கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கைச் சரித்திரம்

Page 1


Page 2

مراجع
*7ւ Ծույլ
'
 ܼ

Page 3

¬ܐ"ܐܗܝ
இலங்கைச் சரித்திரம்
(பிரித்தானியர் காலம், 1796-1948)
يحكم
ஜி. சி. ஈ. உயர்நிலை - சாதாரண நிலை, ஆசிரிய கலாசாலை இறுதிப் பரீட்சைகளுக்குரிய புதுப்பிக்கப்பட்ட பாடத்திட்டங் களுக்கு அமைய எழுதப்பட்டது.
*۔--عحمحمحصبر۔۔۔۔۔۔مح.
بیمبریہ محصحمحم^مح*
ஆசிரியர் :
V. E. நிக்கலஸ், B. A. (Hons.) Lond., (சரித்திர விரிவுரையாளர், கொழும்புத்துறை ஆ, கலாசாலை)
பதிப்பு :
ஆசீர்வாதம் அச்சகம், யாழ்ப்பாணம்,
אביו

Page 4
هزة
A History of Ceylon (British Period, 1796-1948)
Written to suit the requirements of the G.C.E. (A.L.O.L.) and T. C. Final Revised Examination
Syllabuses
Author
V. E. Nicholas, B. A. (Hons.) Lond., (Lecturer in History, Colornbogam G.T.C.)
விலை : ரூபா 7-00
 
 
 
 

முன்னுரை
இலங்கை வரலாற்றின் பிரித்தானிய காலப் பகுதியைக் கூறப் புகும் இந்நூலானது, கல் விப் பொதுத் தராதரப் பத்திர, ஆசிரிய கலாசாலை மாணவர்களின் புதிய பாடத்திட்டத்தினை ஒட்டி எழுதப் பெற்ற ஒன்ருகும். தமிழில் வரலாற்றைக் கற்பித்து வருவதால் ஏற்பட்டுள்ள எனது அனுபவம், இதனை ஆக்குவதில் பெரிதும் பயன் பட்டுள்ளது. இது காறும் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள அரிய நூல்களையும் சஞ்சிகைகளையும் தழுவியே, இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. அவற்றின் ஆசிரியர்கட்கு எனது நன்றி.
எனது முதற் படைப்பான ** புது உலக சரித்திரம்' எனும் நூலில், மொழித் திணைக்களத்தின் கலைச் சொற்களை உபயோகித் தமை, பலராலும் கண்டிக்கப்பட்டது. இந் நூலில், அக்குறையை விடாது, இன்று வழக்கிகிலிருந்து வரும் பதங்களே உபயோகிக்கப் பட்டுள்ளன. தமிழ் மொழி ஆக்கத்திற்கும், கருத்து வளர்ச்சிக்கும் இவ் வழிதான் சிறந்ததென்பது எனது துணிபு.
இந்நூல் ஆக்கப் பெறுவதற்குத் துணை புரிந்த அன்பர்கள், ஆசிரிய மாணவர்கள், வித்துவான் ச. சி. ஞானப்பிரகாசம், ஆசிரியர் M. விக்ரர், என்பவர்களுக்கு என் நன்றி என்றும் உரியது. இந்நூலி லுள்ள படங்களையும் புற அட்டைப் படத்தையும் வரைந்துதவிய ஆசிரிய மாணவன் திரு. S. இராஜேந்திரத்துக்கும் எனது மன மாாந்த நன்றி. எனது முயற்சிக்கு ஊக்கமும் ஆக்கமும் தந்த ஆசீர்வாத அச்சக உரிமையாளர் திரு. M. V. ஆசீர்வாதம் அவர் களுக்கு விசேட கடமைப்பாடுடையேன். இந்நூல் நன் முறையில் ஆக்கப் பெறவும், வெளியிடப் பெறவும் உதவிய ஆசீர்வாத அச்சகத்தாருக்கு எனது உளங்கனிந்த நன்றி. −
V. E. நிக்கலஸ்
ஆஊர்காவற்றுறை

Page 5
இலங்கைப் பரீட்சைப் பகுதி
இலங்கைக் கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண) பரீட்சைக்குரிய திருத்தப்பட்ட பாடத் திட்டம்.
(1965 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதப் பரீட்சையிலிருந்து நடை முறைக்கு வருவது)
சரித்திரம்
சரித்திரப் பாடத்திட்டம் 3 பகுதிகளாக வகுக்கப்பட்டிருக்கும் பகுதி 1-இலங்கையும் அதன் அயல் நாடுகளும் கி.மு. 250-கி.பி. 1508. பகுதி11-இலங்கையும் ஐரோப்பிய தேசங்களும் கி.பி. 1453-கி.பி. 1796, பகுதி II-இலங்கையும் தற்கால உலகமும் கி.பி. 1776 - இன்று
வரைக்கும்.
பரீட்சார்த்திகள் இப்பகுதியில் ஏதேனும் ஒரு ப தியைத் தெரிந்து, தரப்படும் எட்டு வினுக்களுள் ஆறு வினக்களுக்கு மூன்று மணித்தியாலங்களில் விடை எழுதுதல் வேண்டும். ஒவ்வொரு வினத்தாளிலும், ஒரு வினவாவது உண்மை நிகழ்ச்சி, «5#5 fT @) ஆராய்ச்சி, இட அமைதி என்பனவற்றைப் பற்றிய தெளிவான அறிவைப் பரீட்சிப்பதற்காகக் கொடுக்கப்பட்டிருக்கும்.
தெரிந்து கொள்ளப்பட்ட இலங்கைச் சரித்திரத்தின் காலப் பகுதியை, அக்காலத்தில் லெங்கையுடன் நேரிற்ருெடர்பு கொண்ட நாடுகளின் அதே காலச் சரித்திர சம். வங்களுடன் தொடர்பு படுத்திக் கற்றல் வேண்டும். ஒரு நாட்டில் நடந்ந சம்பவங்களினல் வேருெரு நாட்டின் சம்பவங்கள் மீது உண்டாக்கக்கூடிய ளைவுகளை விளங்கக்கூடிய ஆற்றல் பரீட் சார்த்திகளுக்கு உண்டா எனப் பரீட் ஒக்கும் முறையில் வினுக்கள் கொடுக்கப்படும். தெரிந்து கொள்ளப் பட்ட காலப்பகுதிகளை கால ஒழுங்கின்படியும், சரித்திர விருத் திக்குக் கு "ப்பிடத்தக்க முறையில் எவ்வாறு புவியியற் காரணங் கள் பயன்பட்டன என்பதை போதிய கவனத்துடனும் கற்றல் வேண்டும். இந்நாட்டின் சரித்திரத்தைக் கற்கும்போது குறுகிய மனப்பான்மை ஏற்படாத வண்ணம், இலங்கைச் சரித்திரத்துக்கும் இலங்கையுடன் தொடர்பு கொண்ட மற்றைய நாடுகளின் சரித் திரத்துக்குமுள்ள் உறுப் பியலொற்றுமையைக் கவனமாகக் காட்டுதல் வேண்டும். இலங்கையுடன் தொடர்புடைய காலத்தில் இந் நாடு களில் நிகழ்ந்த முக்கியமான வரலாற்று நிகழ்ச்சிகளைப் பற்றி நல்ல அறிவு எதிர்பார்ச்கப்படும்.
 

Luigj ĝ? III —
V அன்பளிப்பு ங்கைச் சரித்திரம்-கி. பி. 1776 இல் ருந்து இன்று வரைக்கும்.
பாடத்தின் உள்ளடக்கம்
1796 இல் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியால் இல்ங்கை யிலுள்ள ஒல்லாந்தப் பிரதேசங்கள் கைப்பற்றப்படல். உடனடி யாக இது நிகழ்வதற்கு இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் இருந்த அரசியல் நிலைமைகள், பிரித்தானிய கிழக்கிந்தியக்
கம்பனியால் கடலோரப் பிரதேசங்கள் பரிபாலிக்கப்படல்.
பிரெஞ்சுப் புரட்சி
கண்டி இராச்சியத்தை ஆட்சிக்குட்படுத்தற்கான முயற்சிகள்1803-1815 ஆம் ஆண்டுகளின் யுத்தங்கள்-கண்டி உடன் படிக்கைகள். நோத், மெயிற்லந்து, பிறவுண்றிக் தேசாதிபதிகளின் கீழ் இலங்கை முடிக்குரிய குடியேற்ற நாடாக இருத்தல். முடிக் குரிய குடியேற்ற நாட்டுப் பரிபாலனம். 1818 ஆம் ஆண்டின் கண்டிக் கலகமும் அதைத் தொடர்ந்த அரசியல் இணக்கமும். சேர். எட்வட் பாண்ஸ் தேசாதிபதி யாயிருந்த காலம். இங்கிலாந்தின் கைத்தொழிற் புரட்சி-ஒப்புரவாண்மை இயக் கம்-இலங்கையிலும் இந்தியாவிலும் இச்சக்திகளின் தாக்கங் கள்-கோல்புறுாக் விசாரணைக் குழுவும் அதன் பொருளாதார, பரிபாலன சமூகச் சிபார்சுகளும். இலங்கையில் பிரித்தானிய பரிபாலனம் வலுவாக்கப்படல்சிவில் சேவை சீர்திருத்தப்படல்-சட்டவாக்கக் கழகமும் நிரு வாகக் கழகமும்-கோப்பித் தோட்டங்கள் ஆரம்பிக்கப்படல்கல்வியும் சமூகச் சீர்திருத்தமும்-மக்கோலேயின் செல்வாக்குவில்மட் ஹோட்டன், ஸ்ருவட் மக்கன் ஸி, என்பார்களின் ஆட் சிக் காலம்.
1848 இலிருந்த பின்னிடைவுகள். . ) فة"، . ن விவசாயிகளின் நிலைமையைச் சீர்திருத்துவதற்காக எடுக்கப் பட்ட புது நடவடிக்கைகள்-நீர்ப்பாய்ச்சல், கிராமச்சபை முறை புத்துயிரளிக்கப்படல்-புது விஞ்ஞான சாதனங்கள் கண்டு பிடிக்கப்பட்டமை-தெருக்கள் அமைத்தல்-புகையிரதம்,

Page 6
V
தந்தி,தெலிபோன்-உடனலத்தையும் சுகாதாரத் ை யும் திருத்து வதற்கான நடவடிக்கைகளும்; வைத்தியப் பகுதி, உள்ளூர் ஆட்சி என்பன நிறுவப்படல்-கல்வி-பரிபாலனத்துக்கும் கிறிஸ் தவ அல்லாத மற்றைய ஸ்தாபனங்களுக்கும் இருந்த தொடர் புகள்-முதலாளித்துவ முயற்சிகள் இலங்கையில் பரவுதல்அவற்றின் பொருளாதார விளைவுகள்-வாட், ருெபின்சன், கிரகறி, லோங்டன், ஆத்தர் ஹவ்லோக், வெஸ்ட் றிட்ஜ்லே, ஹென்றி பிளேக், ஹென்றி மக்கலம் என்பவர்களின் ஆட்சி. 10. இந்தியாவில் பிரித்தானியரின் ஆதிக்கம் பரவுதல்
இலங்கையில் மக்கலம் சீர்திருத்தங்கள்-கல்வி அபிவிருத்தியும் இச்சீர்திருத்தங்களுக்கு அச்சு உதவுதலும். 11. இந்தியாவிலும் இலங்கையிலும் யுத்தத்தின் தாக்கங்கள் (விளை வுகள்)-மத்திய வகுப்பினர் அரசியலைக் கைப்பற்ற முயலுதல் அரசாங்கத்தில் இரட்டையாட்சி முறையைப் பரிசீலனை செய்தல் இந்தியாவில் மோன்ரேக்-செம்ஸ்போட் சீர்திருத் தங்கள் இலங்கையில் டொனமூர் சீர்திருத்தங்கள்-வளர்ந் தோர் வாக்குரிமை கொடுக்கப்பட்ட மை-இலங்கையில் தொழி லாளர் இயக்கம் தோன்றியமை-இலங்கையில் டொனமூர் அரசியற் சட்டத்தின் கீழ்ச் சமூகச் சட்டங்கள் உருவாக்கப் படல்-கல்லி, சுகாதாரம், தொழில், உள்ளூர் ஆட்சி. 15. இலங்கை ஒரு சுதந்திர அரசாகுதல்-சோல்பரி விசாரணைக் குழுவும் இலங்கையில் பாராளுமன்ற அரசாங்கம் நிறுவப் படலும்-சுதந்திரமடைந்தபின் பிறநாடுகளுடன் உள்ள தொடர் புகள்-பொதுநலவரசிலும் ஐ. தே. தாபனத்திலும் இலங்கை அங்கத்துவம் பெறுதல்-ஐ. தே. சங்கத்தின் செழற்றுறைகள்பொருளாதார சுதந்திரத்துக்காக எடுக்கப்பட்ட முயற்சிகள்.
(விடயங்கள் 1, 6, 9, 12, 13, 14, 16 உலக சரித்திரம், பிரித்தானிய சரித்திரம் பற்றியவையாகும்.)
 
 
 

பொருளடக்கம்
அதிகாரம் , பக்கம்
1. இலங்கையின் புவியியற்றன்மைகள் l . முதலிரு மேற்கத்தய ஆட்சியாளர்கள் 9 3. கண்டி இராச்சியத்தின் அரசியல், சமூக,
பொருளாதார நிலைகள் 25 4. இந்தியாவிலும் இலங்கையிலும் பிரித்தானிய
வர்த்தக சங்கம் 4& 5. இலங்கையின் முதலிரு ஆள்பதிகள் 1 69 6. கண்டியின் வீழ்ச்சியும் கண்டிக் கலகமும் 92 7. இலங்கையில் பிரித்தானியர் ஆட்சி
வலுவாக்கப்படல் (1819-32) I I 3 8. கோல்புறுரக் விசாரணையும் திட்டமும், 13 9. நவ இலங்கையின் உதயம் (1833-50) 146 10. 1848 ஆம் ஆண்டுக் கலகமும் அதன் பின் விளைவுகளும் 170 11. பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையின் விருத்தி 189 12. பொருளாதார விருத்தியும் நாட்டு முன்னேற்றமும் 208 13. நிருவாக, பரிபாலனச் சீர்திருத்தங்கள் (1850-1930) 239 14. அரசியற்றிட்ட அபிவிருத்தி(1850-1930) 264 15. டொனமூர் விசாரணையும் திட்டமும் ' 281 16. சோல்பரி விசாரணையும் திட்டமும் • 303
Lorr gif? GG9L'ůLuj ĝSTIš 35 Git G. C. E(A.L. /O.L.)., T. C. Final 321
தேசப்படங்களின் அட்டவணை
1. இலங்கை, தரைத்தோற்றம் முகப்பு 2. இலங்கை-மழை வீழ்ச்சி 2 3. இலங்கை-இயற்கைப் பிரிவுகள் 4. 4. இந்து சமுத்திரத்தில் இலங்கையின் கேந்திர
நிலையத்தைக் காட்டும் படம் 7 5. போத்துக்கேயர் ஆட்சி செய்த மாநிலங்கள் 12 6. ஒல்லாந்தர் s o p 17 7. இலங்கை 1796, கண்டி மாநிலங்கள் 28 8. இந்தியா (1783-1805) 53 9. இலங்கை 1833, மாகாண எல்லைகள் 136 , , ; 10. நெல் விளைவிக்கப்படும் பிரதேசங்கள் 183 11. இலங்கை, தேயிலை விளையும் பிரதேசங்கள் 196 12 , , , இறப்பர் , 20 I 13. sp தென்னை , p. 204 14. இலங்கை, தெருக்கள் ''. 220 15. இலங்கை, புகையிரத வீதிகள் 224 16. கொழும்புத் துறைமுகம் " 229 17. இலங்கை 1889, மாகாண எல்லைகள் 24&
18. கண்டியின் தொகுப்புப் படம் பின்னிணைப்பு

Page 7
- 6500
3000
300- 1600 .
-300
1600-3000
th
pp
இலங்கை தரைத் தோ
 
 
 
 
 
 
 

இலங்கைச் சரித்திரம்
(பிரித்தானியர் காலம்)
- அதிகாரம் 1
இலங்கையின் புவியியற் றன்மைகள்
ஒரு பிரதேசத்தில் வாழும் மக்களின் வரலாற்றினை அப்பிர தேசத்தைப் பற்றிய புவியியல் அறிவின் துணையின்றி ஆராய்தல் இயலாத கருமமாகும். ஏனெனில், புவியியலானது இடங்களையும் உருவங்களையும் ஆராய்வதுடன் நின்றுவிடுவதில்லை. அது பெளதிக பொருளாதாரத் தன்மைகளை ஆராய்வதைக் கடந்து சமுதாயத்தின் வாழ்க்கை, பண்பாடு, பயிர்ச் செய்கை, சமூக வளர்ச்சி முதலியன பற்றிய பிரச்சினைகளுக்கு வியாக்கியானம் கூறவல்லது. அது, ஒரு தேசம் மாறுந்தன்மை வாய்ந்த சூழலினலும், அந்நிய நாட்டுச் செல்வாக்கினலும் இன்று அடைந்திருக்கும் நிலையை விளக்கும் திறத்தது. எனவே, இலங்கையின் வரலாற்றினைக் கற்கப்புகும் மாண வர், அதன் பிரதான புவியியல், பெளதிகத் தோற்றங்களையும், அவை எவ்வாறு வரலாற்றின் போக்கைப் பாதித்தனவென்பதையும் அறிதல் முதற்கடமையாகும்.
1. தரைத்தோற்றம், மழைவீழ்ச்சி இயற்கைப்பிரிவுகள்
இயற்கையமைப்பு : 鬣
※、 s இலங்கை, இந்து சமுத்திரத்தில், தென் இந்தியத் தீபகற்பத்தி லிருந்து இருபதுமைல் தொலைவில், பாக்கு நீரணையால் பிரிக்கப்பட்டு நிற்கும் மாங்கனி வடிவங் கொண்ட ஒரு சிறு தீவாகும். அஃது அட்சரேகை 5° 55 க்கும் 9° 51 க்கும் இடையேயும், கிழக்குத் தீர்க்க ரேகை 79° 42'க்கும், 81° 53 க்கும் இடையுேம் அமைந்துள்ளது. 270 மைல் நீளமும், 140 மைல் அகலமும், 25,332 சதுரமைல் பரப்புமுடையது. リ

Page 8
2 இலங்கைச் சரித்திரம்
தீவின் மத்தியிலுள்ள பீடபூமி 3000 அடியிலிருந்து 8000 அடிவரை உயர்ந்துள்ளது. அதனைச்சுற்றி, 1000 அடி தொடக்கம் 3000 அடிவரை உயரமுடைய மேட்டு நிலமுள்ளது. இதன் மீது உயர்ச் சமவெளியில் உள்ளதுபோன்று பல எஞ்சிய குன்றுகளும் (Residual Hills) மலைச் சிகரங்களும் சிதறுண்டு காணப்படுகின்றன. அதனையடுத்துக் கடற்கரைச் சமவெளியும் அமைந்திருக்கின்றது. கடற்கரைச் சமவெளி, மேற்கேயும், தெற்கேயும் ஒடுக்கமாகவும் வடக்கே விசாலமாகவும் உளது.
"இலங்கை, அளவிற் சிறியதாய் இருந்தபொழுதிலும், பல நில
வமைப்புப் > பிரிவுகளாகவும், உப பிரிவுகளாகவும் பிரியவைக்கும் பெரும் இயற்கையமைப்பு வேற்றுமைகளுடையது. மழைவீழ்ச்சி, வெப்பநிலை, மண்தன்மை, தாதுப்பொருட் செறிவு முதலியவற்றிலும் வேறுபாடுகள் உண்டு. இதனுல் தீவின் ஒவ்வொரு பகுதியும், மணி தனல் உபயோகப்படும் வகையிலும் பயன்படக் கூடிய முறையிலும் வேறுபடும். இதனல் மக்கள் பின்பற்றும் தொழில்களிலும், அவர் க்ளின் தோற்றத்திலும் வேற்றுமைகள் உள. மழைவீழ்ச்சி : : இலங்கையின் சுவாத்திய நிலையில் வேறுபாடு ஏற்படுவதற்கு முக்கியகார ணம் மழை வீழ்ச்சியாகும். இலங்கை, மத்திய கோட்டுக்கு அண்மையில் அமைந் திருப்பதனலும், வடக்கே இந்திய உப கண்டப் பெருநிலப்பகுதி இருப்பதணு லும், தெற்கே இந்து சமுத்திரம் இருத் தலாலும், ஒரு பருவக் காற்றுப் பிரதேச மாக அமைந்துள்ளது. அது தென்மேல் பருவக்காற்று, வடகீழ்ப் பருவக்காற்று, குருவளி, மேற்காவுகை என்பவற்ருல் மழையைப் பெறுகின்றது.
தென்மேல் பருவக் காற்ருல் பெறப் படும் மழையே அதிகமானது. இக்காற்று அரபிக்கடல், இந்துசமுத்திரம் வழியாக 2000 மைல்களுக்குமேல் வருவதனல் நீர் நிறைந்திருக்கும். அதிலிருந்து இலங் கையின் தென்மேற் பிரதேசமும், மலை இலங்கை மழை வீழ்ச்சி "கள் அடுத்த பகுதிகளும், யூலை, ஆகத்து மாதங்களில் செறிவான மன்ழயைப் பெறுகின்றன. இச்செறிவான மழை உள்ள பகுதிகளில் தான் இலங்கையின் பிரதான பயிர்களான தேயிலை, இறப்பர், தென்னை, நெல் என்பன காணப்படுகின்றன. , אין ווושט י קיי *
 
 

இலங்கையின் புவியியற் றன்மைகள்
வடகீழ்ப் பருவக்காற்று ஆசியாக் கண்டத்தினின்று 'உண்டாகி வீசுவதனல் குறைந்த ஈரமுடையது. அது தென்மேல் பருவக் காற்றைப்போன்று செறிவான மழையைப் பொழிவதில்லை. தீவின் வட, கீழ்ப் பிரதேசங்களில் இம்மழை ஒற்ருேபர் தொட்டு பெப்ரவரி வரை காணப்படும்.
குருவளி, மேற்காவுகை என்பவற்றினல் ஏற்படும் தாக்கத் தினுல் நாடு எங்ங்ணும் இடையிடையே மழையேற்படும். s
இயற்கைப்பிரிவுகள் :
மேலே கூறப்பட்ட நில இயல்பையும், மழை வீழ்ச்சியையும் அடிப்படையாகக் கொண்டு இலங்கையை மூன்று பெரும் சுவாத்திய வலயங்களாகப் பகுக்கலாம். அவை :
(1) உலர் வலயம் (2) தென்மேற்பிரதேசம் (3) மலைப் பிரதேசம் என்பனவாம்.
இம்மூன்று வலயங்களுள் உலர் வலயமே அதிபெரியதும், வர லாற்றில் அதி முக்கியத்துவம் வாய்ந்ததுமாகும். புத்தளம், மன்னர், யாழ்ப்பாணம், வவுனியா, அநுராதபுரம், பொலன்னறுவை, குரு நாகல், திருகோணமலை, மட்டக்களப்பு, மொனருகல. அம்பாந் தோட்டை எனும் மாவட்டங்களைக் கொண்ட இப்பிரதேசம், தீவின் நிலப்பகுதியின் 70 வீதத்தைக் கொண்டது. இப்பிரதேசம்தான் புராதன காலத்தில் சிங்கள நாகரிகத்தின் தொட்டில் போன்று விளங் கியது. வடகீழ்ப் பருவப் பெயர்ச்சிக் காலத்தில் 3-4 மாதங்களுக்குள் 50"-75" வரை மழையைப் பெறும் இப்பூமி, மிகவருகிய பற்றைக் காடுகளையும், செறிவற்ற புதர்க் காடுகளையுமே கொண்டது. ஆனல் இப்பாகத்தின் மண்வளம் பயிர்ச் செய்கைக்குத் தனிச் சிறப்புவாய்ந்த காரணத்தினலேயே இலங்கையில் முதற் குடியேறிய சிங்களர் அதனைத் தமது இருப்பிடமாகக் கொண்டனர். வருடத்தில் எட்டு மாதங்களுக்கு வெய்யிலின் வெம்மையில் காய்ந்து கொண்டிருப்பதனுல் ஏற்படும் வரட்சியைத் தடுப்பதற்கும், வருடத்தில் இரு போகங்களி லும் நெல் விளைவிப்பதற்கும் பண்டைய அரசர்கள் இங்கு அற்புதமான பல குளங்களைக் கட்டினர்கள். இப்பிரதேசத்தில் பெரிதும், சிறிது
மான 11,000 க்கு மேற்பட்ட குளங்கள் இருந்தனவென்று கணக் கிடப்பட்டுள்ளது.
தென்மேற் பிரதேசம் ஒரு தனிவகை நிலவமைப்பைக் கொண்டது. அது, பள்ளத்தாக்குகள் இணையாய் ஒடும் நீண்டமலை முகடுகளின் தரையமைப்பை உடையது. இந்த மலை முகடுகளின் சரிவுகள் கிழக்கு

Page 9
4. ' இலங்கைச் சரித்திரம்
நோக்கிச் சாதாரணமாகவும், மேற்கு நோக்கிச் செங்குத்தாகவும் உள்ளன. இங்கு பாயும் நதிகளினதும், சிற்றறுகளினதும் அமைப்பு
 

இலங்கையின் புவியியற் றன்மைகள் is
கம்பிவலையை ஒத்திருக்கும். இது நன்கு நீர்ப்பாய்ச்சப்படும் பகுதியா கும். தென்மேற்பிரதேசம், 13 ஆம், 14 ஆம் நூற்ருண்டுகளில் ஏற்பட்ட படையெடுப்புக்களின் பின்பே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அதன் முக்கியத்துவம் பெரும்பாலும் அதன் நிலையத்தையும் சுவாத் தியத்தையுமே சார்ந்தது. வருடம் முழுவதும் 100"-150 வரை மழையைப் பெறும் இப்பகுதியில் கமுகு, தென்னை, பலா, கறுவர் போன்ற பயிரினங்கள் வளர்ந்து நற்பயன் ஈகின்றன. கோட்டை இராச்சியத்தின் அரசர்கள், நெற் செய்கையை விட்டுப், பிறநாடுகளு டன் வியாபாரம் செய்து பொருளிட்டத் தொடங்கவே, கறுவா உயர்வு பெறலாயிற்று. இக் கறுவாதான் நாளடைவில் ஐரோப்பிய அரசுகளே இலங்கைக்கு வரவழைத்தது. இலங்கையைக் கைப்பற்றிய மேற்குத் தேய அரசுகள், கொழும்பை வாய்ப்பான நிருவாகத் தான்மாகக் கொண்டன.
மலைப் பிரதேசம் என்பது இலங்கையின் தென்மத்தியில் அமைந் துள்ள மலைப்பாங்கான தரைத் தன்மையுடைய பகுதியாகும். மலை நாட்டின் அதி உயர்ந்த பிரதேசமாகிய 5000-7000 க்கும் இடைப் பட்ட பகுதியில் பெரிய மலைத்தொடர்கள் காணப்படுகின்றன. தென் பாகத்தில் சிவனெளிபாத மலையிலிருந்து கிழக்கே ஹோட்டன் சம வெளிவரை ஒரு பெரிய மலைத்தொடர் உண்டு. இத்தொடர் அப்புத்தளையினூடாக நமுனுக்குலவரை தொடர்ந்து செல்கின்றது. மற்ருெரு உயர்ந்த மலைத்தொடர் ஹோட்டன் சமவெளியினின்று வடக்கே பிதுருத்தலாகல மலைவரை சென்று, பின் மகாவலிகங்கைப் பள்ளத்தாக்கு நோக்கிச் சரிந்து செல்கிறது. இதன்பின், தரை, யமைப்பு திரும்பவும் வடமேற்கிலிருந்து தென் கிழக்காகச் செல்லும் மாத்தளைத் தொடர் வரையும் உயர்ந்து செல்கின்றது. இம்மலைத் தொடர்களின் உருவத்தை அவதானிப்பின் அது தலைகீழாக எழுதப் பட்ட 'T' வடிவத்தை ஒத்திருக்கும்.
பண்டைக்காலத்தில் இம்மலை நாடானது ** மலைய இரட்டை ' என அழைக்கப்பட்டது. போர்த்துக்கேயர் காலம்வரை இங்குள்ள நகர்களைப்பற்றியோ, குடிசனத்தைப்பற்றியோ, நாம் எதுவும் அறி வதற்கில்லை. சிங்களர் மலைநாட்டினுள் நுழையாதிருந்தமைக்குப் பல காரணங்களுள. அதிக மழையும், அடர்ந்த காடுகளும், கடுங் குளிரும் சில காரணங்களாகும். இப்பிரதேசம், சிங்களரின் விவசாய முயற்சிக்கு உகந்ததாயில்லாமை மற்ருெரு காரணமாகும். தமிழரின் படையெடுப்புக்களுக்கு அஞ்சிய சிங்களர் புகலிடந்தேடி மலைநாட்டி னுள் புகுந்த பொழுதுதான், அஃது ஒரு புது இராச்சியமாக அமைவு பெறத் தொடங்கியது. அவர்கள், 3000 க்குக் கீழ்ப்பட்ட
g). 2. A

Page 10
6 இலங்கைச் சரித்திரம்
கண்டி, கம்பளை, பதுளை, ஹங்குறன்கெற்றை எனும் பகுதிகளில் குடியேறினர். முதலில் கம்பளையும் பின்னர் கண்டியும், அவை அந் நிய பன்டயெடுப்புக்களை எதிர்த்து நிற்கக்கூடிய இயற்கை நிலையத் தின்பேருக மலைநாட்டின் இராசதானிகளாயின. மலைநாட்டின் 3000" க்குக் கீழ்ப்பட்ட தும்பறை, யட்டிநுவற, உடநுவற, ஹரிஸ் பத்து எனும் பகுதிகள் அவர்கள் பிரதான இருப்பிடங்களாயின. 3000" க்கு மேற்பட்ட பிரதேசங்களில், மிக அண்மைக் காலத்திலேயே மக்கள் குடியேறினர் என்பதை நாம் அறிவோம்.
2. இலங்கையின் நிலையமும் அதன் பேறுகளும்
நிலையம் :
இலங்கையின் உள்நாட்டுவரலாறு எங்ங்ணம் இயற்கையமைப்பினுலும் சுவாத்திய நிலைகளினுலும் பெரிதும் தாக்கப்பட்டுள்ளதோ அங்ங்னமே பிறநாட்டுத் தொடர்புகளும் அதன் புவியியல் நிலையத்தினுல் பாதிக்கப் பட்டுள்ளன்.
இலங்கையின் வரலாற்றில் காணப்பெறும் முதலாவது முக்கிய புவியியற்றன்மை யாதெனில், அஃது இந்தியாவுக்கு வெகு அண்மை யில் அமைந்திருப்பதேயாகும். இந்நிலையத்தின்பேருக இலங்கை இந்திய வரலாற்றின் தாக்குதல்களினின்று முற்ருகப் பிரிந்துநிற்க முடியவில்லை. இலங்கையின் புராதன, இடைக்கால வரலாற்றின் அடிப்படை முழு வதும் இந்திய மயமானதே. இலங்கையின் பூர்வீகக் குடிகளும், இங்கு ஒரு புதுக் கலாச்சாரத்தைத் தோற்றுவிக்கக் காரணர்களா யமைந்த ஆரியரும் இந்தியாவினின்றே வந்து குடியேறியவர்களாவர். அன்று முதல் வடஇந்தியாவிலெழுந்த ஒவ்வொரு நாகரிகமும் இலங்கை யின் வரலாற்றைப் பாதிக்காமற் போனதில்லை. அசோகன் காலத் தில் புத்த சமயம் இத்தீவை வந்தடைந்த நாள் தொடக்கம் பெளத் தக் கலைகளும் சிற்ப முறைகளும் இந்நாட்டில் வளரவாரம்பித்தன. குப்தர் காலத்து ஒவியங்களின் அடிப்படையில்தான் சிகிரியாவின் கற் பாறையில் வனப்புடன் காணப்படும் சித்திரங்கள் தீட்டப்பட்டன. 8ஆம் நூற்ருண்டுக்குப்பின் தென்னிந்தியாவின் செல்வாக்கும் இங்கு பரவத் தொடங்கிற்று தென்னிந்தியர் அமைதியாக உட்புகுந்தும், படையெடுத்தும் தீவின் வட, கீழ்ப்பகுதிகளில் பெருந்தொகையாகக் குடியேறினர்கள். இவ்விதமாக 15 ஆம் நூற்ருண்டுவரை இந்தியா, இலங்கைச் சரித்திரத்தில் பிரதான அங்கம் வகித்த தென்பது வெளிப் படை இலங்கையின் பிரதான சாதியினரும் மதங்களும் இந்திய

இலங்கையின் புவியியற் றன்மைகள்
q-ari qa@Tuo pogoșornaggs og sog)
1995noccorgås& qog'qongqofù e Is@g?&
·gu观赏g藏un 逾9??
,^
·
} } „so. ^

Page 11
8 இலங்கைச் சரித்திரம்
மூலங்களிலிருந்தே எழுந்தவை. அதன் ஒவிய, சிற்பக் கலைகள், அரசியற் கருத்துக்கள், பரிபாலன முறைகள், தத்துவஞானம், கல்வி யாவும் இந்தியா இலங்கைக்கு ஈந்த மாபெருங் கொடைகளாகும்.
நாம் அவதானிக்கவேண்டிய இரண்டாவது முக்கிய அம்சம் யாதெனில், இலங்கை மூன்று கண்டங்களுக்கு மத்தியில், அவற்றி னிடையே போக்கு வரவு நடைபெறும் கடல் வழிகளின் சந்தியில், இந்து சமுத்திரத்தில் நடு நிலையமாகத் திகழ்கின்ற தன்மையாகும். இந்நிலையத்தின் காரணமாகவே இலங்கை அதன் வரலாற்றுக்காலம் முழுவதிலும் பற்பல துறைகளினின்று ஏற்பட்ட அரசியல், பொரு ளாதார, கலாச்சாரத் தாக்குதல்களுக்கு இலக்காயிற்று.
பண்டைக்காலந் தொட்டு இந்து சமுத்திரத்தின் கரைகளில் வாழ்ந்த மக்கள் வணிகம் செய்து வந்தனர். மேற்கே அராபிய, பாரசீயத் துறைகளினின்று புறப்பட்ட கப்பல்களும் இலங்கையைத் தரிசித்தே சென்றன. இவ்விதமாக இந்து சமுத்திரத்தில் பிரயாணஞ் செய்த பலதேசத்து மாலுமிகளும் யாத்திரீகர்களும், இலங்கை கடல் வழிகளின் நடுவே அமைந்திருந்தமையை ஒரு பெரும் தேவ கொடை என்றெண்ண்னர், நீர்வளமும், நிலவளங்களும், முத்துவளமும் மணி வளமும் நிறைந்த இத்தீவைக் கண்டவர்கள் அதனைப் 'பூலோக சுவர்க்கம்' என வருணித்தனர். இவ்வணிகத்தில் பெரும் செழிப் புற்ருேங்கிய நகரம், இலங்கையின் வடமேற்குக் கரையிலுள்ளதும் இப்பொழுது, மாதோட்டம் என்றழைக்கப்படுவதுமான மாந்தையா கும். மேலைத்தேசத்தினின்று கிரேக்கரும் உரோமரும், கிழக்கிலி ருந்து சீனரும் இலங்கையுடன் முக்கியமான வியாபாரஞ் செய்து வந்தனர்.
கி.பி. 47இல் ஹீப்பலாசு (Hippalaus) என்ற கிரேக்க மாலுமி, இந்து சமுத்திரத்தில் வீசுங்காற்றுக்களை அவதானித்து தென்மேல், வடகீழ்ப் பருவக்காற்றுக்களின் துணைகொண்டு, பாய்க் கப்பல்களைச் செலுத்தும் முறையினை எடுத்துக் கூறினர். இவ் வறிவை உபயோ கித்து, பெருங்கடலிற் பிரயாணஞ் செய்ய முற்பட்ட முதற்சாதி யினர் அராபியர் ஆவர். அவர்கள் தம் குடியேற்றத் தலங்களை ஆசியாவின் தென்கரைப் பகுதிகளிற் சுமாத்திரா வரை, பரவச் செய் தனர். அவர்களினது முக்கியமான வியாபாரத் த ல ங் களு ஸ் இலங்கையின் காலித்துறையும் ஒன்ருகும்.
14 ஆம் நூற்ருண்டில் கிழக்கு ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் முசிலிம்கள் ஆதிக்கம் பெறவே, சீனுவினின்று துருக்கித்தானம் வழியாக வந்த வணிகப்பாதை ஐரோப்பியருக்கு மூடப்பட்டது. கீழைத்
 
 

ಶೆಡ್ತಿದ್ಲಿ... Vidyalayಣ್ರ
" முதலிரு டிேற்கத்துNஆட்சியாளர்கள் g
தேய வியாபாரத்தை இழக்க விரும்பாத ஐரோப்பியர், அந்நாடுகளுக்' குக் கடல் மார்க்கமாகப் புதுப்பாதைகளைக் கண்டுபிடித்தனர். வசுக்" கோட காமா, கள்ளிக்கோட்டையை வந்தடைந்ததிலிருந்து இலங்கை அதன் புவியியல் நிலையத்தின் பேருகப் புது முக்கியத்துவம் பெற்றது. வியாபாரத்தையும் வர்த்தகத்தையும் பெருக்குவதில் ஈடுபட்டு நின்ற மேற்கத்தய வல்லரசுகள் ஒவ்வொன்றும் இலங்கையை வெற்றி கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தது. இதன் பயனக இலங்கை, புதுச் சக்திவாய்ந்த ஐரோப்பிய நாகரிகங்கட்கு அடிமைப் ' படலாயிற்று. 16ஆம் நூற்றண்டில் போர்த்துக்கேயரும், 17ஆம் நூற் ருண்டில் ஒல்லாந்தரும், 18ஆம் நூற்றண்டில் ஆங்கிலேயரும் முறையாக இலங்கையை அடிப்படுத்தினர்.
ᏙᏱ
அதிகாரம் 2
لائبر
முதலிரு மேற்கத்தய ஆட்சியாளர்கள் /
1. போர்த்துக்கேயர் காலம்
புயலினலும் காற்றினலும் காலித் துறைமுகத்தை அடைந்த . போர்த்துக்கேயப் பதிலரையனின் மகன் லொறென்ஸோ டி அல்மேடா வும், அவனது கப்பற் படையினரும்-இலங்கை மேற்கத்தய அரசு களுடன் தொடர்புகொள்ள உதவிய முதல் வழிகாட்டிகளாவர். 1505 ஆம் ஆண்டு, எட்டாம் பராக்கிரமபாகு கோட்டையிலிருந்து அரசாண்ட காலத்தில் போர்த்துக்கேயர் முதன் முதலாக இலங்கை யில் கால் வைத்தனர். அன்று முதல், 1658 ஆம் ஆண்டு அவர்கள் கரையோர மாநிலங்களிலிருந்து ஒல்லாந்தரினல் துரத்தப்பட்டது வரையுள்ள, ஒன்றரை நூற்ருண்டுகள் தான் இலங்கை வரலாற்றில் ‘போர்த்துக்கேயர் காலம்' எனச் சிறப்புப் பெயர் பெற்றுள்ளது. இக்காலத்தில் ஏற்பட்ட போர்த்துக்கேயர் ஆட்சியை மூன்று பெரும் பிரிவுகளாகப் பகுக்கலாம். அவையாவன :
(i) 1505-1551 வரை போர்த்துக்கேயர் கோட்டை இராச் சியத்து அரசர்களின் நண்பர்களாக விளங்கிய காலம். இவ்வாண்டு களில் போர்த்துக்கேயர், கோட்டை அரசர்களுடன் நட்புப் பூண்டு, 1517 இல் கொழும்பில் ஒரு பண்டகசாலையை அமைத்து முசிலிம்கள் நடாத்தி வந்த வியாபாரத்தைக் கைப்பற்றிப் பெரும் பொருளிட்டி' வந்தனர். தம் உரிமைகள் பறிபேர்வதைக் கண்ட முசிலிம்கள், சிங்கள'

Page 12
10 ** ~ இலங்கைச் சரித்திரம்
அரசர்களைப் போர்த்துக்கேயருக் கெதிராகப் போருக்கெழுமாறு தூண்டுவதற்கு எடுத்த முயற்சிகள் பயனளிக்கவில்லை. கோட்டை அரசன் புவனேக்கபாகுவுக்கும் சீதாவக்கையின் மன்னன் மாயா துன்னைக்குமிடையே மூண்ட பெரும் போர்களில் போர்த்துக்கேயர் கோட்டை அரசனுக்குப் பக்க பலமாக நின்று அவனது இராச்சியத்
தைப் பாதுகாத்துக் கொடுத்தனர். போர்த்துக்கேயர், புவனேக்க
பாகுவைப் பன்முறை படுதோல்வியினின்று காப்பாற்றியதன் பேருக, தமது அதிகாரத்தை நாட்டில் நிலைநாட்ட முடிந்தது.
(ii) 1551-1597 வரை போர்த்துக்கேயர் கோட்டை இராச்சி யத்தின் பாதுகாவலராக விளங்கிய காலம், புவனேக்கபாகுவின் வேண்டுகோளுக்கிணங்க, தன் பேரன் தர்மபாலனுக்கு, மாயாதுன்னை யினல் எவ்வித துன்பமும் நேராதிருக்கவும் அரசனையும் நாட்டையும் காப்பாற்றிக் கொடுக்கவும் போர்த்துக்கேயர் ஒப்புக்கொண்டனர். அரசனின் மரணத்துக்குப் பின் பாலிய வயதினனன தர்மபாலனின் பாதுகாவலராக விளங்கிய போர்த்துக்கேயர், படிப்படியாகக் கோட்டை இராச்சியத்தைத் தம் ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டுவர முனைந்தனர். தர்மபாலன் போர்த்துக்கேயருக்குக் கீழ்ப்பட்ட சிற்றர சன் போலானன். போர்த்துக்கேயரின் விருப்பங்களுக்கிசையத் தர்ம பாலன் கிறித்தவ சமயத்தையும் தழுவினன். கிறித்தவ சமயம் இலங்கையில் முளைகொண்டு பரவ ஆரம்பித்தது. சீதாவக்கையின் அரசர்களான மாயாதுன்னையும் அவனது மைந்தன் இராசசிங்கனும், போர்த்துக்கேயருடன் பல போர்கள் புரிந்து கோட்டை இராச்சியத் தின் பெரும் பகுதியைத் தமதாக்கிக்கொண்டனர்.
(i) 1597-1658 வரை போர்த்துக்கேயர் கோட்டை இராச்சி யத்தை நேர்முகமாக ஆட்சிசெய்த காலம். 1592 இல் சீதாவக்கை யின் இராசசிங்கன் இறந்தபொழுது, அவனுக்குப் பின் பட்ட மேற்க மைந்தன் இல்லாமற் போனதால், அவ்விராச்சியத்தின் ஒரு பகுதி போர்த்துக்கேயருக்கும் மறுபகுதி கண்டி இராச்சியத்துக்கும் சொந்தமாயின. 1597 இல் தர்மபாலன் இறந்தான். அவன் 1580 இல் எழுதி, போர்த்துக்கேய அரசனிடம் ஒப்படைத்திருந்த மரண சாசனத்தின்படி கோட்டை இராச்சியம் போர்த்துக்கேயருக் குச் சொந்தமாயிற்று. அவ்வாண்டு மல்வானை மரபு மன்றத்தில் ஏற் பட்ட உடன்பாட்டின்படி போர்த்துக்கேயர் கரையோர மாநிலங் களின் பாலன அதிகாரத்தைக் கைக்கொண்டனர்.
யாழ்ப்பாண இராச்சியத்தில் நடந்தேறிய நிகழ்ச்சிகளும் இதை யொத்தவையே. 1542 இல் யாழ்ப்பாண மன்னன் போர்த்துக்கேய
ருக்குத் திறை செலுத்த ஒப்புக்கொண்டான். அதன் பின்பு யாழ்ப்
 
 

முதலிரு மேற்கத்தய ஆட்சியாளர்கள்
T6 அரசர்கள் போர்த்துக்கேயரின் உதவி ஒத்தாசையுடனேயே செங்கோலோச்சினர். 1591 இல் நல்லூர் மரபுமன்ற முடிபுகளின் படி, போர்த்துக்கேயர் யாழ்ப்பாண அரசின்:பாதுகாவலராஞர்கள். 1620 இல் அது போர்த்துக்கேயரின் நேர்முக ஆட்சிக்குட்படலாயிற்று.
நிருவாகம் :
இலங்கையின் கரையோர மாநிலங்களின் மேல் ஆணை செலுத் திய போர்த்துக்கேய அரசாங்கம், சகல துறைகளிலும் கோவையிலி ருந்த பதிலரையனுக்குக் கீழ்ப்பட்டிருந்தது. அவன் இலங்கையின் பாலனத்துக்கென தலைமைத் தளபதியொருவனை நியமித்தான். அவ னது இல்லம் மல்வானையிலிருந்த காரணத்தினல், அவனை மக்கள் * மல்வானை மன்னன் ' என்றும் அழைத்தனர். அவனுடன் ஏறக் குறையச் சம அதிகாரம் படைத்தவன், 'வெடோர் த பசென்டா' (Vedor da Fezenda) என அறியப்பட்ட வரிப்பொறுப்பாளனவான். நீதி நிருவாகத்துக்குப் பொறுப்பாயிருந்தவன் ஒளவிதோர் (Ouvidor) எனப் பட்டான். போர்க்களத் தலைமை மேயர் (Captain Major of the field) என்பான் தலைமைத் தளபதிக்குக் கீழ்ப்பட்ட பிரதான இரா
/வ அதிகாரியாவான்.
கோட்டை :
கோட்டை இராச்சியமானது புத்தளத்திலிருந்து வளவை கங்கை வரையும், கடற்கரையிலிருந்து மத்திய மலைநாட்டின் கீழ் எல்லைவரையும் வியாபித்துக் கிடந்தது. கொழும்பு நகரைத் தவிர்ந்த இப்பிரதேசம், நான்கு திசாவனிகளாக அல்லது மாநிலங்களாகப் பகுக்கப்பட்டிருந்தது. அவை ஏழு கோரளைகள், நான்கு கோரளை கள், சப்பிரகமுவா, மாத்தறை என்பனவாம். இத்திசாவனிகளின் எல்லைகள் கொழும்பு நகரத்தின் மதில்களினின்றே ஆரம்பித்தன. ஏழு கோரளைகள் என்ற திசாவணி புறக்கோட்டையினின்று புத்தளம் வரை பரந்து சென்றது. நான்கு கோரளைகள் கொழும்பிலிருந்து குருநாகல்வரை வியாபித்துக் கிடந்தது. இதனுள் கேகாலை மாவட் டத்தின் வடபாகம், சியனக்கோரளை, ஆப்பிற்றிக்கம கோறளை என் பவை அடங்கின. சப்பிரகமுவா திசாவணி, இரத்தினபுரி மாவட் டத்தையும் கழுத்துறையின் ஒரு பகுதியையும் அடக்கியிருந்தது. மாத்தறை திசாவணி, காலிமுனை (Gale Face) யினின்று வளவை கங்கை ஈருகப் படர்ந்து கிடந்த தென்மாநிலம் முழுவதையும் உள் ளடக்கிற்று. இதுவே நிலப்பரப்பில் அதிவிசாலமானதும் பொருளா தாரத்தில் முதன்மையானதுமான திசாவனியாகும்.

Page 13
போத்துக்கேயர் ஆட்சி செய்த மாநிலங்கள் S யாழ்ப்பாணம
N
யாழ்ப்பானமும் ܔܓܗ மன்னர் மன்னரும்
g ) حق عتوم«
56ird 山点 gan Aja
கண்டி -
९° − s[T (up°*3 ሠ§jö"
gqpጳ፵6°ይ
மாத்தறை"திசாவன்
rešN
prああ""
 
 
 
 
 
 

முதலிரு மேற்கத்தய ஆட்சியாளர்கள் 13
இத் திசாவனிகள், திசாவைகள் என்றழைக்கப்பட்ட ஆள்வோர் களின் பாலனத்தின் கீழ் விடப்பட்டன. திசாவைகள் தம் மாநிலங் களின் மேல் குடியியற் பாலன, இராணுவ, நீதி அதிகாரங்கள் யாவற்றையும் நிருவகித்தனர். மாகாண அரசியற் பாலனத்தை ஆற்றுவதுடன் இராணுவக் கடமைகளையும் அவர்கள் புரிந்தனர்' அரசனுக்குச் சேரவேண்டிய இறைகளைச் சேகரித்தல், உள்ளூர் வழக் குகளை விசாரணை செய்து தீர்த்தல், கூலிப்படைகளைப் போருக்கு இட்டுச் செல்லல் என்பவை திசாவைகளின் பிரதான கடமைகளாகும்3 தொடக்கத்தில் இப்பதவிகளுக்குச் சிங்களரே நியமிக்கப்பட்டனர். ஆனல் இவர்கள் போர்களில் பன்முறை கண்டியரசன் பக்கம் சாய்ந்ததனல் நாளடைவில் போர்த்துக்கேயரே பெரும்பாலும் நியமனம் பெறலாயினர். J
திசாவைக்குக் கீழ் கோறளைகள் இருந்தனர். கோறளைகளுக்குக் கீழ் அத்துக்கோறளைகள், விதானைகள், தலைமைக்காரர்கள் என்ப வர்கள் சேவை செய்தனர்.
யாழ்ப்பாண ஆட்சி :
யாழ்ப்பாணப் பிரதேசத்தின் மேல் பகைவர் படையெடுக்கா வண்ணம் பாதுகாத்தற்கு யாழ்ப்பாணம், மன்னர் என்ற இரு
பிரதேசங்களின் பாலனத்துக்கெனத் தலைமை மேயர்கள் (Captai Majors) நியமிக்கப்பட்டனர்.
ஆட்சியின் குறைகள் : ' ' ஆயிரக் கணக்கான மைல்களுக்கப்பால் பரந்து கிடந்த நாடு களில் மிகவும் விசாலமான ஆள்புலங்களைக் கைப்பற்றித் தம் ஆட்சி அதிகாரத்தை உறுதியாக நிலை நாட்டுவது போர்த்துக்கலைப் போன்ற ஒரு சிறு நாட்டின் மன்னனுக்கும் மக்களுக்கும் முடியாத கருமமாயிற்று. போக்குவரத்துச் சாதனங்களும் செய்தி அறிவிக்கும் வாய்ப்புக்களும் இல்லாத அக்காலத்தில் தூரத்தேயங்களில் ஆட்சியைத் திறம்பட் நிருவகிப்பது இலகுவான கருமமொன்றன்று. நாளடைவில் அக்குடி யேற்றங்கள் நிறைந்த சுயாதீனமுடையனவாய் விளங்கின. ஆரம்ப காலத்தில் போர்த்துக்கேயரைத் தலைசிறந்தவர்களாக்கிய நற்பண்பு கள் அவர்களிடமிருந்து மறைந்தன. ஆட்சியை நடாத்த நியமிக்கப் பட்டவர்கள் மனம் போனவாறு நடந்தனர். மற்றையோர் செல் வச் சுகபோக வாழ்வினல் சோம்பலுக்குள்ளாயினர். உழைப்பையும் போரையும் மறந்து மனப்பொறையில்லாதவர்களாயும் மமதை நிறைந்தவர்களாயும் விளங்கினர். ''

Page 14
14 இலங்கைச் சரித்திரம்
போர்த்துக்கேயர், அரசியற் பரிபாலனத்துடன் வியாபாரத்தை
யும் சமயப் பிரசாரத்தையும் இணைத்துக்கொண்டமையினுல் pj;#5 ளுக்கு மிகுந்த இன்னல்களை விளைவிக்கலாயினர். அவர்கள் தம் சம
யத்தைப் பரப்பி, தற்புகழ்ச்சியையும், பொருட்பெருக்கையும் நாடின ரேயன்றி மக்களின் வளர்ச்சியையும், அவர்கள் நயத்தையும் கருதின ரல்லர். குடிகளையொடுக்கி,வரிகளை வருத்திப் பெற்றுப் பொருள் தேடினர்: வணிகத்திலேயே கண்ணுங் கருத்துமாயிருந்தனர். ஆட்சிப் பகுதியின் எல்லாத் துறைகளிலும் ஊழல்களும் களவும் மிதமிஞ்சிக் காணப்பட்டன. அரசாங்க உத்தியோகத்தர் யாவரும் நெறியில்லா தவர்களாகவே இருந்தனர். சொந்த வியாபாரங்களை நடாத்திச் செல்வந்தராயினர்,
போர்த்துக்கேயர் ஆட்சியின் நிலையான பயன்கள்
போர்த்துக்கேயர் 1505 முதல் 1597 வரை கரையோர மாநி லங்களில் வியாபாரம் செய்தும், அதற்குப் பின்னர் அவற்றைத் தம் ஆதீனத்துக்குட்படுத்தியும் ஆட்சி செய்தனர். தாம் இலங்கையில் இருந்த 153 ஆண்டுகளை ஞாபகமூட்டும் வகையில் விட்டுப் போனவை பலவுள.
அவர்கள், தம் சமூகப் பழக்கங்களையும் தமது மொழியையும் இலங்கைவாழ் மக்களிடையே எஞ்ஞான்றும் வழங்க வைத்துப் போயினர். போர்த்துக்கேயர் சிங்களருடனும் தமிழருடனும் சம நிலையில் பழகியதுமன்றி அவர்களுடன் கலப்பு மணமும் செய்தனர். போர்த்துக்கேயரின் வீட்டுக் கட்டட முறைகளும் தளபாடங்களும் நாட்டில் சாதாரண வழக்கங்களாயின. தமிழிலும் சிங்களத்திலும் வழங்கும் யன்னல், மேசை, அலுமாரி என்பவை போர்த்துக்கேயப் பதங்களாகும். போர்த்துக்கேய நடையுடை பாவனைகளும் பின்பற் றப்பட்டன. கமிசை, களிசான், மேஸ், சப்பாத்து, இலேஞ்சி, அலுப்பினத்தி, பொத்தான் என்பவை போர்த்துக்கேயர் விட்டுச் சென்ற உடைகளினதும்-அவற்றிற்கு உபயோகித்த பொருள்களினதும் பெயர்களாகும். மேலும் எத்தனையோ போர்த்துக்கேயச் சொற்கள் தமிழ், சிங்கள மொழிகளில் தாராளமாகக் கலந்து வழங்க ஆரம்பித் தன. ஆயிரக்கணக்கான சிங்களர், போர்த்துக்கேய நாமங்களையும் தரித்துக் கொள்பவரானர்கள்.
இலங்கையில் உருேமன் கத்தோலிக்க சமயத்தை உறுதியாக நிலைநாட்டிச் சென்றமைதான் போர்த்துக்கேயர் ஆட்சியினல் ஏற் பட்ட அதிமுக்கிய பயன் எனலாம். அவர்கள் தாம் சென்ற இடங் களிலெல்லாம் மக்களை மணந்திருப்பித் தம் சமயத்தை அனுசரிக்கச்

J/
முதலிரு மேற்கத்தய ஆட்சியாளர்கள் 翼5
செய்தனர். அவர்களது குருமார் இடையரு முயற்சியுடனுந் தணி யாத வேகத்துடனும் பணியாற்றித் தம் சமயத்தவரை மதத்தின் நிமித்தம் உயிர் துறக்க நேர்ந்த காலத்தும் அஞ்சா நெஞ்சத்தவராய் நிலைநிற்கச் செய்தனர். அவர்கள் செய்துவிட்டுப்போன சேவை இன்றும் தளர்ச்சியடையாது இருந்து வருகிறது.
ജ് / 2. ஒல்லாந்தர் காலம்
கண்டி ராச்சியத்தின் அரசர்கள்,
17 ஆம் நூற்ருண்டில் போர்த்துக்கேயரின் க்கத்தை ஒடுக்க, அவர்களின் பகை வர்களான டச்சுக்காரரின் உதவியை வேண்டினர். கண்டியின் முதல ரசனன விமலதர்மசூரியனின் அழைப்பை ஆர்வத்துடன் ஏற்ற டச்சுக் காரர், 1602 இல் முதன் முதலாக இலங்கையை வந்தடைந்தனர். ஸ்பில்பேகன் என்ற கப்பற்றளபதி கண்டியரசனைச் சந்தித்து ஒல்லாந்த ரின் நட்பையும் அவர்கள் அவனுக்கு எந்நேரமும் உதவிபுரிய ஆயத் தமாக இருப்பதையும் தெரிவித்து நின்றன். கப்பலுக்குத் திரும்பிய பொழுது, அவன் அரசனின் ஆள்புலங்களில் எப்பகுதியிலேனும் ஒரு கோட்டையை அமைப்பதற்கு அனுமதியும் பெற்றுக் கொண்டான். 1612 இல் கொட்டியாரத்தில் ஒல்லாந்தரின் கோட்டை அமைக்கப் பட்டதைக்கண்டு அஞ்சிய போர்த்துக்கேயர், அதனை உடனே அழித்து விட்டனர். அடுத்த 30 ஆண்டுகளில் மூன்று அரசர்கள் கண்டியின் சிம்மாசனத்திலமர்ந்தனர். அவர்களுள் கடைசி அரசனுன இராச சிங்கன், ஒரு வல்லபம் பொருந்திய கடல் வல்லரசின் உதவியின்றிப் போர்த்துக்கேயரின் ஆணேயை மு றி ய டி ப் பது கடினமென் றுணர்ந்து, ஒல்லாந்தரின் உதவியைப் பெறத் திட்டமிட்டான். இராசசிங்கன் பத்தேவியாவுக்குத் தூதனுப்பி ஒல்லாந்தரின் உதவியை வேண்டி நின்றன். ஒல்லாந்தரும் இராசசிங்கனின் வேண்டுகோளுக் கிசைந்து, 1638 இல் வெஸ்றர்வோல்ட் என்னும் கப்பற் இதலைவனை ஒரு கடற்படையுடன் இலங்கைக்கு அனுப்பிவைத்தனர். மே 23 ஆம் நாள் வெஸ்றர்வோல்ட் இராசசிங்கனுடன் மிகவும் சாதகமான பொருத்தனை ஒன்றினை எழுதினன். இவ்வொப்பந்தத்தினுல் இராச சிங்கன் பிற ஐரோப்பிய அரசுகளுடன் அரசியல், பொருளாதாரத் தொடர்புகள் வைத்திருக்கும் உரிமையைத் தானகவே கை நெகிழ்ந்தது மன்றி, ஒல்லாந்தரைத் தன் நிரந்தரக் காப்பாளராகவும் ஏற்றுக் கொண்டான்.
இதன் பின்பு ஒல்லாந்தர், இராசசிங்கனின் அனுசரணேயுடன், போர்த்துக்கேயரின் கோட்டைகளை ஒவ்வொன்ருகக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கினர். கீழ்க்கரையில் போர்த்துக்கேயரின் இரு

Page 15
16 இலங்கைச் சரித்திரம் ,
முக்கிய கோட்டைகளான டிட்டக்களப்பூம்_திருகோணமலையும் 1639 இல் வெற்றி கொள்ளப்பட்டன. 1640 இல் நீர்கொழும்பு, மாத்தறை, காலி மாநிலங்களும் ஒல்லாந்தருக்கு அடிபணிந்தன. 1644 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் போர்த்துக்கேயருக்கும் ஒல்லாந்த ருக்குமிடையே ஏற்பட்ட அமைதி காரணமாக இலங்கையில் போர் நிலை நிறுத்தப்பட்டது. 1652 இல் மீண்டும் பகைமை மூண்டது. 1658 மே 12 இல், கொழும்பும், 1658 யூன் 24 இல், யாழ்ப்பாணமும் சரணடைந்தன. போர்த்துக்கேயர் ஆட்சியும் முடிவுற்றது.
ஒல்லாந்தர் வெற்றிகொண்ட மாநிலங்களைத் தனக்கே கையளிப் பர் என எண்ணிய இராசசிங்கன் பெரும் ஏமாற்றமடைந்தான். அவர்களுக்கிடையே ஏற்பட்ட பொருத்தனை, ஒல்லாந்தர், போர்த் துக்கேயரைத் துரத்தியபின்பு ஒரு கோட்டையை மாத்திரமே வைத் திருக்கலாமென்றும், அவர்கள் கைப்பற்றிய ஏனைய கோட்டைகள், இராசசிங்கன் போரின் முழுச் செலவையும் இறுத்தபின் அவனிடம் ஒப்படைக்கப்படுமென்றும் கூறிற்று. 1641 இல், 310,790 வெள்ளிக ளாக அதிகரித்திருந்த கடனை இராசசிங்கன் தீர்க்கும் நிலையிலில்லை. ஒல்லாந்தரைக் கருவியாக உபயோகித்துத் தன் நோக்கத்தை நிறை வேற்ற எண்ணிய இராசசிங்கன், ஈற்றில் அவர்களுடைய சூழ்ச்சிக்குப் பலியானன். ஒல்லாந்தர் தமது இலட்சியத்தையடைய இராச சிங்கனை ஒரு கருவியாக உபயோகித்தார்களேயன்றி அவன் ஆணைப் படி நடக்க வரவில்லை. இராசசிங்கனின் நாமத்தைக் கொண்டு போர்த்துக்கேயரைத் துரத்த ஆரம்பித்த ஒல்லாந்தர், வெகுவிரை வில் அப்போலிச் சாட்டைக் கைவிட்டு, தாம் கைப்பற்றிய கரை யோர மாநிலங்கள் மேல் ஆதிபத்திய உரிமைகளையும் பாராட்டினர்.
ஆரம்பத்திலேயே எழுந்த இத் தகராறு, பிற்காலத்தில் கண்டி மன்னரினதும், ஒல்லாந்தரினதும் உறவுகளை வெகுவாகப் பாதித்தது. ஒல்லாந்தர், கரையோர மாநிலங்களைத் தாமே போர்த்துக்கேயரிட "மிருந்து கைப்பற்றியபடியால் அவற்றைத் தாம் வைத்திருக்க 'உரிமையுடையவர்கள் எனப் பிடிவாதம் செய்தனர். ஆனல் கண்டி யரசர்கள், ஒல்லாந்தர், தம் பெயரில் வெற்றிகொண்ட மாநிலங் களின் பாதுகாவலர் மாத்திரமே என்ற நிலையை உறுதியாகக் கடைப்பிடித்தனர். இவ்வுறுதிகளில் வியாபாரமே தலையான இடத்தை வகித்தது. வியாபாரத்தை விரும்பிய ஒல்லாந்தர் "அமைதியையே நாடினர். இலங்கையிலிருந்து பெறப்பட்ட அதி முக்கியமான வணிகப் பொருளான கறுவாவைக் கண்டியரசனின் இராச் சியத்திலேயே நியாயமான அளவில் பெறமுடிந்தது. ஒல்லாந்தர் அதி விசாலமான வர்த்தகத்தையும் நிறைந்த இலாபத்தையும் பெறு வதற்குக் காரணமாயிருந்த பாக்கும் அவனது இராச்சியத்திலேயே

இ 2
&rt &&
స్త్ర
ஆட்சி செய்த
క్కొ
9۔
リ編

Page 16
18 இலங்கைச் சரித்திரம்
கிடைத்தது. எனவே தன் இராச்சியத்தின் எல்லைகளை ஒல்லாந்த ருக்கு மூடிவிடும் உபாயம் சனின் கைகளில் ஒரு வலிமை படைத்த ஆயுதமாயிற்று. மறுபுறம் கண்டி இராச்சியத்தின் வியா பாரத் துறைமுகங்களான புத்தளம், சிலாபம், கொட்டியாரம் என் பவற்றை மூடி, கண்டியின் வியாபாரத்தை அழிக்கும் சக்தி ஒல்லாந் தர் கைகளிலிருந்தது. கரையோர மாநிலங்களின் மேல் ஆதிக்கமும், கடல் வலிமையும் படைத்த ஒல்லாந்தர் திருகோணமலை, மட்டக் களப்பு கற்பிட்டி எனும் துறைகளைத் தம் கைகளில் வைத் திருந்தமையினல் கண்டியரசனை எந்நேரமும் அச்சுறுத்த முடிந்தது. மேலும் ஒல்லாந்தர், இந்தியாவில் கொண்ட நிலையின் பேருக,
கண்டியரசன் வியாபாரம் செய்த மதுரை, மலையாளம் எனும் பிரதான மாநிலங்களின் 蠶°號醬—醬—"醬 விதமான நிலைபேறற்ற அமைதி, 18 ஆம் நூற்ருண்டின் நடுப்பகுதி வரையும் நீடித்தது.
1739 இல் நாயக்க வமிசத்தைச் சேர்ந்த சிறீவிசய இராசசிங்கன், கண்டியின் சிம்மாசனத்தில் அமர்ந்த பின்னர் அமைதி குலைந்து வெளியரங்கமான பகைமை வளரத் தொடங்கிற்று. அவன் தென் இந்தியாவில் பெற்ற அனுபவங்களின் பயணுக, ஒல்லாந்தர் வியா பாரத்தில் கொள்ளை இலாபம் சம்பாதிப்பதை அனுமதிக்க ஆயத்த மாக இருக்கவில்லை. தவிரவும், இந்தியாவில் நாயக்கர் ஆங்கில ருடன் நட்புக்கொண்டிருந்தமையினல், தேவையேற்படின் ஆங்கில ரின் உதவியையும் பெறலாமென எண்ணினன். புது அரச வம்சத் தினர் சிம்மாசனத்தில் அமர்ந்தபின் கண்டிக்கும் ஒல்லாந்தருக்கு மிடையே நிலவிய உறவுகள் படிப்படியாகக் கீழ் நிலையை அடைந்தன. ஈற்றில் 1761 ஆம் ஆண்டு, பகைமை போராக மாறியது. அவ் வாண்டு ஒல்லாந்தரின் கரையோர மாநிலங்களில் பாரதூரமான கல கம் மூண்டது. தாழ்பிரதேசச் சிங்களருக்கு மலைநாட்டினர் உதவி புரிந்து மாத்தறையையும் அன்வல்லையையும் கைப்பற்றினர். ஒல்லாந் தர் மறுப்பு நடவடிக்கைகள் எடுக்கவே, கண்டியரசன் பிரித்தானிய ரின் உதவியை வேண்டினன். 1762ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்த பைபசின் தூதினுல் எவ்வித பயனும் விளையவில்லை. அவ்வாண்டு இலங்கையை வந்தடைந்த புது ஒல்லாந்த ஆள்பதி வான் எக், சிலாபம், புத்தளம் என்னும் துறைகளைக் கைப்பற்றியபின் கண்டியை ஆக்கிரமிக்கத் திட்டமிட்டான். 1765இல் அவன் கலகெதரைக் கணவாய் வழியாகக் கண்டியின் மேற்படையெடுத்து அதனை வெற்றி கொள்ள முடியாது காழும்புக்கு மீண்டான். அவனுக்குப் பின் பதவியேற்ற பால்க் (Falck) கண்டியின் மாநிலங்களை ஆக்கிரமிக்கவே, அரசன் சமாதானம் செய்ய விரும்பினன். 1766_பெப்ரவரி 14 இல் அமைதிப் பொருத்தனை கைச்சாத்திடப்பட்டது.
సోల్లో muni.
*— ܚܝܝܢ —

(v முதலிரு மேற்கத்தய ஆட்சியாளர்கள் 9.
1766 ஆம் ஆண்டு ஒல்லாந்தருக்கும் கண்டியரசனுக்குமிடையே 、器 வாய்ந்த சாதனமாகும். ஏனெனில், ஒல்லாந்தர் அவ்வுடன்படிக்கையின் வழியாகத் தாம் ஆசித்த உரிமைகள் யாவற்றையும் பெற வழியுண் டாயிற்று. அவர்கள் கண்டியரசை நாலாபக்கங்களிலும் தரை எல்லை களுக்குள் கட்டுப்படுத்தி, கடலுக்கும் அதன் வழியாகப் பிற நாடு களுடன் உள்ள தொடர்புகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தனர். இனி மேல் கண்டியரசின் வியாபாரமும் பிறநாட்டுத் தொடர்புகளும் ஒல்லாந்தரின் அனுமதியுடனும் அனுசரணையுடனுமே" நடைபெற வேண்டிய கட்டாய நிலை எழுந்தது. கண்டியின் விளைபொருள்களை ஒல்லாந்தருக்கே விற்றுத் தமக்குத் தேவையான பொருள்களை அவர்கள் மூலமாகவே இறக்குமதி செய்யக் கட்டாயப் படுத்தப் பட்டனர். சுருங்கக் கூறின், 1766 ஆம் ஆண்டு உடன்படிக்கையில்ை.
கண்டி இராச்சியம் னது பொருளாதாரச் சுதந்திரத்தை முழு GOpLDL unTé95 ழிந்ததெனலாம். இவ்விதமாகத் தன் பாருளாதாரச் சுதந்திரத்தையிழந்த கண்டியரசு, 1815 இல் தனது அரசியற் சுதந் திரத்தையும் இழந்தது.
நிருவாகம் :
டச்சுக் கிழக்கிந்தியச் சங்கம் கீழைத்தேயங்களில் வர்த்தகம் செய்ய 1602 இல் அரசாங்கத்திடமிருந்து பட்டயம் பெற்றது. *பதினெழுவர் கழகம்' (Council of Seventeen) என அழைக்கப் பட்ட வர்த்தக சங்கத்தின் இயக்குநர்கள் (Directors) ஒல்லாந்திலி ருந்தே சங்கத்தின் நிருவாகத்தை மேற்பார்வை செய்தனர். ஒல் லாந்து தேசத்தின் நாட்டு மன்றம் (States General) நீங்கலாக இக் கழகம் தான் டச்சுக் கிழக்கிந்திய சங்கத்தின் தலைமை அதிகாரப் பீடமாயமைந்தது. பதினெழுவர் கழகத்துக்கு அடுத்த படியில் அதி காரம் படைத்தவர், பற்றேவியாவின் ஆள்பதி நாயகமாவார். அவர் சங்கத்தின் Επό της Ε. சட்ட மியற்றும் அதிகாரத்தைப் பெற்றிருந்தார். ஈற்றில் ஒவ்வொரு பிரதே சத்தையும், பரிபாலனம் செய்யும் பொறுப்பு பற்றேவிய அதிகாரி யினுல் நியமிக்கப்பட்ட நாட்டின் ஆள்பதியிலும், இயக்குநரிலும்
(Administrator) நியமிக்கப்பட்ட அரசியற் கழகத்திலும் (Political Council) ஒப்படைக்கப்பட்டது.
ஆள்பதியும் இயக்குநரும் :
இலங்கையின் ஆள்பதியும் பிரதான அலுவலாளர்களும் பற்றே விய ஆள்பதிநாயகத்தினலேயே நியமிக்கப்பட்டார்கள். எனவே அவர்கள் நேரடியாகப் பற்றேவிய ஆள்பதிக்கே பொறுப்பாயிருந்

Page 17
20 ". . . . " இலங்கைச் சரித்திரம்
தனர். இலங்கையின் கரையோர மாநிலங்களின் பரிபாலனத்தைப் பற்றிய விரிவான அறிக்கைகள் பற்றேவியாவுக்கு அனுப்பப்பட்டன. அதே போன்று தீவின் நீதி, நிருவாகச் சட்டங்கள் பற்றேவியக் கட்டளைகள் என்ற பெயரிலேயே அமுல் செய்யப்பட்டன. இதற்குப் பல சான்றுகளை ஒல்லாந்தரின் வரலாற்றில் காணலாம்.
ஆள்பதிக்கு அடுத்த அதிமுக்கியமான அலுவலாளர் இயக்குநர் (Administrator) என்பவராவார். பற்றேவியாவினின்று நேரடியாக நியமிக்கப்பட்ட அவர், ஆள்பதிக்குப் பொறுப்பாயிருக்கவில்லை. அவர் கொழும்பு உயர் நீதிமன்றத்தின் தலைமை அதிகாரியாகக் கடமையாற்றினர். அதனுடன் அரச கிராமங்களின் நிருவாக விநியோகமும் அவரது மேற்பார்வையிலேயே நடைபெற்றது. இத ணுல் ஆள்பதிகளும் அவரது ஆதரவையும் நல்லெண்ணத்தையும் வேண்டி நின்றனர். மறுபுறம் அவரது அதிகாரங்கள் அளவு மீரு தபடி ஆள்பதியும் பற்றேவிய அதிகாரிகளும் அதியவதானமாக இருந் தனர். இக்காரணம் கொண்டே அவரது அதிகாரத்தின் கீழ் இடம் பெறவேண்டிய சம்பளவகத்தின் தலைவனை ஆள்பதியின் அதிகாரத் தின் கீழ் அமர்த்தினர்.
அரசியற் கழகம் :
ஆள்பதியுடனும் இயக்குநருடனும் ஓர் அரசியற் கழகம் இலங்கையின் பரிபாலனத்துக்குப் பொறுப்பாயிருந்தது. இக்கழகத் தில் அதிகாரிகள் எண்மர் இடம் வகித்தனர். கொழும்பு திசாவை வரி ஆணையாளன், படைத்தலைவன், பிசுகால், அரசியற் செயலா ளேன், வணிகவகத் தலைவன், சம்பளவகத் தலைவன், பண்டசாலைத் தலைவன் என்பவர்களே அவ்வெண்மர்.
ஒல்லாந்தரின் ஆள்புலங்கள் :
ஒல்லாந்தர் தம் ஆதிக்கத்தின் கீழ் நிருவகித்த மாநிலங்களின் எல்லைகள் காலத்துக்குக் காலம் வேறுபட்டன. 1656 முதல் 1765 வரை, போர்த்துக்கேயர் ஆட்சி செய்த பகுதியில் : பாகத்தை மாத் திரமே அவர்கள் ஆண்டனர் எனக் கொள்ளலாம். அவர்கள் பரி பாலனம் செய்த கரையோர நிலங்களின் எல்லைகள் கரையினின்று 20 மைல்களுக்கப்பால் ஒருபொழுதும் வியாபித்ததில்லை. வடக்கே தெதுறு ஒயாவிலிருந்து தெற்கே வளவைகங்கை ஈருகப் பரந்து கிடந்த கரைப்பகுதி, மன்னர், யாழ்ப்பாணம் என்ற மூன்று மாநிலங்கள் மாத்திரமே ஆரம்பத்தில் அவர்களது ஆட்சிக்குட்பட்டன. 1766 இல் தான் யாழ்ப்பாணம் முதல் கிழக்குக் கரைப் பிரதேசம் முழுவதும்
 

முதலிரு மேற்கத்தய் ஆட்சியாளர்கள் 21
அவர்களது ஆணையின் கீழ் இடம் பெற்றது. இதிலிருந்து, ஒல்லாந்தர் இலங்கையின் காற்பகுதிக்கு மேற்பட்ட நிலங்களை ஒரு பொழுதும் ஆண்டதில்லை என்பது நன்கு புலப்படும்.
கொமாண்டரிகள் :
ஒல்லாந்தர் தம் ஆதிக்கத்தின் கீழ் இருந்த மாநிலங்களை, பரிப்ாலன வசதிகளை முன்னிட்டு மூன்று கொமர்ண்ட்ரிகளாகப் (Commandaries) பகுத்தனர். அவை கொழும்பு, யாழ்ப்பர்ணம், காலி என்பனவாம். வி கொமாண்டரி ஒரு திசாவனி யையும் அப்
Gr பிரதேசத்தினுள் அடங்கிய கோட்டைகளையும் கொண்டது.
β) ' கொழும்பு திசாவணி, கற்பிட்டியிலிருந்து பெந்தொட்டை
ஆறுவரையும் ப் பக்கத்தில் மல்வ ன்வல்லை, அங் வாத்தொட்ட, பிற்றிகல வரையும் வியாபித்துக் கிடந்தது. இதனுள் நான்கு, மூன்று கோறளைகளினதும் சப்பிரகமுவாவினதும் பகுதிகள் அடங்கின. திசாவனிகளுள் பொருளாதாரத்தில் இதுவே சிறந்தது. ஹல்ப்ஸ்டோப்பில் வாழ்ந்த திசாவை, இந்த விசாலமான மாவட் டத்தின் மேல் அரசியல், நீதி, இராணுவ அதிகாரம் செலுத்தினன். கற்பிட்டி, நீர்கொழும்பு, களுத்துறை என்னுமிடங்களில் மூத்த வணிகர் நியமிக்கப்பட்டனர்.
(2 யாழ்ப்பாணக் கொமாண்டரி மன்னுருக்கும் திருகோணமலைக்
(۱)اس
கும் வடக்கே அமைந்த மாநிலத்தைக் கொண் வன்னியும்
ਡ ஒருவனின் ஆணையின் கீழ் நிருவகிக்கப்பெற்றது. மன்னர், திருமலை எனுமிடங்களில் மூத்த வணிகர் நியமிக்கப்பட்டனர். 1766 இல் மட்டக்களப்பும் ஒல்லாந்தருக்கானபொழுது அதுவும் யாழ்ப்பாண திசாவனியுடன் இணைக்கப்பட்டு அங்கும் மூத்த வணிகன் ஒருவன் நியமிக்கப்பட்டான். யாழ்ப்பாணத்தின் திறவுகோலெனக் கணிக்கப் பெற்ற மன்னரில், நீரணையையும் முத்துக் குளிப்பையும் காப்பதற்கு ஒரு கோட்டையும் இராணுவ நிலையமும் இருந்தன.
டி வன்னிப் பிரதேசம் வன்னியரின் ஆட்சியின் கீழ் விளங்கியது. அவர்கள் ஆண்டு தோறும் குறிப்பிட்ட யானைகளை ஒல்லாந்தருக்குத்
திறையிாகக் காடுக்கக் கடமைப்பட்டவர்கள். எனினும், வன்னி"
\யர் அடங்காப்பிடாரிகளாகவே நடந்தனர். ஒல்லாந்தரும் அவர்
களுடைய நடத்தையைப் பராமுகமாக விட்டனர். ஏனெனில்,
.அவர்களை அடக்க முயன்ருல் அவர்கள் கண்டியரசனுடன் இணைந்து
விடக்கூடும் என்ற அச்சம் ஒல்லாந்தரின் மனதில் இருந்தது.
g). 2 B

Page 18
22 இலங்கைச் சரித்திரம்
(3 காலிக் கொமாண்டரி பெந்தொட்டை ஆற்றிலிருந்து வளவை கங்கை ஈருகவும், தரை மார்க்கமாகப் பிற்றிக்கல, பெரலபனத்தற, மாப்பலகம, கட்டுவான எனும் இடங்கள் வரை வியாபித்துச்சென்றது. இம்மாநிலத்தின் திசாவை " மாத்துறைத் திசாவை' என அழைக் கப்பெற்றன். அவனது இல்லம் மாத்துறையிலேயே அமைந்தது,
இவ்விதமாகக் கரையோர மாநிலங்களின் உள்ளூராட்சிக்கும், பரிபாலனத்துக்கும், திசாவைகளே பொறுப்பாயிருந்தனர். உள்ளூர் வியாபாரம், "காணிகளைப் பயிரிடுதல், திறைகளையும் வரிகளையும் சேக ரித்தல், பயிர்களை விருத்தி செய்தல் எனும் முயற்சிகளுடன் சம்பந் தப்பட்ட அதிகாரங்கள் யாவும், அவர்கள் கைகளிலேயே விடப் பட்டன. திசாவைகள் மூவரும் மூத்த வணிகரும் ஒல்லாந்தராகவே இருந்தனர். /
டு நீதி பரிபாலனம் :
டச்சுக் கிழக்கிந்திய வர்த்தக சங்கம், நாட்டில் நல்ல இலாபம்
ஈட்ட வேண்டுமானல், சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவது
இன்றியமையாததென உணர்ந்தது.
1632 மார்ச் 7 ஆம் நாள், பதினெழுவர் கழகம் வர்த்தக சங் கத்தின் ஆணையின் கீழிருந்த மாநிலங்களில், ஐக்கிய மாகாணங்களில் நிலவிய நீதாசன முறையின்படியே நீதி வழங்கப்படவேண்டுமென ஒரு கட்டளையைப் பிறப்பித்தது. இக்கட்டளையின் பிரகாரம் பற்றே வியாவிலிருந்த ஆள்பதி நாயகம், பற்றேவியச் சட்டங்கரைட் (Statutes of Batavia) வகுத்துத் தம் குடியேற்ற நாடுகளுக்கு அனுப்பிவைத்தான். 1666 மார்ச் 3 ஆம் நாள், இலங்கையின் டச்சு ஆள்பதி பிறப்பித்த சட்டத்தின்படி, பற்றேவியாவின் சட்டங்கள் இங்கும் வழக்கத்துக்கு வந்தன. நாட்டின் தேச வழமைக்கும் பழக்க ட வழக்கங் க்கும் ம் கொடுக்கப்பட்டன. hறுள் அடங் காத கருமங்கள் தாம், உருேமன் டச்சுச் சட்டங்களின் படி தீர்மா
னிக்கப்படுமென உறுதியாயிற்று.
உருேமன் டச்சுச் சட்டம் இலங்கையில் நடைமுறைக்கு வந்த பொழுதும், நாட்டின் தேவைக்கேற்ப அதில் மாற்றங்களும் அனு மதிக்கப்பட்டன. கொழும்பு ஆள்பதி கொர்னேலிஸ் யோன் சிமன்ஸ் (Cornelis Joan Simonsz) 1706 g)á), uiTubliusta007 & 8).Fr606juntaar கிளாஸ் ஐசக்ஸ் (Classz Isaacs) என்பவரை யாழ்ப்பாணத்தில் நில விய பழக்க வழக்கங்களை ஒருங்கு சேர்த்துத் தொகுக்குமாறு கட் டளையிட்டான். இவ்விதமாகத் தொகுக்கப்பட்ட சட்டங்களே தேச
வழமைச் சட்டமென்ற பெயரைப் பெற்றன.
 
 
 
 

முதலிரு மேற்கத்தய ஆட்சியாளர்கள் 23
1666 இல் நடைமுறைக்கு வந்த உருேமன் டச்சுச் சட்டத்தை அநுட்டானத்துக்குக் கொண்டுவருவதற்கு இலங்கையின் பல்வேறு பரகங்களிலிருந்த நீதித்தலங்கள் பயன்பட்டன.
கொழும்பு மாநகரின் 'ருட் வான் யஸ்ற்றீஸ்' (Rad Van Justitle) என்ற இக்கால உயர் நீதிமன்றத்துக்கொத்த ஒரு மன்று இருந்தது. கொழும்பிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் வசித்த ஐரோப்பியரினது வழக்குகளை விசாரிப்பதும், கீழ் நீதி மன்றுக்களின் தீர்ப்புக்களை எதிர்த்துத் தாக்கல் செய்யப்படும் மனுக்களை விசாரணை செய்வதும் அதன் வேலையாகும். டச்சு ஆள்பதிக்கு ஆலோசனை கூறு வதற்கு நியமிக்கப்பட்ட அரசியற் கழக அங்கத்தவர்கள் தாம், இம் மன்றத்தில் நீதி செலுத்தினர்.
மாகாணங்களில் "லான்ட்ருட்" (Land Raad) ‘சிவில்ருட்’ (Civil Raad) என்ற இருவித நீதிமன்றங்க ள் இருந்தன. லான்ட்ருட்டில் ஒல் லாந்த திசாவை ஒருவன், தேசப் பழக்க வழக்கங்களை நன்கறிந்த முதலி யார்களைக் கொண்ட 'யூரி'யுடன் நீதிபதியாகக் கடமையாற்றினன்.
சிவில்ருட்டில் 120 இறைசாலுக்குக் குறைந்த கடன் வழக்கு களும் ஒப்பந்தம் பற்றிய வழக்குகளும் விசாரணை செய்யப்பட்டன. இங்கு பிஸ்கால்களும் திசாவைகளும் நீதி செலுத்தினர்.
ஒல்லாந்தர் ஆட்சியின் நிலையான பயன்கள் :
ஒல்லாந்தர் கரையோர மாநிலங்களை 1658 தொடக்கம் 1796 வரையுமான 138 ஆண்டுகளாக ஆண்டனர். இலங்கையின் அரசியல், பொருளாதாரம், சமூக அமைப்பு எனும் துறைகளில் பாரதூரமான மாற்றங்களை ஏற்படுத்தாவிடினும், அவர்கள் தம் ஆட்சிக்காலத்தில் தமது நாகரிகத்தின் சில சின்னங்களைப் பதித்துச் சென்றனர் என் பதை மறுக்கமுடியாது.
ஒல்லாந்தரின் சந்ததியினர் இன்றும் இலங்கையில் பறங்கியர் என்ற பெயருடன் வாழ்கின்றனர். டச்சுக்காரர் ஏற்படுத்திய உருே மன் டச்சுச் சட்டம் இன்றும் நீதிமன்றங்களில் உபயோகிக்கப் படுகிறது. இலங்கையில் நன்கு வேரூன்றியிருக்கும் புருெட்டஸ்தாந்த கிறித்தவ சமயத்தைத் தாபித்தவர்களும் ஒல்லாந்தரே. இச்சமயம் விசேடமாக, யாழ்ப்பாணத் தீபகற்பத்திலும் தென்மேற் gபிரதேசத் திலும் நிலையான வேர்களை ஊன்றியது. வியாபாரத்தின் விருத்திக் காக அவர்கள் கொழும்பினின்று புத்தளத்துக்கும், களனி கங்கையி லிருந்து கழுகங்கை வரையும் அமைத்த கால்வாய் இன்றும் பயன் பட்டு வருவதைக் காணலாம்.

Page 19
24 இலங்கைச் சரித்திரம் கட்டட நிருமாணிகளான ஒல்லாந்தர் இலங்கையில் سیکس نام
கட்டடச் சிற்பக்கலையை உன்னத நிலைக்கு உயர்த்தினர். அவர்கள் அமைத்த கோட்டைகளையும், தேவாலயங்களையும், வீடுகளையும் இன்றும் நாட்டின் பல பாகங்களில் காணலாம். கட்டட வேலைக்கு இன்றியமையாத வேறு பல முயற்சிகளையும் ஆரம்பித்து வைத்தனர். மொறட்டுவையில் தச்சுத் தொழிலையும் களனியாவில் ஒடுகள் உற்பத்தி
செய்யும் தொழிலையும் ஆரம்பித்தவர்கள் அவர்களே. வாயில் முகப்
பும் மத்தியில் முற்றமும் உள்ள வீடுகளை அவர்கள் தாம் இலங்கைக்கு அறிமுகப்படுத்தியவர்கள். அதைத் தொடர்ந்தே விருந்தை, போட் டிக்கோ என்ற், டச்சுச் சொற்கள் பிரயோகத்துக்கு வந்தன.
புது உணவு வகைகளும், பானங்களும் டச்சுக்காரரினல் இங்கு புகுத்தப்பட்டன. அச்சாறு, கேக், உருளைக் கிழங்கு, ஜின், புகையிலை எனும் பொருள்கள் உபயோகத்துக்கு வந்தன.
டச்சு மொழிச் சொற்கள் சிங்களத்துடனும் தமிழுடனும் சேர்ந்தன. வர்த்தகம், சட்டம் எனும் துறைகளில் டச்சுப் பதங்கள் அபரிமிதமாகக் காணப்படுகின்றன.
ஒல்லாந்தர் தாம் அரசோச்சிய மாநிலங்களில் தோட்டப் பயிர்ச் செய்கைக்கு ஊக்கங் காட்டினர். அவர்கள் மக்களைத் தம் இல்லங்களிலும் தோட்டங்களிலும் கோப்பி, மிளகு, கறுவா, பாக்கு, தென்னை போன்ற வணிகப் பயிர்களைச் செய்கை பண்ணுமாறு ஊக்குவித்தனர். அவர்களும் பல தோட்டங்களைத் திறந்தனர்.
நெற்பயிர்ச் செய்கையை விருத்தி செய்யும் நோக்குடன் ஒல் லாந்தர் பல குளங்களைத் திருத்தினர். தஞ்சாவூரிலிருந்து அடிமை களை வரவழைத்து நெல் விளைவிப்பதற்காக அமர்த்தினர்.
n
 
 

அதிகாரம் 3 ഗ്
கண்டி இராச்சியத்தின் அரசியல், சமூக, பொருளாதார நிலைகள்
(N 1. பழைய சரித்திரம்
அனுராதபுரியும், பின்னர் பொலன்னறுவையும் முறையே இலங்கையின் தலைநகரங்களாக விளங்கிய காலங்களில், மலைநாடானது 'மலைய இரட்டை" என அழைக்கப்பெற்று வந்தது. இந்தியா வினின்று வந்த ஆரியர்கள், வெப்ப வலயத்தில் குடியேறியபொழுது, இலங்கையின் பூர்வக் குடிகளான வேடர் இப்பிரதேசத்திலேயே ஓடி ஒளித்தனர் எனச் சரித்திரம் கூறும். அதற்குப்பின், இராசரட்டையும், உறுகுணையும் இருபெரும் இராச்சியப் பிரிவுகளாக எழுச்சியடைந்த காலத்தில், மலைய இரட்டையானது தண்டனைக்கு அஞ்சியவர்களின தும், சூழ்ச்சிகளில் தோல்வியடைந்த சதிகாரரினதும் புகலிடமாயிற்று. போர்களில் தோல்வியடைந்த அரசர்களும், மலைநாட்டின் அடர்ந்த காடுகளிலும், உயர்ந்த மலைகளிலும் கரந்துறைந்தனர். 13-ஆம், 14 ஆம் நூற்ருண்டுகளில், சோழர் இராசரட்டையின்மேல் படை யெடுத்தபோது சிங்கள அரசர்கள், தென் மேற் பகுதியில் யாப்பாகுவ, குருநாகல், தம்பதெனியா, கோட்டை முதலாம் இடங்களைத் தம் இராசதானிகளாக்கினர். அக்காலத்தில் இராசரட்டையினின்று இடம்பெயர்ந்த சிங்களர், நாலந்தைக் கணவாயினுாடாக மாத்தளை, கண்டி, கம்பளை, அழுத்துவரை ஊவா முதலிய இடங்களில் குடியே றினர். 1344 இல் புவனேக்கபாகு தனது இராசதா னியைக் கம்பளையில் அமைத்தான். 1480 அளவில் விக்கிரமபாகு, தன் தலை நகரைச் செங்கடகலைக்கு மாற்றினன்." 'இது மகா நுவரை' (பெரிய பட்டணம்) என்று அழைக்கப் பெற்றது. செங்கடகலையைத் தலை நகராகக்கொண்டு விளங்கிய மலையஇேராச்சியம், 'கந்தே உட பஸ் ரட்ட" அல்லது மலை மேலுள்ள ஐந்து ஊர்கள் எனப் பெயர் பெற் றது. இவ்விராச்சியத்தில் இடம் பெற்ற ஐந்து ஊர்களாவன உடு நுவரை, யட்டிநுவரை, தும்பற, ஹேவாஹெற்ற, ஹரிஸ்பத்து என்பனவாம். இப்பெயர் போர்த்துக்கேயர் காலத்தில் 'கண்டியா" என்றும் பின்பு கண்டி என்றும் திரிந்தது "。
கண்டியின் சுதந்திரம் :
கரையோர மாநிலங்களைப் போர்த்துக்கேயரும், ஒல்லாந் ரும் அரசாட்சி செய்த மூன்று நூற்ருண்டுகளிளிலும், இலங்கையின் மத்திய
பகுதியில் கண்டி இராச்சியம், ஒரு சுதந்தி அரசாகவே திகழ்ந்தது:
ܕܐ¬., 27ܐܬܐ

Page 20
26 இலங்கைச் சரித்திரம்
கண்டி ஒரு சுதந்திர அரசாக இயங்கியது மாத்திரமன்று, அது மீண்டும் மீண்டும் போர்த்துக்கேயரினதும் ஒல்லாந்தரினதும் படை யெடுப்புக்களை முறியடித்தது ஒர் அற்புதமான வரலாருகும்.
1582 இல் முதலாம் இராசசிங்கன் உடறட்டையை வென்ற பொழுது கண்டி, சீதாவக்கை இராச்சியத்தின் ஒரு பகுதி யாயிற்று. 1594 இல் விமலதர்மசூரியன், இராசசிங்கனைத் தோற் கடித்தும், பின்னர் போர்த்துக்கேயருக்கெதிராகப் புரட்சி செய்தும், கண்டி இராச்சியத்தின் அதிபதியானன். அதற்குப் பின் போர்த்துக் கேயரும் ஒல்லாந்தரும் மலைநாட்டை வெற்றிகொள்ள எடுத்த முயற் சிகள் யாவும் படு தோல்வியிலேயே முடிந்தன. 1630 இல் டி சா, வெல்லவாயையிலும், 1638இல் டியோகோ டி மெல்லோ கன்னேறுவை யிலும், தமது படைகளுடன் உயிர் நீத்தனர். 1765 இல் ஒல்லாந்த ருக்கும் இதே கதியுண்டாயிற்று. இவ்விதமாக, இரு நூற்றண்டுக ளாகக் கண்டி மன்னர்கள், தமது இராச்சியத்தின் சுதந்திரத்தைப் பறிபோகாது பேணிக் காத்தனர். அதனுடன் நில்லாது அவர்கள், கரையோர மாநிலங்களினின்று தமது பகைவர்களான அந்நியர்களைத் துரத்திவிடுவதற்கு அயராது முயற்சித்தனர்.
2. பரப்பளவு, நிலையம், தரைத்தோற்றம்
பரப்பளவு :
ஆங்கிலர் கரையோர மாநிலங்களை வெற்றிகொண்ட பொழுது, கண்டி இராச்சியமானது மத்திய மலைப்பகுதியையும், அதனைச் சூழவிருந்த சமவெளியின் பெரும்பகுதியையும், உள்ளடக் கியது. கரையோர மாநிலங்களின் அகலம், கரையினின்று எட்டுத் தொடக்கம் 30 மைல் தூரத்துக்குமேல் வியாபித்ததில்லை. வட பகுதியில் மாத்திரம் அவர்களின் ஆட்சி 80 மைல் வரை பரந் திருந்தது. அக்காலத்தில் கண்டி இராச்சியத்தின் பரப்பளவு 14,144 சதுர மைல் என்றும், கரையோர மாநிலங்களின் பரப்பளவு 10,520 சதுர மைல் என்றும் சைமன் காசிச் செற்றி (Simon Casie Chetty) கணக்கிட்டுள்ளார். எனவே கண்டி இராச்சியம், கரையோர மாநிலங்களிலும் கூடுதலான விஸ்தீரணமுடையதென்று புலப்படும்.
மத்திய மலைநாட்டின் பரப்பளவு முழுத்தீவின் 4 பகுதி அல்லது 3000 சதுரமைல் ஆகும். இப்பிரதேசத்தின் உயரம் 800 அடி தொடக்கம் 5000 அடிவரை வேறுபடும். இதன்கண்ணுள்ள மூன்று பகுதிகள் தெளிவாகப் புலப்படும். அவையாவன :-
 
 

கண்டி இராச்சியத்தின் அரசியல், சமூக, பொருளாதார நிலைகள் 27
(அ) மத்திய மலைப் பெருந்திரள் (ஆ) நக்கிள்ஸ் (Knuckles) பிரதேசம் (இ) இறக்குவானை அல்லது புளுத்தோட்டத் தொடர்
மத்திய மலைப் பெருந்திரள், தெற்கிலே தென் மலைச்சுவர் எனப் பொதுவிற் கூறப்படும் செங்குத்தான மலையினலும், வடக்கே கண்டி தொடக்கம் மினிப்பே வரை, மகாவலிகங்கையின் குறுக்குப் பள்ளத்தாக்கினலும் சூழப்பட்டுள்ளது. இப்பகுதி உயர் சமவெளிகளை யும், மேட்டு நிலங்களையும் செங்குத்தான பக்கங்களையுமுடையது. மேட்டு நிலங்களுள், ஹற்றன், மூன், எல்க், கந்தப்பொல, அம்பவெலச் சமவெளிகள் குறிப்பிடத்தக்கவை. குன்றுகளினதும், மலைச்சிகரங்களி னதும் உதாரணங்கள் பிதுருத்தலாகலை (8281 அடி), கிரிக்ாலப் பொத்த (7857 அடி), தோட்டப்பாலை (7741 அடி), சிவனுெளி பாதம் (7420 அடி) முதலியன. நக்கிள்சும் இறக்குவானைத் திணி வும், மத்திய மலைத் திரளினின்று பிரிபட்ட பகுதிகளாகும். மூன்றும் ஒருமித்தே மத்திய மலைநாட்டுப் பிரதேசமாகும்.
நிருவாக அடிப்படையில், கண்டி இராச்சியமானது, பன்னிரண்டு
பிரிவுகளாகப் பகுக்கப்பட்டிருந்தது. அவையாவன: நான்கு கோறளை, ஏழுகோறளை, ஊவா, சப்பிரகமுவா, மாத்தளை, மூன்று கோறளை, வலப்பான, உடப்பலாத்த, நுவரக்கலாவிய, வெல்லச, விந்தனை" தமன்கடுவை என்பனவாகும். இப்பிரிவுகளுக்குத் திசாவைகள் ஆள்பதி களாக விளங்கினர் ; ஒவ்வொரு பிரிவும் ஒரு திசாவணியென அழைக்கப்பட்டது. கண்டி மாநகரத்தின் சுற்றுப்புறத்திலிருந்த சிறு பிரிவுகள் இரட்டைகள் எனப்பட்டன. இவ்விதமாக அமைந்த ஒன்பது இரட்டைகள் உடுநுவர, யட்டிநுவர, தும்பனே, அரிஸ்பத்து, தும்பறை, ஹேவாஹெற்ற, கொத்மலை, உட (மேல்) புலத்கம, பாத்த . (கீழ்) புலத்கம என்பனவாம். இப்பிரிவுகளின் ஆட்சிக்குப் பொறும்
பாயிருந்தவர்கள், இரட்டேருல என அழைக்கப்பட்டனர்.
நிலையம் :
கண்டி நகரம், அஃது அமைந்திருக்கும் நிலையத்தின் பேருகவே مکرمہ மலைநாட்டின் இராசதானியாகத் தெரிந்தெடுக்கப்பட்டது. அஃது இரு மலைகளுக்கிடையேயுள்ள பள்ளத்தாக் கொன்றினில் அமைந்துளது. அதன் சராசரி உயரம் 2000 அடிக்கும் 3000 அடிக்கும் இடைப்பட் டது. கிழக்கே நக்கிள்ஸ் தொடரும், மேற்கே ஹந்தானை மலைகளும் கண்டியின் இருபுறமும் முறிவற்ற நீண்ட சுவர் போலக் காட்சியளிப் பதைக் காணலாம். தவிரவும், இலங்கையின் மிகப் பெரிய நதியான மகாவலி கங்கை உயர் மலைகளில் பெரதேனியாவுக்கருகில் S வடி

Page 21
Eயிர்ழ்ப்பாணம் இலங்கை
1796
கண்டி மாநிலங்களைக்
காட்டும் படம்
Xリ ତି)
- Sri ز
LLUS$3 * 3இல்ாத்த
2N ,
'సి
«*`ና
8 V a.
V a sdůur 2 - "" . 81766க்கு முன் டச்சு எல்லைகள் ** 2。 பின் ::: 0, 22 99.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கண்டி இராச்சியத்தின் அரசியல்,சமூக, ப்ொருளாதார நிலைகள் 29
வமாக வளைந்து, தெற்கு நோக்கி ஓடிப் பின்னர் வடபுறமாகத் திரும்பி திருகோணமலையை நோக்கிப் பாய்கின்றது. இந்த S வடி வத்தின் இடையிலமைந்த கண்டி நகரம், அந் நதியினின்று வடக் கேயும் மேற்கேயும் பாதுகாப்பைப் பெறுகின்றது. போர்த்துக்கேயர் பன் முறை மகாவலிகங்கையின் கரையிலுள்ள கன்னேறுவையில் தோற்
கடிக்கப்பட்டமை குறிப்பிடற்பாலது.
?A○*F }*.) کسی سے 2-1 KANY - 1. N. . سمر ..........\, !。バ சுவாத்தியம் : /** յ2- ( )
ܠ±ܢ نجير
சுவாத்தியத்தை அடிப்பட்ையாகச் கிாஜாடு கண்டி இராச் சியத்தினை வரண்ட பிரதேசம், ஈரலிப்பான பிரீதேசம் எனும் இரு பகுதிகளாகப் பகுக்கலாம். ஈரலிப்பீான பிரதேசம் மாத்தளை, கண் நுவரெலியா, அப்புத்தளை எனும் இட்ங்களை இணை மேற்குப்புறத்திலுளது. இப்பிரதேசம், சராசரி"150 அங்குலத்திற்கு மேற்பட்ட மழையைப் பெறுவதனல், எங்கும் செழிப்பான அடர்ந்த காடுகள் காணப்படுகின்றன. இக்காடுகளில் மிக உயர்ந்த மரங்களும் அடர்த்தியான கொடிகளும் மரங்களிற் படர்ந்து விழுதிரைபோல் நீண்டு தொங்கும். இவை, கண்டிக்கு இயற்கையான பாதுகாப்பை, யும், பகைவர்களுக்கு விரோதமான அரணையும் பெற்றுத் தந்தன. மலைச்சாரல்களில் கண்டியர் நிலங்களைஒப்புரவாக்கிப் படி வயல்களில் நெல்லை விளைவித்தனர். மலைநாட்டின் வரண்ட பிரதேசத்தில் பதிந்த சமவெளிகள் போன்று பருவ மழை வீழ்ச்சியின் ஆதிக்கம் காணப்படும் மாத்தளை, தும்பறை, ஹேவாஹெற்ற, வலப்பான, பதுளே எனும் பிரதேசங்கள், வரண்ட பிரதேசத்தைச் சேர்ந்தனவாகும். மலைகளி லிருந்து ஓடிவரும் சிறு நதிகளினல், மலைச்சாரற்படி வயல்கள் நன்கு நீர்ப்பாய்ச்சப்படுகின்றன.
தெருக்கள் :
மலைநாட்டினுள் பிரயாணம் செய்வதற்கு ஒற்றையடிப் பாதை களே பயன்பட்டன. அங்கு மக்கள் ஒருவருக்குப்பின் ஒரு மலைகளில் ஏறியும், காடுகளில், மரங்களுக்கும் கொடிகளுக்குமிடை யில் கடினத்துடன் போக்குவரத்துச் செய்தனர். கண்டி நாட்டின் வர்த்தகம் மிகக் குறைவாக இருந்தமையினுல், தெருக்கள் அதிகம் தேவைப்படவில்லை. அங்கு மாட்டுவண்டிகள் பிரயாணத்துக்கு உத வின. ஆனல், தெருக்கள் மிகவும் சொற்பம். நாட்டின் பாதுகாப்பை முன்னிட்டுக் கண்டி இராச்சியத்தில் பாதைகள் அமைக்கவொண்ணு தென அரசர்கள் கட்டளையிட்டிருந்தனர்.

Page 22
@3 ". . இலங்கைச் சரித்திரம்
வர்த்தகம்:
ஒல்லாந்தர் கரையோர மாநிலங்களின் அதிபதிகளாக விளங் கிய காலத்தில், கண்டியர் தம் ஆதிக்கத்துக்குக் கீழிருந்த பல துறை முகங்களின் வழியாக பிற நாட்டவருடன் வணிகம் செய்ய உரிமை கள் பெற்றிருந்தனர். மேற்குக் கரையில் கற்பிட்டி, புத்தளம், கீழ்க் கரையில் திருகோணமலை, கொட்டியாரம், மட்டக்களப்பு எனும் துறைமுகங்கள் 览#茄一嵩元霹 இல் ஒல்லாந்தர் இப்பிரதேசங்களைத் தமதாக்கியதன் பின், கண்டியர் தமது வெளிநாட்டுத் தொடர்புகளைப் பூரணமாக இழந்தனர்.
செழிப்பும், சனச்செறிவும் நிறைந்த ஏழு கோறளைகளுக்கு
புத்தளம், கற்பிட்டி பிரதான வெளிநாட்டு வாயில்களாக அமைந்தன.
鬣“嵩器荒“蔷
கள் கற்பிட்டியில் நங்கூரம் பாய்ச்சி நின்றன. கண்டியின் அதி சிறந்த
துறைமுகம் கொட்டியாரமாகும். மட்டக்களப்பு தென்கீழ்ப் பிரதே
சங்களின் பிரதான துறைமுகமாகும். இவற்றின் வழியாக இறக்கு மதியான பிரதான பொருள் துணிமணிகளாகும்; ஏற்றுமதி செய்யப்
பட்ட பொருள் பாக்கு. தரகர்கள், கிராமங்கள் தோறும் பாக்கைச்
சேகரித்து, அவற்றைத் துறைமுகங்களுக்கு ஏற்றி, வியாபாரிகளுக்கு
விற்றனர். அங்கு அவர்கள் இந்தியத் துணிமணிகளை வாங்கி, உள் நாட்டில் பாக்கு விற்ருேருக்கு விற்பனை செய்தனர். மேற்குத் துறை
களில் கருவாடும், உப்பும் வந்திறங்கின. கிழக்கே நெல்லும் இறக்கு
மதியாயிற்று. இடையிடையே யானைகளும், தந்தமும் ஏற்றுமதியா
பின. 1766 இல் கண்டியர் இப்பிரதேசங்களை இழந்தமை ஒரு
மாபெரும் நட்டமாயிற்று. இதனை நிவிர்த்தி செய்ய அவர்கள் பிற வழிகளில் முயன்றனர். .
3. கண்டியின் பாதுகாப்பு
இயற்கையன் ன் கொடையில் சிறந்த துக்கு மலையருவிகள், சிற்ருறுகள், உயர் குன்றுகள், ச் சரிவுகள், அடர்ந்த காடுகள் என்பன் இயற்கையான பாதுகாப்பை ஈந்தன. இவற்றுடன் கணவாய்கள் பல, கண்டியின் பாதுகாப்பை மேலும்
புலப்படுத்தின.
கணவாய்கள் :
மலைநாட்டினுள் செல்வதற்கு வாயில்களாக அமைந்த கண வாய்கள் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏன்ெ னில், அவற் றின் வழியாகவே மக்களும், பகைவர்களும் மலைநாட்டிற்குப் போக்கு வரத்துச் செய்தனர். வடக்கிலிருந்து மலைநாட்டுக்குச் செல்வதற்கு
 
 

கண்டி இராச்சியத்தின் அரசியல், சமூக, பொருளாதார நிலைகள் 31
மிக இலகுவான வழி நாலந்தைக் கணவாயினூடாகச் சென்ற பாதை யாகும். 體驚卷顎 பிரதானமானவை யும், முக்கியத்துவம் வாய்ந்தவையுமான கணவாய்கள் காணப்பட் டன. கண்டியின் வர்த்தகர்கள், பாக்கு, கறுவா எனும் பொருள் களுடன் கலேகெதரக் கணவாயின் வழியாக குருநாகலையடைந்து, ஈற்றில் புத்தளத்தைப் போய்ச் சேர்ந்தனர். மேற்கே, கொழும்பி னின்று வந்த பிரதான பாதை, களனிப் பள்ளத்தாக்கு வழியாகப் பலனைக் கணவாய்க் கூடாகக் கண்டியை அடைந்தது. இக்கணவாய் தான், கண்டியின் மலைக் கோட்டையின் திறவுகோலெனலாம். இதன் வழியாகவே, போர்த்துக்கேயர் கண்டியின்மேல் பல முறைகள் படை யெடுத்துச் சென்றனர். டி சொயிசா, அசிவெ'டோ என்னும் போர்த் துக்கேயத் தளபதிகளின் கீழ்ச் சென்ற படைகள், இங்குதான் கொள்ளையிடப்பட்டு, அழிக்கப்பட்டன. முன்னர், அந்நியப் படைகள் செல்வதற்கு வழியாகவிருந்த இக்கணவாயினூடாகவே இன்றைய கொழும்பு-கேகாலை-கண்டிவீதி அமைக்கப்பட்டுள்ளது. தெற்கே, கினிகத்ஹேன எனப்படும் மற்ருெரு கணவாயுண்டு. சீதாவக்கை, இராசதானியாகவிருந்த காலத்தில் போர்த்துக்கேயரின் படையெடுப் புகளுக்கஞ்சிய மாயாதுன்னை, இக்கணவாயின் வழியாகவே மலைநாட் டினுள் ஒடியொளித்தான். கிழக்கே, மகாவலிகங்கை, கண்டிக் குன்றுகளைத் தாண்டித் தும்பரைப் பள்ளத்தாக்கு வழியாக அழுத் நுவரைக் கணவாயைக் கடந்து பா ய் கி ன் ற து. இக்கண வாயின் வாயிலில் தான் முற்காலத்தில் பிரசித்திபெற்ற அழுத் நுவரைப் பட்டினம் அமைந்துளது. இந் நகரின் வழியாகவே, கண்டி இராச்சியத்தினின்று, கிழக்கு நோக்கி திருகோணமலை, கொட்டியா ரம், மட்டக்களப்பு எனும் இடங்களுக்கு ஒரு முக்கிய வர்த்தகப் பாதை அமைந்திருந்தது. அவ்விடங்களிலிருந்து நெல்லும், உப்பும் கண்டிக்குக் கொண்டு செல்லப்பட்டன. பதுளை ஓயாப்படுக்கை, மலைநாட்டினின்று கிழக்கு நோக்கிச் செல்வதற்கு ஒரு வாயிலாக அமைந்துளது. தென்கிழக்கே பசறைக் கணவாயினூடாக இன்றைய பதுளை-மட்டக்களப்பு வீதி செல்கின்றது. மலைநாட்டின் தென் சரிவு செங்குத்தாக இருப்பதனுல் மிகச் சில கணவாய்களே காணப்படுகின் றன. இவற்றுள் பிரதானமானது அப்புத்தளைக் கணவாய்ாகும். இதன் வழியாகவே, மலைநாட்டினின்று செல்லும் இன்றைய பலாங் கொடை-வெலிமடைப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
கடவத்தைகள் :
கண்டி இராச்சியத்தின் பாதுகாப்புக்கான ஏதுக்கள் இவற்
றுடன் நின்று விடவில்லை. அதன் எல்லைப் புறங்களில் கடவத்தை களிருந்தன. கரைப்பிரதேசங்களினின்று எதிரிகளும், ஒற்றர்களும்

Page 23
32 இலங்கைச் சரித்திரம்
உட்புகாவண்ணம், இவ்விடங்களில் முள் வேலிகள் மைக்கப்பட் அவற்றில் காவலாளர் இராப் பகலாகக் காவல் புரிந்தனர். மலை நாட்டினுள் பிரவேசித்த யாவரும் இங்கு பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே உட்செல்ல அனுமதிக்கப்பட்டனர். விசேஷ அவசர காலங்களில், நாடு அடங்கிலும் காவல் நிலையங்கள் ஏற்படுத்தப் பட்டன. "எல்லாக் கிராமங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லாச் சந்திகளிலும், காவல் இடங்கள் ஏற்படுத்தப்பட்டமையினல் Go Tol ராவது அவதானிக்கப்படாமல் நாட்டினுள் புகமுடியாமற் போயிற்று' என நொக்ஸ் கூறுகிருர். அக்காலங்களில் மட்பலகைகளில் முத்திரை யிடப்பட்ட அடையாளச் சீட்டுக்களும் வழங்கப்பட்டன.
s
போர்முறை :
கண்டியர் தமது நாட்டின் இயற்கை நிலையத்துக்கும், சுவாத் திய நிலைகளுக்கும் ஏற்ற போர் முறையில் உன்னத தேர்ச்சி பெற்றி ருந்தனர். அவர்கள் தாம் நன்கறிந்த காடுகளிலும் மலைகளிலும் ஒளித்திருந்து பகைவர்களைத் தாக்கும் 'குவரில்லாப் போர்' முறை யினுல் இங்குவந்த ஐரோப்பிய சாதியினரின் ஆட்சிக்கு மிக்க தொல்க்ல யைக் கொடுத்தனர். கண்டியர், எதிரியுடன் நேர்முகமாகப் பொரு தாது காடுகளில் மறைந்து நின்று அவர்களைத் துன்புறுத்துவதிலேயே ஈடுபட்டனர். அந்நியப் படைகள் ஒருவருக்குப்பின் ஒருவராக நடந்து வந்த ஒடுக்கமான ஒற்றையடிப் பாதைகளுக்குக் குறுக்கே பெரும் மரங்களையிட்டு முன்னேற்றத்தைத் தடைப்படுத்தினர். பகைவரின் தளபாடங்களையும், உணவுகளையுங் கொண்டு செல்லும் கூலியாளர் களைத் துண்டித்தும், பட்டாளங்களுக்கிடையே தொடர்புகளை முறித் தும் அவலத்துக்குள்ளாக்கினர். கணவாய்களின் உயர் மலைகளுக்குப் பின்னின்று பகைவரைத் துப்பாக்கிகொண்டு தாக்கினர். இவ்விதமாக இரண்டு அல்லது மூன்று கண்டி வீரர்கள் தனித்து நூற்றுக் கணக் கான வீரர்களைக் கொண்ட ஒரு முழுப் படையையே முன்னேருது தடுக்க முடிந்தது. தம் முயற்சிகள் வெற்றியளிக்காத வேளைகளில் அவர்கள் காடுகளிலும், மலைகளிலும் ஒடி ஒளித்தனர். பகைவர்க களின் பலம் குன்றிய வேளையில் மீண்டும் அவர்களைத் தாக்கி நாசஞ் செய்தனர். காடுகளின் வழியாகச் செல்லும் பொழுது, பகைவர் களைக் காட்டுக் காய்ச்சல் பீடித்தமை, அஃது அவர்களின் துன்பத்தைப் பன்மடங்கு அதிகரிக்கச் செய்தது. மாரி காலங்களில் நதிகளைக் கடப்பதும் மிகக் கடினமாயிற்று.
இராணுவம் :
வீரர்கள் ற்றுவரைக் கொண்ட அரசனின் மெய்க்காப்பா ளர் படை தான் அரசனிடமிருந்த நிரந்தரமான இராணுவப் படை
யாகும். இதில் மலாய், மலபார், முஸ்லிம் வீரர்களும் இடம் பெற்
 
 

கண்டி இராச்சியத்தின் அரசியல், சமூக, பொருளாதார நிலைகள் 33
றனர். இதனைத் தவிர இராச்சியத்தின் எல்லைப் புறங்களில் காவல் புரிவதற்கென "மடுவே இலாக்கா" என ஒர் ஏற்பாடிருந்தது. இதன் தலைவன் மடுவே லேக்கம் எனப்பட்டான்.
தேசிய அவசர காலங்களில் மக்களிடமிருந்து கட்டாய இராணு வச் சேவையைப் பெறுவதற்கு ஒழுங்குகள் இருந்தன. கபடாகம் அல்லது அரச கிராமங்கள் யாவும், வாலிபர்களை இராணுவ சேவைக் காக கண்டிக்கு அனுப்பி வைத்தன. போர் அபாயம் ஏற்படுங் காலங்களில் திசாவைகள் தத்தம் திசாவனிகளுக்குச் சென்று கிராமங் கள் தோறும் நிலமுடையவர்களிடமிருந்து இளைஞர்களைப் போர்ச் சேவைக்குச் சேர்த்தனர். போருக்குச் சென்ற கிராமவாசிகள் 20 நாள்களுக்குத் தேவையான உணவைத் தம்முடன் கொண்டு சென் றனர். இவ்விதமாக இரண்டாம் இராசசிங்கன் 70,000 படைவீரர் களைத் திரட்டினன் எனச் சரித்திரம் கூறும்.
போர்த்துக்கேய, ஒல்லாந்தப் போர்களினின்று சிங்களர் ஐரோப் பியப் போர்முறைகளை வெகுவிரைவில் கற்றுத் தமது வழமையான ஈட்டிகள், அம்புகள் எனும் ஆயுதங்களுடன் துப்பாக்கிகளை ஆக்கவும் உபயோகிக்கவும் பழகிக்கொண்டனர். உலகத்திலே அதி சிறந்த துப் பாக்கிகளை கண்டியர் உற்பத்தி செய்தனர் எனக் கூறப்பட்டுள்ளது. இத்தகைய இயற்கையரணும் சுய பாதுகாப்புமே கண்டி அரசை அந்
நியரிடமிருந்து பாதுகாத்தது. கண்டியர் தம்முள் பகைத்துத்-தீம்ட் நாட்டை அந் ட்டிக் கொடுக்கம் வை ந்நியர் அந்
நாட்டை அடிமைப்படுத்த முடியவில்லை.
4. கண்டியின் ஆட்சிமுறை
புராதன காலத்தில் இலங்கையில் எத்தகைய ஆட்சி நடை பெற்றதோ, ஏறத்தாழ அவ்வகையான நிருவாகமே கண்டி இராச் சியத்தில், ஆங்கிலரின் வருகையின்போது நடைபெற்ற தெனலாம். பல்லாண்டுகளாகக் கண்டி நாட்டில் வாழ்ந்த ருெபட் நொக்ஸ் (Robert Knox) என்ற ஆங்கிலேயர், மலைநாட்டில் நிலவிய ஆட்சி முறையினை மிகத் திறம்பட வர்ணித்துள்ளார். Y 姊 * კბ/სმ, ის ჯ%}}
நாயக்க மன்னர்கள் : , , , , . . . .
1739 இல் காலமான , நரேந்திரசிங்கன் என்பவனே கண்டி .ん、*ーリー六ー六一*六一; e II, S A, e 曾 இராச்சிய்த்தின் இறுதிச் சிங்களஅரசன். அவனுக்குப்பின் சிம்மா சனமேறிய மன்னர்கள் நால்வரும்: தென்னிந்திய அரச குடும்பங்
இ 3

Page 24
34 இலங்கைச் சரித்திரம்
களைச் சேர்ந்தவர்கள். சிங்கள அரசர்கள், தம் மனைவியரைத் தென் னிந்தியாவிலுள்ள மதுரை அரச குடும்பத்தினின்று பெறுவது, நீண்ட காலத்து மரபாக இருந்து வந்தது. அரசியரின் உற்ருர் உறவினர், கண்டியில் ஒரு விசேட வீதியில் (மலபார் வீதி) வசித்தனர். அவர்கள் கண்டியரசில் உயர் பதவிகளை வகிக்காவிடினும், அரண்மனையில் அதி செல்வாக்குடையோராக விளங்கினர். கண்டியின் பிரதானிகள், ஒருவன் மற்றவன்மீது கொண்டிருந்த அச்சத்தினதும், பொறுமையிதும், பொறுமையி னதும் பேருகத் தம்முள் ஒருவனை அரசனுகத் தெரிந்தெடுப்பதை விடுத்து, நாயக்கர்களையே மன்னர்களாகத் தெரிந்தெடுத்தனர். பிர தானிகள் தம்முள் கொண்ட பகைமையும், பொருமையுமே அரசனின் பலமாயிற்று.
மன்னன் :
அரசன் தனது இராச்சியத்தின் தலைவனும் முதல்வனும் என்ற முறையில், சகல அதிகாரங்களுக்கும் இருப்பிடமாக விளங்கினன். சட்டமியற்றல் உநிருவாகம், நீதி அதிகாரங்கள் டயாவும் அவனது கைகளிலேயே குவிந்திருந்தன. நாட்டின் சகல நிலபுலங்களுக்கும் அதிபதியாக விளங்கினன். அவனே வரிகளையும் மக்கள் செய்ய வேண்
டிய சேவைகளையும் கட்டளையிட்டான். குடிகளின் உயிரும் மரணமும் அவனது ஆணைக்குக் கீழ்ப்பட்டேயிருந்த 器兰粽器 தானிகளை நியமித்தும், பட்டம் பதவிகளை வழங்கியும் வந்தான் சகல கருமங்களிலும், நாட்டின் சகல சக்திகளுக்கும் மேம்பட்ட தலைவனுக விளங்கினலும் அவன், தேசத்தில் நிலவிய மரபுகளுக்கும் முன்னேரின் பழக்க வழக்கங்களுக்கும் மதிப்புக் கொடுத்தே ஆட்சியை நடாத்த வேண்டிய கட்டாய நிலைக்குள்ளானன். நாட்டு வழக் கத்தை மீறி எச்செயலையாவது புரிந்தால் தன் பிரசைகளின் பணி வையும் மரியாதையையும் இழப்பதுமன்றி, எந்நேரமும் அச்சத்துட னும் பாதுகாப்புடனும் வாழ நேரிடும் என்ற எண்ணம், அவனை நன் முறையில் ஆட்சி செய்ய வழிகாட்டிற்று. நாட்டின் பழக்க வழக் கங்களுக்குட்பட்டு நடப்பதற்குதவி செய்ய அவனுக்கு ஓர் அரசாங்க சபை துனே புரித்தது. எனவே அவன் சட்டதிட்டங்களேச் செயற் படுத்தமுள் தன் பிரதான அதிகாரிகளினதும் சமயக் குரவர்களின தும் ஆய்வுரையைக் கேட்டுச் சம்பிரதாய முறைப்படியே ஒழுகிமூன்.
~ayA?as7ôasair ABaVAvanDavadir i
TTLLLLLLL LLLL S S TLLLLSS SLLLTLLLLLLLLS LLLLLL SLLLLLLLT LLLLTMLSSS LLL LLTLLLLLLL LLTLLTLLL TTTLEELS duasdanu ovladas awayaMoirawat Mgavgah AoibAab rasheado
 

கண்டி இராச்சியத்தின் அரசியல், சமூக, பொருளாதார நிலைகள் 35
சம பதமுடையவர்கள்; ஆனல் அரச சபையில் ஒருவன் மற்றவனி லும் பார்க்க முதன்மை பெற்ருன். அவர்கள் ஒராண்டுக்கென்றே நியமிக்கப்பெற்றனர். அவர்களது சேவைக் காலத்தின் நீடிப்பு, அர சனின் தயவிலேயே தங்கி நின்றது. அதிகார் ஒவ்வொருவரும் அனு பவித்த உரிமைகளுக்கும், வருவாய்களுக்கும் கைம்மாருக ஆண்டு தோறும் 500 வெள்ளிகளை அரசனின் இறையகத்துக்கு இறுத்தனர். ஒவ்வொரு அதிகாரும் இராச்சியத்தின் அரைப்பாகத்தின் மேல் பொது அதிகாரங்களைக் கொண்டு விளங்கினன். இதற்கெனக் கண்டி இராச் சியம் இரு கூறுகளாகப் பகுக்கப்பட்டது. முதலாம் அதிகாரின் ஆணைக்குட்பட்ட பிரதேசங்களாவன ஏழு கோறளை, ஊவா, மாத்தளை, வலப்பான, வெல்லச, விந்தனை, நுவரக்கலாவிய, தமன்கடுவை, அரிஸ்பத்து, தும்பறை, ஹேவாஹெற்ற எனும் மாநிலங்களாகும். இதனுல் அவன் 'பள்ளே கம்பஹே அதிகார்’ (கீழ் ஐந்து மாநிலங் களின் அதிகார்) என அழைக்கப்பட்டான். நான்கு கோறளை, மூன்று கோறளை, சப்பிரகமுவா, உடப்பலாத்த, உடுநுவர, யட்டிநுவர, தும். பனே, கொத்மலை, புலத்கம எனும் பிரிவுகள் இரண்டாம் அதிகாரின் ஆணைக்குக் கீழ்ப்பட்டவை. இவன் ‘உட கம்பஹே' அதிகார் என வழங்கப்பட்டான். குலம், பதவி, கெளரவம் என்பவற்றில் அவர் களுக்கு ஈடிணையானவர்கள் நாட்டில் வேறிலர். நாட்டின் பிரதான கருமங்களை நிருவகித்தல், வைபவங்களை நடாத்துதல், ஆலயங்களைப் பழுதுபார்த்தல், யானை பிடித்தல், பொதுவேலைகளை மேற்பார்வை செய்தல் என்பன அவர்களினது பிரதான கடமைகளாகும்.
இவர்களுக்குக் கீழ்ப்பட்டவர்கள் திசாவைகள் எனும் திசாவு னிகளின் ஆள்பதிகளும் ரட்டே முல எனும் இரட்டைகளின்_தலை மைக்காரருமாவர். இப்பிரிவுகள் ஏற்கனவே விபரிக்கப்பட்டுள்ளன. இறைகளைச் சேகரித்தல், இராசக்காரியம், சரீர சேவை முதலானவற் றைப் பெறல், பொதுக் கட்டடங்கள், தெருக்கள் அமைத்தல், பழுது பார்த்தல், அவனது மாநிலத்துக் கூடாக அரசன் பிரயாணஞ் செய் யும்பொழுது தங்கு நிலையங்களை அமைத்தல் என்பவை திசாவைகளின் பிரதான கடமைகளாகும். அதிகார்கள், ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பிரதான திசாவைகளாகவும் இருந்தனர்.
திசாவைகள் ஒவ்வொருவருக்கும் கீழ் மாகாண பரிபாலனத் துக்கென கோறளை, அத்துக் கோறளை, விதான, லியனருல எனும் தலைமைக்காரர்கள் பலர் இருந்தனர். இராணுவக் கடமைகளை மேற்பார்வை செய்வதற்கு படிமுறையில் முதலியார் (அல்லது மொஹட்டால). முகாந்திரம், ஆராச்சி, கண்காணிகள் என்போர்"

Page 25
36 இலங்கைச் சரித்திரம்
பொறுப்பாயிருந்தனர். இந்த உதவி உத்தியோகத்தர்களின் அதிகா ரங்கள் மட்டுப்படுத்தப்பட்டவை. இவர்களைக் கட்டுப்படுத்திய பிரதானிகளே உண்மையான அதிகாரமும் செல்வாக்கும் உடைய வர்கள்.
இலாக்காக்கள் :
* மாகாணப் பரிபாலனத்துக்குப் பொறுப்பாயிருந்த இம்மாநில அதிகாரிகளைத் தவிர பல இலாக்காக்களுக்குத் தலைவர்களாக அதி காரிகள் பலர் இருந்தனர். அவர்கள் நாட்டின் பல மாகாணங்களின் கிராமங்களில் வாழ்ந்த பல்வேறுபட்ட சாதியினர் அரசாங்கத்துக் குப், புரியவேண்டிய கட்டாய சேவைகள் இறுக்கப்படுவதைக் கண் காணித்தனர். இவ்விலாக்காக்கள் "லேக்கம்கள்' அல்லது செயலா ளர்களின் பொறுப்பிலிருந்தன. உதாரணமாக, மடுவே லேக்கம் என் பவன் அரசாங்கத்துக்கு இராணுவச் சேவை தெப்பக் கடமைப்பட்ட் சாதியினரை மேற்பார்வை செய்தான். அவன் தனது அதிகாரத்தை ஒவ்வொரு மாகாணத்தினதும் முகாந்திரம், ஆராச்சி, கண்காணி என்பவர்களின் மூலம் செலுத்தினன்.
மகா லேக்கம்- செயலாளர் பகுதியின் தலைவன்
கஜநாயக்க லேக்கம் - யானைப்பகுதித் தலைவன்
SSSSSSSSSSYSSSiMSMSiSiiSSSSAS கொடித்துவக்கு லேக்கம் - துப்பாத்திப் படைத்தலைவன்
நாணயக்கார லேக்கம் - அரசதுரதுவர் தலைவன்.
5. நீதி பரிபாலனம்
கண்டி இராச்சியத்தில் நிருவாக அதிகாரிகளே நீதி பரிபாலனத் துக்கும் பொறுப்பாயிருந்தனர். 'வலுவேருக்கம்' என்ற அரசியற் சித்தாந்தத்துக்கு அங்கு இடமேயிருக்கவில்லை. அரசன் நாட்டில் சட்டங்களின் ஊற்ருகவும், இறுதி நீதியதிகாரத்தின் இருப்பிடமாக வும் விளங்கினன். 'அரசனுடைய சித்தத்தைத் தவிர வேறு சட்டங் கள் ஒன்றுமில்லை; அவனது வாயினின்று பிறக்கும் ஒவ்வொரு சொல்லும் மாற்றமுடியாத ஒரு சட்டமாகும். எனினும், பழைய காலத்தினது மரபுகளும் பழக்க வழக்கங்களும் சட்டத்தைப் போன்று அங்கு கடைப்பிடிக்கப்ப்ட்டன,' எனக் கூறுகின்ருர் நொக்ஸ். அரசன் தனது நீதியதிகாரத்தை, நேர்முகமாக வழக்குகளை விசாரணை செய்யவும், அதிகாரிகளின் தீர்ப்புக்களினின்று அவனது முன்னிலைக்

கண்டி இராச்சியத்தின் அரசியல், சமூக, பொருளாதார நிலைகள் 37
குச் சமர்ப்பிக்கப்பட்ட முறையீடுகளுக்குத் தீர்ப்புக் கூறவும் உபயோ கித்தான். பிரதானிகள் ல்ல அரண்மனை உத்தியோகத்தர் களிடையே 鼬茄盖冠茉臀一றுகள், விகாரைகள் சம்பந்தமாக பிக்கு களிடையே எழும் பிண்க்குகள், தேசத் துரோகம், சதி, புரட்சி,~ கொலை, தேவதுரோகம் எனும் பாரிய குற்றங்களை அரசன் தானே விசாரணை செய்து தீர்ப்புக் கூறினன். நாட்டின் ஒவ்வொரு பிரசை யும் பிரதானிகளின் தீர்ப்புக்களினின்று அரசனின் நீதிமன்றத்துக்கு முறையீடு செய்ய உரிமை பெற்றிருந்தான். இவற்றை அரசன் தானே விசாரணை செய்தான்; அன்றேல், அவனது மா மன்றத்தின் விசார ணைக்கு அனுப்பி அதன் அறிக்கையைப் பரிசீலனை செய்து தீர்ப்பளித் தான். அரசன் ஒருவன் மாத்திரமே கொலைத் தண்டனை விதிக்க உரிமையுடையவன்.
மகா நடுவ :
அரசனின் தனிப்பட்ட நீதியதிகாரத்துக்கு அடுத்ததாக
மாமன்றம் ல்ல A நடுவ' என் மன் -- 影蒿“、荔 சாவை, லேக்கம், முகாந்திரம் என் னும் பதவியுடைய சகல உத்தியோகத்தரும் அதன் உறுப்பினர்கள். இம்மன்றம் தேவைக்கேற்ப அதிகார் தலைமையில் அரண்மனைக்கரு காமையில் கூடிற்று. இம்மன்றம் குடியியற், பாதக வழக்குகள் யாவற்றையும் விளங்கித் தீர்ப்புக்கூற அதிகாரம் பெற்றிருந்தது.
விசாரணைகள் வாய் மூலம் நடைபெற்றன. பதிவுகள் ஒன்றும் வைக்
கப்பட்டதில்லை.
மாமன்றத்தின் உறுப்பினர்கள் தத்தம் மாகாணங்களில் அல் லது தமது அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்ட விடயங்களில் நீதி வழங்க
அதிகாரம் பெற்றிருந்தனர். அதிகார்கள், தம் பரிபாலனத்தின் கீழி ருந்த மாகாணங்களில் கொலைக் குற்றம் ஒன்றைத் தவிரச் சகல வழக் குகளையும் விளங்கித் தீர்ப்புக் கூற அதிகாரம் பெற்றவர்கள். மக் கள், அதிகாரின் தீர்ப்பினின்று மகாநடுவவுக்கும் அரசனுக்கும் முறை யீடு செய்து விமோசனம் பெற உரிமையிருந்தது. திசாவைகள், தமது ஆணைக்குட்பட்ட மாகாணங்களின் நீதி நிருவாகத்துக்குப் பொறுப்பாயிருந்தனர். அவர்கள் வழக்குகளைத் தாமாகவும், அன்றேல் கோறளைகள் மூலம் தமது இல்ல முன்றில்களில் விளங்கித் தீர்ப் பளித்தனர். இதே போன்று, லேக்கம், றட்டே முல என்றவர்களும் மட்டுப்படுத்தப்பட்ட நீதியதிகாரத்தைப் பெற்றிருந்தனர். கிராமத் தலைமைக்காரரும், சிறு வழக்குகளை விசாரித்து 10 வெள்ளிக்காசு (Ridi) க்கு மேற்படாத குற்றப்பணம் விதிக்க அதிகாரம் பெற்றிருந் தனர். மேலும், தத்தம் பகுதிகளில் பொலிஸ் வேலைக்குப் பொறுப்
g). 3 A

Page 26
38 இலங்கைச் சரித்திரம்
பாயிருந்த அவர்கள், சகல குற்றவாளிகளையும் கைது செய்து குறிப் பிட்ட அதிகாரிகளின் முன் முன்னிலைப்படுத்தக் கடமைப்பாடுடைய வர்கள்.
கன் சபாவை :
மேற் கூறப்பட்ட நீதாசன முறையைத் தவிர வேறு இரு வகைப் பட்ட நீதிமன்றங்களும் நாட்டில் இயங்கி வந்தன. இவை கன்சபாக்க ளும் றட்டே சபாக்களுமாகும். கன்சபா அல்லது கிராமச்சபை கிராமத் தின் பிரதான் தலைவர்களையும் அனுபவம் மிகுந்த முதியவர்களையுங் கொண்டிருந்தது.
கன்சபாவையின் தீர்ப்பினின்று இரட்டை சபாவுக்கு முறை யிட மக்களுக்கு உரிமையிருந்தது. இரட்டை சபா மாவட்ட நீதி மன்றமாகும். மாவட்டத்திலிருந்த ஒவ்வொரு கிராமத்தின் பிரதி நிதியை அஃது உறுப்பினராய்க் கொண்டது. இம்மன்றத்தின் நடை முறைகளும் கன்சபாவையின் நடைமுறைகளைப் போன்றவை.
இந்நீதாசனமுறை, மக்கள் பட்ச பாதகமற்ற நீதியை இலகு வாகவும், செலவின்றியும், தாமதமின்றியும் பெறும் நோக்குடனேயே
அமைக்கப்பெற்றது. ஆனல், நிருவாகத்துக்கும், நீதி பரிபாலனத்துக் கும் ஒரே அதிகாரிகள் பொறுப்பாயிருந்த காரணத்தினல் பல ஒழுங் கீனங்களும், ஊழல்களும் எழுந்து அதன் நோக்கத்தைக் கெடுத்தன.
6. மானியமுறையும் இராசக்காரியமும்
மேலே விபரிக்கப்பட்ட அரசாட்சி முறைக்கும், அரசாங்க நிரு வாகத்துக்கும், நீதி பரிபாலனத்துக்கும் "ஆணிவேர் போன்று அமைந் தது, அப்பிரதேசத்தில் நிலிவிய 7 மானியமுறையும் இராசக்காரிய முறையுமாகும். புராதன காலத்தைப் போன்று அரசனே "நிலங் களின் அதிபதி' என்ற கொள்கை நிலவியபோதும், அவனுக்கு எதேச்சாதிகார முறைப்படி நிலங்களை அபகரிக்க அதிகாரமிருக்க வில்லை, 'தனிச் சொத்துரிமை பாராட்டப்படாத நிலங்கள் யாவும் அரசனுக்குச் சொந்தமானவை" எனும் கொள்கை தான் அரசனின் நிலவுரிமைகளுக்கு அத்திவாரமாக அமைந்ததெனலாம்.
இராசதானிக்கு அருகில் அரசனுக்குச் சொந்தமாக மிகவும் விசாலமான நிலங்களிருந்தன. கண்டி மாநிலத்தைச் சுற்றியிருந்த காடுகளும் அரச கிராமங்களும் அவனின் தனிச் சொத்துக்கள் போன்று உபயோகிக்கப்பட்டன. தலை நகரத்தினின்று தூரம் அதி

கண்டி இராச்சியத்தின் அரசியல், சமூக, பொருளாதார நிலைகள் 39
கரிக்க, அரசனின் காணியாட்சி உரிமைகளும் குறைந்தே காணப்
பட்டன. நுவரக்கலாவிய, தமன்கடுவைப் பகுதிகளில் அரச கிராமங் கள் அறவே இருக்கவில்லை.
காணியுடையவர்கள் அரசனுக்கு (அல்லது அரசனின் அலுவ
லாளருக்கு) சேவைகள் புரியக் கடமைப்பாடுடையவர்கள், என்ற கொள்கை சிங்களரிடையே புராதன காலந்தொட்டு நிலவிய ஒரு கோட்பாடாகும். இச்சேவையின் கடினமும், கனகனமும் பலரிடையே வேறுபட்டது. ஒரு சிலருக்கு ஆண்டுதோறும் அரசன் முன்னிலையில் வெற்றிலையைத் தெட்சணையாகக் கொடுத்து கெளரவம் செய்வதுடன் அரச சேவைகள் முடிவடைந்தன. வேறு சிலர் நிலங்களைப் பண்படுத் திப் பயிரிட வேண்டிய கடினமான சரீர சேவைகளைப் புரிய வேண்டிய நிலைக்குள்ளாயினர். இன்னும் சிலர், தம் சாதிக்கேற்ற தொழில் முறையில் சேவை செய்ய வேண்டியவர்களாயினர். 'அதி உயர் வகுப்பினர் தொடக்கம், அதி குறைந்த வகுப்பினர் ஈருக, தனி மனிதன் ஒவ்வொருவனையும் ஒவ்வொரு தனி வகுப்பினையும் கட்டுப் படுத்திய கடமைகளினதும், சேவைகளினதும் சங்கிலித் தொடர் போன்ற ஒழுங்கு முறைதான், அரசாங்கத்தின் குடியியல், நீதி, நிரு வாக எந்திரத்தை இயக்கவும், விவசாய முயற்சிகளை சீராக நடாத் தவும், அரசன் பாதுகாப்புப் போர்களை நடாத்தவும் பயன்பட்டது' என்கிருர் நொக்ஸ்.
நாட்டில் நிலவிய அதி உயர் காணியுரிமை பரவணி (Parayani)ாள் உரிமையாகும். இவ்வுரிமையாளருக்கு அரசன் நிலங்களைச் சதா காலத்துக்கென வழங்கினன். இக் காணியுரிமையாளர் தாமும் அரசனுக்குச் சில சேவைகளை (சரீர சேவை அல்லது திறை இறுக்க) புரியவேண்டியவராயிருந்தனர். இஃது இராசக்காரியம் என அழைக் கப்பட்டது. இராசக்காரியம் மேலல்ல, விதிக்கப்பட்ட சேவையாகும். காணிகளுடையோர், குறிப் பிட்ட இராசக்காரிய சேவைகளைச் செய்யத் தவறின் அவர்களுடைய காணிகள் புறப்பாட்டு (Purappadu) அல்லது உரித்தாளரில்லாத நிலங்களாகி அரசனைச் சேர்ந்தன. அந்நிலத்தைப் புதிதாகப் பெறும் உரிமையாளன், அக்காணியுடன் சம்பந்தப்பட்ட இராசக்காரிய சேவைகளையும் புரியக் கடமைப்பாடுடையவனுனன். காணிகள், விற் பனை அல்லது நன்கொடை மூலம் கைமாறின், புதுச் சொந்தக்காரர் அச் சேவையைத் தொடர்ந்து செய்தனர். இதனல் அரசனது நிர் வாகம் ஓரளவு சீராக நடைபெற்றதென்றே கொள்ளவேண்டும்.

