து போனாலும் திப்பு மன்னர்
ஊனமில்லா வாழ்வுதனை உரைக்கும் சான்றே
63O

ஜின்னாவூர் லுரியுத்தீன் C135o
புவியுருவ இலச்சினை
புலியுருவ இலச்சினையை அனைத்தின் மீதும்
பதியவைத்தார் திப்புசுல்தான் வாளின் பட்டம் தொலைவிருந்து சுடுந்துவக்கு பீரேங்கிக்கள்
சிப்பாய்கள் அணிகின்ற அங்கி மற்றும் விலைகொள்ள இயலாச்"சிம்மாசனத்தும்
வரிக்குந்தன் போரங்கி முகமூடிக்கள் தலைக்கணியும் சிரக்கவசம் பதாகை யெல்லாம்
சேர்ந்திருந்ததாகுமது மன்னர் ஆணை
631
புலிகளினை வளர்த்துவந்தார் திப்பு சுல்தான்
புஜபலத்தின் அடயாளம் பிள்ளைகள்போல் வலம்வருவா ரவையோடு "கஜானா”வுக்கும்
வைத்ததவர் காவலுக்காய் அவற்றை யென்பார் உலகைவிட்டு மறைந்தவுடன் பறங்கிக் கூட்டம்
உட்புகுந்தார் கொள்ளையிடக் காவல் செய்யும் புலிகளினைக் கொன்றொழித்த பின்னே யாங்கு
பாதுகாத்து வைத்ததிரு பறிபோயிற்றே
632
பிற நாட்டுத் தொடர்புகள்
பாரதத்தின் ஆட்சியாளர் தம்மைக் கூட்டிப்
பொதுவான அமைப்பொன்றைத் தோற்று விக்க ஆரம்ப முதற்கொண்டே முயன்றார் திப்பு
ஆங்கிலேயர் தமையோட்ட மராட்டியர்கள் ஒரமுற்றார் அவரோடே நிசாமும் ஒன்ற
ஒன்றுபட முடியாத நிலைமை தோன்றும் வேறுவழியிலாதேபிற நாட்டினோரின்
வழியுதவி கொள்ளவவர் விருப்புக் கொண்டா,

Page 80
தீரன் திப்பு சுல்தான்காவியம் O1360
சொந்தமண்ணில் ஆள்பவர்கள் வெள்ளைப் பேரைத்
துரத்துதற்குத் துணைநில்லா நிலையில் வேற்றார் பந்தத்தை நாடலன்றி வேறில் லாது
போனதன்று திப்புவிற்கு முயல லானார் இந்தியாவில் அன்றிருந்த பிரஞ்சுக் காரர்
எல்லைஆப்கான் தூரத்துத் துருக்கிநாட்டார் வந்துதவ வேண்டுமென விரும்பித் தூது
விட்டனரே திப்புவதன் விபரஞ் சொல்வாம்
634 காரணங்கள் மூன்றுண்டாம் உதவி வேண்டக்
கொள்ளையராம் வெள்ளையரைத் துரத்தலொன்று சீரான வியாபாரத் தொடர்பு கொண்டு
தாய்நாட்டின் பொருட்பெருக்கை கூட்ட லொன்றாம் காரணத்தில் மற்றொன்றாய் இஸ்லாம் போற்றும்
கூட்டமைப்பைத் தோற்றுவித்த லாகும் திப்பு வேரறுந்தார் மூன்றினிலும் என்ற போழ்தும்
வரலாற்றின் பெருமைகொண்டார் தீரத்தாலே
635 பிரான்ஸ்சிடன் தொடர்பு
உள்ளபடி சிறிதளவில் உதவி செய்தார்
உண்டான போரிரண்டில் பிரஞ்சுக் காரர் வெள்ளையரை நாட்டிருந்து விரட்ட வேண்டின்
வகைசெய்யும் அவர்பலமும் என்பதாலே தள்ளவில்லை திப்புத்தம் தோழமையைத்
தொடர்ந்திருக்கப் பலவகையில் உதவி கூட்டிக் கொள்வதிலுங் கருத்தானார் இருந்துங் கூடக்
காட்டவில்லை உறவவர்கள் நம்பும் வாறே
636 தம்படையில் கெளரவத்துப் பங்குதாரர்
தாமாக அன்னவரைத் திப்பு சுல்தான் செம்மையுறப் பதவிகளும் தந்து வந்து
சேர்த்திருந்தார் நாடிரண்டுக் கிடையிலான

ஜின்னவூர் ஷரியுத்தீன் C137כ
நம்பிக்கை வளம்பெறவே தூதுவர்கள்
நலஞ்சேர்த்தார் இருபுறத்தும் இருந்து மன்னார் தம்மளவில் வெள்ளையரைத் தோழ மைக்குத்
தேர்ந்தனரே திப்பறியா வாகினோடே
637
மராட்டியரோ டானயுத்தம் வெடித்த போது
மன்னர்திப்பு வேண்டுதலுக் கமையப் பிரஞ்சார் ஒருபுறமுஞ் சாராது தமைத்தனித்தார்
ஓராயிரத்தெழுபத் தெண்பத்தாறில் விரும்பவில்லை ஈராண்டு கழித்து நட்பை
விரும்பிசுல்தான் வேண்டிடினும் அவர்தம் பேரில் விரும்பினரே உதவிசெயப் பின்னோர் போழ்து
விரும்பிடலாம் தமக்குதவ என்பதாலே
638
ஆயிரத்துத் தொளாயிரத்துத் தொண்ணுற் றீரில்
ஆனமைகர்ப் போரினிலே உதவாதுற்றார் நேயவுடன் படிக்கைக்கும் ஏற்ற வாறு
நடவாது மேலாண்மை கொண்டதாலே தேய்ந்ததவ ருறவுவெள்ளைப் பேர்களோடே
துயர்கொண்டார் பிரெஞ்சாரும் பின்னாள் திப்பு நேயக்கை நீட்டிடவே பற்றினார்கள்
நம்பிக்கைக் கானவுடன் படிக்கை கண்டே
639
ஆறுநூறு ஐரோப்பர் கூடப் பிரஞ்சார்
ஆயிரத்தோ டெண்ணுாறு வாகக் கூடும் வாறுதிப்பு தம்படையில் வளமளிக்க
விரும்பியதும் உடனேற்றார் வெள்ளை யோரைக் கூறிடவே சினங்கொண்டு வெகுண்ட போது
கூட்டுதவி எதிர்பார்த்தார் திப்பு வின்பால் நீறுபூத்த நெருப்பெரிந்து போன தொப்ப
நாடுபுக்கினோரிடையில் போர்பற்றிற்றே 64O

Page 81
தீரன் திப்பு சுல்தான் காவியம் O138)
பிரெஞ்சாரின் கவர்னராணை பாண்டிச் சேரிப்
புலத்திருந்து பிறந்ததது திப்பு வோடே ஒருமித்து வெள்ளையரை எதிர்த்து வென்றும்
உடனவர்கள் இழந்தவற்றை மீட்டெடுக்கக் கருத்துடன்பாடடைகவென ஆனால் திப்பு
கருத்திலதை ஏற்கவில்லை வெள்ளைக் காரர்
பொருத்தமவர்க் கன்றிருந்ததுடன்பாட்டாலே
பிறழ்தல்செய்தால்தர்மம் பிழைக்கு மென்றே
641 யுத்தத்திலுடன்படாத போதும் "பாரிஸ்"
உடன்பட்டால் நிபந்தனைக்காம் உடன்பா டொன்று வித்தாகும் வழியுண்டாம் என்றார் திப்பு
வழிகண்ட அனுபவத்தால் ஏற்ற வாறு பத்தாயிரம்படைஞர் ஆயுதங்கள்
பிரஞ்சுவழி வரவேண்டும் தமதாம் ஆணை ஒத்தவர்கள் பற்றிடவும் வேண்டும் என்றார்
உடன்பாடு தோன்றவென்னும் நோக்கினோடே
642 யுத்தவழிமுறைவேறாம் ஐரோப்பாவில்
இந்தியாவின் முறைகளுடன் ஒப்பு நோக்கில் ஒத்துவராதவர்முறைகள் இங்காம் என்றே
ஒர்ந்ததனால் பிரஞ்சுடையார் தளகர்த் தர்தம் வித்தகத்தில் பொருந்திடினும் அவர்கள் தம்மை
வழிபற்றிச் செல்லுவதில் உடன்பாடற்றே எத்திவைத்தார் நிபந்தனையைத் தம்பால் முற்றும்
ஏவுமதிகாரங்கள் வேண்டு மென்றே
643 வெற்றிபெறின் யுத்தத்தில் ஆங்கிலேயர்
வசமுள்ள பகுதிகளை மீட்டெடுத்துச் சுற்றியுள்ள கரையோர மனைத்தும் பிரஞ்சுச்
சகாவினர்க்கும் மத்தியுள்ள பிரதேசங்கள்

ஜின்னாளுர் லுரியுத்தீன் O139 o
முற்றுந்தம் வசமென்றும் முன்மொழிந்தார்
மனமொப்ப வில்லையவர் நிபந்தனைக்கே அற்றிருந்தார் திருப்தியவர் மராட்டியர்கள்
ஆங்கிலேயரோடுகொண்ட யுத்தத்தாலே
644
இந்தியாவில் உடன்பாடு காணாப் போழ்தில்
இராணுவநல் லுடன்பாடு கொள்ளும் நோக்கில் சந்தித்தே உரையாடக் குழுவொன்றன்னார் தூதோடு பிரஞ்சுநாடு சென்ற தாங்கே சொந்தத்துள் பகைதோன்றி ஆட்சிப் போரில்
சிக்கியிருந்தார்கள்தன் பொருட்டால் "லூயி வந்தவரை உச்சத்தில் மதித்தாலுந்தன்
வகையற்ற நிலையுணர்த்தியனுப்பி வைத்தார்
645
பிரான்சுடனாம் நட்பிருந்த போதும் அன்று
பாண்டிச்சேரிப்புலத்தில் வாழ்ந்திருந்த புரட்சியாளர் தமைபிரான்சு விரட்டுங் காலை
பாதுகாப்புத் தந்துதவி செய்தார் திப்பு அரசருக்கு எதிரான புரட்சியஃது
அதற்குடமை யானவர்கள் “ஜாகோ பீன்கள்” புரட்சிவென்ற பின்னாலும் அன்னார் தம்மைப்
புறந்தள்ளவில்லையவர் பலம்போ லானார்
646 வெற்றியினைக் கொண்டாடும் நோக்காய் ஆட்சி வரலாற்றின் மாற்றத்தை எடுத்துக் காட்ட கொற்றவரின் முடியாட்சிச் சின்ன மெல்லாம்
கொழுந்துவிட்டே எரிகின்ற தீயிலிட்டுக் கருக்கினரே “ஜாகோபீன் புரட்சி யாளர்
கலந்துகொண்டார் திப்புமந்தக் கொண்டாட்டத்தில் பொருந்தியவர் கொடுத்தார்கள் "குடிமான் திப்பு"
பட்டமொன்றும் பிரியமுடன் எற்றார் மன்னர் 647

Page 82
தீரன் திப்பு சுல்தான்காவியம் O140
ஈரானுடனான தொடர்பு
ஆயிரத்து எழுநூற்றுத் தொண்ணுாற் றேழல்
ஆனதொரு தொடர்பு”ஈரான்"நாட்டினோடே போயிருந்தார் அந்நாட்டு ஷாவின் மைந்தர்
பொருந்தாத மனங்கொண்டார் தந்தை மீதே தாயன்ன பற்றுடனே திப்பு சுல்தான்
தம்பதிக்கு வந்தவரை கெளரவித்து ஓய்வுகொள்ளத் தனியில்லம் ஒதுக்கித் தந்தார்
உள்ளவரை தினமவரைக் கண்டும் வந்தார்
648 விடைகொண்டு தாயகத்தை நாடும் நாளில்
வாழ்த்திவிடையளித்ததொடு தழுவிச் சொல்வார் "திடமாக நானுங்கள் தேசந்தன்னைத்
தரிசிப்பேன் வருநாளில் “ஸம்சன் ஷாவின் உடன்பாட்டில் நாடிரண்டுக் கிடையிலோர்நல்
உறுதிமிகு ஒப்பந்தம் செய்வோம்” என்றார் உடனதற்கு மன்னர்மகன் ஒப்பித் தம்மால்
உதவிடவும் முடியுமென வாக்கு ரைத்தார்.
649 பலமான படையலங்கள் இல்லா ரென்று
புரிந்துமவர் செலவிளைந்த காரணம்முன் நிலவழியில் ஐரோப்பா நாடு சென்று
நடந்தவொரு வாணிபத்தின் தொண்மை மீண்டும் நிலைநிறுத்த ஈரானின் நிலப்பரப்பு
நன்குபயன் பெறுமென்ற காரணத்தால் நலமாகும் நாட்டிடையில் வியாபாரத்தை
நிறுத்திடவும் காரணமாம் வேறொன்றில்லை
65O நாடிரண்டுக் கிடையினிலும் நிலையாய் மையம்
நிலைகொண்டால் வெற்றியுண்டு வாணிபத்தில் தேடிடலாம் பெருலாபம் இருநாட்டாரும்
சம்மதித்தால் எனக்கூறி ஒலை யொன்றின்

ஜின்னாவூர் லுரியுத்தீன் C1410
கூடவொரு தூதுவரை "நூறுல் லாஹற்”வைக்
கைப்படுத்தி அனுப்பிவைத்தார் திப்பு சுல்தான் நாடியது வேறொன்றும் உண்டாம் ஆட்சி
நலம்சேர்க்கும் கூட்டொன்றை அமைப்பதஃதே
65 பிரித்தாளும் கொள்கைகொண்ட ஆங்கிலேயர் பங்கமுறச் செய்தார்கள் திட்டந்தன்னை உருவாக்கி விட்டனரே ஈரான் நாட்டில்
உள்ளவிரு இனத்திடையே கலவரத்தை மருவாரின் செய்கையினால் சீயா சுன்னி
மதக்கொள்கை பிரிவினையால் குழப்பம் தோன்றக் கருவினிலே கருகியது திப்பின் திட்டம்
கைகடத்துப் போனதொரு கவல்நிகழ்வே
652 உலகளவில் அரசவழித் தொடர்பு கொள்ள
அவாவுற்றார் சுல்தான்அந்நாட்டங் கூடப் பலங்கொண்ட பிரித்தான்ய மேலாதிக்கம்
பலங்கான விடவில்லை அத்தோ டன்னாள் வலுவான புரட்சியொன்று பிரான்சு நாட்டில்
வலுப்பெறவுமானதொரு வலுவிழப்பே சொலமாட்டாக் காரணங்கள் பிறவுமுண்டாம்
திப்புசுல்தான் சென்றவழித் தடைகளாக
653 முன்னேற்றத் தடைகளொடு “ஆப்கானிஸ்த்தான்”
முதலான "துருக்கி” “பிரான்ஸ்" நாட்டினோர்கள் முன்வைத்த உதவிகளும் இலாது போக
முடக்கமுற்றதாகிற்றே முயற்சியாவும் கண்விழித்துக் காத்திருந்த பறங்கியர்கள்
காலத்தின் பயன்கொண்டார் அந்தப் போழ்தில் முன்னேற்றம் கண்டார்கள் இந்தியாவுள்
மூடாத வழிநுழையும் மந்தைக் கொப்ப
654

Page 83
தீரன் திப்பு சுல்தான் காவியம் O142)
திரைமறைவில் துரோகத் தீ
ஆட்சியை யேற்ற காலம் அரியணை யாசை கொண்டோர் வீழ்ச்சியுற்றான செய்தி வேறுண்டு ஹைதர் கண்ணின் காட்சியா யோர்கால் நின்ற சிறுவனாம் ஆயாஸ் என்போன் ஆட்சிக்கே ஆசை கொண்டான் அறிவிலி நன்றி கொன்றோன்
655 மலபார்மண் புறத்தே யோர்கால் மன்னர்தன் விருப்பின் பேரில் சிலநாட்கள் தரித்திருந்தார் தெருவழி செல்லும் போது குலத்தினில் நாயரான குமாரனைக் கண்டார் அன்னான் நலத்தினை எண்ணித் தன்பால் தத்தெடுத் தழைத்துச் சென்றார்
656 சன்மார்க்கம் தன்னில் சேர்த்துச் சிறப்புற “ஆயாஸ்" என்றே நன்னாமஞ் சூட்டி அன்பால் நனையுறச் சீர்மை காட்டித் தன்வழிப் பிள்ளை போல திப்புவின் தம்பி போல முன்னிலைப் படுத்திக் கல்வி முறைப்பட அனைத்தும் தந்தார்
657
பின்னவன் றனக்குக் கோட்டைப் பதியெனப் பதவிதந்தார் அன்னவன் அனைத்துங் கொண்டும் அடாதது செய்தான் அந்நாள் வன்மனங்கொண்டே நாட்டை வழிகெடுத் தலைந்தோ ரோடு தன்னையும் சேர்த்துச் சூழ்ச்சி தனக்குமோர் காவ லானான்
658 “சித்தல்துர்க்” கோட்டைக் கன்னான் தலைமையை முதன்மை யாக்கிச் சத்தியங் காப்பா னென்னும் தலைமகன் கனவு பொய்க்கப் பித்தனாய்ப் பதவி மீது பற்றுற்றே எதிரிப் பேரின் உத்தம நண்பனானான் ஊர்ப்பழிசுமந்திட்டானே
659 உள்ளிருந் துயிர்பறிக்கும் ஊனநோய் போலு மன்னான் உள்ளிருந் துலைவைத்தாட்சி ஒன்றிடத் தண்பா லென்றே கள்ளமாய்ச் சூழ்ச்சி செய்தான் கூடவே சிலபேர் தம்மை விள்ளிட வைத்தான் தன்கை வலுவுறல் கருத்தாய்க் கொண்டே 660

ஜின்னாவூர் லுரியுத்தீன் C143)
பதவியில் உயர்ச்சி மன்னர் பேரினில் பெறுவா னாக விதியுற்ற போதும் பல்லோர் விருப்புறார் வஞ்சம் ஒர்ந்தோர் மதிபறிகுதிப்பு கூட மனத்தள வொப்ப வில்லை பொதுவினில் அனைத்துப் பேரும் பேசிடத் தயங்கினாரே
வெள்ளையரோடு யுத்தம் வந்துற்ற போதே யோர்கால் எள்ளளவேனும் அன்னான் ஏற்றனனில்லைப் பங்காம் உள்ளகம் கொண்ட தன்னாள் ஒணடவந்துற்ற பேரின் உள்ளத்திலுறைந்து தன்பால் உதவிகள் பெறுவதாமே
மற்றுமோர் சூழ்ச்சி கூட மலர்ந்ததாம் “பக்கீர் கூட்டம்” முற்றுமேதமைத்துறந்து மார்க்கத்தை வளர்ப்போர் போலும் அற்புதச் செய்கை காட்டி அறியாத பொதுசனத்தைச் சொற்றிறன் கொண்டும் தம்பால் சேர்த்திட முயன்ற பேர்கள்
ஹைதரின் இரண்டாம் பிள்ளை கரீமைத்தம் வசமாயீர்த்துக் கைதர முயன்றார் ஆட்சி கைப்பட வெனவாம் ஆயின் கைதர வில்லைக் காலம் கடத்திட கைபொ சுங்கி நைந்தனர் திப்பின் ஆட்சித் தலைமையை ஏற்றதாலே
வரிவகல் செய்யும் பேராய் வரித்தனன் பதவி மைகர் அரசினில் “ஆஞ்சி ஷாம அய்யங்கார்” என்னும் பேரான்
குரூரமாய் மக்கள் சொத்தைக் கொள்ளையிட் டானாம் அந்நாள்
வரியெனும் பேரில் தானே வருபலன் கொண்டிட்டானே
முறையிட்டார் மக்கள் மன்னர் முகதாவில் சினமேற் கொண்டு முறைப்படி தண்டனைக்கு முகந்தர வைக்க நேர மறைமுகமாக மன்னர் மன்றிலில் அவன்சார்ந் தோர்கள்
குறைதனைப் பொறுக்க வேண்டிக் கருணைக்கை நீட்டி னாரே
661
662
663
664
665
666

Page 84
தீரன் திப்பு சுல்தான்காவியம் C1440
மந்திரச் சுற்றத்தாரின் மதியுரை மதித்து மன்னர் சொந்தமாய்க் கொண்டிருந்த தகுதியில் தாழ்த்தி வேறாய்த் தந்தாரோர் பதவி அன்னான் தகைமைக்குக் கீழாம் தம்பால் வந்ததைப் பெற்றான் உள்ளே வாழ்தலின் தேவை யோர்ந்தான்
667
பழிவாங்கும் எண்ணந்தானே புதுப்பணி ஏற்கக் காலாம் அழித்திட எண்ணங் கொண்ட ஆங்கிலப் பறங்கியர்க்கு வழிவந்த தவனால் முற்றும் வாய்த்தபே ரவனுமானான் பழியஞ்சான் அவனினோடு பங்குற்றார் சிலபே ராண்டே
668
ராணியின் சூழ்ச்சிக் கும்பல் சேர்த்தது ஷாமய் யாவைத் தூனென வவனுமானான் திப்புவைக் கொன்றொழிக்கும் வேணவாக் கொண்டா ரன்னார் வகைபடத் திட்டந் தீட்டிப் பேணினார் ரகசியத்தைப் பிறரறியாத வாறே
669
அரசகட்டிலும் அறப்போர்களும்
மன்ன ரென்றுமே பதவி கொண்டபின்
மறக்க ளம்பல கண்டதை முன்னருரைத்தவாறோது தல்மிக
மேன்மை யாகுமே ஒன்றென மன்னு டைப்புயல் போலு மாமவர்
மறவரஞ்சிடு மறவராய்க் தன்னை முதன்மையாய்க் கொண்டு செய்தபோர்
செகமறிந்தவை கூறுவாம்
67O

ஜின்னாவூர் லுரியுத்தீன் C145 o பேடனுர்ப் போர்
மன்னர் ஹைதர்தம் மறைவை யொட்டிய
மகிழ்ச்சியடங்குமுன் வெள்ளையர் உன்னினர்பல ஊர்கள் தம்வசம்
2)_6OL60DLD uuITÉL'LD Fil85e615j' தன்னை யும் பேட னுரையும்மவர்
சேர்த்துப் பறித்திடத் தளபதி ஜென்ரல் மத்யூவின் தோளில் வைத்தனர்
சேனை பெரிதென ஒதுவார்
671 மேற்குக் கடற்கரை வந்த டைந்தனன்
முடங்கிப் போனது ராஜமான் மாற்றி "ஹொனோவர்பால் வளைத்தனன்னது முன்னர் போலுமே கோட்டைகள் ஏற்ற னன்தொடர் இலக்கதாய்ப் பேட
னுர்”கொள் கோட்டையின் முற்றுகை சாற்றி டில்லிவன் சாக சம்பெரி
தான தில்லையே எதிர்ப்பிலான்
672 கோட்டை முதல்வனாய் ஆயாஸ்' என்றிடும்
கயவன் இருந்தனன் தலைவனாய் கோட்டை யவன்வசம் கையளித்தவர்
ஹைதர் மன்னராம் வளர்த்தவர் காட்டினானவன் கீழ்மைப் புத்தியை
காவல் செய்தவன் கள்வனின் கூட்டுச் சேர்ந்தபோல் கேடு செய்தனன்
கூறநாவுமே கூசுமே
673
பழிக்கு ளாகினான் பேடி வெள்ளையர்
புறத்திலனைத்தையும் தந்துமே
இழிக்கு ணன்பெரும் ஈன னென்றுமே
இழித்து ரைத்திடில் ஏதமோ

Page 85
தீரன் திப்பு சுல்தான் காவியம் O1460
வளர்த்த நன்றியும் வழங்கு பொறுப்பையும்
விட்ட கன்றவன் கோட்டையின்
கொழுத்ததனத்தினைக் கொள்ளை யிட்டுமே
கொண்டு பறந்தனன் திருடனே
674
கேர்னல் மக்லொயிட் வந்து சேர்ந்தனன் கூட்டுப் படையுடன் 'பொன்னாணி ஊரிருந்துமே உதவிக் கரந்தர
ஒன்று கூடினர் வெள்ளையர் சேர்ந்த திந்தமெய்த் தகவல் திப்புவின்
செவிகளுண்டிடக் கேட்டதும் ஆர்த்தெ ழுந்துபோர் ஆக்ஞையிடவுடன்
அணிக ளாகினர் படையினர்
675
தமிழகத்தினைக் காக்கப் பெரும்படை
சென்ற தாம்மீர் முயீனுதீன் அமைந்த தலைமையில் இருபதாயிரம்
ஆன வீரர்கள் அடங்குவார் சமமாம் பரிப்படை துவக்குப் படையதும்
சேர்ந்த நடைப்படை இரட்டையாம் தமைத்தனித்துமே பேடனுர்தனைச்
சென்ற திப்புவாங் கடையுவார்
676
நடந்த வோர்கதை நினைவில் கொண்டிடில் நாசகன் ஆயாஸ் கீழ்மையை படித்த லாகுமே பாவியானவன்
புறத்தில் விளைந்தபேர் கேட்டினை அடுத்த வன்தனை ஆதரித்துமே
அடாது தம்மவர்க் கிழைத்ததால் கிடைத்த தொன்றிலை கொண்ட பொருளிலும்
களங்க நாமமே பெரியதாம் 677

ஜின்னாவூர் லுரியுத்தீன் Q_147כ
கோட்டை யவன்வசம் கொண்டதால்பிறர்
கேள்வியற்றுமே போனதால் வேட்டை யாடினான் வரிப்பணத்தினில்
வேண்டு வாறது விபரமாய் நாட்டு மன்னரின் நோக்கு ளானது
நிலைமை யறிந்ததும் மன்னவர் கேட்டே எழுதினார் கடிதில் விபரமென் கூறு வென்றுமே அதிர்ந்தனன்
6ア8
வேறு
வெள்ளையன் மத்யூ வோடு விருந்துண்டு மகிழ்ந்த காலை உள்நுழைந்தானோர் தூதன் உடன்கொண்ட ஒலை யோடே கள்ளுண்ட போதை யந்தக் கடைமகன் ஆயா சுக்கும் வெள்ளையண் மகிழ வென்று வரித்தனன் நடன மாங்கே
679 பல்வகை வாத்தியங்கள் பேசின சுருதி கூட்டி மெல்லிடைப் பெண்ணொருத்தி முன்னிலை சுழல லானாள் வில்லென வளைந்தாள் கண்டு வாங்கிடா விழிகளோடே கல்லெனச் சமைந்தான் மத்யூ கண்கவர் எழிலினாலே
68O மலையிருந்தருவி சுற்றி வளைந்தோடு மாறே அன்னாள் தலையிருந்தழகுக் கேசம் தாள்வரை நீண்டே ஆட மலரணி கருமைக் கேற்ற முறைகொண்டு தொடரு மன்னாள் கலையினை மறந்தான் மத்யூ கருத்ததோ வேறாம் தீயோன்
681 போர்வாளிர் முகையொ டித்துப் பொருத்திய பாங்காம் நெற்றி கார்குழ லொன்றக் காணும் கருமேகத்துள்நுழைந்த சீரினில் வதனம் செம்மைச் சுடரொளி நெஞ்சை ஈர்க்கும்
கூரிய புருவம் வான்வில் கீழ்இமை மலர்க்க ரங்கள்
682

Page 86
தீரன் திப்பு சுல்தான் காவியம் C1480
காதொடு நீண்ட கண்ணின் கருமணி கறுக்காய் தோற்கும் ஓதிடில் நோக்கும் நோக்கே உயிர்கொளுஞ் சரத்துக் கொப்பாம் ஏதுவாய்ப் பாடும் பாட்டின் இசையொடு பொருளுக்கேற்ப மாதின்கண் மணிகள் பூவை முத்திடச் சுற்றும் வண்டாம்
683
பங்கயப் பூவிதழ்கள் போலுமாம் செவிகள் காதில் தொங்கிடுந் தோடில் வைரந் துலங்கிட வதனம் பூக்கும் நங்கைமென் நாசி கூம்பு நிலைமலர் நனையின் பாங்கு சங்கினை யொத்த கன்னஞ் சிவந்தன நவர சத்தே
684 தோடையின் இதழி ரண்டைத் தொடுத்ததில் செஞ்சாந் தூற்றிக் கூடியே பாகுஞ் சேர்த்துச் கோத்தவாய்ச் சிமிழில் வாகாய் மூடிய இதழ்கள் மெல்ல மலர்ந்திடும் அவற்றினுள்ளே கடிடா மல்லி கைப்பூ மொட்டுகள் பல்லாய் மின்னும்
685
மடல்சில கழைந்த வாழை மரத்துண்ட மாங்க முத்து கடைந்தெடுத் தொன்றுங் கைகள் கரிமுகக் கொம்பின் சீர்மை விடைபெறத் துடிக்கும் பாங்கில் விம்மிடும் மார்பகங்கள் நெடுமரம் பனையின் முற்றா நுங்கிரண் டொக்கும் நோக்கே
686
பொத்திடப் போதா கைக்குள் பொதிந்திடில் பிறகண் நோக்கா நர்த்தகி இடையோ ஆட நெளிந்திடும் நாகந் தோற்கும் முத்தொன்று பதித்த பாங்கில் முகிழ்ந்திடும் நாபி பிட்டம் ஒத்ததாம் சுரையின் கூட்டின் ஓர்முகப் பாகம் போன்றே
687
ஆடலுக் குகந்த வாறாய் அமைந்தசெம் பாதம் கூடி வாடாத மலர்களொக்கும் வனிதையின் கால்விரல்கள் நீண்டதாங் கால்கள் ஆடும் நிலத்திருந் திடைவரைக்கும் பூண்டனள் எழிலை யெல்லாம் பறித்துடல் பொதித்த பாங்காம்.
688

ஜின்னாளுர்ஷரிபுத்தீன் C149)
போதையுட் புரண்டான் மத்யூ பொருத்தினான் ஆயாஸ் அஃதைத் தீதெனப் பற்றும் மார்க்கஞ் சொல்லியுந் தவறிழைத்தான் ஒதுவார் ஓத லுக்கே உடன்பட்டான் வெள்ளையர்தான் காதினினருகிருந்தார் கூறவும் வேண்டு மாமோ
689
சுழன்றுமே யாடு மந்தச் சுந்தரப் பெண்ணி னாட்டம் விழிதனில் துலங்க வில்லை வஞ்சியின் பிஞ்சு மேனி களிதரக் கள்ளி னோடு கவல்மறந் திருந்தார் போழ்தே வெளியவன் தூதன் வந்தான் வெறிகொள வைத்திட்டானே
69 O.
“கங்காதர்” திப்பு சுல்த்தான் குருதியோ டிணைந்த தூதன் பொங்கினான் சினத்தால் ஆங்குப் பார்த்தவந் நிகழ்வினாலே சிங்கமென்றானான் வெள்ளைத் தளகர்த்தன் ஆயா ஸோடும் அங்குறைந்திருத்தல் கண்ட அதிர்ச்சியால் கொதித்திட்டானே
691
அனுமதியின்றியுள்ளே அந்நியன் வரவால் ஆயாஸ் சினம்மிகக் கொண்டான் வந்த சேதியை வினவா தோனாய் தனைமதித்தில்லா னந்தத் தூதுவன் பிறர்முன்னென்றே கனத்ததே யுள்ளம் கண்கள் கனலெனத் தகிகு மாறே
692
யாருனை ஈங்கனுப்பி வைத்ததே னுள்நுழைந்தாய் காரணம் சொல்வா யுன்னைக் கொன்றிட முன்னென் றோதக் கூரிய கணையாய்ப் பார்வை கருக்கிடக் கங்கா தர்நான் சீரியர் சுல்தான் தூதன் சிறியனே என்றான் மேலும்
693
ஆறிடா வெங்கோ பத்தால் ஆளுனண ஆயாஸ் நோக்கிக் கூறினான் மொழிகள் தம்மின் கோபத்தைப் பிழிந்தெடுத்தே சீறிய நச்சுப் பாம்பு திகைத்தது கங்கா தர்பின் கூறிய தீநாச் சொல்லால் தொடர்ந்திட வெறிகொண் டானே
694

Page 87
தீரன் திப்பு சுல்தான் காவியம் O150
"துரோகியே பிறந்த மண்ணைத்தாரைவார்த் திட்ட பாவி அறிந்துமோ செய்தாயிந்த அடாததை திப்பு சுல்தான் குறியிவர் தம்மை நாட்டின் கடல்தாண்டியோட வைத்தல் மறந்ததேன் மண்ணின் மானம் மாற்றானுக் கடிமை யானாய்”
695 “கொள்ளையர் நாட்டைத் துண்டாய்க் கூறிட வந்த இந்த வெள்ளையர் தமக்கே னுன்னை விற்றனை சொந்த மானம் எள்ளளவேனு மற்றாய் எச்சிலைப் புசித்தற் காமோ கள்ளரைக் கரம்பிடித்தாய் கயமையின் வழிப்பட்டோனே"
696
“பிறப்பினால் ஈனன் என்னும் பண்பினைச் செய்கை யாலே உறுத்தினாய் வெள்ளையர்தம் ஒருங்கிணைப் பாள னாகி அறுத்தனை யுறவை மன்னர் அன்பினைக் கொன்றாய் பாவி பொறுத்திரு தண்டனைக்குப் பொருந்துநாள் அருகில்” என்றான்
697 "மூடுநீவாயை மாறின் முடிவுடன் கிடைக்கு" மென்றே நாடினா னருகில் ஆயாஸ் நெஞ்சுரங் கொண்ட தூதன் ஆடிடான் அசையான் நின்றான் அறிந்திடாப் போழ்தில் பாய்ந்தே கூறிட முயன்றான் கைவாள் கைகொள முன்சாய்ந்தானே
698 கழுத்தினை நோக்கிக் கைகள் கோத்தனன் கொல்ல ஆயாஸ் முழுப்பலங் கூட்டி முன்னால் மறித்தனன் கீழே தள்ள விழுந்தனன் எழுந்திருக்க விண்டினன் முன்னர் 'மத்யூ அழுத்தினன் வில்லை கையில் வாங்குதுப் பாக்கி பேசும்
699 உருண்டைகளிரண்டு நெஞ்சின் ஊடுமே செல்லக் கீழே புரண்டனன் தூதன் மார்பைப் பொத்திய கைகளோடே சரித்திரம் முடியுமுன்னே சாற்றினான் ஆயாஸ் நோக்கி கருத்தினில் கொள்க நீவீர் கொலைப்பழிசுமந்தீரென்றே
7OO நடந்தவையனைத்துங் கண்டநர்த்தகி பீதியுற்றே நடுங்கினள் அச்சம் மீற நனைந்தனள் வியர்வை பொங்கும் அடுத்தவர் அறியா வாறே ஆங்கிருந்தகன்றாள் முன்னே கிடைத்ததோர் தகவல் 'மத்யூ கூறிய கருத்தினாலே 7O1

ஜின்னாவூர் ஷரிபுத்தீன் Oslo சீரங்கம் மீது போரைத் தொடுத்திட வேண்டு மென்ற நாராசம் செவியுள் தாங்க நிலைகுலைந்தாளே மின்னுள் சேரவைத் திடுதல் வேண்டித் திப்புவின் முகவல் நோக்குங் காரணம் முந்தக் கால்கள் கடிதினில் அகலச் சென்றாள்
7O2 வீடடைந்தாளப் பெண்ணாள் வழமைக்கு மாற்றமாக வீடடைந் திடவுந் தந்தை வினவினார் ஏனென்றாக கேடினை யுரைத்தா ளங்குக் கண்டவை புகன்றாள் பின்தான் நாடிய பணியை ஒதநடுங்கினார் தாதை யோர்ந்தே
7O3 சீரங்கப் பட்டினத்தைச் சிதைத்ததன் பின்னர் சுல்தான் காரியம் முடித்த லொன்றே கருத்ததாம் மத்யூ வுக்குப் பாரிய விளைவு தோன்றப் போவதால் தடுத்து யுத்தக் காரிருந்ததனைக் காக்கக் கருத்துளேன் எனப்பு கன்றாள்
7O4 இப்போதே ஈங்கிருந்தே இரவுதோன்றிடுமுன் மன்னர் திப்புவைக் கண்டு சேதி சொல்லிடத் துணிந்தே னென்ன ஒப்பினாரல்லர் தந்தை உன்றனை நினைநீயென்றார் தப்பொரு பெண்தனித்துச் செல்லுதல் எனப்பு கன்றார்
7O5 ஆபத்திலிருந்து மண்ணை அந்நியர் கரத்திருந்து காப்பதில் உயிர்போ னாலுங் கவலையில் லெனக்கு இன்றே சேர்ப்பது கடனச் சேதி தாமதம் தவிர்த்தல் வேண்டும் பார்த்திரேல் வேண்டா நீங்கள் பங்களூர் செல்க வென்றாள்
7O6 நல்லதை நாடி நீயும் நோர்த்திடும் பணியுணக்கு தொல்லைகள் தருந்து னிந்து சென்றிட்ட போதுஞ் செல்வி பொல்லாத அரக்கன் ஆயாஸ் பழிதீர்க்க அஞ்சமாட்டான் சொல்வதைக் கேளென் தாயே தனித்துநீசெல்லல் வேண்டா
7O7 என்னதான் எடுத்து ரைத்தும் ஏந்திழை கேட்டா ளில்லை தன்னுடைக் கடனாம் நாட்டைத் தொல்லையில் காத்த லென்றாள் மன்னவரறிந்தால் மாற்று மார்க்கமுங் கொள்வார் அன்றேல் தன்னலங் கொண்டால் நாடு சென்றிடும் பிறர்கை யென்றாள்
7Ο8

Page 88
தீரன் திப்பு சுல்தான் காவியம் O152D பிடிவாதமாக அன்னாள் புகன்றதைத் தந்தை யோர்ந்து விடைதர லன்றி வேறு வழியிலை யெனவுணர்ந்தார் உடன்செலப் பணித்தார் ஊர்கண் ஒன்றிடா வாறே என்று தடையொன்று நீங்கிப் போன திருப்தியோ டவள கன்றாள்
7O9 பரியொன்று வேண்டி யாங்குப் பரிதங்கு நிலையஞ் சென்று உரியவரிடத்தில் பொன்னை உடன்தந்து பெற்றாளஃதும் உரியதாம் “கங்காதர்”க்காய் உயிர்விட்ட தூதன் சொந்தம் தெருவழி யறிந்த தொன்றாம் சீரங்கங் கொண்ட திக்கே
71O கொலையுண்ட தூதன் கொண்ட குதிரையாம் என்ற தாலே இலகுவென்றாகிற் றன்னாள் இலக்கினை அடைதற் கன்று சிலமணி நேரத்துள்ளே சென்றடைந் தாள்வாய் காப்போன் செலவிடா திடையிற் புக்கித் தடுத்தனன் வினாத்தொடுத்தான்
711 யாரினைப் பார்க்க இந்த அவசரம் யார்நீயென்றான் காரிய மொன்றிற் காகக் கோனினைப் பார்க்க என்றாள் பேரினைச் சொல்நீ என்னப் புகன்றனள் மும்தாஜ் என்றே காரணம் உரைநீயென்னக் கூறொனாச் சேதி யென்றாள்
ア12 என்னவச் சேதி யென்றே இயம்பிட மாட்டா யாயின் மன்னவர் தம்மைக் காண மார்க்கமொன்றில்லை என்றான் முன்னமஃ துனக்கு ரைத்தல் முற்றிலுங் கேடு செல்ல என்னைநீ விடுவென்றுள்ளே எகிறினாள் தடுத்திட்டானே
713 சொன்னதைக் கேள்நீ அன்றேல் துண்டிரண்டாகுந்தேகம் வன்முறைக் கென்னைத் தூண்டி விபரீதம் நடக்கச் செய்யாய் பின்வந்த வழியை நாடிப் போவென்றே கூறித் தள்ள சொன்னவாறியற்ற லன்றித் தோகையோ மார்க்கம் காணாள்
714. தவித்தது உள்ளம் காலத் தாமதம் அச்சமூட்ட நவின்றிட வொண்ணாச் சேதிநஞ்சென மனத்தைக் கொல்ல குவித்தனள் சிந்தை ஒற்றைக் குறுவழி தேட லுன்னி எவைத்தனும் தோன்றாச் சோகம் உள்ளிடக் கால்பின் மீழும் 715

ஜின்னாவூர் ஷரியுத்தீன் C153o நடந்தவையனைத்தும் தூர நின்றவாரரசரோடு கடைவிழி நோக்கக் கண்ட கொற்றவன் மனையாள் கோவைத் தடுத்தவள் தன்னைத் தம்பால் தருவிக்க வெண்டி நின்றாள் அடுத்ததோர் ஆணையாக அகன்றிட மீண்டிட் டாளே
716 காரணமறியாள் ஏதுங் கேட்டுத்தன் வறுமை தீர்க்கக் கோரின ளென்றே ராணி கருத்தினில் கொண்டழைத்தாள் வாராத தொன்று வந்து வலிந்துதன் மடியில் வீழ்ந்த சீரினை எண்ணி மும்தாஜ் திகைத்தனள் நெருங்கினாளே
717 அருகினில் வந்து கையை அசைத்தவாறுடலைத் தாழ்த்திச் சிரமது குனிந்து மெல்லச் சோபன வார்த்தை கூறி வருவினை தன்னை மாற்றார் விளங்கிடா வாறொ துக்கி விரைவினிற் புகன்றாள் மன்னர் வியப்பினி லாழ்ந்திட்டாரே
718 இனியிலை யென்னும் பாங்கில் இருவிழி மடலும் பூக்க முனைத்தகூர் வேலா மன்ன மணிகளும் நோக்கும் கண்டாள் தனையொரு புழுவா யெண்ணித் துவண்டனள் மன்னர் பார்வை வினைப்பொருளறியாள் அஞ்சி வார்த்தையின் குளறிற் றன்றே
719 சிறுபொழு தமைதியாகித் தெறித்தன வார்த்தை நீயும் அறிந்ததெவ்வாறாம் இஃதை இயம்புவாய் என்னச் சொல்வாள் அறிந்ததொன்றில்லை கண்ணால் அளந்தவை செவிகள் உண்டு பிறந்தவை சத்தியத்தின் பாற்படு மொழிக ளென்றே
72O தூதனின் கொலையும் 'மத்யூ திட்டமும் ஆயாஸ் செய்யும் தீதையும் எடுத்துரைக்கத் தன்னுயிர் தனையும் போற்றாள் ஒதியதனைத்தும் கேட்டே உள்ளத்தில் நன்றி மேவ மாதினை நோக்கி மன்னர் மொழியின்றித் தவித்திட்டாரே
721
தலைநகர் மீது யுத்தந் தொடுத்திடும் ஆயாஸ் திட்டம் புலிதனைச் சீண்டி விட்ட போக்கென வாகும் திப்பு வலுவினில் வந்த தொன்றை விடாதவர் வந்த தென்று சொலவலை விரித்தார் யுத்தஞ் செயலுருக் கொண்டதன்றே 722

Page 89
தீரன் திப்பு சுல்தான் காவியம் O1540 சீரங்கப் பட்டணத்தைச் சேருமுன் அடலர் தம்மை வேரறுத் தோடச் செய்ய வேண்டுமென் றரசர் தம்மின் வீரமா சேனை தன்னை விரைவுறப் பணித்தார் ஆணை காரியமான தோரீர் குறுநொடிப் போழ்தினுள்ளே
723 தூள்துக ளான தேயத் தருக்கரின் படைகள் தம்மின் வாழ்வினை வருந்தித் தேடி விட்டன ஆவியாம்செய் ஊழ்வினைப் பயனா மன்ன ஒருசிறு எச்சமற்றே பாழ்படு யுத்தம் தன்னால் பழிகொண்ட செயலாயிற்றே
724
ஆனந்த்பூர் கோட்டையும் அடலர்தம் வெற்றியும்
தூரத்திலிருந்து பெண்ணைச் செலவிட்ட வாயில் காப்போன் காரணம் அறியும் நோக்கில் கண்செவி இரண்டுங் கூட்டி நாரியின் நடத்தை தன்னை நோக்கினான் சைகை கொண்டு ஓரளவுணர்ந்தான் முற்றும் உசார்நிலை கொண்டிட் டானே
ア25 மன்னரின் மாளிகைக்குள் மன்னருக் கெதிராய் ஆயாஸ் தன்னுடைப் பேராய் துப்புத் துலக்கிட வைத்த பொல்லான் மின்னலாய்ப் பறந்தான் சேதி மொழிந்திட நடந்த தெல்லாம் கண்படு தூரத்துள்ளே கண்டவை யூகம் செய்தோன்
726 திட்டங்க ளெதுவுந்திப்பு தேர்ந்திட லாகா தென்றே திட்டங்கள் தீட்டினார்கள் தெரிந்ததென்றறிந்த போது மட்டிலாச் சினமுங் கொண்டான் மத்யூவும் ஆயா ஸிம்தம் திட்டத்தை மாற்றினார்கள் திப்புவின் திறனறிந்தோர்
ア27 தாமதங் கொள்ளார் திப்பு சிறுபொழு தேனும் விணே போமெனில் பொறுக்கார் நம்பால் படைவரும் வருமுன் நாமே சேமமாம் 'ஆனந்த் பூரைத் தம்வசங் கொள்ளல் என்றான் தீமையின் உருவாம் "மத்யூ ” செயற்பட ஆணையிட்டான்
728

ஜின்னாவூர் லுரியுத்தீன் C155o அடிமைபோலருகிருந்த ஆயாசை நோக்கிச் சொல்வான் உடனந்தக் கோட்டை தன்னில் ஒன்றிய தலைவனுக்கோர் மடல்வரைந்தனுப்பு நம்கை மாற்றிடப் பணிப்பா யென்றே கடனது பணித லென்ப கொண்டனன் ஆயாஸ் செய்தான்
729 பறந்ததே ஒலை கோட்டைப் பதிகரஞ் சேரச் சேதி அறிந்ததும் நாராயண்ராவ்" அதிபதியுரைப்பான் இஃது பிறந்தது மன்னர் தம்மின் புறத்திருந்தன்றே நானேன் துறந்தாட்சி கொண்டே நும்பால் தந்திட வேண்டும் என்றான்
73Ο மறுத்தனன் கைய எரிக்க மாட்டாத செய்தி மத்யூ புறத்தினுக் கண்மக் கண்கள் பெருந்தனல் போன்றாம் மாறி வெறுத்துரை செய்தான் ஆயாஸ் வக்கிலாய் எனந கைத்தான் பொறுப்பற்ற செல்வாக் கற்ற பிண்டம்நீ எனப்பழித்தான்
731 என்னநான் செய்வேன் ஆணை எற்றிடான் திப்பு பேரில் கண்ணியம் செய்வோன் தம்மின் கடமையில் கருத்து மிக்கோன் தன்னையே திப்பு வுக்காய்த் தந்திடத் துணிந்தோன் துரோகம் எண்ணிடான் என்றான் ஆயாஸ் இரத்தலில் கேடாம் கீழோன்
732 இடையினில் தடுக்கா விட்டால் எம்முயிர் எமக்கே யில்லை அடைந்திட வேண்டும் நாங்கள் ஆனந்த்பூர் கோட்டை தன்னை உடன்படைநடத்த வேண்டும் ஒன்றிடு முன்னர் திப்பு கடந்திடுங் காலந் தன்னை கருத்தினில் கொள்வீரென்றான்.
733 கோட்டையைத் தாக்க வெள்ளைக் கேடர்கள் வருத லென்னும் நோட்டத்தை ஒற்றர் கூற நேரெதிர் கொள்வதன்றித் தேட்டமொன்றில்லை யென்று துணிந்தனர் படையிலுள்ளோர் ஆட்பலம் குன்றினாலும் அதுவொன்றே முடிவில் எஞ்சும்
734 ஆனந்புர் கோட்டை தம்மின் அதிபதி நாராயண்ராவ்" தானேமுன்நின்றான் கோட்டைத் தளத்தினில் பகையை வெல்லச் சாணிடையின்றி வீரர் தமைக்குவித் திருந்தா னன்னான் தூணென நின்ற வீரத் தளபதி "நூர்முஹம்மத்" 735

Page 90
தீரன் திப்பு சுல்தான்காவியம் O1560
வேறு பறங்கியர்கள் பன்நூறு பேர்கள் கூலிப்
படையினர்கள் பெருமளவு கூடி எல்லாப் புறமிருந்தும் தாக்குதலை நடத்தினார்கள்
பெருமளவு சேதமிரு புறத்தா ருக்கும் வறந்ததுவாம் கோட்டைவலு மாற்றார் தம்மின்
வீறுகொண்ட தாக்குதலால் சுருண்டு போனார் அறிந்தனராம் அவர்தமக்குள் துரோகப் பேர்கள்
அன்னியருக் குதவியதை அறுதிப் போழ்தே
736 நிலம்நோக்கி எறிகின்ற வேல்கள் வெள்ளை
நீசர்களின் நெஞ்சத்தைக் கூறு போட்டே நிலஞ்சாய்க்கும் தொடர்ந்துவரும் தீயுண்டைகள்
நிலஞ்சரிந்த உடலெரித்துத் தகனஞ் செய்யும் தலைவேறாய் உடல்வேறாய்க் கைகால் வேறாய்த் தனித்தனியே சிதைந்தவுடற் கூறே எல்லாப் புலத்தினிலும் வியாபித்தே துடிது டிக்கும்
பெருஞ்சேதம் வந்தவர்க்கும் இருந்தோர் போன்றே 737 கீழிருந்தும் ஒருவீரன் துவக்கிலுண்டை
கோத்தளிக்க மற்றொருவன் விசையைச் சுண்டக் கீழிருந்து போர்தொடுப்போர் மீதே அஃது
குறிவைத்துத் தாக்குமுயிர் கருகிப் போகும் வாளினொடு வாள்பொருதும் வெட்டுண் டோரில்
வழிந்தோடுஞ் செம்புனலால் நிலஞ்சிவக்கும் தோளின்பல மறியுமந்தச் சமர்க்க ளத்தில்
சென்றவிட மத்தனையும் பிணங்க ளாமே
738 கழ்ச்சியொன்று நடந்ததந்தப் போழ்தோர் வீரன்
தலைதெறிக்க ஓடிவந்தான் தலைவன் நோக்கி "கோட்டையினுள் ளிருந்தொருவன் கயிற்றின் மூலம்
கீழிறங்கிப் போயுள்ளான் அந்நியர்க்குக்

ஜின்னாவூர் ஷரிபுத்தீன் C157 o
கூட்டாக வழிதிறக்க" வென்றான் கேட்டுக்
கடிதினிலே யவ்விடத்துத் தலைவனனன்ட நாட்டத்தை நிறைவேற்றச் சிலபே ரொன்றி
நாயகன்மேல் பாய்ந்தனரே துரோகக் கூட்டம்
739 உண்மையென்று நம்பியதால் நேர்ந்த கேட்டை
உடனறிந்த தலைவன்றன் பலத்தைக் கூட்டி மனன்கல்வச் செய்தானவ் வஞ்சர் தம்மின்
மூட்டொடித்தான் பெருவீரன் என்றாலுந்தான் புண்ணுண்டான் புயத்திலது பெரிதென்றாலும்
பலர்தடுத்தும் போர்முனையைத் தவிர்த்தானில்லை மண்ணிலவன் உடல்சாய்ந்து வீழு மட்டும்
மறவன்போர் செய்தனனே மூர்க்கத் தோடே
74O உடன்கொண்ட சேதியினால் தலைவன் போக
உந்தவவன் தனைத்தடுத்து தானே சென்றான் அடாததுவந் துறாதிருக்க வேண்டு மென்றே
அவசரித்தான் தான்முந்த நூர்மு ஹம்மத் கொடியவரின் கழ்ச்சிக்கும் ஆனந் பூரின்
காவலன்றன்னுயிர்நீக்குங் காட்சி கண்டே விடேனிவரைப் பழிவாங்கா தென்றவ் வீரன்
வாக்குரைத்தான் பலரழித்து வெறிகொண் டானே 741 தலைவன்றன் விழிமூடக் கண்ட காட்சி
தாங்காத நூர்முஹம்மத் சபத மேற்ற தலத்திருந்தே சிங்கமெனச் சீற்றங் கொண்டான்
சிரசரியும் தொழில்கொண்டான் பலபேர் மாண்டார் உலையிடையில் வீழ்ந்தபுழுப் போல மாற்றார்
உடல்துடிக்கச் செத்துமடிந்தார்கள் கண்டோர் நிலைவிடுத்து மறைந்தார்கள் அவன்கை வாளில்
நிலைத்திருக்கும் சாவோலை கண்ணுற்றாரோ
742

Page 91
தீரன் திப்பு சுல்தான்காவியம் O158D
பழிதீர்க்கும் படலத்தைத் தொடர்ந்திட்டாலும்
பின்னிருந்தோர் பேடிவெள்ளைப் பறங்கி தாக்கக் களைத்திருந்த உடலம்தன் பலமிழந்து
கண்ணிமைக்கும் போழ்துள்ளே நிலத்தில் வீழும் இழந்தாலும் உயிரையவன் தலைவன் பேரில் ஏற்றிட்ட சபதத்தை நிறைவு செய்தான் அழியாத புகழுடம்பு கொண்டான் திப்பின்
ஆட்சிக்குப் பலம்தந்த அஞ்சா நெஞ்சன்
743 முஸ்லிம்மாய் இருந்தொருவன் துரோகஞ் செய்ய
மாற்றுமதத் தானெனினும் தலைவன் தம்மின் விசுவாசந்தனைச்சாவில் நிலைநிறுத்தி
வெற்றிகொண்டான் போரினிலே தோற்றிட்டாலும் தசையோடும் என்பொன்றி னாற்போல் திப்பு செய்திட்ட நல்லாட்சி தன்னில் மக்கள் இசைந்தொன்றி வாழ்ந்தார்கள் என்பதற்கும்
இதைவிஞ்சச் சான்றுபிற வேண்டு மாமோ!
744 நீண்டநெடும் ஏணிகளைச் சுவரில் சாத்தி
நெட்டுயர்ந்த கோட்டையின்மேல் குதித்திட்டார்கள் தூண்டில்போல் கொக்கைகளை கயிற்றில் கட்டித்
தொங்கிடவென்றெறிந்தார்கள் கொளுவிக் கொள்ள வானரம்போல் ஒருவர்பின் ஒருவராக
வடம்பற்றி ஏறினரே வந்த கூட்டம் வீணாக வில்லையவர் முயற்சி அன்னார்
வந்ததெந்தக் காரணமோ வசமாகிற்றே
745 கோட்டைதனைக் கைப்பற்றிக் கொண்டார் கோட்டைக்
கதவுகளில் காவலிருந் திட்ட பேர்கள் பூட்டுடைத்துப் புகவுதவி செய்தார் முன்னர்
பொருள்கொண்டு வாக்களித்த பங்கை ஏற்றே

ஜின்னாவூர் ஷரிபுத்தீன் C159 o
கூட்டுடைத்த காடெருமைக் கூட்டம் போலுள்
கூக்குரலிட் டோடினரே வெற்றி கொண்டோர் மாட்டாரே எதிர்க்களஞ்சிநின்ற வீரர்
மனமொப்பிச் சரணடைந்தார் வழிவேறற்றே
746 வெற்றிகொண்ட பூரிப்பில் திளைத்திட்டாலும்
வருவினையை எண்ணியதால் அச்சம் நெஞ்சுள் தொற்றியதே மத்யூதன் அடுத்த திட்டந்
தனைவகுகக தளகரததரதமமைக கூடடி முற்றிலும்நாம் வெற்றிகொள்வதாகும் திப்பு
மண்டியிட்டாலன்றியிலை மற்றோர் போரை வெற்றிகொள வேண்டுமென்றான் மூர்க்கன் நோக்கி
வருமிடரை முன்கூட்டி நினைந்ததாலே
747 வெற்றியினைக் கொண்டாடப் படையோ ருக்கு
வழங்கினனே யாங்குள்ள வீடு வாசல் முற்றையுமே கொள்ளையிட ஆணை அன்னார்
மனங்கொண்டவாறதனைச் செய்தார் கோட்டைப் பொற்குவியல் தனையள்ளிக் கொண்டான் தன்னின்
பங்கினுக்காய்ப் பேராசை கொண்ட பொல்லான் சற்றேனுஞ் சளைத்தார்களில்லை கொள்ளை
தலைவிஞ்சிப் போனதுவாம் தருக்க ராலே
748 வீடுவீடாய்ச் சென்றவர்கள் கொள்ளை யிட்டார்
விட்டார்களில்லையொரு வீட்டைத் தானும் வேட்டைக்காய் ஏவிவிட்ட ஞமலிக் கூட்டம்
வெறிகொண்டு தாக்குவபோல் விழைந்த தஃதே கோட்டைக்குள் நடந்தபெருங் கொடூரந்தன்னைக்
கூறிடநா கூசிடுமே பெண்கள் கூட வேட்டைப்பொருளாகினரே வரம்பு மீறல்
வரைகடந்து போனதுவாம் விடுப்பாரற்றே
749

Page 92
தீரன் திப்பு சுல்தான் காவியம் O160
வேறு வெற்றியைப் பெரிதாய்க் கொண்டு வெள்ளையர் அடாது செய்யச் சற்றெனுங் கவலை கொள்ளான் செய்திட ஆணையிட்டோன் மற்றவரோடு சேர்ந்து முதன்மையுற்றானே பெண்கள்
கற்பினைச் சூறையாடும் கயமையில் முன்நின்றானே
75O
கண்ணினில் பட்டாளோர்பெண் குழந்தைக்கோ மாதம் மூன்றே பெண்னவள் கணவன் திப்பு படையினில் தளகர்த் தாவாம் வண்ணவம் மயிலை மத்யூ விரும்பினான் அடைய ஆணை மின்னலாய்த் தெறிக்கப் பற்றி மறுகணம் இல்லுள் சேர்த்தார்
751 கூட்டினுள் ஓநாயோடு குறுமுயல் தனித்த வாறாம் பூட்டிய கதவின் மற்றப் புறத்தினில் காவ லாளர் ஊட்டிய மதுவால் தன்னை உணர்ந்திடாப் போதை முற்றுங் காட்டின விழிகள் மத்யூ கருத்தழிந் தாங்குற்றானே
752 அள்ளியே வந்த பூவை அவன்விருந்தாகத் தந்தே உள்ளெது நடந்திட்டாலும் ஒருவரும் அறியா வாறே உள்ளிடு நிலைமை செய்தார் ஒன்றிய ஏவலாளர் கிள்ளையைக் கவ்வ நோக்கும் கடுவனாய் மத்யூ நின்றான்
753 அருகினில் சென்றான் தொட்டே அனைத்திட அவள்விடுத்து ஒருபுறம் ஓடப் பின்னால் அவன்தொடர்ந் தருகி லண்மிக் கரமிடைப் பொத்த வெண்ணக் கைதடுத்தவளும் மீறி மறுகினாள் மீண்டு மன்னான் முன்னிலும் வேகங் கொண்டான்
754 மதுவெறியோடு கூடி மாதுற்ற வெறியும் ஒன்ற மிதிதளர்ந்தாடினாலும் மகனெனும் ஆண்மை விஞ்சப் புதுவுடற் பலமுங் கூட்டிப் பாய்ந்தனன் பாவம் பெண்ணாள் கதியவன் கரத்து ளென்மால் கையிடைப் பிடிபட் டாளே
755
தாய்பற்றி வந்த பிள்ளை தனித்தொரு மூலை தன்னில் வாய்விட்டுக் கதறும் தன்னை வாட்டிடும் பசியால் கேட்ட நாய்ப்பிறப்பான பொல்லான் நறுக்கென அதைமிதித்தே வாய்குளறாது செய்தான் வீறலும் அடங்கிற் றன்றோ 756

ஜின்னாவூர் லுரியுத்தீன்
தன்னுணர் விழக்கச் செய்யும் சோர்ந்துடல் தரையில் சாயும் எண்ணத்திற்கேற்ற வாறு இசைந்தது வேளை என்றே தன்னுளத் துறுதி கொண்டே துணிந்தனன் அருகிலுற்றான்
எச்சிலை நாடி வந்த ஈனன்தன் கண்ணில் பட்ட எச்சிலை விட்டா னில்லை இன்னொரு வீரன் பேரின்
161 ܢܘ
கண்முன்னே கண்ட காட்சி கருத்தினைச் சிதைக்க அன்னை
757
சொச்சத்தைப் புசித்தான் அன்னாள் பிள்ளையைக் கொன்றான் பின்னாள்
நிச்சயக் கொடுஞ்சா விற்கு நடந்தவை கருவாகிற்றே
தண்டலை பூத்திருந்த தாமரை தன்னைக் கொய்து மண்ணிடை வீசி காலால் மிதித்துமே சிதைத்த லெப்ப பெண்மையின் தூய்மை போக்கி புசித்தன னுடலைப் பாவி
உண்டனன் விடத்தைப் பின்னாள் உயிர்கொள வைத்த தஃதே
கேணல் மத்யூவின் தோல்வியும்
பழிதீர்த்த கொலையும்
தாக்கிடநினைந்த பேரைத் தகர்த்திடப் படைநடத்திப் போர்க்கொடியேந்தி வந்த புலியிலக் கடையுமுன்னர் தாங்கிய வெற்றி தன்னைத் தொடர்ந்திட மாட்டா னாகத் தாக்கிடைப் பட்டான் மத்யூ சிற்சில நாட்களுள்ளாம்
கோட்டையைச் சுற்றி யெங்கும் கொண்டபிராங்கி யோடே ஆட்பலம் பெருக்கிநின்றார் யுத்தமுந் தொடங்கிற் றன்றே கூட்டொடு வெள்ளையர்தம் குரல்வளை நெருக்கும் தம்மின் நாட்டத்தை முடிக்கத் திப்பு நடத்திய சமரொன் றாகும்
குறுகிய நாட்களுக்குள் கோட்டைதம் வசமென்றாக மறுவழியற்று மத்யூ மண்டியிட் டனனே சாவின் அருகினில் நின்றான் கூட அவன்படை வீரர் சேர்ந்தார் பெருமெதிர்ப் பற்று வெற்றி பலித்தது புகழிறைக்கே
758
7.59
76O
761
762

