கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வாத்தியார் மாப்பிள்ளை காவியம்

Page 1

面町
I li

Page 2

வரத்தியர் மாப்பிள்ளை காவியம்
காப்பியக்கோ
O னாஹற் 6p.f O 5 O
队 زرعلیح) அன்னை வெளியீட்டகம்
LoU55üpGCDGOT

Page 3
நூல் விபரப்பட்டியல்
நூலின் பெயர்
(9dful
பதிப்புரிமை
வெளியீடு
முதற் பதிப்பு
(9ffoliuti)
பக்கங்கள்
விலை
Title of the book Author
Copyright
Published by
First Published in
Printers
Cover design Pages
ISBN NO.
BarCOrd NO
Price
வாத்தியார் மாப்பிள்ளை காவியம்
டாக்டர். அகமது ஜின்னாஹி ஷரிபுத்தீன் ஹம்சியா பரீதா ஷரிபுத்தீன்
அன்னை வெளியீட்டகம் மருதமுனை
3O2-2OOf
ஆசிப் புஹாரி
3O+ O
objust 25O /=
VATHYAR MAPPILLA Qr.Ahamed Jinnah Sherifudeen
Mrs. Hamziya Fareeda Sherifudeen 16, School Avenue,
Off Station Road,
Dehiwala.
Te NO. O11273 O378
Annai Velyeetakam, Maruthamunai.
30.12.2011
Aj. Prints, Dehiwala.
Ashif Buhary
130-10
978-955-54039-1-7
978-955-5403917
RS. 250/-
–Cii D

“உள்ளத்தில் ஊறும் உணர்வுகள் ஓசையோடு விள்ளும் கவிதையென வாம்.” சின்னாஹற்
drtojtitlao ili
தமிழறிஞர் சிறுகாதை நாவல் மன்னர்
செந்தமிழ்த்தாய்ப் படைப்புலகின் தலைமைச் செல்வர் இமைப்பொழிந்து தமிழுக்காய் இறுதி மட்டும்
ஏற்றமுறப் பணிசெய்த ஏந்தல் மற்றோர் தமையுமவர் போல்தமிழின் மேன்மைக் காகத்
தொணிழயற்றப் பணித்திட்ட தகைசால் ஐயன் எமதன்பின் சொந்தமவர் வானா ஆனா
இராசரெத்தினம் பெரியோன் தமக்கா மிந்நூல்

Page 4
வெளியீட்டுரை
இதுவரை கவிஞர் ஜின்னாஹ ஷரிபுத்தீனின் ஏழு காவியங்களுடன் அவரது அனைத்து நூல்களையும் அன்னை வெளியீட்டகம் சார்பாக நாமே வெளியீடு செய்துள்ளாம். வாத்தியார் மாப்பிள்ளை காவியம் என்னும் இந்த அவரது எட்டாவது காவியத்தையும் வெளியிடுவதில் நாம் பெருமகிழ்வு அடைகின்றோம்.
இக் காவியம் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மருதமுனைக் கிராமத்தைக் கதைப்புலமாகவும் அப்பகுதி மக்களின் பேச்சுவழக்கினைக் கொண்டும் எழுதப் பெற்ற காவியமாகும். இதற்கு முன்னர் வெளியிட்ட தீரன் திப்பு சுல்தான்காவியம், அரச சாகித்ய மண்டலப் பரிசுடன் தமிழியல் விருதையும் பெற்றது. முன்னைய இவரது நூல்களுக்கு வாசகர்கள் அளித்த வரவேற்பைப் போன்று இந்நூலுக்கும் வரவேற்புக் கிடைக்குமென நம்புகின்றோம்.
ஹம்ஸியா பரீதா ஷரிபுத்தீன் அன்னை வெளியீட்டகம்
மருதமுனை

நான் இதனை ஏன் எழுதினேன்.........
என்காலத்துக் கிழக்கு மாகாணக் கவிஞர்கள் என்ற கட்டுரையில் பிரபல சிறுகதை, நாவலாசிரியர் வ.அ. இராசரெத்தினம் அவர்கள் பின்வருமாறு எழுதியுள்ளார்
"மறுமலர்ச்சிக் கவிதைகளின் கிழக்குப் பிராந்திய முன்னோடி சுவாமி விபுலானந்தர் அவர்களே. அவர் கவிதைகள் தமிழ் மரபிற் தோய்ந்து சங்க இலக்கியங்களில் முக்குளித்து நீராடிவிட்டு வரும் குமரிப் பெண்ணின் அழகோடும், மிடுக்கோடும் வெளிவந்தன. அவர் பரம்பரையில் வந்த மரபுக் கவிஞர்களாக பண்டிதர் பெரியதம்பிப்பிள்ளை அவர்களையும், அவரால் வெண்பாப்புலி எனப் புகழ்ந்துரைக்கப்பட்ட அல்-ஹாஜ். ஆ.மு.ஷரிபுத்தீன் அவர்களையும் குறிப்பிடலாம். அந்த மரபைத் தொடர்ந்து இன்றையத் தலைமுறையில் சிறந்த மரபுக் கவிஞர்களாக கவிஞர்கள் நீலாவணன், ஜீவாஜீவரத்தினம் மருதூர் கொத்தன், சண்முகம் சிவலிங்கம், ஆகியோர் உள்ளனர். ஆசிரியரல்லாத ஒருதலையாய மரபுக் கவிஞரும் இக்காலகட்டத்தில் வாழ்கின்றார். வைத்தியப்பட்டம் பெற்ற ஜின்னாஹ் ஷரிபுத்தீன் என்ற கவிஞர் புலவர் ஆ.மு.ஷரிபுத்தீன் அவர்களின் புதல்வராவார். அவரை மிஞ்சி மரபுக்கவிதை எழுதக்கூடிய கவிஞர் கிழக்கு மாகாணத்தில் இல்லவே இல்லை.
கிழக்குப் பிராந்திய மக்களின் வாழ்வையும் பாரம்பரியங்களையும் வெளிக்கொணரக் கூடியதான மகாகாவியம் ஒன்றை எழுத அவர் ஒருவரால்தான் முடியும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை!"
மேலும் அவர் தனது இலக்கிய நினைவுகள் என்னும் நூலில்
“கல்முனைக் கவிதா மண்டலம், நீலாவணன் தலைமையில் இயங்கிற்று. சண்முகம் சிவலிங்கம், நுஃமான், மருதூர்க் கொத்தன், ஜீவாஜீவரத்தினம், சடாட்சரம், மருதுTர்வாணன், மருதுர்கனி எனப்பல கவிஞர்கள். இவர்களுக்கெல்லாம் பிதாமகராக அல்-ஹாஜ். ஆ.மு.ஷரிபுத்தீன் அவர்கள்

Page 5
"நான் பிதாமகர் எனக் குறிப்பிட்ட மூத்த கவிஞர் ஆ.மு.ஷரிபுத்தீன் அவர்களின் மகனும், அவன் டாக்குத்தர் ஆக இருந்தாலும் கவிதை எழுதுகின்றான். அவரது மஹற்ஜயீன் என்ற காவியத்தை சமீபத்திற் படித்து பெருமகிழ்வடைந்தேன். ஜின்னாஹற் ஷரிபுத்தீன் அவர்கள் இன்றைய காலகட்டத்தில் முதற்தர மரபுக் கவிஞர். ஆனால் அவரை எனக்குத் தெரியாது. நேரில் கண்டதில்லை.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஐயா அவர்கள் எதிர் பார்த்தது போன்று மகாகாவியம் ஒன்றை எழுதும் வல்லமை எனக்கில்லாத போதும் அவரது ஆசையை ஒரு துளியளவேனும் நிறைவேற்ற அவாவுற்றே நான் இந்தக் காவியத்தைப் பாடியுள்ளேன். முழுக்கவும் மரபில் எட்டுக் காவியங்களைப் படைத்துள்ள நான் தொடக்கம் தவிர்ந்த கதை சொல்லும் படலத்தில் இருந்து பேச்சு மொழியில் பாத்திரங்களைப் பேசவைத்துள்ளேன்.
இது எனது புது முயற்சியே. இந்நூலுக்கான பாயிரத்தை நாடறிந்த கவிஞர் காவியமாமணி அகளங்கன் அவர்களும், அணிந்துரையை பிரபல எழுத்தாளரும் கவிஞருமான சட்டத்தரணி எஸ்.முத்துமீரான் அவர்களும், என்னைப் பற்றிய அறிமுகக் குறிப்பினை தென்கிழக்குப் பல்கலைக் கழக தமிழ்த்துறைத் தலைவர் க.ரகுபரன் அவர்களும் வழங்கி காவியத்துக்குச் சிறப்புச் சேர்த்துள்ளனர். அத்துடன் வழமைபோல் இந்நூலையும் தமிழ்மாமணி அல்-அகமத் அவர்கள் மேற்பார்வை செய்தளித்தார். கணினிப் பதிவுக் குறைபாடுகளை கவிஞர் லுனுகலைழுநீ ஒப்புநோக்க அட்டைப்பட ஓவியத்தை எனது சகோதரர் மகன் ஆசிப் புகாரி வரைந்தளித்துள்ளார். இவர்களோடு இந்நூலை அழகுற அச்சிட்டளித்த தெஹிவளை ஏ.ஜே.பிரின்ற்ஸ் அச்சகத்தாருக்கும் எனது நன்றிகளைச் சமர்ப்பித்துக் கொள்கின்றேன்.
ஜின்னாஹற் ஷரிபுத்தீன்

தமிழ்மாமணி கவிஞர் முத்துமீரான் அவர்கள் வழங்கிய அணிந்துரை
இயற்கையின் இனியதாலாட்டில் கண்ணயர்ந்து கொண்டிருக்கும் கிராமத்து மக்களின் வாழ்வு உயர்ந்த ஒழுக்கத்தின் பாற்பட்டவை. இம்மக்களின் வாழ்வும் வாழ்வியலும், பண்பாட்டுக் கோலங்களும், இன்றைய நாகரிக உலகத்திற்கு சவால் விட்டுக் கொண்டிருப்பதைக் காண்கின்றோம். இறைபக்தியும், எளிமையும் புனிதமும் நிறைந்த கள்ளம் கபடமில்லா கிராமத்து மக்களின் மண்வளச் சொற்கள். தனித்துவமானவை, முக்கியமாக, முஸ்லிம்களின் கிராமத்து மண்வளச் சொற்கள். நெடிலோசை கொண்டவைகள். ஒவ்வொரு சொற்களும் தனித்துவமான கருத்துக்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நூலில் குறிப்பாக, கிழக்கிலங்கையில் உள்ள முஸ்லிம் கிராமமான 'சின்னமக்கா என்று சிறப்பாகச் சொல்லப்படும் மருதமுனையை மையமாக வைத்து, இங்கு வாழும் மக்களின் பழக்கவழக்கங்களையும், சமய ஆசாரங்களையும் அடித்தளமாகக் கொண்டு, காப்பியக்கோ ஜின்னாஹற் ஷரிபுத்தீன் வாத்தியார் மாப்பிள்ளை என்னும் இக்காவியத்தைப் படைத்தளித்துள்ளார்.
நாடறிந்த நல்ல கவிஞரான ஜின்னாஹ் ஷரிபுத்தீன், தன்னுடைய பிறந்த மண்ணுக்கு பெருமை சேர்க்கும் நிலையில் இந்நூலை, இம்மக்களின் மண்வளச் சொற்களை முன்னிலைப்படுத்தி. இக்கிராமத்திற்கும், இங்கு வாழும் மக்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார். புலவர்களும், தமிழறிஞர்களும், கல்விமான்களும் நிறையப் பெற்ற இக்கிராமத்து மக்களின் ஒழுக்க நெறி, உயர்பண்புகள் என்பன இந்நூலில் உயிர்த்துடிப்போடு, காட்டப்படுவது கவிஞருக்குதன் தாய் மண்ணில் உள்ள பற்றினைச் சிறப்பாகக் காட்டப்படுகிறது. மண்ணினை நேசிக்கும் கவிஞர் இங்கு வாழும் மக்களின் மண்வளச் சொற்களையும், அவர்களின் மானிட நேசத்தையும் புடம்போட்டுக் காட்டுவது உயிர்த்துடிப்போடு இருக்கிறது. மண்வளச் சொற்களைக் கொண்டு இச் சொற்கள் எந்த கிராமத்தைச் சேர்ந்த மக்களுடைய சொற்கள் என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். இங்கு மருதமுனை மக்களுக்கே உரிய மண்வளச்சொற்களை நூலின் எல்லா இடங்களிலும், சந்தர்ப்பங்களுக்கேற்ப உரிய வழிகளில் வைத்து நகைச்சுவையோடு கையாண்டிருப்பது கவிஞரின் நாட்டாரியல் ஆளுமைக்கு நல்ல எடுத்துக் காட்டாகும். இன்னும், நூலாசிரியர் மருதமுனை மக்களின் மீன்பிடித் தொழில் பற்றியும், அதனோடு கூடிய வாழ்வு பற்றியும் மண்ணுக்குரிய சிறப்போடு தந்துள்ளமை யதார்த்தமாக
இருக்கிறது.
-Cyiо

Page 6
கிழக்கிலங்கையில் புகழ்பெற்ற கவிஞர்களில் ஒருவரான கவிஞர் அப்துல் காதர் லெவ்வை 1967ம் ஆண்டு படைத்தளித்த செய்னம்பு நாச்சியார் மான்மியம் என்னும் சிறுகாவியம். கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு மாவட்ட காத்தான்குடி, ஏறாவர் போன்ற முஸ்லிம் கிராமத்து மக்களிடையே வழக்கிலிருந்த திருமணவாழ்வியலை மட்டும் கருப்பொருளாகக் கொண்டு நகைச்சுவையுடன் படைத்தளிக்கப்பட்ட நூலாகும். ஆனால், கவிஞர் ஜின்னாஹற் ஷரிபுத்தீன் மருதமுனை மண்ணில் வாழையடி வாழையாக வழக்கிருந்து வந்த திருமணம், அதனோடு கூடிய சடங்கு சம்பிரதாயங்கள் சுன்னத்துக் கல்யாணம் மீன்பிடித்தொழில், சமூகவியல் என்பனவற்றை எல்லாம் நூலில் சொல்லி இருப்பது சிறப்பாக இருக்கிறது. கிராமிய மணம் கமழும் நிலையில் உருவாக்கப்பட்ட இக்காவியம், கவிஞர் அப்துல்காதர் லெவ்வையால் படைத்தளிக்கப்பட்ட செய்நம்பு நாச்சியார் மான்மியம்' என்னும் காப்பியத்திற்கு மேலும் உரமிட்டு, கிழக்கிலங்கை முஸ்லிம் மக்களின் வாழ்வியலை சிறப்புடன் படம்பிடித்துக் காட்டுகிறது.
புகழ்பெற்ற புலவர் பரம்பரையில் வந்த கவிஞர் ஜின்னாஹற் ஷரிபுத்தீன். இந் நூலை இன்னும் சற்று எளிதாக்கி எல்லா, மக்களும் எளிதாக விளங்கிப் படிக்கக் கூடிய மக்களின் மண்வளச் சொற்களில் முழுமையாக தந்திருந்தால், கவிஞர் அப்துல் காதர் லெவ்வையின் காப்பியத்திற்கு இணையாக வந்திருக்கும். இலக்கண வரம்பை உடைத்தெறிந்து கிராமத்து மக்களின் மண்வளச் சொற்களில் கூடிய கவனம் செலுத்தியிருந்தால், இக்காப்பியம் கவிஞருக்கு முழுவெற்றியை அளித்திருக்கும் என்பது என் அசையாத நம்பிக்கை. இக் காவியத்தின் மூலம் காப்பியக்கோ ஜின்னாஹற் ஷரிபுத்தீன் மருதமுனையை அண்டியுள்ள தமிழ்க் கிராமங்களோடும் மருதமுனையில் வாழ்ந்த, இன்று வாழ்கின்ற முஸ்லிம் மக்கள் எத்தனை அன்போடும் புரிந்துணர்வோடும் வாழ்ந்திருந்தார்கள் என்பதை சிறப்பாகக் காட்டுகிறார். எப்பொழுதும், பிற சமூகத்தையும், அவர்களின் உணர்வுகளையும் மதிக்கின்ற பண்புள்ள கவிஞர், இதைக் காட்டியமை வியப்பில்லையென்றே கருதலாம்.
இந்நூலின் மூலம் தாய்மண்ணுக்கும் இங்கு பரம்பரையாக சீரும்சிறப்பாக வாழ்ந்து வரும் மக்களுக்கும். அவர்களின் தனித்துவம் மிக்க கிராமத்து மணி வளச் சொற்களுக்கும் கவிஞர் சிறப்புச் சேர்த்துள்ளார். இவர் படைத்துள்ள "வாத்தியார் மாப்பிள்ளை என்னும் இக்காவியம் நாட்டுப்புறவியலில் ஆர்வம் கொண்டு தேடுதல் மேற்க்கொள்ளும் ஆய்வாளர்களுக்கும், மாணவர்களுக்கும் நல்லதொரு உசாத்துணை நூலாகும். இவரின் இலக்கியப் பணிகள் மேலும் சிறக்க இறைவனிடம் பிராரத்திக்கிறேன்.
தமிழ்மாமணி எஸ். முத்துமீரான்
“C36."
நிந்தவுர் - 12
-Ovi)

ஆசிரியரின் வெளிவநீத நூல்கள்
1. முத்துநகை 1989 2 பாலையில் வசந்தம் 1989 3 மஹற்ஐபீன் காவியம் (600 பாடல்கள்) 1992 4. புனித பூமியிலே காவியம் (OOO பாடல்கள்) 1998 5 பனிமலையின் பூபாளம் 1995
(மலையகக் கவிதைத் தொகுப்பு) 6. கருகாத பசுமை (புதினம்) 2OOO ア。 ஜின்னாஹற்வின் இரு குறுங் காவியங்கள் 2OO
(பிரளயம் கண்ட பிதா. தாய்க்கென வாழ்ந்த தனயன்) 8. கடலில் மிதக்கும் மாடிவீடு (சிறுவர் பாடல்) 2OO2 9. அகப்பட்ட கள்வன் (சிறுவர் படக்கதை) 2OO3 10. பெற்றமணம் (சிறுகதைத் தொகுப்பு) 2OO3 11. எங்கள் உலகம் (சிறுவர் பாடல்கள்) 2OO3 12. பன்ைடார வன்னியன் காவியம் (15OO பாடல்கள்) 2OO5 13. திருநபி காவியம் 2OO6 14. திருமறையும் நபிவழியும் 2OO7 15. வேரனுந்தநாட்கள் (சிறுகதைத் தொகுப்பு) 2OO8 16. ராகுலுக்குஒருபுதுவன்ைடி 2OO8 17. சிறுமியும் மந்திரக் கோலும் 2O1O 18. தீரன் திப்புசுல்தான் காவியம் (600 பாடல்கள்) 2O1O 19. அன்பின் கருணையின் பேரூற்று 2O1O
(மொழிமாற்றக் கவிதைகள்) 2O. வாத்தியார் மாப்பிள்ளை காவியம் 2O11
அச்சிலுள்ள நூல்
1. நாயனொடு வசனித்த நந்நபி (மூஸாநபி காவியம்)
வெளியிடப்படவுள்ள நூல்கள்:
1) "கேள்வியும் பதிலும்”
(மகாகவி இக்பாலின் வழிக்வா ஜவாபே வழிக்வா கவிதைகளின் மொழிமாற்றக்
கவிதைகள்)
2) “ஜின்னாஹற்வின் கவியரங்கக் கவிதைகள்”
"வல்லுவம்” கவிதைத் தொகுதி
—CixO

Page 7
காவியமாமணி கலாநிதி அகளங்கன் அவர்கள் வழங்கிய
சிறப்புப் பாயிரம்
பன்னாள் என்மேல் பாசப் பிணைப்புறு ஜின்னாஹற் ஷரிபுத் தீனெனும் பெயரினை என்னா உரைக்க என்றும் இனிக்கும் சொன்னால் பெருமை சுகந்தமே மனக்கும் ஏழுகா வியங்கள் எழுதரு புலமையால் நாளு நாவினிக்க நயந்தினி தளித்தோன் வாழுநா விரிந்த வரிசையில் எந்த ஆளுநாங் காணோம் அதிசயம்! அதிசயம்! சரித்திர சமயச் சம்பவங் களையே விரித்தன முன்னிவர் விளம்பிய காவியம் "வாத்தியார் மாப்பிள்ளை” வரலா றில்லை கிராமிய வாழ்வு கிராமிய அழகு பரவிய புதிய பார்வையில் விளைந்தது தமிழர் இஸ்லாமியர் தாமொரு மனதாய் அமிழ்தினு மினிய அருந்தமிழ் பேசி ஒற்றுமை யாக ஒருதாய் மகவென வேற்றுமை இன்றி விருந்தொடு களித்த அந்நாட் கதையை அழகிய தமிழில் இந்நாட் காவியம் இனிதாய்ப் பாடினார் செந்தமிழ் மொழியில் செப்பிய யாப்பில் அந்தமில் புகழொடு அழியாக் காவியம் ஏழு பாடிய என்னருஞ் சகோதரர் வாழுங் காலத்து வகையாம் பேச்சு மொழியினில் எளிமையாய் மொழிந்தஇக் காவியம் வழிவழி பலர்க்கும் வரலாறாகும் காப்பியக் கோவொடு கணக்கில் பட்டப் பாக்கியம் பெற்ற பண்பமை ஜின்னாஹற் ஆக்கிய காவியம் அவனியில் புகழ்பெற வாக்கினால் அகளங்கன் வாழ்த்தினேன் வாழ்க!

