கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நீதியைக் கடைப்பிடியுங்கள் மானிட உயிரினைப் பேணுங்கள்

Page 1
LDTGJOfL 2 I'll
韬
 
 
 


Page 2
l.
குழு ஆய்வுகளை நடத்துவதற்கான அறிவுரைகள்
இந்த்க் குழுத் தியானங்கள், பங்குச் சமூகங்கள்; துறவற குழுக்கள்; இளைஞர், யுவதிகள் ஊக்குநர்கள் மத்தியிலும் தனி நபர் தியானத்திற்காகவும் தயாரிக்கப்பட்டவையாகும்
நடத்தும் முறையும் கருப்பொருள்களும் பொதுவானவையா கும். ஆகவே குழுக்கள் மத்தியில் இதை நடாத்த வேண்டு மானல், தவக்காலத்தில் வரும் ஒவ்வொரு ஞாயிறு தினத் தின் முன் குழுத்தலைவர்களைப் பங்குக்குரு சந்திந்து அவர் களுக்கென ஒரு தியானம் நடாத்துவது விரும்பத்தக்கது. இதனுல் பலப்படுத்தப்பட்டு, ஒவ்வொரு தலைவனும் தத் தமது பகுதிகளில் இத்தியானத்தை நடத்த முடியும். நாம்
ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, பங்கிலுள்ள பல குழுக்
களால் இத் திய ம்ை செய்யப்பட முடியும்,
தத்தமது பகுதிகளிலுள்ள உண்மை நிலையைக் கருத்தில் கொண்டு, இத்தியானங்களை அச் சூழ்நிலைகளுக்கேற்ப நடாத்த குழுத் தலைவர்கள் முயற்சி எடுக்க வேண்டும். அதே வேளையில் சொந்தச் சூழ்நிலைகளை தேசீய, அனைத்துலக சூழ்நிலைகளோடு ஒப்பு நோக்குவதற்கு ஒவ்வொரு குழுவும் கவனமெடுக்க வேண்டும்.
குழு அங்கத்தவர்கள் அண்மைக்கால நிகழ்வுகளினல் நேரடி யாகப் பாதிக்கப்பட்டவர்களாயிருப்பின் தியானத்தைப் பொருள் பொதிந்ததாக நடத்த முடியும். அப்படியிருக்காத பட்சத்தில், பாதிப்படைந்தோரை விளங்கிக் கொள்ளக் கூடிய விதத்தில், குழு அங்கத்தவர்களை தலைவர் வழி நடாத்த வேண்டும்.
குழு அங்கத்தவர்கள் அனைவரும் தங்கள் எண்ணங்களை, உணர்ச்சிகளை, அநுபவங்களை திறந்த மனதோடு உரை யாடச் செய்வது குழுத் தலைவரின் கடமையாகும். அதே
நேரத்தில் இத் தியானத்தின் கருப்பொருள், நோக்கம் ஆகிய
வற்றை மனதில் வைத்து, குழுவை வழிநடத்துவது தலை வரின் கடமையாகும்.
வேறு சமயத்தைச் சேர்ந்தவர்கள் குழுவில் இருப்பின் இறுதி வேண்டுதல் சொல்ல வேண்டியதில்லை. பதிலாக, சில நிமிட நேரம் மெளனமாகச் செபிக்கும்படி அங்கத்தினர்களைக் கோரலாம்

குழு ஆய்வு " 1 )6 وريمرموقا ،
பொருள்
நான் எனது சகோதரனின் / சகோதரியின் காவலாளியா?

Page 3
(350ւք Չեմl6ւկ 1
அ. பொருள்
நான் எனது சகோதரனின் சகோதரியின் காவலாளியா? ஆ. நோக்கம்
பல்வேறு வகைப்பட்ட உயிர்களையும், மிக முக்கியமாக மனித உயிரை மதித்துப் பாதுகாக்கவேண்டிய அவசியத்தை குழு உணரச்செய்வது. இவ்வுலகை வாழ்வதற்குப் பாதுகாப் பான ஒரு இடமாக ஆக்குவது எமது கடமை. இந்நோக்கத் தின் பொருட்டு நாம் செய்யக்கூடிய பங்களிப்பு என்ன என்னும் வினாவை எம்முள் எழுப்புவோம்.
இ. வேதாகம வாசகம்
ஆதி. 2:7 - 9; 3:1 - 7
"ஆண்டவராகிய கடவுள் களிமண்ணால் மனிதனை உரு வாக்கி, அவன் முகத்தில் உயிர்மூச்சை ஊதவே மனிதன் உயி ருள்ளவன் ஆனான்.""
ஈ. அண்மைக்கால அ னுபவங்கள்
- புராதனமான ஒரு நாகரிகமும் அகிம்சையின் பாரம் பரிய மும் உள்ளதாகக் கூறிக்கொள்ளும் ஒரு நாட்டுக்குச் சற் று ம் பொருந்தாத பயங்கரக் கொலைகளையும் மிருகத்தனமான பல வித வன்செயல்களையும் பற்றி நாம் அண்மைக் காலங்களில் கேள்விப்பட்டிருக்கிருேம். மாபெரும் சமயங்களின் போதனை களெல்லாம் எமது சிந்தனையிலும் நடத்தையிலும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பது பற்றிக் காத்திரமான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. எமது செயல்கள் சரியான வையா தவறானவையா எனக் கண்டுகொள்ளும்படி எம்மை வழி நடத்திவந்த ஒழுக்க விதிகளெல்லாம் தகர்க்கப்பட்டுவிட்டன. இதைவிட மோசமானதென்னவென்ருல், எமது அரசியல் நோக்கு களிற் சில வன்முறைகளையும் அழிவுகளையும் நோக்கித் திசை திரும்பிவிட்டன.
 ைமனித உயிரானது எந்த அளவுக்கு மதிப்புக் குறைந்து விட்ட
தென்றல், சிதைந்த, கருகிய, நிர்வாணமான பிரேதங்கள் வீதி.
யோரங்களிற் கிடப்பதைக் காணும் போதுகூட அவை எம்மிற் சிலரது உள்ளங்களில் வெறுப்புணர்வையோ, கோபத்தையோ, பயங்கரத்தையோ எழுப்பத்தவறிவிடுகின்றன. ஒரு நாட்டு மக்கள் என்ற முறையில் நாம் உணர்ச்சியற்றவர்களாகவும், மரத்துப்
 

போனவர்களாகவும், இந்தக் காட்டுமிராண்டித்தனமான கொடு மையின்மட்டில் அக்கறையற்றவர்களாகவும் ஆகிவிடக் கூடும் என்பதுதான் இதில் உள்ள அபாயம்.
" செறிவான இலைகளைக் கொண்ட காடுகளும், புதர்களும் அழிக்கப்பட்டுவருவது மண்ணரிப்பும், நிலவரட்சியும் ஏற்படக் காரணமாகிறது. இவையெல்லாம் மனிதரின் உயிர்வாழும் உரி மையை வெளிப்படை யாகத் தாக்குகின்ற செயல்களாகும்.
- வேண்டுமென்றே செய்யப்படும் கொலைகளாலும், படு கொலையாலும் உயிர்கள் அழிக்கப்படலாம். அதே வேளையில் இன்னும் புலப்படாத வகையிலும்-அதாவது உயிர்வாழ்வுக்குத் தேவையான உணவு, நீர், உறையுள், வைத்திய சிகிச்சை ஆகியன மக்களுக்குக் கிடைக்காமற் செய்வதனாலும், மனித உயிர்கள் படிப்படியாக உறிஞ்சப்படலாம். இத்தகைய ம்றைமுகமான கொலைகள் அவ்வளவாகப் புலப்படுவதில்லை. பெரும்பாலும் எமது கவனத்தை அவை ஈர்ப்பதில்லை. வேலைவாய்ப்பின்மைகூட தம் மையும் தமது குடும்பத்தையும் தாபரிப்பதற்குவேண்டிய வழி வகைகளை இழக்கச் செய்யலாம்.
உ. வேதாகமச் சிந்தனைகள்:
(1) உயிர், அது எந்த வடிவத்தில் இருந்தாலென்ன, அது இறை வன் உலகுக்களித்த கொடையாகும். இந்த உயிர் வடிவங்களை யெல்லாம் மனச்சான்றுக்கமையப் பாதுகாக்கும் வேலை மனிதரி டம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மிக அற்பமான உயிர்களைத் தன் ணும் பாதுகாத்து, பேணி வளர்க்கும் கடமை இதனுள் அடங்கி யிருக்கிறது.
(2) ஆதியாகம, 'யாத்திராகம வரலாறுகளும், இறைவாக்கின 'ன் அறிவுறுத்தல்களும் உயிரைக் கொடுப்பதற்கும் எடுப்பதற்கும இறைவனைத் தவிர வேறெவர்க்கும் உரிமையில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. யாருக்காவது, பழைய ஏற்பாட்டின் அதிவல்லபமுள்ள மன்னனுக்குத் தன்னும் தன்னிஷ்டப்படி உயி ரைப்பறிக்கும் உரிமையில்லை. ஒரு பெரிய வெள்ளத்தின் மூலம் உலகிலிருந்து தீமையை அகற்ற இறைவன் தீர்மானித்தபோது கூட, தாம் தேர்ந்துகொண்ட அடியான் நோவாவின் தலைமை யின்கீழ் சகல உயிரினங்களும் பாதுகாக்கப்பட்டு தொடர்ந்து நிலைபெற ஏற்பாடு செய்தார்,
(3) இறைவன் உயிருக்கு எத்தகைய மதிப்பு அளித்தாரென்றால், தன் சகோதரன் ஆபேலைக் கொன்றமைக்காகக் காயின்மீது அவர்
3

