கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1953.09.25

Page 1
తిశ99 6696@@@@@@@@@
அன்னை ଜିଏ
接@
← ←ෙට් බ්‍ර, H-69 බ්‍රෙෙෙෙෙෙෙද්
 
 

9-6-6-6-6-6-0 0-6-0 e o 0-0 0-0.
கு?ென L JO I UII II
පිංGO) • බ්‍රණ්ෆණ්ණ්ණංචුණ්ණ්ණ්ත්‍රී ලාංචු

Page 2
9ՏԼԸ
ஆத்ம ஜே தி
ஓர் ஆத்மீக மாத வெளியீடு
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன்ே
எல்லா உடலும் இறைவன் ஆலயமே - சுத்தானந்தர் சோதி 5 விஜயவடு புச ட டா கி பாசம் திகதி 1 | அடர் 11
I பொருளடக்கம் அன்னை േരഞ്ഞLIT) அஞ்சலி a - - - 281 அன்னையின் உன்னதபலத்தை உணருங்கள். - - - 282 நாமலிகித ஜெபயக்ஞம் (யாகம்) அல்லது எழுத்துமூலம் இறைநாமசெபம்பண்ணுதல். 283 காயத்ரி மந்திரமும் அதன் கருத்தும் - - e. - - - 287 பூரீராம தாரக மந்திரப்பெருமை - - - 288 பக்குவமும் குருவும் - - - 29忍 ஞானவாணி * * * ... 29.3 சிவயோகந் தரிசித்தசிவயோகசித்தர் ... - - - 2.94. பிரார்த்தனை 29 தியாகராஜரின் மைேவுறுதி - - 多 298 மனிதன் தன் வாழ்க்கையை உயர்த்தும் விதம் - - - 300 பொதுவணக்கம் - 301. கந்தரநுபூதியிலிருந்து ஒரு பாட்டு o og 302 சத்தி வணக்கம் - - - 305 செய்தித்திரட்டு
306
O wsஆத்ம ஜோதி * ஆயுள் சந்தா ரூபா 75/- * வருடசந்தாரூபா 3/ ஆத்மஜோதி நிலையம் நாவலப்பிட்டி (இலங்கை)
கெளரவ ஆசிரியர். க. இராமச்சந்திரன் 60 t. i. 9am of கொள்ளுப்பிட்டி, கொழும்பு
பதிப்பாசிரியர் நா. முத்தையா
ஆக்மஜோதிநிலையம் நாவலப்பிட்டி,
sa.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அன்னை கிருஷ்ணபாய் அஞ்சலி
——(OO)O)——
தென்கன் னடஞ்செய் சிவபுண் ணியத்தால், உன்னத மாய்வந் துலகில் இருள்கடி, முனிராம தாசரின் முளரித்தா ளடைந்து, இனித்துய குருநிலை எய்தினை போற்றி! அன்னவர்க் கன்னையாய் அருகினி லமர்ந்தே பன்னருஞ் சேவை புரிந்தனை போற்றி! மன்பதை முழுதையும் மக்களாய்க் கருதி
உன்செல்வர் பாசம் உதறினை போற்றி!
இன்னு செய்தார்க் கினியவே செய்வதில் தன்னிக ரில்லாத் தற்பரை போற்றி! ஒதா துணர்ந்த மூதறி வுடனே, கீதை போதிக்குநிஷ் காமிய கர்மப் பாதையை வாழ்வால் விளக்குவாய் போற்றி! ஆதர வில்லா ஹரிசனங் கட்கு மாதா வாய்ப்பணி புரிவாய் போற்றி! ஆனந் தாஸ்ரமம் அருள்நிலை யத்தில் ஞான மழைபொழி நாயகி போற்றி தன்பெருமை யறியாத் தனிப்பெரு மாட்டி உன்பெருமை உரைத்தல் எவர்க்கும் அரிதாம் ஓயாக் கவலையால் உளம் நைந் துருகிச் சேய்போல் வந்துன் சேவடி யடைந்து, நீயே கதியென நிற்கும் அன்பர்தந் தாயே! சிருஷ்ண பாயே போற்றி!

Page 3
அன்னையின் உன்னத பலத்தை உருைங்கள்!
நாம் இப்பொழுது காணும் உலகம் சக்தியின் கீழ் இயல்புகளோடு இணக்கமுற்ற மனிதர்களின் ஆதிகாரத்தில் பெரிதும் அடங்கி:ள் ளது. அவர்கள் மூலமாக அகந்தை, துரோகம், கொடுமை பரவி உல
கில் நாசமும் துன்பமும் மலிந்துள்ளன. இந்தப் பயங்கர அலையை வெல்வதற்கு, மனிதவர்க்கத்தில் உள்ளத்திலே உறங்கிக்கிடக்கும் பரா
சக்தியின் உன்னத பலத்தை எழுப்பவேண்டும்.
உலகில் நீதியும் சாந்தியும் நிலேபெற வேண்டுமென விரும்பும் அன்
பர்களே, எழுந்திருங்கள் உங்கள் உள்ளத்தே நில பெற்றுள்ள தெய்வ அன்னேயை உணர்ந்து, அவளின் ஒtயை உலகில் நிறைக்கும் ஆத் மீக இயந்திரமாகுங்கள்! அப்படியாகி, உலகெங்கும் அழிவு வேலையை ஆரம்பித்துள்ள இருட்சக்திகளே எதிர்த்துப் போராடுங்கள் அவற்றை வெல்லுங்கள்! -
சோம்பரோடு, ஒற்றுமையின்றிப் பலவீனராக இருப்பதற்கோ, உங்கள் பலத் ைத பயனற்ற போட்டி, பொருமைப் போராட்ட ங்கள், சச்சரவுகளில் வீணுகக் கழிப்பதற்கே இது சமயமல்ல, உங்கள் தெய்வீக இயல்பின் உன்னத நிலையில் நிலைத்து நின்று, உலக நாடக த்தை நடத்தும் மகா கட்ட&ளக் கிணங்கி, அவள் துணையை வேண்டுங்கள்! -
அன்பும் ஒற்று:ைம் மிளிரும் உள் த்திக்கrயுடைய தன் மக்கள் மூலம் உலகில் சாந்தியை நிலவச்செய்ய, தெய்வ அன்னே விழிப்போடு காத்திருக்கிருள். நித்திய வாழ்ைைடய குழந்தைகளே, அவளேச்சார் ந்து அவரிடமிருந்து ஒளியும் ஆற்றலும் பெறுங்கள்
&னக்கு வெற்றி a bடுவதாக!" &ತೆ 6ತೆ !!(?: உங்கள் லட்சிய வாக்காகுசு.
-சுவாமி இராமதாஸர்.
 
 
 
 

நாம லிகித ஜெப யக்ஞம் (யாகம்)
எழுத்து மூலம் இறை நாம
செபம் பண்ணுதல்.
பல்லாயிரம் வருஷங்களாகப் பழந்தமிழன் கையாண்டு வந்த முருகன் வழிபாட்டில் இச்சை, கிரியை, ஞானம் என்ற மூன்று சக் திகளும் ஒருங்கே அமைந்துள்ளன. இச்சக்திகள் மக்களிடம் அடங் இயுள்ள உண்மையை, நவீன உள நூலாராய்ச்சியாளர் இப்போது தான் ஏற்றுள்ளனர். நம்முள் ஒடுங்கிக்கிடக்கும் இம் மூன்று சக்தி களும் வெளிப்பட்டுத் தொழிற்ப்ட, நாதங்கடந்த நிலையை அடைய வேண்டும் என்பது தத்துவ சாஸ்திர முடிவு. அந்த நிலையை அடை வதற்கு வேண்டப்படுவது முறையான ஜெப, யோக, தியான வழி பாடுகளாகும். மனிதப்பிறவியின் விழுமிய நோக்கத்தை நன்குணர் ந்த தன்மை உதயமாகும்வரையில் எவ்விதசாதனையும்வலுப்பெருது சக்திகளின் எழுச்சிகளும் தீவிரமாகாது.
ஆத்மீகத்துறையில் சாதகர்க்கு உற்சாகம் ஊட்டவும், அநுபூ திப்பேற்றிற்கு ஒர் எடுத்துக்காட்டாகவும், பெண் உலகிற்கு ஒர்தில கமாகவும் இன்று விளங்குபவர் தூய அன்னை கிருஷ்ணபாய் ஆவர். அவரிடம் நாம் காணக்கிடக்கும் அன்பு அருள் ஆனந்தம், அறிவு ஆற்றல் அமைதி, முதலாய தெய்வ சம்பத்துக்களெல்லாம் மேலே நாம் எடுத்துக்காட்டிய இச்சை கிரியை ஞான சக்திகளின் ஒளியை அன்னர் பெற்றுள்ளாரென்பதை நமக்கு நன்கு விளக்குகின்றன. 1903-ம் ஆண்டில் அவதரித்த இந்த மங்கையற்கரசிக்கு இம்மாத மஹாளய அமாவாசைதினத்தன்று ஐம்பதாவதுவயது நிறைவாகின் றது. எனவே அவரின் இந்த ஆண்டு ஜெயந்தி விழா பொன்விழாவா கும். அன்னையின் தூய தியாக வாழ்வின் (சந்நியாச வாழ்வு) வெள் எளிவிழா 1955-ம் ஆண்டு கார்த்திகைமாசத்திலாகும். இவ்விழாக்கு றித்து அன்னேயிடம்விண்ணப்பம் செய்த அன்பர்கட்கு, அவர்களின் ஆத்மீக வளர்ச்சிக்காகவும் அவனியின் அமைதிக்காகவும் ஒர் அரிய சாதனை இயக்கத்தை தமது குருநாதரான சுவாமி இராமதாஜரின் ஆசியுடன் அருளியுள்ளார். அதுவே இங்கு தலையங்கமாகக்குறிக் கப்பட்டுள்ள இறைநாம செப வேள்வியாகும். இந்தச் சாதனை எவ்

