கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்துக்கலைக்களஞ்சியம் 9

Page 1


Page 2


Page 3


Page 4


Page 5
இந்துக்கலை
தொகுதி - இன்
பிரதம பதி பேராசிரியர் :
உதவிப் ப;
திடுக.இ
நிர்வாக
திரு.சீதெ
இந்து சமய கலாசார அலுவல்
2Ο

க்களஞ்சியம்
பது (ந - நெள)
ப்பாசிரியர் சியத்மநாதன்
நிப்பாசிரியர் ரேகுபரன்
ஆசிரியர் பவநாயகம்
*াuাগুঞ্জসিতা فقافة لكية في "
5ள் திணைக்களம் - இலங்கை O7

Page 6
முதற்பதிப்பு
வெளியீடு
பதிப்புரிமை
ජෙජ්ථි,
ISBN
Igathu
இந்து 248 - இலங்ை
இந்து
தினக் 68, ଶର, இலங்ை
600/-
978 -

2007
சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் 1/1 காலி வீதி, கொழும்பு - 04.
)ó,
சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்
தரல் பப்ளிக்கேஷன் (பிரைவேட்) லிமிட்டெட்
ஹவுஸ் வீதி, கொழும்பு - 15
D.
955 - 9233 - 12 - 1

Page 7
HINDU ENC
Voli
Edi Prof. S.
S. Mr. K
Man .J NMr. S.Tܢ Գ藻 - Q
Department of Hindu Religi

YCLOPAEDIA
Ime - IX V
tor in Chief Pathmanathan
ub Editor
Raguparan
aging Editor nelvanayagam
పురోుLA ༨h in bཚat bat་
w*
sus and Cultural Affairs - Srilanka 6 2007 orga cort

Page 8
First Edition
Puplished By
Copyright
Printed By
Price
ISBN
December
Departmen 248- 1/1 Ga. Srilanka.
Departmen
Thinakkura 68, Elie House Srilanka.
6OO/s
978 - 955 .

2007
t of Hindu Religious 8 Cultural Affairs, le Road, Colombo - 04,
t of Hindu Religious 8 Cultural Affairs
Puplication (Pvt) Ltd Road, Colombo- 15
. 9233 - 12 - 1

Page 9

இந்துக் கலைக்களஞ்சியம்
தொகுதி - ஒன்பது
எழுத்தாளர் குழு
பேராசிரியர் சி.பத்மநாதன்
பேராசிரியர் வி. சிவசாமி
3ਪਰੰਪ சோகிருஷ்ணராஜா ಒಂrjai வசந்தா வைத்தியநாதன் திரு.க.இரகுபரன் கலாநிதி ப.கணேசலிங்கம்
திருமதி இந்திராதேவி சதானந்தன்
திருவேல் சுவாமிநாதன்
திரு. கமுகுந்தன் திருமதி தேவகுமாரிஹரன் திருமதி நித்தியவதி நித்தியானந்தன் திருமதி ஹேமலோஜினி குமரன்
ඛණ්ඨික). சநந்தினி
திரு. சு.துஷ்யந்த்
தியில் அவ்வக் கட்டுரைகளின் ஆசிரியர் பெயர்களின் சுருக்கம் தரப்பட்டுள்ளது. மேற்படிகட்டுரையாளர்களின் பெயர்ச் சுருக்கங்கள் முறையே வருமாறு
க.இர (பக),(இச) (வேக),(ச.மு.) (தேஹ), (நிநி), (ஹேகு,(சந,(சுது)

Page 10
கட்டுரை ஆசிரியர்கள்
பேராசிரியர் சி. கணபதிப்பிள்ளை கலாநிதி வ.தேனப்பன் 繳
§ திரு.எஸ்.கிருட்டிணசாமி ஐயனார்
புலவர் ப.வெ.நாகராசன் திரு. தி.சுப்பிரமணியம்
பேராசிரியர் கி.பிரகதம்பாள்
புலவர் இரா.சங்கரன்
கலாநிதி முதிருமலை
கலாநிதி பி.தெட்சணாமூர்த்தி
திரு. எம். இராஜகோபால்
திரு. மு. வீரசாமி திரு.அ.இராஜகோபால்
திரு.க.குளத்தூரான்
திரு.த.அகரமுதல்வன்
வித்துவான் பாலசாரநாதன்
செல்வி பு:உமாமகேஸ்வரி
திரு.வெ.நாராயணஸ்வாமி
பிரியா கல்யாணராமன்
திரு ஆ கோமதிநாயகம்
திரு. செ. வைத்திலிங்கன்
திரு. நா. முத்தையா நாகர்கோவில் கிருஷ்ணன்
திரு. பா. இராமமோகன்
மேற்படி அறிஞர்களின் கட்டுரைகள் இத்தொகுதிக்கென எழுதப்பட்டவை, இருந்து பெறப்பட்டவை. மேற்படி கட்டுரையாளர்களின் பெயர்ச் சுருக்கங்க (சிக) (வதே),(எஸ்.கி) (பவேநாத் (திசு) (கி.பி), (இராச) (முதி), (பி.தெ}, { (அஇ) (க.கு) (த.ஆ) (வீபா), (பு:உ) (வெ.நா., (பி.க) (ஆகோ) @ಶ್.®a) (
 
 
 

அல்ல; வேறு நூல்களில் ள் முறையே வருமாறு: எம்.இ) (மு.வி) நா.மு.), (நா.கி) போஇர)

Page 11
'இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் வெளி
தொகுதி இது.
அகர வரிசைக்கிணங்க ந முதல் நெள வரையிலான 6 இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. இதற்குமுன் வெளியிட இந்துசமயத்துடன் தொடர்புடைய வரலாறு, சடங்குகள், ப
முதலான அம்சங்கள் விளக்கப்பட்டுள்ளன.
இந்துக் கலைக்களஞ்சியத்தைத் தொகுக்கும் பணி சிரமம் மி எழுதுவதற்கான வளங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. அறிஞர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், விரிவுரையா6 முதலானோர் தம்மாலான முயற்சிகளை மேற்கொண்டு எம
இதனால் இந்துக்கலைக்களஞ்சியத் தொகுதிகளை இடைெ
இந்துக் கலைக்களஞ்சியத்தின் பதிப்பாசிரியராகப் பணிபுரி சி.பத்மநாதன் அவர்கள். ஆய்வாளர்களால் எழுதிச் சமர்ப்பி
செப்பம் செய்து வழங்கி இந்நூலின் வெளியீட்டுக்கு கார ஊக்கமும் ஒத்துழைப்பும் மிகவும் மகத்தானவை. பேராசிரிய
எமது திணைக்களத்தின் பணிகளுக்கு ஊக்கமளித்து, ெ ஆதரவு வழங்கிவரும் மதவிவகார ஒழுக்கமேம்பாட்டு அமைச் விவகார ஒழுக்க மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் திரு கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். இத்தொகுதிக்கு தமது
கட்டுரையாளர்களுக்கும் எனது நன்றியைக் கூறக் கடமைட்
இந்துக் கலைக்களஞ்சியம் தொகுதிகளின் பதிப்புப் பல உதவிப் பணிப்பாளர் திரு.சீ.தெய்வநாயகம், தென்கிழக்குப் பல் சிரேஷ்ட ஆராய்ச்சி அலுவலர் திருமதி தேவகுமாரி ஹரன்
நித்தியானந்தன், செல்வி நந்தினி சண்முகலிங்கம் ஆகியோரு கொள்கிறேன். இந்துசமயம், இந்துப்பண்பாடு போன்ற துறைக இதற்கு முன்னைய தொகுதிகளைப் போலவே இத்தொகுதி
 

வெளியீட்டுரை
சாந்தி நாவுக்கரசன்
பணிப்பாளர், இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம்
யிட்டுவரும் இந்துக்கலைக் களஞ்சியத்தின் ஒன்பதாவது
ழுத்துக்களில் தொடங்கும் சொற்களுக்குரிய கட்டுரைகள் ட எட்டுத் தொகுதிகளைப் போலவே இத்தொகுதியிலும்
ண்பாட்டுக் கோலங்கள், தலங்கள், கலாசார சின்னங்கள்
க்கதும் காலம் எடுப்பதுமாகும். இந்நூலிற்கான கட்டுரைகளை ஆயினும் திணைக்களத்துடன் நீண்டகாலம் தொடர்புடைய ார்கள், எமது திணைக்கள ஆராய்ச்சி உத்தியோகத்தர்கள் க்குக் கட்டுரைகளைச் சமர்ப்பித்து உதவி வருகின்றனர். வெளியின்றி வெளியிட முடிகின்றது.
பவர் பேராதனைப் பல்கலைக்கழகத் தகைசார் பேராசிரியர் க்கப்படும் கட்டுரைகள் அனைத்தையும் உரிய முறையில் | 6001 கர்த்தாவாக விளங்குகின்றார். இவர் அளித்துவரும் பருக்கு எமது மன்மார்ந்த நன்றிகள் உரித்தாகுக.
சயற்பாடுகள் எந்த விதமான இடையூறுமின்றி நிறைவேற சர் மாண்புமிகு பந்து பண்டாரநாயக்க அவர்களுக்கும் மத எச்.பி.ஹேரத் அவர்களுக்கும் எமது நன்றியைக் கூறிக் பங்களிப்பை மேற்கொண்ட எழுத்தாளர் குழுவினருக்கும்
Eயில் சிறப்பாகக் கடமையாற்றும் ஆராய்ச்சிப் பிரிவின் கலைக்கழக தமிழ்த்துறை விரிவுரையாளர் திரு.க.இரகுபரன்,
ஆராய்ச்சி உத்தியோகத்தர்களான திருமதி நித்தியவதி கும் எனது பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவித்துக் உயர்கல்வி பெறுவோரும் ஆய்வு மேற்கொள்வோரும்
முலமாகவும் பயன்பெறுவர் என்பது நமது நம்பிக்கையாகும்.

Page 12
LugÜLJEDNJ சி.பத்மநாதன்
தகைசார் ஓய்வுநிலைப் பேராசிரியர் பேராதனைப் பல்கலைக்கழகம்
இருபதாம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் இந்துச முற்பட்ட காலத்தில் அது தென்னாசிய துணைக் கண்ட 19ஆம் நூற்றாண்டில் அதற்கு அடிப்படையான மறைநூல் மேல்நாடுகளிலுள்ள வித்தியாபீடங்களே அவற்றை உலக
ஜேர்மனி இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய தேசங்களிலு நூல்வடிவில் வெளியிட்டனர். அவர்களே அவற்றை டெ தர்மசாஸ்திரங்களின் தரமான வெளியீடுகளும் முதன்முதலாக தந்திரங்கள் என்பன அங்கு அறிமுகமானதும் இந்துசமயம் பரிமாணத்தைப் பெற்றது. காலப்போக்கில் மகாகவிகளா ஆநந்தவர்த்தனர் ஆகியோரின் நூல்களும் அங்கு அறிமு அபிமானங்கொண்டிருந்த மேல்நாட்டு அறிஞர் சமூகம் மிகத் இந்துசமுதாயத்தின் இலக்கிய நெறி, பாரம்பரியம் என்பன6 மறுமலர்ச்சிக்கு ஏதுவாயிருந்தன. இந்திய பண்பாட்டு மறுமலர் மகரிஷிகளின் இயல்புகளை நினைவுகொள்ளும் வகையி சாதனையாளரான இராமகிருஷ்ணர் உபநிடதசாரமான சிற வசனங்களிலே மொழிந்தார். அவரின் வழிப்பட்ட நரேந்திரநா நிலைநாட்டினார்.
சமயம் சமூக நிலைப்பட்டது என்பதையும் அவர் வலியுறுத் என்ற கருத்திற்கமைய வாழந்து, தனது வாழ்க்கையைச் ச அவர் இயேசுநாதரின் மறுஅவதாரம்ானவர் என்று அங்கிலிக்க குருவான அதிமேற்றிராணியார் சொன்னார். புராதன காலத்து ( பற்றுக்கோடாகக் கொண்டு இந்துசமுதாயத்திற்கு 2Ꭷ .6ᏓᏍᏑᏏ6Ꭲ நவபாரதம் கண்டது.
பண்டைக்கால இந்து சமுதாயத்தின் அருஞ்சாதனைகள் eே
அவை தத்துவங்களையும் சாஸ்திரங்களையும் அடிப்படை சின்னங்களாகும். அவை வரலாற்றுச் சின்னங்கள், பண் வகைக்குரியவை. சாஸ்திரங்கள் சிந்தனாபூர்வமான விவ ஆதாரமாகக் கொண்டு ஈட்டிய சாதனைகளின் அடையாளப சாதனைகளின் தாரதம்மியங்களை எடைபோட்டுக் காட்டுப சேகரித்து, அவற்றைப் பேணுவதற்கும் ஆராய்வதற்கும் 6 பெருஞ்செலவில் இயங்கி வருகின்றன.
இந்துநாகரிகத்தின் அருமை பெருமைகளை அறிந்துகெ அறிவுணர்ச்சியும் தொல்பொருட் சின்னங்கள் பற்றிய புலன் தகுதிகளைப் பெற்ற, மேதாவிலாசங் கொண்டவரான ஆ காலத்தில் இந்துநாகரிகம் அடைந்த இணையிலாச் சிறப்புக மூலமாகவே உலகமும் அந்த உணர்வினைப் பெற்றது. சிவதத்துவங்களைப் புரிந்துகொள்வதற்கு ஏதுவான திறவுகோ

மயம் உலகின் பல பாகங்களிற் பரவியுள்ளது. அதற்கு த்திற்குரிய சமயநெறியாகவே அமைந்திருந்தது. ஆயினும் களும் பேரிலக்கியங்களும் உலகப் பிரசித்தமாகிவிட்டன.
அரங்கில் அறிமுகம் செய்தன.
ள்ள மகாபாண்டித்தியம் பெற்ற அறிஞர்களே வேதங்களை மாழிபெயர்த்து ஐரோப்பிய மொழிகளில் வெளியிட்டனர். ஐரோப்பாவில் இடம்பெற்றன. மகாபாரதம், மகாபுராணங்கள், , இந்துநாகரிகம் என்பன பற்றிய புரிந்துணர்வு ஒரு புதிய ன காளிதாஸர், வான்மீகி, பரதமுனிவர், அபிநவகுப்தர், முகமாகின. பண்டைய கிரேக்கத்திலும் உரோமாபுரியிலும்
தொன்மையானதும் அதிகவர்ச்சியானதும் வளமிக்கதுமான வற்றைக் கண்டு வியப்புற்றனர். அவர்களின் சாதனைகளும் ரச்சியின் பிரதிநிதியாக வாழ்ந்த இரவீந்திரநாதர் முற்காலத்து வில் தனது சிந்தனைகளை வெளிப்படுத்தினார். ஆன்மீக ந்தனைகளைப் போன்ற கருத்துகளை இலகுவான சிறிய தர் சமயங்களில் இந்துசமயமே மிகவும் மேலானது என்பதை
ததினார். ஒழுக்கம் விழுப்பம் தரலால் உயிரினும் ஒம்பப்படும் த்திய சோதனையாக வரையறை செய்தார் மகாத்மாகாந்தி. ன் திருச்சபையின் முதல்வரான காற்னபெருரி தேவாலயத்துக் ஒழுக்கநெறிக் கோட்பாடுகளையும் ஆன்மீக சாதனைகளையும் ாவிய ரீதியில் பெருமை தேடியவர்களை மறுமலர்ச்சியுற்ற
வறோரு வகையான மூலங்கள் வாயிலாகவும் உணரப்பட்டன. யாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் பற்றிய பாட்டுச் சின்னங்கள், தொல்பெர்ருட் சின்னங்கள் என்ற ரங்களைக் கொண்டவை. சாஸ்திரீகமான சிந்தனைகளை மானவை கலாசார சின்னங்கள். அவை ஒரு சமுதாயத்தின் வை. அதனால் எல்லாத்தேசங்களிலும் அவற்றைத் தேடிச் விளம்பரப்படுத்துவதற்கும் தனியான அரசாங்கத் துறைகள்
ாள்வதற்கு மறைநூல்கள், சாஸ்திரங்கள் என்பன பற்றிய மை நோக்கும் இன்றியமையாத் தேவைகளாம். அத்தகைய ஆனந்தக் குமாரசுவாமி போன்றோரினால் மட்டுமே புராதன ளை உணர்ந்துகொள்ள முடிநீதது. அவர்களின் சாதனைகள் ஆனந்தகுமாரசாமியின் ‘சிவ நடனம் நவீனகாலத்தவர்கள் லாகியது. நூல்கள் நவிலும் தத்துவங்களை உருவகப்படுத்திக்

Page 13
காட்சிப்படுத்துவது கலை. அவற்றை கல்லிலும் உலோகத் நடனம். வண்ண மை கொண்டு உருவகிப்பது ஓவியம். அழ பெறுபவை. அவற்றில் ஏற்படும் உணர்ச்சிக்கு நிகரானவை கலாதத்துவத்தின் குறிக்கோளாகும்.
இந்துநாகரிகத்தின் மகோன்னதமான சாதனைகளைப் பற்றி வாழும் இளைஞர்கள் அறிந்திருக்கின்றனர் என்பதைப் பற்றிய ஒன்று. அதனைப் பற்றிய விசாரமும் இலகுவானதன்று. ஒ(
இலங்கையில் பாடசாலைகளிலும் கல்லூரிகளிலும் சமயபாட சைவசமயநெறி ஒரு பாடமாக உள்ளது. அதற்குப் பின் பெறுகின்றது. இவை இரண்டும் பொதுக் கல்வி உயர்தராதர பல பாகங்களில் அமைந்துள்ள கல்லூரிகளில் இப்பாடங்கள் பெற்ற பட்டதாரி ஆசிரியர் இன்மையால் மலைநாட்டுப் பகு உள்ளனர். அங்குள்ள தலைமையாசிரியர்களிற் சிலர் இப் என்றும் சொல்லப்படுகின்றது.
முன்னொரு காலத்தில் இந்துநாகரிகம் என்னும் பாடத்ை இலகுவான பாடம், கூடுதலான புள்ளிகளைப் பெறக்கூடிய தராதரங்கள் பற்றி எவரும் சிந்திக்கவில்லை. சில ஆண் பல்கலைக்கழகத் தேர்வுகள் தொடர்பாகப் புகுத்திவிட்டார்ச புள்ளி மற்றைய பாடங்களிற் கிடைக்கும் புள்ளிகளுக்கேற்ப பெறுகின்றவிடத்து அப்பாடம் பல்கலைக்கழக அனுமதி தெ ஆகவோ C ஆகவோ மாற்றமடைதல் கூடும். எனவே பரீட்ை அது ஒரு மாணவருக்கு வழங்கப்படும் புள்ளிகளிலன்றி ஒt தங்கியிருக்கும். பாடங்களைத் தரப்படுத்தும் Z புள்ளிக் ச இன்று வரை இந்துநாகரிகம் தரப்படுத்தலுக்கு உரிய பா மானப் பிரச்சினையாகும். ஒரு குறிப்பிட்ட பாடம் தரப்படுத்தலு மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களும் நிதானமற்றவர்கள் என்றே க அவற்றுட் பல தமிழ் மொழியிலே பயிலும் மாணவர்கள் க
பல்கலைக்கழக அனுமதிகள் தொடர்பான தரப்படுத்தல் துரதிர்ஷ்டவசமானது. மாணவர்கள் அதைப் புரிந்து கொ6 பாடங்களையே கற்கவேண்டும் என்று கருதுகிறார்கள். டெ கல்லூரி அதிபர்கள் இந்த விடயம் தொடர்பாகச் சரியான விள முடியாத விடயம். கல்விக் கொள்கையினை நெறிப்படுத்து சரியான விளக்கங்களையும் அறிவுறுத்தல்களையும் வழங் நிதானமற்றும் பொறுப்பற்றவிதமாகவும் கருத்துகளை வெளி சொல்லத் துணிந்து விடுகின்றனர். பாரபட்ச உணர்வுகளினால் ஏதோ பிரிதி ஏற்பட்டு விடுகின்றது. அவற்றுக்குச் சார்பான என்ற எண்ணத்தினால் இவர்கள் கேடுகள் புரிகின்றனர். அத

திலும் வடிப்பது சிற்பம். அரங்கில் அபிநயித்துக் காட்டுவது குணர்ச்சியும் கலையுணர்ச்சியும் கலைகளின் மூலம் மலர்ச்சி அத்தகைய இன்ப உணர்வுகளை ஏற்படுத்துவது இந்து
III
ச் சிந்திக்குமிடத்து அவற்றை எந்த அளவிற்கு இலங்கையில் சிந்தனை இயல்பாகவே எழுகின்றது. அது தவிர்க்கமுடியாத ந வகையில் அசெளகரியமானது.
ம் போதிக்கப்படுகின்றது. ஆண்டு 11 வரையான வகுப்புகளில்
அது இந்துசமயம், இந்துநாகரிகம் என்ற நாமங்களைப் ப் பரீட்சைக்குரிய பாடநெறிகளாக உள்ளன. இலங்கையின் Dள மாணவர்கள் விரும்பிக் கற்கிறார்கள். ஆயினும் பயிற்சி திகளிலே தகுதி பெற்ற போதனாசிரியர்கள் மிகச் சிலரே பாடங்களுக்கு விரோதமான போக்கினைக் கொண்டுள்ளனர்
தை எவரும் போதிக்கலாம் என்ற நிலை இருந்தது. அது பாடம் என்று மாணவரும் பிறரும் கருதினார்கள். ஆனால் டுகளுக்கு முன்பாக பாடங்கள் ரீதியான தரப்படுத்தலைப் 5ள். அந்த அடிப்படையில் ஒரு பாடத்தில் ஒருவர் பெறும் மாற்றியமைக்கப்படும். பரீட்சையில் ஒரு மாணவர் A தரம் 5ாடர்பாகத் தரப்படுத்தலுக்கு உள்ளாகும் பொழுது அது B சைப் பெறுபேறுகளின் பெறுமானத்தைப் பொறுத்தவரையில் பீட்டு அடிப்படையில் ஒரு பாடத்தினுடைய தராதரத்திலே கணிப்பீட்டுத் திட்டம் நடைமுறைக்கு வந்த காலம் முதல் டமாகவில்லை. தரப்படுத்தல் என்பது ஒரு சமுதாயத்தின் க்கு உள்ளானால் அந்தப் பாடம் தொடர்பான பரீட்சைகளும் ருதப்படுவர். பல பாடங்கள் தரப்படுத்தலுக்கு உள்ளாகின்றன. ற்கும் பாடங்களாகும்.
பற்றி எமது சமுதாயத்திலே புரிந்துணர்வு ஏற்படாதமை ர்ளவில்லை. அவர்கள் A தரத்திலே புள்ளி கிடைக்கும் ற்றோர்களும் இதனைப் பற்றிப் புரிந்து கொள்வதில்லை. க்கத்தைப் பெற்றுள்ளார்களா என்பது எம்மாற் புரிந்துகொள்ள ம் தேசிய கல்வி நிறுவனம் இந்த விடயந் தொடர்பாகச் வேண்டும். சில மாவட்டங்களிலுள்ள கல்வி அதிகாரிகள் பிடுகிறார்கள். உண்மைக்குப் புறம்பானவற்றை அரங்கிலே அவ்வாறு செய்கின்றனர். சில பாடங்கள் மீது அவர்களுக்கு பிரசாரங்களில் அவர்கள் ஈடுபடுகின்றனர். கேட்பாரில்லை காரிகளிடையில் நிதானம் இன்றியமையாத் தேவையாகும்.

Page 14
கல்வித் துறைக்குப் பொறுப்பான நிறுவனங்கள் முரன வேண்டும். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, தேசி செயற்பாடுகளில் முரண்பாடற்ற தன்மை காணப்படுவது வலியுறுத்தப்படுகின்றது. மறுபுறம் அந்தக் குறிக்கோள் பாதிப்படைகின்றது. சிறப்பான தகுதிபெறும் மாணவர் ஒது பெறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுகின்றன. காலப்போக்கில் பெரிதாகும். கல்வியிலே தராதரங்கள் பேணப்படல் வேண்டும்.
சமூகவிஞ்ஞானம், மனிதப் பண்பாட்டியல் தொடர்பான உ கருதுகின்றனர். அதற்குப் பல காரணங்கள் உண்டு. கட கொள்கைகளே அடிப்படையில் அதற்குப் பொறுப்பானவை.
தாய்மொழியிலே பல்கலைக்கழகங்களிலே கல்வியினைப் ே ஆயத்தங்கள் இன்றியும் உணர்ச்சிவசமாகவும் நடைமுறைப்படு ஆங்கில மொழிப் போதனையை நிறுத்திவிட்டனர். உலகளா ஏற்பட்ட காலத்தில் எமது மாணவர்கள் அரசாங்கம் வெ குறிப்புக்களையுங் கொண்டே கல்வி பயிலுகின்றனர். பிறபெ எமது இளைஞர்கள் புரிந்துகொள்ள வாய்ப்பில்லை. புரிந்து பெரும்பாலானோர் மனித உரிமைகள் பற்றிய நவமான சி பயிலும் மாணவரும் இதில் அடங்குவர் என்பது வியப்பிற்குரி அவற்றிலுள்ள மாணவரிற் பெரும்பாலானோர் அறிவுபூர்வமாகவ இது சமகால உலகின் போக்கிற்கு முற்றிலும் மாறுபட்டத
பாடப்புத்தகங்கள் தொடர்பாக ஒரு புதிய தேசியக் கொள்ை தயாரித்து வெளியிடவேண்டும் என்ற கொள்கையில் மாற்றம் கட்டுப்பாட்டில் அமையவேண்டும் என்ற எண்ணம் பாடநூல் வெவ்வேறான நூல்களைப் படிப்பதற்கு வாய்ப்புகள் ஏற்பட
பாடப்புத்தகங்களைப் பொறுத்தவரையில் இந்துசமயம் தெ அரசாங்க வெளியீட்டுத் திணைக்களம் வெளியிடுகின்ற பிழைகளையும் பலர் அவதானித்துள்ளனர்.
பாடநூல்களிற் கட்டுரை எழுதுவோரில் பலர் பல்கலைக்க என்பதும் குறிப்பிடக்குரியது. பாடத்திட்டம் தேசிய கல்வி நிறு நூல்வெளியீட்டுத் திணைக்களத்தினர் சொல்லுகின்றனர். ஆலோசனை குழுவொன்று அமைந்திருந்தது. அதற்கு என்6 இவர்களை என்ன அடிப்படையிலே நியமனஞ் செய்தனர்? இ6 தேசியக் கல்வி நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும். தமிழ் அப்பாலாகிவிட்டன போலும். ஆனால் பாடநூல்கள் மூலப் பரிகாரம் தேடுவதற்கான முயற்சிகள் சைவப் பெருமக்களி

பாடற்ற தெளிவான நெறிமுறைகளைக் கடைப்பிடித்தல் ய கல்வி நிறுவனம், பரீட்சைத் திணைக்களம் ஆகியவற்றின் அவசியம். ஒரு புறம் தரம் பேணப்படுவதன் அவசியம் உதாசீனம் செய்யப்படுகின்றது. இதனால் இந்துசமயம் க்கப்பட்டு தகைமையற்றவர்கள் பல்கலைக்கழக அனுமதி ல் இந்த அனர்த்தங்களினால் ஏற்படக்கூடிய கேடு மிகவும் எல்லோரும் அதனைப் புரிந்து செயற்படுவது அவசியமாகும்.
III
பர் கல்வியிற் தரம் குறைந்துவிட்டதாக அவதானிகள் பலர் ந்த ஐந்து தசாப்தங்களாக அரசாங்கங்கள் கடைப்பிடித்த
பாதிக்கவேண்டும் என்ற கொள்கை அவசரமாகவும் வேண்டிய த்தப்பட்டது. அதேசமயம் பாடசாலைகளிலும் கல்லூரிகளிலும் ாவிய ரீதியில் அறிவு வளர்ச்சியும் தொழில்நுட்பப் புரட்சியும் பளியிடும் பாடப்புத்தகங்களையும் ஆசிரியர்கள் வழங்கும் )ாழிப் பயிற்சியின்மையால் உலகில் ஏற்படும் மாற்றங்களை கொள்ளவும் மறுக்கின்றார்கள். உதாரணமாக அவர்களிற் ந்தனைகளையே ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர். அரசியல் யதாகும். பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் ஆகிவிட்டன. ன்றி உணர்ச்சிபூர்வமாக மட்டுமே சிந்திக்கப் பழகிவிடுகின்றனர்.
ாகும.
கை உருவாகவேண்டும். அவற்றை அரசாங்க நிறுவனங்களே ) வேண்டும். ஒரு வகையில் சிந்தனைகள் எல்லாம் அரசின் விநியோகமுறையிலே மறைமுகமாக அமைந்திருக்கின்றது. வேண்டும்.
ாடர்பான நூல்கள் இங்கு விசேட கவனத்திற்குரியனவாகும். சைவநெறி பற்றிய நூல்களிலே பல குறைபாடுகளையும்
ழகத்திலே நான்கு வருடங்கள் பயின்று பட்டம் பெற்றவர்கள் வனத்தின் நெறிப்படுத்தலுக்கமைய உருவாக்கப்பட்டதென்று முன்பு இந்துசமய பாடம் தொடர்பாக 22 பேர் அடங்கிய ண நடந்தது? இப்பொழுது எத்தனை ஆலோசகர் உள்ளனர்? வற்றுக்கு யார் பொறுப்பாகவுள்ளனர்? இந்த விநோதங்களுக்கு pமொழிக் கல்வி சம்பந்தமான விடயங்கள் விமர்சனத்துக்கு ) சைவசமயம் பற்றிய அறிவு சீர்குலைகின்றது. இதற்குப் ன் கடமையாகும்.

Page 15
இந்துக்கலைக்களஞ்சியத்தின் 9ஆம் தொகுதி நகர வரிசை சொற்களைத் தலைப்புக்களாகக் கொண்ட கட்டுரைகள் அ திணைக்களத்தின் ஆய்வுப்பணியாளராகவும் நிருவாக இளையதலைமுறையினர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பெற்றவர்கள். ஆர்வம் உடையவர்கள். வேறுசிலர் பல்கலைக் சோ.கிருஷ்ணராஜா போன்றோரின் கட்டுரைகள் வித்துவப் புல க.இரகுபரனின் கட்டுரைகளும் அத்தகையவை. திணைக்களத் கட்டுரைகளும் இங்கே இடம்பெற்றுள்ளன.
கட்டுரையாளர்களின் ஒத்துழைப்பும் கட்டுரைகளின் தராதரமு பல அசெளகரியங்களின் மத்தியிலும் அவர்கள் கட்டுரைகளை அவர்களின் ஊக்கமும் ஆதரவும் இல்லாதவிடத்து இ தொகுதிகளுக்குக் கட்டுரை எழுதியவர்களே இத்தொகுதியி கட்டுரையாளர்கள் வரிசையில் புதிய தலைமுறையினரின் தரம் குன்றாத வகையிலே பணிகள் முன்னெடுத்துச் செல்
இந்து சமயம், இந்துநாகரிகம் எனும் பாடங்களைப்
இந்துக்கலைக்களஞ்சியத்தின் தொகுதிகளை ஆர்வத்துட வாழ்கின்ற அறிஞர்களும் இத்தொகுதிகளைப் பாராட்டுகின் அமைத்துக்கொள்ள முடியும். ஆனால் அதற்கு வேண்டிய வச ஆகக் குறைந்தது 25 கட்டுரை ஆசிரியர்களின் கட்டுரைகள் இ பாண்டித்தியம் பெற்றவர் மிகச் சிலரே இலங்கையில் உள்ள பட்டம் பெற்று பதவி நிலைகளை அடைந்தவர்களில் சில பணிகளில் இருந்து ஒதுங்கிவிட்டனர். பல அழைப்புக்களும் அத்தகைய சூழ்நிலையில் ஒன்பது தொகுதிகளை இந் வெளியிட்டுள்ளமை ஒரு மகத்தான சாதனை ஆகும்.
தேவையான இடங்களில் புகைப்படங்கள் மூலம் கட்டு ஆயினும் கோயில்கள், சிற்பங்கள், ஒவியங்கள் முதலான எதுவும் கிடைப்பதில்லை.
சஞ்சிகைகள், கட்டுரைத் தொகுதிகளாக வெளிவந்த செய்யப்பட்டு இங்கு சேர்க்கப்பட்டுள்ளன. அந்தப் பணியிை வனப்பான கோலத்தில் வெளிவருவதற்கான ஆக்கப் பண பாராட்டுக்குரியது.
இந்துக்களஞ்சியத் தொகுதிகள் கிரமமாக வெளிவருவதற் திருமதி சாந்தி நாவுக்கரசன், ஆய்வுபிரிவின் உதவி பணிட் திருமதி. தேவகுமாரி ஹரன், திருமதி நித்தியவதி நித்தி விடாமுயற்சியும் ஒத்துழைப்பும், ஒன்பதாம் தொகுதி சிறப் முயற்சியில் மேலும் பல தொகுதிகள் திட்டமிட்டப்படி வெளிவ

V
யில் உள்ள உயிர்மெய்களை முதலெழுத்துக்களாகவுடைய டங்கியது. கட்டுரை ஆசிரியரிற் சிலர் இந்துசமய, கலாசாரத் ம் புரிவோர் ஆகவும் உள்ளனர். இவர்களில் சிலர் த்திலும் தென்னிந்திய பல்கலைக்கழகங்களிலும் பட்டம் 5கழகப் பேராசிரியர்கள். பேராசிரியர் வி.சிவசாமி, பேராசிரியர் ]மைநோக்கில் அமைந்தவை - ஆழமானவை. விரிவுரையாளர் திற்கும் பல்கலைக்கழகங்களுக்கும் அப்பால் உள்ளவர்களின்
ம் பாராட்டுக்குரியவை. போதிய சன்மானங்களை எதிர்பாராதும் எழுதி உரிய காலத்திலே ஒப்படைத்தமை குறிப்பிடற்குரியது. த்தொகுதி வெளிவந்திருக்கமுடியாது. முன் வெளிவந்த ல் அடங்கிய பெரும்பாலான கட்டுரைகளை எழுதியுள்ளனர். பிரவேசம் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும். அதனாலே லப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
பயிலும் மாணவர்களும் அவர்களின் போதனாசிரியரும் ன் படிக்கின்றார்கள். தமிழகத்திலும் பிறபிரதேசங்களிலும் 1றனர். அவற்றை மேலும் மிகச் செம்மையான முறையில் திகள் கிடைப்பதில்லை. ஒரு கலைக்களஞ்சியத் தொகுதியில் டம்பெறவேண்டும். இந்துசமயம், இந்துநாகரிகம் என்பனவற்றில் ளனர். பொருத்தமான சில விடயங்கள் தொடர்பாகப் படித்து ர் இந்துக்கலைக்களஞ்சியத்தில் தொகுதிகள் தொடர்பான
வேண்டுகோள்களும் எதுவித பலனையும் அளிக்கவில்லை. துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் இதுவரை
}ரைகளின் அம்சங்களை விளக்குவது அவசியம் ஆகும். வை பற்றிய புகைப்படங்களைப் பெறுவதற்கான வசதிகள்
நூல்கள் என்பவற்றிலிருந்தும் சில கட்டுரைகள் தெரிவு ன இரகுபரன் செய்தார். வழமை போலவே இத்தொகுதியும் ரிகளையும் அவரே நிறைவேற்றினார். அவர் திறன் எமது
கு ஆர்வமுடன் செயற்பட்டுவரும் திணைக்களப் பணிப்பாளர் பாளர் திரு. ச. தெய்வநாயகம், ஆராய்சி அலுவலர்களான பானந்தன், செல்வி நந்தினி சண்முகலிங்கம் ஆகியோரின் புடன் வெளிவருவதற்கு உதவின. எல்லோருடைய கூட்டு பரவேண்டும். அதுவே வளம் செய்யும் உயர்வான பணியாகும்.

Page 16


Page 17
BLD
 


Page 18
நயினை நாகபூசணி
 
 

அம்மன் கோயில்

Page 19


Page 20

(ggu田)追ro Qumu范)自己巳恩岛国

Page 21


Page 22


Page 23
,
 


Page 24


Page 25
|-) |--, , , :)
 


Page 26
Šš
நாயக்கர் கால 8
 

灘
研 5 그역 口 ] 63 E 口 尉 娜

Page 27


Page 28


Page 29
நகரத்தார்
"நகரத்தார்கள் சமயச் சார்புமிக்கவர்கள், அவர்களு டைய சிவநெறி வாழ்வு மிகவும் அழுத்தமானது. அவர்கள் கோயிலைச் சார்ந்து வாழும் குடிமக்கள்’ என்பார் டாக்டர்
தமிழண்ணல்,
அவ்வாறு அழுத்தமான சிவநெறி வாழ்வினை அவர்கள் எவ்வாறு அடைந்தனர் என்ற வரலாற்றினைக் காண்பது
நலம் பயக்கும்.
நகரத்தார் வரலாறு
நகரத்தார். நாட்டுக்கோட்டை நகரத்தார், இரத்தின தனமகுட வைசியர், பூபாலதனவைசியர், பிரதான வைசியர், உபயகுல பூபால வைசியர், சந்தி கங்காகுல வைசியர், சிவகோத்திர வைசியர், இளையாத்தங்குடி நகர வைசியர், நாட்டுக்கோட்டைச் செட்டியார் எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்பெற்றனர். இப்பொழுது நகரத்தார் நாட்டுக் கோட்டைச் செட்டியார் என்ற பெயர்களே பரவலாக வழங்
கப்படுகின்றன.
நகரத்தார் கி.மு. 2898க்கு முன்னே சம்புத்தீவில் உள்ள நாகநாட்டில் சாந்தியாபுரி என்ற நகரில் வாழ்ந்து வந்தனர் எனப் பூங்கொன்றை வேலங்குடிக் கல்வெட்டு கூறுவதாக அறிஞர்கள் பலர் எழுதியுள்ளனர். எனினும் அப்படி ஒரு கல்வெட்டு காணக்கிடைக்கவில்லை எனத் தொல்பொருள்
ஆய்வுத்துறையினர் கூறுகின்றனர்.
சாந்தியாபுரியிலிருந்து குடிபெயர்ந்த அவர்கள் கி.மு.2897 முதல் கி.மு. 790 வரை காஞ்சிபுரத்தில் வாழ்ந்தனர். பிறகு காஞ்சிபுரத்திலிருந்து புறப்பட்டுக் கி.மு. 789 முதல் கி.பி. 706 வரை காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்தனர்.
பின்னர் கி.பி. 707 ஆம் ஆண்டு பாண்டிய நாட்டிற்கு வந்தனர். இவர்கள் இப்போதைய பசும்பொன், புதுக் கோட்டை மாவட்டங்களில் உள்ள 96 கிராமங்களில்
18ஆம் நூற்றாண்டு வரை வசித்து வந்தனர்.
இந்துக் கலைக்களஞ்சியம்
 

கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக நகரத்தார், தொழில் காரணமாகத் தென்னிந்தியாவின் பல பகுதிகளிலும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் பலவற்றிலும் குடியேறினர். எனினும் பழைய 96 கிராமங்களில் 78 கிராமங்களை
இன்றும் தங்கள் வாழிடங்களாகக் கொண்டுள்ளனர்.
நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் வாழ்ந்த 96 கிராமங்க ளுக்கும் 'செட்டிநாடு' எனப் பொதுப்பெயர் உண்டு. அது 1700 சதுர கிலோ மீற்றர் பரப்பளவுள்ளது. நகரத்தார்களின் இப்போதைய மக்கள் தொகை சற்றேறக்குறைய ஒரு இலட்சம் ஆகும்.
நகரத்தார் பெற்ற மெய்ஞ்ஞானம்
நகரத்தார் பெற்ற உலகியல் துன்பங்களே அவர்களை
இறையியல் நெறியில் பழுத்த சிவபக்தர்களாக மாற்றி
யுள்ளது என்பது ஆய்வாளரின் கருத்து.
நாகாட்டில் அரசன் கொடுமை செய்தல்
சம்புத்தீவில் உள்ள நாகநாட்டில் சாந்தியாபுரி நகரத்தில் வாழ்ந்தபோது கோபதீசுவர சுவாமியினை வழிபட்டுள்ளனர். சதாசிவ குருபீடத்தில் சிவதீட்சை பெற்றுள்ளனர். மரகத விநாயகரைப் பூசை செய்துவந்துள்ளனர். மன்னனுக்கு இணையான மரியாதையோடு வாழ்ந்த அவர்களுக்கு அந்நாட்டு அரசன் செய்த கொடுமையால், அவர்கள் கி.மு. 2897ஆம் ஆண்டு காஞ்சிபுரத்திற்குக் குடிபெயர்ந்து சென்றனர் என்று வரலாற்று நூல்கள் கூறுகின்றன. அரசன் எவ்விதமான கொடுமை செய்தான் என்பதைப் பற்றிய குறிப்பு காணப்படவில்லை.
கல்லில் கடவுளின் சிற்பத்தை வடித்து வழிபடுவதைக் காட்டிலும் மரகதக் கல்லில் விநாயகரின் சிற்பத்தைச் செய்து வழிபட்டதிலிருந்தே அக்கால நகரத்தார்களின் செல்வச் செழிப்பு தெரியவருகின்றது.
மன்னர் பின்னோர் என்றழைக்கப்பட்ட இவர்களுக்கும், மன்னர்களுக்கும் செல்வச் செழிப்பால் யார் பெரியவர் என்ற போட்டி பற்றிய செய்திகள் காவிரிப்பூம்பட்டின வாழ்வின்போது பலவாறாக விவரித்துக் கூறப்பட்டுள்ளன. இதுபோன்ற பொருளாதாரப் போட்டிகளினாலேயே நகரத்தார்களின் வணிகத்திற்கு எதிராக நாகநாட்டு
&இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 30
மன்னன் சில பல தடைகளைச் செய்திருக்கக் கூடும். அதனையே அரசன் செய்த கொடுமை என வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன போலும்.
காஞ்சி மன்னன் கொடுமை செய்தல்
சாந்தியாபுரியிலிருந்து காஞ்சிபுரத்திற்கு கி.மு. 2897 இல் குடிபெயர்ந்த நகரத்தார்களுக்கு அந்நாட்டரசன் எல்லா விதமான மன்னிணை மரியாதையையும் கொடுத்தான். நகரத்தார்கள் மரகத விநாயகரை வழிபாடு செய்துகொண்டு இரத்தின வணிகத்தில் ஈடுபட்டனர்.
பின்பு அந்நகரத்து அரசனாகிய பிரதாபராசன் அநீதியாய் அபராதம் முதலிய தண்டனைகளை விதிக்கத் தொடங் கியதால் கி.மு. 789 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்திலிருந்து குடிபெயர்ந்து காவிரிப்பூம்பட்டினத்திற்கு வந்தார்கள் என வரலாற்று நூல்கள் கூறுகின்றன.
காவிரிப்பூம்பட்டினத்தில் பெற்ற துன்பங்கள்
நகரத்தார்களின் காவிரிப்பூம்பட்டின வாழ்க்கையினை மிகச்சுருக்கமாகப் புதுக்கோட்டை அரசின் வரலாற்று நூல் பின்வருமாறு கூறுகிறது.
“நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் காவிரிப்பூம்பட்டினத் திலிருந்து வந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. அவர்கள் சோழ மன்னர்களால் ஆதரிக்கப்பட்டு வந்தவர்கள். முடி சூட்டு விழாவின்போது மன்னரின் தலையில் முடிசூட்டும் கெளரவத்தையும் அவர்கள் பெற்றிருந்தனர். சோழமன்னன் ஒருவன் ஒரு செட்டிகுல மாதை மானபங்கம் செய்ய சூழ்ச்சிகள் செய்தான் என்றும், எனவே செட்டியார்கள் சோழநாட்டிலிருந்து கூண்டோடு குடிபெயர்ந்து, சோழ நாட்டின் தெற்கெல்லையான வெள்ளாற்றுக்குத் தெற்கே குடியமர்ந்தனர் என்றும், தமது பெண்களை வெள்ளாற் றைக் கடந்து சோழ நாட்டு எல்லைக்குள் பிரவேசிக்க அனுமதிக்கக் கூடாது என்று சபதம் செய்துகொண்டனர்
என்றும் ஒரு பழைய கதை கூறுகிறது”
இதே கருத்தைத் தென்னிந்தியச் சாதிகளும் குடிகளும் எனும் நூலை எழுதிய எட்கர் தர்சுடன் என்பவரும் எழுதி யுள்ளார். அவ்வாறு கொடுமைப்படுத்திய சோழ அரசன்
இந்துக் கலைக்களஞ்சியம்
 

பெயர் பூவந்திச் சோழராசன் என நகரத்தார் சரித்திரம் குறிப்பிடுகிறது.
சோழமன்னன் செட்டிகுலப் பெண்ணை அடைய விரும்பி யது பற்றிய கதை ஒன்று சூடாமணிப்புலவர் இயற்றிய வைசியபுராணத்தில் காணப்படுகிறது. அதில் அப்பெண் னின் பெயர் அன்புப்பிரியாள் எனக் குறிப்பிடப்பெற்றுள்ளது. மன்னன் அப்பெண்ணைப் பலவந்தமாக மணப்பது என்ற முடிவுடன் திருமணப் பந்தல் போடுமாறு உத்தரவிட்ட தாகவும், “எம் வீட்டுப் பெண்நாய்க்கும் நீ தகுந்தவன் அல்ல” என்பது விளங்க ஓர் ஆண் நாயைப் பந்தற்காலில் கட்டிவிட்டுச் சோழனுக்குத் தெரியாமல் தம் சுற்றத்தாருடன் திருவிடைமருதூருக்கு அன்புப்பிரியாள் குடும்பத்தினர் ஓடிவிட்டதாகவும், அது கண்டு ஏமாற்றமும் அவமானமும் அடைந்த சோழன் இதனால் கடுங்கோபம் கொண்டு வணிகர்களையெல்லாம் கொடுமைப்படுத்தினான் என்றும்
வைசிய புராணம் கூறுகிறது.
LSL SLL LSL SLL LS SL qLSL SL S S S S S S LSS SLS S S S S S S S S S S S SL S S S S S S S S S S S S S S S S LS S S S S ஆங்கு அரசனும் வெகுண்டு கணங்கொள்வீரரை ஏவித் தன் கழனிசூழ் நாட்டில் வணங்கொள் வாணிபர் யாரையும் வருத்தினன் மன்னோ”
என்னும் பாடல் அடிகள் அக்கருத்தினை இயம்புகின்றன.
சோழமன்னனுக்கும் புகார் நகர வணிகர்களுக்கும் இடையே கசப்பும் பகைமையும் ஏற்பட்டதைப் பல கதைகள் கூறுகின்றன. அவை புகார் வணிகர்களது குலச்செருக்கை யும் பணப்பெருக்கையும் பலவிதத்திலும் சோழன் குலை க்க முனைந்தான் என்று கூறுகின்றன.
காவிரி நதி கரையுடைத்துப் பெருகியபோது ஊரவர்கள் எல்லோரும் மண் சுமந்துவந்து கொட்டவேண்டும் என்று உத்தரவிட்டான். ஆனால் வணிகர்களோ, மண் சுமக்க மறுத்து, தமது பங்குக்குரிய இடத்தைத் தமது பண்டக சாலைகளிலிருந்த பஞ்சுப் பொதிகளைப் போட்டு அடைத் தனர். இச்செய்தி சோழமன்னன் வணிகர்களைக் கூலியாட் களைப் போல வேலை வாங்கி அவர்களது குலச்செருக்கை அடக்க முனைந்ததையும் வணிகர்களோ அதற்குப் பணியாமல் தமது குலச்செருக்கையே மீண்டும் நிலை நாட்டிக் கொண்டதையும்தான் உணர்த்துகிறது.
&இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 31
இதைக் கண்டு கோபமும் பொறாமையும் கொண்ட அரசன், செல்வத்தின் பலத்தாலும் வளத்தாலும் தருக் குற்று நின்ற வணிகர்களின் செருக்கை மேலும் பல வழி களில் அடக்க முயன்றான்.
ஒரு நாள் அவன் வணிகர்களை அழைத்துத் தனது பட்டத்து யானையை நிறுத்து எடை சொல்லுமாறு பணித்தான். வணிகர்களோ தராசில் ஏற்றாமலேயே யானை யின் எடையை மதித்து நிறுத்து எடை சொல்லிவிட்டார்
கள்.
அதன் பிறகு அரசன் மோசமான தங்கத் தகட்டைக் கொடுத்து மாற்றுச் சொல்லுமாறு கேட்டான். அவர்களும் மேற்பூச்சுத் தங்கத்தின் மாற்று என்ன என்று கண்டு சொல்லிவிட்டனர்.
இதனால் மேலும் கோபம் கொண்ட அரசன் வணிகர்களி Lம் நீளம் போதாத கயிறு ஒன்றைக் கொடுத்துத் தனது கோட்டையிலுள்ள கிணற்றில் தண்ணிர் இறைக்குமாறு கட்டளையிட்டான். வணிகர்களோ தாம் அணிந்திருந்த பொன் நகைகளையே கயிறாகக் கட்டி முடிந்து கிணற்றுத் தண்ணிரை இறைத்துக் காட்டினர்.
இதனால் கோபாவேசமுற்ற மன்னன், வணிகர்கள் தமது வீடுகளுக்கு வெள்ளியாற் செய்து பூட்டியிருந்த கதவுக ளையெல்லாம் கழற்றி வருமாறு தனது பணியாட்களு க்கு உத்தரவிட்டான். அவர்கள் அவ்வாறு வெள்ளிக் கதவுகளைப் பிடுங்கி எடுத்துச் சென்ற பிறகோ வணிகர்கள் அன்றிரவுக்குள்ளேயே வெள்ளிக் கதவுகள் இருந்த இடத் தில் பசும் பொன்னால் கதவுகளைச் செய்து பூட்டிவிட்டனர்.
இதனையும் கண்டு வெகுண்ட பின்னரே, சோழமன்னன் வணிகர்குலப் பெண்களையெல்லாம் சிறையெடுக்கத் திட்டமிட்டதாகவும், அதனால் வணிகர்கள் பெண்களை யெல்லாம் கொன்றுவிட்டுச் சிறுவர்களை ஆத்துமநாத சாத்திரியாரிடம் ஒப்படைத்துவிட்டுத் தாமும் தற்கொலை புரிந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தக் கதைகளும் கர்ணபரம்பரையாக நெடுங்கால
இந்துக் கலைக்களஞ்சியம் x

மாகவே வழங்கி வந்திருக்கின்றன என்பது
“சோழ மண்டலமாகிய காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்த
வர்கள். மதயானையை நிறைகண்டவர்கள். . காவேரி யைப் பஞ்சாலடைத்தவர்கள். கலியாண வாசலுக்குப் பவளக்கால் நாட்டியவர்கள். தண்ணிர் கயிற்றுக்குத் தங்கக்கயர் போட்டவர்கள். ’ என்றெல்லாம் 1608
இல் எழுதப்பட்ட ஏழு நகரத்தார் தருமசாசனத் திலிருந் தும் தெரிய வருகிறது.
‘ஏழு நகரத்தார் பள்ளு என்ற நூல் இவ்வாறு பாடுகி
நிது.
பஞ்சுப் பொதி கொண்டு காவிவேரியூரைப்
பரவா தடைத்த வணிகேசர் பட்டத்து யானைக்குக் கிட்டத்திற் போகாமல்
பார்த்து நிறுத்த வணிகேசர் பகட்டான தங்கத்தட்டைக் கிள்ளி மாற்றுப்
பார்த்துரை சொல்லும் வணிகேசர் பற்றாக் கிணற்றுக் கயிற்றுக்குப் பொன்மணி
பாய்ச்சி இறைத்த வணிகேசர் பாங்கான வெள்ளிக் கதவுபிடுங்கப்பின் பைம் பொன்னாலிட்ட வணிகேசர் பாண்டிய நாட்டிற் குடியேறும் ஏழ்நகர் பார்த்திபராம் வணி கேசர்களே!
இதே போல் 'ஏழு நகரத்தார் குழுவ நாடகமும்
மிஞ்சு காவேரி வெள்ள நீரதனைப் பஞ்சுப் பொதியால் பருவணை யணைத்தோர் கொங்கை மின்னடையார் கூவ நீரிறைக்கத் தங்கச் சுவடி தாம்பாய்க் கொடுத்தோர் மாணிக்கம் பிச்சை வழங்கிய திறலோர் ஆணிக்கையா மதயானையை நிறுத்தோர்
என்று நகரத்தார் புகழ்பாடுகிறது.
18ஆம் நூற்றாண்டில் பாடப்பெற்ற கண்ணுடையம்மன்
பள்ளு என்ற சிற்றிலக்கியமும் ஒரு பாடலில் கீழ்வருமாறு கூறுகிறது.
x இந்து சaய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 32
கண்ணினால் மதயானையை நிறுத்தும்
கடலில் விட்ட கனகம் அழைத்தும்.
விண்ணுயர்ந்த பொன் மேருவுரைத்த முன் மீனவர் முடிசூட்டிய மெய்யாய்
நண்ணுகிர்த்தி படைத்த வணிகர்
நகரமெங்கள் நகரங்காணி ஆண்டே!
பாடுவார் முத்தப்ப செட்டியார் எழுதிய 'திருமுக விலாசத்திலும் பின்வரும் அடிகள் காணப்படுகின்றன.
மேரு கிரியுரைத்தும் வேழந் தனைதிறுத்தும் பேருலகின் மிக்கான பேரானார் - யாரும் அதிசயிக்கக் காவேரி யாறுதனைப் பஞ்சுப் பொதியா லெறிந்த பொன்னைக் காசினியோர் தாமெச் சிடவழைத்த வேலெல சிங்க - நெடுங்கிணற்றில் வீம்புக்குத் தம்விட்டில் வெள்ளாட்டி - பாற்சுவடி தாம்பிட்டு நீரிறைத்த தாட்டியர்கள் - தேம்பவே கல்யாண வாயிலிலே காவணக் காலுக்குயர்ந்த நம்பவளக் காலதனை நாட்டினோர் - வல்லிரவில் மற்கதவு வெள்ளிதனை வாங்கிவிட அக்கணமே பொற்கதவு நாட்டிப் புகழ் படைத்தோர்.
இவ்வாறு நாட்டுக்கோட்டை நகரத்தார் பற்றிக் கூறப்படும் கதைகள் சிலவற்றைக் கீர்த்தி பெற்ற வணிகர்கள் 38 பேரின் கதைகளைப் பாடும் 'வைசிய புராண மும் சிற்சில
மாற்றங்களுடன் கூறுகிறது.
வைசிய புராணத்தில் வணிகரின் செல்வச் செழிப்பு சோழ மன்னனின் செல்வத்தைக் காட்டிலும் பன்மடங்கு உயர்ந்தது என்று வலியுறுத்தும் கதை ஒன்று காணப்படு கிறது. கோப்பரகேசரி என்ற சோழ மன்னன் நவமணிகள் ஒவ்வொன்றிலும் ஒரு கோடி சேர்த்திருந்த பெருமையைக் காண்பிப்பதற்காக அவன் தனது பட்டத்து யானையின் முன்னால் எப்போதும் ஒரு பொற்காளத்தை ஊதிக் கொண்டு போகுமாறு செய்தான். இவ்வாறு அவன் தனது பொற்காளம் ஒலிக்கக் காவிரிப்பூம்பட்டினத்திற்குள் வந்து நுழைந்தான். அங்குள்ள 'கடவுளான்' என்னும் வணிகன் அக்காளத்தின் ஒலி கேட்டு, அவனிடமே அதற்குக் காரணம் என்ன என்று கேட்டான். சோழமன்னனோ
&x&
 
 

'கோதிலா நவகோடி நாராயணன் ஆதலால் இவ் அவனி அறியவே ஊதுமென்றனன் என்ன உரைத்தனன்”
இதைக் கேட்ட கடவுளான் “உம்மிடமுள்ள செல்வத்து க்கு இந்தக்காளம் அடையாளம் ஆகுமானால் இதைக் காட்டிலும் அதிகச் செல்வம் படைத்தவர்கள் என்ன அடையாளம் வைத்துக் கொள்வது?’ என்று கேட்டான். வணிகனிடம் நவமணிகள் ஒவ்வொன்றிலும் ஒன்பது கோடி இருந்ததைக் கண்டதும் சோழ மன்னன் வெட்கப்பட்டுத் தனது பொற்காளத்தையே அந்த வணிகனிடம் ஒப்படைத் துவிட்ட்ான் என்று வைசிய புராணம் தெரிவிக்கிறது. வணிகர்களது செல்வ வளத்தினை இப்புராணம் கூறுகிறது.
வணிகர்கள் தமது செல்வ வளத்தின் மூலம் சமுதாயத் தில் பெற்றுவந்த செல்வாக்கினால் அவர்கள் மணிமுடி ஒன்றைத் தவிர - அதாவது நாட்டை ஆளும் உரிமை ஒன்றைத் தவிர - மற்றபடி அரசனுக்குரிய ஏனைய மரியாதையையும் சிறப்புக்களையும் அரசனுக்குச் சமமாகவே அனுபவித்து வந்தனர்.
அதேசமயம் அரசனுக்கு முடிசூட்டும் உரிமை புகார் நகர வணிகருக்கு இருந்ததால் 'சிவகோத்திர் வைசிய விருத்தி நூலாசிரியர் வணிகர்களை மகுடவைசியர் என்று கூறுகிறார். இதனையே பாடுவார் முத்தப்ப செட்டியாரின் நகர வாழ்த்து ‘மூவேந்தர் தங்களுக்கு முடிபுனை யவல்லவர்கள்’ என்றும் ஏழு நகரத்தார் குழுவ நாடகம்,
நாவாலுயர்ந்த நவமணி ஈந்து மூவேந்தருக்கு முடிபுனைந்திட்டோர்
என்றும் பாராட்டிப் புகழுகின்றன.
இவ்வாறு அரசனோடு சரிநிகர் செல்வாக்குக் கொண்டவர் களாகப் புகார் நகர வணிகர்கள் இருந்தனர். அப்படிப்பட்ட உயர்ந்த செல்வாக்குமிக்க வணிகர்கள் காவிரிப்பூம்பட்டி னத்தில் அரசனின் கொடுமை தாங்கமாட்டாமல் தற்கொலை செய்துகொண்டனர் என்ற கூற்றிலிருந்து, அவர்கள் உயிரினும் சிறந்த மானம் காரணமாகவே தற்கொலை செய்து கொள்ளுமளவிற்கு முடிவு செய்துள்ளனர் எனத்
இந்த சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 33
தெரிகிறது.
பாண்டியன் அழைத்து வந்தது உண்மையா?
சுந்தரபாண்டின் என்னும் பாண்டிய மன்னன் சோழ நாடு சென்று, சோழ மன்னனின் ஒப்புதலுடன் வணிகர்களை அழைத்துவந்து தன் நாட்டில் குடியேற்றினான் என்று நகரத்தார் வரலாற்று நூல்கள் கூறுகின்ற கருத்தை ஆராய வேண்டியுள்ளது.
பாண்டிய நாடு பொருளாதாரத்தில் தலைசிறந்து விளங்
கியதாகவும், நிறைந்த வணிகர்களைப் பெற்றிருந்ததாகவும் இலக்கியங்கள் சான்று பகர்கின்றன.
புகார் நகரத்து வணிகர்கள் கொழுங்குடிச் செல்வர்களாக விளங்கியது போலவே மதுரை வணிகரும் வளம்கெழு செல்வராகவே விளங்கியுள்ளனர். எனவே, சோழ நாட்டிலி ருந்து வணிகர்களை அழைத்து வந்துதான் பாண்டிய நாட்டை வளப்படுத்த வேண்டும் என்ற நிலை பாண்டிய மன்னனுக்கு இல்லை என்பது வெளிப்படையாகத் தெரி கின்றது.
பாண்டிய நாட்டை வளப்படுத்தும் அளவிற்குத் திறமை வாய்ந்த வணிகர்களைத் தன் நாட்டிலிருந்து அனுப்புவது சோழ நாட்டுக்கு இழப்பு என்றல்லவா சோழ மன்னன் எண்ணியிருப்பான்? எனவே, உயர்ந்தோங்கு செல்வமுடைய வர்களைச் சோழ மன்னன் பாண்டிய மன்னன் அழைத்த தற்காக அனுப்பியிருக்க மாட்டான். ஆனால் பதிஎழு அறியாப் புகார் நகரத்திலிருந்து நகரத்தார்கள் புறப்பட்டு வந்தது உண்மை.
பாண்டிய நாடு வந்ததன் உண்மைக்காரணம்
அவ்வாறாயின், எக்காரணத்திற்காக புகாரிலிருந்து வந்தனர் என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும். பூங் கொன்றை வேலங்குடியில் நகரத்தார் செய்த சாதிமுறை நியாயங்கள் பற்றிய விவரத்தில் பின்வருமாறு கூறுப்படு
கறது.
”கடலுக்கு மேற்கு, பிரான்மலைக்குக் கிழக்கு, வைகை க்கு வடக்கு, வெள்ளாற்றிற்குத் தெற்கு, இந்நான்கெல்லை க்குட்பட்ட வேளாளர் பூமியாகிய இந்நாட்டிலேயே
இந்துக் கலைக்களஞ்சியம்x
線
 
 

குடியிருக்கிறது வேறிடங்களில் குடும்பத்தோடு போய்க் குடியிருத்தல் கூடாது. பெண்டுகள் சுவாமி தரிசனம் தீர்த்த யாத்திரைகளுக்குப் புருஷர்களோடு போய் வரவேண்டும். இதர காரிய நிமித்தம் அன்னிய தேசங்களுக்குப் பெண்டு கள் போகிறதில்லை.”
இதற்குச் செட்டிநாட்டு எல்லைகளைப் பற்றிக் கூறும் பாடுவார் முத்தப்ப செட்டியாரது பாடல் அரணாக அமையும்.
வெள்ளாறது வடக்காம் மேற்குப் பிரான்மலையாம் தெள்ளார் புனல்வைகை தெற்காகும் - ஒள்ளியநிர் எட்டிக்கடல் கிழக்காம் இதன்றோ நாட்டரண்சேர்
செட்டிநாட் டெல்லையெனச் செப்பு.
கால்டுவெல் பாதிரியாரின் கூற்று இக்கருத்திற்கு மேலும் வலிமை சேர்க்கின்றது.
"வெள்ளாறு பற்றிய இந்தக் குறிப்பானது, நாட்டுக் கோட்டைச் செட்டியார்களிடையே தமது பெண்களை வெள்ளாற்றைத் தாண்டிச் செல்வதற்கு என்றுமே அனுமதிக் கக் கூடாது என்றதொரு பழைய வழக்கம் நிலவி வந்த காரணத்தால் ஊர்சிதமாகிறது. பெண்கள் எல்லைகளைத் தாண்டிச் செல்வது ஓர் அபசகுன காரியமாகக் கருதப்பட்
99
للقـا
மேற்கண்ட இரு குறிப்புகளும் புகார் நகரத்து வணிகர் கள் பாண்டிய மன்னன் அழைத்ததற்காகவே சோழ மன்ன னின் அனுமதியின் பேரில் பாண்டிய நாட்டிற்கு வந்தனர் என்ற கூற்றைப் பொய்ப்பிக்கின்றன.
அவ்வாறு சோழ மன்னனின் அனுமதியின் பேரில் மனம் ஒப்பி வந்திருந்தால் தமது பெண்கள் பாண்டிய - சோழ நாட்டின் எல்லையான வெள்ளாற்றைக் கடந்து வடக்கே சோழ நாட்டுக்குள் செல்லவே கூடாது என்று ஒரு கட்டுப் பாட்டை விதித்திருக்க மாட்டார்கள்.
சோழ மன்னனுக்கும் வணிகர் குலத்தினருக்கும் இடையே ஏற்பட்ட போட்டி மனப்பான்மையினால், சோழன், வணிகர்குலப் பெண்களைச் சிறையெடுக்க முயன்ற தாலேயே நாடு பெயர்ந்தனர் என்னும் கூற்றை இவ்விரு குறிப்புகளும் மெய்ப்பிக்கின்றன.
KX 85žsou asasí sapeaejsci geopolooršaseTů

Page 34
அடுத்துவரும் ஐயப்பாடும் நன்கு சிந்திப்பதற்கு உரியது. வெள்ளாற்றைத் தாண்டி சோழ நாட்டுக்குள் தமது பெண் கள் போகக் கூடாது எனக் கட்டுப்பாடு வகுத்த நகரத்தார், தமது நாட்டின் தெற்கெல்லையாக வைகை நதியைத் தீர்மானித்தது ஏன் என்று சிந்திக்கவேண்டும்.
வைகை நதியின் தென்கரையில் உள்ள பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையிலும், தங்கள் குலப் பெண்கள் சென்று குடியிருக்கக்கூடாது என்றே கட்டுப்பாடு
செய்திருந்தது இதனால் வெளிப்படுகிறது.
சோழமன்னன் ஒரு பெண்ணைக் கவர்ந்தது போலவே பாண்டிய மன்னன் ஒருவனும் நகரத்தார் குலப் பெண் ஒருத்தியை கவர்ந்து சென்றுள்ளான்.
ஏற்கனவே நாகரிகம் கருதிச் சாந்தியாபுரி மன்னனும், காஞ்சி மன்னனும் கொடுமை செய்தனர் என்று மட்டுமே எழுதினர். என்னென்ன கொடுமைகள் என எழுதவில்லை. அதுபோலச் சோழ மன்னன் ஒரு பெண்ணைச் சிறையெடுத் தான் என்று மட்டுமே எழுதினர். சிறையெடுக்கப்பட்ட பெண் ணின் பெயரையோ சிறையெடுத்த மன்னன் பெயரையோ நாகரிகம் கருதி வெளியிடவில்லை என்றே கொள்ள வேண்டும்.
ஆனால் மானம் ஒன்றே பெரிதெனக் கொண்டு, அடைக்க லமாகப் பாண்டிய நாட்டிற்கு வந்தபோது, அப்பாண்டிய மன்னன் ஒருவனும் அதே தவறைச் செய்தபோது அவர்களுடைய கோபம் பன்மடங்காக அதிகமாகியிருக்க (36.606 (6b.
“காவிரிப்பூம்பட்டினத்தை விட்டுப் புறப்படும்போது. ராஜாவினுடைய உபத்திரவம் பொண்ணு விஷயமாய் பொறுக்க முடியாத படியால், இளையேத்துக்குடி வந்து சேர்ந்தோம்” எனத் தருமசாசனத்தில் எழுதியுள்ளனர்.
உபத்திரவம் என்னும் சொல்லும், பொறுக்கமுடியவில்லை என்னும் சொல்லும் மிகச்சூடான சொற்களாகும்.
அந்த உபத்திரவமும் பொறுக்க முடியாத செயலும் பாண்டி நாட்டிலும் பாண்டிய மன்னனாலேயே ஏற்பட்டவுடன்
நகரத்தார்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
இந்தக் கலைக்களஞ்சியம்x
 

எனவே நாகரிகமில்லாது நடந்து கொண்ட மன்னனிடம் நாகரிகம் பாராட்டக்கூடாது என்பதனால் அம்மன்னன் பெயரையும், அது உண்மை நிகழ்ச்சியே என உலகுக்கு முழுமையான செய்தியைத் தெரிவிக்கத் தூக்கிச் செல்லப்பட்ட பெண்ணின் பெயர், பெற்றோர் பெயர், சார்ந்த கோயில், வசித்த தெரு, வாழ்ந்த ஊர் உட்பட அனைத்துச் செய்திகளையும் தெரிவித்துள்ளனர்.
பெண்ணைத் தூக்கிச் சென்ற அரசன் பெயர், காருண்ய பாண்டிய மன்னன், பூங்கொன்றை வேலங்குடியில் DT600slds கப் பெருமாள் தெருவில் வசித்து வந்த நேமம் கோயிலைச் சேர்ந்த, இளநலமுடையான் முத்துவீரப்ப செட்டியார் குமாரானாகிய அருணாசலம் என்பவருடைய மகள் ஐந்து வயதான முத்துமீனாள் என்பவளையே அம்மன்னன் தூக்கிச் சென்றான்.
பாண்டிய மன்னனிடம் நேரில் சென்று பெண்பிள்ளை யைத் திருப்பி அனுப்பும்படி வேண்டியபோது அம்மன்னன் “சிறையெடுத்துச் சென்ற பெண்ணைத் திருப்பி அனுப்பி னால், உங்கள் குல வழக்கப்படி அவளைச் சிரச்சேதம் செய்துவிடுவீர்கள். அவ்வாறு செய்தால் ஒரு தலைக்கு எட்டுத் தலையும் எண்ணாயிரம் பொன்னும் உங்களிடத்து வாங்குவோம்” என்று சொல்லி அப்பெண்ணை அவர்களிடம் கொடுத்தான்.
அவர்கள் அரசன்பால் விடைபெற்றுக் கொண்டு வரும் வழியிலேயே அப்பெண்ணை சாதிநியாய முறைப்படி சிரச்சேதம் செய்துவிட்டனர். ஊருக்கு வந்து " ஏழுகோயில் வழியார் தான் இருக்கின்றோம்” எட்டாவது தலையாக யாருடைய தலையைக் கொடுப்பது? என்று சிந்தித்திருக் கிறார்கள்.
இளையாத்தாங்குடிக் கோயிலில் ஒரு பிரிவினராகிய ஒக்கூருடையார் எழுந்து கூடுதலாகக் கொடுக்க வேண்டிய ஒரு தலையைக் கொடுக்க முன்வந்தனர்.
மானம் பெரியதேயன்றி உயிர் பெரிதில்லை என்று கூறி நகரத்தார்கள் எட்டுத் தலையினையும் எண்ணாயிரம் பொன்னையும் கொடுக்க தாமாகவே முன்வந்தனர். அது கேட்டு அரசன் மிகத்துன்பமுற்று அவர்களை நோக்கி,
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 35
"ஒரு பெண்பழி போதும், நீங்கள் ஒன்றும் தரவேண்டாம். போய் வாருங்கள்” என்று சொல்ல நகரத்தார்கள் திரும்பி வந்தார்கள்.
நகரத்தார் எடுத்த புதுமுடிவு
சாந்தியாபுரி, காஞ்சிபுரம், காவிரிப்பூம்பட்டினம் ஆகிய பகுதிகளில் எல்லாம் மன்னர்களுடன் செல்வச் செழிப்பில் போட்டிபோட்டு, அதனால் கொடுமைப்படுத்தப்பட்ட நகரத் தார்கள், அக்கொடுமைகளுக்கு மாற்றாக வேறு ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்துப் பாண்டிய நாட்டிற்கு வந்தனர். பாண்டிய மன்னனை மதித்து அவனுக்கு வரி செலுத்தி வந்தனர்.
அடைக்கலம் புகுந்த இடத்திலும் அதே துன்பங்கள் தொடர்ந்ததும், வேறு ஒரு பகுதியை நாடி அவர்கள் செல்லவில்லை. தங்கள் வாழ்வின் மையமாக அரசர்களைக் கொண்டு வாழ்ந்ததால்தான் துன்பம் ஏற்பட்டது. பொரு ளையே பெரிதாக மதித்ததாலேயே இன்னல்கள் ஏற்பட்டன என்ற மெய்யுணர்வினைப் பெற்றார்கள்.
நாம் யாருடைய குடிமக்கள் என்று ஆழமாகச் சிந்தித் திருக்க வேண்டும். சோழனின் குடிகளல்லர், பாண்டியனின் குடிகளல்லர். பிறகு? நாம், தெய்வத்தின் குடிமக்களே என்பதை மனமார உணர்ந்தார்கள்.
தெய்வத்தை வாழ்வின் மையமாகக் கொண்டுவிட்டால் வேறு யாருக்கும் அஞ்சவேண்டியதில்லை. நரகவேதனை வராது. யாருக்கும் பணியவேண்டியதில்லை. துன்பமே இல்லாத இன்பமான வாழ்வு வாழக் கோயிலைச் சார்ந்து வாழ்வது ஒன்றே மெய்யான வழி என்று கண்டுணர்ந்தனர்.
நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோம் நடலை இல்லோம் ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம் இன்பமே எந்நாளும் துன்ப மில்லை தாமார்க்கும் குடியல்லாத் தன்மை யான
சங்கரன்னற் சங்கவெண் குழையோர் காதிற் கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகினோமே
இந்துக் கலைக்களஞ்சியம்x
 

என்னும் திருநாவுக்கரசு சுவாமிகளின் சிவஞானம் நகரத்தார்களுக்குத் தோன்றியது.
நாட்டை ஆண்ட அரசனுக்கும் செல்வத்தை ஆண்டுவந்த வணிகர்களுக்கும் இடையே செங்கோல் உரிமைக்கும் செல்வத்தின் உடைமைக்கும் இடையே, நிகழ்ந்த சமுதா யத் தலைமைக்கான போராட்டத்தையே, அதாவது வர்க் கப் போராட்டத்தையே பழைய நிகழ்ச்சிகள் பிரதிபலிக் கின்றன என்பார் திரு. இரகுநாதன்.
அப்போராட்டம் வெவ்வேறு துன்பங்களினால் ஏற்பட்ட மெய்ஞ்ஞானத்தின் உதவியால் முற்றுப் பெற்றது.
பல்வேறு செல்வங்களை உடையவர்கள்’ என்று தங்க ளைப் பற்றி பெருமை பேசிக் கொண்ட நகரத்தார்கள், இறைவனை 'உடையவர் என்று குறிப்பிட்டனர். இறைவ னின் உடைமைப் பொருளாகத் தம்மை எண்ணிக் கொள்ளு
மளவிற்கான பணிவுடைமை அவர்களிடம் தலையெடுத்தது.
அரசர்களுடன் ஏற்பட்ட முரண்பாடுகளினால் மனம் வெறுத்த நகரத்தார்கள் மாதா, பிதா, குரு, தெய்வம், குலதேவதை இவர்களை மட்டுமே வணங்குவது எனச் சாதி முறை நியாயத்தை நிருணயம் செய்துகொண்டனர்.
"இதனைக் கண்ணுடையம்மன் பள்ளு’
”......... மாதா பிதா குரு தெய்வம் தன்னை வணங்குவ தல்லால்
விம்பமா முடி வேந்தரையும் புவி மீதினில் வணங்காத
穷%
என்றும் பாடுவார் முத்தப்ப செட்டியாரின் "திருமுக விலாசம்”
"அன்னை தந்தை தெய்வமுதல் ஆசானைப் போற்றுதலால்
மன்னவரைக் கூட வணங்காதார்’
என்றும் பாடி வலியுறுத்துகின்றன.
மன்னர்களையே வணங்குவதில்லை என்று முடிவெடுத்
தாலும் தெய்வத்தையே தங்களது மன்னராக ஏற்றுக்
கொண்ட காரணத்தாலும், கோயில்களையே தமது வாழ்
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களப்

Page 36
வின் மையமாகக் கொள்ளத் தலைப்பட்டனர். குடியிருக்கும் ஊர்களிலெல்லாம் கோயில்களைக் கட்டியுள்ளனர். அவர்கள் கோயில்களுக்காகச் செலவிடும் முறையினைப்
பின்னிணைப்பில் காணலாம்.
அதனாலேயே அரசுக்கு வரி செலுத்துவது போன்று, கோயிலுக்கு வரி செலுத்த ஆரம்பித்தனர். தங்கள் குடும் பங்களைப் புள்ளிகள்’ எனச் சொல்லிக் கோயிலில் பதிவு செய்து வருகின்றனர். திருமணத்திற்கான அடிப்படைப் பிரிவுகளுக்குக் (கோத்திரங்களுக்குக்) கோயில் பிரிவுக ளையே வைத்துக் கொண்டுள்ளனர்.
நகரத்தார்கள் அவரவர்கள் கோயிலில் உள்ள இறைவன் இறைவியின் திருவருளாலேயே திருமணம் நடைபெறுவ தாக அழைப்பிதழ் அச்சிட்டு அனுப்பும் மரபினை உடைய
வர்கள்.
திருமணத்திற்கு முதலில், உரிய கோயில்களில் பதிவு செய்த பிறகே பிறருக்கு அழைப்பு அனுப்புகின்றனர். அரசனின் ஆணைபோல உரிய கோயில்களிலிருந்து மாலை வந்தால்தான் திருமணம் நடைபெறும் என விதி
வகுத்துள்ளனர்.
நகரத்தார்கள், திராவிட நாகரிகத்தில், பல ஆயிரக் கணக்கான ஆண்டு பண்பாடுமிக்க வாழ்க்கையினைத் தொடர்ந்து நடத்தி வருபவர்கள். எனவே அவர்கள் பல்வேறு மன்னர்களின்கீழ்ப் பெற்ற துன்பங்களே ஞானத்தை - வாழ்வாங்கு வாழும் முறையைக் கற்பித்துள்ளன என்று
கூறலாம்.
பல்வேறு நாடுகளில் அவர்கள் பட்ட துன்பங்கள் அவர்களைச் சுடச்சுடரும் பொன்போல மாற்றியிருக்கின்றன. வாழ்க்கையில் உய்யும் ஒரே வழி தெய்வத்திடம் அடைக்
கலம் புகுதலே என நன்கு உணர்ந்துள்ளனர்.
எனவேதான், நகரத்தார்கள் முழுமையான ஈடுபாட்டோடு கோயில்களைக் கட்டுகின்றார்கள். வழிபாடு செய்கின்றார்
கள். பேணிக்காக்கின்றார்கள்.
கோயிலே தங்கள் வாழ்வின் மையம் பெய்ப்பொருளைச்
இந்தக் கலைக்களஞ்சியம்x
 

சிக்கெனப் பிடித்துவிட்டதாலேயே, கோயிலைக் குறிக்கும் சங்ககாலச் சொல்லான நகரம்' என்பதனையே தங்களது
சாதிப்பெயராகக் கொண்டுள்ளனர்.
நகரத்தார் பெயர்க் காரணம்
நகரத்தார் என்ற பெயர் ஏற்பட்டதற்குப் பலரும் பல காரணங்களைக் கூறுகின்றனர். நகரம் என்றால் காஞ்சி. எனவே காஞ்சிபுரத்திலிருந்து வந்ததால் நகரத்தார்’ எனப் பெயர் ஏற்பட்டது என்பார் கம்பன் அடிப்பொடி சா.கணேசன்
அவர்கள்.
நகரேஷ" காஞ்சி' என்ற பழமொழியின் அடிப்படையில் அவர்கள் கூறுகிறார்கள். அங்கு அதிகமான கோயில்கள் இருப்பதாலேயே அவ்வூருக்கு நகர் என்ற பெயர் வழங்கி யது என்று ஏன் கருதக்கூடாது?
நகர் என்னும் பெயர்ச் சொல்லுக்குக் கோயில், அரண்
மனை, வணிகக் குழுமம் எனப் பல்பொருள் உள.
அரண்மனை போல வீடமைத்து வாழ்வதால் நகரத்தார் என்ற காரணப்பெயர் ஏற்பட்டு வழங்கலாயிற்று என்பது பேராசிரியர் ஒளவை. சு.துரைசாமிப்பிள்ளை அவர்கள்
கருத்தாகும்.
நகரத்தார் பல வணிகக் குழுமங்களை நடத்தியதால், அது குறித்தே நகரத்தார் எனப் பெயர் வந்தது என்பார் திரு. இரகுநாதன்.
பூங்குன்ற நாட்டு வேலங்குடி வணிக நகரத்தொம், எங்கள் தெருவில் பாடிகாவல் நாயநர்க்கு குடுத்தோம் நகரத்தொம் சனத்தி ஊட, பகல் வணிக நகரத்தொம்
கல்வெட்டிக் குடுத்தொம்
எனவரும் வேலங்குடிக் கல்வெட்டு, வணிக நகரத்தார் என்றே குறிப்பிடுகிறது. இதனால் வணிகர் என்னும் தொழிற் பெயர் வேறு என்றும், நகரத்தார் எனும் காரணப்பெயர் வேறு என்றும் புரிந்து கொள்ளமுடிகின்றது.
ZZkSZYZZZ TT LLLLLL LLsC DLD TMMLC CLGLT TTeLLLTTCLL

Page 37
இணன் காரிகுடி ஐஞ்நூற்றுவப் பெருந்தெருவில் நகரத்தார்க்குப் பிடிபாடு பண்ணிக்குடுத்த பரிசாவது.
எனவரும் பிள்ளையார்பட்டிக் கல்வெட்டிலும் ஐஞ்ஞாற் றுப் பெருந்தெரு என்னும் வணிகர் தெருப்பெயர் தனியாக வும் நகரத்தார் என்ற காரணப்பெயர் தனியாகவும் அமைந் துள்ளன.
எனவே வணிகக்குழு என்ற பொருளில் நகரத்தார் என்ற சிறப்புப் பெயர் அமையவில்லை என அறிகிறோம்.
"முக்கன் செல்வன் நகர்’ "கடவுட் கடிநகர்’ "நீ மேய கடி நகர்’ "வரை கெழு செல்வன் நகர்’ "பூமுடி நாகர் நகர்’ "குளவாய் அமர்ந்தான் நகர்”
எனவரும் சங்க இலக்கிய வரிகளில் உள்ள 'நகர்’ என்னும் சொல் கோயிலையே குறிக்கின்றது.
“கோயில் வழியதாகக் குடிகளை அமைத்துக்கொண்ட ஒப்பற்ற நாகரிகம், இன்று நகரத்தார் சமூகத்தில் தான் நிலவுகிறது. அதனால், அச்சமூகத்தினர் திருக் கோயில்களுக்கு வழங்குவதில் கணக்குப் பார்ப்பதில்லை. வழங்குவதோடு மட்டுமன்றி முறையாக வழிபாடுகள் செய்வதிலும் ஈடுபட்டார்கள்” என நகரத்தார், கோயில்வழி நாகரிகத்தைக் கைக்கொண்டு வருவது பற்றிப் பாராட்டிக் கூறுவார் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள்.
பிறப்பு முதல் இறப்பு வரை கோயிலைச் சார்ந்து வாழ்ந்து கோயிலையே வாழ்வின் மையமாகக் கொண்டு கோயில்வழி நாகரிகத்தைக் கடைப்பிடிப்பதால் அக்கோயில் எனும் பொருளிலேயே நகரத்தார் என்ற சிறப்புப் பெயர் ஏற்பட்டது என்று ஆய்வாளர் கருதுகிறார்.
நகரக் கோயில்கள் பொதுமைக் கூறுகள்
சிவ வழிபாடே நகரத்தார்களின் தலையாய வழிபாடு
இந்துக் கலைக்களஞ்சியம்x
 

ஆனதால் கோபுர வாயிலின் நேராகக் கருவறையுள் சிவலிங்கம் கிழக்கு நோக்கியதாக அமைந்திருக்கிறது.
கருவறையை அடுத்து அருத்த மண்டபம் அமைந்துள் ளது. அருத்த மண்டபத்தின் வடபுறம் நடராசப் பெருமான் சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர் சிற்றாலயம் அமைந்துள் ளது. நடராஜர் திருமுன்பாக ஒரு வாயில் அருத்த மண்ட பச் சுவரில் காணப்படுகின்றது. அருத்த மண்டபத்தின் சுற்றுச்சுவர்களை ஒட்டிக் கல்மேடை (திண்டு) அமைக்கப்
பெற்று, அதில் செப்புத்திருமேனிகள் நிறுத்தப்பெற்றுள்ளன.
அருத்த மண்டபத்திற்கும் கொடி மரத்திற்கும் இடையே மகாமண்டபம் கட்டப்பெற்றுள்ளது. மகாமண்டபத் தூண் களில் தெய்வச் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. அருத்த மண்டப நுழைவாயிலில் இரு வாயிற் காவலர்களின் (துவார பாலகர்களின்) நின்ற கோலச் சிற்பங்கள் காணப்படு
கின்றன.
கருவறையில் உள்ள இலிங்கத்திற்கு நேராக அருத்த மண்டபத்தில் சிறிய அளவிலான ஒரு நந்தியின் சிற்பமும் பலிபீடமும் செம்பினாலான கண்ணாடியும் காணப்படுகின்றன. மகாமண்டபத்தின் கிழக்குப் பகுதியில் பெரிய அளவிலான நந்தியும் பலிபீடமும் கொடிமரத்திற்கு முன்பு காணப்படுகின்றன.
அருத்த மண்டபத்தின் வடக்குத் திசையில் அம்மன் சிற்றாலயம், பள்ளியறை, வயிரவர் சிற்றாலயம் ஆகியன அமைந்துள்ளன. அம்மன் சிற்றாலயத்தின் வாயிலில் இரு காவல் பெண்களின் (துவார சக்திகளின்) நின்ற கோலச்
சிற்பங்கள் காணப்படுகின்றன.
அம்மன் சிற்றாலயமும் வயிரவர் சிற்றாலயமும் கருவறை, அருத்த மண்டப அறை எனும் இரண்டு அறை அமைப்புகளைக் கொண்டுள்ளன. பள்ளியறையில் கண்ணாடி வேலைப்பாடுகள் அமைந்த வெள்ளி ஊஞ்சல் உள்ளது. அதில் அம்மன் சிற்பம் அமர்ந்த கோலத்தில் காணப்படுகின்றது. இரவுநேரப் பூசை (அருத்த சாமப்பூசை) நடைபெறும்போது இலிங்கம் அமைந்துள்ள கருவறையி லிருந்து சிவபெருமானின் அமர்ந்த கோலச் செப்புத் திரு

Page 38
மேனி பல்லக்கில் கொண்டுவரப் பெற்று அம்மன் சிற்பத்தில் அருகே இணைக்கப் பெறுகிறது.
கருவறையின் வெளிப்புறத்தில் ஐந்து தெய்வக் கோட்டங்கள் (தேவ கோட்டங்கள்) நிறுவப் பெற்றுள்ளன. கருவறையின் வலப் பகுதியில் - தெற்குத் திசையில் கூத்தாடும் விநாயகர் (நர்த்தன விநாயகர்) சிற்பமும், தென்முகக் கடவுள் (தட்சிணாமூர்த்தி) சிற்பமும் அமைந் துள்ளன. தென்முகக் கடவுளின் தெய்வக் கோட்டம் முன்பாக அழகிய சிறு மண்டபம் உள்ளது. கருவறையின் பின்புறத்தில் - மேற்குத்திசையில் - அடிமுடி காட்டா நாதரின் (அண்ணாமலையாரின்) சிற்பம் உள்ளது. கருவறை யின் இடப்புறத்தில் வடக்குத் திசையில் நான்முகக் கடவுளின் (பிரம்மாவின்) சிற்பமும், துர்க்கையின் சிற்பமும் அமைந்துள்ளன.
திருச்சுற்றில் நான்கு சிற்றாலயங்கள் அமைந்துள்ளன. அவை கிழக்கு நோக்கியதாகக் கட்டப்பெற்றுள்ளன. தெற்மேற்கு மூலையில் கந்தனுடனான ஈசனின் (சோமா சுக்கந்தர்) செப்புத் திருமேனி அம்மன் திருமேனியுடன் காணப்படுகிறது. இதனையடுத்து விநாயகர், வள்ளியம்மை, தெய்வானை உடனாய ஆறுமுகன், கயலட்சுமி
ஆகியோரின் சிற்றாலயங்கள் அமைந்துள்ளன.
திருச்சுற்றின் தென்புறத்தில் பொல்லாப் பிள்ளையார் திருவுருவம் அறுபத்துமூன்று நாயன்மார்களின் திருவுருவங் களும் அமைந்துள்ளன. திருச்சுற்றின் வடகிழக்குப் பகுதியில் ஒன்பது கோள்களின் திருவுருவங்கள் நிறுவப் பெற்றுள்ளன. திருச்சுற்றின் கிழக்குப் பகுதியில், வாயிலின் உட்பகுதியில் இருபுறமும் ஞாயிறு (சூரியன்), திங்கள் (சந்திரன்) ஆகியோரின் சிற்பங்கள் அமைந்துள்ளன. திங்களின் அருகில் சனிக்கோளின் நின்ற கோலச் சிற்பம்
உள்ளது.
கருவறையின் வடபுறம்,கொற்றவையின் எதிர்ப்புறமாகச் சண்டேசுவரர் சிற்றாலயம் அமைந்துள்ளது. இதே அமைப்பு முறைதான் ஒன்பது நகரக் கோயில்களிலும் காணப்படு கிறது. ஒரு சில மாற்றங்கள் சில கோயில்களில் காணப்
படினும் ஒன்பது நகரக் கோயில்களிலும் காணப்படும்
 

பொதுமைக்கூறு இவ்வமைப்பே ஆகும். நகரத்தார்கள் நிறுவியுள்ள எல்லாக் கோயில்களும் இப்பொதுமைக்
கூற்றின்படியே கட்டப்பட்டுள்ளன.
சிவனின் அருவுருவத் தோற்றமான இலிங்கம் கருவறையில் இருக்க, அம்மன், வயிரவர், சோமசுக்கந்தர், விநாயகர், ஆறுமுகன், கயலட்சுமி, சண்டேசுவரர் ஆகியோருக்கான ஏழு சிற்றாலயங்களும் நவகோள், அறுபத்து மூவர் ஆகியோரின் சிற்பங்களும் அமையப்பெற்று இருப்பதே நகரத்தார் கோயிற்பாணியாகும். (வதே)
நகரம்
பலவகையான நகரங்கள்
நகரம் என்பது இலக்கிய வழக்கிலும் சாசன வழக்கி லும் பல பொருள்களைக் குறிக்கும் சொல்லாக இடம் பெற்றுள்ளது. பழந்தமிழ் இலக்கியங்களான தொகை நூல்களிலும் பத்துப்பாட்டு நூல்களிலும் நகள் என்னும் சொல் காணப்படுகின்றது. அது குடியிருப்பு, கோயில் வளாகம், அரண்மனை, இரசதானி என்பவற்றையும் வாணிபத் தலங்களையும் குறிக்கும். சமஸ்கிருத மொழி யில் நகர(ம்) கிராமங்களிலிருந்தும் வேறுபட்ட தன்மை கொண்ட பட்டினங்களைக் குறிக்கும். நகர என்பதிலிருந்தே நாகரிகம் என்ற சொல் உருவாகியது.
இராசதானி, வியாபாரத் தலங்கள், நிர்வாக நிலையங் கள் என்பவற்றை மையமாகக் கொண்டே நகரங்கள் வளர்ச்சியுற்றுள்ளன. அவற்றிலே கைத்தொழில் நிலையங்கள், வித்யா பீடங்கள், கோயில்கள், சங்கத்தார் பள்ளிகள், கலா நிலையங்கள் என்பன அமைந்திருக்கும். பொதுவாக நகரங்களிலே பல்வேறு தொழில்களில் ஈடுபடும் சமூகப் பிரிவுகளின் குடியிருப்புக்கள் அமைந்திருக்கும். ஒவ்வொரு பிரிவினரும் தனித்தனியான பகுதிகளிலோ தெருக்களிலோ குடியிருப்பது வழமை. வளம், செல்வம், வனப்புடமை, கட்டுமானங்கள் என்பன நகரங்களில் காணப்
படும். அவை பிராந்தியங்களின் மையப்பகுதிகளில்
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்கணம்

Page 39
அமைந்திருக்கும். நாட்டுப்புறங்களில் உற்பத்தியாகின்ற உணவுப்பொருட்களும் வேறு பொருட்களும் நகர்ப்புறங்க ளில் உள்ள சந்தைகளுக்கு எடுத்துச்செல்லப்படும். அவை வணிகராலும் அவர்களின் முகவர்களாலும் வேறிடங்களுக் கும் தூரதேசங்களுக்கும் எடுத்துச்செல்லப்படும். பிராந் தியங்களில் நகரங்களை மையமாக் கொண்டே போக்கு வரத்துப் பாதைகள் அமைந்திருக்கும். தேசமட்டத்திலும் சர்வதேசமட்டத்திலும் நகரங்கள் வழியாகவே பண்ட மாற்றும் பொருட்பரிவர்த்தனையும் இடம்பெற்றன. சமய சிந்தனைகளும் அறிவியல் சிந்தனைகளும் பண்பாட்டு மரபுகளும் சமூகங்களுக்கிடையே பரவுவதற்கு நகரங்கள் அடிப்படையாக இருந்தன.
இந்தியத் துணைக்கண்டத்தில் மூன்று வகையான நகரங்கள் உருவாகியிருந்தன. இராசதானிகளை மையமா கக் கொண்ட நகரங்கள் ஒருவகையானவை, அயோத்தி, பாடலிபுரம், வாதாபி, விஜயநகரம், காஞ்சிபுரம் போன்றவை அத்தகையனவாகும். வழிபாட்டுத் தலங்களாகவும் யாத்தி ரைக்குரிய சேஷத்திரங்களாகவும் மேன்மையுற்ற நகரங் கள் வேறொரு வகையானவை. காசி, மதுரை என்பன அவற்றுள் பிரதானமானவை. வணிக நகரங்கள் இன்னு மொரு வகையானவை. அவை பெருந்தொகையானவை. அவற்றிடையிலும் அமைப்பிலும் அளவிலும் மிகுந்த வேறு பாடு காணப்பட்டன. வடக்கிலுள்ள வைசாலி நகரினையும் தெற்கிலுள்ள மாமல்லபுரத்தையும் பெருவணிக நகரங்க ளின் வகைக்குரிய உதாரணங்களாகக் கொள்ளலாம். வைசாலி முன்னொரு காலத்திலே வடஇந்தியாவிலுள்ள தரைவழியான வணிகப் பாதைகளில் ஒரு பெரும் மைய மாக விளங்கியது. தொண்டை நாட்டுக் கடற்கரையில் உள்ள மாமல்லபுரம் பல்லவ இராச்சியத்தின் பிரதானமான துறைமுகப்பட்டினமாக விளங்கியது. கர்நாடகத்திலுள்ள ஜகொளே நகரம் தனியொரு வகையானது. அது சிற்பக் கலைஞரின் பயிற்சி நிலையமாக பல நூற்றாண்டுகளாக வளர்ச்சி பெற்றது. அங்கு சிறியனவும் மிதமான அளவு கொண்டனவுமாகிய 150 ஆலயங்கள் உள்ளன. தக்கி ணத்தின் பல பாகங்களிலிருந்தும் அங்கு சென்ற கட்டிடக் கலைஞரும் சிற்பிகளும் கலை பயின்றனர். அங்கு பரீட்சார்த்தமாக விருத்தி பெற்ற கலைப்பாணி முதிர்ச்சி
இந்துக் கலைக்களஞ்சியப்x
 

பெற்ற நிலையிலே நாட்டின் பல பாகங்களிலும் பரவியது. அதுவே பிற்கால வளர்ச்சிகளுக்கு மூலமாகியது.
நகரங்கள் அவற்றின் செல்வ வளத்தினால் படையெடுப் பாளர்களின் தாக்குதல்களுக்கு இலக்காகின. அவற்றின் பாதுகாப்புக்கருதி சுற்றுப்புறங்களில் அரண்களை அமைப் பது வழமை. விசாலமான நெடுமதில் சுவர்களையும் ஆழ மான அகழிகளையும் அவற்றைச் சுற்றி அமைப்பது வழக் கம். அரண்களால் சூழப்பட்ட சதுர வடிவமைப்பைக் கொண்டவை நகரங்கள் என்று புராதனமான இந்திய இலக்கியங்கள் நகரங்களை வர்ணிக்கின்றன. இராசதானி களை மையமாகக் கொண்ட நகரங்களின் பாதுகாப்பு, பரிபாலனம் என்பன தொடர்பான ஏற்பாடுகளை அரசர் மேற்கொண்டனர். வணிக நகரங்களின் பரிபாலனமும் பாதுகாப்பும் பொரும்பாலும் அவற்றில் அதிகாரம் புரிந்தவர் களின் பொறுப்பாக இருந்தன.
காஞ்சி மாநகரம்
இந்துசமய மரபிலே ஏழு நகரங்களை புனித நகர் என்று கொள்வர். காசி, காஞ்சி, காயா, கன்னோசி, அயோத்தி, அவந்தி, மதுரை என்பனவே புனித நகரங்கள். அவற்றுள் காஞ்சி மட்டுமே தென்னிந்திய தீபகற்பகத் திலுள்ள நகரமாகும். நகரேஷ"காஞ்சி "நகரங்களில் (சிறந்தது) காஞ்சி” என்பது பழமொழி. தென்னிந்திய நகரங்களில் அதுவே ஆதிகாலம் முதலாகத் தொடர்ச்சி யான வரலாற்றைக் கொண்ட நகரமாக விளங்கியது. பல்லவரின் ஆட்சிக்காலத்தில் ஆறு நூற்றாண்டுகளாக இரசதர்னியாக விளங்கியது. ஆதிபத்தியத்தின் மைய மாகவும் பிரதான படைத்தளமாகவும், வளர்ச்சியடைந்த அந்த நகரம் வேறு பல பரிமாணங்களையும் பெற்றது. அது மாநகரம் காஞ்சிபுரம் என்றும் குறிப்பிடப்பெற்றது. ஒரு விசாலமான பிரசித்தமான வாணிப நகரமாக விளங்கி
யதால் அதனை மாநகரம் என்றனர்.
மாநகரம் காஞ்சிபுரம் வணிகரின் ஆதிக்கத்தின்கீழ் அமைந்திருந்தது. அதன் ஆளுங்கணமான நகரத்தார் அரசியல் விவகாரங்களிலும் செல்வாக்குப் பெற்றிருந்தனர். பரமேஸ்வரவர்மன் என்னும் அரசன் இறந்த பின் அரச பதவியைப் பெறுவதற்குரிய இளவரசர் இல்லாத காரணத்
x இந்து சிமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 40
தால் அரசாங்க அதிகாரிகளும் கடிகையாரும் மாநகரத்து நகரத்தாரும் ஒன்றுகூடி, புதிய அரசன் ஒருவனை உருவாக்குவதற்கு ஏற்பாடு செய்தனர். அவர்கள் தூரதேச மொன்றில் அரசு புரிந்த பல்லவரின் கிளை மரபிலுள்ள அரசனிடம் சென்று அவனது இளைய குமாரனாகிய ஹிரண்யவர்மனை அழைத்து வந்து பல்லவராசனாக அபிஷேகம் பண்ணி முடிசூட்டினார்கள். புதிய அரசன் நந்திவர்மன் என்னும் நாமத்தைப் பெற்றான். அவனது வரலாற்றின் மூலம் காஞ்சிபுரத்து விவகாரங்களில் நகரத் தார் கொண்டிருந்த பங்கின் முக்கியத்துவம் உணரப்படும். காஞ்சி நகரம் பற்றிய வரலாறுகளும் ஆய்வுகளும் இது வரை நகரத்தார் மீது போதிய கணவம் செலுத்தவில்லை. மாநகரம் காஞ்சிபுரம் பற்றிக் கிடைக்கும் சாசனக் குறிப்புக் கள் அநேகம், அவை விபரங்கள் மிகுந்தவை. அவற்றை ஆராயுமிடத்து காஞ்சி நகரத்தின் வரலாறு பற்றிய விளக் கம் புதியதொரு பரிமாணம் பெறும்.
பல்லவரின் ஆட்சி முடிந்த பின்பும் காஞ்சிபுரம் தமிழ கத்து நகரங்களில் முதன்மை நகரமாக விளங்கியது. சோழர் அதனை இரண்டாம் தலைநகரமாகக் கொண்டனர். அங்குள்ள பொன் மாளிகை’ சோழரின் அரசமாளிகையாக விளங்கியது. காஞ்சிபுரத்தில் முன் பல்லவருக்குச் சேவை புரிந்த அதிகாரிகள், ஸ்தபதிகள், ஒவியர்கள், நெசவாளர் முதலியோர் சோழரின் ஆதரவைப் பெற்றனர். அங்குள்ள ஒவியரில் சிலர் சோழமன்னர்களின் பட்டயங்களில் வாசகங் களை மையினால் வரைந்தனர். அரண்மனை வாசிகளான பெண்களின் ஆபரணங்களை உருவாக்குவதில் காஞ்சி புரத்து கைவினைஞர் பங்கேற்றனர். தங்கள் அலங்கார மான பட்டுவஸ்திரங்களையும் பருத்தித்துணி வகைகளை யும் உற்பத்தி செய்வதற்கு சோழர்கள் காஞ்சிபுரத்தி லிருந்த நெசவாளரைப் பயன்படுத்தினார்கள்.
விஜயநகர நாயக்கர் காலங்களிலும் காஞ்சி முதன்மை நகரமாக விளங்கியது. ஏகாம்பரநாதர் கோவில் வரதராஜப் பெருமாள் கோவில் போன்றவற்றின் திருச்சுற்றுமாளிகை சுற்றுப்பிராகாரங்கள் ஓங்கியெழுந்த கோபுரங்கள் முதலிய புதிய கட்டுமானங்கள் மூலமாக கோயில்கள் பொலிந்த தோற்றத்தையும் வனப்புமிக்க கோலத்தையும் பெற்றன. முற்காலங்களிலே சிவகாஞ்சி, விஷ்ணுகாஞ்சி, ஜினகாஞ்சி,
இந்துக் கலைக்களஞ்சியம்x
 

பெளத்தகாஞ்சி போன்ற நான்கு வெவ்வேறான பகுதிகள் காஞ்சியில் அமைந்திருந்ததாகச் சொல்லப்படுகின்றது. நால்வேறு சமய நெறிகளைச் சேர்ந்த சமய நிறுவனங்கள் காஞ்சி நகரிலே சிறப்புற்றிருந்தன. பல்லவர் காலத்து பெளத்த நிறுவனங்களில் வாழ்ந்த தர்மபாலர் போன்றோர் இந்தியாவிலும் தூரதேசங்களிலும் புகழ்பெற்றனர். பெளத்த நெறியைப் பரப்புவதில் இவர்களின் பங்கு சாலவும் பெரிதா கும். திருப்பருத்திக் குன்றத்திலுள்ள புராதனமான சமணக் கோயில் ஜினக்காஞ்சியின் எஞ்சியுள்ள அடையாளமாகும். அங்கு சோழர் காலம் முதலாக அமைந்த பழங்கட்டடங் களும் சில சாசனங்களும் உள்ளன. திருப்பருத்திக் அன்றத்து ஓவியங்கள் பிரசித்தமானவை. அவை விஜயநகர நாயக்கர் காலங்களில் வரையப்பட்டவை. ஒரு கோயில் நகரம் என்ற வகையில் காஞ்சிபுரம் தமிழகத்தில் முதன்மை பெற்றது. அங்கு பெருமளவிலான சைவ, வைஷ்ணவ ஆலயங்கள் உள்ளன. எல்லாச் சமயநெறி களைச் சார்ந்தவர்களும் அங்கு தங்கள் முகாமைத்துவ நிலையங்களையும் வித்தியாபீடங்களையும் அமைத்திருந் தனர். அங்குள்ள நிறுவனங்களில் காமகோடிபீடம் என்னும் அத்துவைத மடம் பிரசித்தமானது. வரலாற்றுச் சிறப்புமிக்க ஏகாம்பரநாதர் கோயிலும் பெருந்தொகையான அடியார்கள் இந்நாட்களிலே வழிபாடு ஆற்றுகின்ற காமாட்சி அம்மன் கோயிலும் காமகோடி பீடத்தில் பரிபாலனத்தில் உள்ளன.
வணிக நகரங்கள்
பட்டினங்களின் வளர்ச்சியிலும் நிர்வாக அமைப்பிலும் வணிகக் கணங்கள் கொண்டிருந்த பங்கு குறிப்பிடத்தக் கது. பெருவணிகர் கணங்களோடு பல சமூகப்பிரிவுகள் இணைந்திருந்தமையால் அவற்றின் செல்வாக்கு மேலோங் கிய பகுதிகள் சில தடவைகளில் பட்டினங்களாக பிரகட னப்படுத்தப்பட்டன. மணிக்கிராமப்பட்டினம், நானாதேசிய தசமடிப்பட்டினம், எறிவீரப்பட்டினம் போன்ற வணிக நகரங் களை தென்னிந்திய சாசனங்கள் குறிப்பிடுகின்றன. அத்த கைய பட்டினங்கள் சுயாட்சி உரிமை பெற்ற நிர்வாகப் பிரிவுகளாகவும் சமுதாய அமைப்புகளாகவும் விளங்கின. ஊர்ப்பாதுகாவல், வரி சேர்த்தல், சமுதாய வழமைகளைப் பேணல், தகராறுகளை விசாரித்து தீர்ப்புக்களை வழங்கு தல், பொதுநலப்பணிகளை மேற்கொள்ளுதல், அறநிலை
யங்கள், கோயில்கள், அறக்கட்டளைகள் என்பவற்றைப்
xxx இந்த சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 41
பொறுப்பேற்று நடத்துதல் போன்ற பொறுப்புக்களை வணி கக் கணங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பட்டினங்கள் மேற்கொண்டிருந்தன. சபை, ஊர் போன்ற அமைப்புக்க ளிற் போல பொதுவிடயங்களைக் குறித்து தீர்மானங்க ளையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்காக வணிகக் கணத்தவர் அனைவரும் நிறைவரக்கூடிக் கூட்டா கச் செயற்படுவது வழக்கம். சில சந்தர்ப்பங்களில் வணிகக் கணங்கள் பிரதிநிதித்துவ அடிப்படையில் கூடி குறிப் பிட்ட சில பணிகளை நிறைவேற்றுவதற்கு வாரியங்களை அமைத்தன.
அரசரின் அனுமதியோடும் ஆதரவோடும் அமைக்கப்பட்ட வணிகர் நகரங்கள் தமது அதிகாரம், சிறப்புரிமைகள், சீர்வரிசைகள் என்பன குறித்து பட்டயங்களைப் பெற்றிருந் தன. வீரராகவன் என்ற சேரமன்னன் மணிக்கிராமத்து லோகப்பெருஞ்செட்டிக் கொடுத்த பட்டயம் தக்கவோர்
உதாரணமாகும். அதன் வாசகம் மேல்வருமாறு உள்ளது.
"மகோதைப் பட்டினத்து இரவிக் கொற்றனாய சேரமான் லோகப்பெருஞ்செட்டிக்கு மணிக்கிராமம் பட்டினம் கொடுத்தோம் விளாவாடையும். பவளத்தாங்கும் பெறுபேறும் கடத்து வளஞ்சியமும், வளஞ்சியத்தில் தனிச்செட்டும் முற்சொல்லும் முன்னடையும் பஞ்சவாத்தியமும் சங்கும் பகல்விளக்கும் பாவாடையும் ஐந்தோளமும் கொற்றக்குடையும் வடுகுப் பறையும் இருபடி தோரணமும் நாலு சேரிக்கும் தனிச்சொட்டும் கொடுத்தோம் வாணியரும் ஜங்கம்மாளரும் அடிமை கொடுத்தோம் நகரத்துக்கு கர்த்தாவாய இரவிக் கொத்தனுக்கு பறகொண்டு அளந்து நிறகொண்டு சக்கரையோடு கஸ்தூரியோடு விளக்கெண்ணையோடு இடையில் உள்ளட எப்பேர்ப்பட்டதிலும் தரகும் அதின் அடுத்த சுங்கமும் கூட கொடுங்கோலோர் அளவியில் நீர் முதலாய செப்பேடு எழுதிக் கொடுத்தோம் சேரமான் லோகப்பெருஞ் செட்டியான இரவிக்கொற்றணுக்கு
இந்துக் கலைக்களஞ்சியம்x
 

இவன் மக்கள் மக்களுக்கே வழிவழியே பேராகக் கொடுத்தோம். இடறியும் பன்றியூர் கிராமமும் சோகிற கிராமமும் அறியக் கொடுத்தோம் வேணாடும் ஒடுநாடும் அறியக் கொடுத்தோம். ஏறாநாடும் வள்ளுவநாடும் அறியக்கொடுத்தோம்.”
இச்செப்பேட்டின் வாசகப்படி மணிக்கிராமப் பட்டினம் என்ற நகரமொன்று அரசனால் உருவாக்கப்பட்டது. அதன் மேலான அதிகாரம் மகோதைப்பட்டினத்து இரவிக்கொற்ற னிடம் அரசனால் வழங்கப்பட்டது. இரவிக்கொற்றன் சேரமான் லோகப்பெருஞ்செட்டி என்ற பட்டத்தையும் பெற் றான். அவனுக்கு ஆட்சியதிகாரமும் சீரவரிசைகளும் சிறப் புரிமைகளும் கிடைத்தன. சிற்றரசன் ஒருவனுக்குரிய சிறப் புரிமைகளை அவன் பெற்றான். மணிக்கிராமப் பட்டினத் தின் தலைமையதிகாரியாக, கர்த்தாவாக அவனை அரசன் நியமித்தான். அவனுடைய உரிமைகளும் அவனது வம்சா
வழியினரின் பாரம்பரிய உரிமைகளாக வழங்கப்பட்டன.
பட்டினத்து அதிகாரி என்ற வகையில் இரவிக்கொற்றன் அங்கு வாழும் வணிகர், பஞ்சகம்மாளர் போன்ற மக்கள் மீது எஜமானமும் ஆதிக்கவுரிமையும் பெற்றான். வெண் கொற்றக்குடை, பஞ்சவாத்தியம், முத்துப்பல்லக்கு. சங்கு, நிலபாவாடை முதலியன பதவிக்குரிய சிறப்புரிமைகளாக அவனுக்கு வழங்கப்பட்டன. வாணிபத்திலே சில சிறப் புரிமைகளும் ஏற்றுமதி வாணிபத்திலே ஏகபோக உரிமை யும் அவனுக்குக் கிடைத்தன. எல்லா வகையான பொருட் களை விற்பனை செய்யும்பொழுதும் விற்பனை செய்யும் அரசிறையாகக் கொள்ளப்படும் ஆதாயத்தையும் சுங்கவரி களையும் தானே பெற்றுக்கொள்வதற்கான அதிகாரமும் அவனுக்குக் கிடைத்தது.
நானாதேசிகளான ஐந்நூற்றுவரின் வணிக நகரங்களில் வணிகர் இதேவிதமான உரிமைகளைப் பெற்றிருந்தனர். ஆயினும் அவற்றிலே நிர்வாகம் தனியொருவரின் பொறுப் பாகவன்றி குழுவினரிடம் பொறுப்பாக இருந்தமை குறிப் பிடற்குரியது. பல நூற்றுக்கணக்கான வணிக நகரங்கள் கர்நாடகத்திலும் , தமிழகத்திலும் கி.பி. 1000 - 1350 ஆகிய காலப்பகுதிகளில் அமைந்திருந்தன. நானாதேசிக
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 42
னின் பட்டினங்கள் கர்நாடக தேசத்தில் வணஞ்சுவட்ட ணம், நானாதேசிய தசமடிப்பட்டினம், தசமடிப்பட்டினம் என்னும் பெயர்களால் வழங்கி வந்தன. உதாரணமாக இரண்டு சாசனக் குறிப்புக்களைக் குறிப்பிடலாம். கல் யாணி சாளுக்கிய மன்னன் இரண்டாம் ஜெயசிங்கனுடைய ஹல்கூர் கல்வெட்டு (1038) அய்யாவொளே கணத்தைச் சேர்ந்த வீரவளஞ்செயர் வசமாயிருந்த வணஞ்சு வட்டணம் பற்றிக் குறிப்பிடுகின்றது. கன்ஹர(ன்) காலத்து மந்தாரபுரக் கல்வெட்டிலும் வணஞ்சுவட்டணம் ஒன்றைப் பற்றிய குறிப்
புண்டு.
தமிழகத்தில் வணிக கணத்தவர் அமைத்த பட்டினங் கள் நகரம், வீரபட்டினம், ஜய்யபொழில் பட்டினம், எறிவீர பட்டினம், வீரபட்டினம், வீரதளம் எனப்பலவாறு வழங்கின. பொதுவாக நகரங்களை மன்னரின் பெயர்கள், பட்டப் பெயர்கள் என்பவற்றின் நினைவாகப் பெயரிடுதல் வழமை. மேல்வரும் நகரங்கள் அத்தகையன. உலகளந்த சோழ புரம் (திருக்கழுக்குன்றம்), ஒய்மாநாட்டு உலோகமாதேவி புரம், பாசாலி நாட்டுக் கடாரங்கொண்ட சோழபுரம், வெங் கலநாட்டுச் சத்தியாஸ்பரயகுலகாலபுரம், மாங்காடு நாட்டு பூந்தமல்லியான உய்யங்கொண்டசோழபுரம், பட்டான் பாக்கை நாட்டு வானவன்மாதேவிபுரம், மேலுர் நாட்டு ராஜாதித்தபுரம், வாளையூர்நாட்டு நித்தவிநோதபுரம், பறை யூர் நாட்டு பவமாணிக்கபுரம், பனையூர்நாட்டு அருமொழி தேவபுரம், தக்கோலமான ஷத்திரிய சிகாமணிபுரம் (குலோத்துங்க சோழபுரம்), மேல்பாடியான . வீரநாராயண புரம், ஆற்றுர்நாட்டு மும்முடி சோழபுரம், தென்கல்லகநாட்டு தேசிப்பட்டினமான விக்கிரமசோழபுரம், முள்ளிநாட்டு ராஜேந்திரசோழபுரம், பூனமானராஜராஜபுரம், உறையூர் கூற்றத்து கொங்குகொண்ட சோழபுரம், குறுநகன் நாட்டுச் சிவபாதசேகரபுரம், அன்னவாயில்கள் கூற்றத்து குலோத் துங்க சோழப்பட்டினமான தெலிங்ககுலகாலபுரம், வடபனங் காட்டு நாட்டுப்பெருங்குடியான விருதராஜா பயங்கரபுரம், ஒல்லையூர்கூற்றத்து சுந்தரசோழபுரம், கிழார்கூற்றத்துப் பரகேசரிபுரம், கானத்துார் நாட்டு கல்யாணபுரம்கொண்ட
சோழபட்டினம்.
இவ்வாறான பெயர்களைக் கொண்ட வணிக நகரங்கள்
கர்நாடகம், தெலுங்கு தேசம் என்பவற்றிலும் இருந்தன.
இந்துக் கலைக்களஞ்சியப் :భ:".భజోళ్ల
 

விசாகப்பட்டினம் 11ம் நூற்றாண்டிலே குலோத்துங்க சோழ பட்டினம் என்னும் பெயரால் வழங்கியது. அது ஐநூற்றவர் அதிகாரம் செலுத்திய நகரமாயிருந்தது. அந்நூற்றாண்டில் மாதோட்ட நகரம் இராமகுல வல்லிப்பட்டினம் என்னும் பெயரால் வழங்கியமை கவனத்துக்குரியது. நானாதேசி வணிகர் உருவாக்கிய வணிக நகரங்கள் தொடர்பாக அரசர் கொண்டிருந்த தொடர்புகள் சாசனங்கள் மூலமாகத் தெளிவாகவில்லை. அவற்றிலே ஐநூற்றவரின் பெருநிரவி யான சமயம் நகரங்களை அமைத்தமை பற்றிச் சொல்லப் படுகின்றது. மேல்வரும் சாசனக்குறிப்புகள் இதற்கு உதார ணங்களாகும்.
1. “திருமயிலாற்பில் நி()ைறந்த நானாதேசிப் பெருந்திரவி யோம் அய்யப்புழலாகிய காட்டுரை வீரபட்டின மாக்கி இவ்வீரபட்டினத்துக்கு வைத்த பரிசாவது.
s
2. “ஸ்வஸ்தி பூரிகோவிராசகேசரி பன்மராகிய பூரீராஜேந் திர சோழ தேவர்க்குத் திருவெழுத்துச் செல்லா நின்ற யாண்டு நாலாவது சையமுரி நாடாழ்வார் நாட்டு வடகரை நாட்டு விக்கிரமபலவபுரத்து நகரத்து வளஞ்சிகற்கு வீரபட்டி னம் செய்து கொடுத்தோம். இவ்வூர் மாதேவர்க்கு குடுத்த தர்மமும் இவ்வூர் வீரசாசனம் சேதோமும் இவ்வனையோ மும் உள்ளிட்ட வீரபெரு நிரவியாரோம்”
3. “ஜயங்கொண்ட சோழ மண்டலத்து புராணமாராயபாடி முகைநாட்டு சிறுவள்ளியில் நி()ைறந்த நாடும் நகரமும் நானாதேசியும் நடைகுடி சாத்தும் தொக்கு நிநி()ைந்த ராஜாதிராஜப் பெருநிரவி, எண்டிசை நான்கு திசையாயிர
த்து ஐஞ்ஞாற்றுவப் பெரு (நிரவி) சமையமும் இச்சமைய த்து திருவடிக்குப் பணிசெய்யும் எறிவீரரும் முனைவீரரும் இளங்சிங்க வீரரும் கொங்கவாளரும் பன்மையும் பல நியாயத்தாரும் வலங்கை (தறியாரும்). சிறுவள்ளியை நானாதேசிய தசமடி (எறி) வீரபட்டினமென்று வீரசாசனஞ் செய்து இவர்களுக்கு நாங்கள். இப்பரிசு வீரசாசனஞ் செய்து கொடுத்தோம் பதினெண் விஷையத்துப் பெருஞ்
சமயம் பணிக்க”
இவற்றுள் முதலாவது சாசனக் குறிப்பு காட்டுரைப் பற்றியது. காட்டூர் அய்யப்பொழில் பட்டினமாக இருந்தது.
&இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்கeாம்

Page 43
அதனை நானாதேசிப் பெருநிரவியினர் ஒரு வீரபட்டினமாக மாற்றியமைத்தனர். இரண்டாவது சாசனப் பகுதி கோயம் புத்துார் மாவட்டத்து பவானி தாலுகாவிலுள்ள வேம்பட்ட என்னுமிடத்துக் கல்வெட்டொன்றின் பகுதி. வீரப்பெரு நிரவியார் என்னும் வணிக சமூகத்தவர் (சமயம்) விக்கிரம பலவபுரத்து நகரத்து வளஞ்செயருக்கு வீரபட்டினம் செய்து குடுத்தமை பற்றி அதிலே சொல்லப்படுகின்றது. மூன்ாறவது சாசனப்பகுதி சிறுவள்ளி என்னுமூரில் நானாதேசிய தசமடி எறிவீரப்பட்டினம் உருவாக்கப்பெற்றமையினைக் குறிப்பிடு கின்றது. அது சித்துார் மாவட்டத்து மதனபள்ளி தாலுகா விலுள்ள பஸினிகொண்டா என்னும் ஊரிலுள்ளது. அதிலே சிறுவள்ளி என்னும் ஊரை ராஜாதிராஜப் பெருநிரவியான எண்டிசை நான்கு திசையாயிரத்து ஐந்நூற்றுவர் பெருநிரவி என்னும் சமயம் வீரபட்டினமாக்கி அந்த மாற்றத்தைப்
பிரகடனப்படுத்தினார்கள் என்று சொல்லப்படுகின்றது.
நானாதேசிகளான ஐந்நூற்றுவர் தேவைக்கும் வசதிக்கும் ஏற்ப வணிக நகரங்களை உருவாக்கினார்கள் என்றும் சில சமயங்களில் சில பட்டினங்களை ஒரு வகையிலிருந்து வேறொரு வகைக்குரியதாக மாற்றினார்கள் என்றும் சாசனக் குறிப்புக்களால் அறியமுடிகின்றது. அத்தகைய பட்டினங்கள் வணிக கணத்தவரின் பெருநிரவியான சமையத்தில் அடங்கியவை என்பதை வீரசாசனங்களி
லுள்ள பிரசஸ்திகள் மூலம் அறியமுடிகின்றது.
வணிக நகரங்கள் சுயாட்சி உரிமை பெற்ற அமைப்பு களாகும். நகரம் என்பது பொதுவாக வணிகரின் குடியிருப் புகளும் விற்பனை நிலையங்களும் அமைந்திருந்த ஒரு தலத்தையும் அதில் ஆட்சிபுரிகின்ற ஆளுங்கணத்தையும் அத்தலத்தில் வசிப்போரையும் குறிக்கும். வாணிப விருத் திக்கும் குடியானவர்களுக்கும் வேண்டிய தேவைகளைப் பற்றிய ஏற்பாடுகளைச் செய்வதும் நகரத்துக்கும் அரசருக் கும் உரிய வரிகளைச் சேர்ப்பதும் நகரத்தவரின் பிரதான பொறுப்புகளாகும். வழிபாட்டு நிலையங்களை அமைத்து அவற்றை ஆதரிப்பதிலும் திருப்பணிகளுக்கும் அறக்கட்ட ளைகளுக்கும் பொறுப்பேற்பதிலும் அவை ஈடுபட்டன.
நகரத்தின் ஆட்சி குழுவினர் வசமானது. ஆளுங்கணத் தாரை நகரத்தார் என்று குறிப்பிடுவது வழக்கம். விசாகப்
இந்துக் கலைக்களஞ்சியம் 缀

பட்டினமான குலோத்துங்கசோழ பட்டினத்து நகரத்தாரை நகரத்துப் பன்னிருவர் என்று வர்ணித்தனர். பொலன்னறு வையிலிருந்த வளஞ்செழியரின் ஆளுங்கணத்தாரை அங்குள்ள வேளைக்காரரின் சாசனம் நகரத்தார் என்று குறிப்பிடுகின்றது. நகரம் என்பது வரையறையான எல்லை களையும் வணிகர் குடியிருப்புக்களையும் கொண்ட ஒரு நிர்வாகப் பிரிவினையும் நகரத்தார் என்பது அதன் ஆளுங்கணத்தாரையும் குறிக்கும் என்பது சாசனக் குறிப் புக்களினாலே தெளிவாகின்றது. நகரத்தார் தங்கள் செயற் பாடுகளையும் தீர்மானங்களையும் கட்டளைகளையும் ஆவணங்களிலே குறிப்பிடுமிடத்து தன்மை நிலையில் நகரத்தோம் என்று சொல்வது வழமை. புதுக்கோட்டையி லுள்ள குலோத்துங்க சோழனின் காலத்துச் சாசனமொன் றிலே மேல்வரும் பகுதி அமைந்துள்ளது.
“ழரீகொலோத்துங்க சோழதேவற்கு யாண்டு 30ஆவது ஜயசிங்ககுலகால வளநாட்டு சென்னிகுல மாணிக்கபுரத்து நகரத்தாரிடை இந்நகரத்து வியாபாரி . ஆடவல்லானான ஜயங்கொண்ட சோழ வல்லநாட்டு மூவேந்த வேளானேன் இந்தநகரத்தாரிடையான் கொண்ட ஊற்றஞ் செய் இதற்கு கீழ்பாற்கெல்லை புனினத்துக்கு மேற்கு தென்பாற்கெல்லை செம்மரிபாவைக் கல்லு”
இச்சாசனம் ஜயங்கொண்ட சோழ வல்லநாட்டு மூவேந்த வேளானது சாசனம். அவன் சென்னிகுல நகரத்து வியாபாரி என்று வர்ணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடற்குரியது. அரசாங்கத்து உயரதிகாரிகளுக்குரிய பதவிப்பெயரான மூவேந்தவேளான் என்னும் நிலையிலுள்ள ஒருவன் நகரத்து வியாபாரி என்று சொல்லப்படுகின்றமை சோழர் கால அரசியலுக்கும் வாணிபத்துக்கும் இடையில் நிலவிய தொடர்பினைக் குறிப்பதாகலாம். மூவேந்தவேளான் சென்னி குல மாணிக்கபுரத்தை நகரம் என்றும் அதன் ஆட்சியா ளரை நகரத்தார் என்றும் குறிப்பிடுகின்றமை கவனித்தற் குரியது. நகரத்தார் அவனுக்கு நிலமொன்றைக் கொடுத்த
னர.
நகரத்தாரைப் பற்றிய சில பிரதானமான விடயங்களை வேறு பல சாசனங்கள் மூலமாக அறிந்துகொள்ள முடி
கின்றது. குளத்தூர் தாலுகா, நார்த்தாமாலை, திருக்கடம்பர்
毅 3& ఫ్ల இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்கணம்

Page 44
கோவிலுக்கு வடபுறமான பாறையிலுள்ள சாசனத்தின்
வாசகம் நல்லதொரு உதாரணமாகும்.
திரபுவனச் சக்கரவர்த்திகள் மதுரையும் பாண்டியன் முடித்தலையும் கொண்டருளி காஞ்சியும் கொண்டருளிய றரீகுலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 27ஆவது இரட்டபாடி கொண்ட சோழவளநாட்டு தெலுங்குகாலபுரத்து நகரத்தோம் இந்நகரத்து சீகயிலாயமுடைய நாயனாவிற்கு தேவதானமாக இந்நகரத்து வியாபாரி பரம்ரையூரிடையான் கம்பந் செங்குடியான் கெங்காதரற்கு இந்நகரத்தோம் இந்நகர்க் கடைக்கால் பள்ளிவயலும் குளமும் பெருநான் கொல்லைக்குட்பட்ட நிலங்களும் நீர்நிலை குழிகளும் புன்செய் ஊர் நத்தமும் மாற்று எப்பேற்பட்ட நிலங்களில் இவ்வூர் திருமானைமலை அருகர்தேவர்க்கு புறகரையில் நிலம் இரண்டு மாவும் நீக்கி மற்றெப்பேற்பட்டதும் விற்றுக் குடுத்து கொண்ட பஞ்சசலாகை அச்சு 130 1/2 இவ்வச்சு நூற்றுமுப்பதரையும் கொண்டு உலகுடைய நாயனார் கோயில் திருவாசலால் போத்த இறை குடிமை எப்பேற் பட்டதும் நாங்கள் இறுக்க இந்நாயனார் திருவானைக் காவுடையாற்கு தேவதானமாக இறை இழிச்சிக்கொடுத் தோம். தெலுங்ககுல காலபுரத்து நகரத்தோம். இப்பள்ளி வயல் தேவதானமாகச் சந்திராதித்தவற் செல்லக்கடவிதாக கல்வெட்டி கொடுத்தோம். (இ)த்தெலுங்ககால புரத்து நகரத்தோம். இந்நகரம் பணிக்க மத்தியஸ்தன மாணி சோதியான் மருதூருடையான் எழுத்து’.
இச்சாசனத்தின் மூலம் நகரம் பற்றிய பல விடயங்கள் தெளிவாகின்றன. அவற்றிலொன்று நகரத்து நிலங்களில் நகரத்தார் உடைமை உரிமை பெற்றிருந்தமை ஆகும்.
அந்நிலங்களைப் பிறருக்கு விலைகொண்டோ வேறுவித மாகவோ வழங்குமிடத்து அவற்றினை வகைப்படுத்தும் அதிகாரத்தை நகரத்தார் கொண்டிருந்தனர். பள்ளிவயல் என்னும் நிலம் நகரத்தின் எல்லைப்புறத்தில் உள்ள வொன்று. அதனை நகரத்து வியாபாரிகளில் ஒருவரான பரம்பரையூருடையான் கடம்பன் செங்குடியான் கெங்காதர னுக்கு நகரத்தார் விற்றனர். திருவானைக்காவுடைய நாயனார் கோயிலுக்குத் தானமாகக் கொடுத்தான். அதன் பின்பு அந்நிலத்தை நகரத்தார் இறையிலித் தேவ
இந்துக் கலைக்களஞ்சியம் 器葱概
 

தானமாக வகை செய்தனர். கோயில் நிலமான பள்ளிவய லுக்குரியனவும் கோயிலின் பேராலே செலுத்தவேண்டியன வுமாகிய எல்லா விதமான இறைகடமைகளையும் செலுத் தும் பொறுப்புக்களை நகரத்தார் ஒப்புக்கொண்டனர். இத னால் நகரத்திலுள்ள நிலங்களுக்குரிய இறைகடமைகளை அரசாங்கத்துக்குச் செலுத்துவது நகரத்தாரின் கடமை யென்பது உணரப்படும். இச்சாசனம் மத்தியஸ்தன் ஒருவ னைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. நகரத்தாரின் ஆவணங் களை எழுதுவது அவனது பொறுப்பாகும். கணக்கன் என்னும் ஒருவனைப் பற்றி வேதசாசனங்கள் குறிப்பிடு கின்றன. சில சமயங்களிலே பிரம்மதேயங்களைப் போல நகரங்களிலும் வாரியம் என்னும் நிறைவேற்றுக் குழுக்கள் இருந்தன.
நகரங்களின் பட்டினப் பகுதி
தங்கள் பொறுப்பிலுள்ள திருப்பணி வேலைகள், அறக் கட்டளைகள் என்பன தொடர்பாக வணிக கனத்தாரின் பெருநிரவிகள் கூடி சில தீர்மானங்களை மேற்கொள்வது முற்கால வழமை. தானதர்மங்களைச் செய்வதற்கு வியாபாரத் தலங்களில் மகமை கொள்வது வழமை. மகமை என்பது ஒரு பிரத்தியேகமான கொள்வனவாகும். elgol பட்டினப்பகுதி என்றும் சமயபிடிபாடு என்றும் சொல் லப்படும். சமய பிடிபாடு பற்றிய விபரங்களைக் குறிப்பிடும் சாசனங்களில் பிரான்மலைச் சாசனம் பிரதானமானது. அதுவே அவற்றுள் மிக நீளமானது. வேறு சாசனங்களில் காணப்படாத விவரங்கள் அதில் உள்ளன. அது ஐந்நூற்று வரின் சமையதன்ம. காரியம் பற்றியது. அந்தக் காரியம் கோயிலொன்றைப் பற்றியது. திருமலைநாட்டுத் திருக் கொடுங்குன்றத்து மலையடிவாரத்துத் திருச்சிற்றம்பல முடையான் கோயிலும் அதன் திருக்குளமும் மடமும் திருமடைவிளாகமும் பதினெண் வைஷ்ணவத்தாரின் பொறுப்பானவை. எனவே அவர்கள் பெருநிரவியாக கோயி லின் திருக்காவனத்திலே கூடித் திருப்பணி, திருப்பரிச் சட்டம், திருப்படிமாற்று என்பவற்றுக்கு வேண்டிய நிவந்தங் களுக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தனர். அந்த ஏற்பாடு சமயபிடிபாடு என்று சொல்லப்படும்.
கொள்வனவு, விற்பனவு பொருட்களின் ஒரு சொற்பமான
பகுதியை, பெறுமதியை, மகமையாகக் கொள்வதென்றும்
* இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்கணம்

Page 45
அதனை நிவந்தங்களுக்கு வழங்குவதாகவும் தீர்மானம் செய்தனர். கோயிலின் திருக்காவணத்திலே நடைபெற்ற கூட்டத்திலே ஐந்நூற்றுவரும் பல நகரங்களின் பிரதிநிதிக ளும் கலந்துகொண்டனர். மேல்வரும் நகரங்களின் பெயர் கள் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
1. கேரளசிங்க வளநாட்டு அருவிமாநகரமான குலசேகரப்
பட்டினம்
2. துவாராபதி நாட்டு எறிபடை நல்லூரான வடமட்டை
3. புறவளை நாட்டு புதுத்தெருவான சேரநாராயணபுரம்
4. கடலடையாது இலங்கை கொண்ட சோழவளநாட்டு
ஊற்றத்தூர் கூற்றக்கொடும்பாளூர் மணிக்கிராமம்
5. திருக்கோட்டியூர்மணியம்பலம்
6. கேரளசிங்க வளநாட்டு அழகாபுரமான செழியநாராயண
புரம்
7. ஜயபொழில் நாட்டு கல்வாயல் நாட்டுச் சுந்தரபாண்டிய
LIUD
8. களவழிநாட்டு அழமை மாநகரமான ஜயங்கொண்ட
சோழப்பெருந்தெரு
9. மண்டலீகன் கெப்பீரப்பெருந்தெரு
10.பன்னிரண்டு நகரத்து ஜயங்கொண்ட சோழபுரம் உள்ளிட்ட பல நகரங்கள் கருவூர், கண்ணபுரம், பட்டாளி, தலையூர், இராசராசபுரம், கீரனூர் உள்ளிட்ட நகரங்கள்
வணிகப் பொருள்கள் பலவற்றை குறிப்பிடுகின்றமை பிரான்மலைச்சாசனத்தின் ஒரு சிறப்பம்சமாகும். மேல்வரு வனவற்றிலே சமயபிடிபாடு கொள்வதென்று நிச்சயிக்கப் பட்டது.
நெல், உப்பு, பன்னீர், அரிசி, எள், கற்பூரதைலம், பயறு, பருத்தி, சவ்வாது, அவரை, நூல், தேன். துவரை, பரும்
இந்துக் கலைக்களஞ்சியம்
缀
 
 

புடவை, மெழுகு, ஆமணக்கு, மென்புடவை, சேமாடு, மஞ்சள் , பட்டு, யானை, சுக்கு, கோணிக்கைப்பட்டு, கடுகு, இரும்பு, சீரகம், சந்தனம், கடுநெல்லி, அகில், வெங்காயம், சாந்து
எல்லாமாக 34 பொருட்களின் பெயர்கள் இச்சாசனத்தில் காணப்படுகின்றன. அவை உணவுதானியங்கள், வாசனைச் சரக்குகள், புடவைகள், விலங்குகள், அரும்பொருட்கள் என்ற வகையைச் சேர்ந்தவை. அவற்றுள்ளும் சில பொருட்கள் தமிழகத்திலும் அயலிலுள்ள பிரதேசங்களிலும் உற்பத்தியானவை. வேறுசில பொருட்கள் சீனம், சாவகம், அராபியா, பாரசீகம் போன்ற தூரதேசங்களின் உற்பத்திப்
பொருட்களாகும்.
பிரான்மலைச் சாசனம் குறிப்பிடும் சமயபிடிபாடு வேறு சில சாசனங்களிலே பட்டினப்பகுதி என்று சொல்லப்படுகிறது. கொங்கு தேசத்தில் வீரசோழ வளநாட்டு முகுந்தனுார் ஆளுடையார் திருக்குரக்குத் தளியில் வைகாசித் திருநாள் எழுந்தருளிவிப்பதற்குப் பட்டினப் பகுதி கட்டிக் கொடுத்தனர். அது சுந்தரபாண்டிய தேவரின் நான்காம் ஆண்டிலே (1289) பதினெண் விஷையப் பெருநிரவியர் கோயில் திருக்காவணத்திலே “குறைவறக்கூடி நிறைவற நிறைந்து” செய்த ஏற்பாடாகும். வணிகரின் பெரு நிரவியான சமயம், ஐந்நூற்றுவன் காவு என வழங்கிய மண்டபத்திலே கூடி அந்த ஏற்பாட்டினைச் செய்தது. அதனைப் பற்றிய விவரங்கள் சாசனத்தில் வர்ணிக்கப்படுகின்றன.
மலைமண்டலத்துப் பல நகரங்களும் நான்குதிசைப் பதினெண்விஷையத்தோமும் பதினெண்விஷையப்பெருநிரவியாரோமும் திசையாயிரத்துஞ்நூற்றாவரோமும் அஞ்நூற்றவன் பெருநிரவியோமும் எங்குள்ள நாட்டுச் செட்டித் தளம் செட்டிகள் நம்மக்கள் அறுபத்து நான்குமுனையும் முனைவீர்க்குடியாரோமும்
பட்டினப்பகுதி கட்டிக்கொடுத்த கூட்டத்திற் கலந்து
கொண்டனர் பட்டினப்பகுதி பற்றிய விபரங்களை சாசனம்
மேல்வருமாறு வர்ணிக்கின்றது.
S65 BiOU &6M8HTT 9626 60856ss BlöO6OOTě86llà

Page 46
நான்குதிசை ஏறுசாத்து இறங்குசாத்து நடக்கும் சரக்குகளுக்கு மிக பொதி ஒன்றுக்குப் பணம் ஒரு மாவும் புடவைக் கட்டு ஒன்றுக்குப் பணம் இரண்டு மாவும் நூல்பொதி ஒன்றுக்குப் பணம் இரண்டு மாவும் பாக்குப்பொதி ஒன்றுக்கு அரை மாவும் பசும்பை ஒன்றுக்குப் பணம் அரைமாவும் கழுதைமேல் வரும் பண்டங்களுக்கு . அளக்கும் கருஞ்சரக்குகளுக்கும் பணம் அரைமாவும் தானியங்களுக்குப் பணம் காணியும் நிறுக்கும் பண்டங்களுக்குப் பணம் ஒரு மாவும் ஆனைக்குப் பணம் ஒன்றும் குதிரைக்குப் பணம் அரையும் சந்தனக்கட்டுக்குப் பணம் காலும் விடுபுடவை சமக்கட்டுக்குப் பணம் காலும் சேக்கில் கிடாக்களுக்குப் பணம் ஒரு மாவும் மற்றும் நடக்கும் பண்டங்களுக்கு விழுக்காடும் மற்றும் மென்வகை சுங்கம் தீரும் பண்டங்களுக்கு ஒன்றுக்கு
L A AK A AIK ழியாமல் தீர்க்கடவதாகவும்
இந்த ஏற்பாட்டின் பிரகாரம் சமயக் கணக்குகளும் வைராகிகளும் பல தலங்களுக்குச் சென்று மகமை கொண்டு ஆண்டுதோறும் எதுவித குறையுமின்றி உற்சவம் நடத்த ஏற்பாடு செய்யவேண்டும். பட்டினப் பகுதி என்பது வணிக நகரங்களாகிய பட்டினங்களிலே, தர்மகாரியங்களு க்கு ஐந்நூற்றுவர், பெருநிரவியர் கூடி நிச்சயித்தபடி கொள்ளப்படும் மகமை என்று கொள்வதற்குத் திருச்சிராப் பள்ளி மாவட்டத்துக் குளித்தலை தாலுகாவிலுள்ள கோயிற்பட்டியில் காணப்படும் சாசனமொன்று ஏதுவா கின்றது. அது மாறவர்மன் குலசேகர தேவரின் ஆட்சியில் (கி.பி. 1305 இல்) எழுதப்பட்டது. பட்டினப்பகுதி பற்றிய தீர்மானம் திசை திசையாயிரத்தைஞ்நூற்றவர், நாட்டுச் செட்டிகள், தலச் செட்டிகள், முனைவீரக்கொடியர், சித்திர மேழிப் பெரியநாட்டார் ஆகியோர் கூடிய பெருங்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. சுந்தரசோழ புரமான தேசியுகந்தபட்டி னம், கொடும்பாளுர் மணிக்கிராமம், தெலிங்ககுலகால புரமான குலோத் துங்கசோழப் பட்டினம் கொன்றையூரான
உத்தம சோழபுரம் என்பவற்றின் நகரத்தாரும் அக்கூட்டத்
இந்துக் கலைக்களஞ்சியம்*
 

திலே கலந்து கொண்டனர். அவர்களும் பட்டினப் பகுதி பற்றிய ஏற்பாடுகளுக்கு சம்மதம் தெரிவித்தனர். இச்சாச னம் குறிப்பிடும் பட்டினப்பகுதி சொல்லப்பட்ட நான்கு நகரங்களிலும் நகரத்தாரின் உடன்பாட்டுடன் வசூலிக்கப் படவேண்டிய மகமை என்பது அதன் வாசகத்தின் மூலம்
அனுமானித்துக் கொள்ளப்படும். (சி.ப.)
பஞ்ச பாண்டவர்களில் ஒருவன். இவன் பாண்டுமன்னனின்
இரண்டாவது மனைவியாகிய மாத்திரி பெற்றவன்.
குந்திபோஜனுடைய புதல்வியாகிய குந்திதேவியை திருமணம் புரிந்த பாண்டுமன்னன் மத்திரராசனுடைய புதல்வியாகிய மாத்திரியையும் திருமணம் செய்து கொண்டான்.
குந்தி, மாத்திரி என்ற இரு மனைவியரோடு, பாண்டு வேட்டையாடி இமயமலைச் சாரலை அடைந்தான். கானகத்திலுள்ள விலங்குகளை வேட்டையாடி மகிழும் பொழுதில் ஒருகலைமானும் பிணைமானும் மகிழ்ச்சிகூரத் தம்மில் புணரும்பொழுது, பாண்டு தனது அம்பினால் ஆண்மானை எய்து வீழ்த்தினான். அம்பினால் அடியுண்டு நிலத்திடை வீழ்ந்த ஆண்மான் “சிந்தமன்” என்ற முனிவ னின் உருக்கொண்டது. மன்மதபாணத்தினால் காமநோய் மீதுற தானும் தன் மனைவியும் மான் உருக்கொண்டு காதலின்பம் அனுபவிக்கும் பொழுது பாண்டுவின் கணை தன் உயிரைக் குடித்த நிலையில் மான் உருமாறிய சிந்தமன் "என்னைப் போல் நீயும் பெண்ணின்பம் அனுபவிக் கையில் இறப்பாய்” என்று சபித்து முற்றாத காதலோடு இறந்தான். கணவனை அணையும் பொருட்டு பெண்மானான அவன் மனைவியும், கணவனை தகனம் செய்த தீயில்
தானும் விழுந்து உயிர் நீத்தாள்.
சிந்தம முனிவரால் சாபம் பெற்ற பாண்டு, தனது காதல் மனைவியருடன் முனிவர்கள் வசிக்கும் கானகம் நண்ணி, காண்டற்கு அரிய மணி, பைம்பொன்கலனொடு, ஆடை யொடு, அரச கோலத்தையும் உதறி இந்திரிய சம்பந்தமான இன்பங்களையும் துறந்து, அரிய தவத்தை மேற்கொண்
※零災談經近5 5Ha山 56m5mT g@6ueD56前gleDepDT556má

Page 47
LT6.
முனியுங்கவரின் சாபத்தினால் இல்லற இன்பத்தினை இழந்த பாண்டுமன்னன் சந்ததியில்லாமல் தான் உயிர்நீத்து விடக்கூடாது என்று குந்தி தேவியிடம் கூற, தேவியும் துர்வாச முனிவரிடம் தான் பெற்ற மந்திரங்களின் வர பலத்தினால் தர்மதேவனிடம் யுதிஷ்டிரனையும், வாயு தேவனிடம் வீமனையும், இந்திரனிடம் அர்ச்சுனனையும் பெற்றுக்கொண்டு மாத்ரிக்கும் மந்திரத்தைக்கூற, அவளும் அதனை முறைமையில் பெற்று இரட்டையர்களான அசுவினி தேவர்களைத் துதிக்க அவர்களும் விரைவில் வந்து தமது அம்சமாக நகுல, சகாதேவர்களைத் தந்து மறைந்தனர். வனத்திலேயே பாண்டவர்கள் வாழ்கிறார்கள். பாண்டு இறந்த பொழுது நகுல சகாதேவருக்கு வயது பதின்மூன்று.
பிற்காலத்தில் தருமபுத்திரனின் சூதாட்டத்தால் நாட்டை இழந்து பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசமும், ஒரு ஆண்டு அஞ்ஞாத வாசமும் பெற்ற பாண்டவர்கள் தங்களது அஞ்ஞாத வாசத்திற்காக விராட தேசத்தைத் தேர்ந்து விராடனுடைய அரண்மனையில் தங்களை மறைத்துக் கொண்டு வாழத் தீர்மானித்தனர். அதுபொழுது மத்ஸ்ய தேசாதிபதி விராடனிடம் யார் யார் எப்படி எப்படிப் பணிபுரிய வேண்டும் என்று ஆலோசித்துப் பேசிய பொழுது தருமபுத்தி ரர் நகுலனைப் பார்த்து, "அப்பா நகுலனே! அழகிய சியாமள நிறத்தவனே! சுகானுபவத்திற்குத் தக்கவனே! துக்கத்திற்குத் தகாதவனே! நீ என்ன பணியை மேற்கொள் ளப்போகிறாய்?’ என்று தனது சிற்றன்னை மாத்திரியை நினைத்துக் கொண்டு மனம் பரிதவித்துக் கேட்டார்.
அதற்கு நகுலன், “ஐயனே! நான் விராடனுடைய குதிரை லாயத்தில் பணி செய்யப் போகின்றேன். குதிரைகளைப் பழக்குவதிலும், பார்த்துக்கொள்வதிலும் என் மனம் மகிழ்ச்சியுறும். குதிரைகளுக்குச் செய்யவேண்டிய வைத்திய முறையை நான் கற்றிருக்கின்றேன். எந்தக் குதிரையையும் என்னால் அடக்க முடியும். ஏறிச் சவாரி செய்து பழக்குவதிலும், வண்டி தேர் முதலியவற்றில் பூட்டிப் பழகுவதிலும் நான் வல்லமை பெற்றிருக்கிறேன். பாண்டவர்களிடம் நான் குதிரைகளைப் பாதுகாத்து
இந்தக் கலைக்களஞ்சியம்:
 

வந்திருக்கிறேன் என்று கூறி விராடனிடம் வேலை பெறு வேன்” என்று பணிவுடன் கூறினான். அது போன்றே தாமக் கிரந்தி’ என்ற பெயருடன் பணிபுரிந்தான்.
பஞ்சபாண்டவர்களுக்குத் திரெளபதியிடம் பிறந்த புதல்வர்கள் இளம் பஞ்சபாண்டவர்கள் என அழைக்கப் படுகின்றனர். நகுலனுக்குத் திரெளபதியிடம் பிறந்தவன் சதாநீகன். (61.606).)
EeÜGIb (கீரிமலைச் சிவன் கோயில்)
இலங்கையிலுள்ள புராதன சிவாலயங்களுட் கீரிமலைச் சிவன் கோயிலும் ஒன்றாகும். யாழ்ப்பாணத்துச் சிவன் கோயில்களில் அதுவே மிகப் பழமையானது. நகுலேஸ் வரம், திருத்தம்பலேஸ்வரம் என்னும் பெயர்களால் அது வழங்கி வருகின்றது. பூர்வீக காலத்தில் நகுலேச பாசுபதர் களினால் அமைக்கப் பெற்றதென்று கருதுவதற்கு இட முண்டு. அதுவே யாழ்ப்பாணத்திலே தல யாத்திரை களுக்கு மிகப் பிரசித்தமான தலமாகும். திருவிழாக் காலங் களிலும் பிற சமயங்களிலும் குடாநாட்டின் பல ஊர்களிலி ருந்தும் ஆயிரக்கணக்கில் அடியார்கள் ஆலய தரிசனத் திற்கு அங்கு செல்வது நெடுங்கால வழமை. அங்குள்ள சமுத்திரத் தீர்த்தத்தின் காரணமாக நகுலேஸ்வரம் யாழ்ப்பாணத்துச் சைவர்களின் சமயாசாரங்களில் மிகுந்த சிறப்புடையதாய் விளங்குகின்றது. சபிண்டீகரணம், அஸ்திசஞ்ஜனம் முதலிய கிரியைகளுக்குச் சிறப்பாக வுள்ள புண்ணிய ஷேத்திரமாகவும் அது நெடுங்காலமாக விளங்கி வருகின்றது.
நகுலேஸ்வரம் பற்றிய சில ஐதீகங்களும் வரலாற்றுக் குறிப்புகளும் யாழ்ப்பாண வைபவமாலையிற் கூறப்பெற்றுள் ளன. அதன் உற்பத்தி பற்றி அந்நூல் மேல்வருமாறு கூறும்.
"அரசாட்சியை ஆரம்பிக்க முன்னமே விஜயராசன் தன் அரசாட்சிக்குப் பாதுகாப்பாக நாலு திக்கிலும் நாலு சிவாலயங்களை எழுப்பிக் கொண்டான். கீழ்த்திசைக்குத் தம்பலகாமத்துக் கோணேசர் கோவிலை நிறுத்தி, மேற்றிசைக்கு மாதோட்டத்திற் பழுதுபட்டுக் கிடந்த
x இந்து சமய கலாசார அலுவல்கள் திலைக்கணம்

Page 48
திருக்கேதீச்சரச் சிவாலயத்தைப் புதுப்பித்து, தென்றி சைக்கு மாத்தறையிற் சந்திரசேகரேச்சரன் கோவிலை யெழுப்பி, வடதிசைக்குக் கீரிமலைச் சாரலில் திருத்தம் பலையெனும் பகுதியிலே திருத்தம்பலேசுவரன், திருத் தம்பலேசுவரி கோயில்களையும், அவைகளின் சமீபத்திலே கதிரையாண்டவர் கோயிலையும் கட்டுவித்து அவ்வாலயங் களுக்குப் பூசனை நடத்தும்படி நீலகண்டாசாரியனின் மூன்றாங் குமாரன் வாமதேவாசாரியார் என்னும் காசியிற் பிராமணனையும் அவன் பன்னியாகிய விசாலாட்சி யம்மாளையும் அழைப்பித்து அக்கிரகாரம் முதலிய வசதிக ளுங் கொடுத்திருத்தி வைத்தான். அக்கோயில் அவ்விடத் துத் தோன்றிய காரணத்தால் அந்தக் கிராமம் கோயிற்
கடவை எனப் பெயர் பெற்றது.”
கீரிமலை பற்றி யாழ்ப்பாண வைபவமாலை கூறுவ தெல்லாம் வரலாறன்று. விஜயராசனுக்கும் யாழ்ப்பாணத் திற்கும் எதுவிதமான தொடர்பும் இல்லை. இந்நூலாசிரிய ரான மயில்வாகனப் புலவர் ஒல்லாந்தராட்சிக் காலத்தில் 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். யாழ்ப்பாணத்துப் பூர்வ குடிகளின் உற்பத்தி பற்றி விளக்குமிடத்து அவர் நகு லேஸ்வரம் பற்றிய ஐதீகங்களைக் குறிப்பிடுகின்றனர். அவரின் குறிப்புகளிலிருந்து மேல்வரும் செய்திகளை அறிந்து கொள்ள முடிகின்றது. (1) கீரிமலைச் சிவன் கோயில் திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் என்பனவற்றையொத்த புராதனமானது என்று அவர் கருதினார். (2) அங்கு முற்காலத்தில் சிவனுக்கும் அம் மனுக்கும் வெவ்வேறான கோயில்கள் அமைந்திருந்தன. (3) நகுலேஸ்வரம் யாழ்ப்பாணத்துக் கோயில்களிலே மிகப் பிரசித்தமானதென்றும் புராதனமாதென்றும் அவருடைய காலத்திலே கருதப்பட்டது. (4) அங்கு வழிபாடுகளை முறைப்படி செய்வதற்கென்று கோயிற்கடவையில் முற் காலத்தில் அக்கிரகாரமொன்று அமைக்கப்பெற்றிருந்தது. அங்கு வாழ்ந்த பிராமணர் நீலகண்ட ஆசாரியாரின் வழியினர். இவ்வம்சங்களை மேலும் தெளிவுபடுத்துவதற்கு
ஏதுவான சான்றாதாரங்கள் கிடைக்குமாறில்லை.
கோயில்களின் உற்பத்தியினையும் தலச்சிறப்பினையும் விளக்கும் வண்ணமாய் எழுந்த புராணக்கதைகள் பல
உள்ளன. நகுல முனிவரைப் பற்றிய கதை இத்தகையது.
gé &ðééérgéluti ಫ್ಲಿಫ್ಘÇ¢
 

அதனை மயில்வாகனப் புலவர் மேல்வருமாறு கூறுவர்.
"முற்காலத்தில் நகுலமுனியென்னும் ஒரு இருடி அங்கு ள்ள மலைச்சாரலிலே சிலகாலந் தங்கியிருந்து தீர்த்தமாடி வந்தபொழுது தன் முகத்துக்கிருந்த அங்கவீனம் நீங்கிப் போனது கண்டு அத்தல விசேடத்தையும் தீர்த்த மகிமை யையும் குறித்து வியப்புற்று அவ்விடமே தனக்குத் தவம் செய்வதற்கேற்ற இடமென்று அம்மலை முழைஞ்சியிலே வாசஞ்செய்து கொண்டிருந்தார். அம்முனிவனுக்கு கீரிமுகம் மாறிய காரணத்தால் அம்மலைக்குக் கீரிமலையென்பார் கள். விஜயராசன் அவ்விடத்திற் சிவாலயங் கட்டுவித்த பின் நகுல முனிவர் அவ்வாலயங்களில் இறங்கியிருந்து வழிபாடு பண்ணி வந்தார். அதனால் திருத்தம்பலேசுவரன் கோவிலை நகுலேசர் கோயிலென்றும் திருத்தம்பலேசு வரியம்மன் கோயிலை நகுலாம்பிகையம்மன் கோவிலென்
றும் வழங்கி வந்தார்கள்.”
நகுலம் என்பது கீரி எனப் பொருள்படும் சமஸ்கிருத மொழிச் சொல்லாகும். நகுல முனிவர் வழிபாடு செய்த தலம் கீரிமலை என்றும் நகுலேஸ்வரம் என்றும் பெயர் பெற்றது என்ற ஐதீகம் நகுலேச பாசுபதர்களின் காரண மாகக் கீரிமலைச் சிவன்கோவிலுக்கு இப்பெயர்கள் ஏற்பட்
டன என்ற வரலாற்றுண்மையை உணர்த்துவதாகும்.
கீரிமலையின் தலச்சிறப்பினை விளக்கும் கதையொன்று கைலாசபுராணத்தில் இடம்பெற்றுள்ளது. இராவணனின் யாழோசையினாலே பெரிதும் கவரப்பெற்ற சுசங்கீதன் என்னும் கந்தருவன் இராவணனின் யாழினைக் கவர்ந்து கெர்ள்ளுவதற்குத் தருணம் பார்த்திருந்தான். இராவணனை இராமபாணம் தாக்கியபோது, அவன் கையிலிருந்த யாழ் நழுவி விழ, அதனைச் சுசங்கீதன் பற்றிக் கொண்டான். அவன் கீரிமலையிலே யாழ்வாசினை புரிந்து பரமேஸ்வர னைத் தொழுதனன். பார்வதி சமேதராகக் காட்சி கொடுத்த மகேஸ்வரன் காடுகொன்று நாடாக்கி நகரமைத்து அதனை வீணாயணம் என்னும் பெயரோடு ஆட்சி புரிவாய் என்று திருவாய் மலர்ந்தருளினார். யாழ்ப்பாணம் என்னும் பெயரின் உற்பத்தியை விளக்குமாறு அமைந்த இக்கதை யாழ்பாடி கதையின் மிகப்பழைய வடிவமாகும். இதனை மேல்வரும்
கைலாசபுராண செய்யுள்களில் காணலாம்.
இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 49
வானவர்கடொழுங் கோணையண்ணலையுந்
தேவியையும் மகிழ்ந்து முன்னாட் டேனனைய மொழிக் கங்குற் கரிபுதல்வ
னன்பினொடு செய்யசாம கானமதனாற் றுதிக்கும்படி கரத்திற்
றரித்திடுமக் கலத்தைக் கண்டே யானசுசங் கிதனெனுங் கந்தருவனதைக்
கவர்தற் காசையுற்றான்
உற்றதொரு சமயம் பார்த்திருந்தவ னிராம
னுயர் வெங்கோலா லிற்ற போழ்தினிற் கவர்ந்து மானுடவடிவாகி
யிணையில் கீரிய பொற்பை யெய்திக் கங்கா சங்கமப் புணரி
நதியாடிப் பொருவிலாத பற்றொடரொன்றனை யேத்தி வீணாகானந்
தன்னைப் பண்ணினனால்
பண்ணுதலுஞ் சிவபிரான் மகிழ்ந்து வெளிப்பட்டுச்
சுசங்கீதனைப் பார்த் துண்ைணெகிழ்ந்து நீ வீணாகரனாய்
நின்றிசைத்தமையா லோங்கு மிங்கன் மண்ணவர்கள் புகழ் வீணா பணமெனும்
பெயராக மாற்றிப் பாங்க ரெண்ணில் பதலமுளவிக் காட்டை வெட்டி
நகராக் கென்றியம்பிப் போனான்
போனவரின் மொழிப்படியச் சுசங்கீதன்
காட்டை வெட்டிப் புரமதாக்கித் தானழிந்த வாலயங்க டனையுமெழில் பெறப்
புதுக்கிச் சனங்கடம்மை யானகுடியாயிருத்தி நகுலேசரடி பரவியருள்
பெற்றேகி மானிலமெலாம் புகழத் தனதுலகந்தனி லடைந்து வாழ்ந்தானன்றே.
நகுலேஸ்வரம் யாழ்ப்பாணத்திலுள்ள தலங்களுள்
மிகவும் புராதனமானது. அங்குள்ள சமுத்திர தீர்த்தம் பாவ விமோசனங்களையும் இராசபோகம் முதலான
இந்துக் கலைக்களஞ்சியம்

இம்மைப் பலன்களையும் கொடுக்க வல்லது. அங்கு வழிபாடாற்றிய சுசங்கீதனுக்கு யாழ்ப்பாணத்தின் ஆதிபத் தியம் இறைவனாலே வழங்கப்பெற்றது. அங்கே குடிப் பெருக்கமும் வேளாண்மை போன்ற தொழில்களும் ஆரம்ப மாகிய காலம் முதலாகவே நகுலேஸ்வரம் நிலைபெற்று வருகின்றது என்னும் சிந்தனைகள் இப்பாடல்களில் இடம் பெற்றுள்ளமை கவனித்தற்குரியது.
கீரிமலைத் தலத்தின் சிறப்பினை விளக்கும் அம்சங்கள் மாருதப்புரவல்லி பற்றிய கதையிலும் காணப்படுகின்றன. அக்கதை யாழ்ப்பாண வைபவமாலையில் மேல்வருமாறுள்
துெ.
“சோழ தேசாதிபதியாகிய திசையுக்கிரசோழன் மகள் மாருதப் புரவல்லியென்பவள் தனக்கிருந்த குன்ம வியாதி யினால் மெலிந்தவளாய் வியாதியை வைத்தியர்கள் ஒருவ ரும் சுகமாக்க முடியாததினால் இனித் தீர்த்த யாத்திரை யாகுதல் செய்து பார்த்தால் சுகம் வரவும் கூடும் என்றெண் ணிக் காவிரிப்பூம் பட்டினத்திலிருந்து புறப்பட்டு அங்குமிங் கும் போய்த்தீர்த்தமாடி வருகையில் சாந்தலிங்க னெனும் ஒரு சந்நியாசி கண்டு. 'உன் வியாதி பண்டிதர் ஒருவராலும் குணமாக்கத் தக்கதல்ல. நீ இப்பொழுது எடுத்த முயற் சியே உனக்குச் சுகம் தரத்தக்கது. இலங்கையின் வட முனையிலே கீரிமலை என்றொரு மலையுண்டு. அது சமுத் திர தீரத்திலுள்ளது. அங்கே உவர்ச்சல மத்தியில் சுத்த தீர்த்தமும் மலையருவித் தீர்த்தமும் கலந்து உத்தம தீர்த்தம் ஒன்றுண்டு. உலகத்திலுள்ள எந்தத் தீர்த்தங்களி லும் முக்கிய தீர்த்தமாயிருக்கின்றது. அதிலே நீ போய் நீராடிச் சில காலம் தங்கியிருந்தால் சுகமடைவாய்' என்று சொல்ல, அச்சொற்படி மாருதப்புரவல்லி புறப்பட்டுத் தாதிமாரும் தோழிமாருஞ் சேனை வீரருஞ் சூழ்ந்துவரக் கீரிமலைச் சாரலில் வந்திறங்கிக் குமாரத்தி பள்ளமென்னும் இடத்தில் பாளயம் போட்டுக் கொண்டிருந்து நகுல முனி வரைக் கண்டு சாட்டாங்கமாக வணங்கி அவரால் ஆசிர்வா தம் பெற்றுக் கொண்டு அத்தல விசேடத்தையும் தீர்த்த மகிமையையும் அத்தீர்த்தத்தில் ஆடித் தனக்குக் கீரிமுகம் மாறின செய்தியையும் அம்முனி சொல்லக்கேட்டு மகா சந்தோஷத்துடன் தீர்த்தமாடிச் சிவாலய தரிசனஞ் செய்து வந்தாள். சில காலத்தில் அவளுக்கிருந்த குன்மவலியுந்
இந்து சமய கலாசார அலுவல்க்ள் தி6ை00க்களப்

Page 50
தீர்ந்து குதிரை முகமும் மாறிற்று. மாறவே மாருதப்புரவல் லியின் யெளவன சொரூபத்தைக் கண்டவர்கள் ஆச்சரியம்
கொள்ளாதிருந்ததில்லை.
'அக்காலத்திலே கதிரைமலையிலிருந்து உக்கிரசிங்க மகாராசன் நகுலேசர் கோவிலைத் தரிசிக்க மூன்றாந்தரம் கீரிமலைச் சாரலில் வந்திறங்கி வள்வர்கோன் பள்ளத்தில் பாளையம் போட்டிருந்தான். அவன் மாருதப் புரவல்லியை நகுலேசர் சந்நிதானத்தயலிலே கண்டு அவள் பேரழகினால் மயங்கி மிகுந்த ஆச்சரியம் கொண்டு தான் அவளை விவாகம் செய்ய வேண்டுமென்று தீர்மானித்துக் கொண் டான்.”
தீரா நோய் தீர்க்கவல்ல அற்புதமான தலம் கீரிலை என்ற கருத்தினை வலியுறுத்தும் பாங்கில் அமைவதே மாருதப் புரவல்லியின் கதை. அங்கே சமுத்திரக் கரை யிலே நீராடியதும் நகுல முனிவரின் கீரி முகம் அகன்றது. அக்கரையிலே நீராடியதும் சோழ குமாரியான மாருதப் புரவல்லியின் குன்ம நோய் நீங்கியது. அவள் குதிரைமுகம் நீங்கப்பெற்று சுந்தர வதனியாகி உக்கிர சிங்கனோடு கூடி இராசபோகம் பெற்றாள். பத்தாம், பதினோராம் நூற் றாண்டுகளிலே சோழவம்சத்து இராச குமாரனொருவனும் அவனது தேவியும் கீரிமலையில் வழிபாடாற்றித் திருப்பணி கள் செய்தமை பற்றிய செய்திகள் காலப்போக்கிலே விகாரமாகி நாட்டார் வழக்கிலே மாருதப் புரவல்லி பற்றிய ஐதீகங்கள் தோன்றியிருத்தல் கூடும்.
யாழ்ப்பாண ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்திலே நகு லேஸ்வரம் அரசர்களின் ஆதரவுக்கும் அபிமானத்திற்கும் உரிய தலமாக விளங்கியது. நல்லூரில் இராசதானி அமை த்த சிங்கையாரியன் கீரிமலையோடு தொடர்பு கொண்டிருந் தான் என்று சொல்லப்படுகின்றது. இதனைக் குறித்து மயில்வாகனப் புலவர் மேல்வருமாறு கூறுவர்.
"சிங்கையாரிய மகாராசனும் புவனேகபாகு மந்திரியும் கீரிமலைக்குப் போய்த் தீர்த்தமாடிச் சிவாலய தரிசனமுஞ் செய்து கொண்டு அவ்வாலய விசாரணையை அரசாட்சி
விசாரணைக்குள்ளாக்கிக் கொண்டு கந்தசுவாமி கோவிலில் வந்து பெரிய மனத்துளாரின் குமாரர் சிதம்பர தீட்சிதரின்
 

2
மகன் சினி ன மனத் துTர் விருந் திட உணர் டு
இளைப்பாறினார்கள்.”
இதுவரை நாம் கவனித்தவற்றிலிருந்து கீரிமலைச் சிவன் கோயிலான நகுலேஸ்வரம் மிகப் புராதனமானது என்பதும் யாழ்ப்பாணத்துச் சைவக் கோயில்களில் பறங்கியர் காலம் வரை மிகப் பிரதானமான ஒன்றாக விளங்கியது என்பதும் தெளிவாகின்றன. இலங்கையின் முதலாவது அரசனென்று கொள்ளப்படும் விஜயராசன் அதனை நிர்மாணித்தான் என்று கருதப்படுமளவிற்குப் புராதனமுடையதாக அது விளங்கி யது. யாழ்ப்பாணத்து வரலாற்றின் பிரதான கதைகள் எல்லாவற்றிலும் அதற்குச் சிறப்பிடம் வழங்கப்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்துச் சமுதாய உற்பத்தியினை விளக்கு வனவற்றுட் காலத்தால் முற்பட்டதும் கைலாச புராணத் திலே காணப்படுவதுமான சுசங்கீதன் என்னும் யாழ்பாடி பற்றிய கதையில் கீரிமலை சிறப்பித்துக் கூறப்பெற்றுள் ளது. யாழ்ப்பாணப் பிரதேசத்தின் தனித்துவமான வரலாற் றின் ஒரு காலகட்டத்தினை விளக்குவது போன்றதான உக்கிரசிங்கன், மாருதப் புரவல்லி என்போர் பற்றிய ஐதீகங்களிலும் அதுவே பிரதம தலமாயுள்ளது. சிங்கை யாரியனைக் கீரிமலையோடு தொடர்புபடுத்தும் யாழ்ப்பாண வைபவமாலைக் குறிப்பானது நகுலேஸ்வரம் ஆரியச் சக்கரவர்த்திகளின் பரிபாலனத்தில் அமைந்திருந்தது என்பதை உணர்த்துகின்றது. யாழ்ப்பாணத்து அரசர்கள் தங்களுக்கு இறை கடமையாகவும் வருமானமாகவும் கிடைத்த பணத்தின் ஒரு பகுதியை ஆலய பரிபாலனத்திற் குச் செலவிட்டார்கள் என்பதைப் போர்த்துக்கேயரின் ஆவணங்கள் மூலமாக அறிய முடிகின்றது.
நகுலேஸ்வரத்திலே மூன்று பிராகாரங்களும், ஐந்து கோபு ரங்களும் இருந்தன என்பது ஐதீகம். கி.பி.1621ஆம் ஆண்ட ளவிலே யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்பற்றிய போர்த் துக்கேயர் நகுலேஸ்வரம், நல்லூர்க்கந்தசுவாமி கோயில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் முதலிய ஆலயங்கள் யாவற்றையும் இடித்தழித்தனர். “பரராசசிங்க முதலி இறந்த பின் பறங்கிக்காரர் தாங்கள் இடியாமல் விட்டிருந்த ஆலய மெல்லாம் இடிப்பித்தார்கள். அப்பொழுது பரசுபாணி ஐய ரென்னும் பிராமணன் கீரிமலைச் சாரலிலுள்ள தேவலாயங் களின் தட்டுமுட்டுக்களையும் விக்கிரகங்களையும் கிணறுக ளில் போட்டு மூடி வைத்தான்'
毅
ZSZZZZZkSZTT LaLL aLCLCGuLDBD TMLMMGGT TMLMMeLTTMLTT

Page 51
இவ்விதமாகப் பல கோயில்களுக்குரிய அசல மூர்த்தி களும் உலோகப் படிமங்களும் நிலத்திற் புதைந்தன. அவற்றுட் சில நிலத்தை வெட்டும் சமயங்களிலே எதிர் பாராத வண்ணமாய்க் கிடைத்தன. ஆயினும் கீரிமலைக் கோயில்களுக்குரிய தொல்பொருட்கள் எதுவும் இதுவரை
கிடைக்கவில்லை.
ஏறக்குறைய 180 வருடங்களாகப் பறங்கியரின் ஆட்சி யிலும் ஒல்லாந்தரின் ஆட்சியிலும் தடைசெய்யப்பட்டிருந்த சைவ சமயம் பிரித்தானியரின் ஆட்சியிலே பத்தொன்பதாம் நூற்றாண்டில் புனருத்தாரணம் பெற்றது. முன்பு பறங்கியர் களால் அழிக்கப்பட்ட கோயில்களின் தளங்களிலே புதிய கோயில்கள் உருவாக்கப் பெற்றன. நகுலேஸ்வரத்தைப் புனருத்தாரணஞ் செய்வதற்கான முயற்சிகள் ஆறுமுக நாவலரால் மேற்கொள்ளப்பட்டன. 1878 ஆம் ஆண்டு, வெகுதானிய வருஷம் வைகாசி மாதம் 24 ஆம் திகதி கீரிமலைச் சிவன் கோயில்பற்றி அன்னார் ஒரு விஞ்ஞாபனம் வெளியிட்டனர். ஆறுமுக நாவலர் சரித்திரம் என்னும்
நூலில் திரு.த.கைலாசபிள்ளை மேல்வருமாறு கூறியுள்ளார்.
“யாழ்ப்பாணத்தில் கீரிமலையில் ஒரு சிவாலயம் முற் காலத்திலிருந்து அழிந்து போயிற்று. இந்த ஸ்தலத்திலே வேறொரு சிவாலயம் அமைக்க வேண்டுமென்று நினைத்து 'கீரிமலைச் சிவன் கோயில்' என்னும் பெயர் கொடுத்து ஒரு பத்திரிகை எழுதித் தமது கையெழுத்தோடு வெளிப் படுத்தி, அதற்காக அங்கே போய் இடமும் பார்த்து வகுத்து அவ்விஷயத்தில் முயற்சி செய்யும்படி பிராமண குருமாரையும் தூண்டிவிட்டார். இப்போது அங்கே அமைக்கப்பட்டிருக்கும் கோயிலும் அதுவே. இடமும் அதுவே”
“காதியாகராசக் குருக்கள் 1882ஆம் ஆண்டு சித்திரபானு வருஷம் ஐப்பசி மாதம் அச்சிடுவித்து வெளியிட்ட ஆவேதனத்தில் கீரிமலைச் சிவன் கோயிலின் புனருத்தாரணம் பற்றி நாவலர் பெருமான் மேற்கொண்ட முயற்சிகளை விபரித்துள்ளனர். வண்ணார்பண்ணை திரு. வை.ஆறுமுகம் போன்றவர்களின் ஆதரவோடு திருப்பணி வேலைகள் நிறை வேற்றப்பட்டு 1895ஆம் ஆண்டு மன்மத வருஷம் ஆனி மாதம் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்
இந்துக் கலைக்களஞ்சியம்

பெற்றுக் கும்பாபிஷேகம் நடைபெற்றது”
1918 ஆம் ஆண்டு கோயில் தற்செயலாகத் தீப்பற்றி எரிந்தது. அதன்பின் வெவ்வேறு காலகட்டங்களிலே திருப்பணி வேலைகள் நடைபெற்றன. இந்தியாவிலிருந்து சிவாகமங்களிலே விற்பன்னராக விளங்கிய சிவாசாரியார் களை வரவழைத்து 1953 ஆம் ஆண்டிலே கும்பாபிஷேகத் தைச் சிறப்பாகச் செய்தனர். 1955 ஆம் ஆண்டிலே சிவன் கோயில் வாசலில் கொடியேற்றி வருடாந்த மகோற்சவத் தைத் தொடக்கினார்கள். 1973ஆம் ஆண்டிலும் மகா கும்பாபிஷேகம் சிறப்புடன் நடைபெற்றது. அம்மன் கோயி லில் 1976 ஆம் ஆண்டு முதலாக வருடாந்த உற்சவம் நடைபெற்று வந்தது.
ஆலயத் தோற்றம்
சிவன் கோயில் கர்ப்பக் கிருகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், நிருத்த மண்டபம், கோபுர வாயில், பரிவார தேவர் கோயில்கள், பிராகாரம் என்னும் அமைப்புக்களுடன் விளங்குகின்றது. சிவாகம விதிகளுக்கும் சிற்ப சாத்திர முறைகளுக்கும் அமையவே ஆலயத்தின் அம்சங்கள் யாவும் உருவாக்கப் பெற்றுள்ளன. கோயிலின் அடித் தளமான பீடம் வெள்ளைக் கல்லினால் வேலைப்பாடு களோடு அமைந்துள்ளது. இங்குள்ள அலங்கார வேலைப் பாடுகளோடு அமைந்த தூண்களும் வெள்ளைத் கற்றுாண்க ளாகும். விமானத் தளங்களும் வரிவண்ண வேலைப்பாடுக ளுடன் வெள்ளைக் கல்லினால் ஆக்கப் பெற்றுள்ளன. இறையகத்தின் தெற்கு மாடத்திலே தவழிணாமூர்த்தியும் மேற்கு மாடத்திலே இலிங்கோற்பவரும் அமைந்துள்ளனர். மகாசிவராத்திரி தினத்திலே இலிங்கோற்பவருக்கு அபி ஷேக ஆராதனைகள் நடைபெறும்.
நிருத்த மண்டபத்தின் முகப்புச் சுவரிலே பார்வதி பர மேஸ்வரரின் திருக்கல்யாண வைபவம் அழகுமிக்க ஒவிய மாகச் சித்திரிக்கப் பெற்றுள்ளது. நான்முகன் திருமணச் சடங்கினைச் செய்யத் திருமால் தாரை வார்த்துக் கொடுக் கும் காட்சி கவர்ச்சி மிக்கதாய் அமைந்துள்ளது. தேவர்க ளும் அசுரருமாய் கூடிப் பாற்கடலைக் கடைய ஆலகாலம் பரவியமை, திருநீலகண்டர் அதனைப் பருகி உலகினைக்
காத்தமை, பகீரதன் தவம் புரிந்ததன் பயனாகக் கங்கை
x இந்து சமய கலாசார அலுவல்கள் திகலாக்ககாம்

Page 52
ஆகாயத்திலிருந்து உற்பவித்து உலகோர் உய்யும் வண் ணம் நிலவுலகிலே பாய்ந்தமை முதலிய கதைகள் பிராகாரச் சுவரிலே எழில்மிகு ஒவியங்களாக அமைக்கப் பெற்றுள்ளன.
பிராகாரத்தின் உள்ளே பரிவாரதேவர்களின் ஆலயங்கள் உள்ளன. அவை தள அமைப்போடு கூடிய விமானம் பொருந்தியனவாகும். பிள்ளையார், சண்முகர், சோமாஸ் கந்தர், மகாவிஷ்ணு, மகாலவுமி, பஞ்சலிங்க வடிவிலான பரமேஸ்வரர் ஆகியோரின் ஆலயங்கள் மேற்குப் புறத்தி லுள்ளன. கிழக்கிலே வைரவர் சந்நிதானமும் நவக்கிரக நிலையமும் உள்ளன. எல்லாப் பரிவார தேவர் ஆலயங்க ளிலும் மகோற்சவம், திருவுலா ஆகியன நடைபெறுவதற் கேற்ற வண்ணமாக பஞ்சலோக வார்ப்பு விக்கிரகங்கள் அமைக்கப்பெற்றுள்ளன.
நிருத்த மண்டபத்தின் வடபால் நடராஜரின் உருவத் தைத் தெற்கு நோக்கிய வண்ணமாய் அமைத்துள்ளனர். இரண்டாம் பிராகாரத்தின் வடபுறத்திலே துர்க்கை அம்மனின் கோயில் காட்சியளிக்கின்றது. நவராத்திரி விழாவும் மானம்பூ விழாவும் அங்கு சிறப்புற நடைபெறுவது வழக்கம்.
நித்திய நைமித்திய உற்சவங்கள்
நகுலேஸ்வரத்திலே சிவாகம வழிப்படி நித்திய, நைமித் திய உற்சவங்கள் நடைபெறுவது வழக்கம். திருப்பள்ளி எழுச்சி முதலாக அர்த்த சாமப் பூசை ஈறாக நாள்தோறும் ஆறு காலப் பூசை நடைபெறும். இங்கு மூலமூர்த்திக்குத் திருமணமாகிய சிவாசாரியர்களே பூசை செய்வர்.
மாதப் பிறப்பு, வருஷப் பிறப்பு, சித்திரைப் பெளர்ணமி, வைகாசி விசாகம், ஆனி உத்தரம், ஆவணி மூலம், மானம்பூ, புரட்டாதிச் சனி வாரம், ஐப்பசி வெள்ளி, கார்த் திகை விளக்கீடு, மார்கழித் திருவெம்பாவை, திருவாதிரை, சொர்க்கவாயில் ஏகாதசி. தைப்பொங்கல், தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்தரம் முதலான தினங்களிலே நைமித் திய உற்சவங்கள் சிறப்பாக நடைபெறும்.
இவற்றோடு மாதந்தோறும் சோமவார விழாக்கள் அலங் கார உற்சவங்களாக நடைபெறும். கார்த்திகை மாதத்து
இந்துக் கலைக்களஞ்சியம்x
8ಜ್ರನ್ತಜ್ಜಿ&ಷ್ರ
2
 

நித்திய சோமவார விழாக்கள் முழுவதும் சிறப்பாக நடைபெற்றுச் சங்காபிஷேகத்தோடு நிறைவு பெறும் சுக்கிர வாரந்தோறும் விரதம் மேற்கொள்ளும் அடியார்கள் பெருந் தொகையானோர் ஆலயம் சென்று வழிபாடு செய்வர்.
புரட்டாதிச் சனி நான்கு வாரமும் நகுலேஸ்வரத்திலே திருவிழா நடைபெறும். கடைசிச் சனிக்கிழமையில் எள் எண்ணெய் எரித்து வழிபடுவதற்கு யாழ்ப்பாணத்தின் எல்லாப் பாகங்களிலிருந்தும் அடியார்கள் ஆலயத்துக்குச் செல்வர். மார்கழி மாத ஏகாதசியில் புராணபடனமும் நடைபெறும்.
சிவன் கோயிலில் வருடாந்த மகோற்சவம் மாசி மாதத் திலே நடைபெறும். சிவராத்திரி அமாவாசையன்று தீர்த்த உற்சவம் நிகழும். அம்மன் கோயிலில் பங்குனி மாதத்திலே கொடியேற்றத் திருவிழா நடைபெறும். சித்திரை வருஷப் பிறப்பிலே தேர்த்திருவிழாவும் தீர்த்தமும் நடைபெறும். மகோற்சவ காலங்களில் பெருந்தொகையான அடியார்கள் கீரிமலைக்குச் சென்று விரதமிருந்து ஆலயத்திலே வழிபடுவது வழக்கம். அவர்கள் அங்கு தங்கிச் செல்வதற்கு வசதியாக மடங்களும் உள்ளன.
புராண படனம்
சைவர்கள் வாழும் பகுதிகளிலே புராண படனம் சிறப்
புற்று விளங்கிய பிரதேசம் யாழ்ப்பாணமேயாகும். அங்கு
ள்ள கோயில்களில் இம்மரபினைப் பொறுத்தவரையில்
கீரிமலைச் சிவாலயம் முதன்மை வாய்ந்ததாகும்.
கந்தபுராணம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் ஆகியன இங்கு படிக்கப்படும். இவற்றோடு நகுலாலய புராணம், ஏகாதசிப் புராணம் போன்றவையும் படிப்பார்கள். பெரியபுராண படனமும் நகுலாலய புராண படனமும் சிவன் கோயிலில் கொடித்தம்பத்திற்கு முன்பாக நடைபெறும். கந்தபுராண படனம் முருகன் சந்நிதானத்திலே நிகழும். ஏகாதசி புராணத்தை விஷ்ணு ஆலயத்தின் முன்பு படிப்பார்கள். மார்கழித் திருவெம்பாவைக் காலத் திலே திருவாதவூரடிகள் புராணத்தைப் படித்துப் பயன் சொல்லுவது வழக்கம்.
&55g-Louisay Terry gabaeij856 geopecoré866TLô

Page 53
திருவிழாக் கோலத்தோடு புராண படனம் ஆரம்பமாகும். அதில் கலந்துகொள்வோர் ஆசார அனுஷ்டான சீலராயிருப் பர். சிவாசாரியார்கள் புராண படனத்தைத் தொடக்கி வைப்பது இக்கோயிலுக்குரிய வழக்கமாகும். பின்பு அவர்க ளோடு பிறருங் கலந்து கொள்வர். ஏரம்பையர், அப்பாசாமி ஐயர், வித்துவ சிரோமணி, பொன்னம்பல பிள்ளை, த.கைலாசபிள்ளை முதலிய வித்துவான்கள் இங்கு புராண படனம் செய்தனர். அவர்களின் காலத்திற்குப் பின்பு கருகம் பானை சங்கரப்பிள்ளை, பண்டிதர்களான கதிரிப்பிள்ளை, சங்கரப்பிள்ளை, நவசிவாயம் முதலியோர் இதனை நடத்திச்
சென்றார்கள்.
கோயில் பற்றிய புராணங்களும் பாடல்களும்
பத்தொன்பதாம் நூற்றாண்டிலே சைவாலயங்கள் புனர மைக்கப் பெற்றுச் சைவசமய மறுமலர்ச்சியும் விழிப்புணர்வும் மேலோங்கியிருந்த காலத்தில் கோயில்களைப் பற்றிய மரபு வழியான ஐதீகங்களை அடிப்படையாகக் கொண்டு பலவகையான பிரபந்தங்கள் பாடப்பெற்றன. இலக்கியப் புலமையும் பாட்டியல் இலக்கணப் பயிற்சியும் சைவ சித் தாந்த சாத்திர நூலறிவும் சமயாபிமானமும் கொண்ட வித்துவான்கள் பலர் இருந்தனர். அத்தகையோர் கோயில் களைப் பற்றிப் பாடிய பிரபந்தங்கள் அநேகம். அவர்கள் புனைந்த கவிதைகள் பெரும்பான்மையும் உன்னதமான இலக்கியப் பண்புகளைக் கொண்டிருக்கவில்லை. அவை வித்துவப் புலமையினை வெளிப்படுத்துவனவாகவும் எல்லோராலும் இலகுவில் புரிந்துகொள்ள முடியாதனவாயும் அமைந்திருந்தன. தேவார திருவாசகங்களுக்குரிய இனிமை யும் எளிமையும் சிந்தனைச் செறிவும் கவர்ச்சியும் இவற் றிலே காணப்பெறுவதில்லை. எனவே, இவை சமுதாயத் தில் அறிமுகமாகி விலாசம் பெறாது முடங்கிக் கிடந்துள் ளன. அச்சில் வெளிவந்த பாடல்களும் கிடைத்தற்கு அரிதாகி விட்டன. அவை மீண்டும் அச்சிடப் பெற்று பிரசுர மாகவில்லை. நகுலேஸ்வரம் பற்றிய புராணங்களும் பாடல்
களும் இந்நிலையில் உள்ளன.
நகுலாசல புராணம் நகுலேஸ்வரம் பற்றிய தலபுராண மாகும். மாதகல் வாசியான ஏரம்பையர் (1847 - 1914) இதனைப் பாடியுள்ளனர். சுப்பிரமணிய சாத்திரியாரின் மகனாகிய ஏரம்பையர் நல்லூர் சம்பந்த புலவர், நீர்வேலி
இந்தக் கலைக்களஞ்சியம் x 線
2
 

சங்கர பண்டிதர் முதலான மகாவித்துவான்களிடத்தில் கல்வி பயின்றவர். நீதி சாத்திரம், நாகேஸ்வரி தோத்திரம், குவாலம்பூர் சிவபெருமானுாஞ்சல், காலிக் கதிரேசரூஞ்சல் முதலியவற்றையும் இவர் பாடினார் என்பர். நகுலாசல புராணச் செய்யுள்களிரண்டு மேல்வருவனவாகும்.
பகுதியுந் தகுதியும் பாலு னர்த்திடும் விகுதியும் பெற்றிடை விளங்கி ரட்டியால் நகுலனைப் பணிபவர் நண்ணு மீறதாம் புகுமுதல் பெற்றடி பொருந்தி வாழ்வரே
ஐந்துறை நிகமத் தம்பின்
அமைந்திடும் முல்லை யக்கம் நொந்திடும் இடைபொ றைச்சீர்
நுதலினோ டழகு பெற்று பைத்தொடி சோழ ராசன்
பாவையும் உருவம் மாற்றி முந்திவந் தெழுந்தாள் நீரின்
மும்முடி யழகு பெற்றே
நகுலாசல புராணத்திற்குச் செ.சிவசுப்பிரமணியம் என்பவர் உரை ஒன்றினை எழுதியுள்ளனர். நகுலேஸ்வர மான்மி யம் என்னும் நூலினை நீர்வேலிப் பண்டிதர் ச.சிவப்பிரகாசம் சமஸ் கிருத மொழியில் பாடியுள்ளனர். இதனை அ.குமாரசாமிப் புலவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளனர்.
அராலியூரைச் சேர்ந்த விசுவநாத சாத்திரியார் கவிநயம் மிக்கதான நகுலமலைக் குறவஞ்சி என்னும் பனுவலைப் பாடினார். பத்தொன்பதாம் நூற்றாண்டின், நடுப்பகுதியில் வாழ்ந்த விசுவநாதர் நாராயண சாத்திரியாரின் புதல்வர். வாக்கிய பஞ்சாங்கத்தை முதன் முதல் கணித்து (16.05.1667) வெளிப்படுத்திய இராமலிங்க முனிவரின் வழித்தோன்றல். வண்ணைக் குறவஞ்சி என்பதனையும் இவர் பாடியுள்ளனர். தலச்சிறப்பும் மாருதப்பிரவல்லி, உக்கிரசிங்கன் ஆகியோர் பற்றிய கதைகளும் நகுல மலைக் குறவஞ்சியிலே சிறப்பாக வர்ணிக் கப்
பெற்றுள்ளன.
* இந்து சமய கலாசார அலுவல்கள் தி6ை00ாக்களாய்

Page 54
நகுலேசர் ஊஞ்சல் என்பது குமாரசாமிப் புலவரால் பாடப்பெற்றது. மகோற்சவ காலங்களிலே தீர்த்தத் திருவிழா வின் முடிவிலே திருவுஞ்சல் நடைபெறும். அவ்வைபவத் திலே நகுலேசர் ஊஞ்சல் படிக்கப்படும். நகுலேசர் சதகம் என்னும் பிரபந்தம் பண்டிதர் இ.நமசிவாயத்தின் பெயரால் வழங்குகின்றது. செ.சிவசுப்பிரமணியம் என்பார் நகுலேஸ்வரம் மீது பாடிய பல பக்திரசக் கீர்த்தனைகளும் உள்ளன. சொல்லலங்காரச் சிறப்புடையதான நகுலேசு வரர் விநோத விசித்திர கவிப் பூங்கொத்து என்பதை மயில்வாகனப் புலவர் (1875 - 1918) பாடியுள்ளனர். மயில்வாகனப் புலவர் கணபதிப்பிள்ளையின் குமாரர். வறுத் தலைவிளானில் வாழ்ந்தவர். இவர் சுன்னாகம் குமாரசாமிப் புலவரிடம் கல்வி கற்றவர். மயிலை மும்மணி மாலை, விநாயகரகவல், மயிலைச் சுப்பிரமணியர் விருத்தம், ஊஞ்சல், வைரவர் தோத்திரம், மாவைப் பதிகம், இணுவைப் பதிகம், துணைவைப் பதிகம் முதலியன
வும் இவருடைய படைப்புகள் என்பர்.
அனுபந்தம்
நகுல மலைக் குறவஞ்சி வடமலைச் சிகர மொன்றினை வாயு கடலிடை வீழ்த்துமக் காரணப் பெயரால் ஈழமண் டலமென யாவரு முரைக்க வாழுமண் டலத்தின் மகிதலம் போற்றத் தென்கயி லையிலுந் திருக்கேச் சரத்தினும் அன்புறு கெளரியோ டரன்விற் றிருந்தனன் சங்கம் வருவித் தருநகு லாசலத் துங்கம துறுகதை சொல்லுவான் முன்னாள் வளம்பெறு சோழ மண்டல மதனில் உளஞ்செறி சோழன் றன்மக ளொருத்தி பரிமுகத் தோடுமிப் பார்மே லுதித்தனள் மருமிப் பீடையை மாற்றிட வேண்டிப் பொன்னுரு மருவிய புண்ணிய தீர்த்தம் அன்னதி லாட வகந்தனி லெண்ணிச் சகிமார் தம்மொடுந் தானையி னோடும் நகுலா சலத்தினை நாடிவந் திறங்கிக் கந்தவேள் பதத்தைக் கருத்துற நினைத்துச் சிந்துவிற் பாய்திரு தீர்த்தநீ ரருவிச் சங்கம மதனிற் றகும்புன லாடி
இந்துக் கலைக்களஞ்சியம் ಭೊ

அங்குறு மறையோர்க் கருநிதி வழங்கிக் கோயிற் கடவைக் குகன்பதம் பணிய மேவிய மாமுகம் விட்டு நீங்கினள் அன்னகா ரணத்தா லப்பதி தனக்கு மன்னுமா விட்ட புரமெனப் பகர்ந்தனர் இங்குறுஞ் சோழ ராசகன் னிகைதான் செங்கம லாசனத் திருவெனச் சிறந்தாள் அற்றைநா எரிரவி லணிபெறுஞ் சேனை சுற்றியே காப்பத் துணைவிய ரோடு படங்குமா எரிகையிற் பஞ்சணை மீது நெடுந்துயில் கூரவந் நிசியே கிடுமுன் காவலர் முருகவேள் கடிநகர் வந்து யாவரு மறியா திவளைக் கொண்டுசென் றன்புறு திருமண மவ்விடை யாற்றி இன்புறக் கூடி யிருக்கு நாளிற் றிக்கெலாம் விளங்கச் செயவால சிங்கச் சக்கர வர்த்தி தானினி துதித்தான் இங்கிவ னரசர் யாவரும் பணியத் துங்கவிந் திரனெனத் துலங்குறு நாளில் ஏழிசை நிறுத்தும் யாழ்வலா னொருவன் ஈழமண் டலத்தை யினிதுகாத் திருக்கும் கண்டிமன் னவனைக் கண்டுதன் கையும் வண்டமிழ் வாக்கு மனமுமொன் றாக்கி இன்னிசை யோடும் யாழினைப் பாட மன்னவன் றானு மனமிக மகிழ்ந்து இன்னநற் பதியை யிவன்றனக் குதவ விதிபெறுந் தனது வியன்பெய ரதனால் பதியுடைப் பெயர்யாழ்ப் பாணமென் றெவருஞ் செப்பவிந் நகரைச் சிறப்பொடு புரந்தான் நறுந்திருக் கோவிற் கடவைமா நகரிற் சிறந்தினி திருந்தருள் செய்திடுஞ் செவ்வேள் அங்கதற் பின்ன ராகமா நிலத்தின் மங்கள நகர வர்த்தகர் தமக்கு அருள்செய நினைந்தே யாறுமா முகமுந் திருமிகு மாறிரு செங்கையுங் கொண்ட வடிவுடன் கோவிற் கடவையின் மற்றும் அடியவர் தமக்கு மருள்புரிந் திருந்த வள்ளன் மேற்குற வஞ்சி நாடகந் தெள்ளிய தமிழாற் செப்புவன் யானே.
ஜ் இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 55
函@ சூரியன்றன் குலத்தில்வரு முக்கிரசோ ழனென்னு
மிராசனுக்கு பூரணமா யொருமகள் பரிபோலு முகங்கொண்டுதித்தாள் அந்தமட மான்வளர்ந்தே புத்தியறிய வருகா லத்திற் தந்தை சொல்லுங் கட்டளையாற் றனது கண்மந்
திர்பொருட்டாய் அத்தலத்தில் நதிகளெல்லாஞ் சென்றாடியுந்
திராததனால் சித்திதரு நகுலகிரிப் புண்ணிய தீர்த்தமதி
லாடவெண்ணிப்
பங்கமறு சேனைகளுந் துணைப்பாங் கியருங் கூடிவர வங்கமத னிடையேறி யிந்த வாரிதியைத் தான்கடந்து நகுலகிரி யதனில்வந்து கடல் நண்ணும் நன்னீர்
சுனையாடிக் குகபெருமான் றனைப்பணிந் தந்தக் குதிரைமுகப்
பிணிதீர்ந்து கண்டிமகா ராசனுக்கு நல்ல கற்புமிக்க காதலியாய் மண்டலங்கள் புரந்திடவே துங்க வாலசிங் கராசனெனும் புத்திரனைப் பெற்றிருந்தா ளந்தப் புண்ணிய
நகுலாசலத்தில் உத்தமமாய் வளர்குறப்பெண் நானு முள்ளகுறி
சொல்வேனம்மே.
இது கோயில் பற்றிய ஐதீகங்களைக் கூறுவதனால் இங்கு அனுபந்தமாகச் சேர்க்கப்பெற்றுள்ளது. (சி.ப)
glasburgub 566 ILG
திருச்சிராப்பள்ளி மாவட்டம் குழித்தலை வட்டம், குழு [ᏝᎧ0Ꮱl - இனுங்கூர் சாலையில் நங்கவரம் அமைந்துள்ளது. இவ்வூரில் இருக்கும் மூன்று கோயில்களிலிருந்தும் கல் வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்று பிடாரி கோயிலில் கல்வெட்டு இல்லை. சுந்தரேசுவரர் கோயில் மண்டபத்துக் கல்வெட்டுக்கள் திருப்பணியின்
காரணமாகத் துணுக்குகளாய்ச் சிதறியுள்ளன. மடப்பள்ளி
இந்துக் கலைக்களஞ்சியம்x
 

7
மற்றும் மண்டப வாயில் சுவர்களில் இருப்பதாக கல்வெட்ட றிக்கை குறிப்பிடும் கல்வெட்டுக்கள் காணுமாறு இல்லை. அறிவியல் நோக்கற்ற திருப்பணிகளும், குடமுழுக்குகளும் எந்த அளவுக்கு நாட்டின் வரலாற்றிழிவிற்குக் காரணமாகின்றன என்பதற்கு நங்கவரமே நல்ல சான்றாய் நிற்கிறது.
இக்கோயிலில் இதுவரையிலும் படியெடுக்கப்படாத கல்வெட்டொன்று இருப்பதை அறிந்து அதைப் படிக்கவும் படியெடுக்கவும் முனைந்தபோது கோயில் சிவாசாரியார் தி,காளிசுவரன் குருக்கள் மிகுந்த பரிவுடன் துணை நின்று வேண்டிய உதவிகளைச் செய்து தந்தார்.
இடம்: கருவறையின் வடபுறக் குமுதம்
செய்தி: கல்வெட்டில் காவிரியின் தென்கரையில் அமைந்த தேவதான நங்கை பிரமதேயமான அரிஞ்சிகை சதுர்வேதி மங்கலமென்று இவ்வூர் அழைக்கப்படுகிறது. கோயிலின் பெயர் மறவனிசுவரம். இக்கோயிலைச் சேர்ந்த ஆதிசண்டேசுவர தேவகன்மிகளும் கோயில் கண்காணி செய்வாரும் கோயிலோடு பணித் தொடர்புடைய கொல்லர்க் கும் தச்சர்க்கும் இறையிலியாக நிலமளித்தனர். திருவிழா நடக்கும் பத்து நாட்களும் சிறப்புச் சோறு வழங்கப்பட்டது.
காலம்: பதின்மூன்றாம் நூற்றாண்டு
1. ஸ்வஸ்திழரீ சுந்தரபாண்டிய தேவற்கு யாண்டு .
உடையார் திருமறவநிசுரமுடையார் தெந்(கரை)
2. தேவநாத நங்கை பிரமதேசமான அறிஞ்சிய சருப்பேதி
மங்கலத்து உடையார் திருமறவநிசுரம்
3. உடையார் கோயி(ற்) ஆதிசந்(டேசுர) பண்டார
தேவகன்மி கே(ா)யில் கண்காணி செய்வார்க
4. ஞம் இவூர் காணி உடைய கொல்லரி(ல்) வடவாய் மகமாணி(க்)கந்த அமர சந்திரக் கொல்ல(ர)க்கும் நம்பி. ம ஆந அறிய கொல்ல(ர்) உள்(ளிட்)டார்க்கும்
5. இறையிலி ஒரு மாவும் இவூர் காணி உடை த
krZZZZZTMk Z0SZMkMkMkMkZZZMMMZMMZTTT TLLL LsCLCCL TLGLCLCCGT TkLGGCLGTTLT

Page 56
6. ச்சரில் உடைய பிள்ளை மகன்னான அறிஞ்சய தச்சர்)
உள்ளிட்டார்க்கும்
7. உடையார் உமைய அமர சுந்தர(ர்) உள்ளிட்டார்க்கும்
8. இறையிலி ஒரு மாவில் இந்நாய்னார் தேவ
9. தான இறையிலி நாற்பத்தெண்ணாயிரவன் வயக்கலி(ல்)
கிழக்கடைய, இரண்டு இந்நில
10. அரைமாவு(ம்) இறையிலியாகப் பெற்று இக்கோயிலுக்கு
இவர்கள் செய்யு(ஞ்) (சேவை செய்து(ம்)
11. சோறு பெறக் கடவார்களாக திருந(ா)ள் பத்து சிற(ப்)பு
சே(ா)று பெறவு(ம்) இப்படிக்கு கல்லுவெட்டிக்
12. குடுத்தோம் (மு.வி, மு.ந.)
öffendhaleMuñi
இவர் ஒரு சிறந்த உரையாசிரியர். உரையாசிரியர்கள் தம் காலத்திற்கு முன்னர் இருந்த மன்னர்களும் சமயச் சான்றோர்களும் போற்றி வளர்த்த இலக்கிய இலக்கணங்க ளைக் காத்து அவற்றின் கருத்தை விளக்கிக் கூறித் தம் காலத்தவர்க்கும் தமக்குப் பின்னால் வந்தர்வர்களுக் கும் அவற்றைத் தந்த பெருமைக்குரியவர்கள். அவர்கள் வரிசையில் சிறப்பிடம் பெறுபவர் நச்சினார்க்கினியர். இலக்கணம் இலக்கியம் ஆகிய இருவகை நூல்களுக்கும்
உரை எழுதிய சான்றோன்.
நச்சினார்க்கினியர் வரலாறு
"தண்டமிழ் தெரித்த வண்புகழ் மறையோன் வண்டிமிர் சோலை மதுரா புரிதனில் எண்டிசை விளங்க வந்த வாசான் பயின்ற கேள்விப் பரத்து வாசன் நான்மறை துணிந்த நாற்பொரு ளாகிய தூய ஞான நிறைந்த சிவச்சுடர் தானே யாகிய தன்மை யாளன்
நவின்ற வாய்மை நச்சினார்க் கினியார்”
 
 

என கலித்தொகை உரைச் சிறப்புப் பாயிரத்தில் குறிப் பிடப்பட்டுள்ளது. இதனால் உரையாசிரியர் மதுரையம்பதி யில் பரத்துவாசர் குடியில் அந்தணர் மரபில் பிறந்தவர் என்பதும் தமிழ்மொழி வடமொழி யிரண்டிலும் நன்கு பயின்று கல்வி, கேள்வி முற்றிய பேரறிவாளர் என்பதும் சைவ சமயத்தவர் என்பதும் அறியக்கிடக்கின்றது. பரத்துவாச கோத்திரத்தினர் வைஷ்ணவர், ஸ்மார்த்தர், மாத்துவர் என மூன்று பிரிவினராய் உள்ளனர். நச்சினார்க்கினியர் ஸ்மார்த்த பிராமணராவார். ஸ்மார்த்தர் ஸ்மிருதியில் கண்ட நெறியை மேற்கொண்ட அத்வைதக்
கொள்கையினர்.
"பாற்கடல் போலப் பரந்த நன்னெறி நூற்படு வான்பொருள் நுண்ணிதின் உணர்ந்த போக்கறு கேள்விப் புலவோர் புலத்தின் நாற்பொருள் பொதிந்த தாக்கமை யாப்பினத் தேக்கிய சிந்தையன்”
என்ற பாயிரம் இவரது கல்விச் சிறப்பினை நன்கு எடுத்துக் கூறுகின்றது.
இவர் சைவ சமயத்தவர். என்பதனை மேல்வரும் சான்று
களால் அறியமுடிகின்றது.
"இச்சையான் மலர்கடுவி யிரவொடு பகலுந்தம்மை நச்சுவாக்கினியார் போலு நாகவிச்சரவனாரே'
(திருக்கேதிஸ்வர் பதிகம்)
"முச்சக முதலே போற்றி முலைச்சுவட் டணிவாய்
போற்றி நச்சினார்க்கினியாய் போற்றியெனத் துதி நவிலும்
கானல்’
மேற்கூறப்பட்ட தேவாரங்களில் இடம்பெறும் நச்சினார்க் கினியன் எனும் பதம் சிவபெருமானையே விழித்துக் கூறப் பட்டுள்ளது. நச்சினார்க் கினியர் சிவத்துக்கும் சைவத்துக்கும் உரிய பெயராதலால் இவர் சைவசமயத்த வர் என்பது பெறப்படுகின்றது. அதுமட்டுமன்றி சிவதலங்க ளில் சிறந்த சிதம்பரத்தினது திருநாமங்களாகிய திருச் சிற்றம்பலம், பெரும்பற்றப்புலியூர் என்பனவற்றை முறையே
& {Gö5 s-LOL saMTsrT glapja elsőfi SloeotásoTö

Page 57
ஆறெழுத்தொரு மொழிக்கும் ஏழுெழுத்துதொரு மொழிக் கும் உதாரணமாக இவர் தொல்காப்பியம் எழுத்ததிகாரத்து மொழிமரபில் 'ஓரெழுத்தொருமொழி’ எனும் சூத்திரத்திற்கு எழுதிய உரையில் குறிப்பிட்டிருப்பதாலும் சைவசமயத்தின் சிறந்த நூல்களாகிய திருவாசகம், திருச்சிற்றம்பலக் கோவையார் உரைகளின் பலவிடங்களில் இலக்கிய, இலக்கணப் பொருளுக்கன்றி தத்துவப் பொருள்களுக்கும் மேற்கோள்கள் எடுத்துக் காட்டியிருந்தாலும் திருமுரு காற்றுப்படை உரையில் சில நயங்கள் எழுதும் போதும் இவர் சைவசமயத்தவர் என்பது நன்கு புலனாகின்றது. எனினும் இவர் சமயப் பொதுநோக்குடையவர். திருமாலை நிலங்கடந்த நெடுமுடி அண்ணல் என்றும் வேங்கட மலையை நிலங்கடந்த நெடுமுடி அண்ணலை நோக்கி உலகம் தவம் செய்து வீடுபேறுபெற்ற மலை என்றும் (தொல் - சிறப்புப்பாயிரம்) குறிப்பிடும் இவர் புறத்திணையி யலில் அருளொடு புணர்ந்த அகற்சி என்பதனை விளக்க புத்தபெருமானின் துறவைக் குறிப்பிடும் பாடலை மேற் கோள் காட்டுகின்றார். சமண சமயக் காப்பியமாகிய சிந்தா மணிக்கு உரை எழுதுவதற்காக அச்சமயம் சார்ந்த ஆருகத நூல்களையெல்லாம் கற்றார்.
இவரது காலம் 14ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியாகும். உரையாசிரியர்களான இளம்பூரணர், பேராசிரி யர், சேனாவரையர், ஆளவந்தபிள்ளையார் ஆகியோரது கருத்துக்கள் இவருரையில் இடம்பெறுவதால் இவர்களுக் குப் பிற்பட்டவர் என்பது பெறப்படும். சீவக சிந்தாமணிக்கு உரை எழுதியபோது (391) கோடகம் என்பதற்கு “தாமம் மகுடம், பதுமம், கோடகம், கிம்புரி என்னும் ஐவகையிற் சிகரமாய் செய்த முடி’ என்று இவர் குறிப்பிடுவது சூடாமணி நிகண்டு கூறும் (சூடாமணி ஏழாம் தொகுதி) கருத்தாம். சூடாமணி நிகண்டு காலம் 14ம் நூற்றாண்டாகும். அதற்கு பிற்பட்டவரே உரையாசிரியர் என்பது இங்கு பெறப்படு கின்றது.
உரைச்சிறப்பு
அவர் ஒரு நூலுக்கு உரை கூறப் புகுமுன் அந்நூலின் காலம், நூலாசிரியர் சமயம், உளப்பான்மை, நூற்போக்கு
முதலியவற்றைப் பெரிதும் முயற்சி செய்து தேடி எழுது வார். தாம் உரை எழுத எண்ணிய நூல் பிற சமயத்தைச்
@因ä56Qa7岳56T@8月Liá餐翁
ళ్ల

சார்ந்தது எனினும் அச்சமயத்தையும் கொள்கை களையும் நன்கு அறிந்தே உரை எழுதுவார். சிறந்த மேற்கோள்க ளைக் காட்டுவார். ஆனால் மேற்கோளுக்குரிய நூலையோ ஆசிரியரையோ சுட்டமாட்டார். இவரது உரையில் மேற் கோள்களாக இலக்கணத்துக்கு இலக்கியமும், இலக்கியத் திற்கு இலக்கணமும் இடம்பெறும்.
பாரத்தொல் காப்பியமும் பத்துப்பாட்டுங் கலியும் ஆரக் குறுந்தொகையுள் ஐந்நான்கும் சாரத் திருத்தகு மாமுனிசெய் சிந்தா மணியும் விருத்திருச்சி னார்க்கினியமே
பழம் பெரும் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் சங்க இலக்கியத்துள் பத்துப்பாட்டு கலித்தொகை குறுந் தொகையில் இருபது பாடல்கள் சீவகசிந்தாமணி ஆகிய நூல்களுக்கு இவர் உரை கண்டுள்ளார்.
சீவகசிந்தாமணிக்கு உரை
சீவகசிந்தாமணிக்கு நச்சினார்க்கினியர் இயற்றியுள்ள
உரையின் சிறப்பை உரைச் சிறப்புப் பாயிரம்
திருத்தகு முனிவன் கருத்து இது என்னப் பருப்பொருள் கடிந்து பொருள் தொடர்ப்படுத்து வினையொடு முடியப் புனையுரை உரைத்தும்
எனப் போற்றுகின்றது. சைவ சமயத்தைச் சேர்ந்த பிராம ணராகிய உரையாசிரியர் சமயப் பொது நோக்குடன் ஜைன சமயத்தை நன்கு அறிந்து ஜைன சமயக் காப்பியத்தை மதக் கோட்பாட்டிற்கு உட்பட்டதாக உரை அமைத்துள்ளார். இரு முறை இதற்கு உரை எழுதினார் என்பர். முதல் எழுதப்பட்ட உரையில் சமய விழுமியங் களை அறியாதவராக இருந்துள்ளார். இவ்வுரை எழுதியது பற்றிக் குறிப்பிடுமிடத்து நச்சினார்க்கினியர் முதல் உரையை எழுதிச் சமணப் பெரியார்களிடம் காட்டியபோது அதனைப் படித்த சமணர்கள் "நச்சினார்க்கினியன் என்னும் கார் எருமை சிந்தாமணி என்னும் தாமரைத் தடாகத்தினுள் புகுந்து குடைந்து தாமரை மலர்களைக் கசக்கி எறிந்து பாழ்படுத்திவிட்டது” என்றனராம். திருத்தியபின் "நச்சினார்க் கினியன் எனும் வெள்ளையானை சிந்தாமணி என்னும் தாமரைப் பொய்கையினுள் நுழைந்து அழகிய மலர்களைத்
* இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்ககம்

Page 58
தன் கையால் பறித்து தலைமீது வைத்துக் கரைக்கு இனிது வந்து சேர்ந்தது” என்றனராம். சிந்தாமணியில் உள்ள சொற் களும் சொற்றொடர்களும் உரையாசிரியரின்
விளக்கத்தினால் சிறந்த பொருளைத் தருகின்றன.
தொல்காப்பிய உரை
இதற்கு முதன்முதல் இளம்பூரணார் உரை கண்டபின் நச்சினார்க்கியர் உரை எழுதியுள்ளார்.
தொல்காப்பியம் என்னும் தொடுகடற் பரப்பை
நிலையுடை கலத்தின் நெடுங்கரை கண்டவர்
என இவரது உரைபற்றி சிறப்புப்பாயிரம் போற்றுகின்றது.
தொல்காப்பியத்தில் தொகுத்த பொருள் அனைத்தும் எல்லார்க்கும் ஒப்ப இனிதுரைத்தான் - சொல்லார் மதுரை நச்சினார்க்கினியன் மாமறையோன் கல்விக் கதிரின் சுடர் எறிப்பக் கண்டு
என்று வேறொரு வெண்பாவும் இவரது உரையின் சிறப்பை எடுத்துக் கூறுகின்றது.
கல்லா மாந்தர் கற்பது வேண்டியும் நல்லறி வுடையோர் நயப்பது வேண்டியும்
அதாவது அறிவுடையோர் மட்டுமன்றி இலக்கண அறிவற்றோரும் அறிந்துகொள்ளும் வகையில் இவர் தனது உரையினை எழுதியுள்ளார்.
பொருளதிகாரத்தில் உவமவியல், மரபியல், மெய்ப்பாட்டி யல் ஆகிய மூன்று இயல்களைத் தவிர எல்லாப் பகுதி களுக்கும் இவர் உரை எழுதியுள்ளார். ஒரு அதிகாரத்திற்கு உரை எழுதும்போது அடுத்தடுத்த அதிகாரங்களில் வரும் விடயங்களை உதாரணமாக எடுத்துக் காட்டுவது இவரது சிறப்பியல்பாகும். உதாரணமாக எழுத்ததிகாரத்திற்கு உரை எழுதும்போது பொருளதிகாரத்தில்வரும் செய்யுளை உதாரணமாக எடுத்தாள்வார்.
இவர் தமது உரைநடையில்
நூற்பா அமைப்பை ஆய்தல்
இந்துக் கலைக்களஞ்சியம்:
 

நல்ல பாடம் காணுதல் நூற்பாவுக்கு வினை முடிவு காட்டுதல் வைப்பு முறை ஆய்தல் கருத்துக்களைக் கணக்கிட்டு மொழிதல் சொற்களின் வடிவமும் பொருளும் ஆய்தல் நுண்பொருளை வெளிப்படுத்தல் நயவுரை கூறுதல் தக்கமேற்கோள் காட்டுதல்
ஆகிய உரை நெறிகளைக் கையாளுகின்றார். இவர் எழுத்து என்பதற்கு "எழுத்து என்றது யாதனை எனின் கட்புலனாக உருவும் கட்புலனாகிய வடிவும் உடைத்தாக வேறு வேறு வகுத்துக்கொண்டு தன்னையே உணர்த்தியும் சொற்கு இயைந்து நிற்கும் ஒசையையாம்' என்கிறார். இவ்வாறு நன்கு விளங்கிக் கொள்ளகூடிய முறையில் இலக்கணத்திற்குள் இலக்கிய அறிவை இயலுமான வரை புகுத்தி இலகு நடையாக்கியுள்ளார் எனலாம்.
பத்துப்பாட்டு உரை
சங்ககால மக்களின் பழக்கவழக்கம், நாகரிகம், வரலாறு ஆகியவற்றை நினைவில் கொண்டு தெளிவுபட விளக்கிச் சொல்கின்றார். இடையிடையே தொல்காப்பிய இலக்கணத் தை நினைவுகூருவது இவரது சிறப்பம்சமாகும்.
நெடுநல் வாடை என்ற தலைப்பினை நச்சினார்க்கினியர் நெடியதாகிய நல்ல வாடை என்று'பொருள் கூறி, மேலும் அதில் நயங்காண்கின்றார். தலைவனைப் பிரிந்திருந்து வருந்தும் தலைவிக்கு ஒரு பொழுது ஓர் ஊழிபோல நெடிது ஆகிய வாடையாய் - நெடுவாடையாய் உள்ளது. அகத்து ஒடுங்கிப் போகம் நுகர்வோர்க்குச் சிறந்த காலமா யினும் அரசன் போகம் வேண்டிப் பொதுச் சொற்பொறா னாய் அப்போகத்தில் மனமற்று வேற்றுப்புலத்துப் போந்து இருக்கின்ற இருப்பு ஆதலின் அதற்கு நல்லதாகிய வாடை ஆயிற்று என தலைப்புக்கு நயம் கூறுகின்றார். மலைபடு கடாம் என்பதனை மலைபடு கடாஅம் மாதிரத்து இயம்ப என்ற அடியில் மலைகளாகிய யானைக்கு உண்டாகின்ற ஒலி திசைகள் எல்லாம் ஒலிப்ப என்று பொருள் எழுதி கடாம் ஆகுபெயராய் அதனாற் பிறந்த ஓசையை உணர்த்தி ற்று என்று விளக்கமும் தருகின்றார்.
8 SSS shou asevTsTI EIaajaaso slooTäsoTä

Page 59
மிக இலகுவில் விளங்கிக் கொள்ளும்படியாக இவரது பத்துப்பாட்டு உரைநடை விளங்குகின்றது.
கலித்தொகை உரை
கலிப்பாட்டு ஒவ்வொன்றிலும் நச்சினார்க்கினியரின் நுண்மாண் நுழைபுலம் வெளிப்படுகின்றது. பாட்டில் அமைந் துள்ள உள்ளுறை உவமம், உவமம், இறைச்சிப் பொருள் ஆகியவற்றைத் திணைக்கு ஏற்ப ஆராய்ந்து கூறுகின்றார். இதனை
கலித்தொகைக் கருத்தினைக் காட்சியிற் கண்டு அதற்கு உள்ளுறை உவமமும் ஏனை உவமமும்
தெள்ளிதின தெரிந்து திணைப் பொருட்டு ஏற்ப
என்ற கலித்தொகை சிறப்புப்பாயிரம் குறித்து நிற்கின்றது.
கலித்தொகைப் பாடல்கள் நாடகப் போக்கிலேயே பெரும்பாலும் அமைந்துள்ளன. நச்சினார்க்கினியர் சிறந்த நாடக ஆசிரியரைப் போல அப்பாடல்களின் அமைப்பை நுணுகி ஆராய்ந்து உரை கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. உவமைகளை இலகுவில் விளங்க வைத்து உரை
நடையை சிறப்பிக்கும் பண்பு இவரிடமுண்டு.
பொதுச்சிறப்பு
எண்பதுக்கு மேற்பட்ட நூல்களில் இருந்து பல எடுத்துக் காட்டுக்களை இவர் கையாண்டுள்ளார். இன்று வழக்கில் இல்லாத பல நூல்களை தனது உரைகளில் ஆங்காங்கு எடுத்துக் காட்டியுள்ளார். கலைகள் பற்றி நன்கு அறிந்திருந் தார். யாழ் என்னும் பண்டை இசைக்கருவியின் நுட்பங் களை நன்கு அறிந்திருந் தார். யாழின் தோற்றம், உறுப்புக் களின் அமைப்பு, அளவு ஆகியவற்றோடு அவை செய்தற் குரிய மரங்களையும் இவர் (பொருள் - 22) குறிப்பிடுகின்றார். துணங்கை முதலிய கூத்து வகைகளையும் நன்கு விளக்குகின்றார்.
பாணர் கூத்தர் ஆகிய கலைஞர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது "பாணரும் இசைப்பாணரும் யாழ்ப்பாணரும் மண்டைப் பாணரும் எனப் பலர்” என்கிறார். சமையல், மருத்துவம், சோதிடம் போன்ற கலைகள் பற்றியும் அறிந் திருந்தமையை இவரது உரைகளில் இருந்து அறிய முடி
இந்துக் கலைக்களஞ்சியம்x

கின்றது. இவரை அமிழ்த்தினும் இனிய தமிழ் மடவரல் செய் அருந்தவத்தின் பெரும்பயனாக அவதரித் தருளிய மகோபகாரி என்றே கூறுவர். (@&#.)
Lijflesjeit GlaouiduluIGö
கிரேக்க மெய்யியலில் பார்மினைடிஸ் எந்தளவிற்கு முக்கியத்துவம் பெறுகிறாரோ அதேயளவு முக்கியத்துவம் இந்திய மெய்யியலில் நசிகேதனுக்கு உண்டு. நசிகேதன் ஒரு வரலாற்று நபரோ அல்லவோ என்பது தொடர்பாக அபிப்பிராய பேதம் உண்டெனினும், தைத்திரிய சம்ஹிதை, கடோபநிடதம், முண்டக உபநிடதம் ஆகியவற்றில் இவர் பற்றிய குறிப்புகள் உண்டு. நசிகேதனுடைய 'உளது என்ற கருத்தினடியான மெய்யியல் உத்தாலகருடைய தருக்க அடிப்படையை ஆதாரமாகக் கொண்டது. நசிகேத னின் அதிகாரபூர்வமான மெய்யியற் சிந்தனையென எமக் குக் கிடைப்பதெல்லாம் கடோபநிடதத்திற் காணப்படும் கவிதைகளேயாகும். இது பாரசீகம், பிரெஞ்சு, லத்தீன், ஜேர்மன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்ட பெருமையுடையது. மொகலாயரின் ஆட்சிக் காலத்
தில் பாரசீக மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.
கடோபநிடத்தில் நசிகேதன் உத்தாலகர் மரபின்வழி வந்தவராகக் குறிப்பிடப்படுகிறார். நசிகேதனின் மெய்யியற் சிந்தனையானது உளது பற்றிய கோட்பாடு' என அழைக் கப்படுகிறது. முதன்முதலில் இதனை உத்தாலகர் போதித் தார். இக்கோட்பாட்டை பெளத்த இலக்கியங்கள் ஆத்மா பற்றிய மெய்யியல் என்று குறிப்பிடும். இதனை சாங்கியர் சத்காரியவாதம் என்றும், மகாவீரர், புத்தர் ஆகியோர் ஏகவாதம் எனவும் விவரிப்பர். இக்கோட்பாடு நசிகேதனதும் காத்யாயனரதும் தருக்க நிலைப்பட்ட மெய்யியற்
சிந்தனைகளை உள்ளடக்கியது.
நசிகேதனது மெய்யியற் சிந்தனை ஐயத்திலிருந்து தொடங்குகிறது. இறப்பின் பின்னரும் மனிதர் இருப்புடைய வரா என்ற ஐயம் எனக்குண்டு. சிலர் அவன் இருக்கிறான் என்றும், வேறு சிலர் இல்லை என்றும் கூறுகின்றனர்.
எது உண்மை என்று கூறும்படி யமனிடம் நசிகேதன்
ZBekkeMYYmyyyyllSYLLZBB YkekS TT uLLLT LC uu TMMLCLT TTLGe LG TTLT

Page 60
கேட்டபொழுது நசிகேதனின் ஐயத்தைப் போக்குமுகமாக யமன் வருமாறு கூறுவான். நன்மை என்றது ஒன்று. இன்பம் என்றது பிறிதொன்று. வெவ்வேறான இவையிரண்டும் மனிதனைப் பிணிக்கும் விலங்காம். இவற்றில் நன்மையைத் தெரிவு செய்து நற்கதி அடைவோரும், இன்பத்தைத் தெரிவுசெய்து துன்பமடைவோரும் உளர். நன்மையும் இன்ப மும் மனிதனை நெருங்கி வரும்பொழுது ஞானவான் நன் மையைத் தெரிவுசெய்து இன்பத்தையடைவான். மூடர்கள் இன்பத்தைத் தெரிவு செய்து துன்பமடைவார்கள்.
யமன் தொடர்ந்து கூறுகையில், “அறியாமை, அறிவு என்பனவற்றைப் பொறுத்தவரையில், மூடர்கள் அறியாமை யை அவாவுற்று, தாமே ஞானவான்கள் எனக்கருதி மற்ற வர்களைக் கீழ்நோக்கிப் பார்ப்பார்கள். இத்தகைய மூடர் களுக்கு இறப்பின் பின்னரான இருப்பு புலப்படுவதில்லை. செல்வத்தினால் மருட்கையுற்று, இதுவே உலகம், வேறு எதுவும் இல்லை என நினைத்துச் செயற்படுவார்கள். இத்த கையோர் தாமாகவே தொடர்ந்து பிறப்பு - இறப்பிற்கு
உட்பட்டு எனது ஆளுகைக்கு உட்படுகின்றார்” என்றான்.
நசிகேதன் - யமன் உரையாடலைத் தொடர்ந்து வரும் பகுதிகள் பதிப்புருவம் பெற்ற கடோபநிடதத்திலே தவற விடப்பட்டுள்ளது. பகவத்கீதையில் மேற்கோளாகத் தரப் படும் உபநிடதப் பகுதிகளில் தவறவிடப்பட்ட அப்பகுதி களைக் காணக்கூடியதாய் உளது. இதனைக் கொண்டு கடோபநிடதத்திலே தவறவிடப்பட்ட நசிகேதனின் மெய்யி LJ606ð Benimadhab Barua 6166t. Ty, The History of Pre - Buddhistic indian Philosophy 616.3 biT656) foll60)LD5,
துள்ளமை குறிப்பிடத்தக்கது.
'உளதே இருப்புடையது. உளதல்லாதது இருப்புடைய தல்ல. உளதானது உளது அல்லாததிலிருந்து வந்திருக்க முடியாது. அதுபோலவே உளதல்லாதது உளதிலிருந்து வரமுடியாது. உளது பிறப்பதில்லை. அதனால் அது இறப் பதுமில்லை. அதனால் உளதே உளதாம், உளதல்லா bol அல்லவாம்வெறுமையிலிருந்து வெறுமையே வரும். எனவே உளதாதல் என்பதில்லை. உளது பிறப்பற்றது. அதனால் அது இறப்பற்றது. உளது என்பது ஆன்மாவே யாம். அது சடத்தில் சடம் அல்லாததாயிருக்கிறது. மாறு
 

வனவற்றில் மாற்றமில்லாதிருக்கிறது. இதுவே நசிகேதனாற் போதிக்கப்பட்ட உளது பற்றிய கோட்பாடாகும். உளது என்பது அதன் பண்பில் எதிர்மறையானதென்பதே நசிகே தன் பயன்படுத்திய பயனிலைகளால் அறியமுடிகிறது. நசிகேதனின் 'உளது பற்றிய கோட்பாடு உளவியல் ரீதியான யோகத்தினாலேயே உணரப்படலா மென்றும், தருக்கச் சிந்தனையினால் அதனை அறியமுடியா தென்றும் கூறப்படுகின்றது.
உளது பற்றிய கோட்பாட்டை விளக்குமுகமாக முதலில் வாழ்க்கை, ஆன்மா என இரு தத்துவங்களின் இயல்பு பற்றி நசிகேதன் கூறுகின்றான். பிரமத்தை அறிந்தவன் இவ்விரண்டையும் நிழலும், ஒளியும் எனப் பிரித்தறிந்து கொள்ளுவான். மனிதனது ஆன்மாவே உண்மையான அகம். அது உடலாகிய ரதத்தில் வீற்றிருந்து வாழ்க்கை யை அனுபவிக்கிறது. புத்தியே ரதத்தின் சாரதி மனமே கடிவாளம், புலன்களே குதிரைகள். புலன்களின் விடயமே ரதம் செல்லும் வீதியாம். புலன், உளம், உடல் என்பனவற்று டன் கூடிய ஆன்மாவை ஞானவான்கள் போக்தா எனக் கூறுகின்றனர். இதனைப் புரிந்துகொள்ளாதவன் பலவீன மான உளமுடையவனாய் புலன்வழிச் செல்லுகிறான். புரிந்துகொண்டவன் 'தத் பதம் அடைந்தவனாய் மாற் றத்திற்கு உள்ளாகாத பிறப்பற்ற நிலையை எய்துகிறான். இதனைப் புரிந்துகொள்ளாதவனோ பலவீனமான உள முடையவனாய் புலன்வழி, தறிக்கெட்டுச் செல்லுகிறான். புரிந்துகொண்டவன் மனவலிமையுடன் புலன்களாகிய குதி ரைகளைக் கட்டுப்படுத்தக் கூடியவனாய் இருக்கிறான். புரிந்துகொள்ளாதவன் அசூசை உடையவனாய், சிந்தனை யின்றிச் செயற்படுகின்றான். அவன் ஒரு பொழுதும் நித் தியமான சடப்பொருள்சாரா உயர்நிலையை அடைவ தில்லை. அதனால் மீண்டும் மீண்டும் பிறப்பதுவும் இறப்பதுவு மாய் இருக்கிறான்.
அகம்நோக்கிப் பார்க்கும்பொழுது, காட்சிவழி பதிவு களைப் பெறும் புலன்களிற்கு அடுத்து அகப்புலனாகிய மனம் இருக்கிறது. அதனையடுத்து புத்தி, அதனையடுத்து மகத், அதனையடுத்து இருப்பதே அவ்யக்தம் எனப்படும் புருஷனாகும். தூய உணர்வு நிலையாகப் புருஷன் இருப்ப தால், அதனையடுத்து எதுவுமில்லை. இறைத்தன்மையை
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 61
அடைவதே உயர்ந்ததும், இறுதியுமான இலக்காகும். இறைத்தன்மையான சுய - இருப்பை வேதக்கிரியைகளை நிகழ்த்துவதாலோ அல்லது புத்தியினாலோ அல்லது கற்றலினாலோ அடையமுடியாது. இறைவன் எல்லா உயிர் களினதும் அந்தராத்மாவாக உள்ளான். ரிஷிகள் அதனை உள்ளுணர்வினால் அறிவார்கள். உளத்தைத் தூய்மைப் படுத்தி, அதன் தரத்தை உயர்த்துவது மூலம் மெய்யான அறிவைப் பெறலாமென்பதுவே நசிகேதனது போதனை
JT(35f.
புலன்களை அதன் வழியிற் செல்லவிடாது தடுத்து நிறுத்தலே யோகம் என்பது நசிகேதனின் அபிப்பிராய மாகும். தியானத்தின் மூலம் உளமானது படிப்படியாக உயர்நிலைக்குச் செல்லும், யோகி தன் உயர்ந்த உளக் காட்சியினால் உளதாகிய இறைவனைத் தரிசிப்பான். இறை வனைத் தரிசிப்பவனே உண்மையை அறிந்தவனாவான்,
உளதை உணர்ந்தவனுமாவான்.
நசிகேதனுடைய மெய்யியல் ஆபஸ்தம்பருடைய தரும சாஸ்திரத்திலும் தரப்பட்டுள்ளது. தீகநிக்காயத்தில் வரும் மஹா - கோவிந்த சூத்தத்தில் கூறப்படும் கருத்துக்களும் பலவிடங்களில் நசிகேதனது சிந்தனையுடன் உடன்பாடு கொண்டிருப்பதையும் குறிப்பிடுதல் அவசியம். (சோ.கி.)
நஞ்சீயர்
இவர் வைணவ ஆசாரியார் பரம்பரையில் ஒருவர். தென்கலை மரபினர். பராசரபட்டரின் சீடர். 'ஒன்பதினாயிரப் படி முதலான நூல்களின் ஆசிரியர்.
நஞ்சீயர் பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியிலும் பதின்மூன்றாம் நூற்றாண்டின் பெரும்பகுதியிலும் வாழ்ந்தவ ராகக் கருதப்படுகிறார். இவருடைய ஆயுட்காலம் நூறு வருடங்கள் என்பர். திருநாராயணபுரம் என்னும் தலத்தில் அவதரித்தவர் என்றும் இவரது திருநட்சத்திரம் பங்குனி உத்தரம் என்றும் கூறப்படுகிறது. திருவரங்கத்தில் வாழ்ந்த வர். இவர் தொடக்க காலத்தில் வேதாந்தி என்று பேர் பெற்றிருந்தார். அக்காலத்தில் வாதபிச்சைக்கு வந்த பராசர பட்டரோடு வாதிட்டுத் தோற்று அவரைப் பணிந்து அவர்தம் சீடரானார்.
இந்துக் கலைக்களஞ்சியம்x
 

இவரது இல்லத்தை நாடிப் பிச்சைக்கு வந்த வைணவர் ஒருவருக்கு பிச்சை கொடுக்காது மறுத்த துணைவியாரை வெறுத்து சந்நியாச ஆசிரமத்தை ஏற்றுச் சென்றார். அவ் வாறு செல்கையில் அவரைக் கண்ட ஆசாரியர் பட்டர் நஞ்சீயர் வந்தார் என்று கூறினார். அன்று முதலே இவர் நாமம் நஞ்சீயர் என்று ஆயிற்று. இவருக்கு பூரீ ரங்கநாதர், வேதாந்த வேதியர், மாதவாசார்யர் என்பனவாக வேறு திருநாமங்களும் உண்டு. நம்பிள்ளை, பூரி சேனாதிபதிசியர், குட்டிக்குறி, இளையாழ்வார் என்போர் இவரது சீடர்கள்.
நஞ்சீயர், மதுரகவியாழ்வார் அருளிச் செய்த 'கண்ணிநுண் சிறுதாம்பு என்னும் பதிகத்துக்கு உரை இயற்றியுள்ளார். ஆண்டாளின் திருப்பாவைக்கு ஈராயிரப்படி எழுதியுள்ளார். திருப்பல்லாண்டுக்கு வியாக்கியானம் செய்துள்ளார். இவரது அருளிச் செயல்களுள் பிரதானமாகக் கொள்ளப் படுவது ஒன்பதாயிரப்படி என்னும் பெயரில் வழங்கும் திருவாய்மொழி உரையாகும்.
'ஒன்பதாயிரப்படி என்பது 'ஒன்பதாயிரம் கிரந்தங்கள் என்னும் அளவினை உடையது என்பது பொருள். மெய்யெ ழுத்து நீங்கலாக முப்பத்திரண்டு எழுத்துக்களை உடை யது ஒரு கிரந்தம் (படி என்றால் அளவு என்பது பொருள்) இவ்வாறாக ஒன்பதாயிரம் கிரந்தங்களில் திருவாய் மொழி க்கு எழுதப்பட்ட வியாக்கியானமே ஒன்பதாயிரப்படி என வழங்கப்படுவதாம்.
நஞ்சீயர் எழுதிய ஒன்பதாயிரப்படிக்கு முன்பதாக அவரது ஆசிரியரான பட்டர் திருவாய் மொழிக்கு 'ஆறாயிரப் படியாக ஒரு வியாக்கியானம் எழுதியுள்ளார். அவ்வியாக் கியானத்தை விரிவுபடுத்தி நஞ்சீயர் உபந்நியாசம் செய்து வந்தார். நஞ்சீயரால் விரிவுபடுத்தப்பட்ட அவ்வுபந்நியாச உரையை செவ்வையான எழுத்துப்படியாக எழுதித் தரும் பொறுப்பை நஞ்சீயர், தமது சீடர்களில் ஒருவரான நம்பூர் வரதராசர் என்பவரிடம் ஒப்படைத்தார். அவரும் தம் ஊரிலி ருந்து எழுதிக்கொண்டு வருவதாகச் சொல்லி அதனை வாங்கிச் சென்றார்.
வரதராசர் அவ்வுரையின் மூலப்படியை தம் ஊருக்கு எடுத்துச் செல்லும் வழியில் காவிரியைக் கடக்க வேண்டி
§§§ alousevTsTT siepe Jessef seooTäs6Tä

Page 62
ஏற்பட்டது. காவிரியைக் கடக்கும்போது திடீரென்று வெள்ளம் மிகுதியாக வரவே ஓலைச் சுவடி கைதவறி
ஆற்று வெள்ளத்துள் வீழ்ந்து தொலைந்துவிட்டது.
வரதராசர் அந்த இழப்பால் பெரிதும் வருத்தமுற்றவராய்த் தமது வீட்டையடைந்து நித்திய வழிபாடுகளை முடித்து உணவும் அருந்தாமல் நித்திரையானார். தம் பக்தனின் வருத்தத்தை அறிந்த திருவரங்கத் திறைவன் அவர் கனவிலே எழுந்தருளி 'அன்பனே, ஏன் வருந்து கிறாய்? உன்னுடைய ஆசாரியனை முன்னிட்டுக் கொண்டு நீ எழுதத் தொடங்கினால் நாம் உனது நினைவிலிருந்து கொண்டு உதவுவோம்” என்று கூறியருளினான். வரதராச ரும் இறைவன் கூறியபடி எழுதத்தொடங்கி சொற்ப நாட்க எளில் ஒன்பதாயிரப்படியையும் எழுதி முடித்தார். நஞ்சீயரின் வியாக்கியானத்தைப் படியெடுப்பதே வரதராசரின் பொறுப்பு. ஆயினும் அவரும் நன்கு தமிழறிந்தவராதலால் ஒவ்வொரு பாடலிலும் ஆங்காங்கே பொருத்தமான இடங்களில் 'பிரசன்ன கம்பீர பதங்களுக்கு அர்த்த விசேடங்களும் எழுதினார்.
தாம் படியெடுத்தற்குரிய ஒன்பதாயிரப்படியை தம் ஞாபக த்திலிருந்தபடியும் விசேடமாக்கியும் எழுதிக்கொண்டு போய் நஞ்சீயரிடம் கொடுத்தார். அதனைப் படித்துப் பார்த்த நஞ்சீயர் அப்படி, தாம் சொன்னதிலும் நன்றாக இருப்பதைக் கண்டு நடந்ததை விசாரித்தார். பயத்தினாலே வரதராசர் ஒன்றும் பேசாதிருந்தார். நஞ்சீயர் "நீர் பயப்பட வேண்டாம்! உண்மையைச் சொல்லும்” என்று கூறவே வரதராசரும் நடந்ததைத் தெரிவித்தார். நஞ்சீயர் மகிழ்ந்து இவருடைய புத்திவிஷேடம் இருந்தபடி என்ன! இவர் மகா சமர்த்தராய் இருந்தார்’ என்று பாராட்டி மகிழ்ச்சி மேலிட்டால் அவரை வாரி அணைத்து இவர் நம்முடைய திருக்கவி கன்றிதாசர் என்று கூறி அவரைத் தம்மோடே வைத்துக் கொண்டார். அதுமுதல் அவருக்கு நம்பிள்ளை என்ற நாமம் உண்டா யிற்று.
மேற்படி கதை வைணவ உலகில் நஞ்சீயரின் ஒன்பதா யிரப்படி பற்றி வழங்குவதாகும். இந்த ஒன்பதாயிரப் படியை உபதேசரத்தின மாலை (43) மேல் வருமாறு போற்றும்.
இந்துக் கலைக்களஞ்சியம்x 3:
 

நஞ்சீரை ஞானியர்கள் தாம்புகழும் வேதாந்தி நஞ்சியர் தாம்பட்டர் நல்லருளால் - எஞ்சாத ஆர்வமுடன் மாறன் மறைப்பொளை ஆய்ந்துரைத்தது ஏர் ஒன்பதினாயிரம்
பிரம்ம சூத்திரத்திற்கு இராமானுசர் அருளிச் செய்த 'ரீபாஷ்யம் ஒன்பதாயிரம் கிரந்தங்களை உடையதாதலின் அத்தொகை அளவில் இவ்வியாக்கியானமும் அமைந்தது என்பர். நஞ்சீயர், திருவாய் தொழியை நூறு உரு வியாக் கியானம் செய்தபடியால் 'திருவாய் மொழிக்கு சதாபி ஷேகம் பண்ணினார் என்று வைணவ மரபில் புகழப்படு வார். (க.இர.)
நட்சத்திரம்
நாண்மீன், தாரகை, விண்மீன் ஆகிய சொற்கள் நட்சத்தி ரத்தைக் குறிப்பவை. சோதிடக்கலையில் நட்சத்திரத்திற்கு மிகச் சிறப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஒரு குழந்தை பிறந்த நாளுக்குரிய நட்சத்திரத்தினைக் கொண்டு அக்குழந்தை யின் சிறப்பியல்புகளையும், அதன் எதிர்காலம் பற்றியும் ஒரளவு கூறமுடியும். திருமணத்திற்கு ஆண், பெண் இருவருடைய நட்சத்திரங்களை வைத்துத் திருமணப் பொருத்தம் பார்க்கப்படுகின்றது. அதே போன்று தொழில் தொடங்க, வீடுகட்ட, கல்விப் பயிற்சி செய்ய ஏற்ற நட்சத்
திரங்கள் பார்க்கப்படுகின்றன.
நட்சத்திரங்கள் 27 எனக் கணக்கிட்டுள்ளனர். வானத்தில் இவற்றுக்குரிய அமைப்பும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை
T660T.
1) அச்சுவினி - குதிரைத்தலை, 2) பரணி - அடுப்பு 3) கார்த்திகை - தீக்கதிர், 4) உரோகிணி - சக்கரம், 5) மிருகசிரிடம் - மான்தலை, 6) திருவாதிரை தீக்கொள்ளி, 7) புனர்பூசம் - ஒடம், 8) பூசம் - புடலம்பூ, 9) ஆயிலியம் - சக்கரம், 10) மகம் - நுகத்தடி, 11) பூரம் - கட்டில் கால்கள், 12) உத்தரம் யானைத்தோற்றம், 13) அஸ்தம் - கைத் தலம், 14) சித்திரை - முத்து. 15) 36). Tg5 - U6).J6IT LÊ,
xxx இந்த சமய கலாசார அலுவல்கள் தி3ை00ாக்களம்

Page 63
16) விசாகம் - தோரணவாயில், 17) அனுசம் - கையிற் பிடித்த குடை, 18) கேட்டை - ஈட்டி, 19) மூலம் - பாயும் சிங்கம், 20) பூராடம் - இரட்டைச் சதுரம், 21) உத்தராடம் - கட்டில்கால் - முக்கோணம், 22) திருவோணம் - மூன்றரை அடி, 23) அவிட்டம் - மத்தளம், 24) சதயம் - வட்டம், 25) பூரட்டாதி - கட்டில்கால், 26) உத்தரட்டாதி கட்டில்கால், 27) ரேவதி - மீன்
நாண் மீன்கள் இருபத்தேழிற்கும் கணம், விலங்கு, பறவை, அதி தேவதை (உரிய தெய்வம்) மரம், இரச்சு, பெயர், எழுத்து ஆகியவை குறிக்கப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் திருமணப் பொருத்தம் பார்க்கப் பயன்படுத் தப்படுகின்றன. நட்சத்திரம் தெரியாதவர்களுக்கு பெயர் எழுத்தை வைத்து நட்சத்திரத்தைக் கண்டுபிடித்து அவர்க ளுக்குக் கோட்சார பலன் சொல்லப்படுகின்றது. நாண் மீன்களைக் கொண்டு ஒருவருடைய வாழ்க்கையில் குறிப் பிட்ட காலத்தில் நிகழக்கூடிய சிறப்பு நிகழ்ச்சிகளையும் 3n Boulib.
ஒவ்வொரு நாண் மீனுக்கும் நேராக வடக்கிலோ தெற்கி லோ சந்திரன் வரும் நாளில் அந்தக் குறிப்பிட்ட நாண்மீனின் காலம் நடைபெறும். இவ்வாறு சந்திரன் 27 நாண் மீன்க ளையும் கடந்து தான் நின்ற தொடக்க எல்லைக்கு வர 29 நாள்கள் ஆகும். 27 நாண் மீன்களையும் நான்கு பாதங்களாக்கினால் 108 பாதங்கள் வரும். இப்பாதங்களை 12 இராசி வீட்டிலும் இராசி ஒன்றுக்கு 9 பாதம் வீதம் வைத்துக் கணக்கிடப்படுகின்றது. இக்கணக்கின்படி அசுவினி, பரணி, கார்த்திகை ஒரு பாதம் மேட இராசியிலும் கார்த்திகை 3 பாதங்கள், உரோகிணி, மிருகசீரிடம் 2 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 3 பாதங்கள், மிதுன இராசியிலும் புனர்பூசம் ஒரு பாதம் பூசம், ஆயிலியம் கடக இராசியிலும், மகம், பூரம் உத்திரம் ஒரு பாதம், சிம்ம இராசியிலும் சித்திரை 2 பாதங்கள் சுவாதி, விசாகம் 3 பாதங்கள் துலா இராசியிலும், விசாகம் ஒரு பாதம், அனுசம், கேட்டை, விருச்சிக இராசியிலும் மூலம் பூராடம், உத்தராடம் ஒரு பாதம் தனு இராசியிலும், உத்தராடம் 3 பாதங்கள், திருவோணம், அவிட்டம், 2 பாதங்கள் மகர இராசியிலும் அவிட்டம் 2 பாதங்கள், சதயம், பூரட்டாதி, 3 பாதங்கள் கும்ப இராசியிலும் பூரட்டாதி ஒரு பாதம் உத்தரட்டாதி ரேவதி மீன இராசியிலும் அமைகின்றன.
 
