கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அகில இலங்கை மறைக் கல்வி மகாநாடு: மகாநாட்டு நினைவு மலர் 1970

Page 1
,何R 翻历 圈。历 ,历 |-- |-
 
 
 
 
 

காநாட்டு நினைவு மலர்
லங்கை
வி மகாநாடு
Y0"19 س-16

Page 2
|-
|-
 
 

گیہ2 "2A * କି.. :) aー・分ے۔
سر دور قطع(۶ முன்னுரை
கடந்த ஆண்டு மார்கழித் திங்களில் யாழ் நகரில் நடந்தேறிய அகில இலங்கை மறைக் கல்வி மகாநாட் டின் நினேவு மலருக்கு முன்னுரை ஒன்று எழுதும் படி கேட்கப்பட்டுள்ளேன். இவ்விண்ணப்பத்தை மனப்பூர்வ மாக வரவேற்கின்றேன். ஏனெனில், மகாநாட்டின் குறிக் கோள் தற்போதைய பாடசாலைச் சூழ்நிலையில் மறைக் கல்வியூட்டுவதில் கிறிஸ்தவ குடும்பங்கள் வகிக்க வேண் டிய இடம் என்ன என்பதுபற்றி ஆராய்தலாகும். இஃது எமது முக்கிய கவனத்துக்குரியது. எல்லாக் கிறிஸ்தவ குடும்பங்களும் தம்பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கையை உருவாக்கும் இயக்கத்தில் தமக்குரிய இடத்தை வகிக்க வேண்டும்,
பல மேற்றிராசனங்களிலும் இருந்து வந்த பிரதிநிதி கள் ஏ கோபித்து எடுத்த தீர்மானங்கள் நமது கவனத் திற்குக் கொண்டு வரப்படல் வேண்டும். எல்லா மேற்றி ராசனங்களிலும் மரியாயின்சேனே, பெற்ருேரின் மறைக் கல்வி இயக்கத்தில் எடுக்கும் கரிசனை பாராட்டத்தக்கது. இவ்வியக்கத்தில் நமது மறைக்கல்வி நடுநிலையங்களோடு மரியாயின் சேனை ஒத்துழைப்பது பலன் அளிக்கும்.
முதல் இரு தீர்மானங்களும் சிறப்பாக நடைமுறைக்கு எடுக்கப்படவேண்டியவை. அவையா வெனில் பெற்றேர் மன்றங்களும், திருமறைக் கல்விச் சபைகளும் நமது விசாரணைப் பங்குகளில் அமைப்பதே. இம்மறைக் கல்வி இயக்கத்தில், சிறப்பாக நமது மேற்றிராசனத்தில் உள்ள பங்குக் குரவர்களுடைய அயராத ஒத்துழைப்பைக் கோரு கின்ருேம். இவ்வியக்கம் வருங்கால விசுவாச வளர்ச்சிக் கும் விருத்திக்கும் வழியாகும். இறைவனின் அரும் பெரும் ஆசீர்வாதங்கள் இவ்வியக்கத்தில் ஈடுபடுகிறவர் கள் மேல் பொழியப்படவேண்டுமெனப் பிரார்த்திக்கின்
றேன்.
+ ஜே. எமிலியானுஸ்பிள்ளை, ஓ. எம்.ஐ,
யாழ், மறைஆயர் تشخیص صوبے

Page 3
}
,
SS
κ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யாழ்நகரில் நிகழ்த்திய அகில இலங்கை மறைக்கல்வி மகாநாடு
ஆவலுடன் ஆண்டுகள் பல காத்திருந்த ஆசை நிறை வேறியது. அது இலங்கை வாழ் த மிழ் க் கத்தோலிக்கர்கள் அனைவரும் ஒன்றுகூடித் தமது மறையைப்பற்றி ஆழமாக அறிய ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கியதுதான்; அதுவும் யாழ்ப்பாணத் தில், இந்த நன்னுள் ஒருநாளிலல்ல, இருநாட்களில் மிக்க ஆயத்தத்துடனும் தகுந்த ஏற்பாடுகளுடனும் பொன்னுளாக அமைந்தது,
இலங்கையிலுள்ள அத்தனை மேற்றிராசனங்களிலுமிருந்து பிரதிநிதிகளும், யாழ்ப்பாண மேற்றிராசனத்திலுள்ள பங்கு களிலிருந்து பிரதிநிதிகளுமாக ஐந்நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இம்மகாநாட்டிற் கலந்து கொண்டனர்;
மார்கழி 15-ம் நாள், அதுதான் இம்மகாநாட்டின் ஆரம்ப நாள் காலை 9-00 மணிக்கு யாழ்நகர் ஆயர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை ஆரம்பித்துவைத்தார்கள். மேடையில் மற் றும் உதவி ஆயர்கள் B, தியோகுப்பிள்ளை, L, R. அன்ரனி அவர் களும் யாழ்ப்பாண மேற்றிராசன மறைக்கல்விக் குழுவின் அதி பர் அருட்திரு. G. T. பாலசுந்தரம், மட்டக்களப்பு அதிபர் H. பொன்னையா அடிகள் முதலியோர் அமர்ந்திருந்தனர். விழாத் தலைவர் மறைக்கல்வியின் அவசியத்தையும், இம்மகாநாடு பல கஷ்டங்களுக்கு மத்தியில் நடைபெறுவதுபற்றித் தமது மகிழ்ச்சி யையும் தெரிவித்து சுருக்கமாகத் த மது தலைமையுரையை முடித்துவிட, மகாநாட்டின் முதல் பேச்சாளர் உதவி ஆயர் B. தியோகுப்பிள்ளை ஆண்டகை " பிள்ளைகளுக்கு மறைக் கல்வி ஊட்டுவதில் பெற்ருேகின் பங்கு ' என்ற பொருள்பற்றிப் பேசு கையில், பிள்ளைகளுக்குக் கல்வி ஊட்டுவது பெற்றேரின் இயற்கை உரிமையெனவும், பெற்றேர் தமது சொல்லாலும் முன்மாதிரி யாலும் தங்கள் பிள்ளைகளுக்கு மறைப்பயிற்சி அளிக்கவேண்டு மெனவும், பாடசாலைகளில், பங்குகளில், மற்றும் நிறுவனங் களில் அளிக்கப்படும் மறைக்கல்வி மட்டில் கூடிய அக்கறை கொள்ளவேண்டுமெனவும் எடுத்துரைத்தார். பாடசாலைகளில் அளிக்கப்படும் மறைக்கல்வியின் தரம் குறைந்து வருவதால் பெற்ருேர் திருச்சபையின் பல்வேறு நிறுவனங்களின் முயற்சி களுக்கு ஆதரவளித்து, அவைகளோடு ஒத்துழைக்க வேண்டு மெனவும் கேட்டுக்கொண்டார். ஆண் டகையின் பேச்சை யடுத்து தேநீர் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சமுக
மளித்தவர்கள் 21 குழுக்களாக பேச்சாளரால் கொடுக்கப்பட்ட
கேள்விகளுக்கு விடையளிக்கப் பிரிந்தனர். ہلال

Page 4
س۔ 4 سالم
கலந்துரையாடலின் பின்பு அனைவரும் இம்மகாநாடு நடந்த புனித பத்திரிசியார் கல்லூரி ஆலயத்திற்குள் கூடினர் கூட்டுப் பலியில் பங்குபெற, அதற்கு யாழ்ப்பாணத் துணை ஆயர் தலைமை தாங்கினூர், பலியின்போது ஒவ்வொரு கிறிஸ்தவனும் நற் செய்தியைப் பரப்பவேண்டிய கடமையை ஆகம நிகழ்ச்சிகளி லிருந்து ஆதாரங்களுடன் அழகு ற எடுத்தியம்பினுர் வண3 பொன்னேயா அடிகள், மதிய உணவிற்காக அனைவரும் பிரிந்த னர். யாழ்நகரின் பங்குகளிலிருந்து வந்த பிரதிநிதிகளுக்கும் மற்றையோருக்கும் இலவசமாக உணவு வழங்கப்பட்டது.
முதல்நாளின் இரண்டாவது பேச்சரங்கை ஆரம்பித்துத் தலைமை தாங்கியவர் அருட்திரு. பொன்னேயா அடிகள். பேச் சாளர் திருமதி அந்தோனியா சாமிநாதர், யாழ்ப்பாண மாநகர உறுப்பினரும், சமாதான நீதிபதியும்தலைசிறந்த அனுபவமுமுள்ள ஆசிரியையுமாவர். அவரது சொற்பொழிவு கருத்துச் செறிந் ததும் மனுேதத்துவ சாத்திர அறிவுரைகள் நிறைந்ததாகவும் அமைந்தது. " பாடசாலைக்குச் செ ல் லுமு ன் பிள்ளைகளுக்கு மறைப் பயிற்சி அளித்தல் ’ எனும் பொருள்பற்றியே அவர் பேசி ஞர். குழந்தையின் உள்ளம் இறைவன் குடிகொள்ளும் கோவில் என்பதைப் பெற்ருேர் உணர்வதுடன், பிள்ளை அறியவும் உணர வும் உதவிபுரியவேண்டும். உரூபிகர மனப்பான்மையைப் பயன் படுத்தி மூடநம்பிக்கை, சகுன சாத்திரங்களைப் பாலர் உள்ளங் களில் இடம்பெருது செய்தல்வேண்டும். மேலாகக் கடவுளின் அன்பைத் தனது தாய் தந்தையரில் பிள்ளை காணவும், உணர வும் ஆவன செய்யவேண்டும். மேற்கூறியவை அவர்களின் பேச்சில் உதிர்ந்த முத்துக்களில் சில.
பேச்சினைத் தொடர்ந்து க்லந்துரையாடல் ஆரம்பமானது. கலந்துரையாடல்களுக்காகக் கொடுக்கப்பட்ட கேள்விகள் அதிக மானவைகளாக இருந்தமையினுலும், சிலர் தங்கள் சொந்தக் கருத்துக்களையே கூறவந்தமையிஞலும் இன்றைய பொது அரங்கு ஒழுங்கற்றதாகவும், உரைகள் இரசிப்பற்ற நீண்டவை களாகவும் அமைந்தன. முழுநாளும் உன்னிப்பாகக் கேட்டும், சிந்தித்துக் கலந்துரையாடியுமிருந்தோருக்கு மாலை நிகழ்ந்த கதம்பநிகழ்ச்சிகள் சிந்தைக்கு விருந்தாகவிருந்தன. இந்நிகழ்ச்சி களை ஒழுங்குபண்ணியவர் அருட்திரு. சவிரிமுத்து அடிகள்: அவருடைய கலையார்வம் ஓங்க வாழ்த்துகின்ருேம்.
இரண்டாவது நாள் அருட்திரு G. T. பாலசுந்தரம் அடி களின் தலைமையில் இறை வணக்கத்துடன் ஆரம்பமாகியது) அன்று காலைப் பேச்சாளர் வேறு யாருமல்ல பிரான்சிஸ்கன் ஷெனரிக் குழுவைச் சேர்ந்த சங், சகோதரி ருேஸ், அவருக்குக்

