கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அரசியல் தீர்வின் மூலம் நிரந்தர சமாதானம்

Page 1


Page 2
வெள்ளிச் சிறகடிக்கும் வெண்புறாவே - உன் வரவைக் காணவில்லை வெண்புறாவே நெல்லு மணி பொறுக்கும் வெண் புறாவே - இன்னும் நேரம் வரவில்லையோ வெண் புறாவே
ஒடையில் இப்போ நீர் வழிகின்ற ஒசைகள் கேட்பதில்லை வாடையில் பூக்கும் பூக்களின் வாசம் பாதையில் வரவில்லை கோடைக் காட்சிகளால் கொதிக்கும் உள்ளமெலாம் கோரம் மாறவில்லை கொடுமை தீரவில்லை
(வெள்ளி)
மாலையில் தேனாய் காதினில் விழும் பாடல்கள் கேட்பதில்லை ஒலையில் பேசும் கிள்ளைகள் இன்று ஒன்றையும் காணவில்லை மேகம் இயந்திரமாய் மிதக்கும் காரணத்தால்
தாகம் தீரவில்லை
தனிமை மாறவில்லை
(வெள்ளி)
(எம். எச். எம். ஷம்ஸ்/நிரோஷா விராஜினி)
 
 
 
 

س سے ماموںسےہی سقا ۔ چھ2ے--
ക
அரசியல் தீர்வுமுலம் நிரந்தர சமாதானம்
பத்துவருடங்களுக்கும் மேலாக இடையறாத யுத்தத்தின் கொடுமைகளினால் நீங்கள் அனுபவித்த துன்ப துயரங்கள் இப்போது ஓரளவு ஓய்ந்துள்ளன. இப்போது கிடைத்துள்ள நிம்மதியை நீடித்து நிலைக்கும் சமாதானமாக விஸ்தரித்து அதனூடாக சுதந்திரமாக சிந்திக்கவும் அந்தச் சிந்தனைகளின்படி வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவும் ஆரம்பம் ஒன்றை ஏற்படுத்த முடியும் என்று கருதுகிறோம்.
சமாதானப் பாட்டையின் முன்னணியில்
யுத்தம் என்பது நாம் அங்கீகரிக்கும் விடயமொன்றல்ல. அதனை உயர் பண்பாகவும் கருதமுடியாது. அரசாங்கம் மாத்திரமல்ல, அரசு சார்பாக போரிடும் இராணுவ வீரர்கள்கூட தொடர்ந்து நடத்தவேண்டிய நற்காரியமாக யுத்தத்தை கருதவில்லை. அது சாவையும் பீதியையும் தரவல்லது. இன்றைய அரசாங்கம் பதவிக்குவந்த பின்பு யுத்தத்தை நிறுத்தி அதற்குப் பதிலாக கெளரவமான சமாதானத்தை உருவாக்கவும் பல அர்ப்பணிப்புகளை மேற்கொண்டது. எனினும் எல். ரீ. ரீ. ஈ. இயக்கம் முதல் வேட்டை மாத்திர மன்றி இரண்டாம் மூன்றாம் வேட்டுக்களையும் சுட்டுத்தீர்த்தது. இன்றைய யுத்தத்தின் நிருமாணகர்த்தாக்களும் அவர்களே. இதனால், விரும்பாவிடினும் கூட அரசாங்கம் என்ற ரீதியில் நாமும் யுத்தத்திற்கு முகம் கொடுக்க வேண்டியேற்பட்டது. எனினும் தொடக்கத்தில் சமாதானத்துக்காக மேற் கொண்ட நடவடிக்கையிலிருந்து சற்றும் பின்வாங்காது சமாதானப்பாட்டையில் தொடர்ந்தும் முன்னோக்கி நடைபோட்டது.
