கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1955.11.17

Page 1
、7シ”% gyい%>、 然裂裂) 秘密%に%%
%心%さい· パ - %%溪
BVQ% |-yい 裂瓣
必)參 M、心a>引、お~:: % %※少 % %彩丝习
ஆனந்த ஆச்சிரம அ
いっyいれ>、 、M〜 然裂裂察缴 所陷影陷彩珍以彩珍丝
- --........
→- * ( )
جج کرتے تھے جسمجھے سے ایک جھیقین خجسمجھتے تھے
محیے
கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

}
弘道 邻岱础戏水裂 縱絲駿 -
恐) 姿容冠 涵殘鶴感
綬활
*劑•
(5 n.609TUITUI
Par a
6

Page 2
(ဖီ (!} |l န္တိ၊
மாத வெளியீடு
ஓர் ஆத்மீக
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவனே
எல்லா உடலும் இறைவன் ஆலயம்ே-சுத்தானந்தர்
சோதி 8 மன்மதவடு கார்த்திகை 1.ந்வட (17-11 | 听Lf 1
பொருளடக்கம்.
விஷயம் பக்கம் 1 ஆனந்தாஸ்ரமத்தாய் 1. 2 அருட் சத்தி 2 3 ஓர் புதிய புனித வைபவம் 3. 4 கருணைக்கடல் 5 தாயோடு அளாவல் 7 6 திருமுறைக் காட்சிகள் 9 ஹிந்துராஷ்ட்ரபக்தி 15 8 பூரீகதிரைமணிமாலை 20 9 சுவாமி சிவானந்தர் வாக்கு : 10 நானும் எனது குருநாதரும் 26 11 செய்தித் திரட்டு 29 12 ஐயம் தெளிதல் கவர் மூன்ரும் பக்கம்
ஆத்ம ஜோதி
ஆயுள் சந்தா ரூ. 75 வருட சந்தா ரூ. 3. தனிப்பிரதி சதம் 30 கெளரவ ஆசிரியர்: க. இராமச்சந்திரன் 60, டீல் பிளேஸ், கொள்ளுப்பிட்டி, கொழும்பு
பதிப்பாசிரியர் :- நா. முத்தையா ஆத்ம ஜோதி நிலையம் நாவலப்பிட்டி | சிலோன் ]
 

ஆனந்தாஸ்ரமத்தாய்
"కాళీణిశాGRSpasడ్డి--
ஓம்சக்திஓம் ஓம்சக்திஓம்
ஓம்சக்திஓம் ஓம்சக்திஓம் ஓம்சக்திஓம் ஓம்சக்திஓம்
ஓம்சக்திஓம் ஓம்சக்திஓம் சுந்தர வதன சுகுண மனேகரி
மந்த ஹாச முக மதிவதனி சந்தன குங்கும அலங்கார முடனே
தந்திடு வாயுக்தன் தரிசனமே (ஒம்சக்தி) நந்தி தேவருடன் முனிவரும் பணி
ஆனந்த முடனே வந்திடுவாய் வந்தனை செய்த மாயனயனுடன்
வசமாய் உன்புகழ் பாடிடவே (ஒம்சக்தி) தங்கச் சிலம்பு சலசல வென்றிட
தாண்டவ மாடித் தநயன் மகிழ்ந்திட எங்கும் ஆநந்தமுடன் புவிமேல் விளங்கும்
மங்கள நாயகி மகிழ்வாய் வருவாய்(ஒம்சக்தி) வேதங்க ளுன்னை வேண்டிப் பாடி
விரும்பிச் சரஸ்வதி வீணை வாசித்திட சதானந்த மான ஜோதிஸ்வ ரூப
ராஜ ராஜேஸ்வரி சரணம் சரணம் (ஒம்சக்தி) மீன லேர்சனி மகேஸ்வரி தாயே
தேன்மொழி யுடைய கிருஷ்ணபாய் நீயே ஆனந்தாஸ்ரம வாசினி தாயே
அன்புடன் எளியார்க்க கருள்புரி வாயே.
(ஒம்சக்தி) (சாது பூநீ முருகதாஸர்)

Page 3
-2-
அருட்சத்தி
---g3S3-a- -(யோகி சுத்தானந்த பாரதியார்)-
எந்த யோகமார்க்க மானுலும், சித்திக்குமுன் சக்தி வேண்டும் அருட்சக்தி பொருட்சக்தி என்று சக்தி இருவகையாகும். காந்தம், மின்சாரம், ரேடியம் எலெக்ட்ரன் அணுக்களிற் காண்பது பொருட் சக்தி ஆகும். ஆத்ம சித்தி பெற்ற யோகிகளிடமே அருட்சக்தி அல் லது தெய்வ சக்தி வெளிப்படும். அருட்சத்தி பெற்ற மகான்களே குருமார் ஆவார். தற்பரனுகிய ஒப்புயர்வற்ற பரமாத்மன், அருட்ச க்தியினலே தான் ஐந்தொழில் புரிகின்றன்.அந்தச்சக்தியை வேதம் பரமாகாசம் என்கிறது. இறைவனின் பராசக்தி ஆகாச வடிவமாயி ருக்கிறது.
ஆகாசம் எங்கும் இருக்கிறது; அதனின்றே படிப்படியாகக் காற்று, ஒளி, தீ, நீர், மண், பயிர், உயிர் எல்லாம் போந்து அதற்கே மீளுகின்றன, ஆகாசத்திலுள்ள சக்தி அணுக்களே பலவகையான பூத பெளதிகத் திறமைகளாக உலகில் இறங்கி, அற்புதங்கள் செய் கின்றன. எங்கே மின்பொறி சுழன்றலும், எங்கே ரேடிபோவைத் திருகினலும், அந்தச் சக்தி இறங்கி வேலை செய்கிறது, அதுபோல் தெய்வ சக்தியும் எங்கும் பரவியிருக்கிறது. ஏனெனில் ஆகாசமா கிய சக்தியே பரமன் உடலாகும். -
ஏற்கத் தயாராயிருக்கும் யந்திரங்களில் மின்சாரம் இறங்குவது போலவே தன்னை ஆவாஹனம் செய்யும் பரிசுத்தான்மாக்களுள்ளே அருட்சக்தி பாய்கிறது. அமிர்தத்தை வைக்கப் பரிசுத்தமான பாத்தி ரம் வேண்டும். கண்ட களிம்புப் பாத்திரத்தில் அதை வைக்க முடி யாது. "அருளுக்குப் பாத்திரமாவது' என்று நமது பெரியார் சொல் வதன் பொருள் இதுவே. சாதகனுடைய அந்தக்கரணம் பரிசுத்தமா யிருக்கவேண்டும். எனது யான் என்னும் அகம்பாவம் துளியிருந்தா லும், பரம சக்தியைத் தடுத்து விடும்.
அச்சமற்ற நேர்மை. மனவிகாரமற்ற சமத்துவம், தரவற்ற உள் ளன்பு இன் சொல் பிறரைக்குத்திப்பேசாது, தன் குறைகளைக்கண்டு திருத்திக்கொள்ளும் அடக்கம், ஒப்புயர்வற்ற இறைவனிடமே அன்பு றுதி வழிகாட்டும் உண்மையான குருவிடம் விசுவாசம், சாதுசங் கம், தியானுேபாசனை-ஆகிய சாதனங்கள் மனிதனுக்குச் சித்தசுத்தி தந்து அவனே அருளுக்குப் பாத்திரமாக்கும்.

سسسس-3-
ஒர் புதிய, புனித வைபவம்.
-(ஆசிரியர்)-
"ஆத்ம சம்பத்து, மானசீக சம்பத்து இவைகளே ஒரு மனித னின் வாழ்க்கையையும் ஒரு சமுதாயத்தின் வாழ்க்கையையும்உய்விக் கின்றன. புராதனத்தையுடைய இந்தியா ஆத்மீக சம்பத்தினலேயே இன்றும் உயிருடனிருக்கின்றது, பல்லாயிரம் ஆண்டுகளாக இவ் வித ஆதர் சங்களுடன் இந்தியா சம்பந்தமில்லாதிருந்திருந்தால், அது எங்ங்னம் உயிர் வாழ்ந்திருக்கக்கூடும்? இந்தியாவுக்கு விளைந்த பிரமாண்டமான அல்லல்களுக்கும் தாழ்வுக்குமிடையே, இன்றை க்கு இந்தியா தலை நிமிர்ந்து நிற்கின்ற தென்றல் அது நம் ஆத்ம சம் பத்தினலேயாம்' என்பது இந்தியப் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு அவர்கள் நீண்டகால உலக சரித்திர ஆராய்ச்சியிற் கண்ட முடிபு, இந்த உண்மையை அவர் அண்மையில் செய்த ஐரோப்பிய சுற்றுப்பிரயாணத்தின்போது பல முறை எடுத்து விளக்கியதைக்கே ட்டு அளவற்ற மகிழ்ச்சியடைந்தோம்.
பாரத நாட்டின் பாரம்பரீக, பரமார்த்திகப் பண்பாடுகளையும் ஞானச்செல்வங்களையுந்தேடித் திரட்டி வைத்தவர்கள் ஆடவர்கள் மாத்திரமல்ல; அத்தொண்டில் ஈடுபட்டுப் புகழ் படைத்த பெண்க ளும் பலருளர், வாழையடி வாழையாக இந்தியாவில் அண்மையில் தோன்றிய ஸ்திரீ ரத்தினங்களுள், சாரதாமணி தேவியார், ஆனந்த மாயி கிருஷ்ணபாய் ஆகிய மூவரும் இன்று உலகப்பிரசித்திபெற் ருள்ளார்கள்; பிந்திய இருவரும் இன்னும் நம்முன் உடல் கொண்டு லாவுகின்றனர்; குறித்த மூவருள் அன்னை கிருஷ்ணபாய்ஒருவரையே உலகின் நாலாபக்கங்களிலுமுள்ள கோடிக்கணக்கான ஆத்மப்பசி யாளர் நேரிற்காணும் பாக்கியத்தை அடைந்துள்ளார்கள்.
அன்னை கிருஷ்ணபாய்உலக வாழ்வை முற்றிலுக் துறந்து.தமது குருநாதரான சுவாமி இராமதாசர் அவர்களின் திருப்பாதங்களில் பூரண சரணு கதியடைந்தது இற்றைக்கு இருபத்தைந்து ஆண்டுகட் குமுன், கார்த்திகை மாசத்தில் கார்த்திகை நட்சத்திரம் பொருந்திய சுபவேளையிலாகும். அப்புனித நாளை அண்னரின் சந்நியாசதினமாகக் கொண்டு, அதன் வெள்ளிவிழாவை இந்த ஆண்டில் கொண்டாட வேண்டுமென்ற ஆர்வம்இற்றைக்கு இரண்டு வருஷங்கட்கு முன்ன ரேயே பக்த கோடிகளின் உள்ளத்தில் உதித்தது: முதலில் அன்னே

Page 4
--4 سے
அதை ஏற்க மறுத்தனர். அன்பர்களின் வற்புறுத்தலைத் தவிர்க்கமுடி யாது உடன்பட்டபொழுது,31-10-55க்குள் ஆனந்தாச் சிரமத்தொ டர்பு பூண்ட பக்தர்கள் சேர்ந்து இருபத்தைந்து கோடி நாம லிகித ஜெபயாகம் செய்ய வேண்டுமென்ற நிபந்தனையைக் கொடுத்தனர். அன்னையின் அக்கட்டளையை மகிழ்ந்தேற்ற அடியர் குழு இதுவரை யில் இருபத்தொன்பது கோடி மந்திரங்களை எழுதிக் குவித்து விட் டது. அவையடங்கிய கொப்பிகளெல்லாம் 29-11-55 நடக்கப்போ கும் வெள்ளிவிழாவில் அன்னையின் திருப்பாதங்களில் சமர்ப்பிக்கப் படும்,
அன்னை கிருஷ்ணபாய் ஆதார சக்தியாக வீற்றிருக்கும் ஆனங் தாச்சிரமத்தில் மாத்திரமன்றி உலகின் வேறு பல இடங்களிலும்இவ் வெள்ளிவிழா விமரிசையாகக் கொண்டாடப்படுமென அறிகின் ருேம், இந்தியாவின் சமய சரித்திரத்தில் இது போன்ற ஓர் விழா இதற்கு முன் நடந்ததேயில்லையெனலாம், எனவே, ஆனந்தாச்சிர மத்திற்கு யாத்திரை செய்து அதில் பங்கெடுக்கவும், பார்த்துரஸிக்க வும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆர்வங்கொண்டிருப்பதில் வியப் பொன்றுமில்லை. அகில இந்தியப்புகழ் படைத்த பாடகர்களான, பூரீமதி. எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி, பூரீமதி மாதுரிபாய் காறே.திரு.டிலிப்
குமார்ருேய், சுவாமி ஹரிஹராநந்தபாரதி, திரு, கேர்பாலகிருஷ்ண
பாகவதர் சாது முருகதாஸ் முதலாயினுேர் மணித்தியாலக்கணக்காய் ப்பாடப்போகின்றர்கள், அதிகாலை நாலரை மணியிலிருந்து இரவு ஒரு மணிவரைக்கும், சதா ஆத்ம சாதனையில் ஈடுபட்டு, அரிய சங் கீர்த்தனத்தைக்கேட்டு ஆனந்தத்தில் திளைப்பதற்கு ஓர் அரிய சந்த ர்ப்பத்தை தூய அன்னையின் வெள்ளிவிழா அளிக்கட்போகின்றது: இதில் கலந்து கொள்ளும் பாக்கியம் பெறுவோர் உண்மையில் புண் னியஞ் செய்தவர்களேயாம்! இன்னும் பல்லாண்டு அன்னை பூரண சுகத்துடன் வாழ்ந்து, உலகுக்கு உய்வழி காட்டும் அரும்பணியைத் தொடர்ந்து செய்யுமாறு எல்லாம் வல்ல பராசக்தி திருவருள் பாலிப் UT 6TIT5)
*
"எல்லா அறங்களையும் விட்டொழிந்திங் கென்னேயே
நல்லாய் சரண் புகுக நானுன்னை-அல்லல்தரு பாவங்க ளின் முற்றும் பற்றறவே வீடுவிப்பேன் மேவு துயர் எல்லாம் விடு'
(கீதை: xwi -62)