- 5 -
கொடுக்கப்பட்ட தலையங்கம் நீளமானதும் கடினமானதாயினும், தமது அறிவுத் திறனுலும், அனுபவத்தினுலும் கேட்டுக்கொண் டிருக்கச் சுவையுள்ளதாக அமைத்துவிட்டார்.
" திருவருட்சாதனங்களைப் பெறுதற்குப் பிள்ளைகளே ஆயத் தப்படுத்தல்' என்பது பற்றிப் பேசுகையில் அவர் அள்ளிச்சொரிந்த அறிவுரைகளில் சில : குடும்ப சீவியமானது ஒவ்வொருவரும் தம் சீவியத்தின் நோக்கத்தை நிறைவேற்ற உத வு கி ன் ற து கடவுளுடன் ஒன்றித்தலாகிய நித்திய சீவியம் குடும்ப விேயத்தில் தொடங்குதல் வேண்டும். இந்த ஐக்கியமானது பலனளிக்கக் கடவுளின் அருள்தான் உதவிசெய்யும் பரிசுத்த சீவியத்தின் பிரதானமான அடித்தளம் தேவ திரவிய அனுமானங்களே3 இவைகளைப் பிள்ளைகள் பெறுவதற்குப் பெற்ருேர்கள் தங்கள் குடும்பத்தில் நடக்கும் அன்ரு டச் சம்பவங்களைக் கொண்டு விளக்கி ஆயத்தம் பண்ண வேண்டும். ஒரு குழந்தை ஒரு குடும் பத்தில் பிறந்தால் நாங்கள் அக்குழந்தையைத் திருமுழுக்கு என்னும் தேவதிரவிய அனுமானத்திற்கு ஆயத்தப்படுத்த முடி யாது. ஆணுல் நிச்சயமாக வீட்டில் உள்ள மற்றப் பிள்ளே களை அக்குழந்தைச் சகோதரத்தின் ஞானஸ்நானத்திற்கு ஆயத்தப் படுத்தவேண்டும். திருமுழுக்குப்பற்றி அவர்களுடன் கதைப்ப தற்கு இதுதான் தக்கசமயமாகும் தேநீர் இடைவேளைக்குப் பின்பு கலந்துரையாடலுக்காகச் சபையினர் தத்தம் இடங்களுக் குச் சென்றனர்;
இன்றைய கூட்டுப்பலியில் தலைமைதாங்கியவர் துணை ஆயர் B. தியோகுப்பிள்ளை; திருப்பலியின்போது கண்டி மேற்றிரா சன மறைக்கல்வி நிலைய அதிபர் சின்னப்பு அடிகள் திருவுரை நிகழ்த்தினர் பிறர் அன்பு இறையன் பெண எடுத்தோதினர்3 தாயுமானவரின் பாடல்கள் அவர் வாயிலிருந்து சுவைததும் இசைத்தன. திருப்பலியின்போது கூடியிருந்தோர் அனைவரும் பாடல்களிலும் செபங்களிலும் ஒன்றுகூடிப் பங்குபற்றியது யாவரதும் மனதைக் கொள்ளைகொண்டது, இதுவல்லோ எமது பங்குகளில் தினமும் நடைபெறும் இறை ஆராதனையாக இருக்க வேண்டியதென எண்ணியவர் பலரிருந்தனர். மதிய உணவிற்குப் பின்பும், கலந்துரையாடல்கள் நடைபெற்றதைக் கண்டேன்; காலையில் முடிந்திராத கேள்விகளுக்குப் பதில் அளிக்க அவ்வளவு ஆர்வமும் உற்சாகமும் அவர்களிடையே இருந்தன. பல குருக் களும், கன்னியர்களும் பங்குபற்றி உற்சாகமூட்டினர்.
மகாநாட்டின் இறுதிப் பேச்சாளராக மட்டக்களப்பு மிக் கேல் கல்லூரியின் தற்போதைய துணைத்தலைவர் திரு. L. Mo யோசப், B, A, அவருடைய பேச்சு இன்றைய இளைஞர்கஜன்ே

Page 5
= 6 -
பிரச்சினைகளைப் பற்றியது. இவ்விளைஞர் இன்றைய உலகில் இயங் கிக் கொண்டிருக்கும் ஒரு மாபெரும் சக்தி, அணுச் சக்தியை விட உயர்ந்தது. அதனை நன் மைக்கும் தீமைக்கும் பாவிக்கலாம். இளைஞர்கள் உலகத்தினை அறிந்தவர்கள். வேகமாகக் கற்று, குறுகிய காலத்தில் முதிர்ச்சி அடைகின்ருர்கள். பொதுவில் வெளி அமைப்பு முறைகளை, சொல்லிலும் செயலிலும் காணப் படும் ஒற்று  ைம யீ னத் தை , வெறும் வெளிப்பகட்டுக்களே வெறுத்து, நேர்மை, நியாயம், கண்ணியம் போன்றவற்றை வர வேற்கின் ருர்கள். எனவே அவர்களது இன்றைய பிரச்சினைகளுக் குப் பழைய விடைகளும், வழிகளும் திருப்தியளிப்பதாகவில்லை. மூத்தோர் திட்டங்கள் தோல்வியுற்றுச் செயலற்றுவிட்ட சந்தர்ப் பங்கள் பலவற்றை நேரில் கண்டிருக்கின் ருர்கள். இத்தோல்வி களே இனிமேலும் மூடிமறைக்க முடியாது. இது மறை வாழ்வி லிருப்பதையும் மறையுண்மையை எடுத்துரைப்போர் வாழ்க்கை அவ்வுண்மையின் அடிப்படையில் அமையாதிருப்பதையும் காண் கின்றனர். உண்மையான அர்த்தமும் பொருத்தமுமில்லாத இறைவழிபாடுகளிருப்பதைக் கண்டு மனங்கோணிப் போகிருர் 3Ꭶ5 ᏛYᎢ .
பேச்சாளரின் துடிப்பும் ஆழமுமான கருத்துக்கள் சமுகமா யிருந்தோரைச் சிந்திக்க வைத்ததைப் பொது அரங்கில் கலந்துரை யாடல்களின்போது கிடைத்த விடைகளிலிருந்து அறிய முடிந் தது. இன்றைய இளைஞர்களுக்குப் பெற்ருேர், ஆசிரியர், குரு குலம் ஏற்ற வழிகளில் வழிகாட்ட முன்வந்தது, எந்த இளஞ னினதும் இதயத்தைக் குளிரப்பண்ணியிருக்கும். மூத்தோர் குலத்திற்கு இளைஞர்கள் சார்பில் நன்றி.
எமது மகாநாட்டின் இறுதிக் கட்டம், சிந்தித்தவைகளைச் செயல்படுத்தல், கலந்துரையாடல்களில் கண்ட உண்மைகளில் சில செயல் திட்டங்களாக உருவாக்கி அமைத்தனர். அவை இக்கட்டுரையின் இறுதியில் காணப்படுகின்றன. நன்றிக் கடன் நவில முன்வந்த ஆசிரியர் மிராண்டா அவர்கள் இம்மகாநாட் டினை மாபெரும் மகிழ்ச்சிநாளாக அ  ைம த் த அனைவரையும், குறிப்பாக யாழ்ப்பாண மறைக்கல்வி அதிபர் அருட்திரு. G.T. பாலசுந்தரம் அடிகளின் அயராத உழைப்பையும் ஆர்வத்தை யும் எடுத்துரைக்கத் தவறவில்லை. இறுதியாக இறைவனையும் போற்றிப்புகழ, நன்றிக்கடன் செலுத்த அனைவரும் ஆலயம் புகுந்தனர். என்ருே இதுபோல் இன்னுேர் மகாநாடு 1 என்று ஏங்கிய பல உள்ளங்களில் எனதும் ஒன்று:

ܚܕܘܗ݈ܝܣܐ 7 -ܗ
மறைக்கல்வி மகாகாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்
பெற்ருேர் தமது பிள்ளைகளுக்குத் தகுந்தமுறையில் மறைக் கல்வி ஊட்டுவதற்கு உறுதுணையாக, ஒவ்வொரு பங்கிலும் பெற்ருேர் மன்றம் அமைக்கப்பட்டு, அது நன்ருக இயங்கு வதற்கு ஆவன செய்யவேண்டும் ஒவ்வொரு பங்கிலும் கிறிஸ்தவ திருமறைக் கல்விச்சபை கூடிய விரைவில் நிறுவப்படவேண்டும், பிள்ளைகளுக்கு மறைக்கல்வி ஊட்டுவதற்குப் பெற்ருேரைப் பயிற்றுவதற்கு உதவக்கூடிய பிரசுரங்களை மறைக்கல்வி நடு நிலையங்கள் தயாரித்துப் பெற்ருேர் மன்ற மூலம் வழங்க வேண்டும். ஒவ்வொரு கத்தோலிக்க குடும்பத்திலும் பரிசுத்த வேதாக மத்தின் ஒரு பிரதியாவது, புதிய ஏற்பாட்டின் பிரதியாவது இருக்கவேண்டும் உறுதிப்பூசுதல் என்னும் அருட்சாதனம் குமரப்பருவத்தில் பெறப்படுவதுதான் கூடிய பயனைக் கொடுக்கு மென்று இச் சபை கருதுகிறது. திருமணத்திற்கும் குடும்ப வாழ்விற்கும் வாலிபப் பராயத் தினரைப் பயிற்றுவிக்கும் பொருட்டு " கானு மன்றங்கள்" பங்குகள் தோறும் நிறுவப்படவேண்டும். பங்கு, வட்டார, மேற்றிராசன ரீதிகளில் கத்தோலிக்க வாலிப வயதினர்களுக்கெஓ மன்றங்கள் அமைத்து, உதவி கள் அளிக்கப்படல் வேண்டும், கத்தோலிக்க இளைஞர்கள் மற்றும் சமுதாயங்களைச் சேர்ந்த இளைஞர்களோடும் சேர்ந்து பொதுநலனுக்காக உழைத்தல் வேண்டும்.

Page 6
பிள்ளைகளுக்கு மறைக்கல்வி
ஊட்டுவதில் பெற்றேரின் பொறுப்பு
பெற்றேரின் உரிமையும் கடமையும் :
மனித மாண்பு அறிவை வளர்த்தலாகும். ஒருவன் வாழ்க் கைக்குத் தன்னை ஆயத்தப்படுத்தவேண்டி இருப்பதனுல்தான் அவன் கல்வி கற்கவேண்டி இருக்கிறது. இவ்வுலகில் ஒரு குழந்தை தோன்றுவதற்குப் பெற்ருேரே காரணராக இருக்கின்ற னர், ஆகவே, அக்குழந்தைக்குக் கல்வி ஊட்டும் இயற்கை உரிமையும் தலையான கடமையும் பெற்றே ரைச் சார்ந்ததாகும்? இவ்வுலகில், அவர்களே குழந்தையின் முதன்மையான முக்கிய ஆசிரியர்களாவர். சிறப்பாக மறைக் கல்வியின் மாபெரும் பொறுப்புப் பெற்ருே ரைச் சார்ந்த தென்பது உண்மையும் உறுதிய மானதாகும்;
இன்றைய ஞானஸ்நானச் சடங்குமுறை, ஞானப் பெற்ருே ரிலும் பார்க்கக் குழந்தையின் தாய் தந்தையருக்கே முக்கிய பொறுப்பு உண்டு என்பதை உணர்த்துகிறது, இத்தனை கால மும் பெற்றேர், குழந்தைகளின் ஞானக் கடமைகளை குருக்கள், பாடசாலை ஆசிரியர்கள், கன்னியர்கள் ஆகிய சமயத் தொண்டர் களில் சுமத்தி வந்தார்கள்; இதஞல் பெற்ருேர் தமது பொறுப் பின் பெரும்பகுதியைக் குறைத்துக் கொண்டார்களே அன்றிக் குழந்தைகளுடன் ஒன்றுசேர்ந்து மறைக்கல்வி வித்தைவிதைத்து, அவர்கள் பெற்று மகிழும் தெய்வீக அருளின் இன்பத்தைத் துய்த்து, மகிழ்ந்தார்கள் இல்லை; ஆன்மநலத்திற்கல்ல, உடல் நலத்திற்கே பெற்றேராக இருக்கிருேமென எண்ணி வாழும் பெற்ருேருக்கு இன்றைய ஞானஸ்நான ஒழுங்கு விழிப்புணர்ச்சி யைக் கொடுக் கி ன் றது ; அக்கறையையும் ஊக்கத்தையும் ஆக்குவிக்கிறது; இன்று குழந்தையின் ஞானஸ்நானத்தின்போது தாய் தகப்பன் கட்டாயம் சமுகம் அளிக்கவேண்டும் ஞானஸ் நானத்தினுல் கடவுளின் குழந்தையாகப் புது உயிர்பெறும் தம் பிள்ளையின் விலையில்லா மதிப்பையும், இத்தேவதிரவிய அனு மானத்தின் கொடையையும் உணர்ந்தாற்றன் அவர்கள் தங்கள் கடமையைச் செய்ய முடியும்,

