கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1949.05.14

Page 1
鯊 ***醫 7 ܘܐܲܠܵܲ
ஆத்ம
முக்தா தாவி லவன்புக! எங்காய் அருணகிரி நா
சோதி 1 விரோதி 影、器。崇、
 
 
 
 

ܨܠ.
ம் ஆகிய முற்றுஞ்சொன்ன சு என்னேரீ என்றருளே,
兹
தி வைகாசிமீ சுடர் 7 & 醫密料魯* 崇 *

Page 2
ஆ த் ம ஜோ தி
பொருளடக்கம்.
விஷயம் பக்கம் 1 அருணகிரிநாதர் தோத்திரம் 185 A. 2 முருகா! முருகா! முருகா! - 86 3. அருணகிரிநாதரின் அற்புத வாழ்க்கை - 187 4 எந்தவாழ்வுவேண்டும் 192 5 அருணகிரிநாதரும் சமரசமும் 198 6 முத்திவீட்டின். மித்திருக்களுமாவர் 196 7 கற்ருே ரது கல்வியில். பேசுதல் 200 8 இடுகாடு வயிறன்று 2O2 9 குரு - 203. O அவதார புருஷர்களது. நாவாய்கள் 205 lil சாதனுவாரம் 208 3. சாதகற்குத் துணை 2. 18 கந்தரனுபூதி 23 14 திருக்கேதீஸ்வர ஆலயத்திருப்பணி 24 15 மக்கட்கு அறிவுரை 25 16
تحت پیچھچN
=岁 த்ம ஜோதி ஒர் ஆத்மீக மாத வெளியீடு
கெளரவ ஆசிரியர்: க. இராமச்சந்திரன்,
பதிப்பாசிரியர்: நா. முத்தையா ( விலாசம்: ஆத்ம ஜோதி நிலையம், நாவலப்பிட்டி,
- (சிலோன்)
y
- சந்தாவிபரம்: ஒருவருடம் ரூ. 3- ஆயுள் சந்தா ரூ.75/- தனிப்பிரதி ச, 30
 

.
* ஆத்ம ஜோ
"ஓங்கார மாகி யொளியா யுயிர்க்குயிராய்
நீங்காதான் இன்ப நிறைவு."-சுத்தானந்தர்,
சோதி 1 விரோதிடு வைகாசிமீ – tř 7
۔صمســــــــــــ۔۔۔۔۔
அருணகிரிநாதர் தோத்திரம்.
அரிபிரமர் கேடரிய ஆதியரு ணுசலத் ܛܠܵܐ
தமர்ந்தபெரு மாள்கிருபையால் அவ்வரும் பதியிலே அவதரித் கருணகிரி
காதனெனும் நாமம் பெற்றுய்
அரிவையர்க ளின்பமே மோட்சமென்றவர்கம்மை
அணைந்துவாழ்ந் தலைந்துநொந்து
அக்காவின் உபதேசங் துக்கத்தை மூட்டவே
ஆவியை நீக்கவெண்ண
குருவாக முருகன்வந் தருள்சுரந்தாட் கொளக்
குற்றமில் குணத்தனைய்
குமரனின் பெருமையைக் குவலய மறிந்திடக்
கூறுதல்கின் பணியாக்கி
தெரிவரிய வேதமுடன் ஆகமப் பொருளெலாங்
தெளிவான தேனக்கினை
திருப்புகழோ டனுபூதி திருவகுப் பென்றபல
திவ்வியதமிழ் தருதேவனே!
一、卤 இ;

Page 3
(UP
A.
ருகா! முருகா! முருகா!
குமரகுருபர முருகசரவண' என்றெப்போதும் தியானிப்பவர் அருணகிரி. விதிவசத்தால் இளமையில் விலைமாதர் வசமாகிப் பெருநோயும், வறுமையும், ஊர்ப் பழியுஞ் சுமந்தார். உடல் வாழ்வை வெறுத்தார். வல் லாளராஜன் கோபுரத்திலிருந்து 'முருகா சரணம்' என்று முறையிட்டுத் தற்கொலைசெய்துகொள்ளக் கீழே குதித் தார். முருகா! நீ அன்பனைக் காத்தன. காட்சியளித் தன. வினையொழித்தன. அரிவைப்பித்தனை, அறி
வுச்சித்தனுக்கின. புது வாழ்வளித்தன. அருள்வாக்
கீந்தன. மோனக்கிருத்தி ஞானந்தந்தனை, இன்ப வெள்ளமே தமிழிசையாக 115 L — LD T 4çy. tʼi பொசிவது போலவே உனதருளால் அருணகிரியின் வாக்கு எமக் குத் திருப்புகழை ஈந்தது. உனதருள் வந்தபின் அருணகிரியின் ஆசைத்தின வும், அகமாயமும் ஒழிக் தன. வேசையர் மினுக்கும் முயற்சியும் வீணுயின. முருகா! எமது மனத்தைப்பற்றியலைக்கும் அரக்கரை உனது சுடர் வடிவேலாற் குத்தியெறி. apa, a முருகா முருக !
 
 

அரு ண கிரி நா த ரின் அற்புத வாழ்க்கை.
(ஆசிரியர்)
மந்திரமலையை மத்தாகவும் வாசுகி யெனும் நாகத்தைக்கயி முகவுங் கொண்டு தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டிப் பாற்கடலைக் கடைந்ததாகக் கூறப்படும் புராணக்கதையில் அரிய யோக தத்துவங்களும் மிக நுட்பமான நவீன பெளதிக சாஸ்திரக்
கருத்துக்களும் அடங்கியிருப்பது போலவே, இமயம் உயர மேரு
தாழ்ந்த தெனவும், விந்தியம் உயர இமயம் தாழ்ந்து, பின்னர் அக த்தியரின் தென்னுட்டு வருகையால் மறுபடியும் இமயம் உயர்ந்தது எனவும் கூறப்படும் புராணக்கதைகளில் நுட்பமான ஞாலநூல் (EேOLOGY) உண்மைகளும், எமது சமயங்களின் ஆரம்பத்தை விளக்கக்கூடிய, சரித்திர ஆராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படக் கூடிய, அருங்கருத்துகளெல்லாம் அடங்கியுள்ளன. ஆதித்தியவா திகள் இந்திரவாதிகளானதும், பின்னர் இவ்விரு கூட்டத்தினரும் அக்கினிவாதிகளாய் மாறி, இறுதியில் சிவவாதிகளானதும் இப்புரா ணங்கள் விளக்கும் நிலைமாற்றங்களில் மறைந்துகிடக்கும் உண்மை களாகும் அவை கூறும் அதல, விதல சுதலப் பிரதேசங்களெல் லாம் பண்டையோர் காலத்து இப்பூமண்டலத்திலிருந்த இடப்பிரிவு களேயன்றி ஆகாயத்திலோ பாதாளத்திலோ வுள்ள இடங்களல்ல.
இன்று ஆசியாக்கண்டத்திற்கு இமயம் முகடாகவும் மத்தியா கவும் இருப்பது போல் அன்று விந்தியத்தை வட எல்லையாகக் கொண்டு மகேந்திரத்தின் தெற்குமுனை வரைக்கும் பரந்து விரிந்து கிடந்த பிரதேசத்திற்கு, அருணுசலமென அழைக்கப்படும் திரு வண்ணுமலையே முகடாகவும்பூமத்தியாகவும் அமைந்திருந்ததாகும்.
இந்த உண்மையை, அருணுசல மாகாத்மியத்தில்,
"அதுவே தல மருணுசலந்தலம்யாவிலுமதிக மது பூமியினிதயம் மறியதுவே சிவனிதயப் பதியாமொருமருமத்தலம் பதியாமவனதிலே வதிவானுெளிமலையா நிதமருணுசலமெனவே'

Page 4
് "
188 ஆத்மஜோதி
என்று நந்திதேவர் வற்புறுத்தியுள்ளார். ஆதி அருணசலம் அமர் ந்த பெருமானே' யென அருணகிரிநாதர் பாடியிருப்பதும் இங்கு
கவனிக்கவேண்டிய விஷயமாகும். இந்தக்கண்டத்தில் ஆதியில்
பரவியிருந்தது சிவமதம் ஒன்றே யென்பது ஆராய்ச்சியாளர் முடிபு.
"தென்னுடுடைய சிவனே போற்றி"
எந்நாட்டவர்க்கும் இறைவாபோற்றி,
என்ற மணிவாக்கிலும் இதே உண்மை மிளிர்கின்றது. இச்சிவமதத் தைச் சுத்தமாக்கி எட்டுத்திக்கிலும் பரப்பிய பரம ஆசிரியனே குமாரசுவாமியாவர். அவரால் திருத்தியமைக்கப்பட்ட சமரஸ நெறி அவர் பெயரையே தாங்கி குமாரசமயம் என்றழைக்கப்பட் டது, பல்லாயிரம் ஆண்டுகட்கு பின்னர் சிவமதம் சைவசமயமாகப் புனருத்தாரணஞ் செய்யப்பட்டபோது, குமாரசமயம் கெளமார மாகி சைவசமயத்தினுட் சமயங்களுள் ஒன்ருய் மாற்றப்பட்டதென லாம். எனினும், கெளமாரமானது வைதிக மதமென்ற நிலையை இழக்கவில்லை. சாக்தம், காணுபத்தியம், வைரவம் முதலானவை மலினப்பட்ட சைவமென அழைக்கப்பட்டபோது, குமாரசமயம் கெளமாரம் குற்றம் நீங்கிய சுத்த சிவ அத்துவித மார்க்கமாகவே கருதப்பட்டு வந்தது. இது போன்ற பலகாரணங்கள் பற்றியே முதல் குருவடிவாந்தட்சிணுமூர்த்திக் குரிய பெருமையையும் மகி மையையும் சிவகுருநாதனுன முருகப்பெருமானுக்கும் உரித்தென் றனர் அறிஞர்.
இக்கெளமாரமகத்தின் பெருமையை எடுத்துலகுக்குவிளக்க
வந்த ஆசிரியர்கள் பலர், அவர்களுள் முதலானவர் சிவபெருமான்;
முக்கியமானவர் அருணகிரிநாதர், பிந்தியவரே முந்தியவர்தான் முதலாவது கெளமாராசாரியர். என்ற உண்மையைக் 5Log, Litt - ல்கள் மூலம் நன்குவிளக்கியுள்ளார். கந்தரநுபூதியின் கடைசியான (101ம்) வாழ்த்துப்பாட்டை, "பேழ்வாயரவும் பிறைவெள்ளிரகுஞ் சூழ்வார் சடையார் தொழுதேசிகனே' என முடித்திருப்பதை இங்கு அன்பர்கட்கு நினைவூட்டுகின்ருேம்.
இவ்விரு ஆசிரியர்களுக்கிடையே பலர் தோன்றி முருகன்
புகழைப்பாடியுள்ளனர்.
 

