கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மகாகவி சுப்பிரமணிய பாரதியார் நூற்றாண்டு விழா நினைவு

Page 1
ஒ D3, T356 5s if ID
hTÍB6ÖIB F
1882 -
தொகுத் க. சி. குடு
வெளியிடு
மில்க்வைற் தொழிலதிபர்
6, 660T 6 JT6 மில்க்வைற்
திருஆல
யாழ்ப்பா
198
 
 

ITT SLIITT
îUp TT 526JTQ || ||
, சமாதான நீதவான் 町 °创町岛矶 தொழிலகம்
56. Ti,
TGJØT D.
32

Page 2
  

Page 3
- ܡܢ
occes
ട .." ' ' ' ' )
韃 ,
a ..........................
" -
 
 
 
 

6. --キト@・一み**一"
கடவுள் துணை )3Yaہو یہ صحیع سچس
D35Tjal சுப்பிரமணிய IIT JßLIITIŤ நூற்றுண்டு விழா நினைவு
வெளியிடுவோர் : மில்க்வைற் தொழிலதிபர், சிவநெறிப்புரவலர், சிவதர்ம வள்ளல், சமாதான நீதவான்
க. கனகராசா அவர்கள்
மில்க்வைற் தொழிலகம் திருஆலவாய், யாழ்ப்பானம்,
982,

Page 4
தெய்வப் பாடல்கள்
விநாயகர் துணை எனக்கு வேண்டும் வரங்களை
இசைப்பேன் கேளாய் கணபதி ! மனத்திற் சலனம் இல்லாமல்
மதியில் இருளே தோன்ரு மல், நினைக்கும் பொழுது நின்மவுன
நிலைவந் திடநீ செயல்வேண்டும், கனக்கும் செல்வம், நூறுவயது: இவையும் தரநீ கடவாயே!
தவமே புரியும் வகையறியேன், சலியா துறநெஞ் சறியாது சிவமே நாடிப் பொழுதனைத்துந் தியங்கித் தியங்கி நிற்பேனை நவமா மணிகள் புனைந்தமுடி
நாதா! கருணு லயனே! தத் துவமா கியதோர் பிரணவமே!
அஞ்சேல் என்று சொல்லு தியே.
அன்னை துணை நின்னருள் வேண்டுகின்ருேம் - எங்கள்
நீதியும் தர்மமும் நிலைப்பதற்கே; பொன்னவிர் கோயில்களும் - எங்கள்
பொற்புடை மாதரும் மதலையரும்,
 

ܡܚ 3 ܡܣܼܿ
அன்னநல் லணிவயல்கள் - எங்கள்
ஆடுகள் மாடுகள் குதிரைகளும் , இன்னவை காத்திடவே - அன்னை
இணைமலர்த் திருவடி துணைபுகுந்தோம்.
அன்னையை வேண்டுதல் எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லன எண்ணல் வேண்டும் திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல் அறிவு வேண்டும் பண்ணிய பாவம் எல்லாம்
பரிதிமுன் பணியே போல நண்ணிய நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னுய்!
நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி என்னைப் புதிய வுயிராக்கி - எனக்
ஏதுங் கவலையறச் செய்து - மதி தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்.
காளி தருவாள் தானம் வேள்வி தவங்கல்வி யாவும்
தரணி மீதில் நிலைபெறச் செய்வேன் வானம் மூன்று மழைதரச் செய்வேன்
மாறிலாத வளங்கள் கொடுப்பேன்;