Page 27
: 40 இலங்கைச் சரித்திரம்
கபடாகம்
* கபடாகம் அல்லது மகா களஞ்சியத்தினுல் (Maha Gabadava) நிருவகிக்கப்பட்டன. தனியாருக்கு அல்லது அலுவலாளருக்கு வழங்கப்பட்ட நிலங்களை, சேவை செய்யாமை, திறை கொடுக்காமை, தேசத்துரோகம் எனும் காரணங்களை முன்னிட்டு அரசன் பறி முதலாக்கிய பொழுது, அவை யாவும் களஞ்சியத்தைச் சேர்ந்தன. அவற்றின் பிரயோசனங்களை அரசன் சுகித்தான். களஞ்சியத்தை நிருவகிக்க ஒரு 'கபடா நிலைமை (Gabada Niame) யை அரசன் நியமித்தான். நிலமைக்கு உதவியாக அவனது சிபார்சின் பேரில் தான்கு செயலாளரும், (Lekam) நான்கு கண்காணிகளும் நியமிக்கப்பட்டனர். செயலாளர் கணக்குகளுக்குப் பொறுப்பாயிருந்தனர். செயலாளர் காலத்துக்குக் காலம் அரச கிராமங்களுக்குச் சென்று சேவை செய்ய வேண்டிய நிலங்களையும், புறப்பாட்டு நிலங்களையும் அட்டவணை செய்து, காணி அட்டவணை களைத் தயாரித்தனர். களஞ்சியத்தைப் பாதுகாப்பதன் பொறுப்பு கண்காணிகளின் கைகளில் ஒப்படைக்கப்பட்டது. களஞ்சியத்தைத் துப்பரவு செய்தல், பணிவிடைகள் கொண்டு செல்லுதல் போன்ற வேலைகளுக்காக பணியாளர்கள் பலர் அமர்த்தப்பட்டனர். கபடாகம் நிலங்கள் யாவும் மூவிதப் பிரிவுகளாகப் பகுக்கப்பட்டு பயிரிடப்பட்டன.
1. (pj55jö p (Muttattuva) காணிகள் :
இவை பரிபூரணமாக அரசனுக்குச் சொந்தமான நிலங்களா ம். இவற்றை அரச பரவணிச் செய்கைக்காரர் சிலர் பயிரிட்டு, விளைந்த தானியத்தை மகா களஞ்சியத்தில் ஒப்படைத்தனர். அரச நிலங்களில் பரம்பரை பரம்பரையாகப் பயிர் செய்த குத்தகையாளர், விதை நெல்லை அரச களஞ்சியத்தினின்று பெற்றுத் தமது சொந்தச் செலவிலேயே பயிரிட்டனர்.
2 பரவணிச் செய்கைக்காரரின் காணிகள் .
அரசனின் முத்தற்று நிலங்களைப் பயிரிடும் சேவைக்காகப் பர வணிச் செய்கைக்காரருக்கு வழங்கப்பட்டவை.
3. வாரக்குடிகளின் நிலங்கள் :
இவை ஆண்டு தோறும் பிரதானியினல், ஒருவனுக்கு ஒர் அவு ணம் வீதம் கொடுபட்ட நிலங்களாகும். வாரக்குடிகளில் சிலர்,
முத்தற்று நிலங்களில் சரீர சேவை செய்தனர். வேறு சிலர் விளைந்த தானியத்தைக் கிராமக் களஞ்சியத்துக்கும், கட்டளையிடப்படின்
கண்டிக்கும் காவிச் சென்றனர். அவர்கள் பிரதானியின் வேலையாள்
களாகவும் பணிவிடை புரிந்தனர்.
*、*,
 

கண்டி இராச்சியத்தின் அரசியல், சமூக, பொருளாதார நிலைகள் 41
காடுகள் :
உட இரட்டையிலிருந்த பல காடுகள் அரச நிலங்களாக மதிக் கப்பட்டன. இவற்றைப் பிரசைகள் உபயோகிப்பதைப் பற்றிப் பல வித சட்டங்கள் இயற்றப்பட்டன. நாட்டின் பாதுகாப்பை முன் னிட்டு சில பாகங்களில் பிரசைகள் உபயோகிக்கப்படாதெனத் தடையிடப்பட்ட காடுகள் பலவிருந்தன. அதிகார் மூலம் பெறப் பட்ட அரசனின் அதிகாரமின்றி எவரும் அரச காடுகளைத் துப்பரவு செய்து நன்செய் நிலங்களாக மாற்றமுடியாது. அதிகாரின் உத்தர வின் பேரில் பிரசைகள், காடுகளை நெல் வயல்களாக மாற்ற உரிமை பெற்றனர். நாளடைவில் அதிகார், இக்காணியின் மேல் இராசக் காரிய சேவையை விதித்தான். புதுக் கமக்காரனின் ஆயுள் காலத் தில் இாாசக் காரியம் பொதுவாக அறவிடப்படவில்லை. அவனுக் குப் பிந்திய உரிமையாளர், சேவை செய்ய வேண்டியவர்களாயினர்.
அரண்மனைச் சேவை :
அரசனுக்குத் தனிப்பட்ட சேவை புரிந்தவர்களும், அரண்மனை உத்தியோகத்தர்களும் தாம் செய்த அரச சேவைக்குக் கைம்மாமூகட நிலங்களை மானியமாகப் பெற்றனர். இந்நிலங்கள் கிராமப்புறங் களில் இருப்பின் அவை கிராமப் பிரதானிக்குச் சேவை செய்யும் கடமையினின்று விடுவிக்கப்பட்டிருந்தன. அரசனுக்குச் சேவை செய்த இலாக்காக்களின் உறுப்பினர்கள் இவ்விதமாக நிலங்களைக்
கிராமங்களில் பெற்றனர். உதாரணமாக கம்வாசம் என்பவை பட்டபந்தி (Patabandhi) மக்களுக்கு உரித்தான கிராமங்களாகும். அவர்களுடைய கடமை-திசாவை, மொஹட்டால, அத்தப்பத்து
நிலமே, கொடித்துவக்கு நிலமே, கோருளே என்பவர்களும், அவர் களது பரிவாரங்களும் தம் கிராமங்களினூடாகப் பிரயாணம் செய் யும் பொழுது அல்லது தங்கி நிற்கும்பொழுது அவர்களுக்கு வேண்டிய பொருள்களைச் சன்மானமின்றி வழங்குவதாகும்.
நிந்தகம் :
நிந்தகம் என்பது, அரசனல் தனது உத்தியோகத் தருக்கு அல்லது தனிப்பட்டஒரு பிரசைக்கு வழங்கப்பட்டநிலமாகும். நிந்தகம் நிலங்கள், தொலைவிலுள்ள மாகாணங்களிலேயே கொடுக் கப்பட்டன. உடரட்டையில் அவை வழங்கப்படவில்லை.
அரச வயல்கள், கிராமங்கள் பல, பதவியின் பொருட்டுப் பிரதானிகளுக்கும், தனியாருக்கும். கையளிக்கப்பட்டபோது, அவை நிந்தகம் நிலங்களாயின. அக்காணிகள் சதாகாலத்துக்கு வழங்கப்

Page 28
42 இலங்கைச் சரித்திரம்
படின், அவை பரவணி நிந்தகம் எனப் பெயர் பெற்றன. இவ்விதம் வழங்கப்பட்ட வயல்களில் அல்லது கிராமங்களில் வசித்த குடியான வர்கள், முன்பு அரசனுக்கு இறுத்த அத்தனை சேவைகளையும் இப் பொழுது புது எசமானனுக்கு இறுக்கக் கடமைப்பட்டனர். இந் நிலங்களினின்று, முன்னர் அரசன் பெற்ற வருவாய்களும் புது எசமானனுக்குச் சொந்தமாயின. அரசன் நல்கிய இக்கிராமங்கள், கொடுக்கட்பட்டோருக்குத் தேவையான குயவன், கொல்லன், வண் ஞன், அம்பட்டன் எனும் தொழிலாளரைக் கொண்டிருந்தது. கிராம வாசிகள், கிராமத்தின் அரச நிலத்தைப் பயிரிட்டு தானியத் தைப் புது உரிமையாளனுக்குச் சேகரித்துக் கொடுத்தனர். புது உரிமையாளன், கிராம வாசிகளுக்கு அரச சேவையினின்று விடுதலை பெற்றுக் கொடுத்து அவனே அக்கிராமத்தின் அதிபதியானன். அவன் ஆண்டு தோறும் கண்டியில் அரசன் முன் சமுகங் கொடுத்த பொழுது, தனக்குத் தரப்பட்ட நிந்தகம் நிலத்தின் பெயரால் ஐந்து வெள்ளிக் காசுகளை (Ridi) த் திறையாகக் கொடுத்தான்.
இக்கிராமங்களில் வாழ்ந்த வேளாளர், புது எசமான னரின் செய்கைக்காரராயினர். அவர்கள், தமது பரம்பரை நிலபுலங்களைப் பயிரிடுவதுடன், பிரதானியின் முத்தற்று நிலங்களையும் பயிரிட்டு ' வழக்கமான சரீர சேவைகளையும் செய்துவந்தனர். வருடத்தில் குத்தகைகள் பகிர்ந்து கொடுக்கப்படும் தினத்தன்று பிரதானி, தான் விரும்பாத செய்கைக்காரருக்குக் காணி கொடுக்காமல் கட் டாயமாக விலக்கவும், சேவை செய்யத் தவறினவர்களை நீக்கவும் உரிமை பெற்றிருந்தான். மறுபுறம் செய்கைக்காரருக்கும் தமது நிலங்களைப் பிரதானிக்குத் திருப்பி ஒப்படைத்து, சேவையினின்று விடுதலைபெற்றுக் கிராமத்தை விட்டு வெளியேற உரிமையிருந்தது. நீண்ட காலக் குடியிருப்பினுலும், உடைமையினுலும் பரவணி உரிமை களைப்பெற்ற செய்கைக்காரர், பிரதானிக்குச் செய்ய வேண்டிய சேவைகளை நிறைவேற்றி, திருப்திகரமான வாழ்வு நடாத்தி வந்த னர். பிரதானிகள் பரம்பரைப் பாத்தியத்தையுடையவராயிருப்பின் செய்கைக்காரருக்கும் பிரதானிக்குமிடையே மிகவும் நெருங்கிய உறவுகள் ஏற்பட்டன. இத் தொடர்பு பல தலைமுறைகளுக்கு முறி யாமல் இருப்பின், கிராமவாசிகள் தம்பிரபு மட்டில் பாசமும் அபி மானமும் கொண்டனர்.
- 'பிரதானிகளினதும் பிரபுக்களினதும் தோட்டங்களில் நில விய சேவைகள் பல் வேறுபட்டவை. தலைமைக்காரரும், முதியான் Følvrr (Mudiyansela) என்போரும் பல வகையான கெளரவச் சேவைகள் புரிந்தனர். வேளாள செய்கைக்காரர் பிரதானியின்
" .

கண்டி இராச்சியத்தின் அரசியல், சமூக, பொருளாதார நிலைகள் 43
முத்தற்று நிலங்களைப் பயிரிட்டனர், பிரதானியுடன் பிரயாணங் களில் கூடிச் சென்றனர், அல்லது வீட்டுக் (Valavu) கருமங்களை முறைப்படி செய்தனர். துறே (Dure) நிலக்காரர், பிரதானியின் பல்லக்கையும் பொருள்களையும் காவுவர்; வஹம்புறே (Vahumpure) நிலக்காரர் குடும்பப் பெண் மணிகளின் பல்லக்குகளைக் காவுவதுடன் சமையலறைப் பணிகளையும் புரிந்தனர். இவ்விதமாகப் பிரதானியின் வீட்டுக்குத் தேவையான சேவைகள் யாவும் மிக அவதானத்துடன் ஒழுங்கு செய்யப்பட்டன. பல கிராமங்களையுடைய ஒரு பிரதானி, சமையற்காரரை ஆண்டில் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு கிராமத்திலிருந்தும், அடுத்த 4 மாதங்களுக்கு பிறிதொரு கிரா மத்தினின்றும், அடுத்த 3 மாதங்களுக்கு மூன்ரும் கிராமத்திலிருந் தும் பெற ஒழுங்குகள் இருந்தன. குயவன் ஒடுகளையும், மட்பாண் டங்களையும் சமைத்துக் கொடுத்தான். கொல்லன் பித்தளைப் பொருள்களைத் துலக்கியும், விவசாயக் கருவிகளை ஆக்கியும் திருத்தி யும் கொடுத்தான். சுண்ணும்பு எரிப்போன் சுண்ணும்பு கொடுத்தான். சலவைத் தொழிலாளி, பாய் இழைப்போன் (Kinnaraya), தோட் டத்தில் இறக்கும் மிருகங்களைப் புதைக்கும் கீழ் சாதியினரான ருெடியா (Rodiya) யாவரும் பிரபுவுக்குச் சேவை செய்தனர். மற் றையோர் வயல்களில் விளைந்த தானியங்களை ஏற்றவும், துறை முகப் பட்டினங்களிலிருந்து உப்பு, மீன் என்னும் பொருள்களைக் கொண்டுவரவும் எருதுகளைக் கொடுத்தனர்.”*
விகாரகம், தேவாலகம் :
அரசன், தேவாலயங்களுக்கும் சமயக் குரவர்களின் பராமரிப் புக்கும் வழங்கிய நிலங்கள் முறைப்படி விகாரகம் அல்லது தேவால கம் என வழங்கப்பட்டன. பிரசைகளும், விகாரைகளுக்கு நிலங்களை நன்கொடையாகக் கொடுப்பதும் ஒரு சாதாரண வழக்காகவிருந்தது. ஆனல், அவர்கள் அரசனிடம் அதிகாரம் பெற்ற பின்னரே, அவ் விதம் செய்யலாமெனச் சட்டம் இருந்தது. ஏனெனில் கோவில் நிலங்கள் யாவும் அரச சேவைகளின்றும், வரிகளினின்றும் விலக் கப்பட்டிருந்தமையினல், இந் நன்கொடைகளினல் அரசன், வருவாயை யும் சேவைகளையும் இழக்க நேரிட்டது.
மல்வத்தை, அஸ்கிரிய சமய நிலையங்களே கண்டி இராச்சியத் தின் பிரதான சமய நிறுவகங்களாகும். இவற்றிற்கும், ஒவ்வொரு கிராமத்தின் விகாரை, பன்சாலை எனும் ஸ்தல நிறுவகங்களுக்கும் சொந்தமான நிலங்கள் ஒவ்வொரு கிராமத்திலுமிருந்தன. விகாரை
" Ralph Pieris-Sinhalese Social Organization P. 64

Page 29
LITG) 6T :- . . .
" .
、*
44 இல்ங்கைச் சரித்திரம்
களுக்குச் சொந்தமான நிலங்கள் விகாரகம் என்றும், விஷ்ணு,
பத்தினி, கதிர்காமத் தெய்வங்களுக்கெனக் கட்டப்பட்ட ஆலயங்
களுக்குச் சொந்தமான நிலங்கள் தேவலகம் என்றும் வழங்கப்பட் டன. விகாரகம் நிலங்கள் யாவும், பொதுவாக நிந்தகம் நிலங்கள்
போன்றே பரிபாலனஞ் செய்யப்பட்டன. முத்தற்று நிலங்களில்
குத்தகைக்காரரினல் பயிரிடப்பட்ட தானியம், விகாரையைப் பேணிச்
சமயத்தை வளர்த்த பிக்குகளின் பராமரிப்புக்கெனக் கொடுக்கப்
பட்டது. குத்தகைக்காரர் திறைகள் இறுத்தனர், பலவித சேவை
கள் புரிந்தன்ர், விகாரையுடன் சேர்ந்த கட்டடங்களைப் பழுது பார்த்து நன்னிலையில் வைக்க உதவி புரிந்தனர். உரிமையாளரான
பிக்குகள் திறை வகையிலோ, சேவை வகையிலோ எவ்வித இராசக்காரி
யமும் புரியவில்லை.
தேவாலகம் நிலங்களில் வேறுபட்ட ஒழுங்குகள் காணப்பட் L607. தேவாலயத்தின் பிரதான அதிகாரி பசநாயக்க நிலமே (Basanayaka Nilame) என அழைக்கப்பட்டான். அவன் அரசனல் நியமிக்கப்பட்டவன். அவனது பதவிக்கெனக் கொடுக்கப்பட்ட நில புலங்களிலிருந்தும், தேவாலய கிராமங்களின் மேல் பூரண அதிகாரம் செலுத்தியும், தேவாலயத்தின் சேவைகளுக்கான உத்தியோகத்தர் : களை நியமித்தும் வருவாயைப் பெற்ருன். தேவாலய நிலக் குத் தகைக்காரர், தமது சேவைகளையும் திறைகளையும் கோவிலுக்கு. இறுத்தனர். தலதா மாளிகாவை இவ்வகையிற்ருன் நிருவகிக்கப்பட் டது. அதனுடன் விஷ்ணு, கதிர்காமம், பத்தினி, நத்த எனும் நான்காலயங்கள் ஒன்று சேர்ந்து இயங்கின. தலதா மாளிகாவை யின் பிரதான அதிகாரியான "தியவத்தன நிலமே (நீரைக் கொடுக் கும் அதிகாரி) அரசனல் நியமிக்கப்பட்டான். அவனே, அரசனின் குளிப்பறைச் சேவைகளையும் மேற்பார்வை செய்தான். அவ்வால யத்தின் பராமரிப்புக்கென விசாலமான நிலங்களிருந்தன. தலதா மாளி காவையின் பிக்குகளும், பணிவிடைக்காரரும் இந்நிலங்களின் வரு வாயினின்றே தமது ஊதியங்களைப் பெற்றனர்.
இராசக்காரியம் :
蠶帶沿ā盟煮"一蠶 (அல்லது சேவை) எனப் பொருள்படும். அது தனிம் ர்களும் நிலமுடையவர்களும் அரசனுக்கு இறுக்க வேண்டிய சரீர சேவையை
அல்லது திறையைக் குறிக்கும்.
இராசக்காரியம் மூவித கடமைகளை உள்ளடக்கியது. அவை
y
 
 

கண்டி இராச்சியத்தின் அரசியல், சமூக, பொருளாதார நிலைகள் 45
1. எல்லாப் பிரசைகளும் அரசனுக்கு இறுக்க வேண்டிய gjit Giu 6ufi (Kat-hal-rajakariya). g)g' 5T@j gjiq. pëlaopulai) (Pingo
oad) கணக்கிடப்பட்டது.
2. போர்க் காலங்களிலும், அவசர காலங்களிலும் மக்கள் அரசனுக்குச் செய்ய வேண்டிய விசேட கடமைகள்.
3. நிலமுடையவர்கள், அரசனுக்கு (அல்லது அவனது பிரதி நிதிக்கு) சரீர சேவையில் அல்லது பண, திறை வகைகளில் இறுக்க வேண்டிய கடமைகள், !
நிலமுடையவர்கள் அரசனுக்குப் புரிந்த சேவைகள் தாம் இராசக்காரிய முறையின் மிகவும் முக்கியமான சிறப்பம்சமாகும். ஏனெனில், நாட்டின் நிருவாக, நீதி பரிபாலன ஒழுங்குகள் யாவும். இச்சேவையின் அடித்தளத்திலிருந்தே கட்டி எழுப்பப்பட்டிருந்தன. இதன் முக்கியத்துவத்தை நொக்ஸ், மிகவும் திறம்படப் பின்வரு மாறு வர்ணித்துள்ளார்.
'நாடு முழுவதும் அரசனுக்கே சொந்தமானது. அவன் தனக்குச் சொந்தமான நிலங்களை, பணத்துக்கன்று, சேவையின் பொருட்டே பகிர்ந்து கொடுத்தான். நிலங்களை மானியமாகப் பெற்ற மக்கள், குத்தகைக்குப் பதிலாகப் பல சேவைகளைப் புரிந்தனர். சிலர் போர்களில் சேவை செய்வர். இன்னும் சிலர் தத்தம் தொழில் களில் சேவை செய்வர். வேறு சிலர் கூலியாள்களாகவும், மற்றவர் கள் அரண்மனைக்குத் தேவையான நிலத்தில் கனிகளை உற்பத்தி செய்யும் கமக்காரராகவும், சேவை செய்வர். இவ்விதமாக எல் லாக் கருமங்களும் செலவின்றிச் செய்யப்பட்டதுடன், ஒவ்வொரு வனும் தன் முயற்சிக்குத் தக்க சன்மானமாக நிலங்களைப் பெற்றன். ஆனல், தமது சேவைக் கடமை பாரமானதென்று அல்லது தமக்கு மிகுந்தவையெனக் கண்டால் அவர்கள் வீட்டையும் நிலத்தையும் விட்டு, அரசனின் சேவையிலிருந்து விடுதலைபெறலாம்.'
கண்டி அரசர்கள் காலத்தில், தானிய வரியே அரச வருவாயின் பிரதான மூலமாக அமைந்தது. ஏனெனில், நெல் விதைக்கப்பட்ட வயல் நிலங்கள் யாவும் இவ்வரியை இறுத்தன. தானியத்துக்குப் பதிலாக் பணத்தை இறுக்க மக்களுக்கு உரிமை வழங்கப்பட்ட்து.
சாதிமுறை :
யிலேயே சாதிப் பாகுபாடுகள் எழுந்தன. இச்சாதிப் பாகுபாடுகளைக்
ിങ്ങ്" - கொண்டு அரச இலாக்காக்கள் ஒழுங்கு செய்யப்பட்டன. ஒவ்வொரு
V
g

Page 30
s'tb
46 இலங்கைச் சரித்திரம் ’
மாகாணத்திலும், குறிப்பிட்ட ஒரு சாதியினர் யாவரும் சாதிக்கேற்ற தொழில் இலாக்காவைச் சேர்ந்தவர்கள். இவ்விலாக்காக்கள் 'பத்த" (Badda) எனப்பட்டன. அவ்விலாக்காக்களினின்று வேண்டப்பட்ட சேவைக்குக் கைம்மாருக மக்கள் நிலங்களைப் பெற்றனர். பல சந் தர்ப்பங்களில் அரசனுக்கு, நாட்டின் பல பாகங்களில் சிதறிக் கிடந்த விசேட கைவினைஞரின்-தொழிலாளரின் அல்லது வேலையாள்களின் சேவைகள் தேவைப்பட்டன. இச்சேவைகளைத் தலை நகரில் பெறும் நோக்கமாக, அரசன் ஒவ்வொரு மாகாணத்திலும் ஒவ்வொரு இலாக் காவுக்கு தலைவன் ஒருவனை (லேக்கம்) * நியமித்தான். உதாரண மாகக் குயவீர் என்ற சாதியினர் 4 கோறளை, 7 கோறளை, ஊவா, மாத்தளை எனும் மாகாணங்களினின்று, இராசக்காரியம் புரிவதற் கென கண்டிக்குச் சென்றனர். ஒவ்வொரு மாகாண இலாக்காத் தலைவனும், தனது மாகாணத்தினின்று குயவரை வருடத்தில் 3 மாதங்களுக்கு அரசனின் சேவைக்காகத் தலைநகரத்துக்கு அனுப்பி வைத்தான். இவ்விதமாக, அரசன், எஞ்ஞான்றும் குயவர்களின் சேவைகளைப் பெற்றன். தலைநகரில் சேவை செய்யாத குயவர்களுள் சிலர், திசாவையின் வீட்டில் சேவை செய்தனர். எஞ்சியோர் சேவைக்குப் பதிலாக பணத்தை இறுத்தனர். ஒவ்வொரு சாதியும் ஒவ்வோர் இலாக்காவாக அமைக்கப்பட்ட இச்சாதிப் பாகுபாட்டு முறை, அரசாங்க நிருவாகத்தை நடாத்துவதற்கு மிகவும் வசதியா கப் பயன்படுத்தப்பட்டது. கண்டி இராச்சியத்தின் பிரதான இலாக் காக்கள் பின்வருமாறு.
1. கொட்டல் பத்த (Kottal badda)-கைவினைஞர் இலாக்கா: இதில் கொல்லர், தட்டார், வெண்கல ஆசாரிகள், சிற்பிகள் தச்சர், என்பவர்கள் வேலை செய்தனர்.
2. மதிகே (Madige)-போக்குவரத்து இலாக்கா: இதில் குரு குலத்தினரும் முஸ்லிம்களும் (Marakkala) மாட்டு வண்டிகள் கொண்டு வியாபாரப் பொருள்களை கரைப் பட்டினங்களினின்று கண்டிக்கு ஏற்றி னர். போர்க் காலங்களில் விசேட சேவைகள் செய்தனர்.
3. பத்தல் பத்த (Badhal badda)-குயவர் இலாக்கா.
4. றதா பத்த (Radabadda)-சலவைத்தொழில் இலாக்கா,
5. குறுவே (Kuruve)-யானை இலாக்கா. பண்ணயா (Pannaya) எனும் சாதியைச் சேர்ந்தவர்கள் யானைகளைக் கைப்பற்றிப் பழக் கியதுடன் அரசனின் யானைகளையும் பராமரித்தனர்." W
* 36 ஆம் பக்கம் பார்க்கவும்
 

கண்டி இராச்சியத்தின் அரசியல், சமூக, பொருளாதார நிலைகள் 47
6. ஹ"ணு பத்த (Hunu badda)-சுண்ணும்பு இலாக்கா இவர் கள் சுண்ணும்பைத் தாயாரித்து, அரசாங்கக் கட்டடங்கள் யாவற் றுக்கும் வெள்ளையடித்தனர்.
7. மஹா பத்த (Maha badda)-நெசவாளர் இலாக்கா.
கின்னற பத்த (Kinnara badda)-பாயிழைப்போர் இலாக்கா .8 ܬܢܝܼ.
. . " இந்தச் சாதிக் கட்டுப்பாட்டு முறை, அரசாங்கத்தினல் சட்ட ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு முறையாகும். ஒவ்வொரு சாதியின ருக்கும் பழக்க வழக்கங்கள், நடையுடை பாவனைகள், ' குலாசார முறைகள், திருமண ஒழுங்குகள் இருந்தன. அவற்றை மீறுபவர் கள் நாட்டின் சட்டத்தை மீறியவர்கள் போன்று தண்டனைக்குட் படுத்தப்பட்டனர்.
வினக்கள்
1. ஆங்கிலரின் வருகை வரை கண்டி இராச்சியம் சரித்திரத்தில்
முக்கிய இடம் வகிப்பதேன் ?
2. பதினெட்டாம் நூற்ருண்டில் கண்டி இராச்சியத்தின்
(அ) அரசாட்சி முறையையும் (ஆ) பொருளாதார நிலையையும் விவரிக்க.
3. பதினெட்டாம் நூற்ருண்டில் கண்டி இராசதானியில் நில
விய நீதி பரிபாலன முறையை விவரிக்க,
4. பிரித்தானியர் வருகையின்பொழுது கண்டி இராச்சியத்தில் நிலவிய அரசியல், சமூக, பொருளாதார நிலைகளை விவரிக்க.
5. இராசக்காரிய முறை என்ருல் என்ன ? 19 ஆம் நூற்ருண் டில் அது எவ்வாறு பாமர மக்களைப் பாதித்தது என விளக்குக.
6. இராசக்காரிய முறை, மானியமுறை சமுதாயத்துக்கு எவ்விதங்களில் பொருத்தமாயிருந்தது என்பதை ஆராய்க.
7, 18 ஆம் நூற்ருண்டு கண்டி இராச்சியத்தை உதாரணமாகக் கொண்டு ஒரு படை மானிய அரசில் நிருவாகமும் நீதி பரிபாலனமும் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை alarakeşas.
LTLTTMLL LLLLLL TTTLLTTTLLLLLLL LTTTLLH TL S S qTLTT
uflurasr espasiu, eroria. LLLLLS S LLLLLLLTSLLLLTLS LLELELTLS TTLTLTLT LLTTLT S LLLTLT
agdstarred aga. eS 00SLCCLTLLLLLT LLLLTLTLT LSLEL L
கைப்பற்ற முடியாவிற் போன்தேள் . " " : بين ان له
ssmas
リ

Page 31
அதிகாரம் 4
இந்தியாவிலும் இலங்கையிலும் பிரித்தானிய வர்த்தக சங்கம் கீழ்த் தேசங்களில் முதல் ஆங்கிலர்:
ஏழாம் ஹென்றி (1485-1509) அரசனின் காலந் தொட்டு
எலிசபேத் ராணியின் ங்கிலக் கப்பலோட்டிகள் புதிய நாடுகளைக் கண்டுபிடித்தல், திரவியம் தேடுதல், வியாபாரம்
செய்தல், கொள்ளையடித்தல் எனும் நோக்கங்களினல் உந்தப்பட்டு பெரும் யாத்திரைகளை மேற்கொண்டனர். மக்களதும் அரசரதும் முயற்சிகளினுல் ஆங்கிலரின் துணிவும் கடல் வலிமையும் துரிதமாக
முன்னேறலாயின. 16 ஆம் நூற்ருண்டின் பிற்பகுதியில், அவர்கள் நன் நம்பிக்கை முனையைச் சுற்றி இந்திய சமுத்திரத்தில் கால் வைத்த பொழுது, அதனைச் சூழ்ந்த நாடுகள் ஏற்கெனவே ஸ்பானியராலும் போர்த்துக்கேயரினலும் கைப்பற்றப் பட்டிருந்தமையைக் கண்டனர். ஸ்பானியர் தமது ஆதிக்கத்திற்குட்பட்டிருந்த கடல்களில் ஆங்கிலர் பிரவேசிப்பதை வன்மையாக எதிர்த்தனர். இரு நாடுகளுக்குமிடையே வளர்ந்து வந்த பகைமை, 1570 க்குப் பின் வெளியரங்கமான போராக மாறியது. 1588 இல் ஸ்பா fr ங்கிலார்
மேற் படையெடுத்துச் சென்ற பொழுது.அது புயலினலும் ஆங்கி -
லரின் கடற்போர்த் திறமையினலும் சின்னபின்னப்பட்டு அழிந் து போகலாயிற்று. இவ்வெற்றியினல் கடல் வலிமையை இழந்து நின்ற
ஸ்பெயினுக்கு இனிமேல் அஞ்சவேண்டியதில்லையென நன்குணர்ந்த
ஆங்கிலரும் ஒல்லாந்தரும், அச்சமின்றி இந்திய சமுத்திரத்தினுட் பிரவேசித்தனர். இக்காலத்தில் தான் ஆங்கில சாதியினரில், முதன் முதல் இலங்கையை வந்தடைந்தவர் எனப் பலராலும் அனுமானிக் கப்படும் இறல்ப் பிட்ச் (Ralph Fitch) என்ற வணிகர் 1589 ஆம்
ஆண்டு மார்ச் மாதம் 6 ஆம் நாள் கொழும்பில் வந்திறங்கினர்.
டைக்க எட்வெட் முதன் முதல் இலங்கையை வந்தடைந்த எட்வெட் பொனவெஞ்சர் என்னும் ஆங்கிலக் கப்பல், 1592 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 3 ஆம்
நாள் காலியில் நங்கூரம் பாய்ச்சியது. இவ்வணிகராவது இக்கப் பலாவது இலங்கையில் நெடுநாள் தங்கவில்லை.
1. பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தக
சங்கத்தின் தாபிதம் '
எலிசபேத் இராணியார் (1558-1603)டதழ்.
திக் கூற்றில் ட்டில் புதிதாக நிறுவப்பட்டி பெ சங்கங்க்ளுக்குப் பட்டயம் வழங்கி வியாபாரத்தை ஊக்கப்படுத்தினர். 48 . . . . .
t *,臀
 
 

இந்தியாவிலும் இலங்கையிலும் பிரித்தானிய வர்த்தக சங்கம் 49
ஞர். 1599 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் நாள், இலண்டன் நகர வணிகர், அந்நகர சபைத் தலைவரது தலைமையில் கூடி, கீழைத் தேயங்களுடன் வியாபாரம் செய்யும் நோக்கத்துடன் & 30,000 முதல் கொண்டு ஒரு வணிகர் சங்கத்தை அமைக்கத் தீர்மானித்தனர். இச் சங்கம், 1600 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 31 ஆம் நாள், இந்தியா வுடன் வணிகம் செய்யும் தனி உரிமைப் பட்டயத்தைப் பெற்றது.
ஆரம்பத்தில் வர்த்தக சங்கத்தின் தனி உறுப்பினர்கள், " சிறு குழுக்களாக ஒன்று சேர்ந்து, நறுமணப் பொருள்கள் விளேயும் தீவுக ளுக்குச் சென்று வியாபாரம் செய்து வந்தனர். ஒவ்வொரு பயணம் முடிந்ததும் பங்குக்காரர் இலாபத்தைத் தமக்கிடையே பகிர்ந்து கொண்டனர். மறு பயணத்திற்கு இன்னுமொரு குழு அமைக்கப் பட்டது. இத்தகைய தனிப் பயணங்கள் 1600 முதல் 1612 வரை நடந்தன. இம் முறையிற் பல குறைபாடுகள் புலப்படலாயின. அவற் றைப் போக்குவதற்காக கூட்டுப் பங்குகள் முறை (Joint Stock) ஆரம்பிக்கப்பட்டது. பங்குகள் ஒரு தனிப் பயணத்திற்கு மாத்திர மன்றி மூன்று அல்லது நான்கு பயணங்கள் செய்யும் பொருட்டுச் சேர்க்கப்பட்டன.
ஆங்கில-ஒல்லாந்த இகல் :
ஆங்கில வர்த்தக சங்கம் கிழக்கு நோக்கிச் செய்த முதற் பிர யாணத்தின் (1601-1603)_விளைவாக, ஜாவாவில் பாண்டம் (Bantam) நகரில் ஒரு தொழிற்சாலை நிறுவப்பட்டது. இவ்விதமாக ஆங்கிலேயர் கீழ்த் தேசங்களின் வர்த்தகத்திற் தலையிட்டபொழுது ஆசியாவின் கேந்திர நிலையங்கள் யாவும் போர்த்துக்கேயரின் அல்லது ஒல்லாந்தரின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பதைக் கண்டனர். போர்த்துக் கேயர், ஆங்கிலரை வரவேற்று அவர்களுக்கு வியாபார உரிமைகளை யும் பெற்றுக் கொடுத்துதவினர். ஆனல் மறுபுறம் ஒல்லாந்தர், தாம் சம்பாதித்த தனியுரிமைகளில் பிறர் தலையிடுவதைச் சகிக்க ஆயத்தமாக இருக்கவில்லை. வெகு விரைவில் ஒல்லாந்தரும் ஆங்கில ரும் ஒருவரோடொருவர் பொருதவும் செய்தனர். 1615க்குப் பின் ஒல்லாந்தர், ஆங்கிலக் கப்பல்களைக் கைப்பற்றியும் மூழ்கடித்தும் ஆங் கிலருக்குப் பாதுகாப்பளித்த துறைமுகங்களை அழித்தும் வந்தனர். இப் பகை, 1623 இல் உச்சநிலையை அடைந்தது. அவ்வாண்டு நிகழ்ந்த அம்போய்ணு படுகொலை (Massacre of Amboyna) சம்ப வத்தில், ஒல்லாந்தர் பத்து ஆங்கிலரைக் கொலைசெய்தனர். இச் செயலினல் ஒல்லாந்தர் கிழக்கிந்தியத் தீவுகளில் தனி ஆதிக்கம் பெற்றனர்.
இ. 4 '

Page 32
50 இலங்கைச் சரித்திரம்
2. இந்தியாவில் வர்த்தக சங்கத்தின் நடவடிக்கைகள்
ஆங்கிலர் இந்தியாவில் குடியேறல் :
கிழக்கிந்தியத் தீவுகளினின்று துரத்தப்பட்ட ஆங்கில வணிகர், இந்தியத் தீபகற்பத்தை நோக்கித் தம் கருத்தைச் செலுத்தலாயினர். 17 ஆம் நூற்ருண்டில் அவர்கள் வியாபார நோக்குடன் அங்கு சென்ற பொழுது, அதனை மொகலாயச் சக்கரவர்த்திகள் ஆட்சி செய்து வந் தனர். 1807 இல் வர்த்தக சங்கத்தின் தூதுவரான உவில்லியம் ஹாக்கின்ஸ், சக்கரவர்த்தி ஜெஹங்கீரிடம் வியாபார உரிமைகளைப் பெற்றன். 1612 இல் வர்த்தக சங்கம், சூரத்தில் ஒரு வியாபா ரத் தளத்தை நிறுவிற்று. அதனைத் தொடர்ந்து சென்னை (1639), பம்பாய் (1661), கல்கத்தா (1690) எனுமிடங்களில் வியாபாரத் தளங்கள் அமைக்கப்பெற்றன. பம்பாய், போர்த்துக்கலின் கத்த ரின், இங்கிலாந்தின் இரண்டாம் சாள்சைத் திருமணம் செய்த பொழுது ஆங்கிலருக்குச் சீதனமாகக் கொடுபட்ட துறைமுகமாகும். தொடக்கத்தில் வியாபாரத்திலேயே ஈடுபட்டு நின்ற பிரித்தானியர், நாளடைவில் தம் வியாபாரத் தளங்களைப் பாதுகாப்பதற்காகக் கோட்டைகளையும் அமைக்கலானர்கள்.
பிரெஞ்சினரின் இந்தியப் பிரவேசம் :
கிழக்குலக வணிகத்தில் பிரவேசித்த கடைசி மேற்கத்தைய வல்லரசு பிரான்சாகும். பிரெஞ்சுக் கிழக்கிந்திய வர்த்தக சங்கம் 1664 Co6 ான் நிறுவப்பெற்றது. அது தனது முதல் வர்த் நிலையத்தை சந்திரனசுவரில், ஆங்கிலரின் கல்கத்தா காட்டைக் கருகாமையில் நிறுவியது. 1674 இல் தென் இந்திய முஸ்லிம்கள் புதுச் சேரியை அவர்களது உபயோகத்திற்கென வழங்கினர்.
இவ்விதமாக ஆங்கிலரும் பிரெஞ்சினரும் இந்தியாவில் வர்த்தக முயற்சிகளில் ஈடுபட்டு நின்ற ஆரம்ப காலத்தில், அவர் களுக்கு இந்திய ஆள்புலங்களை வெற்றி கொள்ளுமெண்ணமோ அவற் றைத் தம் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர வேண் டு மென் ற சிந்தனையோ சிறிதளவும் இருக்கவில்லை. அவர்கள் பணம் தேடும் நோக்கத்துடனேயே கீழ் நாடுகளுக்கு வந்தனர். மொகலாயப் பேரரசு வலிமைபடைத்த அரசாக விளங்கியமையினுல் அத்தகைய எண்ணம் இருப்பினும், அது சித்தியடைவதற்கு சூழ்நிலை அனுகூல 'மாயிருக்கவில்லை.
 
 
 
 

இந்தியாவிலும் இலங்கையிலும் பிரித்தானிய வர்த்தக சங்கம் 51
மொகலாயப் பேரரசின் நலிவு :
1707 இல் மொகலாயப் பேரரசின் கடைசி மன்னன் அவுரங்க சீப் இறந்தபின் அப்பேரரசின் வீழ்ச்சிக் காலம் தொடங்கிற்று. உறுதியற்ற முடி மன்னர்கள் சிம்மாசனமேறிய காலங்களில் மாகாண ஆள்பதிகள், சுதந்திரமாக இயங்கத் தலைப்பட்டனர். நாளடைவில் அவர்கள் ஒவ்வொருவராகப் பேரரசின் ஆணைக்குத் தலைவணங்க மறுத்துச் சுதந்திர அரசர்களானர்கள். மொகலாயப் பேரரசு, படிப்படியாகத் தனிச் சுதந்திரம் படைத்த சுயேச்சைச் சிற்றர சுகளைக் கொண்ட மாநிலமாக உருமாறியது. முஸ்லிம்களின் ஆட்சி யின் கீழ் கொடுமையாகத் துன்பப்படுத்தப்பட்ட இந்துக்கள், சீக்கியர், மராத்தியர் எனும் இனத்தினர், நலிந்து வந்த பேரரசைத் தாக்கி அதனை மேலும் சின்னபின்னப் படுத்தினர். மராத்தியர், கூர்சரம் மாலவம் எனும் மாநிலங்களை வெற்றி கொண்டனர்.
ஆங்கில-பிரெஞ்சு இகல் :
இந்திய கண்டத்தில் எழுந்த இந்த ஒழுங்கீனத்தை ஆங்கிலரும் பிரெஞ்சினரும் தமக்குச் சாதகமாக உபயோகிக்க முனைந்ததில் வியப்பில்லை. 1742 இல் டியூப்ளே, பிரெஞ்சு இந்தியாவிற்கு ஆள் பதியாக நியமிக்கப்பட்டான். அவன், உள் நாட்டுப் போர்களில்ை ஈடுபட்டு நின்ற அரசர்களில் சிலருக்கு இராணுவ உதவியை நல்கி, அவ்விதம் கடமைப்பட்ட அரசர்கள் மேல் அரசியலதிகாரம் செலுத் தும் சூழ்ச்சியைக் கையாண்டு வந்தான். பிரெஞ்சினர், ஹைதரா பாத்தின் மேல் ஆதிக்கம் பெற்றனர். கருநாடகத்தின் நவாப்பையும் டியூப்ளே தனது செல்வாக்கிற்கிணங்க அடி பணியச் செய்தான். இவ் விதமாக பிரெஞ்சினர் படிப்படியாகத் தென் இந்தியாவின் அரசியலில் அதி செல்வாக்குடையவர்களாக நிலைமாறினர்.
ஆனல் அதே காலத்தில் டியூப்ளேயின் மதி நுட்பத்தையும் சூழ்ச்சிகளையும் முறியடிக்க வல்ல பலமுடைய ருெபட் கிளைவ், பிரிட் டிஷ் இந்தியாவின் ஆள்பதியானன். இந்தியாவில் ஆங்கிலரின் ஆதிக்கத்தை நிலை பெறச் செய்வதற்கு, பிரெஞ்சினரைத் தோற் கடிப்பதும், இந்திய அரசர்களை ஆங்கிலரின் உதவியை நாடச் செய்வதும்" இன்றியமையாதவை என அவன் உணர்ந்தான். கிளைவ் ஆர்க்காட்டைக் கைப்பற்றி அதனைப் பாதுகாத்த முறையைக் கண்ட் பல இந்திய அரசர்கள், ஆங்கிலர், பிரெஞ்சினரிலும் Luis Triji 35 வலிமையுடையவர்களென்பதை உணர்ந்தனர். தென் இந்திய அர சர்கள், ஆங்கிலரின் பாதுகாப்பைப் பெறுவதற்கு ஒருவரோடொருவர். போட்டியிடத் தொடங்கினர். . . . . .

Page 33
52 இலங்கைச் சரித்திரம்
பிளாசிப் போர் (1757) :
வங்காள நவாபு அலி அர்திகான் 1756 இல் இறக்கவே, அவனது பேரன் சிராஜ் உத் தெளலா அரசனனன். அவன் தொடக் கத்தில் இருந்தே ஆங்கிலர் மீது வெறுப்புக் கொண்டிருந்தான். கருநாடகத்தில் ஆங்கிலர், இந்திய இராச்கிய விவகாரங்களில் தலையிட்டு நாடு பிடிக்கின்றனர் எனக் கேள்வியுற்ற அவன், வங்களாத்தில் அவர்களது ஆதிக்கம் வளராதபடி முளையிலே கிள்ளியெறிந்து விட விரும்பி, முதலில் காசிம் பஜாரையும் பின்பு கல்கத்தாவையும் கைப்பற்றினன். இதைத் தொடர்ந்து கல்கத்தா இருட்டறைச் சம் பவம் நடந்ததனல் சென்னையிலிருந்த ஆங்கிலக் கம்பனியார் மிகுந்த ஆத்திரமடைந்து, வங்காள நவாபு மீது வஞ்சம் தீர்க்கத் தீர்மானித் தனர். 1756 ஒற்றே பரில், ருெ பட் கிளைவும் கடற் படைத் தலைவன் உவாட்சனும் சென்னையில் இருந்து வங்காளத்திற்கு அனுப்பப் பட்டனர். அங்கு காலடி வைத்த இரு மாதங்களில், கிளைவ் கல்கத் தாவை மீட்டான். பின்பு சிராஜ் உத் தெளலாவுடன் ஒரு தற்காலிக உடன்படிக்கையைச் செய்தான். ஆயினும் நவாபுக்கு விரோத மாகப் போரிடுவதற்கான ஏற்பாடுகளை இரகசியமாகச் செய்து வந்தான். 1757 யூனில் கிளைவ், 800 ஐரோப்பியர் உட்பட 3200 சிப்பாய்களுடன் நவாபின் தலை நகரான மூர்ஷிதாபாத்தை நோக்கிப் படையெடுத்தான். யூன் 23 இல், கங்கையைக் கடந்து, பிளாசி என்னும் இடத்தை அடைந்த ஆங்கிலப் படை, நவாபின் 50, 000 வீரர் கொண்ட சைனியம் தம்மெதிரில் நிற்பதைக் கண்டது. ஆயினும் ஆங்கிலப் படையின் முக்கிய தளகர்த்தன் அயர் கூட்டின் திடமான தாக்குதல், பகைவர்களைக் கலங்கியோடச் செய்தது.
இந்திய வரலாற்றில் பிளாசிப் போர் நடந்த அன்றே ஆங்கில ஆட்சி தொடங்கிற்று என்று கூறி விடலாம். அப்போரால், ஆங்கிலர் உடனே இந்தியாவின் அரசியலதிகாரத்தைக் கைப்பற்றி விடவில்லை யென்பது உண்மையேயாயினும், பிற் காலத்தில் அவ்வதிகார மாறுதல் ஏற்படுவதற்குப் பிளாசிப் போரே அடிப்படை என்பதில் ஐயமில்லை.
1783ஆம் ஆண்டுப் பொருத்தனை :
ஆங்கிலருக்கும் பிரெஞ்சினருக்குமிடையே நடந்து வந்த போட்டிகளும் பிணக்குகளும், 1763 ஆம் ஆண்டு பரிசில் கைச்சாத் திடப்பட்ட அமைதிப் பொருத்தனையின்ப்டி ஆங்கிலருக்குச்
ாதகமாகவே முடிவெய்தின. பிரெஞ்சினர், புதுச்சேரியையும் ங்காளத்தில் சந்திரனுகூரையும் இராணுவ ஏற்பாடின்றி தளங்களாக வைத்திருக்க அனுமதிக்கப்பட்டனர்.
 
 
 
 

இந்தியாவிலும் இலங்கையிலும் பிரித்தானிய வர்த்தக சங்கம் 53
அன்று முதல் இந்தியாவில் பிரெஞ்சினரின் அரசியல் செல்வாக் மறைந்து கொண்டு வந்தது. இஃது அமெரிக்காவில் பிரெஞ் (ககு ஏற்பட்ட நிலைக்கொப்பானதென்றே கூறலாம். ரஞ்சினர்க்கு
இந்தியா (1783-1805) - -
1783 இல் பிரித், ஆள்புலம் = ஒவலெஸ்லிகைப்பற்றியஇை2 ... 2 பிரித்தனுடன்இணைநிதி பஞ்சிப்x^பிஜிதே Z ಟ್ವಿಟ್ಜಿ % 3% זה המ சுகவா ? \隊 '# GSGTL60'
@笠金
ს.) . ...” “ •”, No J. . w M * مه' . . . . :* great." s W 1; ፳፰፻፹9ፓፓë፵ù. அரசுகள்:இ8 壽
o)T «s *K3S7
e
须
ந்த
1. o. . . . . . VO
A.
புதுச்சேரி (பிரெஞ்.) இசென்டேவிட் கோட்
YSES ரெ.) . A · شیے . G GAunt išlain." a
இலங்கை

Page 34
54 இலங்கைச் சரித்திரம்
1773இல் பிரித்தானிய பாராளுமன்றம் நிறைவேற்றிய இந்திய சட்டத்தின் பிரகாரம் பிரித்தானிய அரசாங்கம், இந்திய மாநிலங்களின் ஆட்சியை வர்த்தக சங்கத்தினிடமிருந்து தான் பொறுப்பேற்றுக் கொண்டது. கல்கத்தா, சென்னை, பம்பாய் எனுமிடங்களில் ஆள்பதிகள் நியமிக்கப்பட்டனர். வங்காள ஆள்பதி, ஆள்பதி-நாயகமானர்.
3. திருகோணமலையின் முக்கியத்துவம்
16 ஆம், 17 ஆம் நூற்ருண்டுகளில் கீழைத் தேயங்களில் வர்த்தகம் செய்த ஐரோப்பிய கப்பலோட்டிகள், வட கீழ்ப்பருவப் பெயர்ச்சிக் காற்றினின்று புகலிடம் பெறுவதற்கு, திருகோணமலை மிகவும் வாய்ப்பான இடத்தில் அமைந்தமையை நன்குணர்ந்திருந்தனர். இக்காரணத்தினலேயே போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரெஞ்சினர் எனும் வல்லரசுகள் அத்துறைமுகத்தைக் கைப்பற்றின. 1659 நொவம்பர் 19 இல், ஆங்கிலக் கப்பல் 'ஆன்" (Ann) திருமலையில் நங்கூரம் பாய்ச்சிய பொழுது அதன் தளபதி ருெபட் நொக்ஸும் அவனது மைந்தனும் கண்டியரினல் கைது செய்யப்பட்டு, சிறை வைக்கப்பட்டனர். ருெபட், இலங்கையைப்பற்றி எழுதிய நூல் 18 ஆம் நூற்ருண்டில் இங்கிலாந்தில் பிரபல்யம் பெற்றது. அந் நூற்ருண்டின் இறுதியில், திருகோணமலையின் முக்கியத்துவம் பல வழிகளிலும் உயர்வடைந்தது. ஜேம்ஸ் கோடினர் கூறியதாவது, * எமது இந்திய வியாபாரத்தைப் பாதுகாத்தற்கு திருகோணமலைத் துறைமுகம் ஒன்று மாத்திரமே, இத்தீவின் முக்கியத்துவத்தை நன்கு உணர்த்தும். மத்திய கேந்திர நிலையத்திலும், எல்லாக் காலங்களிலும் உள் வெளிச் செல்வதற்கு இலகுவான வசதிகளையுமுடைய திருகோண மலை, இந்தியாவிலுள்ள எமது எந்தக் கப்பற்றளத்திலும் பார்க்க, பிரித்தானிய கீழ்த்தேயக் கடற்படையின் பொருட் சாலையாகவும், தங்கு நிலையமாகவும் இடம்பெற மிகவும் வாய்ப்பான அமைப்புக் களையுடையது.”** பிற்காலத்தில் இங்கிலாந்தின் பிரதம மந்திரியான உவில்லியம் பிற் (William Pitt), திருகோணமலையை 'உலகத் திலேயே அதி சிறந்த குடியேற்ற உடைமை' என வர்ணித்தார். வேறு பலர் திருகோணமலையை 'இந்தியாவின் பாதுகாப்புக்குரிய திறவுகோல்' என்றும் 'இரண்டாம் ஜிப்ருேல்ற்றர் (Gibraltar)' என்றும் வர்ணித்தனர். ஏனெனில் அங்கிருந்து இந்தியாவைப் பாது காப்பதுடன், சீனுவுடன் நடைபெற்ற விலையுயர்ந்த பிரித்தானிய வர்த்தகத்தையும் கண்காணிக்க முடிந்தது.
1. Robert Knox- An Historical Relation of the Island of
Ceylon, 1681.
2. James Cordiner- A Description of Ceylon.
i
 

இந்தியாவிலும் இலங்கையிலும் பிரித்தானிய வர்த்தக சங்கம் 55
ஆங்கிலர், பிரெஞ்சினருடன் நடாத்திய போர்களில் வங்காள விரிகுடாவில் ஒரு துறைமுகம் இல்லாமற் போனதனல் உண்டான இன்னல்களை நன்குணர்ந்தனர். விசேடமாக வடகீழ்ப் பருவப் பெயர்ச்சிக் காற்றுக் காலத்தில் பிரித்தானிய கப்பற் படை, வங்காள விரிகுடாவை விட்டு நீங்கவும் குடியேற்றங்களைப் பகைவர் களின் தாக்குதல்களினின்று பாதுகாக்கவும் முடியாமற் போயிற்று. மேலும் இக்குடாவில் ஒரு பாதுகாப்பான துறைமுகம் இல்லாமற் போன காரணத்தினல் பழுதடைந்த கப்பல்களையெல்லாம் பம்பாய்த் துறைமுகத்திற்கு இழுத்துச் செல்ல வேண்டியதாயிற்று. எனவே ஆங்கிலர், தம் கண்னேட்டத்தை வங்காள பிரிகுடாவில், கேந்திரதானத்தில் அமைந்திருக்கும் திருகோணமலையின்மேல் செலுத்தலாயினர். திருகோணமலை வனப்பு வாய்ந்ததும் இயற்கையாக அமைந்துள்ளதுமான ஒரு துறைமுகம். அதனுள் ஒரு முழுக் கப்பற் படை அமைதியாகத் தங்கி நிற்கவும், அங்கிருந்து இந்தியாவைப் பகைவர்களிடமிருந்து பாதுகாக்கவும் இயலுமென ஆங்கிலர் நன்குணர்ந்தனர். இந்தியாவில் தமது ஆதிக்கத்தை உறுதியாக நிலை நாட்டுவதற்கு, இலங்கை சிறந்ததொரு படிக்கல்போல் அமைந்திருந்தமையையும் அவர்கள் உணர்ந்து கொண்டனர்.
திருகோணமலையின் முக்கியத்துவத்தை நன்குணர்ந்த ஆங்கிலர் அதனைப் பெறுவதற்கு முதற்றருணத்தில், கண்டி மன்னன் இர்த்தி சிறீ இராஜசிங்கனுடன் (1747-82) பேச்சு வார்த்தைகள்
Wis நடாத்த முற்பட்டனர்.
கண்டிக்குப் பைபஸின் தூது :
பைபஸின் தூதுக்கான உடன் காரணம், கண்டியின் அரசன் ஒல்லாந்தருக்கெதிராக ஆங்கிலரின் உதவியைக் கேட்டுச் சென்னை அரசாங்கத்திற்கனுப்பிய வேண்டுகோளாகும். 1762இல் கண்டி அரசன், கரையோர மாநிலங்களில் ஆட்சி புரிந்த ஒல்லாந்தருடன் போர் தொடுத்த வேளையில், அவன் ஆங்கிலரின் துணையை வேண்டி மேற் கூறிய வேண்டுகோளை விடுத்தான். சென்னை அரசாங்கமும் அவ்வாண்டு, பைபஸ் என்பவனைக் கண்டிக்குத் தூது அனுப்பியது. இத்தூதினை அனுப்ப ஆங்கிலரைத் தூண்டிய காரணம் இந்தியாவின் பாதுகாப்புக்காக ஒரு துறைமுகத்தைப் பெறும் நோக்கமாகும்.
இ2ளவின் வெற்றிகளின் பயனக இந்தியாவில் பிரித்தானியரின் ஆதிக்க மையம் மேற்குக் கரையினின்று கிழக்குக் கரைக்கு இடம் பெயர்ந்ததன் விளைவாக ஆங்கில-பிரெஞ்சு கடற் போர்க்ள்
ܝ ܛ

Page 35
56 இலங்கைச் சரித்திரம்
வங்காள விரிகுடாவில் நடைபெறத் தொடங்கின. ஆனல் இக் குடாவின் கப்பற்றளமாக அமையக் கூடிய வாய்ப்பான துறைமுகம் ஒன்றுமே இருக்கவில்லை. ஒக்ரோபர் தொடக்கம் மார்ச் வரை, இப் பகுதியில் வீசிய வடகீழ்ப் பருவக் காற்றுக் காலத்தில் உண்டான அபாயமான காற்றுக்களினின்று பாதுகாப்புப் பெறுவதற்கு கப்பல்கள் யாவும் மேற்குக்கரைக்குச் செல்ல வேண்டியதாயிற்று. இதனல் பல மாதங்களுக்கு ஆங்கிலரின் இந்திய மாநிலம் முழுவதும், வங்காள விரிகுடாவினுள் பிரவேசிக்கும் பகைவர்களின் தாக்குதல்களுக்கு இலக்காயிற்று. இவ்வாபத்தினின்று இந்தியாவைப் பாதுகாப்பதற்கு வங்காள விரி குடாவில் மிகவும் வாய்ப்பான நிலையத்திலமைந்திருந்த திருகோணமலைத் துறைமுகத்தைப் பெற மிகவும் ஆசித்தனர். இத்
துற்ைமுகம் ஒல்லாந்தருக்குச் சொந்தமாயிருந்ததனல் அதைப் பெறு
வது அசாத்தியமாயிற்று. கண்டியரசன் கரையோர மாநிலங்களின் மேல் இன்னும் ஆதிக்கம் செலுத்திய பிரதேசங்களிலுள்ள துறை முகம் ஒன்றினை ஆங்கிலரின் உபயோகத்துக்குப் பெற ஆவன செய்ய வேண்டுமென பைபஸ"க்குக் கட்டளையிடப்பட்டது. அவ்வேளையில் ஒல்லாந்தருடன் பொல்லாப் பகைமை பூண்டு நின்ற கண்டி அரசன் கீர்த்தி சிறீ இராஜசிங்கன், இலங்கையின் கரையோரங்களினின்று ஒல்லாந்தரைத் துரத்திவிட ஆங்கிலரின் உதவியை நாடி நின்றன். ஆங்கிலர் வேண்டி நின்ற துறைமுகத்தை அவர்களுக்குக் கையளிக்க அரசன் சம்மதித்த போதிலும், பைபஸ் அரசனின் வேண்டுகோளின் படி ஒல்லாந்தருடன் போர் புரிய ஓர் உறுதியான் உத்தரவாதத்தைக் கொடுக்க முடியவில்லை. ஆகவே பைபஸின் தூது எவ்வித பயனு மின்றி முடிந்தது.
ஆங்கிலர் திருகோணமலையைக் கைப்பற்றல்
கிழக்கிந்திய வர்த்தக சங்கம், தனது அவதானத்தை மீண்டும் இலங்கையின் மேற் செலுத்த பதின்மூன்று ஆண்டுகள் கழிந்தன. 1775 இல் ஆரம்பித்த அமெரிக்க சுதந்திரப் புரட்சி, ஆங்கிலரைப் பல வழிகளிலும் கலக்கியது. போரில் ஆங்கிலர் இக்கட்டான நிலை யிலிருக்கும் வேளையில் 1778 ஆம் ஆண்டு பிரான்சு, தான் ஐரோப் பாவில் இழந்த முதன்மையைத் திரும்பவும் நிலை நாட்ட, அமெரிக் கரின் சார்பில் இங்கிலாந்திற்கெதிராகப் போரில் இறங்கிற்று. பிரான்சு, அமெரிக்க குடியேற்ற நாடுகளின் சுதந்திரத்தை அங்கீகரித் ததுமன்றி அவர்களுக்குதவியாக மார்க்குவி டி லபாயெட் என்பவனை 6000 போர் வீரர்களுடன் அனுப்பியும் வைத்தது. பிரெஞ்சுக் கப்பற் படையும் அமெரிக்கரின் உதவிக்குப் புறப்பட்டது. 1780 இல் ஒல்லாந்தும் அவ்வழியே சென்று குடியேற்ற நாடுகளுக்கு அனுதாபம் கோட்டியதினுல் இங்கிலாந்து, அதன் மேல் போர் தொடுத்தது.
 
 

Nწ
இந்தியாவிலும் இலங்கையிலும் பிரித்தானிய வர்த்தக சங்கம் 57
போர் மூண்ட வேளையில் ஒல்லாந்தர், தம் கடல் கடந்த குடி யேற்ற நாடுகளின் பாதுகாப்பைப்பற்றி அச்சம் கொண்டனர். இலங்கையிலிருந்த கொழும்பு, காலி, திருகோணமலை, யாழ்ப்பாணம் எனும் பிரதான கோட்டைகளை ஆங்கிலரின் ஆக்கிரமிப்பினின்று பாதுகாப்பதற்கு விசேட இராணுவத்தினரை அனுப்புவது இன்றிய மையாததென உணர்ந்தனர். உடனடியாகத் தம் நாட்டுப் படை யினரை அனுப்ப முடியாமற் போகவே, அவர்கள் பல படைகளை ஐரோப்பாவில் கூலிக்குப் பிடித்து அனுப்பினர். அக்காலத்தில் சில பிரபுக்கள் படைஞரை ஒன்று திரட்டி அவர்களை தேவைப்பட்ட நாடுகளில் போர்ச் சேவைக்காக அனுப்புவது சாதாரண வழக்கா யிருந்தது. ஒல்லாந்தர், இலங்கையைக் காப்பதற்குக் கூலிக்குப் பிடித்த படைகள், த மியூறன் என்ற சுவிற்சலாந்துப் பிரபுவுக்கும் உவேட்டம்பேக் இளவரசனுக்கும் இலக்சம்பேக் கோமகனுக்கும் சொந்தமானவை. இவ்வாயத்தங்களின் பயன் வெகு விரைவில் நிரூபிக்கப்பட்டது. ஒல்லாந்தரின் பகைமையைக் கண்ட சென்னை ஆங்கில ஆள்பதி மக்காட்னி பிரபு, உடனடியாகத் தென் இந்தியா வினின்று படைகளை டச்சுக் குடியேற்றங்களைக் கைப்பற்றுவதற்கென அனுப்பினன். நாகப்பட்டணம், 1781 நொவம்பரில் கைப்பற்றப் பட்டது. 1782 ஜனவரியில் கடற் படைத் தலைவன் சேர் எட்வட் ஹியூஸ் (Admiral Sir Edward Hughes) 60 Spy கப்பற் படையின் துணைகொண்டு திருகோணமலையைக் கைப்பற்றினன்.
பெரியிட் தூது :
இலங்கையின் ஏனைய ஒல்லாந்தக் கோட்டைகளைத் தாக்க முன்பு மக்காட்னி, கண்டியரசுடன் ஒரு நட்புறவு ஏற்படுத்துவது பயனுடை யதாக இருக்குமென எண்ணித் தனது அந்தரங்கச் செயலாளன் பொயிட் என்பவனை கப்பற் படையுடன் அனுப்பினன். பொயிட் திருகோணமலையில் இறங்கி, கண்டி இராச்சியத்தின் தலை நகருக்குச் சென்றன். ஆனல் அவன் கீர்த்தி சிறீயின் மரணத்தின் பின்பே கண்டி இராச்சியத்தினை அடைந்தான். புதிதா க ச் சிம்மாசனமேறிய இராஜாதி இராஜசிங்கன், ஆங்கிலருடன் உடனடியாக உடன்படிக்கை எதுவும் செய்ய ஆயத்தமாக இருக்கவில்லை.
இதற்கிடையில் பிரெஞ்சினர் திருகோணமலையில் ஆங்கிலரைத் தாக்கினர். கடற்படைத்தலைவன் த சப்றன் (Admiral de Sufren) எண்பா னின் கீழ், பிரெஞ்சுக் கப்பற்படை, ஹியூஸின் கப்பல்களுடன் மும்முறை பொருதியும் நிலையான பேறு ஒன்றும் ஏற்படவில்லை. ஈற்றில் 1782 ஆகத்து 15இல் த சப்றன், திருமலையைக் கைப்பற்றி
.16. ܘܼ

Page 36
58 இலங்கைச் சரித்திரம்
னன். 1783 இல் பிரெஞ்சினர், அதனை ஒல்லாந்தரிடம் திருப்பி ஒப்படைத்தனர். ஒல்லாந்த வர்த்தக சங்கம், மேலும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு இலங்கையின் கரையோர மாநிலங்களில் ஆட்சிபுரிய அவகாசம் பெற்றது. به نام
ஆங்கிலர் கரையோர மாநிலங்களைக் கைப்பற்றல்
பிரெஞ்சுப் புரட்சியும் அதன் பயன்களும்:
1789 ம் ஆண்டு பிரான்சில் உண்டான புரட்சியின் விளைவாகத் தோன்றிய சில சம்பவங்களே, இலங்கையின் ஆட்சியில் மிகவும் முக்கியமான மாற்றமேற்படுத்துவதற்கு மறைமுகமாக வித்திட்டன.
1794 இல் பிரெஞ்சுப் படைகள் ஐரோப்பிய நாடுகளின் மேல் படையெடுக்க ஆரம்பித்த வேளையில், தளகர்த்தன் பிச்சேக்று (General Pichegru), ஒரு புரட்சிப் படையினை ஒல்லாந்தினுள் வழி நடத்திச் சென்று அந்நாட்டினை வெற்றி கொண்டான். ஒல்லாந்து தேசத்தின் அரசன் ஐந்தாம் உவில்லியம் முடியைத் துறந்து, தப்பியோடி, இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்தான். பிரெஞ்சுப் புரட்சியின் கருத்துக்களை வெகுவாகப் பாராட்டிய ஒல்லாந்த 'தேசாபிமானிகள்' பிரெஞ்சுப் படைகளுடன் ஒன்று சேர்ந்து நெதர்லாந்துக் குடியரசினை அமைத்தனர். ஒல்லாந்து தேசம் 'பற்றேவியக் குடியரசு" என்ற நாமத்துடன் பிரெஞ்சு நாட்டின் ஒரு பகுதியாக இணைக்கப் பெற்றது. ஏனைய ஐரோப்பிய நாடுகளும் இங்கிலாந்தும் ஒல்லாந்த புரட்சிக்காரருக்கு எதிராகப் போர் தொடுத்தனர். ,
ஒல்லாந்து அடி பணிந்ததன் பயனக அதன் குடியேற்ற நாடுகள் பிரெஞ்சினருடன் இணைந்துவிடுமெனப் பிரித்தானியர் அஞ்சினர். ஒல்லாந்த குடியேற்ற நாடுகளுள் முக்கியமானவையான தென்னபிரிக்க முனையையும் இலங்கையையும் கைப்பற்றுவதற்குப் படைகளை அனுமதிக்க கட்டளைகள் அனுப்புமாறு உவில்லியத்தை ஆங்கிலர் தூண்டினர். புரட்சிப் போரின் முடிவில் தானிழந்த அரசையும் குடியேற்ற நாடுகளையும் ஆங்கிலர் மீட்டுத் தருவர் என்ற நம்பிக்கையினல் உந்தப்பட்ட உவில்லியம், ஆங்கிலரின் வேண்டுகோளுக்கிசைந்தான். அவன் இலங்கை, பிரெஞ்சினரின் கைகளில் சிக்காமலிருப்பதற்கு டச்சு ஆள்பதி வான் அங்கில்டிக் என்பானுக்கு ஆங்கிலப் படைகளையும் கப்பல்களையும் நாட்டினுள் அனுமதிக்கவும் நிருவாகத்தை அவர்களிடமே ஒப்படைக்கவும் 1795 பெப்ரவரி 7இல் ஒரு கட்டளையை வரைந்தனுப்பினன். 1795
静、
g
 
 
 

இந்தியாவிலும் இலங்கையிலும் பிரித்தானிய வர்த்தக சங்கம் 59
யூலையில் ஹ்ோபாட் பிரபுவிடமிருந்து கடிதத்துடன் வந்த அக்னியூ (Major Agnew), ஸ்ராட்ற்ஹோல்டரின் ஆணைப்படி பிரித்தானிய துருப்புக்கள் இலங்கைக்கு அனுப்பப்படுமென்றும் அவை இங்கு அனுமதிக்கப்படாவிடின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுமென்றும் கூறி நின்றன். அங்கில்பீக், உவில்லியத்தின் கட்டளையின் பிரகாரம் 800 ஆங்கிலப்படை வீரரை அநுமதிக்கத் தான் தயாரென்றும், ஆனல் நாட்டின் நிருவாகத்தை ஆங்கிலரிடம் ஒப்படைக்க அக்கடிதம் கட்டளை இடவில்லையென்றும் பதிலிறுத்தான்.
திருமலையில் ஆங்கிலர் :
இப்பதிலை ஏற்றுக்கொண்ட ஹோபாட் பிரபு 300 ஆங்கிலரையும் இந்தியச் சிப்பாய்களையும் கொண்ட ஒரு படையினை, த ள பதி ஸ்ருவட்டின் கீழ், இலங்கைக்கு அனுப்பி வைத்தான். அது திரு கோணமலையை, 1795 ஆகத்து முதலாம் நாளன்று வந்தடைந்த பொழுது, திருகோணமலையின் டச்சுத் தளபதியான போண்போவர் (Fornbauer) அதனைக் கோட்டையினுள் அனுமதிக்க முடியாதென மறுத்துவிட்டான். கொழும்பு ஆள்பதி அங்கில்பீக்கின் கடிதம் அவ னுக்குக் கொடுக்கப்பட்ட பொழுது, அதில் அவன் ஒரு நுணுக்கப8ான பிழையைக் கண்டு, தான் மேலதிகாரிகளிடமிருந்து புதுக் கட் டளையைப் பெறும் வரை ஆங்கிலரை அனுமதிக்க மீண்டும் மறுத்தான். திருமலையைப் போரின்றி அமைதியாக வெற்றி கொள்ள ஆசித்த ஆங்கிலர், போண்போவர் கொழும்பினின்று மறுமொழியினப் பெறும் வரை கோட்டையைத் தாக்கும் முயற்சியைப் பின் போட்டனர்.
இவ்விதமாக திருமலையின் தளகர்த்தன் ஆங்கிலரைத் தாமதம் செய்து வந்த இடைவேளையில் கொழும்பின் மேலதிகாரிகள் அவர் களை அநுமதிக்கும் விடயத்தைப் பற்றி மனம் மாறினர். பிரெஞ் சினர் ஒல்லாந்தரின் மேல் படையெடுத்து ஸ்ராட்ற்ஹோல்டரைத் துரத்தி விட்டு மக்களின் விருப்பங்களுக்கு மாருகப் பலாத்காரம் கொண்டே புதுக் குடியரசை நிறுவினர், என நம்பி வந்தனர். ஆகவே தான் ஆள்பதி, ஸ்ரட்ஹோல்டரைத் தம் அரசனுக ஏற்று அவனது ஆணையை மதித்து நடந்தனர். ஆனல் அவ்வேளையில் ஒல்லாந்தில் புதுக் குடியரசு மக்களின் விருப்பத்துடனேயே நிறுவப்பட்டதென அறிந்த ஆள்பதி, தான் இனிமேல் உலில்லியத்துக்கல்ல, குடியரசு அரசாங்கத்துக்கே விசுவாசமாக இருக்க வேண்டுமெனத் தீர்மானித் தான். எனவே ஒல்லாந்தர் ஆங்கிலரின் பாதுகாப்பை ஏற்க மறுத் துத் தம் கோட்டைகளை அவர்களிள் ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்க ஆயத்தம் செய்தனர். .

Page 37
60 . . . . . . இலங்கைச் சரித்திரம்
திருமலையின்-வீழ்ச்சி :
திருகோணமலையில் காவலிருந்த ஆங்கிலர், இச்செய்தியைக் கேள் விப்பட்டதுடன் 1795 ஆகத்து 23 இல், பிரடரிக் கோட்டையை உடனடியாகத் தாக்கி முற்றுக்கையிட்டனர். 26ஆம் நாள் ஒல்லாந்தர் சரண் புகுந்தனர். பிரடரிக் கோட்டைக்கு மூன்று மைல் தொலை விலிருந்த ஒஸ்ற்றன்பேக் கோட்டை (Fort Ostenburgh), ஆகத்து 31 இல் வீழ்ந்தது. இதன் பின்னர் ஆங்கிலர், கரைவழியாகச் சென்று மட்டக்களப்பு முதல் நீர்கொழும்பு வரையுமிருந்த டச்சுக் கோட்டை களை ஒவ்வ்ொன்ருகக் கைப்பற்றினர். பல கோட்டைகள் ஆங்கிலரைக் கண்டவுடன் எல்வித எதிர்ப்பும் காட்டாது சரண் புகுந்தன. செப்றம்பர் 18 இல் மட்டக்களப்பு வீழ்ந்தது. பருத்தித்துறை செப் றம்பர் 24 இலும், யாழ்ப்பாணம் அடுத்த தினமும், முல்லைத்தீவு ஒக்ருேபர் 1ஆம் நாளும், நவம்பர் 13இல் கற்பிட்டியும் முறையே ஆங் கிலருக்காயின. இறுதியாக ஆங்கிலர் கொழும்பையும் தாக்க ஆயத் தம் செய்தனர்.
தளபதி பாபட் முன் சென்று 1796 பெப்பரவரி 3 ஆம் நாள் நீர்கொழும்பைக் கைப்பற்றினன். அங்கு இலங்கையிலிருந்த ஆங்கிலப் படைகளும், மேலும் இந்தியாவினின்று வரவழைக்கப்பட்ட துருப் புக்களும், ஒன்று சேர்ந்து கொழும்பின்மேற் படையெடுக்க ஆயத்த மாயின. ஆங்கிலேயர் தெற்கு நோக்கிப் புறப்படவே, ஒல்லாந்த துருப்புக்கள் யாவும் கொழும்பை நோக்கிப் பின்வாங்கின. ஏனெனில் ஒல்லாந்தர் தம் முழுப்படைப் பலத்தையும் கொழும்பைப் பாதுகாப்பதற்கு உபயோகிக்க எத்தனித்தனர்.
அவ்வேளையில் ஐரோப்பாவில் ஏற்பட்ட ஒர் உடன்பாட்டின் பிரகாரம் ஒல்லாந்தர் கொழும்பைக் காப்பதற்குக் கூலிக்கு ஒழுங்கு செய்திருந்து த மியூற னின் துருப்புக்கள் ஆங்கிலேயரின் சேவைக்கு மாற்றப்பட்டனர். நன்கு பயிற்றப்பட்ட 600 படை வீரர்களைக் கொண்ட இப்படையின் சேவை மாற்றம், ஒல்லாந்தரின் நிலையைப் படுத்தி ஆங்கிலேயரின் பலத்தைப் பெருக்கியது.
இன்ட்றுாஸின் கண்டித் தூது :
ஆங்கிலேயர் கொழும்பை முற்றுக்கையிடுமுன் கண்டி அரசனின் உதவியையும் பெறுதல் உபயோகமுள்ளதாக இருக்குமென நினைந்து ருெபேட் அன்ட்றுாஸ் என்னும் சென்னைக் குடியியற்பாலன அதிகாரியைக் கண்டி அரசனிடம் ஓர் ஒப்பந்தம் செய்யுமாறு அனுப்பி வைத்தனர். ஒல்லாந்தருக்கெதிராகப் பொல்லாப் பகைமை
 
 
 
 
 
 

இந்தியாவிலும் இலங்கையிலும் பிரித்தானிய வர்த்தக சங்கம் 61
கொண்டிருந்த இராஜாதி இராஜசிங்கனும் அவனது அமைச்சர்களும் ஆங்கிலர் கைப்பற்றிய பிரதேசங்களை ஒரு பொழுதும் ஒல்லாந்தருக் குத் திருப்பிக் கொடுக்கமாட்டார்களென வாக்குறுதி அளிக்குமாறு அன்ட்றுாசை வற்புறுத்தினர். ஆனல் அன்ட்றுாஸ் அத்தகைய ஓர் உறுதியைக் கொடுக்க முடியாமற் போகவே, மீண்டும் ஆங்கிலருக் கும் அரசனுக்குமிடையே எவ்வித உடன்பாடும் ஏற்படா மற் போயிற்று. அவர்களுக்கிடையே எழுந்த வேறுபாடுகளைத் தீர்த்து ஒ ற் று  ைம  ைய க் காண்பதற்காக அன்ட்றுாஸ் தன்னுடன் கண்டியின் மீகாத்தனை திசாவையையும் ஒரு தூதுக் குழுவையும் சென்னைக்கு அழைத்துச் செல்லத் தீர்மானிக்கப்பட்டது.
ஈற்றில் 1796 பெப்ரவரி 12 ஆம் நாள், சென்னையில் , ஓர் உடன்படிக்கை நிறைவெய்தியது. இதன்படி கண்டி அரசன் உப்பும் மீனும் பெறுவதற்காக ஒரிடத்தை வைத்திருக்கலாமென்றும், சுங்க மும் தீர்வையுமின்றிப் பத்துக் கப்பல்கள் கொண்டு தனி வியாபாரம் நடத்தலாமென்றும் ஏற்பாடாயிற்று. இவ்வுடன்படிக்கைக்கு அரசனின் கைச்சாத்தைப் பெறுவதற்காக அன்ட்றுாஸ் மீண்டும் கண்டியைத் தரிசித்தான். ஆனல் அரசன் அவ்வேற்பாடுகளை அங்கீ கரிக்க மறுத்து விட்டான். இவ்விதமாகக் கண்டி அரசன் ஆங்கிலருடன் ஒரு நிலைபேருண் உடன்பாட்டைச் செய்வதற்குக் கிடைத்த வாய்ப்பை இழந்தான்.
கொழும்பின் முற்றுகை :
鞑
ஆங்கிலேயர் நீர்கொழும்பில் ஒரு விசாலமான படையை ஒன்று சேர்த்தும் சகல ஆயத்தங்களை பூர்த்தி செய்தும் முடிந் தவுடன், கொழும்பின்மேற் படயெடுக்கத் தீர்மானித்தனர். ஆனல் ஒல்லாந்தர், அவர்களுக்கு முகம் கொடுக்காது கொழும்பில் ஒர் இறுதிப் பெரும் போரை ஏற்படுத்தும் நோக்குடன் பின் வாங்கிக் கொண்டே சென்றனர். பிரித்தானியர் தங்கு தடையின்றி விரை வாக முன்னேறினர். பெப்ரவரி 5ஆம் நாள், யாயலை (Ja-Ela) யை அடைந்தனர். இதன் பின், ஆங்கிலருடன் போர் புரிவதா இல்லையா என்ற பீதியும் தடுமாற்றமும் ஒல்லாந்தரைப் பீடித்தது. அவர்கள் படைகளை ஆங்கிலேயரின் முன்னேற்றத்தைத் தடை செய்வதற்காக அனுப்புவதும் பின்பு இரண்டொரு நாள்களில் அவற்றைத் திருப்பி அழைப்பதுமாக இருந்தனர். பெப்ரவரி 10 ஆம் நாள் இலக்சம் பேக் படையைச் சேர்ந்த டி றேமன்ட (Colonel de Raymond) என்பவன் மாத்திரமே ஆங்கிலருடன் போர் தொடுத்து 80 பேரைக் காயப்படுத்தினன். அடுத்த தினம், 18 பிரித்தானியப் போர்க் கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிட்டதைக்க

Page 38
62 இலங்கைச் சரித்திரம்
இலசுக்கிரின்கள், இந்திய சிப்பாய்கள், மலாய்ப்படை வீரர் யாவரும் ஒட்டம் பிடித்தனர். பெப்ரவரி 13 இல் ஒல்லாந்த இராணுவத் தளபதிகள் மகாநாடு கூடி, அவர்கள் கைவசமிருந்த ஆள், பொருட் பலம் கொண்டு கொழும்பை மூன்று நாட்களுக்குமேற் காப்பது முடியாத கருமமென்றும் ஆங்கிலேயரிடம் சரண் புகுவதே உத்தமம் என்றும் அபிப்பிராயம் தெரிவித்தனர்.
பெட்ரவரி 14 இல், பிரித்தானியத் தளபதி ஸ்ருவட், கொழும்பு நகரத்தைச் சரண் புகுமாறு இறுதி எச்சரிக்கை விடுத் தான். பெப்ரவரி 15 இல் வான் அங்கில்பீக், தனது அரசியற் கழகத்தைக் கடைசி முறையாகக் கூட்டி ஆங்கிலர் விடுத்த அமைதிப் பொருத்தனை விதிகளை ஏற்பதென முடிவு செய்தான்.
அமைதிப் பொருத்தனை:
ஒல்லாந்தர், ஆங்கிலரிடம் சரண்புகுந்த பொழுது ஏற்றுக் காண்ட நிபந்தனைகளாவன:
1. கொழும்பையும், ஏனைய மாநிலங்களையும், பொருள் உடைமை
களையும் ஆங்கிலரிடம் ஒப்படைத்தல். 2. ஒல்லாந்தப் படைகளைப் போர்க் கைதிகளாகச் சென்னைக்கு
ஆங்கிலரின் செலவில் அனுப்புதல். 3. ஒல்லாந்த அலுவலாளர்கள், விரும்பியபடி பின் தங்க அல்லது தீவை விட்டு நீங்க அனுமதி. வெளியேறும் அலுவலாளர்க்குத் தம் உடைமைகள் அனைத்தையும் ஏற்றுமதி வரியின்றிக் கொண்டு செல்ல அனுமதி. 4. தீர்க்கப்படாத வழக்குகளை விசாரணை செய்வதற்காக ஒல்லாந்த நீதி நிலையங்கள் யாவும் மேலும் ஒராண்டுக்கு இயங்குதல். 5. வணிக ஊழியர்கள், தமது கணக்குப் புத்தகங்களைச் சிர்ப்படுத்தி ஒப்படைப்பதற்காக 18 மாதங்களுக்குப் பின் தங்குதல். 6. ஒல்லாந்த சமயக் குரவர்கள், தத்தம் தேவாலயங்களில் தம்
கடமைகளைத் தொடர்ந்து செய்ய அனுமதி. 7, ஏறக்குறைய அறவு நிலையை எய்தியிருந்த வர்த்தக சங்கத்தின்
நிதிப் பொறுப்பை பிரித்தானியர் ஏற்றல். ஒல்லாந்த நொத்தாரிசுகளின் உறுதிகளும் மரண சாசனங்களும் முன்போன்று இருத்தல்.
 

இந்தியாவிலும் இலங்கையிலும் பிரித்தானிய வர்த்தக சங்கம் 63
இவ்விதிகளின் பிரகாரம் ஒல்லாந்தர் கொழும்பையும் அதனுடன் சேர்ந்த கழுத்துறை, காலி, மாத்தறை முதலிய கோட்டைகளையும் அவ்விடங்களிலுள்ள பொருள்களையும் ஆங்கிலரிடம் ஒப்படைத்துவிட்டு வெழியேறினர். ஒல்லாந்தரின் ஆட்சிக்குட் பட்டிருந்த மாநிலங்கள் யாவும் ஆங்கில வர்த்தக சங்கத்தின் உடைமையாயின.
இவ்விதமாக ஒல்லாந்தர், ஒரு துப்பாக்கிச் சூடின்றியும் ஒரு துளி இரத்தம் சிந்தாமலும் தம் மாநிலங்களைக் கை நெகிழ விட்டனர். அவர்கள் இவ்வண்ணம் நடந்து கொண்டமைக்குப் பல காரணங்களுள. அவர்கள், நாட்டை விட்டு ஓடிய ஸ்ராட்ற்ஹோல்டருக்கு விசுவாசமாகவிருப்பதா அல்லது பிரெஞ்சினர் அமைத்த புதுக் குடியரசுக்கு விசுவாசமாகவிருப்பதா என்பது அவர்களை நிலை தடுமாறச் செய்த பெரும் பிரச்சினையாகும். இதன் விளைவாக ஆங்கிலரைத் தம் பகைவராகக் கணிப்பதா அன்றேல் தம்மை பிரெஞ்சினரிடமிருந்து காப்பாற்ற வந்த நண்பர்களாகப் பாவிப்பதா எனக் கலங்கினர்.
இத் தடுமாற்றத்தைத் தவிர வேறுபல இடையூறுகளும் வான் அங்கில்பீக்குக்கு எதிர்ப்பட்டன. பிரித்தானிய கப்பற்படை இந்திய சமுத்திரத்தில் ஆதிக்கம் செலுத்தி நின்றதனல், ஒல்லாந்த ஆள்பதி கறுவாவை உரிய காலத்தில் ஏற்றுமதி செய்ய முடியாமற் போயிற்று. இதன் பயணுக அரசாங்கம் நிதியறவு நிலையை அடைந்தது. ஒல் லாந்த அதிகாரிகளுக்கும் படைகளுக்கும் சம்பளம் கொடுக்க முடியா மற் போனதனல் அதிருப்தி எங்கும் குடிகொண்டது.
வான் அங்கில்பீக் போதிய ஆள், பொருள் தளபாடங்கள் என் பனவற்றைக் கொண்டிருந்தாலும் அவன் ஆங்கிலருக் கெதிராக போரை நீண்ட காலம் நடாத்தியிருக்க முடியாது. பிரித்தானியரின் கடலாதிக்கம் இந்திய சமுத்திரத்தில் விளங்கியதனுல் ஒல்லாந்தி
தியமற்றது, என்பதை அங்கில்பீக் நன்குணர்ந்தான். தவிரவும் ஐரோப்பாவில் நிலவிய போர் நிலையின் காரணமாக இலங்கையின் புது அதிபதிகளான பிரெஞ்சினர், தமது நிலையைப் பாதுகாப்பதில் ஈடுபட்டனரே தவிர குடியேற்றங்களைப் பாதுகாப்பதில் சிறிதள வேனும் அக்கறை கொள்ளவில்லை.
இப்பேர்ப்பட்ட காரணங்களினுல் வான் அங்கில்பீக் போர் புரிந் தும் ஒன்றுமே செய்திருக்க முடியாதென்பது வெளிப்பட்ை, :

Page 39
64 இலங்கைச் சரித்திரம்
5. ஆங்கில வர்த்தக சங்கத்தின் ஆட்சி
ஐரோப்பாவில் நடந்து வந்த போர் முடியும் வரை ஒல்லாந் தரிடமிருந்து தாம் கைப்பற்றிய மாநிலங்களைப் பரிபாலனம் செய் வதும், போர் முடிந்ததும் அவற்றை அவர்களிடம் திருப்பி ஒப்படைப் பதுமே ஆங்கிலர் இலங்கையின் எதிர்காலத்தைப் பற்றி வகுத்த முதற் திட்டமாகும். எனவே சொற்ப காலத்தினுள் இலங்கையை ஒல்லாந்தருக்குத் திருப்பிக் கொடுக்க எண்ணிய ஆங்கிலர், இங்கு ஒரு தனி ஆட்சி முறையை அமைப்பது வீண் முயற்சியாகுமென எண்ணினர். அதனல் இவ்விடைக்காலத்தில் தீவின் பரிபாலனம் பிரித் தானிய வர்த்தக சங்கத்தின் கைகளில் ஒப்படைக்கப்பட்டது. வர்த் தக சங்கம், இலங்கையின் கரையோர மாநிலங்களைக் கைப்பற்று வதற்கு ஏறக்குறைய 12,000 பவுண் அளவில் செலவிட்டிருந்தமை யால், அஃது அப்பணத்தை இந்நாட்டில் வசூலிக்க உரிமை கொண் டது என எண்ணப்பட்டது. வர்த்தக சங்கம், இம்மாநிலங்களை , சென்னை மாகாணத்துடன் இணைத்துப் பரிபாலனம் செய்யத் தீர் மானித்தது. சென்னையில் ஆள்பதியாகவிருந்த ஹோபாட் பிரபுவே (Lord Hobart) இலங்கையின் ஆள்பதியுமானுன்.
இலங்கையின் பரிபாலன அதிகாரிகள் :
ஹோபாட் பிரபு, கொழும்பைக் கைப்பற்றிய தளபதி ஸ்ருவட் (Colonel Steuart) என்ற படைத்தலைவனை இலங்கையின் இராணுவ, குடியியற்பாலன ஆள்பதியாக நியமித்தான். ஒரு சில மாதங்களுக் குப் பின் 1797 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அவனிடமாக மேயர் ஜெனரல் டொயில் (Major General Doyle) ஆள்பதியாக நியமிக் கப் பெற்ருன். அவனும் சில மாதங்களுக்குள் பதவியிலிருந்து நீக் கப்பட்டு, பிரிகேடியர் ஜெனரல் டி மியூறன் (Brigadier General De Meuron) அப்பதவிக்கு நியமிக்கப்பெற்ருன், இம்மூவரும் தனி இராணுவ அதிகாரிகளே தவிர, குடியியற்பாலன கருமங்களைப்பற்றி ஒன்றுமே அறியாதவர்கள். ஒல்லாந்த அலுவலாளர்கள், தம் கரு மங்களை ஒழுங்கு செய்து, அவற்றை முடித்து வெளியேறும் வரை, நாட்டில் ஒருவித ஒழுங்கை நிலைபெறச் செய்வதே அவர்களது முதற் கடமையாயிற்று. கொழும்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை, காலி மன்னர் எனும் பிரதான நிலையங்களுக்கு இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அவ்விடங்களில் நீதி பரிபாலனத்தை நடாத்த இராணுவ நீதிமன்றங்கள் நிறுவப்பட்டன.
i.
 

இந்தியாவிலும் இலங்கையிலும் பிரித்தானிய வர்த்தக சங்கம் 65
குடியியற் பாலனம் :
இறைவரி அறவிடும் பொறுப்பு ருெபேட் அன்ட்றுாஸ் என்ற சென்னை குடியியற் பாலன அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. அவன் இலங்கையின் குடியியற் தானிகராகவும் (Civil Resident) பிர தம இறையாளனுகவும் நியமிக்கப்பட்டான். குடியியற் பாலனத்தை யும் வரிச்சேகரிப்பையும் முன்னிட்டு அவன் இலங்கையை பழைய திசாவனிகளின் பிரிவுகளுக்கொப்ப மூன்று கலக்டர்களின் "பிரிவு களாகப் (Collectorates) பகுத்தான். கொழும்புக் கலக்டர் பிரிவு, மாத்தறை தொடக்கம் சிலாபம் வரையிலுள்ள மாநிலம் முழுவதை யும் உள்ளடக்கியது. திருகோணமலைப் பிரிவு மட்டக்களப்பையும் கீழ்க் கரையையும் கொண்டிருந்தது. யாழ்ப்பாணப் பிரிவு, மன்னர், புத்தளம், கற்பிட்டி வரை உள்ள பிரதேசத்தைக் கொண்டது.
மூன்று கலக்டர்களும் தத்தம் பகுதிகளின் பாலனத்தை நடத்து வதற்காக சென்னையிலிருந்து ஆயிரக்கணகான அலுவலாளர்களை வரவழைத்தனர். போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலங்களில் சிங்கள திசாவைகளும், முதலியார்களும், தலைமைக்காரருமே உள்நாட்டு நிருவாகத்துக்குப் பொறுப்பாய் இருந்தவர்கள் அன்ட்றுாஸ், மக்களின் விருப்பு வெறுப்புக்கள் ஒன்றையும் பொருட்படுத்தாது, 1796 ஆகத்தில் முன்னிருந்தவர்களைப் பதவியிலிருந்து நீக்கி, அவ்விடங்களை நிரப்ப ஆமில்தார்கள், கணக்கப்பிள்ளைகள், கண்காணிகள், இலிகிதர்கள், கொத்தவால்கள் என 32,000 அலுவலாளர்களை சென்னையிலிருந்து வரவழைத்தான். குடியியற் சேவையின் சகல கருமங்களும் அவர் களது கைகளில் ஒப்படைக்கப்பட்டன. இச்சென்னை அலுவலாளர்கள் ஒரே நேரத்தில் 'வரி அறவிடுவோராகவும், குத்தகைக் காரராகவும் நீதிபதிகளாகவும்' கடமையாற்றினர். அவர்கள் இலங்கையில் ஏற்படுத்திய இறைசேகரிப்பு முறையில் குறைகள் நிறையக் காணப்பட்டன. இறை சேகரிக்கும் உரிமைகள் ஏலத்தில் குத்தைகயாக விற்கப்பட்டன. இக்குத்தகையை, இறை சேகரிக்கும் சேவைக்குப் பொறுப்பாயிருந்த ஆமில்தார்கள் அல்லது அவர்களது உதவியாளர்களே வாங்கினர். இக் குத்தகைக்காரர் தமது சொந்த ஆதாயமொன்றையே குறிக்கோளாகக் கொண்டு கிராமங்களிலிருந்து எவ்வளவை வசூலிக்க முடியுமோ அவ்வளவையும் வசூலித்து எந்நேரமும் கிராம மக்களைத் துன்புறுத்தி வந்தனர். அவர்கள் அரசாங்கத்துக்கு ஒரு பகுதியைச் செலுத்திவிட்டு அதைப்போல் பன்மடங்கு பணத்தை மக்களிடம் கசக்கிப் பிளிந்தெடுத்து தாமே அபகரித்துக் கொண்டனர். நீதி பரிபாலன அதிகாரமும் அவர்களிடமே இருந்ததனுல் அவர்கள் விளைவித்த கொடுமைகளும் அக்கிரம்ங்களும்
, , w

Page 40
66 இலங்கைச் சரித்திரம்
சொல்லில் அடங்கா. மக்களைச் சித்திரவதை செய்து, அட்டைகளைப் போன்று இறுதித்துளி இரத்தம்வரை உறிஞ்சிக் குடித்தனர். வரியிறுக்கத் தவறியவரின் இல்லங்களைத் தீக்கிரையாக்குவது சாதாரண செயலாயிற்று. அதிகுறுகிய காலத்தில் நிறைந்த இலாபத்தைப் பெறுவதே அவர்களது சேவையின் குறிக்கோளாயிற்று. இதற்காக அவர்கள் எவ்வித அட்டூழியங்களையும் செய்யத் தயங்கவில்லை.
வருமானத்தை ரொக்கமாகப் பெற எத்தனித்த வர்த்தக சங்க அதிகாரிகள், பல புரட்சிகரமான மாற்றங்களையும் ஏற்படுத்தத் துணிந்தனர். அவர்கள் சிங்கள மக்களின் மொழி, பழக்க வழக்கங் கள், காணிகளில் நிலவிய பழைய காணியாட்சி மரபுகள் என்பன
வற்றைப் பற்றி ஒன்றுமே அறியாதவர்கள் அறிவதில் அக்கறை
கொண்டவர்களுமல்லர். அவர்கள், இலங்கையில் புராதன காலந் தொட்டு நிலவி வந்த காணியாட்சி முறையையும் இராசகாரிய முறையினையும் அகற்றிவிட்டு அவற்றிற்குப் பதிலாகச் சென்னையில் நிலவிய வரிமுறையினை ஏற்படுத்தினர். அவர்கள் காணிகளின் விளைச் சலில் அரைப்பங்கின் பெறுமதியை அரசாங்கத்துக்குக் கொடுக்குமாறு சட்டமியற்றினர். அதன்பின் மீன், உப்பு, சாராயம், கள்ளு, புகையிலை, ஆமை, ஆபரணங்கள் எனும் பொருள்களின் மேல் வரிகளையும், ஒரு தலைவரியையும் விதித்து, அவ்வரிகளை ரொக்கப் பணமாக இறுக் குமாறு கட்டளைகள் பிறப்பித்தனர். பணப்புளக்கமில்லாத g(5 சமுதாயத்தில் இச்சட்டங்களினல் ஏற்பட்ட இன்னல்களை மக்களா ற் சகிக்க முடியவில்லை. அவர்கள் நாட்டின் பாரம்பரிய வழக்கங்களைக் கைவிட்டு குடியானவரிடமிருந்து இயன்றளவு பணத்தை ஈவிரக்க மின்றி அறவிட்டனர். இறைகளை அறவிடுவதில் சென்னை அதிகாரிகள் சர்வாதிகாரிகள் போலக் கருமமாற்றினர். அவர்கள் கொள்ளைக் கூட்டத்தினர் போன்று தம் சொந்த வருவாயைப் பெருக்குவதிலேயே கண்ணும் கருத்துமாயிருந்தனர். திருட்டின் பொருட்டே அவர்கள் இலங்கைக்கு வந்தனரென்று எண்ணுமாறு அவர்கள் நடந்து கொண்டனர். அவர்களைப் பற்றி சென்னை ஆள்பதியாகவிருந்த ஹோபாட் பிரபு கூறியமை குறிப்பிடத்தக்கது. "கொள்ளையிடுவதே அவர்களது தொழில். அவர்களது நலவுரிமைகள் இலங்கைக்கு அந்நியமானவை. தம்முடைய உத்தியோக நிலை அந்தரமான தாகையால் சொற்ப காலத்துக்குள் எவ்வளவு சூறையாட முடியுமோ அவ்வளவையும் சூறையாட அங்கலாய்ப்புடையவர்கள். இப்படியான போக்கிரிகளே அவர்கள்,' என்ருர்,
•• ሃ;
" அவர்கள் பொருளாதார விடயங்களில் இவ்வாறு நாசத்தன மான பரிபாலனத்தை நடாத்தியதுடன் நின்று விடவில்லை. அவர்கள்
>

ᎨᎲ, இந்தியாவிலும் இலங்கையிலும் பிரித்தானிய வர்த்தக சங்கம் 67
தயவு தாட்சணியம் அற்றவராய், பழி பாவத்துக்கு அஞ்சாதவராய், மிருகத்தனமான கொடுங்கோலாட்சி புரிந்தமையினுல் மக்களினது வெறுப்பையும் பகையையும் சம்பாதித்துக் கொண்டனர்.
V'osa vi.
கலகத்துக்கான பிறிதொரு முக்கிய காரணம், அரசாங்கம் 1796 செப்தம்பர் முதலாம் நாள், தென்னை மரங்களின் மேல் விதித்த ஒரு வெள்ளிப் பண வரியாகும். எல்லா மரங்க்ளின் மீதும் விதிக்கப்பட்ட இவ்வரி, அநீதியானது என்று மக்கள் கருதினர். ஏனெனில் மரங்களின் விளைவு இடத்துக்கிடம் வேறுபட்டது. தவிரவும்
.இவ்வரி, ஏழைக் குடியானவர்களையே கூடுதலாகப் பாதித்தது ’’میر அரசாங்கம், வரிகள் ரொக்கப்பணத்தில் செலுத்தப்படவேண்டுமென கட்டளையிட்டதனல், உடனடியாக நாடெங்கும் எதிர்ப்பும்
அதிருப்தியும் வெளிப்பட்டன.
கலகம் :
பதினெட்டு மாத காலத்தினுள் ஏற்பட்ட இத்திடீர் மாற்றங்களி னலும் சிங்கள மக்களுக்கு விளைவிக்கப்பட்ட அநீதிகள் கர்ரணமாகவும், 1797 யூன் மாதம், அரசாங்கத்துக்கெதிராக ஒரு கலகம் மூண்டது. திருகோணமலையில் சென்னை வரி அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிகழ்ச்சியே கலகத்தைத் தொடக்கி வைத்தது.
இங்கு ஏற்பட்ட கலகத்தைப் பற்றிய செய்திகள் ஹோபாட் . vʻ பிரபுவுக்கு எட்டிய பொழுது, அவர் இலங்கை வாழ் மக்களின் குறை . களையும் அதிருப்தியையும் விசாரணை செய்யுமாறு ஒரு விசாரணைச் ), சபையை நியமித்தார். அதன் உறுப்பினர், ஜெனறல் த மியூறன்,
மேயர் அக்கினியூ, ருெபேட் அன்ட்றுாஸ் என்ற மூவராவர். அவர்கள் இலங்கையின் பரிபாலனத்தைப் பற்றி ஒரு நுணுக்கமான விசாரணையை நடாத்தி, ஈற்றில் கலகம் அன்ட்றுாசின் நிருவாகக் குறைவினலும், அவருக்குக் கீழ் சேவை புரிந்த ஊழியர்களின் அட்டூழியங்களினலுமே ஏற்பட்டதென்ற முடிவுக்கு வந்தனர். அதனுடன் பல மாற்றங்களையும் y B அவர்கள் சிபார்சு செய்தனர். அவற்றுள் முக்கியமானவை,
1. தென்னை வரி நீக்கப்படல். 2. சென்னை வரி சேகரிக்கும் முறையினை ஒளித்து வரிகளைச்
சேவையின் மூலம் இறுக்கும் பழைய சிங்கள முறையின், மீண்டும் புதுப்பித்தல். ... ."
**

Page 41
68
I
2
5
7
o
10.
11. * போனதுக்குக் காரணங் கூறுக.
இலங்கைச் சரித்திரம்
சென்னை அலுவலாளர்களுக்குப் பதிலாக பழைய முதலியார்களை நியமித்தல். ஒல்லாந்தரின் லான்ட்ருட் நீதி மன்றங்களை ஏற்படுத்தல், என்பனவாம்.
வினுக்கள்
"கீழ்த்தேசங்களில் பிரித்தானிய வர்த்தக சங்கத்தின் படர்ச்
சியை விளக்குக. கிழக்குலகில் பிரித்தானிய மக்களின் வியாபார, அரசியல் நட வடிக்கைகளின் தோற்றத்திற்கும் பரம்பலுக்கும் வியாபாரக் கம்பனிகள் உதவி புரிந்த விதத்தை விளக்குக. பைபஸ், பொயிட், அன்ட்றுாஸ் என்பவர்களின் தூதுகளுக்குக் காரணங் கூறுக. கடற்கரை மாநிலங்களைப் பிரித்தானியர் இணைக்க ஆசித்த தற்குரிய காரணங்களை விபரிக்குக. ஐரோப்பிய நாடுகளுக்கிடையே அப்பொழுது நிலவிய போட்டி, இலங்கை பிரித்தானியர் ஆட்சிக்குட்படுவதற்கு எவ்வாறு வழி கோலியது? 18 ஆம் நூற்றண்டின் இறுதிக் கூற்றில் திருகோணமலையின் முக்கியத்துவத்தையும் அதனல் விளைந்த பயன்களையும் விபரிக்க. 1796 இல் இலங்கையில் அரசியல் மாற்றங்களை விளைவித்த (அ) உள்நாட்டு (ஆ) பிறநாட்டுக் காரணங்களைச்
சுருக்கமாகக் கூறுக. * 18 ஆம் நூற்ருண்டில், இலங்கை, போர் புரிவதற்கு வாய்ப் பான ஒரு கேந்திர நிலையத்தில் அமைந்தமையினல், அது ஆங்கிலருக்கு முக்கியத்துவம் வாய்ந்த நாடாயிற்று'. இக் கூற்றினை ஆராய்க. ஆங்கிலர் இலங்கைக்கு வர நேர்ந்த காரணங்களையும், அவர் கள் கரையோர மாநிலங்களைக் கைப்பற்றிய முறையையும் விபரிக்க. இலங்கையின் கரையோர மாநிலங்களில் பிரித்தானியர் தமது ஆதிக்கத்தை நிறுவுவதற்கு உதவிய காரணங்களை ஆராய்க. கிழக்கிந்திய வர்த்தக சங்கத்தின் ஆட்சி அனுகூலமடையாமற்
མ་
༈
 
 
 
 

அதிகாரம் 5 லங்கையின் லிரு ஆள்பதிகள்
முதலIரு ஆ (1798-1811)
1. இரட்டை ஆட்சிமுறை (1798-1801)
பிரடெரிக் நோத் :
இலங்கையின் கரையோர மாநிலங்களில் 1797 ஆம் ஆண்டு உண்டான கலகத்தைத் தொடர்ந்து நியமிக்கப்பட்ட விசாரணைச் சபையின் முடிபுகள் வெளிவர, முன்னரே இலங்கையின் பரிபாலன த் தைப் பிரித்தானிய மன்னனின் கீழ் கொண்டுவர வேண்டுமெனக் குடியேற்ற நாட்டுச் செயலாளர் திரு. டண்டஸ் தீர்மானித்திருந் தார். இத்தீர்மானத்திற்கேற்ப ஆங்கில மன்னன் மூன்றம் ஜோர்ஜ், 1798 இல் பிரடெரிக் நோத் என்பவரை இலங்கையின் ஆள்பதியாக நியமனம் செய்தார்.
புது ஒழுங்கின்படி, கரையோர மாநிலங்களில் சென்னை ஆட்சிமுறை நிராகரிக்கப்பட்டு, அதனிடமாக இரட்டை ஆட்சி முறை ஆரம்பமாயிற்று. பிரித்தானிய அரசாங்கம் கரையோர மாநிலங்களின் குடியியற்பாலன, இராணுவ ஆட்சிக்குப் பொறுப் பேற்க, இறை சேகரிக்கும் உரிமைகளும், வியாபார உரிமைகளும் வர்த்தக சங்கத்தின் கைகளில் ஒப்படைக்கப்பட்டன. பிரித்தானிய மன்னரால் நியமிக்கப்பட்ட ஆள்பதி, இந்திய ஆள்பதி நாயகத்தினதும் வர்த்தக சங்கத்தினதும் கட்டளைகளுக்கு அமைந்தே நடக்க வேண்டு மென விதிக்கப்பட்டது. இப் புதுப் பரிசோதனை ஆரம்பந்தொட்டே சித்தியடைவதற்கான அனுகூலங்களைப் பெற்றிருக்கவில்லை. இலங்கையில் சேவை செய்த பிரித்தானிய அரசாங்கத்தினதும் வர்த்தக சங்கத் தினதும் அலுவலாளர்கள் எக்கருமத்திலும் ஒருவரோடொருவர் முரண்பட்டு நின்றனரேயொழிய ஒத்துழைக்கும் நோக்கமுடைய வரல்லர். விசேடமாக வர்த்தக சங்கத்தின் பழைய அலுவலாளர்கள்.
ஆள்பதிக்குப் பகைமை காட்டியதுமன்றி அவரது முயற்சிகளைத்
தடைப்படுத்துவதிலும் வீண் விரயம் செய்வதிலும் ஈடுபட்டு நின்ற னர். நேர்மையின்மை, கைலஞ்சம் வாங்குதல், எனும் ஊழல்களில் கைதேர்ந்த அவர்கள், புது ஆள்பதியின் சீர்திருத்தங்களை வேம்பு போல் வெறுத்தனர். மேலும் இலங்கை வாழ் மக்களின் பழக்க
வழக்கங்களைப் பற்றி ஒன்றுமேயறியாத வர்த்தக சங்கத்தினர், 。 " . . ܟ இலங்கையைப் பரிபாலனம் செய்வதற்கு முற்றிலும் தகுதியற்றவர்கள்.
g). 5. A

Page 42
70 இலங்கைச் சரித்திரம் -
இவ்வித காரணங்களினல் இரட்டையாட்சிமுறை, இதற்கு முன்சென்ற வர்த்தக சங்கத்தின் ஆட்சியைப் போன்று தோல் வியிலேயே முடிவடைய விதிக்கப்பட்டது.
பிரித்தானியா, அமெரிக்க குடியேற்ற நாடுகளை இழந்த பொழுது இங்கிலாந்தின் முதலமைச்சராகவிருந்த நோத் பிரபுவின் மூன்ருவதும் அதி (இளைய மைந்தனுமான பிரடெரிக் நோத் என்பவரே இலங்கையின் முதல் ஆள்பதியாகப் பதவியேற்றர். அவர் 1798 யூன் 4 இல் பம்பாயை அடைந்து, வர்த்தக சங்கத்தின் கட்டளைகளைப் பெற்று ஒக்ரோபர் 12 ஆம் நாள் கொழும்பில் வந்திறங்கினர். குடியேற்ற நாட்டுச் செயலாளரினல் நியமிக்கப்பட்ட ஒன்பது அலுவலாளரும் அவருடன் வந்தனர். அவர்களுள் ஹியூ கிளெகோன் என்பவர் பிரதமச் செயலாளராக நியமனம் பெற்றர்.
நோத்தின் குணுதிசயங்களைப் பற்றி மில்ஸ் கூறுவதாவது, 'நோத்தின் தனிப்பட்ட குறைகள் அவருடைய தொல்லைகளை அதிகரிக்கச் செய்தன. நேர்மை, விவேகம், ஆற்றல், வசீகரம் பொருந்திய அவர், தமது உத்தியோகத்தர்கள் பலரின் அபிமானத் தையும் நட்பையும் பெற்ருர், எல்லாத் தாராக்களும், அன்னங்கள் என உறுதியாக விசுவசித்த அவர், தமது உத்தியோகத்தர் மட்டில் உயர் அபிப்பிராயம் கொண்டமையினுல் நிருவாக ஊழல்களைக் கண்டு பிடிக்க முடியாமற் தத்தளித்தார். அவரது விருப்பு வெறுப்புக்கள் அடிக்கடி மாறி வந்தமையினல் அவரது இன்றைய நண்பர்கள் நாளையப் பொல்லா எதிரிகளாயினர். தீவிர வாதியான அவர் சில வேளைகளில் கடும்பிடியுடனும் மற்றும் வேளைகளில், இலகுவாகவும் நடந்து கொண்டார். சுருங்கக் கூறின் மனிதரை மட்டிட்டு அறிந்து கொள்ளும் வல்லபம் இல்லாதவர். அவசரக் குணமும் நிதார்த்தமின்மையும், தமது சொந்த விவேகத்தில் மிகுந்த நம்பிக்கையும் கொண்ட அவர், போதிய ஆதாரமின்றித் தீடீர் திடீரென்று சீர்திருத்தங்களைச் சொய்தார். எனினும் அவருடைய பரிபாலன முறைகள், அவரின் பின் ஆள்பதியாகப் பதவி ஏற்றவரும் அவரை வன்மையாகக் கண்டித்தவருமான சேர் தொமஸ் மெயிற்லன்டினல் பாராட்டப்பட்டன என்பதை நாம் மறக்கலா காது.' -
நிருவாகம் :
நோத் இலங்கையில் இராச்சிய பாரத்தை ஏற்ற பொழுது நாட்டின் பரிபாலனத்துக்குப் பொறுப்பாயிருந்தவர்கள், சென்னை அர சாங்கத்தினுல் நியமிக்கப்பெற்ற குடியியற் சேவையாளர்கள். அவர் களைக் கட்டுப்படுத்தி, நாட்டின் நன்மைக்காக உழைக்கச் செய்வதில்
1. Ceylon under British Rule-L. A. Mills-P.30
2
\\

இலங்கையின் முதலிரு ஆள்பதிகள் 71
நோத் மிகவும் இடர்ப்பட்டார். அட்டைகளைப் போன்று நாட்டு மக்களின் இரத்தத்தை உறிஞ்சுவதில் தழைத்து நின்ற சென்னை அதிகாரிகள், தமது ஊழல், இலஞ்ச முறைகளைக் கைநெகிழ விட விரும்பாது, நோத்தின் சீர்திருத்தங்களை எதிர்க்கத் திட்டமிட்டனர். அவர்கள், புது நிருவாக ஏற்பாடுகளை அமுல் செய்வதில் அசட்டை காட்டியதுமன்றிப் பல இடையூறுகளையும் விளைவித்தனர். அவர் களுடைய நடத்தையில் அதிருப்தி கொண்ட நோத், பலரை வேலை யினின்றும் நீக்கினர். நிதி நிருவாகத் துறையில் வளர்ந்து வந்த களவுகளையும் ஊழல்களையும் நிவிர்த்தி செய்யும் நோக்குடன், இலங்கைக்குப் பிரத்தியேகமான குடியியற் சேவையொன்று உடன டியாக நிறுவப்பட வேண்டுமெனப் பிரித்தானிய மேலதிகாரிகளுக் குத் தகவுரை கூறினர்.
அவர் செய்த சிபார்சை அரசாட்சியினர் உடனடியாகச் செயற் படுத்தாமற் போகவே, அவர் பிரதம செயலாளனுக்குப் பொறுப்பு வாய்ந்த நிலவரி சேகரிக்கும் கலெக்டர்கள் ஐவரை கொழும்பு, மட்டக்களப்பு, காலி, திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய இடங் களில் நியமித்தார். 1801 இல் அரசிறை இலாக்காக்களை மேற் பார்வை செய்து கட்டுப்படுத்தும் நோக்குடன் அரசிறை வர்த்தக சபையொன்றினை அமைத்தார். பழைய கலெக்டர்களின் நிருவாகப் பிரிவுகள், மேற்பார்வை செய்தற்கு அதி விசாலமானவை எனக் கண்ட அவர், கரையோர மாநிலங்களை 13 பிரிவுகளாகப் பகுத்து ஒவ்வொன்றுக்கும் பொறுப்பாகப் பழைய கலெக்டர்களுக்குப் பதிலாக அரசிறை அதிகாரிகளை (Agents of Revenue) நியமித்தார்.
கலெக்டர்களுக்கு உதவியாகவும், உள்ளூராட்சியை நிருவகிப் பதற்கும் நோத் உள் நாட்டவர்களையே ஏற்படுத்தினர். இதனுல் மக்கள் வர்த்தக சங்கத்தின் பழைய இந்திய உத்தியோகத்தரின் கொடுமைகளினின்று விடுதலை பெற்றனர். சிங்களப் பிரதேசங்களில் அத்தப்பத்து முதலியார் என்பவன் மாகாண நிருவாகத்துக்குப் பொறுப்பாளியாக்கப்பட்டான். முதலியார்களும் முகாந்திரங்களும்
மாவட்டங்களுக்கு பொறுப்பாயிருந்தனர். கிராமங்களின் பாலனம்
ஆராச்சிகளினதும் விதானைகளினதும் கைகளில் விடப்பட்டது. தமிழ்ப் பிரதேசங்களில் முதலியார் முழு மாகாணத்தையும் மேற் பார்வை செய்தார். அவனுக்குக் கீழ் மணியகாரன், உடை யார், விதானை என்பவர்கள் முறையே மாவட்டங்களையும் பற்றுக்களையும் கிராமங்களையும் ஆட்சி செய்தனர். இச்சுதேச உயர் அதிகாரிகள், மாகாண அதிபதிகளின் சிபார்சுகளின் பேரில் ஆள்பதியினல் நியமிக் கப்பட்டனர். முகாந்திரத்துக்குக் கீழ்ப்பட்டவர்கள் மாகாண அதி பதிகளினலேயே நியமிக்கப் பெற்றனர். . . . .

Page 43
..
72 இலங்கைச் சரித்திரம்
நோத் அளவைப் பகுதி (Survey) பொது வேலைப் பகுதி, வைத்தியப் பகுதி, தபாற் பகுதி, கல்விப் பகுதி போன்ற அரசாங்க சேவைகளைத் தனித்தனி இலாக்காக்களாக அமைக்க ஏற்பாடுகள் செய்தார்.
நீதி பரிபாலனம் :
*பாதகவியல் வழக்குகள் விடயமாகவும், குடியியற்பாலன வழக் குகள் விடயமாகவும் 1796 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையில் நீதி பரிபாலன கருமங்கள் நிறுதிட்டத்துக்கு வந்து விட்டன' என்பதை நோத் நன்குணர்ந்தார். ஒல்லாந்தர் சரணடைந்த பொழுது அவர்களது நீதி நிலையங்கள்தீர்க்கப்படாத வழக்குகளைத் தீர்ப்பதற்குத் தொடர்ந்து மேலும் ஓராண்டு இயங்க வேண்டு மென்ற விதி அமைதிப் பொருத்தனை யில் சேர்க்கப்பட்டிருந்தது. ஆனல் குறிப்பிட்ட அவ்வாண்டு கழிந்தும் ஒரு விதமான ஒழுங்கும் ஏற்படவில்லை. அக்கால முடிவில் ஒல்லாந்த நீதிபதிகளுள் பலர், ஆங்கில மன்னருக்குச் சத்தியப்பிரமாணம் செய்ய மறுத்து உத்தியோகங்களையும் துறந்தனர். இடைக் காலத்தில் வர்த்தக சங்கத்தினர் அமைத்த இராணுவ நீதி மன்றங்கள் குடியியற்பாலன சேவைக்குப் பொருத்தமற்றவை என்பதையும் நோத் கண்டார்.
ஒல்லாந்தரின் ருேமன் டச்சுச் சட்டத்தை விளங்காத நோத், கல்கத்தாவில் இருந்து எட்மன்ட் கரிங்டன் என்ற பிரபல்ய நியாய துரந்தரரை வரவழைத்து, அவரை இலங்கையின் முதல் பிரதம நீதியரசராக நியமித்து, ஒல்லாந்தரின் நீதிபரிபாலனச் சட்டங்களே ஆராய்ந்து இலங்கைக்கு ஒரு நீதிக் கோவையைத் தொகுக்குமாறு பணித்தார்.
கரிங்டன் தயாரித்த தொகுப்பு ஆள்பதியினல் ஏற்கப்பட்டு 1799 இல் அமுலுக்கு வரலாயிற்று. சுப்பிறீம் கோட்" என்ற உயர் நீதிமன்றம் 1801 இல் அமைக்கப் பெற்றது. ஒல்லாந்தரின் பழைய லான்ட்ருட் நீதி மன்றங்களுக்குப் பதிலாக மாகாண நீதிமன்றுகள் ஐந்து மாகாணங்களில் நிறுவப்பட்டன. இவற்றில் குடியியற்பாலன அதிகாரிகளே நீதி பரிபாலனம் செய்தனர். சிறுபாதகவியல் குற்றங்களை விசாரணை செய்வதற்கென பொலிஸ் கோடுகள் நிறுவப்பட்டன.
நிலச் சீர்திருத்தங்கள் :
இவ்விதமாக நோத்தின் பரிபாலனத்தின் ஆரம்ப ஆண்டுகளில் பழைய ஆட்சிமுறையின் ஒழுங்கீனங்களைப் போக்குவதற்கு புனர் நிர்மாண வேலைகளும், முன்னேற்றத்துக்கான பல புதுத் திட்டங் .களும் மேற்கொள்ளப்பட்டன. அவர் அத்துறைகளில் ஈட்டிய வெற்

y
இலங்கையின் முதலிரு ஆள்பதிகள் 73
றிகளுக்கு முழுமாருக இராசகாரிய முறையை ஒழிக்க எடுத்த முயற்சி படுதோல்வியாக முடிந்தது. பிரித்தானிய வர்த்தக சங்கம் நீக்கத் துணிந்த இராசகாரிய முறை, த மியூறன் விசாரணைச் சபையினர் செய்த தகவுரைகளின் பிரகாரம் 1798 இல் தான் புனருத்தாரணம் செய்யப்பட்டிருந்தது. ஆனல் நோத், வர்த்தக சங்கம் செய்த பரி சோதனையினுல் ஏற்பட்ட இன்னல்களை வெகு சீக்கிரம் மறந்து பல நூற்ருண்டுகளாக இலங்கையின் பொருளாதார அமைப்பின் அத்தி வாரம் போன்று விளங்கிய அம்முறையினை 1799 இல் ஒழிக்கத் திடம் பூண்டார்.
19 ஆம் நூற்ருண்டில் இங்கிலாந்தில் வளர்ந்து வந்த ஒப்புர வாண்மை (Humanitarian) கொள்கைகளினல் பெரிதும் பாதிக்கப்பட்ட அவர், இலங்கையில் நிலவிய இராசகாரியம் ஒருவிதப்பட்ட அடிமை முறை எனக் கருதினர். அடிமை முறை உலகத்தின் பல பாகங்களில் வன்மையாகக் கண்டிக்கப்பட்டு வந்த வேளையில், அவர் மனிதர்களின் உரிமைகளைப் பறித்து அவர்களை நிலத்துடன் விலங்கிட்டு, சாதிப் பாகுபாடுகளை மென்மேலும் வளர்க்கக் காரணமாக அமைந்த இராச காரிய முறையினை அகற்ற முற்பட்டது இயற்கையே. அம்முறையினை ஒழிக்க வேண்டுமென நோத் தீர்மானித்தற்கு வேறு காரணங்களு மிருந்தன. மானிய முறையின் கீழ் தலைமைக்காரர், முதலியார்கள், விதானைகள் போன்றவர்கள் தமது அதிகாரங்களைப் பிரயோகித்துக் குடிகளை வருத்தி அளவுக்கு மிகுந்த சேவைகளைப் பெறுவதைக் கண் டார், அவர். அவ்வுத்தியோகத்தரின் செல்வாக்கினைக் குறைப்பதற்கு இராசகாரியமுறை ஒழிப்பை ஒரு வழியாகக் கருதினர். மேலும் நிலங்கள் குடியானவருக்குச் சொந்தமாகக் கொடுக்கப்படின் தானிய உற்பத்தி பெருகவும், அரசிறை வருவாய் அதிகரிக்கவும் வழிபிறக்கு மென அவர் கருதினர்.
1800 மே 3 ஆம் நாள் நோத், இராசகாரிய முறை ஒழிப்புப் பிரகடனமொன்றைப் பிறப்பித்தார். இதன்படி சேவை நிலங்களைப் பயிரிடக் குடியானவர்கள் தமது காணிகளை மாவட்டப் பதிவுக் கந்தோரில் (District Registry) பதிவு செய்து, தமது பழைய இராச காரிய சேவைகளுக்குப் பதிலாகத் தமது விளைச்சலுக்கேற்ப முதல் 4 வரை திறையாகக் கொடுக்க உரிமை வழங்கப்பட்டது. இவ்வித மாகப் பழைய இராசகாரிய முறையினை நிராகரித்த மக்கள் எல்லாச்
சேவைக் கடமைகளினின்றும் விடுதலை பெறுவர். ஆள்பதியின் கட்ட ளையின் பேரில் அரசாங்கத்துக்குச் சேவை செய்தோர்க்கு பணம் வேதனமாக வழங்கப்படுமெனவும் கூறப்பட்டது. இவ்வுரிமையை ஒரு சில குடியானவரே விரும்பிப் பயன்படுத்தியதைக்கண்டு மனம் .

Page 44
74 இலங்கைச் சரித்திரம்
புழுங்கிய நோத், இராசகாரிய முறையைக் கட்டாயமாக நாட்டினின்று முற்ருக ஒழிக்க, 1801 செப்ரம்பரில் புதுப் பிரகடனத்தை வெளி யிட்டார். இதன்படி பழைய இராசகாரிய முறை நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக அரசாங்கத்துக்குத் திறை செலுத்துதல் கட்டாய மாக்கப்பட்டது. அரசாங்கத்துக்குச் சேவை செய்த முதலியார்கள், விதானைகள் போன்ற அதிகாரிகளின் சேவைக்கு நிலம் (நிந்தகம்) கொடுக்கப்படும் பழைய பழக்கத்திற்குப் பதிலாக வேதனம் கொடுக்கப்படுமெனவும் ஏற்பட்டது.
இச்சீர்திருத்தங்களினல் நோத் எதிர்பார்த்த ஒரு நன்மையும் விளையவில்லை.
2. இலங்கை முடிக்குரிய குடியேற்ற நாடாதல்
நோத் இலங்கையின் ஆள்பதியாகப் பதவியேற்று, மூன்று ஆண்டுகள் கழியமுன்னர், நாட்டின் அரசாங்கத்தில் இன்னுமொரு மகத்தான மாற்றம் ஏற்பட்டது.
1801 ஆம் ஆண்டின் இறுதியில் பிரான்சுக்கும் இங்கிலாந்துக் குமிடையே ஏற்பட்ட அமைதிப் பொருத்தனையின்படி இலங்கை ஆங்கிலேயருக்குச் சொந்தமாயிற்று. 1802 ஆம் ஆண்டின் முதல் நாளன்று கரையோர மாநிலங்களில் வர்த்தக சங்கத்தின் LG யுரிமை நிராகரிக்கப்பட்டு, முடிக்குரிய குடியேற்ற நாட்டு ஆட்சிமுறை தொடங்கிற்று. முடிக்குரிய குடியேற்ற நாடென்பது, பிரித்தானிய அரசாங்கத்திற்குச் சொந்தமானதும், குடியேற்ற நாட்டுச் செய லாளர், ஆள்பதியின் மூலம் பரிபாலனம் செய்த நாடெனப் பொருள்படும். புது ஏற்பாட்டின்படி ஆள்பதி குடியேற்ற நாட்டுக் காரியாலயத்துக்கும், குடியேற்ற நாட்டு அமைச்சர் மூலம் பிரித்தா
னிய பாராளுமன்றத்துக்கும் பொறுப்பேற்ருர், -
நாட்டின் சகல அதிகாரங்களும் ஆள்பதியின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டன. அரசியல் சம்பந்தமான கொள்கைகளை நிர்ணயிக்கும் அதிகாரம் மாத்திரம் குடியேற்ற நாட்டு அமைச்சரின் கைகளில் இருந்தது. முக்கிய விடயங்களில் ஆள்பதிக்கு ஆலோசனை கூறும் பொருட்டு ஒர் ஆய்வுரைக் கழகம் நியமிக்கப்பட்டது. இக் கழகத்தில் அரசாங்கத் தலைமைச் செயலாளன், இறைவரி, வர்த்தக இலாக்காத் தலைவன், கணக்குப் பரிசோதகர் என்னும் அலுவலாளர்கள்
அங்கம் வகித்தனர். ஆயினும் ஆள்பதி அக்கழகத்தின் சொற்படியே
நடக்க வேண்டுமென்ற நியதியில்லை.
 

இலங்கையின் முதலிரு ஆள்பதிகள் 75
நிருவாகச் சீர்திருத்தங்கள் :
இலங்கை முடிக்குரிய குடியேற்ற நாடானதுடன், வர்த்தக சங்கத்துடனிருந்த சகல தொடர்புகளும், நிராகரிக்கப்பட்டன. நோத் தனக்கு இடையூறுகளை விளைவித்தவரும், சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்புக்காட்டி நின்றவருமான சென்னை அலுவலாளரை இந்தியா வுக்குத் திருப்பியனுப்ப முடிந்தது. அரசாங்க அலுவலாளர்கள், ஒரே நேரத்தில் எசமானர்கள் இருவருக்குச் சேவை புரியவேண்டிய சங்க டமான நிலையும் நீங்கியது. முன்னர், வர்த்தக சங்கத்தினுல் நியமிக் கப்பட்ட அவர்கள், பதவி உயர்வுக்கு அதனையே நோக்கி நின்றனர்; அதே நேரத்தில் அவர்கள் முடியின் பிரதிநிதியான ஆள்பதிக்கும் விசுவாசமுடையவர்களாக இருக்க வேண்டிற்று. 1802 ஆம் ஆண்டுக் குப் பின் அரசாங்க அலுவலாளர்கள் முடிக்கு மாத்திரமே பொறுப் பாளிகளாக்கப்பட்டனர்.
நோத், அடுத்த ஆண்டுகளில் இலங்கைக்கென ஒரு பிரத்தி யேக குடியியற் சேவையைத் தாபிப்பதில் அயராது உழைத்து வெற்றி கண்டார். 1801, 1802 ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்திலிருந்து 20 குடியியற் சேவையாளர் அனுப்பப்பட்டனர். இவர்களும் 1798 இல் நோத்துடன் வந்தவர்களும் சென்னை ஆட்சியிலிருந்து எஞ்சிய சிலரும் - எல்லாமாக 45 பிரித்தானியர் புதுக் குடியியற் சேவையின் உறுப் பினராயினர். 1802 தொடக்கம் நோத் குடியியற் சேவையாளரின் சம்பளங்களையும், கடமைகளையும் ஒழுங்கு செய்வதில் காலத்தைச் செலவிட்டார். 1803 இல் நோத் ஒய்வுச் சம்பள முறையொன்றை வரைந்து, அதற்குக் குடியேற்ற நாட்டுச் செயலாளரின் அங்கீகா ரத்தைப் பெற்ருர். இவ்வொழுங்கு 1834 வரை அமுலிலிருந்தது. இலங்கை எட்டு மாகாணங்களாகப் பகுக்கப்பட்டு, ஒவ்வொரு மாகா ணத்துக்கும் குடியியற் சேவையாளர் ஒருவர் இறையதிகாரியாகவும், அவருக்குத் துணையாக உதவியாளர் சிலரும் நியமிக்கப்பட்டனர்.
நில அளவை இலாக்கா (Land Survey Dept.) நிறுவப்பட்டது. பொது மராமத்து இலாக்காவும் 1800 இலேயே ஆரம்பித்தது. 1802 இல் அதற்கு பொறியியல் விற்பன்னர் ஒருவர் தலையதிகாரியாக நியமிக் கப்பட்டார். 1805 இல் நில அளவை இலாக்காவும், பொது மரா மத்து இலாக்காவும் ஒன்று படுத்தப்பட்டன. 1800 இல் வைத்திய இலாக்கா, இராணுவ அமைப்பாக நிறுவப் பெற்றது.

