கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிங்களத் தமிழ் முரண்பாடு: இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையையொட்டிய ஓர் அணுகுமுறை

Page 1
হল -
இலங்கையின் தேசிய இனப் ஓர் அணுகுமுறை
 


Page 2

っ){ برط62 دوڑو مملاتنسیخ
وہ حصہ حسر \\ 1
சிங்களத் - தமிழ் முரண்பாடு இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையையொட்டிய ஓர் அணுகுமுறை
இலங்கையில் தேசிய இனங்களின் கூட்டமைவு
இலங்கை பல இன மக்களையும், பல மதங்களை அனுஷ் டிப்பவர்களையும் சனத்தொகையாகக் கொண்டதொரு நாடு. 1981 மார்ச் மாதம் நடத்தப்பட்ட குடிசன மதிப்பீட்டின் பிரகாரம் இத்தீவின் மொத்த சனத்தொகை 1,48,50,001 ஆகும். நாட்டின் மொத்த பரப்பளவு 25, 332 சதுர மைல் (65,610 சதுர கிலோ மீற்றர்) ஆகும். ஆகக்கூடிய துாரம்: வடக்கிலிருந்து - தெற்கு வரை = 270 மைல் ( 435கி.மீ) கிழக்கிலிருந்து - மேற்கு வரை = 140 மைல் (225கி.மீ)
சனத்தொகைக் கூட்டமைவு இன அடிப்படையில் கீழே அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது :
சிங்களவர் 1,09, 85,666 (73.98%) தமிழர் 18,71,535 (12.60%) சோனகர் 10, 56., 972 ( 7.12%) இந்தியத் தமிழர் 8,25, 233 , ( 5. 56 %) LDG) fru. Iri 43,378 ( 0.29%) பறங்கியர் 38,236 ( 0.26%) ஏனையோர் 28,981 ( 0.20%)
மொத்தம் : 1., 48., 50,001
18,71,535 தமிழர்களில் 7,92,246 பேர் மாத்திரமே யாழ்ப்பாணத்தில் வசிக்கிருர்கள். ஏனைய தமிழர்கள் தீவின் ஏனைய பகுதிகளில் அநேகமாக சிங்கள மக்கள் மத்தியில் வாழ்கின்றர்கள்.
இலங்கையில் தமிழர், முஸ்லிம்கள், மலாயர், பறங்கியர் ஆகிய சிறுபான்மை இனத்தவர்கள் வாழ்கின்ற போதிலும், இன்றுள்ள தேசிய இனப் பிரச்சினை முக்கியமாக இத்தீவிலுள்ள பிரதான சிறு பான்மையினரான தமிழர்களைப் பற்றியதாகும். 1981ஆம் ஆண்டின் குடிசன மதிப்பீட்டின் பிரகாரம் மொத்த சனத்தொகையில் தமிழர் ஏறக்குறைய 18.2% வீதமானவர். இந்தத் தமிழ் சிறுபான்மை

Page 3
இனம் இங்கு வாழ்ந்துவரும் இரண்டு தமிழ்ப் பிரிவினரை உள் ள்டக்கியதாகும். சுதேசிய அல்லது இலங்கைத் தமிழர்கள் என அழைக்கப்படக்கூடிய முதலாவது பிரிவினர் சனத்தொகையில் 12. 6% வீதமாகவும், அண்மைக்கால இந்திய வம்சாவளித் தமி ழர்களான அடுத்த பிரிவினர் சனத்தொகையில் 5.6% வீதமாகவும் உள்ளனர். g,
தமிழ் பிரிவுகளுக்கிடையிலான வித்தியாசங்கள் (குழுக்களுக்கிடையிலான வித்தியாசங்கள்)
முதலாவது பிரிவினரான சுதேசியத் தமிழர்கள் அதிகமாக தீவின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் வாழ்கின்ருர்கள். எனினும், பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்காலத்திலிருந்து இத்தமிழர் களில் பலர் (ஒருவேளை இவர்களில் அரைவாசிப்பேர்) சிங்களவர் அதிகமாக வாழும் பகுதிகளில் வாழ்ந்தும் தொழில் புரிந்தும் வரு கிருரர்கள். இந்த வகையில் இலங்கையிலுள்ள ஏனைய சிறுபான் மையினரைப் போன்று இவர்களும் பரந்து வாழ்கின்ற சிறுபான் மையினரெனக் கூறலாம். யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள தமி ழர்களுக்கு மாத்திரம் செல்லுபடியாகத்தக்கதான கோவைப்படுத் திய (தேசவழமை) தனிச்சட்டம் வடக்கில் அமுலில் இருந்து வரு கின்றது. ஆயினும் எண்ணிக்கையில் அதிகம் குறைந்தவர்களான கிழக்கு மாகாணத்துத் தமிழர்களுக்கு இவ்வாருன விசேட சட்டம் எதுவும் இல்லை. இவர்கள் சமூகத்தில் செல்வாக்கும் முக்கியத் துவமும் குறைந்தவர்களெனக் கருதும் மனுேபாவம், மிக அண் மைக்காலம்வரை "யாழ்ப்பாணத் தமிழர்'இடையே நிலவியது. யாழ்ப்பாணம் ஒரு குடாநாடாக இருக்கக்கூடிய வெளிப்படையான புவியியல் காரணியும், தாம் தனி இனத்தவர் என்ற மனப்பான் மையை கட்டியெழுப்ப உதவியாக அமைந்தது. யாழ்ப்பாண மக் களின் குறிப்பிடத்தக்கதொரு அம்சமாக பேணப்படும், பழமை வாய்ந்த இந்துசாதி அமைப்பு முறை இந்த மனப்பான்மைக்கு ஒத்தாசை வழங்கிய ஒரு காரணமாக இருக்கலாம்.
சுதேசியத் தமிழர்கள், அபிவிருத்தி செய்யப்படக்கூடிய வரை யறுக்கப்பட்ட காணிகளுடன், வரண்ட வலயமான வடபிரதேசத் தில் குறிப்பாக வாழ்கின்றவர்கள். வெளிநாட்டிலிருந்து வந்த கிறிஸ்தவ மிஷனரிகளினல் வழங்கப்பட்ட ஆங்கிலக் கல்வியின் முழுமையான பலாபலன்களை, தமது விடாமுயற்சியினலும், திற மையினலும் இவர்கள் பெற்றுக் கொண்டார்கள். இதன் விளை வாக கல்வியறிவுமிக்க தொழிற்றுறைகளிலும், அரசாங்கத்தின் எழுதுவினைஞர் நிறைவேற்றுத்தர துறைகளிலும் இவர்கள் முக்கிய
2 1 ܠܐ ܓ
 
 
 
 

இடங்களை வகித்தார்கள். முக்கியமாக பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின்போது சிங்களவர்களோடு ஒப்பிடுகையில் நாட்டின் சனத் தொகையில் இவர்களது எண்ணிக்கையின் விகிதாசாரத்திற்கும் அதிகமாக இத்துறைகளில் இவர்கள் ஈடுபட்டிருந்தனர். இவ்வாறு முக்கியமான தொழில் வசதிகளைப் பொறுத்தவரை, தமிழ்ச் சமூ கத்தின் நடுத்தர மட்டத்தினரும், உயர்ந்த மட்டத்தினரும் தமது சிங்கள சகபாடிகளைவிட நல்ல நிலையில் இருந்தனர்.
பிரித்தானியரின் ஆட்சியின்போது சிங்கள இனத்தைச் சேர்ந்த நடுத்தர உயர்ந்த மட்டத்தினரும் காணிஉரிமை, கல்வியறிவு மிக்க தொழில்கள், அரசாங்க சேவை உத்தியோகங்கள் போன்ற பொரு ளாதார உறுதியும், சமுதாய உயர்நிலையும் கொண்ட நன்மைகளைப் பெற்று சிறந்த நிலைமையில் இருந்தார்களென்பதும் உண்மையே.
அண்மைக்கால இந்திய வம்சாவளித் தமிழர்கள் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் இந் நாட்டிற்குக் கொண்டு வரப்பட்டார்கள் அல்லது வந்தார்கள். சுதேசியத் தமிழர்களின் உயர்வுக்கு எதிர் மாருக இந்திய சமூகத்தில் இவர்கள் சிறப்புரிமை குறைந்த மட் டத்தினராகவே இருந்தனர். இவர்களுக்கிடையிலும் இரண்டு பகுதியினர் காணப்பட்டனர். முதலாவது பகுதியினர் பிரித்தா னியரினல் தென்னிந்தியாவிலிருந்து இங்கு கொண்டு வரப்பட்டு குறிப்பாக தோட்டங்களில் வேலை செய்யும் தோட்டத் தொழி லாளிகளாவர். இவர்கள் கிராமப் பகுதிகளினல் சூழப்பட்டுள்ள தோட்டங்களில் அமைந்திருக்கும் லயன் அறைகளில் (காம்பராக் களில்) ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக இவர் களுக்கு சுதேச மக்களுடன் ஒன்றிணையக்கூடிய சாத்தியப்பாடுகள் தடுக்கப்பட்டிருந்தன. இரண்டாவது பகுதியினர் வர்த்தகர்களா கவும், வியாபாரிகளாகவும் இந்நாட்டிற்கு வந்தவர்கள். சமீபத் தைய காலம் வரை தமது சிங்கள சகபாடிகளிடமிருந்து கருத்திற் கொள்ளக் கூடிய போட்டியேதும் இல்லாமையினல் மொத்த வியாபாரத்திலும் சில்லறை வியாபாரத்திலும் இவர்கள் முக்கிய பங்கினை வகித்தனர். இந்நிலைமை கடந்த மூன்று தசாப்தங் களுக்குள் குறிப்பிடத்தக்களவு மாற்றமடைந்துள்ளது.
பிரித்தானிய ஆட்சியின் விளைவுகள் பிரித்தானிய ஆட்சி, ஒருமுனைப்படுத்திய பொருளாதார வளர்ச்சியை விருத்தியடையச் செய்தது. இதன் பெறுபேருக எமது நாட்டின் நிருவாகமும் அரசியலும் ஒன்றிணைந்தது. ஒற்றை யாட்சி அமைப்பின் கீழ் பல இனங்களையும், பல மதங்களையும் சமுதாய வெளிப்பாட்டையும் அது கண்டது. எனினும் பிரித்து
3

Page 4
ஆளும் கொள்கையை பிரித்தானியர் தொடர்ந்து கடைப்பிடித்த மையினல், பிரிவினைவாதிகளின் மனுேபாவத்தை உயிரோட்ட முள்ளதாக வைத்திருக்கவும் அது உதவியாயிருந்தது. இது தொடர் பாக வில்லியம் மனிங் தேசாதிபதியின் பங்கு முக்கியமாகக் குறிப் பிடத்தக்கது. ஆயிரத்துத் தொளாயிரத்து இருபதுகளில் அரசி யலமைப்புச் சீர்திருத்தங்களுடன் பிரதேசவாரிப் பிரதிநிதித்துவப் பிர்ச்சினை எழுந்தபோது, புதிதாக உருவாக்கப்பட்ட இலங்கைத் தேசிய காங்கிரஸைப் பலவீனப்படுத்துவதற்காக இத் தேசாதிபதி சிறுபான்மையினரின் உணர்ச்சிகளோடு விளையாடினர் மேல் மாகாணத்தில் தமக்கென விசேட (ஆசனம்) தொகுதியொன்றை உருவாக்க வற்புறுத்துமாறு தந்திரமாக தமிழ்த்தலைவர்களை இவர் ஊக்குவித்தார். அத்தோடு நின்றுவிடாமல், கண்டிய சிங்களத் தலைவர்கள் மத்தியிலும் பிரிவினை மனுேபாவத்தையும் வளர்த்தார். இது எந்த அளவுக்கு வளர்ந்திருந்ததென்றல், 1923 ஆம் ஆண்டு கண்டிய இனவாத இயக்கமான கண்டிய தேசியப் பேரவை, இலங்கைத் தேசிய காங்கிரசுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டதுடன், கண்டியர்களுக்கு பிரதேச சுயாட்சியுடன் கூடிய சமஷ்டி மாநிலம் வேண்டுமென்ற கோரிக்கையையும் 1927 ஆம் ஆண்டில் அது முன் வைத்தது. அதிர்ஷ்டவசமாக குறிப்பிடத்தக்க அர்த்தபுஷ்டியுள்ள எதனையும் மேற்கொள்வதில் இக் கண்டிய பிரிவினை மனுேபாவம் தோல்வி கண்டது.
தேசிய அரசியலும் யாழ்ப்பாண அரசியலும்
இந்தச் சந்தர்ப்பத்தில்தான் சிங்கள தமிழ் அரசியற் தலைவர் களுக்கிடையே இருந்த இணைப்பில் பெரும் பிளவு ஏற்பட்டது. குடியேற்றநாட்டு அரசாங்கத்தினுல் பிரதேசவாரிப் பிரதிநிதித் துவக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதுடன் இந்நிலைமை உரு வாகியது. அதுகாலவரை அதாவது 1920ம் ஆண்டு வரை சிங்கள வரோடு சுதேசிய தமிழர்களை ஒப்புநோக்கும்போது, ஏறக்குறைய ஒரே சமமான சமுதாய நிலையுள்ள ஒரு தனி இனமாகத்தான் பிரித்தானிய அரசு கருதி வந்தது. 懿
வகுப்புவாத அல்லது இனவாரி அடிப்படையில் பிரதிநிதித் துவம் நிலவும் வரை தமிழர்களினதும் சிங்களவர்களினதும் நலன் களுக்கிடையே பிணக்குகள் ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை. இரு இனங்களினதும் தலைவர்கள் தேசிய ரீதியிலான அரசிய லில் உற்சாகத்துடன் ஒத்துழைத்தனர். குறிப்பாக அரசியலமைப் புச் சீர்திருத்தத்திற்கான கிளர்ச்சியில் மும்முரமாக ஈடுபட்டனர். 1919ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை தேசிய காங்கிரஸின்
4.

