கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1949.04.13

Page 1
β
புண்ணியன் சுத்தானத்தன் பண்ணியபா வம்போம் பற
| ജേrള 1) || ഷെക്നേ
 
 
 

போன் முகத்தை க் இண்டார்ச்குப் இது
நி சித்திரைமீ i i 6

Page 2
ബ
ஆத்ம ஜோதி.
பொருளடக்கம்.
விஷயம் சுக்கானந்தர் வாழ்த்து புதுவைக் கவயோகி வாழ்க எமது ஆலயங்களிலுள்ள ஊழல்கள் இறை அருள் மணக்கும் இடங்கள் சாதனை வாரத்தைப்பற்றி பாலயோகி பூரீ இராமகாஸ் தங்துள்ள விளக்கம் சிவகங்கையில் எழுந்த செந்தமிழ் வாணி அருணையில் குருவையடைந்த அற்புகக் காட்சி கோயில் சீர்திருத்தம் புதுவையில் பூரணயோகி தரிசனம் நான்கண்ட சர்வாத்ம சமத்துவம்
முக்கமிழ்வளர்க்கும் முனிவன்
மதமற்ற மார்க்கம்
பாரத சக்தி
அமைதி
அவதார புருஷர்களது.ஜீவியசரிகைகள் ஷெல்லியும் சுக்கானர் கரும் திருக்கேதீஸ்வர ஆலயத்திருப்பணிசசபை
பக்கம்
153
Yn 154
159
16C
161
163
1 (36 168 170 171
72 173 176 179 182 184
ஆத்ம ஜோதி ஓர் ஆக்மீக மாக வெளியீடு -
கெளரவ ஆசிரியர் திரு. க. இராமச்சந்திரன்
சங்கா விபரம்
ஒருவருடம் ரூ. 3/- ஆயுள் சங்கா 75/- கணிப்பிரதி ச, 30.
në T . ap 3 68) 5 tij t ,
'ஆக்ம ஜோதி' நிலையம், நாவலப்பிட்டி (சிலோன்)
– احسيم>

繫
འདུ་
*தானுநிறைவுற்றுத்தன்னவருமின்புறுதற் - கான்வொழுக்காறேயறம்."
--சுத்தானந்தர்
சோதி விரோதிடு) சித்திரைமீ, sfLf 6
சுத்தானந்தர் வாழ்த்து.
வாழ்க சுத்தானந்தின் வாழ்க சுத்தசக்தி
வாழ்க வரகவியே வாழ்க மஹாயோகி வாழ்க மஹாதியாகி
வாழ்க தமிழ்மணியே (வாழ்க)
அருணே ரமணேசன் கருணைக் கிலக்கான
அற்புத மோனியவன்
அரவிந்தக் தேனுண்டு ஆனந்தம் பொங்கிய
ஆவேச வர்ணியவன் (வாழ்க)
ஐயைந்து ஆண்டினுள் அங்கிய மொழியெல்லாம்
ஆர்வமுடன் கற்முன் -
ஆரியம் போலவே ஆங்கிலங் தன்னிலும்
அளவில் புலமைபெற்ருன் (வாழ்க)
எந்தாய் மொழிக்கிணை எங்குமே யில்லையென்
றெடுத்து விளக்கியுள்ளான்-அதில் எண்ணரிய நூல்கள் இயற்றிப் புகழ்நமக்
கேற்றிய ஏந்தலவன் (வாழ்க)
பாரத சக்தி யெனும்மஹா காவியம்
பாடி யெமக்களித்தான்-அதைப்
படித்துத் தமிழர்கள் பண்புற்று வீரராய்ப்
பாரினில் வாழ்ந்திடவே. (வாழ்க)
(یا به سه سیاست .

Page 3
புதுவைத் தவயோகி வாழ்க.
கொண்டல் வண்ணு கோபாலா!
கும்பிட்டுன்னை வேண்டுகின்றேன்; அண்டு மன்பால் தமிழன்னைக் (ङ)
அல்லும் பகலும் அலுப்பின்றித் தொண்டு செய்யும் தவயோகி சுத்தா னந்த பாரதியிம் மண்டலத்தில் என்றென்றும்
வாழ வரம் நீ வழங்குவையே
-கவிமணி, தேசிகவிஞயகம்பிள்ள்ை
இந்துமதம் விஞ்ஞானம்
இன்பமுறும் போகவித்தை
பைந்தமிழிற் கொணர்ந்திடுவீர்
பலகலைகள் தினந்தோறும்;
வந்தனங்கள்! வாய்மையிலே
வளர்கின்ற கவிமுனியே
அந்தமிலாப் பெரும்புகழை
அடைந்திட்டீர் அவனியிலே!
-டி. வி. சுவாமிநாதன்
முத்தமிழும் வல்ல முனிவன்சுத் தானந்தன் சித்தத்திற் கொண்டான் சிவம்.
பத்தாயிர 4 JITD 5 சக்தியெனும் புத்தாரஞ் செய்தானைப் போற்று,
தமிழின்ப வூற்முென்று தாரணியி லுண்டேல் அமிழ்தக் 35 Gos?(BJT @ LITT Lh
வாழிசுத் தானந்த மாமுனிவன் வண்டமிழில் ஆழிபோல் நூல்கள் அளித்து
வாழி தவமுனிவன்! வாழி நவமுனிவன் வாழிகவி யோகி வளர்ந்து
-சாளத்திசாதப்புலவர்.
 

鸞
எமது ஆலயங்களிலுள்ள ஊ ழ ல் க ள் .
omni H******* Immuna wong
(ஆசிரியர்)
*ನ್ನು ● c) மக்களிடத்துள்ள பேராசை, பொருமை, பொய், சினம், வஞ்சகம் முதலாம் விலங்குக்குணங்களை நீ க் கி, அவ்விடத்தில் அன்பு, அருள், பொறுமை, தியாகம், தூய்மை ஆகிய தெய்வசம் பத்துக்களை நிலவச்செய்து, அவர்களைக்கடவுள் நெறியில் நிறுத்
தும் மார்க்கம் சமயமென அழைக்கப்படும். மனிதன் வெறுஞ்
சோற்றுத்துருத்தியல்ல; பிறந்துவளர்ந்து, உண்டு உடுத்து, உறங்கி
எழுந்து, இனத்தைப்பெருக்கி மடிவதோடு மனிதப்பிறவியின்
நோக்கம் முடிவடைவதில்லை, மரணத்தின் பின்னரும் வாழ்வு உண்டு என்ற உண்மையை நமக்கு விளக்குவது சமயம், இந்தச்
சமய நெறியின் துணைக்கருவிகளாகவே ஆலயங்களும் ஏனைய வழி
பாட்டு முறைகளுந்தோன்றின, ஆகமவிதிப்படி கட்டப்பட்ட ஒவ்
இந்துமதக்கோயில் அமைப்பிலும், மனிதனின் துரல, குக்கும், காரணசரீரங்களும், அன்னமய, பிராணமய, மனேமய, விஞ்ஞானமய, ஆனந்தமயமாகிய பஞ்சகோசங்களும் அடங்கி யுள்ளன. இவற்றையெல்லாங்கடந்த நிலையிலேயே கடவுட்காட்சி யைப் பெறமுடியும் என்ப்தே இந்த அமைப்பிலடங்கியுள்ள தத்து வம். ஆலயம் என்ருல் ஆன்மா ஆண்டவனிடம் படியும் இடம் அல் லது ஆணவமல நீக்கத்திற்குப் பயன்படும் இடம் என்பதேகருத்து.
எங்கள் ஆன்ருே?ர்களின் கொள்கைப்படி, கோயிலில்லாத
கிராமம் குடியிருப்புக்குதவாத இடமாகக் கருதப்பட்டது. ஏனெ
னில், கோயில்கள் மக்களின் கம்யப்பற்றின் சின்னங்களாக அமை
வதோடு கின்றுவிடாது, அவர்களின் சமுதாயவாழ்க்கையிலும் பொருளாதாரத் துறையிலுங்கூட நெருங்கிய தொடர்புகொண்டிரு
ந்தன. கோயில்களைச் சேர்ந்த தருமச்சொத்துக்கள் பூசைக்கு மாக்
திரம் பிரயோசனப்படிவில்லை; சமாஸ் சாஸ்திர அறிவு பரவுதற்கும்,
கலைவளர்ச்சிக்கும், தேவார திருவாசகம் திருவாய் மொழி போன்ற துதிப்பாடல்களைப் பண்ணுடனும் பக்தியுடனும் பாடப்பயிற்றுவத ற்கும், புராணப்படனங்கள் செய்விப்பதற்கும் அச்சொத்துக்களின்
வருமானம் பயன்படுத்தப்பட்டது. இக்காரணங்களைக்கொண்டே,

Page 4
, 156 ஆத்ம ஜோதி
ஆலயங் தொழுவது சாலவும் நன்று', கோயிலில்லாத ஊரில் குடி யிருக்கவேண்டாம்,' என்பன போன்ற அ ரு ம் வா க் கு கள் தோன்றின. .
இங்ஙனம் எங்கள் சாதியினரின் தூயபண்புப்பாட்டின் உறை விடமாகத் தோன்றி, அவர்களின் சமாஸ் நெறியிலும், சமுதாய வாழ்க்கையிலும், கல்வித்துறையிலும் மேன்மையுற்று விளங்கிய கோயில்களின் தற்போதைய கேவலநிலையைப் பார்த்து எந்த இந்து தான் வெட்கித்தலை குனியாதிருக்க முடியும்? "என் வீடு சகலசாதி யாருக்கும் ஜெபவிடு எனப்படும் என்று எழுதியிருக்கவில்லையா? நீங்களோ அதைக்கள்ளர் குகையாக்கி விட்டீர்கள், என்று ஈரா யிரம் வருஷங்கட்கு முன் எசுபிரான் கூறிய கண்டனம் இன்றும் பொருத்தமாகவே யுள்ளதன்yே? மணியொலிகேட்டேன்! வாத்தி யங்கேட்டேன்! கோபுரங்கண்டேன்! கோயிலென்ருேடினேன்! என ஆரம்பிக்கும் முன்னேற்றப் பாடலில் யோகி பூரீசுத்தானந்தர்,
"பணத்தைக்கண்டேன்; பத்தியைக்காணேன். சடங்குகள் கண்டேன்; சத்தியங்காணேன். சாதியைக்கண்டேன்; சாமியைக்காணேன். குருக்களைக்கண்டேன்; கோயிலைக்காணேன். எங்கே கோயில்? எங்கே சாமி? ?
என்று நமது கோயில்களை இன்று சூழ்ந்துள்ள ஊழல்களைத்தெட் டத் தெளிவாக விளக்குகிருரர். இவற்றின் காரணங்களை ஆராய்
வோமாயின்,
(1) நாடு தன்னாசை இழந்தது. (2) பிறப்பில் உயர்வு தாழ்வு பா ரா ட் டு த லி லி ரு ங் து கோன்றிய சாதிக்கொடுமை, (3) கல்வியறிவற்ற, ஒழுக்கமற்ற தன்னலமுற்ற மனிதர் கோயில் அதிகாரிகளானது, (4) சமய சாஸ்திரங் தெரியாத, பண்பற்ற, பக்தியற்ற, சீலமற்ற புரோகிதர்கள் கோயில்களில் அர்ச்சகர்களா னது, ஆகிய நான்குமே முக்கியமானவையாகும், இந்த நான்கனுள் இறுதியில் குறிப்பிட்ட ஒன்றுமே ஒரு நாட்டுக்கும் சமுதாயத்திற் கும் பலதொல்லைகளை விளைக்கக்கூடியதென திருமூலர் கீழ்க்கண்ட திருமந்திரத்தால் நன்கு விணக்கியுள்ளார்:-
 

