கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1954.01.01

Page 1
3 ° 306.666-006060-6-6-6-08
O
( శ్రీ గ్రీ @ G) ()
LL 00 LBeL 00 00 00 00 0L0 0L 0L 0L 00 00 0L 0LL0 0LLS
తిశ9686 (86@@@@@తి€ 3 அநீத்திய உலகத்தில் 2 அள்ளி வழங்கிய அண் () 09009 3C 999999
 

出。 A.
@@@@@@@@@@@ళీఠితి
测T
@@@@@@@@@@6ఠితితిశ999
తితితాతార్థి
(ဒိ ၇];) I J]

Page 2
。
ஆத்ம ஜோ தி
ஓர் ஆத்மீக வெளியீடு
வைை
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன்ே எல்லா உடலும் இறைவன் ஆலயமே- பித்தானந்த
Gers 6 விஜயவடு தை பாசம் all 3
பொருளடக்கம்
விவேகானந்த தோத்திரம் ... 5 2 பரமஹம்ஸரின் பாராட்டுமொழிகள் ... 58 விவேகானந்தரைப் பற்றிய ... 59 A HOITIÉ GNÍNGBOSTOJI JJ, för USA, 6. பாரதநாட்டுப் பாவைமணிகளுக்கு 65 6 அன்பு வலயில் அகப்பட்ட விதம் ... 66 7 திருஞானசம்பந்தர் . . பெற்றமை . 69 8 ஆசை கொண்டேன் - ஞானக்கதிரவா ... 3 9 இது என்பரிசுக் கிசையாது என்றசங்கிலியார் . 74. 1. O g"LOLL. Lith irst 53, b 1 1 LITLINGBO3), Coop I (36) jjir Gill ... 8 Gਤੰਘ ਤੇ ... 80 13 செய்தித்திரட்டு 83
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●"
() () ஆத்ம ஜோ தி 源 83 ஆள் சக்தா ரூபா 75/- 米 வருடசந்தரூபா 3/- ച്ചു.ഥ('ജു': foll; [[ഒ്വേ (ജൂരൈ) S S a - ఫ్రీ 9ܢ @* கெளரவ ஆசிரியர். சு. (22 JUILDjib JGör
0 | () : 'ബ' கொள்ளுப்பிட்டி, கொழும்பு 5 o : பதிப்பாசிரியர் நா. முத்தைய VA ஆத்மஜோதிநிலையம் 扈súL●。
599 Gణంee Ge@@@@@@@@@@@@@@@@@@@@@@తితితి తితిలో
 
 
 

磅。
விவேகானந்தர் தோத்திரம்.
சீர்பெருகு வங்கநிலம் சிறக்க வந்தோன்
பூநீராம கிருஷ்ணர்பதம் சிரமேற் கொண்டோன்
பார்புகமும் வேதாந்தப் பயிர் வளர்த்தோன்
பாரதத்தின் பெருமையெங்கும் பரவச் செய்தோன் வேர்பறிய எதிர்வாதம் விரித்துக் கூறி
வீண்வாதம் செய்பவரை வென்று வெற்றித் தார்புனைந்த தவயோகி விவேகா னந்தன்
தாள்பணிந்து வாழ்வோமித் தரணி மீதே
-கவிமணி தே, வி,
தத்தர்செய்த தனித்தவத்தா லவதரித்து
தன்மயத்திற் சின்மயமாந் தன்மைபெற்றே பித்தனென்ற பேர்படைத்த ராமகிருஷ்ணப்
பெருமானின் றிருவருளுக் குரியானகி அத்துவித நெறிவிளக்குங் குரவனுயெம்
ஆன்ருேர்கள் தேடிவைத்த ஞானப்பேற்றை எத்திசையும் எடுத்தளித்த விவேகானந்த
ஏந்தல்பதம் ஏத்திநாம் வாழுவோமே, !
-க, இ.
தத்துவ விதையை நட்டுச் சமரசக் கங்கை Lu Tulli jf, சக்தியின் ஊட்டந்தந்து, தன்னலக் சுளையை வாங்கி, நித்தியம் அன்பு பூத்து, நின்மல ஞான மான
முத்தியைப் பழுக்க வைத்த முதல்வனே போற்றிபோற்றி!
- Br, LIT.
يح صوتحي

Page 3
س-58 -س
பரமஹம்வலரின் பாராட்டு மொழிகள்.
என் சீனச் சுற்றி மலர்களை யொத்த மனமுடைய பக்தர்கள் பல ருாைர். அவர்களுள் சிலர் பத்து இதழ்களுள்ள ம ல க ளா கவும், சிலர் பதினுறு இதழ்களுள்ள மலராகவும், இன்னுஞ் சிலர் நூறு இதழ்க ளுடைய மலர்களாகவும் பல திறத்தினரா யிருக்கின்றனர். அவர்க "ளுள் சஹஸ்ரதள அரவிந்தனய் விளங்கு கின்ருன் நரேந்திரன்.'
வேதங்களில் உபமான அர்த்தமாக எடுத்தோதப்படும் ஹோமா என்னும் பட்சிக்கு மேகமண்டலத்தினருகே சஞ்சரிப்பதும், ! அங்கேயே முட்டையிடுவதும், அம்முட்டைகள் பூமியை அடைவதற்குமுன் ஆகா யத்திலேயே பொரிந்து குஞ்சாகப் பறந்து ஆகாயத்திலேயே ஞ்சரிப்ப தும் இயல்பல்லவா? அதுபோல ஆசாரிய கோடிகள் அவதரிக்கின்ருர் கள். அவர்கள் பூமியில் வசித்தாலும் பற்றற்றவர்களாகவே யிருப்பர், அத்தன்மையினன் நரேந்திரன் .'
:நரேந்திரன் சகல கலா வல்லபன். அவனுக்கு எல்லா விஷயங் களிலும் நிறைந்த ஞானமிருப்பதுடன், உண்மையும், உழைப்பும், pö சாகமும் கூடியிருக்கின்றன." ܢ
:நரேந்திரன் என்பக்கத்திலிருந்தால் போதும். நான் பிரம்மானு பூதியை அடைந்தவண்ணமே யிருப்பேன்."
*நரேந்திரனைப்போல நீங்களாக வேண்டும். அவனே ஒத்தவர்களே நித்திய சித்தர்கள்; அவர்களே பிரம்மஞானிகள். இவ்வுலகமாயை அவர்களே ஒன்றுஞ் செய்ய வியலாது. அவர்கள் தெய்வத்தன்மை பெற்றவர்கள்; ஆசாரிய கோடிகள், மனிதர்களுக்கு அறிவூட்டுவ தற்காகவே அவதாரம் எடுப்பவர்கள். நரேந்திரன் எல்லா விஷயங் களிலும் நிகரற்று விளங்குவதை நீங்கள் காணவில்லையா??
(ஏனைய சீடர்களை நோக்கிக் கூறப்பட்டது இந்த வசனம்.)
 
 
 
 
 
 
 
 

-- 59 - விவேகானந்தரைப் பற்றிய சில குறிப்புகள். (ஆசிரியர்.)
கற்பகதருப்போல் தம்மை அடுத்தவர்கட்கெல்லாம் ஞானத்தை அள்ளி வழங்கிய அற்புத மூர்த்தியாம் சுவாமி விவேகானந்தர் பாரத நாட்டின் நவயுக நபியாவர். காசி விஸ்வநாதன் கருணையால் புவ னேஸ்வரியின் கருவிலுதித்த அவருக்கு மூன்ரும் வயசு நடக்கும்
போது, அக்குழந்தையின் சுந்தரமுகத்தின் ஒளியைக்கண்ட ஒர்வழிப் போக்குச் சாது இது ஒர் தெய்வப்பிறவி என்றனர். பின்னர், பதி
ருைவது வயசில் அவரது கம்பீரமான தோற்றத்தைக் கண்ணுற்ற
தேவேந்திரநாத் தாகூர் யோகிக்குள்ள சகல லட்சணங்களும் அதில் அமைந்துள்ளன வென்ருர், ஆனல், நரேந்திரரின் அவதார மகி மையை முழுதிலும் உணர்ந்தவர் அவரைத் தடுத்தாட்கொண்ட
குருநாதரான பூரீ ராமகிருஷ்ண தேவர் ஒருவரேயாம். அப்பெரியா
ரின் பாராட்டு மொழிகள் இக்கட்டுரைக்கு முன்னுரையாக அமைக் துள்ளன,
விவேகானந்தரின் வாழ்க்கையில் மூன்று முக்கிய அவதரங் 鷲 களைக் காண்கின்ருேம். (1) அவர் தமது பதினேழாவது வயசில் : பரமஹம்ஸரைச் சந்தித்தது; (2) முப்பதாவது வயசில் நிகழ்ந்த
சிக்காக்கோ சர்வமத மகாசபை விஜயம்: (3) அதற்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் செய்த அமரநாத யாத்திரை, U TLD கிருஷ்ணரின் அன்பு வலையில் அவர் அகப்பட்ட விதத்தை விபரிக்கும் வசனங்களைப் பிறிதோரிடத்திற் காண்க. அமரநாத ஸ்தலத்தில் பனிக்கட்டியாலமைந்த பரம மூர்த்தியாய், சச்சிதானந்த விக்கிரக மாய் விளங்கும் சிவலிங்க தரிசனம் பெற்றவுடனே சுவாமிகள் தீர்க்க சமாதி யடைந்ததும், அந்த சமாதி நிலை கலைந்த பின்னர் தம்
முடன் கூடி யாத்திரை செய்த நிவேதா தேவியை நோக்கி, "இது
வரையில் நான் இத்தகைய உயர்தரமான சமாதி நிலையை அடைந் தது கிடையாது; இப்புனித ஸ்தலத்தை யொத்த க்ஷேத்திரங்களுக் குச் சென்றதுமில்லை; இந்த அனுபவம் உண்மையில் எனக்கு ஈஸ் வரனின் அனுக்கிரகத்தினுல் கிடைத்ததேயாகும்,' என்று கூறி
யதும் உலகறிந்த விஷயமாகும். அந்த யாத்திரைப்போது சிவபெ
* , Ꮝ
4."

Page 4
60
ருமானிடம் அவர் கேட்டுக்கொண்டவரம்: பெருமானே! நீ எவ் வண்ணம் இந்த ஏகாந்தமான ஸ்தலத்தில் விளங்குகிருயோ அவ் வண்ணமே யானும் ஏகாந்தமான இமயப் பிரதேசத்தில் எனது எஞ்சிய காலத்தைக் கழித்து முத்தியடைய அருள்வாயாக!' என் பதாம், இறுதிவரையில் அவரை வாட்டிய இருதய (35/TỉI (35/TGör றியதும் இந்த யாத்திரைத் தொடர்பிலாகும்.
மே லே விளக்கப்பட்டுள்ள இரு நிகழ்ச்சிகளுக்கிடையில் பொருந்தி, சுவாமிஜியின் வாழ்க்கையில் நடுநாயகமாக விளங்கும் அற்புத சம்பவம் சிக்காக்கோ திக் விஜயமாகும். கடந்த تپه، ஆண்டுகட்குள் உலகில் நடந்த மிகவும் விசேடமும் மகிமையும் பொருந்திய நிகழ்ச்சி 1893ம் ஆண்டு ஆவணிமாசத்தில் ஒத்தாக்கோ ? நகரில் கூடிய சர்வமத மகாசபையே யெனச் சிறிதும் தயங்காமற் கூறலாம். இச்சிறப்பைக் கணித ரீதியாகச் சற்று ஆராய்வோம், 1893ம் ஆண்டுக்கும் பூரீ சங்கராச்சாரியார் காலத் துக்கும் இடையே யுள்ள வருஷக்கணக்கை நிச்சயம் பண்ணி, அந்தக்கால GT602a)6OLL ஓர் அளவு கோலாகக் கொண்டு. வேதகாலம் வரைக்கும் அளந்து ப்ார்ப்போமால்ை, மிகவும் நுட்பமான உண்மைகள் சில விளங்க வரும். முதற்கோல் சங்கரருக்கும் புத்தருக்கும் இடையேயுள்ள காலத்திற்குச் சரியாக அமையும். அடுத்த அளவை புத்தர் அவதா ரத்தை கிருஷ்ணபிரான் காலத்திலிருந்து பிரித்துக்காட்டும். இன் னுமோர்தரம் அக்கோலைப் பின்போட்டால், அது இராமர் காலத் தைத் தொட்டு நிற்கும். அதற்குமப்பால் பின் செல்ல, உபநிடத காலத்திலும், இறுதியில் வேதகாலத்திலும் இங்கு விளக்கப்பட்ட அளவுகோல் நிற்பதைக் காண்போம். எனவே, இந்து gLNuth GTGSTö சாதாரணமாய் இன்று அழைக்கப்படும் சனதனதர்மத்தின் காலசக் கரத்தில் ஏழுசட்டங்கள் போலத் திட்டமாக அழகுபெற அமைக் திருப்பவை:-(1) வேதகாலம் (2) உபநிடதகாலம் (3) இரா மர் அவதாரமும் ஞானவாசிட்டமும் (4) கிருஷ்ணர் அவதாரமும் கீதோபதேசமும் (5) புத்ததர்மம் (6) சங்கரர் அத்வைதம் (7) சிக்காக்கோ சர்வமத மகாநாடு ஆகிய ஏழுமாம். ஆகையால் இராம நவமிக்கும், கோகுலாஷ்டமிக்கும், புத்தர் பெளர்ணமிக்கும், சங்கரர் ஜயந்திக்குமுள்ள சிறப்பைச் சிக்காக்கோச் சம்பவத்திற்குஞ் சேர்ப் பதே முறையும் கடனுமாகும். இந்த சர்வமத மகாசபையிலிருந்து
 