முதலாவது தலைவராக தமிழரான சேர். பொன்னம்பலம் அரு ணுசலம் இருந்தார். எனினும், பிரதேசவாரிப்பிரதிநிதித்துவம் அறி முகப்படுத்தப்பட்டபின், சேர். பொன்னம்பலம் இராமநாதன், அவரது சகோதரர் சேர். பொன்னம்பலம் அருணுசலம் போன்ற யாழ்ப்பாண அரசியற் தலைவர்கள் ஒன்றிணைந்த தேசிய அரசியற் களத்திலிருந்து ஒதுங்கிக் கொண்டார்கள். இவர்களின் உதவியுடன் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கைத் தேசிய காங்கிரஸிலிருந்து கூட இவ ர்கள் இராஜிநாமாச் செய்தார்கள். மிகக் கூடுதலான சிங்கள சனத் தொகையின் எண்ணிக்கை காரணமாக இனவாரிப் பிரதிநிதித்துவத் திற்குப் பதிலாக பிரதேச பிரதிநிதித்துவம் அறிமுகப்படுத்தப்படு வதை இவர்கள் சிறிதேனும் விட்டுக்கொடாதுஎதிர்த்தார்கள். முன் னைய இனவாரிப்பிரதிநித்துவ முறையின் கீழ் தமிழர்கள் அநுபவித்து வந்த சலுகைகளையும், சிறப்புரிமைகளையும் இழப்பது நிச்சயமா யிற்று. தேசிய நோக்குடன் யாழ்ப்பாணத்தில் இயங்கிய இளைஞர் இயக்கமொன்று தென்னிலங்கையிலிருந்த இ.சாரி இயக்கத்துடன் தொடர்ந்து தொடர்பு கொண்டிருந்த போதிலும், யாழ். குடா நாட்டின் நீண்டகால அரசியல் நடவடிக்கைகளில் இவ்வியக்கம் தோல்வி கண்டது. வயதுவந்தவர்களுக்கான சர்வசன வாக்குரி மையை அறிமுகப்படுத்திய டொனமூர் அரசியற் சட்டத்தை எதிர்க்கும் நோக்குடன் தமிழ் அரசியற்தலைவர்கள் 1931ஆம் ஆண் டின் பொதுத்தேர்தலை பகிஷ்கரித்தனர். எனினும் இது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. சனநாயக அரசின் முக்கிய அங்கமான வயதுவந்தவர்களுக்கான சர்வசன வாக்குரிமையின் கீழ் சிறுபான்மையினருக்கு பாதகம் ஏற்படுமென அச்சம் உண் டானது. இந்த அச்சத்தைத் தவிர்ப்பதற்குரிய பாதுகாப்பான எந்தவொரு நியாயமான தீர்வை காண்பதிலும் இவர்கள் தோல்வி கண்டார்கள். டொனமூர் அரசியற் சட்டத்தின் கீழ் 1936ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலுக்குப் பின்னர் சிறுபான்மை சமூகத்தவர்களின் பிரதிநிதித்துவம் இல்லாத சிங்களவர்களையே முழுமையாக கொண்ட அமைச்சர் சபையை திரு. டி. எஸ். சேனநாயக்க உருவாக்கியது நிலைமையை மேலும் மோசமாக்கியது. இந்நடவடிக்கை "வகுப்புவாத" அரயசிலுக்கு மேலும் தூபம் இட்டது. இக்காலத்தில் சிங்கள மகாசபை என்ற உறுதியான வகுப்புவாத இயக்கமொன்றை திரு. எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்க ஸ்தாபித்தார். அதே நேரத்தில் திரு. ஜி. ஜி. பொன்னம்பலம் தமது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் மூலம், பெரும்பான்மை சமூகத்திற்குரிய பலத்தைப் போன்று எல்லா சிறுபான்மை சமூகத்தினருக்கும் கூட்டாக உறுதியான சம பலம் இருக்க வேண்டுமென்ற தனது ஐம்பதுக்கு ஐம்பது என்ற விகிதாசாரக்கோரிக்கையை முன்வைத்தார்.
5

Page 5
1947ஆம் ஆண்டு நாட்டின் எல்லா சமூகத்தவரையும் பிரதிநிதித்து வப்படுத்துவதாகக் கூறிக்கொண்ட உள்நாட்டு பூர்ஷ்வாக்களின் புதிய அரசியல் அங்கமாகிய ஐக்கிய தேசிய கட்சியிடம் பிரித்தா னிய அரசு அதிகாரத்தை முழுமையாக கையளித்தது.அதன் பின் னர், சனத்தொகையில் 70வீதத்திற்கும் அதிகமான சிங்களப்பெரும் பான்மையினரின் பூர்ஷ்வாப் பிரிவினர், முன்னர் எதிர்ப்பார்த்த வாறு சில அரசியல் அதிகாரங்களை தமதாக்கிக்கொள்ள முன்வந்த னர். சிங்களத் தமிழ் தேசிய பூர்ஷ்வாக்கள் ஒன்றிணைந்த தலைமைத் துவத்தின் கீழ் ஏற்பட்ட பரந்த அடிப்படையிலான மக்கள் இய க்கத்தின் போராட்டத்தினல் சுதந்திரம் வழங்கப்படவில்லையென் பது இங்கு குறிப்பிடத்தக்கது. எனவே, இந்நாட்டின் பெரும் பான்மையினரான சிங்கள பெளத்தர்கள் காலனித்துவ ஆட்சியில் அநுபவித்த இன்னல்களினது தாக்க உணர்வுகள் சுதந்திரத்திற்கு பின் தலைதூக்கியது. எனவே சிங்கள மொழி, பெளத்த மதம் ஆகியவற்றின் மூலம் தமது தனித்துவத்தையும் சுயமரியாதை யையும் பெறவேண்டுமென அவர்கள் எண்ணியது வியப்புக்குரிய தல்ல. திரு. ଜtଜୀର୍ଥ, டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்காவும் அவரது பூரீலங்கா சுதந்திரக்கட்சியும் இதனை மிக சாதகமாக பயன் படுத்தினர். அன்றும் இன்றும் எமது சமுதாயத்தில் பலம் வாய்ந்த சக்தியாக காணப்படும் சிறு முதலாளி வர்க்கத்தின் தாக்கமே இதற்கு காரணமாகும். குறிப்பாக இந்த நிலைமைதான் சிங்கள வர்கள் தமிழர்கள் மத்தியில் 'வகுப்புவாத" அரசியல் மனே பாவத்தை முற்றுமுழுதாக ஏற்படுத்த உதவியது. ஆங்கிலம் அரச கரும மொழி என்ற நிலைக்குப்பதிலாக சிங்களமும் தமிழும் அரச கரும மொழிகளாக இருக்கவேண்டுமென எல்லா அரசியற்கட்சி களும் ஏற்றுக்கொண்டிருந்த கொள்கையை 1956ஆம் ஆண்டு திரு. எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்காவின் சிங்களம் மட்டும் என்ற கூக்குரல் மாற்றியமைத்ததை இது தெளிவாக சித்தரிக்கின்றது.
சிங்கள-பெளத்த இனவாதக் கூக்குரலுடன் திரு. எஸ். டபிள்யு. ஆர் டி. பண்டாரநாயக்க ஆட்சியைக் கைப்பற்றினர். அதன் பின்னர் பதற்றமும் பிணக்குகளும் உச்சக்கட்டத்தை அடைந்து 1958ஆம் ஆண்டு முதன் முதலாக சிங்கள-தமிழ் பகிரங்க மோதலுக்கு வழிவகுத்தது. ஆனல் இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக திரு.பண்டாரநாயக்காவே 1957இல் தமிழ்த் தலைவர் திரு. எஸ். ஜே. வி. செல்வநாயகத்துடன் உருக்குலைந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த முனைந்தார். இவ்விதமானதொரு தீர் வை பெளத்த பிக்குகள், பண்டாரநாயக்க அரசாங்கத்தின் ஆத
6
 
 
 

ரவாளர்கள், ஐக்கிய தேசியக் கட்சித்தலைவர்கள், குறிப்பாக திரு. ஜே.ஆர். ஜயவர்தன போன்ற பல்வேறு சக்திகள் எதிர்த்தனர். பண்டாரநாயக்காவின் "சிங்களம் மட்டும் கொள்கை விளைவாக ஆங்கிலத்திற்குப் பதிலாக சிங்கள மொழியை அரசகரும மொழி யாக பாராளுமன்றம் அமுல்படுத்தியதால், காலனித்துவ ஆட்சி யில் ஆங்கிலம் மட்டும் நிர்வாக மொழியாக இருந்த போது தமிழர்கள் அநுபவித்த வரப்பிரசாதங்களையும் சலுகைகளையும் இழக்க செய்தது. எனவே, அமெரிக்க கறுப்பர்களை போன்றும், இலங் கையிலுள்ள இந்திய வம்சாவளித் தோட்டத்தொழிலாளர்களை போன்று, அவ்வகையில் இலங்கையின் சுதேசியத் தமிழர்களும் நசுக் கப்பட்ட சிறுபான்மையினராயினர்கள். சிங்களம் மட்டும் சட்டம் அமுலாக்கப்பட்ட காலந்தொட்டு சுதேசியத் தமிழர்கள் கல்வியிலும் தொழில் வாய்ப்பிலும் பாதிப்புகளுக்கு ஆளானர்களென்பதை எவ்வகையிலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. ஆகவே, அந் நாட்டின் நிர்வாகத்தில் தமது மொழிக்கு உரித்தான இடத்தை பெற்று பாரம்பரிய உரிமையுடனும், சுயமரியாதையுள்ள இன மாகவும் வாழவேண்டுமென்ற யதார்த்த பூர்வமான விருப்புக்களில் மாறுபட்ட கருத்தெதுவும் இருக்க முடியாது. குறுகிய மனப்பான் மையுள்ள சிங்கள அரசியல்வாதிகளுக்கும், யாழ்ப்பாண அரசியல் வாதிகளுக்கும் இடையிலான தற்போதைய பிணக்கு, வியாபாரம், வர்த்தகம், தொழில் போன்ற துறைகளில் போட்டியிடும் தமது சமுதாயத்தின் நடுத்தர உயர் மட்டத்தில் உள்ளவர்களின் நலன் களைப் பேணுவதாக அமைந்துளது. இச்சூழ்நிலையில் சிங்களத் தமிழ் பூர்ஷ்வாத் தலைவர்களிடையே அரசியல் மேதாவிலாசமின்மையும், சொந்த போட்டி பொருமையும் திறமையின்மையும், தொடர்ச் சியான அரசியல் வங்குரோத்தும் இவர்களால் இப்பிணக்குகளைத் தீர்க்க முடியாது என்பதை எடுத்துக்காட்டின. சிங்களத் தொழி லாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் யாழ்ப்பாணத்திலுள்ள அவர் களது தமிழ் சகபாடிகளுடன் அடிப்படை முரண்பாடு எதுவும் இல்லாமலிருந்தபோதிலும் தீவிரமான வகுப்புவாத அரசியலினுல் உருவான தமிழ் ஈழக் கிளர்ச்சியும் தொடர்ச்சியான சம்பவங்களும் குறிப்பிடக்கூடிய அளவு சிங்களப் பாட்டாளி மக்களின் மத்தியில் பயங்கரமான வகுப்புவாதத்தையும், இன உணர்வுகளையும் தூண்டு வதில் வெற்றி பெற்றது.
வளர்ந்து வரும் பிணக்குகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, வகுப்பு வாத பிரச்சினைகளைத் துஷ்பிரயோகப்படுத்தி சிங்களத்-தமிழ் அர சியற் தலைவர்கள் 'அரசியற் சதுரங்க விளையாட்டில்’ அதிக கவ னஞ்செலுத்தும் மனுேபாவத்தை கட்சி அரசியல் போட்டி ஊக்கு வித்தது.