 

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஆதிபத்யம் உடைய கோள்கள் உண்டு. அவையாவன மேல்வருமாறு அமையும். அசுவினி, மகம், மூலம், கேது, பரணி, பூரம், பூராடம் - சுக்கிரன், கார்த்திகை, உத்தரம், உத்தராடம் - சந்திரன்; மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் - செவ்வாய், திருவாதிரை, சுவாதி, சதயம் - இராகு, புனர்பூசம், விசாகம், பூரட்டாதி - (35(5, பூசம், அனுசம், உத்தரட்டாதி - சனி, ஆயிலியம், கேட்டை, ரேவதி - புதன் ஆகும்.
ஒருவர் பிறந்த நாளில் இருந்த நட்சத்திரத்தைக் கொண்டு அவருடைய சிறப்பியல்புகள் பற்றிக் கூறலாம். ஒவ்வொரு நாண்மீனுக்கும் சிறப்பியல்பு குறிக்கப்படுகின்றது.
அஸ்வினி. இது ஆறு நட்சத்திரப் புள்ளிகளின் வடிவத் தில் அமையும். அஸ்வினி முதல்பாதம் என்றால் அஸ்வினி நட்சத்திரம் உதயமாகச் சுமார் ஆறுமணி காலத்துக்குள் ளான காலம் ஆகும். இந்நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சூட்சுமமான புத்திக் கூர்மையும், தீர்க்க ஆயுளும், நீண்ட அழகிய கண்களும், ஆபரணம் பூணுவதில் அதிக விருப்ப மும், எடுத்த காரியத்தை எப்படியும் முடிக்கும் திறமையும், நண்பர்களிடம் சுமுகமாக நடந்துகொள்ளும் சுபாவமும் கொண்டவர்கள். ஆனால் இலைமறை காயென தீய நண்பர் களின் சேர்க்கையும் இவர்களுக்கு இருக்கும். செலவு பார்த்து, நிதானமாகத்தான் எதனையும் செய்வர். இந்த நட்சத்திரத்தில் எக்காரியத்தினை ஆரம்பித்தாலும் விரைவில் பலன் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
பரணி: "பரணி தரணி ஆளும்” என்று ஒரு பழமொழி உண்டு. தரணி என்றால் உலகம். அரசனாக வாழாவிட்டா லும் போக போக்கியங்களுடன் சுகமான வாழ்வு வாழ்வான் என்று கொள்ளலாம். இந்தக் கருத்துக்கு ஏற்ப பரணி உபயகுல நட்சத்திரம். உபயகுல நட்சத்திரம் என்றாலும் பிறருடைய முயற்சியினாலும் உழைப்பினாலும் கிடைக்கிற செல்வத்தை அனுபவிக்கச் செய்யுமே அல்லாமல் தான் கஷடப்பட்டு சம்பாதிக்கச் செய்யாது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சுவையான ஆகாரங்களை ருசித்து சாப்பிடு வர். தூக்கப்பிரியர், சத்துருக்கள் அதிகம் உடையவர். நீண்ட ஆயுள் உடையவர். திடசித்தம் இல்லாதவர், பரந்த நெற்றியும் சுருள் முடியுமாக பார்ப்பதற்கு நன்றாக இருப்பர்.
x இந்த சமய கலாசார அலுவல்கள் திOைக்களம்

Page 64
எந்தவிதக் கவிஷ்டத்தையும் மனதில் போட்டுக் கொண்டு குழம்பமாட்டார்கள். வாழ்க்கை வாழ்வதற்கே என்ற யதார்
த்த நிலையில் பிடிப்புள்ளவராக இருப்பர்.
கிருத்திகை முருகன் அவதாரம் செய்த நட்சத்திரம் கிருத்திகை. இந்நட்சத்திரக்காரர்களுக்கு சுற்றத்தாரை விரும்பி வரவேற்கும் உதாரகுணம் அமைந்திருக்கும். நல்ல தேகவாகும், முகத்தோற்றமும் பெற்றிருப்பர். சுவையான உணவை ரசித்துச் சாப்பிடுவார்கள். இவர்களுக்கு பேரும் புகழும் இருக்கும். எப்போதும் மகிழ்ச்சியாக காணப்படுவார் கள். பிறருக்குத் தெரியாமல் பாவச் செயல்களைச் செய்வ தில் மனம் செல்லும், கற்ற கல்வியே போதுமானது என்பது
போன்ற மனோபாவம் சிலரிடம் காணப்படும்.
ரோகிணி இந்த நட்சத்திரத்தில்தான் யூரீகிருஷ்ணபக வான் அவதரித்தார். சுபகாரியங்கள் செய்ய உகந்த நட்சத் திரம். இதில் பிறந்தோர் சுகபோக வாழ்வை அனுபவிப்பார் கள். தாங்கள் அதிகம் உழைத்துச் சம்பாதிப்பதை விட பிறர் சேமித்து வைத்திருக்கும் செல்வத்தை அனுபவிக்கும் அதிர்ஷ்டசாலியாக விளங்குவார்கள்.
மிருகசிரிடம் இருபத்தேழு நட்சத்திரங்களில் சில நட்சத் திரங்கள்தாம் எல்லா சுபகாரியங்களையும் செய்ய உகந்த தாக இருக்கிறது. அத்தகைய உடுக்களில் ஒன்று மிருக சீரிடம், கலைமானின் தலையைப் போல தோன்றுவதால் காரணப்பெயரிடப்பட்டது. இது பெண் நட்சத்திரம் என்றும் அலி நட்சத்திரம் என்றும் சில நூல்கள் கூறுகின்றன. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உற்சாகமான பேச்சும், அன்பும் நிறைந்தவர்கள். பாவச் செயல்களை செய்யத் தயங்குவார்கள். ஆயுள் அதிகம். ஒரு தடவை கூறினாலும் மனதில் பதித்துக் கொள்வர். குறிப்பாக தாயிடம் பக்தி மிகுந்தவர்கள். எல்லோருடனும் இனிமையாகப் பழகும் சுபாவம் உள்ளதால் நிறைய நண்பர்கள் இருப்பார்கள். படிப்போ, பணமோ, பதவியோ குறைவாக இருந்தாலும் நிறைய உள்ளதுபோல் பரிமளிக்கும்படி பேசுவதிலும்
நடப்பதிலும் கெட்டிக்காரர்கள்.
திருவாதிரை: இது ஒற்றை நட்சத்திரம். மனித கணத் தைச் சேர்ந்தது. சுபகாரியங்களை இந்த நட்சத்திரத்தில்
இந்தக் கலைக்களஞ்சியப்
 

செய்யமாட்டார்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆசாரசீலர்களாகவும், வியாபாரம் செய்வதில் நிபுணர்களாக வும் இருப்பார்கள். எடுத்த காரியத்தைச் சிறப்பாக முடிக்க முயல்வார்கள். அதனால் கர்வம் இருக்கும். பாவ காரியங்க ளைச் செய்யவும் தயங்கமாட்டார்கள். செய்த நன்றி பாராத
வர்கள். தீர்க்காயுள் வாய்ந்தவர்கள்.
புனர்பூசம் சக்கரத்தின் ஆரத்தில் பொருத்தியது போல ஐந்து நட்சத்திரங்கள் கொண்டது இந்த உடு. தேவகணத்தைச் சேர்ந்தது. சிவப்பு வர்ணம் கொண்டது மூங்கில் விருட்சத்தையும் ஹம்ஸ் பட்சியையும் ஓங்கார ஒலியையும் குறிப்பாகக் கொண்டது. ரீராமன் அவதரித்த புனித நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தோர் உணவை நன்றாக ரசித்துச் சாப்பிடுவதில் விருப்பம் உள்ள வராக இருப்பர். நல்ல குணங்கள் இருக்கும். உளக்கத்துடன் எந்தக் காரியத்திலும் ஈடுபடுவர். உழைப்புக்குத் தயங்காத உறுதி இருப்பதனால் லட்சுமி கடாட்சம் சிறந்து விளங்கு வர். எப்போதும் கலகலப்பாக இருப்பர். நிறைய நண்பர்க ளைப் பெற்றிருப்பர். ஆபத்தில் உதவும் கருணை உள்ளம்
இருக்கும்.
பூசம் விலங்குகளுக்குள்ளே சிங்கம் சிறந்த கம்பீரமாக விளங்குவதுபோல, நட்சத்திரங்களிலே பூசம் சிறந்து விளங் குகிறது. ஆண் நட்சத்திரம், தேவகணம், பிரகஸ்பதி இதன் தேவதை ஊகித்து அறியும் திறமையும், புத்திசாலித்தன மும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவரிடம் காணப்படும். கொஞ்சம் முன் கோபி. உறவினர்களுக்கு உதவிவருபவர் கள். ஜோதிட சாஸ்திரத்தில் தேர்ந்திருப்பார்கள். கெளர வத்தை விட்டுக் கொள்ளாதவர். தீர்க்காயுள். மத்திய வயதைக் கடந்தும் தனித்து வாழப் பிரியப்படுபவர்கள்.
எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் உடையவர்.
ஆயிலியம்: சிவப்பு நிறமானது. ஆறு நட்சத்திரங்கள் சேர்ந்த நட்சத்திரக் கொத்து இது. இது பெண் இனம். இதன் தேவதை சர்ப்பம். இந்த நட்சத்திரத்தின் முதலுக்கும் கடைசிப் பாதத்துக்கும் குருபகவான் அதிபதியாதலால் தர்மசிந்தனையும் நேர்மையும் இவர்களிடம் காணப்படும். இந்த நட்சத்திரத்தில் தர்மராஜர் பிறந்தார். பொதுவாக இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பேச்சு வன்மையும்
ஐ இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 65
சாமர்த்தியமும் இருக்கும். பெரிய மனிதர்களின் பாராட்டும் நட்பும் பெற்றவர்கள். பார்வை சுமூகமாக இருக்காது. வெளியூர்ப் பிரயாணங்களில் ஆர்வம் உள்ளவர்கள். விரோதியை சுலபத்தில் விட்டு விடமாட்டார்கள். விசுவாச
மாகத் தம் பணியைச் செய்வார்கள்.
மகம்: ஐந்து நட்சத்திரங்கள் கொண்டது. பல்லக்கு போன்ற உருவம் கொண்டது. இது ஆண் உடு. ராட்சஸ் கணம். உக்கிர சுபாவம் உள்ளது. இந்நட்சத்திரத்தில் அர்ச்சுனன் பிறந்தான். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூரீவித்யா உபாசகர்களாக இருப்பர். தேவியை வணங்கிப் போற்றுவதில் பெரு விருப்பம் இருக்கும். உறவினர்
களையும் அண்டியவர்களையும் காப்பாற்றும் தயாள சிந்தை பெற்றிருப்பர். நுண்கலைகளில் தேர்ந்த வித்து வானாகவும், பணக்காரர்களாகவும், சமயத்திற்கேற்றாற் போல வளைந்து கொடுத்துச் செல்லும் இயல்பு கொண்ட வர்களாகவும் விளங்குவர். பேச்சில் பிறரைக் கவர்பவர்கள். முன்கோபம் இருக்கும். மனைவியிடம் மிகவும் பிரியமாக நடந்துகொள்வார்கள். இவர்கள் வாழ்க்கையில் செல்வாக் குடனும், வசதியுடனும், வாழ்ந்தாலும் பிற்காலத்தில் மனநிம்மதி இல்லாமல் தவிப்பார்கள்.
பூரம்: இந்த நட்சத்திரம் இரண்டு உடுக்கள் கொண்டது. வெள்ளை நிறம், இந்நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். எப்போதும் ஆடை ஆபரணங்களுடன் கவர்ச்சியாக இருக்க விரும்புவார்கள். தர்மம் செய்யப் பிரியப்படுவார்கள். தங்களிடம் வேலை செய்யும் பணியாளர்களுக்கு நிறையக் கொடுத்து அவர்கள் மகிழ்ச்சியைக் கண்டு தாங்கள் உவகை அடைவார்கள். சங்கீதம், ஒவியம் போன்ற துறை களில் ஈடுபாடு காணப்படும். நடிப்புத்துறைகளிலும் சிறந்து
விளங்குவார்கள்.
உத்தரம் சிவந்த வர்ணம் உடையது. இரட்டை நட்சத்திரம், தண்டம் போன்ற வடிவமுள்ளது. இது ஸ்திரி ஜாதி, மனித காணத்தைச் சேர்ந்தது. இந்நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள் சுயமதிப்பும் கண்ணியமும் நிறைந்தவர்க ௗாகக் காணப்படுவார்கள். தர்மசிந்தை கொண்டவர். மிகத் திறமைசாலிகள், தன்னடக்கமும் இறையுணர்வும் கல்வியில் ஆர்வமும் மிகுந்தவராக இருப்பர்.
இந்துக் கலைக்களஞ்சியம்

ஹஸ்தம்: சுபகாரியங்களுக்கு ஏற்ற நட்சத்திரம் ஐந்து
நட்சத்திரங்கள் கை போல அமைந்த உடு. ஆண் நட்சத்திரம், தெய்வ கணத்தைச் சேர்ந்தது. இதன் தேவதை சூரியன், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பேரும் புகழும் பெற்று கடைசிக் காலத்தில் சுகமாக வாழ்வார்கள்.
ஆழ்ந்த யோசனை உள்ளவர்கள். மக்கட்பேறு நிறைந்தவர். பெண்களுடன் பழகுவதிலும் அழகாகப் பேசுவதிலும் தேர்ந்
தவர்கள். குரு பக்தியும் தெய்வ பக்தியும் நிறைந்தவர்கள். எதிரிகளைத் தோல்வியுறச் செய்வதில் சமர்த்தர். எடுத்த
காரியத்தை எப்படியும் முடித்தே தீரவேண்டும் என்ற விடா முயற்சியுடன் எந்தவித இடையூறுகளையும் பொருட்படுத் தாமல் உழைப்பவர்கள். இதில் பிறந்தவர்கள் எந்தக்
காரியத்தையும் தீர்க்காக யோசித்தே செய்வார்கள். மனம்
வைத்துச் செய்வதால் எதையும் அழகாகச் செய்து முடிப்பர்.
சித்திரை: ஒற்றை நட்சத்திரம் ராட்சத கணத்தைச் சேர்ந்த பெண் உடு. இதனை செளம்யதாரா என்றும் அழைப்பார்கள். இந்நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறந்தவர் கள். பெண்களிடம் சரளமாகப் பழகுவார்கள். அழகான நீண்ட கண்களும் இனிய பேச்சும் வசீகரப் பார்வையும் கொண்டவர்கள். எல்லோரிடமும் அன்பர்க நடந்து கொள் வார்கள். கனிவாகப் பேசுவதால் காரியத்தைச் சாதித்துக் கொள்வதில் சமர்த்தர்கள். மனித வாழ்க்கையின் மிக
முக்கிய சுபகாரியங்களுக்கு எல்லாம் ஏற்றதாக இருக்கும்.
சுவாதி: ஸ்திரீ உடு. தெய்வ கணத்தைச் சேர்ந்தது. யோனி - எருமை, தேவதை - வாயு. இது உபய குல நட்சத்திரத்தைச் சேர்ந்தது. இந்நட்சத்திரத்தில் பிறந்தவர் கள் நல்ல போக போக்கியம் அமைந்தவர்கள். கொடை யாளி, அகன்ற கண்களும் மார்பும் பெற்றவர். புகழ் பெற்ற வர், இறையுணர்வு அதிகம் காணப்படும், உறவினர்களைத் தகுந்த சமயத்தில் உதவிக் காப்பர். அறிவு, சாதுர்யம் நிறைந்தவர்கள. சுதந்திரமாக வாழும் மனப்போக்கு உள்ள வர்கள், சொந்தத் தொழில் தொடங்கினால் அமோக விருத் தியாகும். தாங்களும் செளகரியமாக வாழ்ந்து பிறரும் அப்படி வாழவேண்டும் என்று விரும்புவார்கள். விசால இதயம் படைத்தவர்கள். கம்பீரமான தோற்றம் கொண்டவர்
கள், பிறர் உழைத்துச் சேமித்து வைத்ததைச் சுகமாக
ஐ இந்த சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 66
அனுபவிக்கச் செய்யும் தன்மை வாய்ந்தது.
விசாகம்: விசாக நட்சத்திரத்தை முருகனின் திரு அவதார நட்சத்திரமாகவும் கூறுவார்கள். விசாக நட்சத்திரம் குல நட்சத்திரப் பிரிவைச் சேர்ந்தது. இதில் பிறந்தவர்கள் அறிவாளிகளிடமும் பண்டிதர்களிடமும் பக்தியுடன் நடந்து கொள்வர். தீர்க்காயுள் உடையவர். எல்லாப் பணிகளிலும் சிந்தித்துச் செயல்படுவர். உறவினர்களுக்கு ஓரளவு உதவுவர். தெளிவாகவும் கவர்ச்சியாகவும் பொருட் செறிவுடன் பேசுவர்.
அனுசம்: சமஸ்கிருதத்தில் அநுராதா என்ற அழகான பெயரைக் கொண்டு வானில் மின்னும் நட்சத்திரம் அனுஷ மும் கேட்டையும் அரியணையில் அரசர்களுக்கு மேலாக நிறுத்தப்பெற்றிருக்கும் வெண்குடையின் அமைப்பை கொண்டன. கவிழ்ந்த தாமரை என்பதுவும் பொருந்துவதே. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொதுவாக அனை வரிடமும் அன்பாகப் பழகக்கூடியவர்கள். ஆழ்ந்த சிந்தனை உடையவர்கள். சுகபோகிகள். பசி பொறுக்காதவர்கள், வெளிநாடு செல்லும் பேறு பெற்றவர்களில் பெரும்பாலோர் அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்களே. புகழுடையவர்கள்.
கேட்டை 27 நட்சத்திரங்களில் 18ஆவது ஸ்தானத்தைப் பெறுவது கேட்டை நட்சத்திரம். ஜயேஷ்டா என்பது இதன் சமஸ்கிருதப் பெயர். இதன் வண்ணம் சிவப்பு, இதன் மூன்று முனைகளிலும் மூன்று நட்சத்திரங்கள் மின்னும். இந்நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கூர்வையான பார்வை உடையவர்கள். குத்தீட்டிபோல் சுடுசொற்களை வாரிவிசுவதை கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த பெரும்பாலோரிடம் காணலாம். ஆனால் பழகுவதற்கு இனிய குணம் கொண்டவர். ஆதலால் எப்போதும் நட்பினர் கூட்டம் இவரைச் சூழ்ந்து இருக்கும். உண்மையே பேசுதலும் உண்மையைப் பிறரிடம் நாடுதலும் இவருடைய சிறப்புக் குணங்கள். நியாயத்திற்காகப் போராடுவர். இவருடைய அங்க இலட்சணத்தில் குறிப்பிடத்தக்கது. நீண்டு எடுப்பாகத் தெரியும் அழகிய நாசி. எதையாவது நினைத்து ஏங்கிக் கொண்டே இருப்பது இந்த நட்சத்திரத்தில் பிறந்தவரின் இயல்பு.
இந்தக் கலைக்களஞ்சியம் ষ্ট্র
 
 

மூலம்: ஐந்து நட்சத்திரங்களின் கூட்டுத்தொகுதியாக அமைந்திருப்பது மூல நட்சத்திரம். படுத்திருக்கும் சிங்கத் தோற்றம் கொண்டது. மூலநட்சத்திரத்தைப் பொறுத்த மட்டில் அது நல்ல நட்சத்திரமேயாயினும் ஜாதகத்தில் இதர அமைப்புகளினால் இது பாதிப்புக்காளாகும். ஜாதக அம்சங்கள் சிறப்பாக இருந்தால் தர்மவானாகவும் செல்லப் பிள்ளையாகவும் கெளரவத்தோடு பழகுபவர்களாகவும் சுற்றத்தோடு அனுசரித்து வாழ்பவராகவும் விளங்குவார். வலுவற்ற கிரகங்களமைந்துவிட்டால் காமம் மிக்கவராகவும் கல்வியாளராகவும் பிறர் பொருளைக் கவரும் உள்நோக்கு டையவராகவும் எதற்கெடுத்தாலும் சலித்துக்கொள்ளும்
மனப்போக்கினராயும் வாழ்வர்.
பூராடம்: இரண்டு நட்சத்திரங்கள் சேர்ந்து சாய்ந்த கம்பு போல நீண்டு வான்வெளியில் மின்னுவது. அர்த்த தாரா என்று அழைக்கப்படும். பூராட நட்சத்திற்குரிய பறவை பைங்கிளி. இந்நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சற்று உயரமானவர்கள். கூர்மையான விரல் நுனிகளை உடைய வர்கள். எந்தச் செயலானாலும் துணிச்சலுடன் ஈடுபடுவார் கள். எதையும் கூர்ந்து கவனித்து தேர்ந்து செயல்படக் கூடியவர். புகழோடு பொலிபவர்கள். சுருக்கமாகச்
சொன்னால் புத்திமான்கள்.
உத்தராடம்: இது இரண்டு நட்சத்திரங்கள் இணைந்து நான்கு கால்கள் கொண்ட கட்டில்போல் வானத்தில் மின்னும் துருவ நட்சத்திரம் ஆகும். இது முழுமையான நட்சத்திரமன்று. இது மந்தமானது. மலட்டுப் பசு என்று சொல்லப்படுவது. இந்நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உலகி யல் தெரிந்தவர்கள். பொதுவாக எல்லா விசயங்களையும் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் உள்ளவர் கள். தூய்மையை விரும்பக்கூடிய ஆசாரசீலர்கள். விரதங்க ளைக் கடைப்பிடிப்பவர்கள். நற்குணங்கள் நிறைந்தவர்கள். எடுத்தெறிந்து பேசாமல் இன்சொல் பேசுதலையே இலட்சிய மாகக் கொண்டவர்கள், இவர்களுடைய பேச்சில் நகைச்
சுவை மிகுந்திருக்கும், செயல்வீரர்கள்.
திருவோணம்: இந்த நட்சத்திரத்தில் தேவர்களே தோன்றி யிருக்கிறார்கள். அத்தகைய சிறப்புடையதாகும். கேரள நாட்டினர் சிறப்பித்துக் கொண்டாடும் ஓணம்
&இந்து சமய கலாசார அலுவல்கள் திலைக்களம்

Page 67
பண்டிகைக்கு ஆதாரமான உடுவாகும் இது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விதவிதமான வாசனைப் பொருள்களைப் பூசிக்கொள்வார்கள். விதவிதமான மலர்களை விரும்புவார்கள். பருத்த சரீரத்தைப் பெற்றவராவார், பிறபெண்களை விரும்புகின்ற மனத்தைக் கொணி டவர், நல்ல பாக் கியம் உடையவர், பெரும்போக்கான தன்மையுடையவர், உறவினர்க்கு உறை விடமாக இருப்பவர், வாக்குசாதுர்யம் கொண்டவர், சுகபோகி, பிரயாணம் செய்வதில் அதிக பற்றுடையவர், சபல மனம் உள்ளவர், உறுதியான நெஞ்சுரம் இல்லாதவர்,
மிக்க விவேகம் வாய்ந்தவர்கள்.
அவிட்டம்: அவிட்டத்தில் பிறந்தால் தொட்டதெல்லாம் துலங்கும். தவிட்டுப் பானையெல்லாம் தங்கமாகும் என்பர். இது மிருதங்க வடிவினைக் கொண்டது. இதற்கு அவிழ்ட வசுக்கள் தேவதைகள். இதை ஓர் ஆசார நட்சத்திரத்திர மெனவும் சொல்வார்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் நற்குணமுள்ளவராகத் திகழ்வார்கள். இவர்களது முகம் பொலிவுடையதாயிருக்கும். விடா முயற்சி உடையவர்கள், பெரும்பாலானவர்களுக்கு தாயார் இருப்பதில்லை. இளவயதிலேயே அன்னையை இழந்துவிடுவார்கள். அதிகமாக வெப்பமுடைய தேகத்தை உடையவர்கள், மற்றவர்மீது பழிசுமத்தும் குணமுடையவர்கள், நீதிமன்றம் சென்று வழக்காடுவதற்கு அஞ்சமாட்டார்கள், விடாப்பிடித் தன்மையான இவர்கள் வாதம் செய்யத்தக்கவர்கள்.
சதயம்: ஒட்டகம் போல் உருவ அமைப்புக் கொண்டுள் ளது. சுமார் 100 நட்சத்திரக் கூட்டங்கள் அடங்கிய ஒளி யான நட்சத்திரம் என சோதிட சிந்தாமணி என்னும் நூல் கூறுகின்றது. இது பெண் நட்சத்திரம் என்றும் அலி நட்சத்தி ரம் என்றும் சில நூல்கள் கூறுகின்றன. சிவப்பு நிறமுடைய நட்சத்திரம் ஆகும். இந்த உடுவில் பிறந்தவர்கள் உற்சாக மான பேச்சும் அன்பும் நிறைந்தவர்கள். தயங்காமல் பாவச் செயல்களைச் செய்வதில் மிகவும் பற்று உள்ளவர்கள். எதிரிகளுடன் தயங்காமல் போராடி இறுதியில் வெற்றி பெறுவர். எதிலும் வேகமும் துடிப்பும் நிறைந்தவர்கள். அதிகமான ஆர்வத்தினால் முன்பின் யோசனையின்றி சக்திக்கு அப்பாற்பட்ட காரியங்களைச் செய்ய முயல்படு
வர். அதிகமான படிப்போ, பணமோ, பதவியோ இல்லா
இந்துக் கலைக்களஞ்சியம் x

விட்டாலும் நடிப்பினால் பரிமளிக்கும்படி பேசுவதிலும் நடப் பதிலும் சமர்த்தர்கள். எந்த சூழ்நிலையிலும் எக்காரணத் தைக் கொண்டும் யாருக்கும் கட்டுப்படமாட்டார்கள்.
பூரட்டாதி. இந்த நட்சத்திரம் இரண்டு நட்சத்திரங்கள் கொண்ட கட்டில்கால் போல் உருவமுடையது என சாஸ் திரங்களில் கூறினாலும் சுத்தி போல் உருவமுள்ளது என நட்சத்திர சூடாமணி என்னும் சோதிட நூல் கூறுகின் றது. கும்பராசியில் 3 பாதமும் மீன இராசியில் 1 பாதமும் அடங்கியது இந்நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தில் பிறந்த வர்கள் எப்பொழுதும் கலகலப்பாக இருப்பர். ஆபத்தில் கைகொடுத்து உதவும் கருணை உள்ளம் படைத்தவர். விருப்பு வெறுப்பின்றி பழகும் சுபாவத்தில் அதிகமான நண்பர்களை உடையவர். பெண்களுக்கு அடங்கி வாழும் தாழ்வு மனப்பான்மை உடையவர். பேச்சில் கலகலப்பு இருந்தாலும் மனதில் எப்பொழுதும் கவலைகள் குடி கொண்டிருக்கும். பொருள் சேர்ப்பதில் அதிகமான திறமை மிகுந்தவர். உழைப்புக்குத் தயங்காமல் உறுதி இருப்பதால் இலட்சுமி கடாட்சத்துடன் விளங்குவர். பொருள் கொடுக்கல்
வாங்கல் விசயத்தில் மிகவும் கண்டிப்பாக இருப்பர்.
உத்தரட்டாதி பார்வைக்கு முழு நட்சத்திரமாக விளங் கும் உடு இது. வடமொழியில் தண்டாசுருதி என அழைப் பர். உறுதியான நட்சத்திரம். இந்நட்சத்திரத்தில் பிறந்தவர் கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாகக் காணப்படுவர். பிறரை மகிழ்விப்பதில் கைவந்தவர்கள். அதிகமான புத்திக் கூர்மை யும் சரளமான பேச்சு வன்மையும் உடையவர். அதிகமான நண்பர்கள் எப்பொழுதும் புடைசூழக் காணப்படுவர். சுகம் நிறைந்தவர். தொட்டதெல்லாம் துலங்கும் லட்சுமி கடாட்சம் உள்ளவர். சத்துருக்களை ஜெயிப்பவர். சுறுசுறுப்பு மிகுந்த வர்கள். சத்துருக்களை அநாயாசமாக வெல்லமுடியும். தர்மசிந்தனையும் நண்பர்களில் அதிகமான ஈடுபாடும் இவர்க ளிடம்
காணப்படும்.
ரேவதி சிவப்பு நிறமுடைய இந்த உடு மூன்று நட்சத்தி ரங்களால் மீன் போன்ற வடிவான அமைப்பை உடையது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிகமான சரீரகாந்தி யையும் அழகையும் பெற்றவர்கள். எல்லா
YZZYYeZ TT TLL LJLMLL TMMMLCGT TTLeeeL0LTTTLT

Page 68
ஜனங்களுக்கும் பிரியமானவர் சரளமாகப் பேசும் திறமையும் வாய்ந்தவர். பேச்சினால் பிறரைக் கவரக்கூடிய தனித்தன்மை பெற்றவர். ஆகவே இவர்களுக்கு எப்போதும் அதிகமான நண்பர்கள் இருப்பதற்கு வாய்ப்புண்டு. கடுமையான உழைப்பினால் பொருள் ஈட்டுவர். அவ்வாறு ஈட்டிய பொருளை திறமையாக செலவழிப்பதிலும் வல்லவர். புத்திக்கூர்மை அதிகமாக உள்ளதால் கல்வி,
கேள்விகளில் சிறந்து விளங்குவர்.
இவ்வாறு 27 நட்சத்திரங்களுக்குமான பலன்களையும்
சோதிட நூல்கள் கூறுகின்றன. (தே.ஹ.)
ljLJПеј
சைவத்தின் பரம் பொருளான சிவனுக்கு ஆயிரம் திரு நாமம் பாடியும், திருவுருவங்களைப் படைத்தும் போற்றி வழிபடுவது சைவமரபு. சிவனது திருவுருவங்களில் தலை யானதும், பிரசித்தி பெற்றதும் மிகையான தத்துவ விளக் கங்களைக் காட்டுவது நடராஜர் வடிவம் என்பது குறிப்பிடற்
L 36)ġb].
நடராஜத் திருவுருவத்தின் இலட்சணங்கள் எவ்வாறு அமைய வேண்டும் எனச் சிற்ப நூல்கள் கூறுகின்றன. இவ்வடிவம் ஒன்றுக்கு மேற்பட்ட வளைவுகளையுடையதாக திரிபங்கமாக அமைந்துள்ளது. நான்கு கைகளில் வலது முன் கை அபய முத்திரையாகவும், வலது பின் கரம் உடுக்கை ஏந்தியதாகவும், இடது முன் கரம் நீண்டு உடம்பைச்சாரும் வண்ணம் திரும்பி உடம்பின் முன்னர் சிறிது வளைந்து சிற்ப நூலார் குறிப்புப்படி கஜகஸ்தமாக வும் அமையும். இடது பின் கரம் தீயை ஏந்தியதாக அமைந்திருக்கும். வலதுகால் முயலகன்மீது சிறிது வளைந்தவாறு ஊன்றி இருக்கும். இடதுகால் வலது பக்கம் குறுக்கே மடித்து குஞ்சித பாதமாக அமையும். நடராஜரின் தலை சடாமகுடமாக விளங்கும். சடாமகுடத்திலிருந்து இரு மருங்கிலும் சடைகள் விரிந்து வட்டவடிவமாகப் பரவியிருக்கும். தலையில் ஊமத்தமலர், எருக்கம்பூ பிறைச்சந்திரன், கங்காதேவி, பாம்பு முதலியன அமைந் திருக்கும். முகத்திற் சாந்தம் தவழும். குமிண் சிரிப்பு முறுவலிக்கும். முகத்தில் முக்கண்களும், நெற்றியில்
@f五556oaJä56T@引Lá蓉慈憲靈篷

திருநீறும், குனித்த புருவமும் அமைந்திருக்கும். வலது காதில் நக்ர குண்டலமும், இடது காதில் பத்ர குண்டல மும் தொங்கும். கழுத்தில் கழுத்தணி, முத்தாரம், பாம்பு மாலை, வகுளமாலை, சங்குமாலை, பன்றிப்பல், புலிநகம் என்பன ஆபரணங்களாக அலங்கரிக்கும். சிறுமணிகளா லான சதங்கைகள் கால்களை அழகு செய்யும். அரையி னிலே புலித்தோலாடையினை அணிந்திருப்பார். மேனிபால் வெண்ணிறமாகவும், சாத்வீக குணத்தைக் கொண்டதாகவும் இருக்கும் இவ்வுருவத்தைச் சூழ திருவாசி விளங்கும். நடராஜரின் இடது பக்கம் சிவகாமசுந்தரி அமைந்திருப்பாள்.
உத்தரகாமிகாகமம் நடராஜர் திருவுருவம் அமைய வேண்டிய முறையினைக் கூறுகின்றது. உத்தமதஸதால அளவை முறைப்படி நடராஜ வடிவம் அமைக்கப்படவேண் டும். நெற்றி, கழுத்து, முழந்தாள் பூட்டு, பாதம் ஆகிய உறுப்புக்கள் ஒவ்வொன்றும் நான்கு அங்குலமாகவும், முகம், மார்பு, வயிறு, இடை ஆகிய உறுப்புக்கள் ஒவ்வொ ன்றும் பதின்மூன்று அங்குலமாகவும் தொடை, முழந்தாள், ஆகிய ஒவ்வொன்றும் இருபத்தேழு அங்குலமாகவும் அமை தல் வேண்டும்.
பக்திப்பாடல்களில் நடராஜரின் வடிவம்
சங்க நூல்கள் முதலாக தமிழ் இலக்கியங்களில் சிவன்
ஆடிய பலவகைத் தாண்டவங்கள் பற்றிய வருணனைகள்
காணப்படுகின்றன. அவ்வகையான தாண்டவங்கள்
ஆகமங்களிலும் பரத நூலிலும் குறிப்பிடப்படுகின்றன.
சங்கமருவிய காலப் பகுதியில் வாழ்ந்த காரைக்காலம் மையார் தமது திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்திலே திருவாலங்காட்டில் நடனம் புரியும் சிவனின் பெருமையை
பின்வரும் பாடல்களிலே தெளிவுபடுத்தியுள்ளார்.
காடும் கடலும் மலையும் மண்ணும் விண்ணுஞ் சூழ அனல் கையேந்தி
ஆடும் அரவப் புயங்கன் எங்கள் அப்பன் இடம் திருவாலங்காடே
இதேபோல் அம்மையார் பாடிய
"அடிபேரிற் பாதாளம் பேரும் அடிகள்
x இந்து சமய கலாசார அலுவல்கள் திலைக்களம்

Page 69
இந்துக் கலைக்களஞ்சியம்x
 
 
 

41
இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 70
முடிபேரிற் மாமுகடு பேருங் - கடகம் மறிந்தாடு கை பேரில் வான் திசைகள் பேரும் அறிந்தாடும் ஆற்றா தரங்கு”
என்ற அற்புதத்திருவந்தாதிப் பாடலிலும் இவ்வடிவத்தைப் பெருமிதப்படுத்தியுள்ளார். திருஞானசம்பந்தர் பாடிய பதிகங் களில் சிவன் தாண்டவக்காரன் என்ற குறிப்புக்கள் ஏராளம் காணப்படுகின்றன. அவை;
“கரிகாலன குடர் கொள்வன கழுகாடிய காட்டில் நரியாடிய நகுவெண்தலை யுதை உண்டவை யுருள
எரியாடிய இறைவன்.'
'காளி முன் காணக் கானிடை நடஞ்செய்த கருத்தர்.” "குழலினோசை வீணை மொந்தை கொட்ட முழவதிரக் கழலினோசை யார்க்க ஆடுங் கடவுள்.”
திருநாவுக்கரசர் பாடிய பதிகங்களை நோக்கும்போது
"குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற்
குமிண்சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்
வெண்ணிறும் இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால் மனித்தப்பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே"
"சூடினார் கங்கையாளைச் சூடிய துழனி கேட்டங் கூடினாள் நங்கை யாளு முடலை யொழிக்க வேண்டிப் பாடினார் சாமவேதம் பாடிய பாணியாலே
ஆடினார். 岁岁
"தில்லையுட் சிற்றம்பலத்து நட்டம் என்று
வந்தா யென்னு.”
என நடமாடும் நடராஜரின் அழகின் தன்மை களை வருணித்துள்ளார்.
சுந்தரமூர்த்தி நாயனாரின் பதிகமொன்றினை நோக்கும் போது
"கடுத்தாடும் கரதலத்தில் தமருகமும் எரியகலும் கரிய
இந்தக் கலைக்களஞ்சியம்:
 

LITTLibLqub பிடித்தாடி புலியூர்ச்சிற் றம்பலத் தெம் பெருமான்”
எனும் பாடல் நடராஜ வடிவத்தைச் சுட்டிக்காட்டுகின்றது.
மாணிக்கவாசகரின் திருவாசகத்திலே
"தில்லையிற் கூத்தனே தென்பாண்டி நாட்டானே.”
என்ற பாடலிலும்
திருவிசைப்பாவில்
“ஆறணி சடையெம் அற்புதக் கூத்தா அம்பொன் செய் அம்பலத் தரசே."
என்ற பாடலிலும் நடராஜர் குறிப்பிடப்படுகின்றார்.
பெரிய புராணத்து ஆசிரியர் சேக்கிழார் முதற்பாடலிலே கூத்தப் பெருமானது சிறப்பினை
"அலகில் சோதியன் அம்பலத்தில் ஆடுவான்” என வணக்கம் செலுத்தியுள்ளார்.
ஆழ்வார்களின் பாசுரங்களில் கூட நடனமாடும் சிவனின் சிறப்புக்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. பெரிய திருமடலில் திருமங்கையாழ்வார் நள்ளிருளில் சுடுகாட்டில் நடமாடும் நடனப் பெருமானின் சிறப்பை பின்வரும் அடிகளில் குறிப்பிட்டுள்ளார்.
"ஆயிரந்தோள் மன்னுகர தலங்கள் மட்டித்து மாதிரங்கள் மின்னி எரிவீச மேலெடுத்த குழ்கழற் கால் பொன்னுலகம் ஏழும் கடந்து உம்பர்மேற் சிலம்ப மன்னு குலவரையும் மாருதமும் தாரகையும் தன்னுடனே சுழலச் சுழன்று ஆடும்"
நடராஜர் தத்துவம்
முக்கண்களாக சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய
முச்சுடர்களைக் கொண்டு இறைவன் விஸ்வரூபனாக
விளங்குகின்றான். அது மட்டுமன்றி இச்சாசக்தி, கிரியா
சக்தி, ஞானாசக்தி என முச்சக்திகளையும் முக்கண்களா
xxx இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 71
இந்துக் கலைக்களஞ்சியம்x
 

&இந்து சமய கலாசார அலுவல்கள் தி6ை00ாக்களம்

Page 72
கக் கொண்டு விளங்குகின்றான் என காமிகாகமம் குறிப்பிடுகின்றது. பட்டினத்தடிகளார் முக்கண் என்பது “முத்தீ வேள்வியில் தொக்கது என்னிடை என்பது ஒர் சுருக்கே” என்கிறார்.
நெற்றிக்கண் - ஒப்பற்ற தனிப்பெரும் கடவுள் தன்மை யாக விளங்குவதைக் குறிப்பிடுகின்றது. ஆன்மாக்கள் சிவனின் பெருங்கருணையை உணர்வதற்கு சிவன் காட்டும் அருட்பார்வை என்பதனை மாணிக்கவாசகர் “கண்ணுத
லான் தன் கருணைக் கண் காட்ட வந்து எய்தி” என்கிறார்.
குனித்த புருவம் - அடியார்களின் குறைகளைக் குறிப்பால் உணரும் தன்மையை விளக்குவது
குமிண் சிரிப்பு - புன்முறுவல் காட்டி முப்புரங்களை எரியூட்டினார். புன்முறுவல் ஆன்மாக்களின் மூவினைகளை யும் அறுத்தாட் கொள்வதாகும்.
செவிகள் - வலது செவியினூடாக உடுக்கை யொலியை ஏற்று உலகைச் சிருஷ்டிக்கின்றார். இடது செவியினூடாக மான் ஒலியை ஏற்கின்றார். மான் அகங்காரத்தைச் சுட்டும்
ஆன்மாக்கள் அவற்றை அழித்து அடக்கி யாளுகின்றார்.
திருமுகம் - எல்லையற்ற ஆனந்தமான தலைமை நயத்தையும் அழகையும் பிரதிபலிக்கின்றது.
திருநீறு - முடிந்த முடிவாக அமைவது. அதனை இறைவன் மேனியில் தரித்திருப்பது தானும் தன்னைச் சாரும் பொருளும் அநாதி நித்தியமானவை என்பதை அறிவித்தற்காகும்.
பனித்தசடை - திருமூலரின் கூற்றுப்படி நுண்சிகை ஞானமாம் - ஒன்றுபட்டு இணைந்த ஞானத்தைச் கட்டுகின்றது. இதில் விரிந்தசடை உயிர்களுக்கு ஞான மார்க்கத்தைப் போதிக்கும் முறைகளை உணர்த்துகின்
ቧ9Š5!.
பிறைச்சந்திரன் - தம்மைச் சரணடைந்துள்ளவர்களை அரவணைத்து அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் இயல்பினைச் சுட்டுவதாகும். மேலும் ஆன்மாக்களின்
 

வினைகளைக் கெடுத்து அபயம் அளித்தலையும் சுட்டும்.
கங்காதேவி - பரமனின் பேராற்றலை விளக்குவதாகும். இறைவனின் எண்குணங்களில் முடிவிலாற்றலுடமை எனும் குணத்தை உணர்த்துவதாகும்.
ஊமத்தம்பூ - விருப்பு வெறுப்பற்ற தன்மையைக் குறிப்பது
திருமேனி - இறைவன் மல அழுக்கற்றவன் தூய்மை
யான தன்மையைக் கொண்டவன் என்பதை உணர்த்தும்.
திருக்கரங்கள் - சிவனின் அருட்கடாட்சம் எங்கும் வியாபி த்து பரந்திருப்பதை அவரின் 4, 8, 16 திருக்கரங்கள் உணர்த்தி நிற்கின்றன. குறிப்பாக அவரின் நான்கு திருக் கர அமைப்பினை நோக்கும்போது இறைவனின் உயர்ந்த ஆற்றல்களை அவை வெளிப்படுத்திக் காட்டுகின்றன.
1. வலது முன்கரம் - பிறவித்துன்பக் கடலில் அழுந்து கின்ற ஆன்மாக்களுக்கு அபயமளித்தல் உயிர்களைக் காக்கும் அபயமுத்திரையாக விளங்குதல்.
2. வலது பின்கரம் - துடியேந்திய கர அமைப்பானது ஏழிசையின் தோற்றத்தையும் தநு, கரண, புவன, போகங் கள் உருவாக்கப்படும் தத்துவத்தையும் உணர்த்துவதாக அமைந்துள்ளது.
3. இடது முன்கரம் - வரதஹஸ்தமாக குஞ்சித பாதத்தினை நோக்கியதாகக் கைத்தலம் அமையும். இது மலபந்தத்தால் கட்டுண்ட ஆன்மாக்களை மலபரிபாகம் செய்து பேரின்பமான மோட்சத்தைக் காட்டி நிற்பதை உணர்த்துகின்றது.
4. இடது பின்கரம் - நெருப்பினைப் பிடித்த கரம் ஆன்மாக் கள் தாங்கி நிற்கும் பிறவியுடலை மாற்றும் சங்காரத் தொழிலின் வெளிப்பாடாக அமைகின்றது.
குஞ்சித பாதம் - ஆன்மாக்களை இறைவனின் திருத் தாளினை அடைய உதவும் திறத்தினை உணர்த்துவ தாகும். ஆன்மாக்களுக்கு முக்தி இன்பத்தை அருளுவ தாகும்.
Sö5) erunu sexT&T 2øje Jeð86 Félex Dex O'&&eIIIÁ

Page 73
முயலகன் மீது பதித்த பாதம் - முயலகன் ஆணவம் எனும் மூலமலத்தினைச் சுட்டும் அடையாளமாகும். ஆணவம் அழியா மலமாகும். முக்தி நிலையில் கூட வறுத்த வித்து முளைத்திறன் அற்றுக்கிடப்பது போல இருக்கும். முயலகன் மீது பதித்த பாதம் ஆணவ மலம் சார்ந்த ஆன்மாக்களை மலபரிபாகம் செய்து மறைக்கும்
தன்மையை வெளிப்படுத்துவதாக அமைகின்றது.
அணிகலன்கள் - இறைவனின் அவயங்களை அலங்கரிக் கும் அணிகலன்கள் ஒவ்வொன்றும் அவனின் மேலான
அருளாற்றல்களை விளக்குவதாய் அமைகின்றது.
1. உபவீதம் - மார்பில் குறுக்காக அடிவயிற்றுப் பகுதி வரை தொங்குவது. இதனைப் பூணுல் எனவும் குறிப்பிடுவர். இது ஆநாதாரங்களில் எழும் குண்டலினி சக்தியைக் குறிப்பதாகும்.
2. உதர பந்தனம் - வேதத்தினையும் அதன் உள்ளமைப்
பையும் பரஞானத்தையும் சுட்டுவதாகும்.
3. கபாலமாலை - இறைவன் பிரம கற்பங்களைக் கடந்து என்றும் நித்தியமானவனாய் விளங்குகின்றான் என்பதைச்
சுட்டுகின்றது.
4. பாம்பணி - சடை, கழுத்து, வயிறு, கால் போன்றவற்றில் பாம்புகளை அணிந்திருக்கிறார். பாம்பு காற்றை உணவாக உட்கொண்டு பொறியுணர்வுகளை அடக்கும் ஒன்றாக விளங்குகின்றது. இது யோக மார்க்கத்தின் அடையாள
LDT(35).
5. சிலம்பு - "மறை சிலம்பு ஆர்ப்ப' என்பதில் சிலம்பு
நான்மறைகளாக விளங்குவதைச் சுட்டுகின்றது.
6. கழல் - ஆன்மாக்களின் கன்ம வினைகளை வேரறுத்து
விடுவது என்பதாகும்.
7. பத்ர, நக்ர குண்டலங்கள் - இடது காதில் பத்ரதோடும், வலது காதில் நக்ர குழையும் அணிந்திருப்பது ஆணும், பெண்ணுமாய் அமைந்திருக்கும் இவ்வுலகம் தன்பரத்துவமே என்பதை உணர்த்துவதாகும்.
இந்துக் கலைக்களஞ்சியம்

திருவாசி - ஓங்கார நாத தத்துவமாக அமைவது. நடராஜர் சிவாயநம எனும் திருவைந்தெழுத்தாக திருவாசியினுள் அமைந்திருப்பது ஓங்கார தத்துவமாக விளங்குவதைச் சுட்டுகின்றது.
நடராஜரின் தாண்டவங்களின் வகைகளை நோக்கும் போது அவை பஞ்சகிருத்தியங்களை வெளிக்காட்டு கின்றன. சைவ சமய மரபின்படி நடராஜர் ஆடாவிட்டால் பிரபஞ்ச இயக்கமே நின்றுவிடும் என்பது நம்பிக்கையாகும்.
ஏழுவகைத் தாண்டவங்களும் ஐந்தொழில்களும்
1. காளிகா தாண்டவம் - படைத்தல் 2. கெளரி தாண்டவம் - காத்தல் 3. சந்தியா தாண்டவம் - காத்தல் 4. சங்கார தாண்டவம் - அழித்தல் 5. திரிபுர தாண்டவம் - மறைத்தல் 6. ஊர்த்துவ தாண்டவம் - அருளல் 7. ஆனந்த தாண்டவம் - ஐந்தொழில்கள்
எங்கும் நிறைந்துள்ள இயக்கநாதன் நடராஜப் பெருமா னது திருக்கூத்தினால் எல்லாம் இயங்குகின்றன. சிவன் ஆடிய சிவானந்தக்கூத்து, பொற்பதிக்கூத்து, பொன் தில்லைக்கூத்து, அற்புதக்கூத்து முதலியவை தத்துவ நோக்கம் கொண்டவைகள் ஆகும். சிவானந்தக் கூத்து என்பது பிரபஞ்சமும் ஆன்மாக்களும் இயங்குவதற்காக சிவன் ஐந்தொழில் புரிந்து ஆடும் ஆனந்தக் கூத்தாகும். உடுக்கை ஏந்திய கரம் படைத்தலாகவும், அபயகரம் காத்தலாகவும், நெருப்பை ஏந்திய கரம் அழித்தலாகவும், குஞ்சிதபாதம் அருளலாகவும் ஊன்றிய திருவடி மறைத்த லாகவும் ஐந்தொழில் புரிந்து எங்கெங்கும் அருள் பொழிந்து சிவனாடும் தாண்டவமாகும். இக்கிருத்தியச் செயற்பாடு களை உண்மை விளக்க ஆசிரியர் பின்வரும் பாடலில்
தெளிவுறுத்தியுள்ளார்.
"தோற்றம் துடியதனில் தோயும் திதியமைப்பில் சாற்றிடும் அங்கியிலே சங்காரம் - ஊற்றமாய் ஊன்று மலர்பதத்தில் உற்ற திரோதம் முக்தி நான்ற மலர்பதத்தே நாடு”
*x இந்து சமய கலாசார அலுவல்கள் தி3ைOOக்களம்

Page 74
முடிவே இல்லாமல் சதாசர்வகாலமும் ஆனந்தமே அரங்க மாக, ஆனந்தமே பாடலாக, இசையாக, வாத்தியங்களாக அனைத்து உலகங்களும் ஆனந்தமாக இயங்குவதற்கு ஆனந்த தாண்டவமாடுகின்றான். வேதங்களும், ஆகமங்க ளும் கீதங்கள், கிளரண்டங்கள், பூதங்கள், புவனம், தேவர், அசுரர், சித்தர், மூன்று மூர்த்திகள், பன்னிரு சூரியர்கள், பதினொருருத்திரர்கள், எட்டு வசுக்கள், இரண்டு அசுவினி குமாரர்கள், சப்தரிஷிகள் அனைவரும் ஆனந்தக் கூத்தி னால் இயங்குகின்றனர் என்பதை திருமூலர் திருமந்திரத் தில் திருக்கூத்து தரிசனத்தில் பாடலொன்றில் குறிப்பிட்டுள்
6TITU.
வேதங்கள் ஆட மிகு ஆகமமாடக் கீதங்கள் ஆடக் கிளரண்டம் ஏழாடப் பூதங்கள் ஆடக் புவன முழுதாட நாதங் கொண்டாடினான் ஞானானந்தக் கூத்தே.
மேலுமொரு பாடலில் ஐந்தொழில் தத்துவத்தினையும் திருமூலர் குறிப்பிட்டுக் காட்டுகின்றார்.
அரண் துடி தோற்றம் அமைப்பில் திதியாம் அரன் அங்கிதன்னில் அறையில் சங்காரம் அரனுற்றணைப்பில் அமரும் திரோதாயி அரனடி என்றும் அனுக்கிரகம் என்னே.
இவ்வாறான தத்துவமிகை கொண்ட ஆனந்தத் தாண்ட வம் சிவன் ஆடிய ஏழு தாண்டவங்களில் மிகவும் பிரசித்தம் பெற்றது. இக்கூத்தை நாதாந்தநடனம், குனி சிலைக் கூத்து, மாநடனம், சுடுநடனம், இலயம், ஆடல், வட்டணை யாடல், கொட்டிசைந்த ஆடல் என்றெல்லாம் குறிப்பிடுகின் றனர். இக்கூத்தின் உருவகமாக அமைவது நடராஜர் வடிவம் ஆகும்.
அனைத்து பிரபஞ்சங்களுக்கும் மூலமாக விளங்கும் தில்லையிலே மூவர்களையும், சக்திகளையும் மற்றும் பிற தேவர்களையும் இயங்கச் செய்து தென்திசையில் உள்ள பொன்னம்பலத்தில் ஆடும் கூத்து இதுவாகும். தென்திசை நோக்கியே இறைவன் வேதங்களையும் ஆகமங்களையும்
இந்துக் கலைக்களஞ்சியம்x 羲
 
 

அருளினான். தென்திசையில் நின்றே தென்திசைக் கடவுளாய்ப் புரியும் தென்னம்பல நடனமே எல்லாவற்றை யும் இயக்குகின்றது. இதைத் திருவாசகம் “தென்பால் உகந்தாடும் தில்லைச் சிற்றம்பலவன்’ எனக் குறிப்பிட திருக்கோவையார் “தென் மாத்திசை வசை தீர்தரத் தில்லைச்சிற்றம்பலத்துள் என் மாத்தலை கழல் வைத்து எரியாடும் இறை” எனக்குறிப்பிடுகின்றது.
சமய குரவர்கள் சிவனை மந்திர வடிவினனாக பல வகைத் தோற்றங்களில் கண்டு புலப்படுத்தியுள்ளனர். "மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித் தீரா நோய் தீர்த்தருள வல்லான்” என்பர். மறைமொழி எனப்படும் மந்திரங்கள் நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்தன வாகும். அவற்றுள் சைவசமய ஐந்தெழுத்து மிகவும் தலை யாயது. இவ்வைந்தெழுத்தின் மந்திரமாக ஜொலிப்பவர் நடராஜராவார். நமசிவாய என்னும் ஸ்தூல பஞ்சாட்சரத்தின் அமைவாக ஐந்தொழில் இயற்றுகின்றான். இவற்றில் நடராஜரின் திருவடி - நகரம்(ந) என்பதில் இறைவன் திரோதான சக்தியாக (மறைத்தல்) இருந்து ஆன்மாக்களின் ஆணவமலத்தினை அடக்குதலையும், திருவயிறு மகரம்(ம்) என்பதில் மும்மலங்களையும் திருத்தோள் - சிகரம்(சி) சிவத்தையும், திருமுகம் - வகரம்(வ) சிவனின் அருட்சக்தி யையும், திருமுடி - யகரம்(ய) ஆன்மாவினை யும் சுட்டும். இதன்படி பாசங்களோடு கூடி அதன் தன்மை யாக மயங்கிக் கிடக்கின்ற ஆன்மாக்களுக்கு சிவன் திருவடி நகரமாகிய திரோதான சக்தியாக இருந்து ஆன்மா க்களை தன்னிடத்தே சேர்ந்து தன்னையும், பிறரையும் அறியாமல் இதுவரை மறைந்திருந்த மாயத்தைப் பார்த்து உதரத்தில் மகரத்தைக் காட்டி எங்கும் பரவியிருப்பதோடு சிவனே பரம்பொருள் என்பதை உணர்ந்துகொள் என்று வீசி நின்றாடும் தோள்களாகிய சிகரத்தால் உணர்த்தி உப தேசம் வழங்குமுகமாக வகரத்தைக் காட்டி விளங்கும் வண்ணம் இறைவனது திருநடனம் அமைந்துள்ளது. இத் தத்துவத்தினை உண்மை விளக்க நூலாசிரியர் பின்வரும் பாடலில் உணர்த்தியுள்ளார்.
சேர்க்கும் துடி சிகரம் சிக்கனவா வீசு கரம் ஆர்க்கும் யகரம் அபய கரம் - பார்க்கிறைக்கு அங்கி நகரம் அடி கீழ் முயலகனார் தங்கும் மகரமது தான்.
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 75
நடராஜர் வடிவத்தின் சிறப்புக்கள்
தெய்வ வடிவங்களுள் நாதாந்த நடனத்தை வெளிப்பாடு செய்யும் நடராஜ வடிவம் மிகவும் பிரசித்தமானது. இந்து நுண்கலைகளில் விக்கிரகக் கலை சிறப்பிடம் பெறுகின் றது. இந்து விக்கிரகக் கலை வளர்ச்சியின் உன்னத நிலையைக் காட்டி நிற்பது நடராஜ வடிவம் ஆகும். நடராஜ விக்கிரகம் கோயில் வழிபாட்டில் சல, அசல, விக்கிரக வழிபாட்டிற்குப் பொருளாகின்றது. திருவாதிரை விரதம், திருவெம்பாவை ஒதும் மரபு, நடராஜ அபிடேகங்கள், தைப் பூசம் போன்ற விஷேட நாட்களில் வழிபாடு இயற்றப்பட்டும் வருகின்றன.
சிதம்பரக் கோயிலிலே நடராஜருக்கு ஐந்து மண்டபங்கள் உண்டு. அவற்றை பஞ்ச சபைகள் என அழைப்பர். அவை சிற்றம்பலம், பொன்னம்பலம், பேரம்பலம், நிருத்த சபை,
ராசசபை என்பன ஆகும். சபைகளாக
சிதம்பரம் - ᏧᏠiᎧᎫᎫ60ᏡIᏧ60ᎠL I, ᏧᏏ60IéᏏᏌ60ᎠL ] திருவாலங்காடு - இரதசபை திருநெல்வேலி - தாமிர சபை திருக்குற்றாலம் - சித்திர சபை
என்பவற்றைக் குறிப்பிடப்படுவதும் உண்டு.
நடராஜப் பெருமான் நாதாந்த திருநடனம் புரியும் இடம் சிற்றம்பலம். இத்திருநடனத்தைச் குமரகுருபர சுவாமிகள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
ஈட்டிய வினைப்பயன் எவற்றையும் - மறைந்து நின்று ஊட்டுவ தாகும் நின் ஊன்றிய பதமே அடுத்த இன்னுயிர்கட்க அளவில் பேரின்பம் கொடுப்பது முதல்வ! நின் குஞ்சித பதமே.
சிற்றம்பலத்தை அப்பர் சுவாமிகள் “தூய செம்பொன்னி னால் எழுதி வேய்ந்த சிற்றம்பலம்’ எனப் பாடியுள்ளார். பொன்னம்பலம் என்பது சிற்றம்பலத்திற்கு முன் உள்ளது. இங்குள்ள சபாபதிக்கு ஆறுகால வழிபாடும் இரண்டாம் காலத்தில் அபிஷேகப் பூசைகளும் நடைபெற்று வருகின் றன. பேரம்பலம் என்பதை தேவசபை என்றும் கூறுவர்.
இதில் பஞ்சமூர்த்திகளும் எழுந்தருளியிருப்பார்கள்.
இந்துக் கலைக்களஞ்சியம் x
 

இப்பேரம்பலத்தை திருஞானசம்பந்த சுவாமிகள்
நிறைவெண் கொடி மாடம் வெற்றி நேர் தீண்டப் பிறைவந் திறை காக்கும் பேரம்பலம்
எனப் பாடியுள்ளார்.
நிருத்த சபை என்பது நடராஜப் பெருமானின் கொடிமரத் திற்குத் தெற்குப் பக்கத்தில் உள்ளது. அங்கு அவர் ஊர்த்துவ தாண்டவம் புரிந்தருளுகின்றார். இதனை திரு வருட்பயன் ஆசிரியர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
உளன நடனம் ஒருபால் ஒருபாலா ஞான நடந்தான்நடுவே நாடு.
ராஜ சபை என்பது ஆயிரம் கால் மண்டபத்தைக் குறிக் கும். இங்கு ஆனி, மார்கழி மாதங்களில் நடைபெறும் திருநாள் வழிபாடுகளில் தேர் உற்சவம், அபிடேகம் நடை பெற்று, பக்தர்களுக்கு திருவருள் ஊட்டும் திருக்காட்சி இடம்பெறும்.
சோழ அரசர் காலத்தில் நடராஜர் வடிவம் முக்கியத்து வம் பெற்றிருந்தது. சோழர்காலம் விக்கிரகக் கலையின் வளர்ச்சியில் ஓர் பொற்காலம் என வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். அப்பொற்கால விக்கிரகக் கலையின் வளர்ச்சிக்கு சிறப்பு வாய்ந்த உன்னத சான்றாக எல்லாத் தரப்பினராலும் போற்றப்பட்ட வடிவம் நடராஜ வடிவமாகும். சோழர்கள் இவ்வடிவத்தை வார்ப்புக் கலையாகவும் வளர்ச்சி பெறச் செய்தனர். சோழ மன்னர்கள் ஆடல் வல்லானின் உருவத்தை பிரதான அரச சமய சின்னமாகவும் மதித்துப் போற்றினார்கள். அளவுகோல்களில் கூட அவ்வுருவம் பொறிக்கப்பட்டிருந்தது. சோழரின் பெருமதிப் புள்ள போற்றத்தக்கதான கோயிலாக சிதம்பரம் நடராஜர் கோயில் அமைந்திருந்தது.
பக்தி இலக்கியங்களும், சிற்பசாஸ்திரங்களும் நாட்டிய சாஸ்திரமும் விதந்துரைக்கின்ற சிவதாண்டவங்களில் நடராஜர் வடிவம் மிகவும் பிரசித்தம் பெற்றது. இவ்வடி வத்தை நோக்கும்போது சமயஞானமும், நடனக் கலையும், விக்கிரகக் கலையும், விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொள் ளக்கூடிய தொழில்நுட்பமும் பொதிந்ததாகக் காணப்படு வது வியற்கப்பாலது.
இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 76
நடராஜ விக்கிரகம் பற்றிய சமய, கலாதத்துவ ஆய் வாளர்களின் நூல்களிலே, கலாயோகி ஆனந்தகுமார
சுவாமியின் கட்டுரையாக்கங்கள் மிகவும் முக்கியத்துவம்
பெற்றவை ஆகும். அமெரிக்காவில் 'சிவநடனம் (Dance
of Shiva) என்னும் நூலை எழுதி வெளியிட்டார். இந்நூலில்
நடராஜரின் நடனம் பற்றி எழுதிய கட்டுரைக் குறிப்
பொன்றிலிருந்து சிவதாண்டவச் சிறப்பினை அறிந்து
கொள்ளலாம்.
“இயற்கை அசேதனம், அவனின்றி ஓர் அணுவும்
அசையாது. அவன் ஆணையால் அணுக்கள் எழும்பி நடனமாடி அசேதனப் பொருட்களைச் சேதனப் பொருட்க ளாக மாற்றுகின்றன. இது நாத வெள்ளத்தால் ஏற்படும்
மாற்றம். இது வெறும் கவி அல்ல, விஞ்ஞானம். நம் நடராஜ தத்துவமே அதுதான். நாதசக்தி அவர்”
அழகியல் கலை நிறைந்து, பொலிந்து விளங்கும் நடராஜ திருவுருவம் கண்களுக்கு விருந்தாய் அமைவதோடு ஆன்மாக்களை இன்புறச் செய்து ஆனந்த ஆத்மீக அனுப வத்தை உண்டாக்குவது, தீய எண்ணங்களை அகற்றி நல்லெண்ணங்களைத் தோற்றுவிப்பது, ஈற்றில் வீடுபேற்றை
அடைவிப்பது நடராஜ வடிவமாகும். (சு.து.)
பழந்தமிழர் வழிபாட்டு முறைகளுள் நடுகல் வணக்கமும் ஒன்றாகும். பண்டைக் காலத்திலே பெரு வீரங்காட்டி விழுப் புண்பட்டு வீழ்ந்து வீரமரணம் அடைந்த வீரனை தெய்வ மாகப் போற்றுகின்ற வழிபாடு நடுகல் வணக்கம் ஆகும். அவன் போரிலே இறந்த இடத்திலோ அல்லது அவனைப் புதைத்த இடத்திலோ நடுகல் நட்டு அவர்களை கல்லிலே அமைத்து வழிபட்டனர். இதனை வீரத் துறக்கக்கல், வீரக் கல் நடுகல், நினைவுக்கல் எனவும் குறிப்பிடுவர். இவை பற்றிய செய்திகளை பழந்தமிழ் இலக்கியங்களிலும் கண்டு கொள்ள முடிகின்றன. மாங்குடிக் கிழார் நடுகல் வணக்கத் தைப் பற்றி பின்வரும் பாடலொன்றில் குறிப்பிடுகின்றார்.
இந்துக் கலைக்களஞ்சியம்
 
 

“ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி ஒளிரேந்து மருப்பிற் களிறெறிந்து வீழ்ந்தெனக் கல்லே பரவினல்லது
நெல்லுகுத்துப் பரவுங் கடவுளு மிலவே'
அதன்படி யானைகளைக் கொன்று குவித்து கொல்லப் பட்ட வீரனது நடுகல்லைக் கடவுளாகக் கருதி நெல்
சொரிந்து வழிபடுதலை குறிப்பிடுகின்றார்.
தமிழ் இலக்கியங்களில் நடுகல் வணக்கம்
தமிழரின் தொன்மை மரபுகளை இயம்பும் தொல்காப்பி யம் நடுகல் வழிபாட்டின் இலக்கணம் பற்றிப் பேசுகின்றது. தொல்காப்பிய புறத்தினையியலில் வெட்சித்திணைப் பாடலொன்றில் நடுகல் வழிபாட்டு ஒழுங்குகள் ஆறு எனக் கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
“காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தலென்று இரு மூன்று மரபிற் கல்லொடு புணரச் சொல்லப்பட்ட எழு மூன்று துறைத்தே'
1. காட்சி:போர்க்களத்தில் வீரமரணம் தழுவிய வீரனுக்கு ஏற்றவாறு அவனின் நினைவுக்குறியாக நடுதலுக் கேற்ற கல்லைத் தெரிந்தெடுத்தல்.
2. கால்கோள்: அவ்வாறு தெரிந்தெடுத்த நடுகல்லை முறைப் படி குறித்த இடத்திற்கு எடுத்துச் சென்று நடுவதற் கான நாள் நிமித்தம் பார்த்தல்.
3. நீர்ப்படை கொணர்ந்த கல்லை நீரினால் கழுவி
தூய்மைப்படுத்தல்.
4. நடுகல் வீரன் வீழ்ந்து இறந்த இடத்திலோ அன்றி அவனைப் புதைத்த இடத்திலோ கால்கோளின்படி நடுதல்.
5. பெரும்படை நட்டபின் கோயிலாக எழுப்பி, அதில் பீடுகளைத் தீட்டி, மடை கொடுத்து சிறப்புச் செய்தல்.
6. வாழ்த்துதல்: நடப்பட்ட கல்லினை தெய்வமாகப் போற்றி வாழ்த்துதல்.
ZZZk Z T TLLLL TCCD TLLCTTL TMLLLeG LTTM

Page 77
இவற்றுள் பெரும்படையும், வாழ்த்துதலும் முற்றாக நடுகல் வழிபாட்டையே காட்டுகின்றன.
சங்கப் பாட்டுக்களான, எட்டுத்தொகை நூல்களிலும் பண்டைத் தமிழர்கள் நடுகல்லைத் தெய்வமாக வழிபட்டனர் என்பதற்கு குறிப்புகளுண்டு.
அரம் போழ் நுதிய வாளி அம்பின் நிரம்பா நோக்கின் நிரையங் கொண்மார் நெல்லி நீளிடை எல்லி மண்டி நல்லமர்க் கடந்த நாணுடை மறவர் பெயரும் பீடும் எழுதி அதற் தொறும் பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்.
இருளிலே கடுகதியாகச் சென்று அம்பினைக் குறிபார்க் கும் பார்வையினையு முடையவராய்த் தமது ஆ நிரைகளை காத்து, மீட்க வேண்டி உக்கிரமான போரிலே வீழ்ந்துபட்ட மானம் பொருந்திய வீரர்களது பெயரையும், பெருமையையும் பொறித்து பாதைகளிலே மயிற்றோகை யணிந்து விளங்கும் நடுகற்கள் என்பது பாடற் பொருள்.
நடுகல்லுக்குரியவர்களாகக் கொள்ளப்படுவோர்:
1. வடக்கிருந்து உயிர் துறந்தோர்
2. வீரப்போரில் வீரமரணம் அடைந்த வீரர்கள்
3. ஆநிரை கவர்தல் - ஆ நிரை மீட்டல் ஆகிய போரில்
இறந்த வீரர்கள்
4. உடன்கட்டை ஏறிய உத்தம மாதர்கள்
5. நரபலியாக வெட்டுண்டவர்கள்
6. நற்செயல்கள் பொருட்டு உயிர் துறந்தவர்கள்
7. கொல் ஏறு தழுவியவர்கள்
8. தெய்வங்களுக்கு கோயில் கட்டியவர்கள், கால்வாய்
வெட்டியவர்கள்
இந்துக் கலைக்களஞ்சியம் ஐ 签济

9. விலங்கினங்களிடம் இருந்து ஊர் மக்களைப் பாதுகாக்கும் பொருட்டு விலங்குகளிடம் போரிட்டு இறந்தவர்கள்
10. செயற்கரிய செயல் புரிந்த விலங்குகள்
கற்புக்கு இலக்கணம் பூண்ட பத்தினித் தெய்வத்திற்கு (கண்ணகிக்கு) படிமம் அமைக்கும் பொருட்டு நடுவதற்குரிய கல்லைத் தெரிவு செய்யும் நோக்கில் வடபேரிமயத்தை நோக்கி சேரமன்னன் படை செலுத்தினான் என சிலப்பதி
காரம் கூறுகின்றது.
சிலப்பதிகார இலக்கியத்தின் வஞ்சிக் காண்டம் முழுவதும் நடுகல் வழிபாட்டு வினையமைதிகளே கூறப்படு கின்றது. காட்சிக்காதை, கால்கோள் காதை, நீர்படைக் காதை, நடுகற்காதை, வாழ்த்துக்காதை, வரந்தருகாதை முதலியனவற்றில் சேரநாட்டு அரசன் கண்ணகிக்கு நடுகல் எடுத்த வரலாறு கூறப்படுகின்றது.
நடுகற் கோயில்கள்
பண்டைத் தமிழர்கள் நடுகல்லை கடவுள் நிலையில் வைத்து வழிபட்டனர். நடுகற் கோவில்களைப் போன்று அரசனைப் புதைத்த இடத்தில் சமாதிக் கோயில்களும் அமைக்கப்பட்டன. இக்கோயில்கள் பள்ளிப்படைக் கோயில்கள் என்று பல கல்வெட்டுக்களிலே குறிக்கப் பெற்றுள்ளன. போரில் இறந்த ஒரு அரசனின் கீர்த்திக்கும் தகுதிக்கும் ஏற்பப் பெரிய பள்ளிப்படையை எழுப்பினர். அவ் அரசன் போரில் வீழ்ந்த இடத்துடன் அவனுடைய பெயரினை பின்னொட்டாக அழைத்தனர். சோழன் குராப் பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன், வெள்ளியம்பலத் துத் துஞ்சிய பெருவழுதி, சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் என்பன அத்தகைய பெயர்களுள் சிலவா கும். சோழ அரசனான ஆதித்யனது கல்லறை மேல் கோயில் கட்டியதாகவும் வரலாறு கூறுகின்றது.
முற்காலங்களிலே பின்தங்கிய சமூகங்களிலே வீரத்துட னும் கீர்த்தியுடன்றும் வாழ்ந்து துஞ்சியவர்களுக்கு நடுகற் கள் நடப்பட்டன. அவற்றை மக்கள்தம் குலதெய்வமாகக் கருதி வழிபடுகின்றனர். புறநானூறில் 'மறக்குடி மகளிர் நடுகல் தெய்வங்களையன்றி பிற தெய்வங்களை வழிபட
※爱 இந்து சமய கலாசார அலுவல்கள் தி3ை0Oக்களம்

Page 78
மாட்டோம் என கூறியிருப்பதும் குறிப்பிடற்பாலது. பழந்தமிழ ரின் வீர வழிபாட்டுடன் தோன்றிய நடுகல் வழிபாடே சிறு தெய்வவழிபாடுகள் எனக் கூறுவதற்கும் சான்றுகள் இல்லா மலில்லை.
வல்லாண் பதுக்கைக் கடவுட் பேண்மார்
நடுகற் பீலி சூட்டித் துடிப்படுத்துத் தோப்பிக் கள்ளோடு துரு உப்பலி கொடுக்கும்.
இப்பாடலில் நடுகல்லிற்கு மயிற்பீலி சூட்டுவதுடன் கள்ளையும், செம்மறி ஆட்டுச் சுட்ட இறைச்சியையும் பலியாக படைப்பதைக் கூறுகின்றது. நாட்டார் புறத்தில் இறந்தவர்களுக்கு அவர்களது உறவினர்கள் பூவும், மது வும், இறைச்சியும் வெண்சோறும் நடுகற்களுக்குப் படைத் தும் போற்றும் வழக்கமே இன்று இருளப்பன், கறுப்பன், முனியாண்டி, நொண்டி, மதுரைவிரன், பட்டான், வேடியப்பன், Iனாரப்பன், வீரமரணர்த்தி முதலிய சிறுதெய்வங்களாகத் தோன்றியுள்ளன.
தொன்மைக் காலங்களில் கற்பு நெறியில் நின்று வாழ்ந்த பெண்களுக்கும், கணவன் இறந்த போது அவனது பிரிவுத் துயர் தாங்காது உடன் கட்டையேறிய பெண்களுக்கும் சதிக்கற்கள் நடப்பட்டன. இக்கற்களை மகாசதிக்கல், மாசுதிக்கல் எனவும் வழங்குகின்றனர். சமணப் பெரியார்கள் 'சல்லேகனை விரதம் இருந்து உயிர் துறந்தால் அவர்களு க்கு நிசீதிகைக்கல்' என்ற நினைவுக்கல் நாட்டுவது வழக் கமாக இருந்தது. தென்னிந்தியாவின் பல பகுதிகளிலும் ஈழத்தின் சில பகுதிகளிலும் நடுகற்கள் காணப்பட்டுள்ளன.
(சு.து.)
இந்திய வரலாற்றிலே நந்தவம்சத்து மன்னர்கள் சிறப்பி டம் பெறுகின்றனர். மகத இராச்சியத்தின் எழுச்சியில் அவர்களின் ஆட்சிக்காலம் ஒரு பிரதான காலகட்டமாகும். அவர்களின் ஆட்சியில் மகதம் ஒரு பேரரசாகியது. அது கங்கைச் சமவெளி முழுவதும் பரந்துள்ள பகுதிகளை அடக்கிய பேரமைப்பாகியது. புராதனகாலத்து இந்திய நூலாசிரியர்கள் பாரத நாட்டில் நந்தரின் ஆதிபத்தியம் ஒரு புதிய யுகமாக அமைந்தது என்று கருதினர். ஆயினும்
 

நந்த மன்னர்கள் அவர்கள் எல்லோரதும் அபிமானத்தைப் பெற்றிருக்கவில்லை. வைதீக நூலோர் நந்தரின் ஆட்சி யைக் கலிகாலத்தின் அம்சமாகக் கருதினர்.
நந்தராசரைப் பற்றிய குறிப்புகள் பல நூல்களில் பரந்து காணப்படுகின்றன. அவற்றிலே சில வைதீக நூல்கள், வேறு சில சமண நூல்கள், இன்னொரு வகையானவை பெளத்த நூல்கள், மகாவம்சம், மகாபோதிவம்சம் போன்ற (இலங்கையில் எழுதப்பட்ட) பாளி மொழியிலுள்ள நூல்களி லும் அவர்களைப் பற்றிய விவரங்கள் காணப்படுகின்றன. மகா அலெக்ஷாந்தரின் இந்தியப் படையெடுப்புக்களை வர்ணிக்கும் கிரேக்க - உரோம வரலாற்றாசிரியர்களும் நந்தர்களைப் பற்றி அவதானித்துள்ளமை குறிப்பிடற் குரியது. சந்திரகுப்த கதா என்னும் புராதனமான நாடக நூலொன்றில் நந்தர்களைப் பற்றிய பாமர வழக்கான ஐதிகங்கள் இலக்கிய வடிவம் பெற்றன. சந்திரகுப்தனைக் கதாநாயகனாகக் கொண்ட அந்நூலில் நந்தமன்னரின் இயல்புகளைப் பற்றிய விவரங்கள் திரிபடைந்துள்ளன என்று கருதலாம். அந்நாடக நூலின் சில அம்சங்கள் மிலிந்த பஞ்ஞ என்னும் நூலில் இடம்பெற்றுள்ளன. கலிங்கத்து அரசனாகிய காரவேல(ன்) என்பவனது ஹத்திகும்பா சாசனத்திலே முன்னுாறு வருடங்களுக்கு முன் நந்தராசன் அமைப்பித்த கால்வாய் ஒன்றினைப் பற்றிய குறிப்புண்டு.
பலவகைப்பட்ட நூல்கள் நந்தர்களைப் பற்றிக் குறிப்பிடு கின்ற பொழுதிலும் விவரங்களைப் பொறுத்தவரையில் அவற்றிடையே சில மாறுபாடுகள் உள்ளன. ஆயினும் நந்தர்கள் பலமானவர்கள், மகாசன்யங்களை உடையவர் கள், பேரரசர் என்ற நிலையினை அடைந்தவர்கள் என்பதில் அவற்றிடையே கருத்தொற்றுமை உண்டு. அவர்களின் ஆதிபத்தியம், சமுத்திரம்வரை பரவியிருந்தது என்றும் சமண நூல்கள் குறிப்பிடுகின்றன.
நந்தர்களை நவநந்தர்கள் என்று குறிப்பிடும் மரபொன்று உண்டு. ஒருவருக்குப்பின் இன்னொருவராக ஒன்பது மன்னர் கள் அவ்வம்சத்தில் இருந்தனர் என்று கொள்வதற்கு எதுவிதமான சான்றுமில்லை. நந்தர்களின் ஆட்சி ஆறு தசாப்தங்களுக்கு மேலாக நிலைபெற்றதென்று கருதமுடி
இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்கனம்

Page 79
கின்றது. நந்தர்களைப் பற்றிப் புராதனமான நூல்களில் காணப்படும் முரண்பாடுகள் அவர்களின் உற்பத்தி பற்றியன வாகும். நந்தவம்சத்து முதலரசன் முன்னைய அரசவம் சத்து இறுதி மன்னனுக்கும் சூத்திரப்பெண்ணொருத்திக்கும் புதல்வனானவன் என்பது புராணங்களின் குறிப்பாகும். அவனை அரண்மனைச் சக்களத்தியான ஒரு பெண் நாவித னோடு கூடிப்பெற்ற புதல்வனென்று (கணிகாகுவழி ஜன்ம)
சமண நூல்கள் கூறும்.
மகாபத்ம நந்தன்
நந்தவம்சத்து முதலரசனை மகாபத்மபதி என்று புராணங் கள் குறிப்பிடுகின்றன. அவன் அளவில்லாத சேனைகளை யும் செல்வத்தையும் பெற்றவன் என்றும் சொல்லப்படுகின் றது. அவனை உக்கிரசேனன் என்று மகாபோதிவம்சம் வர்ணிக்கின்றது. காலாசோகனின் (காகவர்ணி) புதல்வர் பதின்மரையும் ஒழித்து உக்கிரசேனன் ஆட்சியைக் கைப் பற்றினான் என்று பெளத்த நூல்கள் கூறும். பிரபலமான சேனாதிபதிகளும் அமைச்சர்களும் அவனுக்குச் சேவை புரிந்தனர். பத்திரசால - என்பவன் அவர்களில் முதன்மை யானவன். கடல்வரை பரந்துள்ள பிரதேசங்கள் எல்லாவற் றையும் நந்தராசனது அமைச்சன் கைப்பற்றியமை பற்றிச் சமணநூல்கள் குறிப்பிடுகின்றன.
மகாபத்ம நந்தன் ஷத்திரய குலங்கள் எல்லாவற்றையும் அழித்து, இஷவாகு, பாஞ்சாலகாசி, கேகயர், கலிங்கர், அஸ்மகர், குரு, மைதிலர், செளரசேனர், விதிஹோத்திரர் முதலானோரின் இராச்சியங்களைக் கைப்பற்றியமை பற்றிப் புராண நூல்கள் குறிப்பிடுகின்றன. இவை பெருமளவிற்கு ஆதாரபூர்வமானவை. இவழ்வாகு வம்சத்தவர் கோசல நாட்டில் ஆட்சி புரிந்தனர். முற்காலங்களில் கோசலம் பிரபலமான மகாஜனபதமாக விளங்கியது. அயோத்தியிலு ள்ள நத்தராசனின் படைத்தளமொன்றினைப் பற்றிப் புராதன நூலாகிய கதாசரித்சாகரம் குறிப்பிடுகின்றது. நந்த மன்னன் அங்கு படையெடுத்துச் சென்று வெற்றிபெற்றமைக்கு இக் குறிப்பினை ஆதாரமாகக் கொள்ளலாம்.
கங்காநதியின் மேற்பகுதி, கோமதியாறு ஆகியவற்றுக்கு இடைப்பட்ட நிலப்பகுதி பாஞ்சால தேசம் என அக்காலத் தில் வழங்கியது. அது இடதுறை நாட்டின் மத்திய பகுதி யின் ஒரு பிரிவாகும். நந்தர்களின் காலத்துக்கு முன்பு
இந்துக் கலைக்களஞ்சியம்*
 
 

அங்கு மகத இராச்சியத்தின் ஆதிபத்தியம் ஏற்பட்டிருக்க வில்லை. காசி இராச்சியம் வாரணாசி நகரத்தைச் சூழ்ந்த பகுதியாகும். முன்பு காசியினை மகத வேந்தனாகிய அஜாதசத்ரு கைப்பற்றினான். சிசுநாக குலத்து முதலரசன் மகதநாட்டின் இராசதானியான கிரிவிரஜத்திலே தங்கி யிருந்த காலத்தில் காசிக்குப் பொறுப்பாக இளவரசன் ஒருவனை நியமித்தானென்று புராணங்கள் கூறும். குரு வம்சத்தவரின் இராச்சியம் பாஞ்சால தேசத்திற்கும் கிழக் கிலுள்ள சரஸ்வதி நதிக்கும் இடைப்பட்ட பகுதியாகும். கங்கை அதன் மேற்கெல்லையாக விளங்கியது. யமுனா நதியின் தீரத்திலுள்ள மதுரா செளரசேனரின் இராசதானி யாக விளங்கியது. வடஇந்தியாவில் நேபாளத்தின் எல்லையில் மிதிலா என்னும் நகரம் அமைந்திருந்தது. மகாபத்ம நந்தன் வெற்றிகொண்ட இராச்சியங்களில் மற் றொன்று கேகயர் வசமானது. மத்திய காலம்வரை அது நர்மதை நதியினைச் சூழ்ந்த நிலங்களில் ஒரு பகுதியினை அடங்கியிருந்தது. தட்ஷணாபதத்தின் ஒரு பகுதியான அஸ்மக இராச்சியத்தில் மகத நாட்டு மேலாதிக்கம் முதன் முதலாக மகாபத்மநந்தனின் காலத்தில் ஏற்பட்டது.
கலிங்க தேசத்தில் நந்தர்களின் ஆதிக்கம் ஏறப்பட்ட தற்குச் சான்றாகக் காரவேல மன்னனது ஹத்திகும்பாச் சாசனக் குறிப்பு அமைகின்றது. அது மேல் வருமாறுள்ளது. “முன்னூறு வருடங்களுக்கு முன்பு நந்தராசனால் உருவாக் கப்பட்ட கால்வாயினை தனகுலிய வீதி வழியாக நகர த்தை அடையுமாறு (தனது) ஐந்தாம் ஆண்டிலே ஏற்பாடு செய்தான்.”
காரவேலனது ஆட்சி ஏற்படுவதற்கு நெடுங்காலத்து முன்பு கலிங்கத்தில் நந்தரின் ஆதிபத்தியம் ஏற்பட்டிருந் தமை இதனால் புலனாகின்றது. அந்த நாட்டிலே குடிகளின் நலன் கருதி நந்தராசன் கால்வாயொன்றினை அமைத்து நீர் வழங்குவதற்கு வழிவகை செய்தமை நந்தரின் ஆட்சி பற்றிய குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாகும்.
மகத இராச்சியத்தின் வரலாற்றில் மகாபத்ம நந்தனுக்குச் சிறப்பிடமுண்டு. அவனை இந்தியாவின் முதலாவது பேரரசன் என்று வரலாற்றாசிரியர் பலர் கொள்வர்.அவனது சாதனைகளின் மூலம் மகதம் மிக விசாலமான இராச்சிய
மாக வளர்ந்து பேரரசாகியது. நந்தர்கள் ஆதிக்கம் பெறு
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்கனம்

Page 80
வதற்கு முன்பு மகதம் சமகால அரசுகளில் முதன்னை பெற்றுவிட்டது. ஆயினும் அதன் ஆதிபத்தியம் வடஇந்தியா வின் கிழக்குப்பகுதியில் மட்டும் அமைந்திருந்தது. ஆனால் மகா பத்மநந்தன் கங்கைச் சமவெளி முழுவதிலும் தனது ஆதிக்கத்தை ஏற்படுத்தினான். பத்து இராச்சியங்களைக் கைப்பற்றி அவற்றை மகத இராச்சியத்தோடு இணைத் தான். வைதிக நூல்களில் சிறப்பித்துக் கூறப்படும் தர்விஜ யம் என்ற கோட்பாட்டைத் தவிர்த்து அசுரவிஜயம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அவன் செயற்பட்டான். அவன் அமைத்த பேரரசு சக்கரவர்த்தி ஒருவனின் மேலாதிக் கத்தை ஒப்புக்கொண்டு அவனுடைய விருப்பு வெறுப்பு களுக்கு இணங்கி நிலைபெறும் அரசர்களைக் கொண்ட பேரரசாக அமையவில்லை. கைப்பற்றிய நாடுகளில் முன்னைய அரசர் குலங்களை ஆட்சியிலிருந்து அகற்றி விட்டு நந்தராசன் தனது அதிகாரிகளை நியமித்தான். நந்தர்களின் நிர்வாகமுறை மோரியரின் ஆட்சிமுறைக்கு முன்னுதாரணமாக அமைந்தது. விந்திய மலைக்குத் தெற் கிலே அஸ்கம இராச்சியத்தைக் கைப்பற்றியமை மகாபத்ம னின் வலிமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். ஒரு வகை யில் அவன் சாதனையிலே பிற்காலத்து குப்தப் பேரரசனா கிய சமுத்திர குப்தனைப் போன்றவன்.
மகாபோதி வம்சத்தில் ஒன்பது நந்தமன்னர்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. அவை 1) உக்கிரசேன, (2) பண்டுக (3) பண்டுகதி, (4) பூதபால, (5) ராஷ்டிரபால, (6) கொவிஷாணக, (7) தஸ்சித்தக, (8) கைவர்த்த,
(9) தன என்பனவாகும்.
இவர்களின் இறுதியரசனாகிய தன நந்தனைத் தவிர வேறொருவரைப் பற்றியும் ஒரு விவரமுந் தெரியவில்லை. மகா அலெக்ஷாந்தர் இந்தியாமீது படையெடுத்துச் சென்ற காலத்தில் தனநந்தன் பாடலிபுரத்தில் அரசனாக விளங்கி னான். அவனுடைய ஆதிபத்தியம் சிந்துநதியின் கிளைநதி யான விபஸ்வரை பரந்திருந்தது. சகடால என்பவன் அவனுடைய மகா அமைச்சனாக ஸ்தூலபத்திர, ழரீயக என்போரும் உயர்பதவிகளைப் பெற்றிருந்தனர். அவர்கள் அனைவரும் சமண சமயத்தவர், நந்தர்களின் சமண
சமயத்திற்கு ஆதரவு புரிந்தனர் எனக்கருத இடமுண்டு.
இந்துக் கலைக்களஞ்சியம்
 

மகா அலெக்ஷாந்தர் நந்தர்களோடு மோதல்களைத் தவிர்த்துக் கொண்டான். அவனது வரலாற்றை விளக்கும் சமகால மேனாட்டு ஆசிரியர்கள் நந்தமன்னது பராக்கிரமம் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். நந்தராசன் தனது இராச்சியத்தின் எல்லைகளிலே காவல் நிலையங்களில் பெரும்படைகளை வைத்திருந்தமை பற்றி அவர்கள் குறிப்பிடுகின்றனர். அவனது மகாசேனையில் 200,000 காலாட் படையினரும் நான்கு குதிரைகள் பூட்டிய 2000 போர் ரதங்களும் 20,000 குதிரைவீரரும் 3,000 போர் யானைகளும் அடங்கியிருந் தமை பற்றி டியமோரஸ் போன்றோர் எழுதியுள்ளனர். பஞ்சாபிலுள்ள விபஸ் நந்திக்கப்பால் அமைந்த கங்கைச் சமவெளியிலும் அதற்குக் கிழக்கிலும் வாழ்ந்த பெருவலி படைத்த சமுதாயங்கள் அவனது ஆதிக்கத்தின் கீழ் அடங்கியிருந்தனவென்றும் சொல்லப்படுகின்றது. அங்கு நிலவிய ஆட்சிமுறையினை அரியன் (Arrian) என்னும் ஆசிரியர் பாராட்டியுள்ளார். அது நீதியானதென்றும் செங் கோன்மையின் பண்புகளைக் கொண்டதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அங்கே பிரதேசங்களில் உள்ளூர்ப்பரிபால னம் அறிவுடைய பிரதானிகளின் வசமாயிருந்ததென்றும் சொல்லப்படுகின்றது. கிரேக்க நூலோர் நந்தர்களின் ஆட்சி பற்றிக் கேட்டறிந்து குறிப்பிட்டவை இந்திய நூல்கள் குறிப்பிடுவனவற்றிலிருந்து மாறுபட்டனவாகும். கிரேக்க உரோம ஆசிரியர்களின் குறிப்புகள் சமகாலத்தவரின் அவதானிப்புகளை அடிப்படையாகக் கொண்டவை. புராண நூலோர் நந்தர்களின் மீது வெறுப்புக் கொண்டிருந்தனர் என்றும் கருதலாம்.
நந்தர்கள் தேடிய அளப்பரிய செல்வங்களைப் பற்றிச் சில இந்திய நூல்கள் குறிப்பிடுகின்றன. பல வகையான வரிகள் மூலம் அவர்களின் வருமானங்கள் பெருகின. சருமங்கள், பசைகள், கற்கள் முதலியவற்றின் மீதும் வரிவிதித்தனர் என்பது ஒரு ஐதிகம். நந்த மன்னர்கள் செல்வங்களைப் பதுக்கி வைத்தமை பற்றி ஏற்பட்ட பாமரவழக்கான ஐதிகங்கள் சில நூல்களில் இடம்பெற்றுள்ளன. கங்காநதியின் அடிமட்டத்திலே குகையொன்றில் 20 கோடி பணத்தை நந்தராசன் பதுக்கி வைத்தானென்று கதாசரித்சாகர கூறும் இந்தக் கதை சங்கப் புலவரான
மாமூலனாரின் பாடலொன்றிலும் சொல்லப்படுகின்றது.(சிய)
發懿線撥
LTLZTT TELSL TCLCLDD TLLM CeT TMeLLGLLTTM

Page 81
நந்தனர் சரித்திர கீர்த்தனை
இந்நூல் கோபால கிருஷ்ண பாரதியாரால் இயற்றப்
பட்டது. இவர் கி.பி. 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
(க.பி.1811 -1881) இவர் தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள
முடிகொண்டான் கிராமத்தில் ராமஸ்வாமி என்பவருடைய
புதல்வராக பிறந்தார். பரம்பரையாக இசைத்துறையில்
வல்லமை மிக்க குடும்பமாக இருந்ததினால் இவரும்
இசைக்கலையில் வல்லவராக இருந்தார். இவர் நைஷ்டிக பிரமச்சாரியாக வாழ்ந்தவர். கோவிந்தபதி என்பவரிடம்
யோகம் முதலியவைகளைப் பயின்றார். ஆனதாண்டவபுரம்
என்னும் ஊருக்கு சென்று அங்கு மிராசுதாரராய் இருந்த
அண்ணு ஐய்யர் என்பவரால் ஆதரிக்கப்பட்டார். அங்கு
கதாகாலாட்சேபம் செய்து வந்தார். சேக்கிழார் எழுதிய
பெரிய புராணத்தில் இருக்கும் 37 செய்யுள்கள் அடங்கிய
நந்தனார் சரித்திரத்தை கோபாலகிருஷ்ண பாரதியார்
பெரிய கதையாக நந்தனார் சரித்திரம்' என்னும் இசை
நாடகமாக எழுதினார். இவர் இந்த சரித்திரத்தில் புதிய
பல பாத்திரங்களைப் புகுத்தி அழகிய கீர்த்தனைகள்
மூலமாக இந்தக் கதையை சங்கீத உலகத்திற்கு வெளி யிட்டார். இந்த இசை நாடகத்தில் பல அழகிய கீர்த்தனை
களையும் இரு சொல் அலங்காரம் நொண்டிச்சிந்து முதலியவைகளையும் அமைத்திருக்கிறார். இவர்
இயற்பகை நாயனார் சரித்திரம், காரைக்கால் அம்மையார்
சரித்திரம் என்பவற்றையும் இயற்றியுள்ளார். ஞானச்சிந்து, ஞானக்கும்மி முதலியவைகளையும் இவரே இயற்றியுள்
ளார். இவர் நந்தனார் சரித்திரக் கீர்த்தனையைப் பாடிய தோடன்றி பல ஊர்களிலும் கேட்போர் மகிழும் வண்ணம் இசைச் சொற்பொழிவுகளும் ஆற்றியுள்ளார். இவர் பெரிய புராணத்திலுள்ள வேறு சில நாயன்மார்களைப் பாடியுள்ள
போதும் இக்கீர்த்தனையே யாவராலும் மெச்சத்தக்க
தலைமையிடத்தைப் பெற்றுள்ளது.
 

நந்தனார் சரித்திரக்கீர்த்தனை இறைவணக்கம், கீர்த்த னம், கட்சா, பெரிய கட்சா, தண்டகம், நொண்டிச் சிந்து, சிந்து இலாவணி, கண்ணி, தோடயம், மங்களம், ஆனந்தக் களிப்பு இருசொல் அலங்காரம், அகவல், ஏசல், நாமாவளி, கலித்துறை, துக்கடா, கவாய், விருத்தம், வசனம் என்னும் இருபத்தொரு உறுப்புக்களைக் கொண்டுள்ளது. இடையி டையே வரும் வசனம், நீங்கலாகப் பல்லவி, அநுபல்லவி, சரணம் என்ற பகுதிகளைக் கொண்ட 134 கீர்த்தனங்க ளோடு சேர்த்து மொத்தம் 298 பாடல்களைக்
கொண்டுள்ளது.
நொண்டிச்சிந்து, ஆனந்தக்களிப்பு, இலாவணி, ஏசல் முதலிய பகுதிகள் யாவரையும் தம்வயப்படுத்தும் தன்மை வாய்ந்தவை. அதனாலேயே நந்தனார் சரித்திரக் கீர்த்தனை குக்கிராமங்கள் தோறும் பாமர மக்கள் வாயிலும் படும் பெருமை பெற்றிருந்தது. ‘ஐய ஒரு செய்தி கேளும் என்னும் நொண்டிச்சிந்தும் மார்கழி மாதம் திருவாதிரை நாள்' என்னும் கண்ணியும் 'சிவலோகநாதனைக் கண்டு சிதம்பரம் போகாமலிருப்பேனோ’ என்னும் கீர்த்தனங்களும் நினைத்தாலும் பரவசமூட்டும் பாடல்களாகும். நந்தனாரின் பக்திப் பெருக்கை நினைத்து அவரைச் சேர்ந்த மற்றவர்க ளெல்லோரும் எள்ளி நகையாடியனர். அப்பகுதி ஏசலென் னும் தலைப்பில் காணப்படுகின்றது. நந்தனாரைப் பார்த்து ஒருவர் 'மூக்கு நுனியைப் பார்த்து முணுமுணுத் தெந்நேரம் காக்கை போல சும்மா கதறுகிறீர்’ என்றார். அதற்குவிடை யாக 'வாக்கிலே சிவநாமம் வராத பாவிகள் நாக்கிலே ஊசியை நாட்டுவேன்' என்று நந்தனார் கூறும் பதில் எவ்வளவு பத்தி உறைப்பாயுள்ளது என்பது நினைக்கத் தக்கதாகும். அதே போன்று ஆனந்தக்களிப்பு, இலாவணி முதலியவையும் இன்பம் பயப்பனவாகும். கட்கா, பெரிய கட்கா, தோடயம், துக்கடா, கவாய் முதலியன இந்நூலில் இடம்பெறும் புதிய உறுப்புக்களாகும். இச் சரித்திர கீர்த்தனை 1861ஆம் வருடம் ஒரு பிரெஞ்சுக்காரர் உதவியால் அச்சிடப்பட்டது. இவர் அநேக விடுதிக் கீர்த் தனைகளும் செய்துள்ளார். (தே.ஹ.)
x இந்த சமய கலாசார அலுவல்கள் தினைக்ககாம்

Page 82
'நந்தி’ என்பதற்கு ஆனந்தம் என்று பொருள். ஆனந்த மயமே நந்தி. நந்தி, நம்பன் முதலியன இறைவனின் பெயர்கள் ஆகும். இடபம், விடை ஏறு போன்ற பெயர்களும் நந்தியை சுட்டுவதாக திருமுறைகள், புராணங்கள் சான்று ரைக்கின்றன. இலக்கியங்களில் ஆன்மா, ஞானம், தர்மம் ஆகியவற்றின் உருவமே நந்தி எனக் குறிப்பிடப்படுகின்
Bgbl.
நந்தி சிவத்தின் அம்சமாகும் என திருமூலர் திருமந்திரத் தில் அருளியுள்ளார்.
குருவே சிவனெனக் கூறினன் நந்தி குருவே சிவமென்பது குறித்தோரார் குருவே சிவனுமாய்க் கோரமாய் நிற்கும் குருவே யுரையுணர் வற்றதோர் கோவே
என்பதுடன்
தானந்தி சீர்மையுட் சந்தித்த சீர்வைத்த கோனந்தி யெண்தை குறிப்பறி வாரில்லை
இந்துக் கலைக்களஞ்சியம்
 
 
 
 

வானந்தி யென்று மகிழும் ஒருவற்கு தானந்தி யங்கித் தனிச்சுட ராமே
எனக் கூறுவதில் நந்தியே சிவம் எனக் குறிப்பிடப்படு கின்றது.
பல்லவர் காலத்திலே வாழ்ந்த நாயன்மார்களின் பக்திப் பாடல்களிலும், சிவனின் வாகனமாக கொடியாக, சின்ன
மாக நந்தி விளங்கும் விதம் வெளிப்படுத்தப்படுகின்றது.
"தோடுடைய செவியன் விடை ஏறி.”
"மாறு கொண்டார் புரமெரித்த மன்னவனே கொடிமேல் ஏறு கொண்டாய். சம்பந்தரும்
நரை விடை நற்கொடியுடைநாதன். அப்பரும்
"ஏறு விடைக்கொடி எம்பெருமான். சுந்தரரும்
"இடபக் கொடியேற்றி வந்து அம்பலத்துள் ஏறும் அரன்."
"ஏற்றுயர் கொடியுடையாய் எனையுடையாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே."
என மாணிக்கவாசகரும் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழகத்துப் பெரிய சிவாலயங்களில் ஐந்து வகையான நந்திகள் அமைந்திருப்பதைக் காணலாம். அவை இந்திர நந்தி (போகநந்தி), வேதநந்தி(பிரமநந்தி), ஆத்மநந்தி, மால் விடைநந்தி, தரும நந்தி என்று அழைக்கப்படும். ஒரு சமயம் இந்திரன் இடப(காளை) வடிவம் கொண்டு சிவனைத் தாங்கினான். போகங்களின் அதிபதியாகிய இந்திரன் வடிவாக விளங்கும் இந்த நந்தியை போகநந்தி என்று கூறுவர். சிவாலயங்களுக்கு வெளியே சற்றுத் தொலைவில் கருவறையை நோக்கியவாறு இது அமைந்திருக்கும்.
பிரமதேவன் நந்தி வடிவம் கொண்டு சிவனைத் தாங்கி னான். இதனால் இந்நந்தியை வேதவெள்விடை பிரமநந்தி என்றும் அழைக்கின்றனர். இந்த நந்தியை கம்பீரமாகவும், மிகப் பெரியதாகவும் அமைப்பர். திருவிடைமருதூர், காஞ்சி புரம், இராமேஸ்வரம் முதலான தலங்களின் பெரிய மண்ட
பத்தினுள் இதனைக் காணலாம்.
இந்து சமய கலாசார அலுவல்கள் தி6ைOOக்களம்

Page 83
ஆலயத்திலே கொடிமரத்தையொட்டி தலைமை நந்தி யாக அமையும் நந்தி ‘ஆன்மநந்தி’ எனப்படும். இது உயிர்(பசுக்கள்) எப்பொழுதும் இறைவனின் திருவருளை நோக்கியதாக அமைவுறும் என்பதை உணர்த்து கின்றது. சிவாலயத்தில் பிரதோஷ காலங்களில் இந்த நந்திக்கே சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
திரிபுரதகனம் செய்வதற்கு சிவன் தேரில் வலது காலை ஊன்றி ஏறியபோது அத்தேரின் அச்சு முறிந்தது. அப்போது திருமால் இடப வடிவம் கொண்டு சிவபெருமான் அமர்ந்த தேரைத் தாங்கினான். இந்நினைவு நீங்காது இருக்கும் சிவன் சந்நிதியில் நிலையாக எழுந்தருளினார். இதனையே மால்விடை நந்தி என அழைக்கின்றனர்.
மகா மண்டபத்தில் அமையும் சிறு நந்தியே தரும நந்தி என்பதாகும். ஊழிக்காலத்தில் பிரபஞ்சம் சிவனில் ஒடுங்க அப்போது தருமம் மட்டும் நிலை பெற்று இடபவடி வம் கொண்டு சிவபெருமானைத் தாங்கும். இவ்வாறு தருமம் தாங்கும் நந்தியே தரும நந்தி எனப்படுகின்றது. இதை உணர்த்தும் வகையில் இந்த நந்தி இறைவனுக்கு அருகாமையில் மகாமண்டபத்திலே எழுந்தருளியிருக் கின்றது.
சிவன் நந்தியந்தேவரை இடபவாகனமாக ஏற்றுக் கொண்ட வடிவம் நந்தி எனக்கூறுவர். ஆணவ அஞ்ஞான உருவமாகிய தட்சன், தசீசி முனிவருடன் வாதிடுகையில் சிவன் இடபவாகனத்தைக் கொண்டது ஏன்? என்று கேட்கின் றான். அப்போது ஞான சொரூபமாகிய தசிசி முனிவர் “பிரளய காலம் யாவும் ஒடுங்கும் காலையில் திருமால் நான்முகன் முதலியோர் மறைந்து அண்ட சராசரமெல்லாம் மறைந்த வேளையில் என்றும் அழியாத தரும தேவதையா கிய நந்தி தான் அழியாதிருக்க விரும்பி இடபவடிவ மெடுத்து சிவபெருமான் முன் சென்று அழியாத தன்மையும் இறைவனுக்கு வாகனமாகி அவரைச் சுமக்கும் பேற்றினை யும் வேண்டியது. சிவனும் அது வேண்டியபடியே சாகாத் தன்மையையும் தனக்கு வாகனமாகும் பெருமையும் அளித் தருளினார். மேலும் புண்ணிய பாவங்களின் தன்மைகளை யும் விளக்கியருளி "உன்னிடத்தில் யாமிருக்கின்றோம் எம்மிடத்தில் நீயிருக்கின்றாய்” என்று கூறியருளினார்.
இந்தக் கலைக்களஞ்சியம்x 羲翻

அந்நாள் முதல் சிவபிரான் தன் அடியார்களுக்கு காட்சிய ளிக்கும் பொழுதெல்லாம் இடபவாகனத்தில் காட்சியளிக் கின்றார்.
பிரதோஷ காலத்தில் சைவர்கள் வழிபாட்டுக்குரிய அம்சமாக நந்தியைக் கருதுகின்றனர். தோஷங்களைப் போக்கும் விரதம் பிரதோஷ விரதம். ஒவ்வொரு மாதமும் இரு பிரதோஷ விரதங்கள் வளர்பிறை, தேய்பிறை திரயோதசி திதிகளில் வருகின்றன. பிரதோஷ காலம் பகல் முடியும் வேளை, இராத் தொடங்கும் வேளைக்குட் பட்ட ஒரு மணி நேரமாகும். புராணக் கதைகளின்படி தேவர்கள், அசுரர்கள் அமிர்தம் எடுக்க விரும்பிப் பாற்கடலைக் கடைந்த பொழுது ஆலகால விஷம் வெளிப்பட்டு எல்லோரையும் கலங்கும்படி செய்தது. இது பற்றி தேவர்கள் முறையிட சிவன் பகலுக்கும், இரவுக்கும் இடைப்பட்ட ஒரு மணிவேளையில் அவ்விடத்தைக் கண்டத்திலே அடக்கி நந்தியின் இரு கொம்புகளுக்கிை யில் நடனம் புரிந்து அபயம் அளித்தார். அக்காட்சியை பார்வதியாரும், தேவர்களும் நந்தியின் இரு கொம்புகளுக் கிடையாக வணங்கி பலன் பெற்றனர். இதனால் நந்தியம் பெருமானையும், சிவபிரானையும் பிரதோஷ காலத்தில் ஒன்றாக வழிபட்டால் தோஷங்கள், கஷடங்கள், நீங்கப்பெறும் என்ற நம்பிக்கையும் வழிபாடும் காலகாலமாக
சைவமக்களால் கைக்கொள்ளப்பட்டு வருகின்றன.
அசுரர்களை அகற்றவும் சிவனங்களையும் தேவர்களை யும் அழைக்கவும் ஆலயத்தைக் காக்கவும், பக்தர்களைப் பாதுகாக்கவும் கொடிமரம் நிறுவப்படுகின்றது. சிவன் கோயில் கொடிமரத்தின் மேல்பாகத்தில் நந்தியை அமைத் தல் மிகுந்த விசேடமாகும். ஆன்மாக்கள் முக்தியின்பம் பெற இறைவன் கொடிகட்டி உற்சவம் கொண்டருள் கிறார். சண்டாளர்களை உய்விக்க எண்ணியே இறைவன் உமை யோடு உற்சவம் கொண்டாடுகிறார். கொடி ஒரு குறிக்கோ ளுடன் ஏற்றப்படுகின்றது. ஏற்றப்படும் கொடி ஏற்றுவிப்பவ ரது உறுதியைக் குறிக்கும். ஓர் உணர்ச்சியை ஊட்டும் கொடியே வெற்றியின் சின்னம். இக்கொடியில் நந்தி "தர்மத்தின் சின்னமாகவும், தியாகத்தின் வடிவமாகவும்” காணப்படும்.
భళ్ల இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 84
நந்தியும் நந்திகேசுவரரும் - சிற்பக்கலைப் பார்வை
சிவன் கோயில்கள் பலவற்றிலும் கொடி மரம் முன்பாக மகாமண்டபம், அர்த்த மண்டபம் ஆகியவற்றில் சிறிய வடிவத்திலும் பெரிய வடிவத்திலும் நந்தி (காளை) அமர்ந்தி ருக்கக் காணலாம். மேலும் புறத்தேயுள்ள பலரும் தெரிந்து கொள்ளும் வகையில் கோயில் மதிற்கவரின் மேலேயும் நந்திகள் அமர்ந்த நிலையில் வைக்கப்பட்டிருத்த லும் உண்டு.
சில ஆலயங்களில் மிகப்பெரிய நந்திகள் கற்சிலை வடிவிலும் சுதைச்சிற்ப வடிவிலும் சுவாமிக்கு எதிரே அமைந்திருக்கக் காணலாம். கற்சிற்பமாகத் தஞ்சாவூர் பெரிய கோயில் நந்தி, திருப்புன்கூரில் சிவலோகநாதர் சந்நிதியில் (நந்தனாருக்காக) ஒரு புறமாக விலகியிருக்கும் நந்தி ஆகியவற்றைக் காணலாம்.
இராமேசுவரம் இராமநாத சுவாமி ஆலயத்தில் சுதைய மைப்பில் பெரிய நந்தியும், திருவிடை மருதூரில் மகாலிங்க சுவாமி ஆலயத்தில் சுதையமைப்பில் பெரிய நந்தியும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை.
பல கோயில்களில் நந்தியுருவங்கள் சிறியனவாகக்
காணப்படுகின்றன. அவற்றுள்ளும் சில சிறப்புகள் உள்ளன.
சந்நிதியின் இறைவனைப் பார்த்தவாறே புறத்தே அமர்ந்த நிலையில் நந்திகளை அமைப்பதுதான் ஆலய மரபு. ஆனால் அமர்ந்தவாறு இறைவனுக்கு எதிரில் பின்புறம் காட்டியவாறு நந்தி இருப்பதைப் பெண்ணாகடம் எனும் திருத்தலத்தில் காணலாம்.
வெள்ளை நிறத்தில் அமையப் பெறின் சிறப்புண்டு என்ற நம்பிக்கையால் குமரி மாவட்டம் சுசீந்திரம் ஆலயத்தில்
வெள்ளைக் கல்லினாலான நந்தி அமைக்கப்பட்டுள்ளது.
நந்தியே வாகனமாக (இடப வாகனமாக) இறைவனுக்கு அமைவதால் சிவாலயத் திருவிழாக்களில் வீதியுலா வருவதற்கேற்ப மரத்தால் செய்யப்பட்டு வர்ணம் பூசிய
நிலையில் நந்தியும், மரத்தால் செய்யப்பட்டு வெள்ளித் தகடு போர்த்திய வெள்ளி நந்தியும் மரத்தால் செய்யப்பட்டு பொன் முலாம் பூசிய பொன் நந்தியுமாகக் கோயிலின்
 

வசதிக்கேற்ப நந்திகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறெல்லாம் நந்திகள் பல இருப்பினும் அவற்றையும் சில வகைகளாகக் - கைலாச நந்தி, அதிகார நந்தி, சாமானிய நந்தி, மகாநந்தி என வகைமைப் பெயர்களுடன் ஆகமங்கள் குறிப்பிடுகின்றன.
சிவபெருமானைப் போலவே அதிகார நந்திக்குச் சடை முடியும் முக்கண்களும், நான்கு கைகளும், பின் இரு கைகளில் மானும் மழுவும் ஏந்திய நிலையுமுண்டு. ஆனால் அவர் முன் இரு கைகளும் கூப்பியபடி தம் தேவியுடன் காட்சியளிப்பவர். இத்தகைய அதிகார நந்தியின் பின்னணியாகப் புராண ஆகமச் செய்திகள் பலவுள. விரிக் கிற் பெருகுமாதலின் ஒரு குறிப்பினைக் காண்போம்.
சிலாத முனிவரும் சித்திரவதியும் பூரீசைல மலையில் புத்திர காமேஷ்டி வேள்வி செய்ய முற்பட்டு யாக பூமியை உழுதபொழுது தங்கப் பெட்டியில் ஒரு குழந்தை கிடைத் தது. அந்தக் குழந்தையிடம் சிவன் அம்சங்களான சடை முடி, முக்கண், நான்கு தோள்கள், சூலம், பரசு, கதை, வச்சிரம் ஆகிய படைக்கலன்களைத் தாங்கியவாறு வியத் தகு தெய்வ நல ஒளி காணப்பட்டது. அதற்குச் செபேசுவ ரர் என்ற திருப்பெயருடன் நந்தி (மகிழ்ச்சி எனும் பொருள்) என்றும் பெயரிட்டனர். அந்தக் குழந்தையே பெருந்தவமி யற்றிச் சிவனால் அதிகார நந்தியாகப் பெயர் பெற்றது. சிவன் ஆடல் புரிகையில் அதிகார நந்தி மத்தளமோ குடமுழவோ (பஞ்சமுக வாத்தியம்) வாசித்துப் பெருமை கூட்டி வருகிறார் என்பது புராணக்குறிப்பு திருமால் சந்நிதி யில் விசுவக்சேனர் போன்று, சிவபெருமான் சந்நிதியில் அதிகார நந்திக்குப் பெரும் சிறப்பு உண்டு.
நந்தி தேவரின் அவதாரச் சிறப்புக்கள் புராணச் செய்தி கள் வாயிலாகச் சிறப்பிக்கப்படுகின்றன. சாலங்காயனன் எனும் முனிவர் தமக்கு மகன் வேண்டும் என்று நெடுங்கால மாக திருமாலை நோக்கித் தவம் செய்தமையால் திரு மால் அவர் முன் தோன்றி காட்சி கொடுத்தார். பின் அவரிடமிருந்து சிவபெருமானைப் போன்ற ஓர் உருவம் தோன்றி முனிவருக்கு மகனாக அமைந்தது. அம்மகன் நந்திகேசுவரன் என்ற பெயர் பெற்றார். அவர் சிவனை
x இந்து சமய கலாசார அலுவல்கள் தி6ை00க்களம்

Page 85
நந்திகேஸ்வரர் (அதிகார நந்தி)
நோக்கிக் கடுந்தவம் புரிந்தார். அவருடைய தவத்தைப் பாராட்டி அவருக்குச் சிவ கணங்களின் தலைமைப் பதவியை சிவன் அளித்தார் என்பது ஒர் புராண மரபு ஆகும். “சிலாத’ என்ற கண்பார்வையற்ற முனிவர் இறை வனை நோக்கித் தமக்கு மகன் வேண்டித் தவம் புரிந்தார். சிவபெருமான் தாமே அவருக்கு மகனாகி 'நந்திகேசுவரர்” என்ற பெயர் கொண்டார் என்பது பிறிதொரு புராண மர பாகும். இவரைப் பற்றி பாகவத புராணம், விஷ்ணு தர்மோத்
இந்துக் கலைக்களஞ்சியம்
 
 
 

5 7
(
திர புராணம் ஆகிய நூல்களும் குறிப்பிடுகின்றன.
இராவணனைக் குரங்கால் உன் பட்டணமழிகவெனச் சபித்தவர். சர்வ சம்கார காலத்தில் சிவமூர்த்தியை அடைக் கலம் புகுந்து வாகனமானவர். கருடனை உச்வாச நிச்வாசத்தால் கர்வபங்கஞ் செய்ததால் பூமியில் பசவேசராகப் பிறந்து சிவபூசை செய்து கைலை அடைந்த வர். சிவாக்கி னையால் பிரமன் யாகசாலைக்குச் சென்று அவ்விடத்துச் சிவமூர்த்தியை நிந்தை கூறிய தக்கனைத் தலையறவும் இந்தச் சிவநிந்தை கேட்டிருந்த தேவர் பிறந் திறந்து சூரனால் வாதையடையவும் சாபமிட்டுத் திருக்கை லையடைந்தவர். இவர் தவமியற்றிப் பருவத ഖgഖ பெற்றுச் ரீபர்வதமாய்ச் சிவமூர்த்தியைத் தாங்கியவர். விஷ்ணு மூர்த்திக்குச் சிவமான்மியங் கூறியவர். இவ்வாறு நந்திதேவரின் பெருமைகள் கூறப்படுகின்றன.
சிவன், உமைக்கும் நாரதருக்கும் நந்திதேவனைப் பற்றி பின்வருமாறு கூறுகின்றார். "நந்திதேவன் பக்தியில் என் போன்றவன். தர்மமே வடிவானவன். சிவாயநம என்னும் உருவினன். ஒப்புவமையிலாத நான்கு வேதங்களையும் தன்னுடைய நான்கு பாதங்களாக உடையவன். உலகம் முழுவதும் பரந்து விரிந்திருக்கும் என்னை எப்பொழுதும் சுமந்து நிற்கும் வாகனமாகி அருமறைகளும் போற்றும் நற்பண்புகளுடன் கூடிய உருவமுடையவன். சிவனே நந்தி தேவர் தமக்கு இணையானவர்” இதனாலேயே சிவனை நந்தி எனப் போற்றி வழிபடும் மரபு உருவானது. சிவனு டைய பிரதோஷ வழிபாட்டிலும் நந்தி தேவரை வழிபடும் மரபும் சைவர்கள் மத்தியில் உள்ளது.
நந்திகேஸ்வரர் வசிஷ்ட மஹரிசியின் பெளத்திரியும் வியாக்ரபாத முனிவரின் புத்திரியும் உபமன்யு என்பவரது சகோதரியுமான 'சுயம் பிரியை என்பவளை மணந்தார். இத்திருமணம் திருமழைப்பாடி என்ற தலத்தில் நடைபெற்ற தென்றும் இறைவனே இதை முன்னின்று நடத்தி வைத்தாக வும் புராணங்கள் கூறுகின்றன. மயிலாடுதுறையில் வள்ள லார் கோயிலில் நந்தியின்மீது அமர்ந்துள்ள தட்சணா மூர்த்தியின் சிற்பம் உள்ளது. நந்தி தேவரின் ஆணவத்தை அடக்கி ஞான உபதேசம் செய்த இடம் இதுவேயாகும். சில கோயில்களில் நந்தி தேவர் கருவறைக்கு எதிரில்
缀
x இந்து சமய கலாசார அலுவல்கள் திைை0Oக்களம்

Page 86
இல்லாமல் சற்றுவிலகி அமர்ந்திருப்பார். அத்தகைய நந்தி விலகிய திருத்தலம் திருப்புன்கூர். இதுவே நந்தியை நந்தனார் விலகச் செய்த கோயிலாகும்.
இந்துக் கலைக்களஞ்சியம்
 

சிவன் நடனமாடும் போது இவர் சுத்தமத் தளம் எனப்படும் முழவு இசைக் கருவியை நந்திதேவர் வாசிப்பார். சிவன்கோயில் தலைவாசல் காக்கும் உரிமையையும்
பெற்றவர் திருநந்தி தேவரே ஆவார். (சு.து.)
தேவியுடன்
8 雛
ஐ இந்து சமய கலாசார அலுவல்கள் தி6ை00க்களம்

Page 87
555Grosul Défeub
சைமெய்யியற் சிந்தனாகூடங்களில் ஒன்றே நந்திகேஸ் வர சைவம், ஒருமைவாதச் சிந்தனையான இதன் ஸ்தாபகர் நந்திகேஸ்வரர். இவர் இயற்றியநூலின் பெயர் நந்திகேஸ் வர ஹாஷிஹா எனப்படும். நந்திகேஸ்வர ஹாஷிஹாவின் உரையாசிரியரான உபமன்யு தன்னுடைய தத்துவ விமர் சினியில் நந்திகேஸ்வரரின் புலமை மரபு பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
நந்திகேசர், பதஞ்சலி, வியாக்கிரபாதர், வசிட்டர் முதலா னோர் சிவனை நோக்கித் தியானம் செய்தனர். சிவன் தனது உடுக்குடன் இவர்கள் முன் தோன்றினார். உடுக்கின் சப்தம் 14 சூத்திரங்களாக ஒலித்தது. பாணிணியின் அஷட் டாத்தியாயில் இச்சூத்திரங்கள் தரப்பட்டுள்ளன. முனிவர் கள் இச்சூத்திரங்களின் பொருளை அறியமுடியாது. நந்தி கேஸ்வரரிடம் விளக்கம் கேட்பதற்காகச் சென்றனர். நந்திகேஸ்வரர் 26 செய்யுள்களாக அதனைக் கூறினார். இதுவே நந்திகேஸ்வர ஹாஷிஹா என அழைக்கப்படு கின்றது.
நந்திகேஸ்வர ஹாஷிஹாவிற்கு உரைகண்டவர் உப மன்யு, இவரது உரை "தத்துவ விமர்சினி” என அழைக்கப் படுகின்றது. உபமன்யு தரும் விளக்கத்திலிருந்து நந்தி கேஸ்வரர் 36 தத்துவங்களை ஏற்றுக்கொள்ளும் ஒருமை வாதச் சிந்தனையாளர் என்பதும் பரமசிவனை இத்தத்து வங்களிற்கு அப்பாற்பட்டவராகக் கருதினார் என்பதும் தெரிய வருகிறது. உபமன்யுவின் உரையில் காணப்படும் குறிப்புகளின்படி சைவ ஆகமங்கள் தொகுக்கப்பட்டு, அவற்றிற்கு உரை எழுதப்பட்ட காலத்தில் உபமன்யு வாழ்ந்தாராதல் வேண்டும். கி.பி. 9ஆம் றூற்றாண்டிலிருந்தே சைவ ஆகமங்களிற்கு உரை எழுதும் மரபு தொடங்கு கிறது. உரையாசிரியரான உபமன்யுவை சிறீபதி பண்டிதர் தனது சிறீகரபாடியத்தில் இரேவணசித்தர், மருளசித்தர் என்பவர்களுடன் இணைத்துக் குறிப்பிடுவதிலிருந்து உபமன்யு 14ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டவர் என நிச்சயப்படுத்தப்படலாம். நந்திகேஸ்வரர் பாணிணியின் சமகாலத்தவரென காந்திசந்திரபாண்டே தெரிவிக்கிறார்.
இந்துக் கலைக்களஞ்சியம் 毅
 

இவருடைய அபிப்பிராயப்படி நந்திகேஸ்வரரின் சிந்தனை களிலிருந்தே பிற்காலத்துச் சைவமெய்யியல்கள் வளர்ச்சி யுற்றன. லகுலீசரின் பாசுபதம் மற்றும் காஷ்மீர சைவ மெய்யியலாளர்களான சோமநாதர், கலாதர், உத்பலர், அபிநவகுப்தர், ஷேமராஜர் ஆகியோரின் சிந்தனைகளில் நந்திகேஸ்வரரின் ஒருமைவாதச் செல்வாக்கு காணப்படுகி றது. காஷ்மீர சைவம் என இன்று அறியப்படும் ஒருமை வாதச் சிந்தனையுடன் மிகவும் ஒத்ததாக நந்திகேஸ்வரரின் சைவ மெய்யியற் திட்டம் உள்ளதென்பதை மறுத்தலிய
6) Tg5l.
நந்திகேஸ்வர சைவம் அனுபூதிநெறி இயல்புடையது. முனிவர்களின் தவத்தால் சிவன் அவர்களிற்கு நேரில் தோன்றி மெய்மை எல்லா வகையீடுகளிற்கும் மேலானது என்ற உண்மையைப் போதித்து, அம்மெய்மையே அகம் என அறிவுறுத்தினார் எனக் கூறப்படுவதே நந்திகேஸ்வர சைவத்தின் அனுபூதிநெறிப் பாங்கைச் சுட்டும். அதாவது (1) அனுபூதிநெறிக்குரிய வாழ்க்கை, நடைமுறை ஆகிய வற்றால் அனுபூதி மான்களான முனிவர்கள் இறுதியும், நித்தியமுமான மெய்மையை அடைவதை இலக்காகக் கொள்ளுதல், (2) அனுபூதிநெறிக் காட்சியினாலேயே இம் மெய்மை அவர்களால் உணரப்படல், (3) தமது இலக்கை அடைவதற்கான தமது முயற்சியில் அசையா நம்பிக்கை கொண்டிருத்தல் ஆகிய மூன்று அனுபூதிநெறியின் அடிப்படைகளையும், அத்துடன் கூடவே அனுபூதி நெறிக் குரிய முற்கற்பிதங்களான மெய்மை. மறைபொருளாகும் இறைவனின் அருளால் அனுபூதிநெறிக் காட்சியினால், மறைபொருளான மெய்மையை உணரலாம் என்பதனையும் நந்திகேஸ்வர சைவம் ஏற்றுக் கொண்டிருப்பதிலிருந்து அதன் அனுபூதிநெறிப்பாங்கை உணர்ந்து கொள்ள முடிகிறது.
அனுபூதிநெறிச் சிந்தனைகள் ஒவ்வொன்றும் தமக்கே உரிய பெளதீகவதிதக் கோட்பாடுகளைக் கொண்டவை. ஆனால் அக்கோட்பாடுகளால் முன்மொழியப்படும் மெய்மை யானது அனுபூதிநெறிசாரா பெளதீகவதீதக் கோட்பாடுகளி லிருந்து சற்று வேறுபட்டது. இவற்றில் அனுபூதிநெறிசார் பெளதீகவதீதக் கோட்பாட்டின் கூறுகளாயிருக்கும் இறை
* இந்து சமய கலாசார அலுவல்கள் தி6ை00க்களம்

Page 88
வன் ஆன்மா பற்றிய விளக்கங்கள் எல்லாவகையான வகையீடுகளிற்கும் அப்பாற்பட்டதாக இருக்கும். ஆனால் அனுபூதிநெறிசாரா பெளதீகவதீதக் கோட்பாடுகளோ இறை வன், ஆன்மா பற்றிய கருத்துக்களைத் தமது வகையீட்டில் உள்ளடக்குவதுடன் அவற்றிற்கான விளக்கங்களை
காரணக் கோட்பாட்டின் அடிப்படையில் எடுத்துக்கூறும்.
முதலாவது சூத்திரமான மகேஸ்வர சூத்திரத்தில் நந்திகேஸ்வரர் பெளதீகவதித மெய்மையை பிரமத்துடன் முற்றொருமைப்படுத்துகிறார். அது குணங்கள் எல்லாவற் றையும் கடந்தது. எல்லாவற்றிலும் உள்ளடங்கியுள்ளது. எல்லாவகையான வாக்கிலும் உளது. பிரபஞ்சம் உட்பட எல்லாவற்றுக்கும் ஆதாரமாக உளது. அத்துடன் கூடவே தன் ஆற்றலால் தானே பிரபஞ்சமாக உளது. பிரமனின் இவ்வாற்றல் சிற்சக்தி என அழைக்கப்படும். அதனால் அது ஈஸ்வரன் என அழைக்கப்படுகின்றது.
சிற்சக்தி என்ற சொல் ‘மாயை' என இங்கு விளக்கப் படுகின்றது. இதிலிருந்து அத்வைத வேதாந்த மெய்யியல் கூறும் மாயை என்பதிலிருந்து நந்திகேஸ்வர சைவம் கருதும் மாயை வேறுபட்டதென்பது தெளிவாகிறது. அறியாமை அல்லது திரிபுக்காட்சியே அத்வைதம் கூறும் மாயை ஆகும். அது ஒரு உள்பொருள் அல்ல. ஏனைய சைவசிந்தனா கூடங்கள் கருதுவதுபோல, நந்திகேஸ்வர சைவமும் சக்தியிலிருந்து வேறுபட்ட மாயை இல்லை யென்பதை ஏற்றுக்கொள்வதுடன் 36 தத்துவங்களையும் ஏற்றுக்கொள்கிறது. ஆனால் நந்திகேஸ்வர சைவம் ஏற்றுக் கொள்ளும் 36 தத்துவங்களும் ஏனைய சைவசிந்தனா கூடங்கள் தெரிவிக்கும் 36 தத்துவங்களிலிருந்து சிறிது
மாறுபட்டவை.
சிற்சக்தியை மாயை என விளக்கும் உரையாசிரியர், அம்மாயை பிறிதொரு காரணத்தால் விளைவதெனக் கூறுகிறார். அதாவது நந்திகேஸ்வரர் கூறும் பிரமம் பிரகாசத் தைப் போன்றது. சிற்சக்தியிலிருந்தும் வேறுபட்டது. அதே வேளை ஒன்றிலிருந்து ஒன்றை வேறுபடுத்தவும் முடியாது. பிரமம் உலகத்தின் காரணமாகவும் அதன் ஆற்றலான
சக்தியே பிரஞ்சமாகவும் கூறப்படுகிறது.
இந்தக் கலைக்களஞ்சியம்*
 

நந்திகேஸ்வரர் மனோவிருத்தி என்ற கருத்தில் மாயை என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். மனோவிருத்தி என்பது உளத்தின் செயற்பாடுகள் என்ற கருத்தைக் கொண்டது. இறைவனால் வெளிப்படுத்துவது. பிரமம், சிற்சக்தி என்ற இரண்டிற்குமிடையிலான தொடர்பைக் கொண்டு, நந்திகேஸ்வரர் சைவம் இருமைவாதமாகும் என வாதிடப்படலாம். இதற்குப் பதில் கூறுவதுபோல இரண்டா வது சுலோகம் காணப்படுகிறது. பிரமம் என்பது உள மாகும். மாயை என்பது உளத்தால் வெளிப்படுத்தப்படும் செயற்பாடுகளாகும். பிரமன் செயற்படுவது, செயற்பாடுகள் வெளிபாடுகளாகும் செயலின் வெளிப்பாடு இல்லாது செயல் இல்லை. சந்திரனும் அதன் ஒளியும்போல அல்லது சொல் லும், பொருளும் போல இரண்டையும் ஒன்றிலிருந்து ஒன்றை வேறுபடுத்த முடியாது.
ஒருமைவாதியான நந்திகேஸ்வரர் இலக்கணத்தின் மெய்யியல் போன்ற ஒன்றை ஸ்தாபிக்க முயன்றார் போலத்தெரிகிறது. நாகேசபட்டரைப்போல, நந்திகேஸ்வர ரும் ஆகமங்களின் செல்வாக்காற் பிரமத்தை 'பரா என்பது டன் முற்றொருமைப்படுத்தியதுடன், அதனை சித்தி எனப்ப டும் ஞானாப்திமாத்திரையாகக் கருதினார். பதஞ்சலி தனது யோக சூத்திரத்தில் அகத்தின் இன்றியமையா இயல்பு என்பதை விளக்கும்பொழுது சித்தி, திருஷ்டி என்ற இரு சொற்களைப் பயன்படுத்தினார். அகம் பற்றிய பதஞ்சலி யின் விளக்கம் காஷ்மீர சைவத்தில் உள்ளதைப் போன்
றதே என உத்பலர், அபிநவகுப்தர் ஆகியோர் கருதினர்.
இவ்விளக்கத்தை நாம் ஏற்றுக்கொள்வோமாயின், ஞானாப்தி சித்தியைக் குறிப்பதாகவும், அது அகத்தின் இன்றிய மையா இயல்பு என்றாவதுடன், ஏலவே சிற்சக்தி பற்றிக் குறிப்பிட்ட உவமையான சந்திரனும், அதன் ஒளியும்போல் பிரிக்கவொண்ணாதது என்பதுடன் ஒத்துப்போவதையும் கண்டுகொள்ளலாம். அதாவது பிரமத்திற்கும் அதன் சக்தி க்கும் வேறுபாடில்லை என்பது பெறப்படும். இதன்படி நந்தி கேஸ்வர சைவம் ஒருமைவாதச் சிந்தனை என்றும், அங்கு உளத்திற்கும் அதன் செயற்பாட்டாற்றலிற்கும் சிவனுக்கும், சிவனுக்கும் சக்திக்கும், பிரமத்திற்கும் சிற்சக்திக்கும் இடையில் வேறுபாடில்லை என்பது பெறப்படும்.
&இந்த சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 89
பிரபஞ்சத்திற்கும் பிரமனுக்கும் இடையிலான தொடர்பு படைத்தவனுக்கும், படைக்கப்பட்டதிற்கும் இடையிலுள்ள தொடர்பு போன்றதல்ல. குயவனும், அவனால் வனையப் பட்ட பானையும் வெவ்வேறாக இருப்பது போலல்லாது உலகமும் பிரமனும் வெவ்வேறான இருப்புடையன அல்ல. உலகம் பிரமத்தின் உள்ளுறை ஆற்றலின் வெளிப்பாடே யன்றி வேறல்ல. தன் உள்ளுறைந்ததுவும், நிர்குணமும் சார்குணமும் முற்றொருடையுடையன. முன்னதன் வெளிப் பாடே பின்னதாகும். எல்லாத் தத்துவ வகையீடுகளும் பிரமத்தின் வெளிப்பாடேயாம்.
தந்திகேஸ்வரர் 36 தத்துவ வகையீடுகளை ஏற்றுக் கொள்கின்றார். அவையாவன 1 சிவன், 2 சக்தி, 3 ஈஸ் வரன், 4 தொடக்கம் 28 வரையில் சாங்கியர் கூறும் ஐம் பூதங்கள், இந்திரியங்கள் முதலான 25 தத்துவங்களும், 29 தொடக்கம் 33 வரையில் பிராணன் முதலான ஐந்து வகை வாயுக்கள், 34 தொடக்கம் 36 வரையில் சத்துவம் முதலாக மூன்று குணங்கள் என தத்துவம் 36 ஆகிறது. பரமசிவன் இத்தத்துவ வகையீடுகளிற்கு அப்பாற்பட்டவர்
என்பது நந்திகேஸ்வர சைவத்தின் நிலைப்பாடாகும்.
(3BT( )
jgilly GilgyörgDUT5Jb
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து இரண்டு கிலோ மீற்றர் தொலைவில் நந்திபுர விண்ணகரம் என்னும் இத்தலம் அமைந்துள்ளது. நாதன் கோவில் என்றும் தட்சிண சகந்நாதம் என்றும் இது கூறப்படுகின்றது.
தர்மத்தின் சின்னங்களாக கருதப்படுவன பசு மற்றும் பால் ஆகியவை ஆகும். பசுவினம் தழைக்கவும் அதில் பால் வளம் சுரக்கவும் உறுதுணையாய் காளை இருக்கின் றது. இக்காளை வடிவத்தில் சிவபெருமானுக்கு வாகன மாக நந்திதேவர் விளங்குகின்றார். இவர் சிவனடியார்களின் தலைவராகவும் வாயில்காப்பாளராகவும் விளங்குகின்றார். இவர் பக்தியில் தலைசிறந்தவர். குரங்கு ஒன்றால் இலங்கை அழிந்துவிடும் என்று சாபம் இட்டவர் இவரே. சிவபெரு மானை அவமதிக்கும் வகையில் நடத்திய தக்கனின்
யாகத்தில் நுழைந்து தக்கனின் தலை அறுபட்டு விழவும்
இந்துக் கலைக்களஞ்சியப்
滚魏
 

1
யாகத்திற்கு துணையாய் இருந்த தேவர்கள் சூரபத்மனால் வதைபடவும் சாபம் இட்டவர். இந்நந்தியம் பெருமான் இத்தலத்தில் எம்பெருமானை நோக்கி தவமிருந்து அருள் பெற்றமையால் இத்தலம் நந்திபுர விண்ணகரம் எனப் பெயர் பெற்றதாக புராணம் கூறுகின்றது. நந்தி என்ற அரசன் ஏற்படுத்திய ஊர் ஆதலால் இப்பெயர் பெற்றதாக 6)լtt) கூறுவர். "நந்தி பணி செய்த நகர்” என்றார் திருமங்
கையாழ்வார்.
இத்தலத்தின் மூலவர் ஜெகந்நாதர் செண்பகவல்லி தாயாரோடு மேற்கே திருமுக மண்டலத்துடன் வீற்றிருந்த திருக்கோலத்தில் இங்கு எழுந்தருளியிருக்கின்றார். இங்கு நந்திக்கும் சிபிச் சக்கரவர்த்திக்கும் வெளிப்பட்டருளினார்.
சூரியகுல வேந்தனாகிய சிபிச் சக்கரவர்த்தியின் முன்பாக வேடனாக தேவேந்திரனும் புறாவாக அக்கினி தேவனும் மாறிவந்தனர். வேடன் புறாவினைத் துரத்திக் கொண்டுவர புறா சிபிச் சக்கரவர்த்தியிடம் வந்தடைந்தது. வேடன் புறாவைத் தன்னிடம் கொடுத்திடக் கேட்டபோது சிபிச் சக்கரவர்த்தி மறுத்து தன் சதையை அறுத்து புறாவின் இறைச்சி எடைக்கு நிகராகத் தருவதாக சம்மதித்து பின்னர் தானே தராசில் ஏறி அமர்ந்து தன் வாக்கை காப்பாற்றியதாக ஐதீகங்கள் கூறுகின்றன. கிழக்குப் பக்கமாய் இருந்த புறா தட்டும் மேற்குப் பக்கமாய் இருந்த சிபி சக்கரவர்த்தி ஏறி அமர்ந்த தட்டும் சமமான அதிசயத்தைக் காணவேண்டியே இத்தலத்து எம்பெருமான் கிழக்கில் இருந்து மேற்குமுகமாக வீற்றிருந்த கோல சேவையைத் தந்தார். கிழக்கில் நின்ற இந்திரன் மற்றும் அக்கிணிதேவன் ஆகியோருக்கு கிடைத்திடாத சேவை சிபிச் சக்கரவர்த்திக்குக் கிடைத்தது.
நாரதர் சபித்த காரணத்தால் செண்பகமலர் பூஜை வழி பாட்டுக்கு உகந்தது அல்ல என்று இருந்தாலும் இத்தலத்து தாயாரே செண்பகவல்லித் தாயாராக பெயர் பெற்றிருக் கின்றார். இங்குள்ள மந்தார மரத்தில் விநாயகப் பெருமான் எழுந்தருளியதாக புராணத்தின் வாயிலாக அறிகின்றோம். இத்தலத்து விமானம் மந்தார விமான அம்சமாகும்.
திருமங்கையாழ்வார் தமது பெரிய திருமொழியில் பத்துப் பாசுரங்களால் இத்தலத்தை மங்களாசாசனம் செய்து
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 90
ள்ளார். இவர் தமது ஒன்பது பாடல்களிலும் 'நந்திபுர் விண்ணநகரம் நண்ணு மனமே" என்று தம் திருவுள்ளத்தை நோக்கிக் கூறுவதன் மூலம் எல்லோரையும் இந்த திவ்விய தேசத்தை அடைந்து எம்பெருமானது அருளைப்பெற அழைக்கின்றார். ”மண்ணில் இது போல நகரில்லை என வானவர்கள் தாம் மலர்கள் தூய் நண்ணி உறைகின்ற நகர் நந்திபுர விண்ணகரம் நண்ணுமனமே". பூலோகத்தில் எழிலுடைய திவ்விய தேசம் இதுபோல் மற்றொன்றில்லை எனக் கூறிக்கொண்டு தேவர்கள் இத்தலத்தை அடைந்து எம்பெருமான் திருவடிகளில் தூய்மையான மலர்களைத் தூவி வழிபடுவராம். “சிறை கொள் மயில் குயில் பயில மலர்கள் உக அளி முரல அடிகொள் நெடுமா நறைசெய் பொழில்’ என்று சிறகையுடைய மயில்களும் குயில்களும் நெருங்க அதனால் பூக்கள் உதிர, வண்டுகள் ஆளத்தி வைக்க உயர்ந்திருக்கும் மாமரங்களில் தேன் பெருக சேலை விளங்குகின்றது என்று நந்தபுரவிண்ணகரத்தின் சோலை வனப்பை வர்ணிக்கின்றார் திருமங்கையாழ்வார். இந்திரியங்களுக்கு வசப்பபட்டு சிற்றின்பக் கலவியை சிந்திக்காமல் நந்திபுர விண்ணகரத்தை நாடும்படி வேண்டு
கின்றார் பிள்ளைப் பெருமாளையங்கார்.
"செயற்கரிய செய்வோமைச் செய்யாமல் நெஞ்சே மயக்குவார் ஐவர் வலியால் - நயக்கலவி சிந்திபுர விண்ணகரம் என்பர் திருச்செங்கண்மால்
நந்திபுர விண்ணகரம் நாடு” (தே.ஹ.)
löögisujLogi - II
பல்லவர்களைப் பொறுத்தவரையில் ஆட்சியுரிமை பரம்பரை வழியானது. தந்தைக்குப்பின் அரசுரிமை மூத்த மகனுக்குரியதாகும். இரண்டாம பரமேஸ்வரவர்மன் இறந்த பின் நாட்டிலே அரசியல் நெருக்கடியொன்று உருவாகியது. அத்தருணத்திலே காஞ்சிபுரத்துக் கடிகையாரும் நகரத்தாரும் உயரதிகாரிகளும் பல்லவ வம்சத்துக் கிளை மரபினைச் சேர்ந்த ஹிரண்யவர்மனிடம் சென்று முறைப்பாடு செய்து, அவனுடைய இளைய மகனை அரசனாக முடி சூட்டினார்கள். ஹிரண்யவர்மனின் மகனாகிய இளைஞ
னைக் காஞ்சிபுரத்திலே அரசனாக்கிய பொழுது அவனுக்கு
இந்துக் கலைக்களஞ்சியம் 簽綠懿綠 6

2
'நந்தி வர்மன்” என்னும் பட்டப்பெயரைச் சூட்டினார்கள்.
'நந்திவர்மன் அபிஷேகஞ் செய்து' என அவனைப் பற்றிவரும் சாசனத் தொடரால் இதை அறிய முடிகின்றது. காசக்குடிப்பட்டயம் இப்பல்லவ அரசகுடியில் ஏற்பட்ட மாற்றத்தை உறுதிப்படுத்தத் துணையாக இருக்கின்றது.
பல்லவ அரசு ஆட்சியில் நந்திவர்மனின் 65 ஆண்டு ஆட்சிக்காலம் ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கின் றது. இவனுடைய ஆட்சிக்காலத்தில் பல்லவ பாண்டிய பகைமை ஏற்பட்டது. இராஷ்டகூடருடன் தொடர்புகள் ஏற்பட்ட அதேநேரம் சாளுக்கியர்களுடன் போரும் நடை பெற்றுள்ளது.
சித்திரமாயனுக்கு உரிமையாக கிடைக்க வேண்டிய அரசுப் பதவி கிடைக்காமையால், அவன் பாண்டிய மன்னன் பராங்குசமாறவர்மனுடன் கூட்டுச் சேர்ந்து நந்திவர் மனை எதிர்த்தான். காவிரி ஆற்றின் வடபகுதியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் போர் நடைபெற்றது. இப்போரின்போது நந்திவர்மன் நந்திபுரம் கோட்டையிலே ஒளிந்துகொண்டபோது பாண்டியர்களால் அக்கோட்டையும் முற்றுகையிடப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் பல்லவ மன்ன னின் படைத்தலைவன் உதயசந்திராவால் இம்முற்றுகை முறியடிக்கப்பட்டது. நந்திவர்மனும் அவனுடைய படையும் பாண்டியர்களை நிம்பவனம், சுதாவனம் சங்கிரகிராமம் சுரவாலுத்தூர் ஆகிய இடங்களில் தோற்கடித்தார்கள். இதனை சில வரலராற்றாசிரியர்கள் வேறுவிதமாகக் கூறு கின்றார்கள். உண்மையில் நந்திவர்மன் பராங்குச மாறவர் மனுக்கு பின்னர் அரசு எய்திய பராந்தக நெடுஞ்சடைய னுடன் தான் போரிட்டான் என்பர்.
வடக்கே சாளுக்கியர்களுக்கும் தெற்கே பாண்டியர் களுக்கும் இடையே பல்லவ அரசு சிக்கித் தவித்தது. இதனால் பல்லவன் பாண்டியர்களுடன் போரிட்டான் என்பர். சேரர், கொங்குநாடு, தகடூர் மன்னர்களுடன் கூட்டணி சேர்ந்து பல்லவ மன்னன் போரிட்ட போதிலும் பாண்டியர் களைத் தோற்கடிக்க முடியவில்லை. (ol JT605600TT3BL" போரிலே பாண்டியர்கள் பல்லவர்களைத் தோற்கடித்து
பல்லவ நாட்டினுள் புகுந்து சேதம் விளைவித்தனர்.
綠線@ö函50u 56DT5町9gal656竹geoarT556Tá

Page 91
ஆனால் இரண்டாம் நந்திவர்மன் கங்க அரசன் பூரீபுரு ஷாவை தோற்கடித்து அவனிடமிருந்து கலிங்க நாட்டுப்
பகுதிகளைக் கைப்பற்றினான்.
2ஆம் நந்திவர்மனின் காலத்தில் சாளுக்கிய மன்னன் 2ஆம் விக்கிரமாதித்தன் பல்லவ அரசின்மீது படையெடுத்து நந்திவர்மனைத் தோற்கடித்து காஞ்சியைக் கைப்பற்றி னான். விக்கிரமாதித்தன் காஞ்சியைக் கைப்பற்றியபோது அவ்வாறு செய்யாமல் நன்கொடைகள் கொடுத்து வைகுந் தப் பெருமாள் கோயிலைப் பேணினான் என்பர். இவ்வாறு செய்தமைக்கு காஞ்சி வைகுந்தப் பெருமாள் ஆலயமே காரணம் எனக் கூறப்படுகின்றது. இது பல்லவர் காலத்துக் கோயில்களில் மிகப் பெரியதாகும். கலைவனப்பு மிகுந்ததாகவும் இது அமைந்துள்ளது. தென்னிந்தியக்கலை வரலாற்றைப் பொறுத்தவரையில் பரமேஸ்வர விண்ணகரம் பல சிறப்பம்சங்களின் நிலைக் களமாக விளங்குகின்றது. பிற்காலத் தென்னிந்திய கோயில்களில் சிறப்பம்சமாக விளங்கும் திருச்சுற்று மாளிகை அதிலேதான் முதன் முதலாக இடம்பெறுகின்றது. முத்தளக்கருவறையும் முதன்முதலாக இடம்பெற்றுள்ளது. திருமாலின் பலவகை யான திருக்கோலங்களையும் பல்லவரின் வம்சாவளியினை யும் சமகாலத்து சம்பவங்களையும் சிற்பக்கோலத்தில்
வடிவமைத்துள்ளனர்.
2ஆம் நந்திவர்மன் வைணவ சமயத்தைப் பின்பற்றினான். திருமங்கையாழ்வார் இவர் காலத்து வாழ்ந்தவரும், அவன் வெற்றியினைப் புகழ்ந்து பாடியவருமாவார். திருமங்கையாழ் வார் தம்முடைய நந்திபுரவிண்ணகரம், பரமேசுவர விண்ணகரம் பற்றிய பாடல்களில் இம்மன்னனுடைய
வைணவப் பற்றைப் புகழ்ந்து பாடியிருக்கின்றார்.
நந்திவர்மன் வைதீக கல்விக்கு பேருதவியளித்தான். அவன் காலத்தில் கடிகைக் கல்வி நிலையங்கள் பெரும் கொடைகள் பெற்றன. பிராமணர்களும் பேருதவி பெற்றார் கள். நந்திவர்மன் காலத்து சாசனங்கள் கிரந்த தமிழில் எழுதப்பட்டன. (தே.ஹ.)
இந்தக் கலைக்களஞ்சியம்
 

நந்திவர்மன்-III
பல்லவ அரசன் நந்திவர்மனுக்கு கடம்ப நாட்டு இளவரசி யின் மூலம் பிறந்தவன் மூன்றாம் நந்திவர்மன். இவன் தன் தந்தையைவிடத் திறமைசாலி எனப் போற்றப்பட்டான். இவன் ஆட்சிக்காலம் கி.பி. 847 - 869 வரையான காலப் பகுதியாகும். இவனின் அரிய சாதனைகளைப் பாடும் இலக்கியமாக நந்திக் கலம்பகம் திகழ்கிறது.
இவன் காலத்தில் தெற்கிலிருந்த பாண்டியர்கள் வலிமை பெற்றுப் பல்லவர்களைத் தாக்கினர். பாண்டியர்கள் பல வெற்றிகளைக் கண்டனர். பல்லவ நாட்டின் தென்பகுதிக ளைத் தமதாக்கிக் கொண்டனர். எனவே மூன்றாம் நந்திவர் மன் இராஷ்டகூடர், கங்கர் போன்றவர்களின் துணை கொண்டு பூரீமாற பரீவல்லவனைத் தெள்ளாற்றில் தேற் கடித்தான். இதனால் 'தெள்ளாற்றெறிந்த நந்திப் போத்தரையன்' என்ற புகழைப் பெற்றான்.
சோழநாட்டினைத் தனது நாட்டுடன் இணைத்தான். பல்ல வர்களின் வலிமையை மீண்டும் ஒரு முறை நிலைநாட்டிய பெருமை 3ஆம் நந்திவர்மனைச் சாரும். இவ்வெற்றிகள் மூலம் தன் நாட்டின் வடக்கிலும் தெற்கிலும் பகைவர்களை
ஒடுக்கிப் பேரரசனாக விளங்கினான்.
மூன்றாம் நந்திவர்மன் கடல் கடந்த நாட்டிலும் தன் செல்வாக்கைப் பரப்பினான். வலிமையான கடற்படையின் துணைகொண்டு தென்கிழக்காசிய நாடுகளுடன் வாணிபத் தொடர்பைப் பெருக்கினான். வாணிபம், சமயம், கலை, பண்பாடு என்பனவும் இந்நாடுகளில் பரப்பப்பட்டது. 3ஆம் நந்திவர்மன் பெயரால் சயாம் நாட்டில் "அவனி நாராயணம்” என்ற பெருமாள் கோயில் எழுப்பப்பட்டது. சயாமில் உள்ள தகுவா - பாவில் கிடைத்த கல்வெட்டில் இது தொடர்பான
குறிப்புக்கள் உள்ளன.
இவனுடைய அறப்பணிகள் மூலம் சிற்றுார்கள் தேவதான கிராமங்களாக கொடையளிக்கப்பட்டன. நான்மறையாளர்
களுக்கு பிரமநேயங்கள் வழங்கப்பட்டன. இவனுடைய
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்கணம்

Page 92
பணிகள் குறித்து. “கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமாள்” என்று சுந்தரரும் “நாடு அறநெறியில் வைக நன்னெறி வளர்த்தான்” என்று சேக்கிழாரும் புகழ்ந்து UTIqueiróT60T. (தே.ஹ.)
jÜLIGOÖGDOTOTij
இவர் கடைச்சங்கம் மருவிய காலப் பகுதியில் வாழ்ந்த வர். பரிபாடலில் குமரப்பெருமானைப் பாடியவர். பண் பாடுவ தில் வல்லவராய் விளங்கியதனால் பண்ணனார் என்ற பெயர் அமைந்திருக்கலாம். இப்பெயரின் பண்டை வழக் குண்மை “சிறு குடிக்கிழான் பண்ணன்' என வரும் வள்ளல் பெயராலும் அறியப்படும். பண்திறம் அறிவது மட்டுமல்லா மல் பண்ணயம் உடையவராதலாலும் இப்பெயரினைப்
பெற்றாராகலாம்.
"புலத்தினும் போரினும் போர் தோலாக் கூடல்' எனக் கூடலின் மாண்பையும் 'அறம் பெரி தாற்றி அதன் பயன் கொண்மார், சிறந்தோர் உலகம் படருநர்’ என அறத்தின் தன்மையையும் பரங்குன்றத்து மாடமருங்கில் மால்மருகன் திகழும் மங்கல நிலையையும் காட்டும் அழகு வியத்தற்
குரியன.
அடியவர்க்கு இன் வாழ்வையும், துறக்க வாழ்வையும் தருகின்றவன் கடம்பமர் வேலனே என்று கூறும் இப்பாடலில் பரங்குன்றத்துப் பெருமையையும் பாண்டியனின் முருக பக்தியையும் பாராட்டுகின்றார் புலவர். பாண்டியனின் கூடலின் பெருமையை அறிவாற்றலாற் செய்யப்படும் சொற் போர்களிலும் உடலாற்றலாற் செய்யப்படும் மறப்போர்களி லும் தோல்வியே அறியாத கூடல் "புலத்தினும் போரினும் (8 ார்தோலாக் கூடல்” மட்டுமல்ல இரவில் மகளிரோடு விளைக்கும் கலவிப் போரிலும் தோலாதவர் என்று சிறப்பா கக் குறிப்பிடும் இடம் புலமைச் சிறப்பைத் தெரிவிக்கும்
இடமாகும். (6) .606).)
இந்துக் கலைக்களஞ்சியம்
 

Hüllgjiang
கண்ணபிரானுக்கு மனைவியர் எண்மர். அவர்களில் ஒருத்தி நப்பின்னை. ஏனையோர் ருக்மணி, சத்தியபாமை, ஜாம்பவதி, காளாந்தி, மித்திரவிந்தை, சுபத்திரை, லஷ் மணை ஆகியோர். நச்சினார்க்கினியர் சீவகசிந்தாமணிக் குத் தான் எழுதிய உரையில் பின்னை என்பதை இவளது இயற்பெயர் என்று குறிப்பிட்டுள்ளார். பின்னை என்னும் சொல் சிறப்புக்கருதி நப்பின்னை என வழங்கலாயிற்று என்று கருத இடமுண்டு.
நப்பின்னை மிதிலை நகரில் வாழ்ந்த கும்பகன் என்னும் ஆயனின் மகள். கும்பகனின் பசுக்கூட்டத்தினுள் 'கால நேமி என்னும் அரக்கனுடைய மக்கள் காளைகளாக இருந்து வந்தனர். அம்மாயக் காளைகள் மக்களுக்கும் ஆனிரைகளுக்கும் பல துன்பங்களைக் கொடுத்து வந்தன. அந்நாட்டு மன்னன் அக்காளைகளைக் கொல்வதற்கு வீரர் களை அனுப்பினான். அவர்கள் காளைகளைக் கொல்ல முடியாமல் திரும்பினர். கும்பகன் காளைகளைக் கொல்வோ ருக்குத் தன் மகளைத் திருமணம் செய்து வைப்பதாக அறிவித்தான். கிருஷ்ணன் பலராமனோடு சென்று அக் காளைகளைக் கொன்று நப்பின்னையை மணந்தான் என்பது ஒரு கதை.
அயோத்தியின் அரசன் நக்னஜித்து. அவனுக்கு நப்பின்னை என்ற பெண் இருந்தாள். அவளுடைய மறுபெயர் சத்தியவதி மன்னர்கள் பலர் அவளை மணம் முடிக்க விரும்பினர். மன்னனை அணுகிக் கேட்டனர். ஒருவரை விடுத்து மற்றொருவருக்குக் கொடுத்தால் விரோதம் வரும் என்று எண்ணிய மன்னன், யசோதையின் சகோதரன் கும்பன் என்பவனிடமிருந்து ஏழு காளைகளைக் கொண்டு வரச் செய்தான். இக்காளைகள் ஏழையும் அடக்குபவர் களுக்கே தன் மகள் உரியவள் என்று அறிவித்தான்.
மன்னர்கள் பலர் முயன்றும் தோல்வியுற்றனர். இச்செய் தியை அறிந்த கிருஷ்ணன் அயோத்திக்கு வந்தான். நக்னஜித் அவனை வரவேற்றான். கிருஷ்ணனின் பேரழ கைக் கண்ட நப்பின்னை அவனையே மணாளனாக அடையவேண்டும் எனப் பிரார்த்தித்தாள். காளைகள் ஏழை யும் அடக்கிய கிருஷ்ணன் நப்பின்னையை மணம் புரிந்து கொண்டான்.
இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 93
அருள்தாசர் இயற்றிய பாகவதத்தில் நப்பின்னையின் திருமணம் பற்றிக் கூறப்பட்டுள்ளது. திருமண வைபவத் தைக் கொண்டாடும் வகையில் நகரம் முழுவதும் விழாக் கோலம் பூண்டது. எங்கும் சங்குகளும் மத்தளங்களும், வேறு பல இசைக் கருவிகளும் முழங்கின. கற்றறிந்த பிராமணர்கள் புதுமணத் தம்பதியர்களுக்கு ஆசிகளை வழங்கினார்கள். மனம் மகிழ்வுற்ற மக்கள் வண்ண வண்ண ஆடைகளையும் ஆபரணங்களையும் அணிந்து அழகுற விளங்கினார்கள். மன்னன் நக்னாஜித் தன் மகளுக்கும் மருமகனுக்கும் பல வெகுமதிகளை வழங்கினான் என
அந்நூல் குறிப்பிடுகின்றது.
நிலமகட்குக் கேள்வனும் நீள்நிரை நப்பின்னை
இலவு அலர்வாய் இன் அமிர்தம் எய்தினான்
எனச் சீவகசிந்தாமணியில் கூறப்பட்டுள்ளது. நப்பின்னையை மணக்கவிருந்த அரசகுமாரர்கள் கிருஷ்ணன் எருதுகளை அடக்கி அவளை மணம் புரிந்து செல்கிறான் என்று கேள்விப்பட்டதும் பொறாமைகொண்டு கிருஷ்ணன் துவார கைக்குச் செல்லும் வழியில் படைகளுடன் சூழ்ந்துகொண்டு தாக்கினர். அவ்வேளையில் கிருஷ்ணனின் மிகச் சிறந்த நண்பனான அர்ச்சுனன் அவர்களைத் தன்னந்தனியாக விரட்டியடித்து கிருஷ்ணனும் நப்பின்னையும் துவாரகை யில் இனிதே இருக்க உதவினான். (நிநி)
நம்பாடுவான்
வைணவத் திருத்தலங்களில் திருக்குறுங்குடி என்னும் திவ்விய தேசம் தென்பாண்டி நாட்டிலுள்ளது. அங்கு திருக் குறுக்குடி நம்பி நின்றும் இருந்தும் கிடந்தும் மலைமேலும் பல திருக்கோலங்களில் சேவை சாதிக்கிறார். இத்திருத் தலத்தைப் பற்றி வராக மகாபுராணத்திலே ஒரு வரலாறு உள்ளது. முற்காலத்திலே இந்தத் திருத்தலத்தில் 'அரிசன வகுப்பைச் சேர்ந்த ஒரு திருமாலடியார் வாழ்ந்து வந்தார். அவர் பாடுவதில் வல்லவர். அதனால் எம்பெருமா னாலேயே நம்மைப்பாடுவான்’ என்று அபிமானிக்கப் பெற்
றார். அதுவே காரணமாகப் பிற்காலத்தில் நம்பTடுவான்
இந்துக் கலைக்களஞ்சியம் 3 :-- . . ". 、黏

என்றே வழங்கப் பெற்றார். அவர் ஒவ்வொரு ஏகாதசி இரவிலும் கோயிலுக்கு வெளியிலிருந்து கொண்டு விடியும் வரை நம்பியைக் குறித்துப் பாடுவதை விரதமாகக் கொண்டிருந்தார். ஒரு கார்த்திகை வளர்பிறை ஏகாதசி யன்று அவர் பாடச் செல்லும்போது, அந்தணனாயிருந்து யாகத்திலே தவறு செய்கையாலே மரணமடைந்து இராட்சச னாகப் பிறந்த ஒரு பிரம இராட்சசன் பசிப்பிணியாலே அவரைக் கொன்றுண்ண விரும்பிப் பிடித்துக் கொண்டான். அவர் தம்முடைய விரதத்துக்கு ஊறு நேராதபடி எம்பெரு மானைப் பாடுவதற்காகத் தம்மை விடுவிக்குமாறும், பாடி முடித்தவுடன் அவனிடம் வருவதாகவும் கூறினார். அரக்கன் தயங்கினான். அவனை நம்ப வைப் தற்காக அவர் பல சபதங்களைச் செய்தார். 'உன்னிடம் நான் திரும்பி வராமலிருந்தால் சிறீமந்நாராயணனை விட்டு வேறு தெய்வங்களைப் பூசித்தவர்களடையும் கதியையும், சிறீமந்நாராயணனை மற்றத் தெய்வங்களோடு ஒத்தவனாக எண்ணுகிறவர்களடையும் பாபத்தையும் அடையக் கடவேன்' என்பது அவர் செய்த கடைசி சபதம். இந்தச் சபதங்களைக் கேட்ட அரக்கன் நம்பாடுவானைப் பாடுவதற் காகச் சென்றுவர அனுமதித்தான். நம்பாடுவானும் எம்பெரு மானைப் பாடி அவனருள் பெற்று அரக்கனிடம் திரும்பி வந்தார். அரக்கன் இன்றிரவு நீ பாடியதின் புண்ணியப் பயனை எனக்குக் கொடுத்து எனது அரக்கப் பிறவியை நீக்கினால் நீ உயிர் தப்பலாம்' என்று ஆசை காட்டிப் பTர்த்தான். அவர் அவனுடை ஆசை வார்த்தைக்கு
மயங்கவில்லை.
உடனே அரக்கன் அவரைச் சரணடைந்து 'ஒருபாட்டின் புண்ணிய பயனையாவது வழங்கி என் அரக்கப் பிறவியை நீக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். அதற்கி சைந்து நம்பாடுவான் அன்றிரவு பாடிய கைசிகம் என்னும் பண்ணின் புண்ணியப் பயனை அரக்கனுக்களித்தார். அதனால் அரக்கன் நற்கதியடைந்தான். நம்பாடுவானும் காலக்கிரமத்தில் பரமபதமடைந்தார். இந்த வரலாற்றைக் குறிக்கும் வகையில் திருமால் திருக்கோயில்களனைத்தி லும் கைசிக ஏகாதசி என்று வழங்கப்பெறும் கார்த்திகை சுக்கிலபட்ச (வளர்பிறை) ஏகாதசி பெரிய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. கைசிகபுராணம்' என்று வழங்கப்
பெறும் இட் ராணமும் சிறீபராசரப்பட்டரருளிய உரையுடன்
&ËSI TOU 56VIT BITIJ glapjaj6936 56ooTë856Të

Page 94
எம்பெருமான் திருமுன்பே வாசிக்கப் பெறுகிறது. திருக் குறுங்குடியில் கைசிக ஏகாதசியன்று கோயிலில் இவ்வர லாறு நாடகமாகவும் நடிக்கப் பெறுகிறது. (எஸ்.கி.)
jibLa5TL5bL
பன்னிரு சைவத் திருமுறைகளுள் ஒன்பதாவது திரு முறையாக விளங்குவன திருமாளிகைத் தேவர் முதல் சேதிராயர் ஈறாக ஒன்பதின்மர் பாடியருளிய 288 திருப் பாடல்களைக் கொண்ட திருவிசைப்பாவும் அவ்வொன்பதின் மருள் ஒருவராகிய சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு மாகும். இவ் ஒன்பதிமரில் ஒருவரே திருவிசைப்பா பாடிய நம்பிகாடநம்பி. இவர் பூந்துருத்தி நம்பிகாடநம்பி எனவும் அழைக்கப்படுவார். திருப்பூந்துருத்தியில் வாழ்ந்தமையால் இவ்வாறு அழைக்கப்பட்டார். நல்லூர்ப் பெருமணத்தில் சம்பந்தர் கைப்பிடித்த மணமகளின் தந்தையார் நம்பியாண் டார் நம்பி, பதினாறாம் நூற்றாண்டில் திருமுறைகளைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி. பின்னர் பதின்மூன்றாம் நூற்றாண்டில் திருவிளையாடற் புராணம் பாடியவர் பெருப்பற்றப்புலியூர் நம்பி என்பவர். இவ்வாறாக நம்பி என்ற பெயர் வழக்கில் இருந்துள்ளது. நம்பி என்பது பொதுவாக ஆடவருள் சிறந்தவனைக் குறிக்கும் சொல்லாகும். நம்பி என்பது ஒரு பொதுச்சொல் என்பது இங்கு பெறப்படுகின்றது.
நம்பிகாடநம்பி தன்னைப் பூந்துருத்தி நாடன் எனவும் குறிப்பிடுகின்றார். கண்ணப்பருடன் வேட்டைக்குச் சென்ற தோழருள் ஒருவர் பெயர் காடன் என்பதும் கருதத்தக்கது. இவரை நம்பி காடவர்கோன் எனவும் குறிப்பிடுவர். முதல் இராசாதிராசனுடைய முப்பத்திரண்டாம் ஆட்சியாண்டில் பாறிக்கப்பட்ட திருவையாற்றுக் கல்வெட்டு ஒரு குறிப்புத் தருகின்றது. “ஒலோக மாதேவீச்சுரத்து ஸ்தானமுடைய சேத்திரசிவம் பண்டிதருக்காக திருவாராதனை செய்யும் ஆத்திரையன் நம்பிகாடநம்பி’ என்ற தொடர் காணப்படு கிறது. இவ்வரசனது ஆட்சிக் காலம் கி.பி. 1018 - 1054. இச்சாசனத்தின் காலம் 1050 ஆகும். எனவே, இந்நம்பி பதினோராம் நூற்றாண்டின் முதற்பகுதியில் ஆட்சி புரிந்த
இந்துக் கலைக்களஞ்சியம்
6

5
சோழமன்னன் இராசராசன், இராசேந்திரன், இராசாதிராசன் ஆகிய மூவர் காலத்தில் வாழ்ந்திருக்கலாம் எனவும் அறிய முடிகின்றது.
இவர் திருவிசைப்பா பாடிய ஒன்பதின்மரில் நான்காம வராவார். திரு என்பது தெய்வத்தன்மை அல்லது அழகு என்பதாகும். இசை என்பது புகழ். பா என்பது பாடல். அதாவது நல்ல தெய்வத்தன்மை வாய்ந்த இசையுடன் பாடும் பாடல் தான் திருவிசைப்பா. இவரது பன்னிரு திருவிசைப்பா பாடல்களே இன்று கிடைத்துள்ளன. இரு பதிகங்களை இவர்பாடிய பொழுதும் 8 பாடல்கள் கிடைக் காமல் போய் விட்டன. ஒரு பதிகத்தில் இரு பாடல்களும் மற்றைய பதிகத்தில் பத்துப் பாடல்களும் இவரது என்பது கிடைத்த குறிப்பாகும். திருவாரூர் பற்றிப் பாடியுள்ளார். திருவாரூர் சோழநாட்டில் காவிரிக்குத் தென்கரையிலுள்ள திருத்தலம். திருவாரூர் பிறக்க முக்தி தரும் தலம். ஐம்பூதங்களில் இது பிருதித் தலம். திருவாரூரில் வீற்றிருக்கும் வீதிவிடங்கராகிய சிவனை நோக்கிப் பாடுகின்றார்.
பக்தியாயுணர்வோ ரருளைவாய் மடுத்துப்
பருகுதோ றமுத மொத்தவர்க்கே
தித்தியா விருக்குந் தேவர்காள் இவர்தம்
திருவுரு விருந்தவா பாரீர்
சக்தியாய்ச் சிவமா யுலகெலாம் படைத்த
தனிமுழு முதலுமா யதற்கோர்
வித்துமா யாரு ராதியாய் விதி விடங்கரயப்
நடங்குலாவினரே
இவர் திருவாரூர் பற்றிப் பாடிய பதிகம் U(658 DC பண்ணில் அமைந்துள்ளது.
இவர் தனது திருவிசைப்பாவில் ”அல்லியம் பூம்பழதை தாமூர் நாவுக்கரசர்’ என்றும் “எம்பந்த வல்வினை நோய் தீர்த்திட் டெமையாளுஞ் சம்பந்தன்” என்றும் “களையாவுட லோடு சேரமானாரூரன் வினைய மதமாறா வெள்ளானை மேல் கொள்ள’ எனவும் ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மும்மூர்த்திகளையும் நினைவு கூருவதனைக் காணமுடிகின்றது.
இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 95
கண்ணப்ப நாயனார் என்ற உன்னுடைய அடியார் திருப் புலிச்சரத்தில் திருவிளக்கேற்றியும் காளத்தி ஈசுரருக்கு கண்ணிடந்து அப்பியும் வீட்டுலகினை ஆளா நிற்க நீ வீட்டுலகினையாளது எந்நாளும் இடைவிடாது முத்தீவளர்க் கும் தில்லைவாழ் அந்தணருடன் தில்லையில் வாழும் வாழ்க்கையினை மேற்கொண்டு மகிழ்ச்சியோடு ஆனந்தக் கூத்தாடுகிறாயே என ஆண்டவனை நோக்கிக் கேட்கின்
றார.
கண்ணப்ப நாயனார் கதையை இங்கு குறிப்பிட்டுச் சொல்வது நோக்கற்பாலது. இவரது பாடல்களில் தத்துவக் கருத்துக்களும் நிரம்பி இருக்கும்.
பாடகமு நூபுரமும் பல் சிலம்பும் பேர்த்தொலிப்பச் குடகக்கை நல்லார் தொழுதேத்தத் தொல்லுலகில் நாடகத்தின் கூத்தை நவிற்றுபவர் நாடோறும் ஆடகத்தால் மேய்ந்தமைந்த அம்பலம்நின் னாடரங்கே
உலக அரங்கில் பழமையான கூத்தாடுபவர்கள் போல, போக, யோக, கோர வடிவங்கள் கொண்டு ஆடுபவர் போலக் காட்டி ஒன்றிலும் தொடக்குணாது உயிர்கள் இன்பம் பெறும் பொருட்டு கூத்தாடி ஆட்டுவிக்கும் நடராஜப் பெருமானே, கைவளையும் பாடகமும் பாத கிணியும் சிலம்பும் சேர்ந்து ஒலி செய்யும் நடனமாடி உன்னை வணங்கித் துதிக்கின்றார்கள் பெண்கள். நீ பொன்னம்பலத் திடையே நடனம் ஆடி அதையே நடனசபையாக்கிக் கொண்டாய் எனப் பாடுகின்றார். இப்பதிகத்தை சாளரபாணி பண்ணில் பாடியுள்ளார். சாளரபாணி தேவராங்களில் காணப் படாத புதுப் பண் ஆகும். (இ.ச.)
ubLlunetóLTöbL
திருநாரையூரில் உள்ள பொல்லாப்பிள்ளையாருக்குப் பூசை செய்து வந்த ஆதிசைவர் ஒருவரின் மகனே நம்பி யாண்டார் நம்பி. சைவசமயம் தழைத்தோங்க அவதரித்த இந்தப் புதல்வருக்குத் தந்தையார் உரிய பருவத்தில் உபநயனம் செய்வித்து வேதம் முதலிய அருங்கலைக ளைப் பயிற்றுவித்தார். ஒரு நாள் நம்பியின் தந்தை வேற்
இந்துக் கலைக்களஞ்சியம்x
భళ్ల 魏鹅
6
 

7
றுார் ஒன்றுக்குச் செல்லுமுன் பிள்ளையாருக்குத் திருமஞ்ச னம் செய்து நைவேத்தியம் படைக்கும்படி மகனிடம் கூறி விட்டுச் சென்றார். அவ்வாறே படைத்த நைவேத்தியத்தை பொல்லாப்பிள்ளையார் திருவமுது செய்யாதிருப்பதைக் கண்ட நம்பியடிகள், அடியேன் செய்த தவறு யாது, என்று மனம் வெதும்பித் தன் தலையைக் கல்லில் மோத முனைந்தார். அவ்வேளையில் பொல்லாப்பிள்ளையார் நம்பி பொறு' எனத் தடுத்து அந்நைவேத்தியம் முழுவதையும் திருவமுது செய்தருளினார்.
அது கண்ட நம்பியாண்டார் மனம் மகிழ்ந்து காலம் தாழ்த்தி இனி நான் பள்ளிக்கூடம் போனால் ஆசிரியர் கண்டிப்பார், அதனால் தேவரீரே வேதம் முதலியவற்றை ஒதுவித்தல் வேண்டும்' எனப் பிரார்த்தித்து நின்றார். அவ்வாறே பிள்ளையார் ஒதுவிக்க வேதங்களைக் கற்ற நம்பியாண்டார் நம்பி நாள்தோறும் அதனை ஒதிப் அப்பிள்ளையார் மேலே திரு விரட்டைமணிமாலை என்னும் நூலையும் பாடியருளினார்.
இச்செய்தியை சோழமண்டலத்து திருவாரூரில் ஆட்சி
புரிந்த அபயகுலசேகரன் என்னும் மன்னன் அறிந்துகொண் டான். அவன் தனது அவைக்கு வரும் சிவனடியார்கள் ஒதிய சில தேவாரத் திருப்பதிகங்களைச் செவிமடுத்து மகிழ்வதுண்டு. தேவாரத் திருப்பதிகங்கள் ஒதக்கேட்டு பரவசமடைந்த மன்னன் அத்திருமுறைகளை எங்கு தேடியும் பெறாமையால் மனத்துயர் கொண்டிருந்தான். தமது வேணவாவை நம்பியாண்டார் நம்பியின் மூலம் நிறைவேற்றலாம் எனக்கருதிய அபயகுலசேகர மகாராசன் பொல்லாப்பிள்ளையாருக்கு நிவேதிக்கும் பொருட்டு பல நைவேத்தியப் பொருட்களோடு திருநாரையூர் வந்து நம்பி யைச் சந்தித்து வணங்கித் தனது மனக்கிடையை வெளிப் படுத்தினார். மூவர்கள் அருளிச் செய்த தமிழ் வேதமாகிய தேவாரத் திருமுறையும், திருத்தொண்டர்களின் சரித்திரமும் தொகுக்கப்படவேண்டும் என்ற தனது விருப்பத்தைக் கூறினான்.
சிதம்பரத்தில் கனகசபைக்கருகில் சமயகுரவர்கள் மூவ ருடைய கைகளின் அடையாளத்தை உடைய அறையினு
ள்ளே தேவாரத்திருமுறைகள் இருக்கின்றன என்பதை
xxx இந்த சமய கலாசார அலுவல்கள் தினைக்கனம்

Page 96
அறிந்த நம்பியாண்டார் அதனை மன்னனுக்குத் தெரிவித் தார். திருத்தொண்டர்களின் சரித்திரத்தைப் பொல்லாப்பிள் ளையாரே நம்பிக்குக் கூறினார் என்ற செய்தியும் கூறப்படு கின்றது.
சோழ மன்னனோடு சிதம்பரம் சென்ற நம்பியாண்டார்நம்பி அங்கு எழுந்தருளியிருக்கும் சபாநாயகரை வணங்கி 'கோயிற்றிருப்பண்ணியர் விருத்தம் பாடியருளினார். மன்னன் தில்லைவாழ் அந்தணரிடம் கனகசபைக்கு மேற்றி சையில் உள்ள அறையில் தேவாரத் திருப்பதிகங்கள் இருக்கின்றன. அவற்றை எடுத்தல் வேண்டும் எனக் கேட் டான். அதற்குத் தில்லைவாழ் அந்தணர்கள் திருமுறை களை வைத்தருளிய சைவத்திருநெறித் தலைவர்கள் மூவர்களும் எழுந்தருளி வந்தால் அறை திறக்கும் என்று ஓர் செய்தியைத் தெரிவித்தனர். சோழராசன் நடேசருக்கு விசேட பூசை செய்வித்து சமய குரவர் மூவரையும் திருவீதி யிலே திருவுலா வருவித்துக் கனகசபையை வலம் செய் வித்துத் திருமுறைகள் இருக்கும் அறைக்கு முன் கொணர் வித்து நிறுத்திக் கொண்டு தில்லைவாழ் அந்தணர்களை நோக்கி "சமய குரவர்கள் மூவரும் எழுந்தருளி வந்துவிட் டார்கள், இனி அறையைத் திறக்கலாமே" என்றார். தில்லை வாழ் அந்தணர்கள் மன்னனின் அறிவை வியந்து அறை யைத் திறக்க அனுமதி வழங்கினார்கள்.
சோழமன்னன் சமயகுரவர் மூவருடைய திருப்பதிகங்கள் உள்ள அறையினைத் திறந்து பர்த்தபோது பெருமளவி லான ஏடுகள் செல்லரித்துப் போய் உள்ளதைக் கண்டு மனம் நொந்து நின்றார். அவ்வேளையில் எல்லோருக்கும் கேட்கும் வண்ணம் “தேவாரப் பதிகங்களிலே இக்காலத் திற்கு வேண்டுவனவற்றை மாத்திரம் வைத்துவிட்டு மற்றவைகளை செல்மூடச் செய்தோம்' என்று ஒர் அசரீரி கேட்டதாகவும் சோழமன்னன் தன் கவலை தீர்ந்து நம்பியி டம் தேவாரம் முதலிய அருட்பாக்களை எல்லாம் திரு முறைகளாக வகுத்தருள வேண்டும் எனக் கூறியதாக வும் அறியக் கூடியதாகவுள்ளது.
நம்பியாண்டார் நம்பி அதற்குடன்பட்டுத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் அருளிச் செய்த தேவாரத்
திருப்பதிகங்க ளை மூன்று திருமுறைகளாகவும்
இந்துக் கலைக்களஞ்சியம் ----- : . . ჯ’

திருநாவுக்கரசர் அருளிச் செய்த தேவாரத் திருப்பதிகங்களை மூன்று திருமுறைக ளாகவும் சுந்தரமூர்த்திநாயனார் அருளிச்செய்த தேவாரங் களை ஒரு திருமுறையாகவும் வகுத்தருளினார். பின் மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவாசகம், திருக் கோவையார் என்னும் இரண்டையும் எட்டாம் திருமுறை யாகவும், திருமாளிகைத் தேவர், சேந்தனார், கருவூர்த் தேவர். நம்பிகாடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருடோரத்தநம்பி, சேதிராயர் என்னும் ஒன்பதின்மர் அருளிச் செய்த திருவிசைப்பாப் பதிகங்கள் இருபத்தெட்டும் அவர்களுள்ளே சேந்தனார் அருளிச் செய்த திருப்பல்லாண்டு பதகம் ஒன்று மாகிய இருபத் தொன் பது திருப்பதிகங்களையும் ஒன்பதாம் திருமுறையாக வும் திருமூலநாயனார் அருளிச் செய்த திருமந்திரத்தைப் பத்தாம் திருமுறையாகவும் திருவாலவுடையார் திருமுகப் பாசுரம் முதலிய திவ்விய பிரபந்தங்களைப் பதினொராந் திருமுறையாகவும் வகுத்தருளினார்.
இங்ங்னம் தேவாரங்களைத் திருமுறைகளாகத் தொகுத்த பின்பு திருத்தொண்டத் தொகையை முதனூலா கக் கொண்டு அறுபத்து மூன்று தனியடியாரும், ஒன்பது திருக்கூட்டத்தாருமாகிய தொண்டர்களுடைய திருத்தொண் டையும் அதனால் அவர்கள் பெற்ற பேற்றையும் கலித் துறைத் திருவந்தாதியாக அருளிச் செய்தார். பின் திரு ஞானசம்பந்தமூர்த்தி நாயனார்மீது திருவந்தாதி, திருச் சண்பை விருத்தம், திருமும்மணிகோவை, திருவுலாமாலை, திருக்கலம்பகம், திருத்தொகை என்னும் ஆறு பிரபந்தங் களும் திருநாவுக்கரசு நாயனார் மீது திருவேகாதசமாலை யும் பாடியருளினார். தாம் அருளிச் செய்த பத்துப் பிரபந் தங்களையும் சோழமன்னனின் வேண்டுகோளின்படி பதினோ ராம் திருமுறையிலே சேர்த்தருளினார்.
இக்கைங்கரியங்கள் இனிது நிறைவேறிய பின்பு தேவாரத் திருப்பதிகங்களுக்கு பண் அமைக்கும் பொருட்டு மன்னனும் நம்பியும் தில்லைவாழ் அந்தணர்களும் திருஎருக் கத்தம்புலியூரை அடைந்து அங்கு எழுந்தருளியிருக்கும் பெருமானிடம் தேவாரத் திருப்பதிகங்களுக்குரிய பண் அடைவை அருளிச் செய்யவேண்டும் எனப் பிரார்த்தித்து
இந்து சமய கலாசார அலுவல்கள் தி0ை0ாக்களம்

Page 97
நின்றனர்.
அவ்வேளையில் திருநீலகண்டப் பெரும்பாணர் மரபிலே பிறந்த பெண் ஒருவர் மூலம் பண் அடைவைப் பெற்றுக் கொள்ளலாம் என்றோர் அசரீரி கேட்டது. அவ்வாக்குக் கமைய மன்னனும் நம்பியும் அப்பெண்ணை அழைத்துக் கொண்டு சிதம்பரத்தை அடைந்து கனகசபையில் வைத்து தேவாரத் திருமுறைகளுக்குப் பண் அடைவு செய்தனர். அபயகுலசேகரன் பதினொரு திருமுறைகளையும் செப்பேடு செய்து சைவநெறி தழைக்க வழி சமைத்தான். (நி.நி)
நம்பியாரூரர்
திருமுனைப்பாடி நாட்டில் உள்ள திருநாவலூர் என்னும் திருநகரில் ஆதிசைவ மரபில் சடையனார் என்பவருக்கும், இசை ஞானியார் என ப வருக்கும் புதல்வராக அவதா ரம் செய்தவரே சுந்தரமூர்த்தி நாயனார் ஆவார். எம்பெரு மான் திருவருளால் அவதாரம் செய்தமையால் பெற்றோர்கள் நம் பியாரூரர் என்னும் திருநாமத்தைச் சூட்டினர். நம்பியாரூரரும், காப்புப் பருவம், செங்கீரைப் பருவம், தாலப்பருவம், சப்பாணிப் பருவம் , முத்தப் பருவம் போன்ற பருவங்களை எல்லாம் கடந்து மேனியிலே பிரகாசமும் முகத்திலே தெய்வ ஒளியும் பெற்று விளங்கலானார்.
ஒரு நாள் ஆரூரர் வீதியிலே, சிறு தேர் உருட்டி தளிர் நடைபோட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது திரு முனைப்பாடி நாட்டை அரசாண்டு வந்த நரசிங்க முனை யர் திருநாவலூர்ப் பெருமானைத் தரிசித்து விட்டு தேரில் வந்துகொண்டிருந்தார். அப்போது நம்பியின் பேரழகைக்
இந்துக் கலைக்களஞ்சியம்x 缀接
 
 

s
கண்டு அளவிலா மகிழ்ச்சி கொண்டு சடையனாரின் ஒப்புதலோடு அவரை அரண்மனைக்கு அழைத்துச் சென்று வளர்த்தார். நம்பியாரூரர் அரண்மனையிலே அரச குமார னைப் போல் வாழத்தொடங்கினார். வேத ஆகம நூல்களி லும், கலை நூல்களிலும் நன்கு பயின்று தேர்ச்சி பெற்றார்.
பெற்றோர்கள் ஆரூரருக்குத் திருமணம் செய்து வைக்கத் தீர்மானித்தனர். தங்கள் எண்ணத்தை அரசரிடம் கூறிச் சம்மதம் பெற்றனர். திருநாவலூருக்கு அடுத்தாற்போல் புத்துார் என்ற ஊரிலுள்ள சடங்கவி சிவாசாரியார் என்பவ ரின் புதல்வியை ஆரூரருக்குப் பார்த்து மணம் முடிப்பதற் கான ஏற்பாடுகளைச் செய்தனர்.
நம்பியாரூரருக்கு மணமங்கலம் நிகழ்ந்த வேளையில் சிவபிரான் கிழப்பிரமாண வடிவில் வந்து மணப்பந்தலில் வாதம் புரிந்து நம்பியைத் தடுத்தாட்கொண்டார். பின்பு சிவனின் அனுக்கிரகத்தோடு பூவுலகிலே பரவையார், சங்கிலியார் என்ற பெயருடன் பிறந்த உமையின் சேடியர்
5ങ്ങാണ് ഥങ്ങ[bpT].
நம்பியாரூரரும் தேவராமும்
சிவன் ஆரூரரை வாழ்த்தி "நீ எம்மை வன்மையாகப் பேசியதால் "வன்றொண்டன்' என்று உனக்குத் திருநாமம் சூட்டுகின்றேன். எம்மை நீ தமிழ்ப்பாக்களால் அரச்சனை செய்வாயாக!” என்று அன்புக் கட்டளை இட்டார். ஆரூரர் சிவனின் கருணை வெள்ளத்தில் மூழ்கினார். பக்திப் பிரவாகத்தில் மூழ்கி வழிதெரியாமல் தவித்தார். தடுத்தாட் கொண்ட தம்பிரான் 'தமிழாற்பாடுக” என்றதால் சுந்தரர் சிந்தை மகிழ்ந்து எம்பெருமானின் சேவடிகளைப் போற்றி நின்றார். இறைவன் தம்பிரான் தோழரைப் பார்த்து "உன்னை ஆட் கொண்டபோது எம்மை பித்தா என்று அழைத்தாய். ஆதலின் பித்தா என்று அடியெடுத்துப் பாடு வாயாக!” என்று திருவாய் மலர்ந்து அருளினார். ஆரூரரும் "பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா!” என தம்பிரான் மீது முதல் திருப்பதிகம் பாடியருளினார்.
சுந்தரர் பாடிய தேவாரங்களில் தனித்துவமானது திருத் தொண்டர்களின் மாண்புகளை வெளிப்படுத்தும் திருத் தொண்டத் தொகை எனும் பதிகமாகும். தென்னாடு வாழ்ந் திட தமிழ் வாழ்ந்திட அற்புதமான தெய்வீகப் பாமாலையாம்
x இந்து சமய கலாசார அலுவல்கள் தி6ைOOக்களம்

Page 98
திருத்தொண்டத் தொகையை திருவாரூர் தியாகேசப் பெரு மானுக்குச் சூட்டி மகிழ்ந்தார் சுந்தரர். திருத்தொண்டத் தொகை 11 பாடல்களைக் கொண்டது. சுந்தரர் தேவாசிரிய மண்டபத்திலே திரண்டிருந்த திருத்தொண்டர்களைக் கண் ணுற்றார். இவர்களுக்கு அடியவனாகும் நாள் எந்நாளோ? என எண்ணிக் கொண்டே திருக்கோயிலினுட் புகுந்தார். அப்போது இறைவன் "வன்தொண்டனே, இங்குள்ள அடியார் களின் மாண்பு அளவிடற்கரியது. இவர்களுக்கு நிகரானவர் எவருமில்லை. அன்பினாலே இன்பத்தையடையும் பெருந்த கையாளர்கள். இவர்களை நீ தீந்தமிழாற் பாடி வழிபட வேண்டும்” என்று திருவாய் மலர்ந்தருளி, "தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என அடியெடுத் தும் கொடுத்தார். அவ்வடியை முதலாக வைத்துக் கொண்டு 62 தனி அடியார்களையும், தில்லைவாழ் அந்த ணர்கள், பொய்யடிமையில்லாத புலவர், பக்தராய்ப் பணி வார் முதலான ஒன்பது தொகையடியார்களையும் புகழ்ந்து
UTLQuoi,6TT).
இத்திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பி திருத்தொண்டர் திருவந்தாதி எழுதுவதற்கும் சேக்கிழார் திருத்தொண்டர் புராணம் எழுதுவதற்கும் ஆதாரமாக இருந்தது. திருத்தொண்டர் புராணத்தில் சேக்கிழார் சுந்தரரைக் காப்பிய நாயகனாகக் கொண்டு காப்பியம்
படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சுந்தரர் சகமார்க்கத்தில் சிவனை, தோழமை பூண்டு யோக நெறியில் சாரூப முக்தி அடைந்தார். சிவனோடு அவர் கொண்ட தோழமைத் தொடர்பால் 'தம்பிரான் தோழர் எனப் பெயர் பெற்றார். இதை அவருடைய பதிகப் பாடல்
உணர்த்தியிருக்கின்றது.
இவர் பாடிய பதிகங்கள் ஏழாம் திருமுறையாக நம்பி யாண்டார் நம்பியால் வைப்புச் செய்யப்பட்டுள்ளது. இவரு டைய பதிகங்கள் சைவசித்தாந்த வளர்ச்சிக்கு முன்னோடி யாகவும் விளங்கின. இவருடைய குருபூசைத் தினம் ஆடிமாதத்து சுவாதி நட்சத்திர நாளில் அனுஷ்டிக் கப்பட்டு வருகின்றது. (சது.)
இந்துக் கலைக்களஞ்சியம்x ళ
 

billsire DGM
இவர் வைணவ ஆசாரியர் பரம்பரை சார்ந்த ஒருவர். தென்கலை மரபினர். தென்கலை மரபில் வந்த நஞ்சீயர் என்னும் ஆசாரியரின் சீடர் நஞ்சீயர் திருவாய்மொழிக்குச் செய்த வியாக்கியானத்தை ஒன்பதாயிரப்படியாக எழுதிய ருளியவர்.
நம்பிள்ளை கி.பி. 1147 - 1252 காலப் பகுதியினராகக் கருதப்படுகிறார். இவர் காவிரியின் தென்கரைத் தலமான நம்பூரில் அவதரித்தவர். திருநட்சத்திரம் கார்த்திகைக் கார்த்திகை, வரதராசர் என்ற இயற்பெயரினர்; ஆசாரியர் நஞ்சீயரால் நம்பிள்ளை' எனத் திருநாமம் பெற்றவர், கலிவைரி, திருக்கலிக்கன்றிதாசர், லோகார்யா, பூரீசூக்தி சாகரன், உலகாரியன், அபயப்பிரதாயர் என்பன இவர்தம் பிற திருநாமங்கள்.
வடக்குத் திருவீதிப்பிள்ளை, கந்தாடை தோழப்பன், பின்பழகிய பெருமாள் சீயர், ஈயுண்ணி மாதவப் பெருமாள், வாதிகேசரி அழகிய மணவாளசியர், நடுவில் திருவீதிப்பட்டர், வேல்வெட்டிப்பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை, ஏறு திருவு டையதாசர், சீனிக்கரபிள்ளை, இராமாநுசாசார்யர், வான மாமலை தாசர், திருக்குருகூர்தாசர் ஆகியோர் இவர்தம் சீடர்கள்.
இவர் அருளிச் செயல்களாவன திருவாய் மொழிக்கு ஈடு முப்பதாயிரப்படி, திருவிருத்தத்துக்கு ஈடு, கண்ணிநுண் சிறு தாம்புக்கு ஈடு முதலாயின.
நம்பிள்ளையாகிய வரதராசரின் குருவான நஞ்சீயர் என்பார் தம்முடைய குருவான பராசரபட்டர் என்பவர் நம் மாழ்வர் அருளிய திருவாய்மொழிக்குச் செய்திருந்த ஆறாயிரப்படி என்னும் உரையை விரிவுபடுத்தி உபந்நியா சித்து வந்தார். அவ்வுபந்நியாசத்தின் படியை செவ்வை யான எழுத்துப்படியாக எழுதும் பணியை தம்முடைய சீடரான வரதராசரிடம் ஒப்படைத்தார். அப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட வரதராசர் தமதுாருக்குச் சென்று அங்கிரு ந்து எழுதிக்கொண்டு வருவதாகக் கூறி மூலப்பிரதியைச் சுமந்து செல்லும் வழியில் காவிரியாற்றைக் கடக்க முற்படுகையில் காவிரியில் வெள்ளம் பெருகி அம்மூலப்பிர தியை அடித்துச் சென்றுவிட்டது.
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 99
வெறுங்கையுடன் ஊர்போய்ச் சேர்ந்த இவர் இறையரு ளால் தம் நினைவில் இருந்தபடியே நஞ்சீயரின் வியாக்கியா னங்களை ஒன்றும் தப்பாமல் எழுதி முடித்தார். எனினும் தாமும் தமிழிலே அறிவு மிக்கவராகையால் நம்மாழ்வர் பாடலொவ்வொன்றுக்கும் பொருத்தமான இடங்களிலே விஷேட அர்த்தங்களும் வியாக்கியானங்களும் எழுதிக் கொண்டுபோய் நஞ்சீயரிடம் ஒப்படைத்தார்.
அதனைப் பார்வையிட்ட நஞ்சீயர் தாம் செய்த வியாக்கி யானங்கள் அணுவளவும் பிசகாமலும் அதேவேளை விஷே டமான பலவிடயங்கள் புதிதாகச் சேர்த்தும் இருப்பது கண்டு நடந்ததை விசாரித்தார். நம்பிள்ளையும் நடந்ததை மறைக்கமாட்டாதவராய் உண்மையைக் கூறினார்.
நஞ்சீயர் இவருடைய புத்தி விசேஷம் இருந்தபடி என்! இவர் மகா சமர்த்தராய் இருந்தார். நன்றாக எழுதினார் என்று உவந்து பாராட்டி அவரை வாரி அணைத்து இவர் நம்முடைய திருக்கவி கன்றிதாசர்’ என நாமமும் சாற்றி அவரைத் தம்மிடத்திருந்து அரைக்கணமும் அகலாது காத்து அவருக்கு உபதேசங்கள் செய்து வந்தார். அதுமுதற்கொண்டு அவருக்கு நம்பிள்ளை' என்னும் திருநாமம் உரியதாயிற்று.
நஞ்சீயரின் வியாக்கியானங்களை விஷேடித்து நம்பிள் ளையால் எழுதப்பட்ட திருவாய்மொழி உரையே ஒன்ப தாயிரப்படி என வழங்குவது. ஆயின் அது நஞ்சீயர் பெயரி லேயே வழங்குகிறது. அதேவேளை இவரால் வியாக்கியா னிக்கப்பட்டு இவர்தம் சீடரான வடக்குத் திருவீதிப் பிள்ளை யால் எழுதிவைக்கப்பட்டதான 'முப்பத்தாறாயிரப்படி என்னும் ஈடும் இவர் பெயரினாலேயன்றி வடக்குத்திரு வீதிப்பிள்ளை பெயரிலேயே வழங்குகின்றது. முப்பத்தாறா யிரப்படி நம்பிள்ளையால் உபந்நியாசிக்கப்பட்டதென்பதை யும் வடக்குதிருவீதிப்பிள்ளையால் வெளிப்படுத்தப்பட்டது என்பதையும் உணர்த்துவதாயமைவது மணவாள மாமுனி கள் பாடிய மேல்வரும் வெண்பா.
தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறிதன்னை வள்ளல் வடக்குத் திருவிதிப் - பிள்ளை இந்த நாடறிய மாறன் மறைப்பொருளை நன்குரைத்தது ஈடுமுப்பத் தாறாயிரம்,
இந்துக் கலைக்களஞ்சியம்x
 
 

திருவாய் மொழிக்கு எழுதப்பட்ட உரைகளான 'ஒன்பதா யிரப்படி', 'முப்பத்தாறாயிரப்படி என்னும் இரண்டோடும் மேற்கண்டவாறாகத் தொடர்புபட்டிருந்த போதிலும் திருவாய்மொழி உரையாசிரியர் பட்டியலில் நப்பிள்ளையின் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. திருவாய்மொழிக்கு விளக்கவுரைசெய்த ஆசாரியர் நாமங் களைப் பட்டியலிடுவதாய் அமையும் மணவாளமுனிவர்தம் வெண்பா வருமாறு:
பிள்ளான் நஞ்சீயர் பெரியவாச்சான் பிள்ளை தெள்ளார் வடக்குத் திருவிதிப் பிள்ளை மணவாளயோகி திருவாய் மொழியைக் காத்த குணவாளர் என்று நெஞ்சே கூறு.
திருவாய்மொழிக்குரித்தான மற்றுமோர் வியாக்கியானம் இருப்பத்துநாலாயிரப்படி என்று வழங்குவது. அது நம்பிள் ளையின் மற்றோர் சீடரான பெரியவாச்சான் பிள்ளையால் எழுதப்பட்டதாகும். பெரியவாச்சான் பிள்ளையின் கல்வி மாண்பை அறிந்த நம்பிள்ளை அவரைப் பணித்த பணிப்பின் காரணமாகத் தோன்றியதே இருபத்துநாலாயிரப்படி என்ப தனை மேல்வரும் மணவாள மாமுனிவரின் உபதேசரத் தினமாலைச் செய்யுளால் உணர்ந்துகொள்ளலாம்.
நம்பிள்ளை தம்முடைய நல்லருளால் ஏவியிட பின் பெரியவாச்சான் பிள்ளை அதனால் - இண்பா வருபத்தி மாறன் மறைபொருளைச் சொன்னது இருபத்தி நாலாயிரம்.
இவ்வாறாக வைணவ ஆசாரியர் மரபில் பலவழிகளிலும் சிறப்புறுபவர் நம்பிள்ளை. வைணவ மரபில் அவர்பற்றி விதந்துரைக்கப்படும் ஒரு செய்தி வருமாறு: திருமால் நம்பிள்ளைக்கு அருள்புரிந்து அவரைத் தம் திருமுடிப் பக்கத்திலிருந்து திருவாய்மொழியை நிர்வகிக்குமாறு நிய மனம் செய்ய, நம்பிள்ளையும் “நாயினேன் தேவரீருடைய நியமனத்தைத் தப்பமுடியாது, ஆகிலும் அவ்விடம் முன்பு துரியோதனன் பற்றிய இடமாகையாலே, அடியார்க்குப் பற்றும் இடமாகாது” என்று விண்ணப்பம் செய்ய, பெருமா ளும் உகந்து அதை ஆமோதிக்க, அதுகண்டு அங்கிருந் தோர் அனைவரும் வியப்பெய்தினர். (க.இர.)
8. Fös, sinu &exTö{IJ ga)øjebøe SecocCIá&emð

Page 100
நம்பூதிரிகள்
நம்பூரிதிகள் கேரள மாநிலத்தில் வாழும் பிராமணர்கள்; நம்பு என்றால் நம்பிக்கை என்றும் திரி என்றால் ஒளி என்றும் பொருள்படும். நம்பூதிரிகள் பரசுராமனால் கொண்டுவரப்பட்டனர் எனக் கூறப்படுகின்ற புதுமையான பழக்க வழக்கங்களைக் கொண்டவர்களாக உள்ளதால் உலக இனக்குழுவியலில் (Ethnography) இவர்களும் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளனர்.
கேரளக் கடற்கரையில் கி.பி.முதலாம் நூற்றாண்டிலேயே பிராமணர்கள் வாழ்ந்து வந்ததற்கான சான்றுகள் தாலமியும், பெரிபுளுசும் எழுதியுள்ள குறிப்புகளில் உள்ளன. அக்கால த்திற்கு முன்பிருந்தே வாழ்ந்து வந்த நம்பூதிரிப் பிராமணர்க ளுடன் கி.பி.4.5ஆம் நூற்றாண்டுகளில் சாளுக்கிய அரசர்க ளின் முன்னேற்றத்தின்போது மேலும் பிராமணர்கள் பெரும ளவில் குடியேறிக் கலந்திருக்க வேண்டும் என்று கருதப் படுகிறது. நம்பூதிரிப் பிராமணர்களின் சிறப்பான வாழ்க்கை கி.பி. 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் இன்னலுக்கு உள்ளானது. திப்புசுல்தான் மலபார்ப் பகுதியில் உள்ள மக்களனைவரையும் முகமதியர்களாக மாற்றும்படி தன்னு டைய படையினருக்குக் கி.பி. 1779 இல் ஆணையிட்டான். முகமதியர்களாக மாற மறுத்து வீட்டை விட்டு ஓடுபவர்க ளின் வீடுகளைத் தீக்கிரையாக்குமாறும் அம்மக்களைத் தேடிப் பிடித்து மதமாற்றம் செய்யுமாறும் தெரிவித்தான். அப்பகுதியில் வாழ்ந்த தாழ்ந்த சாதி மக்கள் முகமதியர்க 6TTB மாறினர். சமயப்பற்று மிக்க நம்பூதிரிகள் அவர்கள் நிலத்தையும் பிற உடைமைகளையும் விட்டுவிட்டுத் திருவிதாங்கூரைச் சுற்றிய பகுதிகளுக்குச் சென்றுவிட்டனர். இருப்பினும் தப்பி ஓடமுடியாத நம்பூதிரிகள் முகமதியர்க ளாக மாறிவிட்டனர். இவ்வாறு முகமதியர்களாக மாறிய நம்பூதிரிகளும் நாயர்களும் அன்னாடிக்கார் என்று சொல்லப்படுகின்றனர்.
நம்பூதிரிகள் தொடக்கத்தில் இரு பெரும் பிரிவினராய் இருந்தனர். பன்றி வடிவிலான விட்டுணுவை வழிபட்ட வைணவர்கள் பன்னியூர் என்னுமிடத்தை மையமாகக் கொண்டு வாழ்ந்தனர். இவர்கள் சாளுக்கிய அரசர்களின் பேராதரவைப் பெற்றிருந்தனர். அவ்வரசர்களும் பன்றி
இந்துக் கலைக்களஞ்சியம்x
 

யையே தங்கள் இலச்சினையாக வைத்திருந்தனர். சோவூரை மையமாகக் கொண்டு சிவனை வழிபட்ட நம்பூதிரி கள் சோவூர் கிராமமக்கார் என்று சொல்லப்பட்டனர். இவர் கள் சாளுக்கியர்களுக்குப் பின்பு வந்த சேர, சோழ, பாண்டியரின் சைவ ஆதரவைப் பெற்றவர்கள். சிவனை வழிபட்டவர்கள். காலப்போக்கில் படிப்படியாக மேலாதிக்கம் செலுத்திப் பன்னியூர் நம்பூதிரிகள் வேதம் படிக்கக் கூடாதெ னத் தடைவிதித்தனர்.
நம்பூதிரிகளுள் தம்பூராக்கால், ஆத்தியா, விசிசுடா, சாமானியா, சாதி மத்ரா என ஐந்து சிறு பிரிவுகள் உள் ளன. இவை தவிர மிகுந்த அதிகாரம் உள்ளவர்களை நம்பூதிரிபாடு என்றும் சொல்வதுண்டு. மேலும் இம்மக்களுள் ஒருவர் செய்யும் யாகங்கள் பலிகள் ஆகியவற்றின் எண்ணிக்கைகளுக்கேற்பவும் உயர்வான நிலையை அடை கின்றார். யாகம் செய்பவர்கள் சோமயாசி அல்லது சோமா திரி என்றும், அதானா எனும் பலி கொடுப்பவர்கள் ஆதித் திரி என்றும், அக்கினிச் சடங்குகளைச் செய்பவர்கள் அக்கதிரி அல்லது அக்னிகோத்ரி என்றும் சொல்லப்படு கின்றனர். இவ்வகையான யாகங்களை ஒரு சில கோத் திரங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே செய்ய முடியும். மணமாகாதவர்கள் இவற்றில் ஈடுபட முடியாது.
நம்பூதிரிகள் பெரும்பாலும் நிலக்கிழார்களாகவே இந்து வந்தனர். தென்னிந்தியாவிலுள்ள பிற பிராமணர்களைப் போல நம்பூதிரிகள் அரசு வழங்கும் பணிகளை ஏற்றுக் கொள்ளாமலிருந்தனர். வணிகம் போன்ற வேலைகளில் ஈடுபடாது தங்கள் தனித்தன்மையைக் காத்து வந்தனர். ஆலயங்களில் பணிபுரிவதுகூட அதிக வருமானம் இருந்தால் மட்டுமே விரும்பப்பட்டது. ஆசிரியர் தொழில் உயர்வாக மதிக்கப்பட்டதால் அதனைச் சிலர் ஏற்றுக் கொண்டனர். எப்பொதும் பணி செய்யாதே என்னும் மனுதருமக் கோட்பாடு இவர்களால் கடுமையாகக் கடைப் பிடிக்கப்பட்டது. இன்று நிலைமை மாறிவிட்டது. தொன்று தொட்டு நில உரிமையாளர்களாக இருந்ததால் பெரும் பாலும் வேளாண்மை செய்தனர். திப்புசுல்தான் காலத்தில் முகமதியர்களாக மாற்றப்பட்டுப் பின்பு மீண்டும் தாய்மதம் தழுவிய சேலை நம்பூதிரிகளிடையேயும் தெற்கு மலபார் நம்பூதிரிகளிடையேயும் மாந்திரீகர்கள் பலர் உள்ளனர் என்று கூறுகின்றனர்.
缀
இந்து சமய கலாசார அலுவல்கள் தி3ைOOக்களம்

Page 101
தொடக்கத்தில் நம்பூதிரிகளுள் கம்ச, காசியப, பரத்து வாச, வாத்சய, கவுண்டினிய, ஆத்திரி, தாத்திரி ஆகிய ஏழு கோத்திரங்கள் இருந்தன. பிற கோத்திரங்கள் இவற்றி லிருந்து உருவாயின. ஒரே கோத்திரத்தில் உள்ளவர்களும் தாய், தந்தை வழியில் உறவு உள்ளவர்களும் திருமணம் செய்து கொள்வதில்லை. திருமணத்திற்குப் பின் மணப் பெண் கணவனின் கோத்திரத்தைச் சேர்ந்தவளாவாள். மூத்த மகன் மட்டும் நம்பூதிரிப் பெண்ணை மணம் செய்து கொண்டால் போதுமானது. இளைய புதல்வர்கள் நாயர்
(Nayar) பெண்களை மணந்து கொள்ளலாம்.
முறையான திருமண நிகழ்ச்சிகள் பத்து நாள்கள் நடைபெறுகின்றன. மணமகள் இல்லத்தில் ஆபாசன அக்கினி எனும் புனிதத் தீ வளர்க்கப்படுகிறது. இது திருமணம் நடைபெறும் பத்து நாள்களும் தொடர்ந்து எரியும். அதன் பின்னர் இதிலிருந்து எடுக்கப்பட்ட தீ ஒரு விளக்கில் அல்லது கட்டைகளில் ஏற்றப்பட்டு அவர்களின் வாழ்நாள் முழுவதும் பாதுகாக்கப்படுகிறது. யாராவது இறந்தால் சிதைக்கு இத்தியே மூட்டப்படுவது வழக்கம்.
திருமண விழா முற்றத்தில் மணமகனை அமர்த்தி நந்தி முகம் எனும் சடங்கு மூதாதையர்களை மகிழ்விக்க நடத் தப்படுகிறது. மணமகன் செய்யும் இது போன்ற சடங்கு களை மணமகளின் தந்தையும் மணமகளும் ஓர் அறையி னுள் அமர்ந்து அதே நேரத்தில் நடத்துகின்றனர். இச்சடங் குகளுக்குப் பின் மணமகளுக்குத் தாலி கட்டப்படுகிறது.
மனைவி கருவுற்றிருந்தால் கணவன் முடிவெட்டுதல், முகம்மழித்தல் ஆகியவற்றைச் செய்யாது அவற்றை வளர்ப் பான். கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என விரும்பினால் மூன்றாம் மாதத்தில் பும்சவனம் எனும் சடங்கு நடத்தப்படுகிறது. குழந்தை நலமாகப் பிறக்க வேண்டும் என்பதற்காக ஆறாம் மாதத்தி லிருந்து எட்டாம் மாதத்திற்குள் சீமந்த நயனா நடத்தப்படு கிறது.
நம்பூதிரிகள் மூத்தமகன் வாரிசு (Primogenture) முறை யைப் பின்பற்றுகின்றனர். அதன்படி தந்தையின் சொத்து
மூத்த மகனை அடைகிறது. இயைளவர்கள் சொத்தைப்
இந்துக் கலைக்களஞ்சியம்
 

பாதுகாக்க மட்டுமே தகுதியுடையவர்கள். ஆண் மக்கள் ஒரு குடும்பத்தில் இல்லாவிடில் மூத்த மகள் வாரிசாகிறாள். மூத்த மகன் மட்டுமே நம்பூதிரிப் பெண்ணை மணக்கலாம். ஆண் வாரிசு இல்லாத வீட்டிலுள்ள பெண்ணுக்குச் சருவ சவதானம் எனும் திருமணம் நடத்தப்படுகிறது. அதன் மூலம் வேறு ஒரு வீட்டிலுள்ள மணமகன் கொண்டு வரப் பட்டு மணமகள் வீட்டில் உறுப்பினன் ஆகிறான். ஆண் மக்கள் இல்லாத வீட்டினர் தத்து எடுத்துக் கொள்ளும் வழக்கமும் உண்டு. இதற்குப் பத்து கைத்தத்து, சஞ்ச மடத் தத்து, குடிவழிச்ச தத்து என்று மூன்று முறைகள் உள்ளன. முதல் வகையில் தத்து எடுக்கப்படும் மகன் இரண்டு பெற்றோருக்கும் மரணச் சடங்குகளைக் கவனிப் பான். இரண்டாம் வகையில் புதிய பெற்றோருக்கே சடங்கு கள் செய்வான். மூன்றாம் வகைத் தத்து விதவைப் பெண்
ணால் ஏற்கப்படுவதாகும்.
அனைத்துச் செயல்களுக்கும் சகுனம் பார்க்கும் முறை நம்பூதிரிகளிடம் உள்ளது. பாம்பு, பூனை, குள்ள நரி, முயல், புகையும் நெருப்பு, வெறும் குடம், விறகு, விதவை, ஒற்றைக்கண் மனிதன் ஆகியவற்றைக் காலையில் முதலில் பார்த்தால் அன்று ஏதோ தீய விளைவு ஏற்படுவ தற்கு அது அறிகுறி என எண்ணுகின்றனர். அவற்றைப் பார்த்த பிறகு கிழக்குச் சுவரில் பல்லியைப் பார்த்து விட்டால் அதனைச் சகுன பரிகாரமாகக் கருதுகின்றனர். ஒற்றைத் தும்மல் நல்ல சகுனமாகவும் இரட்டைத் தும்மல் தீய சகுனமாகவும் கருதப்படுகிறது.
தொடக்க காலத்தில் தீண்டாமையைக் கடுமையாகக் கடைப்பிடித்து வந்தனர். ஒரு நம்பூதிரியைப் பார்க்கும் நாயர் ஆறு அடிக்கு அப்பாலும், அப்பட்டன் தீயன் (Tiyan) முப் பத் தாறு அடிக் கு அப் பாலும் , மலையன் தொண்ணுாற்றாறு அடிக்கு அப்பாலும் தள்ளி நிற்க வேண்டும். இப்போது இவ்வகை வழக்கங்கள் மாறி வருகின்றன.
இறைவனே பரம்பொருள் என நம்புகின்றனர். சூரியன், சந்திரன், விண்மீன்கள் அனைத்தும் தெய்வத் தன்மை வாய்ந்தன. கடவுள் எந்த நேரத்திலும் எந்த வடிவிலும் தோன்றமுடியும். இறைவனின் வாகனங்கள் புனிதமானவை.
இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 102
பசு எல்லா விலங்குகளிலும் உயர்வானது. அதன் சிறுநீர் மிகப் புனிதமான தீர்த்தம் என்பன போன்றவையும் நம்பூதிரி களின் நம்பிக்கையாகும்.
ஒருவரின் மரணம் உறுதி எனத் தெரியவரும்போது அவர் இறக்கும் முன்னரே காதில் தைத்திரிய உபநிடத வார்த்தைகள் உரைக்கப்படுகின்றன. கூசாப்புல்லால் ஒரு படுக்கை திண்ணையில் அமைக்கப்பட்டுச் சாகும் மனிதன் அதில் படுக்க வைக்கப்படுகிறான். இறந்த பின்பு உடல் முழுக்கக் கழுவப்பட்டுப் பாடையில் வைக்கப் பெற்று வீட்டு வளாகத்திற்குள்ளேயே எரிக்கப்படுகிறது. வீட்டுத் தீயிலிருந்து ஓமம் வளர்க்கப்பட்டு அதிலிருந்து எடுக்கப்படும் தீ இறந்தவர் மார்பிலும் சிதையின் மூன்று பக்கங்களிலும் வைக்கப்படுகிறது. தீ மூட்டியவரால் கொள்ளிக் குடமும் உடைக்கப்படுகிறது. பின்பு அனைவரும் நீராடிச் செல்கின்ற னர். இறந்தவரின் ஆவி சூக்கும சரீரத்தில் நுழைந்து முக்தி அல்லது நரகம் சென்றடைவதாக நம்பப்படுகிறது.
மூன்றாம் நாளில் எரிந்த உடலின் சாம்பலை ஒரு தாழியிலிட்டு அருகிலேயே புதைக்கின்றனர். பதினொன் றாம் நாளில் அக்குடும்பத்தார் தூய்மை பெறும் சடங்கினை நடத்துகின்றனர். (ப.இரா.)
GbLongjunij
ஆழ்வார்களில் முதன்மையானவர் சடகோபன் என்ற பெயருடைய நம்மாழ்வார். குலத்தில் வேளாளர், அவரு டைய தந்தையாரின் பெயர் காரி, தாயின் பெயர் உடைய நங்கை. இவர்களுக்குப் பிறந்த இக்குழந்தை அழாமலும் பால் உண்ணாமலும் மெளனமாய் இருந்தது. ஆயினும் பரிபூரணராயிருந்த குழந்தையைப் பெருமான் திரு முன்பு எடுத்துக் கொண்டு போய்ச் சேவிக்கப் பண்ணினர். ஏனைய குழந்தைகளின் நடைமுறைக்கு இக்குழவி மாறாக இருந்ததால் இதற்கு மாறன்’ என்னும் திருநாமம் வைத்த னர். பதினாறு வயது வரையிலும் இவர் கண்விழியாதிருந் தார். அத்தோடு யாரோடும் உரையாடுவதும் இல்லை. இது கண்ட பெற்றோர்கள் தம்புதல்வர் ஏன் இவ்வாறு இருக்கிறார்? கண் விழித்துப் பார்க்காத காரணம் யாது? எனக் கவலை கொண்டு பெருமானிடம் பாரத்தை
 

போட்டுவிட்டு மனம்தேறி இருந்தனர்.
இவர் கருவிலேயே ஞானத்திருவோடு பிறந்தவர். அஞ் ஞானத்தில் ஆழ்த்தும் சடம் என்னும் வாயுவை சங்கரித்து ஒழித்தவர். ஆதலால் சடகோபன் என்றும் திருப்பெயரும் இவரை அனைவரும் கொண்டாடும்படியாக எம் பெருமான் உவந்தேற்றுக் கொண்டதால் நம்மாழ்வார்’ என்றும் மகிழ மலர் மாலையை அணிந்ததால் வகுளாபரணர் என்றும் தமது ஞான அமுதொழுகும் பிரபந்தங்களில் வெளியிட்ட தத்துவங்கள் பிற சமயத்தவரின் செருக்கை அடக்கிய தால் 'பராங்குசர் என்றும் அழைக்கப்பட்டார். இன்னும் இவருக்குக் குருகைப்பிரான், திருக்குருகூர் நம்பி, அருள் மாறன், தென்னரங்கன், பொன்னடி, திருநாவீறுடைய பிரான் என்ற திருநாமங்களும் உண்டு.
திருக்குருகூரில் தியானத்தில் இருந்த நம்மாழ்வாருக்கு சேனை முதலியார் குருவாக வந்து தத்துவப் பொருள் களையெல்லாம் உபதேசித்தருளினார். மந்திரங்கள் அனை த்தையும் உணரப்பெற்று தியானத்தில் மூழ்கியிருந்த நம்மாழ்வாரை வந்தடைந்தார் மதுரகவியாழ்வார். திருக்கோ ளேர் என்னும் திருப்பதியில் தோன்றிய மதுரகவியாழ்வார் திருத்தலங்கள் பலவற்றைத் தரிசித்துக் கொண்டு அயோத் தியிலிருந்த வேளையில் நம்மாழ்வாரைப் பற்றிக் கேள்வி யுற்று அவரைத் தரிசிக்க விரும்புகிறார். திருக்குருகூருக்கு வருகிறார். அங்கு கண்மூடித் தியானத்தில் இருந்த நம்மாழ் வாரைச் சோதிக்க விரும்புகிறார்.
தியானத்தில் இருந்த நம்மாழ்வாரின் முன் சிறு கல்லை மதுரகவி போட, நம்மாழ்வார் கண்திறந்து பார்த்தார். "செத்த தன் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே வாழும்?' என்று மதுரகவி ஆழ்வார் ஒரு கேள்வியைக் கேட்டார். 'அத்தைத் தின்று அங்கே வாழும்” என்று நம்மாழ்வார் விடையளித்தார். அநித்தியமான உடலில் ஜீவன் சேர்ந்தால் அது அனுபவிப்பது எது? வாழ்வது எங்கே என்பது வினாவின் கருத்து. அநித்தியமான சரீரத் தைப் பற்றி சப்த, ஸ்பரிச, ரச, ரூப, கந்தம் என்பவைக ளால் வரும் சுகதுக்கங்களை அனுபவித்து சரீரத்தில் உழலும் என்பது விடையின் பொருள்.
«geauasaTeTeaaebasoolooTš&6Tâ

Page 103
நம்மாழ்வாரின் விடையின் மூலம் அவரது இறைத் தன்மையின் ஆழ அகலங்களைப் புரிந்து கொண்டு மதுர கவியாழ்வார் சீடரானார். அவரோடு சிலகாலம் தங்கியிருந்து உபதேசம் பெற்றார்.
எம்பெருமானைத் தியானிப்பதில் மட்டும் நாட்டம் செலுத்தி வந்த நம்மாழ்வாருக்கு தம் திருக்காட்சியை அளிக்கத் திருவுளம் கொண்டு தம்பிரான் கருடப்பெரு மாள்மீது எழுந்தருளி இவர் முன் தோன்றினார். உள்ளமும் உடலும் நெகிழ்வுற்று அவரது திவ்விய குணங்களில் திளைத்து பேரானந்தம் அடைந்தார். இவர் தம் இன்ப அனுபவத்தின் வெளிப்பாடாக ரிக், யசுர், சாம, அதர்வணம் என்னும் வேதசாரத்தையே முறையே திருவிருத்தம், திருவாசிரியம், திருவாய்மொழி, திருவந்தாதி என்ற திவ்வி யப் பிரபந்தங்களாக அருளிச் செய்தார்.
நம்மாழ்வாரின் மறைவிற்குப் பிறகு மதுரகவியாழ்வார் திருமாலைப் பாடாது நம்மாழ்வாரை மட்டுமே பாடினார். தம் குருவான நம்மாழ்வாரின் உருவச்சிலை ஒன்றையும் நிறுவி வழிபட்டு வந்தார். மிகவும் பழமைவாதிகளான தமிழ் மரபைச் சார்ந்த சிலர், நம்மாழ்வார் வேதங்களைத் தமிழில் பாடினார் என்பதை ஏற்க மறுத்தனர். மதுரகவி ஒரு பனை ஓலையில் ‘கண்ணன் கழலினை என்னும் திருவாய் மொழிப்பாசுரத்தை எழுதி சங்கப்பலகையில் வைத்தார். நம்மாழ்வாரின் பாசுரம் எழுதிய அந்த ஏடு மட்டுமே இருப்பதைக் கண்ட சங்கப் புலவர்கள் தம் தவற்றிற்காக வருந்தி நம்மாழ்வாரை வணங்கினர் என்று ஒரு கதை கூறுகிறது.
பேராசிரியர் K.A. நீலகண்டசாஸ்திரி நம்மாழ்வாரையும், மதுரகவியாழ்வாரையும் கி.பி.9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கடைசி ஆழ்வார்களாகக் கூறியுள்ளார். நம்மாழ்வார் மற்ற ஆழ்வார்களை அவயவமாகக் கொண்டவர் என்றும் கூறுவ தால் இவர் ஆழ்வார்களுள் காலத்தாற் பிற்பட்டவர் என்று கூறுதல் பொருத்தமுடையது.
நாதமுனிகள் 'பக்தருக்கு அமுதமாய், மக்கள் அனைவரும் விரும்பி ஏற்பதால் சகல அர்த்தங்களையும் அளிப்பதாய், உபநிடதங்களோடு கூடியதாய் பூரீ சடகோப ரது வாக்குகளாலான தமிழ் வேதசாரத்தை நான் வணங்கு கிறேன்’ என்று கூறியுள்ளார்.