 
 
 

سس 6l سس
தான் முதன் முதலாக சர்வசமய சமர6ஸ்க்கொள்கையும் உலக சகோ தரத்துவ லக்ஷயமும் விளக்கப்பட்டன, உலகசரித்திரத்தில் ஒர் புதிய சகாப்தம் அதன் பயனக உதயமானதுடன், இந்து சமயம் புத்துயிர் பெற்று, புகழ்கொண்டதும், அன்னிய மதத்தினரின் மதிப்பையடைந் ததும் அதன் மூலமேயாம். இத்தனைச் சிறப்புகளுக்கும் கருவியாக இருந்தவர் விவேகானந்தர். மகாநாட்டைக் கூட்டியவர்களின் நோக்கம் ஒன்று; அவர்கள் முடிவிற் கண்ட பலன் வேறு; அதாவது, அணுவேனும் எதிர்பார்த்திராத இந்துமதப்பிரசாரம். விவேகானந்தர் Aதானும் தனக்கு ஏற்பட்ட உலகப்பிரசித்தியைக்கனவிற் தானும் எதிர் பார்த்தவரல்ல. இவையெல்லாம் அவரை ஆட்கொண்டு வழிகாட்டிய தெய்வப்பிறவிகளாம் ராமகிருஷ்ணர் சாரதாதேவியார் இருவரின் திருவருட் செயல்சளாகும். பாரத சக்தி முன் ஒரு காலத்திலும் கண்டிராத முறையில் இம்மூவரின் இணைப்பில் ஞான ஒளி வீசிய தெனலாம்.
1893ம் ஆண்டு ஜூன் மாசம் 6ந் தேதி விவேகானந்தர் கொழும்பில் சில மணித்தியாலங்கள் கழித்த போது அவர் காண விரும்பியது ஒர் புத்த ஆலயத்தை மாத்திரமே. அமெரிக்காவுக்குப் பிரயாணஞ் செய்து கொண்டிருந்த ‘பெனின்சுலர்" என்ற கப்பலே விட்டு அவர் இறங்கியதையும் அதற்குத் திரும்பிச் சென்றதையும் அறி *தது அவர் தேடித்தரிசித்த ஆலயத்தில் பள்ளிகொண்டிருந்த புத்தர் சிலேஓன்றேயாம். ஆல்ை, நான்கு ஆண்டுகள் ஐரோப்பாவிலும் அமெ ரிக்காவிலும் அரிய அத்யாத்ம சேவை செய்து விட்டு உலகப்பிரசித் தியுடன் தாய்நாடு திரும்பியபோது, அவர் கொழும்பில் எதிர்பாராத முறையில் பெற்ற வரவேற்பு இந்த நாட்டின் சரித்திரத்தில், நமது சமய வரலாற்றில், என்றும்மறக்க முடியாத அற்புத நிகழ்ச்சியாகும். 1897ம் ஆண்டு ஜனவரி மாசம் 15ம்வட மாலே கொழும்பு நகர இந்துக்
இருவரின் கையெழுத்துக்களுடன் சுவாமிஜிக்குச் சமர்ப்பிக் கப்பட்ட நல்வரவுப் பத்திரத்தில், "அவதார புருஷர்களில் ஒருவராகிய பகவான் பூரீராமகிருஷ்ணதேவரது திருவருளாலும், தன்னலம்நீத்துப் றேர் பொன்னலம் பேணும் தகைமை சான்ற தேவரீரது உறுதியின லுமல்லவா மேல் நாட்டார்கள் பாரதபூமியின் பரந்த ஞானத்தின் எழில் பெற்று, விலே மதிக்க முடியாத மகத்தான பாக்கியத்தை
களின் சார்பில், கனம் பொ, குமாரசுவாமி, திரு ஏ. குலவீரசிங்கம்

Page 5
- 6? -------
யடைந்தார்கள்? அதுமட்டுமா! நமது நாட்டிலும் பலர்மேல்நாட்டு நாகரிகமோகத்திலிருந்து விலகி, நமது சிறந்த பழங்கால வைப்பான ஞான நிதியின் உயர்வைக் கண்கூடாகக் காணலானர்கள்!” என்ற அரிய வசனங்கள் அடங்கியிருந்தன.
அடுத்த நாள் கொழும்பு நகர மண்டபத்தில் அவர் செய்த பிரசங் கத்தைக் கேட்க வந்தவர்களில் அநேகர் ஐரோப்பிய உடைதரித்திருந் ததைப்பார்த்ததும் அடிகளின் மனம் புண்பட்டு, "ஆடையிலுமா நாம் அவர்களைப் போன்று நடக்க வேண்டும்? அவர்கள் நம்மைப் போன்று உடுப்பதில்லையே! உடுப்பானது தேச சீதோஷ்ண நிலையைப் பொறுத்ததேயன்றி, நாகரீகத்தைச் சார்ந்ததல்ல. அடிமைகளாக முயலாதீர்கள்; எது வரினும் உங்கள் தேச ஆசாரத்தைக் கைவிட வேண்டாம்” என இடித்துரைத்தார்.
சுவாமிகள் 1899ம் ஆண்டில் இரண்டாம் முறையாக மேல்நாடு சென்ற போதும் அவரை வரவேற்கும் பாக்கியம் கொழும்பு நகர இந்துக்களுக்குக் கிடைத்தது. சென்னை மக்கட்குக் கிடைக்காத புண்ணியம் தங்கட்குவாய்த்தமை குறித்து அவர்கள் அளவற்ற மகிழ் சியும் உற்சாகமும் அடைந்தனர். சுவாமிகள் பிரயாணஞ்செய்த கொல் கொண்டா' என்னும் கப்பல் கல்கத்தாவை விட்டுப் புறப் படும் வேளையில் அந்நகரெங்கும் பிளேக் நோய் இருந்தது. இக் காரணம் பற்றி, கட்பல் தங்கிய அடுத்த துறையான சென்னையில் இறங்க சுவாமிஜிக்கு அனுமதி கிடைக்கவில்லை. வரவேற்புக் குழு வினர் அரசாங்கத்திற்கு விண்ணப்பஞ் செய்தும் உத்தரவு கிடைக்க வில்லை; மக்கள் ஏமாற்றமடைந்தனர், கடற்கரையில் நின்ற படியே பல்லாயிரக்கணக்கான சென்னை வாசிகள் 'விவேகானந்த மூர்த்திக்கு ஜே!” என்று கோஷித்தனர். 27-6-1899 கொழும்பில் நடந்த வைப வம் அதற்கு முழுமாருக அமைந்தது. எங்கு பார்த்தாலும் தோரணங் களும் தீபஸ்தம்பங்களும், மக்களின் குதூகலமான ஆர்வமும் கர கோஷமும்; நகரம் முழுவதுமே ஜெகஜ்ஜோதியாய் பிரகாசித்தது, இந்த மகா உன்னதமான உபசரணைக்குக் காரணராய் இருந்தவர்கள் திரு சேர். குமாரசுவாமியும் திரு பொன். அருணுசலமுமாவர். இரு வரும் தமது முடி சுவாமிஜியின் அடிகளிற்பட வணங்கி வரவேற்ற
ஒனர்.
 
 

-63
விவேகானந்தர் இம்மண்ணுலகில் பூத உடல் கொண்டுலாவிய காலம் முப்பத்தொன்பதரை ஆண்டுகளேயாம். அவற்றில் இறுதிப் பாகமான பத்தாண்டுகளில் தான் அவர் தேசப்பணி, சமூகசேவை, சமயத்தொண்டு ஆகிய மூன்றிலும் ஈடுபட்டிருந்தனர். அந்தச் சிறு கால எல்லேக்குள் வேறு அநேகர் பல நூற்றண்டுகளிற் செய்து முடிக்க முயலாத கருமங்களைச் சாதித்துள்ளனர் மேல் நாட்டிலும் சரி, கீழ் நாட்டிலும் சரி, மாதர்கள் பெருந்தொகையினராகச் சேர்ந்த கூட்டங்களிலெல்லாம் இந்தியப் பெண்மையின் லக்ஷயம் தாய்மை யென்பதை வற்புறுத்த அவர் மறந்ததே கிடையாது. "இந்தியாவில் பெண்மைக்கு லக்ஷயம் தாய்மையே-அற்புதமான, தன்னலமற்ற, யாண்டும் துயருறும், யாண்டும் மன்னிப்பருளும் தாயே-லசஷியம். பெண்’ எனும் சொல்லேக் கேட்டதும் இந்தியரின் உள்ளத்தெழும் கருத்து தாய்மையே; தெய்வத்தையும் 'அம்மே” என்றழைப்பர்.” என்ற மொழிகள் சுவாமிஜியின் வாக்கில் எத்தனை தரம் வந்திருக்கு மென்று கணக்கிடவே முடியாது. இந்துக்கள் இறைவனைப் பெண் ணுெருபாகனுகப் பாவிக்கும் வழிபாட்டின் அரிய ஆழ்ந்த கருத்தை ஐரோப்பியரும் அமெரிக்கரும் விளங்க முடியாமல் இருந்ததற்கு கார ணம், அவர்களின் நாகரீக கொள்கைப்படி பெண்ணின் உயர்ந்த நிலை மனைவியென்ற பதவியென்பதும், அந்த நிலையில் அவள் தரும் இன் பமே விசேடித்தது என்ற கருத்துமாகும். அவர்களது இந்தத் தப் பான அபிப்பிராயத்தை முற்றிலும் மாற்றி, அவர்கள் கொண்டிருந்த உயர்ந்த லகூஷியமான பெண்மைக்கு அப்பால் தாய்மையும், அதற்கும் மேலே இறைமையும் உண்டென்பதை நன்கு விளக்கிக் காட்டிய பெருமை விவேகானந்தரைச் சார்ந்ததாகும். அங்கிய நாடுகளில் வாசஞ்செய்த போது அவர் மனக்கண்முன் சதா காட்சியளித்துக் கொண்டிருந்தது, பெண்மையும் தாய்மையும் இறைமையும் அழகு பெற ஒருங்கே அமைந்து அவதரித்த சாரதாமணி தேவியாரின் திரு உருவமே என்பதை வாசகர்கட்கு நினைவூட்ட வேண்டிய தேவை யில்லே. அன்னரின் நூற்றண்டு விழா முடியும் வரைக்கும் 'ஆத்ம ஜோதி"யில் ஒவ்வொரு மாசமும் ஒரு பெண்மணியின் வரலாறு தவருமல் வெளிவரும் என்பதை மாத்திரம் நினைவூட்டி முடிக்கின் ருேம்.
(விவேகானந்தர் ஜயந்தி நாள் 26-1-54)
Sises ജ
*