Page 45
76 இலங்கைச் சரித்திரம்
3. நோத்தும் கண்டி இராச்சியமும்
இலங்கையின் மத்தியில் தனிச் சுதந்திர இராச்சியமாகத் திகழ்ந்த கண்டியரசு அதனைச் சூழவுள்ள பிரித்தானிய மாநிலங்களுக்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கவல்லவையென்பதை ஆங்கில ர் தொடக்கத்திலேயே உணர்ந்தனர். கரையோர மாநிலங்களில் அமைதியாக ஆட்சியை நடத்துவதற்குக் கண்டியரசனுடன் ஒரு நிலையான உடன்படிக்கையைச் செய்யவேண்டியதன் அவசியத்தை உணர்ந்தே 1796 இல் அன்ட்றுாஸ் என்பவனைக் கண்டிக்குத் தூது அனுப்பினர். ஆனல் அரசன் எவ்வித உடன்பாட்டுக்கும் சம்மதிக்க மறுத்துவிட்டான். கண்டியரசன், அன்ட்றுாஸுடன் அமைதியான முறையில் ஒரு சமாதான உடன்படிக்கை செய்ய மறு க் க வே, ஆங்கிலர் அவ்வரசை வெற்றிகொண்டு அதன் அரசனைத் தம் அதிகாரத்தின் கீழ் வைத்திருப்பது அவசியமென உணர்ந்தனர். தீவைச் சுற்றிக் கரையோரமாக அமைந்த ஒரு சிறு நிலப்பரப்பை ஆட்சி செய்வதிலும் மேலாக, முழுத்தீவினையும் பரிபாலனம் செய்தல் இலகுவான கருமமாகுமென அவர்கள் தீர்மானித்தனர். வேறு பல காரணங்களும் இத்தீர்மானத்தை ஆணித்தரமாக உறுதிப்படுத்தின,
அரசியல் அடிப்படையில் ஆங்கிலர் திருகோணமலைக் கருகாமை யில் தமக்கு விரோதமான ஓர் அரசு இருப்பதை அவர்கள் விரும்பவில்லை.
மேலும் நெப்போலியனல் இந்தியாவுக்கும் கீழைத்தேய நாடுகளுக்
கும் ஏற்பட்ட ஆபத்து முற்ருக நீங்கவில்லை. அவன் 1799 இல் ஒரு 1-1601-6ð) {L} எகிப்து வரையும் அழைத்துச் சென்றிருந்தான். இப்பேர்ப்பட்ட ஒரு படையெடுப்பு மீண்டும் நேரிடின் கண்டியரசன் எவ்விதம் நடந்து கொள்வானென ஆங்கிலர் தீர்ப்புக் கூற முடியாதிருந்தது. கண்டி இராச்சியம் கைப்பற்றப்பட்டால் தான், ஆங்கிலர் தமது நிலையை உறுதிப்படுத்திக்கொள்ள முடியுமென்பது அவர்களுக்குத் தெளிவாயிற்று.
கரையோர மாநிலங்களின் தலைநகரான கொழும்புக்கும்
அவர்களுடைய பிரதான கப்பற்றளமான திருகோணமலைக்குமிடையே
தொடர்பு ஏற்படுதல் ஒர் இன்றியமையாத தேவையென நோத் எண்ணினர். கொழும்பிலிருந்து திருகோணமலைக்குத் தூதுவர்களைத் தீவைச் சுற்றியே அனுப்ப வேண்டியிருந்தது. ஏனெனில் அவர்கள் கண்டி இராச்சியத்தினூடாகச் செல்வதற்கு அரசன் அனுமதிக்கவில்லை, ஆகையினல் கண்டி வெற்றி கொள்ளப்படின் இவ்விரு நகரங்களையும் இணைப்பதற்கான ஒரு பாதையை இலகுவில் அமைக்கலாமெனத்
鷺
 
 

இலங்கையின் முதலிரு ஆள்பதிகள் 77
திட்டமிட்டனர். கண்டியரசன், பெளத்த பிக்குகளின் மூலம் கரையோரப் பிரதேசங்களில் வாழ்ந்த சிங்களர் மேல் கொண்ட செல்வாக்கினை முறிப்பதற்கும் கண்டி இராச்சியத்தை வெற்றி கொள்ளல் அவசியமென நினைத்தனர்.
நிதிக் காரணங்களும் கண்டி வெற்றி கொள்ளப்பட வேண்டிய தன் இன்றியமையாமையை மேலும் வலியுறுத்தின. ஆங்கிலர் கரை யோரத்திலும் கண்டியின் எல்லைப் புறங்களிலுமாக இரு நிரைகளில் கோட்டைகளை அமைக்க வேண்டியவர்களானர்கள். கண்டி வெற்றி கொள்ளப்படின் தீவின் பாதுகாப்புக்கு ஒரு நிரை போதுமானதாகும். மேலும் கண்டியின் எல்லைப்புறங்களில் பொருள்களின் மேல் தீர்வை கள் விதிக்கப்பட்டதையும் அவர்கள் விரும்பவில்லை. J
இந்த நிருவாக, அரசியல், பொருளாதார, புவியியல் கார ணங்கள் யாவும் ஒன்று சேர்ந்து பிரித்தானிய அதிகாரிகளின் உள் ளங்களில் கண்டி வெற்றி கொள்ளப்படல் வேண்டும் அன்றேல் அத னைத் தம் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்க வேண்டுமென்ற எண் ணத்தை வலியுறுத்தின.
அக்காலத்தில் இந்தியாவில் வெலஸ்லி படைத்துணை உடன்ப டிக்கைகள் (Subsidiary Alliances) மூலம் சுதேச மன்னர்களைத் தமது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்தது போன்று கண்டி இராச்சி யத்தையும் தம் ஆணையின் கீழ் வைத்திருத்தல் அல்லது வெற்றி கொள்வது இன்றியமையாததென அவர்கள் தீர்த்தனர்.
கண்டியின் நிலை
கண்டியரசின் நிலை அமைதியின்மையும் நிலைபேறின்மையும் நிறைந்ததாகக் காணப்பட்டது. சிறீ விஜய இராஜசிங்கன், கீர்த்தி சிறீ போன்ற முதல் மதுரை மன்னர்கள், மக்கள் நலன் கருதியே செங் கோலோச்சினமையினுல், அவர்கள் மக்களின் அபிமானத்தையும் ஆதரவையும் நிறைவாகப் பெற்றனர். ஆனல் பின் வந்த மதுரை அரசர்களின் ஆட்சியில் வெறுப்புக் கொண்ட சிங்களப் பிரதானிகள், அந்நியராட்சிக்கு முடிவு கட்டத் திட்டமிட்டனர். அதிருப்தியுற்ற பிரதானிகளுக்குத் தலைவனுக விளங்கியவன் பிலிமத் தலாவை "என்ற முதல் அதிகாரியாவான். வலிமையும், கபடமும், கொடுங்கோலனு மான அவன், அரச பதவியைத் தானே கைப்பற்ற நோக்கங் கொண்டான். ... . . . . .

Page 46
78 இலங்கைச் சரித்திரம்
சிறீ விக்கரம இராஜசிங்கன் அரசனுதல் :
1798 இல் பிலிமத்தலாவை ஏனைய பிரதானிகளின் துணை கொண்டு, இராஜாதி இராஜசிங்கனைச் சிம்மாசனத்திலிருந்து அகற்று வதில் வெற்றிபெற்றன். அதற்குப்பின் அப்பதவியைத் தானே அப கரிக்க முயன்ற பொழுது, எதிர்பாராத விதமாக எதிர்ப்புத் தோன் றியது. அந்நிய அரசனெருவனை அகற்றுவதற்கு ஒத்துழைத்த சிங் களப் பிரதானிகள், பிலிமத்தலாவையின் சுயநலத் திட்டத்தை ஆத ரிக்க மறுத்தனர். இன்னும் தருணம் சரியன்று என உணர்ந்த பிலிமை, அரசனின் மைத்துனன் முத்துச்சாமியைப் பதிலரையனுக நியமித்தான். முதல் அதிகார் என்ற முறையில் உண்மை அரசதி காரம் அவனது கைகளிலேயே இருந்தது. அதேயாண்டு ஜுலை மாதம் இராஜாதி இராஜசிங்கன் காலம் சென்றன். புது அரசனை நியமனம் செய்யும் உரிமை முதல் அதிகாரான பிலிமையைச் சூழ்ந்தது. தான் அரசனவது முடியாத கருமமென அறிந்த அவன், பதிலரையன் முத்துச்சாமியின் உரிமைகளை நிராகரித்து, இறந்த அரசனின் உரித் தாளர்களுள் வயதில் அதிகம் இணையவனும் பலவீனனுமான கண் ணுச்சாமி என்பவனை அரசனுக்கினன். அவனைச் சிம்மாசனத்திலி ருத்தி, தன் எண்ணப்படி நடத்தலாமென்றும், எதிர் காலத்தில் வரும் முதற் சந்தர்ப்பத்தில் அவனைப் பதவியினின்று நீக்கி, தானே அரசனுகலாம் என்பதுமே அவன் வகுத்த திட்டங்களாகும். முத் துச்சாமி கொழும்பு சென்று ஆங்கிலரிடம் சரண்புகவே அவர்கள் அவனை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிவைத்தனர்.
கண்ணுச்சாமி சிறீ விக்கிரம இராஜசிங்கன் என்ற நாம தாரியாய்ச் சிம்மாசன மேறினன். பிலிமை, தானே அரசனுகி விட வேண்டுமென ஆசை கொண்டு, அவ்விலக்கை அடைவதற்கான உபாயங்களில் இறங்கினன். கண்டிப் பிரதானிகள், மதுரை அரசனை எவ்வளவு தூரம் வெறுத்தபோதிலும், தான் அரசனுவதை எதிர்த்தே நிற்பர் என நன்கறிந்த பிலிமை, ஆங்கிலரின் உதவி கொண்டே தனது கருமத்தை நிறைவேற்ற முடியுமென முடிபு செய் தான். இந்நோக்கத்துடன் அவன், ஆங்கில ஆள்பதியான நோத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தான். ஆள்பதி நோத்தும் வேறு வகையான என்ணங்கொண்டிருந்தமையினல் பேச்சுவார்த்தைகளுக்குச் சம்மதித்தார்.
இந்திய அரங்கில் மாக்குவி வெலெஸ்லி ஈட்டிய அரசியற் சாதனைகளை நோத் இலங்கையில் நிலைநாட்ட முயற்சித்தார். 1798இல் வெலஸ்லி இந்தியாவின் ஆள்பதி நாயகமாகப் பதவியேற்ற பொழுது, நெப்போலியன் இந்தியாவில் பிரித்தானியரின் ஆதிக்
 

O
இலங்கையின் முதலிரு ஆள்பதிமள் 79
கத்தை முறியடிப்பதற்குத் திட்டம் வகுத்திருந்தான். மைசூர் திப்பு சுல்த்தானும் ஹைதராபாத் நிசாமும் பிரெஞ்சினரின் ஆக்கிரமிப்பைக் காத்து நின்றனர். இந்நிலையில் பிரித்தானியரின் நிலையைக் காப் பதற்கு ஒரேயொருவழி சுதேச அரசர்களைப் பிரித்தானியரின் பாது காப்பினதும் கட்டுப்பாட்டினதும் கீழ் வைப்பதாகும் என வெலெஸ்லி தீர்மானித்தார். நிசாம் தனது இராச்சியத்தினுள் பிரித்தானியப் படைகளை அ னு ம தி த் து ஆங்கிலருடன் ஒரு படைத்துணை உடன்படிக்கை செய்யுமாறு கட்டாயப் ப டு த் த ப் பட் டான். வெலெஸ்லி மேலும் பல அரசர்களுடன் இவ்விதமான உடன் படிக்கைகளைச் செய்தார். திப்பு சுல்தான் இதற்கிசைய மறுத்த பொழுது, ஆங்கிலப் படைகள் அவனது நாட்டினுள் புகுந்து மைசூரை வெற்றிகொண்டு அங்கு தமக்கு இணக்கமான இந்து அரசன் ஒருவனைச் சிம்மாசனத்தில் அமர்த்தினர். இவ்விதமாக மிகவும் விசாலமான நிலப்பகுதிகள் ஆங்கிலரின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. ஆள்பதி நோத், இப்பேர்ப்பட்ட ஒரு வெற்றி யைக் கண்டியின் மட்டில் ஈட்டலாமென எண்ணியே பிலிமத்தலாவை யுடன் பேச்சுவார்த்தைகள் நடாத்தச் சம்மதித்தார்.
நோத்-பிலிமத்தலாவை பேச்சுவார்த்தைகள் :
1799 பெப்ரவரி மாதம், பிலிமை நோத்தின் உள்நிலையை அறி வதற்காய் அவனை அவிசாவளையில் சந்தித்தான். பிரித்தானியர் கண்டிக்கு ஒரு படையை அனுப்பி, அரசனை அகற்றித் தன்னைச் சிம்மாசனத்தில் அமர்த்தின், தான் விசேட வர்த்தகச் சலுகை கள் பெற்றுத் தருவதாகக் கூறிய திட்டத்தை நோத் ஏற்க மறுத்து விட்டார். எனினும் நோத் கண்டிய விவகாரங்களில் நிறைந்த ஈடு பாடுடையவரென்பதை பிலிமை இச்சந்திப்பின் மூலம் நன்கறிந்து கொள்ள முடிந்தது. அவ்வாண்டு திசம்பரில் பிலிமை மறுபடியும் நோத்தை அவிசாவளையில் சந்தித்து, உண்மையான திட்டத்தை வெளிப்படுத்தினன். தான் சிங்கள அரச மரபிற் பிறந்தவனென்றும் ஆங்கிலர் தனக்குதவி புரிவரேல் தான் நாயக்க அரசனைக் கொலை செய்துவிட்டு, ஆங்கிலருக்குக் கீழமைந்த சிற்றரசனக இருப்பானென் றும் கூறினன். ஆரம்பத்தில் நோத் இக்கோரிக்கைக்கு உடன்பட மறுத்த போதிலும், பின்னர் அரசனுக்கு எவ்வித தீங்கும் விளைவிக் கப்படாத பட்சத்தில் பிலிமைக்கு உதவிபுரிய இசைந்தான். நோத் இவ்விதமான கபடமும் வஞ்சகமும் சூதும் நிறைந்த துரோகி ஒரு வனுடன் வைத்த தொடர்புகளை உடனடியாக நிராகரித்திருத்தல் வேண்டும். மலையாள அரசன் சிறீ விக்கிரம இராஜசிங்கனை மக்கள் :
* ܀

Page 47
80 இலங்கைச் சரித்திரம்
மனமார வெறுத்தனரென்றும், இப்பொம்மை அரசனைக் கொண்டு கண்டியில் உண்மையாக ஆட்சிபுரிந்தவன் பிலிமையே என நோத் நம்பியதனுல் தான், அவன் அரசனை விட்டுப் பிலிமையுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தினன்.
அதிகார், ஆங்கிலருடன் பேச்சுவார்த்தை நடாத்திவந்த வேளை யில், இளம் அரசன் தனக்கு ஆதரவாகப் பல பிரதானிகள் இருப் பதைக் கண்டு, அவர்களது துணைகொண்டு தன் எண்ணப்படி நடக்க முற்பட்டான். அரசனைக் கைப்பொம்மைபோல் ஆட்டி வைக்கலா மெனத் திட்டமிட்ட பிலிமை ஏமாற்றமடைந்தான். பிலிமை கண் டிக்கு ஒரு பிரித்தானியப் படையினை வரவழைத்து சிறீ விக்கிரமனைப் பயமுறுத்த நோக்கங் கொண்டான். 1800 ஜனவரியில் பிலிமை மூன்ரும் முறையாக அவிசாவளையில் பொயிட் என்ற ஆங்கிலச் செய லாளனைச் சந்தித்தான். பொயிட் ஒரு தூதினைக் கண்டிக்கு அனுப் பச் சம்மதித்தான்.
மக்தவலின் தூது :
1800 மார்ச் 12 ஆம் நாள், மக்தவல் எனும் தளபதியின் கீழ் 2000 போர்வீரர்கள் கொண்ட படையொன்று கண்டி நகரை நோக்கிப் புறப்பட்டது. மக்தவல் வெளியரங்கமாக அரசனைக் கண்டு தன் மரியாதையைச் செலுத்தப் போவதாக காட்டிக் கொண்ட போதிலும், உண்மையில் அரசனை ஆங்கிலேயரது பாதுகாப்பை ஏற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்துவதற்காகவே சென்றன்.
ஆயிரக்கணக்கான GBL unTri வீரர்களுடன் பிரித்தானியப் படையொன்று வருவதைக் கேள்விப்பட்ட சிறீ விக்கிரமன், தன் படையினரை உறுவன்வலைக்கு அனுப்பி, அங்கே தளபதியை வழி மறி த்து ஒரு சிறு படையுடன் மாத்திரம் தன்னிடம் வருமாறு கட்டளை யிட்டான். சிறீ விக்கிரமனின் அரண்மனையை அடைந்த பொழுது மக்தவல், அரசன் ஆங்கிலரின் பாதுகாப்பை ஏற்க வேண்டுமென்றும் அவனது துணைக்காகவும் பாதுகாப்புக்காகவும் 800 ஆங்கில வீரரைக் கண்டியில் நிறுத்தவும் வேண்டுமெனக் கேட்டு நின்றன். ஆனல் சிறீ விக்கிரமன் இக்கோரிக்கைக்கிணங்க அறவே மறுத்து விட்டான். மக்தவல் ஒரு பயனுமின்றிக் கொழும்புக்குத் திரும்பினன்.
ஈராண்டுகளுக்குப் பின்னர் 1802 பெப்ரவரியில் அதிகார் மீகாத்தனையின் தலைமையில் ஒரு தூது கொழும்பு சென்றது. கரையோரத்தில் ஒரு வியாபாரத்தளத்தையும் பத்துக் கப்பல்களின் உபயோகத்தையும் கேட்டுப்பெறல் அதன் வெளியான நோக்கம்.
*::"...
 
 

இலங்கையின் முதலிரு ஆள்பதிகள் 81
ஆனல் மீகாஸ்த்தனே ஆள்பதியை இரகசியமாகச் சந்தித்து, மீண்டும் சிறீ விக்கிரமனைக் கொலை செய்யும் பிலிமையின் பழைய திட்டத்தை அங்கீகரிக்குமாறு வேண்டினன். ஆனல் நோத் அத்திட்டத்துக்குச் செவிசாய்க்க மறுத்து விட்டான்.
முதற் கண்டிப் டோருக்கான உடன் காரணம் :
எவ்வித சூழ்ச்சியும் ஒரு பிரித்தானியப் படையினைக் கண்டிக்கு வரவழைக்க முடியாதென நன்கறிந்த பிலிமை, ஆங்கிலரை வலிந்து கண்டியரசின் மேல் போர் தொடுக்கச் செய்வதுதான் வழியெனத் திட்டமிட்டான். 1802 ஏப்பிரில் மாதம், ஐம்பது சோனக வர்த்தகர்கள் புத்தளத்திலிருந்து பாக்கு முதலாம் வியாபாரப் பொருள்களைக் கொண்டு கண்டி நாட்டுக்குச் சென்ற பொழுது, அதிகார் தன் ஏவ லாளரைக்கொண்டு அவர்களது பொருள்களைக் கொள்ளையடித்தும் , அவர்களை அடித்துதைத்தும், வதைத்தும் துரத்திவிட்டான்.
பிலிமத்தலாவையின் தூண்டுதலினல் பிரித்தானிய பிரசை களுக்குச் செய்யப்பட்ட அநீதியையும் அட்டூழியத்தையும் கண்டு ஆங்கிலர் பொங்கியெழுந்தனர். ஆள்பதி, தன் பிரசைகளுக்கு விளை விக்கப்பட்ட கொடுமைகளுக்குப் பரிகாரம் செய்யப்பட வேண்டு மெனக் கண்டி மன்னனுக்கு ஒரு கடிதத்தை வரைந்து அனுப்பி ஞன். சோனகருக்கு நட்ட ஈடு கொடுக்கப்பட வேண்டுமென ஆள் பதி பன்முறை வற்புறுத்தியும் திருப்தியான பரிகாரத்தைப் பெற வில்லை. ஈற்றில் தன் கோரிக்கையை அரசன் நிறைவேற்றப் பின்னிடு வானுயின், தாம் போர் தொடுக்க நேரிடுமென ஆள்பதி இறுதி எச்சரிக்கை விடுத்தான். இதற்கும் அரசன் செவிசாய்க்க மறுக்கவே, நோத், நட்ட ஈட்டைப் பெறுவதற்கும் இப்பேர்ப்பட்ட செயல்கள் மீண்டும் நடவாதிருக்கச் செய்யவும், கண்டியின் மேல் படையெடுக்க முடிபு செய்தான். இவ்விதமாகவே கண்டிப் போர் என அழைக் கப்படும் பிரயோசனமற்ற பெருந்தவறு ஏற்பட்டது.
முதற் கண்டிப் போர் :
1803 ஜனவரியில் இரு சைனியங்கள் கண்டியை நோக்கிப் புறப் பட்டன. சனவரி 31 இல் மக்தவல் கொழும்பினின்று புறப்பட்டு
பெப்ரவரி 19 இல் மகாவலிகங்கையை அடைந்தான். திருகோண மலையினின்று பார்பட் தளபதியின் கீழ் வந்த சேனையும் அவர்களைச்
சந்தித்து இரு படைகளும் பெப்ரவரி 20 இல் கண்டியினுள் பிர
வேசித்தன. அதிகாரும், அரசனும் தம் நகருக்கு எரியூட்டிவிட்டு ஒடி ஒளித்தனர். துருப்புக்கள் தீயை அணைத்து நகரத்தைக் கைப்பற்றின. * *
இ. 6 " . . . . . . . . . . ." .
''. - | ۰, , , , , , , ,

Page 48
இலங்கைச் சரித்திரம்
மக்தவல் அரசனுடன் தொடர்பு கொள்ளப் பன்முறை முயற் சித்தும் பயன் பெறவில்லை. பின்னர் நோத், காலஞ் சென்ற இராஜாதி இராஜசிங்கனின் மைத்துனன் முத்துச்சாமியை யாழ்ப் பாணத்திலிருந்து வரவழைத்து, மார்ச் 3 ஆம் நாள் அவனுக்குச் சிங் கள சமயாசாரங்களுடன் முடி சூட்டுவித்தான்.
பிலிமத்தலாவையுடன் ஒப்பந்தம் :
தான் கேட்டு நின்ற பரிசு இன்னெருவனுக்குக் கொடுக்கப் பட்டதைக் கண்ட பிலிமத்தலாவை, சீக்கிரம் கண்டிக்குத் திரும்பித் தனது சேவைகளை மக்தவலுக்குக் கொடுக்க முன்வந் தான். மார்ச் 28 ஆம் நாள் நோத், பிலிமையுடன் ஒப்பந்தம் செய்து, தாம் சற்று முன்னதாகச் சிம்மாசனத்திலமர்த்திய முத்துச்சாமிக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தான். பிலிமத்தலாவையைக் கண்டியின் சிம்மா சனத்தில் அமர்த்தவும், முத்துச்சாமியை வன்னிநாட்டின் தலை வணுக்+வும் நோத் ஒப்புக் கொண்டான். அதற்குப் பிரதி உபகார மாக பிலிமத்தலாவை சப்த கோறளையையும், மக்தவல் கோட்டை யையும் ஆங்கிலருக்குக் கையளிக்கவும், கொழும்பினின்று திருகோண மலை ஈருக ஒரு பாதையை அமைக்க நிலம் கொடுக்கவும், முத்துச் சாமிக்கு ஆண்டுதோறும் 30,000 ரூபா சன்மானம் கொடுக்கவும் உடன்புட்டான். சிறீ விக்கிரமன் அகப்பட்டவுடன் போர் நிறுத் தப்படுமென்றும் என ஆங்கிலர் தெரிவித்தனர்.
இதற்கிடையில் காட்டுச் சுரம் ஆங்கிலத் துருப்புக்களைப் பீடித் துப் பலரை நோய்வாய்ப் படுத்திற்று. நோய்ப்பட்ட மக்தவல் கண்டியின் பொறுப்பை மேஜர் அடம் டேவியிடம் ஒப்படைத்து விட்டு நோயுற்ற வீரர்களுடன் ஏப்பிரில் முதல் நாள் கொழும்புக்குத் திரும்பினுன்.
ஆங்கிலர் சரணடைதல் :
மக்தவல் கொழும்புக்குத் திரும்பிய சில தினங்களுள் ஆங்கி லப் படையிலிருந்த 700 மலாய வீரரில் 400 பேர் படையை விட்டு ஒட்டம் பிடித்தனர். ஆங்கிலருள் பலர் நோய்ப்பட்டு இறந்தனர். பல் வழிகளில் ஆங்கிலரின் பலம் குன்றியதைக் கேள்விப்பட்ட அரசன், பயந்தெளிந்து தன் திசாபதிகளின் துணையுடன் ஒரு பெரும்படையைத் திரட்டி, யூன் 24 ஆம் நாள் கண்டி நகரை வளைந்து ஆங்கிலரைத் தாக்க ஆரம்பித்தான். டேவியும் அவனது சிறுபடையும் பத்து மணித் தியாலங்களாகத் தாக்குதலை எதிர்த்து நின்றனர். ஆனல் அவர்கள் விரைவில் மனந்தளர்ந்து பகைவரை முறியடிப்பது அரிதென உணர்ந்து
பிலிம்த்தலாவைச் சமர்ப்பித்த நிபந்தனைகளின் அடிப்படையில் சரண்
புகுந்தனர்.
 
 
 
 
 

இலங்கையின் முதலிரு ஆள்பதிகள் 83
முத்துச்சாமியுடன் ஆங்கில வீரர் கண்டியை விட்டு வெளி யேறல், நோயும் காயமுமுற்றேர் கொழும்புக்குக் கொண்டு செல்லப் படும் வரை அதிகார் அவர்களைப் பராமரித்தல், தளபாடங்களை அதிகாரின் பாதுகாப்பில் விடல், என்பவை அரசன் இணங்கிய நிபந்தனைகளாகும்.
டேவி, தாமதமின்றி 34 ஆங்கிலர், 250 மலாயர், முத்துச்சாமி என்பவர்களுடன் கண்டி நகரினின்று புறப்பட்டுச் செல்லும் வேளையில், மகாவலி பெருக்கெடுத்திருந்தமையினல் அதனைத் தாண்ட, இயலாது அயற்கிராமமொன்றில் தங்கவேண்டியதாயிற்று.
தன் இராச்சியத்தை மீண்டும் பெற்ற அரசன், பகைவர் மேற் கொண்ட கோபம் குறையாதவனுய், அடுத்த நாள் காலையில் முத்துச்சாமியைத் தன்னிடம் ஒப்படைக்குமாறு டேவிக்குத் தூது வரை அனுப்பினன். முத்துச்சாமி கண்டியரிடம் ஒப்படைக்கப்பட் டவுடன் படுகொலை செய்யப்பட்டான். அடுத்து, அரசன் நோய் வாய்ப்பட்ட ஆங்கில வீரரைத் தன் முன்னிலையில் கொணர்வித்து
ஒருவர்பின் ஒருவராகக் கொலை செய்வித்தான்.
N
யூன் 26 இல், அரசனின் படைஞர் 'டேவியின் மரம்' எனப் பெயர்பெற்ற இடத்தில் ஆங்கிலரை இருவர் இருவராய்த் தம் வாளுக்கிரையாக்கினர். டேவி கண்டிக்குக் கொண்டு போகப்பட்டுக் கடுஞ்சிறையில் வைக்கப்பட்டான் படைவீரன் ஒருவன், தான் இறந்து விட்டதாகப் பாசாங்கு பண்ணிப் பின்னர் இரவில் நகர்ந்து மக்தவல் கோட்டையை அடைந்தான். மக்தவல் கோட்டையிலும், தம்ப தெனியாக் கோட்டையிலும் இருந்த போர்வீரர்கள் உடனே திருகோணமலைக்குப் பின்வாங்கினர். இவ்விதமாகச் சில நாள் களுக்குள் கண்டியிலிருந்த சகல ஆங்கிலப் படைகளும் அம்மாநிலத்தி னின்று துரத்தப்பட்டன.
கொழும்பில், நோத்தும் மக்தவலும் பிழைகள் யாவற்றையும்
டேவியின் தலையில் சுமத்தித் தமது தவறுகளை மூடி மறைக்க
முயன்றனர். டேவியும் மனம் நொந்து 'நான் எனது நாட்டிற்கு என் கடமையைச் செய்தேன், ஆனல் எனது நாடு என்மட்டில் தனது கடமையைச் செய்யத் தவறிவிட்டது" எனக் கூறினன். ஆண்டுகளுக்குப் பின் டேவி சிறையிலேயே இறந்தான்.
மலை நாட்டின் எல்லைகளிலிருந்த எல்லா ஆங்கிலப் படைகளும் பின்வாங்கினதைக் கண்ட சிறீ விக்கிரமன், தன் பகை வென்றெழித்து விட்டதாக நினைந்து, செருக்கு மிகுந்து, ஆங்
வர்களை :

Page 49
84 இலங்கைச் சரித்திரம்
இலங்கையினின்றும் இலகுவாக அகற்றிவிட நினைந்து, அவர்களது மாநிலங்களின் மேற் படையெடுத்தான். ஆனல் ஆங்கிலர், கண்டிப் படைகளை மீண்டும் மலைநாட்டினுள் துரத்திவிட்டனர்.
புதுப் படையெடுப்புக்கான திட்டம் :
டேவியின் படைஞரைக் கொலை செய்த பாதகச் செயலுக்குப் பழிவாங்கவும், தனக்கு இழைக்கப்பட்ட அவமானத்தைப் போக்கவும் எண்ணங் கொண்ட நோத், 1804 இல் கண்டியின் மேல் இன்னுமொரு படையெடுப்பை நடாத்தத் திட்டமிட்டான். ஆறு கரையோர நகரங்களிலிருந்து படைகள் வெவ்வெறு பாதைகளினல் கண்டியை அடைந்து, அங்கு ஒருங்கு சேர்ந்து அதனைக் கைப்பற்ற வேண்டு மென்பதே அவனிட்ட திட்டமாகும். கடைசி நேரத்தில் இத்திட்டம் கைவிடப்பட்டது. ஆயினும் நோத், மட்டக்களப்பினின்று புறப்பட விருந்த தளபதி ஆர்த்தர் யோன்ஸ்ரன் என்பவருக்கு அறிவித்தல் கொடுக்காமல் விட்டதனுல் அவன் திட்டமிட்டபடி 1804 செப்ரெம்பர் 20 ஆம் நாள், 280 படைவீரருடன் புறப்பட்டு ஒக்ரோபர் 6 இல் கண்டியை அடைந்தான். ஆனல் ஏனைய ஆங்கிலப் படைகள் அங்கு வராததைக்கண்டு அவன் வெகு வீரத்துடன் பின் வாங்கித் திருகோணமலையை ஒக்ரோபர் 20 இல் அடைந்தான்.
நோத் பதவியைத் துறத்தல் :
இதற்கிடையில் கண்டிப் படையெடுப்பு நோத்தினுடைய திற மைக் குறைவினல் அனுகூலமடையவில்லையென்ற செய்தியும் டேவி
யின் படைகள் படுகொலை செய்யப்பட்ட தகவலும் இங்கிலாந்தைப்
போயடைந்தன. பாராளுமன்றத்தில் கேள்விகள் கேட்கப்பட்டது
மன்றி அதனைப்பற்றி விசாரணையொன்று நடாத்த வேண்டுமென்றும் வற்புறுத்தப்பட்டது. இதன் பயனக 1805 இல் நோத் தனது பதவி யைத் துறக்கவேண்டிய கட்டாய நிலை எழுந்தது.
நோத், 1805 இல் பதவியைத் துறந்து தாயகம் திரும்பினர். அவர், உயர் நோக்கங்களும் இலட்சியங்களும் கொண்டவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனல் அவர் வகுத்த பாரிய திட்டங்கள் யாவும் அவரது நிருவாகத் திறமைக் குறைவினலும், உறுதியற்ற மனேநிலை யினலும், தப்பிதமான மதிப்பீடுகளினலும் பயனற்றுப்போயின. "அவர் மிகவும் விரிந்த திட்டங்களைத் தீட்டித் தாய் நாட்டுக்குச் சமர்ப்பித்து விட்டு, அவற்றைச் செயற்படுத்தும் விடயத்தைப் பற்றி ஒன்றும் செய்யாமல் விடுவது அவரது வழக்கமாயிற்று' 6ᎢᎧᏈᎢ மெயிற்லந்து அவரது நிருவாகத் திறமைக் குறைவைப் பற்றிக் குறை
 

இலங்கையின் முதலிரு ஆள்பதிகள் &5
கூறினர். நோத், எவ்விதத்திலும் ஓர் உறுதியான சித்தம் படைத்த ஆள்பதியெனக் கூறமுடியாது. அவர் வகுத்த திட்டங்கள் யாவும் அவரது ஆற்றலுக்கு மிகுந்தனவாகவே காணப்பட்டன. கண்டியின் விவகாரங்களில் அவர் பிலிமத்தலாவையின் சூழ்ச்சிக்குப் பலியான விதம் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். கண்டியை வெற்றி கொள்ள வேண்டுமென அவர் வகுத்த பெருந் திட்டத்தை நிறை வேற்ற அவரது மதிநுட்பமும் வல்லமையும் போதாமற் போயின. நோத் செயற்படுத்த முயன்ற நிலச் சீர்திருத்தங்கள் இதற்கு இன் னுேர் உதாரணமாகும். உயர் நோக்கங்களினல் உந்தப்பட்ட அவர், தான் வகுத்த திட்டத்தை நாட்டின் சமூக, அரசியல் நிலைகளைப் பொருட்படுத்தாது செயற்படுத்த முயன்று தோல்வியே கண்டார்.
நோத்தினுடைய ஆட்சியில் பல குறைகள் இருந்த போதிலும் இலங்கைவாழ் மக்கள் அவருக்கு நன்றியுடையவர்களாயிருக்கப் பல காரணங்களுண்டு. இலங்கையில் ஒழுங்கு, அமைதி, திறமை என்னும் பண்புகளுடைய அரசாட்சி முறைமை, அவரது ஆட்சிக் காலத்தில் தான் முளை கொண்டதெனலாம். நாட்டின் நீதி நிருவாகம், குடி யியற் சேவை, வைத்திய இலாக்கா, கல்வி இலாக்கா, பொது மராமத்து இலாக்கா என்பவை யாவும் அவரது காலத்தில் நிறுவப்பட்டவை. அவற்றின் வளர்ச்சியின் பயணுகவே கடந்த நூற்ருண்டில், இலங்கை பல்வேறு துறைகளிலும் முன்னேற்றத்தைக் கண்டு களிக்க முடிந்த
தெனில் மிகையாகாது.
4. சேர் தோமஸ் மெயிற்லந்து (1805-11)
இலங்கையினின்று பதவி நீங்கி வெளிச் சென்ற நோத்துக்குப் பதிலாய் 1805 ஜனவரியில் தளபதி மெயிற்லந்து அவரது 47 வது பராயத்தில் ஆள்பதியாய் நியமனம் பெற்ருர், யூலை 18 ஆம் நாள் இத்தீவினை வந்தடைந்த அவர், அடுத்த தினம் இராச்சிய பாரத்தை ஏற்ருர், மேற்கிந்தியத் தீவுகளில் பரிபாலனம் செய்த பொழுது மெயிற்லந்து ஆற்றல் மிகுந்த ஆட்சியாளரென்றும், நிதி நிபுண ரென்றும் பெயர் பெற்றவர். அங்கு அவர் பெற்ற கீர்த்திக்கு நிகராக இலங்கையிற் சேவை செய்த உன்னத ஆள்பதிகளின் வரிசையில் அவரும் நாளடைவில் இடம்பெறத் தகுதி வாய்ந்தவரானர். ஏனெனில் அவர் குடியேற்ற நாடுகளின் பாலனத்தைப் பற்றியும் ஒர் ஆள்பதியின் பொறுப்பைப்பற்றியும் மிகவும் முற்போக்கான கொள்கை களையுடையவராக விளங்கினர். 'சுதேச மக்களின் செல்வப் பெருக்கையும், மனரம்மியத்தையும் பொதுவாக அபிவிருத்தி செய்
இ. 6 A : , ...” . . . . . . . . : • ܨ

Page 50
86 இலங்கைச் சரித்திரம்
வதன் மூலமாகவே, இலங்கைத் தீவின் செல்வத்தைப் பெருக்க வேண்டுமென்பதே அரசாங்கத்தின் இன்றைய குறிக்கோளும் என்றைய நோக்கமுமாக இருத்தல் வேண்டும்" என்பது மெயிற்லந்தின் கூற்று.
மெயிற்லந்து "வாழ்க்கை என்பது வேலை" என்றே நினைத்துச் செயலாற்றினர். முயற்சி, ஊக்கம், நேர்மை என்னும் நற்பண்பு களுக்குத்தானே ஒரு மேல்வரிச் சட்டமாக விளங்கியது மன்றி அவற்றை நிலைநாட்டுவதிலும் தயக்கமோ தாட்சணியமோ காட்டவில்லே. இராணு வத்தில் உயர் அதிகாரியாக முதல் சேவைபுரிந்த அவர், திட்டமிட்ட கருமத்தை நிறைவேற்றி முடிப்பதில் சமர்த்தர். நாட்டின் பிரச் சினைகளை நேர்முகமாக அறிய நோக்கங் கொண்ட அவர், தம் ஆட்சிக்காலத்தில் ஆறு மாதங்களைத் தீவின் பல பாகங்களையும் சுற்றிப் பார்ப்பதிற் செலவிட்டார்.
மெயிற்லந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொழுது அவ ருக்கு விடுக்கப்பட்ட ஒரு விசேட கட்டளை, இலங்கையின் படு மோசமானநிதி நிலயைத் சீர்ப்படுத்த வேண்டுமென்பத ாகும். அவர் பத வியேற்ற பொழுது திறைசேரி வெறுமைவாகவும், செலவினங்களுக்கு இங்கிலாந்திலிருந்து பணம் பெறவேண்டிய அவல நிலையும் அவரை எதிர்ப்பட்டு நின்றன. எனவே அவர் கையாண்ட முறைகள் யாவற் றிலும் சிக்கனத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற எண்ணமும், நாட் டின் பொருளாதாரத்தை விருத்திசெய்ய வேண்டுமென்ற திடமுமே மேலிட்டு நின்றன. செலவைக் கட்டுப்படுத்தும் முகமாக கண்டி இராச்சியத்துடன் எவ்விதத் தொடர்புகளையும் வைத்திருக்க மறுத் தார். நோத் தீட்டிய பாரிய திட்டங்களை வன்மையாகக் கண் டித்தார். ஆரம்ப காலத்தில் அவர் கையாண்ட சிக்கன வழி களினல் வருமானத்தில் & 300,000 மிகுதியாகக் காட்டினர்.
குடியியற் சேவை :
மெயிற்லந்து தனக்குமுன் சென்ற நோத்தின் திட்டங்களை நிராகரிக்காது, அவற்றில் காணப்பட்ட மிதமிஞ்சிய செலவுகளைக் கட்டுப்படுத்தினர். நோத் ஆரம்பித்து வைத்திருந்த இலாக்காக்களை புனர்நிர்மாணம் செய்தார். தேவையற்றவையெனக் காணப்பட்ட பல பகுதிகள் நீக்கப்பட்டன. அவர் ஒரு மிகத்திறமை வாய்ந்த நிர்வாகி, தனது திறமையை குடியியற்பாலன சேவையாளர்களிலும் ஏனைய அரசாங்க உத்தியோகத்தர்களிலும் முத்திரையிட வேண்டு மென அயராது உழைத்தார். ஒழுங்கு முறையான உள்ளம்

இலங்கையின் முதலிரு ஆள்பதிகள் 87
படைத்த அவர், நிருவாகத்தில் கட்டுப்பாட்டையும் ஒழுங்கையும் நிலை நாட்டினர். தனது அயரா உழைப்பாலும் கடின சேவையாலும் நாட்டின் நிருவாகத்தை த் திறம்பட மாற்றியமைத்த அவர், இன்றும் அவர் செய்த நன்முயற்சிகளுக்காக நினைவு கூரப்படுகிருர்,
மெயிற்லந்தின் சீர்திருத்தங்களுள் முதன்மை பெற்று விளங்கு வது குடியியற் சேவையின் புனரமைப்பாகும். குடியியற் சேவையாளர் வியாபாரத்தில் ஈடுபடுவதை அவர் 1805 இல் தடை செய்தார். அவர்கள் ஓய்வு பெறுவதற்குமுன் புரியவேண்டிய சேவைக் காலத்தை 12 ஆண்டுகளிலிருந்து 15 ஆக்கினர். அக்காலம் வரை குடியியற் சேவைக்கு 15 அல்லது 16 வயதுப் பராயம் நிரம்பிய இளைஞரை இங்கிலாந்திலிருந்து வரவழைத்து 12 ஆண்டுச் சேவையின் பின் ஒய்வுச் சம்பளத்துடன் தாயகம் திருப்பியனுப்புவதே வழக்காயி ருந்தது, மெயிற்லந்து இம்முறையில் இருந்த குறைகளை, விசேடமாக அவர்கள் நற்சேவை புரியக்கூடிய 27 அல்லது 28 வது பர்ாயங்களில் ஒய்வுபெறுவது நாட்டுக்கு அநீதி செய்வதற்குச் சமானமென எடுத் துக் காட்டினர். இதனல் ஓய்வுச் சம்பளம் பெறுவதற்குரிய கால எல்லையை மூன்று ஆண்டுகளினல் அதிகரித்தார். தவிர, திறமை சாலிகளை ஓய்வு பெற்ற பின்பும் மேலும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு நாட்டின் நலனுக்காகப் பயன் படுத்துவதற்கு வேண்டிய அதிகாரத்தையும் பெற்ருர், சேவையாளரின் சம்பளத்
தை அதிகரித்தும், சேவையின் திறமையைப் பன்மடங்கு அதிக ரிக்கச் செய்தார்.
மெயிற்லந்து, குடியியற் சேவையை மூன்று வகுப்புக்களாக வகுத்தார். மூன்ரும் வகுப்பில் சேர்ந்த சேவையாளர் மூன்று ஆண் டுகள் திருப்திகரமான சேவை செய்தபின் இரண்டாம் வகுப்புக்கு உயர்வும், இரண்டாம் வகுப்பில் ஏழு ஆண்டுகள் சேவையின் பின் முதலாம் வகுப்புக்கு உயர்வும் பெறுவதற்கு வழி வகுத்தார். மேலும் அவர்கள் சிங்களம், தமிழ் மொழிகளைக் கற்று குடிசனங் களுடன் நேரடியான தொடர்பு கொள்ள வேண்டுமென விரும்பினர். சிங்கள அறிவுள்ள அதிகாரிகள் மூன்ரும் வகுப்பினின்று இரண்டாம் வகுப்புக்கு ஈராண்டுகளிலும், முதலாம் வகுப்புக்கு ஆறு ஆண்டுகளிலும் பதவி உயர்வுபெற வசதி செய்து, சிங்களம் கற்பதில் ஊக்கத்தைப் பிறப்பித்தார்.
மாகாணப் பரிபாலனம் :
மெயிற்லந்து மாகாணப் பரிபாலன விடயங்களிலும் LHigl ஏற்பாடுகளைக் கட்டளையிட்டார். அரசிறை விட்டயங்களுக்குப் பொறுப்பாக அரசிறை ஆணையாளர் என்னும் ஒரு உயர் அதிகாரி

Page 51
88 இலங்கைச் சரித்திரம்
யையும், அவரது பரிபூரண அதிகாரத்தின் கீழ் சேவைபுரியும் பத்து கலெக்டர்களை ஒவ்வொரு மாகாணத்துக்குமென நியமித்தார். ஆள் பதியின் அனுமதியுடன் கலெக்டர்களை பதவியினின்று நீக்க ஆணை
யாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
திறைகளை வசூலித்தல், சிறிய பாதகவியல், குடியியல் வழக்குகளை விசாரணை செய்து தீர்ப்புக்கூறல் என்பவை கலெக்டரின் பிரதான கடமைகளாகும். அவற்றைத் தவிர அவர்கள், அடிக்கடி தமது மாகாணத்தைச் சுற்றிப்பார்த்து விவசாயம், வர்த்தகம் ஆகிய முயற்சிகளும், மக்களின் சுகாதார நிலையும் விருத்தியடைவதற்கான வழிவகைகளைத் தேடவேண்டுமெனக் கட்டளையிட்டார். ஒவ்வொரு கலெக்டரும் 'தன் மாகாணம் அடங்கலும் அடிக்கடி சுற்றுப் பிரயாணம் செய்து அம்மாகாணத்திலுள்ள பல் வேறு பிரிவு மக்களோடும், தலைமைக்காரர்களோடும், அறிமுகமாயிருத்தல் வேண் டும். ஆண்டு தோறும் தம் பிரிவையும் அவர் பார்வையிட்டு குடி யானவர்களின் முறைப்பாடுகளையும் மனுத் தாக்குதல்களையும் கிரம மாய் விசாரித்து முறைப்படுத்தி வரல் வேண்டும்" என மெயிற்லந்து விதித்தார். ஒவ்வொரு கலெக்டரும் தன் மாகாணத்தின் பரிபாலனம் சம்பந்தமாக ஒர் ஆண்டறிக்கை தயாரித்துத் தனக்குச் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் கட்டளையிட்டார்.
676). FIT u afu ibé J, 6i :
நோத் செய்திருந்த நிலச் சீர்திருந்தங்களையும் அவர் கையாண்ட நிலப் பூட்கையையும் மெயிற்லந்து முழுமையாக மாற்றியமைத்தார்.
போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் அனுமதித்திருந்த இராசகாரிய முறையினை சென்னை வர்த்தக சங்கத்தினர், தமது குறுகிய ஆட்சிக் காலத்தில் நிராகரித்தமையினலேயே அமைதியீன முண்டான தென்பதையும் அதன் நீக்கத்தினல் அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்பட்டது என்பதையும் மெயிற்லந்து கண்டார். மேலும் இராச காரியமுறையின் ஒழிப்பினல் நோத்தினுடைய காலத்தில் பொது மராமத்து வேலைகளுக்குக் கூலியாட்கள் கிடைக்காமற் போனதால் தென்னிந்தியாவினின்று ஆட்களை வரவழைக்கவும் அதற்காக ஆண்டு தோறும் 30,000 பவுண் செலவிட வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட் !-து, இதனல் அரசாங்கம் கடும் நட்டத்துக்குள்ளாவதைக் கண்ட அவர், குடியேற்ற நாட்டுச் செயலாளரின் அனுமதியுடன் பழைய இராசகாரிய முறையினை மீண்டும் நிலைநாட்டினர். இலங்கையின் அக்காலப் பொருளாதார நிலைக்கு சேவைமானிய முறையே தகுந்து தென்றும் அதில் மாற்றஞ் செய்வதற்கு பொருளாதார நிலை முதல்
மாறவேண்டுமென்றும் எடுத்துக்காட்டினர்.

இலங்கையின் முதலிரு ஆள்பதிகள் 89
நாட்டின் பொருளாதார நிலையை விருத்தி செய்வதற்கும், வருவாயை அதிகரிப்பதற்கும், விவசாயத்தையும் வியாபாரத்தையும் ஊக்குவித்தலே, இரு அதி சிறந்த முறைகளென தாய் நாட்டரசாங்கம் சுட்டிக்காட்டிற்று. நெல் விளைச்சலை அதிகரிக்கச்செய்து நாட்டின் உணவுத் தேவையைத் தானே பூர்த்தி செய்ய வேண்டுமென்ற உயர் நோக்கத்துக்காக மெயிற்லந்து அயராது உழைத்தார்.
பழைய பாளடைந்த குளங்களைச் செம்மைப் படுத்துவதினல் விவசாயம் விருத்தியடையுமென ஜோன்ஸ்ரன் எடுத்துக்காட்டினர். குளங்களின் நிலையைப் 荔兴菇“臀 செலவுகள் பற்றியும் ஓர் அறிக்கை தயாரிக்கப்பட்டது. ஆனல் அக்காலப் பொருளாதார நிலையில் குளங்களைத் திருத்துவது அரசாங் கத்தினுல் சுமக்க முடியாத பெருஞ்செலவை ஏற்படுத்துமென உணர்ந் தார். வெளி நாட்டவர், விசேடமாக ஐரோப்பியரும் இந்தியரும் இத்தீவில் நிலங்களை வாங்கி விவசாயத்தை விருத்திசெய்ய அனு மதிக்குங் கட்டளைச் சட்டத்தை ஏற்படுத்தினர். தாவரத்தோட்டம் ஒன்றைத் திறந்து புது விவசாய முறைகளைக் கண்டு பாவிக்க ஒரு காட்சிச் சாலையையும் தாபித்தார்.
நீதிச் சீர்திருத்தங்கள் :
கொழும்பு, காலி, யாழ்ப்பாணம், திருகோணமலை-மட்டக் களப்பு, புத்தளம்-சிலாபம் எனும் ஐந்து மாகாணங்களில், குடியியல் பாதகவியல் வழக்குகளை விசாரணை செய்வதற்கு ஐந்து நீதி மன்றங் களை அமைத்தார். இம்மன்றங்கள், உச்ச நீதி மன்றத்துக்கும் தலத் திலுள்ள பொலீஸ் மன்றுகளுக்கும் இடைப்பட்ட ஸ்தானத்தை வகிக்கத் தொடங்கின. இம்மன்றங்களின் நீதிபதிகளுக்கு, மாகாண அரசாங்க முகர்வகளின் அதிகாரங்களுக்குக் கட்டுப்படாது சுயேச்சை யாக இயங்க சுதந்திரம் வழங்கப்பட்டது.
நீதித் துறையில் மெயிற்லந்து நிலைநாட்டிய இன்னுமொரு முக்கிய மாற்றம், உச்ச நீதி மன்றத்தில் யூறி முறையை ஏற்படுத் தியதாகும்.
சேர் அலெக்ஸான்டர் ஜோன்ஸ்ரன், முஸ்லிம் சட்டங்களை ஒழுங்காகக் கோவை செய்து, இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு அளப் பரிய ஒரு மாபெரும் சேவையைச் செய்தருளினர். அவரின் துணை கொண்டு, மெயிற்லந்து, கத்தோலிக்கர் மேல் ஒல்லாந்தர் விதித் திருந்த தடைகளை முற்ருக நீக்கினர். இத்திருத்தத்தினல் இந்நாட் டில் கல்வியின் முன்னேற்றத்துக்கு வழி திறந்து விடப்பட்டது. மெயிற்

Page 52
90 இலங்கைச் சரித்திரம்
லந்தின் காலத்தில் தீவில் வசித்த கத்தோலிக்கரின் எண்ணிக்கை 88,000 ஆகும். 1806 மே 27 இல் பிரகடனம் செய்யப்பட்ட சட் டத்தின்படி கத்தோலிக்கருக்குச் சமய வழிபாட்டு உரிமைகளும், அரசியல் உரிமைகளும் அங்கீகரிக்கப்பட்டன.
சேர் அலெக்ஸான்டர் ஜோன்ஸ்ரன் :
மேலே கூறப்பட்ட நீதிச் சீர்திருத்தங்களுக்கு மாத்திரமன்று, நிருவாகத் துறையிலும் மெயிற்லன்டுக்குப் பக்கபலமாக நின்று பணி புரிந்தவர் சேர். அலெக்ஸான்டர் ஜோன்ஸ்ரன் ஆவார். "பிரதம நீதியரசராக இருந்த அவர், பல துறைகளிலும் சிறந்து விளங்கினர். இந்தியாவில் பிறந்து வளர்ந்த அவர், ஆழ்ந்த அறிவும், இந்நாட்டு மக்கள் மட்டில் நற்சிந்தையும் படைத்தவராவார்.
யோன்ஸ்ரன் முதலில் அட்வக்கேட் ஜெனரலாகவும் பின்னர் பிரதம நீகியரசராகவும் பதவி வகித்தார். ஆயினும் அவரது ஈடு பாடுகள் நீதித் துறையுடன் நின்று விடவில்லை. இலங்கையின் எல்லாப் பாகங்களையும் தரிசித்து நாட்டு மக்களின் நிலைகளைப்பற்றி நுணக்கமான அறிவு பெற்ற அவர், விவசாய அபிவிருத்தியிலும் நீர்ப்பாசன வேலைகளைத் திருத்தியமைப்பதிலும் அதிக ஊக்கம் காட் டிஞர். இவற்றுடன் நில்லாது, அரசியல் விடயங்களிலும் யோன்ஸ்ரன் ஒரு இSர முற்போக்குவாதியாக விளங்கினர். எவரும் சிந்திக்க முன்பே, ! இலங்கையின் நல்லாட்சிக்கென பல சீர்திருத்தங்களை மேலதிகாரிகளுக்கு எடுத்துரைத்தார். பிரதிநிதிகளைக் கொண்ட சட்ட சபை, பிரித்தானிய அரசியற்றிட்டத்தைப்போன்ற பாராளு மன்ற ஆட்சிமுறை, சுதேசிகளைக் கொண்ட குடியியற் சேவை என் பவை, அவர் அன்று செய்த முக்கிய சிபார்சுகளுள் சிலவாகும். இவையனைத்தும் பிற்காலங்களில் மேற்கொள்ளப்பட்டமை குறிப் பிடற்பாலது.
அவர் இலங்கையினின்று இளைப்பாறி தாயகம் திரும்பிய காலத்தில், இலண்டனில் முேயல் ஆசியச் சங்கத்தைத் (Royal Asiatic Society) தாபித்து, ஆசிய நாடுகளின் கலாச்சாரத்தை உலகுக்கு எடுத்தியம்புவதில் அரும் பணிகள் புரிந்தார்.
வினுக்கள்
1. ஆள்பதி பிரடெரிக் நோத்தின் அரசியல், பரிபாலன, சீர்திருத்
தங்களைச் சுருக்கமாக ஆராய்க. - 'நோத்தின் மடமைத்தனமும் பிலிமத்தலாவையின் சூழ்ச்சி யும்தான் முதலாம் கண்டிப் போருக்கு வழி காட்டின' இக்
சுற்றினை விளக்குக.
 
 

10.
இலங்கையின் முதலிரு ஆள்பதிகள் 91
பிரித்தானியர் கண்டி இராச்சியத்தைத் தமது ஆட்சிக்குட் படுத்த விரும்பியமைக்குக் காரணங்கள் எவை ? கண்டி இராச்சியத்தைப் பொறுத்த வரையில் ஆள்பதி நோத்தின் கொள்கை யாது ? அது தோல்வியுற்றதன் காரண மென்ன ? பிரித்தானியருக்கும் கண்டி இராச்சியத்துக்குமிடையே 1803 ஆம் ஆண்டிலே ஏற்பட்ட போருக்கு வழிகோலிய சூழ் நிலைக் காரணிகளை முறைப்படி எடுத்துக் கூறுக. பிரித்தானியர் ஏன் தோல்வியடைந்தனர்.
ஆள்பதி மெயிற்லந்து பிரித்தானிய பரிபாலனத்தை வலுப்படுத்துவதற்குக் கையாண்ட முறைகளை ஆராய்க. மெயிற்லந்தின் பரிபாலனத்தை மதிப்பிடுக.
(βστή. தொமஸ் மெயிற்லந்து ஆள்பதியாக இருந்தமை பற்றி ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை வரைக. நோத், மெயிற்லந்து ஆகிய இலங்கை ஆள்பதிகளின் பரி பானத்தை ஒப்பு நோக்குக.
நிருவாகச் சீர்திருத்தங்களிலும், கண்டியுடன் வைத்த தொடர்புகளிலும் நோத் எத்துணையளவுக்குத் தனது அவசர புத்தியை வெளிப்படுத்தினர் ?

Page 53
அதிகாரம் 6
கண்டியின் வீழ்ச்சியும் கண்டிக் கலகமும்
1. கண்டியின் நிலை
சிறீ விக்கிரம இராஜசிங்கனது ஆட்சி, வல்லாட்சியினதும் தன் அதிகள்ரச் சுதந்திரத்தினதும் வளர்ச்சியின் கதையாகும். பிலிமத்தலா வையின் கைப்பொம்மையாகச் சிம்மாசனமேறிய சிறீவிக்ரமன், நாளடைவில் கண்டி நாட்டின் உண்மை அரசனனன். அதிகாரத் தைச் சுவைக்க ஆரம்பித்த மன்னன், சிம்மாசனத்தைச் சூழ்ந்து நின்ற சிங்களப் பிரதானிகளின் அதிகாரங்களையும் செல்வாக்கினையும்
குறைக்க முயன்றன். பிரதானிகள் மத்தியில் அதி செல்வாக்குடைய
கட்சியினராக விளங்கியவர்கள் பிலிமத்தலாவையும் அவனது ஆதர வாளர்களுமாவர். எனவே அரசன், தனது பரோபகரியாக விளங்கிய முதல் அதிகாரையே அழிக்கத் திட்ம் பூண்டான். ஏனைய பிரதானிக ளும் அரசன் மேல் பொருமை கொண்டதுமன்றி அவனை வேம்பிலும் மேலாக வெறுத்தனர். அவனைச் சிம்மாசனத்தினின்று இறக்கினல், அவர்களின் பொருமைக்கு இலக்கான பிலிமத்தலாவை அரியணை ஏறு வதற்கு வழி இலகுவாகும் என்ற அவர்களின் அச்சம் ஒன்றுதான் அரசனைப் பதவியில் வாழ வகை செய்தது. அரசனை வெறுத்தவர் களும் அவனது கோபாவேசத்தை அஞ்சியவர்களுமான பிரதானிகள் பலர், ஆங்கிலருடன் தொடர்புகள் வைத்தனர். ஆங்கிலரின் துணை கொண்டு அரசனைப் பதவியினின்று துரத்துவதே அவர்களின் நோக்கமாகும்.
அரசனும் பிரதானிகளும் பிணங்கிச் சமர் புரிந்த வேளையில், அவர்கள் ஆட்சி செய்த பிரசைகள் மேலும் மேலும் அதிருப்தியடைந் தனர். பிரதானிகள் ஒற்றுமை பூண்டு, அரசனுக்கெதிராகச் சதிகளில் ஈடுபட்டனர் : அரசனும் தன்னுலியன்ற வகையில் பிரதானிகளின் கொடுக்கை அடக்க முயன்றன். இவ்விதம் போரிட்ட இருவகை அதிகார ஆட்சியாளருக்கிடையே அகப்பட்ட கிராம மக்களின் நிலை மிகவும் அவலமாயிற்று.
1803 ஆம் ஆண்டின் முதற் கண்டிப் போருக்குப்பின் பிலிமத் தலாவை, அரசனின் ஆதரவை இழந்தவனுய், ஈராண்டுகளுக்குத் தன் திசாவையிலேயே வாழ்ந்து வந்தான். 1806 இல் அரசனின் இரண்
ட்ாம் அதிகாராகவும் ஏழு கோறளைகளின் திசாவையாகவும் விளங்கிய
鷺 மீகாஸ்தனே காலஞ்சென்ற பொழுது, எகெலப்பொலை அப்பதவிக்கு
 

கண்டியின் வீழ்ச்சியும் கண்டிக் கலகமும் 93
நியமிக்கப்பட்டான். சில தினங்களுக்குப் பின் அரசன் ஏழு கோற ளைக்கு எகெலப்பொலையையும் மூன்ரும் அதிகாரான மொல் லி கொடையையும் திசாதிபதிகளாக நியமித்தான். அரசன் இருவரைத் திசாதிபதிகளாக நியமித்ததனல் ஏழு கோறளையின் குடிகள் தாம் வழக்கமான சேவைகளையும் இறைகளையும் இருமடங்கு செலுத்துவது வழக்கத்துக்கு மாறெனக் குறைகூறி ஒரு கலகத்தை விளைவித்தனர். இந்நிலையில் பிலிமை, அரசனிடம் சென்று ஏழு கோறளையைத் தனக் கும் தன் மருமகனுன இறத்வத்தைக்கும் கையளித்தால் உடனே கலகத்தை அடக்குவதாகக் கூறினன். அரசன் பிலிமையின் சொற் கேட்டு அத்திசாவணியை அவர்களிடம் ஒப்புவித்துவிடக் கலகம் தணிந்து போகவாயிற்று. இதனைக்கண்ட அரசன், பிலிமையின் மேல் ஐயம் கொண்டான். இதனைத் தொடர்ந்து அரசனுக்கும் பிலி மைக்குமிடையே ஏற்பட்ட பல கருத்து வேறுபாடுகளின் காரணம அவனது செல்வாக்குப் படிப்படியாகக் குறைந்து வரலாயிற்று.
ஈற்றில் தான் அரசனுவது முடியாத கருமமென நன்குணர்ந்த பிலிமத்தலாவை, அரசுரிமையைத் தன் மைந்தனுக்காவது பெற்றுக் கொடுக்கும் முயற்சியில் இறங்கினன். அவன் தன் மைந்தனுக்கும் கிர்த்தி சிறீயின் மகளுக்கும் விவாக ஒழுங்குகளைச் செய்ய முற்பட்டபொழுது அரசனின் உள்ளத்திலெரிந்த கோபத்தில் எண்ணெயை வார்த்ததுக் குச் சமானமாயிற்று. 1811 இல் அரசன், அவனைத் தன் முன்னிஆல யில் அழைத்து, பல குற்றச்சாட்டுக்களை அவன் மேல் சுமத்தி, சொற்ப காலம் சிறையில் வைத்து, அவனை அதிகார் பதவியினின்றும்
ஏனைய உத்தியோகங்களினின்றும் நீக்கி ஒரு சாதாரணப் பிரசை
யாக வீடு திருப்பியனுப்பினுன்.
பிலிமையின் சிரச்சேதம் :
பதவியினின்று நீக்கப்பட்ட பிலிமை, அரசனுக்கு முன்னிலும் அதிக விரோதியாகி, அவனைக் கொலை செய்யச் சதித்திட்டம் வகுத் தான். இவ்வேலை, அரசனின் மெய்க்காப்பாளராகவிருந்த LDG) ITL முகாந்திரம் ஒருவனிடம், அரசன் துயில் கொள்ளும் பொழுது செய்து முடிக்குமாறு ஒப்படைக்கப்பட்டது. அதுவுமன்றி உடு நுவரை, யட்டிநுவரை எனுமிடங்களிலிருந்த அதிகாரிகளைக் குறித்த நேரத்தில் கலகஞ் செய்யுமாறு ஏவிவிட்டான். ஆனல் மலாய வீரர் கள் தமக்கு ஒப்படைக்கப்பட்ட வேலையைச் செய்து முடிக்க முன் உடுநுவரை, யட்டிநுவரை அதிகாரிகள் தாம் செய்து கொண்ட் வாக்கின்படி கலகத்தை விளைவித்தனர். -

Page 54
94 இலங்கைச் சரித்திரம்
இதற்கிடையில் பிலிமையின் சதி அரசனின் காதுக்கெட்டிற்று. இதற்கு முன் இருமுறை இதே குற்றத்துக்காக மன்னிப்புப் பெற்றிருந்த பிலிமையும், அவனுடைய மகன், அவன் மருமகன் இறத்துவத்தை, ஆறு தலைமைக்காரர்கள் என்போரும் கைது செய்யப்பட்டுச் சிறை யில் வைக்கப்பட்டனர். மூன்று நாள் விசாரணையின் பின், எதிரிகள் குற்றவாளிகளாகக் காணப்பட்டு 1812 யூன் மாதம் சிரச்சேதம் செய்யப்பட்டனர். பிலிமையின் மகன் மாத்திரம் பிரதானிகளின் வேண்டுகோளின் பேரில், விடுதலையானன். சதிகாரரின் சொத்துக் கள், உடைமைகள் யாவும் பறிமுதலாயின.
எகெலப்பொலை முதல் அதிகார் :
பிலிமையின் மறைவின் பின்பும், அவனது கட்சி இன்னும் பலம் வாய்ந்ததாக இருந்ததனல், அரசன் எகெலப்பொலையை முதல் அதி காராக நியமித்தான். எகெலப்பொலையின் பொல்லாப் பகைவனும் நான்கு கோறளையின் திசாவையுமான மொல்லிகொடை இரண்டாம் அதிகாராக நியமிக்கப்பட்டான். இந்நியமனத்தினுல் இருவரும் தம் மிடையே ஓயாது போரிடுவரென்றும், தன்னுடன் போரிட அவர் களுக்கு நேரமிராதென்றும் அரசன் எதிர்பார்த்தான். அரசன், நீண்ட காலமாக எகெலப்பொலையில் ஐயங் கொண்டதுமன்றி, அவன் பிலிமை பின் சதியில் சேர்ந்திருப்பான் என்ற எண்ணமும் கொண்டிருந்தான். ஆனல் பிரதா னிகளும் குடிகளும் எகெலப்பொலைக்குச் சார்பாக நின்ற மையினல், அரசன் தன் குரோதத்தை வெளிக்காட்டிக் கொள்ள வில்ஜல. அரசன், தன் ஏனைய பிரதானிகளின் மேல் கொண்ட அச் சமும் கட்டு மீறியது. சதிகளுக்கும் சூழ்ச்சிகளுக்கும் அஞ்சிய அரசன், ஓரறையில் இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்களுக்கு மேல் முயனித்ததில்லை. சதிகாரரெனச் சந்தேகப்பட்டவர்கள் உடனடியா கக் கொலை செய்யப்பட்டனர். அரசன் தன் பிரதானிகளின் அதி காரங்களையும் செல்வாக்கினையும் குறைப்பதற்குத் தன்னலியன்ற வழி
வகைகள் யாவற்றையும் கையாண்டான்.
ருெ பட் பிறவுண்றிக் :
சூழியலில் கைதேர்ந்த ஆங்கிலர் கண்டி, இராச்சியத்தில் நடைபெற்ற இச்சம்பவங்களைப் பரிபூரணமாக அறிந்திருந்தனர். கண்டியின் விவகாரங்களை உடனுக்குடன் அறிய அவர்கள் திறமையான ஏற்பாடுகள் செய்திருந்தனர். GLDufb6v5g1, 6pulaí) (D' Oyly) என்பவரை அரசாங்கத்தின் பிரதான மொழிபெயர்ப்பாளராகவும் கண்டிய விவகாரங்களை மேற்பார்வை செய்யும் அதிகாரியாகவும் நியமித்தார். ஒற்றர்கள் மூலமும் சில கண்டிப் பிரதானிகளுடன் வைத்திருந்த தொடர்புகளின் மூலமும், டீ ஒயிலி, உள்நாட்டு விடயங்களை நன்கறிய முடிந்தது.
 
 

கண்டியின் வீழ்ச்சியும் கண்டிக் கலகமும் 95
1812 மார்ச் 11ஆம் திகதி, சேர் ருெபட் பிறவுண்றிக் இலங்கை யின் ஆள்பதியாகப் பதவியேற்றர். ஆரம்பந் தொட்டு கண்டி இராச்சியத்தை வெற்றி கொள்ள வேண்டுமென்ற எண்ணம் அவரது உள்ளத்தில் ஆழமாகப் பதிந்திருந்தது. பிரித்தானிய நிலப்பரப்புக் களின் மத்தியில் வீற்றிருந்த இந்தக் கட்டுப்பாடற்ற இராச்சியத் துடன் ஒரு திருப்திகரமான உடன்பாட்டை ஏற்படுத்துவது முடியாத கருமமென நன்குணர்ந்த அவர், தனது பதவிக் காலத்தில் இலங்கை யின் இறையுரிமை முழுவதும் பிரித்தானிய முடியில் வீற்றிருக்கச் செய்ய வேண்டுமென்பதை மனமார ஆசித்தார்.
எகெலப்பொலை பக்கம் மாறுதல் :
கண்டியில், எகெலப்பொலையின் பதவி உயர்வு சொற்ப காலத்துக்கே நீடித்தது. 1814 இல் அரசனின் இரண்டாவது திருமண வைபவத்தின் பொழுது, எகெலப்பொலை அரசனின் பாதத்தில் வைத்துப் பணிந்த வெகுமதிகளைப் பெறுமதி குறைந்தவையெனக் கோபங்கொண்டு அரசன் இகழ்ந்து தள்ளி விட்டான். அன்று தொட்டு இருவருக்குமிடையே வெளியரங்கமான பகைமை மூண்டது. எகெலப் பொலை சப்பிரகமுவா மாகாணத்தில், குடிமக்களுக்குத் துன்பங்களை விளைவிப்பதாக முறையீடுகள் அரசனின் செவிக்கெட்டின. அரசன்: எகெலப்பொலையை, அவன் செய்த ஒழுங்கீனங்களுக்குக் கணக்குக் கொடுப்பதற்காக உடனே கண்டிக்கு வரும்படி கட்டளை பிறப்பித்தான். ஆனல் அவன் கண்டிக்குச் செல்ல மறுத்ததுமன்றி அரசனுக்கு விரோ தஞ் செய்யவும் தலைப்பட்டான். அவன் அங்கு திரட்டிய அரசிறையை ச் செலுத்தாது விட்டான்; ஆங்கிலர்க்குப் பல வெகுமதிகளை அனுப்பி அவர்களுடன் தொடர்பும் வைத்தான். அரசன் உடனடியாக அவனை அதிகார் பதவியினின்று நீக்கி, அவனது குடும்பத்தினரைச் சிறையில் வைக்கவும், அவனது சொத்துக்களைப் பறிமுதலாக்கவும் துணிந்தான். மொல்லிகொடையை முதல் அதிகார் பதவிக்கு உயர்த்தி, எகெலப் பொலையைச் சிறைப்பிடித்து வரும்படி கட்டளையிட்டான். 1814 மே மாதம் எகெலப்பொலை ஆங்கிலரிடம் சரண்புகுந்தான். மொல்லி கொடை கலகத்தையடக்கி, 47 தலைவர்களைக் கண்டிக்கு விலங்கிட்டுக் கொண்டு சென்ருன்.
எகெலப்பொலையைப் பிடிக்க இயலாமற் போனதைக்கண்டு கோபங் கொண்ட அரசன், தனது வஞ்சத்தையும் ஆவேசத்தையும் தன் கைக்கெட்டியவர்கள் 5மேல் தீர்த்தான். மு த லா வ து, மொல்லிகொடையால் கண்டிக்குக் கொண்டு வந்த கைதிகள் யாபேரும் படு கொலை செய்யப்பட்டனர். அடுத்து எகெலப் பொலையின் மனைவியும் மக்களும் கொடிய சித்திரவதை செய்யப்பட்டு

Page 55
96 இலங்கைச் சரித்திரம்
உயிர் நீத்தனர். அவர்கள் கொலை செய்யப்பட்ட தினத்துக்குப் பிந்திய இரு தினங்களாகக் "கொடுங் கோலனின் அரண்மனையொன்றைத் தவிர கண்டி முழுவதும் ஒர் இழவு வீடு போன்று காட்சியளித்தது. துயரத்தின் மிகுதியினல் மக்கள் ஓர் அடுப்பிலாவது தீயை மூட்டாது, உணவு சமைக்காது, உபவாசமாகவிருந்தனர்' என டேவி கூறியுள்ளார்.
பின்பு ஆங்கிலருடன் தொடர்பு கொண்டிருந்ததாக ஐயங் கொள்ளப்பட்ட பலர், பிக்குகள் சிலர் உட்பட, அவனது கோபத்துக்குப் பலியாக்கப்பட்டனர். ஈற்றில் அரசன், ஏழு கோரளைக்கு மொல்லி கொடையையனுப்பி அங்கு பலரைச் சிரச் சேதம் செய்யுமாறு கட் டளையிட்டான். அவர்கள், ஆங்கிலருடன் தொடர்பு வைத்திருந்தமை யும், ஆங்கில ஆள்புலங்களில் நிலவிய ஒழுங்கையும் அமைதியையும் ஆசித்தமையுமே இச்செயலுக்குப் பிரதான காரணங்களாகும்.
இவ்விறுதிக் கொடுஞ்செயல், அரசனின் தலைவிதியை நிர்ண யித்தது. அரசன் மட்டில் விசுவாசங் கொண்டிருந்த பிரதானிகள் யாவரும் அவனது ஈன இரக்கமற்ற பாதகச் செயல்களைக் கண்டு திகைத்தனர். பலர் கொழும்புக்கு ஒடி ஆங்கிலரிடம் சரண்புகுந் தனர். வேறு சிலர், ஆங்கிலர், கண்டியின் மேல் படையெடுத்துக் கொடுங்கோலரசனைச் சிம்மாசனத்திலிருந்து நீக்க வேண்டுமென ஆள் பதியை வேண்டி நின்றனர். ஆங்கிலரும் தமக்குக் கண்டியரின் நிறைந்த ஆதரவு இருப்பதனல், தாம் எடுக்கும் முயற்சி, வெற்றியில் முடியுமெனக் கண்டனர்.
எகெலப்பொலை, கொழும்பில் ஆள்பதி பிறவுண்றிக்கைச் சந் தித்து, கண்டியின்மேல் படையெடுப்பதற்கான ஒரு திட்டத்தை வகுத்துக் காட்டினன். அதே நேரத்தில் மொல்லிகொடையினதும் ஏனைய பிரதானிகளினதும் ஆதரவைப் பெறுவதற்கு முயற்சிகள் செய்யப்பட்டன. ஈற்றில் இம்முயற்சியிலும் வெற்றிகிட்டியது. ஆங்கிலர் கண்டியின் மேல் போர்ப்பிரகடனம் செய்வதற்கு ஒரு காரணம் எழும்வரை காத்து நின்றனர். சிறீ விக்கிரமனும், அவர்களைப் பலநாள் காத்திருக்க வைக்கவில்லை.
2. இரண்டாம் கண்டிப் போர்
காரணம் :
1814 நவம்பர் மாதம், ஆங்கிலேயரின் தாழ்பிரதேச ஆள் புலங்களில் வசித்த பத்து வணிகர் கண்டி நாட்டுக்கு வியாபாரஞ் செய்யச் சென்ற பொழுது, கண்டியர் அவர்களை ஒற்றர்களென நினைத்து, அவர்களது மூக்கு, செவி, கரங்களைச் சிதைத்து பரி
 

கண்டியின் வீழ்ச்சியும் கண்டிக் கலகமும் 97
தாபமான கோலத்துடன் திருப்பியனுப்பினர். எழுவர் வழியில் இறந்துவிட, எஞ்சிய மூவர் கொழும்பையடைந்து தமக்கு விளை விக்கப்பட்ட கொடுமையை ஆள்பதிக்கு அறிவித்தனர். இது நிகழ்ந்த சில தினங்களுள் சிறீ விக்கிரமன், தன் படைகளைக் கொண்டு சீதாவாக்கைக்கருகாமையிலுள்ள ஆங்கிலக் குடிகளின் பொருட்க ளைச் சூறையாடுவித்து, அவர்களது வீடுகளுக்கும் எரியூட்டுவித்தான்
இவற்றைக் கேள்விப்பட்ட பிறவுண்றிக், மேலும் பொறுத்திருப்பது முறையாகாதெனத் தீர்மானித்து, கண்டியின் மேல் படையெடுக்கத் தீர்மானித்தான்.
படையெடுப்பு :
ஆள்பதியின் ஆய்வுரைக்கழகம் உடனடியாகப் படைகளைத் திரட்டத் தீர்மானித்தது. சென்னையிலிருந்து ஐந்து சைனியங்கள் வந்திறங்கின. 1815 ஜனவரி 10 ஆம் நாள், பிரித்தானியப் படை கள் கண்டியை நோக்கிப் புறப்பட்டன. 1804 இல் கண்டியை நாலா பக்கங்களிலும் தாக்குவதற்காக வகுக்கப்பட்டுப் பின்னர் கைவிடப் பட்ட திட்டம், இப்பொழுது பயன்படுத்தப்பட்டது. கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, திருகோணமலை, நீர்கொழும்பு எனுமிடங்களிலிருந்து சைனியங்கள் ஒரே முக மாக வெளிப்பட்டன. ஆள்பதி பிறவுண்றிக் தானே போருக்கான சகல திட்டங்களையும் வகுத்தான். எகெலப்பொலையும் ஆள்பதியின் பாதுகாப்பின்கீழ் சென்ருன்.
ஜனவரி 12 இல், பிரித்தானியர் உறுவன்வல்லையை அடைந்த பொழுது ஆள்பதி பிறவுண்றிக், கண்டி நாட்டு மக்களுக்கு ஒரு விஞ்ஞாபனத்தை விடுத்தான். 'ஆங்கில மாநிலங்களின் தளகர்த்தனும் ஆள்பதியுமான பிறவுண்றிக், ஐம்பெரும் மாகாணங்களின் வேண்டு கோளைச் சிரமேற் கொண்டு, ஆங்கிலரின் கெளரவத்தைக் காத்தற்கும், கண்டி மக்களைக் கொடுங்கோல் ஆட்சியினின்று விடுத்தற்கும், கண்டி யில் மலபார் ஆட்சியை ஒழித்தற்காகவுமே போருக்கு எழுந்தனன். ஆங்கிலர் போருக்கு எழுந்தது கண்டி நாட்டவருக்கு எதிராகவன்று. கொடுந்தன்மையும் அதர்ம சிந்தையுமுடையவனும் அறத்தைப் பழித்து மறத்தைப் பூண்டவனும், மானிட இயல்பு கடந்து மக்களை வருத்திய வனுமான கண்டியரசனுக்கு மாருகவே என்று அறிக' எனக் கூறிற்று அவ்விஞ்ஞாபனம். மேலும் பிறவுண்றிக், படையெடுத்து வரும் களுக்கு, அமைதியான சிந்தையுடைய எந்தக் கண்டிப் பிரஜை ச வேண்டியதில்லையென்றும் உறுதியான கட்டுப்பாடு நிலைநாட் மன்றும், எல்லா உயிர்களும் சொத்துக்களும் பாதுகாக்கப்

Page 56
98 இலங்கைச் சரித்திரம்
படுமென்றும், உணவுகளுக்கு விலை கொடுக்கப்படுமென்றும் உத்தரவாதம் செய்தான். பெளத்த சமயமும் விகாரைகளும் புனிதமானவையெனக் கொள்ளப்படும்; பிரதானிகளின் கெளரவமும் உரிமைகளும் பாதுகாக்கப்படும்; எல்லாப் புராதன சட்டங்களும் மரபுகளும் நிலைநாட்டப்படும் என, பிறவுண்றிக் மே லும் உறுதி மொழி கூறினன்.
கண்டியுை ஆங்கிலர் வெற்றி கொள்ளல் :
பிறவுண்றிக், இவ்விதமாகக் கொடுத்த உறுதிமொழிகளின் பேருகக் கண்டி மக்கள் ஆங்கிலருக்கு எதிர்ப்புக் காட்டாது விட்டனர். பெப்ரவரி 8 இல், ஆங்கிலர் மூன்று கோறளையை அடைந்த பொழுது, மொல்லிகொடை அவர்களைச் சந்தித்துத் தன் திசாவணியை (நான்கு கோறளை) அவர்களிடம் ஒப்படைத்தான். ஆங்கிலப் படைகள் யாவும் கணேத்தன்னையில் ஒருங்கு சேர்ந்து 14 ஆம் நாள் நகரத் தினுள் புகுந்தன. பிரதானிகளாலும் மக்களாலும் கைவிடப்பட்டு, நண்பர்களையும் அதிகாரத்தையும் இழந்த அரசன், தன் மனைவிமார் இருவருடனும் தமிழ் வீரர் சிலருடனும் நகரத்தை விட்டு ஓடி, குடி யானவன் ஒருவனின் குடிசையில் அடைக்கலம் புகுந்தான்.
பிரித்தானியர் இவ்விதமாக இரண்டாம் முறையாக கண்டியைக் கைப்பற்றிய பொழுது அவர்களது நிலை 1803 ஆம் ஆண்டின் நிலையி லும் பார்க்க மிகமிகச் சிறந்த த ரா கக் காணப்பட்டது; அப்பொழுது அவர்கள் கண்டியினுள் புகுந்த வேளையில் தனித்தும் உதவியின்றியும் தடுமாறினர். ஆனல் இப்பொழுது அவர்களுடன் சென்ற எகெலப்பொலையும் மொல்லிகொடையும் முந்திய பிலிமத் தலாவையிலும் பார்க்கச் சிறந்த நண்பர்களாக விளங்கினர். மேலும் கண்டி நாட்டு மக்கள் ஆங்கிலரை மனமார வரவேற்றனர்.
ஜனவரி 10 ஆம் நாள் விடுக்கப்பட்ட விஞ்ஞாபனம் மீண்டும் பிரசுரிக்கப்பட்டது. மூன்று கோறளை, நான்கு கோறளை, சப்பிர கமுவா ஆகிய பிரிவுகள் முறைப்படி பிரித்தானிய மன்னனின் பாது காப்பின் கீழ்க் கொண்டுவரப்பட்டன.
பெப்ரவரி 18 ஆம் நாள், எகெலப்பொலை அரசனின் மறை விடத்தையறிந்து, தன் போர்வீரர்களுடன் அங்கு சென்று வீட்டின் சுவரைத்தகர்த்து உள்ளே புகுந்தனர். அவர்கள், அரசனைப் பிடித் 2 துப் பின் கட்ட்ாய்க்கட்டி, முகத்திலே உமிழ்ந்து, பரிகாசம் செய்து, * பின்பு யோண் டி ஒயிலி என்ற ஆங்கில அதிகாரியின் கைகளில் ஒப்புவித்தனர் அரசனும் அவனது மனைவியரும் கொழும்புக்கு
 

கண்டியின் வீழ்ச்சியும் கண்டிக் கலகமும் 99
அனுப்பப்பட்டனர். சில மாதங்களின் பின் 1816 ஜனவரி 24 ஆம் நாள், கோண்வாலிஸ் (Cornwallis) எனும் கப்பல் வழியாய் சென்னை இராசதானியைச் சேர்ந்த வேலூருக்கு அவரை அனுப்பினர். அங்கு அவன் 1832 ஆம் ஆண்டு இறந்தான்.
சிறீ விக்கிரமனின் குனுதிசயங்கள் :
கண்டி இராச்சியத்தின் இறுதி அரசனின் ஞாபகம், அவன் புரிந்த கொடுமைகளினலும் அட்டூழியங்களினலும் களங்கப்பட்டுள்ளது எகெலப்பொலையின் குடும்பத்தினரிடம் அவன் பழி வாங்கியமை அவனைப் பொல்லாக் கொடுங்கோலன் என்றே நினைவு கூரச் செய் கின்றது. எனினும், அவனைக் கொடுங்கோல் மன்னன் என்று மாத்திரமே தீர்ப்புக் கூறுவது நியாயமாகாது.
சிறீ விக்கிரமன் இயற்கையில் ஒரு கொடூரணல்லன். அவன் விவேகமும் ஆளுமையும் குறைந்தவன், திட சித்தம் இல்லாதவன், ஆற்றலில் குறைந்தவன். அவனைத் தன் அதிகாரத்தின் கீழ் வைத் திருக்கலாமென்ற எண்ணத்துடன் பிலிமத்தலாவை அவனைச் சிம்மாசனத்திலமர்த்தினன். அவன் அரியணை ஏறிய நாள் தொடக் கம் பிலிமத்தலாவையின் சூழ்ச்சிகள் அதிகரிக்கவே, மற்றைய பிரதானிகளின் உதவியுடன், தன் பாதுகாவலனிடமிருந்து பாதுகாப்புப் பெறலாமென அரசன் கண்டான். ஆனல் அவன் தன் ஆதரவாளரிலும் ஐயம் கொண்டான்; ஏனெனில் அவர்கள் அவனை ஒர் அந்நியனென்று வெறுக்கவும், பிலிமைத்தலாவையின் மேல் கொண்ட பொருமையின் காரணத்தினலேயே அவனை ஆதரிக்கவும் செய்தனர். எல்லாப் பிரதானிகளும் அவனின் பகைவர்களாயிருந்தமையில்ை அவர்களை ஒருவரோடொருவர் போரிடச் செய்வதன் வழியாகவே அவன் தன் சிம்மாசனத்தைப் பாதுகாக்கலாமெனக் கண்டான்.
ஆரம்பத்தில் சிறீ விக்கிரமன், தன் பிரசைகளுக்கு உதவி செய்யவும் அவர்களைப் பிரதானிகளின் கொடூரங்களினின்று பாது காக்கவும் முயற்சித்தான். மக்களைக் காப்பதற்கு அவன், பிரதானி களின் அதிகாரங்களைக் குறைத்தான்; தம் அதிகாரங்களை இழக்க விரும்பாத பிரதானிகள்பிரித்தானியருடன் சூழ்ச்சிகளில் இறங்கினர். சிறீ விக்கிரமன், தன் வாழ்நாள் முழுவதையும் பகை, சூழ்ச்சி, சதி,
அச்சம், விசுவாசமின்மை எனும் சூழ்நிலையிலேயே கழித் தான்.
பிரதானிகளிடம் கொண்ட அச்சம் அவனை அவர்களைச் சந்தேகக் கண் கொண்டு நோக்கச் செய்தது. சந்தேகம் அவனைக் கொடுரனக்கிற்று. தனது உறுதியைத் தளராமல் காக்க மதுவை மிகுதியாக அருந்தினன். சூழ்ச்சியாளர் எனச் சந்தேகப்பட்டவர்களை இரக்கமின்றிப் பொல் லாத் தண்டனைகளுக்குள்ளாக்கினன். *、
* و از

Page 57
100 இலங்கைச் சரித்திரம்
அவன் செய்த நற்சேவைகளுள், அழகும் வனப்பும் மிகுந்த கண்டி வாவியையும், தலதா மாளிகாவையின் எட்டுக் கோணப் பகுதியையும் அமைத்தமை குறிப்பிடற்பாலது.
கண்டி மரபு மன்றம் :
* பிரதானிகளின் அழைப்பினல் தூண்டப்பட்டும், மக்களின் ஆரவாரத்தினல் வரவேற்கப்பட்டும், மாட்சிமை தங்கிய பிரித்தானிய மன்ன்ரின் படைகள், கண்டி இராச்சியத்தினுள் புகுந்து தலைநகர் வரை ஊடறுத்துச் சென்றுள்ளன. தேவ பராமரிப்பு அவர்களுடைய முயற்சிகளைப் பரிபூரணமான வெற்றியினல் ஆசீர்வதித்துள்ளது. உள் மாநிலங்களின் அரசன், அவர்கள் கைவசமாயினுன் அரசும் மாட்சிமை தங்கிய பிரித்தானிய மன்னரின் பிரதிநிதி கைவசமாயிற்று' எனப் பிரித்தானியரின் விஞ்ஞாபனம் கூறியது. எல்லோரினதும் விருப் பத்துக்கிணங்க சிறீ விக்கிரமன் சிம்மாசனத்தினின்று இறக்கப் பட்டதன் பயணுகக் கண்டி இராச்சியத்தில் புது அரசாங்கமொன் றினை அமைக்க வேண்டிய வேலையினைப் பிரித்தானியர் செய்து முடித் தனர். ஆள்பதிக்கும் பிரதானிகளுக்குமிடையே நடைபெற்ற பேச்சு வார்த்தைகளின் பின் உடன்பாடு ஏற்பட்டது.
1815 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் நாள், சனின் சமஸ்கான மண்டத்தி Pಾ??? ဦ??? :? சார்பில் ஆள்பதியையும், மறுபுறம் கண்டி மக்களின் சார்பில் பிர தானிகளையும் கொண்ட சரித்திரப் புகழ் பெற்ற மரபு மன்றம் கூடிற்று. மன்றத்தில் உடன்படிக்கை வாசிக்கப்பட்டு சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது. இவ்வுடன்படிக்கை மீண்டும் சிங்களத்தில் வாசிக்கப் பெற்றபின் பிரதானிகள் ஒருவர் பின் ஒருவராக அதில் தம் கைச்சாத்தையிட்டனர். அடுத்து ஆங்கிலக் கொடி உயர்த்தப்பட, பீரங்கிகள் முழங்க, மாட்சிமை தங்கிய மூன்றம் ஜோர்ஜ் மன்னன் இலங்கை முழுவதற்கும் அரசனெனப் பிரகடனம் செய்யப்பட்டார். உடன்படிக்கையை வா சி க் கும் பொழுது பிறவுண்றிக், முதற் சந்தர்ப்பத்தில், கண்டி இராச்சியத்தைத் தமக்குக் கீழ்ப்பட்ட ஒர் அரசாக அமைக்க எண்ணங்கொண்டார் என்பது புலப்படும். அக்காலத்தில் இந்தியாவில் பிரித்தானிய முடியின் இறை யுரிமையை ஏற்ற பல அரசுகள் தமது உள்நாட்டு விவகாரங்களைத் தாமே தமது சொந்த அதிகாரிகளின் ஆட்சியின் கீழ் நிருவகித்து வந்தது போன்று, கண்டி இராச்சியமும், பிரித்தானிய முடியின் மேலதிகாரத்தை ஏற்க வேண்டுமென்பதும், தமது உள்நாட்டு விவ காரங்களைத் தாமே தமது பிரதானிகளின் துணைகொண்டு பழைய சட்ட திட்டங்களுக்கும் பழக்க வழக்கங்களுக்குமேற்ப நடாத்த வேண்டுமென்பதும் பிறவுண்றிக் இட்ட திட்டமாகும்.
 
 
 

கண்டியின் வீழ்ச்சியும் கண்டிக் கலகமும் IOI
அவ்வுடன் படிக்கையின் பிரதான முறிகளாவன :
1. சிறீ விக்கிரம இராஜசிங்கன் ஒரு மன்னனுக்குரிய கடமை களைக்செய்ய என்றும் தவறியதால் அப்பட்டத்திற்கோ, அதனுடன் சார்ந்த அதிகாரங்களுக்கோ உரிய உரிமைகளை இழந்தவணுகி விட்டான். அதனல் அவன் அரசுப் பதத்திலிருந்து வீழ்ந்தவனனன் என்றும் அப்பதத்தினின்று அகற்றப்பட்டானென்றும் அறிவிக்கப் படுகின்றது. அவன் குடும்பத்தாரும், இரத்த முறை அல்லது 'இன முறையால் அவன் குலத்திற் சார்ந்தவரும் என்றும் அரசணை யினின்று விலக்கப்பட்டவராவர். கண்டி மாநில ஆள்புலத்திற்கு மலபார் இனத்தவர் கொண்ட சகல உரிமையும் பட்டமும் இதனல் அழிக்கப்பட்டன.
2. கண்டி மாநில ஆள்புலம் பிரிட்டிஷ் பேரரசர்க்குப் பொரு ளாக்கப்பட்டுள்ளது. அவர் அதிகாரம் இப்பொழுதுள்ள காலத்திற்கு இலங்கை ஆள்பதி அல்லது பதிலாள்பதியாலும், அதிகாரம் பெற்ற அவர்க்குரிய முகவராலும் கொண்டு நடாத்தப்படும். ஆனல் பிரித் தானிய அரசாங்கத்தால் சட்டமுறைப்படி நியமிக்கப்பட்ட அதிகார் மார், திசாவைமார், மொகத்தாளைமார், கோறளைமார், விதானை மார், மற்றும் பிரதம தலைமைக்காரர் ஆகியோருக்கு அவர் தம் பதத்திற்குரிய சட்டமுறையிலமைந்த உரிமைகள், பேறுகள், அதிகாரங்கள் யாவும் உறுதியாக்கப்படும் ; மற்றைய எல்லா வகுப்பு மக்களுக்கும் அவர்தம் உடல், உடைமை ஆகியவற்றின் காப்பும் அவர்களிடை வழங்குவனவும் நிறுவப்பட்டனவுமான சட்டங்கள், வழக்குகள், வழமைகள் ஆகியவற்றிற்கியைந்த குடியியல் உரிமைகள் ஆகியவை உறுதியாக்கப்படும்.
3. இம்மாநில மக்களும் தலைவர்களும் கடைப்பிடிக்கும் பெளத்த சமயம் மாற்றப்படாது என்று அறிவித்தல் செய்யப்படுகின்றது. அதன் கிரியைகள், அதன் குருமார், வழிபாட்டிடங்கள் ஆகியவை பேணப்பட்டுப் போற்றப்படும்.
4. உடல் துன்புறுத்து, உறுப்புக் குறைப்பு ஆகியவையும் அவற் றின் வகைகளும் தடைசெய்யப்பட்டு ஒழிக்கப்பட்டுள்ளன.
ளும த g
5. பிரிட்டிஷ் ஆள்பதி, அல்லது பதிலாள்பதி, அரசாங்க முக வர் அல்லது முகவர்கள் மூலமாகப் பெற்ற அறிக்கையொன்றின்
பேரில் விடும் எழுத்துக்கட்டளை ஒன்றினலன்றி, எந்த ஒரு குடி வாழ்,
வானையும் கொலைத்தண்டனைக்கு ஆளாக்கலாகாது.
g). 7 A

Page 58
II 0 2 இலங்கைச் சரித்திரம்
பிறவுண்றிக்கின் வெற்றிக்கான காரணங்கள் :
கண்டியை வெற்றி கொள்ளும் முயற்சியில் போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் ஆங்கில ஆள்பதி ஒருவரும் தோல்வி கண்ட இடத்தில் பிறவுண்றிக் வெற்றி கண்டார். கண்டியின் மேல் நடாத்தப்பெற்ற முந்திய படையெடுப்புக்களை அவதானிக்குமிடத்தில் கண்டியை வெற்றி கொள்ள முடியாமற் போனமைக்கு இரு முக்கிய காரணங் களுள அவையாவன: ஒன்று கண்டியின் இயற்கை அரண்கள்; இரண்டு மக்கள் அரசனிடம் கொண்டிருந்த விசுவாசம். கண்டியின் இயற்கை அரண்களை ஊடறுத்துச் செல்வது முற்றிலும் முடியாத கருமமன்று. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், நோத் அனுப்பிய படைகள் யாவும் கண்டியின் தலைநகரம் வரை முன்னேறி வெற்றி கொண்டன. ஆயின் வெற்றி கொள்ளப்பட்ட நகரத்தைத் தம் ஆதிக்கத்தின் கீழ் வைப்பதே முடியாத கருமமாயிற்று. கண்டிக்குள் புகுந்த படைகளை மலைகளும், நதிகளும், காடுகளும் கொழும்பு நகரத்தினின்று துண்டித்தன. இவ்விதமாக உதவியின்றித் தனிமையாக்கப்பட்ட படைகளைக் கண்டியர், மலைகளிலும், காடுகளிலும் மறைந்து நின்று தாக்கி நாசப்படுத்தினர். உதாரணமாக, ஒல்லாந்தர் 1763 இல் கண்டியை வெற்றி கொண்டு அங்கு ஒன்பது மாதமாக ஒரு படையை நிறுத்தி வைத்தனர். இதற்கிடையில் கண்டியர் அவர்களுடைய கரை நாட்டுத் தொடர்புகளையும், உணவுத் தளபாடங்களின் வருகையையும் துண்டித்ததனுல் வேறு வழியின்றி, கொழும்புக்குப் பலத்த ஆள், பொருள் சேதத்துடன் பின்வாங்கினர்.
பிறவுண்றிக்கினுடைய வெற்றி பெரும்பாலும் கண்டி இராச்சி யத்தின் மாறிய புதிய அரசியல் நிலைகளினலேயே ஏற்பட்ட தெனலாம். 1803 இல் நோத் கண்டியை ஆக்கிரமித்த பொழுது, தம் மன்னர் மட்டில் விசுவாசமாயிருந்த கண்டி மக்கள் தாம், பகை வரைத் தோற்கடித்தவர்கள். ஆனல் 1815 இல் கண்டி நாட்டின் பிரதானிகள், பிக்குகள், விவசாயிகள் யாவரும் சிறி விக்கிரம இராஜசிங்கனை வெறுத்து அவனுக்கெதிராக எழுந்தனர். இதற்கு சிறீ விக்கிரமனுடைய நடத்தையே காரணமாயமைந்தது. 1812 க்குப் பின்னர் அவன் பிரதானிகளைப் புறக்கணித்து, நாயக்க வம்சத்தைச் சேர்ந்த தன் இனபந்துக்களையே நம்பி நடந்தான். அதிருப்தியடைந்த பிரதானிகள், மன்னனுக்கு எதிராகச் சூழ்ச்சி களிலும் சதிகளிலும் ஈடுபட்டனர். இவற்றையறிந்த அரசன், நாட்டினின்று எல்லா எதிர்ச் சக்திகளையும் அழித்தொழிக்கத் திட்டம் தீட்டினன். அதி சிறிய சந்தேகங்களுக் கெல்லாம் மக்கள் சித்திரவதை அல்லது கொலை செய்யப்பட்டனர். நாட்டில் அவனது கொடுங்

Oggry
கண்டியின் வீழ்ச்சியும் கண்டிக் கலகமும் 103
கோலாட்சி தலைவிரித்தாடியது. மக்கள் பாதுகாப்புடன் வாழ முடியாமற் போயிற்று. சந்தேகப்பட்டவர்களின் மனைவி மக்களும் கொலை செய்யப்பட்டனர். அரசனின் கொடுங்கோலாட்சி அதிகரிக்க, சதித் திட்டங்களும் பெருகின. ஈற்றில் அரசனுக்கு, பிரதானி ஒரு வனவது விசுவாசமாக இருக்கவில்லை. பெளத்த பிக்குகளும், பிரதானிகளின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாதலால் பிரதானிதளைப் பகைமைப் படுத்திய அரசன், பிக்குகளின் எதிர்ப்புக்கும் ஆளானுன். பல பிக்குகள் சதித் திட்டங்களுக்கு உடந்தையாகவிருந்தனர். சந்தே கத்துக்கு ஆளான பிக்குகளையும் அவன் கைது செய்து, பகிரங்கமாகக் கொலை செய்வித்தான். பிக்குகள் பலர், சிறைவைக்கப்பட்டு அவமானப் படுத்தப்பட்டனர். இம் மிருகத்தனமான நியாயம், நீதியற்ற செயல்களினல் அரசனுக்கிருந்த எதிர்ப்புப் பன்மடங்கு பெருகிற்று.
கண்டி மக்கள் தம் பிரதானிகளிடமும் பெளத்த சங்கத்தினி டமும் அளப்பரிய மரியாதையும் அபிமானமும் கொண்டவர்கள். பிரதானிகளுக்கும் பிக்குகளுக்கும் இளைக்கப்பட்ட அவமானத் தையும் , அநீதியான செயல்களையும் கண்டு பாமர மக்கள் கொதித்தனர்g அம்மக்கள் தங்கள் கண்கள் முன் சிம்மாசனத்தில் வீற்றிருந்து கொலை செய்தவனும் தம் மதத்தை நிந்தித்தவனுமான அரசன், சிம்மாசனத்தினின்று இறக்கப்டும் நாளை நோக்கி ஏங்கி நின்றனர்.
சிறி விக்கிரம இராஜசிங்கனே, மக்களைத் தனது பக்கம் இழுக்கவும், அவர்கள் புரட்சி செய்யாதிருக்கச் செய்யவும் அரும் பாடுபட்டான். அவன் மக்களைத் துன்புறுத்திய பிராதானிகளைத் தண்டித்தான்; உணவும் மற்றும் முக்கிய பொருள்களும் நியாயமான விலைகளுக்கு விற்கப்பட வேண்டுமென கட்டளை பிறப்பித்தான். அவன் நாட்டில் பல பொது வேலைகளை ஆரம்பித்து, மக்களிடம் அளவுக்கு மிகுந்த இராசகாரிய சேவையைப் பெற்றன். கிளர்ச்சிகள் ஏற்படாவண்ணம் மக்களை ஒரு கிராமத்தினின்று இன்னெரு இராமத்துக்கு மாற்றினன். வெகுவிரைவில் நாட்டு மக்கள் அனைவரும் அரசனின் பகைவர்களானர்கள்.
எனவே பிறவுண்றிக்கினுடைய படைகள் கண்டி இராச்சியத் தினுள் புகுந்த பொழுது பிரதானிகளும் மக்களும் அரசனைக் கைவிட்டு, ஆங்கிலர் பக்கம் திரும்பி, தம்மை அரசனின் கொடுங் கோலாட்சியினின்று விடுவிக்குமாறு வேண்டினர். இந்நிலை தான், முந்தியவர்கள் தோல்வியடைந்த இடத்தில், பிறவுண்றிக் வெற்றி பெற்றமைக்கு முக்கிய காரணமாகும்.

Page 59
104 இலங்கைச் சரித்திரம்
நோத்தினுடைய படையெடுப்புக்கு நேர்ந்த அவலம் தனக்கும் ஏற்படாவண்ணம் பாதுகாப்பதற்கு, பிறவுண்றிக் பரிபூரணமான ஆயத்தங்களுக்குப் பின்னரே கண்டியைத் தாக்க முற்பட்டார். அதிட்டவசமாக படையெடுப்பைத் திட்டமிடுவதற்கு அவருக்கு எகெலப்பொலையின் உதவியும் கிடைத்தது. இந்தியாவினின்று போதிய அளவு துருப்புக்கள் வரவழைக்கப்பட்டபின் கொழும்பு, காலி, திருகோணமலை, மட்டக்களப்பு எனுமிடங்களினின்று நான்கு சைனி யங்கள் மலைநாட்டை நோக்கிப் புறப்பட்டன. உதவிப்படைகளும் ஆயத்தமாகப் பின் சென்றன. முன்சென்ற படைகளுடன் தொடர் புகள் முறிந்து போகாவண்ணம் விசேட ஏற்ப்ாடுகள் செய்யப் பட்டன. இவ்விதமாக ஆள்பதி, கண்டியில் எந்நிலை ஏற்படினும் அதனை மேற் கொள்வதற்கு வேண்டிய சகல ஆயத்தங்களுடனுமே சென்ருர். ஆனல் ஈற்றில் மன்னனின் தனித்த நிலை, இவ்வாயத் தங்களை வீண் விரயம் செய்தன.
மறுபுறம், இராணுவ பலமும் சிறந்த ஆட்சி முறையினையும் கொண்ட பிரித்தானிய வல்லரசு, காலப்போக்கில் பாம்பு தவளையை விழுங்குவது போன்று, கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றியிருக்கும் என்பதற்குச் சற்றேனும் ஐயமில்லை. இந்தியாவில் பிரித்தானியரின் ஆள்புலப் படர்ச்சிக்குரிய காரணங்களை ஆராயுமிடத்து, டொட்வல் என்ற சரித்திராசிரியர், 'பலமும், ஒழுங்கான ஆட்சி முறையையு முடைய ஒரு நாட்டைச் சூழ, சிறு அரசுகள் இருப்பின், அவையாவும் நாளடைவில் அப்பெரும் வல்லரசுக்கு இரையாகிவிடும்" எனக் கூறுகிருர், அக்கருத்தின்படி, கண்டி இராச்சியம் உரிய காலத்தில் ஆங்கிலேயருக்குச் சொந்தமாகியேயிருக்கும். அந்நிகழ்ச்சி பின்னர் நடந்தேருமல் 1815 இல் நடந்தேறியமைக்குக் காரணம் சேர் ருெபட் பிறவுண்றிக்கினுடைய நடவடிக்கைகள் தான் எனக் கொள்ளலாம்.
3. கண்டியின் நிருவாகம் (1815-1818)
கண்டி இராச்சியத்தின் புது நிருவாக ஒழுங்குகள், ஆங்கிலர் 1815 இல் கண்டிப் பிரதானிகளுடன் செய்த உடன்படிக்கையின் அடிப் படையிலேயே ஏற்படுத்தப்பட்டன. அ வ் வு ட ன் படி க்  ைக யி ல் "பிரித்தானிய அரசாங்கத்தால் சட்ட முறைப்படி நியமிக்கப்பட்ட அதிகார்மார், திசாவைமார், மொகத்தாலைமார், கோறளைமார், விதானமார் மற்றும் பிரதம தலைமைக்காரர் ஆகியோருக்கு, அவர் தம் பதத்திற்குரிய சட்ட முறையிலமைந்த உரிமைகள், பேறுகள், அதிகாரங்கள் யாவும் உறுதியாக்கப்படும்" என ஆங்கிலர் பிரதானி
...

கண்டியின் வீழ்ச்சியும் கண்டிக் கலகமும் 105
களுக்குக் கொடுத்த உத்தரவாதத்துக் கிணங்க, பிறவுண்றிக் கண்டி யின் குடியியற் பாலனத்தைப் பழைய சட்ட திட்டங்களினதும் பழக்க வழக்கங்களினதும் அடிப்படையிலேயே நடாத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். பிரதானிகள், தத்தம் பழைய மாகாணங் களின் பரி பா ல ன த் துக் கு ப் பொறுப்பாளிகளாக்கப்பட்டனர். மொல்லிகொடை தொடர்ந்து முதல் அதிகாராகவும் ஏழு கோறளை களின் திசாவையாகவும் பொறுப்பேற்றன். கப்புவத்தை இரண்டாம் அதிகாராக நியமனம் பெற்றன். கெப்பிற்றிப்பொலா ஊவாவுக்கும், பிலிமையின் மகன் நான்கு கோறளைகளுக்கும் திசாவைகளாக நிய மனம் பெற்றனர். எனினும் பழமையின் மத்தியில், ஆங்கிலர் தமது புதுமையான ஒழுங்குகளை ஏற்படுத்த முயன்றனர். விசேடமாக நீதி பரிபாலன விடயங்களில் எல்லா மக்களுக்கும் பட்சபாதகமற்ற நீதியை வழங்கவும், அவர்களைப் பிரதானிகளின் கொடூரங்களிலிருந்து Tg, காக்கவும் திடம் பூண்டனர்.
டிறவுண்றிக், கண்டி இராச்சியத்தின் பரிபாலனம், கரையோர மாநிலங்களின் பரிபாலனத்தினின்று வேருக அமைக்கப்பட வேண்டு மெனக் கருதினர். இதற்கிணங்க அவர் 1815 இல், கண்டியின் பிரித்தானியத் தானிகராக யோண் டி ஒயிலி என்பவரை நியமித்தார். அவருக்குதவியாக கண்டியிலும் பதுளையிலும் இரு முகவர்கள் நியமிக் கப்பட்டனர். பின்னர் மூன்றம் முகவரொருவர் உறுவன்வலையில் நியமிக்கப்பட்டார். கண்டியின் அதிகார்கள், திசாவைகள் யாவரும் டி ஒயிலியினதும் அவரது உதவியாளரினதும் மேற்பார்வையின் கீழ் தான் மாகாணப் பரிபாலனத்தை நடாத்தினர். 1816 இல், கண் டியின் நிருவாகத்துக்குப் பொறுப்பாக மூன்று ஆணையாளரைக் கொண்ட ஓர் ஆணையாளர் குழுவினை (Board of Commissioners) ஆள்பதி நியமித்தார். டி ஒயிலி, ஆணைக்குழுவின் தலைவராகவும், உத வித் தானிகர், கண்டி அரசாங்க முகவர் என்பவர்கள் குழுவின் மற்றைய உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டனர். மேலும் பரிபால னத்தை வலுப்படுத்த கண்டியில் நீதிபதி ஒருவரும் இரத்தினபுரியில் நான்காவது முகவரும் நியமிக்கப்பட்டனர்.
இவ்விதமாக 1815 ஆம் ஆண்டு உடன்படிக்கையும் அதைத் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்ட புதுப் பரிபாலன ஒழுங்குகளும் கண்டி மக்களையும் பிரதானிகளையும் திருப்திப்படுத்தும் நோக்குடன் மிகத் தாராள சிந்தையுடன் செய்யப்பட்டன. கண்டியில் ஏற்பட்ட புதுப் பரிபாலன முறை பிரதானிகளின் அதிகாரங்களைத் தொடர்ந்து பாதுகாத்துக் கொடுத்தது. பிரதானிகள் சிங்கள அரசனுக்கு இழைத்த நம்பிக்கைத் துரோகத்தின் வழியாகவே ஆங்கிலர் கண்டி

Page 60
106 இலங்கைச் சரித்திரம்
யின் அரசதிகாரத்தைக் கைப்பற்ற முடிந்ததென்பதை நன் குணர்ந்த ஆங்கிலர், இதுகாலவரை பிரதானிகள் அனுபவித்து வந்த உரிமைகளையும் அதிகாரங்களையும் அனுமதித்து, அவர்களைச் சமா தானப்படுத்த வெகுவாக முயற்சித்தனர். ஆனல் பிரித்தானியர் எத்துணைச் சலுகைகளைக் காட்டியபோதும் இரு பகுதியா ருக்கு மிடையே முரண்பாடுகள் எழவே செய்தன.
ob ஒழுங்கும் கட்டுப்பாடுமுள்ள பிரித்தானியரின் ஆட்சிக்கும் மானியமுனிறயின் அடிப்படையில் இயங்கிய கண்டியரின் ஆட்சிமுறைக்கு மிடையே மலைக்கும் மடுவுக்குமிடையிலுள்ள வேறுபாடுகள் காணப் பட்டன. ஆளுவோர் ஆளப்பட்டவரிலிருந்து சாதி, மதம், மொழி, பழக்க வழக்கங்கள் ஆகிய சகல துறைகளிலும் வேறுபட்டு நின்றனர். இரு பகுதியினரையும் ஒன்றுபடுத்தவல்ல அனுதாபமோ அன்றேல் கவர்ச்சியோ அவர்களுக்கிடையே இருக்கவில்லை; அவர்களைப் பிரித்து வைப்பதற்குக் காரணிகள் நிறைய இருந்தன. இந்நிலையில் சிங்கள வல்லாட்சிக்கு அடிபணிந்து நடந்த பிரதானிகளும் மக்களும் அந்நி யரின் புது அரசாங்கத்துக்குப் பணிந்து நடப்பர், என எதிர்பார்ப்பது அசாத்தியமாயிற்று. தாம் வெறுத்த மன்னன் ஒருவனைச் சிம்மா சனத்தினின்று இறக்குவதற்காக மாத்திரம் ஆங்கிலரை வரவழைத்த கண்டியர், அவர்கள் தொடர்ந்து தமது நாட்டில் நிலைத்து நிற்ப ரென்று எதிர்பார்க்கவில்லை. அவர்கள் ஆங்கிலருக்குக் கூறியதாவது 'நீங்கள் அரசனைச் சிம்மாசனத்தினின்று நீக்கிவிட்டீர்கள். மேலும் தேவைப்படுவது ஒன்றுமில்லை. நீங்கள் எங்களை விட்டு விடை பெறலாம்'. இக்கூற்று கண்டியரின் உள்ளக்கிடக்கையை மிகத் திறம் பட எடுத்துக்கூறும். ஏனெனில் அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாருக, ஒரு வல்லாட்சி இன்னுமொன்றுக்கு இடங்கொடுத்ததையே நடைமுறையில் கண்டனர்.
சிங்கள மன்னர் காலத்தில் பிரதானிகள், அரசன் ஒருவனுக்கு மாத்திரமே அடங்கி நடந்தனர். ஆனல் இப்பொழுது அவர்கள் அரசாங்க உத்தியோகத்தன் ஒவ்வொருவனுக்கும் படை அதிகாரிக்களு கும் கீழ்ப்பட்டு நடக்க வேண்டியதைக் கண்டு மனம் புழுங்கினர். பல பழைய பழக்கங்களும் மரபுகளும் ஆங்கிலரினல் புறக்கணிக்கப் பட்டன. சாதிப்பாகுபாடு முறையில் ஊறியபிரதானிகளுக்கு ஆங்கிலரின் நடுநிலை நீதிமுறை பிடிக்கவில்லை. கடவைகளை அகற்றிக் கட்டுப்பாடு களின்றி வியாபாரம் செய்வதற்குப் பிரித்தானியர் ஏற்படுத்திய புதுச் சட்டங்களினல் பிரதானிகளுக்குக் கிடைத்து வந்த கடவைப்பணம் இல்
லாமற் போயிற்று. - -
இன்னும் பெளத்த சங்கமும் புது ஒழுங்குகளில் அதிருப் யடைந்தது. ,ே கண்டி மாநிலத்தில் ஒரு கிறிஸ்தவ அரசாங்கம்
(.
 

கண்டியின் வீழ்ச்சியும் கண்டிக் கலகமும் - 107
உயர்வடைந்தமை பெளத்த சமயத்துக்குப் பெரும் ஆபத்தை விளைவிக்குமென அஞ்சினர். முன்னர் கண்டி மன்னர்கள் பெளத்த சமய வழிபாடு, ஊர்வலங்கள், ஆசாரங்கள் என்பனவற்றில் பங்கு பற்றியதைப் போன்று புது, ஆட்சியாளர்கள் செய்யமுடியாமற் போனமை அவர்களுக்குப் பெரும் இழப்பாயிற்று. பெளத்த மன்னர் களின் கீழ் பிக்குகள் அனுபவித்த அரசியல் செல்வாக்கும் மறைந்தது. இக்காரணங்களினல் சங்கம், ஆங்கிலர் ஆட்சியை மனமார வெறுத்தது.
பிரதானிகளையும், பெளத்த சங்கத்தையும் போன்று குடியான வர்களும் புதுப் பரிபாலன முறையில் திருப்தியடையவில்லை. கரையோர மாநிலங்களில் ஆட்சி புரிந்த ஐரோப்பிய அரசாங்கங்களுக்கு 300 ஆண்டுகளாகப் பகைமை காட்டி வந்தவர்களும் தமது சுதந்திரத்தைப் பேணிக்காத்து வந்தவர்களுமான கண்டியர், புது அந்நிய அரசாங்கத்தை ஏற்கக்கூடியவர்களல்லர்.
இங்ங்ணம் 1815 க்குப் பிந்திய ஆண்டுகளில் கண்டியின் சகல வகுப்பினர் மத்தியிலும் அதிருப்தி கொழுந்து விட்டெரிந்து கொண்டே வரலாயிற்று. அக்காலத்தில் ஆங்கிலருக்கு எதிராக ஒழுங்குள்ள சதித்திட்டம் ஒன்றும் உருவாகவில்லை. எனினும் எல்லோரும் ஒரேமுகமாக ஆங்கிலரைத் துரத்தி விட வேண்டுமென ஆசித்தமை
ஒழுங்குக்கு மேலான ஒற்றுமையை ஏற்படுத்திற்று.
எங்கும் அதிருப்தி குடிகொண்டிருந்த போதிலும் 1815 ஆம் ஆண்டு உடன்படிக்கை மூன்று ஆண்டுகளுக்குக் கண்டி நாட்டில் நிலைத்தது. ஏனெனில் ஆங்கிலர் நாட்டை விட்டு நீங்கியவுடன் எகெலப்பொலை உடனடியாகக் கண்டியின் அரசபதவியைக் கைப்பற் றுவான் என்பதை பிரதானிகள் நன்கறிந்திருந்தனர். தவிரவும் பிரதானிகளின் பழைய பகைமைகள் வெளிப்பட்டவுடன் கண்டி இராச்சியம் ஒரு போர்க் களமாக மாறியிடுமென அஞ்சினர். இதன லேயே அவர்கள் தம்முள் ஒருவன் அரசனவதை விடுத்து அந்நிய ரின் ஆட்சியைச் சசிக்க ஆயத்தமாயிருந்தனர். இவ்விதமாக உள்ளே குமுறிக்கொண்டிருந்த எரிமலை ஒரு சிறு சம்பவத்தினல் வெடித்த பொழுது அது பெரும் புரட்சியாக மாறிற்று.
4. கண்டிக் கலகம்
கலகத்தின் உடன் காரணம் : ". . . .
வெல்லச எனும் பகுதியிலுள்ள சோனகர், பிரித்தானியப்
படைகளுக்குச் செய்த சேவைகளுக்குக் கைமாருக், தம்முள் அச்சி
மரிக்கார் என்பவனைத் தமது பகுதிக்குத் தலைம்ைக்காரனகப்
ܪ,ܐ ܕ

Page 61
08 இலங்கைச் சரித்திரம்
பெற்றனர். இச்செயல். சிங்களப், பிரதானிகளுக்குப் பொருமையை யும் ஆத்திரத்தையும் உண்டு பண்ணிற்று. ஏனெனில் பெரும் வர்த்தகரும் செல்வந்தருமான சோனகர் சிங்களப் பிரதானிகளுக்கு பரிசுகள், கைலஞ்சங்கள், திறைகள் மூலம் நல்ல வருமானத்தை ஈட்டிக் கொடுத்தவர்கள். புது நியமனத்தினுல் இவை யாவும் பறி போய்விடுமென அஞ்சிய சிங்களர், சோனகர் மேல் கொண்டனர்.
L65)55Gô0)LD
இந்நிலையில் 1817 செப்றம்பர் மாதம், எவராலும் முன்பின் அறியப்படாத ஒரு பெளத்த பிக்கு, வெல்லசவுக்கு அண்மையிலிருந்த காட்டினில் தோன்றி, தானே கண்டி அரசனின் உறவினனென்று பிரகடனம் செய்தான். பதுளையிலிருந்த துணைத் தானிகர் சில்வெஸ்டர் வில்சன், இதனைக் கேள்விப்பட்டு, வெல்லசவின் தலைமைக்காரனன அச்சி மரிக்காருக்குப் போலியுரிமைக்காரனைக் கைதுசெய்யுமாறு கட்டளையிட்டார்.
கலகம் : '
முஸ்லிம் தலைமைக்காரனைக் கண்டவுடன் சிங்களர் சீறிச் சினந்து கோபாவேசம் கொண்டெழுந்து, அவனை அகப்படுத்தி அடித்து சிறையில் வைத்தனர். வில்சன், மரிக்காரை மீட்கத் தானே வெல்லசைக்குப் புறப்பட்டுச் சென்ற பொழுது, சிங்களர் வழியில் ஒழித்திருந்து அவனையும் அவனுடன் சென்ற மூன்று ஆங்கிலப் போர் வீரரையும் தம் அம்புக்கு இலக்காக்கிக் கொலை செய்தனர். கலகம் கண்டி மாநிலம் எங்ங்ணும் பரவிற்று.
டி ஒயிலி, கலகத்தை அடக்க ஊவாவின் திசாவையான கெ ப் பி ற் றி ப் பொலை  ைய வெல்லசைக்கு அனு ப் பி ன ன். ஆனல் அங்கு சென்ற கெப்பிற்றிப்பொல சிங்கள மக்களின் மனே நிலையையறிந்து, கலகக்காரருடன் ஒன்று சேர்ந்து தானே கலகத்துக்குத் தலைமை தாங்கச் சம்மதித்தான். அவன் கண்டி மாநிலங்களில் நிறைந்த செல்வாக்கும் மக்களின் மதிப்பையும் பெற்றவன். ஐரோப் பியர் கூட அவனது ஆளுமை, திறமை, நேர்மை எனும் அரிய இலட்சணங்களைப் போற்றிப் புகழத் தயங்கவில்லை. அவனுக்கு ஆதரவு நாலாபக்கங்களிலும் கிடைக்கவே, கலகம் முன்னெரு பொழுதும் காணுத ஒற்றுமையையும் உற்சாகத்தையும் சிங்களர் மத்தியில் ஏற்படுத்தியது. மொல்லிகொடை ஒருவனைத் தவிர, கண்டி மாநிலத்தின் பிரதானிகள் அனைவரும் அவனை ஆதரித்தனர்.
ஆங்கிலேய்ரின் நிலை மிகவும் கவலைக்குரியதாயிற்று. அவர்கள் இச்சமரில்'தோல்வியடையவும் கண்டியினின்று துரத்தப்படவும் நேரிடுமோவென அஞ்சினர். இந்நிலையில் மக்டொனல்ட் என்ற
 
 
 
 

கண்டியின் வீழ்ச்சியும் கண்டிக் கலகமும் 109
ஆங்கிலத் தளபதி சிங்களரை மற நெறியால் அடக்கத் திட்டமிட்டான். 1818 பெப்ரவரி 21 இல், கண்டி நாட்டில் படைச்சட்டம் பிரகடனம் செய்யப்பட்டது. ஆயுதம் தாங்கியோர் காணப்பட்ட இடங்களில் கொன்றெழிக்கப்பட்டனர். சிங்களரின் வீடுகள் தீக்கிரையாக்கப் பட்டன; அவர்களுடைய ஆடு மாடுகள், நிலபுலங்கள், வயல்கள், ! மரங்கள் யாவும் சர்வ நாசஞ் செய்யப்பட்டன. யானைகளைக் கொண்டு பயிர்களை அழித்தனர்; குளங்களைத் திட்டமிட்டுச் சிதைத்தனர். கெப்பிற்றிப்பொலாவைக் கைது செய்ய உதவி செய்பவனுக்கு 1000 பகோடாக்கள் வெகுமதி தருவதாக பிறவுண்றிக் அறிவித்தார்.
படிப்படியாக ஆங்கிலரின் நிலை சீர்ப்பட்டு வந்தது. சென்னை
யினின்று படையுதவி வந்து சேர்ந்தது. மொல்லிகொடையின்
விசுவாசத்தினுல் கண்டிக்கும் கொழும்புக்குமிடையே இருந்த
தொடர்புகள் ஆங்கிலருக்குப் பெரும் பாதுகாப்பையளித்தன.
ஆயுதங்கள், துருப்புக்கள், உணவு யாவும் கண்டியை இலகுவாக
வந்தடைந்தன. எனினும் போர் பல மாதங்களாக நடந்து வந்தது.
معنی
1818 ஆகத்தில், கண்டியின் மேல் உரிமை பாராட்டியவன் ஒரு போலி மதகுரு என அறியப்பட்டதன் பின், பிரதானிகளினுடைய ஒற்றுமை சீர்குலைந்து பழைய பகைமைகளும் பொருமைகளும் மீண்டும் தலைதூக்கின. மடுகலையும் சில பிரதானிகளும் கெப்பிற்றிப்பொலாவு டன் விரோதம் கொண்டனர். உண்ண உணவின்றி, இருக்க இருப் பிடமின்றி துன்பப்பட்ட பாமர மக்களினது அக்கறை கலகத்தில் குன்றியது.ஆங்கிலர் பிரதானிகளை ஒருவர் பின் ஒருவராகக் கைப்பற்றிச் சிறைப்படுத்தினர். 1818 ஒற்ருேபர் 30 இல், ஆங்கிலத் துருப்புக்கள் கெப்பிற்றிப்பொலாவை அனுராதபுரத்துக்கு அருகாமையில் கைப் பற்றின. இரு நாட்களுக்குப் பின் மடுகலையும் சிறைப்படுத்தப் பட்டான். 1819 பெப்ரவரி 12 இல் படைச்சட்டம் நிராகரிக்கப் பட்டது. -
கெப்பிற்றிப்பொலாவும் மடுகலையும் படை மன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு கொலைக்குத் தீர்க்கப்பட்டனர். எகெலப்பொலையும் மற்றும் தலைவரும் மொரீஷஸ் தீவுக்கு நாடு கடத்தப்பட்டனர். எகெலப்பொலை அங்கு 1829 இல் தனது 59 ஆவது பராயத்தில் இறந்தான்.
கெப்பிற்றிப்பொலா, வாழ்ந்ததைப் போலவே வீரத்துடன் உயிர் நீத்தான். 1818 நவம்பர் 25 ஆம் நாள், கெப்பிற்றிப்பொலா வும் மடுகலையும் போகம்பரை குளத்துக்கு அருகாமையிலிருந்த கொலைக் களத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவன் 、*
தன் :
*、

Page 62
জড়লা
110 இலங்கைச் சரித்திரம்
முகத்தைச் சுத்தம் செய்து கொண்டையைத் தலையின் மேல் ஒரு முடிச்சாகக் கட்டி, மந்திரங்கள் ஓதி முடிந்தபின், கொலைக்காரன் ஒரு கூரிய வாளினல் அவனது சிரசைத் துண்டித்தான்.
இலங்கை சுதந்திரம் பெற்ற பின்பு 1951 நவம்பர் 26 ஆம் நாள், கண்டி மைதானத்தில் வீரபுருஷன் கெப்பிற்றிப்பொலாவின் ஞாபகார்த்தமாகக் கட்டப் பெற்ற் சிலையில் அவனது மண்டையோடு
சகல மரியாதைகளுடனும் அடக்கம் செய்யப் பெற்றது.
5. 1818 ஆம் ஆண்டின் புது ஒழுங்குகள்
கண்டிக் கலகம் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்த வல்ல பயங்கரச் சம்பவமாகும். மலைநாட்டினின்று ஆங்கிலரைத் துரத்தி விட வேண்டுமெனத் திடமாகக் கையாளப்பட்ட முயற்சி, ஒரு நிலை யில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பான சூழ்நிலையையும் பெற்றி ருந்தது. அம்முயற்சி சித்தியடைந்திருப்பின் ஆங்கிலரின் நிலை, 1803 இல் அவர்கள் அனுபவித்த துன்பங்களிலும் பார்க்கப் பரிதாப கரமானதாக முடிந்திருக்கும். தம்மைக் கண்டி நாட்டினுள் வர வழைத்த அதே பிரதானிகள் தான், கலகத்தை ஏற்படுத்தவும் அதற்குத் தலைமை தாங்கவும் செய்தனர், என்பதைக் கண்டு ஆங்கிலர் மனம் புழுங்கினர். 1815 முதல், தாம் பிரதானிகளைச் சமாதானப் படுத்த கைக்கொண்ட முயற்சிகளினல் எவ்வித நன்மையுமில்லை யென்பதையும் அவர்கள் நன்குணர்ந்தனர்.
கண்டிக் கலகம், பிரதானிகளின் செல்வாக்கினையும் அதிகாரங் களையும் தகர்த்தெறிய வேண்டியதன் அவசியத்தை மிகவும் தெளிவாக ஆங்கிலருக்கு எடுத்துக் காட்டிற்று. சிறீ விக்கிரம இராஜசிங்கனின் காலத்தில் ஒழுங்கான ஆட்சியை ஏற்படுத்துவதற்கு அவர்கள் முட்டுக் கட்டையாக இருந்தது போன்றே, ஆங்கிலரின் ஆட்சியிலும் இடை யூறுகளை விளைவிப்பரென ஆங்கிலர் அஞ்சினர். அவர்களின் செருக்கும் ஆணவமும் அடக்கியொடுக்கப்பட்ட பின்னரே கண்டியில் ஒழுங்கான ஆட்சி ஏற்படுமென ஆங்கிலர் முடிபு செய்தனர். இதற்கிணங்க, 1815ஆம் ஆண்டின் உடன்படிக்கையை மாற்றியமைக்கத் திட்ட மிட்டனர். 1818 நவம்பர் 21 இல், ஒரு புது விஞ்ஞாபனம் பிர கடனம் செய்யப்பட்டது.
இதன்படி, கண்டி இராச்சியத்தின் பரிபாலன ஏற்பாடுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாற்றங்கள் செய்யப்பட்டன.
1818 ஆம் ஆண்டின் புது ஒழுங்குகளின் மிகவும் முக்கிய அம்சம்
v Ká
k
 
 
 
 

கண்டியின் வீழ்ச்சியும் கண்டிக் கலகமும் II. I
பிரதானிகளின் விசாலமான அதிகாரங்கள் வெகுவாகக் குறைக்கப் பட்டத்ேயாகும். 9வது விதி கூறியதாவது "அதிகார்கள், திசாவை கள், பிரதம தலைமைக்காரர், மற்றும் தலைமைக்காரர் யாவரும் ஆணைச்சபையினர், பிரிட்டிஷ் முகவர் ஆகியோரின் ஆணைகளின் பேரால் மட்டுமே கடமை செய்யக் கடப்பாடுடையர்; வேறு வழியில் அவர்கள் செய்தலாகாது". இச்சட்டத்தினுலும் அவர்களுக்கு மாதச் சம்பளம் கொடுக்கப்படும் என்ற விதியினலும் பிரதானிகள், பழைய ஆட்சி யாளர் எனும் நிலையையிழந்து, அரசாங்க ஊழியர்கள் என்ற கீழ் நிலைக்குத் தாழ்த்தப்பட்டனர்.
கண்டியின் நிருவாகத் துறையில் பல மாற்றங்கள் செய்யப் பட்டன. ஆணைச்சபை தொடர்ந்து இயங்கிய பொழுதும் கண்டி மாகாணங்கள் ஆள்பதியினல் நேர்முகமாகப் பரிபாலிக்க ஆரம்பிக்கப் பட்டன. கண்டி மாநிலம் பதினெரு பெரும் பிரிவுகளாகப் பகுக்கப் பட்டு, ஒவ்வொரு பிரிவுக்கும் ஓர் அரசாங்க முகவர் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். கண்டிக்கு அருகாமையிலிருந்த ஐந்து பிரிவுகளின் முகவர்கள், தாழ்பிரதேசப் பகுதிகளைப் போன்று கொழும்பிலிருந்த அரசாங்கத்துக்கு பொறுப்பாக்கப்பட்டனர். ஏழு கோறளை, சப்பிரக முவா எனும் இரு பிரிவுகளைத் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இரா ணுவ அதிகாரிகளே முகவர்களாக நியமிக்கப்பட்டனர்.
திசாவைகளை நியமிக்கவும் பதவியினின்று நீக்கவும் ஆள்பதிக்கு மாத்திரம் உரிமையிருந்தது. ஏனைய சுதேச அதிகாரிகள், பிரித் தானிய தானிகரினல் நியமிக்கப்பட்டனர். சில மாகாணங்களுக்குத் திசாவைகள் நியமிக்கப்பட்டனர். திசாவைகள், இறட்டே மகத்ம யாக்கள், ஏனைய கீழ்ப்பட்ட தலைமைக்காரர் யாவரும் புரட்சிக்கு முன் அனுபவித்த அதிகாரங்களை இழந்தவர்களாய், அரசாங்க முக வர்களின் கடும் மேற்பார்வையின் கீழ் சேவை செய்தனர். இச்சுதே அதிகாரிகள் சம்பளம் பெற்றதுடன், தமது நிலபுலங்களை வரி களின்றி அனுபவித்தனர். குடியானவர்களிடமிருந்து வரிகளை அற விடும் அதிகாரமும், இராசகாரிய சேவைகளைக் கட்டளையிடும் அதிகாரமும் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டன. 1818 க்குப் பின் அரசாங்க முகவர்கள் மாத்திரமே இராசகாரிய சேவையைப் பெற அதிகாரம் பெற்றனர். -
-
அரசாங்க முகவர்கள், திசாவைகளைத் தவிர்ந்த ஏனைய அதிகாரிகளைத் தண்டிக்க, சிறையிலிட, பதவியினின்று தற்காலிகமாக நீக்க அதிகாரம் பெற்றனர். திசாவைகளும் தலைமைக்காரரும் தமது நீதியதிகாரங்களையும் இழந்தனர். குடியியல், பாதக வழக்குகளை, முகவர்கள் விசாரணை செய்து தீர்ப்புக்கூறினர். *
**”、

Page 63
112 இலங்கைச் சரித்திரம்
இவ்விதமாக, கலகத்துக்கு முன் திசாவைகளும் தலைமைக் காரரும் அனுபவித்து வந்த இறைகளை வசூலித்தல், நீதி, நிருவாக அதிகாரங்கள் யாவும் கலகத்துக்குப் பின் அரசாங்க முகவர்களின் கைகளுக்கு மாற்றப்பட்டன.
வினுக்கள் 。 1.? ஆங்கிலரின் 1803 ஆம் ஆண்டு கண்டிப் படையெடுப்பு தோல்வியிலும் 1815 ஆம் ஆண்டுப் படையெடுப்பு வெற்றியிலும் முடிவதற்குக் காரணங் கூறுக. - 2. 1815 க்குப் பின்னர் கண்டி மாகாணங்களில் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்துவதற்கு பிறவுண்றிக் எடுத்துக் கொண்ட முயற்சிகளை விபரிக்குக. - 3. 1815 ஆம் ஆண்டிற்கும் 1818 ஆம் ஆண்டிற்கும் இடையே கண்டி மாகாணங்களில் ஏற்படுத்தப்பட்ட பிரித்த னிய நிருவா கம் எவ்வகையில் அவர்களின் கரையோர மாகாண நிருவாகத் திலிருந்து வேறுபட்டிருந்தது என்பதை விளக்குக.
4, 1817-18 மலைநாட்டுப் புரட்சியின் காரணங்களையும் அதன்
பெறுபேறுகளையும் காட்டுக.
5. எக்காரணங்களை முன்னிட்டு பிறவுண்றிக் கண்டியின் மேல் படையெடுத்தார் ? அவர் செய்த ஆயத்தங்களை விவரித்து,
அவரது வெற்றிக்கான காரணங்களையும் ஆராய்க. 6. '1815 இல் கண்டி இராச்சியத்தின் வீழ்ச்சி, பிரதானமாக உள்நாட்டுக் காரணங்களினலேயே நிகழ்ந்தது' எனும்
கூற்றினை ஆராய்க.
7. 1817-18 இல் கண்டிய மக்கள் பிரித்தானிய பரிபாலனத்தை எதிர்த்ததன் காரணமென்ன ? இவ்வெதிர்ப்பு தோல்வியடைந்த தற்குக் காரணமென்ன p
8. கண்டி இராச்சியம் 1815 இல் வீழ்ச்சியடைந்தமைக்குரிய -
காரணங்களை ஆராய்க.
9. 1815 ஆம் ஆண்டின் கண்டி உடன்படிக்கை, 1818 இல் மாற்றப்பட்ட முறையினையும் அதற்கான காரணங்களையும் கூறுக. 1815 ஆம் ஆண்டின் உடன்படிக்கைக்கும், 1818 ஆம் ஆண்டின் கலகத்துக்கும் பின்னர், கண்டி மாகாணங்களின் நிருவாக முறைகளை ஒப்பு நோக்குக. 鑫
 
 
 

அதிகாரம் 7 இலங்கையில் பிரித்தானியர் ஆட்சி
வலுவாக்கப்படல் (1819-32)
பிரித்தானியர் இலங்கையை ஆட்சி புரிந்த காலத்தினை மூன்று பெரும் பிரிவுகளாகப் பகுக்கலாம். 1796 முதல் 1832 வரையுள்ள பகுதி முதற் பகுதியாகும். இக்காலத்தில் ஆங்கிலர், தமது ஆட்சியை உறுதியாகத் தாபிக்கவும் பரிபாலனத்தை வலுப்படுத்தவும் முயன் றனர். இரண்டாவது பகுதியான 1832 தொடக்கம் 20 ஆம் நூற் முண்டின் ஆரம்பம் வரையுள்ள காலத்தினை, இலங்கையின் விருத்திக் காலமெனக் கூறுவர். இவ்வாண்டுகளில் இலங்கை பல வழிகளிலும்
துரிதமாக முன்னேறியது. விசேடமாக, பெருந்தோட்டப் பயிர்ச்
செய்கை பரந்து, நாட்டின் பொருளாதாரத்தைப் புரட்சிகரமாக
மாற்றியது. பொருளாதார மாற்றங்கள் சமூக, நிருவாக மாற்றங்
களுக்கு வழிகாட்டின. மூன்ருவது பகுதி, இருபதாம் நூற்றுண்டுடன் மலர்ந்தது. இக்காலத்தில் ஆங்கிலரின் கைகளிலிருந்து நடுவகுப்பினர் அரசியலதிகாரத்தைப் படிப்படியாகக் கைப்பற்றினர். வெகுவிரை வில் இவ்வதிகாரம் பாமர மக்களின் கைகளுக்கு மாறவே, இலங்கை சுதந்திரமும் பெறலாயிற்று.
இம் முப்பகுதிகளுள் முதலாம் பிரிவினது வரலாற்றின் ஒரு பகுதியான 1796-1818 இடைப்பட்ட ஆண்டுகளின் நிகழ்ச்சிகளும் அக்காலத்தில் இலங்கையைப் பரிபாலனம் செய்த மூன்று ஆள்பதி களின் வரலாறுகளும் முன்னதிகாரங்களிற் கூறப்பட்டன. முதலாம் பிரிவின் எஞ்சிய பாகமான 1819 க்கும் 1832 க்கும் இடைப்பட்ட ஆண்டு களின் வரலாற்றையும், முன்னதிகாரங்களில் கூறப்படாத முக்கிய
அம்சங்களையும் இவ்வதிகாரம் எடுத்துரைக்கும்.
1796-1818 எனும் காலத்தினுள் ஏற்பட்ட மிகவும் முக்கிய மான மாற்றம் யாதெனில் பிரித்தானிய மன்னனின் இறையுரிமை யின் கீழ், இலங்கை முழுவதும் ஒன்று பட்டதாகும். முதற் சந்தர்ப் பத்தில் ஒல்லாந்தரின் உடைமைகளாகவிருந்த கரையோர மாநிலங் கள், பிரித்தானியரின் கைகளுக்கு மாறின. அடுத்த நிகழ்ச்சியாக இப்பிரதேசங்கள், கிழக்கிந்திய வர்த்தக சங்கத்தின் ஆணையினின்று பிரித்தெடுக்கப்பட்டு ஒரு முடிக்குரிய குடியேற்ற நாடாக அமைக்கப் பட்டன. ஈற்றில் போர்த்துக்கேயரினதும் ஒல்லாந்தரினதும் காலங் களில் ஒரு சுதந்திர அரசாகத் திகழ்ந்த கண்டி, இர்ர்ச்சியமும், ஆங் கிலருக்குச் சொந்தமாயிற்று. கரையோர மாநிலங்களும் கண்டி, இ. 8 ' ** ** **

Page 64
114 இலங்கைச் சரித்திரம்
மாநிலமும் பிரித்தானிய மன்னனின் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டிருந்த போதிலும் அவ்விரு பிரதேசங்களுக்கும் இரு வகையான பரிபாலன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கண்டி மாநிலம் தனியொரு நிருவாக அமைப்பின் கீழ் பரிபாலிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத் தககது.
1815 ஆம் ஆண்டினதும் 1818 ஆம் ஆண்டினதும் கண்டி உடன் படிக்கைகளுக்குப் பொறுப்பாகவிருந்த ஆள்பதி சேர். ருெபட் பிறவுண்றிக் தனது வேலை முற்றுப் பெறமுன் 1820 இல் ஒய்வு பெற்றர்.
அவருக்குப்பின் சேர் எட்வட் பாண்ஸ், ஈர் ஆண்டுகளுக்குத் தற்காலிக ஆள்பதியாக (1820-22) வும், அவருக்குப்பின், சேர் எட்வட் பஜற் (1822-24) ஆள்பதியாகவும் பதவியேற்றனர். 1824 இல் பாண்ஸ், மீண்டும் இலங்கைக்கு நிரந்தர ஆள்பதியாகத் திரும்பி, 1831 வரையும் தங்கி நின்ருர்,
ஆங்கிலர் ஆட்சியின் முதல் முப்பது ஆண்டுகளில் இலங்கையைப் பரிபாலனம் செய்த நான்கு ஆள்பதிகளுள், நோத் ஒருவர் மாத்திரமே திறமை குறைந்தவர் எனலாம். மற்றைய மூவரும் இராணுவத்தில் உயர் பதவிகளை வகித்த அதிகாரிகளாவர்.
1802 இல் இலங்கையில் ஏற்பட்ட முடிக்குரிய குடியேற்ற நாட்டு ஆட்சிமுறையின்படி, நாட்டின் சகல அதிகாரங்களும் ஆள்பதி யின் பொறுப்பில் விடப்பட்டன. பிரித்தானிய பாராளுமன்றம் ஒன்றுக்கு மாத்திரம் பொறுப்பாகவிருந்த ஆள்பதி, சர்வாதிகாரி போன்று பரிபாலனத்தை நடாத்தினர். நோத், இராணுவ அதிகாரி களுடன் முரண்பட நேர்ந்தது. ஆனல், உயர் இராணுவ அதிகாரி களாக விளங்கிய மற்றைய ஆள்பதிகள், இராணுவ அதிகாரத்தையும் தம் கைகளிலேயே வைத்திருக்கத் தொடங்கினர். ஆள்பதிகள் நால்வ ரும் நன்னேக்குக் கொண்டவர்கள். 1801 இல் திரு டண்டஸ் நோத்துக் குக் கொடுத்த கட்டளையில், ஆள்பதி மனிதாபிமானமுடைய, ஒள் ளிய, தாராள, நிதருணமான, கொள்கைகளைக் கடைப் பிடிக்கவேண்டும் என்றும், அவர், தம் அதிகாரங்கள் இலங்கை வாழ் மக்களின் நலன் களுக்காக உபயோகிக்க வேண்டுமென்றும் விதித்திருந்தார். எல்லா ஆள்பதிகளும் இக்கட்டளைப் பிரமாணங்களுக்குட்பட்ட ஒள்ளிய வல் லாட்சியை 1 நடாத்தினர் என்பதை மறுப்பதற்கில்லை.
ஆள்பதித்குத் துணை புரியவென ஓர் ஆய்வுரைக் கழகம் இருந்தது. ஆனல் ஆள்பதியின் அதிகாரங்களைக் குறைக்கவோ, அவற்றுக்கு வரம்பிடவோ அதற்கு அதிகாரமில்லை.
| I. Enlightened Despotism
Reis

சேர். எட்வட் பாண்ஸ்: ‹,fእህ፧
சேர். எட்வட் பாண்ஸ், உவாட்டலூப் போரில், உவெலிங் ரனின் இராணுவ அதிகாரிகளுள் ஒருவராகச் சேவை புரிந்தவர். இராணுவப் பயிற்சி பெற்றவராயினும், அவர் இத்தீவினை வந்தடைந்த ஓராண்டுக்குள் அதன் நிருவாக, பொருளாதார பிரச்சினைகளை பூரணமாக விளங்கிக் கொண்டார். இதன் பயனக அவர் நாட்டின் பிரதான தெருக்களை அமைத்தவராகவும், பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையின் ஆரம்ப கர்த்தாவாகவும் விளங்கினர். இலங்கை யின் பொருளாதார விருத்திக்கு வழிவகுத்தவர்களுள், அவரது சேவையை மிஞ்சியவர்கள் வேறிலர் எனக் கூறின் மிகையாகாது. 1820 பெப்ரவரி முதலாம் நாளன்று சேர். ருெபட் பிறவுண்றிக்கின் பின் பதவியேற்ற பாண்ள் , இலங்கையின் தேவைகளுள் 'முதன்மையானது தெருக்கள், இண்டாவது தெருக்கள் மூன்றுவதுட தெருக்கள் என்பதாகும்.
1. குடியியற் சேவை
நாட்டு நிருவாகத்தின் தலைவர் ஆள்பதி. பரிபாலனப் பொறுப்பு முழுவதும் குடியியற் சேவையைச் சார்ந்தது.
இலங்கைக்கெனப் பிரத்தியேகமான குடியியற் சேவையை ஆரம்பித்தவர் நோத் ஆவர். ஆனல் அச்சேவையை உறுதியான அத்திவாரத்தில் அமைத்த பெருமை மெயிற்லந்துக்கே உரியது. 1808 இல் மெயிற்லந்து குடியியற் சேவையின் தரத்தையும் திறமையை யும் அதிகரிக்கப் பல மாற்றங்களைச் செய்தார், என்பதை முன் அதி காரத்தில் கண்டோம். அவர் ஏற்படுத்திய ஒழுங்குகள் மாற்றமின்றி 1832 வரை நீடித்தன.
இக்காலத்தில் குடியியற் சேவையின் அதி உயர் அதிகாரி குடி யேற்றச் செயலாளராவர். அவருக்கு அடுத்த முக்கிய உத்தியோகத்தர் குடியேற்றப் பொருளாளராவர். இவ்விருவருக்குப்பின் முக்கியத்துவம் பெற்றவர்கள் மாகாணங்கனின் அரசாங்க முகவர்கள் ஆவர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு அல்லது இரு உதவி முகவர்கள் துணைவராக நியமிக்கப்பட்டனர். உத்தியோகபூர்வ அடிப்படையில் அவர்கள் இறை வருமான அதிகாரிகளாவர்; 19 ஆம் நூற்றண்டில், நீதிபரிபாலனக் கடமைகளையும் அவர்கள்

Page 65
ாலு"
1 16 இலங்கைச் சரித்திரம்
புரிந்தனர். நீதி மன்றங்களின் நீதிபதிகளும் குடியியற் சேவையைச் சேர்ந்தவர்கள். இவர்களைத் தவிர, சுங்கம், தபால் இலாக்காக் களின் தலைவர்களாகவும் குடியியற் சேவையாளரே நியமிக் கப்பட்டனர்.
பிரித்தானியர் 1815 இல் கண்டி இராச்சியத்தைப் பிரதானிகளின் உதவியுடன் கைப்பற்றியமையினல், அப்பகுதிகளைப் பிரதானிகளே பரிபர்லிக்க பிறவுண்றிக் அநுமதித்தார். ஆனல் கண்டிக் கலகத்தின் பின்னர் அவர், பிரதானிகளின் அதிகாரங்களையும் செல்வாக்கினைபும் குறைக்கும் நோக்கமாக குடியியற் சேவையாளரின் தொகையை அதிகரித்து, அவர்களைப் பாமர மக்களுடன் கூடுதலான தொடர்புகள் வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்தார். நீதி பரிபாலன அதிகாரங்களும் பிரதானிகளின் கைகளினின்று முற்றக நீக்கப்படவே, அவர்களுடைய வருமானம் மேலும் குன்றியது. குடியியற் சேவையாளர் பாமர மக்க ளுடன் நெருங்கிய தொடர்பு கொள்வதை பாண்ஸும், ஹோட்டனும் ஊக்கப்படுத்தினர்.
மெயிற்லந்து வெகுமதிகளின் மூலம் குடியயிற் சேவையாளரைச் சுதேச மொழிகளைக் கற்கச் செய்த ஏற்பாடுகள் நற்பயனை அளிக்க வில்லை. இக்குறையினைப் போக்க 1822 இல் ஆள்பதி பாண்ஸ், ஒரு முக்கியமான திருத்தத்தை அமுல் செய்தார். அவ்வாண்டு குடியியற் சேவையாளர், சிங்களம் அல்லது தமிழில் தேர்ச்சி பெற்ருலன்றி பதவி உயர்வு பெறமாட்டார் எனும் சட்டம் இயற்றப்பட்டது. 1832 இல் ஹோட்டன் குடியியற் சேவையாளர், சிங்களம், தமிழ் எனும் இரு மொழிகளிலும் தேர்ச்சி பெற வேண்டு மென்ற கட்டாய சட்டத்தை இயற்றினர்.
இவ்விதமாகப் பிரதானிகளின் செல்வாக்குச் சிதைக்கப்பட்டு அதனிடமாக குடியியற் சேவையாளரின் அதிகாரங்கள் விஸ்தரிக்கப் பட்டன. இவ்வாண்டுகளில் குடியியற் சேவையினர் முழுமையாகத் திறமைசாலிகள் இல்லாவிடினும், தமக்கு ஒப்படைக்கப்பட்ட நிருவாகக் கருமங்களைக் கிரமமாகவும் கடமையுணர்ச்சியுடனும் நிறை வேற்றினர் என்பதை மறுப்பதற்கில்லை. உள்ளூர்க் கிராமப்புறங் களில் சேவை புரிந்த அதிகாரிகள், கிராம மக்களுடனும் நிலப்பிர புக்களுடனும் இலகுவாகவும் சிரமமின்றியும் பழகி அவர்களின் நன் மதிப்பையும் பெற்றனர். பெரும்பான்மையான அதிகாரிகள் சிங்களம் தமிழ் மொழிகளைக் கற்றுப் பாமர மக்களின் அபிமானத்தையும் சம்பாதித்தனர். அவர்கள் யாவரும் நேர்மைக்கும், பட்சபாதக மற்ற பரிபாலனத்துக்கும் பெயர் பெற்றதுடன், இலஞ்ச ஊழல்க
ளுக்குத் தலை சாய்க்காதவர்களாகவும் விளங்கினர்.
 