Page 93
தீரன் திப்பு சுல்தான்காவியர் O162)
வெற்றிக்குத் துணையாய் நின்ற வீரர்கள் தமக்கு மன்னர் பற்பல பரிசும் ஏற்ற பட்டமும் பொருந்தத் தந்தார் பெற்றநற் பேரும் கொண்ட பரிசில்கள் தாமும் தந்த வெற்றிக்கும் ஊக்கங் கொள்ள வேண்டலுக்காகும் நோக்கே
763 தளபதி "இம்ரா னுல்லாஹி" தலைதாழ்த்திப் பெற்றிட் டாலும் உளத்தள வமைதியற்றே உரித்தினைக் கொண்டான் : திப்பு விழித்தலிலுணர்ந்தார் எஃது விளைந்ததென்றறிகி லாதார் அழைத்ததை அறியுமுன்னர் ஆனதோர் கொலைநிகழ்வே
764 வெள்ளையர் போரில் வென்ற போழ்தினிலுற்ற தீது கொள்ளையாம் அவற்றுள் மத்யூ கொண்டசிர் கேட்டிலுற்ற சள்ளையில் யாண்டு சிக்கித்தவித்துடல் சிதைந்த தோடே பிள்ளையும் இழந்த பெண்ணாள் பற்றிமுன் செப்ப லுண்டாம்
765 கற்பையுமிழந்து தன்னோர் குழந்தையும் பறிகொடுத்த கற்புடைப் பெண்ணாள் தம்மின் கணவனே இம்ரானுல்லாஹற் முற்றிய வெற்றி யின்பின் மகவொடு மனையாள் காண உற்றனன் ஊர்ப்பதிக்காம் ஒன்றிய சேதி கொண்டான்
766 உரைத்தனள் மனையாள் நேர்ந்த ஊறினை மகனைக் கொன்ற தருக்கனைச் சொன்னாள் அன்றே செத்திட நினைந்தேன் என்றாள் வரும்வரை காத்திருந்தேன் வேறெவர் அறியா துற்ற கருத்தினா லென்றாள் சொன்ன கணத்தினோ டுயிர்நீத்தாளே
ア6ア மகவினை இழந்த தோடே மனைவியும் மாண்டு போன திகைப்பினில் உறைந்து பேசுந் திராணியை இழந்தே யோர்கால் வகையறியாதே நின்றான் வெந்துளம் பொசுங்கக் கண்கள் உகுத்தன கண்ணிர் ஆறாய் உளமதோ செந்நீர் கொட்டும்
768 உலகமே கன்யமாகி ஒன்றுமே இலாத வெற்று நிலையினை யுணர்ந்தான் நேர்ந்த நிகழ்வுகள் நிழலாய்த் தோன்றும் சிலபொழு தாமே முற்றும் தன்னிலை மீண்டான் வீரன் கலைந்ததே அனைத்தும் நெஞ்சுள் கனத்தது வஞ்சம் ஒன்றே 769

ஜின்னாவூர் ஷரிபுத்தீன் C163) மத்யூவைப் பழிதீர்த் தென்றன் மகவுக்கும் மனையாளுக்கும் ஒத்ததாய்க் கொள்வேன் வேறும் ஒன்றிலை வாழ்வில் என்றே சத்தியஞ் செய்தான் அந்தச் சனத்திருந் தொத்த வேளை ஒத்திடும் நாளுக்காக உறக்கம்ஊண் கருக்க லானான்
77O மீண்டனன் மீண்டும் மன்னன் முன்றலில் கடமை கொண்டால் மீண்டிடும் வேளை ஓர்கால் மத்யூவை முகதா கொள்ள மீண்டிடாதவன்றன் ஆவி மேலுல கேற்ற வாகாய் மீண்டில் கொள்ள வென்னும் மனப்பதிவேற்றதாலே
771 உயிருக்கே அஞ்சிக் கைகள் உயர்த்தியே சரணடைந்த கயவனாம் மத்யூ மன்னர் கொலுவறை கொணரப்பட்டான் தயவின்றித் தண்டனைக்குத் தக்கவனான போதும் தயவுடன் பேணப் பட்டான் தலைவனாம் பறங்கியர்க்கே
772 தண்டனைக் குரிய குற்றம் தொகையவன் பேரில் மன்னர் கொண்டேகச் சொன்னார் ஆயுட் கைதியாய்த் தலைநகர்க்கே சென்றனன் காவல் வீரர் சுற்றியே சூழ்ந்திருந்தார் நன்றிதே தருணம் என்றே நண்ணினான் இம்ரானுல்லாஹற்
773 தடுத்தனன் நண்பன் வேண்டா தலைமகன் வெகுளல் கூடும் விடுத்திடு நின்மனத்தின் வேகத்தை நமது மன்னர் கொடுத்தவித் தண்டனைக்குக் குறைவுண்டோ கால மெல்லாம் விடுத்திட மாட்டா வாறே வாழ்வினை முடிப்பா னென்றான்
மூன்றுதான் மாத மென்றன் மகனுக்கு மனைவி கூட மூன்றாறு வயது கொண்ட மலரென்றன் உயிர்போ லானாள் வேண்டாத வாறு வாழ்வை முடித்தனர் மத்யூ வாலே வேண்டுமல் வாறே அன்னான் மரணத்தாலழித லென்றான்
775 அகாலத்தி லிழப்பைத் தாங்காதவன்மன வேதனைக்குத் தகுமொரு சமாதானத்தைச் சொல்லிட மாட்டா னாக மிகுதுயர் கொண்டான் நண்பன் மறுத்துரை வழங்க வொண்ணான் வகைத்ததம் மரண மென்றால் மத்யூவைக் காப்பா ராரோ 776

Page 94
தீரன் திப்பு சுல்தான் காவியம் O164D தடுத்ததன் நண்பன் தன்னைத் தனித்திட வைத்துத் தானே தொடுத்தனன் அடிகள் வேகந் தாங்கின பதங்கள் கையில் எடுத்தகை வாளோ டேகும் எதிரியைத் தொடர்ந்தான் கண்டான் துடித்தது கரமும் மத்யூ சிரந்தனைக் களைத லுக்கே
777 கூடவே சிறிது தூரங் கடந்தனன் காவல் வீரர் நாடியே வருதல் கண்டார் நினைந்தன ரில்லைதப்பே கேடிலை வருவ தெங்கள் கோன்படைத் தலைவ னென்றே நாடினர் நாட்டம் பொய்க்க நடந்தது வேறா கிற்றே
778 கண்ணிமைப் போழ்தினுள்ளே கேணல்”மத் யூ"வின் தேகம் புண்ணுண்டதாகும் வாளின் பாய்சலால் துடிதுடித்தான் கண்முன்னே தாயின் கையில் கவர்ந்தபால் சிசுவை வீசிக் கொன்றவன் செய்கைக் காகக் கொண்டதன் பழியை ஏற்றான்
779 கைகொண்ட வாளால் தன்மேல் கொண்டிட்ட சபதந்தன்னை மெய்ப்பித்தான் இம்ரானுல்லர் மகன்மனை இருவர் பேரில் மெய்க்காப்பு வீரர் காக்க முனைந்திடப் பொழுதில் லாதே கையறுநிலைக்குள்ளானார் கருமமும் முடிந்த போழ்தே
78O கொலையாளி தன்னை வீரர் கைதுசெய் தரசர் முன்னே நிலைகொளச் செய்தார் நீதிநிலைபெற வேண்டு மென்றே பலகாலம் நாட்டுக் காகப் படையணி முதன்மை யேற்றுக் களம்பல கண்ட வீரன் கைதியாய் அவையில் நின்றான்
781 யாரென்ற போதும் நீதி இசைந்திடா பக்கம் சார்ந்தே காரணம் அறிந்தே குற்றம் கொண்டதற்கிணங்கத் தீர்ப்புச் சேர்ந்திட வேண்டு மென்ற சத்தியம் தவறா மன்னர் வேர்கொண்ட காரணத்தை வினவினார் பதிலுங் கொண்டார்
782 மன்னரின் தீர்ப்பைச் சற்றும் மதித்திலை அன்னான் ஆவி தன்பொறுப் பேற்றிருந்த தருமத்தைக் கொன்று செய்த புன்மையை மறுத்தார் மன்னர் பெருஞ்சினங் கொண்டார் நோக்கி வண்மையாய் வார்த்தை கோத்து வீசினார் தலைகுனிந்தான் 783

ஜின்னாவூர் ஷரிபுத்தீன் C165 o முன்னிலை நில்லாய் என்றன் முகத்தினை நோக்காய் உன்றன் வன்மனம் விளங்கச் செய்தாய் வரலாற்றில் களங்கந் தோய்த்தாய் உன்வரை அறிகி லாய்நீ உவந்தனை செங்கோ லேற்க என்னதான் நீயென்றாலும் இலையொரு தயவு மென்றார்
784. குற்றத்தைச் சாட்சியோடு கூறிமெய்ப் பித்த லொன்றே குற்றத்தால் பாதிப் புற்றோர் கடனதன் பின்னர் ஆட்சி குற்றத்திற்கேற்றவாறு கொடுத்திடும் தண்டனைகள் குற்றத்தைக் தடுக்கக் குற்றம் கொள்வதுங் குற்றம் செய்தாய்
785 மண்ணறை போகு மட்டும் மத்யூதன் தவறை எண்ணிக் கண்ணிர்விட் டழவென்றன்னான் குற்றத்தை ஆய்ந்தறிந்தே தண்டனை தந்தோம் செத்துச் செத்தவன் மடிய வென்றாம் விண்டதுன் சபதம் ஆட்சி வகுத்ததை மீறி யென்றார்
786 ஆட்சியைப் பிழைக்க யார்க்கும் ஆளுமை யில்லை நீயோ ஆட்சியைப் பிழைத்தாய் என்ன அதிகாரங் கொண்டாய் எந்த மீட்சியும் இல்லை குற்றம் மிகைத்தது தண்டனைக்குள் ஆட்பட்ட ஒருவராவி அணைத்தது மீற லென்றார்
787 முன்னொரு போழ்தில் இம்ரான் மொழிந்ததாய் அமைச்சர் சொல்வார் “என்வழி பத்து மக்கள் எதிர்வரு காலங் கொண்டால் அன்னவர் தமையும் மன்னர் அடிபணிக் களிப்பேன்" என்றாம் சொன்னதோ அவன்பால் ஏதும் தயைகொள லாகு மென்றே
788 மந்திரி சொன்ன வார்த்தை மனத்தினை உறுத்தினாலும் புந்தியில் அவன்மீதுற்ற பாசமுந் துலங்கினாலும் முந்திய பணிகள் கண்முன் முகைவிரித் திட்ட போதும் தந்திலார் சிறிதும் உள்ளத்தாட்சண்யம் அவன்றன் மீதே
789

Page 95
தீரன் திப்பு சுல்தான் காவியம் O1660
வெற்றி வாகையுஞ் சோக மேகமும்
பெருவாகை கொண்டிடினும் பாழ்செருக்குப்
பற்றாத மன்னருக்குப் பெருத்த சோகம் உரித்தாகிப் போகுமொரு சேதி தன்னை
உடன்கொணர்ந்தார் பூர்ணையா அந்நாள் போழ்தே ஒருக்காலும் வருகைதரார் அகாலந் தன்னில்
ஒன்றியதாம் வேதனைதன் முகத்தில் தோன்ற வதிபுலத்துச் சேதியதாம் வாழ்வில் திப்பு
வாழ்வுவரை மறக்காத நிகழ்வாம் அஃதே
79C) மன்னவருக் கருகாமை வந்து நின்று
வாழ்த்துரைத்தார் பூர்ணையா சிறிய போழ்தின் பின்னவரின் மொழியினிலே வேத னையைப்
பிழிந்தெடுத்துக் குழைத்ததுபோல் பேசலானார் “என்னருமை மைந்ததிப்பு நெஞ்சத்தைநீர்
இரும்பாக்கிக் கொள்கவினி என்நா வால்நான் உன்னிடத்தில் சொல்மொழியால் உருகிப் போவீர்
உரைக்கமனம் தவித்தாலும் இயலாதுற்றேன்”
791 பீடிகையோ பலமாக இருத்தல் கண்டு
பண்பட்ட உளமெனிலும் பட்டென் றேயோர் கோடுதுயர் வடிவினிலே நெஞ்சில் மின்னக்
கவனமெலா மொன்றாக்கிச் செவிமடுக்க வாடாத மலரொன்று விதிவசத்தால்
வாடியதை யெடுத்துரைத்தார் பூரணையா கோடான கோடியிடி தலையில் வீழ்ந்த
கொடுமைதனைத் திப்படைந்தார் சிலையாய்ப் போனார்
792 “பிரசவத்தின் போதுன்றன் மனையாள் தெய்வப்
பதியடைந்தாள்” என்றமொழி நாரா சம்போல் சொருகியது செவிப்பறையில் சொல்ல வொண்ணாத்
துயர்பலத்தைக் கருக்கியபோல் தளர்ச்சி கண்டார் அருகிருந்த இருக்கையொன்றில் தனையிருத்தி
அடக்கமுயன்றார்கவலை யதனில் தோற்றார் பெருக்கெடுக்கும் கண்ணிரைப் புதைத்தார் கண்ணுள்
பிறர்காணா வகையினிலே விம்மி னாரே 793

ஜின்னவூர் லுரியுத்தீன் C167 lo
காரிருளால் உடல்மறைத்தே இரவு தூங்கக்
கண்மணிகள் இமைப்போர்வை வேண்டா வென்றோ உருகுகின்ற மெழுகுவர்த்திச் சுடரை நீள
உணர்ச்சியற்ற சிலைவிழிபோல் உற்று நோக்கும் ஒருவருமே அருகிலிலாத் தனிமை கொண்டே
உடனிருந்த ஒவ்வொருநாள் போதினையும் உருவகித்தார் மனத்திரையில் றுகையா பேகம்
உணர்வோடும் நரம்புகளில் உறைந்திட்டாரே
794
இளவயதில் தம்பியொடு பகைவர்க் கஞ்சி
எவருமறியாதவோரு இடத்தில் தங்கக் களவாகப் பெற்றோரும் அறியா வாறு
காரிருளில் காட்டுவழிகடந்து வந்தே பழவகையும் உண்ணரொட்டித் துண்டும் சேர்த்துப் பரிமாறிப் பசிதீர்த்த பாங்கு நெஞ்சில் நிழலாடறுகையாவின் நெஞ்சு ரத்தை
நினைந்ததுள்ளம் கண்மணிகள் நீருளாடும்
795 பெரும்போரில் வெற்றிகண்டு வாகை சூடிப்
பரிமீது பவனிவரும் போதா மோர்கால் தெருவோரச் சாளரத்தினூடே தம்மின்
தோழியரோ டொன்றிணைந்து நகைப்பூப் பூத்தே அரும்பியிதழ் சிலவிரிந்து தன்னை யொத்த
அழகுமலர்தனையாருங் கானா வாறே எறிந்ததனை எண்ணியதும் விழியுள் கோத்த
இருதுளிகள் கன்னத்தைத் தொட்டே வீழும்
796
திருமணநாள் பாங்கியர்கள் கழச் செம்பொற்
சிலையாக நாப்பண்தன் தலையைத் தாழ்த்திப் பெருகிவரும் நாணத்தைப் புதைக்க வுற்ற
பாடதனை மீண்டொருகால் மீட்டுப் பார்த்தார் மருவவிடை பற்றியதும் மெய்யோ டொன்றி மார்போடு மார்பாகச் சரிந்த பாங்கும் நெருடியது நெஞ்சத்தை நினைந்த போது
நயனங்கள் மடையொடித்துப் பொழிய லாகும்
Z97

Page 96
தீரன் திப்பு சுல்தான் காவியம் O1680
முன்னரிரு குழந்தைகளைப் பெற்றெடுத்து
மகிழ்ச்சியிலே வாழ்ந்திருந்த நல்ல நாட்கள் கண்முன்னே காட்சிகளாய்த் தோன்று மாப்போல்
கற்பனையில் நிழலாட நுகையா பேகம் பெண்மைக்கோர் இலக்கணமாய்த் தூய தாயாய்ப்
பரிணமித்தார் என்பதற்குச் சாட்சி கூறும் விண்ணவனே தந்தகொடை வாங்கிக் கொண்டான் விதிவகுப்போன் விதித்ததென விம்மி னாரே
தனித்திருந்தே திருமறையை ஒதினாரத்
தயாபரனைக் கையேந்திப் பிராத்தித்தார்"நீ தனித்தவன்யார் தயவினையும் வேண்டா துற்றோன் தனித்துன்பால் வந்துற்றார் றுகைய்யா பேகம் தனியுற்றேன் நானுன்னைப் பணிந்து வேண்டித்
தலைபணிந்தேன் வல்லவனே சொர்க்க வாழ்வைக் கனிந்திடுவாய் காருண்யா கருணையாளா
காப்பவனே" என்றுருகி வேண்டினாரே.
798
799 மீண்டுமொரு திருமணம்
நீண்டநாள் தனித்திருத்தல் நன்றன்றே என்று மூத்தோர் வேண்டுமோர் திருமணத்தை வரித்திடல் என்றார் திப்பு வேண்டாமே என்று ரைத்தும் விடுவதாயில்லை யன்னார் ஆண்டவன் விதித்த தென்ன அறிகிலா ரெவரும் அன்றே 8OO
தந்தையின் தாயு ரைத்தார் தாயிலாக் குழந்தையர்க்குச் சொந்தமொன் றமைய வேண்டும் தாயென சிறுவ ரன்னார் சிந்தையிலுற்ற சோகம் தணிந்திட வேண்டு மாயின் தந்தைநீ அன்னவர்க்குத் தேர்ந்தொரு தாய்கொள்ளென்றார்
8O1

ஜின்னாவூர் லுரியுத்தீன் C169 o
இளமையில் மனையிழந்த இருள்மையுள் இருக்குங் காலை பழைமையின் நினைவு நெஞ்சைப் பிழிந்தெடுத் துருகச் செய்யும் இழந்ததைப் பெறமாட் டாத இழப்பது என்பதாலே பிழையிலை பிறிதொன் றேற்றல் பிறப்பது நலமா மென்றார்
8O2 மூப்பெனை அணுகிற்றுன்றன் மாதாவும் பிணிக்குள் ளானார் காப்பதுண் கடனா மன்றோ கவலுறா திருக்க நாங்கள் காப்பவன் கருணை யாளன் காரணம் புரிந்தோன் செய்கை வேர்ப்படின் நாம தற்கு வழிப்படல் முறையா மென்றார்
8O3
காரணம் பலவெடுத்துக் கூறினும் பற்ற மாட்டாக் காரணத்தாலே மீண்டுங் கூறுவார் “என்னுள் முற்றும் வேரூன்றிப் போனாள் றுகையா பேகம்நான் என்தான் செய்வேன் தீராத சோக மென்னைத் தொற்றிற்றே" என்றார் திப்பு
8O4. தனித்துநீ இருந்தாலின்னுந் தொடர்ந்திடுஞ் சோகம் மாற்றாய் உனக்கென மற்றோருள்ளம் ஒன்றிடில் கவலை மாயும் தனக்குளோர் சோகந்தன்னைத் தாங்கிடில் செங்கோல் சாயும் மனக்கவல் சிந்தனைக்கு மாபெரும் பகையா மென்றார்
8O5 சிந்தனைத் தெளிவிலாது செய்வதாம் அனைத்தும் தீதை வந்திடச் செய்யும் ஆற்றும் வினையெலாம் பிழைபால் ஒன்றும் புந்திகூர்ந்திதற்கா யேனும் பணியென்றன் வார்த்தை பற்று மந்திரம் செபிப்ப லொப்ப வார்த்தைக்கல் வீசினாரே
8O6 ஒயாதே ஒவ்வொன்றாக ஒதியும் கேளார் செங்கோல் சாயுமென் னுரையொன் றேதன் செவியினுட் புக்கித் தீய்க்கச் சாய்ந்தது மனத்துள்ளூன்றித் தர்க்கித்த பிடிவாதம்தாய் சார்ந்திடப் பதிலு மொன்று தெளிந்தது தாய்ம கிழ்ந்தார்
8O7 எண்ணுவ போல நீங்கள் இயற்றுக இறைவன் நாட்டம் திண்ணமாய் அதுவென்றாகில் தொடரட்டும் முயற்சி உங்கள் எண்ணமும் அதுதாம் நானென் எதிர்ப்பினை இயம்பிட்டாலும் பண்ணவன் தீர்ப்பை மீறும் படியென்று மொன்றுண் டாமோ 808

Page 97
தீரன் திப்பு சுல்தான்காவியம் C170
விரும்பிய வாறு பெற்ற வார்த்தையால் தந்தை யின்தாய் பொருந்தினார் மகிழ்வின் உச்சப் படிதனில் பொருத்தமாகப் பொருந்திய தோர்வரத்தைப் பேரரின் கைகள் பற்றப்
பொருந்தினார் தாயும் தாயைப் பெற்றனர் திப்பின் செல்வர்
809
எண்ணிய போலோர் பெண்ணாள் இசைந்தனள் இளமை கொஞ்சும் பெண்ணவள் திப்பு வுக்குப் பொருந்துவாறமைந்த பாகம் பெண்மையின் பாங்கும் பண்பின் பிறப்புமென்றாய்க்க லந்த தன்மையில் “சயீதா பேகம்" திப்புவின் கரங்கை கொண்டாள்
81Ο இளமையில் நெஞ்சு றைந்த ஏந்திளை றுகையா பேகம் முழுமையாய் நிலைத்திருக்க மற்றொன்றை நாடாப் போழ்து இளமையும் அறிவுங் கொண்டோர் இனியவள் வாழ்வை ஈந்தாள்
தொழுதிடற் குரியோன் செய்யை தனிமையைத் தவிர்ப்பதற்கே
811
முதல்மனை பெற்றசெல்வப் புத்திரர் இருவருக்கும் பதிலவர் தாய்க்குத் தாயாய் பிறப்பெடுத் திருப்ப தொப்ப வதிபுலத் தமைந்தார் சயீதா பேகமும் மற்றுள்ளோர்க்கும்
புதியவ ளல்லாள் போன்றே பற்றொடு பொருந்தினாளே
812
தாயன்பு மக்கள் கொள்ளத் தக்கதாய் மனையா ளொன்ற நேயமும் பெருகிற்றில்லம் நிறைந்தது முன்போ லண்பால் நாயகர் கிழத்தியன்பால் நனைந்திட நெகிழ்ந்தா ருள்ளம்
சேயிழைப் பண்பு வென்ற சிலாக்கியம் அதுவா மன்றோ
813
திப்புவின் வாழ்வில் மற்றோர் திருப்பமாம் சயீதா பேகம் ஒப்புர ஒழுகி நாதர் உடன்பாதி போலு மானார் செப்பிடில் அரச ராட்சி தவிர்ந்தஇல் சுமைக ளெல்லாம் ஒப்பினா ரவரே மக்கள் உடன்படு மனைத்தும் ஏற்றார்
814

ஜின்னாவூர் டிரிபுத்தீன் C1710
மதங்களின் காவலர்
திப்புசுல்தான் மதவெறியர் கொடுமைக் காரர்
செய்ததெல்லாம் கொடுமைகளே மதச்சார் புற்றுத் தப்பிதங்கள் செய்தார்தம் இனத்தைச் சாரார்
தமைவலிந்து மதமாற்றம் செய்ய வைத்தார் கப்பியநெஞ்சழலாலே நாட்டி லுற்ற
கோயில்கள் தமையழித்தே உடைமை யெல்லாம் திப்புகொள்ளை யிட்டாரென்றுண்மை கொன்று
சொல்லிவைத்தார் வெள்ளையர்கள் நம்பும் வாறே
815 முற்றிலும்பொய் யானவெல்லாம் மனங்க றுத்தோர்
மொழிந்தவையே எனப்பின்னோர் ஆய்வு செய்து பொற்புறுநல் லுண்மைகளை வெளிக்கொணர்ந்தார்
பேதமறப் பிறரறியக் கூறுகின்றார் அற்புதமாய் மக்களினை மனத்தால் வென்றே
அரசோச்சி அந்நியரைக் கிறங்கடித்த கொற்றவரை பழியிருந்து காக்க வென்றோர்
பண்புடைய ஆய்வறிஞர் புறப்பட்டாரே
816 மதப்பற்று மிக்கவரே திப்பு இஸ்லாம்
மதவழியில் வாழ்ந்தவர்தான் பிசகில் லாதே மதங்களிடை நல்லிணக்கம் வேண்டும் என்னும்
முறைமையிலே காலூன்றி வலிமை பெற்ற மதக்கொள்கை கொண்டிருந்தார் அனைத்துத் தெய்வ
வழிபாட்டுத் தலங்களையும் மதித்தார் எல்லா மதத்தலங்கள் தமக்குமவர் வாரி வாரி
மானியங்கள் தந்தாரெனுஞ் சான்றுண் டாமே
817 தொழுவதற்குப் பள்ளிகளும் மார்க்கப் பாடந்
தேர்ந்தறியப் பயில்கூடம் அமைத்த தொப்ப வழுவாது கோயில்களும் மடங்கள் தாமும்
வழிபடவும் பயனுறவும் தோற்று வித்தார்

Page 98
தீரன் தியு சுல்தான் காவியம் O172)
ஒழுகுவது எம்மதந்தான் என்றிட் டாலும்
ஒருதடையும் இருந்ததில்லை திப்பு ஆட்சி முழுஉரிமை தந்திருந்ததாகும் யார்க்கும்
முரணில்லை மதவுரிமை பொதுவொன்றாமே
818
வழிபாட்டுத் தலங்களிலே தொழுகை பூசை
வழக்கம்போல் நடைபெறுதல் தவிர்த்த லாகா ஒழுக்கத்தை நிலைநிறுத்த மார்க்கப் பக்தி
ஒன்றிடவும் வேண்டும்தம் மக்கள் வாழ்வில் துளிப்பருக்கை அளவெனிலும் மதக்கு ரோதஞ்
சேர்ந்தவராய் இருத்தலினைக் காண மாட்டார் ஒழுக்கத்தின் சீலரவர் ஒருமைப் பாட்டை
உறுத்தியவோர் பண்பாளர் ஆய்ந்தோர் கூற்றே
819 பலாத்கார மதமாற்றம் செய்தல் பாவம்
பழிகொள்ளல் வேண்டாவென்னிறைவன் ஆணை பலமாகக் கைக்கொண்ட பண்பு மிக்கார்
பிறருரிமை மதித்தவரே திப்பு சுல்தான் நிலம்படைத்தோன் சொல்லெவர்க்கெம் மார்க்க மாமோ
நோர்க்கட்டும் நின்மார்க்கம் நினக்குப் போல நலமாகும் அவர்மார்க்கம் அவர்க்காம் என்ற
நீதிபற்றி இறுதிவரை நிலைத்திருந்தார்
சீரங்கப் பட்டினத்தின் நிலவமைப்பில்
தொன்மைமிகு வழிபாட்டுத்தலம தாகச் சீரங்கநாதரருக்கா யான கோயில்
சீர்பெற்றுத் திகழ்கிறது அதனோர் பாலாய் ஒரத்தில் சிறுதொலைவில் திப்பு சுல்தான்
உறைபதியும் ஒன்றியிருந்தததுவே நாளும் குரல்கேட்யார் கோயில்மணி இன்னி சைக்க
கடந்ததொரு நாள்பொழுது கவலுற்றாரே 82
82O

திண்னாவூர் ஷரியுத்தீன் C173o
தக்காரை வரவழைத்தார் கோயிற் பூசைத்
தாமதத்தின் காரணத்தைத் தேர்ந்தறிந்தார் ஒக்காத செயலிஃதென்றுறுத்திச் சொல்லி
உண்டான குறைகளைந்து ஆணை போன்று இக்கால்தொட் டோர்பொழுதும் பூசை நேரம்
இடம்மாறக் கூடாதென்றுறுதி பெற்று மக்களுளங் கவர்ந்தவராம் திப்பு சுல்தான்
மதவெறியர் என்றுரைப்போர் மதிகெட் டோரே
822 சர்வமதநல்லிணக்கக் கொள்கையோடு
சரிசமமாம் நீதியின்முன் அனைபேரும்என் தர்மத்தை நிலைநிறுத்தத் திப்பு செய்த
தீர்ப்பொன்றைப் பேசிடுதல் சிறப்புடைத்தாம் வர்மத்தின் காரணமாய் வந்த தஃது
வினைக்கெவரோ காரணராம் அவர்க்கு மாறாய்த் தர்மத்தின் காவலென விளைந்த தீர்ப்புத்
தொடரஇன்றும் பொருந்துவது சீர்மை யாலே
823 “பீருலதா” என்னுமொரு முஸ்லிம் தன்னைப்
பின்பற்றுஞ் சீடர்கள் வீதி யொன்றில் ஆரோகணித்திந்துத் தெய்வம் தேரில்
அலங்கார ஊர்வலத்தில் வருதல் கண்டு சீர்கெட்டு நையாண்டி செய்தார் மக்கள்
சேர்ந்தொன்றி நையப்புடைத்தனுப்பினார்கள் நேரிட்ட பெருந்தவறைக் கேட்டு சுல்தான்
நொந்துள்ளம் வருந்திநீதிக் கழைப்பும் செய்தார்
824
சீடர்கள் தாக்குண்ட செய்தி கேட்டு
சீற்றமுற்றார் பீருலதா "முஸ்லிம் ஆட்சி
பீடுற்றுப் போனதுவோ தம்மினத்தோர்
பாதுகாப்புக் கிடமற்ற பவந்தா னென்னே!

Page 99
தீரன் திப்பு சுல்தான் காவியம் O1740
நாடுகடந்தேகிடுவேன் நானென்றச்சம்
நிலைபெறவென்றோதினரே கேட்டு சுல்தான் சோடைபெறா நீதிபக்கஞ் சாரா நீங்கள்
செல்வதென முடிவுகொண்டால் செய்க வென்றார்
825 பள்ளிவாசல் தலங்களுக்கு மட்டு மன்றிப்
பங்குசரியாய்க்கோயில் தலங்களுக்கும் அள்ளியள்ளிக் கொடுத்தாரே திப்பு சுல்தான்
அளவிடற்கும் இயலாதே அந்நாட் போழ்து உள்நாட்டுச் சிவத்தலமாம் நஞ்சுண் டேஸ்வர்”
உறைபதியென்றோதுகின்ற திருத்த லத்தின் உள்ளுறையப் பச்சைவண்ண லிங்க மொன்றை
உவந்தளித்தார் இன்றுமஃது உள்ள தாங்கே
826 “பாதுஷ்ஷா லிங்கம்"எனப் பேர தற்குப்
பேர்சொல்வார் "மரகதத்து லிங்கம்” என்றும் பாதுகாத்து வைத்துள்ளார் மேல்கோட்டையில்
பரிசளித்த முரசத்தைக் கோயில் தன்னில் ஒதிடுங்கால் இன்னுமின்னும் உண்டாம் இங்கு
ஓதியதே போதுமவர் மதக்கொள் கைக்கும் நீதிவழு வாதநெறி நடைமுறைக்கும்
நற்சான்றாய்ப் பதச்சோறாக் கூறல் கொண்டேன்
827 மதப்பற்று மிக்கவராய் வாழ்ந்தார் திப்பு
முற்றுமிறை வழிநடந்தார் இஸ்லாம் மார்க்க விதிமுறையில் நம்பிக்கை கொண்டதாலே
வாழ்க்கையையும் தானமைத்து மற்று மெல்லா மதத்தினையும் மதித்தவர்தம் மதங்கள் வாழ
மட்டில்லா உதவிகளுஞ் செய்த நல்லார் மதவெறியர் என்றுரைப்பதாகில் அஃது
மதவெறியர் புகலுகின்ற வசைச்சொல் தாமே 828

ஜின்னாவூர் ஷரிபுத்தீன் C1750 ஐவேளைத் தொழுகையிலும் அவரே முன்னர்
ஆதியிறை பள்ளியினை அலங்க ரிப்பார் வையத்துநாயகனை வழுத்தா தெஃதும்
வழிதொடர வில்லையவர் வாழ்வில் முற்றும் செய்வதெல்லாம் இறைபணியே என்பதாலே தமதாட்சி"இறையாட்சி என்பார் திப்பு துய்யமனங்கொண்டஅட்சிச் செம்மல் வீரத்
தியாகியின ஒற்றுமைக்குத் தொண்டு செய்தோன்
829 திப்பு சுல்தானின் சிருங்கேரி மடத் தொடர்புகள்
ஆதிசங்கரர்தொட்டுத் தொடக்கி வைத்த
தான "சிருங்கேரிமடம்” மராட்டி யர்தம் தீதுநெறிப் படைத்தலைவன் “பரசுராமன்
செய்வினையால் கொள்ளையிடப் பட்ட போழ்து சேதமுற்ற திருத்தலத்தைச் சீர்மை செய்யத்
தொகைப்பணமும் பொருட்தொகையும் ஈடு செய்தார் மீதியெனக் குறையிருப்பின் அதுவுந் தீர்க்க
முன்னின்றார் மதப்பொதுமை கொண்ட திப்பு
83O
பூனணிகள் ஆறுபத்தின் இலட்சம் தேறும்
பரியோடு பல்லக்கு யானை வேறாம் காணுமிடம் பிராமணரைக் கொன்றுந் தீர்த்தான்
கோயிற்சிலை தனையும்மண் புரட்டினான்எண் சானுடலைக் காக்கமடத் தலைவர் ஒடித்
தப்பித்துத் திப்புமன்னர் உதவி நாட வேணுமெனும் அத்தனையும் தருவதாக
வாக்களித்தார் திப்பனைத்தும் வழங்கினாரே
831

Page 100
தீரன் தியு சுல்தான் காவியம் O1760
பதிலுக்காய் மடத்தலைவர் பரிசாய்ச் சால்வை
பிரசாதம் போன்றவற்றை அனுப்பி வைக்க முதலளித்தே உதவியுடன் இன்னுங் கூட்டி
மனமுவந்து யானையொன்றுஞ் சிலையை -
மீண்டும் புதிதாகப் பிரதிட்டை செய்ய ஹோமப்
பணிக்கான செலவுதந்து பிறரால் தீங்கின் கதிதோன்றா வாறுபாது காப்புச் செய்யக்
காவலரும் வந்துறைந்தார் ஆணையேற்றே
832
தொடர்புகளைக் கொண்டிருந்தார் மடத்த லைவர்
சங்கராச் சார்யருடன் முப்படுது) ஒலை உடனின்றும் உண்டாங்கே உண்மை கூற
உதவிபல தருவதற்கும் உவத்தல் வேண்டிக் கடிதங்கள் திப்புசுல்தான் முத்திரையுங்
கொண்டிருந்ததவையனைத்தும் மதச்சார் பின்மை மடத்திலவர் கொண்டிருந்த கெளரவத்தை
மொழிவனவாம் பரந்தமனப் பாங்குங் காட்டும்
833
கடிதங்கள் அத்தனையும் வழமை மாறிக்
கொண்டிருந்ததாகுமதன் தொடக்கந் தன்னில் உடைத்தாகும் மடத்தினுடைத் தலைவர் நாமம்
உரியவவர் சிறப்புரைக்கும் பெயர்கள் தாங்கி இடைநடுவில் சேதியின்பின் இறுதியாக
எழுதியவர் பெயரிருக்கும் திப்பு நாமம் முடித்திருக்கும் "திப்பு"வென்றாம் புகழ்ச்செல் லற்றே
மதத்தலைவர் தமக்களிக்கும் மரியா தைக்காம்
834

ஜின்னாவூர் ஷரியத்தின் C177 o சிவன் கோயிலும் சுல்தானின் ஜீவகாருண்யமும்
குண்டடி யுண்ட தோர்கால் சுல்தானின் யானை “ஷெர்ஷாஹற்” உண்டது போரின் போதாம் ஊறுசற்றதிகமாகும் கண்டதும் சுல்தான் மிக்க கவலுற்றார் வேண்டு மாறு கொண்டது பரிகாரங்கள் குணங்கான நாளாகிற்றே
835 காரணம் புரியா துற்றார் கைவாகுப் பண்டிதர்கள் தீராத நிலைமை கண்டு செயலற்றுப் போனார் அன்னார் கூறிட வேண்டும் இஃதைக் காரியம் விஞ்சு முன்னர் பூரண சுகத்தைக் காணப் புதுவழி தேடு தற்கே
836 பிழைத்திருந்தாலும் கொண்ட புண்ணினால் வருந்து மஃதை அழைத்துமே வந்தார் கண்டே அகம்மிக வருத்த முற்று முழுச்சுகங் காணற் குண்டோ முறைமையும் என்றே கேட்ப அழுத்தமாயுரைத்தார் உண்டாம் ஆவன செய்வோ மென்றே
837 "பூர்ணய்யாவே வார்த்தை புகன்றவர் எதுவா மென்று காரியமாக வேண்டுங் காரணத்தாலே கேட்க ஊர்ச்சிவன் கோயில் நீற்றை உறைவடு மீது தூவின் பூரண சுகத்தைக் காணப் போதுமென்றுரையளித்தார்
838 பூரணை நாளிற் சென்று பூசாரி யிடத்திற் சொன்னால் நீறினை அவரே தூவி நல்லன செய்வாரென்ன காரணன் ஏகனென்னுங் கருத்துளத் திருந்திட்டாலும் சேரட்டும் மருந்தாய் நீறு செய்கவென்றியம்பிட் டாரே
839 கோபால்ராவ் என்றார் திப்பு கடுகியே சுல்தான் என்று மேவிடு பணிவு மேனி முற்றிலும் படியச் சொல்ல போவிர்நீர் பாகனோடு புரிவன புரிவீர் என்ன நாவினில் வார்த்தை முற்றும் நடுவினிலவர கன்றார்
84O புண்ணுக்கு நீறு கண்ட பரிகாரமாகக் காய்ந்து கண்ணுறத் தோன்றா வாறு கோலமுற்றிருத்தல் கண்டு மண்ணாளும் தலைவன் மிக்க மகிழ்ந்ததற் கீடாய் அன்னார் எண்ணத்தில் மகிழ்வு விஞ்ச ஏற்றதோர் முடிவு கொண்டார் 841

Page 101
தீரன் திப்பு சுல்தான் காவியம் O1780
சிவன்கோயில் நீறு தந்த சுகமென எண்ணு வாரின் செவியினித்திடுமாம் வண்ணம் திப்புதன் முடிவுரைத்தார் எவருமே எண்ணா வாறாய் இட்டவோர் ஆணை இன்றே சிவன்கோயில் நிறுவ வேண்டும் தருமத்தைச் செய்க வென்றே
842 சலவைக்கல் கொண்டே உங்கள் தெய்வத்தலத்தைக் கட்ட எலாமுமே கொள்க வென்றே ஏவிடப்பூர்ணய் யாவும் செலவினைக் கருத்தில் கொள்ளாத்திப்புவின் ஆணை பற்றிக் கலைச்செறிவோடு கோயில் தலத்தினைக் கட்டச் செய்தார்
843
பளிங்குக்கல் கோயிலோடு பன்னிரு ஏக்கர் பூமி வளத்தையுந் தந்தார் மன்னர் வழிபாட்டுச் செலவனைத்தும் வழங்கவும் பணித்தார் வேண்டும் வகையெலாம் நன்மை கொள்ள தொழும்புல மஃதின் காப்போர் தமக்குரை தாமுஞ் செய்தார்
84.4 சிவன்கோயில் கட்டி மக்கள் தவவழிபாடு செய்ய உவந்ததால் ஊரில் சைவர் உவகையால் மன்னருக்கும் உவந்துநல் வரவேற் பொன்றை ஊர்ப்பொதுத் தலத்தில் செய்தார் உவந்தாங்கே யுற்ற மன்னர் உபதேசம் சரிதமாகும்
845
வேறு
என்னுடை மக்காள் என்னுடை மக்காள்! இன்றுநாள் என்றன் இதயம் மகிழ்வால் பொங்கியே திளைக்கும் பாக்கியம் பெற்றது உங்களின் மகிழ்வே என்மகிழ் வாகும் உலகினை ஆளும் ஒருவனாம் இறைவன் நலமெலாம் நல்கும் நாயகனவனாம் புகழெலா மிறைக்கே புகழெலா மிறைக்கே அகமது நெகிழ அவன்புகழோதுவாம்
கோயிலென் றாகிலும் பள்ளியென்றாகிலும் தூயவனிறைவனைத் தொழுந்தலமாகும் ஒன்றே தெய்வம் ஒன்றே தெய்வம்
என்றே கொள்வோம் ஏற்றமும் பெறுவோம்

ஜின்னாவூர் லுரிபுத்தீன் C 179כ
இந்துவும் முஸ்லிமும் என்னுயிர் கூறுகள் இந்திய ராம்நாம் எலாருநா மொன்றே மதங்கள் இரண்டுதாம் மானிடம் ஒன்றே இதம்பெற இரண்டும் இணைந்தேக வேண்டும்
ஒன்றொடொன்றும் ஒன்றுதல் போலும் ஒன்றுக ஒன்றி ஒற்றுமை கொள்வீர் கோயிலும் பள்ளி வாயிலும் என்றும் தூயதாய்ப் பாலனம் பெற்றிட வேண்டும் மனித உணர்வினை மதித்திடுவீர்கள் இனமத வேற்றுமை இலாதொழித் திடுவீர் பொதுவா மனைத்தும் பாகுபா டில்லை
இதுவே ஆட்சியின் அடிப்படை அறிவீர்
மக்கள் ஒன்றுதல் போலவெம் மன்னரும் தக்கவைத் துறவைத் தொடர்ந்திட வேண்டும் இந்திய மண்ணின் எல்லையில் பெரும்புலம் வந்தவர் கைவசம் வந்ததேன் நம்மவர் ஒற்றுமை யற்ற இழிநிலை யாற்றான் முற்றையும் ஒருகால் மாற்றான் கொள்வான் இந்நிலை தொடர்ந்தால் எளிதினில் அந்நிலை வந்திடு மென்பதை மறுப்பதற்கில்லை
வெள்ளைய ரெம்முள் விரவியே மண்ணைக் கொள்ள நினைக்கும் கொள்கையு மறிவேன் என்னுயிரென்னுள் இருக்கும் வரைக்கும் அந்நிலை வரநான் அனுமதிக் கில்லேன் சபதமாயிதனைக் கொண்டுளேன் அன்றேல் அபத்தம் என்றன் ஆட்சிக் கதுவாம்

Page 102
தீரன் திப்பு சுல்தான் காவியம் O180
"உலகில் நூறாய் ஆண்டுகள் ஆடுபோல் உலவலில் மேலாம் ஒருநாள் புலிபோல் வாழ்வது வாகும்” வரலாறுரைக்கும் கீழ்மையிலிருந்தெமைக் காப்பது கடனாம்
புதியதோர் உலகைப் படைத்தே எம்மோர் விதிதனை மாற்ற விளைகுவோம் வாரீர் என்றே மன்னர் இயம்பிட மக்கள் நன்றே நாங்களும் நும்வழி தொடர்வோம் என்றே யொன்றி இயம்பினர் வாழ்த்தொலி எண்திசை பரந்தே இசைத்தது “மன்னர் வாழ்கவே வாழ்க வாழியே வாழ்க வாழ்கவே” யென்று விளம்பினர் மகிழ்ந்தே
846 வணக்கத்தல மான்யங்களும் நன்கொடைகளும்
தொண்ணுறு சதவிகிதம் 'ஹிந்து மக்கள்
சேர்ந்திருந்தார் முஸ்லிம்கள் பத்து வீதம் முன்னைநாள் மைகரின் மனுத்தொகையில்
மதபேதம் இலாதிருந்த காலம் அஃதாம் மன்னரொரு முஸ்லிம்மாய் இருந்த போழ்தும்
முதன்மைதர வில்லையவர் தம்மினோர்க்கு என்னசத விகிதமதோ ஏற்றவாறே
எலாமுமிருந்ததுவதற்குச் சான்றுண் டாமே
847 ஓராண்டு மானியமாய் தேவஸ்த் தான
ஒதுக்கீடு நூறுதவிர் இரண்டி லட்சம் சேருமிரு நூறுநூறு வராக னாகும்
தனித்தேதான் பிராமணரின் மடங்களுக்கு தேறியது ஈர்பத்து ஆயிரங்கள்
தாம்முஸ்லிம் மதத்தலங்கள் சார்பிலாகும் காரணமோ நல்லிணக்கம் நீதி காத்தல்
காண்டதிவை கணக்கேட்டின் பதிவி லாகும் 848

ஜின்னாவூர் லுரியுத்தீன் C181)
சிலைவணக்கத் தட்டுக்கள் தந்திருந்தார்
தங்கவெள்ளி உலோகம்"நர சிம்ம சாமித் தலம்மேலைக் கோட்டையதாம் பன்னிர் ஆனை
சேர்ந்திருந்த ததனோடே இரத்தினத்தால் விலையுயர்ந்த தட்டுக்கள் தந்தார் கோயில்
வாழ்கந்தேஸ் வரஸ்வாமி பூசை”க் கென்றே நலம்பெற்றதாகுமது போல தட்டு
"நாராயனஸ் வரஸ்வாமித் தலமு மாமே.
849
பத்தாயிரம்வராகன் புண்ய தானம்
புனிதகாஞ்சிக் கோயிலுக்கும் இரண்டு ஊர்கள் சொத்தாகும் புட்பகிரி மடத்தினுக்குத்
திப்புசுல்தான் தந்தவைகள் தர்ம மாக அத்துடனே சிருங்கேரி மடத்துக் காக
அளித்திருந்தார் தந்தைஹைதர் சனதுமூன்று அதுவழியே மூபத்துச் சனது மைந்தர்
அன்பளிப்பாம் இன்னுமவை ஆங்குண் டாமே
85O தான்விரும்பிக் கோயில்களைத் தாப ரிக்கத்
தக்கனவாய்ப் போதுமென்ற அளவில் தந்த மானியங்கள் பற்றியதாம் அரசு ஆணை
மைகரின் நூலகத்தில் இன்னு முண்டு ஞானவழி ஜகத்குருவாம் சங்கரர்க்கெண்டு)
எழுதிவைத்த ஒலைகளும் அவற்றில் சேரும் போனாலும் மண்துறந்தே இன்னுங் கூடப்
பெயர்சொல்லத் தர்மங்கள் நிலைத்து நிற்கும்
851

Page 103
தீரன் திப்பு சுல்தான்காவியம் O182D
போத்துக்கியக் கோயில்
வணங்குதற்குக் கோயிலொன்று தம்ம வர்க்கு
வேண்டுகின்ற நிலைமைதனை எடுத்துரைத்தே இணங்கும்படி வேண்டிநின்றார் போர்த்துக் கேயர்
ஏதுமொரு மறுப்புமின்றித் திப்பு சுல்தான் இணங்கியதோ டதனைத்தன் பொறுப்பி லேற்றும்
இடமொதுக்கி அமைப்பதற்கும் உதவி செய்தார் இனமதத்தின் பேதமற்ற கொள்கை கொண்டார்
இணங்கியதில் வியப்பில்லை எடுத்துக் காட்டே
852 சென்னையிலே இருந்து"பாதர் மர்டொக்" என்பார்
திப்பரசர் தமைக்கான வேண்டு மென்று மன்னர்தம் முதலமைச்சர் "பூர்ணைய் யாவின்
முகதாவில் வேண்டிநிற்க அவரும் ஏற்றுக் தன்னோடே அழைத்தவரைத் தரிசித் தற்குத் தக்கவழி செய்திட்டார் சந்திப் பின்கால் முன்வைத்தார் வந்ததம்மின் நோக்கந் தன்னை
மிகஆய்தோர் முடிவினுக்கு வந்திட்டாரே 853
மக்களுக்குக் கல்விதனைப் போதிக் கின்ற
முயற்சியிலே வேரூன்றி கல்விக் கூடம் திக்கனைத்தும் தொடங்குகின்ற பணிகொண்டுள்ளேன்
சென்னையிலே தொடங்கியுள்ளேன் தங்கள் -
LD6Odreoofso அக்கருமம் நிறைவேறின் பலனுண் டென்றே
அறிவுவளர்த் திடும்பணிக்காய் உதவி வேண்ட மிக்கபெரும் கொடையென்ற போதும் மன்னர்
முகத்திலொரு வினாத்துலங்க தந்தை சொல்வார்
854

ஜின்னாவூர் ஷரியத்தீன் C183 o
நிச்சயமாய் மதம்பரப்பும் நோக்க மல்ல
நம்புங்கள் எனையென்று நயந்து கூற அச்சத்தைக் கொன்றுமன்னர் அனுமதித்தார்
அனைத்துமதற்கானவழி செய்ய ஆனை அச்சணமே பிறந்ததுடன் நிறைவேற்றற்காம்
ஆனவழி முதலமைச்சர் செய்யச் செய்தார் கச்சிதமாய் நடந்ததது கல்விக் கன்னார்
கைகொடுத்த செய்கையெனக் காலம் பேசும்
855
இந்துக்களும் ஆட்சிப் பொறுப்புக்களும்
முதலமைச்சராய்ப்பண்டிற் "பூரனையா”
மன்னரவை இறுதிவரை பணிபுரிந்தார் பதவிகொண்டர் "ஹரிசிங்”கோர் படைக்காம் ஏற்ற
படைத்தலைமை “ழுநீபத்ரா” “றொஷான்கானோடே உதவிப்படைப் பொறுப்பேற்றார் புரட்சிக் காரர்
ஓங்குதலைத் தடுப்பதற்காய் மலபார் நாட்டில் தீதுசெய்த நாயக்கர் மராட்டியர்கள்
தொல்லைகளை அடக்குதற்காம் இந்துப் பேரே
856
பங்களூரில் “கான்வாலிஸ்’ தலைமை கொண்டு
புகுந்தவெள்ளைப் பறங்கியரை மூன்றாம் மைகர் செங்குருதிச் சமரினிலே சதமுன்னூறு
சேர்ந்தபரிப் படைக்குமொரு தலைமை இந்து பங்குசெய்தார் இதுபோன்றே பலரும் திப்புப்
புகழரசர் ஆட்சியிலே பதவி ஏற்றார் எங்குமவர் அரசியலில் எவரின் மீதும்
இல்லையேற்றத் தாழ்வுசம உரிமை தானே
85ア

Page 104
தீரன் திப்பு சுல்தான்காவியி O184D
காளிகான் என்னும் அரசவிசுவாசி
திப்புசுல்தான் வரலாற்றில் தவிர்க்க வொண்ணாச்
சிறப்புக்காய் உரியவர்கள் சிலபேருண்டாம் ஒப்பில்லாப் பெருமகனார் "காளிகானை"
ஒப்பப்பிற ரெவருமிலர் ஹைத ரோடும் ஒப்பியநல்லுறவுவன்னார் இறப்பு மட்டும்
ஒன்றியது தொடர்ந்துதிப்பு வரையும் நீண்டே ஒப்பியதாம் அவர்வாழ்வை ஒன்றிக் கூறல்
உவப்பாகும் அன்றியிந்நூல் நிறைவு கொள்ளா
858 இளவயதில் ஹைதரொடு நட்புப் பூண்டே
இருவிரல்களொன்றியபோல் வாழ்ந்திருந்தும் அளவறியா வாறுபல களங்கள் கண்டும்
ஆட்சிக்குத் தோள்கொடுத்தும் உதவி நின்றார் முழுமைபெறத் திப்புவுக்குப் படைப்பயிற்சி
முற்றுமுள வீரதீரக் கலைகளெல்லாம் பழகவைத்தார் பெரும்படைக்கும் முதல்வரானார் பெருவீரர் காஸிகான் புகழிறைக்கே
859 காஸிகான் வாழ்வினிலே நடக்க வொணன்னாக்
காரியமொன்றானதது கூறின் அன்னார் நேசத்தை ஆட்சியின்பால் கொண்டிருந்த
நேர்மைவிசுவாசத்தை நினைத்த லாகும் மாசில்லாக் கொள்கைகொண்ட திப்பு வுக்கு
மனதாரச் சேவைசெய்த பணிக ளோர்ந்தால் வேஷமிடும் இக்கால ஆள்புலத்தின்
வண்டவாளச் சாக்கடையை ஒரல் கூடும்
86O குடும்பவாழ்வில் ஒரேமகனே ஒப்பில் வீரன்
குண்டுமிழும் பீரங்கிப் படைமுதல்வன் உடனொன்றித் திப்புவுடன் இளமைக் காலம்
ஒரேவயதின் காரணத்தால் இணைந்து -
வாழ்ந்தோன்

ஜின்னவூர் லுரியுத்தீன் C185)
பிடியுண்டான் வெள்ளையரின் சூழ்ச்சிக் கன்னான்
பரம்பரைக்கும் ஈனமெனத் துரோகஞ் செய்தான் உடனறிந்தார் திப்புசுல்தான் நொந்து போனார்
உண்மைமுற்றும் அறிந்தார்தன் உளவர் பாலே
861 பீரங்கிப் படைப்பிரிவின் தலைவன் போரிற்
பெரும்பொறுப்பி லுள்ளவனே துரோகஞ் செய்தால் சேருகின்ற விளைவுகளைச் சீர்தூக் குங்கால்
சிரசரியச் சிறுநொடியுங் காத்தல் வேண்டா காரணனோ படைமுதல்வர் காஸிம் கானின்
குமாரனென ஆனதினால் திப்பு சுல்தான் பாரத்தைத் தந்தையின்பால் விடநினைந்தார்
பறந்ததுடன் ஒரழைப்பும் தந்தை வந்தார்
862
அழைத்ததென்ன காரணமோ அறியலாமோ
அடலர்வழிப் பிரச்சினைகள் ஏதுமுண்டோ விளைந்ததென்ன கூறுங்கள் சுல்தான் அந்த
விபரத்தை அறியமனம் விளையு தொன்றை முளையினிலே கிள்ளியெறிந்திட்டால் துன்பம்
முற்றிமர மாகாது என்றார் காஸிம் வெளிநோக்கிப் பார்த்திருந்த விழிகள் சற்று
வந்தவர்பால் பதிக்கவவர் வியர்த்திட்டாரே
863 வாடியசெந் தாமரையாம் வதனம் கண்டார்
வேதனையின் பிம்பமெனும் விழிகள் கண்டார் கூடியதென்னாமோகொடு வினைதா னென்றே
கவலுறுமாறுற்றதிருவுருவங் கண்டார் நாடிவந்த தேதெனுந்தன் நிலைமறந்தார்
நட்டநெடு மரம்போற்சில நொடிகள் நின்றார் கோடிதுயர் வரினுமதற்கஞ்சா வீரர்
கொண்டிருந்த தோற்றத்தால் துயருற்றாரே 864

Page 105
தீரன் திப்பு சுல்தான் காவியர் O186D
மீண்டுமொரு வினாத்தொடுக்க மாட்டா ராக
மன்னவரே வாய்திறக்கக் காத்திருந்தும் தோன்றாத வார்த்தைகண்டு தானே மீண்டுஞ்
சோகத்தின் காரணந்தா னென்ன வென்ன வேண்டாதே வாய்திறக்க விபரங் கூறென்
வேளையிலோர் ஓலைதனைக் கையில் தந்தார் கூடிப்பல இடிகளென்றிதலைக விழ்ந்த
கொடுமையினை யுணர்ந்தார்கண் ஆய்ந்த -
போழ்தே 865 நம்பேன்நான் இதனையெவர் தாமோ செய்த
நாசகாரச் சூழ்ச்சியன்றி வேறொன்றில்லை நம்பியதேன் நீங்களுமென்றுள்ளம் வெந்து
நடுங்கவுடல் பதறியொரு வினாத் தொடுக்க நம்பேனோ இதுகண்டால் என்னும் பாங்கில்
நீட்டமற்றோர் மடல்வாங்கிக் கண்ணால் மேய நம்புகிறேன் நானுமென நிறுத்தும் தோதில்
நயனங்கள் சுடரநின்றார் காளி கானே
866 முதலளித்த ஒலையவர் மகன்"ரகல்காண்”
மாற்றாரின் பக்கலுளான் எனுமாம் சேதி அதைமறுத்த போதினிலே தொடர்ந்து தந்த
ஆவணமோ பறங்கியர்கள் அனுப்பி வைத்த சதிக்குதவும் வெகுமதியின் பட்டியல்தாம்
சென்னையிலே சொத்துசுகம் பதவி போன்ற அத்தனையுங் கொண்டதது அதைக்கொணர்ந்தோன்
அகப்பட்டுக் கொண்டதனால் கிடைத்ததாகும்
867 பெருநெருப்புக் குண்டத்துள் தன்னைத் தூக்கிப்
புதைத்ததுபோல் உணரவிழி செக்கல் வானத் துருப்பெற்ற தாமுடலம் விறைத்துத் தோள்கள்
ஊண்பிடிக்கப் பாய்கின்ற வேங்கைக் கொக்கும்

ஜின்னாவூர் லுரியுத்தீன் C187)
தீராத கொடுஞ்சினத்தால் சீறும் பாம்பின்
சீறலொக்கும் பெருமூச்சு திடங்கொள் கால்கள் கூறாதே அகன்றுநடை கொள்ளும் வீட்டைக்
கண்டதுமே வெறிகொண்டு புகுந்த தாமே
868 ஒடிந்துதரை வீழ்ந்ததுமுன் வாசல் மூடி
ஓங்குகுரலழைப்பாலே சுவர்களாடும் “கொடியபெரும் பாவிரகல் கான்நீ எங்கே?
கேடுடைய துரோகியேநீவெளிவா” என்னும் இடியிடித்த தாமன்ன ஓசை கேட்டே
இல்லிருந்தோர் ஓடிவந்தார் வாயிருந்து கடுஞ்சொற்கள் பீறிப்பாய்ந் திட்ட தெந்தக்
காரணத்தால் என்றறியார் திணறிப் போனார்
869 கூக்குரலைக் கேட்டுவெளிரகல்கான் வந்தான்
காளையுடல் பாய்கின்ற சிறுத்தை யொக்கத் தாக்கிநிலம் புரட்டிவிட்டார் தந்தை வீழ்ந்தான்
தரைகிடந்தே தவிதவித்தான் காரணத்தைக் கேட்கவுமா முடியுமவன் குற்ற நெஞ்சே
கூறியது போலுமவன் மனையுந் தாயுங் காக்கமுயன்றார்கள்முன் பாய்ந்தே வந்தார்
கொடுவாளை கையெடுத்தார் காஸிம் கானே
87Ο
மருமகளேர் கையைமனை யாளோர் கையை
முடிந்தபல மனைத்துமொன்றக் கூட்டிப் பற்றி இரந்தார்கள் உயிர்ப்பிச்சை உவப்பீரென்றே
எள்ளளவும் கருணைமனத்தில்லா தாராய்ப் புரிந்திடுங்கள் தவறுக்கு மன்னிப் புண்டு
புரிந்தராசத் துரோகத்தைப் பொறுக்க லாகா தெரிந்துமிவன் செய்துள்ளான் வெள்ளை யர்க்குத்
துணைசெய்ய முனைந்துள்ளான் துரோகி யென்றார்
871

Page 106
தீரன் திப்பு சுல்தான் காவியம் 88
விட்டார்களில்லையவர் காலைப் பற்றி
விம்மினரே சினங்காக்க மாட்டாப் போழ்தும் சட்டத்தின் முன்நிறுத்திச் சிரத்தைச் சீவச்
செய்கின்றேன் எனவன்மங் கூட்டி ஆணை இட்டார்தம் வீரருக்குக் கைது செய்ய
ஏவலுக்குப் பணிந்தார்கள் சிறைகொணர்ந்தார் குற்றத்திற் கேற்றதுபோல் தண்டனையும்
கிடைக்குமென அவரறிவார் காஸிம் கானே
872 மன்னர்முன் வந்துநின்றார் கைது செய்த
விபரத்தை எடுத்துரைத்தார் நீதி செய்யப் பின்னின்ற தேனென்றார் மன்னர் திப்பு
பிதாவனையீர் நீரெனக்கு நின்றன் பிள்ளை அன்னியனுக் குதவியென்னை அழிக்கச் செய்ய
அகங்கொண்டா னென்பதனை அறிந்த போதோ என்னசெய்வதென்றில்லா திருந்தேன் ஈற்றில்
எடுத்தமுடி வாலழைத்தேன் நின்னை என்றார்
873
தண்டனையை யுரியபடி செய்தல் வேண்டும்
சுல்தானே இல்லையெனில் எதிர்கா லத்தில் தன்பிள்ளை தனைக்கொன்ற பழியை நானுஞ்
சுமக்கின்ற வழிநேரும் தயங்க வேண்டாம் மன்னருங்கள் மகனிதனைச் செய்திட்டாலும்
மன்னிக்க மாட்டீர்கள் நீதி பொய்க்க எண்ணாத பேர்நீங்கள் இன்றிருந்தோ
எண்பிள்ளை யவனல்லன் இசைவீரென்றார்
874 சட்டப்படி எலார்கும்பொதுவான நீதி
சார்ந்ததவன் பால்ராஜத் துரோகத்திற்காம் கட்டளைக்கென்றடிபணிந்தார் சிறைக்கூ டத்தோர்
கைவிலங்கிட்டளைத்தேகும் காட்சி தன்னை

ஜின்னாளுர் ஷரியுத்தீன் C189)
இட்டவரும் பெற்றவரும் சபையினோரும்
எள்ளுவிழும் ஒசையெழும் மெளனத்துள்ளே கொட்டாத இமைகளுடன் கண்ணுற்றார்கள்
கதியதுவென்றுளமோர்ந்த காரணத்தால்
875 கொன்றிட முயன்றார் கொடியவர்
பற்பல் முறைமுயன்றார்களழித்திடக் கேடுடையோர் முற்றிலுந் தோல்வியே கண்டார் இறைவன் திருவருளால் அற்பர்கள் திப்புவின் ஆட்சிச் சிறப்பை அறிந்ததனால் பெற்றதாம் காழ்ப்புளம் பொறுத்திலார் ஒன்றித் தொடர்ந்தனரே
876 முன்னிலை நின்றார் நிசாமே யுடன்படு வெள்ளையரும் சென்னியில் தாங்கிய சேதியுமாகும் தமக்கிடைஞ்சல் முன்னிலைப் பேரா மவரே ஒழிந்தால் சிரமமிலை பொன்கொளும் நாட்டினைப் பற்றிடப் போர்களுந் தீருமென்றே
877 சுலைமான் எனுமோர் சுடுதிறன் கொண்ட கயவனையே செலப்பணித்தார்கள் தருவதாய்த் தங்கப் பெருந்திருவை கொலைஞன் இணங்கினன் கைவரு சொர்ணத் தொகைநினைந்தே வலையினில் வீழ்ந்தான் வருமிடர் நோக்கான் வரித்தனனே
878 புறநகர் கொள்புறம் பார்வையிடவெனப் போவதனை அறிந்திருந்தார்கள் அன்னியர் சேதி அறிந்ததனால் குறிதனில் வெற்றி கொளவொரு வாய்ப்புமே வந்ததென
நிறைவுறச் செய்திட நாடினர் சென்றான் கொலைஞனுமே
879
முட்புதர்ப் பற்றையுள் மெல்லப் பதுங்கிப் பதுங்கியவன் கட்புலன் குத்திடக் கூர்ந்தே குறிதவறாதிருக்க எட்டவிருந்தே இணைத்தனன் தோளில் இலக்குவைத்தே சுட்டிடும் ஆயுதம் சுண்ட விரல்வில் சொருகினனே
88O பரியினில் தன்னைப் பிரித்தவர் கால்நடை பற்றிடுங்கால் அருகினில் முக்கியர் அண்டி வருகையில் ஆளுமையால் தெரிந்தே தனித்தவன் திப்புவைச் சுட்டனன் மார்பினிலே இருந்தவோர் கவசம் இடர்வரா தொன்றியே காத்ததுவே 881

Page 107
தீரன் திப்பு சுல்தான்காவியம் O190
குறிதவறாதவக் குண்டின் பலமுடல் குலுக்கிடினும் விறல்மிகுநாயகர் வீழ்ந்தன ரில்லையாம் வைரமென உறுவினை எஃதும் உடன்படா வாகில் உறுதியுடன் குறுநகை கொண்டிறை பாற்புகழ் கூறி அமைதியுற்றார்
882 குண்டடி பட்டுமே காப்போன் கருணைக் கடலவனால் ஒன்றுமே தோன்றிடா வாறுடல் தப்பிடக் கூடவுற்றோர் வென்றார் பரியில் விரைந்தவன்றன்னையும் வெஞ்சிறையில் ஒன்றிடச் செய்தார் உரையுண்மை யென்றே உறுத்தினரே
883
வாய்திற வாதவன் வீற்றிருந்தானவன் வாயகடு காய்ந்திடில் உண்மையைக் கொட்டுவ னென்றே கருத்துறையத் தீயவனுண்ணத் தரவிலை தாகந் தணிவதற்கும் வாய்ப்பிலா தாக்கினர் வன்மணங் கொண்டோன் விளம்பிலானே
884 வாளினைக் கைதனில் வாங்கினார் “காஸிகான் வந்துரைப்பார் “மாளவென்றாகில் மறுப்பிலை செத்து மடியுனக்காம் ஊழ்வினை யஃதெனில் ஒன்றா விடிவுமே உன்முடிவென் தோள்தனி லாகின் தொடர்தல் தவிரேன்நான்” செப்பெனவே
885 சாவினுக் கஞ்சினான் சத்தியம் செய்தான் சொலமறுத்தோன் யாவு முரைத்தனன்" இம்தியாஸ் ஹரிசைன்” செலப்பணித்தான் பாவிய வன்ஹைத்ரா பாத்நிசாம் தம்மின் முதலமைச்சன் சேவகனன்னான் மருகன்" உறவிலென் றோதினனே
886 தொடர்ந்தன னென்னைக் கினோவைன் எனுமொரு வெள்ளை
யன்பால்
அடுத்தனர் தந்தான் அவனொரு பைநிறைக் காசவைகள் கிடைத்தலுக் காகாத் தொகையெனக் காம்பொன் கொலைநிகழ்ந்தால் கிடைத்திடும் ஐம்பதிவ்வாறெனக் கூறினான்” என்றனனே
887

ஜின்னாவூர் லுரிபுத்தீன் C191 o விவர மிவற்றை விளம்பிடு போழ்தினில் வந்தனனே செவியுண்டவனாய்த் தளபதி "ஆஸிம்கான் அந்நிலையில் “எவரிதற் கிங்கினை செய்தார் எனநீஇயம்பு"வென அவனுரை சொல்லுமுன் ஆஸிம் அவனுயிர் அகற்றினனே
888 கண்ணிமைப் போழ்துள் கடுகிய தாமிது காஸிமிதை எண்ணினாரல்லர் எதிர்பார்த்திடாத இயற்றலினால் “என்னநீ செய்தாய் எதற்கிதைச் செய்தாய்” எனவினவத் தன்பணி மன்னர் தமதுயிர் காத்தல் தெரியுமென்றான்
889 கொல்லா திருப்பினுங் கொல்ல முயன்றான் கொலைஞனிவன் கொல்லா திருப்பது கேடிவன் குற்றம் கொலைக்குநிகர் பொல்லா னிவனைப் பேசவைத் தென்னே பலனுளதோ எல்லாம் முடிந்ததே இத்தொடும் என்றான் இடம்பெயர்ந்தான்
89O முன்னொரு போழ்தும் முயன்றவன் றன்னை முடிப்பதற்கு முன்பாய்ந்ததனை மனத்திலிருத்திட ஐயமுறத் தன்னுணர்வுற்றார் தளபதி காஸிம்கான் சிந்தனையில் உன்னிய தொன்றை இயற்றிட உண்மை எகிறியதே
891 கொலைஞன் வந்த குதிரை தனையதன் கால்செலும்பால் நிலைகொள வைப்பின் நடந்ததுதான்வாழ் தலத்தினுக்கே செலுமதைக் கொண்டுநாம் சீரங்கம் கொண்ட துணைக்கரத்தை வலைவிரித் தொன்ற வழியுள தாமென்றுடன்துணிந்தார்
892 எண்ணியவாறே இயற்றினர் பின்வழி ஏகிடுங்கால் தன்வழி சென்றே தகைந்த பதிதனைக் கண்டதிர்ந்தார் கன்னமிட் டான்றன் குடிசையி லாமென் கயமைதனில் முன்னிலை செய்தவன் முற்றிலும் ஆஸிம்கான் தானெனவே
893
தட்டிடத் தாழ்ப்பாள் திறந்தது ஆஸிம் திகைத்தனன்தேள் கொட்டிய பாங்கினில் கால்தடு மாறக் கருத்துணர்ந்தே விட்டகன் றோட விளைந்தனன் பாய்ந்தே தளபதியும் கெட்டியாய்க் கைகரம் கொண்டு முறுக்கிடக் கீழ்விழுந்தான் 894.