எமது ஆலயங்களின் ஊழல்கள் 5?
பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தாற் போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாகியாம் பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமுமாம் என்றே இசீர்கொன். நந்திகெரிங் துரைத்தானே.
மேலே கூறப்பட்ட முதலாவது காரணமான நாட்டின் அடி மைத்தனம் நீங்கிய்தும் ஆலயங்களை அலங்கோலமாக்கிய ஊழல் கள் இருந்தவிடங்தெரியாமல் மறையவேண்டியதே முறையாகும். தென்இந்தியாவைப் பொறுத்தமட்டில், சென்ற இரண்டாண்டுக் குள் நிறைவேறிய சீர்திருத்தங்கள் எடுத்துக்காட்டாயுள்ளன. 1947-լք ஆண்டில் கொண்டுவரப்பட்ட கோயில் நுழைவு அனும திச்சட்டம் சாதிக்கொடுமையையும் தீண்டாமைப் பேயையும் கோ யில்களிலிருந்து துரத்திவிட்டது. 1926-ம் ஆண்டில் சென்னே முதல் மந்திரியாகவிருந்த பனகால் மகாராசாவால் ஆரம்பிக்கப் பட்ட அறநிலையப் பாதுகாப்புத்திட்டம் இந்த ஆண்டில், எமது சமயத்தையும் அறநிலையங்களையும் ஒழுங்கான பழைய நிலைக்குக் கொண்டுவரக்கூடியமுறையில், திருத்தியமைக்கப்பட்டுள்ளது. சமய விஷயங்களில், கோயில்களின் மடங்களின் கிர்வாகத்தில், அரசாங்கம் தலையிட்டால் சமயம் அழிந்துபோகும் என்று கூக்கு ரல்போடும் கன்னலபுலிகள் அன்றுபோல் இன்றும் உளர். கோ யில்களை இடியுங்கள், சாமியை உடையுங்கள், பூசாரிகளை அடியுங் கள்' எனச் சத்தம்போடும் உலகாயதர்கட்கு வலக்கைபோல் உதவி புரிவோர் இந்தச் சைபர்களேயாம். இவர்கட்கு எங்கள் மதத் தின் மாண்பும் விளங்காது; அதின் சரித்திரமுங் தெரியாது. மத வெறிபிடித்த பறங்கியர்களதும் முகம்மதியர்களதும் நாசவேலைக் குப்பின்னரும் அழியாது கின்ற எங்கள் சமயமும் ஆலயங்களும் இனி அழியப்போவதில்லையென்ற உண்மையை இந்தப் பிற்போக் காளர்க்கு எடுத்துரைப்பதோடு, மூன்றுவது குலோத்துங்கன்கா லத்தில் சில இந்துக் கோயில்களின் ஆட்சிமுறை கெட்டிருந்த போது அந்த அரசன் தன் மந்திரியான மூவேந்த வேளாளனைக் கொண்டு விசாரணை நடாத்தி, குற்றஞ்செய்த தர்மகர்த்தாக்களைத் தண்டித்தும் விலக்கியும், ஊழல்களைக்களேந்த வரலாற்றையும் கினை வூட்ட விரும்புகின்ருேம்.
காலதேவி வேண்டி நிற்கும் புதுச்சமுதாயத் திட்டத்தைப் பற்றி ரீ ராஜாஜி கூறும் அபிப்பிராயம் 'அரசியல் ஆதரவுடனும்,

Page 5
158 ஆத்ம ஜோதி
சட்டமூலமாகவும் இல்லாமல் பணக்காரர்களே நம்பி சமுதாய சமத்துவத்தை ஏற்படுத்தலாமென்று சிலர்கருதுவது நிறை வேyது. அரசியல் நிர்ப்பந்தம் இல்லாமல் பணக்காரர்கள் தங்களு டைய சொத்தை கரும பரிபாலனமாகச் செய்து ஏழைகளைப்பார் த்துக்கொள்வாரென்று இக்காலத்தில் எதிர்பார்க்க இயலாது' என் பதாகும், சமயத்துறையிலும் கையாள வேண்டிய முறை அதுவே யென்பதை சென்னை மாகாணத்தலைமை மந்திரியாரும் உண்மை யான நிஷ்காமிய கர்மயோகியுமான திரு. இராமசாமி ரெட்டியார வர்கள் செய்கையால் விளக்கிவிட்டார்.
இலங்கையில் யாழ்ப்பாணத்திலுள்ள ஆலயங்களின் சீர் േ?.. கிலைமையைக்குறித்து இங்குயாம் அதிகம் எழுதவேண்டிய தில்லை. சென்ற சில ஆண்டுகளாக முக்கியமான கோயில்களின் உறுதிக்கட்டுகளும் கணக்கு ஏடுகளும் நீதிமன்றங்கள் மூலம் யாழ் ப்பாணக்கிற்கும் கொழும்புக்குமிடையே அடிக்கடி பிரயாணஞ் செய்கின்றன; பலியிடும் காட்டு மிராண்டிப்பழக்கம் இல இராமங் களில் இன்னும் தலைகாட்டுகின்றது தாசிக்கூத்துகள் குறைந்தபா டில்லை; சாதிக்கொடுமையோ முன்போல் அகோரமாகவேயுள்ளது. "கீழ்ச்சாதியினரிடம் சுத்தமில்லை, ஒழுக்கமில்லை. ஆகையால், அவ ர்களேக் கோவில்களுள் விடமாட்டோம்" என்று கூறும் உயர் சாதிச் சைபர்களுள் எத்தனைபேர், சென்னைமாகாண கோயில் நுழைவுச்சட்டத்தின் பத்தாவது பிரிவின் மூன்றுவது விதியின் கீழ் உண்மையில் ஆலயங்களுட் செல்லக்கூடிய தகுதியுடையவர்க ளெனக்கேட்கின்ருேம்? பல்லாண்டுகளாக இரு ங் து வந்த இந்த ஊழல்கள் போதாகென்று இப்போ ஒரு புதுக்கொடுமையுஞ் சேர் ந்துள்ளது. அதாவது, கோயில்களில் நடக்கும் துணிவுகரமான துரோகமான களவுகள், பொன் வெள்ளி ஆபரணங்களைத்திருடுவ தோடு நின்றுவிடாது, மூலஸ்தானத்திலுள்ள மூர்த்திகளையே பெய ர்த்து அவற்றின்கீழ் வைக்கப்பட்டிருந்த தங்க யங்கிரத் தகடுகளை பும் களவாடுகிறர்கள். சென்ற மாசி மாசம் 25ங் தேதி (8.3:49) வெளிவந்த இக் அசாதனப்பத்திரிகையின் ஆசிரியர் கட்டுரையை வாசித்தபோது, யாழ்ப்பாணக்கோயில்கள் காலகதியில் கித்திய நைமித்திகங்கள் நடத்தலின்றி அழிந்து விடுமோவென அஞ்சினுேம், இந்தப்புதிய தீமை பழைய ஊழல்களின் பயனுகவே தோன்றி புள்ள தெனலாம். ஆகையால், அவற்றைக் களைவதே அறிஞர் و مازلتقني - ساقه
 

。
கமது ஆலயங்களின் ஊழல்கள்
"ஆத்மஜோகி அபிமானிகளதும் ஏஜனய இந்திக்களதும் கவனத்தை இந்த முக்கிய விஷி யக் தி ல் ஈர்க்கும் நோக்குடன், சென்ஜர் சைவத்திருவாளர் வி. கல்யாண சுந்த முதலியார் அவர் களின் பொன் மொழிகள் சிலவற்றைப் பிறிதோரிடத்தில் பிரசுரித் துள்ளோம். சென் ற முப்பது முப்பைத்தைந்து ஆண்டுகளாக இங் தத்தமிழ்ப்பெரியார் கோயில் சீர்திருத்தத் தொண்டில், மகாநாடு
களின் தலைமைப் பேருரைக ளாலும், கட்டுரைகளாலும், நூல்களா
லும், பெரும் பங்கு பற்றியுள்ளார். அவர் இயற்றிய நூல்கள் கண க்கில. அவற்றின் கொம்போல் விளங்குவது உள்ளொளி, அந்த அரிய நூலிலிருந்தே மேலே குறிப்பிட்ட வசனங்களைத்தெரிந்தெடு த்துள்ளோம். திரு. வி. கவைப்போலவே, யோகி பூீ சுத்தானந்த பாரதியார் அவர்களும் பாட்டாலும் எடுத்துக் காட்டாலும், பத்தி ரிகை வியாசங்களாலும் புஸ்தகங்களாலும், தீண்டாமைக் கொடு மையை ஒழிக்குங் தொண்டில் அரும்பாடு பட்டவராகும். எனவே, அவரது திருமுகப்பொலிவுடன் வெளிவரும் இந்தச்சுடரில் அதே விஷயம் எடுத்துக்கொள்ளப்பட்டது சாலவும் பொருத்த முடைத் தாகும. அவருடைய ஜென்மநட்சத்திரம் சித்திரை மாசு உத்திரம் எனபதையும் அன்பர்கட்கு கினேவூட்டுகின்முேம்,
இறை அருள் மணக்கும் இடங்கள் ஆட்ம்பரத்திலே அநியாய் வாழ்விலே அன்பில வாக்கி லேயுன் அருள்மணஞ் சிறிதேனும் இல்லையென் றுணர்ந்துளோர்
ஆனந்த மவுணி யானுர் வீடின்றி காடின்றி ஒடேந்தி உண்கின்ற டிமையுள் ளாரிடத்தும் வெய்யில் மழையாதியாம் வேதாேகள் தாங்கியே
வினேகள் செய் வாரிடத்தும் வேடம் புனேக்கிடும் வாழ்வையே வேண்டாத
வித்தகச் சித்தர் பாலும் விரும்பிடுங் குதலைமொழி சொரிந்துதன் பால்மணம்
வீசுங் குழந்தை பாலும் ஈரடிகின் றுணதபுன் ணகைமுகங் காட்டுவாய்
நம்பினே லுன்பதத்தை காயே னெனக்கினிய தாயாகி நின்றுமெய்ஞ்
ஞானமருள் மோன குருவே.
*சுதந்தி ஜீவுன்"

Page 6
IV)
{F is 5 ീr 1 (r ர த்  ைத ப் பற்றி | unrabGurg, பூரீ ராமதாவில த நீது ஸ் ள விள க் கம்.
ܝ ܝ
சத்சங்க அன்பர்களால் சாதனை வாரம் கொண்டாட ஏற்பாடு செய்திருப்பது மிகவும் போற்றற்குரியது. வாரம் என்?ல் ஏழு நாட்களைக்குறிக்குமாயினும், சிறப்பாக வாரம் என்பது அன்பு என்று பொருள்படும். அருணகிரிகாகர் முருகனை விளிக்கும் போது,
செஞ்சொல் அடியார்கள் வாரக்காரா! என்கின்ருர், சாதனை வாசத்தில் கடும் அன்பர்கள் வாரம் உள்ளவர்களாக விளக்கவேண் டும். சாதனைக்கு உண்மையான உணர்ச்சி தேவை. இதய பூர்வ DIT GJIT 233Tidig இருந்தால்தான் சாதனையில் ஊக்கமுண்டாகும். ஒருவருடைய கட்டுப்பாட்டிற்காகவோ, மேலெழுந்த உணர்ச்சிக் காகவோ, வெறும் வேடிக்கைக்காகவோ சாதன வாரத்தில் கூடு வது பிரயோஜனம்தராது.
உண்மையான ஆத்ம பரிசோதகனுக்கு அவன் வாழ்க்கையே ஒரு சாதனைதான். அவன் சொல்லில், செயலில், கருத்தில் எல்லா வற்றிலும் கவனமாயிருக்கப் பழகுவான். அவன் வெற்றுரையா டான்; சோம்பித்திரியான், உள்ளதே போதுமென்பான்; புறங்க முன்; பழிவாங்கலுக்கு அஞ்சிநடப்பான்; மனச்சாட்சிசொல்வதை மீறிநடவான், அவன் பேச்சில் அர்த்தபுஷ்டி ததம்பிகிற்கும்; கண் னில் ஞான ஒளிவீசும், பிறர் மெச்சுதலுக்கும் போற்றுதலுக்கும் 22. Li tills 6ð7,
தம்கடன் அடியேனையுங் தாங்குதல் என்கடன் பணிசெய்து கிடப்பதே என்ற பல்லவியே அவன் (புழக்கம், எத்தனை இடுக்கண்கள் வங் தாலும் அதை எதிர்த்து கின்று போரிடுவான்; எடுக்க பணியைத் தொடர்ந்து முடிப்பான்.
எப்படி எப்படி உன் இச்சை அப்படி قهyl'/tلtg. இவ்வுடலே யாட்டு. என்று, சர்வாந்தர்யாமியான பரமாக்மனுக்கே தன்னை முற்றும் அளித்து விடுவான். இதுவே உன்னதமான சாதனை, இதனே அ டையவே, ஜபம், தியானம், மெளனம், பிரார்த்தனே ஆசாரசியம னம் முதலியவை அவசியம் தேவையாக இருக்கின்றன.