அருணகிரிநாதரின்.வாழ்க்கை 189
'வசிட்டர் காசியர் தவத்தான யோகியர்
அகத்ய மாமுனி இடைக்காடர் கீரனும் வகுத்த பாவுறு பொருட் கோலமாய் வரு முருகோனே'
எனக் காலத்தைக் கழுவிய நாம வரிசையைத் தருகின்றது திருக் கோணமலைத் திருப்புகழ். அருணகிரிநாதருக்குப் பின்னரும் பலர் தோன்றி முருகன் பெருமையைப் பாடியுள்ளனர். ஆனல், அவ ருக்கு முன்னும் பின்னும் தோன்றிய மகான்களுக்குமிடையே ஒர் பெரிய வித்தியாசமுண்டு. அவர்கள் முருகனைப் புகழ்வ தோடு நின்றுவிடவில்லை; ஏனையமூர்த்திகளையும் வழுத்தியுள்ளனர். அருணகிரிநாதரோ முருகன் ஒருவனேயே போற்றியுள்ளார். இந்த உண்மையை பூரீ பாம்பன குமரகுருதாசர் அருணகிரிநாதர்மீது பாடிய துதியில், "சேயோன், ஒருவனேயே புகழ்ந்தவருளருணகிரி
சேவடிப்போதுளத்துள் வைப்பாம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முறையில் முருகோபாசனையில் தனக்கு ஒப்பாரும் மிக்கா ரும் இல்லாத்தனிச்சிறப்புற்ற நம் அருணகிரிநாதர் பிறந்தது ஞானத் தபோத6ரரைத் தொன்றுதொட்டு இன்றுவரைக்கும் தன்னிடம் அழைத்துக் கொண்டிருக்குங் திருவண்ணுமலையிலாகும். அங்கே வசித்த கணிகை பொருத்தி வயிற்றில் பட்டினத்துப் பிள்ளையார்க் குப் பிறந்தாரெனத் தமிழ் நாட்டில் வழங்குங் கதை கெஞ்சமும் பொருத்தமற்றதாகும். அவரது பாடல்களைக் கொண்டே அவரது காலத்தை நாம் நிச்சயிக்கவேண்டும். பிரபுடதேவனென்னும் அரச னைப் பாராட்டும் வரிகள் திருப்புகழிற் காண இருப்பதால், அந்தப் பேருடைய மன்னன் காலமே அருணகிரி நாதரின் காலமுமாகும். அக்கோடு, அந்த அரசனும் இவரின் புகழுரைக்காளாவதற்கு ஒர் முருக பக்தனுய் விளங்கியிருக்க வேண்டும். இம்முறையில் தமிழ் நாடெங்கும் கீர்த்திபடைத்த பிரபுடதேவன் விஜயநகரத்திலிருந்து பதினைந்தாம் நூற்றண்டில் அரசாண்ட மன்னன் ஒருவனே. எனவே, அருணகிரிநாதர் இற்றைக்கு ஐஞ்நூறு வருஷங்கட்கு முன்னர் வாழ்ந்தவரெனக்கொள்ளலாம்.
مدينة பூர்வ ஜென்ம வாசனையின் பயனுக தமது இளமைப்பருவத் தில் விலைமாதர் போகத்தினுழன்று, குட்டம் முதலாம் நோய்க ளால் வருந்தி வாடி தமக்கையாரின் உபதேசங் காரணமாகச் சிற்

Page 5
:"&"
' '*{ۂي
190 ஆத்ம ஜோதி
றின்பத்தில் வெறுப்புற்றுப், பின்னர் முருகன் கிருவருள் பெற்று அப்பெருமானைப் போற்றிக் கவி பாட வல்லவராயினரென அவர் சரிதையிற்காண்கின்ருேம், அவர்இயற்றியதிருப்புகழ்களே இதற்குப் போதிய அத்தாட்சிகளாயுள்ளன. அருணகிரிநாதர் பெண்ணுலகின் மீது வசை புராணம் பாடியுள்ளாரெனப் பலர் குறை கூறுகின்ற னர். இக்கூற்று அந்த மகானின் வாழ்க்கை வரலாற்றையும், கழி விரக்கங்கொண்டு அவர் அழுத அழுகையையும், அவரது t_GultL} கார உள்ளக் கணிவையும் விளங்காமையால் உதிக்கும் தவறன அபிப்பிராயமாகும். அவர் இழித்துக் கூறியிருப்பது வேசையர் களையே யன்றிப் பிறபெண்களையல்ல. தம்மைப்போல் பிறரும் காமக்குழியில் வழுக்கி விழுந்து துன் பத்திலழுந்தக்கூடாது, பெண் ணைக்காமக்கூடாகக் சுருகப்படாது என்று நல்லறிவுறுத்தவே, அவர் ஆண், பெண் இருபாலரையுந்தயவு காட்சண்யமின்றிக்கண்டி த்துள்ளார். போலித்துறவையும் அவர் அதே முறையில் கண்டித் தனர். ஒவ்வொரு மகாலும் தமது காலத்திலிருந்த கெட்ட வழக்க ங்களையும், கொள்கைகளையும், சமுதாய ஊழல்களையும் ஒழுக்க மின்மையையும் கண்டிப்பதைத் தமது முக்கிய கடமையாகவே கருதி வாழ்ந்துள்ளனர்.
அருணகிரிநாதர் அருளிய பாடல்கள் பல. அவற்றுள், திருப் புகழ்களே பதினுயிரமாகும். திருவகுப்பு கந்தரந்தாதி, வேல்விருத் தம், மயில் விருத்தம், கந்தரலங்காாம், கந்தரனுபூதி ஆகியவை அவரது ஏனைய பிரபந்தங்கள். அவரது நூல்களைப் படிக்கும் போது, அவர் வட மொழி தென்மொழி இரண்டிலும் வித்துவா ணுய், மந்திர தந்திர சாஸ்திரங்களெல்லாம் நன்கறிந்தவராய், எல் லாக்கலைகளிலும் விற்பன் னராய், அத்துவித உண்மையை அனு பூதி வாயிலாக உணர்ந்த பெரிய ஞானியாய் விளங்கினரென்பது வெளிப்படையாகின்றது. இச்சிறப்புக்களை யெல்லாம் அவர் கோவா கிய கல்வியுளார் கடைசென்று, இாவாவகையில்’, முருகன் அரு ளாலேயே பெற்றனர் இந்த அரிய உண்மையை யாமோதிய கல் வியும் எம்மறிவும் தாமே பெற வேலவர் தந்தது' என நன்றியுடன் வெளியிட்டு, உலகினரையும் அதே முறையில் வாழும்படி வற்புறு த்தியுள்ளார்.
இறைவனருள் கொண்டு பாடல்கள் இயற்றும் பக்தர்கள்மீது பொருமை கொள்வது பண்டித உலகிலுள்ள பெரியதோர் குறை

அருணகிரிநாதர்.வாழ்க்கை 191
யாகும். இது தொன்று தொட்டு என்றுமேயுள்ள கீழ்க்குணம். எமது மொழியில் யாப்பிலக்கணம் என்னும் நூல் இருப்பதையே கேள்விப்படாத சிலர் தங்கள் பக்கி முதிர்ச்சியிலோ அல்லது விசு க்கிசக்கர மலர்ச்சியிலோ கேட்போர் உள்ளத்தை உருக்கக்கூடிய அரிய கோக்கிரப்பாக்களே இயற்றுகிருரர்கள், பண்டிதர்கள் அவற் றில் குற்றமே காண்பர், எதிலாவது குணங்காணும் கண் அவர் கட்குக் குருடாய் விட்ட காரணத்தால், பதினங்காம் நூற்ருண்டி லும் இவ்விதம் குணம் நீக்கிக்குற்றமே காணுங்குழுவினர் வாழ்ந்த
னர். தமிழ்த்தெய்வமாம் முருகனின் கட்டளைகொண்டு அருணகிரி
நாதர் அருளிய பாடல்களில் குற்றங் காணத்துணிந்தனர் பலர். அவர்களுள் இருவர் அவர் சரித்திரத்தில் இடம்பெற்ற்றுள்ளனர். ஒருவர் வைஷணவப்புலவராம் வில்லிபுத்தூராழ்வார்; மற்றையவர் சமண சமயியான சம்பந்தாண்டார். முந்தியவர் கந்தரந்தாதியின் ஐம்பத்துமூன்ரும் பாட்டிற்குக் கருத்துச் சொல்லமுடியாமல் மய ங்கித் தமது அகங்கார மொழிந்தனர், பிந்தியவரும் வாதில் தோல்வி யுற்றனர். ஆனல் கபடமுறையில், அருணகிரிநாதரைக்கிளியுருக் கொண்டு பாரிஜாதமலர் தேடச்செய்துவிட்டு அவரது தேகத்தை எரித்துவிட்டனர். இவ்விதம் பெற்ற கினியுருவிலிருந்து பாடிய பிர பந்தங்களே கந்தரலங்காரமும் கந்தரனுபூதியும்,
'8%
அருணகிரிநாதரின் பாடல்களில் சொல் நயம், பொருள் நயம், பத்திரசம், மந்திரசக்தி இவற்றேடு கூடி சந்த நயம் பொருந்தியிரு க்குஞ் சிறப்பை வேறு எந்தத் தமிழ்ப் பிரபந்தங்களிலுங் காண முடியாதி,
"◌"
'வாக்கிற் கருணகிரி வாதவூரர்கனிவில் தாக்கிற் றிருஞான சம்பந்தர்-நோக்கிற்கு நக்கீர தேவர் நயத்துக்குச் சுந்தரனர் சொற்குறுதிக் கப்பரெனச் சொல்'
என்பது ஒர் பெரிய அறிஞர் வாக்கு தேவார திருவாசகங்கனின் கவி நயத்தையும் பக்திச்சுவையையும் அனுபவிப்போர் சைவர்கள் மாத்திரமே. அருணகிரிநாதர் பாடல்களோ வெனில் திருக்குறளைப் போல் தமிழ்மக்கள் சகலருக்கும் சாதிமத பேதமின்றிப் பொது மறையாய் அமைந்துள்ள தெனலாம், முருகன் எல்லாச் சமயத்தவ
".

Page 6
தி
தி S.
192 ஆத்மஜோதி
ாக்கும் உரிய கடவுள் என்பதே அருணகிரிநாதரின் உள்ளக்கிட க்கை, சமய பேதங்களையும் வாதங்களையும் மறுக்கும் மொழிகளை அவரது பாடல்களிற் பரக்கக்காணலாம். எனவே, அவர் ஒர் ஒப் பற்ற கெளமாராசாரியராய் விளங்கியதோடு நின்று விடாது, உலகு க்கு உய்வழி காட்ட சர்வமத சமரச ஞான குருவாயும் விளங்கினு ரெனலாம். -
இந்தச் சுடரின் அட்டையை அலங்கரிக்கும் அருணகிரிநாதர் உருவம் திரு. R, முத்துசுவாமியவர்களின் 18x12 அளவுப் பலவர்ணப் படத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படமாகும். இப் பெரிய படம் வேண்டுவோர்-சென்னை, பந்தர் தெரு 54ம் இலக்க முள்ள விலாசத்திற்கெழுதிப் பெற்றுக்கொள்ளலாம். இந்த அன்ப ரின் முயற்சியால் சென்ற மாசந்தொடக்கம் அமிர்தவ சனி என் இனும் ஒர் தெய்வீக மாதப்பத்திரிகை தோன்றியிருப்பதை 'ஆத்ம ஜோதி வாசகர்கட்கு மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின் ருேம், அதைப் பற்றிய மதிப்புரை அடுத்த சுடரில் வெளிவரும்.
எந்த வாழ்வு வேண்டும். 'சுதந்திா ஜீவன்' பறவையொடு மிருகாகி இறைவனைப் போற்றிடும்
பழிபகையு மின்றி வாழும் பகுத்தறிவு பெற்றும் பெருதவன் போலவொரு
பாவியிப் பாரி லுண்டோ , அறிவுநூல் கேள்வி ஆராய்ச்சியென் றிவைகளால்
ஆணவக் கோட்டை கட்டி அதிலிருந் தன்புதவம் அறமென்று பேசுவேன்
அவைகளென் வாழ்வி வில்லை பொறிகளுக் கிரைதேடி மனமெனுங் குதிரையிற்
பூலோக பவனி வருவேன் பொன்னகி மூவாசை பாலம் துறந்தவொரு
புனிதனைப் போல் நடிப்பேன் நெறிதப்பி ஓடுமென் நெஞ்சைத் திருப்பியுன்
நினைவிலே கிற்க வருள்வாய் கித்தியானந்தமே முத்திமுதலே ஞான கிலயமே கருணை வாழ்வே.
 