Page 6
சோல்பரி அரசியலமைப்பின் கீழான புதிய பாராளுமன்ற நடைமுறை திரு. ஜி. ஜி. பொன்னம்பலத்தையும் அவரது அகில இலங்கை தமிழ் காங்கிரஸையும் எதிர்க்கட்சியில் அமர்த்தியது. ஆனல், ஒரு வருடத்திற்கிடையில் திரு. பொன்னம்பலம் அவரது உபாயத்தை மாற்றி திரு. டி. எஸ். சேனநாயக்கவுடன் இணைந்து ஐக்கிய தேசிய கட்சி (யூ. என். பி.) அரசாங்கத்தில் சேர்ந்து கொண்டார். எனினும் அண்மைக்கால இந்திய வம்சாவளியின ரான த்ோட்டத்தொழிலாளர்களின் குடியுரிமைகளை பறிக்கும் பிரசாவுரிமைச்சட்டத்தினை திரு. டி. எஸ். சேனநாயக்க அறிமுகப் படுத்தியதை அடுத்து தமிழ் காங்கிரஸில் பிளவு ஏற்பட்டது. திரு.ஜி. ஜி. பொன்னம்பலம் இதற்கு எதிராக வாக்களிக்காததை அடுத்து திரு. எஸ். ஜே. வி. செல்வநாயகமும் அவரை பின் பற்றியவர்களும் தமிழ் காங்கிரஸினின்றும் விலகி தமிழரசுக்கட் சியை ஆரம்பித்து தமிழ் மக்களின் தலைமைத்துவத்தைப் படிப் படியாக உயர்த்திக்கொண்டனர். எத்தகைய சந்தர்ப்பவாத இலா பங்களையும் எதிர் நோக்கியிருக்கும் சிங்கள பூர்ஷ்வா அரசியல் வாதிகளைப்போலவே பொன்னம்பலமும், செல்வநாயகமும் சிங்கள பூர்ஷ்வாத்தலைவர்களுடன் பேரம் பேசுவதில் எவ்வகையிலும் பின் நிற்கவில்லை. இதன் விளைவான டட்லி - செல்வநாயகம் இரகசிய உடன்படிக்கையின் பிரகாரம் 1965இல் திரு. திருச்செல்வம் டட்லி சேனநாயக்காவின் யூ. என். பி. அமைச்சரவையில் பதவி யேற்க வழியமைத்தது. எனினும் மாவட்ட சபைகளை அறிமுகப்படுத்து வதென்ற டட்லி சேனநாயக்கவின் ஆலோசனைக்கு பூரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையில் இயங்கிய எதிர்க்கட்சி உறுப் பினர்களும் கூட எதிர்ப்புத்தெரிவித்தமையால் இதுவும் கைகூட வில்லை. வர்க்கரீதியிலமைந்ததான தமிழரசுக்கட்சியின் அரசியல் போக்கு தமிழ் மக்களின் நியாயபூர்வமான கோரிக்கைகளை மனி தாபிமான முறையில் இணக்கம் காண்பதனை நோக்காகக்கொண் டிருந்த இடதுசாரிகளுடன் கூட எவ்வித ஒப்பந்தத்தினையும் செய்து கொள்வதில்லையென்ற நிலைக்குத் தள்ளியது. பாடசாலைகளை அர சாங்கம் பொறுப்பேற்றல், நெற்காணிச்சட்டம், காணிச்சீர்திருத்த ம் போன்ற முன்னேற்றகரமான தேசியமயமாக்கும் திட்டங்களை ஐ.தே.கட்சியுடன் சேர்ந்து எதிர்ப்பு காட்டியமை மூலம் தமிழரசுக் கட்சித் தலைவர்கள் அவர்களது வர்க்கரீதியிலான அரசியலின் உண் மையான ரூபத்தினை மேலும் வெளிக்காட்டியதுமன்றி முற்போக் குப் பிரிவினைச் சேர்ந்த அநேக சிங்கள மக்களின் நல்லெண்ணத்தை இழந்தனர். 1970ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பாரளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் தெரிவு செய்யப்பட்ட பூரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை யிலான ஐக்கிய முன்னணியின் ஆட்சியின் போது, எத்தகைய
8
 
 

இலாபங்களையும் பெறத்தவறிய தமிழரசுக் கட்சியினர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினை (T.U.L.F.) நிறுவியதுடன் அண்மைக்கால இந்திய வம்சாவளியினரான தோட்டத் தொழி லாளரைப் பிரதிநிதித்துவப் படுத்தும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் (C.W.C) தலைவரான திரு.எஸ்.தொண்டமானுடனும் சிறிதுகாலம்வரை இணைந்திருந்தனர். 1972ஆம் ஆண்டு ஐக்கிய முன்னணி அரசாங்கம் அதன் குடியரசு அரசியலமைப்பை ஆக்கிய போது, அக்கூட்டமைப்பில் அங்கம் வகித்த இடதுசாரிகளுக்கு பெரும்பான்மையினராகவிருந்த பூரீ. ல.சு.க.யின்சிங்கள-பெளத்த வெறியை எதிர்த்து தமிழ்ச் சிறுபான்மையினரின் உரிமை களுக்குப் பாதுகாப்பளிக்க துரதிர்ஷ்டவசமாக இயலாமற் போனது. மாருக, இந்த அரசியலமைப்பில் பெளத்த மதத்திற் கும் சிங்களத்திற்கும் விசேட இடம் அளித்தமை, உண்மையில், சிறுபான்மையினரான தமிழரைப் பொறுத்தவரையில் பெளத்த மதத்திற்கும் சிங்கள மொழிக்கும் அரசியலமைப்பு ரீதியாக வழங்கப்பட்ட உறுதிப் பாடாகவே தோன்றியிருக்கும். ஆகவே அடுத்தடுத்துப் பதவிக்கு வந்த அரசாங்கங்கள் தமிழ் மக்களின் கோரிக்கைகளைத் தட்டிக்கழித்தமையால், 1976ஆம் ஆண்டில் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈழம் என்ற தனிநாட்டுக்கான ஒரு தீவிரக் கோரிக்கையை முன்வைத்தது. ஈழத்திற்கான கோரிக்கை கவனமாகப் பரிசீலிக்கப்பட்டு அது சாத்தியமான வழி என்ற உறுதியுடன் முன்வைக்கப்பட்டதா அல்லது மேற்கொண்டு அர சியற் பேரம் பேசுவதற்கான வழியாக முன்வைக்கப்பட்டதா என்பது சந்தேகத்திற்கிடமாகவுள்ளது. எனினும் இது விபரீத மான விளைவுகளை ஏற்படுத்தியது. முன்பை விட இது சிங்கள மக்களின் மனதில் அதிகமான பகைமை உணர்வை உண்டாக் கியதுடன் இணக்கமொன்றைக் காணுவற்கு மேலும் தடைகளை உருவாக்கியது. 1977ஆம் ஆண்டில் ஐ.தே.க. இனதும், ஜே.ஆர். ஜயவர்த்தனவினதும் பெருவெற்றிக்கு, விசேடமாகத் தெற்கில் தமிழ்மக்கள் அளித்தவாக்குகள் துணைபுரிந்ததிலிருந்து பூரீ, ல.சு. கட்சியின் மீதும் ஐக்கிய முன்னணியின் மீதும் அவர்களுக்கிருந்த வெறுப்பைத் தெரிந்துகொள்ளலாம். எனினும் 1980ஆம் ஆண்டில் நடைபெற்ற பொது வேலைநிறுத்தம் நசுக்கப்பட்டு பொதுமக்கள் மீதான அரசாங்க ஒடுக்குமுறை அதிகரிக்கவே த. வி. கூ. சிறிமா வோ பண்டாரநாயக்காவின் பூரீ, ல.சு.க. உட்படப் பல எதிர்க்கட் சிகளுடன் சேர்ந்து பொதுவான ஐ.தே.கட்சிக்கெதிரான அணி யில் செயற்பட்டது. இதன் விளைவாக, முதல் முறையாக, பூரீ, ல.சு.க. மாவட்டசபைத் தேர்தலைப் பகிஸ்கரித்தபோதிலும், திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் த.வி.கூ. அபேட்ச கர்களுக்கு ஆதரவளித்தது. ஆனல் இதன் பின்னர் த.வி.கூ.
9

Page 7
ஜனதிபதி ஜயவர்த்தணுவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவிரும் பியதனுல் , இம்முன்னணி சிறிது காலத்தின் பின் சிதைந்தது.
பேச்சுவார்த்தைகளால் திருப்திகரமான பயன் கிடைக்கவுமில்லை.
அண்மைக்காலத்தில், த.வி.கூ கொள்கைகளை வெளிப்படை யாகக் கண்டித்து வந்துள்ள புரட்சிகர இளைஞர் பிரிவுகளின் பலத்த வற்புறுத்தலுக்கு த.வி.கூ தலைமை உள்ளாகியுள்ளது. யாழ்ப் பாணத்திலுள்ள படித்த வாலிபர்களால் தலைமை தாங்கப்படும் இப்பிரிவுகளின் சமூக அடிப்படை 1971 ஆம் ஆண்டு ஏப்பிரலில் தெற்கில் கிளர்ச்சியில் ஈடுபட்ட இளைஞர்கள் தோன்றிய சமூக அடிப்படையை ஒத்ததாக உள்ளது. சிங்கள இளைஞர்களைப் போலவே தமிழ் இளைஞர்களும் தமது வாழ்க்கை நிலைமைகளால் உண்டான அதிருப்தியினலும் விரக்தியினலும் தீவிரவாதப் போக்கினைக் கொண்டிருப்பதோடு, குறிப்பாக, தமது குறுகிய யாழ்ப்பாணக் குடாநாட்டு அரசியலால் வரையறுக்கப்பட்ட குறிக் கோளையும் அபிலாஷைகளையும் கொண்டவர்களாக உளர். மேலும், வடக்கிலும் கிழக்கிலும் உழைக்கும் வர்க்கத்தின் வலிமை குன்றி யுள்ளதால் இவ்வியக்கங்கள் நடுத்தர வர்க்கத்தின் வரையறை களுக்கு அப்பாற் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இக் காரணத்தினுல்தான் இவ்விளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராடு வதே விடுதலைக்கான வழியென நம்பி அத்தகைய நடவடிக்கைளில் ஈடுபட்டு, பயங்கரவாதிகள் என்ற குற்றச்சாட்டுக்கும் இலக்காகி யுள்ளனர். -
மேலும், இவ்விளைஞர்களின் விடுதலைப்போராட்டம் பிரிவினை, ஈழம் என்பவற்றை குறிக்கோளாகக் கொண்ட குடாநாட்டு அரசி யலினல் உருவாக்கப்பட்டும் நிர்ணயிக்கப்பட்டும் இருக்கின்றது. இதனல், சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் தெற்கில் நசுக்கப்பட்டோரையும் ஒன்று திரட்டி, தேசிய ரீதியில் நசுக்கப் பட்டோரது உண்மையான விடுதலைக்கான இயக்கமொன்றை வளர்ப்பதற்கான வாய்ப்புக்கள் தடைப்பட்டுள்ளது. எவ்வா றெனில், பிரிவினை அரசியலும், ஈழத்திற்கான கோரிக்கையும், பிற்போக்கு அரசியல்வாதிகளுக்கே உதவுகின்றன. மக்கள் சக் தியை இனப்பிரச்சினையின்மீது திசைதிருப்பி விடுவதன் மூலம் உண்மையான விடுதலைப் போராட்டமொன்றிலே சிங்கள தமிழ் மக்களிடையேயுள்ள முற்போக்குச் சக்திகள் ஒன்றுபட்டுச் செயற் பட முடியாத நிலையை உருவாக்கியுள்ளது. அதுமட்டுமன்றி, தனிநாடொன்றைக் கோரி ஆயுதப்போராட்டம் நடத்துவது, அரசாங்கத்திற்கு அதன் பலத்தைப்பெருக்கி அடக்குமுறை ஆட் சியை மேலும் அதிகரிப்பதற்கு ஒருசாட்டாக அமைந்துவிடுகிறது.
10

எப்போதுமில்லாதவாறு இந்துசமுத்திரத்தில் கேந்திரமையமெனப் பலநாடுகள் போட்டி போடுகின்ற திருகோணமலையை பயன்படுத்தி நிலைபெறும் நோக்கத்துடன் ஏகாதிபத்தியச் சக்திகள் இவ்விடயத் தில் தலையிடுவதற்கான வழிமுறைகளையும் இது உருவாக்கியுள்ளது.
அண்மைக்கால இந்திய வம்சாவளித் தமிழர்களின் நிலை
இலங்கையில் வாழுகின்ற இந்திய வம்சாவளித் தமிழர்களில் பெரும்பான்மையானேர் தோட்டத்தொழிலாளர்களாவர். இந் நாட்டிலேயே அதிகமாகச் சுரண்டப்படுவதும், புறக்கணிக்கப்படு வதுமான இந்த இனம் அதன் உழைப்புக்குக்கூட நன்றி கூற யாருமற்ற நிலையிலே உழைத்துக் கொண்டிருக்கிறது. அரசியல் ரீதியில் இவர்களுக்கு வேண்டுமென்றே பாரபட்சம் காட்டப்படு கிறது. சமூகரீதியில் பார்க்கும் பொழுது, ஒன்றுதிரட்டப்பட்டு, தோட்டங்களிலே அடிமைத் தொழிலாளிகளாக ஒதுக்கிவைக்கப் பட்டு, மனிதாபிமானமிழந்து வாழ்ந்து கொண்டிருக்கிற இவர்கள், இந்த நாட்டு மக்கள் தொகையிலிருந்து புறம்பாக்கப்பட்டபிரிவினர் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
சுதந்திரம் வழங்கப்பட்டதும், 1948-49 ஆம் ஆண்டுகளில் ஆக்கப்பட்ட பிரஜாவுரிமைச் சட்டங்களினல், இத்தொழிலாளர் களிற் பெரும்பான்மையோரின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. பிரதம மந்திரி டீ.எஸ். சேனநாயக்க இச்சட்டங்களை அறிமுகம் செய்ததன் உள்நோக்கம், உண்மையான தேசிய உணர்ச்சியென்ற வகையில் காட்டப்பட்ட இந்திய விரோதக் கொள்கை மட்டுமன்றி அவர் பிரதிநிதித்துவப்படுத்திய முதலாளித்துவ வர்க்கத்தின் நலனும் இதற்கான காரணமாகும். அன்மைக்கால இந்திய வம்சா வளியினரில் பெரும்பான்மையானுேர் தொழிலாளர்களாக இருப்பது முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களுக்கும் பெரும் ஆபத்தாக அமைந்துவிடுமென எண்ணப்பட்டது. உண்மையில் 1947 பொதுத் தேர்தலில், இத்தொழிலாளர்கள் இலங்கை இந்தியக் காங்கிரஸ் என்ற தமது அமைப்புக்கூடாக 7 உறுப்பினர்களைத் தெரிவு செய் தனர். இவ்வுறுப்பினர்கள் ஐ.தே.கட்சிக்கெதிரான எதிர்க்கட்சியில் இடது சாரி அல்லது ஐ.தே. கட்சிக்கு அரசியல்ரீதியில் எதிரான மற்றும் 14 பேருடன் இணைந்தனர். இவ்விதமாக, தோட்டத் தொழிலாளரான பெருந்தொகை மக்கள் இன்று நாடற்றவர் களாக்கப்பட்டு இந்த நாட்டில் வெளிநாட்டவர் போன்று வாழ வேண்டிய நிலைமை உருவாக்கப்பட்டிருக்கிறது. அண்மையில் செய்துகொள்ளப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தங்களின் பயணுக 300,000 பேருக்குப் பிரஜாவுரிமை கிடைத்துள்ள போதிலும்,
II