நிரந்தர சமாதானத்துக்காக அதிகாரத்தைப் பகிர்வோம்
சமாதானத்தை நிலைநிறுத்தும் தனது வாக்குறுதியை உறுதிப்படுத்தி அதிகாரத்தைப் பரவலாக்கும் அரசியல் தீர்வு யோசனையை அரசு முனி வைத்துள்ளது. அரசின் புறத்திலிருந்து நோக்கும்போது அதிகாரப் பரவலாக்குதலுக்கான அரசியல் யோசனைகளானது சமாதானத்தை வென்றெடுப்பதோடு மட்டுமன்றி, காலங்காலமாக உருவாகியிருந்த துன்ப துயரங்களுக்கு நிரந்தரத் தீர்வினையும் தரக் கூடியதாயுள்ளது. தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதற்கு நியாயமான காரணங்கள் கொஞ்சமேனும் இருப்பின், அதிகாரப் பரவலாக்கல் யோசனை வாயிலாக அந்தக் காரணங்கள் முற்றுமுழுதாக வலுவிழந்துவிடும்.
அதிகாரப் பரவலாக்கல் யோசனை முன்வைக்கப்படும் இந்த சந்தர்ப்பம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் பொருட்டு பாரிய அர்ப்பணிப்புக் கள் மட்டுமல்ல மாபெரும் உயிர்த்தியாகங்களும் மேற்கொள்ளப்படுவதை நாம் அறிவோம் இந்த யோசனைகள் பற்றி உங்கள் உள்ளங்களில் பல கருத்துக்கள்
1
PP 007610—100,000 (96/07)

Page 3
எழுவது உண்மை. வடக்கு கிழக்கில் வாழ்கின்ற உங்களிடம் பெருமைமிக்க வரலாறு, மொழி, சமயம், கலாசார பாரம்பரியங்கள் மற்றும் அபிவிருத்தி தொடர்பாக உங்கள் கண்ணோட்டத்திலான தனித்துவ நோக்கு ஆகியன இருக்கின்றன என்பதை நாம் அறிவோம். உங்களது பண்பாடுகள் வாழ்க்கை இயல்புகள் ஏனையோரின் பண்பாடுகளினாலோ அதிகார பலத்தினாலோ அடிப்படுத்தப்படுவது உங்கள் சுய கெளரவத்துக்கும் களங்கமேற்படுத்துவ தாயமையும். எனவே உங்கள் சமூக, பண்பாட்டு பாரம்பரியங்களை பொருளாதார தனித் துவங்களை மற்றுமொரு அதிகார பலத்துக்கு அடிமைப்படுத்தாது, மாறாக ஐக்கிய தேசமொன்றின் கீழ் அவற்றை உறுதி செய்துகொள்வதற்கான வாய்ப்பை இந்த அதிகாரப் பரவலாக்கல் யோசனை மிக அழுத்தம்கொடுத்து வழங்கியுள்ளது.
உங்கள் நியாயமான பிரச்சினைகளுக்கு மிக நேர்மையானதும் துணிகர மானதுமான தீர்வை முனி வைக்கும் இந்த அதிகாரப் பரவலாக்கல் யோசனையை மிக நிதானமாக அவதானித்தால் அது வரலாற்றிலேயே இதுவரை முன்வைக்கப்பட்ட வேறு எந்தத் தீர்வையுடை மிகவும் முன்னேற்ற கரமான நேர்மையான புது முயற்சி என்பதை நீங்களி புரிந்து கொள்வீர்கள்.
யுத்தத்தின் காரணமாகவே ஏதோ ஓர் இராணுவத்தினர்ழ் நீண்டகாலம் வாழவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அது மாத வாழ்க்கைக்கு கண்ணியத்தையோ நிம்மதியையோ தரமாட்டாது. வாழ்க்கைச் சீர்குலைவு, விரக்தி என்பவற்றினூடாக பாரிய சாபக்கேடே சமூகத்துக்கு ஏற்படுகிறது.
யுத்தமும், யுத்தத்துக்கான உண்மையான காரணங்களும் முடிவுக்கு வருதல் அதிகாரப் பரவலாக்கல் யோசனைகளால் ஏற்படும் முக்கிய விளைவுகளாகும். இதற்கு முன் பல சந்தர்ப்பங்களில் தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்கில் பல்வேறு யோசனைகளும் ஒப்பந்தங் களும் முன்வைக்கப்பட்டதுண்மை.
வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்திலும் இவ்விதம் முன்வைக்கப்பட்ட அனைத்து யோசனைகளும் ஒப்பந்தங்களும் தோல்வியிலேயே முடிந்தன. அனைத்துப் பிரச்சினைகளுக்குமான சரியான தீர்வாக அந்த யோசனைகள் அமையாதது மட்டுமன்றி அவற்றை முன்வைத்த அரசியல் தலைமைத்துவத் திடம் அவற்றை முன்னெடுத்துச் செல்லும் நேர்மையும் திறனும் இருக்க வில்லை என்பதே எமது கருத்து.
அந்த இரண்டுவிதமான பலவீனங்களையும் இந்த அரசியல் தீர்வு யோசனையில் காணமுடியாது. இனப் பிரச்சினை தொடர்பாக சகல கோணங்களிலிருந்தும் ஆய்வு செய்யப்பட்டே இந்த யோசனைகள் முன் வைக்கப்பட்டன. அதேபோனறு சந்தர்ப்பவாத போக்கின்றி முழுமையான அர்ப்பணிப்புடன் இதனை முன்னெடுத்துச் செல்லும் தைரியமும் பொது சன ஐக்கிய முன்னணி அரசின் தலைமைத்துவத்துக்கு உண்டு.
2

சிங்கள, தமிழ் தீவிரவாதிகள் தமது ஆயுதங்களை ஏந்திநின்ற சந்தர்ப்பத் தில், பொதுஜன ஐக்கிய முன்னணி எதிர்க்கட்சியில் இருந்தபோதே வடக்கு கிழக்கு இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வொன்றின் அவசியத்தை துணிவுடன் வெளியிட்டது. இதனை தென் மாகாண சபைத் தேர்தலின்போதும் அதனைத் தொடர்ந்து வந்த பொதுத் தேர்தலின போதும், ஜனாதிபதித் தேர்தலின்போதும் மக்கள் மிகவிரும்பி ஏற்றுக்கொண்டனர். இதன் காரணமாக எந்தவிதத் தயக்கமுமினி றி பொது ஜன ஐக்கியமுன்னணி அரசு தனது வாக்குறுதியின் பிரகாரம் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை முன்வைக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வாய்ப்பினை சதிகார சக்திகளுக்கு அடிபணிய இடம்கொடாது. நடுநிலை சிந்தனையோடு அனைத்து தரப்பினதும் துன்பதுயரங்கள் பற்றியும் அவ்வத் தரப்பினரோடு கலந்துரையாடி அவற்றைப் புரிந்து கொண்டபின்னே இந்த தீர்வு யோசனைகள் முன் வைக்கப்பட்டன.
அதிகாரத்தைப் பரவலாக்கும் இந்த யோசனைகள் வெறும் ஒப்பந்தமோ யாப்புத் திருத்தமோ மாத்திரம் அல்ல அதிகாரபரவலாக்கும் யோசனைகளின் மூலம் முன்வைக்கப்பட்டுள்ள தீர்வுகள் எந்த அரசியல் சட்ட விதிகளினாலும் செயலிழக்கப்படாத விதத்திலேயே தயாரிக்க அரசு செயற்பட்டுள்ளது. இதனாலேயே அதிகாரப்பரவலாக்கல் யோசனைகளுக்குமுற்றும் உடன்பாடான விதத்தில் அவற்றை விருத்தி செய்து பேணும் பாங்கில் யாப்புச் சீர்திருத்தமும் செயல்படுத்தப்படுகிறது. இந்த யாப்புச்சீர் திருத்தத்தின் மூலம் அதிகாரப் பரவலாக்கல் செயற்பாட்டை பாதுகாத்து நிலைநிறுத்த இயலுமாகும்.