سيu-- 60 سسسسست
கருணைக்கடல்.
- سیاسته نیمهخانی)0(Sحتیسیونهیم-سسسس
(பொ. கனகராசா)
இறைவனை வணங்கும் பொழுது பல மாதிரி அழைக்கின்ருேம் ஒவ்வொருவரும் தம் மனுேநிலைக்கு உகந்த வண்ணம், பண்பாட்டி ற்கு இயைந்த வண்ணம் அழைக்கின்றனர். அன்பின் ஆர்வத்தால் "அம்மையே, அப்பா, ஒப்பிலா மணியே, அன்பின் விழைந்த ஆர முதே' என்றுமணிவாசகப் பெருமான் அழைக்கின்றர். சிலர் அருட் காதல் அளவை மீறியதால், பித்தா, பேயா' என்றும் அழைக்கின்ற னர், அவர்களிடம் அகம்பாவமில்லை. ஆனல் அன்பு சுரக்கின்றது. தம்மை மறந்த நிலையில் சுந்தரர் பெருந்தகை மேற்கூறியவாறு அழைக்கின்றர்.
இன்னும் மணிவாசகப் பெருமான் ஓரிடத்தில் பல இன்னல்க ளால் இடர்ப்பட்டு நிலைதடுமாறி நிற்கும் நிலையில், 'கருணையினல் கலந்தாண்டு கொண்ட கடையவனே .சடையவனே தளர்ந்தேன் எம்பிரான் என்னைத் தாங்கிக்கொள்ளே' என்று இறைவனை வேண் டுகின்றர். இறைவனும் பல அருள் வடிவங்களிற் தோன்றி அன் பரை ஆட்கொள்ளும் அவாவுடையவன். அவனது அடியவர்கள் பக்குவ நிலையடைந்ததும், அவர்களே ஆட்கொண்டு அருளுவான். இதனேடு நின்றுவிடாமல் அடியவர்கள் இரந்து வேண்டுவதை ஈயும் வண்ணம் நிறைந்த வள்ளலாகவும் இருக்கின்றன். ஆதலினுற்ருன் அப்பர் சுவாமிகளும், "வேண்டுவார் வேண்டுவதை ஈவான் கண் டாய்' என்று கூறினர். இறைவன் ஆட்கொள்ளும் தன்மையை மணிவாசகர் இன்னேரிடத்தில் அழகாக ஒரு திருவாசகத்தால் விள க்குகின்ருர், அதாவது:-
வினையிலே கிடந்தேனைப் புகுந்து நின்று
போது நான் வினேக்கேடன் என்பாய் போல இனையன் நான் என்று உன்னை அறிவித்து என்னை
ஆட்கொண்டு எம்பிரான் ஆணுய்க்குஇரும்பின்பாவை அனைய நான் பாடேன் நின்று ஆடேன் அந்தோ
அலறிடேன் உலறிடேன் ஆவிசோரேன் முனைவனே முறையோ நான் ஆனவாறு
முடிவு அறியேன் முதல் அந்தம் ஆயினனே

Page 5
س.6-س
இவ்வகையாக ஆட்கொள்ளும் தன்மை இறைவனிடம் இருப் பதைக்காண்கின்றர் ஒருவர். அவர் நன்ருகக்கல்வி கற்றவர், இறை வன் வழிபாட்டில் ஈடுபட்டவர்.
'கற்றதனலாய பயனென்கொல்-வாலறிவன்
நற்ருள் தொழாரெனின்' என்ற தமிழ் மறையாம் திருக்குற ளுக்கு இயைபாக வாழ்பவர். அதனுல் முதன்முதலாக இறைவனே க் கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியே' எ ன் று அழைக்கின்றர். இறைவன் கற்பக தருவின் கனியைப் போன்று இனிமையானதும் எங்கும் நிறைந்ததுமான அருளை அளிப்பவன் கற்பக தருவுப் எவரா கிலும் விரும்பிவேண்டுவதைக் கொடுக்கும் தன்மையது.அதேபோல இறைவனும் வேண்டுவார் வேண்டுவதை அளிக்கும் தன்மையை உடையவன். அதனுற்ருன் அவரும் கற்பகக்கனியே' என்று அழைத்தார்.
அடுத்ததாக இறையருளின் இயல்பைக்குறிக்கும் பொழுது :கரையிலாக் கருணைமா கடலே' என்று அருளுகின்ஞர். பொதுவா கக்கடலானது பரந்த நீர்ப்பரப்பையுடையதாயினும் கரையையுடை யதாக அமைந்திருக்கும். ஆனுல் இக்கடலோகரையில்லாததாகஇரு க்கின்றதே. கரையற்றதாகக் கருணையிருந்தாலும் அது எங்காளும் எல்லாருக்கும் இன்பமே விழைவிக்கக் கூடியதாக இருப்பதால் 'மா கடல்" என்ற சிறப்புப் பொருளை அக்கடலுக்கு அமைத்தார். இக்க ருணேயைப் பற்றிக் குறிக்குங்கால் தாயுமானவர்,
"எவ்வுயிரும் என்னுயிர்போல் எண்ணியிரங்கவுநின்
தெய்வ அருட்கருணே செய்யாய் பராபரமே'
என்று பாடியருளினர்.
ஆதலின் கருணை வள்ளலான இறைவன் பல இன்னல்களால் இடர்ப்படுபவர்களை யாட் கொண்டு அவர்களைப் பரிசுத்தமுடைய வர்களாகப் பக்குவப் படுத்தி, தன்னையடைந்து வணங்கும் தோறும் நெஞ்சு ருெக்குவிட்டுருகும் தன்மையுடையவராகச் செய்கின்றன், அவர்கள் அவனை வணங்கும் போதெல்லாம் அவர்தம் உள்ளங்களில் அருள் விளக்குகள் ஏற்றியது போலவும், பின்பு அங்கிருந்து ஒளி யைப் பரப்பும் அவாவினையுடைய ஒரு கிலேயேற்படுகின்றது. இத் தன்மையைப் பெற்ற பெரியார்களோடு பழகுங் தோறும் நம் அறி

தாயோடு அளாவல்
*リン、○○大○*
II கேள்வி: தாயே ராம் என்பது உனது நாமம், நாமமும் ரூபமும்ளப் போதும் தொடர்புடையவை யாதலால் உனது ரூபம் என்ன ?
விடை: எனக்கு காமரூபமில்லே, ராமதாஸ் நாம ரூபம் அற்றநிலை
யில் என்னை அனுபவிப்பதற்கு, காமரூபத்தோடு கூடியத
கவே முதலில் என்னைக் கருதல் வேண்டும்.
கே: ஒன்றே ,ே எனினும் இப்பிரபஞ்சம் முழுவதும் பலவித வேறு பாடுகளே உடையதாயிருக்கிறதே, அது கோடிக்க ணக்கான ரூபங்களால் ஆக்கப்பட்டிருக்கிறதே தாயே இது எவ்வாறு?
முற்பக்கத்தொடர்ச்சி
யாமை அகன்று, அறிவு வளர்கின்றது. இதற்கு விளக்கமாக, சிவா னந்த சரஸ்வதியென்ற பெரியாருடன் நெருங்கிப் பழகும் வாய்ப் பைப்பெற்ற சிலர் அவருடைய அருட்பேற்றின் சில அம்சங்களைப் பெறக்கூடியவர்களாக இருக்கின்றர்கள் இன்னும் இராமகிருஷ்ண
பரமகம்சரோடு பழகிய விவேகானந்தர் பரிபக்குவ நிலையைப் பெற் றுப்பார்முழுவதும் பயனுடைக் கொள்கைகளைப் பரப்பினர்.
இறைவனின் அருட்சித்தியைப் பெற்ற அறிஞர்கள் வாய்ார
வாழ்த்துகின்றனர். இறைவனே வணங்கும் போதெல்லாம், அவனைக்
காணும் பொழுதெல்லாம். உள்ளம் குளிருகின்றதாம், அவ்வண் ம்ை உள்ளங் குளிரும் போது, நான் என்ற பொய்யுணர்வற்று, கண்களில் நீர் கசியத்தொடங்கியதும், கண்கள் குளிர்ச்சியடைகின்ற னவாம். இவற்றைச் சேந்தனர் தாம் இயற்றிய திருவிசைப்பா ஒன்றி ல்ை விளக்கமாக எடுத்துரைக்கின்றர். அத்திருவிசைப்பா பின்வரு س-: زIل LDH
கற்றவர் விழுங்கும் கற்பகக் கணியைக்
கரையிலாக் கருணே மாசுடலை மற்றவர் அறியா மாணிக்க மலையை
மதிப்பவர் தம் மனமணி விளக்கை செற்றவர் புரங்கள் செற்றவெஞ் சிவனைத்
திருவீழிமிழலை வீற்றிருந்த கொற்றவன் தன் இனக்கண்டு கண்டுள்ளங் குளிரவென்
கண்கள் குளிர்ந்தனவே:

Page 6
(3):
(3; வி
ᏣᏠ, ;
C3:
--8-س
நாம ரூபம் அற்ற ஒன்றே நான், நான் பலவாதற்கு விரும் பினேன். ஆகவே உருவங்களைக்கொள்ள வேண்டியதாயி ற்று உருவங்களின்றி பலவாதல் இயலாது,
நீ நித்தியம், ஆனுல் உனது உருவங்கள் எப்படி அகித்திய மாகின்றன?
அது அவ்வாறு தானிருக்கும், உண்மை ஒன்ருனுல் பல உண்மை அல்லனவாகும். ஆகவே, உருவம் பிறக்கிறது, சொற்பகாலம் இருக்கிறது. அப்பால் மடிகிறது, பிறப்பு, மாற்றம், வளர்ச்சிஅழிவு, இவையேஉருவங்களின்இயல்பு.
தாயே! உனது உருவங்கள் அழியும் போது நீ எப்படி இருக்கலாம்?
குழந்தாய் நகையை உருக்கும்போது அதன் உருவம் அழிந்து உள்ள பொன் உள்ளபடி இருக்கிறது.பனிக்கட்டி சூடு பட்டதும் உருகி நீராகிறது அதுபோல நானும் அழி வதில்லை.
நீ அனேகம் ஆவதற்கு விரும்பியதேன்? விளையாட விரும்பினேன், ஒன்றிற்கு மேற்பட்டவர் இல் லாமல் அதுசாத்திய மாகாது. ஆகவே அனேகமாகயானே காட்சி கொடுத்தேன்.
இவ்விளையாட்டால் நீங்கள் அடையும் லாபமென்ன? ஆனந்தம்-பரமானந்தம்
தாயே! உலகம் முழுவதும் துன்பம் நிறைந்ததாகத்தோற் றும் போது தாங்கள் ஆனந்தத்தைப்பற்றிப் பேசுவதெப் Li tq? குழந்தாய்! யானே! இன்பம் துன்பம் கோபம் முதலியன வாக நடிக்கிறேன் என்பதை அறிந்துகொள்: நீ துன்பமாக நடித்துக்கொண்டு அதே சமயத்தில் அதனல் பாதிக்கப்படாமலிருப்பது எங்ங்னம்? நடிப்பு எப்போதும் ஒரு தோற்றமே. அது நடிப்பவரைப் பாதிக்காது; நடிகர் ஒருவர் அழுவதுபோல நடிக்கிருர் ஆனல் அவரின் உள்ளம் மாறுவதில்லை. இதுபோலவே தான் மற்றும் அனுபவங்களிலும் உணர்ச்சிகளிலும்.
(தொடரும்)