Page 8
இன்னும் ஏறத்தாழ 400,000 பேர் நாடற்றவர்களாகவுள்ளனர். சமூகத்துறையில், இந்நாட்டுச் சிங்கள மக்களின் நலன்களை இத் தொழிலாளரின் நலன்கள் எவ்விதத்திலும் பாதிக்காதபோதிலும் இக்கவலைக்கிடமான நிலை தொடர்ந்தும் இருந்து வருகிறது. இவர் கள், சிங்களத் தொழிலாளர்களுடனே, விவசாயிகளுடனே எந்த வித தொழிலுக்கும் போட்டிபோடவில்லை. பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் கண்டிய மாவட்டங்களில் பாரம்பரியமாக, கிராமங் களுக்குரியனவாயிருந்த காணிகள் சில தோட்டங்களை அமைப் பதற்குப் பயன்படுத்தப்பட்டது உண்மைதான். தோட்டங்கள் அமைக்கப்பட்டு தமிழ்த் தொழிலாளர்கள் வந்தவுடன் தென்னிந் திய வர்த்தகர்களும், பணம் கடன் கொடுப்போரும் வந்தனர். இவர்கள் தமிழ்த் தொழிலாளர்களையும் சிங்களக் கிராமத்தவர் களையும் ஒரேவிதமாகவே சுரண்டினர். இவ்வகையாக இவர்கள் இந்திய எதிர்ப்பு உணர்ச்சி உருவாவதற்குக் காரணமாயிருந்தனர். இவ் எதிர்ப்புணர்ச்சி வகுப்புவாதச் சக்திகளால் தோட்டத்தொழி லாளருக்கெதிராகவும் திருப்பப்பட்டது. தோட்டத் தொழிலாளர் களது வாக்குரிமை பறிக்கப்பட்டதன்பின், சிங்களவர்களுக்குச் சொந்தமான நிலத்தில் அத்துமீறிப் பிரவேசித்துள்ள ஓர் அந்நிய சக்தியென இவர்களுக்குப் பெயர் சூட்டுவது, இனவெறிகொண்ட, சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளுக்குக் கஷ்டமானதொரு காரிய மாக இருக்கவில்லை. இவ்வகையில், கொள்கையற்ற இனவாத சிங்கள அரசியல் வாதிகள், அண்மைக்காலத்திற்கூட, அதாவது 1973ஆம் ஆண்டில் நிலச்சீர்திருத்தத்தின் போதும், 1977ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து அவர்களது இனவாதத்திற்கும், இனத் துவேசத்திற்கும் தோட்டத் தொழிலாளரை பலிப்பொருளாகப் பயன்படுத்தினர். 1977 இனக்கலவரங்களைத்தொடர்ந்து ஏறக் குறைய 40, 000 இந்திய வம்சாவளியினர் வவுனியா மாவட்டத் திற்கு ஓடினர். இவர்களிற் சிலர் அரசாங்கத்தினலே அங்கு கொண்டு செல்லப்பட்டனர். வேறு சிலருக்குப் புதிதாக வாழ்க்கை தொடங்குவதற்கு சில தொண்டர் தாபனங்கள் உதவின. விவ சாயத் தொழிலாளிகளாக இருந்த இவர்களிற் பலர் சொந்த நிலத் தில் பயிரிடும் கமக்காரர்களாக மாறியுள்ளனர். அரசாங்கத்தைப் பொறுத்தளவில், பிரசாவுரிமையுடையோருக்குக் காணி வழங்கி யுள்ளதுடன் 1979 மார்ச் 31ஆந்தேதிக்கு முன்னர் பிரஜாவுரிமை யற்றேர் அத்துமீறிக் குடியேறிய நிலங்களையும் சீராக்கியது. எனினும் 1983 ஜூலை படுகொலைக்குப் பின்னரும் அதற்கு முந்திய மாதங்களிலும், அத்துமீறிக் குடியேறியோர் எனக் கருதப்படுபவர் களை படையினரும், பொலிசாரும் பலவந்தமாக வெளியேற்றி வந்துள்ளனர். இது இனவாத உணர்ச்சியை வளர்ப்பதற்கே உதவுகிறது. ' ,
2

அண்மைக்கால இந்திய வம்சாவளியினரான தோட்டத்
தொழிலாளர்களிடையே வளர்ந்து வந்த தொழிற்சங்கத்தின் போக்கும் நாட்டின் ஏனைய தொழிலாள வர்க்கத்தினருடனன
தொடர்புகளைப் பலவீனப்படுத்துவதாகவே அமைந்தன. பிற்
போக்கு அரசியல்வாதிகள் தங்களது சந்தர்ப்பவாத இலக்குகளை
அடைவதற்கு இந்நிலைமையைப் பயன்படுத்துவதற்கு மட்டுமே
இது உதவியது. இவ்வியக்கத்தின் கர்த்தாவாகிய கே. நடேச ஐயர் முதலில் 1920ஆம் ஆண்டுக்காலத்திலிருந்து மற்றுமொரு தொழிற்சங்கக் கர்த்தாவுடன் இணைந்து செயற்பட முயன்றர்.
இனவாதம் தலைதூக்கியதனுல் இம்முயற்சி இடையிற் கைவிடப்
பட்டது. மேலும், காந்தி, நேரு போன்ற இந்தியக் காங்கிரஸ்
தலைவர்களின் பெயர்களுடன், நடேச ஐயர் 'சங்கங்கள்' அமைத் தார் : இவ்வகையில், பாக்கு நீரிணைக்கப்பாலுள்ள இந்தியக் காங் கிரஸை இவர்கள் பின்பற்றினர். எனினும் 1930ஆம் ஆண்டுக்குப் பிற் பட்ட காலத்தில், மார்க்சிஸ்க் கட்சிகளான லங்கா சமசமாஜக் கட் சியும் பின்பு கம்யூனிஸ்ட் கட்சியும் தோட்டத் தொழிலாளர் இயக் கத்தை நாடளாவிய தொழிற்சங்க இயக்கத்துடன் இணைந்து இவ்வியக்கத்திற்கு மேலும் கூடிய தனித்துவமுடைய புரட்சிகர மான தன்மையை அளித்தது. வெல்லஸ்ஸவிலும் மூல்லோயா விலும் நடத்திய வரலாற்று முக்கித்துவம் வாய்ந்த வேலைநிறுத்தங் களை நம்பிக்கையூட்டும் வகையில் ஆரம்பித்தபோதிலும் 1939இல் இரண்டாம் உலக யுத்தம் மூண்டதனுலும் அதன் விளைவாக ல. ச. ச. க. தடை செய்யப்பட்டதனலும் இம்முயற்சிக்குத் தடை யேற்பட்டது. அதன் பின்பு, எஸ். தொண்டமானும் அவரது இலங்கை இந்தியக் காங்கிரஸும் அதன் தொழிற்சங்கத்தின்(பின்பு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்) உதவியுடன் இவர்களுடைய தொழிலாளர் இயக்கத்திற்கு, இந்தியக் காங்கிரஸைச் சார்ந்த அமைப்பொன்றை ஈடேற்றுவதில் வெற்றியடைந்தனர். இவ்வாறு இலங்கையின் தொழிலாளர் இயக்கம் மீண்டும் ஆரம்ப நிலைக்குத் தள்ளப்பட்டு, துண்டாக்கப்பட்டது. இனவாதம், வர்க்க பேதத்தை மிஞ்சி நின்ற தொழிலாளர் இயக்கம் முழுவதையுமே உருக்குலைத்து, பலவீனமாக்கி, செயலற்றதாக்கியது.
அண்மைக்கால இந்திய வம்சாவளியினரான தமிழ் வர்த்தகர் கள் (எண்ணிக்கையில் இவர்கள் மிகச்சிறியவர்கள்) நெடுங்கால மாக தமது வர்த்தகத்தை இலாபகரமாக நடத்தி வந்தனர். இவர்கள் தம்மை இந்தியரெனக்கருதினரேயன்றி தாம் இலங்கை யைச் சேர்ந்தவர்கள் என எண்ணவில்லை. இரண்டாவது உலக யுத்தத்தின் போது இவர்கள் இந்தியாவுக்கு ஓடியதனல் அர ாங் கம் இவர்களுக்குப் பதிலாக மொத்த விற்பனை வர்த்தகத்தை
13

Page 9
நடத்துவதற்கு கூட்டுறவு மொத்த விற்பனவு நிறுவனத்தை அமைக்க வேண்டிய அவசியம் உண்டாயிற்று. மொத்த விற்பனை யில் ஈடுபட்டுள்ள பெரும் வர்த்தகர்களும் சிறியளவு சில்லறை வர்த்தகர்களும் இப்பிரிவில் அடங்குவர். வெகு அண்மையில், சிங்களவர்கள் (முதலாளித்துவ உற்பத்தியாளர் என்றவகையில் பலமற்றவர்களாயிருந்த போதிலும்) கைத்தொழில் வர்த்தகத் துறைகளில் பிரவேசிக்க்த் தொடங்கியதும் (அரசாங்கத்தினல் ஊக்குவிக்கப்பட்டும்) கசப்பான போட்டியுணர்வும், அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது இந்திய விரோத உணர்ச்சியைத் தூண்டு வதற்கும் இனத்துவேஷமும், இனப்பிரச்சினையும் சுவாலை விட்டெரி வதற்கும் காரணமாயிற்று. இந்த வர்த்தகர்களுக்கும், தொழி லாளர்களுக்கும் (இரு பிரிவினரும் அண்மைக்கால இந்திய வம்சா வளித் தமிழர்களே) இடையே நடைமுறையில் பாரிய வித்தியா சம் காணப்படுகின்றது. முன்னையவர்கள் ஆட்சியிலிருக்கும் அரசியற்கட்சியின் பணப்பெட்டியை நிரம்புமளவுக்குச் செல்வாக் கடைந்தும் அவர்களுக்கு 'மதிப்பார்ந்த பிரஜாவுரிமை' கிடைக் கின்றது. அதற்கு மாருக பிரஜாவுரிமை பறிக்கப்பட்ட தொழி லாளர்களிற் பலர் மனிதர் என்ற அந்தஸ்தையே இழந்து நிற்கின் றனர். ஒருவரின் வர்க்க நிலைக்கு அமைய வேறுபாடும் மதிப்பும் சிலருக்குக் கிடைப்பதை இங்கு காணலாம்.
எனினும், இவ்வகையைச் சேர்ந்த தொழிலாளர், வர்த்தகர் இருசாராரையும் சமமாக பாதிக்கும் முக்கிய காரணியொன்றுண்டு. இது என்னவெனில், இந்து சமூக அமைப்பை பொறுத்தளவில் அண்மைக்கால இந்திய வம்சாவளியினரான இத்தமிழர்கள் பாரம் பரியமாக குறைந்த சாதியினர் என்று கருதப்படுவதாகும். மத்திய வகுப்புப் பின்னணியில் தாம் உயர் சாதியினர் என்ற எண்ணத் தால் ஆட்கொள்ளப்பட்டுள்ள சுதேசத் தமிழ்க் கல்விமான்களும், அவர்களின் தலைவர்களும் அண்மைக்கால இந்திய வம்சாவளித் தமிழர்களுடன் இணைந்து செயற்படாமைக்கு இதுவே முக்கிய காரணமாக இருக்கலாம். 1948இல் பெரும்பாலும் தொழிலாளர் களாக இருந்த அண்மைக்கால இந்திய வம்சாவளித் தமிழர்களின் வாக்குரிமையைப் பறிப்பதற்கு ஆதரவாக ஐ.தே.கட்சியில் சேர்ந் திருந்த சுதேசத்தமிழர்கள் பலர் தயக்கமின்றி வாக்களித்தமை கவனத்திற்கொள்ள வேண்டியதோர் அம்சமாகும். இங்கும் கூட பணமும் செல்வாக்கும் கொண்ட வர்த்தகர் குழுவுக்கு, சாதி மற்றும் முறைகளால் ஏற்பட்டுள்ள தடைகளைக் கடந்து செல்லக் கூடியதாக இருந்தது. எது எப்படியிருந்தாலும், பணத்தினல், வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ அதிகாரத்தையும் செல் வாக்கையும் பெற்றுக்கொள்ள முடிந்தது.
14
 