" ܕ ܬܕ̇
அருணகிரிநாதரும் சமரசமும்,
(திரு, வி. க.)
தமிழ் நாட்டாரென்று சிறப்பாகக் கூறுதற்குப் பல காரணங் களுண்டு அவைகளுள் ஈண்டு இரண்டொன்று குறிக்கிறேன். இயற்கையிலுள்ள முருகை முதல் முதல் கண்டவர் தமிழ் காட் டார். முருகனுக்குரிய செவ்வாய்க் கோளுக்குங் தமிழ் நாட்டுக் குங் கொடர்பு உண்டு. முருகனுண்மைகண்டு, இயற்கை வாழ்வு செலுத்தி, நோன்பு காத்து, அழியாப் பேறுபெற்ற சித்தர்கள் வாழ்ந்த நாடு நமது தமிழ் நாடு. முருகன் நோன்பும், வழிபாடும், பிறவும் இன்னும் தமிழ் நாட்டில் நடைபெற்று வருகின்றன. ஆணுல் அவைகளின் முறைப்பாடுகள் இந்நாளில் குலைந்துவிட்டன கோன்பையும் வழிபாட்டையும் ஒழுங்குபட நிகழ்த்தினல், மீண் டும் பழங் தமிழ் நாட்டைக் காணலாம்; சித்தர்களே க் காணலாம் பண்டைநாளில் தமிழ் நாட்டினின்றும் மக்கள் வாழ்வுக்குரிய துன்புத் துறைகள் உலகில் பரவியதுபோல இங்நாளிலும் பரவும், இப்பொழுது உலகிற்கு வேண்டற் பாலன கோன்பும், இயற்கை வழிபாடும். இவைகளை மீண்டும் உலகில் உயிர்ப்பிக்கும் பொறுப் பைத் தமிழ் நாடு ஏற்றுக்கொள்ளல் வேண்டும். ஆதலின், தமிழ் நாட்டில் பிறந்த ஒவ்வோர் ஆண்மகனும் பெண்மகளும் இல்லற மேற்று, முருகனை வழிபட்டு சான்ருேதை ஈன்று, உலகை உய் விக்கக்கடமைப்படல் வேண்டும். 'பிள்ளைகள்' என்று, என்பு கோல்போர்த்த கூடுகளைப் பெறுவதால் என்ன பயன்? பிள்ளை
முருகெனும் அழகு ஒழுகல் வேண்டும்.
முருகன் வழிபாட்டிற்கு இல்லறம் இன்றியமையாதத. இல் லறம் என்பது இயற்கையறம். இவ்வறம் இழிவான சிற்றின்ப கிறைவேற்றலுக்கு ஏறபட்டது என்று கினைப்பது அறியாமை, இல்லறம், இளமை அழகு முதலியவற்றைக் காத்து, மக்கட்பேறு 6ல்கி, கடவுட்டன்மை எய்துதற்கு இயற்கையில் இயல்பாக அ மைந்து கிடக்கும் நல்லதம். இவ்வறத்துக்குரிய பெண்தெய்வத் தைப் பேயாகக் கருதுவது கொடுமை கொடுமை, பெண்ணுேடு கூடிவாழ்ந்து, முருகனுக்குரிய நோன்பு வழிபாடுகளை முறைப் படி நிகழ்த்தி, முருகனிடத்து உறுதியை வளர்த்துப் பிணி முப் புச் சாக்காட்டைத் தொலைக்க முயல்வது அறிவுடைமை.

Page 7
194 ஆத்மஜோதி
எம்பெருமான் முருகன், தமிழ் நாட்டவரால் முதல் முதல் காணப்பட்ட இறைவனுயிலும், அவன் எல்லா உலகங்களையும் நடாத்தும் ஆண்டவனுயிருக்கிருரன். அவனது நோன்பும் வழி பாடும் எல்லார்க்குமுரியன. அவனை அவ்வந்நாட்டார் அவ்வங் நாட்டு மொழியில் பல பெயரிட்டு வழிபடுகிறர். அப்பெயர்ப் பொருளை ஆய்ந்து பார்த்தால், அது தமிழில் முருகன் என்னுஞ் சொல்லுக்குரிய பொருளாகவே பெரிதும் முடியும்,
சமரச உணர்வில்லாச் சமயபேத நாட்டமுடையார் முருக லுண்மை காண்டலரிது. முருகனைத் கொழுவோர் முருகன் எல் லாச் சமயத்தவர்க்கும் உரிய கடவுள்' என்னும் பொது உணர்வு பெற்றவராயிருத்தல் வேண்டும், கடவுளர் பலர், சமயங்கள் பல என்னும் வேற்றுமை உணர்வு அவர்க்கு இருத்தல் கூடாது. வேற் றுமை உணர்வு உள்ளமட்டும் முருகனை அறிதல் இயலாது, வாதங் களையும் பேதங்களையும் கடந்து நிற்பது முருகனெனுஞ் செம்பொ ருள். சமயப் போரிடுதல், பொருமை பகைமை காழ்ப்பு முதலிய பேய்களை வழிபடுவதாகும். இவ்வழிபாடு, அன்புக் கடவுள் உண் மையை விளங்கச் செய்யாது கடவுளுண்மை விளங்கப்பெற்றேர் ஒரு சமய உணர்வு விளங்கப்பெறுவர். இப்பேறுபெற்றவர்க்குச் சமய வாதமும் கடவுள் உண்மையை மறுப்பது போலத் தோன் றும். உலகிலுள்ள பலதிறச் சிறுமைகளில் தலையாயது பல சமய உணர்வுகொண்டு, சமயப்போரிடுவது என்று தெளிக, பன்முகச் சமயநெறி படைத்தவரும் யாங்களே கடவுள் என்றிடும் பாதகத்த வரும் வாத தர்க்கமிடுபடிறரும் என்ருர் தாயுமான சுவாமிகள். ஆதலால், முருகன் அடியார்க்குச் சமய வாதமாதல் சமய பேதமா தல் இல்லை என்க. முருகன் அருள் பெற்று உண்மை கண்ட அரு ணகிரியார் சமய வாத பேதங்களை மறுத்து உலகிற்கு உய்யு நெறி காட்டுகிருரர். அவர் தங் திருவருண்மொழிகளுட் சில வருமாறு;-
சமய பேதத்தவர்க் கணுகொணு மெய்ப்பொருள்
கலகலென மிக்க நூல்க-ளதனுலே-சிலுகிஎதிர் குத்திவாது செய்யுமொரு வர்க்குநீதி, தெளிவரிய சித்தியான-உபதேசம்-தெர்
தர விளக்கிஞான தரிசன மளித்து வீறு, திருவடி எனக்கு நேர்வ
தொருநாளே”
 
 
 

அருணகிரிநாதரும் சமரசமும் 195
"சமய விரோத சாங்கலை வாரிதியை
'குவலயங் கற்றுக் கத்தி யிளைக்கும், சமய சங்கத்தைத் தப்பி யிருக்கும், குணமடைந் துட்பட்டொக்க இருக்கும்-படிபாராய்
"கக்வம் பலவையுங் கற்றுத் தர்க்கமதத்வம்-பழியாதே'
கலைமேவு ஞானப் பிரகாசக்-கடலாடி.ஆசைக்கடலேறி, பலமாய வாதிற் பிறழாதே--மதிஞான வாழ்வைத் கருவாயே அருணகிரிநாதர் மற்றுமோரிடத்தில், கும்பகோணமோடாரூர் சிதம்பரம்' என்னும் திருப்புகழின் இறுதியில் உலகெங்கு மேவிய தேவாலயங் தொறு பெருமாளே என்று திருவாய் மலர்ந் திருக்கி முர். இச்சமரசமுடையாரே முருகனடியாராவர்.
பழந்தமிழர் கடைப்பிடித்தநெறி உலகிலுள்ள எல்லார்க்கும் உரியது; பொதுவானது, அந்நெறி மீண்டுந் தமிழ் நாட்டில் உயிர் பெறல் வேண்டும். இப்பொழுது ஆன்முர் அருளிய நூல் களில் அந்நெறி திகழ்கிறதன்றி, மக்கள் வாழ்வில் அஃது ஊடு ருவி நிற்கவில்லை உலகிற்குத் தமிழ்நாடு வாழிகாட்டுமேல், பழைய பொது நெறியுணர்வை, முதலில் கான் பெறல் வேண்டும். இடை இடையே பலதிறச் சிறுமைக் கொள்கைகளும் பிற இழிவுகளும் கமிழ் நாட்டில் புகுந்து, அதன் இயற்கைப் பொது நெறிக்குக் கேடுவிளைத்தன; விளைக்கின்றன. இளமையும் மனமும் கடவுட்
டன்மையும் அழகும் உடையதாய் இயற்கையை உடலாக் கொண் டகாயுள்ள ஒரு பொருள் எவர்க்கு உரியது? எவர்க்கு உரியதா காது? அஃது எல்லார்க்கும் உரியது. அப்பொருளை உணர்த் தும் இயற்கை வழிபாடும் எல்லாருங் கொள்ளத்தக்கது. தமிழ் மக்கள் கண்ட பொது நெறி இதுவே.
சும்மா இருவென நீசொல்லப் பொருளொன்றும் அம்மா அறிந்திலமென் றன்றுரைத்த எம்மான் அருண கிரிநாத னநுபவரா யேற்குக் கருணைபொழி போரூரா காட்டு.
-சிதம்பரசுவாமிகள்

Page 8
  

Page 9
ந்து மோன நிலையை யடைந்தவர் தமதுடே காண்பதுவுமான ஜோதிமயமான சுத்தமாயை யெனப்படும் குண்டலிகி சக்தி சிவ சக்தியாம் உமாதேவியாரே என்பதை யோகங் கொள் மவுன ஜோதி' என்று கூறிச் சுவாமிகள் உணர்த்தியருளியிருக்கிருர், வெட்ட வெளியில் எண்ணிறந்த சராசரங்களே மாயமாய்த்தோன்றச் செய்தது பரம மாயையான உமாதேவியாரே யாதலின், அவரை 'மோகி' என்று கூறப்பட்டிருக்கிறது.
மெய்வாய் கண் மூக்கு செவி இவைகள் ஒருவருக்கு முக்தி வீட்டின் கதவை அடைக்கும் சத்துருக்களாகவும் எளிதில் முக்தி படைய உதவி செய்யும் மித்துருக்களாகவும் இருக்கும். அவை விஷய கங்களை யனுபவிக்க நாடாமல் எம்பெருமானே வணங்க வும் துதிக்கவும் தரிசிக்கவும் முகரவும் அவரது புகழைக்கேட்கவும் நாடி அவ்வாறு செய்வதனுல் உண்டாகும் சுகங்களை அடையும் முக்தி நெறியில் மனத்தை நிறுத்து மேயாகில், அவைகளே ஒரு வருக்கு முக்தியைக் கூட்டுவிக்கும் பரம மித்துருக்களாகும். அ படிச் செய்வதற்குரிய ஞானமுற்ற ஐம்பொறிகள் வாய்க்கப்பெற்ற ஒருவர் சந்திர சூரியர்கள் ஒளிவீசப் பெருததும் நிராகாசமானதும்,
சத்தின் சொரூபமானதுமான ஜோதிமயமான வெட்டவெளியை படைவார். அங்கு போய்ச்சேர்ந்த பின்னர் அவர் அவ்வெளியின் காரணரும் பஞ்சாக்ஷரத்தின் நாயகருமான சிவபெருமானது ஒப்பு யர்வற்ற பெருமையை அறிவார். அதன் பின் அவர் அப்பெரு மானது பெருமையை நாவினுல் பாடி அதனுல் தாம் இன்பமுற்ற தற்கு அறிகுறியாகக் கண்களினின்றும் ஆனந்தக் கண்ணீர் ஆருய்ப் பெருகப் பெற்று, எம்பெருமானது புகழைச் சப்தசுரங்களுடன் கலந்து இன்னிசையாகபாடி மகிழ்வார். எம்பெருமானது புகழைப் பாடுவதில் மனம் இலயிக்கப்பெற்ருல் ஜடதேகத்தினுல் உண்டா கும் சஞ்சலங்களும், துன்பத்தை இன்பமாகவும் சிற்றின்பத்தைப் பேரின்பமாகவும் பொய்வாழ்க்கையை மெய்யாகவும் கருதச்செய் யும் ஜகமாயையும், நான் என்று மார்தட்டுவதும் எனதுடைமை எனதடிமையென்று கூறுவதுமான அகங்காரமும் அடியோட்ழிந்து டோகும். பிறகு அவர் ஒங்காரத்துக்குள்ளே தோன்றும் ஜோதி உருவத்தைப் பெற்று, ஓங்காரத்துள் ஒளியாக விளங்கும் முருகப் பெருமானுடன் இரண்டறக் கலந்து, வேதத்தில் ஜீவர்கள் இறு தியில் அடையவேண்டிய சிறந்த கிலேமை யாதென்று கூறப்பட்டு
 