میلے (9................
திருமுறைக்காட்சிகள் (4)
- முத்து - பால் நினைந்துாட்டுந் தாய்.
தாய் பொறுமை வடிவம்: தியாகத்தின் சின்னம்,பூதேவி பொ றுபைக்கரசி 'அகழ்வாரைத்தாங்கும் நிலம்போல' என வள்ளுவ ரின் உவமைக்கு இலக்கியமாக அமைந்தவள். பூதேவியின் மடியி லிருந்தே தாய் உற்பத்தியாளுள், பல விதத்திலும் தொந்தரவு கொ டுக்கும் ஒரு ஜீவனே. ஒருதினமல்ல, இரண்டு தினமல்ல, பலநூறு தினங்கள் திருவயிற்றிலே வைத்துக்காக்க எவ்வளவோ பொறுமை எவ்வளவோ கருணை வேண்டும்
இத்தகைய தாய்மார்களிலும் பலவிதமுடையாரைப் பாரினில் காண்கின்ருேம் குழந்தைகித்திரை தெளிந்து அழுகின்றது. தாயை க்கான வில்லே. சமையலறை தேடிக்குழந்தை செல்லுகின்றது. தாய் அங்கே அடுப்பு நெருப்போடு போராடிக் கொண்டிருக்கிருள், தாயைக் கண்டதும் குழந்தை வீறிட்டழுகின்றது. தாய்க்கு அடுப்பு நெருப்பின்மீது காலேயில் கணவன் மீது ஏற்பட்ட கோபங்கள் குழ ங்கைமீது திரும்புகின்றன. குழந்தையின் அழுகை தாய்க்கு கொழு ங் துவிட்டேரிகின்ற நெருப்பில் நெய்வார்த்தாற்போல் அமைத்துவிடு கின்ற்து, குழந்தையை இழுத்து இரண்டுகுத்துக்கள் குத்தி அதன் பின் பாலூட்டுகிருள் ஒரு தாய்,
உனக்கு எந்த நேரமும் பசியும் அழுகையும் தானு என்று வைது அதன் பின் பாலூட்டுகிருள் இன்னுெருதாய், குழந்தை நித் திரை தெளிந்ததும் அழுகைச்சத்தம் கேட்கிறது, குழந்தையின் அழுகை ஒலி தாயின் காதில் விழுந்ததும் செய்த கருமங்கள் எல்லா வற்றையும் அப்படி அப்படியே போட்டுவிட்டு ஓடிவந்து என் கண்ணே எழும்பிவிட்டாயா? பசித்து விட்டதாடா? என்று கொ ஞ்சிக் குலாவிப்பாலூட்டுகிருள் வேருெருதாய், மணி பன்னிரண்டு அடிக்கிறது. என் குழந்தைக்குப் பசிக்கப்போகிறதே என நித்திரை யாகக்கிடக்கும் குழந்தையினருகிற் சென்று அவனுக்கு முத்தமிட்டு

Page 7
سیلا (1 تسلی
ഥര്ബr; அவனத்தடவி நித்திரையிலிருந்து எழுப்பிப்பாலூட்டு
கிருள் பிறிதொருதாய். இப்படி நால்வகைத்தாய தாய்மாரைக்காண்
கின்ருேம் எமது வாழ்க்கையில்,
மகான்கள் எல்லோரும் இறைவனைத் தாயாகவே போற்றி
யிருக்கின்றர்கள்.
தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம் என்கின்ருர் வள்ளலார்.
*தாயினும் நல்ல தலைவரென் றடியார்
தம்மடி போற்றிசைப் பார்கள். என்கின்ருர் திருஞானசம்பந்தப்பெருமான்,
எந்தாயுமெனக்கருள் தந்தையும் நீ என்கின் ருர் அருணகிரியார்.
தாயே நீ தீன பந்து, அடித்தது ஒரு கரமானல் அணைத்தது உனது திருக்கரம் தாயே அணைத்த அந்தத்திருக்கரங்களிலேதான் இன்றளவும் நான் தலைசாய்ந்து ஆறுதல் பெறுகிறேன் -
என்கின்றர் ஒரு பெரியார். 歉
‘என்னருமைத்தாயே, உன் பாதாரவிந்தங்களில் உண்மையான பக்தியை எனக்கு அளி: நான் வேறெதுவும் வேண்டேன். என்னி
டமுள்ளயாவற்றையும் எடுத்துக்கொண்டு, உன் பாதகமலங்களில்
திடமான பக்தியை மட்டும் எனக்கருளுவாயாக!"
என்கின்ருர் வேருெருபெரியார்.
'தாயே, ஆபத்து வந்தால் உன்னை நினைக்க ஆரம்பிக்கின்
றேன். இதை என் துர்க்குணமாய்க் கொள்ளாதே. கருணேக்கட
லின் நாயகியே பசிதாகக் கொடுமையினுல் வருந்தினுேர் தாயை
நினைப்பது சகசமேயன் ருே'
என்கின்றர் பிறிதொரு டெரியார்.
"கெட்டமகன் பிறக்கலாம் கொடியதாய் இல்லே அல்லவா?'
என்று திருவாய் மலர்கிருர் பூரீ சங்கரர்.
'அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே'
என்று துதிக்கிருர் பூரீ சுந்தரமூர்த்திசுவாமிகள்,

.....................11, ...............
'எப்பிறப்பில் காண்பேன் இனி"? என்று புலம்பிப்பெருமூச் செறிகின்றர்கள் பட்டினத்தடிகள்.
பிறந்தது தாய் வயிற்றில் வளர்ந்தது தாய்படியில், மறைவதும் தாய்மார்பிலே தான் மகரிஷிதாயுமானவருக்கு உறையூர்ச்சோழன் பொன்னடை போர்த்து மகிழ்கின்றன், அதைச்சுவாமிகள் மழைக் குளிரால் நடுங்கி ஒடுங்குகின்ற புலேச்சி ஒருத்திக்கு அளிக்கின்ருர், அரசன் கோபித்துக் கேட்ட காலத்தில் சுவாமிகள் திருவாய்மலர்ந்த தென்ன?
புலேச்சிக்கு அளிக்கவில்லை. தாய் அகிலாண்டேஸ்வரிக்குச் சமர்ப்பித்தேன். உலகம் கண்டது புலேச்சி அவர் தரிசித்தது தாயின் திருஉருவம். "தாயை வணங்கு' என்று உபநிடதம் சொல்கிறது.
தந்தை தாய்ப்பேண்” என்று நீதி நூல் மொழிகிறது.
மணிவாசகப்பெருந்தகை இறைவனேடு ஊடாடிக் குதூகலி த்து அவர் அன்பை நேருக்குநேராக அநுபவித்தவர். 'கண்ணப்ப னுெப்பதோர் அன்பின்மை' என்று தமது எளிமையைத்தெரிவித்த வர், இறைவனது அன்பிற்கு உவமை தேடினர். தாய்தான் அகப் பட்டாள். அதிலும் சிறந்த உவமையைத்தேடமுடியாதல்லவா? அதுவும் பால் நினைந்தூட்டும் தாய்தான் சிறப்புடையவள். குழந்தை தன் பசியைத்தான் உணராத காலத்தும் தாய் குழந்தையின் பசியைத் தன் பசியாக உணர்ந்து தீர்க்கின்ருள் அல்லவா? ஆதலால் பால் நினைந்தூட்டும் தாய் அன்பின் சிகரமாகிருள். அத்தகையதாயினும் பரிவுடையவன் இறைவன். அடியார் தமக்குரிய குறைகளை உணர் ந்து வேண்டத்தொடங்கு முன்னமே அவற்றை அறிந்து க்ேகமுயல் வான் 'வேண்டத்தக்கதை அறிவோனும் வேண்டமுழுதும்தரு வோனும் இறைவனே யன்றே? சில குழந்தைகள் விளையாட்டு விருப்பில் தம் பசியை மறத்தல்போல, அடியார்களிற் சிலர் தமது குறையை நன்குணர்ந்து ஆற்ருது இரக்கவும் மறப்பர், வேறு விஷ பங்களில் உள்ள ஈடுபாட்டால் அடியார்கள் மறக்கினும், இறை வன் அதனை மறவாது நினைந்து செய்யத்தக்கதைச் செய்வான். உலகத்தாய் குழந்தையின் உடல் கொள்ளும் அளவறிந்து ஊட்டுகி ன்ருள் இறைவன் மெய்யடியார்களின் உயிர் நலத்தை உண்ணின்

Page 8
سيقي 12 سبيسببه ؟
றுநோக்கியறிந்து அவர்க்கு வேண்டியபோது வேண்டிய அளவிற்கு மறவாது ஞானப்பாலை ஊட்டுகின்றன். இதையே மணிவாசகர் கருத்துட் கொண்டு
'பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து' என்று அரு ளிஞர். இன்னும் உலகத்தாய் அவ்வங்நேரத்தேதான் குழந்தையை நினைவுறுவாள் பிறகேரங்களில் அதை விடுத்துத்தன் வேலையில் முனை ந்திருப்பாள். இறைவனே அவ்வாருகிய நினைப்புமறப்பின்றி ஒரே தன்மைத்தாய் அன்பினைப் பொழிந்தவாறிருப்பன்,
உலகத்தாய் தன் மகன் உத்தமன் என உலகோரால் போற்றப் படும் போது ஈன்றபொழுதிலும் பெரிதுவக்கின்ருள். அதேபோல் அவனை ஒரு பா வியென்னும்போது "கின்னையும் இப்பாவி பெறநேர் ந்ததே' என்று மனம் வெதும்பிப்புலம்புகின்ருள். ஆல்ை இறை வனே எமது பெல்லாவினயையும், தன்ன கினைந்து "கசிந்துள்ளு ருகும் கலம்' சற்றும் இல்லாத தன்மையையும், 'விலங்கு மனத்தை' யும் நன்கறிந்திருந்தும் குற்றங்களேயே குணமாகக்கொண்டு அருள் புரியும் மேன்மையான தயையுடையனுயினன். இதை நினேந்து ரீ பாவியேனுடைய என்ருர்,
தாய் தனது பரிவால் ஒரு பாவமும் அறியாத குழந்தைக்குட் பால் ஊட்டுகிருள். அந்தப்பால் ஊனப்பெருக்கி, ஞான ஒளியைக் குறைத்து அழியும் ஆனந்தத்தைத்தருகிறது. ஆணுல் இறைவனுே என்னைப் பாவியேன் என்று அறிந்தும் தம் பரிவால் சிவாநந்தப்பால் ஊட்டுகின்றன். அந்தப்பால் ஊனின உருக்கி உள் ஒளியைப்டெ ருக்கி, அழிலற்ற ஆனந்தம் சொரிகின்றது, தாய்மார் ஊட்டும்பால் சேய்க்கு உணவாவதன்றி ஞானப்பாலைப்போல வெறிபளிக்கும் தேனுகாது, தாய் பாலைக்குழந்தைக்குச் சிறிது சிறிதாக ஊட்டுவாள் இறைவனுகிய தாயோ தனது ஞானப்பாலச் சொரிவாள். அதிலே ஞானச்சேய்மூழ்கினும் அதனுல் அச்சேய்க்கு ஆபத்து இல்லே. ஞா னப்பாலில் மூழ்கிவிடுவோனும் இறக்காது பிறப்பிறப்பற்ற பேரி ண்ட வாழ்வையே அடைவான். குழந்தையின் வாய் பட்டாலன்றித் காய் பால் சுரக்கமாட்டாள். ஆணுல் இறைவனே பிறரை எதிர்பா ராது தனது அருளா ல் ஞானப்பாலச் சொரிவான், இதனையே g. ) triflJir
 
 

'ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து'
என்று அருளிச் சென்ஞர்.
தான் செல்லும் இடங்தோறும் தாய் தன் குழந்தையை எடுத் துத்திரிவாள். இறைவனே தமது அடியார் பின்னேதான் திரியவன் சுத்தரர்க்காகப் பரவையிடம் தூது நடந்தவனல்லவா? அடியார் நடுவுள் இருக்கும் அன்பனல்லவா? அடி யார் நினைத்ததை அவர் பின்னே சென்று நிறைவேற்றி வைப்பவன். குழந்தை முதன்முதல் எழுந்து நின்று தளர் நடைகற்கும்போது தாய் குழந்தை அறியா மலேதான்னிருகைகளையும் பின்னேகொண்டு சென்றுதாங்குகின்ருள் அவ்வண்ணமே இறைவனும் 'புறம்புறம் திரிந்து' அடியார்க்கருள் புரிகின்றன்.
"ஊணே உடையே, பொருளே என்று உருகி மனது தடு மாறி வீணே து பரத்தழுந்துகின்றேன்' என்று வள்ளலார் வாய்விட் டுரைக்கின்றர். மணிவாசகப்பெருந்தகையும் வெகு காலம் உண் மைப்பொருள் எதுவென்று தெரியாது மயங்கியவர். தம்மைப்புறம் புறம் காடித்திரிந்த செல்வம் இறைவன் என்பதை உணர்ந்தார், அவன் பரிந்தூட்டி ய ஞானப்பாலால் அவனைத் தம் உயிரினும்இனிய மதிப்பரிய அழிவற்ற பெருஞ் செல்வமெனக் கண்டநாள் வந்தடை ந்தது. ஆதலால் "செல்வமே சிவபெருமானே' என்று வாய்விட்டு ரைக்கலாஞர்.
அடிகளார் இறைவனை உணராதிருந்த நாளெல்லாம் இறை வன் அடிகளார் பின்னே திரிந்தான். சிந்தை தனைத்தெளிவித்துச் சிவமாய தன்மையை அடிகளாருக்கு இறைவன் அளித்த உடனே அடிகளாரே இறைவன் பின்னே திரியத்தொடங்கி விட்டார்.இறை வன் அடிகளைத் தொடர்ந்து, அடிகள் திரிந்த இடமெல்லாம் அன் பால் பின் சென்ற நாளெல்லாம் ஒழிய, அடிகள் இறைவனைப்பின் தொடரும் நாள் வந்தது. முன்பு இறைவன் அடிகளாரைத் தமது வலேக்குட்படுத்த முயன்றபோதெல்லாம் அடிகளார் அவ்வலைக்குள் அகப்படாது தப்பியதுமுண்டு. ஆனல், அடிகளாரோ இப்போ இறைவனை அறிந்தார்; இறுகப்பிடித்துக் கொண்டார். உன் அரு ளால் உனை உணர்ந்ததும் யான் உனத்தொடரலானேன். சிக்கெ னப்பிடித்தேன். முன்பு ஒரு முறை நீ எனக்குக் காட்டியருளிய

Page 9
- 14 سب
போது உன்னைப்பிடித்தேனுயினும் நழுவவிட்டேன். இப்போது உன்னை நழுவவிடாது உறுதியாகப் பற்றிக்கொண்டேன், உறுதியா கப்பற்றியபின் உனக்கு உவந்த இடமாகிய என் மனத்தே நிலையாக அமர்ந்தருளல் வேண்டும் என்கின்றர். இறைவன் நினைப்பவர்மனம் கோயிலாகக் கொண்டவன் அல்லவா? இறைவனைப்பிடிப்பதிலுள்ள அருமையை உணர்ந்த அடிகள் இனி இறைவனே எழுந்தருளவிடு வாரோ? ஆதலின் இறைவன் மனமகிழ்ந்து அடிகளது மனதிடனி த்து அமர்ந்தருளுவதே முறை.
தாய் விளையாட்டாக ஒளிந்து நிற்கும்போது குழந்தை அவள் இருப்பிடத்தை அறிந்து 'அம்பா கண்டேன்! கண்டேன்! விடமா ட்டேன்! என்று அவள் உடையை இறுகப்பற்றிக்கொண்டுஒன்றி கிற்குமாறு போல சுவாமிகளும் பிரிந்த இறைவனை ப்பற்றிப் பிடித் துக்கொண்டு
'யான் உனைத்தொடர்ந்து சிக்கெனப்பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே ' என்கின்ருர், பால்நினைந்தூட்டும் தாயினும்சாலப்பரிவுடைய இறை வன் தன்னேட் பிடித்த வகையையும் தான் இறைவனைப்பிடித்தவகை யையும் மணிவாசகர் இத்திருவாசகத்திலே காட்டுகின்றர். இப்டோ படியுங்கள். -
"பால்கினைந் தூட்டும் தாயினுஞ் சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய 、* தேனினைச் சொரிந்து புறம்புறங் திரிந்த செல்வமே சிவபெரு மானே யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.'
 

س-15
ஹிந்து ராஷ்ட்ர பக்தி
-(பரீ குருஜீ)- N விளக்க முடியுமா?
CONCA ) Xo R My
மக்களில் அநேகமாக எல்லோரும் தாங்கள் இந்துக்கள் என் பதை மறக்க ஆரம்பித்து விட்டார்கள்.இந்துத்வம் என்ருல் என்ன என்பதை விளக்குங்கள் என்று சிலர் முன்வந்து கேட்கிறர்கள். எல்லாவற்றிக்கும் விளக்கம் கொடுத்துக் கொண்டா நாம் இருக்கின் ருேம்? யாதொரு விளக்கமும் இல்லாமல் இயல்பாகவே சிற்சில விஷயங்களை நாம் ஒப்புக்கொள்கிருேம், தற்காலத்திய மறதியின் பயனுய் மக்கள் இந்து என்ருல் என்ன என்பதாக வினவுகிறர் கள், சங்கத்தில் இல்லாத நம்முடைய நண்பர்கள் பலர் அதற்கு விளக்கம் கொடுக்க முயற்சிக்கின்றனர். ஆங்கிலேயர்கள் சிற்சில சமயம் முசல்மான் அல்லாதவன் இந்து' என விளக்கம் கொடுக்க முயற்சித்தனர்.அம்மாதிரியே நம்மக்களில் பலரும் இதுஇந்துஅல்ல, ஏனையவைகளே இந்து எனக்கூற ஆரம்பித்தனர். பரம்பொருளை இம்மாதிரியே விவரித்து விளக்கம் கொடுக்கத் தேவைப்படுகிறது. இவ்வுலகத்தில் பரம்பொருள் எது என்பதாக நாம் கேட்போமெ னக் கொள்வோம். அது கடவுள் எனச்சிலர் கூறுகிறர்கள். கட வுள் என்பதாகவோ பிரம்மா என்ருே வேறு எவ்வாறு நீங்கள் அழைத்தாலும் நான் அதைப் பொருட்படுத்த దోమెడి). ஆனல் ஒரு பலவீனமான மனிதன் அப்பரம்பொருளை எவ்வாறு சித்திரிக்கிருன். சிற் சில சமயம் ஒருசிறிது அதிக சக்தி வாய்ந்தது போலும், தனக் குக் கட்டுப்பட்டது போலும், சிற்சிலசமயம் தயை, அன்பு இது போன்ற நற்குணங்கள் படைத்தது போலும், சிற்சில சமயம்கோ பம் முதலிய தீக்குணங்கள் உடையது போலும் உள்ள மற்ருெரு மனிதனகவே அவன் சித்திரிக்கிருன், இதுவே பரம்பொருளை நோக் கிடும் பாமர மனித நோக்காகும். நாம் கண்டிடும் இவ்வுலகமே பர ம்பொருளாகின் அது எவ்வாறு மாறுகிறது என்பதாக இவ்வித கேள்விகள் அவர்கள் முன் கொணரப்பட்டபோது,நமது முன்னே ர்கள் கேட்டார்கள். இது பரம்பொருளல்ல என்பதாகக் கூறினர் கள். அனைத்தைக் குறித்தும் இம்மாதிரியான கேள்விகளைக்கேட்க ஆரம்பித்தனர். திடம் திரவம், வெளி இவற்றில் எவை பரம்பொ

Page 10
نسبتا 16 متنبیه
ருள் அல்லது இவையனைத்தும் பரம்பொருளா? இல்லை இல்லை.
இம்மாதிரி அவர்கள் இதுவல்ல. அதுவல்ல.(நேதிருேதி) என்பதாகக் கூறிக்கொண்டே சென்ருர்கள். இவைகளையெல்லாம்விலக்கிவிட்டு
மிகுதியாக அடித்தளத்தில் எது மிஞ்சுகிறதோ அதுவே பரம்பெரு
ளாகக் கூறினர்கள், சொற்கள் இப்பரம்பொருளுக்குப்பிறகே தேர்
ன்றினமையால் அதை அறிய முடியாததாகவும், அறியமாட்டாத
தாகவும்,விவரிக்க முடியாததாகவும், விளக்கமுடியாததாகவும்உரை
த்தனர். ஆகவே சொற்களுக்குப்போதிய திறனில்லே. எவ்வாறு ஒரு
மகன்தன் தகப்பனின் ஜனனத்தைப் பார்த்ததில்லையோ அவ்வாறே
சொற்களுக்குப் பரம்பொருளை விவரிப்பதற்கான ஆற்றலில்லை.
அம்மாதிரியேதான் இந்து மக்களைப் பொறுத்தும் பெயர் கொ டுக்க அவசியமில்லாத போது நாம் வாழ்ந்திருந்தோம். நாம் 15ல் G36ỦTỉ giG[[[To வாழ்ந்தோம். பேரறிவு பெற்றவராக விளங்கினுேம் இவ்வுலகங்குறித்தும், இயற்கை நியதிகள் குறித்தும், ஆன்ம விதி கள் பற்றியும் எல்லாவற்றையும் அறிந்தவர்களாக நாம் இருந்தோம் மாபெரும் கலாசாரத்தையும், அரும் பெரும் நாகரீகத்தையும் தோ ற்றுவித்தோம். தர்மமாம் பெரும் சமுதாய அமைப்பை உண்டாக் கினுேம். மனித சமுதாயத்திற்கு நன்மை பயக்கக்கூடிய அனைத் தையும் நாம் செய்தோம். ஏனைய மக்களினம் மிருக வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்த காலையிலே, நாம் அன்ருட வாழ்க்கையிலே அனைத்தையும் கண்டோம். சில சமயம் ஏனையோரிடையே நம்மை அறிவதற்காக அறிவாற்றல் மிக்கவர்கள் என்பதாக நாம் அழைக் கப்பட்டோம். மற்றவர்கள் மிலேச்சர்கள் என்றும், இந்துக்களா கிய நாம் ஆரியர்கள் என்றும் கூறுவது வழக்கம். ஆரியன் என்ற வார்த்தையைக் கூறினவுடன் தற்காலத்திய விசித்திர எண்ணங் கள் உங்கள் நினைவிற்கு வரும்,
ஆரியரும் திராவிடரும் ஆரியர்கள் ஆர்க்டிக் வட்டாரத்தில் மத்தியாசியாவில் எங்கோ வசித்து வந்தவர்கள் என்றும் இந்நாட்டின் பூர்வீக குடிகளாக வேறுசிலர் வசித்து வந்ததாகவும் கூறும் சிலரை நீங்கள் கண்டிரு க்கலாம், அப்பூர்வீகக்குடிகளே திராவிடர்கள் என அவர்கள் கூறு கின்றனர். நமது பண்டைய இலக்கியங்களை ஆராய்ந்திடமுயற்சித்
 

JINKIN
திருக்கின்றேன், நமது மொழிகளிலே தான் ஆரியர் என்னும்சொல் வழங்கப்படுகிறதால் நமது இலக்கியங்கள் தான் அதற்கான சரியான விளக்கத்தைக் கொடுக்கமுடியும், உலகத்தில் ஏனைய மொழிகளில் இது இரவல் வாங்கப்பட்டுள்ளது. ஆகவே இது நமது சொல்லாத லால் அதன் அர்த்தத்தையும் சொல் அமைப்பையும் நம்து இலக்கி யத்திலிருந்தே அறியமுயல வேண்டும். முதல் தடவையாக அது உபயோகிக்கப்பட்டுளது குணசித்திர விளக்கமாகவே அன்றி ஒரு இனத்தை விவரிக்க அல்ல. மனித குணங்களை விவரிக்கவும் மரியா தைச்சொல்லாகவுமே அது குறிக்கப்பட்டது. நீங்கள் QuTLDT) ணத்தைப்படித்தால் இராவணனின் இளைய சகோதரன் ஆர்ய யாதைக்குரியவனே என்பதாக இராவணனை அழைத்துள்ளான்.இம் மாதிரித்தான் அச்சொல் உபயோகிக்கப்பட்டுள்ளது, ஆகவே எல் லாவற்றையும் காம் நன்கு புரிந்து கொள்வோம்.
நாம் இந்துக்கள்
மேலை நாடுகளின் வக்கிர புக்கியாலான இந்தத்தற்காலத்திய இன விளக்கம் நம் மக்களையும் வக்கிர புத்தி உடைய்ோராக ஆக் கிற்று. இந்நாட்டிலுள்ள நம் மக்களை ஏனையோரிடமிருந்து பிரித்த றியவே ஆரியர் என்னும் சொல்லே உபயோகித்தனர். தன் சமுதா யத்திலே நால்வகை சிறப்புப்பிரிவு ஆகிற சமுதர்யஅமைப்பையும், தர்மத்தையும் தோற்று விக்காதவரை மிலேச்சர் எனக்கூறினர்.அது ஒன்றுதான் பாகுபாடாயிருந்தது. வேறு எம்முறையிலும் இந்தச் சமுதாயம் பெயரிடப்படவில்லே. இங்குமங்குமாக உலகின் பல் வேறு பாகங்களில் வேற்று சித்தாந்தங்கள் தோன்றி சில ஆத்மார் த்த ஒழுக்க விதிகளை எடுத்துரைத்தபோது பெயரிடுவதற்கான அவசியம் தோன்றிற்று பற்பல பெயர்கள் அளிக்கப்பட்டன. கடை சியாகச் சிந்துநதியிலிருந்து பெறப்பட்ட பெயரான இந்து என்பது பிரபலமாயிற்று. வடக்கே காஷ்மீரத்திலிருந்து தெற்கே குமரிவரை யிலுள்ள மக்கள் எல்லாம் இந்துக்கள் என அறியப்பட்டனர்.இதுவே
நமது பொதுவான, பிரபலமான பெயராக நமக்கு விளங்கியது. எவ் வாறு அப்பெயரை இப்போது விளக்குவது? நாம் இங்கு உள்ளோம்
ஆகவே அதை விளக்குவதில்லை, விளக்கம் ஏதாவது தரப்படவேண் டுமானல் சிந்து முதல் சமுத்திரம் வரை இடைப்பட்ட பகுதியிலே