வாத்தியார் மாப்பிள்ளை காவியம்
வரத்தியார் மாப்பிள்ளை காவியம்
காப்பு
(கட்டளைக் கலித்துறை)
பிறந்தமண் பேர்புகழ் பாடநான் பண்ணவன் பேரருளைத் திறந்திட வேண்டினேன் தாழ்பணிந் தேயவன் தந்தருள்வான் சிறந்தவோர் காப்பியஞ் செந்தமிழ் தன்னிலென் தாய்மொழியில் பிறந்துல கொங்கும் புகழ்பெறப் பேர்நிலை பெற்றிடவே
இரப்பதென் இன்னல் இலாதுபோய் இன்பம் எனைத்தொடர இரப்பதின் றென்பணி ஏற்ற முறவுல கேற்றிடவென் இரத்தலுக் கென்றுமே ஈந்தருள் செய்திடும் ஈசனேயார் இரப்பினும் ஏற்றவர்க் கீவது போல்நீ இரங்குவையே
(9,606 studioff (கட்டளைக் கலித்துறை)
தண்டலை பூத்தசெந் தாமரைப் பூவிடை அல்லியென விண்தொடு பேரலை வாரிதி வாரிய வெண்மணியுள் கண்டவோர் வெண்மைக் கிளிஞ்சலைப் போலெனக் கல்வியிலான் கண்டவிக் காவியங் கற்றவர் கண்ட கவியிடையே
நூன்முகம் (அறுசீர் விருத்தம்)
எந்தையுந் தாயும் நானும் என்னுடன் பிறப்புஞ் செந்நீர்ச் சொந்தமும் பிறந்த திப்பூச் சொர்க்கமாம் கிழக்கி லஃதாற் புந்திகொள் மாந்தர் தம்மின் புலன்கொள மண்மணக்கத் தந்தேனிக் காவி யத்தைத் தமிழினுக் கணிபோ லாமே
O 1 O

Page 8
ஜின்னாஹற் ஷரிபுத்தீன்
செந்தமிழ்ப் புலவன் மூதூர்த் திருப்பதி பெற்ற மேலோன் புந்திசால் அறிஞன் வ.அ.முன் வரித்தபேர் இராச ரத்னம் எந்தனைப் பணித்தார் காவ்யம் இயற்றென மண்ம ணக்கச் சிந்தையிற் கொண்டேன் இஃதைத் தொடங்கினேன் ஆசி -
கொண்டேன்
திசைக்கொரு மொழிவ ழக்குத் தித்திக்குந் தமிழுக் கெங்கள் திசைக்குமோர் தனிவ ழக்குத் தினையொடு தேன்க லந்தே பிசைந்தளித் திட்ட பாங்காம் பேசிடில் நாவி னிக்கும் இசைவொடு கேட்பின் காதில் இன்னிசை போலா மென்பேன்
வேறு (எண்சீர் விருத்தம்)
தமிழறிஞர் வார்த்தைகளைத் தலைமேல் தாங்கித்
தமிழினிலென் அணுவளவாம் அறிவைக் கொண்டே அமிழ்தெடுக்கப் பாக்கடலைக் கடைய நானும்
ஆசைகொண்டேன் அன்னைதமிழ் ஏற்க வேண்டும் சுமக்கமுடி யாதபெருஞ் சுமைதான் நீயே
சுமந்திடவும் வேண்டுமென்றார் ஐயா நானும் தமக்கியலா தெனவுளத்தாற் தெளிந்த போதும்
தனியவனை முன்னிறுத்தித் தொடங்கி னேனே
நாட்டுப் படலம் (அறுசீர் விருத்தம்)
வாரிதிப் போர்வை போர்த்து வங்கத்து நீர்ப்பரப்பில் பாரெழிற் பதியுளொன்றாய்ப் பேர்பெறும் இலங்கைத் தீவின் சீரெடுத் தோதல் முற்றுஞ் சாத்திய மில்லை யாரும் தேரிலார் மண்ணிலுற்ற சொர்க்கத்தின் கூறாம் அஃதே
-O2)

வாத்தியார் மாப்பிள்ளை காவியம்
நானிலம் குறிஞ்சி முல்லை நெய்தல்நேர் மருதம் ஒன்றும் கானலை அறியாப் பூமி காப்பவன் கொடையதாகும் வானம்மும் மாரி கொட்டும் வளம்பெறு நாடு மண்ணுள் காணுமாம் மணிகள் நோக்கக் கண்ணொளி மாந்தும் வாகே
நீண்டுயர் மலைகள் அஃதில் நிலைபெறுநதிகள் கானம் வேண்டுவ தோற்றும் பூமி வயல்நிலம் நீர்நிலைகள் ஈண்டிலை இல்லை யென்படுது) எலாமுமே யுண்டாம் வல்ல ஆண்டவன் முற்றுந் தன்நல் அருளினைச் சொரிந்தான் போன்றே
நகர்ப் படலம் (எண்சீர் விருத்தம்)
வான்சிவந்த கம்பளமாய் ஒளிரக் காலை
வாழ்த்தொலித்துக் கடலலைகள் முரசந் தட்டத் தேன்சிந்தி இதழ்விரிக்கும் தண்டலைமேல்
துயில்கொண்ட தாமரைகள் வண்டு பாடக் கான்மரத்துக் கொம்பர்களிற் குயில்க ளொன்றிக்
கானமழை பொழியுமிசை காற்றில் மேவக் கூன்நிமிர்த்திச் சிறகடித்துச் சேவல் கூவக்
கொற்றவன்போல் நெஞ்சுயர்த்திக் கதிரோன் வந்தான்
காலைமலர்ந் துலகுதுயில் எழுப்ப வெய்யோன்
காய்வதெங்கள் கிழக்கிற்றான் அமுத மன்ன தூயதமிழ் மொழிவதுமித் தமிழ்மணன் னிற்றான்
65IT6oreOLDup வோடு)இந்து முஸ்லிம் மாந்தர் நேயமொடு பேசுமொழி தமிழால் ஒன்றி
நோவினைகள் ஒருவர்பிறர்க் கிழைக்கா தேயோர் தாயீன்ற மக்களென வாழ்ந்த திந்தத்
திருமணணில் தாமென்னில் வரலாறன்றோ

Page 9
ஜின்னாஹற்ஷரிபுத்தீன்
ஒருபுறத்தே கடலன்னை தொட்ட னைக்கும்
ஒன்றன்பின் ஒன்றாக அலைகள் தாவும்
பெருகிவரும் புனல்தழுவும் நண்டுக் கூட்டம்
போட்டியிட்டே தரைநோக்கி வளைக ஞள்ளே சொருகியுடல் தனைமறைத்து மெல்ல மெல்லத்
தலையுயர்த்தும் கண்ணிரண்டும் மின்னும் இந்த அரியவெழிற் காட்சிதனைக் கண்கள் காண
அகம்பொலியும் அஃதெம்மணன் அழகின் கூறே
வெண்நுரைப்பூ கரைகொண்ட நீலப் பட்டின்
வாகாகத் தரைதழுவும் கடலைக் கண்டே பெண்ணினத்தார் மயங்கிடுவார் ஆகா! இஃதோர் புதுவண்ணச் சேலையென்றே ஆழி மீதே உண்ணச்சிறு மீன்கவரப் புள்ளி னங்கள்
ஒன்றையொன்று போட்டியிட்டுச் சுழல அஃதை உண்ணவெனப் பாயுதல்போல் பெருமீன் நீர்மேல்
உந்தியெழுங் காட்சிகண்டால் கவல்மா ளாதோ
அலையடித்த அலைவாயின் கரைகள் பெண்டிர்
அழகுமிகு அழகினைப்போற் கருமை கொண்டு நிலமென்னுஞ் செம்மணலாஞ் சேலைக் காங்கே
நீண்டபெருங் கரைபோன்றே நிலைத்தி ருக்க வலைபடுமீன் கவரக்கை வலைக ளோடே
வரும்மினோர் பதம்பதிய அழகு மாற அலைமீண்டுந் தரைதழுவி அழகு செய்யும்
அற்புதத்தைக் காண்பதுமோர் அழகா மம்மா
மெய்வெள்ளை காரிக்கும் முன்னே ஆழி
மீன்பிடிக்க வருவோர்கள் கண்டே முந்நாள்
பொய்யாகக் கோபங்கொண் டெதிர்தி சையிற்
போயொளித்த பகலவனும் ஊடல் தீர்ப்பான்

AuJT pTÜ1rad 85Taujib
தூய்பொன்னின் தேரேறித் தோளு யர்த்தித்
தோன்றுமவன் சுடர்கண்ட உழவர் கூட்டம்
கையெடுத்த பொருட்களுடன் மேற்கு நோக்கிக்
கழனிகளின் வளங்கான ஏகு வாரே
பரந்துகிடந் தரசோச்சும் ஆழி மீதே
பாய்மரங்கள் பலநூறாய் மீனுக் காகப் பரந்தூரும் இராப்போழ்தில் பகலில் ஆங்கே
பலநூறாய் மீனவர்கள் ஒன்றாய்க் கூடிக் கரைவலையிட் டாழ்கடலில் மீன்பி டிப்பர்
கத்தலொலி வான்பிளக்கும் வாறே அன்னார் நிரையாக வலைபற்றி “அம்பா'ச் சொல்லி
நெளிந்துநெளிந் திழுப்பதனைத் தினமுங் காண்போம்
கடலினெதிர்த் திசையினிலே பொன்கொழிக்கும்
கழனிகளால் வளம்பெறுமெம் கிழக்கு மண்ணின் கொடையெனவே நாற்போகம் விளையும் உண்ணக்
குறையறவே சுயதேவை பூர்த்தி யாகும் தடையில்லா தென்நாளும் புனல்வ ழங்குந்
தேக்கங்கள் இடையிடையே காணும் நன்செய் இடையில்லா தேதொடர்ந்து பொலியும் வானும்
ஏற்றபடி பொழிந்ததற்கென் றுதவு மாமே
பொன்மணிகள் கோத்தெடுத்துச் சரங்க ளாக்கிப்
பொன்வண்ண இலைகளிடை புகுத்தி வைத்தே கண்ணையள்ளு வாறுசெய்த தாரோ அஃது
கடவுள்செய்த விளையாட்டோ காண்ப தற்குத் தண்ணிலவின் ஒளியினிலே தலைவன் மார்பில் தலைபுதைத்து நிற்கின்ற தலைவி போல மண்மகளின் மேற்பு ரண்டு நெற்க திர்கள்
மகிழ்கின்ற காட்சியென்றும் களிப்பை யூட்டும்
O5 O

Page 10
ஜின்னாஹற் ஷரிபுத்தீன்
இதுகாலை வரைதமக்கும் உண்டி ஈந்தே
இட்டம்போல் புனலளித்துக் களையும் நீக்கிப் புதுப்புதிதாய்த் தோன்றுகின்ற நோய்கட் கெல்லாம்
பக்குவமாய் மருந்திட்டுப் பாது காத்தே உதவிசெய்த உழவனுக்குச் செல்வம் சேர
உயிர்கொடுக்கத் துணிகின்ற வயல்கள் தம்மின் விதியெண்ணிப் பெருமையுறும் மண்ணும் இக்கால்
வரைதாங்கி நின்றேனென் றெண்ணும் போழ்தே
வயலண்டி யுள்ளசிறு கானில் ஓங்கி
வளர்ந்திருக்கும் நெடுமரங்கள் மண்வ ளத்தை இயல்பாக எடுத்தோதும் பசுந்த ஸ்ரிர்கள்
எஃகியெங்கும் நிறைந்தேகான் இருளாய்த் தோன்றும் கயல்பாடும் நீரோடை புனலை அள்ளிக்
கொணர்ந்துவயல் நிலஞ்சேர்க்கும் கனிம ரங்கள் அயலிரண்டுங் காய்க்குமவை கவர்ந்தே மந்தி
அங்குமிங்கும் பாய்ந்தோடும் குதூக லித்தே
வான்மதிவின்ை பூரணமாய்க் காயும் நாளில்
வாவிகளில் உறைகின்ற உயிரி னங்கள் தேனாகச் செவியினிக்கக் கானம் பாடும்
தேவிட்டாத மகிழ்வையுளந் தூண்டும் எங்கும் காணாத புதுமையிது கிழக்குக் கென்றே
கொண்டவரம் எனில்மிகையே இல்லை இஃதை வாணாளில் ஒருமுறைதான் எனிலுங் கேட்க
வேண்டாவோ பிறப்பின்பே றாகு மன்றோ
பிட்டுக்கு மாவிடையே தேங்காய்ப் பூவாய்ப்
பிரித்தெடுக்க ஏற்றபடி சேர்த்து வைக்கும்
மட்டுநகர் மக்கள்தம் வழக்கம் போல
மக்களிங்கே ஒற்றுமையாய் அடுத்தடுத்தே

AwbólujTj pmüllerap67 35/76)uji
ஒட்டுமொத்த மாகமுஸ்லிம் தமிழர் என்றே
ஒன்றியொன்றி வாழுகின்றார் பல்லாண் டாக
பிட்டிடையிற் பிரிந்தாலும் பிரியார் ஒன்றிப்
பேசுமொழி தமிழென்ற பொதுமை யாலே
சாதியின மதபேதம் எமக்கு வில்லை
சமயத்தால் வேறுவேறாய் ஆன போதும் ஆதியிறை தனைவனங்குங் கோயில் இங்கே
அனைவருக்கும் பொதுவாகும் விழாக்கா லத்தில் பேதமின்றி அனைவருமே கூடு வார்தீப்
பள்ளயம்"ஓர் உதாரணமாம் "பாண்டி ருப்பில்" வேதத்திற் கிறிஸ்த்தவரும் இஸ்லாம் இந்து
வேவ்வேறே எனினும்நாம் ஒருதாய் மக்கள்
"இரண்டிதழ்கள் இதயத்தின் இந்து முஸ்லிம்"
என்றுரைத்தார் "புலவர்மணி" எனும்பேர் கொண்ட பெரியதம்பிப் பிள்ளைஐயா கிழக்கில் வாழும்
புராதனவீர் குடிகளிவர் என்பதாலே உருவவழி பாடுசெய்யும் இனத்தா ரோடே
உருவவழி பாடுசெயார் ஒன்றி வாழும் பெருமைகொண்ட தெனில்கிழக்கின் மாண்பைக் கூறிப்
பெருமைகொளில் மிகையில்லை புவியின் மீதே

Page 11
ஜின்னாவூற் ஷரிபுத்தீன்
கிராமத்துப் படலம்
மருதமுனை எனுஞ்சிற்றுார் தனிலே முற்றும்
முஸ்லிம்கள் வாழுகின்றார் நீடு நாளாய் இருபுறமும் இந்துக்கள் வாழ்பு லங்கள்
இதயத்தால் ஒன்றுபட்ட மக்க ளன்னார் ஒருபுறத்தே பாண்டிருப்பும் மறுபு றத்தே
உள்ளது "நீ லாவண்ணை" யூரும் மேற்கே பெருவயலின் நிலமுமெதிர்த் திசையில் வங்கப்
பெருங்கடலுஞ் சூழ்ந்ததுநற் பேர்கொள் ஊரே
அகட்டழலைப் போக்கிடநல் நிலம்வி ளைத்து
அரிசிதரும் உழவர்கள் மீன்பி டிப்போர் பகட்டான பாயிழைக்கும் பெண்டிர் சேலை
புடவைநெய்யும் தொழிலாளர் வணிகர் தச்சர் இகபரத்து வாழ்வுயரப் பாதை கூறும்
இறைவேத நபிபோதங் கற்பிப் போர்கள் வகைத்துரைக்க வியலாச்சிற் றொழில்கள் செய்வோர்
வாழுபதி மருதமுனை எனும்நல் லூரே
ஐவேளைத் தொழுகைக்கீர் பள்ளி "குத்பா"
அடுத்தடுத்து வாராந்தம் மாற்றிச் செய்வர் துய்யதமிழ்க் கல்விதர இருகூ டங்கள்
திருமறையை ஒதவைக்கும் மதர சாக்கள் தையலர்க்கும் ஆண்களுக்கும் வேறு வேறாய்த்
தனித்திருந்த காலமது மூபத் தைந்தை எய்துகின்ற ஈர்பத்தின் நூற்றாண் டக்கால்
இக்காதை தொடங்குகின்ற போழ்த தாகும்
-Os)

வாத்தியார் மாப்பிள்ளை காவியம்
நெசவுசெய்தல் பெருந்தொழிலாம் நூலை நூற்று நெய்தார்கள் முன்னாளிற் பிற்காலத்தில் நெசவுக்கா யானவெள்ளை நூலை வாங்கி
நெறிப்படுத்தி நெய்தார்கள் பெண்களுக்காய் இசைவான கம்பாயம் சோமன் மூட்டு
இரண்டுவகை கொண்டசாரன் ஆண்களுக்காம் விசைத்தறியும் எறிதறியும் வழகிற் கொண்ட
விதமிரண்டாம் குழித்தறியும் அவற்றுள்ளாகும்
வேண்டுகின்ற வண்ணத்துக்கேற்றவாறு
வென்னிரில் தூள்கரைத்து நூலை இட்டு நீண்டபொழு தாழ்த்தியதை அவித்துக் காய்ச்சி
நிறம்நிறமாய்க் கட்டைகளில் நிறைத்துச் சுற்றிச் சானிடைகொள் இறாட்டினத்திற் பாவை யோட்டித்
தெரித்திடையில் அலகுகளைச் சொருகி மீட்டு நீண்டகன்ற தெருக்களிலே கவைகள் நட்டு
நிரைப்படுத்திப் பரப்புவரே பசைபோ டற்கே
பதமாகக் காய்ச்சியபின் பசையை நீண்ட
பையிலிட்டு இருபுறத்தும் இருவர் கோலி முதலிருந்து பலமுறைகள் மேலுங் கீழும்
முடியுவரை இழுப்பார்கள் பசையுறப்பின் இதமான சூரியனின் வெப்பந் தன்னில்
ஏற்றபடி காயவைத்தே பாவைப் பாவின் இழைபிரியக் கைப்பிரம்பால் தட்டு வார்கள்
எஃகியவை தனித்தனியாய் அகன்று போகும்
சுற்றிய"பா" தனையெடுத்தே அச்சிற் கோப்பர்
துளைகளூடே ஒவ்வென்றாய்ப் புகுத்தி மீட்டுத்
தறிகளிலே பொருத்திடுவர் நெசவு செய்யத்
தோதாக நிமிரக்கற் பொறியும் வைப்பார்

Page 12
ஜின்னாஹற்ஷரிபுத்தீன்
குறிதவறா தேகுகின்ற அம்பைப் போன்று
குறுக்குநெருக் காகநுழைந் தோடு கின்ற பொறிதன்னில் நூல்த்தாரைப் பொருத்த நூலைப்
பக்குவமாய் இறாட்டினத்திற் சுற்றிக் கொள்வார்
“மக்கந்தப் பினால்மருத முனை”யென்றோர்கால் மக்களுரை செய்வார்கள் நன்மாந்தர்கள் அக்கபக்க மாந்தர்களை அனுசரித்தே
அன்புகொண்டு வாழ்ந்ததொடு வந்தோருக்கும் தக்கஇடம் தந்தவரை ஆதரித்தும்
தம்மவர்போல் மதித்தனைத்தும் நடந்ததாலே மக்கத்தின் புனிதத்தின் பின்னே யவ்வுபூர்
மகத்துவத்தைக் கொண்டதென மொழிந்திட் டாரே
காதை தொட்ங்கு படலம்
சீனியரின் தொழில்"தையல்" மேலுங் கூடச்
செந்தமாகக் 'களிமடுவில்” நன்செய் புன்செய்க் காணிகளும் உண்டவர்க்கு முல்லைக் காரன்
கொண்டவையுஞ் செய்வார்நல் உழைப்புக் காரர் பேணியிறை தனைத்தொழுவ துழைப்பி னோடு பிறிதான கடமையவர் தமக்கு யார்க்கும் கோணாத மனத்தோடு கொடுக்குஞ் சீலர்
கோத்திரத்தில் “ஓடாவிக் குடியைச் சேர்வார்
அடர்ந்தபெருந் தாடிநல்ல முறுக்கு மீசை
ஆஜானு பாகுடைய தோற்றம் போகும்
இடந்தன்னில் பிறர்மதிக்கு மாறு வாகாம்
இடைகொண்ட சாரனொடு நீண்ட அங்கி

வாத்தியார் மாப்பிள்ளை காவியம்
வடம்போன்று தலையினிலே தலைப்பா கைசெவ்
வாய்நிறைந்த தாம்பூலம் காலில் மிக்க
திடமான மிதியடிகள் கையில் வைரத்
தடியோடு நிமிர்ந்தநடை கொண்ட பேரே
நாற்குணமுந் தோன்றியதிப் பெண்ணி டத்தோ
நயம்மிக்க சொல்லுமிவர் உடன்பி றப்போ தோற்றத்தில் அமைதிமிக்க தாயாய்ச் செய்யுந்
தருமத்திற் கருணைமிகு நற்பி றப்பாய் ஆற்றல்மிகு குடும்பத்தின் தலைவி யென்றும்
ஆண்மைக்கு மேன்மைதரும் துணையாய் யாரும் போற்றுவகை வாழ்ந்திருந்தார் "பாத்தும்மா"நற்
பண்புக்கோர் இலக்கணமாம் என்னு மாறே
சீனிமுகம் மதுபாத்தி மாப்பெற் றார்க்கு
சீர்பெறுநல் மகனொருவர் பிறந்தார் தூய ஞானமிகு குலக்கொழுந்தாய் நனிதே போற்றும்
நல்லொழுக்கம் மிக்கவராய் வளர லானார் தேனினிய தமிழோதிச் சிறந்தார் வாழ்வைத்
திட்டமிட்டு வாழ்ந்திடவுந் துணிவு கொண்டார் மானமுள்ள ஆண்மகனாய் மாற்றார் கால்கள்
மண்டியிடா இலட்சியத்தைக் கொண்டிட் டாரே
கிழக்கினிலே கற்றவரில் ஒருவ ராகக்
கீர்த்தியையுந் தன்வயமாய்க் கொண்டு கல்வி விளக்காக ஒளியோச்சி நின்றார் வாழ்வின்
விளக்கமென இவருயர்ந்த புகழுங் கொண்டார் களங்கமிலா மனங்கொண்ட கண்ணி யத்தாற்
கவர்ந்துகொள்ளப் பலருமன்று முயன்றிட் டார்கள் இளமையிலே உளம்பதிந்த மாமன் பெண்ணை ஏற்பதென மனமுறுதி கொண்ட தன்றோ

Page 13
ஜின்னாஹற் ஷரிபுத்தீன்
தந்தையொடும் உடன்பிறந்தார் அனைத்துப் பேரும்
தன்வழியில் விரோதமுள்ளைப் பதித்த போதும் புந்திதடு மாறவில்லை கொள்கை மீது
பிறழ்வுசற்றுந் தோன்றவில்லை குடும்பத் துள்ளே பந்தமொன்றும் விட்டொழியா இடையில் தோன்றும்
பிரிவென்றும் நிலைப்பதில்லை எனவு ணர்ந்தே சொந்தத்துள் பெண்கொள்ளத் துணிந்தார் தன்னைத்
தேடிவந்த பொருத்தங்கள் வெறுத்திட் டாரே
தொடருமிந்தக் காதைக்குத் தலைவன் பின்னர்
தேர்ந்திடுவீர் யாரென்றே முதலிற் சொன்னால் விடைகொண்ட பின்னர்முன் தோன்று கின்ற
வினாவுக்குப் பொருளற்றுப் போகும் முற்றும் படித்தபின்னே சொல்லாமல் அறிவீர் அந்தப்
பண்பாளர் யாரென்றே வல்லோன் மேலாம் குடைநிழலில் சகலதுமே பெற்று வாழ்ந்த
கண்ணியரை அறிந்துள்ளம் பூரிப் பீரே
சரியினிமேல் தொடர்வோமிக் காதை தன்னைச்
செப்பிடுவோம் இதன்தூய தலைவன் தம்மின் வரிசைமிகு வாழ்வுமத னோடு சேர்ந்த
வரலாறும் பின்னியவிக் காவி யத்தை மருதமுனை தான்நடந்த புலமாம் சீர்கொள்
மட்டக்க ளபப்பினொரு பகுதி தொன்மைப் பெருமையுறு மண்சுற்றம் போற்று கின்ற
பதிமேன்மைக் குடிமக்கள் வாழும் ஊரே
“ஆதம்பா வா"தந்தை வேறோர் பேராய்
அழைத்தார்கள் "சீனிமுகம் மது"வென் றுாரார்
தீதறியாப் பெண்திலகம் பாத்தும் மாதாய்
தம்பிகளிர் பேர்அறுவர் பெண்தங் கைகள்

வாத்தியார் மாப்பிள்ளை காவியம்
சீதனமும் கைக்கூலி பிறவும் பெற்றே
தன்மகனைத் தரவிருந்தார் தந்தை ஆனால்
ஒதியுணர் மகனதற்கு மறுத்தா ரோர்நாள்
உவக்காத தந்தைமணம் வெகுண்டு ரைப்பார்
“வெத்திலவாய் போடஅந்த வல்லுவத்த கொண்டாகா புத்தியில்லாடுது) ஏனிந்தப் பேய்த்தனத்தச் செய்யிறானோ!
LIDITLDTL Lq6iT6OD6TT6uJ60cóTL மொக்குத்தனத் தாலேயவன் ஏமாந்து போனாங்கா என்னசெஞ்சும் நானுடன்கா”
என்றுசொல்லி வல்லுவத்தின் வாயவிழ்த்தார் தம்மினது சினந்தன்னை அவிழ்த்தெறியத் தோன்றாத சீனியரும்.
பாக்கைக்கை எடுத்துப்பின் பக்குவமாய் வெட்டித்தன் வாய்க்குள்ளே போட்டதனை மென்றபடி வெற்றிலையின்
காம்பைமுதல் ஒடித்தெறிந்து “கிள்ளவெட்டில்” சுண்ணாம்பைப் பாம்புவிரல் தனையதனுள் பதித்தெடுத்து வெற்றிலையின்
-C13)-