Page 6
سی۔ 64)۔
சுவாமி விவேகாநந்த ரின் கடிதம்
(ஒர் அமெரிக்க நண்பருக்கு எழுதப் |ட்டது)
96) CDLII, J,6(3Tiu ஏப்ரல் 12,1900
மீண்டும் ஒருமுறை தேவியம்மை என் மீது கருணை கூர்ந்து வரு கின்றனள். காரியங்கள் மேல் நோக்குவன வாகின்றன. அது கட்டா யம் அன்ருே?
கருமம் எப்பொழுதும் தன்னுடன் தீமையைக் கொணரும். தீமைத் தொகுதிக்கடனை எனது உடல் நலக்கேட்டால் இறுத்தேன். அதறேல் மகிழ் ந் தே ன் . என் உள்ளம் அதனுல் முற்றும் நலன் பெருகலுற் றது. இதற்குமுன் என்றும் இல்லாத ஒரு மென்மையும் ஓர் அமை தியும் இப்போது வாழ்க்கையில் அமைந்துள்ளன. ஒட்டிவாழும் வாழ் வையும் ஒட்டாது வாழும் வாழ்வையும் இப்போது கற்றுவருகிறேன்? மனவாழ்க்கையில் என்னை ஆளவல்லேனுகி வருகின்றேன்.
தேவியம்மை தனது சொந்த வேலையை ஆற்றி வருகின் ருள். யான் இப்போது பெரிதும் கவலைக்கு இடங்கொடுப்பதில்லை. கணந்தொறும் என்னனைய பூச்சிகள் ஆயிரக் கணக்காய் மடிகின்றன, அவளது வேலை அதனுல் இறையும் மாறுபடாது நடந்து வருகின்றது. தேவியின் சீர் பரவுக! தன்னந் தனிய தாய் தேவியம்மையின் திருவுளப்புனலில் அங் குமிங்கும் அலைவதாய் இருந்துளது என் முழுவாழ்க்கையும். இம்மு றையை மீறயான் முயலும் அக்கணமே, யான் மனம் புண்ணுகப் பெற் றுள்ளேன். அம்மையின் திருவுளப்படியே ஆகுக!
நான் இன்பமாக வாழ்கிறேன், என்னுடன் சமாதானமாயுள்ளேன். இதற்கு முன்னிருந்ததிலும் மிகுதியாகத் துறவி மனப்பான்மை யெய் தியுள்ளேன். என் உற்ருர் உறவினர் மீதுள்ள அன்பு நாடொறும் குறைந்து வர, அம்மையின் மீது செல்லும் அன்பே நாளும் பெருகி வருகின்றது. தக்கணேசுரத்து ஆலமரத்தின் அடியில் பரீ ராமகிருஷ் ணரோடு இரவில் நெடுநேரம் விழிப்பொடு கழித்த நாட்களின் நினை வுகள் மீண்டும் மேலெழுகின்றன. கருமமோ கருமம் யாது? யாரு டைய கருமம்? யார்க்காக யான் கருமம் புரிவேன்?
யான் விடுதலை பெற்றவன். யான் தேவியின் குழந்தை அவள் வேலை செய்கிருள், அவள் விளையாடுகிமுள், நான் ஏன் திட்டம் அமை த்தல் வேண்டும்? என்து திட்டம் ஒன்றுமின்றியே தேவியின் திருவுள் ளப்படியே, காரியங்கள் நடந்தன, கழிந்தன, நாம் அவளால் ஆட்டு விக்கப்படும் கருவிகள்; தேவியே ஆட்டுவிப்பவள்.
 
 

65
o ● شکستامبر" பாரத நாட்டுப் பாவை மணிகளுக்கு ஈங்கோய் மலையிலுள்ள சாதன நிலையத்தின் ஸ்தாபகர் சுவாமி அத்வயானந்தர் அவர்கள் விடுத்த மங்களச் செய்தி اسے "
தாய்மார்களே! சகோதரிகளே! நீங்கள் தேவியின் திரு அவதாரங் கள். பராசக்தியின் வடிவங்கள். உங்களுக்கு வணக்கம்.
உங்களாலேயே இக்காலத்திலுங்கூட நம் நாட்டில் ஆஸ்திகம் * அசைக்க முடியாது நிலைபெற்று வருகின்றது. மக்களின் தொகை மிகவும் பெருகியும், ஞானமும், உணவுப் பொருள்களும் மிகவும் அருகியும் வருகின்ற இக்காலத்தில் நம் தாய் நாட்டிற்கு மக்களைப் பெருக்கும் மாதர்கள் மிகவும் அவசியமல்ல. பிரமச்சாரிணிகளாகவும் சந்நியாசினிகளாகவும் உறுதியோடிருந்து உலக சேவை புரியும் ஞானப் பெண்ணரசிகளே மிகுதியும் தேவை.
நீங்கள் முற்காலத்து வீர ஞானப் பெண்மணிகள் போல விளங் குவீர்களாக உப்பைப்போன்று உபகாரிகளாவீர்களாக உப்பில்லாப் பதார்த்தம் உருசியுடையதாகாது. உணவுப்பொருள்கள் யாவற்றிற் கும் உப்பே தேவையாயுள்ளது. காய்கள் முதலிய வற்றை அழுகா மற்காக்கவல்லது உப்பேயாகும். உப்பே யாவருக்கும் உணவினை யூட்டி உடலுறுதியோடு உயிர்களை யெல்லாம் வாழச் செய்கின்றது. ஆயினும் அவ்வுப்பை அப்படியே கையிலள்ளி யாவராலும் உண்ண இயலாது. ஆதலால் உப்பை ஒருவரும் நேரே அப்படியே சுவைக்க விரும்பார்கள்.அவ்வாறே நீங்களும் கல்விக்களஞ்சியங்களாக விளங்கி உங்கள் நூல்கள் மூலமாகவும், சொற்பொழிவுகள், கல்வி போதித் தல், மருத்துவம், கைத்தொழில்கள் முதலிய சேவைகளின் மூலமா கவும் நம் நாட்டை நலனுறச் செய்வீர்களாக உங்களை நேரில் காண்போருக்குத் தெய்வீக உணர்ச்சிகளே உண்டாதல் வேண்டும், அத்தகைய பண்புடையவர்களாய் வாழ்வீர்களாக
புதல்வர்களைப் பெற்ற புத்திரவதிகளே! உங்கள் பெண் குழந் தைகளை அறிவற்ற இயந்திரப் பதுமையாகளாக்காமல் கல்விக் கடல் களாகச் செய்வீர்களாக
மாதரசிகளே! உங்களுக்கு மங்கள முண்டாகுக! உங்களால் உலகிற்கு மங்களமுண்டாகுக!
ബത്തം

Page 7
- (6 -
அன்புவலையில் அகப்பட்டவிதம்.
(S, W. வரதராஜையங்கார்)
கருணு நிதியான பூரீ ராமகிருஷ்ணருடைய மெய்யுபதேசங்களி, னுயர்வை உண்மையில் அறிந்து அனுபவித்தவர் நரேந்திரர் ஒருவர் தான். பரமஹம்ஸர் கூறுவதில் எதையும் அவர் உடனே நம்பி விடுவ தில்லை. அவற்றை அறிந்து தெளிந்து மகிழ்வது அவருடைய சுபாவ மாயிருந்தது. செய்கையிலும் குணத்திலும் நாளடைவில் அவர் பரம ஹம்ஸரேயாகிவிட்டார், கனவிலும் நினைவிலும் அவர் பரமஹம்ஸரது ஒளி பொருந்திய திருமேனியைத் தரிசித்து வந்தார்; வைதீக ஹிந்து மதத்தின் ஜீவாதார கொள்கைகளை அம்மகானுபாவர் பின்பற்றி நடந்து வருவதைக்கண்டு அவரைப் போற்றி வந்தார்; அவர் பாத
நிழலில் அத்வைத மத சித்தாந்தங்களனைத்தையும் ஐயந்திரிபற ஒதியு
ணர்ந்தார்.
நரேந்திரர் பிரம்ம சமாஜத்தாரோடு சேர்ந்து விக்கிரக ஆராதனை யை வெறுத்தார். ஹிந்துமதக்கிரமங்களிற் கூறப்படும் கர்மாக்களை அலட்சிய பாவத்துடன் நோக்கினர். அவருக்கு யுக்தி சாஸ்திர (Science)ஆராய்ச்சியும் வேதாந்தஉட்கருத்துகளும் புலப்படாதிருந் தமைதான் இவ்வித நிலக்குக் காரணமாயிருந்தது. அப்பொழுது அவ ர் மிகவும் பால்யர்: ஹிந்துமதமோ எத்தனையோ பல்லாண்டு, பல்லாயி ரத்தாண்டு, பலகோடி நூற்றண்டு முதியது மேலும் கலாசாலேயிற் படித்துக் கொண்டிருந்த முறுக்கான காலத்தில் நவீன நாகரீகச் செயல்கள் அவரிடம் குடிபுகுந்திருந்தன. அதற்கேற்ப மேல் நாட்டுச் சமயாசார சாஸ்திரப்படி (Theological) 'பிரம்ம சமாஜம் ஸ்தா பிக்கப்பட்டிருந்தது. அஸ்திவாரமற்ற சுவராதலின், அவருடைய பரி சுத்த ஆன்மாவிற்கு ஏதோ திருப்தியளிப்பது போல் பிரம்ம சமாஜம் தோற்றுவித்ததேயன்றி ஆராயுங்கால் எதையும் உணர்த்தத் தக்கதா யில்லே. ஆதலின் அவர் அச்சமாஜத் தாரிடம் வெறுப்படைந்து தாம் கடவுளைக் கண் கூடாகத் தரிசித்ததுண்டா? வீண் வாசாஞானம் வேண்டியதில்லை' என்று கேட்கத்தொடங்கினர். -
அவரை முதலில் சந்தேக நிலையே அதிகமாகப் பாதித்து வந்தது. பிரம்ம சமாஜத்திற் புகுவதா? அல்லது பூரீராமகிருஷ்ணரின் பாதச்
 
 

سیس: || || || 7 6 ساله
சுவடுகளை உறுதியாகப் பற்றிக் கொள்வதா? என்ற மன அலைப்பால் அவர் மனமும் உடலும் நோயுற்று பித்தரைப் போலானர். இக்கார னம் பற்றிச் சில நாட்கள் அவர் தக்ஷஷினேஸ்வரத்திற்குச் செல்வதி னின்றும் நீங்கியிருந்தார். இதையறிந்து ராமகிருஷ்ணர் கல்கத்தா விற்கு வந்து, ஒரு சிஷ்யருடைய வீட்டிலிருந்து நரேந்திரரையசிைத் துவரச் செய்தார். அவர் வந்ததும் அவருளக்குறிப்பை வாடிய வத னத்தால் அறிந்து தமது கரத்தை நீட்டி, அவர் சிரசை ஒரு முறை "ஸ்பரிசித்தார், அக்கணமே, நரேந்திரர் உடலேப் பற்றிய நோயும் சித் தத்தைப்பற்றிய பித்தமும் அகன்றது. அதுமுதல் பரமஹம்ஸரிடத் தில் அவருக்கு ஸ்திரமான பக்தி வேரூன்றியது. அவருடைய தந்தை யிறந்தும், வறுமை வந்துற்றும், துயருற்ற தாயும் ஆதரவற்ற சகோ தர சகோதரிகளும் இவரையே நம்பியிருக்க அவர்களைக் காக்கவேண் டிய குடும்பபாரம் அவரை அழுத்தியும், அவர் தக்ஷஷிணேஸ்வரத்திற் குப் போவதை மறந்திலர். ஏதோ ஒரு தெய்வத்திருவருள் அவரை கெட்டித்தள்ளி அட்டியன்னியில் தக்ஷஷிணேஸ்வரத்தில் கொண்டு போய் விட்டு விடும்.
பரமஹம்ஸர் பிரம்மானுபூதியை ஏகம் பிரம்மமென்றுணர்த் திடும் நூல்களை வாசிக்குமாறு நரேந்திரரை ஏவுவார். ஏனைய அடிய வர்களே அவர் வாசிக்குமாறு தூண்டுவதில்லை; அவர்களுடைய மார்க்கம் வேறு. அவர்கள் பக்தர்கள்' என்பார். அவர் நரேந்திரரை மட்டுமே ஞானமார்க்கத்தில் துரிதமாகப் பழக்கி வேதாந்தத்தின் வெற்றியை யுணர்த்தி வந்தார். அப்பொழுது ஞான நூல்களை நரேந் திரர் வாசிக்க மறுப்பார்: படித்த ஞானம் - புத்தக ஞானம் வேண் டாம், மெய்ஞ்ஞானம் வேண்டும்' என்பார். பரமஹம்ஸர் அவரை விடாமல் அப்புத்தகத்தை நீ உனக்காகப் படிக்க வேண்டாம் எனக் காகச் சற்றுவாசி அப்பனுவலிற் கூறப்பெறும் விஷயங்களை நீகவ னிக்க வேண்டிய அவசியமில்ல." என்று கூறி அவரைப் பலவந்தப் 'படுத்துவார். அப்பால், குரு நாதரின் கட்டளைக் கிணங்கஅவர் வாசிப் பதுண்டு. அங்ங்னம் வாசிக்குங்கால் அவர் மனம் அந்நூலிலுள்ள விஷயங்களைத் தானகவே இந்தித்து விடும்; அதன் மெய்ப் பொருளி லேயே அவராழ்ந்து சமாதியாகிவிடுவார். இது கண்டு குருதேவர் அகப்பட்டான் அன்பு வலையில்' என்றகமகிழ்வார். இவ்விதம் யோகவாசிட்ட ராமாயணம், அத்யாத்ம ராமயணம், உபநிடதங்கள்