Page 11
18.
வாழும் மக்கள் என்று மாத்திரம் தான் கூறவேண்டும். இந்நாடு புண்ணிய பூமி என்றும், எவரெவர் இதைப்புண்ணிய பூமியாகவும் தாய் நாடாகவுங் கருதுகின்றனரோ அவரெல்லாம் இந்துக்களாகக் கருதப்படவேண்டுமென்றும் விளக்கம் சிலர் தந்தனர். ஆனல் அது பூர்த்தியுருத விளக்கம், வேதத்தில் நம்பிக்கையுள்ளவர்களே இந் துக்கள் என வேறு சிலர் விளக்கம் தந்தனர். இதுவும் பூர்த்தியுருத விளக்கமே. ஏனெனில் சாரவாகப்பிரிவினர் வேதத்தில் நம்பிக்கை யற்றவர்களாயிருப்பினும் இந்துக்களே ஆவார்கள். இவ்விளக்கங் கள் எல்லாம் பூர்த்தியுறதவை. இவை முழு உண்மையையும் வெளி ப்படுத்துகிறதில்லை.
பல்லாயிரம் ஆண்டுகளாக வளர்ந்து கொண்டு, வியாபித்துக் கொண்டு, மிளிர்ந்து கொண்டு வரும் ஒருசார்மக்களுக்குத் தங்களது தோற்றுவாய் தெரியாதது இயற்கையே. நாகரீக வாழ்க்கை நடாத் திக்கொண்டு, எப்போது முதல் நாம் இங்கு வாழ்கிருேம் என்பது சரித்திர வல்லுனர்களுக்கும் புதிராக உள்ளது. ஒரளவிற்கு நாம் தொடக்க மற்றவர்களே. இத்தகைய மக்களுக்கு விளக்கம் தருவது இயலாததாகும். நாமாக உணர்ந்து அனுபவிக்க வேண்டியதொன் ருகும் இது, ஆகவே தான் இவ்விஷயங்களுக்கெல்லாம், விளக்கம் தர முற்படுவது கிடையாது.
விதண்டாவாதங்கள் 'இந்து என்ருல் யார் என்பதாக எண்ணுகிறீர்கள்' என்று ஒரு கனவான் நமது பூஜனீய டாக்டர்ஜியிடம் ஒரு கேள்வி கேட் டது நினைவிற்கு வருகிறது. அறிஞரிடம் சென்று கேட்டுப்பாருங் கள் எனக்குத் தெரியாது என்பதாக அவர் கூறினர். நீங்கள் இந்து ராஷ்டரத்திற்காக வேலை செய்கிறீர்கள். முகம்மதியர்களை விரட்டி டுவோம் எனக்கூறுகிறீர்கள். நாளடைவிலே வெளியிலிருந்து aft ததாகக்கருதப்படும் ஆரியர்களை யாது செய்வீர்கள்? என்பதாக வின வினர், அவர்கள் வெளியிலிருந்து வந்திருக்கும் பக்ஷத்தில் ஆரியர்க ளையும்விரட்டிடுவோம் எனப்பதில் அளித்தார். 'பின் நீங்கள்யார்' என அவர் கேட்டார். ‘நான் ஒரு திராவிடன்' எனப்பகர்ந்தார்.
நாம் பஞ்ச திராவிடர்கள். ஏனெனில் ஆரியர்கள் பஞ்சகெள டர்கள் என்றும், பஞ்ச திராவிடர்களென்றும் பத்துப் பிரிவுகள்
 
 
 
 
 

س-19- .
உடையவர். நர்மதைக்குத் தெற்கே பஞ்சதிராவிடர்களும், அதற்கு வடக்கே பஞ்சகெளடர்களும், ஆகவே நாம் திராவிடர்கள்.ஆனல் அதை ஒரு இனமாகக் கூப்பிடுவது, தவருக அழைப்பதும், மாறிக் கூப்பிடுவதுமாகும். ஆகவேதான் அவர், அவர்களையும் விர ட்டிடுவோம் எனக்கூறினர். அதாவது அநாவசிய சர்ச்சைகளுக்கு நாம் தயாராயில்லை என்பதைக்கூறவே அவர் விரும்பினர். இந்த அபத்தங்களை யெல்லாம் அவர் நம்பவில்லை, இதிலிருந்து நீங்கள் அடைவது பாதும் கிடையாக என்றும் கூறவிரும்பினர். இவைக ளில்ை யாதொரு பயனும் இல்லே அது எல்லையற்ற மணலில் சிறிது நீரை வளர்ப்பதற் கொப்பாகும். நீர் மணலிலே உறிஞ்சப் ஒன்றும் கிரும்பப்பெறமுடியாது. ஒருபய னையம் அளிப்பகில்லை அது. "வாகம் தவிர்' என்று நாரதர் தனதுகுத் கிாக்கில் கூறியுள்ளார் ஆகவே இம்மாதிரியான அர்த்தமற்ற பிர யோசனபற்ற விவாதங்களில் என் ஈடுபட வேண்டும்? ஆகையால் கான் நாம் சர்ச்சை செய்வதில்லே. நாம் இந்துக்கள் என்பதாக உண ர்கிருேம், நம் சக்தியால் இந்துக்களிடையே இவ்வுணர்ச்சியை ஊட்டிடுவோம்.
வாகங்களையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு இந் துமக்களிடை யே ஒற்றுமை வளர்ப்பது என்ற இந்த எளிய கூற்றை புரிந்து கொள்ளக் கஷ்டப்படுகிற மக்களிடம் நாம் செல்லவேண்டும். இவ் வொற்றுமையை நடத்தையில் கொணர முயற்சிக்க வேண்டும், அன்ருட வாழ்க்கையிலே நாம் இதை உணர்ந்திடுவோம், இந்து என்ற இவ்வார்த்தையில் கஷ்டம் காண்கிறவர்களிடம் இது எங் களது உறுதிப்பாடு என்பதாக நாம் கூறுவோம், முதலில் நாம் அக்க உணர்வு கொள்வோம், அது நம்முள் இருக்கிறது. நமது ஒவ்வொரு துளி இரத்தத்திலும் உள்ளது, அதை நாம் வெளிப்படுத் சிடவேண்டியதுதான், நம்மிடையே நுழைந்திருக்கும் வக்கிர உண ர்ச்சிகளை ஒழித் துவிட்டு நாம் அதை வெளிப்படுத்தியுள்ளோம்,நாம் இந்துக்கள் என உணர்கிருேம், அது குறித்து யாதொரு சந்தேக மும் இல்லை.
*、

Page 12
ܚ-20--
பூணி கதிரைமணி மாலை
-(பரமஹம்ஸ தாசன்)-
காப்பு, செல்வக் குமரன் திருவடியைச் செந்தமிழால் வல்வினையேன் போற்றி மகிழவே.செல்வக் கதிரைவளர், ஞானக் களிறே! என் 15ாவில் அதிர முழங்கி யருள்
நூல், ஊனுய் உயிராய் உலகமெலாம்
ஒளிரும் கருணைப் பேரிறைவா! கோணுய்த் தமிழர் குலங்காக்கும்
குமரா பரம குருதேவா! வானேர் பணியும் படைத்தலைவா! வள்ளி படரும் மலைக்கிழவா!
தேனுர் அமுதப் புனல்தவழும்
செல்வக் கதிரைச் செழுமணியே
இலங்கை இந்தியப் பேருறவு ー 。 என்(று)? என்றறியா தறிஞர்குழு
கலங்க, அகாலக் தனில் தமிழர்
கனிந்த சமய கலைப்பண்பு துலங்கக் கானில் எழுந்தருளி
ஜோதிக் காமக் கதிர்வடிவாய் இலங்கும் கருணை எழிற்பரிதி
எந்தாய், உன்தா ளிணைபோற்றி
இறைஞ்சித் தொழுவார்க் கிரங்கிமன
விருளைக் கடிந்துள் ளொளி பெருக்க வருஞ்சித் திரவேல் விழிச்சுடரே!
வளர்செந் தினைத்தேன் வள்ளிமகிழ் குறிஞ்சிக் கிழவா! அசுர குணக்
குலத்தை யழித்துன் குரைகழலே இறைஞ்சிப் பெருவாழ் வுறவருளாய் எந்தாய், கதிரை இறையவனே!
 
 
 

سلسل 1%-
அரும்பு விழிகள் புனல்சொரிய
அங்கம் புளசித் தன்பரெலாம் *கரும்பே, தெவிட்டாக் கனியே எம்
கண்ணே!' என்றுன் சந்நிதியில் துரும்பா யுருக எனை மட்டும்
சோம்பிக் கிடக்கும் கருங்கல்லாய் இரும்பாய் வைத்தல் முறையாமோ? இதுவோ கருணை? எம்மானே!
அன்புள் ளுருகி யடியரெலாம்
அரோக ராவென் ருர்ப்பரித்து இன்பக் கடலில் திளைந்தாடும்
இயல்பைக் கண்டும் எளியமனம் பெண்பால், பொருள்பால், காட்சியின்பால்
பெயர்த்தும் செல்லா தொழிந்திலவே என்பால் சற்றும் உனக்கிரக்கம்
இலயோ? கதிரை யெந்தாயே
ஆண்பால், பெண்பால், ஜாதி, மதம்
அனைத்துங் கடந்து, மக்களெலாம் தேன்போல் பேசி, ஒரு குலமாய்ச்
சேர்ந்து மகிழ்ந்திங் குனேவணங்கக் காண்பார் எவர்தாம் கசிந்துருகார்?
கருணைக் க (ಸಿನಿ! இதுபோல GJ 607 5ITOOT (OTP)J(510 op(1560)LDLD60TLD
இலையோ? கதிரை யெழில் மணியே
பாலர், விருத்தர், ஆண், பெண்கள் பலரும் குவிந்த மனத்துடனே ஒல மிட்டுக் கசிந்துருகி
உணர்ச்சி வேகத் துடன், உனது சீலம் பொலியும் கதிரைமலை
செல்லும் காட்சிக் கிணையுண்டோ? கோலச் சுடர்வேல் உருக்கொண்ட
குமரா கதிரைக் கோமான்ே!
(தொடரும்)