 
 
 
 

முத்திவீட்டின்.மித்துருக்களுமாவர் 199
ள்ளதோ அந்த நிலைமையான-பரம்பொருளுடன் இரண்டறக் கலக்கும் கிலைமையை அடைவர். அவ்வாறு பரம்பொருளுடன் கலந்து அதன்தன்மையை அறிந்து கொண்ட பெரியார் பரம மாயையின் தன்மையை அறிந்து கொள்வாராதலின், சகல லோகங்
களிலும்நிறைந்துகிற் துஒரே பொருளென்பதையுணர்ந்து களித்து
ளும்படிசுவாமிகள் ஞானசொரூபியும்பரம் பொருளுமான முருகப்
பெருமானைப் பிரார்த்திக்கிருர்,
'ஒளியில் விளைந்த வுயர்ஞான பூகரத் துச்சியின்மே லளியில் விளைந்ததோ ரானந்தத் தேனை யாநாதியிலே வெளியில் விளைந்தவெறும் பாழைப் பெற்ற வெறுந்தனியைத் தெளிய விளம்பிய வாமுக மாறுடைத்தேசிகனே'
"ஆங்கா ரமுமடங் கார்பர மானந்தத்தே தேங்கார் நினைப்பு மறப்பு மருர்தினைப்போதளவு மோங்காரத் துள்ளொளிக் குள்ளே முருகனுருவங்கண்டு தூங்கார் தொழும்புசெய்யாரென் செய்வார்யம தூதருக்கே" என்னும் கந்தரலங்காரப் பாடல்களும்,
'இணையடிகள் பவுமுன கடியவர்கள் பெறுவதும்
arga Lig Gari Lury Brig-Gar
இருவினைமு LP6(tpLממ இறவியோடு பிறவியற
ஏக போகமாய் நீயு நானுமாய்
இறுகும் வகை பரம சுக மகனேயருளிடைமருகில்
ஏக நாயகா லோக நாயகா-இமையவர் பெருமாளே!'
என்னும் திருவிடைமருதூர்ப் பாடலின் இறுதி அடியும் இப் L In L}) விளக்கும். (இப்பாடலில் கோவின்பரசமதான x x x விளையாடி' என்றுவரும் மொழித்தொடருக்கு யோக மார்க்கத்தை யொட்டியும் பொருள் கூறலாம். அப்படிப்பட்ட பொருள் பின் GAMI(III) (DIT. (D) ;"
ாவுக்கு இன்பத்தைத் தருவதும் ஆகந்தத்தை விளைவிப்பதுமான அமுதமானது ஆறு போல் பெருகிப் பாயப்பெற்று, தேகத்தினு ள்ளே சகல விதமான நாதங்களும் ஒலிப்பதைக் கேட்டு மகிழ்ச்சி படைந்து,' στόσοτιμ அடிகளுக்குக் கூறியுள்ள உரை கம் ஞானமார்க்கம்என்றும்இரண்டு மாக்கங்களுக்கும் பொருந்தும்.

Page 10
கற்ருே ரது கல்வியில் அவர் மதிக்கும்படி பேசுதல்.
(சிவத்தியானந்த மஹரிஷி) கரவாகிய கல்வி யுளார் கடைசென் று) இரவா வகை மெய்ப்பொரு வீகுவையோ
குரவா குமரா குலிசாயுத குஞ்
சரவா சிவயோக தயா பரனே, -
(கந்தர் அநுபூதி)
அக்வயம்
குரவர் குமார் குலிசாயுத குஞ்சாவா! சிவயோக தயா
பரனே! காவு ஆகிய கல்வி உ(ள்)ளோர் கடைசென்று இரவாவகை
மெய்ப்பொருள் ஈகுவையோ? (நான் அதனல் கல்வியுளாரோடு பேசும் வன்மை பெற்றவனுவேன? என்றபடி)
பொழிப்புரை
தலைப்பு:- (கல்விச் செருக்குள்ளவர்களுக்குத் தெய்வவருளால்
ஞானம் பெற்றவர்களைக் காணின் ஒருவித இகழ்ச்சி ஏற்படுவதி
ண்டு. அஃதேனெனில், அருள் பெற்றுப் பாடுவோர் இலக்கணவ மைதியில்லாதவரென்றும், கல்வியினிடத்துத்தம்மைப்போல் உழை யாதவர் என்றும் அவர்கள் எண்ணுவதேயாகும். உண்மையில் சுவா நுபவமும் அருள் வரமும் இல்லாதவர் கடபட வாதிகளாகமட்டும் இருப்பரேயன்றி முற்றும் உணர்ந்தவர்களாக இரார். அருள் பெற்
றவர் இக்கடபடவாகிகள் நீண்டகாலம் உழைத்துப் படித்த கல்வி
யையெல்லாம் ஒரே கிருஷ்டியில் தமது மனத்தின் கண் அமைத்து அதனைப்பலரும் வியக்குமாறு கையாளும் ஆற்றலைப் படைத்சவர்
களென்பதை இவ்வேட்டுக்கல்வியாளர் உணர்வதில்லை. அதனுல்
அருளாளர் தமது அருள்யாசகத்தை இறைவனிடத்துச் செய்து
பெறும் போதே உலகக்கல்வியையும் பெற்றுவிடுகிறர்கள் என்பத.
றியவும். இவ்வித அருளைப்பெற்றேரிடத்து உலகக்கல்வியாளாது பிதற்றுக்கள் நீடித்து நிலை நிற்பதில்லை. இவ்வுண்மையை யறிந்து,
உபாஸ்கன் இப்பிதற்ருளர்களது தலைவாயிலில் நில்லாது தனது உபாஸ்ன மூர்த்தியினிடத்திலேயே அக்கல்வியையும் பெறுமாறு
தூண்டும் மறை இது.
 
 
 
 
 
 
 
 
 
 

assi)(3COp 737.......................... (BL 137,56)
கற்ருேபது கல்வியில் அவர் மதிக்கும்படி பேச. செய்யுள்-குருநாதனே! நித்தியயௌவனம் வாய்ந்தவனே! வச்சிராயுகலைளிக்கப்பட்ட குஞ்சரமாகிய தெய்வான மணுளனே! சிவயோகத்தைப் பக்தர்களுக்குத் தரும் தயை நிறைந்தவனே! (தங் களது அறியாமையை வெளிக்காட்ட அஞ்சியோ, தாங்கள் கல்வி யில்ை பெறும் உலகப்பயன்களைப்பிறரும் அடைய ஏற்படின் தங்க ாக பெருமை குறையுமென எண்ணியோ, தம்மை வந்து அடுத்து மின்று கேட்பவர்களுக்குக் கொடாமல்) வஞ்சனையாகக் கங்களுக் குள்ளேயே வைத்துக் கொண்டிருப்பதாக வேஷங்காட்டும் கல்வி பாளரிடத்துச் சென்று ஞானத்தை யாசிக்காமல், ஸர்வக்ஞனகிய ேேய என்முன் தோன்றி உண்மைப்பொருளை எனக்குக் கொடுப் பாயோ? (யான் அதன் பலத்தினுல் கல்வியாளர்களோடு வார்த்தை பாடி அவர்களது நன்குமதிப்பைப் பெறுவேனே நீ சொல்வாயாக என்றபடி ..)
விசேடக்குறிப்புகள்.
குமரகுருபர தேசிகர் தமக்கு இலக்கணப்பயில்வு முண்டு என் பதைக்காட்டச் சிதம்பறச்செய்யுட்கோவை' பாடியது உலகமறிங் ககே. இவ்வ்ருணகிரிநாதரே கந்தரந்தாதி பாடி வில்லிபுத்தூரரைத் தோற்கடித்ததை அவர் சரிதம் கூறும். இவரே முன்னமும் யாமோ திய கல்வியும் எம்மறிவும் தாமே பெறவேலவர் தந்ததனல்" எனக் கூறியுள்ளார். அத்தகைய துணிவுடன் கூறியுள்ளவர் இச்செய்யுளை யும் பாடியிருத்தல் கூடுமோவென்பது ஐயுறத்தகுந்தது. குலிசாயு தகுஞ்சாவா" என்பதனை ‘குலிசாயுத"குஞ்சரவா' என இரண்டு விளி யாகப் பிரித்து வச்சிராயுதத்தையுடையவனே! பிணிமுகம் என்னும் யானையை யூர்பவனே! என்று பொருள் கூறுவதிற் பயனென்று மில்லை. ஆனல், ஒருகாலத்து உனது அறிவின் ஆற்றலைக்கண்ட தேவர் கோமானும் உனக்குத் தோட்டுணையாகத் தான் வளர்த்த தேவ குஞ்சரி யென்னும் சத்தியைப் புணர்த்தானதலின், அத்த கைய பெருஞானம் வாய்ந்த உன்னையானடுத்து எனது ஞானத் கைப் பெறவேண்டுமேயன்றி, என்போலவே முக்குண வயத்கராய் க்காமக்குரோதாதிகளுள்ளவர்களும், - 'கல்வியுடைமை பொருளுடைமை யென்றிரண்டு செல்வமும் செல்வமெனப்படும்-இல்லார் குறையிரந்து தம்முன் நிற்பபோற்றமும் தலைவணங்கித் தாழப்பெறின்'

Page 11
202 ஆத்மஜே ாதி
என்பதை அறியாதவருமான மூர்க்கர்களிடத்து, 'நாய் பெற்ற தெங் கம் பழம்' போலவுள்ள கல்வியைக்கேட்டு இரந்து கிற்பேனே
என்று பொருள்பட ‘குலிசாயுத குஞ்சாவா’ எனக்கூறினரென்பது
எவ்வளவு சிறப்புடைத்தென்பதை யோசிக்கவும். அதுபோலவே, ‘துருத்தியெனும்படி என்றற்முெடக்கத்துக் கந்தரலங்காரச் செய் யுளில் சிவயோகமெனும் குருத்தையறிந்து முக மாறுடைக்குரு நாதன் சொன்ன கருத்தை மனத்திலிருந்துங் கண்டீர்' என்றபடி, இக்குருநாதன் சிவயோகத்தை யருளுந்தயாபரனென்று கூறுவது சிறப்புடைத்தேயன் றிச் சிவயோக, தயாபர என இரண்டுதனிப் பட்ட விளிகளாகக் கூறிப்பொருள் உரைப்பதில் பயனில்லை யென்க. இம்மெய்ப்பொருளே, உலகவர் கற்ற கல்வியை யெல்லாம் நன்ரு) க்கிப் பின்னர் அவ்வொன்று பட்ட கல்வியை ஒரு நல்லாற்றிற் செலுத்த வல்லதானது பற்றி மெய்ப்பொருளீகுவையோ என்ருர், இம்மெய்ப்பொருளொன்றைப் பெ ற் ற அக்கணமே உலக கல்விமுற்றிலும் அதற்குள் அடங்கி விடுவதை உய்த்துணர்ந்தறிக. ஒருவன் பல வருஷங்களாகக் கற்றுப் பெற்ற வித்தையை இவ் வுண்மை ஞானமுள்ளவன் அவனிடத்துச்சில நிமிஷங்கள் சம்பா ஷிப்பதனுல் அறிந்துகொண்டு அவ்வித்தையைத் தன்னதாக்கிக் கொண்டு விடமுடியு மென்பதைச் சூசிப்பித்தே, கல்வியில் சம்பா ஷிக்க' என்ற தலைப்புக்கொடுத்தார். இவ்வகை மேதாவிகளைக் கண்டு அழுக்காறடையும் சிறுகுணமுள்ளவர்களையே *கரவாகிய கல்வியுளார்' எனரு?ர். அச்சிறுகுணமுள்ளவர்களிடத்துப் தற்கு ஒன்றுமில்லையென்பதைத்தோற்றுவிக்கவும்,மெய்ப்பொருள் என்ற சொற்ருெடர் உபயோகிக்கப்பட்டது.
இடு காடு வயிறன்று ‘சுதந்தா ஜீவன்'
தன்னுயிர்போல் மன்னுயிரில் அனபு காட்டுங்
தவத்தைவிட மாதவங்கள் வேறுமுண்டோ தின்னுகின்முய் பிறவுயிரை வதைத்துக் கொன்று
ஜீவகா ருண்ணியமும் செப்பு கின்ருய் இன்னுமேன் உன்னிடத்தில் இரக்கமில்லை
6இடுகாடு வயிறென்ருே எண்ணுகின்ருய் சன்னதங்கொண் டுயிர்ப்பலி இறைக்கிடாதே
தன்னலத்தைப் பலியிட்டா லுயர்வாழ்வாமே.
 

