கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பாட்டிமார் கதைகள்: சிறுவருக்கான நாட்டுப்புறக் கதைகள்

Page 1


Page 2


Page 3

பாபழமாற் கதைகள்
(சீறுவருக்கான நாட்டுப்புறக் கதைகள்)
சின்னத்தம்பி இராசமணிநினைவு வெளியீடு
ஒராசமணி ஒல்லம், அணினா ச.ச.நிலையம்,
கெருடாவில் தெற்கு, தொண்டைமானாறு.
2010

Page 4
நூல் :-
தொகுப்பு :-
முதற்பதிப்பு :-
Geoverfluŷu'u_Terry:-
தொடர்பு முகவரி :-
ešéfu Ču Tj :-
நூல் விபரம்
பாட்டிமார் கதைகள் (சிறுவருக்கான நாட்டுப்புறக் கதைகள்)
sr.Cevererö6yge B.A(Hons), PGDE, M.Phil ஆசிரியர், வவு/நொச்சிக்குளம் இல1, கனிஷ்ட உயர்தர வித்தியாலயம், ஓமந்தை.
2O1O-1 O-2O
சின்னத்தம்பி இராசமணி குடும்பத்தினர்
சாந்தரூபன் ஞானகலை இராசமணி இல்லம், அண்ணா ச.ச.நிலையம், கெருடாவில் தெற்கு, தொண்டைமானாறு. மதுரன் கிரா(t)பிக்ஸ்
அல்வாப்.
Cover :- Kondapalli Bomma — Thatha Ammamma
Thanks :-andhrabommalu.wordpress.com

இதாகுப்பாசிரியரிடமிருந்து
‘பாட்டிமார் கதைகள்’ மறைந்தவர்களின் நினைவாக நான் தொகுத்துத்தரும் நான்காவது நூலாகும்.
சிறுவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக எமது பாரம்பரியக் கதைமரபான நாட்டார் கதைகளில் இருந்து இக் கதைகள் தொகுக் கப்பட்டுள்ளன. எங்கள் பாட்டிமார் கதைகதையாகக் கூற அதனை ஆறஅமர இருந்து கேட்ட நாட்கள் இன்று மறைந்துவிட்டன. அந்தக் கதைகளில் இருக்கும் கற்பனையும், வேகமும் தொடர்ந்து கதைகேட்கத் தூண்டும் சுவாரஷயமும் நினைந்து நினைந்து இன்புறத்தக்கன.
இன்று உலகளவில் பேசப்படுகின்ற ஹரிப்பொட்டரும், அவதாரும் இந்தக் கதைகூறும் மரபுகளிலிருந்தே தோற்றம் பெற்றுள்ளன. அதனாலேயே சிறுவர்களை அவை மகிழ்விக்கின்றன. நாட்டார் கதைகளில் இருக்கும் ஒவ்வொரு கதை முடிச்சுகளும் அந்த அற்புத உலகங்களுக்கு சிறுவர்களை இட்டுச் செல்லக்கூடியவை.
3

Page 5
{
அவர்கள் தொடர்ந்து வாசிக்க வேண்டும். அதன்பின் இந்த உலகங்களுடாகப் பயணிக்க வேண்டும். அப்போதுதான் படைப்பாற்றல் மிக்கவர்களாக எதிர்காலத்தில் தோற்றம் பெறுவார்கள்.
இத்தொகுப்பினைச் செய்யவேண்டும் என்று பெருவிருப்புக் கொண்ட அமரர் சின்னத்தம்பி இராசமணி குடும்பத்தினருக்கும், 'ஈழத்துத் தமிழ் நாட்டுப்புறக் கதைகள்’ என்ற தனது தொகுப்பிலிருந்து ஒரு பகுதிக் கதைகளை இந்நூலுக்கு எடுத்தாள அனுமதித்த எனது ஆசான் பேராசிரியர் கி. விசாகரூபன் அவர்களுக்கும், “நாட்டுப்புறக் கதைக்களஞ்சியம்’ தலைமைத் தொகுப்பாசிரியர் கி.ராஜநாராயணன் அவர்களுக்கும், மற்றும் வாஸந்திக்கும், அழகாக நூலாக்கித்தந்த மதுரன் கிராபிக்ஸ் சு. மகேஸ்வரனுக்கும் எனது மேலான நன்றிகள்.
திணைப்புனம்', சு. குணேஸ்வரன்
மயிலிட்டி, Mail:-kuneswarancagmail.com அல்வாய். - Web:- www.valaivelie.blogspot.com 10.10.2010


Page 6


Page 7

உள்ளே.
ஈழத்து நாட்டுப்புறக் கதைகள்
1.
2.
3
4
5.
6
7
8
9
வல்லிபுர ஆழ்வார் குதிரைக்காவல் வெண்ணெய் தின்ற குரங்குகள் பன்றித்தலைச்சி அம்மன் நகை வாங்கிய பேய் திருவம்பலம் கரிக்குருவியும் காக்காயும் வழிப்போக்கனின் தந்திரம் நாயும் அரசியும்
10. கஷ்டந்தான்
தமிழக நாட்டுப்புறக் கதைகள்
1.
2
3
4
5.
6
7
8
9
மேகங்களும் நதிகளும் உண்டான கதை எறும்பு வாங்கிய வரம் பேன் பார்த்த பேய்
அன்னதானப் பலன் ரெண்டு பொண்டாட்டிக்காரன் உள்ளதும் போச்சு
கிழவியின் தந்திரம் கொழுக்கட்டை என்றால் உசுரு
ஆண்டிகள் கட்டிய மடம்
10. தக்காளித் தங்கை

Page 8

ஈழத்து நாட்டுப்புறக் கதைகள்

Page 9
守
... ,
 

வல்லிபுறு ஆழ்வார்
பாட்டிமார் கதைகள்
வடமராட்சியில் உள்ள கோயில்களில் சிறப்புப் பெற்று விளங்கும் கோயில் வல்லிபுர ஆழ்வார் கோயில். இந்த வல ல° புரக கோ ய° ல தோன்றியதைப் பற்றி ஒரு கதை உண்டு. ஒரு நாள் இரண்டு பிள்ளைகள் கடலில் மிதந்து கொண்டு வந்தனர். இவ்வாறு சில நாட்களாக இந்த இரண்டு பிள்ளைகளும் கடலில் மிதப்பதும் தத்தளிப்பதுமாக விளங்கினர். வல்வெட்டித் துறையாக்கள்
இந்தக் குழந்தைகள் ஒவ்வொரு நாளும் தத்தளிப்பதைக் கண்டு அவற்றைக் காப்பாற்ற
வேண்டும் என்று பல தடவை முயன்றனர்.
ஒரு குழந்தை ஆலிலையிலும் மற்றக் குழந்தை வெறும் நீர்ப்பரப்பிலும் காணப்பட்டனர். இந்த இரண்டு குழந்தைகளும் மிக்க அழகு. அழகான குழந்தைகளாக இருக்கின்றபடியால் இவை தெய்வத் தன்மை பொருந்தியதாக இருக்க வேண்டும். ஒரு வேளை இதுகள்
9

Page 10
திருமதிசின்னத்தம்பி இராசமணி நினைவு வெளியீடு
எங்களுக்கு எதற்காவது வழிகாட்டியாக விளங்கினமோ என்று வல்வெட்டித்துறையாக்கள் நினைத்தனர். அந்தக் குழந்தைகளை ஆட்கள் அணுகியதும் அவை மறைந்துவிடுமாம். இதனால் அவர்கள் “பிள்ளைகள் நாம் ஒன்றும் செய்யமாட்டோம். அவர்கள் விரும்பியபடியே நடப்போம்” என்று நேர்த்தி வைத்தனர்.
பின்னர் அங்கேயுள்ள ஒரு பெண்ணை அழைத்து வந்து பிள்ளைகளைக் கரைக்குக் கொண்டு வந்தனர். பின்னர் அவைகளை அழைத்துக் கொண்டு வரேக்கை கொஞ்சத் தூரத்திலே இரண்டு மூன்று கட்டை இருக்கும். அந்தப் பிள்ளைகள் தண்ணி வேண்டும் என்று கூறினர். பிள்ளைகளை அதிலேயே இருத்திவிட்டு அவர்கள் தண்ணி எடுத்துக் கொண்டு வந்து பார்க்கும் போது ஒரு பிள்ளை சிலையாகி இருந்தது. அவர்கள் மிகவும் கவலையுடன் அந்தச் சிலைக்கு நிழல் செய்து போட்டு மற்றப் பிள்ளையைக் கூட்டிக் கொண்டு ஒரு கால் கட்டை தூரம் சென்றனர். அப்ப அந்தப் பிள்ளை ஒரு இடத்திலை இருந்திட்டுது. இருந்தவுடனே சிறிது நேரத்தில் அந்தப் பிள்ளையின் வலது கை மேல் நோக்கியது. அத்தோட தும்பிக்கை ஒன்றும் வளர பிள்ளை சிலையாகிவிட்டது. இவர்கள் அதுகள் தெய்வங்கள் தான் எண்டு வணங்கிக் கொட்டில் கட்டி இரண்டு கோயில்களாக்கினர்.
முதல் குழந்தை சிலையாகி இருந்த இடத்தில் அமைந்த கோயில் இன்று வல்லிபுரஆழ்வார் கோயில் என்றும், மற்றக் குழந்தை சிலையாய் இருந்த இடத்தில் அமைந்த கோயில் குருக்கட்டு பிள்ளையார் கோயில் என்றும் அழைக்கப்படுகின்றன. இரண்டு தெய்வங்களும் கிழக்கு முகமாகக் கடலைப் பார்த்தபடி அமைந்திருக்கின்றன.
கதை கூறியவர்- திருமதி பொ. கனகம்மா,
நெல்லியடி வடக்கு, கரவெட்டி
10

பாட்டிமார் கதைகள்
ܛܕ
குதிரைக் காவல்
ஓர் ஊரிலை ஒரு இராசா இருந்தார். ஒருநாள் அவர் தன்னுடைய மந்திரியையும் அழைச்சுக் கொண்டு காட்டிற்கு வேட்டையாடப் புறப்பட்டார். இராசா போகும்போது ஓர் உயர் சாதிக் குதிரையிலேயே சென்றார். இருவரும் பகல் முழுவதும் திரிந்து வேட்டையாடினர்.
இரவு வந்ததும் இராசா சொன்னார் “மந்திரி இன்றைக்கு அரண்மனைக்குப் போகமுடியாதளவிற்கு களைத்துப் போனோம். ஆகவே இங்கை ஒரிடத்தில் தங்கிவிட்டு விடியப்போவம்” என்றார்.
மந்திரியும் அதற்கு உடன்பட்டார்.படுப்பதற்கு ஒரு இடத்தைத் தெரிவு செய்தார்கள்.பின்பு இராசா எண்ணினார். இருவரும் தூங்கிவிட்டால் தம்முடைய உயர் சாதிக் குதிரைகளை யாராவது திருடிக்கொண்டு போட்டால். இதனால் மந்திரிக்குச் சொன்னார். ‘மந்திரி இருவரும் தூங்கிவிட்டால் குதிரையை யாராவது கொண்டுபோய் விடுவார்கள். ஆகவே நீ தூங்காமல் இருந்து குதிரைகளைப் பார்த்துக்கொள். நான் படுத்து நித்திரை கொள்கிறேன்.” என்றார்.
மந்திரிக்கு நித்திரை வந்தாலும் இராசாவின் சொல்லைத்தட்டக் கூடாது என்றெண்ணி சம்மதிப்பது போல தலையசைத்தார். மந்திரி சிலவேளை நித்திரை கொண்டு விடுவார் என்ற எண்ணத்தில் இராசா
11

Page 11
திருமதிசின்னத்தம்பி இராசமணி நினைவு வெளியீடு
சொன்னார் ‘மந்திரி நித்திரை வராமல் இருக்க ஏதாவது நினைத்துக் கொண்டு கிட” என்றார். மந்திரியும் “சரி” என்றார்.இருவரும் படுத்திருந்தாலும் இராசா தான் நித்திரை கொண்டார்.
நித்திரை கொண்ட ராசா சிறிது நேரத்தில் அருண்டு எழும்பியவுடன் மந்திரி முழிப்போ என்பதை சோதிக்க விரும்பி “மந்திரி என்னத்தைப் பற்றி யோசிச்சுக் கொண்டு கிடக்கிறாய்” என்றார். அதற்கு மந்திரி சொன்னார் ‘கடல்லை இருக்கிற உப்பை யாராவது கொண்டுவந்து கொட்டுகிறார்களோ? அல்லது தன் பாட்டிலை விளையுதோ” என்று சிந்திக்கிறேன் என்றார். இதைக் கேட்ட இராசா மந்திரி முழிப்பாய்த் தான் இருக்கிறார் என்று எண்ணியபடி சொன்னார். ‘மந்திரி கடல்லை உப்பு தன்பாட்டிலை தான் விளைகிறது’ என்று. இதன் பின்பு இராசா மறுபடியும் தூங்க ஆரம்பித்தார், மந்திரி யோசிச்சபடி கிடந்தார். மறுபடியும் இராசா எழும்பி மந்திரியைச் சோதிக்க எண்ணி ‘மந்திரியாரே என்னத்தைப் பற்றி யோசிக்கிறீர்,என்று கேட்டார் அதற்கு மந்திரி சொன்னார் ‘இந்த வானத்திலை நிக்கிற நட்சத்திரங்கள் தன்பாட்டிலை நிக்கின்றதோ? அல்லது யாராவது கொண்டு வந்து ஒட்டினார்களோ?என்று யோசிக்கிறன் என்றார். இதைக் கேட்ட இராசா மந்திரியார் நித்திரை கொள்ளாமல் யோசிச்சபடி தான் இருக்கிறார் என்றெண்ணிச் சொன்னார்.” ‘மந்திரியாரே வானத்திலை நட்சத்திரங்கள் தன்பாட்டிலைதான் நிக்குது” என்று. இதன் பின்பு இராசா மீண்டும் படுத்துவிட்டார்.
கனநேரத்தின் பின் எழுந்த இராசா, பொழுது விடியப்போவதை உணர்ந்தார். எண்டாலும் மந்திரி இப்பவும் முழிப்போ என்று சோதிக்க விரும்பி “மந்திரியாரே இப்ப என்னத்தைப் பற்றி யோசிக்கிறீர்” என்று கேட்டார். அதற்கு மந்திரி சொன்னார் “கட்டிக்கிடந்த எங்கடை குதிரைகள், தன் பாட்டிலை அவிழ்த்துக் கொண்டு போனதோ?அல்லது யாராவது அவிழ்த்துக் கொண்டு போனார்களோ” என்று யோசிக்கிறன் என்றார். இதைக் கேட்ட இராசாவிற்கு என்ன பதில் கூறுவதென்று முடியவில்லை. மந்திரியைப் பேசவும் முடியாமல் அவரையும் அழைச்சுக் கொண்டு நடந்தே அரண்மனையை அடைந்தார்.
கதைகூறியவர்-திரு.க.ஆனந்தநடராசா,
மருதனார்மடம்,கன்னாகம்.
12
 

பாட்டிமார் கதைகள்
வெண்ணெய் தின்ற குறுங்குகள்
இரண்டு குரங்குகளுக்கு  ெவ கு நா ட க ளா க
6) 6) 6OI 6) 601 L
எவ்வளவு நன்றாயிருக்கும் என்று ஆசையாகக்
கூறிவந்தன.
இது வரவர அதிகமாகிக் கொண்டே வந்தது. கடைசியாக இரண்டு குரங்குகளும் ஆசையைக் கட்டுப்படுத்த முடியாமல் கடைத்தெருவுக்குச் சென்றன. அங்கே வெண்ணெய்யும் அதனுடன்
சாப்பிடப் பாணும் வாங்கி வந்தன.
வீடு வந்ததும் இரண்டு குரங்குகளுக்கும் வெண்ணெய் சாப்பிடமனம் வரவில்லை. ஏனெனில் வெண்ணெய்யைச் சாப்பிட்டால் அதுமுடிந்து விடுமே என்று வருந்தின. இதற்கு என்ன செய்யலாம். வெண்ணெய் சாப்பிடவும் வேண்டும். அது முடியாமலும் இருக்க வேண்டும். இரண்டு குரங்குகளும் வெகு நேரமாக யோசனை செய்தன.
13