 
 

இனவாதப் பதட்டநிலையும் வன்செயலும் 1977 இலிருந்து இலங்கையில் மூன்று இனக்கலவரங்கள் இடம் பெற்றுள்ளன. முதலாவது இனக்கலவரம் தற்போதைய ஐ.தே.க. அரசாங்கம் பதவிக்கு வந்ததும் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 1931 இல் மற்றுமொரு இனக்கலவரமும் 1983 ஜூலையில் என்றுமே யில்லாத அளவு படுகொலைகளும் இடம் பெற்றன.
1958 °மொழிக் கலவரத்தில்' சுதேசத் தமிழர்களே தொல்லைக் கும் வன்செயலுக்கும் உள்ளாகினர். இந்திய வம்சாவளி தமிழர், நிலச்சீர்திருத்தத்தைத் தொடர்ந்து சில அரக்கத்தனமான அரசியல் வாதிகளின் தூண்டுதலால் சில இடங்களில் ஒரளவு தொல்லை களுக்கு உள்ளாகியும் சில சந்தர்ப்பங்களில் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டும் துன்புறுத்தப்பட்டனர். 1977இல் நடை பெற்ற இனக்கலவரங்களுக்குப் பின்னரே தம்மீது கட்டவிழ்த்து விடப்படும் திட்டமிடப்பட்ட வன்செயலினதும் காடைத்தனத்தி னதும் தாக்கத்தை தோட்டத் தொழிலாளர் உணரத் தொடங் கினர்.
1977 பொதுத் தேர்தலின்போது, ஐ.தே.க. அதன் தேர் தல் விஞ்ஞாபனத்தில், 'தமிழ் மக்களை எதிர்நோக்கியுள்ள அநேக பிரச்சினைகளை" ஏற்றுக்கொண்டதுடன் 'கல்வி, குடி யேற்றம், தமிழ்மொழிப் பிரயோகம், அரசாங்க அரசு கூட்டுத் தாபனங்களில் வேலைவாய்ப்பு போன்ற குறைகளுக்கு நிவாரண மளிக்க எல்லா நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும்' 'இந் நோக்கத்திற்காக, தாமதமின்றி அனைத்துக் கட்சிகளின் மகா நாடொன்றைக் கூட்டுவதாகவும்' உறுதியளித்தது. அதன்பின்தமிழ் தேசிய மொழியாக்கப்பட்ட போதிலும், அது உண்மையில் அமுல் நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை. ஐ. தே. க. உறுதியளித்த ஏனைய விடயங்கள் அதன்பின் 6 ஆண்டுகள் தீர்த்துவைக்கப் படாமல் இருந்தன. இதேவேளையில் வடக்கில் வங்கிக் கொள்ளை, படையினரைச் சுட்டுக்கொன்றமை, சில தனிப்பட்டவர்களைக் கொன்றமை, ஆயுதம் தாங்கிய தமிழ் இளைஞர்கள் அரசாங்க சொத்துக்களுக்கு நாசம் விளைவித்தமை போன்ற சம்பவங்களினல் நாடு முழுவதும் பதற்றநிலை அதிகரித்தது. வடக்கின் இச்சம்பவங் களை படையினர் அடக்குவதற்கு எடுத்த மிதமிஞ்சிய, எதிர்நட வடிக்கைகள் வன்செயல்களை அடக்குவதற்குப் பதிலாக அதிகரிக்கச் செய்துள்ளன. வடக்கில் பல ஆண்டுகளாகத் தளம் அமைத் திருக்கும் படையினர், யாழ்ப்பாணத்தில் பெரும்பான்மையான மக்களுக்குப் புரியாத ஒரு மொழியைப் பேசுகின்ற சிங்களவர்
15

Page 10
களையே கொண்டிருப்பதனல், இப்பகுதித் தமிழ் மக்கள் சாம் அடிமைப்பட்டவர்கள் என்ற உணர்வுக்கு ஆளாவதுடன் ஆயுதம் தாங்கிய புரட்சிவாத ஈழக் குழுவினைச் சேர்ந்த இளைஞர்கள், தங்களை கொடுங்கோன்மைப் படையினரிடமிருந்து பாதுகாக்க வந்த அமைப்பென்று கருதுவதும் வியப்புக்குரியதன்று.
இச்சூழ்நிலையில் தான் ஜனதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தன பயங்கரவாதத்தை அடக்குவது எவ்வாறெனக் கலந்தாலோசிப் பதற்கென பாராளுமன்றக் கட்சிகளை வ ட் ட மே சை மகா நாடொன்றுக்கு அழைத்தார். அவர் மேற்கொண்டு எவ்வித நட வடிக்கையையும் எடுக்கமுன் இம்முயற்சி தோல்வியடைந்தது. 1983 ஜூலை 23ஆம் திகதி 13 படையினர் வடக்கில் கொலையுண்ட சம்பவம் நிலைமையை முற்ருக மாற்றியதுடன் அதனையடுத்து சிங்களப் பிரதேசங்களில் நடந்த மனிதத் தன்மையற்ற இனக் கொலைகள், அழிவுகளுக்கான உடனடிக் காரணமாகவும் அமைந் தது. 1983 ஜூலை 24ஆம் திகதி இரவு நடத்தப்பட்ட தாக்குதல்கள் தமிழ் வீடுகளையும் வியாபாரத்தலங்களையும் இனங்கண்டு கொள் வதற்கான வாக்காளர் பட்டியல்கள் சகிதம் ஏற்கனவே திட்ட மிடப்பட்ட குழுக்களால் நடத்தப்பட்டனவென்பது தெளிவாகும். அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்கத் தவறியமை கண்ட னத்துக்குரிய விடயமாகும். ஆரம்பத்தில், வெளிப்படையாகவே, சட்டமும் ஒழுங்கும் அற்ற நிலை காணப்பட்டது. படையினர் இக்கலவரங்களில் தலையிடத் தயக்கம் காட்டியது மட்டுமின்றி, சில இடங்களில் இச்சம்பவங்களில் தாமும் பங்கெடுத்து நிலைமையை மோசமாக்கினர். இவர்கள் மட்டுமன்றி அரசாங்கத்தின் ஆதர வாளர்களும் இதில் பங்கு கொண்டனர். சில நாட்களின் பின், அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்குச் சதியொன்று செய்யப்பட்ட தென்றும், தமிழர்கள் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் என்போர் மீது தாக்குதல்களை நடத்தி, படையினரின் ஒரு பகுதியினர் அரசாங்கத்தைக் கைப்பற்ற வழிசெய்ய, சதிகாரர்கள் திட்ட மிட்டிருந்தனர் எனவும் அரசாங்கம் அறிவித்தது. இச்சதிகாரர் களுக்கும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, நவ சமசமாஜக்கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளிலுள்ள மார்க்சிஸ் இடது சாரிகளுடனும் தொடர்புகள் இருந்தனவெனக் கூறப்பட்ட துடன் இம்மூன்று கட்சிகளும் தடை செய்யப்பட்டன. கணிச மான காலத்தின் பின்னரே இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிமீது விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. மிகவும் ஆச்சரியத்திற்குரிய விடயம் என்னவெனில், படையினர் மத்தியில் இருந்ததாகக் கூறப்பட்ட சதிகாரர்களில் எவரும் இதுவரை கைதுசெய்யப்பட 6ίησυόου.
76

தற்போதைய நெருக்கடிநிலை
பிரிவினை கோருவதை அரசாங்கம் அரசியலமைப்பு திருத்த மூலம் சட்டவிரோதமாக்கியது, (முன்னரும் கருதியிருந்தபடி) சிங்களவர்களைச் சமாதானப்படுத்த உதவிய போதிலும், பிரச் சினைக்குரியதோர் தீர்வாக அமையவில்லை. இதன் விளைவாக இலங்கையிலேயே பிரிவினைச் சக்திக i இரகசியமாகச் செயற்படு வதுடன் ஈழ இயக்கத்திற்கு ஆதரவான வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தமிழர்களினூடாக வெளிநாடுகளிலும் பிரிவினை இயக்கம் பரவியுள்ளது. இந்நிலையில் இந்தியா அக்கறையற்ற அயல்நாடாக அமையாமல் நட்பு நாடென்ற வகையில் அதன் நன்மதிப்பைப் பயன்படுத்தி தமிழர் பிரச்சினைக்குத் தீர்வொன் றைக் காணுவதற்கு உதவியளிக்க முன்வந்தமை ஓர் அதிர்ஷ்ட மாகும்.
எதிர்க்கட்சிகளைக் கூறுபோட்டு அவற்றைப் பலவீனமாக்கும் ஜனதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் தந்திரம் பெருமளவு வெற்றி யளித்துள்ள போதிலும், அவர் தனது நலனுக்காகப் பயன்படுத்த முயன்ற இனப்பிரச்சினை அவரது கட்டுப்பாட்டை மீறியுள்ள தாகத் தெரிகிறது. படையினர் பயங்கரமான இனவாத உணர்ச்சி யுடன் செயற்படுவதாகத் தெரிகிறது. வடக்கில் அவர்கள் சேவைக்கமர்த்தப்பட்டுள்ள முறை அவர்களது முக்கிய முறைப் பாடுகளில் ஒன்ருகும். சுதந்திரத்தின்பின் முதன்முறையாக, இந் நாட்டின் பேராதரவைப்பெற்ற அரசாங்கம், படையினரைக் கட்டுப்படுத்தும் சக்தியை இழந்து நிற்பதாக தெரிகிறது. உண் மையில் படையினரை அரசியலிற் பயன்படுத்தும் தற்போதைய முறை இந்நாட்டுக்கும் ஜனநாயகத்திற்கும் புதியதொரு ஆபத் தினை விளைவிப்பதாக அமையலாம். தென்கிழக்காசியாவிலே, உலக முதலாளித்துவத்தினதும் குறிப்பாக அபிவிருத்தியடையா நாடுகளில் காணப்படும் பொருளாதார ஏகாதிபத்தியத்தின் நெருக்கடி நிலவுகிறது. அந்நெருக்கடி நிலையின் பிரதிபலிப்பாக அரசுகள் எதேச்சாதிகார, சர்வாதிகார அரசுகளாக மாறிவரும் போக்கினை நாமும் கருத்திற் கொள்வது நல்லது. முதலாளித்துவ நெருக்கடி நிலைமைகளில் மக்களின் வெறுப்புணர்ச்சியைத் திசை திருப்புவதற்காக இனவாத உணர்ச்சியைக் கிளப்பிவிடுவது சிறந்த பயனை அளிக்கும் வழியாகவுள்ளது.
1983 ஜூலை இனக் கலவரத்திற்கு முன்னரும் நாட்டில் பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்தன. மந்தநிலையிலிருந்த உலக முதலாளித்துவத்தின் தாக்கம் அரசாங்கத்தின் *தாராண் மைப் பொருளாதாரக் கொள்கைகள்' அவை அமுலாக்கப்பட்ட
17

Page 11
விதம் என்பன மிகப் பாரதூரமான பொருளாதார நெருக்கடி நிலைகளை உருவாக்கின. இலங்கையிலுள்ள முதலாளித்துவ வர்க் த்தினருக்கிடையிலேயே, இதே "தாராண்மைப்' பொருளா தாரக் கொள்கைகள் போட்டியையும் பூசல்களையும் உருவாக்கி யுள்ளன. சிங்கள வர்த்தகர்கள், மொத்த விற்பனையிலிருந்து தமிழ் வர்த்தகர்களை (விசேடமாக அண்மைக்கால இந்திய வம்சா வளியைச் சேர்ந்தவர்கள்) பலவந்தமாக விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இப்பூசல் முதலாளித்துவ வர்க்கத்தினர் மத்தியில் மட்டுமன்றி, அவ்வர்க்கம் ஆதரிக்கும் அரசியற் கட்சியான ஐ.தே.கட்சிக்குள்ளேயும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்து வதாக உள்ளது. இப்பிரிவினர் எல்லோரையும் தமது சொந்த வர்க்க நலனுக்காக ஒன்ருக வைத்திருப்பதே ஐ.தே.கட்சியின் குறிக்கோளாகும்.
வடக்கில் பயங்கரவாதத்தை அடக்குவதற்காக, அரசாங்கம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தையும், அவசரகால ஒழுங்குவிதி களையும் கொண்டுவந்திருக்கிறது. இந்த அதிகாரங்கள், நாட்டின் எப்பகுதியிலும் அரசாங்கத்தைக் கண்டிப்பவர்கள் அல்லது எதிர்ப்பவர்களுக்கெதிராகத் துஷ்பிரயோகம் செய்யப்படலாம். அத்தகைய நெருக்கடியான நிலைமையில், முன்னர் சுட்டிக் காட்டப்பட்டது போன்ற எதேச்சாதிகார, அடக்கு முறைப் போக்கு அதிகரிப்பது மட்டுமன்றி அரசாங்கம், மிகப் பயங்கர மான வடிவங்களை எடுக்கக்கூடிய பேராபத்தும் இருக்கிறது. தமிழர் பிரச்சினையை, அண்மைக்காலத்தில் இந்நாட்டில் உரு வாகியுள்ள அமங்கலமான நிலைமைகளைவிடப் புறம்பானதாகவோ, தொடர்பில்லாததாகவோ கருதலாகாது. அரசாங்கத்தின் 'தாராண்மைப்' பொருளாதாரக் கொள்கை, அது பொருளா தார ஏகாதிபத்தியத்திடம் தானகவே சரணடைந்திருப்பதையே காட்டுகிறது. முன்னைய பிரதமர் திருமதி பண்டாரநாயக்காவின் குடியுரிமைகளை ஜனநாயகத்திற்கு ஒவ்வாத முறையிற் பறித் தமை, 1980 பொது வேலை நிறுத்தத்தை அரக்கத்தனமாக அடக் கியமை, மாணவர் எதிர்ப்புக்களை ஒடுக்கியமை, கல்விமான்கள் உட்பட அரசாங்கத்தைக் கண்டித்தவர்கள் மீது அரசாங்க சார் புக் காடையர்கள் தாக்குதல் நடத்தியமை, உயர்நீதிமன்ற நீதிபதிகளின் இல்லங்களை குண்டர்கள் முற்றுகையிட்டமை என் பவை எதேச்சாதிகார முறை மட்டுமன்றி பாசிஸ் முறையையும் நோக்கிப் போய்க்கொண்டிருக்கும் பயங்கர நிலையை எடுத்துக் காட்டுகின்றன. நிலைமை இப்படியிருக்க, ஜனதிபதி ஜயவர்த்தன இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசில் 'ஐந்து நட்சத்திர ஜனநாயகம்' நிலவுவதாக அண்மையில் பறை சாற்றியுள்ளார்.
18
 