= 8) =
மறைக்கல்வியின் நோக்கம் என்ன ?
பிள்ளைகளிடம் விசுவாசக் கொடையை உணர வைத்தல், பிள்ளைகள் தூய ஆவியின் ஒளி யி ல் செயலாற்றச் செய்தல்? அவர்களை உண்மையிலும் நீதியிலும் வளர்த்தல், அவர்கள் தம் மைப் புனிதப்படுத்தவும், கிறிஸ்துவுக்குச் சான்று பகரவுஞ் செய்தல் முதலியன3 பொதுவாகக் கூறின், ஞானஸ்நானத்தி ஞல் பிள்ளைகள் பெற்ற விசுவாசத்திற்குத் தக்கபடி கடவுளை அறியவும் வழிபடவும், பிறருக்கு அன்பு செய்யவும், வாழ்வைப் புனிதப்படுத்தவும் பயிற்றலாகும்;
கல்வி தனிப்பட்டதல்ல, பொதுவானது ; எல்லா இடத்தி லும் கற்றுக்கொள்ளலாம்; ஆயினும், அடிப்படைப் பயிற்சி யைக் குருவும் பெற்ருேரும் பயிற்றுதல் வேண்டும் குழந்தை கள், சிறுவர்கள், குமாரர்கள், இளைஞர்கள் ஆகிய யாவருக்கும் மறைக்கல்வி ஊட்டப் பெற்ருேர் தம்மைத் தகைமை உடைய வர்களாக்கிக்கொள்ளல் அவசியம் புதிய கருத்துக்கள், பிரச் சினைகள், புதிய விஞக்கள் தோன்றும் போதெல்லாம் பெற் ருேர் அறிவு கொடுத்து, அறியாமையைத் தீர்க்க வேண்டும். மனக்கிலேசம், அங்கலாய்ப்புகளை அகற்றி உண்மையான, உறுதி யான, கருத்துக்களை அவர்களிடம் அழுத்தித் தெளிவாக்க வேண் டும் புதிய நல் விஷயங்களை அவர்கள் கண்டு அறிந்து சரிவர ஒழுக அவர்களுக்கு வழி திறக்கவேண்டும்,
பிள்ளைகள் தம் அழைத்தலைத் தெரியும் காலம்வரை தாய் தந்தையர் நாளும் பொழுதும் அயராது அவர்களில் கண்ணுேட் டம் செலுத்தவேண்டும். ஒவ்வொரு பிள்ளையின் அறிவாற்றல், இயல்பூக்கம், செயற்திறன்களிைக் கண்டறிந்து படிப்படியாக நல்ல முறையில் வளர்த்து, துறவற த்திற்கோ, இல்லறத்திற் கோ தகுதியுடையவர்களாக்க வேண்டும். பெற்றேர் கொடுத்த அறிவுப் பயிற்சிதான் அவர்கள் தம் வாழ்க்கையைத் திறம்பட நடத்த அத்திவாரமான உதவியாக இருக்கும்
மறைக்கல்வி ஊட்டும் முறையில், பெற்ருேர் தம் சொல் லாலும், முன்மாதிரிகையாலும் பிள்ளைகளுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும்; கிறிஸ்தவ உருவாக்கலில் தந்தைக்குரிய விசேட பங்கென்ன ? தாய்க்குரிய விசேட ப ங் கென் ன என்பதை அவர்கள் அறிந்து செயல்படவேண்டும் பெற்றேர் வீட்டுச் சூழ்நிலையைத் தகுந்தவாறு அ  ைம த் தா ல் அச்சூழ்நிலையில் நாளாந்த இயக்கம் இலகுவாகும், மறைக்கல்விக்கான பல்வேறு உதவிகள் கிடைக்கின்றன; திருமணத் திருவருட் ಆTತ್ತಿ¤ತ್ತೆ தின் விசேட அருள், இறைவழிபாட்டுச் சடங்குகள், சிறப்பாகத்

Page 7
مضس- فi-مضت
திவ்விய பூசைப்பலி ஞானவாழ்வுக்கு உதவிதருகின்றன: ஒரு வர் ஓர் அந்தஸ்துக்கு அழைக்கப்படும்போது, அவருக்கு வேண் டிய வரமும் அறிவுணர்ச்சியும் கொடுக்கப்படும்; இறைவனில் நம்பிக்கைகொண்டிருந்தால் சகலவித உதவிகளும் வரப்பெறும் இறைவனுக்கும் உலகத்திற்கும் உகந்தவிதம் நடக்க அருள் கிடைக்கும்:
பாடசாலைகளில் அல்லது பங்குகளில் அளிக்கப்படும் மறைக் கல்வி, பக்திச்சபைகள், கிறிஸ்தவ மன்றங்கள், அப்போஸ்தல பணிக் குழுக்கள் என்பன ஈடில்லா உதவிகளை உதவி நிற்கின் றன. அவற்றை ஏற்றமுறையில் அணுகிப் பலனடையப் பெற் ருேர் கூடிய அக்கறை கொள்ளவேண்டும். பிள்ளைகளை அவற்றில் பங்குபற்றிப் பலனடைய வழிசெய்தல் வேண்டும்,
பாடசாலையைப் பொறுத்தவரையில் இன்றைய நிலைமை மிகக் கஷ்டமானது சமயபாட நேரம் மிகக்குறைவு. சமய சுதந்தரம் இழிந்த நிலையில் உள்ளது. சமய அறிவு ஊட்டத் தேவையான ஆசிரியர்கள் இல்லை. அறிவு புகட்ட மாத்திரமில்ல வாழ்க்கையைப் பயிற்றவும் ஏற்ற சந்தர்ப்பம் இல்லை. இக்கட் டான இந்நேரத்தில், மக்களுக்கு மறைக்கல்வியில் பூரண வளர்ச் சியைக் கொடுக்கப் பெற்ருேரே முன்வரவேண்டும். ஆசிரியர் களுடன் அடிக்கடி கலந்துரையாடி அவர்கள் நல்ல ஆலோசனை களைப் பெறவேண்டும்; பாடசாலையில் பிள்ளையின் மறைக்கல்வி யின் தரத்தை ஆராய்ந்து ஏற்ற முறையில் அவர்கள் அறிவும் உணர்ச்சியும் பெற பெற்ருேர் வாய்ப்பான முறைகளைக் கையாள வேண்டும் இவ்விதம் அவர்கள் மறைக்கல்வியை வளர்ப்பார்க ளாகில், பாடசாலையில் சகல பாடங்களிலும் மறைக் கல்வித் தொடர்பை ஏற்படுத்தி இறை அன்பிலும் பிறர் அன்பிலும் அவர் கள் இரண்டறக் கலந்து வளர முடியும்:
பிள்ளைகளின் ஞானவளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கும் பாs. சாலைகளின் தரம் குறைந்து வருவதால் திருச்சபையின் பல்வேறு நிறுவனங்களின் முயற்சிகளுக்கு ஆதரவளித்து அவைகளோடு ஒத்துழைக்கவேண்டும் குருக்களுடன் இளைஞரும், பெற்ருேரும் ஒன்றுசேர்ந்து புதுப்புது ஸ்தாபனங்களை ஏற்படுத்த வேண்டும்3 பெற்ருேர் சங்கம் எழும்பவேண்டும். கிறிஸ்தவ மறைக் கல்விச் சபை ஒவ்வொரு பங்கிலும் நிறுவி நடத்த உதவி அளிக்க வேண்டும்
ܕܟ݂ ؟
 

பாடசாலைக்கு முந்திய பருவத்தில் மறைக் கல்வி ஊட்டுதல்
அரசாங்கம் பாடசாலைகளைக் கையேற்றதின் பின்னர் பிள்ளை வளர்ப்பு விஷயத்தில் கத்தோலிக்க பெற்றேரின் பொறுப்பு மிகவும் காத்திரமானதாகிவிட்டது; பெற்றேர் தம் பிள்ளைக ளின் அறிவு வளர்ச்சியிலும் ஞானவளர்ச்சியிலும் பொறுப் புணர்ச்சியோடு நடந்துகொள்ள வேண்டிய அவசியம் இன்று நமக்கு ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கூடத்துக்குப் போகுமுன்னரே குழந்தையின் மன, உடல், ஆன்மவளர்ச்சி தொடங்கிவிடுகிறது: இதைப்பற்றிப் பெற்றேர் விழிப்புணர்ச்சியுடன் நடந்துகொள் ளாவிட்டால் பிள்ளைகளின் பிற்கால சீவியம் பாதிக்கப்படும்:
இன்றைய பிள்ளைகள் 20 வருடங்களின்முன் இருந்த பிள்ளை களைவிட உடல் வலுவிலும், புத்திக் கூர்மையிலும், மன அமைப் யிலும், உணர்ச்சிப் பெருக்கிலும் முன்னேறியுள்ளார்கள். அவர் களுக்கு இயற்கையாய் எழும் அறிவு விடாயைத் தீர்த்துத் திருப்திபண்ணும் கடமை பெற்ருேரைச் சார்ந்த தலையாய கடமையாகும்.
இன்று நாம் வாழ்வது " ருெக்கற் யுகம் எங்கு பார்த்தா லும் ஒரே பரபரப்பு: நாளாந்த வேலைகளை முடிப்பதற்கு நேர மில்லாதது போன்ற ஒரு சூழ்நிலை: இற்றைக்கு 20, 25 வரு டங்களின் முன் பெற்ருேர் மாலைவேளையில் தம் பிள்ளைகளுக்கு கதைகள் சொல்லி அவர்களுடன் உ  ைர யா டி மகிழ்ந்தனர்: ஆஞல் இன்றைக்கு ஒய்வு நேரங்களைப் படம் பார்ப்பதிலும், றேடியோ கேட்பதிலும், பத்திரிகை படிப்பதிலும் செலவிடுகிருர் கள்: பத்திரிகை, சினிமா, றேடியோ என்பன இன்றைக்கு மிக வும் பின்தங்கிய கிராமப்புறங்களிலும் நன்மைக்கோ தீமைக் கோ ஏதுவாக அமைந்துள்ளன. இவற்றை நன்மையாக மாற்ற நாம் முயலவேண்டும்
ஆரம்ப பள்ளிக்குப் போகுமட்டும் பிள்ளைகளைக் கவனமா கப் பராமரித்தல் வேண்டும், ஞான முழுக்கினுல் இறைமகன் ஆக்கப்பெற்றுத் தெய்வீக அன்பினுல் நிரப்பப்பெற்ற பிள்ளைகள் இயற்கையாகவே தேவனுல் கொடுக்கப்பெற்ற புனிதத்தன்மை யையும், விவேகத்தையும் அருள் வாழ்வையும் எவ்வித களங்க மும் இல்லாமல் அனுபவிக்குங் காலம் குழந்தைப் பருவம்
இன்றைய குழந்தை வருங்கால மனிதன், இயற்கை அன்னை இயல்பாகவே பிள்ளைக்குக் கொடுத்திருக்கும் ஆராய்வூக்வித

Page 8
= 12 =
தைப் பயன்படுத்தி நாம் அவர்களின் ஏன் ? என்ன ? என்ற கேள்விகளுக்குப் பொறுமையுடன் பதில் அளித்தல் வேண்டும்3 மேலும் இப்பதில்கள் உண்மையானவையாயும் பிள்ளை இலகு வில் விளங்கக்கூடியனவாயும் அமையவேண்டும்; இதன் மூலம் பிதாவும் மாதாவும் தனது நம்பிக்கைக்குரியவர்கள், அன்பிற் குரியவர்கள், பாதுகாப்பாளர் என்பதைக் குழந்தை உணரவேண் டும்3 ஒருபோதும் பிள்ளையின் கேள்விகளுக்கு வெறுப்புணர்ச் சியோ கண்டிப்போ காட்டக்கூடாது.
குழந்தையின் உள்ளத்தில் அன்னை " அன்பின் சின்னமாய்" அமைதல் வேண்டும்; எதற்கெடுத்தாலும் குறை கண்டுபிடித்துத் தண்டிக்கிற தாய் குழந்தை உள்ளத்தைப் பாதிக்கிருள். இறை யன்பு பெற்ருேர் அன்பிலேயே ஊற்றெடுக்கிறது. இதைப் பெருக்கெடுக்கப்பண்ணப் பயன்படுத்துவதே பெ ற் ருே ரி ன் பொறுப்பாகும்
பள்ளிக்குப் போகுமுன் பிள்ளையின் கல்வி, சிறப்பாக மறைக் கல்வி எவ்வாறு ஊட்டலாம் எனப் பெற்றேர் ஒரளவு அறிந் திருத்தல் அவசியம்: இப்பருவப் பிள்ளைகளுக்குக் கல்வியூட்ட விளையாட்டு முறையே சிறந்தது என்பதை எவரும் ஒப்புவர் பிள்ளையின் இயல்பூக்கங்களில் சிறப்பான இடம்பெறுவது விளை யாட்டு விளையாட்டென்ருல் பிள்ளைகளுக்கு உயிர்; இயல்பா கவே அவர்கள் சமயச் சார்பான விளையாட்டுக்கள் விளையாடு வதை நாம் காணலாம். ஏனெனில், கண்டுபாவித்தல் இவர் களிடம் காணப்படும் இயல்பூக்கமாகும். ஒன்றரை, இரண்டு வயதுக் குழந்தைகள் ஏதோ செபம் சொல்லுவதுபோல் முணு முணுத்து ஆமென் " என்பார்கள் முழந்தாளிட்டுக் கைகுவிப் பார்கள், ஆராதனை முறைகளைச் செய்வார்கள். இச் செயல் களைப் பயன்படுத்தியே மறைக்கல்விக்கு அத்திவாரமிடல்வேண் டும். நத்தாரையடுத்துச் சம்மனசுகள், மூன்று இராசாக்கள் முதலியவர்களைப்போல் உடுத்தி நடிப்பார்கள் பாஸ்காப் பண் டிகையையொட்டி திருப்பாடுகளின் காட்சியை நடிப்பார்கள் இவற்றைப் பயன்படுத்திச் சமய உண்மைகளை மனத்தில் பதிய வைக்கலாம்,
படங்களைப் பார்ப்பதில் சிறுவர்களுக்குக் கவர்ச்சியுண்டு சமயசம்பந்தமான வர்ணப்படங்களைச் சுவரில் தொங்கவிடுவ தால் பல உண்மைகளை ஊட்டமுடியும், அப்படங்கள் பிள்ளை கள் காணக்கூடிய உயரத்தில் இருத்தல் அவசியம். அவற்றைப் பார்த்துப் பிள்ளைகள் பல விளக்கங்களைக் கேட்பார்கள், அவற் றைத் துணைகொண்டு மறைக்கல்வியை இலகுவில் அவர்களுக்கு
 