Page 5
- 4 -
மானம் வீரியம் ஆண்மை நன் நேர்மை
வண்மை யாவும் வழங்குறச் செய்வேன் ,
ஞானம் ஓங்கி வளர்ந்திடச் செய்வேன்;
நான் வி ரும்பிய காளி தருவாள்.
தேச முத்துமாரி ஆதாரம் சக்தி என்றே
அருமறைகள் கூறும் ; யாதானுந் தொழில் புரிவோம்
யாதுமவள் தொழிலாம்.
துன்பமே இயற்கை யெனும்
சொல்லை மறந் திடுவோம் இன்பமே வேண்டி நிற்போம்
யாவும் அவள் தருவாள்.
நம்பினுர் கெடுவதில்லை
நான்கு மறைத் தீர்ப்பு
அம்பி கையைச் சரண்புகுந்தால் அதிக வரம் பெறலாம்.
உயிர்க்கு உயிரானவர் சிவபெருமான் வாழிய முனிவர்களே! - புகழ்
வளர்ந்திடுஞ் சங்கரன் கோயிலிலே ஊழியைச் சமைத்த பிரான் - இந்த
உலகமெலாம் உருக்கொண்ட பிரான் ஏழிரு புவனத்திலும் - என்றும்
இயல் பெறும் உயிர்களுக் குயிராவான், ஆழுநல் லறிவாவான் - ஒளி 岛”
யறிவினைக் கடந்த மெய்ப் பொருளாவான்.
 
 

= 5. --سه
கண்ணன் வேண்டுதல் ஐய கேளினி யோர்சொல், அடியர் யாம் உய்ய நின்மொழி பற்றி யொழுகியே மைய றும் புகழ் வாழ்க்கை பெறற்கெனச் செய்யும் செய்கையில் நின்னருள் சேர்ப்பையால்,
ஒப்பி லாத உயர் வொடு கல்வியும்
எய்ப்பில் வீரமும் இப்புவி யாட்சியும் தப்பிலாத தருமமுங் கொண்டு யாம் அப்பனே நின் னடிபணிந் துய்வமால்.
திருமகளைச் சரண்புகுதல்
பாற்கட லிடைப் பிறந்தாள் - அது
பயந்தநல் லமுதத்தின் பான்மைகொண்டாள்; ஏற்குமோர் தாமரைப்பூ - அதில்
இணைமலர்த் திருவடி இசைந்திருப்பாள் ; நாற்கரந் தானுடையாள் - அந்த
நான்கினும் பலவகைத் திருவுடையாள் வேற்கரு விழியுடையாள் - செய்ய
மேனியள் பசுமையை விரும்பிடுவாள்.
பொன்னிலும் மணிகளிலும் - நறும்
பூவிலும் சாந்திலும் விளக்கினிலும், கன்னியர் நகைப் பினிலும் - செழுங்
காட்டிலும் பொழிலிலும் கழனியிலும் முன்னிய துணிவினிலும் - மன்னர்
முகத்திலும் வாழ்ந்திடும் திருமகளைப் பன்னிநற் புகழ்பாடி - அவள் -
பதமலர் வாழ்த்திநற் பதம்பெறுவோம்.
"امیر

Page 6
-- 6 --
கலைமகள் வணக்கம் வாணி கலைத்தெய்வம் மணிவாக் குதவிடுவாள் ஆணி முத்தைப்போலே அறிவுமுத்து மாலையினுள் காணுகின்ற காட்சியாய்க் காண்பதெல்லாம்
காட்டுவதாய் மானுயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே.
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள் வீணை செய்யும் ஒலியில் இருப்பாள் கொள்ளை யின்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத் திருப்பாள் உள்ள தாம்பொருள் தேடி யுணர்ந்தே
ஒதும் வேதத்தின் உள்நின் ருெளிர்வாள் கள்ள மற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத் துட்பொருளாவாள்.
மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள் கீதம் பாடும் குயிலின் குரலைக்
கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள் கோதகன்ற தொழிலுடைத் தாகிக்
குலவு சித்திரம் கோபுரம் கோயில் ஈதனைத்தின் எழிலிடை யுற்ருள்
இன்ப மேவடி வாகிடப் பெற்ருள்.
. . . estaur Lufts
திருவளர் வாழ்க்கை, கீர்த்தி
மருவுபல் கலையின் சோதி,
வல்லமை யென்ப வெல்லாம்,