Page 4
-284
க்குப் பெருமை பாராட்டும் அல்லது புகழ்கோரும் தன்மையில் அமையாமல், பொது நன்மைக்கே தோன்றிய இயக்கமாக நடை பெற வேண்டும் என்பதே அன்னையாரின் கோரிக்கை.
இக்கலியுகத்திற்குகந்த பக்தி சாதனைகளுள் இறை நாம ஜெபம் மிகவும் எளிய இனிய மார்க்கமாகும். அதைக்கையாண்டு அனுபூதி பெற்ற மஹான்களுள் தலைசிறந்து விளங்குபவர் சுவாமி இராமதாஸர். ராமநாம மகிமையை இருபதாம் நூற்ருண்டு உலகுக்கு விளக்கவே அவர் உடல் கொண்டு உலாவுகிருர் எனச்சுருக்கமாகக் கூறிவிட
லாம். ராமன், சிவன், விஷ்ணு, அல்லா, கடவுள் என்னும் சொற்
ளெல்லாம் ஒரே கருத்தையுடையன. ராமன்' என்ருல் தசரதகுமா ரன் என்று பலர் கருதிவிடுகின்றனர். இது ஓர் தப்பான அபிப்பிரா யம். சைவம், வைஷ்ணவம், சாக்தம் ஆகிய மூன்று மதங்களையும் ஒருமைப்படுத்தி நிற்பது ராமநாமம். இந்த உண்மையையும், எப் படி 'ராம' என்பது தாரக மந்திரமாய் அமைந்துள்ள தென்பதை யும் பூரீ சீதாராம சாஸ்திரியவர்கள் இம்மாத ஆத்மஜோதிக்கென விசேடமாக வரைந்துள்ள அரிய கட்டுரையில் காண்க. பலர் இது வரையில் அறிந்திராத தத்துவங்கள் இக்கட்டுரையில் அடங்கியுள் 6iᎢᎶᏡᎢ .
இனி எழுத்துமூலம் இறை நாமம் செபித்தல் என்பதைப்பற்றி யும் அதன் விதிகள் குறித்தும் சிறிது விளக்கங்தருவோம். பல்வகைப் பட்ட ஜெப சாதனைகளைப்பற்றி ஹிந்தி, வங்காளம், கன்னடம், மஹாராட்டியம் முதலாய வட நாட்டு மொழிகளில் பல நூல்கள் உள. சுவாமி சிவானந்தரின் முயற்சியால் ஆங்கிலத்தில் கூட சில நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனல் தமிழ் மொழியில் ஒன்றுமே கிடையாது. இப்பெருங்குறை காரணமாகவே மூன்று ஆண்டுக ட்கு முன் கதிர்காமத்தில் அன்பர்கள் சிலர் அகண்ட நாமசங்கீர்த் தனத்தை ஆரம்பித்தபோது, அதைப்பார்த்த, கேட்ட தமிழர்கள் அதின் உட்கருத்தும் நோக்கமும் விளங்காது மயங்கினர், வியப்புற் றனர். தெங்காட்டிலும் இக்குறையிருக்கவே செய்கிறது. ஆகை யால் விதிகளைச்சற்றே விபரமாக விளக்க வேண்டியது எமது கட மையாகின்றது.
இந்த நாம ஜெப வேள்விக்கு ஆசி கொடுத்த பெரியார்கள் குறி த்த இருபத்தைந்து மாதனல்லேக்குள் (1-10-53-31-10-55)குறை ந்தது இருபத்தைந்து கோடி மந்திரங்களாவது வரையப்படவேண்டு மெனத் தெரிவித்துள்ளார்கள். நாளொன்றுக்கு ஒவ்வொருவரும்
 

س-285--
200-மந்திரங்கள் எழுதுவதாக விரதம் கொண்டால் மாசம் ஒன்று க்கு ஒருகோடி மந்திரம் நிறைவேற 1660-க்கு மேற்பட்ட சாதகர் கள் தேவைப்படும். இத்தொகை பெரிதல்ல. முதியோர், இளைஞர், ஆண், பெண் என்ற வித்தியாசம் எதுவுமின்றி, நடைபெறும் சாத னையாகவிருப்பதால், ஒவ்வொரு குடும்பத்திலும் சராசரி நாலுபேர் சேர்ந்தால், 416 குடும்பங்கள் சேர்ந்து இவ்வேள்வியை முடிக்க லாம். தினசரி 200 மந்திரங்கள் எழுதுவதற்கு, எடுத்துக்கொண்ட மந்திரத்தின் நீளத்துக்குத் தக்கவாறு அரைமணிநேரம் முதல் ஒரு மணிநேரம் வரை தேவைப்படும்.
இந்த அரிய வேள்விக்குரிய நிபந்தனைகள் பின்வருமாறு:
(1) இந்த வேள்வி 1-10-53ல் ஆரம்பமாகி 31-10-55ல் முடிவடை
այլ h ,
(2) பங்குபற்ற விரும்பும் அன்பர்கள் தங்கள் பெயரையும் விலாசத் தையும் 1-10-58க்கு முன்னரேயே சுவாமி இராமதாஸருக்கு அறிவிக்கவேண்டும்.
(3) எழுதும் மந்திரம் “ஓம் பூரீராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்" ஆகவோ அல்லது குரு உபதேசமாகப்பெற்ற "நமசிவாய', *சரவணபவாய', 'நாராயணுய’ முதலாய மந்திரங்களுள் ஒன் ருக இருக்கலாம். எந்த மொழியிலும் எழுதப்படலாம். எண்ணி க்கை எடுப்பதற்கு வசதிப்படும்முறையில் வரிகள் நேராகவும், நாமங்கள் ஒரே கணக்காகவும், ஒவ்வொரு பக்கத்திலும் எழுத ப்படும் வரிகள் ஒரே தொகையினதாகவும் இருக்கவேண்டும்.
(4) உபயோகிக்கப்படும் கொப்பிகள் எடுத்துக்கொண்ட நாமத்தை தினம் ஒன்றுக்கு 200 ஆக மாசம் முழுவதும் எழுதுவதற்குப் போதியதாக இருப்பின் நலம்.
(5) மாச இறுதியில் கொப்பிகளைத் தனித்தனியாகவோ அல்லது ஒரு இடத்திலுள்ள அன்பர்களின் கொப்பிகளை ஒன்முகச் சேர் த்தோ ஆனந்தாசிரமத்துக்கு அனுப்பப்பட வேண்டும்.
(6) ஒவ்வொரு கொப்பியின் முகப்பில் எழுதியவரின் விலாசமும், நாமங்களின் எண்ணிக்கையும் குறிப்பிடப் பட்டிருத்தல் வேண் டும். இவை ஆங்கிலத்திலிருப்பின் விசேடம்.
(7) எழுதிய கொப்பிகளைத் திருப்பிப் பெற விரும்புவோர் வெள்ளி
விழா முடிந்த பின்னர், தபாற் செல"க்குரிய முத்திரைகள்
ஒனுப்பிப் பெற்றுக்கொள்ள சாம்.

Page 5
سری 286-سسسس |
இவ்வேள்வியால் பெறும் பலாபலன்வெறும் எண்ணிக்கையில் மாத்திரம் தங்கியிருக்கவில்லே. ஆதலால் பக்தி சிரத்தையுடனேயே நாமங்கள் வரையப்படவேண்டும்.
மேலும் விபரம்வேண்டுவோர் ஆத்மஜோதி ஆசிரியருக்கு GT (U) திப் பெற்றுக்கொள்ளலாம். ", "ز
(இந்த யாகம்பற்றிய மாதாந்த அறிக்கைகள் ஆனந்தாச்சிரமத்திலி
ருந்து வெளிவரும் WISION என்ற ஆங்கிலப் பத்திரிகையில் பிரிசுரி கப்படும். ஆத்மஜோதியிலும் அவை இடம்பெறும்.) "
சுவாமி இராமதாஸரின் விலாசம்:
A NA NO A SHARAM ANANDASHRAM FOST.
Wia-KANHANGAD
(S: INDA)
O 35 திவே றில்லை.
எடுப்பு . கதிவே றில்லே கடைய னெனையாள் கருணைச் சுடர்க் கண்ணனேயில் வேளை (ਉ)
- தொடுப்பு துதிசெய்யும் அன்பர் துயர்போக்கி இன்பக் கதிகாட்டும் ஞானக் கற்பக விளக்கே! (கதி)
... Փդ մւլ சங்கராத் ரிபுராங் தக.கைலே வாசா! சர்வபாவ நாசா, பர்வதசர் வேசா! மங்கைகெளரி நாதா வான்புகழும் போதா மைந்த னுக்குன் பாதம் சந்ததமும் தாதா! (கதி)
-பரமஹம்ஸதாஸ்ன்,
 
 
 
 
 
 
 
 
 

-287காயத்ரி மந்திரமும் அதன் கருத்தும்,
ஒம்பூர் ഖൈഖ: தத்ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி தீயோயோரு: ப்ரசோதயாத். என்பது காயத்ரி மந்திரம்.
பதவுரை:- ய: - எவன் 6: - நமது தீய: - நினைப்புகளை, ப்ரசோதயாத் = ஞான ஒளி பெற, அருட்சோதி பெற, உந்துகி
ருனுே அவன் வரேண்யம் - மிகவும் சிறந்த சவிது - சிவகுரி
யன், பரமாத்ம சூரியன்;
ஓம் - ஓங்காரமாயிருப்பவன், = மண்ணுலகு, சட உலகு புவ அந்தரிக்ஷம், நடுவு லகு, உயிருலகு ஸாவ = மேலுலகு, விண்ணுலகு, மனவுலகு, இவை யனைத்திலும் மேவி விளங்குவோன்; தத் = அந்த தேவ
ஸ்ய = இறைவனது பர்க: - அருட்பெருமையை தீமஹி: = தியா
னிப்போமாக!
விளக்கவுரை:-
கீழும் மேலும் நடுவும், உடல் உயிர் மனம் எங்கும் பரவி
ஓங்காரமாகி, சச்சிதானந்தமாகி, அனைத்திற்கும் மேலான சிவகுரி யன், சிவஜோதி; அருட் பெருஞ்சோதி இறைவன். அவ்விறைவன் நம் நினைப்புகளை ஞானவொளிபெற ஊக்குவான். அப்பரம்பொரு ளின் பெருமையைத் தியானிப்போமாக!
இதுவே காயத்திரியின் பொருள். தத்ஸவிது' என்பதற்கு சூரியன், நாராயணன், சிவன், பரமாத்மன் என்று அவரவர் கொள் கைக்கேற்றபடி பொருளுரைப்பர். அனைத்தும் அவரவர் உள்ளத்து றையும் அருளிறைவனையே குறிக்குமென்க. பெயர் வடிவங்களைப் பற்றி நமக்குக் கவலேயில்லே. இக்காயத்ரி மந்திரத்தை அனைவரும் உபாசித்துப் பயன்பெறலாம். சித்தசுத்தியுடன் ஜபிக்க வேண்டும், அவ்வளவுதான் வேண்டப்படுவது, நேயமாகிய தேரில் ஏறி, நினை வுற்று, தியானமுற்று, அருளுறவுபெற்று, மனத்தைமயக்கும் சகமா யங்களில் தோயாமல் வாழவேண்டும்,
-O-