குரு
)சாது பூரீ முருகதாஸ்( میبرد .
அன்பு, தெய்வம், அல்லா, கர்த்தா, சக்தி, ஆத்மா, இயற்கை ܒܝ ܲ மற்றும் எப்படிப் பெயரிட்டு வழிபட்டாலும் அப்படி எல்லாம் வந்து அவரவர் வேண்டியதை நிலை அறிந்து அருள் தரும் வடிவம் எதுஆனலும் அவையனைத்தும் குருவடிவங்களேயாம். உரு, அரு, உருஅரு, இல்லை, உள்ளது என்று சொல்லி வழிபடும் தன்மை களெல்லாம் ஓர் உயர் நிலையில் அக்ஞானமெனவே ஒதுக்கும் படியாகும்.
இவ்வதிதமான ஸ்வரூப லக்ஷண ஞானங்களையும் கடத்தி ஆத்ம ஜோதியில் நம்மை நாமுணர்ந்து உணர்ச்சி, உணரப்படுவது, உணர்பவன் ஆகியவற்றையும் தாண்டச்செய்து எல்லாம் கடந்த சொல், அல், பகல், வெளி, உள்; வரவு, போக்கு ஆகிய எல்லாம் இறந்த சுத்த தத்துவமாக நம்மை ஆக்கு ஆளக்கருணைகொண்ட பூரணம் கொள்ளும் முதல் சகுண வடிவங்களே தெய்வம் என்று கொண்டாடப்படுகிறது. ' உருவெல்லாம் குரு, அற்றவை பெற்ற நிலைபிரம்மம்' என்ற நிலையில் எல்லாம் குருவடிவமேயாம். இவ் வடிவம் உலகையும் மக்களையும் உய்விக்கவேண்டியே வந்தது
என்பதை
'அருவமும் உருவமாகி அனுதியாய் பலவாய் ஒன்முய் பிரும்மமாய் நின்ற ஜோதிப் பிழம்பதோர் மேனியாகிக் கருணைகூர் முகங்களாறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே ஒரு திரு முருகன் வந்தாங் குதித்தனன் உலகம் உய்ய.'
என்று கந்தப்புராணப்பாடல் சொல்லுகின்றது. அறிந்தோ அறியாமலோ எப்படியோ செய்து சேர்க்கப்பட்ட வினையால் வந்த தேகத்தை அஞ்ஞான இருளில் கொடிய குணங்களால் ஆனபாபக் குழியில் தள்ளி வீலுக்கு அழித்து இன்பத்திற்குப்பதில் கலப்பற்ற துன்பத்தையே அனுபவிக்கும் கொடுமையை நீக்கவல்லது என்ற கருத்துடன் கூடிய சொல்லே குரு என்பது.
'திருவடியுங் கண்டையுஞ் சிலம்பும் சிலம்பூடுருவப் பொருவடிவேலுங் கடம்பும் தடம்புயமாறிரண்டும் மருவடிவான வகனங்களாறும் மலர்க்கண்களும் குருவடிவாய் வந்து என் உள்ளங்குளிரக் குதிகொண்டவே"

Page 12
APPAUVAGES?**
سمجمهوريميI(\a
204 ஆத்மஜோதி
என்று முருகனைப் பாடப்புகுந்த அருணகிரி குருவடிவு என்கிருரர். இன்பம் அனைவர்க்கும் வேண்டின் எல்லாம் குருவடிவாகக்காணக் கற்கவேண்டும். படிப்புக்களாலோ, வாதத்தாலோ, அனுபவத் தாலோ, ஆர்ப்பாட்ட ஜாதிகர்மாக்களாலோ, காணமுடியாத ஒப் பற்ற தன்மய தத்துவத்தை குருநாதர் தன் அபார கருணையால் இமைக்கும் நேரத்தில் அடையும்படி செய்து விடுவார்
'அறிவும் அறிதத்துவமும் அபரிமித வித்தைகளும் அறி என இமைப்பொழுதில் வாழ்வித்த வேதியன்'
என்ற வாக்கால் பாடி அக்ஞானத்தால் எதிரில் கிற்கும் சற்குரு வையும் அவரால் சொல்லிக்காட்டப்படும் தத்துவத்தையும் உண ராது சிற்றறிவின் மூலம் ஏமாருது மெய்ஞ்ஞானம் பெற்று தம் மைத் தடுத்சாள பூரணனே தெய்வங்களான குருவடிவும் ஞானிக ளான உலகதேகதாரியான குருவடிவங்களும் என்று அவன் அருள் பெற்றுக் காணவேண்டும், அவன் யார் யார் எதை மறுத்தாலும், வெறுத்தாலும், விரும்பினுலும் எப்படிப்பேசினலும் அவற்றுள் எல்லாம் அவர்கள் பேசுவதற்குத் தக்கவாறு நின்று ஆடல் செய் யும் தன்மையும் அருள் தரும் தன்மையும் அறியலாம். 'நான்' 'நான்' என்று பேசவைத்து கடைசியில் தேகாபிமானுதிகளைப் பிரித்து அவன் பேசிவந்த 'தானி' லேயே தன்னை அவனுக்குக் காட்டவல்ல ஞானசக்திதானன குருவும் மற்ற வடிவங்களான உலக உயர்வு தாழ்வுகளும் நீங்கி இன்புறலாம்.
தொடரும்,
அப்பர் அருள்வாக்குகள் திருவடிச்சிறப்பு
கடவுளுடைய திருவடிகள், யாதொருபற்றுமில்லாத வர்கட்குச் சிறந்த துணையாயிருப்பன; அருள் நூல்களைக்கற்று ஒதி உணர்ந்தார் பரவும் பெருமையுடையன.
உற்றரிலார்க்கு உறுதுணையாவன ஒதிநன்னூல் கற்றர் பரவப் பெருமையுடையன. 93-3.
 

அவதார புருஷர்களது மனைவிகள் சம்சாரக்கடல் தாண்டுவிக்கும் நா வா ய் க ள் .
---------- * -------- * ---------
y
(ஆரீமதி ஈர்தரம்மாள் ராகவாச்சாரி)
மனிதர்களை நல்வழிப்படுத்தி, ஆக்மசொரூபத்தை விளக்கிக் காட்டி, இல்லறத்துறையினின்றும் நெறிதவமுது நற்கதியடையச் செய்யும் பொருட்டே பகவான் மனிதரூபமெடுத்து மனிதர்களே போன்று இல்லற வாழ்க்கை நடத்திக்காட்டியுள்ளார் என்பதை நமது சகோதரிகள் அறிவார்கள். இப்படி அவதாரங்களெடுத்த சமயங்களில், தேவி பராசக்தியே, அவர்களுக்கு வாழ்க்கைத்துணை விகளாக அமைந்து, தாம்பத்திய தர்மத்தையும் பேரின்பமடைவ தற்கான வழிகளையும் கைப்பிடித்து மனிதர்களுக்கு விளக்கிக் காட்டியுள்ளனர். ஆகவே அந்த ஸ்திரீவியக்திகளே, அவதார புரு ஷர்களது துஷ்டநிக்ரக சிஷ்டபரிபாலனக் கருமங்களுத்குத்தேவை யான பேருதவிபுரிந்துள்ளனர். அவர்களது ஒத்துழைப்பும் விசேஷபக்தியும், நமது சகோதரிகளுக்குப் புத்திபுகட்டி நல்வழி யில் நடக்கும்படி செய்யவல்ல தூண்டுகோல்களாகும்.
இராமவதாரத்தை எடுத்துக்கொள்வோம்:- சீதாப்பிராட்டி பூதேவியின் அம்சம். ஜனகமகாராஜனுல் வளர்க்கப்பட்டவள், வீர்யத்தைப் பணயமாய்வைத்த அவரது பிரதிக்ஞையை நிறை வேற்றிய உத்தம புருஷன் இராமனுக்குரியவளானள், இப்பூமாதே வியின் புதல்வியை இராமபிரானுக்குத் தாரைவார்த்துக் கொடுப்ப தற்காகக் கலியாண மண்டபத்துக்கு ஸர்வாலங்கார பூஜிதையாய் அழைத்துவங்கனர். தேவியின் அழகை கம்பங்ாடர் வருணிப் பதை என்னென்றுரைப்பேன்!
'வல்லியையுயிர்க்கநிலமங்கையிவள்பாகம்
மெல்லியவுறைக்குமென.அஞ்சிவெளியெங்கும் பல்லவமலர்க்கொகைபாப்பினளெனக்கன் கல்லணிமணிச்சுடர்தவழ்ந்திடாடங்காள்'
ஜனகர் வtதாதேவியை அக்கினிக்குமுன் கிறுத்தி பூரீ ராமபிரா னைப்பார்த்து "இதோ இந்த வலீதை, என்பெண்; இவளை உனக்கு

Page 13
So{
206 ஆத்மே ஜாதி
வாழ்க்கைத்துணையாகத் தருகிறேன். இவளைப் பெற்றுக்கொள் உனக்கு சர்வமங்களமும் உண்டாகும், கணவனை ஆசாதிப்பதே தன் விரதமாகக்கொண்ட பாக்கியவதியாய் சீதை பிரகாசிப்பாள். உன் கிழல்போலவே உன்னைவிட்டு ஒருகிமிஷமும் பிரியமாட் டாள்" என்று சொல்லி வேதமந்திரங்களுடன் பிராட்டியை இராம னிடம் தாரைவார்த்துத் தந்தார். பூரீ இராமபிரானும் அக்கினி சாகூதியாக 'என் மனதிற்குள் உன் மனசு நிலைத்துகிற்கட்டும். என்சித்தத்தின்படியே உனது சித்தமும் ஒத்துழைக்கட்டும். நான் பிறழமாட்டேன்; நீயும் பிறழாமலிருக்கக்கடவாய், என் னைப்பின்பற்றிகடந்து என்னுடன் வாழ்க்கையில் ஈடுபடுவாயாக, இந்த வார்த்தைகளை ஒரேமனதுடன் ஏற்றுக்கொள்' என்று பிர மாணம்செய்தார். இவையனைத்தும் வால்மீகி இராமாயணத்திலும், கம்பர் இராமாயணத்திலும் வெகு தெளிவாகக் கூறப்பட்டுள்ளன, பார்வதிதேவி தன்விவாகத்தை யுத்தேசித்துத் தவம்செய்தபோது சங்கரபரமாத்மா பிரத்தியகூஷ்மாகி அவ்வம்மையாரது பாணிக்ரஹ ணத்தை நாடினர்-பர்வதராஜனுகிய தனது தகப்பனது அனும தியைப் பெற்றுவரும்படி உமாதேவி கட்டளையிட, சிவபிரான் ஸப்தரிஷிகள் அருந்ததிதேவி இவர்களது உதவிகொண்டு பர்வத ராஜனது சம்மதத்தைப்பெற்றுப் பார்வதி தேவியை மணந்து கொண்டபொழுதும், தம்முடன் இணைபிரியாது தங்கி உலகத் தோரை உஜ்ஜீவிப்பதில் ஈடுபடும்படி வேண்டிக்கொண்டனராம். இன்னும் மகாவிஷ்ணுவும் இலக்குமியைத் தன் மார்பிலேயே (இருதயத்திலேயே) தாங்கி பக்தர்கட்குப் பதவியளிப்பதாக ஐதி கமல்லவா? கஜேந்திரனுக்குக் காட்சிதந்து முதலைவாயினின்றும் விடுவித்து முக்தியளித்ததற்கும் லக்ஷமிதேவியின் தூண்டுதலே பிரதானமாயிருந்ததல்லவா?
அன்பையே அடிப்படையாகக்கொண்ட கூட மத சம்பிரதா யங்களிலும் ஸ்திரீவியக்தியையே தெய்வமாகப் பாராட்டிக் கொண் டாடுகிறர்கள். கிறிஸ்தவர்கள் "வர்ஜின் மேரி யையும் இந்தியர் களுள் பலர் காளிகாதேவியையும், எகிப்தியர் ஐவலிஸ் என்னும் பெண் தேவதையையும், கிரேக்கர்கள் பால்லாஸ் அதீனி என்ற தேவதையையும் வி ஷே ச மா க பூஜி க் கி மு ர் கள். அத் தேவதைகளின் அருளால் முத்தியடையலாம் என்பது அவர்களது துணிபு. துஷ்டர்களைக் கொல்வதற்கும் முக்கியமாக இராவணவ தத்திற்காகவும் பூரீ இராமபிரான் அவதரித்ததாக நாம் சாதாரணமா