= 7 =
வருவது ஞானத் தாலே
வையக முழுதுமெங்கள் 。 பெருமை தான் நிலவி நிற்கப்
பிறந்தது ஞானபாநு.
பண்ணிய முயற்சி யெல்லாம்
பயனுற வோங்கும், ஆங்கே எண்ணிய எண்ண மெல்லாம்
எளிதிலே வெற்றி யெய்தும்; திண்ணிய கருத்தி னேடும்
சிரித்திடு முகத்தினேடும் நண்ணிடும் ஞானபாநு
அதனை நாம் நன்கு போற்றின்.
வேண்டும் மன தி லுறுதி வேண்டும்
வாக்கினி லேயினிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும் -
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும் கனவு மெய்ப்பட வேண்டும்
கைவச மாவது விரைவில் வேண்டும் தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்.
கண் திறந்திட வேண்டும்
காரியத் தி லுறுதி வேண்டும் பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும் மண் பயனுற வேண்டும்
வானக மிங்கு தென்பட வேண்டும் உண்மை நின்றிட வேண்டும்
ஒம் ஓம் ஒம் ஓம்.

Page 7
முருகா வருவாய் !
இராகம்: நாட்ட்ைக்குறிஞ்சி தாளம்: ஆதி
முருகா! முருகா! முருகா!
சரணங்கள் 1. வருவாய் மயில்மி தினிலே
வடிவே லுடனே வருவாய்! தருவாய் நலமும் த கவும் புகழும்
தவமும் திறமும் தனமும் கனமும்
(முருகா)
அடியார் பலரிங் குளரே,
அவரை விடுவித் தருள்வாய்! முடியா மறையின் முடிவே! அசுரர்
முடிவே கருதும் வடிவே லவனே
(முருகா) சுருதிப் பொருளே வருக!
துணிவே கனலே வருக! கருதிக் கருதிக் கவலைப் படுவார்
கவலைக் கடலைக் கடியும் வடிவேல்
(முருகா) அமரா வதிவாழ் வுறவே
அருள்வாய்! சரணம், சரணம்! குமரா, பிணியா வையுமே சிதற க்
குமுறும் சுடர்வே லவனே சரணம்!
(முருகா) அறிவா கியகோ யிலிலே
அருளா கியதாய் மடிமேல் பொறிவே லுடனே வளர் வாய்! அடியார் புது வாழ் வுறவே புவிமீ தருள்வாய்!
(முருகா) குருவே! பரமன் மகனே!
குகையில் வளருங் கனலே! தருவாய் தொழிலும் பயனும், அமரர் ஸமரா திபனே! சரணம் சரணம்!
- (முருகா)

- 9 ܕ ܚ
புதிய ஆத்திசூடி அச்சம் தவிர் ஆண்மை தவறேல் எண்ணுவது உயர்வு ஏறு போல நட ஐம்பொறி ஆட்சிகொள்
ஒற்றுமை வலிமையாம் கற்றது ஒழுகு காலம் அழியேல் துன்பம் மறந்திடு தூற்றுதல் ஒழி நன்று கருது நாளெல்லாம் வினைசெய் புதியன விரும்பு பூமி இகழ்ந்தி டேல் மெல்லத் தெரிந்து சொல் மேழி போற்று.
பாப்பாப் பாட்டு ஓடி விளையாடு பாப்பா ! - நீ
ஒய்ந்திருக்க லாகாது பாப்பா! கூடி விளையாடு பாப்பா ! - ஒரு
*, குழந்தையை வையாதே பாப்பா!
சின்னஞ் சிறுகுருவி போலே - நீ திரிந்து பறந்துவா பாப்பா!
வன்னப் பறவைகளைக் கண்டு - நீ
3. மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா!