- 13 -
ஊட்டமுடியும். கட்புலப் பதிவு கல்வியூட்டலில் பெறும் பங்கு அதிகம் என்பதைப் பெற்றேர் மறத்தல் ஆகாது.
அழகான புத்தகங்களைப் பார்ப்பதில் பிள்ளைகள் ஆசைப்படு வார்கள். வேதாகம சரித்திரத்தை விளக்கும் வர்ணப் படப் புத்தகங்கள் வீட்டில் இருத்தல் விரும்பத்தக்கது; அல்லாவிடில் நல்ல படங்களைச் சேர்த்துப் புத்தகமாகக் கட்டிப் பிள்ளைகளுக் குக் காட்டி விளக்கங்கள் கொடுக்கலாம். பிள்ளைகள் தாமா கவே புத்தகத்திலுள்ள படங்களைப் புரட்டிப் புரட்டி விளக்கங் கள் கேட்க முற்படுவர். அத்தருணத்தை விவேகமான முறை யில் பயன்படுத்துவதில் கருத்துக்கொள்ளல் வேண்டும்.
கதை சொல்லுதல் சிறுவர்களின் கல்வி வளர்ச்சியில் முக் கிய இடம் பெறுவதாகும். பிள்ளைக்கு இயல்பாயுள்ள அறிவு அவாவைப் பூர்த்திசெய்ய உதவும் கருவி. பாலப்பருவத்தில் தாய்மார் சொன்ன கதைகளாலேதான் பல பெரியார்கள் தோன்றியதாகச் சரித்திரம் கூறுகிறது. வீரர்களையும் ஞானி களையும் தியாகிகளையும் கதைகள் தரவல்லன. பழைய ஏற்பாட் டில் சிறுவரால் விளங்கக்கூடிய உருசிகரமான சிறு கதைகள் பல உள. புதிய ஏற்பாட்டிலும் எமதாண்டவரின் சரிதையிலிருந்து பல கதைகள் திரட்டலாம், புதுமைகளைக் கதைபோலக் கூற லாம். கதைகளையும் படத்தின் உதவியுடன் விளக்குதல் கண் ணுக்கும் காதுக்கும் இனிய விருந்தளிப்பதாகும்.
கதையைப்போலவே பாட்டும் சிறுவர்க்கு இன்பமூட்டுவது. கோவிலில் பாடப்படும் பாட்டுக்களை வீட்டிலும் பயிற்றுதல் நல்லது. பாலர்களுக்கு ஏற்றதான மறைக்கல்வி சம்பந்தமான பாட்டுக்களை ஆக்குதல் வேண்டும்.
பெற்ருேர் போதனைமூலம் ஊட்டுவதைத் தம் சாதனையா லும் காட்ட முற்படவேண்டும் நூலைப்போலச் சீலை, தாயைப் போலப் பிள்ளை ", என்பது முதுமொழி. பின்பற்றுதல் பிள்ளை களின் இயற்கைச் சுபாவம். பழக்கம் இரண்டாம் சுபாவம் எனப்படும். எனவே சிறுமையிலேதானே செபித்தல், சமய அனுட்டானங்களைக் கடைப்பிடித்தல் ஆகிய பழக்கங்களைப் பழகா விட்டால் பிள்ளையிடம் கிறிஸ்தவ வாழ்வை எதிர்பார்த்தல் முடியாது. எனவே,பெற்ருேரின் முன்மாதிரிகையே மறைக்கல்வி யின் அத்திவாரமாகும். தம் பிள்ளைகளுக்குத் துர்மாதிரிகை காட்டும் பெற்ருேர் தேவசாபத்தைப் பெற்றுக்கொள்வதோடு பிள்ளைகளின் பிற்கால வாழ்க்கைக்கும் கேடுசெய்தவராவர்.
மறைக்கல்வியென்ருல் வேத சத்தியங்களையும் அனுசரணை களையும் செபங்களையும் கற்பித்தால்மட்டும் போதாது. பிள்ள்ை

Page 9
ܚܝ J14 -ܚ
யைத் தேவன் விரும்பும் பூரண மனிதனுக அமையப்பண்ணு வதே மறைக்கல்வியின் நோக்கம். ஆகவே அவனைச் சுயமரியாதை படைத்தவனுகவும், தேவனுக்கும் பிற ரு க்கும் பிரயோசனம் உள்ளவனுக்குவதே பெற்றேரின் குறிக்கோளாய் அமையவேண் டும். பிறர்சிநேகத்தின் பாதையே தேவநேசத்தின் நேர் வழி என்ற உண்மையை மெல்லமெல்ல விளக்கி வருவதாக அமைய வேண்டும். குடும்பத்தில் அன்னை தந்தையரின் வாழ்க்கைமுறை, பிறரை மதிக்கவும் அவர்களுக்கு உதவவும் பிள்ளைகளைச் சிறு வயது முதற்கொண்டு பயிற்றிவருதல் அகத்தியம். அதுபோலவே சகிப்புத்தன்மையையும் ஏனைய குழந்தைகளை நேசிக்கும் மனப் பான்மையையும் வளர்த்து வரல்வேண்டும்.
பிள்ளைகள் குற்றம் செய்தால் அதைத் திருத்தும் முறையி லும் விழிப்பாயிருத்தல் வேண்டும். ' தேவன் என்னைக் காண் கிருர், தேவன் எனக்குத் துணையாக இருக்கிருர் " என்ற உண்மை களை எமது குழந்தைகளின் மனதிலே பதியச்செய்தல் வேண் டும். இவ்வாறு செய்தால் குற்றம்செய்யாதவாறு அவர்களைக் காப்பாற்றலாம். குற்றங்களை அன்புடன் திருத்தல் வேண்டும். சிறுவர்களை ஒருபோதும் எக்காரணங்களைக் கொண்டும் பயப் படுத்தல் ஆகாது.
குழந்தைகளின் உள்ளம் இறைவன் குடிகொள்ளும் கோவில் என்பதைப் பெற்ருேர்கள் உணர்வதுடன் பிள்ளைகளும் உணரத் தக்கவகையில் அவர்களை வளர்த்தால் அல்லாது தெய்வபயத்தை ஊட்டல் முடியாது.
நாவூறுபார்த்தல், நூல்கட்டுதல், சகுனசாத்திரம் பார்த்தல் ஆதியாம் மூடநம்பிக்கைகள் எமது நாட்டில் இன்னும் அகல வில்லை. தலைமுறை தலைமுறையர்க இந்த அநாசாரப் பழக்கம் எம் சிறுவரை மிகவும் பாதித்து வருகின்றது. மூடநம்பிக்கை கள் சிறுவரின் விசுவாசவாழ்வை அழித்துவிடுகின்றது. இவற்றை அறவே ஒழித்துக்கட்டித் தேவ நம்பிக்கையை வளர்ப்போமாக.
பெற்றேர் தம் பிள்ளைகளை வீடாகிய கூட்டிற்குள் வளர்க்க முடியாது. அயலிலுள்ள பிள்ளைகளோடும் பழகவேண்டிவரும். எனவே தாய் தந்தையர் தம் அயலிலுள்ள பிள்ளைகளின் குண சிலப் பண்பாடுகளையும் அறிந்திருத்தல் வேண்டும். தம் பிள்ளை களின் நலனைக் கருதியவாறு சுற்ருடலிலுள்ள மற்றப் பிள்ளைகளை யும் கண்காணித்து அவர்களையும் தம் பிள்ளைகளைப்போல் கருதி அவர்களுக்கும் தங்கள் பிள்ளைகளுக்குக் கற்பிக்கும் மறை சம் பந்தமான விஷயங்களைக் கற்பித்தல் நன்று.
ー-\) -------
型)》

திருவருட்சாதனங்களைப் பெறுவதற்குப் பிள்ளைகளை ஆயத்தப்படுத்தல்
இறைவன் அன்பே வடிவானவர். அவர் மனிதருக்கு அன்பு செய்கிருர், அன்புக்கு அன்பு செய்யவேண்டியது மனிதன் கடமை. இந்நோக்கிற்காகவே மனிதன் படைக்கப்பட்டான் இறைவனுடன் நாம் கொண்டிருக்கவேண்டிய அன்பின் ஒன்றிப் பானது குடும்பத்திலே ஆரம்பித்து உயர்நிலை அடைய வேண் டும். பங்குக் கோவில், பாடசாலை, சமூக இயக்கங்கள், தொழில் பொழுதுபோக்கு வசதிகள் என்பனவும் இந்நோக்கை அடைய உதவும் சாதனங்களே. எனினும் பிள்ளையின் குண இயல்புகளை உருவாக்கும் பணியில் குடும்பமே முதலிடம் பெறுகிறது என்ற உண்மையை நாம் மறக்கமுடியாது: பிள்ளைக்கு இறைவன் அளிக்கும் முதற் பாடசாலை இல்லம். பெற்ருேரே பிள்ளையின் முதல் ஆசிரியர் : அன்பு எத்தகையது என்று பிள்ளை பெற் ருேரிடமிருந்துதான் அறிய முடியும். இறையன் பில் பிள்ளைகளை ஒன்றிக்கச் செய்தலில் தமக்குள்ள பங்கு, பொறுப்பு எவை யெனப் பெற்றேர் அறிதல்வேண்டும். ? ? வீட்டில் பெறும் பயிற்சி பழக்க வழக்கங்களிலேயே பிள்ளைகளின் உருவாகும் தன்மை தங்கியுள்ளது ' என 13-ம் சிங்கராயர் பாப்பரசர் கூறுகிருர், கிறீஸ்தவ இல்லம் மெய்விவாகம் எனும் திருவருட்சாதனத்தால் உருவாகியது: இறையன்பைக் காட்டும் சின்னம் மெய்விவாகம்; நித்திய வாழ்வுக்கு நம்மை ஆயத்தம்செய்யும் களமாக இல்லற வாழ்வு அமைய உதவுவது மெய்விவாகம், இறைவனின் படைப் பில் ஒத்துழைக்கும் பெற்ருேர் இருவரும் கிறிஸ்துவைப் பிரதி பலிக்கிருர்கள். எனவே பெற்ருேர் பிள்ளைகளைக் கடவுளுக்கு உகந்தவர்களாக வளர்க்கும் கடப்பாடு உடையவராகின்றனர்.
இன்றைய சூழலில் பாடசாலையில் பிள்ளைகள் மறைக் கல்வி யை நிறைவாகப் பெறுவர் என எண்ணித் திருப்திகொள்ளுதல் தவருகும். பிள்ளைகளுக்கு மறைக்கல்வியூட்டும் பொறுப்பைப் பெற்ருேராகிய நீங்கள் தட்டிக்கழித்துவிட முடியாது. இக் கட மையில் துறவற சகோதரரைவிடப் பெற்ருேராகிய நீங்கள் அதிகம் பணியாற்ற முடியும், பெற்ருேராகிய உங்களுக்காக இம்மகாநாடு நடத்தப்படுவதன் நோக்கை இப்போது புரிந்து கொள்வீர்கள் எனக் கருதுகிறேன்.
திருவருட்சாதனங்கள் என்ருல் என்ன ? ஏன் இவை அவ
சியம் ? எவ்வாறு இவற்றைப் பெறுவது என்பனபற்றிப் பெற்
ருேர் முதலில் அறியவேண்டும் கிறிஸ்துவால் ஏற்படுத்தப்பட்
*