உ|சிவகங்கை யில் எழு ந் த - செந்தமிழ் வாணி.
munen
n mu
(கவிராஜ பண்டித, நா. கனகராஜஐயர்)
செந்தமிழ்வாணி புதிய பொலிவுடன் எழுந்தாள்; இரண்டு வாடாமலர்களைத்தந்தாள். ஒன்று வீராவேசத்திருவுடன் பொலி ந்து காலவெள்ளத்தில் மறைந்தது; அதன் ம ண ம் காலத்தை வென்று பரவுகிறது; மற்rெருமலர் சிவகங்கையில் வேர்கொண்டு, சேரமா தேவியில் அரும்பி, புதுச்சேரியில் மலர்ந்து, பரமசாந்த நிலையிலிருந்து புதுமணம்பரப்புகிறது. இப்புதுமலரைத்தமிழர் அறி வர்; அதன் தூய இன்பத்தை இன்னும் நன்முகத்தமிழர் உணர வேண்டும். சுப்பிரமணிய பாரதியார் கவி மழை பொழிந்தார்; உட லுள்ளவரையில் அவர் பெ ரு  ைம  ைய த் த மி ழ ர் அறிய வில்லை, இன்று அவர் கவிதையை உச்சிமேல் வைத்துக்கொண் டாடித்திருவிழா நடத்துகின்றனர். சுவாமி சுத்தானந்தபாரதியார் இதோ இருக்கிருர், ஒபாமல் கவிமலர் கொட்டுகிருரர். அவர் மூச் செல்லாங் தமிழ்ப்பணியே அவர் வாக்கு நீண்டதவத்தில் மலர்ந்த அருள்வாக்கு. அவர் நிலையான கலைச் செல்வத்தை மலைமலையாக வாரிக்குவித்திருக்கிரு 'அவ்ரையும் த மி மு ர் புறக்கணிப்பரோ? நிகழ்காலம் ஒதுக்கினலும், வருங்காலம் இந்த அருட்கவியை மதி ப்பதுறுதி; அவர் மொழி உள்ளெழுந்த நிறைமொழி; அவர் திரு வாக்கு நன்முகச் செதுக்கிய மாணிக்கம்; புடம்வைத்துப்பொலியும் தங்கம்; போலித்தங்கமன்று; புலவர் உரைகல்லில் உரைத்து மதித்த பத்தரை மாற்றுத்தங்கம். எவ்வளல சோதனை செய்தாலும் அது காலத்தை வென்று விளங்கும்.
தாகூர் கவிதையை அன்னியர் கொண்டாடிய பிறகே, நம்ம வர் போற்றினர்; அறிந்தனர். சுவாமி சுத்தானந்தர் கவிதை இன் ஒனும் பலர் அறியாப்புதையலாகவேயிருக்கிறது. அப்புதையல் அழ குக்கோயில், கலைப்பள்ளி, இன்பவூற்று அவர் வாழ்வே கவிதை, கினைப்பும் உயிர்ப்பும் கவிதை; அவர் எழுதிய வசனமும் கவிமண க்கும்; பாவணு ரஸம் ததும்பும். உணர்ச்சி அலைபொங்கும்; வீரம் ததும்பும்; நகைச் சுவை பொங்கும்; ப்க்தியும் ஞானமும் கரை புரண்டோடும்.

Page 7
162 - ஆத்மஜோதிா
அக்காலம் கிருவள்ளுவர் முப்பாலைக்குறளாகச் செய்தார். இக்காலம் யோக நிலையிலிருந்து சுத்தானந்தர் யோகசித்தி என் னும் அற்புத நூலை அருளினர். அது பலர் வாழ்விற்கு வழிகாட்டி விளங்குகிறது. -
பழந்தமிழரைக் கிண்டிக்கொண்டிருப்பதால் மட்டும் சமிழ் உயரமுடியாது. தமிழை உலகமொழியாக்க அதில் புதிய ஒளியும், புதிய கருத்தும் கொண்டுவரவேண்டும்!
'தமிழின் பெருமைகளைப் பேசுவோம்!-பழங்
தமிழிற் புதியவொளி வீசுவோம்! தமிழர் ஒருகுலமாய் வாழுவோம்-இளங் தமிழர் தமிழ் விரதம் பூணுவோம்' பழந்தமிழிற் புதிய வொளி வீசுவதெப்படி? சுவாமிகள் எழுதிய சிலம்புச் செல்வம், பரீராமதாதன், கம்பக்கவி இன்பம், திருக்குற ளின்பம், திருமந்திரவிளக்கம், தோயோகம், முதலிய பழம்பொருள் பொதிந்த புதுமலர்களைப் பாருங்கள்! அவைபோலவே இன்னும் ஆயிரம் நூல்கள் தோன்ற நம் மொழிக்கு வலிமையுண்டு; உரிமை யுண்டு; தமிழர்களே கவிஞர் கூறுவதைக்கேளுங்கள்:-
'சுற்றியுள்ள நாடுகளை நோக்குவோம்-அங்கே
சொக்கும் புதுமை நம் தாக்குவோம்!"
மனம் வைத்தால் உலகில் முடியாத காரியம் στέμ தமிழீர்!
ஆற்றலை மறந்தின்னும் தாங்கவோ?-செல்வம்
அளவற்றிருக்கப் பிச்சைவாங்கவோ? நாற்றிசையும் தமிழிசை நாட்டுவோம்-இங்கே
நாமும் மனிதரெனக் காட்டுவோம்!"
ஆ, என்ன உணர்ச்சி! என்ன உக்கேசம் இது பலிக்குங் காலம்
வரத்தான் போகிறது,
VNii
சுத்தானந்த பாரதியார் நூலை நான் கருத்துடன் படிப் பதுண்டு; அவரைப்போன்று, அற்புத நூல்களை யார் செய்யமுடியும்? ஒருநாளேக்கு ஒருநூல் எழுதவல்லவர்.
-ரீ சக்ரவர்த்தி ராஜகோபாலாசாரியார்.
 

Cast
NANN
அருணையில் குருவையடைந்த ،++ அற்புதக் காட்சி.
(ஈத்த ானந்த பாரதியார் )
தீவிரமான ஞானப்பசி பெடுத்தது. ஜீவன் முக்தர் வரலாறு களையும், உபதேசங்களையும், புனிதநூல்களையுங் கற்று நினைத்துப் பாடி எழுதிப்பரவசமாவதே முயற்சியானது, பலமதப்பெரியோர் களையும் நேர்ந்துழி சென்று வ ண ங் கி ஞானஸாதனம் பெற்றுக் கொண்டதுண்டு. தாயுமானுரை ஆர்வமுடன் பாடுவதுண்டு, பகவத் கீதையே ஞானவழி காட்டியாகப்பின்பற்றி, அதைப்பின்பற்றியனு பவங்கண்டோருடன் உறவு க ல க் த ல் உண்டு. கன்னலமற்ற பணியே, அகந்தை யொழிந்து வாழ்வைப் புருஷோத்தமனுக்கு வேள்வியாக்கும் வழியெனப் பலதுறைகளிற் பணிமேற்கொண்ட துண்டு. பணிக்குச்சக்தி வேண்டுமென, ஹடராஜயோகங்கள் பயின்றதுண்டு. இவையெல்லாம் உண்டெனினும் உள்ளே நீக்க முடியாத ஒருகுறையுண்டு. ஹடராஜயோகத்தால் உடலுயிர் மனத் கில் சில கிறமைகள் உண்டாயின. ஒலியும் ஒளியும் ஒருமைப் பாடும் எய்தின வெனினும், அவை பொருட்டாகத்தோன்றவில்லை. சமயம், கவி, இலக்கியம் பத்திரிகை, ஆசிரமக்கல்வி, அரசியல், சமுதாயமுன்னேற்றம், கிராமறிச்மாணம் முதலிய பலதுறைகளிற் கீைதிக்கடல்சேரவில்லை. இசையும் புகழும் எத்துணை இன்புறுத்தினும், இவையெல்லாம் மின்னெனத்தோன்றி மறைந்தன. புகழ்மாலைகள் குவிந்தன; ஆனுல் அவற்றிலிருந்து
தேனீக்கள் என்மனதைக்கொட்டிப் புண்படுத்தின. di o , G 3
LITELJ (5 tilLD GJIT ! P
இந்நிலையில் யாராயினும் ஒருவர் எதிர்பாராது வங்து பகவான்
ரமணமஹரிஷிகளைப்பற்றிச்சொல்லுவதுண்டு. முதல் முதலில் பக வானுடைய படத்தைக்கொண்டு ஒருவர் வந்தார். அப்போது ஒர் மனவுறவு ஏற்பட்டது. ஒருகாந்தம் இதனே இழுத்தது. திருவண்ணு மலையினின்று யார் வரினும் மஹர்ஷிகளைப்பற்றிக்கேட்டு ஆனந்தி ப்பது இயல்பாயிற்று. .திருவண்ணுமலையில் அப்போது நட ந்த அரசியல் மஹாநாட்டிற்கு பூரீமான் வ. வே. சு. ஐயர் சென் றுவந்தார். உடனே அவரை மஹர்ஷிகளின் விவமே கேட்டது.
'ஆஹா! தமிழ்நாட்டில் ஒரு ராமகிருஷ்ண பரமஹம்ஸர் الات القيه
தரித்துள்ளார்! அவர் ஜோதிபர்வதமாக விளங்குகிருரர். அவரைப் ܓܠ

Page 8
164 ஆத்மஜோதி
பார்க்கவே முதன்மையாகத் திருவண்ணுமலைசென்றேன்! Lp?გაყ9) னும் அவருடைய கம்பீர்யமே அற்புதமாயிருக்கிறது. அவர் சங் கிதானத்தில் நமஸ்கரித்து உட்கார்ந்ததும் என் மனம் புதிய சாந்தி யடைந்தது. தமது தமிழ்நாடு பாக்யம் செய்தது. பாரததேசம் இம்மஹானைப்பெறப் புண்ணியம் செய்தது, பா ர தி! அவரைக் காணவேணும்' என்றுரைக்கவே கெய்வக்காதல் கொழுந்து விட் டெரிந்தது, பிறகு, பகவானே நினைப்பு: அதன்பிறகு ஆண்டவன் விடுத்த தூதுபோன்று பூரீகணபதிமுனிவர் குருகுல சமரஸ் முடி விற்காகவந்தார். அவரைக் கண்டதும், ஆழிகண்ட தேவியாகி மனஞ் சிலிர்த்தது.இதை ஏதோ ஒரு பசி மஹர்ஷிகளின் பாலே இழுத்தது. ஒரிரவில் தியானம் செய்கையில் தாங்கமுடி யாத அன்பு பிறந்துவிட்டது. மஹர்ஷிகளை உடனே காணுவிடில்
உயிர் கிலைக்காதெனும்படி அவ்வளவு கடும்பசி யெடுத்தது.
மறுகாட்காலேயே நேராக திருவண்ணுமலைக்கு வந்ததும், மனதில் ஒர் சிலிர்ப்பு ஏற்பட்டது. ஒரு அரசியல் நண்பர் வீட்டில் சாமான்களை வைத்துவிட்டு, உடனே மலையை நோக்கி மீப்பாய்ந்து, பகவான் தவமிருந்த இடங்கள் குகைகளெல்லாம் கண்டதும், வெட்கமும், ஆத்மவீரமும் மனதைக்கவர்ந்தன; அந்தோ வாழ்வை வீணுக்கினுேம் நிலைதெரியாது அலைந்தென்ன பயன்? தன்னையறி யாது பிறருக்கு அறிவுபுகட்டும் மடமையினும் மடமை வேறில்லை' உடல், உயிர், மனம், நடை ஒன்றும் உணரவில்லை. பகவான் ரமணர் அதுவே குறிப்பு, மலையருவி ஆழமாகப்பாய்வதுபோல,
'நான்' என்னும் நினைப்பினின்று ஜீவாத்மா விரைந்தெழுந்து,
கடலையலுகிய வெள்ளம்போல எல்லாம் குருநாதன் பாதம் என் னும் உணர்வில்பாய்ந்தது. இனியில்வாழ்விற்கு அலைவில்லை; இதோ ஞானக்கடல், ஜோ தி மலை சோதிமலையிற் சுடர்ப்பூச்சியானது இம்மனே மாயவாழ்வு.
மாலை ஆறரைமணி. மலை கம்பீரமாகப் புடைசூழ்ந்து தொடர் கின்றது. ரமணுகிரமம் மலையடிவாரத்தில் இருப்பினும், மலையே ரமணுசிரமத்தின் அடிவாரத்தில் பணிந்து நிற்பதாகக் காணப்பட் டது. ஆசிரமத்தின் புனிதத்தென்றல் 'சிவோஹம் என்று வீசிற்று
அங்கு அப்போது கூட்டமில்லை. ஆசிரமம் ஏகாந்த கிஷ்டையிலிரு
ந்தது; அதன் ஒவ்வொரு அங்குலமும் ரமணுலபமாகவே தோன் றிற்று அன்பும், அழுகையும், இன்புங்கூடி, அடிமையை ஆசிரமத்
 