5
பக்தி நெறி உலகெல்லாம் தழைக்க வேண்டும் என்று சீரியவாழ்வை மேற்கொண்ட நம்மாழ்வார் தோன்றிய ஊரான திருநகரியைக் காண்பதே பெரும்பேறு என்றும் அதுவே பரமபத இன்பம் என்று கூறி மகிழ்கிறார் இராமானுஜர்.
நம்மாழ்வார் அருளியவற்றுள் திருவிருத்தம் ரிக் வேத சாரமாக 100 பாசுரங்களைக் கொண்டது. யசுர்வேத சாரமா கிய திருவாசிரியம் 7 பாசுரங்களைக் கொண்டது. பெரிய திருவந்தாதி அதர்வவேத சாரமாக 87 பாசுரங்களைக் கொண்டது. சாமவேத சாரமான திருவாய்மொழி 1102 பாசுரங்களைக் கொண்டது. நம்மாழ்வார் பாடிய பாசுரங்கள் மொத்தம் 1296.
இவரது பாசுரங்களில் மிகவும் சிறப்பாகப் போற்றப்படுவது திருவாய்மொழியாகும். இதனை வைணவ சான்றோர்கள் தமிழ்மறை என்றும் கூறுவர். இந்நூலில் இறைவனது பேரருட் திறத்தையும் முதன்மையையும் எளிமையையும் உணர்ந்து மகிழ்வுற்று தாமான தன்மையில் நின்று பேசுவது டன் தாமான தன்மை அழிந்து ஒரு தலைவியின் நிலையை அடைந்து மகிழ்ந்து கூறுவதும் பின் ஆற்றாமையால் கூறும் கூற்றுக்களும் உண்டு. நம்மாழ்வார் இறைவனை மனம், வாக்கு, காயம் என்பனவற்றால் அனுபவிக்க விழைந்த நிலை இது.
திருவாய் மொழியில் நம்மாழ்வார் அகப்பொருட் பாசுரங் கள் மூலம் வேத முதற்பொருளையே விளக்கி நிற்கிறார் என இந்நூலுக்கு வியாக்கியானங்கள் எழுதிய ஆசிரியர் கள் கூறுகின்றனர். தோழியின் பாத்திரம் இறைவனோடு ஆன்மாக்களை ஒன்றுபடுத்துவதல்ல சான்றோர்களைக் குறிக்கிறது. தாய் - பாத்திரம் இறைவனை அடையவேண் டும் என்றும் மனஉறுதியைக் குறிக்கின்றது. தலைவியாக ஆன்மாக்களே கருதப்படுகின்றனர். தலைவி, தலைவனிடம் தூதாக அனுப்பும் பறவை முதலியன ஆசாரியனைக் குறிக்கின்றன என்பது அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரின் விளக்கமாகும். நம்மாழ்வார் இந்நூலில் வைணவ சமய உண்மைகளைத் தெளிவாக எடுத்து மொழிகிறார்.
நம்மாழ்வார் தமிழ்நாட்டின் தனிப்பெரும் கவியாவார். இயற்கையில் இறைவனைக் கண்ட பேரருளாளர். உலகிலே கண்ட அனைத்தையும் இறைவன் அம்சமாகவே எண்ணி அனுபவித்தவர் பக்தி, ஞானம், வைராக்கியம், தெய்வீக கருமம் முதலியவற்றை தமிழ் நாட்டிலே பரவச் செய்தவர். சமரச நோக்குடையவர். (நிநி.)
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 104
LOěřflourTu LonTGUNG)
திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனத்தின் பண்டார சந்நிதிகள் (சின்னப்பட்டம்) செய்த நூல்கள் பதினான்கு பண்டார சாத்திரங்களாக அமைந்தன. இவற் றில் பதின்மூன்றாவது நூலாக 'நமச்சிவாய மாலை” விளங் குகின்றது.
திருவாவடுதுறை ஆதீனத்தின் குரு முதல்வர் பூரீ நமச் சிவாய மூர்த்திகளின் சீடர்களில் ஒருவராக பூரீ அம்பல வாண தேசிகர் திகழ்ந்தார். இவரே பின்னாளில் ஆதீனத் தின் மூன்றாவது குரு மகா சந்நிதானமாக விளங்கினார். பண்டார சாத்திரங்கள் பதினான்கில் இவர் பத்து நூல் களை இயற்றினார். அவற்றில் ஒன்றே நமச்சிவாய மாலை ஆகும்.
பூரீ நமச்சிவாய தேசிகர்மீது பாடப்பெற்ற இந்நூல் 137 கலிவிருத்தப் பாக்களால் ஆனது. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் "ஆவடுதண்துறை நமச்சிவாயனே' எனுந் தொடர் பயின்று வருகின்றது.
அறக்கருணை பொலியச் செய்பவராக நமச்சிவாய தேசிகரைக் கூறும் வகையில் முதலாவது பாடல் அமைந்து ள்ளது. ஆன்மாவின் வினையால் ஆன்மாவிற்கு அஞ்ஞானந் தான் அமையும். ஆனால் கருணையால் ஞானம் காட்டும் சிவம் என நமச்சிவாயரை விளிக்கிறார் (பாடல் 73). உயர் ந்த ஆன்மாவைச் சிவம் என்றே சொல்லுமளவிற்கு உள்ள உலக வழக்கு எடுத்துக்காட்டுக்களைக் காட்டியுள்ளார். அம்பலவாண தேசிகர் சாதியில் வந்தவரை சாதிப் பெய ரால் அழைக்கின்றனர். ஆனால் கருணயில் வந்தவரை சிவம் என்றே அழைக்கலாம் என்கிறார் (பாடல் 74). உட லில் இருக்கும் உயிரை உடல் எனவே கருதுவது போல கருணையோடு சேர்ந்த உயிரை சிவம் என்று கூறலாம் என்பார் (பாடல் 77). "கருணைப் போதகம் சேர்ந்தவரை
'அருள் உரு எனலாம் என்கிறார்.
மலபரிபாகம் விரும்புவது தொடங்கி நூற்பொருளை அமைத்துள்ளார். மாதர் விருப்பம் நீங்கவேண்டியது பற்றிப் பாடியுள்ளார். அருளை நாடுதலும் உலக ஆசை தவிர்த்த
@函556oa油56m@9uá淡※綴影線

லும் வேண்டும் எனக் கேட்கிறார். மெய்யடியார் கூட்டுப் பற்றிக் கூறுகிறார். நரகம் பற்றியும், மாற்றான் மனைவியை விரும்பியவன் பெறும் தண்டனை பற்றியும் பேசுகிறார்.
கருவிகள் தந்து வீடளிக்கும் இறைவன் நோக்கத்தை புதுமையாகச் சிந்தித்து நரகம் தருவது பற்றி பரிசீலனை செய்ய வேண்டுகிறார்.
வினையை ஆன்மா இயற்றுவது பற்றியும் இறைவன் இயக்குவது பற்றியும் விரிவாக காரண முறையில் ஆராய் கிறார்.
செயல் மாற்றங்கள் பலவற்றை விளக்குகிறார். எடுத்துக் காட்டாக பெண்களின் காதலை திருவடிக் காதலாக்குதல், கரணங்கள் சிவமயமாதல் என விளக்குகிறார்.
கருணையால் சிவமாகும் ஆன்ம அனுபவ உயர்வை
பல அடையாளங்களில் கூறுகிறார்.
இறைவன் தடுத்தாளும் திறம், அருளிய நேயம் பற்றி விரிவாகப் பேசுகிறார். குருநெறி, இறைவன் ஆன்மாவை மலங்களுக்கு வேறாக இயக்குதல் முதலியனவற்றை விளக்குகிறார். மாயை மலத்தை அருளாக மாற்றும் தன்மை பற்றிக் கூறுகிறார். வினை ஒருப்படல், வாசனா மலம் அறுதல் எனப் பேறு நிலைகளை விரிவாகப் பேசுகி
றார.
மனத்தைச் சிவம் உறச் செய்த அனுபவமாக நமச்சிவாய மாலை பாடிய அம்பலவவெனத் தேசிகர் நூல் முழுமையை வினா, விளி முறையில் பாடியுள்ளமை சிறப்பாகும். (ச.ந.)
ljШћslпшј јtillјпеј.
ஆதீனத் தலைவர்களான குருமகா சந்நிதானங்களின்கீழ், பயிற்சி பெறுபவர்களும் பணி செய்பவர்களுமான துறவிகள் தம்பிரான் எனப் பெயர் பெறுவர். இவர்கள் ஆசாரிய அபிஷேகம் பெறாது, மூன்று வகைத் தீட்சைக ளையும் பெற்ற திருத்தொண்டர்கள் ஆவர். தம்பிரான்களுள் சிறந்து விளங்குபவர்கள் பின்னாளில் ஆசாரியாபிஷேகம் பெற்று இளவரசுப் பட்டத்திற்கும் அதன் பின் ஆதீனத்
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 105
தலைவர்களாக, சந்நிதானங்களாக பெரிய பட்டத்திற்கும்
வருவர்.
முற்காலத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தில் தம்பிரான் கள் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இருந்தனர். அவர்களுள் ஒருவராக நமச்சிவாயத் தம்பிரான் (அவர்கள்) விளங்கு கின்றார். இவர் பதினாறாம் பட்டத்து மேலகரம் பூரீ சுப்பிர மணிய தேசிகர் காலத்தில் மகா வித்துவான் பூரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களுடைய மாணவராவார். சிறந்த மாணவராகத் திகழ்ந்த இவர் சின்னப்பட்டத்திலே பூரீ நமச் சிவாய தேசிகர் என்றழைக்கப்பட்டார். இவரைப் பேட்டைப்
பண்டார சந்நிதிகள் என்று கூறுவதும் உண்டு.
நமச்சிவாயத் தம்பிரான் வினா வெண்பா' எனும் சாத்திர நூலிற்கு உரை செய்துள்ளார் என்பது அவ்வுரையின் இறுதியிலுள்ள குறிப்பின் மூலம் அறியக்கிடக்கின்றது. தவிர, இருபா இருப.'து' என்னும் நூலுக்கும் இவர் உரை எழுதியுள்ளார்.
ஆதீனத்தின் ஐந்தாவது குருமகா சந்நிதானமாகிய பூரீவேலப்ப தேசிகரின் அனுக்கிரகம் பெற்றதோடு, அவரு டன் சேர்ந்து மெய்கண்ட நூல்கள் பலவற்றுக்கும் உரை
எழுதியுள்ளார். ( 5.)
நமசிவாயமூர்த்திகள்
சோழ நாட்டில் காவேரியாற்றின் தெற்கே தேவாரப் பாடல்பெற்ற தலங்களில் ஒன்றாகத் திருவாவடுதுறை என்னும் திருத்தலம் விளங்குகின்றது. திரு + ஆ + அடுதுறை - பூரீ திருஆவடுதுறை, ஆ - பசுக்கள், துறை - ஆற்றுத்துறை, அதாவது பசுக்கள் நிறைந்துள்ள இடம் - ஆவடுதுறை எனப்பட்டது. இத்தலத்து இறைவனை உமா தேவியார் பசு வடிவம் கொண்டு பூசித்து அவ்வடிவம் நீங்கப் பெற்றார் என்பது ஐதிகம். அறுபத்து மூன்று நாயன் மார்களில் சம்பந்தர். அப்பர். சுந்தரர், சேந்தனார். திருமூலர், திருமாளிகைத்தேவர் ஆகியோர் வழிபட்டுப் பதிகம் பாடிய தலமாக விளங்குவதோடு திருமாளிகைத் தேவர் முத்திய டைந்த தலமாகவும் இது அமைந்துள்ளது. அதனால் முத்தி நகரம், சித்திபுரம், நவகோடி சித்திபுரம் எனப் பலவாறு அழைக்கப்படுகிறது.
இந்துக் கலைக்களஞ்சியம்

இத்தகைய சிறப்புக்கள் கொண்ட இவ்வாலயத்தின் அருகில் அமைந்துள்ளதே திருவாவடுதுறை ஆதீனம். இது சைவ ஆதீனங்களின் வரிசையில் முதலாவதாக வைத்துப் போற்றப்படுகின்றது. தவிர இவ்வாதீனத்தின் குரு பரம்பரை திருக்கைலாயத்தில் இருந்து தொடங்குவதால், “திருக்க யிலாய பரம்பரை” என்று பெருமையோடு அழைக்கப்படுகின் றது. இக்கயிலாய பரம்பரை அகச்சந்தானம், புறச்சந்தானம் என இரு பிரிவுகளாக அமைந்துள்ளன.
திருக்கயிலையில் வீற்றிருக்கும் பூரீகண்ட பரமசிவனால் திருநந்திதேவர் உபதேசம் செய்யப் பெற்றார். திருநந்தி தேவரிடம் சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நால்வரும் உபதேசம் பெற்றுக் கொண்டனர். இவர் களில் சனற்குமாரரிடம் சத்திய ஞான தரிசினிகளும் சத் திய ஞானதரிசினியிடம் பரஞ்சோதி முனிவரும் உபதேசம் பெற்றனர். இவர்கள் அனைவரும் கைலையில் இருந்தமை யால் தேவபரம்பரை என்றும் அகச்சந்தான குரவர் என்றும்
அழைக்கப்பட்டனர்.
அகச்சந்தான குரவரான பரஞ்சோதி முனிவர், மெய்கண்ட தேவருக்கு உபதேசம் செய்தார். மெய்கண்டதேவரிடம் அருணந்தி சிவாசாரியாரும் அருணந்தி சிவாச்சாரியாரிடம் மறைஞான சம்பந்தரும் மறைஞான சம்பந்தரிடம் உமாபதி சிவாச்சாரியாரும் உபதேசம் பெற்றுக் கொண்டார்கள். இந்நால்வரும் பூலோகத்தில் வாழ்ந்தமையால் பூதபரம்பரை
என்றும் புறச்சந்தான குரவர் என்றும் அழைக்கப்பட்டனர்.
புறசந்தான குரவரான உமாபதி சிவாச்சாரியாரிடம் உபதேசம் பெற்றவர் அருணமச்சிவாயர் ஆவார். இவரிடம் சித்தர் சிவப்பிரகாசர் உபதேசம் பெற்றார். சிவப்பிரகாசர், நமச்சிவாயமூர்த்திகளுக்கு உபதேசம் செய்தருளினார். இந்நமச்சிவாயமூர்த்திகள் திருவாவடுதுறை ஆதீனத்தை நிறுவியதோடு ஆதீனத்தின் குரு முதல்வராகவும் திகழ்ந்த வர் ஆவார். குரு முதல்வர் என்றால் முதலாவது சந்நிதா னம் என்பதாகும். திருநந்தி தேவர் முதல் நமச்சிவாய மூர்த்திகள் வரை வந்த தேவ, பூத பரம்பரையினரை “உபதேச பரம்பரை' என்றழைப்பர். நமச்சிவாய மூர்த்திக ளைத் தொடர்ந்து வரும் சந்தான குரவரை “அபிஷேக
பரம்பரை' என்பர்.
இந்து சமய கலாசார அலுவல்கள் தி0ை0ாக்களம்

Page 106
பூரீ நமச்சிவாய மூர்த்திகள் திருவாவடுதுறையின் அருகிலுள்ள மூவலூரில் சைவ வேளாளர் மரபில் பிறந்தார். நீண்ட காலமாக குழந்தைப் பாக்கியம் இல்லாத இவரின் பெற்றோர் புள்ளிருக்கு வேளுர் வைத்தீஸ்வரநாதரிடம் குழந்தை வரம் வேண்டிப் பிரார்த்தித்தனர். அவர்களின் பிரார்த்தனைப் பயனாக வைத்தீஸ்வரன் அருளால் தமக்குப் பிறந்த ஆண் மகவுக்கு வைத்தியநாதர் எனப் பெயரிட்ட னர். வைத்திநாதர் தமது ஐந்தாவது பிராயத்தில் தம் பெற்றோருடன் புள்ளிருக்கு வேளுர் சென்று இறைவனைத் தரிசனம் செய்தார். அச்சமயம் அங்கிருந்த சிவாச்சாரியார் ஒருவர் சிவலிங்கம் ஒன்றைக் கொடுத்து வழிபடும்படி அருளினார். வைத்தியநாதரும் அவ்வாறே செய்து வந்தார். வைத்தியநாதரின் ஏழாவது வயதில் அவரின் வீட்டு வீதி வழியாக சித்தர் சிவப்பிரகாசர் செல்வதைக் கண்டார். அப்போது அவர்பால் ஈர்க்கப்பட்டு, தாம் வழிபட்டு வந்த சிவலிங்கத்தை எடுத்துக் கொண்டு சிவப்பிரகாசரைப் பின் தொடர்ந்து செல்லலானார். இதனைக் கண்ட அவரின் பெற்றோரும் இருவரையும் தொடர்ந்து சென்றனர். ஈற்றில் அனைவரும் திருவாவடுதுறை தலத்தை அடைந்தனர்.
சித்தர் சிவப்பிரகாசர், மனக்கலக்கத்தோடு தம்மைத் தொடர்ந்து வந்த வைத்தியநாதரின் பெற்றோரிடம் மகனைப் பற்றி இனிக் கவலைப்பட வேண்டாம் என்றும் தாம் அவரை கவனித்துக் கொள்வதாகவும் கூறி அனுப்பினார். சிவப்பிர காசர் சிறிதுகாலம் திருவாவடுதுறையில் தங்கியிருந்து பின்னர் வைத்தியநாதரை அழைத்துக் கொண்டு வேதாரண் யம் சென்றார். அங்கு தாம் பெற்ற சிவஞானத்தை வைத் தியநாதருக்கு உபதேசித்தார். அத்தோடு, ஞானதீட்சை அளித்து, நமச்சிவாயர் என்ற தமது குருவின் பெயரை தீட்சாநாமமாகச் சூட்டினார்.
நமச்சிவாயரும் சிவஞானபோதம் முதலிய சைவ சித்தாந்த சாத்திரங்கள், திருமுறைகள் என்பனவற்றில் சிறப்பான தேர்ச்சி பெற்று பக்குவம் கைவரப் பெற்றார். சிறிது காலத்தின் பின்னர் இருவரும் மீண்டும் திருவாவடு துறைக்கு வந்து தங்கினார்கள். அவ்வாறு வாழ்ந்து வந்த காலத்தில் சிவப்பிரகாசர் தாம் முத்தியடையும் காலம் நெருங்குவதை உணர்ந்து நமச்சிவாயரிடம், திருவாவடு
@函556D6Dä56T@引uá談
 

B
துறைக் கோயிலை அடுத்திருந்த திருமாளிகைத் தேவரின் சமாதிக்கு அருகில் ஒரு மடம் அமைத்து அதில் தமது ஆச்சாரிய பரம்பரையை வளர்த்து வருமாறு பணித்துத் தாம் வேதாரண்யத்தை அடைந்தார்.
குருவின் பணிப்பின்படி நமச்சிவாயரும் திருவாவடுதுறை ஆதீனத்தை நிறுவி குரு முதல்வராக - குமகா சந்நிதான மாகத் திகழ்ந்தார். "நமச்சிவாயம்” என்பது "பஞ்சாக்ஷரம்” "திருவைந்தெழுத்து’ என்று பொருள்படும். எனவே, நமச்சிவாய மூர்த்திகள் பஞ்சாக்கர தேசிகர் என்று அவரு க்குப் பெயராயிற்று. ஆதீனமும் "பஞ்சாக்கர தேசிகர் ஆதீனம்” என்று பெயர் பெற்றது.
நீண்டகாலம் குரு முதல்வராக விளங்கிய நமச்சிவாய மூர்த்திக்கு குடந்தை சிவப்பிரகாசர், மறைஞான தேசிகர், அம்பலவாண தேசிகர், தட்சிணாமூர்த்தி தேசிகர் ஆகிய நால்வரும் சீடர்களாவர்.
இவ்வாறு சிறந்த ஓர் ஆதீனத்தையும் சீடர் பரம்பரையை யும் உருவாக்கிய நமச்சிவாய மூர்த்திகள் தைமாதம் அஸ்வினி நட்சத்திரத்தில் முத்தியடைந்தார். இவரின் குருபூசைத் தினத்தை "மகரத் தலை நாள்” என்று அழைப் பர். இத்தினம் ஆதீனத்தில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. (3.b.)
நமிநந்தியடிகள்
பெரிய புராணம் பாடும் அறுபத்துமூவரில் ஒருவராகச் விளங்குபவர் நமிநந்தியடிகள் ஆவார்.
சோழநாட்டிலே உள்ள ஏமப்பேரூர் என்னும் ஊரிலே சைவ அந்தணர் குலத்தில் நமிநந்தியடிகள் அவதரித்தார். சிவபெருமானின் திருவடியை நாள்தோறும் வணங்கி இரவும் பகலும் அவரையே நினைந்து இன்புறுவார். தினமும் தன் ஊரில் இருந்து திருவாரூருக்குச் சென்று இறைவனைத் தொழுது வருவார். கோயில்களில் திருத் தொண்டும் செய்து வருவார். இவ்வாறு வாழ்ந்து வருகின்ற போது ஒரு நாள் நமிநந்தியடிகள் திருவாரூர் சென்று
键 இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 107
இறைவனை வணங்கிவிட்டு அருகில் உள்ள அரநெறி என்னும் ஆலயத்தை அடைந்தார். அவ்வாலயத்தில் ஆயிரக்கணக்கான தீபங்களை ஏற்றித் தொண்டு செய்ய வேண்டும் என விரும்பினார். மாலைநேரம் என்பதால் அதிக தூரம் சென்று நெய் வாங்கி வந்தால் இரவாகிவிடும் என எண்ணி அருகில் உள்ள ஒரு வீட்டிற்குச் சென்று விளக்கு ஏற்ற நெய்தருமாறு வேண்டினார். அவ்வீட்டில் உள்ளவர்கள் சமண மதத்தவர்கள். எனவே அவர்கள் ஏளனமாக “கையில் கனலை ஏந்திய உங்கள் பெருமானு க்கு விளக்கு எதற்கு? இங்கு நெய்யில்லை நீர் விளக் கெரிக்க வேண்டுமானால் தண்ணீர் எடுத்துச் சென்று விளக் கேற்றும் எனக் கூறினார்கள். இதனால் மனம் வருந்திய நமிநந்தி
மனவேதனையுடன் சென்று இறைவனை வணங்கினார்.
அடியவர்களின் குறைகளை பணிபோல அகற்றும் இறைவன் நமிநந்தியடிகளின் குறையைப் போக்க எண்ணி ‘நமிநந்தியே உன் கவலையை விடுக, அருகில் உள்ள குளத்தில் இருந்து நீரை எடுத்து வந்து விளக்கேற்றுவாய்” என அசரீரி மூலம் கூறினார். வியப்பும் மனமகிழ்ச்சியும் அடைந்த நமிநந்தி குளத்தில் சென்று இறைவன் திருநாமத்தை, உச்சரித்தபடியே நீரை எடுத்து வந்து திரியிட்டு ஏற்றியபோது விளக்கு சுடர்விட்டுப் பிரகாசித்தது. இதைக்கண்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆலயம் முழுவதி லும் விளக்கேற்றி மகிழ்ந்தார். இதனைக் கண்ட சமணர் கள் வெட்கம் அடைந்தனர். இவ்வாறு தண்ணிராலே தீபத் தொண்டு செய்யத் தொடங்கிய இவர் வீட்டில் தான் செய்யும் பூசையை இனிதே நிறைவேற்றி விட்டு திருவாரூ ருக்குச் சென்று மாலையானதும் திருவிளக்கு ஏற்றி வழி பட்டு பின் தனது வீடு திரும்புவார். தண்ணிராலே விளக் கேற்றிப் பணிபுரிந்துவரும் காலத்திலே சமணர்களுக் கிடையிலே கலகம் ஏற்பட்டு திருவாரூரில் சமணமதம் அழிந்துவிடவே திருவாரூர் முழுவதும் சிவமயமாயிற்று.
நமிநந்தியடிகளின் தொண்டைக் கண்டு வியந்து சோழ மன்னன் அவரைப் பாராட்டினான். திருவாரூருக்குத் தேவை யான நிவேதனப் பொருட்களை வழங்கி அவற்றைப் பாது காக்கும் பொறுப்பையும் நமிநந்தியடிகளுக்கே வழங்கி னான். திருவாரூரில் உள்ள பிரானுக்கு விழாக்களை
சிறப்பாக பங்குனி உத்தரத்தை நடத்த விரும்பி இறைவனி
இந்துக் கலைக்களஞ்சியம்

டம் முறையிட்டார். அவரின் வேண்டுகோளால் பங்குனி உத்தர விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் ஒரு நாள் இறைவன் திருவுருவம் திருமணலிக்கு எழுந்தருளி யது. அவ்விழாவில் எல்லா மதத்தினரும் குலத்தினரும் வேற்றுமையின்றிக் கலந்து கொண்டனர். அவர்களுடன் கூடி நின்று நமிநந்தியடிகளும் இறைவனை வழிபட்டு மகிழ் ந்தார். பின்னர் தனது ஊருக்குத் திரும்பிய இவர் வாசல் வழியாகச் செல்லாமல் புறக்கடை வழியாகச் சென்று அங்கேயே இரவைக் கழித்தார். அவர் மனைவி “சிவபூசையை நிறைவேற்றிவிட்டு, உணவு உண்டு உள்ளே வந்து படுத்து உறங்குங்கள்” என்று கூறினார். அதற்கு நமிநந்தியடிகள் “இன்று திருமணலிக்கு எம்பிரான் எழுந்தருளினார். அப்போது எல்லா மதத்தினருடனும் சேர்ந்து வணங்கியதால் தீட்டுப்பட்டுவிட்டது. எனவே பிராயச் சித்தமாக நீராடவேண்டும். அதற்கான ஆயத்தங்களைச் செய்’ எனக் கூறினார்.
கணவன் சொன்னதைக் கேட்டு மனைவியும் உள்ளே செல்ல விரிசடைப் பெருமானின் திருவருளாலே இவர் உறங்கிவிட்டார். அவரது கனவிலே இறைவன் எழுந்தருளி ”நமிநந்தியே திருவாரூரில் பிறந்தவர்கள் அனைவரும் எமது அடியார்களே! அத்தன்மை நீ காண்பாய்” எனக் கூறி மறைந்தார். உடனே உறக்கம் கலைந்து எழுந்த நமிநந்தியடிகள் நடந்தவற்றை மனைவியிடம் கூறி, சிவபூசையை செய்துவிட்டு அதிகாலையில் வேகமாக திருவாரூருக்குச் சென்றார். அங்கு திருவாரூரிலே பிறந்த அனைவரும் சிவவடிவங்களாக மாறிப் பிரகாசமான திரு மேனிகளோடு இருப்பதைக் கண்டார். அதைக் கண்ட அவர் தன் தலைமேல் கைகுவித்து வணங்கி, தரையில் வீழ்ந்து ஆனந்தம் கொண்டார். உடனே சிவனைப்போல் காட்சியளித்தவர்கள் பழைய நிலையை அடைந்தனர். நமிநந்தியடிகள் இறைவனைத்தொழுது ”அடியேன் செய்த பெரும் பிழையைப் பொறுத்தருள வேண்டும்” என வேண்டி னார். பின்பு சிவபிரானின் அருளினால் திருவாரூருக்குச் சென்று அங்கேயே குடிபுகுந்தார். அங்கு நீண்டகாலம் தம் தீபத்தொண்டைச் செய்து வந்தார்.
சிவாலயத்தில் விளக்கிடுதல் சிவபுண்ணியங்களில்
எல்லாம் சிறந்தது. இதனால் சிவனருள் விரைவில் கிடைக்
இந்து சமய கலாசார அலுவல்கள் தி3ை0ாக்களம்

Page 108
கும். இதனை அப்பர் சுவாமிகள் “விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்நெறி ஞானமாகும்” எனச் சிறப்பிக்கின்றார். ”தொண்டர்க்கு ஆணி’ எனவும் இவர் சிறப்பிக்கப்படுகின் றார். இவர் விளக்கிடும் திருத்தொண்டு செய்தமையை அப்பர் சுவாமிகள் “தொண்டன் நமிநந்தி நீரால் விளக்கிட்டமை நீணாடு அறியும்” எனப் பாடியுள்ளார். வைகாசி மாதம் பூச நட்சத் திரத்திலே சிவனுடன் கலந்த இவரை பெரியபுராணசாரம் பின்வருமாறு போற்றுகின்றது.
நண்ணுபுகழ் மறையோர்வாழ் ஏமப்பேறுார்
நமிநந்தி யடிகள்திரு விளக்கு நல்க எண்ணெய் அமணர்கள் விலக்க நீரால் ஆரூர் இலங்கும் அரநெறியாருக் கேற்றுநாளில் கண் ணமணர்கெடக் கண் பெற் றடிகள்வாழக்
காவலனால் நிபந்தங்கள் கட்டுவித்தே அண்ணலருள் கண்டாரூர் அமர்ந்து தொண்டர்க்
காணி எனும் அரசினருள் அடைந்துள்ளாரே'
(கு.ஹே.)
julgustifth
தருக்கப்போலிகள் பற்றிப் பேசும்பொழுது நாம் பொது வாக வலிதற்ற வாதங்களைப் பற்றியே பேசுகிறோம். ஆனால், பல சந்தர்ப்பங்களில், விவாதத்தில் ஈடுபடும் முரண்படுபவர் வாதவடிவில் எதனையும் முன்மொழிந்தது. அது வலிதானதோ, அல்லது வலிதற்றதோ என்று கூறும் பொழுது. பேலி என்ற பதத்தை இந்திய மரபில் கையாளு வதுண்டு. எவ்வாறாயினும் மெய்யியலாளர் ஒருவர் வரை விலக்கணங்களை உருவாக்க அல்லது விவரிக்க அல்லது விளக்கத்தைத் தர முயற்சிக்கும்பொழுது, அவர் தனது முடிவிற்கான எடுகோளாகச் சில தவறான முற்கற்பிதங்க ளின் வழிகாட்டலில் செயற்படுதலும் கூடும். இம்மெய்யிய லாளருடன் விவாதத்திலிடுபவர் அவ்வரை விலக்கணத்தி ற்கு அல்லது விவரிப்பிற்கு அல்லது விளக்கத்திற்கு ஆதாரமாயிருக்கும் முற் கற்பிதங்களிற் காணப்படும் உள்ளுறைந்த போலிகளை வெளிப்படுத்தி அவரின் முடிவி ற்கு ஆதாரமயமையும் எடுகோள்கள் தவறானதெனக்
காட்ட முயல்வர். இத்தகைய கருத்திலேயே நாம் வரை
இந்துக் கலைக்களஞ்சியம்x0 3.

விலக்கணப் போலி, விபரிப்புப் போலி, விளக்கப்போலி பற்றிப்பேசலாம்.
நயஆபாசம் என்பது சமணத் தருக்கவியலாளர்களால் எடுத்துக்காட்டப்பட்டது. இதனை நாம் வாதிடுபவரின் நிலைப்பாட்டிலிருந்து எழும் போலி என வகைப்படுத்து கிறோம். வாக்கியங்கள் இலக்கியக் கருத்திலோ அல்லது தருக்கக் கருத்திலோ பயன்படுத்தப்படலாம். ஒரு கருத்தில் வாக்கியமொன்று உண்மையாகவும், பிறிதொரு கருத்தில் பொய்யாகவும் இருக்கலாம். ஆனால் கூறப்படும் வாக்கிய மொன்றின் சரியான கருத்தென்பது அவ்வாக்கியம் மொழி யப்படும் சந்தர்ப்பத்தைப் பொறுத்தது. சாதாரண மொழியி னால் தவறாக வழிநடத்தப்படும் மெய்யியலாளர்கள் சந்தர்ப்பத்தின் தொடர்பின்றி அவ்வாக்கியங்களை வியாக் கியானப்படுத்துவதும், அதன் உட்கிடையான எடுப்புக்களை சந்தர்ப்பத் தொடர்பின்றிப் பயன்படுத்துவ முண்டு. பொது வாக மெய்யியலாளர்களைச் சாதாரண மொழிவழி வெளிப் பாடு தவறாக வழிநடத்துவதுண்டு. ஆனால் சாதாரண மனிதனோ வாக்கியத்தின் சந்தர்ப்பத் தொடர்பினால் பெறப் படும் கருத்துடனும் அதன் நடைமுறைப் பயன்பாட்டுடனும் திருப்தியடைந்து விடுகிறான். இதனைக் கருத்திற் கொண்டே பல்வகை நிலைப்பாடுடைய மெய்யியலாளர் களால் கூறப்படுவதை, சமணத் தருக்கவியலாளர்கள் நய ஆபாசமாக வாதிடுபவரின் நிலைப்பாட்டிலிருந்து எழும்
போலியாக வகைப்படுத்தித் தந்துள்ளனர்.
சமணர்களுடைய நிலைப்பாட்டின்படி ஒவ்வொரு பொரு ளும் முடிவிலா எண்ணிக்கையுடைய பண்புகளைக் கொண் டுள்ளன. அனைத்துப் பண்புகளும் பெளதீகவியலான பண்புகள் அல்ல. அதுமட்டுமல்லாது, சாதாரணமொழி ஏற்ப டுத்தும் மயக்கத்தினால் பொருட்தெளிவின்மையும் ஏற்படுவ துண்டு. உதாரணமாக ஒரு சந்தர்ப்பத்தில் மஞ்சள் என வர்ணிக்கப்படுவது, பிறிதொன்றுடன் ஒப்பிடும் வேறுசில சந்தர்ப்பங்களில் மஞ்சள் எனக் குறிக்கப்படுவதில்லை.
சந்தர்ப்பத் தொடர்புடைய விவரிப்பு இவ்வாறு எண்ணிக் கையற்ற விதத்தில் வெவ்வேறாக விவரிக்கப்படலாம். அதனாலேயே மிகைப்படுத்திய பொதுமையாக்கம் நய
E), ITƏLDT(J) (o LDGOI 3 Coððlgj, தருக்கவியலாளர்கள் குறிப்பிடு
இந்து சமய கலாசார அலுவல்கள் தி6ை00க்களம்

Page 109
கின்றனர். நய ஆபாசம் என்பதும் போலியான தொரு நியாயமாகும். சரியென ஒரு சந்தர்ப்பத்தில் தென்படுவது, உண்மையில் சரியானதல்ல. எனவேதான் சாதாரணமொழி யில் நியாயித்தல் சந்தர்ப்பத் தொடர்புடையதென சமண தருக்கவியலாளர்கள் வாதிடுகின்றனர். மெய்யியலாளர்கள் சாதாரண மொழியிலிருந்து திடீரெனி மெய்யியல் மொழிக்கு வரும்பொழுது இத்தகைய தவறுகளை விடுகிறார்கள். அதாவது சந்தர்ப்பத் தொடர்பை அவர்கள் மிகைப்படுத்தப் பட்ட பொதுமையாக்கங்களாக்கி விடுவதால், வகைக் குளறுபடி என்ற சிக்கலுக்கு உள்ளாகும் நிலை ஏற்படுகி
1335).
சமண தருக்கவியலாளர்களின் அபிப்பிராயப்படி நய ஆபாசம் ஏழு வகைப்படும். அவற்றில் முதலாவது நைகம ஆபாசம் என அழைக்கப்படும். ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாத இரு விடயங்களைப் பிரித்தல் கூடுமென விளக்கமுயல்வது இப்போலியின்பாற்படும். உதாரணமாக, பொருளையும் அதன் பண்பையும் பிரிக்க முயல்வது, அசையும் பொருளையும் அதன் அசைவையும் வேறுபடுத் துவது முதலான செய்கைகள் இப்போலியின் பாற்படும். பொருளையும் அதன் பண்பையும் குறிப்பதற்கு இருவேறு சொற்களை நாம் சாதாரண மொழியில் பயன்படுத்துவதால் எழுந்த மயக்கமே இதற்குக் காரணமாகிறது.
இரண்டாவது வகை சங்ஹிரஹ ஆபாசம் எனப்படும். அது பரசங்ஹிரஹம், அபரசங்ஹிரஹம் என இரு வகைப்படும். உலகிலுள்ள அனைத்துப் பொருட்களும் ஒன்றே எனக் கருதுவது பரசங்ஹிரஹம். ஒரு பொருள் உள்ளடக்கும் பொதுப்பண்பை மாத்திரம் முதன்மைப் படுத்தி, அப்பொருளின் தனிச்சிறப்பியல்பை புறக்கணிப்பது அபரசங்ஹிரஹம். இவ்விரண்டிலுமே பொருளின் தனிச்சிறப் பியல்பு நிராகரிக்கப்படாவிடினும் அது புறக்கணிக்கப்படு கிறது. உதாரணமாக உலகத்திலுள்ள பொருட்கள் எல்லாம் மெய்யானவை என எமது மொழியினால் நாம் விபரித்தாலும், அவ்வாறு விபரிக்கும்பொழுது பொருட்கள் உள்ளதென்பதை நாம் நிராகரிக்காது விட்டாலும், அப் பொருட்கள் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுத்தக் கூடிய தென்பதைக் கவனியாதுவிடுதல். 'உள்ளவை அனைத்தும் ஒன்றே, வேறுபாடு வெறும் தோற்றமே என வேதாந்திகள்
இந்துக் கலைக்களஞ்சியம் x
 

வாதிடுவது பரசங்ஹிரஹ ஆபாசம், மெய்யியல் துறையில் ஆறு மேசைகள் உள' என்று கூறும்பொழுது அம்மேசைகளி டையே வகை வேறுபாடுகள் இருப்ப்தை நாம் நிராகரிக் காத பொழுதும், அவ்வேறுபாடுகளைப் பொருட்படுத்தாது. "மெய்யியற் துறையில் ஆறு மேசைகள் உள' எனக் கூறுகிறோம். பிளட்டோனிய வாதியான மெய்யியல் விரிவு ரையாளர் "மேசைகளிற் கிடையிலான வேறுபாடுகள் வெறும் தோற்றமே, "மேசைத்தன்மை' என்ற பொதுப்பண்பு இவற்றிக்கெல்லாம் இருப்பதனால் அவை மேசைகளா கின்றன’ என வாதிடலாம். சமண தருக்கவியலாளர்களின் அபிப்பிராயப்படி அவர் அவ்வாறு வாதிடுவது அபரசங்ஹி ரஹ ஆபாசம் என்ற போலியின் பாற்படும்.
சமணதருக்கவியலாளர்கள் எடுத்துக்காட்டும் மூன்றாவது வகையான போலி வியவகார ஆபாசம் எனப்படும். அது சங்ஹிரஹ ஆபாசத்திற்கு மறுதலையானது. ஒரு பொரு ளின் சிறப்பியல்புகளின்பாற் கவனத்தைச் செலுத்தி அதே வகையான பிற பொருட்களுடனான பொதுத் தன்மையைப் புறக்கணிப்பதால் எழுவதே வியவகார ஆபாசமாகும். பெளத்த மெய்யியலாளர்களின் அபிப்பிராயப்படி பொருளில் உள்ளதெல்லாம் சுவலட்சணமே, பொதுப்பண்புகள் எனப்படு பவை உளம் பொருட்களின் மீது கற்பிப்பவையேயாகும். சமணர்களுடைய நிலைப்பாட்டின்படி மேற்படி பெளத்தர்க ளின் அபிப்பிராயம் வியவகாரிக ஆபாசமாகும். அதாவது மொழியினால் தவறாக வழிநடத்தப்படுவதால் எழுவதாகும்.
நான்காவது வகையான ஆபாசம் இர்யுசூத்திர ஆபாசம் எனப்படும். பொருளின் நிகழ்கால இயல்பை மட்டும் கருத் திற்கொண்டு, அப்பொருளின் கடந்தகால, எதிர்கால இயல் புகளைக் கவனத்திற்கெடுக்கத் தவறுவதால் இது எழுகி றது. பொருளின் நிகழ்கணத்தை மட்டுமே அறிவுக்குரிய விடயமாக ஏற்றுக்கொண்டு, ஏனையவற்றை உளத்தின் கற்பிதமாகக் கருதும் பெளத்த நிலைப்பாட்டின்படி, "எல் லாப் பொருட்களும் நிகழ்கணத்துக்குரிய புலன் தரவுகளாம், தொடர்ச்சி உளதாகக் கருதுவது திரிபுக் காட்சியாம் என்ற இக்கொள்கை சமணர்களின் அபிப்பிராயப்படி
போலியாகும்.
ஐந்தாவது வகைப் போலி சப்தநய ஆபாசம் எனப்படும்.
இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 110
ஒருமை, பன்மை, சொற்களின் வேற்றுமை உருபு, பால் வேறுபாடு என்பனவற்றால் வாக்கியத்தின் இலக்கண அமைதி, பேணப்படுவதாலேயே கருத்துப் பரிமாற்றம் நடை பெறுகிறது. இவற்றில் மாற்றத்தை ஏற்படுத்தும்பொழுது, கருத்து சில சந்தர்ப்பங்களில் வேறுபடுமெனினும், இலக் கண அமைதியை மிகைப்படுத்தி அதனாலேயே கருத்தில் மாற்றம் ஏற்படுகிறதெனக் கூறல் இப்போலியின்பாற்படும் மேல்வரும் உதாரணத்தைக் கவனிக்கவும்.
ஆசிரியர் பாடம் படிப்பித்தார் பாடம் ஆசிரியராற் படிப்பிக்கப்பட்டது
இவ்வாக்கியங்களில் 'ஆசிரியர், பாடம் ஆகிய சொற்க ளின் இடம் மாற்றப்பட்டாலும் கருத்து மாறவில்லை. ஆனால் இவ்வாக்கியங்களில் சொற்கள் இடம்மாற்றப்பட்டதால் அவற்றின் கருத்திலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதென ஒரு வர் வாதிட்டால், அவர் சப்தநய ஆபாசம் என்ற போலிக்குள் ளாகின்றார்.
சங்ஹிருத்த ஆபாசம் எனப்படுவது ஆறாவது வகையா கும். ஒரு சொல்லின் கருத்து அல்லது கருத்தின் சாயல் கள் சொல்லிலக்கணத்திற்கு ஏற்ப வேறுபடுமென்பதை இது வற்புறுத்துகிறது. இதன்படி செல்லிலக்கணத்தினடி யாக கருத்தொன்றை மிகைப்படுத்திக் கூறுவதன் மூலம் இப்போலி எழுகிறது. அதாவது கருத்துக் குறிப்பு அகலக் குறிப்பு என்பனவற்றிற்கிடையிலான மயக்கத்தினால் எழுவ
தாகும்.
ஏழாவது வகையான போலி ஏவம்பூத ஆபாசம் என அழைக்கப்படும். ஒரு பொருளுக்கு நாம் பெயரிடும்பொழுது, அப்பொருளின் தொழிற்பாடு அல்லது செயற்பாட்டைக் கருதிக் கொள்கிறோம். அவ்வாறு பெயரிடப்பட்டதன் பின்னர், அப்பெயர் அப்பொருளைச் சுட்டும் குறியீடாக மாறி விடுகிறது. சமண தருக்கவியலாளர்களின் அபிப் பிராயப்படி, தொழிற்பாடு அல்லது செயற்பாட்டைக் கொண் டிருக்கும் வரையில் மட்டுமே அப்பொருளை அப் பெயரால் அழைக்கமுடியும். அல்லாத வேளைகளிலும் அப்பொருளை அதேபெயரால் அழைப்பது ஏவம்பூத ஆபாசம் எனப்படும்.
சமணர்கள் எடுத்துக்காட்டும் நயஆபாசங்கள் திட்டவட்ட
இந்துக் கலைக்களஞ்சியம்ஐ
8
 
 
 

2
மானவையாகவோ அல்லது முழுமையானவையாகவோ இல்லாதுபோயினும், பல்வகையான தவறான வாக்கிய வெளிப்பாடுகளைப் பற்றிய புரிந்துணர்விற்கு உதவியாய் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் மேல்வரும் விடயங்கள் தெளிவுபடுத்தப்படுகின்றன.
1. பொருளும் அதன் பண்பும் பிரிக்கமுடியாதவை.
2. கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் எனக் காலம்
வேறுபடும்.
3. பொருட்களுக்குத் தனித்தன்மையும், பன்மைத்
தன்மையும் இருப்பது உண்மை.
4. பொதுப்பண்புகள் உண்டு.
5. பொருட்கள் நம்மைச் சாராத இருப்புடையவை.
6. காலத்திற் பொருட்கள் தொடர்ச்சியாக
இருப்புடையவையாகும்.
7. மொழி இயந்திரப்பாங்கானதன்று.
8. சொல்லிலக்கணத்தின் அடியாக மட்டும் கருத்து
தீர்மானிக்கப்படுவதில்லை.
சொல்லின் கருத்தைத் தீர்மானிப்பதில் மரபு முக்கிய இடத்தைப் பெறுகிறது. (சோ.கி.)
நயினாதீவுநாகபூசணி அம்மன் கோயில்
இலங்கையின் புராதன அம்மன் ஆலயங்களுள் இவ்வால யமும் ஒன்று. யாழ்ப்பாணத் தீபகற்பத்தைச் சூழவுள்ள சப்த தீவுகளில் நயினாதீவும் ஒன்றாகும். இத்தீவு ஏறக் குறைய மூன்று மைல் நீளமும் ஒரு மைல் அகலமும் கொண்டது. மூர்த்தி தலம் தீர்த்தம் என்னும் சிறப்புக்க ளைக் கொண்டதாக நயினை பூரீ நாகபூசணி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
தற்காலத்தில் நயினாதீவு என்று வழங்கப்படும் இத்தீவு முன்பு நயினார் தீவு, நாகநயினார் தீவு, மணிபல்லவம்,
※リ※*※@5安」glaL」5angT町&galepse流gleoeエáseTü

Page 111
மணித்தீவு எனப் பலவாறு அழைக்கப்பட்டது. இங்கு வாழ்ந் தவர்கள் நாகர்கள் எனவும் அவர்கள் தம் குல தெய்வமாக
நாகத்தை வழிபட்டார்கள் எனறும் கூறுவர்.
நாகவழிபாடு இந்தியா எங்கணும் வியாபித்திருந்தாலும் பண்டைய தமிழகத்தின் ஒரு பகுதியாகிய கேரள பிரதேசத்தில்தான் இது முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. இச்சந்தர்ப்பத்திற் பாக்கர் (Parkerh) இப்பாம்பு வணக்கத் தில் ஈடுபட்ட நாயருக்கும் (கேரளமக்களில் ஒரு பிரிவினர்) ஈழத்து நூல்களில் குறிக்கப்படும் நாகருக்கும் இடையே உள்ள ஒற்றுமையை இனங்கண்டு, இந்த நாகவணக்கமும் அங்கிருந்தே ஈழத்தினை வந்தடைந்தது என்ற கருத்தினை முன்வைத்தமை நினைவு கூரத்தக்கது.
பண்டைய காலத்திலே தமிழகமும், இலங்கையும் கலா சார அடிப்படையில் இறுக்கமான தொடர்பினைக் கொண்டி ருந்தன. இதற்குப் பண்டைய இலக்கியங்களும் தொல்லி யற் சான்றுகளும் சிறந்த ஆதாரமாக உள்ளன. மேலும் இவ்விரு நாடுகளும் ஆதிகாலத்திலிருந்தே வர்த்தக ரீதியி லும் நெருக்கமாக இணைந்திருந்தன. இதன் காரணமாக இந்தியாவில் மிகச் சிறந்த நிலையில் இருந்த நாகவழிபாடு இலங்கையிலும் இடம்பெற்றிருக்கும் எனக் கொள்வதில்
தவறில்லை.
ஆரம்ப காலங்களில் தனித்துவமான இவ்வழிபாடு பின்னர் இந்து சமயத்தில் சங்கமித்த நிலையையும் காண முடிகின் றது. இந்து சமயக் கடவுளர் நாகத்தினை அணிகலங்க ளாக அணிவது, நாகத்தில் உறங்குவது போன்ற ஐதீகங்க ளும் வளர்ச்சி பெற்றன. சிவன் நஞ்சுண்ட கண்டன் மட்டு மன்றி நாகத்தினை அணிகலனாகவும் கொண்டவர். நாகத் துடன் இணைந்து காட்சி தரும் சிவன் நாகதம்பிரான் ஆகின்றார். இவ்வாறு அம்பாள் நாகத்துடன் காட்சி தரும் போது நாக பூசணி ஆகின்றார். முருகனின் மயில்வாகனம் கூட நாகத்துடனேயே இணைந்து காணப்படுகின்றது. இவ்வாறே திருமால் ஆதிசேடன் என்றும் பாம்பின் மீது பள்ளிகொள்கிறார் என்ற ஐதீகமும் விளங்குகின்றது.
தனித்துவமாக விளங்கிய இவ்வழிபாட்டை பெளத்த மதமும் தன்னுடன் இணைத்துக் கொண்டதை பாளி நூல்
இந்துக் கலைக்களஞ்சியம்x ళ్ల•ళ్లభ 發災發

கள், பெளத்த ஜாதகக் கதைகள் என்பன எடுத்துக் காட்டுகின்றன. இதனை உறுதிப்படுத்துவதாக பண்டைய இந்திய, இலங்கை பெளத்த வழிபாட்டிடங்களில் காணப் படும் நாக உருவங்கள் அமைந்துள்ளன. பண்டைய வழி பாட்டு மரபாக விளங்கிய நாகவணக்கம் பின் வந்த நெறிக ளால் அழிக்கப்படுவதற்குப் பதிலாக அவற்றினால் இவ் வணக்கம் இணைக்கப் பெற்றமை அவ்வழிபாட்டு மரபு ஆதியில் பெற்றிருந்த செல்வாக்கினை எமக்கு உணர்த்தி நிற்கின்றது.
நினைத்த மாத்திரத்தில் தாம் விரும்பிய உடலுக்குள் புகுந்து அருட் செயல்களை நிகழ்த்தியுள்ள சித்தர்கள், நாகவடிவில் தலங்களில் உறைவதாக ஐதிகம் உண்டு. பிறர் அறியாது விரைந்து தம்மை மறைத்துக் கொள்ளவும் தேவையேற்படும் போது அச்சுறுத்தவும் மிகக் குறுகிய இடத்தில் தம் உடம்பை அடக்கவும் பாம் ரு, ஏற்றதாகக் காணப்படுகின்றது. ஆலயங்களில் சித்தர்களும் ஞானிக ளும் வாழ்ந்து தம் பூதவுடலை விட்டு விட்டு அங்கேயே தங்கியிருந்து விக்கிரகங்கள் மூலம் தம்மை நாடிவரும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. ஆலயங்கள் பலவாகக் காணப்பட்டபோதும் ஒரு சில ஆலயங்கள் அருட்பிரவாகமுடையனவாகக் காணப்பட்டு மக்கள் கூட்டமும் அதிகமாகக் காணப்படுவதற்கு இவ்வா றான சக்தியே ஆதாரமாகவுள்ளது. நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்திலும் அதன் சுற்றாடலிலும் சித்தர்களும் ஞானியரும் அருளாளர்களும் அந்தர்யாமியாய் உறைந்
துள்ளனர் என்று நம்பப்படுகின்றது.
இவ்வாலயக் கருவறையில் சுயம்புருவில் ஐந்து தலையு ள்ள சர்பச் சிலை காணப்படுகின்றது. இவ்வாறான தோற்ற அமைப்பை நோக்கும்போது ஆரம்பகாலத்தில் நாகவழிபாடு மட்டுமே காணப்பட்டு பின் அம்பாளின் திருவுருவத்தை தாபனம் பண்ணியிருக்க வேண்டும் எனக் கருதலாம். 1951ஆம் ஆண்டு நயினை நாகபூஷணி அம்மன் ஆலயத் திற்கு வந்த சேதுராமன் அவர்கள் இங்கு மூல மூர்த்தி யாகக் காணப்படுவது சர்ப்ப உருவிலுள்ள குண்டலினி சக்தி எனக் கூறியுள்ளார். தென்னிந்திய சிற்பவல்லுனரான திரு நரசிம்மன் அவர்கள் மூலஸ்தானத்தில் உள்ள அமைப்பைப் பார்த்த பின் “நயினாதீவில் மூலஸ்தான
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 112
அம்மன் போல் இருப்பது நாகப் பிரதிஷ்டையே. அது தேய்ந்து அம்மன் போல் தெரிகின்றது. இதற்குப் பின்னால் ஐந்து தலையுடைய நாகப் பிரதிஷ்டை ஒன்று உள்ளது. கலப்பற்ற, தூய்மையான நாகவழிபாட்டுப் பண்பினை நயினாதீவிற் காணலாம். சரித்திர காலத்திற்கு எட்டாத காலம் தொடக்கம் உள்ள கோயில் இது என்பது புலனா கின்றது” என்று குறுதிப்பிட்டுள்ளார். இவ்வாலயத்தைத் தரிசித்த பிரபல ஸ்தபதியான காரைக்குடியைச் சேர்ந்த எம்.செல்லக்கண்ணு என்பவர் “மூலஸ்தானத்திலுள்ள விக்கிரகத்தின் அமைப்பைப் பார்த்தால் அது ஆயிரம் வருடங்களுக்கு முந்தியதாகப் புலப்படுகின்றது. ஆனால் நாகப்பிரதிஷ்டை இதற்கு முன்பு ஏற்பட்டிருக்க வேண்டும். மூலஸ்தான விக்கிரகத்திற்குப் பின்னால் உள்ள நாகபடம் பார்ப்பதற்குப் பயங்கரமாக உள்ளது. சீறுவது போல் உள்ளது” என்று கூறியுள்ளார். இவ்வாறாக நயினையம்பதி யிலுள்ள சுயம்புரு (தான்தோன்றி) பற்றிப் பலரும் பல்வே றான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். காஞ்சிப் பெரி யார் சுயம்புருக்களின் மூலத்தையோ அதன் அமைப் பையோ ஆராய்வது உகந்ததன்று எனக் கூறியுள்ளமை அவதானிக்கத்தக்கது.
நாகபூசணி அம்மன் கோயில் பற்றிய செவிவழி கதை ஒன்று வழங்கி வருகின்றது. கண்ணகி கதையில் கண்ண கியின் தந்தையான மாநாய்கன் மாசாத்துவான் என்பானு டன் இரத்தினம் வாங்க நயினாதீவுக்கு வந்துள்ளான். அப்பொழுது வெடியரசன் என்பான் நெடுந்தீவில் கோட்டை கட்டி வாழ்ந்து வந்தான். இவனுடைய தம்பி வீரநாராயணன் இவனுடைய மனைவி நீலகேசி இருவரும் நயினாதீவிலுள் நாகரத்தினங்களுக்குக் காப்பாளராக இருந்தனர். நயினா தீவுக்கு வந்த வணிகரோடு ஏற்பட்ட சண்மையில் விரநாரா யணனும் அவனது மனைவியும் இறந்துவிட்டனர். இவர்கள் சண்டையிட்ட இடம் ‘பரதவர்கல்' என அழைக்கப்படு கின்றது. சண்டை நடந்து முடிந்த பின்னர் இரு வணிகர் களும் நயினாதீவுக்கும் அதற்கு வடக்கே உள்ள புளியந் தீவிற்குமிடையே இருந்த கால்வாய் வழியாக வந்து கொண்டிருந்தனர். அவ்வேளையில் புளியந்தீவிலுள்ள சிவன் கோயிலிலிருந்து நாகம் ஒன்று பூவைக் கவ்விக் கொண்டு கடல்வழியாக நீந்தி வந்தது. இவ்வேளையில் இந்நாகத்தைக் கொல்ல கருடன் ஒன்று வட்டமிட்டுப்
இந்துக் கலைக்களஞ்சியம்&
 

பறந்தது. கருடனைக் கண்டு பயந்த நாகம் கடல் நடுவே உள்ள கல் ஒன்றி னைச் சுற்றிக் கொண்டு அடைக்கலம் வேண்டித் தலையை உயர்த்தியவாறு காணப்பட்டது. இவ்வேளையில் கருடன், அருகில் இருந்த கல் ஒன்றில் அமர்ந்து கொண்டது.
இவற்றைக் கண்ணுற்ற மாநாயக்கனும் மாசாத்துவனும் நாகத்தைக் காப்பாற்றுமாறு நயினாதீவிலுள்ள நாகேஸ் வரியை வேண்டினர். அப்பொழுது கருடனும் பறந்து சென்று விட்டது. இச்சம்பவத்தின்பின் வணிகர்கள் இருவரும் நயினாதீவின் வடகிழக்கு மூலையைச் சென்றடைந்தார்கள். இவர்கள் இறங்கிய இடம் ஒடத்திடல் என அழைக்கப்படு கின்றது. இவ்விடத்தில் அவர்கள் லிங்கமொன்றைத் தாபி த்து காவல் தெய்வமாக ஐயனாரைத் தாபித்து பிரதிட்டை செய்தனர். இக்கோயில் தற்போதும் உண்டு என்று கூறப்படு கின்றது. அம்பிகை மீதும் அளவுகடந்த பக்தி கொண்டிரு ந்த இவர்கள் நாகபூஷணி அம்மன் ஆலயத்தைக் கட்டினார் கள் என்ற ஐதீகம் நிலவுகின்றது. மாநாய்கனே நயினாபட் டர் என்ற பிராமணனையும் கண்ணப்பன் என்ற வேளாள னையும் இங்கு கொண்டுவந்து குடியேற்றினான் என நம்பப் படுகின்றது. இந்நயினாபட்டரின் பெயரே நயினாதீவாக மாறியது என்று கூறுவாருமுளர். இத்தலம் அம்பிகை வழிபாட்டிற்குரிய தலமாக எழுச்சிபெற இங்கு முன்பு நில விய நாகவழிபாடு அம்பிகை வழிபாட்டுடன் சங்கமித்தது
616016)Tf).
நயினையில் சக்திபீடம் (புவனேஸ்வரிபீடம்) நிறுவியவன் இந்திரன் என்பது மணிமேகலைக் காப்பியத்தால் அறியக் கிடக்கின்றது. அதன் பின்னர்தான் புத்தபகவான் நயினா தீவிற்கு வந்தார். புத்தபெருமான் கி.மு.563ற்கும் கி.மு.484 ற்கும் இடையில் மாணிக்கங்கள் பதிக்கப்பட் பீடத்தைப் பெற மகோதரன் குளோதரன் என்னும் இரு அரசர்களி டையே ஏற்பட்ட தகராறைத் தீர்த்து வைப்பதற்கு வந்தார் என மகாவம்சம் கூறுகின்றது. சக்தியின் அறுபத்து நான்கு பீடங்களில் இங்குள்ள பீடம் புவனேஸ்வரி பீடம் என்றும் குறிப்பிட்டு பீடத்திற்குரிய அம்மனை வழிபட்டு அமைதி பெறுமாறு உபதேசம் செய்தார் என்ற செய்தி மணிமேக லையில் உள்ளது. எனவே புத்தர் இலங்கைக்கு வந்ததா கக் கூறப்படும் காலத்துக்கு முன்பே இங்கு சக்திபீடம்
* E55 statu aseaMTGT DJ gepealeöases gélessadexOTšassesTiñ

Page 113
அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சியாமளா தண்டகம் என்னும் நூலும் புவனேஸ்வரி சக்திபீடம் மணி பல்லவத் தீவில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
சாவக நாட்டு மன்னன் புத்தரது பாத பீடிகையைத் தரி சிக்க வந்ததாக மணிமேகலை கூறுகின்றது. பர்மாவில் இருந்து தர்மாசோக மகாராசா புத்திர சோகத்தால் வருந்தி நாகதீவுக்கு வந்தார். பாண்டவர்களில் ஒருவனான அர்ச்சு னன் நாககன்னிைைய மணஞ்செய்து பப்பிரவாசினைப் பெற்றான். தற்போது நாகபூஷணி அம்மன் ஆலயம் அமைந் துள்ள இடம் பப்பிரவாசன் சல்லி என்பதாகும். இத்தகவல் கள் அனைத்தும் நாகவழிபாட்டினதும் அம்மன் வணக்கத் தினமும் தொன்மையைக் குறிக்கின்றன.
போர்த்துக்கேயரின் காலத்தில் நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு பெரிய இழப்பு ஏற்பட்டது. கோயில் முற்றாக அழிக்கப்பட்டது. அக்கற்களைக் கொண்டு சங்கு மாவடி யிற் கோட்டை ஒன்றைக் கட்டினர். அத்துடன் கோயிலில் இருந்த பெறுமதிமிக்க பொருட்கள் சூறையாடப்பட்டன. கி.பி. 1620 - கி.பி. 1624 காலத்தில் இது நடந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.
ஒல்லாந்தர் காலத்தில் இராமச்சந்திரர் கதிரித்தம்பி என்பவரால் கோயிலுக்கு ஏற்படவிருந்த பாரிய அழிபாடுகள் தடுக்கப்பட்டன. போர்த்துக்கேயர் அழித்த கோயில் மீண்டும் சிறிதாகக் கட்டப்பட்டிருந்தது. அதனையே ஒல்லாந்தர் அழிக்க முற்பட்டனர். 1792 இல் இவ்வாலயம் அழிபாடு களை எதிர்கொண்டதாயினும் ஒல்லாந்தர்கள் கைக் கொண்ட ஓரளவு சமயப் பொறையும் கிராமவரி அறிவிட்டுக் கொடுக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டமையும் காரணமாக இவ்வாலயம் அழிவுக்குட்படாமல் தப்பிக்கொண்டது. நயினைநாகபூஷணி அம்மன் ஆலயத்தை 1788 இல் இராமலிங்கர் - இராமச்சந்திரர் கட்டினார். அன்றிலிருந்து அவர் வழிவரும் ஆண் சந்ததியினரே மேலாளராக (மனேஜராக) இருந்து வருகின்றனர்.
கோயில் கிழக்கு நோக்கிய வண்ணம் அமைந்துள்ளது. திராவிட கட்டிடப்பாணியில் ஆகம மரபுக்கமைய அமைக் கப்பட்டுள்ளது. 1935 இல் கிழக்குக் கோபுரம் கட்டப்பட்டது.
இந்துக் கலைக்களஞ்சியம்x
 

1951 இல் விமானம் புனரமைக்கப்பட்டு 26-4-1951 இல் புனராவர்த்தன சம்புரோக்ஷண மஹா கும்பாபிஷேகம் நடை பெற்றது. கருவறையில் சுயம்புருவில் ஐந்து தலை நாக படத்தோடு அம்பாள் அமைந்துள்ளாள். அத்துடன் இரு நிலை விமானமும் அர்த்த மண்டபம், மகாமண்டபம், வசந்த மண்டபம், தெற்குப்புற இராஜகோபுரம், கிழக்குப்புற இராஜ கோபுரம், நவக்கிரங்களுக்குரிய சந்நிதானம், நால்வர் சந்நி தானம், சண்டேஸ்வரர், பைரவர், சூரியன், சந்திரன் ஆகிய பரிவார மூர்த்திகள், யாகசாலை, பாகசாலை, வாகன சாலை, திருக்கேணி ஆகியவற்றைக் கொண்டு அற்புதக் கோயிலாக விளங்குகின்றது.
எழுந்தருளி மூர்த்தமாக விளங்குகின்ற நாகபூஷணி அம்மனின் திருவுருவம் தெற்கு நோக்கி தென்கோபுர வாயில் வழியாக வணங்கக் கூடிய முறையில் மகாமண்ட பத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இத்திருவுருவத் தின் தோற்றமும் அங்கலட்சணங்களும் மனோன்மணி அம்பாளுக்குரியதாகக் காணப்படுகின்றது. நான்கு திருக் கரங்களில் முன்னுள்ள வலக்கரமும், இடக்கரமும் அபய வரத கரங்களாகக் காணப்படுகின்றன. பின் வலக்கரம் தாமரை மலரை ஏந்தியுள்ளது. பின் இடக்கரத்தில் அட்ச மாலை உள்ளது.
அம்பாளுக்குரிய புதிய சித்திரத்தேர் 8-7-1957இல் வெள் ளோட்டம் விடப்பட்டது. தேர்ச்சிற்பங்களில் கோயில் வரலாற் றுச் சம்பவங்கள் அழகாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன. நயினை அம்மாள் கோயிலில் தினந்தோறும் ஆறுகாலப் பூசை நடைபெறுகின்றது. இங்கு நடைபெறும் விழாக்கள் சிறப்புடையவை. மாதந்தோறும் பூரணையில் பூரீ சக்கரத்தில் வித்தியோபாசனை செய்யப் படுகின்றது. இங்கு நவராத்திரி பூசையும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. ஆரம்பகாலத்தில் வருடாந்த மகோற்சவம் ஆறு நாட்களே இடம்பெற்றது. 1960 ஆம் ஆண்டிலிருந்து மகோற்சவம் 15 நாட்களாக மாற்றப்பட்டது. ஆனி மாதத்தில் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகி 15 தினங்கள் நடைபெற்றுத் தெப்ப உற்சவத்துடன் நிறைவு பெறுகின்றது.
இங்குள்ள அன்னை ரீ நாகபூஷணி வேண்டுவார் வேண்டு வனவற்றை அருள்பவளாகக் காணப்படுகின்றாள். திருமண
xஐ இந்து சறய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 114
மாகாத கன்னிப் பெண்கள் அன்னையின் அருளால் திரு மண வாழ்க்கை கிடைக்கப்பெற்றுள்ளனர். மகப்பேறில்லா தோர் நாகப்பிரதிஷ்டை செய்து பூசித்து மகப்பேறு பெற்றுள் ளனர். நோயுற்றோர் அன்னையே சரணமென்று துதித்து நோய்கள் நீங்கப் பெற்றுள்ளனர். தஞ்சமென்று வந்தவர்க ளைத் தாயாக நின்று காத்தருளும் சிறப்புடையவள் நயி னையில் எழுந்தருளியுள்ள நாகபூஷணி அம்மன். (நி.நி)
julm usb
(இராமநாதபுரம் மாவட்டம் ‘நாகநாதஸ்வாமி ஆலயம்)
சீர்தந்த வுருவமிரண்டிணையாகி யுருவத்தே சொன்றாகிப் பேர்தந்த வருவமொரு நன்காகிப் பஞ்சசத்திப்
பெருமானாகிப் பேர்தந்த வருள்வடிவா யெல்லாமா யல்லவுமா யிருக்கும்
606)60) நீர்தந்த தடம்புடைசூழ் மருதூர் நாகேசர்பத நெஞ்சுட்
கொள்வோம்
(தென் திருமருதூர்த் தலபுராணம்)
பாண்டி நாட்டிலுள்ள திருமருதூர் என்னும் தலத்தில் நாகநாதர் கோயில் ஒன்று இருந்தது. தென்னாட்டில் முகம் மதியர் ஆட்சி ஓங்கியிருந்தபோது பீஜப்பூர் சுல்தானின் தானைத் தலைவனான 'முல்லா சாகிப் என்பான் இப்பகுதி யில் தங்கியிருந்தான். அவனது பெண் பேசும் சக்தியற்றி ருந்தாள். ஒரு நாள் இருவரும் நாகநாதர் கோயிலுக்கு வந்தபோது, அங்குள்ள லிங்கத்தைக் கண்ட ஊமைப் பெண் “அல்லா நயினார் ஆண்டவா!” எனக் கூவினாள். முல்லா சகிப்பும் "நீரே அல்லா நிசத்தெறிந்தேன்’ என்று மகிழ்ச்சியுடன் இயம்பினான். அன்று முதல் இவ்விடம் நயினார் கோயில் எனப்பெயர் பெற்றது. இங்குள்ள ஈசரை ஏராளமான முகம்மதியர்கள் இன்றும் வழிபடுகின்றனர். கோமல் நா.அய்யாச்சாமி அய்யரின் நாதநாதர் சதகம் இச்செய்தியை "முல்லா மகளா மூங்கையள் முன்னாள் அல்லா நயினாராண்டவா வென்ன” எனத் தெரிவிக்கிறது.
"தாய்பேசு பேசெனவே சாற்றினும்பே சாமூங்கை
வாய்பேச வைத்தமகா மந்திரமே”
(சேதுபதி விறலிலிடு தூது)
 

இவ்வூர் பரமக்குடியிலிருந்து 12 கி.மீ. வடகிழக்கிலும், இராமநாதபுரத்திலிருந்து 25கி.மீ. வடமேற்கிலும் அமைந் துள்ளது. தற்போது பரமக்குடி, இராமநாதபுரம் ஆகிய இடங்களிலிருந்து நயினார் கோயிலுக்குப் பேரூந்துகள்
உள்ளன.
நயினார் கோயில் எனும் சிற்றூரின் மையப்பகுதியில் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் வாயில் மேற்குப் புறத்திலுள்ளது. இவ்வாலயத்தில் 21 அடி உயரமுள்ள விமானம், இரண்டு பிராகாரங்கள், ஒரு கருவறை, ஒரு அர்த்த மண்டபம், ஒரு மகாமண்டபம், ஒரு கல்யாண மண்டபம் ஆகியன அமைந்துள்ளன. சுதையினாலான அழகிய சிற்பங்கள் விமானத்தை அலங்கரிக்கின்றன.
மிகவும் பழமையான இவ்வாலயத்தில் இந்த நூற்றாண் டின் ஆரம்பத்தில் இராமநாதபுர அரசர் பல திருப்பணிக ளைச் செய்வித்தார். தட்சிணாமூர்த்தி, விநாயகர், சுப்பிர மணியர் ஆகியோருக்குத் தனி சந்நிதிகள் எழுந்தன. சுவாமி, அம்மன் ஆகியோருக்கான அழகிய உற்சவ விக் கிரகங்கள் பஞ்சலோகத்தால் செய்யப்பட்டன. திரெளபதி யம்மன், அய்யனார், பிடாரியம்மன் ஆகியோரும் இவ்வால யத்தில் இடம்பெற்றுள்ளனர்.
இவ்வாலயத்தில் நாள்தோறும் ஆறுகால பூஜை நடை பெறுகிறது. இங்கு நிகழும் திருவிழாக்களுள் பத்து நாட்க ளுக்கு நடைபெறும் வைகாசி வசந்தோற்சவமும், பதின் மூன்று நாட்களுக்கு நடைபெறும் ஆடிப்பூர அம்மன் உற்சவ மும் குறிப்பிடத்தக்கன. தைப்பூசத்தன்று தீர்த்த உற்சவம் நடைபெறும். அன்று சுவாமியும் அம்மனும் சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவிலுள்ள குணதீஸ்வரர் ஆலயம் வரை செல்வர். பின் அருகிலுள்ள வைகையாற்றில் தீர்த்தவாரி நடைபெறும். சுக்கிரவாரம், உற்சவம் போன்ற காலங்களில் ஏராளமான பக்தர்கள் இவ்வாலயத்திற்கு வருகை தந்து ஆடு, மாடு, கோழி, சேவல், தானியம், காய்கறி வகைகள், தங்கம், வெள்ளி, பணம் போன்றவற் றைக் காணிக்கையாகச் செலுத்துவதுண்டு. கூரிய முட்கள் தங்களைக் குத்தாமலிருக்க பக்தர்கள் முட்களையும் காணிக்கையாகச் செலுத்துவர். பக்தர்கள் தங்கள் பிரார்த்
絲魨g8ou 5amgm口ggaj656竹弦leooorä5ema

Page 115
தனைகளை நிறைவேற்றும் பொருட்டுக் காது குத்துதல், மொட்டை இடுவது போன்ற செயல்களைப் புரிவதுண்டு. சுவாமிக்குப் பெரிய வைரத்தேரும், அம்மனுக்கு அண்மை யில் புதுப்பிக்கப்பட்ட சிறிய தேரும் உள்ளன. சேதுபதி அரசர்கள் நவராத்திரியின் போது பவனி வருவதற்காக சுமார் 12,000 ரூபாய் மதிப்புள்ள கோரதம் ஒன்றைப் பயன்படுத்தியிருந்தனர். அற்புத சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த இந்தக் கோரதத்தை பூரீசண்முகராஜேஸ்வர நாகநாதசேதுபதி அவர்கள் நாகநாதர் ஆலயத்திற்கு நன் கொடையாக அளித்தார். விசேட மின்சார விளக்குகள் அமையப்பெற்ற இக்கோரதம் வைகாசி வசந்தோற்சவத்தில் எட்டாவது நாளன்றும், ஆடி அம்மன் உற்சவத்தில் பன்னி ரண்டாம் நாளன்றும் 'உற்சவர்களைத் தாங்கியவாறு பவனி வரும். திரெளபதி அம்மனுக்குப் பங்குனி மாதத்திலும் அய்யனாருக்குச் சித்திரையிலும் பிடாரியம்மனுக்குப் பங்கு னியிலும் விழாக்கள் நடைபெறுகின்றன.
நாமதேவர் என்னும் பக்தரின் பாடலைக் கேட்கும் பொருட்டே நாகநாதர் மேற்கு முகமாகக் காட்சியளித்தார். பக்த விஜயம் எனும் நூல் இவ்வரலாற்றை விளம்புகிறது. இச் செய்தியை "வருநாம தேவ கீதங்கேட்க மேற்குமுகமாகத் திரும்புலிங்கம்” என நாகாபரணம்” என்ற நூலும்,
நாமதேவர் நல்லிசை கேட்டுப் போற்றுமவர்க்காய் மேற்றிசை திரும்பியும்
என நாகநாதர் சதகமும் குறிப்பிடுகின்றன.
மூலவர் யாதொரு கரமும் படாமல் தானே சுயம்புவாகத் தோன்றிய நாகலிங்க மூர்த்தியாவார். ஆலயத்திலுள்ள லிங்கத்திற்குப் பின்புறத்தில் மருத மரத்தடியில் ஈசன் பாம்பு வடிவில் பக்தர்களுக்குக் காட்சியளித்தாராம். அவ் வாறு காட்சியளித்த இடம் இரும்பு வேலியிட்டுப் பாதுகாக் கப்பட்டு வருகிறது. பக்தர்கள் கோழி முட்டைகளைக் காணிக்கையாக அவ்விடத்தில் செலுத்துவதுடன் மரத்தடி யிலுள்ள மண்ணையும் எடுத்துச் செல்கின்றனர். உடலின் உபாதையுண்டான பகுதியில் அம்மண்ணை அப்புவதாலும், நீரில் கலக்கிக் குடிப்பதாலும் பிணிகள் அகலும் என்பது
பக்தர்களின் அசையாத நம்பிக்கை.
 

மகாமண்டபத்திலமைந்துள்ள சந்நிதியில் செளந்தர நாயகி அம்மன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். இச்சந்நிதிக்கு அருகேயுள்ள சுரங்கப் பகுதியில் ஒரு சிறிய நீரோடை உள்ளது. அதிலுள்ள நீர் நோய்களைத் தீர்க்கும் தன்மையைப் பெற்றிருப்பதாக நம்பப்படுவதால் மக்கள் அந்நீரைச் சிறு கலங்களில் எடுத்துச் செல்கின் றார்கள்.
புத்திரப்பேறு வேண்டித் தவமிருந்த ஒரு அந்தணத் தம்பதிக்கு நாகநாதர் அருளால் மகப்பேறு கிட்டியது. ஆலயத்திற்கு அருகேயுள்ள வாசுகி தடாகத்தின் கீழ்க் கரையிலுள்ள புளியமரத்தில் கட்டிய ஒரு தொட்டிலில் அக்குழந்தையை விட்டு விட்டு அத்தம்பதிகள் நீராடச் சென்றனர். குழந்தையின் அலறலொலி கேட்டு ஓடிவந்த அத்தம்பதிகளுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. குழந்தையின் காலைச் சுற்றி ஒரு நாகம் இருப்பதைக் கண்ட அத்தம்பதிகள் இறைவனிடம் குழந்தையைக் காப்பாற்றுமாறு வேண்டிக்கொண்டனர். இறையருளால் அந்நாகமும் குழந்தையை விட்டு நீங்கியது. அவ்விடத்தில் தங்களின் நன்றிக் காணிக்கையாக அந்தணத் தம்பதிகள் ஒரு நாகர் கோயிலை எழுப்பினர். சுவாமி சந்நிதிச் சந்தியாவந்தன மண்டபத்திற்கு வடமேற்கேயுள்ள இச்சிறு கோயிலில் மூன்று காலப்பூஜை நடைபெறுகிறது. நாகநாதர் ஆலயத்தி ற்கு வடக்கில் மருதவன மாகாளி கோயில் உள்ளது. இக்கோயிலின் முன்புள்ள பத்திரை தீர்த்தத்தில் நீராடி சிறந்த வரப்பிரசாதியான மாகாளியைத் தொழுது பேறு பெறுபவர்கள் ஏராளம்.
திருமருதூர் என ஆதியில் இத்தலம் வழங்கப்பட்டது. வடமொழியில் முதலில் எழுந்த தல வரலாற்றைத் தமிழில் தலபுராணமாகப் பாடியவர் பெயர் சிறுகம்பையூர் சிற்றம் பலக் கவிராயர் ஆவார். கிழவன் ரகுநாத சேதுபதியின் மேல் "துளசிங்கமாலை' எனும் நூலைப்பாடி அதற்குப் பரிசாக 'மிழலைப்பட்டி' எனும் ஊரையே பரிசாகப் பெற்ற பெருமை இவருக்கு உண்டு. ஏட்டுச் சுவடியில் சிதை வுற்றிருந்த வில்வவன புராணத்தை வி.சக்திவேல் ஆசாரி யார் சீராக எழுதி வைத்துள்ளார். நயினார் கோயிலுக்கு அருகிலுள்ள காடடர்ந்த குடியைச் சேர்ந்த அந்தகக் கவிஞர் தலைமலை கண்ட மருதத்தேவர்” மருதூர்
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்கனம்

Page 116
அந்தாதி’ எனும் நூலைப் பாடியுள்ளார். இப்பாடலைப் பாடியவுடன் அவருக்குக் கண்பார்வை கிடைத்ததாம் நிலை யாமை பற்றிப் பாடும் வேதாந்த நூலான 'நெஞ்சறி விளக்கம் கணபதிதாசரால் இயற்றப்பட்டது. வி.சக்திவேல் ஆசாரியார் இயற்றிய நாகபுராணம், கோமல் நா.அய்யாச் சாமி அய்யரின் பூரீநாகநாதர் சதகம், கணபதிதாசர் இயற் றிய 'நெஞ்சறி விளக்கம், மஞ்சக்கொல்லை ஆஸ்ரம சுவாமிஜியின் 'சிவாட்சரப்பதிகம் பல பாடல்களின் தொகுப்பு நூலான 'சத கதம்பம்' ஆகியன இத்தலத்தின் சிறப்பைப் போற்றுகின்றன.
நயினார் கோயிலைச் சுற்றி சாளைகிராமம் வரகுணேஸ் வரர், குணநதீஸ்வரர், இயமனேசுவரம் இயமனிசுவரர், கொழுவூர் நாகதாதீஸ்வரர் ஆகிய நான்கு ஆலயங்கள் உள்ளன. இந்நான்கு இலிங்கங்களுக்கு நடுவே நாகநாதர் எழுந்தருளிருப்பதால் நயினார் கோயில் பஞ்சலிங்கத் தல மென வழங்கி வருகிறது. ஆலயத்தின் புறத்திலுள்ள வாசுகி தீர்த்தமும், மங்கள தீர்த்தமும் இங்கு புண்ணிய தீர்த்தங்களாகும். இவை தவிர ஞானதீர்த்தம், பஞ்சமகா தீர்த்தம், இந்திர தீர்த்தம், அக்கினி தீர்த்தம், இயம தீர்த்தம், நிருதி தீர்த்தம், வருண தீர்த்தம், வாயு தீர்த்தம், குபேர தீர்த்தம் ஆகியவற்றின் பெருமைகளைத் தலபுராணம் போற் றுகிறது.
சூரிய குலத்திலுதித்த திரிசங்கு என்ற அரசன் வசிட்டர் அளித்த சாபத்தால் சண்டாள உருவம் அடைந்தான். அதே உருவத்துடன் திரிசங்குவை வானுலகம் அனுப்ப விசுவாமித்திரர் முன்வந்தார். தான் நடத்தத் திட்டமிட்டுள்ள வேள்வியில் பங்கேற்குமாறு வசிட்டரின் சீடர்களான ஆயிரம் முனிவர்களை அழைத்தார். அம்முனிவர்கள் விசுவாமித்திரரின் அழைப்பை ஏற்க மறுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த விசுவாமித்திரர் அம்முனிவர்களை வேடர்களாகுமாறு சபித்தார். வேடர்களாக மாறிய அம்முனிவர்கள் மருதவனத்தில் சில காலம் தங்கி மருதூர் ஈசரைத் தொழு தனர். அம்முனிவர்களின் சாபம் நீங்கியது. மருதூர் இறைவ னும் ஒரு அந்தணர் உருவில் முனிவர்களுக்கு ஞான உபதேசம் புரிந்தார். அங்கு வானுலகத்தோர் மருத மரங்க ளாகவும் வில்வமரங்களாகவும் உருவெடுத்து ஈசனைத்
தரிசித்து வந்தனர்.
இந்துக் கலைக்களஞ்சியம்
 

உலகின் நிலையாமையை அறிந்த மாணிபத்திரன் என்ற கந்தர்வ அரசன் கெளதம முனிவரின் ஆசியுடன் மருதவன த்தில் தவம் மேற்கொண்டான். ஒரு வருட காலம் உண்மை யான பக்தியுடன் வழிபடும் மன்னர் முன் நாகநாதர் காட்சி யளித்தார். தனது மனதை அடக்கி மனக்குழப்பத்தை நீக்குமாறு நாகநாதரிடம் அரசன் வரம் கோரினான். இறைய ருளால் அவனது மனக்குழப்பம் நீங்கியது.
இறைவனால் தென்திசைக்கு அனுப்பப்பட்ட அகத்தியர் விந்திய மலையின் செருக்கை அடக்கிய பின் பல தலங்க ளைத் தரிசித்தவாறு மருதூர் சென்றார். மருதூரில் இறை வனை அன்புடன் பூசித்துவந்த நாகநம்பி என்பாருக்கும் அவரது மனைவியான தேவநங்கைக்கும் உமையம்மை பெண் குழந்தையாகப் பிறந்தார். கல்வி, கேள்விகளில் தேர்ச்சியுற்று மணப்பருவத்தை அப்பெண் அடைந்தாள். வைகாசி மாதத்தில் ஒரு உத்தம வெள்ளிக்கிழமையன்று சிவபெருமான் நம்பியின் மகளாக வளர்ந்து வந்த உமா
தேவியைத் திருமணம் புரிந்துகொண்டார்.
இக்காட்சியை அகத்திய முனிவரும் கண்ணுற்றார். அரவரசனான ஆதிசேடனுக்குப் பிறவாப் பேரின்பம் பெற வேண்டுமென விருப்பம் ஏற்பட்டதால் சிவனாரைத் துதித் தான். சிவனாரின் அறிவுரையின் பேரில் ஆதிசேடன் ஒரு அந்தண வடிவம் தாங்கி மருதூர் சென்று தவமியற்றினார். அங்கே ஒரு அழகிய கோயிலும் பல சந்நிதிகளும், இறை வனுக்குரிய ஆபரண வகைகளும் ஏற்படுத்தி விழா நடத்தினார். அறிவு, ஆற்றல் ஆகியன மிகுந்த ஞானதேசி கன் என்ற ஞானியின் உருவில் சிவபெருமான் காட்சியளித் தார். ஞானம் பெறுவதற்கான போதசாலை ஒன்று நிறுவப் பட்டது. மருதூரில் முறைப்படி நீராடி வழிபட்டுவந்த சேடனு க்கு ஞானதேசிகன் நல்லுபதேசமும், பேரின்ப வாழ்வும் அளித்தார். ஆதிசேடன் அடைந்த பாக்கியத்தைக் கண்டு அட்டமா நாகங்கள் (எட்டு நாகர்கள்) மனித உருவமெடு த்து மருதூரில் எழுந்தருளியுள்ள நாகநாதரைத் துதித்த னர். அட்டமாசித்தியை நாகநாதர் அந்த நாகங்களுக்கும் அளித்தார்.
கோதாவரி நதிக்கரையில் வாழ்ந்து வந்த வேதவிரதன்
**********3888888888 E55 sou u SeaMTGITT Bapealede:Geoff geodeporaša56TÕ

Page 117
என்ற அந்தணனுக்கு மதிமான் என்ற புத்திரன் பிறந்தான். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து, வறுமையால் பீடிக்கப்பட்ட மதிமான் தென்னாடு சென்றான். மருதூரை அடைந்தவுடன் விமலரிஷி எனும் ஞானியின் தரிசனம் அவனுக்குக் கிடைத்தது. முனிவர் அறிவுறுத்தியவாறு மருதூரில் உரிய முறையில் பூசையை மதிமான் நடத்தி னான். ஈசன் மதிமானுக்குப் பொன்முடிப்பு ஒன்றை அளித்து, நல்லறங்களைப் புரியுமாறு அருளினார். கொடிய செயல் களையே புரிந்து வந்த துற்றெரிசன் என்ற வேடன் சிவராத் திரி அன்று இப்பகுதியில் நற்கதி பெற்றான். பிச்சையேந் தும் வாழ்வு நடத்திவந்த சுமதிசன் என்ற வேதியன் கபில முனிவரின் உபதேசத்தை ஏற்று மருதூரில் முறைப் படி வழிபட்டான். ஈசன் அருளால் அவனது வறுமை நீங்கி யது. சப்த கன்னியரும் இத்தலத்தில் வழிபட்டுப் பேறு பெற்றனர்.
மருதூரை அடுத்த காடடர்ந்தகுடி என்ற சிற்றுாரில் மறவர் குலத்தைச் சேர்ந்த தலைமலை கண்ட மருதத்தேவர் என்ற தலைசிறந்த புலவர் வாழ்ந்து வந்தார். பிறவியிலேயே கண்பார்வை பெறாதிருந்த அப்புலவர் இறைவனை வழிபடு வதிலேயே காலம் கழித்து வந்தார். மறவர் குலத்திற்கேற்ற வீரச்செயல் எதுவும் புரியாத தேவருக்குப் பெண் கொடுக்க எவரும் முன்வரவில்லை. திருப்புவனம் என்ற தலத்தில் வாழ்ந்து வந்த தமிழ்ப் பற்றுமிக்க தனவணிகர் ஒருமுறை ஒரு பாடலை முடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்த போது தேவர் அப்பாடலை முடித்துக் கொடுத்தார். வணிகர் அளித்த பொருட்களுடன் மருதூருக்குத் தேவர் திரும்பி னார். இப்பொருளின் உதவியால் ஊரார் மெச்சும் அளவு இல்லற வாழ்வில் திளைத்து வந்தார். ஒருமுறை மருதீசர் அவர் முன்பு தோன்றித் தன் பெயரால் 'மருதூரந்தாதி என்ற நூலைப் பாடுமாறு கூறி, அதற்கு முதலடியும் எடுத் துக் கொடுத்தார். அவ்வாறு எழுந்ததே 'மருதூர் அந்தாதி என்ற சிற்றிலக்கிய நூல்.
இவ்வாலயம் இராமநாதபுரம் சமஸ்தானத்தின் மேற்பார் வையில் உள்ளது. அத்தேவஸ்தானத்தின் முயற்சியால் நயினார் கோயிலில் விடுதிகள், சாத்திரங்கள் ஆகியன
கட்டப்பட்டுள்ளன. (எம்.இ.)
@因á 56oapä56T@élá綠

நரகம்
பதினென் புராணங்களுள் காருட புராணமும் ஒன்று. இதில் 318 அத்தியாயங்களும், 19000 சுலோகங்களும் உள்ளன. இதனைத் திருமால் கருடனுக்குக் கூறியதாக வியாசபகவான் குறிப்பிடுகின்றார்.
இதில் ஜீவன் பூதவுடலை விட்டு 800 யோசனை துாரம் உள்ள ஸ்மயமிநீ என்ற யமலோகம் செல்வது, இடையே 16 இடங்களில் தங்குவது, அங்கு நடக்கும் விசாரணை, தண்டனை, பலவகை நரகங்கள், புத்திரர், அவர்களாற்ற
வேண்டிய கர்மாக்கள் ஆகியவை பற்றிக் கூறப்படுகின்றது.
இடையிலே உள்ள பிரேத காண்டத்தை இறந்த வீடுக ளிலே படிப்பார்கள். மற்றைய காண்டங்களில் விஷத்தின் தன்மை, அதை அகற்ற மந்திரம், மருந்து, 1008 விஷணு வின் திருநாமங்கள், சுதர்ஸன மந்திரம் ஆகியவை கூறப்பட் டுள்ளன. 8 அத்தியாயங்களில் நீதிசாஸ்திரங்கள், 58 அத்தியாயங்களில் வைத்தியம், நாடி பரிசோதனை, வழுக் கைத் தலையில் ஏழு நாட்களில் உரோமம் உண்டாக்கும் விதம், ப்ராம்மீனதலம், கீதாசாரம் முதலியவைகள் காணப்படுகின்றன.
ஒருவன் தனக்காக நல்வினை எதையுமே செய்து கொள் ளாமல் இறந்தால், அப்படி இறந்தவனுக்கு அவனுடைய புத்திரர்கள் கர்மாக்களைச் செய்யாமல் விட்டுவிட்டால், அவன் இரவு பகலாக பசியோடும் தாகத்தோடும் கூச்சலிட்ட வண்ணம் நெடுங்காலம் அலைந்து திரிந்து புழுக்கள், கிருமிகள் இவற்றின் பிறப்பினை எடுத்து மனிதஜாதியில் இழிந்தவன் வயிற்றில் பிறந்து பிறந்து இறப்பான். வயோதிபத்தை அடைவதற்கு முன்பும் செயல்கள் ஒடுங்குவதற்கு முன்பும் நல்வினைகளைச் செய்யவேண் டும். அப்படிச் செய்யாமல் பிறகு செய்வோம் என்று ஆலோசிப்பவன் வீடு தீப்பற்றி எரியும் பொழுது அதனை அணைக்க கிணறு தோண்டும் அறிவிலியை ஒப்பான்.
வாழ்நாள் முடிந்த சீவனை, யமகிங்கரர்கள் பாசத்தால் கட்டி தர்மராஜன் முன்பு நிறுத்தும் பொழுது அவர் அந்த
žig soL GE56AMT EFTT gagaueaö856ī gledestpoTěš56Tiñ

Page 118
சீவனை மீண்டும் அவ்வீட்டிலேயே கொண்டுவிட்டு விட்டு பன்னிரண்டு நாட்கள் கழிந்த பிறகு மீண்டும் அச்சீவனைத் தன்முன்பு கொண்டுவரும்படி ஆணையிடுவார். யமதூதர்கள் ஒருநொடி நேரத்திற்குள் இறந்த அந்த சீவனை கட்டி எண்பத்தாறாயிரம் காதவழி கடந்துவந்து அந்தச் சீவனை அதன் இல்லத்திற்கே கொண்டுவந்து விட்டுவிடுவார்கள்.
யமலோகத்திற்குச் சென்றவன் மீண்டும் அவனது இருப்பிடத்திற்கே வருகிறபடியால் இறந்தவனது உடலை உடனே எரிக்கவோ, புதைக்கவோ செய்யாமல் சிறிது தாமதித்தே செய்யவேண்டும். ஆவி வடிவத்தில் உள்ள அந்த உயிர் சுடுகாட்டில் எரியும் தன் சிதைக்குப் பத்து முழ உயரத்தில் நின்று தீப்பற்றி எரியும் தன் உடல் கண்டு கதறும். பக்குவம் பெற்ற ஜீவனானால் “இந்த உடல் எரிந்தொழிந்ததே நலம்” என்று மகிழ்ச்சியுறும்.
சிரசு முதல் பாதம் வரை தேகமெல்லாம் வெந்து சாம்ப லானவுடனே ஜீவனுக்குப் பிண்டத்தாலான சரீரம் உண்டா கும். இறந்தவனின் புதல்வன் போடும் முதல்நாட் பிண்டத் தால் சிரசும், இரண்டாம் பிண்டத்தால் கழுத்தும் தோளும், மூன்றாம் நாள் போடும் பிண்டத்தால் மார்பும், நான்காம் நாள் வயிறும், ஆறாம் நாளில் பிருஷ்டபாகமும், ஏழாம் நாளில் குய்யமும், எட்டாம் நாளில் துடைகளும், ஒன்பதாம் நாளில் கால்களும் உண்டாகி பத்தாம் நாள் பிண்டத்தால் முழுச் சரீரமும் உண்டாகும். பசியாலும் தாகத்தாலும் கதறும் அந்த ஜீவன் பிண்டவுருவைப் பெற்ற பதினொன் றாம் நாளிலும், பன்னிரண்டாம் நாளிலும் தன் புத்திரனால் பிராமணமுகமாய் கொடுக்கப்பட்டவற்றை உண்டு பதின் மூன்றாம் நாளில் யமதூதர்கள், யமதர்மராஜனின் ஆணைப் படி பிண்டவுருப் பெற்ற ஜீவனை பாசத்தால் பிணித்துக் கட்டி இழுத்துச் செல்லும்பொழுது தான் வாழ்ந்த வீட்டைப் பார்த்துப் பார்த்துக் கதறிக் கொண்டே யமஉலகத்தை
அடையும்.
குரங்கைக் கயிற்றால் பிணைத்து இழுத்துச் செல்வதைப் போல யமகிங்கரர்களால் கொண்டு செல்லப்படும் ஜீவன் தான் தன் குடும்பத்தினர்க்காகச் செய்த பாவச்செயல்களை எண்ணி எண்ணி வருந்தும். கூரிய கிளைகளும் கொடிய
விலங்குகளும் உள்ள கானத்தின் வழியாக பாசப்படையா
இந்துக் கலைக்களஞ்சியம்xx
 

லும் முசலப்படையாலும் நையப்புடைப்புண்டு செல்லும் பொழுது இருபத்தெட்டாம் நாள், தன்புதல்வனால் செய்யப்ப டும் ஊனமாகிய சிரார்த்த பிண்டத்தைப் புசித்து முப்பதாம் நாளன்று ‘யாமியம்' என்ற நகரத்தை அடைவான். அங்கு பிரேதக் கூட்டங்கள் நிறைந்திருக்கும். பிறகு அங்கிருந்து 'அவ்யாமியம்' என்ற நகரத்தில் சிறிதுகாலம் தங்கியி ருந்து இரண்டாவது மாசிக பிண்டத்தை உண்டுவிட்டு யமதூதர்களால் இழுத்துச் செல்லப்பட்டு வருந்தித் துன்ப முற்று, சங்கமன் என்ற மன்னனுக்குரிய செளரி நகரத்தை அடைந்து திரைபவழிக மாசிக பிண்டத்தைப் புசித்து, தாங்க முடியாத குளிரினாலும், கல்மழையினாலும் துன் புற்று குருபுரம் அடைந்து ஐந்தாவது மாசிக பிண்டத்தை உண்டு அதற்கப்பால் 'கிரெசாஞ்சம்' என்ற ஊரில் தங்கி ஆறாவது மாசிக பிண்டத்தை உண்டு, சிறிதுகாலம் தங்கி மீண்டும் பயங்கரவழியில் பயணம் மேற்கொள்ளும். அவ்வழியில் தான் மிகக் கொடுமையான வைதரணி நதியைக் கடந்து செல்ல வேண்டும். வைதரணி நதியானது நீரேயில்லாமல் இரத்தமும் சீழும், சிறுநீரும், மலங்களுமே நிறைந்து பொறுக்க முடியாத துர்நாற்றமும் நாற்றம் அறியும் நாசியில்லாத புழுக்களும் நிறைந்திருக்கும். இந்தக் கொடிய நதியைக் கடக்க வேண்டுமென்றால் பசுமாட்டை தானம் செய்திருக்க வேண்டும். வைதரணி கோதானத்தை உயிருடன் இருக்கும் பொழுதே செய்ய வேண்டும். அல்லது அவன் இறந்த பிறகாவது அவன் மகன் செய்யவேண்டும். தானம் செய்த பசுவின் வாலைப்பிடித்துக் கொண்டு இறந்த அந்த ஜீவன் வைதரணியைக் கடந்துவிடும். அப்படிக் கடந்து நமனுக்கு இளையோனாகிய வசித்திரனது பட்டினத்தை வந்தடைந்து ஊனஷானி மாசிக பிண்டத்தை உண்டு அங்கிருந்து புறப்படும்.
ஏழாம் மாசிக பிண்டத்தை உண்ணும் பொழுது பூவுல கில் வாழ்ந்தபொழுது வறியவர்களுக்குப் பொருளை ஈயா மல் புதைத்து வைத்திருந்தவனும் யாசகனை வருத்தியவ னுமாக அவன் இருந்திருந்தால் அப்பண்டம் அவனுக்குக் கிடைக்காது பைசாரசங்களின் கரங்களிலே சேரும். பேய்க ளின் கைகளிலிருந்து சிதறிய பிண்டத்தை உண்டு பசி யால் துடிப்பான். கிடைத்தற்கரிய மானிடப்பிறவியைப் பெற்றும் இம்மைக்கும் மறுமைக்குமான தான, தர்மங்களை யும் இறைவழிபாடுகளையும் செய்யாமல் பாவ வழிகளில்
இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 119
பொருள் ஈட்டியதையும், பெரியோரை மதிக்காமல் அவர்க ளைத் துன்புறுத்திய தனது கொடுமதியையும் நினைத்து நினைத்து வருந்துவான்.
ஏழாம் மாசிகப் பிண்டத்தில் அந்தணர்களுக்கு உதக கும்பதானம் (நீருடன் கூடிய பாத்திரம்) செய்தால் இறந்த ஜீவனது தாகவிடாய் தீரும். 'பக்குவப்பதம்’ என்னும் பட்டினத்தைச் சார்ந்து எட்டாவது மாசிக பிண்டத்தை உண்டு துக்கதம்' என்னும் ஊரை அடைந்து அங்கு ஒன்பதாவது பிண்டத்தை ஏற்று நாதாக்கிரந்தம்' என்ற பட்டினத்தை அடைந்து பத்தாவது மாசிக பிண்டத்தை உண்பான். 'விருஷோற்சனம் (ஜீவன் ஏறிச் செல்ல மாடு தானம் வழங்கல்) செய்யாத பல ஜீவர்கள் அங்கு கதறிக் கண் ணிர் வடிப்பதைக் கண்டு அதபதம்’ என்ற இடத்தை அடைந்து பதினொராம் மாசிக பிண்டத்தை ஏற்று, சிறிது தங்கி சீதாப்தம்' என்னும் இடத்தில் குளிரால் வருந்தி (போர்வை தானம் பெற்ற உயிர்கள் வருந்தாது) பன்னிரண் டாம் பிண்டத்தைப் பெற்று யமபடர்கள் இழுத்துச்செல்ல, தன் மனைவி, மக்கள், உற்றார் முதலியோரை நினைத்து நினைத்து வருந்தித், துன்பமுற்று, மனம் புழுங்க நடந்து வைவஸ்வத பட்டினத்தைச் சேருமுன்பே ஊகைப்திக
மாசிகபிண்டத்தை உண்பான்.
வைவஸ்த பட்டினமே யமபுரியாகும். நூற்றிநாற்பத்து நான்கு காதவழி அகலமுள்ளதாய், கந்தர்வ அப்சரசுக ளோடு கூடியதாய் எண்பத்து நான்காயிரம் பிராணிகள் வாழுமிடமாக விளங்கும். ஜீவன்கள் செய்யும் பாவ புண்ணி யங்களை அறிந்து யமதர்மனுக்குத் தெரிவிக்கும் பன்னி ரண்டு சிரவணர்கள் அங்கு இருப்பார்கள். இவர்கள் பிரம்ம னால் குசைப்புல்லிலிருந்து தோற்றுவிக்கப்பட்டவர்கள். இவர்களைப் பூசித்து பன்னிரண்டு கலசங்களில் தண்ணீர் நிரப்பி, அன்னம் செய்து அக்கலசங்களை அந்த சிரவணர் களைக் குறித்து தானம் செய்தவர்கள் துன்பமடைய மாட்டார்கள்; நன்மை பெறுவார்கள்.
அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு வகைப் புருஷார்த்தங்களில் ஈடுபட்டவர்கள் தர்மமார்க்கத்தில் வைவஸ்வத நகரை அடைவார்கள். பொன், பொருள்,
முதலியவற்றைப் பெரியோர்களுக்கும் சான்றோர்களுக்கும்
இந்துக் கலைக்களஞ்சியம்x
 

கொடுத்தவர்கள் விமானங்களில் ஏறிச்செல்வார்கள். பெரியோர்கள் விரும்பியவற்றைக் கொடுத்தவர்கள் குதிரை மீதேறிச் செல்வார்கள். மோட்சத்தில் விருப்பங்கொண்டு வேதசாஸ்திர புராணங்களை அறிந்தவர்கள், தெய்வபக்தி செய்பவர்கள் தேவவிமானம் ஏறித் தேவருலகைச் சென்ற
டைவார்கள்.
இறந்தவர்களைக் குறித்துச் செய்யும் தானங்கள் அந்த ஜீவர்களுக்கு நன்மையைத் தரும். அன்னதானம் செய்தால் ஜீவன் பசியில்லாமல் செல்வான். தீபதானம் செய்தால் இருள் மார்க்கத்தில் வழி புலப்படும். கார்த்திகை மாதத்தில் சுக்கிலபட்ச சதுர்த்தசியில் தீபதானம் செய்தாலும் விரு ஷோற்சனம் செய்தாலும் இறந்தவர்கள் நற்கதியடை வார்கள். சையாதானம் (படுக்கை) செய்தால் ஜீவன் விமான த்தில் நல்லுலகை அடைவான். தண்ணிர்க் குடத்தை (உதக கும்பம்) தானம் செய்தால் யமபடர்கள் மகிழ்ந்து ஜீவன்களைத் துன்புறுத்த மாட்டார்கள். மேலும் குடை, மாரடி, தண்டம், வஸ்திரம், மோதிரம், உதககும்பம், ஆசனப் பலகை, அன்னம், பூஜாதிரவியம், பூனூல், தாமிரச் செம்பு, அரிசி ஆகியவற்றை சத்பிராமணர்களுக்குப் தானம் செய் தால் யமதூதர்கள் மகிழ்ந்து ஜீவனை வருத்தாமல் ஆதர வோடு அழைத்துச் செல்வார்கள்.
பாவம் செய்தவர்களுக்குக் காலதேவனால் விதிக்கப் படும் தீவாய் நரகங்கள் எண்பத்து நான்கு லட்சம் இருக்கின்றன. அவற்றின் இருபத்தெட்டு நரகங்கள் மிகக் கொடியன ஆகும்.
பிறன் மனைவி, குழந்தை, பொருள் இவற்றைக் கொள்ளையடிப்போர் அடைவது தாமிஸ்தம்.
கணவன் அல்லது மனைவியை வஞ்சித்து வாழ்வோர் கண்களில் இருள் கவிய மூர்ச்சித்து விழுவது அர்த்தா மிஸ்ரம்.
அக்கிரமமாகப் பிறருடைய குடும்பங்களை அழித்து பலவந்தமாகப் பொருள் பறிக்கும் சுயநலக்காரர்கள் அடை
வது ரெளரவம்.
குரு என்ற கோரமான மான்கள் பாவிகளைச் சூழ்ந்து
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்கணம்

Page 120
துன்புறுத்துவது மஹாரெளரவம்.
தன் சுவைக்காக பிற உயிர்களை வதைத்துச் சித்திர
வதை செய்பவன் அடைவது கும்பீபாகம்.
பெரியோரையும் பெற்றோரையும் துன்புறுத்தும் வெறியர் கள் அடைவது காலசூத்திரம்
தன் தெய்வத்தை நிந்தித்து தனக்குரிய தர்மங்களைப் புறக்கணிக்கும் அதர்மிகள் அடைவது அசிபத்தம்.
அநியாயமாகப் பிறரைத் தண்டித்து, அநீதி புரியும் அக்கிரமக்காரர்கள் அடையும் நரகம் பன்முகம்
சித்திரவதை, துரோகம், கொலை முதலிய கொடுமை களைச் செய்தவர்கள் அடைவது அந்தகூபம்.
தான் மட்டும் உண்டு. பிறரைத் துளைக்கும் கிருமிகள் போல வாழ்ந்து, ஆசாரம், பக்தி நியமமில்லாமல் வாழ்வோர் அடையும் நரகம் கிருமிபோஜனம்
பிறர் உரிமைகளையும் உடைமைகளையும் தன் வலிமை யால் பலவந்தமாக அபகரிக்கும் பாவிகள் அடைவது அக்னி குண்டம்
உரிமையல்லாத மகளிரையோ, ஆடவரையோ கூடி
மகிழும் பலாத்கார சண்டர்கள் அடைவது வஜ்ரகண்டகம்,
நன்மை, தீமை, உயர்வு, தாழ்வு பாராது தரங்கெட்டு எல்லோருடனும் கூடிவாழும் மோகாந்தக்காரர்கள் அடை
வது சான்மலியாகும்.
அதிகார வெறியாலும் கபட வேடத்தாலும் நயவஞ்சகத் தாலும் தர்மத்திற்கு மாறாக நடக்கும் வஞ்சகர் அடைவது
வைதரணி.
கூச்சமில்லாமல் இழிமகளைக் கூடி ஒழுக்கமில்லாமல் விலங்குகளைப் போலத் திரியும் கயவர் அடைவது பூயோதம்.
பிராணிகளைத் துன்புறுத்தி கொலை புரியும் பாதகர்
இந்துக் கலைக்களஞ்சியம்xணxணxணxண0

அடைவது பிராணரோதம்.
ஆடம்பரத்திற்காகவும் வீண் பெருமைக்காகவும் பசுவதை புரிந்து யாகம் செய்யும் பித்தலாட்டக்காரர்கள் அடையும் நரகம் விசஸனம்.
வாழ்க்கைத் துணையை வற்புறுத்தி, பைரீத மோக இச்சைக்கு ஆளாக்கிக் கெடுக்கும் தியோர் அடைவது 6T6) TL I691f.
வீடுகளுக்குத் தீவைப்பது, சூறையாடுவது ஜீவவதை புரிவது, விஷமூட்டுவது, கூட்டங்கூட்டமாகக் குடிமக்களைக் கொல்வது போன்ற பாதகச் செயல்களைச் செய்யும் பாவிகள் அடையும் நரகம் சாரமேயாதனம்
பொய்ச்சாட்சி கூறுதல் முதலிய அகம்பாவச் செயல் களைச் செய்யும் பாதகர்கள் அடைவது அவீசி.
எக்குலத்தாராயினும் மதுபோதைப் பொருள்களைக் கொடுத்து குடிகளைக் கெடுக்கும் குடிகேடர்கள் அடைவது பரிபாதனம்.
தன்னை மட்டும் பெரிதாகக் கருதி பெரியோரையும் நல்லோரையும் அவமதித்து இறுமாப்புடன் தீச்செயல் புரிவோர் அடைவது ஷாரகர்த்தமம்
நரமேதயாகம் புரிதல், ஆணாயினும், பெண்ணாயினும் மனித மாமிசம் புசித்தல், சாதுவான பிராணிகளை வதைத் தல் முதலான தீவினை புரிந்தோரை அவர்களால் வதைக் கப்பட்டோரே, முன்னின்று வதைக்க அவதிப்படும் நரகம்
ரஷோகணம்.
எவ்விதத் தீமையும் புரியாதோரைக் கொல்லுதல், நய வஞ்சமாகக் கொல்லுதல், தற்கொலை செய்துகொள்ளல், நம்பிக்கைத் துரோகம் முதலானவற்றின் காரணமாக அடை வது சூலப்ரோதம்.
தீமையே வாழ்க்கையாகக் கொண்ட துரோகிகள் அடைவது தந்தசூகம்.
பிராணிகளைக் கொடுமையாக வதைத்தோர் அடைவது
வடாரோகம்.
zSZZZZTT TLML TC D TLsLCTGT TTLeLTTLLLLL

Page 121
வீட்டுக்கு வந்த விருந்தினரை வெறுத்து நிந்தித்த உலோபிகளும், பகிர்ந்துண்ண விரும்பாத சுயநலவாதி களும் அடையும் நரகம் பிரியாவர்த்தனகம்.
செல்வச் செருக்காலும், செல்வாக்கினாலும் கர்வம் கொண்டு பிறரைத் துன்புறுத்துகிறவர்களும், அநீதியாய்ப் பொருள் சம்பாதித்து அதனை நல்ல வழிகளில் செலவிடா மல் கள்ளத்தனமாகப் பதுக்கி வைப்பவர்களும் அடையும்
நரகம் சூசிமுகம் ஆகும்.
பாவம் செய்பவர்கள் அடையும் இந்த இருபத்தெட்டு நரகங்களும் மிகக் கொடியன. புராணங்கள் தோறும் இது
பலவகைப்படும். (6)].60)6).)
JEõTEīggit
புராணங்கள் கூறுகின்ற கொடிய அசுரர்களில் நரகாசுரனும் ஒருவன். பாகவத புராணம், விஷ்ணு புராணங் களில் இவனது வரலாறு கூறப்படுகின்றது. இரணியாக்கன் என்னும் கொடிய அசுரன் பூமியைக் கொண்டுபோய்ப் பாதாளத்தில் மறைத்து அழிக்க முற்பட்டான். அவனை எதிர்க்கும் ஆற்றல் இன்றித் தேவர்கள் திகைத்தனர்.
அப்பொழுது திருமால் வராக உருவங்கொண்டு அந்த அசுரனை அழித்துப் பூமியைத் தன் பெரிய கொம்புகளில் தாங்கிக் கொண்டுவந்து முன்போல் நிலை நிறுத்தினார். இவ்வேளையில் திருமால் பூமிதேவியுடன் கூடியதால் பிறந்தவன் நரகாசுரன், வலிமையும், படைக்கலங்களும், வரங்களும் பெற்றவன், ஆணி மகன் எவனாலும் வெல்லமுடியாத வரம் பெற்றவன்.
இவனது தலைநகர் பிராக்ஜோதிஷபுரி, மாகிசுமதி எனவும் கூறுவதுண்டு. நரகாசுரன் துவட்டாவின் மகளான கசேரு என்பவளை மணந்து பகதத்தனைப் பெற்றாள். இவன் தனது வலிமையால் செருக்குற்று உலகிற்குப் பல தீங்குகளைச் செய்தான். தேவர், சித்தர், கந்தர்வர் களின் கன்னிகைகளையும் அரசகுமாரிகளையும் வலுவில் அபகரித்துச் சென்று தன் மாளிகையில் சிறை வைத்தான்.
இந்துக் கலைக்களஞ்சியம் x
 

வருணனின் குடையையும் மந்திரபர்வதத்தின் சிகரத்தை யும் அபகரித்தான். அதிதியின் குண்டலங்களையும் கவர்ந் துவிட்டான். (இந்திரனின் தாய் அதிதி)
நரகாசுரனால் அல்லலுற்ற தேவர்கள் திருமாலிடம் முறையிட அவர் கிருஷ்ண அவதாரத்தில் நரகனுடன் போரிட்டார். நரகாசுரனின் தலைநகரான பிராக்ஜோதிஷ புரத்தைச் சுற்றிக் கத்திகள் நுனியில் இருக்கத்தக்க பாசங்கள் பரப்பப்பட்டு யாருமே அதனுள் நுழைய முடியாத படி பாதுகாப்பு இருந்தது. அதைக்கண்ட ரீகிருஷ்ணர், தம் திருவாழியைப் பிரயோகித்து அந்தப் பாசங்களை எல்லாம் அழித்தெறிந்தார். உடனே முரண் என்பவன் தலைமையில் ஒரு சேனை வந்தது. கிருஷ்ணர் அதனைத் தன் சுதர்சன சக்கரத்தால் எரித்துவிட்டார். இவ்விதமாக முரண், அபயகிரீவன், பஞ்சசனன் என்ற மந்திரிகளை நாசஞ்செய்து தலைநகரினுள்ளே பிரவேசித்தார். அங்கு ஏராளமான சேனைகளுடன் எதிர்த்து வந்த நரகாசுரனுக் கும் பூரீகிருஷ்ணனுக்கும் கடுமையான போர் நிகழ்ந்தது.
இந்தப் போரிலே ஏராளமான அசுரர்கள் மாண்டார்கள். இறுதியில் நரகாசுரன் தன் மாயையினால் கிருஷ்ணரையும் மயங்கச் செய்தான். அப்போது கிருஷ்ணனுக்குத் தேரோட் டியாகச் சென்ற சத்தியபாமா வில்லை வளைத்து அம்பை எய்து நரகாசுரனைக் கொன்றாள். அதனால் சத்திய
பாமைக்கு நரகாசுரமர்த்தினி” என்ற பெயர் உண்டாயிற்று.
உலகத்தை மூடியிருந்த பேரிருள் நீங்கியமைக்காக தேவர்களும் மக்களும் மகிழ்ந்தனர். அவ்வேளையில் பூமிதேவி கிருஷ்ணரை நோக்கி 'நீ என் புதல்வன் நரகன் செய்த பிழைகளைப் பொறுத்தருள வேண்டும். பாவங்க ளைப் போக்கவே உன் மகனான நரகனை நீயே சங்கரித்
தாய்' என்றாள்.
நரகாசுரண் சாகும் தறுவாயில் மெய்யுணர்வு பெற்று கிருஷ்ணபரமாத்மாவிடம் தான் மடிந்த அந்நாளை ஒரு விழாவாகக் கொண்டாட வேண்டும் என்று வேண்டினான். அவரும் அவ்வாறே வரம் தந்தார். நரகாசுரன் மடிந்த தினம் ஐப்பசித் திங்கள் கிருஷ்ணபட்சத்து திரயோதசி இரவு விடிந்தால் சதுர்த்தசி. எனவே துன்ப இருள் நீங்கிய
 ைஇந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்கணம்

Page 122
அத்தினமாகிய நரக சதுர்த்தசியை தீபாவளி என்ற பெய ரில் உலகம் கொண்டாடுகிறது. அதிகாலையில் எண்ணெய் தேய்த்து முழுகுவதும் புத்தாடைகள் அணிந்து இனிப்புப் பட்சணங்கள் உண்டு தீபங்களை ஏற்றி வாணவெடிகள்
வெடிப்பது தீபாவளியின் தனிச்சிறப்பாகும்.
நரகாசுரவதம் பற்றிய ஐதீகம் வேறுவிதமாக விஷ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தனர். அப்பொழுது மகாலட்சுமி தோன்றினாள். அவள் உதித்த தினமே தீபாவளி. அன்றே அவள் திருமாலைத் தேடித் தன் கணவனாக வரித்து மணந்தாள். மணப்பதற்கு முன் ஒரு வரம் கேட்டாள். தேவ, காந்தருவ கன்னிகளின் கற்பை அழிக்கக் கருதி அவர்களைச் சிறைப்படுத்தி வைத்திருக்கும் மகாபாதக னான நரகாசுரனைக் கொன்று அவர்களை விடுவிக்க வேண்டும் என்பது அவ்வரம் திருமாலும் அவ்வாறே நரகாசுர னைக் கொன்று கன்னியர்களைச் சிறைமீட்டார் என்ற
கதையை விஷ்ணு புராணம் கூறுகிறது. (நி.நி.)
5Jefrã85 (pGODGOTuGD Ju 5TuGDITìì
சைவநாயன்மார் அறுபத்து மூவருள் ஒருவர் நரசிங்க முனையரைய நாயனார். செல்வம் நிறைந்து விளங்கிய திருமுனைப்பாடி நாட்டில் நீதி தவறாத குறுநில மன்னராய் விளங்கியவர் நரசிங்க முனையரையர் மன்னர் மரபினராக விளங்கியபோதிலும் சிவனுடைய வெண்ணிற்றையே தனது செல்வமாகக் கருதியவர். சிவனடியார்களுடைய திருவடி களை அடைதலே பெரும்பேறு என உணர்ந்தவர். சிவ ஆலயங்கள் முழுவதும் பெருக்கிக் காப்பதில் முன்னின்ற வர். கனவிலும் நனவிலும் சிவதொண்டையே மறவாமல் சிந்திப்பவர். மானிடர் எவரானாலும் அவரது சிவவேடம் ஒன்றினையே பெரிதாக நினைத்து அவர்களை மதித்து வந்தவர் நரசிங்கமுனையரையர். இவர் விரிசடைப் பெரு மானுக்கு திருவாதிரை நட்சத்திர நாளில் விசேட பூசைகள் பலவற்றையும் செய்து வந்தார். அப்பூசையின்போது தம்மை வந்தடையும் சிவனடியார்கள் ஒவ்வொருவருக்கும் நூறு பொன்னுக்குக் குறையாமல் வழங்கி திருவமுது செய்வித்து வழிபட்டு வந்தார்.
இந்துக் கலைக்களஞ்சியம்x
 

நரசிங்கமுனையரது திருத்தொண்டினது அரிய பண்பினை விளக்கும் சம்பவங்கள் பல உள்ளன. அவற்றில் ஒன்று: ஒருமுறை திருவாதிரை நாளில் சைவநெறித் தொண்டு புரிந்து வழக்கம் போல் சிவனடியார்களுக்கு பொன் வழங்கி வரும்போது துர்நடத்தை உடைய காமக்குணங்கள் நிறை ந்த ஒருவரும் சிவனடியாராக திருநீற்றை அணிந்து வந்திரு ந்தார். அவரைக் கண்டு பக்கத்திலிருந்தவர்கள் அருவெறுப் புடன் விலகிச் சென்றார்கள். ஆனால் நரசிங்க முனையரை யர் அவரைக் கண்டு வணங்கி அழைத்துவந்து உபசரித்து மற்றவர்களுக்குக் கொடுப்பதைக் காட்டிலும் அதிகமாக இருநூறு பொன் கொடுத்து அவரைத் தொழுது இனிய மொழிகள் பேசி உபசரித்து விடைகொடுத்து அனுப்பினார். இவ்வாறாக சிவனடியார்களை வழிபடுதலையும் அவர் களைப் போற்றுதலையும் தலையாயதாகக் கொண்டு வாழ்ந்தவர் இவர்.
சிறுவயதில் வீதிகளில் ஒடி விளையாடிய சுந்தரர் மீது பற்றுக் கொண்டு அவரைத் தன் வளர்ப்பு மகனாகத் தர வேண்டும் என சுந்தரரின் பெற்றோரிடம் வேண்டி சுந்தரரை தனது வளர்ப்பு மகனாகக் கொண்டவர். இதனைப் பெரிய
புராணம்
'நரசிங்க முனையர் என்னும் நாடு வாழ் அரசர்கண்டு பரவருள் காதல் கூரப் பயந்தவர் தம்பால் சென்று விரவிய நண்பினாலே வேண்டினர் பெற்றுத் தங்கள் அரசிளங் குமரற் கேற்ப அன்பினால் மகன்மை கொண்டார்
எனப் போற்றுகின்றது. சுந்தரர் தனது திருத்தொண்டத் தொகையில் ”மெய்யடியான் நரசிங்க முனையரையர்க்கு அடியேன்” எனச் சிறப்பிக்கின்றார். இவ்வாறாக நரசிங்க முனையரைய நாயனார் ஒருவன் தீயவனாயினும் அவன் சிவவேடத்தில் இருப்பாராயின் அவர்களை வணங்கிப் போற்றி சிவனடியார்களின் பெருமை போற்றி அவர்களுக் குத் தொண்டு செய்து வாழ்ந்தவர்.
நரசிங்கமுனையரை ஒன்பது பாடல்களில் பெரியபுராணம் சிறப்புப்படுத்துகிறது.
நாடு புகழ் முனை நாடுமேய
நரசிங்க முனையர் புவி நயந்து மன்றுள்
x இந்து சமய கலாசார அலுவல்கள் தி6ை00ாக்களம்

Page 123
ஆடுமவர் ஆதிரைநாள் அடியார்க் கம்பொன்
அமுதளிப்பார் ஒளிவெண்ணி றணிந்து தூர்த்த
வேடமுடைய யவர்க்கிரட்டிச் செம்பொன் ஈந்து
விடுத்தகழகார் ஆலயங்கள் வாய் கச்செய்து
தோடலர்தா ளுடையபிரான் அருளை ஆலித்
தோன்றினன் எனையருளின் ஊன்றினாரே'
என நரசிங்கமுனையரைய நாயனாரை பெரிய புராண சாரம் போற்றுகின்றது. இவ்வாறாக அடியார்களைப் போற்றி திருநீற்றின் பெருமையை உணர்த்தி சைவத்தை வாழ வைத்த நரசிங்கமுனையரைய நாயனார் புரட்டாதி மாதம் சதய நட்சத்திரத்தில் முத்தியடைந்தார். இத்தினம் அவரது குருபூசைத்தினமாக விளங்குகிறது. (கு.ஹே.)
நரசிங்க மூர்த்தம்
வராக அவதாரத்தால் திருமால் இரணியாட்சனைக்
கொன்ற நிலையில், அவன் தம்பி இரணியகசிபை நரசிம்மா வதாரம் எடுத்துக் கொல்லவேண்டியவராகிறார். இரணியக
இந்துக் கலைக்களஞ்சியம்x
 
 

சிபுக்கு மகனாகித் தோன்றிய பிரகலாதன் திருமாலடியவ னாகக் குழந்தைப் பருவத்திலிருந்தே காணப்பட்டான். அவனைத் தன் மகனென்றும் பாராமல் இரணியகசிபு பல வகைகளிலும் அச்சுறுத்திப் பார்த்தும் அவனது பக்தியை மாற்ற முடியவில்லை. எங்கும் நிறைந்தவர் திருமால் என்ப தை நம்பாமல் இரணியுகசிபு ஒரு தூணைக் காட்டி பிரகலா தனிடம் "உன் திருமால் இத்தூணில் இருக்கிறானா?” என வினவியதும் “அவன் தூணிலும் உள்ளான் துரும்பி லும் உள்ளான்” எனப் பதிலளிக்கிறான். இதனை மெய்ப்பி க்கத் திருமால் நரசிம்மராக வடிவெடுத்து இரணியகசிபைக்
கொன்று, பிரகலாதனைக் காக்கிறார் என்பது வரலாறு.
பிரகலாதனுக்கு மிக எளியவனாக இறைவன் தோன்றிய செளலப்யத்தைப் போற்றி ஆழ்வார்களும் பிற அருளாளர்க ளும் கொண்டாடுவாராயினர். இதனைச் சிற்பக் கலை
வாயி லாகவும் சிற்பியர் புலப்படுத்துவாராயினர்.
நரசிம்ம அவதாரம் நடைபெற்ற திருவிடமாகத் திருக் கோட்டியூர் எனும் திவ்ய தேசம் போற்றப்படுகிறது. அதற் கேற்பப் புராண நிகழ்ச்சிச் சிற்பங்களும் அங்கு உள்ளன. அடியவர்கள் தம்மை உற்றுபூழிக் காத்தருளும் நரசிம்ம மூர்த்தியைப் பல்வேறு கோணங்களில் பல்வேறு திருநாமங் களுடன் போற்றத் தலைப்பட்டனர். சமயக் கலைஞர்கள் சிற்பத்தில் வியத்தகு வண்ணம் உருவாக்க முனைந்துள்ள னர். சிங்கப் பெருமாளின் திருவுருவங்களை,
1. இலட்சுமி நரசிம்மர் - அகோபிலம்
2. யோக நரசிம்மர் - சோளிங்கர், சிந்தலழடி
3. சந்திராந்த நரசிம்மர் - நாமக்கல்
4 உக்கிர நரசிம்மர் (அல்லது) இரணிய சம்மார உக்கிர
நரசிம்மர் - திருவரங்கம்
5 வராக நரசிம்மர் - சிம்மாசலம்
6. பிரகலாத நரசிம்மர்
இந்து சமய கலாசார அலுவல்கள் தி6ை00க்களம்

Page 124
(அல்லது) பிரகலாத வரத நரசிம்மர் - கீழ் அகோபிலம்
7. பர்முலிதி நரசிம்மர் - சிங்கவேள் குன்றம்
8. பார்க்கவ நரசிம்மர் - அகோபிலம்
9. காரங்கி நரசிம்மர் - அகோபிலம் என வகைப்படுத்தி அடியவர்கள் வழிபாடு புரிகின்றனர். சிங்கவேள் குன்றம் எனும் திவ்விய தேசத்தில் நவநரசிம்ம மூர்த்தங்களைக் கண்டு களிக்கலாம்.
வைணவ அடியவர்கள் வேறொரு நோக்கிலும் நரசிம்மரை துவாதச மூர்த்திகளாக வழிபாடு புரிந்து வருகின்றனர். அத்தகைய மூர்த்திகளும் திருமால் திருத்தலங்களில் கொண்டாடப்படுகின்றனர்.
1. யோக நரசிம்மர் - சோளிங்கர்
2. தெள்ளிய சிங்கம் (யோக நரசிம்ம திருக்கோலம்)
திருவல்லிக் கேணி
3. சாந்த நரசிம்மர் - திருநீர்மலை
4. படலாத்ரீ நரசிம்மர் - சிங்கப்பெருமாள் கோயில்
5. ஸ்தாரக நரசிம்மர் - யானை மலைக் குகைக்கோயில்
(மதுரையருகில்) 6. பானக நரசிம்மர் - மங்களகிரி
7. இரணிய சம்மார உக்கிர நரசிம்மர் - திருவரங்கம்
8. பூரீதேவி பூதேவி சமேத நரசிம்மர் - மங்களகிரி
9. இலட்சுமி நரசிம்மர் - அகோபிலம்
10. யோக நரசிம்மர் - சிந்திலழடி
11. சுதர்சன நரசிம்மர் - தாடிக்கொம்பு
9
 

12. பிரகலாத வரத நரசிம்மர் - கீழ் அகோபிலம்
இவ்வாறெல்லாம் நரசிம்மத் திருமேனிகள் பலவாக அமைவதற்கு அடிப்படையாகப் பெரியாழ்வார் அருளிய பெரியாழ்வார் திருமொழி, நம்மாழ்வார் அருளிய திருவாய் மொழி, கம்பராமாயணம் - இரணியன் வதைப்படலம், திரு வரங்கத்து மாலை முதலியவற்றிலுள்ள குறிப்புக்கள் தியான சுலோகங்கள் போலத் துணைபுரிந்துள்ளன.
நரசிம்மாவதாரத்துப் பல எழில் தோற்றங்கள், அடிப்படை யில் வேக மூர்த்தங்களே, எனினும் அருளாளர்களுக் கும் அடியவர்களுக்கும் திருவருள் புரிந்து காப்பாற்றிய நிலையில் செளலப்யச் சிறப்பு உடையவை. இவ்வுண்மை யையும் இராமர், கிருஷ்ணர் ஆகியவர்கள்போல் நரசிம்மரும் பூரண அவதாரமே என்ற தெளிவையும் அருளாளர்கள்
பலரும் உணர்ந்து பலருக்கும் உணர்த்தியுள்ளனர்.
சில திருத்தலங்களில் மட்டும், காணலாகும் நரசிம்மத் திருவுருவங்களின் சிற்ப எழில் பற்றிய சில குறிப்புக்க
ளைக் காண்போம்.
அ. நாமக்கல் குடைவரைக் கோயில்
நாமக்கல் குடைவரைக் கோயிலைச் சிற்பக் களஞ்சியம்
எனக் கூறத்தக்க அளவுக்குச் சிற்பங்கள் நிறைந்து
வைணவ சமயத்தின் மேம்பாட்டை புலப்படுத்திக் காட்டு
கின்றன.
குடைவரைக் கோயில் 1500 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டதெனக் கருதுவர். அத்தகைய கோயிலில் கருவறையிலே வீற்றிருப்பவர் சந்திராந்த நரசிம்மர் என்றும், இலட்சுமி நரசிம்மர் என்றும் கூறுவர். நரசிம்மரின் கம்பீரமான சிம்மத் திருமுகம் அற்புதக் கலைப் படைப்பு வீராசனத்தில் சிங்கப்பிரான் வீற்றிருக்க, இருபுறமும் சூரிய சந்திரர்களும் இடப்புறம் சிவனும் வலப்புறம் பிரமனும் சனக சனந்தன முனிவர்களும் இரணிய சம்மாரம் நடந்துவிட்டது என்பதை அறிவிப்பார்கள் போன்று காட்சியளிக்கின்றனர்.
இந்த நரசிம்மர் கருவறையிலேயே ஆதிசேடன், சிங்கப் பிரானுக்குக் குடையும் ஆசனமுமாக அமைந்திருக்க,
இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 125
அந்தப் பிரான் அதன்மீது கால்வைத்து அமர்ந்து கொண்டு, இருடியரின் குறையைச் செவிமடுப்பது போலக் காட்சியளிக் கிறார். கீழே பூமாதேவியும் மார்க்கண்டேயரும் திருவடியை துதிக்கும் நிலையில் காட்சியளிக்கின்றனர்.
அந்தச் சிற்பத் தொகுதியில் இரணியவதமே நடைபெறு வதைக் காட்சியாக்கிக் காட்டியுள்ளனர் சிற்பியர். ஆவேச மாகக் காட்சியளிக்கும் நரசிம்ம மூர்த்தியின் கோபக் காட்சிக்கு ஈடே கூறமுடியாத வகையில், அவருடைய எட்டுத் திருக்கைகளிலும் படைக்கருவிகள் ஆனாலும் அவருடைய கூரிய கை நகங்களே இரணியனின் குடலைக் கிழிக்கின்றன. இரணிய வதம் நடக்குங்கால், பிரகலாதன் தன் கூப்பிய கரங்களுடன் இந்தத் துஷட நிக்கிரகத்தைக் கண்டு கொண்டிருப்பதாகக் காட்சியில் அமைத்துள்ளனர் சிற்பியர்.
நரசிம்மருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் கருவறை பின் மேலைச் சுவரில் மூலவருக்கு வலப்பக்கம் திருமா லின் வராக அவதாரக் காட்சியும் அடுத்து மற்றுமொரு கோட்டத்தில் வாமன அவதாரக் காட்சியும் சிற்ப நுணுக்கத்
துடன் அமைக்கப்பட்டுள்ளன.
ஆ. திருவாலி
சீர்காழிக்குத் தென்கிழக்கே 14 கி.மீ. தொலைவிலுள்ள 'திருவாலி' எனும் திவ்யதேசத்தில் இலட்சுமி நரசிம்மன் திருக்கோலம் வைணவப் பெருமக்களால் பெரிதும் போற்றப்படும் நிலையில் உள்ளது. திருமகளை அணைத் துக் கொண்டு நரசிம்மர் காட்சியளிக்கையில் அந்தப் பிராட்டி அபய முத்திரையுடன் அவரது ஒரு பக்கமாக அமர்ந்திருப்பது வேறு எந்தத் திவ்ய தேசத்திலும் காணக் கிடைக்காத காட்சியாகும். அந்தத் தாயாரின் திருப்பெயர் அமிருதகடவல்லி. மேலும் திருவாலியைச் சுற்றி நான்கு நரசிம்மத் திருத்தலங்கள் உள்ளன. அவை வருமாறு,
உக்கிர நரசிம்மர் - திருக்கிறையலூர் வீர நரசிம்மர் - மங்கைமடம்
யோக நரசிம்மரும் இரணிய நரசிம்மரும் - திருநகரி
இந்துக் கலைக்களஞ்சியம்ஜ் ಜ್ನಷ:
 

இவ்வாறெல்லாம் நரசிம்ம மூர்த்தியை மிகவும் கொண்டா டுவதற்குக் காரணம் பெருமாளின் செளலப்பியம் (அடியார்
க்கு எளியனாந்தன்மை) என்பர்.
தமிழகத்தில் திவ்ய தேசங்கள் பலவற்றுள் நரசிம்மர் திருமேனிகள் (கல்லாலும் பஞ்ச லோகத்தாலும் வடிவமைக் கப்பட்டவை) பல்வேறு திருக்கோலங்களில் காணக்கிடக் கின்றன. எனினும் கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலின் கருவறையினைச் சுற்றியுள்ள தேவ கோட்டங்களில் காணலாகும் சில நரசிம்மத் திருவுருவங் கள் மிக நேர்த்தியான சிற்பக் கலைத்திறன் வாய்ந்தவை. தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் காணப்படும் நரசிம்ம மூர்த்திகளைக் கண்டு. சமய ஈடுபாட்டுடன் கலைக் கூறுக ளைக் காணமுற்படின் அச்சம் விளைவிக்கும் தோற்றங்களி லும் செளந்தரியம் விஞ்சி நிற்பதை உணர்ந்து போற்றிக் கொண்டே இருக்கலாம். (ᎶléᏠ .6006)I. )
நரசிம்ம மேத்தா
குஜராத்தின் கடேமண்டலீ என்னும் ஊரில் பிறந்தவர் நரசிம்ம மேத்தா. இந்திய தேசத்தந்தை மகாத்மா காந்தி யினால் மிகவும் விரும்பப்பட்ட அவரது இதயபூஷண கீத மான வைஷ்ணவ ஜனதோ என்ற பாடலை இயற்றியவர். இப்பாடலின் பொருளை அறிந்து கொள்வது அவசியமா
னது.
'வைஷ்ணவன் என்று யாரைக் கூறுவது?
எவனொருவன் பிறர் துன்பங்களை உணர்வானோ, பிறர் கஷடங்களைக் களைந்து உதவுவானோ அகத்தில் அகந் தைக்கு இடமே கொடுக்க மாட்டானோ அவனே உண்மை
யான வைஷ்ணவன்.
எவன் உலகத்தின் உயிரினம் அனைத்தையும் வணங்கு கிறானோ. எவன் பிறரை நிந்திக்க மாட்டானோ, எவன் வாக்கு காயம் மனம் ஆகியவற்றை சலனமின்றி வைத்துக் கொள்பவனோ அவனைப் பெற்ற அன்னை பாக்கியம்
சய்தவள்.
இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 126
எவன் சமநோக்கு உடையவனோ, வேட்கையை விட் டொழித்தவனோ, பிற மாதர்களைத் தாயாக வணங்கு பவனே, எவன் பொய்யே பேசாதவனோ, பிறர் பொருளைக் கையால் தீண்டாதவனோ அவனே உண்மையான வைஷ்ணவன்.
எவனை மோஹமும், மாயையும் அணுகாவோ எவன் மனதில் திட வைராக்கியம் குடிகொண்டிருக்குமோ, எவன் வாய் இராம நாமத்தையே ஓயாது ஓதிக்கொண்டிருக்குமோ அவனுடைய உடல் எல்லாப் புனித தீர்த்தங்களுக்கும் உறைவிடம் ஆகும்.
எவன் பேராசையும் கபடமும் இல்லாதவனோ, எவன் காமத்தையும் கோபத்தையும் விட்டொழித்தவனோ அவனே உண்மையான வைஷ்ணவன்.
அவனைத் தரிசிப்பவர்கள் தலைமுறை தலைமுறைக் கும் கடைத்தேறியவர்கள் ஆவார்கள்.”
நரசிம்ம மேத்தா பெயருக்கேற்பவே முரட்டுத்தனமும் துடுக்குத் தன்மையும் கொண்டவர். மரணப் படுக்கையில் பலராம் மேத்தா தனது மகனைப் பற்றிய கவலையினால் மிகவும் மனம் நொந்திருந்தார். தமையனுக்கு ஆறுதல் கூறி அவரது மகனை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் யமுனாதாஸ்.
இளமையிலேயே தாயை இழந்த நரசி தந்தையையும் இழந்தான். தன்னைக் கண்டிக்கத் தந்தையில்லை என்ற காரணத்தால் அவனது முரட்டுத்தனம் மேலும் வீறுகொண் டது. பெற்றோரை இழந்த நரசியை யமுனாதாஸின் மருமக ளும் கொடுமைப்படுத்தினாள்.
ஒருநாள் நரசியின் கூர்மையான நகங்களுக்கு ஆளாகிக் கிழிந்த ஆடைகளுடனும் உடலிற் காயங்களுடனும் பள்ளி யில் நரசி செய்த கொடுமைகளை அவனுடைய மதனியிடம் வந்து முறையிட்டுச் சென்றனர் மாணவர்கள். சிறிது நேரங் கழித்து வந்த நரசி, தட்டை எடுத்து வைத்துக் கொண்டு, “பசிக்கிறது. சாப்பாடு போடு” என்று கூக்குரலிட்டான். வேகமாக வந்த மதனி அன்னமிடும் கரண்டியாலேயே ஆத்திரம் தீர அடி அடி என்று அடித்தாள். அடித்தது
இந்துக் கலைக்களஞ்சியம்x:
 

மட்டுமல்லாமல் "ஒன்றுக்கும் உதவாத உனக்கு பள்ளிக் கூடம் ஒரு கேடா? ஊர் வம்பையெல்லாம் விலைக்கு வாங்கி வருகிறாயே சனியனே! இனியாவது ஒழுங்காக இருப்பாயா?” என்று நரசியின் கையைப்பிடித்து முறுக்கிய வாறு கூச்சலிட்டாள்.
அவளது கையை உதறித் திமிறிக் கொண்டு ஓடிய நரசி அமானுஷ்ய வேகத்துடன் சீறிப்பாய்ந்து புராதன கடம் என்ற அந்த ஊரையே விட்டு ஓடினான்.
ஒடிய அவன் இருள் சூழ்ந்த வனத்தை வந்தடைந்தான். மனதிலே அச்சம். சுற்று முற்றும் பார்த்தான். எதிரே பாழடை ந்த சிவாலயம் ஒன்று காணப்பட்டது. கையினால் தடவிய வாறு இருளடர்ந்த கருவறைக்குள் சென்றவன் அங்கிருந்த சிவலிங்க உருவத்தை ஆரத் தழுவிக்கொண்டான். "சிவசிவ” என்று முனகியவாறு பசி, தாகம், பயம், களைப்பு எல்லாவற்றையும் மறந்து ஆழ்ந்தஉறக்கத்தில் ஆழ்ந்தான்.
உறக்கத்தில் ஆழ்ந்த நரசியை பனிமலர் போன்ற ஸ்பரி சம் தொட்டு எழுப்பியது. இருளின் ஊடே ஒரு ஒளிக்கீற்று, அதில் சாவடித் சிவபெருமானே தோற்றம் தருகிறார். நரசி யின், கரண்டி அடிபட்டுக் காய்த்துப் போன கரங்களைத் தன்பக்கம் இழுத்துத் தழுவுகின்றார். தாயின் அரவணைப் பையே அறியாத நரசிக்கு ஈசனின் அணைப்பு தாய்மைத் தழுவலாகத் தோன்றியது. மற்றுமொரு கர்ப்ப வாசத்திலிருந்து புதிய நரசி பிறப்பெடுக்கின்றான். சிவபெருமான் இராம மந்திரத்தை உபதேசிக்க, காளிந்தி நதிக்கரையில் கண்ணபிரானின் தரிசனம் கிடைக்கிறது. கோபியர்கள் புடைசூழ குழலூதும் சியாமளவண்ணன் தன் திருமேனி யைத் தழுவும் துளசி தளங்களை நரசியின் வாயிலிட்டான். துளசிச் சாற்றுடன் அற்புதமான கவிச்சாறும் நரசிக்குள் இறங்கியது. பிற்காலத்தில் குஜராத்தும் செளராஷ்டிரமும் போற்றும் பக்திப் பயிரை விளைவிக்கும் பண்ணைத் துணையானான் நரசி. நரசிக்குத் துவரை வேந்தன் தன் திருக்கரத்தினாலேயே பீதாம்பரமும், மயிற்பீலியும் சூட்டி மகிழ்ந்தான். பஜனை புரிவதற்காகக் கரதாளமும் அளித் தான்.
இதற்கிடையில் நரசியைக் காணாமல் யமுனாதாஸ் தவியாய்த் தவித்தார். இறுதிக்காலத்தில் தன் தமையனுக்
800008U @5g 85-LOLLI a56aMT9ITDI gxaXJeaJ6Ö85esíf g5leOp6JOT&iäğ56BITLô

Page 127
குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாமல் செய்த மருமகளைத் திட்டித் தீர்த்தார். மருமகளுடன் நரசியைத் தேடத் தொடங்கினார். கடைசியில் பல நாட்க ளுக்குப் பிறகு அடர்ந்த கானகம் ஒன்றிலே சிவாலயம் ஒன்றில் தன்னந்தனியனாக பீதாம்பரமும், சிகிமஞ்சமும் மிளிர தாளமிட்டுப் பாடும் குழந்தை நரசியைக் கண்டனர். ஆனந்தக் கண்ணிர் சொரிந்தனர். பிரகலாதனுக்குக் குழை ந்த நரசிம்மரைப் போல இங்கு உக்கிர நரசியும் மாதுர்ய நரசியாகக் காட்சியளிக்கும் கோலக் காட்சியைக் கண்கள் பனிக்கக் கண்டு மகிழ்ந்தனர். நரசியை ஆரத்தழுவி உச்சி முகர்ந்து உள்ளம் குளிர்ந்தனர்.
குற்ற உணர்ச்சி உள்ளத்தைச் சுட வெதும்பிக் கொண்டு நிற்கும் மதனியைப் பார்த்தான் பாலகன். தூய வைஷ்ண வரின் பார்வையல்லவா அது. பின்னால் அற்புதமான அன்பு கீதமான “வைஷ்ணவ ஜனதோ” என்ற பாடலில் இடம் பெறும் "ஜேபீடபராயி ஜாகுணரே” என்ற பொன்வரிக்குப் பொருளாகி பிறர்துன்பத்தைத் தன் துன்பமாக ஏற்கும்
உன்னத வரிக்கு அடிக்கோடிட்டான்.
தனது சிறிய தகப்பனாரின் விருப்பத்திற்கிணங்கத் தன் சொந்த கிராமமான “புராதன கடம்” சென்று அங்கு மக்க ளுக்கு கிருஷ்ண பக்தியைப் பஜனை மூலமாகவும் பூஜை மூலமாகவும் புகட்டினார். அந்தக் கிராமமே கண்ணனின் மதுரபாவத்தில் மூழ்கியது. மேத்தா பக்தி ரசம் ததும்பும் ஏராளமான சாகித்தியங்களை ஏட்டில் வடித்தார். மக்களி
டையே மேத்தாவின் புகழ் உச்சம் பெற்றது.
இந்நிலையில் நரசியின் திருமண ஏற்பாடுகள் முனைப்புப் பெற்றன. திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லையென்றா லும், சிற்றப்பாவின் விருப்பத்திற்காகவும் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்கியும் திருமணத்திற்கு இசைந்தார். அழகும், பண்பும் நிரம்பிய பெண்ணை மணந்தார். சிறந்த இல்வாழ்க்கைக்குச் சான்றாக ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் பிறந்தன. நன்கு வளர்ந்து கல்வி கேள்விகளில் சிறப்புற்று விளங்கினர் அவ்விருவரும்,
தந்தையின் அடிச்சுவட்டைப் பின்பற்றிய அவரது மகனும் பக்தியிலும் கீர்த்தியிலும் தலைசிறந்து விளங்கினான். திருமணப் பருவம் வந்துற்றது.
@fg5 5eoa戍5eT@éuá綠囊 餐緣 9
 

அதே ஊரில் வாழ்ந்தவர் “கிருஷ்ணபட்டர்” என்னும் பெரியவர்; சிறந்த வைஷ்ணவர், வேதவிற்பன்னர், மக்களி டையே தனது நற்குண, நற்செய்கைகளால் புகழ்பெற்றவர். அவரது கனவில் எம்பெருமான் எழுந்தருளி “நரசிம்ம மேத்தாவின் மகனுக்கும், திரிபுராந்தகனின் மகளுக்கும் திருமணம் நிகழ்த்தி வைப்பாயாக’ என்று ஆணையிட்டு மறைந்தார்.
திருவருளாணைக்கு இணங்க கிருஷ்ணபட்டரும் சியாமளபுரத்தில் வசிக்கும் திரிபுராந்தகனின் மகளை மணம் பேசி நிச்சயித்தார். ஆனால், திரிபுராந்தகன் தனது செல்வ நிலைக்கேற்ப சீர்வரிசைகளோடு வந்தால்தான் திருமணம் என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார். மலைக்கும் மடுவுக்கு முள்ள ஏற்றத்தாழ்வு! என்ன செய்வார் கிருஷ்ணபட்டர்? கிருஷ்ண பரமாத்மா மீதே பாவத்தைப் போட்டுவிட்டு புராதனகடம் வந்து திரிபுராந்தகன் பெண் தருவதற்கு சம்மதித்த செய்தியை மட்டும் கூறினார். சீர்வரிசைகளைப் பற்றி எதுவுமே கூறவில்லை.
குறிக்கப் பெற்ற திருமண நாளும் வந்தது. நரசிம்ம மேத்தாவும் குடும்பத்தினரும் கண்ணனின் கழலடிகளைத் தியானித்து உற்றார், உறவினர் புடைசூழ சியாமளபுரம் நோக்கிப் பயணப்பட்டனர்.
நரசிம்ம மேத்தாவும் அவரது மகனும் தம்புராவும், சிப்லாக் கட்டையுமாக பஜனை செய்தவாறே பயணத்தைத் தொடர்ந் தனர். பழைய துணிகள் அடைக்கப்பட்ட பெட்டிகளும், மூட்டைகளும் தீர்த்தச் செம்புகளையும் கைக்கொண்டு பண்டரிநாதனின் நாமத்தை முழங்கிக் கொண்டு உறவின ரும் செல்கின்றனர். இக்கூட்டத்தைப் பார்ப்பவர்களுக்கு
மாப்பிள்ளை வீட்டார் என்றே தோன்றும்.
நரசிம்ம மேத்தாவின் வறிய நிலை தெரிந்த திரிபுராந்தகர் திருமண ஏற்பாடு எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
தனது பக்தனான நரசி பராரியாகப் பெண்வீடு செல்வ தைக் காணப்பொறுக்காத துவாரகாபுரிவாசன் தனது தேவி
யரான ருக்மணி - சத்யபாமா சமேதராக வர்த்தகனாக
உருமாறினார்.
இந்த சமய கலாசார அலுவல்கள் தினைக்கணம்

Page 128
அறுபத்து நான்கு திருவிளையாடலுள் வளையல் வியா பாரியாக வந்து அங்கயற்கண்ணியின் கரமலர் பற்றிய கண்ணுதற் பெருமான் அம்பிகையுடன் கோடீஸ்வர வர்த்தக
ரானார்.
நான்முகனும், நாமகளும் வைரவியாபாரியானார்கள். மற்றும் தேவாதி தேவர்களும் மற்றுளோரும் வேதமோதும் அந்தணர்களானார்கள். குபேரன் சங்கநிதி, பதுமநிதி சுமந்து வந்தான்.
சியாமளா நகரத்து எல்லையிலே தேவர் திருக்கூட்டம் மேத்தாவின் கூட்டத்தைச் சந்தித்தது. மும்மூர்த்திகளும் நரசிம்ம மேத்தாவிற்குக் காட்சிகொடுத்தனர். சொல்லவொ ண்ணாத பரவச நிலையை அடைந்த நரசிம்மமேத்தா நிலமுற வீழ்ந்து வணங்கினார். பரமனே வந்து பக்தனை ஆட்கொண்டபின் நிலைமை தலைகீழானது. பஞ்சப் பர தேசிகளாக வந்த அனைவரும் விழிகளைக் கூசவைக்கும் வைர ஆபரணங்கள், பட்டும் பீதாம்பரங்கள் சகிதம் கோடீஸ்
வரரானார்கள்.
அழகிய வெள்ளைக் குதிரையில் நரசியின் மகன் சொல்லவொண்ணா அழகுடன் இளவரசனைப் போல பவனி வந்தான். நரசியின் குடும்பத்தினர் வருவதற்கு முன்னே மேத்தாவின் காரியஸ்தர் என்று கூறிக்கொண்டு மும்மூர்த்தி களும் முன்னே செல்ல, வண்டி வண்டியாகப் பாத்திரங்கள், பண்டங்கள், அணிகள், பணிகளாலே சியாமளா நகரமே நிறைந்தது. இதனைக் கண்ட திரிபுராந்தகர் நிலைகுலைந் தார். திருமண ஏற்பாடுகள் எதுவுமே செய்யாது அலட்சிய மாக இருந்ததற்கு வருந்தினார். கிருஷ்ணபட்டருக்கு உண்மை நிலை தெரியவந்தது.
அகந்தை அழிந்து அகவொளி பெற்ற திரிபுராந்தகன் வீதியில் வந்துகொண்டிருந்த நரசிம்ம மேத்தாவின் திருவடி களில் வீழ்ந்து கழுவாய் தேடிக்கொண்டார்.
விண்ணும் மண்ணும் வியக்கும் வண்ணம் திருமணம் நடந்தேறியது. நரசிம்ம மேத்தாவின் புகழ் பெருகுவதைக் கண்டு பொறாமை கொண்ட சிலர் யாத்ரீகர்கள் சிலரை அணுகி, வழியில் கள்வர் பயம் இருப்பதால் நீங்கள் நரசிம்ம மேத்தாவிடம் உங்கள் பொருளைக் கொடுத்து
இந்துக் கலைக்களஞ்சியம் x హ్లాజోళ్ల 囊玉 Q

'உண்டி’ பெற்றுச் செல்லலாம் என்று கூற, அவ்வாறே அவர்களும் மேத்தாவிடம் ஆயிரம் பொன்களைக் கொடு த்து உண்டியலை சியாமள மேத்தா என்ற பெயருக்கு எழுதி வாங்கிச் சென்றனர்.
துவாரகைக்குச்சென்ற யாத்ரீகர்கள் உண்டியலை மாற்ற நினைத்தபொழுது சியாமளா மேத்தா என்று யாராவது வியாபாரி இருக்கிறாரா என்று விசாரித்தனர். அப்பெயரைக் கொண்டவர் எவரும் இல்லை என்று அறிந்து மனமிடிந்து நிற்கும்பொழுது எம்பெருமானே நான்தான் சியாமள மேத்தா என்று கூறிக்கொண்டு உண்டியலைப் பெற்றுக் கொண்டு ஆயிரம் வராகன்களைக் கொடுத்தனுப்பினார். இவ்வதி சயத்தை அறிந்த பொறாமைக்காரர்கள் அறியாமைக்கு வெட்கி, மேத்தாவின் பாதங்களைப் பணிந்தார்கள்.
இவ்வாறு பரந்தாமன், பூரீநரசிம்ம மேத்தாவின் பக்திக்குக் கட்டுப்பட்டு அநேக திருவிளையாடல்களைப் புரிந்தான்.
ஒருசமயம் நரசிம்ம மேத்தாவின் நாமசங்கீர்த்தன இன்பத் தில் இலயித்துத் தமது திருக்கழுத்தில் பிரகாசித்துக் கொண்டிருந்த துளசிமணி மாலையை நரசியின் கழுத்தில் அணிவித்து ஆனந்தம் கொண்டார்.
அந்த துளசிமணி மாலை மேத்தா பூஜை செய்யும் நேரத்தில் மட்டும் ஆயிரம் கோடி சூரியப் பிரகாசமாக ஜகத்ஜோதியாக ஒளிவீசும். மற்ற சமயங்களில் சாதாரண மாலையாகக் காட்சியளிக்கும். இந்த அதிசயச் செய்தி எங்கும் பரவியது. அந்நாட்டு மன்னன் செவிக்கும் எட்டியது. ஒருநாள் வேந்தன் மேத்தாவைக் காண அவரது இல்லம் நாடி வந்தான். மன்னன் வந்ததையும் அறியாமல் நாம சங்கீர்த்தன சாகரத்தில் மூழ்கியிருந்தார் மேத்தா, அவரது கழுத்திலுள்ள மணிமாலை பரிமளம் வீசி, பேரொளியுடன் திகழ்வதைக் காவலன் கண்டான். அவனது மனத்தில் குரோதப் பேய் குடியேறியது. அறத்தின் வேராய் விளங்க
வேண்டியவன் மரத்தின் உருவமாய் மாறினான்.
நாமபஜனை செய்து கொண்டிருந்த நரசியை நோக்கி உரத்த குரலில், "பக்த சிரோமணி என்று பலராலும் போற்றப்படும் உத்தமரே? உமக்கு ஒன்று கூறுகின்றேன். இதோ உமது கழுத்திலே விளங்கும் துளசி மாலையை
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்கணம்

Page 129
நான் எடுத்துக் கொள்வேன். உமது பக்தி உண்மையா னால் இம்மாலை மீண்டும் உமது கழுத்தை அலங்கரிக்கு மாறு செய்ய வேண்டும். இந்த நிபந்தனையில் நீர் வெற்றி பெற்றால் உமது பக்திக்கும் ஞானத்திற்கும் நான் தலை வணங்குவேன். அவ்வாறு இல்லாமல் இம்மாலை எனது கரத்திலேயே தங்கிவிட்டால் எனது உடைவாள் உம்மைப் பலி கொள்ளும்” என்று கோபாவேசமாகக் கூறினான். கூறியதோடு மட்டுமல்லாமல் வலிந்து சென்று துளசிமணி
மாலையைப் பறித்துக் கொண்டான்.
நரசிம்ம மேத்தாவோ சிப்ளாக்கட்டையில் தாளமிட்டவாறு, பக்திப் பூக்களை எடுத்துப் பாமாலையாகத் தொடுத்து பரந்தாமனுக்குப் பூமாலையாக அணிவித்தார். உடனே, மன்னனின் கழுத்தில் இருந்த மணிமாலை மேத்தாவின் கழுத்தில் விழுந்தது. முன்னிலும் பன்மடங்கு மணமும் பிரகாசமும் வீசியது.
இக்காட்சியைக் கண்ட மன்னன் உடல் விதிர் விதிர்க்க அடியற்ற மரம்போல் மேத்தாவின் பாதத்தில் விழுந்தான். மன்னனை அளவற்ற அன்புடன் கரம்பற்றி எழுப்பினார். மேத்தாவின் ஸ்பரிசத்தினால் மன்னன் மகானாக மாறினான். உள்ளத்தில் உறைந்து கிடந்த அகந்தையும் அலட்சியமும் மறைந்தன. பகவத் கைங்கரியத்திற்குப் பொன்னையும் பொருளையும் வாரிவழங்கினான். நரசிம்ம மேத்தா நீண்ட நாட்கள் வாழ்ந்து பார் அளந்த பெருமானின் பக்திப் பனுவ ல்களை ஆயிரக்கணக்கில் இயற்றி நாத்தழும்பேறப் பாடி, நாராயணனின் பங்கஜமலர்ச் சேவடிகளில் தஞ்சமடைந்தார்.
(6).J.606).)
JefboGuiyogir - I
காஞ்சிப் பல்லவர்களுள் மிகச் சிறந்தவன் முதலாம் நரசிம்மவர்மனேயாவான். மகேந்திரவர்மனின் புதல்வனாகிய இவன் தந்தையிடமிருந்து பரந்த பேரரசினைப் பெற்று கி.பி. 630 முதல் 668 வரை சிறப்புடன் ஆட்சி செய்தான். தந்தையைப் போலவே இவனும் பல பெயர்களைச் சூடிக் கொண்டான். பூரீபரன், பூரீமேகன், ரீநிதி, இரணஜயன், அதியநிதகாமன், நயனன்குரு ஆகிய சிறப்புப் பட்டங்க ளைச் சூடிக்கொண்டான். இவனுடைய ஆட்சியில் நான்கு
இந்தக் கலைக்களஞ்சியம்x
 
 

சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. அவையாவன;
1) கி.பி. 642 - 643 ஆம் ஆண்டுகளில் வாதாபிச் சாளுக்கியர்களுடன் போராடி மாபெரும் வெற்றி கண்டு மாமல்லன் ஆனான். இது பல்லவர்களுக்கு அரசியல் சாதனையும் தென்னிந்தியாவுக்கு வரலாற்று முக்கியத்து வம் வாய்ந்த வெற்றியுமாகும். 2) ஈழநாட்டுப் படையெடுப்பு, 3) சீனயாத்திரிகர் யுவான் சுவாங்கின் காஞ்சி விஜயம், 4) மாமல்லபுரத்து திறந்த வெளிக் கலைக்கூடம் உருவாக்கப்பட்டமை.
மகேந்திரன் காலத்தில் தோன்றிய பல்லவ சாளுக்கிய பகைமை நரசிம்மவர்மன் காலத்தில் வளர்பிறை போல வளர்ந்தது. மகேந்திரன் காலத்தில் இளவரசனாகப் புள்ளலூரில் சாளுக்கியர்களைச் சந்தித்தான். அவர்களு டைய வலிமையை உணர்ந்தவன். பல்லவர்கள் சாளுக்கி யர்களுக்கு இணையாக வலிமை பெற்று விளங்கியதை புலிகேசி விரும்பவில்லை. பல்லவர்களின் வலிமையை உடைக்கவும் அழிக்கவும் நினைத்த புலிகேசி பல்லவர்க ளின் ஆட்சியின்கீழ் இருந்த ராயலி சீமாவிலிருந்த சிற்றரச னான பாணர்களைத் தாக்கினான். ஆனால் நரசிம்மவர்மனு க்கும் புலிகேசிக்கும் நடந்த மூன்று போர்களிலும் நரசிம்ம வர்மன் வெற்றியடைந்தான். இவற்றுள் காஞ்சிக்கு இருபது மைல்கள் தொலைவிலுள்ள மணிமங்கலத்தில் நடந்த போரே சிறப்பானதாகும். வெற்றியடைந்த நரசிம்மவர்மன் சேனாதிபதி பரஞ்சோதியுடன் சேர்ந்து சாளுக்கிய நாட்டை அழித்தான். கி.பி.642-643 ஆம் ஆண்டிலேயே வாதாபிக்கு அருகே நடந்த போரில் இரண்டாம் புலிகேசி கொல்லப் பட்டான். நரசிம்மவர்மன் வாதாபி கொண்டான் என்னும் பெயரைச் சூடிக்கொண்டான். சாளுக்கியர்களின் வீழ்ச்சிக்கு காரணமானவன் என வினயாதித்தனின் கோரம் சாசனம் கூறுகின்றது.
மாமல்லனின் வாதாபி படையெடுப்பின்போது பரஞ்சோதி யார் அவன் தளபதியாக இருந்து போராடினார். வெற்றிக்குப் பின் கவர்ந்த பொருட்களை மன்னன்முன் குவித்து மனமகிழ் ந்தார். வாதாபியிலிருந்து விநாயகப் பெருமானின் உருவச் சிலையைக் கொண்டு வந்தார். இதற்குப் பின்னரே தமிழ் நாட்டில் விநாயகரை வழிபடும் பண்பாடு உருவாகியது எனச் சிலர் கருதுகின்றார்கள்.
8Š5 5LQLu 56.JT8HTTJ gladaj6ú3cii šlocorš56Tň

Page 130
புலிகேசியுடனான போரில் மாமல்லனுக்குப் பிற மன்னர் கள் உதவினார்கள் என்பதைச் சாளுக்கிய ஆதாரங்களால் அறியமுடிகின்றது.
இலங்கை இளவரசனான மாணவர்மன் அரசுரிமை இழந்து காஞ்சியில் தஞ்சம் புகுந்திருந்தான். மாணவர்மன் நரசிம்மனு க்கு உதவினவனாவான். இவன் மணிமங்கலத்தில் நரசிம் மனுடன் சேர்ந்து போரிட்டான். வாதாபி வெற்றிக்குப்பின் மாமல்லன் புகழ் பெருகியது. அவன் தன் நண்பன் மானவர் மனுக்கு உதவ இருமுறை படையை இலங்கைக்கு அனுப் பினான் என்பதை மகாவம்சத்தால் அறியலாம். மாமல்லனு டைய கப்பற்படை மகாபலிபுரம் துறைமுகத்திலிருந்து பயணமானது. பல்லவர்கள் இலங்கையில் வெற்றி கண்ட னர். மாணவர்மனுக்கு உரிய அரசிருக்கையை அவன்
பெற மாமல்லன் உதவினான்.
பாண்டியன் அரிகேசரி பராங்குசன் சேரர், சோழர், களப்பரர் மீது வெற்றி கண்டான். அவன் பல்லவ சாளுக்கியப் போட்டியைப் பயன்படுத்திப் பல்லவர் நாட்டின் மீது புகுந்து சங்கர மங்கை என்னும் இடத்தில் பல்லவர்களைப் புறம் கண்டான் என்று சின்னமன்னூர்ச் செப்பேடு காட்டுகின்றது. பாண்டியன் சேரர்களையும் சோழர்களையும் களப்பாளர்க ளையும் சேர்த்துக் கொண்டு பகைவர்களுடன் போருக்குச் சென்றான். நரசிம்மன் பாண்டியர்களுடனும் பிற தென் னகத்து அரசர்களுடனும் போரிட்டான் என்று கூரம் சாசனம் கூறுகின்றது. வடக்கில் சாளுக்கியர்களின் தொல்லையைத் தவிர்த்தான். என்றாலும் மாமல்லன் காலத்தில் தெற்கில் உள்ள பாண்டியர்களுடனான அதிகார வலிமைப் போட்டி ஓயவில்லை.
சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியின் இரண்டாம் படையெடுப்பின் முன் சீனப் பயணியான யுவான் சுவாங் காஞ்சிக்கு வருகை தந்தார். அவருடைய குறிப்பால் காஞ்சி யின் பெருமை, பல்லவர் நாட்டின் நிலை ஆகியவற்றை அறிய முடிகின்றது. சமய நோக்குடன் பயணம் செய்துள்ள அப்பெரியார் அன்றைய சமய நிலைகளையும் செம்மையா கப் படம் பிடித்துச் சென்றுள்ளார். பல்லவநாடு பற்றியும் பெளத்த மதத்தின் சரிவுக் காலத்தைப் பற்றியும் காஞ்சி யைச் சுற்றியுள்ள பகுதிக்கு "திராவிட” என்னும் பெயரிருந் தது என்பதையும் யுவான் சுவாங்கின் குறிப்புகளில் காண
இந்துக் கலைக்களஞ்சியம்xxx
 

6) TLD.
வெற்றி வீரனாக விளங்கிய நரசிம்மன் ஆக்கப் பணிகள் பல செய்தான். மல்லை என்று அறியப்பட்டு வந்த துறை முகத்தை இவன் காலத்தில் புதுப்பித்து மாமல்லபுரம் என்ற பட்டினத்தைத் தோற்றுவித்தான். தந்தையைப் பின் பற்றி அறப்பணியில் ஈடுபட்டான். தந்தையைப் போன்று முதலில் குடைவரைக் கோயில்களை உருவாக்கினான். நாமக்கல், திருச்சி, திருவெள்ளறை, குடுமியான்மலை, திருமயம் ஆகிய இடங்களில் குடைவரைக் கோயில் களைத் தோற்றுவித்தான். இவன் அமைத்த கோயில் களில் போதிகைகள் உருட்டப்பட்டு காடிகள் வெட்டப்பட்டி ருந்தன. திறந்த வாயுடன் குந்திய நிலையில் உள்ள சிங்கங்கள் தூண்களைச் சுமந்தவாறு அமைக்கப்பட்டிருப் பதைக் காணலாம். நரசிம்மன் மகாபலிபுரத்தில் ஒரு திறந்த வெளிக் கலைக் கூடத்தை உருவாக்கினான். மகாபலிபுரத் தில் இவன் காலத்துக் கலை மூவகைக் கலைத்திறனை வெளிப்படுத்தின. அவை குடவரைக் கோயில்கள், ஒற்றைக்கல் கோவில்கள், கற்சிற்பங்கள் என்பவை.
மகிடாசுரமண்டபம், வராகமண்டபம், திரிமூர்த்தி மண்டபம் ஆகிய குகைக் கோயில்களைத் தந்தான். அவை மண்டபங்கள், இறையகங்களைக் கொண்ட கோயில்கள் ஆகும். ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்ட கோவில்களுக்கு இரதம் எனப் பெயரிடப்பட்டது. மிகுதியான அளவில் இவைகள் முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில் செதுக்கப் பட்டன. பலவிதமான இரதங்களை இம்மன்னன் எழுப்பி னான். பாலாற்றின் வாயிலின் அருகேயுள்ள கடலால் சூழப்பட்ட மாமல்லபுரத்தில் எல்லாவிதமான இரதங்களை யும் காணலாம். 100 அடி உயரமும் தெற்கிலிருந்து வடக்காக அரை மைல் தூரமும் இரண்டு பர்லாங் அகல முள்ள பெரிய கருங்கல்லையும் தெற்கு நோக்கிச் செல்லும் சிறு கருங்கல்லையும் கட்டடக்கலை நிபுணர்கள் பயன்படுத் தியுள்ளனர். வெறும் துறை முகமாக விளங்கிய மாமல்ல புரம் பல்லவர்களின் முயற்சியால் கலைக்கூடமாக மாறியது. இவற்றிலே ஏழு, விகாரம் என அழைக்கப் படும் இரதங்கள் ஆகும். இவை பஞ்ச பாண்டவர் இரதங்கள் என அழைக்கப்படும். தர்மன், வீமன், அர்ஜுனன், சகா தேவன், நகுலன், திரெளபதி ஆகியவர்களின் பெயர்

Page 131
களால் இரதங்களை கவர்ச்சியான ஒற்றைக்கல் கோவில் களாக எழுப்பினான். திரெளபதி இரதம் ஓர் குகையின் அமைப்பை ஒத்திருக்கின்றது. ஓர் சிங்கமும் யானையும் அடுத்தடுத்து செதுக்கப்பட்டிருக்கின்றன. மற்ற இரதங்கள் விகாரங்களின் உருவை ஒத்தன. இதன் நடுப்பகுதியில் சதுரத்தூண்களின் உதவியுடன் நிற்கும் தாழ்வாரங்கள் காணப்படுகின்றன. இதன் மேற்பகுதி கூம்பு வடிவுடைய சிகரம். இதன் கட்டடப் பகுதிகளின் உறுதியான வார்படங் களைக் காணலாம். சிங்க உருவங்கள் பொறிக்கப்பட்ட சதுரத்தூண்கள் தாங்கிய புகுமண்டபங்கள் தர்ம இரதத்தின் அழகை மேம்படுத்துகின்றன. அருமையான சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த கலைக் களஞ்சியம்
என இதைக் கூறலாம்.
பீமன், சகாதேவன், விநாயகர் இரதங்கள், சைத்யங்க ளின் உருவை ஒத்திருக்கின்றன. நீண்ட சதுரமாக உள்ள இக்கோயில்கள் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட அடுக்குகள் உள்ளதாகவும் இருக்கின்றன. சகாதேவன் கோயில் கவிகைக் கூரையுள்ள அரைவட்ட வடிவம் உடை யது. இக்கட்டிடக்கலை முறையைப் பிற்கால பல்லவர்க ளும் முற்காலச் சோழர்களும் பயன்படுத்தினர். இவ்இரதங் கள் எல்லாம் இந்து சமயத்தைச் சார்ந்தனவாக இருந்தன. இவைகளில் செதுக்கப்பட்டிருக்கும் மனிதக் கடவுள் உரு வங்கள் பொலிவும் மெருகும் உடையனவாய் இருக்கின்றன.
மனித உருவங்கள் சிறப்பான அழகுருவங்களாக இருக் கின்றன. இவ் இரதங்கள் எல்லாம் நிறைவு பெறாத கட்டிடங்களாக இருக்கின்றன.
நரசிம்மனின் குகைக்கோயில் சிற்பங்கள் கவர்ச்சியா னவை. அவை வாதாபிக் குகைகளில் காணப்படும் புராணச் சிற்பங்களை ஒத்தவையாகும். பாறைகளின் மீது புராணக் கதைகளைச் சிற்பமாக வடித்து விளக்கினான். அர்ஜுனன் தவம் அல்லது கங்கை கீழே தாவி வருதல் போன்ற சிற்பங்கள் சிறப்பான கலை அழகுடையவையாக இருக்
கின்றன.
இப்பாறையின் நடுப்பகுதி இடைச்சுற்று பிளவுகளில் ஓர் அருவி ஓடுகின்றது. இவ்வருவியில் நாகர்களும், நாக
@ög岳 56Ca忘56T@年Lá談緣線10

கன்னிகைகளும் விளையாடுகின்றார்கள். இரு புறங்களி லும் கடவுள், மனித, மிருக உருவங்கள் செதுக்கப்பட்டி ருக்கின்றன. அருவியின் இடது புறத்தில் நின்ற கோலத் தில் சிவபெருமானின் கோயில் உள்ளது. இக்கோயிலின் முன் தலைவணங்கி நிற்கும் பகீரதனின் உருவம் இருக் கின்றது. கைகளை உயர்த்தி பகீரதன் தவம் செய்கின் றான். வலது புறத்தின் ஒரு பகுதியில் யானைகள், சாமி யார், பூனை, குரங்கு குடும்பம் என்பன அற்புதமாக சித்திரி க்கப்பட்டுள்ளன. அதேபோன்று கோவர்த்தன மலையைத் தாங்கி நிற்கும் காட்சியும் அற்புதமான கலைப்படைப்பாகும். இவ்வாறு போர்களினாலும் அறப்பணி, கலைப்பணி ஆகிய வற்றாலும் நரசிம்மவர்மன் வரலாற்றில் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளான். (தே.ஹ.)
jjafibLOGuijLogit -II
முதலாம் பரமேசுவரனின் மகன். இவன் சுமார் 250 விருதுப் பெயர்களைப் பெற்றவன். இவனுடைய கல்வெட்டு க்கள் அனைத்தும் சமஸ்கிருதத்திலேயே உள்ளன. இராச சிம்மன், சங்கர பக்தன், ஆகமப் பிரியன் முதலியன இவ னுடைய விருதுப் பெயர்கள். இவன் ஆட்சி செலுத்திய 40 ஆண்டுகள் பல்லவ தேசத்தில் அமைதி நிலவி ஆக்கப் பணி பெருகிய காலமாகும். பல்லவர் புகழ் பன்னாடுகளி லும் பரவியது. கடல்கடந்த நாடுகளுடன் வாணிபத் தொடர் பும் ஏற்பட்டன. சீனம், கிழக்கிந்திய தீவுகளுடன் நட்புறவு கொண்டு பரந்த தமிழகத்தை ஏற்படுத்தினர்.
சாளுக்கியரோடும் சுங்கரோடும் திபத்தியரோடும் போர் புரிந்தான். சீனர்களுடன் நல்லுறவை வைத்துக்கொண்ட தோடு நாகபட்டினத்தில் புத்தவிகாரம் எழுப்ப அனுமதி அளித்துள்ளான். இவன் காலத்தில் தென்கிழக் காசியவுடனான வாணிபப் போட்டியின் காரணமாக
அரேபியர்களுடன் பகைமை ஏற்பட்டது.
சிவபக்தனாக விளங்கிய இவன் காலத்தில் இந்து சமயத் தின் மறுமலர்ச்சி மிக விரைந்து முன்னேற்றம் கண்டது. கலைக்கு இவன் காலத்தில் ஒரு தனிப்பாணி பின்பற்றப் பட்டது. மாமல்லபுரத்துக் கடற்கரைக் கோயில் இதற்கு
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 132
சான்றாகும். இராஜசிம்மன் காலத்திலேயே (695-722) கற்றளிகளைக் கட்டும் வழக்கம் தொடங்கியது. அவனது காலத்துக் கட்டடங்கள் மாமல்லபுரம், பனைமலை, காஞ்சி புரம் ஆகிய ஊர்களிலே காணப்படுகின்றன. அவற்றிலே சில சிறு தளிகள், வேறு சில பெருங்கோயில்கள், மாமல்ல புரத்து உலகக்ணேஸ்வரம், முகுந்தநாயனார் கோயில் என்பனவும் காஞ்சிபுரத்து இறவாதான் ஈஸ்வரம், மகேந்திர வர்மேஸ்வரம் ஆகியனவும் திருக்கழுக்குன்றத்து வேத கிரீஸ்வரம் என்னும் கோயிலும் ராஜசிம்மன் காலத்து சிறு தளிகளாகும். மாமல்லபுரத்து கடற்கரைக் கோயில்க ளும், பனைமலைக் கோயிலும் காஞ்சியிலுள்ள ராஜசிம்
மேஸ்வரமும் அவனது காலத்தவை.
சிறுதளிகளில் இறவாதான் ஈஸ்வரத்தில் வாயில் காவலர் சிற்பங்களுக்கு மேல் கோட்டம் அமைக்கப்பட்டு மேலும் ஒரு சிற்பம் பெற்றுள்ளமை செதுக்கு தளிகளில் காணப் படாத புதிய உத்தியாகும். இக்கோயில்களில் மகரதோர ணங்கள் சிறப்புற்று விளங்குகின்றன. அவை விரிவாகவும் படைத்திறனுடனும் அமைக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரத்திலே கடற்கரையிலுள்ள கோயில் வளாகத் திலே மூன்று கோயில்கள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன என்பது மிக அண்மைக்காலத்தில் நடைபெற்ற ஆராய்ச்சிக ளினாலே தெளிவாகியுள்ளது. அவை நரபதி சிம்மவிஷ்ணு கிருகம், ஷத்திரிய சிம்மேஸ்வரம், முத்தள விமானமான ராஜசிம்மேஸ்வரம் ஆகியனவாகும். பல்லவ காலக் கலை யின் உன்னதமான கோலத்தைக் காஞ்சிபுரத்திலுள்ள கைலாசநாதர் கோயிலிற் காணலாம். இதனை இராஜசிம் மேஸ்வரம் என்று கல்வெட்டுக்கள் கூறும். பெரிய கற்கோ யில் ஆதலால் "பெரிய திருக்கற்றளி' என குறிப்பிடப்படு கின்றது.
மாமல்லபுரத்து சிம்மேஸ்வரத்தைக் காட்டிலும் வனப் பில் மிகவும் முன்னேற்றமானது. சிற்பங்கள் அதிக அள வில் கொண்டமைந்த கோயில் சுவர்பிரிப்பு, சுவரின் கோட்ட அமைப்பு, கோட்டங்களின் உட்பகுப்பு, அலங்கரிப்பு தோர ணங்கள் எனப் பல்லவர் கலைத்திறம் உச்சத்தில் மிளிரும்
கோயில். இக்கோயிலில் பல்வேறு வடிவங்களில் சிறந்த
 

4.
எழுத்துக்களில் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றது. இக் கோயில் சுவர் முழுமையிலும் சிவபிரான், உமை, முருகன், திருமால் சிற்பங்கள் காணப்படுகின்றன. இக்கோயில் மாமல்லை சிற்பங்களைப் போன்று பல்லவரது சிற்பச்
சிறப்பை உலகிற்கு எடுத்துக்காட்டவந்த அழகிய படைப்பு.
அவன் காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட பனைமலைக் கோயிலிலுள்ள பார்வதியின் ஓவியம் சிறப்புமிக்கது. இராஜ சிம்மன் கைலாசநாதர் கோயிலில் சிவன் ஆடிய சிந்தைக்கு விருந்தாகும் பலவகை நடனங்களைத் தமிழ் மக்கள்
அறியும் வண்ணம் சிற்ப வடிவில் அமைத்துள்ளான்.
இவன் காலத்தில் சமஸ்கிருத மொழிப் புலவர்கள் பேராதரவைப் பெற்றனர். சமஸ்கிருத மொழிப்புலவரும் கதாசாகரம், அவந்தி சுந்தரி கதை முதலிய நூல்களின் ஆசிரியருமான தண்டி மன்னனின் பேராதரவைப் பெற்றார். அவர் எழுதிய 'காவியாதர்சினி' என்ற இலக்கண நூலின் வழிநூலே இன்று தமிழில் காணும் தண்டியலங்காரமாகும். மன்னன் பிராமணர்களுக்காக நிறுவப்பட்டிருந்த காதிகா (கடிகை) என்ற நான்மறைக் கல்விக் கூடத்தைப் புதுப் பித்தான். இராஜசிம்மன் என்ற இரண்டாம் நரசிம்மவர்மன் காலம் பல்லவர் வரலாற்றில் ஒரு சிறந்த காலமாக
விளங்கியது. (தே.ஹ.)
நரலோக வீரநல்லூர்
சோழர்கள் காலத்தில் தலைமுறை தலைமுறையாக முடியாட்சி நடைபெற்றதனால் ஏதோ அம் மன்னர்கள் மனம்போன போக்கில் ஆண்டார்கள் என்பதல்ல. முடியரசு குடியரசாகவே திகழ்ந்தது என்பதற்கு ஐம்பெருங்குழு, எண்பேராயம் என்ற அவைகள் பணியாற்றின என்ற செய்தியே சான்றாகும். அமைச்சர், படைத்தலைவர், சமயத்தலைவர், தூதுவர், ஒற்றர் என்பவர்களே அக்குழு வினராவர். இராமாயண, பாரத காலங்களிலிருந்தே பழங்குடி எனப் பீடுடன் ஆண்ட சோழர்கள் சிலகாலம் பல்லவர் ஆதிக்கத்தால் முகில் சூழ்ந்த ஆதித்தனாயினர். கி.பி. 880 ஆம் ஆண்டில் ஆதித்தன் என்ற பெயரைப் பூண்ட ஆதித்த சோழன் காலத்திலிருந்து வளவர் மீண்டும்
災災簽線經j5 Hau」5aT5TT g@6J656前gleo5Dorä56má

Page 133
முடிமன்னராகி, நாடு பெருக்கி, “பெருநிலச்செல்வி, திருமன்னிவளர, புகழ்சூழ்ந்த புரணியகழ் சூழ்ந்த புவியில்”, என்றெல்லாம் மெய்கீர்த்திகள் புனைய காரணமாயிருந்தவர் கள் பல வீர படைத்தலைவர்களே. இவருள் முக்கியமான வன் ஒருவன் தொண்டை மண்டலத்தைச் சார்ந்த அரும் பாகத்துக் கிழானாகிய காளிங்கராயன். இவர் முதற் குலோத்துங்கன் நடத்திய போர்களில் எல்லாம் பெரும்பங் கேற்று மன்னனுக்குக் கீர்த்தி பெருகச் செய்ததால் நரலோக வீரன் என்ற சிறப்புப் பெயர் சூட்டப்பெற்றான். விக்ரமசோழன் காலத்திலும் இவன் பணி நீடித்தது. போர்ப் பணிகளுடன் இவன் கடமை முடிந்துவிடவில்லை. தில்லை யம்பலத்திற்கு செப்புத்தகடு வேய்ந்து திருவதிகை வீரட்டானேசுவரர் கோயிலுக்குப் போன்போர்த்தி, ஏட்டுத் தேவாரப் பதிகங்களை அழியாமலிருக்க செப்பேடுகளில் எழுதி "திருமுறை செப்பேடு கண்ட பெருமாள்” என்றும்
பாராட்டப் பெற்றவன்.
சோழ மன்னன் விக்கிரமன், இவன் பணி மெச்சி தொண்டை நாட்டில் இவன் சொந்த ஊர் பிரதேசத்தை நரலோக வீர நல்லூர் என்று பெயரிட்டு விட்டான். அது மட்டுமா? தில்லை திருப்பணிகளை அரசன் ஆணைப்படி அரும்பாக்கக்கிழான் நிறைவேற்றிய கி.பி. 1135 லேயே நரலோக வீரநல்லூரைச் சார்ந்த சக்கரமருல்லூர் முக்கண் ணன் ஆலயம் பழுதடைந்திருந்தபடியால், சீராக்கி 13500 குழி நிலம் அளிக்கப்பட்டு வேலிக்காசு, வெட்டிமுட்டி யல் போன்ற வரிகளும் விழாக்களும் ஒதுக்கப்பட்டதென் றால் இக்கோயிலின் புராதனமும், சோழ மன்னர்கள், அவர்கள் படைத்தலைவர்கள் இவர்களின் சமயாபிமானமும் வெளியாகிறது.
காஞ்சிபுரத்திலிருந்து ஆற்காட்டுக்குச் செல்லும் பல வழிகளுள் ஒன்று பாலாற்றைத் தாண்டி, அதையொட்டி வடயிலுப்பை, பூதூர், புதுப்பாடி மார்க்கமாய் செல்வதாகும். பூதூருக்கும் புதுப்பாடிக்கும் இடையே உள்ள சக்கரமல்லூர், சக்கரமூதூர் என்று சாசனங்களால் அறியப்பட்டு சிவபராக்கிரம லீலைகளில் 36வது ஆன காமதகன நிகழ்ச்சியைக் காட்டும் முக்கண்ணனின் நாமம் தாங்கிய ஈசன் உறைவிடமாகும். கரும்பு வில் வளைத்து, கரும்பு
நானேறிட்டுப் பஞ்ச பாணங்களைச் சிவன்மீது பிரயோகித்
இந்தக் கலைக்களஞ்சியம்x
1 O
 

தான் காமன் என்ற புராணத்தையொட்டி இப்பிரதேசம் முழுவதும் ஒரே கரும்புத் தோட்டம்தான். இவ்வூருக்கு வெகு அருகிலுள்ளது அரும்பாக்கம். இப்பிரதேசத்திற்கு நரலோக வீரநல்லூர் என்ற சாசனப்பெயர் விக்ரமசோழன் காலத்தில் ஏற்பட்டதிலிருந்ததே இந்த அரும்பாக்கமே காளிங்கராயன் பிறந்த ஊர் என அறியலாம். இக்காரணம் பற்றியே இப்படைத்தலைவனும் அரும்பாக்கக் கிழான்
என அறியப்பட்டான்.
சத ஹஸ்த', 'ஸ்மாஹர ஸஹஸ்ர ஹஸ்சங்கிர' என்பது அதர்வண வேதம் நூறு கைகளினால் பொருள் சேர்த்து ஆயிரம் கைகளினால் அதை அள்ளித் தானமிடு என்பதே பொருள். ஊர்த்தலைவனுக்குச் செலுத்த வேண்டிய வரிகளுண்டு. அந்தராயம், கட்டிகைக் காசு, கைக்குழி, குற்றத்தண்டம் இவ்வளவு வரிகளையும் இக்கோயிலுக்கு அர்ப்பணித்துவிட்டான் இவ்வூர்த்தலைவன், நுதல் கண்ணுடைய இறைவனின் பெயரையே கொண்ட
இவ்வூருக்கு கண்ணுதல் பெருமான்தான் தலைவன்.
சோழ மன்னர்களுக்குத் தில்லைக்கூத்தன் தான் குலதெய்வம். அவன் கூத்தில் மனதைப் பறிகொடுத்து அக்கலையை ஊக்க தேவரடியார்களை நியமித்து நிலம் வழங்கினர். கி.பி.1230இல், மூன்றாம் இராசராசன் காலத்தில் ஊராரும் சிவப்பிராமணர்களும் பெரிய நாட்டு நங்கை என்ற இக்கோயில் தேவரடியாருக்கு திருமடவளாக முதல் வீட்டை பரம்பரையாக அனுபவிக்கவும், கோயில் மரியாதைகளையும் அளித்தனர் என்பது ஒரு சாசனம். இம்மடவளாகப் பெயர்களிலும் சைவமணம் வீசுகின்றது. சிவஞான சம்பந்த வளாகம், தம்பிரான் சோழன் வளாகம்,
திருக்காளத்தி உடையான் வளாகம் இப்படி,
நிலவு ஒரு காலம். இருள் ஒரு காலம். சோழப் பேரரசு தளர்ந்தது. தொண்டை நாட்டில் காடவன் கோப்பெருஞ் சிங்கன், தெலுங்குச் சோழன் கண்ட கோபாலன். இவர்கள் தனி ஆதிக்கம் புரியலாயினர். கி.பி. 1233இல் ஏற்பட்ட ஒரு சாசனம், தெலுங்குச் சோழன் மதுராந்தக பொத்தப்பி சோழ கண்ட கோபாலன் என்ற அதிகாரியின் pGO DT5 முக்கண்ண தேவனுக்கு உதய பூசை செய்ய 500 குழி நிலமளித்த விபரம் தெரியப்படுத்துவதுடன் தெலுங்குச்
X85 31otŁj 66xTBFTI, gaje jej86 gley6OTä86Tń

Page 134
சோழன், கீழ் அதிகாரியாக விளங்கினான் என்பதையும் புலப்படுத்துகிறது. ஆண்டுகள் சென்றன. ஆதிக்கம் வலுத்தது. காஞ்சிபுர, திரிப்ர திரிநேத்ரன் என்ற பட்டம் ஒட்டியது. தெலுங்குச் சோழனான திருக்காளத்தி தேவனுக்கு திரிநேத்ரன் என்ற பெயர் உண்டே. திரிநேத்ரனான இவ்வூர் முக்கண்ணனுக்கு தறிவரி, செக்கு வரி போன்றவைகளை ஒதுக்கிவிட, அதைக்கொண்டு திருச்சுற்று மதில் கல்லால் அமைக்கப்பட்டது.
இறுதிச் சோழராட்சியில் தொண்டை நாட்டில் மழை யின்றிக் கொடிய பஞ்சம் தோன்றியது. காசுக்கு முந்நாழி நெல் விற்றது. சிவசேகர பிரதாபன் என்பான் இவ்வூர் மக்களுக்கு ஏராளமாய் அரிசி அளித்துக் காப்பாற்றினான். மகா மண்டபத்துக் கணபதி பின்னால் கல்வெட்டு சாசனங்களாய் 4 பாடல்கள் வெளியாயின.
மண்ணி லெங்கும் நெல்லிலா திருந்தகா விரை எல்லாம் வழங்கு சக்கிரிபுர தழைக்க வாழி திரந்து விட்டவ முதுகால் திண்ணிலம் பரந்த குன் இராயன் மந்திரி கிரி வை வாழ் சைவ சக்கர பிரதாபனே
கிழக்கு நோக்கிய ஆலயத்தில் தூங்கானை மாடமும், பச்சைக்கல் கருவறையும் பிரதானம், விமானம் ஒரு அற்புத சுதைப்படைப்பு ஆங்காங்கு தட்சிணாமூர்த்தி பத்மாசன யோக மகாராசா லீலை, முத்திரைகளில் துலங்க, பிட்சாட னர் மோகினியுடன் தாருகாவனத்தினரை கர்வம் ஒழிக்கும் நிலை காட்ட, பிரம்மா, விஷ்ணு, துர்க்கை விம்பங்களுடன் முகப்பில் சிவபெருமான் ரிஷபாருடராய் வெகுகம்பீரமாய், தலவிருட்சம் மாதிரி செழித்து ஓங்கி கவரி வீச விளங்கு கிறார். பிரஸ்தாரச் சுவர்கள் பச்சைக் கல்லில் மின்னு கின்றன. கோஷ்டங்களில் துர்க்கைதான் புராதனமானது. அதிலும் ஒரு அற்புதம், செவிகளில் குழையின்றி பெளத்த விக்கிரம் போல தொள்ளைக் காதாயுள்ளது. கருவறைச் சுவரோ பார்க்கப் பார்க்க அலுப்பைத் தட்டாது இழைக்கப் பட்ட கோஷ்டங்களில் பரிவார தேவதைகள் மேலும் கீழும்
அணியாக யாளி வரிசை, கூரை விமானம், அழக்குத்தூண்,
இந்துக் கலைக்களஞ்சியம்x
 

அதன் கீழ் மலர் தூவியது போல் கல்வெட்டுச் சாசனங்கள். இப்படிக் கலை அழகு கொழிக்கிறது.
அன்னை முப்புர அழகி, அழகின் தெய்வமான அநங் கனை எரித்தவன் தேவியாயிற்றே. அழகுக்கு வசமாகாத சிவனை, தவத்தால் வசப்படுத்த முயலும் தோற்றத்தைக் காண்கிறோம். மெலிந்த உடல், சிருங்கார ரசமே உரு வெடுத்ததுதான், திரிபுரசுந்தரி என்பது தந்திரசாஸ்திரம் மாத்திரமல்ல! இங்கு சிற்பியின் படைப்பும் கூடத்தான்.
இக்கோயிலில் சிற்ப வனப்புகளாய் விளங்குபவைகளுள் ஆடலரசனும் ஒன்று. கருத்துக்களைச் சித்திரிப்பதே கலை என்பது பாரதப் பாணி. அதை தத்ரூபமாய் வெளிப்படுத்தும் தோரணை கொண்ட இவ்வரபாபரணன் ஒரு கையில் வினோதமாய் உடுக்கையைப் பிடித்து, மறுகையில் அக்னியேந்தி, ஆடும் சொகுசில் உத்தரீயம் ஒதுங்கிப் பறக்க நிற்கிறார். (வெ.நா.)
நரஹரி முற்பக்த)
பண்டரிபுரத்தில் பொற் கொல்லர் குலத்திலே பிறந்தவர் நரஹரி. நரஹரி தமது குலத்தொழிலைச் சத்தியத்தோடும் தர்மத்தோடும் நடத்தி வந்தார். இவர் வாழ்க்கையிலும் நன்னெறி தவறாத பண்புடைய தவச் செம்மலாக வாழ்ந்து வந்தார். வெள்ளைப் பிறையணிந்த வேணி பிரானிடம் எல்லையில்லாப் பக்தி கொண்டிருந்தார். சித்தத்தைச் சிவன்பால் வைத்து நித்தம் நித்தம் நமச்சிவாய மந்திரத்தை ஜபித்துக் கொண்டேயிருந்தார்.
பண்டரிபுரத்திலே பிறந்தும், நரஹரி என்று பெயர் பெற்றும் பாண்டுரங்கனிடம் மட்டும் சற்றும் பக்தி இல்லாமல் தீவிர
சைவ பக்தராக வாழ்ந்து வந்தார்.
சிவநாமத்தை உச்சரிக்கும் இந்த அன்பர் கேசவ நாமத்தை நினைப்பதேயில்லை! பாண்டுரங்கன் கோயில் பக்கம் தலை வைத்துக்கூட படுக்கமாட்டார். கோபுர தரிசனம் கோடி புண்யம் என்பார்கள். ஆனால், நரஹரி பாண்டுரங்கன் கோயில் கோபுரத்தைப் பார்த்துத் தமக்குப்
புண்ணியமே தேவையில்லை என்று வைராக்யத்துடன்
ஐ இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 135
வாழ்ந்து வந்தார்.
பண்டரிநாதர் கோயிலிலே உற்சவம் என்றால் கொடி
யேற்று விழாவிற்கு முதல் நாளே, நரஹரி ஊரைவிட்டு எங்கேயாவது ஓடிவிடுவார்.
இவ்வாறு நரஹரி, ஹரியை நினையாது வாழ்ந்து வரும் நாளில், பாண்டுரங்க பக்தர் ஒருவர் நரஹரியைக் காண வந்தார். வந்தவர் ஒரு வணிகர்!
நரஹரி தமது அறையில் அமர்ந்து தங்கத்தை உருக்கி நகை செய்து கொண்டிருந்தார். உள்ளே வந்த வணிகர் “நமஸ்காரம்’ என்று சொல்லி அவரது பக்கத்தில் அமர்ந்தார். வணிகரையும் அவரது நெற்றியிலே துலங்கும் திருமண்ணையும் பார்த்ததும் நரஹரிக்கு ஆத்திரம் வந்தது. இருந்தும் தொழில் மீது மரியாதை கொண்டிருந்த நரஹரி பதிலுக்கு நமஸ்காரம் சொல்லி அவரை வரவேற்றார்.
“என்ன வேண்டும்.” நரஹரி வினவினார்! அதற்கு வணிகர், ”சுவாமி! தேவரீருடைய திறமையைப் பற்றிப் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதனால் தங்கள் மூலம் நவரத்னம் பதித்த வைரப் பொன் அரைஞாண் ஒன்று செய்யவேண்டும்” என்றார்.
“அதற்கென்ன செய்தால் போகிறது”
“நீர் ரொம்ப கொடுத்து வைத்தவர். நீர் செய்யப்போகும் அரைஞாண் யாருக்குத் தெரியுமா? அந்த பாண்டுரங்க பெருமானுக்கு!”
வணிகரின் வார்த்தைகளைக் கேட்டதும் நரஹரிக்குத் தூக்கி வாரிப்போட்டது! அரவம் தீண்டினாற்போல் ஒரு கணம் துணுக்குற்றார்.
வணிகருக்கு நரஹரியைப் பற்றித் தெரியாது! அதனால் அவர் நரஹரியிடம் மீண்டும் “சுவாமி! இது தெய்வகாரியம். இப்பேர்ப்பட்ட நல்ல காரியங்கள் செய்யும் பாக்கியம் எல்லோருக்கும் கிட்டாது! இந்த ஊரில் உம்மைப் போன்ற வேலைப்பாடு தெரிந்த பொற்கொல்லர் வேறு யாரும் கிடையாது. அதனால் தயவுசெய்யும். என் வார்த்தையைத்
இந்துக் கலைக்களஞ்சியம்x
 

தட்டாமல் இந்த நல்ல காரியத்திற்கு உதவும்” என்றார்.
வணிகரின் வார்த்தைகளை கேட்டு நரஹரி, வணிகரே! நான் மழைக்குக் கூட உங்கள் கோவில் பக்கம் ஒதுங்கியது இல்லை. அதனால் எனக்கு உங்கள் பாண்டுரங்கனைப் பற்றி எதுவும் தெரியாது என்றார்.
"வேடிக்கையாக இருக்கிறதே! பண்டரிபுரத்தில் இருந்து கொண்டே பாண்டுரங்கனைத் தெரியாது என்பது சுவாமி! பாண்டுரங்கன் ஒரு வரப்பிரசாதி. அவனைப் பணிந்தால் நமக்கு அரச போகமே கிட்டும். எனக்குத் திருமணமாகி வெகுகாலமாகியும் குழந்தை பிறக்கவில்லை! அதற்காக நானும் என் மனைவியும் பாண்டுரங்கனைப் பிரார்த்திக்கி றோம் அவனது பேரருளால் புத்திர பாக்கியம் ஏற்பட்டது.
சகல செளபாக்கியங்களையும் பெற்றோம்.
“அதற்கென்ன இப்பொழுது? வேண்டா வெறுப்புடன் கேட்டார் நரஹரி!
'அவ்வாறு குழந்தை பிறந்தால், எம்பெருமான் திரு அரைக்குப் பொன் அரைஞாண் ஒன்று செய்து அணிவிப்பதாக வேண்டிக் கொண்டேன். எனது அந்த பிரார்த்தனை
யை நீங்கள் தான் நிறைவேற்றி வைக்கவேண்டும்.”
“அரைஞாண் செய்து தருவதற்கு எனக்கொன்றும் ஆஷேபணையில்லை. இடையின் அளவைக் கொண்டு வந்து கொடுத்தால் அதற்கு ஏற்றாற் போல் அரைஞாண் செய்து தருகிறேன். நான் அக்கோவிலுக்கு வந்து அளவு எடுத்து வருவதென்பது சாத்தியமான காரியமல்ல!
நரஹரியின் பேச்சு வணிகருக்கு விந்தையாக இருந்தது! பாண்டுரங்க தரிசனத்தைப் பெரும்பாக்கியம் என்று கோடிக்கணக்கான பக்தர்கள் மனத்திலே கொண்டு அல்லும் பகலும் அவனைப் போற்றிப் பணிகின்றனர். ஆனால் இவர் ஒருவர் மட்டும் இவ்வாறு வெறுப்புடன் பேசுகிறாரே, என்று மனத்திலே எண்ணிய வணிகர், நரஹரி அரைஞாண் செய்து தருவதற்குச் சம்மதம் தெரிவித்ததே, அந்த பாண்டுரங்கனின் செயல் என்று மனத்திலே கொண்டார். நரஹரியிடம் “உங்கள் எண்ணம் போலவே பெருமானின் இடை அளவை எடுத்து வருகிறேன்” என்று கூறி விடைபெற்றுச் சென்றார்
Fjö8, 8{n!} &exT&T geealeósef góle:McCTöæGild

Page 136
வணிகர், திருக்கோயிக்குச் சென்று எம்பெருமானின் திருஅரையின் சுற்றளவைக் கொண்டு வந்து நரஹரியிடம் கொடுத்தார். அத்தோடு தேவையான பவுன், வைரம், நவரத்தனக்கற்கள் ஆகியவற்றையும் கொடுத்தார். கூலிக்கு அச்சாரமாக பத்து வராஹ நாணயமும் கொடுத் தார். நரஹரியும் அவற்றைப் பெற்று கொண்டு, அரைஞாண் செய்யும் வேலையில் இறங்கினார்.
குறிப்பிட்ட காலத்தில், நரஹரி, நவரத்தினங்களைப் பதித்து, வைரம் இழைத்து, அதி அற்புதமாகவும், மிக்க நேர்த்தியாகவும், அழகிய வேலைப்பாடுகளும் கூடிய அரைஞாண் ஒன்றைச் செய்து முடித்து வணிகரிடம் கொடுத்தார். வணிகரும் அதற்குரிய தொகையைக் கொடுத்துப் பெற்றுச் சென்றார்.
வணிகர் கோயிலுக்குச் சென்று அரைஞாணை எம் பெருமானின் திருஅரையிலே சாத்தச் செய்தார். எதனாலோ சுற்றளவு சற்று குறைவாகக் காணப்பட்டது! வணிகர் அதனைத் திரும்பப் பெற்றுக்கொண்டு நரஹரியிடம் கொடுத்து, விவரத்தைச் சொல்லி சற்று நீட்டிக் கொடுக்குமாறு வேண்டினார். நரஹரியும் அவ்வாறே செய்து கொடுத்தார்.
வணிகர் மீண்டும் ஆலயம் வந்து, எம்பெருமானின் திரு அரையிலே அரைஞாணைச் சாத்தச் செய்தார். இம்முறை அரைஞாண் சுற்றளவு மிக அதிகமாகிவிட்டது!
வணிகருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. எதனால் இப்படி சுற்றளவில் சங்கடம் ஏற்படுகிறது என்று மனம் குழம்பினார். இறைவனுக்குத் தான் ஏதோ பெரும் அபச் சாரம் செய்து விட்டதாக மனத்திலே கொண்டு கலங்கினார். கண்ணிர் விட்டுக் கதறினார். கடைசியில் வணிகர் ஓர் முடிவிற்கு வந்தார். மீண்டும் நரஹரியிடம் வந்தார்.
"ஐயா! இம்முறை சுற்றளவு சற்றுக் கூடிவிட்டது. அதனால் அரைஞாண் இடையில் சரியாக நிற்கவில்லை. இது எல்லோருக்கும் மிகவும் வேடிக்கையாகத்தான் தெரிகிறது. அடியேன் இதனால் பெரும் மனக்குழப்பம் கொள்கிறேன். அதனால் நீங்களே வந்து அளவு எடுத்தால் சரியாக இருக்குமோ என்று தோன்றுகிறது?’ தயங்கிக் கூறினார்.
இந்துக் கலைக்களஞ்சியம்
 

நரஹரிக்குக் கோபம் வந்தது, "நன்றாக உள்ளது உமது பேச்சு! கொடுத்த அளவிற்கு ஏற்றாற்போல் அரைஞாண் செய்து கொடுத்திருக்கிறேன். அது எப்படி கூடுவதும் குறைவதுமாக இருக்கும். இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் சரி செய்து தருகிறேன். கோவிலுக்கு வந்து மட்டும் என்னால் அளவு எடுக்க முடியாது. நான் வீரசைவன். மனத்தால் கூட உங்கள் பெருமானைப் பற்றிப் பேசமாட்டேன். அவன் பெயரைக் கூட நான் சொல்ல மாட்டேன். அப்படியிருக்க நான் எப்படிக் கோயிலுக்கு வரமுடியும்?”
நரஹரி ஆலயம் வரமறுத்தார். ஆனால் வணிகரோ நரஹரியை விடுவதாக இல்லை. இருவருக்கும் நெடுநேரம் வாதப் பிரதிவாதம் நடந்தது. இறுதியில் அக்கம் பக்கத்திலுள்ளோர் மத்தியஸ்தம் செய்வதற்கு வந்தார்கள். அவர்கள் எல்லோரும் சேர்ந்து, இந்த விவகாரத்தில் ஒரு முடிவு எடுத்தார்கள்.
அனைவருடைய தீர்மானத்தின்படி நரஹரியின் கண்களைக் கட்டி, கோயிலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று ஓர் முடிவு எடுக்கப்பட்டது! அந்த முடிவை நரஹரியும் வணிகனும் ஏற்றுக் கொண்டனர்.
நரஹரியின் கண்களைக் கட்டி பாண்டுரங்கன் கோவி லுக்கு அழைத்துச் சென்றனர். இந்த வேடிக்கையைப் பார்க்க ஊர் ஜனங்களும் கூடினர்.
நரஹரி கோவிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு கர்ப்பகிரஹத்தில் விக்ரஹத்தின் முன்னால் நிறுத்தப்பட்டார். நரஹரி அளவிற்காக நூலைக் கையில் எடுத்துக் கொண்டு, எம்பெருமானின் திருமேனியைத் தடவிக் கொண்டே வந்தார்.
பக்தரின் அறியாமையைக் கண்டு கூடியிருந்தோர் கைகொட்டிச் சிரித்தனர்.
"இந் பண்டரீபுரத்தில் இப்படியும் ஒரு ஜீவாத்மாவா? கடவுளின் திவ்ய மங்கள சொரூபத்தைக் கண்டு களித்துப் பேரின்பம் கொள்வதற்குக் கோடி கண்கள் இல்லாமல் போனதே என்று ஏக்கம் கொள்வோர் இந்த ஜகத்தில் எத்தனையோ பேர் இருக்க, கண் இருந்தும் கடவுளைக்
簽緣線@ia gousa兀rg印可ggeu656而函eoarrä56Tá

Page 137
காணமாட்டேன் என்று கண்ணைக் கட்டிக் கொண்டு, கருத்
திழந்து அலையும் இப்படிப்பட்ட கபோதியும் இருக்கிறானே'
ஊரார் நரஹரியைக் கண்டு நகைத்தனர். ஏசினர். எள்ளி
நகையாடினர்.
நரஹரி செவிகளில் இந்த வார்த்தைகள் எதுவும் விழவில்லை! நரஹரி எம்பெருமானின் அரையைத் தடவிக் கொண்டே வந்தார். பட்டு வஸ்திரம் தரித்திருக்க வேண்டிய விக்ரஹத்தில் புலித்தோல் அணிந்திருப்பது கண்டு அதிசயித்தார். எம்பெருமானின் திருக்கரங்களைப் பற்றினார்.
திருக்கரங்களிலே மான், மழு, சூலம், அக்னி, உடுக்கை இருப்பதனை உணர்ந்தார். திருமேனியிலே உருத்திராஷ மாலைகள் அடுக்கடுக்காக அணி செய்வதை உணர்ந்தார். திருச்செவிகளில் மகரக் குண்டலங்களும், திருச்சடையும், சடையிலே பிறை நிலவும் கங்கையும் இருப்பதனையும்
அகக்கண்களிலே கண்டார்.
நரஹரி ஒரு கணம் துணுக்குற்றார். அவருக்கு ஒரு வித பக்தி மயக்கம் ஏற்பட்டது!
அரையிலே கை வைத்து, கெளஸ்துவ வனமாலைகளு டன் அணி செய்யவேண்டிய பெருமான் புலித்தோலை அரையிலே அணிந்து உருத்திராஷ மாலைகள் அணிந்து, பிறை சூடிய பெருமானாக கங்கையையும் திங்களையும் தாங்கிய திருச்சடை அண்ணலாகத் தெரிவது எதனால்? என்பதனை உணர முடியாமல் மனம் குழம்பினார்! சிவக் கோலத்தைக்கான அடியார் துடித்தார் அம்பலவாணனைக்
காண அகமகிழ்வு பூண்டார்.
ஒரு கணம் அசைவற்றுப் போன நரஹரி கண்ட காட்சி அவரைத் திக்குமுக்காடச் செய்தது. கண்மூடியிருந்த போது சிவக்கோலம் கண்ட பக்தர், கண் திறந்ததும்
திருமாலின் திருக்கோலத்தைக் கண்டார்.
இடையிலே புலித்தோல் இல்லை, வெண்பட்டு வஸ்திரம் ஒளி வீசிக் கொண்டிருந்தது. நான்கு திருக்கரங்கள் இல்லை. இரு திருக்கரங்களை இடையில் வைத்துக்
இந்துக் கலைக்களஞ்சியம் ఫళ్ల

கொண்டு இருக்கும் காட்சியைக் கண்டார்.
அவருக்கு உலகமே சுழன்றது! தமது சிவ வைராக்கியத்திற்குப் பங்கம் நேர்ந்து விட்டதே என்று பரிதவித்தார். நரஹரி இரு கைகளாலும் கண்களைப் பொத்திக்
கொண்டார்.
கண்களைப் பொத்திக் கொண்டதும், தமது முன்னால் சிவபெருமான் சூலமும் மழுவும் ஏந்திய திருக்கரங்களுடன் நிற்பதனைக் கண்டு கையை எடுத்தார். அங்கே மீண்டும்
திருமாலைக் கண்டார்.
அகக்கண்களில் சிவபெருமானையம் புறக்கண்களில் திருமாலையும் மாறிமாறிக் கண்டு கொண்டிருந்த நரஹரிக்கு ஞானம் பிறந்தது! அரைஞாண் செய்த அற்புதத் தால் இதயத்தில் மூடிக்கிடந்த அஞ்ஞான இருள் விலகி யது! ஞான ஒளி பிறந்தது.
நரஹரி பகவானின் திருவடிகளில் சாஷடாங்கமாக வீழ்ந்தார். இந்த அதிசயத்தைக் கண்டு அர்ச்சகர்களும் வணிகரும் கூடியிருந்த பக்தர்களும் அதிசயித்தனர். மனம் மாறிய நரஹரியைக் கண்டு மக்கள் வியந்தனர்.
நரஹரி எம்பெருமானைப் பார்த்து “பகவானே! அடியேன் இத்தனை காலமும் எப்பேர்ப்பட்ட அபச்சாரத்தைச் செய்துவிட்டேன். ஹரியும் சிவனும் ஒன்றே என்பதனை உணராமல் பேதம் கற்பித்து என்னை நானே அறிவிலியாக்கிக் கொண்டேனே! ஹரியை மறந்த எனக்கு மோஷமே கிடையாது. கண்ணிருந்தும் குருடன் ஆனேனே!” என்றெல்லாம் பலவாறு சொல்லிப் புலம்பினார். கண்ணிர்விட்டுக் கதறினார்.
அப்போது, கர்ப்பகிரஹத்திலிருந்து ஓர் அசரீரி, நரஹரி செவிகளுக்கு மட்டும் கேட்டது.
“பக்தா! சிவன் வேறு, விஷ்ணு வேறு, என்று பேதம் கற்பிக்கவேண்டாம். இரு மூர்த்தங்களும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்தவே, நீ செய்த அரைஞாணில் பேதம் கற்பித்து உனது அறியாமையை அகற்றினோம். முன்பு ஒரு சமயம் மூன்று மூர்த்தங்களையும் ஒன்றாகத் தரிசித்து அருள் பெற்ற அத்திரி மகரிஷிக்கு மும்மூர்த்தி
keMSYkkkZkkkZT TLL 0kCLSD TLLCCCT TTusLLLGTT0Lt

Page 138
களின் அம்சமாக தத்தாத்திரேயர் புதல்வராகப் பிறந்தார் என்பதனை நீ அறியாயோ! எல்லாம் சிவமயம், எல்லாம் விஷ்ணு மயம், எதிலும் பிரம்ம மயம்! இதுவே பரம்பொரு ளின் தத்துவம்!
அசரீரி கேட்டு, நரஹரி கண் பெற்ற இன்பம் பூண்டார். எம்பெருமானைச் சுற்றி வலம் வந்தார். வீழ்ந்து வீழ்ந்து பணிந்தார். நாவால் துதித்தார். கண்களால் கண்டு களித்தார்.
“பாண்டுரங்கா! பண்டரிநாதா!’ என்று ஆனந்தக் கூத்தாடினார். நரஹரி வணிகரிடமிருந்து அரைஞாணை வாங்கி, பகவான் இடையிலே சாத்தினார். அளவு சரியாக இருந்தது.
அந்த அதிசயத்தைக் கண்டு வணிகனும் மற்றுமுள்ளோரும் மேலும் திகைத்தனர். நரஹரியின் அறியாமையை அகற்ற எம்பெருமான் நடத்திய திருவிளையாடலை யாரே அறியவல்லார்!
அன்று முதல் நரஹரி ஹரிபக்தரானார். அநுதினமும் பீமா நதியில் நீராடி, திருக்கோவிலை வலம் வந்து, பாண்டுரங்கனைப் பணிந்து பேரின்பம் பூண்டார்.
ஒரு முறை நரஹரி நாமதேவர் இல்லத்திற்கு ததியாரா தனைக்குச் சென்றிருந்த சமயம் நாமதேவர் இல்லத்தில் மும்மூர்த்திகளும் ஒன்றாக அமர்ந்து, திருவமுது உண்ணும் பேரின்பக் காட்சியைக் கண்டார்.
நாமதேவரைப் பணிந்து அவரது பக்திக்குத் தலை வணங்கினார், நரஹரி. ஹரி பஜனையும், சிவபஜனையும் செய்து ஹரிஹர அம்சத்தோடு தம்மை ஐக்கியப்படுதிக் கொண்டு நிலையான இன்பத்தைப் பெற்றார். (நி.நி)
நரேஸ்வரபரீட்சா
நரேஸ்வரபரீட்சா என்ற இந்நூலின் ஆசிரியர் சத்திய யோதி. ஆறுமுகநாவலரால் கூறப்பட்ட சைவசித்தாந்தத் தின் சார்புநூல்களின் ஆசிரியர்களில் இவரும் ஒருவராவார். ஆன்மாவே அறிபவனும், செயல்களில் ஈடுபடுபவனும்
 

அதன் பலாபலன்களை அனுபவிப்பவனும் ஆவான். அவன் இறைவனிலிருந்து வேறானவன் என்பதை சத்தியயோதி இந்நூலில் நிறுவமுயலுகிறார். இம்முயற்சிக்கு முன்னோடி யாக இறைவனையும் ஆன்மாவையும் முற்றொருமைப் படுத்தி ஒன்றெனக் கருதும் ஒருமைவாதச் சிந்தனை தொடர்பான விமரிசனத்திற்கும், ஆன்மாவை நிராகரிக்கும் பெளத்தக்கொள்கை தொடர்பான விமரிசனத்திற்கும் இந்நூலின் பெரும்பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆன்மாவே அறிபவனாக இருந்து பல்வகை அனுபவத்திற்கு உள்ளாவதையும் அவ்வனுபவத்தின் புலப்பதிவுகளை ஆதாரமாகக் கொண்டு செயற்படுவதையும் தனது வாதத் திற் பயன்படுத்தி ஆன்மாவின் இருப்பை நிறுவ முயற்சிக் கிறார்.
வெளி என்ற வகையீட்டில் அடங்குகின்ற புறஉலகு தருகின்ற அனுபவமே ஆன்மா உளதென்பதை நிறுவுவதற்கு போதிய நியாயமாகும் என வாதிடும் சத்திய யோதி, பெளத்தரின் கணபங்கவாதம் கடந்த காலத்திற் குரிய கணம்' பற்றியதும் வருங்காலத்திற்குரிய கணம் பற்றியதுமான அறிவைப் பற்றி எதுவுமே கூறமுடியாதென்ற நிலைப்பாட்டிற்கு இட்டுச் செல்லும். அது மட்டுமல்லாது காட்சியும் அதன் பேறான அறிகையும் அசாத்தியமாய் விடும். சுருங்கக் கூறின் புறப்பொருள் உலகமும், அது தரும் அனுபவமும் நிராகரிக்க முடியாத ஒன்றாகுமென்பது சத்தியயோதியின் நிலைப்பாடாகும்.
அறிகைக்கும், அறியப்பட்டதற்கும் இடையிலான வேறுபாடானது முறையே முதலாவது அனுபவமாகவும், இரண்டாவது அனுபவத்தின் நோக்கெல்லைக்குள்ளும் வருகிறது. விழித்திரை முதலான கட்புலக்கருவிகள் உருவம் முதலானவற்றைக் காண்பதற்கு அவசிய மானவை. அதனால் அறிகையும், அறியப்பட்டதும் முற் றொருமை உடையன அல்ல என்பது தெளிவு. உருவம் முதலான பண்புகள் பொருளுக்கு இல்லாது விட்டால், அறிகையில் வேறுபாடுகள் இல்லாது போய்விடும். எனவே எல்லாவகையான அறிகையிலும் விடயம் - விடயி வேறுபாடு உளதென்பது பெறப்படும். கடந்தகால அனுபவத்தை ஆன்மா ஞாபகப்படுத்தக் கூடியதாயிருத்த லால், ஆன்மா நிரந்தரமானது என்பதும் நீடித்த இயல்பு
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 139
டையதென்பதும் பெறப்படும். ஆன்மா நிரந்தரமானதென்ற அடிப்படையிலேதான் புலன்நெறி சார்ந்த தோற்றப்பாடுகள் பற்றியும் இறுதி விடுதலை பற்றியும் எம்மால் திருப்திகர மான விளக்கத்தைத் தரமுடிகிறது. அறியப்படும் பொருளே அறிகையின் விடயமாகிறது. பொருளின் வடிவமே பொருளை அறிவதற்கு உதவுகிறது.
இதுவே உள்பொருள் எனப் பொருளைத் தொடர்ச்சியாக இனங்காண முடிவதிலிருந்து பொருளின் நிரந்தர இயல் பானது பெறப்படுகிறது. பொருளின் நிரந்தர இயல்பை நாம் ஏற்றுக்கொள்ளாதுவிடின் எப்பொருளினதும் இருப்பை நிறுவுவது இயலாத காரியமாகிவிடும்.
பொதுவாகப் புலக்காட்சியைத் தொடர்ந்து அறிகை நிகழுகின்றதெனினும், முதலில் எமது அறிகையில் குறிப்பிட்ட அப்பொருளை முன்னமே கண்டிருக்கிறோமோ என நாம் ஞாபகப்படுத்தவே முயலுகிறோம். அதாவது ஏலவே கண்டதை ஞாபகப்படுத்தியே பொருளை அறிய முயலுகிறோம். இதற்குக் காரணமாயிருப்பது குறிப்பிட்ட பொருளின் பொது இயல்புகளும் (பொதுமை) தனிச்சிறப் பியல்புகளும் ஆகும். (தனியன்) எம்மால் குறிப்பிட்டதொரு பொருளின் பொதுப்பண்புகளையும் சிறப்பியல்புகளையும் ஞாபகப்படுத்த முடியாது போய்விடின் அறிகையும் அசாத்தியமாய் விடும்.
ஆன்மா பற்றிய பெளத்தரின் கணபங்கவாதக் கோட்பாடு பயனற்றதும், விளக்கவாற்றல் குன்றியதுமாகும். பொருளின் காரணத்தை அது நிராகரிக்கிறது. அதாவது ஒரு காரியத் திற்கான காரணத்தை நிராகரிக்கிறது. இதனை விமர்சிக் கும் சத்தியயோதி, ஒரு குறிப்பிட்ட காரியத்தை உளதாக் கிய காரணத்தின் அழிவு காரியத்தின் அழிவையும் கொண்டு வருகின்றதேயல்லாது, அழிவிற்கான காரண மின்றி பொருள் தானே அழிகிறதென்பது பொருளல்ல வென வாதிடுகிறார்.
புலன் உறுப்புகளுடன் ஒப்பிடுகையில் பிரக்ஞை எனப்படும் உணர்ச்சிக்கூறோ இரண்டாம் நிலைக்குரியது. புலன்கள் சடப்பொருளாகும். ஆனால் உணர்வுக்கூறோ
சடப்பொருள் இயல்புடையதல்ல. சடப்பொருள் மூலக்
இந்துக் கலைக்களஞ்சியம்x
 

கூறுகளில் உணர்ச்சியைக் காணமுடியாது. இதனாலேயே தான் ஒரேவகையான அனுபவம் இரு மனிதர்களில் இன்பமும் துன்பமும் என்ற இரு நேரெதிரான உணர்ச்சியை ஏற்படுத்த முடிகிறது. ஆனால் புலன்வழி பெறப்படுவதோ இரு மனிதருக்கு இருவேறுபட்டதாக இருக்க முடியாது. எனவே, தனித்தனியானதும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டதுமான ஆன்மாக்கள் பல உளவென்ற முடிவு பெறப்படுகிறது.
மாற்றத்தால் ஆன்மா பந்திக்கப்படுவதில்லை. கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற முக்காலத்திலும் ஆன்மாவின் செயற்பாடு முக்காலத்திலும் இடம்பெறக்கூடிய தேயாம். அது போலவே ஆன்மாவின் செயற்பாடுகளில் ஒன்றான அறிகையாற்றலும் முக்காலத்திலும் செயற்பட வல்லது. ஆன்மாவின் அறிகை ஆற்றலிற்கும் அதன் உணர்ச்சிக்குமிடையே மெய்யான வேறுபாடு இல்லை. அறிகை ஆற்றலிலிருந்தே ஆன்மாவின் உணர்ச்சியாற்றலும் உருவாகிறதென நம்பப்படுகிறது. ஆன்மாவின் ஆற்றல் பொதுவாகவே இவ்வுலக வாழ்க்கையினாற் கட்டுப்படுத்தப் பட்டது. ஆனால் முழுமையான விடுதலை அடைந்த நிலை யிலோ ஆன்மாவின் ஆற்றல் கட்டுப்பாடுகள் எதுவுமில்லாது முழுமையும் திரும்பக் கிடைத்துவிடுகிறது.
இந்நூலின் இரண்டாவது பிரிவில் நூலாசிரியர் இறைவனின் இருப்பை நிராகரிக்கும் மீமாம்சகரின் வாதத்தை விமர்ச்சிக்கிறார். பிரபஞ்சத்திற்கு கர்த்தா தேவையற்றதென்பது மீமாம்சகரின் நிலைப்பாடாகும்.
மீமாம்சகரின் நிலைப்பாட்டை நிராகரிக்கும் சத்தியயோதி, நிலம் முதலான பிரபஞ்சக் கூறுகள் பகுதிகளால் ஆனவை யாதலின், அவை கடம்போல காரியமாகுமென்கிறார். இதற்கு ஆதரவாக நியாயத்தொடை வாதமொன்றும் அவரால் முன்வைக்கப்படுகிறது. இயற்கையிலும் சடப் பொருள் உலகத்திலும், எவையெல்லாம் கூட்டுப் பொருளா குமோ, அவையெல்லாம் காரிய இயல்புடையவை என்பதால் பிரபஞ்சம் காரியமாக அதற்குக் காரணமான இறைவன் இருப்புடையவன் என சத்தியயோதி வாதிடு கிறார்.
ஐ இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 140
சாங்கியரும் மீமாம்சகரும் பிரபஞ்சத்தின் இருப்பிற்குத் தரும் நியாயங்கள் சத்தியயோதிக்கு உடன்பாடானவை
யாக இல்லை. சடம் எவராலும் உருவாக்கப்பட்டதல்ல என்பதையும் சடம் பற்றிய சாங்கியரின் நிமித்தகாரண
வாதத்தையும் சத்தியயோதி இந்நூலில் நிராகரிக்கிறார்.
அடுத்து உலகம் பன்மைத் தன்மையானது என்பதி லிருந்து அதனைப் படைத்தவனின் பார்வையில் அதற் கொரு மூலநோக்கம் இருத்தல் வேண்டுமென்று இந்நூலில் வாதிடப்படுகிறது. படைக்கப்பட்டது அனைத்தும் அழிவுறும் என்பதால் உலகம் உட்பட்ட ஆன்மாக்கள் தம் கன்ம வினையை நுகர்வதற்குச் சிறிது காலம் தேவைப்படும். சடமும் மீள்படைப்பிற்கு முன்பதாக ஒடுக்கத்தில் இருக் கும். அதாவது படைப்பினால் செலவழிக்கப்பட்ட தன் ஆற்றலை சடம் மீளப் பெறுவதற்குரிய காலமே ஒடுக் கத்திற்குரிய காலம்.
ஒருவனுடைய முன்னைக் கன்மவினைகளே மறுபிறப்பில் அவனுக்கு இன்பத்தையும் துன்பத்தையும் கொடுக்கும். ஆன்மாக்களின் நல்வினை, தீவினைக்கேற்ப அதனதன் பலாபலன்களை நுகரச்செய்பவனே இறைவன்.
மூன்றாவது பகுதியில் நூலாசிரியர், இறைவனே எல்லாவற்றிலும் மேன்மையானவன் என்றும் ஆன்மா அவன் ஆணைக்கு உட்பட்டதென்றும் எச்சந்தர்ப்பத்திலும் ஆன்மா இறைவனுக்கு ஈடாகமாட்டாது என்றும் குறிப்பிடுகிறார்.
இறைவனின் இயல்பை விபரமாக விளக்கியதன் பின்னர், வேதங்கள் பற்றிய மீமாம்சகர் கொள்கையை சத்திய யோதி ஆய்விற்கு எடுத்துக் கொள்கிறார். மீமாம்சகர் கொள்கைப்படி வேதங்கள் எவராலும் இயற்றப்பட்டன வல்ல. அவை தாமே இருப்புடையன என்ற கருத்து நிராகரிக்கப்படுகிறது. அரிசி, கோதுமை என்பன போல ஒசையும் உற்பத்தி செய்யப்பட்டதே. ஒசைக்குரிய குரல் வளை அசைவினால் சப்தம் வெளிப்படுகிறது. மேலும் குரல்வளை ஏலவே உள்ள ஓசையை வெளிக்கொண்டு வருவதல்ல. அது ஒசையை உற்பத்தி செய்கிறது. வேதங்கள் சப்த அலகுகளின் தொகுதியேயாதலால் அது உற்பத்தி செய்யப்பட்டதாதல் வேண்டும். அது உற்பத்தி
செய்யப்பட்டதால் அதற்கொரு கர்த்தா இருத்தல் வேண்டும்.
11
 

எவ்வாறாயினும், வேதமந்திரங்கள் மறைபொருளான கருத்துக்களின் வெளிப்பாடாக இருப்பதால் மானிடரின் அறிவாற்றலால் அவற்றை முழுவதும் புரிந்துகொள்ள முடிவதில்லையென இந்நூலில் சத்தியயோதி குறிப்பிடு கிறார்.
வேதங்கள் இறைவனால் அருளப்பட்டவை அல்ல என்பதற்கு மீமாம்சகர் தரும் பிறிதொரு வாதத்தின்படி, முந்திய காலத்தில் இருந்ததாகக் கூறப்படும் வேதங்கள் முழுமையாக அழிந்து, அவை மீண்டும் வருவிக்கப்பட்டன என்பதாகும். இதன்படி பார்ப்பின், அழிவையும் ஆக்கத்தை யும் மீமாம்சகர் ஏற்றுக்கொண்டதாக முடிகிறது. ஆயிரம் பேர் இறப்பதையும் ஆயிரம்பேர் பிறப்பதையும் வாழ்க்கை யிற் காணக்கூடியதாயிருக்கிறது என்ற அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு பிரபஞ்சம் முழுமையாக அழிக்கப்படும் காலமொன்று உளதென்றும், பின்னர் மீண்டும் புதியதாக அது படைக்கப்படும் என்றும் நூலாசிரியர் வாதிடுகிறார்.
மேலும் இறைவனின் இருப்பு அருள்வாக்குக்களான நூல்களிலிருந்தும், ரிஷிகளின் வெளிப்பாடுகளாலும் உறுதி செய்யப்படுகிறது. இறைவன், கலை, ராகம் முதலியவற் றால் பந்திக்கப்படாதவன். அவன் விருப்பு வெறுப்புக்கள்
அற்றவன். இதனால் இறைவன் எல்லாவகையான ஆற்றலுமுடையவனாகிறான் எனப் பிரகடனப் படுத்தப்பட் டுள்ளான். அவன் பூரண சுதந்திரம் உடையவன். ஆனால், ஆன்மாக்களோ அவ்வாறில்லை. அவை சர்வ வல்லமை உடையவையும் அல்ல. பூரண சுதந்திரம் உடையனவு
மல்ல.
ஆன்மாவின் அறிவு காட்சியறிவாகும். அதனால் அதன் அறிவு எப்பொழுதும் அபூரணமானதாயிருப்பதுடன், எல்லைகளுக்கு உட்பட்டதுமாகும். மனிதனின் ஆற்றல் வரையறைக்கு உட்பட்டதென்பதால் இறைவனுடன் ஐக்கியமாதலே இறுதி விடுதலையாகும். ஆன்மாவின் விடுதலை என்பது அதன் தகுதியைப் பொறுத்து அமையுமாயினும், இறைவனின் அருள் இல்லாது மனிதன் தனது கர்ம வினைகளிலிருந்து தப்பிக்க முடியாது.
x இந்து சமய கaாசார அலுவல்கள் தினைக்களம்

Page 141
எமது செயல்களுடன் இறைவனின் செயல்களை ஒப்பிடமுடியாது. சிந்தனை மாத்திரத்தினாலே அவன் கருமங்களை ஆற்றக்கூடியவன். ஆனால் மனிதரைப் பொறுத்தவரையில் சிந்தனையும் செயலும் இருவேறு கருமங்களாகும். சிந்திப்பதால் மட்டும் ஒருவனால் கருமங்களை ஆற்றமுடியாது. அவன் செயலில் ஈடுபடுதல் வேண்டும். ஆனால், இறைவனின் ஆற்றலோ அவ்வா றில்லை. அவனது ஆற்றலோ பல்வகை வடிவத்தில் உள்ளது. அறிதல், விரும்புதல், செயலாற்றல் என எவ்விடத்தும் இறைவன் ஆற்றல் உண்டு. தேவையும் அவசியமும் கருதி அது வெளிப்படும். ஆனால் மனிதனோ அறியாமை நிரம்பியவன். அவனது இறுதி இலக்கு இறைவனால் நிறைவேற்றப்படுகிறது. (சோ.கி.)
ஆடுதுறையிலிருந்து ஐந்து மைல் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. திருவிசைப்பா பாடிய கண்டராதித்தர், அவர் தேவியாகிய செம்பியன் மாதேவியார் ஆகிய இருவரதும் திருவுருவம் உள்ளது. மேற்குப் பார்த்த சந்நிதியாகும். இங்குள்ள நடராச விக்கிரகம் சிறப்புடையது. இப்பொழுது இது கோனேரிராஜபுரம் என்று வழங்கப்படுகின்றது.
நல்லம் - நல்ல பூமி திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் பாடல்பெற்ற தலமாகும்.
பூமிதேவி, பிரமன் பூசித்த தலமாகும். சுவாமி, உமாமகேசுரர், மாமணியீசுரர், பெளமேசர் எனவும்,
அம்பிகை. மங்களநாயகி, அங்கவளநாயகி, தேகசுந்தரி எனவும் நாமங்களைக் கொண்டுள்ளனர்.
அம்பிகை சந்நிதி மேற்குப் பார்த்தபடி அமைந்துள்ளது. தீர்த்தம்: பிரமதீர்த்தம்.
விருட்சம்: பத்திராசுவத்தம். காலமில்லாத காலத்திலும் பிரதட்சணம் செய்யலாம். செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை வழிபட்டோருக்கு நல்லன நடக்கும் என்பது
இந்தக் கலைக்களஞ்சியம்x 絲11
 
 

ஐதிகம்.
கொல்லத் தான்நம னார்தமர் வந்தக்கால் இல்லத் தார் செய்ய லாவதென் ஏழைகாள் நல்லத் தான்நமை யாளுடை யான்கழல் சொல்லத் தான்வல்லி ரேல்துயர் திருமே.
(திருநா. 5ஆம் திரு.)
கல்லால் நிழல்மேய கறைசேர் கண்டாவென் றெல்லா மொழியாலும் இமையோர் தொழுதேத்த வில்லால் அரண்மூன்றும் வெந்து விழவெய்த நல்லான் நமையாள்வான் நல்லம் நகரானே
(திருஞா. 1ஆம் திரு.)
இத்தலத்தைப் பற்றி வேறு தலங்களில் வழங்கும் தேவாரப் பாடல்கள்:
நல்லமு நல்லூருமேயார் போலும் - சாய்க்காடு (திருநா.) நள்ளாற்றின் மேயானை நல்லத்தானை.
- பள்ளியின் முக்கூடல் (திருநா.)
நல்லமூர்தி நல்லூர் நனிபள்ளியூர் - பூவனூர் (திருநா.) ஐயாற்றமுதன் பழனநல்லம் - அதிகை (திருநா.) பந்தணைநல்லூரும் பாசூர்நல்லம் - அதிகை (திருநா.) ஆரூர்தில்லையம்பலம் வல்லநல்லம் - பொது (திருஞா)
(வி.பா.)
[6]]
பாபநாசம் இரயில்வே நிலையத்துக்குக் கிழக்கே முக்கால் மைல் தூரத்தில் உள்ள உத்தமதான புரத்துக்கு கிழக்கே, தேவாரப்பாடல் பெற்ற இந்தச் சிவத்தலம் இருக்கிறது. அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராகிய அமர்நீதி நாயனார் அவதரித்த தலம் இது. இங்கே கோயில் ஒரு கட்டுமலையின் மேல் இருக்கிறது. மாடக்கோயில். திருநாவுக்கரசர் திருவடி தீட்சை பெற்ற தலம். அவர் இத்தலத்தில் திருவடி தீட்சை பெற்றதற்கு அறிகுறியாக இத்தலத்தில் இன்றும் திருவடி நிலை உள்ளது. அமர்நீதி நாயனாரை இறைவன் ஆட்கொண்டு அவருக்கும் அவரது மனைவி, மைந்தன் ஆகியோருக்கும் முத்தி தந்தருளிய தலம். ஆதலின் குழந்தையோடு
இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்கணம்

Page 142
அவரது மனைவி உருவங்கள் கற்சிலையிலும் செப்புத் திருமேனியிலும் உள்ளன.
மகோற்சவத்தில் உத்தமதானபுரத்தார் பிள்ளையார் வாகனத்தையும் அன்னிக்குடியார் சுப்பிரமணியரையும் மணவாளம் பேட்டையார் சோமாஸ்கந்தரையும் எழுந்தருளப் பண்ண வேண்டும். தடாகத்தில் முத்து விளைகிற தலம்.
பிருங்கிமுனிவரும், நரசிங்கமூர்த்தியும் பூசித்த தலம். திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் பாடிய தலம். சுவாமி ஒரு நாளைக்கு ஐந்து வர்ணங்களாகத் தோன்று கிறார். அகத்தியருக்குக் கலியாணக் காட்சியளித்த தலம்.
பொன்வண்ணமான இலிங்கத்தில் சிலதுவாரங்கள்.
சுவாமி. கலியாணசுந்தரேசுவரர், பெரியாண்டேசுரர், அமிர்தேசுவரர், அபராதஷபணேசுவரர், விசயேசுவரர். அம்பிகை: கலியாணசுந்தரி, திரிபுரசுந்தரி, கிரிசுந்தரி. தீர்த்தம்: சப்தசாகர தீர்த்தம் சுவாமி பக்கத்தில் அகத்தியலிங்கம், சாலிக்கிராமத்தில் செய்த விநாயகர், வைகாசியில் சப்தஸ்தான உற்சவம் நடைபெறும்.
நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார்
நல்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்
சினந்திருகு களிற்றுரிவைப் போர்வை வைத்தார்
செழுமதியின் தளிர்வைத்தார் சிறந்து வானோர்
இனந்துருவி மணிமகுடத் தேறத் துற்ற
இனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப் பில்கி நனைந்தனைய திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே
(திருநா. 6ஆம் திரு.)
கொட்டும் பறைசீராற் குழும அனலேந்தி நட்டம் பயின்றாடும் நல்லூர்ப் பெருமானை முட்டின் றிருபோதும் முனியா தெழுந்தன்பு பட்ட மனத்தார்கள் அறியார் பாவமே.
(திருஞா. 1ஆம் திரு.) (வி.பா.)
 