அவதார புருஷர்களது. 70?
கக் கதையில் கேட்டும் படித்துமிருக்கிருேம். தெய்வாம்சமென்று "ரி பாராட்டி வரும் பூரு தியாகராஜஸ்வாமிகள் சிறந்த ராமபக்தர் காம்போதி ராகத்தில் மாஜானகி' என்று தொடங்கும் ஒர் அபூர்வ கீர்த்தனை அவரது பலவரிய கீர்த்தனங்களுள் சிறந் தது. தெலுங்கிலேதான் அவரது சங்கீத சாகித்யங்கள் செய்யப் பட்டுள்ளன. வால்மீகி ராமாயணத்தை வெகு நன்முய்ப் படித்து அறிந்த பெரியார் இத்தியாகப்பிரம்மம், 'மா ஜானகி' என்று தொ டங்கும் கீர்த்தனையில் அமைத்துள்ள தத்துவார்த்தம் என்னவெ னில் 'ஜானகியை நீ மனைவியாக அடைந்ததனலே, பூரீ ராமா நீ ஒப்பிலா சக்கரவர்த்தியானுய், இராவணனை கொன்றதனல் ஏற் பட்ட பெரும் புகழ் சீதாப்பிராட்டியாகிய ஜானகியை மணந்து கொண்டதாலேதான். உன்னேடு காட்டுக்குச் சந்தோஷமாகவந்து தனது கிழலையேபோன்று இராவணவதத்தைக்கோரிய உனது மனோதத்தை நிறைவேற்ற அவ்விராக்கதனேடுசென்று, அசோசி மரத்தடியில் சோகத்துடன் காலங்கழித்து,தனது பதிவிரதாதர்மத் தின் பலத்தினுல் அவ்வரக்களை கடும் பார்வை பார்த்துக் கொல்லக் கூடிய திறமையிருந்தும், தனது அளவற்ற அன்பிற்குரிய சகா வான பூரீ ராமபிரானுக்கே அவ்வரக்கனை கொன் ற பிரதா பமும் பெருமையும் சேரவேண்டுமென்ற ஒரு பேரவாக்கொண்ட ஜானகியின் மணவாளா' என்று பாடுவதிலிருந்று ஸ்திரி புருஷ தர்மத்தின் ஐக்கியமும், பெருமையும் வெளியாகிறது.
இராவணனும் பூர்வஜென்மத்தில் பெற்றவோர் சாபத்தின் வி மோசனம், சீதாப்பிராட்டியைத் தூக்கிச்செல்வதனுல் இராமபிரா னுக்குக் கோபமூட்டுவதும் அப்பரமபுருஷன்கையினல் மரணம டைந்துதனது ஆத்மஜோதியை இராமரது கையம்பினல் வெளிப்ப டுத்திக்கொண்டு பேரின்பமடைவதும் என்பதே. இதற்குச் சாத னமாயிருந்து பற்பல துன்பங்களையும் பாராட்டாது உதவிபுரிந்தது ஜானகியல்லவா? சம்சாரக்கடலைத்தாண்டி (முத் தி நிலை யை அடைய)ப் போவதற்கும் சிறந்த மரக்கலமாயிருந்ததும் சீதாப்பி ராட்டிதானே!
\ട്ലീ

Page 14
gagumpangmumnya சா த ன வ ய ர ம் . page,
مس- م-------------2 س---- nس--
(13-4-49-18-4-49)
இலங்கையில் சாதனுவாரம் முதன்முதலாகத் திருக்கேதீஸ் வரத்தில் விரோதிடு முதல்நாள் (13-4-49) புதன்கிழமை கஞ் சன்காடு பூரீ சுவாமி இராமதாசரின் பிறந்ததினத்துடன் ஆரம்பமா யது. இதை நடத்துவதற்குத் தென்னிந்தியாவிலிருந்து சாது பூநீ முருகதாஸ், பாலசுவாமி இராமதாஸ், சுகப்பிரமம் ஆகிய மூவரும் 12-4-49 செவ்வாய் இரவே கேதீஸ்வரம் வந்து சேர்ந்தனர். வரு டப்பிறப்பன்று கேதீஸ்வரநாதனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அத்தருணம் ஐஞ்நூற்றுக்கதிகமான அன்டர் கள் பங்குபற்றினர்.
சாதனுவாரம் நடைபெற்ற ஆறுநாட்களும் கிரமமாக காலை நாலுமணிக்கு திருப்பள்ளியெழுச்சியுடன் அன்பர் துயிலெழுங் தனர். 4-5 மணிவரை காலைக்கடன்கள் 5-6 மணிவரை யோ காசனப்பயிற்சி. 6-7 மணிவரை பாலாவியில் ஸ்ஞனம், 7-8 மணிவரை பஜனை, 8-9 மணிவரை காலை ஆகாரம், 9-11-30 மணிவரை புராணபடனம், சமயபாடம், சம்பாஷணைகள். 11-30 பி, ப. 3 மணிவரை மத்தியானப்போசனம் இளைப்பாறுதல். மாலை 3-5-30 மணிவரை உபங்கியாசம் மாஜல 5.30-6-30 மணி வரை மாலைக்கடன்கள். மாலை 6-30-8.30 மணிவரை பஜனை, மாலை 8-30-9-30 மணிவரை இராப்போசனம், மாலை 9.30-10 மணிவரை ஆத்மார்த்தீக சம்பாஷணைகள். இரவு 10-காலை 3 மணி
வரை நித்திரை.
பிரசங்கசாகரர் சுகப்பிரமம் தாய்மையின் தத்துவத்தைக் காரைக்காலம்மையார் சரித்திரமூலமும் சிவாபராதத்திற்குத் தந்தை யாயினும் தண்டிக்கப்பட வேண்டியவனே என்னும் உண்மைத் தத்துவத்தைச் சண்டேசுர நாயனர் சரித்திரமூலமும் அன்பின் தத் துவத்தைக் கண்ணப்பநாயனுர் சரித்திரமூலமும் விளக்கி விரிவுரை செய்தார்கள். -
பாலசுவாமி இராமதாஸ் அவர்கள் சண்டேசுர நாயனர் சரி தத்தை அத்திவாரமாக வைத்துக்கொண்டு கோயிலின் தத்துவங்

阳忍erä明d G奥恩rpurFü虽Lé5975@包77) }ä suum osoɛɲɔ ajië, Guifluui **

Page 15

சாதனவாரம் 209
gah என்பதுபற்றியும் கஞ்சன்காட்டுக்கு அருகேயுள்ள ராமநகரம் ஆனந்தாஸ்ரமத்தில் குருமூர்த்தம் கொண்டிருக்கும் சுவாமி பூீராம தாசர், தெலுங்குநாட்டில் விசேஷமாகப் பிரசித்கி பெற்றிருக்கும் பெரியாராகிய பத்தாசலம் ராமகாசர் ஆகிய இருவர்களது, சரி தைகள்கொண்டு ராமநாமமகிமை என்பது பற்றியும், இராமலிங்க சுவாமிகளின் சரிதையைக்கொண்டு சமரசம் என்பது பற்றியும் இன்னும் தாய்மார்களின் யோகசாதனை, எல்லாருங் வேண்டிய பிரார்த்தனை, ஜெபம் கியானம் என்பனபற்றியும் விள க்கி விரிவுரை செய்தார்கள்.
இனிய காட்சி யினிய நினைவுகள் இனிய பேச்சுடன் இன்னிய நற்செயல் தனிய கங்தை தவிர்ந்த சமாஸம்
புனித வாழ்க்கை பொருந்திய' வாரமே (சத்தானந்தர்)
சாத)ை
வாரத்தின் போது அதில் கலந்துகொண்ட அன்பர்கள் செய்துகொண்ட சங்கற்பங்கள்
1 தாய்மையாக உலகைக்காண பெரியார்களுடைய ஆசியா லும் கடவுளருளாலும் மனத்தைத் திடப்படுத்திக்கொள்ளுகி ருேம்.-4 அன்பர்கள்.
2 என்னிடமுள்ள முன்கோபத்தை குருநாதர் ஆசியாலும் அடி யார்களுடைய ஆசியாலும் நீக்குவதற்குத் தெண்டிக்கிறேன். ஒரு அன்பர்.
8 கிக்கமும் பிரார்க்கனேயைக் குருநாதருடைய ஆசிர்வாகக்கா லும் அடியார்களுடைய ஆசிர்வாதத்தாலும் கவருது செய் யத் தெண்டிக்கிருேம்.-மூன்று அன்பர்கள்.
4 பிறர் குறைபேசுவதைநிறுத்துவதற்கு குருநாதர்களுடைய வும் சத்சங்கத்துடையவும் ஆசியைவேண்டிநிற்கிருேம்,~இரு
அன்பர்கள்.