Page 13
32۔--
g6 to gas so figs 6: Tg,
வானநதா வாககு புத்தரின் கதை.
தீமைக்கு அக்கணமே நன்மை செய்து, அதனுல் தீமை செய் தவனுக்கு அவமானமாகிய தண்டனையைச் செய்துவிடு. புத்த பக வானுல் அடிக்கடி பிரசாரம் செய்யப்பட்டதும் அப்பியாசம் செய்ய ப்பட்டதுமான கொள்கை இதுதான். 'ஒரு மனிதன் எனக்குத்தீங் கிழைத்தால், அதற்குப் பதிலாக அவனுக்கு நான் நன்மையே செய் வேன். எனக்கு அவன் அதிகமாகத் தீங்கிழைத்தால், நான் அவனு க்கு அதிக நன்மையையே செய்வேன். நன்மையின் மனம் நன்மை செய்தவனேயே அடைகிறது. தீமையிலிருந்து உண்டாகும் காற் றுத் தீமை செய்தவனிடமே போய்ச்சேருகிறது.’ என்று அவர் சொ ல்லுவது வழக்கமாம். இந்தக் கொள்கையைத் தானும் அநுஷ்டா னம் செய்து பிறருக்கும்போதித்தார் என்னும் விஷயத்தைக்கேட்ட ஒரு முட்டாள் அவரிடம் வந்து அவரை ஒருநாள் முழுவதும் வாய் க்கு வந்தபடி வைதான். அதற்குப் புத்தர் ஒரு வார்த்தைகூடப்பே சாமல் புன்முறுவல் பூத்த வண்ணமாகவே இருந்தார். அவர் அம்ம னிதனுக்காக இரக்கங்கொண்டார். அந்த மனிதன் வசைமாரிகளைப் பொழிந்து முடித்தவுடன், புத்தர் அவனைப்பார்த்து 'அப்பா குழந் தாய், ஒருவன் தனக்கு அளிக்கப்பட்ட வெகுமதியைப் பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டால் அது யாரிடம் போகும்?' எனக்கேட் டார். அந்த முட்டாள் கேள்வியின் போக்கை அறிந்துகொள்ளச்சக் தியில்லாமல், "அப்படியானுல் அது வெகுமதியை அளித்தவனுக்கே திரும்பிப்போகும்' என்று விடையளித்தர்ன், அதற்குப் புத்தர் "குழந்தாய், நீ என்னை வைதிருக்கிருய் ஆஞல் நான் உன்னுடைய வசையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறேன். தயவுசெய்து அவற்றை உனக்கே வைத்துக்கொள். அவை உனக்கு துக்கத்துக்குக்காரணமா கவும் துக்கமாகவும் இராவோ? எதிரொலி சத்தத்துக்கு சொந்தமா னது நிழல் பொருளைச் சேர்ந்தது. அவ்விதம் போலக் கெட்ட நடத் தையுடையவனுக்குத் துக்கமே பயனுக இருக்கவேண்டும்' என்று சொன்னர்
அம்முடன் மறுமொழியே பேசவில்லை. மறுபடியும் புத்தர் 'ஒரு புண்ணியாத்மாவைத் தூவிக்கும் துஷ்ட சித்தமுள்ள ஒரு மனிதன்,
 

23
சுவர்க்கத்தைப்பார்த்து துப்புவதில் முயற்சியுள்ள ஒருவனுக்குச் சம மாக இருக்கிறன். அந்தஎச்சில்சுவர்க்கத்தை பாழ்படுத்தாது; ஆனல் அது அக்காரியம் செய்த மனிதனிடமே திரும்பி வந்து அவனையே அசுத்தப்படுத்தும், தூஷிப்பவன் புழுதியை இன்னெரு மனிதனிடம் வீசி எறியும் ஒருவனுக்குச் சமமாகிருன் ஆனல் காற்று விரோத மாக இருந்தால் அப்புழுதியானது அதை எறிந்த மனிதனிடமே திரு ம்பி வருகிறது. அந்தப் புண்யாத்மாவுக்கு எவ்விதக் கெடுதலும்
உண்டாவதில்லே. அவருக்கு மற்றவல்ை செய்யப்பட்ட தீங்கானது.
மறுபடியும் திரும்பித் தீங்கிழைத்தவனிடமே வந்து சேருகின்றது.' எனருர்,
நரகமும் சுவர்க்கமும் எங்கே?
18ரகம் எங்கேயிருக்கிறது? நரகமானது காமம், வெறுப்பு, பொ ருமை முதலிய தீப குணங்கள் குடிகொண்ட பனத்திலிருக்கிறது. சுவர்க்கம் எங்கேயிருக்கிறது? சுவர்க்கமானது அன்பு, சுத்தம், சந்து ஷ்டி, பெருந்தன்மை முதலிய நற்குணங்கள் நிறைந்த மனத்திலிருக் கிறது.
கடவுள்
காலரா என்னும் வியாதிக்குக் காரணம் கடவுள்தாம்.அவ்வியா தியைக்குணப்படுத்தும் வைத்தியரும் அவரே. குற்றவாளிக்கு தூக் குத்தண்டனை விதிக்கும் நியாயாதிபதியும் அவரே. அவரே குற்றவா ளியைத் தூக்கிலிடும் கொலேயாளி. அவரே வேலைக்காரர்களைக் கட் டளையிடும் வீட்டுத்தலைவர், யஜமானனுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் வேலைக்காரனும் அவரே. மோட்டார் கா ரி ன் சொந்தக்காரரும் அவரே. அந்த மோட்டாரை ஓட்டும் லோரதியும் அவராகவே இருக் கிருர் கடிக்கும் பாம்பும் அவரே, குணப்படுத்தும் மாந்திரிகனும் அவரே. அவரே அரசர், அவரே குடிகள், வக்கீலும் அவரே, கட் சிக்காரரும் அவரே. அவரே தோட்டம், அவரே ரோஜா. எல்லாம் அவரைத்தவிர வேறில்லை.தங்கத்தாலான கடுக்கனும் வளையல்களும் தங்கத்தைத் தவிர வேறல்ல. நாமரூபத்தாலான இந்த உலகமானது கடவுளேயன்றி வேறன்று நீ இதை அடிக்கடி ஞாபகத்திற்கு கொ ண்டுவந்தால் உனக்கு ஒரு புதிய திருஷ்டி உண்டாகும், பற்றுதல் வெறுப்பு இவைகளிடமிருந்து நீ விடுபடுவாய், உனக்கு இங் த ப் பூலோ கமே சுவர்க்கமாகிவிடும், அவருடைய லீலைகளின் உட்பொ

Page 14
ருளே நன்ருய் உணர்ந்து ஞானியாயிரு. ஒவ்வொரு உருவத்திலும் அவரைப் பூஜை செய். 。
மும்மைகள் மூன்று பொருள்களை அருந்து, மூன்று பொருள்களை அணிந்து கொள். நீ பழக வேண்டியவை அஹிம்ஸை, ஸத்யம், ப்ரஹ்மச்சர் யம் என்ற மூன்றுந்தாம் மரணம்-ஸம்ஸாரத்தால் உண்டாகும் துக் கம் கடவுள் ஆகிய மூன்றும் எப்பொழுதும் உன் ஞாபகத்தில் இரு க்க வேண்டியவை. அகங்காரம், ஆசை, அபிமானம் ஆகிய மூன் றையும் விட்டு விடவேண்டும். அடக்கம், பயமின்மை, அன்புஆகிய மூன்றையும் பழக்கத்துக்குக் கொண்டுவர வேண்டும். இணைவிழை ச்சு, கோபம், பேரரசை அல்லது உலோபம் ஆகிய இந்த மூன்றை யும் வேரோடு அழித்துவிட வேண்டும். *
அன்பர்களே! ஆத்ம ஞானத்தை விருத்தி செய்யக் கூடிய சில மும்மைகள் கீழே தரப்படுகின்றன. அவைகளை நீங்கள் தினந்தோ றும்பழக்கத்துக்குக் கொண்டுவர வேண்டும். மோக்ஷ இச்சை ஸாது ஸங்கம், சுயநலமற்ற பரோபகாரம் ஆகிய மூன்றிலும் அன்பு செலு த்துங்கள். லோபம், குருர குணம், அற்ப புத்தி ஆகிய மூன்றையும் பழித்துத்தள்ளுங்கள். உதாரகுணம்,தைர்யம், பெருந்தன்மை ஆகிய மூன்றும் மெச்சத் தகுந்தவை. பெண்களிடம் மயக்கம், கோபம் கர்வம் ஆகிய இம்மூன்றும் வெறுத்தற் குரியவை. குரு, துறவு நித்யாநித்யப் பொருள்களின் அறிவுஆகியவை வழிபடத் தகுந்தவை நாக்கு, கோபம், அலைமனம் ஆகிய மூன்றையும் அடக்கியாளவேண் டும். துஷ்டச்சேர்க்கை, அகாரியங்களில் ஆசை, கெட்ட எண்ணம் ஆகிய மூன்றையும் துறக்க வேண்டும். ஒழுங்கான உலக கடையில் அன்பு, மன்னித்தல், பொறுமை இவை மூன்றும் பழக்கத்துக்குக் கொண்டுவரத் தகுந்தவை. புறம் சொல்லல், பொய், கடுமையான வார்த்தைகள் இவை மூன்றும் விலக்கத் தகுந்தவை.
y
பரம்பர சாதனங்கள் 臀 வேதாத்யயனம் பூஜை மனத்தை ஒரு முகப்படுத்தல், தியா னம், கன்னடத்தை, தவம், தர்மானுஷ்டானம், மனத்தை நல்வழிக ளில் பழக்கல் முதலிய பரம்பரா ஸாதனங்கள் எல்லாம்சா சுவதமான சாந்தி விடுதலே, அமரத்துவம் ஆகிய கிலேமைகளை அடைவதையே லசரியமாகக் கொண்டவை.
 
 
 
 
 
 
 

ஒரு யோகி மன ஒருமையோடு மலைக் குகை யொன்றை நோக்கியோ ஒரு கோயிலுக்கோ அல்லது ஒரு தனி அறைக்கோ செல்லவேண்டும். மனத்தாலும் பேச்சாலும் செயலாலும் ஒருவரு டனும் கலத்தல் கூடாது, பொருள்களின் சேகரிப்போ கலப்போ யோகிகளுக்குத் துன்பங்களை விளைவிக்கும் எப்பொருளிலும் பற்றி ன்மையை வளர்த்தல் வேண்டும் உலக லர்பத்தில் மகிழ்வதும் 15ஷ் டத்தில் வருந்துவதும் கூடாது. தன்னைப் பிறர் வைதாலும் வணங் கிலுைம்; அவர்தம்மை ஒன்ருகப் பார்த்தல் வேண்டும் யாருக்கோ எங்கோ நன்மையோ தீமையோ ஏற்பட்டால் அவற்றைப் பற்றிச் சூழ்தல் கூடாது; ஊதியத்திலும் கேட்டிலும் மகிழ்வதும் வருந்து வதும் கூடாது; எல்லோரையும் சமமாகப் பார்ப்பதோடு காற்றி னைப்போலப் பற்றற்று மிருத்தல் வேண்டும், இங்ங்ணம் எந்தயோகி தன் மனத்தை இப்பண்புடன் போற்றித் தனக்கென வாழாது பிற ர்க்கென உழைத்து எப்பொருளையும் எம்மக்களையும் தன் கண்ணு க்கு ஒன்ருக்கி ஆறு மாதங்கள் ஒழுங்கான நியமங்களோடு வாழ் கின்றனே அவன் பிரஹ்மத்தை அறிவான், நிர்விகற்ப ஸ்மாதியும் அவனுக்குக்கைகூடும். (மகாபாரதம்-சாந்திபர்வம்)
சத்திக் களஞ்சியம் உன்னிடமே!
சக்திக் களஞ்சியம் உன்னிடமே ஞானம் என்னும் கடலும் உன்னுள்ளே; ஆனந்தத்தின் ஊற்றும் உன்னிடம் தான்; எல்லாச் சக்திகளும் உன்னிடம் மறைந்து கிடக்கின்றன. உள்ளே இருப்ப வன்தான் அழிவற்ற ஆத்மா, tயும் பரமாத்மாவும் ஒன்றுதான். அதனைப் பெற்றுச் சுதந்திரமுள்ளவனுயிரு: தியானத்தால் உன்னி டம் மறைந்து கிடக்கும் சக்திகளை வெளிப்படுத்து: ஆதாரத்தில் மோது; ஆழத்தில் மூழ்கு: ஆத்மா என்னும் முத்தை வெளியிற் காண்டுவா: தைரியமாயிரு ஊக்கத்தைக் கைவிடாதே; நீ மகாத்
மாவாக அல்லது பேரான்மாவாக ஆகிவிடலாம்.
சாதனத்தில் நன்மையும் தீமையும். அழியா ஆத்மப் பொருளே
ஆகாரத்தில் மிதமாயிருத்தல் நலம். ஆனல், இலைகளைச் சாப் பிட்டுக்கொண்டிருத்தல் கெடுதல். சரீரத்தை காப்பாற்றுதல் கலம் ஆனல், சரீர வாஞ்சையிருப்பது நலமன்று.
ஏகாந்த வாழ்வு இனிது தாமஸ் குணத்தோடிருத்தல் கெடு தல். வெளிப்படையான உள்ளம் நலத்தைக் கொடுக்கும் ஆணுல், மற்றவர்கள் குற்றங்களையும் ரகசிய விஷயங்களையும் வெளிப்படுத் தல்கேடு விளைக்கும்.