இலங்கையில் பிரித்தானியர் ஆட்சி வலுவாக்கப்படல் II 7
குடியியற் சேவையாளருள் சிலர், தம் உயர் அறிவினலும் ஆராய்ச்சிகளினுலும் இலங்கையின் கலை, கலாச்சார வளர்ச்சிக்கும் உதவி புரிந்தனர். உவில்லியம் ரொல்ப்றி (William Tolfrey) என்ப வர் விவிலிய நூலை (Bible) சிங்களத்துக்கு மொழிபெயர்த்தார். சமுவேல் ரொல்ப்றி (Samuel Tolfrey) "சிதற் சங்கராவ' எனும் நூலை ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்தார். ஜோண் டிஒயிலி *கண்டி இராச்சியத்தின் அரசியற்றிட்டச் சுருக்கம் ! எனும் நூலை எழுதிச் சென்ருர், ஜோஜ் ரேணர் (George Turnour) சிங்கள, பாளி மொழிகளைக் கற்று "மகாவம்சம்' எனும் நூலைக் குறிப்புக்களுடன் தொகுத்து வெளியிட்டார். இவை, ஆங்கிலக் குடியேற்றச் செயலா ளரின் உயர் அறிவையும் ஈடுபாட்டையும் எடுத்துரைக்க வல்லன.
2. நீதி பரிபாலனம்
ஆங்கிலர் கரையோர மாநிலங்களை வென்ற பின், அங்கு, ஒல்லாந்தர் விட்டுச்சென்ற நீதி பரிபாலன முறையினையே பின்பற்றி னர். இம்முறையின் சிறப்பியல்புகளை இரண்டாம் அதிகாரத்தில் காண்க. ருேமன் டச்சுச் சட்டம், தாழ் பிரதேசங்களில் சிங்களரின் பழக்க வழக்கங்களுக்கேற்ற மாற்றங்களுடன் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணத் தமிழ்ப் பிரதேசத்தில் தேசவழமைச் சட்டங்கள் பின் பற்றப்பட்டன. சேர். அலெக்சான்டர் ஜோன்ஸ்ரனினல் தொகுக் கப்பட்ட முகமதியர் நீதிக்கோவையை 1806 இல் மெயிற்லந்து அமுல் செய்தார். 1815 ஆம் ஆண்டின் கண்டி மரபு மன்றத்தில், பிறவுண்றிக், கண்டி மக்களுக்குத் தம் பிரதேச வழக்கங்களின்படியே நீதி வழங்கப்படு மென உத்தரவாதமளித்தார்.
இவ்விதமாக ஆங்கிலர் ஆட்சியின் தொடக்கத்தில் நீதி பரிபா லனம் இடத்துக்கிடம் இனத்துக்கினம் மாறுபட்டிருந்ததுமன்றி சிக்கல்கள் நிறைந்ததுமாகக் காணப்பட்டது. நாள் செல்லச் செல்ல இம்முறை மேலும் சிக்கலாயிற்று. ஏனெனில் ஆள்பதிகளும், நீதிபதிகளும் இங்கிலாந்தின் நீதாசன முறையின்படி சட்டங்களை ஆக்கவும் தீர்ப்புக்களைக் கூறவும் தொடங்கினர். நீதி மன்றங்கள் :
1799 இல் நோத், பாதகவியல் குற்றங்களை விசாரணை செய்
வதற்கு ஓர் உச்ச நீதி மன்றத்தையும் பிஸ்கால் மன்றுகளையும், குடி யியற் குற்றங்களின் விசாரணைக்கு குடியியல் மன்றுகளையும், லான்ட்
1. “A Sketch of the Constitution of the Kandyan ". Kingdom
g). 8 A . . . . . . . . . . .

Page 66
118 இலங்கைச் சரித்திரம்
ருடுகளையும் ஏற்படுத்தினர். ஐரோப்பியர்கள், உச்ச நீதிமன்றத் தின் நீதிபதிகளினல் மாத்திரம் விசாரணை செய்யப்பட்டனர். 1802 இல் ஐந்து மாகாண நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டதுடன், லான்ட்ருட் மன்றுகள் ஒழிக்கப்பட்டன. 1812 இல் தீவின் பாதக வியல் நீதியதிகாரமும், ஐரோப்பியரின் மேல் குடியியல் அதிகாரமும் உச்ச நீதி மன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டன. எல்லாக் குடியியல் அதிகர்ரங்களும், மாகாண நீதிமன்றங்களில் விடப்பட்டன. அவ் வாண்டு இலங்கையில் ஜூறி முறையும் ஏற்படுத்தப்பட்டது.
சேர். அலெக்ஸான்டர் ஜோன்ஸ்ரனும் மெயிற்லந்தும் இலங் கைக்குப் பெற்றுத்தந்த மாபெரும் நன்மைகளில் ஒன்று அவர்கள் ஏற்படுத்திய ஜூறி முறையாகும். இம்முறை, கீழைத் தேயங்களில் இலங்கையில் முதன் முதல் பரீட்சிக்கப்பட்ட பொழுது, ஆரம்பந் தொட்டு நல்வெற்றியாக முடிந்தது. ஐ"றி முறையின் முக்கிய அம் சங்கள், இந்நாட்டில் தொன்று தொட்டு வழக்கிலிருந்துவந்த கன்சபா வைகளில், அனுஷ்டிக்கப்பட்டு வந்திருந்தன. ஆங்கில ஜூறிமுறைக்கும், சிங்கள முறைக்குமிடையே இருந்த பிரதான வேறுபாடு யாதெனில் ஆங்கில முறை சாதி பேதங்களைப் பாராட்டவில்லை யென்பதாகும். ஆரம்பத்தில் ஒரு வழக்கில் தீர்ப்புக் கூறுவதற்குப் பதின்மூவர் ஜூறிகளாக அமர்த்தப்பட்டனர். பின்னர் எண்ணிக்கை ஏழாகக் குறைக்கப்பட்டது. ".
இலங்கையில் முதல் உச்ச நீதி மன்றம், கொழும்புக் கோட்டை யில், இன்றைய செனற் கட்டடத்தின் ஒர் அறையில் விசாரணைகளை நடாத்தி வந்தது. நோத், 1804 இல் இடத்தை ஹல்ப்ஸ்டோப்புக்கு மாற்றினர். அன்று தொட்டு இவ்விடம் தான், நீதியினதும் சட்டத் தினதும் இருப்பிடமாக இயங்கத் தொடங்கியது.
3. நிதி நிலை
நோத் இலங்கையின் இராச்சிய பாரத்தை ஏற்ற பொழுது, அரசாங்கம் ஏறத்தாழ நிதியறவு நிலையை அடைந்திருந்தது. முதல் ஆண்டுகளில் இறை வருமானம் பிரதான அரசாங்க நிறுவகங்களின் செலவுக்கே போதாமற் போயிற்று. அக்காலத்தில் தீவின் சராசரி ஆண்டு வரவு 8 226,000, செலவு & 330,000 ஆகும். மிதமிஞ்சிய செலவான 8 103,000 ஐ பிரித்தானிய திறைசேரி நிரவியது. இக் குறையைப் போக்க முதல் ஆள்பதிகள் பல முயற்சிகள் எடுத்தனர். முன்போன்று கறுவா வியாபாரம், உப்பு வியாபாரம், முத்துக் குளிப்பு என்பவை தொடர்ந்து அரசாங்கத்தின் ஏகபோக உரிமைகளாக

இலங்கையில் பிரித்தானியர் ஆட்சி வலுவாக்கப்படல் 119
விருந்தன. பருத்தி, தும்பு, போன்றவற்றில் புதுவரிகள் விதிக்கப் பட்டன. நோத், பெண்கள் அணியும் ஆபரணங்களின் மேல் ஒரு வரியை (Joy Tax) பிரகடனம் செய்தார். பெண் ஒருவள் ஒரு சிலிங்கையும், ஒரு குடும்பம் நான்கு சிலிங்கையும் இறுக்க வேண்டு மென விதிக்கப்பட்டது. இவ்வரியினல் பல குழப்பங்கள் ஏற்பட் டன. 1806 இல் மெயிற்லந்து இவ்வரியை நீக்கினர். இராசகாரிய முறையின் ஒழிப்பினுல், இலங்கையின் விவசாயமும் வர்த்தகமும் விருத்தியடைவதுடன், அரசாங்க வருமானமும் அதிகரிக்குமென நோத் எதிர்பார்த்தார் ஆனல் அவரது எண்ணம் சித்தியடையவில்லை.
மெயிற்லந்து, செலவினங்களை மிகவும் நுணுக்கமாகக் கட்டுப் படுத்தி வரவு-செலவுகளைச் சமன்படுத்துவதில் வெற்றி கண்டது மன்றி, நோத் பட்டிருந்த கடன்களில் பலவற்றையும் அழித்தார். 1807 இல் அவர், வருமானத்தை அதிகரிக்கும் நோக்குடன் கடை வரி' (Bazaar Tax) ஒன்றினைப் பிரகடனம் செய்தார். இதன்படி வர்த்தகர்கள், தாம் விற்பனை செய்த தானியங்களில் இரண்டு வீத வரியும், ஏனைய பொருள்களில் மூன்று வீத வரியும் இறுக்க வேண்டு மென விதிக்கப்பட்டது. நாளடைவில் இவ்வரி நீக்கப்பட்டு, இதே யளவு வரி இறக்குமதியான பொருள்களின் மேல் அறவிடப்பட்டது. மெயிற்லந்தின் நிலச் சீர்திருத்தங்களினலும் வருவாய் அதிகரித்தது. எனினும் கடைசி ஆண்டுகளில் வரவிலும் பார்க்கச் செலவு அதிக மாகவே இருந்தது. 1827-129 எனும் மூவாண்டுகளில், சராசரி ஆண்டு வருமானம் & 332, 736 ஆகவும், செலவு 8378,640 ஆக வும் இருந்தது. மேற்பட்ட செலவு 845,894 ஆகும்.
ர். எட்வட் பாண்ஸ், புத்திக் கூர்மையும், அனுபவமும்,
(Vʻ 4. தெருக்கள் திறக்கப்படல்
சே
விடாமுயற்சியும் மிகுந்தவர். வர், தம் காலத்தையும் நேரத் யும் நிருவாக அல்லது நீதிச் சீர்திருத்தங்களில் செலவிடாது, தீவுக்கு வேண்டப்பட்ட முதல் தேவைகளில் ஒன்ருன, தெருக்களை அமைக் கும் வேலையை உடனடியாகக் கைக்கொண்டார்.
தாழ் பிரதேசங்களில் நல்ல நிலையிலுள்ள பாதைகளின்மை, வர்த்தகத்துக்கும் அரசாங்க நிருவாகத்துக்கும் பெரும் இடையூறுகளை விளைவித்தது. ஒல்லாந்தர், தம் ஆட்சியின் முதற் காலத்தில், பல நல்ல அகன்ற வீதிகளை அமைத்திருந்தனர். அவையாவன :
திருகோணமலை-முல்லைத்தீவு-யாழ்ப்பாணம்-மன்னர், 249 மைல் மன்னர்-கொழும்பு 175 மைல் கொழும்பு-காலி-மாத்தறை - . . . . . 114 மைல் மாத்தறை-மட்டக்களப்பு . . . . . 123 மைல்

Page 67
120 இலங்கைச் சரித்திரம்
ஆனல் ஒல்லாந்தர் ஆட்சியின் பிற்பகுதியில் ஏற்பட்ட ஒழுங் கீனத்தினதும் நிதியறவினதும் காரணமாக, அவை பாராமுகமாக விடப்பட்டுச் சீரழிந்து போகலாயின. 1796 இல் ஆங்கிலர் வந்திறங் கிய பொழுது ஒரு தெருவையேனும் நல்ல நிலையிற் காணமுடியவில்லை. பிரித்தானிய துருப்புக்கள், நீர்கொழும்பினின்று கொழும்பை நோக்கி முன்னேறிய பொழுது, பீரங்கிகளை ஒடுக்கமான பாதை களின் வழியாகவும் மணலினூட்ாகவும் இழுத்துச் செல்ல வேண்டிய தாயிற்று. இப்பாதைகளில் வண்டிகளும் கரத்தைகளும் பிரயாணம் செய்ய முடியர்மற் போன தினுல், மக்கள் கால்நடையாகப் பிரயாணம் செய்ய வேண்டியவர்களாயினர். பொருள்கள் எருதுகளின் அல்லது கூலிக்காரக் காவிகளின் துணைகொண்டு செல்லப்பட்டன. ஆள்பதி, போன்ற கனவான் ஒருவர் பயணம் செய்வதால்ை அவருத்து நூற்றுக்
கண்க்கான கூலியாள்கள், யானைகள், குதிரைகள் தேவைப்பட்டன.
மலைநாட்டில் பிரயாணம் செய்வ திலும் பன்மடங்கு கடின மாயிற்று. பழைய o:Êಜ್ಜೈ வில் அடைய முடியாமை, அதனுள் பிரயாணம் செய்வதன் கடினம் 器歳 அந்நியரின் படையெடுப்புக்களி லிருந்து பாதுகாப்பைப் பெற்றுத் தந்தன. இந்நிலை புதுப் பிரித்தானிய ஆட்சியாளருக்குச் சொல்லொணு இன்னல்களை விளைவித்தது. கொழும்பினின்று காடுகளையும் மலைகளையும் நதிகளையும் கடந்து சென்ற 50 மைல் நீளமான ஒற்றையடிப் பாதையின் வழி யாகவே கண்டியை அடைய முடிந்தது. கரையோர மாநிலங்களின் எல் லைப் புறக் காவலிடம் அவிசாவலையிலிருந்தது. அங்கிருந்து ஓர் ஒற்றை யடிப்பாதை உறுவன்வலை வழியாக அட்டாப்பிட்டிக்குச் சென்று, அங்கிருந்து கணேத்தனை வழியாகப் பலனைக் கணவாயைக் கடந்து கண்ணுேறுவையை அடைந்தது. அங்கு மகாவலிகங்கையைக் கடந்த பின்னரே கண்டி நகரை ஒருவன் அணுக முடிந்தது. கண்டி இராச் சியத்தினுள்ளும் போக்குவரத்துச் செய்வது, வழிகாட்டிகளின் துணை பன்றி முடியாத கருமமாயிற்று.
இப் போக்குவரத்து வசதிக் குறைவு, துருப்புக்களை விரைவாக ஓரிடத்திலிருந்
மேலும் கண்டி இராச்சியத்தினுள் குழப்பங்கள் ஏற்படாமல் தடுக்கவும் குழப்பங்கள் ஏற்படின் அவற்றை விரைவாக அடக்கவும், மலை நாட்டின் எல்லைப் பிரதேசக் கேந்திர தானங்களிலெல்லாம் இராணு வத் தளங்களையும், சில இடங்களில் கோட்டைகளையும் அமைத்தனர்.
து இன்னேரிடத்துக்கு டம் பெயர்க்க இயலாமற் ,
 
 
 
 
 

கொழும்பு-கண்டிப் பாதையில் அட்டாப்பிட்டி-அமுனுப்புற முதலாம் இடங்களில் காவல் நிலையங்கள்.
ஏற்படுத்தப்பட் "மலைநாட்டைச் சுற்றி நாலா பக்கங்களிலும் நால்ந்தா, பலக்கடுவை, வதுளை, பட்டுகெதரை, கொத்மலை,
மத்துரட்டை, நுவரெலியா, வெலிமடை, அலுப்பொத்தை எனும் இடங்களில் இராணுவப் படைகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
கண்டியினின்று கடற்கரை ஈருக ஒரு தெரு அமைக்கப்படும்
வரை, மலைநாட்டை வெற்றி கொள்வது முடியாத கருமமென்பது ஒரு பழமொழி. இப்பழமொழியின் உண்மையை நன்ருக முதன் முதல் உணர்ந்தவர் ஆள்பதி பாண்ஸ் ஆவர். கண்டி இராச்சியத்தினுள் சீரான தெருக்கள் அமைக்கப்படின், இத்தனை கோட்டைகளும் காவலிடங்களும் தேவைப்படா என்பதையும், இரண்டொரு பெரிய இராணுவப் படைகளின் உதவி கொண்டு முழு மலைநாட்டையும் காவல் செய்ய முடியுமென்பதையும் கண்டார். அவர் இராணுவ ஏற் பாடுகளைக் குறைப்பதினுல் உண்டாகும் மிகுதிப் பணத்தைக்கொண்டு தெருக்களை அமைக்கத் திட்டமிட்டார். இத்தெருக்கள் எல்லாக் காலங்களிலும் எல்லோருக்கும் உபயோகப்படுமென்பதையும் இவற்றின் வழியாகக் கண்டியின் மிகக் கீழ்த்தரமான பொருளாதார நிலையை விருத்தி செய்யலாமென்பதையும் யூகித்தார். எனவே 1820 தொடக்கம்,கோட்டைகளையும் காவலிடங்களையும் அமைக்கும் வேலையை நிறுத்தி, தெருக்களை அமைக்கும் வேலையை ஆரம்பித்தார். 1821இல்
ஸ் o கண் வீதியைடஅமைக்கும்-வேலையினோஅங். குரார்ப்பணம் செய்தார். இவ்வேலையைக்-சீக்கிரமாகச் செய்து முடிப் பதற்குக் கடினமாக உழைத்தவர்கள் கப்ரின் டோசன், மேஜர் ஸ்க்கினர் என்ற இருவருமாவர். இவ்வீதி வெயாங்கொடை, கேகாலை, கடுகண்ணுவைக் கணவாய், பெரதனியா வழியாகக் கண்டியை அடைந்தது. கடுகண்ணுவைக் கணவாயூடாகத் தெருவை அமைக்கும் வேலையைச் செய்து முடித்தவர் டோசன் ஆவார் அவரது துணிவையும் பிரயாசத்தையும் ஞாபகப்படுத்துமுகமாக பிற்காலத்தில் கடுகண் னவை மலை மீது கட்டப் பெற்ற சின்னத்தை இன்றும் நாம் காணலாம். ஸ்க்கின்னரின் திறமைக்கு அழியாத ஞாபகச் சின்னமாக கொழும்பு. கண்டி வீதி 1825 இல் முற்றுப் பெற் O களையும் தொடர்பு கொள்ளச்செய்ய, வீதியில் அவர்அமைத்த பாலங்கள் அவரது கடின் உழைப்பையும் விடாமுயற்சியையும் என்றும் நினைவு றுத்துஞ் சின்னங்களாய்த் திகழ்கின்றன. அவர் அமைத்த பாலங்களுள் மிகவும் பிரபல்யம் பெற்றவை, களனி கங்கையின் மேல் பாலத்துறையில் அ  ைம க் கப் பெற்ற 'தோணிப் பாலமும்" (Bridge of Boats) மாகவலிகங்கைக்கு மேல் அமைக்கப் பெற்ற (p660T i TavUpLDITG5ub (Satinwood Bridge). ,
*. יו": י

Page 68
122 \ இலங்கைச் சரித்திரம்
1825 இல் கொழும்பு, குருநாகலுடன் இணைக்கப்பட்டு, அவ் வீதி தம்புளைவரை விஸ்தரிக்கப்பட்டது. கொழும்பு-கண்டி வீதி, 1831 இல் மாத்தளை வரையும், 1832 இல் தம்புளை வரையும், 1833 இல் திருகோணமலை வரையும் முறையே இங்ங்ணம் குருநாக்ல், தம்புளை, கிந்தளாய் எனுமிடங்களினூடாக கொழும்பு, திருகோணமலையுடன் இணைக்கப்பெற்றது. நிருவாகத் தலை நகரமும் கப்பற்றளமும் நேர்த் தொடர்பு கொண்டன.
- இவ்விதமாக இவ்வீதிகளை அமைப்பதற்கு அதிக பணம் செல வாகவில்லை. ஆண்கள், கட்டாயமாக அரசாங்கத்துக்கு இறுக்க வேண்டியிருந்த இராசகாரிய சேவையைக் கொண்டும் இராணுவ வீரர்களின் மேற்பார்வையைப் பெற்றும், பாண்ஸ் இவ்வேலையை அதிக செலவின்றிச் செய்து முடித்தார்.
தெருக்களினுல் விளைந்த பயன்கள் :
பாண்ஸ் அமைத்த தெருக்களினல் பல நன்மைகள் விளைந்தன. முதலாவதாக கண்டி இராச்சியத்தில் ஒழுங்கை நிலைநாட்டும் பிரச் சினைகள் இலகுவாகத் தீர்ந்தன. அதனுடன், மலை நாட்டின் பல பாகங்களில் இராணுவ நிலையங்களை அமைப்பதற்கு ஏற்பட்ட சிரம மும் செலவும் பெருமளவுக்குக் குறைந்தன.
இரண்டாவதாகத் தீவு முழுவதுக்கும் பொதுவான ஓர் அரசாட்சி முறையை ஏற்படுத்த இவ்வீதிகள் துணைபுரிந்தன. நிரு வாகத்தில் திறமையும் விரைவும் ஏற்பட்டது. ஆள்பதிகள் மாகா ணங்களை இலகுவாகப் பார்வையிட வழி பிறந்தது. அரசாங்க முக வர்கள், நீதிபதிகள், வைத்தியர்கள் யாவரும், மாகாணங்களைத் தரிசித்துத் தமது வேலைகளை விஸ்தரிக்க வாய்ப்புண்டாயிற்று. தபால் சேவை, போக்கு வரத்து, பொருள்களை இடம் பெயர்த்தல் எனும் சேவைகளில் கெதியும், பாதுகாப்பும், செலவுக்குறைவும் உண்டாயின.
மூன்ருவதாக, வியாபாரம் அதிகரிக்கவும், பெருந் தோட்டப் பயிர்ச்செய்கை அபிவிருத்தியடையவும் வாய்ப்பான சூழ்நிலைகள் ஏற்பட்டன. விசேடமாக மலைநாட்டில் தொலைவிலிருந்த உற்பத்தி குறைந்த பிரதேசங்கள், அபிவிருத்திக்கான புது வாய்ப்புக்களைப் பெற்றன.
நான்காவதாக, நாடு ஒற்றுமை பெறவும், இலங்கை மக் களில் தேசப்பற்று வளரவும் வழி திறக்கப்பட்டது. தாழ் பிரதேசச் சிங்களவர்; கண்டியர், முஸ்லீம்கள், தமிழர் யாவரும் ஒருவரோ டொருவர்தொடர்பு கொள்ளவும், தமது பொருள்களையும் கருத் துக்களையும் பரிமாறிக் கொள்ளவும் வசதிகள் ஏற்பட்டன.
 
 
 
 
 

இலங்கையில் பிரித்தானியர் ஆட்சி வலுவாக்கப்படல் 123
தபாற்சேவை :
தெருக்கள் திறக்கப்பட்டதனல் ஏற்பட்ட இன்னுமொரு நற் பயன் தபாற் சேவையின் விருத்தியாகும். ஒல்லாந்தர் காலத்தில் தபால் ஒடிகள் மூலம் செய்திகள் அனுப்பப்பட்டன. அவர்கள் புரிந்த சேவைக்கு மானியமாக வழங்கப்பட்ட நிலங்கள், சேவை களினின்றும் திறைகளினின்றும் விடுவிக்கப்பட்டிருந்தன. 1802 வரை பிரித்தானியரும் இம் முறையினையே பயன்படுத்தினர். அவ் வாண்டு அந்த னி பேட்டலோசி (Anthony Bertalocci) என்பவரின் தலைமையின் கீழ் தபால் இலாக்கா நிறுவப்பட்டது. நாள் தோறும், கடிதங்களும் உத்தியோகபூர்வமான செய்திகளும் ஒட்டக்கரார் மூலம் அனுப்பப்பட்டன. செலவு அதிகரிக்கவே இச்சேவை மூன்று நாள் களுக்கொருமுறை நடைபெறலாயிற்று. தபாற் சேவை அரசாங்க தலைமைப்பீடமான கொழும்புக்கும், இராணுவ கப்பற்றளமான திருகோணமலைக்குமிடையே தான் முக்கியமாக நடைபெற்றது. கொழும்பினின்று திருகோணமலையை அடைவதற்கு இரு வழிகளிருந் தன. வடக்குப் பாதை மேற்குக் கரைவழியாக மன்னர், யாழ்ப்பாணம் முல்லைத்தீவு எனுமிடங்களினூடாகச் சென்றது. தெற்குப் பாதை காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, மட்டக்களப்பு வழியாகச் சென்றது. தபால் கட்டணங்கள், தூரத்துக்குத் தக்க விதமாக அற விடப்பட்டன. கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு 7 பணமும் திருகோணமலைக்கு 8 பணமும் அறவிடப்பட்டன.
ஆங்கிலர் கண்டியை வெற்றி கொண்டபின் உள்நாட்டிலும் தபாற் சேவையை ஏற்படுத்தினர். இச்சேவை, விசே ட மாக கொழும்புக்கும் கண்டிக்கும், இராணுவ நிலையங்களுக்குமிடையே நடைபெற்றது. தெருக்கள் திறக்கப்பட்டதினல் தபாற் சேவையும் விருத்தியடைந்தது. 1832 பெப்ரவரி முதலாம் நாள், ஆசியாவிலேயே முதன் முதலாக கொழும்பு-கண்டி வீதியில் ஒரு தபால் வண்டி ஒடத் தொடங்கியது. இவ்வண்டி, கொழும்பினின்று புறப்பட்டு, ஒரு நாளில் கண்டியைப் போயடைந்தது.
5. விவசாயம்
போர்த்துக்கேயர் காலத்தில் விவசாயம் மிகவும் கீழ்க்கட்டத்தை அடைந்தது. அவர்கள், தம் ஆட்சிக் காலம் முழுவதும் ஏதாவதொரு மூலையிலேனும் போரிட்டு வந்தமையினல், நெற்செய்கையின் விருத் திக்கு எவ்வித முயற்சியையும் கைக்கொள்ளவில்லை. ஒல்லாந்தர், போர்த்துக்கேயரைப் போலன்றி தமது மாநிலங்களின் பொருளாதார முயற்சியை விருத்தி செய்ய அரும் பெரும் முயற்சிகள் எடுத்தனர். அவர்கள், பழைய நீர்ப்பாசன வேலைகளில் சிலவற்றைப் 'பழுது

Page 69
124 இலங்கைச் சரித்திரம்
பார்த்தும், புதுத் திட்டங்களையமைத்தும், தென்னிந்தியா வினின்று அடிமைகளை வரவழைத்தும் விவசாய முயற்சிகளை ஊக்குவித்தனர். எனினும் இலங்கை, நெல் உற்பத்தியில் சுய தேவையைப் பூர்த்தி செய்யும் நிலையை அடைய முடியவில்லை. பிரித்தானியர் ஆட்சியின் தொடக்க காலத்தில் இந்நிலையே நீடித்தது. ஆள்பதி நோத்தின் காலத்தில், ஆண்டு தோறும் சராசரி 60,000 மூடை அரிசி இறக்குமதி செய்ய்ப்பட்டது. இதற்கு அரசாங்க பணமே செலவிடப்பட்டதினல், ஆள்பதிகள் உணவு இறக்குமதியைக் குறைக்கவும் உற்பத்தியை அதிகரிக்கவும் பெரும் முயற்சியெடுத்தனர். இலங்கையின் விவசாயப் பிரச்சினை பெரும்பாலும் நீர்ப்பாசன பிரச்சினையாகும். நோத் குளக் கட்டுகளை நிர்மாணிக்கும் குழுவொன்றினை ஏற்படுத்தினர். இக்குழு, விவசாயிகளின் உதவியுடன் குளங்களைத் திருத்தி வந்தது. மெயிற் லந்து பிரித்தானிய மாநிலங்களின் நீர்ப்பாசனத் திட்டங்களைப்பற்றி அறிக்கையொன்றினைத் தயாரிக்குமாறு கப்ரன் ஷ்னீடர் (Capt. Schneider) என்பவரை நியமித்தார். அறிக்கையின் பயனுக, மெயிற் லந்து கிராமப்புறங்களில் விவசாயத்தை ஊக்குவிக்கச் சில வழிவகை களைக் கையாண்டார். சில மாவட்டங்களில், ஒரு சில ஆண்டுக
ளுக்குள் காணிவரி இரு மடங்காயிற்று.
எனினும் ஆரம்ப காலத்தில் அரசாங்க வருமானத்தின் குறை
வினல் ஆள்பதிகள், விவசாயத்தை ஊக்குவிக்க பாரிய முயற்சிகளை கைக்கொள்ள முடியாமற் போயிற்று. பொருளாதார நிலை இடம் கொடுத்த அளவுக்கு நோத், மெயிற்லந்து, பிறவுண்றிக், பாண்ஸ் , ஹோட்டன் ஆள்பதிகள் விவசாயத்தை விருத்தி செய்வதில் ஆர்வம் காட்டினர்.
கறுவா வியாபாரம் :
ஆங்கிலர், கரையோர மாநிலங்களைக் கைப்பற்றிய பொழுது, நாட்டின் வருவாயின் பெரும்பகுதி கறுவா வியாபாரத்தினின்றே பெறப்பட்டது. இலங்கை முடிக்குரிய குடியேற்ற நாடான பின்பும் கறுவா வியாபாரத்தில் ஏகபோக உரிமைகளைக் கிழக்கிந்திய வர்த்தக சங்கமே அனுபவித்து வந்தது. இவ்விடயத்தில் அரசாங்கத்துக்கும் கம்பனிக்குமிடையில் ஓர் உடன்பாடு ஏற்பட்டது. அரசாங்கம், ஆண்டுதோறும் 400,000 இருத்தல் கறுவாவை கம்பனிக்குக் கொடுக் கவும், கம்பனி அரசாங்கத்துக்கு 60,000 பவுணைக் கொடுக்கவும் சம்மதித்தன. மேற்கூறப்பட்ட உடன்படிக்கை 1822 இல் முடி வடைய, அர்சாங்கம் கறுவா வியாபாரத்தைத் தானே மேற்கொண் டது. இந்நிலை 1833 வரை நீடித்தது. ஆங்கிலர், வியாபாரத் துறையில் ஏகப்ோக உரிமைகளை அனுபவித்தபோதும், அதில் படிப்
... .
 
 

இலங்கையில் பிரித்தானியர் ஆட்சி வலுவாக்கப்படல் I 25
படியாகக் கட்டுப்பாடுகளை நீக்கினர். தனி வியாபாரிகள் முதலில் வியாபாரத்தில் ஈடுபட அனுமதிக்கப்பட்டும், பின்னர் ஊக்குவிக்கவும் பட்டனர். சேர். அலெக்சான்டர் ஜோன்ஸ்ரன், வியாபாரத் துறை யில் தனியார் முயற்சியை ஊக்குவித்தல், நாட்டுக்கு மாபெரும் நன்மைகளைப் பயக்கும் என்பதை நன்குணர்ந்தார். 1810 gai) பிரித்தானிய உத்தியோகத்தினரல்லாதோர் நிலங்களை வாங்க அனு மதிக்கப்பட்டனர். 1812 தொடக்கம் ஐரோப்பியருக்குத் தலா 4,000 ஏக்கர் வீதம் நிலங்கள் விற்க்கப்பட்டன. 1832 இல் இவ்வுரிமை எல்லா இன மக்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டது. இக்கட்டுப் பாடுகளின் நீக்கத்தினுல் ஏற்பட்ட முதற் பய்ன் கோப்பிச் செய்கை யின் விருத்தியில் காணப்பட்டது.
கோப்பியின் எழுச்சி :
கோப்பிச் செடியானது, ஆபிரிக்கா கண்டத்தின் சுதேசப் பயிர். 15 ஆம் நூற்ருண்டில் அராபியரும் துருக்கியரும், அச்செடி யின் விதைகளினின்று கோப்பிப் பானத்தைத் தயாரித்தனரென்றும் அவர்கள் தாம், அப்பழக்கத்தை ஐரோப்பாவுக்குக் கொண்டு சென்ற வர்கள் என்றும் பொதுவாக நம்பப்படுகிறது. ஒல்லாந்தர், கோப் பிப் பயிரை ஜாவாவுக்கும் இலங்கைக்கும் அறிமுகப்படுத்தி, 1690 அளவில் அதனைக் காலியிலும் நீர்கொழும்பிலும் பயிரிட்டனர். ஆனல் கரையோர மாநிலங்களின் வெப்பச் சுவாத்தியத்தில் அப்பயிர் விருத்தியடையாமற் போகவே, அத்தோட்டங்கள் 1739 இல் மூடப்பட்டன. எனினும் சிங்களவர் மலைநாட்டில், விசேடமாக ஊவாப் பகுதியில் அச்செடியைச் செய்கை பண்ணி வந்தனர். அவர்கள் அச்செடியை, அதன் விதைகளுக்காகவன்று, கறிகளுக்கு நறுமணத்தை ஊட்டவல்ல அதன் இலைகளுக்காகவும், கோவில் வழி பாட்டுக்குப் பயன்பட்ட வெண்ணிற மலர்களுக்காகவுமே வளர்த்து வந்தனர். பிற்காலத்தில், கோப்பிக்கு ஐரோப்பியரின் கராக்கி அதிகரிக்கவே, முஸ்லிம்கள் மலைநாட்டில் திரிந்து, கோப்பியைச் சேக ரித்து, ஏற்றுமதிக்காகக் காலிக்கு அல்லது கொழும்புக்குக் கொண்டு சென்றனர். இச்சிறு விதமாக ஏற்றுமதி செய்யப்பட்ட கோப்பி, 1806 இல் 94,500 இருத்தலிலிருந்து 1813 இல் 216,500 இருத் தலாக அதிகரித்தது.
கண்டி இராச்சியம் வெற்றி கொள்ளப்பட்டபின், ஆங்கிலர், ஐரோப்பாவில் பெரிதும் வேண்டப்பட்ட அயனமண்டலப் பொருள் களை உற்பத்தி செய்வதற்கு இலங்கை மிகவும் வாய்ட் குடியேற்ற நாடு என்பதை வெகு விரைவில் உணர்ந்தனர் பல இயற்கை நற்பேறுகளைப் பெற்று விளங்கியது. அதன் மண்
این نیز نامیم.

Page 70
126 இலங்கைச் சரித்திரம்
வளம் மிகுந்ததாகவும், சுவாத்தியம் ஆரோக்கியத்துக்குரியதாகவும், உஷ்ணமும் மழையும் நிறையப் பெற்றதாகவும் காணப்பட்டது. தீவின் மக்கள், அமைதியானவர்களாகவும், திருப்தியுடையவர்களா கவும், வியாபார நோக்குடன் வந்த பிறநாட் வர் மட்டில் பகைமை காட்டாதவர்களாகவும் காணப்பட்டனர். அரசாங்கமும், தனியார் முயற்சிக்கு உதவியும் ஊக்கமும் அளிக்க ஆயத்தமாகவிருந்தது. நிலங்கள் குறைந்த விலைகளில் பெருமளவில் பெறத்தக்கனவாகவும் இருந்தன. தொழிலாளரைத் தென்னிந்தியாவினின்று சிரமமின்றி வரவழைப்பதற்கும் வாய்ப்புக்கள் இருந்தன. பாண்ஸின் முயற்சியி ணுல் உள்நாட்டுக்கும் பிரதான துறைமுகங்களான காலி, கொழும் புக்குமிடையே நல்ல வீதிகள் அமைக்கப்பட்டிருந்தன.
பிரித்தானியர் ஆட்சியின் தொடக்க காலத்தில், கரையோர மாநிலங்களில், விவசாயத் தொழில்களை அமைப்பதற்குப் பல் வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. சீனி, கோப்பி பரீட்சார்த்தமாகப் பயரிடப்பட்டன; ஆனல் கிடைத்த பயன்கள் சொற்பமானவை கண்டியின் மலைப்பிரதேசங்களில் கோப்பி பயிரிட ஆரம்பிக்கப்பட்ட துடன் தான், பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை முறை உதய மானது. கோப்பிச் செய்கைக்கு முதல் வழியைக் காட்டியவர் ஆள்பதி பாண்ஸ் அவர்களேயாவர். கண்டி மாகாணங்களுக்கும், கரையோரத்துக்குமிடையே தெருக்களை அமைத்தபின், தான் திறந்த வீதியின் உபயோகத்தை நிரூபிக்கும் நோக்குடன் அவர், பேராத னைக்கு அண்மையில், நிலத்துண்டொன்றினை வாங்கி துப்பரவு செய்து கோப்பியைப் பயிரிட கங்காறுவா (Gangaruwa) தோட்டத்தைத் திறந்தார். 1824 இல், கம்பளையில் சின்னப்பிற்றியா எனும் தோட் டத்தை இராணுவ அதிகாரியான ஜோஜ் பேட் (George Bird) என் பவர் திறந்தார். சில மாதங்களுக்குள் சின்னப்பிற்றியா தோட்டத் தைச் சூழ ஒன்றன் பின் ஒன்ருகப் பல தோட்டங்கள் உண்டாயின.
கோப்பிச் செய்கையின் இவ்வாரம்ப காலம், ஒரு பரிசோதனைக் காலம் என்றே கருதப்படல் வேண்டும். ஆர்வம் மிகுந்த ஆங்கிலர் சிலர் மாத்திரம் தான் அதில் ஈடுபட்டு நின்றனர். 1827 இல் 10,000 அந்தர் கோப்பி இலங்கையினின்று ஏற்றுமதியாயிற்று.
6. சமூகச் சீர்திருத்தங்கள்
வைத்திய சேவை:
பொது சனங்களின் சுக நிலையைப் பேணிக் காக்கும் விடயத்தில் ஆங்கிலர் அக்கறை காட்டினர். ஆரம்பத்தில் வைத்திய சேவைகளைச்
செய்வதற்கு இராணுவ நிலையமே பொறுப்பாயிருந்தது. 1798 இல்
அம்மைநோய்உண்டான பொழுது, நோத், கொழும்பு, யாழ்ப்பாணம்,
s
 

இலங்கையில் பிரித்தானியர் ஆட்சி வலுவாக்கப்படல் 127
திருகோணமலை எனுமிடங்களில் அம்மைநோய் வைத்திய நிலையங்களைத் திறந்தார். 1802 இல் அம்மைப் பால் குற்ற ஏற்பாடுகள் செய்து, மரண விகிதத்தைக் குறைத்தார்.
சித்திரவதை, அடிமை முறை நீக்கம் :
சிங்கள அரசர்கள், போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் யாவரும் பாரிய குற்றங்கள் புரிந்தவர்களைச் சித்திரவதை செய்து, பல கொடூரமான வகைகளில் கொலை செய்யும் முறைகளைப் பின்பற்றினர். இவை மனித நாகரிகத்துக்கொவ்வாதவையெனக் கண்ட பிரித் தானியர், அவற்றை முதல் கரையோர மாநிலங்களில் ஒழித்தனர். பின்பு கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றிய பொழுது அம்முறைகள் மலை நாட்டிலும் ஒழிக்கப்பட்டன.
ஆங்கிலர், இலங்கையில் அன்று நிலவிய அடிமை முறையினையும் நீக்கினர். புராதன காலந் தொட்டு இலங்கையிலும் ஒரு வித அடிமை முறை இருந்து வந்துள்ளது; ஆனல் அம்முறையின் இன்னல்கள் மேற்குலகில் நிலவிய அடிமை முறையைப் போன்று கொடூரங்கள் நிறைந்தவையல்ல. இந்நாட்டில் நான்கு விதமான அடிமைகள் இருந்தனர்.
1. கடனிறுக்க முடியாதவர்கள், தம்மைக் கடன் கொடுத்தவருக்கு
அடிமையாக்கினர். 2. பெற்றேர், பிள்ளைகளை அடிமைகளாக விற்றனர். 3. அரசன் சிலரை அடிமைகளெனத் தண்டித்தான்.
அடிமையாகவிருந்த ஒரு தாயின் குழந்தைகளும் அடிமைகளா யினர்.
இவ்வடிமைகள், தம் எசமானுக்குக் குறிப்பிட்ட சேவைகளைச் செய்ய கடமைப்பட்டதைத் தவிர்ந்த ஏனைய கட்டுப்பாடுகள் அவர்கள் மேல் விதிக்கப்படவில்லை. அவர்கள் பெரும்பாலும் எசமானர்களின் வீட்டு வேலைக்காரராகவும் நிலபுலங்களில் வேலையாட்களாகவும் சேவை செய்தனர். தமிழ்ப் பிரதேசங்களில் கோவியர், நளவர், பள்ளர் எனும் மூன்று சாதி மக்களும் அடிமைகள் போன்று பாவிக்கப்பட்டனர். கோவியர் வீட்டு வேலைக்கும் மற்றைய இரு சாதியினரும் விவசாய வேலைகளுக்கும்
பயன்படுத்தப்பட்டனர். ". " : : " . . . . . ...و
ஆள்பதிகளின் முயற்சிகளினல் இவ்வடிமைகள் பலருக்கு சுதந்திரம் பெற்றுத் தரப்பட்டது. .

Page 71
128 இலங்கைச் சரித்திரம்
7. கல்வியும் சமயமும்
இலங்கையைச் சிங்கள முடிவேந்தர் ஆட்சி செய்த பண்டைக் காலத்தில், பெளத்த பிக்குகள் சங்கம் கல்விக்குப் பொறுப்பேற்று நடாத்தி வந்தது. அரசன், கிராமங்கள் தோறும் பாடசாலைகளை நிறுவி, அவற்றுக்குப் பொறுப்பாக பெளத்த பிக்குகளையே அமர்த் தினுன். அப்பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களிடமிருந்து எவ்வித சன்மானமும் ஏற்கக் கூடாதென்றும், பிக்குகளின் பராமரிப் புக்கு வேண்டிய உதவிகளைத் தாமே செய்து வைப்பதாகவும் அரசன் கட்டளையிட்டான். சிங்கள அரசர்களின் ஆட்சி மறையவே, இப் பாடசாலை முறையும் அவர்களுடன் மறைந்து போகலாயிற்று.
கரையோர மாநிலங்களைக் கைப்பற்றிய மேற்கத்திய வல்ல ரசுகள் 16 ஆம் நூற்ருண்டு தொடக்கம், சமய அடிப்படையில் பாடசாலைகளை நிறுவி வந்தன. போர்த்துக்கேயர், ருேமன் கத்தோ லிக்க மதத்தைப் போதிக்கும் நோக்கமாக பாடசாலைகளை ஏற்படுத் தினர். ஒல்லாந்தர், கிராமங்களைக் கோவிற்பற்றுக்களாகப் பிரித்து ஒவ்வொரு கோயிற் பற்றிலும் பாடசாலையொன்றினை நிறுவி, புரட் டஸ்தாந்த கிறிஸ்தவ மதத்தை வற்புறுத்தி வரலாயினர்.
கல்வி:
பிரித்தானியர் ஆட்சியின் ஆரம்ப காலத்தில் சென்னை அரசாங்
கம், தன் அவதானத்தை கரையோர மாநிலங்களை வெற்றி கொள் வதற்குச் செலவிட்ட பணத்தை அறவிடுவதில் செலுத்தியதேயன்றி, நாட்டு மக்களின் கல்வியிலும் கிறிஸ்தவ சமய போதனையிலும் கவலை கொள்ளவில்லை. அவர்கள், ஒல்லாந்தர் நிறுவியிருந்த பாட சாலைகளைச் சீரழிந்துபோக விட்டனர். 1799 இல் ஆள்பதி நோத், ஒல்லாந்தரின் பாடசாலைகளைப் புதுப்பித்து வண. ஜேம்ஸ் கோடினர் (Rev. James Cordiner) 66ör LogoU LITL-FI7äv305(g (p3; Tao) duur ளராக நியமித்தார். பாடசாலைகளின் நிருவாகத்துக்கு நன்கொடை யாக 8 1500 வழங்கினர். இதன் பயணுக 163 சுய மொழிப் பாட சாலைகளும், ஆட்டுப்பட்டித் தெருவில் ஓர் ஆங்கிலப் பாடசாலையும் திறக்கப்பட்டன. ஆனல் கோடினர் பதவியினின்று நீங்கியவுடன் அரசாங்கம், நன்கொடை வழங்கும் முறையை நிறுத்தவே Լ 167) பாடசாலைகள் மூடப்பட்டன. ஆள்பதி மெயிற்லந்து 17 பாடசாலைகளை மீண்டும் திறப்பித்தார். எனினும் அரசாங்கப் பாடசாலைகள் திருப் தியற்றனவாகவும் திறமை குறைந்தனவாகவும் காணப்பட்டன. 1829 இல் இருந்த 90 பாடசாலைகளுள் தமிழ் மாகாணங்களில்
. . . . .
 
 

இலங்கையில் பிரித்தானியர் ஆட்சி வலுவாக்கப்படல் 129
நான்கும், கண்டிப் பிரதேசத்தில் ஒன்றுமில்லாதுமிருந்தன. பல பாட சாலைகள் பெயரளவில் மாத்திரமே இருந்தன. அவை பரிசோதனை களுக்கு மாத்திரமே பிள்ளைகளை ஒன்று சேர்த்தன.
இவ்விடைக்காலத்தில் அரசாங்கப் பாடசாலைகளின் குறைகளை நிவிர்த்தி செய்யும் வகையில், பல கிறிஸ்தவ போதக சபைகள் திறமையுடன் பல பாடசாலைகளை நடாத்தி வந்தன. 1812 இல் பப்ரிஸ்ற் சபையும், 1814 இல் வெஸ்லியன் சபையும், 1816 இல் அமெரிக்கன் சபையினரும் பாடசாலைகளைத் தாபித்தனர். 1818 இல் சேச் மிஷனரிச் சபையும் பாடசாலைகளைத் திறந்தது. இப்புரட்டஸ் தாந்த சபைகளுக்கு, அரசாங்கம் ஆதரவையும் பண உதவியையும், பாடசாலைகளை அமைக்க நிலங்களையும் கொடுத்து, விசேட சலுகை களைக் காட்டிற்று. அவர்கள் 1812 க்கும் 1832 க்குமிடையில் நாட்டின் பல பாகங்களிலும் 215 க்கு மேற்பட்ட பாடசாலைகளை நிறுவி, 10,000 பிள்ளைகளுக்குச் சமயத்தையும் கல்வியையும் போதித்து
வந்தனர்; கோட்டையிலும், வட்டுக்கோட்டையிலும் g2 - ul/ fj பாடசாலைகளை நிறுவி மிகவும் உயர்ந்த தரமுடைய கல்வியை ஊட்டி வந்தனர். கத்தோலிக்கர் அரசாங்கத்திடம் உதவி
பெருதிருந்தும் 1831 அளவில் 63 சுய மொழிப் பாடசாலைகளை நடாத்தி வந்தனர். பெளத்த, சைவ, சமயத்தவர்களுக்குப் பாட சாலைகள் ஒன்றுமேயிருக்கவில்லை.
இவ்விதமாக 1830 இல் இலங்கையில் அரசாங்கப் பாடசாலைகள், புரட்டஸ்தாந்த சமயப் பாடசாலைகள், தனியார் பாடசாலைகள் என மூவித பாடசாலைகளிருந்தன. கத்தோலிக்கரினது பாடசாலைகள் தனியார் பாடசாலைகளெனக் கணிக்கப்பட்டன.
கிறிஸ்தவ சமயம் :
ஒல்லாந்தர், தமது ஆட்சிக் காலத்தில் புரட்டஸ்தாந்த கிறிஸ் தவர்களுக்கு மாத்திரம் ஆதரவளித்து, பிற சமயத்தவர்களான பெளத்தர்கள், இந்துக்கள், விசேடமாக முஸ்லீம்கள், ருேமன் கத் தோலிக்கர் என்பவர்களுக்குச் சமய வழிபாட்டுச் சுதந்திரத்தை மறுத்தனர். புரட்டஸ்தாந்தருக்கு அனுமதிக்கப்பட்ட பல உரிமைகள் மற்றச் சமயத்தவர்களுக்கு மறுக்கப்பட்டன. பிரித்தானியர் ஆரம் பந்தொட்டு எல்லாச் சமயத்தினருக்கும் வழிபாட்டுச் சுதந்திரத்தை அனுமதித்தனர். மெயிற்லந்து, 1806 இல் ருேமன். கத்தோலிக் கருக்கு உரிமைகளை மறுத்த சட்டங்களை நீக்கி, அவர்களுக்குச் சகல
குடியியல் உரிமைகளையும் பெற்றுத் தந்தார். . . . . .
இ. 9 ::

Page 72
I 30 இலங்கைச் சரித்திரம்
பெளத்த சமயம் :
நோத், மெயிற்லந்து ஆள்பதிகள், பெளத்தர்கள் பிரித்தானி யரின் ஆட்சிக்கு விரோதமானவர்கள் என எண்ணினர். ஏனெனில் பெளத்த பிக்குகள் வழியாகக் கண்டியரசன், கரையோர மாநிலங் களின் பெளத்த சமயத்தவர் மேல் ஆத்மீகச் செல்வாக்குக் கொண் டிருந்தான். தவிரவும் பிக்குகள், தமது குருத்துவ அபிஷேகங் களுக்குக் கண்டிக்கே சென்று வந்தனர். இவ்விதமாக, பிக்குகளும் பெளத்தர்களும், ஆங்கிலருக்குப் பகைமை காட்டி வந்த கண்டியர சுடன் தொடர்புகள் வைத்திருப்பதை, விசேடமாக மெயிற்லந்து ஆள்பதி விரும்பவில்லை.
கண்டியைக் கைப்பற்றிய பின் ஆங்கிலர், சமய விடயங் களில் முன்னர் கொண்டிருந்த கொள்கையை மாற்றினர். 1815 ஆம் ஆண்டு உடன்படிக்கையில் ‘கண்டி மாநில மக்களும் தலைவர்களும் கடைப் பிடிக்கும் பெளத்த சமயம் மாற்றப்படாது என அறிவிக்கப்படுகின்றது. அதன் கிரியைகள், அதன் குருமார், வழிபாட்டிடங்கள் ஆகியவை பேணப்பட்டுப் போற்றப்படும்' என பிறவுண்றிக் உறுதி கூறினன். முன் கண்டி மன்னன் செய்த கடமைகளை, பிறவுண்றிக் செய்யத் தலைப்பட்டான். மல்வத்த, அஸ்கிரிய சமய நிலையங்களின் தலைமை அதிகாரிகளைத் தானே நியமித்தான்.
1817-18 கலகத்தின் பொழுது தலதா மாளிகாவையினின்று புத்தரின் புனிதத் தந்தம் இரகசியமாகக் கலகக்காரரினல் அபகரிக் கப்பட்டது. மடுகல்ல என்ற பிரதானி கைப்பற்றப்பட்ட பொழுது, அப்புனிதப் பொருள், அவனுடனிருந்த இரு பிக்குகளின் கைகளில் காணப்பட்டது. அது மிக ஆடம்பரத்துடனும் பயபக்தியுடனும் கண்டிக்குக் கொண்டுவரப்பட்டு, பிரித்தானிய படைகளினல் காவல் செய்யப்பட்டது. புனித தந்தமிருந்த பெட்டகத்தினதும் அறையி னதும் திறவுகோல் அரசாங்க முகவர் கைகளில் ஒப்படைக்கப்பட்ட துடன், அவனே அதன் பாதுகாவலனுனன்.
வினுக்கள்
1. ஆள்பதி பாண்ஸ் முதல் தெருக்களை அமைத்ததற்குரிய காரணங்களையும் அவற்றினல் ஏற்பட்ட விளைவுகளையும் கூறுக.
2. முதல் முப்பது ஆண்டுகளில் ஆங்கிலர் கரையோர மாநிலங்
க்ளில் நிறுவிய நீதி பரிபாலன முறையினை விவரிக்க.
 

var ***
கோல்புறுாக் விசாரணையும் திட்டமும் 13.
3. 1831 வரை சராசரி செலவு, சராசரி வரவிலும் மிகுந்
திருந்தமைக்குக் காரணங் கூறுக. 4. இலங்கையின் புறவரிப் படமொன்றினில், பாண்ஸ் அமைத்த தெருக்களை வரைந்து, அவற்றின் முக்கியத்துவத்தை ஆராய்க. 5. கொழும்பினின்று கண்டிக்குத் தெருக்கள் அமைக்கப்பட்ட முறை, அதற்கான காரணங்கள், அவற்றினல் விளைந்த பயன்கள் என்பவற்றை ஆராய்க. 6. 1833 வரை குடியியற் சேவையின் வளர்ச்சியை படிமுறைப்படி
கூறுக. 7. சேர். எட்வட் பாண்ஸ் ஆள்பதியின் பரிபாலனத்தை மதிப்பிடுக
அதிகாரம் 8 கோல்புறுக் விசாரணையும் திட்டமும்
இலங்கையில் முடிக்குரிய குடியேற்ற நாட்டு ஆட்சி ஆரம் பித்த நாள் தொட்டு கால் நூற்றண்டு காலமாக, அரசாங்கத்தின் செலவு இறை வருமானத்தை மிஞ்சியதாகவே இருந்து வந்தது. வரவை அதிகரிப்பதற்கும், செலவைக் குறைப்பதற்கும் நடவடிக் கைகள் பல எடுக்கப்பட்டபோதும், அரசாங்க வருவாயின் குறை பல்லாண்டுகளாகத் தொடர்ந்து நீடித்து வந்தது. ஆள்பதி மெயிற் லந்து அனேக சீர்திருத்தங்களைச் செய்தபோதிலும், இன்னும் வருவாய் அதன் செலவுக்குப் போதுமானதாக இருக்கவில்லை. எனவே பிரித்தானிய அரசாங்கம், இத்தீவின் நிதி நிருவாக முறையி னைப் பரிசீலனை செய்து, வருவாயைப் பரிபாலனச் செலவுக்குப் போதுமானதாகக் கொண்டுவரவேண்டுமெனத் தீர்மானித்தது.
விசாரணைச் சபையின் நியமனம் :
நெப்போலியப் போர்களின் பயனகப் பிரான்சிடமிருந்து இங் கிலாந்து சுவீகரித்துக் கொண்ட புதுக் குடியேற்ற நாடுகளின் நிலையை ஆராய்வதற்கு விசாரணைச் சபையொன்றினை நியமிக்க வேண்டுமென
1822 இல் குடியேற்ற நாட்டுச் செயலாளர் வில்மட் ஹோட்டன், பிரித்
தானிய பாராளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தைக் கொணர்ந்தார். அவ்விசாரணைச் சபை, நன்னம்பிக்தை முனையினதும், மொறிஷஸ் தீவினதும் நிலையை ஆராய வேண்டுமென்பதே அவரது முதல்
في

Page 73
132 இலங்கைச் சரித்திரம்
நோக்கம். ஈற்றில் அச்சபையின் அதிகாரங்களை இலங்கைக்கும் விஸ்தரிக்க வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டது. அதே ருெ பட் வில்மட், ஒன்பது ஆண்டுகளுக்குப் பின் இலங்கையின் ஆள்பதியாக நியமிக்கப் பெற்று, தான் நியமித்த விசாரணைச் சபையின் சிபார்சுகளை அமுல் செய்யச் சித்தமானர். இத்தீர்மானத்துக்கிணங்க 1823 ஆம் ஆண்டு ஜனவரியில் வில்லியம் கோல்புறுாக், ஜோண் தொமஸ் விக்கே, வில்லியம் பிளேயர் என்ற மூவர் விசாரணைச்சபையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டனர். 1823 இல் நன்னம்பிக்கை முனை யிலும் 1825 இல் மொறிஷஸ் தீவிலும் விசாரணை நடத்திய பின், அவர் களுள் இருவர் தாயகம் திரும்ப, 1829 ஏப்ரில் மாதம் கோல்புறுாக் தனித்து இலங்கை வந்தடைந்தார். இத்தீவின் சட்ட நிருவாகமும் தக்கதாக இருக்காமையினல் அதனையும் சீர்திருத்தியமைக்க வேண்டு மெனப் பிரித்தானிய அரசாங்கம் எண்ணி, நீதி நிருவாக விடயங் களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவென C, H. கமரன் என்ப வரை 1830 இல் இலங்கைக்கு அனுப்பிற்று,
சீர்திருத்தங்களின் பின்னணி:
கைத்தொழிற் புரட்சியின் விளைவாகவும் பிரெஞ்சுப் புரட்சியின் காரணமாகவும் இங்கிலாந்தில் பல சீர்திருத்த இயக்கங்கள் தோன் றின. இவை நெப்போலியப் போர்களினல் சொற்ப காலத்திற்குத் தடைப்பட்டு, 1815 இல் மீண்டும் தலைதூக்கின. தொழிலாளர் உரிமை கள், பழைய ஆட்சிமுறை ஒழித்தல், பாதகவியல் சட்டங்களைத் திருத் தல், தொழிலாளர் ஒன்று கூடல், தடைச் சட்டங்களை நீக்குதல், பாரா ளுமன்றச் சீர்திருத்தம், கோதுமை வரிச்சட்டம் நீக்கல், எனும் இடயங்க%ளப் பற்றிப் பலவிதமான சீர்திருத்த இயக்கங்கள் புது உற்சாகத்துடன் நடாத்தப்பட்டன.
இக்காலத்தின் சீர்திருத்தத் தலைவர்களுள் அதி தலை சிறந்தவர் ஜெரமி பெந்தம் ஆவார். மக்கள் நலன் கருதியே ஆட்சி நடைபெற வேண்டுமென்ற கொள்கையை அவர் ஆதரித்தார். 'பெரும் பான்மையான மக்களின் பெரு நலன்', அதாவது நாட்டின் பெரும் பான்மையினருக்கு மிக மகிழ்ச்சியையும் மன அமைதியையும் தரவல்ல கொள்கையினையே அரசாங்கம் பின்பற்ற வேண்டும் என்பது அவர் கொண்ட கருத்தாகும். 1825 முதல் சுமார் அரை நூற்றண்டு காலத்துக்குப் பிரித்தானிய அரசியலில் பெந்தமின் கொள்கைகளுக்கு நல்ல ஆதரவும் செல்வாக்கும் நிலவின. அவரது கருத்தின்படி சட்டமியற்றுவதின் நோக்கம், கூடியவரை மக்களனைவர்க்கும் ஆட்சி முறையைப் பயன்படச் செய்ய வேண்டுமென்பதேயாகும். dil 'll
 

கோல்புறுாக் விசாரணையும் திட்டமும் 133
மியற்றுகையில் தனி மனிதனின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் தளைகளையெல்லாம் அவிழ்த்து விடுவதுதான் சிறந்த வழியாகும் என அவர் கருதினர்.
பெந்தமின் கொள்கைகளின் செல்வாக்கினல் இங்கிலாந்தில் சட்டச் சீர்திருத்தம் தீவிரமாக முன்னேறியது. 1832 ஆம் ஆண்டின் முதலாவது பாரளுமன்றச் சீர்திருத்த மசோதாவின்படி அரசியலா
திக்கம், நிலக்கிழார் கைகளிற் சிக்குண்டு கிடவாமல் நடுத்தர
வகுப்பினருக்கும் விஸ்தரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மக்களுக்கு இன்னல்களையும் துயரத்தையும் தரவல்ல பல சட்டங்களும் கட்டுப் பாடுகளும் நீக்கப்பட்டன. தனி மனிதனின் சுதந்திரத்தை நிலை பெறச் செய்யும் ஆட்சி முறைகள் பின்பற்றப்பட்டன.
இந்தியா :
மேலும் இக்காலத்தில் பிரித்தானிய அரசாங்கம், தனது குடி யேற்ற நாடுகள் மட்டில் கூடுதலான பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டுமென்ற பொறுப்புணர்ச்சியும் உயர்வடைந்தது. பிரித்தன் குடியேற்ற நாடுகளைச் சுரண்டுவது மாத்திரம் போதாது; அஃது அந்நாட்டு மக்களின் அபிவிருத்திக்கும் பொறுப்பேற்க வேண்டு மென வற்புறுத்தப்பட்டது. இக்கொள்கை சிறப்பாக இந்தியாவில் செயற்படுத்தப்பட்டமை, இலங்கைக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்தது.
1833 ஆம் ஆண்டின் பட்டயச் சட்டம், இந்திய மாநிலத்தில் வர்த்தக சங்கம், பிரித்தானிய அரசின் சார்பாக இயங்கும் பொறுப் பாட்சி நிலையம் என்னும் நிலையை ஏற்படுத்திற்று. பிரித்தானிய அரசாங்கம், இந்திய விவகாரங்களைத் தாம் நியமிக்கும் அதிகாரிகளின் மூலம் நிருவகிக்கத் தொடங்கியது. இக்காலத்தில் இந்தியாவின் சில ஆள்பதிகளும், ஆங்கில அலுவலாளர் பலரும், பிரித்தானிய அரசின் ஒப்புரவாண்மைக் கொள்கைகளை மிகத் திறம்பட அமுல்நடத்தினர்கள். 1833 ஆம் ஆண்டுச் சட்டத்தின்படி பென்ரிங்கு பிரபு (1828-35) வில்லியம் கோட்டையின் இறுதி ஆள்பதியும் இந்தியாவின் முதல் ஆள்பதி நாயகமுமானர். இவரது காலத்தில் இந்தியாவில் பல முக்கியமான சீர்திருத்தங்கள் நடந்தேறின. நன்முறையில் ஆட்சி செய்ய வேண்டியதன் அவசியத்தை நன்குணர்ந்த அவர், அரசியற் றுறையிலும் சமுதாயத் துறையிலும் பல சீர்திருத்தங்கள் செய்தார். வரி வசூலிக்கும் முறையிலும், நீதித்துறையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன. அவர் சுலபமாகவும் விரைவாகவும் எல்லோ ருக்கும் நீதி கிடைக்கும்படி செய்தார். இந்தியர்களை உயர் பதவிகளில்
g). 9 A
..

Page 74
134 இலங்கைச் சரித்திரம்
அமர்த்தி, அவர்களின் சம்பளத்தையும், அந்தஸ்தையும் உயர்த்தினர். இந்தியர், உயர் நீதிமன்ற நீதிபதிகளாகவும் நியமிக்கப்பட்டனர். பென்ரிங்கின் சட்ட அமைச்சராகவிருந்த மக்காலே பிரபு(1834-38) என்பவரின் முயற்சியால் ஏற்பட்ட இந்தியத் தண்டனை விதிக் கோவை யும், நடைமுறைக் கோவையும் சிறப்பு மிகுந்தவை. பெந்தமின் கொள்கை வழியே செயலாற்றிய மக்காலே, இந்தியாவில் கல்வி, சட் டம், முதலியவற்றின் விருத்திக்காக அயராது உழைத்தார். ஆட்சி முறையில் ஊழியங்களையும் ஐரோப்பியருக்கிருந்த சிறப்புரிமை களையும் எதிர்த்து வன்சமர் நடாத்தினர். உச்ச நீதிமன்றத்துக்கு முறையீடு செய்வதற்கு ஐரோப்பியருக்கிருந்த சிறப்புரிமை 1836 ஆம் ஆண்டுச் சட்டத்தினல் நீக்கப்பட்டது. இதனல்இந்தியாவில் நீதி வழங்குவதிலிருந்த இன வேற்றுமை ஒழிந்தது. மக்காலே ஆங்கில மொழியைப் பரப்புவதிலும் தீவிரமாக உழைத்தார். ஆங்கில மொழி மூலம் கல்வி போதிக்க முடிவு செய்யப்பட்டதன் பயனக, ஆங்கிலப் பாடசாலைகள் நிறுவப்பட்டன. அவற்றுக்கு அரசாங்கம் உதவிப் பணம் அளிக்கவும் முன்வந்தது.
மெற்காப் (1835-26) இந்தியா வெங்கணும் பத்திரிகைகளின் சுதந்திரத்தை அனுமதித்தார், ν
கோல்புறுாக், கமரனின் கொள்கைகள் :
இலங்கை வந்து சேர்ந்த கோல்புறுரக், கமரன் இருவரும் பெந்திமின் பயனுடைவாதக் கொள்கைகளில் உறுதிபான நம்பிக் கையும் விசுவாசமுமுடையவர்கள். இந்நாட்டில் தற்போக்குக்கொள் கையுடைய அரசாங்கமொன்றினை அமைக்க வேண்டுமென்பது. அவர்களது குறிக்கோளாயமைந்தது. தனியாரின் முயற்சியை ஊக்கு விப்பதும், தனியாள் சுதந்திரத்தைப் பேணிக்காப்பதுமே அரசாங்கத் தின் முதற்கடன், என அவர்கள் எண்ணினர். வியாபாரம், வர்த்தகம், கைத்தொழில் எனும் துறைகளில் அரசாங்கம் தலைபிட்டுக் கட்டுப் பாடுகள் விதிக்கவெ1ண்ணுது, நாட்டின் செல்வ விருத்திக்கு அரசாங் கத்தின் கட்டுப்பாடற்ற தனி மனிதனது சுதந்திரமான முயற்சியே காரணமாக இருத்தல் வேண்டும், என அவர்கள் கொண்டனர்.
அவர்கள் பயன் எனும் அளவுகோலைக் கொண்டு இந்நாட்டின் நிறுவகங்களின் உபயோகத்தை அளந்து, இங்கு நிலவிய் ஆட்சி முறையில் மாற்றங்களைச் சிபார்சு செய்தனர். எங்கெங்கு சிறப்புரி மைகளையும், ஏகபோக உரிமைகளையும் கண்டனரோ அங்கங் கெல்லாம் அவர்கள் அவற்றை வன்மையாகக் கண்டித்தனர். இவ் வடிப்பட்ைடியிற்முன் அவர்கள் இராசகாரிய முறையினையும், அரசாங்

கோல்புறுக் விசாரணையும் திட்டமும் I 35
கத்தின் ஏகபோக உரிமைகளையும் ஒழிக்க வழி வகுத்தனர்; பரிபால னத்துக்குரிய சட்டங்களில் பாரபட்சத்தை வன்மையாக எதிர்த்தனர்; அரசாங்கம் பொருளாதாரத்துறையில் தலையிடுவதைக் கண்டித்தனர். இவற்றுக்குப் பதிலாக அவர்கள், கட்டிலா வியாபாரத்தைப் போற் றிப் புகழ்ந்தனர்; தற்போக்குக் கொள்கையை வலியுறுத்தினர்; நிலங்களின் உபயோகத்தைத் தடை செய்த கட்டுப்பாடுகளை நீக்கு வதன் இன்றியமையாமையை வற்புறுத்தினர்.
கோல்புறுாக் ஈராண்டுகளையும், கமரன் ஒராண்டையும் இத் தீவினில் செலவிட்டு ஈற்றில் 1832 ஆம் ஆண்டு தம் அறிக்கைகளைச்
சமர்ப்பித்தனர். கோல்புறுாக், அரசாங்க நிருவாகம், வரவு, கட்டாய
சேவைகள், நிறுவகங்கள் எனும் பொருள்கள் பற்றி நான்கு அறிக்கை களையும், கமரன் நீதி நிருவாகம் பற்றி ஒர் அறிக்கையையும் சமர்ப் பித்தனர். இவ்வறிக்கைகள் விசேட அவதானத்துக்கும், நுட்பமான ஆராய்வுக்குமுரியன. ஏனெனில் அவற்றின் கண் கூறப்பட்ட சிபார்சுகள் தாம் இலங்கை சுதந்திரப் பதத்தை அடைவதற்கு அத்தி வாரமிட்டனவெனலாம். அது மாத்திரமன்றி இலங்கையில் பரி சோதனை செய்யப்பட்ட இம்மாதிரியைப் பின்பற்றியே, பிரித்தானிய அரசாங்கம் ஏனைய முடிக்குரிய குடியேற்ற நாடுகளுக்கும் சுதந்தி ரத்தை வழங்கிப் பழைய பிரித்தானிய ஏகாதிபத்தியத்தைச் சமபத முடைய அரசுகளைக் கொண்ட பொதுநலவரசாக மாற்றியது.
1. நிருவாகச் சீர்திருத்தங்கள்
கோல்புறுரக்-கமரன் ஆணைக்குழுவினர் செய்த சிபார்சுகளினல் ஏற்பட்ட அதிமுக்கிய பயன், நாட்டில் உண்டான ஒற்றுமையாகும். அவர்களின் வருகையின் பொழுது கரையோரச் சிங்கள மாவட்டங்கள், தமிழ் மாவட்டங்கள், கண்டி மாவட்டங்கள் என்ற மூன்று பிரதேசங் களிலும் மக்களின் பழக்கவழக்கங்களுக்கிசைய பரிபாலனக் கருமங்கள் நிருவகிக்கப் பெற்றன. கண்டிப் பிரதேசத்தில் தனியொரு ஆட்சி முறை நிலவியதனுல் கரையோர மாநிலங்களில் ஏற்பட்டிருந்த முன்னேற்றம் அங்கு புக முடியாமற் போகவே அதன் வளர்ச்சி நிலை, 300 ஆண்டுகளினல் பின்தங்கியதாகக் காணப்பட்டது. இப்பிரி வினைகளை வன்மையாகக் கண்டித்த கோல்புறுாக், ஒரு சிறு நாட்டின் எல்லைகளுக்குள் பலவித பரிபாலன முறைகள் அனுமதிக்கப்படுவது மடைமைத்தனம் எனக் கூறினர். நாட்டின் பல்வேறு சாகி யத்தாருக்கிடையில் ஒற்றுமையை வளர்ப்பதற்கு, எங்கும் ஒரே'. ஆட்சிமுறை நிலவுவது இன்றியமையாததெனக்கண்ட அவர் முழுத்

Page 75
I 36
இலங்கைச் சரித்திரம்
இலங்கை
1833
ம் மாகாண எல்லைகள்
 

கோல்புறுாக் விசாரணையும் திட்டமும் 137
தீவும் ஆள்பதியினல் பரிபாலனம் செய்யப்பட வேண்டுமெனக் கட்டளை பிறப்பித்தார். கண்டியின் ஆணைக்குழுச் சபை நிராகரிக்கப் பட்டது. இலங்கை, மேல், கீழ், தென், வட, மத்திய மாகாணங் களென ஐந்து புது நிருவாகப் பகுதிகளாகப் பகுக்கப்பட்டது. புது மாகாணங்களின் எல்லைகள் வரையறுக்கப்பட்ட பொழுது பழைய பாகுபாடுகள் பொருட்படுத்தப்படவில்லை. கண்டி மாவட்டங்கள் பல, ஏனைய மாகாணங்களுடன் இணைக்கப்பட்டன. நுவரகலாவிய மாவட்டம் வட மாகாணத்துடனும், சபிரகமுவா தென்மாகாணத் துடனும் இணைந்தன. ஒவ்வொரு மாகாணத்துக்கு அதிபதியாக பிரித் தானிய முகவர் ஒருவரும் உதவி முகவரும் நியமிக்கப்பட்டனர். கமரன் சிபார்சு செய்த நீதிச் சீர்திருத்தங்களின் பயனுக சாதி, சமய, இன வேற்றுமைகளைப் பொருட்படுத்தாது எல்லா மக்களுக்கும் பொதுவான ஒரே நீதிமுறை ஏற்படலாயிற்று.
2. சட்ட, நிருவாகக் கழகங்கள்
ஆள்பதியின் சர்வாதிகாரத்தைக் கட்டுப்படுத்த ஒரு சட்ட நிருவாகக் கழகத்தையும், பொது விடயங்களை அலசி ஆராய்ந்து ஆள்பதிக்கு ஆய்வுரை கூறிச் சட்டதிட்டங்களை ஆக்க உதவி செய்வதற் கென ஒரு சட்டக் கழகத்தையும் அமைக்கவேண்டுமென விசாரணைச் சபையினர் சிபார்சு செய்த மாற்றங்கள்தாம், அரசியற்றுறையில் உண்டான அதி முக்கிய ஏற்பாடுகளாகும்.
நிருவாகக் கழகத்துக்கு ஆள்பதி தலைமை தாங்கினர். அதில் இராணுவத் தளபதி, குடியேற்றச் செயலாளர், குடியேற்றப் பொரு ளாளர், முடிக்குரிய வழக்கறிஞர் (இன்றைய சட்டத்துறை நாயகம்), மத்திய மாகாண அரசாங்க முகவர் என்ற பிரதான அரசாங்க உத்தியோகத்தர்கள் ஐவர் அங்கம் வகித்தனர். நிருவாக விடயங்களில் ஆள்பதிக்குத் துணைபுரிவதும், சட்டக் கழகத்தின் விவாதத்துக்குப்
புதுச் சட்டங்களைத் தயாரித்தலும் இக்கழகத்தின் பிரதான கடமை களாகும்.
சட்டக் கழகம், உத்தியோகப் பற்றுள்ள உறுப்பினர் ஒன்பதின் மரை - நிருவாகக் கழக அதிகாரிகள் ஐவரையும் வட மாகாண, மத்திய மாகாண அரசாங்க முகவர்களையும் கொண்டது. அவர்களுடன் உத்தியோகப்பற்றற்ற உறுப்பினர் அறுவரில் ஐரோப்பியர் மூவரையும் சுதேசிகள் மூவரையும் நியமிக்க வேண்டுமென ஆள்பதிக்குக் கட்டளை யிடப்பட்டது. இந்த நியமனம், உள்ளூர் விடயங்களைப் பற்றித் தகவல் களை அறியவும் மக்களுக்குத் தம் சட்டதிட்டங்கள் யாவும் தம்பிரதி:

Page 76
38 இலங்கைச் சரித்திரம்
நிதிகளினலேயே ஆக்கப்பட்டவை என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவும் உதவுமென நம்பினர். சட்டக் கழகத்தின் நடவடிக்கைகளுக்கு ஆள்பதியே தலைமை தாங்குவார். சட்டக் கழகத்தின் அதிகாரங்கள் மிகவும் குறைந்தவை. ஆள்பதியினலும் நிருவாகக் கழகத்தினலும் சமர்ப்பிக்கப்பட்ட சட்டதிட்டங்களை விவாதிக்கவும், அவற்றில் மாற் றங்களைச் செய்யவும் மாத்திரமே சட்டக் கழகம் உரிமை பெற்றிருந் தது.புதுச்சட்டங்களைக் கொண்டுவர அதற்கதிகாரம் மறுக்கப்பட்டது.
உத்தியோகப் பற்றற்ற உறுப்பினர் அறுவர் சட்டக்கழகத்தில் இடம் பெற்றமை, பிற்கால சரித்திரத்தினின்று நோக்குமிடத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாற்றமாகும். ஏனெனில் நாட்டின் நிரந்தரப் பிரஜைகளினதும், தற்காலிகப் பிரஜைகளினதும் நன்மைக் காக அவர்களின் அபிப்பிராயங்களை அறிந்தே அரசாங்கம் புதுச்சட்டங் களை அமுல் நடத்த எண்ணங் கொண்டதென்பதற்கு இது சிறந்த எடுத் துக்காட்டாகும். சுருங்கக்கூறின், இம்மாற்றந்தான், இலங்கையில் ஜன நாயகத்தையும் பிரதிநிதித்துவ ஆட்சிமுறையினையும் ஆரம்பித்து வைத்ததெனத் திடமாகக் கூறலாம்.
இத்திட்டத்திற் குறைகளில்லாமலில்லை. உத்தியோகப் பற் றுள்ளோர் ஒன்பதின்மருக்கு எதிராக உத்தியோகப் பற்றற்ற உறுப் பினர் அறுவர் மாத்திரமே நியமிக்கப்பட்டமை, அவர்களும் மக்க ளினல் தெரிந்தெடுக்கப்படாமல் ஆள்பதியினுல் நியமிக்கப்பட்டமை, சிறு எண்ணிக்கையில் வாழ்ந்த ஐரோப்பியருக்கும் எல்லா இலங்கை வாழ் சமூகத்தினருக்கும் சம அளவு பிரதிநிதித்துவம் வழங்கப் பெற்றமை, என்பன இப் புதுத் திட்டத்தில் காணப்பட்ட குறைகளா கும். எனினும் இக்குறைகள் அதன் உண்மையான முக்கியத்துவத்தை மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. ஏனெனில் நடக்கத் தெரியாத மக்களை ஒடச் செய்ய முயற்சிப்பது இயற்கைக்கு மாருன ஒரு கருமமேயாகும்.
3. ஆள்பதியின் அதிகாரங்கள் குறைக்கப்படல்
1802இல் இலங்கை முடிக்குரிய குடியேற்ற நாடானதிலிருந்து குடியேற்ற நாட்டின் பரிபாலனம் ஆள்பதியிடம் ஒப்படைக்கப் பட்டதுடன் நாட்டை நல்லாட்சி செய்வதற்காக எல்லா அதிகாரங் களும் அவரின் கைகளிலேயே விடப்பட்டன. அக்காலத்தய ஆள்பதிகள் சர்வாதிகார அதிகாரங்கள் படைத்த குறுநில முடிமன்னர்களைப் போலத் திகழ்ந்தனர். சட்டமியற்றல், நிருவாகம், இராணுவம், நீதிபரிபாலனம் எனும் சகல கருமங்களுக்கும் அவரே அதிகாரியாக
 

R
கோல்புறுரக் விசாரணையும் திட்டமும் 139
விளங்கினர். ஆள்பதி நாட்டின் எப்பிரசையையும் சிறைப்படுத்த , ' விசாரணையின்றிச் சிறைத்தண்டனை விதிக்க, அல்லது நாடு கடத்த அதிகாரம் பெற்றிருந்தார். மேலும் அவர் நாட்டின் நீதிமன்றங் களின் ஆணைக்கு மேற்பட்டவராக இருந்தார். அவரது செயலை ஆட்சேபிக்க எந்த நீதிமன்றத்திற்கும் அதிகாரமில்லை, என விதிக் கப்பட்டிருந்தது.
தனி மனிதனின் சுதந்திரத்திலும், தாராள கருத்துக்களிலும் நன்கு திளைத்திருந்த கோல்புறுாக், இலங்கையை ஆள்பதி" ஒருவரின் சர்வாதிகார ஆட்சியின்கீழ் விடுவது தகாது என்று கருதினர். அவர் சிபார்சு செய்த சீர்திருத்தங்கள், இந்நாட்டில் தனி மனிதனின் சுதந்திரத்துக்கு உத்தரவாதம் அளித்தன. அவர் ஆள்பதியின் சர்வாதிகாரங்களை மட்டுப்படுத்தியதுமன்றி, அவரை வரம்புடைய ஆட்சிமுறைக்கும் உட்படுத்தினர். மக்களை விசாரணையின்றிச் சிறைப் படுத்த அல்லது நாடு கடத்த ஆள்பதிக்கு இருந்த அதிகாரங்கள் நிராகரிக்கப்பட்டன. ஆள்பதியின் அதிகாரத்துக்குக் கீழ்ப்படாத உயர் நீதிமன்றமும், அதன்கீழ் மாவட்ட நீதிமன்றங்களும் நிறுவப் பட்டதுடன் ஆள்பதியின் நீதி அதிகாரங்கள் ஒழிந்தன. இராச காரிய முறை நீக்கப்பட்டதுடன், அவர் பிரஜைகளை அரசாங்கத்துக்குக் கட்டாய வேலை செய்யுமாறு கட்டாயப்படுத்துவதற்குப் பெற்றிருந்த அதிகாரமும் நீங்கியது. தவிரவும் அவர் சட்ட நிருவாகக் கழகங் களின் ஆலோசனையுடன்தான் வரவு, செலவு சம்பந்தமான சகல கருமங்களையும் செய்ய வேண்டுமென விதிக்கப்பட்டமையினல் அவரது அதிகாரங்கள் மென்மேலும் குறைந்தன.
4. இராசகாரிய முறையின் ஒழிப்பு
இராசகாரிய முறை இலங்கையில் தொன்று தொட்டு வழக் கிலிருந்து வந்த ஒரு சேவை முறையாகும். நிலங்களுடையவர்கள் யாவரும் அரசாங்கத்துக்குப் பல விதப்பட்ட சேவைகளைச் செய்தும் திறைகளை இறுத்தும் வந்தனர். பிரித்தானியர் இலங்கையை வெற்றிகொண்ட பொழுதும் இம்முறை இங்கு நிலவியது. கிழக்கிந்திய வர்த்தக சங்கமும், முதல் ஆள்பதி நோத்தும் இம்முறையை மாற்ற முனைந்தும் சித்தியடையவில்லை. பின் வந்த ஆள்பதிகள், இராசகாரிய முறையின் கெடுதியைக் குறைப்பதற்காகப் பல பிரமாணங்களை இடையிடையே இயற்றினர். கோல்புறுாக்கின் வருகையின் பொழுது, மக்கள் இராசகாரிய வேலைக்குப் பதிலாக ஒரு வரியை இறுத்து : வந்த பொழுதும் சட்டத்தின்படி எல்லோரும். அர்சாங்கத்துக்குக்

Page 77
140 இலங்கைச் சரித்திரம்
கட்டாய சேவை புரியக் கடமைப்பட்டு இருந்தனர். அவர்கள் ஓர் ஆண்டில் இரு வாரங்களுக்குத் தம் கிராமங்களில் பாதைகளையும், பாலங்களையும் பழுது பார்ப்பதில் வேலை செய்ய வேண்டுமென்ற நியதி இருந்தே வந்தது. ஆள்பதி பாண்ஸ், இச்சேவையைக் கொண்டு தான் தெருக்களையும் பாலங்களையும் அமைத்தார் என்பது நோக்கற் List agil.
s
கோல்புறுரக், இராசகாரிய முறையில் LG) அநீதிகளைக்
கண்டார். இம்முறையின் கீழ், மக்கள் தம் காணிகளை விட்டுவிலகவோ, தொழிலை விடவோ முடியாதிருந்தது. அரசாங்கமும் தனது பொது
மராமத்து வேலைகளை நிறைவேற்றுவதற்கு இப்பேர்ப்பட்ட ஒரு முறையில் தங்கி நிற்பது ஒர் அடிமை முறையினை நீடிக்கச் செய்வதற் குச் சமானமாகுமெனக் கூறினர். மேலும் இம்முறை தனி மனிதனின் முன்னேற்றத்துக்கும் உயர்வுக்கும் சந்தர்ப்பம் கொடுக்காததினுல் அது விவசாய வர்த்தக விருத்தியைத் தடைசெய்து நாட்டின் செல்வ விருத்திக்குக் குந்தகம் விளைவித்ததெனக் கூறினர். இப்பல்வேறு காரணங்களை முன்னிட்டுக் கோல்புறுரக், இராசகாரிய முறை நீக்கப் படவேண்டுமென்று கட்டளையிட்டார். 1832 ஏப்ரல் 12 இல் பிறப் பிக்கப்பட்ட கட்டளைச் சட்டத்தின்படி இராசகாரிய முறை ஒழிக்கப்பட்டது.
இப்புராதன முறை நீக்கப்பட்ட நாள், இலங்கைவாழ் மக்களின் வரலாற்றில் ஒரு பொன்னளாம். ஏனெனில் அன்று தொட்டு மனிதன் ஒவ்வொருவனும் தனது தனிச் சுதந்திரத்தைப் பெற்றுத் தான் விரும்பிய தொழிலை மேற்கொள்ள வழி பிறந்தது. சாதிக்கட்டுப் பாடுகள் தளர்ந்தன. சட்டத்தின் முன்னிலையில் சமமென மதிக்கப் படும் காலம் மலர்ந்தது.
5. ஏகபோக உரிமைகளின் நீக்கம்
கட்டிலா வியாபாரத்தையும், தனியார் முயற்சியையும் பெரிதும் ஆதரித்த கோல்புறுாக், அரசாங்கத்தின் ஏகபோக வியாபார உரிமைகள் நீக்கப்படவேண்டுமெனச் சிபார்சு செய்ததில் வியப்பில்லை. இவ்வுரிமைகளை ஒழித்தாற்ருன் தனியார் தொழில், வியாபாரம்முதலாம் துறைகள் வளர்ச்சி பெறவும், நாட்டின் செல்வ நிலை விருத்தியடையவும் முடியுமென அபிப்பிராயப்பட்டார். எனவே கோல்புறுாக்கின் சிபார் சின்படி 1833 ஆம் ஆண்டு அரசாங்கம், கறுவாவியாபாரத்திற் பாராட்
டிய சக்ல ஏகபோக உரிமைகளும் ஒழிக்கப்பட்டதுடன் கறுவாச் சட்டங்
களும் இரத்துச் செய்யப்பட்டன. அரசாங்கம் தன்னகத்தே
踝。”
 

கோல்புறுாக் விசாரணையும் திட்டமும் 14l
வைத்திருந்த வேறு பல தனியுரிமைகளையும் கைவிட்டது. அதன் கோப்பி, மிளகுத் தோட்டங்கள் விற்பனையாயின, தேங்காயெண் ணெய், காரியம் போன்ற பொருள்களை ஏற்றுமதி செய்யும் உரிமையையும் நிறுத்தியது. அரசாங்கம் விதித்த வரிகள் நாட்டின் விவசாய, தொழில் விருத்திக்கு இடையூறுகளை விளைவித்தன எனும் காரணத்தை முன்னிட்டு, அவைகளும் படிப்படியாக நீக்கப்பட வேண்டுமெனச் சிபார்சு செய்தார்.
6. நீதி பரிபாலனம்
Ay
இலங்கையில் தற்கால நீதி பரிபாலன முறையைத் தோற்று வித்தவர் கமரன் எனக் கூறின் மிகையாகாது. கமரன் அறிவிலும் ஆற்றலிலும் கோல்புறுாக்கிலும் சிறந்தவர், பெந்தமின் கொள்கைகளை நன்கு விளங்கியவர். நாட்டின் நீதி பரிபாலனத்தைத் திறமையுடன் இயங்கச் செய்ய வேண்டும், ஐரோப்பியர்-சுதேசிகள், செல்வந்தர்வறியோர் என்ற எவ்வித பாகுபாடுகளுமின்றி எல்லோருக்கும் ஒரே நீதி வழங்கப்பட வேண்டுமென்ற கொள்கைகள் தாம் அவரது நோக்கங்களாயமைந்தன. சாதி சமய வகுப்புப் பேதங்களை ஒழித்துத் தனி மனிதனுக்குச் சுதந்திரம் கொடுபட வேண்டுமென்பது அவர் கொண்ட இலட்சியமாகும். மக்கள், நீதிமன்றங்களில் விரைவாகவும் செலவின்றியும் தீர்ப்புக்களைப் பெற வேண்டும் என்றும், அம்மன்
றங்கள் அவர்கள் இலகுவாக அடையக்கூடிய இடங்களில் அமைக்கப்
படவேண்டும் என்றும் கமரன் வற்புறுத்தினர். நீதிமன்றங்களின் நிருவாக ஒழுங்கீனத்தினலும், பிழையான தீர்ப்புக்களினலும் ஏற் படக்கூடிய தீங்குகளினின்று மக்களைக் காப்பதற்கு அவர், கீழ் மன்றங் களின் தீர்ப்புகளினின்று மேல் மன்றங்களுக்கு முறையீடு செய்யும் முறையை ஏற்படுத்தினர். இதுதான் கமரன் ஏற்படுத்திய புது நீதாசன முறையின் மிகவும் முக்கியமான அம்சம்.
கமரனின் சிபார்சுகளின்படி இலங்கையில் உச்ச நீதிமன்றம் நிறுவப்பட்டு, நாட்டின் சகல நீதிமன்றங்களும் அதன் ஆணையின் கீழ் இயங்க வேண்டுமென விதிக்கப்பட்டது. நீதி பரிபாலனத்தை முன் னிட்டுத் தீவு மூன்று மாநிலங்களாகப் பகுக்கப்பட்டது. இவை மேலும் மாவட்டங்களாகப் பகுக்கப்பட்டு, ஒவ்வொன்றிலும் ஒரு மாவட்ட நீதிமன்றம் அமைக்கப் பெற்றது. இதனல் தீவின் எல்லாப் பாகங் களிலும் எல்லா இனத்தினருக்கும் ஒரே நீதிமுறை வழங்கும் முறை ஏற்பட்டது. ஜ" றி முறை நிலைத்தது. ஆளுரிமைக் கட்டளை முறை அமுல் செய்யப் பெற்றது. ருேமன் டச்சுச் சட்டத் தொகுப்பு நாட்டின் பிரதான நீதிக் கோவையாயமைந்தது. கண்டியரினதும் தமிழரினதும் பாரம்பரிய நீதி முறைகள் அனுமதிக்கப்பட்டன.
菁

Page 78
I42 இலங்கைச் சரித்திரம்
1833 ஆம் ஆண்டு வெளியான பட்டயத்தின்படி இச்சீர்திருந் தங்கள் அமுல் செய்யப்படவும், நாட்டில் ஓர் உறுதியான நீதாசன முறை ஏற்படவும் வழி பிறந்தது. ஆங்கிலர் இலங்கைக்கு ஈந்த நன்மைகளில் முதலிடம் வகிக்க வேண்டியது, கமரன் இங்கு நிலை நாட்டிச் சென்ற நீதி பரிபாலன முறையாகும். கமரன் இலங் கையில் பன்னெடுங் காலமாக இருந்து வந்த கன்சபாவைகளின் நீதி அதிகாரங்கள், புது மாவட்ட நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட வேண்டுமென்றும் சிபார்சு செய்தார்.
7. குடியியற் சேவைத் திருத்தங்கள்
விசாரணைச் சபையினர், நாட்டின் வருமானம், அவற்றின் தற் போதைய நிலை, அவற்றைப் பெருக்குவதற்கான வழி வகைகள், நாட்டின் செலவுகள், அவற்றைத் தீவின் சாதாரண வருவாய்க்கு உட்படக்கூடிய அளவுக்கு குறைத்தல் எனும் விடயங்களை விசேட விதமாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென விதிக்கப்
பட்டனர்.
கோல்புறுாக் அரசாங்க செலவினங்களைக் குறைப்பதற்கு, குடியியற் சேவையாளரின் எண்ணிக்கையைக் குறைக்கவும், அவர்களின் சம்பளங்களைத் தாழ்த்தவும், ஓய்வு காலச் சம்பளங்களை நிராகரிக்கவும் வேண்டுமெனச் சிபார்சு செய்தார். இத்துறையில் அவர் செய்த சிபார்சுகள் வன்மையான கண்டனத்துக்குரியவை. ஏனெனில் அவரது திருத்தங்களின் நேர்ப்பயனகக் குடியியற் சேவை திறமையிலும் தரத் திலும் மிகவும் வீழ்ச்சியடைந்தது. குறைந்த சம்பளம், குறைந்த திறமையுள்ளவர்களையே சேவைக்குக் கவர்ந்தது. 1845 க்குப் பிற்பட்ட ஆண்டுகளில் ஆள்பதிகள் இருவர், இக்குறையைப் போக்கி குடியியற் சேவையை மீண்டும் பழைய உயர் நிலைக்கு உயர்த்தினர்.
இத்துறையில் கோல்புறுாக் சிபார்சு செய்த வேருெரு திருத்தம் போற்றற்பாலது. அக்காலத்தில் வழக்கிலிருந்த ஆங்கிலர் மாத்திரம் குடியியற் சேவைக்கு நியமிக்கப்படவேண்டும் என்ற கொள்கையை அவர் நீக்கினர். ஆங்கிலர், இலங்கையர் என்ற பாகு பாடின்றித் தகுதியும் திறமையுமுடையவர்கள் எவரும் குடியியற் சேவையிற் சேர, அதன் கதவுகள் திறந்து விடப்பட வேண்டுமெனச் சிபார்க் செய்தார்.
W: ጃቫo · V. ]
 
 

கோல்புறுக் விசாரணையும் திட்டமும் 143
8. கல்வி
கோல்புறுாக் விசாரணைச் சபையினர் இங்குற்ற பொழுது இலங்கையில் நிலவிய கல்விமுறை முன்னதிகாரத்தில் விவரிக்கப் பட்டது. அப்பொழுது அரசாங்கப் பாடசாலைகள், மிஷன் பாட சாலைகள், தனியார் பாடசாலைகள் என மூவிதக் கல்வி நிலையங்கள் இங்கு இயங்கி வந்தன எனக் கண்டோம்.
இம்மூவித பாடசாலைகளின் குறைநிறைகளைப் பரிசீலனை செய்த கோல்புறுாக், அரசாங்க பாடசாலைகளைப் பற்றிக் கூறியதாவது **இங்கு சுதேச மொழிகளில் வாசினையும் எழுத்தும் தவிர வேறென்றும் கற்பிக்கப்படுவதில்லை. இப்பாடசாலைகளில் நிலவும் கட்டுப்பாட்டுக் குறைவினல் மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் வரவைப் பெற முடியாது இருப்பதுடன் பல ஊழல்களும் காணப்படுகின்றன. பல சந்தர்ப்பங்களில் அரசாங்கப் பாடசாலைகள் பெயரளவில் மாத் திரமே இருந்து வருகின்றன. அவை குறைகள் மிகுந்தனவாயும், திறமை குறைந்தனவாயும் உள்ளன.* மறுபுறம் மிஷன் பாடசாலை களின் திறமையையும், அவை செய்து வந்த சேவைகளையும் அவர் புகழ்ந்து பாராட்டினர். ருேமன் கத்தோலிக்கரும், பெளத்தரும் நடாத்தி வந்த தனியார் பாடசாலைகள் அவரது கவனத்தைப் பெறவில்லை.
பாடசாலைச் சபை :
இவ்விதம் இங்கு நிலவிவந்த கல்வி முறையில் காணப்பட்ட குறைகளை நீக்கும் நோக்குடன், கோல்புறுரக் பல சிபார்சுகளைச் செய் தார். அரசாங்கப் பாடசாலைகளின் நிருவாகக் குறைவையும் யோகமின்மையையும் சீர்திருத்துவதற்கு அவர், அவற்றின் மேற் Listria)6) dig, CD ' ' LIT Lafraud Faol 1 '' (School Commission) அமைக்கப்பட வேண்டுமெனச் சிபார்சு செய்தார். இச்சபையில் **தீவின் தலைமைப் பாதிரியார், சகல பாதிரிமார்கள், அரசாங்க முக வர்கள், அரசாங்கத்தின் பிரதான குடியியல், நீதி பரிபாலன உத்தி யோகத்தர்' அங்கம் வகிக்கவேண்டுமென அவர் விதித்தார்.
ஆங்கிலப் பாடசாலைகள் :
அரசாங்கப் பாடசாலைகளில் ஆங்கிலம் முறையாகக் கற்பிக் கப்படாததையிட்டுக் கோல்புறுாக் அதிருப்தி தெரிவித்தார். இவற்றில் நடைமுறையிலிருந்து வந்த போதன மொழிகளான சுதேச மொழி களை ஆங்கிலத்துக்கு மாற்றும் நோக்குடன், எல்லா ஆசிரியர்களும் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றவர்களாக இருத்தல் வேண்டுமெனக்

Page 79
144 இலங்கைச் சரித்திரம்
கூறியதுடன், புதுப் போதன மொழியை ஊக்குவிக்கும் நோக்கமாக அவர் அரசாங்க சேவையில் புகும் வாய்ப்பினையும் இளைஞர்களுக்குத் திறந்துவிட்டார்.
9. கோல்புறுரக் சீர்திருத்தங்களின் முக்கியத்துவம்
, கோல்புறுாக்-கமரன் சீர்திருத்தங்கள், இலங்கையின் வரலாற்றில் ஒரு புதுத் திருப்பத்தை உண்டுபண்ணியனவாகப் பொதுவாகக் கணிக் கப்படுகின்றன. இலங்கைப் பல்கலைக் கழகத்தில் சரித்திரப் பேராசிரி யராகப் பணி புரிந்தவரும், நீண்ட காலம் இலங்கைச் சரித்திரத்தில் ஆராய்ச்சி நடாத்தியவரும், பல நூல்களை எழுதியவருமான திரு. G. C. மென்டிஸ் அவர்கள், கோல்புறுாக் சீர்திருத்தங்களை ஐரோப் பாவில் 16 ஆம் நூற்ருண்டில் நிகழ்ந்த மாற்றங்களுடன் ஒப்பிட்டு, அவை எவ்விதம் தற்கால ஐரோப்பாவின் மலர்ச்சிக்கு வழி திறந்து விட்டனவோ, அதே விதமாகக் கோல்புறுாக் சீர்திருத்தங்கள் தாம் இலங்கையில் தற்காலம் மலர்வதற்கு வழி செய்தனவெனக் கூறு கின்ருர், அவர் எழுதிய "இலங்கை இன்றும் அன்றும்" எனும் நூலில் கூறுவதாவது 'கோல்புறுாக் சீர்திருத்தங்கள் இலங்கையின் வரலாற்றில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில் அவை தாம் இலங்கை இடைக்கால நிலையினின்று தற்கால நிலைச்கு மாறுவதற்கு விழிகாட்டின. அவை இலங்கையின் வரலாற்றினை வழி பிரிக்கும் இயல்புடையவை. அவற்றினின்று நாங்கள் பின் நோக்கிப் புராதன சிங்கள, தமிழ் முறைகளை நோக்கவும் எதிரே இலங்கையின் தற்கால வளர்ச்சியைக் காணவும் இயலும்' என்கிருர், கோல்புறூக் கின் சீர்திருத்தங்கள், இலங்கை முன்னெரு பொழுதும் கண்டிராத விசாலமான பொருளாதார, சமுதாய, அரசியல் வளர்ச்சிக்கு வழி காட்டின என்பதை மறுப்பதற்கில்லை. கோல்புறுாக் சீர்திருத்தங்கள் இலங்கைச் சரித்திரத்தின் முழுப்போக்கிலும் ஒரு திடமான திருப் பத்தை ஏற்படுத்தின என்பதை நாம் பல வழிகளில் நிரூபிக்கலாம்.
இராசகாரிய முறையின் நீக்கமும் அரசாங்க ஏகபோக உரிமை களின் ஒழிப்புந்தான் பொருளாதாரத்துறையில் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை, கட்டிலா வியாபாரம், முதலாளித்துவம் என்ப வற்றின் வளர்ச்சிக்கு வழி திறந்து விட்டன. அவரது நிருவாகச் சீர்திருத்தங்களின் விளைவாகத் தேச ஒற்றுமை, நாடு முழுவதற்கும் ஒற்றையாட்சி, பொது நீதி பரிபாலனம் எனும் முறைகள் ஏற்பட வும், இலங்கை ஒரு தேசிய அரசாக வளரவும் வழியேற்பட்டது. ஆங்கில்மொழி, நடுவகுப்பினரின் தோற்றத்துக்கும் அரசியல் அறிவுத் துறைகளில் துரிதமான முன்னேற்றம் ஏற்படவும் வழிகோலிற்று.

சுோல்புறூக் விசாரணையும் திட்டமும் 1.45
ஆள்பதியின் அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்பட்டதன் பேரில் தனி மனிதனின் உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டு, அவன் சுதந்திரமாக இயங்கத் தொடங்கினன். பத்திரிகைகளும், பொது சன அபிப்பிராயமும் வளரத் தொடங்கின. இவை யாவற்றிலும் மேலாக இலங்கையில் பிரதிநிதித்துவப் பாராளுமன்ற முறையும், சனநாயகமும் வளர்ச்சியடைவதற்குக் கோல்புறுரக்கின் சிபார்சுகள் தாம் வித்திட்டன எனத் துணிந்து கூறலாம்.
கோல்புறுரக் செய்த சில சிபார்சுகள், இத்துணை நன்மைகளையும் எதிர்கால வளர்ச்சிக்கான வித்துக்களையும் கொண்டிருந்தன. ஒரு சில சிபார்சுகள் அக்கால இலங்கைக்கு ஏற்றனவாக அமையவில்லை. அவர் குடியியற் சேவையின் திறமையைச் சிதைத்தார். ஏழைக் குடியானவரின் நிலையை அபிவிருத்தி செய்யக் கடுகளவேனும் அக்கறை காட்ட வில்லை. இத்தின்மைகளையும் அவை நிவிர்த்தி செய்யப்பட்ட வழிவகை களையும் பின் அதிகாரங்களிற் காண்க.
விஞக்கள் 1. 1833 ஆம் ஆண்டின் சீர்திருத்தங்களை ஆராய்ந்து, அவை எந்த அளவிற்குப் பிற்கால அபிவிருத்திக்கு அடியிட்டன என்பதைக் காட்டுக. 2. '1833 ஆம் ஆண்டு, இலங்கையின் வரலாற்றில் இருகாலப் பிரிவுகளை வழி பிரிக்கும் ஆண்டாகக் கருதப்படும்' எனும் கூற்றினை விமர்சனம் செய்க. 3. நீதி பரிபாலன முறையினைப் பற்றிக் கமரன் கூறிய யோசனைகளை
ஆராய்க. 4. கோல்புறுாக் விசாரணைச் சபையின் முக்கிய சிபார்சுகள் எவை ? இச்சிபார்சுகள் நாட்டின் பிற்காலச் சரித்திரத்தை எவ்வாறு மாற்றியமைக்க உதவின? 5. கோல்புறுரக் சிபார்சு செய்த சீர்திருத்தங்களை விமர்சனம் செய்க 6. 1832 இல் கோல்புறுக் சிபார்சு செய்த கல்வித் திட்டத்தினை
ஆராய்க. அவற்றினல் விளைந்த பயன்கள் என்ன ? 7. இலங்கையை நிருவாக, பொருளாதாரத் துறைகளில் ஒற்றுமைப்
படுத்தக் கோல்புறுாக் சிபார்சு செய்த வழிவகைகளெவை ? 8. இராசகாரிய முறை ஒழிக்கப்பட்டமைக்குரிய காரணங்களையும் அச் செயலினல் ஏற்பட்ட சமூக, பொருளாதார விளைவு களையும் ஆராய்க. 9. இலங்கையில் நிலவிய இராசகாரிய முறையினை விவரித்து, அதனை
ஆங்கிலர் நீக்கிய விதத்தைப் படிமுறைப்படி கூறுக. 10. இலங்கையின் பொருளாதார விருத்தியில் கோல்புறுாக் சிபார்சு
களின் முக்கியத்துவத்தை விளக்குக.

Page 80
அதிகாரம் 9 நவ இலங்கையின் உதயம் (1833-1850)
இக்காலத்தின் உதயம்:
இலங்கைச் சரித்திரத்தில் தற்காலத்தின் தோற்றத்தைப் பற்றி திரு. G. C. மென்டிஸ் அவர்கள் கூறும் கருத்துக்கள் விசேட அவதானத்துக்குரியவை. 'இலங்கை இன்றும் அன்றும்’ என்னும் நூலில் அவர் கூறுவதாவது:
"இலங்கைச் சரித்திரத்தில் இக்காலம் எப்பொழுது மலர்ந் தது ? சிலர் 1796 ஐ இதன் ஆரம்பமாகக் கொள்வர், ஏனெனில் தற் காலத் திசையை நோக்கி நடைபெற்ற மாற்றங்களுள் பெரும் பாலானவை பிரித்தானியர் ஆட்சியின் கீழ் நிகழ்ந்தவை. சிலர் 1815 இல் அதனை நிலை நிறுத்துவர்; ஏனெனில் அவ்வாண்டு போத் துக்கேயரினதும் ஒல்லாந்தரினதும் ஆட்சிகளில் தன்னும் நிலைகுலை யாது நிலைத்து நின்ற கடைசிச் சிங்கள இராச்சியத்தின்-சுதந்திரத்தின்முடிவைக் கண்டது. வேறு சிலர் அவ்வாண்டு, அனுராதபுரம், பொல நறுவைக் காலங்களில் போன்று, இலங்கை மீண்டும் ஒரு மன்னனின் ஆட்சியின் கீழ் ஒற்றுமைப்பட்டதெனும் காரணத்தைக் கொண்டு அதற்கு விசேட முக்கியத்துவம் கொடுப்பர்.
எனினும் 16 ஆம் நூற்ருண்டின் ஆரம்பத்தில் ஐரோப்பாவில் நிகழ்ந்த மாற்றத்திற்குச் சரி நிகரான மாறுதல். இலங்கையில் 1832 இல் கோல்புறுாக் சீர்திருத்தங்களுடன் தான் ஏற்பட்டது. அவ் வாண்டில் இராசகாரிய முறையினதும், அதன் அடிப்படையில் உரு வாகியிருந்த அரசாங்க ஏகபோக உரிமைகளினதும் ஒழிப்புத்தான், பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை, கட்டிலா வியாபாரம், தனியார் முயற்சி, முதலாளித்துவ முறையின் வளர்ச்சி என்பனவற்றிற்கு வழி யைத் திறந்து விட்டது. 1815 இல் இலங்கை ஒரு குடையின் கீழ்க் கொண்டு வரப்பட்டபோதிலும் தாழ்பிரதேசச் சிங்கள, கண்டி, தமிழ் மாநிலங்களில் மூவித நிருவாக முறைகள் இயங்கி வந்தன. 1833 இல் தான் இலங்கையைச் சட்டத்தின் மேலாண்மையில் கீழ் ஒரு நாட்டின அரசாக அமைக்கவல்ல ஒற்றையாட்சி நிருவாக முறையும், நீதி பரி பாலன முறையும் அமைக்கப்பட்டன. ஆங்கில மொழி புகுத்தப்பட் டமை, ஐரோப்பாவில் கிரேக்க இலக்கியங்கள் பயிலப்பட்டதனுல் ஏற் பட்ட மாற்றத்துக்கு நிகரான ஒரு மாற்றம், நடு வகுப்பினரின் சிந் தனத்துறையில் ஏற்பட வழி பிறந்தது. ஆள்பதியின் எதேச்சாதிகார
அதிகாரங்கள் ஒழிக்கப்பட்டமை, தீவில் சுதந்திர பத்திரிகைகள்
 

நவ இலங்கையின் உதயம் i47
வளரவும் அச்சுக்கலை விரிவடையவும் வழிவகை செய்தது. கோல் புறுாக் சீர்திருத்தங்கள் மேலும் பல முன்னேற்றங்களுக்கு வழிவகை செய்தன. உத்தியோகப்பற்றற்ற உறுப்பினரைக் கொண்டு சட்டக் கழகம் அமைக்கப்பட்டமை, நாளடைவில் ஜனநாயக ஆட்சி முறைக்கு வழி காட்டிற்று. ஈற்றில் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையின் விருத்தி, தெருக்களின் அமைப்பு, அரசாங்க நிருவாகச் சேவைகளின் விரிவு, தற்கால வழியில் நீதி மன்றங்களின் வளர்ச்சி, கல்வியின் வளர்ச்சி என்பவை, நடு வகுப்பினரின் எழுச்சிக்கு வழி கோலின. எனினும் பெளத்த, இந்து சமயங்களில் மறுமலர்ச்சி ஏற்படவில்லை. ஏனெனில் அவை, அந்நியர் ஆட்சியின்கீழ் அமைந்த ஒரு தேசிய அரசுடன் பொருதுவதற்கு வேண்டிய ஒழுங்கையோ, மத்திய கட்டுப் பாட்டையோ பெற்றிருக்கவில்லை. இவ்விதமாக, இலங்கைச் சரித் திரத்தை வழி பிரிக்கும் வரையறையைப் புராதன குள நாகரிகம் சிதைந்து சீரழிந்துபோன 13 ஆம் நூற்றண்டின் ஆரம்பத்தில், அல்லது இலங்கையின் வாழ்க்கை முறை தற்காலத்தை நோக்கித் திரும்பிய 1832 ஆம் ஆண்டில் தான் அமைக்கவேண்டும். '
இக்கூற்றிலிருந்து கோல்புறுாக்கின் சிபார்சுகளுடன் தான், இலங் கையின் வரலாறு புது வழிகளில் ஓட ஆரம்பித்ததென்பதும், அதன் பயனகவே தற்காலம் மலர்ந்தது என்பதும் பெறப்படும். ஆனல் கோல்புறுாக்கின் சீர்திருத்தங்களுள் சில, நாட்டு முன்னேற்றத் துக்குத் தடைகள் ஏற்படுத்தின என்பதையும் நாம் மறக்கலாகாது. விசேடமாகக் குடியியற் சேவைக்கு இழைக்கப்பட்ட இன்னல்களும், விவசாயிகளின் நிலையைப் பராமுகமாக விட்டமையும் குறிப்பிடத் தக்க பிற்போக்கான கருத்துக்களாகும்.
1. ஆள்பதிகள்
சேர், ருெபட் ஹோட்டன் (1831-37) :
1831 இல் சேர் ருெ பட் ஹோட்டன், இலங்கையின் ஆள்பதியாக நியமிக்கப் பெற்று 1837 வரை சேவை புரிந்தார். இலண்டனில் உயர் உத்தியோகங்களை வகித்த அனுபவத்துடன் இங்கு வந்த ஹோட்டன், அவருக்கு முன் சென்ற பாண்ஸிலும் கூடுதலான நிருவாக அனுபவமும் திறமையுமுடையவராக விளங்கினர். இவ்வனுபவம் நாட்டின் நிருவாகப் பிரச்சினைகளையும்,நீதிச் சிக்கல்களையும் இலகுவாகத் தீர்த்துவைக்க அனுசரணையாக அமைந்தது. தவிரவும் அவரது பதவிக் காலம், இலங்கையின் செல்வம் கொளிக்கும் காலத்துடன்
1. G. C. Mendis-Ceylon Today and Yestesday'(1957) Ch. 10, P. 93 .

Page 81
148 இலங்கைச் சரித்திரம்
பொருந்தியமை, அவரது பெரும் அதிட்டமாயிற்று. புதிதாக விருத் தியடைந்து வந்த கோப்பித் தொழிலினுலும், சித்திகரமாக நடாத்தப் பெற்ற பல முத்துக் குளிப்புக்களினலும் பெறப்பட்ட கூடிய இறை வருமானம், சீர்திருத்தங்களை அமுல் செய்வதற்கு வேண்டிய மிதமிஞ் சிய செலவினங்களைப் போதியளவு ஈடு செய்தது.
சேர். ஸ்ருவட் மக்கன்ஸி (1837-41):
இவர், நாட்டின் இறைவருமானம் குன்றத் தொடங்கிய பொழுதும், கோப்பித் தோட்டங்களைத் திறப்பதற்கு நிலங்களை வாங்கும் முயற்சி உச்ச கட்டத்தையடைந்த பொழுதும் இலங் கையின் ஆள்பதியானர். மலேரியாக் காய்ச்சலினல் பீடிக்கப்பட்ட அவர், உரிய பதவிக் காலம் முழுவதிலும் சேவை செய்ய முடியா மற் போய், 1841 இல் சுகத்தின் காரணமாக நல்ல சுவாத்தியமுடைய நாட்டைத் தேடி வெளியேறினர். ஐயோனியன் தீவுகளில் பதவி யேற்ற அவர் 1843 இல் காலமானர்.
ஹோட்டன் காலத்தில் நல்ல வருமானத்தை ஈந்த முத்துக் குளிப்பு மக்கன்ஸியின் காலத்தில் பெரும் நட்டமாயிற்று. கறுவா ஏகபோக வருமானமும் அற்றுப் போகவே, இறைவருமானக் குறை வுடன் அவர் ஆட்சியைத் தொடங்கினர். இதனல் அவர் தெருக்களை அமைக்கும் முயற்சியையும் ஏனைய பொது மராமத்து வேலைகளையும் கட்டுப்படுத்தினர். இதன் பயணுக அவர் தோட்ட முதலாளிகளின் வன்மையான கண்டனங்களுக்கு இலக்காக நேர்ந்தது.
சேர். கொலின் கம்பல் (1841-47):
கம்பல், இலங்கையின் ஆள்பதியாகப் பதவியேற்ற பொழுது அவரது வயது 64 ஆகும். அப்பொழுது கோப்பித் தோட்டங்களைத் திறக்கும் முயற்சி தீவிரமாக நடந்து வந்தது. அவரது பதவியின் முதல் ஆண்டில் மாத்திரம் 78, 685 ஏக்கர் முடிக்குரிய நிலங்கள் விற்பனையாயின. 1841 இல் முடிக்குரிய காணிகளின் 9 ஆம் இலக்கச் சட்டத்தை இயற்றினர்.
1844 இல் அவர் குடியியற் சேவையில் பல திருத்தங்களை ஏற்படுத்தி, அதன் தரத்தையும் அந்தஸ்தையும் உயர்த்தினர். அதேயாண்டு வடமேல் மாகாணத்தைத் தனி மாகாணமாகப் பகுத்தார். மேலும் அவ்வாண்டில் பொலீஸ் நீதிமன்றங்களும், 1845 இல் முறையீட்டு (Request) மன்றங்களும் அமைக்கப்பட்டன. அடிமை முறையும் அவ்வாண்டு நீக்கப்பட்டது. 1846 இல் அவர்,
கொழும்பு-கண்டி புகையிரத வீதியை அமைப்பது பற்றி யோசனை
 
 

நவ இலங்கையின் உதயம் 149
செய்யும் பொருட்டு ஒரு சங்கத்தை நிறுவினுர். அவர் 1846 இல், தெரு வீதிகளின் ஒரங்களில் உள்ள வீடுகளின் விருந்தைகள், தெருக்களில் தடைகளை ஏற்படுத்தும் பட்சத்தில், நட்ட ஈடின்றி அகற்றப் பட வேண்டுமென்ற சட்டத்தை இயற்றினர். இச்சட்டம், பறங்கி யரையும் சுதேச மக்களையும் பாதித்ததினுல், அவர்கள் அதற்கெதிராக ஓர் எதிர்ப்பியக்கத்தை ஆரம்பித்தனர்.
2. சட்டக் கழகமும் நிருவாகக் கழகமும் (1833-1850)
சேர் வில்மட் ஹோட்டன் 1833 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிட்ட அரச கட்டளையின்படி, பழைய ஆய்வுரைக் கழகம் கலைக்கப்பட்டு, வரவு செலவுகளைப் பங்கீடு செய்யும் அதிகாரமும், புதுச் சட்டங்களை இயற்றும் அதிகாரமும் புதிதாக நிறுவப்பட இருந்த சட்டக் கழகத்தின் ஆணையின் கீழ் விடப்பட்டன. நிருவாக அதிகாரம் ஆள்பதியினதும், நிருவாகக் கழகத்தினதும் கைகளில் ஒப்படைக்கப்பட்டது. நிருவாகக் கழகம், குடியேற்றச் செயலாளன், குடியேற்றப் பொருளாளன், முடிக்குரிய வழக்கறிஞன், மேல் மாகாண அரசாங்க முகவர் எனும் அறுவரைக் கொண்டு அமைக்கப் பெற்றது.
சட்டக் கழகம், ஒன்பது உத்தியோகப்பற்றுள்ள உறுப்பினரையும் ஆறு உத்தியோகப்பற்றற்ற அங்கத்தினரையும் கொண்டிருத்தல் வேண்டும் என்றும், அப்பதினைந்து உறுப்பினரும் ஆள்பதியினல் நியமிக் கப்படுவரென்றும் விதிக்கப்பட்டது. நிருவாகக் கழக உறுப்பினர் அறு வருடன் உத்தியோகப் பற்றுள்ளவர்கள் மூவர், சட்டசபையின் உறுப் பினராயினர். உத்தியோகப் பற்றற்ற அறுவரில் மூவரை பிரித்தானிய தோட்டத் துரையினரினதும் வர்த்தக முதலாளிகளினதும், நலன்களைப் பாதுகாப்பதற்சாக ஆள்பதி நியமித்தார். மற்றைய மூவரும் இந் நாட்டின் நிரந்தரப் பிரஜைகளுக்காகப் பிரதிநிதித்துவம் பெற்றனர். இப்பதினைந்து சட்டசபை உறுப்பினரும் சீவிய காலத்துக்கென
நியமிக்கப்பட்டார்கள்.
இவ்விரு கழகங்கள் நிறுவப்பட்டதனல் ஆள்பதியின் அதிகா ரங்கள் குறைக்கப்பட்டன என்று எண்ணுதலாகாது. அவருக்கு ஏற்கனவே இருந்த அதிகாரங்கள் புதுத் திட்டத்தின் கீழும் பாது காத்துக் கொடுக்கப்பட்டன. சட்டக் கழகத்தின் தலைவராக விளங்கிய ஆள்பதி, சட்டங்களை எடுத்தாளவும் தாம் விரும்பிய நேரத்தில் விவாதத்தை நிறுத்தவும் அதிகாரம் பெற்றிருந்தார். உத்தியோகப் பற்றுள்ள உறுப்பினரின் ஆதரவைக் கொண்டு தானிட்ட திட்டத்தை நிறைவேற்ற அவருக்குப் போதிய வாய்ப்பிருந்தது. ஆள்பதி, சட்டக் கழகத்தின் எண்ணப்படி தான் நடக்கவேண்டும் என்ற் நியதி: g). 10 A . . . . . . . ;

Page 82
150 இலங்கைச் சரித்திரம்
அவருக்கு விதிக்கப்படவில்லை. இதற்கு எதிர்மாருக கழகம் செய்யும் தீர்மானமொன்றை நிராகரிக்க அவருக்கு அதிகாரம் இருந்தது. அவ்விதம் செய்யின் அவர் அதற்குரிய காரணத்தைக் குடியேற்ற நாட்டுச் செயலாளனுக்கு விளக்க வேண்டுமென ஏற்பட்டிருந்தது.
மேற்கூறப்பட்டவற்றிலிருந்து இலங்கையில் அமைவுபெற்ற முதற் சட்டக் கழகம், ஒர் ஆய்வுரைக் கழகமாக மாத்திரம் விளங்கிய தேயன்றி உண்மை அரசியல் அதிகாரம் படைத்த ஒரு சபையாக விளங்கவில்லை என்பது வெளிப்படை. தீவில் உள்ள பல்வேறு சாகியத்தினரினதும் தொழில் துறையானரிதும் பிரதிநிதிகள் மூலம் "வர்த்தகர், தோட்டத் துரைமார், சுதேசிகள் ஆகியவர்களின் தேவைகளை அறிய' ஆள்பதிக்குத் துணை செய்வதே, இக்கழகத்தின் நோக்கமாயமைந்தது. சட்டக் கழகத்துக்கு மிகவும் கட்டுப்படுத்தப் பட்ட அதிகாரங்கள் மாத்திரமே வழங்கப்பட்டன. ஆள்பதியும் நிருவாகக் கழகமும் இயற்றி, சட்டசபையின் ஆய்வுரைக்கென சமர்ப்பித்த சட்டதிட்டங்களைக் கண்டிக்கவும், சட்டங்களில் திருத் தங்களை ஏற்படுத்தவும் அதற்கு அதிகாரமிருந்தது. ஆனல் புதுச் சட்டங்களை எடுத்தாள அதற்கு உரிமையிருக்கவில்லை.
புதுச் சட்டக் கழகத்தின் முதற் கூட்டம் 1834 மே மாதம் 22 ஆம் நாள் கொழும்பில் நடந்தது. ஆனல் அப்பொழுது உத்தி யோகப் பற்றற்ற உறுப்பினர் ஆள்பதியினுல் நியமிக்கப்படவில்லை கழகத்தின் மூன்ருவது கூட்டத்தில் தான் அவ்விடங்கள் நிரப்பப் பெற்றன. இலங்கை மக்கள் சார்பில் முதன் முதல் நியமனம் பெற்ற உத்தியோகப் பற்றற்ற உறுப்பினர், G. P. பண்டித்தரட்ன, . G. ஹில்டபிரான்ட், A குமாரசாமிப்பிள்ளை என்ற மூவராவர்.
A. குமாரசாமிப்பிள்ளையவர்கள், சேர் பொன். இராமநாதன் அவர்களின் தாய் வழிப் பாட்டனர் ஆவர். அவர் 1838 இல் மறைந்த பொழுது, கற்பிட்டியைச் சார்ந்த சைமன் காசிச் செட்டி அவர்கள் சட்டசபையின் உத்தியோகப் பற்றற்ற தமிழ் உறுப்பினராக நியமிக் கப்பட்டார். அவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் புலமை மிகுந்த வராகக் காணப்பட்டார். "தமிழ்ப் புலவர் வரலாறு' (Tamil Plutarch) எனும் நூலை ஆக்கியவர் அவரே. அவரையடுத்து எதிர் மன்னசிங்க முதலியார் சட்டசபை உறுப்பினராக விளங்கினர். இவருக்குப்பின் சேர். முத்துக்குமாரசாமி அவர்கள் அவ்விடத்துக்கு நியமிக்கப்பட்டார். அவர் ஆனந்த குமாரசாமி எனும் பெருந் தகையின் தந்தையும் இராமநாதனின் தாய் மாமனுமாவார். ஆசி யாவில் 'சேர்' பட்டம் பெற்ற முதல்வர் அவரேயாவர்.