Page 4
கோபங்கொண்டாலும், கொலையாளியான காயினது உயிரைப் பறிக்கத் துணிபவர் எவர்மீதும் அவர் சாபமிட்டார்.
(4) புதிய ஏற்பாட்டில், நற்செய்தியாளரான அருளப்பர் முழு மையான வாழ்வை அளிக்க வந்தவர் என இயேசுநாதரைக் குறிப்பிடுகிறார். அவரே வழியும், உண்மையும் வாழ்வுமாவார்.
(5) இயேசு 'மாபெரும் மருத்துவர்" என அழைக்கப்படு கிறார். அவர் நோயாளரைக் குணப்படுத்திப் பராமரிப்பவர். பசித்தோருக்கு உணவளிப்பவர், இறந்தோருக்கு உயிரளிப்பவர். எமது அன்ருட வாழ்வுக்கு ஊட்டம் அளிப்பதும், கிறிஸ்தவ வாழ்வின் இதயமாக விளங்குவதுமான நற்கருணை "வாழ்வின் அப்பம்" என அழைக்கப்படுகிறது.
(6) ஒரு சிலரின் அதிகாரத்தையும், புகழையும், உடைமைகளை யும் விருத்தி செய்து வலுப்படுத்துவதற்கு மனித வாழ்வையும் சக்திகளையும் ஒருபோதும் பயன்படுத்தலாகாது என்பதற்கு இயேசுவின் சோதனைகள் ஒரு அறைகூவலாக விளங்குகின்றன.
ஊ, ஞானத்தின் குரல்கள் :
(1) 'உயிர் வாழ்வு, சுதந்திரம், சுயபாதுகாப்பு ஆகிய உரிமை
கள் ஒவ்வொருவருக்கும் உண்டு’ (மனித உரிமைகள் சாசனம் 3. ) * எமக்கு முதலில் எதிர்ப்படும் உரிமைகள்தான் மிக அடிப்படை யானவை. இவை உயிர்வாழும் உரிமை, சுதந்திரமாயிருக்கும் உரிமை, பாதுகாப்ப க இருக்கும் உரிமை என்பனவாம். உதாரண மாக, எனக்கு உயிர் வாழும் உரிமை உண்டு, என்பது உண்மை யாயினும், நீ என்னை வாழ விடவேண்டும், என்பதுதான் இதன் பொருள்." (மனித உரிமைகள் சாசனம் பற்றிய விளக்கவுர்ை 3)
(2) எமது அருமைத் தாய்டு டு ஒரு பெரும் நெருக்கடியிற் சிக்கியுள்ளது. எமது 1 க்கள் பயங்கரத்தில் வாழ்கின்றனர். தமது சொந்த வீட்டில் பலர் தூக்கமின்றித் தவிக்கின்றனர். மக்கள் உயிருக்கஞ்சி வாழ்கின்றனர். எத்தனையோ பேரின் சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டு, தம் உடைமைகளனைத்தை யும்"ஒரே நாளில் இழந்திருக்கினறனர். மிருகத்தனமான கொலை கள், சித்திரவதைகள், ஆட்க த்தல்கள் போன்ற பயங்கர சம் பவங்கள் நாள்தோறும் அறிவிக்கப்படுகின்றன. மனித உயிர் இன்று புனிதமாக மதிக்கப்படுவதில்லை. பரம ஏழைகளே இத ஞல் பெரிதும் பாதிக்கப்படுபவர்களாவர்.
(இன்றைய தேசிய நெருக்கடி குறித்து கத்தோலிக்க ஆயர்கள் 1)
4.

(3) இந்தக் குழப்பங்கள் சீர்குலைவுகள் மத்தியில், மனித வாழ்வையும் வரலாற்றையும் படைத்தவரும், எம் அனவருக் கும் அன்புள்ள தந்தையுமான உயிருள்ள இறைவனில் எமது விசுவாசத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். ஒவ்வொரு மணி தப் பிறவியும் எம்மைப் 11டைத்த இறைவனின் சாயலாகவும் பாவனையாகவும் படைக்கப்பட்டு, நித்திய வாழ்வை இலக் அாகக் கொண்டிருப்பதால் மனித உயிர் புனிதமானது என் நாம் நம்புகிறோம். எனவே மனித உயிரை அழிக்க எவருக் கும்ே உரிமையில்லை. K
(இன்றைய தேசிய நெருக்கடி குறித்து கத்தோலிக்க ஆயர்கள் 2.)
(4) ஒருவரின் உயிர் விடுதலை பாதுகாப்பு ஆகிய வாழ்வின் மூன்று கோணங்களும், தற்கால சமுதாயத்தால் இலகுவாக இனங்காணப்பட்டாலும், வேதாகமத்தில் ஒன்றாகவே கருதப் படுகின்றது. யூத மக்களின் நகரத்தை முற்றுகையிட்டு அவர் களைச் சரண் அடைய கோரிய அசீரிய அரசன் சொன்னதாவது: உங்கள் நன்மையை மனத்திற்கொண்டு தஞ்சம் அடையுங்கள்.
உங்களில் ஒவ்வொருவரும் தம் சொந்தத் திராட்சைக் கொடி
யின் பழத்தையுண்டு. சொந்த அத்திமரத்தின்**** தம் சொந்தக் கிணற்றின் நீரைக் குடிப்பார்கள் (2 அரசர்" 18:31). அவர் களுடைய உயிர் காப்பாற்றப்படுவது மட்டுமல்லாது அவர்கள் பெறப்போகும் விடுதலையின் காரணமாக அத்தியாவசிய தேவை கள் பூர்த்திசெய்யப்படுவதால் திராட்சைத் தோட்டம் அத்தி மரங்கள் கிணறு அவர்களுக்கு சொந்தமாகக் கொடுக்கப்படும் என்றான் (ம. உ. சா. விளக்கவுரை 3).
(5) ஒரு சமுதாயத்தின் அங்கததவர்கள் ஒருவர் ஒருவரை ஆட்
களாக மதிக்கும்போது அச்சமுதாயத்தினுள் இயங்கிவரும் ஒரு மைப்பாடு முறையானது. அவர்களுட் கூடிய செல்வாக்குள்ளவர் கள், தம்மிடம் பொருட்செல்வமும், பொது வசதிகளும் கூடிய அளவில் இருப்பதால், வலிமை குறைந்தவர்கள் மட்டில் தாம்
பொறுப்புள்ளவர்கள் என்பதையுணர்ந்து, தம்மிடமுள்ள எல்லா
வற்றையும் அவர்களுடன் பகிர்ந்துகொள்ளத் தயாராயிருக்க வேண்டும். வலிமை குன்றியவர்களும் அதே ஒருமைப்பாட்டுமனப் பான்மையுடன், செயலற்ற ஒரு போக்கையோ சமூக அமைப் ை அழிக்கக்கூடிய ஒரு போக்கையோ கடைப்பிடிக்காமல், தமது நியாய பூர்வமான உரிமைகளைக் கோரும் அதே வேளையில் அன்ைவருடை ய நன்மைக்க கவும் தம்மாலானவற்றைச் செய்ய வும் வேண்டும்.
(6) சட்டத்தின் முன் எல்லோரும் சமமாகையால், வேறுபாடற்ற சமமான பாதுகாப்டை சட்டத்தினல் பெற அவர்களுக்கும் உரிமை