 

சிவகங்கையில் எழுந்த செந்தமிழ் வாணி 165
துள் இழுத்துச்சென்றன. கணபதி முனிவரை முதலில் வினவிய தும், "இங்கேயிருக்கிருர் என்று ஒரு கோயில் காட்டப்பட்டது. வேறென்றையும் கவனிக்கவில்லை; முனிகளைக்கண்டு அவர்பின்னே ஆண்டவன் சங்கிதிக்கு வணக்கமுடன் செல்லவேண்டுமென நினைத் தது. முனிவர் கம்பீரமாக வேதமழை பொழிகிருர், கன்மமூட் டைகளை வெளியே வைத்து, உள்ளேவிரைந்ததும், வலதுபுறம் ஒரு பால் வெளியே தென்பட்டது; திறந்த வால்வெளி யென்றெ ண்ணி அதை நோக்காது முனிகளுக்கு காஷ்டாங்க நமஸ்காரஞ் செய்து, அடியேன் எனுமுன்னே 'ஆஹா அங்கே பகவான், என்ருர் முனிகள்! உடனே தூக்கிவாரிப்போட்டது ஆகா! நான் கேடிய பொருளன்றே அருவாக அருகிற் பளிச்சிட்டது. மிகவும் தயாரிப்போடு ப க வானை முனிவருடன் கூடக்காணச் செல்ல வேண்டுமென்றெண்ணிய தெல்லாம் ୫୯୬ நொடியில் திடுக்கிட மறைந்தது. உடனே வலப்புறந்திரும்பவும் கண்டதென்னே! மனித வடிவல்ல; ஒரு வெண்ணிற்றுக் குவியலே முதலிற்றென்பட்டது. பிறகு முற்றும் ஜோதிப்பிழம்பு பிறகே, கை காலை மடித்து உட்கார் ந்து இகையாட் கொண்ட ப க வான் இதன் வணக்கங்களையும் (11 LIII ),
'பாரதியா! பாரத சக்தி எழுதியிருக்கிருர்' என்று தொடர் ந்தவுடன் இது மூர்ச்ச்ையானது பேசமுடியவில்லை! ஆனந்தம் என்னே! மொழியுமுன்னே இதன் வரலாற்றையும் அறிந்து பல்லா ண்டுகள் பழகிய நண்பரைப்போல உறவாடுகின்ருர் இதனுயுளில் இத்துணை தூய அன்பை யார்பாலுங்கண்டதில்லை. என்ன தெளிவு, தேசு, அன்பு, கருணை ஆ மனச்சந்தேகங்களெல்லாம் நீங்கின.
இது குழந்தையானது. மனம் உருகியது. இன்பம் பெருகியது.
பகவான் 'பாரதி இங்கு சாப்பிடுமா? என்ருர், “என் ஐயனே! வேறெங்கு என்பசிக்கு அன்னமுள்ளது காடு மலையெல்லாம் சுற்றி வற்றி முடிவில் மூலிகையைக்கண்டுபிடித்தது, ஆனந்தம் பகவான் கரத்தால் ஒருபிடி பிரசாதம் பெற்ருல் ப்ரஹ்மஜ்ஞான விதையும் அதனுடன் நாட்டப்பெற்று இங்கிலம் சிவானந்தப்பயிர் விளைக்கும்! பகவானே! இதன் ஆத்மப்பசி அடங்காதது அதற்கு அன்னம் கம திடமே புள்ளது அதை காடியே வந்தது' என்று அடி சாய்ந்து சரணமடைந்தது.
கண்பட்ட போதேயுன் கைப்பட்ட தென்னவி புண்பட்ட சிங்தையெலாம் போய்.

Page 9
கோயில் சீர்திருத்தம்.
SSSS
(திரு. வி க.)
கோயில் சீர்திருத்தம் பலவிடங்களில் பேசப்படுகிறது. பெரி தும் ஹிந்துக் கோயில் சீர்திருத்தம் பேசப்படுகிறது. ஹிந்துக் கோயில்களில் பலதிற மாசுகள் படியுமாறு மக்கள் நடந்தார்கள்; நடக்கிருரர்கள். அவைகளைக் களைந்து கோயிலைக் கோயிலாக்குவ தும் சிறந்த தொண்டேயாகும். இத்தொண்டில் தலைப்படுவோர் கோயிலமைப்பிலும் வழிபாட்டிலும் பற்றுடையவராயிருத்தல் வேண்டும் பற்றுச்சிறிதுமின்றிச் சீர்திருத்தம் சீர்திருத்தம்' என்று கூக்குரலிட்டுத் திரிவோர் கொள்ளைக் கூட்டத்தவராகத் திரும்பி னுந் திரும்புவர். பொதுவாகச் சீர்திருத்தத்தில் சிறப்பாகக் கோ யில் சீர்திருத்தத்தில் இறங்குவோர் அன்பாய்க் தொண்டராய்க் தன்னலமற்றவராயிருக்கல் வேண்டும்.
உயர்வு தாழ் 6.
ஹிந்துக் கோயில்களில் உயர்வு காழ்வுச் சிறுமை பிறப்பிலுங் கருதப்படுகிறது; சிறப்பிலுங் கருதப்படுகிறது. கோயில்களில் பிற ப்பில் சாதி பாகுபாடு கருதப்படுவது அறமாகாது. ஒவியம் மாத் தடியில் இருந்தஞான்று, வழிபாட்டில் உயர்வு தாழ்வு கருதப்பட வில்லை. மண்டபங்களும் கோபுரங்களும் எற்பட்டபின்னரும் பொது வழிபாடே கிகழ்ந்து வந்தது. இடைநாளில் விதிகளும் கட்டுப்பாடுகளும் கோயிலுக்குள் புகுந்தன. சாதி வேற்றுமையும் உடன் புகுத்தப்பட்டது. சமூகத்தில் தோன்றிய கொடுமை கோயி லிலும் நுழைந்தது.
முற்பக்கத்தொடர்ச்சி. எழுந்து உட்கார்ந்தார் என் கருணைக்கடல், மனிதனில்லை கண் டது ஒரு ஜோதிர்லிங்கத்தையே கண்ணுரக்கண்டது பகவானு டைய தலைலிங்கம் போன்றது. சுகாஸனத்திலிருந்த கால் கள் ஆவிடை போன்றன. மூன்று மடிப்புகளுடன் உயர்ந்த பொன்னர் மேனி லிங்கத்தின் உடல்போன்றது. இக்காட்சி மனமயக்கமல்ல! அப்படியே கண்டது. ஸத்குருவும், ஜோதிமலையும், ஜோதிர்லிங்க மும் ஒன்றெனத் தெளிந்தது. அக்காட்சி என்றும் உள்ளத்தில் பதிந்தொளிர்கிறது.
 

ይ...
கோயில் சீர்திருத்தம் 16?
ஆன்ருேர் முயற்சி. இக்கொடுமையைக் களைய அவ்வப்போது அறிஞரால் முய ற்சி செய்யப்பட்டேவந்தது, வெற்றி விளையவில்லை. நாயன்மாரும் ஆழ்வாரும் முயன்றனர் அவர் வழிவழி வந்த ஆன்ருேரும் முய ன்றனர். அப்பெரியோர் முயற்சிகளெல்லாம் ஏட்டளவில் நிற்கலா யின. திருநீலகண்ட யாழ்ப்பாணர், திருப்பாணுழிவார், திருகா ளேப்போவார், திருநீலகக்கநாயனர், இராமாநுசர் முதலியோர் வரலாறுகளைப் பார்க்க. அவ்வரலாறுகள் ஆண்டவன் திருவருள் நோக்கத்தை நன்கு புலப்படுத்துகின்றன. பொல்லாத சமூகம் ஆண்டவன் திருவருள் நோக்கத்தையும் புறக்கணித்தது. இது பற்றி என்னுடைய நூல்களிலெல்லாம் விரித்தோதியுள்ளேன், பொதுமை யுணர்வு புத்துயிர்பெற்றுவரும் இந்நாளிலாதல் பிறப் பில் உயர்வு தாழ்வு கருதுங் கொடுமையை யொழிக்க அறிஞர் உழைப்பாராக, உண்மை உழைப்பு உறுதி நல்கியே தீரும்.
ஹிந்து கோயில்களில் சிறப்பில் உயர்வு தாழ்வு கருதுவதை விரித்துக் கூறவேண்டியதில்லை. உத்தியோகஸ்தர் வாடைவீசிய தும் அர்ச்சகரும் தர்மகர்த்தரும் மற்றவரும் ஒடி வருகின்றனர்; கைகட்டுகின்றனர்; அவரைச் சூழ்ந்துகொள்கின்றனர்; கட்டியம் பாடுகின்றனர். உத்தியோகஸ்தர் கடவுளாக ஏற்கப்படுகிருர் அவர்உடல் பூரிக்கிறது, அவர்கோயிலுள் ஏன் புகுந்தனர்? பாவம்! வெட்கம் வெட்கம் மகுதியில் கற்றவரும் கல்லாதவரும் நவாப் பும் பக்கிரியும் பொதுவாகவே பாவிக்கப்படுதல் ஹிந்து கோயில் குருமாருக்குப்புலப்படுவதில்லைப்போலும் சந்நிதியில்உத்தியோகஸ் தரை ஒருவிதமாகவும், மற்றவரை வேறுவிதமாகவும் பாவிப்பது மடமை, இழிவு. கோயில் சிறுமைக்குப் படித்த பதவி வேடரும் காரணர் என்று கூறல் மிகையாகாது. உத்தியோகஸ்தரை வர வேற்றுத் தனிச்சிறப்புச்செய்யும் இழிவு கோயிலினின்றும் அகலப் பெறல் வேண்டும்.
* 5 M är ”
வழிபாட்டுக்கென்று கோயில் அமைந்தது. வழிபாடு ‘நான்' ೯॰ಣ: முனைப்பை அகற்றுவது. கோயிலிலுள்ள பலிபீடத்தின் அறிகுறி என்ன? 'கான்' என்பதைப் பலியிடுவதை அறிவிப்பது அப்பீ டம், ம க் க ள் அ ங் கே தலையாரக்கும்பிடுகிறர்கள், !
(189ம் பக்கம் பார்க்க)

Page 10
*
اگلے
புதுவையில் பூரணயோகி தரிசனம்.
(சத்தானந்த பாரதியார்)
அலைகடல் ஒம்என்ருர்க்கு, அமுதவாய்ப் புட்கள் ஆர்க்கும், பலகலைத் தொழில்கள் ஆர்க்கும், பயனுள கல்வி ஆர்க்கும், அலதொரு சத்தமில்லா அமைதியில் ஒங்குகின்ற நிலையமே புதுவையோகி அரவிந்த நிலையமாமே,
மலர்கனி குலுங்குகின்ற மலையென மாளிகைகள் புலமைகள் குலுங்குகின்ற பொன்முக நல்லோர்கூட்டம், தலைவரே தெய்வமென்னும் சாதகர் சங்கம் ஓங்கி நிலவிடும் கோவில் எங்கும் நிம்மதி காணலாமே.
வெண்மணி யாடையன்றி வேrெரு பூலும் இன்றிப் பெண்மையும் ஆண்மையன்பும் பேரின் பக்கொடிபோலோங்கி
உண்மையும் உழைப்புங் கொண்ட உயர் நலவாழ்வு வாழும் தண்பொழில் இதுவே, பூமிதாங்கிடும் சுவர்க்கமம்மா!
புண்ணியப் புதுவை மேவும் பூரணயோகி கண்ட விண்ணியல் அரசினுக்கு வெற்றிசேர் திருவாய் வந்தாள், கண்ணிலே கருணைபொங்கும் கனியிதழ் அமுது பொங்கும், வெண்ணிறச் சக்தி யன்னே அவள் செயல் விளம்பப்போமோ!
ஒன்று மற்றிரு ளோங்கிடும் வாழ்வினை Y
ஊறும் ஆனந்த ஊற்றென மாற்றின; கன்றி னுக்குரு கும்பசு என்ன நீ,
கனிந்தெம் உள்ளக் கவலையைக் தீர்த்தனை தொன்று தொட்ட களிம்புறு மேனியைக் தூயதங்கச் சுடரென ஆக்கினே வென்றி யோங்கி அரவிந்த வேந்த நீ
விண்ணரசைப் புவிடமிசை யாளுவாய்
இவரைக்கானும் பாக்
சுவாமி சுத்தானந்தர் கைக்கொள்ளும் முறைகள் புதுமை யும் தனிமையுங் கொண்டவை. இவர் பிறவிதிகளை பும் மத சித்தாந்தங்களையும்பற்றிக் கவனம் கொள்வதில்லை. இவர் திருவாயினின்றும் ஞானவெள்ளம் பெருகும். பார்வை அ ன்பு மழைபொழியும்; நடத்தையில் எளிமை தோன்றும். இவரைச் சூழ்ந்து காந்த சக்தி நிலவும்; முகமண்டலத்தைச் சுற்றி ஜோதி உண்மை ஆர்வம் காணும். கியசாலிகளின் உள்ளத்திலே இவை
நிரந் திரமாகப் பதிந்துவிடும்.
-பூ சுவாமி சிவானந்தர்
 