Page 12
திருமதி.சின்னத்தம்பி இராசமணி நினைவு வெளியீடு
அப்போது ஒரு குரங்கு 0நாம் கொஞ்சம் கொஞ்சமாக வெண்ணெய்யைத் தொட்டுச் சாப்பிட்டால் அது கன நாளுக்கு இருக்கும்தானே0 என்றது. அதற்கு மற்றைய குரங்கு 0அப்படிச் செய்தாலும் கடைசியில் அதுமுடிஞ்சுதானே போகும். வெண்ணெய்க் கட்டியைத் தூக்கிவிட்டு அதனைப்பார்த்துப்பார்த்துச் சாப்பிட்டால் அதுவும் முடியாது. நாமும் ஆசையைத் தீர்த்துக் கொள்ளலாம் என்றது. பின் ஒரு பாண்துண்டை எடுத்து வெண்ணெய்க்குக் கிட்ட கொண்டுபோய் வெண்ணெய்யில் தொடாமல் திருப்பிக் கொண்டுவந்து வாயில் வைத்தது. இவ்வாறு வெண்ணெய் சாப்பிடுவதுபோல் பாசாங்கு செய்தது. இப்படிச் செய்தால் வெண்ணெய்யும் அப்படியே இருக்கும்தானே என்று மகிழ்ந்தது. மறுகுரங்கும் அப்படியே செய்தது.
இவ்வாறு இரு குரங்குகளும் மாறிமாறிப்பாணையே தின்றன. ஆனால் வெண்ணெய்யும் அப்படியே இருக்கவல்லவா வேண்டும். ஆனால் கட்டில் இருந்த வெண்ணெய் தானாக உருகி கீழே வழிந்தது. இதனைக் கண்டு மனம் நொந்த குரங்குகள் நிலத்தில் வழிந்த வெண்ணெய்யை வீழ்ந்து கிடந்து நக்கிச் சாப்பிட்டன. உண்ணாச் சொத்து மண்ணாய் போகும் என்றறியாக் குரங்குகள்
தங்கள் செயலுக்காக வருத்தம் உற்றன.
கதைகூறியவர் - திரு சி. மகேஸ்வரன்,
இரண்டாம் வட்டாரம், மண்டைதீவு
14

பாட்டிமார் கதைகள்
பன்றித்தலைச்சி அம்மன்
மட்டுவில் அம்மனைத்தான் "பன்றித்தலைச்சி அம்மன்’ என்று
கூறுவர். அந்த அம்மனின் புதுமையால்தான், இந்த அம்மனுக்கு அப்படிப் பெயர் வந்தது.
வெள்ளாளர் தான் மட்டுவிலில் உயர் சாதி. அவர்களுக்கு அடிமை வேலை செய்பவர்கள் பலர். வெள்ளாளரிடம் பெரிய பெரிய மாட்டுப் பட்டிகள்
இருந்தன.
அடிமை வேலை செய்பவர்களுக்கு அந்த மாட்டுப் பட்டிகளில்தான் கண். ஒவ்வொரு நாளும் மாடுகள் களவு போய்விடும். இந்தக் களவைச் செய்யிறது அடிமைகள் தான். இந்தக் களவை கையும் மெய்யுமாகப் பிடிக்க வேண்டும் என்று வெள்ளாளர் திட்டம்போட்டனர். ஒரு நாள் ராத்திரி பொல்லுகளுடன் அடிமைகளின் குடிலை நோக்கிப் போயினர். அப்ப அடிமைகள் ஒரு மாட்டை வெட்டிக் கொண்டிருந்தாங்கள். வெள்ளாளர் வருகினம் எண்டு ஒருத்தன் சொல்ல, வெட்டின தலையைக் கொண்டு போய் ஒரு குடிலுக்கை ஒளித்து வைத்தார்கள். ஒரேபயம். இப்ப கட்டாயம் மாட்டிக் கொள்ளப் போகிறம் எண்டு ஒவ்வொருத்தனும் நடுங்கிக் கொண்டிருந்தாங்கள்.
மாட்டைக் களவெடுத்துப் போட்டம் அவங்கள் என்ன செய்யப்போறாங்களோ? இண்டைக்கு எங்கடை குடில் எல்லாம் சரிதான்
15

Page 13
திருமதி.சின்னத்தம்பி இராசமணி நினைவு வெளியீடு
எல்லாத்தையும் எரிக்கத்தான் போயினம். எண்டு அடிமைகள் பயந்து கொன்டிருந்தாங்கள். கடைசியிலை தங்களுடைய அம்மனை நோக்கி “தாயே நீ தான் எங்களைக் காப்பாத்த வேண்டும். நீ எங்கடை உண்மையான தெய்வமாக இருந்தியெண்டால் குடிலுக்கை இருக்கிற மாட்டுத்தலை பன்றித்தலையாக மாற வேண்டும்’ என நேர்ந்தனர்.
வெள்ளாளர் வந்தாங்கள். எல்லா வகை குடிமைகளும் பயத்திலை *கப்சிப்” என்று கைகட்டிநின்றாங்கள். வெள்ளாளர் ஒவ்வொரு குடிலாகத் தேடினர். கடைசியில் ஒரு குடிலில் இருந்து தலையை வெளியாலே கொண்டு வந்தாங்கள். அது பன்றித்தலையாகவே இருந்தது. வெள்ளாளருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பேசாமல் போய்விட்டான்கள்.
சரியான சமயத்தில் தங்களைக் காத்த அம்மனுக்கு மடை வைத்தனர். மாட்டுத்தலையை பன்றித்தலையாக மாற்றியது அந்த அம்மன் தானே. அதாலைதான் இந்த அம்மனுக்கு பன்றித்தலைச்சி அம்மன் என்று பெயர் வந்தது. கதை கூறியவர் :- திரு சு. செல்லத்துரை,
கனகம்புளியடி, சரசாலை.
16

பாட்டிமார் கதைகள்
ருகை வாங்கிய பேய்
ஒரு இடத்திலை இரண்டு சகோதரியள் இருந்தினமாம். அவையளில் அக்கா பணக்காரி, தங்கச்சி கஷ்டப்பட்டவள். ஒரு நாள் கலியான வீட்டுக்குப் போறதுக்குத் தங்கச்சி அக்காவிட்ட நகையைத் தரச் சொல்லிக் கேக்கிறதுக்குப் போனா. அங்கை போய் “அக்கா நாளைக்கு விடியப்பறம் ஒரு கலியான வீட்டுக்குப் போகவேணும். விடிய நான் கூப்பிடேக்கை உன்ரை நகையைத்தா” என்று சொல்லிட்டுப் போயிட்டாள்.
அவையள் இருவரும் இரவு கதைச்சதைப் பேய் கேட்டுவிட்டது, அடுத்தநாள் விடியப்புறம் “அக்கா,அக்கா உன்ரைநகையைத்தா” எண்டு கூப்பிட்டு, தமக்கையிட்ட நகையை வாங்கிக் கொண்டு அது போயிற்றுது. இதைப் பற்றித் தெரியாத தங்கச் சி கொஞ்ச நேரத்தாலை நித்திரையாலை எழும்பிவந்து “அக்கா உன்ரை நகையைத் தா” எண்டு கேட்டாள். இதைக் கேட்டோடன தமக்கைக்குக் கோபம் வந்துட்டுது. “என்னடி சொல்லுறாய்? இப்ப தானே என்னைக் கூப்பிட்டு நகை வாங்கினாய். பிறகென்ன கேட்கிறாய்?” எண்டு கத்தத் தொடங்கினா. அதைக் கேட்ட தங்கச்சி “ஏனக்கா பொய் சொல்லுறாய்? நான் இப்ப தானே எழும்பிவாறன். நீஎப்ப தந்தனி என்னட்டை”என்று கேட்க, இரண்டு பேருக்கும் சண்டை தொடங்கிற்றுது. இவையள் இரண்டு பேரும் சண்டை பிடிக்கிறதைப் பார்த்துக் கொண்டிருந்த தங்கச்சியின்ரை புருஷன் இதிலை என்னவோ இருக்கவேணுமென்று நினைச் சுக் கொண்டு வெளியிலை போயிட்டான். அவன் வெளியிலை எங்கையோ போயிட்டு
17

Page 14
திருமதிசின்னத்தம்பி இராசமணி நினைவு வெளியீடு
வரும் போது மாலையாகி விட்டது சுடலைப்பக்கத்து றோட்டாலை வரேக்கை நகையை வேண்டிக்கொண்டு போன பேய் மற்றப் பேய்களுடன் சேர்ந்து நகையளை எறிஞ் செறிஞ்சு ஆடின. அதோடை நகையை வாங்கின பேய்,
அக்கா அக்கா என்றன்,ஏனெண்டு கேட்டா, கொக்கியையும் தாலியையும் தாவேனென்றேன் தந்தே விட்டா தன்னானே தந்தே விட்டா தன்னான்ே எண்டு சொல்லிப்பாட, மற்றப் பேய்களும் சேர்ந்து பாடி ஆடின.
இதைக் கேட்டுக் கொண்டு வந்த தங்கச்சியின்ரை புருஷன் “நகையள் வாங்கிக் கொண்டு போனது இந்தப் பேயஸ் போலதான் இருக்கு. அங்கை அதுகள் நகைக்குச் சண்டை பிடிக்குதுகள் இதுகளிட்டை என்னெண்டு நகையை வாங்குறது எண்டு யோசிச்சிட்டு, தன்ரை உடுப்புக்கள் எல்லாத்தையும் கழட்டிப் போட்டிட்டு பேயளோட சேர்ந்து ஆடத்தொடங்கினான். இதைப் பேயஸ் கவனிக்கேலை ஒவ்வொருத்தரா மாறி மாறி நகையளை எறிஞ்செறிஞ்சு ஆடிக் கொண்டிந்த பேய்கள் கடைசியாக இவன்ரை கையிலை நகையளைப் போட்டன. அவன் ரை கையிலை நகை வந்ததும் அவன் மெல்ல மெல்லமாக ஆடி ஆடி நகையைக் கொண்டு வெளியாலை வந்து கொஞ்சத் தூரம் வந்ததும் கெதியாய் ஓடி வீட்டுக்கு வந்துசேர்ந்தான். இதைப் பேயஸ் கவனிக்கேல்லை. அவையள் நகையை மறந்து ஆடிக்கொண்டிருந்தன.
அவன் வீட்டுக்கு வந்த போது கூட அவையளின்ரை சண்டை முடியவில்லை. அவன் நகையைக் கொண்டு வந்து “மச்சாள் இந்தா இருக்கு நகை. நீங்கள் ஏன் சண்டை பிடிக்கிறியள்? இது பேயின்ரை வேலை” எண்டு சொன்னான். நகையைக் கண்ட உடன அவையள் தங்கட சண்டையை விட்டுட்டு என்ன ஏதெண்டு விசாரிக்கத் தொடங்கிச்சினம். அவன் நடந்ததெல்லாத்தையும் சொல்லி இனி இரவிலை, மாலை நேரத்திலை ஒண்டும் கதைக்காதைங்கோ நீங்கள் நேற்று மம்மல் பொழுதிலை கதைச்சதைக் கேட்டு கொண்டிருந்த பேய்தான் வந்து நகையை வாங்கிக்கொண்டு போனதெண்டு சொன்னான். இவ்வளவையும் கேட்ட ரெண்டு பேரும் இரவிலை ஒண்டும் கதைக்கக்கூடாது என முடிவுசெய்து ஒற்றுமையாய் வாழ்ந்தார்கள்.
கதைகூறியவர் - திரு.சி.வில்வரத்தினம்,
கோணங்குளம், கண்டாவளை.
18

பாட்டிமார் கதைகள்
ஒரு ஊரில் ஒரு தாய்க்கு ஒரு மகன் இருந்தான். அவனது பெயர் திருவன். திருவம்பலமென்று அழைப்பார்கள். ஒருநாள் தாய் திருவனைப் பார்த்து திருவா, கொப்பு (தந்தை) எங்கோ போய்விட்டார். எங்கு போனாரென்று
பார்த்துவாவென்று. அனுப்பினாள்.
அவன் தெருவால் போய்க்கொண்டிருந்தான். அங்கு ஒரு வேலிக்கட்டையில் ஓர் கறட்டி ஒணான் இருந்தது. திருவன் அந்த ஒணானைப் பார்த்து ஒணானே ஒணானே இந்த வழியால் அப்பு போனாராவென்று கேட்டான். ஓணான் கீழும் மேலும் ஒருதரம் தலையை ஆட்டிவிட்டு இருந்தது. திருவன் மீண்டும் ஒணானே அப்பு இதாலே போனவராவென்று கேட்டான். ஓணான் தலையை கீழும்
மேலும் ஆட்டியபடியே இருந்தது.
திருவனுக்குக் கோபம் வரவே தடியொன்றை முறித்து ஒணானை அடிக்கப் போனான். ஓணான் கட்டையில் இருந்து பொந்துக்குள் புகுந்து கொண்டது. திருவன் வீட்டுக்குச் சென்று மண்வெட்டியை எடுத்துவந்து வேலிக்கட்டையைப் பிடுங்குவதற்காகக் கிண்டினான். கிண்டும்போது அங்கு திரவியக் கிடாரங்கள் இருக்கக் கண்டான்.
19

Page 15
திருமதி.சின்னத்தம்பி இராசமணி நினைவு வெளியீடு உடனே அதனை எடுத்துச் சென்று தாய்க்குக் காட்டி நடந்த வரலாற்றையும் கூறினான். மகனின் இயல்பறிந்த தாய் இவன் எல்லோருக்கும் இதனைச் சொல்லிவிடுவான் என்றெண்ணி அன்று பணியாரங்கள் சுட்டு முற்றமெல்லாம் வீசி எறிந்தாள். எறிந்துவிட்டு “திருவா இங்கு ஓடிவந்து பார். பணியார மழை பெய்கின்றது” எனக் கூறினாள். திருவன் பாய்ந்து வந்து பணியாரம் எல்லாம் பொறுக்கிச் சாப்பிட்டான்.
பின்னர் மறுநாள் ஒரு வீதிவழியே சென்று கொண்டிருந்தான். அந்த வழியால் இருவர் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் திருவனைப் பார்த்து “திருவா இந்த வழியால் எமது மாடுகள் சென்றதைக் கண்டாயா?” என்று கேட்டார்கள். திருவன் அவர்களது கேள்விக்குச் செவிசாய்க்காது “அண்ணன்மாரே நான் திரவியம் எடுத்தனான்’ என்று கூறினான். அவர்கள் வியப்பு மேலிட எப்பொழுதடா என்று கேட்டார்கள். திருவ்ன் சொன்னான் ‘பணியார மழை பெய்ததே அண்டைக் குத் தான் என்று கூறினான்.திருவனுக்கு மூளை பிழையென்று எண்ணிக் கொண்டு அவர்கள் சென்றுவிட்டார்கள்.
திருவன் அந்த இடத்திலேலே நின்றான். அந்த வழியால் அந்த ஊர் இராசாவின் வேலைக்காரி தண்ணியள்ள வந்தாள். அவள் தண்ணி அள்ளிக் கொண்டு நிற்கும்போது திருவன் அங்கு போய் தனக்கு குடிக்கக் கொஞ்சம் தண்ணி தரச்சொன்னான். அவள் மறுக்கவும் அவளைக் கிணற்றினுள் தள்ளி விழுத்தி விட்டான். விழுத்தி விட்டு வீட்டுக்குப் போய் தாயிடம் சொன்னான். அம்மா இராசாவின் வேலைக்காரி தண்ணி அள்ளினாள். தண்ணி கேட்டேன் தர மறுத்தாள். கிணற்றினுள் தள்ளி விழுத்திவிட்டு வந்திருக்கிறேன் என்றான். தாய் உடனே ஓர் ஆட்டுக் கிடாயை அடித்துக் கொண்டுபோய் கிணற்றுள் போட்டுவிட்டு அதனை எடுக்கத் தெரியாது வெட்டித் தாட்டுவிட்டாள். இப்படியாக திருவன் பலவிதமான செயல்களைச் செய்து வந்தான். இவற்றையெல்லாம் பொறுக்கமாட்டாது தாயானவள் திருவனை வீட்டை விட்டே துரத்தி விட்டாள்.
திருவன் வீதி வழியால் சென்று கொண்டிருந்தான். அந்த வழியால் ஒரு கள்வர் கூட்டம் வந்து கொண்டிருந்தது. திருவன் தானும் அவர்களுடன் ஒன்றாகச் சேர்ந்து அங்குள்ள ஒரு வீட்டில் களவெடுக்கச் சென்றான். கள்வர் எல்லோரும் ஒவ்வொரு பொருளாக
20

பாட்டிமார் கதைகள் வீட்டில் நுழைந்து தேடினர். திருவன் சமையலறைக்குச் சென்று பார்த்தான். அங்கு அடுப்பிலே பால்சட்டி இருந்தது. அருகிலே ஒரு பாட்டி உறங்கிக் கொண்டிருந்தாள். திருவன் அந்தச் சுடுபாலினை அகப்பையால் அள்ளும்போது அந்தப் பாட்டி மெதுவாக அசைந்தாள். உடனே சுடுபாலைப் பாட்டியின் வாயினுள் ஊத்தினான். பாட்டி ஐயோ, அம்மா ஓடி வாருங்கள் கள்வர்கள் என்று சத்தமிட்டாள். உடனே கள்வர் எல்லோரும் கால்தெறிக்க ஓடினார்கள். திருவனும் பின்னாலே ஓடினான். எல்லோரும் ஓரிடத்தில் கூடினார்கள். இனிப் போகப் போகும் இடத்துக்கு நீ வரவேண்டாம். என்று கூறி திருவனைத் துரத்தி விட்டு ஒரு காளி கோயிலுக்குச் சென்றார்கள். திருவன் மீண்டும் அவர்கள் பின்னாலே சென்றான்.
காளிகோயில் அண்மித்தது. எல்லோரும் காளிகோயிலினுள் புகுந்து கொண்டார்கள். அங்கு காளிக்குப் போட்டிருந்த அணிகலன்கள் எல்லாவற்றையும் எடுத்தார்கள். பின்னால் வந்த திருவன் கோயிலினுள் புகுந்து தேடிப்பார்த்தான். ஒரு பொருளும் அவன் கையில் அகப்படவில்லை. அங்கு கட்டப்பட்டிருந்த உடுக்கு மட்டுமே அவனது கையில் அகப்பட்டது. எடுத்தான் உடுக்கை. “கடகடவென்று’ அடிக்கத் தொடங்கினான். கள்வர் வந்து விட்டனர் என்றறிந்த ஊரார் எல்லோரும் ஓடி வந்தனர். கள்வர்கள் ஓடினார்கள். ஊர் மக்கள் துரத்தினார்கள். திருவனும் உடுக்கை அடித்துக் கொண்டே கள்வருடன் ஒடிக்கொண்டிருந்தான். அதனால் ஊர் மக்கள் கள்வர்கள் செல்லுமிடத்தை இலகுவில் கண்டுபிடிக்க முடிந்தது. துரத்தி கள்வர்கள் அனைவரையுமே பிடித்து விட்டனர். திருவன் ஒருவாறு தனது விகடத்தால் அவர்களிடமிருந்து தப்பிக் கொண்டு மீண்டும் தனது தாயிடம் சென்றடைந்தான்.
கதை கூறியவர் :- திரு சி. சவரிமுத்து, நீதிமன்ற வீதி, மல்லாகம்.
21