Page 8
-68
முதலியவற்றை நரேந்திரருக்குப் புகட்டினர் அம்மகாத்மா.
“எல்லாம் பிரம்ம மயம் கண்டதும் காணப்படாததும் பிரம் மமே. அறிந்து கொண்டதும் அறியப்பட்ாததும், அண்டாண்டங்க ளும் பிரம்மமேயன்றி வேறில்லே. வாழ்வும் வாழ்வற்றதும், வேதங்க ளும் வேதங்களல்லனவும், ஆரம்பமும் முடிவும் ஆகிய யாவும் பிரம் மமயம். ஆன்மாவும் பிரம்மமே. தேவதா மூர்த்திகளும் பிரம்மமய மானவைகளே. அகிலமே பிரம்மமயம். சத்யம் பிரம்மம். நித்யம் பிரம்மம். சகல சராசரப் பொருள்களும் பிரம்மமேயாம். பிரம்மம லாத பொருள் எங்குமில்லே. இதை அநுபவித்தவர்களே சித்த புருஷர் களாகின்றனர்; அவர்களே பரமஹம்ஸரெனப்படுவர். அவர் இப்பிர பஞ்சத்தின் கண்ணுள்ள பொருள்களனைத்தையும் பிரம்மமாகவே தரி சிக்கின்றனர். இம் மெய்ப் பொருளைக் கண்டவுடன் பாம்பு சட்டை யுரிப்பது போல் எல்லாப் பந்தங்களையும் கடிந்து, பரம புருஷனுக பரஞ்சோதிச் சுடராகப் பிரகாசிக்கின்ருன், தானே பிரம்மம் பிரம்ம மே தானென்றும் அறிகின்றன்.” என்னும் உபநிடத மகா வாக்கியங் கள் குரு கடாக்ஷத்தால் நரேந்திரருக்குச் சித்தித்தன. இவ்விதம் கொஞ்சங் கொஞ்சமாக அவர் முயன்று உறுதி பெற்று நிர்விகல்ப சமாதியில் நிர்க்குணப் பிரம்பானுபூதியை அடைய முயல்வாராயினர்.
பூரீ ராமகிருஷ்ணரின் உதவியில்லேயேல் நரேந்திரநாதர் ஹிந்து மத உண்மைகளை அவ்வளவு பரிபூரணமாக சுவானுபூதியில் அறிந்தி ருக்க முடியாது. நரேந்திரருக்கு நம்பிக்கை யுண்டுபண்ணும் பொருட்டு ராமகிருஷ்ணர் மிக்க பொறுமையுடன் எவ்வளவோ காலம் சிரமப்பட்டார். அவரைத் தம்ப்ை போலாக்க குருதேவர் பேர வாக்கொண்டு அவருக்கெழுந்த சிக்கலான பல சந்தேகங்களையும் போக்கி ஆறுதலளித்தார், பூரீ கிருஷ்ணசைதன்யரும் பூரீமத் சங்கர ரும் ஒருருக் கொண்டு உலகில் வந்தனரோ வென்று புகழத்தகும் ராகிருஷ்ணருடைய மகிமையை நாளடைவில் நரேந்திரர் உணர்வ ராயினர். நரேந்திரரின் மனமாகிய சோதியை மறைக்கும் மாயைத் திரையை பரமஹம்ஸராலேயே நீக்க முடிந்தது. முரட்டுத் தனமாய் நரேந்திரர் பலதடவைகளில் பரமஹம்ஸரை எதிர்த்த போதிலும் குரு தேவர் அவரை மெல்லச் சமாதானப் படுத்திக் கடைசியில் வெற்றி யுடன் விளங்கினர். அப்பொழுது அவர் தமது பிரதம சிஷ்யரைத்
 
 
 
 

69 سس
திருஞானசம்பந்தர் பொன் வள்ளத்து அமுதுண்டு அருள் ஞானம் பெற்றமை,
(சோ. சுப்பிரமணியக் குருக்கள்)
பூரீ சங்கராச்சார்ய சுவாமிகள் செளந்தர்ய லஹரியில் செய்த ஒரு சுலோகம். தவ ஸ்தந்யம் மன்யே தரணிதர கந்யே ஹ்ருதயத: பய: பாரா வார: பரிவஹதி ஸாரஸ்வதமிவ தயாவத்யா தத்தம் த்ரவிடசிக ராஸ்வாத்ய ஸததம் கவிநாம் ப்ரெளடா நா மஜநி கமயே; கவயிதா II
தரணிதர சந்யே - பர்வதராஜகுமாரியே தவ -உம்முடைய ஸ்தந்யம் - முலேப் பாலானது ஸரஸ்வத - வித்யாமயமான பய: பாராவரமிவ - பாற்கடல் போல பரிவஹதி - பிரவாகிக்கிறது (பெருகுகிறது) (என்று) மந்யே - நினைக்கிறேன் (எதெைலன் ருல்) தயாவத்யா - கிருபையுடையவளான உம்மால் தத்தம்கொடுக்கப் பெற்ற (தவஸ்தந்யம் - உமது முலேப்பாலே) ஆஸ் வாத்) - குடித்து (பருகி) த்ரவிடசிசு - தமிழ்க் குழந்தையான ஞானசம்பந்தர் ப்ரெளடாநாம் - புலமையில் முதிர்ந்தவர்களான கவிநாம் - இசைத் தமிழ்ப் புலவர் கட்குள் கமcய: - மனுேகர மான கவயிதா - செய்யுளியற்றுவோராக அஜநி-ஆகிவிட்டார்.
N.
பூரீ சங்கராச்சாரிய சுவாமிகள் இச்சுலோகத்திலே சீர்காழிப் பகு தியில் திருவவதாரஞ் செய்த ஞானசம்பந்தருக்கு மூன்ரும் வயதில் அம்மையும் அப்பரும் வந்து ஞானப்பாலூட்டிய அற்புதத்தை வியந்து பாராட்டுகின்ருர், மெய்யன்பர் பொருட்டு உருவந்தாங்கி வரும் அம்மையப்பர்களது திருவடிவம் எம்போன்றரது, என்பு, தசை, குருதி முதலியவற்ருலாக்கப்பட்டதன்று. உடனே மறைக்
டிற்பக்கத் தோடர்ச் சி:
தட்டிக் கொடுத்து ஏனைய அன்டர்களைப் பார்த்து “இப்பொழுது நரேந்திரன் சகலதையும் அறிந்து கொண்டான், எனது சித்திகள் யாவும் அவனுக்கு எளிதாயின. அவன் தேவியின் திருக்குமாரணுகி
விட்டான். அவனே ராதாகிருஷ்ண பக்தன்; சீதாராம சித்தன்; சித்தி யடைந்த அத்வைதி. நிர்க்குண பிரம்மோபாஸி” எனநவின்றருளினர்.
ضد سيضية سيس-شليسسسسسسس.

Page 9
-س- 70"--
துவிடக் கூடிய திவ்விய சரீரமாகும். இப்படி அருள் வடிவந்தாங்கி வந்த தேவியாரின் ஸ்தனபாரங்கட்கு முறையே பரஞானம் (கடவுள றிவு) அபரஞானம் (உலகியலறிவு)என்று பெயராம். இத்தகைய அறி வுகள் உயிர்கட்கு ஞான சொரூபியாகிய தேவியின் திருவருளாலே யே விளக்கம் பெறுவனவாகும்.
தேவியின் திருவடிவம் ஞான சொரூபமாம் என்பது' சக்தி தன் வடிவே தென்னிற் றடையிலா ஞானமாகும்” என்னும் சிவஞான சித்தித் திருவாக்கால் அறியலாம்.
காளிதாசனுக்கும் முத்துத் தாண்டவர்க்கும் முறையே தாம்பூல முண்பித்தும் பாலடிசில் தந்தும் கல்வியும் ஞானமும் தோற்றுவித்த உலகன்னை, சற்புத்திராவதாரமாகிய ஞானசம்பந்த மூர்த்திகட்கு சிவாஞ்ஞைப்படி பொன் வள்ளத்துப் பாலமுதம் உண்பித்தலின்மூல மாக சிவஞான விளக்கமும் அருள்வாக்குச் சித்தியும் அருளினர்,
முன்னெருகாலத்திலே தேவாதிதேவரும் ஆதிகுருவுமாகிய தக்ஷ
ணுமூர்த்தி சந்நிதியில் ஸருத்குமாரர் என்னும் பெயரோடு விளங்கி
ஞானேப்தேசம் பெற்ற ஸ்கந்த மூர்த்தியே தசஷிணதேசத்திற் சிவ சமய விளக்கம் குன்றுவதைக் கண்டு அருந்தவச் செல்வரான சீர்கா ழிச் சிவபாத விருதயர்க்குத் தமது அம்ஸமாக அவதாரஞ் செய் தார் என்பது பக்திமான்கள் கொள்கை. ஸ்கந்த ஸ்வாமியே ஸகத் குமாரர் என்பது:
*பகவான் ஸ்நத் குமார ஸ்தம் ஸ்கந்த இத்யா சகஷதே!"
*தம் ஸ்கந்த இத்யா சகஷதே!" என்னும் சாந்தோக்கிய உபநிஷத 7ம் பிரபாடக வாக்கியத்தால் அறியக்கிடக்கின்றது.
சமீபகாலத்தில் உயிர்வாழ்ந்த தமிழறிஞரும் மிகச்சிறந்த சமய ஞான உள்ளொளி விளக்கமுடையவரும் வீர தீரச் சொற்பொழி வாளருமாகிய திரு. வி. கல்யாணசுந்தர முதலியாரவர்கள் தாமெழு 6 திய 'சித்தமார்க்கம்” என்னும் நூலில் 15ம் பக்கம் "சித்தர் திருக் கூட்டம்' என்ற பகுதியிலும், "இமயம் அல்லது தியானம்' என்ற நூலில் 61ம் பக்கத்தில் (ரஷ்ய மாது) பிளவட்ஸ்கி கூறியதை
 
 
 
 
 
 