கோயில் சீர்திருத்தம் 89
அதன் கருத்து 'கான்' என்பதைப் பலியிடுவதாகும், நான் என் இனும் முனைப்பை அழிப்பதை உணர்த்துங் குறிகள் இன்னும் பல உள்ளன. முனைப்பை அழிப்பதற்கென்று ஏற்பட்ட அமைப்பில், அம்முனைப்பை எழுப்புதற்குரிய மரியாதை செய்வதும், அதை ஏற்பதும் நியாயமாகா, நோன் பலியாகுமிடத்திலா கான்? அந்தோ அந்தோl கோயிலுள் மரியாதை" செய்யப்படுவதை அறவே ஒழிக்க முயல்வது பெருந்திருத்தொண்டாகும்.
மரியாதை?
மரியாதை பெரிதும் அர்ச்சனே முதலியன செய்வோர்க்கும் அளிக்கப்படுகிறது. அர்ச்சனையின் அடியில் அன்பிருத்தல் வேண் டும். ஆனல் என்ன இருக்கிறது? பணம் பணம் பணம் படமெடு த்து ஆடுகிறது! பணங்கொடுக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு போதும் தனித்தனியே அர்ச்சனே செய்யப்பட வேண்டுமென்னும் நியதி யாண்டுள்ளது? எந்த ஆகமத்திலுள்ளது? இக்கேள்விகளைக் கோயில் அர்ச்சகர்களை நோக்கிக் கேட்கிறேன். பணத்துக்கு அர்ச் சனை என்பது இடையில் நுழைந்த புன்மை, கற்பூர ஆராதனை கோயிலுள் இடம்பெற்ற நாள் தொட்டு, இப்புன்மையும் அங்கே இடம் பெறலாயிற்று. தனித்தனி அர்ச்சனை வழக்கமும் தொலேதல் வேண்டும்; அதனுடன் தொடரும் மரியாதையும் தொலைதல்
வேண்டும்,
வழிபாட்ே gبھالاتقتلاشخاش
ஒவிய உருவைத் துப்பரவு செய்து, மலரணிந்து, குறித்த வேளையில் தாபதீப வழிபாடு, மந்திர வழிபாடு முதலியன செய்து பின்னைப்பட்டர் ஒருபக்கத்தில் அமர்ந்து, ஒழுங்கு முறைகளைக் காத்து வேண்டுவது அவர்தங் கடமை. அன்பர்கள் மலராலோ பாட்டாலோ மனத்தாலோ எப்படியோ வழிபாடு நிகழ்த்திச்செல் வது முறைமை, இது பண்டைய வழக்கு இடைகாளில் இவ்வழ க்கு வீழ்த்தப்பட்டது. பணப் பேய் கன்முறையை வீழ்த்தியது. அன்பர்கள் "நேரே வழிபாடு செய்யும் முறைமை மீண்டும் புதுப்பிக் கப்பட்டால் கோயில் பலவழியிலுஞ் சீர்பெறும்.
முன்னுளில் பட்டர் வடமொழி தென்மொழிகளில் வல்லவு சாய் பல தத்துவ ஞான நூல்களை ஆராய்ந்து தெளிந்தவராயிருக்க

Page 11
لگي .
κό .32 Շ ..으 O G
- நானகண்ட சா வாதம 5FLDğ5.-gjJa)J LD. awan)
திரிகரண சுத்தம், ஆத்ம சுதந்தரம், சர்வாத்ம சமத்துவம்இந்த மூன்றும் மனச்சாட்சி எனக்குக் காட்டிய லட்சியங்கள். பதி ணுயிரம் நூல்கள் படித்தும் என்ன? அதோ மேலே பரந்து விரிந்து என்னைப் பார்க்கிற வானுக்கு நிகராக எந்த நூலைச்சொல்லமுடியும்? தெய்வத்திருவருளே தொகை விரித்து கித்திய நடனம் புரிவது போலத் தோன்றுகிறதுவான் விரிவு. அந்தத் தோகையிற் பதிந்த ஒவ்வொரு நட்சத்திரமும் அறிவின் கருமூலம், கோடிக்கணக்கான உலகங்கள் மேலே சுழல்கின்றன. அவற்றுள் இந்த மண்ணுலகம் ஒரு துளசிபோலும். இத்தூசியில் கோடிக்கோடி உயிர்கள் வாழ்கின் றன. அந்த உயிர்களில் இந்த உடலுயிர் ஒன்று. வானில் எத்த னேய்ோ பரமானுக்கள் சுழல்வது போல் உலகில் இந்த உடலுயிரும் சுற்றுகிறது. என்னேப்போல் இந்த உலகில் இருநூறு கோடிமக்கள் உயிர்க்கிருரர்கள். அத்தனைபேருடனும் நான் ஐக்கியப்பட்டுணர்கி றேன். ஏனெனில் ஒ வ் வெ ர ரு வ ரு க் கும் உயிர் ஒன்று. ஐம்பூதக்கூண்டில் அங்க உயிர்க்கிளி வாழ்கிறது. பிறர்பசி தாக த்தை எனது பசி தாகமாக உணர்கிறேன். உலகில் எந்த நாட்டார் வருந்தினுலும் என் மனதில் சுரீர் என்கிறது. ஏனெனில் நான்யார் அவர்யார்? எல்லா உயிர்களும் ஒரே சங்கிலித்தொடர். அந்த உயிர்ச் சங்கிலியில் என் ஜீவனும் இணைந்ததே. உலகில் ஒருவன் பசித்திரு க்குமட்டும் நானும் பசித்திருக்கிறேன். உலகில் ஒருவன் துன்புறு மட்டும் எனக்கும் இன்பநிறைவாகாது. எனக்கு நான் எப்படியோ அப்படியே பிறருக்கும் இருக்கவேண்டும். எனக்கென்று தனி யுடைமை கூடாது. என் உடல் பொருள் ஆவி எல்லாம் என் அறிவு ஆற்றல் எல்லாம் உலகப் பொதுவுடமையாக வேண்டும் என்பது தான் எனது சர்வாக்ம சமத்துவம், -
இந்த அகண்ட சமரஸ் வுணர்ச்சியை சாதிக்க சுதந்தாம்
வேண்டும். சாதிமத சாத்திர கோத்திர நாடு நிறக்கட்டுப்பாடுகளி
முற்பக்கத்தொடர்ச்சி -
னர். அவர் நிலைமை இங்நாளில் மாறியிருக்கிறது, அவரை கோதல்கூ டாது. காலநிலைமையை நோதல்வேண்டும். இப்பொழுது பட்டருள் பெரும்பான்மையோர் கிளிப்பிள்ளை போலக் சில மந்திரங்களை ஒப் புவித்துத் திருமேனி தீண்டுந் திருத்தொண்டு செய்து வருகின்ற னர். பொறுப்பு வாய்ந்த தொண்டு செய்யும் பட்டர் கல்வி அறிவு ஒழுக்கத்தில் சிறந்து விளங்குவது மற்றவர்க்கு எடுத்துக்காட்டிா கத் துனேசெய்யும் ஆதலின் வடமொழி தென்மொழிகளைப் பயி ன்று, தேர்ச்சியடைந்து, தத்துவஞான நூல்களில் நுண்புலமை பெற்றவரைப் பட்டாகுமாறு பொதுமக்கள் முயல்வது நல்லது.

கான் கண்ட சர்வாத்ம சமித்துவம். 171
லிருந்தெல்லாம் விடுதலை பெறவேண்டும். இந்தச் சுதந்திரத்திற்கு அப்பழுக்கற்ற தூயசுத்தாத்ம அனுபவம் வேண்டும். சுத்த அனு பவம் பெற, யோகத்தால் என்னே 5ான் அறிந்து, என்னிறைவனை யறிந்து அவன் மயமே எல்லாம் என்றறியவேண்டும். இந்த அறிவு தான் என்வாழ்க்கையின் அடிப்படை. அதன்மேல் எழுந்ததே எனது கனவுலகின் கலைக்கோயில், இந்தக்கோயிலில் நான் யோகத்
தால் கடவுளேயே வணங்குகிறேன்.
莎 梵% 今//アクd
(ஆத்ம சோதனை' என்னும் போால் வெளிவர இருக்கும் பெரிய நூலி லிருந்து எடுக்கப்பட்டது. சுவாமிகள் தம் அனுபவச்செல்வங்களே யெல்லாம் " நாட்குறிப்புகளாக இதில்வரைந்து குவித்துள்ளார்.) 森
முத்தமிழ்வளர்க்கும் முனிவன்.
சுப்பிரமணிய பாரதியார் கண்டகனவை நனவாக்குஞ் சிறப் பைச் சுத்தானந்தர் பெற்ருர், இன்று இவர் பெயர் பரவாத தமி ழகப்பகுதி இல்லை. இவர் நூல்களைப் படித்துப் பயன்பெருத தமிழர் இல்லை. இவர் கதை, கவிதை, கட்டுரை முதலியன பிர சுரமாகாத பத்திரிகை இல்லை. இவருடைய கீர்த்தனங்களைப் பா டாத இசைப்புலவர்கள் இல்லை. என்றுமுள கென்றமிழ் இயம்பி இசை கொண்டான்' என்றும், நீண்ட தமிழால் உலகை நேமி யின் அளந்தான்' என்று கம்பர் அகஸ்தியமுனிவரைப் பாராட் டிப் புகழ்ந்தார். அவ்வுண்மையை நம் நூல்கள்வாயிலாகமாத்தி ரம் அறிந்தோம்.
இக்க நூற்றுண்டில் அவ்வாறு தமிழறிவையும் தெய்வம ணத்தையும் நாட்டில் பரவச்செய்த பெருமையைச் சுத்தானந்த முனிவரிடங் கண்கூடாகக் காண்கின்ருேம். முக்கமிழ் வளர்க் கும் மோனமுனிவர்" என்று வாய்குளிர இவரை இன்று உலகம் புகழ்ந்து போற்றுகிறது. வங்கத்தின்பெருமையையும் ଜiff') && மொழியின் வளத்தையும் வளர்க்கவந்த வரகவி தாகூர்போலத் தமிழ்நாட்டின் பெருமையையும் தமிழ்மெர்ழியின் வளத்தையும் வளர்க்க வந்தார் சுக்கானந்த மாமுனிவர். அதனல், அவரைத் தமிழ் நாட்டின் தாகூர் என்று பாராட்டிக் கூறுவது பொருத் தமாகும். 鸮、。”, ܪ
.தி. க. ராககள்