5Gbajtů SlušoguTh
கொள்ளிடம் இரயில்வே நிலையத்திற்குக் கிழக்கே மூன்று மைல் தொலைவில் உள்ளது. இத்தலம் தற்பொழுது ஆச்சாள்புரம் என்று வழங்கப்படுகிறது.
சம்பந்தர் திருமணம் நடந்த இடம். இங்கு, திருமணக் கோலத்தோடு ஞானசம்பந்தர் வடிவம் உள்ளது. திருமணத் திற்கு வந்த அனைவரும் வீடுபெற உதவிய தலம். இத்தலத்தில் திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாருடைய திருமணம் நடைபெற்ற காலத்தில் அம்பிகை இங்கே உள்ள பூரீபஞ்சாக்கர தீர்த்தத்தின் கரையில் நின்று அடியார்களுக்கு வெண்ணிறளித்தருளினமையின் திரு வெண்ணிற்றுமை எனும் திருநாமங் கொண்டனள். திருநீல நக்கநாயனார், முருகநாயனார், திருநீலகண்ட யாழ்ப்பாணர், சிவபாதவிருதயர், நம்பியாண்டார் நம்பிகள் முதலானோர் தீயுட் புகுந்த பின்னர் தம் காதலியைக் கைப்பற்றிச் சம்பந்தர் சோதியுட் புகுந்து ஒன்றி உடனாய் முத்தி பெற்ற தலம். இத்திருநாள் வைகாசி மூலம்தோறும் நடைபெறுகிறது.
சிவக்கொழுந்து தேசிகர் பாடிய தலபுராணம் அச்சிடப் பட்டுள்ளது. இத்தலப்பெயர் பெருமணம், நல்லூர், பெருமண நல்லூர், நல்லூர்ப்பெருமணம் என நான்கு வகையாக வழங்கும். ஞானசம்பந்தருக்கு முன்பே இப்பெயர் இக்கோயிலுக்கு வழங்கியிருத்தல் வேண்டும். ஆச்சாள் (அம்பிகை) ஞானசம்பந்தர் திருமணத்துக்கு வந்த அனைவருக்கும் வெண்ணிறளித்துச் சிவச் சோதியுள் கலக்கச் செய்ததால் ஆச்சாள்புரம் என ஆயிற்று. சுவாமி. சிவலோகத்தியாகர்; அம்பிகை: திருவெண்ணிற்றுமை, தலவிநாயகர், மாவடிப்பிள்ளையார், தீர்த்தம்: பஞ்சாக்கர தீர்த்தம், கங்கா தீர்த்தம் - இது கூப வடிவில் உள்ளது. விருட்சம்: மாமரம்.
கல்வெட்டுக்களில் அம்பிகையின் திருநாமம் சொக்கியார் என்று காணப்படுகிறது. திருஞானசம்பந்தர் பாடிய தலம்.
தலச்சிறப்பு:
தேவாரத்தில் திருஞானசம்பந்தர் நல்லூர்ப் பெருமணம்
絲@因 gHou 5amem町ggualab86而geoeroT亞55má

Page 143
மேய நம்பானே' என்று குறிப்பிடுவதால் நல்லூர் என்ற பெயரே சம்பந்தர்கால வழக்கில் இருந்தது என்று தெரிகிறது. பெருமணம் என்பது திருக்கோயிலின் பெயர். ஆன்மாக் களுக்கு முத்தி வழங்கும் திருக்கோயிலும் பெருமணம் என்று வழங்கலாயிற்று. மேலும் சம்பந்தப் பெருமானுக்குப் பெருமணம் நடந்த இடமாதலின் பெருமண
இப்பெயர் பழமையான பெயர் என்பது மட்டும் தெளிவு.
தலம் மிகச்சிறியது. வசிட்டர் முதலிய முனிவர்களுக்குச் சிவலோகக் காட்சி அளித்த தலம். மாந்தாதா மன்னனால் திருப்பணி செய்யப் பெற்றது. கோயில் ஊருக்கு நடுவில் உள்ளது. இரண்டு பிராகாரங்களையுடையது.
வசிட்டர், பராசரர், பிருகு, ஜமதக்னி முதலிய முனிவர்கள் பதினாயிரம் ஆண்டு கடுந்தவம் செய்ய சுவாமி கருணை கூர்ந்து சிவலோகம் காட்டியருளினார் என்பது புராண வரலாறு. முருகனுக்கு சிவபெருமான் சிவலோகத்தை அளிப்பதாகிய தலம் இது.
காகமுனிவர் இத்தலத்திற்கு வந்து தலத்தைக் காலால் மிதிக்க அஞ்சித் தலையாலேயே நடந்து திருக்கோயிலை அடைந்து இறைவனை வணங்கினார். சிவபெருமான் கட்டளையின்படி நிருதி திசையில் சிவயோகத்தில்
செய்து திருமணத்தில் தாமும் முத்தி பெற்றார்.
கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம் பல்லூர்ப் பெருமணம் பாட்டுமெய் யாய்த்தில் சொல்லூர்ப் பெருமணம் சூடல ரேதொண்டர் நல்லூர்ப் பெருமணம் மேயநம் பானே.
(திருஞா. 3ஆம் திரு.)
(6).LIT.)
இந்துக் கலைக்களஞ்சியம்x 緣11
 

55uglielub
நவதானியங்களாவன கோதுமை, நெல், துவரை, பயறு, கடலை, மொச்சை, எள்ளு, உழுந்து, கொள்ளு என்பனவாம். இவை சைவக்கிரியைகளில் முக்கிய இடம் பெறுகின்றன. ஆலய கும்பாபிஷேகம், நித்திய, நைமித்திய பூசைகள், விவாகம், கன்னிக்கால் நாட்டல், நவராத்திரி போன்ற மங்கல கிரியைகளிலும் மானிடரின் மரணச் சடங்கு போன்ற அபரக் கிரியைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை ஒமகுண்டத்தில் ஆகுதியாகவும் மண்ணில் அங்குரார்ப்பணமாகவும் (அங்குரம் - வித்து, அர்ப்பணம் - இடுதல்) இடப்படுகின்றன.
நவதானியங்களை முளையிடுதல் நாட்டின் பயிர்களின் விளைச்சல்களைப் பெருக்குவதற்கும் கிரியைகளில் குறைகுற்றங்கள் இருப்பின் அவற்றைப் பயிரின் வளர்ச்சி மூலம் கண்டறிந்து சாந்தி செய்யும் பொருட்டுமேயாகும்.
நவதானிய முளையில் தெய்வத்தன்மை விளங்கும் என்பதும் கிரியை செய்வோரிலே குற்றங்கள் உள்ளன வாயின் அந்த முளைகள் அக்குற்றங்களைக் காட்டத் தக்கவை என்பதும் முளைகள் செவ்வையாக வந்தால் நாட்டிற்கு நன்மையுண்டாகும் என்பதும் புகை நிறமாக
கட்டையாய் இருந்தால் குற்றமுண்டு என்பதும் நம்பிக்கை.
தாலிக்காகப் பொன் உருக்கும்போது முள்முருக்கை (கல்யாண முருக்கு) நாட்டி அதைச் சுற்றிய மண்ணில் பாலுடன் நவதானியத்தை இடுவர். அதில் வளரும் முளையைக் கொண்டு மணமக்களின் எதிர்காலத்தை அறிவது மாத்திரமல்லாமல் (வளரும் பயிரை முளையிலே தெரியும்) தாலிக்காகப் பொற்கொல்லனால் உருக்கிய பொன் கட்டியின் உருவ அமைப்பைக் கொண்டு முதற்பிறக்கும் பிள்ளை ஆணா, பெண்ணா என்பதையும் புதுமணத் தம்பதிகளின் குடும்ப வளர்ச்சியையும் அறிவர்.
நவக்கிரகங்களும் அவைக்குரிய தானியமும்:
1) சூரியன் - கோதுமை 2) சந்திரன் - நெல்
இண் இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 144
3) செவ்வாய் - துவரை
4) புதன் LIUILIB ,
5) வியாழன் - 5L606)
6) வெள்ளி - மொச்சை
7) சனி u எள்ளு
8) இராகு உழுந்து
9) கேது கொள்ளு (வே.சு)
நவநாதசித்தர்
சொல்லரிய சித்தர்குழாம் நிறைகொல்லிச் சிகரமதிற்
சுருதிமுடி வானஒளி வெளியை நாடி அல்லலறுத் தானந்தப் பேரமுதம் அநுதினமும்
அருந்தியடி பணிந்தவரை அன்பாற் போற்றி வெல்லரிய சித்திகளோ ரெட்டினையும் சிறுமகவு
போலியற்றிப் பித்தரைப்போல் வெளிவந்த திந்நான் மல்லல்வளம் கரிகாலி நாகண்மனைக் கான்முளைகள்
வழுந்துநவ நாதனடி வணக்கஞ் செய்வாம்
நாவலப்பிட்டிப் பட்டினத்திலிருந்து நுவரெலியா செல்லும் கொத்மலை வீதியில் பதின்மூன்றாவது மைல்துாரத்தில் உள்ளது குயீன்ஸ்பரி என்ற தேயிலைத்தோட்டம். அத்தோட்டத்தில் கரிகாலியிலிருந்து வந்து குடியேறிய நாகன் குடும்பத்தினர் பெரிய கங்காணியாக இருந்து வந்தனர். நாகனுடைய அன்பு மனைவியார் பெருமாள் அம்மையார். இந்த அம்மையார் அடியார் பக்தியிற் சிறந்தவர். வீட்டிற்கு வரும் அடியார்கள் அனைவரையும் சிவமாகவே பாவிப்பவர். பெருமாள் அம்மையார் அடியார் பக்தியிற் சிறந்து விளங்கியதோடு நிர்வாகத் திறமையிலும் வல்லவர். அம்மையார் வருடத்தில் பாதி நாட்கள் கரிகாலியிலும் பாதி நாட்கள் குயீன்ஸ்பரியிலும் காலம் கழித்து வந்தார்.
கொல்லிமலை தமிழ் நாட்டில் சேலம் மாவட்டத்தில் நாமக்கல், ஆத்தூர்த் தாலுக்காக்களில் உள்ள குன்றுத் தொடர். இதற்குக் கொல்லி அறப்பள்ளி என்ற பெயரும் உண்டு. அம்மலை உச்சியில் உயிர்களுக்கு ஆன்ம ஞானத்தைப் போக்கும் ஞானவல்லியும் அறக்கடவுளும் விளக்கும் அறப்பள்ளிநாதர் சந்நிதி ஒன்று விளங்கு
11
 

கின்றது. அறப்பள்ளிநாதர் சந்நிதானத்திற்கு ஆதிசங்கராச் சாரிய சுவாமிகள் சென்று அம்மையாரின் திருவருட் பொலி வைக் கண்டு அம்மையார் சந்நிதிமுன் முருகக்கடவுளை ஸ்தாபித்திருக்கின்றனர். அம்மலையில் பல பெரிய குகைகள் இருக்கின்றன. அவற்றில் பல சித்தர் குழாங்கள் வசிக்கின்றன.
இவர்களில் ஒருவரே நவநாதசித்தர் என்ற பெயருடைய வர். நீண்டகால தவத்தினால் சித்தி பெற்றவர். ஒரே நேரத்தில் பல இடங்களில் தோற்றம் அளித்தவர். கொல்லி மலைச் சித்தர்களுள் மிகச் சிறந்தவராகப் போற்றப்பட்டவர். அயற் கிராமங்களிலுள்ள மக்கள் இவரை மானம்பாக்கி சுவாமிகள் என அழைத்து வந்தார்கள். சுவாமிகள் குகை யில் மோனத்தவம் புரிந்த காலங்களில் பசித்தால் அடி வாரத்திலுள்ள கிராமங்களுக்கு வருவார்கள். அத்தகைய கிராமங்களில் கரிகாலியும் ஒன்று. பெருமாள் அம்மையாரின் அடியார் பக்தியால் கவரப்பட்ட நவநாதசித்தர் அடிக்கடி அம்மையாரிடம் வந்து உணவு பெற்றுச் செல்வார். சித்தர் அம்மையாரைச் செல்லமாக ஆயா என்று அழைப்பார். கெளட்பீன உடையோடு மலையிலிருந்து வரும் சித்தர் நேராக அம்மையாரின் வீட்டு முற்றத்திற்குச் சென்று ஆயா என்று குரல் கொடுப்பார். அம்மையார் எங்கிருந்தாலும் எத்தொழிலில் ஈடுபட்டிருந்தாலும் ஓடோடியும் வந்து சுவாமிகளுடைய திருப்பாதங்களை விளக்கி பூப்போட்டு வணங்கியபின் தயாராக இருக்கும் உணவினைக் கொண்டுவந்து இருகைகளையும் ஏந்தி நிற்கும் சுவாமி களின் கைகளில் இடுவார்கள். சுவாமிகள் நின்ற நிலையி லேயே உணவை உண்டு, கையில் நீருற்ற அதனையும் வாங்கி அருந்தியவுடன் தவத்தை நோக்கிச் சென்று விடு
வார்கள்.
அம்மையார் ஒருநாள் சுவாமிகளுக்கு உணவு ஊட்டும் போது, ‘சுவாமி சிலோனில் நாங்கள் ஒரு சுப்பிரமணியர் கோயில் கட்டுகின்றோம், கெதியில் கும்பாபிஷேகம் நடத்த இருக்கின்றோம், சுவாமிகள் தவறாது அதற்கு வரவேண்டும் என்று மனம் உருகிக் கேட்டார்கள். சுவாமிகள் புன்முறுவல் பூத்தவராய் ”ஆயா நினைச்சா அடிமை வரும்” என்று கூறினார்கள். அம்மையார் குயீன்ஸ்பரி வந்து மாதக்கணக்
காகி விட்டன. கோயில் கட்டும் வேலை முடிவடைந்து
ஜ் இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 145
கும்பாபிஷேகத்திற்கான ஆயத்தங்கள் எல்லாம் மிக விரைவாக நடைபெற்றுக் கொண்டிருந்தன.
கும்பாபிஷேகத்திற்கு முதல் நாள்தான் அம்மையார், தான் சுவாமிகளுக்குச் சொன்னவற்றை நினைவுகூர்ந்தார். மூத்தமகனை அழைத்துதான் சுவாமிகளிடம் கூறியதை யும் சுவாமிகள் அதற்குக் கொடுத்த விடையையும் கூறிச் சுவாமிக்கு ஒரு கடிதம் எழுதுமாறு பணித்தர். “இன்று தந்தி அடித்தாலும் சுவாமிகள் வந்துசேர வாரம் ஒன்றாகும். நாளைக்குத்தான் கும்பாபிஷேகம் முடிந்துவிடுமே. இன்று சுவாமிக்கு அறிவித்து என்ன பயன்' என்ற மகனிடம் “நினைவுக்கு வந்த உடனே அறிவிக்கவேண்டியது எங்கள் கடமை” என்றார் அம்மையார். அன்றே தபால் எழுதித் தபாற்கந்தோரில் சேர்க்கப்பட்டது. தனது கடமை ஒன்று நிறைவேறிவிட்டதாக அம்மையாரின் மனதில் ஒரு நிறைவு. சுவாமிகளின் அருட்சக்தியை நன்கு உணர்ந்தவராகை
யினால் சுவாமிகள் வரக்கூடும் என்றொரு நம்பிக்கை.
மறுநாள் அதிகாலை, வீட்டிலிருந்து கும்பாபிஷேகத்திற்கு வேண்டிய பொருட்களுடன் கோயிலுக்கு வந்தார் அம்மை யார். அந்த நேரம் சுவாமிகள் எதிரே வந்து கொண்டிருந் தார். அம்மையாருக்கு ஆனந்தம் தாங்கவில்லை. ஒடிச் சென்று சுவாமிகளுடைய பாதங்களில் வீழ்ந்து வணங்கி ஆனந்த பாஷ்பம் சொரிந்தார். சுவாமிகளும் அம்மை 1ாரைத் தழுவி எடுத்துக்கொண்டார். "சுவாமி நேற்றைக்குத் தானே கடிதம் எழுதினேன். எப்படிச் சுவாமி வந்தீர்கள்' என்று அதிசயம் மிகக் கேட்டார் அம்மையார் ஆயா நினைச்சது அடிமை வந்திட்டுது என்று சுவாமிகள் கூறினார்
éᏏ6ii .
கோயிலுக்கு முன்னாக வலது பக்கத்தில் கோணத் திசையாக உள்ள ஒரு இடத்தைச் சுட்டிக்காட்டி ”ஆயா இந்த இடத்தில்தான் அடிமையைச் சமாதி வைக்கவேண் டும்” எனச் சுவாமிகள் கூறினார்கள். “அதைப்பற்றி எல்லாம் எதற்காகச் சுவாமிகள் இப்பொழுதே கூறிக்கொண்டிருக் கிறீர்கள்' என்று செல்லமாகக் கடிந்தார் அம்மையார்.
நாட்கள் சில உருண்டோடின. குயீன்ஸ்பரிக்கு வந்திருக் கும் சாமியாரைப்பற்றித்தான் மலையகமெங்கும் பேச்சு அடிபட்டது. மலையத்திலுள்ள ஆயிரக் கணக்கான
இந்துக்கலைக்களஞ்சியம் ※災淡11
 

தோட்டங்களிலிருந்தும் பக்தர்கள் சுவாமிகளைத் தரிசிக்க வந்தனர். குயின்ஸ்பரி ஒரு யாத்திரைத் தலமாக விளங்கி யது. இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் உயந்த உத்தியோகத்தர்கள், ஆன்மீகவாதிகள் வந்து சென்றனர். சுவாமிகளைத் தரிசிக்க இந்தியாவிலிருந்தே பக்தர்கள் வந்தனர். இந்தியாவிலிருந்து வந்தவர்கள் சுவாமிகளைத் தரிசித்தவுடன் இவர் அந்த ஊரில் சமாதியானவர், இந்த ஊரில் சமாதியானவர் என்று பேசத்தலைப்பட்டனர். சுவாமி களைத் தரிசிக்க வந்த சேலம்வாசி ஒருவர் ஒருவருடத் திற்கு முன்புதான் இச்சுவாமியைத் தாங்கள் சேலம் பக்கத்தில் சமாதி செய்ததாகத் தெரிவித்தார். அதனைச் சுவாமிகளிடம் விசாரித்தபோது, சுவாமிகள் புன்சிரிப்புடன் இருக்கும் அப்பா’ என்றார்.
சித்தர்களுக்கு அவர்கள் செயல் எல்லாம் இயற்கை. சாமானியராகிய எங்களுக்கு அவைகள் அற்புதங்கள். தோட்டத்தொழிலாளருடன் சுவாமிகள் சகசமாகப் பழகி னார். தொழிலாளரும் சுவாமிகள் மேல் அன்பும் மரியாதை யும் உடையவர்களாகப் பழகினர். பக்கத்தில் உள்ள தோட்டங்கள் தோறும் சுவாமிகள் தாமாகவே உலாவிவரு வார். குயீன்பரித் தோட்டத் தொழிலாளரிடையே சுவாமிகள் பல சித்துக்கள் விளையாடினார்கள்.
ஒரு நாள் சுவாமிகள் பக்கத்துத் தோட்டத்தில் உள்ள கங்காணியார் ஒருவரைச் சந்திக்கத் தனிமையில் சென்று கொண்டிருந்தார்கள். தேயிலைச் செடி மறைவில் கஞ்சாப் புகை குடிப்பதற்காக மூவர் மறைந்திருந்தனர். சுவாமியைக் கண்டதும், “சுவாமி கஞ்சாப்புகை குடித்து விட்டுத்தான் போகவேண்டும்” என வற்புறுத்தினர். சுவாமிகள் மறுத்தார். அவர்கள் விடவில்லை. சுவாமியும் இணங்கினார். நச்சுத் தன்மையுள்ள சருகுகளும் வைத்து. கஞ்சா தயாரித்தனர். முதலில் சுவாமிகள்தான் குடிக்கவேண்டும் எனக் கூறினர்.
சுவாமி மறுத்து, "நீங்களே முதலில் குடியுங்கள். நீங்கள் குடித்து முடிந்தபின் நான் கடைசியாகக் குடிக்கின்றேன்” என்றார். அவர்கள் சுவாமிகளை விடவில்லை. வற்புறுத்தி னார்கள். சுவாமிகள் ஒரு முறை புகையை இழுத்து முன்னாக ஊதினார். மூவர் முகத்திலும் புகை பிடித்த உடனே மயங்கி வீழ்ந்தனர். சுவாமிகள் தாம் செல்ல
இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 146
வேண்டிய இடத்திற்குச் சென்று விட்டார்கள். புகை குடித்த மூவரையும் தேடி அந்தந்த வீட்டில் உள்ளவர்கள் தோட்டம் முழுவதும் அலைந்தனர்.
ஈற்றில் மூவரும் மயங்கிய நிலையில் நாவலப்பிட்டி
ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். அங்கும் தெளிவு ஏற்படாமையால் கண்டி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சுவாமிகளுடன் இவர்கள் தகாத முறையில் நடந்துகொண்டார்கள் என்ற செய்தி எப்படியோ தெரிந்துவிட்டது. தொழிலாளர் மூவரினதும் உற்றார், உறவினர் சுவாமிகள் இருந்த இடம்சென்று பிழையை மன்னிக்குமாறு கண்ணிர்வார வேண்டினர். சுவாமிகள் தமக்கும் அதற்கும் சம்பந்தம் ஒன்றுமில்லையென அனுப்பி விட்டார். நான்கு ஐந்து நாட்களாகியும் அவர்கள் மயக்கம் தெளியவில்லை. சுவாமிகளிடம் மீண்டும் சென்று உயிர்ப் பிச்சை இடுமாறு மன்றாடினார்கள். சுவாமிகள் ஒரு சிகறெற் வாங்கிப் பற்றவைத்து ஒரு முறை புகை1ை இழுத்து ஊதினார். புகை சுழன்று சுழன்று சென்றது. நீங்கள் கவலையில்லாமல் செல்லுங்கள் நோய் சுகமாகிவிடும் என்று வந்தவர்களை அனுப்பினார். சுவாமி சிகறெற் புகையை இழுத்து வெளியே ஊதிய அதே நேரத்தில் மூவரும் மயக்கம் தெளிந்து எழுந்தனர்.
இச்செய்தி நிகழ்ந்தபின் தோட்டத் தொழிலாளர் மத்தி யிலே சுவாமிமீது பெருமதிப்பும் பயபக்தியும் ஏற்பட்டன. சுவாமிகளைத் தரிசிப்பதற்காக எங்கிருந்து பக்தர்கள் வந்தாலும் தங்குமிட வசதி, சாப்பாட்டு வசதி யாவும் கங்காணியார் குடும்பத்தினர், அன்போடு மனப்பூர்வமாகச் செய்து ஆதரித்து வந்தனர். சுவாமிகளுடைய வருகைக்குக் பின்னர் கங்காணியார் வீடு ஓர் அன்னசத்திரமாக மாறியதென்றே சொல்லவேண்டும்.
ஒரு நாள் பெருமாள் அம்மையார் சிதம்பரம் செல்ல வேண்டுமென்று சுவாமிகள் ஆசியுடன் அனுப்பி வைத்தார் கள். அம்மையார் சிதம்பரம் சென்று ஞானப்பிரகாசத்தில் தீர்த்தம் ஆடி ஜெபம் செய்வதற்காகச் சுவாமிகளால் கொடுக்கப் பெற்ற உருத்திராக்க மாலையைத் தேடினார். காணவில்லை. வீட்டில் மறந்துபோய் வைத்துவிட்டு வந்து
விட்டார். கண்கள் மூடியபடி கைகள் கூப்பிய வண்ணம்
 

3
நவநாத சித்தரை நினைத்து உருகினார். உருத்திராக்க மாலை கைகளில் விழுந்திருக்கக் கண்டார். நவநாதப் பெருமாள் புறம் புறந் திரிந்து கருணை பாலிப்பதை உணர் ந்து அம்மையார் உள்ளம் நெக்குருகினார்.
சுவாமிகளுடைய மிக நெருங்கிய பக்தர்களுள் திருக் கடம்பத்தறை அன்பர் சி. குருசாமியும் ஒருவர். குருசாமி அவர்களுக்குச் சுவாமிகளுடைய தொடர்பு ஏற்பட்டதன் பின்பு கொல்லி மலைச் சித்தர்களைப் பார்க்கவேண்டும் என்றொரு ஆசை எழுந்தது. அந்த ஆசையைச் சுவாமி களிடம் கூறினார். அமாவாசைத் தினத்தன்று ஒரு நாள் இரவு 2 மணிக்குக் கொல்லிமலை வருமாறு சுவாமிகள் குருசாமியை அழைத்தார்கள். இந்த அமாவாசை இருட்டில் எப்படிச் செல்வதென்று குருசாமி தயங்கினாராயினும் சுவாமிகள் மீது கொண்ட நம்பிக்கையில் சுவாமியைப் பின்தொடர்ந்தார். குருசாமியின் வலது கையைத் தமது இடது கையால் பற்றிக் கொண்டு கண்களை இறுக மூடிக்கொள்ளும்படியும் திறக்கச் சொல்லும்போது திறக்க வேண்டும் என்றும் அருளினார். 2, 3 நிமிடங்களுக்குள் கண்களைத் திறக்கச் சொன்னார். சுவாமி, குருசாமி கண்களைத் திறந்தார். என்ன ஆச்சரியம்! கொல்லிமலை உச்சியில் தாம் இருப்பதை உணர்ந்தார். சுவாமிகள் பெரிய தொரு பாறாங்கல்லை இலகுவாகக் கையால் அகற்றி உள்ளே அழைத்துச் சென்றார். ஏழு சித்தர்கள் ஆழ்ந்த சமாதியில் இருப்பதைக் கண்டு தரிசித்தார்.
சித்தர் ஊரைக்கரை, கோம்பை முதலிய இடங்களில் பக்தர்களின் வழிபாட்டுக்காளானார். அங்குள்ள மக்கள் அபிஷேகாதிகள் செய்தே சித்தரை உபசரித்தார்கள். ஆலயத்துடையான்பட்டி இராமசாமி ரெட்டியார் திருப்பணி செய்துள்ள பெருமாள் கோயில் கிணற்றில் அதிக ஆழத் திற்கு வெட்டியும் நீரின்மையைச் சித்தரிடம் தெரிவிக்க சித்தர் ஒரு சக்கரத்தைத் தகட்டில் வரைந்து கிணற்றில் இடச் செய்தார். இவ்வாறே நிரம்ப நீர் ஊறி வந்தமையை ரெட்டியார் ஒரு விழாவாகக் கொண்டாடினார். சுவாமிகளை வைத்துக்கொண்டே கும்பாபிஷேகத்தை வெகுவிமரிசையாக நடத்தினார்.
பச்சைப்பெருமாள் பட்டியில் ஒரு ரெட்டியாரின் புறத்
談@ög Hou 5amgIJgggal656 弦leoecorä56má

Page 147
திண்ணையில் சித்தர் இமையா நாட்டத்தோடு யோகத்தில் இருந்தார். ரெட்டியாருக்குச் சுவாமிகளைக் கண்டால் பிடிக்காது. எல்லோரும் வெளிவேடம் போடுகிறவர்கள்
என்பது அவரது எண்ணம். ஒரு உண்மை மகானை
உண்மை மகானால்தான் புரிந்து கொள்ளமுடியும்.
“புறத்திண்ணையிலே ஒருத்தர் செத்த ஆடு விழிப்பது போல் விழித்து வேஷம் போடுகிறார்” என்று ரெட்டியார் வீட்டிலுள்ளாருக்கும் போவோர் எல்லோருக்கும் பரிகாச மாகக் கூறினார். அவருடைய பரிகாசம் பேச்சளவில் நின்று விடவில்லை. செயலிலும் இறங்கியது. சித்தருடைய தலை யில் ஒரு கொள்ளிக் கட்டையைக் கொண்டு வந்து வைத் தார். சித்தர் அதனைச் சிறிதும் பொருட்படுத்தாது உணர்வு வரப்பெறாதவராக இருந்தார். இதனை உணர்ந்த மற்றொரு ரெட்டியார் சிரத்திலிருந்த கொள்ளிக் கட்டையை அகற்றி, சித்தரை வணங்கி நின்றார். சித்தர் விழித்தார். எதிரே நின்றவரைப் பார்த்து “என்னப்பா’ என்றார். "சுவாமி இந்த வீட்டு ரெட்டியார், தங்கள் தலையில் நெருப்பிட்டார். அதனை அடியேன் அகற்றினேன்” என்றார். அப்படியா? அவர் மிக நல்லவர் என்று சித்தர் அகன்றார். அக்குடும்பமே இருந்த இடம் தெரியாது அழிந்துபோனதை யாவரும் அறிவர். (நா.மு.)
நவநிதி
நவநிதி என்பது ஒன்பது வகையான செல்வங்கள். நவநிதிகளின் அதிபதியாக விளங்குபவன் குபேரன். அவன் பெரும் செல்வம் பெற்றவன். நவநிதிகளாவன கச்சபநிதி, கற்பகநிதி, சங்கநிதி, பதுமநிதி, நந்தநிதி, நீலநிதி, மகாநிதி, மகாபதுமநிதி, முகுந்தநிதி என்பவை. இவை அழிவில்லாத நிதிகளாகும். இருக்குவேதம் குபேரனையும் மகாலக்ஷமியை யும் தனதேவதைகளாகக் குறிப்பிடுகின்றது. மகாலக்ஷமி யின் அட்ட சக்திகளில் இரண்டான சங்கநிதி, பதுமநிதி களைக் குபேரன்தான் இரட்சிக்கின்றான். நவநிதிகள் வண்டோகை, மனேகை, பிங்கலிகை, பதுமை, சங்கை, வேசங்கை, காளை, மகாகாளை, சர்வம் எனவும்
அழைக்கப்படுகின்றன. (கு.ஹே.)
இந்துக் கலைக்களஞ்சியம்x
 

Gulotofish
நவரத்தினங்களை நவமணிகள் என்றும் அழைப்பர். நவ என்றால் ஒன்பது; ரத்னம் என்றால் ஒளி, புதுமை எனப் பொருள் பெறும். எனவே, புதுமையையும் ஒளியையும் உடைய ஒன்பது வகையான கற்கள் நவரத்தினங்கள் எனப்படுகின்றன. சர்வவியாபகி ஆகிய சிவபெருமான் ஒன்பது வகையான உருவங்களுடன் விளங்குகின்றார். அவை “நவம்தருபேதம்’ எனச் சிறப்பிக்கப்படுகின்றன. பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், மகேஸ்வரன், சதாசிவம், சிவம், சக்தி, நாதம், விந்து என்பவையே அவை. ஒன்பது வாயில்கள் உள்ள இம்மனித தேகத்தை ஆளும் நவக் கிரகங்களை ஆட்டிப்படைத்து அற்புதங்கள் நிகழ்த்துவதில் நவரத்தினங்கள் முதலிடம் பெறுகின்றன. நவரத்தினங்களை ஆபரணங்களில் பதித்து அணிந்து கொள்வதால் அதிர்ஷ்டம் உண்டாவதாகவும் பல நோய்களுக்கும், கஷடங்களுக்கும் தீர்வு கிடைக்கின்றது எனவும் பழங்காலந்தொட்டு நம்பப்படுகின்றது. இவை வைரம், மரகதம், மாணிக்கம், நீலம், புஸ்பராகம், வைடூரியம்,
கோமேதகம், முத்து, பவளம் என்பனவாகும்.
புராதன இலக்கியங்களில் நவமணிகளின் பயன்பாடு கூறப்பட்டுள்ளது. இதிகாச புராணங்களில் நவமணிகளின் பயன்பாடுகள் பற்றிய கருத்துக்கள் காணப்படுகின்றன. இதிகாச புராணங்களில் நவமணிகளைக் கொண்டு மாடமாளிகைகள் அமைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின் றது. இந்திரன் மாளிகை புஸ்பராகத்தினால் அமைந்திருந்த தாக புராணங்கள் கூறும். அக்கால மன்னர்களும் பிற்கால மன்னர்களும் நவரத்தினக் கற்களைக் கொண்டு தமது
முடிகளையும் அரியாசனங்களையும் ஆக்கினார்கள்.
நவரத்தினங்களை மகாரத்தினம், உபுரத்தினம் என இருவகையாகப் வகுப்பர். முத்து. வைரம், மாணிக்கம், நீலம், மரகதம் என்பவை மகாரத்தினங்கள். இவற்றை பஞ்சரத்தினங்கள் எனவும் அழைப்பர். ஏனையவை உபரத்தினங்கள். முத்து, பவளம் இரண்டும் ஆழ்கடலில் இருந்து கிடைப்பவை. ஏனையவை கனிமப் பொருட்களா கும். பண்டைக் காலத்தில் இந்தியா, இலங்கை, மியன்மார்
ஆகிய கீழைத்தேய நாடுகளிலேயே பெரும்பாலும்
ZTT TLL TCC L TLLLLLL LLLLT TTeLMLTTLLLL

Page 148
உற்பத்தியாகின. இக்காலத்தில் பிரேசில், அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளிலும் இவை கிடைக்கின்றன. (கு.ஹே.)
இந்து மதத்தின் மூல இலக்கியமாகவும் முதல் இலக்கி யமாகவும் விளங்குவன வேதங்கள் ஆகும். வேதத்தின் உபாங்கங்களில் ஒன்றாக உள்ளது சோதிடம், சோதிடம் என்பது மனித வாழ்க்கையில் விஞ்ஞான ரீதியாக நட்சத்தி ரங்களும் கிரகங்களும் எவ்வாறு ஆட்சி செய்கின்றன என்பதை அறிவதாகும். சோதிடத்திற்கு முக்கியமான அங்கங்கள் ஐந்து. அவை வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் என்பவையாகும். இவையே பஞ்சாங்கம்
எனப்படுகின்றன.
பஞ்சாங்கத்தில் ஏழு வாரங்களும் பதினைந்து திதிகளும் இருபத்தேழு நட்சத்திரங்களும் உள்ளன. சந்திரனின் பாகையில் இருந்து சூரியனின் பாகையை கழிக்கவரும் பாகைக்குரியதே திதியாகும். சுக்கில பட்சமான வளர்பிறை யில் பதினைந்து திதிகள் உண்டு. கிருஷ்ணபட்சமான தேய்பிறையில் பதினைந்து திதிகள், முப்பது திதிகளை யும் 29 நட்சத்திரங்களையும் கொண்டது. ஒரு சாந்திரமான மாதம். பிரதமை, துவிதியை, திருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி. ஏகாதசி, துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி, பெளர்ணமி, அமாவாசை என்பவை திதிகளாகும். அமாவாசை அல்லது பெளர்ணமி வந்து ஒன்பதாம் நாள் வருவது நவமி ஆகும்.
நவமி என்றால் ஒன்பதாம் திதி என்று பொருள். பெளர் ணமி முடிந்து ஒரு நவமி தேய்பிறையில் வரும்; அமாவாசை முடிந்து ஒரு நவமி வளர்பிறையில் வரும். இவற்றில் சிறப்புக்குரியது சைத்திரமாதம் (சித்திரை) சுக்கில நவமி. அது இராம நவமி எனப்படும். புரட்டாதி (பதரபாத) மாதத்தில் வரும் சுக்கில நவமி அதுகா நவமி என்றும் (ஆஸ் வான) ஐப்பசி மாதம் வரும் சுக்கில நவமி மகநவமி என்றும் கார்த்திகை மாதம் சுக்கில
நவமி கிரேதாயுகாதி எனவும் மார்கசீர் (மார்கழி) மாத
 

சுக்கில நவமி கல்பாதி எனவும் மாசி (மகா) பகுண
நவமி, ராமதசா நவமி என்றும் சிறப்பிக்கப்படுகின்றன.
நவமித் திதியின் அதிபதியாக சூரியன் விளங்குகின்றார். நவமியின் சூன்ய ராசியாக சிம்மம் விளங்குகின்றது. பொது வாக நவமியன்று எந்த நல்ல காரியங்களையும் செய்வதோ அல்லது தொடங்குவதோ கூடாது என்று கூறுவார்கள். "அட்டமி நவமி தொட்டது நாசம்” என்றும் கூறப்படுகின்றது. எனவே, அட்டமி, நவமி இரண்டு திதிகளும் நல்ல காரியங் களுக்கு ஆகாத திதிகளாக விளங்குகின்றன. இராமன் பிறந்தது நவமியில் ஆகும். எனவே றுரீ இராம நவமி மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றது. பூரீ இராமபிரான் அவதரித்த திருநட்சத்திரம் சித்திரை மாதம் சுக்கில பட் சத்து நவமி திதியில் வரும் புனர்பூச நட்சத்திரமாகும். இந்நாளே இராம நவமி. எனவே தீங்குகளை விளைவிக்கும் நன்மை பயக்காத திதியாகிய நவமி இராமன் பிறந்த திதியாக விளங்கிச் சிறப்பு பெறுகிறது. (கு.ஹே.)
நவராத்திரி
இந்துக்கள் பின்பற்றும் விரதங்கள், பண்டிகைகள், திரு விழாக்களுள் நவராத்திரியும் ஒன்று. சக்திக்குரிய விரதங்க ளில் ஒன்றான நவராத்திரி ஒரு வருடத்தில் நான்கு வகை யாகக் கொண்டாடப்படுகின்றது. ஆனி மாத அமாவசை க்குப் பிறகு வரும் ஒன்பது நாட்களை ஆஷாட நவராத்திரி என்றும், தை மாத அமாவாசைக்கு பிறகு வரும் ஒன்பது நாட்களை மகாநவராத்திரி என்றும் பங்குனி மாத அமாவா சைக்குப் பிறகு வரும் ஒன்பது நாட்களை வசந்த நவராத் திரி புரட்டாதி மாத நவராத்திரிக்கு பின்வரும், ஒன்பது நாட்களை சாரதா நவராத்திரி என்னும் அழைப்பர். இவற் றுள் புரட்டாதி மாதம் வரும் சாரதா நவராத்திரிக்கு மிகுந்த மகிமை உண்டு. பெரும் ஆற்றல் பெற்ற மகிஷாசுரன் என்னும் அசுரன் சாகாவரம் பெற தவமிருந்து பிரம்மனிடம் வேண்ட அவர் மரணம் எல்லோருக்கும் நிகழவேண்டியது, எனவே வேறு வரம் கேட்குமாறு கூற, அசுரனும் கன்னிகை யைத் தவிர வேறு எவராலும் தனக்கு மரணம் நிகழக் கூடாது என வேண்ட, பிரமனும் அவ்வாறே அருள் கொடுத் தார். அனைத்து உலகினையும் அசுரன் ஆட்டிப்படைத்தான்.
※●5g glau」sengTIggyaleose所gleoGでTá5cmm

Page 149
இறுதியில் அனைவரும் அம்பிகையை வேண்ட அம்பிகை யும் முக்குணங்களும் அற்புத ஆற்றல்களும் மிக்கவளாய் புரட்டாதி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசியில் அவதரித்து ஒன்பது நாட்கள் விரதமிருந்து சுக்கில பட்ச அஷடமியில் அசுரனை வதம் செய்தாள். நவமியில் அன்னையை வெற் றித் திருமகளாகக் கொண்டாடினார்கள். எனவே துர்க்கை யாய்த் தோன்றிய நாளில் நவராத்திரி ஆரம்பமாகி அசுரனை அழித்து கொண்டாடும் நாள் விஜயதசமி என்றும் கொண்டாடப்படுகின்றது.
நவராத்திரி நாட்களான ஒன்பது நாட்களில் பிரதமை முதல் திருதியை வரையுள்ள மூன்று நாட்கள் வீரம் தரும் துர்க்கையையும், சதுர்த்தி முதல் சஷ்டி வரை செல்வம் வேண்டி இலக்குமியையும், சப்தமி முதல் தசமி வரை கல்வி வேண்டி சரஸ்வதியையும் போற்றி வழிபட வேண்டும். பத்தாம் நாள் விஜயதசமி கொண்டாடப்படு கிறது. கொலுவைத்து, கும்பம் வைத்து, அன்னைக்கு உகந்த பிரசாதங்களை, சித்திரான்னங்களை ஒன்பது நாட்களும் மாலைநேரத்தில் கொலுமுன் படைத்து திருவிளக்கேற்றி, பக்திப்பாடல்களைப் பாடி முறைப்படி
வழிபடவேண்டும்.
கொலு வைப்பது நவராத்திரியின் சிறப்பு அம்சங்களில் ஒன்று. பஞ்சபூதங்களில் ஒன்றான மண்ணினால் சிலை செய்து அதில் அம்மனை எழுந்தருளச் செய்து வழிபட்டால் அன்னையின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும் என தேவிபுராணம் கூறுகின்றது. மார்க்கண்டேய புராணத்தில் மகாராஜன் என்பவன் தன் குருவின் ஆலோசனைப்படி காளி ரூபத்தை மண்ணில் செய்து வழிபட்டு அருள் பெற்ற தாக கூறப்படுகின்றது. கொலு வைப்பதற்கு உகந்த நாள் புரட்டாதியில் வரும் அமாவாசை. அன்று வீட்டைச் சுத்தம் செய்து அலங்காரப்படுத்தி கோலம் போட்டு கொலு மேடை அமைக்கப்படும். கொலுப்படிகளை 5, 7, 9 என்ற எண்ணிக் கையில் அமைக்கவேண்டும். முதற்படியில் புல், செடி, கொடி ஆகிய தாவர பொம்மைகளை வைக்க வேண்டும். 2ஆம் படியில் நத்தை போன்ற பொம்மைகள் வைப்பது நலம். இது நத்தைபோல மெதுவாக நகர்ந்து உயர் நிலை அடையவேண்டும் என்பதையும் சுறுசுறுப்பையும் திடத்தை
யும் காட்டுகிறது. 4ஆம் படியில் நண்டு, வண்டு பொம்மை
இந்துக் கலைக்களஞ்சியம்x
 

கள் இடம்பெற வேண்டும். ஆழமாகி ஊடுருவிப் பார்ப்பது, எந்த விடயத்தையும் ஆழமாக சிந்தித்து செயலாற்றுவதை இவை குறிக்கின்றன. 5ஆம் படியில் மிருகங்கள், பறவைக ளின் பொம்மைகளை வைக்க வேண்டும். இது பறவை போல கூடி வாழ வேண்டும் என்பதைக் குறிக்கின்றது. 6ஆம் படியில் மனித பொம்மைகள் வைக்கவேண்டும். இது வாழ்க்கையில் கடந்த ஐந்து படிகளில் உள்ளது போல குணங்களைக் கடைப்பிடித்து உயர வேண்டும் என்பதைக் குறிக்கின்றது. 7ஆம் படியில் முனிவர்கள், மகான்கள் பொம்மைகளை வைக்க வேண்டும். மனிதன் பக்தி மார்க்கத்தைப் பின்பற்றி மகான்கள் ஆகலாம் என்பதை உணர்த்துகின்றது. எட்டாம் படியில் தெய்வங்க ளுக்கு அடுத்த ஸ்தானத்தில் இருக்கும் தேவர்கள், நாயன் மார்கள், ஆழ்வார்கள், நவக்கிரகங்கள் என்பவற்றின் பொம்மைகளை வைக்கவேண்டும். இது மனிதர் தெய்வ நிலையை அடையும் முறையைக் கூறுகின்றது. ஒன்பதாம் படியில் பிரமா, விஷ்ணு, சிவன் பொம்மைகளை தேவியரு டன் வைக்கவேண்டும். ஆதிபராசக்தியின் சிலையை நடுவில் வைக்கவேண்டும். இவ்வாறு அமைக்கப்படும் கொலுப்படி உயிர்களின் பரிணாம தத்துவத்தை உணர்த் துகின்றது. அழகுணர்வையும் கலை நுணுக்கத்தையும் எடுத்து இயம்புகின்ற கொலு நவராத்திரியில் முக்கிய இடம்பெறுகிறது.
ஆலயங்களிலும் வீடுகளிலும் நவராத்திரி பூசை கொண்டாட்டம் கலந்த ஒரு விரதமாகவே அனுட்டிக்கப்படு கிறது. தூய்மையுடனும் அழகுடனும் பொலிவுடனும் திக ழும் ஓரிடத்தில் கொலு மண்டபத்தை அமைத்து பூர்வாங்க பூசைகளுடன் கும்பம் வைப்பது முக்கிய நிகழ்வாகும். கும்பத்தைச் சுற்றிவர மண் பரப்பி அதிலே நவதானியங் களை இட்டு முளைக்க விடவேண்டும். இந்த நவதானியங் கள் ஒன்பது நாட்களில் முளைத்து செழித்து வளரும் செழிப்பை வைத்து தமது குடும்பத்தின் அல்லது ஊரின் வளத்தையும் நன்மை தீமையையும் உணர்ந்து கொள்வது விசேட அம்சமாக விளங்குகின்றது. நவராத்திரி காலத்தில் அம்பாள் ஊசிமுனையில் நின்று தவம் செய்வதால் ஊசி கொண்டு தையல் செய்வது தவிர்க்கப்படல் வேண்டும். இது போலவே எண்ணை தேய்த்து முழுகுவதும் விலக்கப்
பட்டுள்ளது. கன்னிப் பெண்களை இப்பூசைக் காலத்தில்
YZS kkkS TT TLLL TJLLD TLrL MgCT TeLLLMLTTTLLT

Page 150
தேவியின் ஒன்பது அம்சமாகப் பாவித்து ஆராதிப்பது விசேடமாகும். இப்பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், பட்டு வஸ்திரம் கொடுப்பது சிறப்பானதாகும். நவராத்திரி விரதத் தைக் கடைப்பிடிப்போர் ஒன்பது நாட்களும் உபவாசம் மேற்கொள்வர். பெண்கள் காலையிலும் மாலையிலும் நீராடி விரதம் இருந்து அம்பாள் பூசை செய்யவேண்டும். பகலில் செய்யும் பூசையை விட மாலையிலும் இரவிலும் பூசை செய்வதே சிறந்தது. இதன்போது லலிதா சகஸ்ர நாமம், துர்கா சப்தசதி, விஷ்ணு சகஸ்ரநாமம் போன்றவற்
றைப் பாராயணம் செய்து கூட்டுப் பிரார்த்தனை செய்வர்.
ஒன்பது நாட்களும் அன்னைக்கு வகைவகையான அலங்காரம் செய்து அமுது படைத்தல் வேண்டும். முதல் நாள் அம்பிகையை குமாரியாக அலங்கரித்து, மல்லிகை மலர் சூட்டி வெண்பொங்கல் அமுது படைக்க வேண்டும். 2ஆம் நாள் இராஜராஜேஸ்வரியாக அலங்கரித்து மல்லிகை, துளசி சாற்றி, புளியோதரை படைக்கவேண்டும். 3ஆம் நாள் கல்யாணியாக வழிபடவேண்டும். சம்பங்கி, மருக் கொழுந்து போன்றவற்றால் அலங்கரித்து சக்கரைப் பொங் கல் நிவேதனம் செய்யவேண்டும். 4ஆம் நாள் ரோகிணி தேவியாக பாவித்து ஜாதிமல்லிகை சூட்டி கதம்பச் சாதம் படைத்து வழிபடலாம். 5ஆம் நாள் காளிகாதேவியாக பாரிஜாதமலர் சூட்டி தயிர்ச்சாதம் படைத்தும், 6ஆம் நாள் சண்டிகாதேவியாக செம்பருத்திப் பூவோடு தேங்காய்ச் சாதம் படைத்தும் 7ஆம் நாள் அன்னபூரணியாக தாழம்பூ மாலை போட்டு எலுமிச்சை சாதம் நிவேதனம் செய்தும் 8ஆம் நாள் அஷடதேவிகளுடன் எழுந்தருளும் துர்க்கையாய் ரோஜாப்பூ சாற்றி பாயாசம் படைத்தும் 9ஆம் நாள் காமேசுவரி எனும் சிவசக்தி கோலத்தில் சுபத்திராதேவி யாக செந்தாமரை மலரால் அர்ச்சித்து திரட்டுப்பால் நைவேத்தியம் செய்தும் வழிபடல் வேண்டும். இவற்றைவிட 9ஆம் நாள் சரஸ்வதி பூசையன்று அவல், கடலை, நாவற் பழம், கரும்பு, கற்கண்டு முதலியன பிரதான நைவேத்தியங் களாக விளங்குகின்றன.
வீரம் தரும் துர்க்கை சிவப்பிரியை, எல்லாப் பொருட்களி லும் நிறைந்திருப்பவள். புகழ், உயர்வு, மங்கலம், சுகம், மோட்சம் முதலியவற்றை அருளித் துக்கம், பீடை பிணி
என்பவற்றைப் போக்குபவள். தன்னைச் சரணடைந்தவர்க
இந்துக் கலைக்களஞ்சியம்x
 

ளைக் காப்பவள். காளி, தாட்சாயணி, நாராயணி அம்பிகா, சண்டிகா எனப் பல நாமங்களுடன் விளங்குகின்றாள். துர்காவிற்கு முதல் மூன்று நாட்கள் பூசை செய்து வழிபடப் படுகிறது. அடுத்த மூன்று நாட்கள் செல்வத்திற்கு அதிபதி யாகிய லக்ஷமிதேவியை வழிபட்டு சகல செளபாக்கியங் களையும் பெற முடியும். இவள் வைகுண்டத்தில் விஷ்ணு வின் பத்தினியான லஷ்மியாகவும் சுவர்க்கத்தில் சுவர்க்க லக்ஷமியாகவும், ராஜ்யங்களில் ராஜலக்ஷமியாகவும் இல்லற ங்களில் கிருஹலக்ஷமியாகவும் எல்லாப் பிராணி களிடத்தும் அட்டலசுஷ்மியாகவு மிருந்து அருள்பாலிக்கின்
றாள.
ஆய கலைகள் அறுபத்து நான்கிற்கும் அதிபதியாக விளங்குபவள் சரஸ்வதி. வாக்கு, புத்தி, வித்தை, ஞானம் என்பவற்றுக்கு நிலைக்களமாகவும் சகல வித்தைகளின் வடிவமாகவும் சரஸ்வதிதேவி விளங்குகின்றாள். சரஸ் வதிக்குரிய மூன்று நாட்களில் இறுதி நாளாகிய ஒன்பதாம் நாள், சரஸ்வதி பூசை என்றும் ஆயுதபூசை என்றும் கலை மகள் விழா என்றும் சிறப்பித்துக் கூறப்படுகின்றது. கல்விக் கூடங்களிலும் கலைக்கூடங்களிலும் தொழிற்சாலைகளி லும் வீடுகளிலும் இத்தினம் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகின்றது. புத்தகங்கள் சரஸ்வதிதேவியின் உறைவிடம். எனவே சரஸ்வதி பூசையன்று புத்தங்கள், எழுதுகருவிகள், தொழிற்கருவிகள் அனைத்தையும் 60)3F யில் வைத்து வழிபடுவர். சரஸ்வதி பூசையன்று இவற்றைப் பயன்படுத்துவது தவிர்க்கப்படவேண்டும். பூசை செய்யும் போது கலை நிகழ்ச்சிகளின்போது இசைக்கருவிகள் பயன்படுத்தப்படலாம். இவ்வாறான ஆயுத பூசை ஒன்பதாம்
நாள் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும்.
பத்தாம் நாள் விஜயதசமி. விஜயதசமியன்று ஆரம்பிக்கப் படும் நற்காரியங்கள் எல்லாம் வெற்றியடையும். வீடுகளிலும் கோயில்களிலும் தொழிற்சாலைகளிலும் வேலைத் தலங்க ளிலும் பாடசாலைகளிலும் இது வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும். பண்டைக்கால மன்னர்கள் விஜயதசமி யன்று சிம்மாசனம், வெண்கொற்றக் குடை, செங்கோல், சாமரம் மற்றும் தங்கள் படைக்கலங்களையும் யானை, குதிரை போன்ற வாகனங்களையும் பூஜித்ததாக கல்வெட் டுக்கள் மூலம் கண்டறிய முடிகிறது. விஜயதசமியன்று
&x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 151
மகிஷாசுரவதம்; வன்னிமரம், வாழைமரம் வெட்டி அப்புராணக் கதை நினைவு கூரப்படுகின்றது. மகிஷாசுரன் மட்டுமன்றி பண்டாசுரன், மதுகைடபர்கள், சும்ப நிசும்பர்கள் முதலிய பல அரக்கர்களை அம்பிகை கொன்றொழித்த கதைகள் தேவி பாகவதத்தில் காணப்படுகின்றன. விஜயதசமி அன்று வன்னி, வாழைமரம் வெட்டுவது இவற்றை நினைவூட்டவே. வன்னி மரத்தை வழிபாடு செய்யும் வழக்கம் ஆதி காலத்திலிருந்து வருகின்றது. உமாதேவியார் களைப்புற்ற போது வன்னி மரத்தின்கீழ் ஒரு சமயம் இளைப்பாறினார். இராமன் சீதையைத் தேடிப் புறப்பட்டபோது வன்னிமரத்தை வலம் வந்து வணங்கியே புறப்பட்டான் எனக் கூறப்படுகின்றது. பாண்டவர்கள் அஞ்ஞாதவாசத்தின் போது தமது ஆயுதங்களை வன்னி மரத்தில் ஒளித்து வைத்திருந்தது அஞ்ஞாதவாசம் முடித்து தசமியன்று தேவியை வழிபட்டு மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்துக் கொண்டார்கள். விஜயம் அதாவது வெற்றி தரும் தசமி என்பதாலும் விஜயனால் பக்தியுடன் பூஜிக்கப்பட்டதாலும் விஜயதசமி என பெயர் பெற்றது என்பர். இதனைவிட விஜயதசமியை விஜய நவராத்திரி என்றும் வன்னி நவராத்திரி என்றும் வனதுர்க்கா நவராத்திரி என்றும் அழைப்பார்கள். சீதையைப் பிரிந்த இராமன் நாரதரின் ஆலோசனைப்படி இராவணனை வெல்ல நவராத்திரி விரதம் அனுட்டித்தான். இராமன் கானகத்தில் செய்த பூசையை வன்ய நவராத்திரி என்பர். இராமர் சக்தியை வழிபட்டு இராவணனை விஜய தசமியான பத்தாவது நாளில்தான் வென்றான் என்று புராணம் கூறுகின்றது. மேலும் தர்மத்தின் வடிவமான தருமனும், தனது மாங்கல்ய பலம் குறையாமல் இருக்க சாவித்திரியும் இவ்விரதத்தைக் கடைப்பிடித்துள்ள னர். கண்ணபிரானும் பிருந்தாவனத்திலிருந்து நவராத்திரி விரதத்தைக் கடைப்பிடித்து சக்தியின் அருள் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.
இந்தியாவிலும் இலங்கையிலும் இந்துக்கள் வாழும் பிற நாடுகளிலும் நவராத்திரி வெகுவிமரிசையாகக் கொண் டாடப்படுகின்றது. கிருதயுகத் திலே வாழ்ந்து வந்த சுகேது மன்னனும் அவன் மனைவி சுதேவியும் உறவினராதிகளுட னான போரில் நாடு, நகர் இழந்து வனம் புகுந்தனர். அங்கு மிகுந்த மனவருத்தத்து டன் இருந்த இவர்களை
இந்துக் கலைக்களஞ்சியம்xஇx 囊12
 

ஆங்கிரச முனிவர் கண்டு ஆறுதல் சொல்லி நவராத்திரி விரதத்தை உபதேசித்தார். அவர்கள் இருவரும் முறைப்படி இவ்விரதத்தை அனுஷ்டித்து வந்தனர். அதன் பயனாக இவர்களுக்கு சூரியப்பிரதாபன் என்ற மகன் பிறந்தான். அவன் கல்வியறிவிலும் சிறந்து விளங்கினான். படை எடுத்துச் சென்று மீண்டும் நாட்டைக் கைப்பற்றி னான். நவராத்திரி விரதம் பற்றிய மகிமை மக்களிடையே பரவலாயிற்று. நவராத்திரி விரதம் சக்தி மகிமையை விளக்குகின்றது. இந்தியாவின் ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு பெயரில் நவராத்திரி அழைக்கப் படுகின்றது. கர்நாடக மாநிலத்தில் நவராத்திரி விழாவை பத்துநாள் விழாவாக "தசரா என்ற பெயரால் கொண்டாடு கிறார்கள். மைசூரில் சாமுண்டேஸ்வரிதேவி கோயிலில் பத்தாவது நாள் விஜயதசமி அன்று மிகப் பெரிய நகர்வலம் நடைபெறும் மைசூர் மன்னனின் அரண்மனையும் அலங்கரிக் கப்பட்டு மன்னர் யானை மீது ஊர்வலம் வருவார். பூரீதுர்க் கையை இராமர் பூஜித்த வரலாற்றை நினைவு கூரும் முகமாக உத்தரப்பிரதேசத்தில் இன்றும் "ராமலீலா” என்று கொண்டாடுகிறார்கள். கிராமம் தோறும் ராமலீலா அன்று கொண்டாடப்பட்டு விஜயதசமியன்று இராவணனின் உருவத்தைச் செய்து அந்தப் பொம்மைக்குள் பட்டாஸ், பாணம், மத்தாப்பூக்களை வைத்து மூடி கிராம மைதானத் தில் வைத்துக் கொளுத்து வார்கள். இது "ராவண தகனம்” எனப்படும். இதேபோல் டெல்லியிலும் இராம நாடகத்துடன் "நவராத்திரி இராம லீலா’ விழாவாகத் தொடங்கி பத்தாவது நாள் விஜயதச மியன்று இராவணன், கும்பகர்ணன் ஆகி யோரது உருவங் களைப் பொம்மைகளாகச் செய்து இராம னின் வில்லிலி ருந்து தீ கொளுத்தப்பட்ட அம்பை எய்து இராவண சம்காரம் கொண்டாடுகிறார்கள்.
வங்காளத்தில் துர்க்கா பூசை எனக் கொண்டாடப்படுகி றது. மிகப்பெரிய காளி சிலைகளை பூஜித்து பத்தாவது நாளான விஜயதசமியன்று அச்சிலைகளை கடலில் விடு கின்றார்கள். கல்கத்தா சக்தி உபாசனை தொடர்பாக பிரசித்தி பெற்றது. இராமகிருஷ்ண பரமஹம்ஸரை மகாஞானியாக்கிய காளி மாதாவின் திருவருட் சிறப்பை விளக்கும் முறையில் நவராத்திரியைக் கொண்டாடுகிறார் கள். மகாராஷ்டிரத்தில் சில கோயில்களிலுள்ள விக்கிர கங்களை கோயிலிலிருந்து வெளியே கொண்டு வந்து
ZZekeZkZZZZ ZZSekZkZZkZTT TLLL TCCC LDT TMLMLMLLCT TTTeLeeeLTTTLLLM

Page 152
வன்னி மரத்தடியில் வைத்துப் பூஜித்து பூசை முடிந்ததும் சிறுவர்கள் வன்னிமரத்து இலைகளைப் பறித்து உறவினர் நண்பர்களது வீட்டிற்குச் சென்று "சொர்ணம் பெற்றுக் கொள்ளுங்கள்' என இலைகளைக் கொடுத்து வணங்கு வது வழக்கம். இதேபோல் ராஜஸ்தான், காசி போன்ற இடங்களில் இராமல்லா எனப் பெயரிட்டுக் கொண்டாடப்படு கிறது. ஒன்பது நாட்களும் நவராத்திரி விழா கொண்டாடி விஜயதசமியன்று ஆயுதங்களையும் இசைக் கருவிகளை யும் பூசையில் வைத்து வழிபடுகிறார்கள்.
நவராத்திரி என்பது கலைத்திருநாள். சக்தி வழிபாட்டை நிலையாகக் கொண்டது. வேதகாலத்துக்கும் முற்பட்டது சக்தி வழிபாடு. இச்சக்தி வழிபாட்டின் சிறப்பினை எடுத்துக் கூறும் நவராத்திரி "வீடு தோறும் கலையின் விளக்கம்” எனப் பாரதியார் பாடுவது போல அழகுணர்ச்சியையும், பூசை வழிபாடுகள் என தூய்மையான சூழலையும் உருவாக் கிச் சமூக ஒற்றுமையை வளர்ப்பதில் பெரும் பங்கு வகிக்
கின்றது.
இலங்கையில் சிலாபத்தில் உள்ள முன்னேஸ்வரத்தில் பங்குனி மாத அமாவாசைக்குப் பின் வரும் ஒன்பது நாட்க ளும் வசந்த நவராத்திரி எனச் சிறப்பாகக் கொண்டாடப்படு கிறது. இங்கு விசேட பூசைகளும் அபிஷேகங்களும் சக்திக்கு இடம்பெறுகின்றன. வசந்த நவராத்திரி கொண்டா டப் படும் சிறந்த ஆலயமாக முன்னேஸ் வரம் விளங்குகின்றது. (கு.ஹே)
இந்துக் கலைக்களஞ்சியம்ஐ
 
 

நவலிங்கக் கோயில்
சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணத்தில் 63 தனியடியார்களும் ஒன்பது தொகையடியார்களும் பேசப் படுகின்றனர். இவர்களில் தில்லைவாழ் அந்தணர்கள் முதல் அப்பாலும் அடிசார்ந்தார் வரையுள்ள ஒன்பது தொகை அடியார்களதும் நினைவாக ஒன்பது இலிங்கங் களை அமைத்துக் கோயில் கட்டப்பட்டது. இதுவே நவலிங்கக் கோயிலாகும். சிதம்பரம் வடகரையில் இது அமைக்கப்பட்டுள்ளது.
சுந்தரமூர்த்தி நாயனாரின் திருத்தொண்டத் தொகையை யும் நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதி யையும் முதல் நூலாகவும் வழிநூலாகவும் கொண்டு சேக்கிழார் திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்) இயற்றினார். அக்காலம் முதல் சிவாலயங்கள் தோறும் 63 நாயன்மார்களின் உருவ வழிபாடு சிறப்புறத் தொடங்கி யது. தில்லை, சிதம்பரத்தில் சோழ அரசர்கள் நான்கு கோபுரங்களின் அருகிலும் வீதிகளிலும் 63 நாயன்மார்க ளின் உருவங்களை அமைத்து விழா எடுத்தார்கள். ஆனால் இவர்களுடன் தில்லைவாழ் அந்தணர்கள் முதல் அப்பாலும் அடிச்சார்ந்தார் வரையுள்ள ஒன்பது அடியார்களு க்கும் உருவமில்லாமையால் ஊர், பேர், நாள், நட்சத்திரம் இல்லாமையால் சிவனையே வழிபடும் இத்தகையோர் நினைவாக ஒன்பது இலிங்கங்களை அமைத்து தொகையடி
யார் எனப் பெயர் குறிப்பிட்டு வழிபட்டார்கள்.
1) தில்லை வாழந்தணர் (சிதம்பரம் தீட்சிதர்கள்)
2) (LTulugങ്ങഥuിസൈIg L|സെബ] (pഥ L|സെങ്ങഥങ്കങ്ങബ്
சிவனுக்கே செலவிட்டவர்கள்)
3) பக்தராயப் பணிவார் (அரனையும் பிற உயிர்களையும்
வழிபடுவோர்)
4) பரமனையே பாடுவார் (சிவனையே இயலிசையால்
பாடுவோர்)
5) சித்தத்தைச் சிவன்பால் வைத்தார் (நாதாந்தத்திலே
சித்தம் வைத்து சிவனைச் சேர்பவர்)
滚 இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 153
6) திருவாரூர்ப் பிறந்தார் (கயிலை சிவகணத்தோர் ஆரூரில்
பிறந்தவர்)
7) முப்போதும் திருமேனி தீண்டுவார் (சிவனை அர்ச்சிக்கும்
குருக்கள்)
8) முழு நீறு பூசிய முனிவரர் (விதிப்படி எடுத்த நீற்றைப்
பூசி விரிசடையானை வழிபடுவோர்)
9) அப்பாலும் அடிசார்ந்தார் (அயல் நாட்டில் பிறந்த
சிவனடியார்)
சிவபெருமானைப் போன்றே பேரிலாது ஊரிலாது இருக் கும் இத்தொகையடியார்களை சுந்தரர், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார் ஆகியோர் பாமாலை சூட்டிப் போற்றினர். சேக்கிழார் தாம் இயற்றிய பெரிய புராணத்தில் பதினைந்து இடங்களில் இவர்களைக் குறிப்பிடுகின்றார்.
தென்னாட்டில் சைவ சமயம் தழைத்தோங்கிய சோழப் பெருமன்னர்கள் காலத்தில் தொகையடியார்க்கும் தில்லை யில் தனிக் கோயில் அமைக்கப்பட்டது. தில்லைவாழ் அந்தணரை நடுநாயகமாகவும் மற்றைய எண்மரைச் சுற்றி லுமாக இலிங்க வடிவில் இக்கோயில் நிர்மாணித்தனர். தொகையடியார்க்கு எடுக்கப்பட்ட இந்த நவலிங்கக் கோயிலை "திருத்தொண்டத் தொகையீச்சரம்” என்று சிறப்புப் பெயரிட்டனர். இந்த நவலிங்கக் கோயிலில் சுந்தர மூர்த்தி நாயனார் திருவுருவம் அமைக்கப் பெற்றிருந்தது. (சிதம்பரம் என்ற தருமையாதீன வெளியீடு). இக்கோயில் வரலாற்றை வேறு கதையாக மாற்றியபோது சுந்தரர் திரு வுருவம் அக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றது.
தில்லையில் தொகையடியார்க்குத் தனிக் கோயில் இருந்தது போன்றே திருவிடைவாயிலிலும் திருச்சி மாவட் டம் கோவிந்தப் புத்துாரிலும் இவ்வடியார்களுக்கு கோயில் அமைக்கப்பட்டிருந்ததை இராசேந்திர சோழனுடைய மூன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டும், நான்காம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டும் கூறுகின்றன. மூன்றாம் குலோத் துங்க மன்னனின் இரண்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டும் இதனை உறுதி செய்கின்றது. இவ்வரசர்கள் காலம் முதல் நவலிங்க ஆலயமான திருத்தொண்டத் தொகையீச்சரத்தில்
இந்துக் கலைக்களஞ்சியம் x

காலை, மாலை திருத்தொண்டத் தொகை பாராயணம்
செய்யும் ஒதுவா மூர்த்திகள் இருந்தார்கள் என்பதும்
அவர்களுக்குரிய ஊதியமாகப் பொற்காசு, நெல் என்பன
கொடுக்கப்பட்டதென்பதும் தெளிவாகின்றன. அவர்கள் தங்குவதற்கு வடகோபுரத்திற் கருகில் இல்லம் அமைத்துத்
தந்திருக்கிறார்கள் என்பதையும் அறியக் கூடியதாக உள்
ளது.
காலப்போக்கிலே கவனிப்பாரின்மையாலும் தமிழ் வேத
மான தேவாரம் முதலிய திருமுறைகளைப் போற்றிப்
பாதுகாப்போர் குறைந்தமையாலும் இன்று இக்கோயில்
வேறு கதைகளோடு தொடர்புறுத்தப்படுகின்றது.
அடியார்கள் அறுபத்து மூவரல்லாமல் தொகையடியார்
கள் ஒன்பது பேருக்கும் ஊர், பேர் உருவமின்மையால்
ஒன்பது சிவலிங்கம் நிறுவி வழிபாடாற்றினர். இதுதான்
மூதாதையர் வழங்கிய உண்மையான கதை.
சிவபெருமான் நவசக்திகளோடு கூடி விளங்குகின்றார்
என்பதால் நவலிங்கம் அமைந்தது. (நவசக்திகள் இடம்பெற
வில்லை). நவலோகத்தையும் படைத்தவர் சிவபெருமான்
ஆதலால் நவலிங்கம் அமைந்தது. நவகோள்கள் (நவக்கிரகம்) தத்தம் தொழிலைக் குறை வில்லாமல்
செய்ய அவர்களால் நவலிங்கம் அமைந்தது. பானுலிங்
கத்தை (சூரியலிங்கத்தை) நடுவிலும் மற்றைய எட்டு
கோள்களையும் பிரணவ வடிவிலும் முன்னோர்கள் அமைத்
துள்ளனர்.
இப்படிப் பல கதைகள் இக்கோயில் குறித்துத் தோன்றிய
வண்ணம் உள்ளன. இக்கோயிலில் உள்ள நவலிங்கங்க
ளின் நடுவில் உள்ள இலிங்கம் பதினாறு கலைகளுடன்
(பதினாறுபட்டை) அமைந்திருப்பது அற்புதமானது. மிகவும்
பாழடைந்த நிலையில் இருந்த இக்கோயிலை 1924ஆம்
ஆண்டில் இராமசாமிப் பரதேசி என்பவர் கைப்பிடிப் பிச்சை
எடுத்துப் புதுப்பித்துள்ளார். (நி.நி)
இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 154
நிடதநாட்டை ஆண்ட சந்திர குலத்தவன் நளன். தந்தை வீரசேனன் என்று அறியக் கூடியதாக உள்ளது. நளன் முற்பிறவியில் கெளட தேச அரசனாகத் தோன்றினான். பல நாடுகளைப் பிடிக்கும் ஆசையால் பிறநாட்டின் மீது படை எடுத்துத் தோல்வி கண்டான். அதனால் காட்டுக்குள் சென்று மறைந்து வாழ்ந்தான். அங்கு விசுவாமித்திர முனிவ ரின் ஆலோசனைப்படி விநாயக சதுர்த்தி விரதத்தை நோற்றான். அதன் பயனாக பகைவரை வென்று தன் நாட்டைப் பெற்றான். பல மன்னர்கள் திறை செலுத்த நாட்டைத் திறம்பட ஆண்டான் என்றும் கூறப்படுகிறது.
ஒரு நாள் அழகிய சோலையொன்றில் உலவிக் கொண்டி ருக்கையில் அங்கு அன்னம் ஒன்றினைக் காண்கிறான். அந்த அன்னத்தின் அழகில் தன் மனதைப் பறிகொடுத்த நளன் அதனைப் பிடித்து விளையாடி அதற்கு எந்தத் தீங்கும் விளைவிக்காது பறக்கவிட்டான். அதனால் மனம் மகிழ்ந்த அன்னம் நளனைப் பார்த்து, “அரசே விதர்ப்ப நாட்டு மன்னனான வீமன் என்பவனுடைய மகளான தம யந்தி என்பவள் உன் தோளுக்கு ஏற்ற அழகுடையவள்!” என்று கூறி அவளின் அழகை விவரிக்கிறது. உடனே நளனுக்குத் தமயந்தியிடம் காதல் ஏற்படுகின்றது. அன்னப் பறவையையே தூதாக தமயந்தியிடம் அனுப்பி வைக்கி றான். அன்னத்தின்வழி விபரம் அறிந்த தமயந்தியும் நளன் மீது காதல் கொள்கிறாள்.
தமயந்தியின் காதல் நிலையை உணர்ந்த தந்தை வீமன், மகளின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறான். பண்டைக்கால முறைப்படி சுயம்வரம் நடத்த ஏற்பாடு செய்கிறான். சுயம்வரத்தின் பொருட்டு நளனும் விதர்ப்ப நாட்டிற்குச் செல்கிறான். இவ்வேளையில் தமயந்தியை மனைவியாகப் பெற விழைந்த தேவேந்திரன், எமதருமன், வாயு, அக்கினி ஆகிய தேவர்கள் தங்கள் காதலை எடுத்துரைக்குமாறு நளனைத் தமயந்திபால் தூது விடுத்த னர். இவன் வேற்றுருக்கொண்டு சென்று தேவர்களின் மனவிருப்பை எடுத்துரைத்தான். அவளோ நளனைத் தவிர யாரையும் அடையேன் என்று உறுதியாகக் கூறிவிட்டாள்.
தனது காதலியிடமே பிறருக்காக காதல் தூது சென்ற
 

நளனின் மன உறுதியையும், பண்பு நலன்களையும் பாராட்டி தேவேந்திரன் ஆற்றல் மிக்க பல ஆயுதங்களையும் எமதரு மன் கதாயுதத்தையும், வாயு குதிரையை வசப்படுத்துவதாகிய அசுவ இருதயம் என்னும் மந்திரத்தை யும் அக்கினி தீயின்றிச் சமைக்கும் ஆற்றலையும் இவனுக்கருளி வாழ்த்தினர்.
சுயம்வர நாளன்று இந்நான்கு தேவர்களும் நளனைப் போல் வடிவெடுத்துக் கொண்டு சுயம்வர மண்டபத்தில் அமர்ந்திருந்தனர். அவர்களைக் கண்ட தமயந்தி இவர்க ளுள் உண்மையான நளன் யார் எனத் திகைத்துப் பின் தேவர்களுக்குக் கண்கள் இமைக்காது, கால் நிலம் தோயாது, மாலை வாடாது போன்றவைகள் நினைவுக்கு வர மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் உள்ள வித்தியா சத்தை ஆதாரமாகக் கொண்டு நளனைக் கண்டுகொண்டு அவனுக்கே மாலை இடுகிறாள்.
நளன் தமயந்தியோடு இனிதாக இல்லறம் நடத்தி இந்திர சேனன் என்னும் புதல்வனையும் இந்திரசேனை (நளாயினி) என்னும் புதல்வியையும் பெற்றான். தயமந்தி பால் காதல் உற்று அவளை அடைய விரும்பிய மற்றொரு தேவனாகிய கலிசனி) நளனைப் பார்த்திருந்தான். பன்னிரண்டு ஆண்டு களாகக் காத்திருந்தவனுக்கு தக்க சந்தர்ப்பம் ஒன்று ஏற்பட நளனைக் கலி பற்றிக் கொண்டான். கலி பற்றியவு டன் அவன் சிந்தை மாறுபடுகின்றது.
புஷ்கரன் என்பவன் நளனுக்கு அடங்கிய சிற்றரசன். அவன் நளனுக்குச் சகோதரன் முறையினன். அவன் நளனின் நாட்டை அடையத் தக்க சமயத்தை எதிர்பார்த்தி ருந்தான். கலி அவனிடம் சென்று நளனுடன் சூதாடும் படியும் தான் புஷ்கரனுக்குத் துணையாக இருப்பதாகவும் கூற புஷ்கரனும் நளனைச் சூதாட்டத்திற்கு அழைக்கிறான். நளன் சம்மதிக்கிறான். கலியின் சூழ்ச்சியால் நளன் புஷ்கரனோடு சூதாடுகிறான். நாடு, நகரம் அனைத்தையும் இழந்துவிடுகிறான். கடைசியாகப் புஷ்கரன் உன் மனைவியை வைத்து ஆடு என்றான். கோபம் கொண்ட நளன் சூதாட்டத்தை விட்டு எழுந்து மனைவி மக்களோடு நாட்டை விட்டுப் புறப்பட்டு விடுகிறான். மக்கள் இருவரையும் மனைவியின் தாய்வீடு அனுப்பிவிட்டு மனைவியோடு
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்கணம்

Page 155
காடேகினான். கலியின் சூழ்ச்சியால் அங்கு வந்த அன்னத்தினை தன் காதலை ஊக்கிய அன்னம் என்று தவறாக நினைக்கிறாள் தமயந்தி. மனைவியின் விருப்பிற் காக அன்னத்தைப் பிடிக்க நளன் முற்பட்டபோது அது அவனது மேலாடையைக் கவர்ந்துகொண்டு பறந்தது. மேலாடை இழந்த இம்மன்னன் தொடர்ந்தும் தன் மனைவி யைக் காட்டில் உடன் அழைத்துச் செல்ல விரும்பாமல் இரவுப் பொழுது மண்டபம் ஒன்றில் தூங்கும்போது அவளை விட்டு அகல்கிறான்.
துயிலெழுந்த தமயந்தி கணவனைக் காணாது அல்லலு ற்று அவ்வழியே சென்றுகொண்டிருந்த வணிகர்களின் துணையோடு சேதிநாட்டு மன்னனின் அரண்மனையை
அடைந்து பின் தந்தை வீமனிடம் சென்றடைந்தாள்.
நளன் மனைவியைப் பிரிந்து காட்டில் சென்று கொண்டிரு ந்தபோது தீயில் மாட்டிக் கொண்டு துன்பப்பட்ட கார்க் கோடன் என்ற பாம்பினைத் தீயினின்றும் காப்பாற்றினான். கார்க்கோடன் நளனுக்கு நன்மை செய்யும் நோக்கில் அவனைத் தீண்டியது. உடனே அவன் உருவம் மாற்ற மடைந்தது. "உன் உருவத்தை மாற்றுவதற்காகவே தீண்டி னேன். இந்த ஆடையை வைத்துக்கொள் நீ விரும்பிய போது இதனை உடுத்திக்கொண்டால் பழைய உருவத்தை அடைவாய்” என்று கூறி ஓர் ஆடையைக் கொடுத்தது.
நளன் வாகுகன் என்ற பெயரோடு அயோத்தி மன்னனிடம் சென்று மடைத்தொழில், தேர் ஒட்டுதல் போன்றவற்றைச் செய்யும் பணியாளனாக இருந்தான். அயோத்தி மன்னனிடம் பணியாளனாகத் தன் மருமகன் இருந்ததை ஒற்றர் வழி அறிந்த வீமன் அவனைத் தன்னிடம் வரவழைக்கும் வகை யில் தமயந்திக்கு இரண்டாம் சுயம்வர விழா எடுத்தான். அதனை அறிந்த அயோத்தி மன்னன் சுயம்வரத்திற்குத் தன் தேரோட்டியாகிய நளனுடன் சென்றான். செல்லும்போது குதிரைகளை வழிப்படுத்தும் இவனது பேராற்றலை வியந்து அசுவ இருதய மந்திரத்தை நளனிடம் கற்றுக் கொண்டு கைமாறாகத் தான் கற்றிருந்த அட்சவித்தை யைக் கற்பித்தான். ஒரே அம்பினால் மரத்தில் உள்ள இலைகள் அனைத்தையும் துளைக்கச் செய்யும் ஆற்றல் உள்ள இவ்வித்தையைக் கற்றவரைக் கலி தொடராது.
緣12
 

இந்நிலையில் கலி இவனை விட்டு நீங்கிச் சென்றது.
சுயம்வரத்திற்கு வந்திருந்த மன்னர்களிடையே தன் கணவனைக் காணாது ஐயுற்ற தமயந்தி, தேரோட்டியாக நின்றிருந்த இவன்பால் தன் மக்களை அனுப்பி இவனைத் தெரிந்துகொண்டாள். பின்னர் மன்னன் வீமனது வேண்டு தலை ஏற்று துகில் உடுத்துத் தன் உண்மை உருவினைப் பெற்றான். பின் தான் சூதாடி இழந்த நாட்டையும் அரச வாழ்வையும் பெற்று பெரு வள்ளலாக வாழ்ந்தான். தன் இறுதிக் காலத்தில் மகனிடம் ஆட்சிப் பொறுப்பினை ஒப்படைத்துவிட்டு தவம் இயற்றி வீடு பெற்றான் என்பது நளனைப் பற்றிக் கூறப்படும் கதை.
நளன், தமயந்தி கதையை தமிழில் மூன்று நூல்கள் விளக்கமாகக் கூறுகின்றன. 1) நளவெண்பா, 2) நைடதம்,
3) நளன் கதை உரைத்த சருக்கம் - நல்லாப்பிள்ளை
பாரதம்
நளவெண்பா வெண்பா யாப்பில் அமைந்தது. மூன்று காண்டங்களை உடையது. புகழேந்திப் புலவர் இதன் ஆசிரியர்.
நைடதம், அதிவீரராம பாண்டியனால் இயற்றப்பட்டது. விருத்தப்பாவினால் அமைந்த இந்நூலில் 1173 பாடல்கள் உள்ளன. வடமொழியில் உள்ள நைஷதம் என்ற நூலைத் தழுவித் தமிழிலே செய்யப்பட்டது.
நல்லாப்பிள்ளை பாரதத்திலே நளன் கதை உரைத்த சருக்கம் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்நூல் தனி நூலாக இல்லாவிடினும் நளன் சரிதம் முழுவதையும் உரைக்கின்றது. இதில் 153 பாடல்கள் அமைந்துள்ளன. சூதாடி நாட்டை இழந்து வாட்டமுற்றிருந்த தருமனிடம் வியாசர் நளன் சரித்திரம் உரைத்து அவனை தேற்றுகின் றார்.
இவற்றை விட நளன் வரலாற்றைச் சுட்டிக்காட்டும் நூல்க ளும் சில உள்ளன. சிலப்பதிகாரத்தில் கவுந்தி அடிகளால் நளன் கதை குறிப்பிடப்படுகின்றது. மக்களில் சிறந்தவ னாக நளன் கூறப்படுகிறான். வில்லிப்புத்துாரர் பாடிய பாரதத்திலும் நளனைப் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது.
&இந்த சமய கலாசார அலுவல்கள் தினைக்கணம்

Page 156
முத்தப்பர் என்பவரால் பாடப்பட்ட செயங்கொண்டார் சதகத் திலும் நளனைப் பற்றிய குறிப்புகள் நான்கு இடங்களில் வருகின்றன. சுப்பிரமணியக் கவிராயரால் பாடப்பட்ட திருநள்ளாற்றுப் புராணத்தில் நளன் நாடு நகரங்களை மீட்கத் தன்நாடு செல்லும்போது திருநள்ளாற்று இறைவனை வழிபட்டுச் சென்றான் என்று கூறப்படுகின்றது. திருஞான சம்பந்தரால் பாடப்பெற்ற திருநள்ளாறுப் பதிகத்தில் நளன் சம்பந்தமான குறிப்புகள் காணப்படுகின்றன. கூர்ம புராணம், நளனின் முற்பிறவிகளைக் கெளதம முனிவர் விவரிப்ப தாக அமைந்துள்ளது. இச்செய்தி பிறநூல்களில் காணப் படாத ஒன்று. மீனாட்சி சுந்தரம் பிள்ளையினால் பாடப்பெற்ற தல புராணம் மண்ணிப்படிக் கரைபுராணம். இதில் பதினோ ராவது படலம் நளன் கலி நீங்கு படலம். இதில் உரோமசன் என்ற முனிவர் தருமனுக்கு நளனது கதையைக் கூறுவ தாக அமைந்துள்ளது. திருவேங்கட சதகம், வெண்மணி நாராயண பாரதியால் பாடப்பெற்ற நூல். இந்நூலில் சூது பற்றிய தீமையை விளக்க நளன் பற்றிய குறிப்பை ஆசிரி யர் காட்டுகிறார்.
நிகண்டு நூல்களான திவாகரம், பிங்கலந்தை, சூடாமணி ஆகிய மூன்று நூல்களிலும் நளன் பற்றிய குறிப்புக்கள் உண்டு. (நி.நி.)
இந்துக்களின் வாழ்வியலுடன் தொடர்புடைய இலக்கியங் களில் புராணங்களும் இதிகாசங்களும் மனித வாழ்விற்கு வேண்டிய அனைத்துக் கருத்துக்களையும் கூறி இந்துக் களை வளம்படுத்தி உள்ளன. இதிகாசங்களான இராமாய ணமும் மகாபாரதமும் விஷ்ணுவின் அவதாரச் சிறப்புகளின் ஊடாக - சிறுசிறு கதைகள் மூலம் மனித வாழ்வின் விழுமியங்களையும் அறவழிக்கருத்துக்களையும் எடுத்துக் கூறுகின்றன. இந்த வகையில் கற்பின் சிறப்பினை உணர் த்தி அதன் மாண்பை விளக்கும் கதையாக அமைவது நளாயினி பற்றிய கதையாகும்.
நளமகாராஜனுக்கும் தமயந்திக்கும் மகளாகப் பிறந்தவள் நளாயினி. இந்திரசேனன் என்று இவளுக்கு ஒரு சகோதரன்
இந்துக் கலைக்களஞ்சியம்x
發綫綫囊
 
 

கல்யர். இவர் நளாயினியின் கற்புச் செறிவையும் அன்பை யும் பலவாறு சோதித்தார். மெளத்கல்யரிஷி நளாயினியின் கற்பின் திறத்தை மேலும் சோதிக்க எண்ணினார். தன்னை ஒரு தொழுநோயாளியாக உருமாற்றிக் கொண்டு தீர்த்த யாத்திரைகள் செய்யவேண்டும் என நளாயினியிடம் கூறி னார். அவளும் தன் கணவரை கூடையிலிட்டுத் தூக்கிக் கொண்டு தீர்த்தங்கள் தோறும் சென்று ஸ்நானம் செய்வி த்து வந்தாள். அவர் விரும்பிய இடங்கள் எல்லாம் தூக்கிச் சென்று இன்பம் துய்த்திடச் செய்தாள். அவளின் பணியில் எவ்வித குறையும் காணமுடியாத முனிவர் மேலும் சோதனை ஒன்றைச் செய்ய எண்ணினார். தாசியாக விளங் கிய நடனமாதுவிடம் தான் புணரவேண்டும் எனக் கேட்டார். அதற்கு உடன்பட்ட நளாயினி தாசிக்கு வேண்டிய பணி விடைகளைச் செய்து இசைவித்துவிட்டு வந்து தனது கணவரைக் கூடையிலிட்டு தலையில் சுமந்தபடி இருளில் நடந்து சென்றாள். சோலைகளினூடே அவள் செல்லும் போது பூர்வகன்ம பயன் காரணமாக மாண்டவியரிஷி கழுமரத்தில் தொங்கிக்கொண்டு இருந்தார்.இருள் என்ப தால் நளாயினி அதனைக் கவனிக்கவில்லை. கூடை அவரது காலில் பட்டு மாண்டவ்யரிஷிக்கு வருத்தத்தை உண்டாக்கியது. இதனால் அம்முனிவர் “பொழுதுவிடிய
மங்கலம் இழுக” என சாபமிட்டார்.
பதிவிரதையாகிய நளாயினி முனிவர் இட்ட சாபத்தைக் கண்டு உடனே "பொழுது விடியாதிருப்பதாக" எனச் சாபமிட் டாள். இதனால் அடுத்த நாட்பொழுது விடியவில்லை. தேவர்கள் திகைத்தனர். காரணத்தை உணர்ந்த தேவர்கள் மாண்டவ ரிஷியை வேண்ட அவர் நளாயினியிடம் கூறி தமது சாபங்களை நீக்கி பொழுது விடிய வழி செய்தனர். கணவனின் இன்பவாழ்வையே தலைமேற்கொண்டு தன் இன்ப உணர்வுகளை எல்லாம் எரித்து கற்பிலே சிறந்து விளங்கிய நளாயினியைப் பாராட்டி மெளத்கல்யர் "நீ விரும் பும் வரம் யாது?’ என வினாவினார். அதற்கு நளாயினி "ஐந்து உருவாக இருந்து இம்மை, மறுமை இன்பங்களை அருள்வீர்” என வேண்டினாள். முனிவரும் பல்வேறு உயிரினங்களின் வடிவில் ஐந்தைந்து நிலை களில் அமர்ந்து அகமும் புறமும் தழுவிய இன்பங்களை அளித்தார். பல காலம் இன்பம் துய்த்தும் நிறைவு காணாத
xx இந்த சமய கலாசார அலுவல்கள் தினைக்கணம்

Page 157
நளாயினி முனிவர்பின் தொடர்ந்தாள். முனிவரோ பேரின்பத்தில் நாட்டம் கொண்டு தவவாழ்வை விரும்பினார். எனவே “காமவேட் கையில் நாட்டமுற்றவளாக இருக்கும் நீ மனிதப் பிறவியை அடைந்து ஐவருக்கு மனைவியாக” எனக் கூறி நீங்கினார்.
பின் காசிய மன்னனின் மகளாகப் பிறந்து தீராக் காம வேட்கை உடையவளாகிச் சிவனை நோக்கித் தவம் செய்தாள். சிவன் என்ன வரம் வேண்டும் எனக் கேட்டார். 'கணவன் வேண்டும்” என ஐந்து முறை கேட்டதால் “இப்பிறவி நீத்து மறுபிறவியிலும் ஐவரைக் கணவராகப் ப்ெறுவாய்" என அருளினார். இதனைக் கேட்ட நளாயினி கண்ணிர்விட்டு அழுது கங்கையில் மூழ்கினாள். இவள் கண்ணிர் கலந்த இடமெல்லாம் தாமரைப்பூக்கள் தோன்றின. கங்கையை விட்டு வெளியேறிய இவளை இந்திரன் பின் தொடர்ந்தான். இந்திரனுடன் வாயு, யமன், அசுவினி இரட்டை யர் எனும் நால்வரும் இவளுக்கு கணவராகுமாறு சிவன் விதித்தான். மறுபிறவியில் இவள் பாஞ்சால மன்னன் துருப தனின் மகளாகப் பிறந்து திரெளபதி எனும் பெயருடன் விளங்கினாள். அருச்சுனனால் சுயம்வரத்திலே தெரிவு செய்து குந்தியின் மறைவாக்கிற்கு இணங்கி அருச்சுன னின் உடன் பிறந்தவர்களாகிய தருமன், வீமன், நகுலன், சகாதேவன், ஆகியோருக்கும் மனைவினாள். திரெளப தியை ஐவரும் மணப்பதாக பாண்டவர் கூறியதைக் கேட்டு அவள் தந்தையாகிய துருபதன் கலங்கியபோது வியாச முனிவர் திரெளபதியின் முற்பிறப்புக் கதையைக் கூறி அவரை ஆறுதற்படுத்தினார். இவ்வாறாக இக்கதை மகா பாரதத்தில் நளாயினி கதை எனும் பெயருடன் கிளைக் கதையாக விளங்குகின்றது.
பஞ்ச கன்னிகளில் ஒருத்தியாகவும் பதிவிரதாசிரோமணி யாகவும் விளங்கும் நளாயினி திரெளபதி, பாஞ்சாலி, இந்திசேனை எனப் பல பெயர் பெறுகின்றாள். பஞ்சபாண்ட வர்களுக்கு மனைவியாக இருந்து இளம் பஞ்சபாண்டவர் ஐவரைப் பெற்றெடுத்தாள். தருமனுக்கு பிரதிவிந்தனையும், பீமனுக்கு சுருதசோமனையும் அருச்சுனனுக்கு சுருதகீர்த்தி யையும் நகுலனுக்கு சதாநீசனையும் சகாதேவனுக்கு சுருத சேனையும் பெற்றெடுத்தாள். இவ்வாறாக இரு பிறவிகளிலும் சிறந்த பதிவிரதையாகவிருந்து வாழ்ந்து
இந்துக் கலைக்களஞ்சியம்x
 

காட்டிய பெண்ணாக நளாயினி என்றும் திரெளபதி எனவும் அழைக்கப்படும் இந்திரசேனை சிறந்து விளங்குகின்றாள். (கு.ஹே.)
gene UT
சங்கத்தொகை நூல்களுள் ஒன்றாக நற்றிணை இடம்பெறுகின்றது. இந்நூலில் வாழ்த்துப் பாடல் நீங்கலாக நானூறு பாடல்கள் அமைந்துள்ளன. இந்நூல் நற்றிணை நானுாறு எனவும் வழங்கப்படுகின்றது. எட்டுத் தொகையுள் முதலாவதாகிய நற்றிணை ஒன்பதடிச் சிறுமையும் பன்னிர ண்டடிப் பெருமையும் உடைய நானுாறு பாக்களை உடை யது. இன்று இந்நானுாறினில் 110ஆம் பாடலும் 379ஆம் பாடலும் பன்னிரண்டடிகளுக்கு மேல் பதின்மூன்றடிப் பாடல்களாக உள்ளன. 234 ஆம் பாடல் கிடைத்திலது. 385ஆம் பாட்டில் ஒரு பகுதி மட்டும் கிடைக்கப் பெற்றுள்ளது.
இந்நூலினைப் பாடினோர் எண்ணிக்கை 175 என்றும் 187 என்றும் அறிஞர்கள் கருத்து வேறுபடக் கூறுவர்.
இத் தொகைநூலின் கடவுள் வாழ்த்தை பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியுள்ளார்.
மாநிலம் சேவடி ஆக தூநீர், வளை நரல் பெளவம் உடுக்கை ஆக, விசும்பு மெய் ஆக திசை கை ஆக, பசுங்கதிர் மதியமொடு சுடர் கண் ஆக, இயன்ற எல்லாம் பயின்று அகத்து அடக்கிய வேதமுதல்வன் என்ப தீது அற விளங்கிய திகிரியோனே.
என திருமாலை வாழ்த்திப் பாடப்பட்டுள்ளது.
இந்நூலின் கடவுள்வாழ் திருமால் விழித்துப் பாடப்பட்டி ருப்பினும் நூற்பொருளில் முருகு என முருகப் பெருமானை விழிப்பதனைக் காணமுடியும்.
"கடவுள் ஆயினும் ஆக மடவை மன்ற வாழிய முருகே"
இந்த சமய கலாசார அலுவல்கள் தினைக்கணம்

Page 158
'அன்னை அயரும் முருகு நின் பொன் நோ பசலைக்கு உதவாமாறே
எனப் பாடல்களினுடே விழித்துக் சொல்வதைக் காண (ԼՈւգավլb
நற்றிணை அகத்திணை சார்ந்த நூலாகும். காதல் உணர் வினைச் சிறப்பிப்பனவாக இதன்கண்ணுள்ள செய்யுள்கள்
விளங்குகின்றன.
இசைக்கருவிகள், இசை, கூத்து என்பனவும் குறிப்பிடப் பட்டுள்ளன. குழல், யாழ், தொண்டகச் சிறுபறை, தண்ணுமை, முழவு என்பன குறிப்பிடப்படுகின்றன. குரவைக் கூத்தும் குறிப்பிடப்படுகின்றது.
நற்றிணை மூலம் அக்கால மக்களின் பழக்கவழக்கங்க ளையும் அறிய முடிகின்றது. கலங்கரை விளக்கம், கழைக் கயிற்றில் ஏறி மகளிர் ஆடுதல், காக்கைக்குப் பலி இடுதல், காலம் தவறி மகளிர் உண்ணுதல் (கணவனை எதிர் பார்த்து). சமையல் முறை, திருமணச் சிலம்பு கழித்தல், தாழியில் இட்டுப் பிணங்களைப் புதைத்தல், தெய்வம் பலி பெறல், பண்டமாற்று முறையில் பொருள் பெறல். பல்லி சொல் அறிதல், பானைகளில் வாசனைக்காக விளாம்பழம் இட்டு வைத்தல், மகப்பேற்று மகளிர் நீராடுதல், நெய்யாடுதல், மகளிர் சகுனம் பார்த்தல், மகளிர் மாலைக் காலத்தில் விளக்கு வைத்தல், விருந்தோம்பல் போன்ற மக்களின் வாழ்க்கை முறைகள் இந்நூலில் குறிப்பிடப்பட்
டுள்ளன.
நற்றிணையில் அறக்கருத்துக்கள் பலவற்றையும் காண முடிகின்றது.
"உயிரினும் சிறந்த நாண்’ (1)
”பெரியோர் நாடி நட்பின் அல்லது நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்து' (32) "பழகிய பகையும் பிரிவு இன்னதே" (108)
"இசை பாட வாழ்பவர் செல்வம் போலக் காண்தொறும் பொலியும்” (217) “முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
இந்துக் கaைக்களஞ்சியம்x ஜ்
 

நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்’ (355) போன்ற பல அரிய அறக்கருத்துக்களை, நீதிக் கருத்துக் களை இந்நூல் குறித்து நிற்கின்றது.
பல ஆசிரியர்களால் எழுதப்பட்டு தொகுக்கப்பட்ட இந்நூ லில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற ஐந்திணை யைப் பாடுவதில் மிக நெருங்கிய தொடர்புகளை காணமுடி கின்றது. இவ் ஐந்திணைப் பாகுபாடு ஏட்டுப் பிரதிகளில் இல்லை. பதிப்பாசிரியர்களே இதனை வகுத்தனர். குறிஞ்சி க்கு 131 பாடல்களும் பாலைக்கு 106 பாடல்களும் நெய்த லுக்கு 10 பாடல்களும் மருதத்திற்கு 32 பாடல்களும்
முல்லைக்கு 29ஆம் ஆக வகைப்படுத்தியுள்ளனர்.
(இ.ச.)
5göTeofilab
இரயில்வே நிலையத்திலிருந்து மேற்கே மூன்று மைல் தொலைவில் உள்ளது. கோச்செங்கட் சோழன் எடுப்பித்த கட்டுமலைக்கோயில்; பெருங்கோயில் என்று சுந்தரர் பாடியுள்ளார். தலம் மதுவனம் என்று பெயர் பெறும். சூரியன் பூசிதத தலம். தேவியார் சந்நிதியும் அகத்தீசுரர் சந்நிதியும் கீழே உள்ளன. சுந்தரர் பாடிய தலம்.
சுவாமி மதுவனேசுரர், பிரகதீசுவரர் அம்பிகை: மதுவனாயகி, பிரகதீசுவரி தீர்த்தம்: பிரமதீர்த்தம், தேவதீர்த்தம்
தண்ணியல் வெம்மையினான் தலையிற் கடை தோறும் பலி
பண்ணியல் மென்மொழியார் இடங்கொண்டுழல்
பண்டரங்கன் புண்ணிய நான்மறையோர் முறையால் போற்றிசைப்ப நண்ணிய நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே (சுந்தரர்)
இத்தலத்தைப் பற்றி வேறு தலங்களில் வழங்கும் தேவாரப் பாடல்கள்:
நாவலூர் நள்ளாறொடு நன்னிலம் - பூவனூர் (திருநா) நெடுங்கள நன்னில் நெல்லிக்காவும் - பொது (திருநா) நாளு நன்னிலத் தென்பனையூர் வடகஞ்சனூர் பொது
(திருநா)
இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 159
நன்னெறி
இதன் ஆசிரியர் சிவப்பிரகாச சுவாமிகள், கி.பி. 17ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் வாழ்ந்தவர். இவர் காஞ்சிபுரத்தில் தொண்டை மண்டல வேளாளர்களு க்கு தீட்சா குருவாக விளங்கிவந்தார். இவர் தமிழ் மொழியி லும் வடமொழியிலும் வல்லவராக விளங்கினார். இவரது தந்தை பெயர் குமாரசுவாமி தேசிகர். இவருக்கு இரு அண்ணன்மார்களும் ஒரு சகோதரியும் இருந்தனர்.
தந்தையார் இவரது இளம்பருவத்தில் காலமாகிவிட்டார். தந்தை இறந்ததும் திருவண்ணாமலை சென்று அங்கு கல்வி கற்றார். ஆசிரியர் ஒரு நாள் தனிமையாகக் கடற் கரையை அடைந்து அங்குள்ள மணற் பரப்பிலே நன்னெறி வெண்பாக்களை எழுதிவிட்டு வந்து அதனை ஏட்டில் எழுதிவருமாறு தன் தம்பி கருணைப் பிரகாசரிடம் கூற அவரும் அவ்வாறே எழுதிவந்தார் எனக் கூறுவர்.
நூல் அடக்கம்:- இந்நூல் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது வெண்பாக்களைக் கொண்டது. "நன்னெறி வெண்பா நாற்பதும் வருமே” என்னும் கடவுள் வாழ்த்துப் பகுதியால் இதனை அறியலாம்.
'மின்னெறி சடாமுடி விநாயகன் அடிதொழ நன்னெறி வெண்பா நாற்பதும் வருமே”
இந்நூல் அறநெறிகளைக் கூறுவதற்காக எழுதப்பட்டாலும் அழகிய உவமைகளாகக் கண், நா, மூக்கு முதலிய உறுப்புக்கள், ஞாயிறு, திங்கள், கடல், காற்று முதலிய இயற்கைப் பொருட்கள், நெல், வாழை, பசு முதலிய பொருட்கள் என்பன ஆசிரியரால் எடுத்தாளப்பட்டுள்ளமை
opuЈЗ ЗБПОЈОТ60Tib.
“நின்று பயன் உதவி நில்லா அரம்பையின் கீழ்க் கன்றும் உதவும் கனி'
என்னும் உவமையால் செய்த உதவிக்கு என்றும் பலன்
கிடைக்கும் எனக் குறிப்பிடுதல் இதற்கு எடுத்துக்
காட்டாகும்.
இந்துக் கலைக்களஞ்சியம்

பெரியோரைப் பற்றிக் குறிப்பிடும்போது
“என்றும் முகமன் இயம்பாதவர் கண்னும் சென்று பொருள் கொடுப்பர் தீதற்றோர் - துன்று சுவை பூவிற் பொலிகுழலாய் பூங்கை புகழவோ நாவிற் குதவும் நயந்து'
எல்லோரையும் புகழ்கின்ற நாக்கு தன்னைப் புகழாவிடத் தும் கை அதற்கு நல்ல சுவைப்பொருளைக் கொடுக்கின் றது. அதுபோலப் பெரியோரும் தம்மைப் புகழாதவர்களுக் கும் தாமே சென்று அவர்களுக்கு வேண்டும் பொருளைக் கொடுப்பர் என்பது இதன் பொருளாகும்.
நட்பினை விளக்குமிடத்து
நீக்கம் அருமிருவர் நீங்கிப் புணர்ந்தாலும் நோக்கின் அவர் பெருமை - பூங்குழலாய்
நெல்லின் உமிசிறிது நீங்கிப் பழமைபோல் புல்லினும் திண்மைநிலை போம்
பெண்ணே அரிசியுடன் கூடி இருக்கும் உமி சிறிதளவு நீங்கிப் பின் ஒன்று கூடினாலும் முளைத்தற்குரிய வலி மையை அது இழந்துவிடும். அதுபோலப் பிரியாது நட்பாக இருக்கும் இருவர் சிறிதுகாலம் பிரிந்து பின் கூடினாலும் அவ்விருவரின் நட்பு சிறப்புக் குறைந்ததேயாகும் என்கிறார். இல்லறம் என்பது நல்லறமானது. இன்பமயமானது என்
கிறார் வள்ளுவர். இந்நூலாசிரியர்
காதன் மனையாளும் காதலனும் மாறின்றித் திதிலொரு கருமம் செய்யவே - ஒதுகலை எண்ணிரண்டு மொன்றுமிதி எண்முகத்தாய் நோக்கல்தான் கண்ணிரண்டு மொன்றையே காண்’
கண்கள் இரண்டும் ஒரு பொருளை ஒத்தே நோக்குகின் றன. கணவனும் மனைவியும் அவ்வாறே ஒத்த மனத்துடன் இல்லறக் கடமைகளைச் செய்தல் வேண்டும் என்கிறார்.
கல்வி பற்றிக் குறிப்பிடும் போது
”கடலே யனையாம் கல்வியா லென்றும் அடலே றனைய செருக்காழ்த்தி - விடவே
3ës gnu savIT SHTEj gadje jetësesi gëloeoTëseTij

Page 160
முனிக்கரசு கையால் முகந்து முழங்கும் பனிக் கடலும் உண்ணப்படும்”
மிகப் பெரிய கடலும் அகத்தியரால் உண்ணப்பட்டது. அது போல நாம் கல்விக் கடல் என்று செருக்குக் கொள்ப வர்களும் வல்லவர் ஒருவரால் வெல்லப்படுவர். அதனால் கற்றவனென்று செருக்குக் கெள்ளாதே என்கிறார்.
இன்சொல் இருக்க வன்சொல் எதற்கு என்று வள்ளுவர் குறிப்பிடுவது போல் இந்நூலாசிரியரும்.
"இன்சொலா லன்றி இருநீர் வியனுலகம் வன்சொலா லென்றும் மகிழாதே - பொன்செய் அதிர்வளையாய் பொங்கா தழற்கதிரால் கண்ணென் கதிர்வரவால் பொங்கும் கடல்"
ஒலிக்கின்ற வளையல் அணிந்த பெண்ணே குளிர்ச்சி பொருந்திய திங்களின் வரவால் கடல் பொங்கும், வெம்மை யுடைய ஞாயிற்றின் வரவால் பொங்காது; அதுபோல மக்கள் இன்சொல் கேட்டு மகிழ்வர். வன்சொல் கேட்டு
மகிழமாட்டார் என்கிறார்.
உயிர் விடுதல் பற்றியும் ஆசிரியர் கூறாமல் விடவில்லை. அதற்கு அறம் செய்தல் இன்றியமையாதது எனவும் குறிப் பிடுகின்றார்.
"கொள்ளுங் கொடுங் கூற்றம் கொல்வான் குறுகுதன்முன்
உள்ளங் கனிந்தறஞ் செய்கவே - வெள்ளம்
வருவதற்கு முன்னர் அணைகோலியவையார்
இந்துக் கலைக்களஞ்சியம் &
囊132
 
 

பெருகுதற்கண் என்செய்வார் பேசு”
வெள்ளம் வருவதற்கு முன் அணைகட்டி வைக்காதவர் வெள்ளம் பெருகும்போது யாதும் செய்யமுடியாமல் துன் புறுவர். உயிர்களைத் தவறாமல் கொண்டு செல்லும் இயமன் வருவதற்கு முன்னர் மனம் கனிந்து அறஞ் செய் தல் வேண்டும் என்று குறிப்பிட்ட ஆசிரியர் உடம்மைவிட்டு உயிர் போவதை,
"வருந்துமுயி ரொன்பான் வாயி லுடம்பிற் பொருந்துதல் தானே புதுமை - திருந்திழாய் சீதநீர் பொள்ளற் சிறுகுடத்து நில்லாது வீதலோ நிற்றல் வியப்பு'
பெண்ணே ஓட்டைக் குடத்தில் நீர் நில்லாமல் ஒழிகிப் போதலே இயல்பு ஒழுகாது நிற்றல் வியப்பு அதுபோலவே ஒன்பது ஒட்டைகளை உடைய உடம்பில் உயிர் நீங்குதல்
இயல்பே. நீங்காது நிற்றல்தான் வியப்பு என்கிறார்.
நன்னெறி நாற்பது பாடல்களில் ஆசிரியரால் கூறப்பட்ட அறிவுரைகள் யாவும் பெண்ணை விழித்தே கூறப்பட்டுள்ள மையையும் இங்கு நோக்க முடிகின்றது. இந்நூல் அறநூல்க ளாகிய ஆத்திசூடி கொன்றை வேந்தன் வரிசைகளில் இடம்பெறுகின்ற முக்கிய நூலாகவும் சிறுவர்களால் அறியப்பட வேண்டிய கருத்தாழம் மிக்க நூலாகவும் இந் திய அறக்கோட்பாட்டுக்கு நல்லதொரு சான்றாகவும் கொள்ளப்படுகின்றது. (இ.ச.)
இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 161
jTöjtbLilyNGól
பூர்வீக இலங்கை
குமரிக் கண்டத்தின் பல பிரிவுகளில் ஒரு பிரிவுதான் இலங்கை. ஆதிகாலம் தொடங்கி இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆண்டு வந்த மன்னர்களும் அவர்க ளாகவே விளங்கினர். குமரிநாடு, குபேரநாடு, இராவணன் நாடு, ஈழம், இயக்கத்தீவு, நாகதீவு, கார்சிஸ், தபோவனம், இரத்தினத்துவீபம், பதுமராகதுவீபம், தித்திலதுவிபம், மாணிக்கதுவீபம், சிங்கதுவீபம், குணதிசைஏதென், தாமிர வருணி, சிலோன் முதலான பல பெயர்களால் இலங்கை வழங்கப்பட்டது. இன்று பூரீலங்கா என வழங்குகின்றது. சேர, சோழ, பாண்டிய நாடுகளும் இலங்கையும் ஏனைய திராவிட நாடுகளும் முற்காலத்தில் ஒரே நாடாக விளங்கின. மாபெரும் இலங்கையை ஒரு காலத்தில் கடல் விழுங்கி விட்டதென்பர் சரித்திர வல்லுநர்கள். இலங்கை மன்னனாக விளங்கிய இராவணனும் அவன் முன் ஆண்ட மன்னர்களும் தமிழராகவே இருந்தனர். சைவமே அவர்களு டைய சமயமாக விளங்கியது. சிலர் விஷ்ணுவையும் வழி பட்டு வந்தனர்.
நாகர் யார்?
ஈழநாட்டிலே முதன்முதற் பரவி வாழ்ந்த இயக்கர், இராக் கதர், நாகர் எனப்படுவோர் யாவரும் திராவிட எனப்படும் தமிழினத்தைச் சேர்ந்தவர்களேயாவர். இவர்களில் மிகவும் சீர்திருந்திய தமிழரே நாகர். தமிழகத்திலே வாழ்ந்த மிகப் பழங்குடி மக்கள் இவர்கள். நாகரிகத்திலே மிகவும் மேம் பட்டவர்கள். பல கலைகளிலும் சிறந்தவர்கள். இலங்கை யின் மத்திய பகுதிகளில் இயக்கர் வாழ்ந்தனரெனவும் வடபகுதியில் நாகர் வாழ்ந்தனரெனவும் மகாவம்சம் கூறு கின்றது. நாகர்கள் பற்றிப் பல கருத்துக்கள் கூறப்படுகின் றது. இவர்கள் பாதாளத்தில் வசிக்கும் ஒரு சாதியார் என்பர். ஒரு #IJाj நாகத்தைப் போன்ற தலையமைப்புள்ள மையால் நாகர் எனப்பட்டனர் என்பர். இன்னொரு சாரார் நாகத்தை வணங்கியமையால் நாகர் எனப்பட்டனரென்பர். இலங்கையிலே கந்தரோடை, நாகர் கோயில், நயினாதீவு, களனி (கல்யாணி), மாதோட்டம் முதலான இடங்களில் நாக மன்னர்கள் இருந்து ஆட்சி புரிந்தனர் எனவும்
இந்துக் கலைக்களஞ்சியம்*
 

சரித்திரங்கள் கூறுகின்றன. இலங்கையின் பழைய வரலாறுகளில் நாகர்கள் பற்றி இராமாயணம், பாரதங் களிலும் கூறப்படுகின்றது. இராமர் சீதையைத் தேடும் பொருட்டாக அனுமனை அனுப்பும் காலத்து நாகர்களு டைய பட்டினங்களையும் குறிப்பிடுகின்றார்.
பாரதத்திலும் நாகர்கள் பற்றிய குறிப்புகள் காணப்படு கின்றன. கி.மு. 13.فيه நூற்றாண்டளவில் கங்கைக்கும் யமுனைக்கும் இடைப்பாகத்திலே நாக அரசர்கள் இருந்த தாக மகாபாரதத்தின் மூலம் அறியக் கிடக்கின்றதெனவும் வனவாச காலத்திலே அர்ச்சுனன் உலிபி என்னும் நாக இளவரசியையும் அணிபுரத்தையாண்ட நாக அரசனாகிய சித்திரவாகனன் புதல்வியாராகிய சித்திராங்கதை என்பவ ளையும் மணந்து கொண்டான் எனவும் அறியக்கிடக்கின்
றது.
மகாவம்சமும் ஏனைய இலங்கைச் சரித்திர வரலாற்று நூல்களும் நாகர்களைப் பற்றிய செய்திகளுடனேதான் ஆரம்பிக்கின்றன. மகாவம்சத்தின்படி கி.மு.6ஆம் நூற்றாண் டில் இலங்கையின் வடபாகத்திலே நாகதீபமும் மேற்பாகத் திலே கல்யாணி(களனி)யும் வல்லமை வாய்ந்த நாக அரசுகளாக விளங்கின என்பது தெளிவாகின்றது. இதனா லேயே இலங்கை நாகதீவு எனவும் வழங்கப்பட்டது. எனவே மிகவும் பழமையான காலத்திலே இந்திய இலங்கை எங்கணும் நாக மன்னர்கள் சிறந்தவர்களாகவும் வல்லமை நிறைந்தவர்களாகவும் விளங்கினர் என்பது வெளிப்படை
U JTG5 Lb.
இன்னும் நாகபட்டினம், சூடியநாகபுரி, நாகர்கோயில், நாகர்கோட்டம், நாகூர், நாகநாடு, நாகார்ச்சுனம், திருநாகேச் சரம், மணிநாகதீபம், நாகதீவு என்னும் இடப்பெயர்களும் நாகசேனன், நாகநாதன், நாகரத்தினம், நாகவர்தனா, நாக பத்தா, நாகவர்மன், நாகசேதகன், நாகப்பன், நாகேந்திரன், நாகமுத்தன், நாகேசு, நாகேசன், நாகலிங்கம், நாகையா, நாகராசா, நாகமணி, சேனநாகன், நாகம்மா, நாகாத்தை, நாகேஸ்வரி முதலான ஆட்பெயர்களும் கூட நன்கு
வழங்குகின்றமை கண்கூடு.
* இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 162
நாகவழிபாடு
நாக (பாம்பு) வழிபாடு மிகவும் பழமையானதொரு வழிபா டாகக் காணப்படுகின்றது. இவ்வழிபாடு பூவுலகம் முழுவ துமே சரித்திர காலத்திற்கு முன்னதாகவே பரந்து விளங் கியதெனவும் கருதப்படுகின்றது. 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக விளங்கும் மொகஞ்சதாரோ நாகரீக காலத்தி லும் இவ்வழிபாடு பற்றிய செய்தி கள் காணப்படுகின்ற தென்பர்.
சாஞ்சி, அமராவதி, இலங்கை முதலான இடங்களிலுள்ள பண்டைச் சிற்பங்களிலும் ஒவியங்களிலும் நாகவழிபாடு பற்றிய அடையாளங்கள் காணப்படுகின்றன. இன்றும் இறந்தவர்களை வழிபடுதல், நம்மவர்க்கு மிகவும் வழமை யான தொன்றாகும். இது தென்புலத்தார் வழிபாடெனப்படும். திவசம், மாளயம், குருபூசை முதலியன தென்புலத்தார் வழிபாடுகளாகும். அக்கால மக்கள் இறந்தவர்களை அடக் கஞ்செய்த சமாதியிலோ அன்றி இல்லங்களிலோ பாம்புக ளைக் கண்டால் அவற்றை இறந்துபோன தமது முன்னோ ராகக் கருதி வழிபட்டு வந்தனர் என்பர்.
நாகவழிபாடும் சூரிய (ஞாயிறு) வழிபாடும் தொடர்புடைய னவாகக் கருதப்படுகின்றன. நாகவழிபாடு சூரியவழிபாடு போலவே உலகம் முழுவதும் வியாபகம் பெற்றிருந்தது. எங்கெங்கு ஞாயிறு வழிபாடு காணப்பட்டதோ அங்கெல் லாம் நாகவழிபாடும் காணப்படுகின்றது.
நாகவழிபாட்டின் காரணம்
மனிதன் ஒவ்வொருவனுக்கும் ஐந்து புலன்கள் உள்ளன. இவை அவனை மயக்கி பாவங்களைச் செய்யத் துண்டு கின்றன. பாவங்களைச் செய்யாது ஐம்புலன்களாகிய பகைவனிடமிருந்து நீங்கி உய்தியடையும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானித்தல் வேண்டுமென்னும் நினைவுபடுத்தலே இவ்வணக்கத்திற்குக் காரணமாகும். ஐந்து பகைகளாகிய ஐம்புலன்கள் மனிதனிடத்தேயுள்ளன.
'வஞ்சமனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்” என்கின்றார் வள்ளுவர் பெருமான். இதனை எப்பொழுதும் நினைவுறுத்தற் பொருட்டே ஐந்து தலைநாகத்தை ஆலயங்கள், அரண்மனைகள், வீடுகள்
 
 

முதலான இடங்களில் வரைந்தும் சிலையாகவும் வணங்கி வந்துள்ளனர். தமிழ் நாட்டு மக்கள் தங்களுக்குத் தீமை யைத் தருகின்ற ஐம்புலன்களையும் அடக்கிப் பாவ வழியி னின்றும் நீங்கிப் புண்ணிய பயனைப் பெறும் பொருட்டாக நாகவழிபாட்டைக் கடவுள் வழிபாடாகக் கொண்டனர். மனம் நாகபாம்பாகவும் கன்மேந்தியங்களின் தொகுதி வாலாக வும், மெய், வாய், கண், மூக்கு, செவியென்னும் ஐம்பொறி கள் ஐந்து தலைகளாகவும் அவ்வைம் பொறிகளில் நின்றும் எழுகின்ற ஐவகை அவாக்களும் விஷங்களாகவும் கொள்ளப்பட்டன. ஒரு புலன் செய்யும் தீமையானது ஒரு தலைநாகத்தின் நஞ்சுக்கும் ஐம்புலன்கள் செய்யும் தீமை கள் ஐந்தலை நாகத்தின் தஞ்சுக்கும் சமனாகுமென அவர் கள் கண்டனர். கடவுளை வேண்டுதல் செய்யும் பொழுது அவனருளானது ஐம்புலன்களையும் அடக்கி விடுகின்ற தெனவும் நம்பினார்கள்.
நாகதம்பிரான் ஆலயங்கள்
இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் நாகதம்பிரான், நாகம்மை ஆலயங்கள் பல விளங்குகின்றன. அவ்வாலயங் களின் வரலாறுகளும் பாரம்பரியமான கதைகளும், செவி வழிச் செய்திகளும் பலவகையாகக் கூறப்படுகின்றன. இவற்றில் சில ஆலயங்களின் அற்புதங்கள், திருவிளை யாடல்கள் மிகவும் புதுமையாகவும் அச்சத்தையும் ஆச்சரி
யத்தையும் பயபக்தியையும் கொடுப்பனவாகவுமுள்ளன.
இலங்கையில் நாகதம்பிரான் ஆலயங்கள் நாகர்கோயில், சேனையூர், புளியம்பொக்கனை, புதுார், நவாலி, செம்பியன் பற்று, வடலியடைப்பு, பொன்னாலை, மல்லாகம், புளியந் தீவு, அனலைதீவு முதலான பல இடங்களில் விளங்கு கின்றன.
நயினாதீவு, சீரணி, கோண்டாவில், நவாலி, அராலி முத லான இடங்களில் நாகபூசணி அம்மை ஆலயங்கள் காணப் படுகின்றன. ஐந்தலை நாகம் பூசிக்கும் பொருட்டாக இறை வன் நாகேஸ்வரி அம்மை சமேத நாகேஸ்வர மூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் தலம் கும்பகோணத்தில் விளங்கும் திருநாகேச்சரமாகும். ஐந்தலையரவு பூசிக்கும் பொருட்டு இறைவன் அருட்சத்தி வடிவாய் அமைந்த ஆலயங்கள் நாகபூசணியம்மை ஆலயங்களாகும். தென்னிந்திய நாகர்
繼縱囊縱錢縱囊縱籌線繳
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 163
கோயிலுக்கும் பருத்தித்துறை நாகர்கோயிலுக்கும் தொடர் புகளிருத்தல் கூடுமென ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
நாகர்கோயில் நாகதம்பிரான்
இவ்வாலயம் பருத்தித்துறைக்கு கிழக்கே 12 மைல்கல் தொலைவில் அமைந்துள்ளது. பறங்கியர் யாழ்ப்பாணத்தை ஆட்சிபுரிந்த காலத்தில் அவர்களின் போர்க்கப்பல் ஒன்று இங்குள்ள கடற்கரையில் வந்து நங்கூரமிட்டு நின்றது. பறங்கியரின் இராணுவப்படைக்கு போர்வீரரைத் திரட்டி கோவாவிற்கு (பழய) அனுப்ப கப்பல் தலைவன் எண்ணி னான். அப்பகுதியிலுள்ள ஆயிரம் இளைஞர்களை அவர்க ளின் பெற்றோரின் விருப்பத்திற்கு விரோதமாகப் பிடித்து கப்பலில் ஏற்றினான். இதனால் அந்த இளைஞர்கள் பயத் தால் அழுதனர். கூக்குரலிட்டனர். நிலைகலங்கி நாகதம் பிரானே எங்களைக் காப்பாற்று என ஒருமித்து ஓலமிட்ட னர். இருந்தும் பறங்கியர்கள் அவ்வாயிரம் இளைஞர்களை யும் கப்பலில் ஏற்றிக்கொண்டு செல்ல முயன்றனர். மாலுமி களில் ஒருவன் கப்பற்பாய்களை விரிக்கும் பொருட்டு பாய் மரத்தில் ஏறினான். அங்கு ஒரு நாகபாம்பு அவனை நோக்கிப் படமெடுத்துச் சீற்றத்துடன் இரைந்து ஆடியது. அதனைக் கண்டு அச்சமடைந்த மாலுமி பாய்மரத்திலி ருந்து குதித்து ஓடிச்சென்று கப்பல் தலைவனிடம் தான் கண்ட பயங்கரக் காட்சியைக் கூறினான். கப்பல் தலைவ னும் ஏனைய மாலுமிகளும் பாம்பைக் கண்டு பயந்து நடுநடுங்கினர். செய்வதறியாது திகைத்தனர். அச்சமிகுதி யால் கப்பல் தலைவன் தம்வசமிருந்த துவக்கினால் அப் பாம்பைச் சுட்டான். பாம்பு ஆயிரம் துண்டங்களாகச் சித றுண்டு கப்பலின் தளத்திலே வீழ்ந்தது. அதனைக் கண்ட மாலுமிகளும் தலைவனும் அளப்பரிய ஆனந்தம் கொண்டு கப்பலை ஒட்டிச் செல்ல முயன்றனர். அத்தருணம் கப்பற்ற ளத்தில் வீழ்ந்த துண்டங்கள் ஒவ்வொன்றும் பாம்புகளாகி படமெடுத்துச் சீறிச் சினந்து நின்று ஆடின. இவற்றைக் கண்ணுற்ற பறங்கியர் அஞ்சி நடுநடுங்கினர். அத்தருணத் தில் சுழற்காற்றும் பயங்கரமாக வீசியது. கப்பல் அங்குமிங் கும் ஊசலாடி ஆழ்ந்துபோகும் நிலையை அடைந்தது. அதனைக் கண்ட கப்பல் தலைவன் ஏற்றிய இளைஞர் களை கப்பலிலிருந்து இறக்கிவிடுமாறு மாலுமிகளுக்குக் கட்டளையிட்டான். இளைஞர்களை ஒவ்வொருவராக
இறக்கி விட்டபொழுது ஒவ்வொரு பாம்பும் இறங்கியது.
இந்துக் கலைக்களஞ்சியப்x 鑿繼錢災綫 養孔3
 

5
ஆனால் சமையற்காரன், சிறுமி ஒருத்தியைத் தனக்கு உதவியாக யாருக்கும் தெரியாமல் அறைக்குள் மறைத்து வைத்திருந்துவிட்டான். அத்தருணம் பறங்கியர்களில் ஒருவன் ஆவேசம் கொண்டு கப்பலின் உட்புறத்தே ஒரு பெண்பிள்ளையும் ஒரு பூனைக்குட்டியும் இருப்பதாகத் தேவ வாக்காகக் கூறினான். அறைக்குள் சென்று பார்த்த போது அங்ங்னமே இருக்கக் கண்டனர். சிறுமியையும் பூனைக்குட்டியையும் இறக்கிவிட்டதும் பாம்பும் இறங்கிச் சென்றது. சூறாவளியும் நின்றது. வீரரைப் படைக்குத் திரட்டும் முயற்சியைக் கைவிட்டு பறங்கியரும் வந்த வழியிலே சென்றனர். இவ் அதிசயத்தைக் கண்டு மக்கள் எல்லோரும் பெருமகிழ்ச்சியடைந்து இது எங்கள் நாகதம் பிரானின் திருவருள் என்றும், அற்புதம் என்றும் கூறி நாகதம்பிரானுக்கு பெருவிழா எடுத்து வணங்கினர். இந் நிகழ்ச்சியை நினைவு கூரும் பொருட்டு ஆண்டுதோறும் புரட்டாதி மாதத்தில் திருவிழாக்கள் நடைபெறும். அவற்றி னுள் ஒன்றுதான் கப்பல் திருவிழா. இத்திருவிழாவன்று கப்பல் கட்டிப் பறங்கியர் போல் உடையணிந்து அவர்கள் இளைஞர்களை பிடித்துக் கப்பலில் ஏற்றுவது, பாம்பு வருதல், இளைஞர்களை இறக்கிவிடுதல் முதலான வைபவங்களை நன்கு நடித்துக் காட்டுவர். சுவாமி சென்று கடல் தீர்த்தமாடும் இடமே பறங்கியர்கள் வந்து நங்கூரமிட் இடமாகக் கருதப்படுகின்றது.
புளியம்பொக்கனை நாகதம்பிரான்
17ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இடைக்காட்டைப் பிறப்பிடமாகக் கொண்டு கரைச்சியில் வாழ்ந்த முருக உடையாருக்கும் வள்ளியாத்தைக்கும் முதலில் இரண்டு ஆண்பிள்ளைகளும் இறுதியில் ஒரே சூலில் ஒரு பெண் குழந்தையும் ஒரு பெண் நாகபாம்பும் இரட்டைக் குழந்தைக ளாகப் பிறந்தன. அப்பெண் பிள்ளைக்கு நாகாத்தையென் றும் பாம்புக்குட்டிக்கு நாகம்மா என்றும் திருநாமம் சூட்டி னர். இவ்விரு பெண் குழந்தைகளையும் பெற்றோர் பாலூட் டிச் சீராட்டி வளர்த்தனர். நாகம்மா (பாம்பு) இக்குடும்பத்தில் அவதரித்ததும் இவர்களின் பூமியின் விளைச்சல் அதிகரித் தது. மந்தைகளும் பல்கிப் பெருகின. அவர்களின் பொரு ளாதாரம் மேன்மையுற்றது. இச்செல்வங்கள் தம் பாம்புப் பிள்ளையால் வந்ததென்று உணர்ந்து அதைத் தெய்வப் பிறப்பிடமாகக் கருதினர். நாகாத்தை திருமணப் பருவம்
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 164
எய்தியதும் அவருக்கு விவாகம் செய்ய ஏற்ற ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தில் முருக உடை யார் தம் சொத்துக்களைத் தன் பிள்ளைகளுக்குப் பிரித் துக் கொடுக்கத் தீர்மானித்தார். தன் சொத்தை எத்தனை யாகக் பிரிப்பது என்ற எண்ணம் அவர் மனதில் எழுந் தது. நாகம்மாவுக்கும் (பாம்பு) ஒரு பாகத்தைக் கொடுப் பதா? அப்படிக் கொடுத்தால் அது எப்படி அச்சொத்தை ஆளும்? என்று பலவாறும் சிந்தித்த உடையாருக்கு ஒரு உபாயம் தென்பட்டது. ஒரு நல்ல நாளில் தன் மூன்று பிள்ளைகளையும் தன் வீட்டில் நிரையாக அமரச் செய்து தம் கைவசமிருந்த பவுண் நகைகளை மூன்று சமபங்காக பிரித்து வைத்தார். தந்தையின் அருகி லிருந்து இதை அவதானித்துக் கொண்டிருந்த நாகம்மா (பாம்பு) மிகக் கோபாவேஷம் கொண்டு சீறிப் படமெடுத்தது. தன் படத்தால் நகைகளைச் சிதறடித்தது. இச்செய்கை நாகம்மாவுக்கும் சொத்தில் பங்கு வேண்டு மென்பதை உணர்த்தியதைத் தெரிந்து கொண்ட முருக உடையார் நகைகளை நான்கு சமபங்குகளாகப் பிரித்து வைத்தார். உடனே நாகம்மா தன் பங்கைத் தன்னுடன் பிறந்த சகோதரியின் பங்குடன் தன் படத்தால் அரக்கிச் சேர்த்தது. அதன் பின் நகைகளை மாத்திரமல்லாது ஏனைய அசையும் அசையா சொத்துக்களையும் நான்கு பங்குகளாகப் பிரித்து நாகம்மாவின் பங்கை நாகாத்தைக்கு வழங்கி அவருக்கு
விவாகமும் செய்து வைக்கப்பட்டது.
நாகம்மாவும் ஒரு ஆண் நாகத்துடன் கூடிப் பல குட்டி களை ஈன்றது. பாம்புகள் பல்கிப் பெருகி உடையார்வளவு நிறைந்தது. அவை வீட்டுக் கூரை முகடு, வளை, வைக்கற் போர், துலா, ஆட்டுமாட்டுக் கொட்டில்கள், தொட்டில், குடில்கள் எங்கும் வியாபித்திருந்தன. முருக உடையார் வயலிலிருந்து வீட்டுக்கு வந்ததும் படலையிலுள்ள பாம்பு கள் அவரின் தோளிலும் தலையிலும் ஏறி அமர்ந்து கொள்ளும். ஏனையவை கால்களைச் சுற்றி வளைத்துப் பிடித்துக் கொள்ளும். அவர் படுத்துக் களைப்பாற நினைத்துப் பாயை விரித்தால், அதற்குள் பாம்புக் குட்டிகள் நெளியும். உறியில் காச்சி வைத்த பாலை எடுக்கச் சென்றால் சட்டியில் இருந்த பாலைப் பருகிவிட்டு உறியிலி ருந்து ஊஞ்சல் ஆடும். சமைக்கச் சென்றால் அடுப்புக்குள் பாம்புகள். கிணற்றில் தண்ணிர் அள்ளச் சென்றால் பட்டைக்
இந்தக் கலைக்களஞ்சியம்x
 

குள் பாம்புகள். பாம்புகள் கொடுக்கும் அன்புத் தொல்லை அளவிட முடியாதன. ஆனால் அவைகளின் திருவிளை
யாடல்கள் உடையாருக்குப் பேரின்பம் அளித்தன.
ஒரு நாள் நாகாத்தை வீட்டைப் பெருக்கிச் சுத்தம் செய்ய விளக்குமாற்றை எடுத்ததும் அதைச் சுற்றிப் பிடித்திருந்த பாம்புகள் விட்டுவிலக மறுத்தன. இதனால் கோபமடைந்த நாகாத்தை விளக்குமாற்றை உதறி "உங்க ளால் பெரும் தொல்லை எங்கையாவது போய்த் தொலை யுங்கள்” என்று கூறி விரட்டினாள். இச்செயலைக் கண்ட நாகம்மா தன் பிள்ளை குட்டிகளுக்கு இளைத்த அவமா னத்தைத் தாங்கமுடியாமல் உடனே தன் சகல வாரிசுகளு டன் வீட்டை விட்டு வெளியேறினாள். தான் செய்த பெரும் தவறை உணர்ந்த நாகாத்தை உடன் பிறப்புச் சகோதரி யையும் பிள்ளைகுட்டிகளையும் தன்னை விட்டு பிரிந்து செல்ல வேண்டாமென எவ்வளவோ கெஞ்சி அழுதும் எதுவித பிரயோசனமும் ஏற்படவில்லை. பாம்புகள் தம் மனையைவிட்டேறியதை அறிந்த உடையார் பல இடங்களிலும் தேடியலைந்தார். ஓரிடத்தில் தன் பாம்புத் தெய்வங்கள் ஊர்ந்து சென்ற அடிச்சுவடு தென்பட்டது. அதைப் பின்பற்றிக் கொக்காவில் காட்டை அடைந்தார். அங்கு பாம்புகள் சென்ற பாதையில் புல்பூண்டுகள் சரிந்திருப்பதைக் கண்டார் (அப்புற் தரை நாகஞ்சரிந்த சோலை என்று இன்றும் வழங்கப்பட்டு வருகின்றது.) அதைத் தொடர்ந்து புதுார்க்காட்டை அடைந்தார். அங்கு ஒரு பெரிய பாலை மரம் தென்பட்டது. அதற்கு அப்பால் எதுவித அடிச்சுவடும் தென்படவில்லை. அப் பாலை மரத் தடியில் பொந்தொன்றைக் கண்டார். இதற்குள் தன் செல் வங்கள் ஒளிந்திருக்கலாமென எண்ணினார். பொழுதும் சாய்ந்தது, கால் நடையாலும் பசியாலும் உடல் சோர்ந்து அம்மரத்தடியில் படுத்து உறங்கிவிட்டார். உறக்கத்தில் அற்புதக் கனவொன்றைக் கண்டார். அதில் தன் மகள் நாகம்மாவும் அதன் பிள்ளைச் செல்வங்களும் காட்சி அளித்தன.
அப்பொழுது ஒர் அசரீரி ஒலித்தது. "அப்பரே! நீர் முற்பிற வியில் செய்த நல்வினைப் பயனால் நாம் உங்கள் பிள்ளை களாக அவதரித்தோம். உங்களைப் பிரிந்து செல்லும்
காலம் கைகூடியமையால் இப்பாலை மரப்பொந்தில் வந்து
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 165
றைந்துள்ளோம். கவலைப்பட வேண்டாம். உங்கள் வழிபாட் டிற்காக எம்மில் ஒருவரைத் தருகின்றோம். அவரை எடுத் துச் சென்று புளியம் பொக்கனை என்ற ஊரிலுள்ள அரச மரத்தடியில் வைத்து பால்பழங்கள் வழங்கி வழிபட்டு வாருங்கள். உங்கள் சகல துன்பங்களும் நீங்கி பேரின்ப மடைவீர்கள். உமது சந்ததியினருக்கு பாம்பு விஷம் எது வித தீங்கும் விளைவிக்காது” என்ற அசரீரியை கனவில் கேட்ட உடையார் அதிகாலை எழுந்து ஒரு கூடையையும் முட்டியில் பசுப்பாலையும் அயலிலிருந்த வீட்டில் பெற்று அதை பாலை மரப்பொந்தின் முன் வைத்து தன் தெய்வங்களை (பாம்புகளை) நினைத்து இறைஞ்சினார். சிறிது நேரத்தில் ஒரு பாம்பு பொந்திலிருந்து வெளிப் பட்டு அக்கூடைக்குள் புகுந்து முட்டியிலிருந்த பாலைப் பருகியதும் சுருண்டு படுத்துக் கொண்டது. பாம்பின் இச்செயலைக் கண்ட உடையார் இது சாதாரண பாம்பல்ல பாம்பின் உருவில் எமக்குக் கிடைத்த நாகதம்பிரான் தெய்வம் என உணர்ந்து அக்கூடையை பயபக்தியுடன் எடுத்துத் தன் தலையில் வைத்து கரவெட்டித் திடலிலுள்ள புளியம்பொக்கனையைச் சென்றடைந்தார்.
அங்குள்ள அரதமரத்தடியிலுள்ள பொந்தின் முன் பாம்புக் கூடையை இறக்கி வைத்தார். கூடையில் இருந்த நாகதம் பிரான் வெளியே வந்து படமெடுத்தாடி உடையாரை ஆசிர் வதித்து விட்டு அவ் அரச மரப்பொந்துக்குள் புகுந்தது. அன்று தொடக்கம் உடையார் பால், பழம் வைத்து அருகில் ஒரு சூலத்தையும் நாட்டி தினமும் பூசித்து வந்தார். அவர் நாகதம்பிரானடி சேர்ந்ததும் அவர் சந்ததியினர் கோயிலை விரிவுபடுத்திக் கட்டி நித்திய நைமித்திய பூசைகளை இன்றுவரை பயபக்தியுடன் செய்து வருகின்றனர். நாக தம்பிரானாகிய பாம்பு அவதரித்த தினம் பங்குனி உத்தரம் கூடிய பெளர்ணமி நன்நாளாகும். அத்தினத்தில் பொங்க லும், திருக்குளிர்த்தியும் விழாவும் வருடாவருடம் வெகுவிமரி சையாக நடைபெற்று வருகின்றன. இத்திருத்தலம் பரந்தன் புதுக்குடியிருப்பு வீதியில் 7ஆம் கட்டைச் சந்தியிலிருந்து 3 கல் தொலைவில் உள்ளது. முருக உடையார் பரம்பரை யில் வந்த சந்ததியினருக்கு இன்றும் பாம்பு கடித்தால் அதன் விஷம் எதுவித தீங்கும் விளைவிப்பதில்லை என ஆதாரபூர்வமாக அறியக்கிடக்கின்றது.
இந்துக் கலைக்களஞ்சியம்x
 

உடையார் வீட்டுப் பாம்புகள் முதல் முதலில் சென்றடை ந்த பாலைமரமும் பொந்துமே இன்று புதுார் நாகதம்பிரான் ஆலயமெனத் திகழ்கின்றன. புளியங்குளத்துக்கும் மாங்குளத்துக்கும் இடையே பிரதான வீதியிலிருந்து சுமார் 4 கல் தொலைவில் மேற்குத் திசையில் அமைந்துள்ளது. வருடந்தோறும் வைகாசித் திங்களில் பெரும் பொங்கல் விழா வெகுவிமரிசையாக இன்றும் நடைபெற்று வருகின்றது.
திருநாகேச்சுரம் நாகநாதசுவாமி
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்குக் கிழக்கே 6 கி.மீ. தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது. திருநா கேச்சுரம் இராகுபகவான் சிவனைப் பூசித்த திருத்தலமாகும். இங்கு ஐந்து தலை நாகம் என்ற இராகு பகவானுக்குப் பால் அபிஷேகம் செய்யும்பொழுது அப் பால் நீலநிறமாகத் தோன்றுவது ஓர் அற்புதமாகும். மேலும் 16-02-1986 அன்று இராகுவின் மேனியிலிருந்து 5 1/2 அடி நீளமுடைய பாம்புச் சட்டை உரிந்திருந்த காட்சியை பல்லாயிரக் கணக் கான பக்தர்கள் கண்டு பயபக்தியுடன் வழிபட்டனர். இன்றும் இப்பாம்புச் சட்டை பெரிய கண்ணாடிப் பேளைக்குள் பக்தரின் வழிபாட்டுக்காக ஆலயத்துள் வைக்கப்பட்டுள்ளது.
(வே.சு.)
DITEsgob
சோழமண்டலக் கரையிலுள்ள துறைமுகப் பட்டினங்க ளில் ஒன்று நாகபட்டினம். இது முற்காலங்களிலே பிரசித்தி பெற்றிருந்தது. ஐரோப்பியரின் நடமாட்டம் இந்தியக் கரை யோரங்களில் ஏற்பட்ட காலத்தில் ஒரு பிரதான வர்த்தக மையமாக ஐரோப்பியரால் கொள்ளப்பட்டது. ஒல்லாந்தர் நாகபட்டினத்தின் மீது ஆட்சி அதிகாரம் பெற்று கிழக் கிந்திய கரையிலே தமது பிரதானமான வர்த்தக நிலைய மாக அதனை அமைத்துக் கொண்டனர். அவர்கள் நாக பட்டினத்திலே புழங்குவதற்கு என்று தனியான இலச்சினை களும் வடிவமைப்புங் கொண்ட நாணயங்களை வெளியிட்ட
601].
ஒரு துறைமுகப் பட்டினம் என்ற வகையில் நாகபட்டினத்
துக்கு ஒரு நீண்டகால வரலாறு உள்ளது. ஆதி காலம்
綠經述弘 5Hnu」5aT5T口 g@al656而Elep6CCT年56Tá

Page 166
முதலாக அது தமிழகத்தின் பிரதான துறைமுகங்களில் ஒன்றாக விளங்கியது. மீன்பிடித்தல், கப்பலோட்டுதல், கடல்வழி வாணிபம் என்பவற்றில் ஈடுபடுவோர் அங்கும் அதன் சுற்றுப்புறங்களிலும் வாழ்ந்தனர். அங்கிருந்து வணி கக் கப்பல்கள் வங்காளம் முதல் தென்னிலங்கை வரை பரந்துள்ள துறைமுகப்பட்டினங்களுக்கு வணிகப் பொருட் களை ஏற்றிச் செல்வது வழமை. கடல்வழியாக தூர தேசங்களுக்குச் செல்லும் கப்பல்களின் தரிப்பு நிலையமாக வும் அது விளங்கியது. தென்கிழக்காசிய நாடுகளோடு இந்திய தேசங்கள் ஏற்படுத்தியிருந்த வர்த்தகத்தில் நாக பட்டினம் முக்கியத்துவம் பெற்றிருந்தது. சோழப்பேரரசின் காலத்தில் அதுவே அப்பேரரசின் பிரதானமான துறைமுகப் பட்டினமாக விளங்கியது. சாவகம், சீனம் முதலான தேசங்களிலிருந்து வந்த வணிகர் அங்கு தங்கியிருப்ப துண்டு. சோழர் ஆட்சியில் ஒரு பல்லினப்பண்பாட்டு மைய மாக நாகபட்டினம் விளங்கியது. அது தமிழகத்திலுள்ள பெளத்த சமயநெறியின் தலைமை நிலையமாக விளங்கி யது. அந்த நிலையில் நாகபட்டினம் சர்வதேசப் பரிணாமத் தைப் பெற்றது. சாவகப் பெருவேந்தனான சைலேந்திரவம் சத்து சூளாமணிவர்மன் அங்கு ஒரு பெரும் பெளத்தப் பள்ளியினை நிர்மாணித்தான். சோழப்பேரரசனான முதலாம் இராசராசன் அதற்கு நிலமானியங்களை வழங்கினான். சோழரின் ஆதரவில் அங்கு பெளத்த நிறுவனங்கள் சிறப் புற்றிருந்தன. அவற்றின் அழிபாடுகளிருந்த இடங்களை அகழ்வாராய்வு செய்தபொழுது நூற்றுக்கணக்கான பெளத்த படிமங்கள் கிடைத்தன. அவை உன்னதமான வெண்கல வார்ப்புக்கள்.
நாகபட்டினத்துச் சூளாமணிவர்ம விகாரம்
பல நூற்றாண்டுகளாகச் சிறப்புற்றிருந்த சூளாமணிவர்ம விகாரம் சோழ மண்டலத்து வடித்திரிய சிகாமணி வளநாட் டுப் பட்டினக்கூற்றத்து நாகபட்டினத்தில் அமைக்கப்பெற்ற தென்று அதனைப் பற்றிய சோழப்பெருமன்னரின் செப்பேடுக ளில் எழுதப்பட்டுள்ளது.
நாகபட்டினத்து பெளத்த நிறுவனங்கள் பற்றிய ஆவணங் களிலே தலைசிறந்தவை ஆனைமங்கலச் செப்பேடுகள். அவை ஒல்லாந்திலுள்ள லைடன் நகரின் அருங் காட்சியத் தில் உள்ளன. 18ம் நூற்றாண்டிலே பெளத்த விகாரத்தின்
இந்துக் கலைக்களஞ்சியம்:
 

கட்டடங்கள் சிலவற்றை இடித்தழித்த பொழுது அந்தச் செப்பேடுகள் ஐரோப்பிய கிறிஸ்தவ பாதிரிமார் வசமாகின. அவர்கள் அவற்றை ஒல்லாந்திற்கு எடுத்துச் சென்றனர். அவை லைடனில் இருப்பதால் அவற்றை லைடன் செப் பேடுகள் என்று ஆங்கிலத்திலே குறிப்பிடுவது வழமையாகி விட்டது. கவி சுப்ரமணிய ஐயர் அவற்றைப் படித்து விளக் கக் குறிப்புக்களோடு இந்திய சாசனங்கள் (Epigraphia Indica) என்ற தொடர் வெளியீட்டின் இரண்டு தொகுதிக ளில் வெளியிட்டார். சோழ மன்னர்கள் வெளியிட்ட செப் பேடுகளில் அவை பலவகையிலும் முக்கியத்துவம் பெறு கின்றன. அவற்றில் ஒன்று மிக நீளமானது. அது முதலாம் இராஜேந்திர சோழனின் ஆட்சியில் வழங்கப்பட்டது. சிறிய செப்பேடு முதலாம் குலோதுங்கனால் 1090ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.
ஆனைமங்கலச் செப்பேடுகளிலே பெரிய செப்பேடுகளில் 21 தகடுகளில் வாசகம் எழுதப்பட்டுள்ளது. அவை துளை களினுடாகப் பெருவளையமொன்றினால் இணைக்கப்பட்டு ள்ளது. அந்த வளையத்தின் உச்சியிலே சோழரின் இலச் சினையில் அமைந்திருக்கும் உருவங்கள் ஒரு வட்டிவடி வமான முத்திரையில் அமைக்கப்பட்டுள்ளன. அதன் நடு விலே புலியின் உருவமும் இருகயல்களின் வடிவங்களும் காணப்படுகின்றன. அவை சோழரதும் பாண்டியரதும் சின்னங்களாகும். அவற்றின் மேலே குடையும் அதன் இரு பக்கங்களிலும் சாமரை வடிவங்களும் தெரிகின்றன. அவற்றின் இரு மருங்கிலும் குத்துவிளக்குகளின் வடிவங் கள் உள்ளன. முத்திரையின் கீழ்பகுதியில் சேரரின் குலசின்னமாகிய வில்லின் உருவம் தெரிகின்றது. இவை யாவும் ஒரு வளையத்தினுள் அமைந்துள்ளன. அதனைச் சுற்றி மேல் வரும் சமஸ்கிருத வாசகம் கிரந்த வடிவங்க ளில் எழுதப்பட்டுள்ளது.
ஏதத், ராஜேந்த், சோழஸ்ய பரகேஸரி வர்மண: ராஜத, ராஜனடய மகுடஸ்ரேணி ரத்நேஸ" ஸாஸனம்
இது இராஜேந்திர சோழனாற் செப்பேடு வழங்கப் பெற்றது என்பதனை உணர்த்துகிறது. இச்செப்பேட்டு வாசகம் 21 தகடுகளில் 443 வரிகளில் எழுதப்பட்டுள்ளது. அதிலே முதலாம் இராஜராஜனதும் முதலாம் இராஜேந்திர சோழன
இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்கணம்

Page 167
தும் ஆணைகளின் வாசகங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளன. வரலாற்று ஆவணங்கள் என்ற வகை யில் ஆனைமங்கலச்செப்பேடுகள் அதிக சிறப்புடையவை. சோழரின் அரசியல், நிர்வாகமுறை என்பவற்றை அவை செம்மையாகப் பிரதிபலிக்கின்றன. சோழருக்கும், பூரீ விஜய த்து அரசருக்கும் இடையிலான தொடர்புகளைப் பற்றி அவற்றின் மூலம் அறியமுடிகின்றது.அந்த விபரங்கள் வேறெங்கும் காணப்படவில்லை. சோழமண்டலத்தின் பிரதான பிரிவுகளில் ஒன்றான ஷத்திரிய சிகாமணி வள நாட்டின் நிலவியல், குடியிருப்புகள், இடப்பெயர்கள், பயிர்ச் செய்கை முறை என்பன பற்றிய அதிகமான விபரங்கள் அவற்றிலே பதிவாகியுள்ளன. இந்த அளவிலான விவரங் கள் வேறு சாசனத்திலே காணப்படுவதில்லை. பெருந் தொகையான அரசாங்க அதிகாரிகளினதும் நாடு, நகரம், ஊர், பிரம்மதேயம் என்பவற்றின் அலுவலாளர் அவர்களின் பதவிப் பெயர்கள் என்பனவும் பெரிய ஆனைமங்கலச் செப்பேடுகளில் பதிவாகியுள்ளன. நாகபட்டினத்து பெளத்த விகாரங்களைப் பற்றிப் பிரதானமாக இவற்றின் மூலமாகவே அறியமுடிகின்றது.
பள்ளிச்சந்தம் ஒன்றினைப் பற்றிய தெளிவான முழுமை யான விபரங்கள் இவற்றிலே போன்று வேறெந்த ஆவணத்திலும் காணப்படுவதில்லை. பெரிய ஆனை மங்கலச் செப்பேடுகளில் உள்ள தமிழ்ப் பகுதி 16 தகடுக ளில் 332 வரிகளில் எழுதப்பட்டுள்ளது. ஆனைமங் கலத்தை பள்ளிச்சந்தமாக அமைப்பதற்கு ஏதுவான நிகழ்ச்சிகள் பல கட்டங்களில் அமைந்தவை. அவற்றை மேல்வருமாறு வரிசைப்படுத்தலாம்.
1. இராஜராஜன், 21ம் ஆட்சியாண்டில் 92வது நாளன்று தஞ்சாவூர் திருச்செண்டு வாயிலில் ராஜாஸ்ரயன் என்னும் மாளிகையில் இருந்த வண்ணம் நாகபட்டினத்துக்கு கடாரத்தரையனான சூளாமணிவர்மன் எடுப்பிக்கின்ற பெளத்த விகாரத்துக்கு வேண்டும் நிவந்தனைகளுக்குரிய பள்ளிச்சந்தமாக ஆனைமங்கலத்தை வழங்குமாறு ஆணை யிட்டான்.
நித்திவிநோத வளநாட்டு ஆவூர்கூற்றத்து விளத்துார் கிழவன் அமுதன் தீர்த்தகரன் அரசரின் கட்டளையைப்
經近555eoas5es@äLa緣
 

பதிவுசெய்தான். திருமந்திர ஓலைநாயகம் என்னும் பதவி யிலுள்ள மூவர் பதிவாகிய ஆவணத்தைப் படித்து ஒப்பி தம் செய்தனர்.
2. அந்த ஆவணத்தை ஒரு தீட்டாக வரையில் இடுமாறு எண்பர் ஏவினார்கள். அவர்களில் நால்வர் நடுவிருக்கை என்னும் பதவியில் உள்ளவர்கள். ஏனையோர் விடையில் அதிகாரிகள்.
3. ஆவணம் 21ம் ஆண்டு 96ம் நாள் வரியில் பதிவாகி விட்டது. அதன்பின்பு பட்டினத்துக்கூற்றத்து நாட்டார், ஊரார், சபையார், நகரங்களிலார், பள்ளிச்சந்தங்களிலார் என்போரு க்கு கோனோலை அனுப்பப்பட்டது. அதிலே திருமந்திர ஒலை என்னும் பதவியில் உள்ள பலர் கையெழுத்திட் டிருந்தனர். பள்ளிச்சந்தமாக வழங்கப்பெற்ற ஆனைமங்கலத் தின் எல்லைகளை வரையறை செய்யுமாறு நாட்டார் பணிக் கப்பட்டனர். அரசாங்கம் அனுப்பிய அதிகாரிகள், பணி மக்கள் என்போர் முன்னிலையில் நாட்டார் தங்கள் பணியை நிறைவேற்றவேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்
தது.
4. கோனோலையைப் பெற்றுக்கொண்ட நாட்டார், அதிலுள்ள கட்டளைப்படி பள்ளிச்சந்தமான நிலத்தின் எல்லைகளை வரையறை செய்து அங்கே பிடிசூழ்ந்து எல்லையின் அடையாளங்களாகக் கள்ளியும் கல்லும் நாட்டுவித்தனர். எல்லாமாக 27 ஊர்களில் ஆளுங்கணத்த வர் அதிலே பங்குபற்றினார்கள். அரசனது கட்டளை நிறை வேற்றப்பட்டதும் அதனைப்பற்றிய ஆவணம் ஒன்றை எழுதி னார்கள். அதிலே ஊர்களில் நிர்வாகப் பிரதிநிதிகள் கையெழுத்திட்டு அத்தாட்சிப்படுத்தினார்கள். நாட்டார் இவ் விதமாக எழுதிய ஆவணத்தின் முற்பகுதியாக இராஜ ராஜனது மெய்க்கீர்த்தி எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடற் குரியது.
5. இவ்வாறு எழுதப்பட்ட ஆவணம் “யாண்டு இருபத்து மூன்றாவது நாள் அறுபத்துமூன்றினால் வரியிலிட்டுக் குடுத்
தது”
6. வரியிற் பதிவாகிய வாசகத்தின் அடிப்படையில்
災談經述函8ou 5amem可ggal65cfgeoeoorä5cmá

Page 168
இராஜராஜன் திருவாய் மொழிந்தருளிய வாசகம் பட்டயமாக எழுதப்பட்டது. அப்பட்டயத்தில் இருபகுதிகள் உண்டு. ஒன்று நாட்டாருக்கும் நாட்டிலுள்ள சுயாட்சி அமைப்புகளுக் கும் நிலதானம் பற்றி அரசன் அனுப்பிய கட்டளையின் வாசகம், மற்றையது நாட்டாரும் பிறரும் அரசரின் கட்ட ளையை நிறைவேற்றியமை பற்றிய விவரங்கள் அடங்கிய 96).j600Tib.
சாசன வாசகம் அரசரை பல விடயங்களிலே தன்மை நிலையில் குறிப்பிடுகின்றது. நிலதானம் 21ம் ஆண்டு முதலாகச் செல்லுபடியாக வேண்டுமென்று சாசனம் குறிப் பிடுகின்றது. ஆயினும் பெரிய ஆனைமங்கலச் செப்பேடு முதலாம் இராஜேந்திரனால் வழங்கப்பட்டது. அதிலே இரா ஜேந்திரனது சாசன வாசகத்தோடு சமஸ்கிருத மொழியில் அமைந்த இராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்தியும் இணை க்கப்பட்டுள்ளது. இராஜராஜன் உருவாக்கிய சாசன வாக்கி யம் ஏதோ காரணத்தால் அவனது மகனது ஆட்சிக்காலத் தில் பட்டயமாக எழுதி வழங்கப்பட்டது. சூளாமணிவர்ம விகாரத்தை கட்டிமுடித்து அதற்கான பரிபாலன ஏற்பாடு களை உருவாக்குவதில் ஏற்பட்ட காலதாமதே அதற்கான காரணம் போலும்.
இராஜேந்திரனது பிரசஸ்தி ஐந்து தகடுகளில் மூன்று வரிக ளில் அதிலே சோழமன்னர் உற்பத்தியும் சோழ மன்னர் சிலரின் சாதனைகளும் இலக்கிய நயத்துடன் வர்ணிக்கப் படுகின்றன. அதன் பின்பகுதியிலே சூளாமணிவர்ம விகாரம் பற்றிச் சொல்லப்படுகின்றது. கடாரத்தரசன், பரீமாற விஜேதுங்கசர்மன் தன் பிதாவான ரீ சூளாமணிவர்மனின் பெயரால் நாகபட்டினத்திலே சூளாமணிவர்ம விகாரத்தை அமைத்தா னென்றும் அதற்குப் பள்ளிச் சந்தமாக ஆனை மங்கலம் என்னும் ஊர் இராஜராஜ தேவரால் வழங்கப் பெற்றது என்றும் சொல்லப்படுகிறது. இராஜராஜன் வழங்கிய நில தானத்தை உறுதிபடுத்தும் பேராவணமாக இராஜேந்திர சோழன் வழங்கிய பட்டயம் உருவாகியுள்ளது.
இராஜேந்திர சோழனுடைய பிரசஸ்தியை வசிட்ட
கோத்திரத்துக் கோட்டையூர் ஆருந்த நாராயணர் எழுதி னார் அரசரின் ஆணைப்படி காஞ்சிவாயில் தில்லையானி
இந்துக் கலைக்களஞ்சியம்x ಷ್ರ
 

யான மகாதிகாரி இராஜராஜ மூவேந்தவேளான் செப்புப் பட்டயத்தை எழுதுவித்தான். காஞ்சி நகர் சிற்பிகளும் சித்திர காரருமான ராஜராஜப் பேராசாரியனான கிருஷ்ணன் வாசு தேவன், கிருஷ்ணன் திருவரங்கன், கிருஷ்ணன் தாமோதி ரன், வாசுதேவன் கிருஷ்ணன், ஆராவமுது
புருஷோத்தமன் என்போர் பட்டயத்தை எழுதினார்கள்.
முதலாம் குலேத்துங்க சோழனின் பட்டயம்
முதலாம் குலோத்துங்க சோழன் (1070 - 1122) வழங் கிய (1090) ஆனைமங்கலச் செப்பேடு 52 வரிகளும் முற்றிலும் தமிழில் எழுதப்பட்டுள்ளது. அதன் முதற்பகுதி அவனது “புகழ்மாது விளங்க” என்று தொடங்கும் மெய்க்
கீர்த்தியின் வாசகமாகும்.
சூளாமணி விகாரம் பற்றியும் அதன் பள்ளிச்சந்தங்கள் பற்றியும் அதில் அரிய விவரங்கள் அடங்கியுள்ளன. கடார த்து அரசனின் தூதுவர்கள் இருவரின் வேண்டுகோளின் பயனாகச் சூளாமணி விகாரத்து நிலங்கள் பற்றிய நிபந்த னைகளை மாற்றி அதன் சங்கத்தாருக்குச் செப்பேடு எழு திக் கொடுத்தனர். பதினோராம் நூற்றாண்டின் முடிவிலே சோழருக்கும் கடாரத்தரசருக்கும் இடையில் நிலவிய உறவுகள் பற்றியும் விகாரத்தின் பள்ளிச் சந்தங்கள் தொடர்பான பல புதிய விபரங்களையும் இச்சாசனத்தின்
மூலமாக அறியமுடிகிறது.
குலோத்துங்க சோழன், 20ம் நூற்றாண்டில் ஒருநாள் ஆயிரத்தளியிலுள்ள அபிஷேக மண்டபத்தில் கலிங்கரா யன் என்னும் பள்ளிப்பீடத்தில் வீற்றிருந்த வண்ணம் இராஜ வித்தியாதர ரீசாமந்தர அபி,மானோத்துங்க சாமந்த என்னும் கடாரத்தரசனின் தூதுவர்கள் இருவரையும் அரசவைக்கு வரவழைத்து அவர்களின் விண்ணப்பத்தை விசாரித்தான். சிலகாலத்துக்கு முன் ஏற்பட்ட இறைநீங் கலை உறுதி செய்யும் வண்ணமாகவும் பள்ளிச்சந்த காணியாளரை நீக்கி இராஜப்பெரும்பள்ளி, இராஜசோழப் பெரும் பள்ளி என்பவற்றுக்குரிய நிலங்கள் மீதான உரிமை களை அவற்றின் சங்கத்தாருக்கு அளிக்கும் வண்ணமாக வும் புதிய பட்டயம் எழுதிக் கொடுக் குமாறு வேண்டினார்கள்.
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 169
அதனை ஒப்புக்கொண்ட சோழமன்னன், அவர்களின் விண்ணப்பத்தை நிறைவேற்றும் விதமாக புதிய பட்டய மொன்றை எழுதிக்கொடுக்கவென்று அதிகாரிகள் மூவேந்த வேளாரையும் சாந்திவிக்கிரதியான இராஜவல்லவ பல்லவ ரையனையும் பணித்தான். அவர்கள் செய்த ஏற்பாட்டின் பிரகாரம் அரச மாளிகையின் உட்கோடியில் நிலைகொண்டி ருந்த விக்கிரமாபரணத் தெரிந்த வலங்கை வேளைக் காரப்படையைச் சேர்ந்த நிகரிலி சோழன் மதுராந்தகன் பட்டயத்தை எழுதுவித்தான்.
நாகபட்டினத்திலே சோழமன்னரின் ஆதரவோடு கடாரத்து அரசரால் நியமிக்கப்பட்ட சூளாமணி விகாரமான இராஜராஜ பெரும்பள்ளியில் வழிபாடுகளுக்கு வேண்டிய நிபந்தங்கள் சோழ மன்னரின் நன்கொடைகளை ஆதாரமாகக் கொண்டவை. நாகபட்டினத்தில் வாணிபத்தின் காரணமாகச் சர்வதேச பரிணாமங்கள் கொண்ட பெளத்த குடியிருப்புகள் இருந்தன. அத்துடன் சோழரினதும் வணிகர் கணத்தவரின தும் அக்கசாலையினரதும் ஆதரவோடு நாகபட்டினத்து பெளத்த நிறுவனங்கள் பெருகி விசாலமாகி பெருவளர்ச்சி யடைந்தன. தமிழகத்து பெளத்தர்களின் பிரதான நிலைய ங்களாகவும் உபாசகரும் சங்கத்தாரும் நாடிப்போகும் மத் திய நிலையங்களாகவும் வளர்ச்சி பெற்றுள்ளன. முதலாவது ஆனைமங்கலச் செப்பேடு எழுதப்பட்ட காலத்துக்கும் இரண்டாவது பட்டயம் வழங்கப்பட்ட காலத்துக்கும் இடையில் இந்த மாற்றங்கள் ஏற்பட்டன போலத் தெரிகின்றது. புதிய நிறுவனங்கள் உருவானமை அந்த வளர்ச்சியின் ஓர் அடையாளமாகும். முதலாவது பட்டயம் சூளாமணி வர்ம விகாரம் பற்றியே குறிப்பிடுகின் றது. வேறெந்தப் பள்ளி பற்றியும் அது குறிப்பிடவில்லை. குலோத்துங்கன் வழங்கிய பட்டயம் கடாரத்தரசன் எடுப் பித்த இரண்டு பள்ளிகளைக் குறிப்பிடுகின்றது. "கடாரத்தர சன் எடுப்பித்த இராஜேந்திர சோழப் பள்ளிக்கும், இராஜ ராஜ பெரும்பள்ளிக் கும் பள்ளிச் சந்தமான ஊர்கள்” இவற்றிலே இராஜேந்திர சோழப்பெரும்பள்ளி என்பதை நிர்மாணித்த காடாத்தரையன் யார்? அது எப்போ அமைக்கப்பட்டது? என்னும் விடயங்கள் பட்டயங்களின் மூலமாக தெளிவாகத் தெரியவில்லை. இராஜேந்திர சோழன் என்பது முதலாம் குலோத்துங்கனுக்கும் உரிய பெயராகும். இராஜேந்திரசோழப் பெரும்பள்ளி என்னும்
綠囊雞
இந்துக் கலைக்களஞ்சியம்
 
 
 

பெயர் நாகபட்டினத்து வெண்கலப் படிமங்கள் சிலவற்றிலும் காணப்படுகின்றது. சங்கத்தவரின் உறைவிடமான விகார மும், வழிபாட்டுத் தலமான பெளத்த கோயிலும் பள்ளி என்று சொல்லப்படுவது தமிழ்மொழி வழக்கு என்பது கவனத்துக்குரியது.
அக்கசாலைப் பெரும்பள்ளி என்ற கோயிலொன்றை வெண்கலப் படிமம் ஒன்றிலுள்ள வாசகம் வர்ணிக்கின்றது.
அச்சாசனம் மேல்வருமாறு அமைந்துள்ளது.
“இராஜேந்திர சோழப்பெரும்பள்ளி அக்கசாலைப் பெரும் பள்ளி ஆழ்வார் கோயிலுக்கு திருவுற்சவம் எழுந்தருள ஆழ்வார். இவ்வாழ்வாரை எழுந்தருளுவித்தார் சிறுதவுர் நாலாங்குணாகர உடையார், ஸ்வஸ்திழர் பதினெண்
விஷையத்துக்கும் அக்கசாலைகள் நாயகர்.”
இதிலே இராஜேந்திர சோழப் பெரும்பள்ளி அக்கசாலைப் பெரும்பள்ளி என்ற தொடர் அக்கசாலைப் பெரும்பள்ளி, இராஜேந்திரசோழப் பெரும்பள்ளியின் அங்கமானது என் பதை உணர்த்துக்கின்றது. அக்கசாலையினரின் பெயரால் அமைந்த பள்ளி என்பதால் அதனை அக்கசாலைப் பெரும் பள்ளி என்று வர்ணித்தனர். அது ஆழ்வார் கோயில் எனப்படுவதால் அது வழிபாட்டுத்தலமாதல் வேண்டும். முன் கண்டவாறு விகாரத்தையும் அதனோடு இணைந்த கோயி லையும் சாசனம் எழுதியவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இச்சாச னத்தின் வரிவடிவங்கள் குலோத்துங்கன் வழங்கிய பட்டயத் தில் உள்ளவற்றைப் போன்றவை. எனவே, அக்க சாலைப் பெரும்பள்ளி 11ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிர்மாணம் பெற்று ஒரு வழிபாட்டு நிலையமாகி விட்ட்தென
6TD.
பள்ளிச்சந்தங்கள்
குலோந்துங்கன் வழங்கிய பட்டயத்திலே சூளாமணி விகாரத்தின் நிறுவனங்களுக்குரிய ஒன்பது பள்ளிச்சந்தங் களின் விபரங்கள் எழுதப்பட்டுள்ளன. அவை மேல்வருவன வாகும்.
1. கேயமாணிக்க வளநாட்டு பட்டினக் கூற்றத்து
ஆனைமங்கலம், 97 வேலி 2 மா 1/2 காணி.
இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 170
2. பட்டினக்கூற்றத்து பிரம்மதேயமான ஆனைமங்கலம்,
12 3/4 வேலை
3. பட்டினக்கூற்றத்து முஞ்சிக்குடி, 12 3/4 வேலி
4. திருவாரூர் கூற்றத்து ஆமூர், 106வேலி
5. அளநாட்டுக் கீழ்சந்திரபாடி, 10 வேலி, 2 மா,
1/2 காணி
6. அளநாட்டு வளகுடி நாணலூர் 70 3/4, 4 1/2 மா
7. அளநாட்டு பாலையூர் பிரம்மதேயம் 60 3/4 (36ปล)
8. ஐங்கொண்ட சோழவளநாட்டு குறும்பூர் நாட்டு புத்தகுடி:
87 1/4
9. விஜயராஜேந்திர வளநாட்டு இடைக்களி நாட்டு உதய
மார்த்தாண்ட நல்லூர்: 3 வேலி, 3 மா
இப்பள்ளிச் சந்தங்கள் சோழமண்டலத்து வளநாடுகள் இரண்டிலுள்ள ஐந்து நாடுகளில் அடங்கியிருந்தன. ஆனைமங்கலத்தில் மட்டும் இரண்டு பிரிவுகள் இருந்தன. எல்லாமாக அவற்றின் அளவு 475 வேலி ஆகும். அவற்றி லிருந்து அரசாங்க மதிப்பீடுகளின்படி கிடைக்கக்கூடிய வருமானம் 23, 235 கலம் நெல். ஊரார் இறை கடமைக
ளான வரிகள் மேலதிகமான வருமானங்கள்.
நாகபட்டினத்து புராதனமான மாடிக்கட்டடம்
பதினோராம் நூற்றாண்டின் பின்னர் நாகபட்டினத்து விகாரம் பற்றிய வர்ணனைகள் சாசனங்களில் காணப்பட வில்லை. புத்தப்பிய திவாங்கரர் என்னும் ஈழநாட்டு பெளத்த தேரர் சூளாமணிகாராமம், பலாதிச்ச விகாரம் என்பவற்றின் நாயகராக விளங்கினார் என்ற விபரம் ரூப சித்தி என்னும் பாளி நூல் மூலமாகவும் அதன் உரை நூல் மூலமாகவும் தெரியவருகின்றது. அந்த 6ïLIJLij 12b நூற்றாண்டு நிலைகளைப் பற்றியதாகும். 12ம், 13ம் நூற் றாண்டுகளில் இலங்கையிலுள்ள பெளத்த நிறுவனங்களுக் கும் சோழ நாட்டு பெளத்த நிறுவனங்களுக்கும் இடையில்
இந்துக் கலைக்களஞ்சியம்
 
 

நெருங்கிய தொடர்புகள் இருந்தன.
சூளாமணிவர்ம விகாரத்தின் பள்ளிவிளாகம் 31 3/4 வேலி 2 மா ஒரு முந்திரிகை அளவிலான நிலத்தைக் கொண்டிருந்தது. அதன் எல்லைகள் குலோத்துங்க சோழன் பட்டயம் வழங்குவதற்கு முன்பே வரையறையாகி இருந் தன. கிழக்கிலே கடற்கரையிலுள்ள பாறைக்கல்லும் தெற் கிலே புகையுண்ணி என்ற கிணறும் வடக்கிலே காரைக்கல் லுக்குப் போன பெருவழியும் வடக்கிலே சோழ குலவல்லிப் பட்டினத்துக் காடன்பாடி என்னும் நிலமும் அதன் எல்லைக ளாய் இருந்தன. சூளாமணிவர்ம விகாரத்தின் வழிபாடுகளில் எஞ்சிய ஒரு சின்னமாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை ஒரு மூன்று மாடிக்கட்டிடத்தின் பகுதி ஒன்று நிலைபெற்றது. அதனைச் சீனப்பகோடா என்றும் புதுவெனிக் கோபுரம் என்றும் ஊரார் குறிப்பிட்டனர். அது நீள்சதுரமான மாடிக்கட்டடமாகக் திகழ்ந்தது. அதுவே செங்கல் வேலைப்பாடாக மூன்று மாடிகள். மாடிகள் ஒவ்வொன்றுக்கும் இடையில் கபோதம் போன்ற வேலைப்பாடுகள் தெரிந்தன. சுவர்களின் ஒவ்வொரு பக்கத் திலும் நுழைவாயில்களைப் போல வெளிகள் தெரிந்தன. மேல்மாடி கூரையற்ற கோலத்தில் இருந்தது. அதிலே சிற்பங்களோ கல்வெட்டுகளோ காணப்படவில்லை. கரை யோரமாகச் செல்லும் கப்பல்கள் அதனை நாகபட்டினத்தின்
அடையாளமாகக் கொண்டு பிரயாணம் செய்தன.
அந்தச் சின்னத்தை ஒரு தொல்பொருள் சின்னமாகப் பாதுகாப்பதற்கு அரசாங்க அதிகாரிகள் சிலரும் ஊராரும் மேற்கொண்ட நடவடிக்கைகள் பயனளிக்கவில்லை. நிலத்தை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொண்ட ஜெசூற் திருச்சபையார் 1867இல் கட்டடத்தை இடித்து அதன் இடத்திலே பாடசாலை அமைத்தனர். அத்தோடு சூளாமணி வர்ம விகாரத்தின் கதை முடிந்துவிட்டது.
வெண்கலப்படிமங்கள்
நாகபட்டினத்தில் பாதிரிமார்களின் ஏற்பாட்டாளர் பாடசா லைக் கட்டடங்களுக்கு வேண்டிய அத்திவாரம் இடுவதற்கு நிலத்தை வெட்டியபொழுது பல பெளத்த வெண்கலப் படி மங்கள் கிடைத்தன. அவற்றில் ஒன்றின் பீடத்திலே சாசனம் எழுதப்பட்டிருந்தது. ஐரோப்பிய ஆய்வாளர் சிலர்
毅 இந்து சமய கலாசார அலுeபaல்கள் திCைOOக்களம்

Page 171
அதன் வாசகத்தைப் படிக்க முயன்றும் அதனை சரியாக அடையாளம் காணமுடியவில்லை. அதனை 'சுவஸ்தி ரீ ஆகம பண்டிதன் உய்யங்கொண்ட நாயகன் என்று
எம்மால் அடையாளம் காணமுடிந்தது.
நாகபட்டினத்தில் 1856, 1934 ஆகிய ஆண்டுகளிலே பெருந்தொகையான வெண்கலப்ப்டிமங்கள் அகழ்வுகளின் மூலம் கிடைத்தன. கலைச்சின்னங்கள் என்ற வகையிலும் வரலாற்றுச் சின்னங்கள் என்ற வகையிலும் அவை மிகுந்த முக்கியத்துவம் கொண்டவை. ஏறக்குறைய 70 படிமங்க ளின் பீடங்களிலே சுருக்கமான அளவிலே சாசனங்கள் தமிழில் எழுதப்பட்டுள்ளன. அவற்றிலே போதிசத்துவரின் பெயர்களும் தானக்காரரின் பெயர்களும் பெளத்த துறவிக ஸ்ரின் பெயர்களும் பிக்குணிகளின் பெயர்களும் ஊர்ப்பெயர் களும் அடங்கியுள்ளன. அவற்றுள் அரைசர், அண்டர், ஆழ்வார், ஆண்டாள், ஆழ்வி, உடையார், உலகநாதன், நம்பன், நாயகர், நாயன்மார், குறவர், மாணி, தேவர் என்பன குறிப்பிடத்தக்கவை. சைவ, வைணவ, சமண சமய மரபுக ளிலே சமயக் கோட்பாடுகள் சமயகுரவர், கடவுளர் தொடர் பாகப் பயன்படுத்தப்பட்ட சொல்லாட்சியை பெளத்தர்களும் பயன்படுத்தினர் என்பதை இவற்றின் மூலம் அறியமுடி கின்றது.
முன்னாட்களிலே தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு தாலுகாப் பிரிவாக அமைந்திருந்த நாகபட்டினம் இப்பொழுது ஒரு தனி மாவட்டமாக அமைக்கப்பட்டுள்ளது. துறைமுகப்பட் டணமாகிய நகரமே மாவட்டத்தின் தலைநகரமாகும். அதனால் மாவட்டமும் அதன் தலைமை நிர்வாக நிலையத் தின் பெயரால் வழங்குகின்றது. நெடுங்காலமாக உள்நாட்டு வெளிநாட்டு வணிகத்தின் மையமாக விளங்கியதால் அங்கு ள்ள சமுதாயம் பல்லினப் பண்பாட்டு அம்சங்களைக் கொண்டதாக உருப்பெற்றுள்ளது. அங்கே பெளத்த சமயம் மறைந்துவிட்டது. அதனிடத்தை இஸ்லாமும் கிறிஸ்தவ மும் பிடித்துக்கொண்டன. மாவட்டத்து சனத்தொகையில் இந்துக்களே பெரும்பான்மையானோர். பல்வேறு வகையான சமயத்தவர்களிடையிலும் நிலைபெறும் நல்லுறவுகளுக்கு நாகபட்டினம் நல்லதொரு உதாரணமாகும். (d.L.)
இந்துக் கலைக்களஞ்சியம்
 

நாகர்கோயில் (இலங்கை)
யாழ்ப்பாணத்துப் பருத்தித்துறைக்குக் கிழக்கே பத்துக் கட்டை தொலைவில் நாகர் கோயில் என்னும் பெயருள்ள ஒரு சிற்றுார் உண்டு. இவ்வூரின் தெற்கெல்லை யாழ்ப்பா ணக் குடாநாட்டில் தொண்டைமானாற்றிலிருந்து பரவி இருக்கும் உப்பாறு ஆகும். இவ்வாற்றினருகேயிருக்கும் நிலம் உப்பங்கழியாகையின் இங்கு கண்டல் மரம் பெரும் பாலும் வளரும். இக்கழிநிலத்தருகே வடபுறமாக மருத நிலமுள்ளது. இந்நிலத்தில் அவ்வூர் வாழ் உழவர் நெல் விளைப்பர். புன்செய்கை நிலமாகையின் ஆண்டுக்கொரு முறையே உழுது பயிரிடுவர். ஏனைய காலங்களில் வயல் கள் வெற்றெனக் கிடக்கும். இம்மருதநிலமும் ஒரு சிறித ளவே அங்குள்ளது. இது முடியும் எல்லையிலிருந்து வட பால் நோக்கி நெய்தல் நிலம் தொடங்கும். இம்மருதநில எல்லையிலிருந்து சற்றேறக் குறைய இரண்டு கட்டை தொலைவிலுள்ள கடல் மட்டும் நெய்தல் நிலமே பரந்துள்ளது.
இந்நெய்தல் நிலப்பரப்பு பருத்தித்துறைக்கு அடுத்துள்ள நெய்தல் நிலத்துாராகிய கற்கோவளத்திலிருந்து தொடங் கும். இது கிழக்குப் பாகத்தே கரையோரமாகப் பரந்து பச்சிலைப் பள்ளிக்கு அடுத்துள்ள கோவில்வயற் குடா நாடு வரைக்கும் செல்லும் யாழ்ப்பாணத்தில் இப்பகுதி மிகச் சரித்திரப் பெருமை வாய்ந்தது. பெரிய குடியிருப்புக் களைப் பழங்காலத்திற் கொண்டிருந்தது என்று சரித்திர நூல் வல்லோர் கருதுவர். வல்லிபுரக் கோயிலும் குடத்த னையும் இந்நிலப்பரப்பிலேயே உள்ளன. வல்லிபுரக் கோயி லிற் கண்டெடுத்த சாசனத்தின்படி கி.பி. இரண்டாம் நூற் றாண்டில் அநுராதபுரத்திலிருந்து இலங்கையை அரசாண்ட வசபன் என்னும் அரசன் காலத்திலே நாக தீவத்தை அவன் அமைச்சருள் ஒருவனாகிய இசிகிரயன் என்பவன் மாகாண அதிகாரியாய் இருந்து பரிசீலித்து வந்த காலத் தில் பியகுசதீசன் என்பவன் கட்டியெழுப்பிய புத்தப் பள்ளி யிருந்த இடத்திலேயே பிற்காலத்தில் வல்லிபுரக் கோயில் தோன்றியிருக்கின்றதெனத் தெரிகின்றது. மேலும் புத்த பள்ளிகளை அமைக்கும்பொழுது அதன் அத்திவாரத்தின் கீழ் மக்கள் கண்ணுக்கு எட்டாது பொற்றகட்டில் அப்பள்
&இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 172
ளியை ஆக்குவோனின் பெயர் பொறித்து வைத்தல் அக் கால மரபு அவ்வாறெனின் அத்திவாரத்துக்குக் கீழ் புதைக் கப்பட்ட பொற்றகடு மேலுக்குக் கிளம்பியதன் காரணம் யாது என்ற கேள்வி எழும். அதற்கு விடை என்னவெனின் அப்பள்ளி கட்டிய காலத்தும் அந்நிலம் மணலாகவே இருந்ததென்க. ஆகையால் இந்நிலப்பரப்பு சரித்திர எல்லை க்கு முற்பட்ட காலத்திலிருந்தே மணல் நிலமாக இருந்தி ருக்கிறது. 1952ஆம் ஆண்டில் நடந்த கடல்கோள்போல முன்பும் எத்தனையோ கடல்கோள்கள் இப்பகுதிக்குள் நடந்தனவென்று பழைய நூல்கள் வாயிலாக அறிகிறோம். அன்றியும் இப்பகுதி பழங்காலந்தொட்டே இலங்கைச் சரித் திரத்தில் கீர்த்தி வாய்ந்ததாய் இருந்து வருகின்றதென அறிகின்றோம். இப்பொழுது சிறுகாடு அடர்ந்து இடையி டையே மக்கள் வாழும் சிறுசிறு ஊர்கள் உடையதாய் இருக்கின்றது. இக்காட்டுப் பக்கங்களில் உள்ள மணற்பரப் பில் செங்கல்லுத் துண்டுகளும், கலவோடுகளும் மலிந்து காணப்படுகின்றன. அதனோடு பொற்காசுகளையும் சில வேளைகளில் திரவியங்களையும் மக்கள் கண்ட்ெடுக்கின்ற னர். இப்பகுதி நிலத்தைத் தொல்பொருட்கலை ஆராய்ச்சியா ளர் ஆராய்ந்து பார்த்தால் பழைய உண்மைகள் ஒருவாறு வெளியாகும்.
நிற்க. இந்நாகர்கோயிலுள்ள நெய்தல் நிலப்பரப்பும் இப் பெரும் பகுதியின் ஒரு கூறே. ஆகையின் இவ்வூருள்ள பகுதியும் சரித்திரப் பெருமை வாய்ந்திருந்தது என்பது போதரும். இங்கிருக்கும் காட்டுமணல் நிலங்களிலும் கல வோடுகளும், செங்கற்றுண்டுகளும் மலிந்திருப்பதை எங்கும்
35.1600I6) lib.
இவ்வூரிலே கீர்த்தி வாய்ந்த கோயில் ஒன்று இருக்கின் T}). இக்கோயிலின் பெயர் நாகதம்பிரான் கோயில். இது இங்குள்ள மருத நிலமும் நெய்தல் நில்மும் சந்திக்கும் இடத்தில் உள்ளது. மிகப்பெரிய கோயிலன்று. எனினும் எவராலும் நன்கு போற்றப்படுவது. இக்கோயிலிலுள்ள நாக தம்பிரானையே இவ்வூரிலுள்ளார் முக்கிய 35L6),617 T85 வணங்குவர். இக்கோயிலின் மூலமூர்த்தி சிவலிங்கத்தைக் தனது படத்துள் அமைத்து வைத்திருக்கும் ஐந்து தலை நாகம் . இத் திருவுருவம் பழைய உண்மையை எடுத்துக் காட்டுமாயின் ‘நாகதம் பிரான்’ என்னும்
@tæä ಹಠಾಣು&ಜಂಗಿಕàKW686
 
 

சொற்றொடர் சிவபெருமானுக்கே உள்ள வேறோரு பெயராகும். 'தம்பிரான்’ என்ற சொல் சிவபெருமானுக்குப் பெயராய்ப் பெரியபுராணம் வழங்கும் தம்பிரான் சோழர் என்னும் சொற்றொடர். சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் குறிக்கும் - சிவபெருமானுக்குத் தோழர் என்னும் பொருள் படுதலால். ஆனால் மலையாளத்தில் 'தம்பிரான்’ என்னும் சொல் அரசனைக் குறிக்கும். திருவனந்தபுரத்து அரசரை இன்றும் தம்பிரான் என்றே அழைப்பர். அதனால் இது நாகமாகியதம்பிரான்’ என்ற பொருளைத் தருகிறது. அதா வது நாகமாகிய கடவுள் என்று பொருள்படும். இப்பொருளே மக்கள் மனதில் இன்று ஊன்றி இருக்கின்றது. இப்பொரு ளையொட்டி அவ்வூரில் பல கதைகளும் எழுந்துள்ளன.
பறங்கியர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி ஆண்ட காலத் திலே ஒரு முறை நாகர் கோயில் கடற்கரையில் பறங்கிய ரின் போர்க்கப்பல் ஒன்று வந்து நங்கூரமிட்டது. அவர் படையிற் போர் வீரராக்கும் எண்ணத்தோடு அவ்வூரிலிருந்த ஆயிரம் வாலிபரைக் கைப்பற்றினர். இச்செய்கை அவர்களுக்கும் அவர்கள் பெற்றோர்க்கும் இசையவில்லை. பறங்கியர் ஆட்சிக் காலத்தில் தன்னரசு முறையைக் கைக் கொண்ட கொடுங்கோலாட்சி ஆயினமையின் அவ்வூர் மக் கள் அரசினரின் இவ்வடாத செய்கையை எடுத்து மொழி யப் பெரிதும் அஞ்சினர். அதனால் தாம் வழிபடும் கடவுளா கிய நாகதம்பிரானுக்கே இவ் அநியாயத்தை முறையிட்டுப் பழிகிடந்தனர். தம்மக்களின் இடரைக் கண்ட தம்பிரான் அவரைக் காக்கத் திருவுளங்கொண்டார்.
இது இவ்வாறாக, பறங்கியர் இளைஞர் ஆயிரவரையும் ஒரு குறித்த நாளில் கோவைக்குக் (Goa) கொண்டு செல்லக் கப்பலேற்றுவரென்று அவ்விளைஞர்களின் பெற் றோர் யாவரும் அறிந்தனர். ஊரவர் கப்பல் நங்கூரமிட்டு நிற்கும் கடற்கரையிலே திரள் திரளாய் வந்து சேர்ந்தனர். எங்கும் அழுகையும் ஒலமுமாக இருந்தது. இவர்கள் இப்படி யிருக்கப் பறங்கிக் கப்பற் தலைவனும் கடற்படை வீரரும் கப்பலுக்கு வந்து சேர்ந்தனர்.அவரோடு அவ்விளைஞர் ஆயிரவரும் அக்கப்பலிலேற்றப்பட்டனர். சிறிது நேரத்தில்
கப்பல் பாயெடுப்பதற்காகிய முன்னேற்பாடுகள் யாவும் அங்கு நடந்துகொண்டிருந்தன. கப்பல் மாலுமிகள் அங்கு மிங்கும் ஒடிஓடித் தத்தமக்கிட்ட வேலைகளைக் கவனித்து

Page 173
வந்தனர். இவ்வாறு வேலைகள் நடந்துகொண்டிருக்கும் போது மாலுமி ஒருவன் கப்பற்பாய்களை ஒழுங்குபடுத்துவ தற்காகக் கப்பலின் நடுப்பாய் மரத்தில் ஏறினான். அப்பொ ழுது அங்கு ஒரு நாகபாம்பு படுத்திருப்பதைக் கண்டான். உடனே அதற்கு அஞ்சி கீழுறங்கி ஓடிச் சென்று கப்பற்ற லைவனுக்குக் கூறினான். மாலுமிகள் யாவரும் தலைவ னோடு பாய்மரத்தருகே வந்து பாம்பு படுத்திருப்பதைப் பார்த்தனர். பின்னர் ஒரு துப்பாக்கி எடுத்து அதற்குள் வெடிமருந்தும் குண்டும் போட்டு அப்பாம்பிற்கு இலக்குவைத் துச் சுட்டனர். பாம்பு ஆயிரத்துக்கு மேலான துண்டுகளாகிக் கப்பற்றளத்தில் வீழ்ந்தது. இதைக்கண்டு கப்பற்றலைவனும் மாலுமிகளும் மிகுந்த ஆனந்தம் கொண்டனர்.
இவ்வாறு அவர் ஆனந்தமுற்றிருக்கையில் ஒவ்வொரு துண்டும் ஒவ்வொரு பாம்பாகிப் படமெடுத்துச் சீறி நின்றாடி யது. இக்காட்சியைக் கண்டதும் பறங்கியர் அஞ்சினர். ஒன்றோ, இரண்டோ அல்ல. ஆயிரத்துக்கு மேலான பாம்பு கள் அடியெடுத்து வைக்கவும் இடமில்லாது கப்பலெங்கும் பாம்புகளாகக் காட்சியளித்தன. இதற்கிடையில் புயலொன் றும் எழுந்தடித்தது. அப்புயலின் ஆவேசத்தால் கப்பல் பக்கத்துக்குப் பக்கம் ஆடி அசைந்து நீர்கோலி ஆழும் நிலையில் இருந்தது. தலைவன் இவ்வாபத்தான நிலையக் கண்டான். உடனே பாரத்தைக் குறைப்பதற்காக அங்கு ஏற்றிய இளைஞர்கள் யாவரையும் இறங்கும்படி கட்டளை
யிட்டான்.
அவ்வாறு அவர்கள் ஒவ்வொருவரும் இறங்கும்போது ஒவ்வொரு பாம்பும் அவருடன் இறங்கியது. கப்பலின் பாரம் குறைந்தபடியால் கப்பலின் அபாயமும் நீங்கிற்று என எண்ணிக் கப்பற் தலைவன் உவகையெய்தினான். ஆனால், ஒரு பாம்பு மட்டும் இறங்காது நின்று பெரும் நாதமிட்டுச் சீறும் பயங்கரமான ஒலி கேட்டுக்கொண்டிருந்தது. இன்னும் ஒரு பாம்பு கப்பலின் உட்புறத்தில் நிற்பதை அறிந்தனர். அப்பொழுது கப்பலின் உட்புறத்தை ஆராய்ந்து பார்த்த போது அங்கு ஒரு சிறுவன் இருக்கக் கண்டனர். அவனைக் கப்பலின் சமையற்காரன் தன் அட்டற்றொழிலுக்கு உதவி புரிவதற்குப் பிடித்து வைத்திருந்தமை ஒருவருக்கும் தெரி யாது. கப்பலுக்குள்ளே கொண்டு வந்து அட்டல் அறைக்
குள் ஒளித்து வைத்திருந்தான். அதை அறிந்து மாலுமிகள்
இந்தக் கலைக்களஞ்சியம்x 刻14
 

அச்சிறுவனையும் வெளியே கொண்டு வந்தனர். பாம்பும் அவனைப் பின்தொடர்ந்து வந்தது. உடனே அவனையும் கரையில் இறக்கினர். அவனோடு பாம்பும் சென்றது. புயலும் ஒய்ந்தது. இதை அறிந்து மாலுமிகள் மூச்சுவிட்டு மனம் ஆறினர். அதன்பின் கப்பல் பாய் எடுத்து அவ்வூரை விட்டு நீங்கியது. ஊரவர்கள் நாகதம்பிரான் கோயிலுக்குச் சென்று பெரிய வழிபாடாற்றி நாகதம்பிரானை வாழ்த்தி நின்றனர்.
இக்கோயிலிலே திருவிழா ஆண்டுதோறும் புரட்டாதி மாதம் நடக்கும்.அங்கு நடக்கும் திருவிழாக்களில் ஒன்று கப்பற்றிருவிழா. அப்பொழுது ஒரு கப்பல் கட்டி, பறங்கியர் போல் உடையணிந்து, பறங்கியர் அவ்வூர் இளைஞரைப் பிடித்துத் தம் கப்பலில் ஏற்றிப் பின் நாகதம்பிரானின் அருளால் இறக்கிவிட்ட வைபவத்தை மக்கள் முன்னிலை யில் பாட்டுப்பாடி நடித்துக் காட்டுவர். அன்றியும் கடைசித் திருவிழாவாகிய கடற் தீர்த்தத்தன்று சுவாமியை அலங் கரித்து மிக்க ஆடம்பரத்துடன் அங்குள்ள கடற்கரைக்கு எடுத்துச் சென்று தீர்த்தமாடுவர். தீர்த்தமாடும் இடமே பறங்கியரின் கப்பல் வந்து நங்கூரமிட்டு நின்ற இடம்
என்று அங்குள்ளார் இன்றும் கூறுவர்.
நாகதம்பிரானின் திருவிளையாடல்களைப் பற்றிய இன் னும் பல கதைகள் அவ்வூராரக்குள் வழங்குகின்றன. ஒரு முறை கடற்திருவிழாவன்று தீர்த்தமாட்டுதற்குச் சுவாமி யைக் கொண்டு செல்ல ஏதோ பிணக்கால் சிறிது நேரம் சென்றுவிட்டது. மக்களும் கடற்கரையிற் தீர்த்த மாடும் இடத்திற் கூடிவிட்டனர். சுவாமியை இன்னும் கொண்டு வரவில்லை. அப்பொழுது எவரும் பார்க்கக்கூடிய வண்ணம் நாகமொன்று அங்கு வந்து கடலில் தீர்த்தமாடியது. அவ்வற் புதக் காட்சியைக் கண்டு ஆனந்தித்து மக்கள் நாகதம்
பிரானைப் பரவி நின்றனர்.
அவ்வூரிலே இரு பகுதி மக்கள் வாழுகின்றனர். தரைப் பகுதியில் வேளாண் மக்கள். கரைப்பகுதியில் நெய்தல் நில மக்கள். இரு பகுதியாருக்கும் உரியது நாகதம்பிரான் கோயிலாகையினால், வழக்கமாக ஒற்றுமையாகவே இங்கு திருவிழாக்கள், பொங்கல் பூசைகள் முதலியன நடை பெறும். ஊடுதலும் உவத்தலும் மனித இயற்கையாகை யின் சிற்சிலவேளைகளில் இரு பகுதியாருக்கும் சண்டை,
BZZZZZ ZZZS T TLLLL sCLL TCLLCCLC TMLeeLeeLTTTML

Page 174
சச்சரவுகள் வருதலும் உண்டு. திருவிழாக்காலத்தில் ஒரு நாள் அவ்வகையான சண்டையொன்று எழுந்தது. முதலில் வாய்ப்போராய் எழுந்தது, கைப்போர் பொல்லுப் போராய் மாறுதற்கு ஆயத்தமாயிற்று. எங்கும் ஒரே குழப்பமும் கொந்தளிப்புமாகவிருந்தது. திருவிழாவும் நிறுத்தப்பட வேண்டிய நிலையில் இருந்தது. இவ்வாறான கலவரத்துக் கிடையில் ஒருவன் அங்குள்ள பலிபீடத்தில் ஒரு பாம்பு வந்திருக்கக் கண்டு, யாவருக்கும் உரக்கக் கூவி அச்செய் தியைச் சொன்னான். உடனே சண்டை நின்றது. யாவரும் நாகதம்பிரானை வீழ்ந்து வணங்கித் தாம் செய்த இத்தீய செயலை மன்னிக்குமாறு இரந்து வேண்டினர். அதன்பின் திருவிழா முன்னரிலும் பெரும் அன்போடு மிகவிமரிசை யாக நடந்து முடிந்தது.
அங்கு நாகபாம்புகள் பல வாழுகின்றன. அவை எவருக் கும் தீங்கு செய்வதில்லை. பூசை செய்யும் பூசாரியார் அவற்றிற்குப் பாலும் பழமும் வைக்கும் வழக்கம் உண் டென்று கூறுவர். கோயிலில் ஏதாவது குற்றம் நடந்து விட்டால் பாம்பு அங்கு மக்களுக்கு வெளிப்பட்டு நிற்கும் என விளம்புவர். மறுநேரங்களிலும் அவ்விடத்தில் பாம்பு
உலாவ மக்கள் காண்பதும் உண்டு.
ஒருநாள் அங்கு வழக்கமாகப் பூசை செய்யும் பூசாரியார் ஏதோ வேலையாய் எங்கோ சென்றுவிட்டார். அவர் போகும் போது மறுநாள் பூசையைப் போய்ச் செய்து விடுமாறு சிறுவனாகிய தன் மகனிடம் கூறி இருந்தனர். சிறுவன் பூசை செய்ய அங்கு சென்று கோவில் கதவைத் திறந்தான். கதவு சிறிது திறந்ததும் அங்கு ஒரு பாம்பு வாயிற்படிக்கருகில் கிடப்பதைக் கண்டான். கோயிற் பாம் பாகையின் அதற்கு அவன் அவ்வளவு பயப்படவில்லை. பாம்பைக் கடந்து கோயிலுக்குள் போதல் முறையன்றென எண்ணி சிறிது நேரம் அங்கு வெளியே நின்றான். பாம்போ நகர்ந்த பாடில்லை. பின்னர் சிறு தடி ஒன்றினை எடுத்து அதனால் பாம்பைச் சிறிது தள்ளினான். பாம்புக்குக் கோபம் வந்து விட்டது. கோயிலுக்குள் ஒரே இரைச்சலாக இருந்தது. சிறுவன் பயந்து நடுங்கினான். பாம்பின் இரைச்சலைக் கேட்டு அங்கு பலர் வந்து கூடினர். அங்கு நின்றோருள் ஒருவன் ஓடோடியும் பூசாரியார் வீட்டுக்கு வந்து நடந்தவற் றைக் கூறினான்.
இந்துக் கலைக்களஞ்சியம்: 緣14
 
 

6
அத்தறுவாயில் பூசாரியாரும் வீடு வந்து சேர்ந்தனர்.அவர் நிகழ்ந்தவற்றை அறிந்து விரைவில் நீராடி விட்டுக் கோயிலையடைந்தார். பாம்பு நாதமிட்டுக் கொண்டு கிடப்பதைக் கண்டார். உடனே கதவைத் திறந்து ‘எம்பெரு மானே! என் மகனோ சிறு குழந்தை. அவன் செய்ததை இவ்வாறு கோபமாய் எடுக்கலாமா? நகர்ந்து வழிவிடுங்கள், பூசைக்கு நேரமாகிறது” என்று தம் கைகளைக் கூப்பி வணங்கிக் கூறினார். நாத ஒலி நின்றது. பாம்பும் ஒரு பக்கம் நகர்ந்தது. பூசையும் செவ்வனே முடிவுற்றது.
இவ்வூரிலே விடந்தீண்டி மக்கள் இறப்பது குறைவு. யாருக்காவது விடந்தீண்டிவிட்டால் விடந்தீண்டியவரைக் கோயிலுக்குக் கொண்டுவந்து அங்குள்ள புற்று மண்ணை எடுத்து கோயிலுக்கு அருகிலிருக்கும் நீர்நிலையிலுள்ள தண்ணிருடன் கலந்து குடிக்கக் கொடுப்பர். சிறிது நாழிகை யில் விடம் தீர்ந்துபோகும். இந்நீர்நிலைக்குள் "குடவாழை” என்ற ஒருவகைச் செடி அடர்ந்து வளர்ந்துள்ளது. இச்செடி யின் சத்து விடத்தைப் போக்கவல்லதோ என்றும் ஆராயத் தக்கது.
இன்று இவ்வளவில் நிற்க, இதுவரையில் "நாகதம்பிரான்” என்ற சொற்றொடரை நாகமாகிய தம்பிரான் எனப்பொருள் கொண்டு ஆராய்ந்தோம். "நாகர்தம்பிரான்” என்னும் தொட ரும், "நாகதம்பிரான்” என்று உருவங்கொண்டு வழங்கும். வணிகர் தெரு, வணிக தெரு’ என்று மருவி வழங்குதல் போல, நாகர் என்னும் சொல்லும் தம்பிரான் என்னும் வேற்றுமை வழியாகப் புணர்ந்து இப்பொழுது வழக்கிலிருக் கும் நாகதம்பிரான் எனும் தொடர் வந்திருக்கலாம் எனக் கொள்ளின் இச்சொற்றொடர் நாகர் என்னும் சாதியாரின் அரசன் என்று பொருள்படும். வல்லிபுரக் கோயிலில் கண்டெ டுத்த சாசனத்தினாலும் மற்றும் வேறு ஏதுக்களினாலும் இப்பொழுது “யாழ்ப்பாணம்” என வழங்கும் நிலப்பரப்புக்கு நாகதபம் என்ற பெயர் பண்டைக்காலத்தில் இருந்ததென அறிகிறோம். ஆகையினால் யாழ்ப்பாணம் நாகசாதியாரின் குடியிருப்பாய் இருந்த அக்காலத்தில் “நாகர்கோயில்” எனப்படும் அவ்வூர், நாகர் தம் அரசன் வதியும் ஊராக இருந்திருக்கலாம். அதாவது நாகர் கோயிலின் கோட்டை அங்கேயே இருந்தது. அங்கிருந்தே நாகர் தலைவர் அப்பகு தியை அரசாண்டான் என்று போதரும்.
絲線$政函5c山5aT9T口ggal65c前georrorä5emá

Page 175
மேலும் இராசநாயக முதலியாரவர்கள் தமது "பண்டை யாழ்ப்பாணம்’ என்னும் சரித்திர நூலில் “கந்தரோடை” என்னும் ஊரே யாழ்ப்பாணத்தில் நாகர் காலத்துத் தலை நகராயிருந்ததெனக் கூறும் காலத்தில் அங்கு நாகர் மட்டு மேயன்றி வேறு சாதியாரும் வந்து கூடிவிட்டனர் எனத் தெரிகிறது. ஆனால், “நாகர் கோயில்” என்னும் ஊர் தலைநகராயிருந்த காலத்தில் நாகரேயன்றிப் பிறமக்கள் அங்கு இருக்கவில்லையென ஊகித்தற்கிடமுண்டு. ஆகை யால் நாகர் கோயிலே யாழ்ப்பாணம் நாகர் குடியிருப்பாயி ருந்த காலத்து முதற்றலை நகரமாயிருக்கலாம்.
இதுபோலவே தென்னிந்தியாவிலும் “நாகர்கோயில்” என்னும் பெயருடைய ஒர் ஊர் இருக்கிறது. மிகப்பழங்காலத்து நாகர் சாதியார் இந்தியாவின் தென்கோடியில் வாழ்ந்தனர் எனத் தெரிகிறது. நாகபட்டினம், நாகர்கோயில்
போன்ற ஊர்ப்பெயர்கள் இதற்குச் சான்றாகும். அன்றியும் மலையாளத்தில், ஈழத்தில் இருப்பது போலவே, "நாக”
வழிபாடு இன்றும் இருந்து வருகிறது. இங்குள்ள ஒவ்வொரு நம்பூதிரிப்பார்ப்பனர் இல்லத்திலும் அதன் தெற்குப் பக்கத்தில் 'நாக” வழிபாட்டிற்குரிய இடங்கள் காணப்படு கின்றன. இதனால் நாகவழிபாடு இங்கு பண்டைக்காலந் தொட்டே இருந்து வருகிறதெனத் தெரிகிறது. எனவே, இப்பகுதிக்கும் நாகர்காலத்தில் இங்குள்ள நாகர் கோயிலே
அரசன் இருப்பிடமாயிருந்திருக்கலாம். (85.86.)
நாகலிங்க முனிவர்
இவர் அண்மைக் காலத்தில் வாழ்ந்த பெரும் தமிழறிஞர். இவர் நூலாசிரியர், உரையாசிரியர், பதிப்பாசிரியர், போதகா சிரியர், இதழாசிரியர், சொற்பொழிவாளர் எனப் பல துறையி லும் சிறந்து விளங்கினார். இவர் கி.பி. 1865ஆம் ஆண்டு காஞ்சீபுரத்தில் செங்குந்த மரபில் சரவணப்பெருமாள் முதலி யார், மனோன்மணியம்மையார் என்னும் பெற்றோர்களுக்குப் பிறந்தார். இளமையிலேயே தந்தையை இழந்த இவர் தம் 12ஆம் வயதில் நெசவுத் தொழிலை மேற்கொண்டார். 14ஆம் வயதிலிருந்து சென்னையில் தம் சிறிய தந்தையார் புசங்கராவ் முதலியாரின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார்.
,@政gä66oas&m@éun貓 貓14
 

இவர் கச்சபாலைய தேசிகர், வள்ளுவப்பாக்கம் சீனிவாச முதலியார், அட்டாவதானம் பூவை கலியாண சுந்தர முதலி யார், மயிலை சண்முகம்பிள்ளை, குன்றக்குடி ஆறுமுகத் தம்பிரான் ஆகிய தமிழறிஞர்களிடம் கல்வி பயின்றார். தம் 25ஆம் வயதில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிக ளிடம் கல்வியும் கெளமார தீட்சையும் பெற்றார். வண்ணச் சரபம் சுவாமிகள் சென்னை பெத்துநாயக்கன்பேட்டை காசி விசுவநாதர் கோயிலில் தம் தில்லைத் திருவாயிரத்தை அரங்கேற்றியபோது நாகலிங்க முனிவர் கையேடு படித்தார். இவரால் இயற்றப்பெற்ற திருத்தணிகை வண்ணமஞ்சரி யைக் கண்ணுற்ற சுவாமிகள் வண்ணக் களஞ்சியம் என்ற
பட்டத்தை வழங்கினார்.
சென்னைச் சிவனடியார் திருக்கூட்டத்துள் இவர் சிவ ஞான முனிவர் நூல் நிலையம் என ஒரு நூலகத்தை நிறுவினார். சென்னை அருணாசலேசுவரர் வசந்த மண்டபத் தில் நிறுவப் பெற்றிருந்த மெய்கண்டசந்தானசபை, தேவாரப் பாடசாலை, மெய்கண்டான் கல்லூரி ஆகியவற்றின் பொறுப் புக்களையும் நாகலிங்கனார் ஏற்றிருந்தார். அருணாசலேசு வரர் கோயிலுள்ள அணியண்ணாமலைக் கோயிலில் கோபுரத்திருப்பணி முதலியன இவர் முயற்சிகளாலேயே நிறைவேறின. சிவஞானபோதம் முதலிய சைவ சித்தாந்த நூல்கள் பதின்நான்கினையும் உரையுடன் ஒரே தொகுதி யாக மெய்கண்ட சாத்திரம் எனப் பெயர் தந்து வெளியிட் டார். இவர் தென்னாடு முழுவதும் முறையாக எட்டுமுறை யாத்திரை செய்துள்ளார். இவருக்குத் திருவாவடுதுறை, திருப்பனந்தாள், ஆதீனங்களோடு நெருங்கிய தொடர்பு இருந்தது. தம் ஆசிரியர் பூவை கலியாணசுந்தர முதலியா ரைப் பின்பற்றிக் காஞ்சிபுரம் ஞானப்பிரகாச சுவாமிகள் ஆதீனத்தில் துறவறம் பெற்றார். அப்போதிருந்து இவர் நாகலிங்க முனிவர்', 'கச்சியடிகள்’ என வழங்கப்பெற்றார். துறவறமேற்ற பிறகு ஒரு முறை காசியாத்திரை செய்து
வந்தார்.
இவர் தமது மரபாகிய செங்குந்த குலத்தில் மிகுந்த பற்றுடையவராதலால் தம் குல முன்னேற்றத்திற்காகப் பல்லாற்றானும் முயன்று தொண்டாற்றினார். இவர் 1927 ஆம் ஆண்டு செங்குந்த மித்திரன் என்னும் சமூகத் திங்கள்
இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்காம்

Page 176
இதழைத் தொடங்கி அதன் ஆசிரியராகப் பணியாற்றினார். தென்னிந்திய செங்குந்த மகாசன சங்கம், செங்குந்தர் விடுதி, செங்குந்தர் கல்வி நிதி ஆகிய சமூக அமைப்புக்க ளில் பெரும்பொறுப்பு வகித்தார்.
இவருடைய வாழ்க்கைத் துணைவியாரின் பெய்ர் காமாட் சியம்மையார் என்பதாம். இவருக்கு மயிலுேறும் பெருமாள், தணிகைராயன், சரவணப்பெருமாள் என்ற மூன்று புதல்வர்க ளும் கசவல்லி என்னும் ஒரு மகளும் இருந்தனர். தம் குலம், மொழி, சமயம் ஆகிய மூன்றிற்காகவும் அயராது உழைத்த முனிவரவர்கள் 1950ஆம் ஆண்டு காலமானார்.
இவர் திருத்தணிகை வண்ண மஞ்சரி, தென்கடம்பந் துறை பதிற்றுப்பத்தாந்தாதி, வடபழனி மயிலுேறும் பெருமாள் மாலை, வடபழனி இரட்டை மணிமாலை, திருவா மாத்தூர் வண்ணங்கள், திருவெறும்பியூர்ப் புராணம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். இவரால் பதிக்கப்பெற்றவை: தாயுமானவர் பாடல்கள் (குறிப்புரையுடன்) பன்னிரு திரு முறை (பண் முறை), காஞ்சிப் புராணம், காஞ்சிக் கட்ட ளைக் கலித்துறைப் புராணம், திருமுறைத் திரட்டு, மெய் கண்ட சாத்திரங்கள் (தனித்தனியாகவும் ஒன்றாகவும்), தணிகைப் பதிற்றுப்பத்துபத்தந்தாதி, கச்சியானந்தருத்தி ரேசர் பதிற்றுப்பத்து, காஞ்சி சரவண தேசிகர் சாத்திரத் திரட்டு, சுந்தரர் தேவாரம், செங்குந்தர் பிரபந்தத் திரட்டு, காரனேசன் தமிழ் அகராதி முதலியன. (ப.வெ.நா.)
நாக வம்சத்தினர்
நாக குல அரசரைப் பற்றிய விபரங்கள் இந்திய இலக்கி யங்களிலும் சாசனங்களிலும் காணப்படுகின்றன. அவர்கள் ஆரியர் அல்லாத ஒரு இனத்தைச் சேந்தவர்கள் என்றும் நாகவழிபாட்டில் ஈடுபாடு கொண்டவர்கள் என்றும் அறிஞர் சிலர் கொள்வர். நாகரான அரசகுலங்களில் மகத தேசத் தில் அரசு புரிந்த சைசு நாகரே மிகவும் தொன்மையானவள் கள் என்ற கருத்து நிலவுகின்றது. சிசுநாகன், நாகதர்ஸ்
கன் என்போர் அக்குலத்தவராவர்.
குஷாணரின் ஆதிக்கம் சீர்குலைந்த பின் விதிஸா, காந்திபுரி, மதுரா, பத்மாவதி என்பவற்றில் ஆட்சி புரிந்த
இந்துக் கலைக்களஞ்சியம்x
 

நாக அரசர்களைப் புராணங்கள் குறிப்பிடுகின்றன. அவர்க ளில் சேஷன், போகி, சந்திராம்சன் என்னும் சதச்சந்திரன் என்போர் விதிஸாவிலிருந்த மன்னராவர். நாக குலத்தவரின் ஆட்சி கி.பி. மூன்றாம். நான்காம் நூற்றாண்டுகளில் வட இந்தியாவின் பல பகுதிகளிற் பரவியிருந்தமையினை நாண யங்கள், சாசனங்கள் என்பவற்றின் மூலமாக அறிய முடி கின்றது. லாகூரிற் கிடைத்துள்ள, கி.பி நான்காம் நூற்றாண் டிற்குரிய செப்பு முத்திரை ஒன்றில் நாகப்பட்டனின் மக னான மகேஸ்வரநாக என்னும் அரசனைப் பற்றிய குறிப் புண்டு. வாகடக அரசன் முதலாம் ருத்திரசேனனின் தாய் மாமன் குவேரநாகன் என்பதை வாகடகரின் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.
குவேரநாகன் மூன்றாம் நான்காம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவன். அவன் பாரசிவர் வம்சத்தவர். சிவலிங்கம் ஒன்றை தங்கள் தோள்களிற் சுமந்து சென்றதால் அதனை யுற்றுச் சிவபெருமான் மகிழ்ச்சியுற்றதன் பயனாக பாரசிவ குலத்தவர் அரச பதவி பெற்றனர் என்பது ஐதீகம். கங்கா தீர்த்தத்தினைக் கொணர்ந்தமை அவர்களின் வீரசாதனை யென்று பாராட்டப்பெற்றது. கங்கை நீரை அவர்களின் நெற்றியிலே தெளித்தமையால் அவர்கள் பரிசுத்தம் அடைந் தனர். பாரசிவருடைய நகரம் கங்கை நதியிலிருந்தும் மிகுந்த தூரத்தில் அமைந்திருந்தது என்றும் அவர்களின் ஆதிக்கம் காலப்போக்கிலே கங்கை வரை பரவியதென்
றும் சிலர் கொள்வர்.
குஷாணர்களின் ஆதிக்கம் மறைந்த பின் வடஇந்தியா வில் எழுச்சிப்பெற்ற, பலம் மிக்க அரசர் குலங்களில் பாரசிவ நாகரும் அடங்குவர். பவநாகனின் பெயர் எழுதிய நாணயங்கள் சில பதம் பவாய என்னுமிடத்திலே கிடைத் துள்ளன. அது குவாலியர் பகுதியிலுள்ள நர்வார் என்னும் பட்டணத்திற்கு அருகிலுள்ளது. அதன் புராதன காலப் பெயர் பத்மாவதி. சமுத்திரகுப்தன் காலத்தில் நாகவம்சத்த வர் சிலர் வடஇந்தியாவில் பலம் பெற்றிருந்தனர். கணபதி நாகன், நாகசேனன் என்னுமிருவரை அவன் போரிலே வென்று, அவர்களின் இராச்சியங்களை கைப்பற்றினான் என்று அல்லாஹாபாத் பிரசஸ்திலே கூறப்படுகின்றது. எவ்வாறாயினும் நாகரின் ஆதிக்கம் முற்றாக ஒடுக்கப்பட வில்லை. நாகவம்சத்தவர் சிலர் தொடர்ந்தும் ஆட்சி புரிந்த
ప్లజొల్ల
ZZ T LLL T LLL C TTTsMLCsLT TeeeLLTTL

Page 177
னர். சமுத்திரகுப்தனுடைய மகனாகிய இரண்டாம் சந்திர குப்தன் நாகவம்சத்து இளவரசியான குபேரநாகை என்ப
வளை தனது தேவியாகக் கொண்டான்.
நாகரோடு ஏற்படுத்திய மணத்தொடர்பு குப்தரின் ஆதிக்க வளர்ச்சிக்கு ஏதுவாக இருந்தது. மேற்கு இந்தியாவிலே நெடுங்காலமாக ஆட்சிபுரிந்த சக ஷத்திரிப்பர்களைத் தனி மைப்பத்தி அடக்குவதற்கு அந்த உறவு வாய்ப்பளித்தது. நாகவம்சத்தவரின் ஆதரவோடு அவர்களின் ஆட்சிப் புலங் கள் வழியாகவும் குப்தரின் சேனைகள் மேற்கு நோக்கி
படையெடுத்துச் சென்றன என்று கருதலாம்.
ஸ்கந்தகுப்தனின் காலத்தில் ஸர்வநாகன் என்ற நாகர் குலத்தவனை அந்தர்வேதி என்னும் கங்கை, யமுனை ஆகியவற்றுக்கு இடைப்பட்ட பிரதேசத்திலே விஷயபதி யாக குப்தர் நியமித்தனர். நாகசூலத்தவனாகிய நாகசேனர் என்னும் அரசனைப் பற்றி ஹரிஸ்சந்திரர் குறிப்பிடுகிறார். நாகசேனனின் இரகசியமான சம்பாசனைகளைச் சாரிகைப் பறவையொன்று வெளிப்படுத்தியதால் பத்மாவதி நகரத் திலே நாகசேனன் பட்டுமடிந்தான் என்ற ஐதீகத்தை அவர் குறிப்பிடுகின்றார்.
பத்மாவதி நகரத்தில் ஆட்சிபுரிந்த நாகமன்னர் மூவரைப் பற்றி புராணங்கள் குறிப்பிடுகின்றன. பவநாகன், கணபதி நாகன், நாகசேனன் என்போரே அம்மூவர் என்று அறிஞர் சிலர் கொள்வர். மகாராஜ வீமநாக, மகாராஜ ஸ்கந்தநாக, மகாராஜ பிருகஸ்பதிநாக என்னும் நாகமன்னரின் பெயர்
கள் நாணயங்களில் எழுதப்பட்டுள்ளன.
குஷானர் காலத்தின் பிற்பட்ட சில நூற்றாண்டுகளில் நாகவம்சத்தவர் வடஇந்திய அரசியலில் கணிசமான முக்கி யத்துவம் பெற்றிருந்தனர் என்பது இலக்கியக் குறிப்புக்களி னாலும் தொல்பொருட் சின்னங்கள் மூலமாகவும் தெளிவா கின்றது. (fl.u.)
BilöbllunG
இந்திய துணைக்கண்டத்தில் நாகவழிபாடு ஆதிகாலம் முதலாக நிலைபெற்றுள்ளது. நாகருக்கும் நாகவழிபாட்டுக் கும் இடையிலே தொடர்புண்டு என்று சிலர் கருதுவர்.
@f函岳56oa戍56T@äLió 囊災簽
 

சைவம், வைணவம், பெளத்தம், சமணம் என்பன வளர்ச்சிய டைந்த காலத்தில் துணைக்கண்டத்தின் பல்வேறு பகுதிக ளிலும் நாகவழிபாட்டின் அம்சங்கள் அவற்றோடு கலப்புற்று ள்ளன. புராதன கதைகளிலும் சமய சிந்தனைகளிலும் ஆதிஷேசன், அனந்தன் ஆகியவற்றுக்குச் சிறப்பிடம் உண்டு. மகாவிஷ்ணுவின் கோயில்களில் அனந்த சயன கோலம் பிரசித்தமானது. சிவபெருமானுடைய கோலங்கள் பலவற்றிலே நாகங்கள் காட்சியளிக்கின்றன. புத்தரதும் மகாவீரரதும் படிமங்கள் சிலவற்றிலே ஐந்தலை நாகவடிவம் சித்திரிக்கப்பட்டிருக்கும்.
மொஹொஞ்சாதாரோ - ஹரப்பா நாகரிக காலத்தில் நாகவழிபாடு நிலவியது போலத் தெரிகின்றது. இரண்டு முத்திரைகளில் வழிபடும் கோலத்தில் நாகவடிவங்கள் அமைந்துள்ளதாகச் சிலர் கொள்வர். வேதபாடல்களில் சர்ப்பங்களைப் பற்றிச் சொல்லப்படுகின்றது. அவற்றை அஹி என்று குறிப்பிட்டனர். அவற்றை மிகவும் பயத்தோடு குறிப்பிட்டனர். நாகவழிபாடு வேதப்பாக்கள் பிரதிபலிக்கும் சமயநெறிக்கு அந்நியமானது. யசுர் வேதத்திலே வழிபாட் டுச் சின்னமாக நாகத்தை அடையாளம் கண்டுள்ளனர். யசுர் வேதம், குரு - பாஞ்சால நாடுகளில் தொகுக்கப்பெற் றது என்ற கருத்துண்டு. பாஞ்சால தேசத்தின் தலைநகர் அஹிச்சத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு ஆதி நாகம் என்பது நகரத்தின் சிறப்புத் தெய்வமாகக்
கொள்ளப்பட்டது.
பாஞ்சால தேசத்து அரசர்களான அக்கினிமித்திரன், பானுமித்திரன் என்போரின் நாணயங்களிலே பாம்பு உருவங்களை அடையாளம் கண்டுள்ளனர். அதர்வ வேதத்திலும் பிந்திய மற்றைய நூல்களிலும் நாகர்கள் தெய்வாம்சம் பொருந்தியவர்களாக வர்ணிக்கப்பட்டுள்ளனர். கிருஹய சூத்திரங்கள் நாகர்களை வழிபாட்டுக்குரிய வர்களாகவும் பூலோகம், வானுலகம், சொர்க்கலோகம் என்பவற்றுக்கும் நான்கு திசைகளுக்கும் உரியவர்களாகப் போற்றுகின்றன. நாகவழிபாடு பற்றி நித்தேஸ என்னும் பெளத்த நூலும் குறிப்பிடுகின்றது. சர்கோனுலுள்ள ஆளுயுரமான நாகவடிவம் - பகவா நாகோ (வழிபாட்டிற் குரிய நாகம்) என்று அதிலே சொல்லப்படுகின்றது. அது குளமொன்றிலே ஹாவிஷ்க என்னும் குஷான மன்னனின்
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 178
காலத்தில் பிரதி ஷடையாகியது. மதுரா அருங்காட்சியகத் திலே கனிஷ்க ணுடைய எட்டாம் ஆண்டிலே செதுக்கப்
பட்ட நாகவடிவம் ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
காலப்போக்கில் நாகங்களை இறந்தவரின் ஆவிகளோடு தொடர்புபடுத்துவது வழமையாகியது. பிக்காலத்திலே பூட்டிவைத்த செல்வங்களை நாகங்கள் காப்பதாக பாமர மக்கள் நம்பினார்கள். எல்லாச் சமயங்களிலும் நாகவழிபாடு சம்பந்தமான கதைகளும், நம்பிக்கைகளும் இடம்பெற்று விட்டன. முசிலிந்த, எலாபத்த எனும் நாகர், புத்தர்பெரு மானைச் சரணடைந்தனர்.
நாகம் பார்ஸ்வநாதரின் சிறப்பான சின்னமாகிவிட்டது. சிவன், துர்க்கை, சூரியன், கணபதி ஆகியோர் நாகத்தை ஆபரணமாக அணிந்துள்ளனர். கலிய நாகனைக் கிருஷ் னர் பாலிய பருவத்தில் அடக்கியமை பற்றிய கதை ஹரிவம்சத்திலே கூறப்படுகின்றது. பலராமன் சேஷநாக னின் அவதாரம் என்பது ஒரு புராணக்கதை. பலதேவனா கிய நாகத்தை வழிபடுவதன் பயனாக மகாவிஷ்ணுவின் வாரக அவதாரத்தின் பலத்தைப் பெற்றுவிடலாமென்று மகாபாரதத்தில் அநுசாசன பர்வத்திலே சொல்லப்படுகின் றது. பிற்காலத்து வராக அவதாரச் சிற்பங்களிலே வராகத் தின் காலொன்றைச் சேஷன் தாங்கியிருக்கும் கோலம் அமைந்திருக்கின்றது.
சிற்பங்களிலும் ஓவியங்களிலும் நாகர்களதும் நாகினிக ளதும் வடிவங்கள் அமைந்துள்ளன. அவை கலப்பு வடிவங் கள். மனிதக் கோலத்தின் அம்சமும் நாகத்தின் அம்சமும் கலந்தவை. பலித்தீவிலே நாகவாசகியை வர்ணதேவனின்
பணிப்பெண்ணாகக் கொள்ளும் மரபுண்டு. (d.L.)
TõJõ
தமிழ் முனிவராம் அகத்தியர் அருளிய மகாபரதம் என் னும் அகத்தியர் கூத்திலக்கணம் ஆடற்கலைக்கும் இசைக்கலைக்கும் முதல் நூலாகும். அத்தகைய தமிழ் ஏடுகள் மிகவும் பழமை பொருந்தியதாகையால் பலவும் சிதைந்து மறைந்திருக்கின்றன. அவைகளில் சில அடியார்க்கு நல்லார் எழுதிய சிலப்பதிகார உரையின் மேற்கோள்களிலும் அரபத்த நாவலரால் எழுதப்பட்ட
இந்துக் கலைக்களஞ்சியம்x
 

கூத்திலக்கணத்திலும் காணக்கிடைக்கின்றன.
நாகசுரம் தமிழ்நாட்டின் மிகவும் தொன்மையானதோர் இசைக்கருவி. இதனை மணிவாசகர் திருவெம்பாவையில் ”ஏழில்’ என்று குறிப்பிடுகின்றார்.
"கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும் ஏழில் இயம்ப இயம்பும் வெண் சங்கெங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்லையோ'
ஏழுதுளைகளைக் கொண்டதால் ஏழில் என்ற பெயர்
நாகசுரத்திற்கு வழங்கப்படுவது பொருத்தமானதே.
சிலப்பதிகாரம் அரங்கேற்று காதையில் அடியார்க்கு நல்லார் உரையில் நாகசுரத்திற்கு வங்கியம் என்னும் பெயரால் இலக்கணம் கூறப்படுகின்றது. அகத்திய சூத்திரங்களில் அதிதேவதை களும் கூறப்பட்டிருக்கின்றன.
வங்கியம் என்னும் குழலைப் பற்றி அடியார்க்கு நல்லார்
தரும் விளக்கத்தை ஆராய்ந்து பார்த்தால் அவை நாகசுரத் திற்கும் பொருந்துவதை அவதானிக்கலாம். ஆம்பற்குழ லைப் பற்றி விளக்கம் தருகையில் அதற்கு வெண்கலத் தால் அணைசுகள் செய்து இணைக்கப்பட்டு இருந்ததாகக் கூறுகின்றார். இது நாகசுரத்தின் ஒரு வகையான முக வீணையைக் குறிக்கின்றது.
வங்கியம் செய்வதற்கு உகந்தவை மூங்கில், சந்தனம், வெண்கலம், கருங்காலி, செங்காலி என ஐந்துமாம். மேலும் அதன் தன்மையைக் கூறுமிடத்து மூங்கில் பொழுது செய்யு மென்றும் வெண்கலம் வலிமை உடையது என்றும், மரம்
எப்பொழுதும் ஒத்து நிற்குமென்றும் கூறுகின்றார்.
இக்காலத்தில் கருங்காலி, செங்காலி, மூங்கில் இவையே கொள்ளப்படுகின்றன. கருங்காலி வேண்டுமென்பது பெரு வழக்கென்று கொள்ளப்படும். இன்னும் இவ்வங்கியத்தை ஊதுமிடத்து வளைவாய் சேர்ந்த துளையை முத்திரை என நீக்கி முன்னிருக்கும் ஏழினையும் ஏழு விரல் பற்றி வாசிக்க வேண்டும் என்றும் ஏழுவிரலாவன இடக்கையில்
பெருவிரலும், சிறுவிரலும் நீக்கி, மற்றைய மூன்ற விரலும்,
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 179
வலக்கையில் பெருவிரல் ஒழிந்த நான்கு விரல்களும் என அவர் கூறுகின்றது நாகசுரத்திற்கு பொருந்துகின்றது.
நாகசுர இலக்கணம்
அகத்திய முனிவர் இயற்றிய 6000 சூத்திரங்களடங்கிய மகாபரதம் என்னும் நூலை 398 செய்யுட்களர்கச் சுருக்கி அரபத்த நாவலர் இயற்றிய நூலில் கொடுக்கப்பட்டுள்ள நாகசுர இலக்கணத்தை மேற்கூறியதோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
"ஓங்கிய மூங்கிலுயர் சந்தம் வெள்ளிகஞ்சம் தாங்கு கருங்காலி செங்காலி தந்தம் - பூங்குழலாய் நாதசுரஞ் செய்யவே நன்றென்றாரிப் புவியில் பாகமறிந் திடுவோர் பார்”
"இருக்கு வேதத்திலே நின்றேழு நாதசுரத்தின் தோற்றம் அருக்கனா மாஞ்சிலே வட்டமட்ட மாநாகஞ் சூழல் சுருக்க மாஞ்சிலே சோமன் தோன்றிய பொள்ளல் சுத்தி பெருக்கமா முட்டுவானம் மாலெனப் பேசுவாரே”
இதன் பொருள் - நாதசுரம் இருக்கு வேதத்திலிருந்து தோன்றியது. நாதசுரத்தின் ஒவ்வொரு அங்கங்களுக்கும் அதிதேவதைகள் கூறப்பட்டிருக்கின்றன. அதாவது அடிவட் டம் சூரியன், மேற்சிறுதுளை சக்தி, உட்பெருந்துவாரம் விஷ்ணு என்பதாகும்.
மேலும் கண்டை - பிரமன், சரம் - தேவர்கள், கின்னா - இந்திரன், வலது கையின் கனிஷ்ட விரல் - சரஸ்வதி, அநாமிகை - இந்திராணி, மத்திமை - வைணவி, தட்சணி - வராகி, இடதுகையில் அநாமிகை - காளி, மத்திமை நாராயணி, தர்சனி - துர்க்கை என்று அகத்தியர் கூறிய தாக காணப்படுகின்றது.
"வாம மாங் கரத்திலுள்ள வநாமிகைக் காளியாகும் தோமென் மத்திமையை நாராயணியெனச் செல்வர் மேலோர் தேமொழித் தர்ச்சனைக்கே செப்புவன் துர்க்கை நாமம் ஆமெனப் பொதியக் குன்றத்தருந் தமிழ்முனிவன் தானே’
நாகசுரத்தின் அளவு 32 விரல் நீளமும், நாலரை விரல் சுற்றளவும் மேற்றுளை நெல்லளவாகவும் இருக்கவேண்டும் என்று கூறப்படுகின்றது. இதர நூல்களில் கூறப்பட்டிருக்கும் இலக்கணம், சந்தனம், கருங்காலி, செங்கருங்காலி வேங்கை, மூங்கில், தோதகத்தி, வெப்புலா, வெண்கலம்,
இந்தக் கலைக்களஞ்சியம்xx
x 1 5
 

1.
வெள்ளி, பொன். யானைத்தந்தம் என்ற பதினொன்றில் நாகசுரம் செய்யப்படலாம். அதன் நீளம் 32 விரலாகவும் கீழனைசு ஒருவிரல் இரண்டுநெல் மேலனைசு இரண்டு விரல், நான்கு நெல் சுரத்வாரத்தின் சுற்றளவு ஒரு நெல், மேற் சுற்றளவு இரண்டரை விரல் கீழ்ச்சுற்றளவு நாலரை விரல் என்பதாகக் கூறப்படுகின்றது.
நாதசுரம், தவில், மத்தளம் முதலிய வாத்தியங்களைச் செய்வதற்குப் பயன்படும் மரம் 42 வயதுள்ள மரமானால் உத்தமம். 42 வயதிற்கு மேற்பட்டதாயின் மத்திமம், 42 வயதிற்குக் கீழ்ப்பட்டதாயின் அதமமாகும். உத்தமத்தில் பயில்வோருக்கு கீர்த்தியும் அதிக செல்வமும், அஷட சித்தியும் உண்டாகுமென்றும் மத்திமக் கருவிகளில் பயில்வோருக்கு வரவுக்கு மேலாக செலவு ஏற்படுமென்றும் அதமக் கருவிகளில் பயில்வோருக்கு மிகுந்த வறுமை உண்டாகும் என்னும் கூறப்படுகின்றது.
கருவிகள் செய்யத் தகுந்த மரத்தின் வயது 42 தான் என்பதனை அறிவதற்கு அம்மரங்களைச் சீவி விளக்கினில் கொளுத்தினால் அது தீபம் போல் எரியுமாம். அவ்வயதிற்கு மேற்பட்டதும் கீழ்ப்பட்டதும் அப்படி எரியாதாம். இச்செய்தி 'நந்திமதம்” என்றும் நூலில் கூறப்பட்டுள்ளது.
முசுகுந்த சக்கரவர்த்தி தேவலோகம் சென்று தேவேந்தி ரன் பூஜித்து வந்த தியாகராஜ மூர்த்தி பூஜைக் காலத்தில் வாசிக்கப்பட்டு வந்த திமிரி, பாரி,நாதசுரங்கள், முகவீணை, யாழ் முதலிய நரம்புக் கருவிகள் தவில், மத்தளம், பஞ்சமுக வாத்தியம் போன்ற தோற்கருவிகளையும் அவைகளை வாசித்து வந்த கந்தர் வர்களையும் தேவேந்திரனிடம் பெற்று தியாகமூர்த்தியை திருவாரூரில் பிரதிஷ்டை செய்து தான் பெற்றுவந்த வாத்தியங்களை கந்தர்வர்களைக் கொண்டே வாசிக்கச் செய்தான். அக்கந்தர்வ பரம்பரையினரே இன்றளவும் தியாகேசப் பெருமானின் பூஜா காலங்களில் வாசித்துப் பணிசெய்வ தாக சைவவழிச் செய்தியாக அறியமுடிகின்றது.
நாதஸ்வரத்தின் சிறப்பையும் அதன் மேன்மையினையும் அதனுடைய தோற்ற வரலாறுகளையும் இடை உலகில் தனக்கென ஓர் சிறப்பிடம் பெற்ற ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மூத்த இசைக்கலைஞர் சங்கீத கலாநிதி இசைப் பேரறிஞர் நாதஸ்வர வித்துவான் அமரர் திருவிடை மருதூர் திரு.பி.எஸ்.வீரசாமிப்பிள்ளை அவர்கள் தந்த தரவு களைக் கொண்டே தயாரிக்க முடிந்தது என்பதனை நன்றியுடன் தெரிவிப்பதில் பெருமகிழ்வு அடைகின்றேன். (வ.வை.)
భళ్ల
ZSSZTTT LLLLLL LLLLCL GD TTMMLLGM TTMeLeMeLTTTLLLL

Page 180
Täie"TõTõLI
நாகார்ஜ"ன கொண்டா பல சிறப்புக்களுக்குரிய தலம். அந்தச் சிறப்புகளும் வெவ்வேறு விதமான அடிப்படை களைக் கொண்டவை. இந்நாட்களில் அது நாகார்ஜ"ன சாசகர் என்னும் மகத்தான நீர்த்தேகத்தின் காரணமாகப் பிரசித்திபெற்றுள்ளது. முன்னொரு காலத்திலே பெளத்த சமயத்தின் காரணமாக அது சிறப்புற்று விளங்கியது. அமராவதி கலைப்பாணியில் அமைந்த பல பிரமாண்டமான பெளத்தப் பள்ளிகளும் சேதியங்களும் அங்கு அமைந் திருந்தன. பாரதநாட்டிலே பெளத்த சமய மரபுகளின் பிரதானமான நிலைக்களங்களில் ஒன்றாக அது விளங்கி யது. மகாயான மரபை உருவாக்கிய மகாபண்டிதர்களில் தலைசிறந்த நாகார்ஜுனர் அங்கு வாழ்ந்தமையால் நாகார் ஜூனகொண்டா என்னும் ஊர்ப்பெயர் உருவாகியது. நாகார் ஜ"னருக்கு மிகவும் பிற்பட்ட காலத்தில் அந்தப் பெயர் வழக்கில் வந்தது. மிகத் தொன்மையான காலம் முதலாகவும் இடையீடின்றியும் அங்கு மக்கள் வாழ்ந்தமைக் கான தொல்பொருட் சான்றுகள் கிடைக்கின்றன. எனவே, தென் னிந்திய தொல்லியல், வரலாற்று ஆய்வுகளில் முதன்மை பெற்ற தலங்களில் நாகார்ஜ"ன கொண்டாவும் ஒன்றாகும்.
நாகார்ஜ"ன கொண்டா ஆந்திரப் பிரதேசத்தில் குண்டூர் மாவட்டத்தில் பல்நாடு என்னும் பகுதியூடாகப் பாய்ந்து செல்லும் கிருஷ்ணாநதியின் கரையினில் அமைந்திருக்கின் றது. அது ஹைதராபாத்திலிருந்து சுமார் 170 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்நாட்களில் நாகார்ஜூன கொண்டா அமைந்த பள்ளத்தாக்கு நாகார்ஜ"ன சாகரில் அமிழ்ந்துவிட்டது.
மூன்று பக்கங்களிலும் நல்லி மலையினாலும் ஒரு பக்கத்தில் கிருஷ்ணா நதியாலும் சூழ்ந்துள்ள நாகார்ஜ"ன கொண்டா இயற்கையாய் அமைந்த அரண்களின் பாதுகாப் பினைப் பெற்றிருந்த ஒரு நிலப்பகுதிய்ாகும். சாதவாகனர் குலத்து அரசனாகிய விஜயசதகர்ணி நாகார்ஜ"ன கொண்டாப் பிரதேசத்தில் விஜயபுரி என்னும் பெயரால் ஒரு நகரத்தை உருவாக்கினான். கி.பி.மூன்றாம், நான்காம்
இந்துக் கலைக்களஞ்சியம் 緣15
 
 

நூற்றாண்டுக ளில் எழுதிய சாசனங்களில் விஜயபுரி என்னும் பெயர் காணப்படுகின்றது. இஷவாகு மன்னர்களின் ஆட்சியில் விஜயபுரி பூரீபர்வதம் என்னும் பெயரால் வழங்கியது.
தொல்பொருட் சின்னங்கள்
கி.மு. 200000 வருடங்களுக்கு முன்பிருந்தே மனிதகுலத் தோர் வேங்கி நாட்டில் வாழ்ந்தமைக்கு சான்றாதாரங்கள் நாகார்ஜ"ன கொண்டாவில் கிடைத்துள்ளன. இங்கு முதன் முதலாக 1927இல் அகழ்வாய்வுகள் நடைபெற்றன. நாகார் ஜூனசாகர் அணைத்திட்டத்தின் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட் டன. அவற்றால் ஏறக்குறைய இரண்டு இலட்சம் வருடங்க ளுக்கு முற்பட்ட காலம் முதலாக பழைய கற்கால மக்கள் அங்கு வாழ்ந்தனர் என்பது தெளிவாகியது. கைக்கோடரி கள், வெட்டுக்கருவிகள் போன்ற பமைய கற்காலக்கருவி
கள் கிடைத்துள்ளன.
பழைய கற்காலச் சமுதாயம் நெடுங்காலத்தின் பின்பு இடைக்கற்காலம் பண்பாட்டு நிலையை அடைந்தது. இக் காலத்திற்குரிய கருவிகள் சற்று முன்னேற்றமானவை. காலப்போக்கிலே இடைக்கற்காலம் கடைக்கற்காலமாக மாறியது. அக்காலத்து மக்கள் பயன்படுத்திய கல்லாயுதங் கள் மிகவும் சிறியவை. அவை பலவகையான கற்களில் செய்யப்பட்டவை. இக்காலத்தை நுண்கற்காலம் என்று
குறிப்பிடுவது வழமையாகிவிட்டது.
நாகார்ஜ"னகொண்டாவிற் புதிய கற்காலம் ஏறக்குறைய கி.மு. 3000 ஆண்டளவில் ஆரம்பமாகியது. மிருகங்களை வளர்த்தல், மட்கலங்களை உற்பத்தி செய்தல், பயிர்ச் செய்கை, மரவேலைப்பாடு ஆகியவற்றில் புதிய கற்கால மக்கள் ஈடுபட்டனர். உளி, கைக்கோடரி போன்ற கல்லாயு தங்களை அவர்கள் பயன்படுத்தினர். எருமை, மாடு, வெள்ளாடு, முதலியவற்றை பிடித்துப் பழக்கி வீட்டு மிருகங்க ளாக வளர்த்தனர். அவர்களிடையே செம்பின் உபயோகம் காணப்பட்டது. சங்கு, மணி போன்றவற்றைக் கொண்டு மாலைகளைச் செய்தனர். அவர்கள் மட்பாண்டங்
களை உற்பத்தி செய்யும் முறையை அறிந்திருந்தனர்.
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 181
அவர்களின் மட்பாண்டங்கள் கறுப்பு, சாம்பல், பழுப்பு நிறங்கள் கொண்டவை. சிவப்புச்சாயம் பூசப்பட்டவை, வீடுக ளில் வசித்தல், இறந்தோரின் சடலங்களைப் புதைத்தல்
போன்ற வழக்கங்கள் அவர்களிடையே காணப்பெற்றன.
நாகார்ஜ"ன கொண்டாவிற் பெருங்கற்படைக்காலம் கி.மு. 500 ஆம் ஆண்டளவிலே ஆரம்பமாகியது. பெருங்கற்படைக் காலப்பண்பாட்டுச் சின்னங்கள் அங்கு அதிகமுண்டு. இறந் தோர் சடலங்களை புதைக்கும் கல்லறைகள் அங்கு பெருமளவில் காணப்பட்டுள்ளன. நிலத்தின் மேலே தெரியும் கல்வளையங்களும் அவற்றின் மேலெழுந்த கற்குவியல்க ளும் அவற்றின் அடையாளங்களாகும். நிலமட்டத்தின்கீழே வெட்டிச்செதுக்கிய கற்களினால் சதுரமான கல்லறை டிகளை அமைத்து, அவற்றிலே சடலங்கள் புதைக்கப்பட் டுள்ளன. சிலசமயங்களில் இக்கல்லறைகளில் பலரின் சடலங்களைப் புதைத்துள்ளனர்.ஒரு கல்லறையில் நான்கு மண்டையோடுகள் கிடைத்துள்ளன. செப்பு மோதிரம், தங்க நகைகள் இவற்றிலே கிடைத்துள்ளன. ஈமச்சடங்குகளிலே பயன்படுத்தப்பட்ட மட்பாண்டங்களும் இரும்புக் கருவிக ளும் ஏராளமாகக் கிடைத்துள்ளன. கரும் - செம் மட்பாண்டங்கள் குறிப்பிடத்தக்க அளவிலே கல்லறை
களில் காணப்பட்டன.
பெருங்கற்படைக் காலத்தின் பிற்பகுதியிலே நாகார்ஜ"ன கொண்டாவை உள்ளடக்கிய பகுதிகளில் சாதவாகனரின் ஆட்சி ஏற்பட்டது. சாதவாகனரின் நாணயங்களும் சாசனங் களும் அங்கு கிடைத்துள்ளன. அதன் பின் அங்கு இவஷ் வாகு குலத்தவரின் ஆட்சி ஏற்பட்டது. நாகார்ஜ"ன கொண்டா அவர்களின் இராசதானியாகியது. எனவே அதனைச் சுற்றி அரண்கள் அமைக்கப்பட்டன. நகரின் எல்லாப் பக்கங்களிலும் பெருமதில்கள் அமைக்கப்பட்டன. அந்நகரம் இரண்டு வாயில்களைக் கொண்டிருந்தது. மதிற்கவர்கள் இறுதிக்கட்டத்தில் செங்கல்லில் அமைந்தி ருந்தன. நகரிலே வீடுகளும் படைவீடுகளும் மாளிகைக ளும் இருந்தன. நீர் வசதி கருதிக் கிணறுகளும் அங்கு அமைத்திருந்தனர். இரண்டு கிணறுகளிலே அழகிய வேலைப்பாடுகள் அமைந்திருந்தன. கழிவுநீரை அகற்றுவ தற்கு பாதாள வடிகால்கள் கட்டப்பட்டுள்ளன. சதுரவடிவ
மான கிணறு ஒன்றின் நான்கு பக்கங்களிலும் படிக்கட்டுக்
இந்தக் கலைக்களஞ்சியம்x
 

களை அமைத்துள்ளனர். அதிலிருந்தும் கழிவுநீரை அகற்றுவதற்கு பாதாள நீர்வடிகால் அமைக்கப்பட்டிருந்தன.
பொதுமக்களின் குடியிருப்புகள் நகரின் வெளிப்புறப் பகுதசிளில் இருந்தன. அவற்றிலே வீடுகளின் அத்திபாரங் கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. சில வீடுகள் பல அறைகளைக் கொண்டிருந்தன. அங்கே கடைகள் போன்ற விற்பனை நிலையங்களும் இருந்தன. குடியிருப்புப் பகுதியிலே தங்க நகைகளும் உரோமரின் நாணயங்களும் கிடைத்துள்ளன. அகழ்வாய்வின் பொழுது கிடைத்த சாசனமொன்று வணிகர், கம்மாளர், தச்சர் போன்ற தொழில்சார் சமூகப்பிரிவினர்களைக் குறிப்பிடுகின்றது. சங்கினை அறுத்து ஆபரணங்களை உற்பத்தி செய்யும்
சாலைகள் இருந்தமைக்கான ஆதாரங்கள் உண்டு.
நாகார்ஜ"ன கொண்டாவில் கிரேக்க - உரோமச் செல் வாக்கு ஓரளவில் ஏற்பட்டிருந்தது போலத் தெரிகின்றது. அந்த வகையில் விளையாட்டு அரங்கம் என்று கொள்ளக் கூடிய கட்டடம் முக்கியத்துவம் பெறுகின்றது. அது விசாலமானது. அதன் நான்கு பகுதிகளிலிருந்தும் இருந்த வண்ணம் பார்வையாளர்கள் நிகழ்ச்சிகளைக் காணக்கூடிய வகையில் அரங்கம் கட்டப்பட்டிருந்தது. ஆசனங்கள் பெரும்பாலும் செங்கல் வேலைப்பாடானவை. அவற்றின் மேலே கற்பாளங்கள் பதிக்கப்பட்டிருந்தன. விளையாட்டரங் கம் 16.46 மீ நீளமும் 13-72 மீ அகலமும் கொண்டது. அதில் நாட்டியங்களும் இசைக்கச்சேரிகளும் கூத்துக்க ளும் அரங்கேற்றப்பட்டிருத்தல் வேண்டும். மற்போர் புரிவோ ரின் சிற்பங்கள் அங்கு காணப்படுவதால் அது பெரும்பாலும் விளையாட்டரங்கமாகவும் கலையரங்கமாகவும் பயன்பட்டது என்று கொள்வதே பொருத்தமானது. பொதுக்கூட்டங் களுக்கும் சமயபோதனைகளுக்கும் பயன்படும் விதத்திற் செங்கற்களால் கட்டிய மேடைகளும் சதுரங்க மேடைகளும் விளையாட்டுத் தனி மேடைகளும் அங்குள்ள வழிபாடுக
ளில் அடையாளங் காணப்பட்டுள்ளன.
நாகர்ஜுனகொண்டாவிலே பெருந்தொகையான கோயில் களும் சேதியங்களும் பெளத்த பள்ளிகளும் அமைந்திருந்
தன. பெளத்த சமயச் சார்புடைய முப்பதுக்கும் மேலான
இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 182
கட்டடங்களின் அழிபாடுகள் அடையாளம் காணப்பட்டுள் ளன. அங்கு கிடைத்த சாசனங்கள் (1) அபர சைலர், (2) பஹ"சுருதியர், (3) மகிம்சாசகர், (4) மகா விகாரை வாசிகள் என்னும் சமயப் பிரிவுகளைக் குறிப்பிடுகின்றன. அதிகமான பெளத்த சமயக் கட்டடங்கள் வீரபுருஷதத்த னின் காலத்தில் அமைக்கப்பட்டவை. அங்குள்ள பெளத்த அமைப்புகளில் மகாசேதியமே மிகப்பழமையானது. அது வசிஷ்டிபுத்திர சாந்தமூலனின் சகோதரியின் திருப்பணியா கும். சக்கரம் போலமைந்த மகாசேதியம் 27.5 மீற்றர் விட்டம் கொண்டது. அதன் நான்கு பக்கங்களிலும் ஆயக தம்பங்கள் உள்ளன. அதனருகே நான்கு பகுதிகள் அடங்கிய சங்கத்தார் பள்ளியொன்று கட்டப்பட்டுள்ளது. அது செங்கல் வேலைப்பாட்டில் அமைந்தது.
நாகர்ஜ"னகொண்டாவிலே சீஹள விகாரம் என்னும் பள்ளியொன்று இருந்தது. சிங்களதேசத்தில் சங்கத்தாரின் வசிப்பிடம் என்பதால் அது அப்பெயரால் வழங்கியது. அபரமகாசைலரின் விகாரத்திலே சாமந்தமூலனின் காலத் துச் சாசனங்கள் கிடைத்துள்ளன. அதன் முன்னால் எட்டு சதுரங்களையுடைய சேதியமும் வேறிரண்டு சிறிய
சேதியங்களும் காணப்படுகின்றன.
நாகர்ஜ"னகொண்டாவில் அமைக்கப்பட்டுள்ள பெளத்த கட்டடங்களில் காலத்தால் பிற்பட்டது உருத்திர புருஷதத் தனின் பதினோராம் ஆட்சியாண்டிலே கட்டப்பெற்ற பெரும் பள்ளியாகும். நான்கு பகுதிகளைக் கொண்ட இக்கட்டடத் தின் நடுவே வட்டமான தூபியின் உட்பகுதி புத்தரின் சிலையோடு கூடிய அறையாகும். அதன் முன்னால் உருத் திர புருஷதத்தனின் தாயாரின் பேரில் நினைவுத் தூண் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஹாரிதாவின் கோயிலுக்கு பெளத்த சங்கத்தார் தானம் வழங்கியமை இங்குள்ள சாசனங்களில் குறிப்பிடப்படுகின்றது. இங்கு சதுரமான பழுதடைந்த கோயிலொன்றும் காணப்படுகின்றது. அதன் மூலஸ்தானமும் மண்டபமும் இஷவாகு மன்னர் காலத்து
கலைப்பாணியின் அம்சங்களைக் கொண்டுள்ளன.
இவழ்வாகு மன்னரின் காலத்திலே அரசரும் அரச குடும்பத்தவரும் சமயகுருமாரும் பிரபலமான கலைஞரும் இறந்தபின் அவர்களின் பெயரால் நினைவுத்துாண்களை
இந்துக் கலைக்களஞ்சியம்x
 

அமைக்கும் வழக்கம் இருந்தது. அத்தகைய 22 தூண்கள் அகழ்வாய்வுகளின் மூலமாகக் கிடைத்துள்ளன.
நாகர்ஜுனகொண்டாவில் இரு வகையான கோயிலமைப்பு கள் இருந்தன. அவற்றில் முதலாவது வகையிலுள்ளவை கருவறையின் மண்டபத்தோடு இணைக்கப்படாது தனியமைப்பாகவுள்ள கோயில்களாகும். இரண்டாவது வகையிலுள்ளவை மண்டபமும் கருவறையும் சேர்ந்துள்ள ஆலயங்களாகும். இஷவாகு மன்னர் காலத்திலே கட்டப் பெற்ற ஒன்பது இந்துக் கோயில்கள் நகரின் மதிற்கூவரைச் சுற்றி, கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ளன. சிவனையும் குமாரக்கடவுளையும் வழிபடுவதற்கு ஐந்து ஆலயங்களும் அம்மன் கோயிலொன்றும் அங்கிருந்தன. அட்புஜங்கசாமி கோயில் கி.பி. 278இற் கட்டப்பெற்றது. எட்டுத்தலை கொண்ட மகாவிஷ்ணுவின் மரச்செதுக்கு வேலைப்பாடான சிற்பமொன்றினை இங்குள்ள சாசன மொன்று குறிப்பிடுகின்றது. மூலஸ்தானம், மண்டபம், கொடித்தம்பம் என்பன இக்கோயிலின் பகுதிகளாய் இருந்தன என்பதை அறிய முடிகின்றது. பல சங்குகளில் ஆலயத்தின் பெயரை வெட்டி யுள்ளனர்.
இஷவாகு மன்னர் காலத்துக் கோயில்களில் ஒன்று நோடகீசுவரசுவாமி கோயில், சிதைவாகியுள்ள அக்கோயி லின் கொடிமரத்தில் இரண்டு சாசனங்கள் எழுதப்பட்டுள் ளன. மண்டபத்திலே அம்மனது வடிவங்கள், உடன்கட்டை ஏறும் காட்சி, மலரால் அலங்கரிக்கப்பட்ட குடத்தோடு கூடிய பெண்ணின் உருவம் போன்றவை சிற்பவடிவங்களாக
அமைந்துள்ளன.
இவஷ்வாகு மன்னர்களின் காலத்திலே சிறிய அளவில் அமைந்த பல கோயில்களும் நிர்மாணம் பெற்றன. புஷ்ப பத்திரசுவாமி கோயில், கார்த்திகேயர் என்பன பற்றிச் சாசனங்கள் குறிப்பிடுகின்றன. புஷ்பபத்திரசுவாமி கோயிலின் அருகிலே ஒரு பெரிய குளம் இருந்தது. ஒரு விசாலமான பிராகாரத்தினுள் சிறிய எட்டுக் கோயில்கள் அமைந்திருந்தன. அவற்றின் அடித்தளங்கள் வட்டம், சதுரம், நீள்சதுரம் என்ற வேறுபாடான அமைப்புகளைக் கொண் டவை. கருவறை, மண்டபம் ஆகியவற்றின் அடித்தளப்
பகுதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
ந்து சமய கலாசார அலுவல்கள் திaைCOக்களம்

Page 183
சாளுக்கியர், காகதிய மன்னர், விஜயநகரவிஜயர், கொண்டிவீடு செட்டிகள், கொல்கொண்டா சாஹி மன்னர் ஆகியோரின் காலங்களில் ஏற்பட்டன. கொண்டவீடு ரெட்டி கள் இங்கு மலைக்கோட்டையைக் கட்டினார்கள். 92. சாஹி அரசர்களால் புனரமைக்கப்பட்டது. கொண்டவீடுரெட்டி கள் மலையின் மேற்பகுதியில் பெரிய மதிலைக் கட்டினார் கள். சாஹி மன்னர் காலத்திலும் விஜயநரக விஜயர்களின் காலத்திலும் அதிலே மாற்றங்கள் ஏற்பட்டன. இம்மதில் 6மீ. உயரமும் 5.33மீ அகலமும் கொண்டது. அதற்கு எல்லாமாக ஆறு நுழைவாயில்கள் இருந்தன. இதன் உட் பகுதியில் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் அருங்காட்சியம் அமைந்துள்ளது. பாழடைந்த இரு கோயில் களும் ஒரு கிணறும் அரண்மனையின் சில பகுதிகளும் இங்கு அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்குள்ள நாகே ஸ்வரலிங்கசுவாமி கோயில் கி.பி. 1413இல் கசபதி
அரசரால் அமைக்கப்பட்டது.
நாகர்ஜ"னகொண்டாவில் ஓர் அருங்காட்சியகம் அமைக் கப்பட்டுள்ளது. அங்கு அகழ்வாய்வுகளிற் கிடைத்த தொல் பொருள்கள் அதிலே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மணி கள், உரோமரின் நாணயங்கள், ஜாதகக் கதைகளைப் பிரதிபலிக்கும் சிற்பங்கள், விஜயநகர காலத்துக் காசுகள் போன்றன அவற்றுள் அடங்கும். சில புத்தர் படிமங்களும் தேவர் படிமங்களும் அவற்றிடையே காணப்படுகின்றன. கற்காலத்திற்குரிய கருவிகளும் காட்சிக்கு வைக்கப்பட்
(66itଗtTର0].
சாசனங்கள் தனியான ஒரு பிரிவில் வைக்கப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் இஷவாகு மன்னர்களதும் கஜபதிகள தும் காலங்களுக்குரியவை. தெலுங்கிலும் சமஸ்கிருத மொழியிலும் எழுதப்பட்டவை. (fl.u.)
5 TGDafidi65metry TGOEDITib
புண்டரீக முனிவரைக் காயத்தோடு ஆரோகணம் செய்து கொண்டமையால் காயாகரோகணம் என்று ஆகி பின்
காரோணம் என்று வழங்குகிறது.
தேவேந்திரனால் பூஜிக்கப்பட்ட கோமேதக லிங்கம்
உள்ளது.
இந்தக் கலைக்களஞ்சியம்x
 