س- 71"س
அநுவதிக்கும் இடத்திலும் பூரீ கைலாய கிரியில் மெளருகுருவாக ஒருவர் குருமார்கட்குத் தலைவராக விளங்குகின்ருரெனவும் அவரெ திரில் நான்கு பிரதான சிஷ்யர்களிருக்கிருர்களெனவும் அந்நால்வரி லொருவர் இளமை வடிவினராய்த் தலைமை பெற்றிருக்கிருரென வும் அவர்களைச் சேர்ந்த குருமார் கூட்டமொன்றுளதெனவும் அவ சியம் நேரும்போது அவர்களிலொருவர் உலகுநோக்கிவந்து அறம் வளர்த்துச் செல்வரெனவும் எழுதுகின்றர்.
འི་ நமது சமயக் கொள்கையின்படி மெளன குரு பூரீ தகூஷிணு
மூர்த்தியாகவும் நால்வர் சநகாதி நால்வராகவும் இளமை வடிவினர்
ஸ்கந்தர், ஆகவும் கொள்ளலாம். சைவசமய யாகங்களிலே பூஜிக்
கப்படும் சப்தகுருக்களில் ஸ்கந்தசுவாமியும் ஒருவரே. இங்ங்ணம் (ஸ5த் குமார) ஸ்கந்த அம்ஸமாக அவதரித்தவர் சம்பந்தர் எனக் கொள்ளின் அம்மையும் அப்பரும் வந்து பாலமுதளித்தலில் ஒரு
அதிசயமு மில்லை. அங்ங்னமன்றிச் சம்பந்தர் பூர்வஜென்மங்களிலே
சரியை கிரியா யோக நிலைகளை முடித்து ஞானநிலை அடைய வேண் டிய தகுதியேடு பிறந்தவோர் பக்குவான்மா எனக்கொள்ளினும் சர்
வலோக மாதா உருவத்திருமேனி தாங்கி வந்து பாலமுதளித்து
ஞாைேதயம் உண்டாக்குதல் என்றும் நிகழக் கூடியதொரு அருட் செயலேயாம். தேவியாரது அருட் பிரசாதத்தால் அருள் ஞானம் பெற்றேர் பண்டுதொட்டின்றுவரையும் உள்ளார்கள்.
இன்று நாற்றுண்டு விழாக் கொண்டாடும் அன்னை பூரீ சாரதா மணி தேவியாரைத் தமது மனைவியாகவும் பிரதம சிஷ்யை யாகவும் பெற்ற பூரீ ராமகிருஷ்ண பாமஹம்ஸாம் பரீதகSணகாளி தேவியின் அருட்பிரசாதத்தால் மிகப்பெரிய கல்விமான்களும் ஆங்கில பட்ட தாரிகளும் மெச் சும்படியும் அதிசயிக்கும்படியும் ஞானக்களஞ்சிய மாக அதிமதுர மாதுர்ய வாக்விலாசமும் பெற்றவராக விளங்கியிருந்
தாரென்பது அன்னர் வாழ்க்கை வரலாற்ருல் நன்கு அறியலாம்.
தகுதியுடைய பக்குவான்மாக்கட்கு இறைவனும் இறைவியும் சவெளிப்படையாக வந்து அாள் பாலித்தலினல் ஞானம் உண்டாகு
மென்பது பின்வரும் திருமூலர் வாக்குகளால் நன்கு விளங்கும்.
"சத்தியிைேடு சயம்புவும் நேர்படில் வித்தது வின்றியே எல்லாம் விளைந்தன."

Page 10
- ?? -
** நின்றனன் நேரிழையா ளொடு நேர்பட ஒன்றிய உள்ளொளி யாலே உணர்ந்தது சென்ற பிராணிகள் சிந்தையில் வேண்டிய துன்றிடு ஞானங்கள் தோன்றிடுந் தானே.” என்பதனுல் அம்மையும் அப்பரும் எதிரில் வந்த மாத்திரத்தே ஜீவாத் மாவை மறைத்திருந்த திரோதான சக்தி (மாயை) நீங்கிவிட சர்வ ஞானமும் ஆன்மாவிடத்திலே பிரகாசமாயிற் றென்பதாம். பாலூட் ட்ல் என்பது குரு மந்திரோபதேசம் செய்வது போன்ற வெளித் தோற்றமான ஆன்ம சுத்திக் கிரியையாகும். இங்ானம் சிவபிரான் ஆணைப்படி தேவியின் அருள் நோக்கமும் மெய்நீண்டலும் திவ்விய பிர6லாத உணவும் ஞான சம்பந்தர்க்குத் தடையற்ற ஞானவிளக்கத் துக்குக்காரணமாயின. இதல்ை,
'சிவனடியே சிந்திக்குந் திருப்பெருகு சிவஞானம் பவம த&ன யறமாற்றும் பாங்கினி லோங்கிய ஞானம் உவமையிலாக் கலைஞான முணர்வரிய மெய்ஞ்ஞானம் தவமுதல்வர் சம்பந்தர் தாமுணர்ந்தா பந்நிலயில்.' இவ்வாறு ஞானுேதயம் உண்டானது மாத்திரமன்றித் தேனினுமினி ய சித்திர வித்தாரக் கவிபாடும் முதுபெரும் புலவராகவும் ஆக்கிவிட் டதாம் அம்மையின் அருட் பிரசாதம், சகல வித்யா ஸ்வரூபிணியான தேவியின் திருவருளாலேயே இனிமை நிறைந்த வாக்குவன்மையுண் டாகும் என்பதும் மேற்காட்டிய சுலோகத்துள்ள 'கமயே:கவயிதா? என்னும் வாக்கால் நிரூபணமாகிறது.
அஞ்சொன் மொழியாள் அருந்தவப் பெண்பிள்ளை செஞ்சொன் மடமொழிச் சீருடைச் சேயிழை தஞ்சமென் றெண்ணித் தன் சேவடி போற்றுவார்க் கின் சொல் அளிக்கும் இறைவி யென் டுரே. என்னும் திருமந்திர மொழியும் இதற்குச் சான்றகும்.
இவ்வாருக ஞான சம்பந்தக் குழந்தைக்கு அம்மையப்பர் வந்து அருள் செய்து 'ஆத்மஜோதி”யைப் பிரகாசிக்கச் செய்த அருட் செயலே அத்தெய்விகக் குழந்தையின் வாக்கிலேயே காண்போம்.
போதையார் பொற்கிண்ணத் தடியில் பொல்லாதெனத்
தாதையார் முனிவுறத் தானென யாண்டவன்
காதையார் குழையினன் கழுமல வளநகர்ப்
பேதையாள வனொடும் பெருந்தகை யிருந்ததே
:
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆசை கொண்டேன்!
எடுப்பு ஆசை கொண் டேன் சுவாடஉம்மோடென்றும் நேசமுடன் வாழவே ட பேதை நான் (ஆசை) தொடுப்பு தேஜோமயானந்தச் சிற்பர வெளியிலுனே வாச மலர் மணம் போல் ஆசை தீ ரக்கலக்க (ஆசை) முடிப்பு
கமல முகத்தெழிலக் கண்டு மயல் மிகுந்துன் கருணே விழிக்கனலில் பண்டு வி% யொழிந்துன் அமுதப் புகழிசைத்துக் கொண்டு அருகிருந்துன் அடிமலர்த் தே&னவாரி யுண்டு களிசிறக்க (ஆசை) காலேக் கதிரொளியே மாஜலச் சுடர்மதியே! கலையெழில் சிந்திடும் விஜலயில் நிதியமுதே சிலர் மனங்கவரும் நீலகண்ட தேவனே! தில்லைக்கூத்தனேஎன்று அல்லும் பகலும் தொழ (ஆசை)
ஞானக் கதிரவா!
எடுப்பு
வா வா ஞா னக்கதிர வாட இருள்கடிந்து கா வா யெனேத்துரிதமாய்ட குதித்தெழுந்து (வா வா
தொடுப்பு ஆவி துடிக்க நெஞ்சால் கூவி யழைப்பவர்தம் ஆர் வக் கடலினின்று தாவி யெழும் அமுதே Iவா வா
முடிப்பு ஆசை யகந்தையிருள் வேசம் ருெழிந்திடவும், அச்சம் மடமைமிடி நச்சுத் தொலைந்திடவும்,
நாசகா முகப்பகை நைந்தே யழிந்திடவும் நானுன் கருணேயொளித் தேனில் கலந்திடவும் (வா வா பொன்ன மு தநகையால் மின்னவிண் மண்ணெல்லாம் பொங்கு நின் ைெளிவெள்ளம் பொலிய இவ் வுலகெல்லாம் என்னித யப்பொழிலில் இன்பக் கனி மலர்கள் எழிலுடன் குலுங்கிட ஒளிபரப் பி விரைந்தே [வா வா
பரமஹம்ஸதாசன்

Page 11
74 -
இது என் பரிசுக் கிசையாது' என்ற சங்கிலியார். (வித்துவான். ஆ. சிவலிங்களுர்)
மணந்து கொடுத்தற்குரிய பருவத்து மகளிர்களுள், தங்கள் பெற்ருேர்கள் தக்க மணமக்களைத் தேடி மணந்து கொடுக்க அவர் களுடன் மனைவாழ்க்கையை மேற்கொள்பவர்களும், தாங்களே தங் கட்கு ஏற்ற கணவன் மார்களாகப் பிறரை முன் கண்டறிந்து காத லால் பிணைக்கப் பட்டுப் பின் பெற்றேர்களால் அவர்களே மணந்து , மனைமாட்சி யெய்துபவர்களும் உளர். நம் நாட்டில் பெரும்பாலும் பெற்ருேர் மணமக்களைத் தேடிச் செய்து கொடுக்கும் மணமே நிகழ்ந்து வருவது. மகளிர்தாமே கணவன் மார்களைப்பெறும் மணம் சிறுபான்மை நிகழ்ந்து வருவது. ஆணுல்சங்க இலக்கியங்களில் பின் னதைப் பற்றியே காணப் படுகின்றதால் அக்காலத்தில் பெரும்பான் மையான ஒழுக்கமாகப் பின்னது இருந்திருக்கலாம். நம் பெரியபுரா ணப் பெண்மணிகளுள் திலகவதியார் தம்பெற்றேர் தேடிய கலிப்ப கையாரையே கணவராக உள்ளத் திருத்தினர்.
*எந்தையும் அன்னையு மவர்க் கெனக் கொடுக்க இசைந்தார்கள் அந்த முறையா லவர்க்கு உரியது நான்'
என்பதுஅவரது எண்ணம். காரைக்காலம்மையாரும் அத்தகையரே. சுந்தரரது முதல் மனைவியாராகிய பரவையார் காதல் கொண்டு பின் மணந்து கொண்டவர், மேற் கூறிய இரு திறத்தாரையும் போலின்றி தம்மனதிற் கேற்றவர்களாகக் கணவன்மார் அமைதல் வேண்டும். அதாவது தாங்கள் நேரில் கண்டு காதல் கொள்ளாவிட்டாலும் பெற் ருேர்களே தேடிக்கொண்டு வந்தாலும், தாங்கள் குணம் கல்வி ஒழுக்கம் முதலிய தகுதிகளுக்கேற்ற தகுதியுள்ளவர்களாக இருத்தல் வேண்டும்' என எண்ணுபவர்களும் உளர். இம் மூன்ருமவரைச் சார்ந்தவர் நம் அம்மையார் சங்கிலியார், W、
குலம் வேண்டுமென்றிருப்பர் குலத்துள்ளார் கல்வியிற் குறையாஞானப் பலம் வேண்டுமென்றிருப்பர் தந்தைமார் பரந்த பெருஞ் செல்வமுள்ள தலம் வேண்டுமென்றிருப்பர் தாய்மார்கள் யவ்வனமும் அழகும் சார்ந்து நலம் வேண்டுமென்றிருப்பர் நாறு குழற் கன்னிமார் நலத்தின்மிக்கார்,
(இராமாயணம்-இராவணன் பிறப்புப் படலம்)
 