Page 5
யுண்டு. இந்த சாசனத்தை மீறமுடியாதவாறு, பாரபட்சமற்ற சம மா6) பாதுகாப்பு அவை: வருக்கும் உரிமையாவதுடன், பாரபட்சம் ஆாட்ட த் தூண்டுவதும் தவறாயிருக்கிறது (ம. உ. சா. 7).
(7) சித்திரவதைக்கோ, ம்னிதத் தன்மையற்ற கொடிய அல்லது இழிவுபடுத்தும் நடத்துதலுக்கோ தண்டனைக்கோ எவரும் உட் படுத்தப்படலாகாது (ப. உ. ச11 . 9).
மனம்போல போக்கில் எவரையாவது கைதுசெய்தல், மறி யலிலிடல் அல்லது நாடுகடாத்துதல் விலக்கப்பட்டுள்ளது. (ᎿᏝ . 32 - , Ꮿ fᎢ . ᏭᏗ .
எ. எமது பதிலும் அர்ப்பணமும்
(1) சித்திரவதை, மிருகத்தனமான கொலை, நீண்டகாலமான தடுப்புக்காவல் ஆகியன எம்மில் எத்தகைய தாக்கத்தை ஏற் படுத்துகின்றன? இத்தகைய நிகழ்வுகள் பற்றி எமக்கு எடுத்துக் கூறப்படும்பொழுது ஒரு மரத்துப்போன, செயலாற்ற முடியாத உணர்வு எமக்கு ஏற்படுகிறதா?
(2) மரணங்கள் , அழிவுகள் மலிந்திருக்கும் வேளையில் வாயை மூடிக்கொண்டிருப்பதுதான் அன்றைய போக்கு எனக் கருது கிறீரா?
(3) எமது நாட்டுக்கு இன்று நேரிட்டுள்ள அரசியல், பொருளா தார, ஒழுக்க நெருக்கட் யின் காரணங்கள் பற்றி நாம் இருந்து உரையாடவேண்டா மா? உமது குழுவின் கருத்துப்படி அக்கார பனங்கள் எவை?
(4) ஆட்க% ஒழிப்பதன் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கலாம் என்று குழு கருதுகிறதா?
(5) நெருக்கடி வேளைகளில் மக்களுக்கு உணவுப் பொருட் களும் வைத்திய வசதியும் அளிப்பதற்கு நீர் என்ன வழிவகை களைக் கையாளுவீர்? அத்தகைய சந்தர்ப்பங்களுக்கு குழு தன்னை எவ்வாறு, ஆய்த்தப்படுத்திக் கொள்ளலாம்?
(6) இன்றைய நெருக்கடி உளவியல் ரீதியிலும், சமுதாய ரீதியி லும் எமது குழந்தைகளை எவ்வாறு பாதிக்கும் எனக் கருதுகிறீர்!
பாடல் / செபம்
 

குழு ஆய்வு 2
வாழ்க்கை வசதிகளை அவாவும் எமக்கு மக்களின் துன்பம் ஒரு அறைகூவல்

Page 6
اگر که
குழு ஆய்வு 2
அ. பொருள்:
வாழ்க்கை வசதிகளை அவாவும் எமக்கு மக்களின் துன்பம் ஒரு அறைகூவல்
ஆ. நேர்க்கம்:
குழு அங்கத்தவரின் வாழ்க்கை முறைக்கு அறைகூவல் விடுக் கும்படியாகவும் உலக இன்ப சுகங்களே அவர்களது சிந்தனைக் கும் நடத்தைக்கும் தூண்டுதலாயிருந்தனவா என ஆராயும்படி யாகவும் குழுவை வழி நடத்துதல். இ. நற்செய்தி வாசகம்: பத்தேயு 1711 - 9
இராயப்பர் இயேசுவை நோக்கி ஆண்டவரே நாம் இங்கே இருப்பது எத்துணை நன்று! நீர் விரும்பினல் உமக்கு ஒன்றும் மோயீசனுக்கு ஒன்றும், எலியாசுக்கு ஒன்றுமாக இங்கு கூடாரம் மூன்று அமைப்பேன் என்று சொன்னார். நாம் பெற்றுக்கொள்ள விரும்பும் வாழ்க்கை வசதிகளிலிருந்து எமது மனத்தைத் திருப்பி னாலொழிய துன்பம் கைவிடப்பட்ட நிலை ஆகியவற்றை நாம் ஒரு போதும் விளங்கிக் கொள்ளவும் முடியாது. இறைவன் எம்மி
-ம் கேட்பது என்னவென்று தெளிவாக உணரவும் முடியாது.
ஈ. அண்மைக்கால அனுபவங்கள் பற்றிய சிந்தனை:
- பெரும்பான்மையான மக்கள் வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள் கூட இல்லாதிருக்கையில் மிதமிஞ்சிய உலக இன்ப சுகங்களைத் தரக்கூடிய பொருள்களைச் சேகரிப்பதிலேயே தம் வாழ்வின் பெரும் பகுதியைச் செல்விடும் போக்கு சிலரிடம் காணப்படுகிறது.
- 16.5 கோடி மக்களைக் கொண்ட எமது நாட்டில் கிட்டத் தட்ட 40 வீதமானவர்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர் கள். நாளொன்றுக்கு 2000 கலோரி உணவுக்குக் குறைவாகவே பெறுபவர்கள் 1987இல் 1,030,000 ஆக இருந்த வேலையற்றோர் தொகை இன்று பெரிதும் அதிகரித்துள்ளது. இவர்களில் * பகுதி
யினர் இளைஞர்கள்.
- மருத்துவசாலையின் முன்பாக, கையிலே வைத்திய முறை
யின் ஏட்டைத்தாங்கிக்கொண்டு, உயிர் வாழ்வதற்கு வேண்டிய
பணம் இருக்கின்றதா என்று ஏங்கிக்கொண்டு தம்மிடமுள்ள
பணத்தை எண்ணும் ஏழை நோயாளியின் பரிதாப நிலையை
அவருடைய (அவளுடைய) கண்களிலிருந்து காணத்தவற முடி
Այո Ց].
8