Page 12
சென்ற இதழ் தொடர்ச்சி
() O LostpføA Los IråbåbLDe
(மொழிபெயர்ப்பு-விசாகர்)
மனிதவாழ்வின் லட்சியம்
பாக்கை குறுகியது. இறைவனில் வாழ்ந்து அதைப்பெரு மையாக்கு நாட்கள் செல்லச் செல்ல சாவும் சமீபிக்கிறது. உண தென்ற உரிமைபாராட்டிய எல்லாவற்றையும் உதறி உலகில் இரு ந்து நீ சென்று விடுகிருய். கடவுள் கினேவிலே வாழும் வாழ்க்கை இன்பமும் சாந்தியும் கொண்டது. இதுவல்லாத வாழ்வு பயங்கர மான இறப்பிற்கு உன்னே இறுதியில் இழுத்துச் செல்லும் நீண்ட துயர் விலங்கு.
கித்திய இன்பத்தை அனுபவித்தலே மனித வாழ்வின் நோக் கம், கவலை, கிலேசம், அச்சம், ஐயங்கட்கு வாழ்வை இருப்பிடமா க்கின் கடவுளருளிய அருமையான மதிப்பிலாஇவ்வாழ்வை வீணுக் கியதாகும். வாடும் மாலைகளிலும் உலகப் பொருள்களிலும் மனி தன் பெருமை தங்கிஇருக்கவில்லை. நித்தியப்பெருமைக்கும், இறப் பிலா இன்பத்திற்கும், நித்திய வாழ்விற்கும் மனிதன் மனிதனிலி
ருந்து உயரலாம்.
உள்ளிருக்கும் இறைவனின் இன்பத்தையும் சாந்தியையும் அடைவதே மனித வாழ்வின் நோக்கம், தன்னுள் இருக்கும் அழி விலா இன்பத்தை அடைந்த அன்றே மனிதனின் இன்பப்பசி ஆறும், கணிதவாழ்வு கடவுளின் பேருபகாரமே. அதை மனத்தின் சங்கற்ப சிங்தனு எல்லைக்குமேலே உயர்த்து, ஒயாது மாறுபடும் உலக வாழ்வின் கிபந்தனைக்குள்ளான பந்தங்களுக்கு அப்பால் எழு ப்பி என்றுஞ் சுதந்திரமான கித்தியானந்தமான என்றுமுள்ள உண் மைப் பொருளான அதனையே அறியமுயல்,
எல்லாவற்றின் ஊடேயும் உள்ளேபு மச ன ஒன்ருேடுபரி பூரணமாய் ஒன்றிக்கவே ஆன்மாமேல் கோக்கிப் பறக்கிறது. வாழ் வாறு சகலவிலேகளையும் தடைகளையும் தாண்டிக்கொண்டு கடவுளு டன் கலக்கமுயற்சிக்கிறது, இறப்பிலாச்சமுத்திரத்தில் கலந்து அந்தமிலாக்காட்சியில் ஆனக்திக்கும் வரை அதற்கு ஆறுதலில்லே
சுதந்தாமில்லே அமைதியில்லை.
፶ ̆ *毽 தொடரும்
 
 

ப ா ர த சக் கி
(சுத்தானக்திதாசன்)
தமிழன் தவஞ்செய்தாஞ? ஆம் செய்தான். அதற்குச் சக் தேகம் எதுவுமே வேண்டாம். தமிழனின் தவமே உருவாக உதித் தவர் யோகி பூரீ சுத்தானந்த பாரதியார் அவர்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன்னே உள்ள தமிழர்களின் தவத்தால் பிறந்தவர் வள்ளுவர். உலகம் தோன்றியநாள்தொட்டு இன்றுவரை உள்ள தமிழனின் தவத்தாலும் இனிமேல் வரும் தமிழன் செய்யும் தவத் தாலும் பிறந்தவர் சுவாமி சுத்தானந்த பாரதியார் அவர்கள்.
என்னுடைய வாழ்வில் தமிழ் இனிக்கும் என்னும் அனுபல த்தை உண்டாக்கியவர் அவரே, அவர் உருவை இன்றல்ல, மணிக் கணக்கல்ல, வருடக்கணக்காகத் தியானித்திருந்தாலும் மனதில் அலுப்புத்தட்டுவதில்லை. அவர் உருவை மனதில் இருத்துவே ருக்கு முருகன் திருவருட்காட்சியே கிடைக்கும். -
இன்று தமிழ்நாட்டில் சுவாமிகளை முருக உபாசகர்கள் முரு கணுகக் காண்கிர்கள், சக்தி உபாசகர்கள் சக்தியாகக் காண்கி முர்கள். கலை உபாசகர்கள் கலேயாகக் காண்கிருரர்கள், இவ்வார்க் தைகள் எல்லாம் சுவாமிகள்மேற்கொண்ட அன்பினுல் எழுந்த புக ழுரைகள் என்று வாசகர்கள் கருதவேண்டாம். இன்றைய உல கில் தூல உடல்கொண்டு வாழும் மகான்களின் கருத்தும் இதுவே.
அவர் வாழ்வுக்கு இலக்கணம் யோகசித்தி அதன் இலக்கியம்
பாரதசக்தி மகாகாவியம்.
*தரலும் நிறைவுற்றுத் தன்னவரும் இன்புறுதற்
கான ஒழுக்காறே அறம்' -
என்கிருர் யோகசித்தியில், அறம் என்ருல்ன்ன்ன என்பதைப்பற்றி இதுவரை இவ்வளவு தெளிவாகக் கூறியவர் எவருமிலர் குருடன் குருடனுக்கு வழிகாட்ட முடியுமா? இன்று உலகில் எல்லோரும் உபதேசம் செய்கிருரர்கள். அவ்வுபதேசப்படி ஈடப்பவர் யாருமிலர், ஆயிரம் பேருடைய உபதேசத்திலும் பார்க்க ஒருவருடைய செய் கையே உலக உள்ளமெல்லாம் நிறைகிறது. சுவாமியவர்கள் தாம்

Page 13
4.3 (4) (3ಿÇíä
கிறைந்தார். அவர் இப்பிறப்பில் நிறைந்தவரல்லர் பிறக்கும் பொழுதே நிறைந்த பிறந்தவர். ஐந்து வயதினிலே அம்பிகைமீன ட்முென் சென்ருர், வேசற்றுவீழ்ந்தார். பின்வருங்கவிமலர்பூத்தது.
'அம்மா பரதேவி தயாபரியே
சும்மா உலகின் சுமையாக இன்ே எம்மாத் திரமுன் பணியிங்குளதோ
9. w அம்மாக்கிதம் வைக் கடிசேர்த் தருளாய்
பகவானிடம் இதைப்பிரார்த்தனே செய்வதற்கே மனிதலுக்கு எத் தனை பிறவிகளிற் செய்த தவம் வேண்டும். தவம் பெற்ற தவம் ஆனபடியால் ஐந்து வயதிலே இந்தச்சித்தி கிடைத்துவிட்டது. தான் நிறைந்தார். அந்நிறைவைத்தன்னவர் இன்புறப் பாரதசக்தி ᎥᎯfᏛ ᏯᎦ எழுதிவைத்தார். ஆகைப்படித்துப்பயன் பெறுக தமிழர்.
ஆயுட்காவியம் பாரதசக்தி மகாகாவியம் பாரத சக்தி கவிக்குக்கவி, கலேக்குக்கலே வாழ்விற்கு வழிகாட்டும் சாதன வேதம்; புதிய உலகில் புதிய பூரண வாழ்வைத்தரும் அமசானங்க ஊற்று; இனிய எளிய ஆவேச நடையில் வரிக்குவரி தெய்வச் சுவை நிரம்பிய கலேக்கோயில்; இதுவே உலகின் உள்ளம்; மனித சமுதாயக்கின் உண்மை வரலாறு; மனிகான்மாவின் தெய்வ
சுவாமிகள் கமது வாழ்வையே யோகக்கனவில் உருக்கி வார் த்தி சாகசக்தியாக உலகத்திற்கு அளித்திருக்கிருர், பாரத சக் தியை வாசிக்குந்தோறும் சுவாமிகளின் திருவுருவமே உள்ளத்தில் முன்னிற்கிறது, அவர் வாழ்வை நினைந்து இதயம் 5ெக்குருகின்றது. ஆசை ஆணவ அசுரர்கள் மாய்ந்து போய் தற்போத மிழக்கின்றது. சில நூல்களேக் கற்ருல் கான் படித்தவன் என்ற மேதை உண்டா கிறது. பாரத சக்தியைப் படிக்கப்படிக்க 'நான்' 'எனது' என்ப தற்று ஆனந்தம் பொங்கிப் பெருகுகின்றது. சில இடங்களில் எத்த னேயோ ஆண்டுகள் செய்து அடையமுடியாத காதனே சில நிமிஷங் களில் கை ச டிவிடுகின்றது.
பகவான் மணமகர்ஷிகள் சொல்லுகின்மூர்கள் நான் பார்' என ஒவ்வொருவலும் விசாரிக்கவேண்டும், அவ்விசாரத்திற்கு
 

பாரத சக்தி its
அவனே விடை கண்டு பிடிப்பான். இவ்விசா மார்க்கத்தில் சோம் பல் ஏற்படும் போதெல்லாம் ஒய்வு கோ உபயோகத்தில் பாரதசக்தி
சாதகர்களுக்கு அருமருங்காகிறது,
நீருள் மூழ்கியவன் வெளியே வந்து மூச்சுவாங்குவதற்கு எவ்வளவு தவிப்புக்கொள்வாஞே அத்தகைய தவிப்பு ஒன்று சுவா மிகளுக்கு வாழ்வில் ஏற்பட்டது. அத்தவிப்பைச் சுவாமிகளுக்கு இல்லாமற் செய்தவர் பகவான் ரமணமகர்ஷிகளாவர் சுவாமிகள் பகவானைச் சந்திக்கு முதற் சங்கிப்பில் பகவான்
'பாரதியா? பாரதசக்தி எழுதியிருக்கிருர்'
எர்ன்றே சுவாமிகளே வரவேற்றர்.
வீரக்கலை விளக்கு வ. வே. சு. ஐயர் அவர்கள் கூறுவதைக் που σή , εί η τι
"டீ சுத்கானந்த பாரதியார் அவர்கள் ரிஷிவாழ்வு வாழும் ஒர் அற்புதமான வாகவி கவியோகி அவர் வாக்கு கவத்கில்ை பழுக் தக் கணித்ததென்றே சொல்லவேண்டும் உலகமகா காவியங்களை பும் வீரர் வரலாறுகளையும் பல நாட்டுச் சரித்திரங்களையும் இவர் கருத்துடன் படிக்கிருர், சிறு வயது முதலே இவருக்குக் கவிதா இக்கி வளர்ந்து வந்திருக்கிறது. முற்கால மகா கவிகள் இராமா யணம் பாரதம், பாகவதம், இலியாது போன்ற பெரிய காலியங்
க%ள எப்படிச்செய்தார்கள் என்பதை ஈரம் சுத்கானந்தர் வாழ்வினி
ன்று தெரிந்துகொள்ள முடிகிறது.
அவர் நூல்களிலெல்லாம் மிகவும் சிரேஷ்டமானதும் ஜம்சத்
தன்மை பெற்றதும் இங்கப்பாரதசக்தியே. இது மகா
யில் எழுதப்பெற்ற அற்புதமான இலக்கியரசனே தமிழுக்குப்
பொன்குப் புகழைத் தருவது, தமிழில் பல நூற்ருண்டுகளுக்கு பிறகு எழுந்த முதல் நால்; உத்தம காவியம் என்றே இங்கிப்பாக
மகா சக்தி காவியத்தைச் சொல்ல வேண்டும்.