------- 75 سے
பெண்ணுதவுங் காலப் பிதா விரும்பும் வித்தையே எண்ணில் தனம் விரும்பும் ஈன்ற தாய் - நண்ணும் மருவினிய சுற்றம் குலம் விரும்பும் காந்தனது பேரழகு தான் விரும்பும் பெண்.
இப்பாடல்களுக்கேற்பப் பெற்றேர் அனைத்தையும் தேர்ந்து அவை வாய்க்கப் பெற்ற மணமக்களைத் தம் பெண் மக்களுக்கு மணம் முடித்து வைத்தால் அவர்களுள் நல்ல முறையில் வாழ்வோ ரும் உளராவர். அன்றிப் பெண் மக்களின் குணத்திற்கும் சிற்சில போது ஒவ்வாத காரணத்தால் மன வருத்தம் சச்சரவு முதலியவற் றுடன் கல்லானலும் கணவன் புல்லாலுைம் புருஷன் என்று பே சிக்கொண்டு வாழ்வைத் தள்ளுவோரும் உளர். ().
காதல் கொண்டு மணம் புரிந்து கொண்ட காதலர்களுள், வாழ்
நாள் அளவும் தம் காதலில் சிறிதும் குறையாதவர்களாய் வாழ்வோ ரும் உளர். அன்றி மணம் முடிந்த சில ஆண்டுகளில் காதல் முறிவு ஏற்பட்டு வேறுவகையின்றி உடன் இருந்து குடும்பத்தை நடத்து வோரும் உளர். பின்னவர்கொண்ட காதலுக்கு அழகு, அறிவு, ஒழுக்கம், பொருள் முதலியவற்றுள் ஏதேனும் ஒன்று அல்லது இர ண்டு தான் காரணமாகும். மணந்து ஆண்டுகள் ஆக ஆக இவர் கள் கொள்கைகள் ஒற்றுமைப்படாது சச்சரவுக்கு இடம் உண்டா கிறது. இக்காலத்தில் காதல் மணம் என்று நிகழ்த்திக் கொண்டு வாழ்வோரில் பின்னவரே மிகுதியும் உளர்.
நம் சங்கிலியாரைப் போன்று காதலர்களைத் தேர்ந்து பெற் ருேர் மணந்து கொடுக்க மனேயறத்தை மேற் கொள்பவர்களே சிறந்த முறையில் வாழ்க்கையினை நடத்த இயலும். இவர்கள் வாழ்க்கையில் ஏதேனும் மாறுபாடு நேருமாயின் அது ஊழலால் வந்த தென்று தள்ளவேண்டுமே தவிர அறிவுக் குறையால் வந்த தென்று வெறுக்க முடியாது.
திருவொற்றியூர் அருகே ஞாயிறு கிழவர் என்ற பெரியாருக்கு மகளாகத் தோன்றியவர் நம் சங்கிலியார். சிவபிரானிடத்து அன்பு டையவராய் வளர்ந்துவந்தார். தக்க மணப்பருவம் வந்த காலத்து ஓர் நாள் பெற்றேர் மண ம் குறித்துப் பேசினர், அதனைக் கேட்ட சங்கிலியார் மூர்ச்சிக்க, அவரைத் தாங்கி வேண்டுவன செய்து

Page 12
..................76--
உயிர்க்கச் செய்து என்னநேர்ந்தது என வினவினர் பெற்றேர்,
என்று தம்மை ஈன்றெடுத்தார் வினவ மறைவிட்டியம்புவர் இன்றென் திறத்து நீர் மொழிந்த இது என்பரிசுக்கிசையாது வென்றி விடையார் அருள் செய்தார் ஒருவர்க் குரியேன் யானினிமேல் சென்று திருவொற்றி யூரணேந்து சிவனுர ருளிற் செல்வன் என.' மொழிந்தார். இப்பாட்டில் உள்ள இரண்டாம் அடி உயிர் நாடி போன்றதாகும், என் திறத்து நீர் மொழிந்த இது என்று கூறு முக த்தால் என்னைக் கலவாமல் நீங்கள் மணமுடிவு செய்வது தவருகும் என்பதை வற்புறுத்தினர் அம்மையார், 'யான் இறைவனை வழிபடுப வள். இறைவன் அடியார்க்கே - அதுவும் அவ்விறைவனுற் குறிப்பி டப்பட்ட வர்க்கே மணம் பெற வேண்டும், என்ற கொள்கையுடை யவள். நீங்கள் என் குணம் கொள்கை முதலிய வற்றுக்கு மாருக உள்ளவனையும் உறுதிப்படுத்தி விடுவீர்கள், அதல்ை இறைவனே எனக்கு மணவாள%ன உறுதிப்படுத்தி யருள வேண்டும் என்றுஎண் ணுபவள்” என்றெல்லாம் விளங்கிக் கொள்ளும் படியாக, என்பரி சுக் கிசையாது' என்று அழுத்தமாகக் கூறினர்.
பெற்றேர்கள் தம்மக்களுக்குத் திருமணம் முடிப்பதாயின் மக்
களையும் கலத்தல் வேண்டும். மக்களைக் கலவாமல் பணம் முதலிய பலன் கருதிச் செய்வாராயின் அவர்கள் நரகமேயடைவர் என்பது பெரியோர் கொள்கை,
இம்மை சேர்பயன் கருதியே தகாதவரிடத்தில் கொம்மை வார்முலே மகட்கொடை நேர்ந்த அக்கொடியார் அம்மை யாழ்நிரை யத்திடை வீழ்ந்தன ரழுத்தித் தம்மை நோக்குநர் ஒருவரும் இன்றியே தளர்வார்.
இவ்வாறு நல்லாற்றுார்ச் சிவப்பிரகாச அடிகள் கூறுவர். மக களும் தம்மைப் பெற்ருேர் கலக்குமிடத்துத் தம் எண்ணங்கள் முழு மையும் சிறிதும் விடாமல் அவர்களுக்கு அறிவிக்க வேண்டும். மனம் இயைந்த பின்னரே மணம் இயைதல் வேண்டும்,
 
 
 
 
 
 
 
 

سلسنتي 77" ستسلم
9. 敦 சமயம பார்க்கும் சைவர்களே ேெவ عصبیتیجہ محنتیجہN سمتییہ جበጠው ན་ཐ་ཁ་4.༦༥༡་་་་་་་་་་་་་་་་་་ N• "_"_" " " بناب، بیبیسیسی: ""
கடவுள் என்ற உருவத்தை
கண்ட மனிதர் எத்தனைபேர்? கலைஞர் பலரின் உரு அமைப்பில்
கண்டேன் பற்பல கோயில்களில்
கல்லில் கடும்லோ கங்களிலும்
காட்சி அளிப்பது கடவுளென
எள்ளி எள்ளி எத்த&ன பேர்
வங்கி ஏங்கி நோக்கின் ருர், 。
என்னின் எங்கள் கடவுளுக்கு
எத்தனே எத்தனை பூசை ஐயா! மண்ணில் சாதம் தான் சமைத்து
மாண்புடன் படைப்பான் சிறுபையன் தேம்ை பாலும் தினமாவும்
தேடித் தினமும் நல்லூனும் தானும் மடந்தை பாகனுக்கு
நாளும் படைப்பான் நல்வேடன், ஊர்பேர் நட்சத் திரம் சொல்லி
உரக்க மந் திரமும் சொல்லி ஆரா அமுதனத் தினந்தினமும் 。’ அர்ச்சனை செய்வார் அன்பர் பலர்.
வீட்டில் வளர்த்த உயிர்க2ளயே
விரும்பி இறைக்குப் பலிகொடுத்து நாட்டில் பஞ்சம் ஒழிகவென
நல்லவரமும் கேட்பார்பலர், !
கல்வி கற்றுத் தான் பயனென்
கடவுளே வணங்கித் தான் பயனென்
எல்லே இல்லாப் பரம்பொருள்தான்
எங்கே கேட்டார் உயிர்ப்பலியை
உலகம் நன்கு உணரவில்லை
உன்னத மேதைகள் வாக்குகளை
காற்ருே டுருண்டவை போவதினுல்
கருத்துகள் மாறவும் பார்த்திடுமோ?
வாய் பேசாத பிராணிகளே
வருத்த இறைவன் விரும்புவனே? தாய் பேசாளோ தன்மகனின்
தலையை அறிஞர் அறுத்துவிட, சைவம் வளர்க்க வேண்மென்று
சமயம் பார்க்கும் சைவர்களே! வையம் பழிக்கும் உயிர்க்கொலையின் வாழ்வை ஒழிக்க முற்படுங்கள்

Page 13
- 78 -
நாமலிகித ஜெப வேள்வி
(மு. ச. லெட்சுமணபிள்ளை)
.alanan
ஆனந்த ஆச்சிரமத்துப் பெரியோர்கள் மேற்படி வேள்வியை நடத்த முன்வந்துள்ளனர். ஆத்ம அன்பர்களுக்கு இது ஒரு அரிய வரப்பிரசாதமாகும். பூரீ அன்னை கிருஷ்ணுபாய் அவர்கள் சங்கியாசம் எடுத்து 25ம் ஆண்டு நிறைவு 1955ம் ஆண்டு நொவெம்பர் மாதம் பூர்த்தி யடைவதைக் கொண்டாட 1953ம் ஆண்டு அக்டோபர் : மாதத்திலிருந்து 25 மாதங்கள் உள்ளன. இந்த 25 மாதங்களுக்குள் 25 கோடி ஜெபமந்திரங்கள் ஆத்ம அன்பர்களால் எழுதி அனுப்பித் தீரவேண்டும். ஆனந்த ஆச்சிரமத்திலிருந்து வெளிவந்திருக்கும்ஜெப" எண்ணிக்கையைப் பார்த்தால் எதிர்பார்த்ததற்குச் சரிபாதியே ஆச் சிரமத்திற்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது.
அன்பர்களே இவ்வேள்வியின் உட்கருத்து யாதெனில் நூற்றுக் க னை க் கான ஆத்ம அன்பர்கள் இதில்ஈடுபட்டு நாள் தவருமல் நாளொன்றுக்கு இருநூறு முந்நூறு ஜெட மந்திரங்கள் பக்தி சிரத் தையோடு 25 மாதங்கள் எழுதிப் பழகுவார்களானல், ஈடுபடும் அன்பர்கள் பக்தி யோகத்தில் பழகி அதில் கட்டுண்டு 25 மாதங்க ளுக்குப் பிறகும் விடாமல் நாம லிகித ஜெபத்தைச் செபித்து வந்து பக்தியோகியாவார்கள் என்பது திண்ணம். பூரீ அன்னையாரும் பூரீ சுவாமி ராமதாஸ் அவர்களும் ஜனங்களை பக்தி யோகத்தில் பிர வேசிக்கச் செய்வதிலேயே ஆர்வங்கொண்டும், அதற்காகவே மானி டச்சட்டையை விடாமல் போர்த்திக்கொண்டும் இருப்பதால் இவ் வித வேள்வியை ஆரம்பித்திருக்கிருர்கள்,
அடியேன் இவ்வேள்வியில் ஈடுபட நினைத்ததும் நாளொன் றுக்கு 200 மந்திரங்கள் வீதம்தான் எழுதிவந்தேன். இவ்வாறு எழுதிக்கொண்டிருந்தசமயம் ஒருநாள் ஆத்ம ஜோதியின் கெளரவ ஆசிரியர் அவர்களிடமிருந்து தற்செயலாய் அன்னை கிருஷ்ணுபாய் அவர்களின் படத்துடன் கூடிய ஸ்தோத்திரம் வந்தது. மேற்படி படத்தை ஜெபம் எழுதும் நோட்டுப் புத்தகத்தில் வைத்து பூரீ அன்னையை பராசக்தியின் அம்சமாக பூசித்து ஜெபம் எழுதத் தொ டங்கினேன். என்னே சக்தியின் பெருமை! மகிமை!! நாளொன்
 
 
 
 