Page 108
தீரன் திப்பு சுல்தான் காவியம் O192)
கைதுசெய்தாரவன் றன்னை யுடன்சிறைக் கர்ப்பணித்தார் செய்தவை முற்றுந் தெரிந்திடச் செய்தார் அரசரிடம் மெய்தனை ஆய்ந்திட மன்னர் நிசாமின் முதலமைச்சர் கைத்தலங் கொள்ள அழைத்திட வந்தார் காரியரே
895 அமைச்சர்கள் சந்தித்தனர்
அழைப்பனுப்பினார்கள்நிசாம் மன்றிலுக்கே
அமைச்சர்தம் பேச்சுவார்த்தை நடத்தலுக்காய் அழைப்பேற்று முதலமைச்சர் வந்தார் ஒன்றி
அளவளாவ பூர்ணையா அரங்கம் சென்றார் அழைப்பைமதித் தாங்குற்ற அமைச்சருக்கும்
அழைப்புவிட்ட அமைச்சர்நல் வரவு கூற அழைத்ததற்கு நன்றிதனை அவருஞ் சொன்னார்
அமைச்சுமட்டப் பேச்சுக்கள் தொடங்கிற் றாமே
896 நல்லதொரு வருங்காலம் நமக்குள் தோன்ற
நலஞ்சேர்க்கும் சந்திப்பாம் இஃதே என்று சொல்லில்தேன் தோய்த்துநிசாம் முதல்வர் கூறிச்
சொல்கவென்ன காரணமோ தெரிய வென்றார் இல்லாதும் இல்லைமிக வேண்டு மான
ஏதுவதும் இருபுறத்தும் சார்ந்ததாகும் பொல்லாத தொன்றாகும் செவிகொள் ளற்குப்
பொறுக்காததாகுமது புகல்வே னென்ன
897 என்னவதாம் என்றேதும் அறியாப் பாங்கில்
எழுந்ததொரு வினாநிசாமின் முதல்வர் வாயில் தன்னையறியாதவொரு திடுக்கம் கண்ணில்
தோன்றுவதில் பூர்ணைய்யா தெளிவு கொண்டார் சொன்னால்தான் அறிவீர்கள் போலா மென்று
சொற்களிலே சரங்கோத்துப் பதிலுங் கூற என்னவிது கூறாமல் அறிவ தெங்காம்
எனவினவ ஏற்றபதில் இயம்பக் கேட்டார் 898

ஜின்னாவூர் லுரிபுத்தீன் C193o
திப்புசுல்தான் தனைக்கொல்லப் பலமுயற்சி
ஏற்றுளது என்றதுமே அறிவோம் எங்கள் ஒப்புதலாம் வருத்தத்தை ஏற்றுக் கொள்க
உடன்படாத செய்கையவை எனவும் கேட்டுக் கப்பியதேன் வருத்தமது முயற்சி தோற்ற
காரணமோ எனக்கேட்டார் பூர்ண ஐயா தப்பதுபோ லெனன்னுவதாம் அறிவு கெட்டோர்
செய்கின்ற செய்கையவை எனவு ரைத்தார்
899
அறிவுகெட்ட பேராமோ வழிகெடுப்பில்
ஆனவரோ என்ன:இறை அறிவா னென்றார் அறிவீர்கள் நீங்களுமென் றெண்ணுகின்றேன்
அறிந்தபல தகவல்கள் அதையே சொல்லும் அறியுங்கள் சுலைமானும் ஆஸிம் கானும்
அதிலிருவர் வெள்ளையரும் கூட்டாம் என்றும் அறிகின்றோம் இம்தியாசும் சேர்வார் உங்கள் அன்புமருமகனவரென்றறிகுவோமே
9 OO அதிர்ச்சியுற்றார் என்றாலும் மறைக்க வெண்ண
அதைத்தொடர்ந்த வார்த்தைகளே முகத்திரையில் உதித்தமன மாற்றத்தை ஒப்பு விக்க
உணர்ச்சிவசப் படலானார் நிசாம்முதல்வர் சதிக்குடந்தை நீங்களுமாம் என்ற போழ்தே
தெரிந்ததந்த மாற்றங்கள் பூர்ண ஐயா வதிக்கின்றார் சிறைகளிலே கைதியானோர்
விவரங்கள் கைவசத்திலுள்ள தென்றார்
9 O1 முக்கியமாய் மற்றொன்றும் சொல்வேன் உங்கள் மன்னவரும் இதற்குடந்தை என்பதற்குத் தக்கவுயர் சான்றுகளும் உண்டா மென்ன
தீயுண்ட பாடுற்றார் தனைநிறுத்தி

Page 109
தீரன் திப்பு சுல்தான்காவியம் O1940
ஒக்காத கூற்றிஃதாம் எவ்வாறுங்கள்
உளமொப்பியுளதிதுபொய் எங்கள் மன்னர் முக்காலும் மறுப்பாரிம் முடிவுதன்னை
மறவுங்கள் என்றுரைக்க மீண்டுஞ் சொல்வார்
9 O2 எதுதானெவ் வாறெனினும் நட்பின் பேரால்
இயம்புவதைக் கேளுங்கள் நடக்கு மாகில் சதியதற்குப் பழிவாங்கா திருக்க மாட்டார்
தீரரெங்கள் தளகர்த்தர் வஞ்சம் தீர்ப்பார் கொதிக்கின்ற மனவுணர்வைத் தவிர்க்க மாட்டாக்
கொற்றவரின் முதலமைச்சர் எழுந்தே நின்று பதிலுரைக்கப் பொழுதளித்தார் நிசாம் முதல்வர்
பொறுத்திருந்தே வினாவொன்றைத் தொடுக்க லானார்
9 O3 எப்படித்தான் நம்பினிர்கள் சுல்தானுக்கும்
எதிரிகளாய்ப் பலபேர்கள் இருக்கலாமே எப்படித்தான் தீர்மானங் கொள்ள லாகும்
எவரிதனைச் செய்திருக்க லாகு மென்றே ஒப்பாதீர் எவர்வார்த்தை தனையும் நீங்கள்
உங்களைப்போல் எங்களுக்குஞ் சுல்தான் மீது எப்போதும் பாசமுள தென்பதுண்மை
எண்ணிடுக என்றதுமே ஏளனத்தில்.
904
"அப்படியா” என்றாரே ஆச்சர் யத்தால்
அதிர்ச்சியுற்ற பாங்கினிலே அதன்பின் சொல்வார் திப்புவினைக் கொல்வதொன்றும் பெரிதே இல்லை
சொல்லுகின்றேன் இலகுவழி எனழு கத்தில் அப்பியதன் பார்வைதனை அகற்ற மாட்டாடுது)
ஆழ்ந்திருக்க ஹைதராபாத் அமைச்சரின்பால் ஒப்புவித்தார் உள்ளத்தில் உறைக்கு மாறே
ஒருவழியை உவக்காத வார்த்தை கோத்தே 905

ஜின்னாவூர் லுரியுத்தீன் C195)
"சத்தியத்தைக் கொல்லாதும் சொன்ன வாக்கைத்
துடைத்தகற்ற மாட்டாதும் உங்கள் மன்னர் நித்தியமாய் நிலைப்பரெனில் ஆச்சர் யத்தால்
நிலைகுலைவார் அக்கணமே இறந்தும் போவார் ஒத்துவரின் முயலுங்கள் என்றார் கேட்டே
உள்ளூரச் சினத்தாலும் வெளிக்காட்டாதே புத்திசாலி நீங்களெனப் புகழ்ந்தார் பின்னர்
பின்வருமாருரைசெய்தார் பொருந்தாப் பேச்சே
9 O6 நம்பிக்கை யூட்டுதற்காய் நானு ரைப்பேன்
நிசாம்மன்னர் சொன்னபடி மைசூருக்கும் எம்மண்ணாம் ஹைத்ராபாத் தமக்கு முள்ளே
ஏற்பட்ட அமைதிக்காம் உடன்படிக்கை 6ILibLDGIT6ob D–60)L6n ILIT LDTo LDIILLIT
எனநம்பலாம்நீங்கள் என்றார் வார்த்தை தம்மளவில் நீறுமுன்னே வினாத்தொடுத்தார்
சினம்பொங்கித் தெறித்தததில் செவிதீய் தற்காம்
9O7 தரித்திருக்க ஏன்விட்டீர் வெள்ளையர்தம்
தரகர்களைப் படையினரை அத்தோ டன்றிக் கருத்தெண்ன படைப்பயிற்சி அவர்பாற் கொள்ள
கரையிருக்கும் பகுதிகளைத் தாக்கத் தானே உரையுங்கள் அமைதியின்பால் நாட்டம் கொண்டால் உள்நோக்கம் வேறென்ன இவற்றுக் கென்ன சரியல்ல உங்களெண்ணம் எம்மைக் காக்கச்
செய்கின்ற பாதுகாப்புப் பணிக ளென்றார்
9 O8. படைப்பலத்தைப் பெருக்குவதும் பயிற்சி தந்தே
பலம்பொருந்தச் செய்குவதும் பற்றி சுல்தான் அடைகின்ற அச்சத்திற்கான ஏதும்
அமையாதாம் எனநிசாமின் முதல்வர் சொல்ல

Page 110
தீரன் திப்பு சுல்தான் காவியம் O1960
வெடியுண்டை பட்டஅரிமாவைப் போல
வீறுகொண்டார் பூர்ணையா "திப்பு சுல்தான் தொடைநடுங்கார் எவருக்கும் தேர்வீர் உங்கள்
சார்பினிலே அஞ்சுகின்றார்” என்று ரைத்தார்
909 உங்கள்மண் கொண்டுள்ள ஆபத்துத்தான்
உறுத்தியது திப்புவுக்கு வெள்ளையர்கள் தங்கள்வசம் கொள்வதற்குத் திட்ட மிட்டே
தங்கியுள்ளார் உமதுமண்ணில் பிறபு லத்தில் அங்ங்னமே செய்துள்ளர் நிசாமு மின்றாம்
ஆடைக்குள் ஒளித்துள்ளார் முகத்தை யோர்நாள் செங்கதிர்காண் பணிபோல விலகும் போர்வை
தெரிந்துவிடும் சுயரூபம் முடிவுந் தோன்றும்
91Ο
கூறுங்கள் நிசாமிடத்து இரண்டு மாற்றம்
கொண்டுள்ளார் இன்றென்றே ஒன்று வெள்ளைப் பேராகும் அன்னவர்கள் போக மாட்டார்
பூரணமாய் இந்தியாவைக் கொள்ளு மட்டும் தேருங்கள் பயன்கொள்வதவர்பால் உங்கள்
சுயநலத்தின் பேரென்றால் அவர்கள் வெற்றுக் காரணங்கள் தமக்காக உதவார் கொண்ட
குறுக்குவழி வேறுண்டாம் வருந்து வீர்கள்
91
ஒன்றோடு ஒன்றொட்டிப் பிறந்த வாறாய்
ஓரங்கள் ஒருமித்த பிரதேசங்கள் உண்டானதாகுமெங்கள் நாடி ரண்டும்
உள்நுழைந்தார் வெள்ளையர்கள் உங்கள்நாட்டுள் கண்மூடித் திறப்பதற்குள் மைக ருள்ளே
காலெடுத்து வைப்பதற்கா நேர மாகும் சொன்னபடி நடந்துவிட்டால் என்னவாகும்
தெரிந்துகொள்வீர் உங்கள்நிலை பரிதா பந்தான்
92

ஜின்னாவூர் ஷரியுத்தீன் C_197כ
பூரணையா எடுத்துரைத்த காரணங்கள்
புரிந்திருந்தும் வேண்டுமென்றே தாமியற்றும் காரியத்தின் காரணத்தை மாற்றிக் கூற
கடுஞ்சினத்தால் முகங்கனத்தார் வரவழைத்தார் உரங்கொண்ட வார்த்தைகளால் ஊன்றிப் பேசி
உறுவினையின் பயங்கரத்தை எடுத்தே யோதி நிறைவாக வந்தவர்க்கு விருந்தும் தந்து
நன்றிசொல்லி வழியனுப்பி வைத்திட்டாரே
913 திட்டமிட்டுப் பிறரறியா வாறு செய்த
செயல்தோற்றுப் போனாலும் கழ்ச்சி முற்றும் வெட்டவெளிச் சங்கதிபோல் வழங்கக் கண்டு
வருத்தமுற்றார் ஹைத்ராபாத் அமைச்சர் தம்மைக் கட்டிவைத்துக் குற்றக்கனை தொடுத்தாற் போன்றே
கடந்தந்த பொழுதுமணம் குமுறி னாலும் ஒட்டவில்லை மனமவர்க்காம் ஓங்கிப் பேச
ஒன்றுபேசி மற்றொன்றில் படுவோ மென்றே
914
அழைப்புவிடுத் தருகமர்த்தி அச்சமூட்டி
அவமதித்தார் பூரணையா என்னும் கோபம் வழிநீண்டு போவதுபோல் மனத்துள் நீள
வந்தடைந்த மந்திரிதம் மன்னர் முன்னே முழுமையுரை செய்திட்டார் வெகுண்டார் கேட்டு
மமதைகொண்ட செயலெம்மை வரவழைத்து இழிவுசெய்தார் இவர்க்கோர்நல் பாடந்தன்னை
ஏற்றவழி பொருந்துங்கால் செய்வோ மென்றார்
95

Page 111
தீரன் திப்பு சுல்தான் காவியம் O1980 வெள்ளையரின் கழ்ச்சி
மைகரைச் சுற்றியுள்ள சமஸ்த்தா னங்கள்
மன்னர்கள் சிற்றரசர் அனைத்துப் பேரும் கைசோர வேண்டும்தம் கரத்துக் குள்ளே
குறுக்கிடவும் வேண்டுமெனத் திட்டமிட்டுச் செய்கின்ற சூழ்ச்சிக்குப் பெரும்பாலானோர்
சாய்ந்தார்கள் என்றாலும் சிலபேர் மட்டும் பொய்யான நட்புதனைப் புரிந்து கொண்டார்
பின்னின்றார் உட்பகைமை கொண்டிட் டாரே
96
பொன்னுக்கும் பொருளுக்கும் ஆசை கொண்ட
பேடியர்க்குப் பகிர்ந்தளித்தார் பொற்பா ளங்கள் மண்ணாசை கொண்டவர்க்கு நிலப்பங்கீடும்
முறையாகக் கிடைக்குமென முன்மொழிந்தார் எண்ணிலடங் காததொகை ஆயுதங்கள்
எம்செலவில் நாமளிப்போம் என்று ரைத்தார் அன்னவரின் குறிதிப்பு மாட்டே யன்றி
அடுத்தென்ப தொன்றில்லை அந்நியர்க்கே
917
பெட்டிபெட்டி யாகப்பொற் பாளங் கள்கை
பரிமாற்றங் கொண்டனவாம் மானத்திற்கும் இட்டவிலை யஃதென்றே எண்ணி லார்தம்
இழிசெயலை எண்ணிமனம் புரிந்தாரில்லை திட்டமிட்டே செய்தார்கள் எதிர்காலத்தில்
திமிங்கிலத்தைப் பிடிக்குமெண்ணம் இரைதா -
னஃதாம் முட்டையிடும் வாத்துக்குக் கவள மேதான்
மிஞ்சுவது அத்தனையும் வெள்ளையர்க்கே
918

ஜின்னாவூர் லுரியுத்தீன் C199)
"சில்கோட்டின் மன்னனுக்குப் பரிசாய்ப் பொன்னும்
சேர்ந்ததனோ டின்னும்பல் விலைமதிப்புச் சொல்லவொண்ணப்பொருட்களையும் கொண்டு சென்றார்
திப்புவுக்கே எதிராகக் கிளர்ச்சி செய்யச் சொல்லுவதைச் செவிமடுத்தும் ஈற்றில் சொல்வார் திப்புஅன்ன வீரருக்குத் துரோகஞ் செய்தல் பொல்லாத செயலாகும் மான முள்ளோன்
புரியுவனோ ஈனச்செயல் போங்க ளென்றார்
919
வெட்கமுற்ற வெள்ளையர்கள் வாய்பு தைத்து
வெளியேறும் போதினிலே மன்னன் தம்பி ஒட்டியுற வாடினனே உடன்பிறந்தோன்
உயிருக்கே உலைவைக்கத்துணிவுங் கொண்டான் திட்டமிட்டான் பறங்கியரோ டொன்று கூடித்
தானேமுடிதாங்குதற்கு நினைந்த வாறே கிட்டியதாம் மூத்தவனைக் கொன்ற தாலே
கிடைத்தபலன் கடைசியிலே பின்னர் சொல்வாம்
92O காட்டிற்குப் புலிவேட்டை யாடச் சென்ற
காவலனைக் கொல்வதற்கு வெள்ளையர்கள் நோட்டமிட்டுக் காத்திருந்தார் வெற்றி கண்டார்
நேர்மைக்குப் புறம்பான நிகழ்வினாலே வேட்டைக்குப் பதுங்கிநின்று பாயும் காட்டு
விலங்கினுக்குச் சமமானோர் ஒளிந்து நின்றே காட்டினராம் வீரத்தைக் குண்டு மார்பில்
கொண்டுவீர முடிவடைந்தான் அரசன் ஆங்கே
921 தனைமன்னனாகமுடி கட்டிக் கொண்ட
தம்பிவெள்ளைப் பறங்கியரின் வார்த்தை கேட்க முனைந்தானே பலவழியில் திப்பு வுக்கு
மாறான செயல்களிலே ஈடு கொள்ளச்

Page 112
தீரன் திப்பு சுல்தான் காவியம் C200
சினங்கொண்டார் திப்புசெவி கொண்ட போது
சிங்கமெனச் சினந்தெழுந்தார் செறிந்த கோபம் பிணக்கறுக்கத் தூண்டியது பலனாய் யுத்தப்
பிரகடனம் செய்தாரோர் பாடங் காட்ட
922 குற்றமிழைத் தோனுக்கும் கூட்டுச் சேர்ந்த
குள்ளமதியாளர்க்கும் எதிர்க்க எண்ணும் மற்றவர்க்கும் புகட்டுகின்ற பாட மாக
மாறியதப் படையெடுப்பு புதிய மன்னன் வெற்றுக்கை யோனாக விலங்கு கொண்டு
வரவழைக்கப் பட்டான்தான் விளைத்த குற்றம் முற்றினையும் எடுத்துரைக்கப் புலன்கொண் டான்சொல்
மொழிவதற்கும் அற்றவனாய்ச் சிரங்க விழ்ந்தான் 923 மன்னனைநீ கொன்றதுன்றன் முதலாம் குற்றம்
முடிகட்டிக் கொண்டதுமற் றொன்றாங் குற்றம் அன்னியனைத் துணைகொண்டதஃதோர் குற்றம்
அடுத்தநிலப் பரப்பினரைச் சீண்டி உற்ற மன்னுயிரைப் பறித்ததுவோ மிகப்பேர் குற்றம்
மிகைத்தபொருள் கொள்ளையிட்ட ததுவுங் குற்றம் என்றனுக்கும் எதிராகக் கிளர்ச்சி தூண்ட
எண்ணியதோ எனால்பொறுக்க மாட்டாக் குற்றம்
924 தலைகவிழ்ந்து நிற்பதுவே இவையனைத்தும்
செய்தகுற்ற மென்பதனை உறுதி செய்யும் விலையில்லையுயிர்களுக்கு வாரா மீண்டும்
வினைக்கேற்பக் கூலியுன்றன் விதியில் சேரும் கொலைக்குக்கொலை தீர்ப்பாகும் மைகர் நீதி
கொடுப்பதென்றன் கடமையது போலும் உன்றன் தலைக்குமதே கொள்ளென்றார் மன்னர் அன்றே
சிரங்களைந்தார் சிரங்களைவோர் தீர்ப்பின் வாறே
925

ஜின்னாவூர் லுரியுத்தீன் O2010
பாலம்பூர்வரை வந்தார் பறங்கியர்
படைப்பயிற்சியளிக்கின்றார் பறங்கியர்கள்
பாலம்பூர்ப் படைகளுக்கும் அத்தோடன்றி அடைந்ததவர் படைகூட ஐயிரண்டாய்
அருகமைந்த கற்றுாரம் அறிந்த சேதி உடன்மன்னர் கவனத்தில் காஸிம் கானும்
ஓதிவைத்தார் கேட்டுமன்னர் அவரை நோக்கிக் கிடைக்கும்பதில் வாள்மூலம் படையைக் கூட்டக்
கட்டளையைத் தாருங்கள் எனப்பணித்தார்
926 கொடுத்துள்ளார் பீரங்கி பதினைந்தோடு
கிழக்கிந்தியக்குழுவோர் அன்ன வர்க்கு வெடிமருந்து நாற்பதுதொன் வாள்து வக்கு
வகைவகையாய் ஆயுதங்கள் குதிரை நூறும் உடன்பட்டார் ஆபத்தில் உதவ வேண்டும்
உதவிகளும் தருவதுவாய் அறிந்தே னென்றார் படும்பாட்டைப் பார்க்கட்டும் மன்ன ரோடே
பறங்கியரும் பங்கதற்குப் பார்ப்போம் என்றார்
927 அனுப்புங்கள் தூதொண்றைச் சனிநாளன்றே
அக்கினித்தேர் கிழக்கிலொளிகாட்டு முன்னர் தொனிக்குமெனப் படைமுரசு தயாரா கட்டும்
சொல்லியவர் தோலுரிப்போம் வெள்ளையர்க்குங் கனக்குமெனில் வரட்டுமவர் கூட வொன்றிக்
கற்பிப்போம் பாடமென்றார் அடுத்த நாழி சுணக்கமறப் பறந்ததொரு புரவி மண்ணைத்
தொடாதபடி பாலம்பூர் நோக்கி யாண்டே
928

Page 113
தீரன் திப்பு சுல்தான் காவியம் C2020
தீக்கிடங்கில் பதம்பதித்த பாங்கில் மன்னர்
தவிதவித்தார் துதோலை கண்ட போழ்தே சீக்கிரமாய்த் தகவலொன்று தந்தார் வெள்ளைத்
தலைவர்"கேனல் டவுண்சனுக்கு அவரும் -
வந்தார்
வாக்குரைத்தால் செய்யாதே விடாரே திப்பு
வினைதவிர்க்க வழியுண்டோ என்றார் மன்னர் காக்கவுள்ளோம் நாங்கள்நிர் கவல கற்றும்
கூறியவாறவர்செய்யார் என்றார் கேணல்
929 திடீரென்றே தாக்குதற்குத் தக்க வாறு
திராணியில்லை அவரிடத்துப் படையு மில்லை முடக்கியும்மை வைப்பதற்கு அச்சமூட்டும்
முயற்சியிது எனக்கேணல் சொல்ல இல்லை நடக்கின்ற முயற்சியென்னை அம்பாய்க் கொண்டு
நும்மீது தொடுக்கின்ற யுத்தம் வேண்டின் கொடுக்காதேநீர்தவிர்ப்பீர் உதவி யென்ற
காரணத்தை நிச்சயிக்கத் தாமே யென்றார்
93O பயங்காட்டித் தலைகுனியச் செய்து நாட்டைப்
பறித்தெடுக்குந் திட்டமிஃதாம் எமையே மாற்றும் முயற்சியாக இருந்திடவுங் கூடும் நாங்கள்
மாறுசெய்யோம் கூறியவாறுதவி செய்வோம் வயமாகின் வெற்றியுன்றன் பக்கம் மைசூர்
வளைத்துள்ள கிராமங்க ளத்தனையும் வயமாகும் உமதாட்சிக் குள்ளாம் என்றார்
வெள்ளைப்படைத் தளகர்த்தர் மன்னர் சாய்ந்தார் 931 வெள்ளையரின் வார்த்தைக்கு மயங்கிப் போரை
வழிநடத்தத் துணிவுற்றார் பாலம் பூரார் கள்ளமனங்கொண்டவர்கள் பிரித்தாள்கின்ற
கேட்டுவழிக் கொள்கையினர் திப்பு வோடு

ஜின்னாவூர் லுரியுத்தீன் C203 o
உள்நாட்டு மன்னர்களைப் பொருத விட்டு
உபயோகம் பெறத்துடிக்கும் பேடி யர்கள் எள்ளளவும் எண்ணவில்லை இதுகே டென்றே
இங்கிருந்தோர் இடங்கொடுத்தார் இழிவுற்றாரே
932
தனித்தனியே பிரித்துவைத்துச் சண்டை மூட்டல்
சமாதானம் ஒருவரொடு மறுபுறத்தில் இணக்கமுற்றுப் பொருளோடே ஆயுதங்கள்
இயன்றவரை தந்துதவி செய்தல் செய்தால் பிணக்குறுவோர் இருபுறத்தும் அழிவர் தாமே
பலம்பெறுவோம் எனுங்குள்ள நோக்கினோடே முனைந்தார்கள் பறங்கியர்கள் வெற்றி கண்டார்
முடிகொண்டோர் மண்ணுண்டார் அடிமையானார்
933
பாலாம்பூர் மன்னர்தம் மனைவியோடு
போர்பற்றிப்புகன்றார்நற் புத்தி பேசும் சீலமிக்க பெண்ணவராம் செவிகொண்டார்பின்
தலைமகனை விளித்தேயோர் நினைவை மீட்டார் காலமது கரைந்தாலும் மறக்க வொணன்னாக்
காட்சிமனக் கண்முன்னே நிழலா யாடக் காலமறிந்தேயுரைத்தார் கேட்ட மன்னன்
கருத்திலதைக் கொண்டாலும் கணத்துள்நீத்தான் 934 மறந்ததுமேன் முன்னொருகால் திப்பும் என்றன்
மானத்தைக் காத்ததனை ஹைத ரோடு புரிந்துதோற்றுப் போனபோரில் பொறியில் சிக்கிப்
போனநிலை மாற்றானென் மீது தீது புரியமுயன்றானதுகால் கண்டு பெண்மேல்
பரிதாபம் கொண்டவனைக் கொன்ற செய்கை அறிந்திருந்தும் பகைவரென்றே அடாது செய்ய
அனுமதியாக் கண்ணியத்தை அந்நாள் போதே
935

Page 114
தீரன் திப்பு சுல்தான் காவியம் C2040
இறந்திருப்பேன் நானன்றே திப்புச் செல்வன்
இடைமறித்தே எனைக்காக்கா திருந்திருந்தால் குறைத்ததனை நினைத்தீரோ நன்றி கொன்றோ கடல்கடந்து வந்தவரின் கைகோத்தின்று பறையறையத் துணிவுகொண்டீர் போரில் தோற்றுப்
பணிந்தவுமை மன்னித்த பான்மை நீத்தீர் முறைசெய்வீர் திப்பினொடு சமாதானத்தை
முன்னிறுத்த போரொடுக்க எனப்பு கன்றாள்
936 வெள்ளையரை நம்பிடவே வேண்டாம் கெட்டோர்
வலிந்துதவி செய்வதும்மேல் விருப்பாலன்று கொள்ளையிட வந்தவர்கள் குறிக்கோ ளெல்லாம்
கொள்ளைப்பொருள் மீதன்றி வேறொன்றில்லை உள்ளத்தை மாற்றியுமைத் தூண்டி யுள்ளார்
உட்பொருளோ இருபுறமும் அழித லாகும் கள்ளமிலார் திப்புவொடு கூட்டுச் சேர்ந்து
கடல்தாண்டி வெள்ளையரை யோடச் செய்வீர்
937
மனைவியுரை செய்வாரதை மறுத்துப் பேசி
மாற்றானை நம்பியதால் போருக்காக முனைந்தாரே பாலம்பூர் மன்னர் ஈற்றில்
மூக்குடைந்தார் வெள்ளையர்கள் மாறு செய்தார் சொன்னபடி அன்னவர்கள் வரவே யில்லை
திப்புசுல்தான் சொன்னபடி வைக றைக்கு முன்னதாக வந்திருந்தார் சமர்க்க ளத்தில்
மொய்த்தபெரும் படையோடு காத்திருந்தார்
938
தன்னுடைய நாட்டுமன்னர் தம்மி னோடு
சமாதானந்தனைவிரும்பும் திப்பு சுல்தான்
முன்னதாகப் போர்தொடங்க மாட்டா ராக
மறுமுனையின் வரவெண்ணிப் பார்த்திருக்க

ஜின்னாவூர் லுரிபுத்தீன் C20So
இன்னமுமேன் வரவில்லை! வருவார்! இல்லை!
இனுஞ்சொற்ப வேளைக்குள் வருவார்! வாரார் என்றுதிரி சங்குசொர்க்க நிலைக்குள் நின்றார்
எதிர்பார்த்துக் காத்திருந்தோர் ஏமாந்தாரே
939
காத்திருந்தும் வாராத காரணத்தால்
கடிதினிலோர் முடிவுகொண்டார் திப்பு சுல்தான் போர்த்தொழிலில் வல்லவர்தா னென்றிட்டாலும்
பாதைமாற்றிப் படைத்தலைவ னொருவனுக்குச் சேர்த்துவிடச் சொன்னாரோர் சேதி மக்கள்
தேர்ந்தறிய செயலுருவம் பெற்ற தஃதாம் வார்த்தைகளே வரலாற்றை மாற்றிற் றன்று
வீணான போரொன்றுந் தவிர்ந்த தாமே
94O
சொல்லுகபோய்ச் செவியுண்ண ஒலிபெருக்கிச்
சமாதானம் எங்களது குறிக்கோ ளென்றே கொல்வதற்கும் வெல்வதற்கும் வரநா மில்லை
குடிமக்க ளோடெமக்குப் பகையு மில்லை சொல்லிடில்நாம் மன்னருக்கும் எதிரி யில்லை
சேர்ந்துள்ள வெள்ளையரோ பகைவர் என்றே நல்லதொரு முடிவுக்குள் மக்கள் வந்தால்
நிலைமாறும் போங்களென்றார் நடந்த தஃதே
94
ஒலிபெருக்கி வார்தைகளை ஒவ்வொன்றாக்கி உணர்ச்சிபெற மக்களுக்கு ஒதக் கேட்டு வலிந்தொருபோர் செய்துயிகளபூழிவு தோன்ற
விரும்பாத படைவீரர் நிலைமை ஒர்ந்தார் கலைந்தார்கள் கைகொண்ட படைக்க லங்கள்
காலடியில் தனிக்கவிட்டே அனைத்துப் பேரும் சிலையாகிப் பாலம்பூர் மன்னர் நின்றார்
செய்வதறியாதபாலை ஒட்டை போன்றே 942

Page 115
தீரன் திப்யு சுல்தான்காவியம் C2060
தப்பித்துப் போவதுவே சிறந்த தென்று
தலைவியையும் மக்களையுந் தனிக்க விட்டுத் தப்பித்துச் சென்றுவிட்டார் மன்னர் நாட்டின்
தலைவனின்றிக் குழப்பங்கள் தொடங்க லாகும் எப்படியும் மன்னனையும் நாட்டினையும்
இக்கட்டில் காக்கின்ற பொறுப்பை ஏற்றுத் திப்புவிடம் ராணிசென்றார் தாயைக் கண்ட
தனயனெனத் தலைசரித்தே அழைத்துச் சென்றார்
943
தன்னருகில் இருக்கையொன்றைத் தந்து தானும் சேர்ந்தமர்ந்து வந்திருக்குங் காரணத்தை என்னவெனச் சொல்லும்படி இதமாய்க் கேட்க
இதயத்தின் சுமையனைத்தும் ஒன்று கூட்டி என்னருமைச் செல்வாநி முன்னோர் போழ்தில்
எண்மானங் காத்ததனை இன்றும் நெஞ்சுள் எண்ணாத நாளில்லை இன்றும் என்றன்
இக்கட்டில் வந்துள்ளேன் எனப்பு கன்றார்
944 மன்னரின்று நாட்டிலில்லை மக்கள் தத்தம்
மனம்விரும்பு வாறானார் தடுப்பாரற்றே என்னிலையிலேதுமொன்றுஞ் செய்ய வொண்ணா
இக்கட்டில் நானுள்ளேன் உன்ற னுக்கு மண்வேண்டு மாயிலரைப் பங்கு நாட்டை
மனமொப்பித் தருகின்றேன் பெறுவாய் எங்கள் மன்னவரை மன்னித்தே நாடு மீள
வகைசெய்ய வேண்டுமென இரந்திட்ராரே
945
நாடுகொள்ளும் ஆசையெனக் கில்லை மக்கள்
நிம்மதியைக் கெடுக்குமெண்ணம் சிறிது மில்லை
நாடுவிட்டு நாடுவந்தெம் நாட்டுள் புக்கி
நாசங்கள் செய்தெங்கள் நிம்ம திக்குக்

ஜின்னாவூர் லுரிபுத்தீன் C_207-כ
கேடுசெய்யும் வெள்ளையருக்குதவலொன்றே
கவலைதரும் செய்கையதால் உங்கள் மன்னர் நாடாதே இருப்பரெனில் அப்பேர் தம்மை
நாமவர்க்கு நண்பர்தாம் என்றிட்டாரே
946 தமதுநிலை தனையெடுத்துத் திப்பு கூறத்
தாயனையாள் நன்றியொடு அவரை நோக்கி உமைப்போன்றோர் வீரனிந்த உலகில் காணேன்
உவந்தளித்தும் பிறர்மணன்மேல் உவப்பு மற்றே தமையெதிர்த்த பேரினையும் மன்னித் தேகும்
தயாளகுணம் கொண்டுள்ளிர் என்றன் மீது சுமையொன்றை மீண்டும்நீர் சுமத்தி விட்டீர்
செல்வாநின் மேல்நன்றிக் கடன்பட்டேனே
947 வெள்ளையரின் அட்டகாசமும் திப்புவின் போர்க் கொழயும்
வெள்ளையர் கவர்னர் தூது விட்டனன் மைசூர் மண்ணில் உள்ளிடும் நோக்கங் கொண்டே ஊன்றிட நட்பை யென்னும் கள்ளமாம் காரணத்தைக் கூறியே அறிந்தார் சுல்தான்
உள்வர அழைத்தார் முன்னே ஏவலர் செலத்தொடர்ந்தார்
948
வந்தனர் வெள்ளையர்தம் வயப்படுதூது வர்கள் சிந்தையில் ஒன்றாச் செய்தி செப்பினர் திப்பை நோக்கி தந்திடல் நலமெ மக்குத் தங்களின் புலத்தில் நாங்கள் வந்திருந்திராச சேவை வரித்திட எனப்பணிந்தே
949 அண்டையில் இருக்கும் எல்லா அரசரும் எமக்குத் தங்கிக் கொண்டிடும் நட்பைப் பேணக் கொடுத்துளர் வாய்ப்புப் போலும் உண்டெனில் இங்கும் நம்முள் உறவுன்றும் என்றார் வந்தோர் கொண்டதோ அவர்கள் வேறு காரணம் என்றிட்டாரே 95O

Page 116
தீரன் திப்பு சுல்தான்காவியம் O208)
மங்களூர் ஒப்பந்தத்தின் வழியவர் சாட்டாய்க் கொண்டு தங்கிடநினைந்தார் பொல்லார் சீரங்கப் பட்டினத்தில் சங்கையாய் வரவேற் றாலும் சொல்மொழி வெறுப்பைத் தூண்டப் பொங்கிடு சினத்தைப் பொத்திப் புகலுவார் தூதர் பாலே
951 ஒப்பந்தந் தன்னை மீறி ஒவ்வொரு செய்கை தாமும் ஒப்பிலா வாறே நீங்கள் ஒழுகுதல் அறிந்து மோநாம் ஒப்புவோம் எமது மண்ணில் ஒன்றிட உணர்வீரென்றார் தப்புநாம் வந்த தென்னுஞ் சேதிநெஞ்சுறைக்கும் வாறே
952
நாமெல்லாக் கட்டுப் பாடும் நூலிடை தப்பா தேதான் சேமமாய்ப் பேணுகின்றோம் தவறுவோர் நீங்கள் முன்னர் ஆமென்றும் ஒப்புக் கொண்டே அனைத்தையுந் தவிர்த்தே எம்மை நாமமற்றொழிக்க வாய்ப்பை நாடுவதறிவோ மென்றார்
953 “கல்கத்தா” "பம்பாய்" "சென்னை” கடல்வழி மார்க்க மாகப் பல்வகை ஆயுதங்கள் "பிரிட்டன்"இல் இருந்து நீங்கள் பலமுறை கொணர்ந்த தொன்றும் பொய்யிலை அறிந்த வுண்மை சொல்லுங்கள் நோக்க மென்னதாக்குதற் கருத்தோ டன்றோ
954 இல்லையஃ தனைத்தும் நாங்கள் எமைக்காக்கக் கொள்வதாகும் அல்லவே றெஃதும் நோக்கம் அறியுகுவீரென்றார் தூதர் நல்லதாம் அனைத்துப் பேரும் நட்பொடும் இருக்க மேலும் தொல்லைகள் தருவார் யாரோ தடுத்திட எனவிழித்தார்
955 எம்மீது போர்தொடுக்கும் எண்ணமே வேறொன்றில்லை தம்மைத்தாம் காக்கும் நோக்கம் தனக்கென்ப பொய்யதாகும் நம்மைநாம் காத்துக் கொள்ளும் நலமெமக் குண்டு நட்புச் செம்மைக்கும் உதவா வுங்கள் தொடர்பின்று வேண்டா மென்றார்
956 தப்பாகப் புரிந்துள்ளிர்கள் சுல்தானே இதுபோல் மீண்டும் தப்பாகப் புரியா வாறே தூதுவப் பீட மொன்றை ஒப்பிட வேண்டும் நாங்கள் ஒருவரை ஒருவர் நன்கு தப்பின்றிப் புரிந்து வாழச் சொல்லுக முடிவை என்றார் 957

ஜின்னாவூர் லுரியுத்தீன் C209) அதற்கான அவசியத்தில் அல்லநாம் நீங்கள் முன்னர் விதித்தமுன் ஒப்பந்தத்தை விடாதுகைக் கொள்வதாயின் புதியதாம் வேண்டு கோளைப் பற்றிநாம் தேவையாயின் மதிகொளல் கூடும் உங்கள் முயற்சியில் பலனில் என்றார்
958 மறுத்தது மட்டு மன்றி மதியுரை வேறு சொல்ல அறிந்ததும் வெள்ளையர்கள் அகவெறி கொண்டார் எண்ணக் குறிதவறான தென்று குமைந்தனர் வேறு மார்க்கம் அறிந்திட முயன்றார் கொண்டார் அதுவிழி செயலா மன்றோ 959
தமதெல்லைப் புறத்திருந்த சிறுசிறு கிராம மெல்லாம் அமைதியைக் குலைத்தார் தம்மின் ஆட்களைக் கொண்டு மக்கள் தமக்குரித்தான வற்றைச் சூறையிட்டார்கள் சேதி இமைப்பிடைப் பொழுதினுள்ளே எட்டிட வெகுண்டார் மன்னர்
96.O “வெள்ளையர் கவர்னருக்கு வரைந்திடும் ஒலை இஃதாம் எல்லையைக் கடந்தே யுங்கள் ஏவலர் படைகொள் வீரர் கொள்ளையுங் கொலையும் செய்யுங் கொடுமையும் அறிந்தோம் - எம்பெண் பிள்ளைகள் தமையும் உம்மோர் பிடித்தெடுத் தகல்தல் கண்டோடி 61 பொறுமைக்கும் எல்லை யுண்டு பலமுறை சொல்லிப் பார்த்தும் அறிந்தது தொடர்ந்து செய்யும் அட்டூழியங்கள் தாமே சிறுத்தையைத் துயிலில் நின்றுந் தட்டியே எழுப்பி டாதீர்
நிறுத்துக செயலை இன்றே நலம்வேண்டில்” எனவரைந்தார்
962
ஆணையிட் டொழுகச் செய்யும் அதிகாரம் தொனித்த ஒலை காணுறின் பேடி யர்க்கும் கனற்றிடும் கோபம் கவர்னர் தோணிடா தெதுவும் யுத்தம் செய்திடத்திப்பு ஏவும்
பாணமீதாகும் எம்மேல் பெருஞ்சினம் ஏற்ற வென்றார்
963

Page 117
தீரன் திப்பு சுல்தான்காவியம் G210
தடுத்திட வேண்டு மென்று துணிவுற்ற போதும் போரைத் தொடுத்திட முன்னர் சொல்லித் தீர்த்திட முனைந்தே தூது விடுத்திட ஓலை யொன்றை வரைந்தனர் திப்பு சுல்தான் கடுத்தன வார்த்தை யஃதில் கோபத்தின் கணல்தெறிக்கும்
964 தளபதி யொருவர் சொல்வார் "திப்புவின் நோக்கு சற்றும் இளகியதாக வில்லை எடுத்தாய்தல் வேண்டும்” என்றே ”களவொடு கொலைபெண் கொள்ளல் குற்றங்கள் செய்ய நாமோ விளித்தனம” என்றார் கவர்னர் விவாதமொன்றுருவாகிற்றே 965 "திப்புவோ புத்திக் கூர்மை செறிந்தபே ராட்சியாளர் ஒப்பிலார் வீரந் தன்னில் ஓர்மையுந் திறனும் மிக்கார் செப்பிடில் செல்வங் கூடச் செறிந்ததவ வாட்சிநாங்கள் தப்பிதம் செய்வோராவோம் சீர்தூக்கிப் பாராதுற்றால்”
Տ66 தளபதி சொன்ன சொற்கள் செவிகொள வெறுப்புற்றேதன் உளத்தினைச் சினக்க வைத்த உற்றவர் தன்னை நோக்கி வளம்பெறும் ஆட்சி கொண்டால் வீரர்தாம் கோழை யாரும் இழந்திடில் வீராங் கூட இலாதுபோ மெனப்பு கன்றார்
967 இறுதியில் பொருந்தா ஓலை பறந்தது கைகொள் திப்பு கறுவினார் இனிமேல் சற்றுங் காலத்தைக் கடத்த லாகா முறைப்படி பாட மொன்றை மாற்றாருக் குரைக்க வென்றே உறுத்தினார் பெரும்ப டைக்கே உடன்நடை கொண்டதஃதே
968

ஜின்னாவூர் லுரியுத்தீன் G2110
பெரும்படையும் வீர முழக்கமும்
வெற்றிவெற்றி வெற்றியென்று வீறு கொள்ளடா
வெள்ளையரை வெல்வோமென வீரம் பூணடா ஒற்றுமையால் இந்தியர்நாம் உலகை வெல்லலாம்
உட்பகைமை தவிர்த்திடுவொம் ஒன்று கூடுவோம் பற்றுவைத்தால் மண்ணின்மீது பறங்கிப் பேய்களை
பறந்தவர்தம் நாடுநோக்கி ஓடச் செய்யலாம் விற்றுவிட்டார் சிலபேர்நம் சொந்த மண்ணினை
வந்தவர்க்கு மீட்டெடுப்போம் விரைந்து செல்லடா
வெற்றிவெற்றி.
969 மைசூரின் புலியெங்கள் திப்பு மன்னரே
முதன்மைவீரர் வெள்ளையரைத் துரத்தும் போரிலே கையில்வாளும் கேடயமும் துவக்கு மிருக்கையில்
கயவர்களை வென்றிடுதல் கடின மில்லையே வையமெங்கள் காலடியில் வீழு மேயடா
வெற்றிவீரர் திப்புவின்கை யோங்கச் செய்யடா கொய்திடுவோம் சிரங்களைவோம் எதிர்க்கும் பேர்களின்
கவலையில்லை உயிர்பிரிந்தால் மண்ணுக் காமடா
வெற்றிவெற்றி.
97O அச்சமில்லை அச்சமில்லை அச்ச மில்லையே
துச்சமெங்கள் உயிரெமக்குத் துணிவு துணையடா வச்சிரமாம் இந்தியனின் வீரப் புயங்களே
வரலாற்றில் முதன்மைநாங்கள் வரிக்க வேண்டுமே எச்சிலிலை யுண்ணக்கப்பல் ஏறி வந்தவர்
இருந்தவிடமும் இலாதொழிப்போம் ஏறு போல்நட நிச்சயம்நம் பக்கம்வெற்றி நிலைக்கு மேயடா
நெஞ்சுயர்த்திச் சிங்கம்போல நின்று போரிடு
வெற்றிவெற்றி.
971

Page 118
தீரன் திப்பு சுல்தான் காவியம் C212)
கையெடுத்த வாளதுதன் கவசம் போகுமுன்
கூறுபோட வேண்டும்நூறு கயவரையடா மெய்யுறைதலாகாதே வீரன் ஆயுதம்
பாயவேண்டும் எதிரிப்படை வீரர் மீதிலே செய்கைவெற்றி நோக்குடைத்தாய் இருக்க வேண்டுமே
சக்திமிக்க வீரர்களே திரண்டு செல்லுங்கள் வையகத்தின் வாழ்வுவரும் ஒருமுறை தானே
வீனர்களைத் துரத்திவிடின் வெற்றி நமதடா
வெற்றிவெற்றி.
வேறு 972
பெரும்படை யொன்று கூடிப் போனது திமிர டக்கத் திருவுடைக் கோண்முன் சென்றார் திப்புமான் பரியின் மீதே அருகினில் காஸி கானும் அவரொடு தளகர்த் தர்கள்
ஒருங்கிணைந்தேகினார்கள் ஊர்வழி கடல்போந்தாற்போல்
973
வெண்பரி மீது வேங்கை வீற்றிருப்பதுவாம் போன்றே கண்படு பாங்கில் திப்பு கடிவாளம் கையில் பற்றித் திண்டிறல் புயமும் மார்பும் தேசுடைப் பொலிவு காட்டக்
கொண்டதாம் ஓர்மை யோடே களத்தினை நோக்கிச் சென்றார்
974
உணர்ச்சியைத் தூண்டு மாறே உற்சாக மிகுதியாலே விண்ணினைத் தொடுமால் ஓங்கு வார்த்தைகள் கோத்து வீரப் பண்ணொடு மின்னல் வேகம் படைநடை கொண்ட தேபோர்
திண்னமா யெம்பால் வெற்றி தருமெனும் உறுதி யோடே
975
வெற்றியே குறியாய்க் கொண்டு வெள்ளையர் களத்தை நோக்கி உற்றதம் படையி னோடே ஊதியப் படையுங் கூட்டி முற்றுமே ஆயுதத்தின் மீதுகொள் பலத்தால் வந்தார் சற்றுமே அறியார் ஈற்றில் தோல்விதம் முடிவா மென்றே
976

ஜின்னாவூர் லுரியுத்தீன் C213 o வெஞ்சமர்க் களததைத் தம்மின் வீரிய ஒளியைப் பாய்ச்சி நஞ்சுடை மனத்தார் வெள்ளை நாசகர் தம்மையன்று வஞ்சமில் திப்பு மன்னர் வாகைகொள் நிலைமை காண செஞ்சுடர் வெய்யோன் வானைத் துலக்கியே சுடல ரானான்
977 வீரர்கள் இருபுறத்தும் வந்தணிசேர்ந்தார்திப்பு போருக்குத் தொடக்கமாகப் பற்றிய கைவாள் தன்னை வீரர்கள் தம்மை நோக்கு வாறென வுயர்த்திக் காட்ட காரணம் புரிந்த வீரர் களம்புகுந்துழற்றினாரே
978 பீரங்கி யொருபுறத்துப் பீறிடும் குண்டு மாரி மாறியே மறுபுறத்தும் மிகைத்திடு மதுபோல் வாள்வேல் கூறிடும் அவயவங்கள் குறிதவறாதே சன்னம் பீறிடும் துவக்கின் ஒலஞ் செருக்களத் தெங்கு மாமே
979 போருக்கு வந்த வீரர் பன்முகப்படுவர் வெள்ளைப் பேருக்கு நாடு கொள்ளும் பேராசை கூலி பெற்றுப் போரணி சேர்ந்தோர் முற்றும் பணத்தாசை கொண்டிருந்தார் தீரர்கள் திப்பு வின்போர்த்தியாகிகள் மண்காப் போர்கள்
98O எண்ணத்திற்கேற்றவாறே இயல்வுறு மனைத்தும் செய்கை தன்னல மற்ற தாயின் தாய்மண்ணில் பற்றோ டென்றால் உண்மையாம் வெற்றி யென்ப துறுதிசெய்தியாகத் தாலே நண்ணியதாகும் அன்றும் நலம்பெறும் நோக்கின் பாலே
981 ஒவ்வொரு அணியாய் ஏவல் ஏற்றுமே களத்தை நோக்கிச் செவ்வையாய்ச் சென்றார் வீரர் திசைக்கேற்றவாறே எங்கும் எவ்வெவர் எவ்வணிக்காய் ஏற்பரோ வகையறிந்தே ஒவ்விடப் பணித்தார் திப்பு யுத்தத்தின் ஞானம் ஓர்ந்தே
982 பரிப்படை பரிப்படைக்குப் பதில்தரும் பன்னூ றாகும் கரிகளும் பொருதும் ஒன்றைக் குறிவைத்து மற்றொன் றேகும் இருபெரு மலைகளென்றி இடிபடும் பாங்கில் பக்கம் ஒருவரும் நில்லார் யானையுடனுள வீரர் மட்டே 983

Page 119
தீரன் திப்பு சுல்தான் காவியம் G2140
ஈட்டியும் வாளும் வெய்யோன் ஏற்றிய சுடரில் பட்டே காட்டிடும் ஒளியோ மின்னற் கீற்றினை நினைவுகூரக் கேட்டிடும் இடியி னோசை குமுறிடும் பீரங்கிப்பால்
தேட்டமென் கார்காலத்தின் தொடரிதோ வெனுமாறாங்கே
984
வெள்ளையர் குருதியோடு வெட்டுண்ட மற்றோர் சென்னிர் வெள்ளமாய்க் கலந்தே பூமி விரவிடும் சகதியாகும் கொள்ளையாம் தேகத் துண்டம் காணிட மனைத்தும் காணின் உள்ளமோ முள்ளில் வீழ்ந்த உயிர்த்தசைக் கொப்பாய்ப் போமே
985 வெட்டுண்டு வீழ்வார் ஒலம் வீரர்க்கு வீர மூட்டக் கொட்டிடும் பறையினோசை வாட்சமர் ஒலிசேர் சத்தம் முட்டிமோ துண்டு யானை முளங்கிடு முளக்கம் குண்டு
பட்டதும் நிலம்பிளக்கும் பேரொலி செவிகொள்ளாதே
986
ஒவ்வொரு புறத்தும் வெற்றி ஒன்றிடும் பொழுதொன்றுள்ளே அவ்விதம் மறுபுறத்தும் அணைந்திடும் யார்தான் போரில் கவ்வுவார் தோல்வியார்தான் கைகொள்வார் வாகை என்றே
செவ்வையாய்ச் சொல்ல மாட்டாத் தருணமே நீண்ட தன்றோ
987
பலநாட்கள் தொடர்ந்த தந்தப் போரொரு வாறு முற்றி நிலைபெற வெற்றி தம்பால் நிலைத்ததையறிந்தார் திப்பு கலவரங் கொண்டார் வெள்ளைக் கடைமகர் தோல்வி கண்டே உலையிடைப் பட்ட பாங்கில் உயிர்ப்பிச்சை வேண்டி னாரே
988
வெற்றியும் வாழ்த்தொலியும்
சீரங்கப் பட்டினத்தின் தெருவெலாம் சனத்திரள்தம் பேரோங்கு வீரர் தம்மைப் போற்றிட வரவேற்றேற்க்க ஊரில்லத் தொருவரேனும் உளாரிலை வீதி தோறும்
சாரியாய் நின்றார் பூக்கள் சொரிந்தனர் வாழ்த்தொலித்தார்
989

ஜின்னாவூர் லுரியுத்தீன் C21so நீள்நெடு சாலை யோர நிரைநிரைநிலாமுற்றங்கள் நீள்நெடு விழியார் கூடிநிரம்பினர் மலர்களள்ளித் தோள்ப்பல மறவர் மீது தூவினர் வீரர் நாப்பண் மாளிகை நோக்கித்திப்பு மதகரி மீதே வுர்ந்தார்
99 O வெற்றியின் களிப்பு வீர விழிகளில் பொங்குங் கைவாள் பற்றிய பாங்கில் முன்னே பரந்தகன் றிருந்த மார்பில் கற்றையாய் வெண்முத்துக்கள் கோத்ததாம் மாலை மின்னும் பொற்புறும் காட்சிதிப்பு பவனியில் செல்ல லன்றே
991 கோலங்கள் வாசல் தோறும் கொண்டிடும் அலங்கா ரங்கள் ஆலிலைத் தோரணங்கள் அமைந்தன முன்றிலெல்லாம் ஆலாத்தி கொண்டார் பெண்கள் அவரவர் கணவன் மாரை ஆலாத்தியெடுத்தார் பெற்றோர் அருகிருந்தாசி செய்தார்
992 பூரண கும்பம் வைத்துப் பொலிந்தன இல்ல மெல்லாம் காரணர் வீரர் வீடு கால்பதித் திடுங்கால் போற்றுஞ் சீரதாய் வெற்றி கொண்ட சிறப்பினை மாதர் போற்றச் சேருமஃதரசருக்கும் சிந்தையில் பொதிந்ததாலே
993 பள்ளிகள் தோறும் வல்லோன் புகழ்ஒதக் கோயில் தோறும் உள்ளுறை மணிக ளேங்கி ஒலித்திடும் விசேட பூசை கொள்ளுவர் பூசகர்கள் கோனுயிர் நீடு வாழ உள்ளிடும் பிரார்த்தனைகள் ஒற்றையான் தலங்களெல்லாம்
994 வாழ்கவெம் மன்னர் திப்பு வாழ்கவே வாழ்க வெற்றி சூழ்ந்திட வெள்ளை யோரைச் சிதைத்தவெம் அரசர் வாழ்க தாழ்பணிந்துயிரி ரக்கச் செய்தபோர் வீரர் வாழ்க வாழ்பதி மைகர் ஆன மனுக்குலம் வாழ்க வாழ்க
995 அரண்மனை வாயில் தன்னில் அமைச்சர்கள் முதலானோர்கள் பரந்திருந்தனரே கண்கள் பெருமகிழ்வுற்ற பாங்காம் வருகையை அறிந்தார் வெற்றி வேங்கையைக் கண்டார் ஒன்றி இருகரமுயர்த்தி வாழ்த்தை இயம்பினார் பதிலுங் கொண்டார் 996

Page 120
தீரன் திப்பு சுல்தான் காவியர் C2 160
நெருங்கிய ஊர்வலத்தார் நாயகர் தமைத்தவிர்த்தே அருகினி லுறைந்தார் மன்னர் அடிசில முன்னே செல்லக் கரியுடல் நிலம்ப தித்துக் கால்தனைத் தூக்கும் சுல்தான் ஒருபதம் பதித்தார் மற்ற தூன்றியே நிலத்தில் நின்றார்
997 முதலவர் கையைப் பற்றி முத்தித்தார் பூர்ணய்யாவும் மதியுரை முதல்வர் மற்றோர் முறைப்படி வாழ்த்துச் சொல்ல அதிபதி அன்னை பாட்டி அகங்கொண்ட மனையாள் ஒன்றும் பதிதனை அடைந்தார் பெண்டிர்ப் புலமது கண்ணுற்றாரே
998
கிழத்தியின் களிப்பு
பறங்கியர்மேல் படைநடத்தி வெற்றி கொண்டு
புறமுதுகிட் டோடவைத்துப் பதியடைந்த அறங்காத்த வீரரினை அனைத்தாள் நங்கை
அடைந்தவெற்றி மகிழ்வினிலும் போதை யூட்டும் நிறைந்தமனங் கொண்டிருந்தார் மன்னர் பேகம்
நாயகரின் வெற்றியினால் நிலைகொள்ளாதே பொறுமையற்று வரவெண்ணி வீதி நோக்கிப்
பார்த்திருந்தார் பார்த்ததும்நெஞ் சொன்றிப் போனார்
999 புகழனைத்தும் இறைவனுக்கே என்றாள் கேட்டுப்
'பெருவெற்றி கொண்டஎனக் கிலையோ என்றார் "புகழுக்கென்றுரியவனோ இறைவ னொன்றே
பெருவெற்றிதந்தவனும் அவனா மென்றாள் பகைவரினைப் பொருதியது நானே என்றார்
'பக்கமிருந்துதவியது தனியோன் என்றாள் மனமிலையோ எனைவாழ்த்த என்றார் நங்கை
மார்பினிலே புரண்டாள்தன் மதிசோர்ந்தாரே
1OOO