Page 6
ميس 288 سم
நீராம தாரக மந்திரப் பெருமை
e--
 ̄-65ܚ ̄ ܢ ̄17
(நீ T. K. சீதாராம சாஸ்திரியார்.)
"யக்ஞாநாம் ஜபயக்ஞோஸ்மி" (ப. கீ. 10, 25) என்பது கண் ணன் அருள்வாக்கு 'அவிசொரிந்து ஆயிரம் வேட்டலிலும் ஆண் டவன் நாமத்தை உச்சரிப்பதும், மனனஞ்செய்வதும் பன்மடங்கு சிறந்தனவென்ற வுண்மையை வற்புறுத்தவே, அறம் வளர்க்க அவ னியிற்றேன்றிய அமலன் மேலே தந்துள்ள கீதா வாக்கியத்தில் “வேள்விகளுள் யான் ஜபமென்னும் வேள்வியாக விருக்கிறேன்" என்று கூறியுள்ளான். இறைவனது நாமஜபமே சிறந்த வழிபாடெ ன்பதை நாயன்மார்களும், ஆழ்வார்களும் தங்கள் பாசுரங்கள்தோ றும்வற்புறுத்தியுள்ளனர். 'நற்றுணையாவது நமச்சிவாயவே'என்கி ன்ருர் அப்பரடிகள் நற்றுணையாகப் பற்றினே னடியேன் நாராய ணுவென்னும் நாமம்’ என்பது திருமங்கை மன்னன்திருவாக்கு.
இறைவன் நாமத்தை இரண்டுவிதமாகச் செபிக்கலாமென்று சாத்திரங்கள் கூறுகின்றன. ஒன்று, 'உச்சை8” என்ற உரத்துச் சொல்லும் முறை, மற்றையது உபாமசு" என்ற மெளனமாக மன த்தில் செபிக்கும்முறை, இவ்விருமுறைகளுங்கையாளப்படும்போது இறைவன் இர ண் டு தனிப்பட்ட கிலேகளிற் கருதப்படுகிருன், மெளன. செபத்தின்போது, அவன்தந்தையாக, பரஞானத்தின் திரு வுருவாகப் பாவிக்கப்படுகிறன். அந்த நிலையில், உள்ளத்தின் ஒவ் வொரு அசைவையுங்கூட உணருஞ்சக்தி அவனுக்குண்டு. உரத்து நாமமுச்சரிக்கப்படும்போது ஆண்டவன் தாயாம் நிலயையடைந்து விடுகிருன். தாயென்றல் அன்பின், அதாவது உணர்ச்சியின் வடி வமல்லவா? உணர்ச்சியைக் கவருவதற்கு உரக்க உச்சரித்தல் உத
வுகிறது. ஆன்மா துன்பக்துக்குள்ளாய்த் தவிக்கும்போது, ஆண்ட
வன் நாமத்தை வாய்விட்டுச் சொல்லுவதின்மூலம் அமைதியைப்பெ றுகிறது. பிள்ளைகளுக்குத் தந்தையைத் திருப்திப் படுத்துவதிலும் பார்க்க தாயைத் திருப்திப் படுத்துவது மிகவும் இலகு. ஒரு தரம் அம்மா’ என்று வாய்விட்டழைப்பதாலேயே உணர்ச்சி வழிப்படும் தாய் உச்சிகுளிர்ந்து விடுகிருள். இந்தவுலகியலேயே, உலகத்தந்தை யும் தாயுமான கடவுளிடத்திலும் காணப்படுவதாக ஆன்றேர் கற்
 
 
 

.289
பனை செய்துள்ளனர். ஆனல், உண்மையில், பரம்பொருள், உய ர்திணை அஃறிணைப் பாகுபாட்டிற்கும், ஆண் பெண்ணென்னும் பாற் பாகுபாட்டிற்கும் அப்பாற் பட்டதென்பதுமெய்ஞ்ஞானியர்
கண்டுள்ள பேருண்மை."
சைவ உபநிஷத்துக்களுள் ஒன்ருகிய பஸ்மஜாபலோபநிஷத்தில் இரண்டு சிவமந்திரங்கள் கூறப்பட்டுள்ளன. ஒன்று ஆறெழுத்தா லான பிரணவத்தோடு கூடிய பஞ்சாட்சரமான “ஓம் நமசிவாய என்பது; எட்டெழுத்தான “ஓம் நமோ மஹாதேவாய” என்பது மற்றையது."ஷடக்ஷரீ அஷ்டா(கூஷி)ரோ வா சைவோமந்த்ரோஜப யே? என்பது உபநிஷத் வாக்கியம். (மந்திரங்களின் எழுத்தெண் ணிைக்கையில் மெய்யெழுத்துக்களை நீக்கிவிடுவது இந்துமதக்கொ ள்கை) இவற்றுள் ஆறெழுத்தான பிரணவத்தோடு கூடிய பஞ்சா ட்சரத்தை மௌனசெபத்திற்கும் அஷ்டாட்சரமான “ஓம் நமோ மஹாதேவாய” என்பதை உரத்துவாய்விட்டுச் செபிப்பதற்கும்ஆன் ருேர் பயன்படுத்தி வந்துள்ளனர், இன்றைக்கும், தமிழ் நாட்டிலே, சாத்திரமுணர்ந்த சைவப்பெரியார்கள், இறைவன் நாமத்தை உரக் கச் சொல்ல வேண்டிய விடங்களில் "மஹா தேவ" என்ற நாமத் தையே வாய்விட்டுக் கூறுவதைக் கேட்கலாம். காமசங்கீர்த்தனத் தின்போதும் நாமெல்லோரும் சேர்ந்து சொல்லும் மந்திரம் 'ஹர ஹர மகா தேவ" என்பதே. எனவே, இது காறுங் கூறியவற்ருல் பஞ்சாட்சரப் பரம்பொருளான சிவத்தையும், அஷ்டாட்சரம் சக்தி யையும் முறையே குறிக்கின்றனவென்பது பெறப்படுகின்றது.
இனி, இறைவனுக்கு இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி, போகசக்தி, என நாலுசக்திகள் உள்ளனவென்பதும், அவைகளுள் முன்னையவிரண்டும் வேருகப் பிரிக்கப் படாதவையென்பதும், பின் னைய விரண்டு சக்திகள், பிரிக்கப்பட்டுத் தனி முகூர்த்தங்களாகத் திருமால், உமையென்று வணங்கப்படுவதும் சைவ சமய சாத்திரங் களிற் கண்டுள்ள உண்மைகளாகும். திரு மால் கிரியாசக்தியும், உமையம்மை போக சக்தியுமாவார்கள். திருமால் சிவத்தின் சக்தி யென்பதைத் திருநாவுக்கரசர் பெருமான் 'அரியலாற் தேவியில்லே ஐயன் ஐயாறஞர்க்கே” என்ற தமது தேவார அடிகளில் வற்புறுத்து கின்ருர் இக் காரணத்தால், திருமாலுக்குரிய மந்திரமான 'ஓம்
நமோ நாராயணுய” என்பது எட்டெழுத்துடையதாய், அஷ்டாட்
சரமாயிற்று. இதைவிட'ஹிறீம் நம:சிவாய' என்ற சக்தி பஞ்சா
ட்சரமும் வேருகவுண்டு,

Page 7
م-90%-سی
ஆகவே சிவமந்திரமான பஞ்சாட்சரமும், சக்திக்கும், திருமா லுக்குமுரியதான அஷ்டாட்சரமும் சேர்ந்துபதின்மூன்றெழுத்துக்க ளாகி திரயேதசாட்சரமாகின்றது. இந்தச் சேர்க்கையைக் குறிப்பத ற்கே, சமரச சன்மார்க்க நெறிகண்ட பெரியார்கள், இரண்டு மந்தி ரங்களினதும் பிரதான வெழுத்துக்களான பீஜாட்சரங்களை ஒன்று சேர்த்து, 'ராம ' என்ற மந்திரத்தை உருவாக்கினர். அதன் விளிய ருவமே'ராம”என்பது, இதைவிட்டு, 'ராம” என்பது தசரதன் மக கிைய மனிதனைக்குறிப்பதென்றும், அது வைணவர்க்கு மாத்திரமு ள்ள மந்திரமென்றும் கூறுவது சிறிதும் பொருத்தமன்று. இராமன் சரிதையை முதன்முதலெழுதிய வான்மீகியே நாரதராலுபதேசிக்கப் பட்ட "ராம நாமத்தைச் செபித்ததனுற்ருன் வேட்டுவ நிலையினின் றும் திருந்தி முனிவரானரென்று இராமாயணமே கூறுகின்றது. மேலும், வால்மீகி, இராமாயண காலத்தவர் என்பதும் இராமாயண த்திலேயே காணக்கிடக்கின்றது. இதிலிருந்து இராமன் உலகத்திற் ருேன்ற முன்பே; ராம நாமம் மந்திரமாகச் செபிக்கப்பட்டு வந்த தென்பதை ஒருவாறுஊகிக்கலாம். இத்தகைய 'ராம' மந்திரத்தை பதின்மூன்றெழுத்தாக்கி 'பூரீராம ஐய ராம ஜய ஜய ராம' என்று விரித்தும், ஆன்ருேர் செபித்துவருகின்றனர்.
இக்கிலேயில், பீஜாட்சரமென்றல் என்ன? அஷ்டாட்சரம், பஞ் சாட்சரம் ஆகிய மந்திரங்களினின்றும் முறையே "ரா'வும் மகார மும் ஏன் பீஜாட்சரங்களாக கொள்ளப்பட்டிருக்கின்றன? மற்றை யவெழுத்துக்கள் பீஜாட்சரங்களாகாவா? சிவத்தைக்குறிக்கும் பீஜா ட்சரமான மகாரம் பின் வைக்கப்பட்டுள்ளதன் காரணமென்ன? என்ற பலவகைஜயங்கள் எழுகின்றன.
முதலாவதாக, பீஜாட்சரங்கள் அல்லது பிரதானவெழுத்துக்களென் ருல் என்னவென்பதை ஆராய்வோம். ஒருசொல்லிலிருந்து எந்தவெ ழுத்தைவேருகப்பிரித்து எடுத்தால்,புதிதாக ஏற்படும்சொல், தொட க்கத்திலிருந்தகருத்திற்கு நேர்மாறனகருத்தைத்தருமோ, அந்தவெழு த்தேபீஜாட்சரம் அல்லதுபிரதானவெழுத்தாகும்.பிராணிகளில் ஆண் பெண்கள் உடலமைப்பில் ஒன்ருகவிருப்பினும் அவற்றை வேறுபடு த்தும்குறிகள் போல இப்பீஜாட்சரங்கள் அமைந்துள்ளன. இக்காரண ம்பற்றியே, இவை பீஜாட்சரங்கள் என்ற பெயரைப் பெற்றனபோ லும் இதஅளவையின்படி"நமசிவாய'என்பதில்மகாரத்தையெடுத்து விட்டால், நன்மையே வடிவான இறைவனுக்கு வணக்கம் என்ற
 
 
 