Page 14
ஜின்னாஹற் ஷரிபுத்தீன்
மேற்றடவி னார்மடித்து வாயிலிட்டார் தன்சினத்திற்கு)
ஏற்றபடி பற்களையும் ஏவிவிட்டார் மெல்கவென்றே.
கோபத்தால் நெஞ்சமெலாங் கொதித்திடவே தன்மகன்போய் ஆபத்தில் மாட்டியதாய் அங்கலாய்த்தார் சீனியரும்
"ണങ്ങങ്ങuിങ്ങി ജuിഖgTഖb எங்ககாக்கா புள்ளதானே ஆகாதாம் பழிச்சாஅதை அல்லாஹற்வும் பொறுக்கமாட்டான்"
பாவமந்தப் பொடிச்சியவள் படியாட்டிப் போனாலும் ஏவல்கள் வெலக்கல்கள் எல்லாமே தெரிஞ்சவதான்”
“மீராலெவ்வை காக்காவும் மரியாதைக் காறன்போய்ப் போர்க்கோழி போலநிணடு Guar(86)6OOTITLib ji bLDITfrilas"
என்றேதன் கணவர்தம் இரும்பான இதயத்தை நன்றாய்க்க ரிையவைக்க நவின்றிட்டார் பாத்தும்மா.
C140

வாத்தியார் மாப்பிள்ளை காவியம்
“போகாநீ அறிவுகெட்ட பேய்ஒனக்கும் அண்டைக்கிப் போடியார் வந்துபட்ட பாடொனக்குத் தெரியாத"
"ஹாஜியார் வந்தன்று தகுதியவர் புள்ளைக்கி என்ரமகன் தானெண்டார் ஏன்மறந்து போனாய்கா"
"நான்குடுத்தா குடுப்பன்கா நெறஞ்சகாசு பணத்தோட படிச்சவன் என்ரமகன் G3Lu&FTLDäF GLib DTyfu unt”
என்றேதன் மனையாள்தம் எதிர்க்கருத்தை மறுதலித்தார் கொன்றுவிடுங் கடுங்கோபம் கொப்பளிக்கும் கண்களிலே
கண்ணிரண்டுங் குளமாகக் கவல்மிகுந்து பாத்தும்மா விண்ணோனை எண்ணிநிதம் வினைநினைந்தே துன்புற்றார்.
"காக்காட புள்ளையவள் கண்நெறஞ்ச சீதேவி பார்க்கநல்ல அழகிஎன்ர புள்ளைக்கிம் நல்லதுதான்”
C15)-

Page 15
ஜின்னாஹற் ஷரிபுத்தீன்
“என்னத்தச் சென்னாலும் ஒள்ளுப்பமும் கேக்காம தன்ரபுடி வாதத்தொடு தானேதான் தான்புடிச்ச
காட்டுக்குழி மொசலுக்குக் கால்மூணு தானெண்டு மத்தவங்க பேச்சுகளை வெசமெண்டு தான்நெனச்சா
வேறென்ன செய்யிறதோ வீறாப்பு என்னத்துக்காம்" என்றிட்டார் பாத்தும்மா எரிச்லொடு முகம்நோக்கார்
“ஒள்ளுப்பமும் என்ரபக்கம் இஸ்டமில்ல பாத்தும்மா
கல்லுக்கரைஞ் சாலும்நான் கரையமாட்டன் கேளுகாநீ
சொல்லிறத்த கேளுயிது சரிப்பட்டு வரமாட்டா மெனக்கட்டு என்னோட மல்லுக்கு நிக்காதயா"
புகையிலையும் கார்கயிப்பும் பின்னொன்றன் பின்னாக
வகைவகைக்குச் சிறிதளவு
வாயிலிட்டுச் சப்பியபின்
-C6)

வாத்தியார் மாப்பிள்ளை காவியம்
தோன்றிவரும் சாற்றினையோர் செப்புபகால் படிக்கத்துள் துப்பிச்சினம் தணிக்கவெனச் சீனியரும் முயன்றிடுவார்.
தன்மனையாள் அண்ணன்மேல் தீராத பகையவர்க்கு நெஞ்சிரங்க மாட்டாராய் நின்றிட்டார் ஒரேபிடியில்
தன்மகனை வேற்றொருவர் தன்குடும்பம் சாராத பெண்ணுக்குத் தான்தருவேன் பெருந்திருவோ டாமென்றார்
"வாத்தியார் மாப்புளதான் G36.6OdrGLDITC3LDT 2-6dr(36OTITL காக்காட மகளுக்கு காத்திரிக்க வேணாமெண்டு
நீயேபோய்ச் செல்லிட்டுவா நடக்காத வெசயமெண்டு எலவுகாத்த கிளிபோல ஏங்கவரும் பின்னால”
வார்தைகளைச் சூடேற்றி விதைத்தார்தன் மனையாளின் சாத்வீகக் குணந்தன்னைச் சோதிக்கும் பாங்கினிலே
-G17D

Page 16
ஜின்னாவூற்ஷரிபுத்தீன்
புருஷனுக்கு அடங்கியவப் பெண்ணாளோர் பதிலுரைக்க விருப்பின்றி வாய்புதைத்தார் வேண்டாப்பழிதவிர்க்கவென
நெஞ்சம்தான் மிகஉருகி நிதமிதுவே வேதனையாய் அஞ்சினார் பாத்தும்மா ஆகுவினை தோன்றாதார்
வீடுதேடி வந்தேதன் விருப்பத்தைத் தெரிவித்த சகோதரனை எவ்வாறு சாந்தமுறச் செய்வதென்று
சிந்தனையில் திளைத்திட்டார் தோன்றாதே மனங்குமைந்தார் ஆண்டவனின் பக்கலிலே ஆகட்டும் எனவமைந்தார்
மகளைமணம் முடிப்பதற்கு மருமகனார் விரும்புவதாய் அறிந்தமிரா லெப்பைதன் அன்னைமக ளில்சென்றே
பக்குவமாய் வார்த்தைகளைப் பரிமாறினார்தனக்கும் ஒப்புதல் உண்டதனில் ஒர்ந்திடுக என்றேமுன்
-Os)

வாத்தியார் மாப்பிள்ளை காவியம்
தன்மகளின் சம்மதத்தைத் தாய்மூலம் கரிசனையாய்க் கேட்டறிந்த காரணத்தால் கூறமணங் கொண்டிருந்தார்
&flbTD LibLDT Sl6ujLD6o6orum6st சேதிகேட்ட நாள்முதலாய் நச்சரிக்கத் தொடங்கிவிட்டார் நாள்கடந்து போகுமென்றே
"இஞ்சயிங்க இஞ்சயிங்க இண்ைடைக்காலும் போயொங்க தங்கச்சிக்கிச் செல்லிப்பாத்தா சரியில்லையா சும்மாருந்தா
நாள்கடந்து போகும்வந்து நாங்ககேக்க இல்லையெண்டு சாட்டுச்செல்லி உடுவாரொங்க தங்கச்சிர புரிசனாரும்”
"கேள்விப்பட்டன் ஆராரெல்லாம் கேட்டுவாறபோறாரெண்டு தங்கக்கொடம் என்ரபுள்ள தட்டமாட்டா ஒங்கதாத்தா”
மச்சானின் குணமறிந்த மீராலெப்பை தையற்காரர் அச்சம்மிகக் கொண்டிருந்தார் அடாதெதுவும் சொல்வாரென்றே
-C19)

Page 17
ஜின்னாவூற் ஷரிபுத்தீன்
படித்தமகன் என்பதனாற் படியாத மகளுக்கோர் எட்டாக்கனி யென்றுமவர் எண்ணியேதான் பின்னடைந்தார்
கொப்புத்தேன் தனைப்பறிக்கக் காலிலாதான் ஆசைகொண்டால் எப்படித்தான் ஆகுமது என்றுமவர் மனஞ்சொல்ல
பொறுமையாய்க் காத்திருந்தும் பெண்டாட்டி தொல்லையினால் கேட்டுத்தான் பார்ப்போமெனக் கால்பதித்தார் சோதரிஇல்
பொருத்தமாய் ஒருநாளைப் பார்த்திருந்த வேளையிலே தங்கச்சி வீட்டிலொரு சுன்னத்துக் கலியானம்
ஷரிபுத்தீன் வாத்தியாரின் சகோதரியின் மக்களுக்குச் 'கத்னா"வைச் செய்யுமொரு கடமைவர அந்நாளில்
குடும்பத்தார் தமையழைக்கும் கட்டாயத் தால்மீரா லெப்பைக்கும் அழைப்புவர ஏகினார் வளம்பார்த்தே
-O20

UWAbujJj DTT jjleirobeT 35Talu Jib
சுன்னத்துக் கலியாணமும் தங்கையுடன் பேச்சுவார்த்தையும்
தங்கம்மா பெற்றெடுத்த செல்வங்கள் மூவருக்கு மார்க்கப்படி 'கத்னாவை" முடிக்கவெனத் தொடங்கிமுதல்
சொந்தக்காரர் சாதிசனம் தெரியவேண்டும் என்பதற்காய் நேரகாலத் தோடேசென்று நாட்டமதைத் தெரிவித்தார்
"ஒடன்பொறந்தார் குடும்பத்தை ஒதுக்கிவாப்பா வெச்சாலும் மெளத்து ஹாத்துக்கு மணிசர்வேனும்” என்றுசொல்லி
பாத்தும்மா தன்மகளைப் போயழைக்கச் சொன்னதனால் தையல்கார மாமாவையும் தங்கம்மா அழைத்திருந்தார்
சுன்னத்து நாளன்று திருக்கடமை முடிப்பதற்காய் வீடுவாசல் நிறைந்துமக்கள் வந்திருந்தார் கடன்கழிக்க

Page 18
ஜின்னாஹற் ஷரிபுத்தீன்
é960D-pģ55 Uıp göITLÜLDTLD6ÖT அவர்குடும்பத்தாரோடு கலியாணம் பார்க்கவென்னுங் கடமைக்காய் வந்திருந்தார்
வந்தவர்கள் வாய்நனைக்க வேண்டுமென்ற வரன்முறையைத் தக்கவைக்கத் தங்கம்மா செய்திருந்தார் பலகாரம்
வாழைப்பழம் துதள்மஸ்கத் வாயினிக்கக் கோப்பியொடு வெற்றிலை பாக்குபிற வழங்கினரே சிறுவிருந்தாம்
'கத்னா"வைத் தொடங்குமுன்னே குடும்பத்தார் பிள்ளைகட்குக் கைமுழுத்தம் தருகின்ற கடமையது முடித்தார்கள்
முறையனைத்தும் முடிந்தபின்னர் மாப்பிள்ளை மாரையுடன் ஆயத்தம் செய்தார்கள் அடுத்துள்ள நிகழ்வினுக்காய்
நன்னீரில் குளிப்பாட்டி நறுமணங்கள் பூசிப்புது
உடையுடுத்தார் வெள்ளைநிற உடுதுணிகள் அத்தனையும்

Rry6uJTij prij1.jleira)GT STaluJi)
சிறுபிள்ளைச் சாறமொடு சேர்ந்துசட்டை கால்செருப்பு தலைகளுக்குச் சிறுதுருக்கித் தொப்பிகளும் அணிவித்தார்
வழக்கம்போல் நிகழ்வின்முன் வண்டிகட்டிப் பிள்ளைகளை இருக்கவைத்தே ஊர்சுற்றி இல்லம்வந்தடைந்தார்கள்
ஊரறியச் செய்கின்ற ஒருவழக்கம் இடையிடையே சீர்செய்தார் உறவினர்கள் காசுபணம் கையளித்தே
'கத்னாவைச் செய்கின்ற குடும்பமென்று உண்டன்னாள் பரம்பரைத் தொழிலவர்க்குப் பயன்கொண்டார் ஊர்மக்கள்
கல்முனைக் குடியுரே குடிபதியாம் அவர்களுக்கு காலம்தவறாதவரும் கூட்டிவரப்பட்டிருந்தார்
குடும்பத்தார் அனைவருமே கூடியாங்கு வந்திருந்தார் கல்யாணவீடுபோன்ற கலகலப்புக் குறைவிலலை

Page 19
ஜின்னாஹற்ஷரிபுத்தீன்
கலியானம் என்றேதான் கூறுவார்கள் "சுன்னத்துக் கலியாணம” அதுபொன்றே காதுகுத்தும் கலியானம்
அரிசிகுத்தும் உரலொன்றை அடுத்தபக்கம் புரட்டிவைத்து வெள்ளைநிறப் புடவைதனை மேல்விரித்தார் இருக்கையென
குரவையிடச் சிலபெண்கள் காத்திருந்தார் பட்டாசு வெடிக்கவைக்க மற்றொருவர் வகைசெய்தார் வழமையதாம்
'கத்னா"வைச் செய்கையிலே கத்தியழும் பிள்ளைகளின் சப்தம்பிறர் காதுகளில் படாதிருக்க வேண்டுமெனக்
குரவையொடு பட்டாசுங் கொளுத்தியொலி செய்வார்கள் எவர்செவிக்கும் வாயலறல் எட்டாது இவ்வொலியால்
ஒவ்வொருவராகவந்தே உட்காரு வார்உரலில் தக்கபடி பிடிக்கவென தயாராக ஆங்கொருவர்
-C2O

Ibg5u JT ġ LipnTiJ15leiraobeT 5TGSlu Jib
காலிரண்டுக் கிடையினிலே கைகோத்து மேலுயர்த்திக் கழுத்தினைச் சுற்றியிரு கரங்களையும் பின்னியபின்
தன்னுடலி னோடவரைச் சேர்த்திறுக்கிப் பிடித்தாலோ கல்லாகச் சமைந்திடுவர் 'கத்னா"வின் மாப்பிளைமார்
கடமைதனைச் செய்யவெனக் காத்திருக்கும் "ஒஸ்த்தாமா” துரிதமாய்ச் செயற்படுவார் தொடையிலொரு அறைவிட்டே
"தீன்தீன்முஹம்மத்" என்ற சப்தமவர் வாயிருந்து பெரிதாகக் வெளிப்பாயும் பட்டாசுக் குரவையொடு
சீராகக் காரியங்கள் செய்துமுடித் தானபின்னே வீட்டுக்குள் கொண்டுவந்து வளர்த்திவிட்டார் நிலத்தினிலே
வெள்ளாடை ஒன்றெடுத்து வட்டக்கா சொன்றையதன்
மத்தியிலே வைத்தேநல் முறையாகக் கட்டியபின்

Page 20
ஜின்னாலுற்ஷரிபுத்தீன்
முகடிருந்து வரும்நூலில் மேல்நோக்கிக் குடைபோன்றே முடிச்சிட்டுத் தொங்கவைத்தே மூடிவைத்தார் சிறுவர்களை
சுன்னத்துச் சிறுவர்கள் தண்டையலின் பிள்ளைகள் ஷரிபுத்தீன் வாத்தியாரின் தங்கைதனைக் கரம்பிடித்தார்
தோணிவலை கடற்கரையில் கொண்டிருந்தார் சகோதரர்கள் கூட்டாகத் தொழில்செய்தார் கரைவலைதான் நால்வரவர்
“மொட்டையன்"தான் தோணிக்கு வைத்தபெயர் அன்றவர்கள் "85Tä55T6LDT 6oL”uj6ö”LLbLDLuj” கரைவலைக்காம் வேறிரண்டு
வேற்றுாரின் மீனவரும் வருவார்கள் மீன்பிடிக்க மருதமுனைக் கடற்பரப்பு மீன்பிடிக்க வாய்த்ததனால்

6)JVTğ535)uJTj upTTÜ15)eir6D6IT 85TağluJıib
மருதமுனையில் மீன்பிழத்தொழில்
நெசவுத்தொழில் போன்றேதான் நல்வருவாய் மீன்பிடியால் மருதமுனை மக்கள்தம் வாழ்வுக்காம் ஆதாரம்
தினந்தோறும் செங்கதிரோன் தேரேறி வருவான்மண் புக்குமவன் வரவுக்காய்ப் பாய்விரிப்பாள் துகில்களைவாள்
இருட்போர்வை நீக்கியவள் இடமளிக்க மாலைவரை முயங்குகின்ற சுகமெண்ணி மகிழ்ந்திடுவான் அதன்முன்னே
அதிகாலை வணக்கத்தை ஆற்றியபின் வலைஞர்கள் Mഖങ്ങിങ്ങ് ബൈബൈങ്ങ அலைவாயில் பதம்பதிப்பார்
வலையேற்றித் தோணிகளை முதல்நாளே வைத்திருப்பர் வந்ததுமே கடல்நோக்கி விரைந்துதள்ளி அலைகடப்பார்
தண்டையல்தான் தலையாரி தோணிவலைக்காரருக்கு தண்டுபோட நான்கிளைஞர் சேர்ந்திருப்பர் தோணியிலே

Page 21
ஜின்னாஹற் ஷரிபுத்தீன்
நீண்டசவள் கொண்டவரும் நின்றிருப்பார் ஒருமுனையில் தண்டுவலிப் போர்மற்றத் தொங்கலிலே தயார்நிலையில்
தோணியையும் கொல்லாவையும் சேர்த்திணைக்கும் மரமிரண்டில் தனித்தனியே ஆறேழ்வர் தள்ளவெனக் காத்திருப்பர்
அலையோயும் வளம்பார்த்தே அடங்கியலை தாவுகையில் அம்பாவைத் தொடங்கிடுவர் அனைவருமே ஒருகுரலில்
ஏலை.ஏலை. ஏலை.ஏலை
ஏலை.ஏலை. ஏலை.ஏலை
ஏலை.ஏலை. ஏலை.ஏலை
ஏலை.ஏலை. ஏலை.ஏலை
தக்கபடி அலைவாய்க்கரை தாண்டியலை யூடறுத்துத் தோணிகடல் சேர்ந்ததுமே தனிக்கவிட்டுக் கரையடைவர்
தரையிருந்து நெடுந்தூரம் தொடருவது கயிறுகள்தான் கயிற்றுவலை அதன்பின்னே கல்தெப்பம் கூடியதாய்
C2S)-

TšõuJ prügor Talub
நூல்வலையைத் தொடர்ந்துமடி நிறைவாகும் மறுபுறம்முன் போலேதான் தொடருமது புறமிரண்டும் ஒன்றேபோல்
மீகாமன் தண்டையல்தன் மதிநுட்பங் கொண்டெதிரே தோணிசெல்லும் திசையறிந்தே செலுத்திடுவார் வேறிருவர்
வலையிறக்கு வார்கற்கள் விரல்விட்டுக் கீழிறங்க மரத்தெப்பம் நீரினிலே மிதக்கும்படி முறையாக
வளைந்துவரும் தோணிகரை வந்ததுமே மறுபுறத்தோர் கைப்பற்று வார்கள்மறு கரைக்கயிற்றை இழுப்பதற்காம்
இருபறமும் ஒரேயளவில் இசைந்துவர வாய்ப்பதுபோல் நடுநிலையில் தோணிநிற்கும் தண்டையல்தன் கையுயர்த்திக்
கூவிடுவார் எப்பக்கம் கைகதிக்க வேண்டுமென்றே சேவகரும் அவ்வாறே செய்திடுவார் வலைநிமிரும்

Page 22
ஜின்னாஹற் ஷரிபுத்தீன்
இருபுறத்து வலைவேலிக்(கு) இடைப்பட்ட மீனினங்கள்
ஒருபுறமும் தப்பியோட இயலாதே இடைசுழன்றே
இறுதியிலே மடிவலைக்குள் இறங்கிவிடும் கரையிருப்போர் ஒரேசீராய் இழுக்கவலை ஒன்றுங்கரை மடியுடனே
விரிந்தபடி மடிஇருக்க வாயினிலே மந்துகட்டித் தண்டையல்கை பிடித்திருப்பார் தரையையண்டும் வரையிலுமே
இத்தனையும் நடக்கும்வரை இமைப்பொழுதும் அன்னவர்வாய் அமைதியுறா அம்மணத்தை அள்ளிவீசும் குறைவில்லை
கரையிருக்கும் தண்டையலும் குறைவின்றித் தூஷணத்தை வலையிழுக்கும் வலைஞர்மேல் வாரிவாரி அபிஷகிப்பார்
கள்ளிபெத்த மகனேயொண்ட கண்கெட்டுப் போச்சுதடா தண்டையல் தோணியில தவிக்கார்ரா மீன்கெளரா
-GO

வாத்தியார் மாப்பிள்ளை காவியம்
கொள்ளைமீன்கள் வலைக்குள்ளே கண்படுமாறிருந்தாலோ தோணியிலே இருக்கின்ற தண்டையலார் தோற்றத்தில்
ஆலாதன் சிறகுகளை அகலவிரித்தாட்டுவபோல் கைவிரித்துக் குந்திக்கால் குதியுயர்த்தித் தவிதவிப்பார்
காக்காவலி புடிச்சவனே களிசறநாய் றாங்குட்டி ஊண்டியிழு வலதொய்ய உடாதேரா பறநாயே
கீழ்சாதி வளப்புண்ணி கையென்ன சொத்தியாடா வே.மகனே வள்ளாஏன் வேறபக்கம் பாக்காய்நீ
இப்படியாய் வாய்க்குவந்த ஏச்செல்லாம் ஏசிடினும் வலைகரைக்கு வந்தவுடன் வாப்பாஎன்ர சீதேவி
என்றேதான் சொல்மாற்றி இரங்குவார்கள் தண்டையல்மார் கரயாக்கன் பிசாசேறி கத்துவதாய்ச் சொல்வார்கள்
-GO

Page 23
ஜின்னாஹற்ஷரிபுத்தீன்
அரைஞாண் கொடிக்குள்ளே அகப்பட்டு விழாதிருந்த சிறுவாபோர் பக்கத்தில் சரிந்துகழன்றிறங்கவதும்
உணராத பேராக ஓடியோடி வலைக்காலின் மேல்கீழாயப் பறந்திடுவார் முகங்கடுக்க கண்கொதிக்க
மடிவலையில் மீன்நிறைந்தால் மடிவெடிக்கும் சிலபோழ்து மடிகாக்கக் கயிற்றாலே மடிதாங்கி வைத்திருப்பர்
நேராக வலையிழுக்க நிரையொழுங்கு செய்வதற்குக் கரையினிலே இருப்பரொரு கரைத்தண்டயல்காரர்
மருதமுனைக் கடற்பரப்பு மீன்பிடிக்கென்றேற்றதுவாய் வளங்கொண்டதாகுமிறை வழங்கியபேரருளாக
பாரைசுறா சூரைகீரி பெருந்திருக்கை நெத்தலியும் வாளைஅறுக் குழாசாளை வேழாமுரல் சீலாபாலை
(32)-

வாத்தியார் மாப்பிள்ளை காவியம்
கயல்காரல் உழுவைகடை கொடுவாகல் மீன்மணலை இவையனைத்தும் இன்னுமின்னும் எல்லையில்லா வகைமீன்கள்
மீனதிகம் வலைப்பட்டால்
மீனவர்க்குக் கொண்டாட்டம் கடல்பார்க்க வருவோர்க்கும் கைநிறைய மீன்கிடைக்கும்
பிடியுண்ட மீன்களினைப் பரத்திவைக்க ஆங்குவரும் வியாபாரி மார்ஏல விலைவைத்துக் கொள்வார்கள்
ஊர்த்தேவை அத்தனையும் ஏற்றபின்னர் மிதமிஞ்சி இருப்பவைகள் கருவாடாய் இனம்மாறும் தொகைதொகையாய்
உப்பிட்டுப் பதமிடுவர் உப்பிலாதும் காயவைப்பர் கடலோர மணற்பரப்பில் கதிரவனின் செஞ்சுடரில்
கீரிகடை நெத்தொலிதான் காயவைக்கும் மீனினங்கள் கரைஉப்புச் சேர்த்துப்பீப்பா தனிலடுக்கிப் பதனிடுவர்
O33).