எதிர்கால நோக்கும் பொறுப்புக்களும்
மேலே கூறப்பட்ட யாவும் எமது தேசியப் பிரச்சிஜனயில் நாம் சரியானவற்றைச் செய்யவேண்டியதன் அவசியத்தைக் காட்டுகின்றன. எமது நாடு, பிரித்தானிய ஆட்சியின் கீழ், ஒரு நூற்ருண்டுக்கு மேலாக, ஒருமையான நிருவாகப் பொருளாதார, அரசியற் பிரிவாக அமைக்கப்பட்டு அக்காலத்திலிருந்து அவ் வாறே இருந்து வந்துள்ளதென்ற வரலாற்றுண்மையை நாம் எல்லோரும் ஏற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது. (பிரித்தானிய குடியேற்ற ஆட்சியில் அடக்குமுறை, சுரண்டல் போன்ற அம்சங் கள் காணப்பட்ட போதிலும், நவீன உலகில் எமது முன்னேற் றத்தை ஊக்குவித்தது என்பதை மறுக்க முடியாது).
அதேவேளையில், தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்குவதில் பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு உண்மை யி ல் அக்கறை யில்லாததனல் அவர்கள் அவ்வாறு செய்யவில்லையென்பதை நாம் நினைவிற்கொள்ள வேண்டும். அவர்கள் தமது நோக்கங்களுக்காக நிருவாக, அரசியல் ஒருமைப்பாட்டை உருவாக்குவதிலேயே அக்கறை காட்டினர். எனினும், பிரித்தானிய ஆட்சி, அதன் ஏகாதிபத்திய ஆட்சிமுறையின்மூலம், இனவாதம் மற்றும் வேற்று மைகளைக் கடந்து உண்மையான தேசிய ஒருமைப்பாடொன்றை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்ட இயக்க மொன்றை உருவாக்கிற்று. நடுத்தர வகுப்பினரின் தலைமை யிலான தேசிய இயக்கமும் - புரட்சிகரமான உழைக்கும் வர்க் கத்தை அடிப்படையாகக் கொண்ட இயக்கமும் - சோசலிஸ முறையொன்றைக் கடைப்பிடிக்க முன்வந்தமைக்கு இவ்விரு பிரி வினரிடையே நிலவிய இப்போக்கு காரணமாகும். ஆகவே, உண்மையான ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவது மகத் தான பொறுப்பாகவுள்ளது.
எனவே போர்த்துக்கேயர் வந்தபொழுது, வடக்கில் தமிழ் இராச்சியம் இருந்ததென்பதும், ஒல்லாந்தர் காலத்திலும் கிழக்கு மாகாணம் கண்டி மன்னர்களின் கீழ் இருந்ததென்பதும், அரசியல் சதுரங்கமாடி இனவாதத்தைத் தூண்டவிரும்புபவர்களுக்கு பயன் படலாமேயொழிய, இன்றைய தேவைக்குப் பொருத்தமற்றதும் அர்த்தமற்றதும் ஆகும். சனத்தொகையில் 12.6 வீதமாகவுள்ள இலங்கைத் தமிழர்கள் தமக்கென ஒரு தனி அரசைக் கோரு வதற்குத் தகுதியுடையவர்களே என சுயநிர்ணயத்திற்கான சோசலிஸக் கொள்கையொன்றின் அடிப்படையில் வெளிநாடு களிலுள்ள மார்க்சிஸவாதிகள் எனத் தம்மைக் கூறிக்கொள்ளும் சில இலங்கையர்கள் வாதிப்பதும் ஆபத்தான போக்காகும்.
19

Page 12
மாக்சிஸம் சமூக மாற்றங்களைப் பற்றி எடுத்துக் கூறுவது உண்மை தான். ஆனல் 'ஒடுக்கப்பட்ட மக்கள்’ ‘விடுதலைப்போராட் டம்' நடத்துகின்ற ஒரு நாட்டில் இருக்கின்ற நிலைமைகளின் (இதே மார்க்சிஸவாதிகளின் வார்த்தைகளிற் சொல்வதானல்) ? ? விகே ட தன்மையையும் சிறப்புத்தன்மையையும்’ கவனத்திற்கொள்ளாமல் பொதுவான சோசலிஸ்க் கொள்கைகளை அது கொண்டதாக இருக்குமெனக் கூறமுடியாது. மற்றைய உலக நாடுகளில் தங்கி வாழும் நிலையும் உலக முதலாளித்துவமும் நிலவும் இக்கால கட்டத்தில், நிருவாக - பொருளாதார - அரசியல்ரீதியில் அவர் கள் ஒன்றுபட்டிருக்கும் சந்தர்ப்பத்தில், நாட்டைப் பிரிப்பதோ அதற்காகக் கோரிக்கைவிடுப்பதோ, ஏற்கனவே பலவீனமடைந் துள்ள மக்கள் இயக்கத்தைத் திசைதிருப்பி, திரித்து மேலும் பலவீனப்படுத்தி பிற்போக்குச் சக்திகளுக்கும் வல்லரசு அரசிய லுக்கும் இரையாகுவதற்கு வழிகோலுவதாகவே அமையும். கடந்தவாரம் கிறீஸ்தவ தொழிலாளி என்ற எமது பத்திரிகை, திருகோணமலை அமெரிக்கர்களின் வசதிக்காகப் பயன்படுத்தப் படப் போகும் அபாயத்தைச் சுட்டிக்காட்டியது. நாடு பிரிக்கப் படாத நிலையில் கூட திருகோணமலை வல்லரசொன்றின் வசதி யிடமாக மாறுவது ஆபத்தானதாக இருக்கையில், நாடு பிரிக்கப் பட்டால் நிலைமை எவ்வளவு மோசமானதாக இருக்கும்? அப் பொழுது நாம் வல்லரசுகளின் அடிமைகளாகவும் அவற்றின் அரசியல் சதுரங்கத்தில் பயன்படும் பகடைக்காய்களாகவும் மாறி விடுவோம். உண்மையில், பிரிவினை ஒரு மலட்டு அரசியற் கொள்கை மட்டுமன்றி, பொருளாதார ரீதியிலாயினும் அரசியல் ரீதியிலாயினும் இந்நாட்டுக்கு ஒவ்வாததாகும். இச் சந்தர்ப் பத்தில் இனவாதமும், பிரிவினை அரசியலும் ஒடுக்கப்பட்ட மக்க ளின் விடுதலைப் பயணத்திற்கு எவ்விதத்திலும் நன்மையளிக்கா தென்பதை நாம் உணரவேண்டும். எமது இன்றைய நிலையில், * “சுய நிர்ணயம்' என்பது, நாட்டின் எல்லாப் பாகங்களிலுமுள்ள மக்கள் தமது சொந்த விவகாரங்களில் நல்ல முறையிற் பங்கு கொள்வதற்கு வழியமைக்கவல்ல சுயமதிப்புள்ள 'பிரதேச சுயா ட்சி' யாகவே இருக்கமுடியும். மேலும், இலங்கையைப் பொறுத் தளவில், அண்மையில் கிறெனடாவில் நடைபெற்றதுபோல, சிறிய நாடுகளின் விவகாரங்களிற் தலையிடத்தயங்காத முதலாளித் த்துவ நாடுகளிடமிருந்து தனது தனித்துவத்தையும், சுதந்திரத் தையும், இறைமையையும் பேணிப் பாதுகாப்பதென்பதும், ‘சுய நிர்ணயம்' என்பதன் கருத்தாகும்.
எனவே, ஒரு நாடென்ற அடிப்படைத் தத்துவத்தைப் பாழாக் குவதற்கு எடுக்கப்படும் எம்முயற்சியும் நிராகரிக்கப்படுவதுடன்
20
 

உறுதியாக எதிர்க்கப்படவும் வேண்டுமென நாம் எண்ணுகிருேம். வேலை வாய்ப்புகளிலும், உயர்கல்வியிலும் இனவாரிப்பங்கீட்டு முறை என்ற கொள்கை அண்மையில் தெரிவிக்கப்பட்ட இத் தகைய யோசனையொன்ருகும். இத்தகைய இனவாதப்பங்கீட்டுக் கொள்கையினுல், ஒருவரது தனிப்பட்ட திறமையினடிப் படையில் அவர் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்ற இயல்பானதும் ஜனநாயக ரீதியிலானதுமான உரிமை மீறப்படுவதுடன், அது நியாயத்திற்கொவ்வாததாகவும் எதிர்ப்புக்களைத் தோற்றுவிப்ப தாகவும் ஐக்கியநாடு என்ற குறிக்கோளை அடைவதற்கு முட்டுக் கட்டைகளை விதிப்பதாகவும் அமையும். வேலைவாய்ப்புக்கள், கல்வி ஆகியவற்றின் தொடர்பிலான தற்போதைய இனவாரிப் பங்கீட்டுமுறையை நிர்ணயிப்பது பற்றி ஆராயவோ, அமைச்சர் சிறில் மத்தியூ அறிக்கைமூலம் சுட்டிக்காட்டிய தமிழ்ப் பரீட் சார்த்திகளின் விடைத்தாள்களில் செய்யப்பட்ட புள்ளிமாற்றங் களைப் பற்றி அதிர்ச்சியடையவோ தேவையில்லை. அத்தகைய சந்தேகங்கள் இருக்குமேயானல், அவைகளை நிச்சயம் நிவர்த்தி செய்யமுடியும். உதாரணமாக, வேலைகளுக்குத் தெரிவுசெய்யும் போதும், அவசியமான பல்கலைக்கழகப் புகுமுக மட்டத்திலும் கல்வித்தகைமைகளுக்கு மேலதிகமாக பலவின விடைக்கான வினத் தாள்களின் அடிப்படையிலமைந்த உளச்சார்பு, விவேகப் பரீட் சைகளுக்கான முறையொன்றை வகுப்பதின்மூலம் (இவ்விடயத் தில் புள்ளிகளை மாற்றமுடியாது) இந்நிலையை மாற்றலாம்.
எமது நாட்டில் நிலவும் இனப்(இன, மொழி, குலபேதங்கள் போன்ற) பிரச்சினைகளின் புதுமையானதும் குறிப்பிடத்தக்கது மான அம்சம் என்னவெனில், சிங்களவர்கள் இந்நாட்டிற் பெரும் பான்மையினராகவுள்ள போதிலும், அயல்நாடாகிய இந்தியா வின் சனத்தொகையோடு ஒப்பிடும்போது முக்கியத்துவம் குறை ந்த சிறுபான்மையினராகக் காணப்படுவதனல், சாதாரணமாக ஒரு சிறுபான்மையினத்திடம் காணப்படும் பய உணர்ச்சி இவர் களிடமும் காணப்படுகிறது. சிங்களவர்களுக்கு இந்தச் சிறிய தீவே பாரம்பரியத் தாய்நாடாக இருப்பது மட்டுமன்றி மக்கள் என்றவகையில் தமது கலாச்சாரத்தை வளர்க்கக்கூடிய ஒரேயொரு நாடு இதுவென்ற எண்ணம் இப்பயத்தை மேலும் அதிகமாக்குகி றது. பண்டைக்காலத்திலிருந்து நடந்த பயங்கரமான தென்னிந்திய ஆக்கிரமிப்புக்களின் ஞாபகமும், பிரித்தானியர்கள், கண்டிப்பிர தேசங்களின் மத்தியில் 10 லட்சம் தென்னிந்திய தொழிலாளர்களைக் குடியேற்றி இருப்பதும், இந்திய வர்த்தகர்களும், வியாபாரிகளும் இங்கிருப்பதும், அவர்களது இப்பீதி தொடர்ந்திருப்பதற்குக் காரணங்களாகும். தேசியப்பிரச்சினைக்குத் தீர்வெதையும் காண
2.