Page 10
سے= l63۔
டவை திருவருட்சாதனங்கள். கிறிஸ்துவை அடையும் வழியா கவும் இவை அமைகின்றன. இவற்றை நீங்கள் உண்மையென ஏற்றுக்கொண்டால் உங்கள் பிள்ளைகள் அவற்றின் பயனை முழு மையாகப் பெற உதவுதல் உங்கள் கடமை என்பதை மறுக்க மாட்டீர்கள். கிறிஸ்துவ பெற்ருேராகிய நீங்கள் தேவ திரவிய அனுமானங்களின் விளைவுகள் எதிர்பார்க்கக்கூடியவை என்பதை நன்கு விளங்குதல்வேண்டும்; இதனுல் தகுந்தமுறையில் பிள்ளை களைத் தயார் செய்தல் உங்கள் கடமையாகிறது. திருவருட் சாதனங்களுக்குத் தயாரிப்பது என்றதும் பெற்றேர் பலர் வெளி ஆடம்பர அலங்கார உபசாரங்களில் கூடிய அக்கறை காட்டுகின் றனர். பெற்றேர் செய்துவரும் பெருந் தவறுகளில் இதுவும் ஒன்று. பிள்ளைகளின் உள்ளம் தகுந்தமுறையில் திருவருட்சாத னங்களைப் பெறுதற்காக ஆயத்தப்படுத்தல் பெற்றேராகிய உங்களின் பொறுப்பாகும்
பிறந்த குழந்தை முதற் பெறுவது திருமுழுக்காகும். திரு முழுக்குப் பெறப்போகும் குழந்தையை ஆயத்தப்படுத்தமுடியா தென்பது உண்மையே. ஆனல் வீட்டிலுள்ள மற்றப் பிள்ளை களைக் குழந்தையின் திருமுழுக்குக்குத் தயாரித்தலில் பெற்றேர் உதவலாம். திருமுழுக்கின் உண்மைக் கருத்தை விளக்குவதற்கு இதை ஒரு சிறந்த வாய்ப்பாகப் பயன்படுத்தல் அவசியம் திரு முழுக்கின் மூலம் தன் தம்பியோ தங்கையோ இறைவனின் பிள்ளையாவதை வளர்ந்த பிள்ளைகள் உணரச்செய்தல் சிரமமான கருமமல்ல. எம் குடும்பத்தில் புதிய உறுப்பினர் பிறந்தால் நாம் மகிழ்வடைதல்போல விண்ணக அரசுக்கும் ஒர் உறுப்பினர் சேரும்போது இறைவனும் மகிழ்கிருர் : இறைவனுடன் சேர்ந்து நாமும் மகிழ்வோம். இக்காலத்தில் சிறப்பாக இறைவனுக்கு நன்றி கூறிக் குழந்தையின் ஆன்ம சரீர நலன்களுக்காக வேண்டு தல் செய்யவும் பிள்ளைகளை ஊக்கவேண்டும்.
இறைவனுடன் மீளவும் சமாதானப்படுத்தும் திருவருட் சாதனம் பாவ மன்னிப்பாகும்; பாவ மன்னிப்பால் உண்மை யில் என்ன நிகழ்கிறதென்று பிள்ளை அறிவதற்கு அவனின் மனச் சான்று அல்லது மனச்சாட்சி தகுந்தமுறையில் உருவாக்கப்படு தல் இன்றியமையாதது. குழந்தைப் பருவத்திலிருந்தே மனச் சாட்சியின் வழிநடக்கப் பெற் ருே ர் துணைசெய்யவேண்டும். குழந்தை பெற்ருேருடனுே வேறு யாருடனுே விளையாட்டில் ஈடுபடும்போது எவ்வாறு விளை யாட்டு விதிகளைப் பின்பற்று கிருன்? விதிகளை மீறும்போது எவ்வாறு அவனைத் திருத்தமுடி யும் ? சமாதானம், ஒழுங்கு, ஒற்றுமை நிலவச்செய்யச் சட்டங் களை நாம் கைக்கொள்ள வேண்டும் என்பதைத் தெளிவாக விளக்கவேண்டும். தந்தை அலுவலகத்துக்குப் போகும்போது நாள்தோறும் அழுத ராஜன் தம்பதிகளின் குழந்தைக்கு தந்தை பனம் தேடுவதற்காகவே வேலைக்குப் போகிருர் என்றும் அப்
 
 

ܚܕ 7 7 -
பணத்தாலேயே நாம் உண்டு உடுத்து மகிழ்கிருேம் என்றும் விளக்கியதால் குழந்தை பின் அழுவதில்லை3
சட்டங்கள் அனைத்தும் இறைவனிடம் இருந்து வருகின்றன: அவற்றை மீறினுல் அன்புருவான இறைவன் எம்மை மன்னிக்க எப்பொழுதும் தயாராக இருக்கிருர், இவ்வுண்மையைப் பிள்ளை பெற்றேரிடமிருந்தே அனுபவ ரீதியாக அறியமுடியும்3 குழந்தை கோபத்தால் தன் கையிலுள்ள கண்ணுடிப் பாத்திரத்தை வீசி உடைத்துவிட்ட சந்தர்ப்பத்தில் எங்ங்ணம் இதமாகத் திருத்த வேண்டும் என்பதைப் பெற்ருேராகிய நீங்கள் அறிந்திருக்க வேண்டும்; அதே குழந்தை உங்களுக்கு உதவிசெய்ய வந்து பல கண்ணுடிப் பாத்திரங்களைக் கைதவறி உடைத்துவிட்டாலும் பொறுமையாக இருப்பதற்கும் உங்களுக்குத் தெரியவேண்டும் இவ்விரு சந்தர்ப்பங்களும் வெவ்வேறுபட்ட நோக்குடையவை பெற்றேர் நடக்கும் முறையைக்கொண்டே பிள்ளை தான் பிழை விட்ட சந்தர்ப்பம் எது என்பதை விளங்க முடியும் பெற்ருேர் பிறர் நலன் பேணிப் பொறுமையாக இருத்தல், கிறிஸ்துவை வாழ்வில் பிரதிபலித்தல், இறை ஆவியின் ஒளியில் ஊறி நீதி, பெருந்தன்மை, மன்னிக்கும் மனப்பான்மையுடன் வாழ்தல் என்பன பிள்ளைகளிண் மனச்சாட்சி தகுந்தமுறையில் உருவாக வழி செய்யும்;
பெற்றேர் பிள்ளைகளிடமிருந்து சிலவற்றை எதிர்பார்ப்பது இயல்பு : பெற்றேரிலும் மேலானவர் இறைவன்; அவ ரு ம் நாம் சில வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமென எதிர் பார்க்கிருர் இறைவனின் குரலுக்கு " ஆம் ' என்னும்போது ஏற்படும் மகிழ்ச்சியையும், இல்லை" என மறுக்கும்போது உண் டாகும் துன்பத்தையும் பிள்ளை அனுபவிக்கப் பழக்கவேண்டும்: இறைவனின் எதிர்பார்ப்பு அல்லது சித்தம் வெளிப்படையாகத் திருச்சபையின் போதனை மூலமும், உள்ளுணர்வாக இறையாவி யின் தூண்டுதல் மூலமும் நமக்குப் புலப்படுகிறது; இறைவ னின் சித்தத்தைக் கண்டுணர்ந்தும் அதை மறுப்பதே பாவம் பாவம் தனிப்பட்ட ஒருவரையும், சமூகத்தையும் பாதிக்கிறது என்பதையும் பிள்ளைக்கு விளக்கவேண்டும். மனச்சாட்சி வழியில் பிள்ளை வாழ வழிசெய்வதற்கு நித்திய வாழ்வின் மகிமைபற்றி யும் அறிதல் இன்றியமையாதது.
நித்திய வாழ்வுக்குச் செல்லும் பாலமாக மரணம் அமை கிறது. இதை அயலில் நடக்கும் மரணத்தைப் பயன்படுத்தி விளக்கலாம் நித்திய வாழ்வின் பயணத்துக்குத் தகுந்தமுறை யில் ஆயத்தம்செய்ய உதவும் திருவருட்சாதனம் நோயில் பூசுத லாகும் இளம் வயதிலேயே நோயில் பூசுதல்பற்றிய விளக்கம்

Page 11
سیستا 8 Il| مست
பிள்ளைக்கு இருந்தால் பின்னர் வேண்டும்போது இத் திருவருட் சாதனத்தைப் பெறுதற்கும், மற்ருேருக்குக் கொடுக்க உதவுதற் கும் ஊக்கம் உண்டாகும்3
திருப்பலியும் தேவநற்கருணையும் கிறீஸ்தவ வாழ்வின் மைய மெனத் தகுந்தவை: வழிபாட்டுடன் வழிபாடு நடக்கும் இட மான கோவிலைப்பற்றியும் சிந்தித்தல் அவசியம் குழந்தை கோவிலுக்கு அழைத்துச் செல்லப்படுமுன் முழந்தாளிடவும் கை கூப்பவும் பயிற்றப்படுதல் நன்று எம் நாளாந்த வாழ்வில் * மன்னியுங்கள்", " தயவுசெய்து ", " நன்றி " என்ற சொற்களைக் கையாண்டு உரையாடுகிருேம், இதேபோல இறைவனிடமும் மன்னிப்புப்பெற, வேண்டுதல் செய்ய, நன்றிகூறப் பலி துணை செய்கிறது என்பதைப் பிள்ளைக்கு இலகுவாக விளக்க லா ம். பூசைக்குப் போகுமுன்பும் முதல்நன்மைக் காலத்திலும் பலிச் சடங்குபற்றிய நல்விளக்கம் பிள்ளைக்கு அவசியம்: குருக்களும், ஆசிரியர்களும் விளக்குவார்கள் என்ற எண்ணத்தில் உங்களுக்கு உரித்தான இக்கடமையைச் செய்ய மறக்கவேண்டாம் பூசைப் பலியால் திரும்பிய பிள்ளையுடன் அன்றைய நற்செய்தி பற்றிக் கலந்துரையாடவேண்டும் பாடசாலையில் கற்ற ஞானுேபதேசம் பற்றி உங்களில் எத்தனைபேர் கேட்கிறீர்கள் ? சற்பிரசாதம் உட்கொள்ளும்போது நமக்கு ஏற்படும் நல்லுணர்ச்சிகள் பற்றி எம் பிள்ளைகளுடன் கலந்துரையாடுகிழுேமா ? கிறிஸ்துவின் உட லும், இரத்தமும் நம் ஆன்ம வாழ்வுக்கு இன்றியமையாதது இதனற்ருன் நாம் ஒரேகுடும்பமாகப் பலி ஒப்புக்கொடுத்துத் திரு விருந்தில் பங்குகொள்கிருேம் : அன்பின்றிப் பலியில்லை ; பலி யில்லையேல் அன்பில்லை என்ற உண்மைகளைப் பிள்ளைக்குணர்த்த வேண்டும். உண்மையான அன்புள்ள இடத்தில் தியாகம் இருக் கும், தியாகமே பலி என்பதை நம் நாளாந்த வாழ்வில் நடக்கும் நிகழ்ச்சிகள் மூலம் விளக்கலாம்;
இறையாவியின் அலுவலைப் பிள்ளை உணர்ந்துகொள்வதற்கு வீட்டில் பயிற்சி கொடுத்தல் அவசியம்: இறையாவி எம்முள் குடிகொள்ள உறுதிப்பூசுதல் உதவுகிறது; அவர் எம்மை மாற்றி அமைக்கிருர், எம்முடன் உரையாடுகிருர், ஒளியாகவும் மிளிர் கிருர் : பலமும் மகிழ்வும் அளிப்பவர் அவரே; இத்துடன் அன் பினுல் ஒன்றிக்கவும் செய்கிருர் இவ்வுண்மைகளைப் பிள்ளை தன் நாளாந்த வாழ்வில் அனுபவிக்கப் பெற்ருேர் உதவவேண்டும் இளமைப் பருவத்தில் சந்தர்ப்பத்திற்கேற்ப இல்லற, துறவற நிலைபற்றி விளக்கங்கொடுத்தல் பிற்காலத்தில் தமக்குரிய அந்தஸ் தைத் தெரிந்தெடுக்க உதவிசெய்யும்:
v/