Page 24
ஜின்னாஹற்ஷரிபுத்தீன்
சேர்த்திவற்றை வைக்கவெனத் தென்னைமரஞ் சூழந்தவாடித் தலமொன்றும் இருந்ததங்கே சொந்தமது சகோதரர்க்கு
தோனாவைப் பிடித்தாற்போல் தானதுவாம் தோனாதான் வண்ணார்ஊர்த்துணிவெளுக்க வாய்த்தவிடம் ஊர்வடிச்சல்
தண்ணிச்சோற்றைத்தின்றுவிட்டுத் தொழில்நாடி வந்தவர்கள் இடையிலொரு “ப்ளேன்டீயை” ஏற்றிடுவார் “றோஸ்பானொடு
உச்சிவெயில் உடலுருக்க உட்டினத்தால் நிலங்கொதிக்கக் கொட்டுகின்ற வியர்வையுடல் குளிப்பாட்டும் தொழிலதுவாம்
கைநிறையக் கிடைக்கின்ற காலமுண்டு சிலவேளை கால்காசும் கைப்பற்றாக் காய்ந்திருக்கும் நிலையுமுனிடு
ஊர்ச்சிறப்பை எடுத்தோத உகந்ததெனச் சொல்லிவைத்தோம் மீன்வளத்தை இத்தோடு முடித்துக்கதை முன்தொடர்வோம்

Ojmbolu Jmj DTJ jleTab6T 85raýluUb
காதுகுத்துக் கல்யாணம்
சுன்னத்துக் கலியாணம் சிறப்பாக முடிந்தபின்னர் மற்றுமொரு சங்கதியும் முறையாக நடந்ததங்கு
ஒரேகல்லில் இரண்டுமாங்காய் ஒடிப்பதுபோற் செலவடக்கக் காதுக்குத்தும் நடந்ததன்று கூட்டாயவ் வீட்டினிலே
சுன்னத்து மாப்பிள்ளைகள் கூடப்பிறந்தவொரு சகோதரிக்குத் தானந்தச் சடங்குநடந்தேறியது
பிள்ளையைக் குளிப்பாட்டிப் புதுச்சட்டை போட்டெடுத்துச் சுற்றிவர நின்றுபெண்கள் சத்தமாய்க் குரவையிட
வயதான பெண்ணொருத்தி வீறிட்டுக் குழந்தையழச் சூடான ஊசியினைச் சொருகிவிட்டாள் சோணைகளில்
காய்ந்தவேப்பங் குச்சியினைக் காதிலிட்ட துளையுள்ளே அளவாக வெட்டியூசி அகற்றியபின் புகுத்திவிட்டாள்

Page 25
ஜின்னாஹற்ஷரிபுத்தீன்
ஒன்றிரண்டு மணித்துளிக்குள் ஒப்பேறும் சமாச்சாரம் ஊர்கூட்டி யன்னாளில் ஒருசடங்காய் நிகழுவது
வந்திருந்தோர் உண்ணவென வாயகன்ற பன்தட்டில் 660öT6600Tüü J600fuugib இன்னும்கில இனிப்புவகை
பரிமாறி வைப்பார்கள் புசித்தபின்னர் குடிப்பதற்குக் கோப்பியும் தேநீரும் கொடுப்பதந்நாள் அதன்பின்னே
வெற்றிலை பாக்குவட்டா வரும்படிக்கம் உடன்சேரும் பீடியுடன் கருஞ்சுருட்டும் புழக்கத்தில் இருந்தனவாம்.
தங்கையுடன் பேச்சுவார்த்தை
அனைத்துமங்கு முடியுவரை அமைதியொடு காத்திருந்த அண்ணன்தன் தங்கையினை அண்டியுரை செய்திட்டார்
"தங்கச்சி பாத்தும்மா தெரியாமத்தான் கேக்கிறன்கா வாத்தியார் மருமகன்என் மகள்மேலே புறியமெண்டு

ajmš5ýlujTj pTÚLlerapGT 35malujíb
சாறம்மா அறிஞ்சதாகச் செல்லுகாகா மெய்தான?” அறிந்தும் அறியாத அவர்கேட்ட கேள்விக்கு
“என்னகாக்கா கேக்கிறயள் ஒங்களுக்குத் தெரியாத ஊருலகம் தெரிஞ்சசெய்தி ஒங்கமகள் ஆயிஷாவை
கலியாணம் பண்ணத்தான் காத்திரிக்கான் என்ரபுள்ள நானுமத நல்தெண்டு நெனச்சிக்கன் சத்தியமா”
“சரிபுள்ள பாத்தும்மா சரிபுத்தீன் மருமகனார் LÓluuŮLup a56ólu JT6OOTLb பனன்னமச்சான் உடுவாரகா”
"நீயும்நானும் புறியப்பட்டு நடக்குமாகா மச்சானப் புறியப்படச் செய்யிறது பெரும்பாடு தெரியாத "
“கல்கரைஞ்சு போனாலும் கரையாத மனிசனவர் வில்லுப்புடி புடிச்சாஅவர் விடமாட்டார் கோபத்த
C37).

Page 26
ஜின்னாஹற் ஷரிபுத்தீன்
அடக்காம ஏதாச்சும் அறம்பொறமா பேசிடுவார் கதச்சாலும் நீயதுக்குக் காதுகுடுத் திடவேணாம்"
அதனால தாங்காநான் ஆத்தாம யாலவந்து செல்லுறன்கா ஒனக்கிட்ட தெரிஞ்சவித்த செஞ்சுபார்நீ"
"அல்லாஇரிக் கான்காக்கா அவருக்கிட்ட நேரம்பாத்து நல்லதாக முடிவொனட நான்பேசி எடுக்கன்நீங்க
கக்கிசமும் படாதீங்க 856.606DuGSLD LLC36),600TITLD காலஞ்செல்லச் செல்லளல்லாம் ஹைராவரும் போய்வாங்க”
தங்கையின் வார்த்தைகள் தைரியத்தைத் தரஅண்ணன் பாரத்தை அல்லாஹற்மேல் போட்டுவிட்டு வீடுசென்றார்

GJTë,5luJTij prij15leiroGT 5TaluJub
மாப்பிள்ளை ஹரிபுத்தீன்
மாமாவின் மகளைத்தான் மணம்முடிப்பேன் அதுவன்றி ஏமாந்து போகேன்நான் என்றிருந்தார் ஷரிபுத்தீன்
குடும்பத்தார் அத்தனையும் கூடிநின்றே எதிர்த்தாலும் பிடிவாதந் தனையகற்றப் பிரியமற்றே இருந்தாரே
குடும்பத்துள் ஒருத்தியிங்குக் குமராகக் காத்திருக்க இடும்பாக வேறொன்றை ஏற்பதென்ன நீதியென்றே
ஊரினிலே படித்துமுதல் உத்தியோகம் பார்க்கின்றார் வேறொருவர் இல்லையெனும் வாறுவுயர் குணசீலர்
சீதனத்தைப் பாவமெனச் செப்புகின்ற பண்புடையார் ஆதனமும் சீர்சிறப்பும் ஆகாதே எனவுரைப்பார்
கைநீட்டிப் பெண்ணிடத்தில் காசுபொருள் வாங்குவது பொய்சொல்லி ஏமாற்றிப் பெண்கொள்ளும் கீழ்ப்புத்தி

Page 27
ஜின்னாவூற் ஷரிபுத்தின்
ஒவ்வாத செயலென்றே ஊரறியப் பேசுபவர் அவ்வாறே தானுமதை அனுசரிப்ப தாயுரைப்பார்
மணப்பெண் ஆயிஷா
LDITLSugor LD560T65Libb மாமிபெற்ற மகள்ஆயிஷா நாமமுடைத் தாளையுயர் நற்பண்பின் பொக்கிஷத்தை
நாங்களுமே சிறிதிங்கு நெஞ்சிருத்திப் பார்ப்போமே! சேமமுறும் அவர்பற்றித் தெரிந்திருத்தல் காதைக்கு
Örd B60)LuIITLD (UppL555 சுட்டித்தனம் யாரெவரும் வெருட்டவென முயன்றாலும் வெல்லாரே விவேகவரம்
கிடைத்தவராம் வல்லோனின் கொடையாகும் நேர்நெஞ்சம் மிரட்டியெனும் பிறரையவர் மனங்கொண்ட தேவைகளைப்
பெற்றுக்கொள வேண்டினோ பிடிவாதம் செய்துபெறும் சண்டித்தனம் ஆயிஷாவின் சிறுவயதுச் சாமர்த்தியம்.

வாத்தியார் மாப்பிள்ளை காவியம்
சின்னஞ்சிறு பருவத்திற் செய்தபிடி வாதத்தைச் சொன்னால் சிரிப்புவரும் சேதியது ஓரிரவு
கொன்னையாய்ப் புளியங்காய் கொண்டுவாடா என்றேதன் அன்னையுடன் பிறந்தாராம் அப்துல்றகு மானையொரு
நள்ளிரவு தனில்விட்டின் நெடுந்தொலைவில் நின்றஏகப் புளியமரமேறியுடன் பற்றிவருங் கால்வரையும்
எள்ளளவும் ஓயாதவ் விரவமைதி கிழித்தழுத பிள்ளையிவள் பொல்லாத பிடிவாதக் காரியென்பர்.
எத்தனைதான் பொல்லாத பிடிவாதம் கொண்டிருந்தும் நற்குணங்கள் அத்தனைக்கும் நல்லாளே பதியானாள்.
"வாத்தியார் மாப்புளைக்கி வாழவகா போறாய்நீ காத்துக்கிரி யவரமட்டும் கைதவற உட்டுறாதே"
-O410.

Page 28
ஜின்னாவூற் ஷரிபுத்தீன்
"பாத்துக்குவம் நாங்களும்நீ பண்ணப்போற கலியாணத்த மாத்தமவர் செஞ்சிபோட்டா
LDfTLDITLD856ïT 6T6ör60T6)öFü6)JTuü"
என்றேதான்.
நாளும் பொழுதுமொன்றி நச்சரிப்பார் குமர்மார்கள் காழ்ப்புணர்வு தானன்றிக் கொண்டபொருள் வேறில்லை.
ஊரார்தம் பேச்சையெல்லாம் ஒருகாதால் வாங்கிச்சிரஞ் சேராமல் வைப்பதொன்றே தேர்ந்திருந்தாள் ஆயிஷாவும்.
எல்லையொன்று பொறுமைக்கும் இல்லாது போகாதே பொல்லாத வசைபேசிப் பிஞ்சிளைய நெஞ்சத்தைக்
கிள்ளிவிட்டார் ஆளொருவர் கோபமுற்ற ஆயிஷாவோ மவுலானா என்றவுயர் மதிப்புமவர்க் களியாதே
"கேட்டிக்கம்(பு) ஒன்றெடுத்துக் கிசுக்கென்று வீசியவள் நாட்டத்தை நிறைவேற்றி நின்றவிடம் விட்டகன்றாள்.
-C12O

வாத்தியார் மாப்பிள்ளை காவியம்
நோக்காத போதினிலே நடந்தவிந்தத் தாக்குதலால் தாக்குண்ட பேர்வளிக்குத் தலைக்குனிவே ஆதலினால்
மீராலெப் பைடெயிலர் வீடடைந்தே தம்மினுக்கு நேர்ந்தவந்த விபரத்தை நாகக்காய் வாயுரைத்து
ஆயிஷாவைத் தன்முன்னே அழைத்துவந்து கண்காணத் தண்டனையுஞ் சேருவரை தாமதித்தார் அப்போது
காரணமொன் றில்லாமல் காரியமும் இல்லைஒரு காரணமும் இல்லாமல் கூறுவது ஆகியிரா
என்றறிவார் ஆய்ந்தறியும் இதயமுள்ள தந்தையவர் தன்மகளோ தப்பிழையாள் தப்பிழைத்தால் தப்பினுக்குக்
தப்பாது காரணமும் தானிருக்கும் என்றவரும் சொன்னவற்றைச் சீர்தூக்கித் தேர்ந்ததன்பின் எடுத்துரைப்பார்

Page 29
ஜின்னாவூற்ஷரிபுத்தீன்
"தப்புக்குத் தண்டனைதான் தர்மமாகும் அவளொன்றும் தப்பாகச் செய்யாளே சண்டித்தனம் உண்டேதான்”
நீங்களேதும் அவள்வழியில் நியாயமின்றி ஏதெனினும் தப்பாகச் செய்திருந்தால் தண்டனையும் சரிதானே
சரியவளை அழைத்தேநான் தப்பறிந்து தண்டனையைத் தருகின்றேன் நீங்களிப்போ தயைகூர்ந்து போய்வருக"
தந்தையார் பேச்சிலுள்ள சத்தியத்தைக் கேட்டவரும் புந்தியாய் வந்தவழி போகவெனத் தலைப்பட்டார்
வந்தவரும் போகவுடன் வரவழைத்தார் ஆயிஷாவை தந்தைமீரா லெப்பைமகள் சிலநெடிக்குள் காலடிக்குள்
வந்துநின்றாள் ஏதொன்றும் விளங்காத பாங்குற்றாள் அச்சத்தால் கண்ணிரண்டும் அகன்றிருக்க உடல்நடுங்க
-O440

வாத்தியார் மாப்பிள்ளை காவியம்
செல்விதனை நோக்கித்தன் சிறுகோபங் காட்டியவர் நடந்தவற்றை மீட்டுரைத்து நயமாகக் கூறிடுவார்
"இந்தமுறை மன்னித்தேன் என்மகளே நீஇனிமேல் மூத்தோரை கண்ணியமாய் மேவிநட அன்னவரின்
கோபத்துக் குள்ளாகும் காரியங்கள் செய்யாதே அல்லாஹற்வும் திருநபியும் அதைவிரும்ப மாட்டார்கள்”
என்றுரைத்தார் ஆயிஷாவும் ஏற்றகன்றாள் ஆமென்றே பெற்றமணம் நம்பியது பிழைசெய்யாள் மகளென்றே
ஒதுகின்ற பள்ளியிலே ஒஸ்த்தாது தானவரும் கோபத்தால் தான்செய்த குற்றத்தை உணர்ந்ததனால்
பள்ளிக்குப் போவதிலும் பங்கமுற்றுப் போனதங்கு போனால்அடி கிடைக்குமென்ற பயத்தாலே பாதகமே
-- -G15)-

Page 30
ஜின்னாஹற்ஷரிபுத்தீன்
விளையாட்டுப் பிள்ளை
வாப்பாவின் செல்லமகள்
விளையாட்டுப் பிள்ளையவள்
கூட்டாளிப் பெண்களொடு குதூகலந்தான் எப்போதும்
நிரையிரண்டாய்ப் பிரிந்தாடும் நொண்டியடி விளையாட்டு பாய்மூடி விளையாட்டு பொலிஸ்கள்ளன் விளையாட்டு
கைலேஞ்சு ஒளித்தலொடு கல்வெட்டு விளையாட்டுப் போலிவைகள் பற்பலவாம் பிரியமவள் விளையாட
தந்தை மீராலெப்பை
மணப்பெண்ணின் தந்தைமீரா லெப்பைமண மாப்பிளைக்குத்
தாய்மாமன் செய்தொழிலாய்த்
தையல்தான் கிழக்கினிலே
முதல்முதலாய்த் தையல்செய் "மெஷின்" கொண்டு வந்தவராம் தையல்செய் தொழிலிலவர் தலையாரி என்பார்கள்

வாத்தியார் மாப்பிள்ளை காவியம்
மிகச்சிறந்த பண்பாளர் மார்க்கபக்தி மிக்கவராம் பெரியபள்ளி வாசலதன் பரிபால களுளொருவர்
நேர்மைதவறாதவராம் நோகாராம் பிறர்மனத்தை கோபம்மிக அதிகரித்தாற் கூறுகின்ற வார்த்தையொன்று
"உலக்கையா” என்பதுதான் உதிராதாம் பிறவெதுவும் உண்மைக்குப் பெயர்போன உத்தமநற் பேரென்பார்
பெண்பிள்ளை ஐந்துடனே பிறந்ததொரே ஆண்ஆறாம் சொந்தமாய்ச் சொத்துசுகம் சேர்த்திருந்த தில்லையவர்
யார்கையைத் தானெனினும் எதிர்பார்த்து வாழாதே உழைப்பைத்தன் முதலாக உடன்கொண்ட நல்மனிதர்
நீண்டுயர்ந்த பேர்பள்ளி நெட்டைக்கொடி மரம்போலும் தாடியொடு முறுக்குமீசை தரித்ததவர் திருக்கோலம்.
G47)-

Page 31
ஜின்னாவூற் ஷரிபுத்தீன்
ஆஜானு பாகுவான ஆள்அதுபோல் தான்மகனும் நீண்டுயர்ந்து வளர்ந்திருந்தார் நற்பண்பில் தந்தையொத்து
மகளின் திருமணத்திற்குப் பொருள் தேரும் படலம்
சகோதரி பெற்றமகன்
ஷரிபுத்தீன் தன்மகளின் கரம்பிடிக்க விருப்பமுற்ற கருத்தைத்தை யற்காரர்
காற்றுவழி யாகத்தான் கேள்வியுற்றார் தன்னளவில் மாற்றாகக் கருத்தற்று மிகவிரும்பி இருந்திடினும்
மைத்துனரை எண்ணிநிதம் மனப்பயமுங் கொண்டிருந்தார் இயலாதே என்றுரைப்பின் என்செய்வதறியாதே
தங்கையிடம் சென்றேதான் தாங்கியுள்ள சோகத்தைச் சொல்லியிருந்தாரவரின் துணைவேண்டும் என்பதுவாய்

வாத்தியார் மாப்பிள்ளை காவியம்
சொத்துசுகம் பணத்தின்பால் சார்ந்ததவர் மனம்மகள்கை பற்றவிடார் என்றுமவர்
புரிந்துணர்ந்த காரணத்தால்
என்னமுடி விதற்காகும் என்றாய்ந்த போதினிலே பனந்தேடல் ஒன்றேதான் பாரிகாரம் எனவுணர்ந்தார்
காட்டுக்களி மடுக்கன்ைடக் காணிகொஞ்சம் இருந்தததை விளைவித்தும் வந்தாரவர் வேறுவருமானத்தைத்
தருமென்ற காரணத்தால் சேரவில்லை லாபமதில் தரிசாகிப் போகுமெனத் தொடரந்திருந்தார் செய்கையினை
முப்போகம் விளைந்தாலும் முடிவினிலே போட்டமுதல் மட்டுந்தான் மிஞ்சியது முல்லைக்காரன் பணஞ்சேர்த்தான்
தப்பாது வேண்டுவன தந்தாலும் தானின்றேல் கப்பல்தொழில் செய்தாலும் கைநிறையக் காசுதரா
O49)-

Page 32
ஜின்னாஹற் ஷரிபுத்தீன்
என்றபெருந் தத்துவத்தை ஏற்றிருந்த மனத்தாலே சிந்தனையிலாழ்ந்தீற்றிற் சிறந்தவொரு முடிவுகொண்டார்
மூத்தமகள் ஹபீபாவை முறையாக மனம்முடித்துச் சேர்த்திருந்த சிறுதொகையும் செலவாகிப் போனதனால்
அடுத்தமகள் ஆயிஷாவை அவள்விரும்பும் மாப்பிளைக்குக் கொடுப்பதற்குப் பணம்சேர்க்கக் களிமடுவை நம்பியவர்
தையல்செய் தொழிலதனைச் சிலகாலம் தள்ளிவைத்தே கமஞ்செய்யும் நோக்கத்தைக் கைக்கொள்ள முடிவுற்றார்
மாரிகால நெல்விளைச்சல் முகம்பார்க்கும் என்பதனால் மூன்றுமாதம் வயலுக்குள் முடங்கிவிட்டார் பொறுப்புணர்ந்தே
எட்டுக்கல் தூரத்துக்(கு) இடைப்பட்ட நெடுவழியில் முதுகில் அடப்பையொடு மூன்றுநான்கு மணிநேரம்

Tõu pÜlera)6T 85Talub
கால்நடையாய்ப் பிரயாணம் 85mGL560LL LICBLDITIriC385 சிற்றாறும் கடந்தேமான் செல்லவேண்டும் வயல்வெளிக்கே
உடுக்கின்ற சாரத்தின் உள்ளிடையில் பொருள்போட்ட அடப்பைக்குள் வேண்டுகின்ற அத்தனையும் சேர்ந்திருக்கும்
அரிசியொடு பருப்புகறிக் கானகரு வாடுப்பு உரித்தெடுத்த தேங்காயும் ஊறுகாயும் மிளகாயும்
தேயிலைத்தூள் கோப்பித்தூள் சீனியிவை தாமந்த அடப்பைக்குள் சேர்ந்தவையாம் ஆறேழு நாட்களுக்காம்
ஊரிருந்து கொண்டுவரும் உணவுகளைத் தவிர்த்தாங்குச் சேருவன பலவுண்டாம் திராய்பொன்னாங் காணியொடு
ஆறுகளிற் பிடிக்கின்ற ஆற்றுமீன்கள் பலவகையாம் பெயரளவில் சொல்வதெனிற் பின்வருமாறாகுமவை

Page 33
ஜின்னாஹற் ஷரிபுத்தீன்
வாளைவிரால் கொக்குசான் வெள்ளியாய் பொடிசுங்கன் பனையான் மசறிமஞ்சட் பெட்டியான் விலாங்(கு)உழுவை
குறட்டைஜப்பான் குறளிசெத்தல் கெழுத்திஆரல் மட்டைஇறால் போலாகும் பலவுமங்கே பிடித்துனன்பர் வாடிகளில்
வீச்சுவலை அத்தாங்கு வளைதூண்டில் நெடும்பிரம்பு கூர்க்கம்பு கொண்டுகட்டுங் கரப்புமீன்கள் பிடிப்பதற்காம்
மருதமுனை தனிலிருந்து முடுக்கிவிட்டாற் கால்நடையைத் துறைநீலா வணைதாண்டிச் சென்றுவிடின் அடுத்ததன்பின்
வருமூர்தான் அன்னமலை வாழ்புலமாம் இடைநடுவில் பேராறு குறுக்கறுக்கும் பெருந்தோணிப் பயணத்தில்
ஊரார் கடப்பரந்த உபயோகம் பிறர்க்குதவும் பணமில்லாப் படகோட்டம் படகோட்டி தாம்தமக்கே
C52)-