Page 8
கொத்தித் திரியுமந்தக் கோழி - அதைக்
கூட்டி விளையாடு பாப்பா!
எத்தித் திருடுமந்தக் காக்காய் - அதற்கு
இரக்கப்பட வேணும் பாப்பா!
பாலைப் பொழிந்துதரும் பாப்பா - அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா!
வாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது மனிதர்க்குத் தோழனடி பாப்பா!
காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு - என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா!
பொய் சொல்லக் கூடாது பாப்பா! - என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா!
தெய்வம் நமக்குத் துணை பாப்பா! - ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா!
துன்பம் நெருங்கி வந்தபோதும் - நாம் சோர்ந்துவிட லாகாது பாப்பா!
அன்பு மிகுந்த தெய்வ முண்டு - துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!
உயிர்க ளிடத்தில் அன்பு வேணும் - தெய்வம்
உண்மை யென்று தானறிதல் வேணும், வயிர முடைய நெஞ்சு வேணும், - இது வாழும் முறைமையடி பாப்பா!

-- !l) سے
முரசு
வெற்றி எட்டுத் திக்கும் எட்டக்
கொட்டு முரசே ! வேதம் என்றும் வாழ்க என்று
கொட்டு முரசே! நெற்றி யொற்றைக் கண்ண னேடே
நிர்த்தனம் செய்தாள் நித்த சக்தி வாழ்க என்று
கொட்டு முரசே!
ஊருக்கு நல்லது சொல் வேன் - எனக்
குண்மை தெரிந்தது சொல்வேன்;
சீருக் கெல்லாம் முதலாகும் - ஒரு
தெய்வம் துணை செய்ய வேண்டும்.
ஒற்றைக் குடும்பந் தனிலே - பொருள்
ஓங்க வளர்ப்பவன் தந்தை;
மற்றைக் கருமங்கள் செய்தே - மனை வாழ்ந்திடச் செய்பவள் அன்னை.
ஏவல்கள் செய்பவர் மக்கள் - இவர் யாவரும் ஒர்குலம் அன்ருே?
மேவி அனைவரும் ஒன்ருய் - நல்ல
வீடு நடத்துதல் கண்டோம்.
வெள்ளை நிறத்தொரு பூனை - எங்கள்
வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை - அவை பேருக் கொருநிற மாகும்.

Page 9
== 12 سے
சாம்பல் நிறமொரு குட்டி-கருஞ் சாந்து நிறமொரு குட்டி
பாம்பு நிறமொரு குட்டி - வெள்ளைப்
பாலின் நிறமொரு குட்டி.
எந்த நிறமிருந்தாலும் - அவை
யாவும் ஒரேதர மன்ருே?
இந்த நிறம் சிறி தென்றும் இஃது
ஏற்ற மென்றும் சொல்ல லாமோ?
வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் - அதில் மானிடர் வேற்றுமை யில்லை
எண்ணங்கள் செய்கைக ளெல்லாம் - இங்கு யாவர்க்கும் ஒன்றெனல் காணிர்.
அன்பென்று கொட்டு முரசே! மக்கள்
அத்தனை பேரும் நிகராம் இன்பங்கள் யாவும் பெருகும் - இங்கு
யாவரும் ஒன்றென்று கொண்டால்.
அன்பென்று கொட்டு முரசே! - அதில்
யார்க்கும் விடுதலை உண்டு பின்பு மனிதர்கள் எல்லாம் - கல்வி
பெற்றுப் பதம்பெற்று வாழ்வார்.
அறிவை வளர்த்திட வேண்டும் மக்கள்
அத்தனை பேருக்கும் ஒன்ருய்
சிறியாரை மேம்படச் செய்தால் - பின்பு
தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்.
 