Page 15
-26 .
நானும் எனது குருநாதரும்
(அ. இராமசாமி ஜோகூர்பாரு, மலாயா)
24-3-55 இரவு கனவிலே, சாது ஒருவர் தோன்றி ஓம் நாரா யணுயகம, என்று எனக்கு உபதேசம் செய்தார். அந்த திருநாமத்தை பல தடவை சொல்லி மகிழ்ந்தேன். பிறகு விழித்துக் கொண்டேன்.
பூரீராம கிருஷ்ணபரம்பரையில் சிஷ்யர் ஒருவருக்கு தீட்சையளி க்கும் சமயம் தீட்சை செய்பவர் சிஷ்யரின் தலைமேலே தன் வலது திருக்கையை வைத்து; குழந்தாய் உன் கனவிலே வந்து உபதேசி த்த மந்திரத்தைக் கூறுவாயாக! என்பதையும் அவர் அந்த மந்திரத் தை வாய்விட்டு சொல்வதையும் புத்தகத்திலே படித்து நான் ஆச்ச ரியம் அடைந்திருக்கிறேன். இம்மாதிரியும் ஒரு சிஷ்யருக்கு இயலு மா? என்று சந்தேகித்திருந்தேன். இந்த சந்தேகமும் ஆச்சரியமும் என் குருநாதரின் திருவடி சக்தியினலே இன்று தினம் அழிந்துபோ யிற்று. தீவிர பக்தி நிறைந்த சிஷ்யன் ஒருவனுக்கு இம்மாதிரி சம்
பவம், சர்வ சாதாரணம் தான் என்பதை தெரிந்து கொண்டேன்.
குருநாதரின் கடிதம் வெகுநாளாய் வராமல் இருந்ததாகத்தேர் ன்றியது. அதை நினைத்து நினைத்து அதிக கவலையடைந்தேன், இரவு படுக்கைக்குச் செல்லும் முன் பக்கத்திலிருக்கும் பிள்ளையார் படத் தைநோக்கி, இன்னும் ஒரு வாரத்திற்குள் குருநாதர் கடிதம் வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன். மறுநாள் 10 மணிக்கு குருநாதரிடமிருந்து, இரண்டு கடிதங்கள் வந்தன. நான் ஆனந்தம் அடைந்தேன்.
விடி யற்காலம் நான்கு மணியிலிருந்து மணி ?-15 வரை நான் யாரிடமும் பேசுவதில்லை, பக்திக்குப்பணி செய்து கிடக்கும் நான், பிறரிடம் எவ்வாறு பேசமுடியும்?
என் குருநாதரின் திருவடி சக்தி வெளிப்படும்போது, அதற்கு எதுவும் தடையாக இருக்கமுடியாது. பூமிக்குள் அமுக்கி வைத்தி ருக்கும் பெரும் பாறையை, உடைத்துக்கொண்டு வெளிவருவது தான் என் குருநாதர் திருவடி சக்தியின் பெருமை. இதை, ஒருநாள் சம்பவம் கொண்டு விளக்குகிறேன்.

مسلسi"{2:سسسسس
செல்லையா என்பவர் நெற்றி நிறைய விபூதிபூசி விநாயகர் பட த்தை வணங்கி விட்டுத்திரும்பினர், வழக்கத்திற்கு மாருக, காலே மணி 6க்கு, செல்லைபா! இங்கே வாரும் பக்கத்திலே உட்காரும் என்றேன். ஒன்றுமே பேசாத அண்ணன் பேசுகிருரே! என்று அவர் ஆச்சரியத்துடன் உட்கார்ந்தார். நீர் கூடிய சீக்கிரம் இந்தி யாவிற்குப்புறப்படப்போகிறீர்' என்றேன். அதற்கவர், தாங்கள் ஊருக்குப்புறப்படுவதற்கு இன்னும் 6, 7 மாதங்கள் இருக்கிறதல்ல வா? அப்போதுதான் நானும் கூடவருவேன். இதுதான் என் திட மான நம்பிக்கை. தாங்கள் சொல்வது எனக்கு பொருத்தமாகத் தெரியவில்லை, என்ருர், அதுசரி நீர் இப்போது அப்படித்தான் சொ ல்வீர் நேரம் வந்ததும் நான் இப்போதே புறப்பட்டுப்போய் வர வேண்டும் என்று துடியாய்த்துடிப்பீர். சுமார்20 வயது பருவத்தின் சொரூபத்தைக் காண்பித்து விடுவீர் என்று சொன்னேன். அதுசரி, பார்ப்போம் என்று எழுந்து போய் விட்டார்.
அன்று தினம் காலே மணி 10 க்கு அவர் தாய் தந்தையரிடமிரு ந்து ஒரு விமானத்தபால் வந்தது. அதிலே எழுதியிருந்ததுவருமாறு
உன் சித்தப்பார் உனக்காக வளர்த்து வைத்திருந்த பெண்ணை. அவர் நோக்கப்படி நீர் கல்யாணம் செய்து கொள்ள விரும்பாமல் நாள் கடத்துவதனுல், அவர் நம் எதிரி பக்கம் சேர்ந்துகொண்டு அந்த மாப்பிள்ளைக்கே கல்யாணம் செய்து கொடுக்கப்போகிருர் கல்யாணத்திற்குத் தேதியும் குறிப்பிட்டாகி விட்டது. எல்லாரும் சேர்ந்து கொண்டு எங்களுக்கு எதிரி ஆகப்பார்க்கிருர்கள். உன் சித் தப்பார் செல்வாக்குமிக்கவர். அவருடைய எதிர்ப்புச் செயலால்னங் கள் வாழ்வே சிதைந்துவிடக்கூடும், ஆகவே டிெ பெண்ணை கல் யாணம் செய்து கொள்கிறேன், என்று உன் சித்தப்பாருக்கு தந்தி யடித்துவிட்டு உடனே புறப்பட்டுவா என்று எழுதியிருந்தது.
இதைப் படித்ததும் காலையில் மலர்ந்த என் திருவாக்கு, பலித மானதற்காக அவர் உள்ளம் உருகினர். அண்ணே! 4 மணி ஆன தும் வேஷ்டியை அவிழ்த்து வைத்துவிட்டு கோவணத்துடன் உட்கார்ந்து விடுகிருரே! எள் று தான் தங்களை இகழ்ச்சியாய்கினை த்திருந்தேன். தாங்கள் சுவாமி கும்பிடும் பெருமையை இன்றுதான் கண்டேன். ஆணுல் இந்த மாதிரியான ஆச்சரிய செயல்க்ளை, நீங்கள் யாரிடமும் சொல்ல வேண்டாம். சொன்னல் பலிக்காது என்ருர்,
,。

Page 16
கொஞ்ச நேரத்திலே கடிதத்தின் வாசகத்தை ஊன்றிப்படித்து சிந்தனை செய்யச் செய்ய அவன் உள்ளமே கலங்கி விட்டது. சமை யல் வேலை பார்க்கும் அவர் உப்பை அள்ளி பாலிலே போட்டார் சர்க்கரையை அள்ளி குழம்பிலே போட்டார்; அவர் என்ன செய் கிறர் என்பது அவருக்கே புரியாது போயிற்று அவருடையநினைவு இந்தியாவிலிருக்கும் தாய் தந்தையரின்மீது அடிமையாகி விட்டது. உடனே ஊருக்குப் போய் வரவேண்டும் என்ருர்,
மேலதிகாரிகளுக்கு அவரை இந்தியாவுக்குப்போய் வரச்சொ ல்ல மனமில்லை. செல்லையா! கொஞ்சம் பொறு போய் வரலாம்என் ருர்கள்: அதெல்லாம் முடியாது. நான் இப்போதே போய்வரவேண் டும் என்று துடியாய்த்துடித்தார். அவர் உள்ளிம் கலங்கி விட்ட தையறிந்து இவர் நமக்கு இனிமேல் பிரயோசனப்படமாட்டார் என்று கருதி அவரை அனுப்பிவைப்பதற்கு சம்மதித்தார்கள். அவர் அதே கப்பலில் பிரயாணமானுர்,
பரமாத்மா என் கனவிலே அறிவித்ததைத்தான் காலேயிலே அவரிடம் சொன்னேன்இந்தச்செயல் உருவானதை கினைத்து நினை த்து. ஆனந்தம் பெற்று என சாதனையை மேலும் மேலும் தீவிரமா க்கிக்கொண்டு வந்தேன்.
என்குருநாதர் இது விஷயங்கள் பற்றி குறிப்பிடுகையில் சாத கன் ஒருவனுடைய வாழ்வில் இம்மாதிரி ஆச்சரிய சம்பவங்கள் நிக ழ்ந்து அவனுக்கு ஆனந்தம் ஊட்டுவது அன்னை யின் கருணைக்கும் அவள் அவனுடைய பக்தியை உயரத்தூக்கி விடுவதற்கும் அறிகுறி @T @T (ಗ್ರ!T
31-3-55 இரவு கனவில் பயந்து அலறப் போகும் சந்தர்ப்பத் திலிருந்துஎன் குருநாதரின் திருநாமம் சொல்லி தப்பித்துக் கொண் டேன். இன்று தினம் என் குருநாதரின் திருநாமத்தை கனவிலும் சொல்லி, பயத்தைப்போக்கிக் கொள்ளும் வகை தெரிந்ததற்காக மகிழ்ச்சியடைந்தேன். -
குருநாதரின் மகா சக்தி வாய்ந்த திருநாமம் சிஷ்யன் கையிலி ருக்கும் ஆயுதங்தான். அவன் அதன் வலிமையைக்கொண்டு பயத் தை விரட்டிஜெயம் அடைந்து விடுகிருன், அவன் சிற்சில வேளை களில் "என் இருதயத்திலும் நாவிலும் என் குருநாதரின் திருநாமம் உண்டு' எனக்கு எதிரி இவ்வுலகில் யாரும் இல்லை, என்று பெரு மை பேசிக்கொள்கிருன்.அவனுடைய பெருமை யெல்லாம்குருநா தர் அவனுக்கு அருள் சுரந்து கொடுத்ததுதான்.
 
 

-9--
செய்தித்திரட்டு
கண்டி தெய்வீக வாழ்க்கைச்சங்கம்
مبتلادیمینار XP (اسٹCھہsx;b
டிெ சங்கம் கண்டியைச் சேர்ந்த தென்னக்கும்பரபிள்ளையார் கோவில் மடத்தில் 29-10-55 சனிக்கிழமை ரிஷிகேசம் சுவாமிசிவா னந்த சரஸ்வதி அவர்களுடைய சீடர் யோகி சச்சிதானந்தசரஸ்வதி அவர்களுடைய தலைமையில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது அத்தருணம் பல பெருமக்கள் கலந்து விழாவைச் சிறப்பித்தனர்,மலே நாட்டுத்தமிழ்மக்களுக்கு இச்சங்கம் சிறந்த பணியாற்றும் என நம்பு
கின்ருேம்.
மறியற்சாலையில் முருகன் கோயில் உதயம்
குண்டசாலை சீர்திருத்த மறியற்சாலேயில் கண்டி பகிரங்கவேலே ப்பகுதி திரு. த. செல்வத்துரை அவர்களுடைய பொருளுதவிகொ ண்டு ஓர் சுப்பிரமணிய சுவாமிகோயில் கட்டப்பட்டு 30-40-55 ஞா யிற்றுக்கிழமை பல மந்திரிகள் சமுகத்தில் கும்பாபிஷேகம் நடை பெற்றது. எவ்விடத்தும் முருகன் சந்நிதானத்தில் சிங்கள தமிழ்மக் கள் மிக ஒற்றுமையுடன் வாழ்கின்ருர்கள் என கெளரவ மந்திரி நுகவெல அவர்கள் குறிப்பிட்டார்கள்.
ஏழாலே இந்து வாலிப சங்கம் 30-10-55 ஞாயிற்றுக்கிழமை குராவத்தை அம்மன் கோயில் மண்டபத்தில் டிெ சங்கம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுச் சமய வளர்ச்சிக்கான பல திட்டங்கள் ஆராயப்பட்டதோடு அவற்றைக் கொண்டு நடத்துதற்கான உத்தியோகத்தர் தெரிவும் நடைபெற்ற தென அறிகின்ருேம்.
கிளிநொச்சி திருநெறிக்கழகம் டிெ கழகச்சார்பில் சமய அபிவிருத்திக்கான கீழ்க்கண்ட செய ல்கள் நடைபெற்றன என்பதறிந்து மிக மகிழ்கின்ருேம்.
20-10-55இல் 25 பிள்ளைகள் சமய தீட்சை பெற்றனர். 3411-55இல் 35 பிள்ளைகள் சமய தீட்சை பெற்றனர்.