Page 16
திருமதிசின்னத்தம்பி இராசமணி நினைவு வெளியீடு
கரிக்குருவியும் காக்காயும
ஒரு காட்டில் கரிக்குருவி ஒன்றும் காக்காயும், அக்காவும் தங்கையும் போல வாழ்ந்து வந்தன. கரிக்குருவி அக்காவாகவும், காகம் தங்கையாகவும் இருந்து வாழ்ந்து வந்தன. காகம் மண்ணினால் ஒரு வீடு கட்டி வாழ்ந்து வந்தது. கரிக்குருவி தடியும், தண்டினாலும் வீட்டினைக் கட்டி வாழ்ந்து வந்தது. ஒருநாள் பெரும் காற்றுடன் மழையும் பெய்தது. அதனால் காக்கையின் மண்வீடு கரைந்து விட்டது. காகத்துக்கு இருக்க வீடின்றிப் போகவே அக்கா வீட்டுக்கு போவோமென்றெண்ணியது. மழையில் நனைந்து கொண்டே பறந்து சென்றது.
கரிக்குருவிகதவைச் சாத்திவிட்டு தனது வீட்டினுள் இருந்து பணியாரம் சுட்டது. காகம் பறந்து வந்து கதவிலே தட்டியது. அக்காவே அக்காவே கதவைத்திற காற்றடிக்குது, புயலடிக்குது, கல்லும் முள்ளும் வந்து கண்ணுக்குள்ளே குத்துது கதவைத் திற கதவைத்திறவென்றது. அதற்கு கரிக்குருவி சொன்னது வாறன் தங்கையே இப்பொழுதுதான் பணியாரம் சுடுகின்றேனென்றது. காகம் மீண்டும் அக்காவே காற்றடிக்குதுமழையும் பெய்யுதுகல்லும் முள்ளும்
22
 

SuuSuSuSuuSuuSSSLSSSSSSLSLSLSLSLSLSLSLSLS
பாட்டிமார் கதைகள் வந்து கண்ணுக்குள் குத்துது கதவைத் திற கதவைத்திறவென்றது கரிக்குருவி சொல்லியது இப்பொழுதுதான் பணியாரம் சுட்டு முடியுது கொஞ்சம் பொறு கொஞ்சம் பொறு என்றது. இப்படியாகக் கரிக்குருவி பணியாரம் சுட்டு முடிந்ததும் எடுத்து மேலேயுள்ள பலகை மீது வைத்துவிட்டு வந்து கதவைத் திறந்தது. காக்காவும் உள்ளே வந்து ஈரமுணர்த்திக் கொண்டது. பின்பு இருவரும் படுக்கைக்காக ஆயத்தம் செய்தார்கள். அப்போது கரிக்குருவி கேட்டது. தங்கையே எங்கே நீ படுக்கப் போகிறாயென்று. காகம், பணியாரப்பெட்டி கிடந்த பலகையைக் காட்டி அதன் மேல் படுக்கப் போவதாகக் கூறியது. கரிக்குருவியும் சம்மதம் கொடுத்தது. நடு இரவு நேரம் காக்காய் எழுந்து பலகாரப் பெட்டியைத் திறந்து பலகாரத்தைக் கடித்து உண்டது. உண்ணும்போது (மொடுக் மொடுக் L என்று சத்தம் கேட்கவே கரிக்குருவி எழுந்து என்ன தங்காள் கடிக்கிறாயென்று கேட்டது. காகம் சொன்னது உதாலே போன ஆளிடம் பாக்குப் பிளவொன்று வாங்கினன். அதுதான் கடிக்க முடியாதிருக்கின்றதெனக் கூறியது. கொண்டு வாவன் நான் கடித்துத்தல்லாமென்று கரிக்குருவி கேட்க, கடித்துப் போட்டன் கடித்துப் போட்டனென்று காகம் கூறியது. பின் சொற்ப நேரத்தில் அடுத்த பணியாரத்தைக் காகம் கடித்தது. உதென்ன கடிக்கிறாய் என்று கரிக்குருவி கேட்டது. உதாலே போனவனிடம் ஒரு போயிலைக்காம்பு வாங்கினன். அதுதான் கடிக்கேலாமல் இருக்கின்றது எனக் காகம் கூறியது. இப்படியாகக் கூறிக்கூறி விடிவதற்கிடையில் எல்லாப் பணியாரத்தையும் காகம் திண்டு முடித்தது. விடிந்ததும் காகம் பறந்து விட்டது. கரிக்குருவி எழுந்து சென்று முகம் கழுவி விட்டு வந்து பணியாரப் பெட்டியைத் திறந்து பார்த்தது. பணியாரம் ஒன்றையும் காணவில்லை. உடனே இதுகாகத்தின் வேலைதான் என்றெண்ணிக்காகத்துக்குத் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டுமென நினைத்துக் கொண்டது.
மறுநாள் கரிக்குருவி சுடுதண்ணி வைத்தது. காகம் பறந்து வந்ததும் தங்கச்சி தங்கச்சி இரவு முழுக்க மழையில் நனைந்தனி இன்றைக்கு சுடுதண்ணிரில் நீராட வேண்டும் எனக் கூறியது. காகப் பிள்ளையும் சுடுநீரில் நீராட இறங்கியது. உடனே வதங்கி இறந்தது. கரிக்குருவி சந்தோசத்துடன் வாழ்ந்து வந்தது.
கதை கூறியவர்ஹ- திரு வ. ஐயனார், ஆறுமுகம் வீதி, வட்டக்கச்சி, கிளிநொச்சி
23

Page 17
திருமதி.சின்னத்தம்பி இராசமணி நினைவு வெளியீடு
வழிப்போக்கனின் தந்திரம்
ஒரு நாள் ஒரு குடியானவன் வீதிவழியே சென்று கொண்டிருந்தான். N அந்த வழியிலே ஒரு வாழைத் \ தோட்டத்தில் தோட்டக்காரன் வாழைப்பழக்குலை ஒன்றுக்கு காவல் செய்து கொண்டிருந்தான்.
அவன் பசியினால் வீடு செல்ல விரும்பினான். ஆனால் வாழைக் குலையை விட்டுச் சென்றால் யாரும் கொண்டு போய்விடுவார்களே என்று எண்ணியிருந்தான்.
அப்பொழுது அங்கே வந்த குடியானவனைக் கண்ட தோட்டக்காரன் யாரப்பா நீ? உன் பெயர் என்ன? என்று கேட்டான். அதற்கு அவன் என்ர பெயர் தோலிருக்க சுளை தின்னி’ என்றான். தோட்டக்காரனும் அவனைப் பார்த்து "நீ இந்த வாழைக்குலைக்கு காவலாக இரு, நான் வீட்டை போய் சாப்பிட்டு உனக்கும் கொண்டுவாறன்’ என்று கூறிவிட்டுச் சென்றான். குடியானவன் தோலை குலையுடன் இருக்கவிட்டு பழத்தை மட்டும் தின்னத் தொடங்கினான். தோட்டக்காரன் உணவும் கொண்டு திரும்பி வந்த போது, வாழைக்குலையில் தோல் மட்டும் இருக்க பழங்கள் இல்லாதிருக்கக் கண்டான்.
 

போட்டிமார் கதைகள்
உடனே அவன் ‘என்னப்பா தோல் மட்டும் இருக்கின்றன. பழத்தைக் காணோமே எங்கே?' என்று கேட்டான். அதற்கு குடியானவன் ‘நான் தான் சொன்னேன் ஐயா தோலிருக்க சுளை தின்னி என்று’ என் மீது என்ன குற்றம் என்று கேட்டான். தோட்டக்காரனும் செய்வதறியாது
உணவையும் கொடுத்து துரத்தி விட்டான். گی
அங்கிருந்து கிளம்பிய குடியானவன் ஒரு வயல் பக்கமாக சென்று கொண்டிருந்தான். வயலில் நெல்வெட்டி G3UrTUnITab.
வைக்கப்பட்டிருந்தது. அவ்வயல்காரன் அதற்கு காவல் இருந்தான். அவனுக்குப் பசியாக இருந்ததால் அப்பக்கத்தால் சென்ற குடியானவனைக் கூப்பிட்டு “நீ யார்? உன் பெயர் என்ன? “என்று கேட்டான் அவனோ “என் பெயர் பொரியப் பொரிய பொறுக்கித்தின்னி. நான் அயலூருக்குப் போகிறேன்” என்றான்.அதற்கு அவ்வயற் காரன் “இப்போருக்கு காவலாக இரு நான் வீட்டை போய் சாப்பிட்டு வாறன் பின்பு நீ போகலாம்.” என்றான் அவனும் அதற்கு சம்மதிக்கவே வயற்காரன் வீடு சென்றான்.
குடியானவன் வயற்காரன் சென்றதும் நெருப்புப் பெட்டியை எடுத்து தட்டி ஒரு போருக்குத் தீ வைத்தான். உடனே அது எரிந்தது. நெல்லும் பொரிந்து பொரிந்து எரிந்தது. அதனை குடியானவன் பொறுக்கித் தின்று கொண்டிருந்தான். திரும்பி வந்த வயற்காரன் “இதென்னப்பா இது? போர் எரிகிறது நீ உன்பாட்டில் தின்று கொண்டிருக்கிறாயே?’ என்றான். அதற்கு அவன் நான் தானே சொன்னேன் “பொரிய பொரிய பொறுக்கித்தின்னி” என்று மறந்துவிட்டீரா? என்று கேட்டான். வயற்காரனும் ஒன்றும் செய்ய முடியாது. அவனைக் கலைத்துவிட்டான்.
இவ்வாறு சென்ற குடியானவன் அவ்வுபூர் அரண்மனையை அடைந்தான். உள்ளே செல்ல முயலுகையில் காவற்காரன் அவனை அங்கே அரசனின் மகளுக்கு கலியாணம் நடக்கிறது என்று கூறித் தடுத்தான். அதற்கு அவன் “நான் எடுப்பதில் பாதி உனக்குத் தாறேன்” என்று கூறி உள்ளே சென்றான். அங்கு கல்யாணம் நடந்து கொண்டிருந்தது. பந்தலில் வைக்கப்பட்டிருந்த பலகாரங்களைக் கண்ட குடியானவன் அதனருகே இருந்து உண்ணத் தொடங்கினான். இதனைக் கண்ட சேவகர்கள் அவனைப் பிடித்து யார் நீ? எப்படி இங்கு வந்தாய் என்று அடிக்கத் தொடங்கினார்கள். அதற்கு அவன் “என்னை இங்கு ஒருவன் விட்டான். அவனுக்கு எனக்கு கிடைப்பதில் பாதி தாறேன் என்று கூறிவிட்டு வந்தேன் அப்படியிருக்க எனக்கு மட்டும் ஏன் அடிக்கிறீர்கள்? வாருங்கள் காட்டுகிறேன்” என்று அவர்களை அழைத்துச் சென்றான். வாயிலில் நின்ற காவலாளியைக் காட்டி “இவன் தான் அந்தஅள். எனக்குத் தருவதை அவனுக்கு குடுங்கள்” என்று கூறி அவ்விடத்தை விட்டு ஓடி விட்டான்.
கதைகடறியவர்:திரு.சு.காராளி.நாச்சிமார்கோவிலடியாழ்ப்பாணம்.
25
N

Page 18
திருமதி.சின்னத்தம்பி இராசமணி நினைவு வெளியீடு
пђпшII) ҹОІПТälшII)
ஓர் அரசி தனது அந்தப் புரத்திலே நாயொன்றை வளர்த்து வந்தாள். ஒரு நாள் பிற்பகலில், சிற்றுண்டி சாப்பிடும் போது அவள் சாப்பிடுவதையே அவள் வளர்த்த நாய் பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால் ஒரு சிற்றுண்டி கூட நாய்க்குக் கொடுக்காமல் இராணி முழுவதையும் உண்டு முடித்துவிட்டு ஏப்பமும் விட்டாள்.
இறுதி வரை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த நாய் பெருமூச்சுடன் ஒரு சாபமும் இட்டு விட்டுச் சென்றது. அதாவது ‘அரசிக்குப் பிறக்கும் குழந்தைகள் தனக்கும், தனக்குப் பிறக்கும் நாய்க் குட்டிகள் அரசிக்குமாக மாறிப் பிறக்கவேண்டும் என்பதே அதனுடைய சாபம். சாபமிட்டுச் சென்ற நாய் அதன் பின்னர் அந்தப் புரப்பக்கமே தலைகாட்டவே இல்லை. சிறிது காலத்தில் கருவுற்றிருந்த இராணி மூன்று நாய்க்குட்டிகளை ஈன்றெடுத்தாள். இது அரசருக்கும் பெரும் சங்கடமாகவும் துக்கமாகவும் ஆகிவிட்டது. வெளியே தெரிந்தால் தன் மானம் போய்விடுமே எனப் பயந்து நாய்க்குட்டிகளை வெளியேற்றியதுடன் அவ்விடயம் அரண்மனையில் வேறு யாருக்கும் தெரியாதபடி மறைத்து விட்டார்.
இதேவேளையில் காட்டில் ஓரிடத்தில் அந்த நாய் மூன்று அழகான பெண் குழந்தைகளைப் பெற்றது. அதற்கு மனிதக் குழந்தைகள் பிறந்ததில் மிக்க மகிழ்ச்சி. அக்குழந்தைகளை ஆபத்து நேராதபடி மறைவான ஓரிடத்தில் வைத்து மிகப் பாதுகாப்பாக வளர்த்து வந்தது. இரைதேடப் போகும் சமயங்கள் தவிர மற்றைய நேரங்களில் குழந்தைகளுக்கு அருகில் அவற்றுக்கு ஆபத்து நேராதபடி பார்த்து வந்தது. குழந்தைகளோ ஒன்றுக்கொன்று சற்றேனும் அழகிலோ, சுட்டித்தனத்திலோ குறைந்தவர்களாகக் காணப்படவில்லை.
26
 

பாட்டிமார் கதைகள் குழந்தைகள் வளர்ந்து மிகவும் அழகாக இருப்பதைக் கண்டு நாயானது குழந்தைகளை யாரேனும் கடத்திச் சென்றுவிடுவார்கள் எனப் பயந்தது. அதனால் தன் குழந்தைகளின் உடலிலே கரியைத் தேய்த்துப் பூசி அவர்களின் அழகு தெரியாதபடி செய்திருந்தது.
ஆனால், ஒரு நாள் இதற்கும் ஆபத்து ஏற்பட்டது. அயல் நாடுகளிலுள்ள மூன்று அரச குமாரர்கள் வேட்டையின் நிமித்தம் அக்காட்டிற்கு வந்தனர். தாக மிகுதியால் அலையும் வேளையிலே, இம் மூவரையும் கண்டு அவர்களிடம் சென்று நீர் வாங்கிக் குடிக்க எண்ணி அங்கு சென்றனர். முதலாவது அரசகுமாரன் குடித்துவிட்டுத் தன் குவளையிலிருந்த மிகுதி நீரை அப்பெண்ணின் முகத்தில் வீச, அவளின் முகத்தில் இருந்த கரி நீங்கி வெள்ளையாகியது. இது போலவே ஏனைய இருவரும் தம் சொந்த நிறமாகினர். உடனே அரசகுமாரர்கள் அம்மூவரையும் தம் நாட்டுக்குக் கூட்டிச்சென்று மணந்து கொண்டனர்.
இரை தேடச் சென்ற நாய் திரும்பி வந்து பார்த்த போது பிள்ளைகளைக் காணாததால் மிகவும் மனம் வருந்தியது. பின் அவர்கள் சென்ற பாதை வழியே போய் முதல் மகளின் நாட்டை எய்தியது. அங்குள்ள அந்தப் புரத்தில் மகளிருப்பதைக் கண்டு அவளிடம் செல்ல நினைத்தது. ஆனால் அக்காரியம் கை கூடவில்லை. மகள் தனது தாயான நாயை அடித்து விரட்டி விட்டாள். அந்நாய் துக்கத்துடன் இரண்டாவது மகளின் வீட்டை அடைந்தது. அங்கும் அதற்குத் தகுந்த மரியாதை கிடைக்கவில்லை. மகள் அந்நாயினை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. பழைய சாதத்தை அதற்கு உண்ணக் கொடுத்தாள். நாய் தன் தலைவிதியை எண்ணி நொந்தபடி மூன்றாவது மகளின் நாட்டுக்குப் பயணமாகியது. நெடுந்தூரம் நடந்ததால் ஏற்பட்ட களைப்பும், பசி மயக்கமும் ஒன்றுசேரப் பஞ்சடைந்த கண்களுடன் தள்ளாடியபடி மூன்றாவது மகளையடைந்தது. தன் தாயாகிய நாயைக் கண்டதும் மூன்றவது மகளுக்கு மகிழ்ச்சி கரைபுரண்டோடியது. தன் தாயின் களைப்பைப் போக்கப் பால் கொணர்ந்து கொடுத்தாள். தன் தாயைக் கட்டிப்பிடித்து ஆனந்தக் கண்ணிர் உகுத்தாள். தன் கையாலேயே சாதம் ஊட்டிவிட்டாள். ஆனாலும் என்ன பிரயோசனம்? காலங் கடந்துவிட்டதே களைப்பு மிகுதியால் நாயின் கண்கள் இருண்டு கொண்டிருந்தன. அது கதைக்கவே கஷ்டப்பட்டது. மிகப் பிரயத்தனப்பட்டுத் தன் மகளிடம் தான் இறக்கப் போவதையும் இறந்த பின் வெள்ளைத் துணியால் தன்னுடலை மூடித் தோட்டத்திற் புதைக்கும்படியும், பின் ஒரு வாரத்தில் எடுத்துப் பார்க்கும்படியும் கூறிவிட்டு உயிரை விட்டது.
மகளும் தன் தாய் சொன்னபடி செய்துவிட்டு, ஒரு வாரத்தின் பின் பார்த்தாள். நாயின் உடல் தங்கமாக மாறி இருந்தது. அதை எடுத்து வந்து தன் பூசை அறையில் வைத்து வணங்கி வரலானாள்.
கதைகூறியவர் - திரு.வ.கந்தசாமி, தம்பியோடைவதிரி.கரவெட்டி
27