Page 14
ஓம் மாதா மியம் ஜெகத்
அ  ைம தி
(சாது முருகதாஸ்)
அம்மா அருள்வாய் அமைதி அமைதி அமைதி ஒன்றே அழியாச் செல்வம்.
பராசக்தி உலகில் மனிதன் மனிதனுகவும் தேவனுகவும் வாழ அவனை எப்பொழுதும் உன் அடிபரவும் பாலணுகவே வைத் துக்கொள், உலகில் அவனுக்கு சுதந்திரம் கொடு பிறர் அவனை அடுத்தால் பூரணமான உதவி செய்யும் தன்மையையும் இளகிய உள்ளத்தையும் கொடு அடிமைஎன்ற விலங்கு அவனை பந்தப்படுத் தாதவாறு அவனுக்கு எப்பொழுதும் துணையாக இரு.
தாயே! சுதந்திரம் என்பதைப் பெற்றதும் பதவி மோகம் கர் வம் பொருமை இழிவுபடுத்தல் சுயநலம் ஆகியவைகளுக்கு அவன் அடிமையாகிவிடாமல் பொதுவாக கின்ற உன்மயமாக உலகைக் கருதி சேவைசெய்ய மன உறுதியைக்கொடு,
அம்மா! மனிதன் உலகத்தில் சுகந்திரஞகவும் தர்மம் சக்தி பம் அஹிம்சை சேவை தியாகம் அன்பு சமத்வம் திருப்தி ஆகிய வைகளுக்கு அவனை எப்பொழுதும் அடங்கி கடக்கும் அடிமை யாக நீ செய்தாகவேண்டும். இதுதான் அவனுக்கும் அவனைச் சுற்றியுள்ள உலகுக்கும் இன்பந்தரும், உடல் கொண்டயாரும்
சுதந்திரராக வாழமுடியாது உலக அடிமையினின்றும் நீங்கிய
வன் தன்னைத் தர்மாதிகட்கு அடிமையாக்கிக்கொண்டேயாகவேண் டும். இல்லையேல் எவ்வளவு பெரிய தியாகியானுலும் தீரனுணுலும் அவனே ஆசை சுயநலம் பொருமை பொய் பாகிந்தனை பிறர் பொ ருள் யான் எனது என்றவைகள் அடிமைகொண்டு அவனேயும் உலகையும் அழிவை நோக்கியிழுத்துச் செல்லும், பராசக்தி மனித லுக்கு நல்ல புத்தி கொடு,
கருணையம்மா! மனிதனே உலகில் சுதந்திரனுக்கு ஆனல் அவனை அ ன் பி ஞ ல் க ட் டி க ரு ஆண யு டன் அவனே பிணே க்து நீ உன்னடிமையாக அவனைக் கொண்டு எப்பொழுதும்

அமைசி 1湾ク
உன் கருவியாக வைத்திரு. இவ்வாத்தை உடனே உலக அமை
தியைக் கோரிக் கொடு,
அன்புருனே தாயே நீ படைத்த உலகில் வேற்றுமைகளை என் அனுமதிக்கிருய் வீண் கர்வம் ஆணவம் சுயநலம் ஆகியவைகளை வேருடன் களைந்து இனிக்கொடுமைகள் தோன்ருதவாறு செய்து உலகை எல்லாம் அன்பர்களாக்கு என்றும் வீண் எழுச்சியில்லாத பூரண சுதக்கர மக்களாக அனைவரும் வாழ்ந்து உன்னே நம்பி வையக மெல்லாம் இன்பவாழ்க்கை பெற என்இன்னும் உன் அன்பு சக்தியை பூரணமாக உபயோகிக்கவில்லை? உடனே உன் அருட் சக்தி ஜெக மெங்கும் பரவ வா.
ஆதிசக்தியே! இன்று உலகில் உள்ள குழப்ப நிலைகளுக்கெல் லாம் சுயநலமும் காட்டாசையும் மதத்து வேஷமுமேகாரணம், மற் றும் மனிதன் உன்னேயும் உன் அருளின் ஆடலையும் உணரவில்லை. சில பாகத்தைப் பார்க்கும் போது மறந்தே விட்டான் என்று சொல்லலாம். அவன் கன்னேயும் தன் அபார அறிவு சக்தி நீ தந்த தென்பதை மறந்து மற்றவர்களேயும், கொள்கைகளையும் ஒழிக்தி விடத் துள்ளுகிருன், தானே உலகை ஆள்வானும் அமைப்பானும் அழிப்பானும், என் இப்படி மனிதன் மிருகங்களும் தங்களுக்கு இவனே ஒப்பிடும் தன்மை குறித்து வருந்தித் தலை குனியும்படி கேவலவான நிலைமையை நோக்கிப்போருென். இவனே என்ன செய்ய, இவையனேத்தையும் பார்த்துக்கொண்டு கொடிய மெளனம் கொண்டுள்ளாய்? உலகை என்னிஜலயில் வைக்கப்போகிருய்?
பாசக்தி கொடுமையும் அராஜகமும் தலைவிரித்தாடுவது பொறுக்கமுடியவில்லை. அமைதி அமைதி என்று பலமுறை கித்தம் அலறும் எங்கள் குரல் கேட்டு ஏன் சும்மா யிருக்கிருய், 'இன்ப துன்பம் சமமானது உலகம்' என்று நீ சொல்வியுள்ளாய். அதற் கும் ஒர் அளவுண்டல்லவா? பராசக்தியே உன் அபார கருணேயி ல்ை கர்மாகிகள் வளர்த்து கூடிய சீக்கிரம் அமைகியை உண்டா க்கி எங்களைக் கண் குளிரக் காண வை.
வாதே"நாங்கள் வேண்டுவது, நல்ல தாயான நீ பல கோடி கொடிய பிள்ளைகளைப் பெற்றுவிட்டாய், அவர்களேயும் கல் வழிப்
படுத்தி சத்சங்கர்களாக்க வேண்டும்.

Page 15
  

Page 16
* i60 ஆத்ய ஜோதி
பூீ ராமபிரான் தாய், தகப்பன், தம்பிமார், பார்யை முதலிய உற் றத்தாரோடு சாஸ்திரமுறைப்படி குடும்ப நிர்வாகத்தைச் செய்து காட்டி, சகல தர்மங்களையும் அனுஷ்டானத்தில் நிரூபித்ததன் கார் ணமாக ராமாயணக்கதையையே ஓர் சிறந்த வேதமாக strus&sta ரும் கருதுகிருேம். கிருஷ்ணுவதாரமும் துஷ்டகிக்ாக சிஷ்டபரி பாலனத்திற்காகவே எடுக்கப்பட்டதெனச் சாதாரணமாக நாமெல் லோரும் சொல்லக்கேட்டும் படித்துமிருக்கிருேம். ஆயினும் அந்த அவதாரபுருஷனது லீலைகளினின்றும், கவுரவ பாண்டவ யுத்தச மயத்தில் பார்த்தனுக்குச் சாரத்தியம் புரிந்தவண்ணம் உபதேசம் செய்த ஆச்சரியமான கீதையினின்றும் அவதாரத்தின் முக்கிய நோக்கமும் பெருமையும் விளங்குகிறது.
இராமாயணம் மகாபாரதம் (பகவத்கீதை யிதனுள்ளடங்கிய தன்குே) இவ்விரு மகா காவியங்களும் நமது ஆத்மாவின் உண்மை போன கிலையையறிந்து கொள்வதற்கான விசேஷ கரும சாஸனங் களை விவரித்துக் காட்டுவதோடு, தெய்வபக்தி, மாத்துருபக்தி, பித்துரு பக்தி, ஆசாரியபக்தி, சத்தியம், பொறுமை, ஜீவகாருண் யம் சகோதச வாஞ்சை, பதிவிரதா கருமத்தின் மகிமை உண்மை யான சிநேகத்தின் சீலம், அதிதி பூசை, செய்நன்றி மறவாமை முதலிய இல்லற தரும நெறிமுறைகளும் அன்பு, தயை, நடு;ை நிலைமை, சரணுகதியின் புண்ணியம், முதலிய உத்தமகுணங்களும் கன்கு விளங்கப்பெற்றுப் பிரகாசிக்கின்றன. இவ்விரு மாபெருங் காவியங்களையும் மட்டில் நமது சகோதரிகளும், பெண்மக்களும் ந ன் மூ க ப் ப டி க் த அ ங் நீ தி மா ர் க் க ங் களை யனுஷ்டித்தால் வேறு எவ்விதக் கலாசாலைப்படிப்பும் தேவையில்லை என்று என் சொந்த அலுபவத்திலிருந்து நிச்சயமாகச் சொல்லுகி றேன். இவை மட்டுமல்லாமல் நமது சமய குருக்களும், தமிழ்ப்புல வர்களும்எழுதிவைத்துள்ள அறநெறிநூல்களையும்படித்தலவசியம். சமய குரவர்கள் அனேவரும் அநேகமாகபகவத்கீதை, இராமாயணம் முதலிய நூல்களிலுள்ள இரகசியார்த்தங்களேயே கையாண்டு தத் தம் சமய நூல்களை இயற்றியுள்ளனர். முக்கியமாக வைஷ்ணவ ஆழ்வார்கள் பாடியுள்ள பிரபந்தங்களில் இது விசேஷமாகக் காணப்படும். தெய்வப்புலமை திருவள்ளுவரது திருக்குறளில் அர் த்தப்புஷ்டி கிரம்பி, சுருக்கமானவும் செம்பாகமானவுமான ஈரடிச் செய்யுள்கள் ஒவ்வொன்றும் நமது வாழ்க்கையில் நடத்த வேண்டிய
 
 

அவதார புருஷர்களது.விளக்கங்களாம் 181
நெறிமுறைகளையே குறிப்பனவாம்.
'யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் கன் எண்ணக்கினின்று எழும் விருப்பங்களனைத்தையும், மனத் தாலேயே துறந்து இந்திரியங்களை மனத்தாலேயே அடக்கி மனக் துணிவுடன் மெள்ள மெள்ள ஒய்வு பெறவேண்டும். மனத்தை ஆக்மாவிடத்திலேயே செலுத்தி நிலையுறச்செய்து வேறெதையும் சிந்திக்காமலிருக்க வேண்டுமென்று பூரு கிருஷ்ணபகவான் ஆத்ம சம்யம யோகத்தில் உபதேசித்ததன் கருக்கை வள்ளுவர் மேற் கூறிய இரண்டடியில் புகுந்தியுள்ளார்.
'தானே தனக்குப் பகைவனும் நட்டா னும்
தானே தனக்கு மறுமையும்-இம்மையும்
தானே தான்செய்த வினைப்பயன் துய்த்தலால்
தானே தனக்குக் கரி.' என்ற அறநெறிச் சாரப்பாட்டும் கீதையின் தத்துவத்தையே மேற் கொண்டது. இன்றும் உலகத்தில் பிறப்பு இறப்பு, இம்மை, மறு மை இவைகளைப்பற்றி கிருஷ்ணபரமாத்மா விஞ்ஞானயோகத்தில் எடுத்துக்காட்டிய உண்மையே, திருச்சந்த விருத்தத்தில் திருமழி
சையாழ்வார்;-
'தன்னுளே திரைத்தெழுந்தாங்கவெண்தடங்கடல்
தன்னுளே திரைத்தெழுந்தடங்குகின்றதன்மைபோல் கின்னுளேபிறந்திறந்துகிற்பவும்திரிபவும் கின்னுளேயடங்குகின்றதீர்மைகின் கண்கின்றதே"
என்ற பாட்டில் பொதியவைத்துள்ளார்.
'உலகம்யாவையுந்தாமுளவாக்கலும்
I o e (C) . நிலைபெறுத்தலும்நீங்கலும் நீங்கலா அலகிலாவிளையாட்டுடையாரவர் தலைவரன்னவர்க்கேசரணுங்களே'
என்ற கம்பகாட்டாழ்வாரது செய்யுளிலும் சகத்தின் பிறப்பிற ப்பு குறிக்கப்பட்டுள்ளது. ଶ୍ରେ:
'பிறப்பென்னும் பேதமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பதறிவு'
என்னும் குறளும் அதற்குப் பரிமேலகழர் எழுதிவைத்துள்ள உரையும் கவனிக்கவேண்டியவை. ஈசுவர பக்தி கிரம்பிய பல (o) fo

Page 17
ܥ ܬܐ ܕ ܬܐ گي
ஷெல்லியும் சுத்தானந்தரும்.
(வி, ஆர், எம். செட்டியார்)
எதையும் கவிதையென்று எண்ணுவது தவறு. கவிதையில் உண்மையுண்டா, க ற் ப என ஒளியுண்டா, உணர்ச்சியுண்டா? மொழிஜாலம் உண்டா, உவமையணியுண்டா, களை சீர் மோனைக்கு அடிமையின்றி காவிய விண்ணிற் பறக்கும் ஆற்றலுடையதா? இவைபோன்ற கேள்விகளே இரவலிகர்களின் ஆராய்ச்சித்தத்துவம் நிறைந்த கேள்விகள்.
ஆங்கிலக் கவி ஷெல்லியும் (Shelley) சுத்தானந்தபாரதியார வர்களும் உண்மைக் கவிதையை நன்கு உணர்ந்தவர்கள்; அருளு டன் பாடிப் பாடி, ஆராய்ச்சித்த ராசிலும் நிலைத்து கிற்கும் பேராற் றலுடையவர்கள், பாடுவதென்றல், வாய்க்கு வந்தபடியெல்லாம் கவிதையல்ல. சிலர் இஷ்டம்போல, சொற்களை அடுக்கியடுக்கிப் பார்த்துப் பாட்டுக்கட்டுகிருர்கள்; அருளாவேசமின்றி இப்படிச் செய்யப்படும் செய்யுள், இலக்கணவரம்பிற்குள் அறிவின்றிப் புலம் பிக்கொண்டிருந்தாலும், உண்மைக்கவிதையின் எல்லையில் நுழை
முற்பக்கத்தொடர்ச்சி
யோர்க்குமே மரண காலத்தில் மனதைப்பிரமனிடம் பதிய வைத்
தல் கடினமான காரியம். மகாத்மாவான ஜடபரதரே உயிர்மரிக்கும்
போது ஒரு மான்மேல் மனதைச்செலுத்தி மறுபிறப்பில் மானகப் பிறந்தகதை பலருக்கும் தெரிந்ததே. அப்படி மனம் சஞ்சலிக்காமல் இறைவனிடம் இறக்கும்பொழுதுகூட நிலைத்து கிற்க ஈசனை வேண் டிக்கொள்ளுதல் அவசியம், பெரியாழ்வார் திருமொழியிலும் இதற்கு ஆதாரம்:-
துப்புடையாரை யடைவகெல்லாம் சோர்விடத்துத்
துணையாவரென்றே ஒப்பிலேனுகிலும் நின்னடைந்தேன் ஆனைக்கு நீ
யருள் செய்தமையால் எய்ப்பென்னை வந்து நலியும் போது அங்கேது
நானுன்னே நினைக்கமாட்டேன் அப்போதைக்கிப்போதே சொல்லி வைத்தேன்
அரங்கத்தரவணைப் பள்ளியானே.