இங்கு மேலக்குமரன் ஒரு திருமுகமும் நான்கு திருக்" கரங்களும் கொண்டு இரு தேவியருடன் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார். தேவியர் இருவரும் அருகில் காட்சி தருகின்றனர்.
உற்சவர் மயிலுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகின் றார். கந்தசஷ்டி விழா சிறப்பு. பன்னிரண்டு ராசிகளும் ஒரே கல்லில் சுவாமி சந்நிதி மேல் மண்டபத்தில் சிற்பங்க ளாக வடிக்கப்பட்டுள்ளன. அம்பிகை, ஆறுமுகன், சந்நிதிக ளில் கருங்கல் சங்கிலிவளையம் வடிக்கப்பட்டுள்ளது வெகு அருமை. திருப்புகழில் மூன்று பாடல்கள் உள்ளன.
அதிபத்தநாயனார் அவதரித்த தலம். சுந்தரர் பொன் பெற்ற தலங்களுள் ஒன்று. சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்று. இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் தியாகராச மூர்த்திக்கு அழகிய விடங்கர் என்பது திருநாமம். சுந்தர விடங்கர் பாரவார தரங்க நடனம், அலைபோல் நடனம்.
கோயிலில் முதலில் இருக்கும் விநாயகர் நாகாபரண விநாயகர். உள்ளே இருக்கும் விநாயகர் மாவடிப் பிள்ளை யார். தியாகராசருக்கு எதிரில் சுந்தரர் பரவை நாச்சியா ருடன் வீற்றிருக்கிறார். மூன்று புராணங்கள் இத்தலம் சம்பந்தமாக உள்ளன. புண்டகரீகர் காஞ்சிபுரம், கும் கோணம் ஆகிய தலங்களில் காரோணப் பிரதிட்டை செய்தார். நாகையில் 3ஆவது காரோண பீடம் இயற்றி அதில் காயத்துடன் மறைந்தார்.
சுவாதி; காயாரோகணேசுரர், ஆதிபுராணேசுரர் அம்பிகை. கருந்தடங்கண்ணி, நீலாயதாஷி விரும்சம்: மா
தீர்த்தம்: புண்டரீக தீர்த்தம், தேவதீர்த்தம்
பாரார் பரவும் பழனத் தானைப்
பருப்பதத் தானைப் பைஞ்ஞீலி யானைச் சீரார் செழும்பவளக் குன்றொப் பானைத்
திகழுந் திருமுடிமேல் திங்கள் குடிப் பேரா யிரமுடைய பெம்மான் தன்னைப்
பிறர்தன்னைக் காட்சிக் கரியான் தன்னைக் காரார் கடல்புடைசூழ் அந்தண் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றும் காண லாமே
(திருநா. 6ஆம் திரு.)
x இந்துசமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 184
புனையும் விரிகொன்றைக் கடவுள் புனல்பாய நனையும் சடைமேலோர் நகுவெண் டலைசூடி வினையில் லடியார்கள் விதியால் வழிபட்டுக் கனையுங் கடல்நாகைக் காரோ னத்தானே.
(திருஞா. 1ஆம் திரு.) பத்துர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடிப்
பாவையரைக் கிறிபேசி படிறாடித் திரிவீர் செத்தார்தம் எலும்பணிந்து சேவேறித் திரிவீர்
செல்வத்தை மறைத்துவைத்திர் என்கொரு நாள்
இரங்கிர் முத்தாரம் இலங்கிமிளிர் மணிவயிரக் கேவை
அவைபூணத் தந்தருளி மெய்கினிதா நாறும் கத்துரி கமழ்சாந்தும் பணித்தருள வேண்டும்
கடல்நாகைக் காரோணம் மேவியிருந் திரே,
(சுந்தரர்)
'காரோணம் என்ற சொல் திருக்கோயிலைக் குறிக்கும். மகாசங்கார காலத்தில் சிவபெருமான் உயிர்களைத்
தம்முள் ஐக்கியமாக்கிக் கொண்ட தலம்.
இத்தலத்தைப் பற்றி வேறுதலங்களில் வழங்கும் தேவாரப் பாடல்கள்:
பயிலாமாமலையார் காரோணத்தார் - கோயில் (திருநா) காரோணத்தென்று மிருப்பார்போலும் - சாய்க்காடு
(திருநா) கடனாகைக் காரோணங் கருதினானை - புள்ளிருக்கு
வேளூர்(திருநா) காரோணம் காதலார் - பந்தணைநல்லூர் (திருநா) கடனாகைக் காரோணம் கைவிட்டிந்நாட் பொன்மலிந்த கோதை யருந்தாமுமெல்லாம் புறம்பயம்நம் ஊரென்று போயினரோ - புறம்பயம் (திருநா)
கயிலாயா காரோணா வென்றேனானே - ஐயாறு (திருநா) கச்சியேகம்பனே காரோணத்தாய் - ஆனைக்கா (திருநா) காவார் கடைமுடியார் காரோணத்தார் - இடைமருதூர்
(திருநா) கயிலாய மலையுளார் காரோணத்தார் - விழிமிழலை
(திருநா) காளத்தி காரோணமேயார் போலும் - ஆரூர் (திருநா)
綫簽災簽 5
 

காரோணங் கழிப்பாலை மேயான்றன்னை - ஆரூரநெறி
(திருநா) தெள்ளியாருள்கியேத்துங் காரோணந்தம் முடைய காப்புகளே - அதிகை (திருநா)
தண்காழி கடனாகைக் காரோணத்தும் - பொது (திருநா)
(வி.பா.) நாங்குனேரி
திருநெல்வேலி - நாகர்கோயில் பேருந்து, புகைவண்டிப் பாதையில் 29 கி.மீ தொலைவில் உள்ளது.
இத்தலச் சிவபிரான் திருநாகேசுவரர். இறைவி சிவகாமி அம்மாள், இத்தலத்தின் நான்கு புறமும் ஏரிகள் சூழ்ந்துள்ள மையினால் "நாங்குனேரி” எனப் பெயர் பெற்றது. நாகன் என்பவன் வெட்டிய ஏரி. இது நாகன் ஏரி என்று வழங்கி பின் நான்குனேரி என்றாயிற்று என்பர். இத்தலம் திருசிரிவர மங்கை, தோத்தாத்திரி ஷேத்திரம் என்றும் பெயர் பெற்றது. இதனை நாங்குநேரி, நாங்கூநேரி, நாகனசேரி என்பர்.
இங்கு முருகப் பெருமான் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு மயிலுடன் நின்ற திருக்கோலத் தில் தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கிக் காட்சி தருகின்றார்.
வைகாசி விசாகம், கந்தசஷ்டி முக்கியமான விழாக்கள் திருப்புகழில் மூன்று பாடல்கள் பெற்ற தலம். வானமா மலை பெருமாள் கோவிலும் வானமாமலை ஜியர் மடமும் இங்கு உள்ளன. இங்கு வானமாமலைப் பெருமாளு க்கு அபிஷேகம் செய்யும் எண்ணெய் தீராத நோய்களைத் தீர்க்கும் மருத்துவ குணமுடையது என்பர். (நி.நி)
Tällöinằf flugit annuleiðañ6
பராசவன புராணம்
இது ஒரு புராணமாயினும் இப்பகுதியில் இருந்து மறைந் துள்ள, இன்றும் இருக்கிற கோயில்களைப் பற்றி அறிய ஒரு வரலாறு போலப் பயன்படுகின்றது. இப்புராணத்தின்
இன்னொரு சிறப்பு, இது சிவன், திருமால் ஆகிய இரு தெய்வங்களையும் சிறப்பிக்கின்றது. இந்நூலால் அறியப்
பெறும் செய்திகளாவன:
இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 185
பராசவனத்திலுள்ள மதங்காசிரமத்தில் தவம் செய்த மதங்க முனிவரின் வேண்டுகோளின்படி திருமால் பன்னிரு மூர்த்திகளாகி பராசவனத்தில் வெவ்வேறு இடங்களில் எழுந்தருளினார். சுவேதாரணியத்திலுள்ள (திருவெண்காடு) ஈசான்ய பீடமாகிய மூலலிங்கத்தை வாசுதேவன் வழிபட்டு வந்தார். இப்பகுதியிலுள்ள ஏனைய பன்னிரு சிவபீடங்களை திருமாலின் பன்னிரு மூர்த்திகளும் நிறுவி வழிபட்டு வந்தனர்.
(1) மதங்கரை (தத்புருட பீடம்) நாராயண மூர்த்தியும் (2)ஆரண்யேசுவரரை (அகோரபீடம்) பார்த்த சாரதிப் பெருமா ளும், (3) யோகநாதரை (வாமதேவ பீடம்) அண்ணன் பெருமாளும், (4) சொர்ணபுரீசுவரரை (சத்யோஜாத பீடம்) செம்பொன்னரங்கரும், (5) ஜூரஹரேசுரவரரை (சோமபீடம்) குடமாடுங் கூத்தரும், (6) நாகநாதரைப் (சார்வபீடம்) பள்ளி கொண்ட பெருமாளும், (7) நம்புவார்க்கன்பரை (மகாதேவ பீடம்) புருடோத்தமப் பெருமாளும், (8) கைலாச நாதரை (பீமபீடம்) வைகுந்தப் பெருமாளும், (9) சுந்தரேசுவரரைத் (பவபிடம்), திருமேனி அழகரும் (10) பெருந்தோட்டம் ஜராவ தேசுவரரை (பிராண பீடம்) கீழைச்சாலை மாதவப் பெருமா ளும், (11) கலிக்காமேசுவரரை (ருத்ர பீடம்) திருவாலி நரசிம்ம மூர்த்தியும், (12) நயனார்ப்பனேசரை (பாசுபத பீடம்) நயணிபுரம் லட்சுமி நாராயணப் பெருமாளும் நிறுவி
வழிபட்டனர்.
பிரமனின் புருவ மத்தியில் தோன்றிய உருத்திரனும், அவ்வுருத்திரனிடத்துத் தோன்றிய உருத்திரர் பதினொரு வரும் சேர்ந்து மேற்கூறிய திருமால் பன்னிருவரையும் வழிபட்டனர் என்றும் இப்புராணம் கூறுகிறது.
புராணம் கூறும் திருமால் கோயில்கள் அனைத்தும் நாங்கூரில் உள்ளன. சிவன் கோயில்களில் இரண்டு தவிர ஏனையவை உள்ளன. மேலும் இப்புராணம் ஒன்பது விநாய
கர் கோயில்களையும் குறிப்பிடுகிறது. அவைகளாவன:
1. சித்தபிலத்திலுள்ள சித்தி, புத்தியுடன் கூடிய பாலமாயிர
விநாயகர்
2. நாகநாதர் சந்நிதியிலுள்ள புஷ்டி பீடம்
3. வேதராசபுரம் பரமேச விநாயகர்
இந்துக் கலைக்களஞ்சியம்x
鄒 L5
 

4. கெளதமாசிரமம் கற்காயிர விநாயகர்
5. மதங்காசிரமம் கற்காயிர விநாயகர்
6. நாலாயிரத்தொருவர்
7. மதங்கருக்குப் பக்கத்திலுள்ள மதங்கவிநாயகர்
8. மதங்கருக்கு மேற்கேயுள்ள சக்கர விநாயகர்
9. பிரமாசிரமத்திலுள்ள பிரம்ம விநாயகர்
இந்த ஒன்பது விநாயகர்களோடு காவிரிப் பூம்பட்டினத் திலுள்ள தர்மபீட விநாயகரையும், சங்கமத் துறையிலுள்ள தீர்த்த விநாயகரையும் இந்நூல் குறிப்பிடுகிறது. இனி இந்நூல் குறிப்பிடும் முக்கிய கோயில்களைக் காண்போம்.
நாலாயிரத்தொருவர் கோயில்
திருமணக் கூடத்திலிருந்து நாங்கூர் செல்லும் வழியில் சாலையில் தென்புறம் தெற்கு நோக்கி உள்ளது நாலா யிரத்தொருவர் என்னும் பிள்ளையார் கோயில், இராமர் இவ்விடத்தில் நாலாயிரம் முனிவருடன் அசுவமேத யாகத் தைத் தொடங்கியபோது விநாயகரை வழிபடாமையால், முனிவர் மந்திரத்தை மறந்தனர். பின்னர் நாரதர் சொல்லி பிள்ளையாரை வழிபட நாலாயிரவருடன் பிள்ளையாரும் வந்தமர்ந்ததால் அவருக்கு நாலாயிரத்தொருவர் என்று பெயர் வந்தது என்பது புராணம்.
இங்குள்ள பிள்ளையார் சுயம்பு மூர்த்தியாவார். அபிஷே கித்த நீர் சிலையினுள்ளேயே சென்றுவிடும். இங்கு வாயிற் காப்பாக அமைந்துள்ள சங்கநிதி, பதும நிதி என்னும் இரு அழகிய சிலைகளும் காணத்தக்கன. இங்குள்ள திருக்குளம் தசாஅசுவமேத தீர்த்தம் ஆகும். 15.09. 1971 ஆம் ஆண்டில் இக்கோயிலுக்குக் குடமுழுக்கு நடை பெற்றது.
நம்புவார்க் கண்பர் கோயில்
நாலாயிரத்தொருவர் கோயிலிலிருந்து சற்று மேற்கே வந்தால், நம்புவார்க்கன்பர் கோயிலைக் காணலாம். சந்நிதி மேற்கு பார்த்தபடி அமைந்துள்ளது. இங்குள்ள இறைவனின் அழகிய பெயர் நம்புவார்க்கு அன்பர்; இறைவியின் பெயர் நம்பிப்பிரியார். அம்பாளின் சந்நிதி தெற்கு பார்த்தபடி
SSS TTT TLL TCCL0 TLLLCTCO LLekkkLTTLLLLL

Page 186
அமைந்துள்ளது. தெற்கு கோஷ்டத்திலுள்ள தென்முகக் கடவுளின் சிலை எழிலானது 18.03.1975 ஆம் ஆண்டில் இக்கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பழைய கோயிலில் இருந்த கைலாசநாதரையும் (இலிங்கம்) இங்கு எழுந்தருளச் செய்துள்ளனர். அமிர்தகடேசர் என்னும் இன் னொரு இலிங்கமும் வேறொரு இடத்திலிருந்து இங்கு கொண்டுவந்து வைக்கப்பட்டதெனக் கூறுகின்றனர்.
மதங்கேசுவரர் கோயில்
நாங்கூர் கீழவீதியின் கோடியில் மணிகர்ணிகை ஆற்றின் வடகரையில் உள்ள இக்கோயில் மிகப் பழமையானது. கிழக்குப் பார்த்த சந்நிதி. ஆனால் இப்போது உள்ளே நுழைவது மேற்கே உள்ள வழியினால்தான். மேலைத் திருச்சுற்றிலுள்ள விநாயகர், சுப்பிரமணியர், மகாலட்சுமி, சந்நிதிகளும் தெற்குத் திருச்சுற்றில் மதங்கமுனிவரை மயக்க வந்த மோகினிச் சிலையும் சண்டீசர், அம்பாள், சந்நிதிகளும் உள்ளன. வடக்குத் திருச்சுற்றில் காளி சந்நிதியும், மதங்கமுனிவரின் சந்நிதியும் உள்ளன. சுப்பிர மணியர் கோயிலும் காளிகோயிலும் திருப்பணியாகிக் குடமுழுக்கு ஆகியுள்ளன. சுவாமி விமானமும், அம்பாள் விமானமும், மண்டபங்களும் மிகவும் பழுதடைந்துள்ளன. விரைவில் சீர்செய்து குடமுழுக்குச் செய்யப்படவேண்டியுள் ளது. 1973 இல் திருப்பணி தொடக்கத்திற்கான ஒரு கல்வெட்டுத் திறப்புவிழா நடந்திருக்கிறது.
கருவறையுள் மதங்கீசுவரரும், தனிக் கோயிலில் மதங் கீசுவரியும் உள்ளனர். தெற்குத் திருச்சுற்றில் மதங்கமுனி வடக்கு நோக்கி யோகத்தில் உள்ளார். இதுவே மதங்கா சிரமம். மதங்கமுனிவருக்கு அம்பிகையின் அம்சமான யோகமாயை மதங்கீசுவரி என்னும் பெயரில் மகளாகத் தோன்றினாள். அவளுக்கு அஞ்சனாட்சி, சுக ஹஸ்தை (கையில் கிளியுடையவர்), மகாசியாமை எனப் பல
பெயர்கள் உள்ளன.
மதங்கரிஷியின் மகன் மாதங்கர். மாதங்கருக்கு பிரம்ம வித்தை என்ற பெயரில் அஞ்சனாட்சியே மகளாகத் தோன்றி சுவேதாரண்யேசுவரரை மணந்தாள் என்று பராச வனப்புராணம் கூறுகின்றது. இங்குள்ள இரு நந்திக ஞள் ஒன்று மதங்கீசுவரரை நோக்கியும், இன்னொன்று திரு
இந்துக் கலைக்களஞ்சியம்&
 

8
வெண்காட்டை நோக்கியும் உள்ளது. இக்கோயிலும் நம்பு வார்க்கன்பர் கோயிலும் அறநிலையத்துறையின் ஆட்சியில்
உள்ளன.
பிறகோயில்கள்
நாங்கூரின் சாவான் கல் தெருவிலுள்ளது அமிர்தபுரீசுவரர்
கோயில். இங்குள்ள அம்பாள் பெயர் சந்திராட்சி. விநாயகர்
பெயர் சுரந்தீர்த்த விநாயகர்.
நாங்கூருக்கு மேற்கே உள்ள அல்லிவளாகத்தில் மணி கர்ணிகை ஆற்றின் வடகரையில் உள்ளது நாகநாதசுவாமி கோயில். இது கிழக்கு நோக்கிய சந்நிதி. இங்குள்ள அம்பாளின் திருநாமம் நற்றுணை அம்பாள். இங்கு நடராசரின் கற்சிலை உள்ளது. இக்கோயிலுக்கும் நாங்கூர் சுரந்தீர்த்த விநாயகர் கோயிலுக்கும் நம்புவார்க்கன்பர் கோயிலுக்கும் அர்ச்சகர் ஒருவரே.
நாங்கூருக்கும் தெற்கேயுள்ள இலையமுதுகூடத்தில் பிரமபுரீசுவரர் கோயில் உள்ளது. இது மேற்கு நோக்கிய சந்நிதி. இங்குள்ள அம்பாளின் திருநாமம் செளந்தர நாயகி. அர்ச்சகர் வீடு கோயில் அருகிலேயே உள்ளது. இவையனைத்தும் பாடல்பெறாத கோயில்களே.
நாங்கூரின் பிற சிறப்புக்கள்
நாங்கூர் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர். கரிகால் வளவ னின் தாய் மாமன் இரும்பிடர்த் தலையார் இவ்வூரினர், திருவிசைப்பா - திருப்பல்லாண்டு பாடிய சேந்தனாரும் இவ்வூரினரே தகுவோபா கல்வெட்டு நாங்கூரினரைக் குறிப்பிடுகின்றது. திருவெண்காட்டிலுள்ள ராஜராஜன் காலத்திய கலட்வெட்டுகள், திருவெண்காட்டை உள்ளடக் கிய பகுதியை நாங்கூர் என்றழைக்கிறது. நாங்கூர் ராஜரா ஜன் காலத்தில் ஒரு நாடாக இருந்துள்ளது. ராஜேந்திர சிங்க வளநாட்டில் உள்ளடங்கிய நாடாகவும் பின்னர் ராஜேந்திர வளநாட்டினுள்ளடங்கிய நாடாகவும் நாங்கூர் நாடு திகழ்ந்துள்ளது. திருவலம்புரம் (மேலப்பெரும்பள்ளம்) கல்வெட்டொன்றில் நாங்கூர் குறிப்பிடப்படுகிறது.
நாங்கூரினுள்ளேயே மங்களாசாசனம் பெற்ற ஏழு திரு மால் கோயில்கள் உள்ளன. இங்கு நாலாயிரம் அந்தணர் கள் வாழ்ந்ததாகச் செவிவழிச் செய்தி. தில்லை மூவாயிர வர் என்பதுபோல் நங்கை நாலாயிரவர் என்றொரு வழக்கும்
భ
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்கலாம்

Page 187
உண்டு. இங்கு அந்தணர்கள் மிக்கிருந்ததனைத் திரு மங்கை ஆழ்வார் அடிக்கடி குறிப்பிடுகிறார்.
சைவ சமயத்தினர் நாங்கூரை வைப்புத்தலமாக எண்ணு
வர். சுந்தரர் இரு பாடல்களில் நாங்கூரைக் குறிப்பிடுகிறார்.
"தேங்கூருந் திருச்சிற்றம்பலம் சிராப்பள்ளி பாங்கூரேங்கள் பிரானுறையுங் கடம்பந்துறை பூங்கூரும் பரமன் பரஞ்சோதி பயிலுமூர் நாங்கூர் நாட்டு நாங்கூர்”
"வேங் கூருறைவாய், விளமர்நகராய், விடையார்
கொடியானே,
நாங்கூருறைவாய், தேங்கூர் நகராய், நல்லூர்
கொடியானே,
பாங்கூர் பலிதேர் பரனே, பரமா, பழனப் பதியானே’
மங்களா சாசன உற்சவம்
இவ்வூரில் நடைபெறும் திருமங்கை ஆழ்வார் மங்களா சாசனத் திருவிழா வைணவ உலகில் பிரசித்தி பெற்றது தமிழகத்திலிருந்து மட்டுமல்ல பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் இவ்விழாவில் வந்து கலந்து கொள்ளுகின்றனர். தை அமாவாசைக்கு மறுநாள் இவ்விழா நாங்கூர் மணி மாடக்கோயிலில் நடைபெறுகிறது.
திருமங்கை ஆழ்வார், திருவரங்கத்தில் திருப்பணிகள் செய்து வருங்காலத்தில் தாமியற்றிய திருநெடுந் தாண்ட கத்தை அரங்கன் முன் பாட, அரங்கன் உவந்து “உமக்கு வேண்டும் வரம் கேளும்” என்ன, ஆழ்வாரும் அத்யயன உற்சவத்தின்போது வேதத்தோடு திருவாய் மொழியினை யும் கேட்டருளி திருவாய்மொழிக்கு வேதத்திற்கு ஒப்பான நிலை தந்தருள வேண்டுமென வேண்ட, பெருமாளும் அதற் கிசைந்தார். ஆழ்வாரும் அவ்வாறே திருவாய்மொழித் திரு நாள் நடத்திவர அரங்கன் மகிழ்ந்து ஆழ்வாருக்குக் காவிரி யில் மஞ்சள் நீராட்டம் நடத்தி வைத்தார். ஆழ்வார் காலத் திற்குப்பின் அவருடனிருந்த அவர்தம் தங்கையின் கணவர். குறையலூருக்குத் திரும்பி வந்து ஆழ்வாருக்கு விக்கிரகம் வடித்து திருநாங்கூரையொட்டி ஒடும் காவிரி கிளையான மணிகர்கணிகை ஆற்றில் ஓரிடத்தில் மஞ்சள் குளியல் திருவிழாவினைத் தொடர்ந்து நடத்தி வந்தார். அவ்விழாவே
இந்துக் கலைக்களஞ்சியம்x
 
 

கி.பி. 8ஆம் நூற்றாண்டு முதல் இங்கு நடைபெற்று வரு கிறது.
தை அமாவாசையன்று காலை மூன்று மணியளவில் திருநகரிலிருந்து புறப்படும் ஆழ்வார் திருக்குறையலூர், மங்கைமடம், காவளம்பாடி, திருமணிக்கூடம், பார்த்தன் பள்ளி ஆகிய தலங்களுக்குச் சென்று அங்குள்ள எம்பெரு மான்களை மங்களா சாசனம் செய்தபின் நாங்கூருக்குத் தென்மேற்கேயுள்ள மஞ்சள்குளி மண்டபத்திற்கு பகல் 12 மணிக்குச் சென்று ஆற்றில் இறங்கி அங்கிருந்தபடியே திருநறையூர், திருவரங்கத்துப் பெருமான்களை மங்களா சாசனம் செய்வார். திருநறையூரிலிருந்தும், திருவரங்கத்திலி ருந்தும் வந்திருக்கும் ஆடைகளையும் மாலைகளையும் ஏற்றுக்கொள்வார். ஆழ்வாரின் வழிபாட்டிலிருந்த சிந்த னைக்கினியானுக்குச் செய்யப்படும் மஞ்சள் நீராட்டு ஆழ், வாரின் திருமேனிக்கும் ஆகும். அடுத்து அனைவருக்கும் ததியாராதனம் நடைபெறும். பின்னர் ஆழ்வார் அங்கிருந்து புறப்பட்டு திருநாங்கூர் வந்து திருமணிமாடக்கோயில், திரு வண்புருடோத்தமம், திருவைகுந்த விண்ணகரம், திருச்செம் பொன்கோயில், திருத்தெற்றியம்பலம், திருஅரி மேய விண்ணகரம் ஆகிய ஆறு திவ்யதேசங்களையும் மங்களா சாசனம்செய்வார். மதியம் மணிமாடக்கோயிலில் பதினொரு எம்பெருமான்களுக்கும் மங்களா சாசனம் செய்வார். இரவு பதினொரு கருடோற்சவம் நடைபெறும். மறுநாள் ஆழ்வார் திருவெள்ளக்குளம் சென்று சீனிவாசப் பெருமாளை மங் களா சாசனம் செய்வார். பின்னர் கீழச்சாலைக்குச் சென்று மாதவப் பெருமாளை மங்களா சாசனம் செய்வார். அடுத்து திருவாலிக்குச் சென்று ஆலிநாடரை மங்களா சாசனம் செய்வார். இறுதியாகத் திருநகரி சென்றடைவார். அங்கும் மங்களா சாசனம் நடைபெறும்.
ஆழ்வாரின் மைத்துனர் தொடங்கி வைத்த மஞ்சள்குளி மங்களா சாசன விழாவோடு கடந்த 90 ஆண்டுகளாகப் பதினொரு கருடசேவையும் இங்கு நடைபெற்று வருகின் றது. சுமார் 137 ஆண்டுகளுக்கு முன்பு சிதம்பரத்தில் தோன்றி பள்ளிக்கூட ஆய்வாளராகப் பணியாற்றிவந்த ரீதிருமலை விஞ்சிமூர் ரீநிவாஸாச்சாரியார் ஆழ்வார், திருநகரியில் பராங்குசருக்கு ஒன்பது கருடசேவை நடப்பது போலவே இங்கு பரகாலருக்குப் பதினொரு கருடசேவை
xண் இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்கலாம்

Page 188
நடத்திப்பார்க்க ஆசைகொண்டு, பூரீகாகுமாணி ஆதிகேச வலு செட்டியார், பூரீ கொப்பியம் திருநாராயணபிள்ளை முதலிய பெரியார்களின் துணையுடன், அமாவாசைக்கு மறுநாள் பகலில் மணிமாடக்கோயிலின் எதிரில் பதினொரு எம்பெருமான்களையும் எழுந்தருளச் செய்து, அவர்களுக்கு ஆழ்வார் மங்களாசாசனம் செய்ய, இரவு மணவாள மாமுனி கள் முதலில்வர, ஆழ்வார் அன்ன வாகனத்தில் அடுத்து வர, பதினொரு எம்பெருமான்களும் கருட வாகனத்தில் ஒருவர் பின்னொருவராய் கருடசேவை 1894 ஆம் ஆண்டு (விஜய ஆண்டு தை மாதம்) முதல் நடைபெற்று வருகின்
றது.
சைவப் பெருமக்களில் சிலரும் இதுபோல் இப்பகுதியிலு ள்ள கிராம தெய்வங்களைச் சாவான்கல் இருக்குமிடத்து
க்கு எழுந்தருளச் செய்து விழா நடத்தினர்.
இவ்வாறு சைவம், வைணவம், சாக்தம் ஆகிய சமயங்க ளும், சமய விழாக்களும் போட்டியிட்டுக் கொண்டு வளர்ந்த ஊர் திருநாங்கூர். (த.அ)
TěřfutbLogit anulei)
(சிங்கள நாச்சியம்மன் கோயில்)
இத்திருக்கோயில் தஞ்சை குந்தவை நாச்சியார் பெண் கள் கல்லூரி சமீபமாக ஒரு காட்டில் உள்ளது. இத்திருக் கோயில் செங்கமல நாச்சியம்மன் என்றும் செங்க நாச்சியம் மன் என்றும் தற்காலத்தில் அழைக்கப்படுகிறது. இக்கோ யில் இக்காட்டுப் பகுதியில் வடக்கு நோக்கி அமைந்துள் ளது. இக்கோயிலின் நீள, அகலம் 12x 12 மீற்றர் ஆகும்.
இவ்வம்மன் வழிபாடு தஞ்சையில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இவ்வம்மனை தஞ்சையிலுள்ள 48 தெருவார் கள் வழிபட்டு வருகின்றனர். இக்கோயில் அம்மன் பெரு வாரியான தஞ்சை மக்கள் மனதில் இடம்பெற வேண்டு மானால் இப்பகுதியில் ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்க வேண் டும். இச்சம்பவம் மக்களைப் பெரிய பாதிப்புக்குள்ளாக்
கியிருக்க வேண்டும் என அறியலாம்.
சிங்களத் தீவிலிருந்து தஞ்சைக்கு ஓர் அரசன் தன்
இந்துக் கலைக்களஞ்சியம்ஜ்
 

மனைவியையும் மந்திரியையும் பிற பரிவாரங்களையும் அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தான். அக்காலத்தில் முதலாம் இராசராசன் தஞ்சையில் ஆட்சி பீடத்தில் இருந்த தாகச் செய்தி கூறப்படுகிறது. இச்சிங்கள அரசன் இராசராச னின் முந்தைய இரண்டு அழைப்புக்களையும் ஏற்க மறுத்து தஞ்சை வரவில்லை. மூன்றாவது அழைப்பின்போதே மந்தி ரியின் வேண்டுகோளுக்கிணங்கி சிங்களத் தீவிலிருந்து தஞ்சைக்கு வந்தான். சிங்களம் அப்போது இராசராசன் ஆட்சிக்குட்பட்டதாக இருந்திருக்க வேண்டும். திறை செலுத்த வேண்டிய அரசர்களில் இச்சிங்கள அரசனும் ஒருவனாக இருந்திருக்கக்கூடும். தஞ்சைக்கு வந்த சிங்கள அரசன் இக்கோயிலிருக்கும் இக்காட்டுப் பகுதியில் தன் மனைவியையும் பிற பரிவாரங்களையும் இருக்கும்படி கூறி விட்டுத் தானும் மந்திரியும் அரசனைப் பார்க்கப் புறப்பட்டார்
56T.
மந்திரியை வெளியில் இருக்கும்படி கூறிவிட்டு சிங்கள அரசனை உள்ளே அழைத்துச் சென்றார்கள். சிங்கள அரசனை இராசராசன் வரவேற்றும் பேசினார். ஆனால் உள்ளே சென்றவர் திரும்பவில்லை. இதனால் மந்திரி ஐயமுற்றார். சிங்கள அரசன் கொல்லப்பட்டதை அறிந்தார். மந்திரி அவ்விடத்திலிருந்து திரும்பினார். மந்திரி அரசன் கொலையுண்ட செய்தியைச் சிங்கள ராணிக்குத் தெரிவித்தார். பிற பரிவாரங்களுடன் சிங்களத்திற்கு உடனே திரும்ப வேண்டுமெனக் கூறினார் மந்திரி. ஆனால், சிங்கள ராணி செல்ல மறுத்தாள். அவ்விடத்திலேயே உயிரை மாய்த்துக் கொள்ள விரும்பினாள். அக்காட்டிலிருந்து குட்டையில் இறங்கி உடனே சமாதியானாள். அவளே சிங்கள நாச்சியம்மன் ஆகும். பொதுமக்களை அக்காலத்தில் இந்நிகழ்ச்சி பெரிய பாதிப்புக்குள்ளாக்கியிருக்க வேண்டும். ஆதலால் இவ்வம் மன் வழிபாடு தஞ்சையிலுள்ள பல தெருவார்களிடம் இன் றும் தொடர்ந்து காணப்படுகிறது. இக்கோயிலின் உபய தாரர்களாக இத்தெருவார்கள் இருந்து வருகிறார்கள். இவ் வம்மனைப் பற்றிய பாடல்கள் ஏட்டுச்சுவடிகளாகத் தஞ்சை சரஸ்வதி மஹாலில் உள்ளது எனக் கூறப்படுகிறது. இக்கதை தொடர்பான கல்வெட்டு ஒன்று தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ளது என்றும் கூறப்படுகிறது.
xxx இந்து சமய கலாசார அலுவல்கள் திCைOOக்களம்

Page 189
இக்கோயில் கருவறையில் அம்மன் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறாள். அம்மன் வலது காலை மடக்கி பீடத் தில் வைத்துக் கொண்டு இடது காலைத் தொங்கவிட்ட நிலையில் அமர்ந்துள்ளாள். அம்மன் நான்கு கைகளை உடையவள். வலது மேல் கையில் பாம்புப்படம் இணைந்த டமருகமும் வலது கீழ்க்கையில் சூலமும் உள்ளன. இடது மேல் கையில் பாசமும் இடது கீழ்க் கையில் கபாலமும் உள்ளன. செங்கண்மா, செங்கண்ணன் என்பது போல உக்கிரமானதேவி செங்கண்மா நாச்சியாகி பின்பு செங்க மல நாச்சி என அழைக்கப்பட்டிருக்க வேண்டும் எனக்கூறு வர். சாதாரணமாகச் செங்கமல நாச்சியார் என்பது செந்தா மரை மலர் மேல் வீற்றிருக்கும் லட்சுமி, மகாலட்சுமி எனக்கொள்வர்.
இக்கோயிலில் அமையும் விமானம் இரண்டு தளங்களையு டையது. கர்ணகூடு - நீடம் - சாலை - நீடம் - கர்ணகூடு என்ற அமைப்பில் தளவரிசை அமைக்கப்பட்டுள்ளது. சால கிரீவ கோஷ்டங்களில் அம்மன் உருவங்கள் உள்ளன. வட்டமான சிகரத்தில் எட்டு நாசிகள் காணப்படுகின்றன. கபோதத்தின்கீழ் பத்ம வரிசைகள் அமைந்துள்ளன. கிரீவ மூலைகளில் சிங்க வாகனங்கள் அமர்ந்துள்ளன. தேவ கோஷ்டங்களில் சிற்பம் எதுவு மில்லை. கருவறை அதிட் டானத்தின் கீழ் சிறிய உபபீடம் உள்ளது.
கருவறையைத் தொடர்ந்து அமையும் சிறிய அந்தராளத் தில் இரண்டு பட்டவன்’ சிலைகள் வாயிலின் வலது பக் கத்தில் உள்ளன. தனது வீட்டிலுள்ள ஒருவன் எக்காரணத் தினாலோ இறந்துவிட்டால் அவருக்கு ஓர் உருவம் இக் கோயிலில் சமைத்து அல்லது அவர் சாம்பல் மேல் ஒரு கல்லை நட்டு அவரைக் குலதெய்வமாகக் கருதி வழிபடும் வழக்கம் இப்பகுதியில் மிகுதியாகக் காணப்படுகிறது. இக்கோயிலிலே அவ்வாறு இறந்தவர்களின் சாம்பலை எடுத்து வந்து புதைத்து அதன் மேல் ஒரு கல்லை நட்டு வழிபடுகின்றனர். அவ்வாறு அமைக்கப்பட்ட கற்களை
பட்டவன்’ என்று அழைக்கின்றனர்.
அந்தராளத்தைத் தொடர்ந்து அமைவது அர்த்த மண்டப மாகும். அவ்வர்த்த மண்டபத்தில் அந்தராள வாயிலின் இருபுறமும் இரண்டு துவார பாலகிகள் சிற்பங்கள் தற்கால
இந்துக் கலைக்களஞ்சியம்xx 泰※畫s L6
 

த்தில் அழகுடன் சுதையால் அமைக்கப்பட்டுள்ளன. இதன ருகே சிங்க வாகனங்கள் உள்ளன. முன்பு காணப்பட்ட துவார பாலகிகள் மாற்றப்பட்டு புதிய துவார பாலகிகள் வைக்கப்பட்டுள்ளன. இடது பக்கத்திலுள்ள துவார பாலகி வலது மேல் கையில் டமருகமும் வலது கீழ்க்கையில் கத்தி முதலிவற்றையும் வைத்துள்ளார். டமருகத்தின்மேல் நாகபடம் உள்ளது. இடது மேல் கையில் பாசத்தையும் இடது கீழ் கையில் கதாயுதத்தையும் தாங்கியுள்ளார். வலது பக்கத்திலுள்ள துவாரபாலகி நேர்மாறாக கைக ளில் ஆயுதங்களைத் தாங்கியுள்ளார். இத்துவார பாலகிகள் சாந்த சொரூபமாக சாதாரண பெண்கள் போல அழகுடன் அமைக்கப்பட்டுள்ளன. பதினெட்டாம்படி கருப்பண்ண சாமிக்கு மரத்தாலான சிலை ஒன்று இம்மண்ட பத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இம்மண்டபத்தின் மேற்கில் விநாயகர், நாகக் கற்கள் (2) முதலியன வைக்கப்பட் டுள்ளன. அர்த்த மண்டபத்தின் கூரை மராட்டா பாணியில் வளைவுகளுடன் அமைந்துள்ளது. நான்கு சதுரத் தூண்கள் இம்மண்டபத்தில் காணப்படுகின்றன.
அர்த்த மண்டப வாயிலில் கோபுரம் ஒன்று தற்காலத்தில் கட்டப்பட்டுள்ளது. அது இருதளங்களையுடையது. கர்ண கூடு - நீடம் - சாலை - நீடம் - கர்ணகூடு என்ற அமைப்பு வரிசையில் தளஹாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மூன்று செம்பாலான கலசங்கள் சால சிகரத்தில் வைக்கப்பட்டுள் ளன. சால, கிரீவ கோஷ்டங்களில் அம்மன் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அர்த்த மண்டபத்தின் முன்னால் மகாமண்டபம் தற்காலத்தில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயி லில் பல ஆண்டுகளாக பூசை செய்யும் சோழிய வேளாளர் பரம்பரையினரும் பிறரும் இம்மண்டபத்தில் திருப்பணிகள் செய்துள்ளனர். மகாமண்டபத்தின் நடுவில் பலிபீடமும்
அதனருகே சூலமும் வைக்கப்பட்டுள்ள்ன.
மகாமண்டபத்தின் கிழக்கில் பல சிறிய சன்னதிகள் திருச்சுற்றில் உள்ளன. பட்டவன், உண்டிக்கருப்பு, வட்ட வன், பட்டவள். மதுரைiரன் ஆகியோருக்குச் சன்னதிகள் உள்ளன. இவை மேற்கு நோக்கி அமைந்துள்ளன. அடை க்கலம் காத்த ஐயனார் சன்னதி ஒன்று கிழக்கு நோக்கி பட்டவன் சன்னதி பின்னால் அமைந்துள்ளது. மதுரைவிரன்,
வெள்ளையம்மாள், பொம்மியம்மாள் ஆகியோருடன் நின்ற
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்கலாம்

Page 190
கோலத்தில் காணப்படுகிறார். இச்சிற்பம் சுதையால் செய் யப்பட்டது. பட்டவன்’ கற்கள் கருங்கல்லால் ஆனவை. உண்டிக்கருப்பு நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். வலது கையில் கத்தியும் இடது கையில் கதாயுதமும் தாங்கியுள்ளார். அடைக்கலம் காத்த ஐயனார் சூல வடிவில் உள்ளார். மகாமண்டபத்தின் மேற்கில் இரண்டு பட்டவன் சன்னதிகளும் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி சிலையும் இச்சன்னதியில் உள்ளன. பல சூலங்கள் சன்னதிகளுக் குள்ளும் வெளியிலும் நாட்டப்பட்டுள்ளன. இத்தெய்வத்தை வேண்டி பலன் பெற்றவர்கள் இவ்வாறு இக்கோயிலுக்குச் சூலத்தை வாங்கி அளிக்கின்றனர்.
இக்கோயிலுக்கு வெளியே தீர்த்தமானது கோயில் முன் னால் உள்ளது. இத்தீர்த்தத்தின் கரையில் தெற்மேற்கில் கிழக்கு நோக்கி ஏறத்தாழ 12 உயரமுள்ள வேதமுனியின் சுதையாலான சிலை உள்ளது. இச்சிலை பார்ப்பதற்கு விசேடமானது. வேதமுனி அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். அவரது தோள்களில் பச்சைக் கிளிகள் உள் ளன. காதுகளில் நாகப்படங்கள் உள்ளன. இவரது இரண்டு கோரப் பற்கள் வெளியே நீட்டிக் கொண்டு அகோரமாகக் காட்சியளிக்கின்றன. வேதமுனி வலது கையில் வாளை உயர்த்திப் பிடித்துள்ளார். இடது கையில் வேதப் புத்தகம் உள்ளது. மேலும் கதாயுதமும் இடது கையினை ஒட்டி அமைந்துள்ளது. இவர் இடது காலை மடக்கிப் பீடத்தில் வைத்துள்ளார். வலது காலைத் தொங்கவிட்டுள்ளார். வலது கையை நாகத்தின் மேல் வைத்துள்ளார். அவரது இரு பக்கங்களிலும் சிங்கம், புலி முதலியன முறையே இடது. வலது பக்கங்களில் நிற்கின்றன. கல்லாலான சிறிய வேதமுனி சிலை ஒன்று அவரின் கீழ் காணப்படு கிறது. வலது கையில் கத்தியும் இடது கையில் கதாயுத மும் அவர் தாங்கியுள்ளார். சூலம் ஒன்று இச்சன்னதி முன்பு நாட்டப்பட்டுள்ளது.
இக்கோயிலின் மேற்கே சிறிய சியாமளாதேவி அம்மன் சன்னதி ஒன்று காணப்படுகிறது. இக்கோயில் கருவறை யில் அம்மன் நான்கு கைகளுடன் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறாள். அவளது வலது மேல் கையில் பாம்புப் படம் இணைந்த டமருகம் உள்ளது. வலது கீழ்க்கையில் சூலம் காணப்படுகிறது. இடது மேல் கையில் பாசமும்
இந்தக் கலைக்களஞ்சியம்x
 
 

இடது கீழ்க்கையில் கபாலமும் உள்ளன. கரண்ட மகு டத்தை அம்மன் அணிந்துள்ளாள். அம்மன் இடது காலை மடக்கிப் பீடத்தில் வைத்துக்கொண்டும் வலது காலைத் தொங்கல் நிலையிலும் வைத்துள்ளாள். கருவறையை அடுத்து சிறிய அந்தரஈளப் பகுதியும் உள்ளது. அதில் சியாமளாதேவி சூலம் உள்ளது. அந்தராளத்தைத் தொடர் ந்து சிறிய முன் மண்டபம் தற்காலத்தில் கட்டப்பட்டுள்ளது. கருவறை மேல் சிறிய அல்பவிமானம் அமைக்கப்பட்டுள்
6ITՑ5l.
இக்கோயிலில் நித்ய பூசை தினமும் காலையில் நடை பெறுகிறது. தைமாதம் மூன்றாவது செவ்வாய்க் கிழமை கரக உற்சவம் நடைபெறுகிறது. உற்சவர் புறப்பாடும் இக்கோயிலில் உண்டு. அதற்கான சிம்ம வாகனம் இக் கோயிலில் உள்ளது. ஆடி மாதம் காப்புக்கட்டித் திருவிழா நடைபெறுகிறது. மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி மாதங் களில் தஞ்சையிலுள்ள பலதெருவார்கள் பாற்குடம் அம்மனுக்கு அளிக்கின்றனர். ஆடு, கோழி முதலியன பலி கொடுத்தல் பலகாலமாக இக்கோயிலில் நடந்து வருகிறது.
தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தைச் சார்ந்தவர்கள் இக்கோயிலைப் பரிபாலனம் செய்து வருகின்றனர். பெரும்பான்மையும் உபயதாரர்கள் ஆதரவில் இக்கோயில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. (க.கு.)
MěřefubLoež Beirulli)
இத்திருக்கோயில் தஞ்சை ரயில்வே நிலையத்தின் அருகே அமைந்துள்ள வெட்டுக்காரத் தெருவில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. (இக்கோயிலின் அம்மன் வரலாற் றைச் சிங்கள நாச்சியம்மன் கோயில் கதையில் காண்க) சிங்கள நாச்சியம்மனே இக்கோயிலிலும் செங்கமல நாச்சி யம்மன் என்ற பெயருடன் காட்சியளிக்கிறாள். இக்கோயி
லின் நீள, அகலம் 8x6 மீற்றர் ஆகும்.
இக்கோயில் ஒரு மண்டபமாகவே காட்சியளிக்கிறது.
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்கணம்

Page 191
ஏறத்தாழ ஆறு சதுர மீற்றர் பரப்புள்ள இம்மண்டபத்தின்
தெற்கில் ஒரு கோஷ்டத்தில் அம்மன் அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறாள். இவ்வுருவம் சுதையாலானது. அம்மன்
இடது காலை பீடத்தின் மேல் மடக்கி வைத்துக் கொண்டு
வலது காலைத் தொங்கவிட்ட நிலையில் அமர்ந்துள்ளாள்.
இவ்வம்மன் நான்கு கைகளையுடையவள். வலது கைக
ளில் மேலிருந்து கீழாக முறையே பாம்புடன் இணைந்த
டமருகமும் சூலமும் உள்ளன. இடது கைகளில் மேலிரு
ந்து கீழாக பாசமும் கபாலமும் உள்ளன. அம்மன் தலை
யில் கிரீட மகுடம் உள்ளது. அதன் பின்னால் ஜவாலா
கிரீடம் காணப்படுகிறது. அம்மனின் இரு மருங்கிலும் சாமரம்
வீசும் பெண்கள் உள்ளனர். கோஷ்டத்தைச் சுற்றி பிரபா
வளி சிங்கமுகத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. கோஷ்டத்
தின் இருமருங்கிலும் துவார பாலகிகள் ஒவியங்கள் நின்ற
கோலத்தில் பெரிதாக வரையப்பட்டுள்ளன. இவை தற்கால
ஒவியங்கள் ஆகும். சூலம் ஒன்று அம்மனின் முன்னால்
வலது பக்கத்தில் நடப்பட்டுள்ளது.
இக்கோயில் நான்கு தூண்களையுடைய மண்டபத்தையு
டையது. இக்கோயிலின் மேற்கில் விநாயகருக்கு ஒரு
தனிச் சன்னதியுள்ளது. விநாயகரும் மூஞ்சூறு வாகனமும்
இதில் உள்ளன.
காட்டில் அமர்ந்துள்ள சிங்கள நாச்சியம்மன் கோயிலின்
உற்சவ மூர்த்தி இக்கோயிலில் தான் வைக்கப்பட்டுள்
ளது. விசேட காலங்களில் அதன் புறப்பாடு நடைபெறுகி
றது. வெட்டுக்காரத் தெருவார்கள் காட்டு சிங்கள நாச்சி
யம்மனுக்கு பாற்குடம் எடுத்துச் செல்வார்கள். காட்டிலி
ருந்து இரண்டு கரகங்களை எடுத்துக் கொண்டு இக்கோயி
லுக்கு விசேட காலங்களில் வருவர். இக்கரகங்கள் இக்
கோயிலுக்குக் கொண்டு வரப்பட்டு இத்தெருவைச் சுற்றி
வந்து மீண்டும் காட்டு சிங்கள நாச்சியம்மன் கோயிலுக்குத்
திரும்பிச் செல்லும். தை மாதம் இக்கோயிலில் அம்மனுக்
கும் பாற்குடம் எடுக்கிறார்கள். நவராத்திரியின் போது
அலங்காரமும் ஊஞ்சலும் இக்கோயிலில் உண்டு. (க.கு.)
இந்தக் கலைக்களஞ்சியம்x
 

3
நாச்சியார் கோயில் (நறையூர்)
பங்குனி, சித்திரை மாதங்களில் கோயில்களில் குடி கொண்டிருக்கும் தெய்வங்களுக்குத் திருமணவிழா நடக் கும். அதேபோல, சிவாலய உற்சவங்களின்போது அதிகார நந்தி, வெள்ளி ரிஷபவாகன சேவையும் பெருமாள்கோயில் உற்சவங்களில் கருட சேவையும் பிரசித்தி பெற்றவை.
காஞ்சி வரதர் கருட சேவை, நாச்சியார்கோயில் கருட சேவை, திருநாங்கூர் பதினொரு கருடசேவை ஆகியவற் றைக் காணக் கண்கோடி வேண்டும். நாச்சியார்கோயில் கருடனுக்குத் தனிச் சந்நிதி. அதிலும் குறிப்பாக கல்லி னால் உருவாக்கப்பட்ட 'கல்கருடன்’ எங்கும் காணமுடி
யாத அதிசய வாகனர்.
சிற்பி ஒருவர் யாரும் செய்யாத வகையில் வித்தியாச மாக கல்லில் கருடன் சிலையைச் செதுக்கினார். பரந்த விரிந்த சிறகுகள், ஆஜானுபாகுவான திருமேனி, பெருந் தோள்களுடன் இரண்டு கரங்கள் விரித்தபடியிருக்க, சிலை தயாரானது. வழக்கம்போல சிலைக்கு பிரான பிரதிஷ்டை செய்தார் சிற்பி.
உயிர் பெற்ற கருடன், ஆகாயத்தை நோக்கிச் சீறிக் கிளம்பினார். பயந்துபோன சிற்பி, தன் கையில் இருந்த கல் உளியை கருடன் மேல் எறிந்தாராம். மூக்கில் லேசாக அடிபட்ட கல் கருடன், தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள இறங்கி அமர்ந்த இடம்தான் நாச்சியார் கோவில். திருநறையூர் என்றழைக்கப்படும் இத்தலத்துக்கு சுகந்த வனம், சுகந்தமலை என்ற பெயர்களும் உண்டு.
சண்டன், ஹேமன் என்கிற இரண்டு கொடிய அரக்கர்கள் பலவகையில் மக்களுக்குத் துன்பம் விளைவித்து வந்தனர். இதைக் கண்ட இந்திரன், கருடனை அழைத்து, அந்த அரக்கர்களை உடனே வதம் செய்ய கேட்டுக் கொண்டார். கருடன், மிகுந்த வாசனை உள்ள மேருமலையின் முடியைப் பெயர்த்தெடுத்து, அரக்கர்கள் மிது வீசியெறிந்து கொன்றார். வாசனை உள்ள மரங்களைக் கொண்ட மலைச்சிகரம் திருநறையூரில் விழுந்ததால், இது சுகந்த வனம், சுகந்தகிரி என்று அழைக்கப்பட்டது.
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்ககாய்

Page 192
உறையூரில் கமலவல்லித் தாயாரின் கோயில், நாச்சியார் கோயில் எனவும் பூரீவில்லிப்புத்துார் ஆண்டாள் கோயில், நாச்சியார் மாளிகை எனவும் அழைக்கப்பட்டன. வைகுண் டத்திலிருந்த மகாலட்சுமி இந்தத் தலத்தில் தோன்றி திரு மாலை மணந்துகொண்ட காரணத்தால், இந்த நாச்சியார் கோயிலிலும் லட்சுமி பிராட்டிக்குத்தான் முதலிடம். அந்தக் கல்யாணக் கதையையும் பார்த்துவிடுவோம்.
திருநறையூர் திருத்தலத்தில் மேதாவி என்ற முனிவர் கடுந்தவம் செய்தார். அவர் விரும்பிய வரம் - மகாலட்சுமி தனக்கு மகளாகப் பிறக்க வேண்டும், அவளை பூரீநிவாசப் பெருமாளுக்குக் கல்யாணம் செய்துவைத்துத் தான் மாமனாராக வேண்டும் என்பது.
முனிவர் விரும்பியபடியே, ஒரு பங்குனி மாத வெள்ளிக் கிழமை, உத்தர நட்சத்திரத் திருநாளில் வஞ்சுள மரத் தின் அடியில் மகளாகப் பிறந்தாள் மகாலட்சுமி. சீரும் சிறப்புமாக முனிவரின் ஆசிரமத்தில் வஞ்சுள வல்லி என்ற பெயரோடு வளர்ந்து திருமணப் பருவத்தை அடைந்தாள்.
அங்கே வைகுண்டத்தில் திருமாலைவிட்டு திருமகள் பிரிந்ததால், தேவலோகமே ஒளியிழந்து சோகமாகக் காட்சி அளித்தது. அசுரர்களின் கை ஓங்கியது. தேவர்கள் துன்பப் பட்டனர். பிரம்மாவின் தலைமையில் கிளம்பிய தேவர் குழுவினர் திருமாலிடம் முறையிட்டனர்.
அப்போது அருகில் இருந்த பெரிய திருவடியான கருடாழ் வார் ஒரு விண்ணப்பம் போட்டார். "நீங்கள் பூரீராமச்சந்திர மூர்த்தியாக அவதாரம் செய்தபோது அன்னை சீதாபிராட்டி யுடன் உங்களைச் சேர்த்து வைத்த பெருமை அனுமனுக் குக் கிடைத்தது. அதேபோல எனக்கும் பேறு கிடைக்க, பிராட்டியார் எங்கே இருக்கிறார் என்பதைத் தேடிக்கண்டுவர எனக்கு அனுமதி கொடுங்கள். " என கருடன் கேட்க, திருமாலும் தலையசைத்தார்.
மகிழ்ச்சியோடு கிளம்பிய கருடன், திருநறையூர் தலத்தில் மணிமுத்தாறு நதிக்கரையில் மேதாவி முனிவரின் ஆசிரமத் தில் மகாலட்சுமி வளர்வதைக் கண்டு பூரிப்படைந்தார். திருமாலிடம் தகவலைச் சொல்லி, மகிழ்ச்சியில் ஆழ்த்தி
60ITIJ.
வஞ்சுளவல்லித் தாயாரைக் கல்யாணம் செய்துகொள்ள
 

சங்கர்ஷணன், பிரதயும்னன், அநிருத்தன், புருஷோத்தமன், வாசுதேவன் என்ற ஐந்து மனித உருவில் திருநறையூர் வந்தார் திருமால். மணிமுத்தாறின் கரையில் இளைப்பாறிக் கொண்டிருக்கும் இவர்களைப் பார்த்த முனிவரின் சிஷயர் கள், ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்றார்கள். ஐவரையும் வரவேற்று உபசரித்தார் மேதாவி மகரிஷி. கை - கால் கழுவ தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்.
அப்போது நடுநாயகமாக விளங்கிய வாசுதேவர், "ஆண் கள் தரும் நீரை நாங்கள் ஏற்பதில்லை. கல்யாணமாகாத கன்னிப்பெண்கள் கொடுக்கும் நீரைத்தான் ஏற்பது என்பது எங்கள் விரதம்..” என்று விஷமப் புன்னகையோடு கூறினார். முனிவர் உடனே வஞ்சுளவல்லியை அழைத்து
நீர் கொண்டுவரச்சொன்னார்.
நீர் கொடுக்க அருகே வந்த வஞ்சுளவல்லியின் கையைத் தடுத்து வாசுதேவனாக வந்த திருமால் சங்கு சக்கரதாரி யாகத் தன் சுயரூபத்தைக் காட்டி அருளினார். வந்தது பூரீ நிவாசப் பெருமாள் என்பதை உணர்ந்த முனிவர், வஞ்சுளவல்லியைத் திருமணம் செய்வித்து, மாமனார்
பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.
கல்யாணக் களிப்பில் இருந்த மாப்பிள்ளையிடம், இன்று பொலவே கணவனும் மனைவியுமாக எப்போதும் ஒன்று சேர்ந்து தரிசனம் தரவேண்டும். இத்தலத்தில் வஞ்சுள வல்லிக்கே முதல் ஸ்தானம் அளிக்கவேண்டும். அவள் பெயரால் இத்தலம் நாச்சியார்கோயில் என அழைக்கப் படவேண்டும். இந்தத் திருத்தலத்தில் வாழ்ந்ததையே பெரும் பேறாகக் கருதி அனைவருக்கும் மோட்சப் பதவி தரவேண்டும்' என்று பல கோரிக்கைகளை பூரீநிவாசப் பெருமாளிடம் சொல்லி, அதன்படியே வரங்களையும் பெற்று விட்டார் மேதாவி மகரிஷி.
எனவே, இத்தலத்தில் பெருமாள் எதைச் செய்தாலும் மனைவி மஞ்சுளவல்லியின் அனுமதி பெற்றே செய்கிறார் என்று கூறுவார்கள். இதை உண்மையாக்குவது போல, உற்சவ காலங்களில் முதலில் வஞ்சுளவல்லித் தாயார்
தான் வருவார். பின்னால்தான் பெருமாள் தொடருவாராம்.
வஞ்சுளவல்லிக்கு நம்பிக்கை நாச்சியார் என்ற திருப்
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 193
பெயரும் உண்டு. நம்பிக்கையோடு எந்த வரம் கேட்டாலும் உடனே அதை வழங்குபவராக இருப்பதால், இந்தச் சிறப்புப் பெயர், கல்யாணமாகாத கன்னிகளின் வேண்டுதலுக்குச் செவிசாய்த்து, விரைவில் திருமணம் நடைபெற நாச்சியார் வழிகாட்டுவார் என்பது இங்கே பிரசித்தம்!
கோப்பெருஞ்சோழன் மிகவும் நேர்மையான அரசனாகத் திகழ்ந்தவன். அவன் வெளியூர்ப் பயணம் சென்றிருந்த போது, எதிரிகள் நாட்டுக்குள் புகுந்து ஆட்சியைக் கைப் பற்றிவிட்டார்கள். நாடு திரும்பிய மன்னனிடம், திருநறையூர் நம்பியான வாசுதேவப் பெருமாளிடம் சரணடையச் சொல்லி சில மகிரிஷிகள் ஆலோசனை கூற, அதன்படியே மணி முத்தாறு நதியில் நீராடி, வாசுதேவனை மனமுருகி வேண்டி னான். பகவான் அணுக்கிரகத்தால், மணிமுத்தாறு நதியிலி ருந்து உடைவாளும் குதிரையும் பெற்ற சோழ மன்னன், எதிரிகளைத் துவம்சம் செய்து, இழந்த ராஜ்யத்தைப் பெற்றானாம்.
மணிமுத்தாறு முதலில் சாதாரண நதியாகத்தான் இருந்தது. ஒரு சமயம் திருப்பாற்கடலிலிருந்து திருநாவி யணபுரத்தில் உள்ள எம்பெருமானுக்குச் சார்த்துவதற்காக கருட பகவான் வைரமுடி எடுத்துச் செல்கையில், அதிலி ருந்து வைரமும் முத்துக்களும் சிதறி ஆற்றில் விழுந்தமை யால் மணிமுத்தாறு என்ற சிறப்புத் தீர்த்தமாகப் பின்னர் புகழ்பெற்றது.
கும்பகோணத்துக்கு அருகிலுள்ள நாச்சியார் கோயிலு க்கு அரைமணி நேரத்துக்கு ஒரு முறை டவுன் பஸ் உண்டு. கும்பகோணத்திலிருந்து மூன்றரை ரூபாய் கட்ட ணம். கோயிலுக்கு அருகிலேயே போய் நிற்கிறது பஸ்.
மணிமுத்தாறு புண்ணிய தீர்த்தத்தில் இறங்கி கை - கால்களைச் சுத்தம் செய்துகொண்டு மேலே நடக்கலாம்.
கோயில் கோபுரம் 75 அடி உயரம். நுழைவாயிலின் இடதுபக்கம் துன்பங்களைத் துடைக்கும் தும்பிக்கை ஆழ்வார் சம்மணமாக உட்கார்ந்திருக்கிறார். வாசலில் இருந்தே மூலவரான பூரீநிவாசப் பெருமாள் தெரியும்படி மாடமாளிகைபோலக் கட்டி வைத்திருக்கிறார்கள்.
இந்தக் கலைக்களஞ்சியப்

பெரிய மாளிகைக்குள் நுழைந்ததுபோல, உருண்டு திரண்ட பெரிய தூண்களோடு நீளமாகப் போய்க்கொண்டே இருக்கிறது. முரீநிவாசப் பெருமாள் கல்யாண சந்தோஷத் தில் இருப்பதால் விமானத்துக்கும் மரீநிவாசவிமானம் என்றே பெயர். விமான தரிசனம் செய்து சில படிக்கட்டுகள் ஏறி, கல்யாண மண்டபத்தைக் கடந்து, திரும்பவும் சில படிகள்
ஏறிக் கருவறைக்குச் செல்லவேண்டும்.
கருவறைக்குள் கிழக்கு நோக்கியபடி நிற்பவர்தான் திருநறையூர் நம்பி, வாசுதேவன் என்றெல்லாம் அழைக்கப் படுகிற ரீநிவாசப்பெருமாள். "மேதாவி முனிவர் சாபம் கொடுத்துவிடுவாரோ? என்ற பயத்தில் அவசர அவசரமா கத் தான் எழுந்தருளிய கோலத்திலேயே காட்சி தருகி றார். சாதாரண மனிதனைப் போல எளிமையாகக் காணப் பட்டாலும் கவசங்கள், ஆபரணங்களைப் போட்டுக்கொண்டு, வஞ்சுளவல்லியைக் கைபிடிக்கும் மணவாளனாக இருப்ப
தில் கம்பீரம் தெரிகிறது.
ழரீநிவாசனின் வலது பக்கத்தில் ஒரு வஞ்சிக்கொடி நிற்பதுபோல, வலது கையில் பரத முத்திரையுடன் இடது கையை ஒயிலாகத் தொங்கவிட்டு, மணப்பெண்ணுக்கே உரிய திருக்கோலத்துடன் வஞ்சுளவல்லித் தாயார்!
இவ்வாறு நாச்சியார், மூலவருடன் கருவறைக்கு உள் ளேயே நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருவது மிகவும் அரிது.
மூலவருக்கு முன்னால் வலது திருக்கையில் கிளிச் சொண்டு, இடது கையைத் தொங்கவிட்டபடி வஞ்சுளவல்லித் தாயார் உற்சவ பெருமாளுக்கு முன்னால் நிற்கிறார். இக்கோயிலில் நாச்சியாருக்குத் தனிச்சந்நிதி கிடையாது! முரீநிவாசப் பெருமாளே வஞ்சுளவல்லித் தாயாரின் நிழலில் தானே இருக்கிறார்! பூரீநிவாசன் - வஞ்சுளவல்லித் திருமண த்துக்கு சாட்சியாக சங்கர்ஷணன், பிரத்யும்னன், அநிருத் தன், புருஷோத்தமன், வாசுதேவன் திருமணத்தை நடத்தி வைத்த பிரம்மா ஆகியோரும் நிற்கிறார்கள். இவர்களைத் தரிசித்துவிட்டுக் கீழே இறங்கினால், 'கல் கருடன் சந்நிதி
பட்சிராஜன் என்ற பெருக்கேற்ப தனிச் சந்நிதியில் ஒரே கருங்கல்லில் எட்டடி உயரமும் 5X5 அடி பக்க அளவு
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 194
களும் கொண்ட பெரிய திருவடி ஆஜானுபாகுவாகத் தோன்றுகிறார். இவரது திருமேனியை அலங்கரிக்கும் ஆதிசேஷன் போன்ற நவசர்ப்பங்களை கருடனின் திருவாபர ணங்கள் என்பார்கள். வலது கையில் குளிகன் என்ற சர்ப்பத்தை வளையமாகவும், இடது கையில் ஆதி சேஷனை வளைய மாகவும் வாசுகியைப் பூணுால் கயிறாக வும், தட்சனை அரைஞாண் கயிறாகவும், கார்கோடகனை மாலையாகவும், பத்மனை வலது காதணியாகவும், மகாபத் மனை இடது காதணியாகவும் குளிகனைத் திருமுடி நகை
யாகவும் தாங்கியுள்ளார் என்று கூறுவதுண்டு.
கல்கருட பகவானுக்கு ஆறுகால பூஜை நடந்தாலும், திருமஞ்சனம் கிடையாது. தைலக்காப்புதான் கஸ்தூரி, குங்குமப்பூ, புனுகு சட்டம் ஆகியவற்றை வாழைசாற்றில் கலந்து கருடனின் திருமேனியில் சார்த்தினால், நினைத்த காரியங்கள் நடக்குமாம்! அனைத்து சுபகாரியங்களையும் கருடபகவான் கச்சிதமாக முடித்துத் தருவார் என்பதற்கு, ஏழுவார அர்ச்சனை செய்து பலன் பெற்றவர்கள் பட்டியலை காரியாலயத்தில் சொல்கிறார்கள்.
“அதென்ன ஏழு வார அர்ச்சனை?
“கல்கருட பகவான் திருமேனியில் நவசர்ப்பங்களை அணிந்திருப்பதால், நவக்கிரக தோஷங்களை நிவர்த்திக் கும் அருளாளனாக விளங்குகிறார். எந்த நல்ல காரியமாக இருந்தாலும் காரிய சித்தி வேண்டும். பக்தர்கள் தொடர்ந்து ஏழு வியாழக்கிழமை கல்கருடனுக்கு அரச்சனை செய்ய வேண்டும். ஏழாவது வியாழனன்று சுவாமிக்குப் பிடித்த வைவேத்யமாக அமிர்த கலசம் (கொழுக்கட்டை) செய்து படைத்தால் பிரார்த்தனை நிச்சயம் நிறைவேறும், திருமணத் தடை, மகப்பேறு, உத்தியோகம், தொழில் அபிவிருத்தி ஆகியவற்றுக்கு இப்படிப் பிரார்த்தித்துப் பலன் பெற்றவர் அநேகர்.
நாச்சியார்கோயில் வாகனசேவை ரொம்ப பெயர் பெற்றது. கருட சேவையன்று இப்போதும் ஓர் அதிசயம் நடக்கிறது. கல்கருடனை சந்நிதியிலிருந்து நான்குபேர் சுலபமாக எடுத்து வந்துவிடுவார்கள். உள்ளேயிருந்து எடுத்து வந்தவர்கள் அடுத்து வெளியில் எடுக்க வேண்டுமானால்,
இந்தக் கலைக்களஞ்சியம்xxxx
 

எட்டுப் பேர் தேவை! அடுத்தடுத்து படிகளில் இறங்க 32 பேர், கோயில் வாசலுக்கு 64 பேர் என்று பூரிபாதம் தாங்கி கள் (சுவாமி தூக்குகிறவர்கள்) எண்ணிக்கை வளர்ந்து கொண்டே போகும். அந்த அளவுக்குக் கல்கருட பகவா னின் கனம் கூடிக்கொண்டே போகுமாம்! இந்த அதிசயக் காட்சியை மார்கழி, பங்குனி மாதங்களில் நடக்கும் கருட
சேவையின்போது காணலாம்!
திருமங்கை மன்னனிலிருந்து தஞ்சை ரகுநாத நாயக்கர் வரையில் மன்னர்கள் மண்டபம், திருப்பணி என வாரி வழங்கியதாகச் சரித்திரம் கூறுகிறது. யோக நரசிம்மர், ஆஞ்சநேயர், ஆழ்வார்கள் சந்நிதிகளும் இங்கே உண்டு.
வித்யாசமான நினைவுச்சின்னம் ஒன்றும் உண்டு. இக்கோ யில் பூஜைநேரத்தில் சொல்லி வைத்த மாதிரி வந்து கொண்டிருந்தன இரண்டு கருட பட்சிகள். இந்தக் கருட ஜோடி, கடந்த 18-01-1999 அன்று அதேநேரத்துக்கு வந்து இணைபிரியாமல் உயிரைவிட்டன.
கருடஜோடியைத் தேவ பட்சிகளாகக் கருதி ஸ்தலவிரு ட்சமான மகிழ மரத்தின் கீழேயே அடக்கம் செய்தனர். அது ஒரு வியாழக்கிழமை. மாலை ஆறு மணிக்கு வண்ணத்தினால் வரையப்பட்ட கருட ஜோடியின் படத்தி னைத் திறந்து வைத்து, அன்று மோட்சதீபம் ஏற்றினர். அன்று தொடங்கி வருடந்தோறும் லட்சதீப விழா நடந்து வருகிறது. (பி.க.)
நாச்சியார் திருமொழி
பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடியது நாச்சியார் திருமொழி. திருவில்லிபுத்துாரிலே ஆடிப்பூரத் தன்று பெரியாழ்வாரின் நந்தவனத்தில் திருத்துழாய்ச் செடியின்கீழ் கண்டெடுக்கப்பட்டவள் ஆண்டாளர். சிறந்த கூந்தல் அழகிய கையால் கோதை என்றும் அழைக்கப்
பட்டாள்.
இறைவனுக்கு மலர்மாலை கட்டிக்கொடுக்கும் தொண் டில் ஈடுபட்டவர் கோதையின் வளர்ப்புத் தந்தை பெரியாழ்
வார். ஆண்டாள் இளமையிலேயே கண்ணன் கதைகளைக்
జిభజోభ @r55 Goulu aseaMT5HTT gepeajeiðasos góleoexorašasoTå

Page 195
கேட்டு அக்கண்ணனிடம் மையல் கொண்டாள். அக்கண்ண னையே விரும்பினாள். பெரியாழ்வார் பெருமாளுக்குக் கட்டி வைத்த மாலையை தான் அணிந்து அழகு பார்ப்பாள் ஆண்டாள். இவளது இச்செயலை ஒருநாள் கண்ட ஆழ்வார் இவளைக் கடிந்து பின் புதிய மலர்கள் பறித்து மாலைகட்டி பெருமாளுக்கு அளித்து மன்னிப்புக் கேட்டார். இறைவன் அன்றிரவு அவரது கனவில் தோன்றி கோதை சூடிக் களைந்த மாலையின் மணத்தையே தாம் பெரிதும் விரும்புவதாகக் கூறினார். இதனைக் கேட்ட பெரியாழ்வார் கண்விழித்துக் திகைத்து கோதையின் பெருமையை நினைந்து நெஞ்சுருகி நின்றார். கோதை இறைவனையே ஆண்டுவிட்டதால் "ஆண்டாள்” என்று அழைத்தார்.
அன்றுதொட்டுக் கோதை ஆண்டாள் என்னும் பெயர் பெற்றாள். ஆண்டாள் சூடிக் களைந்த மாலையை இறை வன் மிக விரும்பி ஏற்றதனால் சூடிக்கொடுத்த சுடர்க் கொடியானாள். இவளது காலம் கி.பி.8ஆம் நூற்றாண்டு எனக் கருதப்படுகின்றது.
ஆண்டாளுக்குக் கண்ணனிடம் பக்திக் காதல் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே வந்தது. கண்ணனையே மணாள னாக நினைத்து வாழ்ந்தாள். இந்நிலையில் அவள் பாடிய பாடல்களே திருப்பாவை, நாச்சியார் திருமொழி.
கண்ணனைக் கணவனாக அடைய விரும்பிய ஆண் டாள், பாவை நோன்பை அடிப்படையாகக் கொண்டு இனிய
இசைத் தமிழ்ப் பாசுரங்களான திருப்பாவையைப் பாடினாள்.
நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் தன்னைக் கண்ண னோடு சேர்க்குமாறு காமதேவனை வேண்டியதும், தானும் தோழிமார்களுமாகத் மணல் வீடுகட்டி விளையாடிய தும், அப்பொழுது கண்ணன் வந்து அம்மணல் வீடுகளைச் சிதைத்ததும் அவன் யமுனையில் நீராடும் பெண்களின் சேலைகளை ஒழித்து வைத்ததும் குயிலைத் தூது விடுவ தும் திருமணக் கனவை உரைத்தலும், வலம்புரிச் சங்கிற் குக் கிடைத்த பேற்றை எண்ணி உருகுவதும், மேகத் தைத் தூதுவிடுவதும், திருமாலிருஞ் சோலைப் பிரானை வழிபடுவதும் காதல் நோயினால் துவஞவதும் திருவரங்கத் துச் செல்வனைக் காமுறுவதும் கண்ணன் இருக்குமிடத்திற் குக் கொண்டு செல்க என இரங்கி நிற்பதும் கண்ணனுக்கு
இந்துக் கலைக்களஞ்சியம்x భ:భ
 

உகந்த பொருள் கொண்டு காதல் நோயைத் தணிமின்கள் என்பதும் முதலான செய்திகள் இடம்பெற்றுள்ளன. கிருஷ்ணன் மீது உள்ள பிரேமையால் உடல் உணர்ச்சி
களையும் உலக உறவுகளையும் மறந்து வாழ்ந்த கோபிகளின் அனுபவத்தை ஒட்டித் தன்னுடைய காதலின் அனுபவங்களையும் ஆண்டாள் வெளியிட முயல்கின்ற தன்மையினையே நாச்சியார் திருமொழியில் காணக்கூடிய
தாக உள்ளது.
ஆண்டாள் வளர்ந்து பருவமடைகின்றாள். அவளது அழ குக்கும், பக்திக்கும், குணத்திற்கும் உரிய மணாளனைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறார். வளர்ப்புத் தந்தையான பெரியாழ்வார். மகளின் இஷடத்தை அறிந்துகொள்ள விழை ந்து அவளிடம் நேரிடையாகக் கேட்கிறார். அவள் கூறிய பதில் அவளது உள்ளக் கிடக்கையைத் தெளிவாகக் காட்டிவிட்டது.
"மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே'
என்ற இவளது உறுதியான கொள்கை பெரியாழ்வாருக்கு மகிழ்ச்சியையும் கவலையையும் ஒருங்கே விளைவித்தன. அவளுக்குரிய புருஷன் புருஷோத்தமனே என்று எண்ணி னார். ஆயினும் அவனுக்கு இவளை எப்படிக் கல்யாணம் செய்து வைப்பது, கல்யாணம் இல்லாமலே காலம் கழிக்க நேரிடுமோ என்ற கவலையும் அவர் உள்ளத்தை வாட்டி
ԱմՖl.
நாச்சியார் திருமொழியில் உள்ள முதல் பத்துப் பாடல்க ளும் ஆண்டாள் காதல் கடவுளான மன்மதனை நோக்கி பலவாறு விளித்து நோன்பு நோற்று தன்னை வேங்கடவ னோடு சேர்த்துவிடும்படி இரந்து நிற்பதாக அமைந்துள்ளன.
"வித்தகன் வேங்கடவாணன் என்னும் விளக்கினிற் புக என்னை விதிக்கிற்றியே”
என வேண்டி நிற்கிறார். மேலும் உன்னுடைய மலர்ப் பாணங்களைத் தொடுத்து என்னைப் பகவான் என்னும் ஜோதியில் செலுத்திவிட வேண்டும் என்றும் பிரார்த்திக்கின்
றார்.
ஜ் இந்த சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 196
இந்நூலின் அடுத்த பத்துப் பாடல்களும் சிற்றில் சீதை யேல் என்னும் தலைப்பில் அமைந்துள்ளன. பங்குனி மாதத்தில் ஆண்டாள் தன் தோழிகளுடன் மணல் வீடு கட்டிக் கொண்டிருந்தாள். அப்போது கண்ணன் இவர்கள் விளையாடும் இடத்துக்கு வந்து அந்த மணல் வீடுகளை அழிக்கத் தொடங்கிவிட்டானாம். ஆண்டாள் "இது என்ன குறும்பு! நாங்கள் எங்கள் சிறு வீடுகளால் வீதிகளை அலங்கரிக்கின்றோம் நீ இச்சிறு வீடுகளைச் சிதைக்காதே" என விலக்க முயன்றாள்.
"தீமை செய்யும் சிரீதரா எங்கள் சிற்றில் வந்து சிதையேல்"
என்று அங்கலாய்க்கிறாள். ஒரு சமயம் வெண்மணலைத் தேடிக் கொணர்ந்து அதைப் பருக்கைக் கற்களின் கலப் பில்லாமல் புடைத்து நாங்கள் இழைத்து வைத்த வீடுகளை அவனே வந்து அழிக்கும்படி என்ன பாக்கியம் பெற்றோம் என நெஞ்சுருகி நிற்கின்றாள். சிற்றிலைச் சிதைக்க வந்த கண்ணனின் கடைக் கண் பார்வையே எங்களுக்கு இம்சையாக இருந்தது என்று பாடுகிறாள். அகஉலகில் கண்ணனை நேருக்கு நேர் சந்தித்த இவள் தான் கட்டிய சிறு வீடுகளை அவன் வந்து அழிப்பதாகவும் பாவனை செய்து கொண்டாள்.
இவள் தன்னைக் கிருஷ்ணன் காலத்தில் இருந்த ஒரு கோபிகையாகவே எண்ணிக் கொண்டுதான் இப்படி எல்லாம் பாடுவதாகத் தெரிகின்றது. ஜமுனை ஆற்றிலே குளித்துக் கொண்டிருந்த கோபிகளின் ஆடைகளை எடுத்துக் கொண்டு குருந்த மரத்தில் ஏறி அமர்ந்து கொண்ட கடல் வண்ணனிடம் தம்முடைய ஆடைகளைத் தருமாறு இரந்து நிற்கின்றனர் கோபிகள். இதுவே அடுத்த பத்துப் பாடல் களாக உள்ளன.
'கோலங் கரிய பிரானே
குருந்திடைக் கூறை பணியாய்”
என்று இரந்து வேண்டுகிறாள். நீ செய்யும் குறும்புகள் அனைத்தும் எமக்குச் சம்மதமே. ஆனால் எமது தாய்மார் இதற்கு ஒப்பமாட்டார்கள். அதனால் தீமை செய்யாமல்
சேலைகளைக் கொடுத்துவிடு என்கிறாள்.
இந்துக் கலைக்களஞ்சியம்:xx
 

அடுத்து பத்துப் பாடல்களும் கூடல் இழைத்தல் என அமைகின்றன.
"அண்டமும் நிலனும் அடி ஒன்றினால் கொண்டவன் வரின் கூடிடு கூடலே’
என்றும் கூடலே திருவேங்கட மலையிலும் திருக்கண்ண புரத்திலும் மனக்குறையின்றி உள்ளம் உகந்து, உறை கின்ற வாமனன் ஓடிவந்து என் கையைப் பிடித்துத் தன் னோடு அணைத்துக் கொள்வானாகில் நீ கூட வேண்டும் என்றும் உருகி வேண்டுகிறார்.
தன் காதலன் சில சமயங்களில் முறுவல் செய்வதும் இல்லை. முகம் காட்டுவதும் இல்லை. இச்சமயங்களில் இவள் குயில்கள், மயில்கள், கிளிகள், செந்தாமரை போன்ற பூக்கள், வண்டுகள், மேகங்களை தூது போகும்படி வேண்டுகிறாள். நாச்சியார் திருமொழியில் ஐந்தாம் பகுதி யில் அமைந்துள்ள பாடல்கள் குயிலைத் தூது போகும்படி கேட்பதாக உள்ளன.
"காதலியோடு உடன்வாழ் குயிலே! என் கருமாணிக்கம் வரக் கூவாய்”
என்றும் வெள்ளைச் சங்கை தன் இடக்கையில் ஏந்தும் தூயோன் தன் திருவுருவை எனக்குக் காட்டாது நிற்கின் றான். ஆனால் நெஞ்சுட் புகுந்து என்னை வாட்டி வதைக் கின்றான். அந்த வேங்கடவன் அருகே நீ சென்று இங்கு வரும்படி கூவிக் கூப்பிடு எனக் கெஞ்சுகிறாள்.
அடுத்து பத்துப் பாடல்களும் ஆண்டாள் நம்பி மதுசூத னன் வந்து தன்னைக் கரம் பிடிப்பதாகத் தான் கனாக் கண்டதை தோழிக்கு எடுத்துரைப்பதாக உள்ளது.
"வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து நாரணன் நம்பி நடக்கின்றான் என்று எதிர் பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும் தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழிநான்”
“செம்மை உடைய திருக்கையால் தாள் பற்றி அம்மி மிதிக்க கனாக்கண்டேன் தோழிநான்’
என்றெல்லாம்
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்கணம்

Page 197
சர்வகாலமும் கண்ணனையே எண்ணிக்கொண்டிருக்கும் ஆண்டாள் கனவிலே தோன்றிய தன் திருமணக் காட்சியை
விலாவாரியாகத் தோழிக்கு எடுத்துக் கூறுகின்றாள்.
தன் காதலனை எண்ணி உள்ளம் உருகி நின்ற வேளை யில் அவனே சங்கநாதம் முழங்கிக் கொண்டு வந்துவிட்ட தாக எண்ணி அச்சங்கு பெற்ற பேறு இந்திரப் பதவியிலும்
மேன்மையானது என்கிறாள்.
"கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ”
சொல்லு சங்கே, அந்த வாய்ச்சுவையும் வாசமும் எப்படி இருக்கின்றது. கற்பூர வாசனையா அன்றி கமலப்பூ வாசனையா? அந்தச் சங்குதான் என்ன பாக்கியம் செய்ததோ என்று பொறாமை கூட வந்துவிடுகிறது காதலிக்கு.
தன் பரிதாப நிலையை கார்வண்ணனுக்கு எடுத்துக் கூறுமாறு அடுத்த பத்துப் பாடல்களிலும் மேகங்களைப் பார்த்துக் கூறுகிறாள். கார்காலத்துக் கரிய மேகங்கள் காதலனுடைய நிறத்தையும் குணத்தையும் ஒருங்கே நினைப்பூட்டின. அவனும் அந்த மேகங்களோடு வந்திருக்க வேண்டும் என நினைத்தாள். மேகங்களே! அவனும் வந்து விட்டானா என்று கேட்டாள். அவை பதில் சொல்லவில்லை. அவன் தென்படவுமில்லை. ஆகவே அந்த மேகங்களை நோக்கி நீங்கள் என் நிலையை அங்கே போய் அறிவிக்க வேண்டும். எனக்காகத் தூது போய்வரவேண்டும் என
வேண்டிக் கொள்கிறாள்.
ஆண்டாள் இந்த உலகில் இல்லாத புருஷனை தன் உள்ளத்தில் கொண்டு காதலித்தாள். இதனால் அவள் காதல் எத்தனை பெருந்துன்பத்தைக் கொடுத்திருக்கும். இவள் சித்தம் தெளியத் தேசயாத்திரை செய்தால் நல்லது என எண்ணிய தந்தை ஆண்டாளை முதலில் திருமாலிருஞ் சோலை என்ற அழகர் மலைக்கு அழைத்துப் போனார். திருமாலிஞ்சோலைப்பிரானை வழிபடுகின்ற பாடல்களாக அடுத்தபகுதி அமைந்துள்ளது. திருமாலிருஞ்சோலையின் இயற்கைக் காட்சிகள் அனைத்தும் ஆண்டாளுக்குக்
இந்துக் கலைக்களஞ்சியம்

கோவிந்தன் நினைவையே மேலும் தூண்டிவிட்டன. கொடி முல்லைகள் அரும்பி அழகனுடைய புன்சிரிப்பை நினை வுட்டினவாம். நீலமலர்கள் அவள் திருமேனியான நிறத்தை நினைப்பூட்டின. குயில்களும் மயில்களும் வண்டுகளும் சுனைகளும் கூட அந்த உருவை ஞாபகப்படுத்தி, இவளை இம்சிக்கத் தொடங்கின. செந்தாமரைப் பூக்கள் அவனு டைய திவ்விய அவயவங்களை நினைப்பூட்டி இம்சித்தன வாம். காலையிலே கூட்டம் கூட்டமாக வந்து கூச்சலிட்ட குருவிகள் தங்கள் பாஷையில் இவளுடைய காதலனின் வரவைக் குறிப்பிடுவது போன்ற உணர்வை ஆண்டாளுக்கு ஏற்படுத்தி விட்டன. திருமாலிருஞ்சோலையில் சரஞ்சரமாய்த் தொங்கும் கொன்றை மலர்களை பகவானுக்கு எடுத்து அர்ச்சிக்க ஆளில்லாமல் அவை பயனற்றுக் கிடப்பதுபோல அந்த அழகன் என் உள்ளத்தில் இருந்தும் அவனை அனுபவிக்க முடியவில்லையே என்று பிரலாபிக்கிறாள்.
இந்நூலின் அடுத்த பத்துப் பாடல்களும் காதல் நோய் தலைக்கேறி சித்தம் பேதலித்து நின்ற ஆண்டாள். தன் தோழிகளை நோக்கி நீங்கள் உடனே தூதுக்குப் புறப்பட வேண்டும் என்று கேட்பதாக அமைந்துள்ளன. ஆண்டாளின் செல்லத் தோழிகளாக குயில்கள், மயில்கள், கிளிகள், செந்தாமரை, முல்லை, கோவை போன்ற பூக்கள், வண்டு கள், மேகங்கள் ஆகியன தூது செல்வதற்காக அழைக்கப் படுகின்றன.
பெரியாழ்வார் ஆண்டாளுக்கு நூற்றெட்டுத் திருமூர்த்திக ளின் சிறப்புக்களையும் தனித்தனியே எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார். பூரீரங்கநாதனுடைய அருமை பெருமைக ளைப் பெரியாழ்வார் பிரஸ்தாபித்ததும் ஆண்டாள் தன்னை மறந்து பரவசப்பட்டாள். தன் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட கள்வன் திருவரங்கத்தில் எழுந்தருளியிருப்ப வனே என உணர்ந்து கொண்டாள். இந்நூலின் அடுத்த பத்துப் பாடல்களும் திருவரங்கத்தில் எழுந்தருளியுள்ள செல்வனைக் காமுற்றுப் பாடிய பாடல்களாக உள்ளன. கொடிய பாம்பணையிலே பள்ளி கொள்ளும் திருவரங்கன் என் முகத்தை நோக்கவில்லை, என் குறைகளை எல்லாம் நீக்குவதற்காகத் இத்தெருவழியே வரமாட்டானோ என்று ஏங்கித் தவிக்கும் நிலையினை இப்பாடல்கள் காட்டி நிற்கின்றன.
இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 198
அடுத்த பத்துப் பாடல்களும் ஆண்டாள் தன்னைக் கண்ணன் இருக்கும் இடத்திற்குக் கொண்டு செல்லும்படி வேண்டி நிற்பதாக உள்ளன. கண்ணனுடைய மதுரை நகர்க்கு என்னைச் சேர்த்து விடுங்கள், என்னை ஆயர் பாடிக்கே கொண்டு சேர்த்து விடுங்கள். கண்ணன் என் எதிரே வந்து தன் வடிவழகைக் காட்டி இழுக்கிறான். அதனால் நீங்கள் என்னை நந்தகோபர் திருமாளிகை வாசலிலே கொண்டுபோய்ச் சேர்த்து விடுங்கள். என்னை
யமுனை ஆற்றங்கரையில் கொண்டு சென்று விட்டு விடுங் கள். பெரு மழையைத் தடுக்கக் குடையாகத் தூக்கிப் பிடித்த கோவர்த்தன மலையருகே என்னைச் சேர்த்து விடுங்கள். என்னைப் பற்றியிருக்கும் நோய் கண்ணன் தன் திருக்கைகளினாற் தடவினால் அவனது திருத்துழாய் மாலையைக் கொண்டு வந்து சூட்டினால் நீங்கிவிடும் என்று
கூறி இரந்து நிற்கிறாள்.
அடுத்துள்ள பத்துப் பாடல்களும் தன் மெய்வருத்தம் தீர கண்ணனுக்கு உகந்த பொருள் கொண்டு தணிமின் என வேண்டுவதாக, பாடப்பட்டுள்ளது. திருவரையில் சாத் திய பொன்னாடையைக் கொண்டு என் காதல் நோய் தீரும்படியாக என் மேல் போர்த்துங்கள், அவனது குளிர்ந்த திருத்துழாயைக் கொண்டு என் கூந்தலில் சூட்டுங்கள் அவனது திருவடித் துாளியையாவது கொண்டு வந்து என் உடம்பிலே பூசுங்கள் என்று தன் உள்ளத்திலே
கிளர்ந்து எழுந்த உணர்வுகளுக்கு வடிகால் தேடுகிறாள்.
கண்ணனின் பெருமைகளையெல்லாம் பலபட எடுத்துக் கூறி அத்தகையவனைக் கண்டீர்களோ என்ற கேள்விக்கு
பிருந்தாவனத்தில் கண்டோம் என விடை பகரும் பாங்கில்
இறுதிப் பத்துப் பாடல்களும் அமைந்துள்ளன. இளங்
காளை போன்றவனாய், பசுக்களைக் காப்பவனாக இருக்
கும் கண்ணனைக் கண்டீரோ என வினவுகின்ற வினாவுக்கு
மின்னலும் முகிலும் சேர்ந்தாற் போலத் தன் தோழரோடு
கூடித் திருமேனியில் துழாய் மாலை தவழ்ந்தாட பிருந்தா வனத்தில் கண்டோம் என்ற பதில் அளிக்கும் பாங்கிலேயே இப்பகுதியில் அமைந்துள்ள பத்துப்பாடல்களும் உள்ளன.
இந்தக் கலைக்களஞ்சியம்x
 
 

”வெளிர் சங்கு ஒன்று உடையானைப் பீதக - ஆடை
ĝoD 60) L LLIIT60D60ĵI
அணி நன்கு உடைய திருமாலை ஆழியானைக்
கண்டீரோ”
வெண்மையான சங்கினை உடையவனை, பொன்னாடை கொண்டவனை, திருவாழியானை, கண்ணனைக் கண்டீரோ என்ற ஆண்டாளின் கேள்விக்கு தனது பெரிய தோளிலே பூங்குழல் விளங்க பிருந்தாவனத்தில் விளையாடக்
கண்டோம் என்று தோழிகள் பதில் கூறுகிறார்கள்.
நாச்சிார் திருமொழிப் பாடல்களை மேலெழுந்தவாரியாக நோக்குகின்றபோது அவை உலகியல் வாழ்வின் இன்ப, துன்பங்களை வெளிப்படுத்துவன போன்றிருப்பினும் ஆழ நோக்கின் ஜீவாத்மா, பரமாத்மாவுடன் இணைவதற்கு முனைந்து நிற்பதையும் அந்த சேர்க்கையின் இன்பத்தை பலவாறு எல்லாம் எண்ணி மகிழ்ந்து குதுகலிப்பதையும் உணர்ந்து கொள்ளலாம். (நி.நி)
நாட்டியத்தான்குடி
திருவாரூருக்கு தெற்கே ஆறுமைல் தொலைவில் உள்ளது. நாட்டுவியத்தான்குடி என்றும் வழங்கும் நாட்டியத்தான் - நாட்டுவியத்தான் என்பதன் மரூஉ, (நன்னூல் மயிலைநாதர் உரை - 266 ஆம் நூற்பா. நாட்டுவியத்தான் - நாட்டை ஏவுவோன) கோட்புலி நாயனார் தொண்டு புரிந்த தலம். நாயனாருடைய உருவம் இக்கோயிலிலிருக்கின்றது.
சிங்கடி வனப்பகையாரைச் சுந்தரர் புதல்வியராக ஏற்றுக் கொண்ட தலம். கோட்புலிநாயனார் இத்தலத் தீர்த்தங்களி லாடித்தான் குழந்தையைக் கொன்ற பாவத்தைப் போக்கினர். சந்நிதியிலுள்ளது சூரிய புஷ்கரணி, ஆறு, வெள்ளை யாறு, வெண்ணாற்றின் பிரிவு, கோட்புலி நாயனாருடைய உற்சவம் ஆடி மாதத்தில் கேட்டையில் நடக்கிறது. சுந்தர மூர்த்தி நாயனார் வந்தபோது சுவாமியும் அம்பிகையும் நீச வடிவம் கொண்டு நடவு நடச் சென்றனர். இவர் விநாயகரைப் பிரார்த்திக்க அவர் சுட்டிக்காட்ட
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 199
இருவரையும் சென்று தரிசித்தார். பூரீவிநாயகர் விரலைச் சுட்டிக்காட்டிய குறிப்போடு சந்நிதியிலுள்ளார். பூரீபிள்ளை யாருக்குக் கை காட்டு மூர்த்தி என்பது பெயர். பூரீவயல் கோயிலுக்குக் கிழக்கே உள்ளது. பெயர் கோழி மேய்ந் தான் கட்டளை என்பது. சந்நிதி கிழக்கு. யானை பூசை செய்ததால் கரிநாதேசுவரர். புகலக முனிவர் ஏமகண்ட முனிவர் தவம் செய்த இடம்.
ரத்தேனந்திர சோழருக்கும் அவர் பிதாவுக்கும் பாகம் பிரித்து வைத்தமையால் ரத்னபுரீசுவரர்.
சுவாமி. ரத்னபுரீசுவரர், மாணிக்கவண்ணனார்
அம்பிகை. ரத்னபுரீசுவரி, மாமலர்மங்கை, மங்களாம்பிகை
தீர்த்தம்: கரி தீர்த்தம், கோயிலின் முன்னும் பின்னுமாக இரண்டு உள்ளன. சூரியபுட்கரிணி, சுவேதநதி, கபிதிர்த்தம், அக்கினி தீர்த்தம், விருட்சம்: மாவிலங்கம், சுந்தரர் பாடிய g56). D,
பூணாண் ஆவதோர் அரவங்கண் டஞ்சேன் புறங்காட் டாடல்கண் டிகழேன் பேணி ராகிலும் பெருமையை உணர்வேன்
பிறவே னாகிலும் மறவேன் காணி ராகிலும் காண்பனென் மனத்தால்
கருதி ராகிலும் கருதி நானேல் உம்மடி பாடுதல் ஒழியேன்
நாட்டியத் தான்குடி நம்பி (சுந்தரர்)
இத்தலத்தைப் பற்றி வழங்கும் பிற தேவாரம்:
நல்லக்குடி நளி நாட்டியத்தான்குடி - பொது (திருநா)
(6f.ust 6).)
நாட்டேரி
வேலூரிலிருந்து 50 கிலோ மீற்றர் தொலைவில் ஆர்காடு காஞ்சிபுரம் வீதியில் பிரம்மதேசம் என்னும் ஊரின் அருகே இத்தலம் அமைந்துள்ளது. பல்லவ மன்னன் ஒன்பதாம்
கம்பவர்மன் கி.பி. 9ஆம் நூற்றாண்டு காலத்தில் அமைத்த
@ögä56oevä56T@由uá緣刻
 

இக்கோயில் மணற்கற்களால் கட்டப் பெற்ற கட்டுமானக் கோயிலாகும். சந்திரமௌலீஸ்வரர் என்னும் சிவபெருமா
னின் கலைக்கோயிலாகக் காணப்படுகின்றது.
புகழ்வாய்ந்த இப்பிரம்மதேசத்தின் அருகில் முதலாம் இராஜேந்திர சோழன் இறந்தான் என்பதும் அவனுடன் அவனது அரசி வீரமாதேவி உயிர் நீத்தாள் என்பதும் இங்குள்ள கல்வெட்டுக் கூறும் வரலாறு. இக்கல்வெட்டின் படி முதலாம் இராஜேந்திர சோழன் அரசியின் சகோதரனான மதுராந்தகன் என்னும் பரகேசரி வேளான் என்பவன் தனது சகோதரி, அவளது கணவன் இராஜேந்திரன் ஆகிய இருவ ரும் இறந்த இடத்தில் தண்ணிர்ப்பந்தல் ஒன்றை அமைத் தான் எனவும் தெரிகின்றது.
பல்லவர் காலத்தைச் சேர்ந்த இக்கோயில் கருவறை, அர்த்தமண்டபம் ஆகிய பகுதிகளுடன் பிற்காலத்தில் இணைக்கப்பட்ட மகாமண்டபம், சுற்றுப்பிராகாரம், வடபகுதி யில் அமைந்த நுழைவாயில், கோபுரம் ஆகியவற்றுடன் காட்சியளிக்கின்றது.
இக்கோயில் ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமாக கவ னிப்பாரற்றுக் கிடந்ததால் சிதைவுற்றுக் காட்சியளித்தது. 1962 ஆம் ஆண்டு இக்கோயிலை இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையினர் தம் பராமரிப்பின்கீழ் எடுத்துக் கொண்ட னர். 1979 முதல் இக்கோயில் திருப்பணி தீவிரமாகத் தொடங்கியது. கோயில் முழுவதும் கடைக்கால் வரை பிரித்தெடுத்து மீண்டும் அதே கற்களைக் கொண்டு பழமை மாறாமல் திருத்தியமைக்கப்பட்டது.
அச்சமயம் நடந்த அகழ்வாய்வில் மணல் கல்லினாலான லிங்க உருவமொன்று கண்டுபிடிக்கப்பட்டது. சதுரமான யோனி பீடத்துடன் அமைந்துள்ள இந்த விரிந்த உருவம் தான் முதலில் வழிபாட்டில் இருந்திருக்க வேண்டும். அபி ஷேகம் முதலிய வழிபாட்டு முறைகளினால் உருவத்தில் சேதம் ஏற்பட்டிருக்கலாம். இதனை அகற்றிவிட்டு பின்பு கருங்கல்லாலான லிங்கம் ஒன்று கருவறையில் வைக்கப் பட்டது. அகழ்வாராய்ச்சியின்போது துர்க்கையின் சிற்பமும் கிடைத்தது.
இவ்வாலய விமானத்தில் உள்ள சிற்பங்கள் பார்க்கப்
缀
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்கணம்

Page 200
பரவசமூட்டுபவையாகும். பொந்தைப் பெருமானடிகள், பொந் தை ஆழ்வர், பொந்தை ஈஸ்வரர் என்று கல்வெட்டுக்களில் இங்குள்ள ஈசனின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. (பொந்தை பனைமரம் என்பது பொருள்) இதன் மூலம் இத்தலத்தின் தலவிருட்சம் பனைமரம் எனத் தெரிகின்றது. (தே.ஹ)
HILEML
இது ஒரு ஜன்ய ராகம் முப்பத்தாறாவது மேளமாகிய சலநாட்டையின் ஜன்யம்.
ஆரோகணம் - ஸரிகமபதறிஸ்
அவரோகணம் - ஸநிபமரீஸ்
இது எடுத்துக் கொள்ளும் சுரவகைகள் ஷட்ஜம், ஷட்ஸ்ருதி, ரிஷபம், அந்தரகாந்தாரம், சுத்தமத்திமம், பஞ்சமம், வுட்ஸ்ருதி தைவதம், காகலி நிஷாதம், ஆகியனவையாகும். இது ஒரு சம்பூர்ண ஒளடவ ராகம் ஆகும். அவரோகணத்தில் தைவதமும் காந்தாரமும் வர்ஜம், உபாங்க இராகம், ரிஷபம், மத்யமம், நிஷாதம், ஆகியவை ராகச் சாயா ஸ்வரங்களாகும். விவாதி ஸ்வரங்களையுடைய ராகம். ஆரோகணத்தில் ரிஷபம் நொக்கு கமகத்துடனும் அவரோகணத்தில் கம்பித கமகத்துடனும் பிடிக்கப்படுகின்றது. ஸரிகமபதநிஸ் என்ற பிரயோகம் அபூர்வமாகவே வருகின்றது. ரிஷபம் ஒரு நல்ல நியாச சுரமாகும். நாட்டை இராகத்தில் உருப்படிகள் ஷட்ஜம், (சுவாமிநாத) ரிஷபம், காந்தாரம், பஞ்சமம் ஆகியவைகளில் ஆரம்பமாகும்.
இது பிரதம கனராகங்களுள் முதலாவதாகும். இது ஒரு திரிஸ்தாயி ராகம், மாலையில் பாடுவதற்கு உகந்த ராகம், ஜண்டை ஸ்வரப்பிரயோகங்கள் இந்த இராகத்திற்கு பொலிவைத் தருகின்றன. புராணபடனம் படிப்பதற்கும் இந்த இராகம் உபயோகிக்கப்படுகின்றது. ஸ்வாமி புறப்பாட்டின் பொழுது நாதஸ்வரத்தில் வாசிக்கப்படும் மல்லாரி இந்த இராகத்தில் உள்ளது. வீரரசப் பிரதான இராகமாகும். இசைநாடகங்களிலும் நிருத்திய நாடகங்களிலும் உபயோகமாகும் ராகங்களில் ஒன்று.
தமிழ்ப்பண், நட்டபாடை, இந்த இராகத்தை ஒத்ததே.
இந்துக் கலைக்களஞ்சியம்
17

தாளம் பாடுவதற்கு ஏற்ற இராகம். சங்கீத ரத்னாகாரம், சங்கீத மகரந்தம் ஆகிய நூல்களில் இந்த ராகம் காணப்படுகின்றது.
சஞ்சாரம் ஸாஸா - ஸநிஸ்ரீரி - ஸ்ரீஸநிபா - மம பப மம பப
LDLD LILD LDU - LDLJ stub onfon)IT
ஸநி ஸ்ரி கமபாம - கமபரீ பநிஸ்நிஸ்ரீஸா - ஸ்நிபமகமரி - ரிரி கக மம பப நிதி
606)
ஸ்ரிஸ்நிஸ் நிபநிபமகமரீஸா - பபநிஸ்ரீரி - பநிஸ்
ரிகா மரிஸா
ஸநிஸ் ரிரி நிஸாஸ - Lust55 - L ILDL LD56m) - ஸறிஸ
ரீஸ்நிபமகமரீ - ஸ்ஸரிஸரி - கமரீஸாஸ் நிபரீஸ்
உருப்படிகள்
கீதம் - அருள்வாயே - துருவம் -கோமதி அய்யர் கீதம் -பாரினில்- மிஸ்ரஜம்பை-க.பொன்னையாபிள்ளை பஞ்சரத்தினம் -ஜகதாநந்த-ஆதி-தியாகராஜசுவாமிகள் தேவாரம்- தோடுடைய செவியன் - ரூபகம்
-திருஞானசம்பந்தர் க்ருதி - மஹாகணபதி -ஆதி முத்துசாமி தீட்சிதர் க்ருதி - முரீகணபதியே -ரூபகம் நீலகண்ட சிவன் க்ருதி - உமையோர்பாகனே- ரூபகம்
- பாவநாசம் சிவன் க்ருதி - விநாயகனே சரணம் -ஆதி
-அருணாசல கவிராயர்
(ஆதாரம் தென்னிந்திய இசைக்கலை) (தே.ஹ.)
88: இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 201
jTLEDLäöjsjöf
இருபத்தெட்டாவது மேளமாகிய ஹிரிகாம் போஜியின்
ஜன்யராகம்
இதன் ஆரோகணம் : ஸரிகம தநிஸ
அவரோகணம் : ஸநிதமகஸ
இது ஒரு ஷாடவ - ஒளடவ இராகமாகும். உபாங்க இராக வகையைச் சேர்ந்தது. இவ் இராகத்தில் ஆரோகணத்தில் பஞ்சமும் அவரோகணத்தில் பஞ்சமம்,
ரிஷபம் ஆகிய சுரங்கள் வர்ஜம் ஆகும். வஷட்ஜம்,
சதுஸ்ருதி தைவதம் சைகிகி நிஷாதம் ஆகிய சுரங்கள் இந்த இராகத்தில் ஜிவசுரங்கள் ஆகும். மத்திமம், தைவதம்
ஆகியன நியாச சுரங்கள் ஆகும். பஞ்சமம் சில பிரயோக
ங்களிற் பயன்படுத்தப்படுகின்றது. உதாரணமாக சரிகம நிதநிதநிசா - நிதநிபத நிசச - சநிதமாபமபகரிசா -
சரிகம - பமகரிசா - சரிகம பகரிசா
மகரிஸா - ஸதபம கமபகரிஸா விசேட பிரயோகங்கள் ஆகும். இந்த இராகத்தின் சாயலைப் பிரத்தியாகத கமகம் நன்றாக காட்டவல்லது. விரிவான ஆலாபனைக்கு இடம் தரும் இராகம். இது மாலையில் பாடக்கூடியது. கருணைச்
சுவைமிக்க இராகம் ஆகும்.
ஸாநிதநிதப - தநிஸாஸா - தநிஸ்ரிககமா - மகரிகம
uD55 fomoT ஸரிஸா - ஸ்நிரீஸா - ஸ்நிதநிஸரிகம கரிஸாஸ் நிதா
- தநிஸரீஸா ஸநிதமா -மககரி - ஸ்ரிகமபகரிஸா - மகஸா -
ஸநிரிஸா நிதமதநிஸா
இசைவடிவங்கள்
வர்ணம் -சலமேல -ஆதி தியாகராஜசுவாமிகள்
இந்துக் கலைக்களஞ்சியம்
 

க்ருதி-மனஸ்ரீவிஷய - ஆதி. தியாகராஜசுவாமிகள் க்ருதி-குவளதள - ஆதி - முத்துசாமி தீட்ஷிதர் க்ருதி -பூதமாசிரபாயமி ஜம்பை முத்துசாமி சிவன் க்ருதி - எக்காலத்திலும் - ரூபகம் இராமசாமி சிவன் க்ருதி தரிசிக்க வேணும் ஆதி -கோபாலகிருஷ்ணஐயர் க்ருதி-ஒருதரம் தரிசித்தால் ஆதி -பெரியசாமிதூரன் திருப்புகழ்-பரிமளகளபதிஸ்ர அடதாளம்
-அருணகிரிநாதர் (ஆதாரம் தென்னிந்திய இசைக்கலை)
நாடு
நாடு என்னும் சொல் தமிழ்மொழி வழக்கிலே பல பரி மாணங்களைக் கொண்டது. இந்நாட்களில் அது இறைமை ஆதிக்கமுடைய தேசங்களைக் குறிக்கும். அத்தகைய நாடுகளின் பிரதிநிதிகள் அடங்கிய சபையினை ஐக்கிய நாடுகள் சபை என்பர். அதனைவிடத் தமிழ்நாடு என்னும் பெயர் தமிழர் எல்லோரும் அறிந்ததொன்று. தமிழ்நாடு இந்நாட்களில் இறைமை ஆதிக்கமில்லாத ஒரு தேசம், அது இந்தியக்குடியரசின் மாநிலங்களில் ஒன்று.
முற்காலங்களில் நாடு என்பது பல மட்டங்களிலுள்ள நிலப்பிரிவுகளையும் நிர்வாகப் பிரிவுகளையும் குறிக்கும் வண்ணமாக வழங்கியது. அது தனியான இராச்சியங்க ளைக் குறித்தது. பாண்டிநாடு, சேரநாடு, சோழநாடு, கொங் குநாடு, நடுநாடு என்பன பழங்காலத்துப் பெருநிலப்பிரிவுகள். அவற்றுள் முதல் மூன்றும் முடிமன்னரின் ஆட்சிப்புலங்கள். அவற்றின் எல்லைகளை வர்ணிக்கும் தனிப்பாடல்களும் இலக்கியக் குறிப்புக்களும் உண்டு. கொங்குதேசம், நடு நாடு, தொண்டைநாடு என்பவற்றிலே ஆதிகாலத்திலே வேளிர் குலங்களின் ஆட்சிப்பிரிவுகள் பல இருந்தன. தொண்டைநாடு பல்லவரின் ஆட்சியிலே சோழநாட்டைப் போன்று இணைந்த ஒரு பெரும் பகுதியாகியது. பழந்தமிழ் நூல்களில் ஒன்றான பெரும்பாணாற்றுப்படை தொண்டை நாட்டில் அடங்கிய பெரும்பாலான பகுதிகளையும் அங்கு வாழ்ந்த மக்களையும் வர்ணிக்கின்றமை கவனத்துக்குரி யது. அதன் ஆசிரியர் பட்டினப்பாலை பாடிய உருத்திரன்
3 線
xண இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 202
கண்ணனார். தொண்டைநாடு முழுவதும் தனியான ஒரு தேசம் என்று அவர் கருதினார் போலத்தோன்றும்.
இன்னொரு வகையான நிலப்பிரிவுகளும் நாடு என்னும் பெயரால் வழங்கின. அவை அளவில் சிறியவை. அவை இராச்சியங்களில் அடங்கியவை, பல நூற்றுக்கணக் கானவை. அவை தமிழகத்திலே அரசுகள் உருவாவதற்கு முன்பே தோன்றிவிட்டன. அவற்றைப் பற்றிய சில விவரங் கள் எட்டுத்தொகை பத்துப்பாட்டு, நூல்களில் உண்டு. பல்லவர் - பாண்டியர் காலம் முதலாக அவற்றைப் பற்றிய சாசனக் குறிப்புக்கள் கிடைக்கின்றன. சோழப்பேரரசின் காலத்துச் சாசனங்களிலே பல நூற்றுக்கணக்கான நாடுக ளின் பெயர்கள் உள்ளன. அவை தமிழகம் முழுவதிலும் பரவியிருந்தன. புராதன காலக் கர்நாடகத்திலும் நாடு என்ற பெயர் கொண்ட நிலப்பிரிவுகள் அமைந்திருந்தன. நாடு என்பது தமிழ், கன்னடம் என்பன தனிமொழிகளாகப் பிரிவதற்கு முற்பட்ட காலத்தில், ஆதியான திராவிட மொழியில் வழங்கிய சொல் எனக் கருதலாம். இரு தேசங்க ளிலும் நிலையான குடியிருப்புக்களையும் முன்னேற்றமான விவசாய முறையினையும் சிறப்பியல்புகளாகக் கொண்ட பெருங்கற்படைக்காலப்பண்பாடு பரவிய காலத்தில் நாடு என்னும் சொல் வழக்கில் வந்தது என்று கொள்ளமுடிகின்
Bibl.
நாடுகளின் எல்லைகள் ஆறு, சிற்றாறு, ஓடை, குளம், கால்வாய், வனம், மலையடிவாரம் முதலியவற்றை அடிப் படையாகக் கொண்டு வரையறை செய்யப்பட்டன. கணிச மான அளவிலான நிலப்பரப்பை அவை உள்ளடக்கியிருந் தன. அவற்றிலே குடியிருப்புகள் பல தொகுதிகளில் அமைந்திருந்தன. அவை ஒவ்வொன்றும் ஊர்களாக வளர்ச்சி பெற்றன. அவற்றை வயல்களும் மேய்ச்சல் நிலங்களும் சூழ்ந்திருந்தன. அவற்றின் பொருளாதாரத்தில் பயிர்ச்செய்கையும், மந்தை வளர்ப்பும் பிரதான பங்கினைக் கொண்டிருந்தன. நெல், எள், கரும்பு, பருத்தி, கொள்ளு. சாமை, பயறு முதலிய பயிர்களை புன்செய் நிலங்களிலும் நன்செய் நிலங்களிலும் வசதிக்கும் தேவைக்கும் ஏற்ப செய்கை பண்ணினார்கள். காட்டு விலங்குகள், புள்ளினங் கள் போன்ற வற்றிலிருந்து பயிர்களையும் அவற்றில் விளைந்த தானி யங்களையும் பாதுகாப்பதற்கு ஏற்பாடுகள்
தேவைப்பட்டன.
இந்தக் கலைக்களஞ்சியம்:
 

நாடுகளில் இடையர் குடிகள் மிகுந்து காணப்பட்டன. பெருமளவிலான மந்தைகளை அவர்கள் வளர்த்தனர். மாடு, எருமை, ஆடு, செம்மறி ஆகிய மிருகங்களை அவர் கள் வளர்த்தனர். மந்தை வளர்ப்பு பரந்தளவிலான மேய்ச் சல் நிலங்களை ஆதாரமாகக் கொண்டிருந்தது. வனங்க ளின் எல்லைப்புறங்களுக்கு அவை செல்வதால் வனவிலங் குகள் அவற்றைத் தாக்குவதுண்டு. நிரை கவர்தல் என்பது வழமையாகிவிட்டதால் நாடுகளிலே காவல் முறைகளை ஏற்படுத்த வேண்டியிருந்தது. அதற்கான பிரயத்தனங்களின் மூலமாகவே ஆரம்ப நிலையிலான நாட்டுத் தலைமை உருவாகியது போலத் தோன்றும்.
திருவள்ளுவரின் சிந்தனையில் நாடு
நாட்டின் சிறப்பினை திருவள்ளுவர் பத்துக் குறள்களில் விளக்குகின்றார். அவரின் விளக்கம் இலட்சியமயமானது. சிறந்த நாடு ஒன்று எவ்வாறு அமையவேண்டும் என்பதன் விளக்கமாகவே அவரின் வர்ணனைகளைக் கொள்ள வேண்டும். அவரது காலத்திலே தர்மசாஸ்திரங்களிலும் வேறு நூல்களிலும் இத்தகைய சிந்தனைகள் தோன்றிவிட் டன. அவர் இராச்சியமாகிய நாட்டைக் குறிப்பிடுகின்றாரா? அல்லது நாடு என்னும் நில - சமூகப் பிரிவுகளைக் குறிப்பிடுகின்றாரா? என்பது தெரியவில்லை. காவியங்களி லும் பிற இலக்கியங்களிலும் தொடக்கத்தில் நாட்டுச் சிறப்பினைப் போற்றி வர்ணிப்பது வழமையாகிவிட்டது. பட்டினப்பாலை, மதுரைகாஞ்சி போன்ற காலத்தால் முற்பட்ட நூல்களிலும் இதனைக் காணமுடிகின்றது. சிலப்பதிகாரத்தில் இது ஒரு வரையறையான முறையாகி, அதற்குப் பிற்பட்ட தமிழ் இலக்கிய மரபில் ஒரு மரபாகிவிடு கின்றது.
திருவள்ளுவரின் பார்வையில் ஒரு நாட்டின் சிறப்பிற்கு ஏதுவானவை யாவை என்பதை இங்கு நோக்குவது பொருத்
தமானது.
'தள்ளா வினையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு” என்னும் குறளை விளக்கும்போது குன்றாத விளைவு களைச் செய்வோரும் அறவோரும் கேடு இல்லாத செல்வ முடையோரும் ஒருங்குவாழ்வதே நாடு எனப் பரிமேலழகர்
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 203
விளக்குவார். அத்தகைய நாடு "அளவிறந்த பொருளு டைமையால் பிற தேயத்தாராலும் விரும்பத்தக்கதாய் கேடின்மையோடு கூடி மிக விளைவது” அது "பிற நாடுகள் பொறுத்த பாரமெல்லாம் ஒருங்கே தன்கண் வருங்கால் அவற்றைத் தாங்கி அதன் மேல் தன் அரசனுக்கு இறைபொருள் முழுவதையும் உடன்பட்டுக் கொடுப்பது”
"உறுபசியும் ஓவாப் பிணியும் செறு பகையும் சேராது இயல்வது நாடு”
என்பது மற்றுமொரு குறள். “மிக்க பசியும் நீங்காத நோயும் புறத்து நின்று வந்து அழிவு செய்யும் பகையும் இன்றி இனிது நடப்பதே நாடாவது” என்று விளங் கச் சொல்வர்
உரையாசிரியர்.
"பகைவராலே கெடுதல் அறியாததாய் அரிதின் கெட்ட தாயினும் அப்பொழுதும் தன் வளம் குன்றாத நாட்டினை எல்லா நாட்டினும் தலை என்று சொல்வர்” ஆற்றுநீர் வளமும் கடல் வளமும் மழை நீரால் பெறும் வளமும் மலை வளமும் திண்மை பொருந்திய அரண்களும் நாட்டின் சிறப்பிற்கு ஏதுவானவை என்பதும் திருவள்ளுவரின் கருத் தாகும். நோயற்ற வாழ்வு, செல்வமிகுதி, பெருவிளைவு, இன்பமான மக்கள் வாழ்க்கை, சிறந்த பாதுகாப்பு என்ப
னவே தலைசிறந்த நாட்டின் பண்புகளாம்.
பல்லவரின் ஆட்சியில் நாடுகள்
வேளாண்மை விருத்தி பெற்ற நாடுகளில் உழவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட மன்றங்கள் அமைந்திருந்தன. அவை பொதுவிடயங்களை ஆராய்ந்து, தீர்மானங்களை மேற்கொண்டு அவற்றை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை களை எடுத்தன. நாட்டுத் தலைவனைக் கோ என்றும் குறிப்பிடுவது வழக்கம். கோன் முறைமை அரசின் வளர்ச்சி யில் முதலாவது கட்டமாய் இருந்தது.
முடியாட்சி முறையும் இராச்சியங்களும் வளர்ச்சி பெற்ற காலத்தில் நாடுகளில் வழமையான பரிபாலன முறையில் மாற்றங்கள் ஏற்பட்டன. பரம்பரை அடிப்படையில் அதிகாரம் செலுத்திய கோன் என்னும் நாட்டுத் தலைவர்கள் இராச்சி யப் பரிபாலனத்திலே பதவிகளைப் பெற்று அரசனுக்கு அனுசரணையான அதிகாரிகளாயினர். அவர்களுக்கு நில
இந்துக்கலைக்களஞ்சியம்xxx 懿災1 7
 
 

மானியங்களும், சீர்வரிசைகளும் உயர்வான விருதுகளும் கிடைத்தன. அதேசமயத்தில் நாடுகளில் அவர்களுக்கு மரபுவழியாக இருந்துவந்த அதிகாரங்கள் முடிமன்னர் வச மாகிவிட்டன. நாட்டிலுள்ள ஆளுங்கணமான நாட்டாருடன் அரசர்கள் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்ட னர். நிலமானியங்களைப் பற்றிய நன்கொடைகளில் நாட்டா ரும் பங்குபற்றும் வழக்கும் உருவாகியது. நாட்டு வழமை களை அனுசரிப்பதன் மூலமாக நாட்டாரின் சம்மதத்துடன் மன்னர்கள் தங்கள் அதிகாரங்களை நிலைநாட்டிக் கொள்ளமுடிந்தது. அரசின் ஆணைகளை நிறைவேற்றுவ தில் நாட்டார் ஈடுபட்டனர். “ஆளுவ அரசர் விண்ணப்பத்தால் சாளுக்கிய அரசர் ஆணத்தியாகப் பணித்தோம். நாட்டாரும் ஊராரும் ஆழ்வாரும்” என்னும் குறிப்பு நெல்லூர் மாவட்டத் திலுள்ள சாசனம் ஒன்றிலே பதிவாகியுள்ளது. சாளுக்கிய அரசின் கட்டளைப் பிரகாரமாக நாட்டாரும் ஊராரும் ஆழ் வாரும் கூட்டமாகக் கூடி சுப்ரமணியப் பட்டாரகர் கோயிலு க்கு 15 கழஞ்சு பொன் தானமாகக் கொடுக்க முடிவுசெய்த
60TU.
பல்லவரின் காசக்குடிப்பட்டயம் பிரம்மதேயம் உருவாக்கு வதைப் பற்றிய கோணோலை நாட்டாருக்கு அனுப்பப் பட்டதாகக் குறிப்பிடுகின்றது. ஊற்றுக்காட்டுக் கோட்டத்து நாட்டாரும் காண்க என்னும் தொடர் அதில் உள்ளமை கவனித்தற்குரியது. கொடுகொள்ளி என்னும் ஊரை பிராமணன் ஒருவனுக்கு பிரம்மதேயமாகக் கொடுக்குமாறு
நாட்டாருக்கு மன்னன் கட்டளை வழங்கினான்.
அரசனுடைய கோணோலை கிடைத்த பின்பு நாட்டார். முன்புள்ள காணியாளரையும் உடமைக் காரரையும் நீக்கி எல்லைகளில் பிடிசூழ்ந்து கள்ளியும் கல்லும் நாட்டிப் பிரம்மதேயமாக வகைசெய்து கொடுத்தனர். திருமுகம் கண்டு நாட்டோம் நாட்டு வியவன் சொல்லிய எல்லை போய் படாகை வலம் செய்து கல்லும் கள்ளியும் நாட்டிக் கொடுத்தது என்பது சாசனக் குறிப்பு.
சோழநாட்டுத் தென்கரையூர் நாட்டு நாட்டார் காண்க என்னும் வாசகம் தண்டதோட்டம் சாசனத்திற் காணப்படு
கின்றது. நிலதானியங்கள் மற்றைய ஏற்பாடுகள் இருமட்டங்
భభజో, : 3& x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்கணம்

Page 204
களில் மேற்கொள்ளப்பட்டன. மன்னனது கட்டளைகளை திருமுகமாக நாட்டாருக்கு அனுப்பப்பட்டது. அதனை ஒப்புக்கொண்டதும் நாட்டார், திருமுக ஒலைப்படி தானமா கக் கொடுக்கவேண்டிய நிலத்தை வரையறை செய்து, எல்லையிட்டு, அதனைப் பற்றிய விபரங்களை தங்கள் வசமான புத்தகங்களில் எழுதிய பின் அதன் பிரதியை மன்னனுடைய அதிகாரியிடம் வழங்குவார்கள். அது அற வோலை என்று சொல்லப்படும். பூமிதானம் பற்றிய வாசகம் சாசனமாக எழுதப்படுமிடத்து அதில் அரசனது கோனோ லையும் நாட்டார் எழுதிய அறவோலையும் சேர்ந்திருக்கும். இது பிற்காலத்திலே ஆனைமங்கலச் சிற்பேடுகள் போன்ற ஆவணங்கள் வாயிலாகத் தெளிவாகின்றது. "நாட்டாருக்கு விட்ட திருமுகம் நாட்டார் தொழுது தலைக்கு வைத் தெல்லை போய்க் கல்லும் கள்ளியும் நாட்டி படாகை வலஞ் செய்து நாட்டார் விடுத்த அறவோலைப்படி” என்னும் சொற்றொடர் பல்லவ மன்னனின் பட்டத்தான் மங்கலம்
பட்டயத்திற் காணப்படுகின்றது.
பாண்டி நாட்டிலும் நாட்டுத் தலைவர்கள் கோன் என்னும் பட்டப்பெயர் பெற்றிருந்தனர். அவர்களில் சிலர் அரண்மனை அதிகாரிகளாக இருந்தனர். ஆணத்தி ஒருவனை வண்ட மிழ்க கோன் அதிகாரி. வைகுந்த வளநாடன் ஹரி சரண. கமலசேகரன் என்று தளவாய்புரச் சாசனம் குறிப்பிடுகின்றது. அளற்று நாட்டுக் கோன் “அருந்தமிழின் பாத் தொரு பொருள் பயனுணர்வோன் கொடை பயில் கற்பக சீலன் சாத்தம்படிரன்’ என்பவனையும் அச்சாசனம் குறிப்பிடுகின் றது. மதுரதர நல்லூரை அந்தணர்க்குரிய பிரம்மதேயமாகப் புனரமைத்தபொழுது அந்த ஏற்பாட்டிலே நாட்டாரும் பங்கு கொண்டனர். அதனை மேல்வரும் சாசனக் குறிப்பினால் உணரமுடிகின்றது.
"கலைபயில் கிழவங்கோனும் கணக்குநூல் பயில் கணக்கராகவும் மாசில்வான் குடித்தோன்றிய ஆசிநாட்டு நீாட்டாரும் மச்சுறு வளமணவி வேந்த நேச்சுரநாட்டாரும் உடனாகி நின்றெல்லை காட்டப் பிடி சூழ்ந்த பெருநான் கெல்லை”
இந்துக் கலைக்களஞ்சியம்x
ঃঃ 1 7
 

சோழப்பேரரசில் நாடுகள்
விஜயாலய சோழன் வழியினரான மன்னரின் ஆட்சிக் காலங்களில் எழுதப்பட்ட சாசனங்களில் நாடுகளைப் பற்றி யும் நாட்டார் பற்றியும் மிகுதியான குறிப்புகள் உண்டு. அவற்றின் மூலம் பல விபரங்கள் கிடைக்கின்றன. ஆயி னும் சாசனங்களைப் பற்றிய தெளிவான விளக்கமும் சிந்தனையும் இன்மையால் இந்நாட்களிலே பல நவமான கருத்துக்கள் உலகின் பல பாகங்களிலிருந்தும் வெளிவந் துள்ளன. ஆனால், சோழர் கால சமுதாயம் பற்றிய விளக் கத்திற்கு பல குழப்பங்கள் ஏற்படுவதுண்டு. அவற்றைப் போக்குவது இக்கட்டுரையின் நோக்கமன்று. அது எமது அறிவாற்றல்களுக்கு அப்பாலானது. சாசனக் குறிப்புக ளைத் திரட்டி ஆராய்வதன் மூலம் பல விடயங்களைத் தெளிவுபடுத்தலாம் என்பதை இங்கு உறுதியாகக் கூறலாம். அந்தப் பணி இன்னும் மேற்கொள்ளப்படவில்லை.
தமிழகத்து நிலப்பிரிவு முறையிலும் இறைவரி நிர்வாக முறையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை நிகரிலி சோழ னாகிய முதலாம் இராஜராஜன் (985 - 1016) ஏற்படுத் தினான். நாடு என்னும் பிரிவுகள் நிலப்பிரிவுகள் என்ற வகையிலும் வருமானவரிப் பிரிவுகள் என்ற வகையிலும் புதிய பரிமாணத்தைப் பெற்றன. சோழப்பேரரசின் ஆதிக்கத் தின்கீழ் அமைந்த இராச்சியங்கள் ஒவ்வொன்றும் மண்டலம் என்றும் பெயரிடப்பட்டன. மண்டலம் என்பது சோழப்பேரர சில் அடங்கிய மிகப்பெரிய நிர்வாகப் பிரிவுகளாகும். 11ஆம் நூற்றாண்டில் ஒன்பது மண்டலங்கள் இருந்தன. அவற்றில் ஒவ்வொன்றும் தனி இராச்சியமாக விளங்கியமை குறிப்பிட த்தக்கது.
மண்டலங்கள் வளநாடு என்னும் பிரிவுகளைக் கொண்டி ருந்தன. சோழநாடு, தொண்டைநாடு, பாண்டிநாடு, ஈழநாடு, மலைநாடு என்பவற்றை மண்டலம் என்று தழிழ் ஆவணங் களில் குறிப்பிடும் வழக்கம் இராஜராஜனது ஆட்சியின் பயனாக ஏற்பட்டதாகும். சோழநாட்டில் ஒன்பது வளநாடுகள் உருவாகியிருந்தன. வளநாடு என்னும் பிரிவுகள் இராஜராஜ னது ஆட்சியில் முதன்முதலாக ஏற்படுத்தப்பட்டவை. வளநாடு என்னும் பெயர் சோழராட்சி ஏற்படுவதற்கு முன்பே பாண்டி நாட்டில் வழங்கியது. வரகுண வளநாடு, அமித
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 205
குண வளநாடு என்னும் பெயர்கள் அந்நாட்டு சாசனங்களில் காணப்படுகின்றன. ஆனால் அங்கு நாடு என்னும் பிரிவு களையே வளநாடு என்று குறிப்பிட்டனர் போலத் தோன் றும் இராஜராஜன் உருவாக்கிய வளநாடு என்னும் பிரிவுகள் நிர்வாகப் பிரிவுகள் என்ற வகையில் அவற்றினின்றும் வேறுபட்டவை, புதுமையானவை, அளவில் பெரியவை.
அவற்றிலே பல நாடுகள் அடங்கியிருந்தன.
தானங்களையும் தானகாரரையும் வர்ணிக்கும் சாசனங் கள் நிலங்களையும் நன்கொடையாளரையும் அதிகாரிக ளையும் வர்ணிக்கின்றபொழுது மண்டலம், வளநாடு, ஊர் என்பனவற்றில் பெயர்கள் வரிசைக்கிரமமாகச் சொல்வது வழமை. அந்த மரபும் அதன் பயனாகக் கிடைக்கும் விவரங்களும் நிலவியல் சார்ந்த படங்களை வரைவதற்கான ஆதாரங்கள் ஆகும். அந்த மரபின் உதாரணங்களாக மேல்வரும் சாசனக் குறிப்புக்கள் அமைகின்றன.
1. “சோழ மண்டலத்து வடித்திரிய சிகாமணி வளநாட்டு வேளார் நாட்டு சிறுகூற்ற நல்லூர் கிழவன் தாழிகுமரன்”
2. "இராஜராஜ பாண்டிநாட்டு இராஜேந்திரசோழ வளநாட்டு மிழலைக் கூற்றத்து நடுவிற் கூற்று பூரீ பராந்தக நல்லூர்”
3. "இராஜராஜ பாண்டிநாட்டு உத்தமசோழ வளநாட்டுக் குடநாட்டு பர்ஹற்மதேயம் ஆற்றுார் சேந்தமங்கலம்"
4. "சோழ மண்டலத்து சத்திரிய சிகாமணி வளநாட்டுப்
பட்டினக் கூற்றத்து நாகபட்டினம்’
நாடு என்பது சோழர் ஆட்சியில் வளநாட்டின் பிரிவாகிவிட் டது என்பது இவற்றாலே தெளிவாகின்றது. வளநாடு ஒவ் வொன்றிலும் பல நாடுகள் அடங்கியிருந்தன. விருதராஜ பயங்கர வளநாடு என்னும் பிரிவில் எட்டு நாடுகள் அடங்கி யிருந்தன. அவையாவன
உலகளந்த சோழக் காணநாடு செம்பியன் சோழக் கானநாடு
அழகிய சோழக் காணநாடு
விக்கிரம சோழக் கானநாடு
இந்துக் கலைக்களஞ்சியம்x
 

செங்கதிர் சோழக் கானநாடு கண்ணனூர் துறுமா நாடு அழகிய பாண்டிய கானநாடு
தென்கா நாட்டு உத்தம பாண்டிய கானநாடு
பேரிளமை நாடு
பேரிளமை நாடு என்ற சில பிரிவுகளைப் பற்றி சோழர் காலத்துச் சாசனங்கள் மூலம் அறியமுடிகின்றது. அவை பிரம்மதேயத்து பிடாகைகளாக இருந்தன. "பிரம்மதேய ஊர்கள் நாடு என்னும் வருவாய்த்துறை நிர்வாக அமைப்பிலிருந்து தனியாகப் பிரிக்கப்பட்டு அரசரின் நேரடி நிர்வாக த்தின்கீழ் வளநாடு என்னும் அமைப்புடன் சேர்க்கப்பட்டன. அதே சமயம் பிரம்மதேயங்களும் இவற்றோடு இணைக்கப் பட்டிருந்த பிடாகைகள், தேவதான, இறையிலி ஊர்கள் ஆகியன பேரின்மை நாடு பெயரில் தனி நிர்வாகப் பிரிவாக உருவாக்கப்பட்டு பேரிளமையார் என்னும் பெயர் கொண்ட நாட்டார் குழுவால் நிருவகிக்கப்பட்டன. பேரிளமையார் பற்றிய ஆய்விலிருந்து பேரிளமையார் என்போர் பிரம்மதேய ஊர்ப்பகுதிகளில் வாழ்ந்த வெள்ளாள இன நிலக்கிழார் கள் என்றும், இவர்களின்கீழ் இருந்த நிர்வாகப்பகுதி பேரிளமை நாடு எனவும், பேரிளமையாளர்களைக் கொண்ட நிர்வாகக்குழு பேரிளமை நாட்டார் எனவும் அழைக்கப்பட்ட தாக அறிகின்றோம். முடிகொண்ட சோழச் சதுர்வேதிமங் கலத்தில் மூன்று பேரிளமை நாடுகள் இருந்தன. அவற்றின் கீழ் இருந்த ஊர்கள் பற்றியும் மேல்வரும் சாசனப் பகுதிகள் மூலம் அறிய முடிகின்றது.
1."முடிகொண்ட சோழச் சதுர்வேதிமங்கலத்துப் பிடாகை உத்தமசோழப் பேரிளமை நாட்டுச் செவ்வேரி (1045)”
2."இவ்வூர்ப் பிடாகை மதுராந்தகப் பேரிளமை நாட்டில்
கிளியூர், கிளியூர் பட்டூர் (1099)”
3."இவ்வூர் கீழ்ப்பிடாகை இராஜேந்திரசோழப் பேரிளமை
நாட்டு மருங்கில் கட்டளையடைந்தபடி (1119)”
சோழப்பேரரசர் காலத்திலே சோழ நாட்டிலும் தொண்டை நாட்டிலும் ஏறக்குறைய 400 நாடுகள் இருந்தன். அவற்றின் சுற்றளவு பெரும்பாலும் 20 சதுர கிலோ மீற்றருக்கும் 100 சதுர கிலோ மீற்றருக்கும் இடைப்பட்டதாக இருக்கும்.
இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்கணம்

Page 206
நீர்ப்பாசன வசதியுள்ள பிரதேசங்களில் நாடுகளின் சுற்றளவு சிறியதாயிருக்கும். வரட்சிப் பிரதேசங்களின் நாடுகளின் அளவு பெரியது. வளநாடுகளை உருவாக்கிய காலகட்டத் திலே வளமான பிரதேசங்களிலுள்ள நாடுகளின் எல்லை கள் மாற்றமடைந்தன. ஆறு, சிற்றாறு, கால்வாய், என்ப வற்றை எல்லையாகக் கொண்டு வளநாடுகள் உருவாக்கப் பட்டதால் நாடுகள் பல பாதிப்படைந்தன. சில சமயங்களில் அவை இரு பிரிவுகளாகி வெவ்வேறு வளநாடுகளோடு இணைக்கப்பட்டன.
தொண்டை மண்டலத்தில் கோட்டம் என்னும் 24 பிரிவு கள் இருந்தன. அவற்றுள் ஒவ்வொன்றிலும் பல நாடுகள் அடங்கியிருந்தன. ஒரு பெரிய கோட்டத்தில் 17 நாடுகள் இருந்தன. 23 கோட்டங்களில் 180 நாடுகள் இருந்தன. முதலாம் குலோத்துங்க சோழனின் காலம் முதலாக கோட்டங்களை வளநாடு என்று குறிப்பிடும் வழக்கம் ஏற் பட்டது.
நாடுகள் ஒவ்வொன்றும் ஊர், பிரம்மதேயம், நகரம் என்ற வகையிலுள்ள குடியிருப்புக்கள் இருந்தன. அவற்றிலே ஊர் என்பதுவே பொதுவானதும் பிரதானமானதுமாகும். உழவர் குடிகள் பெருமளவிலே குடியிருந்த ஊர்களை வெள்ளான் வகையென்று குறிப்பிடுவது வழக்கம். அவற்று க்கு சில மரபு வழியான உரிமைகளும் அதிகாரங்களும் இருந்தன. அவற்றிலிருந்து வரிகளும் வேறு இறை கடமை களும் அரசாங்கத்துக்குக் கிடைத்தன. வெள்ளாளர் வகை ஊர்களிலே ஈழவர், கம்மாளர், பறையர் ஆகியோர் தனிச் சேரிகளில் வாழ்ந்தனர். புதிதாக அமைக்கப்படும் பிரம்ம தேயங்கள், நகரங்கள் என்பவற்றுக்குப் புதிய பெயர்களும் சிறப்புரிமைகளும் சலுகைகளும் வழங்கப்பட்டன. அவற்றின் உருவாக்கத்தால் நாடுகள் பலவீனமடைந்தன. அவை சுயாட்சி உரிமை பெற்ற தனிப்பிரிவுகளாக இயங்கத் தொடங்கின. சோழராட்சியில் பெருமளவிலே புதிய பிரம்ம தேயங்களும் நகரங்களும் உருவாக்கப்பட்டன. பிரம்ம தேயங்கள் சதுர்வேதிமங்கலம் என்று பொதுவாகச் சொல் லப்பட்டன. அவை ஒவ்வொன்றும் அரசகுலத்தவரின் பெயர் களை முன்னொட்டாகப் பெற்று தனிப்பெயர்களால் வழங் கின. மதுரந்தகச் சதுர்வேதிமங்கலம், வானவன் மாதேவி சதுர்வேதி மங்கலம், இராஜராஜ சதுர்வேதிமங்கலம் என்பன
இந்துக் கலைக்களஞ்சியம் 囊線1 7
 

உதாரணங்களாகும். வணிகள் நகரங்கள் புரம் என்று சொல் லப்பட்டன. பிரம்மதேயங்களைப்போல அவற்றையும் அரசின் பெயர்களால் வழங்கினார்கள். உலகளந்த சோழபுரம், இராஜேந்திர சோழபுரம், ராஜாதித்தபுரம், நித்தவிநோதபுரம், விருதராஜபயங்கரபுரம் முதலியவை நகரங்களின் பெயர்க ளாகும். நிலதானங்களைப் பற்றிய ஏற்பாடுகளில் நாட்டா ரோடு பிரம்மதேயச் சபையாரும் நகரங்களிலார் பங்குபற்றி யமை குறிப்பிடத்தக்கது
நாடுகளின் நிர்வாகம்
நாடுகளின் நிர்வாகத்திலே சோழப்பேரரசர் காலத்தில் சில அடிப்படையான மாற்றங்கள் ஏற்பட்டன. அவற்றிலே தலைமையதிகாரம் நாட்டுக்கோன் என்போரிடமிருந்து நாடாழ்வான் என்போரிடம் கைமாறிவிட்டது. நாடாழ்வான் என்னும் பட்டப்பெயர் கொண்டவர்களைப் பற்றிப் பல சாசனங்கள் குறிப்பிடுகின்றன. பேரையூர் நாகநாதஸ்வாமி கோயிலிலுள்ளதும் மாறவர்மன் குலசேகரனது காலத்தது மான கல்வெட்டொன்றிலே இராஜராஜ நாடாழ்வான், உத்தமசோழ நாடாழ்வான் என்னும் இருவரைப்பற்றிய குறிப்புக் கள் உண்டு. அவர்களின் பெயர்கள் சோழமன்னரின் பெயர்க ளால் அமைந்தவை என்பதால் அவற்ற்ை முற்காலத்திலிருந்த வழமையாகிவிட்ட பதவிப் பெயர்கள் என்று கொள்ள முடிகிறது. பராக்கிரம பாண்டி யன் காலத்தில் பொன்னன் என்பவன் வடபனங்காட்டு நாடாழ்வானாக இருந்தான். இதனை "செயசிங்ககுல கால வளநாட்டு வடபனக்காட்டு பெரும்புலியூருடையான் பனங் காட்டு நாடாழ்வானேன்” என்னும் குறிப்பினால் அறியமுடி கின்றது.
நிலைமை அழகிய நாடாழ்வான், மதுரை நாடாழ்வான், -கொடும்பை நாடாழ்வான் என்னும் மூவரைப் பற்றிய இடையத்துார் ஸ்வயம்பிரகாசமூர்த்தி கோயிலுள்ள கல்வெட்டொன்றிலே சொல்லப்படுகின்றது. அவர்கள் அதிகாரிகள் என்ற வகையில் நிலவிலை ஆவணமொன் றிலே கையெழுத்திட்டுள்ளனர். கேரளசிங்க வளநாட்டுக் கால்வாயி நாட்டு நெல்வாயில் அகஸ்தீஸ்வரமுடையார் கோயிலுக்கு இறையிலித் தேவதானமாகக் கண்டன் ஆவுடையான் என்னும் கல்வாயி நாடாழ்வான் நிலம்
வழங்கினான். அதனை அவனே நீர்வார்த்துக் கல்வெட்டிக்
xxx இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 207
கொடுத் தான். தானமாகிய நிலம் அவனுக்குச் சொந்தமானதா? அல்லது நாட்டுப் பொதுவா? என்பதை அறியமுடியவில்லை. ஆயினும் இறையிலி தேவ தானமாக நிலம் வழங்கியமையால் வழமையாக நாட்டாருக்குரிய அதிகாரத் தை கால் வாயப் நாடாழி வான் பயன்படுத்தியுள்ளமை தெளிவாகத் தெரிகின் றது. அவனது தம்பியான அழகு கண்டபெருமாள் தன் பெயராலும் தமையனான கண்டன் ஆளுடையானான கால்வாயி நாடாழ்வான் பெயராலும் காணநாடான விருதராஜ பயங்கர வளநாட்டுக்கான நாட்டுப் பெருந்துறை கண்டிதேவ விண்ணகர் கோயிலுக்கு நிலம் கொடுத்தான். சில சமயங்களிலே நாட்டார் நாட்டுப் பொதுவான நிலங்களையும் அவற்றின் மீதான இறைகடமைகளையும் கோயில் பணிகளுக்கும் வழிபாட்டுக்கும் தானம் செய்தனர். திருவரங்குளம் ஹரிதீர்தேஸ்வரர் கோயிலிலுள்ள சாசனம் ஒன்று அத்தகைய நன்கொடை ஒன்றை மேல்வருமாறு வர்ணிக்கின்றது.
“ஸ்வஸ்தி ழரீ திரிபுவனச்சக்கரவர்த்திகள் ரீவீரபாண்டிய தேவருக்கு யாண்டு நாலாவது தென்கரை நாட்டு நாடாய் இசைந்த நாட்டோம். திருவரங்குலமுடைய நாயானருக்கு சாமந்தனார் திருநசுஷத்ரம் சதயம் தீர்த்தமாகக் கொண்ட புரட்டாதித் திருநாளான அரச கண்டராமன் திருநாளுக்கும் அரசகண்டராமன் சந்திக்கும் எங்கள் நாடாய் இசைந்த நாட்டோம் விட்ட இந்நாட்டுக் குளத்தூர் நான்கெல்லைக்குட் பட்ட நிலத்துக்கு கவிநாட்டு நாடு இசைந்த கடமை அச்சுவரி மற்றும் எப்பேர்ப்பட்டனவும் இந்த அரசகண்டராமன் திரு நாளுக்கும் அரசகண்டராமன் சந்திக்கும் எடுகிறி உடையார். திருவரங்குளமுடையார் திருமலையிலே கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொடுத்தோம் தென்கவி நாட்டு நாடாய் இசைந்த நாட்டோம்.”
தென்கரை நாட்டு நாட்டார் திருவங்குளமுடைய நாயனார் கோயிலுக்குக் குளத்துாரின் நிலங்கொடுத்தார்கள். அவர் கள் தங்களை நாடாய் இசைந்தநாட்டோம் என்று தன்மை நிலையைப் பன்மையிற் குறிப்பிடப்படுவதால் அவர்கள் நாட்டின் ஆளுங்கணமாகிய நாட்டார் என்பது உறுதியாகின் றது. பிரம்மதேய கிழவரைச் சபையார் என்றும் வணிக நகரங்களின் ஆளுங்கணத்தாரை நகரத்தார் என்றும் சொல்
இந்துக் கலைக்களஞ்சியம்x
 

வதைப் போல நாட்டின் ஆளுங்கணத்தாரை நாட்டார் என்று சொல்வது வழமை. குளத்தூரில் வழங்கிய நிலத்துக்குரிய கடமை, அச்சுவரி போன்ற இறை கடமைகள் நாட்டாரால் வழங்கப்பட்டன. சாமாந்தனர் என்னும் உயரதிகாரி ஒருவ ரின் பெயரால் திருவரங்குளமுடையார் ஆலயத்தில் நடை பெறும் அரசகண்டராமன் திருநாள், அரசகண்டராமன் சந்தி என்னும் தர்மங்களுக்கு வேண்டிய நிபந்தங்களுக்காக நன்கொடை நாட்டாரால் வழங்கப்பட்டது. இறைவரித்துறை யில் நாட்டார் அதிகாரங்களைக் கொண்டிருந்தமை இத னால் உணரப்படும். இந்நன்கொடையில் தென்கவி நாட்டா ரும் ஏதோ வகையில் பங்குகொண்டனர். ஆவணத்திலே கையெழுத்திட்டவர்களில் மும்முடி சோழ தென்கவி நாட்டு வேளாளனும் ஒருவன்.
இச்சாசனம் எழுதப்பட்ட காலத்தில் திருவெட்பூருடையான் திருத்தவமுடையான் நாட்டுக் கணக்கு என்னும் பதவியி லிருந்தான். நாட்டுக்கணக்கு, ஊர்க்கணக்கு என்ற பதவிப் பெயர்களைப் போன்றது. நாட்டுக்கணக்கு என்னும் திரு வெட்பூருடையான் நாட்டு நிர்வாகத்திலே பணிபுரிந்தவன் என்பது "இப்படிக்கு இவை நாட்டுத் திருவடி பணியால் நாட்டுக்கணக்கு திருவருட்பூருடையான் திருத்தபழுடைய யான் நாட்டான் எழுத்து’ எனச் சாசனத்தில் வரும் குறிப்பி னாலே உறுதியாகின்றது.
அரசரும் அரசரின் சாமந்தர்களும் நிலங்களை நன் கொடையாக வழங்குமிடத்து அந்நிலங்கள் அமைந்திருந்த நாட்டு நாட்டாரின் ஒப்பிதலைப் பெறுவது சம்பிரதாயபூர்வ மானது. நாகபட்டினத்து சூடாமணி விகாரத்துக்கு ஆனை மங்கலம் என்னும் ஊரை பள்ளிச்சந்தமாக முதலாம் இராஜ ராஜன் வழங்கினான். அதனைப் பற்றிய கட்டளையினை நிறைவேற்றுமாறு நாட்டாருக்குத் திருமுகம் அனுப்பப் பெற்றது. நாட்டார் அதனை ஒப்புக் கொண்டதும் நிலத்தின் எல்லையை வரையறை செய்து அறவோலை எழுதி அவற் றின் பிரதியை அரசவதிகாரிகள் மூலம் அரண்மனைக்கு அனுப்பி வைத்தனர். அதனடிப்படையிலே பள்ளிச் சந்தம் பற்றிய வாசகம் செப்பேடுகளில் எழுதப்பட்டது. பாண்டியப் பேரரசர் காலத்திலும் அதுவே வழமை என்பதற்கு மேல் வரும் சாசனப்பகுதிகள் உதாரணங்களாகும்.
iš 55 asuu SeaMT&T gaya JesúESOT geoDeJOTäaseTň

Page 208
1. “இராசராச வளநாட்டு கிளிப்பற்றுநாட்டு திருவிடை நேரியான பெருந்திருவாட்டி நல்லூர் உடையார். கோயிலில் நாயனார் செம்பிள்ளையார் சாமந்தனார் சிவநாமத்தாலே எழுந்தருளுவித்த நாயனார் அழகப்பெருமாள் நாயனாருக் கும் அழகப்பெருமாள் நாச்சியாருக்கும் அரசி மீகாமன் சந்திக்கு அமுதுக்கும் திருப்பணிக்கும் உடலாக இந்நாட்டு கிளிப்பற்று நாட்டு வயலில் வல்லநாட்டு அரையர்கள் திருவிடைசேரியில் குடிமக்கள் விலைகொண்டுடைய நிலம் ஆறு இந்நிலம் ஆறுமாவுக்கும் இடைகடமை எச்சோறு விநியோகமும் கழித்து சந்திராதித்தவரை இந்த அழகப் பெருமான் நாயனாருக்கும் நாச்சியாருக்கும் அமுதுபடிக்கும் திருப்பணிக்கும் இந்நிலம் இறையிலியாகக் கொடுத்தோம். கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொள்வதென்று நாயனார் செம்பிள்ளையார் திருவெழுத்துச் சாத்திய திருமுகப்படி. இந்நாயனாருக்கு இறையிலி கொடுத்தமைக்கு எங்களுக் கும் வந்து இந்நிலம் திருமலையில் திருமுகப்படி எழுத்து வெட்டுகையில் நாங்களும் இத்திருமுகப்படி சந்திராதித்த வரை செல்ல கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொடுத் தோம். இந்நாட்டுக் கிளிப்பற்று நாட்டு நாடா(ய்) இசைந்த நாட்டோம். நாட்டுத் திருவடி பணிக்க நாட்டுக்கணக்கன்
எழுத்து
2. ”. கோ மாறபன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் எம்மண்டலமுங் கொண்டருளிய பூரீகுலசேகர தேவருக்கு யாண்டு 13ஆவது. தென்கோ நாட்டுக் கூடலூர் நாட்டுச் செவ்வலுர் உள்ளிட்ட வடபற்று நாட்டு நாட்டவரோம் இந் நாட்டு உடையார் திருப்பூவாலைக்குடி உடைய நாயனார் கோயில் ஆதிசண்டேஸ்வர தேவகண்மி கோயில் கணக் கிற்கும் பிடிபாடு பண்ணிக்கொடுத்த பரிசாவது. இந்நிலம் வேலி ஆறரை வேலியும் குளங்களும் நன்செய் புன்செய்யும் கீணோக்கின் கிணறும் மேனோக்கின் மரங்களும் மற்றும் எப்பேர்ப்பட்டனவும் இறையிலித் தேவதானமாக விட்டு. தென்கோ நாட்டு கூடலூர் நாட்டு செவ்வலூர் உள்ளிட்ட
வடபற்று நாட்டவரோம்”
நாடுகளில் அவற்றின் பாதுகாவலுக்கு படைப்பற்றுக்கள் உருவாக்கப்பட்டன. படைத்தலைவர்களை அரசு மக்கள் என்று குறிப்பிட்டனர். நாடாழ்வான் என்னும் பதவிப்பெயர்
கொண்டவர்களில் சிலர் அரசு மக்கள் என்னும் குழுவின
@f返556oax益56T@由Ló談囊
線刻l 8
 

ரால் அடங்கியிருந்தனர். இவற்றை மேல்வரும் சாசனப் பகுதியால் அறியமுடிகின்றது.
இந்நாட்டுப் படைப்பற்று மலையாளங்குடி அரசுமக்கள் கோவ இராசனான இராசராச நாடாழ்வான் உள்ளிட்டாரும் முடியன் பெருமாளான உத்தமசோழ நாடாழ்வான் உள்ளிட் டாரும் மறமுதலிகள் அனைவோரும் அரசுமக்களே ராயன், பேரரையன் என்னும் பட்டங்களுக்கு உரியவர் போலத் தெரிகின்றது. மலைசையராயன் எழுத்து, மாணிக்கப் பேரரையன் எழுத்து என்ற குறிப்புக்களும் இச்சாசனத்தில் வருகின்றன.
நாட்டார் தங்கள் நிர்வாகச் செலவுகளின்பொருட்டே நாட்டு வரி, நாட்டு விநியோகம் போன்ற வரிகளைக் குடிமக்களிட மிருந்து கொண்டனர் எனக் கருதமுடிகின்றது. (சி.ப)
நாதமுனிகள்
விஷ்ணுவின் அவதாரச் சிறப்புக்களையும் அவரின் புகழை யும் போற்றி அவர் மீது கொண்ட பக்தியில் ஆழ்ந்து போனவர்கள் ஆழ்வார்கள். அவர்கள் பன்னிருவர். அவர்கள் பாடிய பாசுரங்கள் திவ்விய பிரபந்தங்கள் என்று வர்ணிக்கப் படுகின்றன. ஆழ்வார்களின் காலத்துக்கு பின் திவ்வியபிரபந் தங்களில் சிறப்புக்களை உலகத்துக்கு எடுத்துரைத்தும் அவற்றினை வகைப்படுத்தியும் எமக்குத் தந்தவர் நாத முனிகள் ஆவார்.
காவிரியாற்றின் கரையில் உள்ள வீரநாராயணபுரத்தில் சொட்டைக்குலம் எனும் குலத்தில் கலைகளையும் மறை களையும் கற்றுணர்ந்த ஈஸ்வர முனிகளுக்கு மகனாக அவதரித்தார். ஈஸ்வரமுனிகள் தன் மைந்தனுக்கு நாத முனி எனப் பெயரிட்டார். நாதமுனிகள் ஏழிசையையும் தென்மொழி, வடமொழிக் கலைகளையும் பயின்று விஷ்ணு மேல் நீங்காத அன்பு உடையவராக விளங்கினார். நாதமுனி களைக் கண்டவர்கள் “இவர் உலகு உய்யத் தோன்றிய பெரியார்” எனக் கூறினார்கள். தக்க வயதிலே சிறப்புடைய மங்கையைத் திருமணம் செய்து இல்லறத்தை நல்லறமாக நடத்தினர். இதன் பலனாக ஒரு மைந்தன் பிறந்தான்.
&இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 209
அவனுக்கு தந்தையின் பெயராகிய ஈஸ்வரமுனிகள் எனப் பெயரிட்டார். நாதமுனிகள் தந்தையாருடனும் மைந்தனுட னும் நாரயணபுரத்து மன்னனாரை அன்புடன் வணங்கி
அப்பெருமானுக்குப் பல தொண்டுகள் புரிந்து வாழ்ந்தனர்.
இவ்வாறு வாழ்ந்து வரும் காலத்தில் நாதமுனிகள் ஆயர் பாடிக் கண்ணன் இனிது விளங்கியருளிய மதுரை, திருவாய்பாடி, பிருந்தாவனம், யமுனைக்கரை முதலிய திருப்பதிகளை சென்று வணங்கி வர விரும்பினார்.
வடமதுரை, சாளக்கிராமம், துவரை, அயோத்தி, வதரி முதலிய திருப்பதிகளுக்குச் சென்று அப்பதிகளில் எழுந் தருளியுள்ள இறைவனை வணங்கினார். பின்னர் யமுனை ஆற்றங்கரையில் உள்ள "கோவர்த்தனபுரம்” எனும் பதி யில் எழுந்தருளியிருக்கும் “யமுனைத்துறைவன்' என்னும் பெயருடைய பெருமானின் திருவடிகளை வணங்கி கண்ணி னின்றும் அருவி பாய பக்திபரவசத்துடன் போற்றிப் பணிந் தார். கோவர்த்தனபுரமும் யமுனை ஆறும் நாதமுனிகளின் மனதைக் கவர்ந்துவிட அப்பதியிலேயே தான் வாழவேண் டும் என்று எண்ணி, தம் குடும்பத்தினருடன் அங்கு வாழ்ந்து பல தொண்டுகளைப் புரிந்து வந்தார். இவ்வாறு வாழ்ந்து வரும் நாளில் கனவிலே இறைவன் தோன்றி "அன்பனே வீரநாராயணபுரத்துக்கு வருவாயாக’ என்று பணித்தார். இதனைக் கோவர்த்தனபுர இறைவனிடம் கூறி, அவரிடம் விடை பெற்று, வீரநாரயணபுரத்துக்கு தம் குடும்பத்தினரு டன் புறப்பட்டார். செல்லும் வழியிலே சகந்நாதம், சிங்க வேள்குன்றம், அகோபிலம், திருவேங்கடம், திருக்கடிகை, திருப்புட்குழி, திருக்கச்சி, திருவனந்தபுரம், திருக்கோவலூர், திருவரங்கம், திருக்குடந்தை முதலிய திருப்பதிகளை வணங்கிச் சென்றார்.
வீரநாரயணபுரத்துக்கு வந்த நாதமுனிகள் தம் குடும்பத் தினருடன் அங்கு வாழ்ந்து வந்தார். அப்போது நந்தவனம் அமைத்து இறைவனுக்கு மாலை கட்டிச் சாத்துதல், திரு விளக்கு அமைத்தல் முதலிய தொண்டுகளைக் குறை வறப் புரிந்து வந்தார். அத்துடன் மெய்பொருள் நூல்களின் அரும் பொருள்களையும் விளக்கியுரைத்து வந்தார். இவ்வாறு பெருமானுக்குத் தொண்டு செய்து வுாழ்ந்து வருகையில் ஒரு நாள் மேலை நாட்டிலிருந்து வைணவர்
இந்துக் கலைக்களஞ்சியம்x
 

இருவர் ஆலயத் துக்கு வந்து “ஆரா அமுதே அடியேன் உடலம் நின்பால் அன்பாயே..” எனத் தொடங்கும் திருவாய்மொழியின் பதினொரு பாசுரங்களையும் ஒதிப் பெருமானை வணங்கினார்கள். அப்போது அங்கே வந்த நாதமுனிகள் அன்பர்களை நோக்கி “திருமால் அன்பிற் சிறந்த அடியீர், நீங்கள் ஒதிய பாசுரத்தில் ஈற்றுப் பாசுரத்தில் ஆயிரத்துள் இப்பத்து” எனக் காணப்படுவதால் இது ஆயிரம் பாசுரங்களைக் கொண்ட ஒரு பிரபந்தத்தைச் சேர்ந்தவை எனத் தெரிகின்றது. அப்பிரபந்தங்கள் முழுவதும் தங்களுக்குத் தெரியுமா?’ எனக் கேட்டார். அதற்கு அவர்கள் “பெரியாரே நாம் அறிந்தவை இப்பதினொரு பாசுரங்களே' என்றார். இதைக் கேட்ட நாதமுனிகள் “உங்கள் நாட்டில் இப்பிர பந்த ஏடுகள் உள்ளனவா? அவற்றை முற்றும் தெரிந்தவர் உளரோ?” என வினாவினார். வந்த வைணவ அன்பர்கள் "எமக்கு மட்டுமே இப்பதினொரு பாசுரங்கள் வரும், மற்றவர்களுக்கு இதுவும் வரா” எனக்கூற நாதமுனிகளும் அவர்களுக்கு மஞ்சள் நீர் கொடுத்து செய்யவேண்டிய பணிகளைச் செய்து வழி அனுப்பிவைத்தார்.
பாசுரங்களின்மேல் பற்றும் பாசமும் கொண்ட நாதமுனி கள் தம்முள் பலவாறு எண்ணி ஒருவாறு இப்பிரபந்தங்கள் திருசடகோபர் பிறந்த திருக்குருகூரில் இருத்தல் வேண்டும் என முடிவு செய்தார். உடனே ஆழ்வார் திருநகரிக்குச் சென்று அங்குள்ள இறைவனை வணங்கி, பின் அவ்வூரில் உள்ள சிலரை “பாசுரங்கள் பற்றிய தகவல்கள் தெரியுமா?" என வினாவினர். அதற்கு அவ்வூரில் உள்ளவர்கள் “எங்களுக்கு அதைப்பற்றித் தெரியாது” என்றனர். இப்பதியிலே அருங்குணங்கள் கொண்ட பராங்குசதாசரைக் கண்டு வணங்கி அவரிடம் பிரபந்தங்கள் பற்றி வினவினார். அதற்கு அவர் 'அப்பிரபந்தங்கள் மறைந்து வெகு காலமாகிவிட்டன. ஆனால் சடகோபரது சீடரான மதுரகவி ஆழ்வார் அருளிய “கண்ணிநுண் சிறுதாம்பு’ என்னும் பதினொரு பாசுரங்கள் என்னிடம் உள்ளன. அதனை ஆழ்வார் திருமுன் இருந்து மனம் ஒன்றி பன்னிராயிரம் முறை உருப்போடுகிறவர்களுக்கு முன் ஆழ்வார் தோன்றி அருளுவார்” என உரைத்து அப்பிரபந்தத்தை நாதமுனிகளி டம் கொடுத்தார்.
888 iš sou asawTsĦTJ assageaelösa gerooroorašascTvů

Page 210
மிக்க மகிழ்வுடன் அவற்றைப் பெற்றுக் கொண்ட நாத முனிகள் “கண்ணிநுண் சிறுதாம்பு’ எனும் பிரபந்தத்தை பன்னிராயிரம் முறை படித்தார். அப்போது ஞானதேசிகரா கிய நம்மாழ்வார் தோன்றி தன்னைத் துதித்து அழைத்த மைக்கான காரணம் யாது? எனக் கேட்டபோது நாதமுனிக ளும் தன் விருப்பத்தைக் கூறினார். ஆழ்வாரும் நாதமுனி களை உவப்புடன் நோக்கி அவருக்கு மெய்யறிவுக் கண்ணைத் திறந்து தாம் அருளிச் செய்த திருவாய்மொழி, திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி எனும் நான்கு பிரபந்தங்களையும் பொய்கையாழ்வார், பூதத்தாழ் வார், பேயாழ்வார், திருமழிசையார், குலசேகரர், பெரியாழ் வார், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணர், திருமங்கை மன்னர், கோதை என்போர் அருளிய பிரபந்தங்களையும் திருமந்திரத்தையும் மற்றும் அறம்பொருள்களையும் அட்டாங்கயோக நுட்பங்களையும் திருவாய் மலர்ந்தருளி னார். நாதமுனிகளும் ஆழ்வார் மீது பற்றுக் கொண்டு அவர் வாழ்ந்த ஊரிலேயே வாழ்ந்து வரலானார்.
ஒரு நாள் வீரநாரயணபுரத்து இறைவன் கனவிலே தோன்றி நீ பெற்ற நாலாயிரம் பிரபந்தத்தை என்முன் பாடியருள்க எனக் கூறினார். உடனே நாதமுனிகளும் ஆழ்வாரிடம் விடைபெற்று வீரநாராயணபுரத்துக்குப் புறப்பட் டார். செல்லும் வழியில் உள்ள பதிகளில் எல்லாம் அவற் றுக்குரிய அருளிச்செயல்களினால் போற்றித் தொழுதார். பின் நாராயணபுரத்து இறைவனுக்கு அவற்றைப் பாடிக் காட்டினார். மகிழ்ச்சியடைந்த இறைவன் நாதமுனிகள் கனவில் தோன்றி “அன்பனே இவற்றை நீ இயற்றமிழில் வகையில் வகுத்து அவற்றுக்கு இசையும் வகுத்திடுக” எனக் கூறினார். நாதமுனிகளும் தமது மருமக்களும் இசையில் வல்லவர்களும் ஆகிய கீழையகத்தாழ்வர், மேலையகத்தாழ்வார் என்பவர்களை அழைத்து இறைவ னின் கட்டளையைத் தெரிவித்தார். வேதவியாசர் வேத த்தை நான்காக வகுத்து உச்சரிப்புக்களை அமைத்தது போல நாதமுனிகளும் நாலாயிரம் பிரபந்தத்தை முதலாயி ரம், பெரியதிருமொழி, இயற்பா. திருவாய்மொழி என நான்காக வகுத்தார். அத்துடன் அவற்றுக்குத் தேவ கானத் தையும் அமைத்து தம்முடைய மருமக்களைக் கொண்டே பாடும்படி செய்தார். இதனால் நாலாயிரம் திவ்விய பிரபந்தங் கள் உலகில் பரவுவதற்கு நாதமுனிகள் வழி செய்தார்.
இந்துக் கலைக்களஞ்சியம்:
 
 

நாதமுனிகள் நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தை உலகில் பரவச் செய்து வரும் காலத்தில் தேவகானம் பாடவல்ல ஒரு மாதும் மானிடகானம் பாடவல்ல மாதுவும் தங்கள் தங்கள் இசையே சிறந்தது எனக் கூறிக்கொண்டு தமது பிணக்கைத் தீர்ப்பதற்காக சோழ மன்னனிடம் வந்தனர். மன்னனும் சபையில் இருந்தவர்களும் மானிடகானம் பாடிய பெண்ணின் இசையே சிறந்தது எனக் கூறிப் பரிசளித்தார் கள். தேவகானம் இசைக்கும் பெண் “நான் பாடும் கானம் தேவர்களுக்கே அன்றி மானிடர்க்கு விளங்காது” என நினைத்து "நான் திருமகள் மணவாளன் எழுந்தருளி உள்ள கோயில்கள் எல்லாம் பாடுவேன்' எனக் கூறி அவ்வாறே பாடிவரலானார். ஒரு நாள் வீரநாரயணபுரத்தில் உள்ள பெருமானைப் பாடும்போது நாதமுனிகள் அது கேட்டுப் பெரிதும் மகிழ்ந்தார். இதைக் கண்ட மங்கை மகிழ்ந்து அரசனிடம் சென்று நாத முனிகளின் பெருமையைக் கூறி னார். அரசனும் மீண்டும் இரு பெண்களையும் அழைத்துப் பாடும்படி கூற நாத முனிகள் "மானிடகானம் மானிடருக்கு விளங்கும், தேவ கானம் தேவர்களுக்குத்தான் விளங்கும்” எனக்கூற இதை அறிந்தது எப்படியோ என அரசன் வினா வினான். அதற்கு நாதமுனிகள் “இது இவ்வளவு அளவு டையது” எனக் கூறினார். மன்னரும் அவ்வாறே அளந்து பார்த்து மிகவும் மகிழ்ந்து நாதமுனிகளைப் போற்றி பொன், மணி முதலியவற்றைக் கொடுத்தார். “அரசே எம்பெருமானு டைய தாமரைத் திருவடிகளை அன்றி வேறு எதையும் விரும்போம்” எனக்கூறி மறுத்துவிட்டு அரசனை வாழ்த்திச் சென்றார்.
நாதமுனிகள் வீரநாரயணபுரத்தில் இருந்து தொண்டு புரிந்துவரும் நாளில் உய்யங்கொண்டார், குருகைக் காவலப் பன், நம்பி கருணாகரதாசர், ஏறுதிருவுடையார், திருக் கண்ணமங்கை, ஆண்டான், வானமாமலை தேவியாண்டான், உருப்பட்டுர் ஆச்சான்பிள்ளை, சோகத்தூர் ஆழ்வான் என் னும் எண்மர் நாதமுனிகளின் திருவடிகளை வந்தடைந்த னர். நாதமுனிகளும் அவர்களுக்கு மந்திரங்களுள் சிறந்த தாகிய துவயத்தின் பொருளைக் கூறித் திருவாய் மொழி முதலிய திவி விய பிரபந்தங்களையும் அவர்களை ஒதச் செய்தார். பின் மாயோனின் திருவுருவை மனதில் நினைத்து யோகத்தில் எழுந்தருளியிருந்தார். நாதமுனிகளின் யோகத்தின்
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 211
மேன்மையை அறிந்த சோழமன்னன் கோப் பெரும் தேவிமாருடன் நாரயணபுரம் வந்து நாதமுனிகளின் மாண்பைக்கண்டு வியந்து வணங்கிச் சென்றார்.அக்கணமே நாதமுனிகள் “திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே' என்றபடி மன்னனைக் கண்ணனாகவும் தேவி மாரை ஆய்ச்சியர்களாகவும் எண்ணி அவர்களின் பின் சென்றார். இதனை அறிந்த உய்யங்கொண்டார் நாதமுனிக ளிடம் வந்து இப்படிச் செய்யலாமோ என வினவி திருநாரா யணபுரத்துக்கு அழைத்து வந்தார்.
யோகத்தில் சிறிது காலம் அமர்ந்திருந்தார் நாதமுனி கள். ஒரு நாள் குருகைக் காவலப்பனைப் பார்த்து “நீர் யோக இரகசியத்தைப் பயில்வீராக” என்று கூறி அட்டாங்க யோக முறைகளை அவருக்கு அருளினார். பின்னர் உய்யங்கொண்டாரைப் பாடும்படி கூறினார். அதற்கு அவர் "பாணம் கிடைக்க மணம் புணரலாமோ? இந்த உடலின் முடிவிலே அதனைப் பயிலல் நன்று” எனக் கூறினார். அதற்கு நாதமுனிகள் "வேதாந்தம் முதலிய நூல்களை யும், திருவாய்மொழி முதலிய திவ்விய பிரபந்தங்களையும் உலகிற் பரவச் செய்யும்” என அருளினார். பின் தன் மகன் ஈச்சுவரமுனிகளை நோக்கி “உனக்கு ஒரு மகன் பிறப்பான் அவனுக்கு யமுனைத் துறைவன் என்று பெயரிடுக” எனக் கூறி உய்யங்கொண்டாரையும் குருகைக் காவலப்பனையும் நோக்கி 'உங்களுக்கு நாம் சொன்ன நூற்பொருள்களையும் யோகத்தின் அறம், பொருள் சிறப் புக்களையும் யமுனைத் துறைவனுக்கு ஒதுவீராக” எனக் கூறி மீண்டும் யோகத்தில் அமர்ந்தார்.
ஒரு நாள் நாதமுனிகளின் பெண்கள் அவரிடம் வந்து ” எந்தையிர் இரண்டு வில்லிகள் ஒரு பெண் பிள்ளையுட னும் ஒரு குரங்குடனும் வந்து நாதமுனிகள் எங்கே! எனக்கேட்டுச் சென்றனர்” எனக் கூறினார்கள். அது கேட்டு நாதமுனிகள் “வந்தவர்கள் பெருமானும் பிராட்டியும், இளையப்பெருமானும் ஐந்திர வியாகரண பண்டிதரும்” என எண்ணி அவர்களைக் காணச்சென்றார். செல்லும் வழி எல்லாம் இவ்வழியால் போவோரைக் கண்டீரா? என வினா வியபடியே சென்றார். இப்படியே கங்கை கொண்ட
சோழ புரத்தின் கீழ்வாயில் எல்லையை அடைந்தார்.
இந்துக் கலைக்களஞ்சியம்
 

அங்கும் அவர்களைக் காணாது ஏங்கித் துடித்து கீழே வீழ்ந்தார். அப்படியே அடியார் நிலவுகின்ற வைகுந்தம் அடைந்தார். இச்செய்திகேட்டு உயப்யங்கொண்டார் குருகைக்காவலப்பன், ஈச்சரமுனிகள் ஆகியோர் வந்து நாதமுனிகளின் திருமேனி யைத் தொழுது வணங்கி துயரம் மிக்கவர்களாய் ஈச்சர முனிகளைக் கொண்டு இறுதியில் செய்வதற்குரிய காரியங்களைச் செய்வித்தனர். நாதமுனிகளை திருப்பள்ளிப் படுத்திவிட்டு வந்தனர். நாதமுனிகள் யோகத்தில் ஆழ்ந்து இருந்த இடத்திலேயே குருகைக் காவலம்பன் யோகத்தில் அமர்ந்திருந்தார்.
6)66006 வளர்ச்சிக்கு ஆதாரமாக இருந்து ஆழ்வார்கள் பாடிய திவ்விய பிரபந்தங்களை உலகிற் பரவச்செய்து அவற்றுக்கு இசையமைத்து பெருந்தொண்டாற்றிய நாத முனிகளின் நட்சத்திரம் ஆனி மாதம் அனுஷமாகும். நாதமுனிகளின் சிறப்பை பின்வரும் பாடல் விளக்கு கின்றது.
"ஆனிதனில் அனுடத்தில் அவதரித்தான் வாழியே ஆளவந்தார்க்கு குபதேசம் அருளிவைத்தான் வாழியே பானுதெற்கிற் கண்டவன்சொல் பாவுரைத்தான்வாழியே பராங்குசனார் சொற்பிரபந்தம் பரிந்துகற்றான் வாழியே கானமுறத் தாளத்திற் கண்டுரைத்தான் வாழியே கருணையினால் உபதேசக் கதியளித்தான் வாழியே நானிலத்திற் குருவரையே நாட்டினான் வாழியே நலந்திகழும் நாதமுனி நற்பதங்கள் வாழியே!”
(கு.ஹே.)
TLITe Lldi
நாபாஜி காசியில் வாழ்ந்த ஒரு வைணவ பக்தர் எந்நேர மும் திருமாலின் திருநாமங்களைச் சொல்லிக் கொண்டு அவரது கலியாண குணங்களில் திளைத்து வாழ்ந்தவர். அவரது உண்மையான பக்தியையும், உயிர்கள் மீது உள்ள ஜிவகாருண்ய உணர்வையும் கண்டு களிப்படைந்த பகவான் தனது தரிசனத்தை அவர் வேண்டும் போதெல் லாம் தந்தருளினார்.
ஒரு முறை காசி மாநகரில் பஞ்சம் ஏற்பட்டது. இதனால் மக்கள் எல்லோரும் பசி பட்டினியால் தவித்தார்கள். அங்கு
@šs sauu asaMTsĦTIJ gagaJesöaseis geodeOOTěšēseTiñ

Page 212
வாழ்ந்த ஏழைப் பெண்மணி ஒருவர் தன் மகன் பசியால் துடித்து அழுவதைக் கண்டு சகிக்க முடியாமல் பிள்ளை யை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி ஒரு நதிக்கரையை அடைந்து அங்கோர் இடத்தில் குழந்தையை வைத்துவிட்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டாள்.
ஆற்றங்கரையில் தனியாக விடப்பட்ட குழந்தை, வெய் யில் வெப்பத்தாலும் பசி பொறுக்க முடியாமலும் கதறி அழுதது. அவ்வேளையில் அக்கிரஜதாசர் என்ற திருமால் பக்தர் அவ்விடம் வந்தார். குழந்தையின் நிலை கண்டு மனம் வருந்தி தன்னுடன் எடுத்துச் சென்றார். அந்தக் குழந்தைக்கு நாபாஜி என்று பெயரிட்டுத் தான் தங்கியி ருந்த மடத்தில் குழந்தையை வளர்த்து வந்தார். அக்கிரஜ தாசர் நாள் தோறும் செய்யும் பகவான் பூஜையால் மனம் கவரப்பட்ட நாபாஜியும் தாமும் அவ்வாறே பூஜை செய்ய வேண்டும் என்று பிரியப்பட்டார். மடத்திற்கு வரும் பெரியோர் களை வணங்கியும் அவர்களுக்கு வேண்டிய உதவிக ளைச் செய்தும் மடத்தில் நிகழ்ந்து வந்த பாகவத புராண இதிகாசங்களைக் கேட்டும் வளர்ந்து வந்தார். இதனால் நாளடைவில் அவரது கர்மவினைகள் நீங்கப் பெற்று ஞானி யாக விளங்கினார். உலகின் எந்த மூலையில் நடக்கும் விடயங்களையும் தெளிவாக உணரக்கூடிய ஆற்றலையும் பெற்றார்.
ஒரு முறை நாபாஜியின் குரு அக்கிரஜதாசர் தான் மானச பூஜை செய்யப்போவதாகவும் அந்தப் பூஜைக்கு இடையில் வந்து எவரும் இடையூறு செய்யாதவாறு அந்த அறைக்குக் காவலாளியாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண் டார். ஒவ்வொரு நாளும் அக்கிரஜிதாசரின் மானச பூஜை யின் முடிவில் வந்து காட்சிதரும் பரந்தாமன் அன்றைய தினம் காட்சி தரவில்லை. எவ்வளவு முயன்றும் பகவான் தரிசனம் அக்கிரஜிதாசருக்குக் கிடைக்கவில்லை. மானச பூஜையினின்றும் தன்குரு நீண்டநேரமாக வெளிவரா மல் இருக்கவே அதற்கான காரணத்தை உணர்ந்து கொண்டார் நாபாஜி, அக்கிரஜிதாசர் உரக்கக் கூப்பிட்டு சுவாமி நீங்கள் மேலும் தியானிப்பதால் பயனில்லை. இன்று பக்தன் ஒருவனுடைய கப்பல் அவனது பொருட்களுடன் மூழ்கிக் கொண்டிருக்கின்றது. இவ்வேளையில் அவ்வணி
கன் கப்பலை மூழ்கவிடாமல் காப்பாற்றினால், இப்பொருட்
இந்துக் கலaலக்களஞ்சியம்x
 

களை விற்றுப் பெறும் பணத்தில் ஐந்து ஒரு பங்கு ஏழைகளுக்கும் கரு ணையுள்ளம் கொண்ட அக்கிரிஜதாச ருக்கும் கொடுப்பேன் என்று கூறியுள்ளான். அவனையும் கப்பலையும் காப்பாற்றப் பகவான் சென்றுள்ளார். அதனால் சற்று அமைதியாக இருங்கள் என நாபாஜி கூறினார். சிறிது நேரத்தின்பின் பகவான் கப்பல் மூழ்காதபடி காப்பாற்றி விட்டார். இனி நீங்கள் தியானிக்கலாம் எனக்
கூற குருநாத ரும் சீடன் கூறிய வண்ணமே தியானித்தனர்.
அப்போது பகவான் அக்கிரஜிதாசர் முன் தோன்றித் தரிசனம் கொடுத்தார். இத்தனை நேரம் வருந்தி அழைத்தும் வராத காரணத்தைக் அக்கிரஜிதாசர் வினவியபோது, அதற்குப் பகவான் அன்பனே நான் இப்போதுதான் கடலில் மூழ்கிக் கொண்டிருந்த கப்பலொன்றை மூழ்காதவாறு காப்பாற்றிவிட்டு வந்தேன், அந்தக் கப்பலுக்கு அதிபதியான வணிகன் இங்கு தருவான். கப்பலில் உள்ள பொருள் களை விற்ற தொகையில் ஐந்தில் ஒரு தொகையை உன்னிடம் கொண்டு வந்து வருவான். அதை வைத்து உன் மடத்துக்கு ஆகும் அதிக செலவைச் சமாளித்துக் கொண்டு போகவும். இப்போது செலவு அதிகமாக இருக் காது என்பதால் தான் இந்த நிகழ்ச்சி நிகழ்ந்தது எனக் கூறி மறைந்தார்.
பின்னர் அக்கிரஜிதாசர் நரபாஜியைத் தன் பூஜை அறை யினுள் அழைத்து நான்கு வேதங்களாலும் அறிய முடி யாத பரந்தாமனின் செயலை எவ்வாறு முன்னதாகவே அறிந்துகொண்டாய் என வினவினார். இம்மடத்துக்கு வரும் பெரியார்களைப் போற்றி பணிவிடை செய்ததாலேயே இப் பேறு பெற்றேன் என நாபாஜி கூறினார். ஹரியின் ஆயிரம் நாமங்களைக் கூறுவதைவிட அவன் அடியார்களின் புகழைக் கூறினாலேயே எம்பெருமான் பெரிதும் மகிழ்ச்சிய டைந்து விடுவான் எனக்கூறி அபராஜிதாசர் தன் சீடர் நாபாஜிக்கு உபதேசம் செய்தார். நாபாஜி பக்தர்களுடைய சரித்திரங்களைக் குவாலியர் நாட்டு மொழியாலும் பிரா கிருத மொழியாலும் எல்லோருக்கும் பயன்படும்படி எழுதி பாகவத நெறியின் சிறப்பை பலரும் உணரும்படி செய்தார். (நி.நி)
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்கணம்

Page 213
நாமக்கல்
இது தமிழகத்திலுள்ள ஒரு நகராட்சி ஏறத்தாழ 18.ச.கி.மீ பரப்பளவுள்ள இந்நகரின் நடுவில் நாமக்கல் என்ற ஒரே கல்லாலான குன்றுள்ளது. இக்குன்று நகரத் தைக் கோட்டை என்றும் பேட்டை என்றும் இரண்டாகப் பிரிக்கிறது. மேல்பகுதி கோட்டை, கீழ்ப்பகுதி பேட்டை, புண்ணிய நகரமான நாமக்கல் சமயத்துறையிலும் கலைத்
துறையிலும் பெரும்புகழ் பெற்றுள்ளது.
நாமக்கல் மலையின் மீது கோட்டை ஒன்று உள்ளது. இதனை சேந்தமங்கலம், நாமக்கல் பகுதிகளின் பாளையக் காரரான இராமச்சந்திர நாயக்கர் கட்டினார் எனக்கூறுவர். மைசூர் அரசனின்கீழ்ப் பணியாளாக இருந்த இலட்சுமி நரசிம்மையாவே இதனைக் கட்டினார் என்பாரும் உளர். கர்னல் உடு (Colwood) கி.பி. 1768இல் இக்கோட்டையை ஐதரிடமிருந்து கைப்பற்றி, அதே ஆண்டில் ஐதரிடம் இழந் தார். ஐதர் அலி, திப்பு சுல்தான் ஆட்சிக் காலத்தில் மைசூர் அரசின் சார்பில் ஒருவர் இக்கோட்டையில் அமர்த்தப்பட்டார். பின்னர் இது ஆங்கிலேயர் வசமானது.
காந்தியடிகள் நாமக்கலிற்கு 1933இல் வந்துள்ளார்.
சாளக்கிராம மலை எனவும் வழங்கப்பெறும் நாமகிரியின் அடிவாரத்தில் கமலாலயம் என்னும் புராணப் புகழ்பெற்ற
குளம் உள்ளது.
கருநாடக இசையில் வல்லுநரான பல்லவி நரசிம்ம ஐயங் கார், காந்தியடிகளுடன் விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்ட நாகராச ஐயங்கார் ஆகியோர் நாமக்கல்லிற்குப் பெருமை உண்டாக்கினர். இங்கு கால்நடை மருத்துவ ஆராய்ச்சிக் கல்லூரியும் ஆடவர் அரச கலைக்கல்லூரி ஒன்றும், மகளிர் கல்லூரி அரசு கலைக்கல்லூரி ஒன்றும் நகராட்சிப் பெண்கள் மேனிலைப் பள்ளி ஒன்றும், ஆண்கள் மேனிலைப் பள்ளி இரண்டும் உள்ளன. மாவட்டக் கல்வி அதிகாரி அலுவலகம், மாவட்டப் பொதுநல மையம், நீதிமன் றங்கள், மாவட்டப் பதிவு அலுவலகம் முதலியன உள் ளன. இது 1970இல் நகராட்சியாயிற்று. இதற்கு அனைத்து நகரங்களுடன் பேருந்து வசதித்தொடர்பு உண்டு.
18
 
 

தொல்லியல்: நாமக்கல் மலையில் இரண்டு குடைவரை
கள் உள்ளன. இவை அதியமான் மரபில் தோன்றிய குணசீலன் என்பவனால் அமைக்கப்பட்டவை. தகடுரைத் தலைநகராகக் கொண்டு கொங்கு நாட்டுப் பகுதியை ஆண்டவர்கள் அதியமான் வமிசத்தினர்.
நாமக்கல் மலையிலுள்ள இரண்டு குடைவரைகளும் திருமாலுக்காக எடுக்கப்பட்டவை. நரசிம்மர் குகைக் கோயில் நாமக்கல் மலையின் மேற்குப் பகுதியின் அடிவார த்திலும் பள்ளி கொண்ட பெருமாள் குகைக்கோயில் கிழக்குப் பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டாம் கோயில் மலையின் மேல்பகுதியில் எடுக்கப்பட்டுள்ளதால்
அங்கு செல்லப் படிக்கட்டுக்கள் அமைக்கப்பட்டுள்ள்ன.
நரசிம்மர் குகைக்கோயில் செவ்வக வடிவ அமைப்புடை யது. இக்குடைவரைக்கோயில் அதிட்டானத்தில் உபானம், சகதி, திரிபட்ட குமுதம், கண்டம், பட்டி ஆகியன காணப் படுகின்றன. கருவறையின் முன்பகுதியிற் அர்த்த மண்டபம் ஒன்றும் உள்ளது. இந்த மண்டபத்தில் நான்கு தூண்களும் இரண்டு அரைத் துரண்களும் வடிக்கப்பட்டுள்ளன. இத் தூண்கள் பல்லவர்களின் குடைவரைத் தூண்களைப் போலல்லாமல் தனித்தன்மை பெற்றுக் காணப்படுகின்றன. தூண்களுக்கு மேல் கூடு அமைப்புகள் உள்ளன. இக்கூடு கள் அரைவட்ட அமைப்புடையன. அவற்றின் மத்திய பகுதியில் மனித உருவங்களின் தலைப் பாகங்கள் மட்டும் செதுக்கப்பட்டுள்ளன.
நரசிம்மர் குகைக் கோயிலில் திருமாலின் அவதாரங்கள் புடைப்புச் சிற்பங்களாகக் காணப்படுகின்றன. வைகுண்ட நாராயணன் புடைப்புச் சிற்பம் அர்த்த மண்டபத்தின் இடச் சுவரில் உள்ளது. சுற்றிப் படுத்திருக்கும் பாம்பின்மேல் திருமால் அமர்ந்துள்ளார். பாம்பின் ஐந்து தலை திருமாலுக் குக் குடையாக உள்ளது. நான்கு கரங்களுடன் உள்ள திருமாலின் பின்னிரு கரங்களில் சங்கும் சக்கரமும் முன் வலக்கரத்தில் கடக முத்திரையும் இடக்கரம் தொடைமேல் வைத்திருக்குமாறும் செதுக்கப்பட்டுள்ளன. கீர்த்திமகுடமும் மகர குண்டலமும் உள்ளன. திருமாலுக்குக் கீழ் பாலநர சிம்மர் சிங்க முகத்துடனும் நான்கு கரங்களுடனும் காணப் படுகின்றார். இவருக்கருகில் பிரமன் மூன்று தலையுடனும்
x இந்து சloய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 214
நான்கு கரங்களுடனும் காட்சியளிக்கின்றார். அச்சு மாலை, கமண்டலம், கடக முத்திரை போன்றவற்றுடன் உள்ளார். பிரமனுக்குமேல் சந்திரன் கூப்பிய கரங்களுடன் நிற்கின் றார்.திருமாலின் வலப்புறம் சிவன் நின்ற நிலையிலுள்ளார். சடாமகுடத்துடனும் நான்கு கரங்களுடனும் காட்டப்பட்டுள் ளார். மான், பாம்பு ஆகியன இரு கைகளிலும் கடகமுத் திரை ஒரு கையிலும் உள்ளன. மற்றொரு கை கட்டிய வலம்பித நிலையில் உள்ளது. காதுகளில் பாம்புக் குண்ட லங்கள் உள்ளன. சிவனுக்குமேல் சூரியன் கூப்பிய கரங்க ளுடன் நிற்கின்றார். சிவனுக்குக் கீழ் இரண்டு கரங்களுடன் முட்டியிட்டிருக்கும் நிலையில் மார்க்கண்டேயன் மலருட னும், விசுமய முத்திரையுடனும் காட்டப்பட்டுள்ளான். மார்க் கண்டேயனுக்கு முன் முட்டியிட்டிருக்கும் பெண் பூதேவி யாக இருக்கக் கூடும் என்று கருதப்படுகின்றது. எல்லாச் சிற்பங்களிலும் பூணுால் கைகளின் மேல் ஏறிச்செல்வது
போல் காட்டப்பட்டுள்ளது.
மண்டபத்தின் மற்றொரு பகுதியில் உக்கிர நரசிம்ம மூர்த்தி புடைப்புச் சிற்பமாக உள்ளது. இரணியனை அழிப் பது போன்றுள்ள நரசிம்ம அவதாரத்தில் எட்டுக்கரங்கள் உள்ளன. முன்னிரு கரங்கள் தம் தொடைமேல் படுத்திருக் கும் இரணியனின் வயிற்றைக் கிழிப்பது போன்றும் மற்ற இரு கரங்களில் இரணியனின் தலையும் காலும் உள்ளன வாகவும் அமைந்துள்ளன. பின்னிரு கரங்களில் சங்கும் சக்கரமும் உள்ளன. நரசிம்மாவதாரத்தில் காணப்படுகின்ற சிங்கத்தின் முகம் சாளுக்கிய கலைப்பாணியை ஒத்துக் காணப்படுகின்றது.
குடைவரையின் மையப்பகுதியில் கேவல நரசிம்ம மூர்த்தி புடைப்புச் சிற்பமுள்ளது. சூரியனும் சந்திரனும் சாமரம் வீசுபவர்களாகக் காணப்படுகின்றனர். இடப்பக்கத்தில் சிவனும் வலப்பக்கத்தில் பிரமனும் செதுக்கப்பட்டுள்ளனர். முனிவர்கள் இரண்டு வரிசையில் முன்னர் நிற்பவர்கள்
போல் காட்டப்பட்டுள்ளனர்.
மண்டபத்தின் வலப்பாகத்தில் வராகாவதாரம் உள்ளது. திருமால் இரண்டு கரங்களுடன் கம்பீரமாக வராக அவதாரத்தில் காட்டப்பட்டுள்ளார். ஒரு கையின்மேல்
பூதேவி கூப்பிய கரங்களுடன் அமர்ந்துள்ளார். வராகாவ
 

தாரத்தின் கால்களின் கீழ்ப்பகுதி காட்டப்படவில்லை. ஆதிசேடன் பாம்பு விசுவமய முத்திரையுடன் காணப் படுகின்றது. வராகா வதாரத்தின் தலைக்கு மேல் நான்கு உருவங்கள் காட்டப்பட்டுள்ளன. இவை முனிவர்களாக
இருக்கலாம் என்று கருதுகின்றனர்.
நான்காம் புடைப்புச் சிற்பமாக வலச் சுவரில் வாமனாவ தாரம் உள்ளது. இதில் இரண்டு கருத்துக்கள் ஒன்றாகச் செதுக்கப்பட்டுள்ளன. திருமால் வாமனாவதாரமாகச் சிறிய உருவத்தில் கையில் குடையுடன் காட்டப்பட்டுள்ளார்.ஒரு கையால் மாபலிச் சக்கரவர்த்தியிடமிருந்து கொடையை வாங்குவது போன்று உள்ளது. மாபலிச் சக்கரவர்த்தி நின்ற நிலையில் கையில் உள்ள கெண்டியில் தண்ணி ரைத் தாரை வார்த்துக் கொடுப்பது போன்று காட்டப்பட்டுள் ளது. பலிக்குப் பின்னிருந்து வாமனாவதாரத்தின் உண்மை நிலையை மெதுவாக எடுத்துக்கூறுகின்ற நிலையில் சுக்கிராச்சாரியார் காட்டப்பட்டுள்ளார். இதற்குமேல் குதிரை யின் தலைப்பாகம் மட்டும் உள்ளது. இது அசுவமேத யாகத்தைக் குறிப்பதாகும்.
இரண்டாம் பகுதியாக மாபலிச் சக்கரவர்த்தியிடம் வரம் பெற்று இரண்டாம் அடியாக வானை அளக்கும் காட்சி காட்டப்பட்டுள்ளது மூன்றடி மண்கேட்ட திருமால் திருவிக் கிரம அவதாரமாக வலக்காலைத் தூக்கிய நிலையில் காணப்படுகின்றார். கீர்த்தி மகுடமும் அதற்குமேல் குடை யும் உள்ளன. நான்கு கரங்களில் இரண்டில் சங்கும் சக்கரமும் உள்ளன. கீழ்ப்பகுதியில் திருமாலின் வாகன
மான கருடன் காட்டப்பட்டுள்ளது.
பள்ளி கொண்டுள்ள பெருமாளின் குடைவரைக் கோயில் செவ்வகமாக வடிக்கப்பட்டுள்ளது. இதிலும் கருவறை, மண்டபம் ஆகிய இரு ப்குதிகள் உள்ளன. மண்டபத்தின் முன்பகுதி இப்போது அடைக்கப்பட்டு நுழைவாயிலில் இரண்டு படிக்கட்டுக்கள் காணப்படுகின்றன. திருமால் ஐந்து தலைப் பாம்பின் மேல் பள்ளி கொண்டுள்ளார். இரண்டு கரங்களில் ஒன்று, கடக முத்திரையோடும் மற்றொன்று நீட்டிய நிலையிலும் உள்ளன. இங்குள்ள தூண்களில் கல்வெட்டுக்கள் உள்ளன. இந்தக் கல்வெட்டில் இக்குடை
வரை சயன கிரகம்’ என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த சமய கலாசார அலுவல்கள் தி5ை00க்களம்

Page 215
பள்ளிகொண்டுள்ள திருமாலுக்கருகில் சந்திரன், சூரியன் ஆகியோர் உள்ளனர். திருமாலின் மேல்பாகத்தில் பிரமன் தாமரையில் அமர்ந்துள்ளார். நாரதர் தும்புரு ஆகியோருடன் மார்க்கண்டேயன், கருடன், வருணன், சிவன் போன்றவர்க
ளும் காணப்படுகின்றனர்.
மண்டபத்தின் வடபகுதியில் வாமனாவதாரம் உள்ளது. இதுவும் நரசிம்மர் குடைவரையில் உள்ள வாமனாவதாரம் போன்று காணப்படுகிறது. ஆனால், வாமனாவதாரத் தோற் றத்தில் சிறிய பிள்ளையாக இல்லாமல் முதிர்ந்த பிராமண னாகக் காட்சியளிக்கின்றார். மாபலிச் சக்கரவர்த்தியின் அருகில் காட்டப்பட்ட அவருடைய குரு சுக்கிராச்சாரியார் இல்லை. நரசிம்மர் குடைவரையில் உள்ளது போலவே திருவிக்கிரம அவதாரம் உள்ளது. சங்கரநாராயணன் சிற்ப மும் மண்டபத்தில் உள்ளது. இந்த உருவத்தில் வலப்புறம் சிவனும் இடப்புறம் திருமாலும் காணப்படுகின்றனர். சிவனு க்குரிய பகுதியில் மான், பாம்பு ஆகியன உள்ளன. திரு மாலுக்குரிய பகுதியில் சங்குகொண்டும் கட்டிய வலம்பித முத்திரையிலும் கைகள் உள்ளன. மகர குண்டலம் திருமாலுக்கும் பாம்புக் குண்டலம் சிவனுக்கும் உள்ளன. நின்ற நிலையில் உள்ள சங்கரநாராயணனைச் சுற்றி
ஏழு கந்தருவ உருவங்கள் வடிக்கப்பட்டிருக்கின்றன.
பாலநரசிம்ம புடைப்புச் சிற்பம் சங்கரநாராயணன் சிற்பத்தி ற்கு அருகில் உள்ளது. நான்கு கரங்களுள் இரண்டில் சங்கு, சக்கரம் உள்ளன. மலரினால் செய்யப்பட்ட முப்புரி
நூல் காணப்படுகிறது.
பள்ளி கொண்ட பெருமாள் குடைவரையில் நான்கு கல்வெட்டுக்கள் உள்ளன. தூணில் உள்ள இந்தக் கல் வெட்டுகளில் கிரந்த எழுத்துகளும் வடமொழியும் பயன் படுத்தப்பட்டுள்ளன. ஒரு கல்வெட்டில் இக்குகை அதியந்த விட்டுணுகிரகம்’ என்றுள்ளது. அதியமான் வமிசத்து அரசனால் எடுக்கப்பட்ட திருமால் கோயில் என்பது இதற் குப் பொருள். இரண்டாம் கல்வெட்டு அதியந்தர விட்டுணுக் கிரகம்’ என்று குறிப்பிடுகின்றது. மூன்றாம் கல்வெட்டு சிதைந்துள்ளது. எனினும் அதியர் வமிசத்தைச் சார்ந்த ‘சோமா என்பவரைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. "சோமா என்பது இக் குகைக்கோயிலை எடுத்த குணசீலனின்
@政g556oayé56H@éuá談簽業刻1 8

மற்றொரு பெயர். நான்காம் கல்வெட்டில் சயன கிரகம் என்று பொறிக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் இக்கோயிலை எடுத்த அதியமான் வமிசத்து அரசனான குணசீலனின்
ஒன்பது பட்டப்பெயர்கள் வெட்டப்பட்டுள்ளன.
இக்கல்வெட்டுக்களின் எழுத்தமைதியைக் கொண்டு இக்குகையின் காலத்தைக் கணிக்க முடியவில்லை. எனினும் இந்தக் கல்வெட்டுகள் ஆனைமலை (கி.பி. 770), திருப்பரங்குன்றம் (கி.பி.773) ஆகிய இரு கல்வெட்டு களுக்கு முற்பட்டது என்பது தெரியவருகிறது. பாண்டிய மன்னன் மாறவர்மன், அதியர்களை வென்று (கி.பி.730 765) கொங்கு நாட்டைப் பாண்டியர்களின்கீழ்க் கொண்டு வந்தானென்று கூறப்படுகின்றது. எனவே இக்குகை அதற்கு முன் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது தெளிவாகின் றது. இக்கல்வெட்டுக்கள் பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்மவர்மனின் (கி.பி.695 -722)கல்வெட்டுக்களை ஒத்துக் காணப்படுகின்றன. மேலும் இக்குகையிலுள்ள புடைப்புச் சிற்பங்கள் பல்லவர், சாளுக்கியர்களின் சிற்பக் கலையை ஒத்துக் காணப்படுகின்றன. மேற்கண்டவற்றைக் கொண்டு இக்குடைவரைகள் கி.பி.8ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கணிக்கப்படு
கின்றது. (நன்றி. வாழ்வியல் களஞ்சியம்) (தி.சு.)
ITLOBölgeUUTb
இந்து சமயம் தனி மனித வாழ்விலும் பல சடங்குகளை யும் சம்பிரதாயங்களையும் வகுத்துத் தந்துள்ளது. ஒருவர் பிறப்பதற்கு முன்னும் பிறந்து வாழும்போதும் இறந்த பின்பும் செய்யும் சடங்கு முறைகள் இந்து மக்களின் வாழ்க்கையில் முக்கிய அம்சங்களாக நடைபெற்றுவருகின் றன. இவை வரலாற்று மரபுகளை உள்ளடக்கிய தனித்துவ மான சடங்குகளாக விளங்குகின்றன. இச்சடங்கு முறை களை சங்கிதைகள், சாத்திரங்கள், கிருகசூத்திரம், புராணங்கள் முதலியன விரித்துக் கூறுகின்றன. இவ்வா
றான திருவானைக்கா புராணம் வரிசைப்படுத்தியுள்ளது.
"பூண் இருது சங்கமனம் கருப்பாதானம்
புஞ்சவனம் சீமந்தம் சாதகன்மம்
* இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 216
பேணுமுத்தாபனம் நாமகர்ணம் அன்னப் பிராசனமே பிரவாசம் பிண்டவிரித்தி
கானல் உறுஞ்சவுளம் உபநயனம் காண்டோ
பக்கிரமனாய் காண்ட மோசனஞ்சீர்
மானுஞ்சமாவர்த்தனமே விவாகம் இன்ன
வகுத்த பதினாறுமென மதித்த மன்னோ”
மேற்படி பதினாறு வகையான சடங்குகளில் நாமகரண மும் ஒன்று. குழந்தைக்குப் பெயரிடுவதற்காகச் செய்யும் சடங்கு இதுவாகும். பூமியில் பிறந்த குழந்தை க்கு முதன் முதல் நடத்தப்படும் கிரியை "நாமகரணம்” எனப்படும். ஆசௌசம் அன்று அகற்றப்படும். அன்று வீட்டுப் பொருட் கள், உடைகள் உபயோகிக்கும் பொருட்கள் யாவும் கழுவிச் சுத்தம்செய்தபின் வீட்டிலுள்ளோர் குழந்தை உட்பட யாவரும் தோய்ந்து சுத்தமாகிய பின் அந்தணரை அழைத்து வந்து, புண்ணிய வாசனம் செய்வர். இந்நிகழ்வு நடத்தும் நாட்கள் ஒவ்வொரு வருணத்தினருக்கும் வேறு படும். பிராமணருக்கு பன்னிரண்டாம் நாளும் ஷத்திரிய ருக்கு பதினாறாம் நாளும் வைசிகருக்கு இருபத்தோராம் நாளும் சூத்திரருக்கு முப்பத்தோராம் நாளும் துடக்குக் கழித்து நாமகரணம் எனும் பெயர்சூட்டு வைபவம் இடம்பெறும்.
துடக்குக் கழித்த பின் அந்தணர் குழந்தையின் நட்சத் திரத்தைக் கூறிப் பூசை செய்தபின் தாய்மாமன் அல்லது பெரியவர் ஒருவர் மடியில் குழந்தையை இருத்தி, அதன் பெயரை வலது காதில் மூன்று முறை ஒதிக் கற்கண்டுத் தண்ணீர் பருக்கப்படும். சூழ இருக்கும் சுற்றத்தாருக்கும் இனிப்புப் பானம் வழங்கப்படும். இதன் பொருள் தம்வம் சத்தில் தோன்றியுள்ள குழந்தைக்கு இறைவன் அருளால் பெயரும் வாழ்வும் பிரகாசிக்க வாழவேண்டும் என்பதாகும். இதன்பின் சுற்றத்தார் சொந்தபந்தம் அனைவரும் குழந்தையின் பெயரைக் காதில் ஒதுவார்கள். பெற்றோர், உற்றோர் அனை வரும் குழந்தையின் பெயரை நிறைந்த மனதுடன் அழைத்து மகிழ்வார்கள். குழந்தை அன்று எல்லோராலும் அழைக்கப்பட்டு அப்பெயருக்கு உரிமை பெறுகின்றது. இந்நிகழ்ச் சியே நாமகரணம் எனப்படும்.
நாமகரணம் சூட்டும் இந்நாளில் அரைஞாண் கட்டுதல்,

8
பஞ்சாயுதம் கோர்த்த சங்கிலி, பஞ்சலோகத்திலான காப்பு, காற்சங்கிலி போன்றவையும் குழந்தைக்கு அணிவார்கள். முற்காலங்களில் மூதாதையர்களின் பெயர்களையும் தெய் வங்களின் பெயர்களையும் குழந்தைகளுக்குச் சூட்டினார் கள். தற்காலத்தில் எண்சோதிடத்தை மூலமாகக் கொண்டு பெயர்கள் சூட்டப்படுகிறது. அத்துடன் அதற்கென சடங்கு ஒன்று இல்லாமலே அரசினது பதிவுத் தேவை காரணமாக குழந்தை பிறந்து சில நாட்களுக்குள் பெயர் சூட்டப்படுகி றது. பெயர் சூட்டும்போது உயிர் எழுத்துக்களில் ஒன்றை முதல் எழுத்தாகக் கொண்டு பெயர் அமைப்பது சிறப்புக் குரியது எனக் கருதப்படுகிறது. (கு.ஹே)
TLošību (I27o - I3so)
இவர் இந்துமத ஞானியருள் ஒருவர். பக்திமார்க்கக் கவிஞர், வடநாட்டு பக்தி இயக்கத்தின் வீறார்ந்த சமயப் பணிக்கு நல்லதொரு அடையாளமாக விளங்குபவர். மகாராஷ்டிரத்தைச் சார்ந்த பக்திமார்க்கக் கவிஞர்களுள் முதன்மையானவராகக் கருதப்படுபவர். சீக்கிய மதஸ் தாபகரான குரு நானக் இறைநாம சங்கீர்த்தனம் பற்றிய மகிமை உணர்வை இவர் வாயிலாகவே பெற்றுக்கொண்டார் எனப்படுகிறது. அன்றியும் சீக்கியர்களின் ஆதி கிரந்தத்தில் நாமதேவரின் பாடல்களும் இடம்பெற்றுள்ளன.
நாமதேவர் நீண்ட ஆயுளைக் கொண்டவராய் இளம்பரா யம் முதல் இறுதிக்காலம் வரையில் தம் இவஷ்ட தெய்வ மான விட்டலனின் புகழ்பாடி அவன் திருநாமத்தைச் சங்கீர்த் தனம் செய்வதையே விரதமாய்க் கொண்டொழுகினார்.
நாமதேவன் என்ற அவரது பெயரே நாமசங்கீர்த்தனத் துக்கு அவர் கொடுத்த முக்கியத்துவத்தை உணர்த்துவ தாம். நாமதேவன் என்ற தொடரை இரு பெயரொட்டுப் பண்புத்தொகைத் தொடர் போன்று நாமமாகியதேவன்
என்று பொருள் கொள்வர்.
இறைநாமத்தின் மகிமையை நாமதேவரளவுக்குச் சிறப்பா கவும் அதிகமாகவும் வேறு எந்தப் பக்திமார்க்க கவிஞர்க ளும் பாடியிருப்பார்களா என்று அறிஞர்கள் வியந்துரைக்கும் அளவுக்கு நாமதேவர் நாமத்தின் மகிமையைப் பாடுகிறார்.
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 217
நாமத்தில் நாராயணன் உள்ளான்
பக்தர் வசப்பட்டவன் அவன் பக்தியை நீ வேண்டாதே நாமத்திலேயே நால்வகை முத்தியும் உள்ளது நாமத்தை மறவாதே! அதுதான் சுவர்க்கத்தின் சின்னம் நாமத்தை எவர் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்களோ நாராயணனை அடைந்து அவனாகவே ஆகிவிடுவர் (788)
இறைவனின் திருநாமத்தை ஜபிப்பவனை யமனும் முன்வந்து வணங்குகிறான். காலமும் அவன் முன்னே அடிபணிகிறது நாமம்தான் மிகச் சிறந்தது. உயர்வானது. நாம ஸ்மரணை செய்தால் அது சுவர்க்கத்திலும் எதிரொலிக்கிறது. நாமத்தின் மகிமையை எடுத்துரைக்க. பிரம்மனே முன்வந்தார், எனினும் ஆதியோ அந்தமோ உவமையோ தோன்றவில்லை, அவருக்கு. நாமா சொல்லுகிறான். நாமத்தைக் கூறு, நாம வழியிலே செல்லு, விட்டல ஹரி தோன்றுவான் உன்முன்னே. (891)
உன் முத்தியும் வேண்டேன் உன் பக்தியும் வேண்டேன் எனக்கு அமைதியை அளிப்பது வேறொன்று எனக்குப் புரிந்துவிட்டது. நான் புரிந்துகொண்டு விட்டேன். அன்பின் சுகத்தை நான் அறிந்துவிட்டேன். உன்னை நான் தியானிப்பதில்லை. பிரம்ம ஞானமும்
எனக்கில்லை.
என்னிடமுள்ள பொருள் வேறு. உன்னை நான் துதிப்பதில்லை. உண்புகழ் பாடுவதில்லை, நான் கொண்டுள்ளது வேறொரு பக்தி காயக்கிலேசம் செய்யவில்லை. நான் புலன்களை அடக்கவுமில்லை. எனக்குக் கிட்டியுள்ள ஞானம் அது வேறொன்று. நாமா சொல்லுகிறான், நிர்மலமான உள்ளத்துடன் நான் பாடுகிறேன் உன் திருநாமத்தை, நானே தேடிக்கொண்டே உன்னை வந்தடைந்துவிடுவேன் (1222)
பக்தனுக்கும் இறைவனுக்கும் இடையில் இறைவனின்
@fgä5abaDä5eT@9Lá餐綠189

திருநாமமே யாவுமாகும். இறைவனை அடைவதற்கான சாதனம் அதுவொன்றே என்பதையே நாமதேவர் எங்கும் வலியுறுத்துகின்றார். அந்த உண்மையை மேலும் வலியுறுத் தும் வகையில் அமைகிறது, அவர் பாடல்தோறும் அவற் றின் இறுதியில் சுமந்துவரும் நாமா சொல்லுகிறான்’ என் னும் கூற்றாகும். எனினும் உண்மையில் அது அவரது முத்திரையாய் அமைவதாகும். நாயன்மார்களும் ஆழ்வார்க ளுமாகிய தென்னாட்டு பக்தி மார்க்கக் கவிஞர்கள் தம் பதிகம் தோறும் இறுதியில் அமைத்துக்கொள்ளும் முத்திரைகளை ஒத்ததே அதுவென்பது கண்டு உணரத் தக்கது.
நாமதேவரின் வாழ்க்கை விவரங்கள் பல நூல்களிலும் மாறுபட்டனவாகக் காணப்படினும் அறிஞர்கள் அம்முரண் பாடுகளுக்கு மத்தியிலும் சில உடன்பாடுகளுக்கு வருகின் றார்கள். அந்த வகையில் நாமதேவர் 1270 அக்டோபர் 26ஆம் திகதி பண்டரிபுரத்தில் பிறந்தார். அவருடைய தந்தை தாமாஷேட் ஷிம்பி என்பவர். தாய், கோணாபாய், இருவரும் பர்பணி மாவட்டம் சார்ந்த நரசிகானமி என்னும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். எனினும் நாமதேவர் பிறப்பதற்கு முன்பாகவே பண்டரிபுரத்தில் குடி யேறிவிட்டார்கள். கோணாபாய் பண்டரிபுரத்து விட்டலனிடம் செய்த வேண்டுதலால் நாமதேவர் பிறந்தார். சில நூல்கள் நாமதேவரை "அயோனி ஜன்மா’ என்றும் குறிப்பிடுகின்றன. ஒரு தாயின் யோனி வழி ஜனிக்காதவர் என்பது அதன் பொருள். நாமதேவரின் பெற்றோர் பகீரதி நதியில் மிதந்து வந்த ஒரு சிப்பியின் உள்ளேயிருந்து நாமதேவரைக் குழந்தை நிலையில் கண்டெடுத்தனர் என்றும் கதை உண்டு. குலப் பெயரான ஷிம்பி என்பதற்கும் சிம்பி (சிப்பி) என்ற பொருட்பெயருக்கும் இடையிலான ஒலியொப்புமை யால் மேற்படி கற்பனை தோன்றியிருக்கலாம். எவ்வாறாயி னும் பல பாடல்களின் அகச்சான்றுகளின்படி நாமதேவர், கோணாயியின் வயிற்றில் உதயமானவர் என்பது புலனா கின்றது என்று அறிஞர்கள் உரைப்பர்.
இறையுணர்வு மிக்க குடும்பமொன்றில் பிறந்த நாமதேவர் தாமும் சிறுவயதுமுதலே இறைபக்தி உடையவராகவே வளர்ந்தார். தம் குலதெய்வமான விட்டலனின் திருநாமத் தின்பால் அளவற்ற ஈடுபாடு கொண்டிருந்தார்.
Gigi sinu I BarreHTIJ saia esei geoecorăsemă

Page 218
நாமதேவருக்கு பதினோராவது வயதில் திருமணம் நடை பெற்றது. கோவிந்தஷெட்டி சதாவர்த்தி என்பவரின் புத்திரி யான ராஜாபாய் என்பவள் அவருக்கு மனைவியானாள். நாமதேவர் இல்லறவாழ்வில் புகுந்தாராயினும் அவர் மனம் அதில் அதிகம் இலயிக்கவில்லை. தமது பரம்பரைத் தொழிலான தையல் தொழிலிலும் ஈடுபாடுகாட்டினாரில்லை. கையிலே தாளமும் நாவிலே விட்டலனின் நாமமுமாக இரவுபகலாக பண்டரிபுரத்து ஆலயத்திலே பஜனையி லேயே இலயித்திருந்தார். அவரது பரவசநிலையைப் பித்த நிலையாகக் கருதிக்கொண்ட குடும்பத்தவர்கள் பித்தம் தெளிவிக்கப் பாடுபடலானார்கள். ஆனால் அவரது பக்திப் பரவசம் அதிகரிக்கவே செய்தது. நாமதேவர் இத்தகைய தனது வாழ்க்கைச் செய்தியைத் தமது பாடலொன்றிலும் புலப்படுத்தியுள்ளார். மராத்தியிலான அப்பாடலின் தமிழாக் கம் மேலே வருகின்றது.
(மராத்தி மொழியில் 'சதாவழிவி’ என்ற பதத்துக்கு 'சிவபிரான் என்றும் 'எப்பொழுதும் தைத்துக் கொண்டிருப்ப வன்’ என்றும் இருவேறு பொருள்கள் உண்டு)
வழிம்பி குலத்தில் நான் பிறந்தேன் ஆனால் மனம் லயித்ததோ சதாசிவனிடம் இரவிலும் தைக்கிறேன், பகலிலும் தைக்கிறேன் மனிதப்பிறவி எடுத்த எனக்கு வேலையில்லை வேறு. ஊசி நூல், கத்தரி, கஜக்கோல் இவைதான். ஆனால் எண்ணமெல்லாம் சதாசிவனிடம் நாமா சொல்லுகிறான் சிவனிடம்தான் விடோபாவும்
вә 6ії6тт6ӧї. இதனை அறிந்தால்தான் உலகில் நான் தன்யனானேன். (966)
நாமதேவருக்கு நான்கு ஆண் பிள்ளைகள் பிறந்தனர். நால்வருக்கும் திருமணமாகி மருமக்களும் நால்வர் வீட்டு க்கு வந்தனர். நாமதேவர் அவரது தாய் தந்தையார் மனைவி, ஆண் மக்கள் நால்வர், மருமக்கள் நால்வர். லிம்பாயி என்ற மகள், அவுதாயி என்ற சகோதரி, பணிப் பெண் ஜனா என்று மொத்தம் பதினைந்து உறுப்பினர்க ளைக் கொண்ட பெரிய குடும்பம் நாமதேவருடையது.
இந்துக் கலைக்களஞ்சியம்x
 

நாமதேவர், குடும்பத்தின் அதிருப்திக்கு ஆளானவராய் பக்தியென்னும் நெறியில் மேன்மேலும் முன்னேறிச் செல்ல லானார். குடும்பத்தின்மேலான ஈடுபாடு வரவரக் குறைந் தது. ஆனால் பக்தியென்னும் மற்றோருலகம் விரிந்து பரந்து வளர்ந்தது. அவ்வுலகம் இறைவனையும் இறையடி யார்களையுமே கொண்டமைந்ததொரு தெய்விக உலக மாம். அவ்வுலகில் நாமதேவர் தம் சமகாலத்தவர்களான ஞானிகள் பலரோடும் தொடர்புபடலானார். அவ்வாறான ஞானியருள் பிரதானமானவராக ஞானதேவரைக் குறிப்பிட
6TD.
ஞானதேவர், அவரது சகோதரர்களும் அவரையொத்த ஞானிகளாய் விளங்கியவர்களுமான நிவிருத்தி, சோமான், முத்தாபாய் என்போருடன் இன்றைய பூனே நகருக்கு அருகே விளங்கிய ஆனந்தி என்னும் இடத்தில் துறவு நிலையில் வாழ்ந்து வந்தார். ஞானியர்களாகிய அந்நால் வரின் பெரும்புகழ் நாமதேவரின் காதுக்கு எட்டியது. அவர் களைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் உந்தப் பெற்றவ ராக ஆனந்திக்கு வந்தார் நாமதேவர். அங்கே அவர் முதலில் நிவிருத்திநாதரைக் கண்டார்.
அச்சந்திப்புப் பற்றி நாமதேவர் தமது பாடலொன்றில் மேல்வருமாறு கூறுகின்றார்.
நிவிருத்தி எழுந்துவந்தார். பக்தனைத் தரிசிக்க வந்தார். பண்டரியின் அன்பே உருவெடுத்து தனைநாடி வந்ததென வலம் வந்தார், திருவடியில் பணிந்து நின்றார். நாமதேவன் தன்னகத்திலே செருக்குற்றான் தெய்வத்துடன் நாம் இணைபிரியாது உள்ளோம் நம்மைப் பணிவது இவர்களது கடமை ஹரியின் சரணங்களை விட்டு நாம் அகலுவதில்லை. தெய்வமும் பக்தர்களும் போன்ற உறவுதான் இவர்களுக்கும் நமக்குமுள்ள உறவு பரபிரம்மமே என்னுள்ளே குடிகொண்டுள்ளது நாமதேவன் சொல்லுகிறான் நானெப்படிப் பணிவது இவர்களின் பாதங்களிலே! (1057)
நிவிர்த்தி நாதர் தம்மைப் பணிந்ததைக் கண்டதும் தமக்கு அகந்தை உண்டாவதை மேற்படி பாடலிலே நாம
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்கணம்

Page 219
தேவர் தெரிவிக்கின்றார். அவ்வகந்தையால் ஒரு ஞானி மற்றொரு ஞானிக்குக் கொடுக்கவேண்டிய மரியாதையைக் கொடுக்கத் தவறினார் நாமதேவர்.
நிவிர்த்தி நாதரையடுத்து ஞானேஸ்வரர், நாமதேவரை வணங்கலானார். நாமதேவர் ஞானேஸ்வரருக்கும் பதில் வணக்கம் தெரிவித்தாரில்லை. ஞானதேவரைவிட நாம தேவர் ஐந்து வயதால் மூத்தவர். அதனால் அவரது வணக்கம் நாமதேவருக்கு மூத்தோரை இளையோர் வணங் குவது போன்ற இயல்பான நடைமுறையாகப் பட்டிருக்க வும் இடமுண்டு. ஞானதேவர் தம்மை வணங்கும்போது தமக்கு ஏற்பட்ட மனஉணர்வைப் புலப்படுத்துகிறார் நாம தேவர்.
ஞானதேவன் எழுந்தான். அவன் வணங்கிநின்றான். காலடியில் சிரம்வைத்து வணங்கி நின்றான். நாமா சொல்லு கிறான், நான் வயதில் மூத்தவன். இதனால் வணங்குவதற்குத் தகுதியுள்ளவன். அல்லும் பகலும் தெய்வத்துடன் இருப்பவன் நான். வந்தேன் இங்கு, வணங்குகின்றனர் யாவரும். வைணவனின் பாதத்தைத் தாங்குபவர்கள் தேவர்கள். பண்டரிநாதனின் தாளடியிலே சரணம், சரணம் நாமா கூறுகிறான். சாதுக்களின் சங்கத்தைக் கண்டு வனமாலியும் மெய்மறந்து ஆனந்தக் கண்ணிர்
பெருக்குகின்றாள்.
நிவிருத்திநாதர், ஞானதேவர் என்னும் தன்னிரு மூத்த சகோதரர்களையடுத்து அவர்களைப் போலவே நாம தேவரை வணங்கினார் சோமான்தேவ். அவருக்கும் நாம தேவர் பதில் வணக்கம் செலுத்தினாரில்லை. இவற்றை யெல்லாம் அவதானித்துக் கொண்டிருந்தார் இவர்களின் இளைய சகோதரியாகிய முத்தாபாய். தமது மூத்த சகோத ரர்களுக்கு நாமதேவர் பதில் வணக்கம் செலுத்தாதது முத்தாபாயை உறுத்தியது. எதையும் வெளிப்படையாகப் பேசும் சுபாவம் கொண்டவரான முத்தாபாய் மேல்வருமாறு கூறினார்.
எவருக்கு இறைவனின் எல்லையற்ற அருள் உள்ளதோ
அவர்தம் அகங்காரம் ஏன் அழியவில்லை?
 

l
பொறாமையையும் துவேஷத்தையும் வளர்ப்பனவன்றோ மானம், அவமானம் என்னும் உணர்ச்சிகள் வெளிச்சம் இருக்கையில் விளக்கெதற்குக் கையில்? நித்தமும் பரப்பிரமத்துடன் திருவிளையாட்டு பின் குருடனுக்குப் பார்வை வேண்டும் என ஏன் ஆசை? கற்பக தருவின் நிழலிலே கிட்டுகிறது வேண்டுவதெல்லாம் எனக் கூறுபவனின் கரத்திலே தரித்திரனின் திருவோடு எதற்கு? வீட்டிலே காமதேனு கட்டியிருக்க, தயிர்வாங்கச் செல்லும் பித்தனும் உண்டோ இவ்வுலகில்? முத்தாபாய் சொல்லுகிறாள் நான் தரிசிக்கச் செல்ல
LDT1 (8-6or
விட்டொழிக்கட்டும் கர்வத்தை முதலில் (1061)
முத்தாபாய் நாமதேவருக்கு மரியாதை செலுத்தத் தயா ராயில்லை என்பதைக் கண்ட தமையன், நாமதேவனின் பக்திச் சிறப்பை எடுத்துரைத்தார். ஆனால் முத்தாபாய் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. நாமதேவர் எவ்வளவு பெரிய பக்தராக இருப்பினும் அவருக்கு இன்னும் மெய்ஞ் ஞானம் ஏற்படவில்லை என்பது முத்தாபாயின் கருத்து. நாமதேவர் எல்லோருக்கும் பண்டரியின் மகிமையை எடுத் துரைக்கின்றார் எனினும் அவரது அகத்திலே கடுகளவுகூட மெய்ஞ்ஞானம் ஏற்படவில்லை. இவ்விடயத்தில் நாம தேவரின் நிலை சாங்கதேவனின் நிலையை ஒத்ததே என்பது முத்தாபாயின் கருத்தாயிருந்தது.
சாங்கதேவன் என்பவன் ஒரு வருடயோகியாக இருந்த வன். நாமதேவரைப் போலவே இவனும் ஞானதேவரின் புகழைக் கேள்வியுற்று அவருக்கு ஒரு கடிதம் எழுதக் கருதினான். ஆனால் அக்கடிதத்தை எழுதுகையில் அவரை மரியாதையாக விளிப்பதா இல்லையா என்ற தயக்கத்தால் எதுவித விளிப்புச் சொல்லும் இல்லாமலே வெறும் கடிதத்தை அனுப்பினான். இத்தனை யோக சக்தி களை அடைந்த பின்பும் சாங்கதேவன். வெறுமை யாகிவிட் டான்' என்று அச்சமயம் முத்தாபாய் ஏசினார். ஞானதேவர் சாங்கதேவனின் கர்வத்தை அடக்கி அவனுக்கு அத்வைத ஞானத்தை அருளினார். இது "சாங்கதேவ பாசஷடி (65 விஷயங்கள்) என்ற பெயரில் பிரசித்தி பெற்ற ஒரு நூலா
談@政函 gou 5aT5T可gguaJ656前gleoacoräsemá

Page 220
கும். முத்தாபாயும் சாங்க தேவனைத் தனது சீடனாக ஏற்று உபதேசம் அருளினார்.
நாமதேவனிடமும் சாங்கதேவனையொத்த ஒரு கர்வம் இருப்பதை உணர்த்தி அதனை அடக்க வேண்டும் என்ற தன் கருத்தைச் சகோதரர்களிடம் வலியுறுத்தி அவர்களை ஏற்றுக் கொள்ளச் செய்தார். நால்வரும் கலந்தாலோசித்த தன்படி நாமதேவரின் ஆணவத்தை அடக்கும் பொறுப்பு இன்றைய உஸ்மானபாத் பிரதேசத்திலுள்ள தேர்டோகி என்னும் கிராமத்தில் வசித்த பக்தரான கோராகும்பரிடம்
ஒப்படைக்கப்பட்டது.
அக்காலத்தில் மகாராஷ்டிரத்தில் வாழ்ந்து வந்த பெரு மைக்குரிய பக்தர்கள் பலருள்ளும் மிகவும் மதிக்கப்பட்ட வர் கோராகும்பர். அவர் ஒரு மட்பாண்டக் கலைஞர். தட் டிப்பார்த்து அவற்றைத் தரநிருணயம் செய்யும் கோராகும் பரிடம் இருந்த அனுபவம் என்னும் தட்டுக் கோலினால் அவர் நாமதேவரைத் தரநிர்ணயம் செய்வார் என்ற நம்பிக் கையில் அவரை ஆனந்திக்கு அழைத்து வந்தனர். கோரா கும்பர் அங்கு குழுமியிருந்த சாதுக்களை ஒவ்வொருவரா கத் தமது தட்டுக்கோலினால் தட்டினார். எல்லோரும் அடியைத் தாங்கிக் கொண்டு தங்கள் ஞானவைராக் கியத்தை வெளிப்படுத்தினர். நாமதேவரின் முறை வந்தது. அந்நிலையில் நாமதேவரின் மனநிலை எவ்வாறிருந்தது என்பதை அவரே கூறுகிறார்.
கலக்கமடைந்தவனாய் ஓலமிடுகிறான்
தோழா எனக்கென்று எவருமே இல்லையடா’ வைராக்கியம் என்னும் உரைகல்லின் அடியைத் தாங்க இயலவில்லை அவனால் பின்னுக்கு இழுக்கிறான் காலை, பாய்ந்தோட உள்ளத்திலே அச்சம் மூண்டெழுந்தது யுகம் எனக் கழிந்தது ஒவ்வொரு கணமும் நாமா சொல்லுகிறான் இனி ஓடிவிடலாம் இங்கிருந்து, சாதுக்களின் கூட்டமன்றோ இது நெருப்பிலும் போட்டுப் பொசுக்கி விடுவார்கள்
அங்கிருந்த சாதுக்கள் எவரிடமும் முறையிடாமல் ஆனந் தியை விட்டகன்றார் நாமதேவர். இந்திராயணி ஆற்றைக்
 

2
கடந்து விரைந்து சென்று பண்டரிபுரத்தை அடைந்தார். விட்டலனின் திருவுருச் சிலையை நெஞ்சோடு அணைத்த படி முறையிட்டார்.
நிவிருத்தியின் கைகளிலே என்னைக் கொடுத்துவிடாதே ஞானதேவனும் சோபானும் எனை வெறுமையாக்கி விட்டனர் முட்டாள் கிழவன் (கோராபா) நெருப்பாகிவிட்டான் முத்தாபாயி மூட்டிவிட்ட நெருப்பு இது சாதுக்களின் கூட்டம் இது கபடம் நிறைந்தது நாமா சொல்லுகின்றான் நல்லவேளை வந்துவிட்டேன்
இங்கு இல்லையெனில் அழிந்திருப்பேன் அங்கு முழுமையாக
(1080)
கோராபாவின் பரீட்சையில் நாமதேவர் தேறவில்லை. ஆனால் பண்டரிபுரம் திரும்பியதும் அவர் இது பற்றி ஆழ்ந்து சிந்திக்கலானார். தம்மிடமிருந்த குறைபாடு மெல்ல மெல்ல அவருக்குப் புலனாகத் தொடங்கியது.
சாதுக்களின் பராமுகமாகி அறியாமையில்
உழல்பவனுக்கு இகலோகம், பரலோகம் எங்கும் இடமில்லைகாண் பித்தனவன் சாதுக்களைப் பின்பற்றவில்லை விழிகளிலே அஞ்ஞானத்தின் மயக்கமது. அன்புடன் தன்னையே தட்டிக் கொடுத்துக் கொண்டேன் நல்லவர்கள் நயம்பட உரைத்தது கசந்தது கைக் கெட்டிய பயனையெல்லாம் இழந்துவிட்டேன் பிரமையிழந்து முட்டாளாகிப் போய்விட்டேன் மோகமெனும் சர்ப்பம் அங்கமெல்லாம் விரவி நின்றது பாண்டுரங்கா’ என இனிக் கூவி அழைப்பதனால் என்ன
Lju j6di? (1087)
குருவருள் இல்லாமல் இறைவனை அடைவதென்பது
இயலாத காரியம் என்பது நாமதேவருக்குத் தெளிவாகி யது. இறைவன் உணர்த்தியபடி நாமதேவர் ஆவன்டயா நாகநாத்தைச் சேர்ந்த துறவி விசோபாகேசரை நாடிச் சென்றார். நாகநாத் என்பது பன்னிரு ஜோதிலிங்கத் தலங் களுள் ஒன்றாகும். அங்குதான் நாமதேவர் விசோபாகேச
後絲@因5ou samgngggaueD5c前geooorä5emá

Page 221
ரைச் தரிசித்தார். ஆனால் அதிர்ச்சியைத் தரத்தக்க ஒரு நில்ையிலேயே அவரைத் தரிசித்தார். சிவலிங்கத்தின் பலிபீடத்தில் காலை நீட்டிக் கொண்டு உறங்கும் நிலை யிலே அவரைக் கண்டார். தம் குருவாக நம்பிவந்தவரை இந்நிலையில் கண்டதும் நாமதேவர் திடுக்கிட்டார். விசோபாகேசரை நோக்கி நாமதேவர் கூறலானார்.
எழுந்திரு எழுந்திரப்பா! நீ என்ன குருடனா? தெய்வத்தின்மீது காலை வைத்திருக்கிறாயே!” விசோபாகேசர் நாமதேவரிடம் கூறினார். என் உயிரை ஏன் எழுப்பினாய்? எந்த இடம் இறைவனிறியுள்ளது? சிந்தித்துப் பார் நாமதேவா! எங்கு தெய்வமில்லையோ! அங்கு எனது காலை
எடுத்துவை. இதன் பொருளைப் பூரணமாக உணர்ந்துகொள்! நாமதேவர் சுற்றுமுற்றும் பார்த்தார். என்ன தெரிந்தது? சுற்றும் முற்றும் பார்த்தான் நாமதேவன் இங்கும் அங்கும் எங்கும் இறைவன்! இறைவன் இல்லாத இடமேயில்லை. (1098)
விசோபாகேசரின் சந்நிதானத்தில் நாமதேவருக்கு ஞானம் பிறந்தது. குரு சீடனுக்கு உபதேசிக்கலானார்.
நாமமும் ரூபமும் அற்றது எதுவோ இறைவன் அதுவே. மற்றைய யாவும் பொய். நீரிலும் நிலத்திலும் கல்லிலும் பிண்டத்திலும் பிரம்மாண்டத்திலும் அணுவிலும் துளியிலும் யாவற்றிலும் நீக்கமற நிறைந்தவன் அவனே. இதனைப் புரிந்தறிந்து கொள்! உன்னை நீயே உணர்ந்துகொள் கேசர் உரைக்கின்றான் காதுகளிலே கூறுகின்றான் எங்கும் இறைவனே காண் சிரத்தின்மீது கரத்தை வைத்தான் பிரம்ம ஜீவபேதத்தை விலக்கினான்.
விசோபாகேசர் நாமதேவரை பிரம்மஸ்வரூபமாக்கி விட்
 

டார். நாமதேவர் குருட்டுத்தனமான பக்தியிலிருந்து விடுபட்டு ஞானம் பெற்றார். குருவிடமிருந்து தமக்கு ஞானம் கிட்டியது குறித்த நன்றியுணர்வினைப் பலவாறு புலப்படுத் துகிறார் நாமதேவர்.
சற்குரு நாயகன் அவன் பேரருள் காட்டியுள்ளான் எனக்கு உற்றது எதுவென எனக்கு அவன்
காட்டிவிட்டான் எனது இன்பத்தை எனக்கு அவன் காட்டிவிட்டான் அன்பென்னும் கலையை நாமம் என்னும் முத்திரையைக்
காட்டிவிட்டான்.
இந்நன்றிக் கடன் என்னும் சுமையை எப்படி இறக்குவேன் யான்!
இனிப்பிறவித் துன்பம் இன்றி எனக்கு அருள்
செய்துவிட்டான் நாமா உரைக்கிறான் நல்வழி காட்டிவிட்டான்
விசோபாவின் திருவடியை என்றென்றும் நான் மறவேன்
குருவால் உணர்த்தப்பட்ட பிரம்மஞானம் நாமதேவரின் உள்ளத்தில் எந்த அளவுக்கு ஆழப் பதிந்துள்ள்து என்ப தைக் காண்பதற்காக பலமுறையும் அவர் சோதனைக் குள்ளாக்கப்பட்டார். ஒரு முறை அவர் உணவருந்திக் கொண்டிருந்தவேளை அவரது தட்டிலிருந்த ரொட்டியை நாயொன்று எடுத்துக் கொண்டோடியது. எல்லா உயிர்களி லும் இறைவனே உறைந்துள்ளான் என்ற உணர்வினரான நாமதேவர் வெறும் ரொட்டியைச் சாப்பிடாதே உனக்கு வயிற்றை வலிக்கும், ரொட்டியுடன் இந்த நெய்யையும் சேர்த்துச் சாப்பிடு என்று கூறிக்கொண்டே நாயின் பின்னால்
ஓடியதாக ஒரு கதை வழங்குகின்றது.
ஆடுவோம் பாடுவோம் நாமசங்கீர்த்தனம் ஞானம் என்னும் தீபத்தை ஏற்றுவோம் உலகத்தில் வீடு பேற்றினை அடைந்து என்றென்றும் வாழ்வோம் யாவர்க்கும் உறைவிடமான அதுவே எனது
ஸ்வரூபமாகும்.
யாவும் வந்துவிட்டது கைக்குள் பெரும் வள்ளல் அவன்
நாமதேவனின் கேசர் அவன் யாவுமே அவனருள்.
8 ( 8ഥu 56Te] gളഖങ്കീ ടിഞ്ഞ്ടങ്ങി

Page 222
தீர்த்தயாத்திரை
ஞானதேவர் முதலான சாதுக்களின் கூட்டத்தில் ஒருவ ராக சுமார் ஏழாண்டுகள் கூடிவாழ்ந்தார் நாமதேவர். இக்கால த்தில் மகாராஷ்டிரப் பிரதேசமெங்கனும் ஞானதேவரின் உபதேச மொழிகளும் நாமதேவரின் நாமசங்கீர்த்தனமும் எதிரொலித்தவண்ணமிருந்தன. ஒரு முறை நாமதேவரைச் சந்திக்கப் பண்டரிபுரம் வந்திருந்தார் ஞானதேவர். அக்கால த்தில் பண்டரிநாதரின் திருவடிதான் சகல புண்ணிய தலங் களும் தீர்த்தங்களும் சகலமும் என்று எண்ணியிருந்த நாமதேவரின் பக்தி வைராக்கியம் ஞானதேவருக்கு அவர் பால் மிக்க பெருமதிப்பைத் தோற்றுவித்தது. நாமதேவரின் அவ் வைராக்கிய சித்தத்தை அவரிடமே பாராட்டிப் பேசினார் ஞானதேவர். ஆனால் நாமதேவரோ தனக்குள்ளே ஆழ்ந்து சிந்தித்தார். பரப்பிரம்ம சொரூபியான ஞானதேவர் தமது சற்சங்கத்திலே எமக்கும் இடம் தந்து எம்மைக் கெளரவப் படுத்தியுள்ளார் என்று பெருமிதம் கொண்டார். இறைவனும் நாமதேவரிடம் தீர்த்தயாத்திரையில் ஈடுபடுமாறு பணித்தான். ஞானதேவரிடமும் இறைவன் தனக்கும் நாமதேவருக்கும் இடையிலான ஆன்மீகத் தொடர்பை வெளிப்படுத்தினான். ஞானரூபமான தேவரும் நாமரூபமான தேவரும் இணைந்து பத்தர்குழாத்துடன் தீர்த்தயாத்திரை மேற்கொள்ளலாயினர்.
கைத்தாளமும் மிருதங்கமும் வீணையும்
ஸ"ஸ்வரங்களை எழுப்ப நாதஓலி அலைகள் விண்ணிலும் மண்ணிலும்
எதிரொலிக்க தாளமிடும் கர ஒசை விண்ணெங்கும் விரவிநிற்க எல்லையற்ற விண்ணுலகமே இழிந்துவந்தது காண்.
சாதுக்கள் குழாத்துடன் தாம் புரிந்த தீர்த்த யாத்திரை யின் அனுபவங்களை தீர்த்தாவளி என்ற பாடற்தொகுதி யில் நாமதேவர் நன்கு புலப்படுத்தியுள்ளார்.
அற்புதங்கள்
நாமதேவர். ஞானதேவருடன் கூடித் தீர்த்த யாத்திரை
மேற்கொள்ளத் தொடங்கும் வரையில் அவர் தம் மனம்,
வாக்கு, காயம் யாவும் பண்டரிபுரத்து விட்டலனின் எல்
லைக்குள்ளேயே நின்றன. இப்போ மகாராஷ்டிர எல்லைக்
@55& 5coeváseTögluó※ x 8:

கப்பாலும் விரிந்த பேருலகு அவர் வசமாகியது. வடநாட்டின் தலங்கள் பலவற்றைத் தரிசித்தார்.
கோலாத்ஜி என்ற வரண்டதொரு கிராமத்தின் தண்ணிர்ப் பஞ்சத்தை தமது அற்புதத்தால் நீக்கினார். ஆழ்ந்த கிணறு ஒன்றின் அடியில் கிடந்த நீரை வெளிக் கொணர்ந்தும் வற்றாத நீர் ஊற்று ஒன்றை உண்டாக்கியும் தண்ணிர்ப் பஞ்சம் போக்கினார் நாமதேவர். நாமதேவரின் கிணறு என்ற பேரோடு அந் நீர்ச்சுனை இன்றளவும் நிலவுவதாகக் கூறப்படுகிறது.
தீர்த்தயாத்திரையின் போது ஒரு தடவை ஆம்வடயாநாக நாத்துக்குச் சென்றார் நாமதேவர். அங்கே நாதேஸ்வரரின் சந்நிதானத்தில் நாமசங்கீர்த்தனத்தில் ஈடுபடலாயினர் நாமதேவரும் குழுவினரும். ஆனால் அங்கிருந்த வைதீக அந்தணர்களுக்கு அது பிடிக்கவில்லை. ஆலயத்தின் பின்புறம் செல்லுமாறு விரட்டினர். யாவரும் பின்புறம் சென்ற னர். இறைநாமத்தில் ஒன்றியிருந்த நாமதேவர் மாத்திரம் சமாதி நிலையுற்றிருந்தார். எனினும் நாமசங்கீர்த்தனத்தில் முன்பிருந்த ஆனந்தம் குறைந்திருப்பதாகக் கண்டார். மிக உருக்கமாக இறைவனை வேண்டிக் கொண்டார்.
இன்று நின் உள்ளத்திலே ஏனிந்தக் கடுமை? விட்டல விரைந்து ஏன் நீ வரவில்லை?
எனக்கு நின்முகம் காட்டாது அமர்ந்துள்ள சிவபிரானே! நின் அருள் தந்து கருணை பொங்கும் விழிகளால்
எனைப்பார்
உலகத்தின் நாயகனே நின்னைச் சரணடைந்தேன் நான்.
நாமதேவரின் இவ்வார்த்தைகள் வெளிப்பட்டதுமே கிழக்குமுகமாக இருந்த ஆலயம் மேற்குமுகமாகத் திரும்பி விட்டது,இப்போதும ஆவண்டயா நாகநாதேஸ்வரம் மேற்குத் திசை நோக்கியே நிற்கின்றது.
இவ்வற்புதங்களுக்கு முன்பாக நிகழ்ந்ததாகக் கூறப்படும் மற்றொரு அற்புதம் வருமாறு. ஒரு சுல்தான். நாமதேவரைப் பிடித்துவரச் செய்து அவர் கண்ணெதிரிலேயே பசு ஒன்றைக் கொன்றான். நாமதேவரோ தம் பக்திவலிமையால்
அப்பசுவை மீண்டும் உயிர்பெற்றெழச் செய்தார். இவ்வாறாக
滚艇 இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 223
நாமதேவரோடு தொடர்புபட்டவையாக பல அற்புதங்கள்
கூறப்பெறுகின்றன.
ஞானதேவரின் பிரிவு
தீர்த்தயாத்திரையின் காரணமாக சாதுக்கள் கூட்டத் தோடு குறிப்பாக ஞானதேவருடன் நாமதேவருக்கு நெருங் கிய நட்பு ஏற்பட்டது. இத்தீர்த்த யாத்திரை முடிந்து திரும்பிய சில தினங்களுக்கு உள்ளாகவே ஞானேஸ்வரர் தாம் சமாதி அடையப் போவதாக அறிவித்தார். அதை அறிந்ததும் இறையன்பர்கள் அவர் இருந்த இடமான ஆனந் திக்கு வந்து திரண்டனர். இந்நிகழ்ச்சிகளையெல்லாம் உட்கொண்டதாக சமாதிகே அபங் என்னும் பாடல்களை பாடினர். ஞானதேவர் சமாதியடைந்த சம்பவங்களைக் கூட மிக நுட்பமாக கருணாரசத்துடன் சித்திரிக்கும் இந்த அபங்கங்கள் மராத்தி இலக்கிய உலகில் அழியா இடத்தைப் பெற்றுள்ளன.
ஞானதேவரின் பிரிவு நாமதேவருக்கு பெரியதொரு தாக்கமாக அமைந்தது. பண்டரிபுரத்தைவிட்டுத் துரதேசம் செல்லவேண்டும் என்ற எண்ணம் அவர் மனதிலே உதித்
தது.
விட்டோபா ராயா! கேள் இனியொன்று செய்வேன் பண்டரியைத் துறந்து நான் செல்வேன் தொலைதுாரம் சென்று நான் வாழ்வேன் பக்தியில் நம்பிக்கையை நான் இழந்தேன் இறைவா! துயரத்தினால் வெதும்புகிறது உள்ளம் ஹே கேசவா! தாயும் தந்தையும் ஆனவனே!
இப்பண்டரியை என்னுடன் கொண்டு செல்வேன் பீமாநதியின் மணலை சாதுக்களின் இந்நகரத்தை இம்மண்ணில் யாரெல்லாம் வாழ்ந்தனர் என பின்னொருநாள் கூறுவர் மக்கள் என் இறைவா!
நாமதேவர் தம்முடைய இந்த உறுதிப்பாட்டைத் தமது பிற்கால வ்ாழ்க்கையில் நிரூபித்துவிட்டார்.
இரண்டாவது தீர்த்தயாத்திரை
ஞானதேவரின் மறைவுக்குப் பின்னர் சுமார் ஐம்பத்தாறு ஐம்பத்தேழு வருடங்கள் நாமதேவர் வாழ்ந்தார். ஆனால்
இந்துக் கலைக்களஞ்சியம்x 綫線簽