ܚ- 13 --
உழவுக்குங் தொழிலுக்கும் வந்தனே உழவுக்கும் தொழிலுக்கும்
வந்தனை செய்வோம் - வீணல் உண்டுகளித் திருப்போரை
நிந்தனை செய்வோம் விழலுக்கு நீர்பாய்ச்சி
மாய மாட்டோம் - வெறும் வீணருக்கு உழைத் துடலம் ஒய மாட்டோம்.
தொழில் இரும்பைக் காய்ச்சி உருக்கிடு வீரே!
யந்தி ரங்கள் வகுத்திடு வீரே! கரும்பைச் சாறு பிழிந்திடு வீரே!
கடலில் மூழ்கி முத்தெடுப் பீரே! அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல்
ஆயி ரந்தொழில் செய்திடு வீரே! பெரும்பு கழ்நுமக் கேயிசைக் கின்றேன் பிரம தேவன் கலையிங்கு நீரே!
மண்ணெ டுத்துக் குடங்கள் செய்வீரே!
மரத்தை வெட்டி மனை செய்கு வீரே!
உண்ணக் காய்கனி தந்திடு வீரே!
உழுது நன்செய்ப் பயிரிடு வீரே!
எண்ணெய், பால்நெய் கொணர்ந்திடு வீரே! இழையை நூற்றுநல் லாடைசெய் வீரே!
விண்ணி னின்றெமை வானவர் காப்பார்!
மேவிப் பார்மிசை காப்பவர் நீரே!

Page 10
- 4 -
பாட்டும் செய்யுளும் கோத்திடு வீரே!
பரத நாட்டியக் கூத்திடு வீரே! காட்டும் வையப் பொருள்களிள் உண்மை
கண்டு சாத்திரம் சேர்த்திடு வீரே! நாட்டி லேயறம் கூட்டிவைப் பீரே!
நாடும் இன்பங்கள் ஊட்டிவைப் பீரே! தேட்ட மின்றி விழியெதிர் காணும் தெய்வ மாக விளங்குவிர் நீரே!
பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்;
கட்டித் திரவியங்கள் கொண்டு வருவார்
காசினி வணிகருக்கு அவை கொடுப்போம்.
ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஒயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்.
குடைகள் செய்வோம் உழுபடைகள் செய்வோம்
கோணிகள் செய்வோம் இரும் பாணிகள் செய்வோம்
நடையும் பறப்பு முனர் வண்டிகள் செய்வோம்; ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்3
மந்திரம் கற்போம் வினைத்தந்திரம் கற்போம்;
வானை யளப்போம் கடல் மீனை யளப்போம்;
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்
சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.
காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம்
கலை வளர்ப்போம் கொல்லருலை வளர்ப்போம்
ஒவியம் செய்வோம் நல்ல ஊசிகள் செய்வோம்
உலகத் தொழிலனைத்து முவந்துசெய்வோம்.

= l5 =
சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம்
நீதி நெறியினின்று பிறர்க் குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்ருேர்,
பாரத நாட்டின் பெருமை மன்னும் இமய மலையெங்கள் மலேயே
மாநில மீதிது போற்பிறி திலையே! இன்னறு நீர் க்கங்கை யாறெங்கள் யாறே
இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே? பன்னரும் உபநிட நூலெங்கள் நூலே
பார்மிசை யேதொரு நூல்இது போலே பொன்னுெளிர் பாரத நாடெங்கள் நாடே போற்றுவம் இஃதை எமக்கிலை ஈடே.
செந்தமிழ் நாட்டின் பெருமை செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே - எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே, (செந்)
காவிரி தென் பெண்ணை பாலாறு - தமிழ்
கண்டதோர் வையை பொருணைநதி - என
மேவிய யாறு பலவோடத் - திரு
மேனி செழித்த தமிழ்நாடு. (செந்)
முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று
மொய்ம் புறக் காக்கும் தமிழ்நாடு - செல்வம்
எத்தனை யுண்டு புவிமீதே - அவை
யாவும் படைத்த தமிழ்நாடு. (செந்)

Page 11
س- I6 ==
நீலத் திரைக்கட லோரத்திலே - நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை - வட
மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ்
மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு. (செந்)
கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ் க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல பல்வித மாயின சாத்திரத்தின் - மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு. (செந்)
வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து
வான் புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை அள்ளும் சிலப்பதி காரமென்ருேர் - மணி
யாரம் படைத்த தமிழ்நாடு (செந்)
சிங்களம் புட்பகம் சாவக - மாதிய
தீவு பலவினுஞ் சென்றேறி - அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் - நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு. (செந்)
விண்ணே யிடிக்கும் தலையிமயம் - எனும்
வெற்பை யடிக்கும் திறனுடையார் - சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் - தமிழ்ப் பார்த்திவர் நின்ற தமிழ்நாடு. (செந்)
சீன மிசிரம் யவனரகம் - இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக் - கலை ஞானம் படைத்தொழில் வாணிபமும் - மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு. (செந்)
 