றுக்கு 200 ஜ க எழுதிவந்த அடியேன் 300, 400, 500, 600, 700. 800, 900 என்று உயர்ந்துகொண்டேபோய் தற்சமயம் நாளொன் றுக்கு 1000 வீதம் எழுதி வருகிறேன், ?-12-53 வரை 40000 மக் திரங்கள் எழுதி அனுப்பிவிட்டேன்.
சக்தியின் மகிமை அளவிட முடியாதது. சக்தியிடம் நாம் அரு ளுக்காக எவ்வளவு முறையிட்டாலும், முறையிட்டளவுக்குக் கூடு தலாகவே தனதருளைக் கொடுப்பாளென்பது திண்ணம். பொரு ஞக்காக அவளிடம் நாம் முறையிடும் அளவில் 100ல் ஒருபங்கு அருளுக்காக முறையிட்டால் எவ்வளவோ அருளைப் பெறலாம். இந்த அளவிலும் நாம் அருளுக்காக முறையிட்ட பாடில்லே, ஆகவே, இவ்வேள்வியில் ஈடுபடும் அன்பர்கள் அன்னேயாகிய பராசக்தியை மனதில் நிறுத்தி பக்தியோடு எழுதிவருவார்களேயானுல், சக்தியின் அருளால் தங்களுக்கு வசதியும் ஊக்கமும் உண்டாகி தாங்கள் உத் தேசிக்கும் தொகை படிப்படியாக பக்தியின் அளவுக்குக் கூடிக் கொண்டே போகும் என்பது அடியேனின் அனுபவம். பக்தியின் றேல் கொஞ்சமும் எழுத முடியாது. பெருமைக்காக எழுதுவதிலும் பண்ணியமில்லே. ஆகவே பென்சிலால் எழுதலாமா? டைப் அடிக் கலாமா? கோட்டுப் புஸ்தகத்திற்கு வழி யென்ன? நேரமில்லையே! குடும்பத்தொல்லே உத்தியோகத் தொல்லே! என்ன செய்வது என்று வீண்சாக்குப் போக்குச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியது தான ,
நரகத்திற்குப் போகும் பாதை மிகவும் விசாலமாக இருக்கும் மோக்ஷத்திற்குப் போகும்பாதை மிகவும் ஒடுக்கமாயிருக்கும். சிறு வர்களுக்கு ஸம்சார சுகத்தின் ருசி தெரியாததுபோல், பிரபஞ்ச சுகத்தில் இருப்பவர்களுக்கு பரமானந்த சுகம் தெரியவராது. துக்கத் திற்குக் காரணம் பாவம், சுகத்திற்குக் காரணம் புண்ணியம். பாலி யத்தில்ஆட்டங்களிலும், யெளவனத்தில், ஸ்திரீசளிடத்திலும், விரு த்தாப்பியத்தில் பாரியாள், புத்திர பெளத்திர பந்துக்களிடத்திலும் விசேஷ ஆசையுடையவர்களாயிருந்து விருதாவாய் நமது காலத் ಖ್ಯತೆ கழித்து விடுகிருேம்.
வித்தை. தனம், கீர்த்தி, பந்துக்கள் முதலானவைகளெல்லாம் மரணகாலத்தில் நம்மைக் காப்பாற்ற மாட்டா. ஆதலால் பக்தியோ

Page 14
ܢܢܢܢܢܢܝ 80 ܒ ܝ
தினசரி வாழ்க்கையில் யோகநிலை,
(சுவாமி சித்பவானந்தா)
மக்கள் எல்லாரும் வாழ்க்கையில் விருப்பம் வைத்திருக்கின்ற னர். வாழ்ந்து அலுத்துப் போய் விட்டது, இனி எதற்காக வாழ்ந்தி ருக்க வேண்டும் என்று வாழ்வை வெறுப்பவரைக் காணமுடி uJT5). எத்தனைகாலம் வாழ்ந்திருந்தாலும் இன்னும் அதைப் பெருக்கிக் கொண்டே போகவேண்டும் என்னும் அவா எல்லோர்க்கும் உண்டு வெறுமனே வாழ்ந்திருந்தால் போதாது. வாழ்க்கையின் பயன்கள் பல இருக்கின்றன, அப்பயன்களை ஓயாது பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும். அவைகளைப் பெறுவதனுல் புதிய ஊக்கமும் « » வாழ்க்கையில் வந்து கொண்டிருக்கிறது, வாழ்க்கைப் பயன்கள் அனைத்திலும் மிக முக்கியமானது இன்பம். இன்பத்தை நாடாதார் இவ்வுலகில் இல்லை, எடுத்துக் கொள்ளுகின்ற முயற்சிகளெல்லாம் இன்பத்தைப் பெருக்குதல் பெருட்டேயாம். அறிவு, கீர்த்தி, செல் வம், ஆதிக்கம் ஆகிய மற்ற வாழ்க்கைப் பயன்களெல்லாம் இன்பத் தையே சார்ந்திருக்கின்றன. அறிவை வளர்த்து ஒருவர் ஆனந்தம டைகிருர், செல்வத்தைப் பெருக்கி மற்ருெருவர் இன்புற்றிருக்கிருர்,
முற்பக்கத் தொடர்ச்சி கத்திற்கு அடிப்படையாகவுள்ள வே ள் வி யி ல் ஈடுபட்டு பக்தி யோடு எழுதிவருவீர்களானுல் பராசக்தியின் அருளால் தங்கள் பக்தி இரத்தைக்குத் தக்கவாறு இச் சென்மத்திலோ, மறு சென்மத்திலோ யோகியாகி பிரம ஐக்கிய மென்னும் மோசஷ்த்தையடைவீர்கள்.
ஓம் சுத்த சக்தி ஓம் சிவம்.
*RUNN
ஆசிரியர் குறிப்பு:20-12-53 வரையில் இந்தியாவிலும் இலங்
கையிலும் மொத்தம் 1135 சாதகர்கள் ஒன்றரைக்கோடி நாம ங்கள் எழுதி முடித்து, புத்தகங்களை ஆனந்தாச்சிரமத்திற்கு அனுப்பியிருப்பதாக அறிந்து மகிழ்ச்சி அடைகின்ருேம். இத் தொகையில் இலங்கை அன்பர்கள் 114 பேர் எமுதியுள்ளது பன்னிரண்டரை லட்சமாகும்.
 
 
 
 
 
 

- 81 -
ஆதிக்கத்தை அடைந்து இன்னுெருவர் ஆனந்தம் (Tய்துகிருர், மாந்த ருடைய மதிப்புக்கு இலக்காவதில் மற்ருெருவருக்கு பெருமகிழ்ச்சி ஆக உயிர் வாழ்ந்திருக்கவும் அதன் மூலம் இன்பத்தைப் பெருக்க வும் எல்லாாம் ஓயாது முயன்று வருகின்றனர். அப்படி முயற்சி எடுத்துக் கொள்கிற மனிதரை மூன்று தரத்தாராகப் பிரித்து விட லாம். நல்வாழ்வுக்கும் இன்பத்துக்கும் அவர்கள் எவ்வளவு தூரம் தகுதியுடையவர்களாக இருக்கிறர்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டே நாம் அவர்களை மூன்று தரத்தாராகப் பிரித்து வைக்கி ருேம். ரோகிகள் என்றும், போகிகள் என்றும், யோகிகள் என்றும் அம்மூன்று தரத்தாருக்கு மூன்று பெயர்கள் இடலாம். நோய்வாய்ப் பட்டிருப்பவர்கள் ரோகிகள் எனப்படுகின்றனர். நோயற்றவாழ்வே குறைவற்ற செல்வமென்பது கோட்பாடு, வியாதியால் வருந்துபவர் க்கு வாழ்வில் சுவையில்லே. ஏனைய சம்பத்துக்களும் மகிழ்வூட்ட மாட்டா. நோயைப்போக்க முயலுவதிலேயே அவர்கள் காலங்கழிக் கின்றனர். ஆனல் வியாதிக்கு வசப்பட்டிருக்கும் வரையில் அவர் கள் வாழ்வின் பயனை அடைந்தவர்களல்லர், துக்க சொரூபமாக அவர்களுக்கு வாழ்வு துவங்கி, துக்கமயமாக நிலைத்திருந்து, துக்கத் திலேயே அது முற்றுப்பெற்று விடுகிறது. ரோகிகள் அடையும் பயன் இதுவே.
இனி போகிகள் யார் என்று பார்ப்போம், உடலில் உறுதி இருக்கிறது. இன்பத்தை நுகரும் இந்திரியங்கள் தகுதியுடையன வாய் இருக்கின்றன. இன்பத்துக்குரிய பொருள்களும் பலவிதங்க ளல் வந்து வாய்க்கின்றன. அவைகளேவைத்து அனுபவித்துப் பெரு மகிழ்வடைகின்றனர். ஆனல் போகப் பொருள்களை அனுபவித்து முடிந்ததும் இன்பம் துன்பமாக மாறிவிடுகிறது. போஜனப் பிரியன் ஒருவனைச் சான்ருக எடுத்துக் கொள்ளலாம். உண்ணுதலில் அவன் அடையும் மகிழ்ச்சிக்கு முடிவில்லே. தெவிட்டும் வரையில் உணவு ஏற்கிருன், தெவிட்டுதல் என்பதே ஒருவிதத் துன்பகிலே அஜீரணம், மூப்பு முதலியனவந்து இத்தகைடி போகத்துக்கு ஒரு முடிவைக் கொண்டுவந்து விடுகின்றன. போகிகளுடைய வாழ்வு இன்பத்தில் தொடங்கி, துன்பத்தில் முடிவுறுவதை எங்கும் காண ಕ್ಲಿಕ್ಗಿ" ஏகதேசம் இன்பம் இருக்கிறது. இன்பமானது குறுகி விட்டால் அது சிற்றின்பம் என்னும் பெயர் பெறுகிறது. அறிவுடையோர் ஜீவிதத்தை சுகத்தில் துவக்கி துக்கத்தில் ஒடுக்கி விட சம்மதிக்கமாட்டார்கள். துன்பம் கலவாத இன்பம் பெறுதற்கு

Page 15
سم 82 سم.
ஏதேனும்உபாயம் உண்டா என்று ஆராய்ந்து பார்க்கின்றனர். இங் நுனம் அறிவுடையோர் செய்த ஆராய்ச்சியின் விளைவே யோகம் என்
னும்பெயர்பெற்றுள்ளது,வாழ்க்கையைப்பற்றிய மேலாம் கோட்பா டுகளெல்லாம் ஒன்றுசேர்ந்தே யோகம் என்றழைக்கப் படுகின்றது
அக்கோட்பாடுகளைக் கையாளுகிறவர்கள் யோகிகள் என்று அழை
க்கப் படுகிறர்கள். அவர்களுக்கு வாழ்க்கை மங்களகரமாகத் துவங்
குகிறது, மங்களகரமாகத் தொடர்ந்து போகிறது, மங்களகரமா
கவே முற்றுப்பெறுகிறது. இத்தகைய நல்வாழ்வு யோகத்தின் விளை
வென்றல் அறிவுடையோர் எல்லோரும் அதைத் தங்கள் தினசரி
வாழ்க்கையில் கையாளுதல் முற்றிலும் அவசியமாகிறது. இந்த யோகத்தின் உட்கருத்தை அறியாதார் பலர் அதற்கு விபரீதமான
அர்த்தங்கள் பல கொடுக்கின்றனர். இந்த மண்ணுலக வாழ்க்கை
யோடு சம்பந்தப்படாத அலாதியான பிரகிருதிகள்,யாரோ சிலருக்கு அது உரியது என்று ஒருசாரார் எண்ணுகின்றனர். அது ஜால வித் தைகள் பல அடங்கப் பெற்றது என்ருெ ரு கூட்டத்தார் கருதுகின்
றனர். நீர் மேல் நடப்பது, நிலத்தினுள் புதைக்கப் பெற்றுக் கிடப் பது, நெருப்பை விழுங்குவது இது போன்ற அதிசயச் செயல்கள்
என்று மற்றெரு சாரார் யோகத்தைப் பொருள் படுத்துகின்றனர் உண்மையில் இவைகளெல்லாம் யோகம் ஆகமாட்டா. மனிதனை நிறைமனிதன் ஆக்குவதே யோகத்தின் நோக்கமாகும்.
மிகைபட உண்பவனும் குறைபட உண்பவனும் யோகி ஆகான் மிகைபடி உண்பவனுக்கு சோம்பல் அதிகரித்துவிடும் ஆற்
றல் குறைந்து விடும். குறைபட உண்பவனுக்குப் பலவீனம் வந்து
விடும் செயலுக்குத் தகுதியற்றவனுய் விடுவான். மிகைபட உறங்கு பவனும் குறைபட உறங்குபவனும் யோகி ஆகான், அதிகப்பட்ட
நித்திரை அறிவு வளர்ச்சியைத் தடைப்படுத்தி விடுகிறது. குறைந்த தூக்கம் சரீரத்தில் மெலிவையும் மனதில் மயக்கத்தையும் உண்டு
பண்ணுகிறது. மிகைபட்ட உழைப்பும் குறைபட்ட உழைப்பும்
யோகத்துக்கு இடைஞ்சல். ஆசையால் தூண்டப் பெற்று, அதிக
மாக உழைப்பவன் ஆயுளைக் குறைக்கிருன் பாடுபடாது இருந்து விடுபவன் தன் திறமையை வீணுக்குகிறன், இங்ங்னம் தினசரி வாழ்க்கையால் மனிதனுக்கு இன்றியமையாத கர்மங்கள் அளவுடன்
அமைய வேண்டும். ஒழுங்கு பாடான வாழ்வே யோகத்துக்கு அஸ் திவாரமாகும், (தொடரும்)
 