Page 13
முயற்சி மேற்கொள்ளும்பொழுது, இப்பயத்தையும் கவனத்திற் கொள்ளல் அவசியம்.
சிங்களவர்களை, ஒரு சமூகமென்ற வகையில் ஆட்கொண்டுள்ள *சிறுபான்மை மனப்பான்மை' மட்டுமன்றி சிங்கள பெளத்த பாதுகாவலை நாடுகின்ற பாரம்பரியத்தையும் கவனத்திற்கொள்ள வேண்டும். இப்புராணக்கதை மகாவம்ச என்ற வரலாற்றேட்டின் காலத்திலிருந்து இருந்துவருவதுடன், பல சிங்கள பெளத்தர்களின் மனதையும் விசேடமாக புத்தகுருமாரையும் இவ்வெண்ணம் ஆட்கொண்டிருக்கிறது. விஜயனும் அவனது சீடர்களும் இலங் கைக்கு வந்த அதே தினத்தில் புத்தபெருமான் இறந்தாரெனவும் அத்தினத்தில் பெருமானர் தன்னுடைய போதனைகள் இத்தீவில் புனிதமாகப் பேணப்படுமெனக் கூறியதாகவும், அதனல் தெய் வங்களுக்கு அரசனன சக்ரவிடம் இத்தீவைப்பாதுகாக்கும் புனி தமான பணியை ஒப்படைத்தார் எனவும் இவ்வரலாற்றேடு கூறுகிறது. சகர இப்பணியை விஷ்ணுவிடம் (விபீஷண) ஒப்ப டைத்ததாகக் கூறப்படுகிறது. எனவே, இலங்கை ஆரிய சிங்கள மக்களால் பேணிப்பாதுகாக்கப்பட்டு மகத்தான 'தம்மதுவீப** மாகக் (தர்மம் நிலவும் தீவு) காக்கப்பட வேண்டியுள்ளது. எனவே, இவர்கள் தர்மத்தைப் பாதுகாக்கும் புனிதப்பணியை ஆற்றுவ தற்கென புத்தபெருமானல் தெரிந்தெடுக்கப்பட்டு, குருக்களாக் கப்பட்டனர். சங்கத்திலுள்ள பல பக்திவாய்ந்த பிக்குகள் அத்தகைய பணியை மிக உறுதியாக மனதிலிருத்தியுள்ளனர். அதேவேளையில், நேர்மையற்ற, சந்தர்ப்பவாத, குறுகிய நாட்டுப் பற்று வெறிகொண்ட அரசியல்வாதிகள் தமக்குப் பொருத்தமான சந்தர்ப்பங்களில் இனவாதத்தைக் கிளப்பிவிடுவதற்கும் இவ் வெண்ணத்தை சாதுரியமாகவும், தந்திரமாகவும் பயன்படுத்து கின்றனர்.
இவையாவும் சிங்கள இனவெறியையும், தமிழர்மீது இன எதிர்ப்பையும் வளர்த்து உக்கிரமாக்க உதவும் அதேவேளையில் தமிழ் அரசியல்தலைவர்களின் நடத்தையும் இந் நிலைமைய்ை மோச மாக்கியுள்ளது. தமது மக்களுடைய உரிமைகளுக்காக இந்நாட் டில் போராடாமல் தமது வெளிநாட்டுப்பயணங்களாலும் ஐக்கிய அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் எல்லாவற்றிற்கும் மேலாகத் தமிழ்நாட்டிலும் நடத்துகின்ற பேச்சுவார்த்தைகள் மூலமும் நட வடிக்கைகள் மூலமும் இவ்வுரிமைகளை வென்றெடுக்க முயற்சிக் கின்றனர். தமிழ்நாட்டுத் தலைவர்களைப் பொறுத்தளவில், தமது சொந்த நோக்கத்திற்காக, 'தமிழ்ப்பிரச்சினை'யைப் பயன்படுத் தக் கங்கணம் கட்டி நிற்கின்றனர். அதுமட்டுமன்றி, 1983 ஜூலை
22
 

படுகொலைகளின் பின்னர் முன்னைய பா. உறுப்பினர் உட்பட பிர பல த.வி.கூ. தலைவர்கள், தமது தாய்நாடெனக் கூறிக்கொள்ளும் யாழ்ப்பாணத்தை விட்டு, தமிழ்நாட்டில் அடைக்கலம் புகுந்துள் ளமை, சிங்களவர்களுக்கிருந்த தப்பெண்ணத்தையும் பீதியையும் உறுதிப்படுத்தியுள்ளது.
மறுபுறத்தில், தமிழ்மக்களுடைய நியாயமான பயத்திற்கும் சுயமதிப்புள்ள சமூகமாக வாழ்வதற்கான அவர்களது கோரிக்கை களுக்கும் மதிப்பளிப்பது அவசியமாகும். இக்கோரிக்கைகளை சுருக்கமாக, பின்வருமாறு குறிப்பிடலாம்.
(அ) சிங்களவர்கள் பெரும்பான்மையாகவுள்ள தென்பகுதியில் தமிழ் மக்களுடைய உயிருக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு உத்தரவாதமளிக்கப்பட வேண்டும். அதேவேளையில், வடக்கில் மக்க அனைவரினதும் நன்மைக்காக சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் நோக்கத்திற்காகவன்றி வேறெச்சந்தர்ப்பத்திலும் அரசு நேரடியாகவோ, மறைமுகமாகவோ, எவ்வித ஒடுக்குமுறை யையோ பலாத்காரத்தையோ பயன்படுத்தலாகாது. (இது தொடர்பாக, மேற்படி நிபந்தனைகள் மீறப்படுமிடத்து அதனை எடுத்துரைத்து அவசிய பரிகாரம் தேடுவதற்கு எந்தவொரு பிரஜைக்கும் சுதந்திரமும் வாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும்).
(ஆ) தமிழ்மொழி, தேசியமொழியென்ற வகையிலும், நிருவாக மொழியென்ற வகையிலும் சிங்களமொழிக்குச் சமமான அந் தஸ்த்தைக் கொண்டிருக்க வேண்டும். (உண்மையில், இது 1955ஆம் ஆண்டுக்கு முன்னர் எல்லா அரசியற்கட்சிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகும்).
(இ) தமிழ்ப் பிள்ளைகள் தமிழ்மொழியில் கல்விகற்றல்.
(ஈ) வடக்கிலும் கிழக்கிலும் பொருளாதார அபிவிருத்தியை மேற்கொள்வதன்மூலம் போதியளவு வேலைவாய்ப்புக்களை உரு வாக்கி, தமிழ்மக்கள் தெற்கில் வேலை தேடும் அவசியத்தைக் குறைத்தல்.
(உ) வடக்குக் கிழக்குப் பகுதிகளில் உள்ள சனத்தொகையின் இனரீதியான அளவை மாற்றக்கூடிய வகையில் அப்பகுதிகளில் அரசு பலாத்காரக் குடியேற்றங்களைச் செய்யலாகாது.
(ஊ) தமிழ் மக்களின் கலாச்சாரத்தைப் பேணுதல்.
(எ) அண்மைக்கால இந்திய வம்சாவளித் தமிழர்களைப் பொறுத்தவரையில், விசேடமாக, தோட்டத் தொழிலாளர்களைப்
23

Page 14
பொறுத்தவரையில், பிறப்பின் அடிப்படையில் அல்லது குறித்த வொரு காலப்பகுதியில் இலங்கையில் வசித்ததன் அடிப்படையில் முழுமையான பிரஜாவுரிமை வழங்கப்பட வேண்டும். அத்துடன் பிரஜைகள் என்ற வகையில் ஏனைய மக்களோடு அவர்கள் கலந்து வாழ்வதற்கான சூழ்நிலைகளை ஆக்கிக்கொடுக்க உண்மை யான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஒற்றை ஆட்சியின் அல்லது ஒரே அரசின் கீழ், பொருத்த மான நிறுவன மாற்றங்கள் மூலம் இக்கோரிக்கைகளை அளிக்கலாம்.
தேசியப் பிரச்சினையைப் பொறுத்தவரையில், திருப்திகரமான தீர்வொன்றைக் காண்பதாயின் நாடு முழுவதிலுமுள்ள மக்கள் தமது சொந்த நிருவாகத்தை நடத்தும் பொறுப்பிற் பங்கு கொள்ளும் உரிமையை நிச்சயப்படுத்துகின்ற ஒற்றையாட்சி அமைப் பின் கீழான சுயநிர்ணய உரிமையும், மத்திய அரசிலிருந்து உண்மையான ஜனநாயக முறையிலான அதிகாரப் பங்கீட்டின் அடிப்படையிலமைந்த சுயமதிப்புள்ள பிரதேச சுயாட்சியும் வழங்கு வது அவசியம் என்பது எமது கருத்தாக இருந்து வந்துள்ளது.
எனவே, இவ்விதமான தீர்வொன்று கவனத்திற்கெடுக்கப் பட்டிருப்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிருேம். 1983 டிசம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சிகள் அனைத்தினதும் சம்மதத்தின் பயணுக, த. வி. கூ. மகாநாட்டுக் கழைக்க, முன்னர் தயங்கிய அரசாங்கம் இணக்கம் தெரிவித் திருப்பது கலந்துரையாடல்களுக்கும் பேச்சு வார்த்தைகளுக்கும் தைரியமளிப்பதாகவுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியற்கட்சி களினதும் மற்றும் அக்கறையுள்ள குழுக்களினதும் உடன் பாட்டின் அடிப்படையில், நடைமுறைப்படுத்தக்கூடிய இணக் கத்துக்கு வரமுடியுமாயினும், நிலைமையை யதார்த்த பூர்வமாக மதிப்பிட்டு அரசி ய ல் ஞானத்துடனும், சாதுரியத்துடனும் தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமேயன்றி, வெறும் உணர்ச்சி களாலும், குலஉணர்ச்சிகள் - பீதிகள் என்பவற்ருல் உந்தப்படும் அரசியல் வெறியினுல் இத் தீர்மானம் பாதிக்கப்படக்கூடாது. இவ்விடயத்தில் சம்பந்தப்பட்டுள்ள எல்லா முக்கிய குழுக்களும், இனவாத, 'இனத்துவேஷ" உணர்ச்சிகளையும் பீதியையும், தப்பெண்ணத்தையும் தூண்டிவிடும் வகையில் நடக்காது பொது சன அபிப்பிராயத்தின் ஆதரவைப் பெறவேண்டும். -
இதுதொடர்பாக, தேசியப் பிரச்சினைக்குத் தீர்வென்ற வகையில் பிரதேச சுயாட்சி முறையொன்றை அமைப்பதற்கான
24
 

ܐܪܡܢܝ܂
யோசனை ஈழம், அல்லது தனி நாடமைப்பதற்கும் தமிழ் நாட்டுடன் இணைவதற்கும் முதற்படிகளென்ற சந்தேகத்துடன் சில பிரிவினரால் நோக்கப்படுகின்றது. ஏற்கனவே குறிப்பிட்டது போல, சில த.வி.கூ. தலைவர்களின் சொல்லும் செயலுமே அத்தகைய பீதியையும் சந்தேகத்தையும் உறுதிப்படுத்தியுள்ளன. எனவே, வடக்கிற்கும் கிழக்கிற்கும் பிரதேச சுயாட்சி வழங்கு வதன் மூலம் சிங்கள - தமிழ் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு இச்சிங்களப் பிரிவினரிடமிருந்து பலத்த எதிர்ப்புத் தோன்றுவது திண்ணம். எனவே, பிரதேச சுயாட்சி அல்லது நிருவாகம் என்ற விடயத்தை சிங்கள - தமிழ்ப் பிரச்சினைக்கும் தேசியப் பிரச்சினைக்குமான தீர்வென்றவகையில் கருதாமல், தே சி ய ரீ தி யி ல் நிருவாகத்தில் பொதுமக்களின் பங்கை மேம்படுத்துவதற்கான மார்க்கமாகக் கருதுவதே நன்மை பயக்கும். ஆனல், அத்தகைய பிரதேச நிருவாகமுறையெதுவும் அர்த்தமுள்ளதும் பயனுள்ளதுமாக இயங்கவேண்டுமானல் அம்முறை உண்மையான தேசிய மட்டத்திலான உள்ளூராட்சி முறையொன்றினல் இணைக்கப்படவேண்டும். துரதிர்ஷ்டவசமாக, கடந்தகாலத்தில் உள்ளூர் வாக்காளர்களது தேவைகளைக் கவனித்து, மக்கள் பிரதிநிதித்துவத்தின் சரியான ஜனநாயக அடித்தளமாக இருந்த, மக்களால் தெரிவுசெய்யப்பட்டனவான கிராம சபைகளையும், நகரசபைகளையும் ஒழித்ததன் மூலம் தற்போதைய ஐ.தே.க. அரசாங்கம் உள்ளூராட்சியை மிகப் பலவீனமாக்கியிருக்கிறது. இச்சிறிய உள்ளூராட்சிச் ᏯᎦ-ᎧᏈᎠL Ꭵ களுக்குப் பதிலாக, அரசாங்கம் அமைத்துள்ள மாவட்ட அபி விருத்திச் சபைகளினல் தீர்மானமெடுக்கின்ற முழு அதிகாரமும் மத்திய அரசாங்கத்தின் சார்பாக அமையும் போக்கினை கொண்ட தால் உள்ளுர்ப்பகுதிகள் பாதிப்படைகின்றன. மாவட்ட அபி விருத்திச் சபைகள் வாயிலாக உள்ளூர் சுயநிர்ணயத்தை ஊக்கு விப்பதற்காகக் கூறிக் கொண்ட அரசாங்கம், பயனுள்ள உள்ளூர் சுயநிர்ணய முறையினடிப்படையில் அமைந்திருந்த உண்மையான உள்ளூர் ஆட்சி அமைப்பு முறையை முற்ருமுக அழித்துவிட்டது. மாவட்ட அமைச்சருக்களிக்கப்பட்டுள்ள பதவியும் அதிகாரங் களும், (தற்போதைய பலம்வாய்ந்த பெரும்பான்மையுடன்) மத்திய அரசாங்கம் ஏற்படுத்தும் கட்டுப்பாட்டுக்கான மார்க்கங் களாக அமைகிறது.
அமைச்சர்களாலும் பாராளுமன்ற உறுப்பினர்களாலும் பயன் படுத்தப்படுகின்ற அதிகாரங்களும் இன்னும் சொல்வதானல், மாவட்ட அபிவிருத்திச் சபைகளால் ஆக்கப்படும் எந்தத் துணை விதிகளும் பாராளுமன்றத்தின் அங்கீகாரமின்றிச் செல்லுபடியா
25