Page 19
திருமதிசின்னத்தம்பி இராசமணி நினைவு வெளியீடு
கஷ்டந்தான்
ஒரு அரசனின் தர்பாரில் பண்டிதர் ஒருவர் இருந்தார். ஒரு நாள் தர்பாரில் கலைகளில் மிகவும் கடினமானது எது என்பது பற்றி விவாதம் மூண்டது. ஒவ்வொருவரும் தமக்குத் தமக்குத் தோன்றியதைக் கூறினார்கள். பண்டிதர் “கலைகளிளெல்லாம் திருட்டுக் கலைதான் மிகவும் கடினமானது” எனச்சொன்னார். அதைக் கேட்ட அரசனுக்கு கடுங்கோபம் வந்துவிட்டது. அவன்,”ஒரு வேலையும் செய்யத் தெரியாதவனின் தொழில் திருட்டு, இதற்கு ஒன்றும் தனிசாமர்த்தியம் தேவை இல்லை” என்று சொன்னான். அதற்குப் பண்டிதர்,’அரசே இதனை நீங்கள் பரீட்சித்துப் பாருங்கள். திருடுவது இலேசான காரியமல்ல. அதுவும் ஒரு கலைதான். அதற்கு நிறைய சாமர்த்தியம் வேண்டும்.இல்லாவிட்டால் திருட முடியாது. திருடப்போனால்அது எவ்வளவு சிரமம் என்று உங்களுக்கே தெரியவரும்’ என்று கூற அரசனும் அவ்வாறே செய்து காட்டுவதாகக் கூறினான்.
அப்போது பண்டிதர் "நீங்கள் அரசரது ஆடைகளை அணிந்து சென்றால், யாரும் எதையும் நீங்கள் எடுத்துப் போக அனுமதிப்பார்கள். எனவே மாறுவேடம் பூண்டுகொண்டு போகவேண்டும். அப்போது தான் திருடனைப்போல இருக்கமுடியும். நீங்கள் திருட விரும்புவதை எவ்வளவு சிரமப்பட்டு அடைய முடிகிறது என்பதும் தெரியும்” என்றார். அரசன் அதற்கும் இனங்கினான்.
அன்றிரவு அரசன் தன் முகத்தில் கறுப்புநிற மையைப் பூசிக் கொண்டு சாதாரண உடைகளை அணிந்துகொண்டு
28
 
 

பாட்டிமார் கதைகள்
பணக்காரர்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்றான். ஆனால், அந்த வீடுகளினுள் நுழைய வழியே இல்லை. வெளியே காவல்காரர்கள் நின்று கொண்டிருந்தார்கள். வீட்டைச் சுற்றிலும் உயரமான வேறு சுவர்களும் இருந்தன.
சரி, சாதாரண திருட்டு ஏதாவது செய்யலாமென எண்ணி அரசன் ஏழைகள் வாழும் பகுதிக்குச் சென்றான். அங்கும் எல்லா வீடுகளின் கதவுகளும் மூடப்பட்டு இருந்தன.
ஒரு குயவனின் வீட்டின்முன் சட்டி, பானைகள், அடுக்கப்பட்டு இருந்தன. அவற்றில் ஒன்றைத் திருடிக் கொண்டு போவது என அரசன் தீர்மானித்துக் கொண்டான். மேலாகவுள்ள பானைகள் மிக உயரத்தில் வைக்கப்பட்டிருந்ததனால் மத்தியில் இருந்த ஒரு பானையை அவன் உருவினான். அவ்வளவு தான் எல்லா சட்டிகளும் பானைகளும் ‘தபதப' என்று கீழே விழுந்து உடைந்தன.
சட்டிகள் உடையும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தவர் ஓடிவந்து மாறுவேடத்தில் இருந்த அரசனைப் பிடித்து அடித்து “ஏண்டா உனக்குப் போயும் போயும் சட்டிதான் திருடக் கிடைத்ததா? ஒரு பானையை எடுத்து இவ்வளவு சட்டி பானைகளை உடைத்து விட்டாயே” எனத்திட்டினர்.
ஒருவாறாக அவர்களிடம் இருந்து தப்பி, அரசன் அரண்மனைக்கு வந்தான். அவன் மறுநாள் பண்டிதரிடம் சென்று “நீங்கள் சொன்னது சரிதான். எல்லாக் கலைகளிலும் திருட்டுக் கலைதான் கடினமானது” என்று ஒப்புக் கொண்டான்.
கதைகூறியவர்-திரு.வ.வசந்தகுமார்,பெரியகல்லாறு,கல்லாறு.
29

Page 20
30

தமிழக நாட்டுப்புறக் கதைகள்
31

Page 21
32

பாட்டிமார் கதைகள்
மேகங்களும் ருதிகளும்
உண்டான கதை
ஒரு ஊர்ல ரெண்டு குருவிக - ஒரு பெங்குருவியும், ஆங் குருவியும் இருந்துச்சி.
அந்தப் பெங்குருவி ஒரு தடவ நெல்லுக் காட்டுக்குள்ள போயி முட்டெ டுடு, குஞ்சுபொறிச்சது. போன சமயம் மாடு மேய்க்கிற பிள்ளைக - விளயாடுறதுக் குன்னு எடுத்துட்டுப்
3-234 = போயிட்டாங்க.
குருவிக வந்து பாத்தது. குஞ்சிகளக் காணம். பெங்குருவி அழுவா அமுன்னு அழுதிச்சி
ஆங்குருவி அத ஒரு வழியா சமாதானப்படுத்தி “அடுத்த தடவை நாம இங்க முட்டெ வைக்க வேணாம். யாருமே வர முடியாத மூங்கில் வனக் காட்டுக்குள்ள போயி முட்டெவிட்டுக் குஞ்சி பொறிக்கலாம். அங்க நமக்கு இப்பிடி ஆகாது. வா போகலாம்” ன்னு கூட்டீட்டுப் போனது.
அந்த போயி, யாருமே வர முடியாத இடமாப் டாத்து நடு மூங்கில் வணக்காட்டுக்குள்ள போயி முட்ட இட்டு குஞ்சி பொறிச்சது.
குருவிக இரை தேடப் போன சமயத்துல காத்து பலமா அடிச்சி மூங்கில்க ஒண்ணோட ஒண்ணு ரோசி தீப்புடிச்சி எரிஞ்சி குஞ்சுகள்லாம் சாம்பலாப் போயிருச்சி.
வந்து பாத்ததும் குலைபதறிப் போன பெங்குருவி இனி முட்டெயே இடமாட்டேம்ன்னு அந்த அழுவ அழுதுச்சி ஆங்குருவிக்கும் என்ன செய்யிறதுன்னு தெரியல நம்ம வாரிசுக்கும் ஒரு குஞ்சி வேணும்.
33

Page 22
திருமதி.சின்னத்தம்பி இராசமணி நினைவு வெளியீடு
பெங்குருவியவும் குத்தம் சொல்ல முடியாது. எத்தினி நாளைக்குத்தான் அது இப்படி லோல்படும்னு விசாரப்பட்டு பெங்குருவிகிட்ட “ஏத்தா, இந்தத் தடவ சமத்துரத்துக்கு அடியில ஒன்னக் கூட்டீட்டுப் போறேன். அங்கேபோயி முட்டெ இட்டுக் குஞ்சி பொறிப்போம். நமக்கு சமுத்திர ராசா காவல் இருப்பார்னுச்சி”அதுக்குப் பெங்குருவி “ஒருவேள அங்கேயும் காணாமல் போனா என்ன செய்ய?” ன்னு கேக்க “அப்படிக் காணாமப் போனா நா சமுத்திர ராசாவ சும்மாவுடமாட்டோம்.” னுச்சி. “குஞ்சிக்கு நா பொறுப்புன்னு சத்தியம் செய்யிங்க”ங்க ஆங்குருவியும் அதேபடிக்கு செஞ்சி கொடுத்து சமுத்துரக் கரைக்கு கூட்டீட்டுப் போச்சி. ரெண்டுங்க கூடி சமுத்தித்துக்கு அடியில போயி முட்டெ இட்டுக் குஞ்சி பொறிச்சிதுக. சமுத்தி ராசாவுக்கு இவுகளப் பாத்து ஆச்சரியமா இருந்துச்சி நா எம்புட்டுப் பெரிய்ய ராசா என்னெ ஒரு இத்துணிக்குருவி எதுத்துச் சண்டை போடுவேன்னு சொல்லுதே. இதுக எப்பிடித்தாம் சண்டை போடுதுன்னு பாப்பம்’னு சொல்லி அதுகளோட நாலு குஞ்சிகளையும் அதுகளுக்குத் தெரியாம எடுத்து ஒளிச்சு வச்சிக்கிடுச்சி. இரைதேடப் போன குருவிக வந்து பாத்துட்டு. “சரி இனி நாம இந்த ஒலகத்துல இருந்து புண்ணியமில்லென்னு சொல்லி பெங்குருவி சமுத்திரத்துல விழுந்து சாகப்போகும்போது ஆங் குருவி அதத் தாக்காட்டி நிறுத்தி
“நா சொன்ன மாதிரி சமுத்திராசாவோட சண்டை போட்டு நம்ம குஞ்சிகள நா மீட்டித் தரேன்’னுச்சி.
பிறகு அந்த ஆங்குருவி தன்னோட வர்க்கத்த எல்லாம் போயி கூப்பிட்டு இன்ன மாதிரி ஆயிட்டு எல்லாம் வாங்க வாங்கன்னு சத்தம் போட்டுது. எல்லாக் குருவிகளும், ஒலகத்துல இருக்க அத்தனகுருவிகளும் பறந்தோடி வந்தது.
அந்தக் குருவி சொன்னதக் கேட்டதும் எல்லாக் குருவிகளும் கோவமாயி இந்த அநியாயத்த விடப்படாது. இப்பிடி இருந்தா பறக்குற வர்க்கமே இல்லாம அழிஞ்சி போயிரும்னு சொல்லி எல்லாமும் எல்லாத்திடமும் முறையிட்டு சொன்னதுக. உடனே மயிலும் சேவலும் முருகன்ட்ட அனுமதி கேக்க அன்னம் சரஸ்வதி கிட்ட அனுமதி கேக்க கிட்னப்பிராந்து கிட்ணருகிட்ட அனுமதி கேக்க காக்கா சனீஸ்வரங்கிட்ட அனுமதி கேக்க கிளி மதுரை மீனாச்சித்தாயி கிட்ட அனுமதி கேக்க எல்லாரும் போகச் சொல்லீட்டாக எல்லாஞ்சேத்து ஒரே கூட்டமாக வருதுக. பொழுதே(சூரியன்) மங்கும்படியா வானத்துல பறந்து வருதுக
இதுகள பாத்து மத்த மிருகங்க புழுப்புச்சிக அம்புட்டும் எங்க
34

பாட்டிமார் கதைகள் போரீகன்னு கேட்டதுக. விசயத்தச் சொன்னதும் அப்பீடியா? அப்பொ நாங்களும் வரோம்னு இதுகளோட சேந்துக்கிருச்சி.
எல்லாம் மொது மொதுன்னசமுத்திரத்தப்பாத்து வருதுக பிறவு அம்புட்டும் கூடிக்கிட்டு வாயி,காது,மூக்கு செறவுன்னு சமுத்துரத்துத் தண்ணியை எடுத்து எடுத்து பூமாதேவி மேல ஊத்த, ஊத்த சமுத்துரம் கொஞ்சமா குறஞ்சி மொத்தமும் வந்திட்டுது சமுத்திர ராசா விக்கி வெறச்சிப் பொனாரு
“என்னடா இது நாம சுண்டைக்காயினு நெனைச்சோம் அங்கே மலையேவில்ல திரண்டுருச்சி”ன்னு அதுக கிட்ட வந்து
“எதுக்கு இப்பிடிச் செஞ்சீங்க”ன்னு கேக்க அதுக “எங்க வர்க்கத்தோட குஞ்சிகளுக்கு ஓங்களக் காவல் வச் சோம். அத இப்பொக் காணம். அதுக்கு நீங்க தாம் பொறுப்பு’ங்கவும் சமுத்திர ராசா பத்திரப் படுத்தி வச்சிருந்த குருவிக் குஞ்சிகளக் கொண்டாந்து கொடுத்துட்டாரு. இதுகளுக்கு சந்தோசம்."நீங்க நல்லா இருப்பிங்க அப்பநாங்க வர்றோம்’னு புறப்பட்டதும் சமுத்திரராசா “நீங்க எல்லாரும் இப்படி ஒத்தப்பொட்டு தண்ணியில்லாம ஆக்கிட்டுப் போயிட்டாநா என்ன செய்ய? எங்கிட்ட இருந்த சமுத்துரத் தண்ணிய பழைபடிக்கு கொண்டாந்து ரெப்புங்க”ன்னு கேட்டாரு. இதுக எல்லாம் முழிச்சிசு
எல்லாஞ் சேந்து சாமிகிட்ட போயி”எங்களால சமுத்துரத்த அழிக்கத்தான் முடியும். இன்னொரு சமுத்துரத்தக் கொண்டார முடியாது. அது ஓங்களாளதான் முடியும். நீங்கதாம் காப்பாத்தனும்னு விழுந்து கும்பிட்டதுக. சாமிகளும் அதுக பேச்சுக்கிரங்கி நதிகள உண்டாக்கி மேகங்கள வரவழச்சி சமுத்துரத்த ரொப்புனாக
அதும் பிறகு குருவிக குஞ்சிகளோட சந்தோசமா இருந்தது.
குறிப்புசின்னவர் பெரியவர் என்று வேறுபாடு பார்க்கக்கூடாது. சின்னவர்கள் பார்க்க சின்னவர்களாக இருந்தாலும் முடிந்தால் பெரியவர்களால் செய்ய முடியாதவற்றைக் கூட செய்து முடிக்க முடியும். குருவியும் கடலும் மோதிக் கொண்ட கதை இதைத்தான் சொல்லுகிறது.
35

Page 23
திருமதிசின்னத்தம்பி இராசமணி நினைவு வெளியீடு
எறும்பு வாங்கிய வறும்
எறும்புகளெல்லாம் சேர்ந்து கடவுளை நோக்கி தபஸ் செய்ய ஆரம்பித்தன. எத்தனை நாளைக் குத்தான் அதுகள் பொறுத்துக் கொளும். வீட்டுக்குள்ளேயும் தெருக் களிலும் IbL— LfTTL— முடிகிறதா காடுகளில் கூட Ibn IT - முடிவதில்லை.
தரையைப்பார்த்து யார் நடக்கிறார்கள்? சகட்டுமேனிக்க மிதித்து நடந்து போகிறார்கள். ஒருமிதியில் சின்ன எறும்புக்கூட்டமே நசுங்கிச் சாக வேண்டியதிருக்கு. இப்படி ஒருநாளா ரண்டுநாளா எத்தனை காலத்துக்குத்தான் இந்த கொடுமையைப் பொறுத்துக் கொள்கிறது?
எறும்புகளெல்லாம் ஒன்று கூடி யோசித்தது. இதுக்கு ஒரு முடிவு காண வேண்டும் என்று தீர்மானித்தது. அந்த முடிவின்படிதான் கடவுளை நோக்கி தபஸ் செய்தது.
கடவுளுக்கு அதுகளைப் பார்த்து மனசு உருகிப் போய் விட்டது. பாவம், எவ்வளவு சின்ன ஜீவன்கள், இதுகளுக்கு இப்படி ஒரு கஷ்டம் வந்ததே என்று இரக்கம் கொண்டு அவைகள் முன் தோன்றி, ‘என்னவேண்டும் உங்களுக்கு?’ என்று கேட்டார்.
கடவுளை நேரில் பார்த்ததும் எறும்புகளுக்கு ஒரு வினாடிதங்கள் கன்களையே நம்ப முடியவில்லை கடவுளே நேரில் வந்து விட்டார் என்கின்ற தலைகால் புரியாத சந்தோஷத்தில், கேட்க வேண்டும் என்று
36
 