... . ● ós இளைஞர் பிரச்சனைகள்
முதியோர்க்குரிய பிரச்சனைகள் பல. இவற்றுள் இளைஞர் பற்றிய பிரச்சனையும் ஒன்று. இன்றைய இளைஞர்களை ஒரே கூட்டாகக் கணிக்கமுடியாது. பள்ளி செல்வோர், வேலைசெய் வோர், வேலையற்றேர் என் போரது பிரச்சனைகள் தனித்தனி வேறுபட்டவை. இளைஞர் என்றுமே இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு சக்தி அவர்கள் மற்ருேரால் உணர்ந்துகொள்ளப்படத் துடிக்கின்றனர். தம்மை முதியோர் விளங்காமல் இருக்கிறர் களே என்பது அவர்களின் குமுறல் தாம் மற்றவர்களால் ஏற் கப்படவேண்டும் என்று ஏங்குகின்றனர்: பாதுகாப்புடன் கூடிய சுதந்திரமான தனிமனிதனுக வாழவேண்டும் என்பது அவர்கள் அவா, இந்நோக்கை அடையத் தனிப்பட்ட குழுக்களோடு இணைய விரும்புகின்றனர். ஆணுல் அவர்கள் திட்டமான முடி வுக்கு வராத எப்பக்கமும் இழுபடக்கூடிய கூட்டமாகக் காணப் படுகின்றனர்.
முற்கால இளைஞரிலும் இன்றைய இளைஞர் விடய அறிவும் ஆற்றலும் உள்ளவர், பிறர் தம் தகுதியை உணர வேண்டும் என எதிர்பார்க்கிருர்கள்; ஏன் ? எதற்கு என்று கேட்கும் உரிமையை எவரும் மறுக்கமுடியாதென நினைக்கிருர்கள்கு இளை ஞராக வாழுங்காலம் இன்று நீடித்திருக்கிறது; ஆனல் அவர் கள் ஒன்றுமறியாச் சிறுவரல்ல; இருபத்தைந்து வயதுவரைக் கும்கூட அவர்கள் மாணவர்களாயிருக்கலாம், ஆனல் அவர்கள் குழந்தைகளல்ல3 முதியோரது அமைப்பு முறைகளையும் கருத் துக்களையும் இளைஞர் ஏற்காத மன நிலையிலிருந்தால் அவர்கள் மேல் இவைகளைத் திணிக்கவே முடியாது? இளைஞரின் பிரச்ச னைகள் - அவர்களின் தேவைகளும் அவற்றை அடையக் கைக் கொள்ளும் வழிகளும் - இடத்துக்கிடம், குழுவுக்குக் குழு வேறு படலாம். ஆனல் வெளி அமைப்புமுறைகளை விரும்பாத தன் மை பொதுவில் காணப்படுகிறது; சொல்லும் செயலும் வேறு படுவதை வெறுத்து நேர்மை, நியாயம், கணிப்பு முதலியவற்றை எதிர்பார்க்கிருர்கள் மூத்தோரின் பல திட்டங்கள் தோல்வி கண்டமையையும் நேரில் அறிந்துள்ளனர்; எனவே இளைஞரின் பிரச்சினைகளுக்குப் பழைய தீர்வுகள் பொருந்துமென்று நாம் கூறினல் அவற்றை இளைஞர் ஏற்கமாட்டார் என்பது தெளி வாகிறது; முதியோரின் தோல்விகளை இளைஞருக்கு மூடுமந்திர மாக இன்னும் வைத்திருக்க முடியாது
கத்தோலிக்க இளைஞர் பழைய நிறுவனங்களை எல்லாம் உடைத்தெறியும் மனப்போக்குடையவர்களாக இருக்கிருர்கள்

Page 12
என்று குற்றம் கூற முடியாது; பலர் பழைமை பேணுபவர்கள்: ஆனல் தாம் பங்குகொள்ளும் செபம், வழிபாடுகள் கருத்தும் பொருத்தமும் உடையனவாய் இருக்க வேண்டுமென்கின்றனர். கருத்தும் பொருத்தமும் காணும்போது நன்முறையில் பங்கு கொள்வதும் இல்லாவிடத்துத் தூங்கி வழிவதும் அவரது இயல்பு. நசுக்கப்பட்டோர் குருக்களாலும், கன்னியர், ஆசிரியர்களாலும் மதிக்கப்படவேண்டும் என எதிர்பார்க்கிருர்கள்: மு தியோர் கைக்கொள்ளும் சில முறைகள் தம் நோக்கை அடையத் தடை யாய் இருப்பதைத் தெளிவாக அறிகிருர்கள் இளைஞரின் மனப்போக்கிற்குப் பொருந்தாத நெறி முறைகளை முதியோர் கைக்கொள்வதனுல் திருச்சபையைக் கூட மதிக்காத நிலைக்கு இளைஞர் தள்ளப்படுகிருர்கள்: சுதந்திரம் நாடும் இளைஞர்கூட் டம் தமது கனவு நனவாகக்கூடிய அமைப்புகள் ஏற்படவேண் டும் என்று விரும்புகின்றனர். ஒன்றைக் கூறி வேறென்றைச் செய்வதை வெறுக்கின்றனர்; நேர்மை, நியாயம் கிடையா நிலை யில் சகித்துக்கொண்டிருக்கும் மனப் பாங்கை இளைஞரிடம் இன்று எதிர்பார்க்க முடியாது. அது சரியுமல்ல; எம் வீடு, பள்ளி, கழகங்கள், அரசு என்னும் நிறுவனங்கள் சிறுவர்களின் குறிக்கோளை அடைய வழி செய்கின்றனவா ? நாம் சுதந்திரத் தை மதிக்கிருேமா ? எங்களின் பழைய கருத்துக்கள் சீர் செய் யப்பட வேண்டும்; இளைஞருடன் ஒன்றித்து, அவர்களின் சீரிய கருத்துக்களுக்கு மதிப்பளித்து நடந்து அவர்களை வழிநடத்து தல் எமது கடமை, கிறீஸ்தவர்களின் இரட்டை வாழ்க்கைத் தரம் - பேச்சொன்றும் செயல் வேருென்றும் -இளைஞர் மனத் தைப் புண்படுத்துகிறது, அவர்களுக்குப் புரியாத புதிராகவிருக் கிறது. இதனுல் ஏற்படும் வெறுப்புத் திருச்சபைக்கும் தாவு கிறது; திருச்சபையின் அமைப்பு முறைகளில் இளைஞரும் பங்கு கொள்ள வாய்ப்பளிக்கப்பட வேண்டும்3 ?? சிறுவர்களை நம் மண்டை வரவிடுங்கள் " என்ற கிறீஸ்துவின் வாக்குக்கு நாம் மதிப்பளிப்போம் கிறிஸ்துவின் மறைஉடலில் இளைஞரும் உறுப் பினரன்ருே?
வாலிபரது பிரச்சனைகளை விளங்கிக்கொள்ளாதது முதியோ ராகிய நாம் செய்யும் தவருகும், இளைஞர்மேல் நாம் சுமத்தும் பல குறைகளுக்கு நாமும் காரண கர்த்தாக்கள் என்பதை உணர வேண்டும்3 மதிப்பீடுகள் இளைஞர் மேல் திணிக்கப்படாமல் பகிர்ந்து கொள்ளப்படவேண்டும்; ' இளைஞர்க்குச் சுதந்திரம் கொடுப்போம் ? என்று கூறுவதிலும் " சுதந்தரமாக அவர்களை வாழ விடுவோம்’ என்பதே பொருத்தமானது. இளைஞரின் பிரச் சன சமுதாயத்தின் மையமாக இன்று அமைந்துள்ளது. இது அபிவிருத்தியடைந்த, அபிவிருத்தியடையா எல்லா நாடுகட்கும்

- 21 -
பொருந்தும் எங்கும் இளைஞரின் புரட்சிக் குரலைக் கேட்கிருேம்3 அவர்களின் சக்தி இயங்கும் சக்தியாக மிளிர்கிறது. பொருத்த மற்ற சிந்தனை பொருந்தாத அமைப்புகள், செயல்கள் என்ப வற்றின் மாற்றத்திலும் புரட்சியிலும் எவ்வாறு இளைஞரோடு இணைந்து வாழ்வது என்பதை நாம் அறிதல் வேண்டும்; நாங் கள் இவர்களில் அக்கறையுள்ளவர்கள் என்பதை இ ளே ஞ ர் உணர்ந்தால் தம் பிரச்சனைகள் பற்றி எம்முடன் பேச முன் வரு வர் எமது தீர்வுகளுக்கும் கருத்துகளுக்கும் செவிசாய்ப்பர்: எம் இளைஞர் காண விழையும் புரட்சி இளைஞர் உலகுக்குச் சொந்தமானதென நாம் கருதும் வெறும் வரட்டு இலட்சியக் குரலோ என்று நாம் குழப்பமடைந்துள்ளோம். அவர்களின் அதிருப்தி ஆழமானது, ஆவேசம் உடையது. அவர்கள் வேண்டு வது பொருளாதாரப் பாதுகாப்பு மட்டுமல்ல, அடிப்படை மணி தத்தன்மையான சிறந்த உயர்ந்த மதிப்பீட்டைக் கோருகிறர் கள், எம் சிருர் முற்காலத்திலும் பார்க்க விரைவாகக் கற்றுக் குறுகியகாலத்தில் மு தி ர் ச் சி அடைகின்றனர். முதியோரின் இரட்டை வாழ்க்கைத் தரத்தை-சொல் செயல் வேறுபாட்டை - மிக விரைவில் அறிந்து அதனுல் அவர்களையும் அவர்தம் கருத்துக்களையும் சந்தேகிக்கின்றனர். இளேஞரிடம் உள்ளீடாக உள்ள முடங்கிக்கிடக்கும் சத்தியை நாம் நல்வழியில் பயன் படுத்தவேண்டும்3
குழந்தை வளர்ந்து பக்குவநிலை எய்தற்கான சட்டகத்தை
யும், வழிமுறைகளையும் தரும் நிறுவனம் குடும்பமாகும். பெற்
ருேர் உயிருள்ளதான அன்பைத் தாராளமாகப் பிள்ளைகளுக்கு, வழங்கி உறுதியான ஒழுக்க நிலைக்கு அவர்களை வழிநடத்த
வேண்டும். சொல்லிலும் செயல் பெரிது என்பதைப் பெற்றேர்
அறிந்து தம் செயல்மூலம் செவ்விதான வாழ்க்கை நெறியைத் தம் செல்வங்கட்குக் காட்டவேண்டும். சிறுவர் சிறந்த திறனுய்
வாளர் என்பதை மனத்திற்கொண்டு எம் வாழ்  ைவ அலசி ஆராயவேண்டும். திருச்சபை அதிகாரிகள் இளைஞர் மட்டில் இன்னும் கூடிய அக்கறைகாட்டல் அவசியம். உண்மையான சமய மறுமலர்ச்சி இளைஞர் இடத்து ஏற்படுவதற்கான அறிகுறி கள் இன்று காணப்படுகின்றன. கிறிஸ்துவின் போதனை இன் றைய இளைஞர்க்கும் பொருந்தும் என்பதை உணரச் செய்யும் விதத்தில் முறைகள் கையாளப்பட வேண்டும். கிறீஸ்துவை அடையச் சிறந்த அமைப்புமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன என் பதை நாம் மறப்பதற்கில்லை. ஆனல் அந்நிலைக்கு இளைஞரை அழைத்துச்செல்லும் பாதைகள் அமைக்கப்படவில்லை, நாம் அமைக்கும் நெறிகளைக் காலத்திற்கேற்ப மாற்றுவதில் தவறில்லை. கிறிஸ்துவை மேலும் விளங்குவதற்கு இவை துணைபுரியும்