ஜின்னாளுர் லுரியுத்தீன் <217
வெற்றிகொள்ளக் காரணனே இறைவ னென்னும்
வற்றாத நம்பிக்கை நிறைந்திருந்தும் சொற்போரின் மகிழ்வெண்ணித் தூண்டினார்வாய்த்
துடுக்கறிவார் துணையவளைச் சீண்டிப் பார்த்தார் கற்றவர்களிருபேரும் என்பதாலே
கனிந்ததெலாம் இன்சொற்கள் களிப்பைக் கூட்டும் பொற்புடைத்தாம் புகழிறைக்கே என்றே மார்பு படிந்தவளின் முகமுயர்திப் பேசலானார்
1ΟΟ1 பூப்போல்வாய் நீயெனக்கு பேகம் என்றார்
பூரிப்பால் தனைமறந்தாள் சய்தா பேகம் காப்பவனின் கொடைநீயாம்' என்றார் மன்னர்
காவலனின் சேவகிநான் என்றாள் ராணி வாய்ப்பாரோ நின்போல மனைமற்றோர்க்கும்
வற்றாத பேரன்பின் சுனைபோ லென்றார் "வாய்ப்புற்றா றெருவரெனப் புகல்வாள்யாராம்
வேற்றொருவரெனவினவ நீங்களென்றாள்
1OO2 "பொல்லாத குறும்புனக்கு சய்தா என்று
புன்னகையும் பொய்ச்சினமுங் குழைத்துச் சொல்ல 'அல்லஅல்ல ஆண்களுக்கே குறும்பு சொந்தம்
அரிவையரை அவதியுறச் செய்வாரென்றாள் “வெல்லத்தில் கோத்தெடுத்த வார்த்தை கூட்டி
வாட்டுவது யாரெம்மைச் சொல்நீ என்று சொல்லிடவே நீங்கள்தான் சற்று முன்னே
சொன்னதென்ன சொல்லுங்கள் நீங்க ளென்றாள்
1OO3 பாராளும் பதிமீண்டும் புகல்வர் வார்ததைப்
போர்தொடுக்கும் மனையாளை அனைத்தவாறே போர்க்களத்தில் பகையோட்டப் போரியற்றும்
போர்முறைதான் நானறிவேன் நின்னைப் -
போலநாய்

Page 121
தீரன் திப்பு சுல்தான் காவியம் C218 o
போர்செய்ய நானறியேன் தேவியாரிப்
போர்முறையைக் கற்பித்தார் நினக்காம் என்ன யார்நீங்கள் தான்வேறு பேருண் டாமோ
என்னுயிரின் உயிரான மன்னன் என்றாள்
1OO4 கொழுநனொடு குலவிடுங்கால் விளையாட் டாகக்
கூறுமொழி இருவரையும் குதூகலத்துள் நழுவிவிழச் செய்திடவே நகைத்தார் மாற்றார்
நிழல்படாத வேளையது தனித்த பாங்கில் சுழன்றாடக் கலகலக்குஞ் சதங்கைக் கொப்பச்
சிரிப்பொலியின் நாதத்தால் சுவர்கள் கூடிப் பொழிந்ததுவோ எனுமாப்போல் எதிரொலிக்கும்
பாசத்தால் பிணையுண்டோர் களித்திட்டாரே
1OO5
வெண்பிஞ்சுச் சோளத்தின் வரிசைப் பற்கள்
வெளிச்சமிட இதழ்விரித்தே புன்ன கைத்துக் கண்ணிமைகள் படபடக்கக் கூர்வே லொக்கும்
கருமணிகள் கருத்தோடு சுழலும் நோக்கி எண்ணமென்னதாமென்று இதயம் ஒர்ந்த
ஏந்தல்பெண் இடைபற்றி நடந்தார் ஆங்கோர் வண்ணமலர் தெளித்ததேக்கு மஞ்சம் அன்னார்
வரவுக்காய்க் காத்திருக்கும் தனிமை கண்டார்
1OO6 தாயமுதும் தீரர் திப்புவும்
சமர்க்களந் தன்னில் தோல்விதழுவினார் திப்பாம் என்றே அமர்க்களப் பட்ட தோர்நாள் ஆட்சிசெய் புலமனைத்தும் சரமெனப் புகுந்த சேதி செவிகொண்ட மக்க ளெல்லாம்
உருவினில் குறுகி நெஞ்சால் உருகினார் அதிர்ந்தே போனார்
1Ο Ο7

ஜின்னாளுர் ஷரியுத்தீன் C219 lo அன்னையின் காதில் சேதி அறைந்தனர் சேவிதர்கள் சொன்னவை கேட்டுத் தாயோ சற்றெனுங் கலக்கங் கொள்ளார் புன்னகை நெளிந்த தன்னை புருவத்தில் பார்த்தோர் வேர்த்தார் என்னயி தாமோ தாயின் இலக்கணம் பொய்த்த தென்றே
1OO8 தோல்வியைத் தழுவி மன்னர் சீரங்கம் வருவா ரென்றே கால்வழிநடந்தார் மக்கள் கவல்மிகும் உளஞ்சுமந்தே வேல்விழி மாதர் மைந்தர் வயோதிபர் சிறாருங் கூடக் கோல்நிமிர் ஆட்சிக் கோவைக் கண்டிடுங் காமத் தோடே
1OO9
வெற்றியின் வித்தே தோல்விவரித்ததென் வதந்தி சீராய்ப் பற்றிட வைத்தார் நாட்டின் புல்லர்கள் பொறாமை கொண்டோர் முற்றுமே பொய்யதாகும் மக்களும் அறிந்தாரில்லை பெற்றதாய் நெஞ்சு மட்டும் புறங்கண்ட சேதியஃதே
1Ο1Ο
இதயத்தால் சோர்ந்து நோக்கும் இடைவழிகாத்திருந்த அதிசனக் கும்பல் பேசும் அதிசயம் இதுவா மென்றே இதுகாறு வரையும் தோல்வி ஏற்றிட மாட்டார் ஏற்க விதித்ததென் பவமோ என்றார் வேறெதுந் தோன்றாதாரே.
1O11 ஒவ்வொரு விழியும் தோற்றே ஊர்ந்திடுஞ் சைனியத்தைக் கவ்விடு நோக்கா லுண்ணிக் காத்தலின் போழ்து காதில் செவ்வையாய்க் கேட்டதேயோர் களியொலி முரசநாதம் அவ்வொலி வெற்றிக் கென்னும் ஆர்ப்பரிப் பாகும் அன்றே
1O12 பூவிதழ் விரிந்தாற் போன்றாம் புன்னகை வதனப் பூக்கள் யாவுமே பொலிந்த தாங்கே இரவிகாண் கமல மொக்கும் ஏவிடாப் பதங்கள் பாய எதிர்கொண்டார் மைந்தர் மற்றோர் கூவினர் வெற்றி கொண்ட களிப்பினைக் காட்டும் பாங்கே.
1O13 யானையின் மீது கோத்த அம்பாரி மீதமர்ந்தே சேனைகள் தொடர மன்னர் தரிசனம் கண்ட மக்கள் வானையே அதிரச் செய்தார் வாழ்த்தொலிப் பூச்சொரிந்தே காணவென்றிருந்த காட்சி காணாதார் களிப்புற்றாரே 1Ο14

Page 122
தீரன் திய்யு சுல்தான் காவியம் O220 புலிவரிக் கொடிகள் காற்றில் படபடத் தாடும் வீரர் அலைதொடர் கடலா மன்ன அடுக்கடுக்காக மீண்டார் நிலம்படு பதங்கள் ஊன்ற நடுங்கின வீதி யெல்லாம் தொலைவழி கடந்தும் வெற்றிச் செருக்கினால் களைமறந்தார்
1O15 தொடர்ந்திடும் படைகளுக்குச் சோபனஞ் சொல்லிச் சொல்லித் தொடர்ந்தது மக்கள் கூட்டம் சீரங்கஞ் சென்றடைந்தார் கொடும்பகை வென்ற திப்புக் கொண்டபோ ரணிக ளோடே அடுத்தெவர் தாமு மற்றே அன்னைபால் சென்றடைந்தார்
1Օ16 பொய்யாக வதந்தி யொன்று பரவவிட்டிருந்த செய்தி ஐயனும் அறிந்ததாலே அன்னையைத் தேற்ற லெண்ணிச் செய்முதற் கரும மாகச் சென்றாங்கு தாயைக் கண்டார் மெய்யோடு சேர்த்தனைத்தே முத்தித்தார் நுதல்கனிந்தே
1Օ17 செவிகொண்ட சேதியுங்கள் சோகத்தைக் கிளறியுள்ளம் அவிந்திட வைத்திருக்கும் அறியுவேன் அடலா ரென்னைக் கவிழ்ந்திட வைத்து வாகை கொண்டதாய்ப் பொய்யுரைத்தார் கவலழிந்திடுக வெற்றி கொண்டது நானே யென்றார்
1O18 கடுகள வேனும் நெஞ்சில் கவல்கொள வில்லை நான்நீ படுகளம் புக்கின் வெற்றி பற்றுவாய் என்பதாலே திடமது தெய்வச் சார்பு தொடர்ந்திடும் உன்னை அன்னை கொடுத்ததாம் அமுது வல்லோன் காப்பொடு அறிவா யென்றார்
1O19 முகத்தொடு முன்கை நெற்றி முடிசில கணுக்கால் நீரால் அகத்துடை நிய்யத் தோடே அகன்றிட அழுக்க கற்றி வகைப்பட “வுழு”ச்செய் தேநான் வேண்டிடு போழ்திலெல்லாம் உகந்தமு தூட்டினேன்நீ உண்டகாலனைத்தும் என்றார்
1O2O
உடற்தூய்மை யோடு நெஞ்சின் உளத்தூய்மை கொண்டு நம்மைப் படைத்தவன் நாம மோதிப் பாலமு தூட்டினேன்நின் உடற்பலம் தாய்ப்பால் ஈய உளப்பலம் இறைவன் ஈவான் கிடைத்திடும் வெற்றி யென்னும் கொள்கைபால் உறுதி கொண்டேன்.
1Ο21

ஜின்னாவூர் லுரிபுத்தீன் C2210
சிறுவனின் தீரமும் திப்பு செய்த சங்கையும
துயரமிகு நிகழ்வொன்று நடந்த தன்று
திப்புமன்னர் ஆட்சிசெய்த காலப் போழ்தில் பயமறியாச் சிறுவன்றன் மன்னன் மீது
பற்றுடைத்த காரணத்தால் நிகழ்ந்ததாகும் கயவரினால் கிராமத்தில் நடந்த கேட்டைக்
காணமன்னர் வருவதற்காய் வழிசமைக்க முயன்றதனால் விளைந்ததது விபரங் கேட்யின்
மனமுருகாப் பேரில்லை இன்றுந் தானே
O22 பெருங்கோட்டைச் சுவருடைத்து வழிசமைத்தால்
புகுந்துள்ளே மன்னர்வர ஏது வென்று பொருந்தினனே தன்னொத்த சிறாரினோடே
பத்துவயதானவொரு சிறுவன் "சுந்தர்” கருத்துற்றான் கற்களினை ஒவ்வொன்றாகக்
கழற்றியிடை பெருக்கிடவே பகலைக் கொன்ற இருளரக்கன் துணைசெய்தான் நண்பர் கூட்டாய்
இறங்கினரே தம்பணிக்காய் எதுவும் நோக்கார்
1O23 இருப்புக்கூர் கொண்டுமெல்லக் கல்லக் கல்லின்
இடைபுகவே வருமொலியை செவியுள் வாங்கி ஒருகாவற் படைவீரன் உற்றுக் கேட்டான்
“யாரது?"வென்றோங்குகுரல் தனைத்தொடுத்தான் ஒருத்தருமே இல்லைமன உறுத்த லென்றே
ஒருநொடிக்குள் உணரவவன் கடமை செய்ய கருமத்தைச் சிறுபொழுது நிறுத்தி மீண்டுங்
கைக்கொண்டார் கல்லொன்று கழன்றே வீழும்
O24 மீண்டுமொரு கல்லையவர் கல்லச் சப்தம்
மிகைத்திடவே காவலன்கண் சுவரை மேயத் தோண்டுபவர் தமைக்கண்டான் தரித்தி லான்பின்
சப்தமிட்டான் “யாரங்கே" என்ற வாறு

Page 123
தீரன் திப்பு சுல்தான் காவியம் O222)
தோன்றாது ஒளியமுயல் கின்ற வேளை
துவக்கிருந்தே குண்டொன்று பாய்ந்து மார்புக் கூண்டுக்குள் புகுந்ததுயிர் பறிக்கச் சுந்தர்
கல்லோடு புரண்டுதரை மீது வீழ்ந்தான்
1Ο25 கண்ணிமைக்கும் பொழுதுள்ளே காலன் அந்தக்
காவலனின் உருவினிலே வந்துற்றாற்போல் விண்ணேகிப் போனதுயிர் வீரச் செல்வன்
வரலாற்று நாயகனாய் வரமுங் கொண்டான் பின்னொருகால் மன்னரந்த மண்ணுக் கேகப்
பிள்ளையவன் தாய்நடந்த சேதி சொன்னாள் தன்னளவில் அவன்செய்த தியாக மெண்ணித்
துயர்கடலில் மூழ்கினாரே திப்பு சுல்தான்
1Ο26 தாய்மண்ணின் துயர்கண்டு துணிவு கொண்ட
சிறுவனைத்தன் மனமிருத்தி மன்னர் சொல்வார் வாய்ந்திடுங்கால் இவன்போன்ற வைர நெஞ்சர்
வீதிக்கோர் பேரெனினும் இந்தியாவில் தோய்ந்துள்ள அந்நியராம் தொழுநோய் நீக்கித்
துடைத்திடலாம் வரலாற்றை மாற்ற லாகும் சாய்ந்தாலும் உடலமென்றன் நெஞ்சத்துள்ளே
சரியாசனங்கொண்டான் என்றிட் டாரே
1O27 கட்டளையொன் றுடன்பிறந்த தாகும் அந்தக்
கல்லிருந்த இடத்தினிலே வாச லொன்று கட்டியதனுச்சியிலே கவர்ந்த கல்லைக்
கூட்டிப்பொன் னுறையிட்டுப் பதித்து நாமம் இட்டிடவும் வேண்டுமதைச் "சுந்தர் வாசல்”
என்றழைக்க வேண்டுமென்றும் பெற்றோ ருக்கு நட்டமுதலாகவவர் வாழ்நாள் மட்டும்
நிரந்தரமாய் வேதனமும் தருக வென்றே 1028

ஜின்னாவூர் ஷரியத்தீன் C223 o திப்புவின் மனிதாபிமானம்
கடல்கடந்து வந்ததாமோர் ஒலை திப்புக்
கரங்களுக்கே அருகிருந்தார் மனைவி "பானும் உடனதனைப் படிக்கும்படி விரும்பிக் கேட்க
உள்ளத்தை உருக்குமொரு சேதி கேட்டார் படைநடத்தித் தம்மோடு போரு மிட்டுப்
பிடிபட்டுச் சிறையினிலே அடையுண்டுள்ள அடலர்களின் தலைவனது மனைவி கண்ணிர்
அருவிக்குள் தோய்ந்துவரைந் திட்ட தஃது
1Ο29 “காருண்ய மனங்கொண்ட சுல்தானுக்குக்
கண்ணிருள் வாடுமொரு அன்னை கெஞ்சிக் கோருமொரு விண்ணப்பம் இந்த ஒலை
கருணைகூர்ந்து மனங்கொள்ள வேண்டு
கின்றேன் ஈரெட்டு மாதமதாய் எண்ணியெண்ணி
ஏங்குகின்றேன் என்மக்கள் தந்தை யுங்கள் ஊர்ச்சிறையில் வாடுவதால் உளங்கனிந்தே
உதவவரம் வேண்டுகின்றேன்” என்றும் பின்னே
1O3O “யாருமற்ற அனாதைகளாய் நானு மென்றன்
நாயகன்பாற் பெற்றெடுத்த குழந்தை மூன்றும் வேரறுந்த மரமானோம் வழியொன்றில்லை
விடுக்கின்ற விழிநீர்க்கும் அளவே யில்லை காரணமென் கனவரெம்மோ டில்லை யஃதே
கருணைகொள்ள வேண்டுகிறேன் சுல்தானேநான் தீருமெனில் என்சோகம் வாழ்நாளெல்லாம்
திப்புசுல்தான் உங்களையென் நெஞ்சிற் -
686ബഖങ്ങ'
1O31

Page 124
தீரன் திப்பு சுல்தான் காவியம் O224 O “விடுதலைபெற்றென்கணவர் வருவாராயின்
விடேன்மீண்டும் உங்களது மண்ணில் யுத்தந் தொடுப்பதற்குந் தீங்குதனை எண்ணு தற்கும்
சத்தியமிதென்வார்த்தை நம்ப வேண்டும் கடைசியிலோர் வார்த்தைசொல்வேன் சத்தியத்தைக் காப்பாற்று வேனென்பதாகும்” என்றே விடைகொண்டாளாகுமவள் "கேனல் டங்கன்”
வரித்தமனை யாள்வெள்ளைப் பறங்கி நாட்டாள்
1Ο32 கடிதத்தைப் படித்துமுடித் திட்ட பின்னர்
கண்கலங்கிப் போயிருந்தார் ராணி பேகம் எடுப்பரென்ன முடிவாமோ கனவரென்றே
இருவிழியும் ஏங்கிடத்தன் பதியைப் பார்த்தார் கிடைத்தபதில் செவிக்குள்தேன் வார்த்த வாறாம்
காகிதமொன் றெழுதவைத்தார் கற்பித் தோராய் அடுத்தவர்கொள் துன்பத்தில் தானுந் தோயும்
அன்புளத்தை எண்ணிபேகம் நெகிழ்ந்திட்டாரே
1O33 பிடியுண்ட பேர்களிலே பதவி தன்னில்
பலாங்கொண்டோன் ஆணையிடும் பொறுப்புக் - கானோன் அடியுண்ட நாகம்போல் சிறையில் நாளை
அணுவணுவாய்க் கரைத்தபடி அடைந்திருந்தான் கிடைக்காதோர் விடுதலையென் குற்றத்திற்குக்
கொண்டதிந்தச் சிறையேயென் வாழ்நாள் முற்றும் கிடந்தழிய வேண்டியதே எனத்தன்னுள்ளம்
கலங்கிடவே காலத்தையோட்டி னானே
1O34. அறியாதான் அவன்மனைவி அரசருக்கு
அகம்நெகிழ எழுதியதை அடாது செய்தோன் நெறிபிறழ்ந்த கொடுமைகளைப் பிறர்க்கிளைத்தோன் நாடுவிட்டுநாடுவந்தந்நாட்டினோர்க்கே

ஜின்னாளுர் ஷரியுத்தீன் C225) அறம்பிழைக்க ஊறுசெய்த உலுத்தன் தம்மின்
ஆணவத்தால் ஒப்பில்லா வேளை வெற்றி பெறநினைந்து யுத்தத்தைத் தொடக்கி ஈற்றில்
பிடிபட்டான் பரிதாபம் சிறையுள் காய்ந்தான்
O35 "கடிதத்தைக் கண்ணுற்றேன் "கேணல் பங்கன்” கைப்பிடித்த நின்கணவர் விடுவிப்பேற்று திடனில்லம் வருவார்நீசோகங் கொள்ளேல்
சுகமாக இருக்கின்றார் விடுவிப் பேன்நான் உடனின்றே செய்கின்றேன் அச்சஞ் தீர்க
உனதுமக்கள் பொருட்டாலே உன்பொருட்டால் பிடியுண்டார் எமக்கிழைத்த கேட்டிற்காக
பகைமறந்தேன்” எனக்கூறியின்னுஞ் சொல்வார்
1O36 நீர்வடித்த கண்ணிர்முத்தொவ்வொன்றிற்கும்
நானொவ்வோர் வெண்முத்தைப் பரிசா யுன்னைச் சேர்ந்திடச்செய்வேனதனைக் கொள்வாய் நானுன்
துன்பத்திற் களிக்கின்ற சண்மா னந்தான் ஒர்ந்திடச்செய் மாற்றாரின் மண்மீதாசை
உற்றிடுதல் பாவமென்றே எதிர்காலத்தில் சீரோடு வாழுங்கள் என்றன் ஆசி
சேரட்டும் குழந்தையர்க்கும்” எனழு டித்தார்
1O37 சொன்னபடி மறுநாளே "தர்பார் கூட்டி
சத்தியத்தைக் காத்திட்டார் திப்பு சுல்தான் அன்னவனோ அதிசயித்தான் அதிர்ந்தே போனான்
ஆகாதே எம்மளவில் இதுபோ லென்றே மன்னிக்கும் படியாநான் குற்றம் செய்தேன்
மன்றாடி எண்மனையாள் கேட்ட தற்காய் கண்ணியஞ்செய்துள்ளார்பெண் கண்ணிருக்கு
கருணையுள்ளம் இதுபோலுண் டாமோ என்றான் 1O38

Page 125
தீரன் திப்பு சுல்தான்காவியம் O2260
பகைவரென்ற போழ்தினிலும் பணிந்து வேண்டும்
பண்பினுக்கு மதிப்பளித்து மனித நேயம் மிகைத்ததங்கு திப்புசுல்தான் மாண்பைக் கூறும்
மற்றுமொரு செய்கையிது வாழ்நாளெல்லாம் பகையிடையே காலத்தை யோட்டினாலும்
பகைகொண்டதவர்பறங்கிப் பேரோ டன்றி அகங்கொண்டா ரில்லைதம் அயலா ரோடே
அர்ப்பமெனும் பகைகொள்ளார் அவரே திப்பு
1O39 பெருமை சேர்க்கும் பிரயத்தனங்கள்
பொங்கிநிலை கொள்ளது பெருகி யோடிப்
புறமிரண்டும் அலைதழுவப் புனல்புரட்டி நுங்குநுரை கரையொதுங்க நிலஞ்செழிக்க
நீரீந்து குடிபுனலுந் தந்தே பின்னர் சங்கமிக்குங் கடலினிலே துங்க பத்ராத்
தூயநதி அதன்கரையில் பாசறைகள் சங்கமமாய் இருந்ததவை திப்பு சுல்தான்
தலைமையிலே வந்தபடை வீரர்க் கென்றாம்
1O4O
சூல்கொண்ட கருமேகம் வானைத் தன்பால்
சொந்தமெனக் கொண்டதுவோ சுற்றிச் சுற்றிக் கால்பதித்துநின்றதந்தப் புலத்தே மட்டும்
கடுமழையாய்க் கொட்டியதே சிறுபோழ் துள்ளே சாலாத நிலையவர்க்குத் தரைமுற்றாகத்
தண்ணிருஞ் சகதிசேறுஞ் செறிந்து காணும் தோல்விறைக்குங் குளிர்கூடச் சேர்ந்த தொன்றிச்
சிப்பாய்கள் பெருந்துன்பங் கொண்டிட் டாரே
1O41

ஜின்னாவூர் லுரியுத்தீன் C227 כ
சீறியது மின்னல்வான் கிழிதல் போலும்
சிறிதடுத்து வானிடிந்து வீழ்தல் போலும் பேரோலியோ டார்ப்பரிக்கும் இடியுஞ் சேரும் பாசறைகள் தாங்காதே காற்றிலாடும் மாறுகரை சேர்ந்துபடைநடத்த வெந்த
மார்க்கமுமே தோன்றாத திப்பு சுல்தான் தாரணிசேர் மார்பர்தந்தளகர்த்தர்தம்
தீர்க்கமென்னவென்றறியக் கூட்டினாரே
1O42 ஆற்றினைத்தாம் கடந்துசெல்ல வழிகளேதும்
ஆகிடுமோ என்றவரை வினவச் சொல்வார் காற்றோடு பெருமழையும் நீர்ப்பெருக்குங்
குறைந்துவரா நிலைமைக்குள்ளிருப்பதாலே நோற்பதுநாள் சிலதாங்கல் தாமே வேறு
நலஞ்சேர்க்கும் பாதையிலை பொறுப்போமென்றார் ஏற்புடைத்த ததுவொன்றே தாமென்றாலும்
இணங்கவில்லை திப்புமுழு மனத்தினோடே
1O43 வாய்ப்பிதுபோல் வாய்க்காது பகையொ டுக்க
வேண்டுமின்றே நதிகடக்க என்றார் திப்பு ஓய்ந்திடுங்கால் மழைவெள்ளம் ஓங்குங் காற்றும்
ஒன்றிவரினல்லாது வழியில் லென்றார் பேய்க்காற்றைப் பெருமழையைப் பொருட்ப டுத்தாப் பெருவீரர் திப்புத்தம் படையோருக்குப் புரியாத புதிராக ஆணை யொன்றைப்
பிறப்பித்தார் படைவீரர் பற்றினாரே
1O44
சேருங்கள் பீரங்கி இரண்டை ஆற்றின்
திசைதிருப்பிக் கரையோரம் என்பதாக
கூறியதே மன்னரிட்ட ஆணை நீரைக்
குறிவைத்துச் சுடவைத்தார் சுட்டார் என்ன

Page 126
தீரன் திப்பு சுல்தான்காவியம் O228)
காரணமோ நீர்நிரம்பிப் பொங்கியோடும்
காட்டாறு புனலொடுக்க மழையும் ஓய்ந்து
சீரான நிலைக்குவந்து போக மார்க்கம்
தந்ததெனில் மறக்கவொண்ணா நிகழ்வொன்றாகும்
1O45 காலநிலை சீராகிக் கங்கை வற்றிக்
கரைதானண்டிச் செல்லவழி கிடைத்ததாலே காலத்தின் தாமதத்தைத் தவிர்க்க வேகங்
காட்டினரே மறுகரையைச் சென்றடைந்தார் காலால்ப டையோடு பரிப்படையும்
கரிகளெடு பீரேங்கிப்படையுஞ் சேரும் காலவெளி சிறிதேயாம் பெரும்ப டைக்குக்
கரைமாற வெனில்மன்னர் கருத்தை ஏற்றார்
1O46 நீர்த்தலத்தில் குண்டுவெடியுண்டதாலே
நீரருகிப் போனபெரும் அதிசயத்தின் காரணத்தை பின்னொருகால் புகல்வ ரஃது
காரணரின் ஆன்மீகப் பற்றா லென்றே சாருமொரு பலனதனால் மறுபுறத்தே
தரித்திருந்த மராட்டியர்கள் கிலிகொண்டோடப் போருக்குத் திப்புவொடு பிரெஞ்சுக் காரர்
புறத்திருந்தும் வருகின்றார் எனநினைந்தே
1O47 ஹசனலிகான் “மிர்ஸாகான்' "காளீ கானும்
'காபுலிபு றாகிம்கான் முஹம்மத் கானும்" பளமில்கான் ஆம் ஐந்துபடை முதல்வர் தத்தம்
படைப்பிரிவினோடுதனித் தனியாய் யொவ்வோர் திசையினிலே சென்றார்கள் மன்னர் தம்மின்
திட்டத்தை அமுல்செய்தார் மராட்டி யர்கள் விசைகொண்டார் இடம்விடுத்தே ஓடினார்கள்
வரித்தனரே தலைப்பிரிவுத் தளத்தைச் Gಆಕ್ಟ್ರಿ

ஜின்னாவூர் லுரியுத்தீன் C229 o கூடவந்த பெண்டுபிள்ளை அனைத்தும் விட்ட
கோலமவக் கானதுவாம் மன்னர் பாலே கூடினராம் அனைத்தவரும் கருணை கொண்டு
காவலொடும் அனுப்பிவைத்தார் குறைகளைந்தே நாடியவர் பிள்ளைகட்குப் பரிசுந் தந்தார்
நட்டாற்றில் விடப்பட்டோர் காவல் பெற்றார் வீடடைந்த பின்னுங்கள் கணவருக்கு
வேண்டும்நீர் நல்லுரைகள் சொல்ல லென்றார்.
1O49 தொடர்ந்தார்தன் படைகளோடு "சாவ னுர்"க்குத் துங்கபத்ரா நதிக்கரையினூடாய்த் திப்பும் இடைவழியில் இணைந்துகொண்டார் "புர்கா னுத்தீன் ஏற்றபெரும் படைகளொடு படைப்ப லத்தில் மடங்கிரண்டாய்ப் போனதன்று மகிழ்ந்தார் மன்னர்
மாற்றாரை முடக்கலினிச் சுலப மென்றே அடிகொண்டதாம்புதிய தந்திரங்கள்
அரங்கேறும் நாளுமொன்றிவந்ததன்றோ
1O5O சாவனுர் பட்ட அழ
புதுப்புதிதாய் வியூகங்கள் அமைத்தார் திப்பு
போர்யுக்திதனில்தந்தை ஹைதர் தம்மின் மதியூகந்தனைநிகர்த்த காரணத்தால்
மாற்றாரைத் திணறவைத்தார் களப்போர் தன்னில் எதிரிகளை இம்முறையும் போக்குக் காட்டி
இம்சிக்க வேண்டும்பின் புலியாய்ப் பாய்ந்தே கதிகலங்கச் செய்திடுதல் வேண்டும் என்ற
கருத்தோடே பாசறைகள் அமைக்கச் சொன்னார்
1O51 பகல்நேரம் சிலவேளை முறைமை மாற்றிப்
பாசறையில் படைதங்கும் இரவில் தாக்கும் அகலும்படை இரவினிலே சிலநாட் போழ்தில்
அடுத்தெங்கோர் புறத்தினிலே அறியா வாறே

Page 127
தீரன் திப்யு சுல்தான்காவியம் O230
மிகத்தொலைவில் இடம்மாறும் மீண்டுந் தோன்றும்
மாற்றார்கண் மண்தூவி மிரளச் செய்யும் வகையறியா தெதிரிகள்தாம் தமக்குள் கேட்கும்
வினாவாகிப் போனாரே திப்பு மன்னர்
O52 மின்னலென வெவ்வேறு திக்கிலுற்ற
மராட்டியரை நிஜாம்படையைத் தனித்துத் தாக்கிச் சின்னபின்ன மாக்கியவர் இடுப்பொ டித்துச்
சினந்தீர்த்தார் வெள்ளையர்க்குத் துணையாய் -
நிற்கும் தன்மான மற்றசெயல் தொடர்வதாலே
சேர்த்தழிக்கத் துணிவுற்றார் தொடர்ந்துஞ் செய்தார் பன்முனையில் ஒரேதினத்தில் படைநடத்தும்
பாண்மைமைகனடு அதிர்ந்தனரே பகைப்பு லத்தோர்
1O53 அமாவாசை இரவொன்றில் அலறிப் போனார்
அறியாத வேளையிலே நேர்ந்த பாய்ச்சல் இமைதுடிக்கும் நொடிப்பொழுதுள் ஆனதாலே
எதிரிகளால் எதிர்த்துநிற்க இயலவில்லை அமைத்திருந்தார் படையைமுப் பிரிவா யொவ்வோர்
அணிக்குமொரு தலைவரினைத் தேர்ந்தார் திப்பு தமைப்பொறுப்பி லாக்கியொன்றைத் தேர்ந்து போரைத்
தொடக்கியதோர் புதுவியுக மாகிற் றன்றே
1O54 தளகர்த்தர் புர்ஹானுத் தீனோர் பக்கம்
சென்றாங்கே மராட்டியரைத் துவம்சம் செய்யத் தளகர்த்தர் மீர்முயினுத்தீன்தன் பேரில்
சிதைத்தழித்தார் நிஜாம்கொண்ட சேனை தன்னை களைப்பறியா வீரமகன் திப்பு மூலக்
கருவினையே முளையோடு பிடுங்கு மாப்போல் பொருதியவர் தலைவர்தம் மோடு கொண்ட
படையினையும் தரைமட்ட மாகச் செய்தார்
1Ο55

திண்னவூர் லுரிபுத்தீன் O23 O
மராட்டியரின் கொள்ளையும் திப்புவின் சவாலும்
மற்றொருகால் மராட்டியரின் செய்கை திப்பு
மன்னரினை வெறிகொள்ள வைத்ததாகும் உற்றபெரும் படையோடு கானகத்தை
ஊடுருவிச் செல்லுகின்ற காலம் பார்த்துப் பற்றைபுதர் மரஞ்செறிந்த பகுதி யொன்றில்
பதுங்கியிருந்தவர்செய்த பாத கத்தால் உற்றதந்தச் சினம்பின்னர் போராய் மாறி
உயிரழிவைத் தோற்றுவித்த நிகழ்வாகிற்றே
O56
பரிகளிலே படைமுதல்வர் முன்னே செல்லப்
பரிவீரர் பின்தொடர பாதசாரிப் பிரிவினர்கள் வந்தார்கள் ஆயுதங்கள்
பெருவண்டி பலதாங்கிவரும்பின்னாலே வரிவரியாய் ஏவலரும் உணவுப் பண்ட
வண்டிகளும் வந்தனவே எண்ணில் கொள்ள நிரைநிரையாய் அதர்வழியே நீண்ட தூரம்
நகர்ந்ததந்தப் பெருஞ்சேனை நவிலற் போமோ
O57
கொள்ளையிடும் நோக்கோடு பதுங்கிக் கொண்டோர்
கடைசிநிரை வரும்வரையுங் காத்திருந்தார் கொள்ளையாங்கே தானியங்கள் மூடை மூடை கணக்கிலடங்காதபடி வீரர்க்காக உள்ளிடையே புகுந்தார்கள் பொருத்தம் பார்த்தே உணவுப்பொதி ஏற்றிவந்த வாகனங்கள் கள்ளர்வசம் பிடியுண்டதாகும் தான்யம்
கொண்டமூடை பத்தாயிரத்தின் மேலாம்
1O58

Page 128
தீரன் திப்பு சுல்தான்காவியம் O232 O
செவிகொண்டார் நடந்ததனை திப்பு கண்கள்
செவ்வானச் சிவப்பெய்தும் சினக்கொதிப்பால் கவ்வியது போர்வெறியும் தோள்திணக்கக்
கொதித்தெழுந்தார் மராட்டியர்க்கு ஒலையொன்றை அவருரைக்க எழுத்தர்கை ஆணி கோக்கும்
அனலொக்குஞ் சுடுசொற்கள் வீர வார்த்தை செவிசுட்டுப் பொசுங்கியுளஞ் சிலிர்க்க வைக்கும்
தப்பிழைத்தோர் ஆண்மைக்குச் சவாலு மாகும்
1O59 வீரத்தில் புகழ்மிக்கோர் நீங்களென்றால்
வெஞ்சமரில் திறன்கொண்ட தீர ரென்றால் மார்நிமிர்த்தி எதிரிபலம் வெலத்து டிக்கும்
மறவர்குல வழித்தோன்றல் நும்பே ரென்றால் வேரறுத்தே எதிரிகளைத் துவம்சம் செய்த
வல்லமையின் வரலாறும் உண்டா மென்றால் போருக்கு வாருங்கள் அமைதி வேண்டின்
பறித்தபொருள் மீட்டுங்கள் என்பதோடே.
1O6O
போரென்றால் பல்லுயிர்கள் பறிக்கப் பட்டுப்
போகுமுடல் ஊனமுறும் குருதி வெள்ளம் ஆறாகப் பெருகும்பல் அழிவுந் தோன்றும்
அணியாயம் வீண்விரயம் அதுதவிர்த்து மாறாக நாமிருவர் தனித்தே நின்று
மோதிடுவோம் நம்மிடையே வெற்றி தோல்வி தீர்க்கட்டும் முடிவுதனைத் திருடிச் சென்ற
செல்வத்தை என்செய்வதென்பதற்கே
1Օ61 தனித்தெம்மோ டுடற்பலத்தை காட்ட வொண்ணாத்
தயக்கமுமக் குண்டாயின் வீரப் போரில் நினக்குவந்த பேரினைநீர் அழைத்து வாரீர்
நாமுமது போலழைத்து வருவோம் முன்னர்

ஜின்னாவூர் லுரியுத்தீன் C233 o
நனிமேலாம் வேதத்தின் இறுதித் தூதர்
நபிபெருமான் காலத்து வீரப் போரில் அணுகுநிலையதுவாகும் ஆண்மைக் கஃதென்
அறைகூவல் ஆகுமெனில் வருவீரன்றேல்.
இரண்டுமுமக் கொவ்வாதே எனநினைந்தால்
இருபடையும் மோதட்டும் இட்ட மாயின் விரும்புகின்ற படைக்கலங்கள் ஆயுதங்கள்
வேண்டுவரை கொணர்வீர்நீர் அதுபோல் நாமும் விரும்பியதைக் கொணர்வோம்முன் வரையறுத்தால்
வரையறையை விஞ்சோம்நாம் வேண்டுகின்ற ஒருபுலத்தைத் தேர்ந்திடுவீர் எமக்கும் அஃதே
உடன்படட்டும் எனப்பொறித்தார் அத்தோ -
தலைவனுடன் தலைவன்தான் மோத வேண்டும்
தளகர்த்தன் தளகர்த்தனோடேவீரன் பலம்காண வேண்டுமொரு வீரனோடாம்
பரியோடு பரிகரியுங் கரியினோடும் இலவேறு நிபந்தனைகள் இவையே அல்லால்
இன்றேநின் பதிலையென்றன் தூதன் மூலம் சொலியனுப்ப வேண்டுமெனச் சொல்லிற் றந்தச்
சமாதானம் அன்றிப்போர் வேண்டும் தூதே
1O64 "துக்கோஜி ராவ்ஹொல்கார்" மராட்டி யர்தம்
தலைவனிடம் தூதுவனவ்வோலை சேர்க்க மிக்கபுலன் கொண்டதனைக் கண்ணால் மேய்ந்து
மூழ்கினனே சிந்தனையுள் சுல்தான் சீற்றம் மிக்கதுவாய் இருப்பதனை மொழிந்த தஃது
வேறுமொழியுடன்சொல்ல வழியில் லாதே எக்கணமும் புயல்வெடிக்கக் கூடும் என்றே
எண்ணிடச்செய் திட்டதது எரிநா போன்றாம்
1O65

Page 129
தீரன் திப்பு சுல்தான் காவியம் O234D
ஊன்றிக்கண் வாங்காது சிறிது நேரம்
உற்றதனை நோக்கியவாறுள்ளத் துள்ளே தோன்றுமென்ன விளைவுசவால் ஏற்பின் என்றே
சிந்தனையின் வசப்பட்டார் 'துர்க்கோஜீராவ் வேண்டாவென் றொதிக்கிடவும் வேண்டா மஃதை
வேண்டுமேனக் கொண்டாலோ விழைவுதீதாம் தோன்றாத பதிலெண்ணிக் குமைந்தார் தம்மின்
தளகர்த்தர் தமையழைத்தே ஆலோ சித்தார். வெற்றிபல வரித்தபெரு வீர ரேநாம்
வரலாற்றுச் சான்றுண்டு என்றிட்டாலும் முற்றுமெளிதல்லதிப்பு போன்ற வீரர்
முன்னெங்கள் வெற்றிவாய்ப்பு எனவே நாங்கள் நற்றெளிவு பெறவேண்டும் சவாலை யேற்று
நகர்வதுவோ களங்கான அன்றி நட்பைப் பற்றுவதோ நல்லதொரு முடிவை நீங்கள்
புகலுங்கள் என்றவரைக் கேட்பார் சொல்வார்
1O67 மறுத்துரைத்தால் ஈனம்நம் நாடே நம்மை
மிகவிகழும் எள்ளிநகை யாடும் வெற்றி உறுமெனிலோ காத்தபுகழ் ஓங்கும் ஒன்றே
ஒன்றுமெமை உய்த்துணர்ந்து பதில்சொல்லுங்கள் திறமைமிகு தளகர்த்தர் நீங்கள் யுத்தத்
தந்திரங்கள் அறிந்தவரே திப்பு செய்கை அறிவீர்கள் நாமறியாப் போழ்து காட்டும்
அற்புதங்கள் தமைநெஞ்சில் ஆழ்ந்தேயோர்வீர்
1O68 தலைவர்தம் வேண்டுதலுக்கேற்றவாறு
சிந்தித்தோர் முடிவுக்குள் வந்தே சொல்வார் தலைவரொடு தலைவரென்றும் தளகர்த்தர்கள்
தனித்தனித்தும் வீரர்கள் அதுவா றென்றும்

திண்னாவூர் லுரியுத்தீன் C235o
இலைப்பொதுவாய் அணியணியாய் களத்துட் புக்கிச்
இருதரப்பும் சமரிடுவோம் வேல்வாள் அம்பே பலப்பரீட்சைக் குகந்தனவாம் கைத்து வக்கு
பீரேங்கி வெடிமருந்து போல்வை யற்றே
1O69 தூதூவந்த தூதனிடம் மாற்றுத் தூது
சொல்கவெனச் சொன்னார்கள் பொதுவாய் நாமும் மோதலுக்குத் தயாரென்றே தூதை யேந்தி
மின்னலென மறைந்திட்டான் தூது வந்தோன் சேதிதனைத் திப்புவிடம் சொன்னான் கேட்டுச்
சினங்கொண்ட போதினிலும் தனைய டக்கி ஏதுசெய் வேண்டுமெனுந் திட்டந்தன்னை
இமைப்பிற்குள் இதயத்துள் முடிவு கொண்டார்
O7O தளகர்த்தர் தமையழைத்துச் சபையுங் கூட்டித்
தோன்றுமவர் கருத்தினையும் செவியுள் வாங்கி களமேகும் நாள்குறித்து யாரெவர்க்குக்
கொண்டபொறுப் பெதுவென்றே எடுத்து ரைத்து பழிதீர்க்கப் புறப்படுங்கள் என்றார் திப்பு
பெருஞ்சேனை கூட்டினரே ஆணை கொண்டோர் மொழிமுனைவாய் முடியுமுன்னே செயலில் காட்டும்
மறவர்கள் மைசூர்மணன் ஈன்ற தீரர்
1O71 வேறுவேறாய் இனத்திற்கினம் பன்னூறாக
வேண்டலுக்கும் அதிகமதாய் விதியை மாற்றத் தேறினவாம் ஆயுதங்கள் சொன்னாற் போன்றே
தருமத்தைக் காக்குமந்தப் போருக்காக மாறிடுவர் வாக்கினிலம் மராட்டியர்கள்
மிகைத்தாலோ பதிலுரைக்க வேண்டும் வாறு கூறிவைத்தார் மற்றவையுந் தயாராய்க் கொள்ளக்
கருத்திலுற்ற ஐயம்பின் மெய்யா கிற்றே
1O72

Page 130
தீரன் திப்பு சுல்தான் காவியம் O236)
செங்குருதிச் சாக்காட்டில் மராட்டியர்கள்
துலங்கு கின்ற செங்கதிர்கள் கிழக்கு வானில் மேவியே இலங்கி வந்த கதிர வன்றன் எழிலை வானில் காட்டினான் நிலங்கு விரிர்ந்த இருள்மை நீங்கி நிமிர்ந்த துலகு சோபனம்
அலங்க ரிக்கும் போழ்து நெஞ்சம் ஆர்த்தெழுந்த தாமரோ
1973
குறித்த நாளில் மராட்டியர்கள் கூடி நின்றார் வரையிலார் மறத்த லைவர் திப்பு தம்மின் மிடுக்கு யர்த்திப் படையொடு குறித்த மண்ணில் கால்பதித்தார் குறைவிலாத சேனையே
பறித்தெடுத்த பொருளை மீட்கும் பணிக்கா மல்ல பாடமே
1O74
வெள்ளை வண்ணப் புரவி மீது வீற்றிருந்தார் திப்புமான் உள்ளங் கொண்ட கோபங் கண்கள் ஊடு பீறி வழியக்கை கொள்ளு வாளின் கூர்முனைபோல் காணும் மீசை துடித்தது எள்ளல் வாயின் இதழ்கள் காட்டும் இவர்கள் தூசு எனவுமே 1O75 பரந்த மார்பில் போரணிகள் புயபலத்தின் மேதமை விரிந்த காட்சி காணுங் கண்கள் வியக்கும் பாங்கில் ஓங்குமால் தெரிந்த தன்ன திப்பு வீரர் தோன்றத்தானை வீரர்கள்
அருகிலுற்றார் ஆங்கு வீரம் ஆட்சி செய்த தாமரோ
1O76
குதிரை தாங்கு வீரர் கைகள் கொண்ட கூர்வேலாயுதம் உதய சூரியன்புறத்தி லோங்கு சுடரின் ஒளிபடப் புதிய காட்சி காட்டி மின்னும் புலமனைத்தும் வெள்ளிபோல் எதிரில் காணும் வீர ராவி இரைகொள் ஏக்கங் கொண்டுமே
1O77 புரண்டு வீழ்ந்த மலைகளொக்கும் படையில் வந்த கரிகளம் திரண்டு நின்ற காலால் வீரர் தோள்சுமந்தார் அம்புவில் இரண்டு பக்க மும்ப டைகள் எட்டா விழிகொள் தொலைவரை
திரண்டிருந்த காட்சி கானத் தோன்றி னானோ கதிரவன்
1O78

ஜின்னாவூர் லுரியுத்தீன் C237 כ வெள்ளை மஞ்சள் அணியில் புலியின் வரிகள் செம்மை நிறத்திலே உள்ளவாறு பதித்திருந்தார் உருவில் வேங்கை போல்பிறர் கொள்வரச்சம் என்னும் நோக்கும் கொண்டிருந்தார் திப்புமான் வெள்ளையுள்ளம் வீரம் நேர்மை வரித்த வாழ்வு வாழ்ந்தவர்
1O79 மராட்டி வீரர் முனையின் மத்தி முதல்வர் 'துர்க்கோ ஜீபடை திரட்டி வந்த போழ்தும் நெஞ்சு திகில டைந்த வாறுகண் வரண்ட பார்வை கண்டு வீரர் மனமும் நொய்ந்து போனதாம் பொருந்தி வந்த போரைக் கொள்ளும் படியோர் நிலைமை ஆனதே
1O8O தாடி மீசையோடு சேர்ந்த தடித்த மேனி படைக்கலம் கூடி வெள்ளைக் குதிரை மீது காத்திருந்தார் தலைவரும் ஏடு கொண்ட பெருமையுண்டே எனினும் இன்று நிலைமையோ கூடி வெற்றி வாரா வென்னும் காதை தேர்ந்தி லாரரோ
1O81 மஞ்சள் வண்ணப் பாகை காவி விளங்கு பட்டு வஸ்த்திரம் நெஞ்சில் தொங்கு வாரில் பூட்டி வைத்த துவக்கின் உண்டைகள் தஞ்சம் இடையின் கச்சை யென்று சேர்ந்த உறையில் வீரவாள் அஞ்சுகின்ற தோற்றம் துர்க்கோ ஜீயென் தலைவன் களத்திலே
1O82 இருபுறத்தும் ஒன்று போலும் இருந்ததாகும் படைப்பலம் ஒருவர் விஞ்ச ஒருவரில்லை ஒர்ந்து நோக்கில் உண்மையே பொருதுகின்ற போழ்து தங்கள் பக்கம் சார்ந்த பேர்களின் உருத்தெரிந்தே உயிர்தவிர்க்க உடைகள் மட்டும் வேறதே
1O83 பொருந்தி வைத்த வாறு யுத்தம் பக்க மிரண்டுஞ் சைகையால் பொருந்திக் கொள்ளத் தொடங்கிற் றந்த போதிலிர்புறத்திலும் இருந்து வந்ததாகும் அணிகள் இடியிடிப்பப் பேரொலி செறிந்து வந்த தன்ன வர்வாய்ச் சப்த மாகும் மிகைத்ததே
1O84 அல்லா(ஹரி) அக்பர் அல்லாடுஹ°) அக்பர் அல்லாடுU) அக்பர் என்றுநா சொல்லிச் சொல்லி வந்த ஓசை செருக்க ளத்தை ஆண்டிடும் வல்லமையை வாள்கள் பேசும் வீறு கொண்ட நிலைமையைச் சொல்லி லோதச் சாலா வெற்றி தம்கை கொள்ளச் சாடினார் 1085

Page 131
தீரன் திப்பு சுல்தான் காவியம் O238D
நீசர் சென்னிநீங்கியுடலம் நிலம்புரள்க வென்றுமே வீசும் வாளின் வேகம் எதிர்கொள் வீரன் கழுத்தைச் சாடிடும் காசு கொண்ட கயவர் நெஞ்சைக் கூறு போடென்றோதியே வீச மார்பைத் துண்ட மாக்கி வேறு ஒன்றைத் தேடுமே
1O86 உயிரை வாங்கி வாவென் றெண்ணி ஓங்கி எறியும் ஈட்டிகள் செய்யுங் கருமந் துளைத்து நெஞ்சை தாண்டித் தரையில் பாய்ந்திடும் மெய்களுண்ட புண்ணிருந்தே மடையொ டித்த செம்புனல் வெய்யோன் தாக சாந்திக் கென்றோ வடிந்து காய்ந்து கணத்தது
1O87 வில்லும் அம்பும் கொண்ட வீரர் வரிசிலையைக் கோத்தது செல்லுமிடத்தைச் சென்ற டையச் சுண்டி விட்டார் நாணினை கொல்லு தொழிலைக் செய்யுங் கொலைக் கருவியான ஆயுதம் வல்வினையை வரித்த பாங்கின் விவரம் கூறல் வேண்டுமே
1O88 நூறு நூறின் ஆயிரங்கள் நொடிக்கு நொடி எதிரியை வீறு கொண்டு தாக்கி மண்ணில் வீழச் செய்யும் எழுந்திரா வாறு வுயிர்கள் பறித்தெடுக்கும் வரையில் லாத பேர்தொகை நீறு முயிர்கள் உடல்விடுத்து நோக்கும் வானை நிறைக்குமே
1O89 கொட்டி வீழ்ந்த குருதி மண்ணில் குழைந்து குதிரைக் கால்களில் ஒட்டி ஒட வகையி லாதே உருள வைக்கும் சறுக்கினால் முட்டி மோதி முடம தான மதக ரீகள் மலையென அட்ட திக்கும் வீழ்ந்து பிளிறும் அட்ட காசம் களத்திலே
1O9 O கண்ட கண்ட இடங்க ளெல்லாம் களத்தில் மனிதக் கூறுகள் துண்டந் துண்டமாக வீழ்ந்து துடிதுடித்த தன்னவை பெண்டு பிள்ளை கொண்ட பேரின் பகுதியாகும் அன்னவை கண்டு வெய்யோன் கவல்மிகுந்தோ! குடதிசையை நாடினான்
1O91 காலை தொட்டு மாலை ஈறாய்க் கொண்ட யுத்தங் கதிரவன் வேலை முற்றி வீடடையும் வரையில் நீண்டு சென்றதே நீல வானும் நொந்த தந்த நீசக் காட்சி கண்டுமே ஒல மிட்டே அழுதல் போன்றே ஓங்கி மழையும் பொழிந்ததே 1092

ஜின்னாவூர் லுரியுத்தீன் C239 o பொங்கியோடும் வெள்ளநீரில் படிந்த குருதி கரைந்திடத் தாங்கிடாது சேர்ந்து கழியும் செறிந்திருந்த எச்சமும் பங்கு டைத்த பாங்கிலந்தப் புலத்தினைத்தன் புனலினால் எங்கிருந்தோ வந்த வானக் கொடையுங் கூடிக் கழுவுமே
1O93 திப்பு செய்த யுக்தி வென்ற சீர்மை திப்பு சார்பினில் ஒப்பலான வெற்றி கண்டே உள்ளம் வெந்த மராட்டியர் தப்பிடாது காலை யெங்கள் தரப்பில் வெற்றி திரும்பிட ஒப்பும் எந்த ஏதும் செய்ய ஒப்பினார்கள் கீழ்மையே
1O94
இருளைக் கொன்றும் ஒளிபரப்பி எழுந்து நின்றான் கதிரவன் ஒருநாள் போரில் உண்ட தோல்வி ஓங்கு வெறியைத் தந்ததால் மராட்டியர்கள் மூர்க்க மாக மோத எண்ணி வீரரைச் செருக்க ளத்தை நோக்கியொன்றிச் செல்ல வென்று பணித்தனர்
1O95 பெருங்குழாய்கள் கொண்டு குண்டு பொழியும் பெரிய பீரங்கி நெருப்பு உண்டை வீசுந் துவக்கு நாசஞ் செய்யும் அன்னவை பொருந்து வாய மைந்திடாதிப் போரி லென்ற பொருத்தமும் இருந்ததாகும் முன்ன ரஃதை ஏற்றி லாது மறுத்தனர்
1O96 தோல்வி கண்ட காரணத்தால் தடுத்த வற்றை எடுத்தனர் சீல மற்ற செய்கை யென்றே தெரிந்துஞ் சூடு தொடுத்தனர் சீல மில்லா மாந்த ரென்று தெளிந்ததாலே வேண்டில் காலம் ஒர்ந்து கொள்ள திப்பும் கொணர்ந்திருந்தா ரவைகளை
O97 வரம்பு மீறி வரித்த செய்கை வரம்பு மீறச் செய்ததால் பெரும்பு கையும் தீயும் ஓங்கப் பறந்ததாகும் வெடிகளே ஒருங்கி வந்த பேர்கள் ஒன்றி ஒடுங்கு மாறுதிப்புதம் பெரும்ப டைக்குத் தலைமை தாங்கப் போரும் ஒடுங்கிப் போனதே
1O98 வலிந்து சண்டை வகுத்த வர்கள் வாங்கிக் கொண்டார் பாடமே நிலம்படாத வாறு பாதம் நீசர் பிரிந்தே யோடினார் புலர்ந்த பகலவன்றன் நாளின் பணிமுடித்தே ஏகுமுன் கலைந்த தாமக் களத்தி லுயிர்கள் காத்த மராட்டிக் கூட்டமே 1099

Page 132
தீரன் திப்பு சுல்தான்காவியம் C240)
ஓடி யோரைப் பின்தொடர்ந்தே ஓடிடக்கை பற்றிட நாடி வந்ததாகும் குதிரை நான்கு ஆயிரங்களாய் பேடிப் பேர்கள் பறித்தெடுத்த பெருந்தொகையுண் பொதிகளும் கூடி வந்த தாமதற்குங் கூட வென்றுங் கூறுவார்
11ΟΟ
வெற்றி வாகை சூடித்திப்பு வீர பவனி ஏகினார் முற்றுந் தம்மின் மதியுரைத்த முடுகு முறையின் திறத்தினால் வெற்றி கைகள் எட்டி இன்றும் விதந்து பேசும் பாலுற உற்றதாகும் தந்தை தந்த உன்ன தப்போர்ப் பயிற்சியே
11O1
முன்ன ரென்றும் நடந்திடாத முதன்மை கொண்ட போரென சொன்னதின்று சரித்திரத்தில் சொர்ண வரிகளாயின அன்னியவனை அழித்தொழிக்க அல்லும் பகலும் முயல்கையில் பின்ன மிஃது தம்ம வர்பால் பிறந்த கேடு கொடுமையே
11O2 மாட்டியரின் சமாதானத் தூது
மராட்டியர் கண்ட தோல்வி மீதுறத் தொடர்ந்தும் திப்பு திரட்டிய புகழோ கொள்ளை சேருமாம் பல்பல் கோட்டை பெருநிலப் பரப்பு காவல் புரியரண் என்றாம் வெற்றி
உருவினில் எதிர்கொண்டாலும் ஏற்றாரோ இலைச்செருக்கே
11O3
எண்ணினர் முன்னர் மைகர் இடிந்தொடிந் திட்டதாக முன்னிலை நின்றார் திப்பு மன்னருக்குள்ளிருந்தே சொன்னதைச் செய்து கப்பம் செலுத்துவோர் தம்மைத் தூண்டிப் பின்னங்கள் செய்ய முற்றும் பிழைபட்டதாகு மஃதே 11O4 இம்முறை கொண்ட தோல்வி என்றுமே இல்லா வாறாம் மும்மையும் அறிய வல்ல மேன்மையின் திறங்கொண் டாண்ட செம்மையால் யுத்த நுட்பம் தெரிந்ததால் மராட்டியர்கள்
சும்மையைத் துவம்சம் செய்து செயம்பெறக் கருவா கிற்றே
11O5

தீரன்திப்பு சுல்தான்காவியம் C24 O வஞ்சகம் முதலாய்க் கொண்டு வரித்தபோர் தந்த பாடம் நெஞ்சத்தின் இருளை மாற்றி நன்மனாங் கொள்ளச் செய்ய அஞ்சலொன்றனுப்பினார்கள் அமைதிக்காம் தூது மன்னர் வெஞ்சினங் கொன்றார் நட்பை வரித்திட ஒப்பினாரே
1O6 வெற்றிமேல் வெற்றி கொண்டும் வந்திலை அகம்பாவம்தன் சுற்றமுந் தாமும் ஒன்றித் தாய்மண்ணைப் காக்கும் நோகின் கொற்றமுங் கொண்டதாலே கருத்தினிலோர்ந்தார் வேண்டல் முற்றியதாகும் போழ்து மராட்டியர் நன்மை கொண்டார்
11O7 பிடியுண்ட நிலங்க ளெல்லாம் பற்றிடத் தந்தார் முன்னர் கொடுமதி நாற்பத்தைந்தின் இலட்சமுந் தரமுன் வந்தார் கெடுமதி செய்யும் வெள்ளைக் கேடரை யொழித்த லுக்குப் பிடியிது ஒன்று பட்டால் புலர்ந்திடும் வெற்றி யென்றே
11O8 பலாங்கொண்ட போதும் தோற்றோர் பங்கினில் தாழ்ந்து போதல் நலந்தரும் என்ற எம்மான் நபிகளின் வாழ்வின் மாட்சி நிலைபெறத் திப்பு கொண்ட நற்பெரும் தியாகம் இன்றும் விலைமதிப் பற்ற தாகும் வரிப்பவர் நலங்காண் தற்கே
11O9 போரினிற் பகைகொண்டாலும் பண்பினில் உயர்ந்தா ரென்னும் சீரினைக் காட்டும் செய்கை சமாதானஞ் செழிக்கத் தம்மின் பேரினில் கொண்ட பற்றைக் காட்டிய பாங்கு திப்பின் நேர்மைக்கும் சான்று மற்றோர் நிகழ்வதன் சிகரஞ் சொல்வாம்
11O முன்னணித் தலைவர் "ஹரிபந்” மராட்டியர் படைக்கு வேந்தர் என்னுமால் பலபோர் கண்ட ஏற்றத்தைக் கண்முன் கண்டு தன்னையும் விஞ்சி நெஞ்சுள் தாங்கினார் எனநினைந்தே கண்ணியம் செய்த காதை கேட்பதற்கேற்ற மாகும்
1111 புலியெனப் பாய்வார் மாற்றுப் படையினுள் பாய்ந்த வாகில் கிலிகொளும் வாறு வாளைக் கரத்தினுள் சுழலச் செய்வார் ஒலிபெருக் கெடுக்கும் ஆணை உடன்வரு படைக்காம் வீரர் தலைவருள் தலைவர் ஹரிபந் சிலாக்கியந்திப்புத் தேர்வார் 112

Page 133
ஜின்னாவூர் லுரியுத்தீன் O242) பலமுறை கண்ட காட்சி பதிந்திருந்துள்ளம் மீட்க நலம்பெறச் சமாதானத்தின் நிலைவரத் திப்பு சுல்தான் நிலந்தரு வரிகொள் வோராய் நியமித்தார் "கஞ்சன் கூடு” வலிந்தவர் தந்த செய்கை வரலாற்றில் பதிவாகிற்றே
113 வீரத்தை வீரம் போற்றும் வரலாறு அதுவாகிற்று சாருமெப் புலமென் றாலும் திறமையை ஏற்குங் கோன்மை சீருமை மனிதப் பண்பின் சிகரமாம் திப்பு சுல்தான் பேருறைப் பலவற்றுள்ளே பதிந்தவோர் நிகழ்வு மாகும்
14
குலப்பெருமையும் குறுகிய மனமும்
மராட்டியர்கள் நிஜாமுடனே ஒன்று கூடி
மைகரின் வடபுலத்துட் புகுந்து கொள்ளச் சிரமமின்றிக் கரங்கொடுத்தான் "தார்வார்" கோட்டை
தனை"ஹைதர் பக்ஷி"யெனும் தளகர்த் தன்பின் அறிந்ததுமே திப்புசுல்தான் படையைக் கூட்டி
"அதோணியெனும் நிஜாமுடைய கோட்டை -
தன்னை நெருங்கியதும் கோட்டைக்குத் தலைவன் அஞ்சித்
தூதுவனைப் பேச்சாட அனுப்பி வைத்தான்
115
நாயகனாம் கோட்டைக்குத் தூது விட்டோன்
நவாப்முஹம்மத் ஜாங்"நவாபின் மகளின் நாதன் நேயவுடன் பாட்டிற்கு வந்ததாலே
நயந்ததனை ஏற்றதிப்பு வந்தோன் நோக்கிக் காய்தலிலை எம்மினுக்கு “ஜாங்கி னோடு
குற்றமெலாம் நவாபிடந்தான் எமக்குத் தீங்கு தூயமன மற்றவராய் இயற்றுகின்றார்
தெளிவுகொள்வீர் எனவுரைத்தே மீண்டுஞ்
சொல்வார் 1116

தீரன் திப்பு சுல்தான் காவியம் O243)
தருமத்தின் மீதுபற்று தார்மீகத்தில்
சிறிதேனும் நம்பிக்கை மனித நேயம் ஒருதுளியும் இல்லாது பிறரோ டொன்றி
உபத்திரவம் செய்வதையே தொழிலாய்க் -
கொண்டார் சரியான பாடமொன்று வேண்டுகின்ற
தாகத்தைத் தணிப்பதற்கே நாமும் வந்தோம் உருவாகும் சமாதானம் நிஜாம்விரும்பின்
உதறிடினோ யுத்தம்தான் தீர்ப்பாம் என்றார்
1117 மன்றாடி யுத்தத்தைத் தவிர்க்கக் கூறி
முயற்சியிலே வெற்றிகண்ட தூதன் தன்னை ஒன்றியொரு தூதுவனை நிஜாம்பால் ஏக
உவக்கவேண்டும் எனப்பணிந்தான் அவரும் ஒப்ப சென்றாரோர் தூதுவரும் "கியாஸ்முஹம்மத்”
தர்மவழி செல்லுமுயர் பண்பார் கூடச் சென்றதுவோர் ஒலையும்பல் பரிசி லோடு
தூதுவருங் கையளிக்க நிஜாமு மேற்றார்
1118 இதுகால வரைதொடரும் இனக்க மின்மை
ஏற்பட்ட தகராறு வேற்றுமைகள் அதனாலே யுனன்டான பழிகளோடும்
அதற்கான பரிகாரம் அனைத்தும் தாங்கிப் புதிதான உறவுக்குக் குடும்பத் துள்ளே
பங்குறினோர் திருமணமும் உவப்பா மென்றே மதிகூரு முறையிலந்த ஒலை தன்னை
மன்னர்திப்பு முடித்திருந்தார் நிஜாம்படித்தார்
1119 ஒலைதனைப் படித்துமுடித் திட்ட பின்னர்
ஒலைதாங்கி வந்திருந்த செய்தியொன்றைச் சாலுமது பற்றிப்பெண் புலத்தினோரைச்
சந்தித்துக் கருத்தறித லென்றே தம்மின்