ஷெல்லியும் சுத்தானந்தரும். 183 யவே முடியாது. கள்ள நாணயங்கள் போல, போலிப்பாட்டுகள் ஒலிக்குறைவாலும், உண்மைக்குறைவாலும் தங்கள் போலி நிலை யைக் காட்டிக்கொண்டே நிற்கும். உண்மைக் கவிதையில் வாழ்க் கைச் சிக்கிரம் கவழ்ந்து மின்னிவட்டமிடும். அது ஒரு கற்பனைக் களஞ்சியம்; உணர்ச்சிக்கடல்; இசை அருவி; சொற்களின் இன்பத் கிருவிளையாடல்; கேட்போர் காதைக்கொஞ்சி முக்கமிடும்
உண்மைக் கவியின் உண்மைக் கத்துவத்தை உடலிலும் உயிரிலும் கலந்து பருகியவர்கள் ஷெல்லியும் சுத்தானந்தரும், ஷெல்லியின் 6) IT GOT tibi III tọ. (Sky Lark) இசைவிண்ணிலே சிறக டிக் துப் பறக்கிறது; ஒரு கவிஞனின் உள்ளத்தையே பிரதிபலிக் கிறது; கலையுள்ளம் நிறைந்த இசைப்பறவை, உடற்சுமை மறந்து, கவலை மறந்து, கலை நிறைந்து, இசைநிறைந்து நிலவைப் பருகி, காதல்கீதத்தையும் இறுமாப்புடன் இன்பமாய் அருந்தியருந்திப் பித்துப்பிடித்த நிலையில் ஆகாசத்தின் அகண்ட வெளியையே முற்றுகையிடுகிறது. வானம்பாடியின் இசைமழை, உச்சியிலிருந்து புயலாகவே வழிந்தோடுகிறது. மனிதன் கவலைமண்டிய நிலையில், கலையின் ஜோதியையே மறந்துவிடுகிpன். -
இனி நாம் சுவாமி சுத்தானந்த பாரதியாசின் கவிதா ரீதியைக் கவனிப்போம். சுடச்சுடப்பொங்கி வழிந்தோடுகிறது தமிழ்மொழி சுவாமிஜியும் அருட் பிரவாக நடையில் தனது கவிதையைச்சிருஷ் டித்திருக்கிருரர்கள்; அவர்கள் எழுதும் சன்னத கடையில், கலை வெள்ளம், ஞானவெள்ளம், உண்மையின் அகண்ட ஒளி, இன்பநாத இசை, கற்பனையின் தங்கக்கொடி, அன்பின் வெண்ணிறம், கல்வி யின் ஒலிச்சிக்கிரம், சுதந்திரப்பேரிகை, ஈசன் சங்கிதி, எல்லாம் கல ந்து தமிழ்மொழியை இதயச்சிகரமாகவே மாற்றிவிடுகின்றன. இத யக் கண்ணுடியில், மொழியின்மையல், திருவிளையாடலாக உகய மாகவே காண்கிறுேம்; இதயத்துடிப்புகள், அறிவின் அகண்டரே கையாகவே மொழியின் இதயத்தில் ஒளிவீசுகின்றன. இதயம் குதி த்துக் குதிக் துப்பறந்தால், சொற்களும் இசையலைகளாகவே குந்து போட்டுவருகின்றன. சுவாமிகளின் 'தமிழ்க்கனல்' மொழிக்கனல்; 'கலை நிமிர் கமிழா' என்ற பாட்டை இ த ய பூகம்பமாகவே LITty. LILITty. LI L IITC)/h/850T, -

Page 18
திரு க் கே தீ வீஸ் வ ர ஆலயத் திருப்பணிச்சபை
இச்சபையின் பொதுக்கூட்டமொன்றுகிகழும் பங்குனி மாசம் 44 ம்வு (27-3-49) ஞாயிற்றுக்கிழமை மாலை வெள்ளவத்தை சைவ மங்கையர் கழக வித்தியாசாலையில், திருவாளர், K. வைத்தியநாதன் அவர்களின் தலைமையில் கூடியது, *。
அன்று நிறைவேறிய தீர்மானங்களுள் ஒன்றின்படி இலங்கை வாழ் இந்துக்கள் ஒவ்வொருவரும் தமது ஒரு மாச வருமானத்தை இந்தத் திருப்பணிக்காக மூன்று வருஷ எல்லைக்குள் மாசம் மாசம் சிறுதொகையாகக் கொடுத்து உதவவேண்டுமெனக் கேட்கப்பட்டு ள்ளனர். இந்தவிதமான தியாகமுறையில் தான் இப்பெருஞ் சிவத் தொண்டு சீக்கிரம் கிறைவேற முடியுமென்றஉண்மை பலரால் நன்கு விளக்கப்பட்டது. அத்தருணம் கீழ்க்கண்ட தொகைகள் வாக்களி 535 LILILL607 -
#్య | (15 * 1. St. K வைத்தியநாதனவர்களும் அவர்பாரியாரும் 1001-00 , C. தியாகலிங்கமவர்களும் அவர்பாரியாரும் OOOO , S, சிவசுப்பிரமணியமவர்களும்
அவர்பாரியாரும் 1001-00 , K மதியாபரணமவர்களும் அவர்பாரியாரும் 1001-00 , P. C. கதிரவேலு அவர்களும் அவர்பாரியாரும் 1001-00
, மதராஸ் பழையகாட் கம்பனி | 1001-00,
(இந்தத்திருப்பணி நிதிக்குப்பணம் உதவுவோர்களின் களும் தொகையும் ஒழுங்காக "ஆத்மஜோதி யில் இனி மேலும் வெளிவரும்)
திருத்தாண்டகம்
விண்ணுேரும் விளங்கரிய விமலன் நன்னை
வெற்றிவேல் முருகனேயன் றளித்த நெற்றிக்
:2 கண்ணுனைக் கெளரிமகிழ் கணவன் றன்னைக்
- கடல்சூழ்ந்த கவின் நகராய் விளங்கிப் பின்னுல் הי 鷲
மண்ணுேடு மண்ணுன மாதோட்டத்தில் : மறைந்திருந்த தேன்பொங்கை மா மருந்தைக்
** o * , கண்ணுரக் கண்டுகவல் நீங்குங் காலங்
፭ * * கைகூடி விட்டதெனக் களி கொள்வீரே.
ھی , 6 مستنے{,
囊
 
 
 

Mount. O Flame, above our front;
Iight there the Lemp of Truth! Grant us the strength to vanquish &loom,
Bright victorious Flame Lead us to the Heaven within O I ove that is Power Fulfil our life in the Divine Thou art the way and Thou the Guide
" et our fer your kindle Thee O'Flame of Divinity With the rapture of Thy splendour Dance in our hearts. O mounting Flame Transform our bodv, life and mind Tinto a fover of supreme Bliss Darting high Thw arrowed tongues Swell celestial Effulgence
Ascend, O graceful concious Flame,
With the hvnnal word of Truth) Set white ablaze the glowing Spirit, We offer Thee the mind as food. Eat all oux thoughts, O Fire O Den the door of God-knowledge Give us the wealth of Light, Open our eyes to see the On& That lives in as and moves our life, Pour into us. O Cosmic Force; Hail! Gracious Mether, Perfect our love, Perfe, our life, Perfect our mind, perfect our goul
Om Shakti! Om Shaktiki " *、* ド。
%42-644.6

Page 19
Registered in the G. P. O. as
ಟ್ವಿ೫%%%%%%%%%ಣಿ:
புது ஆண்டுப்பிறப்பன்று
திருக்கேதீஸ்வர ஸ்தலத்தில் கோ மன் சங்கிதானத்திலேயே சாதன திருப்பதை மகிழ்ச்சியுடன் அறிய
இடவசதியின்மையால் தாய்மார்
விஷயம் தவிர்க்கப்பட்டிருக்கிறது. 13-4-49 புதன்கிழமையன்று சாத கிழமை இரவு 9 மணியளவில் முடி பங்கெடுக்க சாது பருமாகதாசர்
சாஸ்திரிகள் (LP,
நிகழ்ச் 1 -4-49堕r%,5-00一5_30 Gür、
6.30-800 பஜனை, ே , 8-00_9_00 #7&ല3 ! , 9-00-1 1-30 μ στοδοτιμ , 11-30 bir%)4-00 Gungart மாலை 4.00 , 5.00 பெரியார்
5-OO 99 600 8-O0 LDirév i 2
59
99
3.
($111/I-მ. சுத்தான
இயற்
1 και τωνσωή (οι θρη ρπεδη
2 யோக சிக்கி (மூலமும் உை 3 பாரதசக்தி மகாகாவியம் 15 L 屬山寧 * 笹u 山ü இப்புஸ்தகங்கள் குறிப்பிட்டுள் புதுக்கோட்ட்ையிலும் (
அருட்செல்வம்
விபரக்கிற்கு கீழ்க்காணும் விலாக,
அ. செல்லத்துரை, அரே ഴ്സ്, ബ്
ံမ္ယစ္သင့္အမ္ယစ္သစ္က်န္ထမ္ဟုန္ဟစ္ထိ
கெளரவ ஆசிரியர் பதிப்பாசிரியர் கா. முத்தையா, ஆ
இாவலப்பிட்டி, சரவண'பிரவலில் பதிப்பி

a News Paper.
oಿಳ್ಕೊ
ਸੰu முத்ன் (1,5©7 ಜಿ. யில் கொண்டிருக்கும் கெளரியம் }வாரம் கூடத்திருவருள் பாலித்
த்தருகிருேம். சாதனவாாத்தில் பங்கு பெறும்
னே ஆரம்பமாகி S-4. 49 திங்கட் வாகும். இச்சிறதே தொண்டில் பாலயோகி பூரீராமதாசர் பிரசங்க தலியோர்கள் சமூகமளிப்பர்.
--18-4-49
lure.
நாத்திரம், தியானம்.
ޏ (23r:Lf މިގިޒް r _arch, FLDLLIT_b, తొbLTయెత్తిడిలో,
இளேப்பாறல்
aus@T』l○○W。
ஐம்
னே தோத்திரம், தியானம்,
ந்த பாரதியார் றியது.
3-(OC) Tugub) 3-00 காண்டங்களுடன் 15-00
一山领寺G夺命。 ள விலேக்கே ஓம்கார நூலகம் பெற்றுக்கொள்ளலாம்.
(அச்சில்) 2-OO
த்திற்கு எழுதவும் சினர் தமிழ்ப்பாடசாலே, நிறனுேயா,
蒙-茲韃
,ே இராமிச்சந்திரன் த்மஜோதி கிலேயம்,நாவலப்பிட்டி, த்தது. 13-4-49, 2000 பிரதிகள்,
3ޗަކ
溪
୍ ।
s
鹅