அதிகாரப் பரவலாக் கல் யோசனைகளுடன் ஒட்டியதாக முனர் வைக் கப்படுகின்ற யாப்புச் சீர்திருத்தத்தின் காரணமாக சிறுபாண்மையினரின் உரிமைகள் மறுக்கப்படுகின்றநிலைமை முற்றாக ஒழிக்கப்படும். தமிழ் மக்களது சமூக, பண்பாட்டு, உரிமைகள் நிரூபணமாகும் விதத்தில் நடைமுறையில் உள்ள அடிப்படைமனித உரிமைகள் மேலும் வியாபிக்கப்பட்டு மீளாக்கம் செய்யப்பட்டுள்ளது. இனப்பிரச்சினையையை அறிவுபூர்வமாக அணுகித் தீர்த்துக்கொண்ட வளர்ச்சி பெற்ற நாடுகளது முன்மாதிரிகளைப் பெற்று மனித உரிமைகள் சார்ந்த இந்த அத்தியாயங்கள் அரசியல் யாப்பில் உட்புகுத்தப் பட்டுள்ளன.
ஒன்று குவிக்கப்பட்ட மத்திய அதிகாரம் சிறுபாண்மையினரை மோசமாகப் பாதித்துள்ளது என்பது எமது கடந்த கால அனுபவமாகும். இன்றைய நெருக்கடிகளுக்கு இதுவும் ஒருவிதத்தில் அனுசரணையாயிருந்துள்ளது. எண்பது பகிரங்க உண்மை. இந்த உண்மையை யாப்புச் சீர்திருத்தக்குழு அச்சமினி றி ஏற்றுக்கொண்டுள்ளதோடு அதற்கான தீர்வுகள் இந்த அரசியல் தீர்வு யோசனைகள் மூலம் முன் வைக்கப்பட்டுள்ளன.
அரசினது அதிகாரம் மத்திய அரசாங்கத்திடம் தேவையற்றமுறையில் ஒன்று குவிக்கப்படுவதனால் கடந்தகாலங்களில் தமிழ் மக்களது பிரதிநிதிகள் எல்லையற்ற சிரமங்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்தது. நடைமுறையில் உள்ள
3

Page 4
யாப்பினர் ஆறாம் திருத்த விதிகள் மூலம் 1983 இல் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் உட்பட்ட தமிழர் ஐக்கிய முன்னணிப் பிரதிநிதிகள் தமது பாராளுமன்ற ஆசனங்களை இழக்க நேர்ந்தமை இதற்கான சரியான எடுத்துக்காட்டாகும். தமிழ்மக்களின் எண்ணங்கள் எதிர்பார்ப்புகளை மட்டுமன்றி அவர்களது குரலை பாராளுமன்றத்தில் எழுப்புவதற்கும் அதிகாரக் குவிப்பு ஒருதடையாகவுள்ளது. எனவே இன்றுள்ள நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்படுவதோடு அதனோடு உடனொட்டி சிறு பாண்மையினரின் கோரிக்கைகளுக்கு நியாயம் பெற்றுக்கொள்ளும் விதத்தில் பரந்த ஜனநாயக ஒழுங்கொன்று உறுதி செய்யப்படும்.