இப்பிற்பட்ட வாழ்க்கை குறித்த செய்திகள் எதுவும் அவரது மராத்தி மொழி அபங்களில் கிடைக்கவில்லை. பண்டரியிலி ருந்து புறப்பட்ட நாமதேவர் வடநாடெங்கும் சுற்றித் திரிந்த பின் பஞ்சாபை அடைந்தார். நாமதேவர். ஞானதேவருடன் கூடி மேற்கொண்ட முன்னைய தீர்த்த யாத்திரையின் போதும் பஞ்சாபுக்குச் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. அங்கே அவரைச் சுற்றி ஒரு பக்தர்கூட்டம் உரு
வானது.
பஞ்சாபில் நாமதேவர் சுமார் இருபது ஆண்டுகாலம் வாழ்ந்தார். பஞ்சாபில் அவர் முதலில் சென்றது அமிர்த சரஸ் மாவட்டத்தின் 'பூதபிண்டம்' என்னும் கிராமத்திற்கா கும். அங்கே பஹோர்தாஸ் என்பவர் அவரது முதலாவது சீடரானார். பின் வேறு வேறு கிராமங்களுக்குச் சென்றார். அங்கும் பல சீடர்கள் உருவாயினர். இறுதியில் நாமதேவர் காட்டிலே தனிமையான ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கேயே வாழ்ந்து சாதனைகளில் ஈடுபடலானார். ஆனால் அங்கும் ஏராளமான சீடர்கள் கூடிவிட்டனர். அவரது ஆசிரமத்தைச் சுற்றி கோமான் என்ற புதியதொரு கிராமம் உரு வாகிவிட்டது. அந்தக்காலத்தில் தில்லியிலிருந்து அரசாண்ட ஆலம் என்னும் அல்லாவுதீன் ஆலயமொன்றை அமைப்பதற்காக நாமதேவருக்குப் பெருந்தொகைப் பொருள் கொடுத்தான்.
நாமதேவர் பஞ்சாபில் வாழ்ந்த அவரது பிற்கால வாழ்க்கை பற்றிய தகவல் எதுவும் மராத்தி மொழியில் இல்லை. எனினும் வடநாட்டிலான அவரது அவ்வாழ்வு பற்றிய தகவல்கள் பஞ்சாபி மொழியில் காணப்படுகின்றன. நாமதேவரின் சீடர்களில் விஷ்ணுசுவாமி, பஹோர்தாஸ், லட்டா, ஜல்லா, கேஷோம் கலாதாரி போன்றோர் படைப்புக் கள் அவ்வகையிலே பிரபலமானவை. பிற்காலத்தில் தோன் றிய சாதுக்களுள் ராமானந்தர், கபீர், குருநானக், ரைதாஸ், பீபா முதலான பக்திக் கவிஞர்கள் தங்கள் பாடல்களில் நாமதேவர் பற்றி மிக்க மரியாதையுடன் குறிப்பிட்டுள்ளார்
56.
சீக்கிய மரபில் நாமதேவர்
நாமதேவரின் படைப்பாற்றலுக்கும் பஞ்சாபில் அவர் பெற் றிருந்த மதிப்புக்குமான சிறந்த எடுத்துக்காட்டு அவரது
55 sou seav TəFTJ 96eauesöases geroesooräisesTLň

Page 224
அறுபத்தொரு (61) பாடல்கள் சீக்கிய மதத்தினர் 'ஆதி கிரந்தம்' எனப் போற்றுகின்ற அவர்களது முதல் நூலிலே இடம்பெற்றிருக்கின்றமையாகும். நாமதேவருக்கு ஏறக்கு றைய இருநூறு ஆண்டுகள் பிற்படத் தோன்றிய குருநானக் கால் நிறுவப்பட்ட சீக்கிய சம்பிரதாயத்தில் இறைநாமத்து க்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. அதன் ஊற்றுக்காலை அறிஞர்கள் நாமதேவரிடமே கண்டுகொள்கி றார்கள். ஆதிகிரந்தத்திலே உள்ள நாமதேவர் பாடல்கள் 'சதுக்கடி பாஷா (சாதுக்களின் மொழி) எனப்படுவதும் மக்கள் வழக்கில் இருந்ததுமான ஒருவகைக் கலப்பு மொழியில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சதுக்கடி பாஷையில் நாமதேவர் இயற்றிய பாடல்களில் மராத்தி இன்றைய பஞ்சாபி இரண்டு மொழிகளினதும் பாரதூரமான
சேர்க்கையைக் காணலாம் என அறிஞர்கள் கூறுகின்றனர்.
நாமதேவரின் சமாதி
நாமதேவர் பக்தி மார்க்கம் பற்றியும் நாமமகிமை பற்றியும் பிரசாரம் செய்பவராக இறைவனைப் போற்றிப் பாடிக் கொண்டு வடதேசங்களில் சுற்றித் திரிந்தவராயினும் அவ ரது உள்ளம் பண்டரிநாதனையே பற்றி நின்றது. பண்டரிபுரம் சென்று விட்டலனைத் தரிசிக்கும் ஆவல் மீதுரப் பெற்றார்.
"காணவேண்டுமென்ற ஆவல் தரிசிக்கவேண்டுமென்ற
ᏄᏓ60ᎧèᏠ மனம் ஓரிடத்தில் நிலைகொள்ளவில்லை. காண்பவரிடமெல்லாம் இதுவே அவன் கேள்வி பண்டரிநாதன் ஏன் எனை அழைத்துக்கொள்ளவில்லை? வாரகரி தோழர்கள் பண்டரி செல்லுகின்றனர். அவர்களிடம்தான் சேதி சொல்லி அனுப்புவேன் நாமதேவன் ஓய்ந்துவிட்டான், உயிர் ஊசலாடுகிறது இரவும் பகலும் உன்னை தியானிக்கிறான் அவன்
(1259)
நாமதேவர் தமது இறுதிக் காலத்தில் பண்டரிபுரம் செல்ல வேண்டும் என்ற ஆசையை வெளியிட்டார். அவர் பிரிவை நினைத்து சீடர் குழாம் வருந்தியது. பண்டரிபுரம் சென்ற நாமதேவர் 1350ஆம் ஆண்டு பண்டரிநாதனின் ஆலய வாயிலெதிரே சமாதிநிலையில் அமர்ந்து உடல் நீத்தார். நாமதேவரின் நினைவுச் சின்னங்களைக் கொண்ட சமாதி
@f5座 5eneu益sen@Hun燃線19

கள் பிற்காலங்களில் வேறு வேறு இடங்களிலே அமைக் கப்பட்டுள்ளன. கோமான் என்னும் இடத்தில் 18ஆம் நூற்றா ண்டு காலப்பகுதியில் நாமதேவர் நினைவாக அமைக்கப் பட்ட அழகிய சமாதிக்கோயில் அவற்றுள் குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரத்தில் எழுச்சி கண்ட வாரகரி சம்பிரதாயத்து க்கு அதாவது பாகவத சம்பிரதாயத்துக்கு அடித்தளமிட்ட வர் ஞானதேவர். ஆயினும் அப் பாகவத தர்மத்தை எங்கும் பரப்பிய பெருமை நாமதேவரையே சார்ந்ததாகும். அவ்வுண் மையை பக்த துக்காராமின் சிஷயையான பஹிணாபாய்
மேல்வருமாறு வெளிப்படுத்தினார்.
ஞானதேவன் அடித்தளமிட்டு ஆலயம் எழுப்பினான். நாமதேவன் அவனது கிங்கரன் அதனை விரிவாக்கினான்.
(கிங்கரர் என்ற சொல்லுக்கு “கிம் கரோமி? நான் என்ன செய்யட்டும்? என்பது பொருள்)
நாமதேவர் பெற்ற மெஞ்ஞான உணர்வும் துறவு மனப் பான்மையும்தான் அவரை இத்தகு செயல்வீரராக்கின. பிரம்மமே மெய்பொருள் எனக் கண்டவர் நாமதேவர். அம் மெய்ப்பொருள் வார்த்தைகளுக்குள் அடங்காதது என்பதை Այլք அவர் உணர்ந்தார்.
வேதங்களால் அறியப்படாதது அது. ஆயிரம் நாக்கொண்ட சேஷநாகத்தினாற்கூட வர்ணிக்க இயலாதது சேஷநாகம் அதனை வர்ணிக்க முற்பட்டு செயலிழந்து போயிற்று அது எல்லையற்றது என்கிறான் நாமா (385)
பிரம்மம் எவ்வளவு சத்தியமானதோ அவ்வளவு பொய்யா னது இவ்வுலகம் என உணர்ந்தவராக நாமதேவர் உலக நிலையைமையை எடுத்துரைத்தார்.
நீரிலே எழும் குமிழிகள் போன்று களத்திலே தோன்றி மறையும் வாழ்வு இது மந்திரவாதியின் மாயக்கோலம் போலும் இவ்வுலக வாழ்வு கணநேர விளையாட்டு
6 貓 ZZZZZSZTT uuLL GLC LT TMMLLCTT TTLsLMLTTML

Page 225
முடிவில் கைக்கெட்டுவது எதுவுமில்லை நாமா உரைக்கிறான் எதுவும் உண்மையில்லை இங்கு கணநேரத்துக்குத்தான் இவையாவும் உண்மை (1670)
நாமதேவரின் கருத்துப்படி இத்தகைய மாய உலகில் மனிதப்பிறவி கிடைத்தது உண்மையை உணர்ந்து ஈடேறு வதற்காகவே. அதை உணராமல் மாயையில் உழலும் மனிதன் ஈசுவர துரோகியாகிறான். இம் மாயையிலிருந்து மீளுவதற்கு நாமதேவர் கூறும் வழி பாகவததர்மமே.
கண்டுகொண்டேன் மெய்ப்பொருளை கொள்வேன்
பாகவத தர்மத்தை! புதுப்பிறவி இது கிட்டிவிட்டது பேச்செல்லாம் தான்
மறந்தேன் அன்புக்கு அடிமை இவன் வைகுந்தத்தைத் துறந்தல்லோ
6) libgfollolilot சத்சங்கமதை நாடுவோம் நெஞ்சோடு தழுவிக்
கொள்வோம்!
நாமா உரைக்கிறான் - எப்படி அவனைப் பிணைப்போம்!
நமது நெஞ்சில் உள்ளன அவன் திருவடிகள் (1152)
இறைவன் பாசத்திற்கும் நேசத்திற்கும் அடிமை, அன்புப்பசி கொண்டவன் அவன். பக்தர்களுக்காகவே வைகுண்டத்தைத் துறந்துவந்துள்ளான். சாதுக்களின் சகவாசத்தினால் சத்சங்கத்தின் மூலம் அவனை அடைய லாம். அவனை நம் உள்ளத்தில் அந்தராத்மாவில் அடக்கி வைத்துக்கொள்ளலாம். இதுதான் பாகவத தர்மத்தின்
இரகசியம்.
பாகவத தர்மம் என நாமதேவர் கூறுவதே மகாராஷ்டிரத் தின் புகழ்பெற்ற வாரகரி சம்பிரதாயமாகும். வாரகரி என்றால் ஆவணி, கார்த்திகை மாதங்களில் ஏகாதசியன்றும் மற்றைய புண்ணிய காலங்களிலும் ஆசார நியமப்படி பண்டரிபுரத்திற்குப் புனித யாத்திரை செய்வது அதாவது 'வாரி செய்யும் பக்தர்கள் பாகவதர்கள் என்று பொருள். 'வாரிகர் பண்டரியின் வீரர்கள் என்று மிகுந்த மரியாதையு டன் போற்றுகிறார் நாமதேவர்.
பேரின்பம் இது. இதில் திளைக்கும் இவ்வையகம்
இந்துக் கலைக்களஞ்சியம்
 

பாக்கி யசாலி
பரம பிதாவை நாடிச் செல்லும் வைணவர்களைக் கண்டு சுவர்க்கத்திற் கொடியேற்றுகின்றனர் தேவர்கள்
பண்டரியின் வீரவாரிகர்களின் பாததுரளி வானத்திலே பறக்கிறது பிரம்மாதி தேவர்கள் கூடிநிற்கின்றனர் நான். நீ என முந்திக் கொண்டு! பாததுரளி என் சிரத்திலே படட்டும் என்கின்றனர். பக்தியும் பிரேமையும் அங்கெல்லாம் விரவிநிற்க நாணத்தைத் துறந்து மெய்ம்மறந்து ஆடுகின்றனர்
ஹரிபக்தர்கள்! பேரானந்தத்திலே மூழ்கி ஆனந்தக் கூத்தாடுகின்றனர். இதயத்திலே கண்ணனின் திருவுருவம் பதிந்திருக்க எங்கு நோக்கிலும் யாவிலும் அவனையே காண்கின்றனர் தாமரைபோன்ற விழிகளிலிருந்து அருவியாய் நீர்
பொழிகின்றது. ஒவ்வொரு மயிர்க்காலிலும் சாத்வீக பக்தி
புல்லரிக்கின்றது! விட்டலனின் திருநாமத்தைக் கூறுகின்றனர் உரக்க. மயில் தோகையின் கறாடடகே? சிரத்தை அது அலங்கரிக்கின்றது. கேசவனின் நாமத்துக்கு இவ்வுடலைத் துணியாக்கி ஹரிபக்தர்களுக்கு நடைபாவாடை விரித்துள்ளேன். (899)
நாமதேவர் தன் உடலைத் துணியாக்கிப் பக்தர்கள் நடந்து வருவதற்கு நடைபாவாடை விரிக்கப் போவதாகக் கூறுகிறார்.
விநாடிகள் காற்சதங்கைகள் மயிற்பீலிகளால் அலங்கரித்துக்கொண்டே வைணவர்கள் வருகின்றனர்
பயந்தோடுகிறது கலிகாலம் திகிலுற்று! (900)
வைணவர் என்றெல்லாம் சுட்டப்பெறுபவர்கள் இறையடி யார்கள். நாமதேவர். அவர்களுடைய இயல்பு பற்றிக் கூறுகையில் இறைவனின் நாமத்தை இடைவிடாமல் ஸ்மரித்துக் கொண்டு இருப்பதுதான் வைணவர்களுக்குரிய
இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 226
இலட்சணம் என்கிறார்.
வேத அத்தியயனம் செய்வதனால் வைதிகனாவாய் ஆனால் வைணவனாகமாட்டாய். இதனை அறிந்துகொள்! புராணம் சொல்லுவதால் பெளராணிகனாவாய். ஆனால் வைணவனாகமாட்டாய் இதனை அறிந்துகொள்! இசைபாடினால் இசை வாணனாவாய் ஆனால் வைணவனாகமாட்டாய் இதனைப் புரிந்துகொள்! கர்மானுஷ்டானங்களைச் செய்வதால் சடங்குகளைச் செய்பவனாவாய் ஆனால் வைணவனாகமாட்டாய் இதனைப் புரிந்துகொள்! யாகயக்ளுங்கள் செய்தால் யக்ஞ புருஷனாவாய் ஆனால் வைணவனாகமாட்டாய் இதனைப் புரிந்துகொள்! தலயாத்திரை புரிந்தால் தீர்த்த யாத்திரிகனாவாய் ஆனால் வைணவனாகமாட்டாய். இதனைப் புரிந்துகொள்! நாமா உரைக்கிறான் - இறைவனின் நாமத்தைக் கூறினால் நீ வைணவனாவாய் இதனைப் புரிந்துகொள்!
(1565)
இவ்வாறாக நாமதேவரின் சித்தாந்தங்களில் முக்கிய இடம்பெறுவது நாமமகிமைதான். நாமதேவர் நாமஸ்மரணத் திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பற்றி இக்கட்டு ரையின் தொடக்கத்திலேயே கூறப்பட்டது. நாம மகிமை பற்றி ஏறக்குறைய இருநூறு அபங்கங்களைப் பாடியுள்ளார் என்று அறிஞர்கள் கணக்கிடுகிறார்கள். நாமதேவர் இறை நாமத்துக்குக் கொடுத்த முக்கியத்துவம் அதீதமானது.
வேதம் ஒதவேண்டாம் சாத்திரம் அறியவேண்டாம் நாமா கூறுவதை நினைவு கூருங்கள் பிரம்மஞானமோ வைராக்கியமோ தேவையில்லை சாதுக்களின் சத்சங்கத்தில் பக்தியைப் பேணுங்கள் இக்கலியுகத்தில் நியம நிஷ்டைகள் புரிந்து பிறவிக் கடலைக் கடந்தவர் யார் எனக் கூறுங்கள்! நாமா உரைக்கிறான் - பக்தசாதுக்கள் கூறியுள்ளனர் நாமத்தைவிட அமைதி தருவது வேறு எதுவுமில்லை!
( 1761)
நாமதேவர் நாமத்தின் மகிமையைக் கூறியது போலவே கணிசமான அளவிலே பலவகையான போதனைகளையும் செய்திருக்கின்றார். மக்களின் நல்லொழுக்கம் கருதி
யனவாக அப்போதனைகள் அமைந்துள்ளன. நாமதேவரின்
இந்துக் கலைக்களஞ்சியப்x:x
 

பாடல்களில் பல சமுதாய நோக்குடையனவாகவும் அமை ந்துள்ளன. சமகாலத்தில் நிலவிய சாதி மதபேதங்கள், சம்பிரதாய பேதங்கள், போலி ஆசாரங்கள், உயிர்ப்பலி, உண்மை அன்பில்லாத உரு வணக்கம், பல தெய்வ வணக்கம் என்பவற்றைப் பல இடங்களிலும் கண்டித்துள் ளார். அவை மெஞ்ஞானத்தின்பால் அவர் கொண்ட ஈடுபாட்டினாலேயே உணர்த்துவனாவாம். போலி ஆசாரக் காரர்களை மோசமான வியாபாரிகளாகவே கருதுகிறார் நாமதேவர்.
கசாப்புக் கடைகாரர்போல் செய்கின்றனர் வியாபாரம் உள்ளத்தில் எப்பொழுதும் இதே எண்ணம், நினைப்பு துஷ்டர்கள் இவர்கள். தீய ஒழுக்கம் கொண்டவர்கள்
இவர்கள் (1610)
நாமதேவர் பற்றி ஆராய்ந்த அறிஞர்கள் அவர்தம் பாடல் கள் பற்றி முன்வைக்கும் முடிவு இது.
"நாமதேவரின் படைப்புக்கள் யாவற்றையும் ஒட்டுமொத்த மாகப் பார்க்கும்பொழுது குறிப்பாக உருவக அணியில் புனையப்பட்டுள்ள பாடல்கள் சுயசரிதப் பாணியில் அமைந் துள்ள அபங்களிலிருந்து அவர் தம்மைச் சுற்றியிருந்த தாம் வாழ்ந்த சமுதாயத்தை மிகுந்த விழிப்புணர்வுடன் கூர்ந்து நோக்கியுள்ளார் என்பது புலப்படுகின்றது. அக வயப்பட்ட சாதகர் பக்தர் என்ற முறையில் அவரது படைப் புக்களின் அடித்தளம் அமைந்திருந்தாலும் அவரது கண்ணோட்டம் விரிந்ததொரு சமுதாயப் பார்வையுடனிருந் தது என்பதில் ஐயமெதுவுமில்லையே’
நாமதேவர் தமது பாடல்களிலே உன்னதமான கருத்துக் களைப் பொதிந்து வைத்தார். ஆயினும் அவை வெறுங் கருத்துக் குவியல்களல்ல. ரசம் சொட்டும் கவிதைக் கனிகளுமாம். கவிதை இயற்றவேண்டும் என்ற விருப்புத் தமக்கு ஏற்பட்டதென்றும் அந்த ஆற்றலை விட்டலனிடம் தாமே வேண்டிப் பெற்றுக்கொண்டதாகவும் நாமதேவர்
கூறுகிறார்
சந்திரபவானியின் கரையிலே கதைகள் பல
கேட்டிருக்கிறேன்
zkezZSSereZZZZZkSZZZZZZSkZkZZek TT TLLLLLLL LTL0CCLL LLDD TLLLM CTT TTLeGeLTTaT

Page 227
வான்மீகி நூறுகோடி நூல்களை இயற்றியதாக என்மனம் வருந்தியது மிகவும் வாழ்நாளை வீணடித்துவிட்டேனே என ஆலயம் சென்று விட்டோபாவிடம் முறையிட்டேன் வான்மீகி இராமாயணம் இயற்றியுள்ளான். நான் உனது உண்மையான பக்தனென்றால் எனது இப்பிரதிக்ஞையை நிறைவேற்று உன்னைப் போற்றித் துதித்து நூறுகோடி அபங்களை இயற்றுவேன் நான் (1127)
ஹரியின் அருளினால் தமக்கு அபங்க யாப்பின் இலக் கணங்கள், அணியிலக்கணங்கள் கனவிலே தோன்றின என்றும் குரு விசோபாகேசன் கவிதை எழுதும்படி அன்பு டன் ஆணையிட்டார் என்றும் தமக்கு அபங்க யாப்பின் லட்சணங்கள் பற்றி எதுவும் தெரியாது என்றும் பாகவத தர்மத்தின் உட்பொருளை அறிந்ததுபோலவே அபங்கம் பற்றிய நுட்பங்களையும் தாமாகவே அறிந்து கொண்டதாக வும் குறிப்பிடுகிறார் நாமதேவர். பிறிதொரு இடத்தில் நாமதேவர் குறிப்பிடுகின்றார்: பண்டிதர்களின் பாண்டித்தியம் எனக்குப் புரிவதில்லை. பிரேமை உள்ளத்திலே பொங்கி எழும்போது அப்பரவசத்தில் எந்த சந்தத்தில் நான் ஆடு கின்றோனோ, அதிலேயே என்னை மறந்து இலயித்துப் போகிறேன். மனத்திலே படும்படியான இப்பாடல்களைப் பாடுகிறேன்.
நாமதேவர் மற்றுமோர் அபங்கத்திலே கூறுகிறார்:
அன்புப் பெருக்கெடுத்து உன்மத்தனாய் உடலெங்கும் விரவிநிற்க பாடலுடன் நான் எனை மறந்து ஆடுகின்றேன் எப்பொழுது என்னென்ன பாடுகிறேன் இறைவா அதனையும் நான் அறியேன் காற்று தன்னிச்சையாய் வீசுவது போல்தான் எனது பரவசமும் ஆடலும் பாடலும் கைத்தாளமும் மிருதங்கமும் தென்திசை நோக்க நானோ வடதிசை நோக்கி நிற்பேன் மழலை மொழி பேசுகிறேன் நான். ஆயினும் தாய்க்கு அது உவப்பானது நாமதேவன் உரைக்கின்றான் தேவனே! எத்தனை பிறவி எடுத்தாலும் உனக்கே தொண்டு செய்ய
இந்துக் கலைக்களஞ்சியம்x
భళ్ల
ఫ్లభ 19
 
 

அருள்வாய் (1242)
கடவுளைப் பரவுதற்கு அன்பு ஒன்றே போதுமானது. நூலறிவு தேவையில்லை என்பதே இதன் தாற்பரியம். நாமதேவர் பல்வேறு பாவங்களில் இறைவனைப் பாடியுள் ளார். நாமதேவரின் பாடல்களை சாட்சாத் பாண்டுரங்கனே எழுத்திலே பொறித்ததாகக் கூறுவது மகாராஷ்டிர பாகவத மரபு. நாமதேவர் பாகவத மரபில் மாத்திரமன்றி மராத்திய கவிதை உலகிலும் உயரத்தே ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் ஒப்பற்ற நட்சத்திரமாகத் திகழ்கிறார்.
(இக்கட்டுரை இந்திய சாகித்திய அக்கடமிக்காக மாதவ நோபால் தேஷ்முக் எழுதிய நாமதேவர் என்ற நூலின் அடிப்படையில் எழுதப்பட்டது.) (க.இர.)
நாயக்கர்கள்
தென்னிந்தியாவிலே 14ஆம் நூற்றாண்டில் எழுச்சி பெற்ற விஜய நகரப் பேரரசு இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக வலிமையுடன் சிறப்புற்று விளங்கியது. அப்பேரரசு பல இராச்சியங்களையும் உட்பிரிவுகளையும் கொண்டிருந்தது. அவை ஒவ்வொன்றையும் நிர்வாகம் புரிவதற்கு இளவரசர் களையோ பிரதானிகளையே நியமித்தனர்.
காகதீயர்களின் ஆட்சியில் பிரதேசங்களுக்குப் பொறுப் பாக இளவரசர்கள் இருந்தனர். விஜய நகர மன்னர்கள் இந்த முறையை அடிப்படையாகக் கொண்டு நிர்வாக முறையை உருவாக்கினர். இந்நிர்வாக முறைமை நாயங் கர நிர்வாகம்' எனப்பட்டது. இவ்வாறு நியமிக்கப்பட்டவன்
நாயக்கர் என அழைக்கப்பட்டான்.
விஜய நகரப் பேரரசில் கிருஷ்ண தேவராயரின் ஆட்சிக் காலத்தில் செஞ்சி, தஞ்சை, மதுரை, வேலூர், கர்நாடக மாநிலம் ஆகிய பிரதேசங்களில் நாயக்க ஆட்சி முறைமை ஏற்படுத்தப்பட்டது.
மதுரை நாயக்கர்கள்
மதுரை நாயக்கர்கள் பற்றிய வரலாற்றினை நெல்சன்
என்பவர் எழுதிய மதுரை வரலாற்றிலிருந்து அறிந்துகொள்
ளலாம். மதுரை நாயக்கர்கள் ஆட்சி மதுரையில் கி.பி
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 228
1529 முதல் 1736 ஆம் ஆண்டு வரை நீடித்தது என வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர். நாயக்கர் ஆட்சி இங்கு தொடங்குதவதற்கு முன்பு குமார கம்பனர் காலம் முதல் விஜயநகர இராசப் பிரதிநிதிகள் மதுரையில் இருந்து ஆட்சி புரிந்தனர். விஸ்வநாத நாயக்கரை மதுரையின் இராசப்பிரதிநிதியாக கிருஷ்ணதேவராயர் நியமித்தார். அவரே நாயக்க வம்சத்தின் முதல்வர் ஆவார். இவர் காலம் முதலாக பரம்பரை அடிப்படையில் அவருடைய வம்சாவளியினர் மதுரையிலிருந்து ஆளும் அரசுரிமை பெற்றனர்.
விஸ்வநாத நாயக்கர் (கி.பி. 1529 - 1564)
கிருஷ்ணதேவராயரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான அதிகாரிகளில் ஒருவர்தான் நாகமநாயக்கர். அவரது மகன் விஸ்வநாத நாயக்கர் ஆவர். அவரது ஆட்சியில் மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி, திருச்சி, கோவை, சேலம் பகுதிகளும் திருவாங்கூர் பகுதியும் அடங்கியிருந்தன.
அவரது நிர்வாக முறைமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு பாளையங்களின் தோற்றமாகும். அவர் எழுபத்திரண்டு பாளையப்பட்டுக்களை ஏற்படுத்தினார். அவர் பாளையப் பட்டு முறை மூலமாக படைகளைப் பெற்றுக் கொண் டார். விஸ்வநாத நாயக்கர் பாண்டி நாட்டுக்குரிய வல்லம் பகுதியைத் தஞ்சையுடன் இணைத்துக்கொண்டார். கம்பம், கடலூர் போரில் விசுவநாதரின் தளபதி இராமபத்ர நாயக்கர் பெருவெற்றி பெற்றார். விஸ்வநாதரின் வெற்றிகளுக்கும் அவரது பெருமைக்கும் முக்கியமானவராக திகழ்ந்தவர் தளவாய் அரியநாத முதலியார். மதுரைக்கும் மதுரை நாயக்கரின் மேன்மைக்குத் தான் இறக்கும்வரை அயராது பாடுபட்டவர் அரியநாதர்.விஸ்வநாத நாயக்கர் நாட்டில் அமைதி ஒழுங்கு முதலியவற்றை நிலை நாட்டினார். பொருளாதாரச் சீர்குலைவினைப் போக்க வேளாண்மையில் புனரமைப்பும் நீர்ப்பாசன முறைக்கு அதிக கவனமும் செலுத்தப்பட்டது. இவர் காலத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர்
ஆலயத்தில் சில கட்டிடங்கள் அமைக்கப்பட்டன.
முதலாம் கிருஷ்ணப்பர் (1564 - 1572)
இவர் 1564ஆம் ஆண்டில் ஆட்சி அதிகாரம் பெற்றார். தனது ஆட்சிக்கு எதிராக ஏற்பட்ட பாளையக்காரர்கள்
 

O
கலகத்தை அடக்கினார். பெரிய கிருஷ்ணபிள்ளை மக னான சின்னக் கேசவன் கண்டி மீது படையெடுத்து கண்டி அரசனைத் தோற்கடித்தான் என்று குறிப்புக்கள் கூறுகின் றன. முதலாம் கிருஷ்ணப்பர் போரில் திறமையுடையவராக வும் நிர்வாகத்தில் அனுபவம் மிக்க ஆட்சியாளராகவும் விளங்கியவர். மக்கள் நலம் பேணிய பண்பாளர். அவர்
காலத்தில் பல கோயில் திருப்பணிகள் நடைபெற்றன.
GigūLuijuši (572 - 595):
இவர் கிருஷ்ணப்பரின் மூத்த மகனாவார். இவரது காலத் தில் பாணர் வழிவந்த வாணாதிராயர் என்ற மானாமதுரை சிற்றரசன் கலகம் செய்தான். வீரப்பர் அதை அடக்கினார். பொதுவாக அவரது ஆட்சிக்காலம் அமைதி நிறைந்ததும், செழிப்பு மிகுந்ததுமான காலமாக விளங்கியது. அவர் தம் மிகுதிக் காலத்தை நிலையான செயல்கள் புரிவதிற் செலவிட்டார். அவர் காலத்தில் திருச்சிக் கோட்டை விரிவாக் கப்பட்டது. அருப்புக் கோட்டையில் புதுக்கோட்டை எழுப்பப் பட்டது. சிதம்பரம் மதுரைக் கோயில்கள் செப்பனிடப்பட் டன. வெள்ளியம்பலம், ஆயிரங்கால் மண்டபம், மூர்த்தியம் மன் மண்டபம், சுற்று மண்டபம், வீரப்பமண்டபம் ஆகியவற் றையும் வீரப்பரே கட்டியெழுப்பினார். கம்பத்தடி மண்ட பத்தை அவரே கட்டினார் என்பதை சுந்தரேச ஆலயத்தி லுள்ள 1584ஆம் கல்வெட்டு மூலம் அறியமுடிகின்றது.
இரண்டாம் கிருஷ்ணப்பர் (1595 - 1601)
இவருடைய ஆட்சிக்காலம் மிகவும் குறுகியதாகும். விஜய நகரப் பேரரசானான முதலாம் வேங்கடபதிராயருக்கு உட்பட்டு மதுரைப் பகுதியை ஆண்டு வந்த இவர் தம் முன்னோரைப் போன்று விஜயநகரப் பேரரசுக்கு விசுவாச
மாக நடந்து கொண்டார்.
அவரது ஆட்சிக்காலத்தில் நாயக்கர் அரசு கிழக்கே வங்காள விரிகுடா முதல் மேற்கே அரபிக் கடல் வரையி லும் தெற்கே கன்னியாகுமரி முதல் வடக்கே வாலிகண்ட புரம் வரையிலும் விரிவடைந்திருந்தது. அவரது ஆட்சிக் காலத்தில் அமைதியும் ஒழுங்கும் பேணப்பட்டன. அவர் திருநெல்வேலி பாண்டியர்களுடன் நட்புறவு கொண்டிருந் தார். அவர் வேதங்களில் தேர்ச்சி பெற்ற அந்தணர்களுக்கு சில ஊர்களைத் தானமாக வழங்கினார்.
刻@弘90U5aT5ng ggalasef妥eororäsemá

Page 229
முத்து கிருஷ்ணப்பர் (1601 - 1609)
இரண்டாம் கிருஷ்ணப்பர் வாரிசு இன்றி இறக்க இளவ லான விசுவப்பர் கிருஷ்ணப்பருக்கு முன்பே இறந்துவிட்ட தால் கடைசித் தம்பியான கத்துரி ரங்கப்ப நாயக்கர் ஆட்சியு ரிமை பெற்றார். ஆனால் முறைப்படி ஆட்சிக்கு வரவேண்டிய விசுவப்பரின் மகன் முத்து கிருஷ்ணப்பரை மக்கள் ஆதரி த்ததால் பதவியேற்ற சில தினங்களிலே கஸ்தூரி ரங்கப்பர் கொலையுண்டார். எனவே முத்து கிட்டிணப்பர் மதுரை சமஸ்தானத்தில் ஆட்சிப் பொறுப்பை
ஏற்றார்.
இவர் மறவர் நாடாகிய இராநாதபுரத்தில் நல்லாட்சியை ஏற்படுத்தினார். இக்காலத்தில் போர்ச்சுக்கீசியர்கள் கிழக்குக் கடற்கரையோரங்களிற் செல்வாக்குச் செலுத்தத் தொடங்கினர். போர்த்துக்கேயரால் தீமை ஏற்படும் எனக் கருதிய முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் இராமநாதபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யும் நோக்குடன் போகலூர் என்னும் சிற்றுாரின் தலைவனான சடையத்தேவன் என்னும் மறவர் தலைவனுக்கு சேதுபதி பெயர் வழங்கி ஆட்சிப் பொறுப்பை வழங்கினார். போகலூரிலும் இராமநாதபுரத்தி லும் அரண்களை அமைத்து அமைதி ஏற்படுத்தினார். அதனால் பீதியின்றி யாத்திரகர்களும் அடியார்களும் இராமேஸ்வரம் கோயிலுக்குச் செல்ல முடிந்தது.
முத்துக்கிருஷ்ணப்பர் காலத்தில் கிறிஸ்தவ சமயம் பரவியது. நொபிலி என்ற உரோமன் கத்தோலிக்கப் பாதிரி யார் மதுரை கிறிஸ்தவ சங்கத்தின் சார்பில் உயர்குடி இந்துக்களை கிறிஸ்தவராக்கினார் எனக் கூறப்படுகின்றது. முத்து கிருஷ்ணப்பர் மதுரைக்கு அருகில் கிருட்டிணாபுரம் என்னும் ஊரை அமைத்தார்.
முதலாம் முத்து வீரப்பநாயக்கர் (1609 -1623)
முத்து கிருஷ்ணப்பநாயக்கருக்குப் பின் அவரது மூத்த மகனான முத்து வீரப்பநாயக்கர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார். இவர் காலத்தில் விஜய நகருடனான உறவில் மாற்றம் ஏற்பட்டது. விஜயநகர மன்னர் 2ஆம் வேங்கடர் கி.பி. 1614இல் இறந்தவுடன் வாரிசாக அறிவிக்கப்பட்ட பூரீ ரங்கர் சில மாதங்களில் கொலையுண்டார். இதனையடுத்து ஏற்

பட்ட அரசுரிமைத் தகராறு தோப்பூர் போரினால் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. இராமதேவர் விஜயநகர வேந்தரா னார். முத்து வீரப்ப நாயக்கரோடு போர் புரிய வேண்டி இருந்த நிலைமையைப் பயன்படுத்தி, மைசூர் மன்னர் இராச உடையார் படை அனுப்பித் திண்டுக்கல்லைத் தாக்கினார். விருப்பாட்சி பாளையத் தலைவரும் கன்னிவாடி பாளையப்பட்டுத் தலைவரும் போராடிப்
பகைவர்களை வென்று திண்டுக்கல்லைப் பாதுகாத்தனர்.
திருமலை நாயக்கர் (1623 - 1569)
மதுரை நாயக்கர்களில் தலைசிறந்தவர் திருமலை நாய க்கரே ஆவார். இவரது முப்பது ஆண்டு கால ஆட்சி தமி ழக வரலாற்றில் சிறப்பு மிக்கது. விஜயநகரப் பேரரசு மேலாதிக்கத்திலிருந்து விலகிச் செல்வதையே அவர் தம் கொள்கையாகக் கொண்டிருந்தார். ஆகவே தக்க தருணம் நாடிக் காத்திருந்தார். பேரரசு இரண்டாம் வேங்கடர் இறந்து மூன்றாம் பூரீ ரங்கர் அரியணை ஏறினார். திருமலை இவரை எதிர்க்கலானார். விஜயநகரப் பேரரசின் சரிவினால் திறை செல்லுவதை நிறுத்தலானார். திருமலை நாயக்க ருக்கு மாறுபட்ட, வேறுபட்ட கருத்துக்களைக் கொண்ட ஹிரீரங்கர் 1645இல் மதுரையைத் தாக்கினார். இதனால் ஆத்திரமடைந்த திருமலை தஞ்சாவூர் செஞ்சி நாயக்கர் உதவியுடன் அவரை எதிர்த்தார். தஞ்சை நாயக்கர் விஜயராகவர் திருமலையின் திட்டங்களை பூரீரங்கருக்கு எதிராகப் போர் புரியும் காலம் கனிந்து வரும் நேரத்தில் காலை வாரி விட்டதால் திருமலை கோல்கொண்டா சுல்தான் மீர்ஜும்மா வின் துணையினை நாடினார். அவரது படைகள் பேரரசின் எல்லைகளைத் தாக்கலாயின. அவைகளில் வேலூர்த் தாக்குதல் முதலாவதாகும். இதையறிந்த பூரீரங்கர் அங்கு விரைந்தார். இறுதியில் முடியாது போகவே அவர் மைசூரில் தஞ்சம் புகுந்தார். வேலூர் வெற்றிக்குப் பின் கோல் கொண்டா சுல்தான் தன் படைகளை செஞ்சியின் பக்கம் ஏவி முற்றுகையிடச் செய்தார். அதனைக் கண்டு பீதியடை ந்த திருமலை நாயக்கர் கோல்கொண்டாவிற்கு எதிராக பீஜப்பூர் சுல்தானை உதவி செய்யுமாறு அழைத்தார். முற்றுகை தொடர்ந்து நடைபெற்றது. மதுரைப் படையால் எவ்வித வெற்றியினையும் பெற இயலவில்லை. செஞ்சியை பீஜப்பூர்
ZSMZMkmykZZmZkkkZYT TTTL TCLG TMLLLCLTLL TeL GLLTLLLLLLL

Page 230
கைப்பற்றிக் கொண்ட பின்னர் அது மதுரை, தஞ்சாவூர் பகுதிகளைத் தாக்கமுற்பட்டது. திருமலை கள்ளர்கள்
உதவியுடன் பீஜப்பூர் படைகளைத் துரத்திய டித்தார்.
இச்சூழ்நிலையில் பூரீரங்கர் 1652 இல் மீண்டும் வேலு ரைக் கைப்பற்றத் திட்டமிட்டார். திருமலை மீண்டும் பீஜப் பூர் சுல்தானின் உதவியை நாடினார். அதேசமயத்தில் கொல்கொண்டா சுல்தானும் தனது படையுடன் வந்து சந்திரகிரியைக் கைப்பற்றிக் கொண்டார். அதனால் பூரிரங்கர் 1658இல் இறந்து போனார். ரீரங்கரின் மரணத்துடன் விஜயநகரப் பேரரசும் மறைந்துவிட்டது. திருமலை காலப்பகுதியில் மைசூர்ப் போர், திருவிதாங்கூர் படை யெடுப்பு ஆகியன அவர் காலத்தில் குறிப்பிடக்கூடிய போர்கள் ஆகும். அவருடைய சேதுபதி அரசுரிமைப் போர் ஏற்பட்ட பொழுது அதில் தலையிட்டு தம்பி என்பவரை சேதுபதி பதவியில் ஏற்படுத்தினார். இவ்வாறு மறவர் நாட்டில் அமை தியை ஏற்படுத்தினார்.
திருமலை இந்து சமயத்தில் மிகுந்த நம்பிக்கையுடைவர். ஆகவே, மதுரைக் கோயிலைச் செப்பனிட்டு அதை விழா நகரமாக்கினார். தெப்பக்குளங்கள் பல வெட்டப்பட்டன. அவற்றில் மிக பிரசித்தி பெற்றது மாரியம்மன் தெப்பக் குளம். திருமலையின் புகழை அழியாது காத்துநிற்பது திருமலை மகால் ஆகும்.
இரண்டாம் முத்து வீரப்பர் (1659)
திருமலை இறந்த பின் அவரது மகன் முத்து வீரப்பர் 1659ஆம் ஆண்டில் மதுரை நாயக்கரானார். இவரது காலத் தில் முகமதியர் தாக்குதல் அதிகமாயிருந்தது. பீஜப்பூர் சுல்தானின் தளபதியாகிய முல்லா முகமதுவினிடம் முத்து வீரப்பர் பணம் கொடுத்து அமைதியினை ஏற்படுத் தினார்.
சொக்கநாதர் (1659 - 1682)
சொக்கநாதர் முத்து வீரப்பருக்குப் பின் மதுரை அரசரா னார். சொக்கநாதர் சிறுவனாக இருந்ததால் தளவாய், பிரதானி, ராயசம் ஆகிய மூவரும் ஆட்சி நடத்தியதால் நாட்டில் குழப்பம் குடி கொண்டது. இவர்கள் இளவரசரை நீக்கத் திட்டம் போட்டனர். இதை உணர்ந்த இளவரசர் அவர்களை நாட்டை விட்டு விரட்டினார். அம்மூவரில் தள
இந்துக் கலைக்களஞ்சியம் x 錢$20
 

வாய் மட்டும் தப்பித்துச் சென்று சாகோசியுடனும் தஞ்சை மன்னன் விஜயராகவனுடன் இணைந்து திருச்சியைத் தாக் கினான். ஆயினும் சொக்கநாதர் இப்போரில் வெற்றி பெற் றார். அவர் காலத்தில் பிஜாப்பூர் சுல்தானின் தளபதியாரா கிய வானமியான் திருச்சியை பல தடவை முற்றுகையிட் டான். முகமதியர்கள் இந்துக்களுக்கு பல தொல்லைகள் கொடுத்தனர்.
அவர் காலப்பகுதியில் சேதுபதியுடனும் மைசூருடனும் போர் ஏற்பட்டது. தஞ்சை நாயக்கர் விஜயராகவர் தனக்கு எதிராகச் செயற்பட்டதன் காரணமாகச் சொக்கநாதர் அவர் மீது படையெடுத்தார். இப்போரிலும் வெற்றி பெற்றார். சொக்கநாதர் காலத்தில் நாட்டு மக்கள் சொல்லவொண் ணாத துயரங்களையும் இடையறா இன்னல்களையும் அடைந்தனர். ஆகவே அவர் மீது வெறுப்பு கொண்டனர். சொக்கநாதரை சிறையிலிட்டு அவரது தம்பி முத்துலிங்க நாயக்கரை 1678இல் அரியணையில் அமர்த்தினர். சொக்க நாதரின் நம்பிக்கைகுரிய தளபதி ராஷ்டம்கான் அவரை தந்திரமாக விடுத்து மீண்டும் பதவியில் அமர்த்தினான். அவன் பெயரளவிற்கு அவரைப் பதவியில் அமர்த்தி விட்டு அதிகாரங்களைத் தான் வைத்திருந்தான். இச்சூழ்நிலை யில் அவரது தளவாய், கிழவன் சேதுபதி மற்றும் சில நாயக்கர்கள் ஒன்று சேர்ந்து ரஷ்டம்கானைக் கொன்று சொக்கநாதரை அதிகாரம் பெற்ற முழு ஆட்சியாளராக அமர்த்தினர். சொக்கநாதரின் இறுதிக்காலம் இன்னல்கள் நிறைந்த காலமாகும்.
மூன்றாம் முத்து வீரப்பர் (1682 -1689)
இவர் சொக்கநாத நாயக்கரின் மகனாவார். முத்து வீரப்பர் ஆட்சிக்கு வரும்போது அரசியல் நிலைமை மிகவும் இருண்டு கிடந்தது. அவர் முகமதியருடன் பணிந்து போக வில்லை. அவர் ஒளரங்கசீப்பின் படையினர் மேற்கொண்ட காலணி ஊர்வலத்தை ஏளனம் செய்தார். சேதுபதியுட னான தொடர்பில் கசப்பும் ஏற்பட்டது. அரங்க கிருஷ்ணப்டர் எல்லா சமயத்தினர்பாலும் அன்பு கொண்டிருந்தார். அவர் பல கோயில்கள், மண்டபங்கள், விடுதிகள் கட்டினார்.
பிராமணர்களுக்கு அக்ரகாரங்கள் கட்டிக்கொடுத்தார்.
x இந்து சமய கலாசார அலுவeப்கள் தி5ை00ாக்களம்

Page 231
இராணி மங்கம்மாள் (1689 -1706)
முத்து வீரப்பர் இறக்கும்போது அவரது மனைவி முத்தம் மாள் கருவுற்றிருந்தாள். குழந்தை பிறந்தவுடன் அவர் இறந்துவிட்டார். எனவே சொக்கநாதருக்கு இளம் வயதி லேயே முடிசூட்டப்பட்டது. அவரது காப்பாளராக பாட்டி மங்கம்மாள் ஆட்சிப் பொறுப்பினை ஏற்கலானாள். இவ் வாட்சி 17 ஆண்டுகள் நீடித்தது. மங்கம்மாள் சீரிய ஆற்ற லும் திறமையும் உள்ளவர். எதிரிகளைப் பகைப்பதைக் காட்டிலும் அவர்களுடன் நட்புக் கொள்வதே சிறந்தது
என்ற கொள்கையினை உடையவர்.
இராணி மங்கம்மாளின் ஆட்சியின்போது முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப் இந்திய அரசியலில் செல்வாக்குடன் திகழ்ந்தார். அவரது ஆதிக்கம் தக்கணத்திலும் காலூன்ற முற்பட்டது. பிஜப்பூர் கொல்கொண்டா ஆகியவற்றைப் பிடித்தபிறகு முகலாயர் மராத்தியர்களுடன் கடுமையாக மோதிக் கொண்டிருந்தனர். அம்மோதலில் தப்பிய மராத்திய மன்னர் ராஜாராம் செஞ்சிக் கோட்டையில் பதுங்கியிருந்தார். அவரைக் கைது செய்யும் பொருட்டு ஜால்பிகர்கான் அனுப் பப்பட்டான். அவன் அவரது சிறந்த தளபதிகளில் ஒருவனா வான். அவன் 1693இல் திருச்சிராப்பள்ளியையும் 1697இல் தஞ்சையையும் தாக்கி செஞ்சி முற்றுகையினையும் ஒரு சேர மேற்கொண்டான். அப்போது மங்கம்மாள் சாதுரியமாக சமாளித்தார். எனினும் அவர் பெயரளவில் முகலாயரின்
மேலாண்மையினை மேற்கொண்டார்.
அவருடைய காலப்பகுதியில் மைசூரின் மீது படையெடுப் பும் திருவாங்கூருடன் தொடர்பும் ஏற்பட்டது. மங்கம்மாளின் ஆட்சியின்போது சேதுபதி மதுரைக்குத் திறை செல்லு வதை நிறுத்தி விட்டு சுயஆட்சியை நடத்தி வந்தான். அது மட்டுமல்லாமல் அவன் ஷாஜிக்குப் படைகொடுத்து உதவினான். மேலும் அவன் தஞ்சைக்கும் உதவி செய்து வந்தான். இதனால் சேது நாட்டிற்கும் மதுரைக்கும் எப்பொ ழுதுமே நல்லுறவு அமையவில்லை. 1700இல் கிழவன் சேதுபதி மதுரையைத் தாக்க முற்பட்டான். நரசப் பையன் சேதுபதி சீமைக்கு அனுப்பப்பட்டான். மதுரைப் படையோ தோல் விகண் டது. அத்துடன் நரசப் பையனும் கொல்லப்பட்டான். கிழவன் தன்னாட்சியை ஏற்படுத்தினான்.
இவ்வாறு இராமநாதபுரம் தனி நாடாயிற்று. எனினும் மங்கம்
இந்துக் கலைக்களஞ்சியம்x 漆袭 線20
 

மாள் பொறுமையுடன் நடந்து வந்தார். கிறிஸ்தவர்களுடன் அன்பும் கொண்டிருந்தார். மங்கம்மாள் பொதுப்பணிகள்
பால் நன்கு கவனம் செலுத்திவந்தார்.
விஜயரங்க சொக்கநாதர் (1706 - 1932)
மங்கம்மாள் 1706 இல் இறந்தார். அவருக்குப் பின் சொக்கநாதர் ஆட்சிப் பொறுப்பினை மேற்கொண்டார். அப் போது குழப்பங்கள் குடிகொண்டன. அமைச்சர்கள் புதுவரி கள் போட்டு மக்களைத் துன்புறுத்தினர். மன்னர் இன்பங் கள் பால் நாட்டமுற்று பணத்தைச் செலவழித்தார். அவரு க்கு எதிராக கலகங்கள் ஏற்பட்டன. ஆட்சி அழிவுப்பாதை யில் சென்றது. திருவாங்கூர் இவரது காலத்தில் பிரிந்து சென்றது.
மீனாட்சி
ஆண்மகவு இல்லாததால் சொக்கநாதரின் மனைவி மீனாட்சி ஆட்சிபீடம் ஏறினார். அவரது காலத்தில் தஞ்சை, மதுரைப் பகுதிகளை ஆற்காடு நவாபு தாக்கினார். இதை எதிரிகளும் பயன்படுத்திக் கொண்டனர். பின்னர் சந்தா சாகிபு திருச்சியைக் கைப்பற்றிக் கொண்டான். அதன் பின் அவனது படைகள் தோல்விகண்டன. மீனாட்சி சிறை யில் அடைக்கப்பட்டு நஞ்சு கொடுத்து கொல்லப்பட்டாள். அவ்வரசியின் இறப்பின் மூலம் மதுரை நாயக்கர் வம்சம்
முடிவடைந்தது.
தஞ்சைநாயக்கர் (பார்க்க ஏழாம் தொகுதி)
செஞ்சி நாயக்கர்
செஞ்சி தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரங்க ளில் ஒன்றாகும். அதனைக் கோட்டை நகரம் என்று அழைப்பர். சோழப் பேரரசின் காலத்தில் ஏற்பட்டதாகும். அது ஹொய் சாலர் காலத்திலும் விஜயநகரப் பேரரசின் காலத்திலும் தொண்டை மண்டலத்தின் முக்கியமான இராணுவத்தள மாக அமைந்திருந்தது. கிருஷ்ண தேவராயர் காலத்தில் செஞ்சி மாநிலத் தலைநகர் ஆக்கப் பட்டது. அவர் அதன் ஆட்சிப் பொறுப்பை ஓர் நாயக்கரிடம் படைத்தார். அதன்படி 1526இல் வையப்பர் அதன்
நாயக்கரானார்.
ZZZzZZekeekSke LSSZBkekekk kkZ ZZTTT TLLLLLL LLLLCLCL0L TLCLCMT TTMeGLTTT

Page 232
வையப்பர் (கி.பி. 1526 - 1541 வரை)
செஞ்சி நாயக்கராக இருந்த இவர் தென்னாற்காடு மாவட்டத்தில் பூரீ முஷ்ணம், திருக்கோயிலூர் ஆகிய ஊர்களில் கோயில் எழுப்பியதாகவும் புகழப்படுகின்றார். பேரரசர் கிருஷ்ண தேவராயருக்கு இவர் பேருதவி புரிந்தார்.
துபாக்கி கிருஷ்ணப்பர் (கி.பி. 1526 -1541)
செஞ்சி நாயக்க மன்னன் வையப்ப நாயக்கரின் மகனான இவர் தம் தந்தைக்குப் பின் அரியணையேறினார். அவர் பெத்த கிருஷ்ணப்பர் என்று கல்வெட்டுக்களிலும் துபாக்கி கிருஷ்ணப்பர் என்று மெக்கன்சி குறிப்புக்களிலும் குறிப்பி டப்படுகின்றார்.
விஜயநகரப் பேரரசரான கிருஷ்ண தேவராயர் தமிழகத் தின் மீது படையெடுத்து வந்தபோது துபாக்கி கிருஷ்ணப்ப ரும் அவருக்கு உதவியாக வந்தார். பேரரசரிடம் தோல்வி கண்ட தமிழக மன்னர்கள் செலுத்த வேண்டிய திறைப்பண த்தை நிர்ணயிப்பதிலும் வாங்குவதிலும் இவர் வையப்பரு க்கு உதவி புரிந்தார். அவர் தமது ஆட்சிக் காலத்தில் விஜயநகரப் பேரரசருக்கு உண்மையுடன் நடந்து கொண் டார். இவர் வையப்ப நாயக்கருடன் இணைந்து தென்னார் க்காடு மாவட்டத்திலுள்ள பூரீ முஷ்ணம் திருக்கோவிலுார் ஆகிய ஊர்களில் கோயில்கள் கட்டுவித்து ஆலய வழி பாட்டிற்கு நிலதானங்களையும் வழங்கியுள்ளார். இவர் மிகப் பெரிய தானிய களஞ்சியங்கள், திருமண மண்டபம், உயர் ந்த கோட்டைச் சுவர் ஆகியவற்றை அமைத்தாரெனவும் கூறப்படுகின்றது. இவர் வைணவ சமயத்தவராயினும் பிற சமயக் கோயில்களுக்கும் அறக்கொடை வழங்கியுள்ளார்.
அச்சுதராய நாயக்கர்
அவர் துபாக்கி கிருஷ்ணப்பரின் வாரிசாவார். இவர் சந்திர கிரியைத் தம் ஆட்சிப் பீடமாக கொண்டார். அவர் செஞ்சி யின் வெங்கடரமணசாமி கோயில், சந்திரகிரி சிதம்பரேசுவரர் கோயில் ஆகியவற்றுக்கு நன்கொடைகள் வழங்கியமை யினை கல்வெட்டுக்களால் அறியமுடிகின்றது. முத்தியால் நாயக்கரும் சில காலம் செஞ்சியின் ஆளுநராக பணிபுரிந்
தார். விசயராமபத்திரர் திருவண்ணாமலை, திண்டிவனம்
கோயில்களைக் கட்டினார்.
 

சூரப்ப நாயக்கர்
துபாக்கி கிருஷ்ணப்பரின் மகனான சூரப்பநாயக்கர் (கி.பி.1544 - 1567) செஞ்சி நாயக்கராகப் பதவியேற்றார். அவர் சதாசிவராயர், இராமராயர் ஆகிய பேரரசர்களின் சமகாலத்தவர். சதாசிவராயரின் பெயரால் இவர் பல திருக் கோயில்களுக்குத் தானமளித்துள்ளார். சூரப்பரின் அரச வைப் புலவர் இரத்தினகித சீனிவாச தீட்சதர் என்பார். பவன புருடோத்தமா என்ற நாடகத்தில் சூரப்பரை போற்றிப் பாடியுள்ளார். இவருக்கு கர்நாடக சிம்மபரதிசுட்ட பாணாச்
சாரியா என்ற விருதுப் பெயரும் உண்டு.
கிருஷ்ணப்ப நாயக்கர் (முதலாம்)
சூரப்ப நாயக்கருக்குப் பின் செஞ்சி அரியணையேறினார். இவர் துப்பாக்கி கிருஷ்ணப்பரின் மகனாவார். தென்னார்காடு மாவட்டத்திலுள்ள திருநாவலூர்க் கல்வெட்டில் கிருஷ் ணப்ப நாயக்கர் செஞ்சி படைவீடு, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு முதலாம் பூரீ ரங்கராயரின் ஆளுநனராகப் பணியாற் றினார் என்று குறிக்கப்பட்டுள்ளது. திட்ட சமுத்தரம் திருக் கோயிலூர் கல்வெட்டுகளும் அவர் முதலாம் பூரிரங்கத்து க்கு உட்பட்டே செஞ்சியை ஆண்டார் எனத் தெரிவிக்கின் றன. கி.பி. 1546 முதல் காணப்படும் கல்வெட்டுக்களில் முதலாம் கிருஷ்ணப்பர் நாயக்கரின் பெயர் இடம்பெற்றி ருப்பதால் இவர் இவ்வாண்டுகளுக்கிடை யில் ஆட்சிபுரிந்தார் எனக்கொள்வர்.
இரண்டாம் கிருஷ்ணப்பர்
செஞ்சியை ஆண்ட நாயக்க மரபினரில் தலை சிறந்தவர், புகழ்மிக்கவர். முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கரின் பேரரசரும் வையப்ப கிருஷ்ணப்ப கொண்டம நாயக்கரின் மகனார். அவர் சமயப் பொறையுடன் திகழ்ந்தவர். இவரது ஆட்சி பற்றி அறிந்துகொள்ள கிறிஸ்தவ பாதிரிமார்களின் கடிதங் கள் சிறந்த சான்றுகளாகத் திகழ்கின்றன.
அவர் செஞ்சிப் பேரரசிலிருந்து விடுபடவேண்டி வேங்கட ராயநாட்டுக்கு எதிராக 1586ஆம் ஆண்டில் கலகம் செய் தார். அதில் தோற்கடிக்கப்பட்டு கைதாகிச் சிறையில் தள்ளப்பட்டார். இதைக் கண்ட தஞ்சாவூர் இரகுநாத நாயக் கர் தலையிட்டு அவரை விடுதலை செய்தார். எனவே,
இந்த சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 233
கிருஷ்ணப்பர் மீண்டும் செஞ்சி அரியணையில் அமர்ந்தார். அதற்கு நன்றிக்கடனாக அவர் தன் மகளை இரகுநாத நாயக்கருக்குத் திருமணம் செய்து வைத்தார்.
விடுதலையின் மீது நாட்டம் கொண்ட அவர் மீண்டும் பேரரசுக்கு தாதிராக 1604 ஆம் ஆண்டில் போர்க்கொடி உயர்த்தினார். யச்சம நாயக்கரின் தலைமையிலான படை செஞ்சியினை முற்றுகையிட்டது. கிருஷ்ணப்பர் அப்போதும் தோற்கடிக்கபட்டு சிறையில் தள்ளப்பட்டார். இவர் திறைப் பணம் செலுத்துமாறு வற்புறுத்தப்பட்டார். செஞ்சியின் நிலை இவ்வாறானதைக் கண்ட மதுரை, தஞ்சை நாயக்கர்கள்
மனம் வருந்தி அவரை விடுதலை செய்தனர்.
1614 - 1616ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற வாரிசு உரிமைப் போரின்போது கிருஷ்ணப்பர் ஜக்க தேவராயரு டன் சேர்ந்து பேரரசையும் தஞ்சை நாயக்கரையும் எதிர்த் தார். தோப்பூர் என்னும் ஊரில் நடைபெற்ற போரில் தோல்வி யுற்றார். இறுதியாக வெள்ளாற்றங்கரையில் தஞ்சை நாயக் கரிடம் தோல்வியடைந்து கைதியானார்.
அவர் டச்சுக்காரர்களுக்கும் போர்த்துக் கேயர்களுக்கும் ஆதரவு நல்கினார். இதனை போர்த்துக்கேய பயணியான யேசு சபையைச் சார்ந்த குருபி மண்டாவின் குறிப்புகளி
லிருந்து அறியமுடிகின்றது.
போர்த்துக்கேயர் தேனாவணம் பட்டிணத்தில் கோட்டை யொன்றினைக் கட்டிக்கொள்ளவும் அனுமதியளித்தார். கிறிஸ்தவ பாதிரிகள் மாதாகோயில் கட்டவும் சித்தனுக்கு சமணப் பள்ளிகள் அமைக்கவும் சைவர்கள் திண்டிவனத்
தில் கோயில்கள் அமைக்கவும் அனுமதி அளித்தார்.
அவரின் காலத்தின் பின் வரதப்ப நாயக்கர், அப்பநாயக் கர் ஆகியோர் செஞ்சியினை ஆண்டனர். அவர்கள் திறமை யற்றவர்களாகக் காணப்பட்டனர். அதனால் செஞ்சி அரசு
1648 - 1671ஆம் ஆண்டளவில் சுதந்திரத்தை இழந்தது.
வேலூர் நாயக்கர்கள்
வேலூர் நாயக்கர்கள் ஆட்சி சுமார் 100 ஆண்டுகள்
நீடித்தது. செஞ்சியின்கீழ் இருந்த இவர்கள் விலகிப் பின்னர்
வேலூரில் தனியான ஆட்சியினை ஏற்படுத்தினார். வேலூர்
இந்துக் கலைக்களஞ்சியம்x 線2(
 

நாயக்கராட்சியினை வீரப்ப நாயக்கனே ஏற்பாடுத்தினான். இவனது மகன்களாக பொம்மு நாயக்கன், சின்ன பொம்மு நாயக்கன் ஆகியோர் ஆவர். சின்னபொம்மு நாயக்கன் 1526 - 1595 வரை வேலூரை ஆண்டான். வையப்ப நாயக்கனின் கல்வெட்டுக்கள் வேலூர் பொம்மு நாயக்கன் ஜம்பை, திருக்கோயிலூரிலுள்ள கோயில்களுக்கு வையப்ப நாயக்கனின் உத்தரவுப்படி வரி விலக்களித்து மானியங்களை வழங்கியுள்ளதைத் தெரிவிக்கின்றன. இவனைப் பற்றிய கல்வெட்டுக்கள் அனைத்துமே இவன் விஜயநகரப் பேரரசின் மேலாதிக்கத்தை ஏற்று இயங்கிய மையைத் தெரிவிக்கின்றன.
சின்னபொம்மு நாயக்கனுக்குப் பின் அவனது மைந்த னான லிங்கமநாயக்கன் என்பவன் பதவியேற்றான். கி.பி. 1601 வரை இவன் விஜயநகர அரசனான வேங்கடபதியின் கீழ் தளபதியாகப் பணியாற்றினான். வேங்கடபதி மகாராய னுக்கு கிழ் உண்மையாகப் பணிபுரிந்த லிங்கம நாயக்கன் பின்பு மேலிடத்தை எதிர்க்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டான். பெரும்பேடுகீமை எனப்படும் தற்போதைய செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆகிய இரண்டு நகரங்களும் வேலூர் நாயக்கர் அதிகாரத்தின் கீழ் இருந்தன. முதலாம் வேங்கடன் இப்பகுதிகளைத் தனது நேரடி ஆட்சியின் கீழ் எடுத்துக் கொண்டு நாகம நாயக்கர்களிடம் ஒப்படைத் தான். இச்செயல் லிங்கம நாயக்கர்களின் அதிகாரத்தைக் குறைப்பதற்காகச் செய்யப்பட்ட சூழ்ச்சி.
நாகம நாயக்கன் உத்திரமேரூர் கோட்டை மீது படை யெடுத்து அங்கிருந்து காகா என்ற தலைவனைத் தோற் கடித்து அப்பகுதியினைக் கைப்பற்றினான். இந்நிகழ்ச்சி லிங்கம நாயக்கனின் பொறுமையைச் சோதித்தது. ஆகவே, அவன் செஞ்சி நாயக்கனுடன் சேர்ந்து வேங்கடனுக்கும் நாகம நாயக்கனுக்கும் எதிராக கலகம் செய்யமுற்பட்டான். மதுரை அரசனான ரகுநாத நாயக்கனும் விஜயநகர ஆதிக்கத்தால் லிங்கமநாயக்கனுடன் சேர மறுத்துவிட்டான்.
லிங்கம நாயக்கன் விஜயநகரப் பேரரசை எதிர்த்து தான் ஒரு சுதந்திர சிற்றரசனாக வேண்டும் என முயற்சித் தான். ஆயினும் முதலாம் வேங்கடன் வேலூரின் மீது படையெடுத்து லிங்கம நாயக்கனைத் தாக்கினான். கி.பி.
ššŠși FB53 sou aseav aTJ gageaJejes6ss gleGoeoT&&selTLň

Page 234
1604ஆம் ஆண்டு மே 2ஆம் நாள் லிங்கம நாயக்கன் கைதுசெய்யப்பட்டுச் சந்திரகிரிக்குக் கொண்டு செல்லப்பட் டான். இதனுடன் வேலூரில் நாயக்கர் ஆட்சியும் முடிவுற்றது.
நாயக்கர் கால அரசியல், சமுதாய நிலை
நாயக்கர் காலத்தில் தமிழகத்திலே பல மாற்றங்கள் ஏற்பட்டன. தமிழகத்தில் மரபுவழியாக அரசியல் நிர்வாக முறைகள் மாற்றமடைந்தன. முற்காலங்களில் சிறப்புற்று இருந்த நாடு, நகரம், ஊர், சதுர்வேதி மங்கலம் என்பனவற் றின் நிர்வாக முறைகள் சீர்குலைந்தன. நாயக்க மன்னர்கள் விஜயநகர நாயக்கர்களைப் போல தெலுங்கு தேசத்திலும் கர்நாடகத்திலும் இருந்துவந்த போர்வீரர்களைப் படைகளில் சேர்த்துக் கொண்டனர். பல இடங்களிலே காவல் நிலையங் களாக பாளையப் பட்டுக்கள் அமைக்கப்பட்டன. பெருமள விலே நிலமானியங்கள் வழங்கப்பட்டன. பெரும் தொகை யில் பிராமணர்களும் வியாபாரிகளும் வடக்கிலிருந்து தமிழகம் வந்தனர். அவர்களுடைய செல்வாக்கும் அதிகார மும் சமுதாய நிலைகளில் பெருமாற்றங்களை ஏற்படுத் தின. தெலுங்குமொழி, சமஸ்கிருதமொழி ஆகியவற்றின் ஆதிக்கம் மேலோங்கியது. தெலுங்குமொழி கணிசமானவர் களின் பேச்சு மொழியாகியதுடன் இசை, நடனம்,கலை ஆகிய துறைகளில் பெரும் செல்வாக்குப் பெற்றது. கர்நாடக சங்கீதம் தெலுங்கு மொழியூடாக விருத்தியடைந்து பல கிருதிகளும் நாட்டிய நூல்களும் அம்மொழியிலேயே எழுதப்பட்டன. வைணவர்களாக விளங்கிய நாயக்கர்கள் தெலுங்கு மொழி இலக்கியத்திற்கும் வைணவ சமய சம்பிரதாயத்திற்கும் மிகுந்தளவில் ஆதரவு தந்தனர். சூழ்நிலை காரணமாக தமிழ்மொழி வழக்கில் மாற்றம் ஏற்பட்டது. சமஸ்கிருத சொற்களும், சொற்றொடர்களும் மிகுதியாக புழக்கத்தில் வந்தன. இலக்கிய கர்த்தாக் களில் இந்த மரபிற்கு அருணகிரிநாதர் முன்னோடியாவார். மணிப்பிரவாளநடை வசனநடை விருத்தி பெற்றது. இக்கால சாசனங்கள் இதனைப் பிரதிபலிக்கின்றன. நாயக்க மன்னர்கள் சமஸ்கிருத வல்லுநர்களுக்கும் இலக்கிய வல்லுனர்களுக்கும் முற்கால மன்னரைப் போல ஆதரவு புரிந்தனர். சைவசமய மரபிலே மாற்றங்கள் ஏற்பட்டன.
கர்நாடகத்திலும் தெலுங்கு தேசத்திலும் பெருமளவு
 

வழக்கில் இருந்த வீரபத்திரர் வழிபாடு பெருமளவு பரவி யது. இக்காலத்தில் கிறிஸ்தவ சமயம் பெரும் செல்வாக் குப் பெற்றது. போர்த்துகேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர், பிரான்சியர் ஆகியோரின் வர்த்தக நிலையங்களும் கோட் டைகளும் கரையோரப் பகுதிகளில் அமைக்கப்பட்டன. தமிழகத்தில் கரையோர வர்த்தகம் அவர்களின் கட்டுப்பாட் டில் வந்தது. பிரதான வணிக சமுதாயங்களினதும் உள்ளு ராட்சிகளினதும் சீர்குலைவினால் பெரும் தாக்கம் ஏற்பட் டது. ஆலயங்கள் பொதுநல அமைப்புக்கள், குளம், கால் வாய் தொடர்பான ஏற்பாடுகள் சீர்குலைந்தன. குறிப்பிடத் தக்க அளவிலே அதிருப்தியும் சோகமும் சமுதாயத்திலே காணப்பட்டன. சமகால இலக்கியங்களிலும் இது பிரதி பலிக்கின்றது. சித்தர் பாடல்களும் உலகியல் சார்ந்த பிறபாடல்களும் ஒரு அலட்சிய மனப்பான்மையை வெளிப்
படுத்தின.
நாயக்கர் கால அரசியல் நிலைமையில் மன்னர்கள் வரம்பில்லா அதிகாரங்களைக் கொண்டிருந்தனர். மாநிலத் தலைவர்களாகிய இவர்கள் சடங்குகளையும் சம்பிரதாயங்க ளையும் பின்பற்றினர். இவர்கள் கோயில்களுக்கு இறையிலி நிலங்களையும் பிராமணர்களுக்கு சதுர்வேதி மங்கலம்,
அக்ரகாரம் போன்றவற்றையும் மானியங்களாக வழங்கினர்.
நாயக்க மன்னர்களுக்குத் தளவாய் என்னும் படைத் தளபதியும் பிரதானி என்னும் திவானும் ராயசம் என்னும் தலைமைச் செயலரும் துணை புரிந்தனர். தளவாய் சிவில் படை அதிகாரங்களைக் கொண்டிருந்தனன். நாட்டில் அமை தியும் வெளிநாடுகளுடன் அரசுத் தொடர்புகளை சீரமைக் கும் பொறுப்பும் தளவாய்க்குரியதாகும். பிரதானி வரவு செலவு கணக்குகளைத் தயாரித்தல், பணத்தைப் பொறுத் தவரையில் அனைத்துப் பத்திரங்களையும் கண்காணித்தல் ஆகிய கடமைகளை மேற்கொள்ளுவான் ஆகும். ராயசம் என்னும் அதிகாரிக்கு மன்னரின் அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவது கடமையாக அமைந்தது.
மாநில அரசு
நாடு பல மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது என்பதை யேசு சபையாரின் குறிப்புக்கள் மூலம் அறிய முடிகின்றது.
நாயக்க அரசையும் பாளையப்பட்டுகளையும் இணைக்க
6 xஐx:ஜ் இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 235
ஆளுநர்கள் இருந்தனர். மாநில ஆளுநர்களுக்கு நீதி விசாரணை உரிமையும் இருந்தது. பிரதானி நடத்திய விசாரணையின் போது மாநில ஆளுநரும் அங்கத்தினாராய் இருந்தனர். ம்ாநிலங்கள் நாடுகள், சீமைகள், மாகாணங்கள், குடிகள், ஊர்கள் எனப் பிரிக்கப்பட்டிருந்தன. இவர்கள் ஆட்சி முறையில் கிராமங்கள் பின்தள்ளப்பட்டு பாளையங்க ளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்ட காரணத்தாலும்
தல சுயாட்சி ஊர்கள் அழிக்கப்பட்டன.
நிதி நிர்வாகம்
நிலவரி, பாளையக்காரரின் திறைகள், மீன்பிடித்தல், தொழில் வருவாய் என்பன நாட்டின் முக்கிய வருவாய்களா கும். இவற்றில் நாட்டின் முக்கிய வருவாய் நிலவரியாகும். மன்னருக்குரிய நிலத்திலிருந்தும் உழவு, பண்டாரவடை, ஜோடிவிரதம் போன்ற சிறுபான்மை வரிகளும் தறிவரி, நூற்பு வரி, சுங்க வரி, ஏற்றுமதி வரி என்பனவும் நாட்டில் இருந்தன என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன. நிலவரியிலி ருந்து சில நாட்டு அதிகாரிகளும் பொதுநல அமைப்புக்க ளும் தவிர்க்கப்பட்டிருந்தன. கிராமப்புற நிதி அதிகாரி மணியக்காரன், அம்பலக்காரன் ஆவர். ஊர்களிலிருந்து சேகரித்த வரியை மாகாணத் தலைவர்வழி அவர் நாட்டுக் கருவூலத்திற்கு செலுத்தினார்.
சமுதாய வாழ்க்கை
சாதி அடிப்படையிலான சமுதாயத்தில் பிராமணர்கள் உயரிடத்தைப் பெற்றனர். சிறப்புரிமைகளையும் அவர்கள் அனுபவித்தனர். அவர்களில் சிலர் அரசியல் உயர் பதவிக ளில் தளவாய்களாக, பிரதானிகளாக கடமையாற்றினர். மன்னர்களின் தலைமை ஆலோசகராகவும் அவர்கள் இருந்தனர். சிலர் கோயில் பூசாரிகளாக கோயில் காரியங் களைக் கவனித்தனர். சிலர் புரோகிதராய் மன்னரின் அவை யில் இருந்தனர். தேவைப்படும்பொழுது சமூகச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. தெலுங்கு மொழி பேசிய நாயுடுக்கள். ரெட்டிக்கள். இராசுக்கள் ஆளும் வர்க்கத்தினராக கருதப் பட்டு ஆடம்பரமாக வாழ்ந்தனர். கம்மாளரிடையே ஐந்து சாதிப்பிரிவுகள் இருந்தன. கொல்லன், பொற்கொல்லன், செப்புக் கொல்லன், தச்சன், கைவினைஞன் ஆகியோரே அவர்கள். மதுரையில் வசித்து வந்த பட்டுநூல்க்காரர்களும் உபகர்ணம் செய்யும் உரிமையை அரசி மங்கம்மாளிட
இந்துக் கலைக்களஞ்சியம் ஐ:ஐ ಫ್ಲ್ಯ 2 {)

மிருந்து பெற்றனர் (கி.பி. 1705). எனவே, நூல்காரர்களும் சமூகத்தில் உயர்வு பெற்றனர். கலப்புத் திருமணங்களும் சாதிக்கலப்புகளும் நிகழ்ந்ததால் சாதிகள் எண்ணிக்கை யில் உயர்ந்தன. குழந்தைத் திருமணமும் திருமணத்தின் போது சீதனமாக நகையும் சொத்தும் வழங்குதலும் நில வின. வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் நடை முறையில் இருந்தன. உடன்கட்டை ஏறும் வழக்கமும் பின்பற்றப்பட்டது.
உயர் வர்க்கத்தினரிடையே பலதார மணம் ஒப்புக்கொள் ளப்பட்ட ஒரு முறையாகும். ஜான் நியுகாட்ப், விகோ, பிமண்டா பாதியார்களின் கடிதங்கள் மன்னரின் அரண்மனை யில் அந்தப்புரங்கள் இருந்ததாக அறிவிக்கின்றன. திரு மலையின் அந்தப்புரத்தில் 200 மனைவியர் இருந்ததாக அறியப்படுகின்றது. சாதி முறைமை என்னும் உடன்கட்டை ஏறல் நாட்டில் புழக்கத்தில் இருந்து வந்துள்ளது. நாட்டில் விபசாரம் ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது. சேரிப்பரத்தைகளு டன் கோயில் தாசிகளும் சேர்ந்து கொண்டனர். தேவரடி யார்கள் கோயில் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இமானு வேல்டி வைகா என்பவர் திருவாரூர் கோயில் விழாவில் வீதிகளில் தேவரடியார்கள் நடனமாடிச் சென்றதைக் குறிப் பிட்டுள்ளார். பியட்ரோ டெல்லா என்பவரும் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தேவரடியார்க்குப் பாதங்களில் சூலக்குறி சூடு போடும் வழக்கம் இருந்தது. தேவரடியார்களுக்கு விருதுப் பெயர்கள், நிலங்கள் முதலியன வழங்கப் பெற் றன. திருமெய்யம் தாலுகாவில் ராங்கியம் என்ற ஊரில் உமையம்மை என்ற தேவரடியாள் 'நாலுதிக்கும் வென்ற
மாணிக்கம்” என்ற விருதுப் பெயரைப் பெற்றாள்.
உணவுப் பழக்கவழக்கங்களில் அதிகம் கட்டுப்பாடுகள் இருக்கவில்லை. அந்தணர்கள் புலால் உண்ணாது நெய், அரிசி, சக்கரை, பால் போன்றவற்றை உண்டனர். கல்வெட் டுக்களில் சோறு, தோசை, அதிரசம், சுகியம் போன்ற உணவுப் பொருட்களின் பெயர்களும் காணப்படுகின்றன. சமூகத்தில் தீண்டாமை இருந்து வந்தது. தீண்டத்தகாதோர் ஒதுங்கிய அல்லது ஒதுக்கப்பட்ட இடங்களில் வசித்து
வந்தனர். இத்தாழ்த்தப்பட்டோர் புலால், மீன், முட்டை, அரிசி போன்ற உணவினை உண்டு வாழ்ந்து வந்தன்ர்.

Page 236
ஆடவரும் பெண்டிரும் மேலாடை, இடையாடை அணிந் துள்ளனர். நாயக்க மன்னர்கள் இடையில் அணிகலன்க ளால் உடையை அழகு செய்தனர். சாதாரண மக்களும் மார்பகங்களை மறைத்து ஆடை அணிந்தனர் என்பதனைச் சிற்பங்கள் எடுத்துக் காட்டுகின்றன. ஆண்களும் நீளமான முடியினை வளர்த்துக் கொண்டையிட்டு அதில் அணி கலன்கள் அணிந்தனர். ஆடை அணிகலன்களுக்கு நாயக்கர் பெருஞ்செல்வத்தைச் செலவிட்டனர். மேம்பட்ட துணிகளை நெய்தல் பொருட்டு திருமலை, மதுரையில் செளராஷ்டிரபுரம் பெண்களை குடியிருத்தியிருந்தார். அரச குடும்ப த்தார் பட்டு ஆடைகளையும் பூக்கள் பின்னப்பட்ட
விதவித மான ஆடைகளையும் அணிந்தனர்.
சமயம்
தமிழக மக்களில் பெரும்பான்மையோர் இந்து வழிபாட்டு முறையைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். மதுரை, தஞ்சை, செஞ்சி நாயக்கர்கள் சிவன் அல்லது விஷ்ணு மற்றும் சிறுபான்மைத் தெய்வங்களைப் போற்றி வழிபட்டு வந்த னர். மக்கள் தெய்வத்தின்மீதும் சமயத்தின்மீதும், புனித மான பொருட்களின் மீதும் அதிக நம்பிக்கை வைத்திருந்த னர். ஏதேனும் ஒரு நல்ல அல்லது தீயசெல்களைச் செய்ய துவங்குமுன் கடவுளிடம் முறையிட்ட பின்பே அதனைத் தொடங்குவர். இவ்வாறு செய்வதன் மூலம் ஆண்டவனின் சக்தியையும் வாழ்த்துக்களையும் தாம் பெற முடியும் என்பது அவர்தம் குறிக்கோளாக இருந்தது. எனவே சமயச் சடங்குகள், திருவிழாக்கள், பூசைவழிபாடுகள் ஆகிய வற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர் நாயக்கர் 5ണ്. அரசுகளின் முக்கிய நகரங்கள் பெரும்பாலும் விழாக் கோலம் பூண்டிருக்கும். சித்திரைத் திருவிழா, புட்டுத்திரு விழா, தெப்பத்திருவிழா என்பன மதுரையின் சிறப்புத் திருவிழாக்களாகும். சுந்தரேசப் பெருமான் நடத்தியதாகக் கருதப்படும் திருவிளையாடல் நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டது. மதுரையைத் திருவிழாக்களின் நகரமாக் கிய பெருமை திருமலையைச் சேரும். தஞ்சை, கும்ப கோணம், திருவாரூர், சிதம்பரம் போன்ற இடங்களிலும் திருவிழாக்கள் நடத்தப்பட்டன. மாதமுதற்தேதி, பதினொன் றாம் திங்கள் (பிறை) பெளர்ணமி, பஞ்சபர்வங்கள், ஏகாதசி, சிவராத்திரி, மகாசங்கிராந்தி, துவாதசி, ழரீஜெயந்தி
போன்றவை கோயில்களில் கொண்டாடப்பட்டன.
 

நாட்டுப்புறத் தெய்வங்களுக்கும் தேவதைகளுக்கும் உரிய இடம் தரப்பட்டது. கெடுதிகளிலிருந்தும் கெட்ட சக்திகளிலிருந்தும் நாட்டுப்புற மக்களைக் காப்போர் நாட்டுப் புறத் தெய்வங்கள் என்று மக்கள் கருதினர். இக்காலப்பகுதியிலேயே மதுரைவிரன் தெய்வமகனாக உயர்த்தப்பட்டார்.
நாயக்கர் காலப்பகுதியில் வைணவர்களிடையே வட
கலை, தென்கலை என்ற வேறுபாடுகள் காணப்பட்டன. இக்காலப்பகுதியிலேயே வீர சைவம் தமிழகத்தில் பரவி யது. இவர்கள் தங்கள் சமய தத்துவங்களை உலகிற்கு உணர்த்துமாறு ஊக்குவிக்கப்பட்டனர். அனுமானை வணங் கும் முறை எல்லா வைணவக் கோயில்களிலும் சிறப்பிடம் பெற்றது. அனுமானின் உருவச்சிலைகள் தமிழகக் கோயில் களில் இடம்பெற்றன.
தமிழக நாயக்க அரசுகள் எல்லாமே வேதாந்த சித்தாந் தக் கருத்துக்களை ஊக்குவித்தன. கல்வி வளர்ச்சிக்காக வும் மக்கள் அறிவினைப் பெருக்கவும் தத்துவக் கருத்துக் களைப் போதிக்கவும் மடங்களை நிறுவவும் உதவி செய்த னர். நாயக்க மன்னர்கள் அறிஞர்கள் பலரைச் சமய தத் துவப் போதனைக்கும் விவாதத்திற்கும் ஊக்குவித்தனர். சமய தத்துவ மாநாடுகள் நடத்தப்பட்டன. தந்திரிக பள்ளி களும் அதன் தத்துவங்களும் மக்களின் சமய வாழ்வில் அதிகம் இடம் பெற்றிருந்தன. கோயில்களும் மடங்களும் கல்வி வளர்ச்சி மையங்களாகவும் பொழுதுபோக்கு இடங்களாகவும் மருத்துவ இல்லங்களாகவும் செய்ல்பட்டு வந்தன. அரசர் கோயில்களையும் மடங்களையும் நிர்வகி க்க அதிகாரிகளை நியமித்தார்.
நாயக்கர் காலத்தில் பொதுவாக சமயப் பொறை இருந் தது. பள்ளிவாசல்களுக்கும் மாதா கோயில்களுக்கும் கொடைகள் அரசர்களால் வழங்கப்பட்டன. சமயத்தின் அடிப்படையில் எவரும் தரக்குறைவாக நடத்தப்பட வில்லை. இராபர்ட் டி.நொபிலி , சாண்டி- பிரிட்டோ போன் றோர் சமயம் பரப்பத் தடையேதும் இருக்கவில்லை. திரு மலை நாயக்கர், கிறிஸ்தவ சமய போதகருக்குப் பேராத ரவு நல்கினார். இவ்வாறு காணப்பட்டபொழுதும் சில சமயங் கள் சமயப்பூசல்கள் ஏற்பட்டன. தஞ்சையில் சைவ சமயத்
இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்கணம்

Page 237
தவருக்கும் வைணவருக்குமிடையில் பூசல்கள் ஏற்பட்டன. மதுரையில் வேதாந்த தேசிகரின் சீடர்களுக்கும் மணவாள முனிகளின் சீடர்களுக்கும் இடையே போட்டிகள் ஏற்பட்டன. சிதம்பரம் நடராஜர் கோயிலில் பெருமாள் சுவாமியின் உருவத்தை வைப்பதற்கு சைவ சமயத்தவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இக்கோயிலைத் திருப்பணி செய் யப் பணித்த செஞ்சியின் கிருஷ்ணப்ப நாயக்கர் சைவர்க ளின் எதிர்ப்பிற்கு செவிசாய்க்கவில்லை. ஆனால் மதுரை யில் இந்த இரு இந்து மதப் பிரிவினரையும் ஒன்றுபடுத்தும் முயற்சியில் திருமலை நாயக்கர் வெற்றி பெற்றார்.
இலக்கிய வளர்ச்சி
நாயக்க மன்னர்கள் தெலுங்கு மொழி இலக்கிய வளர்ச் சியிற் பேரார்வம் காட்டினர். அதனை அடுத்து வடமொழி, கன்னடம், தமிழ் இலக்கியங்களும் வளர்ந்தன. அவை பெரும்பாலும் சமய சார்புடையனவே. நாயக்க மன்னர்கள் பொதுவாகக் கவிஞர்கள், அறிஞர்கள், வேதாந்திகள், சித்தாந்திகள் ஆகியோரையும் அயல்நாட்டு கிறிஸ்தவ சமயப் போதகர்களையும் ஆதரித்தனர். காஞ்சியும் மதுரை யும் முறையே வடமொழி, தமிழ் மொழிக் கல்வியின் மையங்களாகத் தொடர்ந்திருந்தன.
நாயக்க மன்னர்களின் காலத்தில் வெளியான புராணங்க ளில் பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற்புராணம் சிறந்ததாகக் கருதப்படுகின்றது. நறுந்தொகை, நைடதம், காசிகாண்டம், கூர்மபுராணம், இலிங்க புராணம், திருக்கருவைப் பதிற்றுபத்தந்தாதி, பிரமேத்திர காண்டம், சுந்தர பாண்டியம், மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், கந்தர் கலிவெண்பா, மீனாட்சியம்மை குறம், மதுரைக் கலம்பகம், சகலகலாவல்லிமாலை, சிதம்பரச் செய்யுட்கோவை, திருவரங்கக் கலம்பகம், அழகர் அந்தாதி, தருவரங்கத்து மாலை, திருக்குற்றால குறவஞ்சி, திருக்குற்றாலத் தலபுராணம், திருக்குற்றால உலா, தணிகைப் புராணம், அருணாசல புராணம், காஞ்சிபுராணம், சிதம்பர புராணம் என்பனவற்றைக் கூறமுடியும். இக்காலத்தில் வாழ்ந்த புலவர்களாக திருமலை நாதர், பரஞ்சோதி யார், தத்துவபிரகாச சுவாமி கள், தாண்டவரியசுவாமிகள், ஞானப்பிரகாச தேசிகர் போன் றோர் அவையை அலங்கரித் தனர். குமரகுருபரர், மாதை திருவேங்கட நாதர், தாயுமான
இந்துக் கலைக்களஞ்சியம்xx 綠20
 

சுவாமிகள் போன்றோர் திருமலை நாயக்கர் காலத்தில் இலக்கியத்திற்கு மெருகூட்டினர்.
தஞ்சை நாயக்கர் காலத்தில் இலக்கியங்கள் வளர்ச்சி யடைந்தன. இரகுநாத நாயக்கர் இலக்கியம் இசை ஆகிய வற்றில் ஆற்றல் மிக்கவர். இவர் சாணகி பரிணாயம், அச்சுதாப்பியூதம், யட்சகானம், வான்மீகி சரிதம், போன்ற பல தெலுங்கு இலக்கியங்களைப் படைத்தார். இக்காலத் தில் பிரபந்த இலக்கியங்கள் தூய்மை பெற்றன.
கட்டிடக்கலை
மதுரை, செஞ்சி, தஞ்சை நாயக்கரது ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் கோயிற் திருப்பணிகள் நடைபெற்றன. பல கோயில்களில் உயர்ந்த கோபுரங்கள் அமைக்கப்பட்டன. மண்டபங்களும் சுற்று மதில்களும் கட்டப்பட்டன. இவர்கள் புதிய கோயில்களைக் கட்டுவதி லும் பார்க்க பழைய கோயில்களை விரிவுபடுத்துவதிலும் அழகு படுத்துவதிலும் ஆர்வம் கொண்டனர். மதுரை பூரீரங் கம், ழரீவில்லிப்புத்தூர் ஆகிய கோயில்களின் பகுதிகளை இவர்கள் கட்டிப் பல கண்ணைக் கவரும் சிற்பங்களையும் வடித்தனர். ரீரங்கம் கோயிலில் பிரகாரங்கள், கோபுரங்கள், மண்டபங்கள் எழுப்பப்பட்டன. திருநெல்வேலி, கிருஷ்ணா புரம் கோயிலும் தென்காசி விஸ்வநாதர் கோயிலும் மதுரை நாயக்கர் காலத்தில் ஏராளமான கொடைகளைப் பெற்றன எனச் சான்றுகள் எடுத்துரைக்கின்றன. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் வடக்கு மண்டபம், வீரப்பமண்டபம் ஆகியவை கிருஷ்ண வீரப்ப நாயக்கர் திருப்பணிகளில் அடங்கும், வேலூர் பேரூர்க் கோயில் திருச்சிராப்பள்ளி, இராமேஸ்வரம், தாடிக்கொம்பு, சுசீந்திரம் ஆகிய கோயில் களிலும் திருப்பணிகள் செய்யப்பட்டன. மதுரை மீனாட்சி யம்மன் கோயில் புதுமண்டபம் திருமலை நாயக்கரால் எழுப்பப்பட்டது என்று கூறப்படுகின்றது. கலைநுணுக்கமான உருவங்கள் செதுக்கப்பட்ட நான்கு சுற்றுக்கள் புது மண்ட பத்திற்குத் துணையாக அமைக்கப்பட்டுள்ளன. மதுரைக் கலையம்சத்தை நினைவூட்டும் நான்கு விதமான தூண்கள், வசந்த மண்டபம், நாயக்க அரசர்களின் உருவங்கள் ஆகியவை கலையழகை மெருகூட்டுவனவாகும். புதுமண்ட பத்திற்கு முன்னால் அமைந்துள்ள கோபுரம் திருமலை நாயக்கரால் தொடங்கப்பட்டது. இக்கோபுரம் முற்றுப்
ZZLZZZSZZZTT TLLL GLLMC L LTLMLMM CGT TTTLeMeLTTMMT

Page 238
பெறாத நிலையில் இருப்பதால் இதற்கு மொட்டைக் கோபு ரம் என்ற பெயர் வழக்கிலிருக்கின்றது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏராளமான புதுமுக மண்டபங்கள், தூண் தாங்கிய வளைவுச் சுவர்கள், உயரமான மேடை போன்ற அமைப்புக்கள் அழகான மென்மையான சில வடிவங்கள், பிரமிக்கத்தக்க கோபுரங் கள் நான்கு பக்கங்களிலும் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச் சுவர்கள் போன்றவை நாயக்கர் காலக் கட்டிடக் கலையை இன்றும் நினைவூட்டுகின்றன. இக்கோயில் தன்னுள் இரண்டு கோயில்களைக் கொண்டுள்ளது. இக்கோயிலில் அமைக்கப்பட்டிருக்கும் பிரசித்தி பெற்ற ஆயிரங்கால் மண்டபம் விஸ்வநாயக்கர் காலத்தில் மதுரை நாயக்கர் அரசின் அமைச்சராயிருந்த தளவாய் அரியநாத முதலியாராற் கட்டப்பட்டது எனக் கூறப்படுகின்றது.
நாயக்கர் காலக் கட்டிடக் கலை முகமதியக் கலை நுட்பங்களைத் தன்னுள் கொண்டுள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக இருப்பவை திருமலை நாயக்கர் அரண் மனையாகும். அதுபோன்று அவர் வெட்டிய வண்டியூர்
தெம்பக்குளமும் கட்டிடக் கலையின் வெளிப்பாடாகும்.
செஞ்சிக் கோட்டையின் கோயில்களும் மண்டபங்களும் நாயக்கர் ஆட்சிக்காலத்தவையே. முத்தியாலு நாயக்கர் என்பவரால் வெங்கடரமணசுவாமி கோயில் கட்டப்பட்டது. முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் கல்யாண மஹால் கட்டி னார். அச்சுதராம பத்திரநாயக்கர் திருவண்ணாமலை, திண்டி வனம் கோயில்களைக் கட்டினார். திருக்கோயிலூரில் உள்ள திருவிக்கிரம பெருமாள் கோயில் பல வழிகளில் நாயக்கர்காலக் கலையை ஒத்திருக்கின்றது. இக்கோயி லில் அம்மன் கோயிலுக்கு முன்பு அமைந்துள்ள கல்யாண மண்டபத்தின் தூண்களில் சில நாயக்க மன்னர்களின் உருவச் சிலைகள் காணப்படுகின்றன. பூரீகிருஷ்ணத்தின் வைணவக் கோயில் ஆறுகால் மண்டபம் ஒன்றைக் கொண்டுள்ளது. இதன் தூண்களில் தஞ்சையின் அச்சு தப்ப நாயக்கர், அவர் தம் மூன்று சகோதரர்கள் மற்றும் பல நாயக்க மன்னர்களின் உருவச் சிற்பங்கள் காணக்
கிடைக்கின்றன.
தென்னார்க்காடு மாவட்டத்தில் பஞ்சமஹாலில் ஒன்றான
இந்துக் கலைக்களஞ்சியம்x 繳2 l
 
 

வெங்கடம்மாள் பேட்டை வெங்கடபதி நாயக்கரின் சகோதரி யின் நினைவாக அமைக்கப்பட்டது என்பர். அச்சுத இராம பத்திர நாயக்கர் திருவண்ணாமலைக் கோயிலின் சுற்றுச் சுவர்களையும் இராஜகோபுரத்தையும் எழுப்பினார். திண்டி வனத்தில் விஷ்ணு கோயிலையும் நெடுங்குன்றம் சேத்துப் பட்டு ஆகிய இடங்களில் கோயிலையும் கோபுரத்தையும்
கட்டினார்.
தஞ்சை நாயக்கர்களும் கோயில் மண்டபங்கள், கோபுர ங்கள், சத்திரங்கள், அக்ரகாரங்கள் ஆகியவற்றை ஏற்படுத் துவதில் வல்லவராக இருந்தனர். தஞ்சைப் பெருவுடையார் கோயில், மன்னார்குடி இராசகோபால சுவாமி கோயில், திருவாரூர் தியாகேசர் கோயில், கும்பகோணம் இராமசாமி கோயில் ஆகியவற்றிலே தஞ்சை நாயக்கர்களது கட்டி டக்கலைப் பாணியைக் காணலாம். இராச கோபால சுவாமி கோயிலில் விஜயராகவர், இராசகோபுரங்களைக் கட்டுவித் ததுடன் ஆயிரங்கால் மண்டபம், கருட வாகன மண்டபம் முதலான மண்டபங்களையும் கட்டிக் கோயில் திருச்சுற்று மதிலையும் எடுப்பித்து கலைப்பணி புரிந்துள்ளார். இவர்
காலத்துக் கட்டிடங்கள் கலையழகு மிகுந்தவை.
சிற்பக்கலை
நாயக்கர்கள் சிறப்பக்கலையைப் போற்றிப் பாதுகாத்த னர். மதுரை நாயக்கர் கிருஷ்ணாபுரம், தாடிக்கொம்பு, மதுரை அங்கயற்கண்ணி ஆலயம் பூரீவில்லிபுத்துர், அழகர் மலை, தென்காசி, திருப்பரங்குன்றம் முதலான இடங்களில் கலையழகு மிக்க சிற்பங்களைக் காணலாம். இவர்களால் வடிவக்கப்பட்ட மண்டபத்துாண்கள் சிறந்த வேலைப்பாடுக ளுடன் விளங்குகின்றன. இத்துாண்கள் பொதுவாக யாளி களை அல்லது பாயும் நிலையில் உள்ள குதிரைகளைத் தம்மகத்தே கொண்டுள்ளன. சில தூண்களில் மதுரை நாயக்கவேந்தனின் முழு உருவச் சிலைகள் தம் தேவியர் புடைசூழச் செம்மாந்து நிற்கும் பாணியில் மிகச் சிறப்பாகச் செதுக்கப்பட்டுள்ளன. திருவரங்கம், மதுரைப் புதுமண்டபம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத் திருச்சுற்றுக்களிலும் இவர் காலத்தைய கவின்மிகு சிற்பங்கள் காணப்படுகின் றன. மதுரை ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திரிபுராந் தகன் பல்லவ சோழர் கால கலையாண்மைக்கு நிகரானது.
மதுரை சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் கம்பத்தடி மண்டபம்,
இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 239
(வீரப்ப நாயக்கர் காலம்) மிக நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட சிற்பத்துாண்களைக் கொண்டது. கிழக்கும் மேற்குமாக இரு சிறிய கோபுரங்களுக்கு இடையே இம்மண்டபம் காணப்படும். வடகிழக்கு மூலையில் நூறுகால் மண்டபம் காணப்படும். இரண்டு வரிசையில் எட்டுத்தூண்களும் நிலை பெற்றுள்ளன. இத்துாண்களில் உக்கிரமாகாளி, சிவன், வீரபத்திரன், சதாசிவன், சதாசிவி ஆகியோர் காணப்படுகின் றனர். தென்மேற்கிலிருந்து வலம் வந்தால் இடபாருடர் ஏகபாத மூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், அரிஹரன், சந்திர சேகரன், கல்யாணசுந்தரர், உமைசகிதமூர்த்தி, காமதகன
மூர்த்தி போன்ற பல சிற்பங்களைக் காணலாம்.
மதுரை ஆயிரங்கால் மண்டபங்களில் முகப்புத் தூண்க ளில் உள்ள அரிச்சந்திரன், குறவன், குறத்தி ஆகிய சிற்ப உருவங்கள் வனப்பும் எழிலும் வாய்ந்தவை. ரதி, மன்மதன் ஆகியோரின் உருவங்கள் ஆயிரங்கால் மண்டபத் தில் அமைக்கப்பட்டுள்ளன. மன்மதனுடைய உருவம் சிதை வுற்றுள்ளது. இரதியின் வடிவம் நன்கு பேணப்பட்ட நிலை யிலே காணப்படுகின்றது. மண்டபத் தூண்களிலே நாயக்க மன்னர்களின் உருவங்களும் அவர்களின் தேவியர்களின் வடிவங்களும் பிரதானிகளின் உருவங்களும் காணப்படு
கின்றன.
திருமலை நாயக்கர் எழுப்பிய புதுமண்டபம் மற்றுமொரு சிற்பக்கூடமாகும். இங்கு சந்திரன், கல்யாண சுந்தரர், காளி, தடாதகை, பதஞ்சலி, வியாக்ரபாதர், துவாரபாலகர், சூரியன், திரிபுராந்தகன் போன்றோரின் படிமங்கள் காணப் படுகின்றன. நாயக்கர்களின் மற்றுமொரு சிறப்பு இம்மன்னர் களின் சிற்பங்கள் காணப்படுவது ஆகும். திருப்பரங்குன் றத்து வடபால் குடவரைமுன் உள்ள மண்டபத் தூணில் திருமலை மன்னர் தேவிகளுடன் காணப்படும் சிற்பம்
9) 6TTg5.
முதலாம் கிருட்டிணப்பர் எழுப்பிய கிருட்டிணாபுரம் வேங் கடவன் திருக்கோயில் உட்பிரகாரத்தில் காணப்படும். அவை (சபா) மண்டபம் யாளி மற்றும் சிற்பத்துரண்களுடன் கூடிய அருங்கலைக்கூடம். இங்கு வீரபத்திரர், மன்மதன், இரதி, பீமன், முனிவரும் பெண்ணும் போன்ற சிற்பங்கள் அமைந்துள்ளன. திருநெல்வேலி நெல்லையப்பர் கோயி
綠21
இந்துக் கலைக்களஞ்சியம்3
 

லில் இசைத்துாண்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுரம் பேசுபவை. தாடிக் கொம்பில் வடிவமைக் கப்பட்ட இரதி, மன்மதன். அகோர வீரபத்திரர் முதலான சிற்பங்களும் பார்த்துச் சுவைக்கத் தக்கவையாகும். சேரன்மாதேவி இராமசாமி கோவிலில் கிடைத்த கண்ணன், ருக்குமணி, சத்தியபாமையின் வடிவங்கள் அழகுள்ளவை. அதேபோன்று மதுரை அங்கயற்கண்ணி ஆலய வழிபாட்டி லுள்ள பிச்சையேந்தும் பெருமாள், கால்மாறி ஆடிய பிரான், இவர்களது செப்புப் படிமங்கள் குறிப்பிடத்தக்கவை. இவ் வாறே திருவைகுண்டத்து செப்புப்படிமங்கள் பேரூர்பட்டிப் பெருமாள் ஆலய செப்புப் படிமங்கள் இவைகள் அனைத் தும் நாயக்கர்காலச் சிற்பக்கலையின் மேன்மையை வெளிக்கொணரும் படைப்புக்களாக அமைகின்றன. விஜய நகரக் கலையின் தொடர்ச்சியே நாயக்க காலச் சிற்பக் கலை என்றாலும் அவற்றிலுள்ள கலை யழகு மேன்மை சிறப்பானதே.
ஒவியங்கள்
தமிழகத்தை ஆண்டுவந்த நாயக்கர்கள் ஒவியக் கலை யையும் பேணிப் பாதுகாத்து வந்துள்ளனர். தமிழகத்திலு ள்ள பல திருக்கோயில்களில் கவர்ச்சிமிக்க வண்ண ஒவியங்களைத் திட்டியுள்ளனர். இவர்களது ஓவியப்பாணி விஜயநகரப் பாணியை ஒத்ததாகும். திருப்பருத்திக்குன்றம், தஞ்சை, புன்னை நல்லூர், திருப்பெருந்துறை, புதுக் கோட்டை, திருவாரூர், காஞ்சி, திருவண்ணாமலை, திரு வொற்றியூர், திருவரங்கம், திருவெள்ளறை, திருவலஞ்சுழி, சிதம்பரம், கும்பகோணம், பட்டீசுவரம், செங்கம், மதுரை, குற்றாலம், அழகர்கோயில் முதலான இடங்களில் நாயக்கர் கள் கவின்மிகு ஒவியங்களைத் தீட்டியுள்ளனர். இவற்றில் சில சோழர்கால ஒவியங்களின்மீது வரையப்பெற்றவை. நாயக்கர்களின் கலை ஆர்வத்தை கி.பி.17, 18ஆம் நூற் றாண்டைச் சேர்ந்த இவை படம் பிடித்துக்காட்டுகின்றன.
திருக்குற்றாலத்துச் சித்திர சபையிலும் புதுக்கோட்டை திருக்கோகர்ணத்துக் கோயில் மண்டபத்து விதானத்திலும் உள்ள ஒவியங்கள் நாயக்கர் காலத்து ஓவியங்களே
யாகும்.
மதுரை மீனாட்சி ஆலயத்தில் ஊஞ்சல் மண்டபத்தின்
ZZSSLSZT GLLLL LaCCCD TMMCGT TTGeLeLTTCMT

Page 240
எதிரில் உள்ள சிறு மண்டபத்தின் மேல் விதானத்தில் அங்கயற்கண்ணியைச் சுந்தரேசப் பெருமான் மணந்து கொள்ளும் காட்சி பாங்குறத் தீட்டப்பட்டுள்ளது. திருமால் நீர்வார்த்துக் கொடுக்க ஆலவாய் அண்ணல் அன்னையின் கரம்பிடிக்கும் காட்சி வானவரும் கண்டுவியக்கும் காட்சியா கும். இக்காட்சியினை அரசி மங்கம்மாள் கண்டு இரசிக்கும் நிலையும் இவ் ஒவியத்தில் காணப்படுவதுடன் தளவாய் இராமப்ப ஐயனுடைய உருவமும் பெயரும் தீட்டப்பட்டுள் ளது. இதைச்சுற்றிலும் மீனாட்சி அம்மன் எட்டுத்திசை காவலருடன் போரிடுவது ஒவியமாகத் தீட்டப்பட்டுள்ளது. மதுரையில் சிவபெருமான் நிகழ்த்தியதாகக் கூறப்பெறும் அறுபத்து நான்கு திருவிளையாடல்களும் பொற்றாமரைக் குளத்தின் எதிரில் ஒவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன.
தஞ்சாவூரிலே நாயக்கர் காலத்து ஒவியங்கள் காணப்படு கின்றன. திருச்சுற்று மாளிகையின் மேற்குப் புறத்தில் ஒரு விசாலமான சித்திரத்திலே தேவர்கள், இந்திரன், அக்கினிதேவன், யமன், திருநந்திதேவர் ஆகியோரும் வரையப்பட்டுள்ளனர். பாற்கடலினைக் கடைந்த காட்சியும் இங்கே சித்தரிக்கப்பட்டுள்ளது. இவற்றின் ஒரத்திலே தேவர்கள் முன்பு பத்மாசனத்தில் அபயவரதம் ஆகிய ஹஸ்தங்களோடு அமர்ந்திருக்கும் திருமகளின் வடிவமும் சிறப்பான கோலத்தோடு வரையப்பட்டுள்ளது. வடக்கு நோக்கிய சுவரிலே துருவாசமுனிவர் பற்றிய விசாலமான காட்சி சித்திரிக்கப்பட்டுள்ளது. இந்திரனுக்கு இலிங்கத் திற்கு சூட்டப்பட்ட மாலையை கொடுக்கும் காட்சி யும் சித்திரிக்கப்பட்டுள்ளது. துர்க்கை போர்புரியும் காட்சி யும், சிவன் விஷ்ணுவிற்கு அனுக்கிரக மூர்த்தியாகி அருள் வழங்கிய காட்சி என்பனவும் சித்திரிக்கப்பட்டுள்ளன.
சிதம்பரத்திலே திருக்காமக் கோட்டத்தின் முன்னால் அமைந்த மகாமண்டபத்தின் முகட்டு விதானத்திலே சிவ னும் திருமாலும் முறையே பிஷாடனராகவும் மோகினியாக வும் தோன்றிய காட்சியும் மண்டபத்தின் ஒரு பகுதியிலே கணேசர், உமாசகிதர், கந்தன், வள்ளி, தெய்வானை, ரிஷிகள் ஆகியோர் உருவங்களும் கைலாசத்திலே உமா மகேஸ்வரரோடு நந்தி பேசிக்கொண்டிருக்கும் காட்சியும் வரையப்பட்டுள்ளன. நடராஜரும் சிவகாமசுந்தரியும் சிவனடி
யார்கள் வாழ்க்கை வரலாறுகளை விளக்கும் புராணக்
இந்துக் கலைக்களஞ்சியம்x 緣21
 
 

கதைகளும் சித்தரிக்கப்பட்டுள்ளன.
நாயக்கர் கால ஒவியங்கள் பல மதுரையிலுள்ள அழகர் கோயிலிலும் காணப்படுகின்றன. வசந்தமண்டபம், கல்யாண மண்டபம், திருச்சுற்று விதானம் என்பவற்றிலே ஒவியங்கள் வரையப்படடுள்ளன. மகாவிஷ்ணு, பூதேவி, ழரீதேவி ஆகியோரின் வடிவங்கள் இராமாயணக் காட்சிகள்
ஆகியவை வனப்புடன் சித்திரிக்கப்பட்டுள்ளன.
திருவரங்கத்தில் வேணுகோபாலர் சன்னிதியிலும் வேறு நான்கு இடங்களிலும் ஒவியங்கள் வரையப்பட்டுள்ளன. ஆழ்வார் திருநகரி ஆதி நாதப்பெருமாள் கோயிலின் கரு வறை முன் மண்டபம், நம்மாழ்வார் சன்னிதி, இராமாயணக் கொரடு ஆகிய பகுதிகளிலும் ஒவியங்கள் காணப்படு கின்றன. அதேபோன்று சேதுபதியின் அரண்மனைகளிலும் ஒவியங்கள் காணப்படுகின்றது. செங்கம் வேணுகோபால பார்த்தசாரதி கோயிலில் இராமாயணக் காட்சிகள் ஒவியங்க ளாக வரையப்பட்டுள்ளது. இராமர் பட்டாபிஷேகம், சஞ்சீவி மலையை அனுமன் கொணருதல் போன்ற பல ஒவியங்கள் மூலம் நாயக்கர் கால மக்களின் உடை, ஒப்பனை, அணிகலன்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ள முடிகின்றது.
நாயக்கர்கால காசுகள்
நாயக்க மன்னர்களால் வெயிடப்பட்ட நாணயங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தஞ்சை நாயக்கர்களுள் ஒருவ ரான செவப்பநாயக்கரால் வெளியிடப்பட்ட காசில் முன்பக் கம் புள்ளிகளாலான வட்டத்தில் சங்கின் உருவமும் பின்பக்கம் இருவரிகளில் நாகரி எழுத்தில் சவப்பா என்றும் எழுதப்பட்டுள்ளது (ஆதாரம் தமிழர்காசு இயல்). இரகுநாத நாயக்கரின் கால செப்பு நாணயம் கும்பகோணத்தில் கிடைத்துள்ளது. இதில் மன்னனது பெயர் நாகரி எழுத்தில் ரகுநாத என்று இருவரிகளில் எழுதப்பட்டுள்ளது. தஞ் சையை அடுத்துள்ள திருவையாற்றுப் பகுதியிலும் கிடைத் துள்ளது.
மதுரை நாயக்கர்களுள் ஒருவரான விசுவநாத நாயக்கரின் நாணயம் கிடைத்துள்ளது. இக்காசில் முன்பக்கம் நிற்கும் மனித உருவமும் பின்பக்கம் இருகயல், இடையில்
888*388 655 sou asaMTEFATT 962yea6adeses glederooT&š856*Tň

Page 241
சாட்டை, பிறைச்சந்திரன் மற்றும் இடப்பக்கமிருந்து வலப்பக் கமாக தமிழில் விசுவநாதன் என்றும் எழுதப் பெற்றுள்ளது. அதேபோன்று மங்கம்மா கால செப்பு நாணயம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. (ஆதாரம் தமிழர் காசு இயல் - நடன காசிநாதன்)
(தே.ஹ.)
mijjiTLone)
குளத்தூரிலிருந்து சித்தன்ன வாசல் செல்லும் சாலை யில் குளத்துருக்குத் தென்மேற்கே சித்தன்ன வாசலுக்கு வடகிழக்கே இந்த இடம் உள்ளது. இந்தக் கிராமத்தைச் சுற்றி உயரம் குறைவான ஒன்பது குன்றுகள் உள்ளன. மேலமலை, கோட்டைமலை, கடம்பர்மலை, பறையன்மலை, ஆளுரிட்டிமலை, பொம்மமலை, மண்மலை, பொன்மலை
ஆகியவையே இந்த ஒன்பது மலைகள்.
இராம இராவணப் போரின்போது அனுமார் தூக்கி வந்த சஞ்சீவி மலையிலிருந்து உதிர்ந்த பகுதிகளே இந்த ஒன்பது மலைகள். நாரதர் மலையே நார்த்தாமலை என மருவியுள்ளதாகக் கூறுகிறார்கள். நாட்டுக்கோட்டைச் செட்டியார்களை நகரத்தார் எனக் கூறுவார்கள். அவர்கள் இப்பகுதியில் சிறப்புற்று வாழ்வதால் நகரத்தார்மலை என்று பெயர் பெற்றது. இதுவே இப்போது நார்த்தாமலை என்று மருவியிருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.
தமிழ்நாட்டைக் கைப்பற்றி ஆண்ட களப்பிரரின் ஒரு பிரிவினர் எனக்கருதப்படும் முத்தனய மன்னர்கள் இப்பகு தியை இந்த ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தனர். பிற்கால சோழமன்னனான விஜயபாலன் இப்பகு தியை அவர்களிடமிருந்து கைப்பற்றி சோழராஜ்யத்தின் பகுதியாக்கினான் எனத் தெரிகிறது.
முன்கூறிய ஒன்பது மலைகளில் ஒன்றான கடம்பர் மலை யில் திருக்கடம்பூர் உடைய நாயனார் கோயில் உள்ளது. இது முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது. இதில் 21 கல்வெட்டுக்கள் உள்ளன. இக்கோயிலுக்கு கிழக்கே நாரீஸ்வரர் என்ற சிவன்கோயில் ஒன்று உள்ளது. இங்கு கோட்டை ஒன்று இருந்ததற்கான தடயங்கள்
இந்துக் கலைக்களஞ்சியம்x
 

உள்ளன. இரண்டாயிரம் அடிநீளமும் பதின்மூன்றடி உயர முள்ள சுற்றுமதில் ஒன்று இங்கே உள்ளது. மற்றொரு மலையான ஆளுருட்டி மலையில் முற்காலத்தில் ஜைன மடம் ஒன்றிருந்தது. இந்த மலையில் உள்ள கல்வெட்டிலி ருந்து இந்த மலைக்கு திருமண மலை மற்றும் திருப்பள்ளி மலை எனவும் பெயர் இருந்ததாகத் தெரிகிறது.
வேறு ஒரு மலையான மேலமலையில் பழியிலிஈச்சுரம் என்ற பெயருடைய சிவன் ஆலயம் ஒன்று உள்ளது. இதற்கு வடக்கில் சமணரின் குடைவரைக் கோயில் ஒன்று உள்ளது. இதன் அர்த்த மண்டபத்தில் பலவித அமைப்புக ளைக் கொண்ட பன்னிரண்டு விஷ்ணு உருவங்கள் வடிக் கப்பட்டுள்ளன. விஷ்ணுவின் பன்னிரண்டு திருநாமங்களைக் கொண்டவையாக இவை உள்ளன. ஆனால் ஆதியில் இது ஜைன ஆலயமாக விளங்கியது. மாறவர்மன் சுந்தரபாண்டியன் என்ற பாண்டிய மன்னன் இதைக் கைப்பற்றி விஷ்ணு ஆலயமாக மாற்றியமைத்தான். இக் கோயிலுக்கு திருமேற் கோயில் என்றும் இந்த இடத்துக்கு பதினென் பூமி விண்ணகரம் என்றும் புதிய பெயர் சூட்டி னான். இதற்கு எதிரே உள்ள சிவாலயம் விஜய சோழிச் சுரம் எனப் பெயர் பெற்ற தாகும். இந்த ஊர் திருச்சியிலி ருந்து 36 கி.மீ. தூரத்தில் உள்ளது.
விஜயாலயச் சோழீச்சுரம் ஆலயம் முத்தரைய மன்னர் களால் வெட்டிய கருங்கற்களால் எழுப்பப்பட்டதாகும். அடிமட்டத்திலிருந்து கோயிலின் உச்சிவரை இவ்விதக் கற்களால் இது உருவாக்கப்பட்டுள்ளது. பிரதான கோயி லைச் சுற்றி ஆறு உபகோயில்கள் உள்ளன. இவை எல்லாமே பிரதான கோயிலை நோக்கி இருக்கும்படி அமை க்கப்பட்டுள்ளன. இந்த உபகோயில்கள் பரிவார தேவதைக ளுக்கானவை. மொத்தம் எட்டு பரிவார தேவதைகளில் இரண்டுக்கான கோயில்கள் அழிந்து போய்விட்டன. இந்தக் கோயில்கள் அனைத்தையும் உள்ளடக்கி கல்லாலான
சுற்றுச் சுவர் ஒன்றும் உள்ளது.
பிரதான ஆலயம் மேற்கு நோக்கி உள்ளது. கர்ப்பக்கிர கம் வட்ட வடிவமானது. இதைச் சுற்றியுள்ள பிரகாரம் சதுரவடிவானது. பக்தர்கள் கோயிலை வலம் வரத் தனி
யாக பிரதட்சனப் பாதை ஒன்றும் உள்ளது. பல்லவர்
8&& 353 soulu esearTesFrTT eleapogeues baisesi geleboxeolojTää6ITLö

Page 242
மற்றும் சோழர் கோயில்களிலிருந்து இது மாறுபட்டு தனித் தன்மை வாய்ந்ததாக உள்ளது. இரண்டாவது நந்திவர்ம பல்லவன் காலத்தில் இப்பகுதியை ஆண்ட செம்மையுடை யான் இளங்கோதரயன் என்ற முத்தரைய மன்னன் இக்கோயிலைக் கட்டினான். பிற்காலத்தில் மல்லன் மற்றும் தமிழாதிரயன் என்னும் வேறு இரண்டு முத்தரைய மன்னர் கள் பழுதுபார்த்தனர் எனக் கல்வெட்டுக்களிலிருந்து தெரியவருகிறது. (அ.இ.)
நாரதர்
பிரமன் புத்திரர். வேதங்களை ஒதி உணர்ந்தவர்கள் பிரமவிருடிகள், வேதவிருடிகள், இராச இருடிகள் என மூவகைப்படுவர். அவர்களுள் தேவவிருடிகள் வரிசையில் நாரதர் முதன்மையானவர். இவர் அத்திரி முதலான முப்பத்தொருவருள் ஒருவர்.
ஒரு பணிப்பெண்ணின் மகனாக முற்பிறவியில் பிறந்த இவர் முனிவர்கட்குத் தொண்டு செய்து சிறந்த பக்தி மானாகத் திகழ்ந்தார். இவரது பக்தியின் மகிமையால் இறையருள் பெற்றுப் பின் பிரமனின் தொடையிலிருந்து தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன.
இவருக்கு நாரதர் என்ற பெயர் ஏற்பட்டதற்குப் புராணங் கள் பல காரணங்களைக் கூறுகின்றன. பிரம்ம வைவர்த்த புராணத்தின்படி காசிய முனிவருக்கு நாரதர் என்ற பெயர் உண்டு. அவர்தம் வரத்தினால் பிறந்ததால் நாரதர் எனப் பட்டார் என்பர். பிரம்மாவின் கழுத்தில் இருந்து பல நாரதர் கள் தோன்றினர். அவரது கண்டத்திற்கு நரதம் என்று பெயர் கண்டத்தில் இருந்து இவர் பிறந்ததால் நாரதர் எனப்பட்டார் என்பர். இவர் சிறுவர்களாகிய தம் நண்பர்கட்கு இளவயதில் நாரம் என்னும் மெய்யறிவை உணர்த்தியமை
யால் இப்பெயரைப் பெற்றார் என்றும் கூறுவர்.
நாராணய முனிவரிடம் தத்துவ உபதேசம் பெற்றவர் இவர். பாகவத புராணத்தைத் தந்தையிடம் கேட்டு அதனை வியாசருக்கு உரைத்தார். விநாயகரிடம் கார்த்திகை நோன்பின் சிறப்பினைக் கேட்டறிந்து சப்த இருடியரைவிட மேலான நிலையை அடைந்தார். இந்திரனுக்கும் சுகருக்கும்
இந்தக் கலைக்களஞ்சியம் x 魏
 

சூரசேன நாட்டரசனாகிய சித்திரகேதுவுக்கும் மெய்யறி வுணர்த்தினார். பிரகலாதன் கருவில் இருக்கையில் மந்திர உபதேசம் செய்தார். யாழிசை கற்க விரும்பி திருமாலை நோக்கித் தவமியற்றினார். திருமால், கானவிந்துவிடம் யாழ்கற்கும்படி குறிப்பால் உணர்த்தினார். கானவிந்துவிட மும் பின் தும்புருவிடமும் யாழிசை கற்றுத் திருப்தியடையா மல் சாம்பவதியிடம் யாழ் கற்று நிறைவெய்தினார். இவர் கையில் எப்போதும் இருப்பது மகதி என்னும் யாழ். இவர் மண்ணுலகிற்கும் விண்ணுலகிற்கும் சென்று வரும் ஆற்றல் பெற்றவர். பஞ்சபாரதீயம் என்னும் இசைத்தமிழ் நூலையும் இவருக்கு வேதத்தின் சில பகுதிகளை யும் ஸ்மிருதியின் சில பகுதிகளையும் இயற்றினார் என்பர். இவர் அகத்தியர் கமண்டலத்தில் இருந்த காவிரி ஆற்றை விரிவடையச் செய்தார். இராமாயணத்தை வான்மீகி முனி வருக்கு உபதேசம் செய்தார்.மகப்பேறில்லாத அரிச்சந்திர னுக்கு குழந்தை பிறக்க வருணதேவனை வழிபடும் வழி யையும் சித்தரகேதுவுக்கு ஆன்மாவின் நித்தியத்தையும் உடலின் அநித்தியத்தையும் எடுத்துக் கூறினார். கண்ணன் பிறக்கப் போவதை கம்சனுக்கு அறிவித்தார். பின் யசோ தையிடம் வளரும் கண்ணனே வசுதேவருக்கும் தேவகிக்கும் பிறந்த குழந்தை என்பதைக் கம்சனுக்கு எடுத்துக் கூறினார். அழகிய பெண்ணாக வடிவெடுத்து கண்ணனை மணந்து பிரபவ முதலான அறுபது ஆண்டுகளைப் பெற்றார்.
இவர் பாரிசாத மலரினைக் கண்ணனிடம் கொடுக்க அதனை அவர் உருக்குமணியிடம் தர அதனால் சத்திய பாமைக்கும் கண்ணனுக்கும் பிணக்கு ஏற்பட்டது. பாரதத் தில் தருமபுத்திரனை இராசசூயயாகம் செய்யத் தூண்டி அதனால் கலகம் விளைவித்தார். பாண்டவர்கள் காட்டை அடைந்ததும் திருதராட்டினனிடம் சென்று உனது வம்சம் அழியப் போகிறது என்று கூறினார். மாங்கனியை கைலா யக் கடவுளிடம் தந்து முருகனைக் கோவணாண்டியாக்கி னார். தமயந்திக்குத் திருமணம் என்று தேவேந்திரனிடம் கூறி நளன் வடிவில் அவனை வரச் செய்து அவமானம் உண்டாக்கினார்.
ஒருமுறை பிரம்மனது மக்களைத் தவம் இயற்றுமாறு கோரியமையால் பிரமன் கோபம் கொண்டு பிரமச்சாரியான
இவரைக் காமுகனாகுமாறு சாபமிட்டார். உடனே கோபம்
淡※線@ö函50u」5amgn可ggal656而gleo6oor函56má

Page 243
கொண்ட நாரதர் குற்றம் புரியாத எனக்கு சாபமிட்டதால் உலகில் மூன்று கற்பங்கள் வரை உனது மந்திரங்கள் பலியாது போகட்டும், அத்துடன் வழிபாட்டுக்குரியவனல் லாது போவாய் என்று பிரமனுக்குச் சாபம் கொடுத்தார். ஆயிரம் ஆண்டுகள் பிரமசபையைக் காணவேண்டும் என்று தவமிருந்தார். பின்னர் பிரம்மசபையைக் கண்டார். அங்கு அரம்பை என்னும் நடனமாதின்மேல் காதல் கொண்டார். இதனை அறிந்த பிரமன் இவரை மனிதனாகப் பிறக்கச் சாபங்கொடுத்தார் என்று பிரம்ம வைவர்த்த புராணம் கூறு கிறது. தக்கனுடைய மக்களுக்கு உபதேசம் செய்து, அவர்களை ஞானிகளாக்கியமையால் கோபமடைந்த தக்கன் இவரை ஓரிடத்திலே நிலையில்லாமல் அங்கும் இங்கும் அலையுமாறு சபித்தான். அதனால் தக்கன் செய்த வேள்வியை தாட்சாயினிக்கு அறிவித்தார். அதனால் தக்கன் அழிந்தான். இரணியகசிபுவின் தேவியைச் சிறை கொண்ட இந்திரனுக்கு ஞான உபதேசம் செய்து நீக்கிய வர். வாயுவிற்கும் ஆதிசேடனுக்கும் நடந்த யுத்தத்தில் ஆதிசேடனிடம் சென்று இசைவாசித்துச் சேடனைத் தம் வசப்படுத்தி வாயுவை வெற்றிபெறச் செய்தவர்.
இவர் கங்கையைப் பணியாது சென்று அக்கரையில் நிஷடை கூடியிருந்தனர். அவ்வாறு இருக்கையில் கங்கை நாரதர் தம்மைப் பணியாது சென்றனர் எனக் கோபமடைந்து பெருகிவர அதை நாரதர் அறியாது இருந்தனர். அப்போது அவ்விடம் வந்த யானை நீரை வாரியிறைத்து நிலைமை யைப் புரியவைக்க நாரதர் கங்கையின் வீறைக் கண்டு மந்திரத்தால் அதைத் ஸ்தம்பிக்கச் செய்தார். இவர் ஒரு யாகம் செய்ய, அதில் இருந்து ஒரு ஆடு பிறந்தது. அதனைக் குமாரக் கடவுள் வாகனமாக்கினார். பிரம்மா விஷ்ணு தாம் பரம் என்றும் யுத்தஞ் செய்த காலத்தில் சிவத்தின் உண்மை கூறியவர். ஒரு கால் நாரதர் விஷ்ணு வைக் காணச் சென்றார். அப்போது அவருடன் இருந்த இலக்குமி மறைய, இவர் நான் இருடியாய் மாயையை வென்றிருக்க என்னைக் கண்டு இலககுமி மறையக் காரணம் என்ன என்று வினவினார். விஷ்ணு மாயை யாரை யும் விடாது என்று கூற அம்மாயையைக் காணவிளைந்தார் நாரதர். விஷ்ணு இவரை குப்ஜமென்னும் பட்டணத்துக்கு அருகில் அழைத்துச் சென்று சிங்காரவனம் என்னும்
தடாகத்தில் ஸ்நானம் செய்யும்படி கூறினார். அவ்வாறு
@因岳 55Capä56T@9uá線叢綫 災後綫21
 

அவர் செய்து கரையேற ஒரு அழகான பெண்ணுருக் கொண்டார். விஷ்ணு இவரது மகதி யாழையும் கொண்டு மறைந்தார். இவ்வாறு நாரதர் பெண்ணுருக் கொண்டிருக்கை யில் தாலத்துஜன் என்னும் அரசன் கண்டு காமுற்று தன்னுடன் அழைத்துச் சென்று மணந்தான். இவர்களுக்கு குழந்தைகள் பல பிறந்து அவர்களுக்குத் திருமணமும் நிறைவேற்றி இனிதே இருந்தவேளையில் வேற்றரசன் ஒருவன் தலாத்துவனோடு போர் செய்து அவன் குமாரர் களைக் கொல்ல அதனால் விசனமடைந்திருந்து, பெண்ணுருவில் இருந்த நாரதரிடம் விஷ்ணு வேதராய் வந்து தேற்றி மாயையின் விளையாட்டே இது எனக் கூறி மீண்டும் அங்கிருக்கும் தடாகத்தில் மூழ்கச் சொல்லி பெண்ணுரு நீங்கிய நாரதரிடம் யாழைக் கொடுத்துச் சென்றார்.
இவ்வாறு இவரைப் பற்றிய பல கதைகள் புராணங்களில் இடம்பெற்றுள்ளன. இவர் கலகக்காரர் என்பதே பொதுவான அபிப்பிராயம் ஆயினும் நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பார்கள். (நி.நி)
நாரதீயம்
இச்சொல் நாரதர் தொடர்பானது அல்லது நாரதரால் இயற்றப்பெற்றது எனப்பொருள்படும். இப்பெயரால் நான்கு நூல்கள் அறியப்பெறுகின்றன. அவை மேல்வருவன.
1. வேதவியாசரால் இயற்றப்பெற்ற பதினென் புராணங்க ளுள் ஒன்று. இது திருமாலுக்குரிய நான்கு புராணங்களுள் ஒன்று. பிரமன் நாரதருக்குக் கூறியதாக அமைந்துள்ள இந்த வடமொழி நூல் 25,000 கிரந்தங்களை உடையது. இதில் திருமாலை வழிபடும் முறைகள், துருவன் பிரகலா தன் வரலாறு, மோகினி அவதாரம் ஆகியன விவரிக்கப்பட்
டுள்ளன.
2. பதினெண் உபபுராணங்களுள் ஒன்று. முற்கூறப்பட்ட நாரதீயத்திற்கு உபபுராணமாகிய இந்நூல் பிருகந்நாரதீயம் எனவும் வழங்கப்படுகின்றது.
3. நாரத சுமிருதி என்னும் தரும சாத்திரமும் நாரதீயம்
ஐ இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 244
எனப்படும். இரு பாகங்களையும் இருபத்தாறு அத்தியாயங்க ளையும் கொண்ட இந்நூல் 884 செய்யுள்களாலானது. இந்நூலில் நீதிமுறைகள் விளக்கப்படுகின்றன. இவ்வட மொழி நூல் முனைவர், சூலியசு சாலி என்பவரால் கி.பி. 1875 இல் சிறப்பாக ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு ள்ளது.
4. இராக, தாள இலட்சணங்களைக் குறித்து நாரதர் செய்த இசைத்தமிழ் நூல், இதனை அடியார்க்குநல்லார் பஞ்ச பாரதீயம் என்பார். (சிலப். உரைப்பாயிரம்) இவ்வுரை யால் இந்நூல் அவர் காலத்திலேயே மறைந்து விட்டது என்பதும் அறியப்படுகின்றது. (ப.வெ.நா.)
பாரத நாட்டின் தென்கோடியில் கேரளமாநிலம் இயற்கை எழில் பொங்க விளங்குகின்றது. இதன் தலைநகரமாக திருவனந்தபுரம் அமைந்துள்ளது. இதன் வடகிழக்கே ஐந்து கல் தொலைவில் "செம்பழந்தி என்னும் சிற்றுார் உள்ளது. இங்கு 1854 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்களில் திருநாரா யணகுரு தோன்றினார். அக்காலத்தில் நாட்டில் சாதி வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளhம் நிறைந்திருந்தன. கொடுமை நிறைந்த இச்சமூகப் பிணியில் ஓர் உழவர் குடும்பத்தில் தோன்றிய நாராயணகுருவுக்குப் பெற்றோர் இட்ட பெயர் நாணு (நாராயணன்) என்பதாகும். தந்தையின் பெயர் மாடன் ஆசான், தாயார் பெயர் குட்டிஅம்மாள்.
நாராயணகுருவின் தந்தை ஆசிரியராகப் பணியாற்றிய தோடு உழவுத் தொழிலையும் செய்து வந்தார். தவிர வானநூல் அறிவையும், ஆயுர்வேத மருத்துவ அறிவையும் சிறப்பாகக் கொண்டிருந்தார். வாரத்தில் ஒரு நாள் வீட்டின் முற்றத்தில் இராமாயணம், மகாபாரதம் பற்றிய சொற் பொழிவுகளைச் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இத்தகைய சூழலில் வளர்ந்த காரணத்தால் சிறுவன் நாணு இயல்பாக நாவல்லமை கொண்டவனாகத் திகழ்ந்
தான்.
சிறுவயதில் சுறுசுறுப்பாகவும் கல்வியில் மிகுந்த அக்கறையோடும் சிறந்த அறிவு நலம் கொண்டும் விளங்கி
இந்துக் கலைக்களஞ்சியம்x 談21
 

னார். நாணு தோன்றிய குலம் தாழ்த்தப்பட்ட குலங்களில் ஒன்றான ஈழவர் குலம் என்ற காரணத்தால் தீண்டாமைக்
கொடுமைக்கு முகங்கொடுக்க நேர்ந்தது.
ஆரம்பக் கல்வியை செம்பழந்தியிலேயே நாணு கற்றார். தமது தாய் மொழியான மலையாளத்திலும் சமஸ்கிருதத் திலும் நன்கு தேர்ச்சியடைந்த நாணுவின் கல்வி அவ்வூரில் மேற்படிப்புக்கான வசதி இல்லாமையால் தடைப்பட்டது. ஆயினும் மனந்தளராது நாணு தனியாகக் கல்வி கற்று வந்தார். தமிழ், சமஸ்கிருதம், மலையாளம் ஆகிய மொழிக ளில் உள்ள இலக்கியங்களைக் கற்று நல்ல புலமை பெற்றார். சித்தரூபம், அமரகோசம் ஆகிய நூல்களை மனப்பாடம் செய்ததோடு தமிழ் இலக்கண நூலான தொல் காப்பியம், திருக்குறள், ஐம்பெரும் காப்பியங்களான சிலப் பதிகாரம், மணிமேகலை முதலிய நூல்களைச் செம்மை யாகக் கற்றார். அவர் கற்ற நூல்களில் அவருக்கு மிகவும் பிடித்த நூலாகத் திருவாசகம் விளங்கியது.
நானு தமது இருபத்திரண்டாவது வயதில் கருநாகப் பள்ளியில் திரு.கெ.இராமன்பிள்ளை ஆசான் என்பவரிடம் சமஸ்கிருத்தைச் சிறப்பாகக் கற்றார். இதன் பயனாக இருபத்தி நான்காவது வயதில் சமஸ்கிருதப் பாடல்களை இயற்றும் வல்லமை பெற்றார். சமஸ்கிருதத்தை சிறப்பாகக் கற்று முடித்துவிட்டு கருநாகப் பள்ளியில் இருந்து திரும்பி தம் சொந்த ஊரான செம்பழந்திக்கு வந்த நாணு அவ்வூர்ச் சிறுவர்களுக்கு பாடம் கற்பித்து வந்தார். இதனால் நாணு ஆசான் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார்.
தமது பதினைந்தாவது வயதிலே தாயையும், இருபத் தொன்பதாவது வயதிலே தந்தையையும் இழந்து தவித்த வர் உள்ளத்தில், உலக வாழ்வு வெறுப்பை ஏற்படுத்திய தோடு துறவு வாழ்வில் ஈடுபாட்டையும் ஏற்படுத்தியது. இவரின் இந்நிலை உறவினர்களுக்கு மனவருத் தத்தை உண்டாக்கியது. ஞான வாழ்வை விரும்பிய நாணு, ஒரு நாள் வீட்டை விட்டு வெளியேறியதோடு காடு, மலை, கடற்கரையோரம், கோயில் முதலிய இடங்களில் சுற்றித் திரிந்தார். தியானம் செய்தார். குகைகளில் தங்கினார். பின்னர் திரு. குஞ்சன்பிள்ளை சட்டம்பி என்பவர் மூலம்
தமிழ்நாட்டு அய்யாவு சுவாமிகள் என்பவரைச் சந்தித்து
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 245
யோகாசனம் கற்றார். தீவிரதுறவு வாழ்க்கையை மேற் கொண்ட நாணு, சுசீந்திரத்திற்கும் கன்னியாகுமரிக்கும் இடையிலுள்ள மருத்துவர் மலையில் மூன்று ஆண்டுகள் தங்கியிருந்தார். அந்த வாழ்க்கை அவருக்கு பக்குவத்தை யும் உண்மை ஞானத்தையும் அளித்தது. பின்னர் இங்கிரு ந்து பல ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டார். அச்சந்தர்ப் பத்தில் தாம் சந்தித்த ஏழைகளுக்கு உதவிகள் செய்து வந்தார்.
இவ்வாறு பல ஆண்டுகள் தலயாத்திரை செய்து வந்த குரு திருவனந்தபுரத்தின் வடக்கே தெய்யாற்றங்கரையில் அமைந்துள்ள அருவிபுரம் என்ற சிற்றுாரை வந்தடைந்தார். அங்கு நாணு கடும் தவம் செய்தார். தவத்தின் பயனாக இறைவனைத் தம் மனத்திரையில் கண்டு குரு நிலையைப் பெற்றார். அங்கேயே சில காலம் தங்கி அவ்வூர் மக்களுக் குப் பல உதவிகள் செய்தார். ஊர் மக்களும் மகிழ்வடை ந்து குருவிற்கு ஒர் ஆச்சிரமத்தை அவ்வூரில் அமைத்துக் கொடுத்தார்கள்.
ஆச்சிரமம் என்பது ஆலயத்தோடு சேர்ந்த ஓர் அம்சமா கவே விளங்கியது. எனினும் ஆலய வழிபாடு பற்றிய குருவின் கருத்து மரபிலிருந்து வேறுபட்டது. ஆலயங்கள் சாதி வேறுபாடுகளை ஆதரித்து வளர்க்கும் இடங்களாக விளங்குகின்றன என்பது அவர் கருத்து. இதனால் புரட்சி கரமான முறையில் அருவிபுரத்தில் அனைத்து இனமக்க ளும் வழிபடுவதற்குரியதாக ஒரு சிவன் கோவிலை அமைத்தார். முருக்கம் புழை என்ற இடத்தில் கட்டிய கோயிலில் உண்மை, கருணை, தருமம், சாந்தி என்ற சொற்களைச் செதுக்கிய கல்லை பிரதிஷ்டை செய்தார். களவங்காடு என்ற இடத்தில் முகம் பார்க்கும் கண்ணா
டியை ஸ்தாபித்து கோயிலைக் கட்டினார்.
சமூக முன்னேற்றத்திற்குக் கோயில்கள் துணை செய்ய மாட்டா என்பதை குரு காலப்போக்கில் உணர்ந்தார். அத்துடன் கல்வியே அவர்கள் முன்னேற்றத்திற்குரிய ஒரேவழி என்பதைக் கண்டு கொண்டார். இதனால் கல்விக் கூடங்களைப் பெருங்கோயில்கள் என்று அழைத்தார். மக்கள் மத்தியில் இருந்த மூடப் பழக்கவழக்கங்களைப் போக்கி அவர்களின் அறியாமை இருளை நீக்கி அறிவுச்
@邱弘盎 56oapä56T@8Lö線 後談21
 

சுடரை ஏற்றினார். இவ்வாறாக 15 ஆண்டுகள் பல நகரங்களைச் சுற்றித்திரிந்து ஏழை மக்களுக்கு பெரும் தொண்டாற்றினார்.
பின்னர் அருவிபுரத்துக்கு வடக்கே அமைந்துள்ள வர்க் கலை என்ற ஊரில் ஆசிரமம் ஒன்றை நிறுவி அவ்வூர் மக்களுக்குப் பல தொண்டுகளைச் செய்தார். அச்சமயத் தில் தென்னிந்தியாவிற்கு வந்த இரவீந்திரநாத் தாகூர் குருவின் வர்க்கலை ஆசிரமத்திற்குச் சென்று அவருடன் உரையாடினார். வர்க்கலையில் சிறப்பான ஆன்மிக வளர்ச் சியைப் பெற்ற குரு, 1912 இல் அல்வாய் என்ற ஊருக்குச் சென்றார். அங்கு கடுந்தவம் செய்து அத்வைத (நிர்விகற்ப சமாதி) நிலையைப் பெற்றார். 1913இல் இங்கு அத்வைதாச் சிரமம் ஒன்றைத் தோற்றுவித்து மாணவர்களுக்கு வட மொழியும் ஆங்கிலமும் கற்பிக்க ஏற்பாடு செய்தார். அதன் சார்பில் வடமொழிப் பாடசாலை ஒன்றையும் நடத்தினார். அங்கு ஆங்கிலப் பாடத்தையும் மாணவர்களுக்கு கற்பித் தார். சாதி, மத வேறுபாடில்லாமல் அனைத்து மாணவர் களும் கல்வி பெறும் வகையில் அமைந்தது இக்கல்வி நிலையம். 1924ஆம் ஆண்டு இங்கு சர்வமத மாநாடு ஒன்றையும் நடத்தினார்.
குரு தம் வாழ்நாள் முழுவதும் ஒதுக்கப்பட்டவர்களுக் காகவும் ஏழைகளுக்காகவுமே தொண்டாற்றினார். அவர்க ளுக்கென ஆலயங்கள், ஆச்சிரமங்கள், தொண்டு நிலை யங்கள் என்பனவற்றைத் தோற்றுவித்தார். மகாத்மா காந்தி யடிகள் நடத்திய வைக்கம் அறப்போரிலும் கலந்து கொண்டார்.
தமிழ், மலையாளம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் நல்ல புலமை பெற்றிருந்த நாராயணகுரு பல நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் சிவசதகம், ஆத்மோபதேச சத கம், அனுகம்ப சதகம், தரிசன மாலை என்பன குறிப்பிடத் தக்கனவாகும். அத்துடன் திருக்குறளை மலையாளத்தில் மொழிபெயர்த்தார். தாம் தொடங்கிய தொண்டு நிறுவனங்க ளுக்குப் பொருளிட்டும் பொருட்டு நாடு முழுவதும் பயணங் கள் மேற்கொண்டார். இதனால் ஏற்பட்ட அலைச்சல் காரண மாக (1927) நோய்வாய்ப்பட்டார். தமது 72ஆவது வயதில் முதுமை காரணமாக எழுந்து நடமாட முடியாதிருந்தவரை
ŠĚŠ8 FN53, sou u BeavTGITT giapeau6ðE56 geocooTeeses Tă

Page 246
தொண்டர்கள் வற்புறுத்தி வர்க்கலைக்கு அழைத்து வந்த னர். 1928ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் நாள் தமது 73ஆவது வயதில் நாராயணகுரு பூதவுடலை நீத்துப் புகழுடலை அடைந்தார். (ச.ந.)
நாராயணாநந்த தீர்த்தர்
நாராயண தீர்த்தர் எனச் சிறப்பாக அழைக்கப்படும் இவர் தஞ்சையை ஆண்ட இரகுநாத நாயக்கர் மற்றும் விசயராகவ நாயக்கர் காலத்தில் வாழ்ந்தவர். இவர் ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்திலுள்ள காஜா என்னும் ஊரில் பிறந்தவர். தல்லவல்லஐ என்ற அந்தணர் குலத்தில் பிறந்த இவரது இயற்பெயர் கோவிந்த சாஸ்திரி என்பதாகும். 12 ஆண்டுகள் வாசுதேவ சாஸ்திரி என்பவரி டம் கல்வி பயின்ற இவர், வேதாத்திரி என்ற இடத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் தவப் பயிற்சி மேற்கொண்டார். பின்னர் காசிக்குச் சென்று பூரீ சிவ இராமானந்த தீர்த்தர் என்பவரின் சீடரானார். சிறிது காலம் குச்சிமஞ்சி என்ற கிராமத்தில் வாழ்ந்தார் என அறியப்படுகிறது.
புகழ்பெற்ற “கிருஷ்ணலீலா தரங்கிணி’ எனும் சமஸ்கிருத காவியத்தை இயற்றி சோழமண்டலத்து வரலாற்றில் அழியாப் புகழைப் பெற்றார். இவரது பிற நூல்கள் பாரி ஜாதாபகரணம் எனும் இசை நாட்டிய நாடகமும் சாண் டில்ய பக்தி மீமாம்ச பாஷ்யம் எனும்
நூலும் ஆகும்.
இவர் கிருஷ்ண பக்தியில் மிகவும் ஈடுபட்டவர். தமது இறுதிக் காலத்தை வரகூர் வெங்கடடேசப் பெருமாள் ஆலயத்தில் கழித்தார். இவரது சீடராகத் திகழ்ந்த ஒருவர் பஞ்சக்ரோச மஞ்சரி’ என்ற வடமொழி இசை நூலை யாத்துள்ளார். இந்நூல் இன்று தஞ்சை சரசுவதிமகால் நூலகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்நூலை மராத்தி மன்னர் துக்கோசி எனும் துளசா மன்னர் மிகவும் போற்றினார் என்பதை இச்சுவடியின் இறுதிக் குறிப்புகளால் அறிய முடிகிறது. இந்நூலாசிரியர் தம்மை சிவ நாராயண தீர்த்த சிஷயா’ என்றே கூறிக் கொள்கிறார்.
நாராயண தீர்த்தர் (28-02-1645) தாரண வருடம் மாசி
இந்துக் க்களஞ்சியம்
21
 

மாதம் 23ஆம் நாள் சுக்கிலபட்ச அட்டமித் திதி மிருகசீருட விண்மீன் கூடிய ஞாயிற்றுக்கிழமையன்று வராகபுரி எனும் வரகூரில் சீவசமாதியடைந்தார்.
தலைசிறந்த சமஸ்கிருத நூல்களைப் படைத்து இறுதி யில் வரகூரில் சீவ சமாதியடைந்த மகான் நாராயண தீர் த்தரின் செப்புப் படிமத்தை வரகூரினை அடுத்த ரங்கநாத புரம் கிராமத்தில் இன்றும் காணலாம். இங்குள்ள ருக்மணி சத்ய பாமா சமேத பாலகிருட்டிணனது செப்புத் திருமேனி யின் பீடத்தில் நாராயண தீர்த்தரின் உருவம் (சுமார் 6 அங்குல உயரம்) இடம்பெற்றுள்ளது.
கமல பீடத்தின்மேல் கையில் வெண்ணெய் உருண் டையை ஏந்திய பாலகிருட்டிணன் தனது வலக்காலை உயர்த்தி, இடக்கரத்தை நீட்டி நர்த்தன கிருட்டிணனாய் (ஆடும் கோலம்) ஒரு மரத்தடியில் திகழ்கிறார். இருபுறமும் கமலமேந்திய ருக்மணியும், பாரிசாதமேந்திய சத்திய பாமாவும் இரண்டு கமல பீடங்களில் நிற்க பின்புறம் ஒரு பிரபாவளி அணி செய்கிறது. இவர்கள் மூவரும் நிற்கும் கமல பீடங்கள் ஒரு நீண்ட பத்ர பீடத்தில் இணைக்கப்பட் டுள்ளன. இப்பத்ர பீடத்தில் கண்ணனின் திருவடிகளுக்கு கீழாகக் கையில் தண்டும் (கோல்) தோளில் ஆடையும் திகழ நாராயண தீர்த்தர் வணங்கும் திருக்கோலத்தில் காணப்படுகிறார். (தே.ஹ.)
STJuJu LLL (all. Isso - Isss)
மேப்புத்தூர் நாராயணப் பட்டதிரி, கேரளத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற சமஸ்கிருதக் கவிஞராவார். இவர் கி.பி. 1560 இல் பிறந்தார். இவர் மறைந்த காலத்தைக் குறித்த தெளிவான செய்திகள் கிடைக்கவில்லை. இவர் கி.பி. 1666இல் மறைந்திருக்கலாம் என்று கருதப்படுகின்றது. இவர் இறைவன் மீது பாடிய துதிப்பாடல்கள், மன்னர்களைப் போற்றிப்பாடிய பாடல்கள், சம்புநூல்கள், இலக்கணம் என்று பலவகைகளில் அடக்கிக் கூறத்தக்கனவாக ஏறத் தாழ நாற்பது நூல்களைப் படைத்திருக்கின்றார். நாராயணி யம், சிரிபாத சப்ததி குருவாயூர் புரேச தோத்திரம் என்பன இவருடைய துதிப் பாடல்கள். மன்னர்களைப் புகழ்ந்து
பாடியனவாகக் கோசிரீநகரவர பிரசத்தி, தூதவாக்கியம்,
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 247
பாஞ்சாலி சுயம்வரம், சுபத்திராபகரணம் முதலிய நூல்க ளையும் இலக்கண நூல்களாகப் பிரக்கிரியா சர்வசுவம், தாது காவியம, முதலிய நூல்களையும் நாராயணப்பட்ட திரி இயற்றியிருக்கிறார். இவை தவிர கசேந்திர மோட்சம்' உருக்மாங்கத சரிதம்' 'செமந்தகம்' குசேல விருத்தம்’ முதலிய நூல்களையும் இவர் படைத்திருக்கிறார். மேப்புத் தூர் நாராயணப் பட்டதிரி இன்றைய மலைப்புறம் மாவட்டத் தில் பாரதப்புது ஆற்றின் வடகரையில் திருநாவாய் என் னும் ஊரையடுத்திருக்கும் குறும்பத்தூரில் மேப்புத்தூர் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தையார் பெயர் மாத்ருதத்த பட்டதிரி என்பதாகும். பிரக்கிரியா சர்வஸ் வரம் என்ற இலக்கண நூலில் இவர் தமது ஆசிரியர்க ளைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றார். மாதவன் நம்பூதிரி தாமோதரச் சாக்கியார், திருக்கண்டியூர் அச்சுதப் பிசாரடி முதலியோர் இவருடைய ஆசிரியர்களாவர்.
நாராயணப் பட்டதிரி வேதங்கள், அளவை நூல், இலக்க ணம் முதலியவற்றை முன்பு குறிப்பிடப்பட்ட ஆசிரியர்களி டம் பயின்றார். நாராயணப் பட்டதிரி தம் ஆசிரியரான அச்சுதப்பிசாரடிக்கு ஏற்பட்டிருந்த வாத நோயைத் தாம் பெற்றுக் கொண்டு பின்னர் அது நீங்குமாறு இறைவனிடம் வேண்டினார். அதற்காக குருவாயூர் கிருட்டிணன் ஆலயத்தி ற்குச் சென்று அங்கு தங்கியிருந்து ஒரு நாளைக்கு ஒரு பாடல் வீதம் நூறு நாளில் நூறு பாடல்கள் பாடி நாராயணி யம் என்ற நூலினைப் படைத்தார். இறைவன் இவருடைய புலமைத் திறத்தையும் பத்தித் திறத்தையும் கண்டு வாத நோயைக் குணப்படுத்தினார் என்று பத்தர்கள் இன்றளவும் நம்புகின்றனர். இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் நாராயணப் பட்ட திரியின் புகழ் கேரள நாடெங்கும் பரவியது. நாராயணப் பட்டதிரியின் காலத்தில் கேரள நாட்டில் வாழ்ந்திருந்த மற்றொரு கவிஞரான பூந்தானம் என்பாருக்கும் இவருக்கும் இடையிலான தொடர்பினைக் குறித்தும் ஒரு கதை வழங் குகின்றது. நாராயணப் பட்டதிரி குருவாயூர் சிரீகிருட்டிணன் ஆலயத்தில் தங்கியிருந்த போது பூந்தானம் அந்த ஆலய த்திற்கு வந்தார். பூந்தானத்திற்கு பிறந்த குழந்தைகள் இறந்துவிட, அதனால் மனம் சோர்வடைந்த நிலையில் பூந்தானம் குருவாயூர் ஆலயத்திற்கு வந்து 'சந்தான கோபா லம் என்ற நூலை இயற்றினார். தாம் இயற்றிய அந்நூலை பூந்தானம் நாராயணப் பட்டதிரியிடம் கொடுத்து செம்மை
இந்துக் கலைக்களஞ்சியம்x
 
 

செய்து தருமாறு வேண்டினார். “மலையாளத்தில் எழுதப் பட்ட நூலில் சிறப்பு எங்கே இருக்கும்” என்று சமஸ்கிருதத் தில் வல்லுநரான நாராயணப் பட்டதிரி பலர் முன்னிலையில் பூந்தானத்தை இடித்துரைத்தார். அதனால் மனம் நொந்த பூந்தானம் அவ்விடத்தை விட்டகன்று ஆலயத்தின் வேறொரு பகுதியில் மனம் வருந்திக்கொண்டிருந்தார். இச்சூழலில் நாராயணப் பட்டதிரியின் புலமையைவிட, பூந்தானத்தின் பக்தியே சிறந்தது என்று ஒரு வான்குரல் ஆலயத்தின் கருவறைக்குள்ளிருந்து நாராயணப் பட்டதிரி யின் காதுகளில் வந்து விழுந்தது. அதனால் உண்மை நிலையுணர்ந்த நாராயணப் பட்டதிரி பூந்தானத்தைத் தேடிக் கண்டு அவரைத் தேற்றினார். பூந்தானத்தின் ‘சந்தான கோபாலம் என்ற நூலினையும் படித்துக் செம்மைப்படுத்தித் தந்தார். பூந்தானத்திற்கும் நாராயணப் பட்டதிரிக்கும் இடை யிலான தொடர்பினைக் குறித்து வழங்குவதாக இக்கதை திகழ்கின்றது.
நாராயணப் பட்டதிரி வாதநோய் நீங்கப்பெற்ற பின்னர் மிகவும் புகழடைந்தார். கேரள நாட்டில் இருந்த பல்வேறு அரசவைகளிலும் இவர் இடம்பெற்றார். கோழிக்கோடு, கொச்சி, வடகுற்கூர், செம்பகச்சேரி முதலான நாட்டு மன்னர்களின் அவையில் தங்கியிருந்து கவிதைகள் புனை ந்து வந்தார். அம்மன்னர்களின் பாராட்டுக்களையும் பரிசுக ளையும் இவர் பெற்றார். இவ்வகையில் செம்பகச்சேரி மன்னரின் அவையில் தங்கியிருந்தபோதுதான் பிராக்கிரியா சர்வஸ்வம், பாஞ்சாலி சுயம்வரம், மானமேயோதயம் முத லிய சிறந்த நூல்களைப் படைத்தார். செம்பகச்சேரி அரண் மனையை விட்டு இவர் எப்போது வெளியேறினார் என்பது தெரியவில்லை. நாராயணப் பட்டதிரி தமது இறுதிக் காலத் தில் சொந்த ஊரில் இறைவனை வழிபடச் சென்றபோது உயிர் துறந்தார் என்று கூறுகின்றனர். (மு.தி)
TIJTuCOUT LIITIJgjunij
வைணவ அந்தணர், தொண்டை நாட்டுப் புலவர்; வெண்மணி என்ற ஊரில் பிறந்தவர். வயல் வளம் செறிந்த இவ்வூரில் முத்தாரையனார் என்ற முதியவரின் புத்திரரான நாராயணன் பாடல்கள் பாடுவதில் வல்லவராய் இருந்தமை
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 248
யால் பாரதியானார். கி.பி. 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இவர் நீதிநெறிகள் பல உள்ளடக்கிய திருவேங்கட சதகம் எனும் சிற்றிலக்கிய நூலை இயற்றித் தமிழ்ப்புற இலக்கிய த்தை வளப்படுத்தினார். இந்நீதிநூலை மணவாள நாராயண சதகம், திருவேங்கடநாராயண சதகம் என்ற பெயர்களா லும் குறிப்பர். காப்புச் செய்யுள், தனியன் தவிர்த்து நூறு செய்யுட்களைக்கொண்ட இந்நூலில் சொல்நயம், பொருள் நயம் போன்ற பல்வகை நயங்களும் உள்ளன. ஆழ்வார் பன்னிருவரையும் இவர் போற்றியுள்ளார். கேரளம், கன்னடம், சிங்களம், கொங்கணம், கூர்ச்சரம், காசுமீரம் போன்ற பல நாடுகளின் பெயர்களைப் பாடல்களில் குறித்துள்ளார். இவர் நாடகம், கதாபிரசங்கம் ஆகியவற்றில் ஆர்வம் உடை யவர். இராமாயணம், பாரதம் பயின்றவர். களமூர் மணவாள நாராயணன் வேண்டுகோளின்படி இந்நூலை இயற்றிய தாகக் குறிப்பிட்டுள்ளார். (பி.தெ.)
TyTuuli
குருவாயூரப்பனான பூரீமத் நாராயணனின் பெருமையைக் கூறும் காவியம் நாராயணியம். 100 தசகங்கள் கொண்டது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுலோகங்கள் அமைந்தது.
16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மேப்பத்தூர் நாராயணபட்ட த்திரி பூரீமத் பாகவதத்தைச் சுருக்கி கனிரசத்தோடு சர்க்க ரையும் கலந்ததுபோல் ரீநாராணியம் என்ற பக்திப் பணு வலை ஆக்கித் தந்தார். ஐயனின் திருமுன் அமர்ந்து பட்டத்திரி ஒவ்வொரு பகுதியையும் பாடி முடித்ததும் “இப்படி நடந்ததா குருவாயூரப்பா” என்று அவர் கேட்க எம்பெருமான் ஆம் எனத் தலையசைத்தானாம். தன்னு டைய பெருமையைத் தானே கேட்டுத் தலையசைத்தான் என்றதால் பட்டத்திரியின் பெருமையையும் நாராயணத்தின் பெருமையையும் கூறவும் வேண்டுமோ? பாகவதத்தில்
உள்ள நிகழ்ச்சிகள் யாவும் நாராணியத்தில் உள்ளன.
நூலின் தொடக்கத்தில் பக்தர்களின் பெருமையையும் சிறப்பையும் கூறவந்தவர், இறுதியில் பக்தியின் பிரவாகத் தில் கரைந்து போகிறார். கர்மம், பக்தி, ஞானம் என மூவகையான யோகங்களைக் கூறிய போதிலும் பக்தி
யோகத்திற்கே சிறப்பான இடம் தரப்படுகின்றது. சிறந்த
இந்துக் கலைக்களஞ்சியம்x
22
 

அஷ்டாங்க யோகங்களைப் பயில்வதனால் பெறப்படும் சிறப்பு பக்தி ஒன்றிலேயே கிடைக்கும் என நிரூபணம் செய்கின்றார். பக்தி என்ற பாலில் ஞானமாகிய கற்கண்டை விரவி பக்தர்கள் பருகுவதற்கு அளித்திருக்கின்றார் பட்டத்திரி அவர்கள்.
அச்சுதபிஷ ரோடி என்ற பெரியாரின் மாணவனாக சந்தர்ப்ப வசத்தினால் மாறிய பட்டத்திரி அவரிடமே சமஸ்கிருத இலக்கியம், தர்க்கம், வியாகரணம், வேதம் முதலியவைக ளைக் கற்றுத் தேர்ந்து பண்டிதரானார். பக்தி நூல்கள் பலவற்றை எழுதினார்.
நாராயண பட்டத்திரி புகழ்பெற்று சிறந்துவரும் நேரத்தில் அவரது குருவான அச்சுத பிஷாரோடிக்கு முடக்குவாத நோய் பீடித்தது. எந்தவிதமான மருந்து மாத்திரைகளாலும் அந்நோய் தீரவில்லை. கொடிய நோயினால் குருநாதர் துடிப்பதை பட்டத்திரியால் பொறுத்துக் கொள்ளமுடிய வில்லை. தன்குருநாதருக்குத் தான் தரவேண்டிய குரு தட்சணையாக முடக்குவாத நோயைத் தாமே ஆவாஹன முறையில் தனது உடலில் ஏற்றுக்கொண்டார். நோயின் கொடுமை தாங்காது இறுதியில் குருவாயூரப்பனிடமே சரண டைந்தார்.
கேரள நாட்டின் பெருங்கவிஞரும் பக்தருமான துஞ்சத்து இராமானுஜன் எழுத்தச்சன் என்பவரிடம் சென்று தனது நோய்க்கு மருந்து வேண்டி நின்றார். நாராயணனின் தியானத்திலேயே நிலைத்துவிட்ட எழுத்தச்சன் "மீனில் துவங்கி அதைத் தின்றுவிடு' என்று மேலோட்டமாக் கூறினார். அருகிலிருந்தவர்கள் அலட்சியமாகப் பார்த்தனர். ஆனால் பக்தியில் ஊறிய பட்டத்திரிக்கு, எழுத்தச்சன் கூறியதன் நுண்மை விளங்கியது.
விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் முதல் அவதாரமான மச்சாவதராத்தினின்று ஒரு கவிதை இலக்கியத்தைப் படைக்கத் தான் பணிக்கப்பட்டுள்ளதை உணர்ந்தார்.
நாராணியம் என்ற புகழ்பெற்ற அமரகாவியம் உருவானது.
குருவாயூரப்பனைப் போற்றும் வகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுலோகங்களை இயற்றினார். அதனை நூறு தசகங்களாக்கி பாகவத சாரத்தையே பிழிந்தெடுத்துக்
&இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 249
கொடுத்திருக்கின்றார். ஒவ்வொரு தசகங்களுக்கும் இடை யில் ஒரு பாடல் பெருமானை நோக்கித் தன் நோயைக் குணமாக்கவேண்டும் என்ற வேண்டுகோட் குறிப்புடன் அமைந்துள்ளது. நாராணியத்தின் அடிப்படைக் குறிக் கோளே பிறவிப்பிணி நீங்கப்பெற்று வீட்டுலகை அடைவதே யாகும். நாராணியத்தின் நூறாவது தசகத்தின் நிறைவுப் பாடலை இவ்வுலகிலுள்ள மாந்தருக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கித்தையும் செளக்கியத்தையும் அருளவேண்டும் என்று கவிஞர் நிறைவு செய்கின்றார்.
நாராணியம் முழுவதுமே ழரீகுருவாயூரப்பனையே நேரில் அழைத்துப் பேசுவதுபோல் அமைந்தது. கிருஷ்ணனின் நேரடி அங்கீகாரத்தைப் பெற்றுள்ள பெருஞ்சிறப்பைக் கொண்டது. திருத்தம் பெறும் இடங்களையும் தனது திருக் கரம்படத் தானே திருத்திக் கொடுத்ததாகவும் கூறப்பெறு கின்றது. பட்டத்திரி கூறக்கூற பகவான் தானே முடிதுளக்கி
ஏற்றுக் கொண்டதாகவும் வரலாறு உண்டு.
நரசிம்ம அவதாரப் பகுதியை எழுதும்பொழுது அந்த அவதாரத்தைத் தத்ரூபமாக விளக்க முடியாமல் பட்டத்திரி தவித்த பொழுது பெருமான் குருவாயூர் ஆலய மடத்துத் தூண் ஒன்றிலே தனது நரசிம்மாவதாரத்தைக் காட்டினார். அது போன்றே இராமாயணப் பகுதியைக் கூறும்பொழுது அனுமான் இலங்கைக்குச் சென்று சீதாபிராட்டியைக் கண்டு அவள் கொடுத்த சூடாமணியைக் கொடுத்தார் என்று எழுதியிருந்தாரே தவிர யாரிடம் கொடுக்கப்பட்டது என்று குறிப்பிட முடியவில்லை. காரணம் பூரீராமன் என்ற ஈரடிச் சொற்களைப் போட இலக்கணம் இடம்தரவில்லை. ஆகவே பட்டத்திரி குருவாயூரப்பனை தியானித்து வழிவேண்ட பகவான் தனது கரத்தை நீட்டினாராம். உடனே கவிஞர் தே' என்று 'உன்னிடமே என்ற பொருள் தரும் சொல்லைப் போட்டு நிறைவு செய்துவிட்டார்.
றரீ கிருஷ்ணனின் பாவலீலைகளை எழுதும்பொழுது பாலகிருஷ்ணன் யசோதையிடம் எப்படியெல்லாம் குறும்பு கள் செய்தான், தொந்தரவு செய்தான் என்று கூறும் பொழுது ஆயர்பாடியில் தயிர்ப்பானைகளைக் கண்ணன் தயிர்கடையும் மத்தால் உடைத்ததாக எழுதிவிட்டார். ஆனால் பாகவதத்திலோ கண்ணன் தயிர்ப்பானைகளை
@啦5556oaD556T@由Lá餐囊

இயந்திரக்கல்லால் உடைத்தான் என்று கூறப்பட்டிருக்கின் றது. வியாச முனிவரின் கருத்துக்குத் தான் முரணாக எழுதிவிட்டோமே என்று மேப்பத்துரார் மனம் நொந்தார். உடனே பகவான் கிருஷ்ணன் தோன்றி தான் தயிர்ப் பானைகளை மத்தாலும், அரைக்கும் இயந்திரக் கல்லாலும் இரண்டாலுமே மோதி உடைத்தேன்’ என்று மனப்புண்ணி ற்கு மருந்திட்டார். இவ்வாறு நாராணியம் முழுவதுமே நாரா யண பட்டத்திரியின் அன்பு மழையிலே ஐயன் நனைந்து நின்றதைக் காணமுடிகின்றது.
இந்நூலில் பிரமன்தவம், வைகுண்டதரிசனம், உலகின் தோற்றம், படைப்பின் வகைகள், முதல் அவதாரத்தின் முன்னோடியான வராக அவதாரம் இரண்யாட்சகனை அழித்தல், கபிலர் அவதாரம், தட்சயக்ஞம், துருவன் சரிதம், பிரிதுவின் கதை, பிரேதஸ் சரித்திரம், ரிஷபதேவன் கதை, அஜமிலன் சரிதம், சித்ரகேதுவின் சரிதம். நரசிம்ம அவதா ரம், கஜேந்திர மோட்சம், பாற்கடலைக் கடைதல், மோகினி அவதாரம், வாமன அவதாரம், பலியை அழித்தல், மச்ச அவதாரம், அம்பரிஷ சரிதம், இராமாயணம் (அனுமன் சந்திப்பு வரை) பரசுராமன் சரிதம், கிருஷ்ண அவதாரம், சகடாசுரன் வதம், ஆகாசுரன் வதம், சுதர்சன முக்தி, கம்சனுக்கு முக்தி அளித்தல், உருக்மணி திருமணம், பானாசுர வதம், குருஷேத்திர யுத்தம், குசேலர் சரிதை, மார்க்கண்டேயர் கதை என்பன போன்ற சுவையான கதை கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடமொழி சுலோகங்களால் நூறு தசகங்களாக ஆக்கப்பட்டு நாராணியம் பகதர்களால் பாராயணம் செய்யப்பெறுகின்றது.
நாராணியம் முழுவதுமே பூரீகுருவாயூரப்பனே நாராயண பட்டத்திரியின் மூலம் பேசுவதாகவே தோன்றும். இந்நூலை இயற்றத் தொடங்கியதிலிருந்து பட்டத்திரியின் நோயும் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. இன்றும்கூட மருத்துவர்களால் குணமாக்க முடியாத நோய்களுக்கெல் லாம் நாராணியம் சிறந்த மருந்து. அதனைப் பாராயணம் செய்து குணமடைந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். மேப்பத் தூர தமது நாராணியத்தை பூரீகுருவாயூரப்பனிடம் சமர்ப் பித்த விருச்சி மாதம் 2ஆம் திகதியை மக்கள் நாராணிய தினமாக இன்றும் குருவாயூரில் கொண்டாடி வருகின்றனர்.
(6.606).)
x இந்த சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 250
5ITGüGuj
சைவசமய குரவர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரையும் இத்தொகைப் பெயர் குறிக்கின்றது. இதில் முதல் மூவரும் பாடிய பதிகங்கள் ஒன்று முதல் ஏழு திருமுறைகளாகப் பகுக்கப்பட்டு அடங்கன் முறை எனப்பட்டது. இதனை இயற்றிய மூவரும் தேவார முதலிகள், தேவார மூவர் எனப்போற்றப்பட்டனர். காலகதியில் மாணிக்கவாசகரின் திருவாசகமும், திருக்கோவையாரும் எட்டாம் திருமுறையா கத் தொகுக்கப்பட்டன. இந்நிலையில் நால்வர் என்ற பெயர் வழக்கு வழமையாகிவிட்டது. திருஞானசம்பந்தர் முதல் மாணிக்கவாசகர் வரையுள்ள நால்வரையும் சைவசம
யாச்சாரியார் நால்வர் என்று குறிப்பிடுவர்.
பல்லவர் காலத்தின் முற்பகுதியிலேயே நாயன்மார்களும் ஆழ்வார்களும் தமிழ் நாட்டிலே தோன்றத் தொடங்கிவிட்டார்
கள்.
பல்லவ மன்னர்களின் ஆட்சிக்கால ஆரம்பத்திலே சமண, பெளத்த சமயங்கள் தமிழ் நாட்டில் மிகப் பலமான நிலை யில் இருந்தன. பழந்தமிழ் மக்களிடையே காணப்பட்ட அதீத போர், காமம், களவொழுக்கம் என்பன சமுதாயத் தில் பல சீர்கேடுகளை ஏற்படுத்தின. இத்தகையதொரு சூழ்நிலையில், கடும் துறவறத்தையும் அறக்கருத்துக்களை யும் வலியுறுத்தி நின்ற சமண பெளத்த சமயங்களின் போதனைகள் மக்கள் மனத்திற்குத் திருப்தியளிக்க அம் மதங்கள் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெறத் தொடங் கின. ஆயினும் காலகதியில் இவை வற்புறுத்தி நின்ற கடுமையான விரதங்கள், கட்டுப்பாடுகள், நிலையாமைக் கொள்கையை வலியுறுத்தி துறவறத்தை மேற்கொள்ளத் தூண்டியமை, பெண்களை இழிவு செய்தமை, கலைகளை ஒதுக்கியமை போன்ற காரணங்களால் சமண, பெளத்த கோட்பாடுகளைக் கடைப்பிடிக்க முடியாமல் மக்கள் மனம்
மீண்டும் ஒரு மாறுதலை எதிர்நோக்கியது.
தமிழக நிலைமை இவ்வாறிருக்க வடஇந்தியாவின் பெளராணிகக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு
பெளராணிக சமயம் வளர்ச்சியடைந்தது. இதன் செல்
 

வாக்கு தமிழகத்திலும் பரவியது. தமிழகத்தில் இப்பெளரா னிக சமயம் பழந்தமிழர் சமய நம்பிக்கைகள், சம்பிரதாயங் கள், சடங்குகள் என்பனவற்றோடு இணைந்து பல்லவர் கால இந்து சமயமாகப் பிரவாகம் எடுத்தது. இப்பிரவாகத்தி ற்கு ஊற்றாக விளங்கியவர்கள் சமயகுவர் நால்வரில் ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் என்பது மனம் கொள்ளத் தக்கது.
திருநாவுக்கரசர் சைவராகப் பிறந்து பின் சமண சமயத் தைத் தழுவித் தருமசேனர் எனப் பெயர் பூண்டு சமணத்தி ற்குப் பெருந்தொண்டாற்றியுள்ளார். சமண நூல்கள் பலவற் றைக் கற்று, புறச் சமயத்தவர் பலருடன் வாதஞ்செய்து வெற்றி கண்டு அவர்களைச் சமண சமயத்திற்கு மதமாற் றம் செய்தவர். பாடலிபுரம் என வழங்கப்பட்ட திருப்பாதிரிப் புலியூரிலே சமண மடத் தலைவராக விளங்கியவர். இச் செய்திகள் அனைத்தும் பெரிய புராணத்தின் மூலம் அறிய க்கூடியதாக உள்ளது. "தென்னிந்தியச் சமண ஆராய்ச்சி” என்னும் நூல் சமணராகப் பிறந்து வளர்ந்த அப்பர் இடை யில் சைவசமயத்திற் சேர்ந்து சைவசமய எழுச்சிக்குக் காரணமாக இருந்தார். பின்பு சமணத்திற்குத் திரும்பினார் எனவும் அதனால் பொறாமை கொண்ட சைவர் அவரைக் கொன்று விட்டனர் என்றும் கூறுகின்றது. இந்த இரு வேறு கூற்றுக்களும் அப்பர் சைவராகவும் சமணராகவும் இருந் ததை உறுதி செய்கின்றன.
சமணராக இருந்த தருமசேனருக்கு ஏற்பட்ட சூலை நோய் சமணர்களால் தீர்க்கமுடியாமல் திலகவதியாரால் திருநீறு பூசப்பட்டுத் தணிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி தமிழர் சமய வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமைந்து விட்டது. சூலை நோய் நீங்கப் பெற்ற அப்பர் சைவ சமயத்தைத் தழுவிக் கொண்டார். இதனால் ஆத்திர மடைந்த சமணர்கள் பல்லவ மன்னன் மகேந்திரவர்மரின் அனுசரணையுடன் அப்பரைத் தண்டிக்க முற்பட்டனர். அகிம்சை பேசிய சமணம் அராஜகமான முறைகளைக் கையாண்டு தண்டனைகளை வழங்கியது. "நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம்” என்ற உறுதி கொண்ட நெஞ்சுடையவராய் அத்தனை கொடுமைகளின்றும் மீண்டார் திருநாவுக்கரசர். திருநீறும் ஐந்தெழுத்துமே அவருக்கு உறுதுணையாக இருந்தன. இறுதியில் அப்பர் வென்றார்.
zk eZTTTT TLLLLLLL LTCT LT TLMLMCMT TTLLeLLLTTT

Page 251
மன்னனும் மக்களும் சைவராயினர். தமிழ்நாட்டின் வடபகுதி யில் ஏற்பட்ட சமயப் புரட்சி இது.
சமண சமயத்திலிருந்து நீங்கி சைவசமயத்தைத் தழுவிய பின் அப்பர் பெருமான் சமணக் கோட்பாடுகளை வெறுத் தொதுக்கவில்லை. நிலையாமை பற்றிய கருத்துக் கள், அறக்கோட்பாடுகள் பற்றிய செய்திகள் அப்பர் பாடல்களில் நிறைய உண்டு. சமணத்தின் வாழ்க்கை நோக்கும் சைவத்தின் பக்தி நெறியும் பிணையும் அழகு அப்பரது பாடல்களில் தெளிவாகத் தெரிகிறது. பாசுபதம், காளா முகம், காபாலிகம் எனப் பல்வேறு தீவிரவாதப் பிரிவுகளுடையதாய் சமண, பெளத்த சமயங்களின் பலத்த கண்டனங்களுக்கு ஆளாகி வந்த சைவத்திற்கு அப்பர் இந்த வகையில் செய்த தொண்டு தமிழகத்திலே பரவிய பிற மதங்களை வெல்லவல்ல மதமாக சைவ சமயத்தை மாற்றியது. மேலும் அப்பர் பெருமானின் உள்ளத்திலே தோன்றிய இப்புதிய சைவ நெறி சமணம் என்ற தனிச் சமயம் வேண்டியதில்லை என்ற நிலையை தமிழ்நாட்டின் வடபகுதியில் வாழ்ந்த மக்கள் பலருக்கு ஏற்படுத்தியது. சமண சமயக் கோட்பாடுகளுடன் பக்தி நெறியையும் இணைத்துத் தலங்கள் தோறும் சென்று பாடல்கள் பல பாடிச் சைவநெறிக்கு வலுவூட்டிய பெருமை நாவுக்கர சருக்கு உண்டு.
தமிழகத்தின் வடபகுதியில் நிலைமையை இவ்வாறி ருக்க தென்பகுதியாகிய பாண்டி நாட்டிலே சமணம் இன்னும் கூடிய செல்வாக்குப் பெற்று விளங்கியது. பாண்டி நாட்டு அரசியான மங்கயற்கரசியார் மந்திரி குலச்சிறையார் இருவரும் மன்னனும் மக்களும் சமணத்தைத் தழுவி நின்றது கண்டு மனம் தளர்ந்து திருஞானசம்பந்தரை தம் நாட்டிற்கு அழைத்தனர். சம்பந்தர் அங்கு வந்து தங்கி யிருந்த மடத்திற்கு எரியூட்டினார்கள் சமணர்கள். மன்னன் கூண்பாண்டியனை வெப்புநோய் பற்றிக் கொண்டது. சமணர்களால் பலவாறு முயன்றும் மாறாத நோய் ஞானசம்பந்தர் "மந்திர மாவது நீறு" என்ற பதிகம் பாடித் திருநீற்றைப் பூசியதும் குணமடைந்து விட்டது. பின்னர் நடைபெற்ற அனல்வாதம், புனல்வாதங்களாலும் சமணர்கள் தோற்க, பாண்டிய மன்ன னும் மக்களும் சைவத்தைத்
தழுவிக் கொண்டனர். இந்நிகழ்ச்சி சம்பந்தர் பாண்டி
இந்துக் கலைக்களஞ்சியம்*
談緣22
 

நாட்டில் சைவ சமயப் பிரசாரம் செய்வதற்கு வழிவகுத்தது.
சம்பந்தர் பெருமான் தனது காலத்தில் செல்வாக்குடன் விளங்கிய சமண, பெளத்த மதங்களை வலுவிழக்கச் செய்யும் நோக்கிலேயே தமது பதிகத்தை அமைத்திருக்கி றார் என்றே கருதவேண்டி உள்ளது.
சம்பந்தரின் பாடல்களில் முதல் இரண்டு வரிகளும் தலம் அமைந்த சூழலையும். மற்றிைய இரண்டு வரிகளும் அங்கு எழுந்தருளியிருக்கும் இறைவனின் பெருமையையும் பாடுவதாய் அமைந்துள்ளன. தம் பிரதேசத்தைப் பற்றிப் பிறர் புகழக் கேட்டு மகிழ்வது மனித இயல்பு. இந்த மன நிலையை நன்குணர்ந்திருந்த ஞானசம்பந்தர் தாம் சென்ற பிரதேசங்களில் உள்ள தலச்சிறப்பினை உள்ளது விரித் தும் இல்லாததைப் புகுத்தியும் பாடி அம்மக்களின் மன தைக் குளிரவைத்து சைவத்தின் மேன்மையையும் பக்தி நெறி நின்று வழிபடுதலே சிறந்த மார்க்கம் எனவும் புலப் படுத்த முற்பட்டிருக்கிறார் போலத் தெரிகின்றது.
இவரது எட்டாம் பாடல் ஒவ்வொன்றும் இராவணனைப் பற்றியதாக அமைகின்றது. தீயவர்கள் ஆயினும் இறை வனை மனமுருகிப் பிரார்த்தனை செய்யும் போது அவனது அருள் கிடைக்கும் என்பதே சம்பந்தர் இக்கதையை தமது பாடல்களில் கையாண்டமைக்குக் காரணம் என பொது வாக விளக்கம் கூறினாலும் எத்தனையோ புராணக் கதை கள் இருக்க இக்கதையை தமது எட்டாம் பாடலில் அமை த்துப் பாடுவதற்கு அக்காலச் சூழ்நிலை காரணமாக அமை ந்திருக்கலாம் போலத் தெரிகின்றது. இராவணன் பேரரசன் சிவனை மதியாது வெள்ளியங்கிரியைத் தூக்க முற்பட்டு நசுங்குண்டு பின் சாமகானம் பாடி விடுதலை பெற்றவன். அப்பரும், சம்பந்தரும் வாழ்ந்த காலப்பகுதி பல்லவப் பேரரசும் பாண்டியப் பேரரசும் உருவாகிய காலம். புதிதாக பேரரசு அமைத்தவர்கள் செருக்குடன் நட்ப்பது இயல்பு. அத்துடன் இரண்டு பேரரசுகளையும் ஆட்சி புரிந்தவர்கள் சமணர்கள். எனவே, தமது அரசியல் பலம்கொண்டு சைவ த்தை எதிர்த்தால் இராவணனைப் போல் துன்புற நேரிடும் என்பதையே சம்பந்தர் இங்கு புலப்படுத்த விளைகிறார் என்றே கருதவேண்டும்.
ஆளுடைய பிள்ளையாரின் ஒன்பதாவது பாடல் மால்,
இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 252
அயன் அடிமுடி தேடிய கதையாக உள்ளது. பிள்ளையா ரின் பத்தாம் பாடலிற் சமண, பெளத்தர் இழித்துக் கூறப்படு கின்றனர். அப்பரது பாடல்கள் பலவற்றிலும் இந்தக் காழ்ப் புணர்ச்சியை உணரக்கூடியதாக உள்ளது. சமண பெளத்த ரின் போலிவேடம் ஒழுக்கக்கேடு என்பனவற்றை பொதுமக் களுக்கு வெளிப்படுத்திச் சைவசமயத்திற்கு ஏற்றம் கொடு க்கும் நோக்கிலேயே சம்பந்தர் தமது பதிகம் ஒவ்வொன்றி
லும் உள்ள பத்தாம் பாடலில் இவ்வாறு பாடியுள்ளார்.
மேலும் சம்பந்தரின் திருக்கடைக் காப்புச் செய்யுட்கள் பலவற்றில் தன்னையும் தமிழையும் இணைத்துக் கூறு வதையும் காணக்கூடியதாக உள்ளது.
இவர்களைத் தொடர்ந்து தோன்றியவர் சுந்தரர். அப்பர், சம்பந்தர் ஆகியோர் எடுத்தாண்ட வடமொழிப் புராணக் கதைகள் யாவும் சுந்தரராலும் கையாளப்பட்டுள்ளன. இப் புராணக் கதைகள் சில சமணர்களால் இழித்துக் கூறப் பட்டதால் அவற்றிற்கு தத்துவார்த்த விளக்கமொன்று அக் காலத்தில் தேவைப்பட்டது. சுந்தரர் பல புராணக் கதைக ளைக் கூறி அவை நிகழ்ந்ததேன் என்று இறைவனை வினவுகிறார். “புகரேறு உகந்தோரால் புரிந்ததென்னே’ “பிறங்கும் சடைமேல் பிறைசூடிற்றென்னே’ என்பன போன்ற பல வினாக்கள் சுந்தரர் தேவாரத்தில் காணப்படு கின்றன. அப்பரும், சம்பந்தரும் செய்த சமயத் தொண்டு ஒரு வகையானது. சுந்தரரும், மாணிக்கவாசகரும் செய்த சைவத்தொண்டு மற்றொரு வுகையானது. முதல் இருவருக் கும் சைவ சமயத்திற்கெதிராக வளர்ச்சியடைந் திருந்த சமண, பெளத்த சமயங்களை எதிர்த்து சைவத்தை தமிழ்
நாட்டில் நிலைநிறுத்த வேண்டிய அவசியம் இருந்தது.
நால்வரது பக்தி மனநிலையிலும் வெவ்வேறு உறவு முறைகளைக் காணக்கூடியதாக உள்ளது. அப்பரும் சம்பந்தரும் சிவனிடம் அதிக மரியாதை செலுத்துவதை உணரக்கூடியதாக உள்ளது. அதிக மரியாதை நெருக்க மான உறவு நிலையைக் காட்டாது. அப்பருக்கும் இறை வனுக்கும் இடையில் உள்ள உறவு ஆண்டான் அடிமை நிலையாகவும், சம்பந்தருக்கும் இறைவனுக்குமிடையில் இருந்த உறவு தந்தை, மகனுக்கிடையில் இருந்த உறவு முறையாகவும் உள்ளதை நோக்கக்கூடியதாக உள்ளது.
சுந்தரர், மாணிக்கவாசகர் நிலை சற்று உயர்ந்த நிலையாக
 

4
வுள்ளன. சுந்தரர் தோத்திரப் பாடல்களில் உள்ள பரிகாசவார்த்தைகள் தோழமை உறவைப் புலப்படுத்து கின்றன. மாணிக்கவாசகர் தன் மனதை இறைவனிடம் முழுக்க முழுக்கப் பறிகொடுத்த நிலையில் அவனைக் காதலனாகவும் தன்னைக் காதலியாகவும் பாவித்துத்
தோத்திரப் பாடல்களைப் பாடியுள்ளார்.
பின் வந்த புலவர்களில் சிலர் இந்நால்வர் மீதும் தனித் தனியாக பாமாலைகள் பாடலாயினர். இவர்கள் நால்வரை யும் முறையே ஆளுடைய பிள்ளையார், ஆளுடைய அரசு, ஆளுடைய நம்பி, ஆளுடைய அடிகள் என்னும் பெயர்க ளில் குறிப்பிட்டு பாடல்கள் பல பாடியுள்ளார். இராமலிங்க அடிகளார் இந்நால்வரையும் 'நால்வர் நான்மணி மாலை” என்னும் பெயரில் நாற்பது பாடல்கள் கொண்ட பாமாலையில் சிவப்பிரகாச சுவாமிகள் போற்றி உள்ளார்.
நாயன்மார்களை வணங்கும் மரபு தோன்றிய பின் அவர்க ளின் திருமேனிகளைக் கல்லிலும் உலோகங்களிலும் அமைத்து கோயில்களில் நிறுவி வழிபடும் வழக்கம் ஏற்பட்டது. செல்வ வளம்மிக்க கோயில்களில் அறுபத்து மூவரையும் வளம் குறைந்த கோயில்களில் நால்வர் திருமேனிகளையும் அமைத்து வழிபடும் மரபு ஏற்பட லாயிற்று. இன்று கோயில்கள் மட்டுமன்றி ஆதீனங்கள், மடங்கள், நிறுவனங்களும் இவர்களது குருபூசைத்
தினத்தை தவறாது நினைவு கூர்ந்து வருகின்றன.
(நி.நி.)
TGÖGui TGÖTLOGOufıOTGUNG)
இந்திய நாட்டு தமிழகத்தில் சைவத்துறையின் வளர்ச் சிக்கு வித்திட்டவர்களாக நான்கு சமயகுரவர்கள் விளங்கு கின்றனர். சைவ சமய நாயன்மார்களுள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர் ஆகியோர் முக்கிய இடம்பெறுகின்றார்கள். இந்நாயன்மார்க ளது தோற்றத்தால் சைவசமயம் புத்துயிர் பெற்றது. தமிழ் மொழி புத்தொளி பெற்றது. இவர்களின் தமிழ்நலமும் பக்திப் பண்பும் காலந்தோறும் தமிழர் வாழ்வுக்கு உயிர்ப்புத் தன்மை நல்கி வருகின்றன. இச்சான்றோர்களின் அளப்பரிய
சாதனைகளைப் பின்வந்தவர்கள் நினைந்து நினைந்து
後談@fa glou 5ameHT9gal656前函eoeporä56má

Page 253
உள்ளம் உருகினர். பக்திப்பாக்களைத் தந்த அந்நால்வர் பெருமக்களையும் பாக்களாலேயே வழிபாடு செய்தனர். இவர்களுள் தலைமை சான்றவர் கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாச சுவாமிகள் ஆவார். சைவ சமய குரவர்கள் நால்வருக்கும் சிவப்பிரகாச சுவாமிகள் எழுப்பிய கவிதைக் கோயிலே நால்வர் நான்மணிமாலை ஆகும்.
அண்ணாலை ரெட்டியாருடன் சிவப்பிரகாச சுவாமிகள் சிதம்பரம் வந்து அங்கே ஒரு திருமடம் கட்டுவித்து அதில் தங்கி நாளும் கூத்தப்பெருமானை வழிபாடு செய்து வந்தார். இங்கே பாடப் பெற்றதுதான் நால்வர் நான்மணிமாலை ஆகும். இந்நூலுடன் சிவப்பிரகாச விளக்கம் தருக்க பரி பாடை, சதமணிமாலை ஆகிய நூல்களையும் பாடியருளி
னார்கள்.
தேவாரமும் திருவாசகமும் சைவப் பண்பாட்டு மரபில் முக்கியமான இடத்தினைப் பெற்று விளங்குகின்றன. இவ்வ ரிய நூல்களைத் திருமுறைகள் எனப் போற்றினர். பன்னிரு திருமுறைகள் திருக்கோயில்களுக்கு அடித்தளமாக விளங் கின. திருக்கோயில்கள் அறுபத்து நான்கு கலைகளின் கருவூலமாக விளங்கின. தேவார மூவரான திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகி யோரால் பாடப்பெற்ற திருத்தலங்கள் தனிச் சிறப்புப் பெற்றன. இவர்கள் தமிழ் 'மூவர் தமிழ்' எனப் போற்றப்படு கின்றன. திருவாசகம், திருக்கோவையார் ஆகியவற்றை அருளிச் செய்த மாணிக்கவாசகரையும் இணைத்து நால்வர் திருமுறைகள் எனப் போற்றப்படுகின்றன.
திருமுறைகளைப் போற்றி வழிபடுபவர்கள் பலராவர். நால்வர் நற்றமிழையும் போற்றுபவர் பலராவர். நால்வர் பெருமக்களையும் போற்றிப் புகழ்ந்துபாடி வணங்கும் மரபு தொன்று தொட்டு நிலவி வருகின்ற ஒன்றாகும். சைவ சமயத்திற்கு நால்வரின் திருப்பாடல்கள் நற்றுணை என்றும் வழிகாட்டுவன என்றும் நால்வரையும் வழிபடுவதும் துதிப்ப தும் வழக்கமாக நிலவி வருகின்றது. நால்வர் செய்த அற்புதங்களைக் கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாசரும் அருட்பிரகாச வள்ளலாரும் நெஞ்சார நினைந்து வாயார வாழ்த்தியுள்ளனர்.
தமிழில் தொண்ணுாறு வகைப் பிரபந்த இலக்கியங்களுள்
இந்துக் கலைக்களஞ்சியம்
 

ஒன்றாக நான்மணிமாலை விளங்குகின்றது. இவற்றைச் 'சிறுபிரபந்தம்', 'சிற்றிலக்கியம்' என்றும் வழங்குவார்கள். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரின் மேல் நான்மணி மாலை” என்ற இலக்கணம் அமையப் பாடப்பெற்ற இந்நூல் 'நால்வர் நான்மணிமாலை' என்ற பெயரைப் பெற்றது.
இறைமைத் தொடர்பினை வெளிப்படுத்தும் இத்தொண் னுாற்றாறு வகை நூல்களுள் ஒன்று நான் மணிமாலை, முத்து, பவளம், மரகதம், மாணிக்கம் என்னும் நால்வகை மணிகளை முறையே கோர்க்கப் பெற்ற மாலை போன்று வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஆசிரிய விருத்தம், ஆசிரியப்பா என்னும் நால்வகைப் பாக்களை நிரலே நிறுத்தி, அந்தாதித் தொடையிலக்கணம் பொருந்தப் பாடப் பெறுவதொரு நூல். நாற்பது செய்யுட்களே இருக்கவேண் டும் என்ற வரையறையும் உண்டு.
"வெண்பாக் கலித்துறை விருத்தம் அகவல் பின்பேசும் அந்தாதியி னாற்பது பெறின் நான்மணி மாலையாமென நவில்வர்”
என்பது இலக்கண விளக்க நூற்பாவாகும்.
நால்வர் நான்மணிமாலை என்னும் நூல்
"எப்போ தகத்து நினைவார்க் கிடரில்லை கைப்போ தகத்தின் கழல்
என்னும் விநாயகர் வணக்கம், காப்புச் செய்யுளுடன் ஆரம்ப மாகின்றது. அதாவது துதிக்கையை உடைய யானை முகக் கடவுளின் திருவடிகளை எப்போதும் உள்ளத்தில் இடைவிடாது வணங்குபவர்களுக்கு பிறவியாகிய துன்பம்
ஏற்படுவதில்லை என வருணிக்கப்பட்டுள்ளது.
நால்வர் நான்மணிமாலை என்னும் நூலானது திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார். மாணிக் கவாசக சுவாமிகள் ஆகியோர்களது வரலாற்றினையும் அற்புதங்களையும் முறையே முதல் நான்கு பாடல்களிலும் பின்னர் நான்கு பாடல்களிலும் என மாறி மாறி நாற்பது
பாடல்களிலும் நன்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளதை அவதா
னிக்கலாம்.
&இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 254
இந்நூலின் முதலாவது பாடல் திருஞானசம்பந்தரின் திருவடியே வீடு என வர்ணிக்கின்றது.
"பூவான் மலிமணிநீர்ப் பொய்கைக் கரையினியற் பாவான் மொழிஞானப் பாலுண்டு - நாவான் மறித்தெஞ் செவியமுதாய் வளர்த்தபிரான் தண்மை வெளித்தண் கமலமே வீடு'
அதாவது ஞானப்பாலுண்டு, நாவால் மறித்து தேவாரமென் னும் செவியமுதாய் வளர்த்த பெருமானுடைய திருவடி களே முத்தி என வர்ணிக்கப்படுகின்றது.
நால்வர் நான்மணிமாலையில் அமைந்த கருத்துக்களைப் பத்துத் தலைப்புகளில் அமைத்துப் பாடியருளினார்கள்.
960)6)lu ll6) 601.
1-4- இறைவன் நால்வரையும் ஆட்கொண்ட முறையும்
பாடற்சிறப்பும்
5-8- நால்வருடைய மேன்மையை விளக்கி நிற்கும்
நான்கு அடியவர்கள் பெருமை
9-12- தேவார திருவாசகங்களைப் பாடிய நால்வரின்
பெருமையை இவ்வாறு விளங்கிக் கொள்ள
வேண்டும் என்பது.
13- 16- LITEg6 JuJ66
17-20- நால்வர் பாட்டுக்களும் செய்த அற்புதம்
21-24- பாடுவோரின் வாகை - செயற்கை வெற்றி
25-28- பாடுவோரின் இயற்கை மிகுதி, முல்லை
ஒழுக்கத்தில் உயர்ந்து கருவி கரணங்கள் மாறிய தன்மை
29-32- குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந்துறும்” என்ற கருத்தை நால்வருக்கும் அமைத்துக் காணுதல்
33-36- அருளாளர் நிகழ்ச்சி அறவழியையும் மாற்றும்
ஆற்றல் பெற்றது
இந்துக் கலைக்களஞ்சியம் x
線*怒綠22
 

5
37-40- நால்வரையும் குருவாகக் கொண்டு முத்தி
பெற்றவர் பலர்.
எனப் பத்துத் தலைப்புக்களும் அமைந்து விளங்குகின்றன.
நால்வர் நான்மணிமாலையின் 1, 5, 9, 13 வெண்பாக்கள் திருஞானசம்பந்தரைப் பற்றிய செய்திகளைக் கூறுகின்றன. இயற்பாவால் மொழி ஞானப்பால் உண்டு நாவால் மறித்து எம் செவி அமுதாய் வளர்த்த பிரான், சுடுகாட்டுக்குள் ஆடுவான் சுட்டினொடு காட்டும் சம்பந்தர், தண்புகலிச் சம்பந்தா, சிரபுரத்து நாவலன் சம்பந்தன், போதமுண்ட பிள்ளை, திருஞானசம்பந்தா வானும் புகழ் புகலி மன்னன், பிள்ளை என்றெல்லாம் பெருமானை அன்பு தோன்ற, பொரு ளொடு கூடிய அடைமொழி வெளிப்படக் கூறி அழைத் துள்ளார்.
நால்வர் நான் மணிமாலையின் 2, 6, 10, 14, 18, 22, 26, 30, 34, 38 ஆகிய எண்களுக்குரிய கட்டளைக் கலித்துறைகள் திருநாவுக்கரச சுவாமிகள் பற்றிய செய்தி களைக் கூறுகின்றன. வீட்டிற்கு வாயில் எனும் தொடை சாத்து சொல்வேந்த, திருத்தாண்டக வேந்த, நாவரசாய பெருந்தகை, நோய் இலியாகிய சொல்லிறை, சொல்வேந்த, சொல்லின் மன்னர், திருநாவுக்கரசு, கடல் நீந்திய பாவலன் என்ற சொற்றொடர்களால் குறிப்பிட்டருளுகின்றார்கள்.
நால்வர் நான்மணிமாலையின் 3, 7, 11, 15, 19, 23, 27, 31, 35, 39 ஆகிய எண்களைக் கொண்ட செய்யுட்கள் சுந்தரமூர்த்தி நாயனாரைப் பற்றிக் கூறுகின்றன. ஆரூரன், துறந்த முனிவர் தொழும் பரவை துணைவா, குண்டையூர் நென்மலை முற்கொண்ட அருட்கடலே, கலக்கருமதலை விழுங்கிய முதலைகான்றிடத் தோன்று நாவலனே. நம்பி, உனற்கரும் புகழ்மேவிய சுந்தரன், வரதன் கைலைமலைய டைந்த மணி, பாவாய்ப் பொழிந்த வானமுதப் பழத்திரு வாய் நம்பி, நம்பியாரூரன், சுரர் முனிவர் பரவலுறுமும் பெருஞ்சீர்த் தொண்டர்த் தொகை செய்தோன், அறமுதல் நால்வகை செய்தோன் என்றெல்லாம் பாராட்டுகின்றார்கள்.
நால்வர் நான்மணி மாலையின் 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40 ஆகிய எண்ணுள்ள பாக்கள் மாணிக்க
வாசக சுவாமிகள் பற்றிக் கூறுகின்றன.
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 255
ஆதிசிர் பரவும் வாதவூர் அண்ணல், பெருந்துறை புகுந்து பேரின்ப வெள்ளம் மூழ்கிய புனிதன், வாதவூரன்பன், மாணிக்கவாசகன் எனும் ஒரு மாமழை, வித்தகன், நலமணிவாதவூரர், நல்லிசைப் புலவன், மனம் நின்று உருக் கும் மதுரவாசகன், செய்ய மாணிக்கவாசகன், கலங்குறு புலனெறி விளங்குறு வீரன் என்றின்ன பொன்மொழிகளினால் மாணிக்கவாசகரைக் குறிப்பிடுகின்றார்கள்.
நால்வர் நான்மணிமாலையின் நாற்பதாவது பாடல் மாணி க்கவாசக சுவாமிகளின் பாட்டின் பெருமையை எடுத்துக்
கூறுவதாக அமைகின்றது.
"செய்ய வார்சடை தெய்வ சிகாமணி பாதம் போற்றும் வாதவூரர் அன்ப! பாவெனப் பாடுவதும் உன் பாட்டு
பூவெனப் படுவது பொறிவாழ் பூவே!”
அதாவது இலக்குமிக்கு வாழிடமளிப்பதால் தாமரை எல்லா மலர்களையும் விட உயர்ந்ததாகக் கருதப்படுவது போல் பாட்டுக்கள் எல்லாவற்றுள்ளும் உயர்வுடையது
மாணிக்கவாசகருடைய பாட்டு என வர்ணிக்கப்படுகின்றது.
நால்வர் நான்மணிமாலையினை ஒரு துதிநூல் என்றும் புகழ்நூல் என்றும் பலர் கொள்வார். சிவப்பிரகாச சுவாமி கள் இந்நூலை ஒரு ஆராய்ச்சி நூல் என்றே கூறுகின்றார் கள். ”என்பாட்டிற்கு நீயும் அவனும் ஒப்பீர் எப்படியினுமே” என்ற அடியில் தம் கருத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
வரலாறுகளில் காணப்பெறும் சிக்கல்கள், தத்துவ உண்மையில் கொள்ள வேண்டிய கருத்துக்கள், அறவழி யும் அருள் மொழியும் மோதும் நிலையில் எழுகின்ற மாறுபாடுகள் போன்றவற்றை எடுத்துக் கூறி விளக்கி, சிக்கல் களை நீக்குகின்றார்கள்.
கற்பனைக் களஞ்சியமாகிய சிவப்பிரகாசப் பெருந்தகை இச்சிறுநூலுள் அமைத்துள்ள கருத்துக்களையெல்லாம் எடுத்து விளக்குதல் யார்க்கும் இலகுவானதல்ல. சுருங்கக் கூறின் சைவ சமயத்துக்கு இது ஒரு கருவி நூல். தத்துவ உலகிற்கு இது ஓர் அட்டவணை நூல், இலக்கிய உலகில்
இந்துக் கலைக்களஞ்சியம்x
 

ஒரு மறுமலர்ச்சியை உண்டாக்கிய புரட்சிகரமான ஆராய்ச்சி நூல். உலக வாழ்வியலுக்கு ஒரு கொள்கை
நூலாகும் எனப் பலவாறாக வர்ணிக்கப்பட்டுள்ளது. (ப.க.)
jTGua LIJbLIGDJ
தமிழக சமய வரலாற்றிலே அகச்சந்தான பரம்பரை, புறச்சந்தான பரம்பரை, கைலாச பரம்பரை போல் ஈழத்தில் நாவலர் பரம்பரை என்ற வொன்றை வகுக்க முடிகின்றது. இப்பரம்பரைக்கு மூலகர்த் தாவாக விளங்கியவர் நல்லூர் பூரீலழரீ ஆறுமுகநாவலர்.
கி.பி.16ஆம் நூற்றாண்டிலிருந்து இலங்கையில் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரிட்டிஷார் ஆட்சிக் காலங்களில் கிறிஸ்தவ மதச் செல்வாக்கினால் சைவசமய பாரம்பரியங்கள், சமயச் சுதந்திரங்கள் முற்றாக மறுக்கப் பட்டிருந்தது. இச்சூழ்நிலையில் சைவத்தையும் அதன் தத்துவமாகிய சைவசித்தாந்தத்தையும் தமிழையும் பாது காக்கும் நோக்குடன் பல தமிழ் அறிஞர்களும் பெரியோர் களும் தோன்றி பல கைங்கரியங்களைப் புரிந்தார்கள். அந்த வகையில் யாழ்ப்பாணம் நல்லூரிலே பிறந்த ஆறுமுகநாவலரின் பணிகள் ஈழத்து சைவசமய வரலாற்றி லும் சைவ சித்தாந்த மரபிலும் தமிழ் மொழியிலும் பல புத்துணர்ச்சிகளை ஏற்படுத்தியிருந்தன. நாவலரைத் தொடர்ந்து அவர் வழியிலே வாழ்ந்து அவரைப் போலவே சைவம், சைவசித்தாந்தம், தமிழ்க்கல்விப் பணிகளையும் பலர் புரிந்தார்கள். இவர்களையே நாம் நாவலர் பரம்பரை என அழைக்கின்றோம்.
நாவலர் பரம்பரை என்று ஆராயும்போது தமிழ் இலக்கண இலக்கிய சாஸ்திர நூற்புலமை பெற்றவர்கள், நாவலரைப் போன்று சைவ அனுட்டானங்கள் சைவசமய பிரசாரம், பிறமதகண்டனம், பிரசங்கம், புராணபடனம், சைவ சித்தாந்த நூல் பணி என்பனவற்றை நாவலர் பரம்பரையினரின் கொள்கைகள், பண்புகள், பணிகள் என்றவாறு குறிப்பிட
6) I D.
முதலில் நாவலரின் பணிகளை நோக்கும் போதுதான்

Page 256
அவருடைய பரம்பரையினரின் பணிகள் எமக்குப் புலனா கும். நாவலரின் பணிகள் இலங்கையின் வடபகுதிகளிலும் தென்னிந்தியாவிலும் நிலை கொண்டிருந்தன. ஈழச் சைவ சமய வரலாற்றிலே அவர் ஒரு சரித்திரம், சகாப்தம் எனக் கூறலாம். மேலைநாட்டு கிறிஸ்தவர்களின் பண்பாடுகள் ஈழத்து சைவப் பண்பாடுகளுள் நுழைந்ததோடு ஆங்கிலக் கல்வியின் வளர்ச்சியாலும், மிஷனரிமார்களின் கண்டணங்க ளாலும் சைவ சமயத்தைப் பின்பற்றியவர்கள் சிலர் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்டனர். இவ்வேளையில் சைவ சமயத் தவர்கள் பெரும் சவாலை எதிர்நோக்கினர். நாவலர் இளமையில் கிறிஸ்தவ பாடசாலையில் கல்வி கற்று ஆங்கில மொழியை அறிந்து கொண்டார். பின்பு சைவர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதைக் கண்டனம் செய்தார். கிறிஸ்தவ மதத்திற்கு எதிராக வச்சிரதண்டம், சுப்பிரபோதம், சைவதுஷணபரிகாரம் போன்ற கண்டன நூல்களைத் தொடுத்தார்.
தமிழ், ஆங்கிலக் கல்வி மிக உயர்ந்த பேச்சாற்றல், சுயசிந்தனை யாற்றல், மனஉறுதி என்பனவற்றினால் சைவநெறிக்கு ஏற்பட்ட இடர்களைக் களைந்து சைவத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தியனார். வண்ணார்பண்ணைச் சிவன் கோயிலில் வெள்ளிக்கிழமை தோறும் சைவப்பிரசங் கங்களை நிகழ்த்தினார். சிவபக்தி வேதாகமங்கள், சிவ தீட்சை, தருமம், விழுமியங்கள் போன்ற பொருள்களில் அமைந்த பிரசங்கங்களால் சைவ சமயம் எழுச்சி பெறக் காரணமாயிருந்தார். இவரின் பிரசங்கச் சிறப்பால் திருவா வடுதுறை ஆதீனம் நாவலர்’ என்ற பட்டத்தை வழங்கிக் கெளரவித்தது.
சைவசமயக் கல்வியின் வளர்ச்சியியைக் குறித்து 1848 இல் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் சைவப்பிரகாச வித்தியாசாலையை நிறுவினார். தொடர்ந்து புலோலி, கோப் பாய் முதலான இடங்களிலும் சமயப் பாடசாலைகள் இவ ரால் ஸ்தாபிக்கப்பட்டன. புலோலி நகர் பசுபதீஸ்வரர், கதிர்காமக் கந்தன் மீதும் பக்திப் பிரபந்தங்களைப் பாடியுள்ளதோடு சைவசமய பாலர் பாடப் புத்தகங்கள், சைவ வினாவிடை, சிவாலய தரிசனவிதி போன்ற நூல்களையும் வெளியிட்டார். இதனால் சைவ சமயம்
எழுச்சி நிலை பெற்றது.
இந்துக் கலைக்களஞ்சியம்xஐx
 

இவ்வாறான பாடசாலைகளுக்குத் தேவையான நூல் களை ஆக்கி வெளியிடும் வகையில் இலங்கை வாழ் இந்துக்களுக்கென 1849 இல் நல்லூரிலே ஓர் அச்சியந்திர சாலையை நிறுவினார். இச்சாலையில் திருமுறையில் அடங்கிய அருட் பாடல்களும் வெளியிடப்பட்டன. பெரியபுராணம், மகாபாரதம், ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நன்னெறி, நல்வழி போன்ற நீதி நூல்களுக்கான உரை நூல்களும் திருக்கோவையார், கந்தபுராணம், மறைசையந்தாதி, கோயில் புராணம் போன்ற நூல்களை யும் பிழையறப் பதிப்பித்து வெளியிட்டார். கல்வி - இம்மை, மறுமைப் பயன்களுக்கு என எடுத்துரைத்தார். இவருடைய கல்விப் பணியை பிற்காலத்தில் சைவபரி பாலன சபையில்
இவருடைய சீடர்கள் விரிவுபடுத்தினார்கள்.
பெரிய புராணம், கந்தபுராண வசனம், திருவிளையாடற் புராண வசனம் போன்ற நூல்களுக்கு வசனம் எழுதி வெளியிட்டார். திருச்செந்தினிரோட்டகயமவந்தாதி, திரு முருகாற்றுப்படை, சைவசமய நெறி, கோயிற்புராணம், மரு தூரந்தாதி முதலிய சமயம் சம்பந்தமான நூல்களுக்கு உரைகண்டவர். இவரது உரை நடை தமிழ் இலக்கியத்தில் தனித்துவமானது. நன்னூல் விருத்தியுரை, செளந்தரியலகரி உரை, மறைசையந்தாதி, குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் போன்ற நூல்களைப் பிழையறப் பதிப்பித் தார். சூடாமணி நிகண்டு போன்ற நூல்களைப் பரிசோதித்து வெளியிட்டார்.
யாழ்ப்பாணத் திலே மட்டுமன்றி தமிழ்நாட்டிலும் நாவலர் நிகழ்த்திய பிரசங்கங்கள், புராணபடனம், சித்தாந்த கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு நிகழ்த்தப் பட்டவை. சைவ சித்தாந்தக் கருத்துக்களை உணர்த்தும் பெரியபுராண சூசனம் முதலிய நூல்களை எழுதி வெளியிட்டார். சைவசித்தாந்தக் கோட்பாடுகளை மறுப் போருக்கு எதிராகக் கண்டனங்களைத் தொடுத்தும் சித்தாந்த உண்மைகளை நிறுவினார். நாவலரவர்கள் தமது சமய முயற்சிகளால் தமது சமய சித்தாந்தப் பாரம்பரியத் தில் நம்பிக்கை கொண்ட மாணவர் பரம்பரையினரை
உருவாக்கிய பெருமைக்குரியவர்.
நாவலர் பரம்பரையினர் எனக் கொள்ளத்தவர்களில்
&இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 257
மிகவும் முக்கியத்துவம் பெற்றோர்கள் மேல்வருவோர் ஆவர்.
க.சதாசிவபிள்ளை
த.கைலாசபிள்ளை மட்டுவில் க.வேற்பிள்ளை வித்துவசிரோன்மணி பொன்னம்பலபிள்ளை மாதகல் ஏரம்பையார் அச்சுவேலி வே.மயில்வானகச் செட்டியார் வேலணை வி.கந்தபிள்ளை ஏழாலை சி.செந்திநாதையர்
நல்லூர் வை.திருஞானசம்பந்தப்பிள்ளை
l
O
வடகோவை சு.சபாபதி நாவலர்
l
1
கொக்குவில் ச.சபாரத்தினமுதலியார்
1
2
நீர்வேலி ச.சிவப்பிரகாசபண்டிதர்
1.
3
மேலைப்புலோலி நா.கதிரவேற்பிள்ளை
1
4.
ஆவரங்கால் சு.நமச்சிவாயப்புலவர்
1
5
வண்ணார்பண்ணை சி.சுவாமிநாதபண்டிதர்
1
6
இணுவில் நடராசையர்
1
7
சித்தங்கேணி ஆஅம்பலவாணநாவலர்
1
8
சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர்
l
9
பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை
க.சதாசிவப்பிள்ளை
நாவலரவர்களின் பரம்பரையினரில் முதன்மை மாணாக்க ராகச் சிறப்பிடம் அளிக்கப்படுபவர். நல்லூரைப் பிறப்பிடமா கக் கொண்டவர். இளமைக் காலம் தொட்டு நாவலரி டம் கல்வி கற்று அவரை விட்டுப் பிரியாதவர். நாவலர் பெருமானின் சகல கைங்கரியங்களுக்கும் இவர் உற்ற துணையாக விளங்கினார். இதனால் திருவாவடுதுறை ஆதீனகர்த்தா சதாசிவபிள்ளைக்கு நெற்றியில் திருநீறு பூசியபோது நாவலரைச் சிவம் என்றும் அவரைச் சக்தி என்றும் போற்றிப் புகழந்ததாக கைலாசபிள்ளை கூறியிரு க்கிறார்.
இவருடைய பணிகளை நோக்கும்போது நாவலரவர்கள் தொட்ட பணியையும் அவரால் விட்ட பணியையும் இவரே பூரணப்படுத்தி முடித்தார். நாவலர் முன்னிலையில் பல நூல்களைப் பரிசோதித்தும் வெளியிட்டார். அவற்றைப்
இந்துக் கலைக்களஞ்சியம்
 

பதிப்பித்தும் விட்டார். நாவலர் மறைந்த பின்பு அவருடைய அச்சகத்தையும் வித்தியாசாலைகளையும் தலைமையேற்று நடத்தினார். அத்துடன் நாவலர் பரிசோதித்து முடித்து வைத்திருந்த நூல்களையும் பதிப்பித்தார். மேலும் அவர் முன்பதிப்பித்த நூல்களை மீள்பதிப்புப் பிரசுரமும் செய்தார். இதற்கு சி.வை.தாமோதரம்பிள்ளை, அ.குமாரசுவாமிப் புலவர் முதலானோரும் உதவியுள்ளனர்.
த. கைலாசபிள்ளை
நல்லூரிலே தம்பு என்பவரின் அருந்தவப் புதல்வராகப் பிறந்தார். தமது சிறிய தந்தையாரான ஆறுமுகநாவலரிடம் வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையில் சென்று படித்தார். கற்று வரும் காலத்தில் சைவசித்தாந்த சாஸ்திரங்களையும், தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளையும் அவரிடம் நன்கு கற்றறிந்தார். இளமையிலிருந்து தீட்சை பெற்றுச் சிவபூசை, தலயாத்திரை செய்து சிவபக்தி பூண்டு நல்லொழுக்கம் வாய்க்கப்பெற்ற வராக விளங்கினார்.
நாவலரின் இறுதிக் காலத்தில் நாவலரின் ஏவல்பணிகள் உட்பட நாவலரின் நாற்பணிகளை இவரே செய்து வந்தார். இதனால் நாவலர் பரம்பரையினரில் முக்கியத்துவம் வாய்ந்த ஒருவராகத் திகழ்ந்தார்.
இவரின் கைங்கரியங்களை நோக்கும்போது 1988இல் சைவபரிபாலன சபை ஸ்தாபிக்கப்பட்ட போது அதன் செயலாளராக இருந்து பல சைவப் பணிகளைப் புரிந்தார். சைவபரிபாலன சபையினால் நடாத்தப்பட்டு வந்த இந்து சாதனப் பத்திரிகைக்கு ஆசிரியராகச் சில காலம் பணி புரிந்தார். அப்பத்திரிகையிற் சைவசமய மாண்பும் பரசமய கண்டனமும் என்ற அரிய விடயங்களையும் எழுதியவர். சிவஞான சித்தியார் எனும் நூலின் சுபக்கத்தை ஆராய்ச்சி செய்து அச்சிட்டு வெளியிட்டவர். இப்பணி அவரின் சித்தாந் தப் புலமையை எடுத்துக் காட்டியது. நாவலரவர்களின் சைவசமயப் பரம்பல் ஊடகமாக விளங்கிய சைவப் பிரசாரத்தை முன்னெடுத்துச் சென்றவர்களிற் கைலாச பிள்ளைக்கு ஒரு தனியிடம் உண்டு.
தமிழ் இலக்கிய, இலக்கண வளர்ச்சிக்கும் கல்வி விருத்திக்கும் பெரும்பங்காற்றியவர்களில் கைலாசபிள்ளை
RSS StausevTeHD geheueHaseff glcocoréesemā

Page 258
யும் மதிக்கத்தக்கவர். பாலர் பாடப்புத்தகங்களை எழுதிய வர். ஆறுமுகநாவலரின் சரித்திரம் உட்பட அவருடைய கிறிஸ்தவ மதத்திற்கு எதிரான கண்டன நூல்கள், துண் டுப் பிரசுரங்கள், பாடல்களையும் ஆறுமுகநாவலர் பிரபந்தத் திரட்டு ஆக தொகுத்துத் தந்த பெருமை கைலாசபிள்ளை யையே சாரும். அதேபோல் காசிவாசி செந்நிநாதையரின் கட்டுரைகளை வைதிக சைவ சுத்தாத்வித சைவ சித்தாந்த சமயம் எனத் தொகுத்து வழங்கியவர். ஞானப்பிரகாச முனிவரின் சங்கத நூல்களை வெளியிட்டவர். நாவலரைப் போன்று சற்றும் பிசகாது வசன நடையைக் கையாண்டவர். வசன நடை பயில்வோருக்கு உதவியாக வசன இலக்கண நூல் ஒன்றினை அச்சிட்டு வெளியிட்டார். வண்ணார்பண் ணையிலுள்ள சைவப்பிரகாச வித்தியாசாலைக்கு அதிப ராகி அவ்வித் தியாசாலையை உன்னத நிலை அடையச் செய்தவர். மேலும் அவ்வித்தியாசாலையை அடிப்படையா கக் கொண்டு காவிய பாடசாலை ஒன்றையும் தமிழ்ச்சங்க மொன்றையும் சித்தாந்த சபையொன்றையும் ஸ்தாபித்து நடத்தி வந்தார். இவ்வாறு நாவலரைப் போன்று சைவத்தை யும் தமிழையும் கண்ணும் கருத்துமாகக் கொண்டு கைலாசபிள்ளை வளர்த்தார்.
மட்டுவில் க.வேற்பிள்ளை
மட்டுவில் எனும் ஊரிலே கணபதிப்பிள்ளை உடையார் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். இளமைப் பருவத்திலே பல ஆசிரியர்களிடம் கல்வி கற்று தந்தையாரின் வேண்டுத லுக்கமைய ஆறுமுகநாவலரைக் குருவாகக் கொண்டு உயர்ந்த நூல்களைக் கற்றார். அதேபோல பொன்னம்பலப் பிள்ளையிடமும் பல நூல்களைக் கற்றார். கம்பராமாயணத்
தில் அதிக பயிற்சி பெற்றவராகவும் விளங்கினார்.
நாவலரைப் போன்று உரை நூல் பணிகள் செய்தவர்க ளில் இவரும் குறிப்பிடத்தக்கவர். திருவாதவூரடிகள் புராணத்திற்கு இவர் எழுதிய உரை மிகவும் சிறப்பு வாய்ந்தது. இவருடைய இவ்வுரையின் திறத்தையும் நுணுக்கத்தையும் மெச்சிய பொன்னம்பலப்பிள்ளை 'உரையாசிரியர்’ என்ற சிறப்புப் பெயரைக் கொடுத்தார். இவ்வுரையின் ஊடாக அவரின் இலக்கியத்திறனும் சைவசித்தாந்தத் திறனும் நன்கு புலப்படுகின்றன. அத்தோடு புலியூர் அந்தாதி உரை, கெவுளி நூலுரை,
இந்தக் கலைக்களஞ்சியம்x
భళ్ల 2 3 |
 

O
அபிராமி அந்தாதி உரை முதலிய விரிவுரைகளும் இவரால் எழுதப்பட்டவைகளாகும்.
இவர் தமிழகத்தில் இருந்தபோதும் பல பணிகளைப் புரிந்துள்ளார். ஈழமண்டலத்தின் பெருமையறியாது இகழ்ந்த இந்தியருக்கு அதன் புகழையறிய ஈழமண்டல சதகம் எனும் நூலை எழுதினார். மேலும் புலோலி பர்வத வர்த்தனி யம்மை தோத்திரம், புலோலி பைரவக் கடவுள் தோத்திரம் போன்ற நூல்களையும் எழுதியவர். வேதாரணியபுராணம், சிதம்பரசிவகாமியம்மை சதகம், ஈச்சரன் மாலை போன்ற நூல்களைப் பரிசோதித்து வெளியிட்டார். இவ்வாறு இவர் மேற்கொண்ட பணிகள் அவரைச் சிறந்த இலக்கண, இலக் கிய உணர்ச்சி மிக்க ஒரு புலவராகக் காட்டின எனலாம்.
சைவத்தின் பெருமைகளை நாவலரைப் போல பரப்பிய வர். சிறந்த புராணக் கதை மரபுகளை பிரசங்கங்கள் மூலமாக வெளிப்படுத்துவதிலும் இவர் கைதேர்ந்தவர். சிதம்பரத்திலுள்ள சைவப்பிரகாச வித்தியாச்ாலைக்கு பல ஆண்டுகள் தலைமையாசிரியராக விளங்கியதுபோல் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையிலும் சில காலம் தலை மையாசிரியராகப் பணிபுரிந்தவர். இவரிடம் சிதம்பரத்தைச் சேர்ந்த வித்துவான் சுப்பயைாபிள்ளை, வித்துவான் தண்ட பாணிஐயர் முதலானோரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆவரங்கால் நவசிவாயபிள்ளை, சாவகச்சேரி பொன்னம்பல பிள்ளை முதலானோரும் கல்வி கற்றுச் சிறப்படைந்தோர் கள் ஆவர்.
வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளை
இவர் யாழ்ப்பாணத்து நல்லூரில் சரவரணமுத்துச் செட்டி யாருக்கு மகனாகப் பிறந்தவர். இவரது தாயார் ஆறுமுக நாவலரின் தமக்கையார் என்பதனால் ஆறுமுக நாவலரு க்கு இவர் மருமகனாவார். இளமைப் பருவத்தில் கார்த்தி கேய உபாத்தியாரிடம் கல்வி கற்றதன் பின்பு ஆறுமுக நாவலரிடமும் பல இலக்கியங்களையும் இலக்கண நூல்க ளையும் துருவித்துருவி ஆராய்ந்து கற்றார்.
கோயில்கள், வீடுகள், மடங்கள் முதலியனவற்றிலே கந்தபுராணம், பெரியபுராணம், திருவிளையாடற்புராணம், கம்பராமாயணம் முதலிய நூல்களைப் படித்துப் பொருள் கூறுவதில் சிறந்தவர். வண்ணார்பண்ணைச் சிவன் கோயில்,
ಜ್ರಜಿಷಜ್ರ
&M 5u 56T8g gളഖ686ീ ട്ടി(Or86

Page 259
நல்லூர் கந்தசுவாமி கோயில் ஆகியவற்றில் கந்தபுராணம், பெரியபுராணம், இராமாயணம் போன்ற நூல்களைப் படித்துப் பொருளும் கூறினார். இவர் மகாபாரதத்தின் சில பருவங்க ளுக்கும், மயூரகிரிப் புராணத்திற்கும் உரையெழுதி அச் சிட்டு வெளியிட்டார். மேலும் நல்லூர் அரசகேசரி தமிழில் மொழி பெயர்த்து எழுதிய இரகுவம்சம் என்னும் நூலைப் பரிசோதித்து அச்சிலிட்டார்.
இவரிடம் கல்வி கற்றவர்கள் ஏராளம். மட்டுவில் க.வேற் பிள்ளை, சுவாமிநாத பண்டிதர், வண்ணார்பண்ணை சி.பொன்னுத்துரை ஐயர், கொக்குவில் க.சபாரத்தின முதலியார், தாவடி ஆமு.சோமாஸ்கந்தபிள்ளை, கந்தர்மடம் வை.சி.சி.சிவகுருநாதபிள்ளை, கொக்குவில் பண்டிதர் தம்பு, சாவகச்சேரி ச.பொன்னம்பலபிள்ளை போன்றோர் இவரிடம் கல்வி கற்று உயர்வடைந்தோர்கள் ஆவர். யாழ்ப்பாணத்து நாவலர் பரம்பரையில் வந்த ஒரு சிறந்த புலவராக இவர் மதிக்கப்படுகின்றார்.
மாதகல் ஏரம்பையர்
இவர் பாண்டி நாட்டிலிருந்து மாதகலில் குடியேறிய சுப்பிரமணிய சாஸ்திரியாருக்கு 1847இல் புதல்வராகத் தோன்றியவர். இளமையிலே தந்தையிடமும் பின்பு சங்கானை வேலுப்பிள்ளை, நல்லூர் சம்பந்தப்புலவர், சங்கர பண்டிதர் முதலானோரிடமும் தமிழ், இலக்கண, இலக்கியங்களையும் சமஸ்கிருத நூல்களையும் கற்றுத் தெளிவடைந்தார். பின்பு ஆறுமுகநாவலரிடம் சென்று ஐயங்களைக் கேட்டுக் கற்று அவரைப் போல சைவப்பணி, தமிழ்ப் பணிபுரிந்தார்.
நிருவாண தீட்சை பெற்று சிவபூசைகளைக் கிரமமாகப் புரிந்து வந்தவர். மேலும் ஊர்ஊராகச் சென்று சைவப் பிரசங்கங்களையும் செய்து சைவசமய அறிவைப் பரப்பிய வர். வண்ணார்பண்ணையிலுள்ள சைவபரிபாலனசபை தொடங்கிய காலத்தில் அந்நிறுவனத்தின் சைவச் சொற்பிர சாரகராகி அறிஞர் சுப்பையருடன் மட்டக்களப்பு, திரு கோணமலை, கொழும்பு போன்ற இடங்களுக்குச் சென்று சைவப் பிரசங்கங்கள் புரிந்து புகழ்பெற்றவர்.
நாவலரால் ஸ்தாபிக்கப்பட்ட வண்ணார்பண்ணைத் தமிழ்ச்
சங்கத்தில் ஒரு உறுப்பினராக அமர்ந்து பல நூற் பணிக
இந்துக் கலைக்களஞ்சியம்
緣23
 

ளைப் புரிந்தார். சமஸ்கிருத மொழி நீதிசாத்திரத்தைத் தமிழிலே மொழி பெயர்த்துச் செய்யுள் நூலாக இயற்றினார். மயில்வாகனப் பிள்ளையின் விருப்புக்கேற்ப செய்யுள் நூலாகவுள்ள சேதுபுராணத்தை யாவரும் படித்துணரும் வகையில் வசன நடையாக எழுதினார். அத்தோடு அந் நூலை அச்சிலிட்டும் வெளியிட்டார். குவாலாம்பூர் சிவ பெருமான் ஊஞ்சல், நாகேஸ்வரி தோத்திரம், சிரார்த்த விதி, கனாநூல், சூரனுடைய முற்பிறப்பின் சரித்திரம், கவணாவத்தை வைரவர் ஊஞ்சல், மாதகல் பிள்ளையார் ஊஞ்சல், காலி கதிரேசர் ஊஞ்சல் முதலிய நூல்களை எழுதி வெளியிட்டார். இவர் எழுதி வெளிவராமற் பல நூல்கள் முடங்கியும் கிடக்கின்றன. அவைகள் கண்ணப்பர் சரித்திரம் (நாடகம்), மிருகாவாதி விலாசம், ஆசெளச தீபிகை, மநுநீதிகண்ட சோழன் சரித்திரம் (நாடகம்) முதலி
யனவாகும்.
கீரிமலையில் நாவலரவர்களின் தருமப் பொருள் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட வித்தியாசாலைக்கு ஆசிரியராக அமர்ந்து இயக்கி வந்தார். பரிபாலன சபையோர் நடாத்திய குரு வகுப்பிற்கும் அவரே தலைமை ஆசிரியராகவும் விளங்கினார். இவ்வாறு ஏரம்பையர் செய்யுள் நூல்களையும் வசன நூல்களையும் இயற்றியுள்ள போதும் அவருக்கு புகழீட்டியது அவருடைய சைவப்பிரசங்கங்களே ஆகும்.
அச்சுவேலி வேல் மயில்வாகனச் செட்டியார்
அரிகர புத்திரச் செட்டியாருக்கும், முத்தாச்சி அம்மைக் கும் அச்சுவேலி என்னும் ஊரிலே பிறந்தார். இளமையிலே இலக்கண, இலக்கியங்களை நன்கு கற்று அவற்றில் பாண்டித்தியமுடையவராகவும் விளங்கினார். பின் ஆறுமுக நாவலரைக் குருவாகக் கொண்டு அவரிடம் சித்தாந்த நுட்பங்களை கற்று அதிலும் சிறந்த பயிற்சியுடையவராக விளங்கினார். அத்துடன் சிவபூசையையும் சிறப்புறக் கடைப் பிடித்து வந்தவர். சைவப் பிரசங்கங்கள் புரிவதில் வல்லுனராகவும், சித்தாந் தபோதனை புரிபவராகவும் சிறந்த ஆசானாகவும் பேரெடுத் தவர்.
நாவலரிடம் கல்வி கற்றபின் புலோலி சைவப்பிரகாச வித்தியாசாலையின் முதலுபாத்தியாயராக விளங்கி பலரு க்குப் போதனைகளும் புரிந்தார். இவரிடம் கற்றுத் தேர்ந்த
x இந்துசமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 260
வர்களில் க.வைரமுத்து, க.மயில்வாகனபிள்ளை, க.மார்க் கண்டேயக் குருக்கள், இ.சபாபதிக்குருக்கள், கா.குமார சுவாமிப்பிள்ளை, சி.செல்லையாபிள்ளை, சி.பொன்னையா பிள்ளை முதலானோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். இவர் தமிழ்நாட்டிலும் கொழும்பிலும் பல வருடங்கள் சைவப்பிர
சங்கங்கள் நடத்தியவர் ஆவார்.
வேலணை வி.கந்தப்பிள்ளை
வேலணை என்னும் ஊரில் வினாசித்தம்பி என்பவருக்குப் புதல்வராகப் பிறந்தவர். நாவலரவர்களிடம் தமிழ் இலக்கண இலக்கியம் நன்கு கற்றவர். நாவலரின் மாணவரான இணு வில் நடராசையரிடம் சைவசித்தாந்த சாஸ்திரங்கள் பதி னான்கினையும் கிரமமாகக் கேட்டறிந்தவர். இவர் சைவப் பற்றாளர். ஆறுமுகநாவலரிடம் மிகுந்த பக்தியும் மரியாதை யும் உள்ளவர்.
நாவலரின் கட்டளைப்படி வேலணையில் தமிழ் வித்தியா சாலையொன்றை உருவாக்கி அதில் அதிபராக இருந்து வழிநடத்தியவர். கொழும்பு சைவபரிபாலன சபையில் பல வாண்டு சைவப்பிரசங்கியாக இருந்து பிரசங்கங்கள் புரிந்தவர். யாழ்ப்பாணம், சிதம்பரம் முதலிய இடங்களில் சைவசித்தாந்த பெருமைகளை இனிதே எடுத்து விளக்கிப் பிரசங்கம் செய்தவர். வேலணையில் அச்சு இயந்திரசாலை யொன்றை நிறுவி பத்திரிகைகளையும் சில நூல்களை பரிசோதித்தும் வெளியிட்டார். சைவசித்தாந்த நுட்பங்க ளைத் தெரிவிக்கும் பொருட்டுச் “சைவ சூக்குமார்த்த போதினி” என்ற பெயரையுடைய பத்திரிகையை அச்சிட்டு மாதம் தோறும் வெளியிட்டு வந்தார். "தத்துவ பிரகாச உரையைப் பதிப் பித்ததோடு "சிவநெறிப் பிரகாச’த்தைப் பரிசோதித்து பேர னைக் கொண்டு பதிப்பித்தார்.
தீவுப்பகுதிகளில் சைவசமயம் வளர்ச்சி பெறுவதற்கு கந்தப்பிள்ளை ஆற்றிய பணிகள் நினைவு கூரத்தக்கவை. தீவு மக்களை தீட்சை பெறச் செய்து சிவபூசையும் செய்ய வைத்தவர். வேலணையிலுள்ள மகாகணபதிபிள்ளை யார் கோயில் பணிகளை பூரணப்படுத்தி நாள்வழிபாடுகள், உற்சவங்கள் நடைபெறுவதற்கும் ஏற்பாடுகள் செய்தவர். அப்பிள்ளையார் மீது திருவூஞ்சல் பாடல்களும் தனிக் கவிகளும் பாடியவர்.
念f函ä56oaJä56T@明uá緣絲談
 

2
ஏழாலை சி.செந்திநாதையர்
ஏழாலை எனும் ஊரிலே சின்னப்பஐயர் என்பவருக்கு 1848இல் மகனாகப் பிறந்தார். இளமையிலே சிறந்த கல்வி யாற்றல் மிகுந்தவராக விளங்கினார். 1870 இல் வண்ணார் பண்ணையில் கற்பித்துக் கொண்டு நாவலரவர்களிடம் பாடம் கேட்டவர். அவருடைய பிரசங்கங்கள், புராணபடனம், கண்டன நூல்கள் என்பனவற்றில் அதிக ஆர்வம் கொண்ட வர். நாவலரைப் போல வாழவேண்டும் என்ற முனைப்போடு வாழ்ந்தவரும் ஆவார். 1871இல் தனது தந்தையாருடன் இந்தியா சென்று சிதம்பரம், காசி முதலிய தலங்களைத் தரிசித்தவர். காசியில் சிலகாலம் வசித்த பெருமையால் “காசி வாசி செந்திநாதையர்” என அழைக்கப்பட்டார்.
செந்திநாதையர் சைவத்திற்கும் சைவசித்தாந்தத்திற்கும் புரிந்த பணிகள் அளப்பரியவை. செந்திநாதையர் நாவலர வர்களைப் போன்று புராணங்களின் உட்பொருளை விளக் கிப் பிரசங்கம் புரிவதில் சிரத்தைமிக்கவராக விளங்கியவர். சைவத்திற்கும் சைவசித்தாந்ததிற்கும் எதிராக கத்தோலிக் கர் மேற்கொண்ட பிரசாரத்தைக் கண்டிக்க நாவலருடன் இணைந்து தொண்டாற்றியவர். ஏகான்மவாதத் தினை வச்சிரதண்டம், மகாவுக்கிர வீரபத்திராஸ்திரம் முதலியன கொண்டு தாக்கியவர்.
சைவ சித்தாந்த அடிப்படை உண்மைகளை நிலை நாட்ட வேதம், ஆகமம், உபநிடதம், புராணம் போன்ற அடிப்படை நூல்களைக் கையாண்டு விளக்கமளித்தார். தேவாரம் வேதசாரம் எனும் நூலையும் எழுதிவெளியிட்டார். சைவ சித்தாந்த சிந்தனைகளை வெளிப்படுத்தும் நூல்கள், கட்டுரைகள், கண்டனங்கள் என்பனவற்றை வெளியிட்டார். இவர் 45க்குமேற்பட்ட நூல்களை எழுதியிருந்தாலும் 29 நூல்கள் மட்டுமே கிடைக்கப் பெற்றிருக்கின்றன.
1902 இல் திருப்பரங்குன்றத்தில் "வைதீக சுத்தாத்துவித சைவ சித்தாந்த வித்தியாசாலை” எனப் பெயர் சூட்டி வடமொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலே நூற்போதனை களும் புரிந்து வந்தார். பின்பு அச்சியந்திர சாலையையும் நிறுவி பல நூல்களை எழுதி தத்துவ விளக்கத்தோடு பதிப்புப் பணியும் செய்தார். அவ்வாறான நூல்கள் பின்வருமாறு:
భళ్ల
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்கலாம்

Page 261
கந்தபுராணம் நவநீதம்
தாந்திரிக துண்டகண்டனம் ஞானபோத விளக்கச் சூறாவளி சிவஞானபோத வசனாலங்காரதீபம் ஞானரத்தினாவளி
திருநீற்றின் உண்மை
சிவலிங்கமகத்துவம்
வஜ்ரடங்கம்
விவிலிய குற்சிதம் விவிலிய குற்சித கண்டதிக்காரம் வைதீக சுத்தாத்துவித சைவசித்தாந்த தத்துவபடம் வைதிக சுத்தாத்துவித சைவசித்தாந்த வினாவிடை பூரீசீகாழிப் பெருவாழ்வின் ஜீவகாருண்யமாட்சி சென்னை ஆரியனார் பிரமம் பரம்பிரம்மாகாத சீவப்பிரமம் இந்து ஐயபேரிகை சிவனுந் தேவனா என்னும் தீயநாவுக்கு ஆப்பு சாண்ஷத்திரியப் பிரசண்டமாருதம் நீலகண்டபாவழிய உரை
சைவ வேதாந்தம்
மாகவுக்கிரக வீரபத்திராஸ்திரம்
இவ்வாறு ஈழத்து நாவலர் பரம்பரையில் அதிகளவு நூற் பணி செய்த பெருமை செந்திநாதையரையே சாரும்.
நீலகணி ட பாஷிய உரையைத் தமிழில மொழிபெயர்த்தது ஜயவர்களது படைப்புக்கள் அனைத் திற்கும் மகுடம் போன்றது. சைவசித்தாந்த கருவூலங் களையே உள்ளடக்கமாகக் கொண்ட கந்தபுராணத் தினை கந்தபுராண நவநீதம் என்ற நூல்வழியாகத் தெளிவு படுத்தினார். இந்நூலை அந்நியமத ஊடுருவல்கள் தாக்கியபோது புராணபடனமாகவும் சைவசித்தாந்த
நியாயித்தல் வழியாகவும் பயன்படுத்தினார்.
பதினொரு ஆண்டுகள் காசியில் வசித்தபோது சிதம்பரம், பிரஹற்ம வித்தியா’ பத்திரிகையிலே சைவசித்தாந்தத்துக்கு மாறாக வந்த விடயங்களைக் கண்டித்து இந்து சாதனம், 'விவேக திவாகரன், நாகை நீலலோசினி, விஜயத்து வஜம்', 'வெற்றிக்கொடியோன் முதலிய பத்திரிகைகளிலே வெளிப்படுத்தினார். 1872ஆம் ஆண்டிலே ஆறுமுக நாவலர்
இந்துக் கலைக்களஞ்சியம்x
 
 