سس-291
கருக்திற்குமாருக, நசிவாய' என்றுஆகி"சிவனுக்குஅன்று'மங்களத் திற்கு அன்று' என்ற கருத்தைத்தருகின்றது. மற்றைய வெந்தவெ முத்தைப் பிரித்தெடுத்தாலும், புதிதாகவேற்படுஞ்சொல் எழுத்தின் கூட்டமாயமையுமேயொழிய எவ்விதகருத்தையுந்தராது. இதேபோ ன்று, அஷ்டாட்சரத்திலிருந்து ரா'வை எடுத்து விட்டால் ந அய நாய'(வடமொழியில் ரகரத்திற்குப் பிறகுவரும் நகரம் னகரமாகும்) என்ருய் இருப்பிடத்திற்கு அன்று வீட்டிற்கு அன்று முத்திக்கு அன்று' என்ற விபரீதக்கருத்தைதரும். 'ஓம் நமோ நாராயணுய' என்ற மந்திரம் சகல சிவராசிகளுக்கும் இருப்பிடமான இறைவனு க்கு வணக்கம்' எனப்பொருள்படும். திருமாலேப் பரந்தாமன்'என் றழைப்பதும்இக்காரணம்பற்றியே. திருமால் வணக்கம் சக்திவழிபா ட்டோடு கூடியதென்பதையும் குறிப்பாகவுணர்த்துகின்றன. இதே கருத்து திருமால் உந்திக்கமலத்தில் பிரமனைத் தோற்றுவித்து அவன்
மூலம் உலகைச் சிருஷ்டித்தான் என்னும்புராணக்கதையிலும் விள ங்கக்கிடக்கின்றது.
அடுத்தபடியாக ராம நாமத்தில் "ரா'முன்னும் மகாரம் பின் னுமாய் வைக்கப்பட்டிருப்பதற்கும் காரணமுண்டு. பகவான் சங் கரர் தமது செளந்தர்யலகரி'யில் சிவ சக்த்யா யுக்தோ யதிபவதி சக்த? ப்ரபவிதும்' என்று கூறியுள்ளார். சிவம்தொழிற்பட்டு ஆற்ற லோடு கூடியிருக்கிறதென்றல், அது சக்தியோடு கூடியிருப்பதே அதன் காரணம் என்பதே அதன் தாத்பரியம். சக்தியின் காரியமான பிரபஞ்சத்தைக் கொண்டுதான் மனம் வாக்குக்கெட்டாத சிவத்தை யுணர முடியும். இந்தவுண்மையை உணர்த்துவதற்கே, தெய்வப்பு லவரான திருவள்ளுவர் 'ஆதிபகவன் முதற்றேயுலகு என்று உல கத்தை முதலாக வைத்துக்கூறுகின்றனர். இக்கருத்தை யறிவுறுத் தும் நோக்கத்தினுல், சமயப்பெரியோர்கள். இறைவன் சக்தியோடு கூடியிருக்கும் நிலையைக் குறிப்பிடும்போதெல்லாம் சக்திகாமம் முன் கைவும், இறைவன் நாமம் பின்னகவும் வைத்துக்கூறும் வழக்க த்தை ஏற்படுத்தியுள்ளனர். 'பார்வதி பரமேசுவரன் “இலட்சுமீ நாராயணன் முதலிய நாமங்கள் சிறந்த வுதாரணங்களாகின்றன. ஆகவே ராம நாமத்திலும், சக்தி மந்திரமான அஷ்டாட் சரத்தின் பீஜாட்சரமான "ரா' முன்னும் சிவமந்திரமான பஞ்சாட்சரத்தின் பீஜாட்சரமான மகாரம் பின்னுமாக வைக்கப்பட்டுள்ளது.

Page 8
-292
எனவே ராம நாமம், சைவம், வைணவம், சாக்தமாகிய, மூன்று பதங்களையுமொன்று சேர்க்கின்றது, எந்தக் கிளேச்சமயத் தைப் பின்பற்றினுலும், இந்துக்கள் ஒன்றுசேர ராமதாரக மந்திரம் வாய்ப்பளிக்கின்றது.
Lమేధావి பூரீராம் ஜெயராம் ஜெயஜெயராம் பூரீராம் ஜெயராம் ஜெயஜெயராம்
ഷൂജയ്പൂ நாரா யணஓம் நமச்சி வாயவெனும் சார மானநல்ல தாரக மந்திரம் (பூீராம்)
653)
நாரதர் வால்மிகி முனிவர் நவின்றது ஆரமு தாயன்பர்க் கானந்த மீன்றது (பூநீராம்) காமாதிக் கள்வரைக் கட்டுடன் ஒழிப்பது நேம நிஷ்டையுள்ள நெஞ்சினிற் செழிப்பது, (பூரீராம்)
பக்குவமும் குருவும்.
குருவையடையவேண்டுமென்று கவலேப்படவேண்டியதில்லை. உரிய பக்குவத்தைப் பேணிக்கொண்டிருந்தால், குருவை எதிர்ப்பட லாகும், அதுவரை உள்ளங்கனிய வேண்டும். *,
காமம், சினம் பொய், வஞ்சகம் முதலியவற்றை நீ இன்னும் கைவிடவில்லே மனமே! உனக்கு ஒரு குருவேண்டும் என்கின்ருய். உனக்கு நாணம் என்பது சிறிதும் இல்லேப்போலும்!
t
குருவேண்டும் என்று கண்கண்டவர்களேயெல்லாம் சரணடை யாதே அவர்களில் உன்னேவிட இழிவானவர்களும் உளர். தமக்கே ஒழுகவேண்டும் நெறிதெரியாமல் இருக்கும் பொழுது பிறர்க்குஉப தேசிக்கப்பலர் முன்வருகின்ருர்கள். ஞான நெறியை ஒர்ந்து அறி ந்தவர்கள், அதனேக்கடைப்பிடித்து வருபவர்கள், ஞானத்தைஅடை ந்தவர்கள் என்னும் இவர்கள் தம் தம் நிலக்கு ஏற்ப உபதேசிக்குங் தகுதி உடையவர்கள் ஆகுல் ஞானத்தை அடைந்தவர்களுடைய
உபதேசமே அனுபவத்துக்குச் சிறந்தது. 。 ് ' , ' ஓர் அறிஞர்.
 
 
 
 
 

: ஞானவாணி :
سیس293یش
(கட்டளைக்கலித்துறை)
மங்கல யாழிசை மீட்டிப் புவனம் மலர்த்தவரும் செங்கதிர்ச் செல்வியே பொங்கும் கடல்கண்ட தேன்மதியே! அங்கம் புளசித் தருளுண்ணும் பேரின்ப ஆர்வமருள்; தங்கக் குமுத மலர்வாய்ப் புனித சரஸ்வதியே!
விள்ளற் கினிய வெளியாய்த் துலங்குநல் வித்தகிஎன் உள்ளத்துறையும் உயிரே மெய்ஞ்ஞான ஒளிப்பிளம்பே பள்ளத் திடைவீழ் புனல்போல்என் னுள்ளருள் பாய்ச்சிடுவாய்; தெள்ளுற் றவருள் தெவிட்டா திணித்திடும் தீங்கனியே!
உள்ளத் துதிப்பவை எல்லாம்நின் பொற்ருட் குவகையுடன் துள்ளுங் கவிதை மலராய்ச் சொரிந்துயர் தூய்மைபெறத், தெள்ளுந் தமிழறி வோடுள் ளுணருந் திறமுமருள்; வெள்ளைக் கமலத் துறைஞான வாணி'என் வித்தகியே!
எங்கும் பொலிந்திடும் நின்னெழிற் சோபைகண் டென்னிதயம் பொங்கிக் களித்துக் கவிமலர்மாலை புனையவருள்; துங்கமெய்ஞ் ஞானியர் துய்க்கும் துரியச் சுடரமுதே எங்கள் குலக்கொழுந் தேதமிழ் வீணே இசைப்பவளே
மடமைக் கொடும்பேயை மாய்த்தென துள்ளம் மலர்த்தி,அதில் திடமிக்க பேரறி வாயுருக் கொண்டு திகழ்ந்திடுவாய்! படமுடி யாதினித் துன்பம்; உனது பதமிலையேல், அடிமைக் குலகில் அணுவும் இடமில்லை அம்பிகையே
-பரமஹம்ஸதாஸன்.
\ട്ലീ

Page 9
--294-بیس சிவயோகந் தரிசித்த
சிவ யோ க சித் த ர்.
(சுத்தானந்தர்)
சிவயோகமாவதென்ன? சித் அசித், உண்  ைம இன்மை, வித்தை அவித்தை, அறிவு அறியாமை ஆகிய இரு தன்மைகளை யும் இன்னதென்று தெளிதல்; அறிவையே பற்றித் தவயோகத்துட் புகுந்து, சுயம் பிரகாசமான சுத்தான்ம ஜோதியாதல்; பிறப்பையும் இறப்பையும் வளர்க்கும் அவயோகங்களை, மலயோகங்களை, பாச நெறிகளைச் சாராது, நிமலமான, சுத்த சிவக்கலப்புடனே நிற்றல்; வேறெவ்வகைப் போகமும்கருதாமல், கற்புள்ளமனேவி கணவன்சம் போகத்தையே விரும்புவது போலப் பதியோகத்தையே நுகர்ந்து, சிவானந்தந்திளைத்தல், இதுவே சிவயோகமாம். இதையே நவயோக
சித்திபெற்றதிருநந்தி தேவர் நமக்கு அளித்தார்.
உலகெங்கும் இறைவன் தானே தானுகத் தாக்கற்றிருக்கும் உண்மை,அமரரும் அறியாத சிவதுரியானந்தம், திருமன்றுள் ஆடும் திருவடிநிழல், அருள்வெளிவாழ்க்கை இப்பேறுகளைத் திருநந்திதே வர் எமக்களித்தார். இப் பேறுகளைப் பெற்ற சிவசித்தர் மனவெளி, துரிய வெளியில் போய்விரவும்; அவர் பாச அன்பு, பதியன்யிற்போய் அடங்கும்; ஜீவவொளி, சிவ பரஞ்சோதியில் ஒடுங்கும். இவற்றின் வகை தெரிந்து அனுபவித்துத் தெளிந்தவரே சிவசித்தராவர். சித்தர் என்பவர் இந்தப்பூலோகத்திலே சிவலோகக் தரிசித்தவர்; அப்பரைப் போன்று உலகெல்லாம் சிவமயங்கண்டோர். அவர் பரநாதமறிந்த வர்; சத்தங்கடந்த சுத்த மெளனிகள். அவர்கள் என்றுமுள்ள பொரு ட்கலப்பிலேயே வாழும் நித்தியர்: மும் மலங்கள் அணுகாகிமலர்; பிறவி கோயற்ற கிராமயர் அவர் பரமுத்தர். அவர் முப்பத்தாறு தத் துவங்களையும் கடந்து, ஒப்பில்லாத பரமானந்த ஜோதியுட் புகுந்து செப்பரிய சிவங்கண்டு, அதையே சொரூபமாகத் தெளிந்து அத்தன் மையாக, சிவமயமாக அமர்ந்திருப்பர். சித்தர் பாச இருளற்றவர்;
"எனது' 'யான்' அற்றவர், சக்தர், சதாசிவத்தன்மையர் ஆவார்.
c KO o தததுவங்கள, முப்பதும் ஆறும் படிமுத்தி GJ Gollu i Tuli 1 ஒப்பிலா ஆன்ந்தத் துள்ளொளி புக்குச் செப்பரி யசிவங் கண்டுதான் தெளிந்து அப்பரி சாக அமர்ந்திருப் பாரே!
 