தமிழ் மக்கள் பல காலமாக நாட்டினி பெரும்பான்மை மக்களோடு ஒன் றாக செயல்பட்டார்கள். நாட்டினி தேசிய சுதந்திரத்தை வென்றெடுக்கும் போராட்டத்தில் சிங்களத்தலைவர்களோடு தமிழ்த் தலைவர்களும் இணைந்து போராடினார்கள். நாட்டின் சிங்களப் பன்ைபாட்டுக்காக தமிழ் அறிஞர்களும், தமிழ்க் கலாச்சாரத்துக்காக சிங்கள அறிஞர்களும், அர்ப்பணிப்புடன் உழைத்த சந்தர்ப்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல, எனினும் தமது கலாசார பாரம்பரிய, வாழ்வியல் மற்றும் அரசியல் எதிர்பார்ப்புகளை சொந்த விருப்பத்தினர் படி ஐக்கிய வரையறைக்குள் நிறைவேற்றிக்கொள்ளும் குழ்நிலையொன றை அமைத்துத் தரும்படி முன்வைத்த கோரிக்கை இனிறு நேற்று இருந்ததல்ல. இந்தக் கோரிக்கைக்கும் எழுபது, எண்பது வருட வரலாறுண்டு. அதிகாரத்தைப் பரவலாக்குவதன் மூலம் கணிசமான அளவு சுயநிர்ணய ஆட்சியே தமிழ் மக்களது கோரிக்கையாக இருந்தது. தனியான ஈழமொன்றுபற்றி அவர்கள் கவனம் செலுத்தவில்லை. தமது நடவடிக்கைகளை பயனுள்ளதாக செய்து கொள்வதற்கு தமிழ் மக்களுக்கு அந்த சுயநிர்ணய ஆட்சிநிலை தேவை. பல காலங்களாக இருந்து வரும் அதிகாரப்பரவலாக்கல் என்னும் நியாயமான கோரிக்கை இந்த அரசியல் தீர்வு யோசனை மூலம் பூரணமாக நிறைவேறுகின்றது.
இதுகாலவரை மத்திய அரசிடம் குவிக்கப்பட்ட அதிகாரம் இந்த அதிகாரப் பரவலாக்கல் சார்ந்த யாப்புச் சீர்திருத்தம் வாயிலாக பிராந்திய சபைகளுக்கு கையளிக்கப்படுகின்றது. இதன் ஊடாக எந்தவித இடைஞ்சலுமின்றி பொது மக்கள் தாம் எதிர்பாத்தபடி அரசியல் செயல்பாடுகளில் இணைந்து ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கிறது. இதன் மூலம் நாடளாவ இருக்கும் இன ரீதியான தனித்துவங்களையும் அந்தந்த பிரதேசங்களுக்குரிய அபிவிருத்தி தேவை களையும் பிழையின்றி புரிந்து கொண்டு அந்தந்த பிரதேச மக்களினதும் தலைவர்களினதும் விருப்பின் பிரகாரம் பிராந்திய சபைகள் மூலம் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு செயல்பாடுகளை கொண்டு நடத்த முடியும். அதிகாரப்பரவலாக்கல் யோசனைகள் அடங்கிய புதிய யாப்புச் சீர்திருத்தம் வாயிலாக இரண்டுபட்டியல்கள் மூலம் மத்திய அரசாங்கத்துக்கும் பிராந்திய சபைகளுக்கு உரிய அதிகாரங்களும் உரிமைகளும் பிரித்துக் கொடுக்கப்படும். நடைமுறையில் உள்ள யாப்பு போலவே பிராந்திய சபை விவகாரங்களை மீறிச்செல்லவோ கட்டுப்படுத்தவோ மத்திய அரசாங்கத்துக்குள்ள இயலுமை ஒழித்துக்கட்டப்படும்.
4.

சட்டம் இயற்றும் அதிகாரம்
அதிகாரப் பரவலாக்கல் யோசனைகள் அடங்கிய புதிய யாப்புச் சீர் திருத்தத்தினால் உருவாக்கப்படும் பிராந்திய சபைகளுக்கு ஆளுநர் ஒருவர், முதலமைச்சர் ஒருவர் உட்பட அந்தந்தப் பிராந்திய மக்களின் விருப்பப்படி உருவாகும் செயல்பாட்டுத் தொகுதியொன்று கிடைக்கப்பெறும். குறித்த பிரதேசத்தில் பல விடயங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் முதலமைச்சருக்குக் கிடைக்கும். அவருக்கும் அவரது அமைச்சரவைக்கும் நிறைவேற்றதிகாரமும் புதிய யோசனைகள் மூலம் கிடைக்கப்பெறும். இதுகாலவரை சட்டமியற்றல் மற்றும் நிறைவேற்றதிகாரம் பாராளுமன்றத்துக்கு மாத்திரமே