பாட்டிமார் கதைகள் நினைத்திருந்த வரத்தின் வாசகம் மறந்துபோய் “நாங்க கடிச்சிச் சாகனும் நாங்க கடிச்சுச் சாகணும்” என்று எல்லாம் ஒரே சத்தமாக கத்தினதாம்.
திக் என்றது கடவுளுக்கு. இது என்ன வம்பா இருக்கு. இதுகள் கடிச்சி உலகத்திலுள்ள ஜீவராசிகள் சாகுறதானால் இவை தவிர மற்ற ஜீவராசிகளே உலகத்தில் இல்லாமல் போயிருமே என்று மனசுக்குள் வருத்தப்பட்டார்.
நல்லா யோசிச்சிக் கேளுங்க நீங்கள் கேக்கிறது சரிதானா? என்று திரும்பவும் அதுகளைப் பார்த்துக் கேட்டார் கடவுள். அவைகளும் அதுகளுக்கே உண்டான பிடிவாதத்தோடு, “நாங்க கேக்கிறது சரிதான். நாங்க கடிச்சதும் செத்துப் போயிறனும். இந்த வரத்தை எங்களுக்குத் தந்துதான் ஆகணும்.” என்று கேட்டன.
‘சரி அப்படியே நடக்கட்டும்’ என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார் கடவுள் கோபத்தோடு,
அன்றிலிருந்து எறும்பு கடித்து மற்ற உயிர்கள் சாவதற்கு பதில் கடித்த எறும்புகளே நசுக்கப்பட்டு செத்துக் கொண்டிருக்கின்றன.
அ.ராதாகிருஷ்ணன், இடைசெவல்
குறிப்புமனிதன் இந்தப் பூமி தனக்காகத்தான படைக்கப்பட்டது என்று எண்ணுகிறான். தனக்குத் துன்பம் தரும் பிற உயிர்களைக் கொன்று விடுகிறான். எறும்புகளையும் அப்படித்தான் கொல்லுவான் இருந்தாலும் இப்படி ஒரு கற்பனைக் கதை இதற்கும் காரணம் சொல்கிறது. கடிக்காத எறும்புகளைக் கூடக் கொல்லுகிறோமே என்று யாரும் கேட்கக்கூடாது. கதைக்குக் காலில்லை. பாம்புகளைக் கொல்லுவதற்கும் கூட பைபிள் கதை ஒன்று உண்டு.
37

Page 24
திருமதிசின்னத்தம்பி இராசமணி நினைவு வெளியீடு
பேன் பார்த்த பேய்
ஒரு ஊர்ல ஒரு வியாபாரியும் பொண்டாட்டியும் இருந்தாங்க. வியாபாரிக்கு ஊர் ஊரா சுத்தற வேல. அவங்க வீட்ல யாரையாவது வேலைக்குச் சேத்தா,
அந்த வேலைக்காரி கொஞ்சநாள் கூடத் தாக்குப் பிடிக்கமாட்டா ஏன்னா வியாபாரியோட மனைவி அப்படி அவளோ வேலங்களையும் செய்ய முடியாம எல்லாரும் ஓடிடுவாங்க.
... ஒரு சமயம் வியாபாரி வெளியூர் போயிட்டுக் காட்டு வழியா வர்றாகுள்ள ஒரு பேய் அவனைக் கூப்பிட்டுது ‘என் தலையில் ஆணிஒன்னு இருக்குது அதைப்பிடுங்கிட்டா நான் சுதந்திரமாயிடுவேன். என்ன கேட்டாலும் தர்றேன்.அந்த ஆணியைப் பிடுங்கிடு’ன்னுது.
வியாபாரியும் பயப்படாம ஆணியைப் பிடுங்கறான் ‘பேயிஉனக்கு என்ன வேணும்னு கேக்க எங்க வீட்டு வேலைகளைப் பாத்து ஒரு வேலைக்காரியும் வரமாட்டேங்கறா. நீ வந்து எல்லா வேலைகளையும் செவ்வியா'ன்னு கேக்கறான்.
“அதுக்கென்ன செய்யறேன். அப்ப இந்த ஆணியைப் பழையபடி தலையில் அடி நா ஒரு பெண்ணா மாறி வேலைக்கு வர்றேன்’னுது. ஆணி அடிச்சதும் வீட்டுக்கு வருது. வியாபாரி ‘இவ பேயாட்டம் வேலை செய்வா,எல்லா வேலையும் குடு’ன்னான்.
பொண்டாட்டிக்காரி இந்தப் பொண்ணுக்கிட்ட எல்லா வேலை வாங்கிக்கறா. நெல்லு குத்தச் சொல்றா, துணிமணி
38
 

பாட்டிமார் கதைகள் துவைக்கச் சொல்றா இப்படி நாள் பூரா வேலை வாங்கறா ‘என்னடி இப்படி பேயாட்டம் வேலை செய்யறியே’ன்னும் சொல்லுவா.
ஒரு சமயம் இந்தப் பொண்டாட்டியும் வேலைக்காரியும் படுக்கக்குள்ள வேலைக்காரிக்கிட்ட நீ போய் தெருக்கதவைச் சாத்திட்டு வான்னா. அது பேயாச்சே இருந்த இடத்திலிருந்தே கையை நீளமா நீட்டிச் சாத்துது. பொண்டாட்டி ஆச்சரியப்பட்டு என்னடி இதுன்னு கேட்டா. அது ஒண்ணும் இல்லம்மா. சும்மா தமாவீன்னு சொல்லுது அந்தப் பேய்.
மறுநா இந்த எஜமானி, ‘ஏண்டி எனக்குத் தலையெல்லாம் அரிக்கிது.பேன் இருக்குதோ என்னமோ, நீ கொஞ்சம் பேன் பார்த்து உடுங்கறா.
பேயும் அவ தலைல பேன் பாக்குது அதுக்கு சரியா பேன் பார்க்கத் தெரியல. எஜமானி “அடி அப்படி இல்லடி, ஒண்ணொன்னா எடுத்துக் குத்தணும்னு சொல்லி “உன் தலையைக் காட்டு நான் பார்க்கிறேன்றா. பேயும் தலையைக் காட்டுது. எஜமானி அப்ப அதோட தலைல ஆணியைப் பார்த்துடறா. என்னடி உன் தலைல ஆணி இருக்குதுன்னு சொல்லி அதைப் பிடுங்கிடறா.
ஆணியைப் பிடுங்கினதும், பேயோட சுயரூபம் வந்துடுது. நெடு நெடுன்னு வளந்து யம்மா உன் வீட்டில வேலைக்காரி தங்கமாட்டான்னு சொல்றது வாஸ்தவந்தான். பேயாட்டம் வேலை செய்யறினியோ, உண்மையிலேயே நான் பேய்தான். என்னாலயே வேல செஞ்சி மாளலை. நல்ல வேளை ஆணியைப்பிடுங்கி என்னை விடுவிச்சியே நா வர்றேன்னு சொல்லிவிட்டு ஓடியே போயிடுச்சாம்.
கதை கூறியவர் : வசந்தா சேகரிப்பாளர் : வ.தி
39

Page 25
திருமதிசின்னத்தம்பி இராசமணி நினைவு வெளியீடு
அன்னதானப் II,000í)
ஒரு ஊரில் ஒரு கிழவி அவளுக்கொரு மகன் இருவரும் அன்றாடம் கூலிவேலை செய்து காலங்கழித்து வந்தனர். அந்த $ நிலையிலும் தினந்தோறும் ஒரு அதிதிக்கு அன்னதானம் செய்யாமல் சாப்பிடமாட்டாள். மகனுக்கோ இது பிடிக்கவில்லை.”என்னம்மா நாம இந்தப்பாடு பட்டுச் சம்பாதிச்சுத் தினந்தோறும் ஒருவனுக்கத் தெண்டச்சோறு போடணுமா? இதுனால நீ என்ன புண்ணியத்தக் கட்டிக்கிடப்போற” என்று கேட்டான்.அவள் “அப்படிச் சொல்லாதப்பா நிச்சயமா நாம செய்யிற அன்னதானத்துக்கு நல்ல பலன் கிடைக்கும்” என்று ஆறுதல் சொல்வாள்.
இப்படிப் பல நாட்கள் கழிந்த பின் கிழவி மகனைக் கூப்பிட்டுச் சொன்னாள், “அப்பா நீ ரொம்ப நாளாக் கேட்டுக்கிட்டிருந்தியே, நாம செய்யிற அன்னாதானத்திற்கு என்ன பலன் என்று அதைக்கடவுளிடமே போய் கேட்டுவா” என்று சொல்லிக் கட்டுச் சோறு கட்டிக் கொடுத்தனுப்பினாள். மகனும் காடு,செடி,வனம் வனாந்திரமெல்லாம் கடந்து நடந்தான். வழியில் எதிர்ப்பட்ட ஒருவன் எங்கப்பாபோகிறாய் என்று கேட்டான் அவன் தனது தாயார் செய்து வரும்அன்னதானத்திற்குப் பலன் கேட்கக் கடவுளைத் தேடிப் போகிறேன் என்று சொன்னான். உடனே அவன் அப்படியானால் நல்லதாப்போச்சு என் விஷயமும் ஒண்ணக் கேட்டு வாப்பா என்று கூற இவன் ஏதென்று கேட்க,அவன் சொன்னான்,தம்பி எனக்குச் சொத்துச் சுகத்திலெ குறைச்சலில்லை. ஒரு தனிக்குளமே இருக்குது. அந்தக்குளம் ஒவ்வொரு வருஷமும் பெருகும். பயிர் பொதிப் பட்டமா இருக்கும்போது குளம் டமாருண்ணு உடைந்து வயலையெல்லாம் அழித்துப்போய் விடுகிறது. இப்படியொரு நாலைந்து வருஷமா நடக்கு.இதற்கு காரணம் கேட்டு வா என்று கூறினான்.
அதைத் தாண்டி வேறொரு ஊரில் எதிர்ப்பட்ட ஒருவனும் தம்பி
40
 

பாட்டிமார் கதைகள்
எனக்கு மூன்று மாமரங்கள் இருக்குது. அந்த மரம் பூவும் பிஞ்சுமாக்
காய்க்கும் அப்புறம் அப்படியே பலபலண்ணு வெம்பி உதிர்ந்து வெறும் மரமாயிடும். இதுக்கும் காரணத்தைக் கேட்டுவா தம்பி என்று கூறியனுப்பினான். இவனும் நடந்தான். இருட்டிவிட்டது. நடுக்காடு எங்கேயாவது தங்கலாமென்று மரத்தின்மேல் ஏறிப்பார்த்தான்.சற்றுத் தூரத்தில் வெளிச்சம் தெரிந்தது. அங்கே ஒரு க்ாட்டு வேடனுடைய குடிசை. அங்கு வேடனும் வேடத்தியும் மட்டும் இருக்கின்றனர். அவ்வப்போது வேட்டையாடிக் கிடைத்ததைத் தின்று விட்டுப் பரண் வீட்டில் வாழ்கின்றனர். இவன் அவர்களிடம் போய் தன் வரலாற்றைச் சொல்லி அன்று ராத்திரி மட்டும் தங்க இடம் கேட்டான். வேடத்தியோ முன் பின் தெரியாதவனுக்கு இடம் தரக்கூடாது என்று பிடிவாதம் செய்கிறாள். வேடன் இரக்கமுள்ளவன் தன் பங்குக்குரிய ஒரு உருண்டை மாவில் பாதியை இவனுக்குக் கொடுத்தான். அதே போல் பரண் வீட்டில் பாதியை அவள் மறித்துக் கொண்டாள். மீதிப் பாதியில் இருவரும் படுக்க வேண்டியதாயிற்று.
வெளிப்பக்கம் வேடன்படுத்துக் கொண்டு உட்பக்கம் இவனைப் படுக்க வைத்தான். இரவில் தூக்கக் கலக்கத்தில் உருண்டு விழுந்து வேடன் புலியாலடித்துக் கொல்லப்பட்டான். விடிந்தது அடா சண்டாளப் பாவி என் புருசனைக் கொன்னுட்ட யேண்ணு இவனை அடித்து விரட்டினாள். இவனும் தனக்கு இடங் கொடுத்த வேடன் கதி இப்படியாய்விட்டதே என்று வருத்தத்தோடு நடந்தான்.
இடையில் கடவுள் ஒரு முனிவர் வேடத்தில் வந்து ‘யாரப்பா நீ எங்கே போகிறாய்” என்று கேட்டார். இவன் தன் கதையைச் சொன்னான். உடனே அந்த முனிவர் இங்கிருந்து 10வது மைலில் ஒரு ஊர், அங்கு ஒரு ராஜா அவருக்கு இன்று மத்தியானம் 12மணிக்கு ஆண் குழந்தை பிறக்க இருக்கின்றது. நீ போய் அந்தக் குழந்தையை ஓர் வெள்ளித் தட்டில் ஏந்திக் கொண்டு கேள்! அது சொல்லும் நீங்கள் செய்கின்ற அன்னதானத்தின் பலனை என்று கூறி மறைந்தார்.
இவனும் அங்கு போய் ராஜாவைக் கண்டு தான் வந்த விஷயத்தையும், முனிவர் சொல்லியனுப்பியதையும் கூறி அந்தப் பிள்ளையை வெள்ளித் தட்டில் ஏந்திக் கொண்டு எங்கள் தாயார் செய்யும் அன்னதானத்திற்கு பலன் என்ன? என்று கேட்டான். அப்போது அந்தக் குழந்தை பேசியது“நான் யார் தெரியுமா?”ஒருநாள் நள்ளிரவில் தங்க இடம் கேட்டு வந்தாயே, ஒரு வேடன் குடிசைக்கு அங்கேஉனக்கு அரை உருண்டை தினை மாவும், படுக்க அரையடி இடமும் கொடுத்தானே வேடன் அந்த வேடன் தானப்பா நான். இந்த அரை உருண்டை மாவுக்கும் அரை அடி இடத்துக்கும் எனக்குக் கிடைத்த பலன் ராஜா வீட்டில் பிறந்திருக்கிறேன். இவ்வளவுக்கு இவ்வளவு பலன் என்றால் நீங்கள்
41

Page 26
திருமதிசின்னத்தம்பி இராசமணி நினைவு வெளியீடு
பரம்பரையாகச் செய்து வருகின்ற அன்னதானத்திற்குப் பலன் எவ்வளவோ அதைச் சொல்ல என்னால் முடியாதப்பா என்றது.
பின்னர் இவன் அந்தக்குளம் உடைந்து போகும் சங்கதியைச் சொல்லி அதற்குப்பரிகாரம் என்னவென்று கேட்டான். அந்தக் குளத்துப் பண்ணையாரிடம் கல்யாண வயதில் ஓர் பெண் இருக்கிறாள். அவள் கல்யாண ஏக்கத்தில் பெருமூச்சு விடும்போது அந்தக் குளம் உடைந்துபோகின்றது. அவளுக்கு சீக்கிரமே கல்யாணம் கட்டி வைத்துவிட்டால் அந்தக் குளமும் உடையாது. நன்றாக விளையும் என்றது.
மேலும் அந்த மாமரங்கள் வெம்பிப் போவது ஏன்ஏன் என்று கேட்டான். “அந்த மரத்தினடியில் ஒர் அண்டா நிறையப் புதையல் இருக்கின்றது. அதை எடுத்து ஏழை எளியவர்களுக்குத் தானம் பண்ணினால் அந்த வெம்மை தீர்ந்து போகும். அதுவும் வெம்பாமல் காய்க்கும் என்றது. இவன் இவ்வளவையும் கேட்டுக் கொண்டு சரி என்று கிளம்பினான். பின்னும் குழந்தை பேசியது, இன்னொன்று கேள் அரை உருண்டை LOπ6) கொடுத்ததால் நான் ராஜாவாகப் பிறந்திருக்கிறேனல்லவா. உனக்கு இடமும் உணவும் தர மறுத்தாளே என் மனைவி வேடத்தி அவளுக்குக் கிடைத்த பலனைக் கேட்டாயா? நீசெல்லும் வழியில் குழுவக்குடி இருக்கும். அங்கே ஒரு பண்ணி 7 குட்டி போட்டுள்ளது. அது நெத்திச் சுட்டிநாலு கால்சிலம்பம், வெடிவாலோட ஒரு பெட்டக் குட்டியும், கெடக்கு.பார்த்துட்டுப் போ. அது அந்த வேடத்தி” என்று சொல்லியது.
சரி என்று திரும்பினான். வழியில் பன்றிக்குட்டிகளையும் கண்டான். குளம் உடைந்ததற்குப் பரிகாரம் சொன்னான். அந்தப் பண்ணையாரும் இவ்வளவு இவ்வளவு தூரம் சாதனை புரிந்த உனக்கே என் மகளைத் தருகிறேன் என்று அவனுக்கே கல்யாணம் செய்து பண்ணையாராக்கினான். அடுத்து மாமரம் வெம்பியதற்கான பரிகாரத்தையும் சொன்னான். அவனும் அப்படியே புதையலை எடுத்து இவனுக்கே கொடுத்தான். இப்படியாக இவனது தாய் செய்த அன்னதானத்திற்குப் பலன் கிடைத்தது. இவனும் நலமாக வாழ்ந்தான்.
கதை சொன்னவர்: புலவர் சுப்பையா, நாரைக் கிணறு
குறிப்பு:- மனித வாழ்க்கையில் தர்மம் செய்வது போல, அதுவும் இடர்பட்டுத் துடிக்கும், மனிதர்களுக்கு தருமம் செய்வது போல ஒரு "சேமிப்பு’ எதுவும் இந்த உலகத்தில் இல்லை.
42