 
 
 

- 295
ஒரு கடிகாரத்தில் சக்கரங்களும் விசைகளும் இருப்பதுபோ லவே, பலதத்துவங்கள் கூடி நமது தூல, குக்கும, காரண, சரீரங் களை இயக்குகின்றன. வேதாந்திகள் பிரகிருதி தத்துவம் 24-ம், புரு ஷன் அல்லது ஆன்மாவுடன் சேர்ந்து தத்துவம் 25என்பர். சித்தாங் திகள் 36 தத்துவங்காண்பர். அவை 24 அசுத்தம், 7 சுத்தாசுத்தம் 5 சுத்தம் என மூன்று வகையாம். 5-பூதம், 5 தன்மாத்திரை, தசே ந்திரியங்கள், 4அந்தக்கரணங்கள் ஆகிய 24ம் அசுத்ததத்துவங்களாம். காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருஷன், மூலப் பகுதி. ஆகியஏழும் சுத்தாசுத்த தத்துவங்களாம். சிவம், சக்தி, சாதாக்கியம், ஈசத்வம், சுத்தவித்தை ஆகிய ஐந்தும் சுத்த சத்துவங்களாம். இந்த முப்பத்தாறு தத்துவப் படிகளையும் கடந்து உள்ளொளி புக்கு, சிவங்கண்டு அதுவே அனைத்துமென் றறிந்து அமர்ந்திருப்பர் சித்தர். கடலேக் கலந்த உப்பைப்போலச் சிவத்தைக் கலந்தோர் சிவமாயிருப் பர்; சிவம் எங்குமிருப்பதால் அவரும் எங்குமிருப்பர்; உலகெங்கும் சிவன் செயலேயே, அவன் அருளாடலேயே சாட்சியாகக் கண்டுகொ ண்டிருப்பர். சிவசித்தர் வந்து, இருந்து, செல்லும் முக்காலமும் ஒரு நீரோட்டமெனக் கருதிக்காலங்கடந்த கடவுட் பொருளிற்கலங் திருப்பர். அதுவே சுத்த முத்திநிலேயாம்.
சும்மா இருத்தல், இங்கிலேயில் சுத்தசிவ சித்தருக்குத் தன் முனைப்பும் குணங்குறி யுணர்வும் ஒழிந்துபோம். தற்போதமழிந்து சதாசிவபோகத்தில் ஆழ் ந்திருப்பர் சித்தர். அங்கிலேயை 'இழவு வந்து எய்திய சோம்பு” என் ருர் திருமூலர் இழவு என்ருல் தன்னிழப்பு: சோம்பல்' என்ருல் பந்ததொந்தமறத் தன்முனைப்பறவொடுங்கி, இறைவனுடன் கலந்து, அவனன்றி வேறில்லாமற் சும்மா இருத்தலாம். தேசம் முன்னேற வேண்டாவா? சும்மா இருக்கும் சோம்பேறிவாதம்நமக்குவேண்டா, போம்!” என்பர் உட்பொருளறியாதார். "சும்மா இருத்தல்” சாமா னியம் அன்று. 'சும்மா இருக்கின்ற திறம் அரிது - சற்ருகிலும்." சூரியன் ஆகாயத்தில் சும்மா இருக்கிருன். அவனல் எத்தனை தொழி ல்கள் இயல்பாய் நடக்கின்றன! கருவி கரணங்களின் சேட்டையொ டுங்கிச் சிவக்கலப்புடன் சும்மா இருக்கும் யோகி, ஒரு சக்திப்பிழம் பாவான். அவனைச் சுற்றிச் சிற்சக்திக் கதிர்கள் சூட்சுமமாகவீசிக் கொண்டிருக்கும். அவன் சந்நிதானம் ஆத்மசுத்தி தரும்; தெய்வவு ணர்வைப் பொலிவிக்கும். அவன் சக்தி பரவிப் பரவி, மனிதசமுதா

Page 10
296
யத்தில் பல புதிய நலங்கள் உண்டாகும். அப்படிப்பட்ட யோக சித்தராலேதான் இன்றும் நமது நாடு புண்ணிய பூமியாக விளங்குகி ன்றது. அத்தகைய சித்தரின் சக்தி மெளனமாகப் பரவியே நமது முன்னேற்ற இயக்கங்களைத் தூண்டி நடத்துகின்றனர். ஜீவ-சிவை
க்கிய நிச்சல நின்மலநிலையே சித்தர் பரிபாஷையில் சோம்பல், தாக் கம் எனப்படும். 'ஒரு பம்பரம் தூங்குகிறது” என்னும்போது, அது சொக்கிநிற்கும் நிலையைக் குறிக்கிறது. சிற்சக்தி பாய் ங் த
தும் ஒமொலி கேட்கும்; அதுவே சுருதி, அச்சுருதியில் லயித்துத் தியானத்தில் உறங்குபவர் யோகியர், பிறகுசுருதிகடந்த, சத்தமற்ற உபசாந்த நிலையெய்தும்; அந்நிலையிலேதான் சோம்பல்” அல்லது "நிச்சல சமாதி" உணர்வாகும் - 'சோம்பல் உணர்வு சுருதி முடி ந்திடம்' அத்தகைய நிச்சல உபசாந்தர்குண தொந்தமற்ற நிர்விகா ரமான, சுத்த சிதாகாச வெளியிலே சதாகால சகசகிட்டையிற் கிட
Luff.
சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே சோம்பர் கிடப்பதுஞ் சுத்த வெளியிலே சோம்பர் உணர்வு சுருதி முடிந்திடம் சோம்பர் கண்டார் சுருதிக்கண் தூக்கமே,
(இப்போது விரைவாகஅச்சேறிவரும் திருமந்திரவிளக்கம்' என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது.)
.
சீடன் குருவென்னச் சீவன் சிவனென்ன மூடவகங் கார முழுமோகம் - கூடும்பாழம் பேதமதி சற்றும் பிறவாத மோகமே
போதநமஸ் காரப் பொருள்,
 
 
 

مبہم۔۔۔۔۔۔۔یے۔۔۔۔۔۔۔۔جہ۔+. --محم۔۔۔مس۔۔۔۔
و يمسيسه97لجسديم
பி ரா ர்த் தனை
(அ, இராமசாமி ஜோகூர்பாரு மலாயா)
தாயே! என் உள்ளத்தில் நீ தோன்றுவதும் மறைவதுமாக எவ் வளவு நாள் இயங்கப் போகிருய்? உன் அருள் சுவையை உணர்ந்த நான், உன்னைமறந்து நாள்கடத்த இயலுமா? உன்திருவடியைதொட ர்ந்து பற்றி உன் அருளைப்பெற சக்தியற்றவன் என்ற திரு உளமா
உனக்கு? வேண்டாம் தாயே! உன் திருவடியில் அன்பு கொண்ட நான், சகல கலாவல்லமையின் துணைகொண்டு உன்தெரிசனம் பெற
முடியும், இது தா ன் என் நம்பிக்கையின் முழு அளவு, தாயே! உன் தெரிசனம் கிடைப்பதற்கு முன் இந்தச் சரீரத்தை அழித்து விடாதே! இதுதான் நான் உன்னிடம்வேண்டும் அரிய வரமாகும். சரீரமாகிய வாளை என்னிடம் கொடுத்து நீ எனக்கு போர்ப்பயிற்சி செய்யலாம். நான் பக்குவகாலம் அடையும்வரை, இந்தப்பயிற்சியே வாழ்நாளை நிரப்பும் அரியசாதனையும் மட்டற்ற மகிழ்ச்சி தரக்கூடிய துமாகம், என்போன்ற பக்தர்களுடன் நீநெருங்கிய உறவு கொண்டு உன் திருவருள் பிரசாதத்தை வெளிக்காட்டாவிடில் இவ்வுலகில் உன்னை யார் மதிப்பர்? தாயே! நாஸ்திகம் மலியும் இக்காலத்தில் உன்னைப்பற்றியஉரை 'ஆத்மஜோதி”யில் இடம்பெறஉன்திருவருள் பிரவாகமடையை என்உள்ளம்பால் திறந்துவிடு, உன்பெருமைபேசு வதற்கும், எழுதுவதற்கும் சகலரும் அறியும்வண்ணம் வாழ்க்கை யில் நடந்து விளக்குவதற்கும் என் போன்ற உன் பிள்ளைகள் திருவ ருட்சந்நிதியில் காத்து நிற்கின்ருேம், தாயே!
உன் திருவடி சரணம்.
a Lub

Page 11
-
298
தீயாகராஜரின் மைேவுறுத்
(தென்னுயிரிக்கா டர்பன் திரு ச.மு- பிள்ளை அவர்கள்)
பகவத் பக்திசெய்து அதனுல் மனதிலேஊறும் இன்பத்தி ற்குச்
சமானமானதோர் இன்பம் வேறு கிடையாது, பொன்னைக்கொண் டும் பொருளைக்கொண்டும் தேடிக்கொள்ளும் இன்பங்களெல்லாம் மானிடர்களுக்கு துன்பங்களேக்கொடுக்கக்கூடியவைதான்”, என்று பரம பாகவத சிரோன்மணியும், சங்கீத வள்ளலுமான பரீதியாகரா ஜர் தம்மை தஞ்சாவூர்மகாராஜா அழைத்துவரச் சொன்னுரெ ன்றுசெய்தி சொல்லவந்த ராஜதூதனிடம் தெரிவித்தாராம். அந்தக் கதையின் வரலாறு வருமாறு.
ஒருநாள் பரீ தியாகராஜரின் மாளிகைக்கு தஞ்சாவூர் சரபோஜி மகாராஜாவிடமிருந்து ஒரு தூதர் வந்தார். அவர் பூரீ தியாகராஜரைட் பணிந்து, தங்களே ராஜா அரண்மனைக்கு அழைத்துவரச்சொன்னர், தங்கள் வரவை ராஜா மிக ஆவலுடன் எதிர்பார்க்கிருர், தாங்கள் ராஜக்கிரகத்திற்கு வந்து அரசனைப்புகழ்ந்து இரண்டுகிருதிகள்பாடி ஞல் போதும், தங்களுக்கு வெகுமானமாக பத்து வேலி நிலமும், ஒரு பெரிய கட்டித்தங்கமும் கொடுப்பதாகத் தெரிவிக்கச் சொன் ஞர்,' என்று கூறிஞர்
'ஐயா ராஜதூதரே, உங்கள் ராஜாவுக்கு என்ன பித்தம் பிடித் துவிட்டதா? தன்னைப்புகழ்ந்து பாடுகின்றவர்களுக்கு பணம்கொடுப் தாகச் சொல்லுகிருரே, இது நியாயமா ஏன் பணத்தை இம்மாதிரி விரயப்படுத்துகிருர்? மேலும் அவர் கொடுக்கும் பணத்திற்கு ஆசை ட்பட்டு என் பாட்டுத்திறனேக் கேவலம் நர ஜன்மமான ஒரு ராஜாவைப் புகழ பிரயோஜனப்படுத்துவேனே? பகவானை அர்ச்சிக்க வைத்திருக்கும் நல்ல புஷ்பங்களை மானிடன் மீது தாவி நாசமாக்கு வேனுே?' -
'இராஜாக்களும் மானிடர்கள்தானே! அவர்களில்பலர் மானிட சமூகத்தை துன்புறுத்தும் கொடிய் வியாதிகளைப் போன்றிருக்கிருர் கள் படிப்புவாசனை இல்லாமல், ஆத்மீக ஞானமில்லாமல், பாவச் செயல்களைச் செய்வதே தொழிலாக காலந்தள்ளுகிருர்கள். அப்பேற் பட்டஇராஜாக்களேயா என்வாயில்ை புகழ்ந்து பாடுவது? முடியாது முடியாது' என்று தியாகையர் சொன்னுர்,
அது கண்ட தூதன் அந்த வைதிகப் பிராமணனை எப்படி ஏமா ற்றுவதென்று சற்று சிந்தித்தான். ஒரு உபாயம் அவன் மனதில் பட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