வாத்தியார் மாப்பிள்ளை காவியம்
ஊர்தாண்டிப் போனவுடன் ஒன்றுவது பெருங்காடு காலதர்கள் தொட்டுநெடுங் காட்டுவழி கடந்தேதான்
சேர்வார்கள் வயல்வெளியில் கட்டியுள்ள வாடிக்கு குரல்கேட்கும் தூரத்திற் கிடைப்பட்ட வாறாக
"குடமுருட்டி” ஆற்றைத்தான் கட்டிஇடை மறித்தன்னோர் நீர்பாய்ச்சி விளைப்பரந்த நன்செய்யின் விளைபுலத்தை
அகன்றுபரந்திருக்கின்ற அவ்வாற்றைக் குறுக்காக இடைமறித்துக் கட்டிப்புனல் இன்னுமொரு வாய்க்காலில்
வழிமாறி வயல்களுக்குள் வேண்டுமாறு பயன்கொள்ளச் செய்யுமோர் பெருமுயற்சி தோள்வலுவே மூலதனம்
காட்டுமரம் கொடிகிளைகள் கம்புதடி போன்றவையும் மண்நிறைத்த சாக்குகளும் முயற்சிக்குத் துணைசேர்க்கும்
-K53D

Page 34
ஜின்னாவூற்ஷரிபுத்தீன்
ஆறேழு அடியுயரம் அரிந்தெடுத்த கணுக்களினைக் கூராக்கி ஒருபுறத்தைக் கால்களென நட்டதன்மேல்
நீளமரத் துண்டுகளை நெடுவாக்கில் வரிந்துகட்டி வேலிபோல் அமைப்பார்கள் வீறுகொண்டு வரும்நிரை
மரக்கொப்பால் தடுத்ததன்முன் மண்சாக்குப் பொதிகளினை ஒன்றன்மேல் ஒன்றாக ஒழுங்குறவே அடுக்கிடுவர்
தடுப்பரனால் முன்னோக்கிச் சென்றபுனல் வழிமாறி வாய்க்காலின் வழியோடும் வயல்நிலங்கள் பசிதீர்க்கும்
நச்சுநிறை மருந்துகளோ நாசம்செய் பசளைகளோ எச்சிலள வேனுமந்த எல்லைகண்ட தில்லையன்று
இம்முறையும் அவ்வாறே இயற்றியதால் பெருவிளைச்சல் 68 booDLDuJIT up6 g560TT6) திருப்திமீரா லெப்பைகொண்டார்

வாத்தியார் மாப்பிள்ளை காவியம்
வயல்வேலைக் கென்றுசிலர் வந்திருந்தார் தினக்கூலி வேலைக்கென்றானவர்கள் விவரமெல்லாந் தெரிந்தவர்கள்
எருதுகட்டி ஏரோட்டி எல்லைகளாய் வரப்புகட்டி நீர்தேக்கி எருமைகளை நடக்கவிட்டு மிதிமிதித்து
LDÜLLDg5 GBSBÖDLJip மெழுகியபின் நீர்வடிய அளைவெட்டி விடுவார்கள் ஆங்குநீர் தங்காதே
முளைகட்டி வைத்திருந்த முத்துச்சம்பா நெல்லைப்பின் கட்டுப்பெட்டி யாலஸ்ளிக் கைகொண்டே விதைவீசி
வரப்புநான்குக் கிடைப்பட்ட வரவைக்கு வக்கடையால்
வேண்டுகின்ற வேளைக்கு வாய்க்கால்நீர் பாய்ச்சினரே
மூன்றுமாத முத்துச்சம்பா முத்துமுத்தாய்க் கந்துகளிற் கொத்துக்கொத்தாய்த் காய்த்துநிலம் குனிந்ததுவே உணவளித்த
(559

Page 35
ஜின்னாஹற்ஷரிபுத்தீன்
நன்றிக்கடன் கழிக்கவென நினைந்துமுத்தம் தருபவைபோல்
தலைதாழ்த்திக் கிடந்தனவாம் தங்கவண்ணம் பூசியதாய்
வரப்புயரந்தாண்டிக்கதிர் வீறுகொண்டு விளைந்துநிலப் பரப்பினிலே படிந்திருந்த பாங்குண்டு மகிழ்வுற்றார்
கதிர்வெட்டிச் சூடுவைத்துக் களம்பெருக்கிச் சூடடித்துப் பொதிபொதியாய்ச் சாக்குகளில் போடுமட்டும் களத்தினிலே
விழிகளுக்குள் எண்ணெயிட்டு வைத்திருப்பார் போலநிதம் கண்ணைப்பதித்துான்றிக் காவல்செய்தார் மீராலெப்பை
வாடியடி வரவைக்குள் வடிவமைந்த கட்டருகில் களவெட்டி யொன்றமைத்தார்
്ബി(8ഖങ്ങബക്സ, bjങ്കബ്
வாரிக்காலன் நான்குசோடு வேலைக்காரக் கம்புபத்து கேட்டிக்கம்பு சிலதோடே கைப்பெட்டி பிறசேர்த்தார்

T5:5lu JJJJ DiJleareob6r a5"Telujb
பூதங்கள் வந்தாங்குப் பொலியள்ளிப் போகும் அவை
புரியாத புதுமொழியில் பேசவேண்டும் என்றெண்ணிப்
பரிமாறும் பொருட்களுக்கும் பெயர்மாற்றம் உண்டங்கு வெள்ளமென்பர் நீருக்கு வாரிக்காலன் எருமைக்கு
பொலியென்றால் நெல்லதுபோல் பெருவாயன் நெற்சாக்கு கணக்கனென்பர் நெல்லளக்கும் கைப்பெட்டி மரைக்காலை
களவட்டிக் காவலுக்காய்க் கனிமங்கள் சேர்தெடுத்தே அரக்கையும் புதைத்தார்கள் ஆழநிலம் மத்தியிலே
சாமமொன்று கழிந்திரனன்டு சந்திக்கும் வேளையிலே சூடடிக்கத் துவங்கினரே சேர்ந்துபலர் மீராலெப்பை
பாத்திஹா ஓதியந்தப் பணியைத் தொடக்கிவைத்தார் புட்கையுடன் தேநீரும் பங்கிடுவார் அப்போது
G7).

Page 36
ஜின்னாஹற்ஷரிபுத்தீன்
களவெட்டி முற்றிலுமே கலைத்துவிட்ட கதிர்க்குதிர்மேல் சுற்றிவளைகின்ற சீர்எருமைத் தோடர்பின்னே
பாடித் தொடர்வரந்தப் போதினிலே துயில்களையப் பின்காணும் பாட்டினைப்போல் பலவாறும் புதுப்புதிதாய்
"வாரிக்காலா வளைஞ்சகொம்பா வைக்கலைத் தூத்தியே பொலிபொலியம்மாஹோஒஒஒஒஓ” ଔ୍MDITତୁତୁରୁତୁତୁର୍ଦ୍IDITତୁତୁରୁଡ଼ତୃତୁ”
இந்தநடநடந்துநாங்க ஏப்பகர சேருகதோஒஒஒஓஓ. ஹோஒஒஒஒஒஹோஒஒஒஒஓ" ஹோஒஒஒஒஒஹோஒஒஒஒஒ”
அரக்குமாடு நடுவினிலே அங்கிங்கென் றலையாதே நின்றவிடந்தனில்நின்று நிலைத்துச் சுழலுகையில்
மற்றவைகள் சுற்றிவலம் வந்தனவே விடியுமட்டும்
இடையிடையே களைப்பாற GL6ിങ്കTGLj 9ഖ8ഖങ്ങാണ്
-୯୪୨

வாத்தியார் மாப்பிள்ளை காவியம்
அடிப்பட்ட கதிர்களினை அள்ளிமேலே போட்டிடுவர் வேலைக்காரன் கம்பதற்கு வகைசெய்யும் பொலிகலைக்க
காலையிலே பொலிகூட்டிக் குவிப்பரொரு இடத்தினிலே வைக்கோலால் புரிசெய்தே வளையவைத்தார் காவலுக்காய்
ஆளுயரம் நிழல்நிலத்தில் அடிபணியும் நேரத்தில் பொலிதூற்றத் தொடங்கினரே பதர்தூசு புறந்தள்ளக்
கடகங்கள் பலவற்றிற் கோதியள்ளிக் கீழ்நின்று ஒருவர்மேல் உயர்த்தமேலே உள்ளவர்கை பற்றிடுவார்
மூன்றுகம்பை ஒன்றாக்கி முக்காலி போற்கட்டிப் பீடமொன்றும் அமைப்பார்கள் பேர் “அவரி” யாமதற்கு
அவரிதனில் ஏறிநின்றே அள்ளியநெற் பெட்டியுடன் காற்றுவளம் பார்த்திருப்பர் கைவிரலும் கைகொடுக்கும்

Page 37
ஜின்னாஹற்ஷரிபுத்தீன்
சுட்டுவிரல் தன்னைத்தன் துப்பிணியால் நனைத்தெடுத்துத் தூக்கிமுன்னே பிடிப்பார்கள் சுட்டுமது காற்றசைவை
எப்பக்கம் குளிர்கிறதோ அப்பக்கம் காற்றுவரும் திக்கென்றே பொருளாகும் தொடருமவர் பணிதொடரும்
அவரியுடன் சேர்த்தளந்தால் ஆளிரண்டாம் உயரத்திற் கைப்பெட்டி தனைத்தூக்கிக் கொட்டுகையில் நெல்நிலத்தில்
வீழுப்பதர் காற்றாலே விலகித்தொலை தூரத்திற் வீழும்கைச் சுளகானும்
வீசிடுவர் அருகிருந்தே
மாரிப்பெரும் போகத்து முத்துச்சம் பாவிளைச்சல் சீராக இருந்ததந்தத் தடவையுடன் இருந்ததனால்
பத்துப்பத்தாய் மரைக்கால்கள் போட்டமூன்று சாக்குகளின் மொத்தப்பெயர் அவனமென்பர் முப்பதன்று தேறியதாம்
G60

வாத்தியார் மாப்பிள்ளை காவியம்
இரட்டைமாட்டு வண்டிகளில் ஏற்றியுர் சேர்க்கவவை சகடையடித் தேயிழுத்துச் சென்றனவாம் சேர்த்தனவாம்
b6)6OUlp. 56Olbeilso6|Tuu நெல்விற்ற தொகைமனத்தின் தொல்லையெலாம் அகற்றிவிடத் தாய்தந்தை களிப்புற்றார்
திருமணத்துக் கானவெல்லாஞ் சேர்த்தெடுக்க வேண்டுபணம் சேர்ந்திருந்ததாம்”டெயிலர்” திருப்தியுடன் காத்திருந்தார்
தந்தையும் மகனும்
தந்தைசீனி முகம்மதுவும் தனயன்மன மகனுமிரு
துருவங்க ளாம்கொள்கை தம்மிலது வென்றாலும்
தந்தைதனை வெறுத்தொதுக்கும் திராணியில்லா மனத்தாலே புந்தியாய் ஓர்செய்கை புரிந்திட்டார் ஷரிபுத்தீன்
அறபுமொழிதவிரமற்ற அனைத்துமொழி களிலொன்றில் எதனைத்தான் படித்தாலும் ஏற்கமண மில்லாத
O610

Page 38
ஜின்னாஹற்ஷரிபுத்தீன்
மனவைரங் கொண்டவர்கள் வாழ்ந்தவந்தக் காலத்தில் சிலரைத்தா னென்றிடிடினும் தமிழ்கற்க ஊக்குவிக்க
முன்னின்று பணிசெய்த முதன்மைக்குரு வைரமுத்தார் மருதமுனை-முஸ்லிம்கள் LDD5566).IIT600róOOTITLDITLD60s.gif
வேற்றுமொழி கற்றிட்டால் வழிதவறிப் போவரெனச் சாற்றுவோர் பலரிருந்தும் தன்மகனைத் தமிழ்கற்க
வைரமுத்து ஐயாவின் விருப்பத்துக் கிணக்கமுற்றே அனுமதித்தார் சீனியரும் அக்காலப் புதுமையது
தலைமுடியை முற்றிலுமே சிரைப்பதுதான் அந்நாளில் முஸ்லிம்கள் வழக்கமதை மாற்றியவர் ஷரிபுத்தீன்
ஒட்டத்தலை முடியையவர் ஓரளவு வெளித்தெரியக் குட்டையாய் வெட்டியுமே குறைத்திருந்தார் காலமெல்லாம்

வாத்தியார் மாப்பிள்ளை காவியம்
வைரமுத்து வாத்தியார்தான் வித்திட்டார் மருதமுனைக் கல்விக்கே அந்நாளில் கற்றறிந்த மேதையவர்
துய்யமனங் கொண்டதிரு தமிழ்முஸ்லிம் ஒற்றுமைக்குச் செய்யத்தான் உகந்ததெல்லாம் செய்தவுயர் தகையாளர்
ஷரிபுத்தீன் கற்றதவர் காலத்தில் ஆசிரியத் தொழிலினையும் பயின்றதவர் தம்மிடத்தே ஆதலினால்
பொருத்தமவர் தானிந்தப்
பிரச்சினையைத் தீர்க்கவென உரித்தோடு சென்றனைத்தும் உரைக்கஅவர் செவிமடுத்தார்
சிக்கலான பிரச்சினைக்குத் தீர்வொன்றை யோசித்துச் சொல்வேன்நீஅஞ்சாதே சென்றேவா எனவுரைத்து
வாத்தியாரும் மூளைக்கு வழிவிட்டார் சிந்திக்க காத்திருந்தார் மாணவரும் காலமும் கனியுமென்றே
(63D

Page 39
ஜின்னாஹற்ஷரிபுத்தின்
ஷரிபுத்தீன் தமிழ்கற்கத் துணைசெய்தார் கல்லாற்றுச் சாமித்தம்பி என்னுமொரு தோழரவருடன்கற்றார்
பள்ளியிலே பாடமவர் பயிலுகின்ற நேரத்தில் சீனியரின் வீடுசென்று
சோறுகொண்டு வருவாராம்
இந்துமுஸ்லிம் ஒற்றுமைக்கும் இலக்கணமாய் ஒருகாலம் இருந்தவர்கள் இவர்களெனில் இம்மியும்பொய் இல்லையன்றோ
சுவாமிவிபுலானந்தர்
தனித்தஒரு முஸ்லீமாய்த் தமிழ்கற்றார்ஷரிபுத்தீன்
சிலநாட்கள் மெல்லமெல்லச் சிறகடித்துப் பறந்தபின்னர் நலமான முடிவொன்றை நல்லாசான் பெற்றதன்பின்
பெண்பெற்ற தந்தையினைப் பள்ளிக்கு வரச்சொல்லி உண்மைநிலை என்னவென்றே ஒர்ந்தறிந்தார் மைத்துனர்க்கும்

வாத்தியார் மாப்பிள்ளை காவியம்
அன்னவர்க்கும் இடையினிலே என்னதான் பிணக்கதென்டு) இனங்கண்டு விடைகண்டே இடர்களைய முன்வந்தார்
மனமுடைய வேண்டாங்கான மீராலெப்பை உன்மகளின் கலியாணம் நடக்கும்நான் கைதருவேன் போய்வாரும்
தலைமைஐயா தந்தபெருந் தைரியத்தால் மீராலெப்பை தலையில்மலை இறங்கியபோல் சுமைகுறைந்தார் வீடகன்றார்
நம்பிக்கை வார்த்தைகளை நவின்ற8யா வைரமுத்து தம்வழியில் முயற்சிகளைத் தொடர்ந்திடத்தான் தலைப்பட்டார்
மாப்பிள்ளை ஷரிபுத்தீன் முறைப்பெண்ணை மணப்பதிலே தாழ்ப்பாளிட முயன்றிருந்த தந்தையினைச் சந்தித்தே
ஏற்றதொரு முடிவெடுக்க எண்ணியவர் பாலேகிப் பரிவோடு சற்றுறுத்தல் பரவிடவே சொல்லிடுவார்
-K65D

Page 40
ஜின்னாவூற் ஷரிபுத்தின்
“சீனித்தம்பி நீரெனக்குன் செவியைத்தா சொல்வதைக்கேள் பாவம்அவன் விரும்புகின்ற பெண்ணைமணம் முடித்திடநீர்
வேண்டாம்எனச் சொல்லிடவே வேண்டாம்நீர் அத்தனையும் விதிப்படிதான் நடக்குமவன் வாழ்வதனைக் கெடுக்காதீர்”
என்ரமகன் படிப்புக்கும் ஏத்தபடி பொண்னெடுக்க என்னால ஏலுமையா அவன்புறியப் பட்டதுபோல்
LDTLDTL L D856TL JGL JIT6OCT
முறையாக்க நான்விரும்ப மாட்டேனையா அதயென்ர மகனுக்குச் சொல்லிடுங்க
என்றார்தன் விருப்பமென்ன என்றுமவர் விளங்கவைத்தார் தன்முடிவில் இரும்பாகத் தரித்திருந்த சீனியரும்
தானாகக் கனிந்தால்தான் சரிசீனி முகம்மதொன்றைத் தட்டிக்கனி யாகவைத்தால் சரிப்படாது ஷரிபுத்தீன்
-(6)

வாத்தியார் மாப்பிள்ளை காவியம்
விரும்பாத ஒருத்தியைநீர் வலிந்துகட்டி வைத்தாலோ இருவரது வாழ்வினிலும் இருள்கழ்ந்து போகுமென்றார்
வாத்தியார் வார்த்தைக்கு வேறுவார்த்தை பேசுகின்ற பாத்தியதை சீனியர்க்குப் பற்றாத காரணத்தால்
வார்த்தைக்கு வார்த்தையுரை வழங்குவது தப்பென்றே கூறாதே ஏதொன்றும் கழன்றுவிட்டார் சினமுண்டார்
கரைப்பார் கரைப்பதெனிற் கல்லும் கரையுமெனும் ஆன்றோர் மொழிக்குள்ளே அடங்குமந்த நிகழ்வாகும்
சூனியம் செய்தல்
LDITL LoireopolT BITörefIT66)60t முறைக்காரர் மம்மாக்கர் சொந்தத்தில் தந்தைக்குச் சாச்சியின் மகனாவார்
சூனியங்கள் செய்வதிலே சமத்தரவர் அண்ணன்மகன் தான்விரும்பும் பெண்ணைத்தான் துணிந்துமணம் செய்வதனை

Page 41
ஜின்னாஹற்ஷரிபுத்தீன்
ஏற்காத மாட்டாலே இடர்செய்யத் துணிந்திட்டார் யாரெவரும் அறியாதே இரவுபகல் முயன்றேயொரு
மூங்கில் குழாயினுள்ளே மந்திரித்தே உருக்கொடுத்த செப்புத் தகட்டைநன்றாய்ச் சுருட்டிப் புதைத்தெடுத்து
மொடக்கத்தான் கொடிசுற்றி மஞ்சளையும் மேல்தடவி நள்ளிரவு வேளைமக்கள்
நித்திரையில் ஆழ்பொழுதில்
கள்ளத்தன மாய்ச்சென்று கடவலவிழ்த்துள்ளேபோய்ப் பெண்வீட்டு முற்றத்தில் புதைத்துவைத்தார் கால்கடக்க
மணப்பெண் அதைக்கடந்தால் மூளைப்பிச காகுமென நம்பித்தான் வைத்துவந்தார் நடந்ததாங்கே ஒன்றுமிலை
சூனியத்தை நம்பாத துணிச்சல்மனாங் கொண்டிருந்த ஆயிஷாவை அணுவேனும் அசைக்கவதால் இயலவில்லை
-K68D

TõuJ püroGT 5Talub
தானேமண் தோண்டியதைத் தனதுகையாற் பிரித்தெடுத்துக் கூறினார்தன் தம்பியினைக் கடலிலெடுத் தெறியவென
பற்பலவாய் முயன்றுமவர் பலனற்றுப் போனதனால் முற்றுமதை மறந்தார்தம் முயற்சிதனில் தோல்விகண்டே
திருமண ஏற்பாட்டுத் தடல்புடல்கள்
ஏதோவோர் வகையினிலே இணக்கமொன்று பொருந்தியதால் மீதமுள்ள வேலையெல்லாம் LDLLDL666or DIT60Tg56órg
பெரியோர்கள் ஒன்றுகூடிப் பேசியொரு முடிவெடுக்க நாள்ப்பார்த்தே ஒன்றானார் நடைமுறையவ் வழக்கம்போல்
பெரியபள்ளிக் கத்தீபுடன் பள்ளிமோதின் விதானைமார் ஆலங்குடி மரைக்கார்மார் அவர்களுடன் இன்னுஞ்சிலர்
ஓடாவிக் குடிமரைக்கார் உவப்பான ஓரிருவர்
ஆலிமுமார் சிலபேரும் அடங்குவரச் சபையினிலே
G6)-

Page 42
ஜின்னாவூற் ஷரிபுத்தீன்
பெண்வீட்டார் வந்தமர்ந்தார் பாய்விரித்த விறாந்தையிலே அத்திராசிப் பூப்போட்டு அழகாய் இளைத்திருந்த
கற்பண்பாய் அத்தனையும் கோடிப் புடவைபோலாம் வெற்றிலையும் சுண்ணாம்பும் வெட்டிவைத்த புகையிலையும்
சீவல்கொட டைப்பாக்கு சேர்த்துக்களிப் பாக்கும்வைத்த வட்டாக்க ளோடுசேர்த்து வாயுமிழப் படிக்கங்கள்
சட்டம்போ லாங்குற்ற சபைக்கென்று சேர்ந்திருக்கும் குறையென்று சொல்லுற்குக் கடுகளவும் இலையாங்கே
“வந்ததென்ன செல்லுங்க” வாய்திறந்தார் மாப்பிள்ளை வீட்டவரின் சார்பாக வந்திருந்த குடிமரைக்கார்
"மாப்புள்ள கேட்டுத்தான்வந்திரிக்கம் வாத்தியாரைஎங்களின்ர மகளுக்கு” என்றொருவர் பதில்சொன்னார்.
-C70

anyTš5óluJTŮ DITÜL ÍlerøD6AT E Telu Jub
வழமைபோல் இருபுறமும் வார்த்தைபரி மாறியபின் LDTLDIT6560T LD56061TLD600TLD முடிப்பதென முடிவுகொண்டு
பள்ளிவாசல் கத்தீபும் பாத்தஹாவும் ஓதியபின் தேனிர்பல காரமெல்லாம் தரச்சபையும் கலைந்ததன்று
மணப்பெண்ணுக்கு நகைதட்டுச் செய்தல்
தங்கநகை செய்வதந்நாள் தட்டான்மார் பொற்கொல்லர் பக்கத்தூர் பாண்டிருப்பில் பதிகொண்ட இந்துக்கள்
பசும்பொன்னை உருக்கியதிற் புதுப்புதிதாய் நகைசெய்யும் வல்லபத்தில் கைதேர்ந்த விற்பன்னர் பரம்பரையாய்
மருதமுனை யூரவர்கள் முஸ்லிம்கள் அவர்களையே முற்றுமுழுதாகநம்பி முன்னின்றார் நகைசெய்ய
நம்பிக்கை நாணயத்தில் நல்லவர்கள் சொர்ணத்தில் பொய்களவு செய்யாத பண்புள்ள ஆசாரிமார்
-C7 O

Page 43
ஜின்னாவூற்ஷரிபுத்தீன்
திரெளபதி யம்மன்தம் திருக்கோயில் தாண்டியொரு கால்கட்டைத் தொலைவில்தான் குடியிருந்தார் ஒரேதெருவில்
தையல்காரர் குடும்பத்தார் தொடர்ந்துநகை செய்கின்ற ஆசாரி சண்முகத்தார் அங்கேதான் குடியிருந்தார்
கையில்முற் பணத்தோடே கடுகியவர் பாற்சென்று தன்மகளுக்கேற்றபடி தங்கநகை செய்கவென்றார்
திருமணத்தில் முஸ்லிம்கள் தரிக்கின்ற நகைநட்டு என்னவென்று முற்றிலுமே இனந்தெரிந்த சண்முகத்தார்
அஞ்சுபவனன் அட்டியலும் அரைப்பவுணில் மோதிரமும் பொற்காப்புச் சோடிமூன்று பவுணிலும் காதுக்கெனக்
கல்லுவைத்த அல்லுக்குத்தும் காலிரண்டு பவுண்கொண்ட மின்னியும் செய்தெடுக்க முடிவுகொண்டு அச்சாரமாய்
-C72D