Page 13
-س- 23 2 --س
குரவர்களும் விசுவாசிகளும் இன்னும் கூடிய முயற்சி எடுத்தால் காணுமற் போன ஆடுகள் போன்ற இளைஞர் கூட்டம் நாளடை வில் கிறிஸ்துவை அண்டி வரச்செய்யலாம்.
இன்றைய பிரதான பிரச்சனை இளைஞர் புரட்சிசெய்கிருர் கள் என்பதல்ல ; முதியோராகிய நாம் அத்தகைய புரட்சிகளை எப்படி எதிர்நோக்குகிருேம் என்பதே இளைஞரின் திறமை, துணிவு, செயல்பாடு என்பன நாம் இழந்துவிட முடியாதவை : அவசியம் பயன்படுத்தப்பட வேண்டியவை. எனவே உயிர்த் துடிப்புள்ள அவர்களின் பிரச்சனைகளே மழுப்பாது, அடக்காது எதிர்நோக்குவோம் ; அவர்களில் நம்பிக்கைகொள்வோம். அவர் களின் பிரச்சனைகளில் நாமும் சிரத்தைகொண்டுள்ளோம் என் பதை அவர்கள் அறிய நாம் நடக்கவேண்டும் , பிரச்சனைகள் தீரக் கூடிய வழிமுறைகள் அமைப்பதில் சேர்ந்து பங்காற்ற வேண் டும் தமது வயது, அனுபவம், வசதிகளே அவர்களது சத்திகளு டன் சேர்த்து ஒருமித்து உழைத்தால் பெற முடியாதது ஒன் றுமே இராது.
பிள்ளைகள் நல்லவர்களாக வாழவேண்டும் என்று நாம் விரும்புவதுபோலப் பெற்றேரும் நல்லவர்களாக வாழவேண்டும் என்று பிள்ளைகள் விரும்புகின்றனர். பொருளே மட்டும் செலவு செய்து நல்ல பெற்ருேராக முடியாது. பிள்ளைகளின் நல் வாழ் வுக்காகக காலத்தைச் செலவு செய்யும் மனப்பான்மை பெற் ருேருக்கு இருக்கவேண்டும். பிள்ளைகளுடன் சேர்ந்து பயனுள்ள வற்றைச் செய்யப் பயிலல்வேண்டும். இளைஞர் யாவற்றிலும் பங்குகொள்ள விரும்புகின்றனர். வாழ்வின் உயர் நோக்கை அடைவதில் முதியோருடன் தேர்ந்து பணியாற்று கிருேம் என்ற உணர்வு இளைஞருக்கு உண்டாக வழிசெய்யவேண்டும். இளைஞர் கேட்கும் வினுக்களுக்கு உண்மையான விடைகள் பொறுதியுடன் அளிக்கப்படுதல் அவசியம்.
இன்றைய இளைஞர்களின் குமுறல்களை நாம் அறிதல் வேண் டும் அவர்கள் பல விடயங்களில் அதிருப்தி அடைந்துள்ளனர்? அவர்கள் மூடர்களல்ல, திறமையாகக் கற்றவர். பெரும்பா லோர் ஒதுங்கிநின்று, செய்வதறியாது, எப்பக்கம் திரும்புவது என்று அறியாது குழம்பி நிற்கின்றனர். ஆனல் குழப்பமான நிலையிலும் நல்ல நெறிமுறையில் தம் இலட்சிய சமுதாயத்தைக் காண விழைகின்றனர். தங்கள் பிரச்சனைகளுக்கு மூல கார ணம் இன்றைய சமுதாயநிலை எனக் குறைப்படுகின்றனர். அவர் களின் கருத்தை நாம் முற்ரு க ஏற்காவிடினும், அதை ஒதுக்கி விட்டுப் பிரச்சனைக்குத் தீர்வு காணுவோம் என நினைத்தால்

一 露品 一
தோல்வியே காண நேரிடும். வாழ்வில் தோல்வி கண்டு மன முடைந்து எதிலும் நன்மைகாணுத முதியோர் சிலர் தமது வாழ்க்கை முறையினுல் கற்பித்த பாடம், அறிவை வளர்க்கும் அவாவில் ஆத்துமத்தைச் சாகடித்துக்கொண்டிருக்கும் கல்வி முறை, உலக இன்பங்களேச் சுகிக்கவேண்டும் என்ற ஆசை, வழிகாட்டு நிறுவனங்களின் அதிகாரிகளின் க ட  ைம மறந்த தன்மை, சூழலின் இயல்பான பாவநாட்டம் என்பன இளைஞருக் குக் கேடு விளைவித்திருக்கலாம். வாழ்வின் உன்னத குறிக்கோள் எது என்பதை இளேஞர் அறிந்தால் அவர்களுக்கே உரித்தான துடிப்புடன் செயல்பட்டு வாழ முன்வருவர். பெற்றேரும், மற் ருேரும் வாழ்ந்து காட்டினுல் மட்டுமே இது சாத்தியமாகும் 9 எந்நிலையிலும் தன் ஆன்மாவை இழந்துபோகாத உறுதித்தன்மை மாணவரின் குறிக்கோளாக்கப்படுதல் வேண்டும். இதற்காக வீடு, பள்ளி, கோவில் என்னும் நிறுவனங்கள் ஒழுக்க நெறி காட்டும் நிறுவனங்களாக மிளிரவேண்டும்.
முதியோராகிய நாம் இளைஞர்பற்றிய பிரச்சனையை ஏற்றே யாகவேண்டும். அவர்களின் கொதிப்புகளை, குமுறல்களைக் கண்டு அனுதாபப்பட்டால் மட்டும் போதாது, அவர்களின் சோக வர லாற்றைக் காதுகொடுத்துக் கேட்டால் எமக்குத் தெளிவுண்டா கும். இளைஞர் எம்மவர் அவர் பிரச்சனைகளில் எமக்கும் பங் குண்டு. பிரச்சனைகள் தோன்றுதல் ஏன் ? இவை நீக்கப்படக் கூடியவையா ? அவர்களுக்கேற்ற அமைப்புகள் எவ்விதம் சீர் திருத்தப்படவேண்டும் ? இவை எவ்வகையில் நல்வாழ்க்கைக்கு உதவலாம் - என்றெல்லாம் நாம் சிந்தித்துச் செயலாற்ற வேண் டும். இளேஞரின் பிரச்சனேயில் எமக்கும் பங்குண்டு என்பதை உண்மையில் உணர்ந்தால் நல்ல் முடிவுகள் செய்ய வழி பிறக் கும். தொடரும் ஆய்வுக் குழுக்களில் இந்தப் பிரச்சனைபற்றி மனத்திறந்து பேசி நல்ல தீர்வுகளைக் காண உங்களை வேண்டு கிறேன்;

Page 14
ஆய்வுக் குழுக்கள்
மறைக்கல்வி மகாநாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக் குள்ளே மிகப் பயனுள்ளதும், மகாநாட்டுப் பிரதிநிதிகள் அதிக ஆர்வத்துடன் பங்கு கொண்டதுமான நிகழ்ச்சி ஆய்வுக் குழுக்க ளாகும்,
காலை, மாலை இரு வேளைகளிலும் இரண்டு நாட்கள் நான்கு தடவைகள் மகாநாடு கூடியது. ஒவ்வொரு வேளையிலும் நடை பெற்ற விரிவுரையின் பின்னல் ஆய்வுக் குழுக்கள் கூடி விரிவுரை சம்பந்தப்பட்ட விடயத்தைப் பரிசீலனை பண்ணினர். அகில இலங்கையிலும் இருந்து வந்து கூடிய 400-க்கு மேற்பட்ட பிரதி நிதிகள் 21 குழுக்களாகப் பிரிந்து தனித்தனி இடங்களில் அமர்ந்து ஆய்வு நடாத்தினர். ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தலைவரும், ஒரு செயலாளரும் தெரிந்தெடுக்கப்பட்டு அவர் களே இயக்குனராகக் கொண் டு கலந்துரையாடல் நடை பெற்றது. மேலும், ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு குருவானவர் வழி நடத்துபவராக இருந்து கலந்துரையாடல் நன்கு நடை பெறுவதற்கு உதவி புரிந்தார்
ஒவ்வொரு விரிவுரைபற்றியும் ஆய்வுக் குழுக்கள் காலவிரய மின்றிச் சரியான பாதையில் இறங்கி ஆய்வு நடாத்துவதற்கும், அவசியமான இலக்குகளில் பேச்சு வார்த்தை நடைபெறவும் உபயோகமான முடிவுகள் பெறுவதற்கு உதவியாக இருப்பதற்கு மாகக் குறித்த விடயம் சம்பந்தமாகச் சில விஞக்கள் ஆய்வுக் குழுக்களுக்குத் தரப்பட்டிருந்தன. இவ்வினுக்களுக்கு விடை காண்பதே ஆய்வுக் குழுக்களின் வேலையாக இருந்தது; தரப் பட்ட விஞக்களுக்கு குழுக்கள் ஆய்ந்து கண்ட விடைகளின் தொகுப்புகளே மகாநாட்டு இறுதியில் தீர்மானங்கள் செய்வ தற்கு அடிப்படைக் கருவூலங்களாகக் கொள்ளப்பட்டன3
நான்கு விரிவுரைகளுக்கும் பின்னல் 21 குழுக்கள் தனித்தனி கூடி ஆய்வு நடாத்தினர் என்பதனல், ஒவ்வொரு குழுவுக்கும் நான்கு வீதம் மகாநாட்டு முடிவில் 84 அறிக்கைகள் கிடைத்தன;
ஆய்வுக் குழுவினர் விரிவுரையாளரின் கருத்து க் களை ஆராய்ந்து தமது அபிப்பிராயங்களை வெளியிட்டனர். வருங் காலத்தில் பெற்ருேர் தங்கள் பிள்ளைகளுக்குத் தாமே மறைக் கல்வியூட்டும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்போது எழக்கூடிய நடைமுறைப் பிரச்சினைகள் எவையென்பதை மனம்விட்டுக் கூறி னர்.கல்வியறிவு, பொருள் வளம், குடும்பச் சூழ்நிலை, சுற்ருடல்

ܚ- 5 ܊ ܡܩܚ
கிராமம், விசாரணைப்பங்கு, ஊர், பாடசாலைகள், கோவில், சமூக இயக்கங்கள் முதலியன பற்றிய மட்டில் பல்வேறுபட்ட ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் நம்நாட்டில் இப்பிரச்சினே சம்பந்தம்ாக எவ்விதமான பொதுத் தீர்மானங்களுக்கு வரமுடியும் என ஒருவரையொருவர் உசாவினர். இந்நாள் வரை பிள்ளைகளின் மறைக்கல்வி, நல்லொழுக்கம், கத்தோலிக்க பண்பு முதலியன சம்பந்தமாகப் பெற்றேர், பெரியோர், ஆசிரியர்கள், குருக்கள், திருச்சபை அதிகாரிகள் ஆகியோர் என்ன செய்தனர்? என்ன செய்யத் தவறிவிட்டனர்? என விவாதித்தனர். பெற்ருேர் தனித் தனியாகவும், பங்கு நிலையில் பொதுவாகவும், மேற்றிராசன அளவிலும், நாடு முழுதுக்குமாகவும் இனி என்ன செய்யலாம் என ஆலோசனைகள் வழங்கினர். இதுவரை பிள்ளைகளின் சமய சன்மார்க்க வாழ்வு சம்பந்தமாகத் தாம் அக்கறையற்று இருந்து விட்டதாக நொந்து கொண்டனர். அந்த நிலை ஏற்படக் காரணங் கள் எவையோ அவற்றைக் கண்டிக்கவும் செய்தனர்.
சில ஆய்வுக் குழுக்களிலே அவ்வப்போது சூடான விவாதங் களும் நடைபெற்றன. வாதப்பிரதிவாதங்கள் உயர்ந்த குரலில் கேட்டன. சமயோசிதமான ஹாஸ்ய வெடிகளினுல் சிரிப்பலைகள் வெளிவந்தன. ஆழ்ந்து சிந்திப்பதில் அமைதி நிலவியது.
மறைக்கல்வி மகாநாட்டில் ஆய்வுக் குழுக்கள் மிகப் பிர யோசனமான வகையிலும், பிரதிநிதிகள் பல உண்மைகளை அறிந்துகொள்ளக் கூடிய முறையிலும் நடைபெற்றன. முன் குறிப்பிட்டதுபோல இந்த ஆய்வுக் குழுக்கள் செய்துகொண்ட முடிவுகளின் அடிப்படையிலேயே இறுதியில் தீர்மானங்கள் உரு வாகின. இரண்டாம் நாள் பிற்பகலில் மகாநாட்டின் இறுதிக் கட்டத்தில் ஆய்வுக் குழுக்களின் தலைவர்கள் தங்கள் தங்கள் குழுவினர் கண்ட முடிவுகளைப் பொதுச் சபையில் எடுத்துக் கூறிச் சபையினரின் அபிப்பிராயங்களைக் கேட்டனர். விரிவுரை நிகழ்த் திய அறிஞர்களின் முடிவான எண்ணங்களையும் கோரினர். குருக் கள், மேற்றிராணிமார்களின் அறிவுரைகளையும் செவிமடுத்தனர். ஏகமனதாகத் தீர்மானங்களே நிறைவேற்றினர். சமீப எதிர் காலத்தில் வீடுகளிலும், விசாரணைப் பங்குகளிலும், மேற்றிராச னங்களிலும் அகில இலங்கை ரீதியிலும் நம் நாட்டில் எடுக்கப் பட வேண்டிய அவசியமான நடவடிக்கைகள் இவையென வரைய றுத்தனர். இனி, கத்தோலிக்க பெற்ருேராகிய நாம் பிள்ளை களின் மறைக்கல்வி சம்பந்தமாக ஒன்றுபட்டு ஆற்ற வேண்டிய தமது தலையாய கடமைகளிலேயே இம்மறைக் கல்வி மகாநாட்
டின் உண்மையான வெற்றி தங்கியுள்ளது எனலாம்;