Page 15
காதென்பது இதனை மேலும் சித்தரிக்கிறது. பெரிதாகப் பேசப் பட்ட கிராமோதய மண்டலய என்ற சபைகள் அமைக்கப் பட்ட போதிலும், மத்திய அரசாங்கம் உள்ளூர்ப்பிரதேசங்களில் வலிந்து செலுத்தும் ஆதிக்கத்தையும் கட்டுப்பாட்டையுமே இது காட்டுகின்றது. இவையும், இடைத்தேர்தலுக்குப் பதிலாக பா. உறுப்பினர்களை நியமிப்பதும் நிலைமையை மேலும் மோச மாக்கி, உள்ளூர் மட்டத்துடன் தொடர்புடைய விடயங்களைத் தீர்மானிப்பதில் மக்கள் நல்லமுறையிற் பங்கு கொள்ளக்கூடிய உள்ளூர் சுயநிர்ணயத்தின் அமைப்புமுறையையே செயலற்றதாக்கி விட்டது.
வெளித்தோற்றத்தில் ஜனநாயகரீதியிலானதும், அரசியற் திட்டத்திற்கு இயைந்ததுமாகத் தோன்றுகின்ற வழிகளைக் கை யாண்டு உள்ளூராட்சி அமைப்புமுறை முழுவதையுமே சீர்குலைத் தமைக்கு, உண்மையில், உள்நோக்கங்கள் பலவுண்டு. அரசாங்கம் இனப்பிரச்சினையைச் சாதகமாகப் பயன்படுத்தி, அடக்குமுறை அதிகாரங்களை அதிகரித்து, நடைமுறையில் சிறிதளவாயினும் உண்மையான மக்கள் பங்களிப்புக்கு இடமளிக்கின்ற உண்மையான ஜனநாயக முறைகள் அனைத்தையும் சீர்குலைக்க வழிவகுக்கிறது. இந்த நெருக்கடியான கால கட்டத்தில், தமிழ்மக்களின் பிரச்சினை யைத் தீர்ப்பது மட்டும் முக்கியமல்ல. இதைவிட முக்கியமான தென்னவெனில், எதேச்சதிகார, பாஸிஸ் ஆட்சிமுறையை நோக்கிச் செல்கின்ற போக்கைத் தடுத்து நிறுத்துவதற்காக அதிகாரத்தை பன்முகப்படுத்த தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதாகும்.
எனவே, எவ்வித பிரதேச நிருவாக முறையுடனும், மத்திய அரசாங்கம் உண்மையான அதிகாரப் பங்கீட்டைச் செய்வதற்கு வழிவகுக்குமுகமாக நாடு முழுவதிலும் உள்ளூராட்சித் திட்டத் திற்கு புத்துயிரளிப்பது இன்றியமையாததாகும். இச்சூழ்நிலையில் தான் பயனுள்ளதும் சரியான அமைப்புள்ளதுமான பிரதேச சபை களை நாடு முழுவதிலும் அமைக்க முடியும். இவை வடக்கு கிழக்கையும் உள்ளடக்கும். அவற்றுக்குரிய பொறுப்புகள் விசேட அதிகாரங்கள், எவை என்பதை சம்பந்தப்பட்ட எல்லோரும் கலந்துரையாடல் மூலம் தீர்மானிக்கலாம். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்ந்து மத்திய அரசாங்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் இருப்பதுடன், குறைந்த மட்டத்திலான நாளாந்த நிருவாகம் குறிப்பிட்டதும் அவசியமானதுமான அளவு க்கு அத்தகைய பிரதேச சபைகளினல் மேற்கொள்ளப்படலாம். அத்தகைய முறை, உண்மையான ஜனநாயக முறையில் நிர்ண யிக்கப்பட்டு அமுல்நடத்தப்படின், நிருவாகம் ஜனநாயகமயமாக்
26 ή

கப்படுவதுடன் மக்களுக்கு அரசாங்கத்திலும் பார்க்கக் கூடிய அதிகாரங்கள் கிடைக்கவும் வழி ஏற்படும்.
இவ்விதமாக, மத்திய அரசு அமைப்பில், தற்பொழுது வடக்கிலும் கிழக்கிலும் இருந்துவருகின்ற பிரச்சினைகளின் பல வற்றிற்குத் தீர்வுகாணலாம். இவ்வகையில், ஒற்றையாட்சி அமை ப்பினுள், மக்கள் தமது பிரதேசங்களின் நிருவாகத்தில் பங்கு கொள்ளும் உரிமைக்கு உத்தரவாதமளிக்கப்படும்.
வடக்குக் கிழக்கு மாகாணங்கள் தனி மாகாணங்களாக இருக்க வேண்டுமா அல்லது நிருவாக நோக்கங்களுக்காக ஒன்றிணைக்கப் படவேண்டுமா என்பது இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதில் உள்ள மற்றுமொரு பிரச்சினையாகும். ஒவ்வொரு மாகாணத்திலும் அல்லது பிரதேசத்திலும் உள்ள மக்களுக்கு தத்தம் விவகாரங் களிற் பங்குகொள்ள உரிமையுண்டு. கிழக்கு மாகாண மக்கள் தமது விவகாரங்களைத் தனியான பிரதேசமாகக்கொண்டு நடத்த வேண்டுமா அல்லது வடக்கு மாகாணத்துடன் இணைக்கப்பட வேண்டுமா என்பது கிழக்கு மாகாணத்து மக்களால் தீர்மானிக்கப் பட வேண்டிய விடயமாகும் அம்மாகாணத்தில் சர்வஜன வாக் கெடுப்பொன்றை நடத்துவதன் மூலம் இவ்விருப்பத்தைத் தெரிந்து கொள்ளலாம்.
அண்மைக்கால இந்திய வம்சாவளியினர் தொடர்பான பிரச் சினைகள் ஒரளவு வேறுபட்டவை. இவர்கள் தனிப்பிரதேசத் தையோ, தமக்கென ஒர் நாட்டையோ கோரியதில்லை. ஆனல் இலங்கையில் சுதந்திரமான, சுயமரியாதையுள்ள, பயனுள்ள பிரஜைகளாக வாழ்வதற்கான பாதுகாப்பையும், சாதகமான நிலை மைகளையுமே நாடி நிற்கின்றனர். இதற்கு, உண்மையான இன ஒற்றுமை நிலவும் சூழலை மெதுவாகவும், உறுதியாகவும், கவன மாகவும் உருவாக்குதல் அவசியம். அண்மைக்கால இந்திய வம்சா வளித் தமிழர்களுக்கு, பிறப்பின் அடிப்படையில் அல்லது நீண்ட கால வதிவின் அடிப்படையில் பூரண பிரஜாவுரிமை வழங்கப்படு வதுடன் இத் தமிழர்கள் நாட்டிலுள்ள சுதேசமக்களோடு ஒரே சமூகமென்ற வகையிற் கலந்து மதிப்புடனும் சுயமரியாதை யுடனும் வாழ்வதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கான உண்மை யான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். லயன் அறை களுக்குப் பதிலாக சுகாதார, கல்வி, போக்குவரத்து வசதிகளைக் கொண்ட கிராமியக் குடியேற்றங்களுக்கான குடியேற்றத் திட்டங் கள் அமைக்கப்பட வேண்டும். சிங்களவர்களும், தமிழர்களும் ஒரேவிதமாக இவற்றைப் பயன்படுத்தலாம். எனினும், விசேட
27

Page 16
மாக தோட்டத் தொழிலாளர்களைப் பொறுத்தவரையில், தற் பொழுது பிரஜைகளல்லாதோருக்கு பிரஜாவுரிமை வழங்குதல் தொடர்பாகவுள்ள முக்கியமான முட்டுக்கட்டை என்னவெனில் ஐ. தே. கட்சியும் இப்பொழுது குறிப்பாக பூரீ. ல. சு. கட்சியும், இத்தொழிலாளர்களுக்கு வாக்குரிமையளிப்பதால் தேர்தல் நிலை மையில் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளை எண்ணிப் பயம் கொண்டிருப்பதாகும்.
சுதேச புர்சுவாக்களுக்கிடையிலுள்ள வர்க்கப் போட்டிகளும் பூசல்களும் தேசியப் பிரச்சினைக்கு நீடித்ததும் திருப்திகரமானது மான தீர்விற்கு தடைகல்லாக அமைகிறது. இனவாதத்திற்கும் மற்றும் சமூகத் தீமைகளுக்கும் உண்மையில் முடிவேற்பட வேண்டு மாயின் சமூகம் சோசலிஸ் அமைப்பொன்றை உருவாக்கும்வரை காத்திருக்க வேண்டியதுடன், இவ்விடைக்காலத்தில் சமரச ஏற் பாடொன்றை செய்யவேண்டும். இது செய்ய முடியாததொன்றல்ல. இவ்வேறுபாடு மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில், பதட்ட நிலைகளுக்கும் பிரச்சினைகளுக்கும் உட்பட்டிருக்கின்ற அதேவேளை யில் மக்கள் ஒடுக்கப்பட்டும் சுரண்டப்பட்டும் வருவதற்குக் காரணம் இலங்கை போன்ற அபிவிருத்தியடையா நாடுகளில் நிலவி வரும் பொருளாதார ஏகாதிபத்திய முறையாகும். இம்முறையை ஒழிப்பதற்கு, முதலாளித்துவ பொருளாதார ஏகாதிபத்தியத் தியத்திற்கும் அதன் முகவர்களுக்கும் எதிரான போராட்டத்தில் சிங்கள தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று திரளவேண்டும். பிளவு பட்ட இலங்கை அத்தகையதோர் விடுதலைப்போராட்டத்தைச் சிதைத்துவிடும்.
இவ்விலக்கை மனதிற்கொண்டு பார்க்கும்பொழுது இன ஒற்று மையைக் கட்டியெழுப்புவது மிக முக்கியமாயினும், இலகுவான காரியமன்று. தற்போதைய சூழ்நிலையில், உடனடியாக, சினேக பூர்வமான சமூக உறவுகளையும் சமூகங்களின் இணைப்பையும் ஏற் படுத்துவது முடியாததாக அல்லது நடைமுறைச் சாத்தியமற்ற தாக இருக்கலாம். ஆனல், சகிப்புத்தன்மையுடன் அயலவர் களுடன் சேர்ந்து வாழும் சூழலில் மக்கள் வாழக்கூடிய நிலைமை கள் உருவாக்கப்படல் வேண்டும்.
இதன் மறுபுறம் இடைவிடாத, பயனற்ற பதட்டநிலையும், சச்சரவுமே நிலவும். இது இலங்கை மக்கள் அனைவரதும் உயிர் மூச்சையே உறிஞ்சிவிடும்.
28

-,|- |-
|-
|- |- ---- |- -|- |- |-
· : |- - * |-
|- |- |-
|- |-
|- |-----|- |- |- |-
--------

Page 17
எமது தேசிய 'இனட் ஒன்றைக் காண்பதற்கான பட்டுள்ள வேளையில் எமது இக்கையேட்டினை, பொதுப
ஆரம்பத்தில் இக்கையே யின் தேசிய பிரச்சினை ட பட்ட ஆய்வுப்பத்திரமாக 1984 ஜனவரி முற்பகுதி வெளியிடப்பட்டது. பின்வி பட்டதன் பயனுக இக்கை
இக்கையேடு பல கொந்தளிப்பானதும் ெ வேளையில், சரியான எதி உதவுமென இதய பூர்வ
கி
39 பிரிஸ்டல் வீதி, கொழும்பு 1. 1984 GLD 9
கி. தொ.
அச்சிட்டோர் : ஆனந்த
 

-- Xہوتے ہ
' பிரச்சினைக்கு நல்ல தீர்வு முயற்சிகள் மேற்கொள்ளப் பங்களிப்பென்ற வகையில் க்களுக்கு சமர்ப்பிக்கிருேம்.
டு, 1983 டிசம்பரில் இலங்கை பற்றி எம்மால் தயாரிக்கப் அமைந்திருந்தது. இது யில் கல்லச்சுப் பிரதியாக னர் இப்பத்திரம் விரிவாக்கப் கயேடு வெளிவருகின்றது.
தகவல்களை அளிப்பதுடன், நருக்கடியானதுமான இவ் ர்கால நோக்கினை வழங்கவும் மாக நம்புகிருேம்.
றிஸ்தவ தொழிலாளர் ஒத்துழைப்பு
ஒ. பிரசுரம்
அச்சகம், கொழும்பு I3.
ܪ .