வாத்தியார் மாப்பிள்ளை காவியம்
முந்நூறு பவுண்பனத்தை முதற்கொடுத்து மீதியினை வேலை முடிந்தபின்னர் வரவுசெய்ய ஒப்பினரே
தீப்பள்ளயம்
பாண்டிருப்பு என்றால் பேரறியார் யாருமில்லை தீப்பள்ளை யம்மதற்குச் சொல்லாத காரணமாம்
ஒற்றுமைக்கு முற்றிலுமே உதாரணஊர மருதமுனை பக்கத்தூர் மக்களுடன் பரஸ்பரமாய் வாழ்பவர்கள்
பாண்டிருப்பு அன்னவரின் பிறந்தகம்போல் இருந்ததந்நாள் தீப்பள்ள யம்வந்தால் தெரியுமந்த உறவருமை
கோயிலைச் சுற்றிக்கடை கட்டித்திரு நாளேழும் வியாபாரம் செய்பவர்கள் வேற்றினத்தார் இந்துவல்லார்
மகாபாரதக்கதையை மூலமாய்க் கொண்டுசெய்யும் தெய்வவழிபாடிற்றில் தீமிதித்தே இறுதிபெறும்
-O73)

Page 44
ஜின்னாஹற்ஷரிபுத்தீன்
பஞ்சபாண்ட வர்தருமர் பின்பிறந்த வீமருடன் அருச்சுனர் நகுலர்பின் அறுதிசகா தேவரதில்
பங்குகொள்ளும் பிரதான பாத்திரங்கள் அவரோடு நேர்த்திக்கடன் வைத்தோரும் நிரைநிரையாயத் தீமிதிப்பர்
நீண்டநெடுங் கிடங்குவெட்டி நிறைப்பரதில் விறகுகளை மேலும்பல அடியுயரம் மடக்கிக் குவித்திடுவார்
வீரமரக் கட்டைகள்தான் வெங்கனலாய் உருமாறும் தட்டித்தணல் துண்டுகளைத் தரையோடு சமமாக்கி
நடப்பார்கள் அதன்மேலே நெருப்பவர்க்குப் பஞ்சனையாம் சாட்டையடிச் சத்தங்கள் செவிவெடிக்கச் செய்யுமாங்கே
சுற்றியந்தக் குழிவளைத்துச் சேருமொரு பெருங்கூட்டம் நெருக்கத்தால் சனத்திரளுள் நெருதுளிதான் பெருங்கூச்சல்

வாத்தியார் மாப்பிள்ளை காவியம்
அரோகராச் சத்தம்விண் அதிருமதன் இடையிடையே நெருக்கத்தால் அலறுபவர் நசுங்கியொலி யெழுப்புபவர்
"அம்மா"வென்றேயொருவன் ஆர்ப்பரிப்பான் அவனருகே “அல்லாஹற்”வென்றின்னொருவன் அவனைவிஞ்சக் கத்திடுவான்
இந்துவென்றும் இஸ்லாமென்றும் இலையாங்குக் கூடிநிற்போர் பந்தத்தால் ஒன்றுபட்டோர் பார்க்கவந்தோர் அனைவருமே
கல்முனையுர் "வீரமுனை காரைதீவு திருக்கோயில் தென்புலத்துத் தமிழ்ஊர்கள் சேர்ந்துமுஸ்லிம் ஊர்களென
"கல்முனைக் குடி"சாய்ந்த மருதுநிந்த ஊர்”பால முனை”அட்டா ளச்சேனை ஒலுவில்”அக்கரைப்பற்று”
"பொத்துவில் எலாமடங்கும் பெருநிலமாம் ஊர்கள்பல அத்தையோ டின்னும்பல அடங்குமவை மறுபுறத்தே
-O75)

Page 45
ஜின்னாவூற் ஷரிபுத்தீன்
மாவடிப் பள்ளி”சம்மான் துறை"சேரும் மேற்கினிலே நீலாவணை"யூர்"துறை நீலாவனை'கல்லாறு
'களுவாஞ்சிக் குடி”யடுத்துக் களுதாவளை"குருக்கள் மடம்"மென்னும் தமிழுர்கள் மருதமுனை யடுத்தனவாம்
பிட்டோடு தேங்காய்போல் பொருந்திஇந்து முஸ்லிம்கள் ஒற்றுமையாய்த் தனித்தனியே உறைந்திருந்தார் ஊர்ஊராய்
சுற்றியுள்ள இவைதவிர்ந்தே தொலைதூரத்தூரிருந்தும் &bulJLDTui ébulJLDTulu அங்குறுவர் பள்ளயத்தில்
பள்ளயக் கோயிலண்டும் புறம்நான்கும் வியாபாரம் தூள்பறக்கும் அந்நாளில் தொப்பிகள்தான் அதிகமாங்கே
இனபேதம் மதபேதம் இல்லையாங்கே அனைபேரும் ஒருதாயின் மக்களென
ஒன்றுவதோர் அற்புதமே

வாத்தியார் மாப்பிள்ளை காவியம்
பற்பலவாய்ப் பொருட்களிடம் பெற்றிருக்கும் கடைகளிலே இல்லையென்றே ஒன்றுமின்றி எலாமிருக்கும் வாறாகும்
செப்புக்குடம் சிறியசெம்பு சீனச்சட்டி பெருங்கிடாரம் பித்தளையாற் சாமான்கள் பேணிமூக்குப் பேணியுடன்
குத்துவிளக் குடன்வீட்டில் குங்குலியம் சாம்பிராணி கருக்கிப் புகைபோடும்
குடுவைச்சட்டி தாம்பாளம்
வட்டாக்கள் படிக்கம்பன்னீர் வார்த்துதறும் பன்னீர்ச்செம்பு அலுமெனியப் பாத்திரங்கள் அடுக்டுக்காய்ப் பானைசட்டி
பனையோலைப் பெட்டிதட்டு பால்வடிக்கும் வடிசுளகு அஞ்சறைப் பெட்டிகுட்டான் அடுக்கிவைக்குந் திருகாணி
கட்டுப்பெட்டி கைவிசிறி கற்பண்பாய் கிராம்பண்பாய் உமல்பானை கொள்உறிகள் உடனின்னும் பலபொருட்கள்
O77O

Page 46
ஜின்னாவூற் ஷரிபுத்தீன்
மட்பொருட்கள் சட்டிபானை மாவறுக்கும் ஓடுகுடம் மடக்குமுட்டி உலைமூடி முடாப்பானை நீர்க்கூசா
அரிசரிக்கும் அரிக்குமிலாய் அத்தனையும் கொண்டகடைத் தெருக்களொரு தனிப்புறத்தில் தொகுத்திருந்தார் வசதியென்றே
காப்புக்கடைத் தொகுதிபெண்கள் கண்களுக்கு விருந்தாக வேறாக்கி வைத்திருந்தார் வணிகமங்கு குமரியர்க்கு
கண்ணாடிக் காப்புவண்ணக் கலவையினால் தனித்தனியாம் வளைத்தாலும் ஒடியாத வகைப்பொருளா லானவைகள்
வெவ்வேறு தினுசுகளில் வண்ணங்களில் குழாய்களிலே எண்ணிலடங் காததொகை இளசுகளின் சுவைக்கேற்ப
சின்னஞ்சிறு குழந்தைகளைத் திருப்திசெய்ய ஜப்பானின் 6,60)6TuJITCB&F FTLDIT6orasoit விதம்விதமாம் ஒருபுறத்தே
C78 D

வாத்தியார் மாப்பிள்ளை காவியம்
செங்கரும்புக் கடைகள்பல தோன்றுமிட மத்தனையும் வெட்டவெளிப் பரப்பினிலே வடிவாகக் குவித்திருந்தார்
கட்டுக்கட் டாகவதைக் கொண்டுசெல்ல ஏற்றதுவாய் வெட்டிக்கட்டிக் கொடுத்தார்கள் வகையாகப் பொதிசெய்தார்
பாம்புபலுான் தாராயலுான் “பீப்பீப்”பென் றுதுகின்ற மூங்கிலால் ஆனகுழாய் மூட்டியுள்ள பலூன்வகைகள்
மிட்டாய்க் கடைகளங்கு மிகஅதிகம் கண்ணாடிப் பெட்டிகளில் வைத்திருப்பர் புழுதியண்டா விதமாக
வெட்டுமுட்டாய் சுள்ளிமுட்டாய் வகைவகையாய்க் குச்சிமுட்டாய் முள்ளிக்காய் யீக்கில்முட்டாய் மிகஇனிக்கும் சீனிமுட்டாய்
துதள்மஸ்கத் தேன்குழலும் சேர்ந்திருக்கும் அவற்றோடு பொரிகடலை பயத்துருண்டை பணியார வகைகளுமாம்

Page 47
ஜின்னாவூற் ஷரிபுத்தின்
கூடார வணிழ கட்ழ
வெளியார்கண் வாங்காது வீட்டினுள்ளே வாழ்கின்ற முஸ்லிம்பெண் பாலர்கள்
முக்காடு போட்டவராய்த்
தக்கதுணை கொண்டுவண்டித் தேரேறி வருவதெல்லாம் வீட்டுப்பொருள் வாங்குதற்காம் வாய்ப்பதனைப் பயன்கொள்வார்
இரட்டைமாட்டு வண்டியிலே இருபுறமும் மூடியதாய் வானவில்லில் சற்றதிகம் வளைந்தவொரு கூடாரம்
கம்புகளை வளைத்திடையிற் கம்புகளைக் குறுக்குவைத்தே கலம்பாக் கயிற்றாலே கட்டியதன் மேலாகத்
தென்னோலை தனைவேய்ந்து செய்திருப்பர் கூடாரம் பிறர்காணார் அதனுள்ளே போவதுயார் என்பதொன்றும்
வெவ்வேறாம் ஊரிருந்தும் வருவார்கள் வியாபாரம் செவ்வையாய் நடக்குமங்கே சச்சரவு சண்டையற்றே
-C80

வாத்தியார் மாப்பிள்ளை காவியம்
ஒற்றுமைக்கெண்டு) உதாரணமாய் உரைத்ததிதாம் ஒர்வீர்கள் தொடரந்தினிநாம் சென்றிடுவொம் திருமணநற் சடங்கறிய
பெட்டி கொண்டு போதல்
மாப்பிள்னை வீட்டிற்கு மணமகளின் வீட்டிருந்து பெட்டிகொண்டு போகின்ற
பழக்கத்துக் கேற்றபடி
பெண்வீட்டார் கெளரவத்தைப் பாதிக்கா வாறுணர்ந்து பற்பலவாயப் பலகாரம் படைக்கத் தொடங்கினர்காண்
பெட்டிகொண்டு போகவெனப் பெண்திறத்தார் தம்வீட்டில் மாவிடித்தல் அந்நாளில் மங்களநற் சடங்கிலொன்றாம்
சாதிசனப் பெண்டிர்கள் தம்மோடு சுற்றமுள்ளோர் ஒன்றாகச் சேர்வார்கள் உரலுலக்கை சேர்த்தெடுப்பர்
அவிக்காத பச்சரிசி அரைமூட்டை இளகச்செய்கு) உரலிலிட்டு இடித்தெடுப்பர் உணவுக்கும் தேவையென்றே

Page 48
ஜின்னாவூற் ஷரிபுத்தின்
மாவிடிக்கும் உரலுள்ளே மாறிமாறி உலக்கைகளால் "உஸ்உஸ்”சென் றோசையுடன் ஓங்கிஓங்கி இடிப்பார்கள்
செப்புப்பூண் போட்டழகாயச் செய்தெடுத்த உலக்கைதனை ஒருகையில் ஏந்திமேலே உயர்த்துகின்ற வேகத்தில்
ஊன்றிப் பதிப்பரக்கை உயருகையில் உடன்மறுகை வாங்குமதை முன்போன்றே வினைசெய்யும் தொடருமது
இடையிடையே இறுகியமா ஏற்றபடி மேலெழும்பப் புறங்கையால் மெல்லமெல்லப் புரட்டிவிடல் சாதுரியம்
ஒற்றைக்குதிக் காலுயர உயரும்கை உயருகையில் மற்றொருத்தி முன்னின்று முறைமாற்றி மாவிடிப்பாள்
ஒருலக்கை தனைமாற்றி இருவரொன்றிக் குத்துவதைக் கைமாற்றிக் குத்துவதாயக் கருத்தோடு கூறுவரே
-C82)

au Tšõgólu JMJ upTijijlerero6aT a5Tajlu ub
இடித்தெடுத்த மாவையாங்கோர் அரிதட்டிற் போட்டெடுத்தே அரித்தெடுப்பர் கப்பியதில் அகப்படாத முறையினிலே
பணியாரம் சுடுவதொரு பணிமணப்பெண் வீட்டார்க்கு "துதள்”சட்டி நான்கைந்தும் தப்பாது வருபவர்க்கு
கோப்பியொடு வருவோர்க்குக் கொடுப்பதற்காம் இவைக்கெல்லாம் தேவைப்படுவதந்தத் தெளித்தெடுத்த மாவேதான்
செய்தெடுத்த பலகாரம் தனைச்சேர்த்துக் கொண்டுசெல்லக் கனமான வாய்க்கட்டுக் கொண்டபனை யோலைப்புதுப்
பெட்டியத்துப் பன்னிரண்டும் பெரியளவில் தேர்ந்தெடுப்பர் சுற்றியவை கட்டவெள்ளைத் துணிசிலவுஞ் சேர்த்தெடுத்தார்
விரிந்தவிரற் கையிரண்டை விரிந்தபடி சேர்த்துவைத்த பெருத்தபெரும் வடிவத்திற் பணியாரம் நூற்றியொன்று
-K83D

Page 49
ஜின்னாலுற்ஷரிபுத்தின்
சுட்டெடுத்தார் மாசீனி சேர்த்துவைத்த கலவையினால் சோகிகளும் சுட்டெடுத்தார் செய்முறையோ கடினமது
மாவொடுநீர் கலந்ததனில் மணப்பொருளும் சீனியையும் ஏற்றளவு ஒன்றாக்கி இறுகநன்றாய்ப் பிசைந்ததனை
முழுக்கொட்டைப் பாக்களவில் முற்றுமெலாம் ஓரளவில்
சிறுசிறிய உருண்டைசெய்து சேர்தெடுத்தே ஒவ்வொன்றாய்
அரிசரிக்கும் அரிக்குமிலாய் அமைந்தவரி பதிவாக உருட்டி எடுத்தவற்றை உருமாறும் தோற்றத்தில்
கொதிக்கின்ற எண்ணெயிலே கொட்டியவை பொரித்துப்பின் சீனியைக் காய்ச்சியசெந் தித்திப்புப் பாகிலிட்டுப்
புரட்டியெடுத்தார்கள்பின் பக்குவமாய்ப் பிரித்தெடுத்துப் பெட்டிபெட்டி யாகப்பல பெட்டிகளில் நிறைத்தெடுத்தார்

வாத்தியார் மாப்பிள்ளை காவியம்
பெருஞ்சீனச் சட்டியொன்றைப் பற்றுகின்ற அடுப்பினிலே சரித்துவைத்துச் சூடுசெய்வார் சீனிமாச் செய்யவென
நெய்யோடு மணப்பொருட்கள் நன்கரிந்த வெண்காயம் சீனியுடன் சேர்த்தெடுத்துச் கடாகி வரும்போது
பச்சரிசி மாவையுடன் போட்டதனில் வறுத்தெடுத்தார் மூக்கைத் துளைக்கின்ற மணம்எலுகை தாண்டிவிடும்
பச்சைப்பா சிப்பயறைப் பதமாக வறுத்தெடுத்தே உரலிலிட்டு மெல்லமெல்ல உமிவிலகக் குத்திப்பின்
ஒழுங்காகப் புடைத்ததனை ஒன்றாக்கிப் பட்டுப்போல் உரலிலிட்டு மாவாக்கி உலரவறுத்தெடுத்தார்கள்
வறுத்தெடுத்த மாவுடனே வேண்டும்நீர் சேர்த்தினிக்கச் சீனியுட்டி உருண்டைகளாய்த் திரட்டியதை பொரித்தெடுத்தார்

Page 50
ஜின்னாஹற் ஷரிபுத்தீன்
தட்டுத்தட் டாகவவை சேர்ந்திருக்கும் தட்டுகளைப் பாகிலிட்டார் சுவைமிகுந்த பயற்றம் பணியாரம்
கொண்டைப்பணி யாரங்கள் கொண்டபல பெட்டிகளும் ஒன்றாக்கினார்கள்பலர் ஒத்துதவி செய்தார்கள்
அத்தனைப் பெட்டிகளும் ஆடைசுற்றிக் கொண்டனபோல் வெள்ளைப் புடவையினால் வரிந்துகட்டித் தயார்செய்தார்
வெய்யோன்றன் கதிரொடுக்கி வீழ்ந்தொளிந்தான் மேற்கினிலே பய்யவே இருள்மேவிப் புவிகருமைப் படாம்போர்த்தும்
"மஃரிபு"க்காம் தொழுகைதனை முடித்தாண்கள் வீடுவந்தார் பொருந்திவந்த பொழுததுதான் பெண்கள்வெளி நடமாட
Binguig, Tril 65Tebbin Lib கொண்டுசெல்லும் பொருள்சுமக்கத் தலைக்கொரு பெட்டியெனத் தாங்கினார்கள் தனித்தனியாய்
-Oso).

வாத்தியார் மாப்பிள்ளை காவியம்
கட்டுவெடில் படபடத்துக் காதைக்குரு டாக்குகையில் தட்டினார் றபான்சிலபேர் தாளத்துக் கேற்றபடி
"புட்டும் புதுப்புட்டுத்தட்டும் புதுத்தட்டுப்புட்டக் கொட்டிக்கித்தட்டைத் தா” என்றனரே
கூடிநின்ற பெண்டுகளின் குரவையொலி சேர்ந்தொலிக்கக் காரணத்தை விளம்பியது காற்றுப்பிறர் காதுகளில்
வாத்தியார் மாப்பிள்ளை வரன்கொள்ளத்தானந்த வெடில்வேட்டும் குரவையுமென்டு) அயலெல்லாம் பறைசாற்றி
நடுவிளைய பெண்கள்சிலர் நிறைகனத்த பெட்டிகளைத் தலைசுமந்தார் மூத்தோரின் தலைமையிலே வழிநடந்தார்
பந்தவிளக் கொன்றித்துப் போகுமந்தப் பெண்களுக்கு வாசதியாய் வழிகாட்டும் வழிஒழுங்கை பலகடந்தார்

Page 51
ஜின்னாஹற் ஷரிபுத்தீன்
தட்டுவேலி இருமருங்குஞ் சேர்ந்திருக்கும் குறுக்குவழி ஒருவர்பின் ஒருவரென ஓங்கிநடை பயின்றார்கள்
மாப்பிள்ளை வீடுவர மீண்டுமவர் ஒன்றாகிக் கடப்பல் வழிதானன்டக் காத்திருந்த வீட்டாரும்
"வாங்ககா” என்றவரை வரவேற்றார் வாய்நிறைய உள்நுழைய முன்வந்தோர் ஒருபாட்டம் குரவையிட்டார்
நாங்களென்றும் குறைவில்லை நும்பேர்க்கு என்பதுபோல் மாப்பிள்ளை வீட்டவரும் மாறிமாறிக் குரவையிட்டார்
கொண்டுவந்த பெட்டியெல்லாம் கைமாறிச் சிறுபொழுதில் தேநீர் விருந்தொன்றும் தரவுண்டு மகிழ்ந்தபின்னர்
பெண்வீட்டுக்காரர்வழி புறப்பட்டார் வீடேகக் கடப்பலடி வரைவந்து கெளரவித்தார் வீட்டவர்கள்

வாத்தியார் மாப்பிள்ளை காவியம்
வந்தவர்கள் சென்றபின்தான் வீடுவந்தார் சீனியரும் நிகழ்ந்த தனைத்தையுமே நடக்குமுன்னர் அறிந்ததனால்
இராத்தொழுகை நிறைவேற்ற இறையில்லம் சென்றவவர் கடத்தினார் வேண்டுமென்றே காலத்தைப் பள்ளியிலே
பெட்டிவந்த செய்தியினைப் பேசவில்லை பாத்தும்மா தாமாகக் கேட்கும்வரை காத்திருந்தார் கேட்கவில்லை
வேண்டாத விருந்தாக விரும்பியவத்திருமணத்தில் வேண்டாத சடங்குகளை விரும்பாத காரணத்தால்
இரவுணவை முடித்துவிட்டு எவருடனும் பேசாது படுக்கைக்குப் போனார் பதுங்குபுலி போலவரும்
அமைதியென்றால் புயலுக்கோர் அடையாளம் அவர்வாழ்வில் சீனியரின் அமைதிகண்டு திடுக்கிட்டார் அவர்மனையாள்

Page 52
ஜின்னாஹற்ஷரிபுத்தீன்
பூகம்பம் ஒன்றுகாலைப் பொழுதுபூத்து விடிந்தபின்னர் வெடிக்கத்தா னிதுவென்று விளங்கியதால் மனைகொண்டாள்
தூக்கமிழந்தன்றிரவு துயர்கொண்டார் விழித்திருந்தார் காக்குமிறை தன்னைத்தன் “கல்பு"க்குள் நினைந்தவராய்
காலைவரை பனிகொட்டிக் குளிர்ந்திருந்த நிலம்காயும் வேளைக்கு முன்பள்ளி
வாசல்சென்ற தன்கணவர்
பொலபொலத்து வான்விடிந்தும் பதிவராத காரணத்தால் மிகநொந்தார் கோபத்தால் மிகைத்தநிலை மனங்கொண்டார்
கடவலிலே முற்றுமதன் கண்பதித்துக் காத்திருக்க வருமரவம் காதினிலே விழுந்ததுமே அடுக்களையுள்
ஓடிப்போய்க் கோப்பிதனை ஊற்றிவந்தார் சீனியரும் ஒன்றுமே அறியாத ஊமைபோல் வந்தமர்ந்து
—୧୨୦୬

ajTöglujTj pTJulairab6T 8Tailujib
வழமைபோற் கோப்பிதனை வாங்கியதைக் குடித்துவிட்டு வல்லுவத்தின் வாயவிழ்த்தார் வெத்திலைவாய் போடவென்றே
elഖ3ഖങ്ങാണ് “ஒள்ளுப்பம் பொறுங்க" ளென்றே உள்ளூட்டுள் பாத்தும்மா சென்றேயொரு தளிசனிலே தயாராக வைத்திருந்த
பீங்கான் நிறைந்தபெரும் பணியாரந்தனைக்கொணர்ந்தே "தின்னுங்கள்” எனச்சொல்லித் தரையில்முன் வைத்தமர்ந்தார்
வந்தவழிதெரிந்தாலும் விபரமறியாதவர்போல் “எங்கால” என்றாரே ஏளனம்கண் இழையோட
"பொண்ணுட்டால் வந்தபொட்டிப் பணியாரம் இதில்கொஞ்சம் தின்னுங்க” என்றதுதான் தாமதமாம் மறுகணத்தில்
ിങ്കളുട്ടിങ്ങ് ിguങ്ങL சிறுமுயலைப் போற்கொணர்ந்த பணியாரம் பீங்கானுள் பொடிப்பொடியாய் நொறுங்கியது