- கள்ளங் கபட்மற்ற பாலகர் இக்காலத்தில் அரிதாகக் கிடைக் கும் அவர்களுடைய மதிப்புமிக்க கல்வியின் கருவிகளாகிய அப்
பியாசப் புத்தகங்களை கெட்டியாகப் பற்றிக்கொள்வதைக் கண்டு
வெட்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோமா?
- கல்விக்குரிய கருவிகள் விலையுயர்ந்தும் த ட் டுப் பாடு மாய் இருக்கும் வேளையில் புதிய வாகனங்கள் நிறைவாகவுள்ளன.
துவக்குகளும் வெடிவகைகளும் மருந்தாக, நூலகமாக, செயற்கூட
மாக, பேணு பென்சிலாக மாற்றம் பெறமுடியும் என்பதைச் சிந்தித் திருக்கின்றோமா?
- சிலருடைய பாதுகாப்பிற்கும் சொகுசுவாழ்வுக்கும் பலரு டைய அத்தியாவசிய தேவைகள் பலியாக்கப்படுகின்றனவா என்றே நாம் சந்தேகிக்கின்றோம்.
- திடீர் தானதருமங்கள் எமக்கு கைவந்த ஒன்று சில குறிப் பிட்ட் தினங்களில் உணவுப் பொட்டலங்கள் வழங்குதல், நத் தார் தினத்தில் வறியோர்க்கு புத்தகங்களும், உடைகளும் வழங் குதல் நாட்டின் சில பாகங்களில் அனர்த்தங்கள் நிகழும்பொழுது உ-ம் அகதிகள், வரட்சி, வெள்ளம், மண்சரிவுகள்; பணமாகவும் பொருளாகவும் அளிக்கப்படும் உதவி இவையெல்லாம் பாராட் டத்தக்க செயல்கள்தான். ஆனால் இத்தகைய பெருந்தன்மை யான செயல்களின் பின் நாம் மீண்டும் எமது அமைதியான குழப் பமற்ற வாழ்க்கைக்குத் திரும்பி விடுவது வழக்கம்.
- சிறந்த கல்வி கற்பதற்கு வசதியும் வாய்ப்பும் பெற்றிருந்தவர் கள் அத்தகைய வாய்புப் பெறாதோரை முக்கியமாகக் கிராமப் புறத்தில் வாழ்வோரை சில சமயங்களில் மறந்துவிடுகின்றனர்.
- வாழ்க்கைத் தொழில் புரிவோருக்கும் சிலதுறைகளில் தொழில்நுட்பப் பயிற்சி பெற்றோருக்கும் வேலையில்லாத பட்ட
தாரிகளையோ பயிற்றப்படாத தொழிலாளர்களையோவிட
நல்ல எதிர்காலம் இருக்கலாம். இது அநேகருக்கு முக்கியமாக இளைஞருக்கு மனவிரக்தியை உண்டுபண்ணியுள்ளது.
உ. வேதாகமச் சிந்தனைகள்:
1. வசதியான தமது வீடு, குடும்பம் நாடு யாவற்றையும் விட்டு விட்டு நிரந்தர வசிப்பிடமற்ற ஒரு நாடோடி வாழ்க்கையின் கொடுமைகளையும் சவால்களையும் ஏற்கும்படி இறைவன் ஆபிர காமுக்குக் கட்டளையிடுகிறார். ; 「
2. இதேபோன்ற ஒரு அனுபவம், மத்தேயு நற்செய்தியிலும்
கூறப்பட்டு அங்கு இராயப்பர் நிலையான அமைதியான தொழல்
9

Page 7
லையற்ற வசதியான ஒரு வாழ்வை விரும்புகிறார் என்பது மூன்று
கூடாரங்களை அமைக்க அவர் விரும்புவதன் மூலம் குறிப்பாக
காட்டப்பட்டு தூக்கி எறியப்படுகிறது.
3. உலக வாழ்க்கையே ஒரு பிரயாணம், இதில் மக்கள் ஓயாது இடம் மாறிக்கொண்டிருக்கின்றனர் என்பதை வெகு சிலரே உணர்வதாகத் தெரிகிறது. இவ்வுலகின் நிலையற்ற போலியான அழிந்துபோகும் ஈட்டங்களையும் சாதனைகளையும் கடந்து அதற்கப்பால் தமது கூடாரங்களை அமைக்க விரும்புவோர் மட்டுமே இறையரசின் உண்மையான மதிப்பீடுகளை கண்டுணர் வார்கள். அவையாவன, உண்மையான சமாதானம், தமக்குள்ள வற்றைப் பகிர்ந்துகொள்ளவேண்டிய அவசியம், சுதந்திர உணர் வும் நிறைவும் எளியாரோடு ஒருமைப்பாடு முதலியனவாம்.
4. இயேசுநாதர் தாமே தமது சீடர்களுக்கு அவர்களது மறை
போதகப் பயணங்களின் போது அத்தியாவசியப் பொருட்களைத் தவிர வேறொன்றையும் கொண்டுசெல்ல வேண்டாமென அறி,
வுறுத்துகிறார். அவர்கள் இவ்வுலகில் இருக்கவேண்டியவர்கள். ஆனால் இவ்வுலகைச் சார்ந்தவர்களாக அல்ல. நிரந்தர வசிப் பிடமற்ற ஒருவராக இருப்பதற்கு இயேசுநாதர் தாமே தமது சீடர்களுக்கு முன்மாதிரியாக விளங்கினார். ஏழை லாசர்ரும் பணக்காரனும் பற்றிய உவமையும் அறிவற்ற செல்வந்தனின் உவமையும் உலக செல்வங்களின் நிலையற்ற தன்மை பற்றிய கிறிஸ்து நாதரின் கருத்தை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.
5. இயேசுநாதர் எல்லாவிதமான வறுமையையும் வலுவின்மை
யையும் உணர்பவராக இருந்தார். பசித்தோர், தாகமுற்றோர், '
ஆடையற்றோர், நோயாளர், சிறைப்பட்டோர் ஆகியோருடன் தம்மை ஒன்றுபடுத்த அவர் தயங்கவில்லை. சுயலாபங் கருதாது இத்தகையோர் மட்டிற் கரிசனை எடுப்போருக்கு கிடைக்கும் சன்மானத்தைப் பற்றியும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
ஊ. ஞானத்தின் குரல்கள் :
1. 'துரதிருஷ்டவசமாக பொருளாதார நோக்கில் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் அபிவிருத்தியடைந்த நாடுகளைவிட எண்ணிக்கையில் மிகக் கூடியனவாக இருக்கின்றன. அபிவிருத்தி அடையக்கூடிய பொருள்களையும் நலன்களையும் பெறமுடியாத திரளான மக்கள் அவற்றைப் பெற்றிருப்பவரைவிட எண்ணற்ற வர்களாக இருக்கின்றனர்.
மிகக்காத்திரமான ஒரு பிரச்சினைக்கு நாம் முகங்கொடுக்க வேண்டியிருக்கிறது. ஆதியில் அனைவருக்கும் உரியதாயிருந்த
வாழ்வுத்தேவைக்கான பொருள்கள் சமமற்ற விதத்தில் பங்கிடப்
7 ܟ
O

ப்ட்டுள்ளன. அதனால் அவற்றின் மூலம் அடையப்படும் நன்மை களும் சமமற்ற விதமாகப் பகிரப்பட்டுள்ளன. இவ்வாறு நிகழ்ந் தது வறிய மக்களின் தவறினால் அல்ல, தவிர்க்கமுடியாத இயற்கை நிலைமைகள் சந்தர்ப்பங்களின் காரணமாகவும் அல்ல." (பொருளாதார விடயங்களில் கரிசனை 9)
(2) **விவகாரம் இதுதான்; சிலர்- இவர்களிடம் அதிக உடம்ை களுண்டு. ஆனால் அவர்கள் ஆட்களாக இருப்பதில் வெற்றிபெறு வதில்லை. ஏனெனில் மதிப்பீடுகளின் படிநிலையிலுள்ள மாறு பாட்டால், உடைமைகளிலுள்ள பற்றீடுபாடு அவர்களைத் தடை செய்கிறது. வேறு சிலர் - அவர்களிடம் உள்ளது சொற்பம் அல்லது ஒன்றுமில்லை - இவர்கள் தமது அடிப்படை மனித அழைப்பை செயலுருவிற் காணமுடியா திருக்கின்றனர், ஏனெனில் அவர்களி டம் அத்தியாவசியப் பொருள்கள் இல்லை. ' (S R S. 28)
(3) குழப்பத்தையும் சீர்குலைவையும் கொண்டுவரும் மனித னின் பாவநிலை ஒரு புறம் இருந்தபோதிலும் உயிர்த்த எமது மீட் பரும் இறைமகனுமான இயேசு கிறிஸ்துவின் வல்லபம் மிக்க பிர சன்னம் எம் மத்தியில் உள்ளதென நாம் விசுவசிக்கிறோம். தமது அரசின் வருகையை எளியோர்க்கு நற்செய்தியென இயேசு அறி வித்தார். (லூக் 4/18), எல்லா மனிதரும் உயிர் பெறும்படிக்கும் அதை மிகுதியாய்ப் பெறும் பொருட்டும் அவர்வந்தார் (அரு 10/10/9 எல்லா அச்சங்களையும் அகற்றும்படிக்கு அவர் வந்தார். ஒருவர் ஒருவரை நேசிக்கவும், எம்மிடமுள்ளதைப் பகிர்ந்துகொள்ளவும், வறுமையிலும் இன்மையிலும் துன்புறுவோர் மட்டில் ஆழ்ந்த கரிசனை காட்டவும், எம்மை ஒறுத்து தாராளமாகக் கொடுக்கவும் இயேசு நமக்குக் கற்பித்திருக்கிறார் (கத்தோலிக்க ஆயர்கள் : இன்றைய தேசிய நெருக்கடி 3).
(4) திருமணங்கள், பிறந்தநாள் விழாக்கள், நினைவு தினங்கள், குருப்பட்டங்கள், கோயிற் திருவிழாக்கள் போன்ற சமூக நிகழ்ச்சி களில் ஆடம்பரச் செலவைத் தவிர்த்தல் வேண்டும். எளிமையான வாழ்க்கை முறைக்கு குருக்களும் துறவிகளும் முன்மாதிரியாக விளங்கவேண்டும் (இன்றைய தேசிய நெருக்கடி 3),
(5) முக்கிய அரசியல் கட்சிகளின் குறுகிய கட்சி மனப்பான்மை யால் அரசியற் களம் மேலும் அச்சுறுத்தல் நிறைந்ததாகி விட்டது. இவை மக்கள் நிலையை உயர்த்துவதற்காக ஒரு உருப்படியான திட்டத்தை வகுக்க முடியாதவைகளாகவோ ,விரும்பாதவைகளாக வோ காணப்படுகின்றன. இவைகளின் முதன்மையான கரிசனை யைப் பெறுவது கட்சிதான், நாடல்ல எனத் தோன்றுகிறது. ஒவ் வொரு கட்சியும் தேசிய அனர்த்தங்களை அரசியல் இலாபத் துக்குப் பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கிறது. கட்சி விசுவாசத் துக்கு அப்பாற் சென்று, கட்சிச்சார்பற்ற ஒத்துழைப்பை ஏற்