பாட்டிமார் கதைகள்
பெரணிடு பொண்டாட்டிக்காரன்
ஒருவனுக்கு ரண்டு பொண்டாட்டி மாசத்துக்கு ஒரு பொண்டாட்டின்னு போய் வந்துகிட்டிருந்தான். ஒரு பொண்டாட்டி கீழேயும், ஒரு பொண்டாட்டி மெத்து(மாடி)லேயும் இருந்தாங்க. மெத்துக்குப் போக படி கிடையாது ஏணிதான் . சித்திரை ԼՈn & th... ජ්ශg இருந்த பொண்டாட்டிகிட்ட அந்த மாசம் முடிஞ்சி விட்டது. நாளை வைகாசி பிறப்பதால் அவன் மேலே போக வேண்டும் .
அதனால் கீழே இருப்பவள் அவனை அனுப்பி வைக்க மனசில்லாமல் அனுப்பி வைத்துவிட்டு வருத்தமாக இருந்தாள். பக்கத்து வீட்டுக்காரி இவளிடம் வந்து,"இந்த வட்டம் சித்திரை 31-ல் போவது’ன்னு ஏதோ ஒரு கணக்குக்காகச் சொல்லிட்டுப் போய்ட்டா. உடனே இவளுக்கு வேகம் வந்துருச்சு. நாளைக்கும் ஒரு நாளு இருக்கும்போதே எதுக்காக நாம இப்பஉடணும்னு, “இந்தாங்க. சித்திரை நாளைக் குத் தான் முடியுது. இன்னிக்கே நீங்க ஒட வேண்டாம்’னு சொல்லிக்கிட்டே ஓடிவந்தா மேலே இருந்து. புருஷன் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்த இன்னொரு பொண்டாட்டி ‘பாதி தூரம் வந்தவனை விடுவதா. இப்படிஅக்கறை இருக்கிறவள் முதல்லே நாளை கணக்குப் பாத்துப் புருஷனை வெச்சிக்கிட வேண்டாமா?’ என்று கோபப்பட்டவள் அவனைக் கைநீட்டச் சொல்லி அதைப்பிடித்துக் கொண்டு மேலே இழுத்தாள் எங்கே அவன் மேலே போய்விடுவானோ என்ற பயத்தில், கீழே இருந்தவள் ஓடிவந்து அவன் கால்களைப்பிடித்துக் கொண்டாள்.ஒருத்தி அவனை மேலே இழுக்க, இன்னொருத்தி
43

Page 27
திருமதிசின்னத்தம்பி இராசமணி நினைவு வெளியீடு
அவனைக் கீழே இழுக்க. அவன் நடுவில் திண்டாடி “விடுங்க. விடுங்க..” என்று கத்தினான். கடைசியில் இரண்டு பேருக்குமே இழுத்துக் களைத்துப்போய் விட்டுவிட, அவன் நடுவில் திண்டாடி “விடுங்க.விடுங்க..” என்று கத்தினான். அவன் தடுமாறிக் கீழே விழுந்தான் ரண்டு காலிலும் நல்ல அடிபட்டு, எலும்பு முறிஞ்சு புண்ணாகிப்போச்சு, ரண்டு பேரும் சேர்ந்து ஆளுக்கொரு காலுக்கு மருந்து போட்டுப் புண்ணைச் சரியாக்கணும்னு கண்டிஷனோட வைத்தியம் பண்ண ஆரம்பிச்சாங்க. மேலே இருக்கறவ கொஞ்சம் பணக்காரி, அதனால டாக்டரை கூட்டியாந்து ஊசி போட்டு நல்ல நல்ல மருந்தெல்லாம் கட்டிப் புண்ணை ஓரளவு ஆத்திட்டா, கீழே இருக்கிறவ கொஞ்சம் ஏழை அதனால பச்சிலை, ஒத்தடம்னு கொடுக்க. புண் நல்லா ஆறாம இருந்துச்சு, அதுலயும் கால் ஒடிஞ்சதில,ஏணி மேலே ஏற முடியாததுனால கீழேயே இருந்தான்.அதனால (3 n(36) இருக்கிறவளுக்கு புண் எப்ப ஆறும் கூப்பிட்டுக்கிடுவோம்’னு ஆவல். கீழே இருக்கறவளைப் பாத்து “புருஷனுக்கு வந்த புண்ணை ஆத்தப் துப்பு இல்லே, வாய் பேசுதா? என்னைப் பாரு ஒரே மாசத்துல புண்ணை அருவாக்கிட்டேன்’னு பெருமையா பேசினா. கீழே இருந்தவளுக்கு ரொம்பக் கோவம். அன்னிக்குத் தலை முழுகி,சினுக்கோரி வெச்சித் தலையைச் சிக்கெடுத்துக்கிட்டே வந்த புருஷன் காலைப் பாத்து யோசிச் சுட்டே நின்னா ‘இன்னும் கொஞ்ச நாளையில இவனை அவ மேலே கூட்டிட்டுப் போயிருவா. பிறவு நாம தான் மேலேபோயிப் போயி பாக்கணும். பேச்சுக்கு ஒருக்க என்னை ஏசுவா. இவபுண்ணை ஆறவிடக் கூடாது’ என்று எண்ணியவளாக கையிலிருந்த சினுக்கோரியால் ஊது புண்ணாக இருந்த காலில் “சதக்.சதக்’ என்று குத்தினாள். அவன் வலி பொறுக்க முடியாமல் கத்தியதைக் கேட்டு மேலே இருந்தவள் ஓடி வந்து பார்க்க, அவள் கஷ்டப்பட்டு ஆற்றின காயத்திலிருந்து ரத்தம் வந்து கொண்டிருந்தது. பார்க்க பார்க்க அவளுக்கு வயிற்றெரிச்சலாக இருந்தது. ‘பாதகத்தி. ஆறின காயத்தை இப்படி மறுபடி புண்ணாக்கிவிட்டாலே.இவளைச் சும்மா விடக்கூடாது’ என்று மனசுக்குள் கடு கடுத்தவள், தன் வீட்டுக்குப் போய் கரண்டியைக் காயவெச்சுக் கொண்டாந்து பதிலுக்கு சக் களத்தி வசம் ஒப்படைச் சிருந்த காலில் ஒரு இழுவை இழுத்தாள், அவன் வலி பொறுக்க முடியாமல் கத்த, இவள் வந்து பார்த்து மீண்டும் சினுக்கோரியால் குத்த. இதுதான் ரண்டு பொண்டாட்டிக்காரன் புழுத்துக்கிட்டுச் செத்த கதை
குறிப்பு:- எப்போதும் இருப்பதைக் கொண்டு சிறப்போடும்,சிறந்த எண்ணத்தோடும் வாழ்வதுதான் நல்லது.
44

பாட்டிமார் கதைகள்
உள்ளதும் போசுே
69(5 ஊருல (905 புருஷன்,பொண்டாட்டி இருந்தாக. புருசனுக்கு மீன்பிடிக்கிற வேல. நித்தெனமும் கடல்ல போயி மீன் ܛ புடிச்சிட்டு வருவான். அவன் புடிச்சிட்டு ܠ) வார மீனு அன்னைக்குப் பொழுது ༄། ། புருசன்,பொண்டாட்டி வயித்த கழுவுறதுக்குத்தேன் சரியா இருக்கும். அவன் பெண்டாட்டி துட்டு அவகாச்சி புடிச்சவ எப்ப பார்த்தாலும் பணம், பணமின்னு அலமோதினதோட இல்லாம எனக்கு அதுவேணும் , இது வேணுமின்னு நச்சரிச்சுக்கிட்டே இருப்பா. அப்புராணி இவன் என்ன செய்வான்? சொல்லதுக்கெல்லாம் தலய,தலய ஆட்டிக்கிட்டே இருப்பான்.
இப்படி இருக்கும் போது ஒரு நாளு எப்பவும் போல கடலுக்கு மீன் புடிக்கப் போனான். அன்னைக்கு அவன் வலையில ஒரு மொக்க மீனு விழுந்திருச்சு. அவனுக்கு சந்தோசம்னா பொறுக்கல இந்த மீனப் பாத்துட்டு நம்ம பொண்டாட்டிசந்தோசப்படுவான்னு நினைச்சுஅந்த மீன எடுக்கப் போகையில அந்த மீனு என்னை நீ தண்ணிக்குள்ள விட்டுரு. உனக்கு என்ன, என்ன வேணுமோ அதையெல்லாம் நான் தாரேன்னுச்சு இவனுக்கும் அந்த மீனப் பாக்கையில பாவமா இருந்துச்சு. சரி உன்னை நான் தண்ணிக்குள்ள விட்டுருதேன். நீ இன்னைக்குப் பொழுது எங்களுக்கு வித விதமா பொங்கி,பொறிச்சி திங்கறதுக்கு உண்டான பணத்தக் கொடுன்னான். மீனும் அப்படியே கொடுத்துச் சு. இவன் கொண்டு போயி பொண்டாட்டிக்கிட்ட கொடுக்க அவளுக்கு ஆச்சரியமா இருக்க அவ ஏது இம்புட்டு துட்டுன்னு கேக்க அவனும் நடந்தத
45

Page 28
திருமதிசின்னத்தம்பி இராசமணி நினைவு வெளியீடு
சொன்னான். அம்புட்டுதேன். அவளுக்கு வந்த கோவம் இந்த மட்டுமல்ல அடபேவண்ட பயலே இப்படியும் ஒரு மனுசன் இருப்பானா? ஒத்தநா பொழுதுக்கு மட்டும் துட்டு வாங்கிட்டு வரக்கண்டமா? போஇப்பவே போயி எனக்கு பட்டும், பணியாரமும் வாங்கிட்டு வான்ன முடிக்கிவிட்டா. இவனும் போயி கரையில நின்னுகிட்டு மீன கூப்பிட மீனு வந்து என்னன்னு கேட்டுச்சு. இவன் பொண்டாட்டி சொன்னத சொல்லவும் இந்த மீனு பட்டும், பணியலுமா அள்ளிக் கொடுத்துச்சு. இவன் கொண்டாந்து பொண்டாட்டிக்கிட்ட கொடுக்க அன்னைக்குப் பொழுது அவ சந்தோசமா இருந்தா. பிறவு விடியவுமே புருசன கூப்பிட்டு வெறும் பட்டமட்டும் எத்தன தேரத்துக்கு உடுத்திக்கிட்டு இருப்பேன். நீ பொயி எனக்கு நவ, நட்டு வாங்கிட்டுவான்ன முடுக்கி விட்டா. இவனும் சரின்னு கடலுக்கு வந்து மீன கூப்பிட்டுநடந்ததெல்லாம் சொன்னான். மீனும் அவ கேக்கது சரிதானேன்னு, நவயும், நட்டும் அள்ளிக் கொடுத்துச்சு. இவன் கொண்டாந்து பொண்டாட்டிக்கிட்ட கொடுக்க அவ அன்னைக்குப் பொழுது அத போட்டு ராத்திக்கிட்டு அலைஞ்சா.
மறுநாளு விடிஞ்சதுதேன் தாமுசம். வெறும் நவயும், பட்டும் இருந்தா மட்டும் போதுமா? குடியிருக்க வீடு வேண்டாமா? இம்புட்டு நவ போட்டுக்கிட்டு இந்த குடுசல்ல இருந்தா சிரிக்க வில்ல செய்வாக நீரு இப்பவே போயி பெரிய மாடமாளிகயம், கூட கோபுரமும் கேட்டு வாங்கிட்டு வாருமின்னு முடுக்கிவிட்ட்ா. அவனும் அவளுக்கு ஆத்தமாண்டாம வந்து மீன கூப்பிட்டு அதுகிட்ட சொல்ல மீனும் அவசொல்றது சரிதான நீ வீட்டுக்குப் போ உனக்கு அரண்மனமாதிரி பெரிய வீடு இருக்குமின்னுச்சு. இவனும் அப்பவே வீட்டுக்கு ஓடியாரான். இவன் குடிச இருந்த ரக்குல பெரிய மாளிக இருக்குஇவன் திகைச்சுப் போயி நிக்கயில இவன் பொண்டாட்டி மெத்துல இருந்து ஒரே ஓட்டமா ஓடியாந்தா. அப்படி ஓடிவாரேலபடிதட்டி உருண்டு கீழே உளுந்து அப்படியே செத்துப்போனா. பொண்டாட்டி செத்ததப் பாத்ததும் புருசனுக்கு கவலையின்னா இந்த மட இல்ல. அப்படியே அவள தூக்கிட்டு கடலுக்கு வந்து மீன கூப்பிட்டான், மீனும் என்னன்னு வந்துச்சு. இவள் என் பொண்டாட்டி ஆசைப்பட்டது அம்புட்டும் கொடுத்த, னா எம்பொண்டாட்டிய சாவ அடிச்சிட்டாயே. இனி இம்புட்டு செல்வாக்கும் இருந்து பொண்டாட்டி இல்லாம இருந்து என்ன செய்ய? எப்படியாச்சிலும் எம்பொண்டாட்டிய பிழைக்க வச்சுருன்னான். இந்த மீனும் உன் பொண்டாட்டி பிழைக்கனு மின்னா உன் உடம்புல இருந்து ஒருசொட்டுரத்தம் கொடு அவயிழைச்சிக் கிடுவான்னுச்சி.இவனும் தன்னோட கட்ட விரலஅறுத்து ஒத்தச் சொட்டு ரத்தத்த அவமேல விட அவளும் இப்பத்தேன் உறங்கி எந்திரிச்சவ
46

பாட்டிமார் கதைகள்
கணக்கா எந்திரிச்சா. அந்தமான இவன் பொண்டாட்டிய கூட்டிகிட்டு தன்னோட விட்டுக்கு வரான். வார வழியில இவஎனக்கு தண்ணிதவிக்கு. தண்ணி குடிச்சாத்தேன் நான் நடப்பேன்னா. இவனும் அவள ஒர ரக்குல உக்கார வச்சுட்டு தண்ணி இருக்க எடத்த தேடிப்பொயி அவளுக்கு தண்ணி கொண்டு வந்தான். இவன் தண்ணியோட வரான். பொண்டாட்டியக் காணோம். ஐயய்யோ என்னடா, என்னபாடு பட்டு பிழைக்க வச்ச பொண்டாட்டிய காணோமேன்ன இவன் அங்கன இருக்க ஊருக்குள்ள போயி ஒவ்வொரு வீடா தேடினான். அப்ப அந்த ஊருக்குள்ளயே பெரிய காரை வீட்டுல அவன் பொண்டாட்டி உக்காந்திருக்கா.
இவன் அவள பாத்து என்னத்தா உனக்காவ நான் தண்ணி கொண்டாந்துட்டு தேடு, தேடுன்ன தேடுதேன். இங்க வந்து உக்காந்திருக்கேன்னு கேட்டான்.
அவ இந்த வீட்டுக்காரன் உன்னைவிட பணக்காரன் ஆளும் நல்லா இருக்கான். இனிமேல்ட இவன்தேன் எம்புருசன். அதனால இனிமே நீ என்னை கூப்பிடாதேன்னா. இவனுக்கு கோவம் வந்திருச்சு அடிப்பாவி உன்னை என்ன பாடுபட்டு ரத்தம் கொடுத்து பிழைக்க வச்சேன். நீ இப்படி பேசுதே. இந்த வீட்டுக்காரன்தேன் உனக்கு புருசன்னா நான் கொடுத்த ரத்தத்த திருப்பிக் கொடுன்னான். இவளும் உன் ரத்தத்த வாங்கிட்டுப்போன்னு வீட்டுக்குள்ள போயி ஒரு கத்திய எடுத்தாந்து விரல்ல இத்னிகீறினா. அம்புட்டுத்தேன். அவ ஒடம்புல இருந்த ரெத்தமெல்லாம் வெளியேறினதும், கொசு ஆயிட்டா. அன்னைக்கிலருந்து இன்னைக்கு வரைக்கும் ஒரு சொட்டு ரத்தத்துக்காக இந்தக் கொசு அலைஞ்சுக்கிட்டே இருக்கு.
குறிப்பு:- ஒருவர் செய்த உதவியை மறந்தவர்களுக்கெல்லாம் கடைசியில் இப்படித்தான் ஆகும் என்பதை எடுத்துக் காட்டுகிறது. இந்த கதை.