Page 134
ஜின்னாவூர் லுரிபுத்தீன் <244
கால்தொடுத்தார் நிஜாம்அந்தப் புரத்தினுக்குக்
கணப்பொழுதுள்திரும்பிவந்தார் கண்ணில் கோபம் கல்கொண்டதாய்வெறுப்புக் கொப்பளிக்கச்
சுடுவார்த்தை வாயிருந்து பறந்ததன்றோ 112O பாராண்ட பரம்பரைநாம் தலைமுறைகள்
பலப்பலவாய் பேர்பெருமை கொண்ட பேர்கள் சீர்சிறப்பே உன்னதமாம் எங்களுக்கு
திப்புவுக்காய் என்னவுண்டு தந்தை ஹைதர் ஊரறியா திருந்தவொரு சிப்பாய் எங்கள்
உறவுகொள விரும்பியதேன் கூச்ச மற்றே தேருமிதைப் போய்ச்சொல்லும் என்றார் பின்னர்
சேரவுள்ள சுமையறியார் செருக்குற்றாரே
112 வார்த்தைகளில் கோத்திருந்த அகம்பாவத்தை
வந்திருந்த தூதுவரும் உணர்ந்தா ராகக் கோத்திரத்தின் உயர்வைமட்டும் கருத்திலுன்னிக்
குலப்பெருமை பேசுவது கீழ்மை கற்றோர் சாத்திரங்க ளறிந்ததனால் மேன்மை கொள்வார்
செய்நலத்தா லுயர்வுறுவோர் சமூக மேலோர் நீத்தாலும் உயிருடலை நிலைப்பர் சான்றோர்
நிஜாமிதனை யறியாத நிலைமை கண்டார்
1122
கிடைத்ததொரு சந்தர்ப்பம் சமாதா னத்தின்
கொள்கையிலே வெற்றிபெற யதைவிடுத்தே படைநடத்தி மராட்டியரோ டிணைந்து மைகர்ப்
புலமொன்றில் நாசகாரக் கொடுமை செய்தார் கிடைக்குமொரு சந்தர்ப்பம் அதோனிக் கோட்டை
கொண்டதங்கள் குடும்பத்தை மீட்டெடுக்க முடக்கிவிடின் சுல்தானின் புலனை மைசூர்
மட்டத்தில் எனநினைந்தார் மதிகெட் டாரே 123

தீரன் திப்பு சுல்தான்காவியம் O245D
நினைந்தபடி நடந்ததது திப்பு சுல்தான்
நடப்பதனை தெரிந்திருந்தார் அறியார் போன்றே மனுக்குலத்தில் பெண்மைக்கு முதன்மை காட்டும்
மனங்கொண்ட பேரதனால் தப்பிச் செல்லும் அனைவரிலும் மாதர்தொகை அதிகம் என்று
அறிந்திருந்தார் போவோரை விட்டு வைத்தார் எனினுமென்ன நிஜாம்தனதாம் அடாவடிக்கை
இடைவிடாது செயத்திப்புச் சினாங்கொண் டாரே
1124 பதினெட்டே நாட்களுக்குள் அதோனிக் கோட்டை
பிடிபட்டதாகுமதில் மணியும் பொன்னும் அதியதிகமாயிருக்கக் கைக்கொண் டஃதை
அனுப்பிவைத்தார் சீரங்கம் சீரங்கத்தில் வதிகின்ற ஏழையர்க்குக் கணிசமான
வாறவற்றில் பங்கீடுஞ் செய்ய வேண்டி உதித்ததுவே ஆணைதிப்பு வாயிருந்தே
உடன்நடந்த தாமதுவும் ஊர்போய்ச் சேர்த்தே
1125 புதிய கவர்னர் கான்வாலிளம்
மங்களூர் ஒப்பந்தத்தை முடித்தகால் தொட்டுத் தம்மின் பங்கினில் படைபலத்தைப் பெரிதாக்கக் கொம்பனியார் சங்கற்பங் கொண்டு ழைத்தார் சாதித்தும் விட்டார் போழ்தும் தங்கிடார் திப்பே தம்மைச் சூழ்பகை என்பதாலே
1126 திப்புவின் நடவடிக்கை தொடர்ச்சியாய் வெள்ளையர்க்கோ ஒப்பிலாப் பயத்தை நாளும் உண்டுசெய்திட்ட தோடே ஒப்பிலார் மராட்டியர்கள் உடன்நிசாம் ஆனோர் தம்மின் உட்பகை யோரின் ஆட்சி உறும்பலம் காணல் வேண்டார்
1127 புதியதாய் ஒருக வர்னர் பறங்கியர் தலைமை ஏற்க விதித்தனர் தலைமைப் பேர்கள் வெள்ளையர் பிரிட்டிகூழ் காரர் மிதித்திடும் போதே சென்னை மண்ணினைக் காண்வா லீஸ்ஸலிம் கொதிப்பொடு சபதமொன்றைக் கூறினார் அவரே கவர்னர் 1128

Page 135
ஜின்னவூர் டிரிபுத்தீன் O246)
ஆகஸ்ட்டு யெண்பத் தாறே அவர்பதம் பட்ட நாளாம் வேகமோ தீயின் பாங்கு வலிந்தெனும் போர்தொடுத்துச் சாகடித் திடுவேன் திப்பின் சரித்திரம் முடிப்பே னென்று வேகினார் நெஞ்சத்துள்ளே வெந்தழல் வார்த்தை கோத்தார்
1129 முன்னவர் போலும் வாழா மந்தராய்ச் சோம்பி நில்லேன் தன்மானத் தோடு என்றன் தலைமைக்குப் பெருமை சேர்ப்பேன் என்னையிங் கனுப்பி வைத்த ஏற்றத்தை மறவேன் என்றார் கண்மணங் கொண்ட கவர்னர் கான்வாலிஸ் கழுரைத்தார்
113O புதியதாய்த் திட்ட மேதும் பூண்டிலார் முன்னர் போலும் அதிகாரப் பதவி கொண்டோர் அடிதொடர்ந்திருந்த திப்பு எதிரிகள் தம்மைத் தம்பால் ஈர்த்திடச் செய்த செய்கை அதேவழி தானும் பற்றி ஆற்றிட முடிவுங் கொண்டார்
1131 பகைவரின் பகைவர் தம்மைப் பகைத்தலைக் கருவாய்க் கொண்டு வகைசெயின் ஒருகு டைக்கீழ் வளைத்திட அதனால் வெற்றி வகைப்படும் அவரோ டொன்றின் வீழ்ந்திடும் மைகர் என்று பகையினைப் பகையால் வெல்லப் பறங்கியர் முடிவு கொண்டார்
1132 கைக்கூலிப் படைகளோடும் கைக்கொண்ட பிரதேசத்தைக் கைக்கொளில் ஒவ்வொன்றாகக் கடைசியாய்த் திப்பின் கோட்டை கைப்படும் தம்வ சத்தில் கான்வாலிஸ் திட்ட மஃதாம் பொய்ப்பட வில்லை எண்ணம் பின்னது நோக்கு வாமே
1133
பற்பல வாறாய்த் திட்டம் போட்டிட்ட போதும் முன்னர் சொற்பலம் மிக்க பேராய்த் தலைமைகொண்டிருந்த "சேர்ஜோன்” மற்றுமோர் யுக்தி தன்னை மொழிந்ததும் "கான்வாலீஸ்"ஸிம் முற்றுமே மறுத்தார் பின்னர் முடிவினை மாற்ற லானார்
134 “கரைப்பவர் கரைத்தாற் கல்லும் கரையுமாம்” என்ப தொப்பச் செருக்கொடு திட்டமிட்ட “ஜெனரலும் சற்றுச் சாய்ந்தார் ஒருத்தரம் திப்பு வோடும் உரைசெய்து பார்த்த லேதாம் கருத்தினில் "சேர்ஜோனுக்குத் தோன்றிய உபாயமாகும் 1135

தீரன் திப்பு சுல்தான் காவியம் O247) "ஜெனரல்ட்ரேக்" என்னும் மிக்க திறன்கொண்ட தளகர்த்தாவைத் தனதுநற் றுத ராகச் சென்றிடப் பணித்தார் வாலிஸ் பொன்னொடு பெண்பே ராட்சி பெறுவதென் றாகில் சாயா மன்னரொன் றில்லை யென்று மனத்துன்னித் தோல்வி கண்டார்
1136
பெறுமதி மிக்க தான பரிசுகளோடும் கண்ணைப் பறித்திடு தேவதைபோற் பெண்ணொன்றுந் துணையாய்க் கொண்டே உறுத்திய சேதி கூட்டி உடனகன்றிட்டார் தூதர் முறைப்படி அவரைத்திப்பு வரவேற்றார் உபசரித்தார்
1137 “வந்ததென் காரணம்தான் விளம்புக என்றார்” மன்னர் தந்தனர் கொண்டு வந்ததனைத்தையும் ஏற்றார் திப்பு “வந்தது நட்பு நாடி வேறிலை” என்ன பின்னென் வந்திடும் வார்த்தை யென்றே வியப்பொடு செவியுற்றாரே
1138 புதியதாய்ப் பதவியேற்றுப் பாரதம் வந்தா ரென்று முதலிலே அறிந்திருந்தார் முன்னொரு பொழுது தோற்றே ஒதுங்கிய பேர்தான் பொல்லா ஒருமை கொண்ட தீயர் சதியினில் வல்லா ரென்படுது) திப்பறிந் திட்ட பாடம்
1139 நட்பென்று சொன்ன போழ்து நேர்ந்ததோர் ஐயம் சூழ்ச்சி உட்பதிந்துள்ள தென்றே உள்மனம் உறுத்தல் செய்யும் கட்புலம் உண்டதந்தக் கோலத்தில் தொடரக் கேட்டார் திட்டங்க ளெடுத்து ரைக்கத்திப்புமன் சினங்கொண் டாரே
114-O "வங்காளம் சென்னை பம்பாய் வந்தெம தாட்சியுள்ளே தங்கிடச் செய்யத் திப்பு துணைசெய்ய வேண்டும் கொள்ளில் பங்கரை அனைத்திலும்தான் படைதனில் முதன்மை தேரல் உங்களின் விருப்புக் காகும்" என்றதும் தீபொங் கிற்றே
1141 "ஒப்பிடில் சீரங்கத்தை ஒப்பந்தம் செய்த லுக்காய்த் தப்பாது வருவா ரெங்கள் ஜெனரல்"என்றுரைப்பக் கேட்டே "ஒப்பினேன் நட்பை ஆனால் உங்களின் ஜெனரல் வேண்டும் தப்பினுக் கொப்பேன்" என்றார் தொடர்ந்துமே வார்த்தை கோத்தார்
142

Page 136
ஜின்னாவூர் லுரியுத்தீன் O248)
“கல்கத்தா சென்னை பம்பாய்த் துறைமுக மொங்கும் உங்கள் பல்வகை யுத்தப் பாண்டம் பெருந்தொகை யாக நீங்கள் சொல்லுங்கள் சேர்ப்ப தென்ன தேவைக்காம் எமது மண்ணைக் வெல்லவென்றன்றோ வேறு விருப்பமென்” வினவினாரே
1143 "வல்லவர் நாங்களிங்கு வேரூன்றினாலோ நீங்கள் நல்லது பெறுவீர் மைகர் நிலந்தனி நாடொன்றாகும் தொல்லைகளில்லை நாட்டில் சரிபாதி உங்கள் கையில் நல்லதே நாடினோம்நாம் நாட்டமென் னுரைப்பீரென்றார்
1144
“சொன்னதை மீண்டும் நானே சொல்கிறேன் விபரங் கேள்மின் என்னரும் மக்கள் மீதே எனக்குள பாசம் வந்தோர் தன்னளவில்லை நட்பைத் தொடர்வது வேறு மணணை கன்னமிட்டோட வந்தோர் கருத்தினுக் கொத்தல் வேறு”
1145 "இடம்வலம் தெற்கு மேற்கு இணைத்துவான் பூமி மட்டும் கொடுப்பமென்றுரைத்திட்டாலும் கால்பதிநிலத்தையேனும் கொடுத்திடேன் அடிமை கொள்ளக் கான்வாலிஸ் அறிகி லாரோ படித்தமுற் பாடம் ஏனோ பதிந்திலை நெஞ்சில்” என்றார்
1146
“என்றணின் தந்தை ஹைதர் இன்னுயிர் போக்கி இந்த மண்ணினைக் காக்கப் பட்ட மிகப்பெரு சோதனைகள் எண்ணலில் அடங்கா மண்ணின் இறைமையைக் காத்து நின்றார் என்பனி யதுவே தாதை இடைவிட்ட பணிதொடர்தல்”
147 "பகைகொண்ட போதும் என்றன் பாரத மன்னர் தம்மை அகங்கொண்ட பேர்நான் மாற்றார் அளித்திடும் பிச்சைக் காக வகைசெயேன் அழித்தொழிக்க வாய்ப்பிலை யுங்களுக்கும் தகாததைச் செய்யேன்” என்றார் திரும்பினார் வந்த தூதர்
148
நடந்தவையனைத்தும் சொல்ல நினைந்தது தவறிப் போன படித்தலத்திருந்தார் வேங்கைப் புலியெனச் சீற்றங் கொண்டார் கிடைத்ததோர் வாய்ப்புதிப்பைக் கூறுபோட்டிடலா மென்ற அடித்தளம் நொருங்க வாலிஸ் அடைந்ததோ ஏமாற் றந்தான் 149

நீரன் திப்பு சுல்தான்காவியம் C249D
அனைத்திட முடியாக் கான அக்கினி ஒக்கும் பேராய்த் துணிவுடன் எதிர்த்துத் தம்மைத் துரத்திட எண்ணு வார்மேல் அணிதிரண் டிட்ட போழ்தும் ஆனவோர் நிமித்த ஏது கணித்திட இயலா வாறு கான்வாலிஸ் கருத்தில் ஒர்ந்தார்
115O நிசாமினைத் தமது கைக்குள் நிலைத்திட வைப்ப தோடே இசைந்திடில் நாநா சாகிப் இணைத்திட வேண்டும் கூட இசைவினைக் கொண்டு பிரான்சின் இனத்தவர் தமையுஞ் சேர்த்தால் இசைந்திடும் வெற்றி தம்பால் என்றவர் திட்டமிட்டார்
151 நண்பராய் முதலில் காட்டி நாள்கடந்தேக வாய்ப்பும் உண்டான போது காலை உருவிடும் நோக்கினோடே உண்டான திட்டமஃதாம் ஒருவரோ டொருவர் தம்மைச் சிண்டுமுடித்த லும்பின் திட்டமும் அதனுள் சேரும்
1152 பிரித்தாளும் யுக்தி வெள்ளைப் பறங்கியர் கண்ட கொள்கை விரிந்தவிப் பூப்பரப்பில் வென்றாட்சி செய்த நாட்டில் உரம்விடச் செய்தாரின்றும் ஊன்றிய வித்து வெவ்வே றுருவத்தில் சீரழிக்கும் ஒருபெரு நோயென்றாச்சே
1153 இந்துக்கள் முஸ்லிமோடும் முஸ்லிம்கள் முஸ்லி மோடும் இந்துக்கள் இந்து வோடும் இருநாடு ஒன்றோ டொன்றும் பந்தத்தை அறுத்து வாழ்ந்தால் பலன்தமக் கதிக மென்னும் தந்திரம் வென்றதன்றும் சிறுமையின் கருவாகிற்றே
1齿54 முன்னரே திப்பு வோடு முரண்பட்டே இருந்த பேர்கள் சொன்னதும் எதிர்க்கத் தம்பால் சேருவர் கொள்பவற்றில் சொன்னவாறளிப்போ மென்றே கூறியே ஆசை என்னும் எண்ணெய்யை யூற்றி யூற்றி எரித்திட எண்ணங் கொண்டார்
1155 கிடைப்பதில் மூன்றி லொன்றைக் கொடுப்பதாம் அனைத்திலும்தான் படைப்பலம் ஓங்கச் செய்தால் போதும்நாம் “கும்பனியார் எடுத்ததை முடிப்போம் வெற்றி எம்வசமாகும் என்றே கொடுத்திட நினைந்தார் வாக்குக் கொள்கையும் அதுவாகிற்றே 156

Page 137
ஜின்னாவூர் ஷரிபுத்தீன் O250
மந்திரச் சபையைக் கூட்டி முன்வைத்தார் தமது திட்டத் தந்திரந்தனைய வர்கள் சேர்ந்தொன்றி ஏற்க எல்லாம் எந்திரக் கதியில் மாறி இயங்கின பொருத்த மானோர் பிந்திடார் காலம் நோக்கிப் பறந்தனர் வெற்றிகண்டார்
115ア பறங்கியர்க்குக் கற்பித்த பாடம்
பெரும்ப டையைக் கூட்டி வெள்ளைப் பறங்கியர்கள் வருவதாய் அறிந்த திப்பும் அஞ்சிடாதே ஆன படைகள் கூட்டியே வரும்புலத்தை நோக்கித் தனது வாளுக் கிரையு மூட்டவே
பொருந்திச் சென்ற பாங்கு ரைப்பின் புயபலத்தைச் சாற்றுமாம்
1158
துப்பறிந்து வந்தவர்கள் சொல்லு வாரே பறங்கியர் தப்பிலாது மும்மடங்கு சேர்ந்திருப்ப ரென்றுமே ஒப்பியதனுக் கேற்றவாறு யுத்த வியூகம் கொண்டதால்
கப்பி வந்த யுத்த மேகம் கரைந்தழிந்து போனதே
仕59
பெருவெளிப்போர்க் களத்திலிரண்டு புறத்து வீர ரெதிரெதிர் உருவிக் கையிலெடுத்த வாளும் உண்டை தள்ளும் பொறிகளும் பெருக்கியெடுத்து வந்திருந்தார் பொருதி அழிக்கும் நோக்கினார்
செருக்க ளத்திற் கடலிரண்டு திக்கிலுற்றல் போலுமே
116Օ
பரியிலுற்றவாறு வீர பராக்கிரத்தினுருவமாய் உருவிக் கையிலெடுத்த வாளும் ஒருக ரத்தில் சேனமும் பொருந்த வந்தார் திப்பு சுல்தான் படைநிலையை நோக்கவே
விருந்தையுண்ணக் காப்ப வர்போல் வீரர் கண்டார் வேங்கையே
1161
எதிரி வீரர் தமைய ரிந்தே இலாதொழிக்கும் பாங்கினில் உதிப்பெடுத்த தாமோ வென்ன எண்ணும் வாறு நின்றனர் குதிநிலத்தில் படாத வாறு குதிரை எகிறிப் பாய்ந்திடக்
குதிரை வீரர் அணிவகுத்தார் கட்டளைக்குக் காத்துமே
1162

தீரன் திப்பு சுல்தான் காவியம் O25O அணிகள் நூறு பீரங்கிகளும் ஆங்கு களத்தினோர்புறம் இணைந்திருந்த வீரர் சகிதம் இலக்கு வைத்துக் காத்தன கணக்கி லாத தொகையா மன்ன குண்டுகள்பின் சேர்ந்தேதம் பணிக்கு நாங்கள் தயாரென் றோது பாங்கிற் திப்பு நோக்கினார்
1163 கண்டி லாத புதுமையன்று களத்தில் திப்பு கொணர்ந்தவாம் விண்டு சென்று வளியுட் புக்கி வேக மறியா வாகினில் கொண்ட திசையில் குறித்த புலத்தைக் கூறு செய்யுந் தீக்கலம்" உண்டி ாைததாகும் முன்னர் உற்ற தன்று முதன்மையே
1164 ஏவி விட்ட மறுகணத்துள் இரண்டு கற்கள் தாண்டியும் ஏவி விட்ட பேர்நினைந்த எல்லை யின்பால் இடியெனத் தாவியழிக்குந் திறன்மிகுந்ததாகும் என்றே விளம்புவார் “ஏவுகணைக" ளாம வைகள் எண்ணும் பணியை முடித்திடும்
1165 இகச்ச ரீத மீதி லின்றும் ஏற்ப வர்களேற்றிடும் மிகைத்த புகழின் மேன்மை பெற்ற மனித ஆற்றல் சாதனை செகம்புகழ்ச்சி செய்யும் திப்புதான தற்கு மூலவர் வகைத்தததனின் வழிதொடர்ந்தே விண்கலன்கள் ஆனதே
1166 படையை யோர்கண் பார்த்து நெஞ்சில் பூரிப் புற்ற பின்னவர் விடைகொடுத்தார் வீரர் தமக்கு வளியை விஞ்சினாரவர் அடுத்த டுத்து வேறு வேறாய் ஆணை பலவாய் அறைந்திடும் விடுத்த லொன்றே வார்த்தை வாயுள் வெளிப்படப்பின் செயற்படும்
1167 ஒரேதிசையில் படைகள் செல்ல ஆணையிட்டார் வெள்ளையர் மறுபுறத்தில் கட்டளைகள் வேறு வேறு வாகின விரோதிகள்பால் முன்புறத்தில் வேக முற்ற தோர்படை பிரிந்து சுற்றி வளைத்த வைகள் பற்பலப்போர்ப் படைகளே
1168
குண்டு மாரி யிருபுறத்துங் கொட்டி யாட்சி செய்திட அண்டி விட்டதாம்ப டைகள் அரிதொழில்கை வாட்படும் துண்ட துண்ட மாங்க ளத்தில் தலையு டல்கை கால்களே கொண்ட பசியைத் தீர்த்த தேமண் குருதிப் பாலும் மாந்தியே 169

Page 138
ஜின்னாவூர் ஷரியுத்தீன் O252 o
சட்டென் றோர்பே ரொலியெண் திசையுந் திடுக்கிட்டசையச் செய்தது பட்டென் றோர்கணத்திலனைத்தும் பலமிழந்த பாங்குறும் பட்ட தில்லைச் செவிக ளிந்தப் புதிய தான அனுபவம் மட்டி லாதே உயிர்பறிக்கும் மாயக் குண்டம் தீக்கலம்
117O வீழ்ந்த இடத்தில் வெடித்துச் சிதறி வட்டத் தோர்பேர் எல்லையைத் தூள்தூளாகச் செய்த தோடு சிதறி யண்ைடைப் புறமெலாம் பாழ்படுத்தியழித்தொழிக்கும் பணியில் முதன்மை கொண்டதே கீழைத் தேய நுண்புலன்கொள் கீர்த்திதிப்பு சாதனை
1171 பகல வன்றன் ஒளிகை வாளில் பட்டி லங்கும் பார்வையை அகலச் செய்யும் வாறிரண்டும் அண்டிமோத மின்னலை மிகைத்த தாமோ என்னுமாகு மிகுந்த தெங்குஞ் சமர்க்களம் பகலைப் பகலில் பதித்த தன்ன பொலிந்த தென்ன புதுமையே
1172
படையிடையிற் புகுந்து எதிரிப் படையின் வீரர் குழாத்தினைத் துடிதுடித்து மாண்டொழிக்கத் தேடித் தேடி அரிகுவார் மடிந்து வீழும் பேர்கள் தாண்டி மிஞ்சியுள்ள வீரரைத் தொடர்ந்து சென்று கொன்று வெற்றிதிப்படைந்தார் களத்திலே
1173 வேங்கை யின்கைப் பட்ட சிறிய விலங்கு மறுகண் மாய்ந்திடும் பாங்கு மன்னர் திப்பு முன்னில் படுபவர்களாகினார் நீங்கிலாரோ இல்லை பார்வை நின்ற இடத்தில் சரிந்தனர் ஓங்கிடும்வாள் பதிவ தொன்றும் உடல்விடுத்த சிரசுடன்
1174. சாவைக் கையில் தாங்கிப் பிறரின் சன்னிதிக்குப் பகிர்வதாம் தேவை யிவர்க்காம் ஏனென் பணியை இவர்பறித்தா ரென்றுமே பூவிலுயிர் பறிக்கும் தெய்வப் பணியியற்றுந் தூதுவர் நாவுரைப்ப ராமோ வென்னு நிலைமை காட்டிச் சாடுவார்
1175 சிறுதொகையே திப்பு வீரர் சிறிய பொழுதுள் அன்னவர் தறிகெட் டோடு வார்கள் எங்கள் தரப்பிலுற்ற தாக்கினால் உறுதி வெற்றி எம்மவர்க்கென்றுறுதியோடு வந்தவர்
இறுதி வேளை எதிர்க்க வொண்ணா இழிநிலைக்குள்ளாகினார்
1176

தீரன் திப்பு சுல்தான் காவியம் O253D நிலைமை முற்றும் பாத கம்சேர்நிலைக்குள் ளாக வெள்ளையர் நிலைகுலைந்தார் தப்பியோடும் நிலைமை கொண்டார் தலைவர்கள் விலகியுயிரைக் கரம்பிடித்தே “ஓடு ஒடு" என்றனர் கலக நிலைமை அவர்கட்குள்ளே கூடி டப்பாய்ந் தோடினார்
1177 சிறிய படையென் றாகினாலும் சிறந்த யுத்த யுக்தியால் முறியடித்தார் பெரும்ப டையை மறக்க வொண்ணாப் பாடமே சிறகொ டிந்த பறவையானார் தேடி வந்து தோல்வியை உறுதி கொள்ள ஒருவரின்றி ஓடினாரே புகலிடம்
1178
காஸிகானுடன் ஒரு கலந்துரையாடல்
இரவுநெடுநேரங்கண் துஞ்சாவாறே
இருந்ததுகண் டவரண்டை காஸி கானும் பொருந்துமென்ன காரணமென்றறிய வேண்டிப்
போய்வினவத் திப்புரைப்பார் ஐய மொன்று உறுத்துதென்றன் மனத்திலென உடனே கான் “என்
னுரையுங்கள் சுல்தானே” என்றார் சொல்வார் வருவாரோ இரவினிலே எம்மைத் தாக்க
வெள்ளையர்கள் என்பதுதான் வேறில் லென்றார்
1179 தருமமறியாதவர்கள் செய்வார் நாமும்
தயாராவோம் எனச்சிங்கம் வேங்கைக் கோத உருமாறிற் றவரெண்ணம் செய்கை யாக
உறக்கமுயிர் பெறாதுறக்கம் கொண்ட தன்றோ வருவாயிற் பொறிகொண்ட வாகாம் உள்ளே
வந்ததும்பின் மீளவெண்ணா வழைத்துக் கொல்ல உருவான தோர்யுக்தி பாசறைகள்
ஒளிதவிர ஒன்றுமற்ற வெறுமை கொள்ளும்
118O எண்ணியவாறுண்மையென வாகிற் றங்கும்
எதிரிகளும் இரவினிலே தாக்க வெண்ணிக் கண்ணுறங்கார் காத்திருந்தார் மூன்றாஞ்சாமம்
கடுகுமட்டும் பொறுத்திருந்தார் பகற்போ துண்ைட

Page 139
ஜின்னாவூர் ஷரியுத்தீன் O254)
புண்ணுளத்தில் பற்றியெரி கொண்டதாலே
பேரழிவுந் தோன்றியதால் பொறுக்க மாட்டார் மண்ணுமுண ராதபடி அரவமற்றே
மிகவண்மித்தரித்தார்கள் நோக்கம் பார்த்தார்
1181
காரிருளில் பதுங்கினரே வீர ரெல்லாம்
கண்டில்லா வாறெவரும் வழியில் கூட ஓரிருவ ரேனுமிலை உறங்குங் கோலம்
ஒன்றியவர் உள்ளத்தால் பூரித்தார்கள் கூரியவாள் கரந்தாங்கத்திப்பு வீரர்
கண்டாலும் எதிரிகளைக் கட்டளைக்குப் பார்த்திருந்தார் பாய்வதற்குப் பதுங்கு கின்ற
புலிப்படைபோல் பகைப்படைகள் மீதி லாமே
1182
"தாக்குங்கள்” என்றவொலி வெள்ளை யர்பால்
கேட்டதது கேட்டதுமே குபுகு பென்று தாக்கியழித் திடுவேகம் தலைகால் முற்றும்
தாங்கிவெறி கொண்டுபுகுந் தருக்கர் கூட்டம் வாகுவரும் வரைகாத்துநின்ற வீரர்
வந்தவர்கள் தமைநுழைய முற்றும் விட்டு ஏகாது நின்றார்கள் எகிறிப் போனோர்
எதிர்ப்பின்றித் திகைத்தார்கள் எதுவுந் தோணார்
1183 நஞ்சுண்ட மீன்குளத்துள் அலைதல் போல
நாடிநாடிப் பாசறைகளொவ்வொன்றாக வெஞ்சினத்தின் பாற்பட்டு வந்தோர் தேடி
விடாதொன்றும் அலைந்தார்கள் வெறுமை கண்டார் அஞ்சினரோர் சூழ்ச்சியெம்மைச் சூழ்ந்த தென்றே ஆளரவங் காணாத காரணத்தால் பஞ்சில்தீபற்றியதோ வெனுமால் சற்றுப்
பொழுதிலொரு பிரளயமாங் குருவாகிற்றே 184

தீரன் திப்பு சுல்தான்காவியம் C255D
வந்தவழியடையுண்ட தோர்நொடிக்குள்
வளைத்துப்பெரு வெள்ளம்போல் உள்நுழைந்தோர் எந்தப்புற மேகிடிலும் பேரெதிர்ப்பின்
இடைப்பட்டார் ஏதுமறியாது நின்றார் சந்தர்ப்ப மீதென்றே திப்பு வீரர்
திகைப்படங்க முன்பகைவர் தலைகள் சீவ முந்தினரே ஒருவரைமுன்னொருவர் கான
வராகனிடை வேங்கைப்படை புகுந்தவாறே
1185 இனித்தாக்குப் பிடிக்கவிய லாதே யென்னும்
இடரோங்க வெள்ளையர்கள் தப்பியோடும் மனங்கொண்டார் புறமுதுகு காட்டியோடும்
மானமிலாச் செயலுக்கு முகங்கொடுக்கத் தனக்குவந்த தீங்கினைத்தன் பாலுற்றோரின்
துணிவாலும் தியாகத்தின் பொருட்டினாலும் நினைத்தவர்க்கே திருப்பிவிட்டார் திப்பு சுல்தான்
நிரந்தரமாய்ப் புகழ்கொண்டார் வீரத்தாலே
1186 கோபக் கனலிடை கான்வாலிஸ்
போனது மானம் வெட்கம் பறந்ததால் எம்மவர்க்கே ஈனமும் பற்றியெம்மை இழிவுறச் செய்த தெண்ணம் கானல்நீர் ஆன தென்னே! கடுகள வேனும் யுத்த
ஞானமற்றோர்களாலே நினைந்திடக் கூசு தென்றார்
1187
ஒன்றுக்கு மூன்றாய் என்று ஒருபெரும் படையைக் கூட்டிச் சென்றிருந்தாலும் தோல்வி தோட்சுமையான தெம்மோர் பன்றிகள் கூட்டம் போலும் புகுந்துளார் சுற்றிநின்று கொன்றுளார் என்றே கோபக் கனலிடை கொதித்தார் வாலிஸ் 1188

Page 140
ஜின்னாவூர் லுரியுத்தீன் C2560
எதிரியின் பலமறிந்தும் இரவினில் படைநடத்தி மதியறு செயலாலுற்ற மாபெரும் தோல்வி எங்கள் விதிதனைக் கூடத்திப்பு வகுத்தது வாறாம் என்றார்
மிதிதனலுற்ற ஓநாய் மிரண்டோலம் விட்டவாறே
1189.
“மடோவ்"வை நம்பினேன்நான் மிகப்பெருந் தவறாம் இன்று பிடியுண்ட பகுதி யெல்லாம் பறியுண்டு போன தென்று பிடிபடும் மீண்டு மென்றே பதறினார் கவர்னர் வாலிஸ்
அடியுண்டநாகம் போலாம் அவர்நிலை ஆகிற்றன்றே
119 O
"ட்ரேக்”கெனும் தளகர்த்தர்பால் சொல்நெருப்பாக வீசி யார்க்குமே அஞ்சா வாலிஸ் என்னதான் செய்வதென்றே கார்க்குகை யாக வுள்ளங் கனத்திட ஒன்றுந் தோணார் வேர்த்துடல் பதறநின்றார் வீண்வார்த்தையுரைக்கும் நாவே 1191 யாரவர் திப்பும் என்ன தைரியம் வேண்டும் என்றன் போர்க்குணம் அறியாதாராய்ப் பகைவளர்த்திடமுயல்வார் கார்கவிழ்ந்தாலும் வெய்யோன் கதிர்வரும் இன்று தோற்றால்
வேரொடு சாய்க்கும் வேளை விரைவினில் கனியும் என்றார்
1192.
பொறுத்திட வியலாத் தோல்வி பொருள்மனு நட்டம் வெள்ளை நிறத்தவர் இனத்துக் கென்றும் நீங்கிடாப் பழியிம் மாட்டு நிறுத்திட வில்லை யாயின் நாம்நிலை பெறுதல் சாலா திறம்படு திட்ட மொன்றால் திப்புவை அழிப்போ மென்றார்
1193
“பேஷ்வா”நிசாமி ரண்டு பேரையும் வலையுட் சிக்கப் பேசுதல் வேண்டும் வேண்டும் பொன்னெலாம் தருவொ மென்றே ஆசையைக் காட்டி நம்பால் அழைத்திடில் பலமுன்ை டாகும் காசென்றால் அடங்கும் பேயும் கொடுத்திடு "ட்ரேக்"என்றாரே
1194

தீரன் தியு சுல்தான் காவியம் O257D
“நிசாம்” “வோலிஸ்" சந்திப்பு
நிசாமினைத் தானே சென்று நியாயங்கள் எடுத்துக் கூற இசைந்துமே சென்றார் ஆங்கு நினைந்ததை விஞ்சு மாறு வசைந்துமே தந்தார் காக்கும் வரமொன்று கிடைத்தார் போன்றே பசித்தவன் பாலுஞ் சோறும் பெற்றதாய் மகிழ்ந்தார் "வோலிஸ்”
1195 ஞமலிகால் பற்றியேனும் தம்வழி இலாபங் கொள்வார் அமைந்ததோர் சந்தர்ப்பத்தை அகன்றிட விடுவராமோ! தமதுகா லடிக்கு வந்த தருமதேவதையா மென்றே அமைந்தது "வோலிஸ்" ஆங்கே அவரண்டை சென்றதன்றே
1196
நாவினில் நறையைச் சிந்திநயனங்கள் மகிழ்வு காட்டத் தூவினார் நச்சுப் பூவாம் சொற்களை அவையுள்ளேகி ஆவியுட் கலந்து தேகத்தணுவிலும் செறிந்த வாறு போவதைப் பார்வையாலே புரிந்திடய பேசலானார்
1197 நட்பினை நாடி வந்தோம் நாமென வோலிஸ் சொல்ல நட்பினை ஏற்றோம் நாமும் நட்பினைப் பொழிவோ மென்றே மட்டிலா மகிழ்வு காட்டி மண்டியிட் டிடுவார் போன்றார் விட்டிலாய் நெருப்பில் வீழும் விபரத்தை ஒர்ந்தி டாரே
1198. தம்மையே தாமழிக்குந் திட்டத்தை மாற்றான் தூண்ட இம்மியும் ஒர்ந்தி டாதே எதிரியை நண்பனாக்கித் தம்மவர் மீது போரைத் தொடுப்பவர்க் குதவி செய்ய என்மனம் கொண்டிட் டாரோ எதிர்வினை நோக்கி லாரே
1199 திப்புவை வெற்றி கொள்ளத் தங்களின் படைப்ப லத்தை ஒப்புக ஒப்பின் வெற்றி ஒன்றிட மைகரில்நீர் ஒப்பிடும் பாங்கில் மண்ணில் உமதுபா லிருக்கும் பங்கைத் தப்பாதே யளிப்போம் கிட்டும் செல்வத்தில் பெரும்பங்கேற்பீர்
12OO இம்மண்ணி லெவரும் உம்மை எதிர்த்திட விடவும் மாட்டோம் செம்மையாய் ஆட்சி செய்யத் தேவைகள் உணர்ந்து செய்வோம் எவ்வள வெனிலும் யுத்த ஆயுதம் வெடிமருந்தும் உம்மைவந்தடையும் வெற்றி ஒன்றேதான் குறிக்கோ ளென்றார்
12O1

Page 141
ஜின்னாவூர் ஷரிபுத்தீன் O258 o
பூரித்தார் நிசாமெ மக்குப் பகையினி யில்லை கொள்ளும் போரின்பின் கிடைக்கும் லாபம் பெரிதெனக் கணக்கி லிட்டார் யார்குடி யழிந்திட்டாலும் எனக்கென்ன எம்வலைக்குள்
சேருவ தொன்றே போதும் தலைக்காப்பும் உண்டா மென்றே
12O2
அன்றவர் செய்த செய்கை அடலர்கள் பாரதத்தை வென்றாட்சி செய்யக் கால்கள் வேரூன்றத் துணையாயிற்றே ஒன்றுபட்டிருந்தால் திப்பு உயர்த்திய போர்க்கொ டிக்குள் சென்றோடச் செய்யுஞ் சக்தி சாத்தியம் என்பாருண்மை 2O3
1 நம்பிவந் தீர்களெம்மை நாமுமைக் கைவிடோம்நாம் நம்பினோம் உம்மை வாக்கு நிலைபெறும் என்பவோலிஸ் "கும்பனி வார்த்தை மாறா கூறிடில்” என்றார் கேட்டே
தம்மதி இழந்த நிசாம்தன் திருப்தியைத் தெரியச் செய்தார்
12O4
கனிந்தது கனியு மென்று கருதியே வந்த தொன்று மனத்திடைதிருப்தி மேவ முறுவலித் தாரே "வோலிஸ்” நினைந்தது வேறு மொன்றாம் நிசாம்கொண்ட நம்பிக் கையின் எனவாகுந் தன்னால் என்ற எண்ணமும் வஞ்சப் பேரே
12O5
மராட்டியர் சம்மதம்
மராட்டியர் தமக்குந் தூது முறைப்படி சென்ற தன்றே கருத்தினில் ஆய்ந்தார் நாநா சாஹரியும் ஆரம்பத்தில் விருப்பிலார் திப்புப் போன்ற வீரரை வெல்வதற்கு மருவலர்க் குதவல் முற்றும் முறையல வெனநினைந்தார் 12O6
யாருக்கும் பக்கஞ் சாரா திருப்பதாய்த் திட்டங் கொள்ளப் போருக்கும் உதவாப் போழ்து பயன்தனை இழப்போ மென்று காரணஞ் சொன்னார் நாட்டின் கோல்வழியுபதே சிப்போர்
சாருமே யனைத்தும் வெல்வோர் சொந்தமாய் எனவுஞ் சொல்வார்
12O7

தீரன் திப்பு சுல்தான் காவியம் O259D
திப்புநம் எதிரியேதான் சரியவர் தன்னை வெல்ல எப்படி மற்றோ ரோடு மிணைவதாம் அவரும் நாங்கள் ஒப்பிட வொண்ணார் நாட்டை உறிஞ்சிட வந்த மாற்றார் தப்பொரு பகையை வெல்லச் சேருதல் பிறிதொன் றோடே
12O8 வெள்ளையர் காலூன்றுங்கால் வலுப்பெறும் அவர்தம் ஆட்சி எள்ளளவேனும் ஐயம் இலையவர் பின்நாட் போழ்தில் உள்நுழை வார்களெங்கள் உடைமைக ளனைத்துங் கொண்டே இல்லாது செய்வாரென்றார் இசைவின்றிநாநா சாஹரிப்
12O9 பறங்கியர் சக்தி பெற்றால் பயனவர்க் காகும் உண்மை முறைப்படி உதவி னாலோ மராட்டியும் வலுவே கொள்ளும் மறுத்திடில் போரின் பின்னே பெற்றிடும் வெற்றி யெம்பால் மறுத்ததால் போர்தொடுக்க முனைப்பிடச் செய்யு மென்றார்
121Ο திப்புவின் கைகளோங்கிக் கூடுமென் றாகில் வெற்றி எப்படி யாகும் என்ன இயலுமோ நாங்கள் மூவர் தப்பியவ்வாறமைந்தால் சூடுண்ட ஊன வேங்கைக் கொப்புவார் துணியக் காலம் உடன்படா வென்றுஞ் சொல்வார்
1211 வெல்லுவோர் எங்கள் மீது வலிந்துபோர் தொடுப்பர் இன்றே சொல்லுதல் நலமாம் காலம் சென்றிடில் வாய்ப்புத்தப்பும் அல்லல்வந் துறுமுன் நாமும் ஆமெனச் செல்வோமானால் வெல்லுதல் திண்ணம் பின்னர் விளைவதும் நலமாம் என்பார்
1212 என்றனின் கொள்கைக் கிஃதோ இடங்கொடா தெனினும் மக்கள் நன்மையைக் கருத்திற் கொண்டு மராட்டியின் எதிர்காலத்தை எண்ணிநான் வெள்ளையர்பால் இனங்காமல் இணங்குகின்றேன் என்னைநான் இழப்ப தொக்கும் இதுவென்றார் நாநா சாகிப்
1213

Page 142
ஜின்னாளுர்ஷரிபுத்தீன் C260 திப்புவின் சீற்றம்
வெள்ளையர்கள் வலையினிலே நிசாமும் கூட
வளைந்துவிட்டார் மராட்டியரும் எனவறிந்தே உள்ளங்கொள் வெஞ்சினம்மோ பூகம் பம்போல்
ஊழித்தீ கொதித்தெழுந்த பாங்கும் போலாம் கள்ளமனங்கொண்டவர்கள் மான மற்றோர் கடுகளவும் புந்தியிலார் எதிர்காலத்தில் எள்ளளவும் எஞ்சாது நமது மண்ணை
ஏப்பமிடத் துணிந்தவரை நம்பினாரே
214 உட்பகையை அழிப்பதற்குப் பொதுப்ப கையை
உவந்ததுமேன் ஒன்றிப்பின் உதவும் பேரை திட்டமிட்டுக் கொன்றுவிடும் ஒட்டுண் ணிக்குத்
தம்மைத்தாம் தந்தகதிக் குள்ளானார்கள் வெட்வெட்டத் தளைக்கின்ற விடச்செடிக்கு
வளரப்புனலூற்றுவதோ வளர்ந்த பின்னர் கிட்டவுள்ள மரஞ்செடியும் வளர மாட்டாக்
கேடுசெய்யும் அழித்துவிடும் அறியா ரேனோ
1215
நிசாமென்றால் துரோகத்தின் மறுபிறப்பு
நிலைகுலைந்த தேனாமோ மராட்டியர்கள் வசப்படுமென் மண்னதனில் பங்குத் தேட
வாய்ப்புவரும் சூறைப்பொருள் கிட்டு மென்றே இசைந்துள்ள கேடதனை எண்ணிப் பார்த்தால்
எச்சிலுண்ண ஏங்குகின்ற நிலைபோ லாமே பசித்தாலும் புலியென்றால் புல்லை யுண்ணா
பிறர்கையை நம்பியிவர் இழிவு பெற்றார்
1216

தீரன் திப்பு சுல்தான்காவியம் O260
என்நாட்டார் என்னவரே என்று நானும்
எண்ணுகையில் ஏனிவர்கள் கடல்கள் தாண்டி மண்பிடிக்க வந்தவரை நாட்டின் எல்லா
வளங்களையுங் கொள்ளைகொள்ளும் பறங்கிப் -
பேர்க்கு முன்னின்றார் உரமளிக்கக் கொடிய போரில்
மாண்டழிவோர் எம்மவரே எதிர்காலத்தில் ஒன்றன்பின் ஒன்றாகத் தமக்குள் வாங்கி
ஒன்றுமில்லா தாக்கவல்லார் உணராரேனோ
121ア
உருவான போர்மேகம் தம்மைச் சுற்றி
உலவுகின்ற வேளையிலே திப்பு சுல்தான் அரசசபைதனைக்கூட்டிநிலைமை தன்னை
ஆரா ) போழ்தினிலே பரத மண்ணின் அரசர்கள் செய்யுகின்ற கேட்டைச் சொல்வார்
அவையினிலே பூர்ணைய்யா காஸி கானும் இருந்தார்கள் தளகர்த்தர் பலரினோடே
எதிர்கொள்ளும் பகைவெல்ல வகைகள் ஒர்ந்தார்
218
பிறந்தமண்ணில் பற்றில்லார் பாவியர்கள்
பேராசை கொண்டயிபூழி பிறப்பினோர்கள் வறந்ததென்ன அன்னவரின் சிந்தனைகள்
வந்தவனை ஏன்நம்பி மோசம் போனார் அறிந்திலையோ இன்றெனக்குப் பின்ன வர்க்கு
அடாதுசெய்வர் என்பதனை அறிந்து மாமோ முறைகேடு செய்திட்டார் மேலண்ணாந்து
முகம்மீழ உமிழ்கின்றார் மன்னிப் பற்றோர்
1219

Page 143
ஜின்னாவூர் லுரிபுத்தீன் O262)
எரிநெருப்பில் கனிந்தமழை
சிந்தனையில் ஆழ்ந்திருந்தார் திப்பு சுல்தான்
செய்வதென்ன வாமென்றே தேடலுற்றே வந்தமர்ந்தார் அருகினிலே பேகம் சாய்பா
வாஞ்சையொடு மன்னர்முகம் நோக்கிநின்றார் வெந்திருந்த மனத்தினுக்குக் களிம்பு பூசி
வேதனையைக் குறைக்கின்ற மருத்து வன்போல் புந்திபறிக்க மனையாள்நல் வார்த்தை கூறப்
படிந்தசினம் கரைந்துமனந் தெளிவா கிற்றே,
நாளைநீங்கள் யுத்தகளம் செல்ல வேண்டும்
நிம்மதியாய்த் தூங்குங்கள் என்ற போழ்து நீள்விழியில் கோத்திருந்த சோகக் கீற்றை
நாடாளும் பதியுண்ர்ந்தார் வாடிப் போனார் தோள்த்துணையே என்னவிது புண்ன கையைத்
தொலைத்ததுமேன் விழிகளிருள் கொண்ட -
தென்னே பாழ்யுத்தந்தனைநினைந்தா ஆட்சி செய்வோர்
பொறுப்பிலொன்றாம் ஈதறியாய் ஏனாம் என்றார் 1221
யுத்தமென்ப தரசர்க்குப் பொழுது போக்கு
உணர்வேன்நான் உள்ளத்தில் உங்கள் மீது நத்தியுள்ள காதலினால் வருத்தம் தோய்ந்தேன்
நானறிவேன் நாடாள்வோர் மனைகளென்றும் யுத்தத்தைக் கண்டஞ்சல் கூடாதென்ப
என்செய்வேன் என்னுள்ளொரு மனமுண்டன்றோ எத்தகைய இடையூறும் என்னால் தோன்றா
இமைமூடித் துயிலுங்கள் என்றார் ராணி
1222

தீரன் திப்பு சுல்தான் காவியம் C263D
நமக்குள்ளேர் ஒப்பந்தம் உண்டாம் அன்று
நானுன்றன் கைதொட்ட முதல்நாளன்று சுமக்கின்ற ஆட்சிமுதல் பின்னே காதல்
சார்ந்துள்ள சொந்தங்கள் அடுத்தாம் மக்கள் தமக்குமுதல் தானத்தைத் தருவே னென்று
சொல்லியதும் நீயதனை ஏற்ற தும்தான் நமைநாமே வென்றிடுதல் வேண்டும் நெஞ்ச
நெகிழ்வினுக்கு வாய்ப்பளிக்க வேண்டா மென்றார்
1223
நாட்டுக்கும் மக்களுக்கும் உங்களுக்கும்
நடுவினிலே என்அன்பு இடையூறாகா கோட்டைவிட்டு முதன்முதலாய் என்னை நீங்கள்
கைப்பிடித்த பின்செல்லும் யுத்த மிஃதாம் ஆண்டவனே அருள்புரிவான் வாகை கட
அடலரினைத் துவம்சம்செய்திடேவே என்னில் பூண்டகவலழித்திட்டேன் நாளை நீங்கள்
போகுவரை துயிலுங்கள் என்றார் ராணி
1224
கால்பற்றிப் பதிக்குத்தன் பாசங் காட்டிக்
கண்ணயரத் துணைசெய்தார் தன்னிர் துஞ்சா வேல்விழிகள் வாஞ்சையொடுவதனம் நோக்க
விழித்திருந்தார் வெகுநேரம் தனைமறந்தே கோல்கொண்டான் கடமைதனைக் கருத்தில் கொண்ட
காரணத்தாலமைதியுற்றார் மன்னன் தேவி சீலத்தின் பெருமைக்குச் சான்றாய் மன்னர்
திப்புகரம் பற்றியுடன் வாழ்ந்த கோதை
1225

Page 144
ஜின்னாவூர் லுரியுத்தீன் C264 o போருக்குத் தயாராகும் பறங்கியர்கள்
போருக்காங் காரணத்தைப் பலபட எண்ணுங் காலை ஆரம்ப மறிந்தார் யுத்த அணுகுதல் திப்பு வுக்குஞ் சேர்ந்தவரோடு வுள்ள சமஸ்த்தான மொன்றினுக்குங் காரணம் டச்சுக் காரர் கோட்டைகள் தடுப்பு மொன்றாம்
1226 வாய்த்தவக் காரணத்தை விடாதுதம் பக்கல் கொண்டு தோய்ந்தனர் நன்மை வெள்ளைத் தோலினர் வலிந்தே பெற்றார் ஓய்ந்திடார் உதவிக் கென்றே உடன்பட்டார் துரித மானார் தாய்கன்று துன்பங் கண்டு தவித்தலுக் கொப்பாம் பொய்யே
1227 திருவாங்கூர் சமஸ்த்தானத்தார் திப்புவின் ஆட்சிக் குள்ளே தருபவர் கப்பம் அன்னார் தம்வழி தடுப்பாய் ஒன்றை இருபுறம் வேறு வேறாய் ஏற்றிடும் நோக்கினோடே உருவாக்கம் செய்தார் திப்போ உவப்பிலார் சினம்மேற் கொண்டார்
1228 தடித்தவேய்க் கம்பங் கொண்டு தடுப்பினை எல்லை யின்பால் தொடுத்தனர் “கொச்சின் கூடத் தொடர்ந்தது நீண்டு கண்டே உடைத்தெறிந்திடப்பணித்தார் ஒப்பாத திருவாங்கூரார் அடுத்திருந்தவரோ டொன்றி அழிவினுக் கடிசமைத்தார்
1229 தடுப்பமைத் திருந்த தோடு தூண்டினர் மலபார் எல்லை அடுத்துள கிளர்ச்சிப் பேரை அணிதிரண் டெதிர்க்கத்திப்பு கடுப்படைந் திட்டார் கோபக் கனல்விழியுமிழ்ந்த தென்மால் எடுத்ததம் முடிவில் மாற்றார் இருப்பெனப் பதம்பதித்தார்
123O கூடவே டச்சுக் காரர் கோட்டைகளிரண்டைத் தம்கை கூடவுஞ் செய்தார் திப்பு கருத்துணர்ந்திடாத வாறாம் நாடினார் திப்பும் அஃதில் நலம்பெற மடங்கிரண்டாய்க் கூடிய தொகைக்கும் தம்கை கூடிடா நிலையுணர்ந்தார்
1231

தீரன் திப்பு சுல்தான்காவியம் O2650
சென்னையின் ஆட்சியாளர் திருவாங்கூர் ராஜா வுக்கு முன்னிலை வகித்தார் அந்நாள் மாற்றாரின் தலையீடற்றுத் தன்னலங் காக்க அன்னார் தெரிந்திலை நடந்த தெஃதும் வன்மணங் கொண்டார் மேலும் வழங்குதம் நலம்மறுத்தார்
1232 வங்காள ஆட்சியாளர் வெகுண்டனர் வெள்ளையர்கள் தங்களின் வெறுப்பைத் தம்பால் சொல்லினர் என்பதாலே பங்கமாம் உறவுக் கென்றே பகர்ந்தனர் ராஜா செய்கை எங்களின் வெறுப்புக் குள்ளும் இணங்கிற்று எனப்ப கர்ந்தார்
1233 திப்புவின் எல்லைக் குள்ளே சேர்ந்திலாப் பகுதிக் குற்றான் செப்பிடுங் கோட்டை இரண்டும் சேர்ந்தன டச்சுக் காரர் செப்பினர் துணிவுதந்தார் திப்புவினோடும் அந்நாள் ஒப்பிய உறவு மாய்ந்தே உவப்பிலா திருந்த காலம்
1234 யூதர்கள் வணிகந் தன்னில் ஏற்றமுற்றிருந்தா ராங்கு பாதகம் திப்பின் கைக்குள் போயிடில் எனத்தெளிந்தார் சாதகம் தமக்கு ராஜா சொந்தமென்றாகி லென்றே ஒதாது மனங்கிடத்தி ஓதினர் கொள்வீரென்றார்
1235 திருவாங்கூர் மன்னராலே தொடங்கிற்று யுத்தம் போரில் திருவாங்கூ ரோடு வெள்ளைத் தோலினர் படையும் சேர்ந்தே ஒருமித்தார் நிசாமும் முன்னர் உடன்பட்டு மைகர் ஆட்சி வரிபெற்ற பாளையத்தார் தொண்டமான் முதலானோரே
1236 தனித்தொரு சக்தியாகத் தோள்தரற் கெவருமற்றே முனைத்திடத் துணிந்தார் திப்பு முற்றுகை பலமா கிற்றே அனைத்தொடும் மராட்டி யர்தம் அணிகளும் ஒன்று சேர மனத்தினை மாற்றும் மாறு வேண்டிற்றுநிலைமையோர்ந்தே
1237 முப்பது நாட்கள் அன்னார் முற்றுகை தொடர்ந்திட்டாலும் முப்பது மணற்கூறேனும் முடிந்திலை கோட்டை யண்ட தற்பாது காப்புக் கான தேவைகள் அனைத்தும் கொண்ட செப்பமாங் கிருந்த வாகாம் சீரங்கப்பட்டினத்தே 1238

Page 145
ஜின்னாவூர் லுரியுத்தீன் O2660 சீரங்கப் பட்டினத்தைச் சுற்றியுட் புகமாட் டாதோர் வேர்விட்ட மரங்கள் போல வளைத்துக்காத்திருந்தார் யாரும் ஊருளே வருவாராயின் உயிர்குடித் திடத்துணிந்த பேருளாருள்ளென் றெண்ணம் பற்றிய திடத்தினாலே
1239 வெள்ளையர் கறுப்ப ரென்னும் வேற்றுமை தோற்றலாகத் தள்ளியே பாசறைகள் தனித்தனி ஒன்றுள் ஒன்றாய் வெள்ளைத்தோல் நோய்கண் டான்போல் விளங்கினர் கோட்டைக் கப்பால் உள்ளிட்டோர் வெளியில் வாரா உபாதையுந் தோன்றச் செய்தார்
24O கூண்டினுள் சிக்குண்டாற்போல் திப்புவின் நிலைமை தோன்ற வேண்டாமே யுத்தம் இன்று வேண்டுவ சமாதானந்தான் நீண்டநாள் தொடர்ந்தால் மக்கள் நிலைமைசீர் கெடுமென் றெண்ணிப் பூண்டது உள்ளம் பேசிப் பகைவரைப் பொருந்து தற்கே
1241
நடந்தது என்ன?
வெள்ளையர் சேனை யோடு மராட்டியர் படையும் கூட உள்ளன ரானா ரன்னாள் உடன்படுநிசாமின் வீரர் கொள்ளையாம் தொகையில் மூன்று திறத்தினர் சேர்ந்த தாலே வெள்ளமோ! கடல்கரைக்கு வந்ததாம் நிலைமை தோற்கும்
1242 ஈர்பத்தினோடி ரண்டின் ஆயிரம் வெள்ளை வீரர் சேர்நிஜாம் படையோ மூவாறாயிரம் மராட்டியர்கள் போர்ப்படை நான்கெட் டாகு பாற்படும் ஆயிரத்தில் சீர்நிரை கொண்டார் சுற்றிச் சீரங்கப் பட்டினத்தே 1243
முற்றுகைப் படைகளோடே மலையடி வார மொன்றைப் பற்றினான் “கான்வாலிஸ்தன் படைகளை யடுத்துச் சற்றே உற்றிட வைத்தான் மற்றீருடன்படை யோர்கள் தம்மை
வெற்றிட மெங்கு மில்லா வாறெனச் சூழ்புலத்தே
1244

தீரன் திப்பு சுல்தான் காவியம் O267)
குன்றினில் ஏறிநின்ற கான்வலிஸ் தொலைவை நோக்கக் கண்டனன் அழகுக் காட்சி கண்கவர் நிலைக்குள்ளானான் உண்டதோ இல்லை இந்த உன்னதம் எனது நாட்டில் மண்படு மகிமை இந்த மண்ணுக்கே சொந்தம் என்றான்
1245 பசுமையாம் வெளிகள் புல்லைப் புணர்ந்தன வெனுமாலுற்ற திசையினைக் கண்ட போழ்து திளைத்ததோ மனமு மஃதில் விசும்பினை நோக்கா நீர்கொள் வயல்நிலம் வரப்பால் சூழ்ந்தே அசைப்பினின் படிக ளொக்கும் அழகினைக் கண்களுண்ணும்
1246 வெள்ளியை உருக்கியோட விட்டது போலு மாகத் தெள்ளிய உருவிலோடும் சீர்மிகு காவிரித்தாய் வெள்ளத்தில் மருங்கிரண்டும் வளம்பெறும் இயற்கை கொஞ்சும் கள்ளுண்ட போதை காணும் கண்படின் புலவோர் நெஞ்சே
1247 தென்னையின் தோப்பு வாழைத் தோட்டங்கள் பிறம ரங்கள் கன்னலின் சேனை வேறு கனிமர வர்க்கம் போலாம் பன்முகப் பட்ட வெல்லாப் பயிர்வகை நிலத்தை ஆளல் கண்ணுற மகிழ்ந்தான் வாலிஸ் கவர்ந்திடத் துணிவுற்றானே
1248
கூறிரண்டாக ஓடும் காவிரிநதியின் நாப்பண் கூறிடற் கரியதாகும் கனவெழிற் சீரங் கம்கை தேறிடு மாகில் திப்பைத் தம்வசம் கொள்ளல் சாலும் வேறிலை வழியென் றெண்ணி வன்மணங் கொண்டான் "வாலிஸ்
1249 மேகத்தைத் தொட்ட ணைக்க முயன்றிடு போலாம் கோட்டை ஏகனை வழுத்தும் பள்ளி இறைத்தல "மினாரா” ஆங்கு வாகொடு மிளிருங் கோயில் வாழ்பதி மாடி தூர நோக்கியின் ஊடே அண்மித் தெரிந்தன கண்களுக்கே
125O
காவற்கேந்திரங்கள் தூரங் கண்பட நோக்குந் தூபி யாவுமே புலிப்பதாகை ஏந்தியே நிமிரிந்து நிற்கப் பூவெளி தோன்றா வாறு பரந்துயர்ந் தொங்கும் மாடம் மேவிடக் கண்டான் வாலிஸ் மலைத்தனன் மோக முற்றான் 1251

Page 146
ஜின்னாவூர் லுரியுத்தீன் O268D
கைப்பட வேண்டு மிந்தக் கண்கவர் நகர மென்றான் கைப்படா துறினோ வந்த காரியம் பொய்த்ததாகும் வைப்படு கண்ணை வாங்கா வாறுளம் வரித்தான் வஞ்சம்
கைப்படச் செய்வேன் என்றான் கண்வெறி கொண்டே காணும்
1252 பலபட நெஞ்சத்துள்ளே பொங்கின வினாக்கள் இந்தப் பலத்தினைக் கொண்டோ எம்மைப் பயங்கொள வைக்கின்றார்நம் பலத்தையும் பலத்தால் வெல்லும் பயங்கரர் திப்பு என்றே பலத்தினைப் பயத்தால் நீத்துப் பெற்றவன் போலுமானான்
1253 தனித்தனி நிஜாமை மராட்டித் தலத்தினர் தமையொடுக்கித் தனிப்பெரு வீர ராகத் திகழ்ந்தவர் நாங்கள் கூடப் பணிந்திட மங்களூரில் படைவென்றார் தீரர் சுல்தான் எனப்பல எண்ண மோங்க இதயத்துள் சிலிர்த்தான் வாலிஸ்
1254 "பெய்லியைப் பேரம் பாக்கம் “ப்ரத்வொயிட்" நாகப் பட்ணம் கைத்தலம் பிடித்துக் கைகள் கட்டிய ஓர்மை கொண்ட மெய்யுள வலுமிகுந்த வீரராம் திப்பு மக்கள் அய்யனின் புலமீ தென்றே அகத்தினுள் மீட்க லானான்
1255 எப்படிப் பிடிப்பதிஃதை எதுவழி ஏற்கும் திப்பை எப்படிப் பிடிப்பதென்ன ஏதுதா னுண்ைடி ரண்டும் கைப்பட வேண்டின் கொள்ளக் கொள்பவை யாதாம் என்றே மெய்ப்படா மனத்தி னோனாய் வசிப்பிடம் புக்கி னானே
256 பற்பல வாறாய் ஆய்ந்தும் புலப்படா வழிகள் ஈற்றில் நற்பலனளிக்கும் என்னும் நினைவினில் இரவுப் போழ்தில் சுற்றியே வளைத்துப் போரைத் தொடங்குதல் வேண்டு மென்றான் சொற்படி தொடக்க வீரர் தளகர்த்தர் பொருந்தினாரே
1257 ஒன்றென அனைத்துப் பேரும் உடன்படப் படையிலொன்றைக் குன்றுகள் மீதும் சேர்ந்த காட்டிடைப் புதர்கள் மீதும் புன்மையின் உருவாம் வாலிஸ் பறங்கியர் படைமுதல்வன் ஒன்றிட வைத்தான் திப்பின் ஒற்றரும் அறியா வாறே 1258