Page 8
படுத்தி, நாட்டுமக்களைக் காப்பாற்ற எவ்வித முயற்சியும் எடுக் கப்படுவ்தாகத் தெரியவில்லை. (கத்-ஆயர்கள்: தேசிய நெருக்கடி) ஏழைகள் பாக்கியவான்கள் (தொடர்பு சாதனங்கள் - இந்தியா A. P. H. D. Lužзић 17)
எ. எமது பதிலும் அர்ப்பணமும்
(1) உங்கள் குழுவில், ஒவ்வொரு அங்கத்தவரிடமும் இருக்கும் இலௌகிகப் பொருள்களைப் பற்றிச் சிந்திக்கவும், இவற்றுள் எவை தமது உயிர்வாழ்வுக்குத் தேவையானவை, எவை மேல் மிச்சமானவை என ஒவ்வொருவரும் தம்மையே கேட்டுக்கொள்ள
வும். ,
(2) அயலில் சுற்றுநோட்டமிட்டு குழு செயற்படக்கூடிய ஒரு இடத்தைத் தேர்ந்தெடுக்கவும் . இதன் மூலம் அங்கு வாழும் மக்கள் பண்படிப்படையில் இன்னும் சிறந்த வாழ்க்கை வாழக் கூடியதாயிருக்க வேண்டும்.
(3) குறிப்பிட்ட சிலர் வறுமையிலேயே வாழ விதிக்கப்பட்ட வர்கள் போல் இருப்பது ஏன் என்பதை உங்கள் குழு வில் ஆராய்ந்து உரையாடவும்.அத்தகையோர் உயிர் வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டியிருக்கிறது?
(4) உங்கள் பகுதியில் அண்மைக்கால நெருக்கடியினல் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களைக் கண்டுபிடிக்கவும். அவர்களுக்கு எவ்விதத்தில் உதவிசெய்யப்படலாம்?
ஜெனரல் கரிபால்டி இத்தாலியின் புரட்சிவீரன். அரசுக்கு
எதிராக நடாத்திய போரில் படுகோல்வியடைந்தான். மீண்டும்
தன் படையினரை ஒன்றுசேர்த்தான். அவர்களே வரிசையாக
நிற்கவைத்த அவன், "தோழர்களே நாம் தோல்வியடைய வில்லை. இது வெற்றியின் முன் அடையாளம், மீண்டும் நான்
போராடப் போகின்றேன். உங்களுக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றும்
இல்லை. பசியும் பட்டினியும்தான் நான் உங்களுக்குக் கொடுக்
கக்கூடிய பரிசு, ஊனமும் உதிரமும்தான் நீங்கள் பெறக்கூடிய
விருதுகள். இரண்டு நிமிடங்கள் நான் கண்களை மூடித் திறப் பேன், உங்களில் போருக்குவரப் பிரியமுள்ளவர்கள் ஒர் அடி
எடுத்து முன்னேவந்து நில்லுங்கள்" என்றுகூறி கண்களை மூடி
ஞன். இரண்டு நிமிடங்கள் கழித்து கண்களைத் திறந்தபோது
படைவரிசையில் எதுவித மாற்றமும் இல்லாது இருப்பதைக்
கண்டு மனம் சோர்ந்தான். அவனது சோர்வைக்கண்ட படை வீரர்களுள் ஒருவன், "பிரபு படைவீரர்கள் அனைவருமே ஒர்
அடி முன்வைத்து வந்திருக்கிருர்கள். நமக்கு இனிமேல் கவலை இல்லை" என்ருன்.
12

ள்மூலங்களைப் பேணிப் பாது
Îtul(5ă(95b வ

Page 9
குழு ஆய்வு 3
உயிருக்கு ஆதாரமாயிருக்கும் வளமூலங்களைப் பேணிப் பாது காத்தல்
ஆ. நோக்கம்:
உயிருக்கு ஆதாரமாயிருக்கும் வளமூலங்களை மக்களுக்கு மறுக்கும் சக்திகளுக்கெதிராக உறுதியாக நிற்கவேண்டுமென்ற தீர்மானத்தை எடுப்பதற்கு கவனமான சிந்தனையின் மூலம் குழுவை வழிநடத்துதல்.
இ. வேதாகம வாசகம்: அரு 4/5-42
"நான் தரும் தண்ணிரைக் குடிப்பவனோ என்றுமே தாகங் கொள்ளான். நான் அவனுக்கு அளிக்கும் * தண்ணீரோ அவன் முடிவில்லா வாழ்வடைய அவனுக்குள் பொங்கியெழும் உளற் றாகும்.”
(வாழ்வுக்கும் நீருக்கும் ஒரு தொடர்புண்டு. உயிர்வாழ்வு நீரில் தங்கியுள்ளது. புத் துயிர் அளிக்க தடைபுரண்டு பாயும் நீரே கிறிஸ்து)
ஈ. அண்மைக்கால அனுபவங்கள்:
- அண்மைக்கா லத்தில் வெள்ளப்பெருக்கு, வரட்சி, மண்சரிவு கள் போன்ற இயற்கை அனர்த்தங்கள் காரணமாக எத்தனையோ மக்கள் தம் வாழ்வுக்காதாரமான உணவு, குடிநீர், உடை, மருந் துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களைப் பெறமுடியா திருந்தனர்.
ஆனால் மக்கள் நலனில் சற்றும் அக்கறையில்லாதவர்கள் சுயலாபத்தின் பொருட்டு எடுத்த தீர்மானங்களின் விளைவாக ஏற்பட்ட அனர்த்தங்களே இவற்றைவிட மோசமானவை. உதார ணமாக பல நூற்றாண்டுகளாக பல தலைமுறைகளாக எமது நாட்டுப்புற மக்களுக்கு ஆதாரமாயிருந்துவ்ந்த அரிய வளமிக்க நிலமானது அந்நிய வியாபார நிறுவனங்களுக்கு குத்தகையாகக் கொடுக்கப்படுவதை எடுத்துக்கொள்வோம். எப்போதும் பிற நாட்டவருக்கே சாதகமாக இருக்கும் இப்பேரத்தினால் கிராம மக்கள் தமது நிலத்தை இழந்தது மட்டுமல்லாது அவர்களது உயிர்வாழ்வுக்கு ஆதாரமாயிருந்த வளமூலங்களையும் பறி கொடுத்துவிட்டனர். தமக்குப் பயனற்ற பொருள்களை உற்பத்தி செய்யுமாறு நிர்ப்பந்திக்கப்பட்ட இந்தக் கமக்காரர்கள் ஈற்றில்
4.
 