உரித்துடைய தாயிருந்தது. எனினும் குறித்த பிரதேசத்தின் நிலைமையையும் மக்களினத்தின் உரிமைகளையும் பேணுகின்றவகையில் சட்டமியற்றும் அதிகாரம் குறித்த பிரதேச மக்களால் தெரிவு செய்யப்படும் பிராந்தியசபைக்கு கிடைக்கப்பெறும். பொதுஜன ஐக்கிய முன்னணி அரசு வழங்கும் அதிகாரத்தின் வாயிலாக காலாகாலமாக தமிழ் மக்கள் இழந்திருந்த நீதியும் நியாயமும் கிடைக்கப் பெறாத விரக்தியும் அகன்றுவிடுவதற்கு காரணமாக அமையும். நீதித்துறை அதிகாரம்
தனி நபர்களுக்கு மாத்திரமினி றி, இனங்களுக்கும் நீதி, நியாயம் வழங்கப்படவேண்டும். சிறுபான்மை இனமொன்றில் பிறந்தாலும், வல்லமை கொண்ட சலுகைகள் வாய்க்கப்பெற்ற நபர்கள் நீதியை, நியாயத்தையுப் பெறமுடிந்தாலும் சிறுபான்மை இன மக்கள் அனைவருக்கும் அது ஒரு பொது அம்சமல்ல. அவர்கள் சிறுபான மையினர் என ற காரணத்தினால் இச்சமுதாயத்தில் பெரும்பான்மையினருக்கு உரிய உரிமைகள் நீதி, நியாயம் வழங்கப்படும் விடயத்தில் பாரிய குறைபாடுகள் பல நிகழ்ந்துள்ளன. இந்நிலையை மாற்றி, இன பேதம் பாராது சிறுபான்மையினருக்கு நீதி, நியாயம் சரிசமமாக வழங்கும். அடிப்படை உரிமைகள், அதிகாரத்தைப் பரவலாக்கும் இந்த யோசனைகள் மூலம் நிலை நிறுத்தப்படும். சாமானிய மக்கள் நீதியை நியாயத்தைப் பெறும் வகையில் நீதி நடைமுறைகள் எளிமையாக்கப்படும். மக்கள் விருப்பத்துடன் தெரிவு செய்யப்படும் பிராந்திய சபைகளுக்கு, மாஜிஸ்திரேட் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், மேல் நீதிமன்றம் என்பவற்றை நிறுவும் அதிகாரம் வழங்கப்படும். இது மாத்திரமின்றி மத்தியரசின் ஒரே ஒரு நீதிசார் அதிகாரியான சட்டமா அதிபர் பதவி கூட, ஒவ்வொரு பிராந்திய சபையும் ஒவ்வொரு சட்டமா அதிபரை நியமிக்கும் விதத்தில் பரவலாக்கப்படும். நீதித் தீர்ப்பை எளிமையாக்குவதன் மூலம் பிராந்தியத்தின் சாமானிய மக்கள் நியாயமான நீதித் தீர்ப்பை பெற முடியுமாக இருக்கும்.
நிதி அதிகாரம்
நாட்டிலே பெருகுகின்ற செல்வம் நாட்டுக்குள் சமமாகப் பகிரப்படாததால்
ஏற்படும் பிரச்சினை இன்று நடைபெறும் சமூக அநீதிகளுக்கு முக்கிய
காரணமாகும். செல்வம் பகிரப்படுவதில் சிறுபான்மையினருக்கு கணிசமான
5

Page 5
அநீதி இழைக்கப்பட்டுள்ளதென்பதை ஒப்புக் கொள் வேண்டியுள்ளது. இந்நிலையை ஆழ்ந்து கவனித்த புதிய அரசியல் தீர்வு யோசனை வரைவாளர் கள் செல்வம் சமமாகப் பகிரப்படுவதற்கான நியாயமான திட்டமொன்றை நிலைநிறுத்த வெற்றிகரமான வேலைத்திட்டமொன்றை உருவாக்கியுள்ளார்கள். அதிகாரப் பரவலாக்கல் யோசனையில் விதந்துரைக்கப்பட்டுள்ள நிதி ஆணைக்குழு செல்வம் பகிர்ந்து செல்வதற்கு வெற்றிகரமான தீர்வாகும். நிதி ஆணைக்குழுவில் சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்களுக்குரிய பிரதிநிதிகள் சமமாக அங்கம் வகிப்பார்கள். இதனால் எந்த ஓர் இனத்துக்கும் அநீதி இழைக்கப்படுவதற்கான நிலை தவிர்க்கப்படுகிறது. மூவினத்தையும் சேர்ந்த மக்கள் தத்தமது கலாச்சார, சமூக, பொருளாதார பாரம்பரியங்களுக்கேற்ப, நிதித்தேவைக்கான கோரிகைகளின்படி பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இந்த நிதி ஆணைக்குழு மூலம் கிடைக்கப்பெறுகிறது.