Page 53
ஜின்னாஹற் ஷரிபுத்தீன்
“ஒனக்குவேணுமெண்டால்நீ உண்ணடுபசி யாறெனக்கு மானமில்லாத் தீனைஎன்ர
மனசுக்குப் புடிக்காம
வலுக்கார மாய்த்தின்ன வெச்சாய்நீ என்றபடி வெத்திலையும் போடாமல் விசுக்கென்றே வெளிச்சென்றார்
எதிர்பார்த்த நடபுடிதான் என்றாலும் கிராமத்தில் முதல்மனிதர் வாய்பட்டே மற்றவர்கள் உண்பதெனும்
வழமைக்கு மாறுசெய்ய வேண்டாத காரணத்தால் மதியுகம் மிக்கவந்த மனையாள் முறைசெய்தார்
சினத்தின் சிகரம் சீனியர்
சினமென்றால் அதன்சிகரம் சீனியர்தான் என்பார்கள் சீனியரின் சினத்திற்குச் சிறந்ததோர் உதாரணத்தைச்
சொல்லுவது இங்குமிகச் சாலுமது முன்னொருநாள் தன்தொழிலின் திறன்காட்டத் தனக்கென்றோர் "சர்வானி"
€92D

6vTšõgólu Jmji upTÜ1 jlesira DST 85 Tanju Jub
தைத்துடுத்து வீதியிலே சென்றாராம் அதைக்கண்டாங்(கு) அறவியார் என்றொருவர் அவமானம் செய்வதுபோல்
“சீனித்தம்பி இன்னுங்கொஞ்சம் தாழ்தால்தான் நல்ல"தென பதிலுக்கு வார்த்தையொன்றும் பேசாதே கடைசென்று
முழங்காலுக் கடிசெல்லும் முறையாக ஒன்றுதைத்து மறுநாளே அவர்முன்னால் மிடுக்காக வந்துநின்று
“அடேஅறவி பாரிப்போ அளவுசரிதானாசொல்” என்றுவினாத் தொடுத்தாராம் இரும்புநெஞ்சமனிதரவர்
விரிந்தகன்ற பெருமார்பு வாட்டசாட்ட மானவுடல் வெள்ளைநிறத் தாடிமீசை வீரவிழி சீனியர்க்கு

Page 54
ஜின்னாஹற் ஷரிபுத்தீன்
திருக்கல்யாணம்
நாள்குறித்தார் கல்யாண நாளுக்குப் பெரியோர்கள் ஊர்வழமை போலனைத்தும் ஒவ்வொன்றாய் நிறைவேறும்
மருதோன்றி மாற்றுகின்ற வழக்கமிரு பக்கத்தும் குரவைவெடி யோடுமிகக் குதுகலமாய் நடந்ததுவாம்
மாப்பிள்ளை வீட்டவர்கள் மருதோன்றிகொண்டுவர பொருத்தமாய் ஒருநாளைப் பேசிமுடித் திருந்தார்கள்
அரைத்தெடுத்த மருதோன்றி
அழகியதோர் மலாம்பூச்சுச்
"சுக்கிரியான்" கோப்பைதனிற்
சேரவைத்துப் பட்டுத்தி
வெள்ளைவண்ணத் துணிபோட்ட விதத்தினிலே விரித்தெடுத்த "மான்மார்க்குக்” குடையொருத்தி வான்மறைத்துப் பிடித்துவர
மாப்பிள்ளை யின்தங்கை முன்னெடுத்துச் சென்றார்பின் கூட்டமாகத் தாய்மார்கள் குரவையிட்டுச் சென்றார்கள்

வாத்தியார் மாப்பிள்ளை காவியம்
மணப்பெண்ணின் வீடண்ட
மணமகளின் சாதிசனம்
குடைபிடித்து வந்தார்கள் கைமாற்றிச் செல்லவென
கேலிகிண்டல் நையாண்டி குத்துவார்த்தை போலிவைகள் பக்கமிரண்டாலுமே பகடியைப்போற் பரிமாறும்
கொல்லென்ற சிரிப்போசை காதினிக்கப் பெண்களெல்லாம் ஒன்றாகிப் பெண்வீடு ஒன்றினர்பின் மணப்பெண்ணின்
அங்கைகளை விரித்ததனில் அடுக்கடுக்காய்ப் புள்ளிகள்போல் மருதாணி வைத்தார்கள் மீண்டுமாங்கு குரவையொலி
கண்ணேறு கழிக்கவெனக் காத்திருந்த பெண்ணொருத்தி காகிதப்பூ ஆராத்தி கொண்டுதலை சுற்றினளே
காகிதப்பூச் செய்தலொரு கைவினையாம் அந்நாளில் “á6(BULGuiЈLU" цвовјвофтболLib கைக்கொண்ட அளவுதனில்
-(95)-

Page 55
ஜின்னாஹற்ஷரிபுத்தீன்
பூவிதழ்கள் போல்வெட்டிப் பிரித்தெடுத்துத் தனித்தனியாய்க் கம்பியொன்றிற் கன்னிசுற்றிக் கட்டிடுவர் இதழிதழாய்
வெவ்வேறு வண்ணத்தில் வாய்த்தாலும் பூக்களதில்
பச்சைதான் இலைதண்டு பூவோடே பொருந்திவிடும்
சேர்த்தவற்றை ஒன்றாக்கித் தொடுத்தேபாற் பேணியிலே ஆராத்தி செய்வார்கள் அழகழகாய்ப் பலவடிவில்
வந்தவினை முடிந்ததுமே வந்தவர்கள் பலகாரம் கோப்பி அருந்தியபின் கூறிவிட்டுப் புறப்பட்டார்
அந்நாளில் மணிருமனை
அக்கால வீடுகளோ ஆளதிகம் கொள்ளாது சிக்கனமாய்க் குடும்பத்தின் தேவைக்குத் தக்கபடி
மூன்றறைகள் கொண்டேதான் முடித்திருப்பர் போதுமென கல்யாணம் காப்பென்றால் கட்டுவது பந்தலைத்தான்

வாத்தியார் மாப்பிள்ளை காவியம்
ஊள்ளூடு ஆலஉளடு ஒன்றியபோல் நெடுந்தினன்னை தொங்கலிலே சாப்பூடு சேர்ந்திருக்கும் அடுப்படியாம்
உள்ளூடு தான்வீட்டின் உயர்பீடம் முக்கியமாய் வேண்டுவன அத்தனையும் வரித்திடுமோர் உறைபதியாம்
கட்டிலொன்று கூடவொரு கனரகப்பெட் டகமும்பெரும் "இறங்குப்பெட்டி" யொன்றும் இருக்கும்உடை சேர்த்துவைக்க
உடைகொளுவ மான்கொம்பும் உண்டாமதில் வேறில்லை கட்டிமரத்தாலேநற் கடைச்சல்வேலை கூடியதாய்
நிலையிருக்கும் தனிக்கதவு நெடியதொரு திறப்புடனே
இரும்பாலே பூட்டொன்றும் இணைந்திருக்கும் பலமாக
ஆலஊடு தான்வீட்டுக்கு) ஆனபொருள் அத்தனையும் சேர்த்துவைக்கும் களஞ்சியமாம் தட்டமுட்டுப் பொருள்கொள்ளும்

Page 56
ஜின்னாஹற் ஷரிபுத்தீன்
பாயசவு ஒன்றினிலே பாயடுக்கி வைத்திருப்பர் பானைபல அடுக்குகளும் பெட்டிகளும் சுளகுகளும்
முடாப்பானை அடுக்குள்தான் மாஅரிசி சீனிபிற தீனுணவும் பக்குவமாய்ச் சேர்த்துவைப்பர் பாதுகாக்க
ஆலஊட்டுநடுவினிலே அந்தரத்தில் ஒருகயிறு தொங்குமாம் நிரந்தரமாய் தேவைக்கு வேண்டுமென
பேறுகாலம் வரும்போது பிரசவத்தாய் பலங்கூட்டிப் பிள்ளையை வெளியாக்கப் பயன்பட்ட தக்காலம்
இரட்டைக் கதவுகளை இணைத்திருப்பர் கீழ்மேலாய் தனித்தனியாய்த் திறக்கவெனத் தாழ்ப்பாழ்கள் போட்டிருப்பர்
உள்ளுடும் ஆலஊடும் உள்ளுறையும் மாதருக்காம் சாப்பூடு ஆணினத்தார் சஞ்சரிக்கும் பிரதேசம்
K98D.

வாத்தியார் மாப்பிள்ளை காவியம்
விருந்தினரைப் பாய்போட்டு வரவேற்கும் பகுதியது பூட்டோடு கதவுகளும் பொருத்தாத வெளியில்லம்
நெசவாளர் வீடுகளில் நெசவுக்காய்க் குழித்தறிகள் சாப்பூட்டுக் குள்ளேதான் தனித்திருக்கும் நெசவுசெய்ய
திண்ணையொன்றுஞ் சிலவீட்டில் சேர்த்துயரக் கட்டிடுவார் களிமண்ணும் மண்ணும் கலந்தெடுத்த கலவையினால்
வேற்றாண்கள் வந்திருந்தால் வீட்டாண்கள் தம்மோடே சேர்ந்திருந்து கதைபேசச் செளகரிய மாயிருக்க
ஆலஊட்டைத் தொடருவது அடுப்படிதான் சமையலுக்காம் அடுக்களைப் பாத்திரங்கள் அடுக்கிவைக்கும் பரனோடு
அடுப்புக்கும் மேலுமொன்றை அமைத்திருப்பர் விறகுவைக்க கருவாட்டுத் தட்டியொன்றும் கயிறுகட்டித் தொங்குமதில்
C99)-

Page 57
ஜின்னாலுற்ஷரிபுத்தின்
“அஞ்சறைப் பெட்டி"யோடும் அம்மிக்கல் குழவியுடன் புகைப்பாணை யென்பதெல்லாம் புழக்கத்தில் இருந்தவைகள்
அடுப்புவேலை முடிந்தவுடன் அதிலுள்ள அனல்மேலே நெல்லுமியைக் கொட்டிப்பின் நாட்டிவைப்பர் மண்குடத்தை
புகைமண்டிக் குடம்மனக்கும் பாகத்தில் நீர்ஊற்றிக் குடிக்கவெனப் பயன்கொள்வார் கிராமத்துப் பழக்கமது
புழக்கடை வீட்டிற்குப் பின்னாலே பக்குவமாய்ப் பெண்களுக்கும் ஆண்களுக்கும் பிரிந்திரண்டாய் அமைந்திருக்கும்
களிமணி வீடு
கல்வீடு கொண்டதந்தக் காலத்தில் ஒன்றிரண்டே களிமண்ணாற் சுவர்வைத்தே கட்டுவார்கள் தாம்தமக்காய்
கதிகாலிக் கம்புநட்டுக் கூடுபோல வரிச்சிகட்டப் பாக்குமரச் சலாகைகளைப் பயன்கொள்வர் பின்னதிலே
-C00

வாத்தியார் மாப்பிள்ளை காவியம்
களிமண்ணின் திரணைகளைக் கொண்டுவந்து நிறைப்பார்கள் களிமண்ணைக் குழைப்பதொரு கலையாகும் அந்நாளில்
வட்டமாயப் பாத்தியொன்றை வடிவமைத்தே அதனுள்ளே குளக்கரையில் வெட்டிவந்த களிமண்ணைப் போட்டேநிர்
குடங்குடமாய் ஊற்றிப்பின் கால்கொண்டு மிதிமிதித்தே இருகைகொள்ளளவினிலே எடுத்ததனைத் திரணைசெய்வர்
நான்குபுறச் சுவர்களுடன் நடுச்சுவர்கள் கட்டியபின் களிமண்ணைக் கரைத்தெடுத்த கரைசல்கொண்டு மெழுகிப்பின்
தேங்காய்ச் சிரட்டையினால் சமன்செய்து மினுமினுக்கத் தீற்றிடுவர் அழகுபெறச் சமர்த்தர்கள் பெண்களதில்
நிலத்தினிலும் களிமண்ணை நிறைத்ததன்மேல்நீரூற்றி மிதமாக ஊறியபின் மொங்கானால் இடியிடித்து
-C00

Page 58
ஜின்னாவூற் ஷரிபுத்தின்
ஒரேமட்ட மாக்கியது உலருகின்ற தறுவாயில் சுவருக்குச் செய்ததுபோல் தீற்றிடுவர் மெழுகியபின்
சுற்றிவர வேலிகட்டச் சேர்ந்ததுபோல் வீட்டின்மேல் கூரைக்கு வேய்வதுவும் காய்ந்ததென்னைக் கிடுகுகள்தாம்
காலங் கடந்துவீட்டின் கூரைபழுதடைந்தாலோ அக்கம்பக்கத்திருப்பவரே அவைமாற்ற உதவிடுவார்
தேநீரும் பகலுணவும் சேர்ந்திருந்தே உண்பதுதான் தருகின்ற கூலிவேறு சல்லியணம் கொடுப்பதில்லை
வாழைமரத் துண்டுகளை வகிர்ந்தெடுத்து வெயில்காய்ச்சி நீரினிலே இளகவைத்து நார்நாராய்க் கிழித்தெடுப்பர்
குருத்தோலை வெட்டியதன் கீற்றுகளை வகிர்ந்தெடுப்பர் கூரையோலை கட்டவவை கயிறுகளாய்ப் பயன்கொள்ளும்

வாத்தியார் மாப்பிள்ளை காவியம்
கிணற்றுக்குக் துரவுவெட்டக் கொடுப்பனவென் றொன்றில்லை சாப்பாடுந் தேநீரும் சேர்ந்துபாக்கு வெற்றிலைதான்
பெண்பாலார் புழங்குவதைப் பிறரறிய மாட்டாதே தட்டுவேலி முற்றத்தைத் தனித்திரண்டாய்ப் பிரித்துவிடும்
கூரைவேய வேலிகட்டக் கிடுகுகள்தான் பயன்கொண்ஞம் தூரஊர் தனிலிருந்தும் தருவிப்பர் அதுதவிரத்
தாமாகப் பின்னியொன்றச் சேர்த்துவைத்தும் பாவிப்பர் கிடுகிழைத்தல் பெண்கள்செய் கைவினையில் ஒன்றாகும்
சுற்றிவீட்டில் வளர்கின்ற தென்னைகளிற் பழுத்துவிழும் ஒலைகளைக் கிணற்றடியில் ஒன்றாக்கிப் போட்டுவைத்துக்
குளிக்கின்ற போதுவிழும் கைப்பட்டை நீரினிலே நாலைந்து நாட்களொன்ற நனையவைத்து இளகியதும்
-Cos)

Page 59
ஜின்னாஹற் ஷரிபுத்தீன்
வெட்டுக்கத்தி கொண்டதனை வாலிருந்து மேலாக வகிர்ந்தெடுத்தே வேறாக்கி வகைசெய்வார் பின்னுதற்கே
ஒன்றுவிட்டு மற்றொன்றை ஒடித்ததனை விடுபட்ட கீற்றடியில் சொருகிப்பின் கரந்தொடர்வர் அவ்வாறே
வேலிகட்டிப் படலைக்கும் வேண்டுவது சிலவீட்டில் தென்னோலைக் கிடுகுகள்தாம் தனியோலை வேண்டிவரும்
ஆனைக்கிடு கென்றதற்காய் ஆனபெயர் பிளக்காத பச்சோலை கொண்டதனைப் பின்னிடுவார் சுற்றிவரக்
கீற்றினது தொங்கல்களைக் கொண்டைபின்னு வதைப்போன்று பின்னுவது பிரியாது பலமாக இருப்பதற்காம்
வேலிகட்டப் பனையோலை வேண்டுவதும் உண்டந்நாள் வெட்டிவிரித் தடுக்கிமண்ணை வாரியதன் மேலிட்டு

வாத்தியார் மாப்பிள்ளை காவியம்
நன்றாகக் காய்ந்தபின்னர் நாட்டியுள்ள வேலிகளில் மறைக்கவெனக் கட்டுகின்ற வழக்கமது வலுவுடைத்தாம்
வேலிக்குத் தழைகம்பை வரிசையாய் நட்டவற்றை ஒருமித்தே கதிகாலால் ஒன்றப்பிணைப்பார்கள்
கிளிசிறியா முள்முருக்கைக் கம்புகளும் பூவரசுக் கம்புகளும் ஊன்றிடுவர் கவர்விட்டுத் தழைக்குமவை
சிற்றொழுங்கை தானதிகம் தெருக்களென இருபுறத்தும் வேலிகள்தான் அரணாகும் வெளியார்கண் வாங்காதே
பெருவீதி தனைத்தவிர்த்துப் பரந்தகன்ற வீதிகளாய் நான்கேதான் மருதமுனை நல்லூரின் இடையாகும்
தெற்கினில் ஊரிரண்டைத் தனிப்படுத்தும் வீதியொன்று பாண்டிருப்பைத் தனியாக்கிப் பிரிக்கின்ற பாதையது

Page 60
ஜின்னாஹற் ஷரிபுத்தீன்
வடக்கினிலே ஒன்றுநீலா வணைதன்னைப் பகுப்பதற்காய் வடதெருதென் தெருவென்று மத்தித்தெரு வேறாக்கும்
ஆலையடி வீதியுஞ்சற்று) அகலமான தக்காலம் மற்றெல்லாம் சிறுதெருக்கள் மட்டுநகர் ஊர்அமைப்பாம்
கொட்டுக் கிணறு
கொட்டுக் கிணறொன்றும் கூடுமொவ்வோர் வீட்டினுக்கும் பட்டமரக் குற்றியினைப் பெரிதாகத் துளையலிட்டு
இரண்டுமூன்றை ஒன்றாக்கி நெடும்பாட்டில் மேல்கீழாய் நட்டுவைப்பர் வாசலிலே நீரெட்டும் வரைதோண்டி
காலஞ்சில கடந்தபின்னர் கொட்டுவைத்த கிணறெல்லாம் கற்கிணறாய் மாறியது கிணற்றிருந்துநீர்மொள்ளக்
கப்புமரம் நாட்டியதில் குறுக்காலே துலாமரத்தை அச்சுவைத்து நிறுத்திடுவர் அசையுமது மேல்கீழாய்
Coo

வாத்தியார் மாப்பிள்ளை காவியம்
கைப்பற்று வாளியுடன் கிணற்றுமுனைப் புறமிருக்கும் சுற்றிவரக் கமுகுமரம் சிலவீட்டில் வாழைமரம்
கொன்னையாய்க் காய்த்தடர்ந்தும் குலைவிட்டும் காட்சிதரும் பச்சைப்பாக்கு கழிப்பாக்குப் பெறுவதிந்தக் கமுகுகளில்
கல்யாணப் பந்தல்
வந்தவரை வவேற்று விருந்தளிக்க ஏற்றதுவாய் பந்தல்கட்டு வார்களந்நாள் பிறிததற்கெண்டு) ஆளுனடு
கதிகாலிக் கம்புடனே கலம்பாக் கயிற்றுமுடி தென்னொலை போன்றவையும் சேர்த்தெடுத்தார் பந்தல்கட்ட
அளவெடுத்துக் கயிறுகட்டி ஐந்தடிக்கு) ஒன்றாக அளைபோட்டுக் கணுநாட்டி அவைஇணையக் கம்புகட்டி
இருபுறத்தும் ஒன்றேபோல் இருக்கவவை தொடுத்தார்கள் உறுதியொடு சிலநாட்கள் இருக்கவேண்டும் என்பதற்காய்
-C070.

Page 61
ஜின்னாலுற் ஷரிபுத்தீன்
காலுக்கும் தொடுப்புக்கும் கதிகாலிக் கம்புகள்தான் கைகொடுக்கும் காட்டுமரம் கேட்டபடி கிடைத்தந்நாள்
கட்டிமேலே தொடுத்துவைத்த கம்புகளின் மேலாகத் தென்னோலைக் கிடுகுகளைத் தட்டுத்தட்டாய் அடுக்கியவை
காற்றுக்கு விலகாதே கயிறுகொண்டு முடிச்சுமிட்டார் சிறுமழைக்கும் வெயிலுக்கும் தாக்குப்பிடித் திருக்கவென
பந்தலுருவாகியதும் பச்சைவடப் புடவைதனை மேல்கட்டுக் கட்டித்தான் முடிப்பார்கள் சீராக
உணவுக்காம் அரிசி
கலியான வீட்டில்வரும் களரிக்கும் வீடுவரும் விருந்தினர்க்கும் உணவளிக்க வேண்டுகின்ற அரிசிக்காய்
ஈரவண நெல்லுக்குத்த இணக்கமுற்றார் வீட்டவர்கள் களிமடுநெல் அவர்களுக்குக் கைதந்த தப்போழ்து
-G108)

வாத்தியார் மாப்பிள்ளை காவியம்
முடாப்பானை தனில்முக்கால் மேவுமட்டும் நெல்கொட்டி கழுத்துவரை நீர்நிறைத்துக் கொதிக்கவைத்தார் அவியும்வரை
அவித்தநெல்லை வடித்தெடுத்தே அகலப்பெருந் தோட்டுப்பாய் தனில்துழாவி விட்டார்கள் அனல்வெயிலில் காயவைக்க
காய்ந்தநெல்லைக் கூட்டியுமி களைந்தெடுக்க உரலிலிட்டே குத்தியெடுத் தார்கள்பின்
கோதகலப் புடைத்தெடுத்தார்
உமிநீங்கித் தனித்துவிட்ட உள்ளீடாம் அரிசியினைத் தவிடகற்ற வேண்டுமென்ச் சேர்த்தெடுத்தார் எலாருமாக
மீண்டும்உரல் தனிலிட்டு முனையொன்றிற் பூண்போட்ட மற்றுமோர் உலக்கையினால் மிதமாகக் குத்தியதில்
தனித்தகன்ற தவிடதனைத் தனியாக்க வேண்டுமெனத் தெள்ளியெடுத் திட்டார்கள் சுளகிலிட்டே வினைமுடியும்
C109

Page 62
ஜின்னாஹற்ஷரிபுத்தீன்
காவின் களரி
திட்டமிட்ட நாளன்று திருமணத்தை முடித்துவைக்க ஊர்ப்பெரியார் மரைக்கார்மார் உறவினர்கள் ஒன்றானார்
மாப்பிள்ளை வீட்டில்தான் முறை"காவின்” களரிசெய்தல் தப்பாதே வேண்டுபவர் சேர்ந்திருப்பர் அவ்வேளை
மணமகளின் தந்தையாங்கு “வொலிகாரர் சாட்சிகளிர் பக்கத்துக் கொவ்வொருவர் பள்ளிலெப்பை பதிவாளர்
செப்பமாக அனைவருமே சேர்ந்திருந்தார் அவ்வேளை "மாப்புளையக் கூப்பிடுங்கவழியுடுங்க” என்றொருவர்
சத்தமாகச் சொன்னாருடன் சபைநுழைந்தார் மணமகனும் “அஸ்ஸலாமு அலைக்கும்"என அவையோர்க்குச் சலாமுரைத்தே
“காவின்”செய் களரியிலே கால்மடித்து மாப்பிள்ளை வெள்ளைப்புது விரிப்பினிலே வந்தமர்ந்தார் தோற்றத்தில்

வாத்தியார் மாப்பிள்ளை காவியம்
கம்பீரம் கலந்திருக்கக் கண்டசபை கண்ணுள்ளே
கொண்டுமகிழந்திருந்ததுவாம் கதையுண்டு அவ்வாறே
கம்பமிட்ட சாறமதன் கரைகளிருவண்ணத்தில் “ப்யூஜிசில்க்" சட்டை"கொலர்” பசையிட்ட "ஸ்டிப்”விறைப்பு
செந்துருக்கித் தொப்பி சேரந்ததனிற் கருங்குஞ்சம் வெள்ளைநிற மேல்”கோட்" வடிவழகர் வீற்றிருந்தார்
“வொலிகாரர் பெண்தந்தை வொலிசென்னார் கரம்பிடித்தே பள்ளிவாசல் “காவின்”பதி புத்தகத்தில் விவரமெல்லாம்
தெள்ளத்தெளிவாகமுற்றும் தடம்பதிந்த பின்னர்லெப்பை "இஃஜாப் கபூல்" தன்னை எடுத்தோதி முடித்துவைத்தார்
எல்லோரும் மாப்பிள்ளைதம் இருகரங்கள் ஒன்றுபட சலாம்கொடுத்தார் லெப்பைமுதல் தாய்மாமன் பின்தொடர
-C1 O

Page 63
ஜின்னாலுற் ஷரிபுத்தீன்
கைக்கூலி சீதனத்தின் கதையெவரும் பேசவில்லை ஏலவே எதுவுமில்லை எனும்முடிவு இருந்ததனால்
85 LITuj LDITJ85858 கடமையெனும"மஹர்”தொகையை வழமைபோல் தந்தையிடம் வழங்கியபின் முடிந்ததவை
மாப்பிள்ளை கூட்டல்
காவின்செய் களரியெல்லாம் "ஹைர்"ஆக முடிந்தபின்னர் பெண்வீட்டை நோக்கியுடன் புறப்பட்டார் அனைவருமே
குடைவிரித்து அதன்மேலோர் கோடிவெள்ளைத் துணிபோட்டு முன்னொருவர் பிடித்துயர்த்த மாப்பிள்ளை வெளிவந்தார்
"பைத்”தோதினார்லெப்பை வந்திருந்தோர் தொடர்ந்தார்கள் ஊர்கூடி ஒன்றாக ஊர்ந்தார்கள் வீதிகளில்
"6LD61T6DITuu 6noebe S66n)6b லின்தாயி மன்அபதாஆலாஹபீபிக்கஹை லிலஹல்கி குல்லீமீன்"
G120

Tšuu pü16rabaT suub
இடைமறித்துச் சிலபேர்கள் இசைகூட்டிப் "பதம்"படித்தார் சால்வைகள் விழுந்ததவர் தோள்களிலே வீழுமட்டும்
வால்நீட்டிப் படித்தார்கள் விடாரேயவர் விடாக்கனன்டர் வாழ்த்திப் பதம்படிப்போர் வரகவிகள் அப்பொழுது
கோத்தெடுக்கும் வார்த்தைகளே கவியாகும் புதுப்புதிதாய்ப் புலவரெனும் பேரவர்க்குப் புகலுவரே ஊர்மக்கள்
சீனடியும் சிலம்படியும் தொடர்ந்தனவே வான்வெடியும் படபடத்து ஒலியெழுப்பும் புகைவழியை மறைத்திருக்க
கம்பெடுத்துச் சுற்றிடமுன் கால்மடித்து நிலம்பணிந்து ஸலாம்வரிசை போட்டுத்தான் சுற்றிவழி சுழன்றார்கள்
தனித்தொருவர் தான்தனித்தும் சேர்ந்திருவர் இருபுறத்தும் பின்னியெடுத் தார்களதைப் பார்ப்பவர்கன்ை இமைப்பிழந்தார்
-O 13).