Page 29
திருமதி.சின்னத்தம்பி இராசமணி நினைவு வெளியீடு
பேராசை பிடித்த கிழவி ஒருத்தி ஏராளமான பணத்தைச் சேர்த்து வீட்டில் ஒளித்து வைத்திருந்தாள். பருத்தி வெடிப்பு சமயம் நல்ல நிலவாக இருந்ததால் ராத்திரியிலேயே புஞ்சைக்கு பருத்தி எடுக்கப்போய் விட்டாள், ஒருநாள். .
போகும்போது வீட்டைப் பெருச் சாளி தோண்டி நாசமாக்கு கிறதென்று அதைக் கொல்வதற்காக தினையை இடித்து கருமந்துடன் கலந்து பிசைந்து உருட்டி உருண்டை களை மூலைக் கொன்றாக வைத்து விட்டுப் போனாள். அந்த ஊரிலே கிழவியின் பணத்தின் மேல் கண் வைத்திருந்த திருடர்கள் நாலுபேர்,இதுதான் சமயமென்று கன்னம் வைத்து உள்ளே நுழைந்து விட்டார்கள்.
உள்ளே நுழைந்ததும் காலில் மாவு உருண்டை தட்டுப் படவே ஆளுக்கொன்றாக எடுத்துக் கொண்டார்கள்.
தினைமாவு வாசனை ஜமாளித்தது. நாக்கை அடக்க முடியவில்லை. ஆவலோடு தின்றுவிட்டார்கள்.
அவ்வளவுதான். கொஞ்ச நேரத்தில் மருந்து வேலை செய்து நாலுபேரும் விறைத்துவிட்டனர்.
நடுச்சாமத்தில் கிழவி வீட்டைத் திறந்தாள். நான்கு பேரும் செத்துக் கிடப்பதையும் சுவரில் இருந்த கன்னப்பொந்தையும் கண்டு விஷயத்தைப் புரிந்து கொண்டாள். அவளுக்கு கொஞ்சம் பீதி காலையில்
48
 

பாட்டிமார் கதைகள்
இது விவரம் ஊருக்குத் தெரிந்துவிட்டால் கூட்டம் போலீஸ் விசாரணை எல்லாம் வந்துவிடுமே என்று. எனவே ராத்திரியொடு ராத்திரியாக பிணங்களை அடக்கம் செய்துவிடத் தீர்மானித்து ஊர்ச்சாவடிக்குப் (3UIT60IIId.
சாவடியில் படுத்திருந்த மொக்க்ைச்சாமியார் என்கிற சோம்பேறிச் சாமியாரை எழுப்பி ‘அப்பா, எங்க வீட்டு ஆம்பிளை செத்துப்போயிட்டாரு. எனக்கு நாதி கிடையாது. நீ வந்து அடக்கம் செய்துவிட்டா ஒனக்கு அம்பது ரூபாதாறேன்’ என்று கூப்பிட்டாள்.
சாமியாரும் சம்மதித்து உடன் வந்தார். கிழவி ஒரு பிணத்தை மட்டும் வெளியே எடுத்து உரலில் சாத்தி நெற்றி நிறைய நாமம் போட்டு வைத்திருந்தாள். சாமியார் கையில் ஒரு மண்வெட்டியைக் கொடுத்து முதுகில் பிணத்தை தூக்கி வைத்து அனுப்பினாள்.
சாமியார் அந்தப் பிணத்தை அடக்கம் செய்துவிட்டுத் திரும்பினார். வாசலில் உரலில் இன்னொரு பிணம் நாமம் போட்டு சாத்தப்பட்டிருந்தது.
நல்லா வேலைசெஞ்சே! சரியாய் புதைக்காம வந்துட்டே. நீ வர்றதுக்குள்ளே பொணம் வந்திருச்சு. இந்தவாட்டியாவது நல்லாப் புதைச்சுட்டு வாய்யாவை” என்று கடித்து கொண்டாள் கிழவி.
சாமியாருக்கு ஆச்சரியம். ‘என்னடா நாம் குழி வெட்டி மேலே மண்ணைப்போட்டு மூடிட்டு வந்தோம். அப்படியிருக்க பொணம் எப்படி வந்துட்டது? அதே பொணம் மாதிரிதான் இருக்குநாமம் அசல். அதேதான்’ என்று குழம்பிக் கொண்டே பழயபடியும் பிணத்தை இடுகாட்டுக்குச் சுமந்தான்.
இரண்டாவது தடவை பிணத்தை புதைத்துவிட்டு வாசலுக்கு வந்த சாமியாருக்குத் திகைப்பு தாங்கவில்லை. பழையபடியும் உரலில் பிணம் நெத்தி நிறைய நாமம். அதே மாதிரி தான் இருந்தது.
கிழவி மிகவும் சடைத்துக் கொண்டாள். ‘என்னப்பா நீ. குழியை நல்லா மூடியிருந்தா இப்படி எழுந்திருச்சி வருமா? இதுவோ ஒரு முரண்டு பிடிச்ச பொணம். தெரிஞ்சும் நீ நல்லா மூடாம வந்துட்டயே. பிடிய்யா.’ என்று விரட்டினாள்.
சாமியார் மூணாவது பிணத்தைத் தூக்கிக் கொண்டு போனான். இந்தத் தடவை குழியை நன்றாக மூடி மேலே இலந்கை முள்ளை வைத்துவிட்டு வந்தான்.
“வீட்டுக்கு வந்தால். பழையபடி உரலில் பிணம் அசட தேவுடா சாமியாருக்கே கோபம் பொறுக்கவில்லை. இரு இரு. ராஸ்கோல் ஒன்னை என்ன செய்றேன்பாரு”. என்று உலக்கையால் ரெண்டு போடு போட்டு தூக்கிக் கொண்டு போய் குழியில் போட்டு கனமான பாறாங்கற்களை மேலே வைத்து விட்டு வந்தான்.
49

Page 30
திருமதிசின்னத்தம்பி இராசமணி நினைவு வெளியீடு
வேலையை முடிக்கவும் இருள் கொஞ்ச கொஞ்சமாக விலகி வானம் செங்கமங்கலாக வெளுக்கவும் சரியாக இருந்தது. சாமியார் நிம்மதியோடு குளத்தில் இறங்கி கைகால் கழுவிவிட்டு கரையேறும்போது பக்கத்திலிருந்த ஒற்றையடிப்பாதையில், தினமும் பக்கத்து ஊருக்கு ஏட்டுப் பள்ளிகூடத்துக்குப் போகிற பிராமண வாத்தியார் ஒருவர் கோப்பாக நாமம் போட்டுக் கொண்டு வேகு வேகு என்று நடந்து போய் கொண்டிருந்தார்.
அவர் துரித நடையையும் நாமத்தையும் பார்த்த சாமியாருக்கு படுகோபம் வந்துவிட்டது. ஓட்டமாகஒடி
ஒனக்கு அவ்வளவுதிமிரா, ஒரு மனுஷன் எத்தனை தடவைதான் குறுக்கு ஒடியச் சுமக்கிறது? புதைக்கப் புதைக்க எழுந்திருச்சு ஓடிப்போய் உரல்லே படுத்துக் கிடறயே. என்று கத்திக் கொண்டே மண்வெட்டியால் ஒரு போடுபோட்டான் சாமியார்.
வாத்தியார் மூளை சிதறிக் கீழே விழுந்ததும் கால்கள் ரெண்டையும் ஒடித்து பிணத்தைச் சுமந்து இடுகாட்டில் புதைத்து மேலே முள்ளும் பாறாங்கல்லும் அமுக்கி அமுக்கி வைத்துவிட்டுக் கிழவியிடம் வந்தான்.
வந்து, "நீ சொன்னது சரியாப் போச்சு. நாலாந்தரமாப் புதைச் சுட்டு குளத்திலே முகங்கழுவிட்டு கரையேறுகிறேன்.அந்தக் கழுதைப்பய பொணம் நெத்திநிறைய நாமத்தைப் போட்டுக்கிட்டு வேகு வேகுன்னு எனக்கு எனக்கு முன்னாலே ஓடி வருது. விடுவேனா? போட்டேன் ஒரு போடு வகையா கால்ரெண்டையும் ஒடிச்சி கல்லு முள்ளுவச்சுப் புதைச்சிட்டேன். பொட்டியாரு. இனி வர முடியாது”என்று பெருமையாகப் பீத்தினான்.
‘அட பாவிப்பயலே.குடியைக் கெடுத்தாயே. அது பக்கத்து ஊரு ஐயரு வாத்தியாருல்லே. அநியாயமா. ஒரு உசிரை கொலை பண்ணிட்டயே,’ என்று கூப்பாடு போட்டாள் கிழவி.
மொக்கைச் சாமியார் திரும்பிப் பார்க்காமல் ஓட்டம் பிடித்தான் ஐம்பது ரூபாயையும் மறந்துவிட்டு
குறிப்பு:
இக்கதையிலும் நகைச்சுவை உணர்வே மேலோங்கி நிற்கிறது. 'நாமம்’ என்ற அடயாளம் மனிதர்களைக் குறிக்கும் குறியீடாக, இக்கதையில் சுட்டப்பட்டுள்ளது. கிழவின் தந்திரம் கடைசியில் இன்னொரு கொலையில் முடிகிறது. இயல்பு நவிற்சியாகவே இக்கதை படைக்கப்பட்டுள்ளது.
50

பாட்டிமார் கதைகள்
685ncupé685 6ODL என்றாள் Dör
பார்வதி பல்லுக் கொழுக்கட்டை செய்தாள் புருசனிடம் வந்து கொழுக்கட்டை செய்தாச்சி சாப்பிட வாங்க என்று கூப்பிட்டாள் அவனும் வந்தான்.
இந்தா பாருங்கோ மூணு கொலுக்கட்டைத்தான் இருக்கு நம்ம ரெண்டு பேருக்கு எப்பிடிப் பங்கு வைக்க என்றாள்? “எனக்கு ரெண்டு. உனக்கு ஒண்ணு' என்றான் அவன். ‘அதெல்லாம் முடியாது எனக்குத்தான் ரெண்டு’ என்றாள் அவள்.
நாந்தானே கடைக்குப்போயி எல்லாச் சாமானும் வாங்கியாந்தேன் அதனாலே எனக்குத்தானே ரெண்டு என்றான்.
நாந்தானே இவ்வளவு நேரமும் அடுப்படியலெ இருந்து செய்தேன் அதனாலே எனக்குத்தான் ரெண்டு என்றாள். ‘நா வாங்கியாரலேன்னா நீ எப்பிடிச் செய்வே?’ ‘நா செய்யாட்டி உங்களுக்குக் கொழுக்கட்டை எப்படிக் கிடைக்குமாம்??
“இங்கே பாருபிள்ளெ, இப்படி நாம ரெண்டு பேரும் ரெண்டு கொழுக்கட்டைக்கு சண்டை போட்டுக் கிட்டு இருந்தா நல்லா இல்லை. அதனாலெ நா ஒரு ரோசனை சொல்லுதேன். அதும்படி நடப்போம்’ என்றான். அவளும் சரி என்றாள்.
எப்பிடீண்ணா. நம்ம ரெண்டு பேரும் படுத்துத் தூங்குவோம் நாளைக்கு யாரு ரொம்ப கழிச்சி எந்திரிக்காகளோ அவுகளுக்கு ரெண்டு
51

Page 31
திருமதிசின்னத்தம்பி இராசமணி நினைவு வெளியீடு
பேச்சு பேசக்கூடாது என்றான்.
இருவரும் படுத்துத்துங்கி விட்டார்கள். விடியக்காலம் ரொம்ப நேரமாகியும் ஒருத்தரும் எழுந்திருக்கவில்லை. மதியம் ஆகியும் எழுந்திருக்கவில்லை பக்கத்துவிட்டுக்காரர்கள் எல்லேரும் கதவைத்தட்டு என்று தட்டினார்கள் உள்ளே அரவத்தையே கானோம். வாசலில் கூட்டம் கூடிவிட்டது ஊர்ச்சனங்கள். கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்தார்கள்.வந்து ரெண்டு பேரையும் தட்டி தட்டி எழுப்பிப்பார்த்தார்கள். ம்ஹீம் மூச்சையே பானோம் பேசினாத்தான் பந்தயத்தில் தோத்தாச்சே, சரிசெத்துவிட்டார்கள் எனறு நினைத்து குளுப்பாட்டி கொஞ்சம் அழவேண்டிய கடனுக்கு அழுது விட்டு தூக்கிப் போடுவோம் என்றார்கள். இருவரையும் குளிப்பாட்டினார்கள். போட்டுச் செய்யவேண்டிய கடமைகளைச் செய்து ஒப்பாரி ஆரம்பித்து விட்டார்கள்.
ஒத்துமையா வந்து ஒத்துமையாப்போனியளே ஒவலைக்கு அடம் வச்சிப் போனியளே கொள்ளிக்குப் பிள்ளை இல்லாமல்ப் போனியளே கொழுக்கட்டையை திங்காமல்ப் போனியளே
அழுதாச்சு மறுபடியும் குளிப்பாட்டி பாடையிலே வச்சிக்கட்டி நெருப்புக் கொண்டாங்க என்றான். சுடுகாட்டுக்கு தூக்கிக் கொண்டு போய்விட்டார்கள்.
அங்கே கீழே இறங்கிவைத்துவிட்டு ஏ.குடிமகனே. ம்கொள்ளி வைநீதானே வைக்கணும். அவுக ரெண்டு பேருந்தான் தொள்ளிக்குப் பிள்ளை அத்துப் போனாங்களே என்றார்கள். அவனும் கொள்ளியை எடுக்கப் போனான். பாருவதி ஐயய்யோ சுடுமே எம் மேலே தீ வைக்காதிங்கோ என்று கத்திவிட்டு என்னை அவுத்துவிடுங்க என்றாள். இந்தச்சத்தத்தைக் கேட்டு எல்லோரும் இது என்னடா சவம் ாேசுது! பேயோ பிசாசோ வாங்கடா ஊடுவோம் என்றார். ஐயா ஐயா
ஐய்ா அவுத்த விடுங்கய்யா. நடந்ததைச் சொல்லுகிறேன் என்று கத்தினாள்.
அப்புறம் அவிழ்த்து விட்டார்கள். படக் கென்று எழுந்திருந்துஎனக்குத்தான் ரெண்டு கொழுக்கட்டை எனக்குத்தான் என்று சொல்லிக்கொண்டே வீட்டை பார்க்க ஓடினாள். அதைக் கேட்ட புருசக்காரன் நாந்தானே நேரங்கழிச்சி எந்திரிச்சேன் எனக்குத்தானே ரெண்டு என்றான். எல்லோருக்கும் ஒரே ஆச்சரியாமாய்ப் போய்விட்டது. முழிமுழ என்ற முழித்தார்கள். புருசன் என்னையும் அவுத்து விடுங்கய்யா
52

பாட்டிமார் கதைகள் என்றான் அவிழ்த்துக் கொண்டே என்ன ரெண்டு பேரும் விளையாடுதெள என்றார்கள். விளையாடல்ை ஐயா,எங்களுக்குள்ஒரு பந்தயம் தூங்கி யாரு நேரங்கழிச்சி எந்திரிக்காகளோ அவுகளுக்கு ரெண்டு கொழுக்கட்டையும் முந்தி எந்திரிக்கிறவங்களுக்கு ஒரு கொழுக்கட்டையும் . நாந்தானே ஐயா நேரங்கழிச்சி எந்திரிச்சேன்? அதுனாலே எனக்கத்தானே ஐயா ரெண்டு? ஏம் பொண்டாட்டி கிட்டெ வந்து சொல்லுங்கய்யா கூப்பிட்டான் ஊர்காரர்களை.
சீ சவத்துப் பயபிள்ளைகளா எங்களை ஏமாத்தி கிட்டா இருக்கீங்க இனிமே நீங்க செத்தாலும் உங்க வீட்டுக்கு வரமாட்டோம். சை இந்த கொழுக்கட்டைக்குப் பறக்கிறதை விட கட்டையிலே போயேன்டா என்று ஏசிவிட்டு எல்லாரும் அவரவர் வீட்டுக்குப் போய்விட்டார்கள். அவனும் தன் தலைவிதியை நொந்து கொண்டே வீட்டுக்கு மெள்ள நடந்தான்.
குறிப்பு:-
விட்டுக் கொடுக்க முன்வராத இரண்டு தம்பதிகள் வாய்த்து விட்டால் அவர்களுக்காகப் பரிந்து போகிறவர்களின் நிலையும் நொம்பலம்தான்.
53