காணி
இனப்பிரச்சினை உருவாவதற்கு காணிப் பிரச்சினை கணிசமான அளவு தாக்கம் செலுத்தியுள்ளது. அதிகாரப் பரவலாக்க யோசனை மூலம் காணிகள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள மானியங்கள், தமிழ் மக்கள் நீண்டகாலமாக முன்வைத்து வந்த கோரிக்கைகளின் பிரகாரம் உருவாக்கப்பட்டதாகும். காணிப் பயன்பாடு தொடர்பாக வடக்கு கிழக்கு மக்கள் முன்வைத்த கோரிக்கைகளை மிக அனுதாபத்தோடு நோக்கி ஆராய்ந்ததன் பயனாக, அது தொடர்பான மானியங்கள் அரசியல் யாப்பிலும் உறுதிசெய்யப்பட்டுள்ளன. இன்றும் வடக்கு, கிழக்கு மக்கள் முகம் கொடுக்கும் பாரிய பிரச்சினை காணி சம்பந்தமாக முறையான அதிகாரங்கள் இருக்காத காரணத்தால் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களினி பொருளாதார அபிவிருத்தி கணிசமான அளவு பின்தள்ளப்பட்டது. இனிமேல் வடக்கு கிழக்கு பிராந்திய சபைக்கு உரிய காணிகள் தொடர்பான கடமைகள் பிரதேச மக்களால் தெரிவு செய்யப்படும் பிராந்திய சபைகளுக்கு வழங்கப்படும்.
சட்டமும் அமைதியும்
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நியாயம் வழங்கும் விடயத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டியுள்ளது. இது காலவரை வடக்கு, கிழக்கு மக்கள் தமது இனத்தைச் சேராத பொலிஸ் அல்லது இராணுவத்தினரின் கீழ், தமது அபிலாஷைகளைப் புரிந்து கொள்ளாத ஆயுதம் தாங்கிய தமிழ் இளைஞர்களின் கீழ் அவர்களது உத்தரவுக்கு அடிபணிந்து கிடக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். எனினும், உத்தேச பிராந்திய சபைகளின் கீழ் தமது இனத்தின் கலாசாரம், மொழி, பழக்க வழக்கங்களைப் புரிந்து கொண்ட பொலிஸ் சேவையொன்றைப் பெற்றுக் கொள்ளும் உரிமை, குறித்த பிராந்திய சபைகளுக்கு வழங்கப்படுகிறது.

எதிர்காலத் தடைகள் நீக்கப்பட்டுள்ளன
வரலாற்றை நோக்கும் போது பெருமையும் இனிமையும் கொண்ட வரலாறொன்று வாய்க்கப்பெற்ற வட, கிழக்கு மக்கள் கண்ணியமாகச் செயல்பட்டதன் மூலம் இலங்கை சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதில் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளார்கள். கடந்த காலங்களில் இருந்த இந்த பரஸ்பர சகோதரத்துவம், அண்மை காலங்களில் சுயலாப அரசியல் காரணமாக அழிவுற்றது. ஓர் இனத்துக்கெதிராக இன்னோர் இனம் ஆயுதம் ஏந்தும் அளவுக்கு மாறியது.