நவ இலங்கையின் உத்யம் 151
சீர்திருத்தக் கிளர்ச்சியின் ஆரம்பம் :
1833 ஆம் ஆண்டின் அரசியற்றிட்டம், இலங்கையில் பாராளு மன்ற ஆட்சிமுறையினை முதன் முதலாக ஆரம்பித்து வைத்தது. இலங்கை வாழ் மக்கள், ஆங்கிலரின் பரிபாலன முறைகளைப் பற்றி ஒன்றுமே அறியாத பட்சத்தில், சட்ட, நிருவாகக் கழகங்களின் சீர் திருத்தத்திற்கான கிளர்ச்சியை ஆரம்பித்து நடாத்தியவர்கள் ஐரோப்பியரும் பறங்கியருமாவர். சட்டக் கழகத்தின் ஆரம்பந்தொட்டு உத்தியோகப் பற்றற்ற உறுப்பினர், தமது சட்டமியற்றும் அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்பட்டமையையும், வரவு செலவுகளின் மேல் எவ்வித அதிகாரம் வழங்கப்படமாற் போனமையையும், வன்மையாகக் கண்டித்து வந்தனர்.
கோப்பிச் செய்கையின் விருத்தியுடன் ஐரோப்பியரின் எண்ணி க்கை விரைவில் அதிகரித்தது. பிரித்தானிய பாராளுமன்ற முறையில் பழக்கமுடைய ஐரோப்பிய தோட்டத் துரைமாரும் வர்த்தகரும் இங் குற்ற பொழுது தாயகக்தில் தாம் அனுபவித்த அரசியல் உரிமைகளை யும், சலுகைகளையும் இங்கும் பெற எதிர்பார்த்தமை இயற்கையே. ஆனல் அவர்கள் தமக்கோ, சுதேசிகளுக்கோ தேர்ந்தெடுக்கப்பட்ட பிர திநிதித்துவம் கொடுபடாமை, சட்டமியற்றும் அதிகாரம் மறுக்கப் பட்டமை, நிதிப் பங்கீட்டில் எவ்வித அதிகாரமும் இல்லாமை எனும் அம்சங்களைக் கண்டித்தனர். நிருவாகத்துக்குப் பொறுப்பாயிருந்த உத்தி யோகத்தரின் பரிபாலன முறைக்கும், அவர்கள் பலமான எதிர்ப்புக் காட்டினர். புதுச் சட்டசபை மூவித அடிப்படைகளில் சீர்திருத்தப் பட வேண்டுமென வாதாடினர்.
முதலாவது சட்டசபைக்கு ஆள்பதி உறுப்பினரை நியமனம் செய்யும் முறையினை வன்மையாகக் கண்டித்தனர். ஏனெனில் நியமிக்கப்பட்ட அங்கத்தவர்கள், எஞ்ஞான்றும் ஆள்பதியின் கைப் பொம்மைபோல் இருப்பரேயன்றி, தம் சமூகத்துக்கு எவ்வித நன்மை யும் செய்ய முடியாதெனச் சுட்டிக் காட்டினர். நியமனத்துக்குப் பதிலாக அவர்கள் தமது பிரதிநிதிகளைத் தாமே தெரிவு செய்யும் உரிமை வேண்டுமென வற்புறுத்தினர்
இரண்டாவது, தமது நல உரிமைகளைப் பாதுகாப்பதற்கு வேண்டிய சட்டதிட்டங்களை சட்டக் கழகத்தின் வழியாகவே நிறை வேற்ற வேண்டுமெனக் கண்ட ஐரோப்பியர், சட்டக் கழகத்தில் உத்தி யோகப் பற்றில்லாத உறுப்பினரே பெரும்பான்மையினராக இருக்க
வேண்டுமென வாதாடினர். ". '';

Page 83
1.59 இலங்கைச் சரித்திரம்
மூன்ருவதாக அவர்கள் சட்டசபையில் சட்டங்களை எடுத்தாள அதிகாரமும், அரசாங்கத்தின் செலவினங்களைப் பங்கீடு செய்யும் முறை யினைத் தீர்மானிக்க உரிமையும் தரப்பட வேண்டுமென வாதாடினர்.
1840 க்குப் பின்னர் ஐரோப்பியரின் அரசியல் ஈடுபாடு கோப்பித் தோட்டங்களுக்குத் தெருக்களையும், புகையிரத வீதிகளையும் அமைப்பதன் இன்றியமையாமையை வற்புறுத்துவதுடன் நின்று விட்டது. அரசாங்கம் புதுப் பாதைகளை அமைப்பதற்குப் போதிய பணத்தை ஒதுக்கி, அதில் சிரத்தை காட்டிய ஆண்டுகளில் சட்ட சபைச் சீர்திருத்த இயக்கம் தணிந்தது. ஒதுக்கப்பட்ட பணம் குறைந்த ஆண்டுகளில், ஐரோப்பியரின் கிளர்ச்சி மிகவும் வலுப் பெற்றது. இவ்விதமாக 1850 வரை அரசியற் கிளர்ச்சி பெரும் பாலும் கோப்பித் தோட்டங்களின் தேவைகளினலேயே வரையறுக் கப்பட்டது. இக்கிளர்ச்சியின் முன்னணியில் நின்ற தோட்டத் துரைமாரையும், வர்த்தகரையும் ஊக்குவித்தவை, தம் தொழிலின் முன்னேற்றத்துக்குத் தேவைப்பட்ட விடயங்களேயன்றி மனித உரிமைகளைப் பற்றிய பிரச்சினைகளுமல்ல, பாமர மக்களின் சமூக நலனுமல்ல.
இக்கிளர்ச்சிக்கு ஆள்பதிகள் செவிசாய்க்க மறுத்தனர். தோட்டத்துரைமார், வர்த்தகர், பறங்கியர் யாவரும் தமது சுய நலத்தில் கருத்துடையவர்களேயன்றி பொது மக்களுக்காகப் பேச அருகதையற்றவர்கள் என அக்காலத்து ஆள்பதிகள் அபிப்பிராயம் தெரிவித்தனர். பறங்கியரைப் பற்றி உவாட் கூறியதாவது, 'அவ்வகுப்பினருக்கு சட்டமியற்றும் பெரும் அதிகாரங்களை ஒப் படைத்தல், அதி தீங்குகளை விளைவிக்கும். அவர்கள் நல்ல சேவை யாளர்கள், ஆனல் பொல்லா எசமானர்கள்' என்ருர், உவாட் மீண்டும் கூறியதாவது 'ஏழாயிரம் தொடக்கம் எண்ணுயிரம் வரை ஐரோப்பியரையும் கல்வியறிவுடைய மிகச் சிறு தொகையினராகிய பறங்கியரையும், இருபது இலட்சம் சுதேசிகளையும் கொண்ட ஒரு குடி யேற்ற நாட்டில் பிரதிநிதித்துவ ஆட்சிக் கொள்கையினை நாம் புகுத்தவொண்ணுது. பிரித்தானிய முடி, ஒழுங்கை நிலைநாட்டவும், சட்டமியற்றுவதில் நடுநிலையைக் கடைப் பிடிக்கவும் விரும்பினுல் அது பல ஆண்டுகளுக்கு ஐரோப்பியரினதும், சுதேசிகளினதும் நலவுரிமை களுக்கிடையே நடு நிலை தவருது சமநிலையை ஏற்படுத்த வேண்டும்.' பிரித்தானிய-ஆள்பதிகள் இவ்விதமாக அபிப்பிராயப்பட்ட காலத்தில், சீர்திருத்தக் கிளர்ச்சிகளினல் அதிக நன்மைகள் விளையவில்லை.
1854 ஆம் ஆண்டு பெப்ரவரி 17 இல், ஏறத்தாழ நூறு கோப் பித் தோட்டத் துரைமார் கண்டியில் ஒன்று கூடித் தமது நலவுரிமை களைப் பாதுகாப்பதற்கென இலங்கைத்தோட்டத்துரைமார் சங்கத்தை (The Planters' Association of Ceylon) 5pasaori. ... ' ' ',

அள7
நவ இலங்கையின் உதயம் 153
1855 இல் ஐரோப்பியருக்கு ஒரு சிறு இளக்காரம் காட்டப் பட்டது. இலங்கை வர்த்தகர் சங்கமும், தோட்டத்துரைமார் சங்கமும் தமது சட்டசபை உறுப்பினரைத் தாமே தெரிந்து கொள் ளலாமென அரசாங்கம் அனுமதித்தது.
3. குடியியற் சேவை சீர்திருத்தப்படல்
கோல்புறுாக் சீர்திருத்தங்கள் அமுல் செய்யப்பட்டதன் விளைவாக "குடியியற் சேவை திறமையிற் குறைந்ததுடன் குடியியற் சேவை யாளரின் திறமையை ஊக்குவிப்பதற்கு ஆதாரமாகவிருந்த காரணிகள் யாவும் மறைந்தன. அவர்களின் வேதனங்கள் குறைக் கப்பட்டன. ஒய்வுச் சம்பளங்கள் நிராகரிக்கப்பட்டன. பதவி உயர்வு மிகவும் மெதுவாக நடந்தது. சேவையாளரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. பதவி உயர்வு மூப்பு அட்டவணையின்படி நிகழ்ந்தது.
1837, 1839 ஆம் ஆண்டுச் சீர்திருத்தங்கள்:
கோல்புறுாக் சிபார்சுகள் நடைமுறைக்கு வந்த நான்கு ஆண்டு களுக்குள் 1837 இல், அதில் முதல் திருத்தங்கள் செய்யப்பட்டன. சேர். ருெபட் ஹோட்டன் குடியியற் சேவையாளரின் சம்பளங்கள் அளவுக்கு மிகுதியாகக் குறைக்கப்பட்டு விட்டன என்றும், இக்குறைந்த சம்பளத்துடன் குடியியற் சேவையில் கல்வியறிவும், கெளரவமு முடைய இளைஞரைச் சேரத் தூண்ட முடியாது என்றும், பழைய சேவை யாளர்களின் குறைக்கப்பட்ட ஒய்வுச் சம்பளங்களை அதிகரித்தால் அவ்ர்களுடைய 12 வருடகாலச் சேவை முடிந்த பின்பும் அவர்களைத் தொடர்ந்து சேவை புரிய வற்புறுத்தலாம் என்றும்எடுத்துக் காட்டினர். அவரது முயற்சிகளின் பேருக, கனிஷ்ட குடியியற் சேவையாளர்களின் ஒய்வுச் சம்பளங்களும், பழைய சேவையாளர்களின் ஒய்வுச் சம்பளங் களும் உயர்த்தப்பட்டன. 1833 க்குப் பின் சேவையில் சேர்ந்தோர்க்கு ஒய்வுச் சம்பளத் திட்டம் மறுக்கப்பட்டது.
1839 இல் ஆள்பதி ஸ்ருவட் மக்கன்ஸி, குடியியற் சேவையில் புதிதாகச் சேரும் அதிகாரிகள், ஆறு முதல் ஒன்பது மாத காலம் வரை ஓர் அரசாங்க முகவருக்குக் கீழ் பயிற்சி பெற்று, அவரது சிபார்சின் பேரில்தான் புதுப் பதவிகளுக்கு நியமிக்கப்படுவர், எனும் சட்டத்தை அமுல் செய்தார். - -
*.12 "

Page 84
154 இலங்கைச் சரித்திரம்
1845 ஆம் ஆண்டுச் சீர்திருத்தங்கள் :
1837-1839 ஆம் ஆண்டுகளின் திருத்தங்கள் ஒரளவுக்கு குடியியற் சேவையின் குறைகளைப் போக்கினலும், அவை அச்சேவையின் அடிப்படையான இன்னல்களை நீக்கவில்லை. குறைந்த சம்பளங்கள், பதவி உயர்வுகளுக்கு வாய்ப்பின்மை, ஒய்வுச் சம்பளமின்மை எனும் நேர்ய்களினல் பீடிக்கப்பட்ட சேவையின் தரமும் திறமையும் ஆண்டு தோறும் குறைந்து கொண்டே வந்தன. இவ்வீழ்ச்சியை நிறுத்திச் சேவையின் தரத்தை உயர்த்துவதற்கு ஹோட்டன், மக்கன்ஸி, கொலின் கம்பல் எனும் ஆள்பதிகள், ஒயாமல் வற்புறுத்தி வந்த திருத்தங்களை மேலதிகாரிகள் பொருட்படுத்தினரில்லை. ஈற்றில்
1845 ஆம் ஆண்டு குடியேற்ற நாட்டுச் செயலாளரான ஸ்ரான்லி பிரபு
(Lord Stanley) இப்பிரச்சினையைத் தீர்த்துவைக்க முற்பட்டார். அவர், ஆள்பதிகளின் ஆலோசனைகளைக் கேட்டும், இந்திய குடியியற் சேவை யிலிருந்து பெறப்பட்ட அனுபவங்களைக் கொண்டும் பல திருத் தங்களை அனுமதித்தார். அவரது அனுமதியின் பேரில், சேவையாளரின் சம்பளங்கள் அதிகரிக்கப்பட்டன. ஒய்வு காலச் சம்பளங்கள் மீண் டும் அமூல் செய்யப்பட்டன. பதவி உயர்வுக்குச் சேவையாளர் சுதேச மொழிகளைக் கற்றுத் தேர்ச்சி பெறுவது அத்தியாவசியமாக் கப்பட்டதுடன், சேவைக் காலத்துக்குப் பதிலாகத் திறமை முதலிடம் பெறவேண்டுமென்றும் விதிக்கப்பட்டது. பதவிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. சேவையிற் சேர்வதற்குப் புகுமுகப் பரீட்சை யொன்று ஏற்படுத்தப்பட்டது. ஈற்றில் சேவையாளர், விவசாயம், வியாபாரம், வர்த்தகம் எனும் முயற்சிகளில் ஈடுபடலாகாது என்றும் சட்டமியற்றப்பட்டது.
இச்சீர்திருத்தங்களின் பயணுக கோல்புறுாக்கின் 1833 ஆம் ஆண்டுத் திருத்தங்கள் யாவும் நிராகரிக்கப்பட்டு, 1832 க்கு முன் குடியியற் சேவையைக் கட்டுப்படுத்திய பழைய விதிகளே மீண்டும் நடைமுறைக்கு வந்தன என்பது புலணுகும். கூடின சம்பளம், ஒய்வு கால வேதனம், ஒழுங்கான பதவியுயர்வு எனும் அனுகூலங்கள் சேவையாளரை நற்சேவை புரிய ஊக்குவித்தன. தனி முயற்சிகளில் ஈடுபடுவது த ை செய்யப்பட்டதனல் சேவையாளர் தம் முழு உழைப்பையும் அரசாங்கக் கருமங்களில் செலவிட்டனர்.
மாகாண நிருவாகம் :
இரண்டாவதாக, கோல்புறுாக் சிபார்சு செய்த மாகாணங்களின்
விசாலத்தைக் குறைப்பதும், அவற்றின் எண்ணிக்கையை அதிகரிப் பதும், இன்றியமையாததென ஆள்பதிகள் வற்புறுத்தி வந்தனர்.

/ 155 நவ இலங்கையின் உதயம் لري
கோல்புறூக் ஏற்படுத்திய ஐந்து மாகாணங்கள் ஒவ்வொன்றினதும் நிலப்பரப்பு மிகவும் விசாலமாக இருந்தமையினல் குடியியற் சேவை யாளர், மாகாணத்தில் வசித்த மக்களின் நலன்களைக் கண்காணிக்க முடியாமற் போயிற்று. எனவே, பிற்போக்கான நிலையிலிருந்த மாகாணங்களின் மேல், கூடுதலான அவதானம் செலுத்தும் பொருட்டு அவற்றைப் பகுத்துச் சிறு மாகாணங்களாகச் சிருட்டித்தல் வேண்டுமெனப் பலரும் உணர்ந்தனர். இத்துறையில் முதற் திருத்தம் 1845 இல் நிகழ்ந்தது. மேல் மாகாணத்தில் இடம் பெற்ற ஏழு கோறளைகள், புத்தளம், சிலாபம் எனும் பகுதிகள், வடமேல் மாகாணமெனப் புதிதாக அமைக்கப்பட்டது. புத்தளம் அதன் தலைப்பட்டணமாயிற்று. 1856 இல் தலைப்பட்டணம் குருநாகலுக்கு மாற்றப்பட்டது.
கோப்பியின் வளர்ச்சி .4 الري
கோப்பிச் செய்கையின் ஆரம்ப முயற்சிகள் எட்டாம் அதிகா ரத்தில் கூறப்பட்டன. கோல்புறுக் சீர்திருத்தங்களின் பயன் :
1833 ஆம் ஆண்டின் கோல்புறுாக் சீர்திருத்தங்கள் மேலும் இலங்கையில் தனியார் முயற்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தன. பிறநாட்டவர்கள் எவ்வித இடையூறுகளுமின்றி நிலங்களை வாங்கும் வாய்ப்பைப் பெற்றமை, நிலவரி நீக்கப்பட்டமை, இராசகாரிய முறை ஒழிக்கப்பட்டமை, அரசாங்கம் வியாபார ஏகபோக உரிமை களைக் கைவிட்டமை, ஆகிய இவை யாவும் இலங்கையில் பெருந் தோட்டப் பயிர்ச் செய்கைமுறை துரிதமாக வளர்ச்சியடைவதற்கு வேண்டிய சூழ்நிலைகளைப் பெற்றுத் தந்தன. முதலும் முயற்சி யுமுடைய ஆங்கிலர், அயன மண்டலப் பயிர்களை வளர்த்து நிறைந்த செல்வத்தைச் சம்பாதிக்க, இத்தீவினைப் போன்ற வாய்ப்புக்களை யுடைய ஒரு நாட்டை உலகத்தின் வேறெந்தப் பகுதியிலும் காண வில்லை.
கோப்பியின் வேகப்போக்கு :
ஐரோப்பாவில் கோப்பிக்கு ஏற்பட்ட மதிப்பு மின்னல் வேகத் தில் அதிகரிக்கவே, இலங்கையில் சிறு முயற்சியாக நடைபெற்று வந்த கோப்பிப் பயிர்ச் செய்கை, அதனை ஈடு செய்யமுடியவில்லை. ஐரோப்பிய முதலாளிகளும் வர்த்தகர்களும், இத்தீவில் ஒரு பெரும் இலாபம் தரும் முயற்சியை அமைப்பதற்கு, சூழ்நிலை வாய்ப்பான

Page 85
156 இலங்கைச் சரித்திரம்
தாக இருப்பதைக் கண்ட்னர். 1835 க்குப் பின்னர் இலங்கையில் கோப்பிச் செய்கை வியப்புக்குரிய வேகத்துடன் மலைநாடெங்கணும் பரந்தது. தோட்டங்கள், மலைநாட்டின் சகல பாகங்களிலும் திறக் கப்பட்டன. அடர்த்தியான காடுகளினல் மூடப்பட்டிருந்த ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களில் கோப்பி பயிரிட ஆரம்பிக்கப்பட்டது. தும்பறைப் பள்ளத்தாக்கு, கொத்மலை, புசல்லாவை, பதுளை, ஊவா, மஸ்கெலியா, இறக்குவானை, தெனியாய எங்கணும் புதுப்பயிர் ஊட றுத்துச் சென்றது. குடிசனமற்றிருந்த சிறு கிராமங்கள் எல்லாம் புதுப்பயிர்ச் செய்கையின் மத்திய தானங்களாக உருமாறின. புதுப் பாதைகள், கோப்பியைக் கொழும்புக்குக் கொண்டு செல்வதும் கொழும்பினின்று அரிசி, உணவுப் பொருள்கள், தோட்டக் கரு விகள் முதலானவற்றைக் கொண்டு திரும்புவதுமாகிய எண்ணற்ற கரத்தைகளினல் நிறைந்து வழிந்தன. அரசாங்கமும் மலைப்பிர தேசத்தின் முடிக்குரிய நிலங்களை ஏக்கர் ரூபா 3-33 விகிதப்படி விற்றது. இக்காலத்தில் விலைப்பட்ட நிலங்களின் அளவைப் பின் வரும் புள்ளி விபரங்கள் சுட்டிக் காட்டும்.
1837............... 3,660 (Jai Sri
1838............... 10,400 p
1840.......... . . . . 42 840 و
1841. . . . . . . . . . . . . . . 78,685 9
இம்முடிக்குரிய நிலங்களை முதன் முதல் வாங்கியவர்கள் இந்நாட்டின் அரசாங்க உத்தியோகத்தரும், இராணுவ அதிகாரி களுமாவர். ஆள்பதி உட்பட, நிருவாக அதிகாரிகள், நீதிபதிகள், ஆங்கிலப் பாதிரிகள், குடியியற் சேவையாளர், இராணுவத்தினர் யாவரும் இக்காலத்தில் பெரும் கோப்பித் தோட்டச் சொந்தக் காரராயினர். இக்காலத்தில் விலைப்பட்ட நிலங்கள் யாவற்றிலும் உடனடியாகக் கோப்பி பயிரிடப்பட்டதென நாம் எண்ணுதலாகாது. ஏனெனில் பிற்காலத்தில் இந்நிலங்களை உயர் விலைகளுக்கு விற்கலாம் என்ற எண்ணத்துடன் காணிகளை வாங்கியவர்கள் பலர் இருந்தனர்.
இலங்கையில் கோப்பித் தோட்டங்கள் இத்துணை விரைவாகப் படர்ந்தமைக்கு இங்கிலாந்தில் இப்பொருளுக்கு ஏற்பட்ட கடும் மதிப்பும், அதற்கு அங்கு கிடைத்த நல்ல விலைகளுமே முக்கிய காரணங்களாகும். இக்காலத்தில் ஒரு அந்தர் கோப்பியின் விலை 120 ஷிலிங் வரை உயர்ந்ததென்முல் இலங்கையில் கோப்பிப் "பைத் தியம்'பரவியதில் வியப்பிலலை. யோண் வெஸ்லி போன்ற சமய போத கர்களின் முயற்சிகளினல் மக்களிடையே , மது பானங்களையருந்தும்
 
 

བྱས་པས་
நவ இலங்கையின் உதயம் 157
பழக்கம் குறைய, கோப்பி போன்ற பானங்களை அருந்தும் பழக்கம் அதிகரித்தது. இலங்கையின் கோப்பி வளர்ச்சிக்குத் துணைபுரிந்த மற்ருெரு காரணம், மேற்கிந்தியத் தீவுகளில் கோப்பி உற்பத்தியில் உண்டான பெரும் வீழ்ச்சியாகும். 1827 இல் மேற்கிந்தியத் தீவுகள் மூன்று கோடி இருத்தல் கோப்பியை இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்தன. 1833 இல் அத்தீவுகளின் அடிமைகளுக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டதன் பயனக, கோப்பி உற்பத்தி பெரும் வீழ்ச்சியைக் கண்டது. மேலும் 1837 தொடக்கம் இலண்டனில் இலங்கைக் கோப்பிக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரி, மேற்கிந்தியக் கோப்பியின் அளவுக்குக் குறைக்கப்பட்டது. முன்னர் மேற்கிந்தியக் கோப்பிக்கு 6 பென்ஸ் வரியும், இலங்கைக் கோப்பிக்கு 9 பென்ஸ் வரியும் விதிக்கப்பட்டன.
R. B. ரிற்லர் (R. B. Tytler) என்பவர், மேற்கிந்தியத் தீவு களுக்குச் சென்று கோப்பி உற்பத்தி முறைகளைக் கற்று, 1837 இல் நாடு திரும்பி, அதனை விஞ்ஞான முறையில் பயிரிடும் வழி வகை களைக் காட்டிக் கொடுத்தார்.
இவ்விதமாக, விரிந்து வந்த சந்தைகள், போட்டியின் குறைவு, விஞ்ஞானச் செய்கை முறைகள் என்னும் இவைகளே கோப்பியின் வளர்ச்சிக்கு வழிகாட்டிய பிரதான காரணங்களாகும். G5Tl ill பயிருக்கு எதிர்காலம் மிகவும் திருப்தியானதென்று அறியப்பட்டதும், ஆங்கில்ர் நூற்றுக்கணக்கில் கொழும்பில் வந்திறங்கினர்.
1847-50 ஆண்டுகளின் வீழ்ச்சி:
1844 இல் இங்கிலாந்து கட்டிலா வியாபார முறையை மேற்கொண்டதன் பயனுக, ஜாவா, பிறேசில் எனும் நாடுகளிலிருந்து கோப்பி, மலிந்த விலைகளில் அளவுப் பிரமாணமின்றி இலண்டன் சந்தைகளில் குவிந்தது. விலைகளும் படுமோசமாக வீழ்ச்சியடையத் தொடங்கின. 100 ஷிலிங் விற்ற ஒரு அந்தர் கோப்பியின் விலை 1848 இல் 45 ஷிலிங்காகவும், 1849இல் 27ஷிலிங்காகவும் குறைந்தது. இங்கிலாந்தில் 1845-46 இல் பண நெருக்கடியும் ஏற்பட்டபடியால் இலங்கைத் தோட்ட முதலாளிகள், தமது தோட்டங்களின் விருத்திக்கு வேண்டிய பணத்தைக் கடன் வாங்க முடியாமற் போயிற்று. 1847 தொடக்கம் ஐந்து ஆண்டுகளுக்குக் கோப்பிச் செய்கையில் மந்தநிலை நீடித்தது. இக்காலத்தினுள் தோட்ட முதலாளிகள் பலர், மிகுந்த நட்டமடைந்து கோப்பிச் செய்கையைக் கைவிட்டனர். அதி விரைவில் பணக்காரராக முயன்றவர்கள், அவசரத்தில் அதிக விலைகளைக் கொடுத்து நிலங்களை வாங்கியவர்கள், தோட்டங்களில் சிக்கன மின்றிப் பணத்தைச் செலவிட்டவர்கள் யாவரும் தமது தோட் டங்களைப் பாதிவிலை, கால்விலைக்குக் கூட விற்க முடியாமல் அல்லற்
*辑
A.
...'

Page 86
I 5& இலங்கைச் சரித்திரம்
பட்டனர். 1843 இல் 16,000 பவுணுக்கு வாங்கப்பட்ட ஒரு தோட்டம் 1847 இல்50 பவுணுக்குவிற்பனையாயிற்று. விடாமுயற்சியையும், சிக்கன த்தையும், விஞ்ஞான் முறையையும் பின்பற்றிய தோட்ட முதலாளிகள் மாத்திரம் தான், இவ்வீழ்ச்சியினின்று உயிருடன் தப்பிப் பிழைத்தனர்.
5 தோட்டத் துரைமாரின் பிரச்சினைகளும்
அவற்றின் தீர்வும்
இலங்கையில் ஐரோப்பியர், பெருந் தோட்டப் பயிர்ச் செய்கையை ஆரம்பித்த காலையில், அவர்களைப் பல் வேறுபட்ட பிரச்சினைகள் எதிர்த்து நின்றன. மலைநாட்டினில் போதிய நிலமின்ழை தொழிலாளரின்மை, முதலின்மை, தெருக்களின்மை, புகையிர வீதி களின்மை எனும் பிரச்சினைகளுக்கு அவர்கள் உடனடியாகத் தீர்வு
SSSSBSBSBSSSJYSTSSBSBSASSMSSSSSSS SSS GLG0SSSSAAMMSSSSSSSSSSAA e్యతా o *:一 காணவேண்டிய கட்டாய நிலை எழுந்தது. இப்பிரச்சினைகளைத் தீர்க்க அவர்கள் கையாண்ட வழிவகைகளின் அடிச்சுவட்டில்தான் இலங்கை யின் பொருளாதார முறையும் உருமாறியது. 1. நிலம்
கோப்பிச் செய்கைக்குப் பொருத்தமான சுவாத்தியமும் நிலங் களும், பழைய கண்டி இராச்சியத்தின் மாவட்டங்களிலேயே காணப் பட்டன. அப்பிரதேசங்களில் நிலத்துக்கான கேள்வி உச்ச நிலையை அடைந்த பொழுது, முதலாளிகள் அங்கு நிலவிய பழைய ஒழுங்கு களுடன் பிணங்க வேண்டிய நிலைக்குள்ளாயினர். கண்டி மாவட்டங் களில் ஒவ்வொரு குடியானவனும் காட்டு நிலங்களில் சேனைப் பயிர்களைச் செய்கை பண்ண உரிமை பெற்றிருந்தான். இச்சேனை நிலங்கள், சட்டப்படி குடியானவருக்குச் சொந்தமில்லாதிருந்த போதிலும், அவர்கள் அவற்றைப் பழைய பழக்கத்தின் அடிப்படையில் காலத்துக்குக் காலம் பயிரிட்டு வந்தனர். இப்பேர்ப்பட்ட காட்டு நிலங் களில் தான் கோப்பி முதலாளிகள் தோட்டங்களைத் திறச்கத் திட்ட மிட்டு அவற்றை அரசாங்கத்திடம் விலைக்கு வாங்க முற்பட்டனர். முடிக்குரிய நிலங்களென எண்ணிய காடுகளை, கண்டியர் தமது சேனை நிலங்களென உரிமை பாராட்டவே, அரசாங்கம் அவற்றை உடனடி யாக விற்க முடியவில்லை. வளர்ந்து வந்த புதுத் தொழிலுக்கு ஏற்பட்ட
இயற்றினர். இக்கட்டளேயின்படிடகுடியானவர், சட்ட முறைப் Լ1ւգ- தமது உடைமையை நிரூபிக்க முடியாத நிலங்கள் யாவும், அரசாங்க முடிக்குரிய நிலங்களாயின. புதுச் சட்டத்தின்
 
 

நவ இலங்கையின் உதயம் I59
தேவைகளுக்கேற்ப சொத்துரிமையை நிரூபிப்பதன் கடினத்தையும், வழக்கத்தின் பிரகாரம் குடியானவர் பெற்றிருந்த உரிமைகளையும் அரசாங்கம் பொருட்படுத்தவில்லை. இச்சட்டத்தை எதிர்த்து குடியா னவர் ஆர்ப்பாட்டங்களும் குழப்பங்களும் விளைவித்த பொழுது, அரசாங்கம் இராணுவ உதவியுடன் அமைதியை நிலைநாட்டியதுமன்றிப் புதுச் சட்டத்தைக் குடியானவர் பலவந்தமிாக ஏற்கவும் செய்தது. இவ்வாருக ஒரு காலத்தில் அரசனுக்குச் சொந்தமாயிருந்த (கபடகம்) நிலங்கள் யாவும், கோப்பி முதலாளிகளின் தனிச் சொத்தாயிற்று. இதனுல் கண்டியருக்குப் பல இன்னல்கள் விளைந்தன. 3.
கண்டி நாட்டு வாசிகளுள் பெரும் பகுதியினர் தம் நிலங் களை இழந்தனர். காட்டுச் சேனைகளில் பிற உணவு வகைகளை உற்பத்தி செய்யும் உரிமையும் பறி போயிற்று. அநேக காடுகள் அழிக்கப்பட்டதுமன்றி, சில கிராமங்கள் முழுவதுமே அழிந்தொழிந்தன. அரசாங்கம் கிராம விஸ்தீரணத்துக்குச் சாதார ணமாக தேவைப்பட்ட நிலத்தைக் கூட விட்டுவைக்கவில்லை. இத்தகைய மாற்றம் பற்றிக் கூறுமிடத்துக் குடியேற்ற நாட்டுச் செயலாளராகவிருந்த சேர். எமர்சன் ரெனன்ற் பின்வருமாறு எழுதியுள்ளார். 'ஆள்பதியும், ஆய்வுரைக்கழகத்தினரும், இராணு வத்தினரும், நீதிபதிகளும், மதக்குருமாரும், குடியியல் அதிகாரிகளுள் பாதிப் பேரும் மலைநாட்டுக்குச் சென்று முடிக்குரிய காணிகளை யெல்லாம் வாங்கினர் ஏலத்திலே மற்றவர்கள் போட்டியிட்டு விலை கூறி இந்நிலங்களை வாங்குவதைத் தடுத்துக் கொள்ளை இலாபம் அடிக்கக் கருதிய அவர்கள், அவற்றை அடக்கித் தாமே வாங்கினர்'.
2. கூலியாட்கள்:
1833 இல் இராசகாரிய முறை ஒழிக்கப்பட்டதாயினும் கோப்பி முதலாளிகள் எதிர்பார்த்த தொழிலாளரின் இடப் பெயர்ச்சி நடைபெறவில்லை. பணத்தின் பயன்களை இன்னும் உணராத விவசாயிகள், தத்தம் சிறு நிலத் துண்டுகளைப் பயிரிட்டுச் சீவியத்தைக் கழித்து வந்தனரேயன்றி, கூலிக்குப் பிழைக்கும் வாய்ப்புக்களை அறவே புறக்கணித்தனர். சிங்களர் தமது நிலையை விருத்தி செய்வதற்காகப் பணத்துக்குச் சேவை செய்ய முன்வருவர் என எதிர்பார்த்த ஆங்கில ருக்குச் சிங்களரின் செயல் பெரும் ஏமாற்றமாக முடிந்தது. விசேட மாகக் கண்டிப் பிரசேதங்களில் வாழ்ந்த மக்கள், ஆங்கிலத் துரைமாரின் தோட்டங்களில் கூலிக்குப் பிழைக்க விரும்பவில்லை.
பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை ஆரம்பித்த காலையில் காடுகளை வெட்டித் துப்பரவு செய்தல், களை பிடுங்குதல், கோப்பி விதைகளைப் பறித்தல், ஏற்றுமதிக்குத் தயார் செய்தல் போன்ற

Page 87
1 60 இலங்கைச் சரித்திரம்
வேலைகளைச் செய்வதற்குக் குறைந்த செலவில் கூலியாட்களைப் பெற வேண்டிய தேவை ஏற்பட்டது. அதிட்டவசமாகத் தென்னிந்தியச் சந்தைகள் தோட்டத் துரைமாரின் இத்தேவையை ஈடு செய்ய முன் வந்தன. தென்னிந்தியாவில் குடிசனத் தொகை பெருகி வந்ததன லும், மழையில்லாக் காலங்களில் பஞ்சம் ஏற்பட்டதனுலும் மக்கள் வயிற்றுப் பிழைப்புக்காகப் பிறநாடுகளுக்குக் கூலியாட்களாகச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இக்காலத்தில் மேற்கிந்தியத் தீவுகள், பசுபிக் தீவுகள், நேட்டால், மலாயா, இலங்கை எனும் குடியேற்ற நாடுகளில் தேவைப்பட்ட தொழிலாளரை ஐரோப்பியர் தென்னிந் தியாவிலேயே திரட்டினர். இலங்கை தாயகத்துக்கு அண்மையில் இருந்தமையினுலும், தம் நாட்டிலுள்ள நிலைகளே இங்கும் காணப் பட்டமையினலும், தம் மனைவி மக்களுடன் இடம்பெயர வசதிகள்
இருந்தமையினுலும் பெரும்பாலான கூலியாட்கள் இந்நாட்டுக்கு விரும்பி வந்தனர்.
தோட்டங்களுக்குத் தேவையான தென்னிந்தியரைத் திரட்டி இலங்கைக்குக் கொண்டு வர உதவி செய்தவர்கள் கண்காணிகளாவர். தோட்டத் துரைமார் தமக்குத் தேவையான தொழிலாளரைத் திரட்டி வருமாறு கண்காணிகளுக்குப் பணம் கொடுத்துத் தென்னிந் தியாவுக்கு அனுப்பி வைத்தனர். அவர்களும் தம் கிராமங்களிலுள்ள உறவினரையே வரவழைத்து வந்தனர். இதனுல் ஒரு நன்மையும் விளைந்தது. குடும்ப உறவுகளினலும் இரத்த பாசத்தினுலும் பிணைக் கப்பட்ட ஒரு தோட்டத்தின் தொழிலாளர், தம் உழைப்புக்களுடன் காலத்துக்குக் காலம் தாயகம் செல்லாது இங்கேயே நிரந்தரமாக வாசஞ் செய்தனர். இவர்தள்_மதுரை, க்கோட்டை, திருக்
பஹ்ளி, தஞ்சாவூர், தேஹம். கோயம்புத்தூர், ருநெல்வேலி எனும் மரவிட்டங்களினின்றே பெரும்பாலும் திரட்டப்பட்டன T
இலங்கைக்கு வர உடன்பட்டவர்கள், கிராமங்களினின்று நூற்றுக்கணக்கான மைல்களைக் கால்நடையாக நடந்து, தென்னிந் தியாவின் கரைத் துறைமுகங்களையடைந்தனர். அங்கிருந்து அவர்கள் புராதன காலத்துக் கப்பல்களில் வட இலங்கையின் துறைமுகங்களில் இறக்கப்பட்டனர். அதன்பின் உலர் வலயத்தின் பல நூற்றுக் கணக்கான மைல்களை நடந்து, தோட்டப் பிரதேசங்களைப் போய்ச் சேர்ந்தனர். தோட்டங்களை அடைந்த கூலியாட்கள், அங்கு * லயின்கள்" (Lines) என்றழைக்கப்பட்ட நீண்ட பதிந்த, பத்து அறைகளைக் கொண்ட கட்டிடங்களில் வாழ்ந்தனர். ஓர் அறையில் ஒரு முழுக் குடும்பமே வசித்தது. இவ்விருப்பிடங்கள் பெரும்பாலும் சுகாதார வசதிகளற்றனவாகவும், செளக்கியக் குறைகள் மிகுந்தன வாகவும் காணப்பட்டன.
 

நவ இலங்கையின் உதயம் 161
ஆனல் படிப்படியாகத் தோட்டத்துரைமார் இக்கூலியாட்களை மனிதாபிமானத்துடன் நடத்தவேண்டிய அவசியத்தை உணர்ந்தனர். அரசாங்கமும், வந்திறங்கும் துறைகளில் வைத்திய வசதிகளையும், ஏனைய செளகரியங்களையும் செய்து கொடுக்க முன் வந்தது. தனியாரினதும், அரசாங்கத்தினதும் முயற்சிகளினல் கூலியாட்களின் வருகை 1850 க்குப்பின் துரிதமாக அதிகரித்தது.
தோட்ட முதலாளிகள் தமக்குத் தேவையான கூலியாட்களைத் திரட்டவும், அவர்களை வேலைக்கமர்த்தவும், சம்பளங்கள் கொடுக் கவும் கண்காணிகளையே உபயோகித்தமையினல், இம் முறை 'கண் காணி முறை' எனப் பெயர் பெற்றது. தோட்டங்களில் கூலியாட்கள், மேற்பார்வையாளர் போன்று விளங்கிய கண்காணியின் கீழ் குழுக் களாக வேலை செய்தனர். கூலியாட்களின் மொழியையும் பழக்க வழக்கங்களையும் அறியாத தோட்டத் துரைமார், மேற்பார்வை யையும் சம்பளம் கொடுப்பதையும் கண்காணிகளின் பொறுப்பிலேயே
விட்டனர். ஒன்றுமறியாத கூலியாட்கள், தமது கொடுக்கல் வாங்கல் கருமங்களை அவனிடமே ஒப்படைத்தனர். கூலியாட்களின் சம்பளங்கள், சகாயப் பணம், ஆண்டிறுதி நன்கொடைப்பணம்
கடன்கள் கொடுத்தல் எனும் சகல பண நடவடிக்கைகளுக்கும் பொறுப் பாளியாகவிருந்த கண்காணி, தோட்டத்தில் பெரும் செல்வந்தனுகவும் செல்வாக்குடையவனுகவும் ஆனன். தோட்டத் துரைமாருக்கு கூலி யாட்கள் மேலும் தேவைப்படின், அவர்கள் இக்கண்காணிக்கு முற் பணம் கொடுத்துத் தென்னிந்தியாவுக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவன், கூலியாள்களைத் திரட்டி, அவர்களுக்குச் சொற்ப முற்பணம் கொடுத்து, வழியில் ஏற்படும் செலவுகளைப் பொறுத்து தோட்டத்தில் கொண்டு வந்து, தானே அவர்கள் பட்ட கடன்கள் யாவற்றுக்கும் பொறுப்பேற்ருன். இம் முதற் கடன் தீர்க்கப்படும் வரை எந்தக் கூலியாளும் தோட்டத்தை விட்டு விலகலாகாதென தொழிற் சட்டங்கள் விதித்தன.
தென்னிந்தியாவினின்று கோப்பித் தோட்டங்களில் கூலி வேலைக்கு இந்தியரை முதன் முதலாக வரவழைத்தவர்கள் ஜோஜ் பேட்டும். ஆள்பதி பாண்ஸுமாவர். 1828இல் தோட்டங்களில் இருந்த இந்தியரின் எண்ணிக்கை 10, 000 ஆகும். 1847 இல் இவ்வெண்ணிக்கை 80, oUUolu?öp. حيحديدكساس صعصعصعصحديمه

Page 88
I 62 இலங்கைச் சரித்திரம்
3. பேர்க்குவரத்து வசதிகள்
பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை முறையின் விருத்தி, உள் நாட்டுப் போக்கு வரவு முறைகளில் ஒரு புரட்சிகரமான மாற்றத் துக்கு வழி வகுத்தது. கோப்பியின் உற்பத்தியும், வாணிகமும் பன் மடங்கு பெருகியதனல் கோப்பியைத் துறைமுகங்களுக்குக் கொண்டு செல்வதற்கும், தோட்டங்களுக்குத் தேவைப்பட்ட பொருள்களைத் திருப்பிக் கொண்டு வருவதற்கும் தரை மார்க்கமாகக் கெதியான போக்குவரத்து வசதிகள் இன்றியமையாதனவாயின
இலங்கையின் முதல் தெருக்கள் அமைக்கப்பட்ட வரலாறு எட்டாம் அதிகாரத்தில் கூறப்பட்டது. 1840 ஆம் ஆண்டுக்குப்பின் கோப்பியின் வேகப்போக்கு உச்சநிலையைத் தொட்வே, தோட்டப் பிரதேசங்களுக்கு மேலும் திெருக்க அமைத்தல் இன்றி யமையாததெனச் சகலரும் உணர்ந்தனர். அரசாங்கம் கொள்கை யளவில் தோட்ட முதலாளிகளின் இவ்வுறுதிக் கேள்வியை மறுக்க வில்லை. ஏனெனில் முடிக்குரிய நிலங்களை விற்ற அரசாங்கம், அவற் றிற்குப் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கக் கடமைப் பாடுடையதென்பதை நன்கு உணரலாயிற்று. சொற்ப காலத்தினுள் வேண்டப்பட்ட தெருக்களின் எண்ணிக்கையும், அதற்குத் தேவையான பணமும் அரசாங்கத்தை மலைக்கச் செய்தது.
தவிரவும் புதுப்பாதைகள் செங்குத்தான மலைகளையும், வளைவு களையும், பல நதிகளையும், ஊடறுத்துச் செல்ல வேண்டியிருந்த மையினுல் செலவும் கடினமானதாயிருந்தது. கோப்பிச் செய்கை யினல் நிறைந்த வருவாயைப் பெற்ற அரசாங்கம், செலவுகளைப் பொருட்படுத்தாது உடனடியாக மலைநாட்டில் புதுத் தெருக்களை அமைக்கத் திட்டமிட்டது. ஆள்பதி ஹோட்டன், கொழும்பு கண்டி வீதியை,
நிருவாக வசதியின் பொருட்டு அமைக்கப்பெற்ற தெருக்கள் :
கோல்புறுாக் சீர்திருத்தங்கள் முழுத்தீவுக்கும் ஒற்றையாட்சி முறையினைப் பெற்றுத்தந்ததன் விளைவாக, நாடெங்கும் மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டினை நிலைபெறச் செய்தற்கு இலகு வானதும், கெதியானதுமான போக்கு வரத்து வசதிகள் இன்றிய மையாத தேவைகளாயின. நிருவாக வசதியை முன்னிட்டுச் செய்ய
 
 
 
 
 
 
 
 
 
 
 

நவ இலங்கையின் உதயம் ' 163
வேண்டியிருந்த முதல் வேலை, தீவின் பிரதான நகரங்களை தலை நகருடன் இணைப்பதேயாகும். 1833 இல் கொழும்பு-திருகோணமலை வீதி முற்றுப் பெற்றதன் பேருக கீழ் மாகாணம் கொழும்புடன் நேர்த் தொடர்பு கொண்டது. இதன்பின் வடபகுதியுடன் தொடர் புகளை ஏற்படுத்தும் நோக்குடன் கண்டி-தம்புளை வீதி, தம்புளைவரை நீட்டப் பெற்றது. அனுராதபுரத்திலிருந்து இரு கிளைகள்-ஒன்று வடக்கு நோக்கி யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கும், மற்றையது முத்துக் குளிப்பு நிலையமான அரிப்புக்கும் இடப்பட்டன. குருநாககல்-புத்தளம் வீதி அமைவு பெற்றதுடன், வடமேல் மாகாணம் கொழும்புடனும் கண்டியுடனும் தொடர்பு கொண்டது. கொழும்பு-அவிசாவலை வீதி, சப்பிரகமூவ மாகாணத்தைத் தலைநகருடன் இணைத்தது. அவிசா வலையினின்று இரு கிளைகள்-ஒன்று எட்டியாந்தோட்டைக்கும், மற்றையது இரத்தினபுரி மூலம் இறக்குவானைக்கும் இடப்பட்டன. கடைசியாகக் கூறப்பட்ட வீதிகள் தோட்டப் பிரதேசங்களின் தேவைகளையும் பூர்த்தி செய்தன. -
இவ்விதமாக 1850 அளவில் கோப்பிப் பிரதேசத்தைச் சுற்றியும், தீவின் ஒவ்வொரு பிரதான நகரத்தையும் (மட்டக் களப்பு ஒன்று நீங்கலாக) கொழும்புடன் இணைக்கத் தெருக்கள் அமைக்கப் பெற்றன.
சோ தொமஸ் ஸ்க்கினர் :
ஆள்பதி பாண்சின் காலம் முதற் கொண்டு தெருக்களை அமைக்கும் வேலையில் ஈடுபட்டு இலங்கையில் அழியாப் புகழ் பெற்ற ஆங்கிலருள் ஒருவர் மேஜர் தொமஸ் ஸ்க்கினர் ஆவர். அவர் தனது பதின்நான்காவது வயதில் 1818 ஆம் ஆண்டு இராணுவப் La) Luigi (Ceylon Pioneer Corps) GFri 55tri. 1820 இல் தெருக்களை அமைக்கும் வேலைக்காகச் சிபார்சு செய்யப்பட்டார். அன்று தொடக்கம் 1867 இல் அவர் ஓய்வு பெற்ற காலம் ஈழுக, இலங்கையில் அமைக்கப் பெற்ற ஒவ்வொரு வீதியுடனும், பாலத் துடனும் நெருங்கிய தொடர்பு கொண்டார். அவரது திறமையை நன்கு அவதானித்த பாண்ஸ், 1829 இல் அவரை உள்நாட்டுப் போக்கு வரத்து அபிவிருத்தித் திட்டத்தின் தலைமையதிகாரி யாக்கினர். 1841 இல் அவர் தெருக்களின் ஆணையாளர் ஆனூர், ஸ்க்கினர் தனது சேவைக் காலத்தில் இலங்கைக்கு 3000 மைல் நீளமான தெருக்களையும் மிகவும் திறமை வாய்ந்த ஒரு மராமத்து இலாக்காவையும் நிர்மாணித்தார். அவரது சேவையைப் பாராட்டி சேர். எமர்சன் ரெனன்ற் கூறியதாவது, "இலங்கை தனது தற்கால செல்வ நிலைக்கு வேறெந்த மனிதனிலும் பார்க்க ஸ்க்கினருக்கே
கடமைப்பாடுடையது'.

Page 89
164 இலங்கைச் சரித்திரம்
4. முதலீடு
நிலம், கூலியாட்கள், போக்குவரத்து எனும் பிரச்சினைகளுடன் முதலீடு எனும் முக்கியமான பிரச்சினையும் தோட்ட முதலாளிகளை எதிர் நோக்கி நின்றது. இலங்கை போன்ற இன்னும் அறியப் படாத ஒரு குடியேற்ற நாட்டில் பணத்தை முதலீடு செய்வதி லுள்ள அபாயங்களை உணர்ந்த முதலுடையோர், மிகவும் பாதுகாப்புடனேயே நடந்தனர். இதனுல் ஆரம்ப காலத்தில் அரசாங்க் உத்தியோகத்தர்களும், இராணுவ அதிகாரிகளும், தமது சேமிப்புப் பணத்தைக் கொண்டே நிலங்களை வாங்கவும் பரிசோதனைகளை நடாத்தவும் செய்தனர். கோப்பிச் செய்கை பரீட்சிக்கப்பட்டு, அது செல்வம் தரவல்ல ஒரு முயற்சியென நிரூபிக்கப்பட்டபின் மட்டான பண வசதியுடைய ᎠᏗᎧu) முதலாளிகள் மேலும் மேலும் நிலங்களை வாங்கத் தொடங்கினர். 1844 இல் நிலத்தின் விலை 5 சிலிங்கிலிருந்து 20 சிலிங்குக்கு உயரவே, ஒரு தோட்டத்தைத் திறப்பதற்குச் சாதாரணமாக ஒருவருக்கு ஆகக்குறைந்த & 3000 முதல் ஆவது தேவையாயிற்று. இதன் விளைவாக தோட்டங்களைத் திறக்கும் வாய்ப்பு சிறு முதலுடையவர்களுக்கு மூடப்பட்டது -
கோப்பியின் வளர்ச்சியுடன் இலங்கையில் குவிந்த சிறு முதலுடையவர்கள் பெரும்பாலும் ' கடன் முதலில்' அதாவது உற்பத்தியைப் பிணை கொடுத்துக் கடனெடுக்கும் முறையிலேயே தங்கி நின்றனர். இம்முறையின்படி லண்டனில் அல்லது கொழும் பிலிருந்த பண முதலாளிகள் பணத்தைக் கடன் கொடுத்து உற்பத்தி யினின்று முதலையும் வட்டியையும் அறவாக்க உரிமை பெற்றனர். தீவின் வர்த்தகம் அதிக திருப்திகரமாகவும், கோப்பிப் பயிர் முன்னேற் றமான முறையில் செய்கை பண்ணப்படுவதையும் கண்ட பிரித்தானிய வங்கிகள், தமது முயற்சிகளை இலங்கைக்கும் விஸ்தரிக்க நீண்ட காலம் எடுக்கவில்லை. இலங்கையின் முதலாவது வர்த்தக வங்கி "இலங்கை வங்கி" என்ற பெயருடன் 1841 யூன் முதலாம் நாளன்று திறக் கப்பட்டது. பிரித்தானிய முடியிடம் சாசனம் பெற்ற சில லண்டன் முதலாளிகளே அதனைத் தாபித்தனர். அவ்வங்கி, பிணையின்பேரில் பணம் வழங்குவது, பணம் கடன் கொடுப்பது, வைப்புக் காசுகளை (Deposits) ஏற்பது, கடதாசி நாணயங்களை வெளியிடுவது எனும் சேவைகளைச் செய்யத் தொடங்கியது 1851 இல் "வெஸ்டர்ன் Lumiễj; Qử gìị59urr” (Western Bank of India). GTGörựp 6ulü6ì அதனைக் கையேற்று, இரண்டும் இணைந்து 'ஒரியண்டல் வங்கி கர்ப்பரேஷன்" (Oriental Bank Corporation) என்ற பெயருடன் இயங்கின. அதன் முதன் முதலீடு 8 2,500,000 ஆகும்.

நவ இலங்கையின் உதயம் , 1 Ꮾ 5.
5, கல்வி
கோல்புறூக் விசாரணைச்சபை சிபார்சு செய்த கல்விச் சீர்திருத் தங்கள் அமுல் செய்யப்பட்டதுடன், நாட்டின் கல்வி வரலாற்றில் ஒரு புது அத்தியாயம் மலர்ந்தது.
1832 ஆம் ஆண்டில், அரசாங்கத்தின் கீழ் இயங்கிய சிங்கள, தமிழ் பாடசாலைகள் யாவும் மூடப்பட்டன. அவற்றினிடமாக கொழும்பு காலி, யாழ்ப்பாணம், கண்டி, சிலாபம் எனுமிடங்களில் ஆங்கில பாடசாலைகள் நிறுவப்பட்டன. அரசாங்க பாடசாலைகளுள் முதன்மைபெற்று விளங்கியது, தொடக்கத்தில் கொழும்பு அக்கடமி (Colombo Academy) GTGöruplib, 196örGTrĩ (3ơuả) ở đi).9)IIfì (Royal College) என்றும் அழைக்கப்பட்ட பாடசாலையாகும். இவ்வாங்கில பாடசாலைகளுக்கு ஆங்கிலம், ஆங்கில இலக்கணம், வாசினை , கட்டுரையெழுதல், எண் என்பன கற்பிக்கத் திறமையுடையவர்களே ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். கோல்புறுரக் சிபார்சின் பேரில் நிறுவப்பட்ட இப்பாடசாலைகளில், ஆங்கிலக் கல்விக்கு முதன்மையான இடம் கொடுக்கப்பட்டது. ஏனெனில் இப்பாடசாலைகளின் மூலம் தான், அரசாங்கத்துக்கும் தோட்ட வணிகத்துறைகளுக்கும் வேண்டிய இலிகிதர்களையும் ஏனைய உத்தியோகத்தரையும் பெற கோல்புறுாக் எண்ணினார்.
1834 இல் ஹோட்டன், கோல்புறுாக் விசாரணைச் சபையின் மற்றைய முக்கிய சிபார்சினை அமுல் செய்தார். அவ்வாண்டு முதலாவது பாடசாலைச் சபை (School Commission) கொழும்பில் நிறுவப்பட்டது. அதற்குக் கீழ்ப்பட்ட உப சபைகள், காலி, யாழ்ப்பாணம், கண்டி, திருகோணமலை எனுமிடங்களில் அமைவு பெற்றன. இச்சபைகளில் அரசாங்க முகவர், மாவட்ட நீதிபதி, ஆங்கிலத்திருச்சபையின் போதகர்கள் என்பவர்கள் அங்கம் வகித்தனர். மத்திய பாடசாலைச் சபையிலும், மாகாணச் சபைகளிலும் அங்லிக்கன் போதகர்கள் அதி செல்வாக்குடையவர்களாக விளங்கியதனல் இச்சபைகள் சித்தி பெறவில்லை.
பாடசாலைச் சபைகளின் அங்லிக்கன் போதகர்கள் பெரும் பான்மையினராக இருப்பதை ஏனைய புரட்டஸ்தாந்த மதப் பீடங்கள். கண்டித்து வந்தன. இதனைக் கண்ட ஆள்பதி ஸ்ருவட் மக்கன்சி 1841 இல், அதனிடமாக மத்திய பாடசாலைச் சபை (Central School Commission) ஒன்றினை ஏற்படுத்தினர். இச்சபையில் எல்லாக் கிறீஸ்தவ சபைகளுக்கும், ருேமன் கத்தோலிக்கருக்கும் பிரதிநிதித்
g) 11 A - . . . . . . . .

Page 90
I 66 இலங்கைச் சரித்திரம்
துவம் கொடுக்கப்பட்டதுடன், போதகர்கள் சிறுபான்மையினராக்கப் பட்டனர். பெளத்த, சைவ நலவுரிமைகளுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. மத்திய பாடசாலைச் சிபார்சின் GLuigi) அரசாங்கம், மிஷன் பாடசாலைகளுக்கு நன்கொடை வழங்கவும் ஆரம் பித்தது. இதனல், 1841 இல் $ 3, 000 ஆகவிருந்த கல்விச் செலவு 1847 இல் & 11, 415 ஆக அதிகரித்தது.
பதினைந்து ஆண்டுகளாகக் கல்வித் துறையில் ஏற்பட்ட அனுப வத்தின் பயனுக, கிராமியப் பிள்ளைகளின் கல்விக்குத் தாய் மொழியே சிறந்த சாதன மெனும் உண்மையைப் பாடசாலைச் சபை கண்டு ணர்ந்தது. இதன் விளைவாக 1847 இல் சிங்கள, தமிழ் மொழிப் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன, ஆனல் கோப்பிச் செய்கையில் ஏற்பட்ட மந்த நிலையின் காரணமாக அரசாங்க வருமானம் குறையவே, கல்விக்கென ஒதுக்கப்பட்ட பணம் வெகுவாகக் குறைக்கப் பட்டது. புதுத்திட்டம் முன்னேற்றமடையும் வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டன.
கோல்புறுரக் சிபார்சுகளின் அடிச்சுவட்டில் உருவாகிய புதுக் கல்வித்திட்டத்தின் பயனுக நன்மைகள் பல ஏற்பட்டன. அன்று ஆரம்பித்த ஆங்கிலக் கல்வி முறை, இலங்கை வாழ் இளைஞர்களை மேற்கத்தய உலகின் கலாச்சாரத்துடன் நேர்முகமாகவும் அன்னி யோன் னியமாகவும் தொடர்பு கொள்ளச் செய்தது. ஐரோப்பியக் கலைகளையும் விஞ்ஞானப் புதுமைகளையும் ஆங்கில மொழியின் மூலம் கற்றறிந்த அவர்கள், புது வழிகளில் சிந்திக்கவும் செயலாற்றவும் தொடங்கினர். ஐரோப்பிய சரித்திரத்தைப் படித்த அவர்கள், பிரெஞ்சுப் புரட்சியின் கருத்துக்களிலும் மாக்சின் போதனைகளிலும் புது இலட்சியங்களைக் கண்டனர். ஆங்கில சரித்திரத்தில், மத்திய வகுப்பினர் எவ்விதம் அரசியலதிகாரத்தைக் கைப்பற்றினரெனக் கற்றறிந்து உணர்ந்தனர். நாளடைவில் தம் நாட்டிலும் அப்பேர்ப் பட்ட சீர்திருத்தங்களுக்காக வாதாட ஆரம்பித்தனர்.
'கிழக்கது கிழக்கே, மேற்கது மேற்கே, கிழக்கும் மேற்கும் ஒன்று சேரா' என்று கிப்ளிங் (Kipling) என்ற ஆங்கிலக் கவி பாடிச் சென்ருர், ஆனல் ஆங்கிலக் கல்வியின் மூலம் கிழக்கும் மேற்கும் ஒன்று சேர்ந்தமையினலேயே தற்கால இலங்கை மலர்ந்ததெனக் கூறின் மிகையாகாது.

நவ இலங்கையின் உதயம் 167
6. நீதி நிருவாகம்
அரசியல் நிருவாகம், மாகாண பரிபாலனம், கல்வி என்னும் பல துறைகளில் புது இயக்கங்களை ஆரம்பித்து வைத்த 1833 ஆம் ஆண்டு, நீதி பரிபாலனத் துறையிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக அமைந்தது. அவ்வாண்டு ஜூலை 31 இல், புது 15647 uLLuh (Charter of Justice) 19Jah LGrub செய்யப்பட்டது. அதற்கிணங்க உச்ச நீதிமன்றம் (Supreme Court) திறக்கப்பட்டு, சேர். சாள்ஸ் மாஷல் (Sir Charles Marshal) இலங்கையின் பிரதம நீதியரசராகச் சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்றர். அதனு டன் கமரன் செய்த சிபார்சுகளுக்கிணங்க இலங்கை யெங்கணும் ஒரே வகையான நீதி பரிபாலனமுறை ஏற்படுத்தப்பட்டது. குடி யியல், பாதகவியல் அதிகாரங்களுடைய மாவட்ட நீதி மன்றங்கள், தீவின் பிரதான நகரங்களில் நிறுவப்பட்டன. 1845 இல், சிறு பாதகவியல் வழக்குகளை விசாரணை செய்வதற்கும், மாவட்ட மன்றங் களின் வேலைகளைக் குறைப்பதற்குமாக பொலீஸ் மன்றுகள் (Police Courts) நிறுவப்பட்டன. 1848 இல் முறையீட்டு மன்றுகள் (Courts of Requests) சிறு குடியியல் வழக்குகளை விசாரணை செய்வதற்கென
நிறுவப்பட்டன.
7. பத்திரிகைகளின் வளர்ச்சி
பிரித்தானியர் ஆட்சியின் முதல் முப்பது ஆண்டுகளில் இலங்கையில் பத்திரிகைகள் என்று அழைக்கக்கூடிய வெளியீடுகள் ஒன்றுமிருக்கவில்லை. 1802 ஆம் ஆண்டு தொடக்கம் 'அரசாங்க கசற்" (Government Gazette) ஒன்று தான் அக்காலத்தின் புதினப் பத்திரிகையாகும். பிரதானமாக அரசாங்க அறிவித்தல்களையும் , தகவல்களையும் கொண்டு வெளிவந்ததுடன் அது புதன், சனி, என்ற இரு நாள்களில் முக்கியமான உள் வெளிநாட்டு விடயங்களையும் ஆங்கில, இந்தியப் பத்திரிகைகளினின்று தெரிந்தெடுக்கப்பட்ட விடயங்களின் சுருக்கங்களையும் கொண்டு வெளிவந்தது.
ஆள்பதி ஹோட்டனின் காலத்தில்தான் பத்திரிகைகள் முதன் முதலாக இலங்கையில் காட்சியளித்தன. அவர் இங்குற்ற மூன்று மாதங்களுள் அரசாங்க ஆணையின் கீழ் "கொழும்பு ஜேணல்" என்ற பத்திரிகையை ஆரம்பித்தார். 1832 ஜனவரி முதலாம் நாளன்று அரசாங்க அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளிவந்த இப்பத்திரிகை, மிகவும் குறுகிய காலத்துக்கே உயிர்வாழ முடிந்தது. பிரித்தானிய அரசாங்கம் 1833 டிசம்பர் 31 இல் அப்பத்திரிகை நடைபெறுவதைத் தடுத்து நிறுத்திவிட்டது. ' ' ' ' ' .

Page 91
168 இலங்கைச் சரித்திரம்
ዕ»
கொழும்பின் பிரித்தானிய வணிகர் சிலர் ஒன்று சேர்ந்து இலங்கையின் முதல் சுதந்திரப் பத்திரிகையை பிரசுரிக்க ஆரம்பித் தனர். 'ஒப்சேவர் அன்ட் கொமேஷல் அட்வட்டைசர்’1834 இல் வெளி வந்தது. இன்றும் இலங்கையில் ஒப்சேவர் என்ற நாம்த்துட்ன் பிரசுரமாகும் அப்பத்திரிகை தான், ஆசியாவின் மிகப் பழமை வாய்ந்த இரண்டாவது ஆங்கிலப் பத்திரிகையாகும். 1835 இல் கிறிஸ்தோப்பர் எலியட் ஆசிரியராக அமைந்தது முதல், ஒப்சேவர், அரசாங்கத்தை மிகவும் வன்மையாகக் கண்டிக்கத் தலைப்பட்டது.5 அக்கண்டனங் களினின்று நிருவாக அதிகாரிகளைப் பாதுகாக்க வேண்டுமென உணர்ந்த குடியியல் அதிகாரிகள், ஆள்பதியின் ஆதரவுடன் 'சிலோன் குருெனிக்கல்' என்ற பத்திரிகையை 1837 மே 3 இல் முதன் முதலாக வெளியிட்டனர். ஆனல் அவ்வதிகாரிகள் மத்தியில் எழுந்த வேற்றுமைகளின் பயனுக 1838 செப்ரம்பர் 3 இல் வெளி வந்ததுடன் அப்பத்திரிகை கைவிடப்பட்டது. 6.x.....
மக்கன்ஸி காலத்தில் ஒப்சேவர் பத்திரிகையின் கொள்கை முற்றிலும் நிலைமாறியது. ஆள்பதியின் சேவையாளர்களில் ஒருவரான A. M. பேர்குசன், "குருே னிக்கல்' உக்குக் கட்டுரைகள் எழுதி அதன் ஆதரவை அரசாங்கத்துக்குச் சார்பாகப் பெற்றுக்கொடுத்தார். அவர்தான் பிற்காலத்தில் அப்பத்திரிகையின் ஆசிரியணுக அதனை நாட்டில் மிகவும் பலம் வாய்ந்த சக்தியாக மாற்றியவர்.
"குருேனிக்கல்” விற்பனையான பொழுது அதன் எந்திரங்களை வாங்கிய மக்கன்சி ருெஸ் என்பவர் 1838 செப்ரம்பர் 7 இல் 'சிலேர்ன் ஹெரல்ட்" எனும் புதுப்பத்திரிகையொன்றினை ஆரம்பித்தார். அரசாங்கத்தை ஆதரித்த ஒப்சேவருக்குப் போட்டியாக ஹெரல்ட் அரசாங்கத்தைக் கண்டிப்பதையே தனது முதன்மையான வேலையாகக் கொண்டது. 1845 இல் சில பிரித்தானிய வர்த்தகர்கள் அதனை வாங்கி அதற்கு 'ரைம்ஸ் ஒப் சிலோன்' என நாமஞ் சூட்டினர். அப்பத்திரிகையின் முதலிதழ் 1846 யூலை 11 இல் பிரிசுரிக்கப்பட்டது. இதற்குச்சற்று முன்னதாக 1846 ஜனவரியில் 'சிலோன் எக்ஸாமினர்' என்ற ஒரு பத்திரிகையைப் பறங்கியர் ஆரம்பித்தனர். அதில் பல எழுத்தாளர்கள் கட்டுரைகளையும் அபிப்பிராயங்களையும் எழுதிப் பிரபல்யமும் புகழும் ஈட்டினர். இவ்விதமாக 1850 அளவில் வாசகர்களின் ஆதரவைப் பெறுவதற்காக ஒப்சேவர், ரைம்ஸ், எக் ஸாமினர் எனும் மூன்று பத்திரிகைகள் ஒன்றேடொன்று போட் டியிட்டுவந்தன. ' . −

0.
I l .
罩2。
நவ இலங்கையின் உதயம் 169
வினுக்கள்
குடியியற் சேவை வளர்ச்சியடைந்த விதத்தை ஆராய்க.
1832 இல் இலங்கையின் நிருவாகத்தை ஒருமைப்படுத்த எடுக்கப்பட்ட வழிகள் எவை? பிற்காலத்தில் மாகாணப் பிரிவுகளில் ஏற்பட்ட மாற்றங்களையும் காரணங்களையும் விளக்குக.
1844 ஆம் ஆண்டு குடியியற் சேவையில் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டதற்குரிய காரணங்களை ஆராய்க.
இலங்கையில் நிறுவப்பட்ட முதல் சட்ட நிருவாகக் கழகங் களின் குறைநிறைகளை ஆராய்க.
கோல்புறுாக் சீர்திருத்தங்கள் இலங்கையின் பொருளாதாரத்தில்
பெருமாற்றம் ஏற்படுவதற்கு எவ்வாறு வழி செய்தன? கோப்பிப் பயிர்ச் செய்கைக்குத் தடையாக இருந்தவை யாவை? அவைகள் எங்ங்னம் சமாளிக்கப்பட்டன?
(அ) கூலியாளர் (ஆ) போக்குவரத்து என்பனவற்றைப்
பொறுத்த வரையில் 19 ஆம் நூற்ருண்டில் கோப்பிச் செய்கையை நன்முக அபிவிருத்தி செய்வதில் தோட்ட முதலாளிகள் எதிர்நோக்க வேண்டியிருந்த முக்கிய பிரச்சினைகள் யாவை? இவற்றை அவர்கள் எவ்வாறு தீர்த்தனர்?
19 ஆம் நூற்றண்டின் முன்னரைப் பகுதியில் பிரித்தானியர் எமது பொருளாதாரத்தை எவ்வாறு விருத்தி செய்தனர்? இவ்வபிவிருத்திக்குக் காரணங்கள் தருக. 19 ஆம் நூற்ருண்டின் முன்னரைப் பகுதியில் போக்குவரத்து முறைகளில் ஏற்பட்ட விருத்திக்குக் காரணங் கூறுக. உமது விடையைப் பட உதவியுடன் விளக்குக. சேர் வில்மட் ஹோட்டன் காலத்தில் இலங்கைச் சரித்திரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டமையை விளக்குவதற்கு நீர் காட்டக்கூடிய உதாரணங்கள் எவை? கோல்புறுரக் குழுவினரின் முக்கிய சீர்திருத்தங்கள் எவை? 1850 வரை இச்சீர்திருத்தங்களின் விளைவுகளைத் தொடர்
பாகக் கூறுக.
வில்மட் ஹோட்டன் ஆள்பதியின் பரிபாலனத்தை மதிப்பிடுக.

Page 92
அதிகாரம் 10
1848 ஆம் ஆண்டுக் கலகமும்
அதன் பின் விளைவுகளும்
1817-18 ஆம் ஆண்டுப் பெருங்கலகத்தின் பின் இலங்கையில் நிலவிய அமைதியைக் குலைத்த அடுத்த முக்கிய நிகழ்ச்சி 1848 ஆம் ஆண்டுக் கலகமாகும். அவ்வாண்டு ஏற்பட்ட குழப்பங்கள் ஈரிடங் களில்-ஒன்று கொழும்பிலும், மற்றையது கண்டிப் பிரதேசத்தின் மாத்தளை குருநர்கல் என்னும் இடங்களிலும் நடந்தேறின. 1848 இல் விதிக்கப்பட்ட வரிகளுக்கு விரோதமாக உருவாகிய பொது எதிர்ப்பு ஒன்றுதான் இவ்வீர் இடங்களிலும் எழுந்த கலகங்களிற் காணப் பட்ட பொது இயல்பாகும். கண்டி மாநிலங்களில் கலகத்தை ஊக்கு வித்த பிரதான சக்தி நாட்டின உணர்ச்சியாகும்.
1. கலகத்தின் காரணங்கள்
கண்டியின் பழமை வயலிலே, பிரித்தானியர் புதுமை விதைகளை விதைத்த பொழுது, o இடையில் ஏற்பட்ட
t விளைந்தது. ஒருபுறம் 1815 இல் சிறீ விக்கிரம இராஜசிங்கன் தோ கடிக்கப்பட்டு நாடுகிடத்தப்பட்டதையும் அத%னத் தொடர்ந்து சிங்களர் ஆட்சி போய், பிரித்தானியர் ஆட் தோன்றியதையும், 1818 ஆம் ஆண்டுக் கலகம் -- -- யில் நின்று தோல்வியா மறைந்தமையையும் ஒன்றன்பின் ஒன்ருகக் கண்டுகளித்த பிரதானி களும் மக்களும் பழமையை மீண்டும் நிலைநாட்ட மனம் ஏங்கி நின்றனர். மறுபுறம் ஆங்கிலர் 1818 தொடக்கம் புது நிர்வாக ஒழுங்குகள், சீர்திருத்தங்கள், நீதிபரிபாலன முறைகள், தெருக்கள், தோட்டங்கள், புதுவரி முறைகள் என்பனவற்றின் வழியாக கண்டி இராச்சியத்தின் தனித்தன்மையைச் சிதைக்கவும் அப்பிரதேசத்தைச் சுரண்டவும் முற்பட்டனர். மானிய முறையினையும் இடைக்காலத்தின் பழைய முறைகளையும் அனுசரித்து வந்த சிங்களச் சமுதாயத்தினுள் இராணுவப் பலமும் நிர்வாகத்திறனும் முற்போக்குக் கருத்துக்களும் கொண்ட நவீன பிரித்தானிய அரசாட்சி புகுந்தமை, வெண்கலக் கடையினுள் யானை புகுந்தது போலாயிற்று.
கண்டி நாட்டில், 1848 ஆம் ஆண்டுக் கலகத்தை விளைவித்த
பிரதான காரணம் நாட்டின வாதமாகும். இச்சக்தியை ரொறிங்ரன்
நன்கு விளங்கி, அதனைப் பின் வருமாறு வருணித்தார்' (கண்டியரின்) 170 -
缸
 
 
 
 
 
 
 
 

1848 ஆம் ஆண்டுக் கலகமும் அதன் விளைவுகளும் i 71
நாட்டினவாதம் என்பது 34 ஆண்டுகளுக்கு முன்னர் முதன் முறையாக எங்கள் ஆணைக்குக் கீழ்ப்படுத்தப்பட்ட மக்களிடையே காணப்படும் உணர்ச்சிகள், பழக்கங்கள், உறவுகள், வழக்கங்கள் என்பனவற்றைக் குறிக்கும். அவர்கள் கரையோர மாகாணங்களுடன் இணைக்கப்பட்டமை ஒருவிதமான முன்னேற்றத்தையும் ஏற்படுத்திய தாகத் தென்படவில்லை. ' கண்டியரின் நாட்டினவாதமானது நீண்ட காலச் சரித்திர வளர்ச்சியினுல் ஏற்பட்ட வழமையைத் தழுவுந் தன்மையைக் கொண்டதாயிற்று. தத்தம் கிராமங்களுக்கும் மாவட் டங்களுக்கும் நாட்டுக்கும் அவர்கள் நிறைந்த விசுவாசமும் அபிமானமும் கொண்டவர்களாய் இருந்தனர். இப்பாமர மக்கள் தம்முள் ஒருவனை அரசனுக்கி பழைய கன்டி அரசாட்சி முறைக்கும் அதன் நிலையான பாரம்பரிய ஒழுங்கு முறைக்கும் திரும்பிச் செல்ல எண்ணினர்; பிரித்தானியர் ஆட்சியினல் ஏற்பட்ட மாற்றங்களுக்கும், நிலை பேறின்மைக்கும், எதிராக அவர்கள் நன்கு அறிந்ததும். அவர்கள் உள்ளங்களில் உறுதியாக வேரூன்றி இருந்ததுமான பழைய சமுதாய முறையை உயிர்ப்பிக்கும் நோக்கமாகவே கலகத்தை விளைவித்தனர்.
2. பிரதானிகளின் அதிருப்தி
பிரித்தானியர் 1818 ஆம் ஆண்டுக் கலகத்தை அடக்கியபின் கண்டிப் பிரதேசங்களின் பரிபாலன ஒழுங்குகளில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தினர், புது உடன்படிக்கையின் விதிகளினுல் கண்டிப் பிரதானிகள் பல வழிகளிலும் ஒடுக்கப்பட்டனர். கண்டி நாட்டில் மீண்டும் புரட்சி நிகழாதிருக்க, பிரதானிகளின் செல்வாக்கையும் அதிகாரங்களையும் குறைப்பது இன்றியமையாததென அரசாங்கமும் திட்டமிட்டுக் கருமமாற்றியது. இறைவரி சேகரித்தல், நீதிபரி பாலனம் என்னும் கருமங்களுக்கு ஆங்கிலேய உத்தியோகத்தர் பொறுப்பேற்றதுடன் பிரதானிகள் கீழ்நிலை உத்தியோகத்தில் மாத்திரமே நியமிக்கப்பட்டனர். ஒரு காலத்தில் தம் பிரதேசங் களில் குறுநில மன்னர்களைப் போன்று அரசாட்சி நடாத்தி வந்த பிரதானிகள், சடுதியாக அரசாங்கப் பரிபாலனங்களில் நின்று முழுமையாக விலக்கப்பட்டதுடன் நெடுங்காலமாக அனுபவித்து வந்த அதிகாரங்கள், வருவாய்கள் யாவற்றையும் இழந்தனர். தம்முன்னைய அதிகாரங்களையும் சலுகைகளையும் இழந்தபோதிலும் அவர்கள் பாமர மக்களின்மேல் கொண்டிருந்த செல்வாக்கினை அத்துணை இலகுவாக இழந்து விடவில்லை. இச்செல்வாக்கு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் குடியியற் சேவையாளர் மக்களுடன் நெருங்கிப் பழகாத பட்சத்தில் 'மக்களுக்கும் அரசாங்கக் குடியியற் சேவையாளருக்குமிடையே தொடர்புகளை ஏற்படுத்த

Page 93
172 - . இலங்கைச் சரித்திரம்
வல்லதாக இருந்த ஒர்ே ஒரு சாதனம் பிரதானிகள் தான்' என ரெனன்ற் கூறியுள்ளார். பிரதானிகளின் செல்வாக்கினைப் பற்றி ஸ்க்கினர் கூறியதாவது "பழமை வாய்ந்த மாசுபடாத புனித வம்சங்களில் உதித்த பிரதானிகளுக்கு எல்லா வகுப்பு மக்களும் காட்டும் மரியாதை தெய்வ வணக்கத்திற்குச் சமானமானது 'இத்துணை செல்வாக்குடைய பிரதானிகளை அரசாங்கம் நிர்வாகக் கருமங் களினின்று அறவே புறக்கணித்தமை, ஈற்றில் அவர்களுக்கே பெருந் தீவினையாக அமைந்தது. இந்தநிலையில் பல துறைகளிலும் அதிருப்தி படைந்த பிரதானிகள், தம் மேல் சந்தேகமும் ஐயமும் கொண்ட ஆட்சி யாளருக்கு எவ்வித உதவியும் நல்காது நாட்டில் வளர்ந்து வந்த அதிருப்தியை பாராமுகமாக விட்டதில் வியப்பில்லை,
3. தெருக்கள், தோட்டங்கள் திறக்கப்பட்டதினுல். விளைந்த இன்னல்கள் கண்டிக் குடியானவரையும் பிரதானிகளையும் வெகுவாகப் பாதித்த ஒரு பொதுக் காரணம் மலைநாட்டுக்குத் திறக்கப்பட்ட தெருக்களும்டஅவற்றின் அடிச்சுவட்டில் தோன்றிய கோப்பித்
தோட்டங்களுமாகும். மலைநாட்டில் திறக்கப்பட்ட தெருக்களின் 浣—#、茄“蒿 யாவும் சிதைந்து போவதைக்கண்டு கண்டியர் மனம் புளுங்கினர். கோப்பித் தோட்டங்கள் திறக்கப்பட்டதன் பயணுக அவர்களின் நிலை மேலும் சீரழிந்தது. தோட்டப் பிரதேசத்தில் வியாபாரம் , சாராயக் குத்தகை, ஏற்றுமதி ஒப்பந்தங்கள், தரகு, தச்சுவேலை போன்ற தொழில் வாய்ப்புக்கள் பெருகவே அவற்றினுல் முதன் முதல் நன்மை அடைந்தவர்கள் தாழ்பிரதேசச் சிங்களராவர். கண்டி, கம்பளை, பதுளை, நுவர-எலிய என்னும் நகரங்களிலும் கோப்பிப் பிரதேசம் முழுவதும் இவர்களினல் நிறைந்து வழிந்தது. புது வரத்தினர் நாட்டின் மூலைமுடுக்குகளை ஊடறுத்துச் சென்று பாமர மக்களின் அறியாமையையும் எளிமையையும் பயன்படுத்தி, அவர்களை ஏமாற்றிப் பிழைத்தனர். விரும்பத்தகாத பேர்வழிகளும் நீதிக்கு அஞ்சியவர்களும் அங்கு புகலிடம் பெறவே, ஒழுங்கீனம் அதிகரித்தது. -
கண்டிப் பிரதேசத்தில் ஒழுங்கீனமும் குற்றங்களும் அதிகரித்த மைக்கு ஒரு முக்கிய காரணம் அரசாங்கம் கடைப்பிடித்த சாராய வியாபாரக் கொள்கையாகும். இவ்வியாபாரத்தினுல் கூடுதலான வருவாயைப் பெறத்திட்டமிட்ட அரசாங்கம், கிராமங்கள் தோறும் , தவறணைகள். திறக்கப்படுவதை ஆதரித்தது. 1815 க்கும் 1848 க்கும்.
 

1848 ஆம் ஆண்டுக் கலகமும் அதன் விளைவுகளும் i 73
இடைப்பட்ட ஆண்டுகளில் கண்டி மாகாணங்களில் மாத்திரம் 133 தவறணைகள் திறக்கப்பட்டன. இப்பிரதேசத்தில் மது அருந்தும் பழக்கம் ஒரு மாபெரும் தீமையாயிற்று. இதனை வன்மையாகக் கண்டித்த ஸ்க்கினர் தவறணைக்காரரின் நடத்தையைப் பின்வருமாறு வருணிக்கிருர் - 'மது சாரத்தைப் பருகுவதில் ஒரு சுவையை ஏற்படுத்துவதற்குத் தவறணைக்காரர் இலவசமாக மக்களுக்கு அதனை விநியோகித்தனர். ஏனெனில் அது நாளடைவில் மதுவை மிகுதிய்ாக அருந்தும் பழக்கத்தை ஏற்படுத்துவது நிச்சயம் என்பதை அவர்கள் நன்கறிவர். சில மாவட்டங்களில் சில ஆண்டுகளுக்கு முன் நூற்றி லொருவர் தன்னும் மது அருந்துவது அருமையாக இருந்த இடத்தில், இப்பொழுது கிராமவாசிகள் தம் நிலத்தில் விளையும் தானியங்களை தவறனைக்காரரிடம் அடகுவைத்துச் சாராயம் அருந்துகின்றனர்'. விவசாயிகளும் தொழிலாளரும் உழைத்த பணம் முழுவதும் இத்தீய வழியிலேயே செலவாயிற்று. களவு, கொள்ளை, குது, குற்றங்கள். யாவும் அதிகரித்தன~
கோப்பித் தோட்டங்களின் வழியில் ஐரோப்பிய தோட்ட முதலாளிகளும் இந்தியக் கூலியாட்களும் மலைநாட்டினுட் புகவே அப்பிரதேசத்தின் தனிமையும் அமைதியும் மேலும் பங்கப்பட்டன. புதிதாக வந்தவர்களின் மொழி, பழக்க வழக்கங்கள் ஒன்றையும் அறியாத கண்டியர் அவர்களைத் தம் நாட்டின் செல்வத்தை அபகரிக்க வந்த கயவர், என்றே கருதினர். ரொறிங்ரன் "எங்கள் தோட் டங்கள் கண்டியரின் கொடிய பகைமைக்கு ஒரு முக்கிய காரணமாகும்" எனக் கூறினர்.
கண்டியரின் வன்மையான எதிர்ப்புக்கு இலக்கான சட்ட திட்டம், அரசாங்கம் கோப்பித் தோட்ட முதலாளிகளுக்கு நிலங்களை விற்பனை செய்வதற்குக் கையாண்ட நிலக்கொள்கையாகும். 183440 இல் 247000 ஏக்கர் நிலங்கள் ஐரோப்பியருக்கு விற்பனை செய்யப் பட்டன. நிலத்துக்கான போட்டி அதிகரிக்கவே, அரசாங்கம் 1841 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க முடிக்குரிய சட்டத்தை (Crown Lands Ordinance No 9 of 1841) guibaug. 3s girluga Lt முறைப்படி உரிமைகள் பாராட்டப்படாத урU 13. I čj) o நிலங்கள் ஆக்கப்பட்டு ஐரோப்பியருக்கு விற்பனையாயின. இதனுல் குடியானவர்கள் தம் காட்டுச் சேனை நிலங்களையும் மேய்ச்சல் நிலங் களையும் இழந்தனர்.

Page 94
74 இலங்கைச் சரித்திரம்
4. கோல்புறாக்-கமரன் சீர்திருத்தங்கள்
1833 ஆம் ஆண்டுச் சீர்திருத்தங்கள் தாழ் பிரதேச மக்களிலும் கூடுதலாகக் கண்டியரையே பல வழிகளிலும் பாதித்தது. இலங்கை மீண்டும் ஒற்றையாட்சியும், ஒற்றுமையும் பெற்றுத் திகழ்வதற்கு கண்டியர் தாம் நீண்ட காலமாக அனுபவித்து வந்த சுதந்திரம், சுயேட்சை யாவற்றையும் கைநெகிழ வேண்டிய நிலைக்குள்ளாயினர்.
கோல்புறுரக்-கமரன் சீர்திருத்தங்களின் பயணுக கண்டி மாநிலங்கள் தனி நிருவாக ஆட்சியின்கீழ் பரிபாலிக்கப் பட்டு வந்த முறைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. இலங்கையின் எல்லா மாகாணங்களும் பிரித்தானிய அரசாங்க முகவர்களிள் ஆணையின் கீழ் நிர்வகிக்கப்படத் தொடங்கின. மாகாணங்களின் நிர்வாகத்துக்குப் பொறுப்பாயிருந்த திசாவை முறை நீக்கப்பட்டது. அதிகார் என்ற பட்டம் குடியேற்ற நாட்டினல் வழங்கப்படும் கெளரவப்பட்டமாயிற்று. கண்டிப் பிரதானிகள் மாவட்டத்தின் பகுதிகளையும், சிறு பிரிவுகளையும் மேற்பார்வை செய்யும் சிறு தலைமைக் காரர்களின் நிலைக்குத் தாழ்த்தப்பட்டனர்.
கிராமிய விவசாய முயற்சிகளுக்கு மூலாதாரமாக அமைந் திருந்த இரா சகாரிய முறையினையும் கன்சபாவை முறையினையும்
அழிப்பதில் வெற்றிகண்ட கோல்புறுநூக், கமக்காரரின்_விவசாயத் *菇菇总 மாற்றுத் திட்டத்தைச் சமர்ப்பிக்கத் தவறியமை, அவர் இந் நாட்டு மக்களுக்கு இழைத்த மாபெருந் தீங்காகும். நாட்டின் பொருளாதாரத் துறையில் அரசாங்கம் தலையிட்டு தடைகளை விதிக்கலாகாதென்றும், கட்டுப்பாடற்ற தனி மனிதனின் முயற்சியே தேசத்தின் செல்வநிலையை வளர்க்க வேண்டும் என்றும் கோல்புறுாக் உறுதியாக நம்பினர். எனவே அவர் பொருளாதாரத் துறையில் தனியார் முயற்சிக்குக் கதவுகளைத் திறந்துவிட்ட பொழுது பண வசதியுள்ளவர்கள் நிலங்களை வாங்கி பெருந் தோட்டங்களைத் தாபித்தனர். ஆனல் பணம் இல்லாத ஏழைக் குடியானவர்கள் முன்னையிலும் பார்க்க கூடுதலான இன்னல்களுக்கும் பொருளா தாரக் கஷ்டங்களுக்கும் உள்ளாயினர். நெற்பயிர்ச் செய்கையின் விருத்திக்குப் பாரிய நீர்ப்பாசனத் திட்டங்களைப் புனருத்தாரணம் செய்வதை அரசாங்கம்தான் பொறுப்பேற்க வேண்டும் என்பதை கோல்புறுாக் உணரவும் உணர்த்தவும் தவறினர். விவசாயிகள் பeட்டில் தன் பொறுப்பை உணராத அரசாங்கம், அவர்களின் நலனுக்காக எவ்வித திட்டத்தையும் வகுக்கவில்லை. கமக்காரரின்
s

1848 ஆம் ஆண்டுக் கலகமும் அதன் விளைவுகளும் I 75
விவசாயம் நாளாந்தம் குன்றி வந்தது. கண்டி மாகாணங்களினதும் பிற பகுதிகளினதும் நீர்ப்பாசனத் திட்டங்கள் அழிந்து போன நிலையிற் காணப்பட்டன. மேலும் கோல்புறுரக் செய்த சீர்திருத் தங்களுள் பல அக்கால இலங்கைக்கு ஏற்றனவாக அமையவில்லை.
கோல்புறுாக், அரசாங்கத்தின் செலவினங்களைக்  ைறக்கம்
நோக்குடன் இலங்கையை ஐந்து மாகாணங்களாக வகுத்தார் _
இப்புது மாகாணங்கள் வசதியின் பொருட்டு ஏற்படுத்தப்பட்டனவே யன்றி நாட்டின் புவியியல் சரித்திர, அரசியற் காரணங்களின் அடிப்படையில் வகுக்கப்பட்டனவல்ல. இம்மாகாணங்களின் நிலப் பரப்பு மிகவும் விசாலமானவையாக இருந்தமையால் குடியியற் சேவையாளர் அவற்றுட் பரந்து கிடந்த குடியானவர்களின் நலன்களை பேணிக் கருமமாற்றுவது முடியாத கருமமாயிற்று. 1845 இல் ஸ்ரான்லி பிரபு குடியியற் சேவையில் பல சீர்திருத்தங்களை மேற் கொண்டிருந்த போதிலும் அதன் தரம் உடனடியாக விருத்தி பெறவில்லை. குடியியற் சேவையாளரின் சம்பளம், வேதனங்கள் குறைக்கப்பட்டமையால் 1833 க்குப் பின்னர் விவேகம் குறைந்த வர்களே அச்சேவையிற் புகுந்தனர். ஆள்பதி ஸ்ரூவாட் மக்கன்சி யினல் ஊக்குவிக்கப்பட்ட குடியியற் சேவையாளரின் பெரும் பகுதியினர் கோப்பித் தோட்டங்களை திறக்கும் முயற்சியில் மும் முரமாக ஈடுபட்டனர். அவர்கள் மாகாணங்களைப் பரிபாலிக்கும் கருமங்களை விடுத்து தம் முழு நேரத்தையும் தோட்டங்களிலேயே செலவிட்டனர். தோட்டத் துரைமாருக்கும் கண்டிக் குடியானவர் களுக்குமிடையே எழுந்த பிணக்குகளில் (விசேடமாக நில விற்பனை) அவர்கள் தோட்ட முதலாளிகளுக்கு ஆதரவாகவே கருமமாற்றினர். அவர்கள் சுதேச மொழிகளைக் கற்பதிலும் தம் மாகாணங்களைச் சுற்றிப் பார்வையிடுவதிலும் அக்கறை காட்டவில்லை. பிரதம நீதி அரசர் சேர். அந்த னி ஒலிபன்ற் கூறியதாவது 'இந்த நாட்டின் ஒரு பெரும் பகுதியில் நிலவும் நிலைகளும் அவற்றின் தேவைகளும் அறியப்படாத நிலையிலேயே இருக்கின்றன. இப்பகுதிகளில் கடந்த 30 ஆண்டுகளில் ஒரு ஐரோப்பியர் தன்னும், வேட்டை ஆடுவதற்கு சென்றிருந் தாலன்றி, கால் வைக்கவில்லை'
கமரன், கன்சபாவை முறையினை நீக்கியதனுல் கிராமிய மக்கள் தம் விவசாயக் கரும்ங்களை ஒழுங்கு செய்யவும், சச்சரவுகளை இலகு வாகத் தீர்த்து வைக்கவும் பயன்பட்ட ஒரேயொரு நிலையம் சீர்குலைந்து போயிற்று. கன்சபாக்களின் நீதி அதிகாரங்கள் மாகாண நீதிமன்றங் களுக்கு மாற்றப்பட்டமையினல் கிராம மக்கள் நகரங்களுக்குச் சென்று

Page 95
176 இலங்கைச் சரித்திரம்
வழக்கறிஞர்களை ஏற்படுத்தி, அதிக செலவைப் பொறுக்க வேண்டிய வராயினர். வழக்கறிஞர்களும் மக்களின் அறியாமையை uu u Gör படுத்தி நீர்மாற்றிப் பணம் பறித்தனர்.
5. பெளத்த சங்கம்
* கலகத்துக்குரிய பிறிதொரு காரணம் பிரித்தானிய அரசாங்கம் பெளத்த மத ஈடுபாடுகளினின்று விலகிக்கொண்டதனுல் பெளத்த சங்கம் அதிருப்தி கொண்டமையாகும். 1841 ஆம் ஆண்டு பெளத்த பிக்குகள் தாமே தம் சங்கங்களின் தலைமைப் பிக்குகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அத்தெரிவை ஆள்பதி உறுதிப்படுத்துவர் என்றும் அரசாங்கம் சட்டம் ஒன்றினை இயற்றியது. 1847 இல் அரசாங்கம் மேலும் புத்தரின் புனித தந்தத்தின் பாதுகாப்பினை தலதா மாளிகா வையின் அதிகாரிகளிடம் ஒப்படைத்து அப்பொறுப்பினின்றும் விலகிக் கொண்டது. இவை வரவேற்கத்தக்க மாற்றங்களாகும். ஆனல் முற்காலத்தில் அரசன் தலதாமாளிகாவையின் நிலங்களின் பாது காவலனுக விளங்கியதுமன்றி விகாரைகளுக்கு ஆண்டுதோறும் நன்கொடைகள் (dana) வழங்கியும் வந்தான். அரசாங்கம் அப்பொறுப்புக்களை நிராகரிக்கவே பிக்குகள் அரசாங்கத்தின்பால் பகைமை கொண்டனர்.
f
f 6. ரொறிங்ரனும் புது வரிகளும்
இல் வைக்கவுன்ற் ரொறிங்ரன் இலங்கையின் ஆள்பதியாக 1847 /ری\ நியமிக்கப்பட்டார். அன்றைய இங்கிலாந்துப் பிரதமமந்திரி பிரபு ஜோண் இறசலின் உறவினன் என்ற முறையிலே இப்பதவிக்கு நியமிக் கப்பட்டார். பல்லாண்டுகளாக இலங்கையின் அரசியல் அமைதியாக நடைபெற்று வந்ததினுல் அவர் பரிபாலனத்தை கஷ்டமின்றி இயற்றுவதற்கு இடையூறுகள் ஏற்படமாட்டாதென்று எதிர்பார்க்கப் பட்டது. அத்துடன் குடியேற்ற நாட்டுச் செயலாளராக இருந்த அறிவு மேதை சேர் எமர்சன் ரெனன்ற், அவரை நல்லவழியில் இட்டுச் செல்வார் என ஆட்சியாளர் எதிர்பார்த்தனர். சாதாரண அமைதிக் காலத்தில் ரொறிங்ரன் நிலைமையைச் சமாளித்திருக்க முடியும். ஆனல் இலங்கையின் அரசியலில் தோன்றிய நெருக்கடியான நிலை அடுத்த ஈராண்டுகளில் படுமோசமாயிற்று. அவரது முன்னேர் விட்டுச்சென்ற கஷ்டங்களின் காரணமாகவே ரொறிங்ரனின் ஆட்சி, தோல்வியில் முடிந்தது. எனினும் அவரது குணங்கள், எரியும் தீயில் நெய்யை வார்த்தது போலாயின. ரொறிங்ரன் புத்தி சாதுரிய மற்றவராகவும்
 

1848 ஆம் ஆண்டுக் கலகமும் அதன் விளைவுகளும் I.7.7
கர்வம் நிறைந்தவராகவும், கடும் முற்கோபியுமாகக் காணப்பட்டார். இலங்கையில் பதவியேற்ற சொற்ப காலத்துக்குள் அவர் ஐரோப் பியருடனும் பறங்கியருடனும் பிணங்கிக்கொண்டார்.
புது வரிகள்:
கோப்பிச் செய்கையின் பூரண வெற்றி, இலங்கையின் பொருளாதாரத்தில் புரட்சிகரமான விளைவுகளை ஏற்படுத்தி நின்றதை உணர்ந்த குடியேற்ற நாட்டுக் காரியாலயம், 1845 இன் இறுதியில் நாட்டின் இறை வருமானத்தில் சில மாற்றங்களைச் செய்வ தற்குத் தீர்மானித்தது. எனினும் 1846 இன் இறுதியில், இலங்கையில் கோப்பிப் பிரதேசங்களை ஒரு பெரும் மந்தநிலை சூழ்ந்த பொழுது தான், குடியேற்ற நாட்டுக் காரியாலயம் புது வரிகளைச் செயற் படுத்தத் திட்டமிட்டது. இப் புதுவரித் திட்டத்தை அமுல் நடத்தும் பொறுப்பு ரொறிங்ரனையே சார்ந்தது. கோப்பித் தொழிலில் மிகவும் நெருக்கடியான ஒரு நிலை எழுந்தபொழுதுதான் இங் குற்ற அவர், அத்தொழிலுக்குப் புத்துயிர் அளிப்பதற்கு கோப்பி முதலாளிகளும், வர்த்தகரும் ஏற்றுமதி வரிகளைக் குறைக்குமாறு கூக்குரலிடுவதைக் கண்டார். இதற்குச் செவிசாய்த்த அரசாங்கம், கோப்பியின்ஏற்றுமதி வரிகளை முற்ருக நீக்கியது.இவ்வரி ஒழிப்பினுல் அர சாங்கத்திற்கு ஏற்பட்ட நட்டம், & 40,000 ஆகும். இந்த நட்டத்தை ஈடு செய்யும் பொருட்டு, அரசாங்கம் செலவினங்களைக் குறைத்தது: புது வீதிகளையும் புகையிரதச் சேவையையும் அமைப்பதற்கான திட்டங் களைப் பின்போட்டது. அதனேடு செலவுகளுக்கேற்ப வரவுகளைச் சமன்படுத்துவதற்கு அரசாங்கம், சில புது நேர்முகவரிகளையும் கட்டளை யிட்டது. முத்திரை வரி, நாய் வரி, துப்பாக்கி வரி, கடை வரி, வண்டி வரி எனப் பல வரிகள் பிரகடனப் படுத்தப்பட்டன.
1848 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ருேட்டுச் சட்டம் (Road Ordinance of 1848) தனி இயல்புகளைக்கொண்டு விளங்கியது. &Tả)607 மக்களிடமிருந்தும் அறவிடப்பட வேண்டிய நேர்முக வரியாக அமையவேண்டும் என்ற எண்ணத்துடன் தான் அதனை அரசாங்கம் இயற்றியது.
18 க்கும் 55 வயதுக்கும் உட்பட்ட ஒவ்வொரு ஆண் மகனும் ஆறு நாள்களுக்குத் தெருக்களில் கட்டாய வேலை செய்ய வேண்டும் அல்லது மூன்று ஷிலிங் வரியிறுக்க வேண்டுமென்று அச்சட்டம் விதித்தது. அது பெரும்பாலும் கோப்பித் தோட்டங்களுக்குப் புதுத் தெருக்களைத் திறக்கும் நோக்குடன்தான் இயற்றப்பட்டது. கண்டி விவசாயிகள், ருேட்டுச் சட்டம், பழைய இராசகாரிய முறையினை
இ 12 I ...' '
As

Page 96
I 78 இலங்கைச் சரித்திரம்
மீண்டும் உயிர்ப்பிக்க அரசாங்கம் எடுத்த முயற்சியென நினைத்து, அச்சமும் பீதியும் கொண்டனர். அவர்கள் கோப்பித்தோட்டங்கள் திறக்கப்பட்டதை வேம்பிலும் மேலாக வெறுத்தனர். தோட்டங் களுக்கு அமைக்கப்பட்ட வீதிகள் கிராமிய வாழ்க்கைக்குப் பெரும் இடையூறுகளை விளைவித்தன, என எண்ணி வந்த மக்களை அத் தெருக்களில் கட்டாயசேவை புரியுமாறு அரசாங்கம் வற்புறுத்தியமை, எரியும் தீயில் நெய்யை வார்த்தவாருயிற்று. புது வரிகளும் ருேட்டுச் சட்டமும் பிரகடனம் செய்யப்பட்ட அதே நேரத்தில் அரசாங்கம் ஆண்டுதோறும் தயாரிக்கும் நீலப் புத்தகத்திற்குத் (Ceylon Blue Book) தேவையான புள்ளி விபரங்களைச் சேகரிக்கும் நோக்கத்துடன் வீடு வீடாக நுணுக்கமான விசாரணைகளையும் ஆரம்பித்தது.
இங்கு விபரிக்கப்பட்ட பல் வேறு காரணங்கள் ஒன்று சேர்ந் ததின்மயின் பயணுகவே கொழும்பிலும் கண்டியிலும் கிளர்ச்கிகள்
ற்படலாயின. -
2. கலகம்
கொழும்பில்:
'கொழும்பு ஒப்சேவர்' பத்திரிகையின் முன்னுள் ஆசிரியரான கிறிஸ்தோப்பர் எலியட்டும் சில பறங்கி நியாயதுரந்தரரும் இவ் வரிகளுக்கெதிரான கிளர்ச்சியைக் கொழும்பில் தொடங்கிநடாத்தினர். கொழும்பு மாவட்டத்தில் புதுக் கடைவரியினலும் முத்திரை வரியி னலும், ருேட்டுச் சட்டத்தினலும் முறையே பாதிக்கப்பட்ட வியா
பாரிகள், நியாயதுரந்தரர்கள், பாமர மக்கள் யாவரும் புது வரிகளைப் பலமாக எதிர்த்தனர். 1848 ஆம் ஆண்டு, ஐரோப்பாவில் புரட்சியாண்டாகும். அவ் ஆண்டின் பிரஞ்சுப் புரட்சியைப்
பற்றிய செய்திகள் இலங்கையை வந்தடைந்த பொழுது, எலியட் இங்கு நடந்து வந்த வரி எதிர்ப்பு இயக்கத்துடன் தீவிரக் கொள் கைகளைச் சேர்த்து, அவ்வியக்கத்துக்குப் புது மெருகூட்டினர். மக்கள் புது வரிகளைக் கட்டல் ஆகாதென்றும், இன சமத்துவம், சர்வசனவாக்குரிமை எனும் ஜனநாயகக் கருத்துக்களுக்காக அவர்கள் கிளர்ச்சியைத் தொடர்ந்து நடத்த வேண்டுமென்றும் அவர் தூண்டினர்.
கண்டியில்:
மலைநாட்டில், கிளர்ச்சியின் முதல் அறிகுறி 1848 ஆம் ஆண்டு கண்டியில் நடைபெற்ற கமக்காரரின் சிறு ஆர்ப்பாட்டமாகும். 1848 யூலை 6 இல், சுமார் 4000 கமக்காரர் கண்டிக் கச்சேரியைச்
re.

1848 ஆம் ஆண்டுக் கலகமும் அதன் விளைவுகளும் 179
சூழ்ந்து அரசாங்க முகவரைப் பேட்டி காணவேண்டுமெ6னக் கேட்டனர். வேறு பல ஆயிரக்கணக்கானவர்கள் நதியின் கடவை களிலும் பாதைகளிலும் இராணுவத்தினரால் நிறுத்தப்பட்டனர். ஆர்ப்பாட்டக்காரர் தமக்கு இழைக்கப்பட்ட இன்னல்களுக்குப் பேச்சு வார்த்தை மூலம் பரிகாரம் பெறத் திடம் பூண்டவர்கள். அவர்கள் அரசாங்க முகவர் புளர் (Buller) என்பவருக்கு ஒரு மனுப் பத்திரத்தைச் சமர்ப்பித்தனர். அப்பத்திரத்தின் ஆரம்பம் '1815 இல் எங்களை அடக்கியொடுக்கி எங்களுக்கு அநீதிகளை விளைவித்த கார ணத்துக்காக நாங்கள் எங்கள் அரசனை அகப்படுத்தி அவனை பிரித்தா னியரிடம் ஒப்படைத்தோம் .சிங்கள அரசாங்கத்தின் கீழ் ஒரு பொழுதும் அனுபவியாத அநீதிகளையும், அடக்கு ழுறைகளையும் பிழைகளையும், இழப்புக்களையும் ஆண்டு தோறும் மென் மேலும் நாங்கள் அனுபவிக்கச் செய்யப்படுகிருேம், போலத் தோற்றுகிறது,' எனக் கூறிற்று. முகவர் புளர், தான் விடயத்தை ஆள்பதி ரொறிங் ரனுக்கு அறிவிப்பதாக விடை பகர்ந்து விட்டுத் திரும்பிய பொழுது கூட்டத்தினர் பொலிஸ் படையினரைத் தாக்கி சிறு கலவரத்தை உண்டாக்கினர், நாலந்தையில் கமக்காரர், கொங்கல கொட பண்டா என்ற ஒரு தாழ் பிரதேசச் சிங்களனை அழைத்துச் சென்று அங்கு நாயக்கத் தேரோவைக் கொண்டு அவனை அரசனென்று பட்டா பிஷேகம் செய்தனர். பின்பு ஒரு லட்சம் ஆயுதம் தாங்கிய சிங்களவர் தமது புது அரசனின் கீழ் மாத்தளையை நோக்கிப் புறப்பட்டனர். புது அரசனுக்கு புறங் அப்பு என்ற இன்னுமொரு தாழ் பிரத்ேசச் சிங்களன் முதல் அதிகாராக நியமிக்கப்பட்டான். இதைப் போன்ற கலவரங்கள் பல மலைநாட்டுப் பட்டினங்களில் நிகழ்ந்தன.
இவ்விதமாக மலைநாட்டின் பல நகரங்களில் கமக்காரர் செய்த ஆர்ப்பாட்டங்களை ஓர் அபாயம் நிறைந்த கலவரமெனக் கூறமுடியாது. அவர்கள் நாட்டில் அழிவை உண்டுபண்ணியிருக்கலாமென்பது உண்மையே எனினும், திட்டமும் ஒழுங்கும், உண்மையான தலைவர் களுமில்லாத இக்கலகக்காரர், பிரித்தானிய அரசாங்கத்துக்கு எவ்வித பாரதூரமான விளைவுகளையும் ஏற்படுத்தியிருக்க முடியாது. ஆனல் நீண்ட காலமாக மலைநாட்டில் கலகத்துக்கு அஞ்சிய அரசாங்கம் வெகுண்டு கடும் நடவடிக்கைகளில் இறங்கிற்று. விசேடமாக ஆள்பதி ரொறிங்ரன், மதியிழந்தவனைப் போன்று தீவிர நடவடிக்கைகளில் இறங்கினர்.
கப்பித்தான் உவாட்சனின் கீழ் ஒர் இராணுவப்படை மாத் தளைக்கு அனுப்பப்பட்டபொழுது, அவர்கள் கலகக்காரர் கூட்ட மொன்றினை வாறியப்பொலையில் சந்தித்தனர். உவாட்சன் எக்
".

Page 97
፲ 80 இலங்கைச் சரித்திரம்
காரணமுமின்றி அவர்கள்மேல் துப்பாக்கிப் பிரயோகம் செய்யக் கட்டளையிட்டான். ஒட்டம் பிடித்த கிராம வாசிகளைப் படைஞர் ஈக்கள் போலச் சுட்டு வீழ்த்தினர்கள். **வாறியப்பொலைப் போரில் வெற்றிவாகை சூடிய’ படை, மாத்தளையை அடைந்தது. அங்கும் அவர்கள் 200க்கு மேற்பட்ட கமக்காரரைத் தம் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாக்கினர். அதற்குப்பின்பு படைகளும் படைத் தல்ைஞர்களும் கொள்ளையடிப்பதிலும், வீடுகளுக்கு எரியூட்டுவதிலும், மக்களைக் கொலை செய்வதிலும், திரவியங்களையும், பொருள்களையும் திரட்டுவதிலும் ஈடுபட்டனர்.
இவ்விதமாகக் கண்டி, மாத்தளை, தம்புளை, குருநாகல் என்னு டங்களில் ஏற்பட்ட கலகங்கள் முடிவடைந்தன.இந் நடவடிக்கைகளில் ஒரு ஆங்கிலப் போர்வீரனவது உயிர் நீத்ததில்லை. எனினும் கண்டி நாட்டில் படையாட்சி பிரகடனம் செய்யப்பட்டு, பயங்கர ஆட்சியும் இரத்தக் களரியும் தொடங்கிற்று. இராணுவத்தினர், கிராமங்களின் மேற் படையெடுத்து, மக்களைச் சித்திரவதைசெய்து அவர்களது பணத் தையும் நகைகளையும் பறித்தனர்; ஆடு மாடுகள், நெல், தானி யங்கள், பிறபொருள்களை அபகரித்து, விற்றுப் பணம் சம்பாதித் தனர். வீடுகளும், சில இடங்களில் முழுக்கிராமங்களும் தீயினுற் சாம்ப
லாயின. கண்டியில் படை நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, 200 கலகக்காரர் தூக்கிலிடப்பட்டனர்; அல்லது துப்பாக்கிக் குண்டு
களினல் உயிர் நீத்தனர். நூற்றுக் கணக்கானேர் மேல் சிறைத் தண்டனையும் கசையடியும் கட்டளையிடப்பட்டது. ஒரு பெளத்தபிக்கு, தகவல் கொடுக்க மறுத்த குற்றத்துக்காக காவியுடையுடன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
ரொறிங்ரன் இரத்தம் சிந்துவதில் ஈடுபட்டு நின்ற வேளையில், பல ஆங்கிலர், நீதியும் நியாயமும் கண்டி மக்களுக்கு வழங்கப்பட வேண்டுமென நடவடிக்கையெடுத்தனர். பிரதம நீதியரசராயிருந்த சேர் அந்தணி ஒலிபான்ற் (Sir Anthony Olephant) தனது உயர் பதவியின் இலட்சியங்களையும் சுதந்திரத்தையும் கைநெகிழவிட அறவே மறுத்தார். ஆள்பதியைப் போன்று வெகுளியடையாத அவர், உறுதியுடனும் அச்சமின்றியும் ஆள்பதியின் கடும் நடவடிக் கைகளைக் கண்டித்தார். முடிக்குரிய வழக்கறிஞர் திரு. செல்பி (Selby) அவர்களும் பிரதம நீதியரசரைப் போன்று, கலகக் காரருக்குச் செய்யப்பட்ட அநீதிகளைக் கண்டித்தார். அவர் பெளத்த பிக்குவை விடுதலை செய்யுமாறு வேண்டியும் பயன்கிடைக்கவில்லை. முதன் முறையாக ஐரோப்பியர், கண்டிய மக்களுக்கு இழைக்கப் பட்ட கொடும்ைகளுக்காகக் கவலைப்பட்டனர். 'ஒப்சேவர்' பத்தி
.་་་༣:

1848 ஆம் ஆண்டுக் கலகமும் அதன் விளைவுகளும் 81
ரிகையின் ஆசிரியர்களான எலியட் (Elliot), பேர்குசன் (Ferguson) இருவரும் ஆள்பதிக் கெதிராக மிகவும் வன்மையான கண்டனங்களை எழுதினர். அவர்களது குரல் ஒலியின் வன்மை, ஈற்றில் இங்கி லாந்தையும் போயடைந்தது. பிரித்தானியப் பாராளுமன்றம் நிய மித்த விசாரணைக்குழு, முழுச் சம்பவத்தையும் தீர ஆராய்ந்து,
ரொறிங்ரனையும், சேர் ஜேம்ஸ் ரெனன்ரையும் திருப்பியழைக்குமாறுட சிப்ார்சு செய்தது. ఆ=-==*T*
3. விவசாய, நீர்ப்பாசன முன்னேற்றம்
பிரித்தானியர் ஆட்சியின் ஆரம்பம் தொட்டு அரசாங்கம், நீர்ப்பாசனத் திட்டங்கள் புனருத்தாரணம் செய்யப்பட வேண்டி யதன் அவசியத்தை உணர்ந்து கொண்டது. ஆனல் இறை வருமானத்தின் குறைவே ஆள்பதிகளின் முயற்சிகளை மிகக் கட்டுப் படுத்தலாயிற்று.
உலர் வலயத்தின் சமவெளிகளில், பருவப் பெயர்ச்சிக்காற்று மழை இல்லாக் காலங்களில், நீர்ப்பாசன வசதிகள் மிகவும் தேவைப்பட்டன. நீர்ப்பாசன வேலைகள் அமைப்பதைத் தமது பிரதான கடமைகளில் ஒன்ருகக் கொண்ட சிங்கள அரசர்கள், விசாலமான குளங்களையும் கால்வாய்களையும் அமைத்திருந்தனர். மகாவலிக்கும் கண்டிப் பிரதேசத்துக்கும் வடக்கே, பண்டை நாட் களில் சிங்கள நாகரிகத்தின் தொட்டில் போன்று விளங்கிய இராசரட்டை, அனுராதபுரம், பெ7லன்னறுவை என்னும் பகுதிகள் அழிவுற்றுக்கிடந்தன. இப்பகுதி, பண்டைய நாட்களில் இலங்கையின் "மிகவும் உற்பத்தி வளம் கூடிய இடமாகவும், குடிசனம் அடர்த் தியாக இருந்த பகுதியாகவும் இருந்தமைக்கு, இவற்றின் நீர்ப் பாசன அமைப்புக்களே சான்று பகரும். பல நூற்ருண்டுகளாக நிகழ்ந்த போர்களினலும் கவனிப்பின்மையினலும் நகரங்கள் சிதைந்து, கிராமங்கள் பாழடைந்து, பயிர் செய்யப்பட்ட பிரதேசங்களெல்லாம் 19 ஆம் நூற்ருண்டின் நடுப்பாகத்தில் காடடர்ந்த பிரதேசங்களாக உருமாறிவிட்டன. ஒரு கடலிலிருந்து இன்னெரு கடல்வரை பரந்து, பிரமாண்டமான அழிவுச் சின்னங்களையும் பாரிய நீர்த்தேக்கங் களையும் கொண்ட இம்மாநிலம் முழுவதும், குடிசனமற்ற பெருங் காடாக மாறியது.
கோல்புறுக் சீர்திருத்தங்களில் கமக்காரரின் நிலைமை பற்றிச் சிறிதளவேனும் அக்கறை காட்டப்படவில்லை. மலைநாட்டில் கோப்பி அரசனின் ஆட்சி தோன்றிய நாள்முதல், உலர்வலயத்தில் வாழ்ந்த கமக்காரனின் சமூக, பொருளாதார நிலைகள் அதி கீழ்த்தரமான
g 12 A . . . .

Page 98
182 இலங்கைச் சரித்திரம்
நிலையை எய்தின. 1848 ஆம் ஆண்டுக் கலகத்துக்கு கமக்காரரின் அதிருப்தியும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. அக்கலகம், அதிகாரிகளின் கண்களைத் திறந்து, விவசாயிகளின் பரிதாப நிலை யையும், அவர்களது நலன் முற்ருகப் புறக்கணிக்கப்பட்டு வருவதையும் தெளிவாக எடுத்துக் காட்டிற்று. இதன் பயனுக 19 ஆம் நூற்றண்டின் பின் அரைப்பாதியில் அரசாங்கம் கமக் காரரின் நிலையைச் செம்மைப்படுத்துவதில் கூடுதலான அவதானமும்
அக்கறையும் காட்டத் தொடங்கியது. ஆள்பதிகள், கோப்பிச் செய்கையின் விருத்தியுடன் தனித்து நில்லாது, விவசாயிகளின் நலவுரிமைகளிலும் ஆர்வம் காட்டினர். விசேடமாக உவாட், !
ருெபின்சன், கிறெகரி, கோடன், றிட்ஜ்வே எனும் ஆள்பதிகள், நேரத்தையும் செலவையும் பொருட்படுத்தாது, கமக்காரருக்குத் தம்மாலியன்ற உதவிகளைச் செய்ய முன் வந்தனர். அவர்களது ஆர் வத்துக்கு உறுதுணையாக, நாட்டின் பொருளாதாரம் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்து வரலாயிற்று.
சேர் ஹென்றி உவாட் 1856 இல் ஆள்பதியாகப் பதவியேற்ற வுடன் நாட்டின் பல பாகங்களைத் தரிசித்து, தெருக்களை அமைத்தலும் நீர்ப்பாசனத் திட்டங்களைப் பழுது பார்த்தலும் தான், இலங்கையின் அதி முக்கிய தேவைகளெனத் தீர்மானித்தார். விசேடமாக கிராமப் புறங்களில் வாழ்ந்த விவசாயிகளின் பரிதாபமான நிலையில் அனுதாபம் கொண்ட அவர், நீர்ப்பாசனத் திட்டங்களைப் புனருத் தாரணம் செய்து, அதன் வாயிலாக அவர்களுக்குப் புது வாழ்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்ற உன்னத இலட்சியத்தைக் G3, it girl-nitri. -
ஆள்பதி உவாட் பழைய குளங்களைத் திருத்துவதில் மிகுந்த சிரத்தையும் அக்கறையும் காட்டினர். கீழ் மாகாணத்தின் இரக் காமம் அம்பாறைக் குளங்களையும்; தென்மாகாணத்தில் ஊறுபொக்க, கிராமக் குளங்களையும் புனருத்தாரணம் செய்வதற்கு 78,000 பவுண் செலவிட்டார். மாத்தளை, பதுளை, மத்திய மாகாணம் என்னும் பகுதிகளில் சிறு குளங்கள் அரசாங்க முகவரின் மேற்பார்வையின் கீழ் விவசாயிகளினுல் சம்பளமின்றித் திருத்தியமைக்கப்பட்டன. இவ் வேலைகளுக்கேற்பட்ட செலவுகளின் ஒரு பகுதிக்கு அரசாங்கம் பொறுப்பேற்றது. இப்புனரமைப்புத் திட்டங்களின் பயணுகவும் புதிதாக அமைக்கப்பட்ட தெருக்களின் பயணுகவும் காடடைந்து கிடந்த வயல்களெல்லாம் மீண்டும் நெல்லை உற்பத்தி செய்யத் தொடங்கின. உலர் வலயத்தின் சனச் செறிவு எண்ணிக்கையிலும் செல்வத்திலும் மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியது.

1848 ஆம் ஆண்டுக் கலகமும் அதன் விளைவுகளும் 183
பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் ருெபின்சனும் குளங்களைப் புதுப்பிக்கும் முயற்சியில் அதிக அக்கறையும் சிரத்தையும் காட்டினர் . 1867 இல் அவர் "நீர்ப்பாசனத்தில் அல்லது உணவைக் கூடுதலாக உற்பத்தி செய்யக்கூடிய வேலைகளில் அரசாங்கப் பணத்தைச் செலவிடுவதற்கு வாய்ப்பான திட்டம்' ஒன்றினை வகுக்குமாறு ஒரு விசாரணைச் சபையினை நியமித்தார். மிகவும் விரிவான அறிக்கை ஒன்றினைத் தயாரித்த அச்சபை, நீர்ப்பாசன முறையினை விருத்தி செய்வதன் மூலம் தான் விவசாய அபிவிருத்தி ஏற்படு மெனச் சிபார்சு செய்தது. இதன் பயணுக அரசாங்கம் சிறிய நீர்ப்பாசன வேலைகளைத் திருத்துவதற்கு பணம் உதவியது. அதனு டன் கிராம வாசிகளின் முயற்சிக்கும் கடன் கொடுத்து அப் பணத்தைப் பத்து வருடங்களில் திருப்பிப்பெற ஏற்பாடுகள் செய்தது.
உண்மையான நீர்ப்பாசன புன ருத்தாரண வேலைகள் ஆள்பதி கிறெ கரி காலத்திற்ருன் ஆரம்பிக்கப்பட் டன. அவர் 1873 இல் நுவரக்கலா விய, தமன்கடுவை எனும் மாவட் டங்களை இணைத்து வடமத்திய மாகா னமெனும் ஒரு புது மாகாணத்தை ஏற்படுத்தி, அதன்நிர்வாகப் பொறுப் பினை அதி திறமையும் உற்சாகமும் நிறைந்த அரசாங்க முகவர் ஜே. எவ். டிக்ஸன் (J. R. Dixon) அவர்களிடம் ஒப்படைத்தார். அவரின் கீழ் சிறிய குளங்களைத் திருத்தியமைப்பதற்கான திட்டம் மேற்கொள்ளப் பட்டது. அரசாங்க முகவரினதும் தலைமைக் காரரினதும் மேற்பார்வையின் கீழ், கிராமங்கள் தோறும் விவசாயச் சபைகள் அமைக்கப்பட்டன. புதுத் நெல்விேளைவிக்கப்படும்பிரதேசங்கள் திட்டத்தின் பிரகாரம் கிராமத்து மக்கள் குளங்களைத் திருத்து வதற்கு வேண்டிய மண்வேலையைச் செய்து கொடுக்க, அரசாங்கம் கல்வேலைகளையும் சீமேந்து வேலைகளையும் செய்ய முன்வந்தது. மக்களும் புதுத்திட்டத்தை ஆர்வத்துடன் மேற்கொண்டனர். ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்ட முன்னேற்றம் அதிசயத்துக்குரிய ஒன்ருகும்.
இதனைத் தவிர அனுராதபுர மாவட்டத்தில் திஸ்ஸ வெவ, பசவக்

Page 99
184, - இலங்கைச் சரித்திரம்
குளம், நுவரவெவ எனும் குளங்கள், நிக்க வரட்டியாவில் மகலவெல, கீழ் மாகாணத்தில் கந்தளாய், உறுாகம் குளங்கள் எனும் பாரிய நீர்ப்பாசனத் திட்டங்கள் புனர் நிர்மாணம் செய்யப்பெற்றன.
நீர்ப்பாசன வேலைகளின் இன்றியமையாமையை நன்குணர் ந் தவரும் அதற்கான பணத்தைச் செலவிடத் திடம் பூண்டவரு மான கோடன் 1884 ஆம் ஆண்டு ஆள்பதியானர். கலாவெவக் குளத்தைச் சீர்படுத்தச் சகல திட்டங்களும் பூரணமாயிருந்தும் பணமின்மையினல் அவ்வேலை ஆரம்பிக்கப்படாமலிருப்பதை அவர் கண்டார். கோடன் தபால் சேமிப்பு வங்கியினின்று கடன் வாங்கிய பணத்துடன் அப்பாரிய வேலையை உடனடியாக ஆரம்பிக்குமாறு கட்டளையிட்டார். ஈற்றில் இத்திட்டத்துக்கு நான்கு இலட்சம் ரூபா செலவாயிற்று. அதன் பின்னர் கலாவீவாவிலிருந்து அனுரத புரிக்கு விவசாயத்துக்கும் குடிநீருக்கும் நீரைக் கொண்டு சென்ற யோத.எல என்ற கால்வாய் புனர் நிர்மாணம் செய்யப்பட்டது. கோடனின் உற்சாகம் கூடச் சில குறைகளை நீக்க முடியவில்லை. திட்டங்கள் போதிய ஆராய்வின்றி மேற்கொள்ளப்பட்டமையினுல் செலவிடப்பட்ட பணத்துக்கு ஏற்ற வருமானம் இல்லாமற் போனதை அரசாங்கம் உணர்ந்தது. இதனைத் தீர்க்க 1887 இல் மத்திய நீர்ப்பாசனச்சபை கொழும்பிலும், தல நீர்ப்பாசனச் சபை கள் மாகாணங்களிலும் அமைக்கப்பெற்றன. நீர்ப்பாசன வேலை களின் அவசியமும், எத்திட்டங்கள் முதலில் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஆலோசனை கூறுவதும், இச்சபைகளின் முதன் மையான கடமையாயிற்று.
நீர்ப்பாசன சபைகளில் வேலைகளை இலகுவாக்குவதற்கு 1897இல் இலங்கையின் தலவிபரப்படங்களைத் தயாரிக்கும் வேலை ஆரம்ப மாயிற்று. ஈற்றில் இப்படங்கள், இலங்கையில் 11,206 பாழடைந்த குளங்கள் இருந்தமையை எடுத்துக் காட்டின. விவசாயிகளின் நிலையை விருத்திசெய்யும் நோக்குடன் 1893 இல் தானிய வரியை ஆத்தர்
ஹவ்லொக் நீக்கினர்.
1900 இல் நீர்ப்பாசன இலாக்கா நிறுவப்பட்டது. திரு எச். ரி. எஸ். வாட் (H. T. S. Ward) நீர்ப்பாசன இயக்குநராகவும், திரு. ஹென்றி பாக்கர் உதவியாளனுகவும் நியமிக்கப் பெற்றனர். புது விவ சாய முறைகளை விவசாயிகளுக்குக் கற்பிப்பதிலும் முயற்சி எடுக்கப்பட் டது. 1901 இல் கிராமப் பாடசாலைகளில் கமச்செய்கைக்கென தோட்
டங்களை அமைத்து அவற்றின் மூலம் கிராம வாசிகளுக்கும் பிள்ளை
களுக்கும் நவீன விவசாய முறைகளைக் கற்பிக்கும் முயற்சி மேற்
கொள்ளப்பட்டது.

1848 ஆம் ஆண்டுக் கலகமும் அதன் விளைவுகளும் 185
கூட்டுறவு இயக்கம்:
குடியானவரின் கடன் சுமைகளைக் குறைப்பதற்கும், அவர்களின்
விளைபொருள்களுக்கு நல்ல விலைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கும்
1911 இல் கூட்டுறவுக் கடனுதவும் சங்கங்கள் நிறுவப்பட்டன.
4. உள்ளுராட்சி முறையின் புனருத்தாரணம்
கன்சபாக்கள்: Y
புராதன காலந் தொட்டு, கிராமத்தின் பிரதிநிதிகளை உறுப் பினராகக் கொண்ட கன்சபா முறைதான் கிராம உள்ளூராட்சிக்குப் பொறுப்பாகவும் கிராமத்தின் சட்டதிட்டங்களை நிர்வகிக்கும் ஒரு தாபனமாகவும் இருந்து வந்தது. கிராமத்தின் சட்டதிட்டங்களையும், நெல் வேளாண்மையுடன் சம்பந்தப்பட்ட சகல கருமங்களையும் மேற்பார்வை செய்வதும், நீர்ப்பாசனத் திட்டங்களில் ஒவ்வொரு கமக்காரரினதும் பங்கையும் கடமைகளையும் பகிர்ந்து கொடுப்பதும் அதன் தலையான கடமைகளாயிற்று. குளங்களினின்று தமது பங்குக்குக் கூடுதலான நீரைத் தம் வயல்களுக்கு நீர்ப்பாய்ச்சியவர்களையும் குளங்களைப் பழுது பார்ப்பதில் தமது கடமைகளைச் செய்யத் தவறிய கமக்காரரையும் தண்டிக்க கன்சபாவுக்கு அதிகாரமிருந்தது. இச் சபைகள் அரசாங்க ஆதரவுடன் இயங்கியமையினல் அவை கிராம வாசிகளின் இராசக்காரிய சேவை கொண்டு குளங்களைப் பழுது பார்த்து, நல் நிலையில் பாதுகாத்து வந்தன. பல கிராமங்களுக்கு நீரை உதவிய குளங்கள், அக் கிராமங்களின் விவசாயிகளின் இராசக் காரிய சேவையினல் பராமரிக்கப்பட்டன. 1832 இல் இராசக் காரிய முறை ஒழிந்ததன் பயனுகவும் கன்சபாக்களின் நீதி அதி காரங்கள் பறித்தெடுக்கப்பட்டமையினலும் நீர்ப்பாசன விவசாய முயற்சிகளை நிருவகி க கிராமங்களில் ஒரு நிறுவனமும் இல்லாமற் போயிற்று. படிப்படியாக நீர்ப்பாசனத் திட்டங்கள் சீரழிந்தும், நெல் வயல்கள் எல்லாம் கவனிப்பாரற்றுக் காடுகளாகவும் மாறின.
1856 இல் உவாட், நீர்ப்பாசனக் கட்டளைச் சட்டத்தை இயற்றி, கன்சபாக்களுக்கு மீண்டும் புத்துயிர் அளிக்க முற்பட்டார். ஒரு மாவட்டத்திலுள்ள பெரும்பான்மையான விவசாயிகள் விரும்பியவிடத்து, அவர்கள் தம் விவசாய நீர்ப்பாசனக் கருமங்களை மேற்பார்வை செய்வதற்கு ஒரு கன்சபாவை அமைக்க அவர் களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. அரசாங்க முகவரைத் தலைவராகவும் கிராமவாசிகளின் பிரதிநிதிகளை உறுப்பினராகவும் கொண்ட இச்சபை, அதன் முதல் வேலையாகக் கிராமத்தின் பாரம்

Page 100
Ꮀ86 இலங்கைச் சரித்திரம்
பரிய பழக்க வழக்கங்களின் நிரலொன்றைத் தயாரித்தது அது
ஆள்பதியின் அங்கீகாரத்தைப் பெற்றவுடன் கிராமத்தின் சட்டமாயிற்று இச்சட்டதிட்டங்களை மீறுபவர்களைத் தண்டிக்கவும் கன்சபாவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. இந்த நீர்ப்பாசன
கட்டளைச் சட்டம், ஆள்பதி உவாட்டின் காலத்தில் நிறைவேறிய திட்டங்களுள் முதன்மையான இடம் வகிக்கின்றது. இத்திட்டம், பல மாவட்டங்களில் விவசாயிகளின் சம்மதத்துடன் அமுல் செய்யப்பட்டது.
1856 இல் உவாட், நீர்ப்பாசன வேலைகளுக்காக கன்சபா முறையினைப் புதுப்பித்ததன் விளைவாக ஏற்பட்ட நற்பயன் களின் காரணமாக, 1871 இல் அதன் அதிகாரங்கள் மேலும் விஸ்தரிக்கப்பட்டன. சேர் ஹேக்கியுலிஸ் ருெபின்ஸனின் ஆட்சியின் அதிமுக்கிய நிகழ்ச்சியாக அமைந்த இச்செயலினல் கன்சபாக்கள், கிராமங்கள் தோறும் ஸ்தல ஸ்தாபன விவகாரங்கள் யாவற் றையும் கட்டுப்படுத்த அதிகாரம் பெற்றன. இச்சீர்திருத்தத் துக்கான முக்கிய காரணம், கீழ் நீதிமன்றங்களில் குவிந்த அளவுக்கு மிகுதியான சிறுபாதகவியல் வழக்குகளாகும். 1869 இல் சிறு நீதிமன்றங்களுக்கு முன்னிலையில் 168,426 பெயர்களுக் கெதிராக அல்லது குடிசனத்தின் பகுதிக்கெதிராக வழக்குகள் தொடரப் பட்டன. இவற்றுள் 112,301 வழக்குகள் பூர்வீக விசாரணை யின்றித் தள்ளப்பட்டன. பகுதியினர் மாத்திரமே குற்றவாளி களாகத் தீர்க்கப்பட்டனர், சாட்சியம் கொடுப்பதற்கு வரவழைக் கப்பட்டவர்களையும் சேர்த்தால் ஏறத்தாள 1,000,000 பெயர்கள் அல்லது குடி சனத்தின் 4 பகுதி 1869 இல் கீழ் நீதிமன்றங்களின் முன்னிலையில் தோன்றினர்' எனக் கூறுகிருர் மில்ஸ், ! இந்த விபரீதமான நிலை எழுவதற்கு அடிப்படைக் காரணம் நாடெங் கணும் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து கன்சபாக்கள் தம் அதிகாரங்களை இழக்க நேர்ந்தமையாகும்.
முன்னர் கிராமத்தின் சகல சண்டைகள் சச்சரவுகள் குற்றங்கள் யாவும் கிராமப் பழக்க வழக்கங்களை நன்கறிந்த உறுப் பினரைக் கொண்ட கன்சபாக்களினல் உடனடியாக விசாரணை செய்யப்பட்டுத் தீர்ப்புக்கள் கூறப்பட்டன. ஆணுல் அச்சபைகளின் நீதி அதிகாரங்களைக் கமரன் நிராகரித்ததன் விளைவாகக் கிராம வாசிகள் நீதிமன்றங்களுக்குச் செல்லத் தொடங்கினர். உவாட்
1. L. A. Mills-Ceylon under British Rule 1795-1932. p. 136
 

s
1848 ஆம் ஆண்டுக் கலகமும் அதன் விளைவுகளும் 87
நீர்ப்பாசனச் சேவைகளின் பொருட்டுப் புனருத்தாரணம் செய்த கன்சபாக்கள் நீதாசன கருமங்களை நிருவகிக்கப் போதிய அதிகாரம் பெறவில்லை.
V− 1871 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க கன்சபாச் சட்டம் கன்சபாக்களுக்கு 'தனித்து கிராமங்களுடன் தொடர்புடைய விவ காரங்கள்' சம்பந்தமாக புதுச் சட்டதிட்டங்களை ஆக்க அதிகாரம் வழங்கியது. இச்சட்டம், கன்சபாவின் உறுப்பினர்கள் ஐவரென்றும் , இவர்கள் கிராமத்தின் நிலமுடையோரினின்று திருவுளச் சீட்டு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் என்றும் விதித்தது. ஆள்பதி ருெபின்சன், முதலியார்களைத் தத்தம் மாவட்டங்களிலுள்ள கன்சபாக்கள் யாவற்றுக்கும் தலைவர்களாக நியமித்தார். கன்சபாக்கள் புராதன பழக்க வழக்கங்களுக்கு விரோதமாக இழைக்கப்பட்ட குற்றங் களையும் சிறு குடியியல் பாதக வழக்குகளையும் விசாரணை செய்து இரண்டு பவுணுக்கு மேற்படாத குற்றப்பணம் வரை தீர்ப்புக் கூற அதிகாரம் பெற்றது. கன்சபாக்களின் தீர்ப்புக்களினின்று மாகாண முகவர்களுக்கு மனுச்செய்ய அதிகாரமும் வழங்கப்பட்டது. இப்புதுச் சட்டம் அமுல் செய்யப்பட்டதன் பேருக நீதிமன்றங் களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை பெரு மளவு குறைதன, நாளடைவில் கன்சபாமுறை பிரித்தானிய நீதி பரிபாலன, உள்ளூர் நிருவாக விடயங்களில் முக்கிய இடம் பெறலா யிற்று.
வினுக்கள்
1. 1848 ஆம் ஆண்டுக் குழப்பங்களுக்கு 1832 ஆம் ஆண்டுச் சீர்
திருத்தங்கள் எந்த வகைகளில் காரணமாயமைந்தன ? 2. வைக்கவுண்ட் ரொறிங்ரனுடைய காலத்திலேற்பட்ட குழப் பத்துக்கான உடன் காரணங்களையும் அடிப்படைக் காரணங் களையும் வேறு படுத்திக் கூறுக. 3. ஹென்றி உவாட் ஆள்பதியின் பரிபாலனத்தை மதிப்பிடுக. 4. உவாட் ஆள்பதியின் பரிபாலனத்தில் திட்டமிட்டுச் செயலாற்
றப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் யாவை ?
5. 1850 இல் இருந்து 1900 ஆம் ஆண்டுவரை அரசாங்கம், விவசாயிகளின் நிலைமைகளைச் சீர்ப்படுத்துவதற்கு எடுத்துக் கொண்ட நடவடிக்கைகளை விபரிக்க.

Page 101
188
I 0.
இலங்கைச் சரித்திரம்
19 ஆம் நூற்ருண்டின் பின்னரைப் பகுதியில் விவசாயிகளின் கமச்செய்கையை வளம் படுத்தப் பிரித்தானிய அரசாங்கம் கொண்டிருந்த கருத்தினை ஆராய்க. (அ) 1817 ஆம் ஆண்டிலும் (ஆ) 1848 ஆம் ஆண்டிலும் மலை நாட்டு மக்களின் அதிருப்தியின் காரணங்களைத் தெளிவாக விளக்குக. 1848 க்குப் பின்னர் பிரித்தானிய அரசாங்கம் விவசாயிகள் மட்டில் அக்கறை கொள்வதற்குத் தூண்டிய காரணங்களை விபரிக்க.
உவாட், ருெபின்ஸன், கிறகரி, றிட்ஜ்வே, கோடன் ஆள்பதிகள் விவசாயிகளின் நல அபிவிருத்திக்காகச் செய்த சேவைகளை விபரிக்க . கன்சபாவை முறையின் சரித்திர முக்கியத்துவத்தைக்கூறி, அது 19 ஆம் நூற்ருண்டில் புதுப்பிக்கப்பட்ட முறையினை
விவரிக்குக.