Page 64
ஜின்னாஹற்ஷரிபுத்தீன்
சிலம்பாட்டக் காரர்தாம் சுழற்றுவதை நிறுத்தியதும் சீனடியில் சித்துடையோர் தொடந்தார்கள் வழிமறித்தே
கையடியுங் காலடியுங் காதில்"தை தை"யென்றே மெய்யாய்மெய் அறைவதுபோல் மேவுமுடல் சிலிர்சிலிர்க்கும்
பெண்வீடு அண்டியதும் பெண்வீட்டுப் பெண்டிர்கள் மாப்பிள்ளை தன்னைத்தாம் வரவேற்கும் பாங்கினிலே
குரவையொலித் தாரேசெவி குருடாகும் வாறாக பட்டாசும் வெடித்தங்கே போட்டிக்குச் செய்வதுபோல்
வீட்டுவாசற் படியண்டை வந்துநின்றார் மணமகனார் பூசிநன்றாய் மினுக்கியவோர் Gurredrej6006001&f 6fLDL60f(36D
நீர்மொண்டு மைத்துனரும் நின்றிருந்தார் கால்கழுவ காலணியைக் கழற்றியவர் கடன்கழிக்க இடம்விட்டு
-O 140

வாத்தியார் மாப்பிள்ளை காவியம்
நாட்டுமுறை வழக்கம்போல் நடந்ததது முறையாக தண்ணிரை யூற்றியிரு தாழ்கழுவப் பட்டதுவும்
கோட்டுக்குள் கைபுதைத்து கால்கழுவுஞ் சன்மானம் மைத்துனரின் கைகளுக்குள் மாற்றிவிட்டார் மாப்பிள்ளை
மாமனார் முன்வந்தார் மணமகனை மணவறைக்குத் தானேமுன் வழிநடத்திச் செல்லவவர் பின்தொடர்ந்தார்
இதுகாறும் தனதுகர ஏந்துதலில் வாழ்ந்திருந்த செல்வமகள் ஆயிஷாவைத் தாரைவார்த்துத் தருவதுபோல்
முன்நெற்றி மயிர்பிடித்து முறையாகத் தன்மருகர் கைத்தலத்துத் தந்தார்தன் கண்கள்குளமாகிடவே

Page 65
ஜின்னாஹற் ஷரிபுத்தீன்
மணவறை
கடைச்சல்காற் கட்டிலிலே கால்நெடுத்து மேல்கட்டு பட்டுத்துணி கொண்டேயோர் படாம்போட்டுக் கட்டியதில்
ஏழடுக்குப் பாய்பரப்பி இருப்பார்கள் தம்பதிக்காம் ஏழுபாய்கள் போடுவது இயல்பந்நாள் முதல்வார
ஏழுநாளில் முதலாறும் இழக்குமொவ்வோர் பாய்தன்னை கடைசியாய் எஞ்சுவதோ கட்டிலிலே ஒன்றேதான்
புத்தம்புதி தாகப்பாய் பின்னுவார்கள் அந்நாளில் கற்பன்னைக் காயவைத்துக் கைப்பிடியுட் கொள்ளளவு
கட்டிவனினங் காய்ச்சியது காய்ந்தபின்னர் அரைமணையில் அரைத்தெடுத்துக் கொள்வாரே elup85 passTuuli ustullcup60)Luj
பாயிழைத்தல் அந்நாளில் பணிவீட்டுப் பணியோடு கூட்டாகச் செய்கின்ற குடிசைக்கைத் தொழிலாகும்
C 160

வாத்தியார் மாப்பிள்ளை காவியம்
மருதமுனைப் பெண்களதில் முதன்மைபெற்றேதகழ்ந்தார் ஒருவருமே அறியாதார் உண்டில்லை அக்காலம்
ஆங்கிலத்தில் பெயர்போறித்தே அழகாகப் பாய்முடைவர் ஆமினாதான் அதிற்சிறந்த அனுபவங் கொண்டிருந்தார்
மணப்பெண்ணின் தங்கையவர் மாப்பிள்ளை மாமிமகள் பார்ப்பதறகும் அழகாகப் பலவண்ணப் பன்பொருத்தி
விதவிதமாய்ப் பாய்பின்னும் வித்தையிலே கைதேர்ந்து பேரெடுத்தார் வெளிநாட்டார் பார்த்ததிர்ந்த கதையுண்டு
செப்புக் குடம்மினுக்கித் தென்னைமரப் பாளைதனை வெட்டிப்பிளந் தழகாக விரித்துமதில் வைத்திருந்தார்

Page 66
ஜின்னாஹற் ஷரிபுத்தீன்
மணமகள் அலங்காரம்
புத்தம்புது மணப்பெண்ணைப் பூங்கொடிபோல் அலங்கரித்தே கட்டிலதன் தலைமாட்டிற் காத்திருக்க வைத்திருந்தார்
புதுப்பட்டுச் சேலையுடன் பொன்னணியால் அலங்காரம் கழுத்திலோர் அட்டியலும் கையிலிரு காப்புகளும்
முகப்பணிக் காப்பன்று மிகவுயர்வு கொண்டதுவாம் செய்திருந்தார் மகளுக்குத் தந்தைமீரா லெப்பையன்று
காதுகளில் மின்னியுடன் கல்லுவைத்த அல்லுக்குத்தும் காலில்வெள்ளிக் கரனையொடு கைவிரலில் மோதிரங்கள்
தாலிக்கட்டும் ஆராத்தியும்
தாலிகட்டும் வழக்கமன்று தமிழரிடை இருந்ததுபோல் தமிழ்பேசும் முஸ்லிம்கள் தரத்துமன்று வழமைதான்
-Os)-

வாத்தியார் மாப்பிள்ளை காவியம்
இந்துக்கள் போலன்றி இசுலாமியர்வேறாய்ச் செய்வார்கள் தோற்றத்தில் தனித்திருக்கும் பொதுவாகக்
கறுப்புவண்ணக் கரசமணிக் கோவையிலே இடையிடையே
செம்மணிகள் சேர்ந்திருக்கும் தங்கக்கா சொன்றுமதில்
கொக்கியிலே தொங்குமது கழுத்தைவிஞ்சி அலங்கரிக்கச் சுற்றியழ காகவதில் செய்தவேலைப் பாட்டுனே
மாப்பிள்ளை ஷரிபுத்தீன் முறைமாற்றி அற்றையநாள் தாலியொன்றுங் கட்டவில்லை தான்கழுத்தில் தாங்கிவந்த
பூமாலை தன்னைத்தான் போட்டார்மண மகள்கழுத்தில் மார்க்கத்தில் இல்லாத முறைமையது என்பதனால்
ஆராத்தி எடுக்கின்ற அக்கால வழக்கம்போல் “பீரிசியொன் றெடுத்ததன்மேல் பரத்திவைத்த வெற்றிலையிற்
C119)

Page 67
ஜின்னாஹற்ஷரிபுத்தீன்
பாலூற்றிக் கறிமஞ்சட் பொடிகரைத்து இருவரது தலைகளையும் மூன்றுமுறை சுற்றியதன் பின்னாலே
துப்புங்கள் எனப்பணித்தார் தாய்போன்ற பெண்ணொருத்தி துப்பவில்லை ஷரிபுத்தீன் செய்கைதவ றென்பதனால்
கொள்கைப் பிடிப்புள்ள காரணத்தால் உயர்இஸ்லாம் மார்க்கத்தில் இல்லாத முறைமைகளை நிராகரிக்கும்
போக்கைக் கடைப்பிடித்தார் படிப்பறிந்த காலமுதல் மற்றவர்க்கும் போதித்தார் முன்னேற்ற வழிமுறைகள்
கத்தமொடு பாத்திஹா கந்தூரிமவ்லூது ஒடுக்கத்தப் புதன்நேர்ச்சை உடல்கூடும் தாயத்து
சியாரவழிபாடுதங்கள் தாழ்பணியும் சங்கைகளும் ஒருமித்தே வெறுத்தார்பொய் ஒன்றுமவை விட்டகன்றார்
G20

வாத்தியார் மாப்பிள்ளை காவியம்
கல்யாண விருந்து
விருந்தோம்பும் பண்பில் விஞ்சியவர் கிழக்குமக்கள் கலியான வீட்டிலுயர் கலாசாரம் விருந்துணவு
திருமணநாள் அன்றுதத்தம் சொந்தபந்தத் தோடேதான் அழைப்புதனைப் பெற்றவரும் அமர்வார்கள் விருந்துண்ண
தோட்டுப்பாய் விரித்துவெள்ளைத் துணிவிரிக்கு முன்னதன்மேல் கற்பண்பாய் கிராம்பண்பாய் கலந்துகூடம் விரித்திருக்க
வரிவரியாய் உட்கார்வார் விருந்துண்போர் தனித்தனியாய் மலாம்பூச்சிறக்காவி வழங்கிடப் பெறுமவர்க்கு
சம்பரிசிச் சோற்றுடனே தெளிந்தபசு மாட்டிறைச்சிக் கறியுமுடன் துணைக்கறியும் Jon CBLDL6s unoOOTUpLDITLD
கடையிறைச்சி வேண்டாத காரணத்தாற் புதிதாகத் தம்பன்கட வைமாட்டுத் தொழுவத்திலேயிருந்தே
-C12O

Page 68
ஜின்னாஹற் ஷரிபுத்தீன்
இறைச்சிக்காய் மாடொன்றை இருவர்வழிநடத்திவர "முஅத்தினார்" அறுத்தளித்தார் மதமதத்த பெரியபசு
துவரம்பருப் பெடுத்தரித்துத் துண்டுதுண்டாய் வழுதுணங்காய் தேங்காய்ப்பால் கூட்டியொன்றாய்ச் சேர்த்தவித்துத் தாளித்தே
இறைச்சிக்கறிக் கேற்றபடி இணக்கமாகச் சமைப்பதுதான் துணைக்கறியாம் அந்நாளில் தெவிட்டாத பேரமுது
சுடச்சுடவே புளியாணம்
தேவைக்கெண்டு) ஏற்றபடி தருவார்கள் சோற்றிலதைச் சேர்த்துண்டு பருகுதற்காய்
பனையோலைப் பெட்டியிலே பால்மனக்கும் சோறெடுத்துப் போதுமிது போதும்மெனப் பதறுமட்டும் பகிர்ந்தளிப்பர்
"போஸ்கோப்பை” தன்னில்தான்
பரிமாறும் தண்ணிரில் “கொளுக்கு"ஒன்றைப் போட்டிருப்பர் கையலம்பிக் குடிப்பதற்காய்
-O220

வாத்தியார் மாப்பிள்ளை காவியம்
சுற்றிவட்டம் அரசிலைபோல் தொங்குகின்ற அலங்கார வட்டாக்கள் தம்மினிலே விளைந்துள்ள செளிம்பகற்ற
பழப்புளியைப் பூசிநன்றாய்ப் பளிச்சென்று மினுக்கியதிற் சீராக அடுக்கிவைப்பர் கீழ்ப்புகலும் பொருட்களினை
கழுதாவளை யுரிருந்து கொண்டுவந்த வெற்றிலையும் கொட்டைப்பாக்குச் சீவலுடன் கழிப்பாக்கும் கிள்ளவட்டில்
சுண்ணாம்பும் வாய்மனக்கச் சேர்த்துவைப்பர் கிராம்டு)ஏலம் காசுக்கட்டி யாற்செய்த கைப்புவட்டம் அதிலடங்கும்
வெற்றிலையை மென்றுதுப்ப வெண்கலத்தில் படிக்கங்கள் தப்பாது தருவார்கள் சீரதுதான் அக்காலம்

Page 69
ஜின்னாஹற் ஷரிபுத்தீன்
விருந்துக்கழைக்கும் விதம்
விருந்துக்கெண்டு) அழைப்பதற்கு வரலாறும் ஒன்றுண்டு இருவீட்டார் பக்கலிலும் இருவரவர் சார்பாக
ஒன்றித்துப் போயழைப்பர் உவந்துவர வேண்டுமெனில் மறுமுறையும் ஒருநாள்போய் வரவழைக்க வேண்டுமன்றேல்
கூப்பிட்டுவர வில்லையெனக் கோபித்துக் கொள்வார்கள் மேம்பட்ட போக்கில்லை மரபதுதான் அந்நாளில்
கல்யாண வீட்டில்
கலியான வீடுகளிற் கலகலப்பு விஞ்சுமங்கே கண்ணுக்கும் விருந்தாவர் கூடுகிறக் கூட்டத்தார்
அரைமூடிச் சதங்கையுடன் &LibLD600TLDITU blad D6hu60L பிள்ளைகள் பட்டுடுத்துப் பறந்தோடித்திரிந்தார்கள்
C1240

வாத்தியார் மாப்பிள்ளை காவியம்
அரைஞாண் கொடியில்ஈர் அங்குலத்தில் ஒன்றுதொங்க உடையின்றிப் பகலெல்லாம் ஒடிய சிறுவர்கள்
கழுத்தினைச் சுற்றியொரு காறையணி அலங்கரிக்கக் கையிரண்டும் வெள்ளிப்புதுக் காப்போடு திரிந்தார்கள்
முற்றியுடல் பழுத்தபல மூதாட்டிப் பெண்கள்தமை எட்டுமுழச் சோமனினால் இறுக்கிமுக் காடுமிட்டே
ஊர்வம்புதனைப்பேசி ஒருபுறத்தில் அமர்ந்திருக்கக் கம்பாயம் உடுத்தசில கிழவிகளும் சேர்ந்துகொண்டார்
சுங்குகட்டிச் சேலைகட்டித் திருமணஞ்செய் திருந்தஇளம் பெண்களொன்றித்திரிந்தார்கள் பொன்னணிகள் கண்மயக்கும்
கழுத்தினிலே கரசமணி காசுமாலை அட்டியல்கை அடுத்தடுத்து நாலைந்தாய் அழகான பூட்டுக்காப்பு

Page 70
ஜின்னாலுற்ஷரிபுத்தீன்
காதினிலே மின்னியுடன் கல்பதித்த அல்லுக்குத்து வாரிமுடித் திருக்கின்ற வளமான கேசமதில்
வேல்போன்ற கூர்கொண்டு விதம்விதமாயக் கொண்டைகுத்தி வைத்திருந்தார் ஒவ்வொன்றும் வேறுவேறு வகையாகும்
காலிரண்டிற் புதுவெள்ளிக் கரணைதண்டை அலங்காரம் போலாகும் ஆங்குற்ற பெண்கள்பெண் புறத்தாமே
புதுப்பட்டுப் புடவைசட்டை பூணாரம் தாலிக்கொடி தலைநிறைய மல்லிகைப்பூ செஞ்சாந்துப் பொட்டுடனே
வாலாமணிச் சட்டைபட்டு வேட்டியுடன் கரைமடித்த சால்வையும் மேற் போட்டுத் சகோதரத் தமிழினத்தார்
கணவன்மனை சோடியராய்க் கல்யாணவீடுவந்தார் அயல்கிராமங் குடியிருப்போர் அன்பாலே இணைந்தவர்கள்
G120–

வாத்தியார் மாப்பிள்ளை காவியம்
"வாங்கண்ணே" என்றும"அக்கா வாங்க"வென்றும் இளைஞரினை "6 IITLITLD&EFIT60" 6T60rpLDirig வந்தோரை முறைசொல்லி
வரவேற்றார் வரவேற்க வேண்டிநின்று காத்திருந்த வாலிபர்கள் வாஞ்சையொடு வரலாறாய்ப் போனதின்று
திருமணத்தின் பின்
வெண்முத்துப் பணித்துளிகள் வெய்யோன்பொற் கரம்பட்டு மெல்லமெல்ல உருவிழந்தே மறைந்தொழிந்த புலர்பொழுது
கல்யாண வீட்டின்கண் குடியிருந்த கலகலப்பு பனியடங்கிப் போனதுபோற் பிரிந்தமைதி குடிகொள்ளும்
கண்விழித்தே இரவெல்லாம் கதைபேசி வம்பளந்தோர் பொழுதுப்புலர் வறியாராய் பாய்களிலே புரண்டயர்ந்தார்
"சுபஹசிவேளைத் தொழுகைக்காய்ச் சென்றுவந்த மூத்தோர்கள் கோப்பிதரக் குடித்தபடி கல்யாண நிகழ்வுகளை
-C1270

Page 71
ஜின்னாஹற்ஷரிபுத்தீன்
அசைபோட்டார் மாதருடன் அடுத்தென்ன செய்வதெனத் திட்டமிட்டார் தினம்ஏழு தொடருகின்ற நிகழ்வுகளை
முறைமையன்று மாப்பிள்ளை முதல்விடிந்த தினத்தன்று காலைக்கடன் முடித்துணவு கொண்டபின்னர் தாயில்லம்
போய்வருவார் அவருடனே புறப்படுவார் மைத்துனரும் கையிலொரு குடையிருக்கும் கொடுவெயிற்கும் மழையினுக்கும்
கால்மாறிப் போதல்
முதலேழு நாட்களுக்கும் மணமகனின் வீட்டார்கள் மணமகளின் வீட்டுக்கு முறையாக வந்துசெல்வர்
வட்டாக்கொண்டு வருவதென வழங்குபெயர் அதற்காகும் கட்டாய நடைமுறையக் காலத்து வழக்கமது
மணமக்கள் ஏழாம்நாள் மணமகனின் தாயில்லம் அழைத்துவரப்படுவார்கள் அங்குமொரு விருந்துண்டே

Gymrš56)uum průjergp6T 85Talu jib
எண்ணெய்ப்பணி யாரமொடு இரண்டுவகை ‘துதள்” “மஸ்கத்” கோழிச்சூடன் வாழைப்பழம் கோப்பியிவை சேருமதில்
கால்மாறிப் போவதெனக் கூறிடுவர் இவ்வழக்கை ஷரிபுத்தீன் தம்பதிக்கும் செய்தார்கள் முறையாக
வாத்தியார் மாப்பிள்ளை
மாமிமகன் வாத்தியாரை மணம்முடிக்க வேண்டியபெண் மாமாமகள் முறைப்பெண்ணை மணம்முடிக்க
நினைந்தமகன் தாமாக விரும்பியதால் சோதனைகள் பலகடந்தே ஏமாறா தொன்றியதாம் இக்காதை இனிதுபெறும்.

Page 72
ஜின்னாஹற் ஷரிபுத்தீன்


Page 73
அவர்களின் தனயர் தப் தமிழ் இலக்கியத்தையு அவர்களுடையது க மருத்துவர் ஆயினும் உழைத்தல், இமைப்பெ சேர்விலா வாழ்க்கைமு: படைக்க முடிந்தது அ இலங்கையில் அதிக க இருத்தல் கூடும் 69 போதும் வன்னநடை
கருத்தியல் காரணமாக பலவற்றையும் அவர் செ கவிதைகளின் மவுசு கு விசுவாசமான நல்லதொ வசன இலக்கியத்திலும் முஸ்லிம்களின் வாழ்வி
ஒரு மானிட நேயர் இ நேசிக்கவல்ல உண்மை
சமநிலையில் நிற்பவர்கள்
ISBN No 978-955-5403.
I
 

கவிஞர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் பூத்த புலவர்மணி ஆமுஷரிபுத்தீன் ாமற் பிறந்த பிள்ளை இஸ்லாத்தையும் ம் தம் இரு கண் எனக்கொண்ட மரபு விஞர் ஜின்னாஹ் தொழில்முறையில் மக்குத் தொழில் கவிதை நாட்டுக்கு ழுதும் சேராதிருத்தல் என்று வாழ்பவர் றை காரணமாக பல நூல்களை அவரால் வர் படைத்தவற்றுட் பல காவியங்கள் வியங்களைப் படைத்தவர் இவராகவே ங்கு நடை வசனநடை என்று ஆன செய்யுள் நடையே என்ற அவர்தம் வசனநடையில் அமைந்த நூல்கள் ய்யுள் நடைக்கு மாற்றினார் மரபுவழிக் நிறைந்த இற்றைய நாளிலும் அதற்கு 5 வக்கீலாக நின்று வாதாடுபவர் அவர் அவர் வல்லவர் கிழக்கிலங்கை யலை சிறுகதைகளில் சித்தரித்த எல்லாவற்றினுக்கும் மேலாக அவர் இன, மத, மொழி கடந்து மனிதரை ச் சமயி உண்மை இலக்கியவாதி டாரவன்னியனும், திப்பு சுல்தானும்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
2-1-7 கஇரகுபரன் தமிழ்த்துறைத் தலைவர் தென்கிழக்குப் பல்கலைக் கழகம் ՏՏՏՏՏՏՏՏՏՏ RS. 250/-