Page 16
5 பொய்பேசாமை, புறங்கூருமை, பயனில்சொல்லாமை, குண
s ங்கண்டு பேசுதல் இவை நிறைவேறக் குருநாதர்களுடைய
ஆசியை வேண்டுகிழுேம்பு-ஆறு அன்பர்கள்
ܘ܂ a. புகைத்தல், தேநீர், காப்பி முதலியன அருந்தல் ஆகிய வழக்
. a “..........................බ கங்களை இன்றுதொடக்கமாக நிறுத்திக்கொள்ளுகிருேம்"
ஆறு அனபாகள்.
தினக்குறிப்பு στ(1ρβ) வருடமுடிவில் குருநாதரிடம் சமர்ப்
. , . . . . . பிக்கிறேன்-ஒரு -೨)6ನ! ! Uff,
o o o . 8 o/q_LJITIT தொண்டுசெய்து யோகவாழ்க்கை நடாத்த உத்தே
' . . . . SeSAS པ77་ ತ್ರಿ ನೌT பிரமச்சாரியம்கொண்டுவாழச் சங்கற்பித்துள்
C U56 ୯୭ - ୬ / 601
ඊ. ஒரு GØTilff",
நற்கருமம் செய்யப் பின் வாங்கோம். கெட்டகுணங்கள் எல்
லாவற்றையும் ஒழித்துவிடுவதாகச் சங்கற்பித்துள்ளோம்
ဦg, " . .”
|க் கே ாருகிருேம்.--இரு அன்பர்
|୩ இL சயத ழைகரு ೧@T
èᏏ ᎧYᎢ ,
gy 9. ο)! ΤιρέΕ σο) 45ι 1 (FLITITTL Lij352or வெல்வதற்கு அஹிம்சை
- (Ο ο யையே ஆயுதமாகக் கொண்டு திண்டாமைப்பேயை கேக
سربرا பல் リr一ート/ | (Մ) வேன் ୭୯୬ – ୬ ଡି011-JIT • ।
ஆத்மஜோதியின் நற்கொள்கை எங்கும் பரவ இயன்றன செய்
- ് ്
t வேன்,-ஒரு அன்பர்.
 ݂ ݂s so؟ م |
கருணைப் பெருமானே Ꮺ5 Ꭷ0Ꭲ ᏭᏐ5Ꭿ- சுடரோனே
صر அருணுே தயம்போலெம் அறிவிற் பொலிவோனே
திருவார் குருநாதா சிவனேயென உள்ளம்
. ܩܣܗܿܘܡ݀ܩܢܩܚܫܩܗܿܘ ܠܐܘܣ» ------
-
歌
கந்தரனு பூதிபெற்றுக் கந்தரனு பூதிசொன்ன
வெந்ை தபரு ணுடியிருக்குநா ளெக்ாே ᎾᎢ Ꭲ• . {
-தாயுமான சுவாமிகள், !
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முன்தொடர்ச்சி
ജ
O C - சாதகற்குத் துணை. -
. • سي-- சுவாமி பூரீ ராம்தாஸ் அவர்களின் ஆங்கில நூல்களில் இருந்து திரட்டிய
"Guide to Aspironts" Grob 6) i Effolor QuoTцGuuufiЈЕН
(மொழிபெயர்ப்பு-லிசாகர்)
*
2. 6RSOT 65) 65) UL) (3 T
ܡܡܬܐwܙܘܘܘܼܗܗܪܗܢܝܗܝ
--
, (Y - - - மங்கிப்பே கும் வாழ்க்கைச் சித்திரத்தில் உள்ள பொருள்கள்
- o யாவும் மாறியும் மறைந்தும் போகக்கூடியவை. நாம் என்றும் ஐக்கியப்பட்டுள்ள இறைவன் ஒருவனே உண்மை.
. - வாழ்வின் வெளிவிஷயங்களிலிருந்து சுதந்தரத்தையும் சாந்தி யையும் தேடவேண்டாம். ஏனெனில் உன்னுள் உறையும் இறை
வனுேடு இசைந்திருக்கும்போதுள்ள மனத்திலேதான் உண்மைச்
கிறது. வாழ்வில் உள்ள ஒவ்வொரு துன்ப நிகழ்ச்
சுதந்த It is இரு சியும் உன்னை மேலும் மேலும் கடவுளை நோக்கச் செய்யட்டும்,
ܚܝܝܢ
இதனுல் எவ்வகையான வெளித்தா க்குதலும் உன்னைப் பா திக்க
மாட்டாது. முழுவலிமையோடும் நம்பிக்கையோடும் இறைவன் நாமத்தைப் பிடித்துக்கொள். குளிக்கும்ே ாதானுலும் தெருவில்
- - - நடக்கும்போகாலுைம் அடுக்களை வேலையின்போதானுலும் கச்சே
C) - , 《): e
ல் தொழில் ஆற்றும்போதானுலும் எந்தநேரத்திலும் இடைவி
- - -1 മ காமஜெபம் ரெப், 18 ೨||೧೫೨(೮) இதுவே வழி. இதை உறுதியாக நம்பி காமத்திடம் அடைக்கலம் புகு.
கடவுள் என்றுமுள்ள உண்மை. மனிதன் வழக்கமாக ஈடு . های به பட்டுள்ள எல்லாவற்றினும் அவன் அதிக உண்மை, உலகப்பே
() zo ●,。 றுகளில் மனிதன் ஆசைகொண்டிருப்பதினுல் தனது அழிவிலா உண்மையை அறியமுடிகிறதில்லை புலன்கள் தரும் இன்பங்களில்
- -
அவன் ஆழமாக அகப்பட்டிருப்பதால் கித்தியானந்த சாந்த நிலை
யின் உன்னத அனுபவத்தைப் பெறமுடிகிறதில்லை.
ஆனதால் அன்பனே! உன்னுடைய தெய்வக் கர்த்தாவோடு
உன் வாழ்வு இணைக்கப்படாவிடின் அது வீணனதே.
и வாழ்க்கையோ குறுகியது. அதில் 虎 அனுபவிக்கும் இன்
பங்கள் மாறிமறைவன. இந்நிழல்களைத் தொடர்வதில்ை இருள்
- w உண்மைப்பொ ருளே உணரமுடிவதில்லை.
புறநிலைகளில் இன்பத்தைக் தேடுவ கில்ை மனிதன் துன்பப்ப கிருன், அவன் உள்ளம் ) வாவும் பூ ரனநிலையைக் கொடுக்கக்
th. (9. LL. இய ல் (0)) ) || களுக்கில்லை
உன்னுடைய மைேகிலேயைப் பொறுக்கே இன்பமோ துன் அமைந்திருக்கிறது. வெளிநிலைமைகளையும் தன்மைகளை

Page 17
212 ஆத்மஜோதி
f களையும் பொறுத்தல்ல. ஆசைகளினல மனம் தூண்டப்பட்டு பொருளுக்குப் பொருள் தாவிக்கொண்டும் அவைகளின் உடை மைக்கும் அனுபவத்திற்கும் அவாவிக்கொண்டு துன்பமேயான அமைதியின்மையில் சஞ்சரிக்கிறது, அவைகளை உடைமையாக் கியபின் கவலையும் கிலேசமும் வருகிறது, அதில் நீ அடையும் அற்ப சந்தோஷம் பரந்த இருட்டில் இமைக்கும் சிறு வெளிச்சத் தைப்போலுள்ளது. மறுகணம் அது அணைந்து உன்னை இன் னுங் கூடுதலான இருளுக்குள்ளாக்கும். நீ அவாவும் பொருள் அழியக்கூடியது மாறக்கூடியது. இதை அறி. ஆகையால் நிக் தியா சந்தம் அதில் கிடைப்பது எங்ஙனம்? ஆகவே கிலையற்ற சதாமாறுகின்ற உருவங்களிலும் பொருள்களிலும் மனஞ் சஞ்சரிக் கும்போது துன்பத்தையே அனுபவிக்கிறது. ஆனபடியால் உனது நோக்கை உள்முக்மாக்கி கடவுளை அங்கே காண். அதுவே சகல இன்பத்திற்கும் சாந்தத்திற்கும் இருப்பிடம்.
ஆசை அலைகள் எழாத உள்ளத்திலேதான் சாந்தம் உள்ளது அதிருப்தி, குழப்பம் துயர் இவைகட்குக் காரணமாய் உள்ளத்தில் பதித்திருக்கின்ற சகல ஆசைகளையும் பூரணமாய் அடக்குவதே உள்ளத்தின் அவா. ஒன்றும் வேண்டா அமைதி-தானே யானஅமைதி-கிரந்திர அமைதி-அமைதி-அமைதி-அ  ைமதி-இதுவே உள்ளத்தின் வேட்கை. இந்த நித்திய அமைதியே உனது உண்மை நிலை, இது அடைதற்குரிய கிலையோ உண்மையோ அல்ல. இது அனுபவிக்கப்படவேண்டியது. ஏனெனில் நீ என்றும் அதுவாயி ருக்கிரு?ய்,
மாறுபடக்கூடிய அழியக்கூடிய பொருள்கள் எல்லாம் அமை தியைக் கொடுக்கமாட்டா, உனக்கு அமைதி வேண்டுமாயின் உனது கித்திய மூலப்பொருளான இறப்பில்லாத மாறுபாடில்லாத - உண்மைப்பொருளுக்கு மனத்தைத் திருப்பு. உறுதியான தாரணை தியானத்தால் எண்ணத்தை உண்மைப்பொருளோடு இசைத்துக் கொள். இறுதியாக அந்தத் தெய்வ கிலைக்கு அதை உயர்த்தி மாறுபாடறியா கித்திய சாந்தத்தைப் பெறு. -
ஆயிரம் வருஷங்கட்கு நாம் ஜிவிக்கலாம். உலகில் விரும் பியதெல்லாவற்றையும் நாம் பெறலாம். ஆனல் உலகப்பொருள் கள்மேலுள்ள ஆசைமடியும்வரை நாம் சந்தோஷமாய் இருக்க இய (0)/T 27,
ஆத்மானந்தத்திற்காக நீ மேல்மாடியில் இருந்தாலென்ன அல்லது ஊர்சுற்றும் ஆண்டி ஆனல் என்ன மனத்திலும் புத்தியி லும் எழும் ஆசைகளை ஒழித்து அவ்வானந்தத்தை அனுபவி.

க ந் த ர னு பூ தி.
(இதுவரை எத்தனையோ முருகபக்தர்கள் கந்தரனுபூதிக்கு விரிவுரை செய்துள்ளார்கள். ஒவ்வொருவரும் அனுபூதியில் எவ் வளவு அனுபூதியடைந்தார்களோ அதற்குத் தக உரையும் இருங் தது. இன்று 'முருகா' என்ற திருப்பெயரையே தாரகமாகக் கொண்டு இலங்கையிலும் இந்தியாவிலும் வீழ்நாள்படாது முருக நாமபஜனை செய்துவரும் சாது பூரு முருகதாஸ் அவர்களை அறியா தவரிரார்.அவர்அனுபூதியில்அனுபூதியடைந்தமையைத்திருத்தணி யில் வருடந்தோறும் மார்கழி மீ 31-ந்தேதி நடக்கும் அனுபூதிப் பஜனை ஒருமுறை கேட்டவர் அறிவர். அத்தகைய பெரியார் கங் தானுபூதிக்குப் புது அமைப்பில் விரிவுரை எழுதி ஆத்மஜோதியில் தொடர்பாய் வெளியிட மனம் இசைந்த சந்தோஷத்தை ஆத்ம ஜோதி அன்பர்களுக்கு அன்புடன் அறியத்தருகிருேம்.)
காப்பு 1 நெஞ்சக் கனகல் லுநெகிழ்ந் துருகத் 2 தஞ்சத் தருள்ஷண் முகனுக் 3 கியல்சேர்
செஞ்சொற் புனைமாலை சிறந்திடவே
4 பஞ்சக் கரவான பதம் பணிவாம்.
(2) ஷண்முகா சரணம் என்று தன்னை அண்டின அடியா ரின் உள்ளம் குளிர அருள்புரியும் அண்ணலுக்கு (1) கல்லிலும் கடினமானதும் பெரியதுமான நெஞ்சம் நெருப்பின்முன் மெழுகு போல் உருகும்படி செய்யவல்ல (3) அழகும் அன்பும் நிறைந்த சொல்லாலான பாமாலை சிறந்கதாகவும் அவனுக்கு உகந்ததாகவும் விளங்க (4) ஐந்து தொழிலுக்கும் மூலனன சித்திவினுயகன்பாதம் பணிவோமாக. (பணிவேன்)
குறிப்பு.
விசித்திர வேலைப்பாட்டுடன் வேலைசெய்யும் பூக்கடைக் காரணி டமும் கூட நம் நாயக நாயகிகளுக்கு ஏற்றவாறு மாலையோ செண் டோ கட்டச்சொல்லிச்சரிபார்த்து சங்தேகமற்றபின் சேரவேண்டிய இடத்தில் சேர்க்கிருேம். (அதுபோல்) ஸர்வத்திற்கும் ஆதிகாரண ணுன விநாயகக்கடவுளே நம் உரிமை ாாயகினை முருகன் அழ குக்கு ஏற்றதான சொற்பாமாலையில் அன்புத்தேன் ஊற கட்டித்த ரும்படியும் கட்டிய பாமாலை சிறந்ததாக விளங்கவும் விநயத்துடன் அவன்தாள் வணங்கி வேண்டுகிருேம். (வேண்டவேண்டும்).