தீரன் திப்பு சுல்தான் காவியம் C269D முப்பெரும் பிரிவா யஃது வியூகமு மமைத்து நிற்கச் செப்பினான் ஆணை"மெடோவ்ஸ்"தன்வலப் புறத்தும்"மெக்ஸ்வெல்" ஒப்பிடத் தலைமை தந்தான் உடன்கொண்டான் "ஸ்டுவார்ட்"டை கப்பிய இரவு மெல்லக் கனத்ததாம் அவர்க்கா மென்றே
1259 வெள்ளையர் படைக்குப் பின்னே வந்தொன்றினார்கள் வாலிஸ் கொள்ளையில் பங்கு கொள்ளக் களம்வந்த இந்தியர்கள் எள்ளளவேனும் மானம் இலாதவர் நிஜாம்ம ராட்டிப் புல்லர்கள் தொகையில் கொள்ளைப் படையினர் ஆணை யேற்றே
126 O தன்னொடு கூட்டுச் சேர்ந்தோர் தளகர்த்தர் தமக்கும் சொல்லான் என்னதாம் திட்டம் என்றே ஏவினான் போரைத் தூண்ட பன்னூறே யாகும் ஆங்கு பீரங்கி ஆணை கேட்டுத் தன்னுடைப் பணியை ஏற்கும் செந்தணல் எங்கு மாமே
1261 தொலைவிலை திப்பின் சேனை தெரிபடு சமீபம் எண்ணா நிலையினில் வீழ்ந்த குண்டின் நெருப்பினால் படையினோர்கள் நிலைதடு மாறிப் போனார் நிமிடமும் தரியா வாறே பலதொடர்ந் திடவுங் கண்டார் பாசறை பற்றக் கண்டார்
1262 நினைந்திடாப் போழ்து நேர்ந்த நிலைமையால் குழப்பம் தோன்றத் தனதுடைப் படையில் வில்லு துப்பாக்கி ஏந்தி யோரைத் தனித்திட வைத்தார் திப்பு சென்றாற்றுக் கரையில் தங்கப் பணித்துமே தாமிருந்த புலத்தினை வெறுமை செய்தார்
1263 படைகளைப் பிரித்தே ஏற்ற பாதுகாப்பளித்ததாலே நடைபெற விருந்த சேதம் நிகழ்தலில் சிறிதே வெற்றிக் கிடைப்படும் வெள்ளையர்கள் ஏகினர் முன்னும் முன்னும் அடுத்திட வுள்ள தொன்றும் அறிகிலார் மேலுஞ் சென்றார்
1264
முன்னேறி வந்தவர்கள் முன்னேற வாகிலாது முன்னணி மைகர் வீரர் மடக்கினர் பொருதல் ஓங்கும் இன்னவர் தமக்காம் வெற்றி என்றிலா நிலைமை ஒயா பின்னிராப் போழ்தும் தாண்டிப் போனது போரந் நாளே 1265

Page 147
ஜின்னாவூர் லுரியுத்தீன் O270 சேர்ந்தனர் தொடர்ந்தும் சாரி சாரியாய் எதிரி வீரர் சார்ந்துமே இருந்த தன்னார் தலத்தினில் நவீனமான போரணிச் சாதனங்கள் படையணி யென்பதாலே மூர்க்கமாய் எதிர்த்தும் மைகர் மறவர்கள் பின்னடைந்தார்
1266 நேர்ந்தவம் நிலையில் தம்மை நிலைபெறச் செய்ய வேண்டின் போர்நிலை மாற்ற மொன்றே பலன்தரும் எனவுணர்ந்து சீரங்கப் பட்டினத்தைச் சென்றடைந் திட்டார் திப்பு போரதன் பாட்டி லோய்ந்து போமெனுங் கருத்தைக் கொண்டே
1267 சந்தர்ப்ப சாதகத்தைத் தனதாக்கிக் கொண்டாமேடோவ்ஸ்" முந்தினான் "கஞ்சம்” என்னும் மக்கள்வாழ் பகுதி தன்னைச் சொந்தமென்றாக்கிக் கொள்ளச் செயலிலும் வெற்றி கண்டான் இந்நிலை திப்பு கோட்டைக் கிடம்பெயர்ந் திடவுஞ் செய்யும்
1268 பலபடப் போரின் திக்குப் பாதக வழியில் செல்ல இலவழி வேறாம் மக்கள் இன்னுயிர் காக்க வென்னும் வலைப்படும் இக்கட்டுக்குள் வந்ததால் திப்பு சுல்தான் நலமொரு சமாதானத்தை நாடுத லெனவுணர்ந்தார்
1269 முற்றுகை செய்தால் வாலிஸ் மக்களுக் குணவு தேறா நிற்கதி தோன்றும் என்னும் நினைவொடு தொடர்ந்தால் யுத்த வெற்றிதுர்ப் பலமுமாகும் வீனென முடிவுங் கொண்டே பற்றிடச் சமாதா னத்தின் பாற்படத் தூது விட்டார்
127O பணிந்தவர் வருவதாயின் பயன்கொள விரும்பி வாலிஸ் இணைந்தொரு முடிவு காண ஏற்றதாய் “மெடோவ்ஸை"க் கேட்க இணங்கினா னில்லை கொல்லும் இறுமாப்புக் கொண்டதாலே பிணங்கினான் வாலி ஸோடும் பிடிவாதம் செய்திட்டானே
1271 படைகளின் தலைவன் தன்னைப் பிழைத்திட விரும்பா வாலிஸ் உடன்படலானான் கேட்ட உத்தரவளித்தார் கோட்டை தொடுவாயி லுடைக்க அன்னான் தன்னொடு படையுங் கூட்டிக் கடுகினான் தடுக்க மாட்டா கான்வாலிஸ் தனைத்த விர்த்தான் 1272

தீரன் திப்பு சுல்தான் காவியம் O27 O கோட்டையைத் தாக்க வந்த கயவனை சையத் கப்பார் கோட்டையின் முதல்வர் வீரர் குலத்திடை யரசர் எந்தக் கேட்டையும் எதிர்த்து வெல்லும் கரவலிப் பெருவேள் கண்டார் வேட்டைக்குப் பொருந்து மொன்றை வேங்கையுங் கண்டவாறே
1273 சமாதானத் தூதைச் சற்றுஞ் சிந்திக்கா தழிப்ப தொன்றே தமதுடைப் பணியென் றெண்ணிச் சமர்க்களம் புக்கியோனைத் தமதுடைப் பணியழித்தல் தாமென வெகுண்ட வேங்கை இமைப்பொழு தேனும் ஒயார் இரைதேடும் வாளுக் கீந்தார்
1274 கொல்லுங்கள் என்றார் சென்னிகளையுங்கள் என்றார் ஆவி இல்லாதே உடலந் தன்னை உருட்டுங்கள் என்றார் தானும் சொல்லிய வாறே செய்தார் சைனியம் தொடர்ந்த தஃதை வில்விடுத் தேகும் அம்பின் வேகமாம் அனைத்தும் ஆங்கே
1275
தீப்பொறிபறக்கும் வாட்கள் சேர்ந்துடனொன்றோ டொன்று போர்ப்பொறை கொண்டு மோதும் பொருதலால் கைத்து வக்கும் போர்ப்பணி செய்யும் வேலும் பங்கினை யாற்றும் கப்பார் நாப்பண்ணில் சுழன்றார் சுற்றி நூறெனப் பினங்களாமே
1276 வெடித்தன குண்டு யாங்கும் வாள்மோது சப்தம் வேல்கள் குடித்தன உயிரை எங்குங் கூக்குரல் மரண ஒலம் பிடித்தனர் ஓட்டம் வெள்ளைப் பறங்கியர் ஆவி தன்னைக் கொடுத்தவர் நீங்க லாகக் கண்படாத் தொலைவுக் காமே
1277 களத்தினை விட்டே யோடிக் காத்துயிர் பின்னும் மேடோவ்ஸ் களத்தினை நாடி வந்தான் கூடவே புதியோர் வந்தார் இழந்ததை மீட்கும் எண்ணம் இருந்ததோ இன்னுஞ் சேர்க்க முழுத்திறன் கொண்டும் தோல்வி முகப்படக் களம்வி டுத்தான்
1278 வெற்றியே குறியாய்க் கொண்டு வந்தவன் தோற்றே ஓடிப் பற்றிய அவமானத்தால் போக்கிட உயிரை நாடிப் பற்றினான் கைத்துப் பாக்கி பார்த்தனன் கேர்னல் வாலிஸ் சற்றுமே தரியா துன்னித் தடுத்திடத்தப்பித் தானே 1279

Page 148
ஜின்னாவூர் லுரியுத்தீன் O272 o
பலநாட்கள் இதுபோல் மோதல் பற்பல நடக்குங் காலை நிலைமையில் ஒருபேர் மாற்றம் நிகழ்ந்தது "கூர்க்கா” என்னும் நிலத்துடைப் படைப்பேர் கூலிநாடியே வந்தோர் வெள்ளைப் புலத்தினைச் சேர்ந்தார் மொத்தம் பதினாயிரத்துப் பேராம்
128O கூலிக்கு மார டிக்குங் கேவலப் பெண்டிர் போல்வார் கூலிசற்றதிக மென்ற குறிக்கோளில் போர்செய்வோர்கள் வேலியை உடைத்துப் பாயும் வராகன்கள் போலா மோர்நாள் காலிசெய் திட்டார் கோட்டைக் காவலைக் கடைமாந்தர்கள்
1281 இரவொடும் இரவா யாங்கே இடைத்தரகர்கள் புக்கிப் பெருநிதி தருவார் வெள்ளைப் பறங்கியர் என்றே ஆசை உருவுறச் செய்ய ஈனர் உடன்பட்டார் கேணல் வாலிஸ் புரிந்தவன் பணத்துக் கெந்தப் பாவமும் செய்வோ ரென்றே
1282 கோட்டையின் பலமும் இஃதால் குன்றிய போது பம்பாய் தோட்பலம் தந்த தாங்கு தரித்தவெண் படையினோர்கள் வேட்டலின் பேரில் வந்தார் வாலிஸின் துணைக்கென்றாக மேட்டிமைத் தொகையிலான வாய்ப்பவர்க் கான தன்றே
1283 முற்றுகைப் படையி னோடு முறைகெடப் பிறந்த மண்ணை அற்பதம் நலத்திற்காக அன்னியர் கரம்பற்றற்காய் முற்றிலும் உதவும் துரோக முடியுடைக் கடையார் சேனை உற்றதாம் முன்னுமிந்த உடனிணை படைகளோடே
1284 கரிபரி ஒட்டைக் கூட்டம் கணக்கிலா எருது போருக் குரியதாம் தளபாடங்கள் ஏற்றியே வந்த தான நிரைகளோ ஒருபுறத்தை நிறைத்தன மனிதர் வேறாம் கரையெது வென்றி லாது கண்படு தொலைவி லெல்லாம்
1285 போர்வீரர் தங்கு தற்குப் பாசறை ஆயிரங்கள் சேர்ந்தொன்றி நிரைநிரையாய் தோன்றிடு பக்க மெல்லாம் சீராக அமைத்திருந்தார் தத்தமக் கேற்றவாறாம் சூரியன் ஒளிக்கிறேனும் சென்றிடா தெஃகிக் காணும் 1286

தீரன் திப்யு சுல்தான் காவியம் C273D
யானையின் பிளிற லோலம் அதனொடு பரிக்க னைப்பு ஊனுக்கென்றோட்டி வந்த உயிர்களின் கத்தல் மேலும் சேனையின் பேச்சுக் கூச்சல் சேர்ந்தொன்றி அமைதி கொன்றே வானையும் அதிரச் செய்யும் வாறென இருந்த தாங்கே
1287 படைப்பலம் அதிக மென்ற பலத்தினால் பறங்கியர்கள் அடுத்தவர் உணர்வைக் கூட அலட்சியம் செய்வார் சேர்ந்தே கடைத்தனம் புரிவார் அன்றும் கொண்டனன் முதன்மை மேடோவ்ஸ் கடைத்தனம் செய்தான் நெஞ்சைக் கூறிடும் பாங்கி லாமே
1288 திப்புவின் தந்தை ஹைதர் திருவுடல் அடக்கம் பெற்ற “கப்றுஸ்த்தான்” “லால்பாக்” சூழ்ந்த கலையெழில் தோட்டந்தன்னை ஒப்பிலான் அரக்கன் வெட்டி உண்டிலை யென்று செய்தான் பெட்பறியாத மூடன் பிழைபட்டான் இயற்கை யோடே
1289 சீராக வளர்க்கப்பட்ட செடிகளும் வானை நோக்கி நேரியதாயுயர்ந்த நெடுமர மனைத்தும் சாய்த்து பீரங்கி கொண்டே கொண்ட பெருமரம் முற்றும் வீழ்த்தித் தூரவுஞ் செய்தான் செய்கை திப்புவை அழித்தாற் போன்றாம்
129O நடந்ததை அறிந்த திப்பு நெருப்பெனவானார் செய்த கொடுமையை எண்ணி நெஞ்சம் கொதித்திட மறுகணத்தே வெடித்தன கோட்டை மீது வரித்ததாம் பீரங் கிப்பேய் துடித்தனர் பகைவர் அஞ்சித்தறிகெட்டு ஓடினாரே
1291 பஞ்சிடைப் பட்ட தீயின் பாற்படும் வேகம் சற்றும் அஞ்சிடா நெஞ்சர் திப்பு அரிசினங் கொண்டாற் போலாம் வெஞ்சினம் பகைவர் மீது வீசிய குண்டு கொண்டே நெஞ்சினிற் பதியுமாறுநிலைமையும் இருந்ததன்றே
1292 அறிந்தனர் அடலர் திப்பின் ஆவேச அனலின் வேகம் வறந்திலை எளிதில் கோபம் வெறியென மாறிற் றன்றோ மறைந்தனன் வெய்யோன் நாளை வருகிறேன் என்பான் போலும் குறைந்தது வெடியி னோசைகங்குலென் போர்வைக் குள்ளே 1293

Page 149
ஜின்னாவூர் லுரியுத்தீன் O274D
(36.
மெய்வெள்ளை வெளுத்திடுமுன் அதானின் ஓசை
மேவியது காற்றலையில் அமைதிப் போழ்து துய்யவனை வழுத்துதற்காய் மக்க ளெல்லாம்
சேர்ந்தொன்றி வந்தார்கள் பள்ளி நோக்கி ஐயன்திப்டு அதிகாலைப் போழ்தே கோட்டை
அடிமுதலாய்ப் பார்வையிட்டு வந்திருந்தார் வையத்து நாயகனைத் தொழுத பின்னர்
விடைபெறவென்றெழுந்தார்கள் வந்திருந்தோர்
1294
"நில்லுங்கள்! உங்களுடன் சுல்தான் பேச
நாடியுள்ளார் என”முஅதின் வாய்மொ ழிந்தார் கல்லாகச் சமைந்தனரே அனைத்துப் பேரும்
குரலுயர்த்தித் திப்புசுல்தான் பேசலானார் “அல்லாஹ்வின் நேசர்களே அறிவேன் நீங்கள்
அன்புடையீர் மண்மீதே அதனால் தானே பொல்லார்கள் எமைவிட்டுப் போன போதும்
போகாதே எம்முடனே இருக்கின்றீர்கள்.
1295
நல்லவர்போல் நடித்தவர்கள் சமயம் பார்த்து
நமக்கெதிராய் எதிரிகளைச் சார்ந்து விட்டார் சொல்லினெல்லாத் துரோகிகளும் அவ்வாறேதான் சேர்ந்திருந்தே கழுத்தறுப்பார் சோதனைகள் சொல்லாமல் வருவதினித் தொடரும் போலும்
தொடர்ந்துகொண்ட வெற்றியெலாம் கனவு -
போன்றாம் பொல்லாதார் வெள்ளையர்கள் சமாதா னத்தைப்
புறந்தள்ளி நிபந்தனைகள் விதித்துள்ளார்கள்
1296

தீரன் திப்பு சுல்தான்காவியம் O2750
நேசக்கரம் நீட்டியநம் கரத்தைத் தட்டி
நம்மிதயக் கொதிப்பினையே தூண்டு மாறே சேதமுறச் செய்தார்கள் லால்பாக் கின்கண்
தோட்டங்கள் முற்றையுமே தீங்கிழைத்தார் போதாமைக் கெங்களது நாட்டில் பாதி
பாதகர்க்கு வேண்டுமென ஓலை யொன்றும் நீதமின்றிக் கேட்டுள்ளார் போருக்கான
நிதிமுற்றும் வேண்டுமெனும் ஆணை யோடே
1297
சேதிதனைக் கேட்டதுமே ஆங்குற்றோர்கள்
செந்தழலில் பதம்பதித்தோர் போலு மாகி யாதுசெய வேண்டும்நாம் "கான்வாலீஸ்"சை
இலாததொழிக்க வேண்டாமோ? எனச்சினக்க நீதியது தானவனின் செருக்க டக்க
நடத்துவது யாரென்றார் வினாவில் பாதி ஒதுமுன்னே பன்னூறு பேர்முன் வந்தார்
ஒப்புதலை ஓங்கியுரை செய்த வாறே
1298
தேர்ந்தெடுத்த வீரர்கள் சமர்க்க ளத்தைச்
சந்தித்துப் பழக்கமுற்ற தீரர் நெஞ்சின் ஓர்மையுடன் உடல்வலுவும் கொண்ட பேரார்
உண்மைவிசுவாசிகளம் இறைநேசர்கள் சேர்ந்தார்கள் ஒருவேங்கைப் படைபோலன்னார்
சிலநிமிடப் போழ்தேதான் பரிகளேறி நேராகப் பறந்தார்கள் எதிரிகள்பால்
நொடிப்போழுதும் தாமதியார் நோக்கொன்றாமே 1299
இடியிடிப்பதாகுமோலி குழம்புச் சப்தம்
எகிறினவே குதிரைகளும் மனத்தின் வேகம்
பிடியுண்ட கொடுவாள்கள் பகலோன் தீயில்
பட்டொளிரும் இடியிடையே மின்னல் போலாம்

Page 150
ஜின்னாவூர் ஷரிபுத்தீன் C276)
நடையிடையுமில்லாத நெருக்கம் வீரர்
நாப்பேச்சைக் கொன்றவராய்நாடும் நோக்கே குடிகொண்ட தாமுளத்தில் புலன் குறுக்கக்
கடுகளவும் எண்ணாதார் கடுகினாரே
13 OO பாசறைகள் தாண்டியுள்ளே பலகடந்தார்
பார்த்தவர்கள் நிஜாமுடைய நட்பு வீரர் நேசப்படை தாமென்றே நினைவில் கொள்ள
நடுவிடையில் கண்டவரைத் துண்டம் செய்தார் வீசியவாள் கண்டங்கள் நோக்கிச் சீவ
வீழ்ந்தனவாம் உடலங்கள் திப்பு வீரர் நீசர்படைத் தளகர்த்தன் இருப்பிடத்தை
நோக்கிவழிபாய்ந்தனரே உயிர்க்கஞ் சாரே
1ՅՕ1 பெருங்குழப்ப நிலையொன்று தோன்றிற் றாங்குப் பறங்கியர்கள் பலபேர்கள் மாண்ட பின்னே தெரிந்ததுவாம் வந்தவர்கள் யார்தா மென்றே
திப்பரசர் வீரரென சட்டென் றேயோர் மருவார்தம் படைத்தலைவன் நிலைமை யோர்ந்து
மாய்த்திடவும் ஆணையிட்டான் வெள்ளைக் காரன் உருமாறிப் போனதுவாம் புலத்தின் ஆட்சி
ஒன்றியது பறங்கியர்கை பலபேர் மாண்டார்
13O2 விழிப்படைந்தான் கான்வாலிஸ் திப்பு வீரர்
வீரத்தை வரித்துளத்தே வியப்புங் கொண்டான் இழப்பினுந்தம் உயிர்தலைவன் உறுதி வெல்ல
இணைந்தியற்றும் தீரத்தைக் கண்ட யர்ந்தான் துளிர்த்ததவன் நெஞ்சத்தே தெளிவும் இந்தத்
திறல்கொண்ட வீரர்கள் இருக்கு மட்டும் ஒழிக்கவியலாதுதிப்பின் புகழை என்றே
இறுமாப்பில் திளைத்தவவன் அபங்கி னானே
13O3

தீரன் திப்யு சுல்தான் காவியம் C 277פ
பட்டாற்றான் புரியுமென்பதுணர்ந்ததாலே
பிரியமுற்றான் சமாதானம் செய்து கொள்ள விட்டாலும் மற்றுமொரு காரணத்தை
வரித்தனனே வஞ்சகத்தின் விளைவா மஃது திட்டப்படி திப்புவைத்தாம் வெற்றி கொண்டால்
தேறுவதில் தமதுபங்கு மூன்றிலொன்றாம் கட்டாயப் பங்குண்டு மற்றவர்க்கும்
கொடாதிருக்கச் சமாதானம் உதவுமென்றே
13O4 பங்குகொண்டால் பலமவர்க்கும் அதிகமாகும்
பாதகமாம் எமக்கதுவும் பகைமை தோன்றின் எங்களையும் வெல்லவவர் முயலுவார்கள்
ஏற்றதல்ல என்னுமொரு காரணத்தைப் பொங்குசினங் கொண்டுதிப்பை அழிப்ப தென்னும்
பிடிவாதம் கொண்டிருந்த மெடோவ்ஸ்சிக் கோத பங்கினுக்குத் தன்கருத்தை அவனும் சொல்வான்
பொறுப்புணர்ந்து வாலீஸ°ம் புரிய வைத்தான்
13O5 காரணத்தைப் புரிந்துகொண்டு மெடோவ்ஸ°ம் ஏற்கக்
கான்வாலிஸ் திப்புவுக்கோர் ஓலை தன்னைச் சேர்ப்பித்தான் முன்னவரின் ஒலைக் கின்று
தருகின்ற பதில்போன்றும் அமைவதாகத் தூரநோக்குக் கொண்டதிப்பும் அவையைக் கூட்டித்
தளகர்த்தர் மந்திரிமார் முன்னே என்ன காரணமாய் அழைத்ததென எடுத்துச் சொன்னார்
கைக்கொண்ட ஓலைதனைப் படித்திட்டாரே
13O6 சமாதான உடன்படிக்கை செய்து கொள்ளச்
சொல்லிவைத்த நிபந்தனைகள் அனைத்துங் கூறி “உமதுபதில் என்னவென உரைப்பீர்” என்றார்
உடனவையோர் எழுந்துநின்றே ஒரேமூச் சாக

Page 151
ஜின்னாளுர் ஷரியுத்தீன் C278)
“எமதுபதில் உயிர்த்தியாகம் செய்வதாகும்”
என்றனரே மந்திரிமார் தளகர்த்தர்கள் இதுசமயம் அல்லவதற்கென்றே ஏற்கும்
ஏதுக்கள் இயம்பிடவே ஏற்றிட் டாரே
13O7 "சுற்றிவரப் பல்லிலட்சம் படைவீரர்கள்
கழ்ந்துள்ளார் நமதுபடை எட்டில் ஒன்றே மற்றவரின் பலமறிந்தே மோதல் வேண்டும்
முடியாதென்றறிந்திட்டால் தவிர்த்தல் இலாபம்" கற்றவர்கள் எடுத்துரைத்த காரணத்தைக்
காதளவிலில்லாது கருத்தால் ஓர்ந்து முற்றொன்று தோன்றியதே சமாதானத்தை
முன்னெடுத்துச் செல்லுவதாய் மறுப்பாரற்றே
13O8 ஒப்பந்தமும் பிள்ளைப் பிணையும்
ஒப்பந்தம் ஒன்று தோன்ற உடன்பட்டார் திப்பு தாமும் தப்பித்தால் போதும் என்ற தன்மையில் பகைகொண் டோரும் ஒப்பினர் பெரும்ப ரப்பை உவப்பதோடிழப்பீடாக முப்பத்தின் பத்து இலட்சம் முதலும்கொள் வாகி லாமே 13O9 கான்வாலிஸ் கவர்ன ரோடு கதைத்தொரு முடிவு கான வேண்டிடு நிலைக்குச் சுல்தான் வந்ததும் மீர்சாதிக்கைப் பூண்டிடச் செய்தார் தூது பொருந்தியே அவனுஞ் சென்றான் வேண்டிலன் நாட்டு நன்மை வரித்தனன் சுயநலத்தை 131O மக்களின் நன்மை நாடி மன்னர்முன் இட்ட சட்டம் ஒக்காது வெறுப்பை நெஞ்சுள் ஒன்றிட வளர்த்த வன்றான் மக்களின் வரிக்குறைப்பை விரும்பினார் நாட்டுப் பற்றை தக்கவைத்திருக்க வேண்டும் துணையென உணர்ந்ததாலே 1311

தீரன் திப்பு சுல்தான் காவியம் O279)
காரணப் பொருத்த மற்றுத் திறைசேரிச் செலவு செய்தல் யாருக்கும் உரிமை யில்லை எனுமொரு சட்டந்தோற்றிச் சீராக நடைப்படுத்தச் சொன்னதால் தமக்கு வந்த ஊர்ப்பணக் கையாடல்கள் ஒழிந்ததால் வருந்தி னானே
1312 மீர்சாதிக் உடனா யின்னும் மந்திரி சிலருந் தாங்கள் நேர்மைக்குப் புறம்பாய்ச் சேர்த்த லாபங்கள் ஒழிந்த போதே சார்ந்தனர் ஒன்றாய் மன்னர் திப்புவுக் கெதிராய் கழ்ச்சி ஒர்ந்தனர் தருணந்தன்னை ஒன்றிடக் காத்திருந்தார்
1313 தீர்வுக்குத் தூது செல்லுஞ் சந்தர்ப்பம் வந்த போழ்தே ஏர்ப்புடைத்தாகக் காலம் இணைந்ததாய் எண்ணி சாதிக் பூரித்தான் பொருந்தும் வாறே பகைவனும் பேரம் பேச நேரத்தைத் தக்க வைத்தே நெறியிலான் பலன்கொண் டானே
1314 கான்வாலிஸ் தூது வந்த கயவனாம் சாதிக் கைத்தன் சாண்வலைக் குள்ளதாகச் சுழற்றிட முடிந்த வாறாம் தேன்குழைத் தெடுத்துக் கோத்த சொற்களில் ஆசை கூட்டி தான்கொண்ட எண்ணந் தன்னில் செயம்பெற்றார் சூழ்சிக் காரர்
1315 திப்புவை வெற்றி கொள்ளத் துணைசெய்தால் மாற்றீடாக திப்புவின் அரசுப் பேற்றைத் தருவதாய் வாக்களித்தார் நப்பாசைக் கிலக்காய்நாடு நம்வசம் வருமென் றெண்ணி ஒப்பினான் உதவத் துரோகம் உடன்படலாகிற் றன்றே
136 திப்புவின் பக்கஞ் சார்ந்து தூதுவந்தோன்பின் மாற்றார் செப்புதற் கடங்கி அன்னார் தூதுவன் போலு மானான் உட்பகை நெஞ்சு றைந்த உருவத்தை மாற்றி நல்லோன் பெட்பினில் வதனங் காட்டிப் போயினன் அரசர் முன்னே
1317 என்னதான் கேட்டார் என்றே இயம்பிடக் கூறச் சொல்வான் "பொன்னொடு நிலமும் கேட்டுப் பிடிவாதம் செய்கின்றார்கள் பொன்மூன்று கோடி கூடப் பறித்திட உவக்கும் பூமி தன்னையீங்குரைத்தல் கேட்பின் சுல்தானே சினப்பீர்” என்றான் 1318

Page 152
ஜின்னாவூர் லுரியுத்தீன் C28O
கேட்டிடும் நிலப்பரப்பைக் கூறிட வெகுண்டார் மன்னர் மேட்டிமை வருவாய் சேர்க்கும் மாநிலம் மைசூர் எல்லை நாட்டின்மெய்ப் பொருளாதாரத்தின் நிலைக்களன் என்றார் கேட்டு நாட்டுடைநிலையில் இன்று நமக்கென்றோர் வழியில் லென்றான்
1319 முன்றிலில் "கான்வாலிஸ்"தன் முகத்திரை அழித்தே அன்பால் ஒன்றிய பாங்கு காட்டி ஒன்றெனக் கரங்கள் நீட்டி அண்டிவந்தணைத்தார் அஃதில் அணுவுமே பொய்மை இல்லை கண்களால் கனிந்தார் தாய்மைக் கோன்மைவெல் லுளத்தின் பாங்கே
132O அற்றைநாள் நிலைமை நோக்கி அளிப்பதாய் வாக்க ளித்தார் முற்றுமே மீர்சா தீக்கின் முன்மொழிவாகும் மாற்றார் பெற்றிடச் செய்தலுக்குப் புகன்றவனவனே பொன்னில் முற்றுமல்லாது பாதி முதல்த்தர மன்னரேற்றார்
132
வருடமொன்றாகு முன்னர் மீதிப்பொன் தருவதாகப் பொருந்தினார் அரசர் கேட்டுப் பொருந்தினார் வாலிஸ் சாதிக் இரும்பனை நெஞ்சன் உண்ட இரைப்பைக்குந் துரோகஞ் செய்தான் கருத்தினில் பொதித்தான் வேறு கருத்தினை வாலிஸ் ஏற்றார்
1322 தருவதோ உண்மை யானால் தருங்காலங் குறைக்க வேண்டின் பொருந்துக பணயமாகப் பிள்ளைகள் தம்மை என்றான் தருவதற்கினங்கா விட்டால் திரும்பியும் யுத்தம் செய்யப் பொருத்தலாம் காரணத்தைப் பிறர்குறை சொல்லார் என்றான்
1323 சாதீக்கின் கருத்தைக் கேட்டுத் திருப்பதிகொண்டதுபோற் சொல்ல ஒதினார் கான்வாலிஸ்பின் ஒருநாளுள் முழுத்தொகையும் மீதியில் லாது வேண்டும் முடியாது போயின் பிள்ளை சாதகப் பிணையாய் வேண்டும் சொல்கவென்றனுப்பி வைத்தார்
1324. சுல்தானை நேரில் கண்டு துயரத்துட் தோய்ந்தோன் போன்றே சொல்லுவான் சாதிக் “மன்னா சொல்லிட வொண்ணாச் சேதி பொல்லாதார் பணத்தை இன்றே பெறச்செய்தல் வேண்டும் அன்றேல் சொல்லிய பாதியோடு தருகவிர் பிணையென்றாமே 1325

தீரன் திப்பு சுல்தான்காவியம் C28 O
யாரினைப் பிணையாய் வேண்டி இரக்கின்றார் என்றார் திப்பு பேரினைச் சொன்னார் சொல்லப் பலனற்றேன் என்றான் பொய்யாய்க் "கூறிடும்” என்றார் மன்னர் கூறினான் கேட்டுப் பூமி கூறிரண் டாகித் தன்னைக் கொண்டது போலு மானார்
1326 சுழன்றதோ தன்னைச் சுற்றிச் சேர்ந்துள பொருள்களெல்லாம் சுழன்றதோ உடலை விட்டுத் தலையன்றி இரண்டு மாமோ கழன்றதோ ஆவி கொண்ட கூட்டினை இதயந்தன்னைப் பிழிந்ததார் எதுவுந் தோன்றாப் பொய்மையுள் தவித்திட்டாரே
1327 பிணையென உங்க ளன்புப் பிள்ளைகளிரண்டு பேரை இணைத்திட நாட்டங் கொண்டார் இதயமில்லாத பொல்லார் இணங்கிலை நானும் இஃதை ஏற்றிட இயலா தென்றேன் பிணங்கினார் வந்தேன் சுல்தான் பதில்கொள என்றிட் டானே
1328 திட்டங்கள் அனைத்தும் இட்டுத் தந்தவனவனே தன்னை விட்டவை கான்வா லிஸ்தம் கருத்தெனப் பொய்மை சொன்னான் மட்டிலாச் சோக நோயுள் முழுமையும் புதைந்தார் தந்தை பட்டிடும் அவர்துன் பத்தைப் பார்த்துள்ளம் மகிழ்ந்தான் சாதிக்
1329 பற்றிய நிலப்பரப்பைப் பங்கிட்டார் பணத்தை ஆண்டு முற்றிட முன்னர் திப்பு முழுமையாய்த் தருதல் வேண்டிப் பெற்றனர் மகவிரண்டைப் பாசத்தின் முதன்மை கொண்டே உற்றவந் நிலைமை வேறோர் உளத்தினைப் பொறுக்கச் செய்யா
133O பிள்ளைகளிரண்டைப் பொன்னின் பிணையாக வேண்டிப் பெற்று கொள்ளையர் வெள்ளைப் பேர்கள் கொண்டுடன் சென்றார் தந்தை வெள்ளமாய் நெஞ்சுட் சோக வேதனை பீறிட் டோட கள்ளமில் சிறார்கள் தம்மை கையளித் துடல்சோர்ந் திட்டார்
133 சதவயதான 'காலிக் தம்பியாம் மொய்சுத் தீன் உம் அதியுயர் பாது காப்பில் அன்னியர் வசமே ஏக பதியதற்காக வேண்டும் பாடெலாம் புரிய ஏவி நிதிபெறும் முயற்சி தன்னில் நிலைப்படத் தனித்திட்டாரே 1332

Page 153
ஜின்னாவூர் ஷரியுத்தீன் C282) தாயினைப் பிரிந்த கன்றின் சோகத்தில் மக்கள் தம்மின் சேய்களைப் பிரிந்த துன்பத் தாங்கலில் தந்தை கண்டோர் வாய்விட்டே அலறச் செய்யும் வேதனை சீரங்கத்தில் தோய்ந்ததந்நாளம் ஏட்டில் செறிந்தது கல்லிற் போன்றே
1333 பிரிந்துசெல் முன்னர் தாயைப் பார்த்திடச் சென்றார் தாயைப் பிரிந்தநாள் தொட்டுத் தாய்க்குப் பதிலெனக் காக்குந் தாயாம் பெருந்தவப் பலனா மன்ன பெறாதுமே பெற்றாள் தந்தை கருத்தினைக் கருத்தாய் கொண்ட காவலர் மனையைக் கண்டார்
334 கண்கணிர் கோத்து வீங்கிக் கவலுருவாகக் கண்ட கண்களும் கலங்கிப் போகக் கைகளைப் பற்றி மக்கள் எண்ணியீராறு மாதம் இடைவெளி இதற்கு ஏனாம் புண்ணுண்டதாமோ உள்ளம் பொறுத்திட வேண்டு மென்றார்
1335 உயிரனைச் செல்வங் காள்நீர் ஒருகுறை தானு மற்றென் இருவிழியாக வாழ்ந்தீர் எப்படிப் பிரிவேன் என்னைக் குருடென வாக்கிச் செல்லுங் கோலத்தைத் தாங்கு வேனோ அருவுருவான அல்லாஹற் அடைக்கலம் நீங்களென்றார்
1336 கட்டியே அனைத்து நெற்றிக் குறியினில் முத்த மீந்தே ஒட்டியே ஈர்புறத்தும் ஒன்றியே வரவழைத்து இட்டமில் லாது மக்கள் ஏகிடு நிலைமை காணார் மட்டினில் சென்று நின்றார் மன்னவர் நோக்கினாரே
1337 தந்தையுஞ் சோகத் தாலே தாயனைத் திருக்கக் கண்டார் எந்தையே எதுவும் நேரா இறைதுணை உண்டா மன்றோ தந்தையின் மக்கள் நாங்கள் திப்புவின் உதிரம் அச்சஞ் சிந்தையிற் கூட வில்லாச் சிங்கங்கள் கவலே னென்றார்
1338 பூரித்துப் போனார் மன்னர் பெருஞ்சுமை நெஞ்சிருந்து தூரத்தி லெறிந்தாற் போன்ற சொகுசினை யுணர லானார் வீரவீர்ச் செல்வ மென்றே வழங்குவார் ஆனால் இன்றோ பேரரும் உறுதி கண்டார் பெற்றதன் பேறுற்றாரே 1339

தீரன் திப்பு சுல்தான் காவியம் O283D வார்த்தையிற் கோத்த வீரம் விழிகளில் மிளிரும் தம்மின் கோத்திரப் பெருமை அன்னார் குருதியின் குருதி யாகச் சேர்ந்திடை யூறிக் கொண்ட செழுமையைக் கண்டார் தந்தை பூத்ததோர் நெகிழ்வு சோகப் பொழிவிடை மின்னல் போன்றே
134O மனைவியின் அணைப்பில் நின்ற மக்களை யருக ழைத்துத் தனதுடலோடு கூட்டிச் சிறுபொழு திருத்தி நீக்க மனமிலா திருந்தும் வாக்கை மதித்ததால் விடுத்தார் செல்வர் கனமெனுந்தரியார் வந்த காவல ரேடு சென்றார்
1341 மைகளுர் மக்களின் மனக்குமுறல்
வாசலில் நிறைந்தார் பெண்டிர் வளரிளஞ் சிறுவர் பிள்ளை நேசத்தில் தவிக்குந்தாய்மார் நடைதளர் மூத்தோர் கோபத் தீச்சுடர் கனற்றுங் கண்கொள் தந்தையர் முதலாம் முற்றும் பாசத்தில் திளைத்தோர் மன்னர் பிள்ளைகள் மீதிலுற்றார் 1342 உரியவெம் பொருட்களெல்லாம் உவந்துநாம் அளிப்போம் நாங்கள் தருகிறோம் எமது பிள்ளைச் செல்வங்கள் தமையும் எங்கள் இருவிழி வேண்டுமாயின் இழக்கவும் துணிவோம் என்றார் தெருவையும் மறைத்தார் செல்லுந் திசைவழிதோன்றா வாறே
1343 “மக்களின் சொந்தம் எங்கள் மன்னவர் அதுபோல் மன்னர் மக்களும் எமது சொந்தம் மாற்றான்கை தரநாம் ஒப்போம்” துக்கத்துட் தோய்ந்த மாந்தர் சொல்லுவார் வழியிறைஞ்சப் பக்கமுற்றோரை நோக்கிப் பதிலற வவரும் நின்றார் 1344
வழிவிட மாட்டோம் எங்கள் வெற்றுடல் மீது வேண்டின் குழந்தைகள் தம்மை நீங்கள் கொண்டுசென்றிடலாம் என்றே வழிதனின் குறுக்கே வீழ்ந்து வாதிட்டார் தாய்மார் மற்றோர்
முழுமையும் சேர்ந்தார் பாதை மூடிடப் பரவினாரே
1345

Page 154
ஜின்னாவூர் லுரிபுத்தீன் C284D
சத்தியம் பொய்க்கும் மன்னர் சொன்னதை செயாது போனால் உத்தமக் குடிகள் நீங்கள் ஒப்புவீர் நிலைமையோர்வீர் சித்தத்தில் கொள்வீர் இன்று தீதிருந் தெம்மைக் காக்க ஒத்ததாம் முடிவு இஃதே உடன்படும் அமைதிக் கென்றார்
1346 நிலைமையை எடுத்துக் கூறி நகருக வென்று கெஞ்சப் பலமிழந்தார்கள் உள்ளம் பொறுப்பினை யுணர்ந்தார் மன்னர் சொலைமறுத்தவர்தம் வாக்கைச் செயல்பெறத் தடுத்தல் வேண்டா நிலைமையை ஒர்ந்தார் சற்றே நீங்கினார் வழிகொண்டாரே
1347 வெள்ளியால் வடித்தெடுத்து வளமாகப் பட்டணைகள் உள்ளிடச் செய்திருந்த உயர்'அம் பாரி தன்னில் பிள்ளைகளிரண்டும் வேங்கைப் புத்திரர் போல மர்ந்தார் கொள்ளிடம் கரியாம் அஃது கொலுவெழில் கொண்டதன்றே
1348
பட்டினால் 'முகபா டத்தில் பதிந்தநல் மணிகள் அள்ளிக் கொட்டிடும் ஒளிசெங் கைக்கோன் கதிரவன் சுடரோ டொன்றப் பற்றிய இடங்களெல்லாம் பகலிரண் டொன்றினால்போல் உற்றது கண்டார் கண்கள் உறுத்திடத் தலைகுனிந்தார்
349 பசுங்கொடி ஏழு தாங்கிப் பரிகளில் எழுபேர் செல்ல அசுவங்கள் தொடர்ந்தே ஒட்டை அணிவர வாள்வேல் ஈட்டி திசையிருபுறமுந்தாங்கி தோள்வலு மறவர் ஏக திசையெதிர் தகன்றார் திப்புத் திருவிரண் டழியாச் சோகம்
135O தாங்கொணாத் துன்பத்தாலே சகித்திடார் காட்சி நோக்கும் பாங்கிலார் கண்ணிர் கன்னங் கனற்றிட விழிபூ நோக்கத் தேங்கின வாமோ வெள்ளம் துன்பத்தின் நிழல தாமோ ஆங்கிரு புறமும் வீதி அணிதிரட் கூட்டத் தூடே
1351 வெள்ளையர் முகாமை அண்டும் வேளையில் குண்டொ லீகள் கொள்ளையாம் இருபத் தொன்று கணக்கினில் வரவேற்றற்காய் தள்ளலில் வெறுப்பாலன்னார் சங்கைசெய்தார்கள் சின்னப் பிள்ளைகளென்றிட்டாலும் பிறப்பினால் கோன்கு லத்தோர் 1352

தீரன் திப்பு சுல்தான் காவியர் O2850 தொழுகைக்கு ஏற்ற வாறு தங்கிடு கூடாரங்கள் ஒழுங்குற அமைத்திருந்தார் ஒன்றிடும் பள்ளியண்டே குழுவினர் நேசநாட்டார் கூடவே வரவேற்றார்கள் பழுதிலை வெள்ளையர்தம் பண்பினில் ஏற்றங் கொண்டார்
1353 தளபதி மார்களொன்றத்திப்புவின் குமாரர் “வாலிஸ்" உளவிடத் தழைத்துச் சென்றார் ஒன்றெனக் காவல் வீரர் வழிதொடர் கரையிரண்டும் வழங்கினர் சீர்மை காண்பின் இளையவர்க் கல்ல திப்பே ஏற்றதாம் போலு மாமே
1354 திப்புவின் அந்த ரங்கத் துணைச்செயலாளர் வந்தே ஒப்புதல் செய்தார் “இன்றே உடன்படு காலை மட்டும் திப்புவெம் மன்னர் சொந்தம் திருமக்கள் உங்கள் பேரில் இப்பொழு திருந்தே யானார் இனிப்பிதா நீங்க" ளென்றார்
1355 குலாம்மலிக் கானு ரைத்த கருத்துடை வார்த்தைக் கோவை வலியுடைத் தாயிருக்க “வாலிஸ்"தன் பேரில் சொல்வார் "நலிவுறா தென்றன் வாக்கு நானவர் பாது காப்பின் நிலைதவறாதிருப்பேன் நிச்சயம் அறிவீர்” என்றே
1356 வாக்கொடு சிறுவர் தம்மின் விருப்பத்தை ஏற்கும் நோக்கில் சீர்க்கரத் தணியத் தந்தார் சொர்ணக்கைக் கடிகாரங்கள் பார்க்கவென்றவரை 'வாலிஸ் பின்தொடர் நாளிலேக ஏற்கவென்றிளவ லாரோர் இடைவாளைப் பரிசளித்தார்
1357 பாரசீகத்து வேலைப் பாடுடை வாளை வாகை மார்பினன் மக்கள் தந்தார் மகிழ்ச்சியால் கான்வாலிஸ்சும் சார்புடைக் கருவி யன்ன துப்பாக்கி தமைத்தம் சார்பாய்ச் சேர்த்துமே தந்தார் என்னும் சீர்வரலாறு முண்டே
1358 ஓராண்டு முடிவதற்குள் ஒப்பந்தம் முற்றுப் பெற்றுத் தீர்ந்தது ஆயிரத்து எழுநூற்றுத் தொண்ணுற் றீரில் நீரறக் காய்ந்து போன நிலமென ஆனார் திப்பு காரணம் பொருளாதாரம் குன்றிய நிலையினாலே 1359

Page 155
ஜின்னாவூர் லுரியுத்தீன் C2860
செய்தவவ் வொப்பந்தத்தைச் செயலுருக் காட்ட முற்றும் செய்வன அனைத்தும் திப்பு செய்திட்ட போதும் வெள்ளைப் பொய்யர்கள் வாக்கு மாற்றி வீண்பிடி வாதம் செய்தார் கையறுநிலைக்குள் ளாக்கிக் கடுஞ்சினங் கொள்ளச் செய்தார்
136O ஒப்பந்தப் படிதம் நாட்டின் ஒருபெரும் புலத்தை ஈடாய் ஒப்பியே இருந்ததாலே உள்ளுறை வருமானத்தைச் செப்பிடும் எழுத்தில் கொண்ட தனவேட்டுப் பதிவை யெல்லாம் ஒப்படைத் திடப்பணித்தார் ஓரிரு தினத்துள் ளென்றார்
1361
தமதுயிர் மக்கள் தம்மைத் தந்தவர் புறத்தில் ஈடாய் அமைத்துமஷ் வெள்ளைப் பேர்கள் அணுங்கின்கைப் பொறிக்குள் சிக்கிக் குமைந்திடு பாங்கி லாக்குங் கொள்கையில் நிலைத்தார் கீழோர் சமைந்ததோ இல்லை நீதிதருக்கரின் செயற்பாட்டாலே
1362 சீரங்கப் பட்டினத்தின் திறவுவாய் போலிருக்கும் காரணங் கண்டு "டெங்கனிக் கோட்டையை "குடகு ஊட்டி சேர்ந்திடப் பெல்லரி சேலம் தம்வசம் வேண்டு மென்றார் ஒர்ந்திடில் இவைசீரங்கம் ஒப்பான நிலப்பரப்பே
1363 வேண்டுதல் தவிர்ப்பீர் வேறு வேண்டிடும் நிலத்தை நீங்கள் வேண்டிய வாறு கொள்வீர் விடுகவிப் புலங்களென்ன வேண்டுவதிவையே வேறு வழியிலை எனிலோ யுத்தம் வேண்டுவதாகும் என்று வேங்கையைச் சீனன்டினாரே
1364
நம்பிக்கைத் துரோகமும் நாடுகடத்தலும்
ஒப்பந்தப் படிய னத்தை ஒப்புதல் செய்த போதும் தப்பிதம் செய்தார் தம்பால் சேர்த்துள சிறுவர் தம்மைத் திப்புவின் கையளிக்கத் தவறினர் இருப்பை விட்டும்
அப்புற மாக்கச் செய்தார் ஆயத்தம் அரங்கேறிற்றே
1365

தீரன் திப்பு சுல்தான் காவியம் C287) காவலாயிருந்த மைகர் காவலர் கைவேல் நீக்கி ஏவினர் சிறுவர் தம்மை இடம்பெயர்ந் திடவென்றாக காவலாய் கப்டன் வேல்ஸ் கூடவே "மங்களூர்க்குப் போவதாய் நிர்ணயத்தைப் பகைவருட் பதிவாக்கிற்றே
1366 திட்டமும் மாறிச் சென்னை சேர்த்தனர் சிறுவர் தம்மை விட்டிட நினைத்தார் 'வாலிஸ் விடுதலை விரும்பா துற்றுத் திட்டமொன் றுரைத்தார் நிசாம்தம் சார்பினில் வைத்திருந்தால் மட்டிலா நன்மை சேரும் மக்களால் எனவா மென்றே
1367 உடன்பட வில்லை 'வாலிஸ் உடன்படார் மராட்டி யாரும் இடமிலை யுள்ளத்திந்த இளஞ்சிறு பால ரோடு தொடரநாம் யுத்தம் என்றார் திப்புவின் பேரில் பின்னர் தொடுத்தனர் நிபந்தனைகள் சினங்கொளு வாற தாமே
1368
நாட்டினிற் பாதிதம்பாற் சேர்த்திட அதிலும் நாட்டில் மேட்டிமை லாபம் சேர்க்கும் மேன்நிலம் மணப்பொருட்கள் ஈட்டிடும் பூமி வாய்போல் இருப்பது சீரங்கத்தின் கோட்டைக்கும் உகந்தாற் போலாம் கேட்டனர் வெள்ளையர்கள்
1369 கொடுத்திடார் என்றறிந்தும் கொடுத்திடப் பணித்ததாலே துடித்ததே உடல மெல்லாம் திப்புசெந் தழலில் நின்றார் விடுத்ததன் நோக்கம் தம்மின் வாரிசு இரண்டினோடும் அடித்திடக் கொள்ளை செல்வம் அனைத்தையும் எனப்புரிந்தே
137Ο ஒப்பிட வொணன்னா வாறே உவந்ததம் மண்ணைச் சேர ஒப்பிலாப் போழ்து காலம் உடன்படா நகர்வு செய்ய ஒப்பந்த நாட்கள் மீறும் உபாதையால் வெகுண்ட 'வாலிஸ் கப்பிய சினத்தால் யுத்தக் கட்டளை ஓங்கச் செய்தார்
1371
வில்லியம் மேடோவ் வெள்ளை வீரர்க்குத் தலைமை தாங்கிச் செல்லவோர் புறத்தில் மற்றோர் திசையினில் நிசாமும் மைகர் எல்லைமுன் பாளையத்தார் ஆற்காடு நவாபும் சேர்ந்தார் கொள்ளையாம் படைகள் தொண்ட மானுடன் சேர்ந்திருந்தார் 1372

Page 156
ஜின்னாவூர் ஷரிபுத்தீன் 288
மூன்றாவது மைகப்ப்போர்
கோயம்புத் தூரிருந்து கூறிடும் பாதை மூன்றில் போயினர் திண்டுக் கல்லோ டீரோடு மைகர் என்றே வாய்த்தது கடுமெதிர்ப்பு வெள்ளையர் திண்டுக் கல்லில் சாய்ந்திடுவாரோ என்னுந் தரத்தினில் தப்பித் தாரே 1373 மைகரைத் தாக்கும் எண்ணம் வலுத்திடும் அவர்க்கா மென்றே மைகரின் பாதை தன்னை மறைத்திடப் பணித்தார் திப்பு கைசோரா வண்ணந்தானே கைக்கொண்டார் தலைமை ப்ளெயிட்
கையறுநிலைக்குள்ளானார் கடுஞ்சமர் தலைமைக் கர்னல்
1374
வருகைக்காய்க் காத்திருந்தோர் வந்துறப் பதுங்கிநின்ற சிறுத்தைகள் போலப் பாய்ந்தார் சிதறின அடலார் சேனை மருவிய பேரைத் திப்பு முண்டத்தைத் தலையிருந்தே
பிரித்தறுத் தெறிந்தார் காணும் புறமெலாம் பிணக்கா டாமே
1375
ஓங்கிய கொலைவாள் மாற்றார் உடல்தொட முன்னர் கண்முன் வேங்கையொன் றுடல்சிலிர்த்து விழிகனற் குன்ற மன்ன பாங்கினில் தோன்றல் கண்டார் பயத்தினால் உடல்வியர்க்கத் தாங்கிய ஆயுதங்கை தரைவிழச் சிலர்நின்றாரே 1376
நிராயுதபாணியாக நிற்பவர் தம்மைக் கொல்லல் மருவலராகி லென்ன மாய்த்திடல் பாவ மென்னுந் தருமத்தையுணர்ந்த திப்புதங்கரந் தவிர்த்து வேறோர் உருவினை நோக்கிப் பாய உறுவது மதுவாகிற்றே
377
கண்படு தூர மெல்லாம் காண்பது கைகால் முண்டம் எண்ணிடவியலாக் கொள்ளை இறந்தபேர் இருபுறத்தும் மண்சுய வண்ணம் முற்றும் மாறியே செம்மை கொள்ளும்
வண்ணமாம் குருதிக் காட்டில் குளித்தபாங் கனைய தாமே
1378

தீரன் திப்பு சுல்தான் காவியம் C289)
வாளொடு வாளும் கைவேல் வேலொடும் பொருத ஓசை ஆளுமத்தலத்தில் வில்லும் அம்பும்தம் ஏவல் வீரர் ஆளுமை காட்டும் தேகம் அரிந்துடற் புகுந்தே ஆவித் தோழமை கூட்டி மாற்றுத்திக்கினில் வீழு மாமே
1379 தொடரிடி தோற்கு மாறு சீறின பீரேங் கிப்பேய் மடமடவோசை கூட்டி மிகைத்தன துவக்கின் ஒலம் உடன்படும் அவற்றி னோடே உயிர்விடும் மனுக்குரல்கள் கடல்படும் அலையின் ஒசைக் கோரமோ கடுகிற் கீடே
138O போர்மிகக் கொடுமை யென்னும் புரிதலை நிலைநிறுத்தும் தேர்தலைக் கண்டார் போரில் திளைதவீர் திறத்தினோரும் கோரமே எங்கும் வீரர் கொலையுண்ட பிணங்கள் தேக ஊறுகொண் டுபாதை யுற்றோர் ஒன்றுக்குப் பலவென்றாகும்
1381 புண்ணுண்ட வீரர் செந்நீர் பீறிட உதவிநாடிக் கண்படுதிக்கிலெல்லாம் காலோட அலைந்தார் அன்னார் துன்பத்தி னெல்லை தாண்டித் துடித்துடல் களைத்தார் வெய்யோன் விண்விடுத்தகன்றான் கங்குல் வலைவிரித் திருளைப் போர்த்தும்
1382 சமரிடைப் புலியதாகச் சுழன்றுந்தன் சக்தி மீறி அமைந்தது வெற்றி வெள்ளை அடலரின் பக்க லென்றே தமதுடை நிலைமை யோர்ந்தார் திப்புபோர்க் களத்தில் நீங்கிச் சம்மதங் கொண்டார் ஒன்றுஞ் சமாதான நிபந்தனைக்கே
1383 எழுபது கோட்டை யோடே எண்ணுறு பெரும்பீரங்கி இழப்பினில் சேரும் வீரர் இறந்தவர் கானாதுற்றோர் பழுதுடல் கொண்டோ ரென்று பத்தைந்தின் ஆயிரம்பேர் களத்திழப் பிதுபோ லென்றுங் கண்டிலார் கவல்மிக் காரே
1384 அதிகாரம் பொருளாதாரம் அனைத்திலும் பின்ன டைந்து மதிப்பையும் இழந்த கோலம் முன்னஞ்சிநின்ற பேரும் மதித்திடா தச்சம் நீங்கு மாறென வானார் திப்பு விதித்ததும் அதுவா மென்றே விறலுளத் தோர்மை ஏற்றார் 385

Page 157
ஜின்னாவூர் லுரியுத்தீன் O290 பற்பல முனையில் யுத்தப் பங்குறுநிலையால் வந்த துர்ப்பலன் அதுவா மன்றித் தனித்தனி யாமென் றாகில் பொற்புறும் வெற்றி யன்னார் புயங்களிலென்பார் பின்னாள் அற்புதர் தம்மினாட்சி ஆளுமை விளக்கும் பேர்கள்
1386 கைப்படு பிரதேசங்கள் கூட்டெனச் சேர்ந்தோ ருள்ளே மெய்ப்படச் சமமாய்ப் பங்கு மேற்கொள வேண்டு மென்னும் வைப்புடன் படிக்கை நோக்கார் வெள்ளையர் நீதி கொண்றே பொய்ப்பட வைத்தார் தம்மின் பேர்நலங் கொண்டிட் டாரே
1387 முக்கிய கோட்டை பல்லும் பெருநிலப் பரப்பும் தம்பால் தக்கவைத்தார்கள் மிக்கத் தோதென மலபார் ஓரத் திக்கினில் வியாபாரத்தில் வாசனைத் திரவியங்கள் மிக்கதாய் இலாபஞ் செய்யும் மேட்டிமை அறிந்ததாலே
1388 தோல்வியைக் கண்ட போழ்தும் துவண்டிட வில்லை திப்பு தோல்வியே வெற்றிப் பாதை துலக்கிட ஓர்மை கொண்டு சால்புறு வழிகளோர்ந்து செயலுறு பணிமேற் கொண்டார் காலமோ சிறிது மீட்டுக் கொண்டதோ பலமடங்காம்
1389 அமைச்சர்கள் அவையைக் கூட்டி அரசாங்க வரிகள் தம்மைச் சுமையின்றி மக்களுக்குச் சிறிதென அதிகரித்தார் தமைச்சார்ந்து மீத முற்ற தம்புல மனைத்தும் கூறாய் அமைத்ததன் ஏற்றத்திற்காய் ஆவன செயப்பணித்தார்
1390 உடன்பட்ட வாறே பொன்னை உரியநாள் தந்து தம்மின் கடன்தீர்த்துப் பிடிதளர்த்திக் கொண்டதும் நிலைத்திராது படைநடத்திடத்து னிந்தார் பகைவரை ஒடுக்க வென்றே உடனதற்கான தெல்லாம் உருவாக்கம் பெறலா கிற்றே
1391 இழந்தவை அனைத்தும் மீட்டி இருந்ததற் கதிகமாயும் வளங்கொள வழிசெய்தஃதில் வெற்றியுங் கொண்டார் திப்பு களம்படு சேனை மிக்குங் கால்புலன் அர்ப்பணித்தார் முழுமைகொண்டனைத்துந்தேற முதன்மையிற்பங்குற்றாரே 1392

தீரன் திப்பு சுல்தான் காவியம் O2910
இற்றைநாள் பணயம் வைத்த இளவல்களிரண்டுந் தந்தை பெற்றிடப் பிரிவின் தாபம் போக்கிட இழந்த தெல்லாம் முற்றுமே கொண்டாற் போன்று மனநிறைவுற்ற செய்கை வற்றிய கடல்மீண்டுற்றவாறெனப் புகலல் சாலும்
1393 போரினில் வாகை கொண்டும் பெருந்திரு வீழ்ச்சி கண்ட பாரிய மாற்றம் வெள்ளைப் பறங்கியர் தம்மைச் சூழும் நீரறக் காய்ந்த பாலை நிலமென வானார் செல்வம்
சேருதற்கான தெல்லாம் செய்தனர் வேற்று நாட்டார்
1394
படைபலம் பொருளாதாரப் பலமொடு தம்மை மீட்ட திடனொடு பிரெஞ்சுக் காரர் துணையையும் வேட்டல் வேண்டி உடன்பாடு செய்தார் யுத்த ஒத்துழைப் பென்னும் பாங்கில் கடன்படு நிலையிலாத கொள்கையாம் திப்பு மன்னர்
1395
பொறியியலாளர் யுத்தப் பயிற்சியில் வல்லோ ரென்ன திறன்மிகு பிரெஞ்சுக் காரர் சீரங்கப் பட்டினத்தில் பெறுநருமானார் ஊதி பத்தினைத் திறமைக் கேற்ப மறுபுலம் வெள்ளையர்கள் முற்றுமே அறிந்திட்டாரே
1396 கிருஷ்ணாராவின் துரோகமும் கைகடந்த கோட்டையும்
ஆயிரத்தோ டெழுநூற்றுத் தொண்ணுற்றொன்றின்
ஆனதிங்கள் பிப்ரவரி கான்வாலிஸ்'பொய் மாயமென்று காட்டினனே "ஆம்பூர்” நோக்கி
மிதிதொடர்வான் போல்காட்டிச் “சித்தூருக்கு வாய்தான "முக்ளிகன வாயினுடே
வேகமுடன் மைகரின் பீடபூமி போயடையப் படையோடே வெற்றி கண்டான்
போகுவழி "கோலாரைப் பற்றிக் கொண்டான்
1397

Page 158
ஜின்னாவூர் ஷரியத்தீன் O292 o
பெங்களூரில் மார்ச்சுதிங்கள் ஐந்தாம் நாளில்
பாசறையை அமைத்தனனே கோட்டை முன்னே தங்கலினை அறிந்தாரே திப்பு சுல்தான்
தொடர்ந்துள்ள ஆபத்தை யுணர லானார் பங்கமுறச் செய்தவர்தம் பொருட்கள் தம்மைப்
பறித்தெடுக்கும் படியாணை பகன்றார் வீரர் தங்கடமை தொடர்ந்தாலும் ஈற்றில் தோல்வி
தாங்கிப்பின் வாங்கினரே சேர்ந்தாற் போன்றே
1398
வெறிகொண்டான் கான்வாலிஸ் திப்பு சுல்தான்
வரித்தசெய்கை தனக்காமோர் பதிலை நாடி உறுத்தினனே "கர்னல்ப்ளைட் தன்னை நோக்கி
ஒடுக்கவென்றே வந்தவரை அவனும் தம்மின் பரிப்படையை ஏவிவிட்டுத் தொடர்ந்தான் திப்பின்
பீரங்கிப்படைநின்ற புலத்தைக் கூர்ந்தே குறித்தபடி நிறைவேறா நாட்டத் தோடே
குண்டடியும் பட்டதனால் குரலிழந்தான்
1399
எதிர்பாரா நிகழ்வதுவாம் மைசூர் வீரர்
எதிரிகளின் பலமறிந்தார் இமைப்புள் தம்மின் எதிர்ப்புதனைப் பீரங்கி துவக்குக் கொண்டே
இலகுவினில் புரியவைத்தார் இதுபோழ் தாங்கே குதிரைசுண்டிக் குண்டொன்றைக் குரல்வளைக்குக்
குறிவைத்துச் செலுத்தினனே திப்பின் வீரன் விதிமுடியாப் போதும்தன் வார்த்தை பொய்க்கும்
விதிகொண்டான் “கர்னல்ப்ளைட்" திரும்பினானே
14OO
புறமுதுகிட் டோடுகின்ற நிலைமை தோன்றும்
படியான தாமன்று பறங்கியர்க்கு
முறியடிக்கப் பட்டதொடு நான்கு நூறு
மாற்றாரும் பிடியுண்டார் கைதியானார்

தீரன் திப்பு சுல்தான் காவியம் O293)
மறுமுறையும் தொடர்ந்தார்கள் விட்டா ரில்லை
"மூர்ஹவுஸ்?"ம் "மெட்டோவும் கேர்னல் ஜென்ரல் அருகிருந்த பெங்களூர் பேட்டை தன்னை
அடலர்கள் தாக்கினரே வெற்றி கொண்டார்
14O1 பாதுகாப்புப் பலமாகக் கொண்டிருந்தும்
புயல்போன்ற தாக்குதலால் பகலில் பாதி போதுமென்றே யானதன்று குண்டு மாரிப்
பொழிவுக்குத் தாங்கொணாதே பேட்டை சாயும் மோதுதலில் சளைத்தார்கள் இல்லை திப்பின்
மறவர்கள் ஆயினுமென் வெள்ளையர்கள் மோதலிலே கொண்டயுக்தி வெற்றிக் கான
மற்றுமொரு காரணமாய்ப் போன தன்றே
14O2 இருபடைக்கும் உயிரிழப்பு இணைந்த வாறாம்
இணைத்தலைமை கொண்டவரில் "கேனல் -
மூர்ஹவுஸ்" செருக்களத்தில் சிங்கமென வெற்றி நோக்கிச்
சமர்புரிந்தான் பெருவீரன் வாகை கொண்டும் தரித்திருக்க வில்லையவன் ஆவிகுண்டு
துளைத்துடலை யதனோடு தெறித்த தாலே பொறுத்திருந்த கான்வாலிஸ் கோட்டை தன்னைப்
புடைகழத் திட்டமிட்டான் பலன்கொண் டானே
14O3 பதினாறாம் நூற்றாண்டில் "கெம்ப கெளடா"
பெயர்கொண்ட "செந்தலைவர் மைசூர் மன்னன் புதிதாக மண்கொண்டு படைத்த கோட்டை
பதினெட்டாம் நூற்றாண்டில் புதுப்பித்தார்கள் அதிபலமாய் ஆனதது திப்பு சுல்தான்
அமைத்திட்டார் பெரிதாகக் கல்லினாலே அதிகரித்த படைப்பலமக் காலப் போழ்தில்
அடுத்தவர்கள் அண்டிடாத பாங்கினோடே
14O4.