அதிகாரம் 11
பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையின் விருத்தி
ஏழாம் அதிகாரத்தில் கோப்பிச் செய்கையின் ஆரம்ப முயற்சிகளையும், ஒன்பதாம் அதிகாரத்தில் அதன் போக்கு துரிதமாக அதிகரித்ததையும் 1847 தொடக்கம் 1851 வரை இப்பயிர்ச் செய்கையில் ஏற்பட்ட மந்த நிலையும், அதனுல் விளைந்த பயன் களும் கூறப்பட்டன.
1. கோப்பியின் வளர்ச்சி
1847 இல் கோப்பித் தொழிலைப் பீடித்த நெருக்கடி நீண்ட காலம் நிலைக்கவில்லை. 1853 அளவில் அத்தொழில் மீண்டும் புத்துயிர் பெற்று, முன்னிலும் மேலான செல்வம் நிறைந்த காலத்தை எதிர் நோக்கிற்று. உண்மையில், அந்நெருக்கடி பல நன்மைகளை மறைமுகமாக விளைவித்தது. அளவு மிகுந்த செலவு களுக்கும் விஞ்ஞானமற்ற பயிர்ச்செய்கை முறைகளுக்கும் பதிலாகச் சிக்கன வழிவகைகளும் விஞ்ஞான முறைகளும் பின்பற்றப்பட லாயின. புதுத்துரைமார்கள் பெரும்பாலும் தம் தோட்டங்களை நெருக்கடி காலத்தில் குறைந்த விலைகளுக்கு வாங்கியிருந்தமையினல் அவர்கள் கடனின்றியே தமது முயற்சிகளை நடாத்த முடிந்தது.
தொழிலாளர் சம்பளங்கள், ஏற்றுமதி முதலிய பிற செலவுகள்
யாவும் குறைந்ததனல், உற்பத்திச் செலவுகள் பெருமளவுக்குக் குறையலாயின. அதே நேரத்தில் இலண்டனில் கோப்பியின் விலை உயர்ந்ததுடன் ஆங்கில அரசாங்கக் கொள்கைப்படி விதிக்கப்பட் டிருந்த வரிகளும் முற்ருக நீக்கப்பட்டன. இவற்றின் பயனுக உருவான புதுச் செல்வம், பழைய நிலைகளிலும் பார்க்க உறுதியான அத்திவாரத்தில் அமைவு பெற்றது.
1870 க்குப் பிந்திய ஆண்டுகள், விசேடமாக , 1872 முதல் 1877 வரை ஆள்பதியாகவிருந்த உவில்லியம் கிறகரியின் காலம்தான், இலங்கைக் கோப்பியின் பொற்காலமாக அமைந்தது. கோப்பியே இலங்கைப் பொருளாதாரத்தின் அடிப்படையாகவும், நிருவாகத்தின் வெற்றிச் சின்னமாகவும் அமைவு பெற்றது. அரசாங்கம் பெற்ற மிதமிஞ்சிய இறைவருமானங்களைக் கொண்டு, கிறகரி விசாலமான அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டார். இவ்வாண்டுகளில் மாத்தளை, கண்டி, குருநாகல், நாவலப்பிட்டி, கினகத்தேனை,
. . . . . - I 89

Page 102
190 இலங்கைச் சரித்திரம்
டிக்கோயா, கம்பளை, புசல்லாவை, அப்புத்தளை, வெளிமடை, சப்பிரகமுவா எனும் பிரதேசங்களிலெல்லாம் கோப்பித் தோட் டங்கள் பல்கிப் பெருகின.
கோப்பிச் செய்கையின் வளர்ச்சியுடன் அதனேடு தொடர் புள்ள வேறுபல நிறுவகங்களும் விருத்தியடைந்தன. வங்கிகள், ஏற்றுமதிக் கொம்பனிகள் (Agency houses) என்பவை தோன்றின. 1899 இல் இல்ங்கை வர்த்தகர் சங்கமும் (Ceylon Chamber of Commerce), 1854 இல் இலங்கைத் தோட்டத் துரைமார் சங்கமும் (Ceylon Pianters' Association) நிறுவப்பட்டன. சட்டசபையிலும் நாட்டின் அரசியல், பொருளாதார விவகாரங்களிலும் இவ்விரு சங்கங்களும் நிறைந்த செல்வாக்கும் அதிகாரமும் பெற்று விளங்கின.
ஆரம்பகாலத்தில் கோப்பிச் செய்கையில் சிங்களர் எவ்வித அக்கறையும் காட்டவில்லை. ஏனெனில் அவர்களிடம் அம்முயற் சிக்குத் தேவையான முதலிருக்கவில்லை. ஆனல் 1850 க்குப்பின் பல தாழ் நிலச் சிங்களர் கோப்பித் தோட்டங்களைத் திறந்து அவற்றை நன்முறையில் நிருவகிக்கத் தொடங்கினர். அவர்கள் பெரும்பாலும் தொடக்கத்தில் ஆங்கிலத் தோட்டத் துரைகளுக்கு வண்டிகள், கட்டடங்கள் அமைக்கும் ஒப்பந்தக்காரராகவும், தச்சுத் தொழிலாளராகவும் மலைநாட்டுக்குச் சென்றவர்களாவர். அவர்கள் பல்லாண்டுகளாக முதலைச் சேகரித்து, நிலங்களை வாங்கிக் கோப் பியைப் பயிரிடத் தொடங்கினர். கண்டிப் பிரதேசத்தின் கிராம வாசிகளும், தம் வீட்டுச் சுற்றுப் புறங்களிலும் மிகச் சிறிய நிலப் பரப்புகளிலும் கோப்பியைப் பயிரிடலாயினர். 1870 இல் ஏற்று மதியான கோப்பியில் 4 தொடக்கம் 4 பங்குவரை, சிங்கள முதலா ளிகளினதும் கிராமவாசிகளினதும் நிலங்களில் உற்பத்தியானதெனக் கணக்கிடப்பட்டுள்ளது. 1870 இல் ஏற்றுமதியான கோப்பியின் அளவு 1,054,029 அந்தராகும். ,
2. கோப்பியின் வீழ்ச்சி
கோப்பிச் செய்கை, 1870 இல் அதி உச்ச நிலையை எய்தியது. அதன்பின்னர் அஃது எழுச்சியடைந்ததிலும் கூடிய வேகத்துடன் வீழ்ச்சியடையத் தொடங்கிற்று. இருபது ஆண்டுகளுள், கோப்பியின் உன்னத நிலையைப் பிற பயிர்கள் பெறலாயின.
கோப்பியின் வீழ்ச்சிக்கு, கோப்பி மரங்களில் தோன்றிய ஒரு
பூச்சியே (Hemelia Vestarix) மூலகாரணமாயமைந்தது. 1868 தொடக்கம் அப்பூச்சியினல் பரவிய நோய், வெகுவிரைவில் தோட்டப்
17:1[ܬ݂ܶܐ

பெருந்தோட்டப்பயிர்ச் செய்கையின் விருத்தி 191
பிரதேசங்கள் எங்கணும் பரந்தது. இந்த ஒரேயொரு பயிர், ஆயிரக்கணக்கான சதுரமைல் நிலப்பரப்பில் விளைவிக்கப்பட்டதனல் பூச்சியினல் ஏற்பட்ட அழிவு மிகப்பெரிதாயிற்று. இப்பூச்சி, காற்றின் வழியாகப் பரவியதனல், அதன் அழிவை எவ்விதத்திலும் கட்டுப் படுத்தல் முடியாமற்போயிற்று. அப்பூச்சியினல் ஏற்பட்ட நோயின் மர்மம் பதின்மூன்று வருடங்களுக்குப் பின்னரே பூரணமாகக்கண்டு பிடிக்கப்பட்டது. கோப்பிச்செடிகளில் நோய் தென்பட ஆரம்பித்த முதல் ஆண்டுகளில், விளைச்சலில் ஏற்பட்ட சொற்ப வீழ்ச்சி பருவ மாற்றங்களினுல் ஏற்பட்டதென்றே தோட்ட முதலாளிகள் முடிபு கட்டினர். அதே காலத்தில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கோப்பியின் விலைகள் ஐம்பது விகிதமாக அதிகரித்ததனுல் வருவாய் முன்னியிலும் பார்க்க மேலானதாகக் காணப்பட்டது.
இதனைப் பின்வரும் புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டும்
ஆண்டு ஏக்கர் தொகை பெறுமதி விலை (அந்)
(அந்) ரூபா
1870 185,000 1,054,029 27, 53,000 54 ரூபா "I 871 195,657 945,85 24, 32,427 55 1872 206,000 723,055 18, 53,713 55 1873 219,974 95丑,342 42,20,252 88 1874 237,345 730,937 32, 16,651 90 1875 249,604 924, 266 45,0.6, 903 100 1876 260,000 665,626 34, 24,000 106 1877 272,243 974,333 49, 76,022 106 1878 275,000 631,609 83 ,95 , 249 107 1879 265,000 779, 738 40,29,229 107
இவ்விதமாக நோய் காலத்தில் கோப்பிக்கு நல்ல விலை கிடைத்தபடியினுல் பயிர் மாற்றமொன்றும் நிகழவில்லை. வீழ்ச்சி யடைந்த விளைச்சலை ஈடு செய்யப் புது நிலங்கள் அதன் செய் கைக்குத் திறக்கப்பட்டன. 1869 க்கும் 1879 க்குமிடையில் நான்கு இலட்சம் ஏக்கர் முடிக்குரிய நிலங்கள் விற்பனையாயின. 1880 தொடக்கம், கோப்பியின் விலைகள் வீழ்ச்சியடைய ஆரம்பித்த பொழுதுதான், நோயினல் ஏற்பட்ட அழிவின் கனகனம் மெல்ல மெல்லப் புலனுயிற்று. 1872 இல் ஒரு அந்தர் கோப்பியின் விலை 81 ரூபாவாகக் குறைந்தது. 1878 அளவில் கோப்பியின் எதிர் காலத்தைப்பற்றி தோட்டமுதலாளிகள் பீதியடைந்த போதிலும், அது ஈற்றில் புத்துயிர் பெற்று பழைய நிலையை அடையும் என்று
,

Page 103
192. இலங்கைச் சரித்திரம்
அவர்கள் பூரணமாக நம்பியிருந்தனர். 1880 தொடக்கம் இந்த நம்பிக்கை படிப்படியாக மறைந்தது. உற்பத்தியும் விலைகளும் குறையவே, தோட்டமுதலாளிகள் கோப்பிச் செய்கையை கைவிடத் தொடங்கினர். 1883 இல் ஏற்றுமதி 305,702 அந்தர் என்ற அதிகுறைந்த நிலையை எய்தியது. முதலாளிகள் தமது தோட்டங்களை விற்க முயன்றனர். ஆனல் அவற்றை வாங்குவதற்கு ஆட்களில்லை. இலங்கையிலிருந்த ஐரோப்பிய துரைமார்களில் நான்கிலொருபகுதி யினர் நாட்டைவிட்டு வெளியேறினர். எஞ்சியோர் படிப்படியாக சிங்கோளுனிவயும் தேயிலையையும் பயிரிடத் தொடங்கினர். 1887 இல் கோப்பி பயிரிடப்பட்ட நிலம் 100,000 ஏக்கராகவும் 1895 இல் 22,500 ஏக்கராகவும் குறைந்தது. 1905 இல் கோப்பி பயிரிடப் பட்ட நிலத்தின் பரப்பு 3,591 ஏக்கராயிற்று.
3. சிங்கோணு
இலங்கையில் கோப்பித் தோட்டங்கள் நோயினுல் அழிந் தொழிந்துபோன காலத்தில், அதனிடமாக சிங்கோனவையும் பின்னர் தேயிலையையும் மாற்றுப் பயிர்களாகச் செய்யக் கூடிய வழியைக்காட்டியவர் பெரதே னிய தாவரத் தோட்டத்தின் இயக்கு நரான கலாநிதி துவைட்ஸ் ஆவர். ஒரு பயிரை மாத்திரம் எல்லாத் தோட்டங்களிலும் பயிரிடுவதில் மறைந்திருந்த அபாயத்தைத் தோட்டத் துரைமாருக்கு எடுத்துக் காட்டியதுமன்றி அவர்களது அவதானத்தை சிங்கோணவிலும் தேயிலையிலும் செலுத்துவதற்காக அயராது உழைத்தார். ஆள்பதி சேர். உவில்லியம் கிரகறியும் (1872-177) இத்தகைய எச்சரிக்கைகளை விடுத்தார். ஆனல் கோப்பியினின்று இன்னும் பெரும் இலாபமீட்டிய பெருந் தோட் டக்காரர், அவர்களது ஆலோசனைகளுக்குச் செவி சாய்க்க மறுத்தனர்.
சிங்கோனவைச் கோப்பியுடன் துணைப்பயிராகப் பயிரிடும் முறை முற்றிலும் கலாநிதி துவைட்சின் முயற்சியினலேயே ஏற் பட்டது. அவர் 1861 இல் ஹக்கலையில் ஒரு சிறு சிங்கோனத் தோட்டத்தை ஏற்படுத்தினர். 1870 க்குப்பின் கிரகறி காட்டிய ஊக்கத்தினல் தோட்டக்காரர் சிலர், புதுப்பயிரைச் செய்ய ஆரம் பித்தனர். அவர்களும் உடனடியாக நல்ல இலாபத்தைப் பெற்றனர். ஏனெனில் இலங்கைச் சிங்கோன, இந்தியப் பொருளிலும் பார்க்க தரம் நல்லதாகக் காணப்பட்டதனுல் இலண்டனில் ஓர் அவுன்சிற்கு 12 சிலிங் கிடைத்தது. கோப்பியின் வீழ்ச்சியில் பீதியடைந்த தர்ட்டமுதலாளிகள் யாவரும், சிங்கோனவைப் பயிரிடுவதில் முனைந் 'தனர். இதன் பயனுக 1875 இல் 5000 ஏக்கர் நிலம் இப்பயிர்ச்
 
 
 

பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையின் விருத்தி 193
செய்கைக்குப் பயன்படுத்தப்பட்டது. இதற்கெனப் புதிய நிலங்கள் திறக்கப்படாவிடினும் 3000 அடிக்கு மேற்பட்ட உயரத்திலுள்ள தோட்டங்களில் சிங்கோன மரங்கள் கோப்பிக்கிடையே நாட்டப் பட்டன. 1878க்கும் 1883க்கும் இடையில், சிங்கோனப் பயிர்ச் செய்கை துரிதமாக முன்னேறியது. கலாநிதி துவைற்ஸ் சிங்கோனக் கன்றுகளை விநியோகித்தும், அதனைப் பயிரிடும் முறைகளைக் காட்டிக் கொடுத் தும், புதுப்பயிரைப் பரப்புவதில் அளப்பரிய சேவை புரிந்தார். இப்பயிரின் விருத்தியைப் பின்வரும் புள்ளி விபரங்கள் காட்டும்.
ஆண்டு பரப்பு ஏற்றுமதி தொகை மதிப்பு(ரூ) குயினைன்விலை
(இரு) (அவுண்ஸ்) 1870 500 - m -
1875 5,000 19 , 1 52 17,963 1 2 gr). 6 (o) u 1880 45,000 11,61,989 12, 67,41 12 g). I 885 39 000 1, 23, 25,642 41,28,753 4 சி. 3 பெ. 1890 30,000 87, 79,140 10, 53,497 1 சி. 5 பெ.
1895 - 9, 19,820 73,586 I G. 2 (G) .
சிங்கோணவிலிருந்து பெறப்பட்ட இலாபம், கோப்பிச் செய்கை யின் வீழ்ச்சிக்கும் தேயிலையின் வருகைக்கும் இடைப்பட்ட காலத்தின் வெற்றிடத்தை நிரப்ப உதவியது.
சிங்கோன ஒரு மருந்துப் பொருளாதலினல், அதன் கிராக்கி நெகிழ்ச்சியற்றது. எனவே அளவுக்கு மிகுந்த உற்பத்தி, நாளடைவில் பெரும் நட்டத்தையே கொணர்ந்தது. இலங்கையின் மிதமிஞ்சிய உற்பத் தியின் பயணுகவும், ஜாவாவிலும் பிறநாடுகளிலுமிருந்து ஏற்றுமதியான சரக்கின் காரணமாகவும் உற்பத்தி தேவையை மீறியது. 1885 முதல் விலை துரிதமாக வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. அவ்வாண்டு தொடக்கம் பெரும் தோட்டக்காரர் அப்பயிர்ச்செய்கையைக் கைவிட்டனர். அதன் பின்புரற்றுமதியான சிங்கோன கைவிடப்பட்டநிலங்களினின்றே சேகரிக்கப்பட்டது தேயிலை மென்மேலும் கூடுதலாகப் பயிரிட ஆரம்பிக்கப்பட்டது. 1900 அளவில் சிங்கோன ஒரு மிகவும் சிறிய பயிர்த் தொழிலாக மாறிற்று.
4. தேயிலை
இலங்கையின் செல்வநிலைக்கான திறவுகோலும் தீவின்
செழிப்புக்கு உயிரூட்டுவதுமான தேயிலைச் செய்கையை ஜோண் ஸ்டில்
மிகவும் அழகாகப் பின்வருமாறு வருணிக்கிருர், "தேநீர்ப் பாத்தி

Page 104
194 − இலங்கைச் சரித்திரம்
ரத்தின் அடியிலிருக்கும் தேயிலையொன்றை எடுத்து விரித்துப் பார்த் தால், இலங்கையிலுள்ள மலைப்ப்குதியில் இச்செடி எவ்விதம் வளர்கிற தென நாம் யோசித்துப் பார்க்கலாம். சூரியன் வானமண்டலத்தைக் கிழித்துக்கொண்டு படிகம் போன்று பரவி வரும் வேளையில் மலைகளின் சிகரங்களும், குன்றுகளின் உச்சிகளும் கண்கொள்ளாக் காட்சிகளா யிருக்கும். மலையருவிகள், பாறைகள் மீது படிந்து கணவாய்கள் வழியாகச் சலசலவென வேகமாகப் பாயும் பொழுது எழும் நாதம் பரந்த பள்ளத்தாக்குகளில் ஒலித்துப் பரவும்.’’ உலகத் தேயிலை நுகர் வின் மூன்றிலொரு பாகம், இலங்கையிலிருந்துதான் உலகின் பல்வேறு பா ங்களுக்கு ஏற்றுமதியாகின்றது. ஆனல் ஒரு நூற்றண்டின் முன்னர் இலங்கையில் தேயிலைத் தொழிலே இருந்ததில்லை.
கோப்பியின் வீழ்ச்சிக்கு முன், மலைப்பிரதேசத்தில் பரீட்சார்த் தமாகப் பயிரிடப்பட்ட பயிர்களுள் தேயிலையும் ஒன்று. 1839 இல் சில தேயிலைச் செடிகள், அசாமிலிருந்து பரீட்சைகள் நடாத்தும் பொருட்டு இங்கு கொண்டுவரப்பட்டு, பேராதனைப் பூந்தோட்டத்தில் நாட்டப்பட்டன. 1841 ஆம் ஆண்டு வேம்ஸ் சகோதரர்கள் (Worms Brothers) தேயிலையை முதன் முதலாக இறம்பொடையில் சிறு தோட்டமொன்றில் நாட்டினர். சிறு நிலத்தில் பயிரிடப்பட்ட இப்பயிர், அதிக பணச் செலவை உண்டுபடுத்தியதனல் அது இந் நாட்டுக்குப் பொருந்தாதென அவர்கள் முடிபு கட்டினர். 1867 இல் ஜேம்ஸ் ரெயிலர் (James Taylor) அதனை ஒரு பயன்தரு தொழிலாக மாற்றியமைக்கலாமென்பதைச் செய்கை மூலம் நிரூபித்து 'தேயிலைத் தொழிலின் தந்தை' எனும் சிறப்புப் பெயரைப் பெற்ருர். இவரது முன்மாதிரியினலும் இந்தியத் தேயிலைத் தொழிலின் விரிவினலும் அப்பயிர்ச் செய்கையில் புது ஆர்வம் பிறந்தது.
தேயிலையின் விருத்தி:
கோப்பித் தோட்டங்களை நோய் பீடித்த பொழுது, தேயிலை பயிரிடப்பட்ட நிலப்பரப்பின் அளவு 200 ஏக்கராகும். கோப்பி யின் விளைச்சல் வீதம் வீழ்ச்சியுறத் தொடங்கத் தேயிலையில் ஆர்வம் அதிகரித்தது. கோப்பி முதலாளிகள் பணமுடைப்பட்டாலும் உற் சாகம் குன்றவில்லை. அவர்கள், கோப்பிச் செடிகள் பாழாகக் கிடந்த தரிசு நிலங்களில் தேயிலையைப் பயிரிடலாமெனக் கண்டனர். எனினும் நீண்டகால அனுபவம் பெற்ற ஒரு பயிரை விடுத்து இன்னெரு புதுப்பயிரைப் பயிரிடுவதில் பல இக்கட்டுகள் இருந்தன தேயிலையை ஆரம்பம் தொட்டு விஞ்ஞான அடிப்படையில் நிரு வகிக்க வேண்டியதாயிற்று. ஏனெனில் தேயிலையைப் பதனிட்டுத்

பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையின் விருத்தி 195
தயாரிக்கும் முறை, கோப்பி விதைகளை உல்ரவிடும் முறையினின்று சிக்கல்கள் மிகுந்தது. இதற்கு தொழிற்சாலைகளும் விலைமிகுந்த இயந்திர சாதனங்களும் தேவைப்பட்டன. இவ்வியந்திரங்களை இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்ய நிறைந்த முதல் வேண்டப் பட்டது. இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கொருமுறை தேயிலைக் கொழுந்தைப் பறிக்கவும் செடிகளை ஒழுங்காகக் கண் காணிக்கவும் ஏராளமான கூலியாட்கள் தேவைப்பட்டனர். இதற்கு, மேலும் முதல் தேவைப்பட்டது. இதனல் தேயிலைத் தோட்டங்களைத் திறந்தவர்கள் யாவரும் ஐரோப்பியராகவே இருந்தனர். முதலுடைய ஆங்கிலர், இலங்கை வந்து பழைய கோப்பித் தோட்டங்களைச் சொற்ப விலைக்கு வாங்கி அல்லது முடிக்குரிய நிலங்களை வாங்கி, துப்புரவு செய்து தேயிலை விதைகளை நாட்டினர். சிறு முதலுடையோர் சிங்கோணுப் பயிரைத் தம் தோட்டங்களில் விளைவித்தனர். தேயிலை தைகளைப் போதிய அளவில் அசாமிலிருந்து பெறமுடியாமற் போனதாலும் பலர் சிங்கோணுவைப் பயிரிட முற்பட்டனர்.
தேயிலைத் தோட்ட முதலாளிகளை எதிர்நோக்கிய இச்சிறு காலப் பிரச்சினைகள் வெகுவிரைவில் நீங்கின. அவர்களது விடா முயற்சியினுலும் உறுதியான நம்பிக்கையினுலும் தேயிலைச் செய்கை துரிதமாக முன்னேறியது. இலங்கையின் உயர்ந்த மத்திய மலைப்பிரதேசம், தேயிலைச் செய்கைக்கு மிகவும் உவப்புடையதாகக் காணப்பட்டது. சூரியவெப்பம், வளம் நிறைந்த மண், பருவமழை வீழ்ச்சி, பனிபெய்யும் இரவுகள் எனும் நிலைகள் உலகிலேயே அதி சிறந்த தேயிலையைப் பயிரிடுவதற்கு வேண்டிய சூழ்நிலைகளை மலைநாடு ஈந்தது. 6000 அடி உயரமான பிரதேசங்களிலும் தோட்டங்கள் திறக் கப்பட்டன. தேயிலை, எந்த உயரமான நிலத்திலும் வளருமா யினும், இலங்கையின் பிரசித்தி பெற்ற உயர்தரமான தேயிலை 3,000 அடிக்கு மேற்பட்ட பிரதேசங்களில்தான் வளருகின்றது. உயரம் அதிகரிக்க தேயிலையின் தரமும் கூடும். அதிசிறந்த தேயிலை 4,200 அடிக்கு மேல்தான் வளரும்.
1880 க்குப் பிந்திய ஆண்டுகளில், தேயிலைச் செய்கை பொரு ளியல் முயற்சியாக மாறவும் அதன் விரிவடையும் விகிதத்தை அதிகரிக்கவும் பல சக்திகள் ஒன்று சேர்ந்து துணைபுரிந்தன. சிங்கோ ஞவின் விலைகள் வீழ்ச்சியடையத் தலைப்பட்டன. இலங்கைத் தோட் டங்களின் விளைச்சல் அசாமின் தோட்டங்களிலும் கூடுதலாகக் காணப்பட்டது. ஒரு ஏக்கரின் விளைச்சல் 500 இருத்தல் தொடக்கம் 1000 இருத்தல் வரை உயர்ந்து காணப்பட்ட்து. தேயிலை விதை

Page 105
196 இலங்கைச் சரித்திரம்
களும் பெருமளவு இலங்கையை வந்தடைந்தன. இக்காரணங்களி ணு,லும் கோப்பிச் செய்கையின் வீழ்ச்சி உறுதிப்படுத்தப்பட்டதன் பயனுகவும் உடனடியாகக் கோப்பியிலிருந்து தேயிலைக்கு ஒருமனதாக மாற்றம் நிகழ்ந்தது. கோப்பி நிலங்கள் மாத்திரமல்லாது கோப்பிக்
இலங்கை
தேயிலை விளையும் பிரதேசங்கள்
கென வாங்கப்பட்டு பயிரிடப்படாத காட்டு நிலங்களிலும் தேயிலே விதைகள் நாட்டப்பட்டன. 1880 க்கும் 1895 க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் தோட்டப் பிரதேசத்தின் பிரதான விளை பொருளாக கோப்பி வகித்த இடத்தைத் தேயிலை பெற்றது. இம்மாற்றத்தை பின்வரும் புள்ளி விபரங்கள் காட்டும்.
ஆண்டு தேயிலை கோப்பி
ஏக்கர் ஏக்கர்
883 19,797 250, 740
1885 120,728 167,677
1887 99,647 68,623
1889 207,413 49,284
1891 261, 179 34,927
89.3 303,886 10,664
1895 322,810 8,832
1897 404,574 u
 
 
 

பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையின் விருத்தி 197
தேயிலை விளைவித்தல் இலாபகரமான முயற்சியென்பது நிரூ பிக்கப்பட்டதன் பேருக, அது 1897 வரை தங்குதடையின்றி முன் னேறியது. ஆண்டு தோறும் சராசரி 20,000 ஏக்கர் நிலம் தேயிலைச் செய்கைக்குட்படுத்தப்பட்டது. இக்காலத்தின் தேயிலை உற்பத்தியின் 80 விகிதத்தை ஐக்கிய இராச்சியம் நுகர்ந்தது 1896 அளவில் இந்தியாவிலும் இலங்கையிலும் நிறுவப்பட்ட புதுத் தோட்டங்களி னின்று ஏற்றுமதியான தேயிலை கேள்விக்கு அதிகமாகக் காணப் பட்டதனுல் இலண்டன் சந்தைகளில் தேயிலை தேங்கிக்கிடந்தது. தேயிலையின் விலைகளிலும் ஒரு வீழ்ச்சி ஏற்பட்டது. 1883 இல் 15 பென்சுக்கு விற்பனையான தேயிலை, 1897 இல் 9 பென்சுக்கு விற்பனை யாயிற்று. இதன் பயனக தேயிலைப் பயிர்ச் செய்கையின் விரிவுக்கு முற் றுப்புள்ளி வைக்கப்பட்டது. இக்காலத்தில் பெரும்பாலான தோட்ட முதலாளிகள் நயமின்றித் தேயிலையை விற்றனர். விலைகள் தொடர்ந்து 1905 வரை வீழ்ச்சியடைந்து வந்தன. இக்காலத்தின் இலங்கைத் தேயிலையின் சராசரி விலை 699 பென்சாக இருந்தது. விரிவாக்கம் நிறுத்தப்பட்டதுமன்றி, சிலர் தேயிலைச் செய்கையையும் கைவிட்டனர். வேறு சிலர் இறப்பர்ச் செய்கைக்கு மாறினர்.
1896 முதல் விலைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியை ஈடு செய்யும் முகமாக முதலாளிகள் தேயிலையை விஞ்ஞான முறையில் பயிரிட்டும் கூடுதலான எந்திர சாதனங்கள் கொண்டு உற்பத்தியின் விலையைக் குறைக்கவும் முயன்றனர். இதற்கு மேலும் பெரும் முதல் தேவைப்பட்டதஞல், சிறு நிலச் சொந்தக்காரர் பிற வழியின்றி தமது தோட்டங்களை பெரும் முதலுடைய கம்பனிகளுக்கு விற்றனர். இதன் விளைவாக பல சிறு தோட்டங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு பெரிய தோட்டங்கள்ாக அமைக்கப்பெற்றன. இவற்றை அமைத்த கம்பனிகள் இருவிதப்பட்டவை. இங்கிலாந்தில் தலைமைக் காரியா லயங்களைக் கொண்டு இயங்கியவை ஸ்ரேளிங் (Sterling) கம்பனி கள் என்றழைக்கப்பட்டன. இலங்கையில் தலைமைக் காரியாலயங் களைக் கொண்ட கம்பனிகள் ரூபாய்க் கம்பனிகள் எனப்பட்டன.
1905 ஆம் ஆண்டில் நெருக்கடி நீங்கவே, புது நிலங்களில் தேயிலை மென்மேலும் பயிரிடப்பட்டு வரலாயிற்று. மிதமிஞ்சிய உற்பத்தி ஏற்படாமலிருக்க இரசியா, சீனு, அமெரிக்கா எனும் புதுச் சந்தைகளுக்குத் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டது. முதலாம் உலகப்போரின் முதலிரு ஆண்டுகளில் தேயிலையின் விலை அதி கரித்தது. ஏனெனில் பிரிட்டன், ஆயுதந்தாங்கிய படைகளின் தேவையை முன்னிட்டு, தேயிலையைச் சேகரித்து வைக்க முன் னிட்டது. இதன் பயனக தேயிலையின் விலை அதிகரித்தது. 1915 இன் இ 13 A 臀 , '*
A.

Page 106
198 இலங்கைச் சரித்திரம்
இறுதியில் கட்டுப்பாடற்ற நீர்மூழ்கிக் கப்பற் சண்டை அதிகரித்து வரவே, கப்பற்போக்கு வழிகளில் தடைகள் ஏற்பட்டு இலங்கையின் மூன்று முக்கிய பொருள்களின் ஏற்றுமதியைப் பாரதூரமாகப் பாதித் தது. போரினை ஊக்கப்படுத்துவதற்கு தேயிலை ஓர் இன்றியமையாத பொருளாகக் கருதப்பட்டதினுல், அதன் ஏற்றுமதி அரசாங்கக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. இதன்படி அரசாங்கம் உற்ப்த்தியாளர்களுடன் நேரடியான பேச்சுவார்த்தைகள் நடாத்தி, அவர்களிடம் தேயிலையை நேரடியாக விலை கொடுத்து வாங்கியது . ஒரு குறிக்கப்பட்ட அளவு தேயிலையை மாத்திரம் அரசாங்கம் வாங்கியதனுலும், தனிப்பட்டவர்களின் ஏற்றுமதி தடை செய்யப் பட்டதனலும் 1917-18 ஆம் ஆண்டுகளில் ஏற்றுமதி குன்றியது. 1920 இல் பாதுகாப்புக் கட்டுப்பாட்டின் கீழ் தேயிலை பழைய நிலையை அடைந்தது.
இலங்கைப் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை வரலாற்றில் 1922 ஆம் ஆண்டு ஒரு திருப்பமாக அமைந்தது. போரினல் ஏற்பட்ட இன்னல்கள் நீங்கின. பிறநாட்டு பசளைவகைகளை இலகுவிற் பெறக்கூடிய வாய்ப்புக்களும் தோன்றின. நுகர்ச்சி நாடுகளும் கொள்வனவு வலுவை மீண்டும் பெற்றன. இதன்பின்னர் சந்தையைப் பாதிக்கும் காரணிகள் வெளிச் செல்வாக்கின் கீழிருக்கவில்லை. இதன் காரணமாக பழைய சாதாரண நிலை மீண்டும் நிலவியது.
தேயிலை ஆராய்ச்சிக் கழகம்:
தேயிலைத் தொழிலில் ஏற்படும் விஞ்ஞானச் சிக்கல்களை ஆராய்ந்து அபிவிருத்தி செய்து நவீன முறைகளைக் கையாளுவ தற்கு 1925 ஆம் ஆண்டு தலவாக்கொல்லையில் சென்ற். கூம்ப்ஸில் இலங்கை அரசாங்கத்தினலும் இலங்கைத் தேயிலைத் தொழிற் பகுதியினராலும் தேயிலை ஆராய்ச்சிக் கழகம் தாபிக்கப்பட்டது. தீவிலிருந்து ஏற்றுமதியாகும் தேயிலையில் விதிக்கப்படும் வரிப் பணத்தைக் கொண்டு இக்கழகம் நிருவகிக்கப்பெற்றது. அது நவீன ஆராய்ச்சிச் சாலைகளையும் தொழிற்சாலைகளையும் 400 ஏக்கர் கொண்ட தோட்டத்தையும் சொந்தத்தில் வைத்துப் பரீட்சைகளை நடாத்தத் தொடங்கியது. தோட்டங்களின் மண் வளத்தைக் காத்தல், செட்டான நிர்வாகத்தை விருத்தி செய்தல், தேயிலைச் செடிகளிடையே ஏற்படும் நோய்கள், பூச்சிகள், களைப்புல் முதலிய வற்றை அகற்றுதல், உற்பத்தியின் தரத்தை பெருக்குதல், உயர்ந்த தரமுள்ள செடிகளைத் தெரிந்தெடுத்தல் என்பவை அக்கழகத்தின் வேலைகளாகும்.
**

பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையின் விருத்தி 99
தேயிலைக் கட்டுப்பாட்டுச் சட்டம்:.
1920 ஆம் ஆண்டில் மகோன்னத நிலையில் ஏறிச் சென்ற தேயிலை வர்த்தகம் 1932 இல் மந்த நிலையை அடைந்தது. அதன் எதிர்காலம் கவலைக்கிடமாயிற்று. இவ்வீழ்ச்சியைப்பற்றி கொழும்புத் தேயிலை வர்த்தகர் சங்கத்தின் 1932 ஆம் ஆண்டு அறிக்கை கூறுவ தாவது: 'இவ்வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் விலைகள் தொடர்பாக ஏறிவந்தன. மார்ச் 8 ஆம் நாள், ஆகக்கூடிய விலையுாக இருத்தல் 70 சதமாக இருந்தது. பின்னர் பிரிட்டிஷ் தேயிலைத் தீர்வை மீண்டும் அமூல் செய்யப்பட்டதன் விளைவாக உள்ளூர்ச் சந்தை வீழ்ந்து கொண்டே வந்து, ஜூன் மாதத்தில் இருத்தலுக்கு 33 சதமாயிற்று. இந்நிலை நவம்பர் மாதக் கடைசிவரை நீடித்தது.' இவ்வீழ்ச்சியைத் தடுப்பதற்காக, தேயிலை உற்பத்தி நாடுகளான இந்தியா, இலங்கை, டச்சுக் கிழக்கிந்திய தீவுகள் எனும் நாடு களின் பிரதிநிதிகள் இலண்டனில் கூடி, கிராக்கிக்கும் உற்பத்திக்கு மிடையே ஓர் உறுதியான நிலையை ஏற்படுத்தும் பொருட்டு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒவ்வொரு நாடும் அதன் தேயிலை ஏற்றுமதியைச் சட்டமூலம் கட்டுப்படுத்தியமைக்க வேண்டுமெனத் தீர்மானித்தனர். மூன்று நாட்டு அரசாங்கங்கள் இந்த யோசனையை ஏற்றுக் கொள் ளவே, 1933 பெப்ரவரியில் இலண்டனில் சர்வதேச தேயிலை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதன்படி இலங்கையினின்று ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்பட்ட தொகை 1929 ஆம் ஆண்டின் மொத்த ஏற்றுமதியில் 25 விகிதமென நிர்ணயிக்கப்பட்பட்டது. இதுவே "இலங்கை ஏற்றுமதிக் கோட்டா' என்று அழைக்கப்பட்டது. இத்திட்டத்தின் பயனக விலைகளுக்கு விமோசனம் கிடைத்ததுமன்றி, ஒப்பந்த காலத்தில் விலைகளும் உறுதியாயிருந்தன. ஐந்து வருட காலப் பகுதி முடிந்ததும், இத்திட்டம் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டது. அதன்பின் உலக மகாயுத்த காலத்தை முன் னிட்டும், யுத்தம் முடிந்தபின் நிலைமை சீராவதை முன்னிட்டும் அதுமேலும் மேலும் நீடிக்கப்படலாயிற்று.
5. இறப்பர்
1492 இல் புது உலகத்தில் கால் வைத்த கொலம்பஸ், அமெரிக் காவின் மத்திய தென் பகுதிகளில், இறப்பர் இயற்கையாகவே வளரும் மரமென்பதை முதன் முதற் கண்டறிந்தார். எனினும் பழைய உலகில் இறப்பரின் உபயோகம் 18 ஆம் நூற்ருண்டின் பிற் பகுதிவரை உணரப்பட்டதில்லை. 1772 இல் காகிதங்களிலுள்ள பென்சில் எழுத் துக்களை அழிக்கும் தன்மை இறப்பருக்குண்டு எனக் கண்டுபிடித்த

Page 107
200. இலங்கைச் சரித்திரம்
பிறீஸ்ற்வி (Priestley) அப்பொருளுக்கு 'இந்திய இறப்பர்’ எனும் பெயரை இட்டார். அரை நூற்றண்டுக்குப் பின்னர் மக்கின்ரொஷ் (Macintosh) ரேப்பன்ரையின் (Turpentine) திரவத்தில் கரைக்கப் பட்ட இறப்பரைக் கொண்டு நீர் புகா ஆடைகளை ஆக்கும் முறை யினைக் கண்டறிந்து 1824 இல் நீர் புகா உடைகளை உற்பத்தி செய்யும் முதற் தொழிற்சாலையை அமைத்தார் 1839 இல் சாள்ஸ் குடியர் (Charles Goodyear) 'oudj53Orib07Glaviti Sth' (Vulcanisation) முறையினைக் கண்டுபிடித்ததன் விளைவாக, இறப்பர், உலகின் அதி முக்கிய மூலப் பொருள்களில் ஒன்ருகும் காலம் பிறந்தது. 1900க்குப் பின் மோட்டார் வாகனங்களுக்கு "ரயர்கள்' செய்வதற்கு இறப்பர் இன்றியமையாததென அறியப்பட்டதுடன், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் அதன் தேவை பன்மடங்கு அதிகரித்தது 1900இல் உலக இறப்பர் நுகர்ச்சி 60,000 தொன். 1960 இல் உலக தேவை 3,600,000 தொன் ஆயிற்று. இதில் எண்பது விகிதம் ரயர்களும் ரியூப்புகளும் செய்தற்கே பயன்படுத்தப்பட்டது.
இறப்பர்ச் செய்கையின் ஆரம்பம்:
இறப்பர் பிரேசிலில் இயற்கையாக வளர்வதைக் கண்ட ஆங்கிலர், அதனைத் தம் குடியேற்ற நாடுகளில் பயிரிடுவதற்கான வாய்ப்பினை ஆராய்ந்தனர். பிரேசிலின் இறப்பர் மரங்களை நன்கு ஆராய்ந்தறிந்த சேர். ஹென்றி விக்ஹம் (Sir Henry Wickham), அஃது அயன மண்டலச் சுவாத்தியப் பிரதேசங்களில் பயிரிடுவதற்கு மிகவும் பொருத்தமான பயிர் எனும் முடிபுக்கு வந்தார். இந்தியாவில் இறப்பர் மரங்களைப் பயிரிடத் தீர்மானித்த இந்திய அரசாங்கம், இறப்பர் விதைகளைப் பெற்றுத் தருமாறு 1876 இல் சேர். ஹென் றியைப் பணித்தது. இவ்விதைகள் (Hevea Brasiliensis) இங்கிலாந்தின் கியூ பூங்காவில் (Kew Gardens) நாற்றிடப்பட்டு, சிறு கன்றுகளாக இந்தியாவுக்கு அனுப்பப்பட்டன. ஆனல் இந்தியாவின் சுவாத்தியம் இறப்பர்ச் செய்கைக்கு ஏற்றதன்று எனக் காணப்பட்டமையினுல் அவை இலங்கைக்கு மாற்றியனுப்பப்பட்டன. 1876 இல் இலங்கை வந்தடைந்த இக்கன்றுகள், ஹெனரத்கொடைப் பூங்காவில் நாட்டப் பட்டன. இன்று இலங்கையில் பெரும் தோட்டப்பயிராகப் பெருகி யுள்ள இறப்பரின் முதல் வராலறு இதுவேயாகும், இறப்பர் மரங்கள் 1876 இல் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்டனவேனும் ஒழுங்கான பயிர்ச் செய்கை, இருபதாம் நூற்றண்டின் ஆரம்பம் வரை நிகழ வில்லை. இவ்விடைக்காலத்தில் பிரித்தானியப் பேரரசு அடங்கலும் இலங்கையினின்றே இறப்பர் விதைகள் பரப்பப்பட்டன. பிஜி,
 

பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையின் விருத்தி 20.1
அவுஸ்ரேலியா, ஜமேக்கா, திறிணிடாட்,' ஜாவா, சன்ஸிபார், இந்தியா, பர்மா எனுமிடங்களுக்கு இறப்பர் இலங்கையினின்றே பரவியது.
இருபதாம் நூற்ருண்டின் தொடக்கத்தில் தேயிலைத் தொழி லில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாக, இறப்பர் தொழில் விருத்தி யடைவதற்கு வேண்டிய சூழ்நிலைகள் தோன்றின. முதலாவதாக தேயிலையிலும் பார்க்க இறப்பருக்குக் குறைந்த கண்காணிப்புப் போதுமாயிற்று. தேயிலைச் செடியைப் போலல்லாது, இறப்பர்க்
கன்றுகளைக் கண்காணியாமலும் விடமுடிந்தது. இரண்டாவதாக, பால் வெட்டுவதற்கு வேண்டப்பட்ட கூலியாட்கள் மிகச் சொற்பம். மூன்ருவதாக இறப்பர்ப் பாலைப் பதப்படுத்துவதற்கு அதிக செலவு ஏற்படவில்லை. இறப்பரின் விலையுயர்ச்சி காரணமாகப் பெரிய தொழிற்சாலைகள், இறப்பர்ப் பாலை விரும்பி வாங்கலாயின. நான் காவதாக, இறப்பருக்கு ஆரம்பம் தொடங்கி நல்ல விலை கிடைத்தது. கடைசியாக, தேயிலையிலும் பார்க்க இறப்பருக்குத் தேவைப்பட்ட நிலம் இலகுவில் பெறக்கூடியதாயிருந்தது. 1900 இல் தேயிலையின் இடையில் அல்லது சிறு நிலங்களில் இறப்பர் பயிரிடப்பட்ட நிலம் 1750 ஏக்கர் ஆகும். ஒருசிலர் மாத்திரமே துணிந்து அதனைத் தனித்தும் பயிரிட்டனர். 1901 இல் இலண்டனில் தேயிலையின் விலை வீழ்ச்சியடைந்தபொழுது இறப்பரின் விலை நான்கு ஷிலிங்காக

Page 108
202 இலங்கைச் சரித்திரம்
உயரவே, இறப்பர் தொழிலில் உண்மையான ஆர்வம் பிறந்தது. விலைகள் படிப்படியாக உயர்ந்தன. 1910 இல் ஓர் இருத்தல் இறப் பரின் விலை பன்னிரண்டு ஷிலிங்காயிற்று. இச்செழிப்புக் காலத்தில்
ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இறப்பர்ச் செய்கைக்குப் பயன்
படுத்தப்பட்டன. இறப்பர் உலர் வலையங்களுக்குரிய பயிராயிருப் பதஞல் அஃது இத்தீவின் அனலும் ஈரலிப்பும் மிகுந்த பிரதேசத்தில் நன்ற க செழித்து வளருகின்றது. அது 2,000 அடிக்குக் குறைந்த தரையில் வருடத்தில் 80' மழை வீழ்ச்சியுடைய பிரதேசத்துக்குகந்த பயிராகும். " களனிப் பள்ளத்தாக்கு, இரத்தினபுரி மாவட்டம், கேகாலைப்பகுதி, மாத்தளைப்பகுதி முதலிய இடங்களே இறப்பர் பயிரிடப்பட்ட பிரதேசங்களாகும். இப்பிரதேசங்கள் யாவும் தென் மேற் பிரதேசத்தின் உயர்பகுதிகளில் காணப்படுவதுடன் வருடத்தில் 125' மழையைப் பெறும் இடங்களாயும் உள்ளன.
பின்வரும் புள்ளி விபரங்கள் இறப்பரின் வேக விருத்தியைக் காட்டும்.
ஆண்டு இறப்பர் விளை
நிலப்பரப்பு (ஏக்கர்)
1900 750 1905 40,000 1906 100,000 1907 150,000 1908 180,000 1909 184,000 203,000 1910 ܐ ܢܝ . 191 215,000 1912 217,000 1913 229,000
இக்காலத்தில், கீழைத் தேயங்களில் இறப்பர்த் தோட்டங் களில் முதலீடு செய்வதற்காக ஐரோப்பிய அமெரிக்க வர்த்தகக் கூட்டுக் கம்பனிகள் நிறுவப்பட்டன. இவ்விதமாக வெளிநாடு களினின்று வந்த முதலீட்டின் ஒரு பகுதியை இலங்கை பெற்றது ஆனல், இதனல் பெரும் நன்மையடைந்த நாடு மலாயாவாகும். முதல்ாம் உலகப் போர்க் காலத்தில் இறப்பர்தான் வருவாய் தரும் பெரும் தொழிலாக அமைந்தது. 1914-18 வரை ஓர் இலட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் இறப்பர்ச் செய்கைக்கெனத் திறக் கப்பட்டன.

பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையின் விருத்தி 203
இறப்பர்ச் செய்கையின் இப்பெரும் விரிவு, சிறு காணிக் காரரான சுதேச விவசாயிகளுக்கும் நன்மை பயப்பதாயிற்று. ஏனெனில் விவசாயியும் அவனது குடும்பத்தினரும் அதனைத் தம் ஒய்வு நேரங்களில் செய்யக்கூடியதாயிற்று. 1914 இல் 30,000 ஏக்கராகவிருந்த இறப்பர் விளைவிக்கப்பட்ட சிறுகாணிகளின் நிலப் பரப்பு 1931 இல் 140,000 ஏக்கராக அதிகரித்தது. இறப்பர் விளைவிக்கப்பட்ட ஒவ்வொரு ஏக்கருக்கும் ரூபாய் 400 மூலதன மென மதிப்பிட்டால் இறப்பர் தொழிலிலிருந்த மொத்த முதலீடு ரூபாய் 24,000,000 ஆகும். இம்மொத்தத்தில் 55 விகிதம் அல்லது ரூபாய் 13,000,000 உள்நாட்டு மூலதனமாக இருந்தது.
ஸ்டீவன்சன் கட்டுப்பாட்டு விலைகள்:
போரின் பின்னர் இறப்பர் விலைகள் வீழ்ச்சியுறத் தொடங் கின. இறப்பருக்கு முக்கிய சந்தையாக அமைந்த நாடு ஐக்கிய அமெரிக்க தேசமாகும். அந்நாடு உலக இறப்பர் உற்பத்தியில் 72 விகிதத்தை நுகர்ந்து வந்தது. 1920 - 22 அமெரிக்காவில் பொருளாதார மந்த நிலை எழுந்தபொழுது, அந்நாடு இறப்பர் வாங்குவதைக் குறைக்கவே, அதன்விலை துரிதமாகக் குறையத் தொடங்கிற்று. 1919 இல் 2 ஷிலிங் விற்ற இறப்பரின் விலை 1920 இல் 10 பென்சாகவும், 1921 இல் 7 பென்சாகவும் 1922 இல் 6 பென் சாகவும் குறைந்தது.
1922 இல் பிரித்தானிய அரசாங்கம், ஸ்டீவன்சன் குழு சிபார்சு செய்த அறிக்கையினை மேற்கொண்டது. இது பிரித்தானிய குடியேற்ற நாடுகளில் இர ப்பரின் விலைகளில் ஒர் உறுதியான நிலையை ஏற்படுத்தும் பொருட்டு, ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தி அமைக்கத் தீர்மானித்தது. மொத்த உற்பத்தியின் 60 விகிதம் ஒவ்வொரு நாட்டிலும் "ஏற்றுமதி கோட்டா" எனப் பெற்றது. இச்சட்டம் 1922 நொவம்பர் தொடக்கம் ! 1928 நொவம்பர் வரை அமூலிலிருந்தது. இக்கட்டுப்பாடு தொடங்கிய ஈர் ஆண்டு களுக்குள் விலைகள் உறுதியான நிலைகளை எய்தின. விலைகளின் ஏற்றத்தாழ்வுகளுக்கேற்ப ஏற்றுமதிக் கோட்டா காலத்துக்குக் காலம் குறைத்தும் கூட்டியும் நிர்ணயிக்கப்பட்டது.
பிரித்தானிய குடியேற்ற நாட்டு உற்பத்தியாளர்கள் கட்டுப் பாடுகளை ஏற்படுத்தி, உயர்ந்த விலைகளைப்பெற எடுத்த முயற்சியில் உச்சுக் கிழ்க்கிந்திய தீவுகள் பங்குபெற அறவே மறுத்தன. இதன் விளைவாக டச்சுக் கிழக்கிந்தியத் தீவுகளில் இறப்பரின் பெருக்கம்

Page 109
204 இலங்கைச் சரித்திரம்
அளவுப் பிரமாணமின்றி பல்கிப் பெருகியது. உலக உற்பத்தியில் அந்நாட்டின் பங்கு 40 விகிதமாக உயர்ந்தது. கட்டுப் பாட்டுத் திட்டத்தில் டச்சுத் தீவுகள் தொடர்ந்து பங்கெடுக்க மறுக்கவே, 1928 இல் அத்திட்டம் பயனிழக்கலாயிற்று. பொருளாதார நெருக்கடி, இலங்கை இறப்பர் உற்பத்தியாளரை மிகக் கேவலமாகப் பாதித்தது.
6. தென்னை
புராதன காலந்தொடங்கி இலங்கையில் வளர்ந்து வந்த பயிர்களில் தென்னையும் ஒன்று என்பதற்குச் சான்றுகள் பலவுள. அன்றும் இன்றும் இத்தீவின் ஒவ்வோர் இல்லத்திலும் தெங்குப் பொருள்கள் தவிர்க்க முடியாததொரு பண்டமாக இருந்து வருகின்றன. தாழ்பிரதேசங்களில் வாழ்ந்த விவசாயிகள், வீட்டின் சுற்றுப் புறத்தில் சில தென்னை மரங்களை வளர்த்து வந்தனர். இவற்றின் மூலம் உணவு, தளபாடம், மது ஆகியவற்றைப் பெற்றனர்.
லங்கை 'agðrar sáðgasú
பிரதேசங்கள்
தென்னை உற்பத்தியும் தென்னையுடன் தொடர்புடைய துணைத் தொழில்களும் நல்லவருவாய் தருவனவாக இருந்தமையால், விவ சாயிகள் தமது பிரதான தொழிலுடன், இதனையும் துணைத் தொழில்களாகக் கொண்டனர். இதன் காரணமாக தென்னை,
இலங்கையின் உள்நாட்டுப் பொருளாதார அமைப்பினில் முக்கிய
இடம் வகித்து வந்துள்ளது.
 
 
 
 
 

பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையின் விருத்தி 205
பல நூற்ருண்டுகளாக இலங்கையில் தென்னை பயிரிடப் பட்டு வந்தபோதிலும், 1860 க்குப்பின் அது வெளிநாட்டு வியா பாரங்களில் முக்கிய இடம் வகிக்கத் தொடங்கிய பின்னர்தான், eggil துரிதமாகவும் முறைப்படியும் பயிரிட ஆரம்பிக்கப் பட்டது. 1860 க்குப்பின் மேலைத் தேசங்களில் தேங்காய் எண்ணெய்க்கு மதிப்பு ஏற்படும்வரை, ஏற்றுமதி வர்த்தகத்தில் தெங்குப் பொருள்கள் இடம் பெறவில்லை. ஏற்றுமதி வர்த்தகத் துக்கான தெங்குப் பொருளின் ப்ெரும்பகுதி, விவசாயிகளிடமிருந்தே பெறப்பட்டது. தெங்குத் தொழிற்துறையிலேயே உள்நாட்டு மூலதனம் ஆரம்பத்தில் குவியத் தொடங்கியது. 19 ஆம் நூற் முண்டின் இறுதிக் காலந்தொடக்கம், இந்நாட்டு மக்களிற் பணம் படைத்தவர்கள் தென்னந் தோட்டத் துறையில் அதிகமாகப் பங்கு பற்றத் தொடங்கினர். இலங்கையின் தெங்குத் தொழில் முழுமையும் இந்நாட்டினரின் கையில்தான் தங்கியிருந்தது எனக் கூறின் மிகையாகாது. தென்னைத் தொழிலிற் சம்பந்தப்பட்ட மூலதனத் தொகையைப் பற்றித் தென்னை விசாரணைச் சபையினர் கூறியதாவது 'தென்னை பயிரிடுதலில் ஆழ்த்தப்பட்ட மூலதனத் தொகையைக் கணிப்பது கடினமானதாகும்; அத்தொகை ரூபாய் 300,000,000 க்கும் ரூபாய் 500,000,000 இடையே இருந்த தெனக் கவனித்தால் அது குறைவுக் கணிப்பெனக் கருதலாம்.' இதிலிருந்து இந்நாட்டினர் தென்னைச் செய்கையில் ஈடுபடுத்திய மூலதனம் சிறு தொகையானதல்ல என்பது புலப்படும். தென்னைப் பயிர் அபிவிருத்தித் துறையில், சுதேசிகள் பல கஷ்டங்களை எதிர் நோக்க வேண்டியிருந்தது. இந்நாட்டு வங்கித் தொழில் முழுமையும் ஐரோப்பியர் கைகளிலிருந்தமையினல் சுதேச முதலாளிகள் ஐரோப்பிய முதலாளிகளிலும் பார்க்கப் பல இன்னல்களுக்கு ஆளானர்கள். வட்டிக்குக் கடன் கொடுக்கும் செட்டிமார்களே இந்நாட்டவர் கடன் பெறுவதற்கு ஒரேயொரு மார்க்கமாக அமைந்தனர். இவர்கள்தானும் குறுகிய கால வர்த்தக மூலதனப் பணம் கொடுக்க முன்வந்தனரேயன்றி, நிலத்தில் முதலீடு செய் வதற்கு நீண்ட காலக் கடன் கொடுக்க விரும்பவில்லை.
1870 தொடக்கம் தென்னைப் பிரயோசன உற்பத்தி, ஏற்றுமதி வர்த்தகத்தில், விசேஷமாக எண்ணெயும் கொப்பராவும் முக்கியமான இடம் பெறத் தொடங்கின. இவற்றின் ஏற்றுமதி 1870 இல் 45 வீதத்திலிருந்து, 1880 இல் 9 வீதமாகவும், 1890 இல் 15 வீதமா கவும், 1900 இல் 17 வீதமாகவும், 1910 இல் 245 வீதம கவும் அதிகரித்தது. இதற்கொப்ப தென்னை பயிரிடப்பட்ட நிலத்தின் விஸ்தீரணமும் 1860 இல் 2 இலட்சம் ஏக்கரிலிருந்து 1900இல் ஆறு",

Page 110
206 இலங்கைச் சரித்திரம்
இலட்சமாகவும், 1910 இல் எட்டு இலட்சமாகவும் உயர்ந்தது. இவற்றுள் 10 வீதம் மாத்திரமே பெருந் தோட்ட முதலாளிகளின் கைகளிலிருந்தன. மிகுதித் தோட்டங்கள் சுதேசிகளின் கைகளி லிருந்தன. ''
முதலாம் உலகப் போர்க் காலத்தில் தெங்குப் பொருள் ஏற்று மதி, கப்பற் போக்குவரத்துக் குறைவால் அதிகம் பாதிக்கப்பட்டது. இதன் பிரதான நுகர்வு நாடு பிரித்தானியாவாக இருந்தமையினுல், போக்குவரத்துக் குறைய, நுகர்வும் குறைந்தது. 1914-18 ஆண்டு களில் விலை வீழ்ச்சி 50 வீதம் எனக் கணக்கிடப்பட்டது. 1913 இல் 207 வீதத்திலிருந்து, 1917 இல் 106 வீதமாக தெங்கு ஏற்று மதியின் பெறுமதி வீழ்ச்சியடைந்தது. இந்நிலையில் சிறு தோட்டக் காரர் இறப்பர் உற்பத்திக்கு மாறினர்.
போரின் பின்னர் போக்கு வரத்துச் சுலபமாகியதால் தெங்குப் பொருள்களின் கேள்வி திடீரென அதிகரித்தது. விலைகளும் அதி விரைவாக, உயர்ந்தன. இக்கேள்வியை சுதேச உற்பத்தியாளர் உடனடியாகச் சாதிக்க முடியாமற் போனதால், உயர் விலைகள் 1922 வரை நிலைத்திருந்தன. 1922-30 வரை ஏற்பட்ட மந்த நிலைக் காலத்தில் தெங்கின் விலை, தேயிலை இறப்பர் விலையிலும் கூடுதலான உறுதி பெற்று விளங்கியது.
வினுக்கள்
1. 19 ஆம் நூற்ருண்டில் பிரித்தானியர் எமது பொருளா தாரத்தை எவ்வாறு விருத்தி செய்தனர் ? இவ் விருத்திக்குக் காரணங்கள் தருக. 2. இலங்கையில் கோப்பி, தேயிலை, இறப்பர் தோட்டங்கள்
விருத்தியடைந்ததற்கான காரணங்கள் எவை ? 3, 1850 க்கு ப் பின்னர் தேயிலை, இறப்பர்த் தோட்டங்கள் அபிவிருத்தியடைவதற்கு உதவிபுரிந்த காரணிகள் எவை ? அதன் உடனடியான சமூக விளைவுகள் எவை ? 4. தேயிலைக் கைத்தொழிலின் அபிவிருத்தியை விவரித்து, எமது நாட்டின் வரலாற்றினை அது எங்ங்ணம் வளம்படுத்திற்றென் பதை உதாரணங்களின் மூலம் காட்டுக. 5. இருபதாம் நூற்றண்டில் தேயிலை, இறப்பர், தென்னை ஆகிய
பயிர்த் தோட்டங்கள் வளர்ச்சியடைந்தமையை விபரிக்குக: :

பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையின் விருத்தி 207
இலங்கையில் (அ) சிங்கோன (ஆ) தென்னை (இ) இறப்பர் (ஈ) தேயிலை என்ற தோட்டப் பயிர்ச் செய்கைகளில் இரண் டினைத் தெரிந்து அவை, எக்காலத்தில், எப்பகுதிகளில் நன்கு வளம் பெற்றன என்பதைச் சரித்திர ரீதியாகச் சுருக்கமாகக் கூறுக. ; இலங்கையில் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை வளர்ச்சி யடைந்த முறையினைப் படிமுறைப்படி சுருக்கமாகக் கூறுக. பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை, 19 ஆம் நூற்றண்டில் விரை வாகப் பரந்தமைக்குக் காரணங் கூறுக. 19 ஆம் நூற்றண்டில் இலங்கையில் நடந்தேறிய பொரு ளாதார மாற்றங்களை விவசாயப் புரட்சியென அழைப்பது பொருந்துமா ? உமது விடைக்குக் காரணங் கூறுக. இலங்கையில் தேயிலை அல்லது இறப்பர் பற்றி ஒரு வரலாற் றுக் கட்டுரை வரைக. ܗܝ இலங்கையின் பொருளாதார விருத்திக்கு அடிப்படையா யமைந்த பயிர்களையும் அவற்றின் “வளர்ச்சியையும் விபரிக்குக.

Page 111
அதிகாரம் 12
பொருளாதார விருத்தியும் நாட்டு முன்னேற்றமும் பதினெட்டாம் நூற்றண்டின் இறுதியில் இலங்கையை, பிரித்தானியர், அதன் கேந்திர நிலையத்தின் காரணமாகவே வெற்றி கொண்டனர். ஏடன், பம்பாய், சிங்கப்பூர் போன்று இலங்கையின் துறைமுகங்கள், நீண்ட பிரயாணம் செய்யும் கப்பல்களுக்குத் தேவையான பொருள்களைப் பெற்றுத் தரவும், கடல் மார்க்கங் களை மேற்பார்வை செய்யவும் உதவின. ஆனல், நாளடைவில் இத்தீவின் கேந்திர நிலையத்திலும் பார்க்கப் பொருளரதார நிலைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை அவர்கள் கண்டனர்.
பிரித்தானிய அரசாங்கமும் மக்களும், இந்நாட்டின் செல்வ வளம்
அதன் நிலத்தில்தான் தங்கியிருப்பதை உணர்ந்தனர். தனியார் மூலதனம் தீவில் குவிந்தது. போர்வீரர்களினதும், நிர்வாகிகளி னதும் அடிச்சுவட்டில் தோட்டத்துரைமாரும் வர்த்தகரும் தீவின் மேற் படையெடுத்தனர். கோப்பி, தேயிலை, இறப்பர் தொழில் களின் விருத்தியுடன் தீவின் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் நாளாந்தம் உயர்வு பெறலாயிற்று.
18 ஆம், 19 ஆம் நூற்றண்டுகளில் இங்கிலாந்தில் கைத் தொழிற் புரட்சி துரிதமாக முன்னேறி வந்தது. பிரிட்டனின் கைத்தொழிற் பொருள்களின் வர்த்தகத்தைப் பாதிக்கவல்ல கைத் தொழில்கள் இங்கு நிறுவப்படுவதைத் தடைசெய்யும் வகையில் பிரித்தானிய அரசாங்கம் இத்தீவின் வெளிநாட்டு வர்த்தகம், வரவு செலவுத்திட்டம் முதலியவற்றை அமைத்தது.
அயனமண்டலங்களில் உற்பத்தி செய்யக்கூடிய கோப்பி, தேயிலை, இறப்பர் என்னும் பொருள்களைப் பெருந்தோட்ட முறையில் செய்யுமாறு ஆங்கிலரை ஊக்குவித்து, அத்தொழில்களில் முதலீடு செய்தோர்க்கு நிறைந்த உதவிகளும் அளிக்கப்படலாயின. கண்டி மாவட்டத்தின் செழிப்பான தரையும், நடுத்தரமான சுவாத் தியமும், பிரித்தானிய முதலாளிகளை அங்கு வரவழைத்தன. அங்கு உருவாகிய பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை வர்த்தகம், அந்நியரால் அந்நிய மூலதனத்தையும், அந்நிய தொழிலாளரையும் கொண்டு நடாத்தப்படலாயிற்று அவர்கள் நிலங்களை மலைநாட்டில் வாங்கியும், மூலதனத்தைப் பிரித்தானிய வ்ங்கிகளிடம் கடன்பெற்றும், கூலி 208 . . . . . . . . . . . . . . . .
 

பொருளாதார விருத்தியும் நாட்டு முன்னேற்றமும் 209
யாட்களை இந்தியாவினின்று வரவழைத்தும், பெருந்தோட்டங்களை நிர்மாணித்தனர். இவ்விதமாக இலங்கையின் வியாபாரம், வர்த் தகம், தொழில் துறைகள் யாவற்றையும் ஐரோப்பியர் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். இம்முறையினை இக்காலச் சொல்லியலில் "பொருளாதாரச் சுரண்டல்" என்பர். இம்முறை "சுரண்டப்பட்டோருக்கு' தீமைகளை விளைவித்தது என்று பொது வாகக் கூறப்படினும், அதன் அடிச்சுவட்டில் நன்மைகளும் விளைந்தன என்பதை நாம் மறக்கலாகாது.
ஆங்கிலரின் பொருளாதாரச் சுரண்டல், அவர்களுக்கு முன் சென்ற போர்த்துக்கேயரினதும், ஒல்லாந்தரினதும் முறைகளினின்று பெரிதும் வேறுபட்டுக் காணப்பட்டது. பிந்தியவர்கள், கறுவா வியா பாரத்தின் மூலம் நிறைந்த பொருளீட்டுவதில் கண்ணுங்கருத்துமா யிருந்தார்களேயன்றி, இந்நாட்டில் எவ்விதமான முதலீடுகளையும் செய்தார்களில்லை. மறுபுறம் ஆங்கிலர், தம் பணத்தை முதலீடு செய்து, நாட்டின் பொருளாதாரத்தைப் புது வழிகளில் விருத்திசெய்து அதன்வழியாகவே செல்வத்தை ஈட்டினர். அவர்கள், காடுகளாகவும் தரிசு நிலங்களாகவும் காட்சியளித்த இந்நாட்டு மண்ணைப் பொன் கொழிக்கும் பூமியாக மாற்றியமைத்தனர், போக்குவரத்து வசதிகளை விருத்தி செய்து நாட்டின் பொருளாதாரத்தையும், சமூக வாழ்வையும் வளம் பெறச் செய்தனர். அவர்களுடைய முயற்சியினல் அரசாங்க வருமானம் பன்மடங்கு அதிகரிக்கவே, நாடு பல துறைகளிலும் முன்னேற்றம் பெற்று நலமுடன் விளங்கியது. அரசாங்கமும் பொது நலனுக்காக வைத்திய, சுகாதார நிலையங்களையும், கல்விச் சாலைகளையும் அமைத்துக் கொடுக்கலாயிற்று. எனினும், நாட்டின் உழைப்பில் பெரும் பகுதி வெளியே அனுப்பப்பட்டது.
1. முதலாளித்துவ முறையின் தோற்றம்
பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையின் அடிச்சுவட்டில் தோன்றிய முதலாளித்துவ முறைதான், இலங்கையில் ஒரு புதிய பொருளாதார யுகத்தைத் தோற்றுவித்தது எனத் திட்டவட்டமாகக் கூறலாம். அந்நிய நாட்டவர்கள், உற்பத்தியின் மூலங்களான நிலம், முதலீடு, தொழிலாளர்கள் என்னும் முத்துறைகளின் மேலும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியதன் பயணுகவே, புதுப் பொருளாதார முறை முளை கொண்டு வளர்ச்சியடையத் தொடங்கியதென முன்னர், கண்டோம். இவ்விதமாகத் தோன்றிய சக்திவாய்ந்த இப் பெருந்
1. பக்கம் 158
இ 14

Page 112
2 1 0 இலங்கைச் சரித்திரம்
தோட்ட முறை, நாட்டு மக்களின் தொழில் முறைகளை மாற்றி யமைத்ததுமன்றி சில ஆண்டுகளுக்குள் அரசாங்க வருவாயின் மூன்றி லொரு பகுதியையும் அளிக்கலாயிற்று.
இலங்கையில் "கோப்பி அரசனின்" ஆட்சிக் காலத்துடன் ஆரம்பித்த இம் முதலாளித்துவ முறையானது, அவ்விளைபொருளின் அழிவுடன் மறைந்து விடவில்லை. கோப்பிச் செய்கையின் பயனுக எழுந்த பொருளாதார அமைப்பு, தேயிலைக் காலத்துடன் தொடர்ந்து நீடித்ததுமன்றி, புதிய வளர்ச்சியையும் பெற்றுத் திகழ்ந்தது. 19 ஆம் நூற்ருண்டு முழுவதிலும் தோட்டமுதலாளி களின் பிரச்சினைகளே நாட்டுப் பிரச்சினைகளாகக் கருதப்பட்டன. அவற்றைத் தீர்க்க எடுக்கப்பட்ட முயற்சிகளின் பேருகப் பழையன கழிந்து, புதியன வெகு வேகத்துடன் புகுந்தன.
* தெருக்கள், புகையிரதவீதிகள், வர்த்தக விவசாயம், வளர்ந்து வரும் பணப் பொருளாதாரம், புது வகுப்புக்கள், சுதந்திர இயக்கம், மாறிவரும் சமூக, பொருளாதாரக் கோட்பாடுகள் எனும் நவீன இயக்கங்களைக் கொண்டு திகழ்ந்த 1900 ஆம் ஆண்டு இலங்கையானது, 1830 ஆம் ஆண்டு, எத்துணை அளவிற்கு ஆயிரம்ஆண்டுகட்கு முன் னிருந்த நிலையினின்றுவேறுபட்டதோ,அத்துணை அளவிற்கு வேறுபட்டுக் காணப்பட்டது. முதலாளித்துவ முறையின் வருகையுடன் இயங்க ஆரம் பித்த சக்திகள், எழுபது ஆண்டுகளுக்கு மாத்திரமே தொழிற்பட்ட போதிலும், அவை அக்குறுகிய காலத்தினுள் பொருளாதார முன் னேற்றத்திற்கு விலங்கிட்ட தடைகள் யாவற்றையும், தகர்த்தெறிந்து விட்டன"2
இம் மாற்றங்கள் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவை; ஏனெனில் அவை பழைய பொருளாதார வாழ்க்கை முறைகளைத் தகர்த்து எறிந்ததுமன்றி, நவீன தற்கால வாழ்க்கை முறைகளையும் உண்டு பண்ணின. சுருங்கக் கூறின், இலங்கையின் பொருளாதாரம், மானிய முறை அடிப்படையினின்று, பணமுறையை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ முறையாக நிலைமாறியது. இம்மாற்றத்தினுல் விளைந்த பயன்கள், இங்கிலாந்தில் கைத்தொழிற் புரட்சியினல் ஏற்பட்ட பயன்களுக்கு நிகரானவை எனக்கூறின் மிகையாகாது.
2. I. H. VANDEN DRIESEN "Some Trends in the Economic History of Ceylon in the MODERN
PERIOD-C.J. of H. & S. S. vol. 3. .
No. 1
 
 

பொருளாதார விருத்தியும் நாட்டு முன்னேற்றமும் ”罗及及
ஏற்றுமதிப் பொருளாதாரம் :
தோட்டப் பகுதியில் ஏற்பட்ட இவ்வளர்ச்சி, இலங்கையின் பொருளாதார அமைப்பை அடியோடு மாற்றியமைத்தது. உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யும் விவசாயத்தையே தொழிலாகக் கொண்டிருந்த நாடு, பணப் பயிர்களை விளைவிக்கும் நாடாக உருமாறியது. இலங்கையின் பொருளாதாரம், ஏற்றுமதிப் பொருளா தாரமாக மாறி, நாட்டு வருமானத்தின் பெரும் பகுதி, விளைபொருள் களைப் பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் பெறும் நிலை எழுந்தது. உலகச் சந்தையில் விளைபொருள்களின் விலைகளில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளினல் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட லாயிற்று. தோட்டப் பயிர்ச்செய்கையில் ஏற்படும் வளர்ச்சி, தேய்வு என்பன, இந்நாட்டு மக்களை நேரடியாகப் பாதிக்கலாயின.
1860 ஐ அடுத்த ஆண்டுகளில் ஏற்றுமதிப் பொருள்களில் கோப்பி 60 விகிதமாக இருந்தது. முதலாம் உலகப்போரின் முடிவில் தேயிலை, இறப்பர், தெங்குப் பொருள்கள் என்பன இலங்கையின் ஏற்றுமதியில் 90 விகிதமாக அமைந்தன. இந்நிலை அன்று தொடங்கி இன்றுவரை தொடர்ச்சியாக நிலைத்து வருகின்றது.
கிராமிய விவசாயப் பொருளாதாரம்:
மலைநாட்டில் விருத்தியடைந்த இப்பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை, இலங்கையின் விவசாயக் குடியானவர்களின் பொருளாதார நிலைகளில் அடிப்படையான மாற்றங்களை ஏற்படுத்தவில்லை என்பது நோக்கற்பாலது. புதுப் பொருளாதார முறை, குடியானவர்களின் மானிய முறைச் சமூக, பொருளாதார அமைப்புக்களைப் பாதித்த பொழுதிலும், அம்முறையினை முற்ருக அழித்து விடமுடியவில்லை. இதனுல் இலங்கையின் பொருளாதாரம் இரு வகைப்பட்டதாக அமைந்தது. ஒருபுறம் தோட்டங்களையும், வர்த்தகத்தையும் அடிப் படையாகக் கொண்ட முதலாளித்துவ முறையும், மறுபுறம் விவசா யத்தை மாத்திரமே அடிப்படையாகக் கொண்ட பாமர மக்களின் கிராமப்புற முறையும் அக்கம் பக்கமாக இடம் பெறலாயின.
2. தோட்ட முதலாளிகளின் பிரச்சினைகளும் அவற்றின் தீர்வும்
1835 தொடக்கம் உற்பத்தியின் மூலங்களான நிலம், முதலீடு,
தொழிலாளர் என்னும் மூன்று துறைகளின் மேலும் அந்நியர் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியதன் காரணமாகவே இலங்கையில்
臧*

Page 113
212 இலங்கைச் சரித்திரம்
முதலாளித்துவ முறை உருப்பெற்றது. பெருந்தோட்டங்களின் விருத்தியினுல் மலைநாடெங்கணும் கோப்பி பயிரிடப்படவே, கண்டி யருக்கு நிலமில்லாப் பிரச்சினை எழுந்தது. வளர்ந்து வரும் விவசா யத்துக்கும், பெருகிவரும் வணிகத்துக்கும் துணையாக வங்கிகள் நிறுவப்பட்டன. முதலுடையோர் கூலிக்குத் தொழிலாளரை இந்தியாவினின்று வரவழைத்து உற்பத்தியைப் பெருக்கினர். இம்
மாற்றங்கள் யாவற்றையும் முன்னர் கண்டோம்.
1850 க்குப் பின்னர் கோப்பிச் செய்கை பொற் காலத்துட் பிரவேசிக்கவே, தோட்டத் துரைமாரை எதிர்நோக்கிய பிரச்சினைகள், முற்காலத்தில் எழுந்தவையிலும் பார்க்கப் பன்மடங்கு மிகுதியாகக் காணப்பட்டன. எனினும் தோட்ட முதலாளிகள், இப்பிரச்சினை களைத் துணிவுடனும், மதிநுட்பத்துடனும் தீர்க்க வழிவகைகளைக் கையாண்டமையினலேயே, கோப்பி முன்னையிலும் கூடுதலான வேகத்துடன் வளர்ச்சியடைய முடிந்தது. அது மாத்திரமன்றி, கோப்பி அழிந்தொழிந்து போன பொழுது அதன் சாம்பர்களிலிருந்து புதுப்பயிர்கள் முன்னையிலும் கூடுதலான சித்தியுடன் விளைவிக்க
ஆரம்பிக்கப்பட்டன.
1. [36v Lih:
சிங்கள அரசர்கள் காலத்தில் அரசனுக்குச் சொந்தமாக விருந்த கபாடகம் நிலங்களும், கிராமங்களின் பொது நிலங்களும் 1835 தொடக்கம் 1847 வரை கோப்பியின் வளர்ச்சியினுல் தோட்டத் துரைமாரின் தனி உடமைகளாயின. கண்டிப் பிரதேசங் களில், நிலவுரிமைகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. நெல் விளைவிக்கப்பட்ட காணிகள் தப்பின. ஆனல் உப உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யும் உரிமைகளும், பொது நிலங்களில் மந்தை மேய்க்கும் உரிமைகளும் பறிபோயின. குடியானவர்களுக்குப் பயனுடைய இந்நிலங்களைத் தோட்டத் துரைமார் அபகரித்தனர்.
1852 தொடக்கம் கோப்பி விலைகள் கிரமமாக உயர்ந்து, ஆண்டுதோறும் கோப்பியிலிருந்து பெறப்பட்ட ஆதாயம் அதிகரித்து வந்தது. பயிரிடப்பட்ட நிலங்கள் அதிகரித்தன. வர்த்தகம் பெருகியது. அதிகரித்த வருமானம், மீண்டும் தோட்டங்களில் முதலீடு செய்யப்பட்டது. இக்காலத்தில் பழைய தோட்டங்கள் விஸ்தரிக்க்கப்பட்டன, புதுத் தோட்டங்கள் திறக்கப்பட்டன. கேர்ப்பிச் செய்கைக்குப் பொருத்தமற்ற உயர் பிரதேசங்களில்தொலொஸ்ப்ாகே, திம்புள, டிக்கோயா, மஸ்கெலியா எனும்

பொருளாதார விருத்தியும் நாட்டு முன்னேற்றமும் 23
பகுதிகளில் கோப்பி பயிரிடப்பட்ட நிலம், நான்கு ஆண்டுகளில் இருமடங்காகப் பெருகியது. நுவரேலியாவில் 1874 இல் 84,000 ஏக்கர் நிலத்தில் கோப்பி பயிரிடப்பட்டது.
நில அளவையாளர்களால் காணிகள் அளந்து, எல்லைகளிடப் பட்டவுடன் அவை விற்பனையாயின. ஆண்டுதோறும் விசாலமான நிலங்கள், அதிகரித்த விலைகளுக்கு விற்பனை செய்யப்பட்டன. இருபது ஆண்டுகளுக்கு முன் ஏக்கர் இரண்டு பவுணுக்கு விலைப்பட்ட காணிகளை இப்போது 15, 20, 25 பவுண் வீதம் வாங்கத், தோட்டத் துரைமார் போட்டியிட்டனர்.1
கட்டுப்பாடின்றிக் காடுகள் அழிக்கப்பட்டுத் தோட்டங்கள் திறக்கப்பட்டதனல் மழைவீழ்ச்சி குறையலாம் என்றும், மண்ணரிப் பினல் கெடுதிகள் விளையுமென்றும், தாவர ஆராய்ச்சி நிலையம் அரசாங்கத்திற்கு ஒர் அபாய அறிவிப்பை 1870 இல் விடுத்தது. இதன் பயணுக 1874 இல் ஆள்பதி கிறகரி, வனபரிபாலனச் சட்டத்தை இயற்றிப் புதுத்தோட்டங்கள் திறக்கப்படுவதை அரசாங்கக் கட்டுப்பாட்டின் கீழ்க்கொண்டுவந்தார். 1880 க்குப் பின் தேயிலைத் தோட்டங்கள் உயர் மலைப்பிரதேசங்களை நாடிச் செல்லவே, கோப்பி ப் பிரதேசத்துக்காக அமைக்கப்பட்ட இச்சட்டம் வலியிழந்து போயிற்று. மீண்டும் முன்னர் போலவே தேயிலையைப் புது நிலங்களில் பயிரிடுவ தற்கான போட்டி அதிகரித்தது 2. தொழிலாளர்:
1878 இல் 275,000 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட கோப்பி 1880 தொடக்கம் வீழ்ச்சியடையத் தொடங்கி, 1889 இல் 50,000 ஏக்கர் நிலத்தில் மாத்திரம் செய்கை பண்ணப்பட்டது. மறுபுறம் கோப்பியின் இவ்வீழ்ச்சிக்குப் பதிலாக தேயிலைத் தொழில் துரித மாக விருத்தியடைந்தது. 1873 இல் தேயிலை பயிரிடப்பட்ட நிலத்தின் பரப்பளவு 250 ஏக்கர் ஆகும். இது 1884 இல் 70,000 ஏக்கராகவும், 1890 இல் 220,000 ஏக்கராகவும், 1904 இல் 388,753 ஏக்கராகவும் அதிகரித்தது.
இவ்விதமாக பயிர்ச்செய்கை, கோப்பியிலிருந்து தேயிலைக்கு
மாறிய பொழுது, தோட்டத் துரைமாருக்குத் தேவைப்பட்ட கூலி யாளர் தொகையிலும் பெரும் மாற்றம் நிகழ்ந்தது. கோப்பிச்
1. B. Bastianpillai-"From Coffee to Tea in Ceylon-The Vicissi
tudes of a Colony's Plantation Economy-C.J. of H. & S.S.
Vol. 7 No. 1. P. 50 . . . . . . . . . ."
g) 14 A ' . '

Page 114
214 இலங்கைச் சரித்திரம்
செய்கைக்குத் தேவைப்பட்ட கூலியாட்களின் எண்ணிக்கை குறை வாகவே இருந்தது. ஆனல் தேயிலை, இறப்பர்த் தோட்டங் களுக்கு வருடம் முழுவதிலும் குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்யக்கூடிய பெருமளவு கூலியாட்கள் தேவைப்பட்டதுமன்றி, அவர்களை, நிரந்தர வாசிகளாகத் தோட்டங்களில் வசிக்க வசதி செய்து கொடுக்கவும் வேண்டியதாயிற்று. பின்வரும் புள்ளி விப ரங்கள் கூலியாட்களின் அதிகரிப்பைக் காட்டும்.
ஆண்டு தோட்டங்களின் அதிகரிப்பு விகிதம்
மொத்தச் சனத்தொகை
1871 123,654 1881 206,495 82,841 67 1891 262,262 55,767 27 1901 441, 601 I ሃ9,889 , 68 • 4 I9 513,467 71,866 633 1921 568,850 55, 383 108 1931 790, 376 221,526 38.9
தேயிலைத் தோட்டங்கள் பெருகவே, தோட்டத் தொழிலா எண்ணிக்கையும் பெருகியதை இவ்விபரங்களிலிருந்து காணலாம். இதற்குத் துணைபுரிந்த ஒரு காரணம், பெண்களும், பிள்ளைகளும், குறைந்த சம்பளங்களில், கொழுந்தெடுத்தல், தரம் பிரித்தல் போன்ற வேலைகளுக்கு அமர்த்தப்பட்டமையாகும்.
தோட்டத் தொழிலாளர் பிரச்சினையில் அரசாங்கம் நீண்ட கால
மாகத் தலையிடாக் கொள்கையைக் கடைப்பிடித்து வந்தது. கூலி
யாட்களை இந்தியாவில் திரட்டுதல், அவர்களைத் தோட்டங்களுக்கு அனுப்புதல், அவர்களின் வேலை நிலைகள், சம்பளங்கள் எனும் பிரச் சினைகளின் தீர்வு, துரைமார்களின் கைகளில் விடப்பட்டன. ஆரம் பந்தொட்டு, இத்தொழிலாளர் பிரச்சினையில் ஈடுபட அரசாங்கம் மறுத்தது. எனினும் இப்பிரச்சினையின் முக்கியத்துவத்தை உணர்ந்த அரசாங்கம், கூலியாட்களுக்குச் சில உதவிகளைச் செய்ய முன்வந்தது. ஆள்பதி உவாட், கூலியாட்களைக் கொண்டு வருவதற்கு மன்னருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையில் வள்ளப் போக்குவரத்தை ஏற்படுத் தினுர், ஆள்பதி கிறகரி மன்னுரிலிருந்து மதவாச்சி வரை ஒரு தெருப் பாதையை அமைத்தார்.
அரசாங்கம் தோட்ட முதலாளிகளுக்குச் சாதகமாக, தொழி லாளரிடமிருந்து, முறையான வேலைவாங்க வசதி செய்யும் பொருட்டு, 1865-ஆம் ஆண்டின் பதினேராம் இலக்கக் கட்டளையை
** " .

பொருளாதார விருத்தியும் நாட்டு முன்னேற்றமும்
இயற்றியது. அடுத்துத் தோட்டத்துரைமார் தம் தோட்டங் களிலுள்ள கூலியாட்களுக்கு முறையான வைத்திய வசதிகளைப் பெற் றுத் தரவேண்டுமென்ற நோக்குடன் 1872 இல், 'வைத்திய தேவைகள் கட்டளையை' (Medical Wants Ordinance) இயற்றியது இச்சட்டம், அரசாங்கம், தோட்டப் பிரதேசங்களில், வைத்தியசாலைகளையமைத்து, அவற்றை நடாத்துவதற்கான செலவு களைத் துரைமாரிடம் அறவிடவும், கூலியாட்க்ளின் வசிப்பிடங்க்ளை, அரசாங்க வைத்திய அதிகாரிகளைக்கொண்டு மேற்பார்வுை செய்யவும் வழிவகை செய்தது.
இருபதாம் நூற்ருண்டின் ஆரம்பத்துடன் அரசாங்கம், கூலி யாட்கள் பிரச்சினையில் கூடுதலான அக்கறையும் சிரத்தையும் எடுக்கத் தொடங்கியது. இந்தியக் கூலியாட்கள், அம்மை, பேதி போன்ற தொற்று நோய்களைக் கொண்டு வந்து பரப்பாமல் தடை செய்ய அரசாங்கம் அவர்களின் தங்குதலுக்கென மண்டபத்தில் ஒரு முகாமை ஏற்படுத்திற்று.
அடுத்து, அரசாங்கம் தென்னிந்தியத் தொழிலாளரைத் திரட்டும் பொறுப்பைத் தானே ஏற்று நடாத்த முற்பட்டது. கண்காணி முறையின் கீழ், கூலியாட்கள் அடிமைகள் போல் நடாத்தப்பட்ட இன்னல்களைப் போக்குவதற்காக இலங்கை அரசாங்கம், 1902 இல் * துண்டு' முறையை ஏற்படுத்தியது. தோட்டங்களினதும், அவை யிருந்த மாவட்டங்களினதும் பெயர்கள் பதியப்பட்ட துண்டுகளை அரசாங்கம் தோட்டங்களுக்கு விற்றது. கண்காணிகள் இச்சீட்டுக்களைக் கொண்டு இந்தியா சென்றனர். இந்தியாவில் சீட்டுக்களைப் பெற்ற தொழிலாளர், இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பானர்கள். அவர்கள் தம் தோட்டங்களைப் போயடையும் வரையுள்ள சகல செலவு களையும் அரசாங்கமே ஏற்றுக் கொண்டது. அச்செலவுகளைத் தோட்ட முதலாளிகள் தொழிலாளரிடம் அறவிட்டு அரசாங்கத்துக்கு அனுப்பி வைத்தனர்.
1904 இல், கரையோரத் திரட்டு நிலையம் (Coast Agency) திருச்சினப்பள்ளியில் நிறுவப்பட்டது. பற்றுார் (Battur), மாயவரம், திண்டிக்கல், மதுரை, திருநெல்வேலி எனும் ஐந்து இடங்களில் உதவி நிலையங்கள் நிறுவப்பட்டன. இலங்கை அரசாங்கத்தின் தொழில் ஆணையாளர்கள், தொழிலாளரைத் திரட்டி இலங்கைக்கு அனுப்பினர். 1915 இல் இலங்கையும் இந்தியாவும் புகையிரத வீதியினல் இணைக்கப்பட்டதனலும், மண்டபத்தில் முகாம் அமைக்கப்பட்டதனலும் போக்கு வரத்து மிகவும் சுலபமாயிற்று.
; ܊ ܐ ܕ

Page 115
2 1 Ꮾ . இலங்கைச் சரித்திர்ம்
தொழிற் சங்க இயக்கத்தின் ஆரம்பம்:
இந்தியத் தோட்டத் தொழிலாளரை எதிர்நோக்கிய இன்னல் களுக்கும், அவர்கள் அனுபவித்த துன்பங்களுக்கும் பரிகாரம் தேடு வதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளிலிருந்துதான் இலங்கையில் தொழிற் சங்க இயக்கம் ஆரம்பித்தது.
இலங்கையில் முதலாவது தொழிலாளர் சங்கம் 1919 ஜூன் 25ஆம் நாள், சேர். பொன்னம்பலம் அருணுசலம் அவர்களால் அங்குரார்ப் பணம் செய்யப்பட்டது. அச்சங்கத்தின் பெயர் இலங்கைத் தொழி Guirgitri Gay LDITLSaició5d fish (Ceylon Workers' Welfare League) என்பதாகும். சேர். அருளுசலம் அவர்கள் அதன் முதற் தலைவராகவும் திரு. பெரி சுந்தரம் அதன் முதல் செயலாளராகவும் தெரிவு செய்யப் பட்டனர். சங்கத்தின் நோக்கம், அதன் விதிகளில் பின்வருமாறு கூறப்பட்டது- இலங்கையிலுள்ள தொழிலாள வர்க்கங்களின் நலன் களைப் பாதுகாத்தலும், அவர்களது சேமாபிவிருத்தியை அதிகரித் தலும், அவர்களது தொழில் நிலைகளைச் சீர்திருத்தலும், அன்னரது லெளகீக, ஆத்மீக அபிவிருத்திக்கு உதவுதலும், மக்களின் சமூக, பொருளாதார நிலைமைகள் பற்றிய பிரச்சினைகளைக் கற்றறிதலை ஊக்குவித்தலும்' ஆகும்.
1920 இல் சேர், அருணுசலம், தமது தொழிலாளர் சங்கத்தை விஸ்தரித்து இலங்கைத் தொழிலாளர் சம்மேளனம் (The Ceylon Workers' Federation) எனும் இயக்கத்தைத் தோற்றுவித்தார். இச்சங்கத்தின் முயற்சிகளின் பெரும் பயனகவே, தொழிலாளர் சட்டத்தில் இருந்த தொழிலாளரைத் தண்டிக்கும் ஏற்பாடுகள் நீக்கப்பட்டன. இந்தியத் தொழிலாளருக்குப் பாதகமான முறையில் நிலவி வந்த 'துண்டு முறையினை ஒழிப்பதற்கு சங்கம் பெரிதும் போராடிற்று. 1921 இல் தொழிலாள இயக்க வீரர்களில் ஒரு வரான கேர்ணல் ஜோசையா வெட்ஜ்வுட் (Col. Josiah Wedgewood) இலங்கை வந்து, பல விரிவுரைகள் நிகழ்த்தினர். அவ்வாண்டு, அவர் பிரித்தானிய பாராளுமன்றத்தில், சேர். அருணசலம் அவர் களுக்கு ஒரு புகழ்மாலை சூட்டினர். ஜூலை 14 இல் அவர் பேசும் பொழுது கூறியதாவது: 'இலங்கையில் ஏறக்குறைய அடிமைகள் போல் வசித்துவரும் தொழிலாளர் சார்பில் இருவர் பெரும் தொண்டாற்றி வருகின்றனர். ஒருவர் வண. C. F. அன்ட்றுாஸ்; மற்றவர் முன்னைநாள் அரசாங்க ஊழியரான சேர். P. அருணுசலம். தொழிலாளரின் நிலைகளுக்குப் பரிகாரம் தேடும் அவர், தமது நாட்டுத் தொழிலாளருள் ஒரு பெரும் பகுதியினருக்கு விடுதலையைத் தேடித் தந்திருக்கின்றர். அவருக்கு இச்சபையில் எனது நல்வாழ்த்
 

பொருளாதார விருத்தியும் நாட்டு முன்னேற்றமும் 21 7
துக்களை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்’ எனக் கூறி முடித் தார். சேர். அருணுசலம் அவர்களது முயற்சியினதும், பெரும் பாலும் இந்திய அரசாங்கத்தின் வற்புறுத்தலினதும் பயனக, 1921 இல் "துண்டு முறை ஒழிக்கப்படலாயிற்று. எனினும், நடுத்தர வகுப்பின் தலைவர்களினுல் நடாத்தப்பட்ட இத்தொழி லாளர் இயக்கத்தின் பயணுக, தொழிற் சங்கங்கள் இலங்கையில் தோன்றி வளர்ந்தன என்று கூறிவிட முடியாது.
இந்தியத் தொழிலாளரின் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு காணும் முதற் தொழிற் சங்கம், பத்திரிகை ஆசிரியரும், சட்டக்கழக உறுப்பினருமாக இருந்த திரு. K. நடேச ஐயர் என்பவரால் ஆரம் பிச்கப்பட்டது. 1929 அளவில் அவர் அகில இலங்கை இந்தியத் தோட்டத் தொழிலாளர் சம்மேளனத்தை அமைத்துத் தொண் டாற்றினர். பின்பு அவர், இலங்கை இந்தியத் தொழிலாளர் சம்மேளனத்தை நிறுவினர்.
இலங்கைத் தொழிற் சங்கம்:
1922 ஒக்டோபர் மாதம் 10 ஆம் நாள் திரு. A. E. குணசிங்க என்பவரின் பெரு முயற்சியினுல் இலங்கைத் தொழிற் சங்கம் (Ceylon Labour Union) நிறுவப்பட்டது. இச்சங்கம் கொழும்பிலும் ஏனைய நகரங்களிலும் பல பிரசார இயக்கங்களை நடாத்தி தொழிலாளர் மத்தியில் ஒரு புத்துணர்ச்சியைத் தட்டி எழுப்பிற்று.
1923 பெப்ரவரி 15 ஆம் நாள், புகையிரதத் தொழிலாளர் மத்தியில் எழுந்த வேலை நிறுத்தம், விரைவில் துறைமுகம், வெள்ளவத்தை மில்ஸ், கொழும்பு பொறியியல் கம்பனிகள் (வாக்கர்ஸ், பிறவுண்ஸ்), மாநகர சங்கம் ஆதியாம் வேலைத்தலங் களுக்குப் பரவி, மொத்தம் 15,000 க்கு மேற்பட்ட தொழிலாளர் அதில் பங்குபற்றலாயினர். அவ்வாண்டு மார்ச் மாதம் வேலை நிறுத்தம் முடிவடைந்தபொழுது, குணசிங்காவும் அவரது தொழிற் சங்கமும், தொழிலாளர் இயக்கத்தின் முன்னணியில் நின்றனர். நீர்கொழும்பு, நாவலப்பிட்டி, பதுளை போன்ற மாவட்டங்களில் கிளைச் சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டன, 1925 இல் அரசாங்கமும் தனியார்துறை முதலாளிகளும் தொழிலாளரின் வேதனங்களை 20 விகிதம் அதிகரிக்க உடன்பட்டனர்.
1926, 1927 எனும் ஆண்டுகளிலும் பல வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. இவை தாம், தொழிலாளர் ஒற்றுமையாக நேர் நடவடிக்கைகளில் இறங்கிய முதல் இயக்கங்களாகும். 1928 இல்

Page 116
2 1 8. இலங்கைச் சரித்திரம்
அகில இலங்கை தொழிற் சங்க மாசபை (Al-Ceylon Trade Union Congress) நிறுவப்பட்டபொழுது, 40,000 அங்கத்தினரைக் கொண்ட 22 தொழிற் சங்கங்கள் அதில் ஒன்று சேர்ந்தன.
3. முதலீடு :
கோப்பித் தொழிலை அழித்த கோப்பிப் புழு, 1851 இல் நிறுவப் பட்ட ஒறியண்டல் வங்கியையும் பீடித்தது. 1884இல் ‘வேலைநிறுத்தம் எங்கும் பரவியது. வங்கியின் கொழும்புக் காரியாலத்தை, பீதியடைந்த வைப்புக்கர்க் உடையவர்களும், கடதாசி நாணய உடைமையாளர் களும் சூழ்ந்து கொண்டனர். அவர்கள் வங்கியின் கதவுகளை உடைத்துத் திறப்பதை இராணுவப் படையினரின் சமூகந்தான் தடுத்தது, ' என எழுதினர் E. H. லோறன்ஸ். தீவின் ஆள்பதி சேர், ஆத்தர்கோடன் தலையிட்டு, வங்கியின் கடதாசி நாணயங்களுக்குப் பணம் செலுத்துவதாக உத்தரவாதம் அளித்ததால் நிலைமை காப்பாற்றப்பட்டது. வங்கியின் பங்குக்காரர் தமது முதல்கள் முழுவதையும் இழந்தனர். இச்சம்பவத்தினல் கிடைத்த அனுபவம், வங்கிகளுக்கு, வெப்ப வலயப் பயிர்ச் செய்கையிலுள்ள ஆபத்துக் களுக்கு ஒர் உன்னத பாடமாக அமைந்தது.
இதன் பின்பு தெற்கு, கிழக்காசிய நாடுகளில் இயங்கி வந்த சில வங்கிகள் இலங்கையிலும் கிளைகளை நிறுவின. மேர்க்கன் ரைல் வங்கி (Mercantile Bank), 15666tai aliii.5) (National Bank), Fril "LL". வங்கி (Chartered Bank) ஹொங் கொங் அன்ட் ஷங்ஹாய் வங்கி, (Hongkong and Shanghai Bank) GTait LIGOTGylf air Gori FF Gi) Liaist வங்கி (Eastern Bank), பி. அன்ட. ஒ. (P & O.) வங்கி ஆகியனவும் இங்கு கிளைகளை நிறுவின. பல இந்திய வங்கிகளும் கிளைகளைத் திறந்தன.
இக்காலத்தில் பெருகிவந்த தென்னந்தோட்டங்களிலும் இறப்பர்த் தோட்டங்களிலும் முதலீடு செய்த இலங்கையர், இத் தகைய வங்கிகளினின்று, பண உதவிபெற முடியாமற் போயிற்று. வம்சாவழிப் பணவர்த்தகர்களான தென்னிந்திய இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த செட்டிகள், இந்திய வங்கிகளினின்று பணம் பெற்றுக் கூடுதலான வட்டிக்கு இலங்கையருக்குக் கடன் கொடுத்தனர் 'அவர்களில்லாதிருந்தால் இலங்கையின் செல்வநிலை இன்றுள்ள நிலைக்கு வந்திருக்க முடியாது' என C. B. A. டயஸ் என்னும் பிரபல்ய இலங்சைத் தோட்ட முதலாளி 1934 இல் வங்கி விசாரணைச் சபையின்முன் சாட்சியமளித்தார்.
1939 இல் இலங்கை வங்கி நிறுவப்பட்ட வரலாற்றினைப் பதினைந்தாம் அதிகாரத்தில் காண்க.

பொருளாதார விருத்தியும் நாட்டு முன்னேற்றமும் 21朗
3. போக்குவரத்து வசதிகளின் விருத்தி தெருக்கள் :
ஆள்பதி ஹோட்டன் தொடங்கிய தோட்டப் பிரதேசங் களுக்குத் தெருக்களைத் திறக்கும் முயற்சி, இக்காலத்திலும் தொடர்ந்து நடைபெற்று வற்தது. தோட்டங்களின் அபிவிருத்தியில் அதிக கவன மும் சிரத்தையும் காட்டிய சர். ஜோர்ஜ் அன்டர்சன் சர். ஹென்றி உவாட் சர். ஹேர்க்கியூலிஸ் ருெபின்சன் எனும் ஆள்பதிகள் தெருக் களை அமைக்கும் விடயத்தில் முன்னிலும் கூடுதலான ஊக்கம் காட்டினர்.
1847-ல் ஏற்பட்ட பொருளாதார மந்தத்தினுலும் 1848 இல் உண்டான் கண்டிக் கலகத்தின் காரணமாகவும் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த தெருக்கள் அமைக்கும் வேலையை, அன்டர்சன் மீண்டும் ஆரம்பித்து வைத்தார். அவரது காலந்தொட்டு அமைவு பெற்ற பிரதான வீதிகளாவன : கொழும்பு-அவிசாவலை-இரத்தினபுரி-புலுத் தொட்ட வீதி, காலி -பத்தேகம வீதி, கழுத்துறை-அகலவத்தை வீதி, நீர்கொழும்பு-வெயாங்கொடை வீதி, கம்பளை-கிணிகத்ஹேனயட்டியாந்தோட்டை வீதி, நாவலப்பிட்டிய-கொத்மலை வீதி, மாவ னல்லை-அரநாயக்கா வீதி, கினிகத்ஹேன-டிக்கோயா வீதி, இரத்தின புரி-பெல்மதுளை-ஹப்புத்தளை-பதுளை-மட்டக்களப்பு வீதி என்பன Gf
கிறெகரி, தம்புளையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கும் திருகோண மலைக்கும் சென்ற காட்டுப்பாதைகள் போன்ற தெருக்களைப் பெரும் வீதிகளாக அமைத்தார். இந்நெடுந் தெருவிலிருந்து அநுராதபுரிபுத்தளம், மாங்குளம்-முல்லைத்தீவு, மதவாச்சி-மன்னர் எனும் மூன்று கிளைகள் அமைக்கப்பட்டன.
இக்காலத்தில் தெருக்களின் அமைப்பு முறைகளில் பல மாற் றங்கள் நிகழ்ந்தன. முதல் அமைக்கப் பெற்ற வீதிகள், துப்புரவு செய்யப்பட்ட ஒடுக்கமான காட்டுப்பாதைகள் போலிருந்தன. இவ் வீதிகள், அதிகரித்துவந்த வண்டிகளின் இரும்புச் சில்லுகளின் அதிக மான பாரத்தினுல் விரைவில் பழுதடைந்துபோயின. எனவே 1841இல் கொழும்பு-கண்டி வீதிக்குக் கல்லிடப்பட்டது. இதனல் கொழும்பு சென்று திரும்புவதற்கு எடுத்த காலம் நாற்பது நாட்களி லிருந்து எட்டு நாட்களாகக் குறைந்தது. 1850 தொடக்கம்,

Page 117
220 இலங்கைச் சரித்திரம்
இலங்கை
gr向G5年酶g° பருத்தித் துறை தெருக்கள்
9 SY
* د قد معاچ`""ناتان nنه. |
sv) قوف سمت“
 

பொருளாதார விருத்தியும் நாட்டு முன்னேற்றமும் 22.
தெருக்கள் அகலமாகவும் ஆழமாகவும் அகழ்ந்து கல்லிடப்பட்டு, அதற்கு மேல் நான்கு அங்குல உயரத்துக்கு உடைந்த கல்லிடப்பட வேண்டுமென புதுத்திட்டம் ஆக்கப்பட்டது.
1857-58 இல் நிர்மாணிக்கப் பெற்ற அரசாங்கத் தொழிற்சாலை (Government Factory), தெருக்களில் தேவையான இடங்களில் பாலங்களை அமைக்கும் வேலையைப் பொறுப்பேற்றது. 1884 இல், பொது மராமத்து இலாக்காவின் தலைமையதிகாரியான திரு. மக் 1960 pL (Macbright), LDś35Lib வகுத்தமுறையில் தெருக்களை அமைக்கும் முறையினை இலங்கையில் ஆரம்பித்து வைத்தார். இப்புது முறையின் உபயோகத்தினுல் தெருக்களைப் பழுதுபார்க்கும் வேலையின் செலவு குறிப்பிட்டளவு குறைந்தது. 1891 இல், தெருக்களின் மேற் பரப்பை உறுதியாக அமைப்பதற்குப் பத்துத் தொன் நிறையுடைய உறுளைகள் (Rollers) பாவனைக்கு வந்தன.
இருபதாம் நூற்றண்டின் ஆரம்பத்துடன் போக்குவரத்துச் சாதனங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. முதல் மோட்டார் வாகனம் 1902 இல் பெப்ரவரியில் இலங்கையில் வந்திறங்கியது. முதலாவது உலகப்போரின் முடிவில் 2000 கார்கள் தீவின் வீதிகளில் காணப்பட்டன. 1939 இல் பதிவு செய்யப்பட்ட கார்களின் எண் ணிக்கை 31,164 ஆயிற்று. வாகனங்களின் பெருக்கத்துக்கு ஏற்ற தாகப் பெற்ருேல் இறக்குமதியும் துரிதமாக அதிகரித்தது. இறக்கு மதி, 1923 இல் 20 இலட்சம் கலனிலிருந்து 1939 இல் 120 இலட் சமாக அதிகரித்தது.
1910 தொடக்கம் பஸ் வண்டிகளும் லொறிகளும், ஆட்களையும் பொருள்களையும் ஏற்றவும் இறக்கவும் உபயோகிக்க ஆரம்பித்தன. முதல் பஸ்சேவை கொழும்புக்கும் சிலாபத்துக்குமிடையே தொடங் கியது. பஸ்களின் எண்ணிக்கை 1922 இல் 217, 1925 இல் 1444, 1929 இல் 2694 ஆக அதிகரித்தன. பஸ் சேவைகளின் பல அம்சங் களையும் கட்டுப்படுத்தச் சட்டங்கள் 1927 முதல் படிப்படியாக இயற் றப்பட்டன. பஸ்கள் ஒடும் பாதைகள், நேர அட்டவணைகள். அதி குறைந்த கட்டணங்கள், சேவையாளர் 'வேதனங்கள் எனும் விடயங்கள் பற்றி சட்டங்கள் படிப்படியாக இயற்றப்பட்டன. இலங்கைப் புகையிரதச் சேவை:
உலகத்திலே முதன் முதலாக இங்கிலாந்திலேதான் புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன. அந்த நாட்டிலேதான் புகையிர தங்களில் உபயோகிக்கும் நீராவி எந்திரத்தை ஜோர்ஜ் ஸ்ரீபன்சன்
H'

Page 118
222 இலங்கைச் சரித்திரம்
முதலில் கண்டுபிடித்தார். 1829 இல் இவர் மணித்தியாலம் 30 மைல் ஒடக்கூடிய "முெக்கட்" என்ற பெயர் பெற்ற இரதத்தை அமைத்து அதன் செயற்றிறனை நிரூபித்தார். அடுத்த ஆண்டு இலிவர்ப்பூல்-மன்சஸ்டர் புகையிரதவீதி போக்குவரத்துக்குத் திறக் கப்பட்டது. இதைத் தொடர்ந்து இங்கிலாந்தில் 'புகையிரதப் டிைத்தியம்' உண்டாயிற்று. அங்கு தனிப்பட்ட கம்பனிகள் நிறுவப்பட்டு, புதுவீதிகளை அமைத்து நடாத்தி இலாபத்தைப் \eபற்றன."
ஆரம்பத்தில் இங்கிலாந்தில் புகையிரத வீதிகளை அமைக்கும் வேலையை அரசாங்கம் தனியார் முயற்சியிலேயே விட்டது. இரயில்வேக் கம்பனிகள், காளான்கள் போல நாட்டின் சகல பாகங்களிலும் முளைத்தன. முதல் வைத்திருந்தவர்கள், இரயில்வேக் கம்பனிகளில் தமது முதலைத் துணிந்து முதலீடு செய்ய முன்வந்தனர். அக் கம்பனிகள்தான் பிறநாடுகளில் புகையிரத வீதிகளை அமைப்ப தற்கும், பல உதவிகளைச் செய்வதற்கும் காரணங்களாயின.
புகையிரதக் கம்பனிகளுக்கிடையே போட்டியும், பிணக்கும் ஏற்பட்டதனல், பிரித்தானிய முதலாளிகள் தம் மூலதனத்தைக் கீழ்நாடுகளில் முதலீடு செய்யலாமென எண்ணினர். தூரத்தில் கிடந்த இலங்கைத்தீவு அவர்களது கூர்மையான கண்களுக்கு மிகவும் வாய்ப்பான இடமாகத்தென்ட்டது. 1842 இல் இலங்கைக்கு ஒரு புகையிரத வீதியை அமைக்கும் திட்டம் முதன் முதலாகப் பரிசீலனை செய்யப்பட்டது. ஆனல் அதனைப்பற்றி இலங்கைவாழ் மக்கள் ஒன்றுமே அறியாதவர்களாயிருந்தமையால், அவர்கள் அதில் எவ்வித அக்கறையும் கொள்ளவில்லை. அவர்களது மட்டான தேவைகளை
டாட்டுவண்டிகள் ஈடுசெய்தன.
1850 தொடக்கம் மலைநாடெங்கணும் கோப்பித் தோட்டங்கள் சீக்கிரமாக விருத்தியடைந்து வந்தன. 300 தோட்டங்களின் விளை பொருள்களை கொழும்புக்கு அனுப்புவதற்குப் போதிய வண்டிகளும் எருதுகளும் இருக்கமாட்டாவென்ற அச்சம் தோன்றவே, துரைமார்களும் வியாபாரிகளும் புகையிரத சேவையின் இன்றி யமையாமையை உணரத் தொடங்கினர். தமது தேவைகளைப் பூர்த்தி செய்யவல்ல சாதனம் புகையிரதம் ஒன்று மாத்திரமே என நன் குணர்ந்த அவர்கள், தெருக்களின் விஸ்தரிப்பில் திருப்தியடைய மறுத்தனர். வெகுவிரைவில் புகையிரத சேவை அமைக்கப்பட வேண்டுமென வாதாட ஆரம்பித்தனர்.
 

பொருளாதார விருத்தியும் நாட்டு முன்னேற்றமும் 223
கொழும்பிலிருந்து கண்டிக்கு ஒரு புகையிரத வீதியை அமைப்பதற்கென இங்கிலாந்தில் நிறுவப்பட்ட, 'இலங்கை புகையிரதக் sibu Gof” (The Ceylon Railway Company) egy6T60) ausöTuyb, திட்டங்களையும், செலவுகளையும் கணக்கிட்டு, 1857 இல் அரசாங் கத்துடன் ஓர் ஒப்பந்தம் எழுதியது. ర.
1858 ஆகத்து 3 ஆம் நாள், புகையிரத சேவையின் ஆரம்ப விழாவை உவாட், மிகவும் ஆடம்பரத்துடன் நடாத்தினர். இதன் பின்பு வேலை ஆரம்பித்தபொழுது கணக்கிடப்பட்ட 8 80,000 மிகவும் குறைந்த தொகையென கம்பெனியார் உணர்ந்தனர். இந்நிலையில் சட்டசபையின் குழுவொன்று நிலையைப் பரிசீலனை செய்து, அவ்வொப்பந்தத்தை இரத்துச் செய்யுமாறு சிபார்சு செய்தது. இதன்படி 1861 இல் இலங்கை அரசாங்கம் இவ்வீதியை அமைக்கும் பொறுப்பினை முழுமையாகக் கையேற்கலாயிற்று
1862 ஆம் ஆண்டு இத்திட்டத்தினை நிறைவேற்றுவதற்காக, இலண்டனில் ஒப்பந்தக்காரருக்குக் கோரிக்கைகள் பிரசுரிக்கப் பட்டபொழுது, பவியல் (Faviel) என்பவர் இப்பாதையை & 873,039 12சி-4பெ. செலவில் கட்டி முடிப்பதாகச் சமர்ப்பித்த திட்டத்தை, 1863 இல் அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. 1864 ஜனவரியில் முதலாவது புகையிரதம் இலங்கையில் இறக்கப்பட்டு, பாதையை அமைக்கும் வேலைக்காகப் பயன்படுத்தப்பட்டது. இதன் பின்பு வேலை வெகுகெதியில் முன்னேறியது. 1864 இன் முடிவில் வீதி, அம்பேபுஸ்ஸ வரை முற்றுப் பெற்றது. 1865 ஒக்டோபர் 2 ஆம் நாள், கொழும்பு-அம்பேபுஸ்ஸ வீதி போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டது. 1867 ஏப்ரில் 30 ஆம் நாள், கொழும்பிலிருந்து புறப்பட்ட முதல் புகையிரதம் 44 மணித்தியாலங்களில் கண்டியை வந்தடைந்தது. இவ்விதமாகப் பல்லாண்டுகளாக எடுக்கப்பட்ட முயற்சி வெற்றியில் முடிந்தது.
கம்பளை, நாவலப்பிட்டிப் பகுதி கோப்பித் தோட்டங்களின் மத்திய தானமாக விளங்கியதனல், அரசாங்கம் அப்பிரதேசத்தின் தேவைகளை ஈடுசெய்யும் நோக்கமாக பெரதெனியாவிலிருந்து ஒரு கிளைப்பாதையை கம்பளைக்கு 1873 இலும், நாவலப்பிட்டிக்கு 1874 இலும் திறந்தது. ஆனல் அரசாங்கம் கோப்பித் தோட்ட முதலா ளிகளின் தேவைகளுக்கு மாத்திரமே புகையிரத வீதிகள் அமைக்கப் படவேண்டுமெனக் கருத்திற் கொள்ளவில்லை, அது தாழ்பிரதேச மக்களின் நன்மைக்காக ஒரு கரையோரப் பாதையை அமைக்கத் திட்டமிட்டது. இப்பாதை மொறட்டுவையை 1877 இல் அடைந்தது. 1879 இல் கழுத்துறை வரை நீட்டப் பெற்றது.

Page 119
224 இலங்கைச் சரித்திரம்
リ இலங்கை காங்கேசந்துறை. புகையிரத வீதிகள்
 

பொருளாதார விருத்தியும் நாட்டு முன்னேற்றமும் 225
இதற்கிடையில் திம்புள, டிக்கோயா, மஸ்கெலியா, போக வந்தலாவை, ஊவா எனும் பகுதிக்ள் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களாக மாறின. விசேடமாக வெகுவிரைவில் விருத்திய டைந்து வந்த ஊவாப்பிரதேசம், போக்குவரத்து வசதிகளின்றி மிகவும் கஷ்டப்பட்டது. கோப்பி முதலாளிகளின் வற்புறுத்தலுக்கு இயைந்து புதுப் பாதையை டிக்கோயா, திம்புள, நானுஒயா என்ப வற்றுக்கூடாக அமைக்கத்திட்டம் வகுக்கப்பட்டது மாத்தளேப் பிரதேச முதலாளிகளும் கண்டியிலிருந்து மாத்தளைவரை ஒரு பாதை திறக்கப்பட வேண்டுமென வாதாடி வெற்றி பெற்றனர். மாத்தளை வீதி 1880 இலும், நாவலப்பிட்டி நானுஒயா வீதி 1885 இலும் முற்றுப் பெற்றன. நானுஒயாவிலிருந்து ஆரம்பித்த பாதை, 1894 இல் பண்டாரவளையையும், 1924 இல் வதுளையையும் அடைந்தது. பொல் காவலை-குருநாகல் வீதி 1894 இல் முடிவெய்தியது. கரையோரப் பாதை, படிப்படியாக நீட்டப்பட்டு 1895 இல் மாத்தறை வரை லிரிந்தது.
தோட்ட முதலாளிகளின் வற்புறுத்தலின் பேரில், களனிப் பள்ளத்தாக்குப் பாதையில் வேலை 1896 இல் ஆரம்பமாயிற்று. 5' 6" அகலத்தில் இலங்கையெங்கணும் அமைக்கப்பட்ட இருப்புப் பாதையில் மாற்றம் செய்யப்பட்டது. களனிப் பாதையை 2' 6" அகலமான பாதையாக அமைக்கத் திட்டமிடப்பட்டது. இரத்தினபுரி வரை அமைக்கப்பட்ட பாதை 1912 இல் போக்குவரத்துக்குத் திறக்கப் பட்டது.
இருபதாம் நூற்ருண்டின் ஆரம்பத்துடன் புகையிரத வீதிகளை அமைப்பதில் அரசாங்கம் புது உற்சாகம் காட்டியது. குருநா லி லிருந்து வடக்கு நோக்கி ஆரம்பித்த பாதை, 1905 இல் காங்கேசன் துறை வரையும், 1914 இல் தலைமன்னர் வரையும் முறையே விஸ்த ரிக்கப்பட்டது. களனிப் பள்ளத்தாக்குப் பாதை 1902 இல் அவிசா வலை வரையும், பின்னர் இரத்தினபுரி, ஒப்பணுயக்க வரை நீட்டப் பட்டது. நீர்கொழும்புப் பாதை 1909 இல் ஆரம்பமாயிற்று. இது 1919 இல் சிலாபம் வரையும் 1924 இல் புத்தளம் வரையும் நீண்டது. திருகோணமலைக் கிளை 1927 இலும், மட்டக்களப்புக் கிளை 1928 இலும் முறையே முற்றுப் பெற்றன. இவ்விதமாக கொழும்பு-கண்டி வீதி யுடன் ஆரம்பித்த இலங்கைப் புகையிரத சேவை 1928 இல் 894 மைல்களாக அதிகரித்தது.
இ 15

Page 120
226 இலங்கைச் சரித்திரம்
தபால், தந்தித் தொடர்புச் சேவைகள் :
தெருக்களும் புகையிரத வீதிகளும் அமைவு பெற்றதன் பயனுக தபால், தந்தி, போக்குவரத்துச் சேவைகளிலும் துரிதமான முன் னேற்றம் காணப்பட்டது. 1840 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் முதன் முதலாக 'பென்னி தபால்' முறை அமுலுக்கு வந்தது. அங்கு இதற்கு முன் தபால் கொண்டு செல்லப்படும் தூரங்களுக்குத் தக்கதாக கட்டணம் இருந்தது. உதாரணமாக பிரித்தனிலிருந்து 50 மைல் தூரத்தில் இலண்டனுக்கு ஒரு தபால் தாளை அனுப்பு வதற்குச் செலவு 8 பென்ஸாக இருந்தது. ருேலன்ட் ஹில் (Roland Hill) என்பவர், இம்முறைக்குப் பதிலாக நாடு அடங்கிலும் பென்னித் தபால் முறையினைச் சிபார்சு செய்தார். அவருடைய அபிப்பிராயம், நிறைந்த ஆதரவைப் பெறவே, அம்முறை 1840 இல் இங்கிலாந்தில் ஏற்பட்டது. அதேமுறை இலங்கையில் 1858 இல் நடைமுறைக்கு வந்தது.
முதல் தந்திக் கம்பனி, இங்கிலாந்தில் 1847 இல் செயற்பட
ஆரம்பித்தது. 1858 இல் முதன் முதலாகக் கொழும்பும் காலியும் தந்திக் கம்பிச் சேவையினல் இணைக்கப்பட்டன. அதேயாண்டு இவ் வசதி கண்டிக்கும் மன்னருக்கும் விஸ்தரிக்கப்பட்டது. 1859 இல் மன்னு ரிலிருந்து இந்தியாவுக்குத் தந்தி இணைப்பு ஏற்பட்டது. அதற் குப்பின் இந்தியாவினின்று இங்கிலாந்துக்குத் தொடர்பு, தரை
வழியாக ஏற்பட்டது. 1866 இல் ஆள்பதி ருெ பின்ஸன் இலங்கை
யினின்று குடியேற்ற நாட்டு அமைச்சருடன் நேரடியாகப் பேச முடிந்தது. -
1870 இல் தந்திக்கம்பிகளை கடலின் கீழ் இடும்வேலை ஆரம் பிக்கப்பட்டது. நீண்ட தூரங்களுக்குத் தபாலைக் கொண்டு செல்வதற்குப் புகையிரத வீதிகள் பயன்படுத்தப்பட்டன. தபால்
கொண்டு செல்வதற்கான பிரத்தியேக வண்டிகள் புகையிரதங்
களுடன் இணைக்கப்பட்டன. மேலும் இரு பிரதான போக்கு வரத்துச் சாதனங்கள் தோன்றின. முதன் முதலாக மோட்டார் வண்டிகள் இலங்கை வீதிகளில் இரைந்தோடத் தொடங்கின இதைத் தொடர்ந்து ஜீ. பீ. ஓ. வான்கள் உபயோகத்துக்கு வந்தன. 1938 இல் விமான தபாற் சேவை ஆரம்பமாயிற்று.
கொழும்புத் துறைமுகத்தின் அபிவிருத்தி:
14 ஆம் நூற்ருண்டில் அராபிய வர்த்தகர்கள்தான் முதன்
முதல் கொழும்பை ஒரு பிரதான துறைமுகமாக உபயோகிக்கத்
தொடங்கினர் எனச் சரித்திரம் கூறும். 1330 இல் இலங்கையைத்

பொருளாதார விருத்தியும் நாட்டு முன்னேற்றமும் 227
தரிசித்த இபன் பத்தூத்தா கொழும்பை, 'செரன்டிப் தீவின் அதி பெரியதும் சிறந்ததுமான நகரங்களில் ஒன்று” என வர்ணித் தார்.
ஒரு நூற்ருண்டுக்குப்பின் இலங்கையில் கால்வைத்த போர்த்துக் கேயர், தமது முதற் கோட்டையைக் கொழும்பில்தான் அமைத் தனர். அவர்களது முயற்சிகளின் பயனக கறுவா, யானைத் தந்தம், இரத்தினக்கற்கள் போன்ற பொருள்களின் வியாபாரத்துக்கு கொழும்பு ஒரு மத்திய தானமாக விளங்கியது. , கறுவாவை சேகரிப்பதற்குப் பல பண்டகசாலைகள் அமைக்கப் பெற்றன. எனினும் அக்காலத்திலும் அதன் பின்பும் காலிதான் இலங்கையின் பிரதான துறைமுகமாகத் திகழ்ந்தது.
ஒல்லாந்தர் காலத்தில், கொழும்பின் முக்கியத்துவம் அதி கரித்த போதிலும், அதன் உருவம் மாறவில்லை. இத்துறையின் வழியாக கறுவா, அரிசி, புடவை வகை, பாக்கு, யானைகள் முதலாய பொருள்கள் ஏராளமாக ஏற்றி இறக்குமதி செய்யப் பெற்றன. டி பியர் (De Beer) என்ற டச்சுப் பொறி விற்பன்னர் கொழும்பு வாவியை ஒரு முக்கியத்துவம் வாய்ந்த உள்நாட்டுத் துறைமுகமாக்கினர். பல பாதைகளும் கால்வாய்களும் அதனைச் சூழவர இணைக்கப்பட்டன.
ஆங்கிலர் காலத்தில் தான், கொழும்புத் துறைமுகம் தற்கால முக்கியத்துவம் பெறத் தொடங்கிற்று. நீண்ட கால அமைதியும், பொருளாதார விருத்தியும், கொழும்புக்கு முன்னேற்றத்தைக் கொணர்ந்தன. சுற்றுப் புறங்களின் செல்வாக்கினல் கொழும்பு துரிதமாக விருத்தியடைந்தது. அதன் வழியாகவே கோப்பி உற்பத்தி முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டது. தெருக்கள், புகையிரத வீதிகள், தபாற்சேவைகள் என்பவை அதனைக் Gantu i19u") பிரதேசங்களுடனும், புதுக் குடியிருப்புக்களுடனும் இணைத்தன. சுற்றுப்புறம், ஏற்றுமதிக்கான பொருள்களை உற்பத்தி செய்ததுமன்றி நுகர்ச்சிப் பொருள்களுக்கான சந்தையையும் ஏற்படுத் தியதன் பயனக, கொழும்புத் துறைமுகத்தின் வர்த்தகம் அதிகரித்தது 1870 இல் கோப்பியின் ஏற்றுமதி 885,728 அந்தராக உயர்ந்தது. அரிசி 4,735, 832 அந்தர் இறக்குமதியாயிற்று. எனினும் கொழும் புத் துறைமுகம் பொருளாதார விருத்திக்கேற்றவாறு விருத்தி செய்யப் பெறவில்லை. அவுஸ்திரேலியாவுக்கும் தூரகிழக்கு நாடுகளுக்கும் பிரயாணம் செய்த கப்பல்கள் இன்னும் காலித்துறையையே பயன்
படுத்தின.

Page 121
228 இலங்கைச் சரித்திரம்
கொழும்புத் துறையினூடாக நடைபெற்ற வர்த்தகத்தின் பயணுக அதன் சுற்ருடல் வேகமாக மாற்றமடைந்தது. கோப்பி வர்த்தகர், 30 வர்த்தகக் கம்பனிகளைக் கொழும்பில் நிறுவியதுமன்றி பல மில்களையும், பண்டகசாலைகளையும் அமைவு பெறச் செய்தனர். கோப்பிக்குப்பின் தேயிலை உயர்வடைந்த பொழுது, தேயிலை ஏற்று மதிக் கம்பனிகள் பல நிறுவப்பட்டன. அதே போன்று கொக்கோ, தேங்காய், இறப்பர் போன்ற ஏற்றுமதிப் பொருள்களுக்கும் பல வர்த் தகக் கம்பனிகள் தாபிக்கப்பட்டன. இறக்குமதிப் பொருள் களுக்கும் கொழும்புத் துறையே முக்கிய தானமாக விளங்கியதனல் இறக்குமதியான உணவுப் பொருள்கள் என்பனவற்றுடன் சம்பந்தப் பட்ட தொழில் வர்த்தக நிலையங்களும் பெருகின.
1869 இல் சுவெசுக்கால்வாய் பூர்த்தியாக்கப்பட்டதும், தூர கிழக்கு நாடுகளுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் செல்லும் கடற் பாதைகள் பிரியுமிடத்தில் கொழும்பு இடம் பெற்றதனல், அதன் சிறப்பு பன்மடங்கு அதிகரித்தது. காலித் துறைமுகம் இதற்கு ஏற்ற தாகவிருக்கவில்லை. பாதுகாப்பும் இடவசதியுமுள்ள ஒரு துறைமுகம் இலங்கைக்கு இன்றியமையாததென யாவரும் உணர்ந்தனர். 1871 இல் இலங்கைச் சட்டசபை கொழும்புத் துறைமுகத்தில் அணை யொன்றினைக் கட்டும் திட்டத்தை அங்கீகரித்தது. வேலை, 1874 இல் ஆரம்பித்து 1884 இல் முடிவெய்தியது. தென் மேற்குப் பக்கமாக இவ்வணை 1350 அடிக்கு, 50 அடி அகலமாகவும், மிகுதி 2882 அடிக்கு 40 அடி அகலமாகவும், மோதும் அலைகளுக்கு மேலாக 9 அடி உயரத் திலும் அமைக்கப்பெற்றது. இங்ங்ணம் கொழும்புத் துறைமுகம் பெற்ற பாதுகாப்பினல், அஃது இந்தியச் சமுத்திரத்திலேயே முதன்மை பெற்றது. பல புதுக் கப்பல்கள் அதனை உபயோகிக்கத் தொடங்கின.
1880 க்குப் பின் தேயிலை, இறப்பர், தெங்குப் பொருள்களின் ஏற்றுமதி அதிகரிக்கவே, கப்பல்களின் போக்கு வரத்து அதிகரித்தது. மேலும் அதிகமான கப்பல்களுக்கு இடங்கொடுக்க வேண்டிய நிலை எழவே, கூடுதலான பாதுகாப்புத் தேவையாயிற்று. வடகிழக் கிலும், வடமேற்கிலும் மேலும் ஈர் அணைகள் கட்டப்பட்டு 1898 இல் பூர்த்தியாயின. இதன் பயனக நீர்ப்பரப்பின் அளவு 643 ஏக்கராக விரிவடைந்ததுமன்றி, இரு பருவப் பெயர்ச்சிக் காற்றுக்களிலுமிருந்து பாதுகாப்புக் கிடைத்தது. ஆள்பதி வெஸ்ற் றிஜ்வே 'கொழும்பு உலகத்திலேயே அதி சிறந்த செயற்கைத் துறைமுகத்தைக் கொண்டது' எனக் கூறினர். 1900 அளவில்


Page 122
230 இலங்கைச் சரித்திரம்
Qaisrepubliggilaosp(p5th '''Clapham Junction of the East'', 66.7 வர்ணிக்கப்பட்டது. ஐரோப்பாவினின்று அவுஸ்திரேலியா, தூர கிழக்கு, இந்தியா, பர்மா, மலாயா எனும் நாடுகளுக்குச் செல்லும் கப்பல்கள் யாவும், அதனைப் பிரதான துறையாகப் பாவிக்கத் தொடங்கின. அதன் மத்திய கேந்திர நிலையத்தின் பேருக, கொழும்பு ஈருலகப் போர்களிலும் பெரும் பங்கு கொண்டது
4. குடிசனப் பெருக்கமும், நகரங்களின் வளர்ச்சியும்
மலை நாட்டினுள் கோப்பி, தேயிலைச்செய்கை எனும் முயற்சிகள் புகும் வரை அப்பிரதேசத்தின் பெரும் பகுதி, குடிசனமற்ற பகுதிக ளாகவே இருந்து வந்தன. இப்பகுதி வெளியுலகுடன் எவ்வித தொடர்புமின்றி, அநேக கிராமங்களைக் கொண்டு விளங்கியது. நெற் செய்கையும், கமுகஞ் செய்கையுமே, இங்கு வாழ்ந்த மாந் தரின் பிரதான முயற்சிகளாயிருந்தன. ஆண்டுகள் பல ஒடி மறைய, மலைநாட்டு மக்களின் வாழ்க்கையில் பல மாறுதல்கள் ஏற்பட லாயின. 1833 இல் தெருக்கள் அமைக்கப்படவே, அப்பிரதேசத்தின் தனி வாழ்க்கை மறைந்தது. கீழ்நாட்டுச் சிங்களரும் பிறரும் அங்கு குடியேறத் தொடங்கினர். மேலும் ஆங்கிலர் அங்கு கோப்பியை யும் தேயிலையையும் பயிரிடத் தொடங்கினர். தோட்டச் செய்கை காரணமாக புகையிரதப் பாதைகள் அமைக்கப்பட்டன. இவற்றின் பயணுக பெருந்தொகையான இந்தியக் கூலியாட்கள், ஐரோப்பியர், கீழ்நாட்டுச் சிங்களர், முஸ்லீம்கள் என்போர் தோட்டப் பிர தேசங்களில் குடியேறினர்.
1871 இல் இலங்கையில் முதன் முறையாக குடிசனமதிப்பு விபரங்கள் எடுக்கப்படலாயின. அன்று தொடக்கம் குடித்தொகை பற்றிய நம்பிக்கையான புள்ளி விபரங்கள் எமக்கு கிடைக்கின்றன. இக்காலத்தில் மலைநாட்டில் குடியேறிய மக்கள் தொகையில் குறிப் பிடத்தக்க தொகையானேர் இந்தியக் கூலியாட்களாவர். 1871 தொடக்கம் பத்து ஆண்டுகளுக்கொருமுறை எடுக்கப்பட்ட குடி மதிப்புப் புள்ளி விபரங்கள் இந்தியரின் அதிகரிப்பைப் பின்வருமாறு தருகின்றன :
871-1881 239, 556 103,791 1891 سس۔ 1881 1891 - 1901 332,759 184,249 1911 سے 1901 1911 - 1921 72,845 151,316 l 3 19 حسH9 2 l
1931-1946 - 69,552
 
 
 
 
 
 
 
 
 

பொருளாதார விருத்தியும் நாட்டு முன்னேற்றமும் 23.
தோட்டங்களின் விருத்தி, குடிசனப் பெருக்கம், போக்கு வரத்து வசதிகளின் விருத்தி, வியாபாரப் பெருக்கம் எனும் காரணங்களினல் மலைநாட்டினில் பல நகரங்கள் வளர்ச்சியடைந்தன. மத்திய இடங்களில் வர்த்தகர்கள் கடைகளைத் திறந்தனர். போக்குவரத்துத் தரகர்கள் தமது அலுவலகங்களை அமைத்தனர். கைவினைஞர்கள் தமது தொழில் நிலையங்களை நிறுவினர். இவ்வித மாகப் புது நகரங்கள் தோன்றவே, அவை தோட்டப் பிரதேசங் களினதும் கிராமப் பகுதிகளினதும் மத்திய நிலையங்களாக மாறின. தோட்டங்களின் ஏற்றுமதி, இறக்குமதிப் பொருள்கள், கிராம வாசிகளின் உற்பத்திப் பொருள்களின் விற்பனை, யாவும் இச்சந்தை களின் வழியாகவே நடைபெறத் தொடங்கின.
மலைநாட்டின் அதி முக்கிய நகரமாக விளங்குவது கண்டியாகும். இதுவே தோட்டப் பிரதேசங்களின் தேவைகளை ஈடு செய்யவல்ல அதி செல்வாக்குடைய மத்திய வர்த்தக நகரமாக விளங்குகிறது. பதுளை, ஊவா மாகாணத்தின் தலைநகராகவும் அதனை சூழவுள்ள தோட்டங்களுக்கு மத்திய நகரமாகவும், வளர்ச்சி பெற்றது. தெரு வீதிகள், புகையிரதப் பாதைகள் பல சந்திக்கும் இடத்தில் அமைந்த கம்பளை, அதன் நிலையத்தின் பயணுக முக்கியத்துவம் பெற்றது. மாத்தளை, மலை நாட்டின் வட பாகத்திலுள்ள தோட்டங்களுக்கு பொருள்களைப் பகிர்ந்தளிக்கும் மத்திய ஸ்தானமாக உருப்பெற்றது.
நாவலப்பிட்டி, ஹற்றன், தியத்தலாவை, நுவரெலியா, நானு ஓயா, ஹப்புத்தளை, வெலிமடை என்பன தோட்டச் செய்கையின் கார ணமாகவும், இதற்கு உதவியாகவிருந்த போக்குவரத்து வசதிகளின் காரணமாகவும், எழுந்த பிறநகரங்களாகும். பதுளை, தியத்தலாவை, நுவரெலியா எனும் நகரங்கள் குளிர்ச்சியான சுவாத்தியமுள்ள சுகத்துக்குரிய நிலைகளினலும் முக்கியத்துவம் பெற்றன. டிக்கோயா மஸ்கேலியா, போகந்தலாவை சிறு நகரங்களாகும்.
(o, (ti i 55i :
ஆங்கிலர், கொழும்பை நாட்டின் தலைநகராகவும், பிரதான துறைமுகமாகவும், நிருவாகத்தின் மத்திய நிலையமாகவும் உபயோகிக்கத் தொடங்கியதன் பயனக, அது குடிசன அடர்த்தி மிகுந்த பகுதியாக மாறிற்று. நாட்டின் சட்ட சபை, உச்ச நீதிமன்றம், அரசாங்கக் காரியாலயங்கள், வர்த்தகக் கம்பனிகள், வியாபார நிலையங்கள் யாவும் அங்குதான் குவிந்தன. அதனேடு கொழும்பு, கைத்தொழிற்

Page 123
232 இலங்கைச் சரித்திரம்
றுறையில் கூடுதலான அபிவிருத்தியடைந்த பகுதியாகவும் அமைந்தது. இலங்கையின் போக்கு வரத்து வழிகள் யாவற்றுக்கும் அது தான் மூலஸ்தானம் போன்று அமைந்துளது.
கரைப் பட்டணங்கள் :
தீவின் தென்மேற் பிரதேசத்தில் கொழும்பு மட்டுமே பிரதான துணிறமுகமாக இருந்தாலும், வேறு பல கரையோரப் பட்டணங்கள் அங்கு வளர்ச்சியடைந்துள்ளன. மாத்தறை தொடக்கம் சிலாபம் ஈருக உள்ள பகுதி, படிப்படியாக குடிசன அடர்த்தி கூடிய பகுதி களாக விருத்தி பெற்றன. இவை துறைமுகச் செயல்களை ஆற்ருத பொழுதிலும் அப்பிரதேசங்களின் விளைபொருள்களான இறப்பர், தென்னை வர்த்தகத்திலும், மீன்பிடித் தொழிலிலும் ஈடுபட்ட குறிப் பிடத்தக்க தொகையினர் வாழ்கின்றனர். கொழும்பைச் சார்ந் துள்ள மொறட்டுவை, தெஹிவளை, நீர்கொழும்பு என்பன அதிக குடிசன அடர்த்தியுள்ள நகரங்களாகும். இவற்றுக்கு கொழும்பு அளிக்கும் மையநோக்குத் தன்மையினற்ருன், அங்கு அதிக அடர்த்தி ஏற்பட்டது. மேலும் பாணந்துறை, மாத்தறை, கழுத்துறை காலி ஆகிய நகரங்களிலும் வாழ்க்கைத்குத் தேவையான வசதிகள் காணப் பட்டமையால் அவையும் அதிக அடர்த்தியான பகுதிகளாக உருப் பெற்றன.
5. நடு வகுப்பினரின் தோற்றமும் வளர்ச்சியும்
பிரித்தானிய அரசாங்கம், அதன் ஆட்சியின் ஆரம்பம் தொட்டு இலங்கையில் இருந்துவந்த சமூக அமைப்புக்கள், நியதிகள், ஒழுங் குகள், கட்டுப்பாடுகள் என்பனவற்றை வன்மையாகக் கண்டித்து வந்தது. சாதிக்கேற்ற தொழில், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்காத அரசியல் முறை, கூலியாட்களின் இடப்பெயர்ச்சிக்கு வாய்ப்பு கொடுக்காத பொருளாதாரம் எனும் நிலைகள், அவர்களுடைய தற்போக்கு கொள்கைகளுக்கு முற்றிலும் முரண்
பட்டவை. நாட்டின் இயற்கை வளங்களை விருத்தி செய்து
அரசாங்கத்தின் இறை வருமானத்தைப் பெருக்க நோக்கம் கொண்ட பிரித்தானியருக்கு, இவை பெரும் இடையூறுகளாக அமைந்தன. எனவே பிரித்தானிய அரசாங்கம் 1832 இல், இராசகாரிய முறையினை ஒழித்தபொழுது, ஒவ்வொரு மனிதனும் தான்விரும்பிய தொழிலை தெரிந்தெடுக்கும் வாய்ப்பினைப் பெற்றன். அதனுடன் புராதன மானியமுறை, தனதிடத்தை தற்காலப் போட்டி முறைப் பொருளாதாரத்துக்கு ஈந்தது. அடுத்து, பெருந்தோட்டப் பயிர்ச்
* »,
 

பொருளாதார விருத்தியும் நாட்டு முன்னேற்றமும் 2 ತಿತಿ
செய்கையை ஆதரித்த அரசாங்கம், சமுதாய வாழ்வை வர்த்தக முறைக்கு மாற்றவும் உதவியது. அது, முடிக்குரிய நிலங்களைக் குறைந்த விலைக்கு விற்றும், பெருந்தோட்டங்களை நிலவரியினின்று நீக்கியும், இறைவருவாயின் பெரும் பகுதியை தோட்டங்களுக்குத் தெருக்களை அமைக்க உபயோகித்தும், வர்த்தகத்தை ஊக்குவித்தது.
இம்மாற்றங்கள், ஐரோப்பிய முதலீட்டையும் தோட்டத் துரைமாரையும் இந்நாட்டுக்கு வரவழைத்ததுமன்றி நாட்டின் சமூக அமைப்பிலும் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்த உதவின. பிரித்தானியர் இலங்கையை வெற்றிகொண்ட பொழுது, அஃது ஒரு கிராமிய நாடாக இருந்தது. சமூகமானது, ஆட்சிக்குப் பொறுப்புடைய அலுவலாளரைக் கொண்ட ஆட்சி செய்யும் வகுப்பு, விவசாய பாட்டாளிகளைக் கொண்ட தொழிலாளர் வகுப்பு, எனும் இரு வகுப்புக்களை மாத்திரம் கொண்டு விளங்கியது. வர்த்தகம், அரசாங்கத்தின் ஏகபோக உரிமையாக இருந்தமையினல் அன்றிருந்த வர்த்தகர்களின் எண்ணிக்கை மிகச் சொற்பம். ஆங்கிலர் தமது சீர்திருத்தங்களினதும், பொருளாதார முயற்சிகளினதும் பேருக, இவ்விரு வகுப்புகளுக்கிடையில் தற்கால நடு வகுப்பினர் என்ற வகுப்பினைத் தோற்றுவிக்க வழி செய்தனர்.
பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையின் விருத்தி, இலங்கையின் வர்த்தகருக்கும், தோட்டச் சொந்தக்காரருக்கும் அளப்பரிய வாய்ப்புக்களைப் பெற்றுத்தந்தது. தோட்டங்கள் திறக்கப்பட்ட தினல் பல புதிய முயற்சிகளும் வேலைகளும் தோன்றின. காடுகளைத் துப்பரவு செய்தல், தொழிற்சாலைகள், வீடுகள் நிறுவுதல் போன்ற வேலைகளுக்கு ஒப்பந்தக்காரரும், தொழில் விற்பன்னர்களும் தேவைப் பட்டனர். தோட்டங்களின் விளைபொருள்களை ஏற்றுமதி செய்யப் போக்குவரத்து ஒப்பந்தக்காரர்கள் தோன்றினர். தோட்டத் தொழிலாளரின் உணவு, புடவைத் தேவைகளை ஈடுசெய்ய வர்த்தகர் எழுந்தனர். மலைநாட்டிலும் கொழும்பிலும் கடைகள் தோன்றிய வுடன் பல வியாபார முதலாளிகளும் தோன்றினர். நாட்டில் ஒற்றுமையும் அமைதியும் நிலவின. தபால் தந்திச் சேவைகளும் புகையிரத வீதிகளும் பிரதான நகரங்களை இலகுவாகத் தொடர்பு படுத்தின. இதனல் வர்த்தகர்களின் செல்வநிலை ஓங்கிற்று. வர்த் தகத்தில் பணம் சம்பாதித்த முதலாளிகள், தாமே தோட்டங்களை வாங்க அல்லது திறக்க முற்பட்டனர். நாளடைவில் ஒரு சில தேயிலைத் தோட்டங்களும், இறப்பர்த் தோட்டங்களின் அரைப் பகுதியும், தென்னந் தோட்டங்கள் முழுவதும் இலங்கையருக்குச்

Page 124
234 இலங்கைச் சரித்திரம்
சொந்தமான, அம்முதலாளிகளின் பிள்ளைகள், பிறநாடுகளுக்குச்
சென்று ஆங்கிலத்திலும், ஆங்கிலப் பழக்க வழக்கங்களிலும் தேர்ச்சி பெற்றுத் தாயகம் திரும்பினர்."
ஆங்கிலர் நிறுவிய நிருவாக பரிபாலனமுறை, பெருந்தொகை யான அரசாங்க சேவையாளரை வேண்டி நின்றது. இத்தேவையை ஈடுசெய்யும் முகமாக நாட்டின் எல்லாப் பாகங்களிலும் 1834 தொடக்கம் ஆங்கிலப் பாடசாலைகள் திறக்கப்பட்டன. இப்பாட சாலைகளில் கல்வி கற்றுத் தேர்ச்சி பெற்ற எல்லா இனத்தவர்களும் சாதியினர்களும் அரசாங்க சேவைகளில் சேர்ந்தனர். 1833 இல் பிரித்தானிய அரசாங்கம், இலங்கை எங்கணும் ஒரே விதமான நீதிமன்றங்களை அமைத்து, எவ்வித பாகுபாடுமின்றி எல்லா மக்களும் சட்டத்தின் முன் சமன் என்ற நிலையை ஏற்படுத்தியது. இச் சட்டத் துறை நாட்டின் விவேகிகளை பெரும் எண்ணிக்கையில் கவர்ந்தது. விரைவில் அறிவும் நாவன்மையும் படைத்த நியாய துரந்தர்கள் இலங்கைச் சமூகத்தின் முன்னணியில் திகழ்ந்தனர்.
1835 தொடக்கம் பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிக்கவே, நிருவாக அமைப்பிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. L16) L-/ğ5/ இலாக்காக்கள் நிறுவப்படவும், புது உத்தியோகங்கள் எழவும் வழியுண் டாயிற்று. உயர் பதவிகள் ஆங்கிலரினல் நிரப்பப்பட்டன. ஏனைய உத்தியோகத்தர்கள் ஆங்கிலக் கல்வி அறிவுடைய சுதேசிகளினின்று தெரிந்தெடுக்கப்பட்டனர். நாளடைவில் இலங்கையில் ஒரு 'வெள்ளைச்சட்டை வகுப்பினர்' உருவாகி அரசாங்கத்தினதும், தனியார் துறையினதும் இலிகிதர் வேலைகளைச் செய்யத் தொடங் கினர். இவர்களது உத்தியோக வாய்ப்புக்களுக்கு ஆங்கில மொழித் தேர்ச்சிதான் பிரதான திறவுகோலாக அமைந்தது.
ஆங்கிலமொழி, அரசாங்க உத்தியோகங்களுக்குப் பிரதான வாயிலாக அமைந்தமையினல் ஆங்கிலப் பாடசாலைகளுக்குப் பெரும் தேவை ஏற்பட்டது. 1869 வரை இலங்கையில் கிறிஸ்தவ மிஷன்கள் தம் செலவில் பாடசாலைகளை நிறுவி கல்வியைப் புகட்டி வந்தன. அவ்வாண்டு பிரித்தானிய அரசாங்கம் சுயமொழிக் கல்விக்குப் பொறுப்பேற்றதுடன், மிஷன் பாடசாலைகளுக்குப் பணவுதவி கொடுக்கவும் உடன்பட்டது. இதனல் ஆங்கிலப் பாடசாலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கவும், ஆசிரியர்களின் தொகை பெருகவும் தொடங்கிற்று. இப்பாடசாலைகளில் பயின்றவர்கள், நாளடைவில் நியாய துரந்தரர்களாகவும், வைத்தியர்களாகவும், பட்டதாரிகளா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பொருளாதார விருத்தியும் நாட்டு முன்னேற்றமும் 235
கவும் கூடுதலான எண்ணிக்கையில் வெளிப்பட்டனர். தத்தம் துறைகளில் மேற்குலகின் உத்தியோகத்தர்களுடன் சமபதமுடைய வர்களாக இவர்கள் தேர்ச்சி பெற்றுத் திகழ்ந்தனர்.
ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்ற இலங்கையருக்கென பல தொழிற் கல்லூரிகள் நிறுவப்பட்டன. 1864 இல் வைத்தியக் கல்லூரி, 1873 இல் சட்டக் கல்லூரி, 1893 இல் தொழில் நுட்பக் கல்லூரி, 1903 இல் ஆங்கில ஆசிரிய பயிற்சிக் கலாசாலை எனும் உயர் நிலைப் பாடசாலைகளை அரசாங்கம் நிறுவி, அவற்றை நடாத்தத் தொடங் கியது. இக்காரணங்களினுல் 1870 தொட்க்கம் மத்திய வகுப்பினரின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்து வரலாயிற்று.
இப்பல்வேறுபட்ட நிகழ்ச்சிகளினுல் 19 ஆம் நூற்றண்டின் பிற்பகுதியில், நியாய துரந்தர்கள், அரசாங்க சேவையாளர், குடியியல் நீதி பரிபாலன அதிகாரிகள், வைத்தியர்கள், ஆசிரியர்கள் என்பவர்களையும், புதுப் பொருளாதார வாய்ப்புக்களை பயன்படுத்தி முன்னிலைக்கு வந்த தோட்ட முதலாளிகள், வர்த்தகர், தரகர், ஒப்பந்தக்காரர் எனும் பல் வேறுபட்ட பிரிவுகளைக் கொண்ட நடுவகுப்பொன்று இலங்கைச் சமுதாயத்தில் தோன்றியது. அவர்கள், சாதி வித்தியாசங்களைப் பாராட்டும் வழக்கத்தை விட்டுப் பணம், கல்வி எனும் விடயங்களில் வித்தியாசம் பாராட்டினர். பணத்தி ஞலும், கல்வியினுலும் உயர்வு பெற்றவர்கள் தனி வகுப்பினராக அமைந்தனர்.
இவ்வகுப்பினர் ஐரோப்பியரினது நடை உடை பாவனைகள், பழக்க வழக்கங்கள், கலாச்சாரம், பண்பாடு முதலானவற்றை பின் பற்றலானர்கள். ஆங்கில மொழி, அவர்களுடைய மிகவும் போற்றப் பட்ட உடமையாயிற்று. ஆங்கிலப் பல்கலைக் கழகங்களில் பயின்ற இலங்கையர், ஆங்கில மொழியை ஆங்கிலேயரிலும் பார்க்கத் திறமை யுடன் பேசக் கற்றுக் கொண்டனர். அம்மொழியின் வழியாக அவர்கள் மேற்குலகின் அரசியல், சமூக, பொருளாதாரக் கருத்துக்களை அறிந்தனர்.
நடுவகுப்பினர், தாராண்மை வாதத்தையே தமது கொள்கை யாகக் கொண்டனர். இங்கிலாந்தில் மத்திய வகுப்பினர், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்குக் கையாண்ட வழிவகைகளை நன் கறிந்த அவர்களுக்கு, சுய ஆட்சியும், பொருளாதாரச் சுதந்திரமும் அரசியல் நோக்கங்களாய் அமைந்தன. அரசாங்க உத்தியோகங்களில் உயர் பதவிகளைத் தமதாக்க வேண்டுமென்பது அவர்களின் உடன்

Page 125
236 இலங்கைச் சரித்திரம்
இலக்காயிற்று. மேற்குலகின் விஞ்ஞானத்தினதும், புதுக்கல்வி முறையினதும் அடிப்படையில் இலங்கையை முன்னேறச் செய்ய வேண்டுமென்பதும், அவர்களது பொது இலட்சியமாகும்.
பிரதிநிதித்துவ ஆட்சி முறையைப் பற்றிய கொள்கை இலங்கை வாழ் மக்களுக்கு ஒரு புது அனுபவமாகும். 19 ஆம் நூற்றண்டின் முற்பகுதியில் சிங்களரும் தமிழரும் அரசியலில் பங்குபெற வேண்டு மென்ற அவாவில்லாதவர்களாக வாழ்ந்தனர். ஆங்கிலத் தோட் டத்துரைமாரும் பறங்கியருமே அரசியல் அதிகாரத்தின் தன்மையை நன்கறிந்து, அதனைத் தம் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருப்பதில் முனைந் தனர். விரைவில் இலங்கையரும் பிரதிநிதித்துவ ஆட்சி முறையின் நலன்களை உணரத்தொடங்கினர். சட்டசபையில் பிரதிநிதித்துவமும் வாக்குரிமையும் தம கு வேண்டுமென்ற இயக்கம் வளர்ந்தது. கோப்பித்தொழிலும், ஆங்கிலத் தோட்டத்துரைமாரும் தாம், இலங்கையில் அரசியற் சுதந்திரத்துக்கான இயக்கத்தை மறை முக மாகத் தொடக்கிவிட்டனரெனின் மிகையாகாது. இங்கிலாந்தில் நடந்துவந்த வாக்குரிமையின் விரிவுக்கான அரசியல் இயக்கமும், ஜோண் ஸ்ரூவட் மில் போன்ற அரசியல் அறிஞர்களின் கருத்துக்களும் நடுவகுப்பினரின் உரிமைப் போராட்டங்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தன.
*பிரதிநிதித்துவ அரசாங்கங்கள்' எனும் பொருள்கள் பற்றி மில் எழுதிய நூல்கள் தாம், நடுவகுப்பினரின் அரசியல் கைநூல்களாக அமைந்தன. அவர்கள் வகுத்த ஜனநாயகத் தத்துவத்தின்படி ஆட்சியானது கல்வியினலும் செல்வத்தினலும் உயர்வு பெற்ற நடு வகுப்பினரின் கைகளிலேயே இருத்தல் வேண்டுமென்பதாகும். இந் நடுவகுப்பினர் தான் இலங்கையின் மூளையும் மனச்சாட்சியுமாவர் என்றும், அவர்களே கல்வி அறிவற்ற பாமர மக்களின் உரிமை களுக்காக வாதாட வல்லவர்கள் என்றும் அவர்கள் நம்பினர்.
இந்நடுவகுப்பு இலங்கையின் வரலாற்றில் ஒரு பெரும் பணியைச் செய்தபோதும் பல குறைபாடுகளைக் கொண்டிருந்தது. அவர்கள் பாமர மக்களின் நலன்களை அறவே புறக்கணித்தனர். கிராமப் புறங்களில் வாழ்ந்த விவசாயிகளும், நகரங்களில் வாழ்ந்த தொழி லாள வகுப்பினரும் அவர்களுடைய செயல் துறைகளில் எவ்வித இடமும் பெறவில்லை. பாமர மக்களின் பொருளாதார முன்னே ற்றம் அல்லது அவர்களுக்கு சர்வசன வாக்குரிமையை அல்லது பொளாதார சுதந்திரத்தை பெற்றுத்தரவேண்டுமென்ற கருத்துக்கள் அவர்களின் சிந்தனையில் இடம் பெறவில்லை.