Page 15
- 86 -
இருபத்தொரு ஆய்வுக் குழுக்களிலும் பங்குகொண்ட அங்கத்தவர்கள் காண்பித்த ஆர்வத்தைக் கண்டு நாங்கள் எல் லோரும் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். அடிப்படையாக நில விய கருத்து என்னவெனில், பெற்றேர், இறைவன் தங்கள்மேல் சுமத்திய பெரும் கடமைகளைச் சுமுத்திரையாக நிறைவேற்றுவ தற்குப் போதிய ஆயத்தம் இல்லாததின் காரணமாக ஆற்றல் குறைந்தவர்களாகக் காணப்படுகிருர்கள் யார், யார் இக்குறை பாடுகளை நிவர்த்தி செய்யக் கடமைப்பட்டு இருக்கிருர்களோ அவர்கள் காலதாமதமின்றி முன்வந்து உழைப்பார்கள் என்பது? நமது நம்பிக்கை.
 

மகாநாட்டின் தீர்மானங்கள்
இம் மறைக்கல்வி மகாநாட்டின் முடிவிலே பொதுச்சபை யால் எட்டுத் தீர்மானங்கள் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப் பட்டன. உண்மையில் மகாநாட்டிலிருந்து முழுப் பயனடைய வேண்டுமானல், நாம் விரைவில் இத்தீர்மானங்களைச் செயற் படுத்த முன்வரவேண்டும்; எனவே, இப்பொழுது இத்தீர்மா னங்களை ஒவ்வொன்ருக எடுத்துச் சிறிது ஆராய்வோம்:
1-வது தீர்மானம் : பெற்ருேர் தமது பிள்ளைகளுக்குத்தகுந்த முறையில் மறைக்கல்வியூட்டுவதற்கு உறுதுணையாக ஒவ்வொரு பங்கிலும் " பெற்ருேர் மன்றம்" அமைத்து அது நன்ருக இயங்குவதற்கு ஆவன செய்யவேண்டும். இங்கு குறிக்கப்படும் * பெற்ருேர் மன்றம் " ஒவ்வொரு பங்கிலுமுள்ள கத்தோலிக்க பெற்றேர் அனைவரையும் ஒன்ருக இணைக்கும் ஒரு சங்கமாகும்: பெற்ருேர் இம்மன்றம் வழியாக ஒன்று கூடித் தங்கள் பிள்ளை களின் மறைக்கல்விபற்றிக் கலந்துரையாடிக் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வர், தாங்க ள் இப்பணியைச் செவ்வனே செய்வதற்குத் தேவையானவற்றைப் பெறுவதற்குத் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வர். இத்தகைய கூட்டுறவு தங்கள் பணியைச் சிறப்பாகச் செய்வதற்கு வேண்டிய ஊக்கத்தையும், உற்சாகத்தையும் பெற்ருேருக்கு அளிக்கும். எனவே, பெற் ருேர் தங்கள் பிள்ளைகளுக்குத் தகுந்த முறையில் மறைக் கல்வி ஊட்டுவதற்குப் பெரிதும் உதவக்கூடிய இம்மன்றம் எல்லாப் பங்குகளிலும் விரைவில் நிறுவப்படவேண்டும்3
2-வது தீர்மானம் ஒவ்வொரு பங்கிலும் கிறிஸ்துவ படிப் பினைச் சபை கூடிய விரைவில் நிறுவப்படவேண்டும். கிறிஸ்தவ மக்களின் மறைக்கல்வி அறிவை வளர்ப்பதையே தன் நோக்க மாக இச்சபை கொண்டுள்ளது. ஒவ்வொரு பங்கிலும் இச்சபை நிறுவப்படவேண்டுமெனத் திருச்சபைச் சட்டம் வற்புறுத்திய போதிலும், இதுவரை பல பங்குகளில் இது நிறுவப்படவில்லை. கத்தோலிக்க பள்ளிக்கூடங்களில் எமது பிள்ளைகளுக்கு மறைக் கல்வியூட்டப்பட்டு வந்ததே இச்சபை இவ்வாறு அலட்சியம் செய் யப்பட்டதற்கு ஒரு முக்கிய காரணமாகும். ஆனல், இன்று நிலைமை மாறிவிட்டதால், இச்சபை ஒவ்வொரு பங்கிலும் விரை வில் நிறுவப்படுவது அவசியம். எனவே, ஒவ்வொரு பங்கும் * பெற்ருேர் மன்றங்களின் ஆதரவுடன் இச்சபையை நிறுவு வதற்கு ஆவன செய்யவேண்டும்,

Page 16
-- 588 حصے
3-வது தீர்மானம் : பிள்ளைகளுக்கு மறைக்கல்வியூட்டுவதற் குப் பெற்ருே ரைப் பயிற்றுவிப்பதற்கு உதவக்கூடிய பிரசுரங் இளே நடுநிலையங்கள் தயாரித்துப் பெற்ருேர் மன்றங்கள் வழி போக வழங்கவேண்டும், எமது பங்குகளில் போதிய கல்வியறி வற்ற பெற்ருேர் பலர் இருக்கின்றனர். முதலில் இவர்களுக் குத் தகுந்த பயிற்சி அளிக்கப்படவேண்டும். அப்போதுதான் அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்குத் தகுந்த முறையில் மறைக் கல்வி ஊட்டக்கூடியவர்களாவர். ஆணுல், அவர்களுக்கு இத் தகைய பயிற்சியை அளிப்பதற்குப் பொருத்தமான சில பிரசுரங் கள் தேவை. ஒவ்வொரு பெற்ருேர் மன்றமும் இவற்றைத் தனித் தனியாகத் தயாரித்துக்கொள்ள மு டி ய ர து. எனவே, ஒரு நடுநிலையம் (சிறப்பாக மறைக்கல்வி நடுநிலையம்) இத்த கைய பிரசுரங்களைத் தயாரிப்பதே சிறந்தது.
4-வது தீர்மானம் : ஒவ்வொரு கத்தோலிக்க குடும்பத்திலும் பரிசுத்த தோகமத்தின் பிரதியாவது அல்லது புதிய ஏற்பாட் டின் பிரதியாவது இருக்கவேண்டும். கடவுள் வெளிப்படுத்திய உண்மைகளை மக்கள் அறிந்து அவற்றிற்கேற்ப வாழ வழிகாட்டு வதே மறைக்கல்வியின் முக்கிய நோக்கமாகும். எனவே, கடவு ளின் வார்த்தைகளைக் கொண்டுள்ள பரிசுத்த வேதாகமம் ஒவ் வோர் இல்லத்திலும் இடம்பெறவேண்டிய பிரதான நூல் என் பதில் ஐயமில்லை.
5-வது தீர்மானம் : உறுதிப் பூசுதல் எனும் திருவருட்சாத இனம் குமரப்பருவத்தில் பெறப்படுவதுதான் கூ டி டி பt&னக் கொடுக்கும் என்று இச்சபை கருதுகிறது. இப்பொழுது பல விடங்களில் பிள்ளைகள் முதல் நன்மை பெறும்பொழுதே உறு திப்பூசுதலையும் பெற்றுக்கொள்ளுகிருர்கள். ஆனல், இப்படிச் சிறுவர்களாக இருக்கும்பொழுதே உறுதிப்பூசுதலைப் பெறுவது நல்லதல்ல என இ ன்  ைற ய மறை அறிஞர் கருதுகின்றனர். ஏனெனில், ஒரு கிறிஸ்தவன் பொறுப்புணர்ச்சியுடன் திருச்சபை யின் பல்வேறு பணிகளில் பங்குபெறுவதற்கு அவனுக்கு வேண் டிய அருளை உறுதிப்பூசுதல் வழியாகப் பெறுகிருன், ஆனல், அதை அவன் பெறும் பொழுது தனது பொறுப்பை உணர்ந்து கொள்ளும் ஆற்றலில்லாதவனுயிருந்தால் அதஞல் முழுப்பயன அடைந்துகொள்ளமுடியாது. எனவே, அவன் தன் பொறுப்பை உணர்ந்துகொள்வதற்கு அவசியமான அறிவுவளர்ச்சியை ஒரள வென்ருலும் அடைந்த பின்னர் இத் திருவருட்சாதனத்தைப் பெற்றுக்கொள்வதே சிறந்தது;

- 29 -
-ேவது தீர்மானம் திருமணத்திற்கும் குடும்ப வாழ்விற்கும் வாலிபப்பராயத்தினரைப் பயிற்றுவிக்கும்பொருட்டு " காணு-மன் றங்களே " பங்குதோறும் நிறுவவேண்டும். பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பது இல்லற வாழ்வின் முக்கிய நோக்கமாகும். எனவே, இல்லற வாழ்வில் ஈடுபடவிருக்கும் இளைஞரும், இளம் பெண் களும் அதற்கு வேண்டிய பயிற்சியைப் பெற்றுக்கொள்வது அவ சியம். இப்பயிற்சியை அளிப்பதற்குக் காணு-மன்றங்கள் பெரி தும் உதவியாயிருக்கும். ஏனெனில், இத்தகைய பயிற்சிக்குரிய வகுப்புகளே நடத்துவதே கானு - மன்றங்களின் பணியாகும். எனவே, ஒவ்வொரு பங்கும் காலத்துக்குக் காலம் இந்த மன் றங்களில் வாலிபவயதினரை ஒன்றுகூட்டிப் பயிற்சி அளிப்பது அவசியம்,
?-வது தீர்மானம் : பங்கு, வட்டார, மேற்றிராசன ரீதிகளில் கத்தோலிக்க வாலிப வயதினர்களுக்கென மன்றங்கள் அமைத்து உதவிகள் அளிக்கப்படவேண்டும் - இளம் வயதினர் கிறிஸ்துவ படிப்பினைப்படி வாழ்வதற்கு இம்மன்றங்கள் உதவியாயிருக்கும்: அத்துடன் பெற்ருேர் இளம் பிள்ளைகள் தவழுன வழிகளில் செல்லாது கண்காணிப்பதற்கும் இவை உதவியாயிருக்கும்.
8-வது தீர்மானம் : கத்தோலிக்க இளைஞர்கள் மற்றும் சமு தாயங்களேச் சேர்ந்த இளைஞர்களோடும் சேர்ந்து உழைத்தல் வேண்டும் - நம் இளைஞர் பரந்த நோக்கும் திறந்த மனமும் உள்ளவராக வளர்வதற்கு இது உதவியாக இருக்கும் அத்து டன் அவர்கள் கிறி ஸ் து வி ன் உண்மையான சாட்சிகளாக விளங்குவதற்கும் இது சந்தர்ப்பம் அளிக்கும்.

Page 17
|- |- ,|- |-|- " |- |-