H 7 is தமிழ் மொழியின் பெருமை
(பாரதியார் பல மொழிகளறிந்தவர். பல மொழிகளைப் பேசும் பல்வேறினத்தவர் மத்தியில் வாழ்ந்தவர். அவர் தாமறிந்த மொழிகளின் தரத்தையும் தமிழின் தரத்தையும் நன்கறிந்தவர். தாமறிந்த உண்மையை நாமறியப் பாடுகிருரர்
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்குங் காணுேம்; LIT LDJ (JIT i விலங்குகளாய் உலகனைத்தும் இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு, நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திடுதல் நன் ருே சொல்லீர் தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும். யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
வள்ளுவர் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்த திலை உண்மை வெறும் புகழ்ச்சியில்லை ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்ருேம் ஒருசொற் கேளீர்! சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கஞ் செழிக்கச் செய்வீர். பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும் இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும் மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை யில்லை திறமான புலமையெனில் வெளிநாட்டார்
அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்.

Page 12
- ie- R
தெளிவு, அன்பு, உறுதி. அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி, அகத்திலே அன்பினேர் வெள்ளம் , பொறிகளின் மீது தனியரசாணை,
பொழுதெலாம் நினது பேரருளின் நெறியிலே நாட்டம், கருமயோகத்தில்
நிலைத்திடல் என்றிவை யருளாய், குறிகுண மேதும் இல்லதாய் அனைத்தாய்க்
குலவிடு தனிப்பரம் பொருளே!
மேலானவர் வையகம் காப்பவரேனும் - சிறு
வாழைப் பழக்கடை வைப்பவரேனும், பொய்யக லத்தொழில் செய்தே - பிறர்
போற்றிட வாழ்பவர் எங்கணும் மேலோர்.
தவமும் யோகமும் உற்றவர் நாட்டவர் ஊரார் - இவர் க்கு
உண்மைகள் கூறி இனியன செய்தல் நற்றவம் ஆவது கண்டோம் - இதில்
நல்ல பெருந்தவம் யாதொன்றும் இல்லை. பக்கத் திருப்பவர் துன்பம் - தன்னைப்
பார்க்கப் பொருதவன் புண்ணியமூர்த்தி; ஒக்கத் திருந்தி உலகோர் - நலம்
ஊற்றிடும் வண்ணம் உழைப்பவன் யோகி,
யோகம், யாகம், ஞானம். ஊருக் குழைத்திடல் யோகம் - நலம்
ஓங்கிடு மாறு வருந்துதல் யாகம்; போருக்கு நின்றிடும் போதும் - உளம்
பொங்கல் இல்லாத அமைதி மெய் ஞானம்,

- 19 -
சென்றது மீளாது சென்றதினி மீளாது, மூடரே! நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண் இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவிர் (டாம், எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக்
(கொண்டு தின்றுவிளை யாடியின் புற்றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம் திரும்பிவாரா.
மனத்திற்குக் கட்டளை பேயா யுழலுஞ் சிறுமணமே!
பேணு யென் சொல் இன்றுமுதல் நீயா யொன்றும் நாடாதே s
நினது தலைவன் யானேகாண் தாயாம் சக்தி தாளினிலும்
தரும மெனயான் குறிப்பதிலும் ஒயா தேநின் றுழைத்திடுவாய்
உரைத்தேன் அடங்கி உய்யுதியால்,
கிளிவிடு தூது
சொல்ல வல்லாயோ ? கிளியே! சொல்லநீ வல்லாயோ ?
: ܫ அநுபல்லவி வல்ல வேல்முரு கன்தனை - இங்கு
வந்து கலந்து மகிழ்ந்து,குலாவென்று (சொல்ல)