பொருளாதார விருத்தியும் நாட்டு முன்னேற்றமும் 237
6. சமூக மாற்றங்கள்
1835 இல் கோப்பியுடன் ஆரம்பித்து, 20 ஆம் நூற்ருண்டில் தேயிலை, இறப்பர், தென்னை எனும் பயிர்களின் உற்பத்தியில் முடிவடைந்த பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை, குடியானவர் வாழ்க் கையிலும் பல மகத்தான மாற்றங்களை ஏற்படுத்தியது. அதன் அடிச் சுவட்டில் தெருக்கள், புகையிரதவீதிகள், தபால், தந்தி இயந்திரங்களின் உபயோகம் ஆதியாம் துறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் யாவும் ஒன்ருேடொன்று பின்னிப்பிணைந்து பல நூற்ருண்டுகளாக இலங்கையில் நிலவிவந்த பழைய வாழ்க்கை முறைகளை தகர்த்தெறிந்ததுமன்றி நவீனகாலப் புதுவாழ்க்கை முறைகளையும் புகுத்தலாயின.
மானிய முறைக் காலத்தில் குடியானவர்கள் தமக்குத் தேவையான உணவைப் பெறுவதற்காகவும், திறைப் பொருள்களை இறுப்பதற்காகவுமே, பயிர்ச்செய்கை செய்து வந்தனர். 1832 தொடக்கம் கோப்பிச்செய்கை மலைப்பகுதியெங்கணும் பரவவே, சிங்களக் குடியானவரும் பணமுடையவர்களும் படிப்படியாகக் கோப்பிச் செய்கையை மேற்கொண்டனர். பாமர விவசாயிகளும் தம் வீட்டின் சுற்றுப்புறங்களில் கோப்பி மரங்களைப் பயிரிட்டு அதிலிருந்து நியாயமனளவு மேலதிகமான வருமானத்தைப் பெற்றனர். 1850-70 க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் கோப்பி விளைச்சலின் ஏறக்குறைய அரைப்பகுதி கிராமத்தோட்டங்களினின்று பெறப்பட்டமை குறிப் பிடத்தக்கது. இதனுல் குடியானவர்களுக்கும் பணம் வந்து அடையவே, பணத்தின் உபயோகங்களையும் அவர்கள் அறிந்துணர்ந்தனர். பணம் சம்பாதிப்பதற்குக் கிடைத்த வாய்ப்புக்களினல் சாதி, குலம் பற்றிய கட்டுக்களெல்லாம் தளர்ந்தன. பழைய காலத்துக் கூட்டுமுயற்சிக்குப் பதிலாக தனியாரின் முயற்சி உயர்வு பெற்றது.
நிருவாக பரிபாலனத்துறைகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தை அடுத்த அதிகாரத்தில் காண்க.
வினுக்கள்
1820 க்கும் 1890 க்கும் இட்ையில் தெருக்களும் புகைவண்டிப் பாதைகளும் அபிவிருத்தியடைந்த விதத்தைப் புறவரிப் படமொன்றின் உதவியுடன் விபரிக்க. இலங்கையில் தெருக்களும் புகையிரத வீதிகளும் அமைக்கப் பட்டதன் காரணங்களைக் கூறுக.

Page 126
238
10.
Il II ,
12.
13.
இலங்கைச் சரித்திரம்
சென்ற நூற்ருண்டின் கடைசிப் பகுதியில் நடுத்தர வகுப்பி னரின் தோற்றத்திற்குக் காரணங்கள் கூறுக. இவ் வகுப் பினர் அரசாங்கத்தின் மேல் தமது செல்வாக்கை எவ்வாறு செலுத்தினர் ? - பிரித்தானிய கைத்தொழிற் புரட்சியினல் இலங்கையில் ஏற் பட்ட விளைவுகளெவை ? உதாரண வாயிலாக விளக்குக.
கோப்பிப் பயிர்ச் செய்கை, உள்நாட்டுப் போக்குவரத்துச்
சாதனங்கள் என்பவை 19 ஆம் நூற்றண்டுச் சிங்களச் சமூகத்தை
எவ்வாறு பாதித்தன என்பதைக் கூறுக. தோட்டங்கள் திறக்கப்பட்டதால் உண்டான விளைவுகளைத் தொகுத்துக் கூறுக.
பத்தொன்பதாம் நூற்ருண்டில் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் எவை ? அவற்றுக்கான காரணங்களைக் கூறுக இலங்கையில் கோப்பிப் பயிர்ச் செய்கை விருத்தியடைந்ததின
லுண்டான பிரதான பயன்களெவை ?
புறவரிப் படமொன்றில், 19ஆம் நூற்ருண்டில் அமைக்கப்பட்ட
தெருக்களை வரைந்து, அவற்றின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டுக.
புகையிரத சேவை விருத்தியடைந்த வரலாற்றைச் சுருக்
கமாக விவரிக்க. உமது விடையைப் பட உதவி கொண்டு
விளக்குக. பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் கொழும்புத் துறை முகம் அபிவிருத்தியடைந்த முறையை விளக்குக, அஃது இலங்கையின் முக்கிய துறைமுகமாக வளர்ச்சி பெற்றதுக்குக் காரணங் கூறுக. பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையினல் ஏற்பட்ட நன்மைகளையும் தீமைகளையும் வேறுபடுத்திக் கூறுக. பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையின் பயனுக gd GOT LATGÖST சமூக, பொருளாதார விளைவுகளை விளக்குக.
 
 
 

அதிகாரம் 13
நிருவாக, பரிபாலனச் சீர்திருத்தங்கள் (1850-1930)
இலங்கையின் பொருளாதாரத் துறையில் ஏற்பட்ட புரட்சி கரமான மாற்றங்களும் அவற்றின் விளைவுகளும் முன்னிரு அதிகா ரங்களில் விபரிக்கப்பட்டன. பொருளாதாரம், போக்குவரத்து, வர்த்தகம் என்னுந் துறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் நிருவாகத் துறையிலும் பல சீர்திருத்தங்களுக்கு வித்திட்டன.
1840 க்குப் பின் கோப்பிச் செய்கையின் பெருக்கத்தினுல் தீவின் செல்வநிலை பன்மடங்கு அதிகரித்தது. இலங்கை வறுமை நிலையினின்று செல்வம் கொழிக்கும் நாடாக மாறியது. கோப்பி வியாபாரத்தின் வழியாகப் பெறப்பட்ட ஆதாயத்தின் பெரும் பகுதி, அரசாங்க இறை வருமானமாயிற்று. 1834 இல் அரசாங்க வருவாய் 377, 952 Llay (609) கும். 1875 இல் இத்தொகை 1,354, 123 பவுணுக உயர்ந்நது. இவ் விதம் வருவாய் அதிகரிக்க, அரசாங்கமும் கூடுதலான தொகையினைப் பொதுச் சேவைகளில் செலவிடலாயிற்று. நாட்டின் சனத் தொகை பெருகியதாலும் நிருவாகக் கருமங்கள் அதிகரித்தன.
நிருவாகப் பரிபாலனத் துறைகளில் வேண்டப்பட்ட மாற் றங்களை ஏற்படுத்துவதற்கும், இலங்கையை உலக நாடுகளிடையே தற்கால நிலைக்கு உயர்த்துவதற்கும், ஊக்கம் மிகுந்த ஆள்பதிகளும், குடியியற் சேவையாளரும் இங்கு வந்து பல சீர்திருத்தங்களையும் ஏற்பாடுகளையும் செய்தமை ஒரு முக்கியமான காரணமெனக் கொள் ளத்தகும்.
1. ஆள்பதிகள்
பிரித்தானியப் பேரரசிலிருந்த முடிக்குரிய குடியேற்ற நாடு களுள் இலங்கை தலையான இடத்தை வகித்ததனல், அதன் ஆட்சிக் காக அனுப்பப்பட்ட ஆள்பதிகள் விவேகமுள்ளவர்களாகவும், நிருவாக விடயங்களில் நிறைந்த அநுபவம் பெற்றவர்களாகவும் காணப்பட்டனர். சிலர், பிற குடியேற்றங்களில் ஆள்பதிப் பதவியை வகித்தவர்கள்; வேறு சிலர் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்
களாக இருந்தவர்கள். வேறு சிலர் பிற குடியேற்ற நாடுகளின் அல்லது
குடியியற் சேவையின் வாயிலாக உயர்வு பெற்றவர்கள். ஆள்பதிகள் 239

Page 127
240 இலங்கைச் சரித்திரம்
யாவரும் திறமையும் ஆற்றலும் உள்ளவர்கள் என்றும், கடமையிற் கண்ணும் கருத்துமாயிருந்தனரென்றும் பொதுப்படக் கூறலாம். ஒவ்வொருவரின் திறமைக்கேற்ப அவர்கள் ஆற்றிய, சேவைகள் அளவிலும் தரத்திலும் வேறுபட்டன. இலங்கையின் ஆள்பதிகள் வரிசையில், அதி திறமையும் சிறப்பும் பெற்று விளங்கியவர்கள், மெயிற்லன்ட், பாண்ஸ், உவாட், ருெபின்சன், கிறெகரி, கோடன், றிட்ஜ்வே என்பவராவர்.
இலங்கை வந்த ஆள்பதிகள், இங்கிலாந்தின் குடியேற்ற நாட்டுச் செயலாளரினதும் பாராளுமன்றத்தினதும் சட்ட திட்டங் களுக்கு அமைந்து நடக்கவேண்டும் என்பதை நன்குணர்ந்தனர். சில சந்தர்ப்பங்களில் ஆள்பதிகள் இங்கிலாந்தினது கட்டளைகளை மனமுவந்து வரவேற்காவிடினும், அவற்றைச் செயற்படுத்துவது தமது கடனென நினைந்து கருமமாற்றினர். அவர்கள் நாட்டின் மாறிவரும் நிலைமைகளை நன்கு கற்றறிந்து, அவற்றை மேலதி காரிகளுக்கு அறிவித்தும், புது நடவடிக்கைகளைச் சிபார்சு செய்தும் தாம் செயற்படுத்தும் திட்டங்களுக்கு அங்கீகாரம் பெற்றனர். இக் கட்டுப்பாடுகளைத் தவிர்ந்த ஏனைய துறைகளில், அவர்கள் சர்வாதிகாரிகள் போலவே நடந்தனர். "ஆள்பதி தான் அரசாங்கம்", எனும் கூற்று அக்காலத்தில் நடந்த ஆட்சி முறைக்குச் சாலப் பொருந்தும்.
ஆள்பதிகளின் முதற் கடமை, பெருந் தோட்டப் பயிர்ச் செய்கையையும் வர்த்தகத்தையும் விருத்தி செய்வதற்கு உதவி செய்வதாகும். 1895 இல் றிட்ஜ்வே இலண்டனில் இலங்கைச் சங்கத்துக்குக் கூறியது, "ஆள் பதியின் தலையாய கடமைகளிலொன்று வர்த்தகத்தை விருத்தி செய்வதாகும். பேரரசின் எல்லாப் பகுதி களையும் தொடர்பு படுத்தும் சாதனம் வர்த்தகம் தான்', என்ப தாகும். எனினும், ஆள்பதிகள் வர்த்தகத்தை விருத்தி செய்வ தற்காக மற்றைய எல்லாக் கருமங்களையும் புறக்கணித்தனர் என நாம் கொள்ளல் ஆகாது. அவர்கள் குடியானவரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் யாவற்றிலும் அக்கறையும் சிரத்தையும் காட்டினர். அவர்கள் இவ்வபிவிருத்திக்குத் தேவையான பணத்தை, வர்த்தகத்தை விருத்தி செய்வதன் மூலமே பெற முடிந்தது. எனவே குடியேற்ற நாட்டுக் கொள்கைகளின் அடிப்படையிலும், உள்நாட்டு விருத்திக்குத் தேவையான இறை வருமானத்தைப் பெறுவதற்கும் வர்த்தகத்தை ஆதரித்தல் இன்றியமையாத முதற் தேவைகளில் ஒன்ருயிற்று.
 
 

நிருவாக, பரிபாலனச் சீர்திருத்தங்கள் 1850-1930 241
இவற்றை விடச், சட்டத்துக்கு முன் சமத்துவம், பிரதிநிதித்துவ ஆட்சிமுறை, சுதந்திரம் படைத்த நீதி குலம், நாடெங்கணும் ஒரே விதமான ஆட்சி முறையை ஏற்படுத்தல், தனியார் முயற்சியை ஊக்குவித்தல், என்பவை அவர்கள் திட்டமிட்டு ஆதரித்த முற்போக்குக் கருத்துக்களாகும்.
ஆள்பதிகளின் அதிகாரங்கள் காலத்துக்குக் காலம் மாறுபா ட்டைந்து வந்தன. 1830 வரை அவர் சர்வாதிகாரியாகவே விளங் கினர். 1830 தொடக்கம் அதிகாரங்கள் ஒரளவிற்குக் குறைக்கப் பட்ட போதிலும், அவரே அரசாங்க நிருவாகத்தின் தலையான அதிகாரியாகவும், சட்ட சபையின் தலைவராகவும் திகழ்ந்தார். நாட்டின் நல்லாட்சிக்கான பொறுப்பு அவருடைய கைகளில்தான் தங்கி நின்றது. சட்டக் கழகத்தின் மேலும் நிருவாகத்தின் மேலும் தம் ஆளுமையின் திறத்தினுல் தம் எண்ணங்களை நிறைவேற்றக் கூடிய திறமை பெற்ற ஆள்பதிகள், சொல்லிலும் செயலிலும் சர்வாதிகாரிகளாகத் திகழ்ந்தனர். நாளடைவில் போக்கு வரத்து வசதிகளின் விருத்தி, சட்டக் கழகத்தில் உத்தியோகப் பற்றற்ற உறுப்பினரின் எண்ணிக்கை அதிகரித்தமை, எனும் காரணங்களினுல் ஆள்பதிகளின் அதிகாரங்கள் படிப்படியாகக் குறையத் தொடங்கின. 1870 இல் கடற்கீழ் தொலைபேசிச் சாதனங்கள் அமைக்கப்பட்ட துடன், குடியேற்றச் செயலாளர், ஆள்பதிக்கு நேர்முகமான கட்டளைகள் இடக்கூடிய வாய்ப்புக்கள் தோன்றின. குடியேற்றச் செயலாளர் எத்துணை அதிகாரங்கள் படைத்தவராகக் காணப் பட்ட போதிலும் அவர் இலங்கையை இங்கிலாந்திலிருந்து ஆட்சி புரிய முடியவில்லை. அவர் தல நிலைகளை அறிந்தவரிடம் தீர்மா
னங்களைச் செய்யும் பொறுப்பினை விடவேண்டிய நிலைமைக்குள்ளானர்.
அதிகாரம் படிப்படியாகச் சட்டக் கழகத்தின் கைகளுக்கு மாறவே, ஆள்பதியின் அதிகாரங்கள் குறையலாயின. 1924 தொடக்கம் தெரியப்பட்ட உத்தியோகப் பற்றற்ற உறுப்பினரின் எண்ணிக்கை அதிகரிக்க, ஆள்பதி தன் எண்ணங்களைச் செயற் படுத்தும் அதிகாரத்தினை இழந்தார். டொனமூர் அரசியல் திட்டம் அமுலானதுடன் ஆள்பதி சட்ட வரம்பிற்குட்பட்ட ஆட்சியாளரின் நிலைக்குத் தாழ்த்தப்பட்டார்.
1850 தொடக்கம் 1930 வரை இலங்கையினை ஆட்சி செய்த ஆள்பதிகளின் வரிசை பின்வருமாறு:-
சேர். ஜோஜ் அன்டர்சன் (1850-55) காலத்தில் கோப்பிச் செய்கையும் வர்த்தகமும் அதிகரித்து விரைவில் பழைய நிலையை ೫ಥ್ಥ : 1848 ஆம் ஆண்டுக் கலகத்திற் சிறையானேர் 1854 இல்

Page 128
242 இலங்கைச் சரித்திரம்
விடுதலை செய்யப்பட்டனர். அதே ஆண்டு தோட்டத் துரைமார் தமக்கனெ ஒரு சங்கத்தை (Planters Association)த் தாபித்தனர். அவர் கையாண்ட சிக்கனத்தினுல் பின் வந்த ஆள்பதி பெரும் அபி விருத்தித் திட்டங்களை மேற் கொள்ள முடிந்தது.
சேர். ஹென்றி உவாட் (1855-60) 'அதிட்ட ஆள்பதி' எனப் பெயர் பெற்றவர், ஏனெனில் அவர் இலங்கையின் பொரு ளாதார அபிவிருத்திக்கும், குடியானவரின் நல்வாழ்வுக்குமென வகுத்த திட்டங்கள் நற்பயனை அளித்தன, அவர் ஆள்பதியாகப் பதவியேற்றுச் செய்த முதற் கருமங்களிலொன்று, நாட்டின் இறை வருமானத்தின் ஒரு பகுதியைத் தெருக்களினதும், நீர்ப்பாசன வேலை களினதும் விருத்திக்கு ஒதுக்கியமையாகும். அவரது ஆட்சி முடி வடையுமுன் இலங்கை எங்கணும் நல்ல தெருக்கள் அமைக்கப்பட்டி ருந்ததுடன், முக்கிய நகரங்கள் யாவும் கொழும்புடன் இணைக்கப் பட்டன. அவர் நாட்டின் பல பாகங்களில் குளங்களைத் திருத்தவும் புதுப்பிக்கவும் பெரு முயற்சி செய்தார். 1856 இல் இரண்டு பண மாயிருந்த தபால் முத்திரைச் செலவை ஒரு பெனி ஆக்கினர். 1857 இல் கொழும்புக்கும் காலிக்குமி ையில் தந்திச் சேவையை ஆரம்பித்தார். 1858 இல் உவாட், தன் கையினுல் முதற் (o) Luitgif வெட்டிக் கொழும்பு-கண்டி புகையிரத வீதி அமைக்கும் வேலையைத் தொடக்கி வைத்தார். 1859 இல் கன்சபாவைச் சட்டத்தை இயற்று வித்தார். நாட்டு மக்கள் அவரை எத்துணை அளவு மதித்து நேசித் தனர் என்பது, அவரது பதவிக் காலத்தை நீடிக்கும்படியும், அவரது வேதனத்தை உயர்த்தும் படியும், அவர்கள் விக்ரோறியா மகா ராணிக்குச் சமர்ப்பித்த விண்ணப்பத்திலிருந்தும், கண்டி மக்கள் அவ ரது ஞாபகத்துக்காகத் தம் நகரில் தம் செலவில் இயற்றிய சிலையி னின்றும் புலப்படும்.
சேர் சாள்ஸ் மக்காத்தி (1860-63) கொழும்பு-கண்டிப் புகை யிரத வீதி அமைப்பு ஒப்பந்தத்தை W. R. பவியேல் (Faviel) இடம் ஒப்படைத்து, அவ்வேலை துரிதமாக நடை பெறுவதற்கு வழி வகுத் தார். அவரது காலத்தில் "லங்கா லோக்கய” எனும் முதற் சிங்களப் பத்திரிகை பிரசுரமானது. சுகவீனத்தின் காரணமாகப் பதவியைத் துறந்தார்.
மேஜர் ஜெனரல் ஒ பிறயன் (1863-65) நிரந்தர ஆள்பதி ஒருவர் நியமிக்கப்படும் வரை தற்காலிக ஆள்பதியாகச் சேவை செய்தார். 1864 இல் சட்டக் கழகத்தில் இராணுவச் செலவினங் களைப் பற்றி ஏற்பட்ட கிளர்ச்சியையும், அதன் பயனக உத்தி
; :
's

நிருவாக, பரிபாலனச் சீர்திருத்தங்கள் 1850-1930 罗43
யோகப் பற்றற்ற உறுப்பினர் யாபேரும் ஒரே முகமாக இராஜின மாச் செய்த பிரச்சினையையும் சமாளிக்க வேண்டியதாயிற்று. 1864 இல் கொழும்பு-அம்பேபுஸ்ஸ புகையிரத வீதி முற்றுப்பெற்றது.
சேர். ஹேர்க்கியூலிஸ் ருெபின்சன் (1865-72) இலங்கையை வந்தடைந்த ஆண்டில் கொழும்பு, கண்டி எனும் இடங்களிலும் 1866 இல் காலியிலும் மாநகரசபைகளை நிறுவினர். 1867 இல், அவர் கொழும்பு கண்டிப் புகையிரத வீதியைப் போக்கு வரத்துக்குத் திறந்து வைத்தார். 1869 இல் கல்விச் சங்கம் நிராகரிக்கப்பட்டு, பாடசாலைகள் வித்தியா பகுதியினரின் பொறுப்பில் விடப்பட்டன. 1870 இல் கொழும்பில் வைத்தியக் கல்லூரி நிறுவப்பட்டது ; கன் சபாவைச் சட்டம் இயற்றப்பட்டது. 1871 இல் இலங்கையின் முதற் குடிசன மதிப்பு நடாத்தப்பட்டபொழுது, அதன் குடிசனம் 24,05,287 என மதிப்பிடப்பட்டது. 1872 இல் ரூபா, சத நாணய முறை வழக்கத்துக்கு வந்தது. அவர் ஏட்டுப் பிரதிகளிற் கிடந்த பாளி மொழி நூல்களைத் திரட்டும்படி திரு. ஜேம்ஸ் டி அல்விஸ் என் பவரைப் பணித்தார்.
சேர். வில்லியம் கிறகரி (1872-77) இன் காலத்தில் கோப்பித் தோட்டங்களின் செல்வ நிலையினல் அரசாங்க வருமானம் அதிகரித்து வரலாயிற்று. 1872 இல் கொழும்பில் வாயுத் தீபம் (Gas light) முதன் முதல் ஏற்படலாயிற்று. அவ்வாண்டில் கம்பளைக்குப் புகையிரதவீதி முற்றுப் பெற்றது. 1873 இல் வடமத்திய மாகாணத்தைப் புதிதாக ஆக்கினர். 1874 இல் புகையிரதப் பாதை நாவலப்பிட்டிக்குத் திறக்கப்பட்டது. 1875 இல் உவேல்ஸ் கோமகன் (பின்பு ஏழாம் எட்வேட் அரசர்) இலங்கை கண்டிச் சபா மண்ட பத்தில் கிறகரி ஆள்பதிக்கு சேர்’ பட்டமளித்தார். அவர் கொழும்புக் கடலணைக்கு அத்திவாரமிட்டார். பாணதுறைவரை புகையிரத வீதியை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். 1875 இல் கொழும்பு நூதனசாலை (Museum) திறக்கப்பட்டது.
சேர். ஜேம்ஸ் ருெபட் லோங்டன் (1877-83) இன் முயற்சியினல் (1881) கொழும்புத் துறைமுக அணை கட்டப்பெற்றது. அவரது காலத்தில் கோப்பித் தோட்டங்களில் நோய் பரவி அழிந்து போகவே பொருளாதார நெருக்கடி மிகுந்தது.
சேர். ஆத்தர் கோடன் (1883-90) ஒறியன்ரல் வங்கி 1884 இல் முறிந்தபொழுது, மிகவும் திறமையுடன் நிலைமையைச் சமாளித்தனர். அவர் வங்கி நோட்டுக்களை வாங்கிக்கொண்டு வெள்ளி நாணயங்களைக் கொடுக்கும்படி உத்தரவு பிறப்பித்தார். 1886 இல் ஊவா

Page 129
244 இலங்கைச் சரித்திரம்
மாகாணம் பகுக்கப்பட்டட்து. வேளாண்மை செய்தற் பொருட்டும், தெருக்கள், பாலங்கள் அமைத்தற் பொருட்டும் ஏராளமான பணத்தைச் செலவிட்டார். நீர்ப்பாசன வேலைகளை விருத்தி செய்தார். கலாவவ, யோதளல வெட்டு வாய்க்கால் புதுப்பிக் கப்பட்டன. 1887 இல் விக்ரோறியா இராணியின் 50 ஆம் வருட யூபிலி மிக ஆடம்பரமாகக் கொண்டாடப்பட்டது. 1889 இல் சப்பிரகமுவா மாகாணம் வகுக்கப்பட்டது. கண்டியருக்கு ஒருவரும் முகமதியருக்கு ஒருவருமாக இருவரைச் சட்ட சபைக்கு நியமித்தார். 1885 இல் இலங்கைக்கென ஒரு பாதகவியல் சட்டத் தொகுப்பை (Penal Code) glibuG.55 (a)ri.
சேர். ஆத்தர் ஹவ்லொக் (1890-96) 1892 இல் தானிய வரியை நீக்கினர். 1894 இல் புகையிரத வீதியை பண்டாரவளை, மாத்தறை, குருநாகல் எனுமிடங்களுக்கு விஸ்தரித்தார். 1895 இல் களனி கங்கையின்மேல் விக்ரோறியா பாலத்தைக் கட்டுவித்தார்.
சேர், ஜோசப் வெஸ்ற் றிட்ஜ்வே (1896-1903) ஆசிரிய பயிற்சிக் கல்லூரியை ஆரம்பித்தார். 1897 இல் தரிசு நிலச் சட்டத்தை நிறை வேற்றினர். 1900 இல் களனிப் புகையிரத வீதியில் வேலை தொடங் கியது. அவ்வாண்டு யாழ்ப்பாணத்துக்குப் புகையிரத வீதி அமைக்கும் வேலையும் ஆரம்பமாயிற்று. இவ்வீதி 1902 மார்ச் 10 இல் அவரினல் திறக்கப்பட்டது. 1902 ஆகத்து ஒன்பதில் ஏழாம் எட்வேட், மன்ன ராகப் பட்டாபிஷேகம் செய்யப்பட்டார். அவ்வாண்டு இலங்கையில் முதல் மோட்டார் வாகனம் வந்திறங்கியது.
சேர், ஹென்றி பிளேக் (1903-01) 1904 இல் இலங்கை விவ சாயச் சங்கத்தை அமைத்தார். அவர் இலங்கையின் பொலீஸ் முறையினையும், தலைமைக்காரர் முறையினையும் சீர்திருத்தியமைத் தார். 1905 இல் விக்ரோறியா ஞாபகார்த்த கண் வைத்தியசாலை திறக்கப்பட்டது. 1906 இல் பெரதேனியாவில் இறப்பர் பொருட் காட்சி ஒன்றினை ஏற்படுத்தினர்.
சேர். ஹென்றி மக்கலம் (1907-13) காலத்தில் (1911) ஐந்தாம்
ஜோஜ் அரசராக முடிசூடினர். அவரது ஆட்சியின் மிகவும் முக்கி யமான சம்பவம் 1911 இல் நடைபெற்ற சட்டசபைத் திருத்த மாகும். திரு. P. இராமநாதன், சட்டக் கழகத்தின் முதல் உறுப் பினராக கல்விகற்ற இலங்கையரால் தெரிவு செய்யப்பட்டார். 1912 இல் திரு. P. அருணசலம் நிருவாகக் கழக உறுப்பினராக நிய மிக்கப்பட்டார். 1912 ஜனவரி 16 இல், சீர்திருத்தப்பட்ட சட்டக் கழகம் கூடிற்று. அதேயாண்டு இரத்தினபுரிப் புகையிரத வீதி திறக் கப்பட்டது. கொழும்பு மத்திய தந்திக் கந்தோரும் திறக்கப்பட்டது.
 

நிருவாக, பரிபாலனச் சீர்திருத்தங்கள் 1850-1930 245
சேர். ருெபட் ஷாமர்ஸ் (1913-1916) 1914 இல் இலங்கை
இந்திய்ப் புகையிரத வீதியைத் திறந்து வைத்தார். அவ்வாண்டு முதலாவது உலக யுத்தம் மூண்டது. 1915 இல் சிங்களருக்கும் சோனகருக்குமிடையில் பெருங் கலகம் விளைந்தது. இது மேல் மாகாணத்தில் தொடங்கி மத்திய, வடமேல், தென், சம்பிரகமுவ மாகாணங்கள் எங்கணும் பரவியது. ஆள்பதி இராணுவச் சட்டத்தைப் பிரகடனஞ் செய்தார். 1916 இல் விவசாயப் பாடசாலையைத் தாபித்தார்.
சேர். ஜோண் அன்டர்சன் (1916-18) அவர்களின் ஆட்சிக் காலம் முதலாம் உலகப் போருடன் பொருந்தியது. 1916 இல் சிலாப புகையிரத வீதியும் 1917 இல் கொழும்பு கோட்டை மத்திய புகையிரத நிலையமும் திறக்கப்பட்டன. 1918இல் D. R. விஜயவர்த்தன அவர்கள் 'சிலோன் டெய்லி நியூஸ்" பத்திரிகையை ஆரம்பித்தார்.
சேர். வில்லியம் மனிங் (1918-25) 1920 இலும் 1925 இலும் சட்டசபை அமைப்பில் சில திருத்தங்களைச் செய்தார். 1921 இல் இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரி திறக்கப்பட்டது. அவ்வாண்டின் குடிசன மதிப்பின்படி இலங்கையின் குடிசனம் 45,04,549 ஆயிற்று.
சேர் ஹியூ கிளிபட் (1925-1927) ஈராண்டுகளுக்கு மாத்திரம் ஆள்பதியாகச் சேவை புரிந்தார். அவரது ஆலோசனையின் பயனுக டொனமூர் விசாரணைச் சபை இலங்கை வந்து சேர்ந்தது. 1927 இல் மகாத்மா காந்தி அவர்கள் இலங்கைக்குத் தரிசனம் தந்தார். அவ்வாண்டு திருகோணமலை புகையிரத வீதி முற்றுப்பெற்றது.
சேர் ஹேபட் ஜேம்ஸ் ஸ்ரான்லி (1927-31) நல்கிய ஆதரவின் பயணுக 1927 ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழகம் பெரதே னி யாவில் கட்டப்பட வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டது. 1928 இல் மட்டக்களப்பு புகையிரத வீதி திறக்கப்பட்டது. டொனமூர் விசாரணைத் திட்டத்தின் பயனக பழைய சட்டக் கழகத்தைக் கலைக்கவும் புதுச் சட்டசபையைத் திறக்கவும் செய்தார்.
2. குடியியற் சேவை
கோல்புறுரக் சீர்திருத்தங்களின் பயணுக, குடியியற் சேவையில் எழுந்த குறைபாடுகளுள் பெரும்பாலானவை, ஹோட்டன், மக்கன்சி, கம்பல் எனும் ஆள்பதிகளின் ஆட்சிக் காலங்களில் நீக்கப்பட்டன என்பதை முன்னர் கண்டோம். குடியியற் சேவையாளரின் திறமை
g) 16 A
-
:

Page 130
246 இலங்கைச் சரித்திரம்
யைப் பொறுத்தே இலங்கையில் நல்லாட்சி நிலவியதனல் குடியியற் சேவையின் திறமையை அதிகரிப்பதற்கும், திறமை மிகுந்தவர்களை அச்சேவையிற் சேர்ப்பதற்கும் 1850 தொடக்கம் பல நடவடிக்கைகள் 65) 645 LIT 6ft - Golf .
1845 தொடக்கம் 1856 வரை இங்கிலாந்தில் நடாத்தப் பட்ட பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் மாத்திரமே குடியியற் சேவையினுள் புகுந்தனர். 1856 இல் குடியியல் ஆணையாளர் எனும் குழு, பரீட்சை ஒன்றினை நடாத்தி, அதில் முதற்றரமாகச் சித்தி பெற்றவர்களையே குடியியற் சேவைக்குத் தெரிந்தெடுத்தது. இப்பரீட்சைக்குத் தோற்றுபவர்கள் பல்கலைக்கழகப் பட்டதாரிகளா கவும், வயதில் 18 க்கும் 25 க்கும் உட்பட்டவர்களாகவும் இருத்தல் வேண்டும் என விதிக்கப்பட்டது. صر
ஆள்பதி உவாட், எவ்வித பரீட்சையுமின்றி இலங்கையில் குடியியற் சேவையாளரைச் சேர்க்கும் அதிகாரத்தைப் பெற்ருர். 1870 இல் குடியேற்ற நாட்டுக் காரியாலயம், இங்கிலாந்திலிருந்தும், இலங்கையிலிருந்தும் குடியியற் சேவையில் சேர விரும்புபவர்கள், ஈரிடங்களிலும் நடாத்தப்படும் ஒரே போட்டிக்குரிய பரீட்சைக்குத் தோற்ற வேண்டுமென விதித்தது. அத்தீர்மானத்துக்கிணங்க 1870 தொடக்கம் குடியியற் சேவைப் பரீட்சை இலங்கையிலும் நடாத்தப் படலாயிற்று. இங்கிலாந்தில் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள், சிங்களத்திலும், தமிழிலும் போதிய அறிவு பெற்றிருக்க வேண்டு மெனவும் விதிக்கப்பட்டது. 1880 தொடக்கம் இப்பரீட்சை இங்கி லாந்தில் மாத்திரம் நடாத்தப் பெற்றது. வயதுத் தகைமை 22 க்கும் 24 க்கும் இடைப்பட்டதாக்கப்பட்டது.
19 ஆம் நூற்ருண்டின் பெரும் பகுதியில் குடியியற் சேவை யாளர் முழுமையாக ஆங்கிலராகவே இருந்தனர். இச்சேவையினுள் முதன் முதல் புகுந்த இலங்கையர் திரு. (பின்பு சேர்.) பொன்னம்பலம் அருணுசலம் அவர்களாவர். ஆங்கிலப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற அவர், 1875 இல் போட்டிக்குரிய குடியியற் சேவைப் பரீட் சையில் சித்தியடைந்தார். ஆங்கிலச் சேவையாளரிலும் பார்க்க அதி திறமைசாலியாக விளங்கியபோதிலும் அவர் பதிவு நாயகம் (Registrar General) எனும் பதவிக்கு மேல் உயர்வடைய ஆட்சிய்ாளர் அனுமதிக்கவில்லை. அவரைத் தொடர்ந்து அச்சேவையினுள் புகுந்த சேர். போல் பீரிஸ், இலங்கைச் சரித்திர ஆராய்ச்சித் துறையில் பல அளப்பரிய பணிகள் புரிந்தார்.
} / }

நிருவாக, பரிபாலனச் சீர்திருத்தங்கள் 1850-1930 ”247
முதலாம் உலகப் போருக்குப் பிற்பட்ட ஆண்டுகளில், இலங் கையர் அதிகமானேர் குடியியற் சுேவையில் சேர்ந்தனர். 1921 இல் இலங்கைப் பல்கலைக்கழக் கல்லூரி திறக்கப்பட்டமையும், 1924 இல் குடியியற் சேவைப் புகுமுகப் பரீட்சைகள் கொழும்பிலும் இலண் டனிலும் நடாத்தப்பட்டமையும், இலங்கைப் பட்டதாரிகளுக்குப் பெரும் வாய்ப்பாயமைந்தன. குடியியற் சேவையின் இனவாரி அமைப்பைப் பின்வரும் விபரங்கள் எடுத்துக் காட்டும்.
1920 இல் 79 ஐரோப்பியர், 11 இலங்கையர் 1930 83 , , 55 J j
1940 , , 49 81
y sy
இவ்விருபது ஆண்டுகளில் பட்டதாரிகளான இளைஞர்கள் குடியியற் சேவையினுட் புகுவதைத் தம் கல்வியின் உன்னத நோக்க மாகக் கொண்டனர். இவ்விதம் அதனுட் புகுந்த வாலிபர்களும், பொதுவாக அச்சேவையின் உயர் இலட்சியங்களைக் கடைப்பிடித்து, நாட்டின் நிருவாகத்தைத் திறம்பட நடாத்தினர்.
மாகாணப் பரிபாலனம் :
கோல்புறுாக், இலங்கையினை ஐந்து மாகாணங்களாகப் பகுத்தார். 1856 இல் வடமேல் மாகாணம் தனிப் பிரிவாக அமைக்கப்பட்ட மாகாணங்கள் ஆக்கப்பட்டு இலங்கை ஒன்பது மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது.
1866 இல் ஆள்பதி கோடன், ஊவா மாகாணத்தை ஏற்படுத் தினர். மத்திய மாகாணத்தின் விந்தன்னை, வியலுவ, வெல்லச, உடுக்கிந்த, யட்டிகிந்த எனும் பகுதிகள் புதுப் பிரிவினுள் அடங்கின. தென் மாகாணத்தினின்று வெல்லவாய, புத்தள எனும் பகுதிகளும் இதனுள் இடம் பெற்றன. தலைநகரம் பதுளையில் அமைந்தது.
1873 இல் சேர். வில்லியம் கிறகரி, வடமத்திய மாகாணத்தை ஆக்கினுர், வடமாகாணத்தின் தலைப்பட்டினமான யாழ்ப்பாணத் திணின்று நுவரக்கலாவிய, தமன்கடுவை போன்ற பிரதேசங்களை ஆட்சி செய்வது மிகக் கடினமாயிற்று. ஏழைக் குடியானவர்களின் அபிவிருத்தியில் அக்கறையும் சிரத்தையும் கொண்ட கோடன், இப்பகுதியின் வளத்தைப் பெருக்கும் நோக்கமாக அதனை ஒரு தனி மாகாணமாகப் பகுத்து ஓர் அரசாங்க முகவரின் கீழ் விட்டார்.

Page 131
248 இலங்கைச் சரித்திர்ம்
இலங்கை 1889
மாகாண எல்லைகள் 1
மாகாணம்
 

நிருவாக, பரிபாலனச் சீர்திருத்தங்கள் 1850-1930 249
1889 இல் ஆத்தர் கோடன் சப்பிரகமுவா மாகாணத்தை ஏற்படுத்தினர். கேகாலை, இரத்தினபுரி மாவட்டங்களில் பெருந் தோட்டங்கள் திறக்கப்பட்டமையினல், அவை மேல் மாகாணத் தினின்று பிரிக்கப்பட்டு, சப்பிரகமுவா மாகாணமெனப் புதிதாக ஆக்கப்பட்டது. இரத்தினபுரி, இம்மாகாணத்தின் தலைநகராயிற்று நிருவாக வேலைகள் விஸ்தரிக்கப்படவே சிலாபம், நீர்கொழும்பு, களுத்துறை, மாத்தளை, வவுனியா எனும் இடங்களில் உதவி அரசாங்க முகவர்கள், அரசாங்க மாவட்டப் பரிபாலனத்தின் பொறுப் பாளிகளாக நியமிக்கப்பட்டனர். மிகச் சிறந்த துறைமுகத்தைக் கொண்டிருந்த திருகோணமலைதான் கீழ்மாகாணத்தின் தலைநகராய் இருந்து வந்தது. ஆனல் அதன் முக்கியத்துவம் குன்றிப்போகவே, குடிசனத்தின் பெருக்கத்தினலும், நெற்செய்கையினலும், முக்கியத் துவம் பெற்று விளங்கிய மட்டக்களப்பு, 1870 இல் கீழ்மாகாணத் தின் தலைநகரமாக்கப்பட்டது. திருகோணமலையில் உதவி அரசாங்க முகவர் நியமிக்கப்பட்டார். -
3. புது அரசாங்கத் திணைக்களங்கள்
நாட்டின் சனத்தொகை பெருகியதனுலும், பொருளாதார முயற்சிகள் விரிவடைந்ததினலும் நிருவாகக் கருமங்கள் அதிகரித்தன. இவற்றை ஈடு செய்யும் பொருட்டு, தேவைக்கேற்ப்க் காலத்துக்குக் காலம் புதுத் திணைக் களங்கள் இயற்றப்பட்டன.
கல்வி, சுகாதாரம், பொது மராமத்து வேலைகள் எனும் இலாகாக்கள் நீண்ட வரலாற்றை உடையவை. பிரித்தானியர் இலங் கையைக் கைப்பற்றிய நாட்தொட்டு இவை இயங்கிவர ஆரம்பித்தன . தெருக்கள், புகையிரத வீதிகளின் விரிவுடன் புகையிரத, தந்தி இலா காக்கள் நிறுவப்பட்டன. விவசாயத்தினதும் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையினதும் முன்னேற்றத்துடன் 626ug tub, பூந்தோட்டம் (Royal Botanic Gardens), நில அளவை, நீர்ப்பா சனம், குடியேற்றம், வனபரிபாலனம் சம்பந்தமான திணைக்களங்கள் தனிக் கிளைகளாக இயங்கத் தலைப்பட்டன.
1870 க்குப் பின்னர் இத்திணைக்களங்களின் எண்ணிக்கையும் திறமையும் அதிகரித்தன. அதற்குமுன் நிலவிய நிருவாக முறையில் நாட்டின் பல்வேறு பாகங்களில் அரசாங்க முகவர்கள்தான் பிரதான நிருவாக அதிகாரிகளாக விளங்கினர். அவர்கள் தத்தம் மாகாணங் களில் ஒழுங்கையும் அமைதிய்ையும் நிலைநாட்டல், அரசிறைகளைச் சேகரித்தல், விவசாய நீர்ப்பாசன வேலைகளைப் பராமரித்தல், பொது

Page 132
250 இலங்கைச் சரித்திரம்
மராமத்து வேலைகளை மேற் பார்வை செய்தல், உள்ளூராட்சி மன்றங்களைக் கண்காணித்தல், எனும் கடமைகளுடன் வேறு பல சேவைகளையும் புரிந்தனர். நாளடைவில் நிருவாகக் கருமங்கள் பெருகவே, அவை சிக்கல்கள் நிறைந்தனவாக மாறின. பல்கலைக் கழகக் கலைத்துறைப் பட்டதாரிகளான முகவர்கள் நீர்ப்பாசனம், விவசாயம் பொது மராமத்து வேலைகள் போன்ற துறைகளை நிருவகிப்பதற்குத் தேவைப்பட்ட தொழில் நுட்ப அறிவு இல்லா திருந்தனர். விஞ்ஞான அறிவும், பொறியியல் திறமையும் உள்ள நிபுணர்கள் இவ்விதமான வேலைகளுக்கு நியமிக்கப்பட வேண்டுமென் பதை அரசாங்கம் படிப்படியாக உணர்ந்தது. ஆகவே, 1870 க்குப் பின்னர், பல இலாகாக்கள் நிறுவப்பட்டு, தொழில் நுட்ப வேலை கண்ப் பொறுப்பேற்றன அரசாங்க முகவர்கள், பொது நிருவாகத் தையும் மாகாணங்களில் பல இலாகாக்களின் வேலைகளையும் தொடர்பு படுத்தும் வேலையை மேற்கொண்டனர்.
இவ்விதமாக, இக்காலத்தில் விருத்தியடைந்த திணைக்களங்களுள் அதி முக்கியத்துவம் வாய்ந்தவை விவசாயம், கல்வி, வைத்தியம், உள்ளூராட்சி என்பனவாம். விவசாயத்தின் விருத்தி, பத்தாம் அதிகா ரத்தில், விபரிக்கப்பட்டுள்ளது. மற்றைய மூன்று திணைக்களங்களின் விருத்தி கீழே தனிப் பகுதிகளாக ஆராயப்பட்டுள்ளன.
4. கல்வி
8. இலங்கையின் கல்வி முறையினைப் பரிசீலனை செய்வதற்கென 1865 இல் சட்டசபை, றிச்சட் மோகன் என்பவரின் தலைமையில் ஒரு விசாரணைச் சபையினை நியமித்தது. அக்குழுவின் சிபார்சுகளின் பேரில் பல முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டன. இச்சபை ஒபார்சு செய்த திருத்தங்களுள் முக்கியமானவை பின்வருவன:
1 வது பாடசாலை மத்தி சபையினை நீக்கி அதனிடமாக பொதுக் 5663; S300T did,6Tg5 605 (Department of Public Instruction) அரசாங்கம் தன் பொறுப்பில் அமைத்தல் வேண்டும். இத்திணைக்களத்திற்கு இயக்குநர் ஒருவர் (Director) தலைவ ராக நியமிக்கப்பட வேண்டும்.
2 வது ஆரம்பப் பாடசாலைகளில் போதன மொழி, தாய்
மொழியாக இருத்தல் வேண்டும். ...,
" ቅ.................................
-
fi

நிருவாக, பரிபாலனச் சீர்திருத்தங்கள் 1850-1930 251
3 வது உயர்தர கல்விக்கு ஒரு கல்லூரி நிறுவப்படல் வேண்டும். தகுதியுடைய மாணவர் பல்கலைக் கழகங்களுக்குச் சென்று உயர் கல்வியைப் பெறுவதற்கு அவர்களுக்கு நன்கொடைப் பண உதவிகளை நல்கும் முறை ஆரம்பிக்கப்படல் வேண்டும்.
4 வது சுயமொழிப் பாடசாலைகளின் எண்ணிக்கை அதிகரித்தல் வேண்டும். அப்பாடசாலை ஆசிரியர்களின் பயிற்சிக்காக ஒர் ஆசிரிய பயிற்சிக் கழகம் நிறுவப்படல் வேண்டும்.
இவ்விசாரணைச்சபை செய்த சிபார்சுகளின் அடிப்படையில் சேர். ஹேக்கியூலிஸ் ருெபின்சன் 1869 இல் மிஷன் சபைகளின் ஆதிக்கத்தின் கீழிருந்த மத்திய பாடசாலைச் சபையைக் கலைத்து, அதனிடமாக இயக்குநர் ஒருவரின் கீழ் பொதுக் கல்வித் திணைக் களத்தை நிறுவினர். 1870 இல் சிங்களம், தமிழ், எனும் தாய் மொழிகள் மூலம் ஆரம்பக் கல்வி கற்பிக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றது. இக்காலந் தொட்டு அரசாங்க வருமானம் அதிகரிக்கவே ஆங்கில சுய மொழிப் பாடசாலைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. பாடசாலைகளின் அபிவிருத்தியைப் பின்வரும் அட்டவணை தெளி
வாக்கும்
1869 1872 1882 1890 அரசினர் பாடசாலைகள் 64 200 42】 436 LDIT600Tauri 10,852 40,290 உதவி பெறும் பாடசாலை 2 II 402 832 984
மாணவர் 25,443 73,698
1872 க்கும் 1890 க்கும் இடையில் பாடசாலைகளின் எண்ணிக்கை இரு மடங்காகவும், அவற்றில் கல்வி பயின்ற மாணவர்களின் தொகை மும்மடங்காகவும் பெருகின.
1885 தொடக்கம், அரசாங்கம் சுய மொழிப் பாடசாலைகளின் விருத்தியில் மேலும் கூடுதலான அக்கறையும் சிரத்தையும் காட்ட லாயிற்று. ஆங்கிலக் கல்வி, நன்கொடை பெறும் பாடசாலைகளின் பொறுப்பில் பூரணமாக விடப்பட்டது. அரசாங்கம் உள்ளூர்ப் பகுதிகளிலும், கிராமப் புறங்களிலும் விசேடமாக வட மத்திய, வட மேல் மாகாணங்களில் சுய மொழிப் பாடசாலைகளைத் திறக்கும் முயற் சிபிலேயே ஈடுபட்டது. கடற்கரை மாநிலங்களில் கிறீஸ்தவ மிஷன்கள் மேலும் மேலும் ஆங்கிலப் பாடசாலைகளை நிறுவின.
:
3. . . 1、。. ".
... '"

Page 133
252 இலங்கைச் சரித்திரம்
2) ut i gG6io 667:
ஆங்கிலக் கல்வியில் இலங்கை பெரும்பாலும் இங்கிலாந்தின் முறைகளைத்தான் பின்பற்றியது. 1880 ல் கேம்பிரிஜ் பல்கலைக் கழகத் தின் சிரேஷ்ட தராதரப் பரீட்சைகள் இங்கு முதன் முதல் நடாத் தப்பட்டன. 1873 இல் சட்டக் கல்விக் கழகம் (Council of Legal Education) தாபிக்கப்பட்டதுடன் சட்டக் கல்லூரியும் ஆரம்பிக்கப் பட்டது. வைத்தியக் கல்லூரி 1870 இல் ஆரம்பமாயிற்று. இக்கல்லூரி வழங்கிய பட்டம் (L. M. S., Ceylon) பிரித்தானிய வைத்திய கழகத் S'(G)ői) (British Medical Association) gyá185 fiáig Lüul L-5). 1893 g)ai) அரசாங்கம், தொழில் நுட்பக் கல்லூரியையும் (Technical College) நிறுவியது. சுய மொழி ஆசிரியர்களைப் பயிற்றுவதற்காக ஒர் ஆசிரிய பயிற்சிக் கல்லூரியை 1889 இலும், ஆங்கில பயிற்சிக் கல்லூரி ஒன்றினை 1903 இலும் அரசாங்கம் தன் பொறுப்பில் நிறுவியது.
1911 ஆம் ஆண்டுக் கல்வி விசாரணைச் சபை :
1911 ஆம் ஆண்டு பிறிட்ஜெஸ் (Bridges) என்பவரின் தலைமை யில் ஒரு கல்வி விசாரணைச் சபை நியமிக்கப்பட்டது. இச்சபை தனக்குச் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களைப் பரிசீலனை செய்தபின் சிபார்சு செய்த திருத்தங்களுள் மிக முக்கியமானவை பின் வருவன: 1 வது நான்காம் வகுப்புவரை மாணவர்களுக்குத் தாய் மொழி
கட்டாயமாகக் கற்பிக்கப்படல் வேண்டும். 2 வது ஆங்கிலப் பாடசாலைகள், ஆரம்ப, உயர்தர பாடசாலைகள் என வகுக்கப்படல் வேண்டும். விஞ்ஞானம் அல்லது மனையியல் பகுதிகளைக் கொண்ட உயர்தரப் பாடசாலைகளும் நிறுவப்படல் வேண்டும். 3 வது நாட்டின் தேவைகளுக்கேற்ற பாடத்திட்டத்தின் அடிப் படையில் ஆங்கிலப் பாடசாலை விடுகைத் தராதரப் பரீட்சை (E.S.T.C.), உள்ளூர்ப் பத்திரப் பரீட்சையாக நடத்தப்படல் வேண்டும்.
4 வது இலங்கையில் பல்கலைக் கல்லூரி நிறுவப்படல் வேண்டும்.
ஆரம்ப வகுப்புகளில் தாய் மொழி கட்டாயமாக்கப் பட்டமை, உள்ர்ளுப் பரீட்சை முறையினை ஏற்படுத்தியமை, விஞ்ஞானம், மனையியல் போதிப்பதற்கு வழிவகை செய்தமை என்பன, விசாரணைச் சபை செய்த சிபார்சுகளினல் விளைந்த நன் மாற்றங்
களாகும் உள்ளூர்ப் பரீட்சைகள் ஏற்படுத்தப்பட்டதன் பயனுக,
 

நிருவாக, பரிபாலனச் சீர்திருத்தங்கள் 1850-1930 253
நாட்டின் நிலைகளுக்கேற்ப, சிங்களம், தமிழ், பாளி, இலங்கைச் சரித்திரம், இலங்கைப் புவியியல் எனும் பாடங்கள் பாடத்திட் டத்தில் சேர்க்கப்பட்டன. மேலும் இச்சபையின் சிபார்சுகளின் பேரில், 1926 இல் ஆசிரியர்களின் சம்பளம் கூட்டப்பட்டதுமன்றி
அவர்களுக்கென ஓர் ஓய்வுச் சம்பளத் திட்டமும் (Pension Scheme) வகுக்கப்பட்டது.
முதலாம் உலகப் போருக்குப் பின்னரும் ஆங்கிலக் கல்வியின் ஈடுபாட்டினல் மேலும் பல ஆங்கிலப் பாடசாலைகள் திறக்கப் பட்டன. 1920 இல் 919 அரசாங்க சுயமொழிப் பாடசாலைகள்,
1868 உதவி நன்கொடைபெறும் பாடசாலைகள், 287 ஆங்கிலப் பாடசாலைகள் நடாத்தப்பட்டு வந்தன.
பல்கலைக்கழக இயக்கம் :
இருபதாம் நூற்ருண்டின் தொடக்கத்துடன் இலங்கையில் பல்கலைக்கழக அந்தஸ்துடைய ஒரு கலாசாலை நிறுவப்பட வேண்டும் என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. சேர். பொன் அருணுசலம் அவர்களின் பெரும் முயற்சியினல் 1906 ஜனவரியில் இலங்கைப் பல்கலைக் கழகச் சங்கம் நிறுவப்பட்டது. அரசாங்கத்திற்கு தலைவராக விளங்கிய அருணுசலம் அவர்கள், "தற்பொழுது பாடசாலைகளிலும் ஏனைய தொழில் நிலையங்களிலும் சிதறிக்கிடக்கும் சக்திகளை ஒரு முகமாக ஒழுங்கு படுத்தவும், ஆரம்ப உயர்தரப் பாடசாலைகளின் சிகரமாகத் திகழக் கூடியதும், நமது பாடசாலைகளும் கல்லூரிகளும், சக்தியிழந்து, சோர்வுற்று ஒரு முறையில் செலவைத் தடுக்கவும் மக்களின் பண்பை படிப்படியாக உயர்த்தி வரக்கூடிய பல்கலைக் கழகமொன்றினை அமைப்பதே எமது கழகத்தின் நோக்கமாகும்" எனக் கூறினர்.
1912 இல், இலங்கையின் உயர்தரக் கல்வி முறையினைப் பரிசீலனை செய்வதற்காக அரசாங்கம் நியமித்த விசாரணைக் குழு பல்கலைக்கழகமொன்று அமைக்கப்பட வேண்டுமென சிபார்சு செய்தது, அதனை நிருவாகக் கழகம் ஏற்றது. ஆனல் அத்திட்டத்தினை முதலாம் உலகப்போர் தாமதப்படுத்திற்று. 1917 க்குப்பின் அப்பிரச்சினை மீண்டும் ஆராயப்பட்டு 1921 இல் இலங்கைப் பல்கலைக் கழகக் கல்லூரி (Ceylon University College) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. அக்கல்லூரி, இலண்டன் பல்கலைக்கழகத்தின் B, A, B Sc., பரீட்சை களுக்கு மாணவர்களை ஆயத்தம் செய்யத் தொடங்கியது:1928இல் பல்கலைக்கழகமொன்று கண்டியில் தாபிக்கப்பட வேண்டுமென்ற தீர்மானத்தை சட்டக் கழகம் அங்கீகரித்தது. “”
*ܢ

Page 134
254 இலங்கைச் சரித்திரம்
5. சமய மறுமலர்ச்சி இயக்கமும் கல்வியும்
19 ஆம் நூற்றண்டில் கிறிஸ்தவ சமயம், ஆங்கிலக் கல்வி, ஐரோப்பிய நாகரிகம் என்பவை எழுச்சியடைய, பெளத்த, சைவ மதங்களும், சிங்கள, தமிழ் மொழிகளும் பின்நிலையை அடைந்தன. இவ்விதமாக அந்நிய ஆட்சியினல் ஒரு நாட்டு மக்களின் மொழி, சமயம், கலாச்சாரம் போன்ற துறைகளுக்குக் கெடுதி ஏற்படும் போது, அந்நாட்டில் தேசிய விழிப்புணர்ச்சியும், ஆட்சியாளருக் ' கெதிரான தேசிய இயக்கமும் தோன்றுதல் இயல்பே. இது வரலாற்றில் காணப்படும் ஒரு பொது விதியாகும். இவ்வுண்மையை நாம் இலங்கையின் வரலாற்றிலும் காணலாம்.
19 ஆம் நூற்றண்டின் பிற்பகுதியில், சிங்களர் தாம் இழந்து போன கலாச்சாரத்தையும், மறந்துபோன பண்பாட்டினையும் புதுப் பித்து நிலைபெறச் செய்ய வேண்டுமென்ற ஒரு மறுமலர்ச்சி இயக்கம் முளை கொள்ளலாயிற்று. இவ்வியக்கம் பெளத்த பிக்குகளின் மத்தியில்தான் முதன் முதல் அரும்பியது. தொன்று தொட்டு சிங்கள மொழியினதும் பெளத்த மதத்தினதும் பாதுகாவலராக விளங்கி வந்த பிக்குகள், அவை அழிந்து போகாவண்ணம் பாது காத்தற்கு வன் சமர் தொடங்கினர்.
கேணல் ஒல்க்கொட்டும் பெளத்த பிரமஞான சங்கமும்:
1862 ஆம் ஆண்டு மிகத்துவ குணுணந்த தேரோ என்ற பெளத்த பிக்கு, தம் மதத்தைப் பிரசாரம் செய்வதில் ஊக்கம் மிகுந்தவராய், நாட்டின் பல பாகங்களுக்குஞ் சென்று பிரசங்கங்கள் பல நடாத்தினர். ஆயிரக்கணக்கான மக்கள் அவரது தர்ம உப தேசங்களைக் கேட்கக் குழுமினர். 1873 இல் பாணந்துறையில், அவருக்கும், வண. டேவிட் டி சில்வா என்ற கிறிஸ்தவ போத கருக்குமிடையே ஒரு பெரும் தர்க்கம் நடந்தது. "ரைம்ஸ் ஒவ் ஒலோன்* பிரசுரித்த இத்தர்க்கத்தின் பிரதியொன்று அமெரிக்காவில் கேணல் ஹென்றி ஸ்ற்றில் ஒல்க்கொட் (Col. Henry Steele Olcott) என்பவரின் கைகளுக்கெட்டிற்று. இவ்வெளியீடுதான், ஒல்கொட்டை இலங்கையுடன் இணைக்க உதவிய சாதனமாகும். .
ஒல்க்கொட், நியூஜேச்சியில் 1832 ஆகத்து 2 இல் பிறந்தவர். அவர் விவசாய ஆராய்ச்சியிலும் விவசாயத்தைப் பற்றி நூல்கள் எழுதுவதிலும் ஆர்வம் மிகுந்தவர்ாய் விளங்கினர். 1858 இல் அவர் ஐரோப்பாவிற்குச் சென்று விவசாய மேதையெனப் பெரும்

நிருவாக, பரிபாலனச் சீர்திருத்தங்கள் 1850-1930 255
கீர்த்தியும் புகழும் பெற்றர். அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் தொடங்கியபொழுது, அவர் வடஇராச்சிய இராணுவத்தில் சேர்ந்து நீக்கிரோக்களின் விடுதலைக்காக உழைத்தார். 1875 இல் ஒல்கொட், திருமதி பிளவற்ஸ்க்கி (Madame Blavatsky, பிற ஆதரவாளர்கள் பலர் ஒன்று சேர்ந்து நியூயோர்க்கில் பெளத்த பிரமஞான சங்கத்தை (Buddhist Theosophical Society) pổgoy66õTrř. 1878 g)3iv . Sy 6Nuri பம்பாய் வந்து, இந்தியாவில் “கதர் இயக்கத்திற்கு ஆதரவளித்தர்ர். 1882 இல் பெளத்த பிரமஞான சங்கத்தின் தலைமைக் காரியாலயம் சென்னையில் நிறுவப்பட்டது. 1880 மே 15 இல், ஒல்க்கொட்டும் பிளவற்ஸ்கியும் இலங்கையைத் தரிசித்தனர். அவர் காலியில் வெலிவிற்ற விஜயநாந்தரும விகாரையில் பெளத்த மதத்தைத் தழுவினர். அதற்குப்பின் அவர் இலங்கைப் பெளத்தர்கள் அனுபவித்த இன்னல்களைப் போக்குவதற்காக உழைக்க ஆரம் பித்தார். ஒரு சில ஆண்டுகளுக்குள் பிரமஞான சங்கம், மூன்று கல்லூரிகளையும் இருநூறு பாடசாலைகளையும் திறந்து 200,000 மாணவர்களுக்கு கல்வி பயிற்றியது. -
ஒல்கொட்டின் முயற்சிகள் இலங்கையுடன் நின்றுவிடவில்லை. பிரமஞான சங்கத்தின் சேவைகள் அமெரிக்கா முதல் ஜப்பான் ஈருகப் பரந்தன. அவர் உலகெங்கணும் திரிந்து, விரிவுரைகள் நிகழ்த்தி, ஐரோப்பியருக்கு பெளத்த மதத்தை அறிமுகம் செய்யவும் அதில் ஓர் ஆர்வத்தை உண்டாக்கவும் முனைந்தார். பெளத்த ருக்குச் சமயக் கொடியை ஆக்கிக் கொடுத்த பெருமையும், இலங்கையில் முதன் முதல் வைசாகப் பெளர்ணமி தினத்தை அரசாங்க விடுமுறை தினமாக்கிய பெருமையும் அவருக்கே உரியது.
மகா போதி சபை:
அனகாரிக்க தர்மபால (Anagarika Dharmapala) அவர்கள், 1892 இல் மகாபோதி சங்கத்தை இலங்கையில் தாபித்தார். வண. H. சுமங்கல நாயக்க தேரோ, சங்கத்தின் தலைவராகவும் தர்மபால அதன் செயலாளராகவும் பொறுப்பேற்றனர். இந்தி யாவில் மகாபோதி சங்கத்தின் தலைமைப்பீடம் கல்கத்தாவில் அமைக்கப் பெற்றது. அங்கிருந்து 'மகாபோதி" என்ற மாத ஆங்கில சஞ்சிகையை தர்மபால பிரசுரித்து வந்தார். இச்சபையும் ப்ெளத்த சமய வளர்ச்சிக்கும், சமய அடிப்படையில் கல்வி பயிற்றும் முயற்சிக்கும் பேருதவி அளித்தது. ' ' . . . " ' '

Page 135
256 இலங்கைச் சரித்திரம்
ஆறுமுகநாவலரும் (1822-1879) சைவப்பாடசாலைகளும்:
சிங்களர் மத்தியில் காணப்பட்ட சமய மறுமலர்ச்சியைப் போன்று ஒர் இயக்கம் தமிழ்மக்கள் மத்தியிலும் எழுந்தது. ஆங்கிலர் ஆட்சிக் காலத்தில் கிறீஸ்தவ சமயத்தைப் பிரசாரம் செய்யும் நோக் குடன் யாழ்ப்பாணத்தில், அமெரிக்க தேசத்தினின்று பாதிரிமார் வந்திறங்கினர். அவர்கள் தெருக்கள் தோறும் விரிவுரையாற்றியும் , ஆங்காங்கு கிறிஸ்தவ ஆலயங்களை அமைத்தும், தமிழ்ப் பாடசாலைகள், மருந்துச் சாலைகள் என்பனவற்றை நிறுவியும் தங்கள் சமயக் கொள்கைகளைப் பரப்பினர். அன்றியும் ஆங்கிலக் கல்வியைப் பரப்பு வதற்காகப் பெரிய கல்லூரியொன்றினை வட்டுக்கோட்டையில் அமைத் துத் தம் சமயத்தைத் தழுவிய மாணவர்க்கு இலவசமாகக் கல்வி பயிற்றியும் வந்தனர். அவர்கள் கிறீஸ்தவ குழுவினர்க்கென்று சிறப் பாகச் செய்த நன்மை, பின்னர் யாழ்ப்பாணத்தவரெல்லோருக்கும் பொதுவானதொரு மாபெரும் நலனுய் முடிந்தது.
கிறீஸ்தவர்களுக்கு இவ்வாறெப்திய நன்மைகளைக் கண்ணுற்ற சைவ சமயத்தவர், கிறீஸ்து சமயத்தைத் தழுவத் தொடங்கினர். ஆங்கிலக் கல்வியே உணவைத் தரவல்லது என்னுங் கடைப் பிடியோடு அதனைக் கற்றலில் யாவருங் காலங்கழித்த வேளையில், சைவர்களின் இன்னல்களைத் தீர்க்க ஆறுமுக நாவலர் தோன்றினர்.
ஆறுமுக நாவலர் அவாகள், தமிழ்க் கல்வியையே மிகப் போற்றிக் கற்று வந்தார். அதன் பயனக தமிழில் மிகுந்த கல்வி யாளனய், இலக்கண இலக்கியங்களையும், சித்தாந்த நூல்களையும் நன் காராய்ந்து மிகுந்த புலமையுடையவரானர். அதனேடு நில்லாது வடமொழியும் பயின்று பின்னர் ஆங்கிலமும் கற்றுத் தேறிஞர்.
அவ்வமையம் தம் நட்டவரின் பண்டைச் சமயமாகிய சைவமும் தமிழ்க் கல்வியும் சீர்குலைந்து நிலை குன்றுவதைக் கண்ட நாவலர், பழைமையைப் பேணிக்காக்க முன் வந்தார். இதன் பொருட்டு நாவலர் துண்டுக் கட்டுரைகளாலும், சிறு நூல்களாலும், சொற் பொழிவுகளாலும் பாதிரிமாரைக் கண்டித்தும் சைவர்களைத் தண் டித்தும் சைவப்பற்றையும் தமிழ்க்கல்வி வளர்ச்சியையும். மிகவோங்கச் செய்தார். அவர் சமயங் காரணமாகத் தொடங்கிய பாடசாலைகள், பின்னர் தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பேருதவி புரிந்தன.
. .
- ,
. . .
༥......,
..",
 

நிருவாக, பரிபாலனச் சீர்திருத்தங்கள் 1850-1930 257
இராம கிருஷ்ணு சபை:
இராம கிருஷ்ணு சபை. இராம கிருஷ்ண பரமஹம்ஸர் என்ற ப்ெரியாரின் பெயரால் அவர்களது தலை மாணவனன விவேகானந்த அடிகளால் நிறுவப்பட்டது. சிக்காகோவில் 1893 இல் நடைபெற்ற சைவசமய மகாநாட்டில் விவேகானந்த அடிகள் ஈட்டிய் பெரும் புகழ், கீழ் நாடுகளில் ஒரு பெரும் சமய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் அம்மகாநாட்டில் நின்று இந்தியா திரும்பும் பொழுது, முதன் முதல் கொழும்பை வந்தடைந்தார். சுவாமி விவேகானந்தர் இலங்கை வந்ததன் பேருக, கொழும்பு விவேகானந்தா சபை 1902 இல் ஸ்தாபிக்கப்பட்டது. பின்னர் இராம கிருஷ்ண சங்கத் துறவிகள் இலங்கையில் பிரசாரஞ் செய்ததன் பயஞக, கொழும்பில் இராம கிருஷ்ண சங்கக் கிளையொன்று நிறுவப்பட்டது. அச்சபை நாட்டின் பல பாகங்களிலும் பாடசாலைகளைத் திறந்து கல்வி போதிப்பதில் ஆர்வமும் ஊக்கமும் கொண்டது. '
சேர். பொன். இராமநாதன்:
இராமநாதன் அவர்கள் கல்வித்துறையில் ஞானமுடையவராய் விளங்கிஞர். அவர் சைவ மகளிருக்காக மருதனுமடத்தில் இராம நாதன் கல்லூரி எனப்படும் விடுதிப் பெண் பாடசாலையை 1913 இல் ஆரம்பித்து வைத்தார். பின்னர் சைவ மானவர்களுக்கென யாழ்ப்பாணத்திலே திருநெல்வேலியில் 1919 இல் பரமேஸ்வராக் கல்லூரியை அமைத்தார். இவற்றின் பயணுக சைவ மாணவர்களும் மாணவிகளும் சைவ சமயச் சூழலிலே கல்வி பயிலுவதற்கு வழி பிறந்தது.
": ፴`ነ (ፍ 1 ' . . . . ." முஸ்லீம் Lun LF a &bvy, Gir :
பெளத்தரும் இந்துக்களும் முன்னேறிய காலத்தில் இலங்கை வர்ழ்மக்களின் ஒரு பகுதியினராகிய முஸ்லீம்களும் வாளாவிருக்கவில்லை. முஸ்லீம்களின் முன்னேற்றம் கல்வியெனும் பாதை வழியே செல்ல வேண்டுமென வழி வகுத்துக் காட்டியவர் சித்தி லெவ்வை ஆவர். அவரது பெருமுயற்சியினல் 1891 இல் கொழும்பு முஸ்லீம் கல்விச் சங்கம் அமைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு, சங்கம் 'கட்டி முடித்த ஸ்ாகிராப் பாடசாலை திறக்கப்பட்டது. அப்பாடசாலை முஸ்லீம் கலாச்சாரத்திற்கேற்ற வகையில் முஸ்லீம் மாணவர்க்குப் புது முறைக் கல்வி:வழங்கத் தொடங்கிற்று. இதனைத் தொடர்ந்து கொழும்பு, கண்டி, கேம்பளை ஆதியாம் இடங்களில் ஆங்கில முஸ்லீம் பாடசாலை களும், பெண் பாடசாலைகளும் நிறுவப்பட்டன. : .
இ 17
'لاتړ

Page 136
258 இலங்கைச் சரித்திரம்
5. வைத்தியம்
வைத்திய இலாக்கா, பிரித்தானியர் இலங்கையைக் கைப் பற்றிய ஆரம்ப நாட்களில் நிறுவப்பட்ட தொன்ருகும். ஆரம்பத்தில் இலங்கைக்கு வந்த பிரித்தானியப் படைகளின் சுக நல தேவைகளை ஈடு செய்யும் நோக்குடன் நிறுவப்பட்ட அப்பகுதி, இராணுவ நிருவாகத்தின் கீழ் இயங்கி வரலாயிற்று. அந்நிருவாகத்தின் கீழ் கொழும்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை, காலி எனுமிடங்களில் மருத்துவ நிலையங்கள் அமைக்கப்பட்டு, அவற்றை வைத்திய மேற்பார்வையாளர் (Medical Overseers) நிருவகித்து வந்தனர். இவை, வைசூரி, பேதி போன்ற தொற்று நோய்கள் பரவாது தடுப்பூசி போட்டு அவற்றினல் ஏற்படும் அழிவைக் கட்டுப்படுத்தின. இவ் விதமாக மேற்கத்திய வைத்திய முறைகள் தலைகாட்டத் தொடங்கிய ஆரம்ப காலத்தில், கிராமிய மக்கள் ஆயுள்வேத முறைகளையே பெரும்பாலும் பின்பற்றி வந்தனர்.
1858 இல் தான் வைத்திய இலாக்கா, இராணுவக் கட்டுப் பாடுகளினின்று விடுதலை பெற்று தனித்தியங்கத் தொடங்கியது. குடியியல் வைத்தியப் பகுதியின் (Civil Medical Establishment) முதற் தலைவராக நியமிக்கப்பட்டவர், கிறிஸ்தோப்பர் எலியட் (Christopher Elliot) j96)Jiř,
1866 அளவில் 40 வைத்திய சாலைகளும் 66 டிஸ்பென்சரிகளும் தீவின் சகல பாகங்களிலும் காணப்பட்டன. 1870 தொடக்கம் மேற் கத்தய வைத்திய முறைகள் இலங்கையில் உறுதியாக வேரூன்றத் தொடங்கின. சேர். வில்லியம் கிறெகரி, தீவின் எல்லாப் பகுதிகளிலும் டிஸ்பென்சரிகளைக் கட்டுவித்து, அவற்றை மாவட்ட வைத்திய அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் விட்டார். பிரதான நகரங் களில் ஆஸ்பத்திரிகள் கட்டப்பட்டு வைத்திய அதிகாரிகளும் நியமிக் கபபடடனா.
நடுத்தர வகுப்பினர் மேற்கத்தய வைத்திய முறைகளைக் கற் பதிலும் அதனைப் பயிற்சிப்பதிலும் ஊக்கங் காட்டினர். 1864 இல் வைத்தியக் கல்லூரி நிறுவப்பட்டது. இங்கு வைத்தியர்கள் மாத் திரமன்று, டிஸ்பென்சரிகளின் அதிகாரிகளான அப்போத்திக்கரிகளும் பயிற்றப்பட்டனர். இலங்கை வைத்தியக் கல்லூரி, ஆரம்பந்தொட்டு மிகவும் உயர்ந்த தரமுடைய படிப்பையும் பயிற்சியையும் நிலைநாட் டியது. இன்று வைத்தியக் கல்லூரி, இலங்கைப் பல்கலைக்கழகத்தின்

நிருவாக, பரிபாலனச் சீர்திருத்தங்கள் 1850-1930 259
ஒரு முக்கியமான பகுதியாகும். மற்ற இலாக்காக்களிலும் பார்க்க வைத்தியத்துறையின் வைத்தியர்களும் அப்போத்திக்கரிகளும் ஆரம்பந் தொட்டு இலங்கையராகவே அமைந்தனர்.
காலகெதியில் விசேட மருத்துவ நிலையங்கள் பல ஆரம்பிக் கப்பட்டன. 1893 இல் கண், காது, குரல்வளை நோய்களைப் பரிகரிப்பதற்கு ஒர் வைத்தியசாலை நிறுவப்பட்டது. 1899 இல் | lg Q Frt uit Fr 6)(1515) 34Trujë9 s5)2guub (De Soysa Bacteriological Institute) ஆரம்பிக்கப்பட்டது. 1906 இல் விக்ருேரியா, இராணி ஞாபகார்த்த கண் வைத்தியசாலை திறக்கப்பட்டது. விசர் நாய்க்கடி வைத்திய நிலையம், 1918 இல் ஆரம்பமாயது. கயரோக நிவாரண நிலையங்கள் கந்தானை, இருகம, காங்கேசன்துறை எனுமிடங்களில் ஆரம்பிக்கப்பட்டன. தந்த ரோக நிவாரணசாலை 1927 இல் நிறு வப்பட்டது. 1930 இல் 120 அரசாங்க வைத்திய சாலைகளும் 731 டிஸ்பென்சரிகளும் இருந்தன.
6. உள்ளுராட்சி முறையின் வளர்ச்சி
கன்சபா முறையின் புனருத்தாரணம்:
புராதன காலந்தொட்டு கிராம மக்களின் வாழ்விலும் தொழிலிலும் கன்சபாக்கள் மிகவும் உபயோகமுள்ள ஒரு நிறுவகமாக இருந்து வந்தன. இம்முறை 1833 இல் பயனிழந்து போய், 1855 இல் ஆள்பதி உவாட் அதனைப் புனருத்தாரணம் செய்தார். 1876 இல் ருெபின்சன், அதற்கு மேலும் புது அதிகாரங்களை வழங்கி, அதனைக் கிராம வாசிகளுக்கு அதி பயனுடைய தாபனமாக மாற்றி அமைத்தார், எனும் விபரங்களை பத்தாம் அதிகாரத்தின்கண் காண்க. இவ்விதமாக இவ்விரு ஆள்பதிகளின் முயற்சிகளின் பேருக, கன்சபாக்கள் கிராம ஆட்சிக்கும் பரிபாலனத்துக்கும் மத்திய நிலையங் களாக இடம் பெறத் தொடங்கின.
புது நகரங்களும் அவற்றின் பிரச்சினைகளும்:
பிரித்தானியர் ஆட்சியின் தொடக்கத்தில் இலங்கையில் ஒரு
சில நகரங்கள் மாத்திரமே இருந்தன. தோட்டங்களின் வளர்ச்சி, போக்கு வரத்து வசதிகளின் விருத்தி, குடிசனப் பெருக்கம் எனும் காரணங்களினல் நாட்டின் பல பாகங்களில் நகரங்கள் தோன்றின என முன் அதிகாரத்தில் கூறினுேம். இந்நகரங்களின் குடிசனம் அதிகரிக்கவே, அங்கு சுகாதாரப் பிரச்சினைகள் பல தோன்றின.
இங்கிலாந்தில் கைத்தொழிற் புரட்சி தோன்றியபொழுது, அங்கும்

Page 137
260 ነ } .... '' ' ኳ ! ; : இலங்கைச் சரித்திரம்
இதே விதமான பிரச்சினைகள் எழுந்தன. தொழிலாளர்கள் கைத் தொழிற் பிரதேசங்களை நோக்கி இடம் பெயர்ந்து, புது நகரங் களில் குவிந்தனர். இதனுல் மக்களின் சுகம், சுகாதாரம் பற்றிய பிரச்சினைகளை அரசாங்கம் தீர்த்து வைக்கவேண்டிய நிலைக்குள்ளானது. களைத் தீர்க்கும் பொறுப்பு அவர்களிடமே ஒப்படைக்க வேண்டுமென அரசாங்கம் முடிபு செய்து, உள்ளூராட்சி மன்றங்களை அமைக்கும் வேலையைக் கைக்கொண்டது. வைத்தியம், சுகாதாரம், நீர் விநி யோகம், கழிவுப் பொருள்கள் அகற்றுதல், பொலீஸ், சேமக்காலைகள் எனும் விடயங்களைப்பற்றிய நிருவாக அதிகாரங்கள் உள்ளூராட்சி மன்றங்களின் கைகளில் விடப்பட்டன. இலங்கையிலும் நகரங்களின் வளர்ச்சியுடன் அதே விதமான பிரச்சினைகள் எழுந்தபொழுது, அரசாங்கம், அவற்றைத் தீர்ப்பதற்கு அதேவழியைக் கைக்கொண்டது.
மாநகர சபைகள்:
உள்ளூராட்சி முறை கொழும்பிலும் கண்டியிலும் தான் முதன் முதல் ஆரம்பமானது.
1865 இல் சேர். றிச்சட் மோர்கன் தயாரித்த மசோதா ஒன்றின்படி கொழும்பில் மாநகரசபை உருவகம் பெற்றது. இலங்கையில் அப்பொழுது ஆள்பதியாகவிருந்த சேர். ஹேர்க்கியூலிஸ் ருெபின்சன், இதற்கான மசோதாவைச் சட்டசபையில் சமர்ப் பித்தார். 1865 நவம்பரில் வெளியிடப்பட்ட விசேட 'கசற்’ மூலம் கொழும்பு நகரசபையின் எல்லைகள் வரையறுக்கப்பட்டன. 1866 ஜனவரி 16 இல், முதலாவது நகரசபை கூடிற்று. அச் சபைக்கு, தெரிவு செய்யப்பட்ட ஒன்பது உறுப்பினருடன் ம்ேலும் ஐவரை ஆள்பதி நியமனம் செய்தார். மேல் மாகாண அரசாங்க முகவரும், நியமன உறுப்பினருமான திரு. C. P. லெயார்ட், நகர சபையின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். சபையின் நிதி, சுகாதாரம், ஊர்க்காவல், பொதுமராமத்து வேலைகள், சட்டம், பொது அலுவல்கள் ஆகியவற்றைக் கவனிக்கத் தனித்தனி குழுக்கள் நியமனம் பெற்றன. இக்குழுக்கள் தம் நிருவாகத்துக்கு வேண்டப் பட்ட 'சட்ட விதிகளைத் தயாரித்தன. இவற்றை அரசாங்க முகவர், சட்டங்களாகப் பிரகடனம் செய்தார். கொழும்பு நகர சபையைத் தொடர்ந்து, அதேய்ாண்டு கண்டியிலும், 1867 இல் காலியிலும் மாநகர சபைகள் தாபிக்கப்பட்டன. கண்டியிலும் காலியிலும் அரசாங்க முகவர்கள், சபைகளின் தலைவர்களாகக் கடமையாற்றினர். நகரங்களின் ஆரோக்கியம், தூய்மை, அழகு

நிருவாக, பரிபாலனச் சீர்திருத்தங்கள் 1850-1930 261
எனும் மூன்று விடயங்கள், அவற்றின் கண்காணிப்பில் விடப் பட்டன. பல விதப்பட்ட வரிகளினல் பெறப்பட்ட பணம் இச்சபைகளின் நிருவாகத்துக்கும் செலவுக்கும் உதவின.
உள்ளூர்ச் சபைகள்: - - ܝ ܲܬܲܝ ܬ ܐ
மேற்கூறப்பட்ட மூன்று பெரும் நகரங்களைத் தவிர்ந்த சிலாபம், கழுத்துறை, குருநாகல் போன்ற ஏனைய சிறு நகரங்களில் 1876 ஆம் ஆண்டு உள்ளூர்ச் சபைகள் (Local Boards) நிறுவப் பட்டன. இவையும் அரசாங்க முகவரின் அல்லது அவருடைய உதவியாளரின் தலைமையின் கீழ்தான் செயற்பட்டன. தெரிந் தெடுக்கப்பட்ட உறுப்பினரும் நியமன உறுப்பினரும் சமமாயிருந் தனர். தெருக்களைத் திருத்தல், தெருக்கள் தோறும் வெளிச்சம் அமைத்தல், தொற்று நோய்களைக் கட்டுப்படுத்தல், நகரைச் சுத்தமாய் வைத்திருத்தல், மக்களுக்குக் குடிதண்ணீர் பெற்றுத் தரல், சந்தைகள் நிறுவுதல் என்பவை இச்சங்கங்களின் வேலை களாயிற்று.
சுகாதாரச் சபைகள், லோக்கல் போட்:
1892 இல் மேலும் சிறு நகரங்களுக்கு ஒரு வகையான உள்ளூராட்சி முறை மேற்கொள்ளப்பட்டது. சிறு நகரங்களில் ஆள்பதி நியமித்த அலுவலாளர்களின் பொறுப்பில் சுகாதாரச் சபைகள் (Sanitary Boards) செயலாற்றின. மற்றும் சிறு நகரங்கள் "லோக்கல் போட் (Local Board) என வழங்கப்பட்ட் தலபரிபாலனச் சபைகளின் மேற்பார்வையின் கீழ் விடப்பட்டன. 1920 இல் லோக்கல் போட்களுக்குப் பதிலாக நகர சங்கங்கள் (Urban Councils) நிறுவப்பட்டன.
உள்ளூராட்சி முறையினுல் விளைந்த பயன்கள்:
19 ஆம் நூற்ருண்டில் சட்டசபை அமைப்பில் சிறிதளவு மாற்றங்கள். மாத்திரம் ஏற்பட்ட காலையில், உள்ளூராட்சி முறை களில் ஏற்பட்ட விசாலமான மாற்றங்கள் தாம், நடுவகுப்பைச் சேர்ந்த அரசியல் வாதிகளுக்குப் பயிற்சிக்களஞய் அமைந்தது. தேசிய அரசியலில் பலர் புகுவதற்கு ஏற்ற பயிற்சியைக் கொடுத்த அனுபவப் பீடங்களாக, இத்தாபனங்கள் விளங்கின. அதனுடன், இவ்வுள்ளூராட்சித் தாபனங்கள் மூலம்தான் இந்நாட்டு மக்கள் முதன்முதல் சுய ஆட்சியின் சுவையை உணரச் சந்தர்ப்பம் கிடைத்தது.
g) 17 A

Page 138
262 − இலங்கைச் சரித்திரம்
1865 ஆம் ஆண்டு சட்டக் கழகத்தில், கொழும்பு மாநகர சபையை நிறுவச்சட்டங் கொண்டுவந்த ஆள்பதி சேர், ஹேர்க்கியூலிஸ் ருெபின்சன் "நகரசபை நிருவாகத்தைத் திறம்படவும், நேர்மை யாகவும், தியாக உணர்வுடனும் நடாத்துவதன் மூலம், நாட்டின் சகல அரசியல் நிருவாகக் கருமங்களையும் நடாத்துவதற்கு அனுமதி கோருவதற்கு மக்கள் தம்மை தயார் செய்து கொள்ள முடியும்’ என்று கூறினர். அவரது எண்ணம் பிற்காலத்தில் பூரணமாக நிறை வெய்தியது. கொழும்பு நகர சபையின் உறுப்பினர்களாக இருந்த அநேகர், பிற்காலங்களில் இந்நாட்டின் பொது வாழ்வுத் துறையில் சுடர் விட்டுப் பிரகாசித்தனர். சேர். றிச்சட் மோர்கன், அம்புருேஸ் லோறன்ஸ், ஜேம்ஸ் டி அல்விஸ், சேர். மு. முத்துக்குமாரசாமி J. W. பீரிஸ், ஹெக்டர் ஜயவர்தன, C. P. டயஸ், சேர். ஹென்றி டி மெல், சேர். M. மக்கான் மரிக்கார், N. H. M. அப்துல் காதர் போன்ற முக்கியமானவர்களும் பிற்காலத்தில் தோன்றி, நாடு விடு தலை பெற்ற பின்னர், பல அமைச்சரவைகளில் அங்கம் வகித்த பலரும் கொழும்பு மாநகர சபையின் வழியாகவே அரசியலில் புகுந்த வர்களாவர்.
வினுக்கள்
1. 19 ஆம் நூற்ருண்டில் சர்வாதிகாரி போன்று ஆட்சி செய்த ஆள்பதிகளின் அதிகாரங்கள், 20 ஆம் நூற்றண்டில் குறைக்கப் பட்டமையை விபரிக்குக. இதனல் விளைந்த பயன்கள் என்ன ? 2. சேர். ஹென்றி உவாட், சேர். வில்லியம் மனிங் என்பவர்களின்
ஆட்சியை விபரிக்குக. 3. 19 ஆம் நூற்ருண்டில் கல்வித் திட்டத்தில் ஏற்பட்ட முன்
னேற்றத்தை விபரிக்குக. 4. சுய மொழிக் கல்வி முறைக்குப் புத்துயிர் அளிக்கப்பட்ட
முறையினையும் அதற்கான காரணங்களையும் ஆராய்க. 5. 19 ஆம் நூற்றண்டின் பின் அரைப்பகுதியில் ஏற்பட்ட சமய மறுமலர்ச்சி இயக்கங்களினல் கல்வித்துறையில் உண்டான மாற்றங்களெவை ? 6. 19 ஆம் நூற்றண்டில் உள்ளூராட்சித் தாபனங்களில் ஏற்பட்ட
முன்னேற்றத்தை ஆராய்க. 7. குடியியற் சேவையின் வளர்ச்சியைச் சுருக்கமாகப் படிமுறைப்
L !ᎥᎸ- ᏭᏂ Ᏸ0ᎫᎦ5 .
. . .

10.
II.
12.
நிருவாக, பரிபாலனச் சீர்திருத்தங்கள் 1850 -- 1930 263
1832 இல் ஏற்படுத்தப்பட்ட மாகாணங்கள் பிற்காலத்தில் எவ்வழிகளில், ஏன் மாற்றப்பட்டன ?
19 ஆம் நூற்ருண்டின் பிற்பகுதியில் கல்வி அல்லது உள்ளு ராட்சி விருத்தியடைந்ததைப் பற்றிச் சுருக்கமாகக் கூறுக. 19 ஆம், 20 ஆம் நூற்றண்டுகளில் வைத்திய, சுகாதார சேவைகள் அபிவிருத்தியடைந்த விதத்தை விளக்குக. '': 19 ஆம், 20 ஆம் நூற்ருண்டுகளில் இலங்கையின் சமுதாய பொதுநல அபிவிருத்தியைப்பற்றி ஒரு கட்டுரை வரைக. உள்ளூராட்சி முறை வளர்ச்சியுற்ற விதத்தைக் கிரமப்படி காட்டி, நாட்டு மக்களது வாழ்க்கையில் அது முக்கியத்துவம் பெற்றதற்கான காரணங்களைத் தருக.
SLLLLSS SSqSS

Page 139
அதிகாரம் 14 - ". . அரசியற்றிட்ட அபிவிருத்தி (1850-1930)
பிரதிநிதித்துவ ஜனநாயக ஆட்சிமுறை, கோல்புறுாக் விசாரணைச் சபையின் சிபார்சுகளைத் தொடர்ந்தே, இலங்கையில் வேரூன்றி வளரத் தொடங்கிற்று. அத்திட்டத்தின் கீழ், ஆள்பதியே நாட்டின் நல்லாட் சிக்கு முழுப் பொறுப்பாளியாக இருந்தார். அன்று நிறுவப்பட்ட சட்டக் கழகம், இலங்கை வாழ் பல்வேறு சமூகங்களின் அபிப்பிரா யங்களை ஆள்பதிக்குத் தெரிவிக்கும் சாதனமாக இருந்ததேயன்றி, பிறிதொரு அதிகாரமும் அதற்கிருக்கவில்லை. 19 நூற்ருண்டின் முதல் அரைப் பகுதியில் ஆங்கில், அறிவு இல்லாத சிங்களரும் தமிழரும் அரசியலில் பங்குபெற வேண்டுமென்ற அவாவில்லாதவர்களாகவே வாழ்ந்து வந்தனர். அக்காலத்தில் ஆங்கில வர்த்தகர்கள், தோட்டத் துரைமார், பறங்கியர் மாத்திரமே அரசியல் அதிகாரத்தின் தன்மையை விளங்கி, அதனைத் தம் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருப் பதில் முனைந்தனர். அவர்கள் சட்டக் கழகத்தில் தமக்குப் பிரதி நிதித்துவமும் அதிகாரமும் தரப்பட வேண்டுமென ஓயாது வாதாடி வந்தனர். ஆனல் சிறுபான்மையினரான ஆங்கிலருக்கும் பறங்கி யருக்கும் அரசியல் அதிகாரம் வழங்கப்படுவதை ஆள்பதிகள் வன்மை யாக ஆட்சேபித்தும், எதிர்த்தும் வந்தனர்.
1. சட்ட நிருவாகக் கழகங்கள்
சட்டக் கழகம் நிறுவப்பட்ட நாள் தொடக்கம் உத்தியோகப் பற்றற்ற உறுப்பினர், சட்டங்களை ஆக்குவதற்குத் தமக்கு உரிமைகள் மறுக்கப்பட்டதையும், நாட்டின் நிதி விடயங்களின் மேல் எவ்வித அதிகாரம் இல்லாமற் போனதையுமிட்டு ஆட்சேபித்து வரலாயினர். அரசாங்கம், நிதிப்பங்கீட்டு விடயங்களில் நடந்துகொண்ட முறை யிணைப்பற்றி அவர்கள் இடையிடையே குடியேற்ற நாட்டுச் செயலா ளருக்கு முறையிட்டு வந்தனர். 1855 இல் சேர். சாள்ஸ் மக்காத்தி ஆள்பதியாக நியமிக்கப்பட்டதுடன் "உத்தியோகப் பற்றற்ற உறுப் பினர் பணத்துடன் சம்பந்தப்படாத வேறு சட்டதிட்டங்களை எடுத்தாள அதிகாரம் வழங்கப்பட்டது '.
1864 ஆம் ஆண்டு நெருக்கடி:
சட்டக் கழகத்தின் சட்டவாக்க அதிகாரங்களையிட்டு வழங்கப் பட்ட இச்சிறு சலுகை, உத்தியோகப்பற்றற்ற உறுப்பினரின் கோரிக்கைகளைத் திருப்தி செய்ய முடியவில்லை. ஆள்பதியினதும், 264
 

அரசியற்றிட்ட அபிவிருத்தி (1850-1930) 265
குடியேற்றச் செயலாளரினதும் தலையீடின்றி நாட்டின் வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதில் தமக்கு அதிகாரம் தரப்பட வேண்டுமென்ற உணர்ச்சி நாட்டில் தீவிரமாக வளர்ந்து வரலாயிற்று. இந்நோக்கத்துடன் ஆட்சேபனைகள், மன்ருட்டுக்கள், பகிரங்கக் கூட்டங்கள் என்பவற்றின் வாயிலாக சட்டக் கழகத்துக்கு உள்ளும் புறமும் ஒரு சீர்திருத்த இயக்கம் நடாத்தப்பட்டு வந்தது. எனினும் குடியேற்றச் செயலாளரும் ஆள்பதியும் நாட்டின் நிதி அதிகாரங் களைக் கை நெகிழ விடச் சித்தமாக இருக்கவில்லை.
1863 இல் இவ்வியக்கம் உச்சநிலையை எய்தியது. அவ்வாண்டு, இலங்கையின் ஆள்பதி சேர். ஹேர்க்கியூலிஸ் ருெபின்சன், குடி யேற்றச் செயலாளர் விடுத்த கட்டளைக்கிணங்க, உத்தியேர்கப் பற்றற்ற உறுப்பினரின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாது, பொது மராமத்து வேலைகளுக்கென ஒதுக்கப்பட்டிருந்த ரூபா 30,000 த்தை தாய் நாட்டின் இராணுவச் செலவுக்காக அகப்படுத்தினர். இதற்குக் காரணம், இலங்கையிலிருந்த இராணுவத்துக்கான செலவ்ை இலங்கையரே ஏற்று நடாத்த வேண்டுமெனப் பிரித்தானிய் அரசாங்கம் 1863 இல் விடுத்த கட்டளையாகும். இதுகாலம் வரை நாட்டின் இராணுவத்துக்கான செலவினங்களை பிரித்தானிய அர்சாங்கமும் இலங்கை அரசாங்கமும் பகிர்ந்து ஏற்றுவந்தன: 1857 இல் பிரிட்டன் & 115,685 ஐயும் இல்ங்கை 8 74,359 ஐயும்' முறையே ஈடுசெய்தன. 1863 இல் உத்தியோகப்பற்றற்ற உறுப் பினர். பிரித்தானிய அரசாங்கக் கட்டளையை ஏற்க மறுத்து அரசாங்கத்துக்கெதிராக ஒரு கண்டனப் பிரேரணையைச் சட்டக் கழகத்தில் நிறைவேற்றினர். ஆனல், ‘ ஆள்பதி இராணுவச் செலவினங்களை உத்தியோகப்பற்றுள்ள உறுப்பினரின் துணை கொண்டு நிறைவேற்றினர். அவர், அவ்வாறு செய்யவே உத்தி யோகப்பற்றற்ற உறுப்பினர் அறுவரும்-லோறன்ஸ், உவால், தொம்சன், கப்பர், ஜேம்ஸ் அல்விஸ், ஈற்றன்-ஒரே முகம்ாகப் பதவிகளைத் துறந்து, சட்டக் கழகத்தினரின்று விலகினர். எனினும், சட்டக் கழகம் அவர்களின்றி தொடர்ந்து இயங்கி வரலாயிற்று. '
இலங்கைக் கூட்டவை: . Y
சட்டக் கழகத்தினின்று விலகிய ஐரோப்பியரும் பறங்கியரும் *இலங்கைக் கூட்டவை' (Ceylon League) என்ற ஒரு சங்கத்தை அமைத்து, அதன் வழியாக ஆள்பதியின் நடவடிக்கைகளைக் கண்டித்து, ஆர்ப்பாட்டம் செய்தனர். அச்சங்கம், சட்டக் கழகத் தினின்று வெளியேறிய உறுப்பின்ரை "மாத்திரமன்று, தீவின்

Page 140
266 இலங்கைச் சரித்திரம்
பிரபல்ய வாசிகள் அனைவரையும் அங்கத்தினராகக் கொண்டது, அரசமைப்புத் திட்டத்திலும் . சட்டக் கழகத்தின் நடைமுறை களிலும் மாற்றங்களை ஏற்படுத்தி, நாட்டின் நிதி விவகாரங்களின் மேல் பூரண ஆதிக்கம் பெறுவது, கூட்டவையின் முதன்மையான நோக்காயமைந்தது. இங்கு சீர்திருத்தப் பிரசார இயக்கங்கள், ஆர்ப்பாட்டங்கள், பொதுக் கூட்டங்கள் பல நடாத்தப்பட்டன. ஜோர்ஜ் உவால் குடியேற்ற நாட்டு அமைச்சரைப் பேட்டி காண்ப தற்காக இங்கிலாந்து சென்ருர்,
கூட்டவையின் நோக்கங்களை நிறைவேற்றும் பொருட்டு ஐரோப் பியரினதும், இலங்கையரினதும் 2500 க்கு மேற்பட்ட கைச்சாத் துக்களைக் கொண்ட மனுப்பத்திரம் ஒன்று, மகாராணி விக்ரோறி யாவுக்கு அனுப்புவதற்கென தயாரிக்கப்பட்டது. இம்மனுப்பத் திரத்தை, ஆள்பதி ருெபின்சன், 1866 ஏப்ரில் 23 ஆம் நாள் திகதி யிடப்பட்ட அறிக்கையுடன் இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தார். அதில் ஐரோப்பிய தோட்டத்துரைமார் நாட்டின் பொதுமக்களுக்காக வாதாட அருகதையற்றவர்களெனக் காரசாரமாக எடுத்துரைத்தார். * ஐரோப்பியர்கள், தலைநகரத்தையும் கோப்பிப் பிரதேசத்தையும் தவிர்ந்த தீவின் ஏனைய பகுதிகளைப் பற்றி சொற்பமே அல்லது ஒன்றுமே அறியாதவர்கள். அவர்கள் தனித்து, அல்லது தமது வர்க்கத்தினர் நலன்களைப் பெறும் நோக்குடன்தான் குடியேற்றத் தின் வரவுகளின் மேல் ஆதிக்கம்பெற முயற்சிக்கின்றனர்,' எனக் குறிப்பிட்டார். ஜோர்ஜ் உவால், சீர்திருத்தக் கிளர்ச்சியைத் தொடர்ந்து நடாத்தி எவ்வித பயனுமின்றி, 1769 இல் இவுக்குத் திரும்பினர். இதனுடன் சீர்திருத்தங்களுக்காக ஐரோப்பிய தோட்டத்துரைமாரும் வர்த்தகரும் நடாத்திய இயக்கம் ஒய்ந்தது.
1889 இல் மிகவும் சிறிய திருத்தங்கள் அரசியற்றிட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டன. இலங்கைவாழ் மக்களின் பெயரால் நடை பெற்ற சட்டக் கழகத்தில், இலங்கையரின் பிரதிநிதிகளாக மூன்று நியமன உறுப்பினர் மாத்திரம் இருந்தனர். முஸ்லீம்கள், கண்டிச் சிங்களர் எனும் சாகியத்தாருக்குப் பிரதிநிதித்துவம் வழங்கப் படாமற் போனமை, அதன் முக்கிய குறையெனச் சுட்டிக் காட்டப்பட்டது. இக்குறையினை நிவர்த்தி செய்வதற்கென 1889 இல், உத்தியோகப் பற்றற்ற உறுப்பினர் தொகுதியில் கண்டிச் சிங்களருக்கு ஒரு பிரதி நிதியும், முஸ்லிம்களுக்கு ஒரு பிரதிநிதியுமாக ஈர் உறுப்பினர்கள் நியமனம் பெற்றனர். இதன் பயனக சட்டக் கழகத்தில் ஒன்பது உத்தியோகப் பற்றுள்ளவர்களும், எட்டு உத்தியோகப் பற்றற்றவர் களும் அங்கம் வகிக்கத் தொடங்கினர்.
 

அரசியற்றிட்ட அபிவிருத்தி (1850-1930) 267
அவ்வாண்டு, சட்டக் கழக உறுப்பினர், ஆயுட்கால்ம் முழு வதும் பிரதிநிதிகளாக இருக்கும் முறை நீக்கப்பட்டு, ஐந்து ஆண்டு களுக்கு மாத்திரம் அங்கம் வகிக்கலாம் என்ற முறையும் ஏற்படுத் தப்பட்டது. அவர்கள் மேலும் ஐந்தாண்டுகளுக்கு நியமனம் பெறும் உரிமையும் அங்கீகரிக்கப்பட்டது. இவ்விதமாக சட்டக் கழகம் நிறுவப்பட்டு, அரைநூற்றண்டு கழிந்தும், அதன் அடிப்படை அமைப் பில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. د .
2. இலங்கையரின் சீர்திருத்த இயக்கம் வலுப்பெறல்
பத்தொன்பதாம் நூற்ருண்டின் இறுதிக்கூறு, இலங்கை வரலாற்றில் மிகவும் முக்கியமான காலப் பகுதியாக அமைந்தது. இருபதாம் நூற்ருண்டின் அரசியல் விழிப்புக்கு வித்திட்ட காலம் அது. இவ்வாண்டுகளில், குடியேற்ற நர்ட்டு அரசாட்சி முறையினில் கூடுதலான பங்கு வேண்டுமென்ற கோரிக்கையும், சட்டசபையின் உறுப்பினர்கள் தெரிந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக இருத்தல் வேண்டுமென்ற கோரிக்கையும் வலுப்பெற்றன.
அன்று நிலவிய சட்டசபை சீர்திருத்தப்பட வேண்டும் என்ற இயக்கம் வளர்ச்சி பெறுவதற்குத் துணைபுரிந்த காரணிகள் பல. அவற்றுள் முக்கியமானவை, கல்வியின் வளர்ச்சி, சமய, கலாச்சார, தேசிய மறுமலர்ச்சி இயக்கங்கள், மக்களின் செல்வ நிலையில் உயர்வு, நடு வகுப்பினரின் தோற்றம், பொதுசன அபிப்பிராயம் உருவாகு வதற்கு சக்தி வாய்ந்த பத்திரிகைகள் புரிந்த பணி, இந்திய அரச மைப்பில் ஜனநாயக நடைமுறைகள் கையாளப்பட்டமை, கீழ்த் திசை நாட்டு மக்களின் விழிப்பு என்பனவாம். 1904 இல் இரஷ்யஜப்பானியப் போரில், ஜப்பான் ஈட்டிய மகத்தான வெற்றி, கீழ்த் திசை நாடுகளுக்குப் புது உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் ஈநதது.
கல்வியின் முன்னேற்றம், நடு வகுப்பினரின் தோற்றம், நாட்டில் தோன்றிய சமய, கலாச்சார, தேசிய மறுமலர்ச்சி இயக்கங்கள் போன்ற விடயங்கள் முன் சென்ற அதிகாரங்களில் ஆங்காங்கு விளக் கப்பட்டுள்ளன.
இருபதாம் நூற்ருண்டு மலர்ந்த பொழுது, இலங்கை பல வழிகளிலும் செல்வம் கொழிக்கும் நாடாகக் காட்சி தந்தது. 1907இல் நடாத்தப்பட்ட குடிமதிப்புப் புள்ளி விபரங்கள்,இலங்கை அடைந் திருந்த முன்னேற்றத்துக்குச் சாட்சி பகர்ந்தன. 1834 இன் குடிசனம்

Page 141
268 இலங்கைச் சரித்திரம்
1,167,700 ஆக இருந்து; 1906 இல் 3,984,281 ஆக அஃது உயர்ந் தது. அவ்வாண்டுகளின் இறை வருமானங்கள் முறையே 3,779,520 ரூபாவும் 35,030, 660 ரூபாவுமாகும். ஏற்றுமதி வர்த்தகம் 1,458,340 ரூபாவிலிருந்து 112,516,914 ரூபாவாக அதிகரித்தது. கல்வித் துறையிலும் அபரிமிதமான முன்னேற்றம் காணப்பட்டது. 1834 இல் கல்வி பயின்ற மாணவர்களின் தொகை 13,891 ஆகும். 1906 இல் அத்தொகை 276,691 ஆயிற்று. 1205 இல் 554 அரசாங்கப் பாட சாலைகளும் 1582 உதவி பெறும் பாடசாலைகளும் இருந்தன. கல்வி அறிவு நாலா பக்கங்களிலும் வேகமாகப் பரந்து வந்தது. 1901 ஆம் ஆண்டு குடிசன மதிப்பின் பொழுது 76,496 மக்கள் ஆங்கிலம் வாசிக் கவும் எழுதவும் அறிவர் எனக் கணக்கிடப்பட்டது.
இங்ங்ணம் கல்வி, வர்த்தகம், வியாபாரம், குடிசனம் எனும் துறைகளில் ஏற்பட்ட இத்தீவிர முன்னேற்றம், கல்வி கற்ற இலங் கையரின் சிந்தனையில் பல மாற்றங்களை விளைவித்தது. அவற்றின் உடன் பயணுக அரசியற்றிட்டச் சீர்திருத்த இயக்கம் புது வலுவைப் பெற்றது. குடியேற்ற நாட்டுச் செயலாளருக்கு குறிப்புக்கள், மனுக்கள், மன்ருட்டுக்கள் என்பனவற்றை அனுப்புவற்கு பல சங்கங்களும், தாபனங்களும் ஏற்பட்டன. இலங்கையின் கல்விமான் களும் செல்வந்தருந்தான் இச்சங்கங்களை நிறுவி, நடாத்தி வரலா யினர். தாழ் பிரதேச விளைபொருள் சங்கம் (Low Country Products" Association), யாழ்ப்பாணச் சங்கம், சிலாபச் சங்கம், இலங்கைத் தேசியச் சங்கம் (Ceylon National Association) என்ற நிறுவகங்கள் யாவற்றிலும் உத்தியோக, வர்த்தக, நிலமுடைய நடுவகுப்பினர் தாம் பெரும்பான்மையினராக இருந்து, தம் நேரத்தையும் காலத்தை யும் அரசியற் பிரச்சினைகளுக்குப் பரிகாரம் தேடும் முயற்சியில் செல விட்டு வந்தனர்.
கலாநிதி ஆனந்த குமாரசாமி :
இலங்கையின் தேசீய மறுமலர்ச்சி இயக்கத்துக்கு அரும்பெரும் தொண்டாற்றியவர்களுள் முதன்மை பெற்று விளங்குபவர் கலாநிதி ஆனந்த குமாரசாமி அவர்கள் ஆவர். இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் தத்துவஞானம், சமயம், நுண்கலைகள், கைத் தொழில்கள் ஆதியாம் துறைகளில் ஆனந்த குமாரசாமி, தலை சிறந்த நிபுணராக விளங்கினர். இவருக்குச் சமானமான கலை ஞானியை இலங்கை எஞ்ஞான்றும் பெற்றதில்லை. அவர், இலங் கையைத் தமது பிறப்பிடமாகக் கொண்டாரெனினும், உலகம் முழுவதும் உரிம்ை கொண்டாடும் பேரறிஞராகத் திகழ்ந்தார்.

அரகியற்றிட்ட அபிவிருத்தி (1850-1930) 269
ஆனந்த குமாரசாமியவர்கள், இலண்டன் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்று, 22 ஆவது பராயத்தில் விஞ்ஞான பட்டதாரியானுர்; தமது இருபத்தைந்தாவது வயதில், இலங்கைத் தாதுப்பொருள் ஆராய்ச்சிப் பகுதித் தலைவர் பதவியை ஏற்று. 1903 இல் தாயகம் திரும்பினர். அப்பகுதியின் தலைவராக இருந்த காலத்தில் (1903-08) அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளைப் பாராட்டி, இலண்டன் பல்கலைக் கழகம், கலாநிதி (D.Sc) பட்டத்தை அவருக்கு 1906 இல் வழங்கிற்று. குமாரசாமி அவர்கள், தமது ஒய்வு நேரங்களில் இலங்கைக் கிராம மக்களின் பண்டைக் கைத்தொழில்கள், சிற்பக் கலைகள், பண்பாடு ஆகியவற்றை ஆராய்வதில் ஈடுபட்டார். அவர், இலங்கை மக்கள் மறந்துவிட்ட பல புராதனக் கலைகளை ஆராய்ந்து கண்டுபிடித்து, அக்கலைகளுக்குப் புத்துயிர் அளிக்க உழைத்து வந்தார். இலங்கை மக்களின் உடையிற் சீர்திருத்தம், ஆங்கிலப் பாடசாலைகளில் சிங்களம் அல்லது தமிழ் கட்டாய பாடமாக்கப் படல், அரசியற் சீர்திருத்தம், தேசீயம் , ஆதியாம் துறைகளில் உழைத்து வந்ததுமன்றி 'நஷனல் றிவியூ" (National Review) எனும் சஞ்சிகையையும் நடாத்தி வந்தார். 1905 இல் அவர் நிறுவிய சமூகச் சீர்திருத்தச்சபை, 'இலங்கையின் சமூக வழக்கங் களில் சீர்திருத்தங்களை ஆரம்பித்து ஆதரிக்கவும், பொருத்தமற்ற் ஐரோப்பிய பழக்க வழக்கங்களை யோசனையின்றி பின்பற்றும் முறைகளை ஒழிக்கவும்' நோக்கங் கொண்டது.
குமாரசாமி அவர்களைப் போன்று வேறு பலரும் தேசீய மறுமலர்ச் சிக்காக உழைத்தனர். ஜேம்ஸ் பீரிஸ், அணுக சிக்க தர்மப்பால, பொன் . இராமநாதன், பொன். அருணசலம் அவர்கள் சமூகச் சீர்திருத்தத்துக் காகவும் கீழைத்தேய நாகரிகங்களின் சிறப்புக்க%ள மேற்குலகுக்கு எடுத் தோதுவதிலும் முனைந்தனர். பெளத்த மறுமலர்ச்சி இயக்கம், மதுபான ஒழிப்புச் சங்கம் போன்றவையும் அரசாங்கக் கொள்கைகளைக் கண்டித் தும், பழைமையைப் பேணிக் காப்பதன் அவசியத்தை வற்புறுத்தியும் வந்தன. இதே காலத்தில் இலங்கையின் பழைய சரித்திரத்திலும் தொல்பொருள் ஆராய்ச்சியிலும் புத்தூக்கம் பிறந்தது. இவ்வூக் கத்தின் பரம்பலுக்கு ரேணர் (Turnour) மகாவம்சத்தை மொழி பெயர்த்தமையும், முேயல் ஆசியச் சங்கத்தின் இலங்கைக் கிளை நிறுவப்பட்டமையும் இரு முக்கிய காரணங்களாகும். சிதைந்து அழிந்துபோன அநுரதபுரி, பொலன்னறுவை போன்ற நகரங்களின் சிறப்பியல்புகளைக் கண்டு, மக்கள் தம் கலாச்சாரத்தின் பெருமையில் இறுமாப்புக் கொண்டனர். 1908 இல் தொல்பொருள் திணைக்களம் (Archaeological Dept) நிறுவப் பெற்றது. அதன் முதல் ஆணையா ளராகச் சேவைசெய்த H. C. P. பெல்(Bel) அவர்கள், இத்துறையில் அளப்பரிய பணிகளைப் புரிந்தார். . " : ، : . ". ". . .

Page 142
270 இலங்கைச் சரித்திரம்
இவ்விதமாக சமய, சமூக, வரலாற்றுத்துறைகளில் எழுந்த அலைகள், அரசியற்றுறையிலும், மகத்தான மாற்றங்களை ஏற்படுத்தின. இவை, இலங்கையின் அரசியல் இயக்கத்தின் அடித்தளத்தை விரி வடையச் செய்தன. தனித்து சிங்களம், தமிழ் பண்பாட்டில் வளர்ந்த நடுத்தர வகுப்பினரும் அரசியற் கிளர்ச்சிகளில் தலைப்பட்ட ஆரம்பித்தனர். இதுவரை சிறு தொகையினரான ஆங்கிலக் கல்வி கற்றவர்கள் மாத்திரம் நடாத்தி வந்த சீர்திருத்த இயக்கத்தின் பலம், புது ஆதரவாளர்களினல் பன்மடங்கு அதிகரித்தது.
இந்தியா:
நடு வகுப்பினரின் சீர்திருத்த இயக்கத்துக்கு ஊக்கமும் ஆக் கமும் தந்த பிறிதொரு காரணம், இந்தியாவில் நடந்தேறிய மாற் றங்களாகும். 1885 ஆம் ஆண்டு, இந்திய விடுதலை இயக்கத்தின் தலைமை நிலையமாகத் திகழ விதிக்கப்பட்ட இந்தியக் காங்கிரஸ் பம்பாயில் முதன் முதலாகக் கூடிற்று.
1907 இல் வகுக்கப்பட்ட மின்ரோ-மோர்லி சீர்திருத்தங்கள் (Minto-Morley Reforms) இந்திய அரசியலமைப்பு முறை வளர்ச் சியில் ஒரு முக்கியமான படிக்கல்லாய் அமைந்தது. அவை, முதன் முதலாகச் சட்ட மன்றங்களின் உறுப்பினர்தளைத் தெரிந்தெடுக்கும் உரிமையை அங்கீகரித்தன. இம்முறையில், மின்ரோ-மோர்லி சீர்திருத்தங்களை பொறுப்பாட்சியின் முதற்படியெனக் கொள்ளலாம்.
3. மக்கலம் சீர்திருத்தங்கள்
உரிமைகளைப் பெறுவதற்கான புது இயக்கம் 1908 ஆம் ஆண்டு ஆரம்பித்தது. அவ்வாண்டு டிசம்பர் 12 ஆம் நாள், திரு. ஜேம்ஸ் பீரிஸ் அவர்கள், குடியேற்ற நாட்டுச் செயலகத்துக்கு, சட்டக்கழக சீர்திருத்தங்கள் எனும் விடயம் பற்றி மனுப்பத்திரமொன்றினைச் சமர்ப்பித்தார். இதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாண, 6Fant Lu, தேசீய, தாழ்பிரதேச விளைபொருள் சங்கங்கள் யாவும் அரசியல் சீர்திருத்தங்களை வேண்டி மனுக்களை அனுப்பின.
இச்சங்கங்களின் கோரிக்கைகளில், பிரதான விடயங்களில் ஒருமைப்பாடு காணப்பட்டது. அவை சட்டக்கழக அமைப்பில் பழைய முறைகளைத் தொடர்ந்து அனுட்டிக்கும் முறையைக் கண்டித்தன, ஐரோப்பிய மக்களுக்கு அளவு மிகுந்த பிரதி நிதித்துவம் கொடுக்கப் பட்ட முறையினை ஆட்சேபித்தன; நியமனம் செய்வதற்குப் பதிலாக உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் உரிமை தமக்குத் தரப்பட
...,

அரசியற்றிட்ட அபிவிருத்தி (1850-1920) 27
வேண்டும்; நிருவாகக் கழகத்தில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற் பட்ட உத்தியோகப் பற்றற்ற உறுப்பினர் இடம் பெற வேண்டும்; வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஒழிக்கப்பட்டு, பிரதேசவாரிப் பிரதி நிதித்துவம் ஏற்படுத்தப்பட வேண்டும், என ஏகோபித்த குரலில் அவை வேண்டி நின்றன.
இக்கோரிக்கைகளுள் பலவற்றை ஆள்பதி சேர். எட்வட் மக்கல மும் ஐரோப்பியர்களும் எதிர்த்து வாதாடினர். எனினும் குடியேற்றச் செயலாளர் க்று (Earl of Crewe), நடு வகுப்பினரின் வேண்டு கோள்களுக்குச் செவிசாய்த்து, பல சீர்திருத்தங்களை அனுமதித்தார். 1910 ஆம் ஆண்டின் 13 ஆம் கட்டளைச் சட்டத்தின்படி, கல்வித் தகமையுடைய இலங்கைவாழ் கல்வி கற்றவர்கள் வாக்குரிமையைப் பெற்றதுடன், அவர்கள் தமக்னெ 'கல்வி கற்ற இலங்கையரின் பிரதிநிதி' என ஒருவரைத் தெரிந்தெடுக்கும் வாய்ப்பையும் பெற் றனர். 21 உறுப்பினரைக் கொண்ட சட்டக் கழகத்தில், இரு ஐரோப் பியர்கள், ஒரு பறங்கியர், ஒரு கல்வி கற்ற இலங்கையர் என நால்வர், விசேட வாக்காளர் தொகுதிகளினுல் தெரிவு செய்யப்பட உரிமை பெற்றனர். ஐரோப்பியரின் பிரதிநிதித்துவம் மூன்றிலிருந்து இரண் டாகக் குறைக்கப்பட்டது. அவர்களுள் ஒருவர் தகர்ப்புறங்களுக்கும், மற்றவர் தோட்டப் பகுதிகளுக்குமெனத் தனித்தனி வாக்காளர் தொகுதிகளினல் தெரிவு செய்யப்படுவர் என்றும், அதே விதமாக பறங்கியரும் தமக்கென ஒரு பிரதிநிதியைத் தெரிந்தெடுப்பர் என்றும் ஏற்பட்டது. தாழ்பிரதேசச் சிங்களரினதும், தமிழரினதும் பிரதி நிதித்துவம் ஒவ்வொரு மேலதிகமான உறுப்பினரினல் அதிகரிக்கப் பட்டது.
இப்புதுத் திட்டத்தின்படி அமைக்கப் பெற்ற புதுச் சட்டக் கழகம் 1912 ஜனவரியில் கூடிற்று. மாபெரும் சமூகப் பணியாள ராகவும், கல்விமானகவும், கலாச்சார ஞானமுடையவராகவும் விளங்கிய பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள், கல்வி கற்ற இலங்கையரினல் தெரிவு செய்யப்பட்ட முதற் பிரதிநிதியாக அக்கழ கத்தை அலங்கரித்தார். உத்தியோகப் பற்றற்ற உறுப்பினர் அறுவர் இனவாரியாக (கண்டியர்-1, தாழ்பிரதேசச் சிங்களவர்-2, தமிழர்-2, முஸ்லிம்-1) ஆள்பதியினுல் நியமிக்கப்பட்டனர். உத்தி . யோகப் பற்றுள்ள பதினுெரு உறுப்பினரையும் ஆள்பதியே நியமித்தார். இவ்விதமாக புதுச் சட்டக் கழகத்தில் உத்தியோகப் பற்றுள்ள வர்கள் பதினெருவரும், உத்தியோகப் பற்றற்றவர்கள் பதின்மரு Lorru fløTri . " TE

Page 143
፵ 72 ' இலங்கைச்சரித்திரம் ,
1910 ஆம் ஆண்டின் மக்கலம் சீர்திருத்தங்கள், இலங்கையின் அரசியற்றிட்ட அபிவிருத்தி வரலாற்றில் ஒரு முக்கியமான கட்டத்தை வகிக்கின்றன. ஏனெனில் நடு வகுப்பினர், தம்மாட் சிக்காக நாத்தி வந்த உரிமைப் போராட்டத்தில் முதல் வெற்றியை ஈட்டினர். இந்தியாவின் மின்ரோ-மோர்லி சீர்திருத்தங்களைப் போன்று, இலங்கையின் மக்கலம் சீர்திருத்தங்கள், பிரதிநிதித்துவ ஆட்சியின் முதற்படி எனக் கொள்ளலாம். -
5. மனிங் சீர்திருத்தங்கள்
1910 ஆம் ஆண்டுச் சீர்திருத்தங்களின் பின், சட்டக் கழகத் துக்கு வெளியே நடைபெற்ற சில நிகழ்ச்சிகள், தேசீய சீர்திருத்த இயக்கம் வலுப்பெறுவதற்கு உறுதுணையாக அமைந்தன.
1914 ஆம் ஆண்டு ஆரம்பித்த முதலாவது உலகப்போர், குடியேற்ற நாடுகளுக்குத் தம் உரிமைகளை வலியுறுத்தப் பயன்பட்டன. ந்ேச நாடுகள், குடியேற்ற நாடுகளின் ஒத்துழைப்பைப் பெறுவதற்கு அவற்றின் மட்டில் இளக்காரம் காட்ட வேண்டிய நிலை எழுந்தது.
சீர்திருத்த இயக்கம் வலுவடைவதற்கு துணைபுரிந்த பிறிதொரு காரணம், 1915 ம்ே, ஜூன் மாதம், இலங்கையின் சில பாகங்களில் சிங்களருக்கும் முஸ்லீம்களுக்குமிடையே நடந்த இனக் கலவரங் களாகும்.
1915 ஆம் ஆண்டுக் கலகங்கள் :
1912 இல் கம்பளை விகாரையின் நிலமை, அரசாங்க முகவர் சக்ஸ்ரனிடம் (Saxton) "ஏசலப் பெரஹரா'வை நடாத்துவதற்கு அனுமதி கேட்டு நின்ற பொழுது, அவர் 'முஸ்லிம் பள்ளிவாசலின் இரு எல்லைகளிலும் ஐம்பது யார்களுக்கப்பால் சங்கீதம் நிறுத்தப்படு மாயின் அனுமதி வழங்கப்படும்" என அறிவித்தார். இம்முடிபுக் கெதிராக கண்டி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட பொழுது, நீதிபதி (Dr. Paul E. Pieris) வழக்காளிக்குச் சாதகமாகத் தீர்ப்புக் கூறினர். ஆனல் அரசாங்க முகவரின் தூண்டுதலின் பேரில், சட்டத்துறை நாயகம் இத்தீர்ப்புக் கெதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தபொழுது, அம்மன்றம் 1915 பெப்ரவரி 2இல் கண்டி மாவட்ட நீதிபதியின் தீர்ப்பை நிராகரித்தது. நிலமை, பிறிவுக் கவுன்சிலுக்கு மேல் முறையீடு செய்தார். ja ," :
 
 

அரசியற்றிட்ட அபிவிருத்தி (1850-1930) 273
முஸ்லீம்களுக்கும் பெளத்தர்களுக்குமிடையில், 1915 வைகாசி 28 வைசாக் பெளர்ணமி இரவின் ஊர்வலத்தின் "பொழுது கண்டியில் சில அசம்பாவிதங்கள் நடை பெற்றன. அடுத்த தினமான 29 ஆம் நாள் காலை, தலதா மாளிகாவையில் வழிபாட்டுக்கு வந்த கிராமப்புற மக்கள் வெகுண்டு, ஆர்ப்பாட்டங்கள் பல நடாத்தினர். முஸ்லீம்களுக்கும் சிங்களருக்குமிடையே நடைபெற்ற ஒரு கைகலப் பின் பின்னர், சனக்கூட்டம் கலைக்கப்பட்டது.
தலதா மாளிகாவையின் அழிவு, முஸ்லிம்களின் அட்டுளியங்கள், பெண்களின் கற்பழிப்பு போன்ற வதந்திகள் மின்னல் வேகத்தில் நாட்டில் பரவின. எங்கெங்கு முஸ்லிம்கள் வாழ்ந்தனரோ, அங்கெல் லாம் கலகங்கள் மூண்டன. கொழும்பில், கொள்ளையடித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. பொலீசார் பொதுவாக சிங்களருக்கு உடந் தையாக இருந்தனரேயன்றி, கலகத்தை அடக்க அதிகம் முயற்சி எடுக்கவில்லை.
ஜூன் 2 இல் கலகம் பற்றிய செய்திகள் நுவரெலியாவி லிருந்த ஆள்பதி ஷாமேர்ஸுக்கு எட்டவே, அவர் உடனடியாகக் கண்டிக்கு விரைந்து சென்ருர், உத்தியோக பூர்வமாக மறுத் தாலும், அவர், கலகத்தை அரசாங்கத்தை கவிழ்க்க கையாளப் பட்ட சதியென்றே முடிவு செய்தார். ஜெர்மன் ஒற்றர்கள், இலங்கையில் பெளத்த பிக்குகளின் காவி உடைகளைத் தரித்து வாழ்ந் தார்களென்றும், அவர்கள் பிரித்தானியர் ஆட்சியை முறியடிக்கத்
திட்டமிட்டு வந்தார்களென்றும் கூறப்பட்ட கதையும், எம்டன்
என்ற ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல் இந்திய சமுத்திரத்தில் காணப் பட்ட உண்மையும், ஆள்பதியின் மதியை மறைக்கச் செய்தன. அதே தினம் அவர், படையாட்சியைப் பிரகடனம் செய்து, ஆட்சி யதிகாரத்தை இராணுவத்தினர் கையில் ஒப்படைத்தார்.
இராணுவத்தினர், கலகத்தை முறியடிப்பதற்கு மிகவும் கொடூரமான அடக்கு முறைகளைக் கையாண்டனர். நாலா பக்கங் களிலும் ஆண்களும் பெண்களும் கைது செய்யப்பட்டனர்: குடியியல் இராணுவச் சட்டங்களை மீறினேர், உடனடியாகச் சுட்டுக் கொல் லப்பட்டனர். துப்பாக்கி அல்லது அபாயகரமான ஆயுதங்களை வைத்திருப்பவர்களுக்கும் அதேகெதி உண்டாயிற்று. படை மன்றுகள், தேசத் துரோகம் எனும் போர்வையின் கீழ், பலரை கொலைத் தண்டனைக்குத் தீர்த்தன. இவ்விதமாக 63. குற்றமற்றவர்களை படைமன்றுகள் கொலைக்குத் தீர்த்தன எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
g) 18

Page 144
274 இலங்கைச்சரித்திரம்
சிங்களரின் மனதில் பயங்கரத்தை ஏற்படுத்தும் நோக்கமாக மூன்று மாதங்களுக்கு படையாட்சி நிலவிற்று. சிங்களப் பிரமுகர்கள் பலர், கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டதுமன்றி, அவர்களின் இல்லங்களும் பரிசோதிக்கப்பட்டன. ,
அமைதி நிலைகள் மீண்டும் எழவே, 1915 செப்ரம்பர் 25 இல் கொழும்பில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஒரு செயற்குழு நியமிக்கப்பட்டு, அஃது அரசாங்கத்தினதும் இராணுவத் தினரதும் அட்டூளியங்களைப்பற்றி தயாரித்த விஞ்ஞாபனம், நொவம்பர் 25 இல் குடியேற்றக் காரியதரிசிக்கு அனுப்பப் பெற்றது. அவர், உடனடியாகச் சிங்களப் பிரமுகர்களையும் படைமன்றங்களினல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்களையும் விடுதலை செய்தார். இக்கலகத்தில் இராணுவப் படைஞர் நடந்து கொண்டமுறை யினையும், அவர்களால் நீதி நியாயமின்றி சுட்டுக் கொல்லப்பட்ட கொலைகளையும் விசாரிப்பதற்கென அவர் ஒரு விசாரணைச் சபையையும் நியமித்தார். விசாரணைச் சபை, ஒளிப்பு மறைப்பின்றி பழியை அதிகாரிகளின் மேலும் இராணுவப் படைகளின் மேலும் சுமத்தியது. இதன் விளைவாக ஆள்பதி ஷாமேர்ஸ் திருப்பியழைக்கப்பட்டு, அவ ரிடமாக சேர். ஜோன் அன்டர்சன், சிங்களருக்கு விளைவிக்கப்பட்ட அநீதிகளுக்கு பரிகாரம் செய்ய வேண்டுமென்ற கட்டளையுடன் புது ஆள்பதியாக அனுப்பப் பெற்றர்.
இந்நிலையில் சேர். பொன் இராமநாதன் இங்கிலாந்து சென்று, கலகத்தின் விபரங்களை மேலரசுக்கு எடுத்துரைத்தார். திரு. E. W. பெரேரா 'இராணுவச் சட்டக் காலத்தில் இலங்கை முழுவதும் ஒரு இழவு வீடுபோல் இருள் அடைந்திருந்தபோது சேர். பொன். இராமநாதன் அவர்கள், சுவாலை விட்டெரியும் சுடர்போன்று கோபாவேசத்துடன் சீறியெழுந்து இந்த அக்கிரமங்களைத் தடுத்து நிறுத்தவும், மீண்டும் சாதாரண நிலைமைகளை ஏற்படுத்தவும் இயன் றவற்றையெல்லாம் செய்தார்’ எனக் கூறினர்.
1915 ஆம் ஆண்டு முஸ்லிம் கலகங்களில், ஆங்கிலர் கலகத்தை அடக்குவதற்குக் கையாண்ட நடவடிக்கைகள், தேசியவுணர்ச்சியை உச்சக் கட்டத்தைத் தொட உதவின. அவர்களது மிருகத் தனமான செயல்கள் மீண்டும் நிகழாதிருப்பதற்கு, தம் நாட்டு
ஆட்சியில் கூடுதலான பங்கு பெறுவது இன்றியமையாதது என்பதை பல இலங்கையர் உணரத் தொடங்கினர். இக்கட்டத்தில் தான் சேர் ப்ொன்னம்பலம் அருணுசலம் அவர்கள் அரசியலுலகில் பிரவேசித்
தாா.
*、*
*:', '
 
 

அரசியற்றிட்ட அபிவிருத்தி (1850-1930) 275
இலங்கைத் தேசிய காங்கிரஸ் :
சேர். பி. அருணுசலம் அவர்கள், 33 ஆண்டுகளாக அரசாங்க சேவையில் அமர்ந்து மிகத்திறமையுடன் சேவையாற்றி 1913 இல் இளைப்பாறினர். அவர் அரசாங்க சேவையில் ஆற்றிய சேவைக்குக் கைம்மாருக ஐந்தாம் ஜோர்ஜ் மன்னர் பக்கிங்காம் அரண்மனையில் அவருக்கு 'நைட்' பட்டத்தை வழங்கினர். அருளுசலம் அவர்கள் தமது பிற்கால வாழ்க்கையைத் தேச சேவையிலேயே செலவிட முற்பட்டார். அரசாங்க சேவைக் கட்டுப்பாடுகளினின்று விடுதலை பெற்ற அவர், தம் ஒப்பற்ற சக்திகளையெல்லாம் நாட்டிற்கே அர்ப்பணம் செய்தார். , i.
சுயாட்சி பெறும் நோக்கத்துடன் 1917 ஆம் ஆண்டு மே மாதம், இலங்கைச் சீர்திருத்தச் சங்கமொன்றினை அருணுசலம் அவர்கள் நிறுவினர்கள். அத்துடன் 1917 டிசம்பரிலும், 1918 டிசம்பரிலும் முறையே இரு அரசியல் மாநாடுகளை அவர் ஒழுங்கு செய்தார். அடுத்த மாதங்களில் அருணுசலம் நடாத்திய விரி வுரைகள், பிரசுரித்த ஈட்டுரைகள் என்பவற்றின் வழியாக இலங்கையின் அரசியல் விடுதலைக்காகப் போராடும் ஆர்வத்தை நாட்டு மக்களிடையே தட்டியெழுப்பினர். இந்நாட்டுக்காக சேவை புரிவதற்கு இலங்கையிலுள்ள சகலரையும் அறைகூவி வரவழைத்தார். அவர் பொதுமக்களுக்கு அரசியல் அறிவை ஊட்டவும், மிதவாதி கள், பழைமையைப் பேணுவோர், தீவிரவாதிகள் ஆகிய எல்லாச் சக்திகளையும் ஒன்று கூட்டுதற்கும், அரசியற் திட்டத்தில் ஒரு நியாயமான சீர்திருத்தத்துக்கான ஆகக் குறைந்த கோரிக்கையின் பேரில் ஒரு உடன்பாட்டை ஏற்படுத்தற்கும், ஒரு பொதுச் சபை இன்றியமையாததென உணர்ந்தார். அருணசலம் அவர்களின் பூர்வாங்க வேலைகளின் பயணுக 1919 டிசம்பர் 11 ஆம் திகதி இலங்கைத் தேசிய காங்கிரஸ் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. அருணுசலம் அவர்களே காங்கிரசுக்கு முதலாவது தலைவராக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். காங்கிரஸ் நிறுவப்பட்டதை திரு. C. P. கொறயா பின்வருமாறு வர்ணித்துள்ளார். 'கடந்த சில வருடங்களுள் சகல முயற்சிகளுக்கும் மத்திய ஸ்தானமாகிய இவ்விடத்தில் (கொழும்பு) கூர்ந்து அவதானிக்கும் கண்களையுடைய
ஒரு பெரியார், ஆங்காங்கு பரந்து கிடந்த தனிப்பட்ட ஆர்வப்
பொறிகள், தனித்தனியாகக் கிடந்து 'பிரகாசமிழந்து அணைந்து போகும் தறுவாயிலிருப்பதைக் கண்ணுரக்கண்டார். இதனைக் கண் ணுற்ற அப்பெருமகனர் எழுந்து விரைந்து சென்ருர் , சென்று
பரந்து கிடந்த அப்பொறிகளை ஒன்று சேர்த்து கொழுந்து விட்டெ
".