இன்று நடைபெறுகின்ற யுத்தம் உருவாவதற்கு வடக்கு, கிழக்கு மக்கள் சார்ந்த நியாயமான பிரச்சினைகள் காரணமாக இருந்ததை நாம் ஏற்றுக்கொள்கிறோம். நீண்டகாலமாக தீர்க்கப்பட்டாத வடக்கு, கிழக்கு மக்களது பிரச்சினைகள் அனைத்துக்கும் தற்போதைய அரசியல் தீர்வு யோசனைகள் வாயிலாக தீர்வு வழங்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வழங்குவதற்கான தெளிவான மக்கள் சம்மதத்தை தென்னிலங்கை மக்கள் பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு வழங்கியுள்ளனர். அதன் பிரகாரம் முன்வைக்கப்பட்டுள்ள அதிகாரப் பரவலாக்கல் யோசனை களை தோழமை மனப்பானமையோடு ஏற்று அக்கறையோடு படிப்பது உங்கள் கடமை.
இந்த வரைபை உருவாக்கும்போது அரசு தனது சுயவிருப்பை மட்டும் கவனத்திற் கொள்ளவில்லை. இதற்காக நாட்டிலுள்ள சகல அரசியல் மற்றும் பொது நிறுவனங்களையும் பங்குபற்றச் செய்தது எமது வரலாற்றில் பரந்த ஜனநாயக செயல்பாடொன்றைப் பின்பற்றிய ஒரே ஒரு அரசியல்யாப்பு வரைபு இதுவாக இருக்கலாம். அதிகாரத்தை பரவலாக்கும் இந்த தீர்வு யோசனைகள் வாயிலாக திறக்கப்படும் அமைதியினதும் சமாதானத்தினதும் வாய்ப்பை தமிழ் பேசும் மக்களாகிய நீங்கள் இன்று ஏற்றுக் கொள்ளாவிடினி , இந்தப் பிரச்சினைக்கான தீர்வுக்குரிய வரலாற்று முக்கியம் வாய்ந்த வாய்ப்பொன்றை வீணாக புறக்கணித்தவர்கள் ஆவீர்கள். இந்து வாய்ப்பைத் தவறவிடுவது உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் எதிர்கால சந்ததியினருக்கும் நீங்கள் இழைக் கின்ற மாபெரும் அநியாயமாகும்.
அதிகாரத்தைப் பரவலாக்கும் இந்த தீர்வு யோசனைகளை ஆழ்ந்து படிக்கும் நீங்கள், உங்கள் கடந்த கால துன்ப துயரங்கள் அனைத்துக்கும் சிறந்ததொரு பரிகாரம் கிடைத்துள்ளதைக் காண்பீர்கள். கடந்த கால உங்களது துன்ப துயரங்களினால் ஆயுதம் ஏந்திய உங்கள் பிள்ளைகளும் சகோதரர்களும் தொடர்ந்து ஆயுதம் ஏந்துவதற்கு நியாயமான காரணம் எதுவும் எஞ்சியிராது என்பதையும் புரிந்து கொள்வீர்கள். சுயநிர்ணய உரிமை மூலம் கிடைக்கும் சமாதானத் தூதை உங்கள் உற்றார் உறவினரிடையே பரவச்செய்து பொதுஜன ஐக்கிய முன்னணி அரசினால் முன்வைக்கப்படும் அதிகாரப் பரவலாக்கல் யோசனைகளுக்கு அனைவரினதும் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கு செயல்படுமாறு அரசினரும் ஜனாதிபதியும் மிக கெளரவத்தோடு கேட்டுக் கொள்கிறார்கள்.
இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களத்திற் பதிப்பிக்கப்பெற்றது.

Page 6
-
,
.
 ി
!
.
,
·
-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 7
斑疹 etnitů அரசியல் யாப்பு விவகாரம் தொடர்பு நீதிமற்றும் அர்சி కిణ్వ ప్లైకోజడ கொழு
 
 

ܓ-ܠ
ான ஆய்வு மற்றும் தகவல் நிலையம் பல்யாப்ப் விவகார அமைச்சு இறக் கட்டிடத்தொகுதி,
thւ 12