Page 159
ஜின்னாவூர் லுரியுத்தீன் C2940
நீண்டவட்ட வடிவத்தில் மேற்ற ளத்தில்
நீண்டுயர்ந்த தொலைநோக்குக் கோபுரங்கள் பூண்டதந்தக் கோட்டையதில் கொடிக்கம் பங்கள்
பீரங்கித் தளங்களுடன் அமைத்திருந்தார் தாண்டவியலாதபெரும் அகழி தோண்டித்
தோன்றாத வாறுபெரும் முட்புதர்கள் சாண்புலமும் வெறுமையற்றே படரச் செய்தார்
சரித்திரத்தில் பதிவொன்றே இன்றஃதில்லை
14O5 பேட்டைதனைப் பிடித்துவிட்ட துணிவால் வாலிஸ்
படைகளுக்கோர் ஆணையிட்டான் துரித மாகக் கோட்டையினைக் கைப்பற்றப் படையி னோரும்
காதுபட முன்னதனைக் கடனாய்க் கொண்டார் மேட்டுநிலப் பகுதிகளில் நிறுத்தி வைத்தார்
முற்றுகைப்பீரங்கிகளைச் சிதறடிக்கும் பெட்புடைத்தாம் அன்னவைகள் குண்டை வாரிப்
பொழிவதிலே பொழிந்தனவாம் கோட்டை மீதே
14O6
பதிநான்கு நாட்களவர் பெரும்போர்ப் பாண்டம்
பீரங்கி இரவுபகல் நோக்கா வாறே அதிபலத்தைக் காட்டினவே கல்லின் கோட்டை
அடியின்மேல் அடியுண்டே அகல்வாய் தோற்றும் இதுவேளை உடையுண்ட “டெல்லி வாயில்”
ஏற்புடைத்தா யானதுவாம் நுழைவதற்கும் உதயத்தின் ஒளிகண்ட வாறாம் "வோலிஸ்”
உவகையினால் படையினரை வாழ்த்தி னானே
14O7 திட்டமிட்டான் நுழைவதற்குப் பொருந்தும் நேரம்
தோதான வழியென்பதாய்ந்தான் வேண்டும் கட்டளைகள் தமையிட்டான் குறித்த திக்கில்
குவித்துவைத்தான் படைகளினை திப்பு சுல்தான்

தீரன் திப்பு சுல்தான் காவியம் O2950
கட்டளையு மிட்டிருந்தார் கொத்தளத்தில்
காவலுறும் வீரருக்குநிலைமை ஒர்ந்தே அட்டதிக்கும் பகைவெல்ல உறுதி கொண்டே
ஆனதெலாம் செய்கவென வாகு மஃதே
14O8 கோட்டைக்குத் தென்புறத்தில் கல்லிரண்டு
கொள்தொலைவில் "ஜிங்கானி அருகில் திப்பு நோட்டமிட்ட வாறிருந்தார் நடக்கும் போரின்
நிலைமைதனை அறிந்தவராய்ச் சிறுதொலைவில் மேட்டிமையாய்ப் படையொன்று 'கமருத்தீன்கான்”
முதன்மையிலே "பசவன்குடி” எனுமிடத்தில் வேண்டும்போதழைக்கவெனக் காத்திருக்கும்
வகையினிலே திப்புசுல்தான் திட்டம் போன்றே
14O9 வந்திடுங்கால் ஆபத்து கோட்டை தன்னை
வருவினையில் காப்பதற்கும் ஏற்ற வாறு முந்தவெனக் 'கமருத்தீன் காணி னோடு
“மேஜர்லாலி தளகர்த்தர் "சையத் சாகிப்” சேர்ந்திருந்தார் "கிருகஷ்ணாராவ் கூட வானான்
துரோகத்தின் காவலவன் அறிந்தாரில்லை சந்தர்ப்பம் காத்தவனாம் திப்பு சுல்தான்
தூயஅன்பில் திளைத்தவனாம் இதுநாள் மட்டும்
141O திப்புசுல்தான் திட்டங்கள் அனைத்தும் அன்று
தெரிந்தவருள் கிருகூடினாராவ் ஒருவனாவான் ஒப்பனையில் லாதவொரு நடிகன் போன்றே
உடனிருந்தான் நல்லவன்போல் பாசாங் குற்றே செப்பிடவோர் ஏதில்லை துரோகஞ் செய்யத்
சேர்ந்திருந்தான் மந்திரச்சுற்றாரினோடே தப்பிழைத்தான் முற்றிலுமே படையோர் தம்மைத்
தவறான வழிசெல்லத் தூண்டி னானே
141

Page 160
ஜின்னாளுர் ஷரிபுத்தீன் C2960
அறிந்திருந்த திடட்மெலாம் ஆங்கிலேயர்
அறிந்திடச்செய்தானவனே கோட்டை வீரர் முறையான காவலையும் முடங்கச் செய்தான்
மனமுவந்த வாறுணவுந் தயாரித் துண்ண உறுத்தினனே புலன்மாற்ற அனுமதித்தே
உத்தரவும் தரச்செய்தான் தளகர்த்தர்க்கே மறுத்திலையாம் அன்னவரும் பதவி தன்னில்
மந்திரியா யவனிருந்த காரணத்தால்
1412 சந்தர்ப்பம் பார்த்திருந்த கான்வாலீஸ°ம்
சார்பான நிலையுணரத் தாக்கு தற்கு முந்தினனே கோட்டைமீது படைநடத்த
மதிதுலங்கும் போழ்தஃது தொடக்கங் கொள்ளும் எந்திரம்போல் செயற்பட்டார் வெள்ளை வீரர்
ஏணிகளைக் கோட்டைமதில் மேலே சாத்தி வந்திடுமோர் ஆணைக்குக் காத்திருந்தார்
வரச்சுவரில் தாவியவர் கோட்டை சேர்ந்தார்
1413 இரவான போதினிலும் சந்திரன்றன்
இளவொளியைச் சிந்தியதால் வெள்ளை வீரர் சரமாரியாகஇடிபாட்டினுடே
சென்றுகோட்டை வீரர்தமைத் தாக்கினார்கள் வருவார்கள் என்றறியா வேளை ஏறி
வந்ததனால் உருவான சமரின்போது பெருவாரியானவர்கள் உயிரை நீத்தார்
படைப்பலமுங் குன்றியதே கோட்டை மீதே
1414 கோட்டைத்தள கர்த்தர்களும் நாயக் காரும்
குறைந்தளவே இருந்தாலும் சீற்றத் தோடு வேட்டைக்கு வந்தவரை வேட்டை யாட
வெறிகொண்டார் வெள்ளையர்கள் வளைத்துச் -
சேர்ந்தார்

தீரன் திப்பு சுல்தான் காவியம் G2970
கூட்டமாக ஒன்றித்துத் தொடர்ந்து தாக்கக்
கையளவே யானவர்கள் என்தான் செய்வார் மாட்டுண்டார் போலானார் பொறியில் வீர
மரணமொன்றே துணைநின்றதாம வர்க்கே
1415
காத்திருந்தார் மைகர்வாய்த் தலத்தில் ஆனை
கொண்டுதாக்க வேண்டுமெனக் கமருத்தீன்கான் போர்த்தலைமை திப்புவின்கை இருந்ததாலே
படைநடத்தும் படியிருந்தும் காத்திருந்தார் சார்ந்தன்று வெற்றிகிருகூடினா ராவ்செய் கழ்ச்சி திப்புவுக்கு மாறாக இருந்ததாலே போர்முனையில் பலியுண்டோர் கோட்டை வீரர்
பத்தின்நூறாகுமெனப் புகலு வாரே
1416
வெள்ளையரின் வெற்றியின்பின் சீரங்கத்தை
வந்தடைந்தான் கிருக்ஷணாராவ் வந்தும் ஆங்கே உள்ளவரில் தன்போன்ற குணமுள்ளோரை
உள்ளடக்கித் துரோகத்தில் முதன்மை யானான் உள்ளபடி நடந்தெல்லாம் அறிந்தார் திப்பும்
உடனடியாய் நடவடிக்கை எடுக்க வேண்டிக் கள்ளமனங் கொண்டவனைக் கண்காணிக்கக்
குதிரைப்படை யொன்றினையும் அனுப்பி னாரே
147
படைத்தலைமை ஏற்றிருந்தார் சையத் சாகிப்
புலன்விசாரித்தறிகுபணியவர்மீதாகும் உடனழைத்தார் மன்னரன்னை முன்னதாக
ஒர்ந்தறியும் நோக்கோடு "தர்பா” ருக்கே "படைத்தலைவன் அழைப்பையேற்கும் படிநா னில்லை போயுரைப்பீர் நானிங்கோர் திவானாம்” என்றே கடிந்துரைத்தான் வந்தவரை சையத் சாகிப்
கைதுசெய்து வருகவென ஆணையிட்டார் 1418

Page 161
ஜின்னாவூர் ஷரிபுத்தீன் O298 o பொறுப்புவாய்ந்த கடமையிலே அமர்த்தப் பட்ட
பொறுப்பதனால் கைதுசெய்யும் உரிமை கொண்டார் முறைப்படியாய் நீதிக்குக் கட்டுண்ணாது
முரண்டுசெய்தான் கிருகூழ்ணாராவ் கைகலப்பில் இறங்கிடவுந்துணிந்தனனே எதிர்த்தார் வீரர்
எதிர்பாரா நிலையிலவன் கொலையுண் டானே இறைகொடுத்த தண்டனையாம் ஊன்தந் தோர்க்கே
இரண்டகித்தால் ஏற்குநிலை இதுவா றென்றே
1419 துரோகியவன் செய்கைக்குக் கிடைத்து விட்ட
தண்டனைபோல் துரோகத்தில் பங்கு கொண்டோர் சிறையுண்டார் கிருகூழ்ணாராவ் மனைவி முன்னர்
திப்புவுக்குச் சாதகமாய் கணவ னென்றும் கருதாது எதிர்தத்வளம் ராஜ மாதா
கருணைகொண்டு அவள்வேண்டபெண்புரத்தில் குறையின்றி வாழ்வதற்கும் வழிகள் செய்தார்
கயவன்மனை யென்றாலும் நல்லா ளென்றே
142O
உன்னதமாம் கிருக்ஷனாராவ் பெற்றிருந்த
உயர்பதவிதிப்புசுல்தான் ஆட்சி தன்னில் தன்னலமே கொண்டதனால் அன்னியர்க்குத்
தாய்மன்ைனை அபகரிக்கத் துணையுஞ் செய்தான் எண்ணிடுங்கால் "மீர்சாதிக் ஆயாஸ் இன்னும்
இவன்போன்றோர் செய்திட்ட துரோகம் தானே மண்ணிழக்க மரணமெய்த ஏதுவாகும்
வரலாற்றில் கறைபடிய வகையுமாகும்
1421

தீரன் திப்பு சுல்தான் காவியம் O299) நான்காவது ஆங்கில மைகர்ப் போர்
மண்ணினுடைப் பெரும்பகுதி மூன்றாம் போரில் மாற்றார்கைப் பட்டிருந்தும் திப்பு விண்பால் மண்ணளவும் அன்னோருக் கச்சம் மாற
முடியாது போனதனால் மீண்டும் யுத்தம் திண்மையுறலாகிற்றே ஆங்கிலேயர்
திரட்டினரே பெரும்படையை உடன்பட் டார்கள் அன்னியனின் கால்பற்றி வாழ்ந்த கோழை
அரசர்களும் அழிவுக்காம் அடிகோலிற்றே
422 கூட்டியவப் பெரும்படையைக் கருத்தில் ஒர்ந்தால் கையளவே நிலமதனை எளிதாய் வெல்ல நாட்டமுற்ற பேர்களுக்கோ ஆகும் ஆனால்
நெஞ்சினிலே திப்புவின்மேல் கொண்ட அச்சம் மேட்டிமையாய் இருந்ததனால் கடுகின் காரம்
மங்காது எனப்பயந்தார் துதிக்கை யுள்ளே கோட்டைவிட்டால் எறும்பொன்றைக் குன்றாம் யானை
கொள்ளுகின்ற பாடதனை கருத்தில் ஏற்றார்
1423 எண்ணியவாறில்லாது தாம்மேற் கொண்ட
எதிர்பார்ப்பில் அத்தனையும் இடியுண் டாற்போல் மண்ணாகிப் போவதனை யுணர்ந்தார் திப்பு
மனந்தளர்ந்தார் வழியறியா நிலைக்குள்ளானார் மன்னவனாம் “நெப்போல்யன்” படைகளோடு
மைசூருக் குதவுவதாய் வாக்கிருந்தும் தன்னளவில் உதவநின்றபேர வர்க்குத்
தழுவியதே தோல்விவந்து எகிப்து நாட்டில்
1424 சொந்தமண்ணில் வாழ்ந்தவர்கள் கூடத் தம்மைச் சேராது வெள்ளையரின் கைக்குள் ளானார் வந்தவனை ஆதரித்தான் நிஜாம் குடகு
மராட்டியனும் திப்புவின்மேல் பொறாமை யுற்றே

Page 162
ஜின்னாளுர்ஷரிபுத்தீன் C300
சொந்தமுற நினைந்தார்கள் இழந்த மண்ணைத்
துணைசெய்தே வெள்ளையர்க்காம் உடையார் கூட்டம் கொள்ளையவர் கொண்டபகை மைக ரின்முன்
கோன்மையவர் கையிருந்த காரணத்தால்
1425 மூவெட்டின் ஆயிரமாம் வெள்ளையர்கள்
முதல்வனெனப் படையோட்ட "ஜெனரல் ஹேரிஸ்” காவோலை கையளிக்குங் களத்தைக் காணக்
கடிதுவந்தான் வெள்ளையர்கள் இந்தியாவில் ஏவியவெப் படையினிலும் இல்லா வாறே
எண்ணடங்கா ஆயுதங்கள் இசைவாய்ப் போரில் தேவையெனெக் கொண்டுதள பாட மெல்லாம்
தொகைதொகையாய்க் கொண்டிருந்தார் பறங்கி யர்கள்
1426 கடலனைய சேனையது கிழக்கிருந்து
கல்லேழு வேகத்தில் ஊர்ந்து காணும் இடைவெளியு ரனைத்தையுமே கொள்ளை யிட்டும்
எதிர்நோக்கிச் சீரங்கம் வருகை நோக்கப் படையோடு மிருகங்கள் மாடு யானை
பளுசுமக்கும் கோவேறு கழுதை யன்ன தொடராக வந்தனவாம் தொகையிலஃதைச்
சொல்வதெனில் ஒரறுபதாயிரத்தாம்
1427 வடக்கிருந்து ஹைத்ராபாத் நிசாமின் சேனை
வந்தததில் ஈரெட்டின் ஆயிரம்பேர் படைத்தலைமை ஏற்றதுமோர் வெள்ளைக் காரன்
பம்பாயின் படையாறா யிரமாம் எண்ணில் நடத்தினரோர் படைவேறாய்த் தெற்கிருந்தும்
நாடாளும் ஆசைகொண்ட பரதே சிப்பேர் கொடுத்தானோர் வாய்ப்பிலையே மராட்டியர்க்கு
கவர்னர்"வொல்ஸ் லியவர்கள் போரில் சேரார்
1428

தீரன் திப்பு சுல்தான்காவியம் O30 O
தன்தலைமை தனில்திப்பு தெற்கிருந்து
தமைநோக்கி வருவோரைக் களத்தில் கண்டார் பன்மடங்காம் அழிவெதிரிப் படையினோர்க்கு
புறங்காட்டித்திப்புகோட்டைப் பதிக்கு மீண்டார் இன்னுமொரு படைப்பிரிவு “ஜெனரல் ஹேரிஸ்”
எதிர்கொண்டதவர்களினைத் தொடர்ந்து தாக்கிப் பின்னமுறச் செய்ததுவாம் பிறிதோர் போழ்து
படையிடையில் மாற்றமொன்று நிகழ லாகும்
1429
முன்னணியில் படைநடத்தும் தளகர்த் தர்கள்
மந்தகதியடைவதுபோல் செயலில் காட்ட என்னவதன் காரணமென்றறிய நோக்க
எதிரிகளைக் களைப்படையச் செய்து வெல்லும் உன்னதமாம் உத்தியது நீண்ட தூரம்
உடல்களைக்க நடக்கவைத்தால் தாக்கு தற்குப் பின்னமிரா தென்றபதில் கிடைத்த தஃது
போர்யுக்தி திப்புவுடைத் ததுவாம் என்றார்
143O முன்னொருகால் சீரங்கப் பட்டினத்தில்
மன்னர்கொண்ட செயற்பாடு வெற்றிக் கென்றே உன்னதமாம் அன்றதுவும் என்ற போழ்தும்
உண்மையின்றோ அஃதல்ல "கவர்னர் -
666D6tba கன்னமிட வந்தகொள்ளைக் காரன் செய்த
குள்ளநரித்தந்திரத்தால் விளைந்ததாகும் தன்னையண்டி வாழுஞ்சில கைக்கூலிப்பேர்
தயவுடனே செய்தபெரும் கழ்ச்சியாகும்
1431 பனத்தின்மேல் பேராசை யுத்தம் செய்யப்
பயங்கொண்ட பேடியர்கள் பதவி யாசை நினத்திற்கண் கொண்டலையும் இழிகுணத்தோர் நாட்டின்மேல் பற்றற்ற நயவஞ்சர்கள்

Page 163
ஜின்னாவூர் ஷரிபுத்தீன் C302)
கணத்தினிலே மாறுபடும் கயவரென்று
கண்டவரை கண்டறிந்து ஆசை யுட்டி இணைத்தெடுத்தார் தம்மோடு வெள்ளையர்க்கும்
இசைவாகத் திப்புவிற்குத் துரோகஞ் செய்ய
14.32
வெள்ளையரின் வெற்றிக்குத் துணைகள் செய்தால்
விடிவுபெறும் மைகரின் உயர்வும் ஓங்கும் கொள்ளையெனப் பணவளங்கள் உம்மை நாடும்
கோருகின்ற அத்தனையும் கைக்குள் ளென்றும் எள்ளளவும் குறைகொள்ள வாழ்வு சேரும்
இணங்குங்கள் எனப்பொய்யாம் ஆசை காட்டிக் கொள்ளைகொண்டார் ஈனர்மனம் அவரும் ஓரார்
கைப்பாவை யானார்கள் மதிகெட் டோரே
433
பலகாலம் நம்பிக்கைக் குரியோ னாகப்
பதவியிலே நிதியாளும் அமைச்சனாக நிலைபெற்றே இருந்தவனாம் “மீர்சாதிக்கென்
நீசகனும் அதிலொருவன் நன்றி கொன்றோன் இலைமறைகாய் போலிருந்தே இடுக்கண் செய்தான் இதிகாசந்தனில்மாறா இழிவுங் கொண்டான் நிலைகுலைய வில்லைதிப்பு தனித்திட்டாலும்
நிமலனையே நம்பியவர் துணிவு கொண்டார்
1434
வெள்ளையரின் படைப்புலத்துள் திப்பு சுல்தான்
வேங்கையெனப் புகுந்துசிரங் களைந்து வெற்றி கொள்ளற்காய்ப் புதுயுக்தி பலவுஞ் செய்தார்
கூண்விழுந்த நிலைகொண்டார் பறங்கிக் காரர் எள்ளளவும் எண்ணவில்லை “ஹேரிஸ்" இந்த
இடியேற்றுத் தாக்குதலை இழப்புங் கொள்ளை வெள்ளமெனப் பரந்துவந்த பெரும்ப டைக்கு
விதித்தவிதி காயாகிப் போன தன்றாம் 1435

தீரன் திப்பு சுல்தான் காவியம் O303D
உள்ளபடி சிறுபடைதான் என்றிட் டாலும்
ஊடுருவிப் பெருஞ்சேதம் தமக்களித்த வல்லமைக்குச் சான்றுரைப்பான் போல “ஹேரிஸ்”
வழிமொழிந்தான் திப்புவின்றன் திறமை போற்றி கள்ளமற்றுப் பொய்மறுத்து யுத்தத் தின்பின்
கூறினனே புகந்துரைகள் திப்பின் ஆற்றல் சொல்லவிய லாததென விதந்து ரைத்தான்
சமர்க்களத்தின் முடிவுரைத்த காலப் போழ்தே
1436
பகைவரினைப் பந்தாடி நின்ற போழ்தும்
படைபெரிதோ டன்னவர்கள் இருந்ததாலே வகையிலாது தொடர்ந்திருக்கக் கோட்டை நோக்கி
வரவேண்டும் நிலைமைதனை திப்பு கொண்டார் அகன்றதுமப் பெருவீரர் வெள்ளையர்கள்
அண்டினரக் கோட்டையினைச் சுற்றித் தங்கும் வகையாகப் பாசறைகள் அமைத்துக் கொண்டார்
வரமாகிப் போனதவர்க்கேற்றவாறே
1437 சுற்றியவர் கோட்டையினைச் சூழ்ந்த செய்கை
தம்பக்கம் வெற்றிகொண்ட வகையாய்ப் போக முற்றுகையின் பலங்கொண்டு தொடர்ந்தே குண்டு
மாரிபொழிந்தார்களந்தக் கோட்டை மீதே உற்றதிரு திங்களுள்ளே தனிக்கப் பட்டே
உடனிருந்தோர் சூழ்ச்சிகளும் ஒன்று சேரக் கற்குன்றம் போலிருந்த திப்பும் சற்றுக்
கலங்குநிலைக் குள்ளானார் காலக் கேடே
1438
நீண்டுசென்ற முற்றுகையால் சுற்றிநின்ற
நாடோடி வெள்ளையருள் அவரோ டொன்றிப்
பூண்டவுற வால்திப்பு மேலுதித்த
பொறாமையினால் படைநடத்தி வந்த பேருள்

Page 164
ஜின்னாளுர் லுரிபுத்தீன் C304)
தோன்றியதாம் சிற்சிலதாய் மனப்பு கைச்சல்
தேவைப்பாடானவெல்லாம் தீர்ந்து கொண்டே போனதுவும் காரணமாய்ப் புகுந்த தோடு
பட்டினியும் புதியதுவாய்ப் பறங்கியர்க்கே
1439 உண்ணவுன வற்றநிலை பங்கில் பாதி
ஒருவருக்கு என்றதொடு உயிரினங்கள் உண்ணவுன வற்றுயிரைப் போக்கும் பாடும்
உண்டான நிலைகண்டான் “கேணல் ஹேரிஸ்” இன்னுமிது தொடந்தாலோ பசிச்சா வுக்கே
எல்லோரும் உட்படலாம் எனவே அஞ்சித் தன்னளவில் முடிவோன்றைத் தோற்று விக்கும்
தேவைக்குள் தள்ளுண்டான் விதிகெட் டோனே
144O வீறுகொண்டோர் தாக்குதலை நடத்திக் கோட்டை
வீழவெனப் பொருந்துமொரு புலத்தைத் தேர்ந்தார் ஆறோடும் மேற்குவசத்தமைந்த தஃதாம்
ஆறுநூறு ஆளுயரம் நெடுந்து ரத்தில் நீறாகிப் போகவெனும் வேகங் கொண்டு
நெடுந்துரம் தாக்குகின்ற கணைகளாலே ஊறின்மேல் ஊறுசெய்தார் ஒடிந்து வீழ
ஒன்றும்பயனனற்றநிலை யுலுத்த ருக்கே
1441 அடிமேலே அடியடித்தால் அம்மி கூட
அடிநகரும் என்பதனை மனத்தா லுன்னித் தொடர்ந்தனவே தாக்குதல்கள் சிரமத்தின்பின்
சிறியதொரு பகுதியில்வாய் திறக்கக் கண்டார் விடிந்தமறுதினமேயவ் விடியா டுடே
வலுத்ததவர் வெறிகொண்டதாக்குதல்கள் அடிசாயும் வரைகோட்டை தாக்கும் நோக்கம்
அழிப்பதுபோல் நடந்ததொரு மாற்றம் ஆங்கே
1442

தீரன் திப்பு சுல்தான் காவியம் O305)
கடிதமொன்று வந்ததது திப்பு சார்பில்
"ஹேரிஸ்"தம் கரங்களுக்குப் பேச்சு வார்த்தை நடத்தத்தான் விரும்புவதாய்ப் பதிவு கொண்டே
நிபந்தனைகள் வகுத்தவனும் தூது விட்டான் உடன்படிக்கை செய்வதெனில் உள்ள பங்கும்
உத்தரவை கவர்னர்முன்ஹேரிஸ்" சுக்கு விடுத்திருந்தா ரதன்படியே தூதுவன்போய்
விபரித்தான் வெள்ளையர்பால் பணிதல் போன்றாம்
1443
நிபந்தனைகள் ஆறவைகள் சொந்த நாட்டின்
நிலத்தினிலே பாதியவர் பக்கல் வேண்டும் நிபந்தனையில் லாதுகைது செய்த பேரை
நம்புலத்து விடவேண்டும் கால மெல்லாம் நபரிருவர் நம்மவருள்ளுமது நாட்டில்
நிரந்தரராய் எம்சார்பில் நிலைக்க வேண்டும் சுபநிலைமை மறுத்தொதுக்க வேண்டும் "பிரெஞ்சார்த்
தோழமைக்கு முற்றாகத் தடையுண் டென்றார்
1444
இரண்டுகோடி இழப்பீடாய் வெள்ளையர்கள்
ஏற்றிடச்செய்திடவேண்டும் கைதியாகத் தரவேண்டும் தம்மக்கள் நான்கு பேரைத்
திப்புவுடன் தளகர்த்தர் நால்வரோடே விரும்புவதாயின்ஒப்பி ஓரீர் நாளுள்
விதித்தமுதல் கையளித்தால் ஒப்பந்தத்தைக் கருத்தினிலே கொள்வதென “ஹேரிஸ்" தூது
கொணர்ந்தவர்கள் கூறினரே கோண்முன் தீதே
1445
செவியுண்ட செந்தணலாம் நிபந்தனைகள்
திப்புசினந் தணித்தமைதி காத்தல் வேண்டி
நவமான சேதியொன்றைத் தூதுர் மூலம்
நிறைவேற்ற "ஹேரிஸ்"அது மறுத்துப் பொன்னும்

Page 165
ஜின்னாவூர் ஷரிபுத்தீன் C306)
தவப்புதல்வர் நால்வரையும் தந்தால் பேசச்
சந்தர்ப்பம் உண்டென்றான் இனிமேல் ஒன்றும் உவப்பில்லை யுத்தமொன்றே பதிலா மென்றே
உணர்ந்துபதில் தவிர்த்தார்போர் உறுதிகொள்ளும்
1446
காஸிகானின் கடைசிநாள்
முதிர்ந்தாலும் நெஞ்சுரமும் வைரம் பாய்ந்த
மேனியொடும் வீரதீரத்திறனுங் கொண்டு கதியென்றே அரசபனரி தமக்குத் தம்மைத்
கொடுத்திருந்த காஸிகான் தன்னைக் கொல்லச் சதிசெய்தான் மீர்சாதிக் ஹைதருக்கும்
தொடர்ந்துதிப்பு சுல்தானின் அரசினுக்கும் மதியுக மந்திரிபோல் படைகட் கெல்லாம்
முதல்வருமாய் இருந்தவனாம் நிழல்போ லானார் 1447 சந்தேகங் கொண்டிருந்தார் அவன்மேல் திப்பு
சேர்ந்தொன்றிக் காஸிகான் அவன்மீதுற்ற சந்தேகம் தெளியவென கண்காணித்தார்
தெரிந்துகொண்டான் மீர்சாதிக் திட்ட மிட்டான் தனித்தவனைச் சந்தித்தார் சமயம் பார்த்துத்
தன்னோடு சதிக்குடந்தையான பேரைச் சொன்னபடி செய்வித்தான் அவருஞ் செய்தார்
தேராத போழ்திலந்தத் துயர்நடக்கும்
1448 நல்லவன்போல் நடித்தான்தான் நாட்டுக்காக
நலஞ்செய்யும் மந்திரிபோல் குழைந்தான் செய்யும் எல்லாமே மன்னருக்காய்ச் செய்வான் போன்றே
ஏமாற்ற முயற்சித்தான் தோல்வி கண்டான் பொல்லாதான் வார்த்தைகளில் பொதிந்திருந்த
பாசாங்கைத் தளகர்த்தர் அறிந்திட்டாலும் சொல்லாதே எதுவும்றன் வழியை மாற்றத்
தெரிந்துகொண்டான் சந்தேகம் வலுத்த தென்றே
1449

தீரன் திப்பு சுல்தான்காவியம் C307פ
சென்றவரை நிறுத்தியது பின்னால் நின்று
தெரிவித்த சேதியுடன் திரும்பி நோக்க மன்னவர்க்கு விசுவாசமான வீர
மறவனெனும் இலக்ஷ்மண்ராவ் துரோகி யாகி அன்னியர்பால் உறவுகொண்டான் எண்னக் கேட்டு
அதிசயித்த தோடதனை மறுத்த போழ்து உண்மைதனை நிரூபிப்பே னென்றே யுள்ளே
ஏகியவன் சிறுபொழுது கண்ணில் காணான்
145O
சொன்னதவன் பொய்யென்று தெளிந்த போதும்
சொன்னவனைத் தெளிவுபெறச் சிறிய போழ்து அன்னவனின் வரவுக்காய்க் காத்திருக்க
அடியரவம் கேட்டுப்பின் தலைதிரும்பும் பின்னாலோர் பாதகன்றன் வாளி னோடு
பாய்ந்தனனே பார்த்தமறு கணத்தில் தப்பி உன்னியவன் தனைத்தூக்கி வானுயர்த்தி
ஊன்றித்தரை மீதடித்தார் காஸி கானே
1451 தரைமீது மோதுண்டோன் சிலநொடிக்குள்
துடிப்படங்கிப் போயினனே மீண்டு மாங்கே இருபுறத்தும் இருந்திருவர் பாய்ந்தார் கைவாள்
ஏந்தியவர் நொடிப்பொழுதுள் நிதானங் கொண்டு ஒரடிபின் வாங்கியவரிருபேரும்முன்
ஒருசேர வாய்ப்பளித்தார் மறுகணத்துள் இருவருமே தரைபுரண்டார் நடந்த தென்னே
இறையன்றிப் பிறரறியா யுத்தச் சீர்மை
1452
தவறிவிட்ட திருமுறையும் இனிமேல் விட்டால்
தன்தலைக்கே ஆபத்தாய்ப் போகு மென்றே
பவத்திற்குக் காரணனாய் ஒளிந்தே நின்று
பார்த்திருந்த மீர்சாதிக் குறுவாள் தன்னை

Page 166
ஜின்னாவூர் லுரியுத்தீன் C308 o
அவர்முதுகைக் குறிவைத்து ஓங்கி வீச
அடுத்தநொடி புதைந்ததது அம்பின் வேகம் தவிர்க்கவொண்ணா நிகழ்வவர்தம் புலனுக் கெட்டாத் தலத்திருந்தே வந்ததுகண் நோக்காப் போழ்தே
1453
தாக்கியவாள் தனைப்பிடுங்க முயன்ற போது
தடுமாறும் நிலைகண்டு வாய்ப்பை ஏற்று தாக்கியதோர் நீழ்நெடுவாள் மார்பினுடே
செய்ததுவோர் காவற்படை வீரனாவான் நோக்கத்தில் வெற்றிகண்டான் மீர்சாதிக்கான்
நிலம்புர்டார் காஸிக்கான் நெஞ்சு யர்த்திப் போர்க்களங்கள் பலகண்ைடு வாகை கொண்ட
பெருவீரர் சூழ்ச்சிக்குப் பலியானாரே
454.
போரினிலே புண்ணுண்டு இறந்தாரென்று
பொய்யுரைத்தான் மன்னரிடம் அவரும் நம்பி சேரட்டுஞ்சுவனமென இருகையேந்தித்
தூயவனைப் பிராத்தித்தார் குடும்பத்திற்கும் காரணனே துணையாக வேண்டு மென்றுங்
கண்கலங்க வாயுரைக்கும் இதுநாள் மட்டும் இருகரம்போல் களங்களிலே இருந்த வீரர்
இழப்பெண்ணிச் சோர்ந்திட்டார் இறுதிநாளே
1455 காதல் மனைவியுடன் கடைசிச் சந்திப்பு
சீரங்கப் பட்டினத்தை வெள்ளையர்கள்
துரோகிகளின் துணையோடுகழ்ந்தா ரென்று
சேர்ந்ததொரு நம்பிக்கைச் செய்திதிப்பு
துணிவிருந்தும் மனமுடைந்தார் சூழ்நிலையின்

தீரன் திப்பு சுல்தான் காவியம் O309D
காரணம்தான் உடனிருந்தே முதுகில் குத்திக்
கண்டத்தில் கத்திவைத்தோர் போகத் தம்மின் ஒருடலின் பாகமெனும் காஸி கானும்
உயிர்துறந்தார் என்பதுமாய் ஆனதாலே
1456 போருக்குப் போகுமுன்னே இறுதியாகப்
பார்த்துவிடை கொள்ளவெணத் திப்பு சுல்தான் சேர்ந்தார்தன் மாளிகைக்கு மனையாள் தன்னைச் சந்தித்தார் சோகத்தின் முழுமை யாக காரழிந்த வெண்மதிபோல் வதனங் கொண்டாள் கருமேகஞ் சூழ்ந்தமதி போலு மாக நேர்கொள்ளக் கண்டதுமே துடித்துப் போனார்
நெஞ்சோடு சேர்த்தனைக்க மெளனமானார்
1457 நிமிடங்கள் சிலவேதான் ஆனதஃதுள்
நிலையுணர்ந்தார் தனைவிடுத்து மனைதோள் தாங்கி அமைதியொடு முகம்நோக்க விழிகள் நான்கும்
அன்னியத்தை இழந்தனவே வார்த்தை கொன்றார் தமைத்தாமே நொடிப்பொழுதுள் மாற்றப் பெண்ணாள்
திப்பரசர் தமைவிழித்தே "வெள்ளையர்கள் எமையண்டி விட்டனரோ?” எனச்சொல் சிந்த
“எம்மவரே வழிகாட்ட அருகில்" என்றார்
1458 சோகத்தின் முழுமையொடு விழிகள் சிந்துந்
தலைவியினை நேக்கியவத் தலைவர் சொல்வார் “ஆகாதே இதுமணநாள் நாட்டின் பின்தான் அன்புக்கு இடம்என்று என்ற னுக்கு வாக்களித்தாய் சத்தியத்தை மறக்க லாமோ
வருமிடரைச் சந்தித்து நாட்டைக் கண்போல் காக்கின்ற கடன்செய்யக் களத்தைக் கான
கலங்காது விடையளிப்பாய் துணிவாய்” என்றே
1459

Page 167
ஜின்னாவூர் ஷரிபுத்தீன் O31O
“மீண்டுமுனைச் சந்திக்கும் வாய்ப்பெ னக்கு
மீழுமென நானறியேன்”என்றார் திப்பு “ஏனிந்த வார்ததையெலாம்” என்றே வாயின்
இதழ்களினை மலரக்கரத்தால் மூடி "முன்னர் நான்செய்த சத்தியத்தை மறவேண் நீங்கள்
நாட்டுக்கே முதன்மைதந்து நாட்டைக் காக்க வேண்டும்நான் இடைநில்லேன் வாக்கு மாற்றேன் விடைகொள்க வல்லவனின் துணையோ" -
டென்றாள்
146Օ "உன்னைநீ பாதுகாத்துக் கொள்வாய் மக்கள்
உன்பொறுப்பே இறையடுத்து" என்றார் திப்பு “ஒன்றுக்கும் கவல்வேண்டாம் எல்லாம் வல்லோன்
உடனிருப்பான்” எனமனையாள் உரம எரித்தாள் “இன்னுமிங்கு தரித்திருத்தல் ஆகா தென்றே
இருகரத்தால் நெஞ்சணைத்து உச்சி மோந்து மன்னர்விடை கொண்டார்முன் என்று மில்லா
வாகுமுகம் பொலிவிழந்து போயிற் றன்றே
1461
இறுதி யுத்தம் எகிறிற்று
விதித்திருந்த நிபந்தனைகள் கேட்பாரற்ற
விதமுணர்ந்த வெள்ளையர்கள் தமக்குள்ளாகப் பொதுவிறுதித் தீர்மானங் கொண்டார் கூடிப்
படைநடத்த அவர்களோடு சதித்து ரோகி மதியழிந்து மாற்றாரின் கைக்குள் ளானோன்
மீர்சாதிக் பாரதத்தின் சாபக் கேடு வதிபுலத்தை அழிப்பதற்கு வழியுஞ் சென்னான்
வருமிறுதிநாள்நரகப் பதிகொள்வோனே
1462

தீரன் திப்பு சுல்தான் காவியம் O31 O
நோக்கமிட்டார் கோட்டையினைத் தளகர்த் தர்கள்
நேர்ந்திருந்த சிதைவுகளை விழியுள் தாங்கித் தாக்குதலைப் பகற்பொழுதே உச்சி வேளை
தொடங்குவதாய் முடிவுகொண்டார் எவரென்றாலும் நோக்காத போழ்தஃதோ உணவு வேளை
நோவளிக்கும் தீச்சுடரைப் பெய்யும் வெய்யோன் வேக்காட்டைப் பொருட்டாகக் கொள்ள லாகா
மிகப்பொருத்தம் எனவெண்ணித் திருப்தி கொண்டார்
1463
மேமாதம் நான்காம்நாள் காலைப் போழ்து
மேகமூட்டம் வெளிறியது வைக றையைத் தாமாக வுணர்த்துகின்ற சான்றி னோடே
தகதகத்துக் கிழக்கிலொளிக் கிரணம் வீசும் தூமேவு நெஞ்சத்தின் அரக்கன் செந்நீர்த்
தாகத்தின் வெறியோடு கைய னைத்தும் காவோலை கொண்டுவெளிக் கிளம்பு வான்போல்
கதிரவனும் நெருப்பெரித்துக் காங்குல் மாய்த்தான்
464 பதிலெதுவுங் கூறாத நிலையில் திப்பு
பகைவர்களின் தாக்குதலை எதிர்பார்த்தாலும் புதிதாகத் தொடங்குகின்ற தாக்குதல்கள்
பகற்பொழுதில் நிகழாது எனநினைந்தார் முதலிருகால் "கொன்வாலிஸ்" யுத்தம் செய்ய
முனைந்ததுவோமாலையில்றான் அவ்வாறேதான் இதுமுறையும் நிகழ்ந்திடுமென் றெதிர்பார்த்தார்பின் எண்ணியது வேறுவிதமாகிற் றாமே
1465 நிறைந்தபெரும் படைவெள்ளை யோர்தம் சார்பில்
இந்தியரோ பலதிறத்தார் அதனில் சற்றுக் குறைவதாகும் ஒன்றித்தார் காலை தத்தம்
காப்பரண்களுள்ளிருந்தே பகலை நோக்கிக்

Page 168
ஜின்னாவூர் ஒரிபுத்தீன் O312 o
குறியானார் அனைவருக்குங் குடிக்கக் கள்ளுங்
காரமிகு மதுவகையுங் கொடுத்தார் நேரம் அறியாது கழிந்ததுவே வீரர் நெஞ்சுள்
ஆனவுணர் வாயிரமாம் அறிவார் யாரோ!
1466 சுட்டெரிக்குஞ் செஞ்சுடரின் வீச்சினாலே
திக்கெட்டும் பற்றிக்கனல் கொட்டு மாப்போல் உட்டிணத்தின் கோரக்கை ஓங்கிநிற்க
உணவுகொண்டார் திப்புமன்னர் படைப்புலத்தார் திட்டமவர் அறியாரே எதிரிக் கூட்டர்
தமைத்தாக்கக் குறித்ததந்தப் பொழுதா மென்றே விட்டகன்ற நிலையவர்க்கோ ஆயுதங்கள்
வரித்திடவும் போதாத நேரமஃதே
146ア கோட்டைமதில் வெளிப்புறத்தே நேரம் நோக்கிக்
காத்திருந்த பறங்கியரின் வீர ரொன்றி வேட்டைக்குப் பதுங்குகின்ற ஞமலி யொக்க வாள்வேல்கைத் துப்பாக்கி சகித ராக நீட்டுகுழல் பீரங்கி முற்புறத்தை
நோக்கிடுவாறிருக்கவொவ்வோர் நிமிடம் எண்ணி மாட்டாதோ ஆணையொலி செவியுட் சேர
மோதலுக்காம் எனவெண்ணிப் புலன்கூர் செய்தார்
1468 “வாருங்கள் என்வீரத் தளகர்த்தர்காள்
வந்தென்னைத் தொடருங்கள் நீங்கள் வெள்ளைப் போர்மறவர் எனநிறுவ” என்றே கூவிப்
பதுங்குகுழிதனிலிருந்து கோட்டை நோக்கி ஒருருவம் ஓடியது வாள்கையேந்தி
உடன்பட்டார் காத்திருந்தோர் வெறிகொண் -
டோராய்த் தார்கொள்ளத் தவித்தமன "பெய்த்தின் ஓசை
தாமதுவாய் இருந்ததது தேர்ந்திட்டாரே
469

தீரன் திப்பு சுல்தான்காவியம் O313D
வான்வெடித்துப் பிளந்ததெனும் ஓசை யோடு
வெடியுண்டை தாக்கினவே கோட்டை மீது பூண்டதென்ன நிலைமையென உள்ளிருந்தோர்
புரிந்ததுமே புயம்புடைக்கப் போருக் கானார் தீண்டவரும் நச்சரவைத் தடுத்த லொக்குந்
தன்மையைத்தான் கொண்டிருந்தார்திப்பும் என்ன தோன்றியதோ யாரறிவார் துணிந்தார் சாவின்
துணைவரினும் எதிர்ப்பதெனத்திடங்கொண்டாரே
147Ο
நவீனயுத்த ஆயுதங்கள் நாற்புறத்தும்
நாடலுறும் தொடர்ந்துவெடி ஓசை பீறும் செவிசெத்துப் பிழைத்தெழுந்து மீண்டுஞ் சாகும்
செந்தழலும் வெண்புகையும் களத்தை மூடும் குவிந்துவந்த படையெதிர்ப்பால் சிதறியோடும்
கண்டகண்ட இடமனைத்தும் பிணங்கள் சாயும் புவிகுருதிப் புனலாலே செம்மை யாகும்
புகலவொண்ணாப் பேரழிவே போரின் பேறாம்
471
ஓரணியாய்த் தொடர்ந்தூரும் பீரேங்கிக்குள்
உள்நுழையும் குண்டுகளோ ஒவ்வொன்றாக வீறுகொண்டு கோட்டைமதிற் சுவர்கள் மீது
விண்ணதிரும் ஒலியெழுப்பி மோதுண் டின்னும் நீறாகா திருந்தவிடந்தன்னை தூர்த்து
நேசப்படை யுள்நுழைய இடமளிக்க வேறுவேறாய்ப் பலதிக்கும் நுழைந்தார் சென்றோர்
வேறுவேறாய் உடலரியப் பினமாய்ச் சாய்ந்தார்
1472
செஞ்சட்டைக் காரர்வெண் பறங்கிப் பேர்கள்
சேர்ந்துவந்த மற்றவர்தம் நாட்டு டையில்
அஞ்சாத திப்புமன்னன் போர்வீரர்கள்
அணிந்திருந்தார் புலிபொறித்த உடைகள் வேறாம்

Page 169
ஜின்னாவூர் லுரிபுத்தீன் O3140
பஞ்சிலிட்ட பொறியதனைப் பொசுக்கல் போல
பாய்ந்துவந்த பெரும்படையைப் புலிபொறித்தோர் தஞ்சமுறச் செய்தார்மண் துவட்டி வாளின்
தீராத பசிக்குணவு தந்திட்டாரே
1473
பெருநெருப்புத் துண்டங்கள் வருவோர் மீது
பாய்ந்துவந்து சுட்டெரிக்கும் கோட்டை கொண்ட புறமிருந்து வருவதவைதிப்பு வீரர்
பாய்ச்சுகின்ற சிற்றேவுகணைகளாகும் குறிதவறாதவையுயிரைக் காவு கொள்ளக்
கடுந்தூரம் பயணிக்க ஏற்றவாறு திறமுடைத்தாய்த் திட்டமிட்டு திப்பு செய்தார்
சரித்திரத்தில் முதன்மையது கூறு தற்கே
1474
வெள்ளையரின் படைவீரர் பழக்க மற்ற
வெய்யோனின் சுடர்தாங்க மாட்டா ராக கொள்ளியிடைப் பட்டபுழுத் தவித்த லொக்கக்
கருகினரே அணிந்திருந்த உடைகள் வேர்வை வெள்ளத்தால் நனைந்துவுடல் உபாதை சேர்க்கும்
வகைசெய்யத் திணறிடினும் உட்பு குந்த கள்நெருப்பால் தெம்புற்றார் தொடர்ந்தும் சென்றார்
களைப்புண்ணா வாறதுவுங் காத்ததன்றோ
1475
கோட்டைதனை அண்மித்தார் தாக்கு தற்குக் குறியான புறம்பெரிதாய் வாய்பிளந்து வேட்டையரை வரவேற்றுநின்ற தொப்ப
வழிகாட்டும் வெள்ளையர்கள் உள்நுழைந்தார் ஆட்டுமந்தை தொழுவத்தின் வாயினுடே
அடிபிடிசெய் தோடுகின்ற நிலைமை போலாம் காட்டெருமைக் கூட்டமது கள்ளுண் போதை
கொண்டதனால் செருக்கேறித்துள்ளிற் றன்றோ
1476

தீரன் திப்பு சுல்தான்காவியம் O315)
வந்தவரை எதிர்கொண்டார் மைகர் வீரர்
வேங்கைகளாய்ப் பிய்த்தெறிந்தார் அப்போழ் தாங்கே சிந்தியதோர் ஆணைவெள்ளைப் பறங்கியர்பால்
திசையிரண்டில் வலமிடமாய்ப் பிரிந்து கோட்டைச் சொந்தமென வானமதில் மீது தாவச்
செய்தார்கள் கட்டளைக்குப் பணிந்த பேர்கள் உந்தினனே யொருவெள்ளை வீரன் கையில்
உடன்கொண்ட கொடியோடு நட்டி னானே
1477
பகலுணவையுண்ணக்கரம் பற்றும் போது
பெற்றாரோர் செய்தியினைத்திப்பு சுல்தான் மிகநெருக்க மானவரும் நம்பிக் கைக்கு
மாறுசெய்யாப் மெய்யருமாந் தளகர்த் தர்தம் அருமைநண்பர் செய்யத்கப் பார்குண் டொன்றால் அழிவுக்குள் ளாகிவிட்ட சேதி யஃதாம் பெருமதிர்வு கொண்டதுளம் சோகத் தாலே
பாதியுடற் பலமழிந்த பாங்கி லானார்
1478
மாற்றாரின் படைபுகுந்த கோட்டைப் பக்கல்
மின்னலொடு கூடியிடி தொடர்ந்தே ஆர்க்குஞ் சீற்றத்தின் பேரொலிபோல் திசைக ளெட்டுஞ்
சென்றடையும் காற்றதற்குத் துணைக்கை சேர்க்கும் சாற்றுதற்கு மாட்டாதே யுத்த வேகம்
செங்குருதிப் பொழிவாலே பூமி தோய்ந்து மாற்றமுறும் சுயமற்றுச் சகதியாகி
மண்செவ்வான் போர்வைகொண்ட போலு மாகும்
1479
குதிரையொன்றின் மீதமர்ந்து காற்றில் தாவி
கெடுவாளைக் கையேந்தித் திப்பு சுல்த்தான்
எதிர்ப்பவரை எதிர்த்துப்போர் ஏற்ற லோடும்
இடைபுகுந்தும் எதிரிகளை வாளுக் கீந்து

Page 170
ஜின்னாவூர் ஷரிபுத்தீன் O3160
புதுப்புதிதாய்த் திசைமாற்றிச் சுழன்று சுற்றிப்
படைகளுக்கும் ஆணையிட்டுப் புலியதாகக் கதிகலக்கி எதிரிகளைச் சூறையாடும்
காரியத்தைத் தமதாக்கிக் கொண்டிருந்தார்
148O
வெள்ளையர்கள் கைத்துவக்கின் வரிசை காட்ட
வாள்வீச்சின் வலிமையினைத்திப்பு வீரர் எள்ளளவுங் குறையாதே எதிர்த்துத் தாக்கி
இருந்தவிடந்தனில்துடித்து மாளச் செய்தார் வெள்ளமெனப் புகுந்தார்கள் வந்தோர் மீண்டும்
வருவோர்கள் வருமுன்னே வந்த பேர்கள் உள்ளவுயிர் பறியுண்டு நிலத்திற்சோர
உடல்களினால் பிணக்காடொன்றுருவாகிற்றே
481
வெற்றிக்காம் அடையாளம் அவர்தம் நாட்டில்
வழங்குகொடிதனையேற்றல் அதனைச் செய்தோன் பெற்றமகிழ் வரைநிமிடப் போழ்தே மற்றப்
பாதியிலே வெட்டுண்டு தரைபு ரண்டான் பற்றியதோர் செய்திதிப்புப் படைப்பேர்க் குள்ளே
படைஞருக்குச் சம்பளப்பொன் கொடுப்பதாக பற்றவைத்தான் மீர்சாதிக்பழிப்பேர் கொண்டோன்
பாவிவிரர் புலனழிக்கப் பொய்யுஞ் சொன்னான்
1482
திட்டமிட்டுச் செய்ததந்தச் செயலாம் போரின்
திசைதிருப்பத் தருணத்தில் செய்வதென்றே கெட்டகுணத்தார்நன்றி கொன்று நாயின்
கேடான கோடரிக்கை குலத்திற் கீனன் ஒட்டியவனோடுடின்னும் பலரிருந்தார்
உதவினரே அவன்பணிக்குப் பரப்பிச் செய்தி எட்டவைக்கத் திக்கனைத்தும் எச்சில் உண்டோர்
ஈடுசெய்ய இயலாத இடராகிற்றே 1483

தீரன் தியு சுல்தான் காவியம் O317)
சேதமிரு புறத்தினிலும் சொல்ல டங்காத்
தொகையதிகம் படைபலத்தால் தாக்க வந்தோர் மீதமிருந்தோர்தொகையோ மைகர் வீரர்
மிகக்குறைவே முதலில்முனை யாண்ட போதும் ஏதுமிகக் குறைந்ததவர் வெற்றியின்பால்
என்றுணரப் பின்னடையும் நிலைமை தோன்றப் பாதியிற்றன் பொருதுதலைத் தவிர்த்த கத்தே
புகமுனைந்தார் வீரர்தம் பலத்தைக் கூட்ட
1484 ஒரேசுழலில் சுழன்றேதன் பரியைத் தட்டி
ஓடவிட்டார் கோட்டையின்வாய்ப் புறத்தை நோக்கி அருகடைந்து வாயில்காப் போனை நோக்கி
ஆணையிட்டார் தாழகற்ற செவியுட் கொண்டும் ஒருவினையுஞ் செய்யாது கல்லாய் நிற்க
உதவியற்ற இக்கட்டுள் திப்பாளாகிப் புரியாத கனியத்துள் திகைத்து நின்றார்
பாவியவன் செய்கையினால் பெருங்கே டொன்றும்
1485
கைக்கூலி பெற்றவரின் கைக்கூலிக்குக்
கைப்பட்ட கடையனந்தக் காவலாளன்
தக்கநிலை கண்டுபெற்ற கைப்பிச் சைக்குத்
தக்கபடி செயற்பட்டான் இழிகு லத்தோன்
செக்கொடிந்து நெய்சிதறிப் போன தொக்கத்
தேட்டமுற்ற அத்தனையும் மண்ணாய்ப் போன
நிர்க்கதிக்குள்ளானாரே திப்பு சுற்றி
நெருங்குகின்ற பகையுணர்ந்தார் நிலைமாறிற்றே
1486
வேரறுந்தநிலைமைகர் வீரருக்கு
வந்திடினும் மன்னரரு கிருந்ததாலே கோரவெறிகொண்டார்கள் மண்ணைக் காக்கக்
கொற்றவனின் உயிர்காக்கக் கடமை யோர்ந்தே

Page 171
ஜின்னாவூர் லுரிபுத்தீன் C318)
நேராத நிலையவர்க்கு முன்ன ரென்றும்
நம்பியவர் கேடுசெய்த காரணத்தால் போர்த்திறமும் நெஞ்சுரமுங் கொண்டிருந்தும்
பகைவர்தம் சூழ்ச்சிக்குப் பலியுண் டார்கள்
1487 பொறியிலகப் பட்டதந்தப் புலியி னோடு
பொருதுவீரர் பலருமதிலொன்றினார்கள் எறிசரத்தின் கொள்ளையொடும் எரிகுண்டிற்கும்
ஈடுகொடுத்திடுமோர்பேர் இடும்பைக் குள்ளே வறுமையுற்ற தன்னவரின் வேகம் தம்பால்
வீரர்தொகை குன்றியதுங் காரணம்மாம் சிறுதொகைதான் எஞ்சிநின்றார் சொற்பப் போழ்தே தாங்கிதாம் அந்நியர்க்கு தரைசாய்த் தற்கே
1488 இறுதிநிலை இதுவேதான் இனியொன்றிற்கும்
இடமில்லை எனுமெண்ணுஞ் சொற்பத்துக்குள் குறிதவறா தொருவன்றன் கைத்துப் பாக்கிக்
குதிரையினைப் பின்னிழுத்தான் பற்றிற் றஃது பறந்துவந்த குண்டுதிப்பின் உடலைத் தாக்கப்
படையிடையே யவர்சரியப் பரியின் மீது குறிவைத்துச் சரமாரி யாகச் சுட்டான்
குதிரைதன் கால்மடித்து நிலத்தே வீழும்
1489 அடையுண்ட மைகரின் வீரர் மீது
ஆங்குநிறைந் திட்டபெரும் வெள்ளைக் கூட்டம் தொடராகத் துவக்குண்டை சொரியச் செய்யச்
சாவுண்டு களம்பினத்தால் நிரம்ப லாகும் வெடிகொண்டு சரிந்தாலும் வீரர் திப்பு
வீழாது மீண்டுந்தன் உடல்நிமிர்த்திப் பிடியுண்ட வாளுடனே எழுந்துநின்றார்
புண்ணுண்ட உடல்தளர்ந்தே சோர்வு கொள்ளும் 1490

தீரன் திப்பு சுல்தான்காவியம் O39D
தூரத்தேமன்னர்நிலை கண்டோர் வீரன்
தன்னுயிரை நோக்கானாய் அருகில் வந்து
மாரனைத்துப் பல்லக்கில் ஏறு மாறு
மன்றாடி னான்மன்னர் உயிரைக் காக்க வீரத்தின் மொத்தவுருதப்பியோட
வேண்டாராய் மறுத்தாரவ் வேளை நோக்கி மார்பகத்தைத் துளைத்ததொரு குண்டு மன்னர்
மருமத்தைப் பிளக்கவவர் மேலுஞ்சோர்ந்தார்
1491 குருதியுடல் கொப்பளித்தே உடைந னைக்கக்
குண்டுதுளைத் திருந்தவடு கொடுநோ செய்யச் செருக்களத்தில் தனித்திட்டார் உடல்காப் போரும்
தம்முயிரை மன்னனுக்காய் இழந்த காலை அருகொருவன் வந்தவர்தன் அரையைச் சுற்றி அணிந்திருந்த கற்பதித்த வாளைப் பற்றி உருவுவதைக் கண்ணுற்றார் திப்புகைவாள்
ஒருநொடிக்குள் சுழற்றவவன் வெட்டுண் டானே
1492
வடுவுண்ட போதினிலும் கையிருந்த
வெள்ளையனின் துப்பாக்கி கைப்ப லத்தால் நொடிப்பொழுதுள் இயங்கியதே திப்பு சுல்தான்
நெற்றியினைக் குறிவைத்தே தாக்கிற் றன்றோ கடல்கடந்து வந்தவனைக் கால்பதிக்கக்
கொடாதிருக்க இறுதிவரை பாடுற்றோரைக் கடல்கடந்து வந்தவனே கொன்றான் அந்தக்
கயமைக்குக் கைகொடுத்தோர் குடிகள் தாமே
1493
ஞானத்தின் பிம்பமென விரிந்த கன்ற
நெற்றியினைத் துளைத்திட்ட துவக்கினுண்ைடை
மானமுள்ள மாவீரர் தம்மைச் சாய்த்த
மகிழ்சிகொண்ட தாமதுவாய் உள்ளே புக்கி

Page 172
ஜின்னாவூர் லுரியுத்தீன் O320
வாழுமொரு தியாகியினைக் கொன்ற தாலே ஈனமுற்றதாகியது வெள்ளை யர்க்கு
1494 பற்பலவாய்ச் சமர்க்களங்கள் கண்ட தோள்கள்
பன்நூறு சிரங்களினைக் களைந்த கைகள் அற்பர்தம் சூழ்ச்சியினால் தனிமைப் பட்டே
அடலர்தம் குண்டுக்கன் றிரையுமாகி வெற்றுடலாய் உயிரற்றே வீழ்ந்த காட்சி
வெறுத்தாரும் வருந்துகின்ற வாறதாகும் சிறுத்தையினை நரிகளென்றிக் கொன்ற தொக்குந்
தன்மைத்தாம் சொற்களிலே வடிக்க வொண்ணா 1495 துரோகிக்குக் கிடைத்த தண்டனை
முடிந்தவரை தோல்விக்குக் காலாய் நின்று
வீரர்களைத் திசைதிருப்பிப் பறங்கியர்க்குத் தொடர்ந்துதவி செய்தீற்றில் திப்பு வாழ்வு
தூர்ந்திடச்செய் தான்சாதிக் மன்னனாக்கக் கொடுத்திருந்த வெள்ளையரின் வாக்கை நம்பிக்
கேடுற்றான் இறுதியிலே கொலைவாய்ப் பட்டான் படைத்தவனின் தீர்ப்பென்றும் பழுது போகா
பாவிகளை இருமையிலுந் தண்டிப் பானே
1496
சுல்தானின் அந்திமநாள் மட்டும் தன்னைச்
சேவைக்காய் அர்ப்பணித்த தேசப் பற்றன் வல்லபெரும் வீரனுயர் மறவன் மன்னர்
வெற்றிக்குத் தோள்கொடுத்தோன் "ராம -
கிருஷ்ணன்"

ஜின்னாளுர் லுரிபுத்தீன் G320
கொல்லுதொழிலியற்றுகையில் இறுதிப் போரில்
கூடிவந்த வெள்ளையரால் தாக்குண்டானே இல்லையினி வாழ்வென்னும் இறுதிப் போழ்தில்
இலாதொழித்தான் கொடியவனை என்றும் -
வாழ்வான்
1497 போரினிலே வெள்ளையர்கள் வெற்றி கொண்ட
போதினிலும் சுல்தானைத் தேடிக் கொல்லுங் காரியத்தில் கண்ணானார் மீர்சாதிக்கைக்
கூட்டியெங்குந் தேடலுற்றார் ஓரிடத்தில் பாரியமெய்ப் புண்ணுண்டு "ராம கிருகஷ்ணன்"
பரிதவிக்கும் நிலைகண்டுங் கானாதுற்றார் “மீர்சாதீக் ஐயா!"வென்றோலங் கேட்க
முற்றுமவர் திரும்பினரே அருகிற் சென்றார்
1498 அறிந்துகொண்டான் மீர்சாதிக் யாரா மென்று
அருகோடிச் சென்றான்மெய் அறியும் நோக்காய் ஒருக்காலும் பிரியாதான் மன்ன ரோடே
ஒன்றியெங்குஞ் செல்பவனாம் என்பதாலே உரைப்பாய்நீசுல்தானெங் குற்றா ரென்றே
பொறுப்போடு காப்பவன்போல் உடலைத் தூக்கிப்
பேசுவதைச் செவிமடுக்க முயன்றிட்றானே
1499 “உங்களைத்தான் தேடிநின்றார் இறுதி வேளை
உடனவரைப் பாருங்கள்” என்ற வாறே அங்கையிடை மறைத்தெடுத்த குத்து வாளை
அடிவியிற்றில் பதித்திழுத்தான் ராமகிருகூடினன் “எங்குஅவர் சென்றாரோ அங்கே நீயும்
அடைந்திடத்தான் வேண்டும்நீ இன்றே செல்வாய் சங்கைமிகு மனிதருக்குத் துரோகம் செய்தாய்
சன்மானம் பெற்றுக்கொள்” எனவாய் சொல்லும்
15OO

Page 173
தீரன் திப்பு சுல்தான் காவியம் O322 O
புண்ணுண்ட அடிவயிற்றைக் கையால் பொத்திப்
புலன்திருப்பி வெள்ளையர்பால் உதவி வேண்டி மண்புரண்டு கதறியுடல் துடித்தான் சென்னிர்
மண்நனைத்துத்தன்பவத்தைத்தீர்த்துக் கொள்ளும் திண்னமிவன் சாவதெனும் திடத்தாலுற்றோர்
சிறிதேனுங் கவலையற்றே மீர்சாதிக்கைக் கண்ணெடுத்தும் பாராராய் விட்ட கன்றார்
கழன்றதொரு பீடையெனும் கருத்தினோடே
15O1
ஆட்சிபெறும் ஆசைகொண்டு சொந்த மண்ணின்
அழிவுக்குக் காரணனாய் ஆகி ஈற்றில்
தீராத பழிகொண்டான் வாழ்வைக் கொன்றான் வீழ்ச்சிகொண்ட போதினிலும் வீரர் சுல்தான் வரலாற்றில் பதிவுண்டார் தியாகியாக மீழ்ச்சிக்கு வழியில்லை துரோகியர்க்கு
மறுவுலக வாழ்வினிலும் பாட மாகும்
15O2 சீரங்கப்பட்டினத்தின் தெருக்கள்
சீரங்கப்பட்டினத்தின் தெருக்க ளெல்லாம்
செத்தழிந்த பிணக்குவியல் சொல்லில் மாளா ஆரெவரென்றில்லாதே அனைத்தும் மாய்ந்த
ஆவியற்றவுடலங்கள் ஒன்றோ டொன்றாம் மார்பினிலுந் தலையினிலுங் குண்டு தாங்கி
மன்னவரின் உடல்கூட மரித்தோருள்ளே ஒர்படைச்சிப் பாயொக்க வீழ்ந்திருந்தார்
ஒருவருமப் போழ்ததனை நோக்கிலாரே
15O3