Page 32
திருமதிசின்னத்தம்பி இராசமணி நினைவு வெளியீடு
ஆணிடிகள் கட்டிய மடம்
“ஆண்டிகள் கூடிமடம்கட்டுன கதை தெரியுமா?’ என்று கேட்டார் பாட்டி
“தெரியாதே சொல்லுங்க” என்றோம்.
ஊருக்கு ஒதுக்குப்புறமா ஒரு கோயில் மடம் இருந்தது. அந்த மடத்தில் நாலைந்து ஆண்டிகள் தங்கி இருந்தனர். காலையில் எந்திரிச்சு ஆளுக்கு ஒரு திசையாப் போயி நாலு வீட்டுல கையேந்தி பிச்சை எடுக்க
Xy வேண்டியது.
கருக்கலான கோயில் மடத்துக்குத் திரும்பி வரவேண்டியது, அன்னைக்கு கிடைத்ததைச் சாப்பிட வேண்டியது, பிறகு தூக்கம் வரும் வரைக்கும் ஊர்க்கதை உலகத்துக்கதை பேசவேண்டியது. தூங்கி முழிச் சதும் காலைல திரும்பவும் திருவோட்டைத் தேடிப்பிடிக்க வேண்டியது. ஊருக்குள்ள கிளம்ப வேண்டியது. இப்படியே அவங்களோட நாளும், பொழுதும் கழிஞ்சுக்கிட்டு இருந்தது.
இப்படியா இருக்கும் போது ஒருநாள் ராத்திரி நல்லா மழை பெய்தது. கோயில் மடத்துல தூவானம் தூவியது. அப்ப ஒரு ஆண்டி சொன்னான் ‘சாமிகளே. நாமளும் எத்தனைநாளைக்குத்தான் இப்படிக் கோயில் மடத்துல தங்குவது? நமக்கின்னு ஒரு மடத்தைச் சொந்தமாகக் கட்டிக்கிட்டா நம்ம இஷ்டம் (8UT6)
54
 
 

பாட்டிமார் கதைகள் இருந்துக்கிடலாமே!” என்றான்.
அதைக்கேட்ட இன்னோர் ஆண்டி "சாமி நீர் சொல்லுததும் சரிதான். நாமளே அன்னாடம் நாலு வீட்டுக்குப் போயி பிச்சை வாங்கிச் சாப்பீட்டுக்கிட்டு இருக்கோம் நாம எப்படிச் சொந்தமா மடம் கட்ட முடியும்? மடம்கட்டணும்னா முதல்லநமக்குன்னு ஒரு இடம் வேண்டுமே” என்றான்.
பக்கத்திலிருந்த இன்னோர் ஆண்டி இடம் என்ன பிரமாதம்? நாம எல்லோரும் ஒருமிச்சி (ஒன்றுசேர்ந்து)ராஜாகிட்ட போயி“எங்களுக்குன்னு ஒரு இடம்வேணும் மடம் கட்ட” என்று கேட்டா இல்லைன்னா செல்லிரப் போறாரு? என்றான். R
அதைக் கேட்ட இன்னொருத்தன் ஆமா சாமி சொல்லுததும் நெசந்தான். நம்ம ராஜா யார் யார்க்கெல்லாமோ எதை எதை எல்லாமோ கொடுக்காரே. நமக்கு மடம் கட்டக் கொஞ்ச நிலம் தராமலா போவாரு.? சரி நிலத்துக்கு நிலமாச்சி அதோட எனக்குத் தெரிஞ்ச பண்ணையார் ஒருத்தர் இருக்கார். காட்டாம்பட்டியில் அவர் பெரிய செங்கமால்(சூளை) வச்சிருக்கார். நான் எது கேட்டாலும் இல்லைன்னு சொல்ல மாட்டார். செங்கல் பொறுப்பை நான் ஏத்துக்கிடுதேன் என்றார். அதைக்கேட்ட இன்னொரு ஆண்டி கருங்குளத்துல எனக்குத் தெரிஞ்ச மர வியாபாரி இருக்கார். அவரும் எனக்கு வேணுங்கப்பட்டவர்தான். நான் அவரிடம் மரம் வாங்கித்தரேன். மடம் கட்டிருவோம் என்றான். w
அடுத்த ஆண்டி கொத்தனாரை நான் ஏற்பாடு செய்கிறேன் என்றான். இன்னொருத்தன் சித்தாளுக்கு நான் ஏற்பாடு செய்கிறேன் என்றான்.
ஆகக்கூடிநாளைக் காலையில இருந்து நமக்குன்னு சொந்தமா ஒரு மடம் கட்டவேண்டிய காரியத்தைப் பார்ப்போம் என்று எல்லோரும் சேர்ந்து சொன்னார்கள். பிறகு தூக்கம் வரவும் தூங்கிப் போனார்கள்
காலையில் எந்திருச்சி வழக்கம் போல அவனவன் திருவோட்டைத் தேடி எடுத்துக் கிட்டு ஆளுக்கொரு திசையா யாசுவம்(பிச்சை) வாங்கக் கிளம்பி விட்டார்கள்.
அன்னைக்கு ராத்திரியும் பழையபடியே மடம் கட்டணும்னு கூடிப் பேசினார்கள். காலையில் வழக்கம் போல திருவோட்டைத் தேடினார்கள்.
இப்படியாக இன்னைக்கு வரைக்கும் அந்த ஆண்டிகள் கூடிமடம் கட்டணும்னு ராத்திரி வேளையில பேசத்தான் செய்யுதாங்க. ஆனால் இதுவரை மடத்தைத் தான் கட்டக் காணலை.
55

Page 33
திருமதிசின்னத்தம்பி இராசமணி நினைவு வெளியீடு
“இப்படித்தான் சிலர் அதைச் செய்யணும் இதைச் செய்யணும்னு பேசுவாங்க அடுத்த நாள் ஆளையே பார்க்க முடியாது. இதுதான் ஆண்டிகள் கூடி மடம் கட்டிய கதை” என்று கதையைச் சொல்லி முடித்தார் பாட்டி
குறிப்பு:
ஆண்டிகள் கூடி மடம் கட்டுத கதையா இருக்கே. என்ற வழக்குத் தொடரின் அடியாகப் பிறந்த கதை இது. வெறும் திட்டம் மட்டும் போடும் சில அரசியல் வாதிகளை இக்கதை மறை முகமாக நையாண்டி செய்கிறது. செயல்தான் முக்கியம், செயல்பாட்டை நோக்கிய திட்டமே பயன்தரும் என்ற கருத்தை இக்கதை உணர்த்துகிறது.
56

பாட்டிமார் கதைகள்
தக்காளித் தங்கை
ஒரு நாள் ஒருத்தி அம்மியில் மிளகு அரைத்துக் கொண்டிருந்தாள். எல்லா மிளகும் அரைபட்டு நசுங்கியது. ஆனால் ஒரேயொரு மிளகு மட்டும் குழவிக்குத் தப்பி அரைபடாமல் உருண்டு ஓடியது.
அதை எடுத்து குழவிக்கு இடையில் வைக்க அந்தப் பெண் கையை நீட்டினாள் அதைக் கண்ட மிளகு பேசியது.
‘அம்மா,அம்மா என்னை அரைக்காதே,
வீட்டு வேலை செய்வேன்
காட்டுவேலை செய்வேன்,
உனக்கு மகளாய் இருப்பேன்.
உழைத்துச் சோறு போடுவேன்.” என்று மிளகு கூறியதைக் கேட்டதும் பிள்ளை இல்லாத அவளுக்கு இரக்கம் ஏற்பட்டது.
அதை எடுத்து அணைத்தாள். முத்தம் கொடுத்தாள். மிளகு அதைக் கண்டு மிகவும் மகிழ்ந்தது. எல்லா வேலைகளையும் செய்தது. கடைக்குப் போகும், காடு கழனிக்குப் போகும், அன்பாகப் பேசும் அளவோடு சிரிக்கும். அதைத் தன் மகனாகவே கருதி அந்தப் பெண் அன்புடன் வளர்த்து வந்தாள்.
மிளகுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்று அவள் நினைத்துப் பெண் பார்த்தாள். யாரும் பெண் கொடுக்க விரும்பவில்லை. அவள் மிகவும் வருந்தினாள். மேலும் பல இடங்களில் பெண் தேடி அலைந்தாள்.
கருமிளகு கைலாசத்துக்குக் V
கலியாணம் செய்ய வேணும்
கைநிறைய பொன் வேண்டும்,
கண்நிறைந்த பெண் வேண்டும்.”
57

Page 34
திருமதிசின்னத்தம்பி இராசமணி நினைவு வெளியீடு
என்று கேட்டுக்கொண்டே கருமிளகு மகனுக்கு மணம் செய்யப பெண்ணுக்காக அலைந்தாள்.
ஒரு ஏழைக் குடியானவனுக்குப் பெருங்கறுப்பி என்ற பெண்ணிருந்தாள். அவளுடைய கரியநிறத்தையும் பெரிய உருவத்தையும் பார்த்து யாரும் அவளை மணக்க விரும்ப்வில்லை. ஆகையினால் அவளை கருமிளகு மாப்பிளைக்கு மணம் செய்து கொடுக்க அந்தக் குடியானவன் முன் வந்தான்.
கருமிளகுக்கும் பெருங்கறுப்பிக்கும் திருமணம் நடந்தது. இருவரும் குடும்பம் நடத்தினர். கருமிளகு நன்றாக உழைப்பதைக் கண்டு மனைவிக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது. வயலில் கருமிளகு வேலை செய்யும் போது பெருங்கறுப்பி அதற்குக் கஞ்சி கொண்டு போவாள். அதோடு மரநிழலில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பாள். கருமிளகு உருண்டு உருண்டு கருவண்டு போல் வயலில் வேலை செய்வதைப் பார்த்து மகிழ்வாள்.
ஒருநாள் பெருங்கறுப்பி கடைக்குக் காய்கறி வாங்கப் போனாள். அப்பொழுது ஐந்து தக்காளிப் பழங்கள் வாங்கி வந்தாள். வீட்டுக்கு வந்ததும் ஒரு தக்காளிப் பழம் உருண்டு ஓடியது. அதைப் பெருங்கருப்பி எடுக்கப் போனாள். அது அவளுடைய கைக்குக் கிடைக்காமல் பானை இடுக்குக்குள் சென்று மறைந்தது.
பெருங்கருப்பி அதைத் தேடினாள். ஆனால் காணவில்லை. பானை இடுக்கிலிருந்து ஒரு குரல் கேட்டது.
*அக்கா அக்கா நான் தான், தக்காளி இங்கே இருக்கிறேன் தேடி என்னைப் பிடிக்க வேண்டாம், நாடி உன்னை நம்பி வந்தேன் வேலை பலவும் செய்து தருவேன் வேண்டிய உதவி செய்து கொடுப்பேன் அக்கா அக்கா நான் தான். தக்காளி இங்கே இருக்கிறேன்.” இவ்வாறு தக்காளிப் பழம் கூறியதைக் கேட்டு பெருங்கருப்பி மிக வியப்படைந்து அதை அன்புடன் எடுத்துத் தடவிக் கொடுத்தாள்.
‘அக்கா அக்கா மெதுவாய்த் தடவு, அழுத்திப் பிடித்தால் நசுங்கிவிடுவேன்.” என்று தக்காளி கூறியதும் அதைக் கீழே வைத்துவிட்டாள். பின் அதனிடம் என்னென்ன வேலைகள் செய்வாய் என்று கேட்டாள் உடனே சிரித்துச் சிவந்தது தக்காளி பின் பேசியது.
58

பாட்டிமார் கதைகள்
‘அக்கா அக்கா அருமை அக்கா கடைக்குப்போவேன் கழனிக்குப் போவேன்,மாவரைப்பேன், மாடு மேய்ப்பேன், வீட்டைப் பெருக்குவேன், இராட்டைச் சுற்றுவேன், அத்தானுக்குச் சோறெடுப்பேன், அக்காளுக்கு ஆடிக் காட்டுவேன், அக்கா அக்கா அருமை அக்கா.” தக்காளி இவ்வாறு அன்புடன் பேசியதைக் கேட்டதும் பெருங்கருப்பி பெரு மகிழ்ச்சி அடைந்தாள்.
ஒரு நாள் வயலில் வேலை செய்து கொண்டிருந்த கருமிளகுக் கணவனுக்குத் தக்காளிப் பெண்ணிடம் உணவு கொடுத்து அனுப்பினாள். சோற்றுப் பாத்தித்தைத் தூக்கிக் கொண்டு தக்காளிப் பெண் வயலுக்குப் போனாள். கருமிளகு சாப்பிட வந்தான்.
தக்காளிப் பெண்ணைக் கண்டதும் கருமிளகு அவளையே பார்த்தது. அவ்வாறு பார்த்தது தக்காளிக்குப் பிடிக்கவே இல்லை.
"கருப்பு நிறத்து அக்காளை, விரும்பித் தானே கட்டினார் சிவப்பு நிறத்துத் தக்காளியைச் சிரித்துப் பார்ப்பது எதற்கோ?’ என்று தக்காளிப் பெண் நினைத்தாள். உடனே சாப்பாட்டுப்பாத்திரத்தை எடுத்துக் கொண்டு விட்டுக்கு ஓடி வந்தாள். வழியில் பாத்திரத்துக்குள் எதுவோ கிடந்தது குலுங்கியது. எடுத்துப் பார்த்தாள் அரை ரூபாய் அதற்குள் இருந்தது. அது அங்கே எப்படி வந்தது என்று எண்ணிப் பார்த்தாள். கருமிளகு தான் அதை அங்கு வைத்திருக்க வேண்டும். ஏன் கருமிளகு அத்தான் அரை ரூபாயைப் பாத்திரத்துக்குள் வைக்க வேண்டும் என்று தக்காளி பெண் சிந்தித்தாள்
“அக்காளின் அன்பு என்ன? அத்தானின் போக்கு என்ன? சிவப்பைக் கண்டதும் கருப்பு கசக்குதோ?” இவ்வாறு நினைத்துக் கொண்டே தகக்காளிப் பெண் வீட்டுக்கு வந்தாள். பெருங்கருப்பி அக்காளிடம் நேரே வந்தாள். அரை ரூபாயை அவளிடம் வழியில் கண்டு எடுத்ததாகச் சொல்லிக் கொடுத்தாள்.
பெருங் கருப்பிக்கு மகிழ்ச்சி தாங்கமுடியவில்லை. தக்காளிப் பெண் எவ்வளவு நம்பிக்கையுடையவளாக இருக்கிறாள் என்று நினைத்து உணர்ச்சியுடன் தக்காளிப்பெண்னை நெருங்கினாள்.
59

Page 35
திருமதிசின்னத்தம்பி இராசமணி நினைவு வெளியீடு
தக்காளிப் டெண்னே,அருமைத் தங்கையே சிவந்த கனியே,என் செல்வத் தங்கையே’ என்று கூறிய பெருங்கருப்பி தக்காளிப் பெண்ணை இறுகப்பிடித்துத் தழுவின்ாள். பிடியின் இறுக்கத்தைப் பொறுக்க முடியாமல் தக்காளி தண்ணிராய் நசுங்கிவிட்டது. பெருங்கருப்பி அதைக் கண்டு கண்ணிர் விட்டு அழுதாள்.
கருமிளகுக் கணவன் வயலிலிருந்து திரும்பினான் அவனிடம் நடந்தவற்றை விரிவாகக் கூறிப் பெருங்கருப்பி கண்ணிர் விட்டுக் கதறினாள். தானே தக்காளிப் பெண்ணைக் கொண்று விட்டதாக வருந்திச் சொல்லி அங்கிருந்து சென்றாள்.
கருமிளகு நசுங்கிக் கிடந்த தக்காளியைப் பார்த்தது. தக்காளி சாவுரை கூறியது.
‘கட்டிய மனைவி கருப்பழகி இருக்க, எட்டியென்னைப் பார்க்கலாமோ அத்தான்? அக்காளின் அன்பால் சாகா விட்டால், உங்களது வம்பால் செத்திருப்பேன் அத்தான் அக்காளுடன் அன்பாய் இருங்கள். அத்தான்.’ இதைக் கேட்டதும் கருமிளகு அம்மிக்கு உருண்டோடி அரைபட்டு நசுங்கியது.
குறிப்புகருமிளகு ஆண் மகனாகிறது. ஒரு பெண்ணை மணந்து கொள்கிறது. தக்காளி பெண்ணாகிறது. மிளகுக்கு பெண்மீதும் ஆசை வருகிறது. தக்காளி துரோகம் செய்யவிரும்பவில்லை. நசுங்கி சாகிறது.கருமிளகு அரைபட்டு சாகிறது. ஒரு வேடிக்கைக் கதையும் தர்மம் சொல்கிறது.

நினைவுக்குரியவர் பற்றி.
திருமதி சின்னத்தம்பி இராசமணி
தோற்றம் 16-02-1944
மறைவு 06-09-2010
கணவர்
அமரர்.மயிலன் சின்னத்தம்பி
பிள்ளைகள்
தவராசா (சுவிஸ்) ,யோகராசா (சுவிஸ்)
ஞானகலை ஞானராசா, ரஞ்சித்ராசா
மருமக்கள்
சாந்தினி (சுவிஸ்), ஜெயகெளரி (சுவிஸ்)
சாந்தரூபன் (கிராம அலுவலர் அச்சுவேலி தெற்கு)
பேரம்பிள்ளைகள்
சாதனா தனுஷன், தர்மிஷன்
யுவர்னிஷன், ஆஸ்திகா
சாருகாந், தாருகா
சகோதரர்
சிவலிங்கம், இந்திரசித்தன், கமலாதேவி, திலகவதி, மனோன்மணி.
ܢ
61

Page 36


Page 37


Page 38

யாமல் போனது. மெளனn வீடியோ விளையாட்
திதில்கதைசொல்லிக்கொண்டுருந்த
தா.பே: 021226 3099. 0776688318.