*、*、 隅驚 鸞 鬣
- 299டது. மீண்டும் தியாகராஜ மகானை நோக்கி 'சுவாமி, இதோ பாருங் கள்' என்றுதான்கொண்டுவந்திருந்த பெரியதங்கக்கட்டியைக் காட் டினன். “இந்த பொன்கட்டியைப் பெற்றுக்கொண்டு ராஜக்கிரகத் திற்கு எழுந்தருள கிருபை செய்யவேண்டும்.” என்று ஆசைகாட்டி
தியாகராஜ சுவாமி அந்த தங்கக்கட்டியைப் பார்த்ததும், “அந்த அற்ப வஸ்துவை வீசி எறி, யாருக்கு வேண்டும் அந்தத் தங்கம்? மக் கள் மனதை வஞ்சித்து அவர்களை துன்மார்க்கத்தில் பிரவேசிக்கச் செய்து துன்பங்களையுண்டாக்கும் விஷமல்லவா அது? ஒய் தூதரே. தங்கத்தைக் கண்டதும் என்மனம் சபலமடைந்து விடுமேன்று உம க்கு எண்ணம் போலும் நான் தினம் ஆராதனம் செய்யும் திவ்விய மங்கள ராமமூர்த்தி விக்கிரகம் தங்கத்தினுல் செய்தது. அந்த விக்கி ரகத்தினுள் என் ராமமுத்தியைத்தான் நான்தரிசிக்கிறேன். எனக்குத் தங்கத்தில் மோகமிருக்குமாயின் அந்த விக்கிரகத்தினுள்ளிருக்கும் தங்கத்திலல்லவே என் ஞாபகம் பதிந்திருக்கும்? நான் அந்த விக்கி ரகத்தை உருக்கிவிட்டிருக்க மாட்டேன? ஆகவே, என் சித்தம் தங் கத்தைக்கண்டு மயங்கும் சித்தமல்ல, போய்வாரும்,” என்று சொல் லிவிட்டு 'நிதி சால சுகமா' என்னும் கீர்த்தனையைப் பாடினர்.
மேற்சொன்ன கீர்த்தனேயின் கருத்து வருமாறு, "ஓ மனமே, உண்மையைச்சோல்லு என்னேஏமாற்ருதே. சத்தியத்தைச் சொல்லு இராமனப் பTத்திருப்பது தித்திப்பா? அல்லது பணமோகம் பிடி த்து அலவது சுகமா? 。
பாலும், மேரும், வெண்ணெயும் உண்பது ருசியா? என் தாச !ரதியை நிந்ைது பத்து மெய்மறந்திருப்பது சுகம்ா? ஒ மனமே אין
பொய்யாமல் சொல்லு,
திட புத்தியும், சஞ்சலமற்ற மனமும் போன்ற கங்கையில் குளி ப்பது ஆரோக்கியமா? துன்மார்க்கமென்னும் கலங்கிய சகதி நிரம் பிய கிணற்றில் குளிப்பது ஆரோக்கியமா? ஒளியாமல் சொல்லு,
p65) (3), , }
செருக்கு மிகுந்த நரமனுஷனை ஸ்துதிசெய்து பாடுவது நன்ரு? சர்வலோக காரண்யனை ஜகத்ரக்ஷகனக் குறித்து பாடுதல் நன்ற? உள்ளதைச்சொல்லு மனமே"
மேற்சொன்ன கருத்துக்கொண்ட பாட்டை பூரீ தியாகராஜர் பாடிஞர். ராஜதூதர் அந்தப்பாட்டைக் கேட்டுவிட்டு, பதிலொன் றும் சொல்லாமல் திரும்பிப்போளுர், ா

Page 12
ܢܬܚ-800ܝܒܝܢ
மனிதன் தன் வாழ்க்கையை உயர்த்தும் விதம்.
மனிதன் ஓர் அபூர்வமான பிராணி, உயர்ந்த நிலயில், உயர்ந்த படியிலுள்ள மிருகத்துக்கு ஒருபடி உயர்ந்தவன்; தாழ்ந்த நிலையில், தாழ்ந்த மிருகத்துக்கு ஒரு படி தாழ்ந்தவன். இயற்கையன்னையின் மடியில் தவழ்ந்து, உரையாடி, உண்டு உடுத்துத் தன் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொண்டான்,
உருமாறிப் பல பிறப்பும் பிறந்தும் செத்தும், தன் பூர்வகதை யைபொருவாறுணர்ந்து, 'உறுதி பயக்கும் பொருள் ஒன்றே"பென்பு தைத் தெரிந்தான், மனம் சாந்தியடைந்தது. அங்கிலேயில் நிற்க அரும் பாடுபட்டு வருகிருன், உலகத்தை இயக்கும் சக்தி ஒன்றே யென்ப தையுணர்ந்த பின், உள்ளங் குழைந்து, என்பு ருெக்குருகி, ஊரா ரோடு உறவாடி உற்றதை உணர்த்தி, ஆடியும் பாடியும் ஆவல்சீர்த் துக்கொள்கிருன்,
இவ்வாறு இயற்கையிலுள்ளடங்கிய சக்தியின் வயப்பட்டு, இய ற்கைக் குழந்தையாகிய தன்னுடைய ஆற்றலே மாபெரும் சக்திக்கு அர்ப்பணித்து, அடிமைபூண்டு, சமூகத்துக்கோ, சமுதாயத்துக்கோ, நாட்டினுக்கோ, உலகத்துக்கோ, தொண்டு செய்ய முனைகிருன். கற்பனையுலகில் சஞ்சாரம் செய்து, கவிதையுலகில் திளைத்து, அன் பென் எனும் அருங்கடலில் மூழ்கி, அரியபெரிய உண்மைகளை அளந்து, அன்னை திருவடிகளில் சமர்ப்பிக்கிருன்,
உலகம் போற்றும் உத்தமர்கள் பலர். இவர்கள் பத்திபரவசர்க ளுண்டு, கர்மவீரர் அநேகர் ஞானிகள் ஒருசிலர். இவர்கள் எல் லோருமே உலகம் தேசம் இனம், மதம் எல்லாவற்றையுங் கடந்த வர்கள். உலக மறிந்தவன் ஞானி; உள்கிலேயுணர்ந்தவன் யோகி; கருமம் அல்லது தன்தொழிலே ஓயாது செய்பவன் கர்மவீரன்; இயற் கையன்’னயால் தூண்டப்பட்டு இறைவன் நிலயை உணர்ந்து: குழ ந்தையுள்ளம் பெறப் பெற்றவனுய் பக்தி வெள்ளத்தில் மூழ்கி. பரமனுடன் ஒன்றிநிற்பவன் பக்தன்.
பூநீராமகிருஷ்ணவிஜயம்)

سال 1 (){-سسسد.
ஓம்
பொது வணக்கம்
Y
ஹே ப்ரபோ! இவ்வகிலமனைத்தும் படைத்தவர் தாங்கள். இவ ற்றைக் காத்தருள்பவரும் தாங்களே. புல்லின் நுனியிலும் புஷ்ப இத ழிலும் இருப்பவர் தாமே. விரிகதிர் இரவிபாலும் விண்ணக மீன்களு ள்ளும் விளங்கி நிற்பவரும் தாங்களே, கருணையளித்து களிப்பருளும் பரம! நினக்கு வணக்கம்.
இன்னருள் இறைவ1 இறப்பென்னும் பிணியினின்றும் நான் விடுதலையடைவேனுக. சகலஜீவராசிகளையும் சம நோக்குடன் பார்க் குஞ் சக்தி பெறுவேனுக. பாவமும் மலமும் என்னைப் பற்ருதொழிக. மனந்தனையடக்கும் மதியை யருளுக. உமக்கும் உயிர்க்கும் ஒய்விலா கழைக்கப் பலந்தருவீராக. தங்கள்பணிக்கு என்னை தக்கதோர் கரு வி பாக்குவீராக. என்னைப்பரிசுத்தணுகவும் பலவானுகவுஞ்செய்வீராக.
உள்ளங்கள் தோறும் உறையும் பரம! மறையில் மறைந்த இறைவ! போற்றி! போற்றி! எனது கெட்ட எண்ணங்களையும் குறைபாடுகளையும் பலவீனத்தையும் அகற்றுக, என்னைப்பரிசுத்தனக்
கித் தங்கள் கருணைக்கும் ஆசிகளுக்கும் பாத்திரனுமாறு செய்க, ஹே! ப்ரபோ உயிரனைத்தும் ஒன்றெனப் பிணைக்கும் ஆத்ம சூத்தி ரம் நீர், உலகெல்லாம் பரந்து எங்கும் ஊடுருவியிருப்பவரும் நீரே.
அஞ்ஞான இருளை அடியோடழிக்கும் திவ்ய ஜோதி நீர். கருணை நிறைந்து அகம் புறமும் வழியும் கடவுள் தாங்கள். நோயற்றவாழ்வில் நான்வாழ்ந்து ஒருமையுடன் தங்களையே நினைந்திருக்கும் வண்ணம் அருள்பாலிப்பீராக. தாயருற்குணவானகச் சேயெனக்குளவு புகல்வீர்.
சுயஞ்சோதிப் பிழம்பே தாங்களே எனது தந்தை, தாய் தமை யன், நண்பன், சுற்றம், சற்குரு சகலமும். இவ்வுண்மையை நான் என்றும் உணருவேகை, விருப்பு வெறுப்பு, ஆணவம், காமம், பொ றமை ஆய தீய பேய்கள் எனையணுகாதிருக்குமாக அகிலமெங்கும் நான் அமைதியும் அன்பும் ஆனந்தமும் வாரிவழங்குமாறு என்னைத்

Page 13
30%2...........
கந்தரநுபூதியிலிருந்து ♔ || (b
[குகரு இரத்தின சபாபதி நாயக்கர் அவர்கள் எழுதிய அரிய விரிவுரை நூலிலிருந்து எடுக்கப்பட்டது.
திணியா மைனுே சிலைமீ துனதாள் அணியா ரவிந் தமரும் புமதோ பணியா வெனவள் விபதம் பணியும் தணிய வதிமோ கதயா பரனே.
(ப-ரை) பணியா என-பணிவிடை யாது(செய்யவேண்டும்) என்று கூறி; வள்ளி பதம் பணியும் - வள்ளியம்மையார் திருவடிகளை வணங்கும்; தணியா-தணிவடையாத; அதிமோக-அளவிலாத வேட்கை கொண்ட தயாபரனே அருளுக்கு இருப்பிடமான வனே; திணியான மனுேகிலோமீது கடினத்தன்மை வாய்ந்தமன மாகிய கல்லின் மேல்; உன் தாள் - உனது திருவடியாகிய; அணி ஆர் அரவிந்தம் - அழகு பொருந்திய தாமரை, அரும்பு மதோ அரும்புமோ, (எ-ற)
(மறுபக்கம்)
301ம்பக்கத்தொடர் தமது இனிய தாதனென ஆக்குவீராக. எனது உடல் பொருள் ஆவியனைத்தும் தங்கள் திருப்பணிக்கும் தாங்கள் படைத்தஇவ்வுலக சேவைக்குமே உரியதாகுக. தங்கள் அமரவாழ்வெனும் மூச்சையா ணும் உயிர்க்கச் செய்வீர்களாக உலகமக்களின் சகோதரத்துவத்தை யான் நன்குணருவேனுக. அனைத்துயிரையும் எனதுஆத்ம சொரூப மாகவேஎண்ணி அன்புசெலுத்துவேனுக, ஹே தனிப்பெருங் கருணை நிதியே தங்களுக்கு எனது தாழ்மையான வணக்கம்,
வாழிய கிணதருள் வாழி வாழியவே.
扈 ஆங்கிலத்தில் சுவாமி சிவனந்தர்
தமிழாக்கம்; சுவாமி சச்சிதானந்த யோகி.
 