தமது முன்னோர் வழிவ்ந்த நிலபுலன்களிலிருந்து வெளியேற்றப்
படுகின்றனர்.தமது சிறிய வீட்டுத் தோட்டங்களில் பாடுபட்டு பணப்பயிர்களை செய்கை பண்ணும் குடியானவர்களுக்கு உற் பத்தி செய்த பொருள்களை விற்பது மிகக் கஷ்டமாக உள்ளது.
மேலும் கிராமப் புறங்களுக்கு போக்குவரத்தும் அரிதாகவே
காணப்படுறது. ஆகவே இக்கமக்காரர்கள் தமது மரக்கறிகள், பருப்பு வகைகள், வாசனைப்பொருள்கள் ஆகியவற்றை தமது தலைமீதோ, மிதிவண்டியிலோ நகரத்துக்குச் சுமந்து சென்று அற்ப பணத்துக்கு விற்கவேண்டியிருக்கிறது. ஏறக்குறைய வெறுங்கை யோடு அவர்கள் வீடு திரும்புகின்றனர். எனவே கமக்காரன் தனது குடும்பத்தைக் காப்பாற்றவும் தன் பிள்ளைகளுக்கு ஆடை அணிவித்து பாடசாலைக்கு அனுப்பவும் குடும்பத்தில் நோய் துன்பம் வரும்போது சிகிச்சை செய்யவும் கையிலிருக்கும் பணமோ மிகச் சொற்பமாகும். இத்தகையோருடைய வியர்வையிலேதான் நாடு உயிர்வாழ்கிறது.
எத்தனையோ தாய்மாரின் கதை உள்ளத்தை உருக்கவல்லது.
அவர்கள் கணவன்மாரையும் புதல்வரையும், இழந்தவர்கள். சிலர்
காணாமற் போய்விட்டனர். சிலர் கொல்லப்பட்டுவிட்டனர். இத் தாய்மார்கள் ஆதரவற்றவர்கள். அவர்கள் முகங்களிலே விரக்தி. அவர்களது துன்பக்கதையைக் கேட்பதற்கோ ஒருவருமில்லை. தமது குடும்பத்தின் உழைப்பாளிகளான ஆண்களைத்தேடி பொலிஸ் நிலைய வாயில்களிலும் இராணுவ முகாம் வாயில்களி லும் காலை முதல் மாலை வரை கால் கடுக்க கடும் சூரிய வெப் பத்தில் வாடி நிற்கின்றனர். அவர்களது தந்தையரும், சகோத ரரும் பிடித்துச் செல்லப்பட்டபின் அவர்கள் வீட்டில் உணவில்லை, குழந்தைகளுக்குப் பாலுணவில்லை. அடுத்த நாள் என்ன நடக் குமோ என்ற கவலையையும், அச்சத்தையும் தணிக்கக்கூடிய எந் தத் தண்ணிரும் இல்லை. ஒருசிலரின் தனிச்சலுகையாகிய நித் திரையோ அவர்களுக்குப் பெறற்கரிய சரக்கு.
- உலர்வலையம் பல்லாண்டுகளாக வரண்டே கிடக்கின்றது. வானம் பொழியவில்லை, ஊற்றுக்கள் வற்றிவிட்டன. சட்ட விரோதமாக மரந்தறித்ததினுல் இவ்வாறு ஆயிற்று என்று கூறு கின்றனர். ஏழைகள் சம்பிரதாயமின்றி வருங்கால சந்ததிக்கான ஆயிரக்கணக்கான மரங்களை நடுகின்றனர். பெரிய இடத்தி லுள்ளவர்கள் அவற்றை வெட்டி, வாகனங்களில் ஏற்றிக்கொண்டு போகின்றனர். இத்தகைய அடாத செயல்களுக்கு சட்டம் ஒன் றும் செய்ய முடியாமலிருக்கிறது. நிலமும் கொஞ்சம் கொஞ்ச மாக வளமற்ற வனந்தரமாகிக்கொண்டிருக்கிறது.
உ. வேதாகம சிந்தனைகள் :
(1) பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் தண்ணிர் எப்
5
t

Page 10
போதும் உயிர்வாழ்வுக்கு அடையாளமாக இருந்திருக்கிறது. தீமை யின் இருப்பிடமான வனந்தரத்துடன் தண்ணீர் ஒப்பிட்டு வேறு படுத்திக் காட்டப்படுகிறது. தண்ணீர் மக்களை வாழ்விக்கும் இறை வனின் கொடையாகக் கருதப்படுகிறது. நீரில்லாமை மனிதருச் கும் விலங்குகளுக்கும், சகல தாவர இனங்களுக்கும் அழிவையே குறித்தது.
(2) 94ம் சங்கீதம் மெரீபா மாசா பாலைவனங்களை தேர்ந் தெடுக்கப்பட்ட மக்களின் இதயங்களுக்கு ஒப்பிடுகிறது. ஏனெ
னில் யாவேயின் குரலைக் கேட்கமுடியாமல் அவை வரண்டு. கடினமாகிப் போயிருந்தன. பிறருக்குச் செவிசாய்த்து பொறுமை யுடன் அவர்களது துன்பங்களைப் பகிர்ந்துகொள்ளும் சக்தியை இழக்கும்போது இதயங்கள் வரண்டுபோகின்றன,
இறைவனுக்கும் மக்களுக்குமுள்ள வேறுபாடு தெளிவானது. இறைவன் செவிசாய்த்து, மக்கள் தமது தாகத்தைத் தீர்த்து உயிர்வாழும்படிக்கு தண்ணீரைக் கொடுக்கிருர், அதே நேரத் தில் இறைவனில் அவநம்பிக்கைப்படும் அளவிற்கு முக்கியமாகத் தமது துன்பவேளைகளில் மக்களின் இதயம் கடினமாகி விட் டது.
(3) உரோமர் (5/1-2; 5/8) கடிதத்திலிருந்து எடுக்கப்பட்ட வாசகம் மனிதனின் வல்லமையின்மையையும், நம்பிக்கையின்மை யையும் பற்றிக் கூறுகிறது. ஆனல் கருணையுள்ள இறைவன் தமது அன்பை எம் இதயங்களிற் சொரிகின்றார். நற்கருணை யில் இயேசு தம்மை உணவாகவும் பானமாகவும் எமக்களிக்கும் போது இது இன்னும் தெளிவாகவும், புலனிடாகவும் வெளிப் படுத்தப்படுகின்றது.
(4) அருளப்பர் நற்செய்தியில் (4/5-42) கிணற்றடியில் இயேசு பற்றிய உணர்ச்சியூட்டும் வரலாறு காணப்படுகிறது. இந்த வர லாற்றில் இயேசுவுடன் முக்கிய கதாபாத்திரமாக இருக்கும் பெண் மூன்று விதங்களில் துன்புறுத்தலுக்குரியவளாகிறாள். முத லாவது அவள் ஒரு பெண் (பால் அடிப்படையில் பாரபட்சம்) இரண்டாவதாக அவளது ஒழுக்க நிலை அவளை மற்ருெரு வித மான ஓரச்சார்புக்கு (சமூக, ஒழுக்க) ஆளாக்கியது; இறுதியாக அவள் சமாரிய இனத்தைச் சார்ந்தவள், இந்த இனம் தூய்மை யற்றதென யூதர்களால் ஒதுக்கப்பட்டது (இனமதபாரபுட்சம்) ஆனல் அவளது வாழ்வை மாற்றியமைத்து, அவளை அடிமைத் தனத்திலிருந்து விடுவிக்கக்கூடிய 'உயிருள்ள தண்ணீரைத்" தருவதாக இயேசு இவளுக்குத்தான் வாக்குப்பண்ணுகிறார்.
- குழப்பமடைந்த சீடர்களைப் போலல்லாமல் கட்சிச்சார்பான
I6
 