Page 18
இ"
திருக்கேதீவிஸ்வர ஆலயத் திருப்பணி.
صيبسسسسسسس سيبيسيد حسنه 35 كيتين خمسة
s
இந்தத் திருப்பணிச்சபையின் பிரதிநிதிகள் (22-4-49) கண்டி வந்து, அங்கே திருவாளர் c. கல்யாண சுந்தரன் அவர்களின் தலைமையில் قهfة-tp_tLف அகில இலங்கை ஒவசியர்கள் சங்கத்தினருக்கு திருக்கேதீஸ்வர ஸ்தலத்தின் பழம் பெருமையைக்குறித்தும், சைவ சமயிகள் அதன் புனருத்தாரணத்திற்காகச் செய்யவேண்டியுள்ள கடமை பற்றியும் எடுத்துரைத்தனர். தலைவரும், திருவாளர்கள் N. A. வைத்தியலிங்கமும் K. வேலுப்பிள்ளையும் தங்கள் சங்கக் தின் ஆதரவை ஆர்வத்துடன் வெளியிட்டனர்,
அதேதினம் மாலை ஆறுமணிபோல் கண்டி இந்துப் பிரமுகர்
பலர் மேற்படி பிரதிநிதிகளுடன் கலந்துகொண்டு இச்சிவதொண் டில் ஒத்துழைப்பதற்காக ஒர் கிர்வாகசபையை நியமித்தனர்.
திருப்பணி நிதிக்கணக்கு,
சென்றமாச வெளியீட்டின்படி ஆறு அபிமானிகள் மொத்தத் தொகை: 6006-00
7 திரு. சு. சிவபாதசுந்தரம் அவர்கள் 2500.00
(திருப்பணிச் சபைத்தலைவர்) 8 திரு. W. A. கங்தையா அவர்களும்
அவர் பாரியாரும் 1001-00 9 திரு. க. இராமச்சந்திரன் அவர்களும்
அவர் பாரியாரும் 500-00
10 திரு. அ:சிற்றம்பலம் அவர்களும் அவர் பாரியாரும் 500.00 11 திரு. C. S. துரையப்பா அவர்களும்
அவர் பாரியாரும் 500-00 2 திரு. வ. க. முத்தையாபிள்ளை அவர்களும்
சகோதரர்களும் 1001-00 13 டக்றர் ச. இராசேந்திரம் அவர்களும்
அவரது பாரியாரும் 1001-00 14 திரு. செ. சரவணமுத்து அவர்கள் 1001 00
4010-10

திருக்கேதீஸ்வர ஆலயத்திருப்பணி 21
முன்பக்கப்படி 14010.00 15 திரு. S. K. விஜயரத்தினம் அவர்களும்
அவரது பாரியாரும் 1001-00 16 அ. பாலசுந்தரம் அவர்களும் பாரியாரும் 236-00 மொத்தம் 15247.00 (திரு. சு. சிவபாதசுந்தரம் அவர்கள் இத்திருப்பணிக்கென சில வருஷங்கட்கு முன்னர் ரூ. 3000/- உதவியுள்ளனர்).
வேகமுடன் ஆகமு மானுய் போற்றி
வேதாந்தச் சித்தாந்தப் பொருளே போற்றி குதமுனி புகழ்ந்துரைத்த சிவனே போற்றி
துவட்டாவின் கலிதீர்த்த துரையே போற்றி கேதுவந்து பூசித்த கோவே போற்றி
கேட்டவரம் ஈந்தருளுங் கையா போற்றி மாதொருபா கத்சமர்ந்த மணுளா போற்றி
மாதோட்ட மாமணியே போற்றி போற்றி.
.(2) . به سه
மக்கட்கு அறிவுகரை
மக்களே! நீவிர் உம் கண்முன்னே நேற்று உயிரோடிருந்தவர் இன்று இறக்கக்கண்டும், அதனை யுணராது வீணே காலம் கழிக் கின்றீர்.
இன்றுள்ளார் நாளை இல்லை யெனும் பொருள் ஒன்றும் ஒராது உழிதரும் ஊமர்காள். 198.9
艇 擬 磁 மக்களே! நீங்கள் கடவுளை நினைத்தால் உங்கட்கு அறம் பெருகும்; பொய்த்தன்மை நீங்கும்; அறிவு வளரும்,
பூரியாவரும் புண்ணியம் பொய்கெடும் கூரிதாய அறிவுகை கூடிடும். 1911
潮 巡 嫩 மக்களே! உங்கள் வாழ்நாள் கழிவதன்முன்னமே கடவுளை உங்களால் இயன்றவழியில் வணங்குங்கள்.
காலமான கழிவதன் முன்னமே ஏலுமாறு வணங்கி கின்றேத்துமின், 157.9

Page 19
*۔
W
செய்தித் திரட்டு.
சாதனுவாரம் இலங்கையில் முதன் முதல் சாதனுவாரம் திருக்கேதீஸ்வரத்தில் 13-4-49-18-4-49 வரை நடைபெற்றது.
சுவாமி பூரு இராமதாஸரின் ஜெயந்தி ஆனந்தாஸ்ரமம் சுவாமி பூரு இராமதாஸர் அவர்களின் ஜெயந்தி வெள்ளவத்தை சைவ மங்கையர்கழக வித்தியாசாலையில் 24-4-49ல் நடந்தது. பூரீ முருகதாஸர்-பஜனை, பாலசுவாமி இராமதாசர்-இறைவன் காமமகிமை, சுகப்பிரமம் திரு. எஸ். இராமசாமி சாஸ்திரிகள்குருபக்தி, திரு. கே. இராமச்சந்திரன் குழந்தைகள்-பக்திப்பா டல்கள். செல்வி இராஜேஸ்வரி நாகலிங்கம்-குருதோத்திரம், பூரீமதி விவேகானந்தன்-தோத்திரங்கள்.
திருகாவுக்கரசு5ாயனர் குருபூஜை விழா ைெடி குருபூஜை விழா 23-4-49 சனிக்கிழமை தெல்லிப்பழை பாலர் ஞானேகய சபை ஆதரவில் காசிவிநாயகர் ஆலயத்தில் நடைபெற்றது. திரு. எம். எஸ். சிதம்பரப்பிள்ளை அவர்கள் நாயனுரின் சரித்திரம் பற் றிச் சொற்பொழிவாற்றினர்கள்,
சுவாமி விபுலானந்த அடிகளின் நினைவுமண்டபம் . டிை நினைவுமண்டபத் திறப்புவிழா 12-5-49 வியாழக்கிழமை அக் கரைப்பற்றில் நடைபெற்றது.
இந்தியாவிலிருந்து சாதனவாரத்திற்காக இலங்கை வந்த
மகான்களின் விசேட நிகழ்ச்சிகள்.
26-4-49-நாவலப்பிட்டி இந்துவாலிப சங்கம்-உபங்கியாசங்க ளும் பஜனையும் 27-4-49-கண்டி சைவமகாசபை-உபங்கியாசங்களும் பஜனையும் 29-4-49-கொம்பனித்தெரு பூரீ சுப்பிரமணிய சுவாமி கோயில்உபங்கியாசங்களும் பஜனையும்
3-5-49-வெள்ளவத்தை மாணிக்கர் வினுயகர் ஆலயம்
உடங்கியாசங்களும் பஜனையும் ܐ 6-5-49-நாவலப்பிட்டி இந்துவாலிபசங்கம்-கூட்டுப்பிரார்த்தனை 8-5-49-வதுளை சைவபரிபாலன சங்கம்-உபங்கியாசமும் பஜ
彝 னையும்
9.5.49-கற்றன் சைவமகாசபை-உபங்கியாசமும் பஜனையும்.

8 அன்பர்களுக்கு.
ஆத்ம ஜோதி சம்பந்தமாக கடிதம் எழுதும் அன்பர்கள் தயவு செய்து தங்கள் சந்தா இ ல க்கக்  ைதயு ம் குறித்து எழு தும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்ர்கள். 2 இந்தியாவிலிருந்து ச்ர்தா அனுப்பும் அன்பர்கள் தங்கள் தெளி வான விலாசத்துடன் பிறம்பான கடிதம் ஒன்றும் எழுதும் படி கேட்டுக்கொள்ளப்படுகின்ருரர்கள். 3 ஜோதியின் நோக்கத்திற்கு மாறுபடாதவகையில் மக்களுக்கு பயன்படக்கூடியதாக விஷயதானம் செய்வோரது விஷயங்க ளைச் ஜோதி மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ளும். இந்த மாசத்தில் அனுப்பப்பட்ட விஷயம் இங்கமாசத்திலோ அன்றி அடுக்க மார்க்கிலோ வெளிவந்துவிடுமென எதிர்பார்க்கிருக்கவேண் டாம் சில விஷயங்கள் ஆறுமாசத்தின் பின்னும் வெளிவரலாம், காங்கள் அனுப்பிய விஷயம் தேவையானேர் தகுந்த கபால் முத்திசையுடன் எழுதினுல் அவர்களுக்கு அவை திருப்பி அனுப்பிவைக்கப்படும்.
குங்குமம் பெண்களின் இனிய செந்தமிழ் மாகப் பத்திரிகை
தாய்மாரின் வாழ்க்கைக்கு ஒர் வழிகாட்டி ஒவ்வொரு குடும்பத்திலும் அவசியம் இருக்கவேண்
- டியதோர் சஞ்சிகை. ஆசிரியை எ ஸ் வி சா லா கூறி முரளி, பச்சையப்பன் ஹாஸ்டல் முேட், சென்னை 10
ഷൂിഖി'L.
அன்புடையீர்!
"சுகாஸ்ரம நித்திய பிரார்த்தனே'
என்னும் பாமாலையை விரும்பும் அன்பர்கள் அடியில் கண்ட விலா
ரத்திற்கு எழுதினுல் இலவசமாய் அன்பர்களுக்கு கபாலில் அனுப்
பப்படும். .
தங்கள் அன்பன்,
சு க த ஸ். சுகதாஸ்-சுகாஸ்ரமம்
Ly Gů u ř P. o. (சிக்கல் வழி)
தஞ்சாவூர் ஜில்லா, S Ry.
2.

Page 20
gi ed in the G. P. O. as Ne
|ANAмтндѕтRAмд
Kandy Road, Ch
ஆன்ந்தாஸ்ரம
புத்தகம் படம் கண்
கண்டிருேட், ச
இப்புக்கசு சாலையில் பலவிதம பெரியோர்களின் அாம்பொம்நாள் பகவான் சமணமகரிஷி, சுவாமி இ பாப், அரவிந்தகோஷ் இன்னும் அ
கங்கள் மிகவும் மலிவான விலைக்குப்
- எங்கள் வியாபார நோக்கம் அ
3 呜 காக வென்பதை அன்பர்கள் யாே
அன்புடன் வேண்டுகின்ருேம்,
ーran=李○ =f
2-3-49.
10 angl. jmr ஸ்தகங்கள் வடலூர் இராமலிங்க சுவாமிகள் வி சுவாமிகளும் நாவலரும் சுவாமிகள் சரித்திரமும் இந்துக்களு
மறைவும் ауларth சிதம்பர ஷேத்திர மகிமை பழனி ஷேத்திர மகிமை திருத்தணி ஷேத்திர மகிமை அதிர்ஷ்டம்- நல்லகாயம்
இன்றே எழு மணி அருள்சோ 3. பாவாமுத
சிதம்பரம்
கெளரவ ஆசிரியர்: க. பதிப்பாசிரியர் சா. முத்தையா, ஆத்மஜோதி நாவலப்பிட்டி, சாவன பிரவலில் பதிப்பித்
 
 
 
 
 

¥s Paper.
Book DEPOT
avakachcheri
புத்தகசாலே
ணுடி வியாபாரம்
ஒ படங்கள், கண்ணுடிகள் கள், சுவாமி சுத்தானந்தர்,
ராமதாஸ், அன்னை கிருஷ்ணு
னேகம் பெரியோர்களின் புத்த
பெற்றுக்கொள்ளலாம்.
37 iš 55 T-2) y Les மன்னேற்றத் திற் பருக்கும் அறியத்தருகிருேம். ம்மை ஆதரிக்கும் வண்ணம்
.. s)
அச்சிரமத்தொண்டன்,
வைபல நினைவாக
ਪ7
100 1 0 0 0苇0 0、0 O 120
08 Ol O 2 O 1000
துங்கள் தி ஆசிரமம் லிதெரு
- இாமச்சந்திரன்
கிலேயம், நாவலப்பிட்டி, கிலோன்,
*தது. 14-5:49, 2000 பிரதிகள்
ബ
3. . . .