ஸ்தாபித்த ஆங்கில வித்தியாசாலையிலும், சைவ வித்தி யாசாலையிலும் ஆசிரியராகவிருந்து கடமை புரிந்தவர். 1882 இல் இந்தியா சென்று திருநெல்வேலி சைவவித்தியா சாலையொன்றில் ஆசிரியராகவிருந்து சமய பாடம், இலக் கண, இலக்கிய பாடங்களையும் கற்பித்து வந்தார். அங்கு சுஜன மநோரஞ்சனி என்னும் பத்திரிகைக்கு உதவி ஆசிரி UIUT5 விளங்கினார். இவ்வாறு 1924ஆம் ஆண்டு வரை அரிய பணிகளைப் புரிந்து நாவலர் பரம்பரையிலும் ஈழநாட்டு வரலாற்றிலும் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெற்றார்.
நாவலரைப் போன்று ஐயரவர்களும் செய்த பணிகள் போற்றத்தக்கவை. சித்தாந்த சிகாமணி, கிறிஸ்துமத கான குடாரி, மாயாவாத துவம்ச கோளரி, சைவசித்தாந்த ஞானபானு போன்ற சிறப்புப் பெயர்களை ஐயரவர்கள் பெற்றதிலிருந்து அவரது சைவ சித்தாந்தப் பணிகளை அறிந்துகொள்ளலாம்.
நல்லூர் வை.திருஞானசம்பந்தபிள்ளை
நல்லூரிலே 1849 இல் பிறந்தவர். ஆறுமுகநாவலருக்கு மருமகனாகவும் மாணவனாகவும் விளங்கியவர். வித்துவ சிரோமணி பொன்னம்பலபிள்ளையிடம் இவர் கல்வி கற்ற வர். இவர்களிடம் தர்க்கமும் சித்தாந்த சாத்திரமும் நன்கு கற்று புலமை பெற்றவர்.
தர்க்க சாஸ்திர ஆராய்ச்சியிலும் தர்க்கவாதம் புரிவதி லும் மிகுந்த சிரத்தை மிக்கவர். இதனால் “தர்க்ககுடார தாலுதாரி' என பலராலும் அழைக்கப்படுவர். நாவலருக்கும், நல்லூர் கந்தசுவாமி கோயிலாருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதங்களில் நாவலருக்கு உதவியாக நல்லூர்க் கந்தசுவாமி கோயில் பிரதிகண்டன வழுக்களை, வச்சிர குடாரம் போன்ற கண்டனங்களை நாவலருக்குச் சார்பாக எழுதியவர். வடகோவை சு.சபாபதிநாவலர் யாழ்ப்பாணத் திலே நிகழ்த்திய பிரசங்கத்திலே கலந்து கொண்டு அகோர சிவா சாரியாரின் பத்ததியைக் கண்டித்து அதனைப் பின் பற்றுபவர்களை சமவாதசைவர்கள் என்று தூஷத்தார். அரிகரதார தம்மியம், வேதாகமநாமவாத தீபிகை, நாராயண பரத்துவ நிரசனம், தர்க்காமிர்த மொழிபெயர்ப்பு போன்ற நூல்களையும் எழுதியுள்ளார்.
xஜஜ் இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 262
வடகோவை சு.சபாபதிநாவலர்
வடகோவையில் சுயம்பு நாதபிள்ளைக்கு மகனாக அவ தரித்தனர். ஆரம்பத்தில் ஜகநாதையரிடம் வித்தியாரம்பம் செய்து பின்பு நீர்வேலி சங்கரபண்டிதரிடம் தமிழ், சமஸ் கிருத மொழியில் உள்ள இலக்கியங்களையெல்லாம் கற்றார். பின்பு ஆறுமுகநாவலரிடம் கல்வி கற்று, நாவலரின் மதிப்பிற்குரிய மாணவனாகத் திகழ்ந்தார். பின்னர் நாவலர் விட்ட பணியை இலக்கணம் முத்துக்குமாரசுவாமியுடன் இணைந்து முன்னெடுத்துச் சென்றவர்.
சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலையிலே தலை மையாசிரியராக இருந்து கல்விப் போதனைகள் சில காலம் புரிந்து வந்தார். பின்பு அங்கிருந்து நீங்கி திருவாவடு துறை ஆதீனத்தை அடைந்து அவ்வாதீனத்தின் பதினாறா வது சந்நிதானமாக விளங்கிய ரீலழரீ சுப்பிரமணிய தேசிகரிடம் பன்னிரண்டு வருடங்கள் சைவசித்தாந்த நூல் களை முறையாகக் கற்று அவ் ஆதினத்தின் வித்துவனாக வும் விளங்கினார்.
நாவலரைப் போன்று சைவப்பிரசங்கம், பிறசமயக் கண்டனங்கள், பத்திரிகை வெளியிடல், அச்சியந்திரசாலை நிறுவு தல், நூல்களை இயற்றுதல், பதிப்பித்தல், உரை எழுது தல், சைவசித்தாந்தத்திற்கு விளக்கம் கொடுத்தல் முத லிய பணிகளால் தமிழகத்திலும் ஈழத்திலும் சைவம், அதன் தத்துவம் நிலைபேறடைவதற்குக் காரணமாக இருந்
தவர.
இவர் இயற்றிய நூல்கள் சிவஞானசுவாமிகளுடைய நூல்சாயல்கள் கொண்டனவாக உள்ளன என்பது ஒரு சாராரின் கணிப்பாகும். இவர் இயற்றிய நூல்கள் மேல்
வருமாறு:
சிதம்பர சபாநாத புராணம் சிவகர்னாமிர்தம்
மாவையந்தாதி இலக்கண விளக்கப்பதிப்புரை மறுப்பு திராவிடப் பிரகாசிகை இயேசுமத சங்கற்ப நிராகரணம்
திருச்சிற்றம்பல யமகவந்தாதி

திருவிடை மருதூர்ப் பதிற்றுப் பத்தந்தாதி நல்லைச்சுப்பிரமணியக் கடவுள் பதிகம் வைதிக காவிய தூஷண மறுப்பு
இவர் பதிப்பித்த நூல்களில் சிவசமவாத உரை மறுப்பு என்பதும் ஒன்றாகும்.
இவர் மொழிபெயர்ப்புச் செய்த நூல் மேல்வருவனவாகும்.
பாரததாற்பரிய சங்கிரகம் இராமாயண தாற்பரிய சங்கிரகம் சதுர்வேத தாற்பரிய சங்கிரகம்
சித்தாந்த வித்தியானுபாலன யந்திரசாலை' எனும் அச்சு
இயந்திரசாலையை அமைத்து ஞானாமிர்தம் தமிழ்ப் பத்திரிகையை நடாத்தி வந்தார். அதேபோல பிரத வித்தியா’ எனும் பத்திரிகையையும் எழுதியவர். சிதம்பரம், உத்தரகோசமங்கை, திருச்செந்தூர், திருக்குற்றாலம், முதலிய தமிழ்நாட்டு ஆலயங்களிலே சைவப் பிரசங்கங்கள் புரிந்தவர்.
சித்தாந்தப் பணிகளின் வளர்ச்சியிலே சிவஞானமுனிவ ரின் 'சிவஞானபாடியத்தைப் பதிப்பிக்கும் முயற்சியில் ஈடுபட் டார். இந்நூலுக்குத் திராவிடப் பிரகாசிகை’, 'சிவஞான சுவாமிகள் உரை செய்யுள்' என்ற நூல்களை எழுதினார். இவரிடம் சிவராமச் செட்டியார், விழுப்புரம் இராமசாமிப்பிள்ளை, சிதம்பரம் சோமசுந்தர முதலியார், மாகறல் கார்த்திகேச முதலியார், திருமயிலை சிங்காரவேலு முதலியார், பாலசுந்தர முதலியார், சுழிபுரம் சிவப்பிரகாச பண்டிதர் முதலியோர் கல்வி கற்று நாவலர் பரம்பரையின் வளர்ச்சிக்குப் பங்களிப்புப் புரிந்தார்கள்.
கொக்குவில் சபாரத்தின முதலியார்
கொக்குவிலில் சபாபதிப்பிள்ளை என்பவருக்குப் புதல்வ ராக அவதரித்தார். இளமையிலே வித்தியாரம்பம் செய்து சுயம்புநாதபிள்ளை என்பவரிடம் தமிழ்மொழி இலக்கியம், இலக்கணம் கற்றார். பாடசாலையிலே ஆங்கிலமும் கற்று வந்தார். பின்பு வண்ணார்பண்ணை சைவப் பிரகாச விதி தியா சாலையிலே ஆறுமுகநாவலரிடமும் த.கைலாசபிள்ளையிடமும் கல்வி கற்று நாவலரின் அபி
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 263
மானம் கொண்ட மாணவரானார். அவரிடம் கற்றமையால் சைவசமயப்பற்றும் சமய அபிமானமும் இவருக்கு
உண்டானது.
இவர் பத்தொன்பது வயதிலேயே அரச உத்தியோகம் புரிந்தார். இளமையிலேயே "உதயபானு', 'இந்துசாதனம் என்னும் பத்திரிகைகளில் சமயம், தத்துவம் சம்பந்தமான பல கட்டுகரைகளை எழுதி வெளியிட்டவர். உதயபானுப் பத்திரிகையில் நீர்ச்சுர வாதத்தை மறுத்துப் பல கண்டனக் கட்டுரைகளையும் எழுதியவர்.
சபாரத்திய முதலியார் கொக்குவில், முனிசுரம், சுட்டுசுட் LT65, நல்லூர் ஆகிய தலங்களில் மீது எழுந்தருளியுள்ள தெய்வங்கள் மீது பக்திப்பாடல்களை இயற்றிப் பாடினார். சிவன், விநாயகர், முருகன் மீது பல கவிகளையும் இயற்றி னார். இந்தியாவி லும் இலங்கையிலும் நடைபெற்ற சித்தாந்த மகாநாடுகளில் தலைமை தாங்கியவர். 1905 இல் இவருக்கு முதலியார்’ பட்டமும் அளிக்கப்பட்டு பெருமை பெற்றவர். நாவலரைப் போன்று இவரும்
சைவப்பிரசங்கங்களை நடத்தியவர்.
முதலியார் சீவான்மபேதம், ஈச்சுரநிச்சயம், பிரபஞ்சசாரம் எனும் சமய தத்துவ நூல்களையும் ESSentials of Hinduism எனும் ஆங்கில நூலையும் எழுதினார். தமிழ் நூல்கள் சிலவற்றை ஆங்கில மொழியிலும் எழுதி வெளியி
LLITU.
நீர்வேலி ச.சிவப்பிரகாச பண்டிதர்
நீர்வேலி எனும் ஊரில் சங்கரபண்டிதருக்கு சிரேஷ்ட புதல்வராக அவதரித்தார். இவர் தனது தகப்பனாரிடத்தே தமிழ் மொழியில் தொல்காப்பியம் நன்னூல் முதலிய இலக்கண நூல்களையும் சமஸ்கிருத மொழியில் இரகுவம் சம் மாகம் முதலிய காவியங்களையும் முக்தபோதம், ஆசுபோதம் முதலிய வியாகரணங்களையும் நன்கு கற்ற
வர்.
ஆறுமுகநாவலரிடம் கல்வி கற்றுத் தனது சந்தேகங் களை நிவர்த்தி செய்து கொண்டவர். வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசலையில் குமாரசாமிப் புலவருக்கு உதவி ஆசிரியராக விளங்கினார். அவர் பிறந்த ஊரில்
இந்துக் கலைக்களஞ்சியம்x
 

சைவப்பிரகாச வித்தியாசலையொன்றை நிறுவியவர். அதில் தலைமை ஆசிரியராக இருந்து பரிபாலனமும் செய்தவர். திருக்கழிபாலைப் புராண செய்யுணுால்கள், பாலாமிர்தம், பாலபாடநூல்கள், திருச்செந்தூர்ப்புராணவுரை, சிவானந்த லகரித் தமிழுரை, சங்கத நூல்களுக்குத் தமிழுரை போன்றவற்றை எழுதியவர். வண்ணை சி.சுவாமிநாத பண்டிதருக்கும் சி.வை.தாமோதரம்பிள்ளைக் கும் நூற்பரிசோதனைகளில் கைங்கரியம் புரிந்தவர்.
மேலைப்புலோலி நா.கதிரைவேற்பிள்ளை
யாழ்ப்பாணம் புலோலி என்னும் ஊரிலே சைவாசாரமு 60)LU ! குலத்திலே நாகபிள்ளை என்பவருக்கு மகனாக அவதரித்தார். சைவப்பாடசாலையில் ஆறாம் வகுப்பு வரை கல்வி கற்றார். இருபத்திரண்டாம் வயதில் தமிழகத்திற்குச் சென்று தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்று தேர்ச்சியடைந்தவர். தமிழகத்தில் வாழ்ந்த காலத்தில் அங்கும், பிற இடங்களிலும் சென்று சைவப் பிரசங்கங்கள் நிகழ்த்தியவர். மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் புலவராகவும், இராயப்பேட்டையில் உள்ள வெஸ்லி கிறிஸ்தவ கலாசா லையில் தமிழாசிரியராகவும் ஆங்கிலப் பெருமகன் கிளை டன் என்பவரின் தமிழாசிரியராகவும் தம்பணிகளைப் புரிந்
தார,
நாவலருக்கு எதிராகக் அவதூறு பேசியவர்களை எதிர்த்து நின்று செயற்பட்டவர். நாவலர் வழியில் நின்று பணியைப் புரிந்தவர். நாவலரின் பெருமையை சைவ உலகிற்கு வெளிப்படுத்தியவர். நாவலரை திருஞானசம்பந்த நாயனாரின் அவரதாரமாகப் போற்றிப் பரவியவர். கிட்டத் தட்ட நாவலரின் சிந்தனைகளால் நாவலராகவே மாறிவிட்ட
வர் கதிரைவேற்பிள்ளை எனக்கூறலாம்.
கதிரைபெற்பிள்ளையவர்கள் கூர்மபுராண விரிவுரை, சைவசித்தாந்த சுருக்கம், சைவசந் திரிகை, புத்தமத கணி டனம், சிவாலய மகோற்சவ விளக் கம், தமிழ்ப்பேரகராதி, சுப்பிரமணிய பராக்கிரமம் முதலிய சமய, தத்துவ தமிழ் இலக்கிய நூல்களையும் இயற்றியுள் ளார்.
கதிரைவேற்பிள்ளையவர்களின் நூல் அறிவினையும் புத்தித் திறனையும் உணர்ந்த ஆரணி மன்னர் "அத்துவித
xணஇந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்ககம்

Page 264
சித்தாந்த மகோத்தாரணர்” எனும் பட்டத்தினை அளித்துச் சிறப்புறச் செய்தார். மாயாவாதத்தை மறுத்துப் பேசும் திறன் வாய்ந்தமையினால் தமிழக வித்துவான்கள் அனைவரும் கூடி "மாயாவாத தும்சகோளரி” எனும் பட்டத் தினையளித்தும் சிறப்பித்தனர். சைவசித்தாந்த புலமையி னால் "சைவசித்தாந்த மகாசரபம்’ எனும் பட்டத்தினையும் பெற்றார்.
இவர் செய்த பணிகள் மிகவும் போற்றத்தக்கன. பிள்ளையவர்களுக்கும் சீடபரம்பரையினர் உருவாகினர்
என்பதும் குறிப்பிடலாகாது.
ஆவரங்ால் சு.நமச்சிவாயபுலவர்
ஆவரங்கால் என்னும் ஊரிலே சுப்பிரமணியபிள்ளைக்கு மகனாக அவதரித்தார். முருகப் பெருமான் மீது மிகுந்த பக்தியுடையவர். உடுப்பிட்டி சிவசம்புப்புலவரிட மும், மட்டுவில் வேற்பிள்ளையிடமும் தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்றவர். சித்தாந்த நூல்களின் மீதும் ஆர்வம் கொண்டு கற்றவர். நாவலருக்கு உறுதுணையாக நின்று உழைத்தவர்.
நாவலருக்கும் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலாருக்கும் இடையே இடம்பெற்ற வாதங்களில் நாவலரின் பக்கம் நின்று உழைத்தவர்.
நமச்சிவாயப் புலவர் சங்கீத ஞானம் கொண்டவராகவும் திகழ்ந்தார். இதனால் பல சங்கீத கீர்த்தனங்களையும் பாடியுள்ளார். இவர் பாடியவற்றை திரு.வே.சாரங்கபாணி என்பவர் தொகுத்து அச்சிலும் ஏற்றினார். நாவலர் தனது மத்தியாவாத நிரசனத்திலே ஆவரங்கால் தம்பி’ என்று நமசிவாயப் புலவரைக் குறிப்பிடுகின்றார்.
வணினார்பண்ணை சி.சுவாமிநாதபணிடிதர்
வண்ணார் பண்ணை கந்தர்மடம் என்னும் ஊரிலே வேளாளர் குலத்திலே சின்னத்தம்பி என்பவருக்கு மகனா கப் பிறந்தார். இளமைக் கல்வியை அவ்வூர் வித்தியா சாலையொன்றிலே கற்றார். பின்பு தமிழ் இலக்கண இலக்
கியங்களை வித்துவ சிரோமணி பொன்னம்பலபிள்ளையி டம் கற்றார்.
後談賽23
 

பொன்னம்பலபிள்ளையோடு ஆலயங்கள், மடங்கள் போன்றனவற்றில் புராணபடனம் செய்வதற்கு செல்பவர். முதன்முதலாக காலியில் உள்ள சிவன் கோயிலில் பெரிய புராணத்தைப் படனம் செய்து பெரும் புகழ் படைத்தவர். பின்பு இந்தியாவில் தேவகோட்டை, நாட்டுக்கோட்டை முத லிய இடங்களுக்கும் சென்று புராணபடனம் செய்து சைவ சமயத்தின் புராண பாரம்பரியத்தை வளர்த்தவர்.
இவர் சிதம்பரத்திலே இருக்கும் காலத்திலே சபாபதி
நாவலரிடமிருந்த சிவஞானபாடியத்தின் பல பாகங்களைப் பெற்று அவற்றை அச்சிட்டும் வெளியிட்டார். இதற்காக சென்னையிலே ஒரு அச்சியந்திரசாலையை அமைத்து நூல்களைப் பதிப்பித்தும் நூல்களை எழுதியும் நூல்க ளைப் பரிசோதித்தும் நாவலர் பெருமானின் வழியிலே சென்றவர். மூவர் பாடிய தேவாரங்களின் ஏடுகளைப் பரிசோ தித்து அச்சிட்டு வெளியிட்டவர். திருக்கோவை யாருண்மை எனும் நூலையும் அச்சிட்டு வெளியிட்டவர்.
தமிழகத்தில் திருச்செந்தூரில் ஒரு வித்தியாசாலையை நிறுவி அதனைப் பொறுப்பேற்று நடாத்தி வந்தவர். தமிழகத் தில் பல இடங்களுக்கும் சென்று சைவப்பிரசங்கங் கள் புரிந்தவர். பல கவிகளையும் இயற்றியவர். புலோலி கதிர வேற்பிள்ளைக்கு மருட்பா வழக்கின்போது உதவியாக நின்றவர். இவ்வாறு சைவசமயப் பற்றும் சைவசித்தாந்தப் பற்றும் நிறைந்தவராக சுவாமிநாதபண்டிதர் விளங்கினார்.
இணுவில் நடராசையர்
இணுவில் எனும் ஊரிலே அந்தணர் பரம்பரையைச் சேர்ந்தவர். 1846இல் ஆறுமுகநாவலரின் திண்ணைப்பள்ளி யிலே சேர்ந்து தமிழ் இலக்கண, இலக்கியங்களையும், சித்தாந்தசாஸ்திரங்களையும் நன்கு பயின்றார். பின்பு நாவ லருடைய வண்ணார்பண்ணைச் சைவப்பிரகாச வித்தியா சாலையிலே வேதனமின்றிச் சமயம், சாஸ்திரம், இலக் கணம், தத்துவம் போன்றவற்றைப் போதித்தவர். ஈழத்தில் மட்டுமன்றித் தமிழகத்திலும் சிதம்பரம், மதுரை முதலிய இடங்களிலும் பல நாள் வசித்து அங்கும் சித்தாந்த சாஸ்திரத் தெளிவுகளை பலபேருக்குப் படிப்பித்தவர்.
ஈழத்திலே சைவசித்தாந்த சாஸ்திரங்களில் சிறந்த
ஐ இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 265
வல்லுநர் என்று பேரெடுத்தவர். சித்தாந்த சாஸ்திர நுட்பங்களையும் திட்பங்களையும் நுணுகி ஆராய்ந்து கூறுவதில் நடராசையருக்கு நிகர் அவரே எனக் கூறுமளவுக்குப் பெயரெடுத்தவர். ஞானப்பிரகாசமுனிவர் சிவஞான சித்தியார் சுபக்கத்திற்கு எழுதிய உரையினைத் திருப்பற்றுாரிலே 1888இல் தனியே அச்சிட்டு வெளியிட்டவர். செந்திநாதையர் நீலகண்ட சிவாச்சாரியால் பிரம சூத்திர த்திற்கு சைவப்பரமாக எழுதப்பட்ட “சிவாத்துவித சைவ பாடியம்” என்ற நூலினை தமிழ் மொழியில் மொழி பெயர்த் தார். நடராசையர் பெயரில் அதனைப் பதிப்பித்தார். இவர் சவிபாடும் திறமையும் உடையவர்.
சித்தங்கேணி அம்பலவாணநாவலர்
சித்தங்கேணியில் ஆறுமுகப்பிள்ளைக்கு மகனாகப் பிறந்தார். இளமையிலே விவேற்பிளையிடம் தமிழ் கற்றார். பின்பு நீர்வேலி ச.சிவப்பிரகாச பண்டிதரிடம் சங்கத நூல்களையும் கற்றார். ஆறுமுகநாவலரைச் சற்குருவாகக் கருதி அவர் வழி ஒழுகினார். விளைவேலி வே.அப்பாத்துரைக் குருக்களிடம் தீட்சை பெற்றுச் சிவபூசை பண்ணிக் கொண்டவர். பின் மதுரை திருஞானசம்பந்தர் மடத்தில் மந்திர காஷாயம் பெற்று நைஷ்டிகப் பிரமசரிய மாதுல்யசந்நியாசம் பூண்டவர்.
வட்டுக் கோட்டையிலே பாதிரிமார்களால் நிறுவப்பட்ட வித்தியாசாலைகளுக்கு எதிராக ஒரு சைவத்தமிழ் வித்தி யாசாலையை ஸ்தாபித்து அதில் ஓர் ஆசிரியராகவும் இருந்து பணிபுரிந்தார். தமிழ்நாட்டிலே திருநெல்வேலியில் திருஞானசம்பந்த சுவாமிகளின் பெயரில் மடாலயமொன் றினை அமைத்தார். அங்கு ஆண்டுதோறும் குருபூசையும், நித்திய பூசையும் நடைபெறச் செய்தார். சிதம்பரத்தில் ஆறுமுகநாவலரின் சந்தான ஞானசம்பந்த சுவாமி ஆதீனம் என்னும் மடாலயத்தினையும் ஸ்தாபித்தார்.
அம்பலவாண நாவலர், ஆறுமுகநாவலரைப் போல பிரசங் கம் புரிவதிலும் சிறந்த வல்லுநராக விளங்கியவர். அவர் ஆசிரியராகக் கடமை புரியும் காலத்தில் வண்ணார் பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலை, சிவன்கோயில் போன்ற இடங்களில் ரீலழரீ ஆறுமுகநாவலருடைய பிரசங் சங்களைத் தவறாமல் கேட்டு ஆறுமுக நாவலரைக்
இந்துக் கலைக்களஞ்சியப்x 羲搬签
 

குருவாக மனதில் பாவனை செய்தார். பின்பு அவரைப் போல பிரசங்கம் புரியும் சாமர்த்தியத்தையும் பெற்றார். திருவாதவூரர் புராண விரிவுரையைத் திருநெல் வேலியில் நீண்ட பிரசங்கமாகப் புரிந்து பல உபசாரங்களைப் பெற்றார். தேவ கோட்டையில் பெரிய புராணத்தை இரண்டு வருடங்களாகப் பிரசங்கம் புரிந்து தனவைசியப் பிரபுக்க ளின் பெருமதிப்புக்களையும் பெற்றார். இவை தவிர இவர் தரிசிக்கச் சென்ற கோயில்களெல்லாம் பற்பல பிரசங்கங் களைப் புரிந்தார்.
அகோர சிவாசார்யார் பத்ததி (நிர்மலமணி வியாக்கியா னம்), உமாபதி சிவாசாரியாரின் பெளவுகரசக்கிதா பாஷியம் முதலியவற்றையும் அருணாசல மான்மியம், திருநாவலூர் மான்மியம், பிரமதருக்கஸ்தவம், சற்குருமணி மாலை, திருவாதிரைத் திருநாள் மகிமைப் பிரபாவம், சிவத்துரோக கண்டனம், வேணுவனலிங்கோற்பவம், திருச்சுழியற் புராணம், சண்முகஷடா கூடிரப் பதிகம் முதலியவற்றையும் இயற்றிப் பதிப்பித்தார். இவரால் எழுதப்பட்டு அச்சேறாத பல நூல்களும் உள. அவற்றுள் பெரிய புராண பாடியம், சித்தாந்தப் பிரபோதம், சைவசந்நியாச பத்ததி, ஆரிய திராவிடப் பிரகாசிகை, தஷாதர்சம் போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.
இவருடைய இலக்கண, இலக்கிய, சித்தாந்த சாஸ்திர நூலறிவின் திறத்தையறிந்த திருவாவடுதுறை ஆதீன சந்நி தானத்திலிருந்த பூரீலழரீ அலம்பவாண தேசிகர் இவருக்கு நாவலர்’ என்னும் பட்டத்தினை அளித்துச் சிறப்பித்தார்.
சுண்ணாகம் அ.குமாரசாமிப்புலவர்
யாழ்ப்பாணம், சுன்னாகத்தில் அம்பலவாணர் தம்பதிகளு க்கு மைந்தராகப் பிறந்தவர். இளமையிலே முருகே பண்டிதரிடம் இலக்கிய இலக்கணங்களைக் கற்றவர். பின்பு அவ்வு, ரைச் சேர்ந்த நாகநாத பணி டிதரிடமும் தென்மொழியையும் வடமொழியையும் கற்றுத் தேறினார். இவருடைய கல்வி ஞானத்தைக் கண்ட சி.வை.தாதோதரம் பிள்  ைள தானி நிறுவிய ஏழாலை சைவ வித்தியாசாலைக்கு இவரைத் தலைமை ஆசிரியராக நியமித்தார். அப்போது உதயபானு, இலங்கை நேசன், விஞ்ஞான வர்த்தனி போன்ற பத்திரிகைகளில் சமய,
இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை அவ்வப்போது எழுதி வந்தார்.
இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 266
பற்பல ஊர்களுக்குச் சென்று சமயப் பிரசங்கங்களும் செய்து வந்தார். பல ஆலயங்களின் மீது பதிகங்களும், ஊஞ்சல் முதலியனவும் பாடினார். அவை வதுளைக் கதிரேசரூஞ்சற்பதிகம், நகுலேஸ்வர ஊஞ்சல், தென் கோவை வெள்ளெருவை விநாயகர் ஊஞ்சல், ஏழாலை அத்தியடி விநாயகர் ஊஞ்சல், துணைவைப்பதிகம் முதலி யனவாகும்.
இவற்றோடு வேறும் பல நூல்களை எழுதியுள்ளார். அவைகள், கம்பராமாயண பாலகண்ட அரும்பதவுரை, நீதிநெறி விளக்கப்புத்துரை, சாணக்கிய நீதி வெண்பா, சிசுபால சரிதம், மாவைப்பதிகம். இதோப தேசம். இராமோதந்தம், இரகுவமிச சரிதாமிருதம், கலைசைச் சிலேடை வெண்பா அரும்பதவுரை முதலியனவாகும். இவற்றுட் சில மொழி பெயர்த்து எழுதியவையாகும்.
தமிழ்ப் புலவர்களின் சரிதங்களை தமிழ்ப் புலவர் சரிதம் எனும் நூலாக எழுதி அச்சிட்டார். தமிழ் இலக்கியங்களின் மூலவிடயங்களைப் பல தடவைகள் நோக்கி அவற்றின் பொருளை நன்குனர் ந்து உரை கூறுவதில் வல்லுநர். அதேபோல் ஏட்டுப் பிரதிகளாகவுள்ள பழைமையான நூலுரைகளை பிழையறப் பதிப்பித்து வெளியிடுவதிலும் வல்லுநர், ஏழாலை சைவப் பிரகாச வித்தியாசாலையில் இருந்து விலகிய பின் 1902 ஆம் ஆண்டிலிருந்து ஆறுமுக நாவலரின் சைவப்பிரகாச வித்தியாசாலையில் தலைமை ஆசிரியராக விளங்கி இறப்பு மட்டும் பல சேவைகளைப் புரிந்தார். இவர் இலங்கையில் மட்டுமன்றி இந்தியாவிலும் புகழ்பெற்ற ஒருவராக விளங்கினார்.
ஆறுமுக நாவலரின் நேரடி மாணவராக இல்லாவிடினும் அவர் வழியிலேயே வாழ்ந்து தமிழுக்கும் சமயத்திற்கும் தொணி டாற்றிய வர் களில் குமாரசுவாமிப் புலவ
நெஞ்சிலிருக்கத்தக்கவர்.
பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை
பண்டிதமணி அவர்கள் தன்னுடைய ஆரம்பக்கல்வியை
மட்டுவில் அமெரிக்கன் மிசன் பாடசாலையிலும், இடை
நிலைக் கல்வியை திண் னைப் பாடசாலையிலும், உயர்
கல்வியை வண்ணார் பண்ணை நாவலர் பாடசாலையிலும்
இந்துக் கலைக்களஞ்சியப்
 

பயின்றார். இக்காலங்களில் இவருக்கு கல்வி போதித்த ஆசான்களாக இருந்தவர்கள் மகாலிங்கசிவ உபாத்தியார், ச.பொன்னம்பலபிள்ளை, சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர். த.கைலாசபிள்ளை, வித்துவான் சுப்பையாபிள்ளை
என்போராவர்.
பண்டிதமணி அவர்கள் மதுரைப் பண்டிதர் தேர்வில் சித்தி பெற்றவர், திருநெல்வேலி சைவ ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் தமிழ் விரிவுரையாளராகவும், காவி
யப்பாடசாலையில் ஆசிரியராகவும் கடமை புரிந்தார்.
தமிழ் இலக்கண இலக்கியங்களை போதிப்பதில் பண்டித மணிக்குத் நிகர் பண்டிதமணியே எனச் சிறப்புப் பெற்றவர். இவருடைய தமிழ்புலமைக்கு எடுத்துக்காட் டாக ஈழத்து இலக்கிய வழி பற்றிச் சிந்தித்தமை, நுண்மை யான முறையில் இலக்கிய நயம் கண்டமை, கம்பன் போன்ற புலவர்களின் நயங்களை நன்கு ரசித்து அவர்க ளின் புலமைகளை வெளிப்படுத்தியமை. இரசனையான உரைநடையைத் தந்தமை. முதலாகப் பலவற்றைக்
கூறலாம்.
இலக்கிய உலகில் சிறந்து விளங்கிய பண்டித மணியை பொ.கைலாசபதி அவர்கள் சமய உலகிற்கு இழுத்து வந்தார். சமயம் தத்துவம் தொடர்பான கட்டுரைகளையும் நூல்களையும் எழுதினார். இவருடைய சில நூல் கள் சமயத்தையும் தமிழையும் இணைத்துப் பேசுவதாகவும் அமைந்திருந்தன. இதற்கு எடுத்துக் காட்டாக இலக்கிய அகத்திணையையும் சைவசித்தாந்தக் கோட்பாட்டையும் இணைத்து 'அத்வைத சிந்தனை” என்ற நூலில் நோக்கியி ருப்பது குறிப்பிடற்பாலது. பண்டிதமணி அவர்களால் படை
க்கப்பட்ட நூல்கள் மேல்வருவனவாகும்.
கண்ணகி தோத்திரம் இருவர் யாத்திரிகர் கந்தபுராணப் போதனை சைவநற்சிந்தனைகள் பாரத நவமணிகள் கந்தபுராணக் கலாசாரம்
கந்தபுராண தக்ஷகாண்ட உரை
*&:ஜ் இந்து சமய கலாசார அலுவல்கள் திaைOOTக்களம்

Page 267
அன்பினைந்திணை செந்தமிழ்க் களஞ்சியம் கம்பராமாயணக் காட்சிகள் சிந்தனைக் களஞ்சியம் கதிர்காம வேலன் பவனி வருகின்றான் சிவன் ராத்திரியில் சிந்திக்கத்தக்கவைகள்
கோயில்
ஆறுமுகநாவலர்
பண்டிதமணி அவர்கள் எழுதிய 'அத்வைத சிந்தனை என்ற நூல் மிகவும் பிரபல்யமானது. இதில் வேதாந் தக் கோட்பாட்டின் கருத்தோட்டங்களை சித்தாந்தக் கருத் துக்களோடு விளக்கி எழுதியுள்ளார். அதேபோல் “கந்த புராண போதனை” என்ற நூலிலும் பதி, பசு, பாச உணி மைகளை தெளிவாக எடுத்து விளக் கரி
வாழ்வியலுடன் கலக்கச் செய்தார்.
ஈழத்தில் தோன்றிய நாவலர் பரம்பரையினர் சைவம், தமிழ், சைவசித்தாந்தப் பணிகள் மூலமாக ஈழத்துச் சைவ சமய சைவசித்தாந்த மரபிலே மிகுந்த முக்கியத்துவத் தினைப் பெற்றுள்ளனர். இப்பரம்பரை பற்றிய ஆய்வுகள் விரிவுபடவேண்டியவை. (சி.து.)
நாலந்தாபல்கலைக்கழகம்
பீகார் மாநிலத்தில் ராஜ்கீருக்கு வடக்கே 7 மைல் தொலைவில் காணப்படும் தற்கால பரஹான் பிரதேசத்தின் பண்டைய பெயரே நாளாந்தா. பாளி நூல்களில் நாலந்தா பற்றிய குறிப்புகள் பரவலாக இடம்பெற்றாலும், கிறிஸ்து சகாப்தத் தொடக்கத்தில் பெளத்தப் பிரிவொன்றான மகாயான பெளத்தம் எழுச்சி பெறும்வரை நாளந்தா எது வித முக்கியத்துவமும் பெற்றதாக இல்லை. நாகார்ச்சுனர் (கி.பி.300) ஆரியதேவர் (கி.பி.320) என்பவர்களே நாலந்தா கல்வி நிறுவனத்தின் முன்னோடிகள். மகாயானத்தின் தர்மபோதனைகள் அழிந்துவிடாது காப்பாற்றப்படும் பொருட்டு நாகார்ச்சுனரின் சமகாலத்தவரான சுவிஷ்ணு எனப்படும் பிராமணன் நாலந்தாவில் 108 பெளத்த கோயில்
களைக் கட்டியதாகக் கூறப்படுகிறது. ஏறக்குறைய
இந்துக் கலைக்களஞ்சியம்x
 

கி.பி.400ஆம் ஆண்டளவில் சீன யாத்திரிகனான பாஹியான் நாளந்தாவுக்குச் சென்றார். சீனமொழியில் அக்கிராமத்தை நாளோ எனக் குறிப்பிட்டார். அங்கு புத்தரின் மாணவனாகிய சாரிபுத்தர் பரிநிர்வாணம் அடைந்த இடத்தில் கோபுரம் ஒன்று அமைக்கப்பட்டிருந்ததைத் தான் கண்டதாக பாஹியான் எழுதியுள்ளார். கி.பி.7ஆம் நூற் றாண்டின் தொடக்கத்தில் பிறிதொரு சீன யாத்திரிகனான யுவான் சுவாங் நாலந்தாவிற்கு சென்றார். அங்கு அவர் 15 மாதங்கள் தங்கியிருந்து சமஸ்கிருத மொழியைக் கற்றார். யுவான் சுவாங் கூறும் விவரங்களின்படி நாலந்தா முன்னர் ஒரு மாம்பழத் தோட்டமாக இருந்தது. அதனை 500 வணிகர்கள் பத்துக்கோடி தங்க நாணயங்களை விலையாகக் கொடுத்து, புத்தருக்கு அன்பளிப்புச் செய்த தாகவும், புத்தர் பரிநிர்வாணம் அடைந்ததன் பின்னர் மகத அரசனான சக்கராதிதனும் அவனது சந்ததியினரான புத்த குப்தா, ததாகதகுப்தா, பாலாநித்தியா, வஜ்ரா ஆகியோர் ஐந்து சங்காராமங்களை நாலந்தாவிற் கட்டினரென்றும் அறியப்படுகிறது. பெயர் அறியப்படாப் பிறிதொரு மத்திய இந்திய அரசன் பாரியதொரு மடத்தைக் கட்டியும் ஒரு வாயிலைக் கொண்ட மதில் கட்டும் வேலையைத் தொடக்கியும் வைத்ததுடன், நாற்பது பிக்குகளின் நாளாந்த உணவிற்கான ஏற்பாடு களையும் செய்தான். அவனது
சந்ததியினர் தொடர்ச்சியாக அதனைக் கட்டிமுடித்தனர்.
இப்பல்கலைக்கழகத்தில் கல்விமான்களான ஆயிரம் பிக்குகள் காணப்பட்டனர். விநய சட்டவிதிகளை இவர்கள் கடுமையாகப் பின்பற்றினர். இப்பல்கலைக்கழகம் அக்கால இந்தியரால் மதிக்கப்பட்டது. அங்கு வாழ்ந்த கல்விமான்க ளுக்குக் கற்பதற்கும், விவாதிப்பதற்கும் பகற்பொழுது பேர்தியதல்ல என்பதால் இரவுபகலாகக் கற்றல் முயற்சி யில் ஈடுபட்டிருந்ததாகவும் முழு நிறைவான அறிவைப் பெறுவதற்காக இளைஞர்களும் அனுபவஸ்தர்களும் பரஸ் பரம் ஒருவருக்கு ஒருவர் உதவியதாகவும் யுவான் சுவாங் குறிப்பிடுகின்றார். பல்வேறு நகரங்களிலிருந்தும் கற்றறிந்த அறிஞர்கள் அங்கு வந்தனர். நாலந்தாவில் கல்வி பயின்ற வர் எனக் கூறிக்கொண்டவர் சமூகத்தில் நன்மதிப்பைப் பெற்றனர். வெளிநாடுகளிலிருந்தும் பலர் நாலந்தாவிற்கு வந்து தம் கல்வியைத் தொடர்ந்தனர். நாலந்தாவிற் கல்வி போதித்தவர்களான தர்மபாலர், சந்திரபாலர், பிராபமித்திரர்,
缀 2x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 268
ஜினமித்திரர், ஞானச்சந்திரர், சீலாகரர் ஆகியோர் பற்றியும் யுவான் சுவாங் குறிப்பிட்டுள்ளார்.
பிறிதொரு சீன யாத்திரிகரான இட்சிங் (கி.பி.675-685) என்பார் பத்துவருடங்கள் நாலந்தாவில் தங்கியிருந்ததாகக் குறிப்பிடப்படுகின்றது. அவர் தரும் விவரங்களின்படி நால ந்தா பல்கலைக்கழகத்தில் எட்டு மண்டபங்களும் 300 தங்குமிடங்களும் இருந்ததாகவும் 3000 பிக்குகள் அங்கு தங்கியிருந்து கல்வி பயின்றதாகவும் நாலந்தா பல்கலைக் கழகத்திற்கு 200 கிராமங்கள் சொந்தமாக இருந்ததாகவும் அதிலிருந்து கிடைத்த வருமானத்தை ஆதாரமாகக் கொண்டு இக்கல்வி நிறுவனம் செயற்பட்டதாகவும் தெரிகிறது.
கி.பி.450ஆம் ஆண்டளவில் நாலந்தா ஒரு பல்கலைக் கழகத்திற்குரிய பண்புகளைப் பெற்றிருந்ததுடன் அரச அங்கீகாரத்தையும் பெற்றிருந்தது. அங்கு மடத்தைக் கட்டிய வனான மகத நாட்டு அரசனான பாலாதித்யன் என்பான் காஷ்மீர அரசனான மிஹிராகுல என்பானின் சமகாலத்தவன். இதனால் அரச ஆதரவு பெற்ற காலப் பகுதியை நாலந்தாவின் தோற்றத்திற்குரிய மேலேல்லை யாகக் கருதுவோமாயின், அதன் கீழ் எல்லையாகக் குறை ந்த பட்சம் கி.பி.450ஆம் ஆண்டைக் குறிப்பிடலாம். கி.பி.750ஆம் ஆண்டளவில் தந்திரங்கள் பற்றிய கல்வியை நாலந்தாவிற் போதிப்பவராக கமலா சீலர் கடமையாற்றி யமை பற்றிய குறிப்புகள் உண்டு. இதனை உறுதி செய்யும் திபேத்திய தகவல்களின்படி, மிகப் பெரியதொரு நூல் நிலையம் மூன்று கட்டிடங்களில் அமைந்திருந்தது. அவற்றில் பிரக்ஞபாராமித சூத்திரங்கள் எனப்படும் புனித நூல்கள், தாந்திரிக நூல்கள் என்பன உள்ளடங்கும்.
நாலந்தாவில் கல்வி இலவசமாகவே போதிக்கப்பட்டது. உடை, உணவு, கட்டில், மருந்து ஆகிய நான்கு தேவை களும் பழையமாணவர்க்கும் இலவசமாகக் கொடுக்கப் பட்டன. யுவான் சுவாங் காலத்தில் இத்தகைய மாணவர் தொகை 10,000 ஆக இருந்ததாகச் சொல்லப்படுகின்றது. இங்குள்ள பிக்குகளின் வாழ்க்கைத்தரம் அவர்களது தகுதிக்கேற்ப வேறுபட்டிருந்தது. யுவான் சுவாங் நாளந்தா வில் இருந்த காலை அவருக்கு நாளாந்தம் பழங்கள்,
@政gá56oaJ556T@年uá刻
 

பாக்கு, சாதிக்காய், கற்பூரம், அரிசி என்பனவற்றோடு மாதாந்தம் எண்ணை, மற்றும் தேவையான பிற பொருட்களும் கொடுக்கப்பட்டன. இட்சிங் காலத்தில் நாலந்தாவில் மாணவர் தொகை 3000த்திற்கும் மேற்பட்ட தாயிருந்தது.
அங்கு பயிலும் மாணவருக்குத் தேவையான பொருட்கள் தேவையாள அளவுக்கு வழங்கப்பட்டதால் பொருள் தேவைகளையிட்டு அக்கறை கொள்ளாது கல்வியிலும், சுயகட்டுப்பாட்டிலும் மாணவர் தமது முழுக்கவனத்தையும் செலவிட முடிந்தது. அங்கு உயர்கல்வி வழங்கப்பட்டது. ஐயங்களிற்கான தீர்வுகளை வழங்கியதுடன் விவாதம், பேச்சுக்கலை ஆகியவற்றிலும் பயிற்சி வழங்கப்பட்டது.
வெளிநாட்டு மாணவர்கள் தமது ஐயங்களைப் போக்குவ தற்காக நாலந்தாவிற்கு வந்தனர். இட்சிங்கினது குறிப்புக்க ளின்படி மங்கோலியாவிலிருந்து கூட மாணவர்கள் நாலந் தாவிற்கு வந்தனர். யுவான் சுவாங்கினது குறிப்புகளின்படி கல்வி பயிலுவதற்காக சீனா, கொரியா, திபெத் ஆகிய இடங்களிலிருந்தும் மாணவர் இங்கு வந்தனர்.
பெருந்தொகையான கல்விமான்கள் கூடிச் சமயக் கோட் பாடுகளின் சாத்தியம், சாத்தியமின்மை பற்றிக் கலந்துரை யாடும் இடமாகவும் நாலந்தா விளங்கியது. ஆராய்ச்சி மையமாகவும் அறிவுசார் விடயங்களின் தொடர்பாகத் தீர்ப்புச் சொல்லுமிடமாகவும் இருந்தது. நாலந்தாவில் கற்பத ற்காக வரும் மாணவர்கள் மிக உயர்தரத்திலான அனுமதி ப்பரீட்சைக்கு தோற்றவேண்டியது அவசியம். யுவான் சுவாங்கின் குறிப்புக்களின்படி 20% மாணவர்களே அனுமதிப்பரீட்சையில் சித்தியடைந்தனர். மிக உயர்ந்த கல்வித் தரமும் ஒழுக்கத்தரமும் அங்கு பேணப்பட்டன. யுவான் சுவாங் காலத்தில் 1500 ஆசிரியர்களும் 8500 மாணவர்களும் நாளந்தாவில் இருந்தனர். நித்திரைக்கான நேரம் போக மிகுதி நேரம் முழுவதும் கற்றலிலேயே செலவிடப் பட்டது. பிராமணியம், பெளத்தம், புனிதநூற் கல்வி, சமயம் சாரா நூற் கல்வி, மெய்யியல், நடைமுறைக் கல்வி, விஞ்ஞானமும் கலையும் என அங்கு பயிற்றப் பட்டவை பல்துறை சார்ந்தவையாக இருந்தன. யுவான்
சுவாங் அங்கு யோகசாத்திரம் பயின்றார்.
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 269
நாலந்தாவின் தொடக்க காலங்களில் அங்கு வழிபடப் பட்ட தெய்வங்கள் பற்றிய குறிப்புகளும் யுவான் சுவாங் இட்சிங் ஆகியோரின் எழுத்துக்களில் காணப்படுகின்றன. தாராதேவி, அவலோகிதேஸ்வரர், புத்தர், போதிசத்துவர் ஆகியோரை அங்கு வழிபட்டனர். பிற்காலங்களில் வஜர பாணி, அபராஜித முதலான தாந்திரிகத் தெய்வங்களும்
வணங்கப்பட்டன.
நாலந்தாவின் கல்விப் போதனை பிரதானமாக சமயம் சார்ந்ததாகவே காணப்பட்டது. சமயச் சடங்குகளும், சமய நடைமுறைகளுமே பெருமளவிற்குப் போதிக்கப்பட்டன. ஆரம்பத்தில் மகாயான போதனைகள் முக்கிய இடத் தைப் பெற்றிருந்தன. காலப்போக்கில் தந்திரஞானம், வஜ்ர ஞானம் போன்ற பெளத்த சம்பிரதாயங்கள் பற்றிய பிரிவுப் போதனைகளும் அங்கு இடம்பெற்றன. மகாயானத்தில் ஏற்பட்ட பிற்கால மாற்றங்களும் நாலந்தாவிற் பிரதிபலித் ததை அங்கு அகழ்ந்தெடுக்கப்பட்ட மணற்கல், செம்பு, பித்தளை ஆகியவற்றாலான பெருந்தொகையான ஆண், பெண் தெய்வச் சிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.
(சோ.கி.)
நாற்பாதங்கள்
ஆன்மா முத்தியடைவதற்கு வேண்டிய நான்கு மார்க்கங் களைச் சைவ சித்தாந்திகள் குறிக்கின்றனர். இவை சரியை, கிரியை, யோகம், ஞானம் எனப்படும். எனினும் இவை தனிப்பட்ட வெவ்வேறு மார்க்கங்கள் அல்ல. அவை ஒன்றுக்கு ஒன்று ஆதாரமானவை. இந்நான்கு மார்க்கங் களும் அடிப்படையாக விளங்குவது பக்தி ஆகும்.
‘விரும்பும் சரியை முதல் மெஞ்ஞான நான்கும் அரும்புமலர் காய்கனிபோல் அன்றோ பராபரமே”
என்கிறார் தாயுமானவர். அரும்பின்றி மலரும் மலரின்றி காயும் காயின்றிக் கனியும் உண்டாகா. அது போல் சரியையின்றிக் கிரியையும் கிரியையின்றி யோகமும் யோகமின்றி ஞானமும் உண்டாகா. இவ்வழிகளில் நின்
றோரை முறையே தாஸ்மார்க்கத்தினர். சற்புத்திர மார்க்கத்
இந்துக் கலைக்களஞ்சியம் 毅魏
 

தினர், சகமார்க்கத்தினர், சன்மார்க்கத்தினர் என்பர். இந்நெறி களை மேற்கொண்டு ஒழுகுபவர்கள் பெறும்பதவி சாலோக, சாமீப, சாரூப, சாயுச்சிய பதவிகளாகும். இதில் முதல் கூறிய மூன்று பதவிகளும் பத முத்தியாகும். நான்காவதா கிய ஞானத்தால் உண்டாகும் முத்தி பரமுத்தி ஆகும். இதில் சாலோக முத்தி ஈஸ்வரன் திருமேனி கொண்டிரு க்கும் உலகத்தை அடைந்து இன்புறுதலாகும். சாமீப முத்தி மேலே கூறிய நிலையில் ஒரு புதல்வனைப் போல இறைவன் அருகில் அமர்ந்து இன்புறுவதாகும். சாரூப்பிய முத்தி இறைவனின் திருவுருவம் போன்ற ஓர் உருவந் தாங்கி இறை இன்பத்தை நுகர்வது. சாயுச்சிய முத்தி இறைவனோடு நித்தியானந்தம் அனுபவித்து பிறவியை அறுத்து நிற்பதாகும்.
சரியை
உலகியல் இன்பங்களைத் துய்த்து அவற்றில் அமிழ்ந்து கடவுளை மறந்து வாழ்வோருக்கு அவர்களை ஆன்மீக வழியில் திசை திருப்புவதற்குரிய முதற்படி சரியை ஆகும். சரியை என்பதற்கு ஒழுங்கான வழியில் நடத்தல் என்பது பொருள். ஒரு எஜமானனிடம் வேலையாள் LuU855 விசுவாசத்துடன் ஊழியம் செய்து எஜமானுடைய அன்புக்குரித்தாகி அத னால் அடையக்கூடிய பேறுகளை அடைதல் போல், ஆண் டவனாகிய எஜமானனிடம் நாம் தொண்டாற்றி அவனால் அளிக்கப்படும் பேறினைப் பெறுவதற்கு உரியதாதலின் இதனைத் தாஸ்மார்க்கம்
என்று கூறுவர்.
வேலையாள் தன் எஜமானனிடம் நம்பிக்கை, விசுவாசம், கீழ்ப்படிதல், அவருக்கு விருப்பமான செயல்களைச் செய் தல், எஜமானை எந்த இடத்திலும் புகழ்ந்து பாராட்டுதல் முதல்ய நற்குணங்கள்ை கைக்கொண்டொழுகுவது போல் நாமும் நமது எஜமானாகிய கடவுளிடத்தில் பக்தியும் விசுவாசமும் கொண்டு அதிகாலையில் எழுந்து நீராடித் தூய உடை தரித்து விபூதி தரித்து நிவேதனப் பொருட் களுடன் ஆலயம் சென்று சந்நிதியில் நின்று இறைவன் பெருமையைப் புகழ்ந்து பாடி விதிப்படி ஆலய தரிசனம் செய்து வழிபாடாற்ற வேண்டும்.
ஆலயத்தில் செய்யக்கூடிய தொண்டுகள் திருவிளக்
இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 270
கிடல், மெழுகிடல், நந்தவனம் அமைத்தல், மலர் பறித்தல், மாலை கட்டுதல், தூபதீபம் இடுதல், பசுமடம் கட்டுதல், பூசைக்கு வேண்டிய பொருட்களைக் கொடுத்தல், அடியார்க ளுக்கு அன்னமிடல், அடியார்கள் பொருட்டு சத்திரம் சாவடி கட்டுதல், தண்ணிர்ப்பந்தல் வைத்தல், வேதாகம தேவாரப் பாடசாலைகள் வைத்து நடத்துதல், சமயப் பிர சார நிலையங்கள் அமைத்தல், இலவசக் கல்வி நிலையங்
கள் கலாசாலைகள் அமைத்தல் என்பனவாகும்.
சரியை மார்க்கத்திற்கான திருத்தொண்டுகளை அப்பர் சுவாமிகள் ஆரூர்த்தாண்டகத்தில் விளக்கியுள்ளார்.
"நிலைபெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீவா
நித்தலும் எம்பிரானுடைய கோயில்புக்குப் புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்குமிட்டு
பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்துபாடித் தலையாரக் கும்பிட்டுக் கூத்துமாடிச் சங்கரா
சயபோற்றி போற்றி என்றும் அலைபுனல் சேர் செஞ்சடை எம் ஆதி என்றும்
ஆரூரா என்றென்றே அலறா நில்லே”
தாச மார்க்கம் பற்றி சிவஞான சித்தியார் கூறுவது:
"தாசா மார்க்கஞ் சாற்றில் சங்கரன்றன் கோயில் தலம் அலகிட்டு இலகு திரு மெழுக்குஞ் சாத்திப் போதுகளுங் கொய்து பூந்தார் மாலை கண்ணி புனித நிற்குப் பல சமைத்துப் புகழ்ந்துபாடி திதில் திரு விளக்கிட்டுத் திருநந்தவனமும் செய்து திருவேடங் கண்டால் அடியேன் செய்வ தியாது பணியீரென்று பணிந்தவர் தம் பணியும் இயற்றுவது இச்சரியை செய்வோர் ஈசனுலகிருப்பர்
இங்கு கூறியவாறு நடந்ததால் பழம் உண்டாவதற்கு மூலகாரணமான அரும்பு அரும்புவதுபோல சரியையாகிய அரும்பு உண்டாகும். அதுவே கிரியையாக மலரும்.
கிரியை
கிரியையாவது தான் வழிபடும் கடவுளை அகத்தும்
புறத்தும் பூசித்து வழிபடுவதாகும். இது ஆன்மார்த்தம்,
刻242
 
 

பரார்த்தம் என இருவகைப்படும். ஆன்மார்த்தம் தன்பொருட்டு தெய்வத்தை வழிபடுவதாகும். பரார்த்தம் பிறர் பொருட்டு தெய்வத்தை முறைப்படி பூசனை செய்வதாகும். இப்பரார்த்த பூசை நித்திய, நைமித்ய, காமிக பூசை என மூன்று வகைப்படும். இவ்வழிபாட்டிற்கு மந்திரம், யந்திரம், தந்திரம், என்ற மூன்றும் வேணடும். சிவபூசை முறையைச் சிவாகமங் கள் கூறுகின்றன. வாசனைத் திரவியம், தூபம், தீர்த்தம், தீபம், மலர்கள், பஞ்சகவ்வியம், பஞ்சாமிர்தம் முதலிய பூசைக்குரிய பொருட்களைக் கொண்டு ஆத்மசுத்தி, ஸ்நான சுத்தி, திரவியசுத்தி, மந்திரசுத்தி, லிங்கசுத்தி முதலானவை செய்து அந்த மூர்த்திக்குரிய மூலமந்திரம் ஜபித்து பீடம் இடவேண்டும். இந்த ஐந்து சுத்திகளையும் செய்வது ஆணவம், கன்மம், மாயை, திரோதாயி, மாயேயம் என்னும் ஐவகை
பாசங்களையும் களைவதற்காகும். இதனை
"பஞ்சவித சுத்தியினைப் பண்ணிடுக பாங்கப்
பஞ்சவித பாசமறுப்பார்” என்னும் சைவநெறிச் செய்யுளால் அறியலாம். அபிஷே கப் பொருட்களாக வடித்தெடுத்த நீர், வாசனைத் திரவியங் கள் கலந்த நீர், இளநீர், பன்னீர், எண்ணெய், பால், பஞ் சாமிருதம், விபூதி, சந்தனம், புஷ்பம் முதலியவைக ளாகும். மல நிவாரணம் ஏறி படுவதற்கே அபிஷேகம் செய்யப்படுகின்றது. பூசையில் செய்யப்படும் உபசாரங்கள் பதினாறாகும். அவை ஆவாஹனம், தாபனம், சந்நிதானம், ஸந்திரோதனம், அவகுண்டனம், தேனுமுத்திரை, பாத்தி யம், ஆசமனியம், அருக்கியம், புஷ்பதானம், தூபம், தீபம், நைவேத்தியம், பாநீயம், ஜபஸமர்ப்பணை ஆராத்திரிகம் என்பன. புறம், அகம் இரண்டினாலும் செய்யும் கிரியை வழிபாட்டில் கிரியையில் சரியை சிவாகம விதிப்படி சிவலிங்க பூசனை செய்வது. கிரியையில் கிரியை என்னும் மானத பூசை கிரியையில் யோகம் எனவும், மானத வழியில் நிற்போர் பெறும் உணர்வு கிரியையில் ஞானம் எனவும் அழைக்கப்படும். கிரியைவழி நிற்போர் பெறும் முத்தி சாமீபயோகம்,
யோகம்
பக்தன் தன் வெளித் தோற்றங்களைத் துறந்து உள்ள
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 271
டங்கி இறைவனோடு ஒன்றி இறையின்பம் நுகர்தல் யோகம் எனப்படும். யோகம் என்பதற்குச் சேர்க்கை என்று பொருள் படும். ஜீவாத்மா, பரமாத்மாவோடு உள்ளத்தால் சேர்ந்துறை தலாம். பிராணவாயுவை சலனமற நிறுத்தி ஐம்புலன்களை அடக்கி மனதைப் புறவிடங்களில் போகவிடாது தடுக்க வேண்டும். பின் மூலாதாரம் சுவாதிட்டானம் மணிபூரகம் அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை என்னும் ஆறு ஆதாரங் களை அறிந்து தியானிப்பதே யோக மார்க்கமாகும்.
இட்து இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தி யாகாரம், தாரணை, தியானம், சமாதி என எட்டு அங்கங்க ளுடையது. இதனை அட்டாங்க யோகம் என்பர். இதனை திருமூலர்
"இமய நியமமே எண்ணிலா ஆதனம் நயமுறு பிராணயாமம் பிரத்தி யாகாரம் சயமிகு தாரணை தியானஞ் சமாதி அயமுறும் அட்டாங்க மாவது மாமே” என்கிறார்.
இயமம் அகிம்சை, உண்மை, கள்ளாமை, பிறர் பொருள் விரும்பாமை, பிரமச்சரியம் என்பன.
நியமம்: தவம், சந்தோசம், தேவசிந்தனை, தானம், ஈசுர பூசை, ஞான சாத்திரங்கள் கேட்டல், பழிக்கஞ்சுதல், விரதம் என்பன.
ஆசனம்: யோகத்தை ஒழுங்காய் நடக்கத்தக்க முறை யில் உடம்பை அமரச் செய்தல். இது மயூராசனம். குக்குடா சனம் எனப் பல வகைப்படும். எந்த ஆசனம் தியானத்திற்கு தனக்கு அனுகூலமாக உள்ளதோ அந்த ஆசனத்தை அவன் மேற்கொள்ளலாம்.
பிராணமாயாமம். பிராணவாயுவை அடக்குதலாகும். அது மந்திர ஜபத்தோடு அடங்குவதும். ஒன்றுமின்றி அடங்குவ தும் என இருவகைப்படும்.
பிரத்தியாகாரம்: மனதை ஐம்புலன்வழிச் செல்ல விடாது தடுத்தலாகும். இயம, நியம, ஆசன, பிராணாயாம நிலை பெற்றவர்களுக்கே இம் மனதை அடக்கும் ஆற்றல் ஏற்படும்.
இந்துக் கலைக்களஞ்சியம்x
 

தாரணை: முத்துச் சிப்பி கடலின் மேற்பாகத்திற்கு வந்து மழைத்துளி தன்னுள் விழுந்ததும் விரைவில் சிப்பியை மூடிக்கொண்டு கடலின் அடியில் சென்று பொறுமையோடு அதனைப் போற்றி வளர்த்து விலையுயர்ந்த முத்தாக்கு கிறது. அதேபோல உபதேசம் பெறவேண்டும். பின் மனதை வெளிவிடயங்களில் போகாமல் தடுக்க வேண்டும். பின் நிம்மதியான தியானத்தில் இருக்கவேண்டும். இதுவே தார ணையாகும்.
தியானம் மனதை இறைவனிடம் சலனமின்றி நிறுத்தி வழிபடலாகும். அப்போ நான் எனது என்னும் அகங்கார,
மமகாரங்கள் அழிந்துபோகும் இதுவே தியானமாகும்.
சமாதி; மனம் சுய போதத்தை இழந்து இறையருளில் தோய்ந்து நிற்கும் நிலையே சமாதியாகும். போதாதீத நிலை என இதனைக் கூறுவர்.
இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம் யோகத்தில் சரியை. பிரத்தியாகாரம், தாரணை, யோகத்தில் கிரியை, தியானம், யோகத்தில் யோகம், சமாதி யோகத்தில் ஞான மாகும். இன்று யோகப் பயிற்சிகள் பல நோக்கங்களுக் காகப் பயன்படுகின்றன. யோகிகள் பன்னெடுங்காலம் வாழ்ந்தனர் எனவும் சமாதியில் ஆழ்ந்திருந்தனர் எனவும் நமது புராணங்கள் கூறுகின்றன. யோகத்தினால் அடை வது சாரூப்பிய முத்தியாகும்.
ஞானம்
ஞான மார்க்கத்தில் நிற்போர் ஞானசாத்திரங் களை ஆசிரியரிடம் கேட்டறிதல், பின் அதனைப் பற்றிச் சிந்தித்தல், சிந்தித்தவற்றைத் தெளிதல், தெளிந்த நிலை யில் நிட்டை கூடல் என்ற நிலைகளில் தம்மைப் படிப்படி யாக உயர்த்திக் கொள்ளவேண்டும்.
ஞானம் பதிஞானம், பசுஞானம், பாசஞானம் என மூவகைப்படும். பதி ஞானம் தற்பிரகாசம், பரப்பிரகாசம் என இருவகைப்படும். ஒளிஞானம், பரப்பிரகாசம் ஆன்மா வைக் காட்டுதல் ஆகும். பசு ஞானம் தற்சொரூபத்தை அறியாது பலவகையில் சந்தேகப்பட்டு நிற்பதாகும். பசு ஞானம் உலகப் பொருள்களைப் பற்றி ஒருவாறு அறியும் அறிவு ஆகும். பசு ஞானமும் பாசஞானமும் ஞானமல்ல. பதிஞானமே ஞானமாகும். அதுவே பிரம்மஞானம். ஞான
8 G 8: $68 8ളഖ86 8ിഞ്ഞാട്ടൺ

Page 272
மின்றி மேற்கொள்ளும் யோகத்தால் முத்திபெற இயலாது. இதனால் மோட்ச விருப்பமுடையவர்கள் யோகத்தையும் ஞானத்தையும் மேற்கொள்ள வேண்டும். ஞானசாத்திரங் களைக் குருவிடம் கேட்டறிதல் ஞானத்தில் சரியை. கேட்ட வற்றை ஆராய்ந்து சிந்தித்தல் ஞானத்திற் கிரியை. தெளி தல், ஞானத்தில் யோகம். தெளிந்து நிட்டை கூடல், ஞானத் தில் ஞானமாகும். ஞானமார்க்கத்தில் நிற்போர் இறைவனுடன் இரண்டறக் கலப்பர். இது சாயுச்சிய (பர) முத்தி எனப்படும். சரியை, கிரியை, யோகங்களில் நின்ற ஆன்மாக் கள் அடைவது பத முத்தியாகும். சைவ சித்தாந்தங்களின் படி பரமுத்தியடைந்த ஆன்மாக்கள் உலகில் பிறப்ப தில்லை. பதமுத்தியடைந்த ஆன்மாக்கள் பிறவியெடுத்தா லும் ஒரே பிறவிலேயே இறை அருளால் பரமுத்தியைப் பெறுகின்றன.
மானிடப் பிறப்பின் நோக்கம் முத்தி அடைவதாகும். ஆனால் உலகியல் இன்பங்களில் ஈடுபட்டு நிற்போர் திடீர் என்று யோக, ஞான மார்க்கங்களைக் கைக்கொள்வது கடினமானது. எனவே, மனதினைப் படிப்படியாக ஆன்மீக நெறியில் உயர்த்திச் செல்வதற்கு இச் சரியை, கிரியை,
யோக, ஞான மார்க்கங்கள் உதவியாக உள்ளன.
(நி.நி.)
TEÓLOGOutLOTGUNGA)
தொண்ணுற்றா வகைச் சிறு பிரபந்தங்களில் ஒன்று. நால்வகைப் பாக்கள் விரவிய நாற்பது பாடல்களைக் கொண்டது. முத்து, பவளம், மரகதம், மாணிக்கம் என்ற நான்கு வகை மணிகள் போல வெண்பா, கலித்துறை அகவல், விருத்தம் என்ற நான்கும் அந்தாதித் தொடரில்" வருவதே நான்மணிமாலையாகும். பாவகையின் எண்ணிக் கையாலும் பாடல்களின் எண்ணிக்கையாலும் இப்பெயர் வந்ததெனலாம். இவற்றுள்ளும் ஆசிரியப்பா முதலில் வரவேண்டும் எனும் விதியைப் பன்னிருபாட்டியல் கூறுகின் றது. கி.பி.பத்தாம் நூற்றாண்டின் பின்பே நான்மணிமாலை
இலக்கியங்கள் தோன்றின.
நான்மணிமாலை நூல்கள் 1. கோயில் நான்மணிமாலை 2. திருவாரூர் நான்மணிமாலை 3. நால்வர் நான்மணிமாலை 4. விநாயகர் நான்மணிமாலை
என்னும் நான்கும் குறிப்பிடத்தக்கன.
 

கோயில் நான்மணிமாலை
இவ் இலக்கிய வகைகளுள் இதுவே முத லில் தோன்றியது. பதினோராம் திருமுறை பாடிய பன்னிரு வருள் ஒருவராகிய பட்டினத்தடிகளால் பாடப்பட்டது. இவர் காவிரிப் பட்டினத்தில் சிவகேசர் என்பவருக்கும் ஞானகலை யம்மை என்பவருக்கும் மகனாகப் பிறந்தார். சிவகலை என்னும் பெண்ணை மணமுடித்தனர். மருதவாணன் என் னும் ஒரு புதல்வன் இவர்களுக்குண்டு. இவரது இயற் பெயர் திருவெண்டர், திருவெண்காட்டடிகள் எனவும் பட்டின த்துப்பிள்ளையார் எனவும் அழைப்பர்.
ஆசிரியர் தில்லைச்சிற்றம்பலத்தினை - கோயில் எனச் சிறப்பித்து கூறும் சிதம்பரத்தினை - பாடிப் பரவவேண்டும் என்னும் நோக்கத்துடன் இக்கோயில் நான்மணிமாலையைப் LITL960TT.
பூமேலே அயனறியா மோவிப் புறத்தே நாமே புகழ்தனவை நாட்டுவோம்
என இந்நூலை வெண்பாவுடன் ஆரம்பிக்கின்றார். வெண்பா கட்டளைக் கலித்துறை ஆசிரியவிருத்தம் நேரி சையாசிரியப்பா என்று தொடர்ந்து அந்தாதி வடிவில் பாடி யிருக்கிறார்.
பொன்னம்பலவாணனின் நடனத்தைப் பற்றி ஆசிரியர் கூறும்போது
நானே பிறந்த பயன் படைத்தேனென நாரணனெம் கோனே எனத்தில்லை அம்பலத்தே நின்று கூத்துகந்த தேனே திருவுள்ளமாகி யென் தீமை யெல்லா மறுத்துத் தானே புகுந்தடி யேன்மனத் தேவந்து சந்திக்கவே
எனப்பாடுகின்றார்.
பேசுவாழி பேசுவாழி ஆசையொடு மயங்கி மாசறு பொன்னே பேசு வாழி பேசு வாழி
கண்டன மறையும் உண்டனமலமாம்
என இணைக் குறளாசிரியப்பாவில் பாடுகின்றார்.
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 273
பெருவேட்கையால் மயக்கமடைந்து குற்றம் அடைந்த நெஞ்சமே (உய்யும் வகையாம் உறுதியொன்று உனக்குக் கூறுவன்) கண்ணாற் காணப்பட்ட எல்லாப் பொருள்களும் நிலைபெறாது ஒடுங்கும். நீ உட்கொண்ட இன்சுவைப் பொருள்கள் எல்லாம் மலமாகக் கழியும். மணமுள்ளவை யென்று பூசிக் கொள்ளப்பட்ட நறுமணமிக்க கலவைச் சாந்து அனைத்தும் அழுக்காக மாறும். உன் உடைமை யெனக் கொள்ளப்பட்ட உன்னைச் சேர்ந்த பொருட்கள் காலமுறையில் உன்னைவிட்டழிந்து விடும் என்று கூறிச் செல்கிறார். வாழ்க்கையின் நிலையாமை பற்றி இவரது பாடல்கள் குறிப்பிட்டுச் செல்கின்றன.
அரசனாக வாழ்வதிலும் பார்க்க பசிய கொன்றை மலர் மாலையணிந்த நீண்ட திருச்சடையினையுடைய தில்லைச் சிற்றம்பலவன் திருவடிக்கு அடிமையாய் அவர்தம் அரு ளாணை வழிநின்று ஏவல் பூண்டொழுகி, மெய்யன்பர்கள் வீடுதோறும் சென்று அவர்கள் அன்போடு இடும் பிச்சையுண வினை ஏற்றுண்டு வாழும் வாழ்வே மகிழ்ச்சிக்குரியது என்று கூறிச் செல்கிறார்.
இவரது பாடல்களில் மாந்தர், மகளிர் உறவு விரும்பப்படக்கூடியதல்ல என்ற கருத்தே தொனிக்கிறது.
நெறிதரு குழலை யாழென்பார்கள் நிழலெழு மதியம் நுதலென்பார்கள் நிலவினும் வெளிது நகையென்பார்கள்
அறிவு இல்லாத சிலர் இளமை வாய்ந்த மங்கையர் மையலால் அவர்தம் உறுப்புக்களை அளவிறப்ப புனைந்து பாராட்டுவர் என்றெல்லாம் கூறுகிறார். மேலும் இவ்வளவு
அழகுள்ளவர்களின் உறவினால் யாது பயன் என்கிறார்.
நால்வர் நான்மணிமாலை
நால்வருக்கு நல்ல புகழ்மாலை - அதாவது சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நான்கு
குரவர்களைப் பற்றிப் புகழ்வதே இந்நூலாசியரின் நோக்கமாகும்.
கி.பி. 17ஆம் நூற்றாண்டளவில் வாழ்ந்த சிவப்பிரகாச சுவாமிகள் இந்நூலின் ஆசிரியராவர். காஞ்சிபுரத்தில்
இந்துக் கலைக்களஞ்சியம்x ;భళ్లభ 鄒24

தொண்டை மண்டல வேளாளர்களுக்கு தீட்சா குருவாக விளங்கி வந்தவர். குமாரசாமிதேசிகர். இவரின் மகனே சிவப்பிரகாச சுவாமிகள். முப்பதிரண்டு வயதில் முப்பத்திர
ண்டு நூல்களைப் பாடிய பெருமை இவருக்குண்டு.
வெண்பாக்கள் பத்தும் திருஞானசம் பந்தருக்கும் கலித்துறைகள் பத்தும் திருநாவுக்கரசருக்கும் ஆசிரிய விருத்தம் பத்தும் சுந்தரருக்கும் ஆசிரியப்பாக் கள் பத்தும் மாணிக்கவாசகருக்கும் என அமைத்து நால் வரையும் போற்றுகிறார். எல்லாச் செய்யுட்களும் பக்திச் சுவையும் கற்பனை நயமும் பொருந்தச் சொல்லா லும் பொருளாலும் கற்போருள்ளத்தைக் கவரும் தகையன. அவற்றுள்ளும் ஆசிரியப்பாக்கள் மாணிக்கவாசகரின் திரு வாசகத்தைப் பல படியானும் பாராட்டுஞ் சிறப்புடையன. நெஞ்சுருக்கும் நீர்மையன. செய்யுள் ஒன்றில் "வேதம் ஒன்றின் விழிநீர் பெருக்கி நெஞ்சம் நெக்குருகி நிற்பவர் காண்கிலோம். திருவாசகம் இங்கு ஒரு கால் ஒதின் கருங்கல் மனமும் கரைந்து உருகும். கண்கள், தொடுமணற் கேணியிற் சுரந்து நீர்பாய மெய்ம்மயிர் நொடிப்ப விதர்விதிர்ப் பெய்தி அன்பராகுநரன்றி மன்பதையுலகின் மற்றையரிலர்’ என்கிறார். "முற்பட்ட கைகளையும் ஒவ்வொரு காலத்திலே மட்டும் ஒளிசெய்யும் முக்கண்ணையும் உடைய சிவபெரு மான் தன்னை நீ புகழ்ந்துரைத்த செய்யுட்களை அமர்ந்து எழுதிக் கொண்டதற்குக் காரணம் அவன் மகிழ்ச்சி விருப்ப னாக இருப்பதாற் போலும்’ என்கிறார்.
ால்வர் நான்மணிமாலையின் ஒவ்வொரு பாடலும் ஒன்றை ஒன்று மிஞ்சியதாக பக்தி நிறைந்ததாக பொருட் செறிவுடையதா கக் காணப்படுகின்றன.
திருவாரூர் நான்மணிமாலை
இந்நூலின் ஆசிரியர் தருமபுர மடத்தைச் சேர்ந்த புலவர்களுள் பெரும்புகழ் பெற்று விளங்கிய குமரகுருபரர். 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த வர். இவர் பிள்ளைத் தமிழ், கலம்பகம் மும்மணிக்கோவை, செய்யுட்கோவை, இரட்டை மணிமாலை போன்ற பல நூல் களை எழுதியுள்ளார். இவரது தந்தை சண்முகசிகாமணிக் கவிராயர், தாயார் சிவகாமசுந்தரி அம்மை, திருவாரூர் பூரீ தியாகப் பெருமானைத் தரிசித்து திருவாரூர் நான்மணிமாலையைப்
x இந்துசமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 274
பாடினார். வடமொழி, தமிழ்மொழி இரண்டிலும் நிரம்பிய அறிவுடையவர்.
நாடுங் கமலேசர் நான்மணி மாலைக்கு மிகப் பாடும் கவிதை நயம் பாலிக்கும் . வீடொன்றை முப்போ தகத்தின் முயல்வோர்க்கு முன்னிற்கும் கைப் போதகத்தின் கழல்
என முதலில் விநாயகர் மேற்காப்புப் பாடி இந் நூலைத்
தொடங்குகின்றார். இந்நூல் நேரிசை வெண்பா வில்
தொடங்குகின்றது.
நீரூர்ந்த முந்நீர் நிலவலய நீள்தொடிஞ்சித் தேரூர்ந்த செல்வத்தியாகனே - ஆரூர வீதி விடங்காவடங்கா வேலைவிடம் போலும் நில்
பாதிவிடங் கா கடைக்கண் பார்த்து
என வீதி விடங்கனாகிய சிவனை நோக்கிப் பாடுகிறார். திருவாரூர் தியாகேசருடைய பெயர்களுள் ஒன்றே வீதி விடங்கன். இக்கோயிலின் தேர் மிகச் சிறப்பு வாய்ந்தது. தேரூர்ந்த செல்வத் தியாகனே' எனப் பாடுகின்றார்.
இவர் சிவபெருமானை தனது நூலில் வர்ணிக்கும் போது பார் பெற்ற வல்லிக்கு பாதியும் பகீரதிக்கு வேணியும் கொடுத்த பெருமான். இவனுக்கு திசைகளே ஆடைகள். அத்திசைகள் பகலில் வெண்ணிறமடைந்து Gol6i6i6TT6ODL u JIT கவும் இரவில் கருநிறமடைந்து கரிய ஆடையாகவும் அந் திப் பொழுதில் செந்நிறமடைந்து செவ்வாடையாகவும் அமைக்கின்றன என்றெல்லாம் வர்ணிக்கிறார்.
சிவபெருமானின் அர்த்தநாரீசுவர வடிவத்தை
ஒரு காலத்தி லுருவமற் றொன்றே இடப்பான் முப்பத் திரண்டறம் வளர்ப்ப வல்ப்பா லிரத்தன் மாநிலத் தின்றே
அதாவது ஒரே உருவத்தில் ஒரு பால் அறம் வளர்க்க மற்றொருபால் இரத்தலைச் செய்கிறார் என்கிறார். திருமாலு க்கு வையம் முழுவதினையும் அளித்ததாலும் குபேரனுக்கு நவநிதியை அளித்ததனாலும் உமாதேவிக்கு உடம்பில் ஒரு கூறு அளித்ததனாலும் இவரை தியாகர் என அழைத்
இந்துக் கலைக்களஞ்சியம்xx
 

ததாக ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.
விநாயகர் நான்மணிமாலை
இந்நூலைப் பாடியவர் மகாகவி பாரதியார்.
இவரது நான்மணிமாலை பக்திசுவை நிரம்பி யது.
"சக்தி பெறும் பாவாணர் சாற்றுப்பொருள் யாதெனினும் சித்தி பெறச் செய்வார்க்கு வல்லமைக்கா அத்தனே நின்றனக்குக் காப்புரைப்பார் நின் மீது செய்யும் நூல் இன்றிதற்கும் காப்பு நீயே
என வெண்பாவில் தொடங்கி கலித்துறை, விருத்தம்
அகவல் என யாப்பமைப்புக் கேற்ப பாடிச் செல்கிறார்.
மக்கள் வாழ்வை விக்கினமில்லாது செய்தலும் விக்கின மடையச் செய்தலுமாகிய வடிவத்தைப் பலபடப் புகழ்ந்து பாடுங்காலை மெளனநிலை வந்திடத் தனக்குச் செய்வ தோடு அளப்பருஞ் செல்வத்தையும் நூறாண்டு இருக்கும் வயதையும் அளிக்க வேண்டுமென்று வேண்டுகின்றார்.
"கடமையாவன தன்னைக் கட்டுதல் பிறர் துயர் தீர்த்தல் பிறர் நலம் வேண்டுதல் விநாயக தேவனாய் வேலுடைக் குமரனாய் நாராயணனாய் கதிச்சடைமுடியனாய் பிறநாட்டிருப்போர் பெயர் பல கூறி அல்லா யெஹோவா எனத் தொழுதன்புறும் தேவருந்தானாய் திருமகள் பாரதி
உமையெனும் தேவிய ருகந்த வான் பொருளாய்
என கணபதி பாரதியார் தனிப் பெரும் பொருளாக எடுத்துக்கூறி ஒருமையை நிலைநாட்டு கிறார்.
நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல் இமைப்பொழுதும் சோராதிருத்தல், உமைக்கினிய மைந்தன் கணநாதன் நம் குடியை வாழ்விப்பான் சிந்தையே இம்மூன்றும் செய்”

Page 275
என்ற பாடலில் கடமையுணர்வை, தமிழ்ப்பற்றைக் கூறுகிறார்.
முப்பத்திரண்டாவது பாடலில் எல்லா உயிர்களிலும் இன்புற்றிருக்க வேண்டுமென்ற அவா நிரம்பப் பெற்ற எழுச் சியால் பாடும் அடிகள் இவை
"பேசாப் பொருளைப் பேசநான் துணிந்தேன் கேட்கா வரத்தை கேட்க நான் துணிந்தேன் மண்மீதுள்ள மக்கள் பறவைகள் விலங்குகள் பூச்சிகள் புற்பூண்டு மரங்கள் யாவுமென் வினையா இடும்பை தீர்ந்தே இன்பமுற் றன்புடனிணங்கி வாழ்ந்திடவே செய்தல் வேண்டும் தேவதேவா”
எனப் பாடுகின்றார்.
விநாயகனை நோக்கி நான்மணிமாலை பாடத் தொடங்கிய ஆசிரியர்
விதியே வாழி விநாயக வாழி பதியே வாழி பரமா வாழி சிதைவினை நீக்கும் தெய்வமே போற்றி புதுவினை காட்டும் புண்ணியா போற்றி மதியினை வளர்க்கும் மன்னா போற்றி
என விநாயகனைப் போற்றி அகவற்பாடலில் முடிக் கின்றார். (இ.ச.)
'மறை என்பது வேதம் என்பதாகும். அவை இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என நான்கு வகைப்படும். சிவனே வேதத்தை அருளினார் என்பது சைவர்களின் நம்பிக்கை இதை திருமுறைகள் விதந்து கூறுகின்றன. ‘அருமறையங் கம் ஆகமம் வகுத்த பிரான், அங்கம் ஓராறும் அருமறை நான்கும் அருள் செய்த, "மறை நான்கும் விரித்துகந்தீர், 'ஒதினார் வேதம் வாயால், சுருங்கா மறை நான்கினையும் ஒதியன்’ என்றவாறு நாயன்மார்களின் பதிகங்கள்
பேசுகின்றன.
இந்துக் கலைக்களஞ்சியம்
 

வேதநூல் சைவநுால் என்றிரண்டே நூல்கள் வேறுரைக்கும் நூல் இவற்றின் விரிந்த நூல்கள் ஆதி நூல் அநாதி அமலன் தருநூல் இரண்டும் ஆரண நூல் பொது, சைவம் அருஞ்சிறப்பு நூலாம்
வேதத்தை விட்ட அறமில்லை வேதத்தில் ஓதத்தகும் அறம் எல்லா முள தருக்க வாதத்தை விட்டு மதிஞர் பெற்றார்களே வேதத்தை ஒதியே வீடு பெற்றார்களே
எனத் திருமூலர் போற்றிப் பகர்ந்துள்ளார்.
வேதங்கள் சங்கிதைகள், பிராமணங்கள், ஆரணியங்கள், உபநிடதங்கள் என்னும் பகுதிகளால் அமைந்துள்ளன. வேதங்கள் ஆரம்பத்தில் மூன்று என்பதே மரபா கும். அவை இருக்கு, யசுர், சாமம், என்பனவாகும். இம்முப்பிரி வுகளை “திரயீவித்யா”, “மூவகைவித்தை” எனும் பெயர்க ளால் குறிப்பிட்டனர். ஆரம்பகாலத்தில் அதர்வண வேதம் ஓர் வேதமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. நெடுங் காலத்திற்குப் பின் அதர்வண வேதம் நான்காம் வேதமாக ”, “சதுர்மறை” எனும் பெயர்களால் அழைக்கப்பட்டன. இவ்வாறான வேதங்களை
இணைக்கப்பட வேதங்கள் "நான்மறை
எம்முன்னோர் எழுத்திற் பொறிக்காது பரம்பரை பரம்பரை யாக வாயால் ஒதிச் செவியால் கேட்டுப் பேணி வந்தமையால் வேதம் “சுருதி” எனவும் "எழுதாமறை” எனவும் பெயர்பெறலாயிற்று. வேதங்களுக்கு ஆறு அங்கங்கள் உண்டென பின்னெழுந்த உபநிடதங்கள் கூறுகின்றன. இதனை ‘வேதாங்கங்கள்’ என அழைப்பர். அவை சிட்சை, கல்பம், வியாகரணம், நிருத்தம், சந்தஸ்,
ஜோதிடம் என்பவைக ளாகும்.
இருக்குவேதம்
வேதங்களுள் பழமையானதும் முதன்மையானதும் இருக்குவேதமேயாகும். “ரிக்” என்ற வடசொல்லின் பொருள் பாட்டு என்பதாகும். இருக்கு வேதம் சங்கிதைத் தொகுதியானது. இதன் அமைப்பினை நோக்கும் போது 10 மணி டலங்களா லும் 1028 பாடல்களாலும் ஆக்கப்பட்டுள்ளது. முதலாம், பத்தாம் மண்டலப் பாடல்கள்
சமய தத்துவ சிந்தனைகள் வாய்ந்தவை. இரண்டாம்
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்கலாம்

Page 276
மண்டலம் முதல் ஏழாம் மண்டலம் வரையான பாடல்கள் மிகப் பழமையானவை. மண்டலங்களில் உள்ள பாடல்களை கிருத்ஸமதர், விசுவாமித்திரர், வாமதேவர். அத்திரி, பரத்துவாசர். வஷிட்டர், கண்வர், அங்கிரஸ் போன்ற முனிவர்கள் இயற்றினார்கள். சில மண்டலப் பாடல்கள் பெண் கவிகளாலும் ஆக்கப்பட்டன. பத்து மண்டலப் பாடல்களைத் தவிர வேறு சில LJITI 6056lblf. இருக்கு வேதத்தில் இணைந்துள்ளன. இவை கையெழுத் துப் பிரதிகளில் உள்ளன. இவை “கிலங்கள்’ எனப்படும். ’கிலம்’ என்றால் எஞ்சியது. மிகுதியாக உள்ளது என்பது பொருளாகும். உதாரணமாக எட்டாம் மண்டலத்தின் இறுதி யாகக் கூறப்படும் “வாலகில்ய சூக்தங்கள்’ கிலங்களே யாம். இருக்கு வேதம் 21 சாகைகளை உடையது. இதற் குள்ள உபநிடதங்கள் ஐதரேயம், கெளவரீதகீ நாதபிந்து, ஆத்மப்பிரபோதம், நிருவாணம், முத்கலை, ஆஷமாலிகை, திரிபுரை, செளபாக்கியம், வக்விருச்சனை எனப் பத்தாகும்.
இருக்கு வேதப்பாடல்கள் பெரும்பாலும் அக்காலத்தில் வழிபட்ட தெய்வங்களை அழைத்தல், துதித்தல், வேண்டு தல் என்பனவற்றைக் குறிக்கோளாகக் கொண்ட சமயமரபு களையும், ஐயம் எழுப்பும் தத்துவக் கோட்பாடுகளையும், உலகியல் விடயங்கள், வாழ்க்கை நெறிகள் என்பவற்றையும் விவரித்துக் கூறும் இலக்கியங்களாக
அமைந்துள்ளன.
இருக்கு வேதம் எடுத்துக் கூறும் வழிபாட்டை இயற்கை வழிபாடு எனக் கூறுவர். நீர், நிலம், தீ, காற்று, விண், சூரியன், சந்திரன், விடியற்பொழுது முதலிய இயற்கைக் கூறுகளை வேதகால மக்கள் வழிபட்டு வந்தனர். அதாவது இயற்கைக் கூறுகள் பற்றிய பாடல்களை கவிகள் பாடிய விதம் இயற்கையை அநுவதிக்கும் முகமான பாடல்களாக உள்ளன. இருக்கு வேத தெய்வங்களை விண், மண், இடை, உலகங் கள் சார்ந்த அதி தெய்வங்களாக வேதசமய நிலையை விளக்க எழுந்த விமர்சகர்கள் வகுத்தார்கள்.
தியெள, மித்திரன், வருணன், ஆதித்தன், சூரியன், சவிதா, பூஷன், விஷ்ணு, அஸ்வினிதேவர்கள், உஷை
என்னும் தெய்வங்கள் விண்ணுடன் நெருக்கமானவை.
@igä56oay主56T@浮uá後談24

மண்ணின் அதி தெய்வங்கள் பிருதுவி, அக் கினி, பிருகஸ்பதி, சோமன், துவஷ்டா என்பனவாகும். சிந்து, விபாட், சுதுத்ரீ சரஸ்வதி போன்ற நதிகளும் மண்ணுலகு டன் பிணைப்பு மிக்கவை.
இந்திரன், உருத்திரன், திருத அபத்யன், அஜஏகபாதன், மருந்துக்கன், வாயு, பர்ஜன்யன் போன்றோரும் அப்பு எனப்படும் நீர்த்தெய்வ மும் இடையுலகம் சார்ந்தவை.
இவ்வாறான தேவர்களை அஞ்சி, கெஞ்சி, வியந்து, நயந்து, இரந்து, போற்றி வழிபட்டனர். பெரும்பாலான தேவர்கள் ஒளியூட்டுபவர்களாகவும் இயற்கையை ஒழுங்கு படுத்துபவர்களாகவும், சுகம், நோய் நீக்கம் அருளுபவர்க ளாகவும் இருக்கு வேதப்பாடல்கள் வருணி க்கின்றன.
இருக்கு வேதத்தின் ஆரம்பகால பாடல்களில் ஒரு தெய்வக் கோட்பாடு காணப்படவில்லை. இருக்கு வேதத்தில் ஒரு தெய்வத்திற்குச் சிறப்பாக எடுத்துக் கூறும் அதே பண்புகள் வேறு தெய்வத்திற்கும் உரியன வாகக் கூறப்படுகின்றன. வழிபடுபவன் ஒரு தெய்வக் கொள்கையினனல்லன். இருக்கு வேதம் கூறும் தெய்வங் கள் எல்லாவற்றையும் வழிபடும் உயர்த்திப் போற்றி, உயரிய பண்புகளை அத் தெய்வத்தின் மேலேற்றி, ஒப்புயர்வற்ற ஒரு தெய்வமோ என நினைக்கும் வண்ணம் உயர்நிலைக்கு உயர்த்தி அத்தெய்வத்திடம் தான் விரும்பும் பொருள்களை இரந்து வேண்டுகின்றான். இவனே வேறு ஓர் தருணத்தில் இன் னொரு தெய்வத்தை வழிபடும் வேளையில் அக்கால நிலைக்கும் சூழலுக்குமேற்ப அதே உயரிய பணி புகளை இப் பொழுது வழிபடும் தெய்வத்தின்மீது ஏற்றி வழிபட்டு, அதை உயர்த்தி வழிபடுகின்றான். வழிபடுவோன் தெய்வ மொன்றையே தன் தனித் தெய்வமாகக் கொண்டு எப்பொழு தும் வழிபடாது, தன் விருப்புக்கேற்றவாறு வழிபடும்வேளை யில், தன் எண்ணத்தை நிறைவேற்றவல்ல தெய்வம் எனத் தான் கருதும் தெய்வத்துக்கே உயரிய குணங்களைக் கற்பித்துப் போற்றி வழிபடுதலையே வழக்காகக் கொண்டான்.
இருக்கு வேதம் பல தெய்வ வழிபாட்டை ஆதரித்துக் காணப்பட்டபோதிலும் எல்லாம் ஒரே பொருளின் வேறு
*: Sß8 sau asexT5{TH gaXeueö86st geworé8Gmà

Page 277
வேறு தோற்றங்கள் என்பதை 10ஆம் மண்டல சுலோகம் மேல்வருமாறு குறிப்பிடுகின்றது. "ஒன்று தான் உளது, அதனையே அறிஞர்கள் வெவ்வேறு பெயர்க ளாற் குறிப்பிடுகின்றனர்”.
இருக்கு வேதத்தின் ஒப்பற்ற பெருந்தெய்வமான இந்திர னையே ஒரு தெய்வமாக ஐயுறத் தொடங்கியவர்களுக்கு வேறு வேறு தெய்வங்கள் மீதும் இதே உணர்ச்சி தோன்றி யது. பிரம்மணஸ்பதி, பிருகஸ்பதி, விஸ்வகர்மா கூறப்படும் பிராஜபதி எனும் தெய்வம் படைத்தல் தெய்வம், அவனே பிரஜைகளுக்குத் தலைவன், படைப்புத் தெய்வம் என்ற குறிப்புக்கள் தத்துவக் கருத்துக்கள் விரவியுள்ள பாடல்களில் உள்ளன. படைப்புத் தெய்வமாகவும், காக்கும் தெய்வமாகவும் கொள்ளப்படும் பிராஜபதி மீது பாடிய பாடலின் ஒவ்வொரு பாட்டினிறுதியி லும் “எந்தத் தெய்வத்திற்கு அவி சொரிவேன்?’ என்று ஒன்பது முறை வினாக்களாகக் கேட்கும் சந்தேக உணர்ச் சிக்கு விடையாக 'அத்தெய்வமே முழுமுதல் அவனுக்கே அவியைச் எனக் சொரியக்கடவீர்” கூறப்பட்டிருப்பதாக குறிப்புக் கள் உள்ளன. நாசதிய சூக்கத்தில் படைப்பு நிகழ்ந்ததா? என்ற ஐயுறுதல் உணர்ச்சிகளின் உச்ச வரம்பை மீறுகின்றது.
“உலகின் தொடக்க நிலை எத்தகையது? அக்காலத் தில் ஏதாவது இருந்ததா அல்லது ஒன்றுமே இருக்கவில் லையா? ஆகாயம், இடைவெளி என்னும் இவைதானும் காணப்பட்டனவா? எல்லாவற்றையும் மூடிப்பரந்து நின்றது யாது? எனது பாதுகாப்பாயமைந்தது எது?”
இதற்கு விடையாக
"இருளிற் பொதிந்துள கருமிருள் எங்கும் வியாபித்த நிலை தொடக்கத்திலிருந்தது. மிகவும் ஆழமாக நீர் எங்கும் பெருகிக் காணப்பட்டது தவத்தின் பெருமையின் விளை வாக ஒப்பற்ற தனிப் பொருள் தோற்றம் பெற்றது, இது
அறிவு மயமானது. ) q என்று கூறப்படுகின்றது.
இவ்வாறு அறிஞனின் மனதில் தோன்றும் தத்துவ விசார ணைகள் மேலும் ஐயுறுதல் உணர்ச்சியால் விளக்கம்
இந்தக் கலைக்களஞ்சியம்
 

கூற முடியாத தெளிவற்ற நிலைக்குள் தள்ளிவிடுவதைக்
35T600I6Os TLD.
“யார் இதை அறிவார்?, யாரிங்கே இதை எடுத்துக் கூற வல்லவர்? படைத்தல் எப்பொழுது நிகழ்ந்தது? படைத்தல் நிகழ்ந்த பின்னரா தேவர்கள் தோன்றினார்கள்? எங்கு படைத்தல் நிகழ்ந்தது? யாருக்குத் தெரியும், படைத் தல் நிகழ்ந்ததா? இன்றேல் நிகழவில்லையா?. y
இருக்கு வேதத்திலுள்ள பாடல்களிலிருந்து அக்காலத்து வாழ்க்கை நெறி தர்மங்கள் எவ்வாறு இருந்திருக்கலாம் என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது. அக்கால மக்களி டையே நிலவிய குலம், குடும்ப வாழ்க்கை, அரசியல், பொருளாதாரம், தொழில்முறை, கல்வி, விளையாட்டு, உணவு, உடை, ஆபரணங்கள், பிணி, பிணி நீக்கும் முறைகள், ஆரோக்கிய வாழ்வு என்பன பற்றிய விவரங் களை இவ்வேதம் உணர்த்துகின்றது.
இருக்கு வேதத்திற் புருஷசூக்தம் ஒன்றே சாதி பற்றிய நேரடியான குறிப்புக்களைத் தருகின்றது. புருஷனுடைய நான்கு உறுப்புக்களான முகம், தோள், தொடை, கால் முதலியவற்றுடன் முறையே பிராமணன், கூடித்திரியன், வைசியன், சூத்திரன் ஆகியோர் தோன்றினார்கள். அவர்க ளின் தொழில் மூலமான கடமைகளும் வகுத்துக் கூறப்பட் டன. இருக்கு வேதப்பாடல்கள் அரசர்களைப் பற்றியும் கூறுகின்றது. ராஜா என்னும் சமஸ்கிருத சொல் அரச னையே அடிக்கடி குறிப்பிடுகின்றது. அங்கு குடித்தலைவன் எனப்பொருள் உண்டு. அரசனின் கடமை குடிகளைக் காப்பதே என இருக்கு வேதம் குறிப்பிடுகின்றது. அரசோச் சும் முறையில் அரசனுடன் புரோகிதனும் இருந்தான். திவோதாஸன், சுதாஸன், திரசதஸ்யு போன்ற மன்னர் களின் பெரும் தீரச்செயல்களை இருக்கு வேதம் குறிப்பிடு கின்றது. வாழ்க்கையோடு தொடர்புபட்ட சமிதிக் கூட்டங்க ளில் அரசனும் கலந்து கொண்டான் எனக் குறிப்பிடப்படு கின்றது. மக்களின் குரலை எழுப்புவதற்கு வாய்ப்புப் பெற்றவர்களாய்த் தனிக் குழுவினர் நியமிக்கப்பட்டிருந்த னர். இக்குழு சமிதி என்றும் சபை என்றும் இருக்கு வேதத்தில் கூறப்பட்டுள்ளது. இருக்கு வேதம் கூறும் பொரு ளியல் விவரத்தை நோக்கும்போது எருதுகளும், பசுக்க
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்கணம்

Page 278
ளும் விலை மதிப்புள்ளனவாகப் போற்றப்பட்டன. பசுக்களே செல்வத்தை அளவிடும் கருவியாக விளங்கின. பண்டங்க ளின் விலையும் பசுக்களைக் கொண்டே நிர்ணயிக்கப்பட் டது. கொல்லாமற் பாதுகாக்கப்படும் ஒன்றாக பசுக்கள் விளங்குவதால் அதை "அக்னயா” என அழைத்தனர். வியாபாரம் சிறந்த தொழிலாக விளங்கியது. பண்டமாற்று வியாபாரம் அக்காலத்திற் பெருவழக்காயிருந்தது. உழவு, பாய்பின்னல், துணி நெய்தல் போன்ற தொழில்முறைகளும் இருந்ததாகக் தெரிகின்றது.
வாழ்க்கை தர்மத்தைக் கூறும்போது பிரமச்சரியம், கிரு ஹஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் போன்ற ஆச்சிரம தர்ம நெறிகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தார்கள். “பிரம சாரிசூக்தம்” என்ற பாட்டில் எழுத்துக் கலையற்ற செவி யால் கேட்கப்பட்டு வந்த சுருதிக் கல்வி முறை கூறப்படுகின்றது. கிருஹஸ்தத்தில் ஆணும், பெண்ணும் முக்கிய இடத்தினை வகிக்கின்றனர். குடும்பங்களாக அக்காலச் சமூகம் இயங்கியது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு தலைவன் இருந்தான். குடும்பச் சொத்துக்கள் தந்தை வழிச் சமுாயத்திற்குரியன. இல்லாளை “சகதர்மினி” என்று சொல்வது இவ்வேத மரபாகும். இருக்கு வேதத்தில் “காந்தருவ” மணமுறையும், விவாகக் கிரியைகள் பற்றியும் கூறப்படு கின்றது. மணமான பெண், குடும்பத்தில் முக்கிய இடம் வகிப்பாள், ஆணுடன் இணைந்து யாகம் வேட்டல் முதலிய கிரியைகளில் எல்லாம் அவளுக்குத் தனி இடம் உண்டு. மணம் புரிதலின் நோக்கம் சிறந்த ஆண்மகனைப் பெறு தலே. இல்வாழ்பவள் அதிதிகளை உபசரணை செய்தல், சுற்றாடல் பேணல், வித்தியா தருமம், தேவர்களை வழிபடு தல், பிதிர்கடன் முதலிய தர்மங்களைப் புரிதல் வேணடும் . பெண்களுக்குரிய உரிமை கள் பற்றியும் இவ்வேதம் பேசுகின்றது.
பால், வெண்ணெய், தயிர் முதலியவற்றை மக்கள் முக்கிய உணவாக உட்கொண்டனர். 'யவம்' என்னும் தானியத்தை மாவாக அரைத்து பாலுடன் சேர்த்து அப்பங்க ளைச் சுட்டனர். சுரா’ எனும் தானியக் குடிவகையையும் அருந்தினார்கள். மக்கள் பல வகையான ஆடைகளை
அணிந்தனர். காதணிகள், விரலணிகள், நிஷகம் எனப்
இந்துக் கலைக்களஞ்சியம்x
酸
 
 

படும், கழுத்தணி, மணிகள், பொன்னாலான அணிகளும் அணிந்தனர். பஷ்மா கூடியம் முதலிய நோய்களைப் பற்றியும் அவற்றைக் குணமாக்கும் மூலிகை வகைகள் பற்றியும், இவைகளை அறிந்து அவற்றை தீர்க்கவல்ல வைத்தியர்கள் பற்றியும் இவ்வேதம் குறிப்பிடுகின்றது.
யசுர் வேதம்
யாகங்களில் கடமையாற்றும் அத்வர்யுக்கள் வேட்பவருள் ஒரு பிரிவினர். இவர்களின் தேவையை ஒட்டி எழுந்ததே யசுர்வேதம் ஆகும். அத்வர்யுக்களின் வேதம் 101 பிரிவுகள் என்று கூறப்படுகின்றது. இவற்றுள் ஐந்து பிரிவுகளை மட்டும் அறியக்கூடியதாக உள்ளது. இவற்றுள் காடக சங்கிதை, கபிஷ்டலகட சங்கிதை, மைத்ராயணி சங்கிதை, தைத்திரீய சங்கிதை என்னும் நான்கும் கிருஷ்ணயஜுர் வேதத்தைச் சார்ந்தவை. ஐந்தாம் பிரிவான வாஜசநேயி சங்கிதை இரண்டு வகைப்படும். அவை கண்வ சாகை, மாத்தியத்தின் சாகை என்பனவாகும். இச்சங்கிதை
சுக்கிலயசுர் வேதம் எனக் கூறப்படுகின்றது.
யசுர் வேதம் வழிபாட்டு முறையில் புதியதொரு திருப்ப த்தை தோற்றுவித்துள்ளது. "சதருத்திரியம்” என்னும் பகுதியில் உருத்திரனின் நூறு பெயர்கள் உச்சாடனம் செய்யும் முறை விவரிக்கப்படுகின்றது. யசுர் வேதத்தின் நான்காம் காண்டமாயுள்ள தைத்திரீய சங்கிதையில் இவ்வி வரம் காணப்படுகின்றது. முத்தொழிலுக்கதிபதியான ருத்திர சிவவழிபாடு யசுர் வேதகாலத்தில் முக்கிய வளர்ச்சிக் கட்டத்தை அடைந்தது. இக்காலகட்டத்தில் உருத்திர சிவன் ஒன்றுக்கு மேற்பட்ட நாமங்கள் கொண்டவராக சிவதெய்வத்திற்குரிய பண்புகளைப் பெற்றுக் கொண்ட தொரு தலைமைக் கடவுளாக உயர்த்தப்பட்டார். உருத்திர சிவன் "மலைவாழ் கடவுள்” என்பதை ய்சுர் வேதம் கூறு
கின்றது.
’பிரத மனதவிய பிகிசஜா” என வருமடிகளில் உருத்திரன் முதல் தெய்வீக வைத்தியன்’ எனவும் சகஸ்ரம வேத ஸ்வபிவாத பேஷஜா என்பதில் ஆயிரம் மருந்துக ளையுடையவன் எனவும் எதிரிகட்கு நோயை
ஆயுதமாகப் பயன்படுத்துபவன் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்கணம்

Page 279
யசுர்வேத நம.சிவாய சிவதராய நம,' என்ற பஞ்சாட்சர மந்திரங்களும் சதருத்திரியத்தின் உட்பொருளாக விளங்கு கின்றன. உருத்திரனை சதருத்திரியம் மேலும் குறிப்பிடும் இடத்து,
நமோபவாய, ச, ருத்ராய ச சர்வாய ச பசுபதயே ச, நமோ நீலக்கிரீவாய நம ச, சிறிகண்டாய ச
நம கபர்தீனே சவ்யுப்த கேசாய ச -
எனப் பலவாறு துதிக்கின்றது.
பிற்காலத்தில் தென்னாட்டுக் கோயில்களில் அச்சனை வழிபாடுகள் வளர்ச்சியடைய சதருத்திரிய பகுதியே முன் னோடியாக அமைந்தது எனலாம். அஷ்டதோத்திர வழிபாடு (108), சதஸ்ரநாம உச்சாடனம் (1000) திரிசதி அர்ச்சனா முறைகள், தெய்வங்கள் மீது எழுந்த நாமாவளிகள் வழி
பாட்டில் செல்வாக்கைப் பெற்றன.
FITLD G6h5h
வேதத்தில் இசை வரலாறுகளை விளக்குவது சாமவே தம் ஆகும். சாமம் என்ற சொல் இசை கலந்த பாட்டைக் குறிக்கும். இவை வேள்வி முறைகளிலே பயன் படுத்தப்பட்டன. சாமசங்கிதைகளில் “கெளதம சாமசங் கிதை' பிரசித்தி பெற்றது. இதில் இரண்டு பிரிவுகள் உள்ளன. இவற்றை 'ஆர்ச்சிகம்', 'உத்தரார்ச்சிகம்' என அழைப்பர். இவ்விரு பகுதிகளும் இசையறிவைப் பெருக்கு தலைத் தனி நோக்கமாக உடையவை. இவற்றை ஒதுவத ற்கு உரிமையுள்ளவனைச் சாமம் 'உத்காதர் என அழைக் கின்றது.
ஆர்ச்சிகம் என்பது பாட்டுக்களின் முதல் தொகுதி எனப் பொருள்படும். உத்காதாவாகப் பயிற்சி பெறுபவன் முதன் முதலாக இராகங்களைப் பாடும் அறிவைப் பெறுதல் வேண்டும். இதற்கு துணை புரிவது ஆர்ச்சிகம் ஆகும். இதில் 585 தனிப்பாட்டுக்கள் உள்ளன. இவற்றுக்குப் பல வகையான இசைகள் இருக்கின்றன. இருக்கு வேத பாட்டுக்கருவை (யோநி) கொண்டமைந்த தொகுதியே ஆர்ச்சிக இசைப்பாடல்களாகும். ஆர்ச்சிகத்தில் சில பாட்டு
இந்தக் கலைக்காஞ்சியம்x
 

க்கள் காப்பு முறை அமைக்கப்பட்டுள்ளன. சில பாட்டுக் கள் அக்கினி, இந்திரன், சோமன் முதலிய தெய்வங்களை
அடிப்படையாகக் கொண்டு வரிசைப்படுத்தப் பட்டுள்ளன.
உத்தரார்ச்சிகம் என்பது பாட்டுக்களின் பின் தொகுதி என்பது பொருளாகும். ஆர்ச்சிகத்தை அறிந்த பின்னர் அதைப் போற்றிக் கூறும் பாட்டுக்கள் அனைத்தையும் மனனஞ் செய்தல் முறை. வேள்விகளிற் பயன்படும் பாடல்கள் உத்தரார்ச்சிகத்தில் அடங்கியுள்ளன. இதில் 400 பாடல்கள் உண்டு. ஒவ்வொரு பாடலிலும் மும்மூன்று பாட்டுக்கள் இருக்கின்றன. இதிலிருந்துதான் யாகங்களிற் பாடப்படவேண்டிய பாட்டுக்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இப்பாடல்களில் அமைத்துப் பாடவேண்டிய இராகங்கள்
பாடுபவருக்கு ஏற்கனவே தெரிந்திருத்தல் வேண்டும்.
எனவே சாமம் கற்க வேண்டியவர்கள் முதலில் ஆர்ச்சி கம் கற்றுப் பாடப் பயிலுதல் வேண்டும். பின் உத்தார்ச்சி
கம் பயின்று சிறந்த உத்காதாவாக விளங்கலாம்.
அதர்வ வேதம்
அதர்வவேதத்திற்கு "அதர்வாங்கிரஸ்', 'பிருகுவாங்கிரஸ், பிரமவேதம்’ எனும் பல பெயர்களும் உண்டு. ஆதியில் திரயீவித்யா வேதங்களில் சேர்க்கப்படாத இவ்வேதம் காலப்போக்கில் ஒர் வேதமாக இணைக்கப்பட்டு நான்மறை யாக்கப்பட்டது. அதர்வ வேதத்தின் பிரிவுகள் ஒன்பது என்பர். இவை சாகைகள் எனவும் சரணங்கள் எனவும், பேதங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. அவை முறையே பைப்பலாதம், தெளடம், மெளடாயனம், செளநகியம், ஜாஜலம், ஜலதம், பிரமவாதம், தேவ தர்சம், சரணவைதயம் என்பன. இவற்றுட் செளநகியம்,
பைப்பலாதம் எனும் இரு சாகைகளும் பிரசித்தி பெற்றவை.
அதர்வவேதம் மாந்திரிக நூலாகவே அமைந்துள்ளது. இவ்வேதம் கூறும் கிரியைகளும் மாந்திரிகமாகவே உள் ளன. இவ்வாறான மாந்திரிகம் ஆரம்பத்தில் தீமை பயக்கக் கூடிய காரியங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தன. பின்பு நன்மையான காரியங்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வந்தன. இவ்வேதத்தில் உள்ள மந்திரங்கள் பெரும் சக்தி வாய்ந் தவை. சில நோய் நீக்கக் கூடியவை. சில நீண்ட வாழ்வை
ZZZZZZZSSeSe sT GLaLLLL LLLCCLD TLLCGMC TTLeLeeLTTMMM

Page 280
அளிப்பன. சில பிரிந்த குடும்பங்களை ஒன்றிணைப்பன. சில பகைவரை அழித்து அரசருக்கு வெற்றியை, புகழைக் கொடுப்பவை. இவை தவிர கோபத்தை நீக்குதலையும், ஆசி கூறுதலையும், சாபம் இடுதலையும் நோக்கமாக உடையன என்பர். பேய்பிசாசுகள், அரக்கர்கள் பற்றியும்
அடிக்கடி இவ்வேதம் கூறுகின்றது.
அதர்வ சங்கிதைகளில் காணப்படும் சில பாட்டுக்கள் பேஷஜானி இராகமானவை. இவை நோய் தீர்க்கவல்ல மந்திரங்களாக விளங்குகின்றன. அதர்வ வேத அரக்கர் களே நோய்களை உருவாக்கி அவற்றைப் பெருக்கச் செய்து, மக்களைப் பிடித்து ஆவேசமாக ©|േ ഞഖ பர். இவற்றிலிருந்து மீள்வதற்கான மந்திரங்கள் நோயைத் தீர்க்க வல்ல மூலிகைகளை விளித்துக் கூறப்பட்டுள் ளன. இவ்வாறான மந்திரங்கள் மக்களுக்கு நீண்ட வாழ்வை அளிக்கவல்லவையான ஆயுஷய சூக்தங்களை உடை யவை. "நோயை நீக்கினால் மட்டும் போதாது, வாழ்வும் நீண்டு அமைதல் வேண்டும், நூறு சரத் காலங்கள் வாழ்வு அமைதல் வேண்டும், நூறு மழைக்காலங்கள் வாழ்தல் வேண்டும்” என்று இம்மந்திரங்கள் எடுத்துக் கூறுகின்றன.
பெளஷடிகாணி மந்திரங்கள் நன்மை விளைவிப்பன. உழவனும், வர்த்தகனும் தம் கருமங்களில் வெற்றியையும் இன்பத்தையும் பெறுவர். புதிதாக வீடு கட்டுதல், உழுதல், விதைத்தல், மயிர் வளர்தல், கிருமிகளும் புழுக்களும் பயிரை அழித்தல், தீயால் அபாயம் நிகழ்தல் போன்ற நிகழ்வுகள் நடைபெறும்பொழுதும் இம்மந்திரங்கள் உபயோ கிக்கப்படுகின்றன. இவை தவிர மழை பெய்வித்தல், மந்தைகளைப் பெருக்குவித்தல், சூதாட்டத் தில் வெற்றி பெறுதல், பாம்மைப் கட்டி வசப்படுத்த முதலான நோக்கங்களுக்கு பிரயோகித்தக்க மந்திரங்களும் பெளஷடி காணியிலுள்ளன. ஒழுக்கம் நன் னெறி முதலியவற்றிலிருந்து பிறழ்தலால் வரும் தீமையைப் போக்குவது மட்டுமன்றிச் செய்யப்படும் கிரியைகளைச் சிறுசிறு தவறுகளை இயற்றித் தெரிந்தும், தெரியாதும், உரியவாறு செய்யாது விடுவதால் விளையும் குறைகளை நீக்கும் ஆற்றல் வாய்ந்தது. பிராயச்சித்தம் என்பவற்றை பிராயச்சித்த சூக்தங்கள் விளக்கிக் கூறுகின்றன.
ఘభ2 5
 

ஸ்திரீகர்மாணி, கணன்ை, மனைவியிடையே தோன்றும் பிளவை நீக்கி ஒற்றுமையைத் தோற்றுவிக்கவல்ல மந்திரங் கள் இதிற் கூடுதலாக உள்ளன. காதல், திருமணம்பற்றிய விவரங்கள் இதில் விளக்கப்படுவதால் அதர்வ வேதப்பாடல் களுக்கு ஸ்திரீகர்மாணி எனப் பெயர் வழங்கப்பட்டுள்ளது. பெண்களின் நலன் பொருட்டு இம்மந்திரங்கள் பிரயோகிக்கப் படுகின்றது. இதில் விவாகம், மக்கட்பேறு. விரும்பிய ஆட வனை அடைதல் அதேபோல் ஆண் விரும்பிய பெண்ணை அடைதல், இருவரும் மணவாழ்க்கையில் இணைதல் போன் றவற்றுக்கான மந்திரங்களை இதிற் காணலாம். இம்மந்தி ரங்களை அபிசாராணி என்னும் பெயர் கொண்டு அழைப்பர்.
ராஜகர்மாணி அரசர்களின் நன்மை கருதி அவர்களின் பொருட்டே பிரயோகிக்கப்படும் மந்திரங்கள் ஆகும். இம் மந்திரங்கள் சில பகைவர்களின் மீது ஏவப்படுவன. சில அரசர்களுக்கு ஆசி கூறுவன. அதர்வக் கிரியைகளில் வல்லமை பெற்ற புரோகிதர்களைக் கொண்டு அரசன் தனது தேவைகளை நிறைவு செய்யப் பயன்படுத்திய மந்திரங்களே ராஜகர்மாணி என அழைக்கப்படுகின்றன. அரசன் பகைவரை வென்று தலைசிறந்த அரசனாகத் திகழவும் ஆற்றலையும் புகழையும் பெறவும் வேண்டிய வலிமையை அளிக்கும் மந்திரங்களும் இதில் உண்டு.
(எஸ்.து.)
நான்முகன்திருவந்தாதி
நான்முக திருவந்தாதி என்னும் நூல் வைணவர்களின் தமிழ் வேதமாய நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் நான்காம் ஆயிரமாகக் கருதப்பெறும் இயற்பா என்னும் பகுதியில் நான்காம் பகுதியாக அமைந்துள்ளது. இது திருமழிசை ஆழ்வாரால் அருளிச் செய்யப்பட்டது. நான் முகனை நாராயணன் படைத்தான்’ என்று நூல் தொடங்கு கின்றதாதலினாலும் அந்தாதி யாப்பில் அமைந்திருப்பதா லும் இதற்கு நான்முகன் திருவந்தாதி என்னும் பெயர் ஏற்பட்டுள்ளது. இது தொண்ணுற்றாறு வெண்பாக்களைக் கொண்டது. இந்நூற் சிறப்பைக் குறிப்பிட்டுச் சிராமப்
இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 281
பிள்ளை பாடிய தனியன் ஒன்றும் உண்டு. பெரும்பான்மை யான ஏடுகளில் நாலாந் திருவந்தாதி, நான்காந் திருவந் தாதி என இந்நூற்பெயர் வழங்கி வந்ததாகக் குறிப்புகள் காணப்பெறுகின்றன.
திருமாலைப் பரம்பொருளாகக் கொண்டு இலங்குவதாக லின் அப்பெருமானின் சிறப்பு, அவனைத் தொழுதலினால் ஏற்படும் பயன்கள் முதலியவற்றை மிகவும் உறைத்த பத்திச் சிறப்புடன் திருமழிசை ஆழ்வார் அருளியுள்ளார். வைணவ சமயத்தில் பெருமானுக்கு ஏற்றம் கொடுப்பதைக் காட்டிலும் அடியார்களுக்கு மிக அதிக ஏற்றம் கொடுத் துப் பாராட்டுவது மரபு அவர்கள் வழக்காறுகளில் தாசானு தாசன், அடியார்க்கடியன் போன்ற தொடர்கள் அடிக்கடி பயிலப்பட்டு வரும். அம்மரபை ஒட்டியே திருமழிசை ஆழ் வார் இந்நான்முகன் திருவந்தாதியிலும் பல பாடல்களில் அடியார்களின் பெருமையையும் போற்றிப் பாடியுள்ளார். திருமால் திருவடியிணைகளைத் தொழுதால் உடனே நற்பயன் கிட்டும் என்பது ஒரு தலை. அதை விட எளிமை யான வழி ஒன்றுண்டு. அதுயாதெனில் திருமாலடியாரைக் கண்டு தொழுது வாழ்ந்தால் தங்கள் வினை நீங்கப் பெற்று விரைவில் வைகுந்த பதவி பெறுவர் என்பதாம். பழுதாகா தொன்றறிந்தேன் பாற்கடலான் பாதம், வழுகா வகை நினைந்து வைகல் - தொழுவாரைக் கண்டிறைஞ்சி வாழ் வார் கலந்த வினைகெடுத்து, விண்திறந்து வீற்றிருப்பார் மிக்கு’ என்பதே அப்பாடலாகும். இதனைப் போன்ற பல கருத்துக் கருவூலங்கள் இந் நான்முகன் திருவந்தாதியில் செறிந்து காணப்பெறுகின்றன. (இரா.ச.)
TEUmjöf Gueuflasi
நவீன காலத்துக்கு முற்பட்ட இந்திய வணிகரில் மிகவும் பிரசித்தமானவர்கள் நானாதேசிகள். நானாதேசங்களுக்கும் சென்று வாணிப நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அவர்களு க்கு நானாதேசி என்பது ஒரு காரணப்பெயர். (வீர) வளஞ் செயர், திசையாயிரத்து, ஐந்நூற்றுவர் என்போருக்கும் நானாதேசிகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புண்டு. சில சாசனங்களில் இம்மூன்று பெயர்களும் வெவ்வேறு
வணிக கணங்களின் பெயராக வருகின்றன. கன்னட
இந்துக் கலைக்களஞ்சியம்x
 

சாசனங்களில் குறிப்பாக அந்த வேறுபாடுகள் தெரிகின்றன. அய்யாவொளே ஐநூர்வரு ஸ்வாமிகளு (ஐந்நூற்றுவர்) என்னும் வணிகரின் சாசனங்கள் சில அவர்களோடு தொடர்பு கொண்டிருந்த மேல்வரும் சமுதாயப் பிரிவுகளைக் குறிப்பிடுகின்றன.
கவறை, காத்திரிவர், செட்டி, செட்டிகுத்தர், செட்டிபுத்திரர், நாடு, நகரம், நானாதேசி, வளஞ்செயர், வீரவணிகர், ஸ்வதேசி, பரதேசி, கண்டளி, பத்திரக, காமுண்டஸ்வாமி, ஆவணக்காறர், எறிவீரர், முனைவீரர், கொங்காவளர், மும் முறிதண்டங்கள், அங்கங்காறர், வீரக்கொடி, வியவகாரிகர், பாஞ்சாலர், கும்பலிகர், தண்டுவாயிரவஸ்திரபோதகர், திலகடகர், குரந்தகர், வஸ்திரராஷஸர், தேவாங்கர்,
கன்னட சாசனங்கள் குறிப்பிடும் சமூகப் பிரிவுகளில் நானாதேசி, வளஞ்சியர் என்ற பெயர்கள் தனித்தனியாக வருகின்றமை கவனித்தற்குரியது. கர்நாடக தேசத்திலே சில காலங்களில் வளஞ்செயர் என்போர் நானாதேசிகளினின் றும் வேறான பிரிவாக அமைந்திருந்தனர் என்று கருதமுடி கின்றது. ஆனால் தமிழகம், இலங்கை ஆகியவற்றைப் பொறுத்தவரையில் கதை மாறிவிடுகின்றது. அங்குள்ள வீரசாசனங்கள் நானாதேசி ஐந்நூற்றுவர் என்னும் பெயர் களை இணைத்து விடுகின்றன.
சிறுவள்ளி என்னும் ஊர் ஒரு வீரபட்டினமாகிய வரலா ற்றை விளக்கும் வீரசாசனத்தில் நானாதேசி திசையாயிர த்து ஐந்நூற்றுவர் என்போருக்கிடையில் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டிருந்தமை தெளிவாகின்றது. அச்சாசனத் தின் ஒரு பகுதி மேல்வருமாறு அமைந்துள்ளது.
"ஜயங்கொண்ட சோழ மண்டலத்து புராணமாராயபாடி முகைநாட்டு சிறுவள்ளியில் நி()ைறந்த நாடும் நகரமும் நானாதேசியும் நடைகுடி சாத்துந் தொக்கு நி()ைறந்த ராஜாதிராஜப் பெருநிரவி எண்டிசை நான்கு திசையாயிரத்து ஐந்நூற்றுவப் பெரு(நிரவி) சமையமும் இச்சமையத்து திருவடிக்குப் பணிசெய்யும்
இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 282
எறிவீரரும் முனைவீரரும் இளசிங்க வீரரும் கொங்கவாளரும் பன்மையும் பலநியாயத்தாரும் வலங்கை (தறியாரும்) சிறுவள்ளியை நானாதேசிய தசமடி (எறி) வீரபட்டினமென்று வீரசாசனம் செய்து இவர்களுக்கு நாங்கள். இவ்வூரில் கொள்ளாததாகவும் இப்பரிசு வீரசாசனஞ் செய்து கொடுத்தோம் பதினெண் விஷையத்துப் பெருஞ்சமையம் பணிக்க”
ராஜாதிராஜப் பெருநிரவி என்னும் பெயரால் வழங்கிய திசையாயிரத்து ஐந்நூற்றுவர் என்னும் வணிக சமூகத்தின் கூட்டத்திலே நானாதேசிகளும் கலந்துகொண்டனர். அவர்க ளோடு நாடு, நகரம், நடைகுடி, சாத்து என்போரும் பெருநிரவி யான சமயத்தில் அடங்கியிருந்தமையால் நானாதேசிகள் ஐந்நூற்றுவரின் சமுதாயமாகிய சமையத்தில் அம்சமானவர் கள் என்பது உணரப்படும். பெருஞ்சமையம் உருவாக்கிய வீரபட்டினம் நானாதேசிகளின் பெயரால் அமைந்தது. அது நானாதேசிய தசமடி (எறி) வீரபட்டினம் என்று சொல்லப்பட் டது. இவற்றைக் குறிப்பிடும் சாசனத்தில் வேறொரு பிர தான அம்சமும் அடங்கியுள்ளது. அது திசையாயிரத்து ஐந்நூற்றுவரைப் பற்றியது. இப்பரிசு வீரசாசனம் செய்து கொடுத்தோம். பதினெண்விஷையத்தும் பெரும் சமையம் பணிக்க என்னும் தொடர் திசையாயிரத்து ஐந்நூற்றுவர். பதினெண்விஷையம் என்னும் பெயர்கள் ஒரு வணிகர் கணத்திற்குரிய இருவேறு நாமங்கள் என்பதை உணர்த்து கின்றது. அவ்வணிகத்திற்கு நானாதேசி என்னும் பெயரும் உரியது என்பது இலங்கையிலுள்ள வீரசாசனங்கள் மூலம்
புலனாகின்றது.
பொலன்னறுவையிலுள்ள தமிழ்ச்சாசனமொன்றில் ஐந் நூற்றுவரைப் பதினெண்பூமித்தேசி என்று வர்ணித்துள்ள னர். அச்சாசனம் மேல்வருமாறு அமைந்துள்ளது. ஸ்வஸ்தி ழரீ கி, சி, கையில் வேளாப்பள்ளி மரீ பதிநெண் பூமித்தேசி என்றனர் எனக் கருதலாம். பதவியா, வாஹங்கட என்னு மிடங்களிலுள்ள வீரசாசனங்களில் பதிநெண்பூமித்தேசித் திசையாயிரத்தஞ்நூற்றுவர் என்ற தொடர் வருகின்றது. வீரவளஞ்சியர் என்பதும் ஐந்நூற்றுவரின் மறுபெயராகச் சில காலங்களில் வழங்கியது என்பதையும் விஹாரஹின்ன
@fa55eoevä56m@8邦Lá緣
 
 

சாசனத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். இதுவரை கவனித்தவற்றின் மூலம் ஐந்நூற்றுவர் என்னும் வணிக கணம் நானாதேசி, வளஞ்செயர் பதினெண்விஷையம்
என்னும் பெயர்களாலும் வழங்கியது என்பது உணரப்படும்.
நானாதேசி வணிகர் சிறப்புப் பெற்றிருந்த காலம் கி.பி. 800 - 1400 என்பதாகும். அக்காலத்திலே தென்னிந்தியாவி லும் இலங்கையிலும் விவசாய அபிவிருத்திகளும் சிறு கைத்தொழில்களும் முன்னேற்றம் அடைந்தன. குடிசனப் பெருக்கம் கணிசமான அளவில் ஏற்பட்டது. பொருட் பரிவர் த்தனையும் சந்தைப்படுத்தும் முறைகளும் முன்னேற்றம் அடைந்தன. அத்தியாவசியப் பொருட்கள், போகப்பொருட் கள் என்பவற்றின் தேவை பெருகியது. ஆதிகாலம் முத லாக மேற்கிலும் கிழக்கிலுமுள்ள கரையோரப் பட்டினங் கள் கடல்வழியான சர்வதேச வணிகப் பாதைகளின் கேந்திர நிலையங்களாக வளர்ச்சி பெற்றுவந்தன. மேற்கில் ஐரோப்பாவிற்கும் அராபிய தேசங்களுக்கும் பாரசீகத்திற் கும் அங்கிருந்து கப்பல்களில் பொருட்கள் ஏற்றிச்செல்லப் பட்டன. அப்பட்டினங்கள் ஊடாகக் கிழக்கில் அமைந்துள்ள சுவர்ணபூமி, சாவகம், சீனம் என்பவற்றோடு குறிப்பிடத்தக்க அளவிலே வாணிபம் நடைபெற்றது. கடல்வழி வாணிபத் தில் இக்காலத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்
L-ġebl.
இக்காலத்து அரசியல் வளர்ச்சிகளும் சமய நிறுவனங்க ளின் வளர்ச்சிகளும் வணிக கணங்கள் மூலமான வாணிப, வர்த்தக அபிவிருத்திகளுக்கு ஏதுவாயிருந்தன. இக்காலம் சைவ, வைணவக் கோயில்களும், பெளத்த - சமணப் பள்ளிகளும் பெருவளர்ச்சியடைந்த காலமாகும். விசாலமாகி விரிவடைந்த கோயில்களின் உற்சவங்களும் சமயக் கிரியைகளும் சடங்குகளும் கவர்ச்சியான முறையிலும் விமரிசையாகவும் நடைபெற்றன. துTரதேசங்களில் உற்பத்தியான சந்தனம், அகில், கற்பூரம், சவ்வாது போன்ற வாசனைப் பொருட்கள் பெருமளவில் தேவைப்பட்டன. அவை சாவகம், சீனம் போன்ற தேசங்களில் உற்பத்தியா னவை. அங்கிருந்து பட்டுப் புடவைகளும் செம்பு, வெள்ளி, ஈயம், தங்கம் முதலான உலோகங்களும் இறக்குமதி செய்யப்பட்டன. அத்தகைய பொருட்களின் ஒரு பகுதி தென்னிந்தியத் துறைமுகங்களிலிருந்து மேற்கிலுள்ள
XX. 858 sou asels galajavase álcoor&solô

Page 283
தேசங்களுக்கு ஏற்றிச் செல்லப்பட்டது.
அரசரும் வணிகரும்
இக்காலத்து அரசியல் முறைகளும் வாணிபம் வளர்ச்சி பெறுவதற்கு ஏதுவாயிருந்தன. தக்கிணத்திலே கர்நாடகத் தைத் தளமாகக் கொண்டு இராஷ்டிர கூடரும் அவர்களுக் குப் பின்பு கல்யாணி சாளுக்கியரும் ஆதிக்கம் பெற்றிருந் தனர். வடஇந்தியாவிலும் தங்கள் செல்வாக்கினை ஏற்படுத் துமளவிற்கு அவர்கள் பலம் கொண்டிருந்தனர். அவர்க ளின் இராசதானிகள் கர்நாடகத்தில் அமைந்திருந்தன. கல்யாணிச் சாளுக்கியரின் ஆதிக்கம் சீர்குலைந்த பின்பு கர்நாடகத்திலே ஹோய்சளரும் வேங்கிதேசத்திலே காகதியரும் ஆட்சிபுரிந்தனர்.
தமிழகத்திலே ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல்லவரின் ஆதிக்கம் முடிவுற்றது. ஆதித்த சோழன் பல்லவர் வசமிருந்த தொண்டை நாட்டையும் கொங்குதேசத் தையும் கைப்பற்றிவிட்டான். அவனது மகனாகிய பராந்தக சோழனின் ஆட்சியில் (கி.பி. 907 - 954) சோழரின் இராச்சியம் பேரரசாகியது. ஆயினும் இராஷ்டிகூடரின் படை. யெடுப்பால் அது நிலைகுலைந்தது. அருண்மொழிவர்மனாகிய முதலாம் இராஜராஜனின் காலத்தில் அது மீட்சி பெற்றுப் பெருவலி படைத்த பேரமைப்பாகியது. அவனது மகனும் இணையிலாப் பேராற்றல் கொண்டவனுமாகிய மதுராந்தகன் வடக்கிலே கங்கபாடி, கொங்கணம் முதலானவற்றைக் கைப்பற்றினான். கங்கபாடி, நுளம்பபாடி என்பன சோழப்பேரரசின் மண்டலங்களாகி விட்டன. அவை முறையே முடிகொண்ட சோழ மண்டலம், நிகரிலிச்சோழ மண்டலம் என்று பெயரிடப் பெற்றன. ஐந்நூற்றுவர் என்னும் தமிழ் வண்ணிக கணத்தவர் சோழராட்சிக் காலத்தில் அங்கு சென்று வாணிபத்தலங்களை அமைத்தனர். மேற்கிலுள்ள மலையாள தேசமும் ஈழமும் சோழப்பேரரசின் மண்டலங்களாகிவிட்டன. அவற்றிலும் குறிப்பாக ஈழத்திலும் நானாதேசிகளான ஐந்நூற்றுவரின் செல்வாக்கு ஏற்பட்டது. மாலைதீவு, நக்கவாரம், சாவகம் என்பன மீது சோழர் மேற்கொண்ட படையெடுப்புக்களின் மூலமாக அங்கெல்லாம் நானாதேசிகள் முதலான தென்னிந்திய வணிக சமூகங்களின் செல்வாக்குப் பரவியது. சோழப்பேரரசின்
@瓜8556oa忘5em@明uá緣後線25

ஆதிக்கப் படர்ச்சியில் வணிக கணங்களும் பங்கு கொண்டிருந்தன என்பது அண்மைக் காலத்து ஆய்வுகளின் மூலம் புலனாகின்றது. வணிக கணங்களின் கப்பல்களையும் படைகளையும் சோழர் சில சமயங்களில் பயன்படுத்தியுள்ளனர் எனக் கருத முடிகின் றது. பதின்மூன்றாம் நூற் றாணி டின் முற்பகுதியில் சோழப் பேரரசு நிலைகுலைந்து வீழ்ச்சியுற்றது. அதனைத் தொடர் ந்து முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் ஆட்சியிலே (கி.பி. 1215 - 1230) பாணி டியரின் ஆதிக்கம் தென்னிந்தியாவில் உதயமாகியது. முதலாம் சுந்தரபாண்டியனின் ஆட்சிக் காலத்திலே (கி.பி.1252 - 1272) அது உன்னத நிலையை அடைந்தது. தெற்கில் இலங்கையிலும் வடக்கிலே தெலுங்கு தேசத்தின் தென்பகுதிகளிலும் பாண்டியரின் மேலாதிக்கம் பரவியது. பாண்டியரின் ஆட்சியிலே வணிக கணங்களின் செல்வாக்கு மேலும் வளர்ச்சி பெற்றது. 13ஆம் நூற்றாண்டில் எழுதப்பெற்ற வணிகரின் சாசனங்கள் அதற்கு முற்பட்ட இரு நூற்றாண்டுகளிலும் பதிவாகிய வணிகர் பற்றிய ஆவணங்
களிலும் கூடுதலானவை.
வணிகரின் சாசனங்கள்
நானாதேசிகளான ஐந்நூற்றுவர் தங்கள் சாசனங்களில் பிரசஸ்தி என்னும் வாசகங்களைச் சேர்த்துக்கொள்ளும் சிறப்புரிமை பெற்றிருந்தனர். ஐந்நூற்றுவர் 500 வீரசாசனங்க ளைப் பெற்றவர்ளென்று அவர்களின் பிரசஸ்திகள் கூறும். அவர்களின் உற்பத்தி பற்றிய மரபுவழிக் கதைகளையும் வாணிப நடவடிக்கைகளையும் அவர்கள் புரிந்த விவரங்க ளையும் வர்ணிக்கும் பாங்கில் பிரசஸ்தி அமைந்துள்ளது. ஐந்நூற்றுவர் பூரீவாசுதேவர், கண்டளி மூலபத்திரர் ஆகியோ ரின் வழிவந்தவர்கள் என்றும் பூரீஜயப்பொழில்புர பரமேஸ் வரியைக் குலதெய்வமாகக் கொண்டவர்கள் என்றும் பூமா தேவியின் மக்களானவர்கள் என்றும் சாசனங்கள் கூறும். பிரசஸ்தியின் பிரதானமான பகுதி ஐந்நூற்றுவரில் அடங்கிய சமூகப்பிரிவுகளின் பெயர்களைக் குறிப்பிடுவதாகும். கர்நாடகத்துச் சாசனங்களில் காணப்படும் அத்தகைய பெயர்களை இங்கு முன்னே குறிப்பிட்டோம். வாஹல்கட சாசனத்தில் ஐந்நூற்றுவரின் சமுதாயத்தில் அடங்கிய குழுக் களைப் பற்றிய பகுதி மேல் வருமாறு
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்கலாம்

Page 284
அமைந்துள்ளது.
'மதிதோய் நெடுங்கொடி மாடவீதிப் பதினெட்டுப் பட்டினமும் முப்பத்திரண்டு வேளாபுரமும் அறுபத்துநான்கு கடிகைத் தாவளமும் தாவளத்திருந்து அறம் வளர்க்கின்ற செட்டியும் செட்டிபுரத்திரனும் கவறை காஸ்யபனும் காமுண்டஸ்வாமியும் அங்கக்காறனும் ஆவணக்காறனும் மஞ்சனும் . மார்வத்து நாடியும் கொங்கவளர் முந்நூறும் கொற்றக்குடைப் பன்மை முந்நூறும்.”
பதினெண்கீழ்பூமித் தேசித் திசையாயிரத்து ஐந்நூற்றுவர் என்பது பல சமூகப் பிரிவுகளையும் நிறுவனங்களையும் உள்ளடக்கிய ஒரு சமுதாயம் என்பது பிரசஸ்தியின் வாசகத்தால் உணரப்படும். அதில் பல வணிகர் குழுக்கள், அவர்களுக்குச் சேவை புரிந்த அங்கக்காறர், வேளைக்கா றர், கொங்கவாளர், அத்திகோசம், இளஞ்சிங்க வீரர் முத லிய படைவீரரும் வேறு பணிகளைச் செய்வோரும் அடங்கி யிருந்தனர். அத்தகைய பேரமைப்பான சமுதாயம் பிரதான மான விடயங்கள் தொடர்பாகக் கூட்டமாகக் கூடுவது வழமை. அப்படியான கூட்டம் பெருநிரவி என்று சொல்லப் படும். வணிக கணத்தவரின் தலைமையிலான சமுதாயம்
சமயம் என வழங்கியது.
பல நிலைகளில் உள்ளனவும் வணிகரின் கட்டுப்பாட்டில் அமைந்தனவுமாகிய பட்டினங்களும் சமயத்தில் அடங்கி யவை என்பது பிரசஸ்தியின் வாசகத்தால் உணரப்படும். இந்த விளக்கத்திற்கு ஆதரமாகக் காட்டூர் சாசனத்திலுள்ள மேல்வரும் பகுதியைக் கொள்ளலாம்.
"பதினெட்டுப் பட்டினமும் முப்பத்திரண்டு வேளாபுரமும் அறுபத்து நான்கு கடிகைத் தாவளமும் செட்டியும் செட்டிபுரத்தினும் கவளையுங் காத்திவனுங் கண்டளியும் காமுண்டஸ்வாமியும் சிங்கமும் பத்திரகனும் சிறுபுலியும் வலத்துக் கையும் வாரியனும் உள்ளிட்டதாகத்
இந்தக் கலைக்களஞ்சியம்x
線災囊錢線25
 

திருமயிலாற்றில் நிறைந்த நானாதேசிப்
பெருநிரவியோம்”
நானாதேசிப் பெருநிரவி என்று சொல்லப்படுவது பல குழுக்களை உள்ளடக்கியது. அவ்வாறு உள்ளடக்கிய ஒவ்வொரு பிரிவினரின் பெயருடனும் உம்முச்சாரியை சேர்ந்து வருகின்றது. அது பொதுவாக வணிகரின் பிரசஸ்தி கள் எல்லாவற்றிலும் காணப்படுவது. பட்டினங்கள், நெடுந்துாரஞ் சென்று வியாபாரஞ் செய்யும் வணிகர், குறிப் பிட்ட இடங்களைச் சேர்ந்த வியாபாரிகளான தளச்செட்டி கள், நாட்டுச் செட்டிகள் போன்றோர் கம்மாளர், நெசவாளர் முதலான உற்பத்தியாளர், கொங்கவாளர், எறிவீரர், முனை வீரர், வேளைக்காறர் முதலிய படையினர், ஒட்டன், வாரி யன், கழுதைப்பாகன் முதலிய பணிமக்கள் ஆகியோர் அனைவரும் அடங்கியதே சமையம். வீரர்களையும் பணி களை நிறைவேற்றும் மக்களையும் மணிமக்கள் என்றும் பணிசெய்மக்கள் என்றும் சொல்வது வழமை. இக்குழுக்க ளில் அடங்கியவர்கள் தம்முள் ஒருவரைக் குறிப்பிடுமிடத்து உடப்பிறந்தான் என்றும் சகையர் என்றும் சொல்வர். சமையத்தின் அதிபர்களான பெருவணிகரை ஏனையோர் ஆச்சமார், மூதாதைகள், மாதாக்கள் எனப் பலவாறு அழைத் தனர். சமையம் என்னும் வணிக சமுதாயக் கட்டமைப்பில் உறவுகளையும் பந்தங்களையும் குறிப்பிடுவதற்கு பொது வழக்கில் இன உறவுகளைக் குறிக் கும் சொற்கள் பயன் படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும்.
நானாதேசித் திசையாயிரத்து ஐந்நூற்றுவரின் சமையமா னது ஒரு பரந்த சமுதாயம். அது அளவில் மிகப் பெரியது. அதில் பல சமூகப் பிரிவுகள் அடங்கியிருந்தன. பல வணிக கணத்தவரும் வீரர் கணங்களும் அக்கசாலையின ரும் பலவகைப் பணிமக்களும் பட்டினங்களும் இணைந்த அமைப்பாக அது விளங்கியது. நாடு, மண்டலம், இராச்சியம் என்பனவற்றின் எல்லைகளைக் கடந்த ஒரு சமுதாயமாக வும் அது அமைந்திருந்தது. வாணிபமே அந்த இணைப்பு க்கு அடிப்படையானது என்பதால் ஐந்நூற்றுவரான பெரு வணிகரின் தலைமையில் அது இயங்கியது. ஐந்நூற்றுவர் சில பொதுவான அறநெறிகளைப் பின்பற்றினார்கள். அவற்
றைச் ச()ைமயதர்மம் என்றனர். சமூக உறவுகளில் மாற்ற
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 285
ங்களும் புத்துணர்ச்சியும் சமய பண்பாட்டு அபிவிருத்திக ளும் ஏற்படுவதற்கு வணிகர் சமுதாயம் கணிசமான அள வில் பொறுப்பேற்றது.
வாணிப நடவடிக்கைகள்
நானாதேசி வணிகர் தரைவழியாகவும் நீர் வழியாகவும் ஏழு கண்டங்களுக்கும் பதினெட்டுத் தேசங்களுக்கும் சென்று வாணிபம் செய்ததாகச் சொல்லப்படுகின்றது. கழுதை, ஒட்டகம், எருமை, மாடு முதலிய விலங்குகளில் அவர்கள் பொருள்களை ஏற்றிச் சென்றனர். மேலும் அவர் கள் ஊர்களிலும் அங்காடிகளிலும் நகரங்களிலும் தாவளம் அமைத்து வாணிபம் செய்தனர். நானாதேசிக ளான ஐந்நூற்றுவர் தென்னிந்தியாவினதும் இலங்கையின தும் உள்நாட்டு வாணிபத்திலும் அயல்நாட்டு வாணிபத்தி லும் பெரும் பங்குகொண்டிருந்தனர் என்பது சாசனங்கள் மூலமாகத் தெளிவாகின்றது. சுமாத்திராவில் கி.பி.1078 ஆம் ஆண்டில் எழுதப்பெற்ற சாசனமொன்று ஐந்நூற்றுவர் அங்கு சென்று வாணிபம் செய்தமையினைக் குறிப்பிடுகின் றது. அவர்கள் அங்கு மாதங்கரி வல்லபதேசி உய்யவந்த பட்டினம் என்னும் வணிக நகரத்தையும் அமைத்திருந்தனர்.
அருமண (மியன்மார்) தேசத்தின் தலைநகரான அரிவட்ட னபுரத்தில் நானாதேசிகள் நிலைகொண்டிருந்து வாணிபம் செய்தனர். அங்கு ஒரு பெருமாள் கோயிலை அமைத்து அதற்கு நானாதேசி விண்ணகர் எனப் பெயரிட்டனர். மலை மண்டலத்து மகோதைப் பட்டினத்து ஈராயிரன் சிறியனான குலசேகர நம்பி என்பவன் அக்கோயில் மண்டபமொன் றினை அமைத்து அதில் நந்தாவிளக்கு ஒன்றினை எரிப்பத ற்கு ஏற்பாடு செய்தான். அதனைப் பற்றிய சாசன வாசகம் மேல்வருமாறு உள்ளது. “ஸ்வஸ்தி பூரீ திருச்செல்வம் பெறுக. புக்கமான அரிவட்டனபுரத்து நானாதேசி விண்ணகர் ஆழ்வார் கோயில் திருமண்டபமுஞ் செய்து திருக்கதவும் இட்டு இந்த மண்டபத்துக்கு நின்றெரிகைக்கு நிலைவிளக்கொன்றும் இட்டேன். மலைமண்டலத்து மகோதையர் பட்டினத்து ஈராயின் சிறியனான குலசேகர
நம்பியேன் இது பூரீ தன்மம் மலைமண்டலத்தான்”
வணிக கணத்தவர் வியாபாரம் செய்த வாணிபப் பொருட்
கள் அவர்களின் சாசனங்கள் சிலவற்றிலே சொல்லப்படு
இந்துக் கலைக்களஞ்சியம்x
囊25
 

கின்றன. பதினெட்டு வகையான தானியங்கள், நெய், வெண்ணெய், எண்ணெய், உப்பு, உள்ளி முதலிய பொருட்கள், இஞ்சி, மஞ்சள், சுக்கு, மிளகு, கடுகு, சீரகம், போன்ற வாசனைச் சரக்குகள், சந்தனம், அகில், கற்பூரம், சவ்வாது, புனுகு போன்ற வாசனைத் திரவியங்கள், மணி, முத்து, பவளம், நவரத்தினங்கள் போன்ற அரும்பொருட்கள், கனிவருக்கங்கள், வெற்றிலை, பாக்கு, மலர்கள், மலைகள், மருந்து வகைகள், பருத்தி ஆடைகள், படுக்கை விரிப்புகள், பொன், வெள்ளி, செம்பு, இரும்பு முதலியவற்றிலான பொருட்கள், கருவிகள், கொள்கலன்கள், படைக்கலங்கள், கவசங்கள், யானை, குதிரை, மாடு முதலிய உயிரினங்கள் ஆகியனவற்றை எல்லாம்
அவர்கள் விற்பனை செய்தனர்.
அரசரோடும் சமய நிறுவனங்களோடும் விவசாயிகளோடும் அக்கசாலையினர் முதலான உற்பத்தியாளர்களோடும் நெருங்கிய உறவுகளை நானாதேசிகள் ஏற்படுத்தியிருந்த னர். வீரபட்டினம், நகரம், தாவளம், வேளாபுரம் போன்ற பட்டினங்களையும் வியாபாரத்தலங்களையும் அவர்கள்
உருவாக்கியிருந்தனர்.
வணிகரின் சமய, கலாசாரப் பணிகள்
வளமான வாழ்க்கையினையும் செல்வங்களையும் பெறும் வாய்ப்பினைக் கொண்டிருந்த வணிகர் தங்கள் மேலதிகமான வருமானங்களில் குறிப்பிடத்தக்க பகுதியினை சமயப் பணிகளுக்கும் பொதுப்பணிகளான தானதருமங்களுக்கும் செலவிட்டார்கள். கோயில்கள், பெளத்தப் பள்ளிகள் போன்ற சமய நிறுவனங்களை அமைப்பதிலும் அவற்றை ஆதரிப்பதிலும் அவர்கள் ஆர்வம் கொண்டிருந்தனர். திருத்தலங்களிலே கோயில் மண்டபங்களும் மடங்களும்
மூலவர் படிமங்களும் ஐந்நூற்றுவரால் அமைக்கப்பட்டன. ஐந்நூற்றுவன் ஈஸ்வரம், ஐந்நூற்றுவன் மண்டபம், ஐந்நூற்றுவன் மடம் என்னும் பெயர்கள் சில சாசனங்களில் காணப்படுகின்றன. அவற்றிலே சிலவற்றை இங்கு உதார ணங்களாகக் குறிப்பிடலாம். ஐந்நூற்றுவரர் கோயில் என வழங்கும் ஆலயமொன்று மட்டுரில் இன்றும் உள்ளது. அதன் பரிபாலனம் செட்டியார் சமூகத்தவரின் பொறுப்பில் உள்ளது. அது முற்காலத்தில் ஐந்நூற்றுவர் குடும்பங்களி னால் அமைக்கப்பெற்றது என்பது ஐதீகம், பதின்மூன்றாம்
ஐ இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 286
நூற்றாண்டில் எழுதப்பெற்ற வணிக நகரங்களைப் பற்றிய பிரான்மலைச் சாசனத்தில் மட்டூர் பற்றிய குறிப்புள்ளமை கவனித்தற்குரியது. கர்நாடகத்திலே, கல்பார்காபு மாவட்ட த்துச் ஷோராபூர் தாலுகாவிலுள்ள பூரீகரிதிகே என்னும் ஊரிற் காணப்படும் அனுமார் கோயில் வளாகத்திலுள்ள சாசனமொன்றிலும் ஐந்நூற்றேஸ்வர தேவர் பற்றிக் கூறப் பட்டுள்ளது.
திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயிலில் ஐந் நூற்றுவன் மண்டபம் என வழங்கிய கட்டுமானம் இருந்தது. அது ஒரு சமயத்திலே கைக்கோளரினாற் புனரமைக்கப்பட் டது. ஐந்நூற்றுவன் காவணம் என்பதைப் பற்றிய குறிப்புகள் பல சாசனங்களில் உள்ளன. சிவகங்கை யிலுள்ள மலைக்கொழுந்து ஈஸ்வரத்துக் கல்வெட்டொன்று அங்குள்ள திருக்காவணம் பற்றிக் குறிப்பிடுகின்றது. நெல்லூர் மாவட்டத்தக் கிருஷ்ணபட்டணத்துச் சித்தேஸ் வரம் என்னும் கோயிலில் ஐந்நூற்றுவன் காவணம் என்ற மண்டபம் இருந்தது. அதிலே ஒரு சமயத்தில், நாடு, நகரம், மலைமண்டலம் என்பவற்றிலுள்ள அஞ்சுவண்ண வணிகரும் நானாதேசி பதினெண் பூமி சமஸ் த பரதேசிகளும் கூட்டமாகக் கூடினார்கள். ஐந்நூற்றுவன் காவணம் என்னும் கோயில் மண்டபங்கள் அநேகமானவை. நானாதேசி முத லான வணிகர் கணங்கள் அவற்றிலே தங்கள் கூட்டங்
களை நடத்துவது வழமை.
இலங்கையில் மத்திய காலத்திலே நானாதேசிகளான ஐந்நூற்றுவர் சிவாலயங்கள், அம்மன் கோயில்கள். பெளத் தப் பள்ளிகள் என்பன பலவற்றை அமைத்தனர். ஆலயங் களை ஆதரிப்பதிலும் பராமரிப்பதிலும் ஈடுபட்டனர். இராமன் புஜங்களான விஜயவல்லவர் என்னும் செட்டி ஒருவனைச்
சிவாலயப்பிரியன் என்று சாசனமொன்றில் வர்ணித்துள்ளனர்.
பொலன்னறுவையில் அமைந்துள்ள இந்துக்கோயில்கள் பல வணிகரின் திருப்பணிகளாகும். வணிக நகரங்களான விக்கிரமசலாமேகபுரம் (புதுமுத்தாவை), ஐபொழில் பட்டி னம் (பதவியா) ஆகியவற்றிலுள்ள கோயில்களில் பெரும்
பாலானவை வணிக கணத்தவரின் திருப்பணிகளாகும்.
பதவியாவிலுள்ள இரவிகுலமாணிக்க ஈஸ்வரம் என்னும்
இந்துக் கலைக்களஞ்சியம்ஐx
 

கோயில் வீரபட்டினத்தில் அமைந்திருந்தது. சோழர் காலத்து இரண்டாம் சோழ இலங்கேஸ்வரனின் பெயரால் விளங்கிய விக்கிரமசலாமேக ஈஸ்வரம் விக்கிரமசலாமேக புரம் என்னும் வீரபட்டினத்தில் அமைந்திருந்தமை குறிப்பி டத்தக்கது. விக்கிரமசலாமேகபுரம் முதலான நகரங்களிலும் அநுராதபுரம், பொலன்னறுவை போன்ற பெருநகரங்களிலும் அமைந்திருந்த அம்மன் கோயில்கள் வணிக கணத்தவரின் திருப்பணிகளாகும்.
நானாதேசிகளான ஐந்நூற்றுவரால் நிர்மாணிக்கப்பெற்ற பெளத்த கோயில்கள் ஐந்நூற்றுவன் (பெரும்).பள்ளி என்னும் பெயரால் வழங்கி வந்தன. அத்தகைய பள்ளிகள் விக்கிரமசலாமேகபுரம், பொலன்னறுவை, வெலிக்கந்தை ஆகிய இடங்களில் அமைந்திருந்தன. நானாதேசிகள் தம் பேரால் விக்கிரகங்களையும் செய்துகொடுத்தனர். ஜேதவ னாராமத்து வளாகத்தில் நடைபெற்ற அகழ்வாராய்வு களிற் கிடைத்த அக்கினி வீரபத்திரரின் படிமமொன்றின் பீடத்தில் ரீநானாதேசியன் என்று 12ஆம் நூற்றாண்டுக் குரிய வரிவடிவங்களில் எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடற்குரியது.
நானாதேசிகளின் முத்திரை
நானாதேசிகள் பயன்படுத்திய முத்திரைகளில் இரண்டு மட்டுமே இதுவரை கிடைத்துள்ளன. அவற்றிலொன்று கர் நாடக தேசத்திலுள்ள செப்புப் பட்டயமொன்றில் உள்ளது. மற்றையது இலங்கையிலே ஏறக்குறையக் கால்நூற்றா ண்டுக்கு முன் கிடைத்தது. அது ஹம்பாந்தோட்டை மாவட் டத்திலுள்ள அம்பலாந்தோட்ட என்னும் ஊரில் 1985ஆம் ஆண்டு வயலொன்றிலே கண்டு எடுக்கப்பெற்றது. பன்னிர ண்டு அவுன்சு நிறைகொண்ட இவ்வினோதமான வெண் கலம் 4.5 சென்ரிமீற்றர் உயரமுடையது. வட்டவடிவமான அதன் அடிப்புறம் 4 சென்ரிமீற்றர் 1.5 மில்லிமீற்றர் விட்டம் கொண்டது. வார்ப்புச் சிலையின் பீடம் போன்ற வடிவில் ஒன்றன் மேலொன்றாக அமைந்தாற் போன்ற தளங்கள் கொண்ட உருவமே அதன் தோற்றமாகும். கைபிடியாக அமைந்த அதன் மேற்புறம் பவளமணியின் அளவுடைய உருண்டையான தோற்றமுடையது. தோற்றத்தில் அது தூபியின் மிகச்சிறிய பிரதிமை போன்றது. ஆயினும் “பரிசுத்த மலை'யின் உருவம் நானாதேசிகளின் கொடிக
ளில் வரையப்படுவது வழக்கம் என்று அவர்களின் சாசனங்
இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்கணம்

Page 287
கள் கூறுவதால் இவ்வெண்கலத்தின் வடிவம் மலையின்
பிரதிமையாக அமைக்கப்பெற்றது என்று கருதலாம்.
ജൂഖിഖങ്ങിട്ടുണ്ഡ முத்திரையின் அடிப்புறத்தில் காணப்படும் பிரதான வடிவம் நான்கு கரங்களுடன் ஸ்தானக (நிற்கும்) நிலையிலுள்ள பெண் தெய்வத்தின் தோற்றமாகும். இரு கரங்களும் கீணோக்கித் தொங்கிய கோலமானவை. உயர் த்திய மேல் வலக்கரம் திரிசூலம் ஏந்திய வடிவமானது. வலக்கால் மிருகமொன்றின் தலைமேல் ஊன்றிய கோலத் திலே தெரிகின்றது. அந்தத் தலை மகிஷத்தின் தலை போன்று காணப்படுவதால் காலினால் மிதிக்கப்படும் உரு வம் மகிஷாசுரனைக் குறிக்கும் எனக் கொள்ளலாம். தெய் வத்தின் இடக்கால் சற்று முன்னோக்கி உயர்த்தி, முழங்கா லில் மடித்துக் கீணோக்கித் தொங்கிய வண்ண
மாய் அமைந்துள்ளது.
தெய்வத்தின் தலைமேல் கிரீடம் போன்ற அமைப்புள்ளது. கிரீடத்தின் மேல் வெண்கொற்றக் குடையின் தோற்றம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனருகில் காணப்படுவது பசும்பையின் உருவமாகும். அதன் வடிவம் இரட்டைக் கோடுகள் சேர்ந்த V என்ற ஆங்கில எழுத்தின் தலை கீழான தோற்றமாகும். தெய்வத்தின் ஒவ்வொரு பக்கத்தி லும் ஒவ்வொரு பெண்ணின் நின்ற கோலமான உருவம்
இந்துக் கலைக்களஞ்சியம்x
 
 

காணப்படுகின்றது.
பிரதிமாலஷணங்களின் அடிப்படையில் இந்த முத்திரையி லுள்ள நான்கு கைகள் பொருந்திய பெண்ணின் வடிவத்தை மகிஷமர்த்தனியின் கோலமான துர்க்கை என்று அடையா ளம் காணமுடிகின்றது.இந்து சமயமரபிலே திரிசூலம், மகிஷாசுர சங்காரம், அக்கினிச் சுவாலைகள் பொருந்திய கிரீடம் ஆகிய அம்சங்கள் துர்க்கையோடு தொடர்புடையன
வாகும்.
வெண்கல முத்திரையின் அடித்தளத்தில் ரீநானாதேசி யன் என்று எழுதப்பட்டுள்ளது. எனவே அது நானாதேசி வணிக கணத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினருக்கு உரியதென் பதும் அது அவர்களால் பயன்படுத்தப்பட்டது என்பதும் g) 600TJLJLJ(BLD. முத்திரையிலுள்ள வரிவடிவங்கள் 12ஆம் நூற்றாண்டுக்கு உரியன என்று கொள்ளமுடிவதால் அது அந்நூற்றாண்டில் புழக்கத்தில் இருந்தது என்று கருதலாம். அது வணிக நகரம் ஒன்றின் பெயரால் பயன்படுத்தப்பட் டது என்று கொள்ளமுடிகின்றது. பற்றுச் சீட்டுக்களிலும் பொதிகள், பொட்டலங்கள் போன்றவற்றிலும் இலச்சினை இடுவதற்கு அம்முத்திரை நானாதேசிகளால் பயன்படுத்தப்
பட்டதாகும். (d.L.)
இந்து சமய கலாசார அலுவல்கள் தி6ைOOக்களம்

Page 288
idyasatogne Tib
சிவஞானசித்தியார் அளவைப் பாடல்களுக்கு உரை கண்டோர் நிக்கிரகஸ்தானம் எனப்படும். தோல்வித்தானங் கள் 22 இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். சிவாக்கிரக யோகியின் உரையிலும் ஈழத்தவரான திருவிளங்கம் என்பா ரின் உரைவிளக்கத்திலும் நிக்கிரகஸ்தானம் ஓரளவு விரி வாக ஆராயப்பட்டுள்ளது. தருக்கரீதியாக விவாதிப்போரி டையே தோல்வியடையும் சந்தர்ப்பம் எவருக்கு ஏற்படுகிற தென நடுவர்கள் தீர்மானிப்பதற்கு உரிய நடைமுறைசார் உத்தியே நிக்கிரகஸ்தானம் எனப்படும்.
இந்திய தருக்க வரலாற்றில் முதன்முதலாக நிக்கிரகஸ் தானம் பற்றிக் குறிப்பிட்டு ஆராய்ந்தவர் சரகர். இதனைத் தோல்வியடைதல்' என அவர் வரைவிலக்கணப்படுத்தியுள் ளார். தோல்வியடையும் இடம் அல்லது சந்தர்ப்பம் என இதனை நாம் விளக்கலாம். ஒரு விவாதத்தில் தோல்வி யடையும் சந்தர்ப்பம் 15 என சரகர் பட்டியலிட்டுள்ளார். தோல்வியடையும் சந்தர்ப்பங்கள் 15உம் தம்மியல்பில் வேறுபட்டவை. அவற்றில் சில தர்க்கப்போலிகளாகும். வேறுசில தவறான மொழிப்பயன்பாட்டினால் ஏற்படுபவையா கும். இன்னும் சில விவாதவிதிகளை மீறுவதால் எழுபவை யாகும். எவ்வாறாயினும் சரகர் தோல்விஸ்தானங்களை, அவை இன்னவை எனப் பட்டியலிட்டுள்ளாரே தவிர வகைப் படுத்திக் கூறவில்லை. அக்ஷபாதர் எனப்படும் கெளதமர் தனது நியாய சூத்திரத்தில் சரகரின் 15 தோல்வித்தானங்க ளுடன் மேலதிகமாக 7 தோல்வித்தானங்களையும் இனங் கண்டு எல்லாமாக 22 நிக்கிரகஸ்தானங்கள் இருப்பதாக எடுத்துக்காட்டியுள்ளார். அக்ஷபாதர் மேலதிகமாக எடுத் துக்காட்டிய நிக்கிரகஸ்தானங்கள் தொடர்பாகக் கருத்து வேறுபாடுகள் தருக்க அறிஞர்களிடையே காணப்படுகின் றன. இவர்களில் காசிநாத சாஸ்திரி, கோரக்கநாத சக்கர வர்த்தி ஆகிய இருவரும் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களு டைய அபிப்பிராயப்படி அப்பிராப்த காலம், அன்னனுகாஸ் னம், அப்பிரதீப, விட்ஷேயம் ஆகிய நான்கு தோல்வித் தானங்கள் மட்டுமே சரகருடைய வகையீட்டிற்கு நியாய சூத்திர ஆசிரியரால் மேலதிகமாகச் சேர்க்கப்பட்டவை. ஏனைய மூன்றும் உபபிரிவுகளாகக் கருதப்படலாமேயன்றி
@ögáseoa油5em@9uá緣26

தனிச்சிறப்பியல்பு பெற்ற வகையீடுகள் அல்லவென்பது இவர்களின் கருத்தாகும். அடுத்து நிக்கிரகஸ்தானங்களின்
வகையீடுகளை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
1.பிரதிஞ்ஞாஹானி
பிரதிஞ்ஞாஹானியை வரைவிலக்கணப்படுத்தும் பொழுது பிரதிதிருஷ்டாந்தசம எனப்படும் 'ஜாதி” என்ற தருக்க வடிவத்தைப் பயன்படுத்தி அக்ஷபாதர் அதனைத் தெளிவு படுத்துகிறார். ஒத்த தன்மை அல்லது வேற்றுமைத் தன்மை என்பதை அடிப்படையாகக் கொண்டு முன்மொழியப்பட்ட கருத்துரையை நிராகரிப்பதே ஜாதி என்ற வாத முறையா கும். எதிராளி ஜாதியைப் பயன்படுத்தி முரண்படுபவனின் வாதத்திற்கு எதிர்ப்புக் கூறுமிடத்து, அவ்வெதிர்ப்பை முரண்படுபவரும் ஏற்றுக்கொள்ளின் முரண்படுபவனுன் வாத மும் வலிதற்றதாகி, அவன் தோற்றவனாகின்றான். இத்த கைய சந்தர்ப்பமே பிரதிஞ்ஞாஹனி எனப்படும். அதாவது முரண்படுபவர் தனது கருத்துரையைத் தானே கைவிடுவது பிரதிஞ்ஞாஹனி. மேல்வரும் உரையாடல் வடிவத்தால் இதனைத் தெளிவுபடுத்தலாம்.
முரண்படுபவர்: aயிடம் Sஉள்ளது. ஏனெனில் H இடம் Sஉள்ளதாலாகும். உதாரணமாக Dயிடம் உம் Sஉம் இருப்பது போல Aயிடம் Hஉம்மும், அதனால் Sஉம் இருப்பது போலாகும்.
எதிராளி; ஆனால் Eயிடம் Hஇருந்தாலும் அதனிடம் Sஇல்லை என்னும் முரண்நிலை உதாரணம் உமது பிரதிக் ஞையை ஐயத்திற்கு உள்ளாக்குகிறது.
முரண்படுபவர்: சரிதான் உம்மாற் தரப்பட்ட முரண்நிலை உதாரணத்தைப் பொறுத்தவரையில் உண்மையே.
இங்கு முரண்படுபவரின் பதில் காரணமாக அவரே தனது கருத்துரையைக் கைவிட்டு, தோல்வியடையும் நிலை ஏற் படுகிறது.
2. பிரதிஞ்ஞாந்தரம்
எதிராளியின் நிராகரிப்பிற்கு பதிலிறுக்க முடியாதென
அறிந்த முரண்படுபவர் எதிராளியைத் திசைதிருப்பும் வண்
ணம் பிறிதொரு கருத்துரையை கூறுதலாகும். இவ்வாறு
0 緣
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 289
செய்வது முரண்படுபவரைத் தோல்விக்கு இட்டுச் செல்லும், நிறுவப்படவேண்டியதை விடுத்து பிறிதொரு கருத்துரையை மொழிவதாகும்.
முரண்படுபவர்: Aஎன்பது Sஐ உடையது. ஏனெனில் H ஐ உள்ளடக்கியவை எல்லாம் Sஐ உம் உள்ளடக்கிய தனாலாகும். உதாரணமாக Dயிடம் Hஉம் Sஉம்
(இரண்டும்) உண்டு.
எதிராளி; ஆனால் Eயிடம் Hஇருக்கிறது. ஆனால் Sஇல்லை. எனவே A யிடம் S உளதென்ற உமது கருத் துரை தவறாகும்.
முரண்படுபவர்; ஆனால் எனது வாதமோ A என்பது Dயை ஒத்ததென்பதாகும். அது எது போலவெனில் D என்பது Fஐக் கொண்டிருப்பதுபோல Aஉம் Fஐக் கொண்டிருக்கிறது என்பதாகும்.
இங்கு முரண்படுபவர் எதிராளிக்குப் பதிலிறுக்காது A என்பது Fஐக் கொண்டிருக்கின்றதெனப் பிறிதொரு கருத் துரையைக் கூறுவதால் அவர் தோற்றவராகிறார்.
3. பிரதிஞ்ஞாவிரோதம்
கைவிட்டு பிறிதொன்றை நிறுவலிற்கான ஹேதுவாக முன்மொழிவானாயின் அதுவும் ஹேதுவந்தரம் என்ற தோல் வித்தனமாகி விடும். அதாவது பிறிதொரு ஹேதுவை முன்மொழிந்த குற்றத்தால் தோல்வியடைந்தவனாகிறான். மேல்வரும் உதாரணத்தைக் கவனிக்கவும்.
முரண்படுபவர்: A ஆனது S ஐக் கொண்டி ருக்கின்றதென் றால் (அது) Hஇடம் S இருப்பதனால் ஆகும். உதாரணமாக D 9Lib H g if S S if S}(bjug (3LJT6) ASL b Hg) Lib இருக்கிறது. அதனால் (A) அதனிடம் Sஉம் இருக்கிறது.
எதிராளி: . எனவே H ஆனது S ஐ நிறுவுவதற்கு போதியதல்ல.
முரண்படுபவர்: சரி, Aயிடம் S உள்ளது. ஏனெனில் Fஇருக்குமிடமெல்லாம் S உள்ளது. உதாரணமாக
Eஆனது F, S ஆகிய இரண்டையும் கொண்டது போலவே
இந்தக் கலைக்களஞ்சியம்x
 
 
 

Aயிடம் F உண்டு. ஆகவே, அதனிடம் Sஉம் உண்டென நான் வாதிடுவேன்.
4.பிரதிஞ்ஞா சந்நியாசம்
முரண்படுபவனின் கருத்துரையை எதிராளி நிராகரிக்கும் பொழுது முரண்படுபவன் தன் கருத்துரையை வாபஸ் பெற் றால், அவன் தோற்றவனாவான். இதுவே பிரதிஞ்ஞா சந்நியாசம் அதாவது கருத்துரையை வாபஸ் பெறல் என்ற தோல்வித்தனமாகும்.
முரண்படுபவர்: AஆனதுS ஐக்கொண்டது. ஏனெனில் Hஆனது Sஐக் கொண்டதாகும். உதாரணமாக Dஆனது Hஐயும் Sயும் கொண்டது. அதாவது Aஆனது Hஐக் கொண்டிருப்பதால் அதனிடம் S இருப்பது போலாகும்.
எதிராளி; ஆனால். ஆகவே Aஆனது Sஐக் கொண்டிராது இருக்கலாம்.
முரண்படுபவர்: Aஆனது Sஐக் கொண்டிருக்கும் என்ற கருத்துரையை நான் முன்மொழியவில்லை.
5. ஹேதுவந்தரம் முரண்படுபவர் ஒரு கருத்துரை ஒன்றை நிறுவுதல் வேண்டி, ஒரு ஹேதுவை முன்வைக்கும்பொழுது, எதிராளி அந்த ஹேது கருத்துரையை நிறுவுவதற்குப் போதுமானதல்ல எனக்கூற முரண்படுபவர் முன்மொழியப்பட்ட தனது ஹேதுவை வாபஸ்பெற்று, பிறிதொரு ஹேதுவை ஏற்புடை யதெனக் கருதி முன்னையதைக் கைவிட்டு பிறிதொன்றை நிறுவலிற்கான ஹேதுவாக முன்மொழிவாராயின் அதுவும் ஹேதுவந்தரம்ஸ் என்ற தோல்வித்தனமாகி விடும். அதா வது பிறிதொரு ஹேதுவை முன்மொழிந்த குற்றத்தால் தோல்வியடைந்தவனாகின்றான். பின்வரும் உதாரணத் தைக் கவனிக்கவும்.
முரண்படுபவர்: A ஆனது S ஐக் கொண்டிருக்கின்ற தென்றால் (அது) Hஇடம் S இருப்பதனால் ஆகும். உதார ணமாக D இடம் H உம் Sஉம் இருப்பது போல Aஇடம்
Hஉம் இருக்கிறது. அதனால் (A) அதனிடம் Sஉம் இருக்கிறது.
* இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்கaாம்

Page 290
எதிராளி: . எனவே H ஆனது S ஐ நிறுவுவதற்கு போதியதல்ல.
முரண்படுபவர்: சரி, aயிடம் S உள்ளது. ஏனெனில் Fஇருக்குமிடமெல்லாம் S உள்ளது. உதாரணமாக Eஆனது FS ஆகிய இரண்டையும் கொண்டது போலவே Aயிடம் F உண்டு. ஆகவே, அதனிடம் Sஉம் உண்டென நான் வாதிடுவேன்.
6. அர்த்தாந்திரம்
முரண்படுபவர் விவாதத்துடன் தொடர்பற்ற விடயங்களை விவாதத்தின் பொழுது கூறிக்கொண்டிருப்பாராயின், அவர் தோற்றுவாராவார்.
உதாரணமாக இறைவன் இருக்கிறான் என்ற கருத் துரையை நிறுவுவதற்கு 2+2=4 என்று கூறிக் கொண்டிருப் பாரானால் அவர் அர்த்தாந்தரம் என்ற தோல்வியைத் தழுவியவராகிறார்.
7. நிரர்த்தகம்
அர்த்தாந்திரத்திற்கு உள்ளாகும் முரண்படுபவர், விவாத த்திற்குத் தொடர்பற்ற விடயங்களைக் கூறினும் அவர் கருத்துடைய விடயங்களையே கூறுவார். ஆனால் நிரார்த்த கத்திற்கு உள்ளாகும் முரண்படுபவரோ தனது கருத்து ரையை நியாயப்படுத்துவதற்குப் பதிலாக அர்த்தமற்ற சொற்களைக் கூறுவதாகும். நிராத்தகம் என்பதற்கு அர்த்த மற்றது என்பது பொருள். உதாரணமாக சப்தம் உள்ளார்ந் தது என்ற கருத்துரையை நியாயப்படுத்துவதற்கு ABCD ஏனெனில் EFGH, XYZ என்பதைப்போல எனக்கூறுவது.
8. அவிஞ்ஞாதார்த்தம்
முரண்படுவர் கூறும் கூற்றுக்களில் யாதேனுமொன்றை மூன்றுமுறை கூறியபொழுதும் எதிராளியினாலோ அல்லது மற்றவர்களினாலோ புரிந்துகொள்ள முடியாது போயின், முரண்படுபவர் தோற்றவராகிறார். கருத்தைப் புரிந்து கொள்ளமுடியாமை என்ற தோல்வித்தனமாகிறது.
பொதுவாக முரண்படுபவர் தன்னால் சரியான முறையில் நியாயப்படுத்த முடியாதுபோகும் சந்தர்ப்பங்களில் அதனை
மறைத்துக் கொண்டு மயக்கம் தரும் வார்த்தைகளைப்
இந்தக் கலைக்களஞ்சியம்x 絲26
 

பயன்படுத்தி, இரட்டுறமொழிதல் அல்லது வழக்கத்திற்கு மாறான கருத்திற் சொற்களைப் பயன்படுத்தல் அல்லது எவராலும் செவிமடுக்கமுடியாதபடி விரைந்து கூறுதல் முதலானவை இதிலடங்கும்.
முரண்படுபவர் முன்மொழியப்பட்ட கருத்துரைக்கு முர ணான ஏதுவைக் கூறுவாராயின், அவர் தோல்வியடைந்த வராவார். இத்தகைய சந்தர்ப்பம் பிரதிஞ்ஞாவிரோதம் அதாவது கருத்துரையுடன் முரண்படும் ஏது என்ற தோல் வித்தானத்தினுள் உள்ளடங்கும். இது பின்னைய நியாய தரிசனம் குறிப்பிடும் அனுமானப் போலியை ஒத்தது. ஆனால் அக்ஷபாதர், வாத்சாயணர் ஆகியோர் குறிப்பிடும் விருத்தப்போலி என்பது பிரதிஞ்ஞாவிரோதம் என்ற தோல் வித் தானத்திலிருந்து வேறுபட்டதென்பதை அவதானித்தல் வேண்டும்.
முரண்படுபவர்: Aயிடம் S உள்ளது. ஏனெனில் Hஐக் கொண்டவை எல்லாம் Sயும் கொண்டவையாகும். உதார ணமாக Dயிடம் Hஉம் Sஉம் உள்ளது. அது, எதுபோல வெனில் Aயிடம் Hஇருப்பதால் அதனிடம் Sஉம் இருப்பது போலவாகும்.
எதிராளி: Hஇருக்குமிடமெல்லாம் S இருக்குமென்ப தில்லை. எனவே Aயிடம் H இருந்தாலும் S இருக்க வேண்டும் என்பதில்லை. அதாவது Hஐக் கொண்டிருப்பது எதுவும் Sஐக் கொண்டிருக்க முடியாது.
இங்கு எதிராளியின் நிராகரிப்பு ஏற்றுக்கொள்ளத்தக்க தென்பதால் முரண்படுபவர் தோற்றவராகின்றார்.
9. அபார்த்தகம்
அபார்த்தகம் என்னும் தோல்வித்தானம் நிரார்த்தகம், அர்த்தாந்தரகம் என்பனவற்றைப் போல இருப்பினும் சற்று வேறுபட்டது. அபார்த்தகத்திற்கு உள்ளாகும் முரண்படு வோன் கூறுவது விவாதிக்கப்படும் சந்தர்ப்பத்திற்குத் தொடர்பற்றதாயிருத்தல் மட்டுமல்ல, முழுவிவாதத்துடனும் தொடர்பற்றது. இத்தகைய வாக்கியங்கள் தம்மளவில் அர்த்தம் உடையனவாயினும் விவாதத்திற்குப் பயனற் றவை. உதாரணமாக யாரேனும் ஒருவர் சப்தம் அநித்திய மானது அத்துடன் அங்கு 10 மாதுளம் பழங்களும், ஆறு
緣線$ö函8nu 5angm凹ggal656igeoeoofä5emá

Page 291
கேக் துண்டுகளும், ஒரு பாத்திரமும் ஆட்டுத் தோலும், அப்பெண்ணை நீ குடிக்கச் செய்தல் வேண்டும். அவளு டைய தந்தைக்கு குளிச்சுரம் இல்லை என்று கூறி வெல்லு தல் இத்தகைய தோல்வித்தானத்தினுள் உள்ளடங்கும்.
10. அப்பிராத்தகாலம்
நியாயதருக்கவாதிகளின்படி அனுமானம் ஐந்து அவய வங்களைக் கொண்டிருத்தல் வேண்டும். அதுமட்டுமல்ல, இவ்வைந்து அவயவங்களும் அவ்வவற்றுக்குரிய ஒழுங்கில் தரப்படுதல் வேண்டும். ஒரு அனுமான வாக்கியத்தை முன்மொழியும்பொழுது முரண்படுபவர் அவயவங்களை அதற்குரிய ஒழுங்கை மாற்றிக் கூறுவாராயின் அவர் அப் பிராத்தகாலம் என்னும் தோல்வியைத் தழுவிய பூரீ வராவார். ஐந்து அவயவங்களினதும் தராதர ஒழுங்கு வருமாறு,
பிரதிஞ்ஞை: இம்மலை நெருப்டைத்து ஹேது: ஏனெனில் புகையடையாமல் திருட்டாந்தம்: எங்கெங்கு புகையுண்டோ
அங்கெல்லாம் நெருப்புண்டு அடுக்களை போல உபநயனம்: இம்மலை புகையடைத்து நிகமனம்: எனவே, இம்மலையில்
நெருப்புண்டு.
இவ்வொழுங்கை மீறுவது தோல்வியடையச் செய்யும்.
11. நியூனம்
அனுமானத்தில் இடம்பெறக்கூடிய அவயவங்கள் சரியாக ஐந்து மட்டுமே என்பது நியாகக் கொள்கையினரின் நிலைப் பாடாகும். முரண்படுபவர் ஐந்து அங்கங்களிற்குக் குறை வானதாய் அனுமானத்தை முன்மொழியின் நியூனம் என்ற தோல்வித்தானத்திற்கு உள்ளாவார். (நியூனம் = போதாமை)
12. அதிகம்
முரண்படுபவர் அனுமானத்தை முன்மொழியும்பொழுது ஒன்றிற்கு மேற்பட்ட ஹேதுவையோ அல்லது மூன்று முறைக்கு மேலதிகமாகவோ அதனைக் கூறினால் அதிகம் என்ற தோல்வித்தானத்தை அடைந்தவராகின்றார். தேவைக்கு மேலதிகமாக ஹேதுவை முன்மொழிவதானது தருக்க ரீதியாக தவறாவதில்லை. எனினும் விவாதத்தில் இவ்வாறு மொழிவது அதிகம் என்ற தோல்வித்தானமாகவே கருதப்படும்.
இந்துக் கலைக்களஞ்சியம்xx
 

53
13. புனருத்தம்
ஒரே வாக்கியத்தை மீண்டும் மீண்டும் கூறுதல், அல்லது ஒரே வாக்கியப் பொருளை வேறுவேறு சொற்களைப் பயன்படுத்தி மீண்டும் கூறுவது புனருத்தம் என்ற தோல்வித் தானமாகும். எதிராளியோ அல்லது நடுவர்களோ ஒரு கூற்றைப் புரிந்து கொள்ளாதுவிடின் அதனை மீண்டும் இரண்டு தரம் மட்டுமே முரண்படுபவர் கூற அனுமதி உண்டு. எதிராளியோ அல்லது நடுவர்களோ மூன்று முறை யும் கூறியபோதும் புரிந்துகொள்ள மாட்டாதவர்களா யின் முரண்படுபவர் அவிஞ்ஞாதார்த்தம் என்ற தோல்விக் கிடமா வர். அவ்வாறில்லாது முரண்படுபவர் தேவையற்ற விதத்தில் பலமுறை மீண்டும் கூறுவாராயின் அவர் புனருத்தம் என்ற தோல்விக்கு ஆளாவர்.
14. அநனுபாடனம்
அவிஞ்ஞாதார்த்தம் என்ற தோல்வித்தானத்தில் முரண் படுபவனின் சில கூற்றுக்களை அவன் மும்முறை கூறிய பொழுதும் நடுவர்கள் எவருக்கும் அது புரியாதவிடத்து முரண்படுபவன் தோல்வியடைந்தவனாகிறான். ஆனால் அநணு பாடணத்திலோ நடுவர்களிற் சிலருக்கு அது புரிந்த பொழு தும் எதிராளி முரண்படுபவனின் கூற்றை மீண்டும் கூற முடியாதபொழுதோ அவன் தோற்றவனாகின்றான். (அநணு பாடணம் = மீளக் கூற முடியாமை)
15. அஞ்ஞானம்
அநணுபாடணத்தில் எதிராளி முரண்படுபவரின் கூற்றைப் புரிந்துகொள்ள முடிந்த பொழுதும், ஆனால் அஞ்ஞானத் திலோ முரண்படுபவரின் கூற்றை எதிராளி முற்றிலும் புரியாதிருப்பது எதிராளியை அஞ்ஞானம் என்ற தோல்வி தானத்திற்கு உள்ளாக்குகின்றது. இங்கும்கூட முரண்படுப வர் தன் கூற்றை மும்முறை மொழியும் பொழுது நடுவர்க ளில் சிலர் அதனைப் புரிந்துகொண்டபொழுதும் எதிராளியி னால் புரிந்துகொள்ள முடியாது போவதே அஞ்ஞானம் என்னும் தோல்வித்தனமாகும்.
16. அப்பிரதியை
அநனுபாடனத்திலும் அப்பிரதிபையிலும் எதிராளி முரண்
படுபவரின் வாதத்திற்குப் பதிலளிக்க முடியாததால் அவர்
தோல்வியைத் தழுவியவராவார். இரண்டிற்கும் இடையி
భ
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 292
லான வேறுபாடாவது அப்பிரதிபையில் முரண்படுபவர் மும் முறை தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய பொழுதும் எதிராளி மெளனமாக இருப்பதன் மூலம் சரியான விடை யைத் தர இயலாதிருக்கிற நிலையே அப்பிரதிபை என்ற இத்தோல்வித்தானமாகும்.
17. விக்சேஷபம்
எதிராளி முரண்படுபவரின் வாதத்தைப் புரிந்துகொள்ள முடியாதோ அல்லது பதிலிறுக்க முடியாத அதேவேளை மெளனமாகவோ இருக்காது அல்லது தனது இயலா மையை வெளிப்படுத்தாது. முரண்படுபவரின் கவனத்தைத் திசைதிருப்புமுகமாக, தனக்கு இப்பொழுது அவசர வேலையிருப்பதாகவும் பிறிதொரு சந்தர்ப்பத்தில் இதனை விவாதிக்க முடியும் என்று கூறுவது, விவாதிப்பவர் இத்த கைய சாட்டுக்களைக் கூறி விவாதத்திலிருந்து தப்பிக்க முயல்வது விக்க்ஷேபம் என்ற தோல்வித்தானமாகும்.
18. மதானுஞ்ஞை
எதிராளி முரண்படுபவரின் நிலைப்பாட்டை நிராகரித்த பொழுது முரண்படுபவர் எதிராளியின் நிராகரிப்பிற்கு விடையளியாது, எதிராளியின் நிலைப்பாட்டை நிராகரிக்க முயற்சிப்பது "மதானுஞ்ஞை” எனப்படும். இங்கு முரண்படு பவர் எதிராளியின் மறுப்பிற்கு நேரடியாக பதிலிறுக்காது விடுவது முரண்படுபவர் எதிராளியின் விமரிசனத்தை ஏற் றுக்கொண்டதாகக் கருதி, அவர் தோல்வியடைந்தவராகக் கருதப்படுவார்.
19. பரியனுயோச்சியோபேசஷணம்
விவாதத்தின் பொழுது இது நிகழக்கூடியது. விவாதத் தின்பொழுது முரண்படுபவர் தோல்வியடையும் சந்தர்ப்பம் வந்தபொழுதும், எதிராளி அதனைக் கண்டுகொள்ளாது தொடர்ந்து வாதித்துக் கொண்டே போவாராயின் எதிராளி முரண்படுபவர் விடுத்த தவறைக் கவனியாது விட்ட குற்றத் தால் தோல்வியடைந்தவராவர்.
20. நிரனுயோச்சியானுயோகம்
வாதத்தின் பொழுது வாதி எத்தகைய தவறையும் விடாதபொழுதும் , அவர் ஒரு சந்தர் ப் பத்தில் தவறுவிட்டதாக எதிராளி கூறுவாராயின் அவர் தோல்விய டையா விடத்து தோல்வியடைந்ததாகக் கூறிய குற்றத்தி
இந்தக் கலைக்களஞ்சியம்xx
綫26
 

1.
னால் எதிராளி தோல்வியடைந்தவராக நடுவர்கள் தீர்மானிப்பர்.
21. அபசித்தாந்தம்
விவாதத்தின்பொழுது விவாதிப்பவர் ஒரு கூற்றை அல் லது கருத்துரையொன்றை முன்மொழியும்பொழுது, அது ஏலவே ஏற்றுக்கொண்ட நிலைப்பாட்டிற்கு மறுதலையாக இருக்குமாயின் அதனை முன்மொழிந்த வாதி தோல்விய டைந்தவராகின்றார். இத்தோல்வித்தானம் விருத்தப் போலியை பெரிதும் ஒத்ததாக இருப்பினும் விருத்தத்தில் விவாதிப்பதனால் முன்மொழியப்பட்ட ஹேது வாதி ஏலவே ஏற்றுக்கொண்ட நிலைப்பாட்டிற்கு ஒவ்வாததாக இருப்பது விருத்தப்போலி. ஆனால் அபசித்தாந்தத்திலோ கருத்து ரையோ அல்லது கூற்றொன்றோ ஒவ்வாதிருப்பதால் தோல் வித்தானமாகிறது.
22. ஹேத்துவாபாசம்
அக்ஷபாதரும் வாத்சாயணரும் குறிப்பிட்ட ஹேதுப் போலிகள் அனைத்தும் தோல்வித் தானாங்களாகின்றன. ஹேதுப் போலிகள் அனுமானப் போலிகளாயிருப்பதால் அவையும் விவாதத்தின் பொழுது வாதிப்போர் தோல்வி யைத் தழுவுதற்குக் காரணமாய் இருப்பதனால் தோல்வித் தானத்தில் அடக்கப்பட்டது.
நிக்கிரகஸ்தானம் பற்றிய அகஷபாதரின் வகையீட்டை ‘வாதநியாயம்' என்ற நூலில் தர்மகிர்த்தி மீள்வரையறை செய்து, அதனை நான்காக எடுத்துக்காட்டுகிறார். தர்ம கீர்த்தியின் தோல்விதான வகையீடு மேல்வருமாறுள்ளது:
1. வாதிப்போன் தனது கருத்துரைக்கு இன்றியமையாததும் போதியதுமான நியாயப்படுத்தலைத் தரத்தவறுவது.
2. விவாதத்தின் பொழுது தேவைக்கதிகமாக அல்லது தவறான பேச்சுக் கூற்றுவாதம் ஆகியவற்றை முன்வைத் தல்
3. வாதத்தின் பொழுது எதிராளி விடும் தவறைச் சுட்டிக்
காட்டாதிருத்தல்
4. வாதத்தின் பொழுது ஒருவர் தவறுவிடாத பொழுதும்
தவறுவிட்டதாகக் கூறுதல்
缀 x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 293
இந்த நால்வகைப் பிரிவினுள்ளும் எல்லாவகையான தோல்வித்தானங்களையும் உள்ளடக்க முடியுமென்பது தர்மகிர்த்தியின் அபிப்பிராயமாகும். (சோ.கி.)
LEUOL Gulsčiščõib
வடமொழியில் நிஷடை எனச் சுட்டப்படும் சொல்லா னது தமிழில் நிட்டை என வழங்கப்படுகின்றது. ஆன்மலாபம், சிவப்பேறு, நிட்டை, சுவானு பூதி என்பன
ஒரு பொருட் சொற்களாகும்.
நிட்டையின் இயல்பு என்பது சிவானந்தத்தை அனுபவித் தல் என விளக்கப்படுகின்றது. நிட்டை என்பது தியானம், உண்மை, அறிவு (ஞானம்) என்க்வற்றோடு 35n IQ U ] ஒன்றாகும். நிட்டை மேல் கிடைப்பது வீடு. சிந்தித்துத் துணிந்த பொருளுடன் பிரிவின்றி உறுதியாக நிற்றலாகும். நி - நிச்சயம், ஸ்தாநிற் றல் எனப்பொருள்படும். நிட்டை, உபாய நிட்டை, ஞான நிட்டை என இருவகைப்படும். உபாய நிட்டை என்பது இலகுவில் சித்தியடையும் வழியைக் காட்டும் நிட்டையா கும். ஞான நிட்டை என்பது கேட்டுச் சிந்தித்துத் துணிந்த பொருளுடன் பிரிவின்றி உறுதியாக நிற்றல் எனப்படும். உண்மை அறிவு நான்காகும். அவையாவன கேட்டல், சிந்தித்தல், தெளிதல்,
நிட்டை கூடல் என்பனவாகும்,
உபாய நிட்டை, நிட்டை விளக்கம் ஆகிய நூல்களை துறைசை அம்பலவாணதேசிகர் இயற்றியுள்ளார். அவர் துறைசையாதீனத்தில் இரண்டாவது பட்டத்தில் அமர்ந்த வர். இவரது காலம் கி.பி. 117 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி எனலாம். இவர் பதின்மூன்று நூல்களை இயற்றியருளினார். இந்நூல்களுள் உபாய நிட்டை, நிட்டை விளக்கம் ஆகியன முக்கியமானவை. உபாயநிட்டை என்னும் நூல் 46 வெண்பாக்களாலானது. நிட்டை விளக்கம் என்னும்
நூல் 28 திருவிருத்தங்களாலானது.
உமாபதி சிவாசாரியார் இயற்றிய சிவப்பிரகாசம் என்னும்
நூலிலே ஞானத்தால் வரும் பயன் என்ற பகுதியில்
@fg亞 5eoaJä5cm@手uá簽談簽

மூன்றாவதாக ஆன்மலாபம் கூறப்பட்டுள்ளது. இவற்றுள் ஞானத்தின் வகை, ஞான நிட்டை, உபாய நிட்டை, பாவ னையாற் சிவத்தை அடைய இயலாமை, அத்துவித நிலை, ஆணவ மல நீக்கம், கன்ம மல நீக்கம் ஆகியன எடுத்துக் கூறப்பட்டுள்ளன. கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை என ஞானம் நான்கு வகை. இந்த முறையிலே நின்று மேட்டுச் சிந்தித்துத் தெளிந்து நிட்டை கூடினவர்களே முத்தியைப் பெற்றவராவர்.
பாசஞானத்தினாலும் பசு ஞானத்தினாலும் சிவனை அறி யக்கூடாது. சிவஞானத்தைப் பொருந்தி, அதன் உபகாரத் தாலே தற்போதம் நீங்கி, அந்த ஞானத்துக்கு மேலான சிவத்திலே அத்துவிதமாய்க் கலந்து அன்பு செய்து, சிவானந்தத்தை அனுபவித்து நிற்பது ஞானநிட்டையாம். முன்சொன்ன முறையிலே நிட்டை கூடுதல் அரிதாயின் முதல்வனது அத்துவித நிலையை மறவாது, பக்தி செய்த லால் அவன் திருவடியைக் கூடுதலாகிய நிட்டை கைகூடும். பாவனைகளாற் சிவனையடைதல் அரிது. சிவத்தினது அருளைப் பெற்ற அடியாருக்கு ஒருபாவனையும் வேண்டிய தில்லை. அவ்வருளே சிவத்தை அடைவிக்கும் என சிவப் பிரகாசம் என்னும் நூல் கூறுகின்றது.
பிரமமாகிய ஒரு பொருளே பிரமமும் சீவர்களுமென இரண்டாக எண்ணப்பட்டிருந்து முத்தி நிலையில் அவ்விரண் டும் ஒன்றாய் விடுமெனின் சீவர்களும் பிரமத்தின் இயல்பு டையராக வேண்டும். அப்படியில்லாமையால் அது பொருந் தாது. வேறாகிய சிவமும் ஆன்மாவும் முக்தி நிலையில் ஒன்றாகுமெனின் இரண்டு பொருள் ஒன்றாவதில்லை. அன்றி யும் ஒன்று அழியவேண்டியதாகும். ஆணவ மலமானது முத்தி நிலையில் அழிந்து விடுமெனின் அது நித்தம் என்பது பொருந்தாது. முத்தி நிலையில் அழியாதெனின் ஞானம் பொருத்தமாட்டாது. உண்மை எப்படியெனின் மலம்
நித்தமாயிருக்க அதன் சத்தியே வலி அழியும் என்பதாம்.
அளவில்லாத பிறவிகளைத் தருதற்கேதுவாயிருக்கின்ற புண்ணிய பாவ வடிவாயுள்ள சஞ்சிதவினை வறுத்த வித்துப்போல ஆசாரியனது திருநோக்கால் நீங்கும். உடலுக்குரிய பிராரத்தவினை உடலுள்ளளவும் நின்று அனுபவத்தினால் ஒழியும். அப்பிராரத்தப் பயனை நுகரும்
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 294
பொழுது வந்தேறும் ஆகாமிய வினை ஒளிமுன் இருள் போல் ஞானத்தால் அழியும் என சிவப்பிரகாசம் என்னும் சைவசித்தாந்த சாத்திரநூலில் ஞானத்தின் வகையும் வீடு பேற்றுக்குச் சிறந்த சாதனங்களும் இவை என வகுத்துக் கூறப்பட்டுள்ளது.
சிவஞானபோதம் பதினோராம் சூத்திரம் இவ்வகையில் சிவனோடு ஏகனாகி நிற்கும் பயிற்சியில் முதிர்ச்சியும் ஆன்மாவுக்குச் சிவனது காட்டிக் காணும் உபகாரம் விளக் கப்படுகின்றது. அவ்விளக்கத்தின் பிரகாரம் சிவனருள் மகிமையிலிடுபட்டு அன்புருகும் நிலையினதாகிய ஆன்மா தனது அறிவு, இச்சை, செயல் மூன்றினாலும் சிவ னோடொன்றி நின்று சிவானந்தத்தை அநுபவித்தலாகிய நிட்டையினியல்பு கூடுவதாம். இது ஆன்மலாபம் எனவும், சிவப்பேறு எனவும் கூறப்படும். இவ்விளக்கத்தரும் சிவஞான போதம் பதினோராம் சூத்திரம்.
“காணுங் கண்ணுக்குக் காட்டு முலாம் போற் காண உள்ளதைக் கண்டு காட்டலின்
அயரா அன்பின் அரண்கழல் செலுமே”
என்பதாம். இதன் கண், ஆன்மாவானது உள்ளிருந்து உரிய சாதனங்களால் கண்ணை இயக்கி பொருட்களைக் காணச் செய்து, அதன் சார்பில் தானுங் காண்பது போல சிவனும் உள்ளிருந்து ஆன்மாவை இயக்கி, அதற்காம் அநுபவங்களைக் காணச் செய்து அதன் சார்பில் தானுங் கண்டு கொண்டிருப்பர் என்பது சூத்திரத்தின் முற்பகுதியின் பொருள். இதுவே காட்டிக் காணுதல் உபகாரம் எனப்படு
துெ. (க.க.)
நித்தியகருமம்
இந்து மதம் கூறும் சடங்குகளும் அனுஷ்டானங்களும் மனித வாழ்வினை வளப்படுத்த எழுந்தவையாகும். இவை அன்றாட வாழ்வில் நெறிமுறையோடு வாழ்வதற்கும் வாழ் வில் உயர்வு பெற்று ஆன்மீகத்தை அடையவும் உதவுகின் றன. ஒரு மனிதன் நித்தியம் செய்யும் கருமம் நித்திய கருமம் ஆகும். இந்துக்கள் வாழ்வில் அன்றாடம் கடைப்
@政g556oaJ55eT@引uá業後26

பிடிக்கும் அனுட்டானம் பற்றிப் பல சாஸ்திரங்கள் கூறுகின் றன. அவை விரிவாகவும் விளக்கமாகவும் பல அனுட்டான ங்களைக் கூறுகின்றன. விரிவான முறையில் கூறப்படும் நித்திய கருமங்கள் இன்றைய காலத்தில் கடைப்பிடிக்க முடியாவிட்டாலும் அதன் சுருங்கிய கருமங்களையாயினும் கடைப் பிடிக்க முயலவேண்டும்.
ஒருவன் விடிவதற்கு ஐந்து நாளிகைக்கு முன், பிரம மூர்தத்தில் எழுந்து கடவுளை நினைந்து துதிக்க வேண் டும். பின்னர் வீட்டுக்குத் தொலைகால் போய் மலசலம் கழிக்க வேண்டும். பின்னர் மண்ணினாலும் தண்ணீராலும் நன்றாகச் சுத்தம் செய்யவேண்டும். பற்களை நன்றாக சுத்தம் செய்து வாய் கொப்பளித்து ஆசமனம் செய்தல் வேண்டும். ஸ்நானம் என்றால் நீராடல். நீராடல் வாருணம், பளல்மம், ஆக்னேயம், ஐந்திரஸ்நானம், வாயல் யஸ்நானம், மந்திரஸ்நானம் ஆகும். ஆற்றங்கரை, மலை யருவி போன்ற புண்ணிய எனப் பலவகை நீரிலே இஷட தெய்வத்தை நினைத்து தியானித்து நீராடல் வேண்டும். இரவில் நீராடு தலை தவிர்த்தல் வேண்டும். மாதப்பிறப்பு, கிரகணம் போன்ற தினங்களில் இரவில் நீராடலாம். நிர்வாணமாக நீராடக்கூடாது. புனிதமாக நீரில் நீராடி தோய்த்து உலர்ந்த தூய்மையான ஆடையை அணிதல் வேண்டும்.
ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களின் வலியை அடக்க விபூதி ஸ்நானமும், மந்திர ஸ்நானமும் முக்கியமானவை. எனவே ஸ்நானத்திற்கு அடுத்த படியாக விபூதி ஸ்நானம் செய்தல் வேண்டும். சுத்தமான பாத்திரத் தில் தண்ணிர் நிறைத்துக் கிழக்கு முகமாகவேனும் வடக்கு முகமாகவேனும் இருந்து விநாயகரையும் குருவையும் வணங்கித் தண்ணீரைச் சுத்தி செய்து ஆசமனம் செய்ய வேண்டும். அதன் பின் திருநீற்றை இடது கையில் வைத்து அஸ்திரமந்திரத்தினால் தண்ணிரைத் தெளித்து அதில் ஒரு சிறு கூற்றைப் விரல்களாலெடுத்து அஸ்திர மந்திரத்தால் தென்மேற்கு மூலையில் தெளித்து எஞ்சிய விபூதியின் ஒரு கூற்றை பெருவிலனி விரல்களால் தலைமுதலாக உடம்பெங்கும் பூசி மீதியை நீர் விட்டுக் குழைத்து சிரசிலும், நெற்றியிலும் மார்பிலும், கொப்பூழிலும் பூசி முழந்தாள், புயம், முழங்கை, மணிக்கட்டு, விலாமுதுகு, கழுத்து ஆகிய இடங்களில் விபூதி தாரணம் செய்ய
வேண்டும்.
இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 295
விபூதி ஸ்நானம் செய்த பின் ஆலய தரிசனம் செய்தல் வேண்டும். ஆலய தரிசனம் செய்து பின் இலையிலேனும் சுத்தமான பாத்திரத்திலேனும் போசனம் செய்தல் வேண்டும். உணவு உண்ண முன் உணவிலே நீர் தெளித்து சிவனை யும், குருவையும் நினைத்து உணவை உண்ணுதல் வேண் டும். அவ்வாறே இரவிலே திருவைந்தெழுத்தை ஒதிசிவனை நினைத்து நீறு பூசி நித்திரைக்குச் செல்ல வேண்டும்.
இதைவிட பகல், இரவு, ஆகிய காலங்களின் சந்திப்பில் செய்யப்படும் கடவுள் வழிபாடு சந்தியாவந்தனம் எனப்படும் இது சூரியனை வழிபடுதல் ஆகும். நாம் அன்றா டம் தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் பாவங்களை மன்னித்து நல்வாழ்க்கை வாழ்வதற்கு ஆண்டவனை வணங்குவதே சந்தியாவந்தனம். இதனைச் செய்யும்போது ஆசமனம், மார்ஜனம், அதமர்சனம், சூரியஅர்க்யம், பிராணா யாமம், உஸ்தானம் என்பவை முறையே செய்யப்படல் வேண்டும். அதாவது கடவுளைத் தியானித்து சிறிது நீரை உள்ளங்கையில் விட்டு அருந்துதல் ஆசமனம், உடலையும் மனத்தையும் தூய்மைப்படுத்த வேண்டி நீரை உடலில் தெளித்தல் மார்ஜனம் எனப்படும். அகமர்சனம் என்பது பல முற்பிறவிகளிற் செய்த பாவத்துக்குப் பிராயச்சித்தமாக வேண்டுதல். சூர்யஅர்க்யம் என்பது சூரிய பகவானைக் குறித்து பிரார்த்தனை செய்து நீர்தெளித்தல். பிராணாயமம் என்பது அலைபாயும் மனத்தை கட்டுப்படுத்தும் மூச்சுப் பயிற்சி செய்து காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்தல். உபஸ்தானம் என்பது கருணையும் அருளும் வேண்டி சூரியபகவானிடம் வேண்டுதல். இவ்வாறாக ஒரு இந்துவின் நித்திய கர்மம் நடைபெற வேண்டும் என சாஸ்திர நூல்கள் பகர்கின்றன. (கு.ஹே)
நித்தியசூரிகள்
பாகவத மாரக்கமும் விசிட்டாத்வைத தத்துவமும் ஆன்மாக்கள் பற்றிக் குறிப்பிடும்போது நித்திய சூரிகள் பற்றிப் பேசுகின்றன. ஆன்மாக்கள் அநாதியானவையென் றும் பலவென்றும் கூறுகின்ற விசிட்டாத்வைதம் அவற்றை அவற்றின் வினை வயப்பட்ட தகுதி நிலையை
 

7
அடிப்படையாகக் கொண்டு பத்தர், முத்தர், நித்தர் என மூவகைப்படுத்தும்.
வினைவயப்பட்டு உலகிலே தோன்றி உழல்பவரைப் பத்தர் என்று குறிப்பிடப்படுகிறது. இவர்கள் பெத்த நிலை யில் உள்ள ஆன்மாக்களாகும். தத்துவத்திரயம்
சம்சாரிகளைப் பத்தர் எனக் குறிப்பிடும்
உலகிலே பிறந்து இறையருள் துணையுடன் தமது இடையறாத முயற்சியால் கன்மநெறியிலோ, ஞானநெறி யிலோ, பக்தி நெறியிலோ வீடுபேறடைந்தவரை முத்தர் என்ற வகைப்பாட்டுக்குள் அடக்கலாம். இவர்கள் சம்சார
பந்தம் அற்றவர்கள் எனத் தத்துவத்திரயம் குறிப்பிடுகிறது.
பத்தரிலிருந்தும் முத்தரிலிருந்தும் நித்தர்கள் வேறுபட்டவர்கள். இவர்களே நித்திய முக்தர்கள் என்றும் நித்திய சூரிகள் என்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் என்றும் பரம பதத்திலேயே இருப்பவர்கள்.
நித்திய சூரிகள். ஞான வடிவாக உள்ளவர்கள். பகவா னைப் போலவே வினைவயப்படாதவர்கள். பகவானின் இயல்பை நன்கு தெரிந்தவர்கள். ஆகையால் அவனை
யன்றி வேறு எதையும் மதியாதவர்கள்.
பக்தர்கள் காலவயப்பட்டவர். முக்தர்கள் காலமாகிய கட்டிலிருந்து விடுபட்டவர். நித்திய சூரிகள் காலமாகிய கட்டையே அறியாதவர்கள். ஆதலால் இவர்களை
காலமும் கணக்கும் நீத்தவர்கள் என்று கூறுவர்.
நித்திய சூரிகளில் முதன்மையானவன் ஆதிசேடன். இவனே அரியணை, கிடை, திருவடிப் பாதுகையாக பக வானுக்கு விளங்குபவன்.
ஆதிசேடனுக்கு அடுத்தவனாக கருடன் முக்கிய நித் திய சூரியாக விளங்குவான். இவனே பகவானுக்கு வாக னம் ஆவான்.
மேலும் திருவாயில் பாதுகாக்கும் சேனை முதலிகளும்,
கணத்தலைவர்களும் நித்திய சூரிகளே. என்றுமே வினைத் தளைப்படாது பரம பதத்திலேயே உறைவதனால் நாலாயி
ZZZZZZZSeZSzYZZSLSLLLSLLkkSkeSkSkkZZZZZ TTTTT LLLLLL LLLLCLLD TLLLGGCCCTMeLeGCeLTLTLLLLL

Page 296
ரத்திவ்யப்பிரபந்தம் இவர்களை 'அமரர் எனக் குறிப்பிடும்.
வேதாந்த தேசிகர் நித்திய சூரிகளைத் "தொல்வினை என்றும் இல்லாச் சோதி வானவர்” எனக் கூறுவது கவனித் தக்கது. (ச.மு.)
நித்தியானு சந்தானம்
வேதம் இந்துக்களுக்கு அடிப்படையான நூலாகும். வைணவர்கள் எம்பெருமா னின் திருவருளைப் பெறத் திவ்விய பிரபந்தத்தை ஒதுகின் றார்கள். ஆழ்வார்கள் பன்னிருவர் பாடிய திவ்விய பிரபந்தங் கள் வேத
விளக்கங்களாகக் கொள்ளப்படுகின்றன.
திவ்விய பிரபந்தம் நாலாயிரம் பாக்களைக் கொண்டது. அவற்றை எந்நாளும் ஒதுவது எவராலும் முடியாத காரியம். ஆதலால் நாலாயிரத்தின் முக்கியமான பதிகங்கள் நித்தி யானு சந்தானமாக சுருக்கப்பட்டுள்ளன. நித்தியானு சந்தான த்தில் திருப்பல்லாண்டு, திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை, நீராட்டம், பூக்கட்டல், காப்பிடல், சென்னி யோங்கு, அமலனாதிபிரான், கண்ணிநுன்சிறுத்தாம்பு, கோயில், திருவாய் மொழி, இராமானுச நூற்றந்தாதி, வாரணமாயிரம், நாலாயிரத் தனியன்கள் ஆகியன உள்ளடக் கப்பட்டுள்ளன. இவற்றை ஒவ்வொரு வைஷ்ணவனும் நாளும் ஒதவேண்டும். சில சமயங்களில் இவற்றை முழுமையாக ஒதமுடியாதவாறு வேறு கடமைகள் இருக்குமாயின் நித்தியானு சந்தானத்திலுள்ள பாசுரங்களை முன்னடி, பின்னடி சேவிக்க வேண்டும்.
இதனை முன்னடி, பின்னடி சேவை என்பர்.
பிற்காலத்தில் வைணவம் வடகலை, தென்கலை என்ற இரண்டு வகையாகப் பிரிந்தது. அப்போது தென்கலை வைணவங்கள் நித்தியானு சந்தானத்தில் மணவாள மாமுனிகள் திருவாய் மலர்ந்த உபதேசரத்தின மாலையை யும் திருவாய் மெர்ழி நூற்றந்தாதியையும் ஆர்த்திப் பிரபந்த த்தையும் அருளாளப் பெருமான் எம்பெருமானார் திருவாய் மலர்ந்த ஞனசாரத்தையும் பிரமேய சாரத்தையும் ஆழ்வார்
இந்துக் கலைக்களஞ்சியம்
 
 

கள் வாழித்திருநாமத்தையும் சேர்த்தனர்.
வடகலை வைணவங்கள் நித்தியானு சந்தானத்தில் வேதாந்த தேசிகரின் அடைக்கலப்பத்தையும் மும்மணிக் கோவையையும் நவமணி மாலையையும் அதிகார சங்கிரக த்தையும், பிரபந்த சாரத்தையும் பிள்ளையந்தாதியையும் சேர்த்துக் கொண்டனர். நித்தியானு சந்தானத்தை தொகு த்த பெரியவர் பெயர் தெரியவில்லை. தொகுத்த காலமும் தெரியவில்லை. வடகலையும் தென்கலையும் பிரிவதற்கு முன்னரே நித்தியானு சந்தானம் தொகுக்கப்பெற்றது ଶTରitu}. (தே.ஹ.)
நிபந்தங்கள்
நிபந்தம் என்பது விடப்பட்டது. அல்லது கொடுக்கப்பட் டது என்னும் பொருளினைக் குறிப்பதாகும். சமய நிறுவனங் களுக்கோ தருமஸ்தாபனங்களுக்கோ பணமோ வரியோ தாவரசொத்தோ சங்கமச் சொத்தோ கொடுக்கப்படுவதையே "நிபந்தம்” என்பர். கோயில் மடம், மசூதி முதலியவற்றை நிர்வகிப்பதற்கு கொடுக்கப்படுவது சமய நிபந்தங்களாகும். ஏழைகளுக்கு உதவுவதற்கும் அன்னதானம் போன்றன செய்வதற்கும் கல்வி நிலையங்களை நிர்வகிப்பதற்கும் கொடுக்கப்படுவது அறநிபந்தங்களாகும்.
இந்தியாவில் பல கோயில்கள் மன்னர் நிபந்தங்களைப் பெற்றே இயங்குகின்றன. சத்திரங்கள், அன்னசாலைகள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் முதலியன நடத்த வும், குளங்கள், கிணறுகள் முதலிய நீர் நிலைகளை அமைக்கவும் குடிதண்ணிர் வழங்க ஏற்பாடு செய்யவும் கொடுக்கப்படும் நிபந்தங்களை தரும நிபந்தங்களுக்கு எடுத்துக் காட்டாகக் கூறுவர். தரும நிபந்தங்களை மன்ன ரும் அவருக்குக் கீழ் இயங்கும் பொது நிறுவனங்களுமே செய்து வந்துள்ளன. திருப்பதி, காஞ்சிபுரம், சிதம்பரம், தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, இராமேஸ்வரம், திருச்செந் துர் போன்ற ஆலயங்களுக்கு மன்னரே நிபந்தங்கள் வழங்கியுள்ளனர்.
சமய தர்மத்துக்கோ தரும விடயத்துக்கோ பொருள் கொடுத்துப் பாதுகாப்பது என்பது இந்தியாவில் பண்டைக்
భళ్ల x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 297
காலம் முதல் சிறந்ததோர் அறப்பணியாகவே கருதப்
பட்டது.
வழிபாடு நடத்துவதற்கு கோயில்களும் ஆன்ம போதனை தியானம் முதலியன நடத்துவதற்கு மடங்களும் மக்களுக்குப் பெரிதும் பயன் பட்டன. கோயில்
நிபந்தங்கள் இரு வகைப்படும்.
1) கோயில் பூஜையும் திருவிழாவும் நடைபெறுவதற்
காக அமைவது
2) ஒரு குறிப்பிட்ட பூஜை, அபிஷேகம், விழா போன்ற வற்றிற்காக அமைவது
கோயில்கள் விழாக்களுக்கும் கிரியைகளுக்கும் உரிய இடமாக இருந்தன போல மதபோதனைகளைச் செய்வதற் கும் மத அறிவைப் பரப்புவதற்கும் குரு பரம்பரையைப் பாதுகாப்பதற்கும் மடங்கள், ஆதீனங்கள் பெரிதும் உதவியா யிருந்தன. சங்கராச்சாரியார் மடம், உடுப்பி மாத்துவமடம், தருமபுரமடம், திருவாவடுதுறை மடம், திருப்பனந்தாள் மடம், திருக்கண்ணன்குடி மடம், வானமாமலை மடம், அகோவில மடம் ஆகிய மடங்களுக்கு மன்னர்களும் மக்களும் பெருமளவு செல்வத்தினைக்
கொடுத்தனர்.
நிபந்தங்களை ஏற்படுத்துபவர்கள் தங்களுக்கு நிபந்தத் தில் எந்தத் தொடர்பும் இல்லாதவாறு ஏற்படுத்தினால் அது முழு நிபந்தம் எனப்படும். அறத்திற்கு ஒரு பங்கு செலவு செய்ததுபோக மீதி தங்களுக்கு என்று ஏற்படுத்தினால் அது பகுதி நிபந்தமாகும். கோயில் நிபந்த ங்களை நிர்வாகம் செய்பவர் தர்மகர்த்தா என அழைக்கப் படுவார். சில இடங்களில் இப்பதவி பரம்பரை பரம்பரையா கவே இருந்து வரும் சில இடங்களில் குறிப்பிட்ட காலப்பகு தியில் (காலத்திற்கு மட்டும்) இருக்கும். இதனை கோயில் நிர்வாக பொறுப்பாளர் ஆவணப்படுத்துவதனையும் சில இடங்களிற் காணலாம்.
நிபந்தம் ஏற்படுத்தப் பத்திரம் வேண்டும் என்பதில்லை. நிபந்தம் ஏற்படுத்துகிறவர் தமக்கு அத்தகைய நோக்கம் இருப்பதாகத் தெரிவித்து நிபந்தம் ஏற்படுத்தி விட்டால்
 

பின்னர் அதை மாற்ற முடியாது. இந்நாட்டில் பொதுவாக சமய நிபந்தங்கள்தாம் எண்ணிக்கையில் அறநிபந்தங் களை விட அதிகமாகவுள்ளன. அறநிபந்தங்களில் சிறப்பு மிக்கதாகக் குறிப்பிடத்தக்கது யாத்திரிகர்களுக்காக இரா மேஸ்வரம் வரை சாலைகள் அமைந்த தஞ்சை மராட்டிய
மன்னர்கள் ஏற்படுத்திய தஞ்சை சத்திர நிபந்தங்களாகும்.
முற்காலத்தில் முன் நிபந்தங்கள் அரசரு டைய பொறுப்பில் இருந்தன வருமானத்தைச் செலவு செய்வதற்கும் பாலங்கள், சத்திரங்கள் போன்ற பொதுநலப் பணிகள் செய்வதற்கும் வேண்டிய விதிகளை யும் எழுதினார்கள். சென்னை இராச்சியத்தில் செய்த இத்தகைய விதித்தொகுதி 1817 ஆம் ஆண்டின் ஏழாம் தொகுதி என்பதாகும். இந்து சமய நிபந்தனைகளையும் தரும நிபந்தனைகளையும் ரெவினியூ போர்டர் மூலம் நிர்வ கிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதனால் நிர்வாகம் சிறப்பாக நடந்தது. ஸ்தாபனங்களும் பயனடைந்தன. 1842 ஆம் ஆண்டளவில் இந்து, முஸ்லிம் நிபந்தங்கள் விடயத் தில் தலையிடுவதை நிறுத்திக் கொண்டனர். (கிறிஸ்தவ மதத்தினரே இதனை எதிர்த்தனர்) அதனால் இவற்றின் செயற்பாடுகள் சீர்குலையத் தொடங்கின.
மேற்கூறப்பட்ட நிபந்தம் சம்பந்தமான சட்டங்களை தவிர 1817 ஆம் ஆண்டின் சென்னை நிபந்தங்கள் அனுமானச் சட்டம், 1863ஆம் ஆண்டின் சமய நிபந்தனைகளின் சட்டம், 1890ஆம் ஆண்டின் தரும நிபந்தங்களின் சட்டம், 1920ஆம் ஆண்டின் தரும டிரஸ்ட் சட்டம், 1923ஆம் ஆண்டின் முஸ்லிம் வாகப் செல்வாக்குச் சட்டம், 1913 -1930ஆம் ஆண்டுகளின் வாகப் செல்வாக்குச் சட்டம், 1908ஆம் ஆண்டின் சிவில் நடைமுறைச் சட்டத் தொகுதியின் 92ஆம் பிரிவு என்பன போன்ற சட்டங்கள் பல நிபந்தங்களுக்கான
சட்டங்களாகக் காணப்பட்டன.
ஆதாரம்: 1) கலைக்களஞ்சியம் 2) வாழ்வியற் களஞ்சியம் (@.g.)
இ இந்து சமய கலாசார அலுவல்கள் திOைOக்களம்

Page 298
buTáisi,
நிம்பாக்கர் அல்லது நியாகநந்தர் என்றழைக்கப்படும் இம்மகான் ஆந்திர நாட்டைச் சேர்ந்த ஒரு பிராமண யோகி யாவார். இவர் ஒரு சிறந்த தத்துவஞானி; வானசாஸ்திரக் கலையிலும் இவர் சிறந்த தேர்ச்சி பெற்றிருந்தார். இராதா, கிருட்டிணன் ஆகிய இருவரிடமும் பக்தி கொண்டு வழிபாடு செய்யும் நிம்பாக்க மதத்தை நிறுவிய வர். இத்தகைய சிறந்த மகானைப் பற்றியும் மிகப் பிரபலமாக ஒரு காலத்தில் விளங்கிய இவரது வழிபாட்டு முறை பற்றியும் அநேக நூல்கள் எழுதப்பட்டிருந்தன. ஆனால் அந்நூல்கள் எல்லாம் இந்தியாவில் ஆண்ட முகலாய சக்கரவர்த்தி அவுரங்கசீபு காலத்தில் தீவிர இசுலாமிய வாதிகளால் அழிக்கப்பட்டு விட்டன. எனவே, நிம்பாக்கர் பற்றியும் அவரைப் பின்பற்றிய மாந்தர்கள் பற்றியும் அறிந்து கொள்வதற்கான தக்க சான்றுகள் மிகக்குறைவாகும்.
நிம்பாக்கர் வாழ்ந்த காலத்தைக் கி.பி.12அல்லது 13ஆம் நூற்றாண்டு என இந்துமத வரலாறு கூறும் வரலாற்றாசிரியர் கள் கருதுகின்றனர். இவரது பக்தி வழிபாடு கி.பி.12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இராமானுசரது முறையைப் பின்பற்றியுள்ளது. நிம்பாக்கர் வேதாந்த சூத்திரத்திற்கு உரை எழுதியிருக்கிறார். இதனை ஒரு வகையில் இராமா னுசர் சித்தாந்தத்துடன் ஒப்பிடலாம் என்பது சிலரது கருத் தாகும்.
நிம்பார்க்க மதம்: நிம்மார்க்கர் துவைதம், அத்வைதம் இரண்டை யும் அங்கீகரித்தார். இறைவனும் அவனால் ஆக்கப்பட்ட ஆன்மாவும் வெவ்வேறாகும். பிரம்மமானது தன்னிடமிருந்தே உலகத்தை உண்டாக்குகிறது. சீவன் நுகர்வோன், அசித்து நுகரப்படும் பொருள், ஈசுவரன் (இறைவன்) அவற்றுக்குள் அந்தரியாமியாய் இருப்பான். பிறவிக் கடலிலிருந்து மீள வேண்டுமாயின் இராதகிருட்டிண பக்தியில் ஈடுபாடு கொள்ளவேண்டும். மனிதன் தனது முயற்சியால் அடைய முடியாத விமோசனத்தை இராதாகிருட்டிணனிடம் சரண் அடைந்து பெறலாம். அந்நிலையில் இறைவன் அருள் பெற்று முக்தி பெறலாம். ஒவ்வொருவரும் பக்தியோகம் கடைப்பிடித்தல் வேண்டும்.
இது போன்ற அம்சங்களைக் கொண்ட நிம்பாக்க மதம்
இந்துக் கலைக்களஞ்சியம்x ※27
 

கி.பி. 13, 14ஆம் நூற்றாண்டுக ளில் கிழக்கிந்தியாவில் மிகப் பிரபலமாக விளங்கியது.
இராதா கிருட்டின பக்தி நிம்பாக்க மதத்தில் இராதகிருட் டிண பக்திக்குத் தனிச் சிறப்புண்டு. இராதகிருட்டிண பக்தி யைச் சைதன்யரும், வல்லபரும் சிறப்பாகக் கொண்டாடினார் கள். சைதன்னிய மதத்திற்கு அசத்திய பேதாபேதம் என்று பெயர். வல்லபர் மதத்திற்கு சுத்தாத் துவைதம் என்று பெயர். ஆனால் நிம்பார்க்கர் மதத்தில் சீவன் ஈசுவர னிடமிருந்து (இறைவனிடமிருந்து) உண்டான போதிலும் அது ஈசுவரனினின்று வேறுபட்டதேயாகும். அதற்கு அறிவு, செயல், நுகர்வு ஆகிய மூன்று குணங்கள் உண்டு. சீவன் தேகாபிமானத்தால் இன்னலில் மூழ்க நேரிடுகிறது. ஆயினும் இராதகிருட்டிண பக்தியினால் சீவன் முக்தியடைய முடியும் என்பது நிம்பார்க்கரது தத்துவமாகும். (கி.பி.)
unuă blănciianăului eginnami
நியாயசூத்திரத்தின் 115ஆம் பிரிவில் நியாயக் கொள் கையினரின் அனுமானம் பற்றிக் கூறப்பட்டபொழுதும் அதனை விளக்குவது சற்றுச் சிரமமானது. சூத்திரத்தில் மூவகை அனுமானம் பற்றிப் பேசப்படுகிறது. அவை முறையே, பூர்வபத், சேஷவத், சாமானிய திருஷ்ட என அழைக்கப்படும். தமிழ்நூல் மரபில் அதனை பூர்வக்காட்சி அனுமானம், அனுமான அனுமானம், சாமானிய அனுமானம் எனக் குறிப்பிடுவர்.
நியாயசூத்திரம் இம்மூவகைப் பாகுபாட்டிற்குமான உதார ணங்கள் எதனையும் தராமையினால் பாகுபாடு பற்றிய தெளிவின்மை அறிஞர்களிடையே காணப்படுகிறது. நியாய சூத்திரத்தின் உரையாசிரியரான வாத்சாயனரின் மேற்படி சூத்திரத்திற்கான (11.5) விளக்கவுரையும் தெளிவற்றிருக் கிறது. நியாயக் கொள்கையினரின் அனுமா னம் பற்றிய தெளிவான விளக்கத்திற்கு சரக சம்ஹிதையில் தரப்படும் உதாரணங்களையும், நியாயசூத்திரத்தின் 2.1-37-38ஆம் பிரிவில் தரப்படுகின்ற சூத்திரத்தையும் ஒருசேரப் பார்த்தல் வேண்டும். அனுமானத்தின் முப்பிரிப்புத் திட்டம் ஒன்றில் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற முக்காலத்தி
签滚
xx இந்து சமய கலாசார அலுவல்கள் தி6ை00க்களம்

Page 299
னடியாக மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். அல்லது காரண காரியத் தொடர்பு, பாரிசேடம், காரணகாரியம் சாராத் தொட
ர்பு என்ற வகையில் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம்.
அனுமானம் ஒரு முறைப்படுத்தப்பட்ட திட்டமாக உருவா கிய காலை அனுமானம் பற்றி இரு கொள்கைகள் காணப் பட்டன. முதலாவது வகை அன்னுவயம் (உடன்பாடு) வெதிரேகம் (எதிர்மறை) என்ற இருபிரிப்புத் திட்டத்தைக் கொண்டது. வைசேடிகரும் மீமாம்சகரும் இதிலடங்குவர்.
உதாரணம் - அன்னுவயம் இம்மலை நெருப்பு உடையது - பிரதிஞ்ஞை
புகையுடைமையால் - ஏது யாதுயாது புகை உடையதோ அதுவது நெருப்புடையது -அடுக்களை போல- திட்டாந்தம்
இம்மலை புகையுடையது உபநயம் ஆகவே நெருப்புடையது நிகமனம்
உதாரணம் - வெதிரேகம் இம்மலையில் நெருப்பில்லை பிரதிஞ்ஞை புகை இன்மையால் - ஏது
எங்கெங்கு நெருப்பில்லையோ அங்கங்கு நெருப்பில்லை
மடுப்போல திட்டாந்தம் இம்மலையில் புகையில்லை உபநயம் ஆகவே நெருப்பில்லை நிகமனம்
நியாயக் கொள்கையினர், பெளத்தர்களிற் சிலர், சரகர் ஆகியோர் பூர்வவத், சேஷவத், சாமானிய திருஷ்ட என்ற முப்பிரிப்புத் திட்டத்தை ஏற்றுக்கொண்டவர்கள். இம்முப்பிரிப் புத் திட்டத்தின் தெளிவின்மையை நீக்குமுகமாக உபாய ஹிர்தயர், வாத்சாயனர் (இரு விளக்கம்) பாசவச்னர் ஆகி யோரின் விளக்கத்தை மட்டும் இங்கு எடுத்துக் காட்டு (36)Isflid.
உபாயஹறிர்தயரின் விளக்கம்:
பூர்வவத்=ஏலவே அறிந்தது போல உதாரணம் ஒரு சிறுவனின் சிறப்படையாளத்தை
வைத்துக் கொண்டு அவன் வளர்ந்ததன் பின்னரும்
அவ்வடையாளத்தால் அவனை அறிவது
சேவத்=ஒன்றின் தன்மையிலிருந்து ஏனையவையும் அவ்வாறிருக்கும் என அறிவது
இந்துக் கலைக்களஞ்சியம்x
 

உதாரணம்: ஒரு துளி நீர் உப்பாயிருப்பதைக் கண்டு, ஏனையவையும் உப்பே என அனுமானித்தல்
சாமானியதிருஷ்ட பொருளின் இடமாற்றத்தைக் கொண்டு அவற்றின் இயக்கத்தை அறிதல்
உதாரணம்: சூரிய - சந்திரர் உட்பட வான்பொருட்கள் வெவ்வேறிடங்களில் காணப்படுவதைக் கொண்டு அவற்றின் இயக்கத்தை அனுமானித்தல்
வாத்சாயனரின் முதலாவது விளக்கம்:
பூர்வவத் = காரணத்திலிருந்து காரியத்தை அனுமானித்தல் மழை பெய்யும். ஏனெனில் கருமேகம் காணப்படுகிறது
சேஷவத்= காரியத்திலிருந்து காரணத்தை அனுமானித்தல்
மழை பெய்துள்ளது. ஏனெனில் ஆற்றில் வெள்ளம் நிறைந்துள்ளது.
சாமானியதிருஷ்ட = உபாயஹிர்தயரின் விளக்கத்தை ஒத்தது.
வாத்சாயனரின் இரண்டாவது விளக்கம்:
பூர்வவத் = உபாயஹிர்தயரின் விளக்கத்தை ஒத்தது.
சேஷவத் - பதிலீடுகளைக் களைவதன் மூலம்
அனுமானித்தல் சப்தம் ஒன்றில் A அல்லது B அல்லது C ஆக இருத்தல் வேண்டும்
அது Aயோ Bயோ அல்ல. எனவே அது C ஆக இருத்தல் வேண்டும்.
சாமானியதிருஷ்ட = ஆசை முதலானவை குணங்களா கும். ஏனெனில் திரவியத்தை நிலையிடமாகக் கொண்டது குணம். எனவே ஆசை முதலான குணங்களைக் கொண்ட
திரவியத்திலிருந்து அது அகம் என அனுமானிக்கலாம்.
பாசவச்னரின் விளக்கம்:
பூர்வவத் - வாத்சாயனரின் முதலாவது விளக்கத்தை
ஒத்தது.
1 線
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 300
ஒத்தது.
சாமானியதிருஷ்ட = காரணமில்லாத் தொடர்பு
ஒரு பழத்தின் வாசனையிலிருந்து அப்பழத்தின் சுவையை அனுமானித்தல்
அனுமானத்தின் முப்பிரிப்புத் திட்டம் பற்றி இதுவரை எடுத்துக்காட்டப்பட்ட விளக்கங்களின் குறைபாடுகள் பற்றி ஆராய்ந்த தற்கால இந்திய மெய்யியலாளரான பிமல் கிருஷ்ண மதிலால் என்பார் முப்பிரிப்புத் திட்டம் தொடர் பான பிரச்சனையை வருமாறு தீர்த்து வைத்தார்.
பூர்வவத் = கடந்தகால நிகழ்ச்சியை நிகழ்காலத்திலிருந்து
அனுமானித்தல்
சேஷவத் = நிகழ்காலத்திலிருந்து எதிர்காலத்தில் நடைபெறப் போவதை அனுமானித்தல் சாமானியதிருஷ்ட = நிகழ்கால நிகழ்ச்சிகள் இரண்டில், ஒன்றைக் காண்பதிலிருந்து மற்றயதை அனுமானித்தல்.
(சோ.கி)
நியாய சாத்திரம்
நியாயசாத்திரம் - அதன் வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் அன்விகூரிகி, ஹேது சாத்திரம், தர்க்கவித்யா எனப் பலவாறான பெயர்களால் அழைக்கப்பட்டு பிற்காலத்தி லேயே அது நியாய சாத்திரம் என்ற பெயரைப் பெற்றது. பொதுவழக்கில் நியாயம் என்ற சொல் சரியானது. நீதியா னது என்ற கருத்தில் பயன்படுத்தப்படுகிறது. அதன்படி நியாயசாத்திரம் என்பது சரியான தீர்ப்பு அல்லது உண்மை யான நியாயித்தல் பற்றிய விஞ்ஞானம் என வரைவிலக் கணப்படுத்தலாம். நியாயம் என்ற சொல்லைக் கலைச் சொல்லாகக் கருதுவோமாயின், அது ஐந்து அவயவங்க
ளைக் கொண்ட அனுமானத்தைக் குறிக்கும்.
விடயங்களை அவற்றிற்குரிய சான்றுகளை ஆதாரமாகக் கொண்டு ஆராய்வதே நியாயம் என்ற சொல்லின் தாற்பரி யம் என வாத்சாயனர் குறிப்பிடுவார். ஐந்து பகுதிகளை
இந்துக் கலைக்களஞ்சியம்
 

அடிப்படையாகக் கொண்ட அனுமான வடிவமே நியாயத் தின் ஸ்வரூபம் என விஸ்வநாதர் குறிப்பிடுகிறார். அனுமானத்தைப் பயன்படுத்தி பிறர்பொருட்டு அறிவைத் தருவதே நியாயமென மாதவாச்சாரியார் கூறுவார். இக் கருத்துக் கள் அனைத்தையும் தொகுத் துப் பார்க் கும் பொழுது, நியாய சாத் திரம் என்பது அனுமானத்தைப் பயன்படுத்தி அறிவைப் பெறும் விஞ்ஞானம் என்று கூறலாம்.
வரலாற்றின் அடிப்படையில் நோக்கும்பொழுது நியாயம் என்ற சொல் தருக்கம் என்ற கருத்தில் முதன்முதலில் மகாபாரதத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். அடுத்து புராணங்களில் குறிப்பாக விஷ்ணுபுராணம், மத்ஸ் யபுராணம், பத்மபுராணம், ஞாக்ஞவல்க்கிய சம்ஹிதை ஆகியவற்றில் காணக்கூடியதாயிருக்கிறது. எவ்வாறாயி னும் ஸ்தாபனம் என்ற பெயரில் அனுமானம் முதன்முதலில் சரக சம்ஹிதையிலேயே ஆராயப்பட்டுள்ளது. நியாயம் என்ற சொல் தருக்கம் என்ற சொல்லிற்குச் சமமான அர்த்தத்தில் இந்நூலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. நியாய சூத்திரம் தொகுக்கப்பட்ட காலை நியாயம் என்ற சொல்லே பிரசித்தமாயிருந்தது. தின்னாகர் நியாய அவயவம் என்ற சொல்லைப் பயன்படுத்தியிருந்தார்.
நியாயசாத்திரத்தின் தொடக்க கால ஆசிரியர்களைப் பற்றி எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. மகாபாரதத் தின் ஆதிபர்வம் காசிபர் ஸ்தாபனம் (முன்மொழிதல்), ஆட்சேபம், முடிவைப் பெறுதல் என்பனவற்றின் உண்மைக் கருத்தை அறிந்திருந்தார் எனக் குறிப்பிடுகிறது. மகாபாரத த்தின் பிறிதொரு இடத்தில் நியாயசாஸ்த்திரத்தில் நாரதர் வல்லவராயிருந்தார் என்றதொரு குறிப்பும் உண்டு. அவர் 'ஐந்து அவயவங்களைக் கொண்ட வாக்கியங்கள் பற்றிய அறிவுடையவராயிருந்தார் என்ற குறிப்பு, ஐயத்திற்கிட மின்றி நியாயசாத்திரத்தையே குறிப்பிடுகிறது. நாரதரு டைய நூல்கள் எதுவும் இன்று கிடைப்பன அல்லவெனி னும் அவர் நிக்கிரகஸ்தானம் என்ற தோல்வித்தானம் பற்றிய அறிவுடையார் என ஜெயந்தர் தனது நியாய மஞ்சரியிற் குறிப்பிட்டுள்ளார்.
பத்மபுராணம், ஸ்கந்தபுராணம் முதலான புராணங்கள் கெளதமரையே நியாய சாத்திரத்தின் ஸ்தாபகராகக் குறிப்
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 301
பிடுகின்றன. விஸ்வநாதர் தனது நியாயசூத்திர விருத்தி யில் நியாயசாத்திரத்தை கெளதம சாத்திரம் என்றே குறிப்பிடுகிறார். கெளதமருக்கு அக்க்ஷபாதர் என்ற தொரு பெயரும் இருப்பதாக நியாய கோஷ என்ற நூல் மூலம் தெரியவருகிறது.
நியாயசூத்திரத்தின் உள்ளடக்கமாக ஐந்து விடயங்கள் உள்ளன. அவை முறையே 1. பிரமாணம் எனப்படும் அறிவின் வாயில்கள், 2. பிரமேயம் எனப்படும் அறிவின் விடயம், 3. வாதம் எனப்படும் சொல்லாடல், 4. அவயவம் எனப்படும் அனுமானத்தின் அங்கங்கள், 5. அன்னியமத பரீட்சை எனப்படும் பிற மெய்யியற் கோட்பாடுகள் பற்றிய
ஆராய்ச்சி என்பனவாகும்.
வாதமார்க்கம் எனப்படும் விவாதத்தின் சகல கூறுகளை யும் நியாய சூத்திரம் 16 வகையீடாகப் பிரித்து ஆராய்கி றது. நியாயசூத்திரத்தின் உரைகளின்படி வாதி பிரதிவாதி ஆகிய இருவருக்கும் இடையில் நடைபெறும் விவாதத்தின் படிநிலைகளே 16 வகையீடுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
அவை மேல்வருவனவாகும்.
1. பிரமாணம் - இது அறியப்படும் வாயில்கள் பற்றியது 2. பிரமேயம் - இது அறியப்படும் பொருள் பற்றியது.
இவை இரண்டும் விவாதத்திற்கான அடிப்படையைத் தரும் வகையீடாகும். நிறுவவிரும்பும் கருத்துரையை வாதி நிறுவுவதற்கான சந்தர்ப்பத்தை இவ்விரு வகையீடும் தரு கிறது.
3. சம்சயம் எனப்படும் ஐயம்
4. பிரயோசனம் எனப்படும் சமாந்தரமான கருத்து
ரைகளைத் தருதல்
5. ஐயத்தைப் போக்கும் வகையில் ஒத்த உதாரணங்க
ளான திட்டாந்தத்தைத் தருதல்
6. சித்தாந்தம், வாதியும் பிரதிவாதியும் உடன்படும்
முடிவிற்கு வருதல்
7. அவயவங்கள்
இந்துக் கலைக்களஞ்சியம்:xxx
 

10.
11.
2.
13.
14.
15.
16.
தர்க்கித்தல், பிரதிவாதியினால் கூறப்படும் ஆட்சேபங் களை நிராகரித்தல்
நிர்ணயம் எனப்படும் நிச்சயப்படுத்தல். வாதியின் நிறுவலாற் பிரதிவாதி, திருப்தியடையாதுபோயின், பிரதிவாதியால் பிறிதொரு கருத்துரை முன் மொழியப்பட்டு அவரால் நிறுவல் மேற்கொள்ளப்படும்.
வாதம் எனப்படும் சொல்லாடலில் வாதியும் - பிரதி வாதியும் ஈடுபடுதல். ஜல்பம், விதண்டை என்ற இரு வடிவங்களைப் பெறலாம்.
ஜல்பம், விவாதத்தில் வெற்றிபெறுவதை மட்டும் இலக்காகக் கொண்டு தர்க்கித்தல்.
கருத்துரையை முன்வையாது எதிராளியினால் முன்மொழி யப்படுபவற்றை நிராகரிப்பதில் மட்டும் FF(BLIL6).
ஹேதுப் போலி எனப்படும் தவறான நியாயித்தல்
சலம் - விவாதத்தில் ஈடுபடும் இருவரில் ஒருவர் வேண்டுமென்றே எதிராளியின் கருத்தைத் திரிவு
படுத்தி விளக்குதல்.
ஜாதி - எதிராளியின் வாதம் ஹேதுப் போலியாகும் என வேண்டுமென்றே தவறாகக் கூறுதல்,
நிக்கிரகஸ்தானம் எனப்படும் தோல்வித்தானம். விவாதத்தில் தோல்வி அடைந்தவர் எவர் எனத் தீர்மானிப்பதற்குரிய உத்திகள்.
உத்தேசம், இலட்சணம், பரீட்சை என்ற அடிப்படையி
லேயே நியாயசூத்திரத்தில் மேற்படி வகையீடு மேற்கொள்
ளப்பட்டுள்ளதென உரையாசிரியரான வாத்சாயனர் குறிப்
பிடுவது அவதானிக்கத்தக்கது. (சோ.கி.)
இந்து சமய கலாசார அலுவல்கள் தி6ை00க்க3ாம்