Page 13
- 20 -
சரணங்கள் தில்லை யம்பலத்தே - நடனம்
செய்யும் அமரர் பிரான் - அவன் செல்வத் திருமகனை - இங்குவந்து
சேர்ந்து கலந்து மகிழ்ந்திடு வாயென்று
அல்லிக் குளத்தருகே - ஒருநாள்
அந்திப் பொழுதினிலே - அங்கோர் முல்லைச் செடியதன்பாற் - செய்த வினை
முற்றும் மறந்திடக் கற்றதென் னேயென்று.
(சொல்ல)
பாலை வனத்திடையே தனக்கைப் பற்றி நடக்கையிலே - தன்கை வேலின் மிசையாணே - வைத்துச் சொன்ன
விந்தை மொழிகளைச் சிந்தை செய் வாயென்று (சொல்ல)
பரம்பொருள் எல்லையில் லாத உலகில் - இருந்
தெல்லையில் காலம் இயங்கிடும் தோற்றம் எல்லையில் லாதன வாகும் - இவை
யாவையு மாயிவற் றுள்ளுயி ராகி.
எல்லையில் லாப்பொருள் ஒன்று - தான்
இயல்பறி வாகி இருப்பதுண் டென்றே,
சொல்லுவர் உண்மை தெளிந்தார் - இதைத் தூவெளி யென்று தொழுவர் பெரியோர்.

பாரதியாரின் ஞானகுருவாய யாழ்ப்பாணத்து சுவாமி புகழ்
பாரதியார் புதுச்சேரியில் புகலடைந்து பத் தாண்டுகள் வாழ்ந்த காலத்தில் அங்கே அரவிந்தர் முதலான ஞானியரையும்; குள்ளச்சாமி, மாங் கொட்டைச்சாமி, கோவிந்தசாமி, மெளனசாமி முதலிய சித்தர்களையும் கண்டு கலந்துரையாடி வந்தார். அவர்கள் எல்லோரிலும் பார்க்க அவர் யாழ்ப்பாணத்துச் சாமி என்பவரிடத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார் என்றும், அவரையே தமது ஞானகுருவாகக் கொண்டார் என்றும் அவர் பாடல்களிலிருந்து அறியக்கிடக்கிறது.
யாழ்ப்பாணச் சாமி என்றும், பூந்தோட்டத் துச் சாமி என்றும் , மெளனசாமி என்றும் வழங் கியவர் ஒருவரே. அவர் பருத்தித்துறையின் அண்மையிலுள்ள வியாபாரிமூலையைச் சேர்ந்த சின்னையா வேலுப்பிள்ளை என்பாரும், வதிரியைச் சேர்ந்த ஆறுமுகம் மகள் இலட்சுமிப்பிள்ளை என் பாரும் பெற்ற மைந்தர் அருளம்பலம் என்பவ ΠΠολlΠ.
அருளம்பலம் இளமையில் மேலைப் புலோலி சதாவதானம் நா. கதிரைவேற்பிள்ளை அவர் களிடம் படித்தவர். வியாபாரத்திலீடுபட்டு நட்ட மடைந்ததோடு, தாங்கமுடியாத நோய்வாய்ப் பட்டு நாட்டைவிட்டுத் தமிழ்நாட்டுக்குச் சென்று, நாகை பட்டினத்து நீலலோஜனி அம்மன் சந்நிதி