 

தப்பெண்ணங்களுக்கோ, உலக அபிப்பிராயத்துக்கோ, நீண்டகால பாரம்பரியங்களுக்கோ, சில மக்கட் குழுக்களுக்கெதிராக பார பட்சம்காட்டிய சட்டத்துக்குத்தன்னும் இயேசு இடம் கொடுக்க வில்லை, இந்தப் பெண்ணுக்கு புரிந்துணர்வும், அன்பும், பிறரால் ஏற்றுக்கொள்ளப்படுதலும், ஒரு புதிய வாழ்வை ஏற்றுக்கொள் வதும் அவசியம் என்பதை அவர் காண்கிறார். புரிந்துணர்வும் கருணையும் நிறைந்த இதயத்துடன் அவர் பதிலளிக்கிறார்.
ஊ. ஞானத்தின் குரல்கள் :
1. இவ்வுலக செல்வங்கள் அனைவருக்கும். உரியவை. இறைவன் எல்லா மக்களையும் தமது சாயலாக, தமது ஆவியில் பங்குகொள்
பவர்களாக, புத்தி, சித்தம். சுதந்திரம் உள்ளவர்களாகப் படைத் தார். பொருளாதார அமைப்பு எல்லா மக்களின் தேவைகளையும் பூர்த்திசெய்யக்கூடியதாக இருக்கவேண்டும். (தேசிய நெருக்கடி இ. ஆ. ச. 3 ஏப்ரல் 1988)
2. இறைவனை ஏழைகள், விதவைகள், அநாதைகள், அந்நியர் மட்டில் ஆழ்ந்த கரிசனையுள்ளவராக வேதாகமம் காட்டுகின் றது. தனது அரசில் பேறுபெற்றவர்கள் என இயேசு அறிவித் துள்ளார். (லூக் 6:20), நாட்டின் சமூக பொருளாதாரக் கொள் கையை வகுக்கும்போது ஏழைகள் அனுகூலம் அடைகிறார்களா? (தேசிய நெருக்கடி இ. ஆ. ச. 3:4.88).
3. இலங்கையின் கத்தோலிக்க திருச்சபை என்ற மட்டில் ஆயர் கள், குருக்கள், துறவிகள், பொது நிலையினர் ஆகிய நாம் அனைவரும், ஆழ்ந்த விசுவாச. செப மனப்பான்மையுடன், எம் இதயத்தில் மிகுந்த நம்பிக்கையும் அன்பும் கொண்டவர்களாய் ஏழைகள் சார்பாக ஒர் அர்ப்பணம் செய்வோம். ஏழைகள் சார்பாக எடுக்கப்படும் இந்த அர்ப்பணம் அவர்களை நசுக்கும் வறுமைக்கெதிரானதாகவும் இருக்கவேண்டியது அவசியம். ஏனெ னில் பலவந்தமான வறுமை ஒரு நல்ல மதிப்பீடோ புண்ணி யமோ அல்ல, அது இறைவன் விரும்பாத ஒரு தீங்காகும். தானே விரும்பி ஏற்றுக்கொள்ளும் வறுமையும் எளிமையான வாழ்வும் சகல துறவிகளாலும் எப்போதும் ஓர் உயர்மதிப் பீடாகக் கருதப்பட்டுவந்துள்ளது. ஆகவே இந்த அர்ப்பணத்தைச் செய்வோம். (எமது மக்களின் அதிகரித்துவரும் வறுமை ஆயர் கூற்று 25 அக்டோபர் 1988) -
7

Page 11
4. ஒரு உறுதியான ஆரம்ப முயற்சியாக, ஒவ்வொரு ஆணும், பெண்ணும், குழந்தையும் அடிப்படைத் தேவைகளையும், அடிப் படைக் கெளரவத்தையும் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒருவகையான சமத்துவத்தை நாம் பேணி வளர்ப்போம். எமக்கு மேலதிகமாக உள்ளவற்றை மட்டுமல்ல, ஏழைகளுக்கு உரியதாயிருந்தும் லிவர் களிடம் இல்லாதவற்றையும் நாம் கைவிடத் தயாராயிருக்க\வுேண் டும். (எமது மக்களின் அதிகரித்து வரும் வறுமை ஆயர் கூற்று 25. I0。88).
எ. எங்கள் பதிலும் அர்ப்பணமும்
(1) உங்கள் பிரதேசத்தில் பிறிதொரு வகுப்பு, சாதி அல்லது சம யத்தைச் சேர்ந்தவராக இருப்பதால் தாம் ஒதுக்கப்படுவதாகக் கருதும் மக்களுக்காக உறுதுணையாக நிற்பதற்கு உங்கள் குழு போதிய வலிமை பெற்றுள்ளதென நினைக்கிறீர்களா?
(2) யாதொரு குற்றமும் செய்யாதவராயிருந்தும், உம்மைக் கைதுசெய்து, விசாரணைசெய்து, வழக்கறிஞரின் உதவியை நாட முடியாமல் அடைத்துவைத்திருந்தால் உமது உணர்வுகளும், எதிர்த்தாக்கங்களும் எத்தகையனவாய் இருக்கும்?
(3) உங்கள் பிரதேசத்தில் குறிப்பிட்ட சிலர் கைதுசெய்யப்பட் டுள்ள குடும் பங்களை உங்கள் குழு தரிசிக்க முடியுமா? குடும்பத் தில் கஷ்டமிருந்தால் அக் குடும்பத்தை தாபரிப்பதற்குப் போதிய ஆதரவைப் பெற ஆவன செய்வதற்கு நீங்கள் ஆயத்தமாயிருக் கிறீர்களா? ܗ -
(4) வறுமையின் காரணிகளை ஆராய்வதற்கும் வறுமையுற் றோருக்கு உணவு, நீர், உறையுள், மருந்து முதலியவற்றை அளிப் பதற்கான வழிவகைகளைக் கண்டுபிடிக்கவும் நீங்கள் ஒன்று கூடி செயற்படமுடியுமா?
(5) மக்களின் பிரச்சினைகளுக்கு கருணையுள்ளத்துடன் பொறு மையாகச் செவிசாய்க்க உம்மால் முடியுமென்று கருதுகிறீரா?
பாடல் / செபம் (1) இறைவா! உம் சாந்தியின் கருவியாக என்னை ஆக்கியருளும்! எங்கு 11கையுள்ளதோ அங்கு அன்பையும் , எங்கு மனவருத்தமுள் ளதோ அங்கு மன்னிப்பையும் , எங்கு ஐயமுள்ளதோ அங்கு உம் மேல் விசுவாசத்தையும் வளர்ப்பேனாக .
(2) உம் சாந்தி பின் கருவி பாப் என்னை ஆக்கியருளு i எங்கு கைவிடப்பட்ட நிலையுள்தோ அங்கு நம்பிக்கையைக் கொணர்

வேனாக, எங்கு இருள் உள்ள கோ அங்கு ஒளியையும், எங்கு துன் பமுள்ளதோ அங்கு இன்பத்தையும் நான் பரப்பிட அருள் காரும்.
ஐயனே நான் என் ஆறுதலுக்காக அலைவதைவி டு ஆறு தலைக் கொடுக்க விழைவேனா சு. நான்னை மற்றோர் புரிந்து கொள்ளவேண்டுமென்று துடிப்பதை விடுத்து ஏனையோரைப் புரிந்துகொள்ள விழைவேனாக, என்னை மற்றவர்கள் நேசிக்க வேண்டுமென்று துடிப்பதை விடுத்து ஏனையோரை முழு உள்ளத் துடனும் அன்பு செய்ய முற்படுவேனாக,
(3) உம் சாந்தியின் கருவியாய் என்னை ஆக்கியருளும் , மன்னிப் பதன் மூலம்தான் மன்னிப்படைய முடியும். அனைவர்க்கும் கொடுப்பதன் மூலம்தான் பெற்றுக்கொள்ள முடியும். n 7 வதன் மூலம்தான் முடிவில்லா வாழ் விற்குப் பிறக்கமுடியும்.
வேதனேயே மிஞ்சிவிடும்
தமிழ் செல்வன் மாசில்லாமணி - தெமோதரை
ஒன்றே குலமப்பா - F10க்கு ஒற்றுமையே உலமப்பா
நன்றே இகைமன இல் - மரமாய்
5T q L (3au6ör(reintl
இமயமுதல் குமரிவரை - நமது
முன்னேர்கள் ஆண்டாரென்று
எமக்குள்ளே பேசுவதால் - வெற்றி எமைவ்ந்து சேராதப்பா !
சாதி சடங்கு என்றும் - பல
சாக்கடை கட்சியென்றும்
மோகி பிளவுபட்டால் - நாம்
மேன்மை அடைவதெப்போ(து) ?