 
 
 

s")
- 88 - செய்தித்திரட்டு.
சாரதா தேவியாரின் நூற்றண்டு விழா
வதுளைச் சைவபரிபாலன சபை, நனுஒயா காந்திசேவாசங்கம், ஆத்மஜோதிநிலையம் இவ்விடங்களில் தேவியாரின் விழா மிக அமிை இயான முறையில் கொண்டாடப் பெற்றது. அத்தருணம் ஆத்ம ஜோதி கெளரவ ஆசிரியர் அவர்கள் தேவியாருக்கும் பரமஹம்ஸருக்
குமுள்ள தொடர்பு, தேவியார் பெற்ற சக்தி, தேவியார் ஆற்றிய பணிகளென்பன பற்றி விரிவுரை நிகழ்த்தினர்கள். திரு. குமாரவேல்
அவர்கள் நனுஒயாவில் நடைபெற்ற கூட்டத்தில் பாரதப்பண்பே தேவியாரின் உருவமாயமைந்தது என்பது பற்றிப் பேசினர்கள்.
பூரீ ரமண ஜெய்க் வதுளைச் சைவ பரிபாலன சபை, கடவளைத் தோட்ட 15ன் மார்க்க சபை ஆகிய இரு இடங்களிலும் கொண்டாடப்பெற்றது. ஆத்மஜோதி கெளரவாசிரியரவர்கள் ஜோதிவழிபாடு ரமணமுனி வரின் பெருமை என்பன பற்றி விரிவுரை நிகழ்த்தினர்கள்.
நனு ஓயா காந்தி ஞாபகார்த்த மண்டபத் திறப்பு விழா
இந்திய அரசாங்கதூதர் திரு. தேசாய் அவர்கள் மண்டபத்தை
திறந்துவைத்துப் பேசிய பொழுது இம்மண்டபம் இலங்கை இந்திய உறவுக்கு ஒர் முன்மாதிரியாக ஏற்பட்டதோர் சின்னம் என்றர்கள்
இந்தியாவில் இருந்து வந்த திரு. காமராஜ் நாடார், செல்வி அருந்த
நாயகி என்போரும், திருவாளர்கள் தொண்டைமான் இராஜலிங்கம் என்போரும் காந்திய தத்துவங்கள் பற்றியும் இலங்கை இந்திய உற
வுகள் பற்றியும் சொற்பெருக்காற்றினர்.
கிளிநொச்சியில் as Lou GnuGT i štaf
கிளிநொச்சியிலும் அதனைச் சூழ உள்ள இடங்களிலும் அரசி னரின் புதிய குடியேற்றப் பகுதிகளிலும் 2-1-54 தொடக்கம் 5-1-54 முடிய உள்ள நாலு நாட்களையும் சாதனவாரமாகக்

Page 16
ー 84.ー
கொண்டாடினர், தமிழில் யாகம் செய்தல், கூட்டுப் பிரார்த்தனை, ஆத்மீக உபதேசங்கள், நன்மார்க்கப் பிரசங்கங்கள், என்பன முக் கிய இடம்பெற்றன. திரு. க. வடிவேல்சுவாமிகளுடைய அன்பி ணுலும் திருவாளர்கள் அம்பலவாணர், கிருஷ்ணபிள்ளை, நல்லதம்பி ஆதியோரின் முயற்சியினுலும் டிெ சாதனுவாரம் செவ்வனே நடை பெற்றது
ஜிந்துப்பிட்டி பூரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தில் கண்ட அற்புதக் காட்சி
இலங்கையில் இதுவரையில் நடந்திராத ஒர் அரிய சமயப்பிரசா ரம் ைெடி ஆலயத்தில் டிசம்பர் இருபதாங் தேதி தொடக்கம் ஜன வரிபத்தாங் தேதிவரையில் தினந்தோறும் நிகழ்ந்துள்ளது. முருக திரு. கிருபானந்தவாரியார் அவர்கள் இருபத்திரண்டு தினங்களும் மாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கேட்டின்புறும் முறையில் இராமாயணப் பிரசங்கங்கள் நிகழ்த்தினர், கடைசித் தினமாகிய 10-1-54 அன்று இராமர் பட்டாபிஷேக வைபவம் விளக்கப்பட் டது. ஆலயத்துக்குச் செல்லும் வீதிகளிலேயே மக்கள் நிறைந்து நின்றனர். கோயிலுக்குள்ளும் உள்வீதியிலும் எள்ளுப்போட இட மில்லாமல் ஆண்களும் பெண்களும் அமர்ந்திருந்தனர். நாட்டில் நாஸ்திகம் பரவாமல் தடுக்கவேண்டுமானுல் அரிய நூல்களை எரிக்கு மற்பத்தனத்தை நிற்பாட்ட வேண்டுமானல், இதுபோன்ற பிரசங்க ங்கள் பல இடங்களில் நடைபெறவேண்டும். தென்னுட்டுக்கும் யாழ் ப்பாணத்திற்கும் கொழும்பு வழிகாட்டி வருகின்றதையறிந்து மகிழ்ச் சியடைகின்ருேம்.
நிகழ்பவை
திருக்கோணுமலையில் 30-1-54 மாலை காந்தி அடிகளின் அமர வாழ்வுத் தினக் கொண்டாட்டமும் 31-1-54ல் சிவானந்த தபோவ னத்தில் சாரதா தேவியார் நூற்றண்டு விழாவும் நடைபெறும். அத்தருணம் திருவாளர்கள் K, ஆள்வாப்பிள்ளை K. P. ஹரன் K. இரா மச்சந்திரன் ஆதியோர் முக்கிய பேச்சாளராய் இருப்பர்.
சிவானந்த புரத்தில் முதலாவது அந்தர் யோகம்
1954 ஜனவரி 15, 16, 17, தேதிகளில் மட்டக்களப்பைச் சேர்
ந்த கல்லடி உப்போடையில் டிெ யோகம் நடைபெறும் எனகாரிய தரிசி சுவாமி சர்வாதீதானந்தா அவர்கள் அறிவிக்கிறர்கள்.

*。
இ
யோக வலமாஜம், வட இTர்
இது கவி யோகி சுத்தானந்த a Si i. நாட்டி வளர்க் கும் தவ யோக நிலையம். இங்கே கர்ம பக்தி, ஞான ராஜ யோகப் பயிற்சியே வாழ்க்ை கயாகும். அனுபவ விளக்கமே யோக ஸமாஜம், காலை is raig, ബ இரவு பத்து மணி வரையில், 9 தயங்கள். |1 უგზე 77., L/Tეr|T பனம், கடவுள் வரைக்கர், ஆலனம், பிரான யாமம், சுவாச பந்தம், முத் திரை, புலனடக்கம், மன அடக்கம் 5) и тал 7, மோனம், மாகி நிஷ் காம்ப சேவை, கறுக ரப்பான தொ
மில் 1ற்சி அருள் நூ லாய்ச்சி முதலிய நன் if uri
கள் இங்கே நடக்கும் தைப்பூசம் முதல் ஐந்து மாதங்கள்
தொடர்ந்து யோக சாதன முகரம் நடக்கும். ஒரு முகாம் 15 நாட்கள் இருபது சாதகருக்காக நடக்கும். அஃதான
- 3. ৩০ ܢ - o தும் மறு முகாம் இருபது பேருக்குத் தொடங்கும், தமிழ், தி, தெலுங்கு ஆகிய மொழிகள் இங்கே
ஆங்கிலம், இ
. '
வழங்கும் ,
அக் காகமும், யோக விருப்பமும், சித்த தத்தியும், கொண்டுணர்வும், கடவுளான்பும், உயிர்க்கருனேவும், சம கோக்கும், சாது சுபாவமும் கொண்ட நல்லோர் இங்கே '* அவரவர் அவரவர் செலவை ஏற்றுதவ வேண்டும். தினம் ஆறு மணி யோகப் பயிற்சி, ஆறுமனி ஸ்மாஜ சேவை ஆரமணி அறிவு, தொழிற் பயிற்சி ஆறு மணி ஓய்வு பெற லாம் எமாஜத்தில் தோட்டம், பயிர் நிலம், ஏற்றம் கட் டிடங்கள் உணவுக் குடில், நூல் (όδουμ μή, (ιμένα μη και θέτυ யம்) அச்சுச் சாலே (Yoga Press) சுத்த நிலேயம் வாசக
சாலே, மாட்டுப் பண்ணே, முதலியவற்றில் சாதகர் தொண்டு செய்யலாம் இங்கே செய்வதெல்லாம் சுத்தமும் சக்தியும்,
ஒருமையும், ஆன்ம நேய உரிமையும், தெய்வப் பொலிவும்
ே (). o 8 011 தாங்களாம். உலகின் அருட் (2) τους, αεροι σε η ρή
இங்ே ஒருங்கே 1.0 in.
g) 聚
ଓୋ}
R , *Q9@@9•@@鬱@@@@è@@@@@@蕊

Page 17
וללת
Regd. at the G. P. O. as a New
১৯২ 姜涵 [Sষ্ট 隱《纜說》懿《尊》隱《零
ஆயுள்சந்தா ஆ
திரு. K. B. பஞ்சாட்
S. கந்தசாமி, ஒ , V. jih 6)ши II.
யாழ்ப்பாணத்தில் ஆத்ய
T. தம்பி
翰,,,@ ఒ్మతే అతి 226, ஆஸ்பத்திரி ருேட்
Sl
食
ஆரோக்கிய
ஆசிரியர் வி.
சுகத்துடன் இருக்க விரு அவசியம் வாசிக் வில இருபாக 制 இ கிடைக்குமிடம் ஆரே 食 218, திருவொற்றியூ
தண்டையார்பேட்டை
2 حسینےمستقیس تینتیسی=چ
器 统 黏
விபுலாநந் திருநெல்வேலித் தென் நூற்பதிப்புக் கழகத்தார ஈழந்தந்த அருட்டிரு விபு
அறிய விரும்புவோருக்கு ಛಿ) ಆL!
১৯২৯)।
@影電雲》霧撃
சரவண அச்சக
隱
 

Paper H.G. 59,300
黔》繳《零》)證《
is
}:ՖՍ6ւյT6 1 (1356IT
சரம் அனுரதபுரி,
S.
邺
வசியர், அனுரதபுரி, கொலனி, கிளிநொச்சி
2.
5 ஜோதி விற்பனையாளர்
影
த் துரை,
யாழ் ப் பாண ம்
Ν
N
藻
磁
少
ரகவிலயம்.
என்.குமாரஸ்வாமி
2A
È
經
-
忍
給
--
ம்புவோர் ஒவ்வொருவரும் கவேண்டிய நூல். ரும் சேர்ந்து 10 ரூபா Tä;3u GuTgsten Joli 畿
ஹை ரோட்,
Gತಮೆಷಿ) 21. (S, I)
S SMSMSMSMSMS SMSSTTSS
த அடிகள் னிந்திய சைவசித்தாந்த ல் வெளியிடப்பெற்றது. ܬܛܢ ானந்த அடிகளாரைப்பற்றி ଝିଞ୍ଛି ।
உகந்ததொரு நூலாகும். ஒன்றரை.
雲。》○影等Xリ》
b, நாவலப்பிட்டி,
সূত্র
*
محمبر
然
ζί