Page 17
18-11-55இல் பழையகொலனி சித்திவிநாயகர் ஆலயத்தில் அக ண்ட நாமப்ஜனையும் தீபாவளி பற்றிய சொற்பொழிவுகளும் நடை பெற்றன. -
15-11-55இல் கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விரதம் ஆரம்பிக்கப்பெற்று 21-11-55 முடிய ஏழுநாட்களும் கந்த புராணபடனமும் பூரீமத் க. வடிவேல் சுவாமிகளால் கந்தசஷ்டியற் றிய உபங்கியாசமும் நடைபெற்றன.
றிவாலை சரஸ்வதி பீடஸ் தாபனம் காரைநகர் பூரீவாலே சரஸ்வதி அம்பாள்பீட ஸ்தாபனம் கடந்த 15வராத்திரி தினத்தின்போதுவெகு சிறப்பாக நடைபெற்றது.
கோ. வை. சின்ன ஆறுமுக சுவாமிகள்
அறுபதாம் ஆண்டுவிழா டிெ விழா 23-10-55 ஞாயிற்றுக்கிழமை சுவாமிகளுடைய சீடர் எல்லாம் கூடிக்கொண்டாடியதோடு சுவாமிகளுடைய நினைவு மலர் ஒன்றும் வெளியிட்டுள்ளார்கள்,
தமிழ் மறைக் கழகம்
பல பரிசில்கள் வழங்கப்படும், அகில இலங்கைத் திருக்குறள் மனனப் போட்டியின் முடிவு
திகதி 1-12-55 ஆகும்,
போட்டிகளில் முதல் மூன்றிடங்களையும் பெறுபவர்களுக்குப்
பதக்கங்கள் பரிசில்களாக வழங்கப்படும், இவற்றைவிடப்பின்வரும்
பரிசில்களையும் வழங்குதற்குத் தமிழ் மறைக்கழகம் முடிவு செய்து
ளது, &
1 ஒவ்வொரு பிரிவிலும் முதலாவதாகத்தேறும்பெண்களுக்கு 50 ரூபா பெறுமதியான தங்கப்பதக்கம்,
2 கீழ்ப்பிரிவுப்போட்டியில் பங்கு பற்றுபவர்களுள் மிகக் குறைந்த வயதுடையவருக்கு ஒரு பரிசில்,
3 தேர்வு நடத்தப்படும் ஒவ்வோரிடத்திலும் ஒவ்வொரு பிரி விலும் முதலாவதாகத் தேறுபவருக்கு ஒரு பரிசில்,
4 ஒவ்வொரு பிரிவிலும் மிகக்கூடிய தொகையான மாணவர் களைப் போட்டியிற் பங்குபற்றச் செய்யும் பாடசாலைக்குஒருப்ரிசில் ,
 
 

سی-831-س
5 ஒவ்வொரு பிரிவிலும் 75 சதவீதத்திற்கு மேத் புள்ளிபெறு பவர்களில் முதற் பதின்மருக்குப் புத்தகப் பரிசில்கள்,
விளம்பரங்களுக்கு
- தமிழ்மறைக்கழகம்--
1812 அத்திடியா வீதி, இரத்துமலனே. எனும் முகவரிக்கு எழுதுக.
** திரு. க: இராமச்சந்திரன் சஷ்டியப்த பூர்த்தி
محمبہم مسحص{-~~---بیسن
ஆத்மஜோதியின் கெளரவ ஆசிரியரும் ஆத்மீகத்துறையில் அரும்பணி புரிபவருமாகிய திரு. க. இராமச்சந்திரன் அவர்களின் சஷ் டியப்த பூர்த்தி 1-11-55 ஜிந்துப்பிட்டி பூரீ சுப்பிரமண்ய சுவாமி கோயிலில் கொண்டாடப்பட்டது. சண்முக அர்ச்சனையின் பின் நடைபெற்ற கூட்டத்திற்கு கெளரவ சேர், க. வைத்தியநாதன்.அவர் கள்தலைமை தாங்கினர்கள், சுவாமி இராமதாஸ்,சிவானந்தா, சுவாமி சுத்தானந்தர் முதலிய் மஹான்களிடமும் வேறு பல பெரியோர்களி டமும் இருந்து வந்த ஆசிச்செய்திகள் படிக்கப்பட்டன. கொழும்பு மக்கள் சார்பிலும், மலைநாட்டு மக்கள் சார்பிலும் மட்டக்கணப்புமக் கள் சர்ர்பிலும் வாழ்த்துப்பாக்கள் பாடி வழங்கப்பட்டன, சுவாமி சச்சிதானந்த யோகீஸ்வரர் சுவாமிவரானந்த, திருவாளர்கன் ஆர். என், சிவப்பிரகாசம், ரா, ம, வள்ளியப்பச்செட்டியார், ப. கணபதி, சி, சரவணமுத்து. வே. அ. கங்தையா முதலாயிஞேர் திரு. க. இரா மச்சந்திரனின் சேவைகளைப்பாராட்டினர். திரு. க. இராமச்சந்தி ரன் எல்லோருக்கும் தமது நன்றியைத் தெரிவித்தார்கள்.

Page 18
ஆனந்தாசிரமச் செய்திகள்
ーミ式○ミ三千一 வெள்ளி விழா அன்னை கிருஷ்ணபாய் அவர்கள் 25 வருஷங்கட்கு முன்னர் துறவுபூண்ட புண் ணிய தினமாகிய கார்த்திகை மாதப் பூரணே 29-11-55ல் ஆகும். முன் அறிவித்தபடி இவ்வெள்ளிவிழாக்கொண் டாட்டத்துக்கு அன்னையின் பக்தர்கள் விசேஷ ஒழுங்குகள் செய்து ள்ளனர். அன்றைய நிகழ்ச்சிகள் பின்வருமாது:- காலை 4 30-5 00 தியானம்
5 00-5 30 வேதபாராயணம்
80-(് 00 പ്രജ്ഞr 6 00-7 00 பாகவத சப்தகம்
0)-8 0 0 പ്രജ്ഞr 8 00-9 00 பக்திப்பாடல்கள் 9 00-10 30 பஜ்னை, ஆரத்தி 10 80-10 40 பகவத்கீதை பாராயணம் 10 40-11 00 சொற்ட்ொழிவு 11 00-11 20 அன்னையின் பேரில் சுவாமி இயற் றியருளிய ஆங்கிலப் பாடல் படித் தல் 11 20-12 00 வெள்ளி விழாமலரும் நாம லிகிதக் கொப்பிகளும் அன்னைக்கு வழங் 35 (6) இடைவே?ள-12-00-2-00 வரை மாலே 2 00 3 00 பஜனை
3 00-400 பக்திப்பாடல்கள் 4 00-4 45 நாம சங்கீர்த்த்னம் 4 46- 45 പ്രക്റ്റ് - പൃ', 5 45-6 00 வேத பாராயணம் 6 00-9 00 பக்திப்பாடல்கள்
பூரீமதி எம், எஸ். சுப்புலக்ஷமி அவர்கள் 9 00-11 00 கதாப்பிரசங்கம் 11 00 - 1 00 பஜனை - தீபப்பிரதட்சணம் ஏழைகட்கு அன்னதானமும் வழங்கப்படும். எல்லா அன்பர்களினதும் ஒத்துழைப்பு வேண்டப்படுகின்றது.
நாமலிகித ஜெப யாகம் 10-10-55 வரையில் ஆனந்தாசிரமத்துக்கு அனுப்பப்பட்ட கொ பிகளின் படிக்கு 286 329, 834 நாமங்கள் எழுதப்பட்டுள்ளன.
خھی کبھیعیہ

வினு: (1)
வினு (2)
វិធា...
வி;ை (3)
辭 。
சைவ சமயத்தில் பேய்பிசாசுக்ளில் நம்பிக்கை உண்டா? விஞ்ஞானரீதியில் இது டொருந்துமா?
சைவ சமயத்தில் பேய் பிசாசுகளின் நம்பிக்கைக்கு இடம் இல்லை, ஆனல் முழுமரணமோ அல்லது மறுபிறப்போ, இறுதி எரிநிலையோ எய்தாத உயிர்கள் உடல் இல்லாமல் சஞ்சரித்துக்கொண்டிருப்பதாக சாத்திரரீதியாகச் சொல் லப்பெறுகிறது. பல இடங்களில் அனுபவத்தில் ஒத்திருப்
பதாகவும் பொது மக்கள் சொல்லுகின்றர்கள். உயிர்கள்
அப்படி உலவுதலு விஞ்ஞானம் இறந்தவருடன் பேசுத லால் :
சில கோவில்களில் பூசகருக்கோ அன்றி கோவிலைச்சேர்
t
ந்த வேறு ஒருவருக்கோ தீபாராதனை நடக்கும் நேரத்
தில் உருஎறி ஆடுதல் வழக்கமாகஇருக்கிறது. அவர்களே தம் வாயால் காணிக்கையும்கேட்கின்றர்கள். இவற்றைப் பற்றி தங்கள் அபிப்பிராயம் என்ன? உணர்ச்சி வயப்பட்ட சந்தர்ப்பங்களில் இம்மாதிரி நிகழ் வது உண்டு, திருவருள் உணர்ச்சி மேவியபோதும் உல கில் உணர்வு குறையாமையினுல்தான் காணிக்கை கேட் கும் நிலை ஏற்படுகின்றது. இரு உணர்வுகளும் சம நில யில் இருப்பினும் இங்கில நிகழலாம். திருவருள் உணர் ச்சி மேற்பட்டு, உலகியல் உணர்ச்சி குறைந்தால் காணி க்கை கேட்கும் நிலை வருவதற்கு இடமில்லை. சில இடங் களில் போலியாகவோ அன்றி பழக்கத்தின் காரணமா கவோ நடிக்கப்படலாம். . சிலர் பெண்களைத்தாயாகவும் சக்தியாகவும் பாடியிருக்க ஒரு சிலர் பெண்களை இழித்துக்கூறியிருக்கிருர்களே:இவ, ற்றின்கருத்து என்ன? . .ته س. م “ பெண்களை இழித்துக்கூறுவது முற்றிலும் புறம்பானது சமணம் பெளத்தம் முதலிய சமயங்கள் தமிழ் நாட்டில் கால் பரவாமல் போனதற்கு பெண்களை இழிவு படுக் தும் மனப்பான்மையே முழு முதற்காரணம். சேக்கிழார் பெருமான் 'மங்கையற்கரசி எங்கள் குல தெய்வம்" என்று. பெண்மை நலத்தையே பெரிய புராணத்தில் வாழ்த்தியருளுகின்ருர் மிகப்பிற்பட்ட காலத்தில் வேறு இன்பப்பண்பாட்டை ஒட்டித்தான் சிலர் இழிவுபடுத்தும் மனப்பாங்கு பெற்ருர்கள். அவை கொள்ளத்தக்கவை | Gd (31),
-குன்றக்குடி அடிகளார்

Page 19
Ragd. at the G. P. O, as News Pa.
ι, κείίρίοικο δέρα
t
An Inti
the reachin of East and
ต
ܕܚܛܐ
For th two months - Decembe a few days
T - E AN island Foreign Malaya, Single Co Subscriptio
Please Wri
N. . .
ஆத்மஜோதி சந்த
ويجددتعويضحي =ة
அன்பர்களே!
தெய்வத் திருவருளாலு உங்கள் ஜோதிக்கு ஏழாம் ஆண்டு ஆரம்பமாகி உள்ளது நினைவூட்டுகின்ருேம், ஏழாண் கத்திலேயே சந்தாவை அனுப்பு துபோலவே இவ்வாண்டும் மு னேயே தங்கள் சந்தாவை அ பார்க்கின்ருேம், சோதியின் வ: கள் அனைவருக்கும் எமது விலாசமாற்றம் செய்வோர் ட சந்தா இலக்கத்தையும் தெளிவ CềJợử,
\,
இன்பமே சூழ் க! * 路 ஆத்மஜோதி நிலையம், !
ਡੂਡੂਜੋਢ ਰੂ يدوية
Hony, Editor, K. Raraachand Printed 3. Publisned by N, Muthiah,
At Saravana Press,

مجھے پیچ گیس ساڑھےپ جھجھے پچی چھٹھے ہے، چچیچیچ 下ー ¬¬< 늘속을속
ernational Journal, devoted to gs of Prophets, Sages and Saints
West.
e present, it will appear once in
i. The first issue, for November
:r. 1955, is expected to be out in
time.
NUAL SUBSCRIPTION
Rs. 6.00
9 sh, or 2 dollars
6 dollars ppy Re. 1-00 ns should be paid in advances
teg *O: -
RAMACH ANDRA,
Managing Editor, AL PLAGE, COLOMBO-3.
ή
நேயர்களுக்கு
ம் உங்கள் ஒத்துழைப்பாலும் ஆண்டு பூர்த்தியாகி எட்டாம் என்ப்தை மிக மகிழ்ச்சியுடன் ாடுகாலமும் வருடத் தொடக் ச்ே சோதிக்கு ஆதரவு காட்டிய தலாவது சுடர் கிடைத்த உட அனுப்பி ைவப்பீர்களென எதிர் ார்ச்சிக்காக உழைத்த அன்பர் மனமார்ந்த நன்றி உரித்தாகுக, ழைய புதிய விலாசங்களையும் ாக எழுதி அனுப்பவேண்டுகின்
ல்லோரும் வாழ்க! நாவலப்பிட்டி, (சிலோன்)
* جگہقیقت جھونگھنے کچھ چکی تھے تجھھ چکی تھے ھمجھلکیات ra, 60, Deal Place, Colpetty
Athmajothi Nilayam, Nawalapitiya
Nawalapiti ya 17 - 1 l-56
ή