Page 12
குழு ஆய்வு 4
வலியோரை அரியணையினின்று அகற்றினார், தோரை உயர்த்தினார். −
 

குழு ஆய்வு 4
வலியோரை அரியணையினின்று அகற்றினார், தா ழ் ந் தோரை உயர்த்தினார், -
ஆ. நோக்கம் :
- வலுக்குறைந்தவர்களுக்கு எதிராக தி ட் ட மி ட் டு இடம் பெறும் அநீதியான செயற்பாடுகளைக் குழு காணவும், ஏழை களு. லும் அதிகாரமற்றவர்களுடனும் பரஸ்பர விசுவாசத் தாலும் நம்பிக்கையாலும் உந்தப்பட்டு அவர்களோடு ஒன்று பட்டு செயற்படும் அர்ப்பணத்தை நாடுவது.
இ. வேதாகம வாசகம்: அரு 9: 1-41. --
அவர் (இயேசு) பாவியோ அல்லரோ, எனக்குத் தெரியாது; ஒன்றுதான் தெரியும்; நான் குருடனாயிருந்தேன் இப்பொழுது பார்க்கிறேன் . எனக்குப் பார்வை கொடுத்திருக்கிறார். (உள் ளத்தின் சிறை1ை உடைத்தெறிய இயேசு உதவிபுரியும் போது ஏழைகளின் பக்கத்தால் உண்மையை அறியவும் உதவுகின்ற ர்).
ஈ. அண்மைக்கால அனுபவங்கள் :
சமுதாயத்தில் இடம் பெறும் பொது நிகழ்ச்சிகள், சமய விழாக்கள் பொதுக்கூட்டங்களில் சமூகத்தில் உயர்வான வல்லமை மிக்கவர்களில் அதிக கவனம் செலுத்துவது எமது சுபாவமாகி விட்டது. பணக்காரர்களின் மேசையிலிருந்து கீழேவிழும் உரொட் டித்துண்டுசளை ஏற்று ஏழை சள் திருட்தி அடைய வேண்டியவர்
களாயிருக்கின்றார்கள். பலமற்றவர், குழந்தைகள், தமது தேவை
களை எடுத்துரைக்க அறியாதவர் இங்கே வரிசையின் கடைசியில் நிற்பர் வாசலருகில் மணிக்கணக்கில் காத்துநிற்க நிர்ப்பந்திக்கப் பட்டு உட்காருவதற்கு அநேகமாக அழைக்கப்படாது, மூலைக்குத் தள்ளப்படுவார்கள்.
- வாலிபரும், யுவதிகளும் சர்வகலாசாலைப் பட்டங்கள் புெற் றிருந்தும், குறிப்பான அரசியல் தொடர்பு அற்றவர்களாதலால், வேலைவாய்ப்பற்று வாடும் கதைகளை நாம் கேள்விப்பட்டிருக் கிறோம் . இவ்வாறு மனத்தளர்ச்சியடைந்த வாலிபரும், யுவதி
களும் குடும்பத்திற்குச் சுமையாகவும், சமுதாயத்திற்கு தொல்லை
:1ாகவும் கருதப்படுகின்றார்கள். அவர்களுக்குச் சுமத்தப்பட்ட இம்மோசமான நிலையை விளக்க வார்த்தைகள் வேண்டிய தில்லை.
- புகழ்பெற்ற பாடசாலைகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க: விரும்பும் தாய் தந்தையர் முடியாத கட்டத்தில் பெரும் பொரு

Page 13
எ. எமது பதிலும் அர்ப்பணமும்: (1) உனது அயலில் வெளிப்படையாக நடந்த அநீதிகளைக் கண்டும் குருடனைப்போல் காணாததுபோலமூடிமறைத்தாய் என் பதை எண்ணிப்பார். ஒரு சம்பவத்த்ையாவது விபரமாகக் கூறு. (2) உத்தியோ கபூர்வ, சமூக அல்லது சமய விழாவொன்றை ஒழுங்குபடுத்துமாறு நீர் பணிக்கப்பட்டால் கெளரவ இடத்தை யாருக்குக் கொடுப்பீர். (3) உம்மிடமில்லாத சில கொடைகளையுடைய ஆனால் பின் தங்கிய பாடசாலையில் கல்வி கற்று, ஆங்கில அறிவில்லாதவனும் வறிய குடும்பத்தைச் சேர்ந்தவனுமாகியவனுடன் நீர் எவ்வாறு
நடந்துகொள்வீர்?
ஏ. செபம்:
இறைவன், அன்னை தந்தை, ஆவியை நான் விசுவாசிக்கிறேன். அவரே பூலோகத்தைப் படைத்தார்.
ஆணையும் பெண்ணையும் படைத்து, அன்பிலும் கீழ்ப்படி தலிலும் சமுதாயத்தில் சுதந்திரமாக வாழவிட்டார்.
தமது படைப்பின் மீதுகொண்ட அன்பினால் மனிதத் தன் மையில் பங்குபெற உலகிற்கு வந்து இ ன்பத்தையும் துன்பத்தை யும் அனுபவித்து எமது வாழ்க்கைப் பாதையையும் இறப்பையும் எடுத்துக்காட்டி புறக்கணிக்கப்பட்டு மரித்து ஆனால் இறுதியில் மரணத்தை வென்று உலகைத் தம்முடன் இணைத்த இறைவனை விசுவாசிக்கின்றேன்.
திருச்சபையின் சமுதாயத்திற்கு எம்மை அழைத்து விசுவாசத் டனும் ஒற்றுமையுடனும் உயர்வான உறுதியான இறையருளை அனுபவித்து எமது சமுதாயத்தின் பொறுப்புக்களை நிறை வேற்றி, எமது அயலவருக்கு நாம் அன்புக்கரம் அளிக்கபிளவு பட்டு நிலையற்ற உலகினில் சமாதானத்தையும் முழுமை யூையும் உருவாக்க இயற்கையின் சீரான நிலையிலும் எமது வாழ்வின் மகிழ்ச்சியிலும் நான் குதூகலிக்கச் செய்யும் இறை வனை நான் விசுவாசிக்கிறேன்.
24

உங்கள் கவ னத்திற்கு
தவக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட தியான முயற்சிகளைத் தொடர விரும்புகிறீர்களா? அப்படியாயின், உங்கள் மாதாந்த குழுத்தியானத்திற்குத் தேவையான, திருச்சபையின் சமூகக் கொள்ளைகளையொட்டிய குறிப்புகளை உங்களுக்கு அனுப்பி வைக்க நாம் ஆயத்தமாகவுள்ளோம்.
இப் படிவத்தை நிரப்பிக் கீழ்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்:
சமூக பொருளாதார அபிவிருத்தி நிலையம். 133, கின்சி தெரு, பொறள்ள. கொழும்பு - 08,
தலைவர் பெயர்: . .
(up 35aid: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
குழுவிலுள்ளோர் எண்ணிக்கை . ....................................................................
குடும்பங்களின் எண்ணிக்கை . . . .
-2.6ior... . . . . . . . . . . . . . . . . . . . . . ...Guajor . . . . . . . . . . . . . . . . . பிள்ளைகள். .
彎
55 G5st 6565 if ... . . . . . . . . . . . . . ... ... Spudg55.56 lif........................
எங்கே கூடுவீர்கள்? . . . .
எப்போது கூடத் தீர்மானித்துள்ளிர்கள் ?.
திகதி கையொப்பம்

Page 14
" ( ܬܪ ܝܢ