Page 14
سے 22 =ے
யில் நீண்ட நாட்கள் நிட்டையிலிருந்து அருள் பெற்றார். அவர் பல தலங்களையும் தரிசித்த பின் புதுச்சேரிக்குச் சென்று மீனலோஜனி அம்மன் கோயில் பூந்தோட்டம் ஒன்றில் மெளனமாக இருந்துவந்தார்.
யாழ்ப்பாணத்துச் சுவாமியிடம் ஈ டு பாடு கொண்ட பாரதியார், அவரைத் ‘தே விபதம் மறவாத தீரஞானி' என்றும், “ சிதம்பரத்து நடராச மூர்த்தி' என்றும், 'பாவியரைக் கரை யேற்றும் ஞானத்தோணி ' என்றும் , * யாழ்ப் பாணத்து ஐயன் ' என்றும், இன்னும் பலவாரு கவும் பாடுவர்.
** கோவிந்த சாமிபுகழ் சிறிது சொன்னேன்
குவலயத்தின் விழிபோன்ற யாழ்ப்பாணத்தான் தேவிபதம் மறவாத தீரஞானி,
சிதம்பரத்து நடராச மூர்த்தியாவான் பாவியரைக் கரையேற்று ஞானத்தோணி,
பரமபத வாயிலெனும் பார்வை யாளன் காவிவளர் தடங்களிலே மீன்கள் பாயும்
கழனிகள் சூழ் புதுவையிலே அவனைக் கண்டேன். தங்கத்தாற் பதுமை செய்தும் இரதலிங்கம்
சமைத்துமவற் றினிலீசன் தாளைப் போற்றும் துங்கமுறு பக்தர்பலர் புவிமீ துள்ளார்;
தோழரே! எந்நாளும் எனக்குப் பார்மேல் மங்களஞ்சேர் திருவிழியால் அருளைப் பெய்யும்
வானவர்கோன், யாழ்ப்பாணத்தீசன் தன்னைச் சங்கரனென் றெப்போதும் முன்னே கொண்டு சரணடைந்தால் அது கண்டீர் சர்வசித்தி'

ہے۔ 23 ----
கண்ணன் - என் விளையாட்டுப் பிள்ளை தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்
தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை (தீராத) தின்னப் பழங்கொண்டு தருவான், - பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்; என்னப்பன் என்னையன் என்ருல் - அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான்
(தீராத) தேனுெத்த பண்டங்கள் கொண்டு - என்ன
செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்; மாணுெத்த பெண்ணடி என்பான் - சற்று
மனமகிழும் நேரத்தி லேகிள்ளி விடுவான்
(தீராத) அழகுள்ள மலர் கொண்டு வந்தே - என்னை
அழஅழச் செய்து பின், ‘கண்ணை மூடிக்கொள் குழலிலே சூட்டுவேன்' என்பான் - என்னைக்
குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான்
η (βιΤΠ 1 ) பின்னலைப் பின்னின் றிழுப்பான் - தலை
பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான் வன்னப் புதுச்சேலை தனிலே - புழுதி
வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான்
(தீராத) விளையாட வாவென் றழைப்பான் - வீட்டில் வேலையென் முலதைக் கேளா திழுப்பான், இளேயாரொ டாடிக் குதிப்பான் - எம்மை
இடையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான் (தீராத)

Page 15
  

Page 16
* சர்வோதயம்
ஆ கிராமோத * மாவட்ட அபிவி * தேசோதய
இவ்வாறு எல்லோரும் என்று மகாத்மா காந்தி, இர6
மணிய பாரதியார் மு.
பாடுபட்டார்கள், வி
இவர்கள் சொன்ன வழியி மில்க்வைற் ெ தங்களால் இய பன்முகமாகப்
உங்கள் அபிமான தொழிலகத்தாரு
filia).j) (JG) மில்க்வைற் தய 9 DTGofa in 3,5JG)
* ஆதரவு பெருகினுல்
- Idiods
சாந்தி அச்சகம், யாழ்ப்

UMMO
. (TUUS விருத்தி W60函鳴 ம் -
பாடு அடைதல் வேண்டும் பீந்திரநாத் தாகூர், சுப்பிர
தலாய பெருமக்கள் ழிகாட்டினுர்கள்.
நாழிலகத்தார் ன்றவரை பணிசெய்கின்றர்கள்.
மும் ஆதரவும் க்குத் தேவை.
| aĵJ TaïÔÙLIJ5ĵoj ாரிப்புகளுக்கு GIlj5áGOIGÖIGi
அறப்பணி பெருகும் *
வற் -