Page 302
untu jiffGOTlb
இந்தியாவிலே சமயத்திற்கும் தத்துவத்திற்கும் நெருங் கிய உறவு இருப்பதற்குக் காரணம், அங்கு பகுத்தறிவும், கடவுளைப் பற்றி உணர்த்தப்பட்ட அறிவும் இணைந்து சென்றமை ஆகும். மேலை நாட்டவர் “தத்துவ ஞானத்தை" ஒன்றைப் பற்றி அறிய எழும் இயல்பான விருப்பம் அல்லது வியப்புணர்வு என்பதிலிருந்து தோன்றுவது என்பர். அது உலகைப் பற்றிய கண்ணோட்டம், உள்பொருள் பற்றிய கொள்கை என்பது அவர்கள் கருத்தாகும். ஆனால் இந் திய மரபில் தத்துவத்தை, வாழ்க்கை நெறியாக, ஆன்மீக உணர்வைப் பெறுவதற்கு ஒரு பாதையாகக் கொள்கின்ற னர். சமயத்தைப் போலவே தத்துவமும், மனித வாழ்க்கை யின் தேவையை நிறைவு செய்கிறது. துன்பத்தை நீக்கி சாந்தியைப் பெறுவதே மனிதனின் உயர் குறிக் கோளாகும். இதற்கு சமயம் இன்றியமையாதது. சமயத்தை அடைவதற் குரிய பாதையாக தத்துவ ஞானம்’ அமைந்திருக்கின்றது. சமயத்திற்கும் தத்துவத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பு காரணமாக இந்து சமய தத்துவ ஞானிகள் தத்துவ ஞானம் பயனற்றதாகப் போகாமலும் சமயம் குருட் டுப் போக்காய் அமையாமலும் தடுத்துப் பாதுகாத்தார்கள்.
நியாயம் என்னும் தத்துவ முறையானது காட்சியளவைக் கொள்கை ஆகும். சிந்திக்கும் மனங்களின் சார்பற்ற அளவி லேயே ஒரு புறவுலகு இருப்பதை அது நம்புகிறது. இந்த நம்பிக்கையைச் சரியான அனுமான வழிகொண்டே நிறுவ முயல்கின்றது. அதாவது "புறத்தேயுள்ள பொருள்களின் இருப்பும், இல்லாமையும் தோற்றமும் மறைவும் நம்மனத் தைப் பொறுத்தன அல்ல. நம்மனம் இருந்தாலென்ன இல் லாது போனாலும் என்ன, புறவுலகும் அதன் கண்ணுள்ள பொருள்களும் இருந்தே தீரும் என்பது அவர்கள் கொள்கை, நியாய தரிசனத்தை நையாயிகம்' என்றும் சொல்வர். இதனை பின்பற்றுவோர் நையாயிகர் எனக் கூறப்படுவர்.
இந்திய தத்துவ முறைகளில் அறிவைப் பற்றிய ஆராய் ச்சி முக்கிய இடம்பெறுகிறது. அவற்றில் ஏற்புடைய அறிவு
என்பது என்ன? அதனைப் பெறுவதற்குரிய வழிகள் எவை?
இந்துக் கலைக்களஞ்சியம்x
錢談27
 

என்ற இரு விடயங்கள் முக்கியமாக ஆராயப் பெறுகிறது. ஏற்புடைய அறிவைப் பெறும் வழிகள் பிரமாணங்கள் எனப்படும். நியாய முறைப்படி ஏற்புடைய அறிவைப்
சம் (புலக்காட்சி), அனுமானம், ஆப்த வாக்கியம் (சான்
றுரை), உபமானம் (ஒப்புமை) என்பனவாகும்.
1. பிரத்தியட்சம் (புலக்காட்சி)
சாதாரண புலக்காட்சி என்பது ஒரு புலனுக்கு ஒரு பொருளோடு ஏற்படும் இணைப்பும் அதன் பயனாகக் கிட் டும் அறிவுமாம். ஆனால் சில புலக்காட்சிகளில் புலச்செயல் இல்லாமலும் இருக்கலாம் என்ற காரணத்தால் நையாயிகர் புலக்காட்சி என்பது 'நேரடியாக அறிதல்' என்று கூறினார் கள். புலக்காட்சியின் போது மனத்திற்கும் புலனுறுப்புக்கும் தொடர்பு ஏற்படுகிறது. ஆன்மாவுக்கும் மனத்துக்கும் தொடர்பு உண்டாகிறது. புலக்காட்சி முறையில் பெறும் அறிவுக்கோ மற்றைய வழிகளில் பெறும் அறிவுக்கோ இத்தொடர்புகளே தேவைப்படுகின்றன. அ.தாவது ஒரு பொருள் நம் கண்ணுக்குப் புலனாகின்றது. கண்ணுக்குப் புலனாகின்ற காரணத்தால் நாம் காண்பதைப் போன்றே அது புறத்தே உண்மையில் இருக்கின்றது என்பது பிரத்தி யட்சப் பிரமாணம் ஆகும் என்று கூறுகிறார்கள் நையாயிகர். பிரத்தியட்சம், நிருவிகற்பம் (வரையறுக்கப்படாத புலக் காட்சி), சவிகற்பம் (வரையறுக்கப்பட்ட புலக்காட்சி) என இருவகைப்படும் ஒரு பொருளை 'அது' என்று அறிவது நிருவிகற்பம் அது என்ன? என்று அறிவது சவிகற்பம் ஆகும். சவிகற்பத்தில் பொருளின் இயல்புகள் இனங்கள், தன்மைகள் போன்றன ஆராய்ந்து அறியப்படும்.
(உதாரணம்)
1. மேசையைப் பார்த்தல் - நிருவிகற்பம்
2. மேசையைப் பார்க்கும்போது அதன் கடினத்தன்மை, அதன் நீளம், வடிவம் போன்ற தன்மைக ளோடு பார்ப்பது சவிகல்பம்.
2) அனுமானம்
நியாய தத்துவத்தின் இரண்டாவது முக்கியமான பிரமா
ணம் அனுமானம் ஆகும். இதன்வழிவரும் அறிவு ஊடக
அறிவு எனப்படும். அது நேராகக் கிடைக்கும் புலக்காட்சி
x இந்து சமய கலாசார அலுவல்கள் தி6ைOOக்களம்

Page 303
அறிவிலிருந்து வேறுபடுகிறது. எடுத்துக்காட்டாக மலையின் கண் நெருப்பு உள்ளது. ஏனெனில் அங்கு புகை இருக்கி றது. எங்கெல்லாம் புகை உள்ளதோ அங்கெல்லாம் நெருப்பு உண்டு. (அடுப்படி) நெருப்போடு மாறாது தொடர் ந்து வருகின்ற புகை இம்மலையில் இருக்கிறது. எனவே இம்மலையின்கண் நெருப்பு உள்ளது என்று முடிவு கொள்வர்.
இங்கு, மலையில் புகையைக் காண்பதை ஆதாரமாகக் கொண்டு, மலையின் கண் நெருப்பு உள்ளதை அனுமானி க்க முயல்கிறோம். புகைக்கும் நெருப்புக்கும் இடையே இணைந்தே வரும் என்று நம்மால் அறியப்பட்ட புகையைப் பற்றிய புலக்காட்சியை ஆதாரமாகக் கொண்டே மலையில் நெருப்பு உள்ளது என்ற அறிவு அமைகின்றது. எனவே, அது ஊடக அறிவாகும். மலைக்கும் நெருப்புக்கும் உள்ள அறிவுத் தொடர்பு புகையின் ஊடாகக் கொண்டுவரப்படுகி றது. எனவே, அனுமான அறிவு பிறிதோர் அறிவைக் கருவியாகக் கொண்டு பெறப்படும் அறிவாகும். அனுமானத் தின் நேர்ப்பொருள் பின்வரும் அறிவு என்பதாம்
3) ஆப்த வாக்கியம் (சான்றுரை)
மூன்றாவது பிரமாணமாக விளங்குவது ஆப்த வாக்கிய மாகும். அ.தாவது நம்பிக்கைக்கு உகந்த ஒருவரின் சான்றுரை ஆகும். இது சப்த பிரமாணம் என்றும் அழைக்கப் படும். பேசுகின்ற பொருளைப் பற்றி நன்று அறிந்தவனாக வும் அதைச் சரியாக எடுத்துச் சொல்பவனாகவும் உள்ள ஒருவனே நம்பத்தகுந்தவன். சப்த பிரமாணமானது அதன் மூலத்தின் சிறப்பினைப் பொறுத்தது. அதாவது அதைச் சொல்பவனுடைய தகுதி, சிறப்பு ஆகியவற்றினைப் பொறுத்தே அமைகிறது. பொருள்களைப் பற்றிய அறிவைப் பெறுவதற்குச் சொற்களைப் புலனால் உணர்ந்தறிதல் மட்டும் போதாது, அச்சொற்களின் அர்த்தங்களையும் ஒரு வன் புரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு பொருளைத் தரக்கூடிய ஆற்றல் உண்டு. இவற்றால் இறைவனது திருவுளத்தாலே தான் நிர்ணயிக்கப் படுகிறது என்பது நையாயிகர்களது கருத்து. “இந்தச் சொல்லிலிருந்து இந்தப் பொருள்தான் உணரப்படவேண் டும்.” என்பதை இறைவனே தீர்மானிக்கிறான். எனவே நம்பத்தகுந்த ஒருவன் சொல்லும் சொற்களைக் கேட்கும் போது அச்சொற்கள் தம் சக்தியால் தரும் பொருளைப் புரிந்துகொள்ளும் போது நாம் சான்றுரை வழியாக ஏற்புடை
இந்துக் கலைக்களஞ்சியம்

7 5
அறிவைப் பெறுகின்றோம்.
சான்றுரை வேதத்தினைச் சேர்ந்ததாகவும் (வைதிகம்) அல்லது உலகியல் கூற்றாகவும் (லெளகிகம்) அமைய லாம். வேதத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களெல்லாம் இறை வனுடைய கூற்றுக்களாகும். எனவே அவற்றின் சான்றுரை கள் நிறைவுடையனவாகவும், தவறற்றனவாகவும் உள்ளன. உலகியல் கூற்றுக்கள் அப்படியல்ல. அவை நம்பிக்கைக்கு உகந்த சான்றோர்களிடமிருந்து கிடைத்தால் மட்டுமே சரியாகவும் அதிகார பூர்வமானதாகவும் இருக்கும்.
4) உபமானம் (ஒப்புமை/உவமானம்)
உபமானம் ஏற்புடைய அறிவை பெறுவதற்கான நான் காவதும் இறுதியானதுமான வழியாகும். இங்கே ஒரே மாதிரி யாய் இருத்தல் பற்றிய அறிவே கருவியாய் அல்லது வழியாய் அமைகின்றது. இதன்மூலம் ஒரு பெயருக்கும் அப்பெயர் குறிப்பிடும் பொருளுக்கும் உள்ள உறவு பற்றிய அறிவு பெறப்படும்.
எடுத்துக்காட்டாக நகர்ப்புறத்தில் வாழும் ஒருவனுக்குக் கவயம் (காட்டுப்பசு) என்ற சொல்லின் பொருள் தெரியாது. அவன் கவயம்' என்பது பசு போன்றது என்று ஒருவர் மூலம் அறிகின்றான். அதன் பின் அவன் காட்டுக்குச் சென்றபொழுது அம்மிருகத்தைக் கண்டு அது கவயம் என உபமானம் மூலம் அறியும் அறிவு உபமானப் பிரமான மாகும் என்பர் நையாயிகர். (ச.ந.)
untu luDuiului)
வைதீக அல்லது ஆஸ்திக தரிசனங்களில் நியாயம் ஒன்றாகும். தருக்கச் சிந்தனைகளே இதன் சிறப்பியல்பா கும். இதன் மெய்யியற் சிந்தனைகள் அக்ஷபாத கெளதமர் என்பாரின் நியாயசூத்திரத்திரம் என்னும் நூலை அடிப்படை யாகக் கொண்டது. நியாயசூத்திரத்தின் உரைகளில் வாத் சாயனரின் உரை சிறப்பிடம் பெறுகிறது.
நவீனகால இந்து தத்துவ சிந்தனையில் நியாய மெய்யி யலின் முக்கிய பங்களிப்பு அதன் முறையியலேயாகும். இந்த முறையியலானது ஒரு குறிப்பிட்ட தருக்கச் சிந்த னையை அடிப்படையாகக் கொண்டது. பிற்காலத்தில்
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 304
பெரும்பான்மையான சிந்தனாகூடங்கள் நியாயத்தின் முறை யியலை தமக்குள் உள்வாங்கிக் கொண்டமை குறிப்பிடத் தக்கது. மேற்கத்திய விஞ்ஞானமும் மெய்யியலும் எவ் வாறு அரிஸ்ரோட்டலின் தருக்கத்தை உள்வாங்கிக் கொண்டனவோ அவ்வாறே இந்தியச் சிந்தனை மரபும் நியாய த்தின் தருக்கத்தை உள்வாங்கிக் கொண்டது.
அரிஸ்ரோட்டலின் தருக்கத்திலும் பார்க்க, நியாயதருக் கம் தன்னியல்பில் மிகவும் பரந்தது. வலிதான அறிவைப் பெறுவதன் மூலமே துன்பத்திலிருந்து விடுதலை பெறமுடியு மென்பது நியாய தரிசனத்தைப் பின்பற்றுபவர்களது நம்பிக்கை. இதனால் அவர்கள் வலிதான அறிவைப் பெறுவதற் கும் தவறான அபிப்பிராயங்களிலிருந்து விடுபடுவதற்கு மாகப் பெரிதும் முயற்சியெடுத்தனர்.
நியாயமெய்யியலாளரது கருத்துப்படி, பிரமாணங்கள் அல்லது அறிவின் வாயில்கள் நான்காகும். அவையாவன, காட்சி, அனுமானம், ஒப்புமை, ஆய்தவாக்கியம் என்பனவா கும். இவ்வாயில்கள் மூலம் அறிவு பெறப்பட்டாலும் அவற் றிலும் தவறுகள் இடம்பெறுதல் சாத்தியம். அதனால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பெறப்படும் அறிவு தவறுகளிலி ருந்து நீங்கியதாயிருப்பதை உறுதிசெய்து கொள்வதற்காக நியாய மெய்யியலாளர் பெரும் சிரமமெடுத்துக் கொண்டது டன் அதற்கான விளக்கவுரைத் திட்டங்களையும் வகுத்துக் கொண்டனர்.
அறிவைப் பெறுவதற்கு நால்வகைப் பிரமாணங்களை நியாயச் சிந்தனையாளர் ஏற்றுக் கொண்டிருந்தனர். அவை முறையே காட்சி, அனுமானம், ஒப்புமை, ஆய்தம் என்பனவா கும்.
காட்சியை பிரத்தியட்சம் என அழைப்பதுடன் அதுவே நியாய அறிவாராய்ச்சியியலில் முதன்மை ஸ்தானத்தையும் பெறுகிறது. அது இரு வகைத்து. அவை முறையே லெளகீக அல்லது சாதாரணப் பிரத்தியட்சம், அலெளகீக அல்லது அசாதாரண பிரத்தியட்சம் எனப்படும். மெய், வாய், கண், மூக்கு, செவி, உளம் என்பவற்றால் பெறப்படும் காட்சியறிவு லெளகீக அல்லது சாதாரண பிரத்தியட்சம்
எனப்படும். அலெளகீக அல்லது அசாதாரண பிரத்தியட்
 

சம் மூன்று வகைப்படும். அவை முறையே தனியன்களிலி லிருந்து பொதுமைப் பண்புகளைப் பெறுவது சாமான்ய லட்சணம் எனப்படும். சிலவேளைகளில் புலன்களால் தரப்படும் பண்புகள் சில அப்புலன்களுக்கு உரித்தல்லாத வொன்றாக இருத்தல் சாத்தியம். உதாரணமாக மிளகா யைப் பார்க்குமொருவர் அது உறைப்பானதென உணருவது ஞானலட்சணம் எனப்படும். யோகத்தின் ஆற்றலால் முக் காலமும் உணரும் அறிவு யோக ஞானம் எனப்படும். அத்துடன் கூடவே காட்சியின் இரண்டு படிநிலைகள் பற்றி யும் நியாய அறிவாராய்ச்சியியல் குறிப்பிடுகிறது. அவை முறையே நிர்விகற்பக் காட்சி, சவிகற்பக் காட்சி என்பன வாகும். லெளகீக, அலெளகீக பிரத்தியட்சம் சவிகற்பக் காட்சியில் உள்ளடங்கும் பிரத்தியபிக்ஞான என்பதொரு மூன்றாவது நிலையும் உண்டு. ஞாபகத்தை அடிப்படையா கக் கொண்டு மீள்நினைவு கூரத்தக்கதாக இருப்பது இப்பிரி விலடங்கும்.
அனுமானமே நியாய மெய்யியலின் மிக முக்கிய பங்க ளிப்பாகும். இது இருவகைப்படும். அவை சுவார்த்த அனு மானம், பரார்த்த அனுமானம் எனப்படும். ஒருவன் தானே அறிவைப் பெறுதல் வேண்டி அனுமானிப்பது சுவார்த்த அனுமானம் எனப்படும். இது ஒன்றில் முதல் மூன்று அல் லது இறுதி மூன்று படிநிலைகளைக் கொண்டது. ஒருவன் தான் அறிந்ததை பிறருக்கு நிறுவுதற்காக அனுமானத் தைப் பயன்படுத்துவது பரார்த்த அனுமானம் எனப்படும். இது ஐந்து படிநிலைகளைக் கொண்டது. நியாயக் கொள் கையினர் அனுமானத்தை மூன்று வகையாகவும் வகைப்படு த்தினர். அவை முறையே பூர்வவத், சேஷவத், சாமானிய என்பனவாகும். அனுமானம் தொடர்பாக ஆராய் ந்த நியாயக் கொள்கையினர் தவறு பற்றியும் விரிவாக ஆராய்ந்துள்ளனர்.
உவமையின் தருக்க இயல்பைப் பயன்படுத்தி ஒப்புமைப் பிரமாணம் உருவாக்கப்பட்டுள்ளது. உவமை, ஏகதேச உவமை, வியாபக உவமை என இரண்டாகும். ஏகதேச உவமையே ஒப்புமைக்கு உரியது. சொல்லிற்கும் சொல் குறிக்கும் விடயத்திற்கும் இடையிலான தொடர்பை அடிப் படையாகக் கொண்டு பெறப்படும் அறிவு என ஒப்புமையை

Page 305
விளக்கலாம். ஒத்ததன்மை காரணமாகப் பெறப்படும்
அறிவே ஒப்புமையாகும்.
சப்தம் அல்லது ஆப்தவாக்கியம் எனப்படுவதையும் ஒரு பிராமணமாக நியாயக்கொள்கையினர் ஏற்றுக் கொண்டிருக் கிறார்கள். இதுவும் இருவகைப்படும். முதலாவது வைதீகம் எனப்படும் வேத வாக்கியங்கள் ஆகும். அவை இறைவ னின் வாக்கு என நியாயக் கொள்கையினர் கருதுகின்ற னர். இரண்டாவது லெளகீகம் எனப்படும் நம்பிக்கைக்கு
உரியவரின் வாக்கு அல்லது எழுத்தாகும்.
அனுமானத்தின் முறையியல் உய்த்தறிதல், தொகுத் தறிதல் என்ற இருவடிவங்களினதும் இணைப்பைப் பயன் படுத்தி தனியன்களிலிருந்து தனியன்கள் பற்றியதும் அதனவழி பொதுமை பற்றியதுமான அறிவைப் பெறுவதா கும். இதற்கென நியாய மெய்யியலாளர் தரும் உதாரணம் மேல்வருமாறு அமைந்துள்ளது.
* மலையில் நெருப்புண்டு. (பிரதிக்ஞை - என
அழைக்கப்படும்.)
* ஏனெனில் அங்கு புகை காணப்படுகிறது. (ஏது - என
அழைக்கப்படும்)
* எங்கு புகையுண்டோ அங்கு நெருப்புண்டு. (திருட்டாந்தம்
- என அழைக்கப்படும்)
* இம்மலையில் புகை காணப்படுகிறது. (உபநயம்
என அழைக்கப்படும்)
* ஆகவே இம்மலையில் நெருப்புண்டு (திகமனம் - என
அழைக்கப்படும்.)
மேலே தரப்பட்ட உதாரணத்தைக் கொண்டு நியாயக் கொள்கையினரின் கலைச் சொற்களை விளக்கலாம். இதன்படி மலை பக்கமாகும் நெருப்பு சத்தியம், புகை ஏது, புகைக்கும் நெருப்பிற்கும் இடையிலான தொடர்பு வியாப்தியாகும். இவர்களுடைய அபிப்பிராயப்படி, ஏது ஐந்து பண்புகளைக் கொண்டிருத்தல் வேண்டும். அவை யாவன. 1. ஏது பக்கத்தில் இருக்க வேண்டும், 2. உடன் பாட்டு உதாரணங்கள் அனைத்திலும் இருக்க வேண்டும்.
இந்துக் கலைக்களஞ்சியம் இ8:ஐ 緣災 整27

3. எதிர்மறை உதாரணங்களில் இல்லாதிருத்தல் வேண்டும், 4. பக்கத்துடன் ஒத்திசைவாக இருத்தல் வேண்டும், 5. ஏனைய அறிவின் வாயில்களுடன் முரண்படும் வகையில் இருத்தலாகாது. நியாய அறிவாராய்ச்சியியலின்படி அனு மானப் போலிகள் மேல்வருவனவற்றில் யாதேனுமொன்றால் நிகழலாம்.
அசித்தம் தரப்பட்ட ஏதுவால் முடியாது போகும் சந்தர்ப்பங்களால் இப்போலி எழுகிறது. இது மூன்று வகை ப்படும். 1. அன்னியதாசித்தம் - பக்கம் உண்மையற்ற தாயின் ஏதுவிற்கான நிலையிடம் இல்லாது போய் விடும். உதாரணமாக ஆகாயத்தாமரை நறுமணமுடையது. ஏனெ னில் அது பிற தாமரைப் பூக்களைப் போன்றதாலாகும். 2. ஸ்வரூபாசித்தம் - ஏது பக்கத்தில் இடம்பெறாது போவதால் எழுவது, உதாரணமாக சப்தம் ஒரு பண்பாகும். ஏனெனில் அது கட்புலனாகக் கூடியதாய் இருப்பதாலாகும். 3. வியாப்யாத்வசித்தம் -நிபந்தனைக்குட்பட்ட ஏதுவால் விளைவதாகும். உதாரணமாக எங்கெல்லாம் நெருப் புண்டோ அங்கெல்லாம் புகையுண்டு. என்கையில் எழக் கூடிய போலி ஈரவிறகினாலும் புகையுண்டு என்ற போலி
வாதமாகும்.
சவ்வியச்சாரி: ஒழுங்கற்ற ஏதுவினால் நிகழும் இப்போலியானது மூன்று வகைப்படும், 1.சாதாரணம் - சபக்கத்தையும் விபக்கத்தையும் உள்ளடக்கக் கூடிய வகையில் அமையும். ஏதுவினால் இப்போலி எழுகிறது. உதாரணம் இம்மலையில் நெருப்புண்டு. ஏனெனில் அது அறியத்தக்கதாய் இருப்பதனாலாகும். 2. அசாதாரணம் - சபக்கத்திலும் விபக்கத்திலும் இடம்பெறாது, பக்கத்தில் மட்டுமே இடம்பெறும் ஏதுவினால் இப்போலி எழுகிறது. சப்தம் நித்தியமானது. ஏனெனில் அது கேட்கக்கூடியதனா லாகும். அனுபவசம்ஹாரி சபக்கம், விபக்கம் உட்பட அனைத்தையும் விதிவிலக்கில்லாது உள்ளடக்கும் ஏதுவி னால் இப்போலி நிகழுகிறது. உதாரணம் - சப்தம் அணித்தியமானது. ஏனெனில் அறியக்கூடியதாய் இருப்பத
னாலாகும்.
சத்பிரதிபக்கம்: சமவலிமையுள்ள அதே சமயம் ஒன்றுக்கொன்று முரண்பட்ட ஏதுக்கள் முன்மொழி
縫 x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்கலாம்

Page 306
யப்படும்போது அவற்றிலிருந்து எத்தகைய முடிவையும் பெறமுடியாது. சப்தம் நித்தியமானது, ஏனெனில் அது கேட்கக்கூடியதனாலாகும். சப்தம் அணித்தியமானது, ஏனெ னில் அது உற்பத்தி செய்யப்பட்டதாலாகும் என்ற வாதத்தி லும் முறையே இடம்பெற்றுள்ள கேட்கக்கூடியதாயிருத்தல், உற்பத்தி செய்யப்பட்டது என்ற இரண்டும் சமவலிமையு டைய ஏதுக்களாதலால் எத்தகைய முடிவையும் பெற
முடியாது.
பாதிதம்: பிறிதொரு நிரூபணம் (உதாரணம் காட்சி) ஏதுவுடன் முரண்பட்டு அதனை நிராகரிக்குமாயின் அது பாதிதம் என்ற போலியாகும். நெருப்பு தண்மையானது. ஏனெனில் அது ஒரு திரவியமாதலின்,
விருத்தம்: நிறுவவேண்டியதிற்குப் பதிலாக அதன் மறுதலையை நிறுவுவது விருத்தம். உதாரணம் - சப்தம் நித்தியம், ஏனெனில் அது உற்பத்தி செய்யப்பட்டதாலா
கும்.
காரியத்தின் முன்னதாக கட்டாயமாக நிகழ்வதே கார ணம். அது எவ்வித வடிவத்திலும் காரியத்தில் உள்ளடங்கி யிருப்பதில்லை என நியாயக் கொள்கையினர் கருதுகின்ற னர். இக்காரணக் கொள்கை அசத்காரியவாதம் என அழை க்கப்படும். மேல் வரும் நிபந்தனைகளைக் காரணக் கொள்கை பூர்த்தி செய்தல் வேண்டும். 1. காரணம் காரிய த்தின் முன்னிகழ்வதாய் (பூர்வவிருத்தி) இருத்தல் வேண் டும். 2. கட்டாயமாகக் (நியதபூர்வவிருத்தி) காரியத்தை உண்டாக்குதல் வேண்டும். 3. நிபந்தனைகள் (அன்னியதா
சித்தம்) எதுவும் இருத்தலாகாது.
ஐந்து வகையான அன்னியதாசித்தம் பற்றி நியாயக் கொள்கையினர் குறிப்பிடுகின்றனர். 1. முற்றிலும் தற்செய லான முன்னிகழ்ச்சி, உதாரணம்; குயவனின் ஆடையின் நிறம் குடத்தின் நிறத்திற்குக் காரணமல்ல. 2. தொலைக் காரணம்: குயவனின் தந்தை குயவன் வனைந்த குடத்தி ற்கு காரணமல்லன், 3. காரணத்தின் விளைவுகள் தம்மி டையே காரணத்தொடர்பைக் கொண்டவையல்ல, 4. நித் தியமான திரவியங்கள் அல்லது நித்திய நிபந்தனைகள் முன் நிபந்தனைகள் ஆகா. உதாரணம் வெளி குடத்திற்
@ig556oaJ55es@由Ló談

குக் காரணமல்ல, 5. தொடர்பற்ற விடயங்கள், உதாரணம்
குயவனின் குரங்கு குடத்திற்கு காரணமல்ல.
நியாயக் கொள்கையினர் மூன்று வகையான காரணத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். 1. சமவாயிகாரணம் - சடக்கார ணம், உதாரணம் ஆடையின் இளைகள், 2. அசமவாயி காரணம் இழைகளின் நிறம் ஆடையின் நிறத்திற்குக் காரணமாகிறது. 3. நிமித்த காரணம், ஆடையை நெய்ய
660.
நியாயக் கொள்கையினரின் தவறு பற்றிய கொள்கை அன்யதாக்கியாதிவாதம் என அழைக்கப்படும். இது குமாரி லரின் விபரீதக்கியாதியை ஒத்தது. தவறு பற்றிய குமாரி லரின் கருத்தைப் போலவே, பொருளுக்கும் அப்பொருள் பற்றிய தரவுகளுக்குமிடையே ஏற்படும் தவறான இணைப் பினால் எழுவதாகுமென நியாயக் கொள்கையினரும் ஏற்றுக் கொள்ளுகின்றனர். தவறான தரவுகளால் பொருள் பற்றிய மயக்கம் எழுகிறது. அறிவின் வாய்ப்பும், வாய்யின் மையும் பரார்த்தப் பிரமாணத்தினாலேயே தீர்மானிக்கப்படும்.
ஆரம்பகால நியாயக் கொள்கையினர் இறைவன் (ஈஸ்வரன்) பற்றிய ஆய்வுகளை அதிகளவில் மேற்கொள்ள வில்லை. ஆனால் பெளத்தக் கொள்கையினரின் அறியொ னாமை வாதம், இறைமறுப்பு வாதம் ஆகியவற்றுக்கு எதிரான விவாதத்தில் ஈடுபட்டதனால் இறைவனை தருக்க ரீதியாக நிறுவவேண்டிய தேவை ஏற்பட்டது. இறைவனது இருப்புத் தொடர்பாக ஒன்பது வகையான நிரூபணங்கள்
உதயணரின் நியாய குசுமாஞ்சலியிற் தரப்பட்டுள்ளது.
* காரியத்தை அடிப்படையாகக் கொண்ட ി[]ഖ്, காரியம் காரணத்தினால் உற்பத்தியாக்கப்படுவது போல பிரபஞ்சத்திற்கும் ஒரு காரணம் இருத்தல் வேண்டும். பிரபஞ்சத்தின் சமவாயிகாரணம் அணுக்கள், அசமவாயி காரணம் அணுக்களின் இணைப்பு நிமித்த காரணம் ஈஸ் வரன், உலகைச் செயற்படுத்தும் காரணம் அனைத்து படைப்பின் கூறுகள் பற்றிய அறிவுள்ளவனாதல் வேண்டும். அத்தகையவன் இறைவனேயாம். எனவே படைக்கப்பட்ட திலிருந்து அதனைப் படைத்தவனொருவன் உளான் என்பது நிறுவப்பட்டது.
災談炮ig Hau」5a兀9H可g@au656竹豆leoecoTá56Tá

Page 307
* அணுக்களை ஒன்று சேர்த்தல் என்பதை அடிப்படை யாகக் கொண்ட நிறுவல், அணுக்கள் செயலூக்கமற்றவை அவற்றின் பண்புகள் பெளதிகவியல்பானவை அல்ல, ஆகவே உலகைப் படைத்த இறைவனின் சித்தமே அணுக் கள் ஒன்றுசேர்வதற்கு ஏதுவாகிறது. உயிரற்றவை தாமா கவே ஒன்றுசேர முடியாதவை. இவற்றை ஒன்று சேர்த்து ஒழுங்குபடுத்துவதற்கு ஒருவர் அவசியம். அவரே இறை
66T.
* உலகிற்கு ஆதாராமாயிருத்தல் என்பதை அடிப்படை யாகக் கொண்ட நிறுவல் ஆதாரமில்லாதிருந்தால் சடப் பொருட்கள் நிலைத்திராது. அதுபோல உலகிற்கு ஆதார மாக இருப்பவரும் அதனைத் தாங்குபவரும் ஆகிய ஒருவர் இருத்தல் வேண்டும். அவரே இறைவன்.
* சொல்லை அடிப்படையாகக் கொண்ட நிறுவல். ஒவ் வொரு சொல்லும் குறிப்பிட்டதொரு விடயத்தைச் சுட்டுவது இறைவனின் சித்தத்தினாலாகும். இறைவனைத் தவிர வேறெதனிலிருந்தும் எமக்கு இத்தகைய அறிவு கிடைப் பதில்லை. அறிவின் ஊற்று எங்குமுளதாயும், எல்லாமறிந்த தாயும் இருத்தல் வேண்டும். இப்பிரபஞ்சத்திலே அத்தகைய வொன்றை எங்கும் காணமுடிவதில்லை. எனவே அது இப்பிரபஞ்சத்திற்கு வெளியிலேயே இருத்தல் வேண்டும். அதுவே இறைவன்.
* நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட நிறுவல், வேதங்கள் நித்தியமான அறிவின் ஊற்றுக்களாகக் கருதப் படுகின்றன. எத்தகைய போலிகளுக்கும் உட்படா இவ்வறிவு நிறுவலிற்கான அடிப்படையாகப் பொதுவாக நம்பப்படுகிறது. மனித அறிவு வரையறைகளுக்குட்பட்ட தால் வேதங்களை இயற்றியவர் மனிதராக இருத்தல் முடியாது. மனிதரால் முக்காலம் பற்றிய அறிவையும் உளத்தின் அடிநிலை பற்றிய அறிவையும் பெறமுடியாது. எனவே வேதங்களை ஆக்கியோன் இறைவனாயிருத்தல் வேண்டும். வேதங்களை ஆக்கியோன் இறைவன் என்பதால்
இறைவனின் இருப்பு நிறுவப்பட்டதாகிறது.
* சுருதியை அடிப்படையாகக் கொண்ட நிறுவல், வேதங்
கள் இறைவனது இருப்பு பற்றியும் அவனது மேன்மை
இந்துக் கலைக்களஞ்சியம் 签魏
 

பற்றியும் மிக உயர்வாகப் பேசுகின்றன. 'அவன் எல்லா விடயங்களுக்கும் அதிபதி, எங்கும் உள்ளவன், அகஉணர் ச்சிகளை அறிந்தவன், அவனே உலகின் காரணம், படைப் பாளி, அழிப்பவனி' என்றவாறாகச் சுருதிகள் கூறுகின்றன. இதனால் இறைவனின் இருப்பு நிறுவப்படுகிறது. (நிறுவலுக் கான ஆதாரமாக சுருதிகளை நியாயக் கொள்கையினர் ஏற்றுக்கொள்கின்றனர்)
* வாசகத்தை மொழிதல் என்ற அடிப்படையைக் கொண்ட நிறுவல், வேதங்கள் யாரேனுமொருவரால் மொழி யப்பட்ட வாக்கியமாக இருத்தல் வேண்டும். மொழியப்படு வது வாக்கியத்தின் இயல்பாகும். வாக்கியங்கள் எம்மால் மொழியப்படுவதுபோல வேதங்கள் வாக்கியங்களானதால் அவை ஒருவரால் மொழியப்பட்ட வாக்கியங்களாக இருத் தல் வேண்டும். இறைவனே அவற்றை மொழிந்தவனாகி
றான்.
* இலக்கிங்களின் சிறப்பியல்பை அடிப்படையாகக் கொண்ட நிறுவல், ஒரு மூலக்கூறின் பருமன் அது உள்ளடக்கிய அணுக்களின் தொகையில் தங்கியுள்ளது. ஒரு குறிப்பிட்ட கலவையில் உள்ளடங்கிய அணுக்களின் தொகை காண்போனின் காட்சிக்குரிய பொருள் அல்ல. எனவே, அது இறைவனால் ஏற்படுத்தப்பட்டதாகும்.
* கட்புலனாக அடிப்படையிலிருந்து தரப்படும் நிறுவல், இவ்வுலகில் சில மனிதர் இன்புறுவோராகவும் வேறு சிலர் துன்புறுவோராகவும் இருப்பதைக் காண்கிறோம். சிலர் செல்வராயும் வேறு சிலர் வறுமையால் வாடுபவர்களாகவும் காணப்படுகின்றனர். கர்மவினையே இதற்குக் காரணமென நம்பும் நியாயக் கொள்கையினர் தனிமனிதனுடைய வினை களிற்கேற்ற பலாபலன்களைத் தருமொருவர் இருத்தல் வேண்டும், அவரே இறைவன் என்கின்றனர்.
நியாயக் கொள்கையினர் இறைவனின் இருப்பை நிறுவு வது மட்டுமல்லாது அவ்விறைவன் ஒருவனே எனவும் வாதி டுகின்றனர். நியாய குசுமாஞ்சலியில் மீமாம்சகர்களுக்கு எதிரான வாதத்தில் நியாயக் கொள்கையினரின் ஓரிருமை வாதம் காணப்படுகிறது. பல்லிறைவாதிகள் தேவதைகள்
உட்பட பல தெய்வங்கள் பற்றிய நிரூபணங்களைத் தரு
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 308
கின்றபொழுதும், அந்த நிரூபணங்கள் தர்க்கரீதியானவை அல்ல. இறைவன் ஒருவனே என ஏற்றுக் கொள்வதே தர்க்கரீதியானதென நியாயக் கொள்கையினர் வாதி டுகின்றனர். (சோ.கி.)
lumu - Un6u8aFL25 Glaisigniulonfigi darjinfluGungjib
காரணக் கொள்கை பற்றிய விளக்கம் இந்திய மெய்யி யற் சிந்தனா கூடங்கள் அனைத்திலும் பிரச்சினைக்குரிய ஒன்றாகக் கருதப்பட்டு விவாதிக்கப்பட்டுள்ளது. உலகம் எவ்வாறு இருப்புடையதாகிறது என்ற பிரச்சினையை அடிப் படையாகக் கொண்டே இச்சிந்தனாகூடங்கள் ஒவ்வொன் றும் மெய்மைபற்றிய தமது கருத்தமைப்பை உருவாக்கி யுள்ளன. உள்ளன அனைத்தும் மாற்றமடைகின்றன என்ற பொதுப்புத்தி அறிவே காரணக்கொள்கையை ஏற்பதற் குரிய இயற்கையான நியாயமாகக் கருதப்படுகிறது. ஒரு பொருள் குறிப்பிட்ட நிபந்தனைகளின் பேரில் பிறிதொரு பொருளாக மாற்றமடைகிறதெனக் கொண்டால் மாற்றமடை வதற்கான நிபந்தனைகளைக் காரணமென்றும், மாற்றமுற்ற பிந்திய நிபந்தனைகளைக் காரியமென்றும் கூறுவர். நூல் ஆடையாகிறது. பால் தயிராகிறது. வித்து முளையாகிறது. தரப்பட்ட மேற்படி உதாரணங்களிலெல்லாம் காரியமாகிய விளைவிற்கு பிறகாரணிகளும் பங்காற்றியிருக்கலாம். உதாரணமாக வித்து முளையாவதற்கு வித்தைத் தவிர நிலம், நீர், சூரியஒளி முதலானவையும் ஏதுக்களாகும். இவை துணைக்காரணிகள் எனப்படும். இவற்றைவிட விதைப்போனும் அவனது செயலும் விதை முளையாவத ற்கு இன்றியமையாதிருப்பினும் முளை என்ற சாராம்சமான காரியத் துடண் அவை நேரடியாகத் தொடர் பு கொண்டனவல்ல என்பதால் அவற்றைக் கருவிக் காரணம் அல்லது நிமித்த காரணம் என அழைப்பர். வித்து சடக்காரணம் அல்லது உபாதான காரணம் எனப்படும்.
சாங்கியக் கொள்கைப்படி காரணம் என்பது ஒரு நிலை யிலிருந்து, பிறிதொரு நிலையாக மாறுதலடைதலேயாம். இவ்வாறு கூறுதல் பொதுப்புத்திக்குப் போதியதாயினும் பொதுப்புத்தி விளக்கத்துடன் மெய்யியலாளர்கள் திருப்தி
@fa556oevā56T@明uá談 భ28 !
 

யடைந்து விடுவதில்லை. அவர்களுக்கு விரிவான விளக் கம் தேவைப்படுகிறது. உதாரணமாக காரணக்கொள் கையை மாற்றமாக அதாவது பரிணாமவாதமாகச் சாங்கி யர் விளக்கும்பொழுது காரணத்தின் முழுச்சாராம்சமும் காரியத்தில் உள்ளடக்கப்பட்டு, அதுவொரு புதிய வடிவமா கத் தரப்படுகிறதா? அல்லது காரணத்தின் சாராம்சமே புதியதொரு தோற்றப்பாடாகத் தரப்படுகிறதா? என்பதையும் விளக்குதல் வேண்டும். சாங்கியர் இரண்டாவது அணுகு முறையை ஏற்றுக்கொண்டவர்களாக, காரியம் ஏலவே அதன் வடிவத்தில் - காரணத்தில் உள்ளடங்கியுள்ளதென வாதிடுகின்றனர். சாங்கியரின் இந்நிலைப்பாடு சத்காரிய வாதம் எனப்படும். ஆடை, தயிர், முளை ஆகிய காரியங் கள் முற்றிலும் புதிய தோற்றப்பாடுகள், அதாவது முன்னர் இல்லாதிருந்து புதியதாய்த் தோன்றியது என்பதைச் சாங்கி யர் ஏற்பதில்லை. மெய்மை அழிவதில்லை என்ற சாங்கி யக் கொள்கையிலிருந்து அவர்களது இவ்வாதம் தொடர்கி றது. இருப்புடையது எதுவும் இருப்பற்றதாகப் போவ தில்லை, அதேபோல இருப்பற்றதெதுவும் இருப்புடையதாக மாறுவதில்லை என்பதால் காரியம், சாங்கியரின் கருத்துப் படி எவ்விதத்திலும் புதிய மெய்மை அல்லவென்பது சாங் கிய சத்காரியவாத நிலைப்பாடாகும்.
நியாய - வைசேடிகரின் காரணக்கொள்கை சாங்கியரின் நிலைப்பாட்டிற்கு மறுதலையானது. ஆடை, தயிர்முளை என்பன முற்றிலும் புதிதாகத் தோன்றிய விளைவுகளாகும். காரியம் ஏலவே காரணத்தில் இருந்திருக்க முடியாதது என்பதால், அது முற்றிலும் புதிய விளைவாகும். ஆரம்ப வாதம் என அழைக்கப்படும் இது, அசத்காரியவாதம் என அழைக்கப்படும். இந்திய மெய்யியலில் நியாய - வைசேடி கரின் அசத்காரியவாதக் கொள்கையை விமர்சிப்போரில் சாங்கியரும் பெளத்தரும் பிரதான இடத்தைப் பெறுகின்ற ങ്ങI].
அசத்காரியவாதத்தை முதன்முதலில் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் வரையறுத்த்வர் பிரசஸ்த்தபாதர் என்ற வைசேடிக சிந்தனையாளராவார். இவரைத் தொடர்ந்து உத்யோதகர், வாசஸ்பதி மிஸ்ரர், ஜயந்தர் ஆகியோர்க ளால் தொடர்ந்து விருத்தியாக்கப்பட்டது. பிரசஸ்த்தபாதரது
பாடியத்தின் உரையான ரீஹர்சரின் நியாயக்கண்டாவலி

Page 309
யிலேயே மிகத்தெளிவான முறையில் அசத்காரியவாதம் விளக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்தே பிற்கால நியாய - வைசேடிக நூல்களான பாஷா பரிச்சேத', 'தருக்க சங்கிரகம்’ முதலான நூல்களிலும் அவற்றின்
உரைகளிலும் அசத்காரியவாதம் தெளிவாக்கப்பட்டுள்ளது.
அசத்காரியவாதத்தின் அடிப்படை இயல்புகளை நூல் ஆடையாதல் என்ற உதாரணத்தைக் கொண்டு நியாய -
வைசேடிகர் வருமாறு விளக்குவர்:
1. காரணமாகிய நூலைக்கொண்டு காரியமாகிய ஆடை புதிதாக உருவாக்கப்பட்டது என்று கூறும்பொழுது நூல் அவயவமாகிய பகுதியாகும். ஆனால் ஆடையோ அவயவி எனப்படும் முழுமையாகும். இங்கு காரியமானது முன்னர் இல்லாதிருந்து முற்றிலும் புதியதாகத் தோன்றிய ஒன்றாகும்.
2. புதிதாகத் தோன்றிய ஆடை, வெறுமனே பலநூல்க ளின் தொகுதியல்ல, பலநூல்களை ஒன்று சேர்த்து தறியில் நெயப்யப்பட்டதாலேயே ஆடையாயிற்று, காரியமாகிய ஆடை - முழுமை, காரணமாகிய நூலிலிருந்து = பகுதிக ளிலிருந்து வேறுபட்டது. சாராம்சத்தில் நூலும், ஆடையும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவை. இருவேறு பொருட்க ளாகும். இரண்டையும்
ஏககாலத்தில் பக்கம் பக்கமாகக் காணமுடியும்
3. நூலே ஆடையாகிறபொழுதும் அதாவது நூலிற்கும் ஆடைக்கும் உள்ளார்ந்த தொடர்பு இருப்பினும் நூலும் ஆடையும் ஒன்றல்ல. இரண்டும் வெவ்வேறு பொருட்கள். இவ்விரண்டிற்கும் இடையில் காணப்படும் தொடர்பைச்
சமவாயம் என நியாய-வைசேடிகர் ஏற்றுக் கொள்கின்றனர்.
4. நியாய - வைசேடிகரின் அபிப்பிராயப்படி (சடக்) காரணத்திற்கும் காரியத்திற்கும் இடையிலான தொடர்பு பகுதிக்கும் முழுமைக்கும் இடையில் காணப்படும் தொடர்
JT(5f.
நியாய - வைசேடிகரின் அசத்காரியவாதத்திற்குப் பதி லாக சாங்கியர் சத்காரியவாதத்தை ஏற்றுக் கொண்டன
ரென்பது ஏலவே விளக்கப்பட்டது. இவற்றைவிட அத்வைத
 

வேதாந்தம் விவர்த்தவாதம் எனப்படும் காரணகாரிய விளக் கத்தையும் பெளத்தம் பிரதித்திய சமுத்பாதம் என்ற காரணகாரிய விளக்கத்தையும் முன்மொழிகின்றன.
அத்வைத வேதாந்தத்தின்படி மாற்றம் என எதுவும் உண்மையில் இல்லை. காரணம் எப்போதும் போல மாற்ற முறாது இருக்கிறது. நாம - ரூபங்கள் காரணத்தின்மீது தவறாகப் பிரயோகிக்கப்பட்டு, காரியம் என அழைக்கப்படு கிறது. தருமம் - தருமி என்ற சொற்களைப் பயன்படுத்தி விளக்குவதாயின் தருமியாகிய (பிரமம்) ஒரேயொரு கார ணம் மட்டுமே உளது. தருமமாகிய காரியம் மெய்யான தல்ல. மாற்றத்தைக் காணமுடிகிறதாயினும் அது மெய் யானதல்ல என்ற மேற்படி அத்வைத நிலைப்பாடு விவர்த்த
வாதம் எனப்படும்.
பிரதித்தசமுத்பாதம் எனப்படும் பெளத்தரின் கொள்கை
கணபங்கவாதம் எனவும் அழைக்கப்படும். அதன்படி உள்ளதெல்லாம் மாற்றமே. இதன்படி காரியம் உளதாகும் பொழுது காரணம் அழிந்து விடுகிறது. காரணமாகிய மண்களி காரியமாகிய குடமாகும்பொழுது அழிந்துவிடு கிறது. (சோ.கி.)
நிர்த்தி
சதபத பிரமாணம், மஹாபாரதம், மார்கண்டேய புராணம், விஷ்ணுபுராணம் முதலான நூல்களிற் குறிக்கப்படும் நிர்த்தி’ என்ற பெண் தெய்வம் நோய்களதும் துரதிர்ஷடத்தி னதும் மலட்டுத் தன்மையினதும் கடவுளாகக் குறிப்பிடப்படுகின்றாள். நிர்த்தி அழிவிற்குரிய தெய்வமாக அதர்வ வேதத்திலும் குறிப்பிடப்படுகிறாள். சதபத பிராமணத்தில் அவிர்ப்பாகம் ஆகுதியாக்கப்பட்டு நிர்த்தி வழிபடப்படு கிறாள்.
சதபத பிராமணத்தின் பிறிதொரு இடத்தில் பசு என்ற குறியீட்டால் 'தாய் பற்றி குறிப்பீடு உணர்த்தப்பட்டு அதனை பால் தரும் பசு நற்றாய் என்றும் கெடுதி விளை விக்கும் பசு துர்த்தாய் என்றும் விளக்கப்படுகிறது. இதன் படி துர்த்தாயான நிர்த்திக்கு கெடுதி விளைவிக்கும் பசு புனிதமானதெனக் கருதப்பட்டு நோய், துரதிஷ்டம், மலட்டுத்
ళ్ల ஜ் இந்த சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 310
தன்மை என்பனவற்றை மனிதர்க்கு தருபவளாகிய அவளு க்கு கெடுதி பயக்கும் பசு பலியிடப்படுகிறது. மகப்பேறு இல்லாத பெண்ணின் இல்லமே நிர்த்தியின் உறைவிட
மாகும்.
மார்க்கண்டேய புராணத்தில் ரிஷிகளதும் அவர்களது மனைவியரதும் வம்சங்கள் பற்றி விவரித்த பின்பு, மனித வாழ்வில் உருவகமான தர்மம், அதர்மம் பற்றியும் அவர்க ளது மனைவியர், புத்திரர்கள் பற்றியும் குறிப்பிடப்படுகிறது. அதர்மத்தின் மனைவி கெடுதி எனவும் அவர்களுக்குப் பொய்மை என்ற மகனும் அழிவைக் குறிக்கும் நிர்த்தி என்ற மகளும் பிறந்தனர் என்றும் சொல்லப்படுகின்றது. இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் மணந்து பயம், நரகம், வஞ்சகம், சித்திரவதை என்பவர்களை மக்களாகப் பெற்றனர். இவர்களிடமிருந்து இறப்பு, துன்பம் என்ற பிள்ளைகள் பிறந்தன. இவர்களிடமிருந்து நோய், முதுமை, துக்கம், பேரவா, கோபம் என்ற பிள்ளைகள் பிறந்தன. சாராம்சத்தில் தீமையின் ஏதுக்கள் பற்றிய குறியீட்டை
இக்கதை உள்ளடக்கியதெனலாம்.
முற்கால வேத இலக்கியங்களில் வருணனும் தீமை புரிவோரைத் தண்டிப்பவனாகக் குறிப்பிடப்படுகிறான். அவன் பாசத்தைக் (= பாசமான கட்டு) கொண்டவனாக இவ்வுலகில் துன்பத்தை அனுபவிக்க வேண்டிய நியதி உள்ளவர்களுக்கு துன்பத்தை விளைவிப்பவனாக வர்ணிக் கப்படுகிறான். ஆனால் பிற்கால வேத இலக்கியங்களிலே வருணனுடன் கூடவே, நோய், கேடு, இறப்பு ஆகிய துன்பங் களைத் தரும் பெண் தெய்வங்களாக நிர்த்தி, கிராகி ஆகியோருக்கும் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.
முற்கால ஐதீகங்களில் நிர்த்தி அதிதியின் மூத்த சகோதரியாகக் குறிப்பிடப்படுகிறாள். அதிதி நற்றாயாகவும், போஷாக்கை தருபவளாகவும் கற்பும் கருவளமும் கொண்ட வளாகவும் சித்திரிக்கப்பட்ட நிர்த்தியோ துர்த் தாயாகவும் மலடியாகவும் பேராசை கொண்டவளாகவும் சித்திரிக்கப்படு கின்றாள். பிற்காலக் கதைகளில் நிர்த்தி (அ-லக்ஷ்மி) நஞ்சை ஏந்தியவளாகவும் அவளது சகோதரியான லக்ஷ்மி பாற்கடலைத் தேவர்களும் அசுரர்களும் கடைந்த காலை
அமிர்தத்தை ஏந்தியவளாகவும் வர்ணிக்கப்படுகின்றனர்.
இந்துக் கலைக்களஞ்சியம்x

திதி, அதிதி என்கிற காசிப முனிவரின் இரு மனைவிய ரில் திதியின் வயிற்றிலிருந்து எல்லாவகையான தீமைக ளையும் புரியும் அசுரர்கள் தோன்றினர். அதிதியின் வயிற்றி லிருந்து தேவர்கள் தோன்றினர். தேவர்களுக்கும் அசுரர் களுக்கும் இடையிலான யுத்தத்தை சகோதர யுத்தமாக விவரிக்கும் இக்கதை இந்து மரபில் காணப்படும் தீமை பற்றிய ஐதீகமாகும். அதிதியின் மகனான இந்திரன் திதியின் புத்திரர்களைத் தொடர்ந்து கொன்று வந்தான். திதியோ இந்திரனைக் கொல்லவல்ல புத்திரனைப் பெறுவ தற்கு முயற்சித்தவண்ணம் இருந்தாள். ஒரு முறை அவ னைக் கொல்லவல்ல ஆற்றலுடைய கருவை திதி கொண்டி ருந்த சமயம் இந்திரன் அவளது கர்ப்பத்தினுள் புகுந்து தாயிலிருந்து பிறப்பெடுக்காத் தன் சகோதரனை வெட்டிக் கொன்றான். இவ்வாறு இந்திரன் தன் மாற்றாந் தாய்க்கு எதிராக மேற்கொண்ட தாக்குதல் மூலம் அசுரர்களை
அடக்க முடிந்தது. நிர்த்தி தொடர்பாகவும் இதே விதமான கதை பாகவதம், பிரமாண்டம், மத்யஸ்யம், பத்மம்
முதலான புராணங்களில் காணப்படுகிறது.
தேவர்கள். அசுரர்கள் என்ற உருவகம் முறையே நன் மையும் தீமையுமாக உருவகப்படுத்தப்படுவதுடன் நன்மை யானது தீமையை வேருடன் களையும் தன்மையைக்
கொண்டதென்ற அர்த்தத்தைச் சுட்டுகிறது.
இந்திரன் நிர்த்தி பற்றிய பிறிதொரு கதை காத்ஹாக
சம்ஹிதையில் காணப்படுகிறது. இதன்படி இந்திரனுக்கும்
நிர்த்திக்குமிடையிலான முரண்பாடு, பாலியல்சார் முரண் பாடாக தென்படுகிறது. ஒருமுறை இந்திரன் அசுரப்பெண்
ஒருவளிற் காதல்கொண்டு அவளுடன் சேர்ந்து வாழ்ந்தான்.
இந்திரனின் இச்செய்கையால் அவன் தேவர்களுக்குரிய
அந்தஸ்தை இழந்ததுடன் தனது ஆண் தன்மையையும்
இழக்க வேண்டியதாயிற்று. அவன் ஆண்களுடன் இருக்கும்
பொழுது ஆணாகவும் பெண்களிடையே இருக்கும்பொழுது பெண்ணாகவும் இருக்க வேண்டியதாயிற்று. நிர்த்தியின்
பிடிக்குள் அகப்பட்டதாலேயே தனக்கு இக்கதி ஏற்பட்ட
தென்பதை அவன் உணரலாயினான். (சோ.கி.)
zSS Tu Ta TCLLL TMMLL LLsM TTLsseLLTTLLLLL

Page 311
ölýsunem fjLmf
இது சைவசித்தாந்தம் கூறும தீட்சை வகைகளுள் ஒன்று. நிராதாரம், சாதாரம் என்னும் இருபெரும் தீட்சை வகைபாடுகளில் சாதாரம் என்னும் வகைப்பாட்டுள் அடங்கு
வது இது.
விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர் என்னும் மூவகை உயிர்களில் சகலர் நிலையிலுள்ள உயிர்களுக்குரிய தீட்சை முறையே சாதார தீட்சை எனப்படுவது. (சகலர் - ஆணவம், கன்மம், மாயை என்னும் மூவகை மலத்தாலும் பீடிக்கப்பட்ட உயிர்கள்)
சகல நிலையிலுள்ள உயிர்களுக்கு இறைவனது அருட் பதிவானது (சத்திநிபாதம்) மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என்னும் நால்வகையில் ஏதேனும் ஒரு வகை யில் நிகழ்தல் கூடும். சத்திநிபாதம் நிகழும் தன்மைக்கேற்ப
அவ்வான்மாக்களுக்குரிய தீட்சையும் பல வகைப்படும்.
சாதார தீட்சை இறைவனால் நேரடியாக நிகழ்த்தப்படுவ தில்லை. குருவினுடாகவே நிகழ்த்தப்பெறும் ஆன்மாவின் பாசத்தைப் போக்கி ஞானத்தைக் கொடுக்கும் அருட்செய லாகிய தீட்சை ஆன்மாவின் சத்திநிபாத நிலைக்கேற்ப பல்வேறு வகையில் நிகழும். ஆகையால் சாதார தீட்சை யின் வகைகள் இத்துணைதான் என்று வரையறுத்துரைத் தல் இயலாது. எனினும் ஒருசில நூல்கள் சாதார தீட் சையை ஏழாக வகுத்துரைப்பதுண்டு. அந்த ஏழுவகையும் மேல்வருமாறு: 1. நயன திட்சை - ஞானசாரியனின் அருள்நோக்கால் நிகழ்த்தப்பெறும் தீட்சை,
2. ஸ்பரிச தீட்சை - ஆசிரியன் மாணவனைத் தொடும் அளவில் நிகழ்வது.
3. வாசக திட்சை - ஞானாசிரியர் திருவைத்தெழுத்து முதலிய மந்திரங்களை மாணாக்கனுக்கு உபதேசிப்பதன் மூலம் நிகழ்வது.
4. மானச தீட்சை - ஞானாசிரியர் யோகமுறையிலே
மாணவனது ஆன்மாவைச் சிவமயமாக்கி நிகழ்த்துவது.
இந்துக் கலைக்களஞ்சியம்
 

5. சாத்திர திட்சை - குரு மாணவனுக்கு ஞானநூல் களை உரைத்து முப்பொருளியல்பை உணருமாறு செய்து
அகவிருள் தீர்ப்பது.
6. யோக திட்சை - ஞானாசிரியர் மாணவர்க்கு ஆதார யோகம், நிராதார யோகம் என்பனவற்றினைப் பயிற்றுவிப்ப தன் மூலம் நிகழத்துவது
7. ஒளத்திரி தீட்சை - ஞானாசிரியரின் மாணவனிடத் தில் ஞானம் உண்டாவதற்குத் தடையாய் உள்ள சஞ்சித வினைகளை அக்கினி காரியத்தாற் போக்குதல் மூலம் நிகழ்த்துவது.
அக்கினி காரியமாவது ஒமகுண்டத்திலே தீ வளர்த்து
அதில் ஆகுதி செய்தலாகும். 'ஒளத்திரி” என்றால் ஒமத் தோடு செய்யப்படுவது என்று பொருள்.
மேற்கூறிய தீட்சை வகை ஏழினுள் முன்னைய ஆறும் மாணாக்கரின் பக்குவத்துக்கு ஏற்றபடி தனித் தனியே செய்யப்படும். அவ்வாறன்றி ஏழாவதான ஒளத்திரி தீட்சைக்கு அங்கமாகவும் அவற்றுள் ஒன்றோ பலவோ செய்யப்படு வதும் உண்டு. அவை தனித்தனியே செய்யப்படும் போது ‘சுதந்திரம்' என்றும் ஒளத்திரியின் அங்கமாய்ச் செய்யப்படும் போது 'அங்கம்' என்றும் சுட்டப்பெறும். முன்னையவற்றை அங்கமாகக் கொள்ளும் தன்மையால் ஒளத்திரி தீட்சையை அங்கி தீட்சை என்றும் சுட்டுவர். எவ்வாறாயினும் மேற் கூறிய தீட்சை வகை ஏழில் ஒளத்திரி தீட்சையே சிறந்த தாகக் கொள்ளப்படுகின்றது.
அத்தகையதான ஒளத்திரி தீட்சை மூவகையாகப் பகு த்து நோக்கப்படும். அம்மூவகையில் ஒன்றே நிர்வாண தீட்சை எனப்படுவது. ஏனையவை சமயதீட்சை, விசேட தீட்சை எனும் இரண்டுமாம். இந்த மூன்றும் சமய தீட்சை, விசேட தீட்சை, நிர்வாண தீட்சை என்ற ஒழுங்கில் ஏறுவரிசையில் ஒன்றைவிட ஒன்று சிறந்ததாகக் கொள்ளப் படுவன. இத்தீட்சைகள் அவற்றைப் பெறுவோரது பக்குவ நிலைக்குத் தக்கதாக ஒன்றன்பின் ஒன்றாகச் செய்வதற் குரியன. அவ்வகையில் இம்மூவகைத் தீட்சையும் தனித் தனியே வேறுவேறு காலங்களில் செய்யப்படுவதே பெரும்
災線災短沌E Hou 5amgTU 9a2aueDB6前gleo6Cos556Há

Page 312
பான்மை. எனினும் மாணவரின் பக்குவ முதிர்ச்சியைக் கருத்திற்கொண்டு மூன்றையும் ஏககாலத்திற் சேர்த்துச் செய்யப்படுவதும் உண்டு. அவ்வாறு செய்யும்போது முன் னர் செய்யும் தீட்சை பின்னர் செய்யும் தீட்சைக்கு அங்க மாய் அமையும். அவ்வகையில் நிர்வாண தீட்சைக்கு சமய
தீட்சையும் விசேட தீட்சையும் அங்கங்களாகும்.
சமய தீட்சை ஒருவரைச் சமயியாக்குவது. அத்தீட்சை பெறாதவர் சைவாசாரங்களை மேற்கொள்வதற்கு அரு கதையுள்ளவராகார். விசேட தீட்சை சிவபூசை செய்தலா கிய கிரியை நெறிக்கும் மற்றும் யோக நெறிக்குமான அதிகாரத்தைத் தருவது.
சமயம், விசேடம் என்னும் தீட்சைகளைப் பெற்று சரியை, கிரியை, யோகம் ஆகிய மார்க்கங்களில் நின்று பரிபக்கு வம் அடைந்து வீடு பேற்றின் மேலதான அவா மிகப் பெற்ற ஒருவனுக்கு அவனது சஞ்சித கன்மத்தை வறுத்த வித்துப் போல் வலுவிழக்கச் செய்து ஆணவ வலியடக்கி வீடுபேற்றுக்குக் காரணமான ஞானத்தைத் தருவதே நிர் வாண தீட்சை என்று சுட்டுவர். சிவாகமங்கள், சித்தாந்த சாத்திரங்கள் என்பவற்றின் உண்மைப் பொருளை ஆராய் வதற்கும் அவ்வழியே ஞானமார்க்கத்திற் புகுவதற்குமான அதிகாரத்தைத் தரும் தீட்சையாக இந்நிர்வாண தீட்சையே கொள்ளப்படுகின்றது.
நிர்வாண தீட்சை அதிதீவிரம் என்னும் சத்திநிபாதம் உடையவர்க்கே செய்யப்பெறுவது. முப்பொருள்களின் இயல்பினை உள்ளவாறு உணரமுடியாதபடி தடுத்து வந்த சஞ்சிதகன்மம் எனப்படும் வினைத்திறனை ஞானாசிரியர் இந்நிர்வாண தீட்சை மூலம் முற்றாய்த் தகர்ப்பார். அவ்வா றாகச் சஞ்சிதவினை நீங்கும் நிலையில் பொருள்களின் இயல்பு முழுவதும் உள்ளவாறே விளங்கும், எது பொய்ப் பொருள், எது மெய்ப்பொருள் என்று விளங்கும். அதனால் பொய்யிலிருந்து விலகி மெய்யைப் பற்றும் நிலை உண்டா கும். இதுவே ஞானம். இவ்வாறாக ஞானாசிரியரால் நிகழ்த் தப் பெறும் நிர்வாண தீட்சையில் ஞானமும் அதன்வழி வீடுபேறும் சாத்தியமாகும்.
நிர்வாண தீட்சை அதனைப் பெறுவோரது பக்குவத்தின்
@fg556oa'556m@9kuá緣簽炎簽緣28

அடிப்படையில் சத்தியோ நிர்வாணதை, அசத்தியோ நிர்வாணதை என இருவகைப்படும்.
நிர்வாண தீட்சை அதிதீவிர சத்திநிபாதர்க்கு உரியது என்று ஏற்கனவே கூறப்பட்டது. அந்த அதிதீவிர சத்திநிபாத மும் நான்கு நிலைப்பட்டதாகப் பகுத்து நோக்கப்பெறும்.
9)6O)6).Ju IIT6).j60T:
1. அதிதீவிரத்தில் மந்ததரம் அதிதீவிரத்தில் மந்தம் அதிதீவிரத்தில் தீவிரம் அதிதீவிரத்தில் தீவிரதரம்
இவற்றுள் அதிதீவிரத்தில் தீவிரதரமான மிகுசத்திநிபாத நிலையினர்க்குச் செய்யப்பெறும் தீட்சையே சத்தியோ நிர்வாண தீட்சை எனப்பெறுவது. ஏனைய மூன்று நிலையில் நிற்ப்போர்க்குச் செய்யப்பெறும் தீட்சை அசத்தியோ நிர்வாண தீட்சை எனப்பெறுவதாம்.
சத்தியோ நிர்வாண தீட்சையானது செய்யப் பெறுபவரு க்கு (அதிதீவிரத்தில் தீவிரதரமான சத்திநிபாத நிலையினர் க்கு) உடனடியாகவே பரமுத்தியைக் கொடுப்பதாம். சத்ய என்பதற்கு இங்கே 'விரைவாக” என்பது பொருள். விரைந்து முத்தி கொடுக்கும் நிர்வாண தீட்சை சத்தியோ நிர்வாண தீட்சை எனப்பட்டது.
அதிதீவிரத்தில் மந்ததரம் முதலிய ஏனைய மூன்று சத்திநிபாத நிலையினர்க்கும் செய்யப்படுவதான அசத்தி யோ நிர்வாணதையானது உடம்பு முகந்து கொண்டு வந்த பிராரத்த வினை தீர்ந்து உடம்பு எப்பொழுது நீங்குகின்றதோ அப்பொழுது முத்தியடையும் படியாகச் செய்வது.
உமாபதி சிவாசாரியார் பரிபக்குவ நிலையினை அடைந் திருந்த பெற்றான் சாம்பான் என்னும் விறகு வெட்டிக்கும் அத்தகு தகுதி வாய்ந்திருந்த முள்ளிச் செடிக்கும் சத்தி யோ நிர்வாண தீட்சை வழங்கி முத்தியடையும்படி செய்த தாக வழங்குகின்ற கதை இங்கு நினைவு கூரத்தக்கது.
நிர்வாண தீட்சையை வேறொரு அடிப்படையிலும்
ஐஜ் இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 313
இரண்டாக வகுத்துரைப்பர்.
1. உலக தர்மிணி தீட்சை 2. சிவதர்மணி தீட்சை
முதலாவது இல்லறத்தார்க்குச் செய்யப்பெறுவது இரண்டவாது திருமணம் செய்யாதிருக்கும் நைட்டிகர்க ளுக்குச் செய்யப்பெறுவதாம்.
நிர்வாண தீட்சையோடு ஆசாரியாய் இருத்தற்கான தகு தியை வழங்கும் சடங்குகளைச் சேர்த்துச் செய்யும் நடை முறையும் உண்டு. அவ்வேளை கலச நீரால் நீராடுவதுண்டு. அத்தகைய சடங்குமுறை ஆசாரிய அபிடேகம் என்ற தனியான தீட்சை வகையாகவும் சொல்லப்படுவ துண்டு.
அத்தகைய அபிடேகம் செய்யப்பெற்றோர் ஆசாரியார் என்றும் சாதகர் என்றும் இருவகைப்படுவர். நைமித்திக, காமிய கன்மங்களைப் பிறர் பொருட்டுச் செய்யும் உரிமை பெற்றோர் ஆசாரியர் எனப்படுவர். அவர்கள் சகல கிரியைக ளையும் செய்வதற்கு அருகதையுடையவர்கள். அவ்வுரிமை
அங்கியுரிமை எனப்படும்.
சாதகர்கள் நைமித்திக, காமிய கன்மங்களைப் பிறர் பொருட்டுச் செய்யும் உரிமை அற்றவர்கள், அவற்றைத் தம்பொருட்டாகவே செய்து சித்தி, முத்தி எய்துவதற்கு உரியவர்கள். அங்கி எனப்பட்ட கிரியைகளுள் இன்றியமை யாத சில அங்கங்களை மாத்திரம் செய்வதற்கு உரித்து டையவர்கள். அத்தகையதான உரிமை அங்க உரிமை
எனப்படும்.
இத்தகையதான அபிடேகம் பெறாது நிருவாண தீட்சை மட்டும் பெற்றோர் ஆசாரியர் என்றோ, சாதகர் என்றோ சுட்டப்பெறார். அவரை 'விசேடபுத்திரர்’ என்றே சுட்டுவர்.
ஒருவர் ஆசாரியர் ஆவதற்குச் சத்திநிபாதம், ஒழுக்கம், கல்வி, தேகாரோக்கியம், பயிற்சி என்பன அமையப்பெறல் வேண்டும். அத்தகையவரும் தொடக்கத்தில் சாதகராயிரு ந்து பின்னர் ஆசாரியர் ஆதலே சிறப்பும் பெரும்பான்மையு மாம். ஆசாரிய அபிடேகம் எப்போதும் சபீசமாகவே
 

செய்யப் பெறும் என்பதும் அறியத்தக்கது.
தீட்சையின்போது உபதேசிக்கும் மந்திரங்களை ஆசிரியர் பீச அட்சரங்களைக் கூட்டி மாணவனுக்கு அறிவுறுத்துவது சபீசமாகும். சபீச தீட்சை பெற்றோர் நித்திய, நைமித்திய, காமிய கன்மங்களை இயற்றுவதற்கான அதிகாரமுடையவ ராகிறார். அத்தகைய அதிகாரத்தை வழங்குவதால் சபீசதீட்சையானது சாதிகாரை எனப்படும். (சாதிகாரை = ச + அதிகாரை - அதிகாரத்தை உடன்கொண்டது) சபீசம் எனப்படும் சாதிகார தீட்சை அதனைப் பெற்றபின் நைமித்திய காமிய கிரியைகளைத் தவறாது செய்வதற் கான ஆற்றல் உள்ளவர்க்கே வழங்கப்பெறும். அவ்வாற ன்றி நித்திய கிரியைகளை மாத்திரம் செய்வதற்கே தகுதியுடையவராய்ப் பலர் இருப்பர். இளவயதினர், நூலறி வற்றோர், முதியோர், நோய்வாய்ப்பட்டோர் என்று இன்னோர் நைமித்திய காமிய கண்மங்களைச் செய்வதற்கு இயலாதவர்கள். இத்தகையவர்களுக்கு நிர்பீச தீட்சை எனப்படும். அது நித்திய கன்மத்தையன்றி ஏனைய நைமித் திய காமிய கன்மங்களைச் செய்வதற்கான அதிகாரத்
தைக் கொடுக்காமை பற்றி நிரதிகாரை எனவும்படும்.
நிர்வாண தீட்சை சபீசமாகவும் நிர்பீசமாகவும் செய்யப் பெறும். அது காரணமாக சபீசநிர்வாணம் என்றும் நிர்ப்பீச
நிர்வாணம் என்றும் நிர்வாண தீட்சை இருவகைப்படும்.
சமயாசார கன்மம் எல்லாவற்றையும் இயற்றுவதற்கு அதிகாரம் கொடுப்பதால் சமயம், விசேடம் என்னும் தீட்சை வகைகளைத் தனக்கு அங்கமாக உடையதாய் விளங்கு வது சபீச நிர்வாண தீட்சையாகும். சமயாசார அனுட்டானத் திலே விதிவிலக்குக் கொண்டதாய் சமயம், விசேடம் என்னும் அங்கங்களோடு கூடியதாய் விளங்குவது நிர்பீச
நிர்வாண தீட்சையாகும்.
முன்னர் குறிப்பிட்ட சத்தியோ நிர்வாணம், அசத்தியோ நிர்வாணம் என்பன நிர்ப்பிச தீட்சையின் வகைகள் என்பதும் உலகதர்மிணியும் சிவதர்மிணியும் சபீசதீட்சையின் வகை
கள் என்பதும் மனங்கொள்ள வேண்டியன. (க.இர.)
0 SSSZZSZSSSZYSSSkSYzeSZSLSLSLSLSeTTTuLTLG LCL LBDB TMMMMMCCLTTTMLMCCLTLT

Page 314
நிர்விகற்பக் காட்சியும் சவிகற்பக் காட்சியும்
இந்திய மெய்யியல் சிந்தனைகள் ஒவ்வொன்றும் தத் தமக்கேயுரிய அறிவாராய்ச்சியியலை உருவாக்கியுள்ளன. இதனைப் பிரமாண சாத்திரம் என அழைப்பர். பிரமாண சாத்திரத்தின் அடிப்படையிலேயே அவர்களது பெளதீக வதிதக் கோட்பாடுகள் கட்டியமைக்கப்பட்டுள்ளன. பெளத்த சிந்தனையாளர்கள் அறிவாராய்ச்சியியலில் விடயி இயல்பிற்கு அதிக முக்கியத்துவத்தைக் கொடுத்தனர். அறிவின் விடயமாக சுவலட்சணம் எனப்படும் தனியன்கள் பற்றிய அறிவு, சாமான்ய லட்சணம் எனப்படும் பொதுமை கள் பற்றிய அறிவு என இருவகை இருப்பதாகத் தின்னா கர் குறிப்பிட்டதுடன் காட்சி பற்றிய அவரது ஆய்வுகள் அறிவாராய்ச்சியியலின் பிற்கால வளர்ச்சிக்குப் பெரிதும் பங்காற்றியமை குறிப்பிடத்தக்கது
இந்திய மெய்யியலில் முதன்முதலாக நிர்விகற்பக் காட்சி, சவிகற்பக் காட்சி எனக் காட்சியை தெளிவாக வரையறுத்தவர் தின்னாகரேயாவார். சைவசித்தாந்த மெய் யியல் உட்பட, பெரும்பாலான பிற்காலத்தரிசனங்கள் நிர் விகற்பக் காட்சி, சவிகற்பக்காட்சி என்ற தின்னாகரின் காட்சி பற்றிய வகையீட்டை ஏற்றுக்கொண்டமையே இதன் முக்கியத்துவத்திற்குப் போதிய சான்றாகும். தின்னாகரின் நிர்விகற்பக் காட்சி, சவிகற்பக் காட்சி என்ற வகையீடு வெறுமனே இரண்டு வகைக் காட்சி அல்ல, இரண்டிற்கு மிடையிலான வேறுபாடு அடிப்படையானதும், பண்படிப்படை யிலானதும் ஆகும். நிர்விகற்பம் என்பது கடந்த நிலை பற்றிய எமது விளிப்புணர்வினாற் பெறப்படுவதும், சிந்தனை யினால் பிரக்ஞைபூர்வமாக உணரப்படுவதற்கு முற்பட்டது மாகும். தற்சார்பற்ற மெய்மையின் கடந்த நிலையான ஸ்வலட்சணத்தை எமது புத்தி அறியுமாற்றல் கொண்ட தல்ல. சாமான்ய லட்சணம் என்னும் பொதுமை வடிவங் களை மட்டுமே அறியுமாற்றல் கொண்டதே எமது புத்தி. அதாவது அனுபவம் அல்லது தோற்றப்பாடுகள் என அழைக்கப்படுபவற்றை மட்டுமே எமது புத்தி அறியுமாற்றல் கொண்டது. எனவே, நிர்விகற்பம், சவிகற்பம் என்ற இரண்
டும் பெயரில் மட்டுமல்ல, அவை செயற்படும் தளத்திற்கூட
இந்துக் கலைக்களஞ்சியம்ஜ்ஐ ఘళ్లజోళ్లళళ్ల 28
 

வேறுபாடு உளது. இவையிரண்டும் இருவேறு வகை என்பதை ஏற்காதபொழுதும் இவற்றிடையே பண்படிப்படை யிலான வேறுபாடு உளதாகப் பிற்கால நியாய வைசேடிகர் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
நிர்விகற்பக் காட்சியானது சவிகற்பக் காட்சிக்கு முன்ப தாக, தவிர்க்க முடியாதபடி விளைவதெனவே தின்னாகரு க்குப் பிந்திய, ஆரம்பகால வைதீகக் கொள்கையினர் கருதினர். உதாரணமாக சுலோக வார்த்திகையில் குமாரி லர் (கி.பி. 700) இத்தகையதொரு கருத்தையே குறிப்பிட் டார். ஆலோசனா என்ற சொல்லால் குமாரிலர் குறிப்பிட்டது நிர்விகற்பத்தையேயாம். அதாவது பொருளைப் பிண்ட மாகக் காணும் காட்சியாகும். பொருளை முதலில் பிண்ட மாக நிர்விகற்பமாகக் கண்டதன் பின்னரே பொருளின் பொதுப்பண்புகள் முதலான பிற அறியப்படுகின்றன. அதனி னும் பின்னரே சர்விகற்பக்காட்சி நிகழுகின்றதென குமாரில பட்டர் தெரிவிக்கின்றார். தின்னாகரின் அபிப்பிராயப்படி, நிர்விகற்பக்காட்சியின் காரணமாக அமைவது புற உலகப் பொருட்களேயாம். சவிகற்பக் காட்சிக்குக் காரணமாக அமைவதோ உளக்காரணியாகும்.
குமாரிலரின் அபிப்பிராயப்படி நிர்விகற்பக் காட்சி, சவிகற் பக்காட்சிக்கும் இடையில் இன்றியமையாததும் பண்படிப் படையானதுமான வேறுபாடுள்ளது. ஆனால், பிற்கால நியாய -வைசேடிகரோ நிர்விகற்பகக் காட்சி பற்றி குமாரிலர் கருத்தைப் பூரணமாக வெளிக்கொண்டுவரவில்லை எனத் தோன்றுகின்றது. நிர்விகற்ப நிலையில் மொழிக் கூறுகள் எதுவும் இடம்பெறுவதில்லை எனக் குமாரிலர் குறிப்பிட்டார்.
நியாய - வைசேடிகரைப் பொறுத்தவரையில் நிர்விகற்பக் дѣлt fl பற்றி முதன்முதலில் வாசஸ்பதி மிஸ்ரரின் நியாய வார்த்திகா - தாற்பரியதீபிகையிலேயே காணப்படுகிறது. ஆயினும் 12ஆம் நூற்றாண்டுவரை நிர்விகற்பத்தின் கடந்த நிலை இயல்பு தெளிவாக உணரப்படவில்லை. ஜெயந்தர், வியோமசிவர் ஆகிய 12ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட சிந்தனையாளர்களைப் பொறுத்தவரையில் நிர்விகற்பம் சவிகற்பம் என்பனவற்றை வேறுபடுத்தும்பொழுது, முன்ன தில் மொழிக்கூறுகள் இல்லை என்று மட்டுமே குறிப்பிடுவ தால், இவர்களது விளக்கம் தெளிவற்றதும் திட்டவட்டமான
x இந்து சமய கலாசார அலுவல்கள் தி6ை00ாக்களம்

Page 315
தும் அல்ல.
பிற்கால நியாய - வைசேடிகரிற் குறிப்பாக காங்கேயரே நிர்விகற்பம், சவிகற்பம் என்னும் இரண்டையும் திட்டவட்ட மாக வரையறுத்து, தெளிவுபடுத்தியவராவார். இவரது அபிப்பிராயப்படி சவிகற்பக் காட்சி திட்டவட்டமான அறிவின் கூறுகளைத் தருகிறது. விசேடணம் - விசேடியம் என்ற சொற்களைப் பயன்படுத்தி இதற்கு விளக்கம் தருகிறார். அதன்படி சவிகற்பக் காட்சியிற் பொருளின் பொதுப் பண்பும், சிறப்புப் பண்பும் அறியப்படுகிறது. உதாரணமாக சாடியை எடுத்துக்கொண்டால் சாடித் தன்மையும் அதன் இயல்புகளும் (கடமும் கடத்துவமும்) ஒரு தீர்ப்பு வடிவத் தில் அறியப்படுவதே. (விசேட - விசேடிய பாவம்) சவிகற்பக் காட்சியாகும். காங்கேசர் உட்பட்ட பிற்கால நியாய - வைசேடிகரின் அபிப்பிராயப்படி, நிர்விகற்பக் காட்சியானது இந்திரியங்களின் அறிகைக்கு அப்பாற்பட்டது. பொருளைப் பிண்டமாகக் காண்பதே நிர்விகற்பக் காட்சி என்கின்றனர். இதன்படி தீர்ப்பு வடிவத்திற் தரப்படாத எவ்வகை அறிகை யும் அறிவாராய்ச்சியியலின் நோக்கெல்லைக்கு உட்படாது என்ற முடிவு பெறப்படுகிறது. (சோ.கி.)
நிருவிகற்பக் காட்சி
விகற்பம் என்னும் சமஸ்கிருத சொல்லிற்கு வேற்றுமை என்று பொருள். ஆகவே நிருவிகற்பம் என்பது வேற்றுமை யின்மை' என்பதைக் குறிக்கும். உருவம், ஓசை, மணம் முதலிய புலன்கள் கண், காது, மூக்கு முதலான ஐம் பொறிகளால் உணரப்படுகின்றன. இது ஓர் உருவம், இது ஓர் ஓசை என்று பொதுவாகவே உணரும். அவ்வாறு பொதுவாக உணரப்படுவது நிருவிகற்பக் காட்சி எனப்படும். பொதுவாக அன்றிச் சிறப்பாக வேற்றுமைப்படுத்திக் காண் பது சவிகற்பக் காட்சி ஆகும். அதாவது கண் முதலிய பொறிகளால் பொதுவாகக் கண்ட புலன்களை மனம் முதலிய உட்கருவிகள் ஆராய்ந்து, இது இன்ன உருவம், இது இன்ன ஓசை என்று சிறப்பாக அறுதியிட்டு உணரும் நிலை 'சவிகற்பக் காட்சி ஆகும். 'சவிகற்பம்' என்பது வேற்றுமையோடு கூடியது. எனவே அது சிறப்புக் காட்சி ஆகும்.
இந்துக் கலைக்களஞ்சியம்:
 

குடத்தைக் காண்கின்ற ஒருவன் ‘இது குடம்' என்று முடிவாக உணரும் பொழுது அது குடம் அல்லாத வேறு எந்தப் பொருளும் அன்று என்பதையும் உடன் உணர்கின் றான். ஆகவே, அந்த நேரத்தில் அவன் குடத்தின் கண் குடம் அல்லாத பிறபொருள்களோடு, குடத்திற்கு உள்ள வேற்றுமைகளை உணர்வதால்தான் எதிரில் உள்ள பொருளை, குடம்' என்று உணர முடிகின்றது. எனவே, எந்தப் பொருளையும் இது இன்ன பொருள்தான்’ என்று அறுதியிட்டு உணர்தல் அப்பொருளின் கண், பிறபொரு ளோடு அதற்கு உள்ள வேற்றுமையை உணர்வதாலேயே நிகழ்தல் தெளிவாகும். இந்த வேற்றுமையை உணராத பொழுது எல்லாப் பொருளும் ஒரு பொருளாகத்தான் தோன்றும். அவ்வாறு தோன்றுதல் பொதுக்காட்சி ஆகும். இப்பொதுக் காட்சியே நிருவிகற்பக் காட்சி. அதாவது வேற்றுமையில்லாத காட்சி எனப்படுகிறது. (சந.)
helbL flollf
ஐவகை இந்திய தரிசனங்களுள் பதஞ்சலி முனிவரால் இயற்றப்பட்டது யோகம் ஆகும். புருஷன் (ஆன்மா/உயிர்), பிரகிருதி (சடப்பொருள்) இரண்டிற்கும் இடையேயான தொடர்பை விளக்குகின்றது. "யோகம் என்றால் 'பிரிதல் என்று பதஞ்சலி முனிவர் கூறுகிறார். அதாவது ஆன்மா (புருஷன்) உடலை (பிரகிருதியை) விட்டு நீங்குதல் என்பதா கும். இக்கருத்தை பதஞ்சலி முனிவர் தமது ‘யோக சூத்திரம்' என்ற நூலில் விளக்கிக் கூறியுள்ளார். யோகம் செயலை அடிப்படையாகக் கொண்ட செயல்நிலை ஞான மாகும். நான், எனது என்ற நிலை நீங்கிச் சித்த சுத்தியைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டமைந்ததே 'யோகம்.
பதஞ்சலி முனிவர் சித்த சுத்தியைப் பெறுவதற்கு எட்டு வகையான படிநிலைகளைக் கூறுகிறார். சித்த தூய்மை யைப் பெறுவதற்கு முதலில் உடலைக் கட்டுப்படுத்த வேண்டும். அதன் காரணமாக இயற்றப்பட்டவையே இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பனவாம். அவற்றில் இயமம், புருஷன் (ஆன்மா) செய்யத்தகாதவை பற்றியும் நியமம் புருஷன் செய்யத்தகுந்தவை பற்றியும் ஆசனம் என்பது யோகத்தின்
&இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 316
அடிப்படையில் உட்கார வேண்டிய முறையைப் பற்றியும், பிராணாயாமம் மூச்சுப் பயிற்சி பற்றி யும் கூறுகின்றன. இவ்வைந்து நிலைகளின் மூலமாக ஐம்புலன்களை கட்டி அடக்குவது பிரத்தியாகாரம், அடக் கப்பட்ட மனதை பின்னர் ஒரு நிலைப்படுத்துவது தாரணை, ஒரு நிலைப்பட்ட மனத்தின் மூலம் செய்யப்படுவது தியானம் என்றும் கூறப்படும். தியானத்தின் இறுதி நிலையாக நிற் பது சமாதி. மேற்சொன்ன ஏழு வகைப் படிநிலைகளும் இறுதிப் படிநிலையான ‘சமாதி நிலையை புருஷன் அடைவதற்குத் துணை நிற்கின்றன.
சமாதி இருவகைப்படும். அவை சம்பிரக்ஞாதா சமாதி, அசம்பிரக்ஞாதா சமாதி என்பனவாகும். சம்பிரக்ஞாதா சமாதி என்பது புருஷன் புத்தியிலிருந்து தன்னை வேறுபடு த்தி உணர்வதாகும். சமாதி என்பது மனத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சியின் உணர்வு நீங்கி, (ஒடுங்கி) புருஷன் தன் விடுதலையைப் பெற்றுத் தனது இயல்பான தூய நிலையை மீண்டும் பெறுகின்றான் என்பதாகும். அதாவது வேறுபாடற்ற தியானமாகும். தியானத்தின் போது ஒருவன் ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்ட சமயம் சிந்தனை செய்த பொருளைப் பற்றிய உணர்வற்றுத் தன்னைப் பற்றிய
உணர்வை மட்டுமே கொண்டிருத்தலாகும்.
அசம்பிரக்ஞாதா சமாதியை அடைவதற்கு வைராக்கியம், நம்பிக்கை, ஆற்றல், நினைவு, அடக்கம், விவேகம் என்பன அடிப்படைக் காரணிகளாக அமைகின்றன. முதலில் தைரி யத்தையும் நம்பிக்கையையும் ஒருவர் கொண்டிருக்க வேண்டும். அதன் பலனாக ஆற்றல் (செயல்), நினைவாற் றலை வளர்த்துக் கொள்ளவேண்டும். தவிர ஐம்புலன் களை அடக்கும் வல்லமையையும் வளர்த்துக் கொள்ள, அவரிடம் விவேகம் தோன்றும். இவை யாவும் தொடர்ச்சி
யான பயிற்சிகள் மூலம் கிடைக்கும்.
யோகப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வதோடு இறை பக்தியும் அவசியம். இறைவனிடம் சரணாகதி அடையும் போது ஆன்மாவை விட்டு ஆணவம் நீங்கும். இந்நிலையில் ஆன்மா இறை இன்பத்தை அனுபவிக்க முடியும். (சந.)
@因庄 伍5Day主56m@äLiá綫緣線
 

நிரம்பகழகிய தேசிகர்
இவர் சோழ நாட்டில் உள்ள தஞ்சை மாவட்டம் வேதா ரணியம் என்னும் ஊரிலே பிறந்தவர். இவர் சைவ வேளாளர் களுக்கு குருமாராயிருக்கின்ற அபிஷேகத்தார் பரம்பரை யிலே தோன்றியவர் என்பர். இவர் கி.பி. 16ஆம் நூற்றாண் டைச் சேர்ந்தவர். இவர் தமிழ்மொழி, வடமொழி இரண்டிலும் மிகவும் புலமையானவர். சைவசித்தாந்த நூல்களிலும் பயிற்சியுடையவர் என்பதனை இவருடைய சிவஞானசித்தி யார், திருவருட்பயன் முதலிய நூல்களின் உரைகள் புலப்படுத்துகின்றன. இவரால் இயற்றப்பட்டதே சேது புராணம். இராமநாதமுனிவரின் வேண்டுகோளின் பிரகாரம் 3438 பாடல்களாற் பாடப் பெற்றதாகும்.
இந்நூல் பொருட்சுவை, சொற்சுவை நிரம்பப்பெற்றது. சேது அணை கட்டிய வரலாறு முதல் இராமேசுவரத்தி லுள்ள தீர்த்தச் சிறப்பு வரை பல்வேறு செய்திகளைக் கூறும் நூலாக இது விளங்குகின்றது. தனுஷ்கோடிச் சிறப்பினை இவர் நூலானது "நீறு தனுஷ்கோடியினை நினைந்தாலும் புகழ்ந்தாலும் நேர்க்கண்டாலும் வீடு பெறல் எளிதாகும்” என்று சேதுபுராணம் தனுஷ்கோடி சுருக்கம்
கூறும்.
இவ்வாசிரியர் இங்குள்ள தீர்த்தங்கள் போக்கிடும் பாவங்களை எல்லாம் தொகுத்துக் கூறுகிறார். இதிகாசங் களில் கூறப்பெறும் பாவங்களைத் தொகுத்துக்கூறும் பகுதியை இந்நூலிற் காணலாம்.
இராமர், இலக்குமணர், அனுமார் முதலியோர் சிவபத்த னான இராவணனைக் கொன்ற பாவம் போக இங்கு காசிக்கு இலிங்கம் கொண்டு வரச் சென்ற அனுமன் வர முன்னே சீதையால் அமைக்கப்பெற்ற இலிங்கத்தை பூசித் தால் அனுமன் கொண்டு வந்த இலிங்கம் தனியாகப் பூசிக்கப் பெற்ற செய்தி, இராமன் பூசித்த இலிங்கமாதலால் இராமநாதர் எனப் பெற்ற செய்தி, அகத்திய முனிவரும் பூசித்துப் பேறு பெற்ற செய்தி குணாநிதி பாண்டியன் மகளாக இலக்குமி தோன்றி திருமாலை மணந்த செய்தி கள் போன்றவை இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.
X 858 вашањалтантЈ gapajebao gleС»coОТšвопћ

Page 317
இவர் திருப்பரங்குன்றப் புராணம், திருவையாறுப் புராணம், திருஞானசம்பந்த மாலை முதலிய நூல்களையும் எழுதி யுள்ளார். திருவாரூர்ப்புராணம் பாடிய அளகை சம்பந்த முனிவர், ஞானக்கூத்தர் ஆகியோர் இவருடைய மாணவர்
கள் ஆவர். (தே.ஹ.)
நிராதா தீட்சை
இது சைவ சமயத்திற் கூறப்படும் சிவதீட்சையின் அடிப் படைப் பிரிவுகள் இரண்டினுள் ஒன்று. மற்றையது சாதார தீட்சை எனப்படும்.
சிவதீட்சை என்பது சைவத்தில் இன்றியமையாத விடயமாக வலியுறுத்தப்படுகின்றது. சிவதீட்சையே ஒருவ னைச் சைவசமயி என்ற தகுதியுடையவனாக்குகின்றது. திருமுறைகளையும் சிவாகமங்களையும் ஒதிச் சைவாசார த்தை மேற்கொள்வதற்கான அடிப்படைத் தகுதியை அது வழங்குகின்றது.
உயிர்களின் மலத்தைப் போக்கி அவற்றுக்கு உண்மை ஞானத்தை வழங்குவதே தீட்சை' அத்தகைய தீட்சையைச் செய்து வைக்கும் அதிகாரி சிவபிரானே என்று கொள்வது சைவமரபு. சிவன், ஞானத்தை அருளுவதான இத் தீட் சையை இரணி டு வகைகளில் மேற்கொள்கின்றான் என்று கூறப்படுகின்றது. வேறு ஓர் ஆதாரத்தை வேண்டாது தானே நேர்நின்று செய்வது ஒரு Ꭷl60ᎠᏑᏴ . வேறொரு பொருளைத் தனக்கு ஆதாரமாகக் கொண்டு செய்வது மற்றொரு வகை. இவற்றுள் முன்னையதே நிராதார தீட்சை என்று சுட்டப் பெறுவது. இரண்டாம் வகை சாதார தீட்சை எனப்படும். உயிர்களின் பக்குவ நிலைக் கேற்பவே இறைவன் இவ்வாறு இருவகைப்பட்ட நிலைகளில் நின்று தீட்சையளிக்கிறான் என்று கொள்கிறது சைவமரபு.
உயிர்கள் யாவும் அறிவைப் பொறுத்தவரையில் இயல்பாகவே வேறுபட்ட தன்மைகளை உடையன. ஒருயிரின் அறிவுத் திறம்போல மற்றோருயிரின் அறிவுத் திறம் இருப்ப தில்லை. இது காரணமாக உயிர்களிடையே உயர்வு
@i函556oeu556T@9Lá談28

தாழ்வு உண்டு. ஆணவப் பிணிப்பு உயிர்தோறும் வேறு வேறு அளவுகளில் அமைந்து காணப்படுகின்றமையே இதற்கான அடிப்படைக் காரணமாகும். ஆணவப் பிணிப்பின் அளவு வேறுபாட்டினை மூன்றாக வகைப்படுத்தி அவற்றை தூலம், சூக்குமம், அதி சூக்குமம் என்ற பெயர்களாற் சுட்டுவர்.
ஆணவ மலம் வெளிப்படையாக - கடுமையாகப் பிணித் துள்ள உயிர்களை மாயை, கன்மம் என்னும் ஏனைய இரு மலங்களும் இலகுவில் பற்றும். இவ்வாறாக மும்மலங்
களிலும் கட்டுப்பட்ட உயிர்கள் சகலர் எனப்படும்.
ஆணவமலம் சூக்குமமாய் மெலிதாகப் பற்றிய உயிர்கள் பிரகிருதி மாயையைக் கடந்தவர்களாதலால் மாயை கன்மம் எனும் இரண்டில் கன் மத்தால் மட்டும் தொடக்குறுவர். ஆணவம், கன்மம் என்னும் இரண்டு மலங்களாலே தொடக் குண்ட அவர்கள் பிரளயாகலர்
எனப்படுவர்.
ஆணவ மலம் மிக மெலிதாய் - அதி சூக்குமமாய்ப் பீடித்த உயிர்கள் மாயை, கன்மம் இரண்டாலும் தொடக்கு றாதவராய் ஆணவம் என்னும் ஒரு மலத்தால் மாத்திரம் கட்டுண்டு விஞ்ஞானகலர் எனச் சுட்டப்பெறுவர். இவ்வாறாக பந்த நிலையில் வேறுபட்ட உயிர்களுக்கு இறைவன் ஞானத்தைக் கொடுக்கும் முறையும் வேறுபடுகின்றது.
மேற்குறிப்பிட்ட மூவகை உயிர்களில் விஞ்ஞானகலர் மேலதான ஆணவமல பந்தம் மிக மென்மையானது. அது காரணமாக, அவர்களை அடைந்த மாயையும் கன்மமும் அவர்களை மயக்குவதில்லை. அதாவது அவ்வுயிர்களுக்கு அமைந்த உடம்பு - கருவி கரணங்கள் மயக்கத்தைச் செய்வதில்லை. இத்தகைய உயிர்களுக்கு இறைவன் குரு வடிவில் புறத்தே தோன்றி உபதேசித்து உணர்த்தும் போதே ஞானம் உண்டாகும் என்பதில்லை. உயிருக்குயி ராய் - அந்தர்யாமியாய் நின்று - உள் நின்று உணர்த்தி னாலே அவர்களைப் பீடித்திருந்த அதிசூக்கும ஆணவம் நீங்கிவிடும். மெஞ்ஞானம் எளிதிற் கைகூடும். அக்காரணத் தாலேயே அத்தகு உயிர்களுக்கு இறைவன் உயிருக்குயி ராய் நின்று அருள் செய்கின்றான்.
&இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 318
ஆணவ மலத்தோடு கன்ம மலத்தாலும் பீடிக்கப்பட்ட நிலையிலுள்ள உயிர்கள் (பிரளயாகலர்) அம்மலங்களால் சிறிதே மயங்கி நிற்பனவாம். அத்தகு உயிர்களுக்கு இறைவன் உள் நின்று உணர்த்துவதால் ஞானம் கை கூடாது. அவ்வுயிர்களுக்குப் புறத்தே - முன்நின்று உணர்த் தல் வேண்டும். இறைவன் தனக்கேயுரிய திருக்கோலங்க ளோடு கூடிய (முக்கண், சடாமுடி முதலியவை) தன் இயற்கை வடிவைக் குருவடிவாகக் காட்டி எதிர்நின்று திருநோக்கம், பரிசம், வாசகம் என்பவற்றால் அவ்வுயிர்க
ளின் மலகன்மங்களைப் போக்கி ஞானத்தை அருளுவான்.
இவ்வாறாக விஞ்ஞானகலருக்கும் பிரளயாகலருக்கும் இறைவன் முறையே உயிர்க்குயிராய் உள்நின்றும் மெய்யு ணர்வு வழங்கும் செயல், வேறொருவரை - ஆசானை இடமாகக் கொண்டு நின்று செய்வதன்று, தானே செய்வது ஆகலின் நிராதார தீட்சை எனப்படும்.
நிராதாரம் - நிர் + ஆதாரம்- ஆதாரம் இல்லாதது, வேறொன்றைத் தனக்கு இடமாகக் கொள்ளாதது. இத்த கையதான இந்நிராதார தீட்சையை இறைவன் உயிர்களின் சத்திநிபாத நிலையை நோக்கியே செய்வான்.
உயிரானது எண்ணற்ற பிறவிகளை எடுத்து உலகவாழ் வில் ஈடுபட ஈடுபட அத்தனை பிறவிகளிலும் அதன் அறிவை மயக்கி வந்த ஆணவ மலமானது வலிகுன்றும் நிலை (மலபரிபாகம்) உண்டாகின்றது. ஆணவமலசக்தி வலி குன்றினால் அதுவரையில் உயிரோடு உடனாக இருந்து அம்மலத்தைச் செயற்படுத்தி உயிருக்கு மறைத்த லைச் செய்து ஆணவத்தின் ஆற்றல் சிறிதுசிறிதாக தேயும் படி செய்து வந்த இறைவனது திரோதான சக்தியும் தன் தன்மையில் மாறும். முன்பு மறைத்தலைச் செய்துவந்த அதே சக்தி இப்பொழுது அருளலைச் செய்ய முற்படும். (திரோதான சக்தி அருட் சக்தியாக மாறும்) உயிரில் மறைந்து நின்ற முன்னைய நிலைமாறி சத்தியானது விளங் கித்தோன்றும் நிலையே சத்திநிபாதம் எனப்படுகின்றது.
經迹gé56oayá5es@由Ló後緣
 
 

சத்திநிபாதம் என்பதற்கு இறைவனது சக்தி ஆன்ம அறி
வில் பதிதல் என்பது பொருள்.
சத்திநிபாதம் ஆன்மாவில் படிமுறையாகவே நிகழும். தொடக்கத்தில் மிக மெதுவாக மந்தமாக நிகழும், பின்னர் ஒரளவு மந்தமாகும். பின்பு தீவிரமடையும். இறுதியில் அதிதீவிர நிலை அடையும். இந்நால்வகைச் சத்திநிபாத
நிலைமைகளும் முறையே,
1. மந்ததரம் (மிக மென்மை)
மந்தம் (மென்மை)
தீவிரம் (விரைவு)
தீவிரதரம் (மிக விரைவு)
எனச் சுட்டப்பெறும்.
இந்நால்வகைகளில் தீவிரம், தீவிரதரம் என்னும் இரு
வகையிலேதான் முற்சுட்டிய விஞ்ஞானகலர், பிரளயாகலர்
என்னும் இருவகையாருக்கும் சத்திநிபாதம் நிகழும்.
தீவிரம் என்னும் சத்திநிபாதம் நிகழ்ந்த நிலையில் அவர் கள் இறைவன் செய்யும் ஞானதீட்சையால் சுத்த மாயை
யில் உள்ள உலகங்களில் அனந்ததேவர் முதலியோரது பதவிகளைப் பெறுவதுண்டு. அந்நிலை அபரமுத்தி
எனப்படும்.
தீவிரதரம் என்னும் சத்திநிபாதம் எய்திய நிலையில் செய்யப்படும் ஞான தீட்சையால் அவர்கள் பரமசிவனோடு இரண்டறக் கலக்கும் முடிவான முத்தியை - பரமுத்தியைப்
பெறுவர்.
இவ்வகையில் நிராதார தீட்சையானது தீவிர சத்திநி பாதர்க்குச் செய்வதும் தீவிர தர சத்திநிபாதர்க்குச் செய்வ தும் என இருவகைப்பட்டு முறையே அபரமுத்தியை யும் பரமுத்தியையும் தருவதாய் அமைகின்றது. (க.இர.)
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்கலாம்

Page 319
நின்றசீர்நெடுமாறன்
பெரியபுராணம் சிறப்பிக்கும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். இவரது வரலாறு இந்நூலின் கறைக்கண்டன் சருக்கத்திற் பேசப்படுகிறது. மேலும் திரு ஞானசம்பந்தரின் பாண்டிநாட்டு விஜயம் பற்றிக்கூறும் பெரிய புராணப் பகுதியிலும் அந்நூலிலுள்ள மங்கையற் கரசியார் புராணம் என்ற பகுதியிலும் நின்றசீர்நெடுமாறன் பற்றிய குறிப்புகள் வருகின்றன.
பாண்டி நாட்டில் மதுரையம்பதியை ஆண்டவன் இம்மன் னன். இவனது முதுகில் உள்ள வளைவு காரணமாகக் கூன்பாண்டியன் என அழைக்கப்பட்டான். சோழ இளவரசி யும் சிறந்த சிவசிந்தையுமான மங்கையற்கரசி யாரைத் திருமணம் புரிந்தான். இவனது முதன் மந்திரியான குலச்சிறையாரும் சிவனை மறவாத சிந்தையுடையவர்.
கூன் பாண்டியன் சமணர்களது போதனையாற் சைவ சமயம் துறந்து சமணனானான். பாண்டிநாடும் சமணரின் செல்வாக்கிற்குட்பட்டது. இதனால் கலக்கமடைந்த பாண்டி மாதேவியும் மந்திரி குலச்சிறையாரும் திருஞான சம்பந்தரி டம் குறை இரந்து, இந்நாடும் மன்னனும் உய்வு பெறவேண் டும் என வேண்டிக் கொண்டனர். இவர்களது வேண்டு கோளை ஏற்ற ஞானசம்பந்தர் திருவாலவாயை அடைந்து ஆங்கோர் மடத்தில் தங்கினார். இச்செய்தி அறிந்த சமணர் கள் கூன்பாண்டியனிடத்தில் இதனைத் தெரிவித்தனர். மன்னனின் இசைவு பெற்று சம்பந்தர் தங்கியிருந்த மடத்திற்கு மந்திரச் செயலால் அழல் சேருமாறு செய்தனர். அது பலிக்காமல் போகவே, தாமே நேரில் சென்று தீயிட்டனர். சமணர்கள் இத்தீங்கினை இழைப்பதற்கு மன்னனே உடந்தையாய் இருந்தான் என உணர்ந்து கொண்ட சம்பந்தர், 'திருஆலவாய்' எனத் தொடங்கும் 'சிவனடியார் வாழும் மடத்தில் சமணர் வைத்த தீ மெல்லச் ઊ + 60ાં []; பாணி டியனுக் கு ஆகுக' 6l 60i) ஆணையிட்டருளினார். வெப்பு நோயி னால் துவண்ட மன்னன், யான் அடைந்த நோயைப் போக்குபவர்களின்
பக்கம் சேர்வேன் எனப் பகர்ந்தான்.
வெப்பு நோயினால் துடித்த மன்னனின் வேதனையைச்
சமணர்கள் பலவாறு முயன்றும் தீர்க்க முடியவில்லை.
இந்துக் கலைக்களஞ்சியம்ஐ
 
 

1.
பின் திருஞானசம்பந்தர் அழைக்கப்பட, அவர் "மந்திரமாவது நீறு" என்ற பதிகம் பாடி அவ்வெப்பு நோயின் தாக்கத்தைப் போக்கி சைவத்தின் மாட்சியையும் திருநீற்றின் பெருமையி னையும் நிறுவினார். இந்நிகழ்ச்சிக்குப் பின் மன்னன் முதுகில் இருந்த கூனும் நிமிர்ந்துவிட்டது. இதனால் அவன் நின்றசீர் நெடுமாறன் எனப் பின் அழைக்கப்பட்டான்.
சுரவாதம், அனல்வாதம், புனல்வாதம் ஆகியவற் றில் ஞானசம்பந்தரிடம் தோல்வி கண்ட சமணர்களை இம்மன்னன் கழுவேற்றினான் என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார்.
"மன்னவன் மாறன் கண்டு மந்திரியாரை நோக்கித் துன்னிய வாதில் ஒட்டி இச்சமணர் தாங்கள் முன்னமே பிள்ளையார்பால் அநுசிதம் முற்றச் செய்தார் கொன்றுனைக் கழுவில் ஏற முறை செய்க
என்று கூற'
என்ற பாடல் நெடுமாறனின் ஆணையைத் தெரிவிக்கின்றது.
இம்மன்னனைச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தம் திருத் தொண்டர் தொகையில் “நிறைகொண்ட சிந்தையால் நெய்வேலிவென்ற நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்” என்று போற்றியுள்ளார். “நெல்வேலியில் வென்ற மாறன்’ என்று நம்பியாண்டார் நம்பி இவரைச் சிறப்பிக் கின்றார்.
நின்ற சீர் நெடுமாறன் நெல்வேலியில் பெற்ற வெற்றியும் அவரது சிவபக்தியின் பிரதிபலிப்பே என்று நெல்வேலித் தல புராணத்தால் அறியக்கூடியதாய் உள்ளது. நெய்வே லிப் போர் நெருக்கடியில் அவர் சிவனை நினைக்க சிவ பெருமான் தனது சிவபூதங்களை அவரது படையில் சேரச் செய்து வெற்றிபெறச் செய்தார் என்று இத்தல புராணம் கூறுகிறது. மேலும் இச்செய்தி சேக்கிழார் நாயனார் வாக்கி லும் குறித்துணரக் கூடியதாகவுள்ளது.
"தியுமிழும் படைவழங்குஞ் செருக்களத்து முருக்குமுட நோயுநெடுங் குருதிமடுக் குனித்து நிணந்துய்த்தாடிப் போயபழு வம்பணி கொள் பூதங்களேயன்றி பேயமரும் பணிசெய்ய வுணவளித்த தெனப்பிறங்க” என்றுரைக்கிறது அச்செய்யுள்.
餐災談線@ög ginu 5a府T好TJggueuey5c前gleoeDCT55emá

Page 320
திருஞானசம்பந்தர் திருக்கையால் தீண்டப் பெற்று உடல், உயிர்ப் பிணிகள் நீங்கப்பெற்ற நின்றசீர் நெடுமாறனார். சைவத்தின் சர்வ ஆதிபத்தியம் வரலாற்று ரீதியாக நிலை நாட்டப்படுவதற்கும் ஏதுவாக இருந்தவர். இவரது ஆட்சிக் காலத்தில் சிவன் தொண்டிற்குரிய சகல துறைகளும் மேலோங்கும் வண்ணம் ஆட்சி செய்தார். இதனைச் சேக்கி ழார் திருத்தொண்டர் புராணப் பாடல் ஒன்று தெளிவுறுத்து
இந்துக் கலைக்களஞ்சியம்
 
 

கின்றது.
"திரைசெய்கட லுலகின்கட் டிருநீற்றி னெறிவிளங்க
வுரைசெய்பெரும் புகழ்விளக்கி யோங்கநெடுமாறனை
அரசுரிமை நெடுங்கால மளித்திறைவ ரருளாலே
பரசுபெருஞ் சிவலோகத் தன்புற்றுப் பணிந்திருந்தார்’
(நி.நி)
毅
ஐ இந்து சமய கலாசார அலுவல்கள் தி6ை00க்களம்

Page 321
நீதிநூல்கள்
நீதி - அறம் பற்றிக் கூறுவனவே நீதிநூல்கள். வட மொழியில் இருக்குவேத காலத்திலிருந்தே நீதிக்கருத்துக் கள் இலக்கியங்களுடே காலத்திற்குக் காலம் எழுந்துள் ளன. அறம் பற்றிய கவிதையின் தொடக்கத்தை வேத இலக்கியங்களுக்குப் பின் இதிகாசங்கள் அதாவது மாகபாரதத்திலுள்ள அனுசாசனபர்வத்திலும் சாந்திபர்வத்தி லும் யக்ஷயப் பிரச்சினம், விதுரநீதி முதலியவற்றை காண முடிகின்றது.
வரலாற்றுக் காலத்தில் தோன்றிய பழைய நூலான அர்த்த சாஸ்திரத்தின் ஆசிரியரான சாணக்கியர் எழுதியது சாணக் கிய சதகம் என்பதாகும். அடுத்தெழுந்தவை பத்ருஹரி யின் நீதி சதகமும் வைராக்கிய சதகமுமாகும். வடமொழி யில் உள்ள சதகங்களுள் இவை மிகச் சிறந்தவையாகக் கருதப்பட்டன. நீதிசாரம், நீதிரத்தினம், நீதிபிரதீபம் ஆகிய பழமை வாய்ந்த நீதிநூல்களும்
உள்ளன.
மிகப் பழமை வாய்ந்த நூல்களாவன பஞ்சதந்திரமும் (5ஆம் நூற்றாண்டு) அதன் பின் எழுந்த இதோபதேசம் என்பதும் இராஜ்யதந்திரம், தனி மனித ஒழுக்கம், சமூக நடத்தை இவற்றைப் பற்றிய நீதிக் கருத்துக்களை விலங்குகளைக் கொண்டு கதைவடிவிற் கூறும்
நூல்களாகும்.
பஞ்சதந்திரம் - ஐந்து உபாயம் எனப் பொருள்படும். அதாவது ஐந்து பகுதிகளைக் கொண்டது. நீதிகளை உணர்த்தும் சுலோகங்களை இடையிடையே கொண்டு வசன நடையிலெழுதப்பட்ட கதைகளையுடைய நூலே பஞ்சதந்திரமாகும். மக்களுடைய குணங்களையும் மொழி களையும் விலங்குகளுக்கு ஏற்றிக் கூறிப் பஞ்சதந்திரம் முழுவதும் ஒருவித நகைச்சுவை நிரம்பியதாக அமைக்கப் பட்டுள்ளது. அது,
(1) நட்புப் பிரிவு - மித்திரபேதம்
(2) நட்புப் பேறு - சுகிர்லாபம்
இந்துக் கலைக்களஞ்சியம்ஐx
 

(3) அடுத்துக் கெடுத்தல் - சந்திவிக்கிரகம்
(4) பேரழிவு - ஸப்தஹானி
(5) ஆராயாது செயல் - அசப்பிரேகூரிய காரித்துவம்
என்ற ஐந்து சந்திகளையுடையது.
இதோபதேசம் விஷ்ணுசர்மாவினால் எழுதப்பட்டது. அது,
(1) நண்பரை அடைதல் - மித்திரலாபம் (2) நண்பரைப் பிரிதல் - சுகிர்பேதம் (3) போர் - விக்கிரகம் (4) சமாதானம் - சந்தி
என நான்கு பகுதிகளையுடையது.
1) பிறவாதவன், இறந்தவன், மூடன் என்னும் மூவரில் முதலிருவருமே சிறந்தவர். மூடனோ அடிக்கடி துன்பத்தைத் தருவான்.
2) எவனுடைய பிறப்பினால் ஒரு குலம் உயர்வடை
கிறதோ அவனே உண்மையாகப் பிறந்தவன்.
3) எல்லாச் சந்தேகங்களையும் போக்குவதும் மறைந்து கிடக்கும் பொருள்களைக் காட்டுவதும் எல்லோருக்கும் கண் போலிருப்பதும் கல்வியே. அதனைப் பெறாதவர் கண்ணில்லாதவரே.
4) இளமை, செல்வம், அதிகாரம், அறிவின்மை ஆகிய இந்நான்கும் தனித்தனியே அழிவை உண்டாக்குவன.
5) எவன் செய்தற்கரிய தவத்தை புண்ணியமான தலத்திற் செய்கிறானோ அவனுடைய புதல்வன் பணிவுள்ளவனாயும் செல்வனாயும் அறநெறியிற்
செல்பவனாயும் நல்ல மேதையாயும் இருப்பான்.
6) ஒருவனது ஆயுள், அவன் செய்யும் வினைகள் செல்வம், கல்வி, இறப்பு ஆகிய இவ்வைந்தும் அவன் கர்ப்பத்தில் இருக்கும்போதே வினைப்பயனாய் நியமிக்கப்படுகின்றன.
談談@sa gou」5amgn凹9gueu6056而弦leoeDoT556má

Page 322
இவ்வாறான நீதிக் கருத்துக்களை இதோபதேசம் குறிப்பிட்டுச் செல்கின்றது.
க்ஷேமந்திரர் என்பவர் எழுதிய சாருசர்யா என்னும் நூல் சமூகத்தில் நடந்துகொள்ள வேண்டிய முறைகளைக் கூறுகின்றது. இவருடைய சதுர்வர்க்க சங்கிரகம் என்பது உறுதிப்பொருள் நான்கையும் விளக்குகிறது. இவருடைய சேவியசேவகோபதேசம் என்பது தலைவன் பணியாள் இருவரும் நடந்து கொள்ளவேண்டிய முறைகளைப் பற்றிக் கூறுகின்றது.
ஜல்கணா (1150) என்பவர் எழுதிய முக்தோபதேசம் என்னும் நூல் பரத்தையர் வலையில் விழாதிருக்குமாறு எச்சரிக்கை செய்கிறது. கி.மு. 1-2 நூற்றாண்டு காலத்தில் பைசாசி மொழியில் எழுதப்பட்ட பிருகத்கதா எனும் நூலின் மொழிபெயர்ப்புக்களாகிய கி.பி. 8-11 நூற்றாண்டு களுக்கு இடைப்பட்ட காலத்தில் சமஸ்கிருத மொழியில் எழுந்த கதாசாரிதசாகரமும் க்ஷேமேந்திரருடைய பிருகத் கதா மஞ்சரியும், புதசுலாமி எழுதிய பிருகத்கதா சுலோக சங்கிரகம் என்னும் நூலும் நீதி நூல்களாகவே கருதப்
பட்டன.
நீதிசதகம் - நீதி நூல்களிற் சிறப்பாகக் கூறப்படுவது.
சதகம் - நூறு பால்களின் தொகுப்பு எனப்படும். நீதி பற்றிக் கூறும் நூறு பாடல்களைக் கொண்டதே நீதி சதகமாகும். பத்திருஹரி என்பவர் இந்நூலை எழுதினார். இந்நூல் பத்ததி எனும் பெயரில் பத்துப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 1) மூர்க்கன், 2) அறிஞன், 3) மானம், 4) வீரம், 5) பொருள், 6) கெட்டவர், 7) நல்லவர், 8) பரோபகாரம், 9) தைரியம், 10) அதிஷர் டம், என்பனவற்றினை இந்நூல் குறிப்பிட்டுச் செல்கின்றது. இந்நூலாசிரியர் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கூறப்படுகிறார்.
இந்நூலின் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்து கூறப்படுகின்றது. பரப்பிரமம் அதாவது ஒளிமயமானதும் அமைதியானதுமான பரப்பிரமத்துக்கு வணக்கம் கூறப்பட்டுள்ளது.
மூடன் அதாவது மூர்க்கன் பற்றி,
@啦gä56oaJä56T@印uá後談
 

“ஒன்றுமேயறியாத மூடனை இலகுவாக சமாதானம் செய்யலாம். முழுமையான அறிவுள்ளவனை மிக இலகுவாகத் திருப்திப்படுத்தலாம். தான் ஓர் அறிஞன் என எண்ணும் மூடனை பிரமனாலும் திருப்திப்படுத்த முடியாது. (நீதி.சத. 4)
முதலையின் கடை வாயப் ப் பறி களிலிருந்து பலாத்காரமாக இரத்தினத்தைப் பெற்றுவிடலாம். பயங்கரமாக அசைந்து ஆடும் அலைக்கூட்டம் நிறைந்த ஆழ்கடலைக் கடந்துவிடலாம். கோபமூட்டப்பட்ட பாம்பினையும் பூமாலை போல் சூடிக் கொள்ளலாம். தான் கொண்டதே சரியென வாதிக்கும் மூர்க்கனின் மனத்தை திருப்தி செய்யவே முடியாது. (நீ.ச.7)
“எது திருடனுக்குப் புலனாகாதோ எது எப்போதும் ஒரு வித அலாதியான சுகத்தைக் கொடுக்கின்றதோ, எது வேண்டுவோருக்கு எப்போதும் அளிக்கப்பட்டபோதும், மேலான வளர்ச்சியைப் பெறுகின்றதோ அத்தகைய கல்வி என்னும் உட்செல்வம் எவர்களிடம் உள்ளதோ அவர்களைக் குறித்து அரக்கர்களே கோபத்தை விட்டு விடுவார்கள். எவன்தான் அவர்களோடு போட்டியிட முடியும். (நீச. 12)
கல்வியே மனிதனுக்கு மேலான அழகு. கல்வியே இரகசியமாய் மறைக்கப்பட்டுள்ள செல்வம். கல்வி போகங்களையும் சுகம், புகழ் ஆகியவற்றையும் தருகின்றது. கல்வி குருவுக்கும் குரு, வெளிநாட்டிற்குச் செல்லுங்கால் கல்வி இனசனம் போல் உதவும். கல்வியே மேலான செல்வம், அவர்களிடத்தும் கல்வியே போற்றப்படுகின்றது. செல்வமல்ல. கல்வி இல்லாதவன் மிருகம் (வித்யாவினே பசு) எனக் குறிப்பிடுகின்றார்.
மானம்- மனிதனுக்கு மானமே பெரிது மாறிமாறிச் சுழன்றுவரும் வாழ்க்கையிலே இறந்தவன் எவன் தான் பிறக்கவில்லை எவனுடைய பிறப்பினால் வம்சம் நிலை பெறுகின்றதோ அவனே பிறந்தவன் ஆவான்
(நீச.24)
x இந்து சமய கலாசார அலுவல்கள்ே தினைக்களம்

Page 323
'உயிர் இல்லாத காந்தக்கல்லும் சூரியனின் கிரணங்களால் தீண்டப்பட்டதும் ஜொலிக்கின்றது (அனல் கக்கின்றது) ஆகவே மானமுள்ள எந்த மனிதனும் பிறர்செய்யும்
அவமதிப்பைப் பொறுத்துக் கொள்ளமாட்டான்.
என மானத்தின் சிறப்பினையும் இன்றியமையாமையையும்
எடுத்துக் கூறுகின்றார்.
வீரம்:- இலக்கியங்களில் சிறப்பாகப் பேசப்படுவது வீரமாகும். மனித குலத்திற்கு வீரம் முக்கியமானது என்பது பொதுவானதே.
’பட்டம் வெட்டப்பட்ட இரத்தினம், அம்புகளால் தாக்குண்ட வெற்றி, வீரம், மதநீரினால் இளைத்த யானை, சரத்காலத்திலும் நீர் வற்றியமையால் சிறு மணற்றிடர் களையுடைய ஆறு, ஒரே கலையுடன் கூடிய சந்திரன், இன்பத்தில் திளைத்து இளைத்த இளங்குமரி, ஏழைகளுக் குக் கொடை கொடுத்த அரசன் ஆகியோர் மெலிவினால் மேலும் பிரகாசம் பெறுவர்.
சிறு குட்டியாயினும் சிங்கம் மதநீர் ஒழுக்கினால் அழுக்கமடைந்த கன்னங்களையுடைய யானைகளின் மீதே பாயும். பலமுள்ளோருக்கு இதுவே இயற்கை. பலசாலி களுக்கு வயது தடையாகாது.
என்று குறிப்பிடுகின்றார்.
பொருள்:- பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை. என்பது வள்ளுவ்ர் கருத்து. இதனை இந்நூலாசிரியர்
“எந்த மனிதனிடம் செல்வம் உள்ளதோ அவனே நற்குலத்தவன், அவனே அறிஞன், அவனே கேள்வியறிவுள்ளவன், அவனே குணங்களை அறிந்தவன். அவனே பேச்சுவன்மையுடையவன். அவனே காணத்தக்கோன்
எல்லா நற்குணங்களும் செல்வத்திலேயே தங்கியுள்ளது.
“அரசே பசுவிடமிருந்து செல்வமாகிய பாலைக் கறக்க விரும்பு வாயானால் கன்று ஆகிய சனத்தையும் எப்போதும் நன்றாகப் போஷிப்பாயாக, சனம் நன்கு போஷிக்கப்படின்
பூமியானது கற்பகவிருக்ஷம் போலப் பல விதமான பேறு
இந்துக் கலைக்களஞ்சியம் x
 

களையும் அளிக்கும் எனக் குறிப்பிடுகின்றார்.
கெட்டவன்: - துவுடனைக் கண்டால் தூர விலகு முதியோர் வாக்கு. அவனுக்கென இயல்பான குணங்கள் உள என்கிறார் இந்நூலாசிரியர்.
"இரக்கமின்மை, காரணமில்லாது சண்டைசெய்தல், பிறர் செல்வம், புகழ், பெண்கள் மீது ஆசை கொள்ளல், நன்மக்கள் இனசனம் ஆகியோர் மீது பொறாமை ஆகிய இக்குணங்கள் கெட்டவர்களுக்கு இயற்கையிலேயே அமைந்தவை.
சூரியனது ஒளியால் முதலிற் பெரிதாயிருந்து பின் சுருங்கும் முற்பகல் நிழல் போன்றது கெட்டவர்களின் நட்பு முன் சிறிதாயிருந்து பின் வளரும் பிற்பகல் போன்றது நல்லோரது நட்பு.
நல்லவன்:- சான்றோன் ஆவது நல்லோர்க்கு அழகு. "எவன் தனது நன்னடத்தைகளால் தந்தையை மகிழ்விக்கிறானோ அவனே புதல்வன். எவள் கணவனின் நன்மை ஒன்றையே விரும்புகிறாளோ அவளே மனைவி, இன்பத்திலும் துன்பத்திலும் எவன் ஒரே விதமாகச் செயலாற்றுகின்றானோ அவனே நண்பன். இம்மூன்றையும் இவ்வுலகில் புண்ணியம் செய்தவனாலேயே பெறமுடியும்.
பரோபகாரம்:- பலன் கருதாமல் செய்யும் உதவி ஆபத்திற்குச் செய்யும் உதவி. அதுவே சிறந்தது என்பது இவ்வாசிரியர் கருத்தாகும்.
”எவர்கள் தம் நன்மையைக் கருதாது பிறர்க்கு நன்மை செய்தலிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கின்றார் களோ அவர்களே உத்தம மனிதர்கள். எவர்கள் தங்கள் காரியத்திற்கு விரோதமில்லாமல் பிறர் காரியத்தையும் கருதி முயலுகின்றார்களோ அவர்கள் மத்திமமானவர்கள் தங்கள் காரியம் நிறைவேறுவதற்காகப் பிறர் நன்மையை
அழிக்கின்றார்களோ அவர்கள் மனித அரக்கர்கள், எவர்கள் தமக்குச் சிறிதளவேனும் பிரயோசனமின்றிப் பிறர் நன்மையைக் கெடுக்கின்றார்களோ அவர்கள் யாரென அறியோம்”
x இந்து சமய கலாசார அலுவல்கள் திaைcOக்களம்

Page 324
தைரியம்:- தன்னம்பிக்கை உடையவர்களே தைரியம்
உடையவர். இதனை
"நீதியில் வல்லுனர் இகழட்டும் அல்லது போற்றட்டும். செல்வம் வந்து சேரட்டும் அல்லது தன் இஷடப்படி நீங்கட்டும். இன்றேல் மரணம் வரட்டும் அல்லது வேறு யுகத்திலாயினும் வரட்டும். ஆனால் தைரியமுடைய பெரியோர் நீதியோடு கூடிய நல்வழியிலிருந்து ஒருபோதும் ஒரடிகூடப் பிறழார்”
எனக் கூறுகின்றார்.
அதிர்ஷ்டம், ஊழ்வினை பற்றியும் இவர் குறிப்பிட்டுச் சொல்கிறார்.
"மொட்டைத் தலையன் ஒருவன் சூரிய கிரணங்களால் தனது தலை சூடேற்றப்பட்ட வேளையில் வெயில் இல்லா இடத்திற்குச் செல்ல விரும்பியவனாய் நிழல்தேடி ஒரு பனை மரத்தடிக்குச் சென்றான். அங்கே பனை மரத்திலிருந்து விழுந்த ஒரு பெரிய பனம் பழத்தினால் அவனது தலை படாரென்று உடைந்தது. சாபக்கேடுடையவன் செல்லுமிடமெல்லாம் அவனை ஆபத்துப் பின்தொடர்ந்தே செல்லும்” என்றும் “அழகிய தோற்றமும் பலன் தராது. நற்குலமும் பலன் தராது. நல்லொழுக்கமும் அவ்வாறே. கல்வியும் பலன் தராது. நன்முயற்சியோடு அரசுக்கு செய்த சேவையும் பலன் தராது. ஆனால் முன் செய்த புண்ணியத்தால் தேடப்பட்ட பாக்கியங்களே உரிய காலத்திற் பலன் தரும்” எனவும் கூறுகின்றார்.
இவ்வாறு நீதிசதகம் என்னும் நூலின் ஆசிரியர் குறிப்பிட்டுச் செல்லும் நீதிக்கருத்துக்கள் வள்ளுவரின் கருத்தை ஒத்தனவாகக் காணப்படுகின்றன. அறம், பொருள், இன்பம் யாவும் வாழ்க்கைக்கு இன்றியமையாதது. காஷமீர கவியாகிய சில் கணன் பத்திருஹரியின் சதகத்தை நன்கு அறிந்துள்ளார் என்பதனை அவரது நூலான சாந்தி சதகம் குறித்து நிற்கின்றது. இதில் பத்திருஹரியின் கருத்துக்கள் இடம்பெற்றுள் ளன. கி.பி. 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வேதாந்த தேசிகர் தம்முடைய "சுபாஷிதநீவி” என்ற நீதி நூலில் 145 செய்யுள்
@i母亞 5eoapä56T@引Ló談
 

களில் பன்னிரண்டு பகுதிகளாகப் பகுத்து எழுதியுள்ளார். கி.பி.17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நீலகண்ட தீட்சிதர் கலியுகத்திற் காணப்படும் பல தரீமைகளைக் கலிவிடம்பணம்’ என்ற நூலிலும் பேச்சு மேடைகளில் கையாளும் முறைகளைக் குறித்துச் சபாரஞ்சன சதகம் என்ற நூலிலும் சாந்தியின் மேன்மையைப் பற்றி சாந்தி விலாசம்' என்னும் நூலிலும் எழுதியுள்ளார். (@.g.)
ËGJEGJiLLITIguib
உபநிடதங்களிற் காணப்படும் பல்வகைத்தான சிந்தனைகளையும் ஒழுங்குபடுத்திப் பாதராயணர் என்பவரால் எழு தப்பட்ட ஒன்றே பிரமசூத்திரம் எனப்படுகிறது. பாதராயணர் பிரமசூத்திரத்திற்குச் சங்கரர், ராமானுஜர், பாஸ்கரர், மத்து வர், ழரீகண்டர் முதலானோர் தத்தம் சமய மெய்யியல் நிலைப்பாட்டிற்கு ஏற்ப வியாக்கியானப்படுத்தி உரை எழுதி யுள்ளனர். உரையாசிரியர்களிடையே காணப்பட்ட பாரிய கருத்து வேறுபாடுகள் காரணமாக அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம் முதலான சமய மெய்யியல் சிந்தனை கள் தோன்றின. உதாரணமாக பிரமசூத்திரத்திற்கான சங்கரரின் உரையோ ஒருமைவாதப் போதனையாக இரு க்க, மத்துவரின் உரையோ பன்மைவாதத்தைப் போதிக்கிறது.
பூரீநீலகண்ட சிவாசாரியார் என சைவசித்தாந்த நூல் மரபினரால் அழைக்கப்படும் றுரீகண்டர் என்பார் எழுதிய பாடியமே நீலகண்ட பாடியம் அல்லது சிவாத்துவித பாடியம் என அழைக்கப்படுகிறது. இந்நூல் தமிழில் காசி வாசி செந்திநாதையரால் மொழி பெயர்க்கப்பட்டு 1909இல் வெளியிடப்பட்டுள்ளது. சமஸ்கிருத நூல்களிலும் அப்பைய தீட்ஷிதரின் பாடிய உரையிலும் நூலாசிரியர் பூரிகண்டர் என்றே குறிப்பிடப்படுகிறார். ஆனால் தமிழ் மொழியிலுள்ள சைவநுால்கள் எல்லாம் அவரை நீலகண்டர் என்றே குறிப்பிடுகின்றன. அகோர சிவாசாரியாரின் பத்ததியின் உரைநூலான நிர்மலமணிப்பிரபை, முரீகண்டரை பகவான் நீலகண்ட ஆச்சாரியார்’ என்றே குறிப்பிடுகிறது. பெளவிஷ்கரபாடியத்தில் உமாபதி சிவாசாரியாரும் இந்திய மெய்யியல் 2ஆம் பாகத்தில் ராதாகிருஷ்ணனும் நீலகண்
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 325
டர் என்றே குறிப்பிடுகின்றனர். இப்பெயர்கள் ஒருவரையே சுட்டினும் அதற்கான காரணம் யாதென்பது இதுவரை புலப்படவில்லை. கிரியாசாரம் என்ற நூலை எழுதிய நீல கண்டர் வேறொருவர். இவர் 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த
வராவார்.
பூரீகண்டரின் காலம் பற்றித் தெளிவாக எதுவும் கூறமுடி யாதுள்ளது. சங்கரர், இராமானுஜர் ஆகியோரின் காலத்தி ற்கு முற்பட்டவராக செந்திநாதையர் ரீகண்டரைக் குறிப் பிடுகிறார். சங்கரர் 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இராமா னுஜர் 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். நீலகண்டபாடியத் திற்கு அப்பையா திட்ஷிதர் சிவார்க்கமணி தீபிகை என்ற தொரு உரையையும், மரீகண்டரின் சிவாத்வைத நிலைப் பாட்டை வரையறை செய்யுமுகமாக சிவாத்வைதநிர்ணயம் என்ற நூலையும் எழுதியுள்ளார். அப்பைய தீட்ஷிதர் தெரிவிக்கும் கருத்தின்படி சங்கரர் பூரீகண்டருக்கு முற்பட்ட வர். இராமானுஜர் பூரீகண்டருக்கு பிற்பட்டவர். ஆனால் எஸ்.எஸ்.சூரியநாராயண சாஸ்திரியாரோ பூரீகண்டர் 11ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் வாழ்ந்தாரென்றும் இராமானுஜரின் சமகாலத்தரென்றும் தெரிவிக்கின்றார்.
பாடியகாரர்களாகிய சங்கரர், பாஸ்கரர், இராமானுஜர், மத்துவர், நிம்பார்க்கர், பூரீகண்டர் ஆகியோரின் உரைகளி டையே கருத்துவேறுபாடுகள் காணப்படுவது மட்டுமல்ல பிரமசூத்திர சுலோகங்களின் வாசிப்பு தொடர்பாகவும் கணி சமான வேறுபாடுகள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இராமானுஜரும், பூரீகண்டரும் சுலோகங்களின் வாசிப்பில் பெருமளவிற்கு ஒத்துப்போவதைக் காணமுடிகிறது. சங்கர ரின் வாசிப்போ முற்றிலும் வேறுபட்டது. முறிகண்டரின் வாசி ப் பு ஒருபுறம் இராமானுஜரின் வாசிப் புடன் ஒத்துப்போவதுடன் மறுபுறம் நிம்பார்க்கர், மத்துவர் ஆகியோரின் வாசிப்புட னும் ஒத்துப்போகிறது. அதேவேளை நிம்பார்க்கரும் மத்து வரும் பெருமளவு சங்கரருடன் ஒத்துப்போவதும் குறிப்பிடத் தக்கது. இவர்களைவிட பிரமசூத்திரத்திற்கு விஞ்ஞானமிர்த பாடியம் என்றதொரு உரைநூலை விஞ்ஞானபிட்சு என்பார் எழுதியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது பூரீகண்டரின் பாடியத்திற்கான உரை நூலா
இந்துக் கலைக்களஞ்சியம் భ
 

கிய அப்பைய தீட்ஷிதரின் சிவார்க்கமணி தீபிகை மட்டுமே (Up(p60LDu T355 கிடைத்துள்ளது. அப்பைய தீட்ஷிதர் 16ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் வாழ்ந்தவர். இதைவிட நிஜாகுணசிவ யோகியின் தாராவலி, ஹரதத்த சிவாசாரியாரின் முரீகண்ட பாடிய சமர்த்தா, பிரமவித்யாவரிந் தரின் வேதாந்த - சர்வஸ்வ - சிவதர்ப்பணம் ஆகிய உரைகளும் மரீகண்ட பாடியத்திற்கு இருந்ததாக கர்நாடக கவிசரிதத்திலிருந்து தெரியவருகிறது.
காசிவாசி செந்திநாதையர் பூரீகண்டரின் பாடியத்தைத் தமிழில் மொழிபெயர்க்கும் பொழுது அப்பாடியத்தில் ஏகான் மவாதக் கருத்துக்களின் கலப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, தனது மொழிபெயர்ப்பில் அக்கலப்புகள் களையப்பட்டுள்ள தாக எழுதியமைக்கு மேற்படி பாடியகாரர்களின் கோட்பாடு சார்ந்ததும் மொழிசார்ந்ததுமான பண்புகளின் ஒற்றுமையே காரணமாய் இருந்திருக்கலாம்.
பிரமத்திற்குப் பதிலாக சிவனை முழுமுதற்கடவுளாகவும் ஏற்றுக் கொண்டு பூரீகண்டர் பிரமசூத்திரத்திற்கு சிவாத்துவித சைவபாடியமா கிய உரைநூலைச் செய்துள்ளார். பிரமசூத்திரத்தின் உள்ளடக்கத்தைத் தெளிவுபடுத்துவதே தனது நோக்கம் என்று குறிப்பிட்டு குருவணக்கம் தெரிவிக்கின்றார். பூரீகண்டர் சைவ ஆகமங்களைப் பின்பற்றியே தனது பாடியத்தை இயற்றியுள்ளதால் தமிழ் நூல் மரபிற்குரிய சைவ சித்தாந்தத்திற்கும் பூரீகண்டரின் சிவாத்துவிதத்திற்கும் இடையில் குறிப்பிடத்தக்க பொதுப்பண்புகள் காணப் படுகின்றன. பதி, பசு, பாசம், என்னும் முப்பொருட்களை ஏற்றுக்கொள்வது சம்சாரம் எனப்படும் கட்டு உயிர்கள் தத்தம் வினையினால் ஏற்படுத்திக் கொள்பவையே அன்றி இறைவனால் உயிர்கள் மீது சுமத்தப்படுவதன்று. உயிர் கள் தம்மைத் தாமே தூய்மைப்படுத்திப் பக்குவநிலையை அடைதல் வேண்டும் ஆகிய கருத்துக்கள் இரண்டிற்கும் பொதுவான வை. அதேவேளை சைவசித்தாந்தத்திற்கும் ழரீகண்டரின் சிவாத்துவிதத்திற்கும் இடையே கோட்பாட்டு ரீதியான வேறுபாடுகளும் உண்டு.
சைவசித்தாந்திகள் தமது நிலைய்பாட்டிலிருந்து சமயங் களை நான்கு வகையாகப் பிரிப்பர். அவை முறையே
x இந்து சமய கலாசார அலுவல்கள் தி8ை00ாக்களம்

Page 326
L[]][IL|[[}ở ở LDu_IIf), L[]}ở ở LDu IIf), 9)ị5[]L[[3ở ở LDu JID. GDị5ở சமயம் எனப்படும். சிவாத்விதத்தைச் சைவசித்தாந்திகள் அகச்சமயத்தில் உள்ளடக்குவர். பூரீகண்டரின் சிவாத் விதமும் ஐக்கியவாத சைவமும் சில பொதுப்பண்புகளைக் கொண்டவை. குறிப்பாக ஆணவமல்த்தை இவையிரண்டும் நிராகரிக்கின்றன. ஆனால் சைவசித்தாந்தத்திலோ ஆணவ மலம் முக்கியமானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றது. பூரீகண்டர் ஆணவமலத்தையும் அதன் தொழிற்பாடுகளை யும் வெளிப்படையாக நிராகரித்தார் என்பதற்கில்லை. ஆனால் ஆணவமலம் என்ற சொல்லை அவர் தனது பாடியத்தில் எவ்விடத்தும் பயன்படுத்தியதாக இல்லை. பசுத்துவம் என்ற சொல்லை அவர் பயன்ப்டுத்தியபொழு தும் ஆன்மாக்களின் இயல்பைச் சுட்டவே அச்சொல் பயன் படுத்தப்பட்டது. மேலும் சைவசித்தாந்திகளால் ஆணவ மலத்தின் தொழிற்பாடு எனக் கூறப்பட்டவையெல்லாம் பூரீகண்டரின் சிவாத்துவிதத்தில் கன்மத்திற்கும் மாயைக் கும் உரியனவாகக் கூறப்பட்டுள்ளது. அதேவேளை மலங்களினதும் மாயையினதும் தொழிற்பாடுகள் ஒன்றுக் கொன்று வேறுபட்டவை என்றோ எதிரானவை என்றோ சைவசித்தாந்தம் எச்சந்தர்ப்பத்திலும் குறிப்பிட்டதாக gേ
அது சித்தும், அசித்தும் இவ்வுலகம், சிவனது ஆற்றலான சிற்சக்தியின் பெறுபேறு என்பதுடன், சிற்சக்தி சிவனிலிரு ந்து வேறுபட்டதல்ல என்பதும் றுரீகண்டரின் சிவாத்துவிதத் தின் கருத்து. பூரீகண்டரின் இந்நிலைப்பாட்டிலிருந்து சைவசித்தாந்தத்திற்கு உடன்பாடான இரு கருத்துக்கள் பெறப்படுகின்றன. 1. உலகம் இறைவனது சிற்சக்தியானல் படைக்கப்பட்டது. 2.ஆன்மாக்களின் போகத்தின் பொருட்டே அசித்துப் பொருட்கள் படைக்கப்பட்டன. ஆனால் மாயையி லிருந்தே உலகம் சிவசக்தியினாற் படைக்கப்பட்டதனால் மாயையையும் சிற்சக்தியையும் பூரீகண்டர் ஒருதத்துவத்தில் உள்ளடக்குவது சைவசித்தாந்திகளுக்கு ஏற்புடைய தல்ல. சங்கற்பநிராகரணத்தில் உமாபதி சிவாசாரியார் மேற்படி சிவாத்துவித நிலைப்பாட்டை நிமித்தகாரண பரிணாம வாதம் எனக்கூறி விமர்சிக்கிறார். சித்து ஒரு பொழுதும் அசித்தாக முடியாததால் உலகம் விவர்த்த மானது, நித்தியமில்லாத திரிபுநிலையாகுமென ரீகண்டர் தனது
இந்துக் கலைக்களஞ்சியம்x
 

நிலைப்பாட்டிற்கு வியாக்கியானம் தருகிறார்.
தாதாத்மியம் அல்லது அத்வைதம் தொடர்பான சைவ சித்தாந்த நிலைப்பாட்டிற்கும் சிவாத்வைத நிலைப்பாட்டிற் கும் இடையில் வேறுபாடுண்டு. பூரீகண்டர் பாதராயணரைப் பின்பற்றி இதனை ஒரு குறிப்பிட்ட வகையான அபூர்வ பரிமாணம் என அழைக்கிறார். இதன்படி, நிமித்த காரணம் அபூர்வ பரிணாமத்தில் மாற்றம் எய்துவதில்லை. றரீகண்ட ரின் நிலைப்பாட்டிற்கு மாறாக, சிவஞானயோகிகளோ இருவகையான தாதாத்மியம் பற்றிக் குறிப்பிட்டு, ஒன்று ஒரே பொருளில் காணப்படுவது போன்ற குணம் - குணித் தொடர்பு (பொருளிற்கும் அதன் பண்புக்கும் இடையிலான தொடர்பு) என்றும் இரண்டாவது இருபொருட்கள் தம்மிடை யே கொண்டுள்ள தொடர்பினால் ஒரே பொருளாகக் கருதப் படுவது என்றும் குறிப்பிடுகிறார். இதன்படி சைவசித்தாந்தம் கூறும் தாதாத்மியம் இரண்டாவதாகும். ஆனால் ரீகண்ட ரின் தாதாத்மியமோ முதலாவது வகையைச் சேர்ந்ததாகும்.
சைவசித்தாந்ததிற்கும் சிவாத்துவிதத்திற்கும் இடையி லான பிறிதொரு வேறுபாடு சீவன் முக்தி பற்றியது. பக்கு வப்பட்ட அறிவு நிலையால் இவ்வுலகிலேயே ஒரு மனிதன் சீவன் முக்தனாகலாம் எனத் திருவருட்பயன் குறிப்பிடுகி றது. ஆனால் ரீகண்டரின் சிவாத்துவிதமோ இக்கருத்தை ஏற்பதில்லை. ஒருவனது இறப்புவரை அவனது கடந்தகால த்து கர்மவினை தொடர்ந்திருக்கும் அறிவைப் பெறுவதால் அது அற்றுப் போவதில்லை என ழரீகண்டர் வாதிடுகிறார்.
சிவஞானபோதத்தின் இறுதியில் வரும் சிறப்புப்பாயிரத் தில் 'சிந்தை செய்து தான் உரைத்தான் மெய்கண்டான் தாரணியோர் தாம் உணர எதுதிருட்டாந்தத்தால் இன்று என்று வரும் குறிப்பு மெய்கண்டார் நியாயித்தலிற்கு முக்கிய இடத்தைக் கொடுத்தார் என்பதை உணர்த்துகி றது. ஆனால் பூரீகண்டரோ நியாயத்திற்கு முக்கியத்துவம் கொடாது. சுருதிக்கே அவ்விடத்தைக் கொடுத்தமை அவதானிக்கத்தக்கது. அத்துடன் வைஷ்ணவ விசிஷ்டாத் வைதிகள் போல பூரீகண்டர் ஆன்மா அணு இயல்பினது எனக்கருதினார். ஆனால் சைவசித்தாந்தமோ ஆன்மா வியாபித்துள்ளது (விபு) என்ற நிலைப்பாடுடையவர்கள்.
இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 327
சிவனை முழுமுதற் கடவுளாக ஏற்றுக் கொள்ளும் ழரீகண்டம் அகம் - பதார்த்தம் என அவரது இயல்பு பற்றிக் குறிப்பிடுகிறார். இது சத்துப்பொருள் எனவும் சித்துப் பொருள் எனவும் ஆனந்தமயமானதென்றும் குறிப்பிடுவதிலி ருந்து சச்சிதானந்தமே இதன் இயல்பு என வரையறை செய்கின்றார். வேத உபநிடதங்களின் சாராம்சமான போத னைப் பொருளும் இதுவே எனத் தனது பாடிய உரையில் வரையறை செய்கிறார். ஒரு புறம் சிவனை தனியாள் ஆளுமையின் அகமாகவும் மறுபுறம் சித்துப் பொருளாகவும் ஆனந்தமயமானதென்றும் எடுத்துக்காட்டுகிறார். அவரது அபிப்பிராயப்படி தனியாள் ஆளுமையின் இறுதி இலக்கு எல் லைகளற்ற இயல் புடைய இறைவனுடன் முற்றொருமைப்படுத்திக் கொள்ளுவதாகும். பூரீகண்டரின் பாடிய உரைக்கு விளக்கமளித்த அப்பைய திட்ஷிதர் சிவன் உருவமற்றவன் ஆதலால் அவன் சச்சிதானந்த
ரூபமுடைய வன் என விளக்கமளிக்கிறார்.
ஒருபுறம் பூரீகண்டர் சிவனைக் கடந்த நிலைக்குரியதும் அனைத்திற்கும் மேலான தெய்வமாகவும் கருதுகிறார். மறுபுறம், தயிரின் சடத்துவக் காரணமாக பால் இருப்பது போல பொருட் பிரபஞ்சத்தின் சடத்துவக் காரணமாகவும் சிவனைக் கருதுகிறார். பூரீகண்டரின் மேற்படி விளக்கத்தின் படி பிரமம் முற்றிலும் கடந்த நிலைக்குரியது. பொருட் பிரபஞ்சத்தின் படைப்பிற்காக மாற்றமுறுகிறது என்ற முடிவு பெறப்படுகிறது. பூரீகண்டரின் நிலைப்பாட்டை அப்பைய தீட்ஷிதர் மேல்வருமாறு விளக்குகிறார். சடப் பொருட்பிரபஞ்சமாக இறைவன் மாற்றமுறுவதில்லை, பதிலாக அவனது ஆற்றலே அப்பிரபஞ்சத்தை ஆக்குகி றது. இவ்வாற்றல் இறைவனது ஆளுமையின் பகுதியாகும் எனக்கூறுகிறார்.
அப்பைய திட்ஷிதர், ழரீகண்டரின் பாடியம் பற்றிக் குறிப்பி டும்பொழுது பிரமனின் இயல்பு பற்றிய ஆராய்ச்சியென்பது உபநிடதங்கள் பற்றிய ஆராய்ச்சியே ஆகும் என்கிறார். சேதன. அசேதனங்களிலிருந்து பிரமம் வேறுபட்டது. சட சக்தி, சிற்சக்தி என இருவகைச் சக்திகள் உள. பொருட் பிரபஞ்சம் சடசக்தியினால் பிரமத்தை முன்னிலைப்படுத்தி உருவாகிறது. சிற்சக்தியோ சேதன-அசேதனங்களிற்கு
இந்துக் கலைக்களஞ்சியம்x
 

அப்பாற்பட்டதாய் பொருட்பிரபஞ்சத்தைக் கட்டுப்படுத்துவ தாய் இருக்கிறது. பிரமம் சடப்பொருளையும் ஆன்மாக் களையும் உள்ளடக்கிய தோற்றப்பாடு உலகினின்றும் வேறுபட்டு இருக்கிறது. தன் சக்தியால் சடப்பொருள் உலகைப் படைத்த இறைவன் பிரமம் அல்லது சிவன்
ஆவான்.
உலகைப் படைத்து, பாதுகாத்து, அழித்து, அருளுபவன் சிவனாவான். ஆன்மாக்களின் விடுதலையின் பொருட்டு தோற்றப்பாடான இவ்வுலகம் சிவனால் படைக்கப்படுவத னால் அவன் இவ்வுலகத்திலிருந்து வேறுபட்டு நிற்பவனா வான். உலகம் அழிக்கப்படுகிறதென்பதால் அது இல்லாது போவதில்லை. மாறாக அது பிரகிருதியிடமே (மாயை) மீண்டும் சென்றடைகிறது. எனவே, இவ்வுலகம் திரிபுக்காட்சி
யல்ல என்பது பூரீகண்டரின் நிலைப்பாடாகும்.
பிரமத்தின் இயல்பு பற்றி விளக்கும் பூரீகண்டர் ஞான த்தை உடைய சத்துப் பொருளான அது ஆனந்தமயமானது என்பதுடன் உலகின் மூலகாரணமானது என்கிறார். உப நிடதங்கள், பிரமத்தைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது ஆகாசத்தையே உடலாகக் கொண்டதென்றும் அது ஆனந் தம் என்றும் குறிப்பிடப்படுகிறது. பூரீகண்டர் இதனை விளக் கும்பொழுது ஆகாசம் என்பது பூத-ஆகாசம் அல்லவென் றும் அது சித்தாகாசம் என்றும் குறிப்பிட்டு, முடிவான பொருளான பரா-பிராகிருதியே அதுவென்றும் விளக்கு கிறார்.
பிரமத்தின் இயல்பை மீண்டும் பூரீகண்டர் விளக்குகை யில், அது ஆனந்தமயமானது என்று கூறி, புறப்பொருட் கருவிகளின் உதவியின்றித் தனது பேரின்ப அனுபவத் திற்கு தானே உட்பட்டதென்று விளக்குகிறார். இதனாலே தான் விடுதலையடைந்த ஆன்மாக்கள் இப்பேரின்பத்தை எதுவித கருவிகளின் உதவியுமின்றி அனுபவிக்கின்றன என்கிறார். எனவே பிரமம் அல்லது சிவன் எத்தகைய மாற்றங்களுக்கும் உள்ளாகாது. தனது ஆற்றலாலும் சடப் பொருள் ஆற்றலாலும் சடப்பொருட் பிரபஞ்சத்தைப் படைக் கிறது என்கிறார். பிரமத்தினது, சிவனது ஆற்றல் எல்லைக ளற்றது. அதனால் அவர் அப்பிரபஞ்சத்தில் உள்ளுறை
x 355 stou satag gapakapasa seooraisortin

Page 328
பவரையும், அதற்கப்பாலும் நிறைந்து இருப்பவராகிறார். இதனாலேயே அவர் சர்வமுமாக நிறைந்திருப்பவராகிறார். அவரிடமே அனைத்தும் சென்றடைவதால் அவர் ஈசானர் என அழைக்கப்படுகிறார். எல்லாவற்றிற்கும் இறைவனாக இருப்பதால் அவர் பசுபதி என அழைக்கப்படுகிறார்.
மாயை பற்றிக் குறிப்பிடும்பொழுது, அதுவே மூலப்பொரு ளாகவும், பிரபஞ்சத்தின் சடக்காரணமாகவும் இருக்கிறது என்கிறார். சிவன் மாயையுடன் சேர்ந்திருப்பவன். ஆதலால் அவனுக்கு மாயையிலிருந்து தனியானதொரு இருப் பில்லை. இத்தகைய அணுகுமுறையினாலேயே மாயை பிரபஞ்சத்தின் சடக்காரணமாகிறது.
ஆன்மாக்களும் இறைவனும் உள்பொருள் என்பது உபநிடதப் போதனையாகும். இறைவனுக்கும் ஆன்மாக்க ளுக்கும் தொடக்கமும் இல்லை, முடிவும் இல்லை. ஆனால் ஆன்மாக்கள் மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கின்றன. இதற்க்குக் காரணம் முடிவேயில்லாத கன்மவினையாகும். இறைவன் எல்லாமறிந்தவனாதலால் ஆன்மாக்களின் வினை களிற் கேற்ப பிறப் பைக் கொடுத் து அவைகளிற்கேற்ற வினைப்பயனை நுகரச் செய்கிறான். பிறப்பு- இறப்பு என்ப னவற்றால் ஆன்மாக்கள் களைப் புறும் பொழுது பிரபஞ்சம் அழிக் கப்பட்டு ஆன்மாக்களுக்கு ஒய்வு கொடுக்கப்படுகிறது.
இன்பமும் துன்பமும் ஆன்மாக்களின் கன்மவினைப் பயன் களாகும். கன்மவினைப் பயனை ஆன்மாக்கள் நுகர்ந்தேயா தல் வேண்டும். ஆனால் அது இறைவனின் சித்தத்தில் தங்கியுள்ளது. கன்மமும் கன்மவிதியும் தாமே செயற்படும் ஆற்றலற்றவை. அவற்றை இறைவன் செயற்படுத்துகிறான். கன்மவினைப் பயனின்றி ஆன்மாக்கள் தூய ஞானத்தைப் பெறமுடியாது. ஞானமில்லாது விடுதலை பெறவோ, பேரின் பத்தை நுகரவோ முடியாது. ஆன்மாக்கள் தீவினை புரி யாது தடுப்பதற்கும் பேரின்பத்தை அடைவதற்கும் இறைவ னின் அருள் அவற்றுக்குத் தேவைப்படுகிறது. பூரீகண்டபாடி யத்தில் இன்பமும் - துன்பமும் பூர்வகன்ம வினையின் பலாபலன்களே என்பது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. நல்வினை செய்ய விரும்பும் ஆன்மாவிற்கு இறைவன் நல்வழியைக் காட்டுவான். எத்தகைய வினையைப் புரிவ
இந்துக் கலைக்களஞ்சியப்x 淡籌30
 

தென்பது அவரவர் சித்ததைப் பொறுத்தது. எனவே, தெரி வும் அதற்கான பொறுப்பும் தெரிவு செய்வதனையே சார்ந்த தாகின்றது.
இறுதியாக ஆன்மாக்களின் விடுதலை பற்றிக் குறிப்பிடும் பொழுது எல்லாவகையான பந்தங்களிலிருந்தும் நீங்கிய ஆன்மாவானது விடுதலை அடைந்து பேரின்பத்தை நுகரும் பிரபஞ்சத்தைப் படைத்தல் தவிர்ந்த ஏனைய எல்லாவகை ஆற்றலும் உடையதாக அது விளங்கும். உடலற்ற நிலை யில் உளத்தாலேயே எல்லாவகையான இன்பத்தையும் நுகரக்கூடியதாக இருக்கும். நித்திய சீவானுபவம் என்ப தன் தாற்பரியம் அதுவேயாகும். (சோ.கி.)
šTbu
இது ஒரு ஜன்யராகம் இருபத்தொன்பதாவது மேளமா கிய தீரசங்கராபரணத்தின் ஜன்யம்.
ஆரோகணம் - ஸரிகமபதநீஸ் அவரோகணம் - ஸநிதபமகரிஸ
இந்த இராகத்தில் வரும் சுர வகைகளாவன ஸட்ஸம் சதுஸ்ருதி ரிஷபம், அந்தரகாந்தாரம், சுத்தமத்திமம், பஞ்ச மம், சதுஸ்ருதி தைவதம், காகலி நிஷாதம் முதலியன. கைசிநிசாதம் அன்யஸ்வரமாத் தோன்றுகிறது.
உபயகிர சம்பூரண ஷாடவ ராகம் ஏகஸ்வர வக்ரராகம், அவரோகணத்தில் தைவதம் வர்ஜம், இது ஒரு பாஷாங்க இராகம். அன்யஸ்வரமாகிய கைசிசி நிஷாதம் பநிதநி, பாதநிதநிபா ஆகிய பிரயோகங்களில் வருகிறது. ரிஷபம். மத்தியமம், நிஷாதம் முதலியவை ராகச்சாயா ஸ்வரங்க ளாகும். மத்தியமம், பஞ்சமம் இரண்டும் நியாச ஸ்வரங்கள். பஞ்சமம் ஒரு நிலை ஸ்வரம், ரிஷபம், மத்யமம் இந்த இராகத்தில் கம்பித ஸ்வரங்களாகும். மாதநி தநிஸ் என்ப தில் இரண்டாவது நிஷாதம் காகலி நிஷாதம் பேசுகின்றது. காம பமமா என்ற சஞ்சாரத்தின் முடிவில் ஒலிக்கும் மத்திமம், நீலாம்பரி இராகத்தின் ஸ்வரூபத்தை யும் அழகி னையும் வெளிப்படுத்துகின்றது. அசைவுடன் கூடிய இந்த மத்யமம் சுத்த மத்திமத்தைவிட ஸ்ருதியில் குறைந்து
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 329
ஒலிக்கின்றது. கமபா என்பதில் சுத்தமத்திமம் அதன் ஸ்தானத்தில் ஒலிக்கின்றது. பமா என்பதில் மத்திமம் சிறிது ஸ்ருதியில் ஏற்றத்துடன் ஒலிக்கின்றது. ஸ்நி நீஸா என்பதில் காகலி நிஷாதம் தோன்றுகின்றது. இவ்வாறான ஸ்ருதி ஜாதிகளினால் இராகப் பொலிவு வெளிப்படுகின்றது.
ஸநிபமகஸ, பாதநிதாநிஸ் விசேட சஞ்சாரங்கள். நீலாம் பரி இராகத்தில் உள்ள உருப்படிகள் ஸட்ஸம் (அம்பா நீலாயதாட்சி) காந்தாரம் (என்கை மனசு) முதலிய ஸ்வரங்க ளில் ஆரம்பமாகின்றன. கமக வரிகரக்தி இராகம், இந்த இராகத்தின் மத்திமத்தில் கம்பித கமகத்துடன் கொடுக்கப் படும் அசைவு நீலாம்பரி இராகத்தின் எழிலினை வெளிப்படுத் துகின்றது. செளக்க காலப்பிரயோகங்களினால் பொலிவ டையும் இராகம், விஸ்தாரமாகப் பாடக்கூடிய இராகம் அல்ல. தாலாட்டுப் பாடல்களும் லாலிகளும் இந்த இராகத் தில் பிரசித்தமாகப் பாடப்படுகின்றன. கருணை, பக்தி, வாத்சல்யம், முதலிய உணர்ச்சிகளை நீலாம்பரி இராகத் தின் மூலம் வெளிப்படுத்தலாம். நித்திரையைக் கொடுக்கக் கூடிய இராகம் என்ற கருத்து பிரசித்தமாக உள்ளது. இந்த இராகத்தை இரவில் பாடுவது உசிதம், மிகப்பழைய இராகங்களில் ஒன்று. தமிழிசைப் பண்களில் "மேகராகக் குறிஞ்சி” என்பது நீலாம்பரி இராகத்தைக் குறிக்கும்.
சஞ்சாரம்: 6nIDfabupDIT - 5TLDL JITLDT – abuDITI ILDB5 famDIT -6muIÉ57 b5 ஸரிகமா - பமகரிகஸ் -மகஸாநி - ஸ்ரிகமபமமா கமபநிதநி. பதபபமகரிகமபமா - மகரிகஸா ஸ்ரிகமபா - கமபநிதநி - கமபதபநிஸா ஸாஸநிரீ - ஸ்நிபமமா - கமபாதநிதபா பமமாமக - ரிகமயமக - ரிமகஸா - ஸாஸநிரீ 6m) flab LDL Air - Dib flonu)II.
(தே.ஹ)
நீளோபா முற்பக்த)
பொங்கும் மங்களம் எங்கும் தங்கும் சிறப்புமிக்க பிம்ப ளம் என்னும் திருத்தலத்தில் நிளோபா என்னும் திருநாமம் கொண்ட திருமால் அடியவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவர் அன்பு மனைவியுடனும் அருமையான ஒரே மகளுட
இந்துக் கலைக்களஞ்சியம்x
驚簽線30
 

னும் நிறைவோடு இல்லறத்தை நடத்தி வந்தார்.
இவர் எந்நேரமும் ஹரி நாமத்தையே சிந்தையிற் கொண்டு ஒழுகி வந்தார். உஞ்ச விருத்தி எடுத்து குடும்பத் தைக் காப்பாற்றி வந்தார்.
இவ்வாறு வாழ்ந்துவரும் நாளில், மகள் திருமண பருவ
த்தை அடைந்தாள்.
மகளுக்கு எப்படித் திருமணத்தை நடத்தப் போகிறோம் என்று மனைவி அல்லும் பகலும் கவலை கொண்டாள். ஆனால் அடியவரோ சற்றும் கவலை கொள்ளவில்லை.
“கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிருக்கும் கருணை காட்டும் கடவுள், நம் மகளுக்கும் கருணை காட்டுவார். பீமா நதிதீரம் கோவில் கொண்ட குவலயம் காக்கும் பாண்டுரங்கப் பெருமான் நமது குணவதியான மகளுக்கு
ஏற்ற மணாளனைக் கண்டிப்பாக கொண்டுவந்து சேர்ப்பார்.”
கணவனின் ஆறுதல் வார்த்தைகளைக் கேட்ட மனைவி யார் “சித்தாந்தம் செயலாகப் போவதில்லை. தெய்வத்தை நம்ப வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. இருந்தாலும் நமது முயற்சியும் வேண்டும் அல்லவா? என்று பதிலுரைத்
தாள.
கிருஹபத்தினியின் வார்த்தைகளை ஏற்றுக் கொண்டார் பக்தர் தமது மகளுக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலத்தில் இறங்கினார்.
எம்பெருமான் திருவருளால் இவர்கள் அந்தஸ்திற்கு ஏற்றவாறு கெளரவமான இடத்திலிருந்து ஒரு நல்ல வரன் அமைந்தது.
ஜாதகப்பொருத்தம் பார்த்து திருமணமம் நிச்சயமானது. அடியவர் திருமணத்திற்கான ஏற்பாடுகளைத் தொடங்கி னார். பலவழிகளில் கஷ்டப்பட்டு பொருள்களைச் சேர்த்தார் பக்தர்.
கல்யாணத்திற்கு ஓரிரு தினங்கள் இருந்தன. சாப்பாட்டுச் செலவுகளைப் பற்றி கணவனும் மனைவியும் தீவிரமாகச்
சிந்தித்துக் கொண்டிருந்தனர்.
இந்த சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 330
மளிகை சாமான்கள் வாங்குவதற்குப் போதிய பணம் கைக்கு வந்து சேரவில்லையே என்று பாரியாள் புலம்பிக் கொண்டிருந்தாள். பர்த்தாவோ, வழக்கம்போல் திக்கற்றவர் களுக்குத் தெய்வமே துணை என்ற உறுதியுடன் இருந்தார்.
"எல்லாவற்றிற்கும் இந்தப் பழைய பல்லவியையே பாடிக் கொண்டிருங்கள்” என்று வெறுப்போடு சொன்னாள் கிருஹ பத்தினி!
மனைவியின் வார்த்தைகளைக் காதில் சிறிதும் போட்டுக் கொள்ளாமல் பக்தர், பகவானின் நாமத்தை ஜபித்துக் கொண்டே இருந்தார்.
பகவான், தமது பக்தனைக் காத்தருளத் திருவுள்ளம் கொண்டார். திருத்தொண்டரின் மகளின் திருமணத்தை ருக்மணி கல்யாணம் போல், மிகக் கோலாகலமாக நடத்
தத் திருவுள்ளம் பற்றினார் பரந்தாமன்!
திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட அனந்தன், கிருஷ்ண னாக மாறவில்லை. குலேசரைப்போல் தம்மைத் தோற்றத் திலே மாற்றிக் கொண்டார். கந்தல் துணியில் அரிசியும், பருப்பும், வெல்லமும், ரொட்டிமாவும் கட்டிக் கொண்டு நேராக நீளோபா இல்லத்திற்கு எழுந்தருளினார்.
பகவத் சிந்தையுடன் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந் திருந்த அடியவர் தமது வீடுநோக்கி வரும் அந்தணரை எழுந்து நின்று வரவேற்றார்.
அந்தணராக வந்த அனந்தன் அடியவரைப் பார்த்து, "ஸ்வாமி! அடியேன் பண்டரிபுரத்திலிருந்து வெகுதூரம் நடந்துவந்த எனக்குப் பசி காதைத் துளைக்கிறது. நான் பிஷை எடுத்து அரிசி, பருப்பு, வெல்லம் முதலியவை கொண்டுவந்துள்ளேன். இதனைப் பெற்றுக் கொண்டு எமக்கு ஒருவேளை போஜனம் அளித்தால் உங்களுக்கு நிரம்பப் புண்ணியம் ஏற்படும்!” என்று விண்ணப்பித்தார்.
“ஸ்வாமி! தங்களைப் போன்ற அடியவர்களுக்கு விருந்து அளிப்பதனைத்தான் இந்த எளியேன் வாழ்க்கையில் பெரும் பேறாகக் கொண்டுள்ளேன். தாங்கள் அரிசி, பருப்பு முதலியவற்றைக் கொடுத்துத்தான் போஜனம் செய்யவேண்
@igä56oavä56T@明uá綠30

டும் என்பதில்லை. உள்ளே எழுந்தருளுங்கள். போஜனம் செய்யலாம்” என்று பணிவன்போடு வேண்டிக் கொண்டார்.
அடியார் அந்தணரை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றார். மனைவியும் மகளும் அவரை வணங்கி வரவேற்ற
னர்.
அனந்தன் தாம் கையில் கொண்டு வந்திருந்த உணவுப் பண்டங்களை அம்மையாரிடம் கொடுத்து "தாயே! இவற்றை உங்கள் வீட்டில் உள்ள பதார்த்தங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு குறையும் வராது” என்றார்.
பூரீ நீளோபாவின் மனைவி அனந்தன் கொடுத்த பண்டங்
களை வாங்கிப் பத்திரப்படுத்தினாள்.
கணவனும் மனைவியும் அனந்தனை ஆசனத்தில் அமரச்செய்து வயிறார போஜனம் அளித்து உபசரித்தார்
கள். அனந்தன் உண்டு மகழ்ந்தார்.
அடியவர் அனந்தனிடம் ’ஸ்வாமி! அடுத்த வாரம் எமது மகளுக்குத் திருமணம் நடக்கப்போகிறது. அதுவரைக் கும் தேவரீர் இங்கேயே இருக்கலாம்” என்று கேட்டுக்
கொண்டார்.”
"அப்படியா! மிக்க சந்தோஷம்! ஒரு காலத்தில் கல் யாண வீடுகளுக்கு நான் ஒருவனே சமையல் ஏற்பாடு களைக் கவனித்திருக்கிறேன். நீங்கள் பண்டங்கள் எதுவும் வாங்கவேண்டியதில்லை. நானே எல்லாவற்றையும் 56) னித்துக் கொள்கிறேன். நீங்கள் செலவைப் பற்றிச் சற்றும்
கவலைப்படத் தேவையில்லை.
அந்தணரின் அன்புமொழி ரீ நீளோபாவிற்கும் அவரது மனைவிக்கும் மகளுக்கும் செவியில் அமுதம் பாய்ந்தாற் போல் இருந்தது.
அவர்கள் அந்தணரின் பாதங்களைப் பணிந்து எழுந்தனர்.
அடியவரின் இல்லத்தில் விவாகத்திற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. உற்றார், உறவினர் வந்து கூடினர்.
x இந்த சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 331
அந்தணராக வந்த அனந்தன் பெண் வீட்டாருக்கும், பிள்ளை வீட்டாருக்கும் அற்புதமாக - விதவிதமாக காய் கறி வகைகளுடனும் சித்தரான்னங்களுடனும் பஞ்சபட்சய பரிமாணங்களுடனும் விருந்து அளித்தார்.
பத்து பதினைந்து ஆட்கள் செய்ய வேண்டிய வேலையை ஒருவராகவே இருந்து கவனித்துக் கொண்டது அனைவருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது!
திருமணம் முடிந்து பிள்ளை வீட்டுக்காரர்கள் பெண்ணை அழைத்துக் கொண்டு புறப்பட்டார்கள்.
பெண்ணும், மாப்பிள்ளையும் அனந்தனின் திருவடிகளில் வீழ்ந்து பணிந்தனர். அனந்தன் அவர்களுக்குப் பேரருள் பாலித்து வழியனுப்பி வைத்தார்.
அனந்தன் பூர் நீளோபாவிடம் “ஸ்வாமி! உங்களிடம் கொடுத்த வார்த்தையை காப்பாற்றிவிட்டேன். விவாகமும் வெகுவிமரிசையாக நடந்துவிட்டது. உங்களுக்குத் திருப்தி தானே!” என்று கேட்டார்.
கணவனும் மனைவியும் அந்தணரை நமஸ்கரித்து, "ஸ்வாமி! தவரீர் சாதாரண மனிதர் அல்ல! பெரும் தவஞானியாகத்தான் இருக்கவேண்டும் இல்லையேல் அந்த ஆண்டவனே உங்கள் உருவில் வந்திருக்கவேண்டும் என்று எண்ணுகிறேன். உக்கிரான அறையில் பண்டங் களை எடுக்க எடுக்க குறையாமல் இருப்பது ஏதோ பெரும் மாயாஜாலம் போல் அல்லவா தோன்றுகிறது! நீங்கள் வராவிட்டால் எங்கள் மகளின் திருமணம் இத்தனை சிறப்பாக நடந்திருக்காது. தயவுசெய்து அடி யேன் தங்களுக்கு ஒரு சிறு காணிக்கையைத் தரலாம் என்று எண்ணியுள்ளேன். அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று கூறிவிட்டு தமது மனைவியுடன் உள்ளே சென்று பட்டு உத்தரியம் ஒன்றை சாதுவிற்குத் தமது உளம் கனிந்த சன்மானமாகக் கொடுப்பதற்காக எடுத்து வந்தார்.
அங்கே அந்தணர் இல்லை! கணவனும் மனைவியும் செய்வதறியாது திகைத்தனர்.
அந்தணர் நின்ற இடத்திலே ஒரு பேரொளி பிரகாசத்
 

தைக் கண்டனர். பூரீ நீளோபாவிற்கு விஷயம் விளங்கி விட்டது. அந்தணராக வந்து அறுசுவை அன்னம் சமைத்துப் போட்டது அந்த அனந்தனே அன்றி வேறு எவரும் இல்லை என்பதனை உணர்ந்தார்.
அடியவர் நெஞ்சு மகிழ்ந்தார். உள்ளம் உருகினார். சித்தம் தடுமாறினார். அவர் கண்களிலிருந்தும் கண்ணிர் தாரைதாரையாகப் பெருகிறது! நா குழறியது. புலம்பி 5)(ggbiT).
"பாண்டுரங்கப் பெருமானே! வைகுண்ட வாசனே! தேவர் களும் முனிவர்களும் போற்றித் துதிக்கும் தேவரீருடைய திருவடிக் கமலங்கள் இந்த ஏழையின் இல்லத்தில் வருந்தி யதை எப்படிப் பொறுத்துக் கொள்ளமுடியும்.
பாலும் பழமும் நிவேதித்து ஆராதிக்க வேண்டிய தேவனை இந்த எளியேன் ஏவல் கொண்டேனே! அடுத்திருந்து இலை போட்டு அன்னம் பரிமாறியதோடு இலை எடுத்து பணி செய்திரே! அடியேன் என்ன பிராயச்சித்தம் தேடப்போகிறேன். மதுசூதனா! மாதவா எங்கள் பிழையைப் பொறுத்திடுவீர்!’
அந்த அறையிலே அசரீரி பிறந்தது!
"நீளோபா! இதற்காக நீ வருத்தமோ, வேதனையோ கொள்ளவேண்டாம். பக்தர்களுக்குத் தொண்டு செய்வ தென்பது எமக்குப் பேரானந்தம் ஆகும். உமது பக்தியும், திருத்தொண்டும் என்றும் நிலைத்திருக்கும். இந்த இடத் தில் uJTIb அர்ச்சாவதார ரூபியாக எழுந்தருளத் திருவுள் ளம் கொண்டோம்”
அனந்தன் அர்ச்சாவதார ரூபியாக அந்த அறையிலே கோவில் கொண்டான். அடியவரும் மனைவியாரும் நிலம் கிடந்து நிமலனை சேவித்தனர்.
இந்த அற்புதமான விஷயம் ஊர் முழுவதும் பரவியது. பக்தர்கள் கடல்போல் அடியவரின் இல்லத்திற்குத் திரண்டு வந்தனர். அர்ச்சாவதார மூர்த்தியான அனந்தனை பொன்னா லும் பொருளாலும் சேவித்தனர்.
šosouusagJ gaajaose geooTä8õõ

Page 332
அந்த இடத்திலேயே கோவில் கட்ட அடியவரும், ஊர்மக்களும் விருப்பங்கொண்டனர்.
அனந்தனின் அருளால் பூரீ நீளோபா இல்லாம் வைஷ் ணவ திவ்ய தேசமானது ஏழையின் குடிசை ஏற்றிப் புகழ்பாடும் கோவில் ஆனது! அந்த கோயிலிலே பூரீ நீளோபாவின் பகவத் கைங்கரியம் நிலைத்தது.
இந்துக் கலைக்களஞ்சியம்x
 
 

பக்தர்களின் கூட்டம் பெருகியது! நாம சங்கீர்த்தனம் எந்நேரமும் ஒலித்தது.
பூரீ நீளோபாவும், அவரது பணியாட்களும் அனந்தனுக் கும், அனந்தனின் அடியார்களுக்கும் திருப்பணிகள் பல செய்து, சிறப்புற வாழ்ந்து பேரின்பப் பெருவீடு கண்டனர். (நா.கி.)
ॐ 3 இந்து சமய கலாசார அலுவல்கள் தி6ைOOக்களம்

Page 333
நூற்றெட்டுத்திருப்பதிஅந்தாதி
அழகிய மாணவாளதாசர் என்கிற திவ்வியகவி பிள்ளைப் பெருமான் ஐயங்காரால் நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி என்னும் நூல் இயற்றப்பட்டது. இந்நூல் நூற்றெட்டு திருப்பதி வெண்பா எனவும் வழங்கப்பெறும். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட நூற்றெட்டுத் வைணவ தலங்களைப் பற்றிய வெண்பாக்கள் என்பதால் இப்பெயர் பெற்றது. மேலும் அந்தாதித் தொடையால் அமைத்த நூல் என்பதால் நூற்றெட்டுத் திருப்பதியந்தாதி எனவும் வழங்ப்படுகின்றது. இதனை
"ஏற்ற மணவாளர் இசைத்தார் அந்தாதி வெண்பா தோற்றம்கேடு இல்லாத தொல்மாலைப் போற்றத் திருப்பதியாம் நூற்றெட்டினையும் சேவிப்பர்
கருப்பதியா வண்ணம் உண்டாக”
என்னும் நூல் அடியினால் அறியலாம். இந்நூற்றெட்டுத் தலங்களையும் சேவிப்பவர்களுக்கு மீண்டும் பிறப்பின்றி முத்தியை அளிக்குமாறு விண்ணப்பிப்பதாக இப்பாடல் அமைந்துள்ளது. இவ் அந்தாதிகளுக்கு தனியன் என்றும்
(oll Iu1J.
இந்நூல் சிறப்புப் பாயிரச் செய்யுள் ஒன்றும் ஆழ்வார்கள் காப்புச் செய்யுள்கள் (அழ்வார்கள் காப்பு); நம்மாழ்வார். உடையவர், கூரத்தாழ்வான், பராசர பட்டர்) தன்னைப் பிறன் போல் கூறிய செய்யுளும் திவ்விய தேசங்களின் தொகைகளைத் தொகுத்து கூறும் செய்யுள் நீங்கலாக நூற்றெட்டு வெண்பாக்களைக் கொண்டது. மேலும் இந்நூல் நூற்றெட்டு திருப்பதிகளைப் பாடுவதால் அந்தாதிக்குரிய நூறு என்னும் எண்ணிக்கையைக் கடந்து நூற்றெட்டுப்
பாடல்களை இது கொண்டுள்ளது.
இந்நூற்றெட்டு அந்தாதியில் சோழநாட்டுத் திருப்பதிகள் 40 உம் முறையே திருவரங்கம், திருவுறையூர், திருதஞ்சை,
@öglä 56oap556T@由uá綠
 

திருஅன்பில், திருக்கரம்பனுTர், திருவெள்ளறை, திருப்புள்ளம் பூதங்குடி, திருப்பேர், திருஆதனூர்,
திருஆழந்தூர், திருச்சிறுபுலியூர், திருச்சேனை, தலைச்சங்க
நாணி பதியம், திருக் குடந்தை, திருக்கணி டியூர்,
திருவிண்ணகார், திருக்கண்ணபுரம், திருவாலி, திருநாகை, திருநறையூர், திருஇந்தனூர், நந்திபுரவிண்ணகரம் போன்ற பல தலங்களும் பாண்டிநாட்டுத் தலங்கள் 18 உம்,
தொண்டைநாட்டுத் திருப்பதிகள் 22உம், மலைநாட்டுத் திருப்பதிகள்13உம், வடநாட்டுத் திருப்பதிகள் 12உம், திருநாட்டு திருப்பதிகள் 22உம் திருநாட்டுத் திருப்பதி ஒன்றும் என்ற முறையில் பிள்ளைப் பெருமான் ஐயங்கார்
UTLQuairGTTTj.
இந்நூலில் முதற் பாடல் திருவரங்கம் பெரியகோயில்
பற்றியதாகும்.
"சீர்வந்த உற்றித் திசைமுன்னால் அல்லாது என்
சோர்வந்த சொல்லில் சுருங்குமோ. ஆர்வம்
ஒருவரங்கங்கு ஒயில் உகந்த வரை ஆள்வான்
திருவரங்கம் கோயில் சிறப்பு
இறுதி நூற்றெட்டாவது பாடல் திருவைகுந்தம் (பரமபதம்) பற்றியதாக உள்ளது, இவ்விரண்டு தலங்களுமே வைணவர்களாற் பெரிதும் மதிக்கப்பெறும் தலங்கள் ஆகும். திருவரங்கத்தை திருவைகுண்டமாகவே கருதி வைணவர்கள் போற்றுவர். ஆகையாற் போலும் இவர் திருவரங்கத்தை முதல் திருப்ப்தியாகக் கொண்டு பாடியுள்ளார். மேலும் இவர் திருவரங்கத்துப் பெருமானிடம் ஆராத அன்பு கொண்டவர். திருவரங்கத்தந்தாதி இயற்றியபின் திருவேங்கடத்தந்தாதி பாடினார் என்பதாலும் திருவரங் கத்தை முதற் திருப்பதியாக கொண்டு
இந்நூலை இயற்றியுள்ளார். (தே.ஹ.)
&இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 334
Gilgulopa)
திருத்தணி வட்டத்தைச் சேர்ந்தது நெடியம் என்ற ஊராகும். பள்ளிப்பட்டியிலிருந்து நகரி செல்லும் பேரூந்துத் பாதையில் உள்ளது. யானை படுத்திருப்பது போன்ற அமைப்புடைய மலையாதலால் இத்தலத்தை யானைமலை, கஜகிரி என்று அழைப்பர். மலை மீதுள்ள கோவிலை யடைய 600 படிகள் ஏறவேண்டும். இந்திரன் செங்கலுவ என்னும் நீலோற்பல மலரால் வழிபட்டதனால் செங்கல்வ ராய சுவாமி எனப் பெறுகின்றார். ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு இருபுறமும் தேவியர் சூழ கடிகஸ்தத்துடன் காட்சி தருகின்றார்.
உற்சவர் மூலவரைப் போன்று இரு தேவியருடன் நின்ற திருக்கோலத்தில் அருகில் மயில் விளங்க எழுந்தருளியுள் ளார். வள்ளி தேவசேனா தேவி சமேதராக ஆறுமுகரும், தேவியாருடன் பாலசுப்பிரமணியரும் காட்சி தருகின்றனர். ஆறுமுகம் உற்சவர் திருவுரு வெகு அழகு.
ஆடிக் கிருத்திகையில் புஷ்பக்காவடி சிறப்பு: சனவரி முதல் நாளன்று சந்தனக்காப்பு வெகு அழகு. தீர்த்தம்: செங்கல்வ தீர்த்தம், நீலோத்பல தீர்த்தம். இத்தலத்தின்மீது திருப்புகழில் ஒரு பாடல் உள்ளது. (ஆ.கோ.)
நெடுஞ்செழியன்
சங்க காலத்தில் வாழ்ந்த பாண்டிய மன்னருட் சிறப்பு மிக்கவன். இவன் பாண்டிய ஆரியப்படை கடந்த நெடுஞ் செழியன் என்றும் குறிக்கப்பெற்றுள்ளான். இவனைப் பற்றிய செய்திகள் மீனாட்சிபுரம் கல்வெட்டுக்களால் அறியப்பெறு கின்றன. வானநூல் அறிஞரான நந்தி என்னும் சமணப் பெரியாருக்கு இந்த நெடுஞ்செழியன் மலைக்குகையிற் கற்படுக்கை சமைத்துக் கொடுத்தான் என்ற செய்தியை இக் கல்வெட்டால் அறிய முடிகின்றது. சடிகன், இளஞ்சிடிகன் ஆகியோரின் பெயர்க ளும் இக்கல்வெட்டிற் காணப்பெறுகின்றன.
இந்துக் கலைக்களஞ்சியம்:
 

இவன் பாடிய பாடலொன்று புறநானூற்றிலே காணப்படு கின்றது. இப்பாடல் கல்வியின் சிறப்பைச் சித்திரிக்கின்றது. இதில் அக்காலத்தில் சமூகம் நான்கு வருணங்களாகப் பிரிக்கப் பெற்றிருந்த குறிப்பும் காணப்படுகின்றது.
"உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே பிறப்போரன்ன உடன் வயிற்றுள்ளும் சிறப்பின் பாலால் தாயும் மனந்திரியும் ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும் மூத்தோன் வருக என்னாது அவருள் அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும் வேற்றுமை திரிந்த நாற்பாலுள்ளும் கீழ்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கட்படுமே
(புறம்: 183)
கோவலனைக் கொலை செய்தவன் என்று சிலப்பதிகாரத்
தில் கூறப்படும் பாண்டிய அரசன்
'வடவாரியப் படைகடந்து தென்றமிழ் நாடு ஒருங்கு காணப் புரைநீர் கற்பின் தேவி தன்னுடன் அரைசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியன்
(சிலப். 23) என்று குறிப்பிடப்படுகின்றான். இவ்வாறு குறிப்பிடப்பெறும்.
"ஆரியப்படை கடந்த” என்னும் தொடரும் புறநானூற் றைத் தொகுத்தவர் குறிப்பிடும் "ஆரியப்படை கடந்த” என்னும் தொடரும் ஒன்றாக அமைவதால் இவ்விருவரும் ஒருவரே என்று அறிஞர்கள் கருதுகின்றனர். சிலப்பதிகாரத் தில் குறிப்பிடப்படும் இவனோடு தொடர்புடைய நிகழ்ச்சிகள் இவனது வரலாற்று நிகழ்ச்சிகளே என்று கூறலாம்.
இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 335
(ஆரியப்படை கடந்த) நெடுஞ்செழியன் காலத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் மதுரை நகர் (அரண்மனை) அழியும் என்ற நிமித்த வாக்கு மக்களிடையே நிலவி வந்தது. இதனை கூறும் சிலப்பதிகாரச் செய்யுள் மேல்வருமாறு
அமைகின்றது.
ஆடித்திங்கள் பேரிருள் பதிகத்து
அழற்குட்டத்து அட்டமிஞான்று
வெள்ளி வாரத்து ஒன்னெறியுண்ண
உரைசால் மதுரையோடு அரைசு கேடுறும் என்னும்
உரையும் உண்டே நிரைதொடியோயே
(ย์กิ6ง. 25-132-137)
அரியணையில் அமர்ந்தபடியே இறந்து போனமையால்
இந்தப் பாண்டியன் “அரசுகட்டிலில் துஞ்சிய பாண்டியன்’ எனப் பெயர் பெற்றான். தீர ஆராயாது கோவலனை குற்ற வாளி என மயங்கித் தண்டனை வழங்கினான். பின் உண்மை உணர்ந்து உயிர் துறந்தான். பாண்டிமாதேவியும் கோவலன் கொலைக்கு ஒரு காரணமாகையால் கணவனு
டன் தான் மாண்டு செங்கோலை நிலைநாட்டினாள். இம்மன் னன் சேரன் செங்குட்டுவன் காலத்தவன் எனக் கூறப்படு
கின்றான். (தே.ஹ.)
Sligocoquiuliasmus)
கட்டமைப்பு
நெல்லையப்பர் சாலையில் சற்றுத் தொலைவில் நின்று பார்க்கும்போது இக்கோயில் மண்டபம் ஒன்றுடன் இணை ந்து நிற்பது போலத் தோற்றமளிக்கும். ஆயின் இம்மண்ட பத்தைக் கடந்தால்தான் தேரோடும் வீதி வருகிறது.
இறைவன் கோயில் அமைப்பு
கோபுரத்தின் நுழைவாயிலைக் கடப்பதற்கு முன், இறைவன் கோயில் அம்பலத்தைக் காணலாம். பொதுவாக மரத்தேர்களில் அமைந்திருப்பது போன்ற அழகிய மரச்சிற் பங்களைக் கொண்ட மேற்கூரையுடன் இவ்வம்பலம் அமைந்
திருக்கக் காணலாம்.
இந்துக் கலைக்களஞ்சியம் x

இறைவன் கோயில் அமைப்பு
இறைவன் கோயில் மூன்று திருச்சுற்றுக்களைக் கொண் டது. நெல்லை நகரின் நடுவே விளங்கும் இக்கோயில் 850 அடி நீளம் 756 அடி அகலங்கொண்டது. கீழ்ப்பக்கத் தில் உள்ள கோபுரமே பெரியது ஆகும்.
கோயில் எவ்வாறு அமைக்கப்படவேண்டுமோ அந்த விதிக்கேற்ப அமைக்கப்பட்ட கோயில் இது என்பர். இறை வியின் கோயிலும் இறைவன் கோயிலும் சம பகுதியில் தனித்தனிக் கருவறைகள் கொண்டவை. இரண்டு கோயில் களுக்கிடையே குளங்களும் தூண்கள் கொண்ட நடை பாதைகளும் (Corridors) ஆயிரங்கால் மண்டபமும் நந்த வனமும் உள்ளன.
மிகப்பெரிய திருச்சுற்றுக்களைக் கொண்டு விளங்கும் இராமேசுவரத்திற்கு அடுத்து, பெரிய திருச்சுற்றுக்களைக் கொண்டது இக்கோயிலேயாகும். எழிலில் மதுரை மீனாட்சி கோயிலுக்கு அடுத்துச் சிறந்து விளங்குவது இக்கோயில்.
மூலக்கோயிலைச் சுற்றிய திருச்சுற்றை (பிரகாரம்) முறையே முதலாகக் கொண்டு இரண்டு மூன்றாவதாகக் கோயிலை வலம் வருவோமாயின் நாம் காண்பவை:-
வெளித்திருச்சுற்றாகிய மூன்றாம் திருச்சுற்றில் கீழ்ப்பிரகாரம்
கோபுரவாசல் மண்டபத்தைக் கடந்து சென்றால் பெரிய மாக்காளையைக் கொண்ட மண்டபத்தைக் காணலாம்.
இது இடப மண்டபம் எனப்படும்.
இடப மணர்டபம்
சிவந்தியப்ப நாயக்கரால் கி.பி. 1654 இல் அமைக்கப்பட் டது. இதன் முன்னுள்ள கொடிமரம் கி.பி. 1555இல்
காளயுக்தி ஆண்டு, வைகாசி மாதம் அமைக்கப்பட்டது.
GeFmr Lm6numrJ Lm60ci LLuħ
வடபக்கம் 78 திண்ணிய தூண்களுடன் கூடிய இம்மண்டபம் சோமவாரமண்டபம் எனப்படுகிறது. இதில் அமைந்துள்ள கல் உத்தரங்களும் வளைவுகளும் மர உத்தரங்களும் அழகுடன் விளங்குவன. இம்மண்டபத்தில்
நுழைவாயிலின் இரு மருங்கிலும் கோபுர அமைப்புச்
:ஐ இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 336
கொண்ட அழகிய தூண்களையும் மிகப் பழமையான
தூண்களையும் காணலாம்.
இம்மண்டபத்தில் புரட்டாதியில் நவராத்திரி விழாவும், கார்த்திகையில் சோமவார மண்டகப்படிகளும் நடைபெறும்.
இம்மண்டபத்துக்கு மேல்பக்கம் வன்னியடிச் சாத்தனார், யாகசாலை, வைரவர் தங்கும் மண்டபங்கள் உள்ளன. அர்த்தயாம முடிவில் இவ்வைரவருக்குப் பூசை நடை பெறும்.
நவக்கிரக மண்டபம்
இடப மண்டபத்துக்கு வடக்கே உள்ளது.
சர்வநல் வாத்திய மண்டபம்
மாக்காளையின் தென்புறம் உள்ள பகுதி இவ்வாறு சர்வநல்வாத்திய மண்டபம் எனப்படுகிறது. இம்மண்டபத் தில் மூன்று தூண்களில் குறவன், குறத்தி, மன்மதன், இரதி ஆகியோரின் அழகிய சிலைகளைக் காணலாம்.
தெற்குத் திருச்சுற்று
தென்பக்கம் கீழோரம் அறையில் பேரால வட்டம், கொடி, வாகனங்கள், தோரணங்கள் வைக்கப்படும் அறைகள் முதலியன உள்ளன. அவைகளுக்கு முன் நிற்கும் தூண் களில் பிள்ளையன் காலம்வரை அரசாண்ட நாயக்க மன்னர் தம் சிலைகள் பத்து உள்ளன. இவை மதுரை
புதுமண்டபம் சிற்பத்தை நினைவூட்டுவன.
தென்மேற்கில் திருப்பணி மண்டபம் உள்ளது. எல்லாத் திருவிழாக்களிலும் ஆறாவது ஏழாவது விழா நாட்களில் இறைவனும் இறைவியும் இங்கு எழுந்தருளுவர்.
தெற்குத் திருச்சுற்று வாயு திசையில் ஆறுமுக நயினார் கோயில் அமைந்துள்ளது. கருவறையும் அர்த்த மண்டப மும் மகாமண்டபமும் கொண்ட பெரிய கோயில் இது.
தெற்குப் பிரகாரத்தின் நடுவில் தச்சிணாமூர்த்தி கோயில் அமைந்துள்ளது. அதற்கு முன் சங்கிலி மண்டபத் தொடர்ச்சி வடக்கோரத்தில் நடுக்கோபுரம் அமைந்துள்ளது.
கோபுரக்கதவு அழகிய மரச்சிற்பங்களைக் கொண்டு
 

புராணக் கதைகளைக் கூறி நிற்கின்றன.
மேற்குத் திருச்சுற்று
இதன் நடுவில் மேலக்கோபுரம் இருக்கிறது. சுதைப் பிள்ளையார் பெரிய வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
வெள்ளி கோரத மண்டபமும் உள்ளது.
வடக்குத் திருச்சுற்று
இது சீபலிப்பிரகார மண்டபம் எனப்படும் மண்டபங்கள் உயர்ந்து பருத்த கற்றுாண்களால் தாங்கப்பட்டு கற்றள வரிசையிடப்பட்டுள்ளது.
இதன் நடுவில் வடக்குக் கோபுரம் உள்ளது. ஆண்டுக்கு இரண்டு நாள் திறக்கப்படும். இறைவன் ஆறுகாலத் தீர்த்த குண்டம் இங்குள்ளது. ஈசான வெளியில் யானை கட்டு மிடம் உள்ளது.
இப்பிரகாரங்களில் வடக்குப் பிரகாரம் வடமலையப்ப பிள்ளையன் மைத்துனர் திருமலைக்கொழுந்து பிள்ளையா லும் பொதுமக்களாலும் மற்ற பிரகாரங்கள் வடமலையப்ப
பிள்ளையினாலும் கட்டப்பட்டன.
இரண்டாம் திருச்சுற்று
இரண்டாம் திருச்சுற்று நுழைவாயிலில் நான்கு அழகிய சிலைகள் உள்ளன. உள்வாயிலில் சிறிய கொடிமரம் உள்ளது.
இடப்பக்கம் சூரியன், வலப்பக்கம் சந்திரன் கோயில் கொண்டுள்ளனர். சூரிய, சந்திரர் அழகிய மூர்த்தங்கள், சூரியன் குடிகொண்ட கோயில் சுவரிலும் கல்வெட்டுக் களைக் காண்கிறோம்.
தெற்குத் திருச்சுற்று
சூரியனை வணங்கிவிட்டுச் சென்றால், தெற்குத் திருச் சுற்றில் அறுபத்து மூவரது செப்புப்படிமங்கள் (அ.ப.எ.26) எழுவர். முனிவரர் (சப்தரிஷிகள்) கரதேவர். சப்தமாதர் ஆகிய உருவங்களைக் காணலாம்.
இவற்றுக்கு நேரே வலப் பக்கம் பொல் லாப் பிள்ளையாருக்குச் சிறுகோயிலையும் அடுத்துச் சிவலிங்கம்

Page 337
ஒன்றினை யும் காணலாம். சிறு கருவறையும், நான்கு
தூண்களைக் கொண்ட அர்த்த மண்டபமும் கொண்டது.
இவற்றைக் கடந்து நேரே சென்றோமேயானால், சுதையா லான இராவணன் கைலைமலையைத் தாங்கும் வடிவத் தையும் உயர்ந்த பீடத்தில் சோமாஸ்கந்தர் இருப்பதையும்
ЗБT600160Tit). -
சோமாஸ்கந்தரை வணங்க இடப்பக்கமிருக்கும் படியேறி, வலப்பக்கம் உள்ள வழியே இறங்க வேண்டும். இவ்விடத் தில் பாண்டியர் இலச்சினையைப் பொறித்திருக்கக் காண லாம். இரண்டு மீன்களுக்கிடையே செண்டு உள்ள இலச் சினை இது.
மேற்குத் திருச்சுற்று
முழுதுண்ட இராமக்கோன் உருவம் ஈண்டு வைக்கப்பட் டுள்ளது. அடுத்து இருப்பதே சுப்பிரமணியர் கோயில் வள்ளி, தெய்வானையுடன், சக்தி, வச்சிராயுதம் அபயவரத முத்திரைகளுடன் விளங்கும் இப்பெருமான் இருப்பதும் பழைய கோயிலாகும்.
மேல்புறம் தாமிர சபை உள்ளது. இச்சபையின் பின்னுள்ளது கோயில்.
வடக்குத் திருச்சுற்று
அட்டலட்சுமியர், சனீசுவர பகவான் உருவங்களைக் கடந்து வருவோமேயாயின் காரைக்கால் அம்மைக்கு அருள்புரியும் ஆடல் வல்லான் கோயிலைக் காணலாம். சகஸ்ரலிங்கம், குபேரலிங்கம் எழுந்தருளியுள்ள சிறு கோயில்கள் இங்கே உள்ளன.
முதல் திருச்சுற்று
மணிமண்டபம் வழியாக வேணுவனநாதர் கோயிலுள் நுழைகையில் மகாமண்டபத்தைக் கடந்து சென்றால் நுழை வாயிலில் இருமருங்கிலும் துவாரபாலகரையும், இடப்பக் கம் மகாகணபதியின் மிகப்பெரிய வடிவையும், வள்ளி தெய்வயானையுடன் விளங்கும் சுப்பிரமணியரையும்
BT600T 6M) TLD.
வேண்ட வளர்ந்த நாதரை வணங்கி, பக்கத்தே வடபால்
உள்ள நெல்லைக் கோவிந்தரையும் வணங்கி, இடமாக
இந்துக் கலைக்களஞ்சியம்ஐ
 

இறங்கி வெளியே வருவோமேயாயின் இடைக்காலப் பாண்டியர், கலைச்சிறப்பை விளக்கும் சுற்றுப்பிரகாரத்தைக்
காணலாம். கல்வெட்டுக்களைத் தாங்கி நிற்கும் இச்சுற்றுச் சுவர்கள் சில, புடைப்புச் சிற்பங்களையும் தாங்கி நிற்கின்
றன.
தட்சிணாமூர்த்தி, பிள்ளையார், நந்திகேசுவரர், பிள்ளை யார் (செப்புத்திருமேனி), பாண்டிய அரசன் செப்புப்படிமம், கங்காளநாதர், சுப்பிரமணியர், சண்டேசுவரர் ஆகிய திருவுரு வங்களை கண்டுவரின், வடதிருச்சுற்றில் கீழே பள்ளத் தில், மூலலிங்கர் கோயிலைக் காணலாம். வெளியேறும் போது நடராசர் (செப்புத்திருமேனி), மகிஷாசுரமர்த்தனி,
பாலவைரவரை வணங்கி வெளியேறலாம்.
மகாகணபதி இருக்கும் உள் அறையில் சந்திர சேகரரது செப்புத்திருமேனி உள்ளது. யோகபோகீசுவரர், காலாரி மூர்த்தி, பாண்டிய அரசன், அரசி, அப்பர், சம்பந்தர் ஆகி யோரது புடைப்புச் சிற்பங்களை இத்திருச்சுற்றில் தெற்கு, மேற்கு, வடக்குப் பக்கங்களில் காணலாம்.
இறைவன் கோயிலுக்குச் சென்று வழிபடும் முறை
இறைவன் கோயிலுள் நுழையுமுன் நெல்லையம்பலத்தி லுள்ள பிள்ளையார், முருகனை வழிபட்டு கோபுரவாயிலில் நுழைந்ததும், திருவாசி தொழுது, தென்புறம் சைவசமய குரவர்களுடன் சேக்கிழாரும் எழுந்தருளியுள்ள கோயிலை வழிபட்டு, சர்வநல் வாத்யமண்டபத்தில் அமர்ந்த பாசம் என்னும் பலிபீடம் பின்னதாகவும், பசுவாம் இடபம் இடைய தாகவும், பதி என்னும் சிவம் முன்னதாகவும் உள்ள தத்துவக் குறியை நினைந்து பெரிய இடபத்தை வழிபட்டு இறைவன் கோயிலுள் புகவேண்டும்.
இறைவியின் கோயில்
இறைவன் கோயிலைப் போலவே இங்கும் முகப்பில் அம்மன் அம்பலம் ஒன்றுள்ளது. இது திரிசிரபுரம் சிவராம காசியா பிள்ளையால் அமைக்கப்பட்டது. இக்கோயில்
கோபுரம், இறைவன் கோயில் கோபுரம் கட்டி இருபதாண்டு களுக்குப் பின்னர் கி.பி. 1626இல் கட்டப்பட்டது.
xx இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்கணம்

Page 338
ஊஞ்சல் மணர்டபம்
கோபுரத்தைக் கடந்ததும் 96 அழகிய தூண்களைக் கொண்ட மண்டபத்தைக் காணலாம். இம்மண்டபத்தில் தான் இறைவிக்கு ஐப்பசியில் திருக்கல்யாணம் நடைபெறு கிறது. மூன்று நாள் ஊஞ்சல் விழாவும், இதனையடுத்து நடைபெறும். நான்மறைகள், தேவாரம், திருவாசகம் ஒதல், சமயச் சொற்பொழிவுகள் நடைபெறுவதும் இங்கு தான். பத்திரதீப, இலட்சதீப விழாக்காலத்தில் திருவோலக் கக் காட்சியும் இதில் காணலாம்.
நந்தியைக் கடந்து கோயிலுக்குள் சென்றால் மணி மண்டபம் தென்படும். மணிமண்டபத்தில் கீழ் இருமருங்கும் இசைத்துண்கள் உள்ளன. மண்மண்டபத்தைக் கடந்து, மகாமண்டபத்தையும் கடந்தால், அர்த்த மண்டபமும், கருவ றையும் கொண்ட கோயிலில் இறைவி நின்ற கோலத்தில், அருள்புரியும் தோற்றத்தைக் காணலாம். வலக்கை உயர் த்தி, இடக்கை தாழ்த்தி, தாமரை, கிளி இவற்றுடன் ஒளி சிறந்து விளங்கும் அன்னையின் கோலம் எழிலார்ந்த தோற்றமாகும்.
மகாமண்டபத்தில் வடபக்கம் இறைவனும் இறைவியும் அர்த்தயாம பூசைக்கென எழுந்தருளும் பள்ளியறை உள் ளது. இறைவியின் கருவறையைச் சுற்றி வருவதற்கே இயலும். அடுத்த திருச்சுற்றை யாரும் சுற்றி வருவதில்லை. அவ்வாறு சுற்றி வருவோமாயின் மேற்புறம் மருமாறித் தீர்த்தம், வடபுறம் மருமாறிச்சுப்பிரமணியசுவாமி பொற்றாம ரைத் தீர்த்தமும் காணலாம்.
பொற்றாமரை
இப்பொய்கையின் நாற்புறமும் கற்படித் துறைகளும் சுற்றுக்கால் மண்டபமும் உள்ளன. இப்பொற்றாமரையில் மாசித்திங்கள் மகநாளில் அப்பர்க்குத் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.
குளம் பற்றிய புராண வரலாறு
சிவபெருமானே நீர்வடிவாயினான், பொற்றாமரையுடன்
நான்முகன் இங்கு வந்து வழிபட்டான். குளத்தின் மேற்புறம்
- பொற்றாமரைப் பிள்ளையார், வாணி, தக்கிணாமூர்த்தி,
பால்வண்ணநாதர் ஆகியோர் கோயில் கொண்டுள்ளனர்.
இந்துக் கலைக்களஞ்சியம் x
 

ஆயிரங்கால் மணிடபம்
520 அடி நீளம் 63 அடி அகலமுடன் உள்ளது. இறைவியின் திருக்கல்யாணமும், பங்குனி உத்தரச் செங்கோல் திருவிழாவும் ஈண்டுதான் நடைபெற்று வந்தன. இன்று தமிழ்நாடு நுகர்பொருள் கிடங்காக (Civil Supplies Corpration) இருக்கிறது. அழகிய தூண்களைக் கொண்ட தாயின் இதனைத் தூண்களின் காடு வசந்த மண்டபம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இளவேனிற் காலத்தில் (சித்திரை, வைகாசியில்) இறை வன் இறைவியர்க்கு வசந்த விழா மண்டகப்படிகள் சிறப் பாக நடைபெறும்.
நெல்லையப்பர் கோயில் தீர்த்தங்கள்
இக்கோயிலுக்குரியதாக 32 தீர்த்தங்களைக் கூறுவர். இவற்றுள் ஒன்பதே முக்கியமாகக் கருதப்படுபவை.
பொற்றாமரை
கருமாறி
வைரவதீர்த்தம்
சர்வதீர்த்தம்
எனும் இந்நான்கும் கோயில்களுள்ளும்,
கம்பை
தெப்பக்குளம் சிந்துபூந்துறை (தாமிரவருணியில் ஒரு துறை) துர்க்கைத் தீர்த்தம் குறுக்குத்துறை (தாமிரவ்ருணியில் ஒரு துறை)
ஆகிய ஐந்தும் கோயிலுக்கு வெளியே இருப்பவை.
இக்கோயிலுக்குரியதாகக் கூறப்படும் சபைகள்
1. சிந்துபூந்துறையில் தீர்த்தசபை
2
சங்கரன் கோயில் சாலையில் 10 கல் தொலைவில்
உள்ள மானுாரில் ஆச்சரிய சபை
3. இறைவியின் கோயில் முன்னிடம் வடபால்,
இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 339
கூத்தப்பிரான் நடனம்புரி செளந்தரசபை,
4. இறைவியின் ஆலயத்துள் உள்ள திருக்கல்யாண
LD60öTLULD
5. இறைவன் கோயில் முன்னுள்ள இராசசபை
6. இறைவன் கோயில் வாயுதிக்கில் உள்ள தாம்பிரசபை
எனும் ஆறாகும்.
சுற்றுக்கோயில்கள்
நெல்லையப்பர் கோயிலுனுள் உள்ள உட்கோயில்கள் நீங்கலாக பல்வேறிடங்களில் உள்ள கோயில்களும் இக்கோயிலின் நிர்வாகத்தின் கீழ் உள்ளன. அவற்றுள் சிலவற்றுக்குத் தனி அறங்காவலர்களும் உள்ளனர்.
தேரடிக் கருப்பசாமி, செளந்திரசபை மாயூரநாதர், ஆத்தி யடி விநாயகர், அம்மன் சன்னதி வடபால் உள்ள கரும் பணை வீரச்சாத்தா, கீழரதவீதிக் குளத்தூர்ச் சாத்தா, பூதத்தான் கோயில், வாகையடி அம்மன், சந்தி விநாயகர், கல்லணை அடைக்கல விநாயகர், பேட்டை வழியில் உள்ள ஆலடி விநாயகர், வேணுவனக் குமரர், தடிவீரச்
சாத்தா, கம்பாநதிக் காமாட்சி, வடக்குப் பக்கம் உள்ள
இந்துக் கலைக்களஞ்சியம்
袭 囊3
 

பிட்டாபுரத்தியம்மன், தொண்டர்கள் நயினார், குத்துப்புரை ஈசான விநாயகர், தெப்பக்குளத் தெரு பெரியசாமிச் சாத்தா, அங்குர விநாயகர், தெப்பமண்டபம் மீனாட்சி சுந்தரேசர், வலம்புரியம்மன், நிலத்தோர் சம்பந்தர், கீழ்ப் புதுத்தெரு மாரியம்மன், திருப்பணி விநாயகர் ஆகிய இம்மூர்த்திகளின்
கோயில்கள் உள்ளன.
நகருக்கு வெளியில் கறுப்பன் துறை அழியாபசுபதீசுரர். சிக்கல் நரசையபுரம் எட்டுக்கண்ணாறு துர்க்கை, வீரராகவ புரம் அனுமார், மேலப்பாளையம் கற்பக விநாயகர், சேந்தி மங்கலம் பிள்ளையார், நல்லாம்பிள்ளை பெத்தம்மன், திருப் பணி கரிசற்குளம் அனவரத விநாயகர், திருப்பணிச் செட்டி குளம் வடிவம்மன் ஆகிய தெய்வங்களின் கோயில்கள்
உள்ளன. இருவகையிலும் 39 கோயில்கள் உள்ளன.
இவற்றுள் தொண்டர்கள் நயினார் கோயில் மிகப்பழைய கோயிலாகும். குலோத்துங்க சோழன் ஆகியோரது கல் வெட்டுக்களைக் கொண்ட சிறுகோயில் இது.
பிட்டாபுரத்தியம்மன் கோயிலில் நடைபெறும் பத்து நாள் திருவிழாவும் நெல்லையப்பர் கோயில் ஆனிப்பெருந்
திருவிழாவுடன் இணைக்கப்பட்டே நடந்து வருகிறது.
(L).9 .)
x இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 340
sjöförTuCUTIT
சிவனடியார்கள் சிவன்பால் அன்பு கொண்டிருப்பதிலேயே கண்ணாயிருப்பர். அதன்றி தம் உடல், உயிர், வாழ்வியல் பற்றிக் கருத்திற் கொள்ளாதவர்கள். இதனை 'ஆரங்கண்டிகை ஆடையுங் கந்தையே பாரமீசன் பணியல தொன்றிலார்’ எனத் திருத்தொண்டர் புராணமும்
அவர் தம் மாண்பினைக் கூறுகின்றது. இவர்கள் திருவருள் விட்ட வழிப்படி தமது இன்றிமையாத் தேவைக ளாகிய உணவு, உடை முதலியவற்றை எவரேனும் தாமாக வழங்கினால் கண்டு கொள்வதேயன்றி அவர்க ளாகத் தேடிக் கொள்ளாதவரகள். இதுவே சிவனடியார்கள் நிலை. இத்தகைய சிவனடியார்களின் தேவைகளில் ஒன்றாகிய ஆடையை வழங்கிய சிவபக்தர்களுள் ஒருவர் நேசநாயனார்.
அவர் காம்பிலி என்னும் ஊரில் பிறந்தார். அவர் சாலியர் குலத்தவர். இவர் ஆடை நெய்யும் தொழில் புரிந்தார். அவர் சிவனடியார்களுடைய திருப்பணியைத் தம் தலைமைப் பணியாக ஏற்றுக் கொண்டு அவர்களைத் துதிக்கும் அன்புடையவர். அவர் சிவனடியார்களுக்கு ஆடை, கீழ் கோவணம் என்பவற்றைத் தாமே நெய்து அளித்து வந்தார்.
இப்பெரும் தொண்டினைச் சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தில் குறிப்பிடும் பொழுது,
இந்துக் க்களஞ்சியம்ஐ
(8
 

"அங்கவர் மனத்தின் செய்கை அரனடிப் போது சாக்கி
ஓங்கிய வாக்கிற் செய்கை உயர்ந்த அஞ்செழுத்துக்
காக்கித்கைத் தாங்கு
தொழிலின் செய்கை தம்பிரான்
அடியார்க்காகப்
பாங்குடை உடையுங்
கிளும் பழுதில் கோவணமும் நெய்வார்
என்றுகூறிப் பாராட்டுவார். இங்ங்ணம் மனம், மொழி, மெய்க
ளால் இவர் சிவத் தொண்டினைச் செய்து சிவனடி நிழல்
எய்தினார். (தே.ஹ.)
நேரூர் - நெருவூர்
திருச்சி கரூருக்கு அருகில் உள்ள தலம் நெருவூர் என்பர். இங்கு சிவபெருமான் அக்னீஸ்வரர் வலப்பக்கமும் இடப்பக்கம் அம்பிகையும் நடுவில் முருகப்பெருமான் சந் நிதிமாக இங்கு முருகப்பெருமான் சோமாஸ்கந்த மூர்த்தி யாகக் காட்சி தருகின்றார்.
ஆறுமுகப்பெருமான் பன்னிரு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார். (தேவியர் இல்லை) இத்தலத்தின்மீது திருப் புகழில் ஒரு பாடல் உள்ளது. (ஆ.கோ.)
ஜ் இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 341
நைடதம்
gesluit:
இந்நூலின் ஆசிரியர் அதிவீரராம பாண்டியன். விஜய நகரவேந்தர் காலத்து வாழ்ந்த பாண்டிய அரச தலை முறையைந் சேர்ந்தவன். கி.பி.1564-1603 வரையான காலகட்டத்தில் தென்காசியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்தவன் இவன் திருநெல்வேலிப்பெருமானின் ஏற்பு மகனும், வரதுங்க இராமனின் இளவலும் பராக்கிரம பாண்டியனின் மூன்றாம் புதல்வனும் ஆவான். இவனது இயற்பெயர் அதிவீரராமன். இவனுக்கு சடையவர்மன் என்ற பட்டப் பெயரும் உண்டு. தமிழ்மொழி, வடமொழிப் புலமை
யுடையவன். இவன் எழுதிய ஏனைய நூல்கள்
1) காசி காண்டம்
2) கூர்மபுராணம் 3) கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி 4) கருவை வெண்பா அந்தாதி 5) கருவை கலித்துறை அந்தாதி 6) வெற்றி வேற்கை
நைடதம் என்னும் நூலுக்கு மூல நூல்களாக வடமொழி நைஷதத்தையும் தமிழில் நளன் வரலாற்றைக் கூறும் நளவெண்பாவையும் ஆசிரியர் எடுத்துக் கொண்டார் என்பர். நிடத நாட்டின் மன்னன் நளன் வரலாற்றை கூறும் மூல நூலை வடமொழி மரபுப்படி நைஷதம் என அழைத்த னர். இந்நூலை பூரீஹர்சர் வடமொழியில் எழுதினார். இவர் 12ம் நூற்றாண்டில் கீர என்பவருக்கும் மாமல்லதேவிக்கும் மகனாகப் பிறந்தவர். புகழேந்தியார் நளவெண்பா என்னும் நூலை வெண்பா, யாப்பில் தமிழில் எழுதியுள்ளார். நள வெண்பா நைடதம் என்ற இரு தமிழ் நூல்களும் ஒரே கதையைப் பற்றிக் கூறினாலும் இரண்டு வெவ்வேறு மூலநூல்களைக் கொண்டுள்ளன என்பாருமுளர். எவ்வாறா யினும் மகாபாரதத்தின் ஆரண்யபர்வதத்தில் உரோமச முனிச்சருக்கத்தில் வரும் நளன் கதையையே பூரீஹர்சரும் அவரது நூலை மூல நூலாகக் கொண்ட அதிவீரராம பாண்டியனும் எழுதியுள்ளனர் என்பது ஏற்றுக்கொள்ளக்
கூடியது.
இந்துக் கலைக்களஞ்சியம்x
 

மகாபாரதத்தில் சூதாடி நாடு நகரை இழந்து மனம் சோர்ந்து கவலையுடன் இருந்த தர்ம ராசாவுக்கு ஆறுதல் கூறும்போது கூறப்பட்ட உபகதையே நளன் கதையாகும். இங்கு ஆசிரியர் நிடத நாட்டின் நகரத்தின் நீர்வளம், நிலவளம், குடிவளம், குடிகளின் சிறப்பு, மக்களின் சிறப்பு, மன்னன் சிறப்பு:யாவற்றையும் வர்ணித்து கூறிச்செல்கின்றார். நளன் அன்னத்தைக் கண்டது 'அன்னம் அவனது சிறப்பியல்பை உணர்ந்து அவனுக்கு தமயந்தி பற்றி எடுத்துரைத்தது என்றவாறாக கதை தொடங்குகின்றது. அன்னம் நளன நோக்கி “மகாராஜனே கேளும். விதர்ப்ப தேசத்தில் குணமணபுர என்னும் நகரத்தில் வீமன் என்னும் அரச தம்பதியினருக்கு தமனமுனிவரின் அருளால் தமயந்தி என்னும் சொர்க்க மத்திய பாதாள மென்னும் முப்புவனத்திலுள்ள மாதர்க ளின் அழகெல்லாம் திரண்டு ஒரு வடிவம் கொணி டது போல விளங்கும் சுந்தரத்தையுடைய மகள் உள்ளாள் எனக் கூறியது நளன் நிலைதடுமாறினான். அவனது நிலையை உணர்ந்த அன்னம் தமயந்தியிடம் சென்று நளனைப் பற்றி வர்ணிக்கின்றது. அதனைக் கேட்ட தமயந்தி "நிடத தேசாதிபதியைத்தான் கணவனாகக் கொண்டுள்ளேன். பெற்றோர் எதிர்த்தாலும் அவனையன்றி மாதரை மயக்கும் மாறன் வந்தாலும் மயங்காமல் என்கையில் இருக்கும் மணமாலையை நளனுக்கே சூட்டு வேன். இல்லையேல் என்னுயிர் அக்கினிக்கே இரையாகும்” என்கின்றாள். பின் இருவரும் சுயம்வரத்தில் சந்தித்து மணம் முடித்து கலியினால் சூதாடி நாடு நகரை இழந்து புத்திரர் இருவருடன் வனம் புகுந்து, பின் பிள்ளைகளைப் பெற்றோரிடம் அனுப்பிவிட்டு செல்லும்வேளை மனைவியை நளன் இழந்து விதிவசத்தால் கஷ்டங்களை அனுபவித்து பின் இணைந்து. அரசியலை ஏற்று இன்பமுடன் வாழ்ந்த தாக மகாபாரதம் நளன் கதையைக் கூறிச் செல்கிறது. இங்கு நளன், தமயந்தி அழகு, சுயம்வரம், மாலை காலை சூரியோதம், சேனைகள், அலங்காரங்கள் யாவும் அழகாக வர்ணிக்கப்பட்டுள்ளன. நளன் கதை பழைய தமிழ் நூல்களிலேயே காணப்பட்டதற்கு சான்றுகள் உண்டு. சிலப்பதிகாரத்தில் ஊர்காண் கதையில் வரும் பாடல் ஒன்றில்.
நளன் கதையைக் குறிப்பிடப்படுகின்றது.
x இந்த சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 342
கம்பராமாயணப் பாடல்கள் பலவற்றின் தாக்கமும் நைடதத்தில் காணப்படுகின்றது. நளவெண்பா, நைஷதம் இவற்றின் செல்வாக்கு காணப்பட்டாலும் மகாபாரதத்தின்
தாக்கம் கூடுதலாகவே உள்ளது எனலாம்.
நூலின் அமைப்பு: இந்நூல் 1173 விருத்தப்பாக்களைக் கொண்டுள்ளது. நைடதம் புலவர்களுக்கு ஒளடதம் என்பர் அறியாமையை நீக்கும் மருந்து என்பர். நூலின் ஆரம்பத்தில்
விநாயகருக்கு வணக்கம் ஆசிரியரின் சிறப்பு, (சிறப்புப்பாயிரத்தில்) குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நூல்
1) நாட்டுப்படலம் 2) நகரப்படலம் 3) அன்னத்தைக் கண்ணுற்றபடலம் 4) அன்னத்தை தூதுவிட்டபடலம் 5) கைக்கிளைப்படலம்
6) DIT60)6)(JLJL6)(b 7) நிலாத் தோற்றுப்படலம் 8) சந்திரோபாலம்பனப்படலம் 9) மன்மதோபாலம்பனம்படலம் 10) இந்திரப்படலம் 11) நளன் துாதுப்படலம் (2) Jiu It f6) J (IL6)lf 13) (8LITÜL Jf JL6db 14) மணம்புரிபடலம் 15) மீட்சிப்படலம் 16) கலிதோன்றுபடலம் 17) இளவேனிற்படலம் 18) புனல் விளையாட்டுப்படலம் 19) சூதாடுபடலம் 20) தமயந்தி கருவுறல் படலம் 21) நகர் நீங்கு படலம் 22) நளன்கான்புகுபடலம் 23) பிரிவுறுபடலம் 24) வேற்றுருவமைந்தபடலம் 25) of Dait (3,5L65ul Ulooti. 26) 3565 55(5 ULouf
இந்துக் கலைக்களஞ்சியம்x
綫綠31
 

27) தேவியைக் கண்ணுற்ற படலம் 28) அரசாட்சிப் படலம்
என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
முதலில் ஆசிரியர் நாடு, நகரங்களை வர்ணிக்கின்றார். வர்ணணையில் உவமான உருவமேயங்களை மிக அழகாக கருத்தாழத்துடன் கையாணி டுள்ளார். நகரப்படலத்தில் மாவிந்த நகரச் சிறப்பினைப் பாடுகின்றார். நகரக்காட்சி அகழியின் சிறப்பு, மதிலின் சிறப்பு, இல்லங்க ளின் சிறப்பு என்பவற்றை வர்ணித்துச் செல்லுகின்றார். நளனுடைய ஆற்றல், நற்குணங்கள், அழகு, சேனை, வன்மை, அறம், கல்வி முதலியவற்றின் சிறப்புகளும் இங்கு வர்ணிக்கப்பட்டுள்ளன. அன்னத்தைக் கண்ணுற்ற படலத்தில் நளன் அன்னத்தைக் காணுதல், தமயந்தி நளனுடைய அழகினைக் கேட்டு விரும்புதல், நளனை இடைவிடாது நினைத்தமையினால் விழி துயிலாமை, நளனது புகழ்கேட்டு விரும்பல், கனவிற் காட்சி நினைத்த லால் துயிலாமை, நளன் தமயந்தியின் குணத்தினை நினைத்தல், மன்மதன் செய்கை, விதிவன்மை, இன்பத்தின் வன்மை, உள்ளுறுதலும் நாணுவரையிறத்தலும், நளன் இன்பத்திலுண்டாந் துன்பமடக்கும் வன்மை, தமயந்தியைச் சேராமைக்குக் காரணம், நளன் காமநோயை மறைத்தும் மறைபடாமை, நளன் பொழிலில் செல்ல நினைத்தல், குதிரையில் வனத்துக்குச் செல்லல், வனத்தின் சிறப்பு. அன்னத்தைக் காண்டல், நயமொழி கேட்டல் என்பன
எழுபத்திரண்டு பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
அன்னத்தைத் தூதுவிட்ட படலத்தில் நளன் அன்னத்தை தமயந்தியிடம் தூது அனுப்புதல் முக்கிய இடம்பெறுகின் றது. அன்னம் தமயந்தியை அடைந்து மீண்டும் நளனிடம் வந்து அரசனைப் புகழ்ந்து
மன்னவர் மன்ன நின்னுளத் தேறா மடமொழி யாயினு மீதோ ரன்னமென் சொல்லென் றதிசயஞ் சிறப்ப வகமலர்ந் தினிது கேட்டருளாய்
எனக் கூறி வீமனின் புகழையும் அவனது மகள் தமயந்தி யின் அழகை அங்கம் அங்கமாக தலையிலிருந்து கால்
※徽線@ö98nu 5am9H可gQ6ueD5of 函ooorä5emá

Page 343
வரை வர்ணித்து, தமயந்திக்கு ஒப்பான அழகுள்ளவன் நீயே எனக்கூறி பின் தமயந்தியிடம் சென்றமையும் நளனின் பிரிவுத்துயர், தமயந்தியை அன்னம் அடைதல், தமயந்தியி டம் நளன் பற்றிக் கூறுதல், தமயந்தியின் காதல் என்பன யாவும் நூற்றுமுப்பத்து நான்கு பாடல்களில் குறிப்பிடப் பட்டுள்ளன.
கைக்கிளைப் படலத்தில் தமயந்தி காதல் பிரிவால் துயருறுதல் முப்பத்திமூன்று பாடல்களில் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆசிரியர் காமசூத்திரத்தின் அறிவும் பெற்றிருந்தார் என்பதை இப்படலம் எடுத்துக்காட்டுகின்றது.
மாலைப் படலத்தில் மாலையின் வரவு வர்ணிக்கப்படுகின் றது. நிலாத்தோற்று படலத்தில் நிலாவினது தோற்றம் அழகு என்பன வர்ணிக்கப்பட்டுள்ளன. இருபது பாடல்களில் ஆசிரியர் நிலாவினை வர்ணிக்கின்றார்.
சந்திரோபாலப்பனப்படலத்தில் சந்திரனை தமயந்தி நிந்தித்தல், முப்பதிதேழு பாடல்களில் வர்ணிக்கப்பட்டுள் ளது. தமயந்தி மன்மதனை நிந்தித்தல், பதினான்கு பாடல் களில் மன்மதோபாலப்பன படலத்தில் குறிப்பிடப்பட்
டுள்ளது.
இந்திர படலத்தில் தமயந்தி நளன்மேல் ஏற்பட்ட காதலால் வருந்துவதனை உணர்ந்துகொண்ட தோழியர் கள், தமயந்தியின் அன்னைக்குத் தெரிவிப்பது அன்னை தந்தை வீமனுக்குத் தெரிவிப்பதும் சுயம்வரத்துக்கு மண வோலையை அரசருக்கு அனுப்புதல், நாரதர் தேவருலகிற் சேர்தல், இந்திரலோகத்தின் சிறப்பு, நாரதர் இந்திரனுக்கு தமயந்தியின் அழகை வர்ணித்தல், இந்திரன் தமயந்திபால் வேட்கையுறல், தமயந்தியை அடையும் நோக்கில் அக்கினி இயமன் வருணன் இவர்களுடன் இந்திரன் பூலோ கத்திற்கு வருதல் என்பனவற்றை இருபத்தொரு பாடல்க ளில் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
நளன் தூதுபடலத்தில் நளன் தமயந்தியின் சுயம்வரத் துக்கு இந்திரன் வேண்டுகோளுக்கிணங்கி உரு மாறி தூது செல்லுதல். மாற்றுருவில் சென்ற நளன் தன்னுருக் காட்ட தமயந்தி கண்டு அதிர்ச்சியடைய அவனை அன்னம் தமயந்திக்கு அறிமுகப்படுத்துதல், நளன் தேவர்களுக்கு
இந்துக் கலைக்களஞ்சியம்x
 

நிகழ்ந்தவற்றைக் கூறுதல் யாவும் நூற்றுமுப்பத்தாறு பாடல்களில் இடம்பெற்றுள்ளன. சுயம்வர படலத்தில் நால் வகை சேனைகளின் வரவு, இந்திரன் முதலியோர் வருதல், வீமன் அவர்களை வரவேற்றல், இரவு, பகல் சூரிய அஸ்த மனம், நளனின் காதல், தமயந்தியின் பிரிவுத் துன்பம், மகளிரின் அலங்காரங்கள், நளனின் அலங்காரம் யாவும் இங்கு வர்ணிக்கப்பட்டுள்ளன.
போர்புரி படலத்தில் தமயந்தி நளனுக்கு மாலை சூட்டி யமையால் பொறாமை கொண்ட அரசர்கள் நளனுடன் போர் புரிந்தமையும், இந்திரன் முதலியோர் மனம் திருந்தி நளனுக்கு வரம் கொடுத்தமையும் எழுபத்தெட்டுப் பாடல் களில் குறிப்பிடப்படுகின்றது.
மணம்புரி படலத்தில் நளன் தமயந்தியை விவாகம் செய்தல், நளன் அலங்கார வர்ணனை, தமயந்தி அலங்கார வர்ணனை, இருவரும் தனித்தனி மணமேடைகளுக்கு வரும் காட்சி யாவற்றையும் அறுபத்தெட்டு பாடல்களில் குறிப்பிட் டுள்ளார்.
மீட்சிப் படலத்தில் பதினைந்து பாடல்களில் நளன் தமயந்தியோடு தன்னகரத்திற்குப் போதல் குறிப்பிடப்படு கின்றது. கலிதோன்று படலத்தில் தமயந்தியை நளன் விவாகம் செய்ததினால் ஏற்பட்ட பொறாமையால் அவனை வருத்துவதிற்கு கலி முயன்றமை பதினான்கு பாடல்களில் இடம்பெறுகின்றன. இளவேனிற் படலம், மல்கொய்ப் படலம், புனல்விளையாட்டுப்படலம் என்பவற்றில் வர்ணனைகளுடன் நாற்பத்தாறு பாடல்கள் இடம்பெறுகின்றன. பின்பு நளன் சூதாடியமை, சூதாடு படலத்திலும் தமயந்தி கருவுற்றமை இருபத்தெட்டுப் பாடல்களிலும், தமயந்தி கருவுறல் படலத் தில் தமயந்தி கருவுற்றமையும் தன்னகர் விட்டு நீங்கியமை யினை நாற்பத்தொன்பது பாடல்களில் நகர்நீங்கு படலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நளன் கானகமடைதலை இருபத்தொரு பாடல்களில் நளன் கான்புகு படலத்திலும் நளன் தமயந்தியைப் பிரிந்த மையினைப் பிரிவுறு படலத்திலும் நளன் வேற்றுருவில் கானகத்தில் வாழ்ந்தமையை வேற்றுருவமைந்த படலத்தில் பதினெட்டுப் பாடல்களிலும் தமயந்தி நளன் இருவரையும்
签滚

Page 344
தேடுவதற்கு வீமன் ஒற்றரை விடுத்தமையினை பத்தொன் பது பாடல்களில் வீமன் தேடவிட்ட படலத்திலும் நளனை விட்டு கலி நீங்கியமையினை கலிநீங்கு படலத்தில் பதினொரு பாடல்களிலும் தேவியைக் கண்ணுற்ற படலத் தில் இருபத்தொன்பது பாடல்களில், நளன் தமயந்தியை அடைதலையும், நளன் தமயந்தியோடு தனது நிடத தேசத் துக்குச் சென்று புட்கரனை வென்று அரசாட்சி செய்தமை யினை பதினைந்து பாடல்களில் அரசாட்சிப் படலத்திலும் ஆசிரியர் குறிப்பிட்டுச் செல்கிறார். நளன் கதை முற்றாக இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. (இ.ச.)
GUnusolefningguttuih
நைமிசம் என்றால் தர்ப்பைப் புல், தர்ப்பை நிறைந்திருந் ததனால் இந்த வனம் “தர்ப்பாரணியம்” அல்லது நைமி சாரண்யம் என்று அழைக்கப்படுகிறது. இது இமயமலைக்கு அருகிலுள்ளதாகக் கூறப்படுகின்றது.
முனிவர்கள் அனைவரும் ஒருங்குகூடிப் படைப்புக் கடவுளான நான்முகனிடம் சென்று தாங்கள் அமைதியாகத் தவமியற்றுவதற்கு உரிய இடத்தைத் தேர்ந்து கூறவேண் டும் என்று திருமுன் விண்ணப்பிக்க, விரிஞ்சனும் தர்ப்பை யொன்றை எடுத்து அதனை வட்டமான நேமி (சக்கரம்) யாக்கி அதனை உருட்டிவிட்டு, "முனிவர்களே இந்த தர்ப்பைச் சக்கரத்தின் பின்னால் செல்லுங்கள். இது எந்த இடத்தில் நிற்குமோ அந்த இடமே நீங்கள் தவம் செய்வ தற்கு ஏற்ற இடமாகும்” என்றார். நேமி நின்ற இடமாதலால் நேமிசாரண்யம்-நைமிசாரண்யம் எனப் பெயர்பெற்றது.
வைணவத் திருப்பதிகள் 108 ஆகும். அவற்றுள் சோழ நாட்டு திருப்பதிகள் 40, பாண்டி நாட்டுத் திருப்பதிகள் 18. மலைநாட்டுத் திருப்பதிகள் 13, நடுநாட்டுத்திருப்பதிகள் 02. தொண்டை நாட்டுத் திருப்பதிகள் 22, வடநாட்டுத் திருப்பதிகள் 12, திருநாடு 01.
இந்துக் கலைக்களஞ்சியம்x
 

6
வைணவ திவ்ய தேசங்களைக் குறிக்கும் வெண்பாப்
பாடலொன்றுண்டு.
"ஈரிருபதாம் சோழம் ஈரொண்ப தாம்பாண்டி ஒர்பதின் மூன்றாம் மலைநாடு ஓரிராண்டாம் - நடுநாடு ஆறோடீ ரெட்டு தொண்டை அவ்வடநாடு ஆறிரண்டு கூறு திருநாடு ஒன்றாகக் கொள்
வடநாட்டுத் திருப்பதிகளில் ஒன்றான
நைமிசாரண்யத்தில் திருமால் தேவராஜன் என்ற திருநாமம் கொண்டு எழுந்தருளி அருள்பாலிக்கின்றார்.
இத்தலத்தில் திருமால் அரக்கர்களைக் கொன்று நர,
நாராயணராகத் தவம் செய்தார்.
இங்குள்ள மூலவரை பூரீஹரி என்றும் அழைக்கின்றனர். இவர் இத்தலத்தில் சுதர்மன், தேவரிஷி, வேதவியாசர், இந்திரன், சூதபுராணிகன் ஆகியோருக்கு பிரதியட்சமா னவர். இத்தலத்து தாயார் பூரிஹரிவல்லி ஆவார். புண்டரீ கவல்லி என்ற மற்றொரு பெயராலும் இவர் அழைக்கப் படுகிறார்.
இத்தலத்து எம்பெருமான் ஆரண்யத்தின் வடிவாக தரிசனம் தந்தருளுகின்றார். அவரே காடு முழுமையும் என்ற பாவனையில் வியாபித்துள்ளார். பக்தர்கள் இத்தலத்திற்கு வந்ததும் கோமுகி நதியில் தீர்த்த நீராடி பின் சக்கர தீர்த்தத்திலும் நீராடுகின்றனர். சக்கர தீர்த்தக் கரையில் சக்கர ஆழ்வார், விநாயகர், இராமலட்சுமணர், சீதாபிராட்டியார் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. கோமுகி நதிக்கு சென்றிடும் வழியில் வியாசசுட்டீ எனப்ப டும் வேதவியாச மகரிஷி கோயில் உள்ளது. இத்தலத்தின் மற்றொருபுறம் புராணமந்திர் என்ற ககமுனிவர் ஆலயம்
* இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 345
உள்ளது. இங்கு கிளி மூக்கினைக் கொண்ட சுகபக
வானின் பெரிய வெண்கலச்சிலை பிரதிஷ்டை உள்ளது.
சுகமுனிவரின் ஆலயத்திற்கு சிறிது தூரத்தில் உள்ள
சிறுமலையின்மீது அனுமான் காட்டி என்ற கோயில்
உள்ளது. இராம இலக்குமணரைத் தோளில் சுமந்து
நிற்கும் விஷ்வரூபத்துடன் ஆஞ்சநேயர் இக்கோயிலில்
தரிசனம் தருகிறார்.
இத்தலத்தின்மீது திருமங்கையாழ்வார் மனிதனின்
இந்துக் கலைக்களஞ்சியம்x
 
 
 

வாழ்க்கை அனுபவ முத்திரைகளாக பத்துப் பாசுரங்களை மங்கள சாசனம் செய்துள்ளார். இத்தலம் பற்றி
மணவாளாசர் என்னும் திவ்வியகவி பிள்ளைப் பெருமார்
நூற்றெட்டு திருப்பதியந்தாதியில் இவ்வாறு பாடியுள்ளார்.
"ஓரறிவும் இல்லாத என் போல்வார்க்கு அரிது பார்
அறிய
நைம்மி சாரண்ணியத்து நாதர் அடியாரோடும்
இம்மி சார்வு உண்டாயினால்” (வ.வை.)
* இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்
317

Page 346


Page 347
சொ
நகரத்தார்
நகரம்
நகுலன்
நகுலேஸ்வரம்
நங்கவரம் கல்வெட்டு
நச்சினார்க்கினியர்
நசிகேதன் மெய்யியல்
நஞ்சீயர்
நட்சத்திரம்
நடராஜர்
நடுகல் வணக்கம்
நந்தமன்னர் நந்தனார் சரித்திரக் கீர்த்தனை
நந்தி
நந்திகேஸ்வரசைவம்
நந்திபுர விண்ணகரம்
நந்திவர்மன் (I)
நந்திவர்மன் (III)
நப்பண்ணனார்
நப்பின்னை
நம்பாடுவான்
நம்பிகாடநம்பி
நம்பியாண்டார்நம்பி
நம்பியாருரர்
நம்பிள்ளை
நம்பூதிரிகள்
நம்மாழ்வார்
நமச்சிவாய மாலை
நமசிவாயத் தம்பிரான்
நமசிவாய மூர்த்திகள்
நமிநந்தியடிகள்
நயஆபாசம்

ால்லடைவு
O
O
18
19
27
28
3.
33
54
4O
48
5O
53
54
59
61
62
63
64
64
65
66
67
69
7O
72
74
A6
76
77
78
8O

Page 348
நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில் நயினார் கோயில்
நரகம்
நரகாசுரன்
நரசிங்க முனையரைய நாயனார் நரசிங்க மூர்த்தம் நரசிம்ம மேத்தா
நரசிம்மவர்மன் (1)
நரசிம்மவர்மன் (I) நரலோக வீரநல்லூர்
நரஹரி நரேஸ்வரபரீட்சா
நல்லம்
நல்லூர் நல்லூர்ப் பெருமணம்
நவதானியம்
நவநாதசித்தர்
நவநிதி
நவமணிகள்
நவமி
நவராத்திரி நவலிங்கக் கோயில்
நளன்
நளாயினி
நற்றிணை
நன்னிலம்
நன்னெறி
நாகதம்பிரான் நாகபட்டினம்
நாகர்கோயில்
நாகலிங்க முனிவர் நாகவம்சத்தினர்
நாகவழிபாடு
நாகஸ்வரம்

82
86
89
93
94
95
97
Ol
O3
O4.
O6
llO
l4
15
16
19
19
2Ο
12O
124
126
28
129
13O
31
133
37
43
47
148
49
15O

Page 349
நாகார்ச்சுன கொண்டா
நாகைக்காரோனம்
நாங்குநேரி
நாங்கூர்ச் சிவன்கோயில்
நாச்சியம்மன் கோயில் (சிங்கள)
நாச்சியம்மன் கோயில் நாச்சியார் கோயில் (நறையூர்) நாச்சியார் திருமொழி
நாட்டியத்தான்குடி
நாட்டேரி
நாட்டை
நாட்டைக்குறிஞ்சி
நாடு
நாதமுனிகள்
நாபாஜி பக்தர்
நாமக்கல்
நாமகரணம்
நாமதேவர்
நாயக்கர்கள்
நார்தா மாலை
நாரதர்
நாரதீயம்
நாராயணகுரு
நாராயணா நந்த தீர்த்தர்
நாராயண பட்டதிரி
நாராணய பாரதியார் நாராயணியம்
நால்வர்
நால்வர் நான்மணிமாலை
நாவலர் பரம்பரை
நாளந்தா பல்கலைக்கழகம்
நாற்பாதங்கள்
நான்மணிமாலை
நான்மறைகள்

159
155
156
56
16O
l62
63
66
17Ο
71
72
73
173
18O
83
85
187
188
199
213
24
25
26
28
218
29
22O
922
224
227
239
24
244
247

Page 350
நான்முகன் திருவந்தாதி நானாதேசிவணிகர்
நிக்கிரகஸ்தானம்
நிட்டை விளக்கம்
நித்திய கருமம்
நித்திய சூரிகள்
நித்தியானு சந்தானம்
நிபந்தங்கள்
நிம்பாக்கர்
நியாயக் கொள்கையினரின் அனுமானம் நியாய சாத்திரம்
நியாய தரிசனம் நியாய மெய்யியல் நியாய - வைசேடிகக் கொள்கையினரின் அக நிர்த்தி
நிர்வாண தீட்சை
நிர்விகற்பக் காட்சியும் சவிகற்பக் காட்சியும் நிர்விகற்பக் காட்சி
நிர்விகற்ப சமாதி
நிரம்ப அழகிய தேசிகர் நிராதார தீட்சை நின்றசீர் நெருமாறன் நீதிநூல்கள்
நீலகண்டபாடியம்
நீலாம்பரி
sf86IIILIT (cussi lébg5) நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி நெடியமலை
நெருஞ்செழியன்
நெல்லையப்பர் கோயில்
நேசநாயனார்
நேருர்
நைடதம்
நைமிசாரண்யம்

ஈத்காரியவாதம்
252
253
26O
265
266
267
268
268
27O
27O
272
274
275
28O
28
283
286
287
287
288
289
29
293
296
3OO
3Ol
3O5
3O6
3O6
3O7
312
32
33
516

Page 351


Page 352


Page 353


Page 354

-
>= cae | C |---- | H= Z cz s| ~