ஜின்னாவூர் ஷரியத்தீன் C323 o
வெற்றிகொண்ட வெறியர்கள் வீராவேச
வெறிகொண்டு வெற்றியினால் வாய்கு ரைக்க சுற்றியெங்கும் ஓடியோடிக் குதுக லித்தார்
செவிசெவிடா யாகிற்றே கூச்சலாலே அற்பர்கள் துணைசெய்தார் தமது மணணை
அன்னியனின் பிடியுளகப் பட்டு வீழ வெற்றியின்பால் பங்கிருந்தும் பேடியோர்கள்
வரித்தென்ன! வெள்ளையரே பலன்கொண்டார்கள்
15O4 பினங்களொடு பினமாக பிணத்தின் கீழே
பின்னியடி வீழ்ந்திருந்தார் திப்பு காணார் கனப்பொழுதுள் வந்ததொரு கட்ட ளையுங்
கொன்றொழிக்கு மாறெதிர்ப்போர் தம்மை யென்ன வினைதொடர்ந்த தாம்தப்பியோடினோரும்
வாளுக்குந் துவக்குக்கும் பலியானார்கள் குணமற்ற குடிவெறியர் மாதர் பாலும்
குற்றமிழைத் திட்டபெரும் கொடுமை தீதே
5O5 வெள்ளையரின் படைப்பிரிவுத் தலைவன் தம்மோர் வழிதொடர வெள்ளைநிறப் பதாகை யோடே உள்நுழைந்தான் மாளிகைக்குள் வரவொட் டாது
உடன்தடுத்தார் மூவரிளஞ் சிறுத்தை போன்றோர் பிள்ளைகளாம் திப்புமன்னன் பேர்பொய்க் காதார்
பிறப்பிருந்தே பயமென்பதறியா ரன்னோர் வெள்ளையனோ அதிசயித்தான் வீராங் கண்டு
வினவினனே யாருள்ளேயுள்ளாரென்றே
15O6 தாழகற்ற மாட்டோம்நாம் தந்தை யானை
தவிர்த்தென்றார் "அன்ை”வெள்ளைத் தலைவன் மிக்க தோழமையாய் உங்களுக்குச் சிறிதென்றாலுந்
துன்புவரா வாக்களித்தேன் என்னை நம்பித்

Page 174
தீரன் திப்பு சுல்தான்காவியம் O324D
தாழகற்றப் பணியுங்கள் எனவும் வேண்டத்
தமதுநிலையுணர்ந்தவராய் வாக்கை நம்பி ஊழியரை ஆணையிட்டார் அவருஞ் செய்தார்
உள்நுழைந்தார் பறங்கியர்கள் ஒன்றுங் காணார்
15O7 திப்புவைத்தம் குறியாகக் கொண்டு வந்தோர்
தேடியெங்குங் காணாத நிலைமை கண்டு செப்பினனே யொருவனொரு தகவல் போரில்
தான்வாயிற் புலமவரைக் கண்டே னென்றே செப்பியசொல் செவிமடுத்தார் சொன்ன திக்கில் தேடிடவுஞ் செய்தார்கள் நீண்ட போழ்து மெய்ப்பட்ட தாமவனின் வார்த்தை கண்டார்
மெய்ப்பாது காவலனாம் "காஜாக் கா"னை
15O8 குற்றுயிருங் குறையுயிரு மாக வீழ்ந்து
கிடந்தவனை கண்டவர்கள் அருகிற் சென்று கொற்றவரின் நிலையென்ன என்றார் கேட்டுக்
கதறினனே வாய்விட்டு "சுல்தான்” என்றே அற்பர்களோ விடவில்லை ஆவி போமுன்
அறிந்திடவே தவித்தார்கள் இறுதி வேளை நற்பயணம் ஏற்கட்டும் என்றே எண்ணி
நீட்டினனே கரத்தைமன்னர் கிடந்ததிக்கே
15O9 படைத்தலைவன் ஹேரிஸ்முன் ஒடிச் சென்று
பக்கத்தே மண்டியிட்டு முடிவுங் கொண்டான் அடுத்தகணம் "இந்தியாவைப் பிடித்து விட்டோம்"
என்றனனே மகிழ்ச்சிபொங்கக் கொக்க ரித்தான் விடிதல்கண்ட பேருவகை இனிமேல் எந்த
வழித்தடையும் இல்லைக்கல் அகன்ற தென்னும் திடங்கொண்டான் தண்வாழ்வின் தண்மணன் னிற்குச்
செய்தபெரும் தொன்ைடென்றே எண்ணி னானே 151Ο

ஜின்னாவூர் ஷரிபுத்தீன் C325 o
கண்டெடுத்த உடலத்தை அரண்மனைக்குக்
கொண்டுவந்தார் குடும்பத்தார் அடையாளத்தைக் கண்டுசொல வேண்டுமெனுங் காரணத்தால்
குருதியினால் குளித்திருந்த தவர்தம் மேனி கண்டார்கள் நான்குதுளை வாயில் மெய்யில்
குண்டுதுளைத் திருந்தவடு மார்பு நெற்றி விண்டிருந்த தாமவையோ பாரதத்தின்
வீரவரலாறாங்கல் லெழுத்துப் போலாம்
1511 கொலைகளவு கொள்ளையென மறுநாட் காலை
கொடுமாட்சி நடந்ததெங்கும் மக்க ளச்சம் சொலவொண்ணா வாறாகும் கட்டிடங்கள்
தூள்துகளாய் உடைந்தனவே மக்களில்லம் பலவாறும் உடையுண்டும் தீயில் வெந்தும்
பகைவரின்கை யோங்கியதால் பலவுங் காணும் நிலங்கிடந்த பிணங்களுமாங் கிருந்த கோர
நிகழ்வுக்குத் துணைசெய்தல் போலு மாமே
1512 திப்புவின் இறுதிநாள்
ஆயிரத்தோ டெழுநூற்றுத் தொண்ணுற்றொன்ப
தாண்டுதிங்கள் “மே"நான்காம் நாளில் திப்பு காயவடுக் கொண்டுடலைத் துறந்தார் விண்ணோன் காலடிக்குத்தனையீந்தார் சொர்க்க வாழ்வின் தூயசுகங் காணுதற்காம் தனது வாழ்வைத்
தனியவனின் சேவைக்காய்த் தந்த தீரர் ஓயாது களங்கண்ட வீரர் நாட்டின்
இறைமைகாக்கத் தோள்கொடுத்த தென்நாட் டேந்தல்
1513

Page 175
தீரன் திப்பு சுல்தான் காவியம் C326)
தேசியநல் லுணர்வெழுச்சித் தலைவர் வெள்ளைத்
தேசத்தோர் தனையகற்றத் துணிந்த மன்னர் நேசக்கரம் நீட்டியவர் தம்மினோரை
நட்புரிமை யோடணைக்கத் துரோகஞ் செய்தும் மாசில்லாக் கொள்கைகொண்ட மறவர் வாழ்வை
மக்களுக்காய்த் தந்தபெருந்தியாகச் செம்மல் நாசகரால் கொலையுண்டார் நன்றி கொன்றோர்
நம்பிக்கைத் துரோகிகளால் வாழ்விழந்தார்
1514 மையித்தைப் "பீஸபீல"ர்க் கேற்றவாறாம்
முறையான கிரிகைகளைச் செய்தெடுத்து வைத்திருந்தார் மண்ணறைக்குப் பரிசாய் ஈய
வரலாற்று நாயகரை மைகர் மக்கள் தையலரும் ஆடவரும் தெருக்கள் தோறும்
தம்முயிரைத் தந்தார்போல் திரண்டிருந்தார் செய்வதினி யாதென்றுந் தேரார் வெள்ளைத்
தலைவனதை நிர்ணயிக்கும் சாபக் கேடே
1515
"சந்தூக்"கினுள்வெள்ளைத் துணியிரண்டாற்
சுற்றிவைத்த உடலமது பிறர்க்குப் போலாம் எந்தவித மாற்றமுமே இலாதிருந்தும்
இடைப்பட்ட சரீரத்தின் சொந்தக் காரர் இந்தியரின் தன்மானங் காத்துநின்ற
இணையில்லாப் பெருந்தலைவர் திப்பு வேந்தர் வந்தாளத் துணிந்தவரை எதிர்த்த வேங்கை
வரலாற்றில் சுதந்திரத்தின் முதன்மை வீரர்
1516
உயிர்பிரிந்த போதுமவர் வதனம் முன்போல்
உயிருடைத்த பாங்கினிலே வீரஞ் சொட்டத்
துயில்வதுபோல் தானிருந்ததாகும் குண்டு
துளைத்தநுதல் வடுவீரத் தழும்பினோடே

ஜின்னாவூர் லுரிபுத்தீன் C327)
உயர்ந்திருந்த மார்பகமோ என்றும் போலாம்
எனக்குநிக ரெவருமிலை எனச்சொல் வாம்போல் புயங்களுமஷ் வாறுரைத்த பொலிவைக் காட்டும்
பெருங்குன்றம் சாய்ந்ததுபோ லிருந்த தாமே
1517
வெள்ளைப்படைத் தலைவர்தம் வீரர் சூழ
வந்திருந்தார் திப்பரசர் உடலத்திற்கு உள்ளமரியாதையுடன் அடக்கம் செய்ய
உடன்பாட்டை கேட்பவராய் மகனுரைப்பார் “உள்ளதென்ன கெளரவமாம் நீங்கள் செய்தல்
உயிர்பறித்த பேர்களென நீரிருக்க உள்ளதினியொன்றுமிலை அடக்க மொன்றே
ஊரதனைச் செயுமுமக்கு நன்றி யென்றே
1518
“பகைகொண்டீர் யுயிர்தன்னைப் பறிப்பதற்காய்ப்
பகலிரவாய்ப் பாடுபட்டீர் பறித்துக் கொண்டீர் இகவாழ்வைப் பிரித்தபின்னர் சடலத்திற்கென்
இறுதிமரியாதையினி வேண்டும்” என்ன "பகைதிப்பு மீதினில்தான் உடலோ டல்ல
பெருவீர ரவரென்பதறிந்த வுண்மை செகம்போற்றும் பெருமகனாம் என்பதாலே
சங்கைசெய்தல் எங்கள்கடன்" எனவுரைத்தார்
1519 பெரியவர்கள் எடுத்துரைத்தார் நிலைமை நோக்கி பொறுமைக்கு வாழ்வளிக்க மகனும் ஏற்க உரியபடி யத்தனையும் நடந்த தாங்கே
உன்னதப்போர் வீரருக்கா யானதாகும் சிரந்தாழ்த்திச் சிறுபொழுது நின்றார் கையைத்
தலைவரையும் உயர்த்தியுடல் நிமிர்த்தி மீண்டும் கரந்தாழ்த்தி விறைத்துநின்றார் அவர்கள் சார்பில்
காட்டுகின்ற முறைபேணிக் கொளரவித்தார் 152O

Page 176
தீரன் திப்பு சுல்தான் காவியம் O328)
வெண்பட்டுத் துணிகொண்டே அலங்கரித்த
வெள்ளிப்பல் லாக்கொன்று "சந்தூக்" கைத்தான் கொண்டுசெலவுள்ளேனென் பெருமை மீறிக்
காத்துநிற்ப போல்மாளிகைமுன் நிற்கும் கண்ணுண்பாரில்லையதைக் கருத்து முற்றுங்
காவலனின் பாலுற்ற காரணத்தால் வின்ைமணியும் மெல்லமெல்லச் சரிய லானான்
வேதனையின் வாய்ப்பட்டான் போல வாமே
1521
பள்ளிகளில் திருமறையின் ஓசை யோங்கும்
பேரோலியில் மணியொலிக்கும் கோயில் தோறும் வெள்ளைநிறப் பதாகைகளால் வீதி சோக
வயப்படுமால் காட்சிதரும் விதியை வெல்ல உள்ளதொன்று மில்லையெனுஞ் சத்தியத்தை
உணர்த்துவபோலத்தனையும் நடந்த தாங்கே கொள்ளிடமோ இலையென்னு வாறாய் யூரே
கூடியெஃகி நின்றதொரு புதுமை யாமே
1522 பல்லக்கில் சந்தூக்கை வைக்கு முன்னர்
பார்ப்பவர்கள் பார்பதற்கு ஏதுவாக எல்லோரும் இருநிரையில் வகுந்துநின்றார்
இடங்கிடையாப் பேர்களதில் அதிக மாகும் நில்லாதீர் போங்களென்ற ஒலியை வாங்கி
நின்றவர்கள் நின்றார்கள் நினைவற்றோராய் செல்லமன மற்றநிலை அனைபேருக்கும்
தலைவனைநாம் காண்பதினி இல்லை யென்றே 1523 அள்ளியள்ளி வழங்கியகை அகட்டின் மேலே
அசையாதே யொளிந்திருக்கும் வெண்து கிற்குள் உள்ளதெல்லாம் வெள்ளையர்கள் கொள்ளை யிட்டார்
ஒன்றுமில்லைத் தருவதற்கா மென்னும் பாங்கில்

ஜின்னவூர் லுரியுத்தீன் C329)
தெள்ளியபேரறிவினுயர் தீட்சண்யத்தைத்
துலங்கவைத்த விழியிரண்டும் இமைகள் மூட உள்ளுறைந்து போனதுவேன் நன்றி கெட்ட
உலகத்தை நோக்கவெள்கிப் போனதாலோ
1524 எவர்க்குமில்லா வாறுவெள்ளைப் பறங்கியர்கள்
இறந்தசுல்தான் உடலுக்கு வழமைக் கொப்பக் கவுரவத்தை அளித்தார்கள் தொடர்ந்தும் பின்னர்
காரியங்கள் அத்தனையும் நிறைவேறிற்றே சிவிகையிலே வைத்தவுடல் தனித்திருக்கத்
தூக்கிநால்வர் முன்செல்ல இரண்டாம் மைந்தன் பவனிக்கு முதலாகப் பின்னால் மற்றோர்
பின்தொடர்ந்தார் அரசமரியாதை சேரும்
1525 தொடர்ந்தார்கள் மந்திரிமார் அவர்கள் பின்னே தரத்திலுயர் பிரதானி மார்கள் சென்றார் அடுத்துவெள்ளைச் சிப்பாய்கள் அணிவகுத்தார்
அனைவருமே சிவப்புவெள்ளைப் படைக்கோ - லத்தில் மடைதிறந்த வெள்ளமெனப் பாயுங் கண்ணிர்
மழையிடையே பார்வைபொய்த் திரும ருங்கும் குடிமாந்தர் குரலெழுப்பிக் கதறினார்கள்
கோற்றவனே யென்றுன்னைக் காண்போ மென்றே
1526 தம்மினுயிர் தாங்கியவர் செல்லுகின்ற
சந்தூக்கில் செல்லுவதாய் ஆர்ப்பரித்தார் சும்மையங்கு ஆண்பெண்கள் மதச்சார் பற்றே
திரண்டிருந்த மக்கள்தொகை கடலா மன்ன வம்மியவர் சிறுதொகையாம் வெந்து நெஞ்சால்
6ITıpuJ6hJ LJ6ơTLDuffi(Bab 6ODLDöjů (86556oT இம்மையிலே தேடியவச் செல்வம் மக்கள்
இதயத்தைப் பிழிந்தெடுத்த பாசச் சாறே
1527

Page 177
தீரன் திப்பு சுல்தான் காவியம் O330
மண்புரண்டார் மார்பிலறைந்தார்கள் தம்மின்
முடிமயிர்கள் பிய்த்தெறிந்தார் உடைகிழித்தே புண்ணுண்டார் உடலத்திற்கேவிக் கேவிப்
பேரொலித்துச் செவிப்புலனைக் கருகச் செய்தார் கண்ணுண்டார் கோலத்தைத் தாமுங் கூடக்
கதறியழு நிலைகொள்ளச் செய்தார் யார்தான் எண்ணினரோ இலையஃது வாறோர் போழ்தும்
ஏற்குநிலை வருமென்றாம் மைகர் மாந்தர்
1528
மாலைவெயில் குளிர்ந்ததென்ன விந்தை வெய்யோன்
மழைத்துளியுட் கதிர்புக்கித் துறச் செய்தான் தூலவுடல் தாங்கியபொற் சிவிகை மீது
தூறாதே அவைதூறும் நனைக ளொப்பக் கோலமென்ன செப்புதற்குக் கருணை விஞ்சிக்
கோன்முதல்வன் காலத்தைச் சீத மாக்கிப் பாலித்தான் பேரருளைப் பாராளப்பேர்ப்
பதிக்குற்றன் பங்காற்றுஞ் சீர்மை போன்றே
1529 தாதையுடல் தாயினுடல் தாங்கும் மஞ்சம்
தனயனுடல் சேர்த்தொன்றித் தாங்கச் செய்ய வீதிவழிசுமந்துவந்தார் வெள்ளை வீரர்
வரித்தகுழற் துப்பாக்கி வானுயர்த்தி வீதியிரு மருங்கினிலுஞ் சிலைகளொப்ப
விறைத்துநின்றார் கவுரவப்பண் காட்டுஞ் சீராய் ஒதினரே மறைவசனம் “கும்பாஸ்" உள்ளே
உடலத்தை "இமாம்பெற்றார் அடக்கம் செய்ய
153O மாறிமாறிக் கைதாங்கிக் கொணர்ந்த சந்தூக்"
முன்னிருக்க வைத்ததன்பின் குடும்ப ஆண்கள் மாறாத சோகத்தை நெஞ்சுள் தாங்கி
முதலணியில் தமையிருத்திக் கொண்டார் மற்ற

ஜின்னாவூர் ஷரியுத்தீன் C331 o
ஊராளுமன்றிலிலே உயர்ந்திருந்தோர்
ஒன்றியவர் பின்னாலே தொடர்ந்தார் பின்னே போர்வீரர் படைத்தலைவர் போன்றோர் நின்றார்
பார்க்கக்கண் போதாதே பின்னால் சேர்ந்தோர்
1531 சாரிசாரி யாகமக்கள் தொழுகைக் காகச்
சேர்ந்துநின்றார் வரிவரியாய் ஒழுங்கு மாறாச் சீரினிலே "இமாம்"முன்னே சென்று நின்று
தக்பீரைச் சொல்லிக்கை யுயர்த்த வானைக் கூறிடுவதாகவொலிதிக்க னைத்தும்
தக்பீரின் பெருக்கெடுப்பால் திணறிப் போகும் கார்கொள்ளும் விண்முகடும் கவல்மிகுந்தே
கண்டமனுச் சோகத்தைக் காட்டும் வாறே
1532 தொழுகைநிறைவேறியதும் கைகளேந்தித்
தலையுயர்த்தி விண்நோக்கிக் கண்கள் சிந்த அழுதழுதே "இமாம் இரப்பார் எல்லாம் வல்லோய்
அழைத்தனைநீயுன்வசமாய் எமது மன்னர் களங்கமில்லாப் பெருமகனைக் காத்த ருள்வாய்
காரிருளில் தனித்துவிட்ட குழந்தை யானோம் உளமொன்றி இறைஞ்சுகின்றோம் வகுத்து வைத்த
உயர்சுவனப் பதிக்கவரை உவந்தேற் பாயே.
1533 மக்களுக்காய் வாழ்ந்திருந்தார் மக்கட் காக
முற்றுந்தனை அர்ப்பணித்தார் முதலோன் உன்றன் பக்கமவர் சாய்ந்தாட்சிதனைப்புரிந்தார்
பாரபட்சம் காட்டாதே பணிகள் செய்தார் முக்காலமும்மறிந்த முதலோன் நீயே
முடிவிலென்ன நாமறியோம் நீயே தேர்வாய் தக்கநலந்தந்தருள்நீதிப்பு சுல்தான்
தூயசுவன் சென்றடைய நீயே காப்பு 1534

Page 178
தீரன் திப்பு சுல்தான்காவியம் O332O பிராத்தனையும் முடிந்ததாங்கே அனைத்துப் பேரும் பொருந்துவதாய் “ஆமீண்”என்றுரத்துக் கூற சரித்திரத்தை ஆண்டபெருந் தலைவன் தேகம்
சமாதிக்குள் அடங்கியதே அடக்கம் செய்தார் இருந்தாலும் யானைபொன் ஆயிரந்தான்
இறந்தாலும் ஆயிரந்தான் என்பான் போல இருக்கும்போதிலக்கணமாய் வாழ்ந்தார் பின்னும்
இலட்சியத்தை மதிப்பவர்க்கு எடுத்துக் காட்டே
1534 மரியாதைக் காகவெனக் கோட்டை மேலே
மேல்முழக்கம் செய்ததுவாம் பெரும்பீரங்கி சரியாக நாற்பத்தி ஒன்பதாகும்
திப்புவின்வாழ்நாட்கால வருடங் கூற திருவளித்தார் ஏழையர்க்குத் தருமமாகத்
திப்புமன்னர் பேராலே யாவும் முற்ற பெருமழையும் புயற்காற்றும் தொடங்கிற் றெங்கும்
புரண்டோடும் வெள்ளமுமங்குடன்கூடிற்றிற்றே
1536
வேங்கையொன்றின் அகாலத்துப் பிரிவை எண்ணி
வான்மேகக் கூட்டங்கள் வீறாய் மோதித் தாங்கொண்ட கோபத்தைத் தணிக்க மின்னல்
துலங்கினவே அவைமுந்திச் சினத்தை பீய்ச்சும் ஓங்குபுயல் சுழல்காற்றும் நேர்ந்த கேட்டை
ஒப்பாதே தானுந்தன் வெறுப்பைக் காட்டும் பாங்கினிலி வீசியதாம் அற்றைப் போழ்தில்
பார்த்தவர்களுரைத்ததுவாய்ப் பதிவி லுண்டே
1537

ஜின்னாவூர் லுரியுத்தீன் C333 o போருக்குப் பின்
வீடு வீடென வலிந்து புகுந்துமே
வெற்றி கொண்டவர் தம்வசம் தேடு பொருட்களைச் சேர்த்தெடுத்தனர் தீமை பரவிய சூறையால் கேடு டுடைத்தநெஞ் சான கீழ்மகர்
கூடிக் கூடியே கைப்படு வீடு கொள்பொருள் விற்றுங் கைப்பணம் வாரிக் குவித்தனர் வீணரே
1538 அச்ச மிகுதியால் அழுது புலம்பியே
அன்னை கால்தனை அனைத்திடுங் கொச்சை பேசிடுங் குழந்தை கண்வழி கொட்டும் நீரையும் நோக்கிலார் இச்சை கொண்டவெண் ஈன ரோடவர்
இணைந்த சுதேசிக் "குக் கல்"களும் எச்சி லுண்டனர் இளமை கண்டதால் எண்ணிடில்பெருஞ் சோகமே
1539 காய வெம்பசிக் கீழ்மை போக்கிடு
கயவரோர்புறம் மறுபுறம் ஒய மாட்டிலார் உடைமை கூட்டிடும்
ஓர்மை கொண்டவர் ஊர்த்தெரு வாயல் கொண்டிடு கடைகளுடைத்தவர் விரும்பு மாறுள வனைத்தையும் வாயு வேகமொன்றாக வேபிறர்
வரிக்க முன்முண்டியள்ளினர்
154O பொன்னும் மணிகளும் பட்டு டைகளும்
பைகள் பைகளாய்ச் சேர்த்தவர் தன்னிற் றாங்கிய தோட்சு மைகளால்
தரைத வழ்ந்தனர் நடைகெட

Page 179
தீரன் திப்பு சுல்தான் காவியம்
முன்னர் கொண்டதை மறைத்து மறுமுறை
முயன்று முயன்றுமே பல்முறை கன்ன மிட்டனர் கள்வர் பல்கடல்
கடந்து வந்தவெண் பேய்களே
மாத ரணிகலன் மாலை கைவளை மேக லைசெவிக் குண்டலம் பாதக் கொலுசுகள் தண்டை சிலம்பொடு
பிறைநுதல்நகை மெட்டிகள் மோதி ரஞ்சிகை மாட்டி யட்டிகை
மிகைமி கையெணு மாறுதாங் கோதியள்ளினர் கவர்ந்த வையவை
கோதை யர்புறம் கடைமகர்
கறை யிற்பெருஞ் சூறை திப்புவின்
சொந்த மாளிகைப் பொருட்களே சூறை யிட்டவர் சொல்லில் வெள்குவர்
சொந்த மண்படு மாந்தரே கூறலாகுமோ கொள்ளை கொண்டவர் கவர்ண ரோடவர் கைக்கிளைக் கரும மாற்றிய பேர்களும்பொதுக்
கள்வ ராயினர் ஈனமே
வைர நகைகளும் வைர மணிகளும்
வரையிலாதவை டூரியம் துய்ய மாணிக்க மரகதங்கள்செஞ்
சுடர்தெறித்திடு கற்களும் துய்ய ஆழிமுத் தோடு கட்டிகள்
தங்க மாகும்பல் லாயிரம் செய்த கொள்ளையிற் சேருமா மாமவை
சொல்லிலடங்கிடாத் தேறலே
1541
1542
1543
1544

ஜின்னாவூர் லுரியுத்தீன் C33so
கோடி கோடியாய்க் கொள்ளும் விலையவை
குவியல் குவியலாம் அளவினில் தேடி வைத்தவத் திரவியம்மவர்
சொந்த மண்ணுயர் பணிசெய நாடி யாமது நாசகர்வசம்
நிலைத்த கேடென்ன கேடதோ நாடு போனபின் நிலைத்து மென்பயன்
நெறிப்படுத்திடாரில்லையேல்
1545
தொடர்ந்து நான்குநாள் தொடர்ந்ததாகுமே கருறை ஈதுதா மென்னுமால் அடங்கி டாரென அறிந்த கவர்னரும்
அடங்கி அடக்கிட ஆணையைத் தொடுத்தும் அன்னவர் தொடர்ந்தா ராசையின் சுவைய டிந்ததால் கடமையின் அடிப்படுத்திட ஆன தண்டனை
அடக்க வைத்தபின் அடங்கினார்
1546 சிலரைத் தூக்கினில் தொங்க விட்டனர்
செயலிலன்னவர் பேருளார் கலவரத்தினைக் களைய அன்றுநாள் கைப்படுத்தலஃ தொன்றுதான் பலித்த தாயினும் பவத்திலிருவரும்
பங்கு தாரரே கைவசம் பலமிருந்ததால் பதவி கொண்டவர்
பிறரை மாய்த்துயிர் காத்தனர்
1547

Page 180
தீரன் திப்பு சுல்தான் காவியம் O336D
வேறு
காவிரியைக் கடந்து" ஜெனரல் ஹேரிஸ்" செல்லக்
காரணனாய் "ஆஞ்சிசாமய் யா"விருந்தான் காவியவன் பாவத்தை "மாள வல்லி
கைநழுவக் "கமருத்தீன்" "திருமல் ராவே" தேவையுற்றான் வெள்ளையர்க்கு சுல்தான் பேட்டை தம்வசமாய்க் கொள்வதற்கு “மீர்சா திக்கின்" ஆவணசெய்தான்பகைவர் சீராங் கத்துள்
அணிவகுக்க அவரோடு இன்னுங் கூறின்
1548
கைநழுவி பெங்களூர்சென் றிடவும் செய்தான்
"கிஷ்னாராவ்" துரோகத்தால் அனைத்தில் மேலாய் துய்யவனாய் நம்பித்தன் தோழ னென்றே
சேர்த்திருந்த "பூர்ணையா" மாற்றான் உள்ளே கைகோத்து வரச்செய்தான் வீரர் தம்மை
கைப்பலமற்றிடவுமவன் செய்தான் இந்தப் பொய்யான உலகத்தில் நம்ப யாரும்
பாக்கியதை யற்றதனை நிரூபித் தாரே
1549
உடனிருந்து கொல்லுகின்ற வியாதி யொக்க
உடனிருந்தே துரோகத்தால் திப்பு வீரன் தொடர்ந்ததோல்வி எண்ணிடுங்கால் இந்தியர்கள்
தலைகுனிதல் போதாதே அதற்கும் மேலாய் உண்டெனினுங் கொண்டிடலாம் உரித்ததாகும் உலகவரலாற்றினிலே இதுபோல் வேறும் உண்டாமென்றானாலும் சிகரம் போன்று
உள்ளதிதே மறுப்பார்க்கோர் உளமே இல்லை
155O

ஜின்னாவூர் லுரிபுத்தீன் C337) போருக்குப் பின்மைமைகரின் ஆட்சி மாற்றம்
வெள்ளையர் சூழ்ச்சி யோடு வஞ்சகர் துரோகம் ஒன்ற தள்ளவொணன்னாத தோல்வி சீரங்கம் கொண்ட போழ்து வெள்ளையர் ருள்ளும் சேர்ந்து வினைக்குத்தோள் தந்தோருள்ளும் உள்ளத்தால் ஒன்ற மாட்டா ஒர்நிலை உருவாகிற்றே
1551 ஒருவரை ஒருவர் ஐய உணர்வுடன் நோக்கித் தம்பால் வருநிலம் கொள்ளைப் பண்டம் கொள்வதில் கண்ணாயுற்றார் தருவதாய் ஒப்புக் கொண்ட திருவொடு நிலத்தில் பங்கு தருவதில் சிரத்தை வெள்ளைத் தோலருக் கற்றதாலே
1552 தமதெல்லைப் புறத்தை யொன்றிச் சார்ந்தநல் நிலத்தைக் கொள்ளல் சமமாகப் பொருள்பி ரித்துத் தம்பங்கு எற்றல் என்ற அமைப்பினில் சற்றும் மாறா எண்ணத்தில் நிசாமி ருக்க எமகாத வெள்ளைப் பேர்கள் எண்ணமோ வேறொன்றாமே
1553 முன்னைய ஆட்சியாளர் முயன்றனர் பறங்கியர்க்கு என்னதான் செலவென்றாய்ந்தே ஈடுசெய்தாட்சி கொள்ள சொன்னதம் வாக்கு மாறிச் சேர்ந்தவரோடு பேச அன்னியன் வெலஸ்லி ஒப்பி அறியாது செயற்பட்டானே
1554 “ஜோசையா வெப்பே" என்பார் திட்டமொன் றுரைத்தார் அந்த யோசனை பத்தில் ஒன்றைப் புறந்தள்ளி மற்றோர் ஏற்கும் யோசனை என்றார் அஃதை ஏற்றிட வெலஸ்லி இல்லை நாசத்தின் பாலே நோக்கு நிலைபெற்றே இருந்ததாலே
1555 மற்றுமோர் திட்டந்தன்னை முன்வைத்தார் பூர்ண ஐயா உற்றதல் ஆட்சி திப்பு யுயிர்வழி மகர்க்காம் என்றே பெற்றிடச் செய்க மூத்த புதல்வர்க்காம் நாட்டில் ஆட்சி முற்றிலும் நிருவாகத்தை முஸ்லிம்கள் கொண்டா ரென்றார்
1556 ஆட்சி யில் மாற்ற மென்றன் றேற்பட்டே இந்து மன்னர் ஆட்சியைப் பெறுவ ராயின் அரசியல் சீர்மை தோன்றா நாட்படும் நிருவா கத்தில் நன்னிலை தோன்ற உள்ளோர் பாற்படு பதவி மாற்றிப் புதியபேர் கொள்ளி லென்றார் 155ア

Page 181
தீரன் திப்பு சுல்தான் காவியம் O3380
நிருவாகத் துறையி லன்றி நாட்டுடைப் பாது காப்பும் பெரும்பாலும் திப்பு மன்னர் தேர்ந்தளித் திருந்த பேர்கை இருந்ததால் தொடர்தல் ஒன்றே ஏற்றதாம் மைகருக்கும் பொருந்துமாம் முழுநாட்டிற்கும் புதுமாற்றம் பொருந்தா தென்றார்
1558 நாட்டுடைப் பெருநி லத்தை நிசாமொடு பிரித்துக் கொண்டு சாட்டினர் பங்க ளூரைச் சார்தசிற்றுரைத் திப்பு மாட்சிமைக் குரிய பாங்கர் மக்களுக் கவர்சார்ந் தோர்க்கும் கேட்பிலார் அற்ற போழ்தும் கருத்தினைப் பொருத்தாப் பாங்கே
伶559
கவர்னரின் முடிவாய் மற்றோர் கருத்துருக் கொண்டதஃது திவானாகப் பூர ணய்யாதமைக்கொண்டு முன்னைப் பேர்க்கே உவந்துவவ் ஆட்சி தன்னை உரித்தாக்க மைகர் நாட்டின் புவிப்புல நாப்பண் தம்மைப் பரம்பரை இந்து மன்னன்
156Օ மீதியாம் நிலங்கள் தம்மை நிசாமுக்கும் மற்றோ ருக்கும் போதிய தாகத் தம்பால் பொருத்தியே பகிர்ந்தளிக்க நிதிக்குப் புறம்பாம் செய்கை நயத்திலர் திப்பைச் சார்ந்தோர் ஒதினார் மறுப்பைக் கவர்னர் உறுதியில் மாற்றம் தோற்கும்
1561
உடனடி கவர்னர் திட்டம் உருப்பெற வேண்டு மென்றே திடங்கொண்டான் வெலஸ்லி அஃதைத் திப்புவின் மக்கள் ஏற்று உடன்படார் அறிவான் நாட்டை இழந்ததும் தமது தந்தை கொடுரமாய் கொலையுண் டன்னார் கெளரவம் சிதைற்ததாலே
1562 அடிப்படை அவர்க்குத் தந்தை "அன்னியர் ஒடுக்கல்” என்னும் பிடிவாதந் தானே ஆட்சி பற்றிடில் நமைய பூழிக்க முடிந்தவா றனைத்தும் செய்வார் மாற்றாக விசுவாசத்தைக் கடைப்பிடித் தொழுகார் என்னும் காரணம் வெலஸ்லி தேர்வான்
1563 நாட்டிற்குத் துரோகியான நிசாமும்தன் எதிர்ப்பை முற்றும் காட்டினார் திப்பு மன்னர் கோன்வழி யாட்சி மக்கள் பாட்டினில் பொருந்த அன்னார் கடுகள வேனும் தம்பால் கேட்டிடும் உரிமை கொள்ளார் காரணம் தோற்றோர் என்றார்
1564

ஜின்னாளுர் ஷரியுத்தீன் C339) வெள்ளையர் படைந டத்தி வென்றதாம் மைகர் முற்றும் உள்ளதாம் உரிமை யார்க்கென் றுவப்பதவ் வாட்சி என்று கொள்ளுமோர் முடிவு அன்னார் கைவசம் தானே என்றார் உள்ளத்தில் கபடங் கொண்ட ஊனராம் நிசாமென் நீசர்
1565 திப்புவின் தந்தை ஹைதர் கைப்பட முன்னர் ஆட்சி ஒப்பியே இருந்த பேரின் உறவினர் தம்பால் நாட்டை ஒப்பளித் திடவென் றோசார் நிலைமையும் தோன்றிற் றன்று செப்பிடில் அன்னார் தாழ்ந்து திறைதந்து மதிப்பரென்றே
1566
முடிவொன்று கொண்டான் வெலஸ்லி வரிப்பதவி ஆட்சி தன்னை அடிபற்றி வாழ்வதற்கும் ஆகுபேர் ஆனதாலே முடியிழந் திருந்த முன்னை மன்னரின் பரம்ப ரைக்கே தொடர்ந்ததற்கான சட்டத் தீர்வையும் வகுத்திட்டானே
1567 வெள்ளையர் தமக்கும் மைசூர் வரித்திட்ட ராஜா வுக்கும் உள்ளதாம் உறவு பற்றி யொன்றொடு மற்றும் ஒன்றாய் கொள்ளையிட் டெடுத்த மண்ணைக் கூறுபோட்டிடுதலோடு கொள்ளையாம் செல்வம் தம்மின் கொடுபனப் பகிர்வுக் கென்றாம்
1568 தமக்கென ஒதுக்கிக் கொண்டார் செல்வத்தில் ஏழு இலட்சம் அமைந்திடப் பகோடா மண்ணில் ஆனதாம் “கோயம் புத்தூர்” தமதொடு "மலபார்” சேரும் "தர்மபுரம்”மும் தெற்கில் அமைவுறும் கரையோ ரங்கள் ஆகுமாம் கிழக்கைப் போன்றே
1569 துறைமுகம் கோட்டை யெல்லாம் சொந்தமுற்றார்கள் அன்னார் குறைந்தள வாகும் செல்வம் கொண்டது நிசாமும் மண்ணும் குறைந்தளவாகும் கூடக் கொடுத்திடில் தமையே விஞ்சும் பொறைவரும் அவர்க்கா மென்றே பகிர்வினில் சீர்மை கொன்றார்
157Ο வாக்களித் திருந்த வாறு வகைத்திடா நிலமும் பொன்னும் கோக்கவைத் திட்ட சீற்றம் குமுறிட நிசாமும் அன்னார் போக்கினைக் கடிந்து ரைக்கப் பிறிதொரு முடிவுஞ் சொன்னார் நாக்கினில் நஞ்சு கொண்டோர் நிசாமினை ஏய்ப்பதற்கே
15ア1

Page 182
தீரன் திப்பு சுல்தான் காவியம் O340
யுத்தத்தில் பங்கு கொள்ள மராட்டியர் தமக்கென்றாகத் தந்திட வுவந்தார் சொற்பத் தொகையொடு நிலமும் அஃதைச் சொந்தமுற்றில்லாப் போழ்தில் சேர்த்ததில் மூன்றில் இரண்டை தந்திடலாகும் என்றோர் தீர்வினை முன்வைத் தாரே
1572 பதின்மூன்று இலட்சம் பகோடா பெறவேண்டும் நாங்க ளென்றே விதித்ததாம் சட்டம் அன்று வெள்ளையர் மைசூர் மீதே மதிப்பீடே இல்லா செல்வம் மைசூரின் கஜானா முற்றும் பொதுப்பொருளான தன்னாள் பறங்கியர் படைகளுக்கே
1573 வெள்ளையர் எண்ணம் போன்றே வருத்தனர் அனைத்தும் திப்பு பிள்ளைகள் வேலூருக்கு போகிடப் பணிக்கப் பட்டார் உள்ளதாம் மானியங்கள் உரியவாறென்றார் தந்தும் கொள்ளையர் பின்னாள் அஃதைக் குறைத்தனர் போதா வாறே
1574.
வேறு ஆயிரத்தோ டெழுநூற்றின் எழுபத் தேளில்
ஆனதிங்கள் ஜூன்வருநாள் முப்பதன்று வாய்த்ததுமுன் ஆண்டவரின் பரம்ப ரையில்
வந்துதியா வளர்ப்புமகன் றம்பமினுக்காம் பூணுமுடி வெள்ளையரே புனையச் செய்தார்
பூரணையா பொறுப்பேற்றார் திவானு மாக கோணல்தான் முற்றிலுமே பொம்மை மன்னர்
கையேற்ற ஆட்சிபின்னாள் ஆய்வு கூறும்
1575

ஜின்னாவூர் லுரியுத்தீன் O34O
வேலூர் கலவரமும் திப்பு சுல்தான் குடும்பமும்
மாவீரர் ஹைதர்அலி அவர்தம் பிள்ளை
மாற்றாரை நாட்டைவிட்டே யோட்டச் செய்தடுது) யாவுமறிந்துள்ளபின்னர் அவர்தம் எச்சம்
ஏதுசெய்தார் பின்னாளில் என்பதாய்தல் பூவுலக வரலாற்றைக் கற்போருக்குப்
பேருதவியாகுமதால் அஃதை ஈங்கு தேவையுணர்ந் தேசெப்பலானேன் திப்பு
சரிதத்திதல் பங்கதற்கும் உண்டதாகும்
1576 "தாய்நாட்டின் மீதுநேசம் கொள்வது) ஈமான்
தனில்பாதி” எனும்நபிகள் போதம் ஏற்ப தாய்நாட்டின் மீதுஹைதர் திப்பு போன்றே
திப்பரசர் சந்ததியும் பற்றுக் கொண்டார் சேய்களுடற் செங்குருதிதாதை பாட்டன்
தாய்நாட்டுப் பற்றுடைத்தாய்த் திகழ்ந்த வாறே வாய்த்ததெனில் வெள்ளையரை விரட்டும் எண்ணம்
வாராதோ வந்ததெனில் புதுமையுண்டோ!
1577 சீரங்கம் வீழ்ச்சியுற்ற பின்னர் மன்னர்
திப்புசுல்தான் ஆண்மக்கள் பன்னிர் பேரும் சேரப்பெண் மக்களெண்ம ரோடு சொந்தம்
சுற்றமென முன்னூறு பேரும் வேலூர் சேரவைத்தார் வெள்ளையர்கள் கோட்டையுள்ளே
சிறைவைத்தார் ஐம்பெரிய அரண்மனைக்குள் சார்ந்தொருபேர் படைகூடக் காவலுக்கு
சுற்றிவளைத் திருந்ததுவாம் அற்றை நாளே
1578 "பால்கொண்டா” “கண்டி” “திப்பு” “கும்கர்” என்னும்
பேர்கொண்டநான்கோடு “பற்சா பேகம் வேலூரின் கோட்டையுள்ளே அமைந்த ஐந்து
வசதிமிகு மாளிகைகள் அவர்க்கென்றாகும்

Page 183
தீரன் திப்யு சுல்தான் காவியம் O342)
கால்பதித்த காலத்தே பொறுப்பாய்க் கொண்டு
"கேனல்டெ வேடன்"எனும் வெள்ளை யர்தான் வேலூரில் இருந்தாராங் குற்ற போர்க்கு
வகைசெய்யும் பொறுப்புமவர் பேரிலாகும்
1579
லெப்டினண்ம ரீயோட்ஸ்"தம் பொறுப்பி லுற்ற
மாளிகைக்குள் அவரன்றி மாற்றார் யாரும் ஒப்தல்பெற்றன்றியுள்ளே செல்ல லாகா
உள்ளுறையும் குமாரர்களின் விருப்பி லாகும் எப்பொழுதும் சென்றுவரும் பணியாட் கட்கு
ஏதுவாகத் தந்திருந்தார் மன்னர் மைந்தர் ஒப்பமிட்ட அட்டையொன்றைப் பதிவி னோடே
ஒழுங்குமுறை பேணுதற்காம் உரிய வாறே
158O
ஆண்மக்கள் அறுவரொடு பெண்கள் நால்வர்
அரசரது காலத்தே திருமணத்தைப் பூண்டிருந்தார் அவரோடு பன்னூறாகப்
பாதுகாப்புப் பணியாளர் ஒன்றினார்கள் வேண்டுவன செய்வதற்கும் ஏவலாளர்
வேறாய்ப்பன் நூறாகும் அனைத்துப் பேரும் மீண்டுவந்து சேர்ந்தவரே முன்னாள் மன்னர்
மாளிகையில் சேவைசெய்தோர் நன்றி கொண்டோர்
1581
மாளிகையின் வாசல்முற்றும் காவ லாளர்
மாறிமாறிக் காவல்செய்தார் சிப்பாய் மார்கள் ஆளணியின் பெயர்களையும் அச்சொட் டாக
ஆங்கிலேயர் பதிந்திருந்தார் அனைத்துப் பேரும் மாளிகையில் வாழ்ந்திருப்போர் மன்னர்க் கானோர்
மற்றவரைச் சார்ந்திருப்போர் கண்காணிப்பின் ஆளுமையின் உச்சத்தில் அனைத்தும் கொண்டார்
அச்சமவர் நெஞ்சத்தில் உறைந்ததாலே 1582

ஜின்னாவூர் ஷரியுத்தீன் O343 o
சுல்தானின் தம்பியொடு மக்களைத்தம்
சிறைக்கைதிப் பாங்கினிலே வைத்திட்டாலும் எல்லையொன்றுள் போகவர அனுமதித்தார்
ஏற்றவவர் தரத்துக்குத் தக்க வாறே பல்வகையில் உதவுகின்ற பணியாளர்கள்
புறநகரில் வாழ்ந்தாலும் அன்னவர்க்குச் சொல்லிமுறை வைத்தாற்போல் பொழுது மாற்றித்
தினந்தோறும் சென்றுவர அனுமதித்தார்
1583
சுல்தானின் மூத்தமகன் "ஃபத்தே ஹைதர்”
திட்டமிட்டார் புரட்சியொன்றை நடத்து தற்கு பல்வகையில் உதவினரே உறவினர்கள்
பக்கபலம் தந்தார்கள் மற்றை யோர்கள் எல்லாமாய் மூபத்து ஆயிரம்பேர்
இந்தியச்சிப் பாய்களொடு வெள்ளை விரர் இல்லையெனில் பதின்மூன்று ஆயிரம்பேர்
இருந்தார்கள் கோட்டையுள்ளே பாதிப் பங்கே
1584.
தொடக்கத்தில் வெள்ளையரின் நடவடிக்கை
தேர்ந்தறியத் தேர்ந்தெடுத்தார் திறமை மிக்கார் கொடுத்தபணி உடன்முடிக்கும் "முஹம்மத் மாலிக்"
கைக்கடங்குஞ் சிலபேரைத் துணையாய்த் தந்தே விடுத்ததில்லை உள்நாட்டு ஆட்சியாளர்
வரிக்கின்ற செயல்களையும் அறிய வேண்டி முடிக்குரிய இளவரசர் 'ஃபத்தே ஹைதர்
மிகுகவன மாகவது பொசியா வாறே
1585
ஒற்றர்கள் பலகூறாய்ச் செல்ல மாலிக்
ஒருபுறமாய் சென்னையொடு பாண்டிச் சேரி
முற்றும்தன் வசமாக்கிச் சேதி கொள்ள
முனைந்தகன்றார் கச்சிதமாய் நடந்த தஃதே

Page 184
தீரன் திட்யு சுல்தான் காவியம் O3440
கொற்றவர்தம் மகனுக்கு தினமும் சேதி
கொண்டுவந்தார் கடன்சுமந்தோர் திட்டந் தீட்ட உற்றதுணையானதவை தம்பிமாரும்
உறுதுணையாய் இருந்தார்கள் அண்ணனுக்கே 1586
தாதைதனைக் கொன்றாட்சிதனைப்பறித்துத்
தமதாக்கிக் கொண்டதொடு குடும்பந்தன்னை ஆதுலராய் ஆக்கிவிட்ட பறங்கிப் பேரை
அழித்தொழிக்குங் கடமையிலே மன்னர் மைந்தர் பேதமற ஒருமித்தார் "அப்துல் ஹாலிக்
பிரஞ்சுநாட்டின் துணைகேட்டு ஒலை விட்டார் ஒதுவரே "மொயுளித்தீன் புரட்சிக் கான
ஒவ்வொன்றும் தேர்ந்தறிந்து செய்தா ரென்ன
1587
சிப்பாய்கள் தமக்குவேண்டுந் துணைபுரிந்து
தம்பக்கம் சேர்ப்பதிலே வெற்றி கண்டார் அப்போழ்து பலங்கொண்ட மராட்டியர்க்கு
"அலாவுத்தீன்" எனுந்தனது முறைசார்ந் தோரைக் கைப்படவோர் கடிதத்தை கரங்கொடுக்கக்
கேட்பதுவாய் வரைந்தளித்தே அனுப்பி வைத்தார் மெய்ப்படுமா றத்தனையும் திட்டமிட்டே
முயன்றார்கள் ஆட்சிதனை மீட்கும் நோக்கே
1588
தொகையளவில் அதிகமென்ற காரணத்தால்
திண்ணமவர் பக்கத்தில் வெற்றி யென்றே வகைசெய்தார் திப்புமக்கள் புரட்சி தோற்ற
வருடமாயிரம்மோடே யெணனூற்றாறில் தகும்பத்தாம் நாள்ஆகஸ்ட் திங்க ளன்று
தொடங்கிற்று மன்னர்மகள் பாத்தி மாவும் அகமொன்றி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட
அமைச்சர்மகள் தாமுமென்றியியற்றினாரே 1589

ஜின்னாவூர் லுரியுத்தீன் O345) “வெளிச்சென்றால் பல்லாக்கில் பெண்களுக்கு
வெள்ளையர்கள் பாதுகாப்பாய் செல்ல லாகா” அழுத்தமாயோர் ஒப்பந்தம் உண்டு முன்னர்
அன்னியர்கள் கைதுசெய்த போதி லாகும் முழுதுமதைப் பயன்கொண்டார் ஆயுதங்கள்
மறைத்துள்ளே பல்லாக்கில் கொண்டு செல்ல வகைசெய்தார் பாத்திமாவும் மன்னர் செல்வி
வேற்றார்கண் காணாத விவேகத்தோடே
1590 அற்புதமாயத் திட்டமிட்டும் அரும்பா டுற்றும்
ஆனதந்தப் பரட்சிகாலை மணியிரண்டு முற்றியதும் சிப்பாய்கள் ஐந்து நூறு
முதலணியில் வகுத்துநின்றார் தாக்கு தற்கே சுற்றிவளைத்(து) ஆங்கிலேயர் தங்கி நின்ற
சுகபோக மாளிகைகள் துவம்சமாக மற்றொருபால் ஆயுதங்கள் கொண்ட சாலை
முற்றாகக் கொள்ளைகொள்ளப் பட்டதன்றே
1591
"சுபேதர்ஷேக் “ஐமேதர்ஷேக்" இருபேரும்போர்ச்
சாதனங்கள் பரிமாறக் கோட்டைக் குள்ளே தபசுசெய்த அமைதிவிரண் டோடும் எல்லாத்
திக்கினிலும் வெடியோசை செவிபி ழக்கும் சுபமாகத் துயில்கொண்ட வெள்ளை யர்கள்
திக்கறியாத் திசைநோக்கிச் சிதறியோடி அபயமற்றார் குண்டுக்கிரை யாகினார்கள்
அவர்முன்னர் செய்தபழி அனுபவித்தார்
1592
மாளிகைகள் ஒவ்வொன்றும் வளைக்கப் பட்டு
மூர்க்கமாகத்தக்குணன்னச் செய்வ தோரார்
ஆளோடு ஆள்மோதி அங்கு மிங்கும்
அலைந்தார்கள் ஆவிகரம் பற்றிக் கொண்டார்

Page 185
தீரன் திப்பு சுல்தான் காவியம் O3460
கேள்விகனக் கேதுமில்லை வெள்ளைத் தோலைக்
கண்டதுமே கொண்டிருந்த வஞ்சம் தீர்க்கத் தாழொடித்துப் பறந்தனவே குண்டு மாரி
தடுப்பதற்கோ யாருமில்லை சாவே எஞ்சும்
1594 கோட்டைக்குத் தலைவனெனும் "கேணல் பேங்கோர்ட்” குண்டுபட்டுத் தரைசாய்ந்தான் சிப்பாய்க் கூட்டம் போட்டுடைத்தார் மண்டைதனை புறத்து வக்கால்
பகைகொண்டார் முன்னரவர் தலைக்குப் பாகை வேண்டுமெனக் கட்டளையும் பிறப்பித் தோனாம்
வேண்டாத ஆணையது வெறுப்புற்றார்கள் பூண்டிருந்த கோபத்தைக் காட்டக் காலால்
பாதபுசை தந்தார்கள் பரிதாபம்மே!
1595
உயிரஞ்சி மாளிகைக்குள் ஒளிந்த பேரை
ஊடுருவிச் சென்றுள்ளே வெளிக்கொணர்ந்து உயிர்பறித்தார் சிப்பாய்கள் ஒருவர் தாமும்
உயிர்பிளைத்தாரில்லையந்த இரவுப் போழ்தே தயவற்றுத் தாய்மண்ணில் தம்மோர் தம்மைச்
சித்ரவதை செய்தவர்கள் சாகடித்தோர் தயவற்றுத் தாக்குதற்குந் தகுதி கொண்டார்
செய்தபழி தலைகொண்டார் தருக்கர் கூட்டம்
1596 காலில்விழச் செய்தவனே காலில் வீழ்ந்தான்
கையெடுத்துக் கும்பிட்டான் கொலைத விர்க்க ஏலாது போனதுதாம் பட்ட துன்பம்
இதயத்தில் பதிந்திருந்து பழியைத் தீர்க்குங் காலத்தைக் காத்திருந்த காரணத்தால்
கைவிட்டால் மீண்டுமிவர் கைகளோங்கிப் போகுமெனில் நமைநாமே கொன்றொழிக்கப்
பங்களித்தல் போலாகும் எனவுணர்ந்தார் 1597

ஜின்னாளுர் ஷரியுத்தீன் O347)
தாகசாந்தி கொண்டதுமண் குருதி யாலே
தனையாள வந்தவரைத் தனிலு தித்தோர் சாகவழி செய்ததனால் மகிழ்வு கொள்ளும்
சுதந்திரம்தன் பாங்குபெறும் தனது மக்கள் சோகத்தின் காரணரைத் தன்னிருந்தே
துடைத்தெறியும் வாகொன்று துலங்கக் காணும் போகத்தில் திளைத்ததுபோல் வான்வெளிக்கும்
பரிதியொளி வெற்றிப்பூ சொரிந்தாற் போன்றாம்
1598
வெற்றியின்பின் இளவரசர் அரண்மனைக்குள்
வெற்றிக்குக் காரணரை ஒன்று கூட்டி சொற்பெருக்கி நன்றிகாட்ட இனிப்புந் தந்தார்
சேர்ந்துவிருந்துண்டுமகிழ்ந்தனைவருக்கும் உற்றபடி பதவிகளும் படியுயர்வும்
உண்டாமென்றுறுதிசெய்தார் மகிழச் செய்தார் வெற்றுடைமை யானதுவாம் வெள்ளையர்கள்
வரித்திருந்த ஆயுதத்தின் குதங்க ளன்றே 1599 முற்றிலுமே கோட்டைவசம் ஆன பின்னர்
மூத்தமகன் "பத்தேஹை தர்தம் வீரர் ஒற்றுமையும் துணிவுடனும் இருந்து கோட்டை
ஒழுங்குகாத்து நடந்துகொள்ள வேண்டு மென்றார் மற்றொருபால் எதிர்மாறாய் நிகழ்வு ஒன்று
முகிழ்ந்ததது பொருளாசை கொண்ட பேரால் பொற்காசுப் பாதுகாப்பு அறையுடைத்துப்
பெருங்கொள்ளை நடந்ததது பெருஞ்சீர் கேடே
16OO
கொள்ளைகொண்ட நாணயங்க ளோடே சிப்பாய்க்
கூட்டம்தன் வழியோடப் பார்த்திருந்தாங்(கு)
உள்ளவரும் தொடர்ந்தார்கள் மன்னர் மக்கள்
உவந்தநிலை குலைந்ததனால் அதிர்ச்சியுற்றார்

Page 186
தீரன் திப்பு சுல்தான் காவியம் O3480
உள்ளபலம் குன்றியதால் தடுக்க வொண்ணா
உறுநிலையில் புரட்சிமுற்றும் வலுவிழக்க அள்ளிக்கை கொண்டதுவாய் கிட்டாப் பாங்கில்
ஆனதன்று முதற்சிப்பாய்க் குழப்பம் கேடே
16O1 பேராசை பெருநட்டம் போலு மாகிப்
போனாலும் மிகப்பெரிய அளவிலன்று காரணமாய்ப் போனதுவாம் ஆங்கிலேயர்
கலங்கிடவும் பயப்பீதி கொள்ளு தற்கும் காரணத்தை அறியாது திணறினார்கள்
கொன்றொழித்த செயலதுவென்றிற்றை நாளும் சீராக இருந்தசிப்பாய்த் தொழில்செய் தோர்கள்
சீற்றமுற்ற தேனென்றே தெரியாதுற்றார்
16O2
"வேனூர்சிப் பாய்க்கலகம்” இங்கி லாந்து
வேந்துக்குத் தலையிடியாய்ப் போனதன்று காலூன்றிநின்றாலும் தென்னகத்தில்
குழப்பநிலை முகாம்களிலே கொதிக்க லாச்சு ஏலாத நிலையடக்கச் சிரமங் கொண்டார்
இயல்புநிலை தோன்றப்பெருநாளா கிற்று காலொடிந்த வாறாகும் வெள்ளை யர்பால்
கல்லெழுத்தாம் சரித்திரத்தில் மறக்காப் பாடம்
16O3 ஆயிரத்தோ டெண்ணுற்று ஐம்பத் தேழில்
ஆனதுவோ மற்றொன்று சுதந்திரப்போர் தாயதற்கு முன்சொன்ன கலவரம்தான்
சிப்பாய்கள் செய்ததுவே இரண்டு மாகும் நாயகராம் திப்புசுல்தான் நாட்டுக் காக
நடத்தியபோர் தொடர்ந்தவர் மக்களாலே தூயமனங்கொண்டவர்கள் மறக்க மாட்டார்
சரித்திரத்தைப் பொய்ப்பிக்கார் நன்றி கொல்லார்
16O4

ஜின்னாவூர் ஷரியுத்தீன் O349)
பிரார்த்தனை திப்புசுல்தான் காவியத்தை நிறைவு செய்தேன்
தீந்தமிழுக் கென்றனது காணிக் கையாய் ஒப்பில்லா வீரனையில் வுலகத் தோர்கள்
உள்ளத்தில் பதித்திருக்க வேண்டு மென்றே செப்பிடுங்கால் மனிதவாழ்வில் ஒவ்வோர் பேரும் தன்மானங் கொண்டவராய் நாட்டுப் பற்றின் ஒப்புடைமை மிக்கவராய் வாழ்தல் வேண்டும்
ஒருமையைத் தருவதவர் வாழ்வ தாமே.
6O5
பலதிங்கள் முயன்றிந்தக் காவி யத்தைப்
படைத்துள்ளேன் பண்ணவனின் அருட்பேற் றாலே அலைகடலைத் தாண்டியுமென் தமிழ்பேர் கொள்ளும்
ஆவலுற்றேன் ஆய்வுசெய்வோர் ஆய்தல் வேண்டும் நிலமுள்ள வரைநிலைக்க வேண்டு மாயின்
நற்றமிழின் சுவையுணர்ந்தோர் கற்ப தோடே பலரறியச் செய்திடவும் வேண்டும் காலம்
போற்றுமிதைப் புகழனைத்தும் பேரி றைக்கே
6O6 எண்முயற்சிக் கீடாக இறைவன் பாலே
இரக்கின்றேன் தேகநலம் நீண்ட ஆயுள் என்றனுக்கும் எனைச்சார்ந்த அனைத்துப் பேர்க்கும்
எல்லாமே வல்லவனின் தாள்ப னிந்தே பொன்மனத்துப் பெரியோர்கள் பற்றோ டெம்பால் பிரியமுடன் பிராத்திப்பர் படித்த பின்னே முன்னவனின் அருள்முற்றும் பெறட்டு மென்றே மாநபியின் “சபாஅத்தும் கிடைக்க “ஆமீன்"
16O7

Page 187
நூலாசிரியரின் ஏனைய நூல்கள்
காவியங்கள்:
மஹற்ஐபீன் காவியம் புனிதபூமியிலே காவியம் தாய்க்கென வாழ்ந்த தனையன் பிரளயம் கண்ட பிதா பண்டார வன்னியன் காவியம்
திருநபி காவியம்
சிறுகதைத் தொகுப்புகள்: 1. பெற்றமனம் 2. வேரறுந்த நாட்கள்
புதினம்:
. கருகாத பசுமை
கவிதைத் தொகுப்புகள்:
1. முத்து நகை 2. பாலையில் வசந்தம் 3. பனிமலையின் பூபாளம் 4. திருமறையும் நபிவழியும்
சிறுவர் இலக்கியம் : 1. கடலில் மிதக்கும் மாடிவீடு
2. எங்கள் உலகம்
3. அகப்பட்ட கள்வன் 4. சிறுமியும் மந்திரக் கோலும் 5. ராகுலுக்கு ஒரு புதுவண்டி
மொழிமாற்றம்:
1. அன்பின் கருணையின் பேரூற்று
1992
1998
2OO1
2OO1
2OO5
2OO6
2OO2
2OO8
2OOO
1989
1989
1995
2OO7
2OO2
2OO2
2OO3
2OO8
2OO8.
2OO

言莓0婷{F
TPP SULTAN VNÅS
FOUND HERE
போர் முடிவில் பூரீரங்கப்பட்டணத்தில் தீரர் திப்பு சுல்தானின் ஜனாஸா கிடந்த இடத்திற்கு அருகில் நூலாசிரியர்
பூரீரங்கப்பட்டணத்தில் தீரர் திப்பு சுல்தானின் சமாதி

Page 188
ஆய்வுச் சுற்றுலாவின்போது மைசூரில் நண்பர்களான கவிஞர் அல்-அஸ9மத், டாக்டர் தாஸிம் அகமது கவிஞர் அஷ்ரஃப் சிஹாப்தீன் ஆகியோருடன் நூலாசிரியர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
*丁。添
 
 


Page 189
ஜின்னாஹ் ஷரிபுத்தீன், ட அமர்ந்த இடத்தில் ஆயிரம் பாடல்க இவரது பேனா முனையிலிருந்து பே ஓடும் தமிழ்நதியின் கிளையாறுகள் LDன்னர்களுக்காகவே ம மக்களுக்காகவே வாழ்ந்த மகே அவர் தன் மக்களை நெஞ்சார நேசி கொள்ளை கொள்ள வந்த மாற்ற எழுந்து நின்றார். அதனால் ச தொலையாத் தொன்மமாக அவர் அழித்தும் திரித்தும் எழுதப்ப வீரத்தின் மந்திரக் குறி இந்நூலில் உத்தமப் பண்பு அந்த அதிசய சுல்தானை, ஜின்ன ராஜபாட்டையூடாக நம்மிட
இந்த நூல், நேர்மையும் ஆட்சியாளர்களுக்கு ஆ6 ஓர் ஆள்காட்டி விரல். தமிழோ பாடநூலாகக் கொள்ள
கவிஞர் அஷ்ரஃ
செயலாளர் இலங்கை இஸ்ல
 
 
 
 
 
 
 
 

|லவர் பரம்பரைப் புதல்வர். ளை எழுதும் ஆற்றல் கொண்டவர். ராற்று வெள்ளமாயப் பெருக்கெடுத்து பில் ஒன்றுதான், இந்தக் காவியம், க்கள் வாழ்ந்த காலை, ான்னத மன்னர் திப்பு சுல்தான். த்த காரணத்தால், தனது மண்ணைக் ானுக்கு எதிராக, நெஞ்சு நிமிர்த்தி காலத்தின் தீராத பக்கங்களில் ால் நீடித்து நிலைக்க முடிந்தது. டும் வரலாற்றில், அழியாத பீடாக மாற முடிந்தது.
களும் ஓர்மையும் கொண்ட எாஹ் ஷரிபுத்தீன் அழகுத் தமிழ் ம் அழைத்து வருகிறார்.
நெஞ்சுரமும் கொண்ட ண்டாண்டு காலத்துக்கும் தும் பல்கலைக் கழகங்களில் த் தகுந்த படையல்.
ப் சிஹாப்தீன் ாமிய இலக்கிய ஆய்வகம்