سيس-3 330 سيبيس
அருள்மேனியன் அறுமுகன் அன்பு வடிவினன் அமலே: அன்பு அருளை நாடும்; நாடும் அன்பில் கூடும் அருள். இதை விளக்கும்வர லாறு கீழ்வருமாறு:-
அன்பானது, வைகுந்தத்தில் திருமால் கண்வழியிரங்கிப் பெண் ணுருவாகிப் பிறந்து. இமயத்தில் ஆறெழுத்தை எண்ணியிருந்து, சட க்கரத்தான் இட்ட கட்டளைப்படி தொண்டை நாட்டு மலேயொ ன்றையடைந்து, மாலாகிய சிவ முனிவரும், திருமகளாகிய மானும் நோக்கிய நோக்கால் ஈர்க்கப்பெற்று, மானின் கருவில் நுழைந்து, முருகா முருகா என்று முனகியது. மற்ருெருநாள், உருவாகித் திருவாகி உலகில் உதயம் செய்தது. "கின்னரகல் யாழொலியோ, கேடில் சீர்ப் பாரதியின் இன்னிசையோ என்றயிர்க்க, இறைவனை யெண்ணியேங்கி அழுதது. அவ்வொலிகேட்டு வந்த தவமகன் வேடு வர் தலமகன் வேல் நம்பியையடைந்தது. எடுப்பார் கைப்பிள்ளை யாய், வள்ளி நாமம் வாய்ந்து வளர்ந்தது. வேடர்குல முறைப்படி தினைகாக்கும் காலத்தும், முருகாமம் மறவா அந்த அன்புருவமுதல் வியிடம், சிவனுல் அருள் விளியிலிருந்து வெளியான ஆனந்தவடிவ முருகன் வருகிருன், அருள்மணம் செய்கிறன். திருமணத்தின்முன் னும் பின்னும் அருளாடல் பல நிகழ்த்துகிறன். அந்த ஆடல்களுள் ஒன்று, இந்த பணிவு. உபகாரிகளான வ ள் ள ல் கள் தா ன் முருகனேயறிந்து வணங்கமுடியும். இந்த உபகாரம், சர்வசங்கபரித் யாகமாக முடியும், முருகன்மேல் இச்சையையெழுப்பி, கிரியையில் ஈடுபடுத்தும் மகோபகாரியார் அம்மையார்; அதனல், அத்தேவி வள் ளியார் எனும் நாமம் வாய்ந்துளர், சர்வசங்க பரித்யாகிகளாக்கித் தொழுவோரை மணக்கும் தொல்லோன் குமரன் எனும் பொருளில், "வள்ளல் தொழு ஞானக் கழலோனே, வள்ளிமணவாளப்பெரு மாளே” என்ற திருப்புகழ் இங்கு நினைவு கூரத்தகுவது.
இருகில முருகனிடம் என்றும் எண்ணப்பெறும் ஒன்று, பேசா தமோனப் பேரின்பநில, அதன் மயமாய் இன்பம் அனுபவிப்பவர் தேவானையார் மற்ருென்று, பேசும் ஞானப் பேரின்பநிலை; அதை யனுபவிப்பவர் வள்ளியம்மையார். தான் பெற்ற பேறு உயிர் களெல்லாம் பெற, இடையருது முயலும் வண்மையான வள்ளியாரி டம், வளரும் காதலன் வள்ளல் முருகன், அந்தக் காதல் பெருநிலை, பணியாப் பரனேயும் வள்ளியாரிடம் பணிய வைக்கின்றது. சாதாரண அகப்பொருள் இலக்கணம் கொண்டு இறை ஆய வேண்டா அது.

Page 14
--304 سسس
உலகியல், இது அநுபூதி அனுபவம். பக்குவ நிலைகளைப் பரிசீலி த்து, உயிர்களை யாள இடையருது திரு முன் வேண்டல் செய்பவர் வள்ளியார். அங்ங்னே அருளளழுந்தருளும் போதெல்லாம், கோல க்குறத்தியார்” தொடர்ந்து வருவர். பணிவு தோன்ற முருகனைப்பணி வார் அன்பர்கள். வேண்டுவார் வேண்டுவதே யீதல்வேண்டும் என்று தூண்டுதல்புரிவார் அத்தேவியார்உணர்ந்துகூறும் அவர் மொழிப்படி விரைந்து அருள்கிருன் அந்த விமலன், இங்கில யென்றும்நிகழ்வன.
அடியவர்க்கு எவ்வுருவில் அருளவேண்டும்? எந்த அருள்புரிய வேண்டும் என்னும்பொருளில், பணியாது? பணியாது? என்று, வள் ளியாரை நச்சரிக்கின்றன் நம்பன். அவர் சொல்வதற்குள், விரை ந்து பணிமுகம் புரியும் போதும், பணிந்தெழும் போதும் பணியாது என்று இடையருது கேட்கிறது பரமன் திருவாய், பக்தகோடிகட் குப் பணிசெய்யும் வகையில், தணியாத அதிமோகமுடைய தயாப ரன் அவன். அந்த அருமையை உணர்கிறபோதே உள்ளம் பாகாய் உருகும்மே! அந்தோ! அங்கிலேயும் கைவராத கடினமான மனம் கல் லுக்குத்தான் சமம். சேற்றில் முளைக்கும் செங்கமலம் என்பர். அது போல் உருகும் உளத்தில் அவன் அடிக் கமலங்கள் அரும்பும், மல ரும், மணக்கும், ஆனந்த அநுபவத்தைச் செய்யும், இளகாத உள் ளத்தில் அரும்பவே இடமில்லேயென்றபடி, பின்னிரண்டடிகளை,
*குறப்பெண் குறிப்பறிந்து அருகணேந்து உன்
குற்றேவல் செய்யக் கடைக்கண் பணிக்கெனக் குறையிரந்து' எனும் முத்துக்குமாரஸ்வாமிப்பிள்ளைத் தமிழுடன் ஒப்பிடத் தக்க தாகும், ܚܚܚܚܚܚܚܚܚ
உலகமெல்லாம் உயர்நலம் பெருகுக! அகிலமெங்கும் அமைதி நிலவுக! பாருலகெங்கும் பூரணம் பொலிக பொங்கும் மங்களம் எங்கும் தங்குக!
-சுவாமி சச்சிதானந்த யோகி,
 
 
 

சத்தீவணக்கம்
(சி. இராசரத்தினம் பெரிய நீலாவஜன)
சத்தியுன் சத்திகொண்டே சகமெலா மியங்கவேண்டும் சத்தியுன் சத்திகொண்டே தவமது புரியவேண்டும்
1. சத்தியுன் சக்திகொண்டே தமியனு முணரவேண்டும்
சக்தியுன் சத்திதந்தே தவறிடா வகைநீ நல்கே,
அன்னே நீ யாதிசக்தி அனைத்துல காளும்தேவி உன்னையான் விட்டுவாழ ஒருகண மியலுமோதான் பின்னேயான் பிறவாவண்ணம் பிராட்டியென் அனுளமெழுந்து என்னேயுன் னருளாற்பற்றி யிறைபணி செய்யவையே
மன்னுயிர் தொறும் செறிந்தே மாணருள் நல்குந்தேவி என்னுயி ருன்னதாக்கி யிறைபணி செய்யவைப்பாய் என்னுயிர் தளராவண்ண மெழுந்தரு @y¢ಲಿ 954) 175T அன்னேயே யாதிசக்தி யபயம்யா, னெழுகமாதோ
κ. வெம்பினே லுலகவாழ்வில் விதியெனே யலேத்தவாறே
நம்பினே அணுலகவாழ்வு நாளுமே சதமென்றின் அனும் துன்பிலே யுழ லாவண்ணம் து வடியருள்தா வன்னுய் நம்பினே லுலகமாதா நாயகி போற்றி போற்றி,
இருளினுற் புரிந்தபாவ மிறைவி நீ பொறுத்தாளாயேல் அருளினு லென் கனயாளு மன் இனவேறுண்டோ வன்னுய் மருளினுல் மயங்கியின்னும் மாய்ந்திடா வகைநீகாட்டி அருளினுற் குருவந்தெய்தி யருள்பெற வருள்நீ யம்மா
அம்மை தன்னை யடிபணிவார்க்கு
அரியதே.து முண்டோதொல் இம்மையம்மைப் பேற&னத்து
மொருங்கே யெய்த இரங்கிடுவாள் உம்மைவினையும் தாங்கியவள்
உளத்தேயிருப்பாள் ஒளிதருளாள் செம்மைமலர்ந்தாள் நினேநெஞ்சே
தேவியிரங்குவா ளுனக்கே.
ரூச்

Page 15
செய் தீ த் தி ர ட் டு
டில்லியில் உபநிடத ஞானவேள்வி.
சென்ற ஆண்டில் பூணு நகரத்திலும், இந்த ஆண்டு சித்திரை மாதத்தில் சென்னையிலும் உபநிடத ஞான யக்ஞம் (வேள்விகள்) மூலம் அரிய அத்யாத்ம சேவை செய்து புகழ் பெற்ற உத்தரகாசி சுவாமி சின்மயானந்தரவர்கள் இந்தியாவின் தலைநகரமாகிய டில்லி மாநகரத்தில் 12-9-53 தொடக்கம் 10-12-58 வரைக்கும் உபநிடத ஞான வேள்வி நடாத்த இசைந்துள்ளார்கள்.
இந்த ஞானவேள்விக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட உபநிடதம் மண்டுக்கியஉபநிடதமும்அதற்கு கெளதபாதர்கள் எழுதியகாரிகையு மாகும். குறித்த 19-நாட்களிலும் தினசரி இரணடு மணித்தியாலத்தி ற்குக் குறையாமல் சுவாமியவர்கள் விரிவுரை செய்வார்கள். முதல் 21-நாளும் பத்து சாஸ்திரிகளால் குறித்தஉபநிடதத்தின் மந்திரங்கள் ஒதப்படும். பின்பகுதி 41-தினங்களில் அகண்ட மஹாமந்திர கீர்த் தனே நடைபெறும். இறுதி நாளன்று பக்த கோடிகள்.
'ஹரே ராம ஹரே ராம
ir Thr) ir i'r un p (3 r )vo (3r
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே'
என்ற மஹாமந்திரத்தை ஒலி பரப்பிகளின் உதவியுடன் பாடிக்கொ ண்டு நகரின் முக்கிய வீதிகளூடாகஊர்வலம்செல்வார்கள்.
பம்பாயிலிருந்து பகவான் ரமண மூர்த்தியின் உபதேசங்களைக் கொண்டு வெளிவரும் தெய்வீக அழைப்பு (CALLDIVINE) என்னும் மாதசஞ்சிகையின் கெளரவ ஆசிரியர்களில் ஒருவர் சுவாமி சின்மயானந்தர் என்பதையும் இந்தச் சந்தர்ப்பத்தில் அன்பர்கட்கு அறிமுகப்படுத்த விரும்புகிருேம்
 
 

சமயச் சீர்திருத்த வாகிகட்கோர்
அரிய வெற்றி
சரசாலே சித்திவிநாயகர் ஆலயத்தில் சென்றமாதம் (12-9-53) விநாயக சதுர்த்தி கொண்டாடிய விதம் சைவமக்கள் சகலர்க்கும் ஓர் எடுத்துக் காட்டாக விளங்கியது. யாழ்ப்பாணத்தில் நடைபெ றும் விழாக்களுக்கு சின்னமேளத்தை அழைக்கும் வழக்கம் இப்போ அருகிவருகின்றது. எனினும் பெரும்பணச்செலவுகொண்ட பெரிய மேளக்கச்சேரிமீதுள்ள மோகம் குறைந்தபாடில்லை.
இவை இரண்டுமில்லாமல் மாலே ஐந்துமணிதொடக்கம் இரவு இரண்டு மணிவரைக்கும் நடந்த ஓர் வழிபாட்டில் மக்கள் சலிப்பின் றிக் கலந்துகொண்டனர் எனில் எவரால் நம்பமுடியும்? இந்த அற் புதம்தான் விநாயகர் கடாட்சத்தால் சரசாலையில் நடந்ததாகும். அபி ஷேக ஆராதனையின்பின் கூட்டுப் பிரார்த்தனையும், 'ஆத்மஜோதி” யின் கெளரவ ஆசிரியரால் பிள்ளையார் வழிபாடுபற்றி ஓர் விரிவுரையும் நடைபெற்றன. அதன்பின் செல்விகள்: இ. தனலட்சுமி, இ. புவனே ஸ்வரி இருவரும், ஆசிரியர் நாகலிங்கம் அவர்களும் பக்திப் பாடல்கள் பாடினர். அதன்மேல் கூட்டுப்பிரார்த்தனை ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டப்பட்டு, முத்தமிழ் மணி C. S. மணிஐயரின் கதாப்பி ரசங்கம் நடைபெற்றது. இறுதியாக விநாயகப்பெருமான் வீதிவலம் வந்து பக்தகோடிகளுக்கு அருள்பாலித்தார்.
இந்த விதமான புனித முறையில், சதுர்த்தி தினத்தை மக்கள் அனுட்டிக்கச் செய்தபெருமை சரசாலே சமூகசேவா சபையின் தலை வரான திரு. கைலாசபிள்ளையையும் காரியதரிசி சிவஞானத்தையும் சார்ந்ததாகும்,
பாரதிவிழா,
டிெவிழா செப்டெம்பர் 11-ம், 12-ம் திகதிகளில் சென்னதியா கராயநகரில்உள்ள ஹிந்தி பிரசாரசபையில் சுதேசமித்திரன் ஆசிரியர் பூரீ ஸி. ஆர். பூரீநிவாசன் தலமையில் வெகுசிறப்பாகக் கொண்டா டப்பட்டது.
13-9-53 ஞாயிற்றுக்கிழமை நாவலப்பிட்டி இந்துவாலிப சங்க ஆதரவில் முத்தமிழ் விழா என்று சொல்லும் வண்ணம் மிகச்சிறப் பாக ைெடிவிழாக்கொண்டாடப்பெற்றது.

Page 16
ميسي 308 مسيين பேரறிஞர் திரு. வி. க. மறைவு.
சென்ற முட்பத்தைந்துஆண்டுகளாக, தமிழ்நாட்டினரால் அன் புடனும் நன்மதிப்புடனும் (திரு வி. க. என அழைக்கப்பட்ட திரு வாரூர் வி. கலியாண சுந்தரமுதலியார் அவர்கள் 17-9-58 வியாழக்கி ழமை இரவு 7-40 மணிக்கு இவ்வுலக வாழ்வை நீத்து விண்ணுலகெ ய்தினரென்ற செய்தி எமது உள்ளத்தை உருக்குகின்றது: எழுத லும் முடியவில்லே. ஆரம்பத்திலிருந்தே 'ஆத்மஜோதி,யின் பக்கங் களை இப்பெரியாரின் மணிவாக்குகள் தவருமல் அலங்கரித்து வந்து ள்ள உண்மையை இங்கு வாசகர்கட்கு கினைவூட்ட வேண்டிய அவ GլլյլճÇÙ25),
தமிழ்நாடு செய்த தவப்பயணுக, இற்றைக்கு எழுபது ஆண்டு கட்டுன், சென்னையில் தோன்றிய இந்த மகா மேதை தமிழ்க் கலைக் கோர் நிலக்களஞய் வாழ்ந்ததோடு, சைவத்தின் சமரசத்திக்கோர் ஒப்பற்ற உதாரணமாகவும் விளங்கினர். பழந்தமிழரின் பண்பாட் டிலிருந்து முகிழ்த்து, திருக்குறளின் உயிர்ப்பாக வளர்ந்த "உலகம் ஒருகுலம்’ என்ற கொள்கையே திரு வி. க. வின் வாழ்வின் குறிக் கோளாகவிருந்தது. அவர் பேச்சாலும் எழுத்தாலும் புரிந்த அரும் பணி முழுவதும் "உலகம் ஒருகுலமாதல் வேண்டும்” என்றஉன்னத நோக்கங்கருதியேயாம். அன்பையும் அஹிம்சையையும் அடிப்படை யாகக் கொண்ட காந்தியப் பொதுமையில் தமது ட்ைசியம் நன்கு பொருந்தியிருப்பதை உணர்ந்து அதைப் பரப்புவதிலேயே அயராது உழைத்து மறைந்தார்.
அவரது பூதஉடல் மறைந்தாலும், அவரது புகழுடலும், சிவத் தொண்டும், தமிழ்ப்பணியும், என்றென்றைக்கும் நிலவவேசெய்யும், ஏன்? அவரது வாழ்வே இன்றைய தமிழர்க்கும், இனிவரும் சந்ததி யார்க்கும் ஓர் பேரிலக்கியம் போல மிளிரும், குழைந்துருகும் உள்ள த்தோடு அவரது உறவினர்க்கும், நண்பர்கட்கும் ஏனையோர்க்கும் எமது அனுதாபத்தைத்தெரிவித்துக்கொள்கிருேம், அவரின் ஆன்மா சாந்திபெற இறைவனே வழுத்துகிருேம்.
தனக்கென வாழாப் பிறர்க்குரியாளரான திரு. வி. க. வினுல் அவரது இளமைவயசில் நிறுவப்பட்ட சென்னை பூரீ பால சுப்பிரம
 

லனிய பர்சபையின் மைதானத்தில், அவர் பேரால் ஓர் அழகிய மண் டடம் அமைக்க முயற்சிகள் நடக்கின்றன. இந்த மண்டப அமை ப்புப் புவிற்கு ஆதரவளிக்குமாறு வாசகர்களையும் ஏனைய அபி மானிகளேயும் கேட்டுக்கொள்கிருேம். நன்கொடையளிக்க விரும் புவோர் 'ஆத்மஜோதி கிலேயத்திற்கு அனுப்பலாம். அப்படிச்சேரும் பணத்தைத் திரட்டி சென்னைக்கு அனுப்ப ஒழுங்கு செய்யப்படும், நன்கொடையாளரின் பெயர்களும் அடுத்த 'ஆத்மஜோதி”யிலிருந்து தொடர்ந்து பிரசுரிக்கப்படும்,
கொலைபுல நீக்கியெங்குங் குணஞ்செயல் அறிவைக்காக்க அலைமன அவதிபோக்கி அமைதியைக் காக்க காக்க
உலகெலாம் ஒன்றிநிற்க உயரறங் காக்க காக்க கலைவளர் மதியந்தோயுங் கடிவரைச் செம்மைத்தேவே!
- -திரு. வி. க. 1ெழித்து
வாழியென் (ண்ைடவன் வாழி யெங்கோனருள் வாய்மையென்றும் வாழியெம்மான் புகழ் வாழியென்னதன் மலர்ப்பதங்கள் வாழிமெய்ச் சுத்தசன்மார்க்கப் பெருநெறி மாண்புகொண்டு வாழி இவ்வையமும் வானமும் மற்றவும் வாழியவே.
வான்முகில் வழாதுபெய்க; மலிவளஞ்சுரக்க மன்னன் கோன்முறை யரசுசெய்க; குறைவிலாதுயிர்கள் வாழ்க: நான்மறை யறங்களோங்க, நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவதிே விளங்குக உலகமெல்லாம்.

Page 17
Regd at the G.D. O. as a News P.
నిన్జిస్ట్రోక్రైస్త్రీన్రాస్త్రస్ట్రో ట్రైన్రి స్త్ర ప్ర్రాస్త్ర స్త్ర ప్ర్ర
ஆத்மஜோதி ே
965 || , GGI!
Dਤੇ, வது ஜோதியாக உங்கள் அடுத்த மாசத்துடன் ஆத்ம டுகள் பூர்த்தியாகின்றன. தாவை அடுத்தமாதத்திற்கி ஆத்மஜோதிக்கு உங்கள் ஆ இவ்வாண்டுச் சந்தாவை இ ரும் புதுவருட சந்தாவையு
GITT EF5 -
ஆத்மஜோ
BT 6). JSM).
சுத்தான ஆத்மீக விஷயங்களே ഉ1 ജൂബ9 (ഖങിg. ! றக்கூடியதொன்று. ஆக்கியோன்:-
திரு. மு. ச. லெட்சு இப்புத்தகம் வேண்டுவோர் துக்கு 4 சதமுத்திரை அனுப்
ԼԲ. Յ. Goւ Յմ
ਗਰੰਥ
। Gj, jin së GIII siti
魯登器魯魯魯魯懿尊登魯魯魯魯懿
哥raar-9厝在乐t,邸na)

* per H-C 5Գ|300
酸酸懿@
நயர்களுக்கு
ாம் ஆண்டில் பதினுேரா கையில் இடைக்கிறது, ஜோதிக்கு ஐந்து ஆண்
ஆதலால் புதுவருடச் சந்
டையில் அனுப்பிவைத்து ] ഞഖ ၅၅f]|''[[ါနီးg;၅TTg. ன்றுவரை அனுப்பாதோ ਤੇ ਸਯੁ੭) ਪੰ
தி நிலையம்
ELS L9.
● 憩 "JIB5395 LD.
@_öröLT5岳 @ämöf_ வரும் படித்துப் பயனு
in II sir21 Oli Gir
கீழ்க்காணும் விலாசத் பிஇலவசமாகப் பெற்று
6GOT I Sasi 26TT.
ప్ర్ర
BGN) TULIT స్టి © . 器 స్త్రీ
霹
為@@圈像鯰@魯隱@@@@@@