Page 145
276 இலங்கைச் சரித்திரம்
ரியும் தமது தேசாபிமான உணர்ச்சியால் அவற்றுக்குச் சக்தியூட்டி தேசிய முயற்சியெனும் பெருந்தீயாக மாற்றினர். இப்பெருந் தீயில் புடமிட்ப்பட்டு உருவாகியதே இலங்கைத் தேசிய காங்கிரஸ்"
இந்தக் காங்கிரஸ், சேர். பொன்னம்பலம் அவர்களின் புனித ஊக்கத்திலிருந்து பிறந்ததொன்ருகும். காங்கிரசின் கோரிக்கை களுள், குறுகிய வாக்குரிமையின் அடிப்படையில் பிரதேசவாரியாகத் தெரிந்தெடுக்கப்பட்ட உறுப்பினரைப் பெரும்பான்மையினராகக் கொண்ட சட்டசபையின் அமைப்பே முதலிடம் வகித்தது. அதனுடன் சபையின் சபாநாயகர் தெரிந்தெடுக்கப்பட்ட அங்கத்தவராக இருத்தல் வேண்டும் (ஆள்பதியல்ல) என்றும், அரசாங்க சேவையில், இலங்கை யருக்குக் கூடுதலான இடங்கள் வழங்கப்பட வேண்டுமெனவும் வேண்டினர். -
மொன்ரே கு- செம்ஸ்போட் சீர்திருத்தங்கள் :
மின்ரோ-மோர்லி சீர்திருத்தங்களுக்குப் பின் 1918 ஜூன் 18 இல் வெளியிடப்பட்ட மொன்ரேகு-செம்ஸ்போட் சீர்திருத்தங் sGat (Montague-Chelmsford Reforms) g).55u gyu Suavaold air அடுத்தபடி முன்னேற்றமாகும். இந்திய மந்திரியான எட்வட் மொன்ரேகு, இந்தியா மட்டில் பிரித்தனின் கொள்கைகளைப் பற்றி, 1917 ஆகத்தில் ஒரு முக்கியமான பிரகடனத்தை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது: 'மாட்சிமை தங்கிய மன்னர் அரசாங் கத்தின் கொள்கை. இந்திய அரசியல் நிருவாகத்தின் எல்லாத் துறைகளிலும், இந்தியர் கூடுதலான பங்கு கொள்ளச் செய்வதுடன், பிரித்தானியப் பேரரசின் பகுக்கப்படாத ஒரு பகுதியாக விளங்கவும், பொறுப்புள்ள ஆட்சியை அது படிப்படையாக அடைவதற்கு சுயாட் சித் தாபனங்களை அபிவிருத்தி செய்வதுமாகும். இந்திய அரசாங்கமும் இக்கொள்கையைப் பூரணமாக ஆதரிக்கிறது.' இத்திட்டத்தின் படி, இந்திய மத்திய அரசாங்கத்தில், இரு அவைகளைக் கொண்ட பாராளு மன்றம் நிறுவப்பட்டது. மேற்சபையில் 60 உறுப்பினரும், கீழ்ச் சபையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 பேர் உட்பட, 140 உறுப்பினர். இருப்பரென விதிக்கப்பட்டது. மாகாண சட்ட சபைகளில், ஒரு விதப் பொறுப்பாட்சி அங்கீகாரம் பெற்றது. இம்மன்றங்களின் 100 உறுப்பினரில், 70 பேர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவும், அரசியல் நிருவாகத்தின் ஒரு பகுதியை மன்றங்களிலிருந்து அமைக்கப்பட்ட அமைச்சர்களே நிருவகிக்கவம் புதுவிதி இடமளித்தது. -
 

அரசியற்றிட்ட அபிவிருத்தி (1850-1930) 27 7
1920 ஆம் ஆண்டுச் சீர்திருத்தம் :
1918 இல் சேர். பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள், அரசியலமைப்புத் திட்டத்தில் மாற்றம் ஏற்படுவதன் அவசியத்தை வற்புறுத்தி சட்டசபையில் ஒரு தீர்மானத்தை எடுத்தாண்டார். இலங்கையினின்று இங்கிலாந்து சென்ற ஒரு தூதுக்குழு, குடியேற்ற நாட்டுச் செயலாளரைப் பேட்டி கண்டது. இம்முயற்சிகளின் பயணுக அரசியற் சட்டச் சீர்திருத்தத்துக்கான சிபார்சுகள் 1920 இல் வெளி யிடப்பட்டன. '.
சட்ட சபை, 37 உறுப்பினரைக் கொண்டிருத்தல் வேண்டுமென விதிக்கப்பட்டது. இவர்கள் முறையே 16 உத்தியோகப் பற்றற்றவர் களாகவும், 14 உத்தியோகப் பற்றுள்ளவர்களாகவும், 7 நியமன உறுப்பினராயும் இருப்பர். 16 உத்தியோகப் பற்றற்ற உறுப்பினருள், 11 அங்கத்தவர்கள் பிரதேசவாரியாகத் தெரிந்தெடுக்கப்படுவர்; மிகுதி 5 உறுப்பினருள், இருவர் ஐரோப்பியராம், ஒவ்வொருவர் முறையே பறங்கியர், வர்த்தக சங்கம் (Chamber of Commerce) தாழ் பிரதேச விளைபொருட் சங்கம் என்பவர்களினல் இனவாரியாகத் தெரிந்தெடுக்கப்படுவர். 7 நியமன ஸ்தானங்களில் 2 கண்டியருக்கும், ஒவ்வொன்று இந்தியருக்கும் முஸ்லிம்களுக்கும், மிகுதி 3, பிரதிநிதித் துவம் பெருத நலவுரிமைகளுக்குமாகப் பங்கீடு செய்யப்பட்டது. நிருவாக சபையிலும் 3 உத்தியோகப் பற்றற்ற உறுப்பினர் இடம் பெற்றனர்.
இச்சீர்திருத்தச் சட்டம், வெளிப் பார்வைக்கு தாராளக் கொள்கையுடைய ஒரு திட்டம் போன்று காட்சி தந்தது. ஆளுல் உண்மையில், அத்திட்டம் பிரதிநிதித்துவ ஜனநாயகம் என்ற போர்வையின் கீழ், போலி அமைப்புக்களின் மூலம் அரசாங்கத்தின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலைநாட்டவும், இலங்கையருக்கு உண்மையான அரசியலதிகாரத்தை மறுக்கவும் செய்தது. காகிதத்தில், சட்டசபையில் உத்தியோகப் பற்றற்ற உறுப்பினர் 23 க்கு 14 என்ற விகிதத்தில் உத்தியோகப் பற்றுள்ளவர்களிலும் பார்க்கக் கூடுதலாக இருந்ததாகக் காணப் பெறும். உண்மையில் முக்கியமான விடயங் களில் 3 ஐரோப்பியரும் 7 நியமன உறுப்பினரும் அரசாங்கத்துக்குச் சாதகமாகவே வாக்களிப்பர் என அரசாங்கம் எதிர்பார்த்தது. இவ்வழியில் அரசாங்கம், 24க்கு 13 என்ற விகிதத்தில் உத்தி யோகப் பற்றற்றவர்களிலும் கூடுதலான பெரும்பான்மையைப் பெற வழிவகை செய்யப்பட்டது. "ו י" :" -
இ I 8 A

Page 146
278 இலங்கைச் சரித்திரம்
இச்சட்டம், மேலும் கூடுதலான அதிகாரங்களை ஆள்பதிக்குப் பெற்றுக் கொடுத்தது. அவர், தாம் நினைத்த நேரத்தில் எச்சட் டத்தையும், தீர்மானத்தையும் பற்றி நடக்கும் விவாதத்தை நிறுத்த
விவாதத்துக்குரிய நேரத்தைக் கட்டுப்படுத்த, உத்தியோகப் பற்றற்ற
உறுப்பினரை சபைக்கு வராது வெளியே நிறுத்தி வைக்க, புது அதிகாரங்கள் பெற்றர். t இச்சட்டத்தை இலங்கையர் யாவரும் கண்டித்தனர். இலங் கைத் தேசிய காங்கிரஸ், அது, 'சமூகங்கட்கிடையே பகைமையை வளர்க்க வல்ல வேறுபாடுகளை உண்டாக்கி விட்டது. பொறுப் பாட்சியின் ஆரம்பத்தைக் கூட மறுத்துவிட்டது" எனக் கண்டித்துப் புதுச் சட்டசபையில் பங்குபெற மறுத்தது. இப்பேர்ப்பட்ட ஒரு சட்டக் கழகத்தில் பங்கு பெறுவதணுல் நாட்டுக்கு எவ்வித நன்மையும் கிடையாதென, சேர். அருணசலமும் ஏனைய தலைவர் களும் அபிப்பிராயம் தெரிவித்தனர்.
ஆள்பதி மனிங்கின் வேண்டுகோளின் பேரில், மகாசபைத் தலைவர்கள், அவருடன் பேச்சு வார்த்தைகள் நடாத்தினர். புதுச் சட்டக் கழகம் செய்யும் தீர்மானங்களின் அடிப்படையில் மேலும் திருத்தங்கள் வழங்கப்படும் என ஆள்பதி உறுதி கூறியதன் பயனுக, மகா சபை, ஆள்பதியின் விருப்பத்துக்கிணங்கி அரசாங் கத்துடன் ஒத்துழைக்கச் சம்மதித்தது. தேர்தல்கள் நடைபெற்றபின் புதுச் சட்டக் கழகம் 1921 ஜூன் மாதம் தாபிக்கப்பட்டது.
தேசிய மகாசபையில் தமிழ் மக்களுக்கு விசேட பிரதிநிதித்துவம் கொடுக்கும் பிரச்சினையைப்பற்றி சிங்கள அங்கத்தினருக்கும் தமிழ்ப் பிரதிநிதிகளுக்குமிடையே அபிப்பிராய பேதங்கள் எழுந்தன. 1923 இல் சேர். பொன். அருணசலமும், பொன். இராமநாதனும் தேசிய மாசபையினின்று வெளியேறி,தமிழ் மக்களின் அபிப்பிராயத்தை சரியான வழிகளில் நடத்துவதற்கும், வழிகாட்டுவதற்குமென இலங் கைத் தமிழர் சபையை நிறுவினர். அவர்கள், மக்கள் சார்பில் தம் கோரிக்கைகளடங்கிய ஒரு விண்ணப்பத்தைக் குடியேற்ற நாட்டு அமைச்சருக்கு அனுப்பியும் வைத்தார்கள்.
1924 ஆம் ஆண்டுச் சீர்திருத்தங்கள் :
* தேசிய மகாசபை சமர்ப்பித்த திட்டத்தையும், தமிழர், ஐரோப் பியர், பற்ங்கியர், முஸ்லிம்கள், இந்தியர் எனும் சாகியத்தினர் முறையே அனுப்பிய விண்ணப்பங்களையும் பரிசீலனை செய்தபின் குடியேற்றக் செயலாளர், புதுச் சீர்திருத்தங்களை 1924 இல் அனு
 
 

அரசியற்றிட்ட அபிவிருத்தி (1850-1930) 2.79s
மதித்தார். இதன்படி புதுச் சட்டக்கழகம், 37 உத்தியோகப் பற்றற்ற வர்களையும், 12 உத்தியோகப் பற்றுள்ளவர்களையும் கொண்ட 49 உறுப்பினர் சபையாக அமைய வேண்டுமென விதிக்கப்பட்டது. 37 உத்தியோகப் பற்றற்ற உறுப்பினர்களுள், 16 சிங்களரும், தமிழ் தொகுதிகளிலிருந்து 7 தமிழருமாக 23 அங்கத்தினர் பிரதேசவாரி யாகத் தெரிந்தெடுக்கப்படுவர்; 11 உறுப்பினர்கள் இனவாரியாகத் (3 ஐரோப்பியர், 2 பறங்கியர், 1 மேல் மாகாண இலங்கைத் தமிழர், 3 முஸ்லிம்கள், 2 இந்தியர்) தெரிந்தெடுக்கப்படுவர்; மிகுதி மூவர் ஆள் பதியினுல் நியமனம் செய்யப்படுவர். 12 உத்தியோகப் பற்றுள்ள உறுப்பினருள் ஐவர் (குடியேற்றச் செயலாளர், இராணுவத் தளபதி, சட்டத்துறை நாயகம், இறையாணையாளர், பொருளாளர்) பதவியின் பொருட்டு நியமனம் பெறுவர்; மிகுதி எழுவர் அர்சாங்க சேவை யாளரிலிருந்து ஆள்பதியினல் நியமனம் செய்யப்படுவர்.
இவ்விதம் 1924 இல் அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள், முதன் முறையாக தனித்துச் சட்ட சபையில் பெரும்பான்மையினராக விளங்கினர். எனவே இத்திட் டத்தின் கீழ் தான், இலங்கை, பிரதிநிதித்துவ அரசாங்கமொன்றினைப் பெற்றது.
இத்திட்டத்தின் குறைகளையும், அவை நீக்கப்பட்ட விதத்தையும் அடுத்த அதிகாரத்தில் காண்க.
வினுக்கள்
1. இருபதாம் நூற்ருண்டின் முதல் 25 வருடங்களில் நடு வகுப்பினர் அரசியற்றிட்டவமைப்புச் சீர்திருத்தங்களுக்காக தொடர்ந்து கிளர்ச்சி செய்தமைக்குக் காரணமென்ன ? 2. 19 ஆம் நூற்ருண்டில் சட்டசபை சீர்திருத்தப்பட வேண்டு மெனக் கிளர்ச்சி உண்டாவதற்குக் காரணங்களென்ன ? இக்கிளர்ச்சிக்கு அரசாங்கத்தார் ஏன் இணங்கவில்லை ? 3. இலங்கையின் அரசியற்றிட்டப் படிமுறை வளர்ச்சியில் 1833 ஆம் ஆண்டு கோல்புறுாக் சீர்திருத்தங்கள் தொட்டு 1910 ஆம் ஆண்டு மக்கலம் சீர்திருத்தங்கள் வரை ஏற்பட்ட பிரதான மாற்றங்களை விபரித்து விளக்குக. 4. 1890 முதற் 1930 வரை உண்டான சமூக, பொருளாதார வளர்ச்சி எவ்வகைகளில் அரசியற்றிட்ட சீர்திருத்தக் கிளர்ச் சிக்கு வழி காட்டின எனக் கூறுக.

Page 147
280
இலங்கைச் சரித்திரம்
1910 ஆம் ஆண்டு அரசியற்றிட்ட சீர்திருத்தங்களுக்குக் காரணங் கூறுக. மனிங் சீர்திருத்தங்களுக்குக் காரணங் கூறுக.
1833 க்கும் 1928 க்குமிடையில் இலங்கையில் பொறுப்பாட் சிக்காக நடைபெற்ற சீர்திருத்த வேண்டுகோள்களின் தன்மை
களையும் அவற்றுக்கான காரணங்களையும் விளக்குக.
19 ஆம் நூற்றண்டின் இறுதியில் ஏற்பட்ட பிரதான மாற்றம் யாது ?
இலங்கையில் அரசியற்றிட்ட கிளர்ச்சியை நடாத்தியவர்கள umuntri ? øTGöIT ?
ܚܫܚܚܐ ܡܚܣܪ ܝܚ ܝܙܚܘܗܝܡ■
 
 

அதிகாரம் 15.
டொனமூர் விசாரணையும் திட்டமும்
1931 வரை இலங்கையில் நிலவிய அரசியல் முறையினை
*பெற்றேர்க்குரிய சர்வாதிகார பராமரிப்பு முறை” என வருணிப்பர். அம் முறையின் கீழ், சகல அதிகாரங்களும் ஆள்பதியின் கையிற்ருன் தங்கியிருந்தன. ஆள்பதியின் அதிகாரங்களைப் பற்றிய விளக்கத்தைப் பதின்மூன்ரும் அதிகாரத்திற் காண்க. நாட்டின் அரசியற்றுறையில் நிலவிய இப் பழைய கொள்கைகளைச் சிதைத்து, அதனைச் சுதந்திரப் பாதையில் இட்டுச் செல்லுவதற்கு வேண்டிய நிலைகளை ஆக்கித் தந்தது, டொனமூர் திட்டமாகும். அத்திட்டம் தான், இலங்கையின் வரலாற்றில் சுதந்திர சகாப்தத்தைத் தொடக்கி வைத்ததெனக் கூறலாம். இப்புதுத் திட்டத்தின் வழியாக நாட்டு மக்கள் பெற்ற அனுபவமும் பயிற்சியும் தான், நாடு சுதந்திரம் பெற்ற பொழுது, அவர்கள் தம் பிரச்சினைகளைத் தீர்க்கவும் ஜனநாயக ஆட்சி முறை யினை அமைத்து, அதனை உறுதியாகக் கடைப்பிடிக்கவும் வழி செய்தன.
1931 தொடக்கம் பழைய சர்வாதிகாரம், புது ஜனநாயகமாகப் பல வழிகளிலும் பர்ணமிக்கத் தொடங்கிற்று. டொனமூர்த்
திட்டத்தின் கீழ் வரி முறை, நிதி நிர்வாகம், பொருளாதார விருத்தி
முதலிய துறைகளில் நாட்டு மக்கள் தாமே தீர்மானங்களைச் செய் யவும், அவற்றை நிறைவேற்றவும் வாய்ப்புக்களைப் பெற்றனர். நாட்டின் பரிபாலன நிர்வாகக் கருமங்களுக்கு ஆள்பதியல்ல, மந்திரி களே பொறுப்பேற்றனர். அவர்களும், தம்மைத் தெரிவு செய்து சட்டசபைக்கு அனுப்பிய மக்களின் பொது நலனையும் அபிவிருத்தி யையும் கருத்திற் கொண்டு கருமமாற்றினர்.
1. டொனமூர் விசாரணைச் சபை
மனிங் திட்டத்தின் குறைகள் :
1924 ஆம் ஆண்டு ஆள்பதி மனிங் அங்கீகரித்த சிபார்சுகளின் பயணுக ஏற்பட்ட அரசியற்றிட்டத்தில் காணப்பட்ட அதி முக்கிய குறைபாடு, 'பொறுப்பிலிருந்து நிர்வாக அதிகாரம் பிரிக்கப்பட்டு விளங்கிய தன்மையாகும்." மனிங் திட்டத்தின் கீழ், சட்டக் கழகத்
Paternal Despotism

Page 148
282. இலங்கைச் சரித்திரம்
திற்கு அதிக உரிமைகள் வழங்கப்பட்டபோதிலும், அதற்கு நிர்வாக அதிகாரம் தரப்படவில்லை, சட்டக் கழகத்தில் பெரும்பான்மையின ராகத் திகழ்ந்த உத்தியோகப் பற்றற்ற உறுப்பினர், எவ்விடயத் தைப் பற்றியும் மசோதாக்களை ஆரம்பித்து அவற்றைச் சட்டமாக்க அதிகாரம் உடையவராக இருந்தனர். ஆனல் தாம் ஆக்கிய சட்ட திட்டங்களை நிர்வகிக்க வேண்டிய அதிகாரமும் பொறுப்பும், அவர் களுக்கு மறுக்கப்பட்டது. மறுபுறம், அரசாங்கக் கருமங்களை நிறை வேற்றுவதற்கும், சட்டக் கழகத்தின் தீர்மானங்களை அமுல் செய் வதற்கும் கருவியாக இருந்த நிர்வாகக் கழகம், ஆள்பதிக்குப் பொறுப்பாயிருந்ததேயன்றி சட்டக் கழகத்துக்குப் பொறுப்பாளி யாக்கப்படவில்லை. அரசாங்கத்தை நடத்தும் அதிகாரம் அதன் கையிலிருந்த போதிலும், சட்டக் கழகத்தின் அனுமதியைப் பெறு வதற்கு அதற்குப் பெரும்பான்மை ஆதரவு அங்கிருக்கவில்லை . விசேடமாக, நிதி விடயங்களில் செலவினங்களைத் தீர்மானிக்கும் அதிகாரம், உத்தியோகப் பற்றற்றவர்களை பெரும்பான்மையினராகக் கொண்ட நிதிக் கமிட்டியின் கையில்தானிருந்தது. - . . .
இக்காரணங்களினல் சட்டக் கழகத்துக்கும் நிர்வாகக் கழகத் துக்கும் எவ்வித தொடர்புமில்லாதிருந்ததுடன், இரு சபைகளுக்கு மிடையில் போட்டியும் பிணக்கும் வெகுவாக மலிந்தன. சட்டக் கழக உறுப்பினர் தம் காலத்தையும் நேரத்தையும், தனித்தும் ஒருமித்தும், நிர்வாகக் கழக உறுப்பினரைக் கண்டிப்பதிலேயே செலவிட்டனர். நிர்வாகக் கழக உறுப்பினரையும் திணைக்களங் களின் அதிகாரிகளையும் எஞ்ஞான்றும் கண்டனம் செய்வதே தம் கடமையெனக் கொண்ட உத்தியோகப் பற்றற்ற உறுப்பினர், அரசாங்கத்தின் நிரந்தரமான எதிர்க் கட்சியினர் போன்று செயலாற்றத் தலைப்பட்டனர். இக்குறையினைப்பற்றி டொனமூர்' அறிக்கை, 'இலங்கை அரசமைப்பின் மிகச் சிறப்பான இயல்பு யாதெனில், பொறுப்பிலிருந்து அதிகாரம் பிரிக்கப்பட்டிருந்தமை" யாகும். பொது அலுவல்களை நடாத்துவதற்கு பொறுப்பில்லாத வராயமைந்த உத்தியோகப் பற்றற்ற உறுப்பினர், சட்டக் கழகத்தில் பெரும்பான்மையினராயிருந்தனர். பொறுப்பு வாய்ந்த வர்களான உத்தியோகப் பற்றுள்ள உறுப்பினரோ, சட்டிக் கழகத்திற்கு கீழ்ப்படிவில்லாதிருந்தனர். அவர்களை ஆள்பதியன்றி வேறு பிறர் பதவியிலிருந்து அகற்ற முடியாது. அவர்களில் தான் நிருவாக அதிகாரம் முழுமையாகத் தங்கியிருந்தது. சட்டமாக்கும்' அதிகாரத்தை உத்தியோகப் பற்றற்ற உறுப்பினர் கொண்டிருந்த போதிலும் அவர்கள், தாமே பதவி வகிக்கும் வாய்ப்பில்லாதவரா யிருந்தனர்,' எனக் கூறியது
 
 
 

v/
சேர். ஹியூ கிளிபட்:
1925 முதல் 1927 வரை இலங்கையின் ஆள்பதியாகப் பதவி வகித்த சேர். ஹியூ கிளிபட், விவேகம் நிறைந்தவராகக் காணப் பட்டதுமன்றி, முன்னர் இந்நாட்டின் குடியேற்றச் செயலாளரா கவும் பணி புரிந்தவராவர். அவர் அன்றைய அரசியற்றிட்டத்தை ஆராய்ந்து அதன் குறைகளைக் குறித்து ஒரு அறிக்கையினைப் பிரித் தானிய அரசாங்கத்துக்குச் சமர்ப்பித்தார்.
டொனமூர் விசாரணையும் திட்டமும் 283
விசாரணைச் சபையின் நியமனம்:
சேர். ஹியூ கிளிபட் மேலதிகாரிகளுக்கு அனுப்பிய அறிக்கை யின் விளைவாகப் பிரித்தானிய பாராளுமன்றம், 1927 ஆகத்து 6 ஆம் நாள், டொனமூர்ப் பிரபு அவர்களைத் தலைவராகவும், சேர், மத்தியூ நாதன், சேர். ஜெப்றி பட்லர், T. டிறமண்ட வீல்ஸ் என்பவர்களை உதவியாளராகவும் கொண்ட ஒரு சிறப்பாணைக் குழுவை, "இலங்கை சென்று அங்குள்ள அரசியற்றிட்டம் எவ்வாறு இயங்குகின்றதென்பதையும், அது பற்றி ஆட்சி முறையில் எழுந்த இடர்களைப்பற்றி அறிவிக்கவும், அவர்களின் முன்னிலைக்குச் சமர்ப் பிக்கப்படும் அரசமைப்புத் திட்டத்தைப் புதுக்கியமைக்கும் முன்னி டுகளை ஆராயவும், இப்பொழுதுள்ள கழகத்துப் பணிக்கைகளுள் எவற்றைத் திருத்தியமைத்தல் வேண்டும் என்பதை அறிவிப்பதற்கும்"
நியமனம் செய்தது.
விசாரணைச் சபையினர், 1927 ஒக்டோபர் 27 ஆம் நாள் இங்கிலாந்தைவிட்டு வெளியேறி, நவம்பர் 13 இல் இலங்கையை வந்தடைந்தனர். 1928 ஜனவரி வரை இங்கு தங்கியிருந்த அவர்கள், இலங்கையின் பல பாகங்களையும் தரிசித்து, சான்றுகளையும் பல பிரதிநிதிக் குழுக்களையும் விசாரணை செய்தனர். சான்றுகள் அளிப் போரின் வாய்ப்பிற்காக அவர்கள் கண்டி, யாழ்ப்பாணம், மட்டக் களப்பு, காலி ஆகிய இடங்களில் கூட்டங்கள் நடாத்தினர். அவர்கள் முன் அரசியற் குழுக்கள், சமயக் குழுக்கள், வணிகக் குழுக்கள் தோன்றிச் சாட்சியம் கூறின. இவ்வழிகளில் விசாரணைக் குழுவினர் இலங்கையில் அன்று நிலவிய அரசியலமைப்பின் குறை களையும், இந்நாட்டு மக்கள் வேண்டி நின்ற சீர்திருத்தங்களையும்
தட்டத் தெளிவாக அறிய முடிந்தது.
விசாரணைச் சபையின் நோக்கங்கள்:
டொனமூர் விசாரணைச் சபையினர், 1924 ஆம் ஆண்டின் அரசியற்றிட்டத்தை வெகுவாகக் கண்டித்தனர். அதில் காணப்
பட்ட குறைகளுக்குப் பரிகாரம் தேடி எண்ணிய அவர்கள், பிரித்

Page 149
284 இலங்கைச் சரித்திரம்
தனின் கட்டுப்பாட்டின் கீழ் ஒரளவுக்குப் பொறுப்பு வாய்ந்த ஆட்சியை இலங்கையரின் கைகளில் ஒப்படைக்கத் தீர்மானித்த6னர். இந்நாட்டில் நிலவிய சூழ்நிலையில், பூரண பொறுப்பு வாய்ந்த ஆட்சியை இலங்கைக்கு உடனே கொடுப்பது உசிதமல்ல எனக் குழுவினர் எண்ணினர். கட்டுப்பாட்டின்கீழ் அரசாட்சி முறையில் அனுபவம் பெற்ற பின்புதான், இலங்கையர் பூரண பொறுப்பாட் சிக்குத் தகுதி வாய்ந்தவர்களாவர் என அவர்கள் அபிப்பிராயம் தெரிவித்தனர். பொறுப்பாட்சிக்குச் சிறுபான்மையினரின் எதிர்ப்பு, வகுப்புப் பிரிவினைகளின் முதன்மை, தேச அடிப்படையிலியங்கும் கட்சி முறையின்மை எனும் காரணங்களினுல் நாட்டின் பொது நலனுக்குத் தேவையான தேசிய ஒருமைப்பாடு ஏற்படாமற் போனமை, எனும் காரணங்களைச் சபையினர், தம் முடிபுக்கு ஆதா
ரங்களாகக் காட்டினர்.
| , , இங்ங்ணம், கட்டுப்பாட்டின்கீழ் ஒரளவு பொறுப்பு வாய்ந்த
J ஆட்சியை நாட்டு மக்களிடம் ஒப்படைக்கத் தீர்மானித்த விசா ரணச் சபையினர், தம் அலுவல்களைத் தாமே நடாத்துவதற்கு வேண்டிய நிர்வாகப் பொறுப்பினை அவர்களுடைய பிரதிநிதிகளின் கைகளில் ஒப்படைக்க வேண்டுமென முடிபு செய்தனர். புதுத் திட்டம், நாட்டின் உள் விவகாரங்கள் பற்றிய பூரண பொறுப்பை, தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் கைகளில் அளிப்பதாயிருத் தல் வேண்டுமென அவர்கள் கூறினர். ஆனல் அப்பொறுப்பினை, சில அனுபவம் வாய்ந்த அதிகாரிகளின் ஆய்வுரைகளினுலும் ஆள் பதியின் சில பாதுகாப்பு அதிகாரங்களினுலும் மாத்திரமே வரை யறுக்க ஏற்பாடுகள் செய்தனர். புதுத்திட்டம், இலங்கை தானே தன் அலுவல்களை நடாத்தும் நந்நாளுக்குப் பயிற்சிக் களஞய் அமைய வேண்டுமென்பது அவர்களது நோக்கமாயிற்று. இம்முறை யின்கீழ், பழைய சட்டக் கழகத்தில் கிளர்ச்சிகளை நடாத்தியவர்கள், புது அரசுக் கழகத்தில் நிருவாகப் பொறுப்புடைய மந்திரிகளாக மாற்றப்படுவர். இம்முறை, நாளடைவில் நிருவாக சபையின ருக்குப் பொறுப்புணர்ச்சியை ஊட்டி, பொறுப்பாட்சிக்கு வழி நடாத்தும் என எதிர்பார்த்தனர்.
அடுத்து, விசாரணைச் சபையினர், அரசாங்கமானது இலங்கையி லுள்ள செல்வந்தர்கள், கல்வி கற்றவர்கள் எனும் நடு வகுப்பினரின் ஆட்சியாக மாத்திரம் இருத்தலாகாது என்று உறுதியாக அபிப்பிராயப் பட்டனர். அரசியலதிகாரம், ஒரு குழுவினரின் கைகளில் மரத்திரம் வீற்றிருப்பது அபாயகரமானது எனக் கண்ட அவர்கள், மக்கள் தொகையில் பெரும்பாலருக்கு பாதுகாப்பளிப்பதற்கு வாக்குரிமை
 
 
 
 

டொனமூர் விசாரணையும் திட்டமும் 285
விஸ்தரிக்கப்பட வேண்டுமென முடிவு செய்தனர். நடுத்தர வகுப் பினரின் உரிமைகளுக்காக போரிட்டு வந்த தேசிய காங்கிரஸ், வாக்குரிமை விஸ்தரிக்கப்படுவதை எதிர்த்தமை நோக்கற்பாலது. D .B.ஜயத்திலக்கா, D.S. செனநாயக்கா போன்ற காங்கிரஸ் தலை வர்கள், ஆட்சியனுபவம், கல்வியறிவு இல்லாத மக்களுக்கு வாக்' குரிமை வழங்குவது பெருந்தவறு என வாதாடினர். இலங்கையில் சர்வசன வாக்குரிமையை வேண்டி நின்றவர்கள், திரு. A. E. குண்சிங் காவும், அவர் நிறுவிய தொழிற் கட்சியினருமாவர். விசாரணைச் சபையினர் சர்வ சன வாக்குரிமையை சிபார்சு செய்ததன் பயனுக, கல்வியினலும் செல்வத்தினுலும் உயர்வடைந்த சிறுபான்மையினரி டம் இருந்த அரசியல் அதிகாரம், சாதாரண மக்களின் கைகளுக்கு மாற்றப்பட்டது. பாமர மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து அவர்களின் ஆதரவைப் பெறும் ஒருவன் தான், தேர்தலில் வெற்றி பெறமுடியும் என்ற நிலை ஏற்பட்டது. இதனுல் அரசுக்கழகம் பொதுமக்களின் பிரச்சினைகளைத் தீர ஆராயவும், தீர்க்கவும் முயற் சிக்குமென விசாரணைச் சபையினர் இட்ட திட்டம், பிற்காலத்தில் நிறை வெய்தியது. དེ་
இவ்விதம், பழைய அரசியற்றிட்டத்தின் குறைகளை போக்கு வதற்கு டொனமூர் விசாரணைச் சபையினர் முற்றிலும் ஒரு புதிதான திட்டத்தைச் சிபார்சு செய்தனர். அவர்கள் செய்த சிபார்சுகள் பல வகைகளில் புரட்சிகரமானவையாக அமைந்தன. வயது வந்தோருக்கு வாக்குரிமை, வகுப்புவாரிப் பிரதிநிதித்து: வத்தை ஒழித்தல், ஏழு நிர்வாக சபைகளை நிறுவுதல் என்பவை விசாரணைச் சபை செய்த சிபார்சுகளுள் முக்கியத்துவம் வாய்த் தன்வ.
2. டொனமூர் திட்டம்
டொனமூர் விசாரணைச் சபை 1928 ஜூன் மாதம் புதுத்திட் டத்தைச் சமர்ப்பித்தது. அதன்கண் காணப்பட்ட பிரதான சிபார் சுகள் பின்வருமாறு:
1. வாக்குரிமை :
கீழைத் தேயங்களில் வயது வந்தோருக்கு வாக்குரிமையளித்தல், பரீட்சார்த்தமாக முதன் முதல் இலங்கையிற்ருன் நடை பெற்றது. நாட்டு மக்களுக்கு சுயாட்சிக்கான பொறுப்புக்களை மேலும் வழங்கு வதற்கு முன், எல்லா மக்களுக்கும் பூரணமான பிரதிநிதித்துவம் சட்டசபையிற் கொடுக்கப்பட வேண்டுமெனச் சபையினர் தீர்மா னித் தனT. .
- 鬣下

Page 150
286. இலங்கைச் சரித்திரம்
1920 ஆம் ஆண்டின் அரசியற் றிட்டத்தின்படி குடிசனத் தொகையில் நான்கு சத வீதத்தினரைக் கொண்ட மத்திய வகுப் பினருக்கு பொறுப்பு வாய்ந்த அரசாங்க அதிகாரத்தைக் கொடுத்தல் முறையாகாதென விசாரணைச் சபையினர் கண்டனர். அவர்கள் மற்றை மக்களுடைய நலன்களைப் பாதுகாப்பர் என்பதற்கு உத்தர வாதமிருக்கவில்லை. அக்காலத்தில் கைத்தொழில் நிலையங்களில் வேலை செய்யும் தொழிலாளர், விவசாயிகள் என்பவர்களின் உரிமை களைப் பாதுகாப்பதற்கு எவ்வித சட்டங்களும் இருக்கவில்லை. வறியோர் சட்டம், தொழிலாளருக்கு உதவி, தொழிற்சாலைச் சட்டம், நல்ல மனையளிக்கும் சட்டம், பாடுபட்டு உழைக்கும் தொழில்களைக் கட்டுப்படுத்தும் சட்டம், தொழிலாளர் நட்ட ஈட்டுச் சட்டம், சம்பளச் சட்டம் போன்ற திட்டங்கள் அன்றைய இலங்கையில் அறவே இருக்கவில்லை. இச்சட்டங்கள் சமூகத்தில் இல்லாததினல் ஏற்படுகின்ற இழிவை, விரிந்த வாக்குரிமை ஈடு செய்யுமென அவர்கள் நம்பினர். குடியாட்சியின் பயன் யாவருக்கும் சேரல் வேண்டும் என்ருல், யாவருக்கும் வாக்குரிமை இருத்தல் வேண்டும் என்ற முடிபுக்கிணங்க, அவர்கள் வாக்குரிமையைக் கட்டுப் படுத்திய சொத்து, வருமானம், கல்வி என்னும் தகைமைகளை நீக்கி, 21 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கும், 30 வயதிற்கு மேற் பட்ட பெண்களுக்கும் வாக்குரிமை அளிக்கப்படல் வேண்டுமெனச் சிபார்சு செய்தனர். பின்னர் ஆள்பதியின் சிபார்சின் பேரில் வாக்குரிமை பெறுவதற்கு, பெண்களின் வயதுத் தகைமையும் 21 ஆகக் குறைக்கப்பட்டது.
2. நிலத் தொகுதிப் பிரதிநிதித்துவம் :
இலங்கையில் முதற் சட்டக் கழகம் அமைக்கப்பட்ட நாட் ..) தொட்டு இனவாரிப் பிரதிநிதித்துவம், ஆட்சி முறையின் தவிர்க்க முடியாத ஒர் அம்சமாக இடம் பெற்றிருந்தது. ஆள்பதி, உறுப் பினரை நியமித்த பொழுதும், வாக்காளர் பிரதிநிதிகளைத் தெரிந் தெடுத்த பொழுதும், இனவேற்றுமைகள் தான் பெரிதும் பாராட் டப்பட்டன. சட்டக் கழக உறுப்பினர், தத்தம் இனங்களின் பிரதி நிதிகளாகவே அங்குசென்றனர். இவ்விதமான இனவாரிப் பிரதி நிதித்துவம் தீமையானதென்றும், பல இனத்தவரிடையே நட்புறவை வளர்ப்பதற்குப் பதிலாக இனங்களைப் பிரித்து வைக்கும் இயல்புடைய தென்றும் விசாரணைச் சபையினர் கருதினர். அவர்கள் சென்ற இடங்களிலெல்லாம் சட்ட சபைப் பிரதிநிதித்துவம், இன, சமய அடிப்படைகளில்தான் இருக்க வேண்டுமென வற்புறுத்தப்பட்டது.
 
 

டொனமூர் விசாரணையும் திட்டமும் 287
இந்த வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை ஒழிப்பதன் மூலமே, பல இனத்தவரும் ஒன்று சேர்ந்து உண்மையான ஒற்றுமையை நாட்டில் வளர்க்க முடியுமெனக் கூறினர்.
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைப் பற்றி ஆணைக்குழுவினர் கூறியதாவது: “பல்வேறு இனங்களும் சமயங்களும் உள்ள நாடுகளில் மக்களாட்சி நிலையங்களை வளர்த்தற் பொருட்டு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறை ஏற்படுத்தப்ட்டடது. அது சமூகத்திலுள்ள பல்வேறு மக்களினத்தாருக்கும், நற் பிரதிநிதித்துவம் அளிக்கக்கூடிய சட்டிக் கழகத்தை அமைதியுடன் அளித்து, மக்களிடையே ஒற்று மையை வளர்க்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆயின் தீவினையாக, இப்பரிசோதனையால் எதிர்பார்த்த பலன் கிட்டவில்லை . பல்வேறு சமுதாயங்களும் ஒருவர்மேல் ஒருவர் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. இனவாரிப் பிரதிநிதித்துவம் ஒற்றுமைத் தொடர்பை ஏற்படுத்த உதவி புரியவில்லை. மற்றைச் சமுதாயத்தவர்க்கு மேலதிகமாகக் கிடைக்கக் கூடிய அரசாங்க அதிகாரத்தை ஈற்றில் அவர்கள் தம் சமுதாயத்திற்கு எதிராகவே உபயோகிப்பர் எனச் சிறுபான்மை யினர் அஞ்சுகின்றனர். ஆதலால் வேற்றுமை காட்டும் அறிகுறிகளை மிக்க கூர்மையாக நோக்கியவண்ணம் அவர்கள் இருக்கின்றனர்."
இக்காரணங்களினல், இன அடிப்படையில் சட்டசபை உறுப் பினர் தெரியப்படும் முறையும், நியமனம் செய்யப்படும் முறை யும் ஒழிக்கப்படல் வேண்டுமெனச் சபையினர் சிபார்சு செய்தனர். அதற்குப் பதிலாக ஆணைக் குழுவினர், நிலத்தொகுதிப் பிரதிநிதித் துவத்தை (Territorial Representation) ஏற்படுத்தினர். இலங்கை; ஐம்பது தேர்தற் தொகுதிகளாகப் பகுக்கப்பட்டு, ஒவ்வொரு தொகுதியும் ஒர் உறுப்பினரைத் தெரிந்தெடுத்து சட்ட சபைக்கு அனுப்பும் என விதிக்கப்பட்டது.
நிலத் தொகுதிப் பிரதிநிதித்துவம், தமக்குச் சட்டக் கழகத்தில் கூடுதலான ஆதிக்கத்தைப் பெற்றுத்தருமென எண்ணிய சிங்களர், அதனை ஆதரித்தனர். இலங்கைத் தமிழர், தமக்கு அரசியற் பலம் குறைந்து விடுமென எண்ணி, அதனை எதிர்த்தனர். பறங் கியரும், முஸ்லிம்களும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறையே, தமக்குப் பெரிய பாதுகாப்பென வாதாடினர். சிறுபான்மை யினரின் பீதியைக் கண்ட விசாரணைச் சபையினர், அவர்களின் பிரதிநிதித்துவம் குறைந்து போகாவண்ணம் ஒரு தற்காலிக ஏற் பாட்டைச் செய்தனர். ஒரிடத்தில் வாழாது எங்கும் பரவலா யிருக்கும் இனங்களின் சார்பில் எட்டு உறுப்பினரை நியூமனம்

Page 151
288 இலங்கைச் சரித்திரம்
செய்ய ஆள்பதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. மேலும் சிறு பான்மையினரின் அச்சத்தைத் தணிப்பதற்காக ஆள்பதிக்கு, "குறித்த ஒரு வகுப்பையோ, சமயத்தையோ சேர்ந்தவர்களுக்குப் பாதக மாயும், மற்றவர்களுக்குச் சாதகமாயும் இயற்றப்படும் மசோதாக் களுக்கு அனுமதி கொடுக்க மறுக்க' விசேட அதிகாரம் கொடுக் கப்பட்டது.
3. அரசுக் கழகம் :
பழைய சட்டக் கழகத்துக்குப் பதிலாக, அரசுக் கழகம் (State Council) என்ற பெயருடன் ஒரு புதிய ஆட்சிக் கழகம் நிறுவப்படவேண்டுமென ஆணைக்குழுவினர் சிபார்சு செய்தனர்.
புது அரசுக் கழகமானது, பிரதேசவாரியாகத் தெரிந்தெடுக் கப்பட்ட 50 உறுப்பினரையும், ஆள்பதியினல் நியமிக்கப்பட்ட 8 உறுப்பினரையும், மூன்று உத்தியோகப் பற்றுள்ள உறுப்பினரையும் (பிரதம செயலாளர், சட்டத்துறைச் செயலாளர், நிதிச் செயலாளர்) கொண்டிருக்கும். இம்மூன்று உத்தியோகப் பற்றுள்ள உறுப்பினரைத் தவிர அரசுக் கழகத்தில் அலுவல் பற்றுள்ள உறுப்பினர்கள் வேறு எவரும் இருத்தலாகாது. மூன்று அலுவலாளர்கள், அரசுக் கழக உறுப்பினராயிருந்த போதிலும் சபையில் வாக்குரிமையற்றவர்கள்.
நிருவாகக் குழுக்கள்:
தேர்தலின் பின் முதல் வேலையாக அரசுக் கழக உறுப்பினர்கள்,
கழகத்தின் சபாநாயகர் (Speaker), உப சபாநாயகர் (Deputy Speaker), (5(pid, affair gydi Suit faitri (Chairman of Committees) எனும் சபைத் தலைவர்களைத் தெரிவு செய்வர். அதன்பின் அவர்கள் தம்மை ஏழு நிருவாகக் குழுக்களாகப் பிரித்துக் கொள்வர். ஒவ் வொரு குழுவிலும் ஏழு உறுப்பினருக்குக் குறையாமலும், எட்டு உறுப்பினருக்குக் கூடாமலும் இருத்தல் வேண்டும். ஒவ்வொரு குழுவும் இரகசிய வாக்களிப்பு முறையினுல் ஒரு குழு முதல்வரைத் தெரிந்தெடுக்கும். இம்முதல்வர், நிருவாகக் குழுவின் தலைவர் அல்லது மந்திரி என ஆள்பதியினல் நியமிக்கப்படுவர். இவ்வேழு குழுக்களும் பின்வரும் விவகாரங்களுக்கு முறையே பொறுப் பேற்கும்.
உள்நாட்டு விவகாரங்கள் (Home Affairs)
6a). Frt uh (Agriculture) a) l-esireeju nru 8 (Local Government)
சுகாதாரம் (Health) 653505 Irisdi), a 60fastb (Local Industry & Commerce) I saias (Education)
போக்குவரத்து மராமத்து வேலைகள் (Transport & Works)
 

டொனமூர் விசாரணையும் திட்டமும் 289
ஒவ்வொரு குழுவின் முதல்வரும், அக்குழுவினுடைய கண் காணிப்பின் கீழ் உள்ள திணைக் களிங்களுக்குப் பொறுப்பாகவுள்ள மந்திரியின் தகுதியையும் நிலையையும் கொண்டு விளங்குவார்.
4. அரசாங்க உத்தியோகத்தர் மூவர் :
அரசியல், நிதியியல், சட்டவியல் எனும் முத்துறைகளின் செயலாளர்கள், மந்திரி நிலையிலிருந்த போதிலும், அரசாங்கத்திற்கும் அரசுக் கழகத்திற்கும் ஆலோசகர்களாகக் கடமையாற்றுவார்களே யன்றி, ஏழு மந்திரிகளைப் போன்று நிருவாகக் கடமைகளை நிறை வேற்றுபவர்களாக இருக்கமாட்டார்கள்.
l. 3 J, D G ful so sili (Chief Secretary):
நாட்டில் ஆள்பதிக்கு அடுத்த முக்கியத்துவம் வாய்ந்த அதிகாரி இவரே. அதனுடன் அவர் அமைச்சரவையின் உத்தியோக பூர்வ மான நிரந்தரத் தலைவராகவும் இருப்பர். அரசாங்க அலுவல்கள், அரசாங்க சேவையாளர், வெளிநாட்டு விவகாரங்கள், பாதுகாப்பு எனும் கருமங்களுக்கு இவரே பொறுப்பேற்பார்.
2. 5 3)& GFL 0161 fr (Financial Secretary):
வரவு-செலவு, நிதி எனும் கருமங்களுடன் சம்பந்தப்பட்ட அதிகாரம் முழுவதும் நிதிச் செயலாளரின் பொறுப்பிலிருந்தது. நாட்டின் நிதிநிலை பற்றிய ஆலோசனைகளை மந்திரிகளுக்கு எடுத்துக் கூறுவது அவரது முதற் கடமையாகும். அரசாங்கச் செலவுகளுக்கு அவரே அங்கீகாரம் வழங்கியமையால், அவரது அனுமதியின்றி மந்திரிகள் ஒன்றுமே செய்ய முடியாத நிலைக்குள்ளாயினர். சுங்கம், பண்டகசாலை, அச்சகம் என்பவற்றிற்கும் அவரே பொறுப்பாயிருப்பர்.
3. Fi'. Lj. G 5 ujor Siri (Legal Secretary): 臀
அரசாங்கத்திற்கும் அரசுக் கழகத்திற்கும் சட்டம் சம்பந்தமான் ஆலோசனைகளைக் கூறல், முடியின் சார்பில் வழக்குகள் தொடர்த்ல், அரசுக் கழகத்துக்கான தேர்தல்களை நடாத்துதல், சட்டங்களையும் மசோதாக்களையும் சட்ட முறைப்படி வரைதல், என்பவை இவரது பிரதான கடமைகளாகும்
மேலே கூறப்பட்ட மூன்று விடயங்கள் அரசுக் கழகத்தின் அதிகாரங்களினின்று வேருக அமைக்கப் பட்டமையினல், அவை "ஒதுக் கப்பட்ட” (Reserved) அல்லது பிரத்தியேக (Special) விடயங்கள் என அழைக்கப்பட்டன. இம்மூன்று உத்தியோகத்தரும் ஆள்
இ 19

Page 152
290 இலங்கைச் சரித்திரம்
பதியினல் நியமிக்கப்பட்டமையினல், அவர்கள் அரசுக் கழகத்தின் கருத்துக்களுக்கு செவிசாய்க்க வேண்டிய நியதி இருக்கவில்லை. இவ் வுத்தியோகத்தர், இலங்கையின் தேவைகளிலும் பார்க்க ஏகாதிபத்தி யத்தின் நலனையே கருத்திற்கொண்டு கருமமாற்றினர் எனக் கூறப் பட்டது. எனவே இவர்களுக்கும், அமைச்சர் சபைக்குமிடையே கருத்து வேறுபாடுகள், போட்டிகள், பிணக்குகள் ஏற்பட்டது வியப்புக்குரியதல்ல. −
5. அமைச்சர் சபை
ஏழு நிாவாகக் குளுக்களின் தலைவர்களும், மூன்று அரச அலுவலாளர்களும் அமைச்சர் சபையின் (Board of Ministers) உறுப்பினராவர். அரசுக்கழகத்தின் நடைமுறைக் கருமங்களை ஒழுங்கு செய்து கட்டுப் படுத்துவதுடன், அரசாங்கத்தின் பிரதான வேலையான ஆண்டு வரவு செலவுத் திட்டம், மதிப்பீடு ஆகியவற்றைத் தயாரித்தலும், அதன் முதன்மையான வேலையாகும். அமைச்சர்கள், தமது ஆண்டு வரவு செலவு மதிப்பீடுகளை நிதிச் செயலாளர் மூலம் அமைச்சர் சபைக்குச் சமர்ப்பிப்பர். பின்னர் ஒவ்வொரு குளுவுக் குரிய அதிகூடுதலான செலவு, நிதிச் செயலாளர் துணை கொண்டு தீர்மானிக்கப்படும். அவ்வேளையில் புது வரிகளும் சிபார்சு செய்யப் படும். இவற்றை இணைத்து ஆண்டு வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்படும்.
இவ்வேலைகள் யாவற்றிற்கும், அமைச்சர் சபை கூட்டுப் பொறுப் புடையதாயிருக்கும். இத்திட்டங்களை அரசுக் கழகம் ஏற்க மறுத் தால், அன்றேல் மூன்று மாதங்களுக்குள் ஏற்கத் தவறினல், ஆள்பதி அரசுக் கழகத்தைக் கலைத்து விடுவார். இவற்றைத் தவிர்ந்த ஏனைய
விடயங்களில் அமைச்சர்கள் தனிப்பட்ட பொறுப்புடையவரா யிருப்பர். 6.ஆள்பதியின் அதிகாரம் :
புதுத் திட்டத்தின் கீழ், ஆள்பதியின் விசேட அதிகாரங்கள், அவ்சர்காலத்தில் கட்டளைகளைப் பிறப்பிக்கும் தனியுரிமை, மசோ தாக்கள் ஆள்பதியின் சம்மதத்தைப் பெற்று சட்டமாகும் உரிமை எனும் விடயங்களில், பழைய அதிகாரங்கள் அவருக்குப் பாதுகாத்துக் கொடுக்கப்பட்டன.
: எனினும் நிருவாகக் கருமங்கள் முழுவதும் மக்களின் பிரதி நிதிகளிடமும், அரசாங்க அலுவலாளரிடமும் ஒப்புவிக்கப் பட்டதன் பயனுக, ஆள்பதி சட்டவரம்பிற்குட்பட்ட ஒர் அரசாங்க மேற்
議
 
 
 
 
 
 

டொனமூர் விசாரணையும் திட்டமும் 2.91.
JITř6)6uurr6MTř எனும் நிலையை அடைந்தார். பேரரசு பற்றி முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள், சிறுபான்மையினரைப் பாதிக்கும் விடயங்கள், பாதுகாப்பு, பணநிலை, நீதி பரிபாலனம், அரசாங்க உத்தியோகத்தரைப் பாதிக்கும் சட்டங்கள் என்பனவற்றை ஏற்காது அரசரின் பார்வைக்கு ஒத்திவைக்க ஆள்பதிக்கு விசேட அதிகாரங்கள் வழங்கப்பட்டன. , ,
7. உள்ளூராட்சி : A
டொனமூர் அரசியற்றிட்டம், மத்திய அரசாங்கத்தின் போக்கில் மாத்திரமன்று, உள்ளூராட்சி முறைகளிலும் புதுத் திருப் பத்தை ஏற்படுத்தியது. விசாரணைச் சபையினர், இலங்கையில் உள்ளூராட்சி மன்றங்கள் ஓரளவு வெற்றிகரமாக இயங்கிய போதிலும் அவற்றிற்குப் புத்துயிர் அளிப்பதும், அவற்றை விஸ்தரிப்பதும் அத்தி யாவசிய தேவைகள் என உணர்ந்தனர். அவர்கள், உள்ளூராட்சியின் பரிபாலனத்தைத் திறமைப்படுத்தவும், பண நிலையை உறுதிப் படுத்தவும், நிபுணர்களின் சேவைகளைப் பெறவும் பல சிபார்சுகளைச் செய்தனர். எல்லா உள்ளூராட்சி மன்றங்களையும் மேற்பார்வை செய்வதற்கென ஒரு உள்ளூராட்சி ஆணையாளர் நியமிக்கப்பட்டார். அவருக்குத் துணையாக 12 நிருவாக மாநிலங்களில், 12 உதவி ஆணை பாளர்கள் உள்ளூராட்சிப் பொறுப்பை யேற்றனர். தலைவர் உட்ப்பு உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்ட மையால், அவர்கள் வாக்காளர் மட்டில் தம் பொறுப்புக்களை நன் குணர்ந்தனர்.
. . .
திட்டத்தின் குறைபாடுகள்:
டொனமூர் திட்டம், அதற்குமுன் தோன்றி மறைந்த அரசியற் றிட்டங்களிலும் பார்க்க சிறந்த அம்சங்கள் பலவற்றைக் கொண் டிருந்த போதிலும், சில குறைபாடுகள் இருக்கவே செய்தன. அவை களாவன:
', " ..." i:. . . . . . .
(i) புது அரசியற்றிட்டம், இலங்கையில் இரட்டையாட்சி முறையொன்றினை ஏற்படுத்தியது. மூன்று அரசாங்க அலுவலாள்ர் அரசுக் கழகத்திற்கண்றி ஆள்பதிக்கு மாத்திரம் பொறுப்பர்க்க்ப் பட்டமையினல் ஏனைய மந்திரிகளுக்கும் அவர்களுக்குமிடையே சித்ா முரண்பாடுகள் தோன்றின. திரு:E. W. பெரேரா 'அம்மூவ்ரை "சாதாரண உடையில் நடமாடும் பெர்லிஸ்காரர்' என வர்ணித்தhர்.

Page 153
292 இலங்கைச் சரித்திரம்
(i) ஏழு மந்திரிகளிடையே கூட்டுப் பொறுப்பு, ஒருமைப் பாட்டுடன் திட்டமிடல், ஒற்றுமை, வேலைத்தொடர்பு என்னும் பண்புகள் சிறிதளவும் இருக்கவில்லை. அவர்களை ஒருவழிப்படுத்தி, ஒருவழியில் செலுத்துவதற்குக் கட்சி முறையிருக்கவில்லை, பிரதம மந்திரியுமில்லை. இந்நிலையில் அவர்கள் சாரதியற்ற தேரில் பூட்டப் பட்ட குதிரைகள் போன்று வெவ்வேறு திசைகளில் இழுத்தனர். மந்திரிகளுக்கிடையே போட்டிகள் மலிந்தன. ஒவ்வொரு மந்திரியும் தற்புகழ் பெறுவதற்கும், மக்களின் ஆதரவைப் பெறுவதற்குமாகக் கருமமாற்றினரேயன்றி, நாட்டின் நலனை நோக்காகக் கொண்டு செயற்படவில்லை.
(i) பாதுகாப்பு, வெளிநாட்டு விவகாரங்கள், சிறுபான்மை யினரின் உரிமைகள் என்னும் விடயங்களில் முன்போன்று ஆள்பதி, சகல அதிகாரங்களும் படைத்தவராக விளங்கினர்.
3. நடைமுறையில் டொனமூர் திட்டம் (1931-1945)
1931 ஆம் ஆண்டு அமுல் செய்யப்பட்ட டொனமூர் திட்டம் இலங்கை மக்களின் எண்ணங்களையும் ஆசைகளையும் திருப்தி செய்ய முடியவில்லை. நீண்டகாலம் அரசியற்றுறையில் ஈடுபட்டிருந்த அனுபவம் மிக்க பெரியார்கள் மாத்திரமன்றி, அரசியலில் புகுந்த சேர். பாறன் ஜெயதிலகா, D. S. சேனநாயக்கா, ஜோன் கொத்தலாவலை போன்ற புது முகங்கள் கூட, டொனமூர் திட்டத்தில் மலிந்துகிடந்த அதிகெடுதியான அம்சங்களைக் கண்டித்து, அரசியலில் மாற்றம் வேண்டுமெனக் கிளர்ச்சிகளை ஆரம்பித்தனர்.
முதல் அரசுக் கழகம்:
முதலாவது தேர்தலில் தமிழர் வாழும் பிரதேசமாகிய யாழ்ப் பாணக் குடாநாட்டில் நடாத்தப்பட்ட ஒன்றியொதுக்கலின் (Boycott) பயனக, நான்கு தொகுதிகளுக்கு உறுப்பினர் தெரியப் படவில்லை. புது அரசியற் திட்டத்தில், தமிழ் மக்களின் நலவுரிமை களுக்கு ஏற்றமுறையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லையென். அவர்கள் அதிருப்தி கொண்டமையே, இவ்வொன்றி யொதுக்கலுக்குப் பிரதான காரணமாகும். இதன் பயனக ஐம்பது உறுப்பினரைக் கொண்டிருக்க வேண்டிய அரசுக் கழகம், நாற்பத்தாறு உறுப் பினரைக் கீழ்க்காணும் அடிப்படையில் கொண்டிருந்தது.
 

டொனமூர் விசாரணையும் திட்டமும் 293
தாழ்பிரதேசச் சிங்களர் - 28
மலைநாட்டுச் சிங்களர் - 10 இலங்கைத் தமிழர் س-" {", : இந்தியத் தமிழர் - 2 y ஐரோப்பியர் - 2
முஸ்லிம் سسسسسسة- : "" TI
'எட்டு நியமன இடங்களுக்கு ஆள்பதி, 2 பறங்கியர், I முஸ்லிம், 1 இந்திய வர்த்தகர், 4 ஐரோப்பியர் என்பவர்களை நியமனம் செய்தார். 1931 இல், சேர் கிரேம் தொம்ஸன், முதல் அரசுக் கழகத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். அக்கழகத்தில் நியமனம் பெற்ற மூன்று அலுவலாளர்கள் பின் வருமாறு. స్టీ" |
பிரதம் செயலாளர்-சேர் பேனட் பூர்டிலோன் (Sir Bernard Bourdilon) நிதிச் ' , –Gg i 69619 pl - all '6i (Sir Wilfred Woods) நீதிச்' , — E. GOSFu376ởTIL". J. gj. F Gör. (E. St. J. Jackson)
புது, அரசியற்றிட்டம் திருத்தப்பட வேண்டுமென்ற கிளர்ச்சி, உடனடியாக ஆரம்பித்தது. 1932 யூலை மாதம், திரு. E. W. பெரேரா, அரசுக்கழக அமைப்பைப் பற்றிய பல தொடர்பான தீர்மானங்களைச் சபையில் சமர்ப்பித்தார். 1933 ஏப்பிரலில் மந்திரிகள் புதுத் திட்டமொன்றினைத் தயார் செய்தனர். அதில் அவர்கள் , அரசாங்க அலுவலாளரின் ஆட்சியை ஒழிக்கவும், அவர் களின் கடமைகளை இலங்கை மந்திரிகளின் கைகளில் ஒப்படைக் கவும், ஆள்பதியின் அதிகாரங்களைக் குறைக்கவும் வேண்டியதன் அவசியத்தை வற்புறுத்தினர். நிர்வாகக்குழு ஆட்சி முறைக்குப் பதிலாக அமைச்சரவை ஆட்சிமுறை நிறுவப்பட வேண்டுமென். பதே அவர்களின் பிரதான கோரிக்கையாக அமைந்தது. இத் திட்டம் சிறுபான்மையினரின் ஆதரவைப் பெற முடியவில்லை. குடியேற்ற நாட்டு அலுவலகத்தார், அரசமைப்புத் திட்டத்தை இத்துணை சீக்கிரம் மாற்ற எவ்வித நியாயமுமில்லையெனக் கூறி விட்டனர்
இரண்டாவது அரசுக் கழகம்: · : ",
முதலாவது அரசுக் கழகம், குறிப்பிட்ட ஐந்து ஆண்டு
களுக்குச் சேவைசெய்து 1936 இல் கலைந்தது. அவ்வாண்டு நடந்த
பொதுத்தேர்தலில் ஒன்றியொதுக்கல் நடைபெறவில்லை. புது
அரக்க் கழகத்தின் பிரதி நிதித்துவம் இன அடிப்படையில் பின்
வரும்iறு' அமைந்தது. ' ' '
g 19 A ;"

Page 154
2.94 இலங்கைச் சரித்திரம்
தாழ்பிரதேசச் சிங்களர் - 31
கண்டிச் சிங்களர் - 8 இலங்கைத் தமிழர் - 8 இந்தியத் தமிழர் .2 مس ஐரோப்பியர் - I
, எட்டு நியமன இடங்களுக்கு ஆள்பதி, நான்கு ஐரோப்பியர், இரு முஸ்லிம்கள், ஓர் இந்தியர், ஒரு பறங்கி என்பவர்களை முறையே நியமனம் செய்தார். இரண்டாம் முறையும் சட்டசபையின் முதல் வராகத் தெரிவு செய்யப்பட்ட சேர். பாறன் ஐயத்திலக்காவின் நோக்கப்படி, ஏகோபித்த மனப்பான்மையுடைய ஒரு மந்திரிசபை உண்டாயின், அரசியற் றிட்டத்தை மாற்றியமைக்க அதிகாரிகள்
உடன்படுவரென எண்ணினர். எனவே, நிருவாகக் குழுக்கள் தெரியப்பட்டபொழுது, திட்டமிடப்பட்ட சூழ்ச்சியினல் மந்திரிகள் யாவரும் சிங்களராகத் தெரிவு செய்யப்பட்டனர். இச்செய்கை
யினல், புதுத்திட்டம், சிறுபான்மையினர் தாம் என்றும் அரசாங் கத்தில் எவ்வித உரிமையும் அங்கமும் பெறமுடியாதவர்களாகச் செய்து விடுமென அஞ்சினர். இதனல் அவர்கள் அரசியலமைப்புத் திட்டமாற்றத்தை எதிர்த்தே நின்றனர். அன்ட்று கல்டிக் கொட் :
1936 ஆம் ஆண்டு குடியேற்ற நாட்டுச் செயலாளராக நியமிக் கப்ப்ட்ட திரு ஓம்ஸ்பி கோர் (Ormsby Gore) பழைய பிரச்சினை களைப் புதுவித நோக்கத்துடன் ஆராய முற்பட்டார் அவரின் ஆலோசனையின் படி, சேர் அன்ட்றுா கல்டிக்கொட் 1937 இல் இலங்கையின் ஆள்பதியாக நியமிக்கப்பட்டார். கல்டிக்கொட் அவர்கள், தம் வாழ் நாள் முழுவதையும் மலாயாவில் செலவிட்டு, அங்கு அவர் ஒரு சிறந்த மதி நுட்பம் வாய்ந்த நிருவாகி எனப் பெயர் பெற்றவர். ஆசிய மக்களுடன் நீண்ட காலம் சேவை செய்த அனுபவத்துடன் இங்கு வந்தமையினல் அவர், இலங்கையர் மட்டில் அன்பும் அனுதாபமும் கொண்டிருந்தார்.
1937 நொ வம்பர் 5 இல், குடியேற்ற நாட்டு அதிகாரி, தன் புதிய ஆள்பதியிடம் இலங்கையின் அரசியற்றிட்டத்தின் நிலையைப் பரிசிலனை செய்து, அதனைப்பற்றி எல்லோரினதும் அபிப்பிராயங்களை யறிந்து ஒரு பூரண அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு பணித்தார். அவர், மந்திரி சபையின் அறிக்கைகள், சிறுபான்மையினர் கூற்றுக்கள், பல முன்னேற்றக் கழகங்களின் அறிக்கைகள், தூதுக்குழுக்களின் எண்ணங்கள் யாவையும் நன்கு கற்றும், விசாரணை செய்தும்

டொனமூர் விசாரணையும் திட்டமும் 295
அறிந்தார். சிலர் வாக்குரிைையக் கட்டுப் படுத்த வேன்டுமென்றனர். வேறு சிலர், மேற்சபை ஒன்றினை அமைக்க வேண்டு மென்றனர், சிறு பான்மையினர் "ஐம்பதுக்கு ஐம்பது" அதாவது, சட்டசபையின் உறுப்பினர்கள், சிங்களருக்கும் சகல சிறுபான்யிைனருக்கும் சமமாக இருக்க வேண்டுமென்ற திட்டத்தைச் சமர்ப்பித்தனர். இவ்விதமாக பூரண விசாரணை நடாத்தியபின் அவர், 1938 யூன் 13 இல், அதி சிறந்த அறிக்கை ஒன்றினை புதுக்குடியேற்ற நாட்டுச் செயலாளர் திருg மல்க்கம் மக்டொனல்டுக்கு அனுப்பி வைத்தார்.
அவ்வறிக்கையில் சேர். கல்டிக்கொட், அரசுக் கழகத்தில் இன அடிப்படையில் அங்கத்துவம் வழங்குவதற்கு, கணித முறையை உபயோகித்தலை எதிர்த்தார். அதற்குப் பதிலாக அவர், வாக்காளர் தொகுதிகளின் எல்லைகளை மாற்றி அமைக்கவும், அவற்றிலிருந்து கூடுதலான சிறுபான்மை உறுப்பினர் தெரிவு செய்யக்கூடிய வாய்ப் பைக்கொடுக்கும் நோக்கமாக எல்லைகளைக் குறிப்பிடுவதற்கு ஒரு விசாரணைச்சபை ஏற்படுத்தல் வேண்டுமென ஆலோசனை கூறினர். அவரது அறிக்கையின் முக்கியமான அம்சம் யாதெனில், நிருவாகக் குழு ஆட்சி முறை நீக்கப்பட வேண்டு மென்பதேயாகும். 'அரசுக் கழகமானது, ஒர் அரசியல் விவாதக் கழகமாக இருக்கிறதேயன்றி, ஒரு முறையான அரசாங்கமாக இருக்கவில்லை' என்ருர் அவர். 'திருவாகம் தாமதப்பட்டதும், தொல்லையானதுமாய் மாறி விட்டது". மந்திரிகள் பொறுப்பில்லாது இருந்தனர் ; அவர்கள் நிருவாகக் குழுக்களினல் தெரிந்தெடுக்கப்படும் முறை விரும்பத்தக்க தல்ல; மந்திரிசபைக்கு வரவு செலவுத்திட்டத்தை மாற்ற அதிகார மிருந்தது, ஆனல் அதனை உருவாக்க அதிகாரமில்லை. இக்காரணங் . களுக்காக ஆள்பதி, 'கபினட் முறை" அமைக்கப்பட வேண்டு மெனச் சிபார்சுசெய்தார். கபினட் ஆட்சி முறையின் கீழ்தான், ஒர் உறுதியான கட்சி முறை வளரும் என்றும், அவர் உறுதியாக நம்பினர்.
1938 நவம்பர் 10 ஆம் நாள், திரு. மக்டொனல்ட், நிருவாகக் குழு ஆட்சி முறைக்குப் பதிலாக கபினட் முறையை அமைக்கும் ஆலோசனைக்கு விருப்பம் தெரிவித்து, ஓர் உத்தியோக பூர்வமான பதிலை அனுப்பிவைத்தார், அவர் அதில், ஆள்பதியின் அறிக்கை, சட்டசபையில் விவாதிக்கப்பட வேண்டுமெனக் கேட்டிருந்தார்.
1939 இல் உலக யுத்தம் ஆரம்பமாயிற்று. இக்காரணத்தினுல் புதுத்திட்டத்தைப் பற்றிய தீர்மானங்கள், யுத்தம் முடியும்வர்ை பின்போடப்பட்டன.

Page 155
296 い 。 இலங்கைச் சரித்திரம்
... . . . 4. நாட்டு முன்னேற்றம் ༥༣.༥ ; f་"
டொனமூர் திட்டத்தில் குறைகள் பல இருந்தபோதிலும், அது, மக்களின் அரசியல் ஆர்வத்தை, அல்லது நாட்டின் சமூக, பொருளாதார விருத்தியைத் தடைப்படுத்தி விட்டது எனக் கூறுவதற்கில்லை. 1940 இல் சேர். பாரன் ஜயத்திலக்கா, 'கடந்த தொண்னுாறு ஆண்டுகளில் நடந்திராத முன்னேற்றத்தை இந்நாட்டி லுள்ள அரசுக் கழகம், கடந்த ஒன்பது ஆண்டுகளில் நிறை வேற்றியிருப்பது பெரும் வியப்புக்குரிய விடயமாகும்” எனக் கூறினர். அரசியற்றிட்டத்தில் கெடுதிகள் பல இருந்தபோதிலும் இலங்கை மக்களும் அவர்களின் தலைவர்களும், தம் கருமங்களைத் தாமே கொண்டு நடாத்தத் தகுதியுள்ளவர்கள் என்பதைச் செய் கையில் நிரூபித்துக் காட்டி விட்டனர். அத்திட்டம்தான், இலங்கை யரைத் தம் அரசாங்க நிருவாகக் கருமங்களை நடாத்த வல்ல வராக்கி, அவர்களைச் சுதந்திரப் பாதையில் நடப்பதற்கு வேண்டிய பயிற்சியையும். தகைமையையும் பெற்றுத் தந்ததெனக் கூறலாம். புதுத்திட்டம் அநுட்டானத்திலிருந்த 17 ஆண்டுகளில், தேசத்தின் சகல துறைகளிலும் தீவிர முன்னேற்றம் காணப்பட்டது. இக் காலத்தில், இலங்கையின் அரசியல் தலைவர்கள் பொதுமக்களின் நலனையும், அபிவிருத்தியையும் கருத்திற்கொண்டு பொறுப்புணர்ச்சி யுடன் நடந்ததன் பயனகவே, இம்முன்னேற்றம் ஏற்ப்பட்டதெனக் கொள்ளலாம். *
டொனமூர் திட்டம் அமூல் செய்யப்பட்ட முதல் ஆண்டுகள், பொருளாதார மந்தம் நிறைந்த காலமாக அமைந்தமை, இலங் கையின் துர்அதிட்டமாகும், 1931 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஆரம்பித்து, உலகம் எங்கணும் பரவிய பொருளாதார மந்தம், இலங்கையையும் வெகுவாகப் பாதித்தது. ஏற்றுமதிப் பொருள்களின் குறைவு, வேலையில்லாத் திண்டாட்டம், குடிசனப் பெருக்கம் எனும் இன்னல்கள் நாட்டில் தாண்டவமாடின. இந்நிலை மாறி வரும் வேளையில், 1934 இல், மிகவும் கொடூரமான மலேரியாச் சுரம் நாட்டையும் மக்களையும் துன்பப்படுத்திற்று.
* : & கைத்தொழில் : . . . . . .
இலங்கை ஒரு விவசாய நாடு. விவசாயம் எனும்பொழுது, நெல் வேளாண்மையுடன் தேயிலை, இறப்பர், தென்னை போன்ற பணவரு வாயுடைய விவசாயப் பொருள்களும் அதனுள் அடங்கும். 1931ஆம் ஆண்டு உலகெங்கணும் பரந்த பொருளாதார மந்தம், இந்நாட்டின்
 
 

டொனமூர் விசாரணையும் திட்டமும் *29უ7
பொருளாதார அடிப்படையைப் பலவிதப்படுத்த வேண்டியதன்
அவசியத்தை வலியுறுத்திற்று. கைத்தொழிற் சாலைகள் அமைப்பதன்
மூலம்தான் பொருளாதாரத்தைப் பயன் தரும் முறையில் பலவிதப்
படுத்தலாம் என்பது, அபிவிருத்தியடைந்த நாடுகளின் அனுபவத் திலிருந்து இலங்கையர் அறிந்த ஓர் உண்மையாகும்.
கைத்தொழில்களின் விருத்திக்கும் வளர்ச்சிக்கும் மின்சார சக்தி ஓர் இன்றியமையாத தேவை யென்பதை அரசுக் கழகத்தினர் நன்குணர்ந்தனர் கரி, எண்ணெய் போன்ற பொருள்கள் இல்லா விடினும், நீர் வீழ்ச்சிகளினின்று மின் சக்தியைப் பெறும் வாய்ப்பு நாட்டில் நிறையவுண்டு எனக் கண்ட அவர்கள், அதனைப் பயன் படுத்தும் பொருட்டு, 1931 இல் மின்சக்தி திணைக்களத்தை (Dept. of Govt. Eletrical Undertakings) sidjoj6a ri. . . ."
35ņGuLuiòpo søy 9a2c1536) pÉS (Colonial Development i Fund) இலங்கைக்கு பத்துக்கோடி ரூபாவை வழங்கியதன் பயனுக, பல தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பப்டன. நெசவுத் தொழிற்சாலையும் ஒட்டுப்பலகைத் தொழிற்சாலையும் நிறுவப்பட்டன. இரண்ட்ாம் உலகப்போர் நடைபெற்ற காலத்தில், அரசாங்கம் மேலும் பல் தொழிற் சாலைகளை நிறுவிற்று. அசெற்றிக் அசிட் (Acetid Acid) காகிதம், கிளாஸ், பீங்கான்-கோப்பை, காலணிகள் உற்பத்திக்கென பல தொழிற்சாலைகள் ஆரம்பமாயின. இவை போர்க்காலத்தில் நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்தன. ஆணுல் போர் முடி வெய்த, ஒட்டுப்பலகை ஒன்றைத் தவிர, மிகுதித் தொழிற்சாலைகள் யாவும் மூடப்பட்டன. s', ' ' '
மலிந்த சக்தி, மூலப் பொருள், தொழில் நுட்ப அறிவு, சந்தைகள் எனும் காரணிகள் போதியளவு இல்லாதமையினல் கைத் தொழிற்றை சித்திகரமாக விருத்தியடைய முடியாமற் போயிற்று. எனினும் இக்காலத்தில் பெறப்பட்ட அனுபவம், எதிர் காலத்தில் பயன்தர வல்லதாக அமைந்தது எனக் கூறலாம். : . .
விவசாயம்:
டொனமூர் திட்டம் நடைமுறையிலிருந்த காலத்தில், விவசாயம் , நீர்ப்பாசனம் எனும் துறைகளில் ஏற்பட்ட முன்னேற்றமும் 'அபி விருத்தியும் பாராட்டத்தகும். இத்தகைய முன்னேற்றத்துக்குக் காரண கர்த்தாவாக விளங்கியவர் திரு. D. S. சேனநாயக்கா அவர் களாவர். அவர் 1931 தொடக்கம் விவசாய நில மந்திரியாகக் கடமையாற்றினர். ஆரம்பந்தொட்டு சேனநாயக்கா அவர்கள், விவசாயத் திட்டங்களில் நிறைந்த ஆர்வமும் ஊக்கமும் காட்டி

Page 156
298 இலங்கைச் சரித்திரம்
இலங்கையில் மூன்று ஏற்றுமதிப் பொருள்களின் அடிப்படை முக்கியத்துவத்தை உணர்ந்த அதே நேரத்தில் அவர், நெற் செய்கை விருத்தியடைந்தால்தான், ஆண்டுதோறும் நாட்டுக்குத் தேவை யான அரிசியின் 3 பகுதியை இறக்குமதி செய்யும் அவலநிலை நீங்கு மெனக் கண்டார். எனவே, நெல்லுற்பத்தியைப் பெருக்குவது அவரது விசேட இலக்காயிற்று. நெற் செய்கையை விருத்தி செய் வதற்கு அவர் இரு திட்டங்களை வகுத்தார். அவையாவன முதலாவது, உள்ள விளை நிலங்களில் விளைச்சலை அதிகரிக்கச் செய்தல், இரண்டாவது, உலர் வலயத்தில் புதுநிலங்களை நெற்செய்கைக்குப் பயன்படுத்தல் என்பனவாகும்.
முதற் திட்டத்தின்படி, விவசாயிகள் கடைப்பிடித்து வந்த பண்டைய முறைகளுக்குப் பதிலாக, நவீன விஞ்ஞான முறைகள் மேற் கொள்ளப்பட வேண்டுமென, சேனநாயக்கா திட்டமிட்டார். நிலங்களை ஆழமாக உழுதல், போதியளவு பசளை உரங்கள் இடுதல், சிறந்த விதை நெல்லை உபயோகித்தல், ஜப்பானிய முறைப்படி வரிகளில் நாற்று நடுதல் எனும் முறைகளை பரீட்சை செய்வதற்கென ஆராய்ச்சிப் பகுதியொன்று நிறுவப்பட்டது. அம்முறைகளை விவசாயி களுக்கு எடுத்துக் காட்டுவதற்கு விவசாயப் பாடசாலைகள் அமைக் கப்பெற்றன. இப்பாடசாலைகளில் புதிய முறைகள் செய்கையில் காட்டப்பட்டதுடன், மாணவர்களுக்கும் அம்முறைகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.
இரண்டாவது திட்டத்தின்படி, உலர் வலயத்தில் புதுக் குடி யேற்றங்களை ஏற்படுத்தும் முயற்சி துரிதமாக முன்னேறிற்று. 1932 இல் சேனநாயக்கா, அரசாங்கப் பண உதவியுடன் குடி யிருத்தும் திட்டமொன்றினைப் பிரகடனம் செய்தார். மின்னேரியா போன்ற இடங்களில் காடுகளை ஒழித்தற்கும், வீடுகளைக் கட்டுவதற் கும் அரசாங்கப் பண உதவி விவசாயிகளுக்குக் கொடுக்கப்பட்டது.
விவசாய மந்திரியும் அரசுக் கழகமும் பெரிதும் ஆதரித்த இன்னுமொரு திட்டம், கூட்டுறவு இயக்கமாகும். கூட்டுறவு முறை 1913 இல் ஆரம்பிக்பப்பட்டு, 1936 வரை விவசாய இலாக்காவின் ஒரு கிளைப் பகுதியாக இருந்தது. இக்காலத்தில் கிராமிய விவசாயி களின் கடன் சுமையை நீக்கும் நோக்குடன், கூட்டுறவு இயக்கத்தை விஸ்தரிக்கப் பெரும் முயற்சி எடுக்கப்பட்டது. இதன் காரணமாக, 1940 இல் 70 இலட்சம் ரூபா முதலைக் கொண்ட 1660 சங்கங்கள் இயங்கி வந்தன. உலக யுத்த காலத்தில் உணவுப் பங்கீட்டு முறையும் கூட்டுறவுச் சங்கங்களின் பொறுப்பில் விடப்பட்டன. இத
ணுல் இலங்கை எங்ங்ணும் கூட்டுறவுச் சங்கங்கள் நிறுவப்பட்டன.
1945 இல் சங்கங்களின் எண்ணிக்கை 4000 ஆகப் பெருகியது.
 

டொனமுர் விசாரணையும் திட்டமும் 299
விவசாய விற்பனை இலாக்காவும் (Agricultural Marketing Dept.) மந்திரியின் முயற்சியினலேயே அமைக்கப்பட்டது.
கல்வி:
கல்வி விடயத்திலும் அரசுக்கழகம் அதிக ஊக்கமும் சிரத்தையும் காட்டிற்று. ஆரம்ப சிரேஷ்ட கல்வி முறைகளின் முன்னேற்றம், நிதி நிலையினல் பெரிதும் பாதிக்கப்பட்டது. இக்காலத்தில் அரசுக் கழகம், கூடுதலாகத் திறமையான பாடசாலைகளை அமைத்தல், இலவச மதிய போசனம் அளித்தல், ஆசிரிய பயிற்சிக் கல்லூரிகளைத் திறத்தல் எனும் திட்டங்களை வகுத்து, நாட்டின் கல்வி வசதிகளை விஸ்தரிக்க வேண்டுமென அதிக அக்கறை எடுத்தது. 1940 ஆம் ஆண்டு ஒரு விசேட கல்வி விசாரணைச்சபை நியமிக்கப்பெற்றது. அச்சபை, பாலர் வகுப்புத் தொடக்கம் பல்கலைக்கழகம் வரை, இலவசக் கல்வி, எல்லா மாணவருக்கும் அளிக்கப்பட வேண்டு மென்ற புரட்சிகரமான திட்டத்தை வகுத்தது. ஆசியாவில், இலங்கையில்தான் முதன்முதல் இப்பேர்ப்பட்ட விசாலமான இல வசக் கல்வித் திட்டம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டமை குறிப் பிடத்தக்கது. அத்திட்டம், அரசுக் கழகம் முடிபு செய்த மகத் தான சாதனைகளிலொன்று என்பது வெளிப்படை, 85 வீதமான பிள்ளைகள் வசித்த கிராமப்புறங்களின் நலனுக்கும் முன்னேற்றத் துக்குமாக 50 மத்திய கல்லூரிகள் (Central Colleges) நிறுவப் பட்டன. 1931 இல் அரசாங்கம் கல்விக்குச் செலவிட்ட தொகை 120 இலட்சம் ரூபாவாகும். 1945 இல் இத்தொகை 340 இலட் சமாக உயர்ந்தது. −
அரசுக் கழகம், இலங்கையில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்க வேண்டுமென்ற திட்டத்தையும் பூரணமாக ஆதரித்தது. பொரு ளாதார நெருக்கடி காரணமாக இத்திட்டம் பின்போடப்பட்ட போதும், நிலை அபிவிருத்தியடைந்தவுடன் புதுப் பல்கலைக் கழகத்தை பெரதே னியாவில் அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது. இரண டாம் உலகப்போர், திட்டத்தை மேலும் தாமதம் செய்தது. 1941 இல் சேர் ஐவர் ஜெனிங்ஸ் பல்கலைக் கல்லூரியின் அதிபராக நியமிக்கப்பட்டார். சட்ட நிபுணராக விளங்கிய அவரது சேவைகள், மந்திரி சபைக்கு மிகவும் உபயோகமுள்ளனவாயின. 1942 இல் அவர் பல்கலைக் கல்லூரியைக் கழக அந்தஸ்துக்கு உயர்த்தினர்.
வைத்தியம் , சுகாதாரம்:
இக்காலத்தில் வைத்தியம், சுகாதாரம் எனும் துறைகளிலும் அதிக முன்னேற்றம் காணப்பட்டது. சின்னம்மை, கொலரா, பிளேக் முதலிய கொடிய தொற்று நோய்களை அகற்றுவதில் வெற்றிகள் பல கிடைத்தன.

Page 157
300 . இலங்கைச் சரித்திரம்
.: மலேரியாச் சுரம் பரவுவதைத் தடுக்க விசாலமான நடவடிக் கைகள் எடுக்கப்பட்டன. 1934-35 ஆம் ஆண்டுகளில் மலேரியாச் சுரத்தினல் 50,000 பேர் இறந்தனர். 1945 வரை இந் நோய், மக்களை வெகுவாகப் பீடித்து மரண விகிதத்தை அதிகரிக்கச் செய்தது. போர்க் காலத்தில், இலங்கையிலிருந்த இராணுவ வீரர்கள் D, D. T மருந்து அடித்தல், நீர்த்தேக்கங்களை அழித்தல் போன்ற வழி வகைகளைக் கையாண்டு, இந்நோயைத் தடுப்பதற்கு வழிகளைக் காட்டிக் கொடுத்தனர். இவற்றை அரசாங்கம் பின்பற்றி ஒரு பெரும் தடுப்பு இயக்கத்தை ஆரம்பித்து நோயைக் கட்டுப்படுத் தியது. . ,
பொதுசன சுகாதார ஒழுங்கு முறைகளிலும் புதுக் கொள்கைகள் கையாளப்பட்டமையினல் அதிக பலன் ஏற்பட்டது. போஷணை, சுற்றுப்புறச் சுகாதாரம் எனும் அடிப்படையான கொள்கைகளை ஆதாரமாகக் கொண்டு நோய் ஏற்படாது தடுப்பதில் அபிவிருத்தி காணப்பட்டது. இக்காலத்தில் வைத்திய சாலைகள், டிஸ்பென்சறிகள், வைத்தியர்கள், தாதிமார் எண்ணிக்கை பன் மடங்கு பெருகியது. ஆயுள்வேத வைத்திய முறையினையும் விருத்தி
செய்வதற்கு ஒரு புதுத்திட்டம் அங்குரார்ப்பணம் செய்யப்
பட்டது.
சமூக சேவைகள் :
சமூக சேவைகளை அபிவிருத்தி செய்வதிலும் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வரலாயிற்று. தொழிலாளரின் நல வுரிமைகளைப் பாதுகாத்தற் பொருட்டு, அரசாங்கம் பல சட்டங்களை இயற்றியது. தொழிலாளருக்குரிய அதி குறைந்த சம்பள வீதத் தையும், வேலை நேரத்தையும் நிர்ணயிப்பதற்கு சம்பளத் தீர்ப்புச் சங்கங்கள் நியமிக்கப்பட்டன. தொழிலாளரின் உழைப்புச் சக்திக்குக் கெடுதிகள் ஏற்படாமலிருக்க தொழிற்சாலைச் சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. காத்திராப் பிரகாரம் தொழிலாளருக்கு ஏற்படும் விபத்துக்களுக்கு, முதலாளிகள் நட்டஈடு கொடுப்பதைக் கட்டாயமாக்க தொழிலாளர் நட்ட ஈட்டுச் சட்டம், 1934 இல் (Workmen's Compensation Act) 90ugiptull-3.
ஏழைகளின் கஷ்ட நிவாரணத்துக்காக அரசாங்கம் பெருந் தொன்கப் பணத்தை ஒதுக்கியது. 1939 ஆம் ஆண்டு ஆக்கப்பட்ட வறியோர் சட்டத்தின் பிரகாரம் கொழும்பு, கண்டி, காலி மாநகர
எல்லைகளுக்குள் வசிக்கும் வறியோருக்குப் பண் உதவி அளிக்கும்
அதிகாரம், மாநகர சபைகளிடம் ஒப்படைக்கப்பட்டது. தீவின்
鄭
 

டொனமூர் விசாரணையும் திட்டமும் 301
ஏனைய பாகங்களில் இவ்வுதவியைச் செய்வதற்கு மத்திய அரசாங்கம் தானே பொறுப்பேற்றது. இத்திட்டத்தின் கீழ் வயோதிபர், நோயாளிகள் ஆகியவர்களுக்குப் பண உதவி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வயோதிபர் விடுதிச்சாலைகளும் பல, நிறுவப்பட்டன.
முதலீடு:
அரசுக் கழகத்தின் ஆயுட்காலம், பிறிதொரு துறையில் ஏற் பட்ட முன்னேற்றத்துக்கும் பிரசித்து வாய்ந்தது. இலங்கைப் பொருளாதாரத்தின் நிதியமைப்பு முற்றிலும் பிறநாட்டவர்களின் கைகளில் இருப்பதை இலங்கைத் தலைவர்கள் வரவேற்கவில்லை. இலங்கை வாசிகள், பெருந்தொகைக் கடனைப் பெறுவதற்கு பிரித் தானிய வங்கிகளை அல்லது இந்தியச் செட்டிகளை நாட வேண்டி யிருந்தது. இந்நிலையைப் போக்குவதற்கு 1935 இல் அரசாங்க உதவியுடன் இலங்கை வங்கி (Bank of Ceylon) நிறுவப்பட்டது 1940 இல் விவசாய, தொழில் கடன் கார்ப்பரேஷன் (Agricultural and Industrial Credit Corporation) அங்குரார்ப்பணம் செய்யப் பட்டது. 娜* * ‘" : " : :1,x,, "}
விளுக்கள்
1. டொனமூர் விசாரணைக் குழுவினர் எக் காரணங்களை ஆதார மாகக் கொண்டு வயதுவந்தோர் வாக்குரிமை அளிப்பதற்கான யோசனை கூறினர் என்பதை விளக்குக: 2. இந்நாட்டின் அரசியல் வளர்ச்சிக்கு டொனமூர் ஆட்சிமுறை
எவ்வழிகளில் உதவியது ? 3. டொனமூர் ஆட்சிமுறையின் கீழ், நாட்டு நிர்மாணச் சேவைகள் எவ்வாறு வளர்ச்சியுற்றன என்பதை விளக்க மூன்று உதாரணங்கள் தருக. 鷺鷺 4. டொனமூர் ஆணைக் குழுவினர் சர்வசன வாக்குரிமை வழங் கப்பட வேண்டுமென எக்காரணங்களுக்காகச் சிபார்சு செய்தனர் ? அவர்கள் எதிர்பார்த்த பலன்கள் எவ்வளவு தூரம் பூர்த்தியாயின ? 5. நிர்வாகக்குழு அமைப்புமுறை சித்தி பெருமற் போனதற்குரிய காரணங்களெவை ? 鲇、 6. டொனமூர் விசரரைச்சபை நியமிக்கப்பட்ட காரணங்கண்
ஆராய்க. - , 扈

Page 158
302
h 10,
இலங்கைச் சரித்திரம்
டொனமூர் அரசியற் திட்டத்தின் பிரயோகத்தில் தேசமக்க ளுக்குச் செய்யப்பட்ட சிறப்பான சேவைகளை ஆராய்க." டொனமூர் அரசியல் ஆட்சியின் பலனக உண்டான நன்மை களெவை ? ட்ொனமூர் திட்டத்தை மாற்றி அமைக்கவேண்டிய தற்குக் காரணம் என்ன ? இலங்கையில் பொறுப்பாட்சி அமைப்பதற்கு டொனமூர் அரசியற் திட்டம் எவ்வளவுக்கு ஒரு படியாய் விழங்கின தெனக் கூறுக. 1931 தொடக்கம் 1947 வரை என்ற காலத்தில் விவசாயம்
அல்லது கல்வி அல்லது உள்ளூர் ஆட்சி விருத்தி அடைந்த
I.
2.
தைப்பற்றிச் சுருக்கமாகக் கூறுக. இருபதாம் நூற்ருண்டில் கல்வித் திட்டத்தில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்களை ஆராய்க. இலங்கையில் நிலத் தொகுதிப் பிரதிநிதித்துவ முறை வளர்ச்சி அடைந்த விதத்தை விபரிக்குக. டொனமூர் விசாரண்ைச்சண்ப இன வாரிப் பிரதிநிதித்துவ முறையினை ஒழித்ததேன்?
i.
 

அதிகாரம் 161 சோல்பரி விசாரணையும் திட்டமும் 1. உலகப் போரும் அதன் பயன்களும்
1939 செப்ரம்பர் முதலாம் நாள் ஹிற்லரின் படைகள் போலந்தை ஆக்கிரமித்த நிகழ்ச்சியுடன் இரண்டாம் உலகப் போர் ஆரம்பமாயிற்று. பிரிட்டன், போலந்துக்குக் கொடுத்திருந்த உறுதி மொழியை நிறைவேற்றும் பொருட்டு, உடனே ஜெர்மனிக்கு எதிராகப் போர்ப் பிரகடனம் செய்தது. ஹிற்லர் வெற்றிகரமாகக் கையாண்ட 'மின்னற் போர்" (Blitzkrieg) முறை, ஓராண்டுக்குள் போலந்து, பின்லன்ட், நோர்வே, ஒல்லாந்து, பிரான்ஸ் என்னும் நாடுகளை ஊடுருவிச் சென்று அவற்றை அடிபணியச் செய்தது. வின்ஸ்ரன் சேர்ச்சில் :
1940 மே 10 ஆம் நாள், பிரிட்டன், நெவில் சேம்பலேனின் தலைமைக்குப் பதிலாக, வின்ஸ்ரன் சேர்ச்சிலைப் புதுப் பிரதமராக ஏற்றுக் கொண்டது. பிரிட்டன், தனது முயற்சியினல் தன்னையும், முன்மாதிரியினல் ஐரோப்பாவையும் பாதுகாக்க உறுதி பூண்டது. சேர்ச்சில் தளராத திடசித்தத்தினுலும் நாவன்மையினுலும், பிரிட்டிஷ் மக்களைத் தூக்கத்திலிருந்து தட்டியெழுப்பி வீரத்தை அவர்களுக் கூட்டினர். அவரது உள்ளத்தில் உதித்த வீராவேசமும் துணிவும் உல கின் எட்டுத் திக்குகளிலும், எல்லாச் சுதந்திர எண்ணம் கொண்ட மக் களின் உள்ளங்களிலும் பிரதிபலித்தன. அவர் வாக்குப்பண்ணியவாறு, பிரித்தானிய மக்கள்'இரத்தமும், கண்ணிரும், வியர்வையும் சிந்தி," பல்லாண்டுகளாகக்கடுமையாக உழைத்தே, தம் சுதந்திரத்தைக் காக்க வேண்டுமென்பது உறுதியாயிற்று.
s
முடிக்குரிய குடியேற்ற நாட்டு அந்தஸ்து நிலையிலிருந்த இலங்கை, தன் விதியைப் பற்றித் தானே தீர்மானிக்கவோ, அல்லது அதனைப் பற்றிக் கலந்துரையாடவோ உரிமை பெற்றிராத நிலையின் காரணமாக, பிரிட்டனுடன் ஜெர்மனிக்கு விரோதமாகப் போரில் இறங்க வேண்டியதாயிற்று. இலங்கை ஆரம்பந்தொட்டு, பிரிட்டனுடனும் நேச நாடுகளுடனும் மனப் பூர்வமாகப் போர் முயற்சிகளில் ஒத்துழிைத் தது. நாட்டின் நிறுவகங்கள் யாவும் போருக்குத் தேவையான வகை யில் மாற்றியமைக்கப்பட்டன. உலகத்தில் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் காப்பதற்கு அது தன்னலியன்ற சகல உதவிகளை யும் செய்ய முன்வந்தது. .
303

Page 159
0. இலங்கைச் சரித்திரம்
இலங்கையின் அரசியற் பிரச்சினை:
இலங்கைவாழ் மக்கள், போர் முயற்சிகளில் பிரிட்டனுடன் மனப்பூர்வமான விசுவாசத்துடன் ஒத்துழைத்தபோதிலும், தம் அரசியற் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் முயற்சியை, போர் முடிவடையும்வரை பின்போடுவர் என எதிர்பார்ப்பது சாத்தியமற்றது, என்பதை ஆங்கிலர் நன்கறிவர். 1941 ஆம் ஆண்டின் தொடக் கத்துக்குப் பிந்தாமல், அரசுக் கழகம் கலைக்கப்பட்டு ஒரு பொதுத் தேர்தல் நடைபெற வேண்டுமென அரசியற்றிட்டம் விதித்திருந்தது. எனவே 1941 இல், புது அரசியற்றிட்டமொன்றினை அமுல் செய்ய வேண்டும் அல்லது தேர்தல்களைப் பின்போட வேண்டுமென்ற நெருக்கடியான சூழ்நிலை எழுந்தது. மந்திரி சபை, புது அரசியற் றிட்டமொன்றினையே ப்ெரிதும் விரும்பியது. அரசியற்றிட்ட பிரச்சினையானது பல்லாண்டுகளாக விவாதிக்கப்பட்டவொரு விடய மாகும் புதிதாக எடுத்துரைக்க வேண்டிய நியாயங்கள் ஒன்றுமே யிருக்கவில்லை. எனவே பிரித்தானிய அரசாங்கம், தனது பொறுப்பை யுணர்ந்து ஒரு தீர்மானத்தையெடுத்து, புதுத்திட்டத்தை வெளி யிடுமென எல்லோரும் எதிர்பார்த்தனர்.
ஜப்பானின் போர்ப் பிரவேசம்:
1941 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3 ஆம் நாள், ஜப்பான்
ஒருவித எச்சரிக்கையுமின்றி அமெரிக்காவின் கடற்படை தங்கி நின்ற பேள் ஹ்ாபர் (Pearl Harbour) மேல் குண்டுகளைச் சரமாரியாகப் பொழிந்து, பெரும் அழிவையும் நாசத்தையும் ஏற்படுத்திற்று. உடனே அமெரிக்கா ஜப்பான் மீதும், மற்றும் அச்சு நாடுகள் மீதும் போர் தொடுத்திருப்பதாக அறிவித்தது. அமெரிக்கா போருக்கு ஆயத்தமாக முன், கீழ்த்திசை நாடுகளையெல்லாம் கைப்பற்றி விடத் தீர்மானித்த ஜப்பான், பல நாடுகளை ஒன்றன்பின் ஒன்ருகத் தாக்கி, தொடர்பான வெற்றிகளை ஈட்டிக்கொண்டு மின்னல் வேகத்தில் முன்னேறி வரலாயிற்று.
இந்நிகழ்ச்சி, இலங்கையில் நிலவிய சூழ்நிலையை புரட்சிகரமாக மாற்றியமைத்தது. ஜப்பானியர், ஹாங்காங், பிலிப்பீன்தீவுகள், மலா யா, சிங்கப்பூர், பர்மா, நியூகினி எனும் நாடுகளை வென்று, 1942 இல் இந்தியாவின் வடகிழக்கு எல்லையிலிருந்த மணிப்பூர்வரை முன்னேறி யதன் பயனுக, இலங்கையும் அவர்களுடைய தாக்குதல்களுக்கு இலக்காகக் கூடிய நிலையை எய்தியது. இவ்வாபத்தான நிலையில், உள்ளூர் அரசியற் பிரச்சினைகளிலும் பார்க்க அவசரமானதும், முக்கிய மானதுமான பாதுகாப்புப் பிரச்சினைக்கு முதலிடம் கொடுக்க
 
 
 
 

சோல்பரி விசாரணையும் திட்டமும் 305
வேண்டியதாயிற்று. எனவே தேர்தல்கள் பின்போடப்படுமென குடியேற்ற நாட்டுச் செயலாளர் செய்த தீர்மானத்தை மந்திரிசபை எதிர்ப்பின்றி ஏற்றது.
போர்ச் சபை:
கிழக்கே எழுந்த அபாயத்தை மேற்கொள்வதற்காகப் பிரித் தானிய அரசாங்கம், இலங்கையின் பாதுகாப்புப் பொறுப்பைய்ேற் பதற்கு தலைமைத் தளபதியாக சேர். ஜியோப்ரி இலெயிற்றனை நிய்மித்தது. சேர் அன்ட்று கல்டிக்கொட் இன்னும் நாட்டின் குடியியற் சேவைகளின் தலைவராகவும், பெயரளவில் ஆள்பதியாகவும் கடமை யாற்றினர். புது நிலையில், நாட்டின் பரிபாலனத்தை நடாத்துவதற் காக ஆள்பதி, தலைமைத்தளபதி, எல்லா அமைச்சர்கள், முப்படை களின் தலைவர்கள், தேச பாதுகாப்பு அதிகாரி திரு. (பின்பு சேர்.)" ஒலிவர் குணத்திலக்கா என்பவர்களைக் கொண்ட ஒரு போர்ச்சபை (War Council) நிறுவப்பட்டது எதிர்காலத்தில் ஆள்பதி நாயகமா ! கவும், இலங்கைச் சுதந்திரத்தின் பிரதம சிற்பிகளில் ஒருவராகவும் திகழவிருந்த குணத்திலக்கா, இவ்விதமாக ஓர் இக்கட்டான நிலையில் நாட்டின் விவகாரங்களில் பிரவேசித்தார்.
ஜப்பானின் தாக்குதல்:
1942 ஆம் ஆண்டின் ஆரம்ப காலத்தில் ஜப்பான் இலங்கையைத் தாக்கும் என்ற அச்சம் நாளாந்தம் வளர்ந்து வந்தது. ஏப்ரில் 5 ஆம் நாள், ஈஸ்ற்றர் ஞாயிறன்று, 75 யப்பானிய விமானங்கள் கொழும்பின்மேல் குண்டுகளைப் பொழிந்தன.
ஸ்ரா போட் கிறிப்ஸ் விசாரணைச் சபை:
இக்காலமாகிய 1942 ஆம் ஆண்டில், இந்தியாவின் எதிர்கால அரசியல் நிலையை விசாரணை செய்வதற்கென சேர். ஸ்ராபோட் கிறிப்ஸ் (Stafford Cripps) என்பவரைப் பிரித்தானிய அரசாங்கம் அனுப்பி வைத்தது.
இந்தியாவரை வந்த கிறிப்ஸ் அவர்கள், இலங்கையையும் தரிசித்து, அன்றேல் ஒரு தூதுக்குழுவினைச் சந்தித்து பேச்சு வார்த்தைகள் நடாத்தி, இந்நாட்டின் அரசியல் பிரச்சினையைத் தீர்த்து வைக்க உதவ வேண்டுமென அரசாங்க சபை எதிர்பார்த்தது. இவ்வேண்டுகோள் குடியேற்ற நாட்டுச் செயலாளருக்குச் சமர்ப்பிக் கப்பட்டபொழுது, அவர், வெற்றி கைகூடியவுடன், இலங்கையின் அரசியற்றிட்டம் பரிசீலனை செய்யப்பட்டு சீர்திருத்தங்கள் வழங்
இ 20 ;" به ،..: };

Page 160
306 இலங்கைச் சரித்திரம்
கப்படுமெனப் பதிலிறுத்தார். இம்மறுமொழி இலங்கையருக்குப் பூரண திருப்தி அளிக்கவில்லை. நாட்டில் போர்க் கருமங்களில் மக்களின் மன உறுதியை நிலைக்கச் செய்வதற்கு ஒரு திட்ட வட்டமான பிரகடனம் இன்றியமையாததென ஆள்பதியும், தலைமைத் தளபதியும், அமைச்சர்களும் குடியேற்ற நாட்டுக் காரியாலயத் துக்கு எடுத்துக் காட்டினர். இந்தியாவைப் போன்று விலாசமான தாகவும், முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இல்லாத போதிலும், இலங்கை, ஜப்பானியப் போர்முனையில் ஒரு கேந்திர நிலையத்தை வகித்தது, என்பதை அவர்கள் உணராமலில்லை. தூர கிழக்கில் இழக்கப்பட்ட நாடுகளை மீட்பதற்கு வாய்ப்பான போர்த் தளத்தை யமைப்பதற்கு இலங்கையே மிகவும் வாய்ப்பான நாடு; சிங்கப்பூரும் ஹாங்காங்கும் ஜப்பானியருக்கானபின், இந்து சமுத்திரத்தில் நேச நாடுகளின் பாரமான கப்பல்கள் நங்கூரம் பாய்ச்சி நிற்கக்கூடிய ஆழ்ந்த நீரையுடைய ஒரேயொரு துறைமுகம் திருகோணமலை; தவிர போர் முயற்சிக்குத் தேவையான தேயிலை, இறப்பர், கொப்பரு போன்ற விளைபொருள்களை இலங்கை ஈந்தது, எனும் மறுக்க முடியாத உண்மைகளை உணர்ந்த பிரிட்டன், இலங்கை யரின் விருப்பத்திற்கிணங்கியது.
1943 ஆம் ஆண்டுப் பிரகடனம்:
மேற்கூறப்பட்ட கருத்துக்களை மாத்திரமன்றி, இலங்கை எவ் விதம் அரச விசுவாசத்தோடு தம்முடன் ஒத்துழைத் ததென்பதை யும் கணித்து, பிரித்தானிய அரசாங்கம், அதிக பேச்சு வார்த்தை களின் பின், புகழ் பெற்ற 1943 ஆம் ஆண்டுப் பிரகடனத்தை மே மாதம் வெளியிட்டது. இது திரு. D. S. சேனநாயக்காவின் பெயர் பெற்ற தனிவெற்றியென நியாயத்துடன் கருதப்பட்டது,
இப்பிரகடனத்தில், போருக்குப்பின் அரசியற் சீர்திருத்தம் பற்றி விசாரணை செய்யும் சபையினர் 'இலங்கைக்கு உள்நாட்டுக் குடியியல் விடயங்கள் யாவற்றிலும் பரிபூரண பொறுப்பாட்சியை' வழங்க ஆவன செய்வரென பிரித்தானிய அரசாங்கம் அறிவித்தது. இலங்கையின் வெளிநாட்டு உறவுகளையும் பாதுகாப்பையும், பிரித் தானியா தொடர்ந்து கட்டுப் படுத்தி வருமென்று வெளியரங்க மாகக் கூறப்பட்டது. நடந்துவரும் போரைச் சீக்கிரம் முடிப் பதற்கு அதன்கண் தம் சக்தியை செலவிட்டு வந்ததனல், மேற் கூறிய விடயத்தில் நுணுக்கமான கவனத்தைச் செலுத்த முடியாமற்
போனதையிட்டு பிரிட்டன் கவலை தெரிவித்தது. எனினும் போர்
;', '/"4 يوم %2. :

சோல்பரி விசாரணையும் திட்டமும் 307
முடிவடைந்தவுடன் மந்திரிசபை சமர்ப்பிக்கும் அரசியற்றிட்டம், ஒரு விசாரணைச் சபையினல் அல்லது மகாநாட்டினல் பரிசீலனை செய்யப்படுமென பிரித்தானிய அரசாங்கம் உறுதிமொழி கூறிற்று.
வெளியிலிருந்து ஓர் அரசியற்றிட்டம் தம்மேல் திணிக்கப் படுவதைக் காட்டிலும் தாம் தயாரித்த ஒரு திட்டத்தைப் பரிசீலனை செய்ய பிரித்தானிய அரசாங்கம் ஒப்புக் கொண்டமையை, இலங்கை மந்திரிகள் ஒரு மாபெரும் வெற்றியாகக் கருதினர். அவர்கள், புது அரசியற்றிட்டத்தை தயாரிக்கும் வேலையில் உடனடியாக இறங்கினர். அதிட்ட வசமாக அவர்கள், அப்பொழுது பல்கலைக் கழகத்தின் உபவேந்தராகக் கடமையாற்றி வந்த அரசியற் சட்ட வல்லுனரும், மேதையுமான சேர். ஐவர் ஜெனிங்ஸைத் தம் ஆலோசகராகப் பெறும் பெரும் வாய்ப்பினைப் பெற்றனர். அவரது உதவியுடன் மந்திரிகள், புது அரசியற்றிட்டத்தை விரைவாக வரைந்து, 1944 பெப்ரவரியில் பிரித்தானிய அரசாங்கத்தின் பரி சீலனைக்குச் சமர்ப்பிப்பதற்கு ஆயத்தஞ் செய்தனர்.
1945 இல் அரசாங்க சபையின் பின்போடப்பட்ட கால வெல்லை முடிவடைந்து தேர்தல்கள் நடைபெற வேண்டியிருந்தமை யினல் அமைச்சர்கள், பிரித்தானிய அரசாங்கத்தைப் போர் முடிவடையும்வரை காத்திராது, உடனடியாகத் தமது திட்டத்தைப் பரிசீலனை செய்யுமாறு அவசரப்படுத்தினர். இக்கருத்தினை பிரித் தானிய அரசாங்கம் ஏற்க முடிபு செய்தது. 1944 யூலை 5 இல் குடியேற்ற நாட்டுச் செயலாளர் திரு. ஒலிவர் ஸ்ரான்லி (Oliver Stanley) பிரித்தானிய பாராளுமன்றத்தில் பின்வருமாறு அறிவித்தார். * 'இலங்கையின் மந்திரிகள் ஒரு நகற் திட்டத்தைச் சமர்ப் பித்து, அதனை ஆலோசிக்குமாறு கேட்டிருக்கின்றனர். அவர்களின் சிபார்சுகளை ஆலோசனை செய்வதற்கும், இலங்கையிலுள்ள பல்வேறு . சமூகத்தினரையும் அரசியற் சீர்திருத்தம்பற்றி ஆலோசிப்பதற்கும் பிரித்தானிய அரசாங்கம், ஒரு விசாரணைச் சபையினை இலங்கைக்கு அனுப்பத் தீர்மானித்துள்ளது. மேலும் பொதுத் தேர்தலொன்றை ஏற்படுத்துவதனுல் இலங்கையின் யுத்த முயற்சிக்கு ஏற்படும் தடையை நீக்குவதற்காக இலங்கை அரசாங்க சபையின் ஆயுள் மேலும் ஈராண்டுகளுக்கு நீட்டப்பட்டிருக்கிறது".
சேர். ஹென்றி மூர்'
ஏழு ஆண்டுகளாகக் கடினமாக உழைத்த சேர். அன்ட்று
கல்டிக்கொட் 1944 ஆம் ஆண்டில் ஒய்வு பெறவே, பிரித்தானிய ஆள்பதிகளின் நீள் வரிசையில் இறுதி இடத்தை வகித்த சேர். ஹென்றி

Page 161
308 இலங்கைச் சரித்திரம்
மூர் (Sir Henry Moore) அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார். சேர். ஹென்றி மூர், இலங்கையின் இறுதி ஆள்பதி மாத்திரமன்று, இந்நாட்டின் குடியியற் சேவையில் பயிற்றப்பட்டவரும், 1910 முதில் 1919 வரை நிருவாக அதிகாரியாகச் சேவை செய்தவருமாவர். இதன் பின்பு பேமியூடா, நைஜீரியா, கெனியா என்னுமிடங்களில் பிரதமச் செயலாளராகவும், சீரா இலயோனினதும், கெனியாவின தும் ஆள்பதியாகவும் கடமையாற்றி, அதிக அனுபவம் பெற்றவர். இந்நாட்டையும், அதன் மக்களையும், அன்புடன் நோக்கியவரும், அதன் பிரச்சினைகளை நன்கறிந்தவரும், பற்பல அரசாங்கங்களின் தன்மைகளை அறிந்தவருமான அவரைவிடச் சாலச் சிறந்த ஓர்
ள்பதியைப் பிரித்தானிய அரசாங்கம், இலங்கையின் சரித்திரப்
ரசித்தி பெற்ற ஆண்டுகளில் தெரிந்தெடுத்திருக்க முடியாதென்றே கூறலாம்.
2. சோல்பரி விசாரணைச் சபை
விசாரணைச் சபையின் நியமனப் :
1944 ஆம் ஆண்டு யூலை மாத அறிக்கையின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்குத் தகுந்த வழிவகைகளை ஆராய்ந்து ஆலோசனை கூறுவதற்காகப் பிரித்தானியப் பாராளுமன்றம், சோல்பரி விசாரணைச் சபையினை நியமித்தது. சிறுபான்மையரின் ஆலோசனைகளை கேட் பதற்கு விசாரணைச் சபை பணிக்கப்பட்டதை, மந்திரி சபை வர வேற்கவில்லை.
தாம் சமர்ப்பித்த திட்டத்தை நிராகரித்து, விசாரணைச் சபையை நியமித்துப் பிரச்சினையை மீண்டும் புதிதாக ஆராயப் பிரித்தானிய அரசாங்கம் வழிசெய்ததைக் கண்டு மந்திரி சபை மனம் புழுங்கியது. 1943 இல், தான் கொடுத்த வாக்கை குடியேற்ற நாட்டு மந்திரி மீறிவிட்டாரென்ற காரணத்துக்காக விசாரணைச் சபையினையொதுக்க, மந்திரிசபை தீர்மானித்தது.
இதன் காரணமாக உத்தியோக பூர்வமாக சபைக்கு முன் சாட்சியம் கொடுக்க முடியாமற் போனலும், மந்திரிகள் விசாரண்ைச் சபையினரை சமயோசிதமாகச் சந்தித்துத் தம் கருத்துக்களைத் தெரி வித்தனர். விசேடமாக திரு. D. S. சேனநாயக்காவும், திரு. குணத் திலக்காவும் சபையினருக்கு நாட்டின் எல்லாப் பாகங்களைத் தரிசிக் கவும், நாட்டு மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடவும் வேண்டிய ஏற்பாடுகள் அனைத்தையும் செய்தனர். அவர்கள் காட்டிய பொது அறிவு, மரியாதை, சாமர்த்தியம் என்பவைதான் ஈற்றில் பிரச் ಫ್ಲೆ: சுலபமாகத் தீர்க்க வழிகாட்டின.
 
 

சோல்பரி விசாரனையும் திட்டமும் ())
சோல்பரி விசாரணைச் சபையினர், 15 வாரங்களாக இலங்கை யில் தங்கியிருந்தனர். அக்காலத்தினுள் அவர்கள் நாட்டின் பல பாகங்களுக்கும் சென்று மந்திரிகள், சிங்களப் பிரதிநிதிகள், மற்றும் சிறுபான்மைப் பிரதிநிதிகள் யாவரினதும், அபிப்பிராயங்களைப் பகிரங்க விசாரணை மூலமும், தனித்த உரையாடில்களின் மூலமும் அறிந்தனர். சிறுபான்மையினர் விசேடமாக, தமிழ் மக்கள் சார்பில் சாட்சியம் கொடுத்த இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் (Ceylon Tamil Congress), டொனமூர்த் திட்டம் அமுலிலிருந்த காலத்தில், சிங்கள ஆட்சியாளர், தமிழருக்கும் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களுக்கும் வஞ்சகம் செய்தனர் என எடுத்துக் கூறினர். நாட்டின் வருவாயைப் பங்கீடு செய்தல், உத்தியோகத்தர் நியமனம் எனும் துறைகளில் பாரபட்சம் காட்டப்பட்டதென்று அவர்கள் எடுத்துக் காட்டினர். தமிழ்க்காங்கிரஸ் தலைவர் திரு. G. G. பொன்னம்பலம் 'சம பலப் பிரதிநிதித்துவம்' அல்லது "50 க்கு 50’ என்ற திட்டத்தை விசா ரணைச் சபையினரின் ஆலோசனைக்குச் சமர்ப்பித்தார். விசாரணைச் சபையினர், குற்றச் சாட்டுக்களையும் மாற்றுத் திட்டத்தையும் ஏற்க மறுத்துவிட்டனர். -്
அவர்கள் விசாரணையை முடித்துக்கொண்டு, 1945 ஆம் ஆண்டு ஏப்ரில் 7 ஆம் நாள் இங்கிலாந்து போய்ச் சேர்ந்தனர். அப்பொழுது இலங்கைக்கு மாத்திரமன்று, அகில உலகத்துக்குமே ஒரு புதுயுகம் மலர்ந்து கொண்டிருந்தது. ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த உலக யுத்தம் முடிவெய்தியது; கிழக்குலகப் போரும் முடிவடையும் தறுவாயிலிருந்தது. இங்கிலாந்தில் கூட்டரசாங்கம் பதவியிலிருந்து விலகும் காலம் நெருங்கியது.
விசாரணைச் சபையினர், எந்நோக்கங்களுடன் தம் அறிக்கை யைத் தயார் செய்தனர் என்றதற்கு விடை, அறிக்கையின் பின் னிணைப்பில் இடம் பெற்றுள்ளது. அவர்கள் எழுதியதாவது "இலங்கை வாழ் மக்களின் குறிக்கோள் ஆணிலப்பதமாகும். அவ்விலக்கு மாட் சிமை தங்கிய மன்னனின் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு இயைந் தவையென நாம் அறிகிருேம். எனினும், எமது அறிக்கையில் பல் வேறு இடங்களிலும், நாம் சுட்டிக் காட்டியிருக்கும் காரணங்களுக் கிணங்க, அவ்விலக்கை ஒரு படியில் அடைந்துவிட முடியாதென்பது கண்கூடு. எமது சிபார்சுகள் அமுல் செய்யப்படுமாயின், அவை இலங்கை உடனடியாகப் போதியளவு சுய ஆட்சியை அனுபவிக்கவும், காலகெதியில் ஆணிலப் பதத்தையடையவும் வழி காட்டுமென நாம் நம்புகிருேம். இது, ஈற்றில் பிரித்தானிய அரசியற் கொள்கைகளின்
g) 20 A

Page 162
፰.l 0  ̈ இலங்கைச் சரித்திரம்
இறுதி நோக்கான சாம்ராஜ்யத்தையும் பொதுநலவமைப்பையும் ஒன்ருக இண்ைக்கும் இலட்சியத்தை அண்மையில் கொணர்ந்துவிடும்.' சுருங்கக் கூறின், பிரித்தானிய அரசியலமைப்பு, சம்பிரதாயங்கள், நடைமுறை வழக்குகளையொத்த ஓர் அரசியலமைப்பை இலங்கைக்கு வழங்குவதே அவர்களது நோக்கமாயிற்று. .
馨
3. சோல்பரித் திட்டம்
சோல்பரி விசாரணைச் சபையின் அறிக்கையிற் கண்ட சிபார்சு களின் மிக முக்கியத்துவம் வாய்ந்தவற்றின் சுருக்கம் பின்வருமாறு
1. வாக்குரிமை: "
வாக்குரிமையில் அப்பொழுதிருந்த நிகழ்வு நிலை, மாற்ற மின்றி உறுதிப்படுத்தப்பட்டது. விசாரணைச் சபையினர் கூறியதாவது, "1931 க்குப்பின் சமூகச் சீர்திருத்தத்துறையில் எவ்வளவோ முன் னேற்றம் ஏற்பட்டிருப்பதனுல் சர்வசன வாக்குரிம்ை கொடுக்கப் பட்டது நியாயமான தொன்றெனவே எமக்குத் திருப்தியளிக்கின்றது இதைவிடக் கட்டுப்பட்ட வாக்குரிமையில் எளிய மக்கள் தம் தேவைகளையும் ஆவல்களையும் பூர்த்தி செய்ய இதைப்போன்ற சந்தர்ப்பம் கிடைக்குமென்று நாங்கள் நம்பவில்லை."
பிரதேசவாரியாகத் தேர்தற் தொகுதிகளைப் பகுக்கும் முறை, ஒருசில மாறுதல்களுடன் நிலைபெற வேண்டுமென அவர்கள் சிபார்சு செய்தனர். பிரதேசவாரித் தேர்தல் முறையினை தனித்துப் பின் பற்றினல் அளவுக்கு மிகுதியான தொகுதிகள் சிங்களரைத் தேர்ந் தெடுக்குமென - 50 இல் 39-விசாரணைச் சபையினர் கண்டனர்.
எனவே, பிரதிநிதித்துவத்தைச் ożo?
ஒ
மைல் பரப்புள்ள பிரதேசத்துக் ரு உறுப்பினரும், 75,000 سب سے
மக்களைக் கொண்ட குடிசனப் பிரிவுக்கு ஒரு உறுப்பினரும் தெ தெடுக்கப்பட வேண்டுமென அவர்கள் வகுத்தனர். தவிரவும், ஒரு பிரதேசத்தில் 'பெரும்பான்மை வாசிகளின் வாழ்க்கை முறையினின்று வேறுபட்ட மக்கட் கூட்டத்தினர் வசித்தால், அச்சமூகத்துக்கு ஒரு புறம்பான பிரதிநிதித்துவம் வழங்குவதற்கு' விசேட ஏற்பாடுகள் செய்தனர். இதற்கெனச் சிபார்சு செய்யப் LJl L- Liav 2-g)|tyl Søofff Gg5/TSS) gjoit (Multi-Member Constituencies): மூலம் சிறுபான்மைச் சமூகத்தினர் மேலும் கூடுதலான பிரதிநிதித் துவம் பெறுவதற்கு அனுக்லம் கிடைக்குமென நினைந்தனர்.
 
 
 

சோல்பரி விசாரணையும் திட்டமும் 511
101 உறுப்பினரைக் கொண்ட சட்டசபை, பெரும்பான்மையினர்
(நியமன உறுப்பினர் உட்பட) 58 உறுப்பினரையும், சிறுபான்மை யினர் 43 உறுப்பினரையும் கொண்டிருக்குமெனக் கணக்கிட்டனர்.
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்: ..,
டொனமூர்க் குழுவினரைப் போன்று, சோல்பரி விசாரண்ைச் சபையினரும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை ஏற்க மறுத்தனர். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம், பல சங்கடங்களை நீக்குவதற்குச் சுலபமான வழியாயினும், அது தேச நலனுக்குத் தீமை பயக்குமென நன்குணர்ந்தனர். அவர்கள், பெரும்பான்மையினரது நிலையையும் உரிமைகளையும் பாதிக்காத வகையில் சிறுபான்மையினருக்கு அதிகப் பட்ட பிரதிநிதித்துவத்தைக் கொடுக்க வழிவகைகளை வகுத்து, சிறு பான்மைப் பிரச்சினையைத் தீர்க்க முயன்றனர். இதனுலேயே, 50 க்கு 50 என்ற திட்டத்தை விசாரணைச் சபையினர் ஏற்க மறுத்
தனர். 'பெரும்பான்மையினரை இயற்கைக்கு விரோதமாகச் சிறுபான்மையாக்க எத்தனிப்பது அசம்பாவிதமானதும் பயனற்றது மாகும்' என அவர்கள் கூறினர். 'ஆட்சியுரிமை, ஒரு சாகியத்
தார் கைகளில் இருத்தல் வேண்டும். தவருண ஆட்சி நடவாமற் பாதுகாப்பதற்கே கட்டுப்பாடுகள்; ஆனல், தவருண ஆட்சிக்குப் பாதுகாப்புக்கள், நிராட்சியை ஏற்படுத்துமாயின் அரசாங்கத்தின் நோக்கமே தோல்வியடைந்துவிடும்' என்ச் சுட்டிக் காட்டினர்.
2. பாராளுமன்றம்:
புதுத் திட்டம், இலங்கைப் பாராளுமன்றம், கீழ்ச்சபை மேற் சபையென இருசபைகளைச் கொண்டிருக்குமென விதித்தது. கீழ்ச்சபை, பிரதிநிதிகள் சபை எனப்படும். அதன் உறுப்பினர் “பாராளு மன்ற உறுப்பினர்' என அழைக்கப்படுவர். இதன் 101 உறுப் பினருள், 6 உறுப்பினர் ஆள்பதியினல் நியமனஞ் செய்யப்பட்டவர் களாயிருப்பர். மிகுதி 95 பேரும் தொகுதிகளிலிருந்து தெரிந்தெடுக் கப்படுவர். பிரதிநிதிகள் சபைதான், உண்மையான அரசியலதிகாரம் படைத்த சபையாக விளங்கும். அரசாங்கத்தை இயக்குவதற்கு வேண்டிய சக்தி இச்சபையிலேயே பிறக்கும். நிதி விடயங்கள் உட்படச் சகல சட்டங்களையும் இச்சபைதான் விவாதித்துத் தீர்மானிக்கும்.
மேற் சபை :
மேற் சபை அல்லது செனற் சபை, பொதுசன அபிப்பிராயம் பாதிக்கப்படாத வகையில் நிறுவப்படும். எவ்விடயத்தையும் அமைதி யாகவும் சாவதானத்துடனும் ஆராய்ந்து விவாதிப்பதற்கு அச்சபை இடமளிக்க வேண்டுமென்ற நோக்குடனேயே இவ்வாறு அஃது அமைக்கப்பட்டது. - ...' ... s

Page 163
39 இலங்கைச் சரித்திரம்
அச்சபைக்கு ஆள்பதி, 15 செனட்டர்களை, பிரதம மந்திரியின் ஆலோசனையின்படி நியமனம் செய்வார். அவர்கள் 30 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும், அரசாங்க சேவையில் விசேட இடம் பெற்றவர்களாகவும். அன்றேல் கல்வி, சட்டம், வைத்தியம், விஞ்ஞானம், பொறியியல், வங்கி, வியாபாரம், கைத் தொழில், விவசாயம் முதலாம் 'துறைகளில் நற்சேவை புரிந்தவர்களாகவும் இருத்தல் வேண்டும். அவர்கள் அறிவிலும், ஆற்றலிலும், அனுபவத்திலும் முதிர்ந்தவர்களாக இருப்பதுடன், அத்துறைகள் சம்பந்தமாக எழும் விவாதங்களில் பூரண அதிகாரத்துடன் தமது கருத்துக்களை வெளிப்படுத்தக் கூடியவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
மீதியாயுள்ள 15 செனட்டர்களும் பிரதிநிதிகள் சபையினுல் **விகிதசாரப் பிரதிநிதித்துவம்" என்ற முறையில் தெரிவு செய்யப்
படுவர். அதன் முன், ஆலோசனைக்குச் சமர்ப்பிக்கப்படும் விடயங்களை
அமைதியாகப் பரிசீலனை செய்யும் முறையிலேயே அதன் பயன் தங்கியுள்ளது. செனட் சபை ஒரு சட்டத்தை ஒரு மாத காலத்துக்கு மாத்திரம் தாமதித்து வைக்கலாம். கீழ்ச்சபை அவசரப்பட்டு ஆத்திரத்தில் நிறைவேற்றும் சட்டங்களை தாமதப்படுத்தி அதனைப் புனராலோசனை செய்யவும், அவசரத்தைத் தடுக்கவும் அச்சபை உதவும். கீழ்ச்சபை தீர்மானித்த ஒரு சட்டத்தை செனட்சபை நிராகரிப்பின், கீழ்ச்சபை அதைக் கவனியாது அடுத்தடுத்து இரண்டு கூட்டங்களில் நிறைவேற்றுமாயின், அச்சட்டம் முறைப்படி நிறைவேறி யதாகக் கருதப்படும். நிதி சம்பந்தமான ஒரு மசோதாவை ஒரு மாத காலம் வரை தாமதப்படுத்தும் உரிமையைத் தவிர, செனட் அதை நிராகரிக்கவோ அன்றேல் மாற்றங்களைச் செய்யவோ அதிகாரமற்றது.
3. மந்திரி சபை :
நிருவாகக் குழு ஆட்சி முறையினையும், மூன்று அரச :
அலுவலாளர்களையும் நீக்கிய விசாரணைச் சபையானது, நாட்டின் நிருவாகப் பொறுப்பை ஒரு பிரதம மந்திரியினதும், 'கபினெட்' என அழைக்கப்பெறும் மந்திரிசபையினதும் 'கைகளில் ஒப்படைத்தது.
பாராளுமன்றத் தேர்தல் முடிவடைந்ததும், ஆள்பதி நாயகம்,
தமது அபிப்பிராயப்படி, சபையின் பெரும்பான்மையான ஆதரவைப் பெறும் கட்சியின் தலைவரை வரவழைத்து அவரைப் பிரதம

சோல்பரி விசாரணையும் திட்டமும் 3.13
மந்திரியாக நியமித்து, நாட்டின் நிருவாகத்துக்கு பொறுப்பேற்குமாறு பணிப்பார். பிரதம மந்திரி தனக்கு உதவியாக மந்திரிகளைத் தெரிவு செய்து, ஆள்பதி நாயகத்துக்குச் சமர்ப்பிப்பார். அவரது அங்கீ காரம் பெற்றதும் இம்மந்திரிகள், கபினெட் அங்கத்தவர்களாவர்.
கபினெட்டில் 10 மந்திரிகள் இருப்பர். பிரதம மந்திரி, நாட்டின் பாதுகாப்புக்கும் வெளிநாட்டு விவகாரங்களுக்கும் பொறுப்பா யிருப்பர். டொனமூர் திட்டத்தின் கீழிருந்த பொருளாளர், சட்டத்துறை நாயகம் என்ற இருவருக்குப் பதிலாக நிதி மந்திரி, நீதி மந்திரி என இருவர் இடம் பெறுவர். நீதி மந்திரி, செனட்டி லுள்ள உறுப்பினராக இருத்தல் வேண்டும். அரசாங்க சேவைக்கு நிதி மந்திரி பொறுப்பாயிருப்பார். இங்ங்னம் இலங்கையின் உள் நாட்டு நிருவாகப் பொறுப்பு முழுவதும் மந்திரி சபையின் கைகளிலேயே ஒப்படைக்கப்பட்டது.
நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான விடயங்கள், பிரித்தானிய அரசாங்கத்தின் ஆணையின் கீழ் விடப்பட்ட ன. அதனை நிருவகிப் பதற்கு ஏற்படும் செலவுகளைப் பிரித்தனும் இலங்கையும் ஒன்று கலந்து உரையாடிப் பகிர்ந்து கொள்ளல் வேண்டும்.
4. அரசாங்க சேவை ஆணைக் குழு :
அரசாங்க சேவையில் (Public Service) ejust 3,600 dig, Gudgi) சம்பளம் பெறும் உத்தியோகத்தரை நியமனம் செய்யும் பொறுப்பை அவர்கள், அரசாங்க சேவை ஆணைக்குழுவிற்கு அளித்தனர். அதனு டன் அச்சேவையாளரின் பதவி உயர்வு, இடமாற்றம், வேலை நீக்கம், ஒழுங்கு நடவடிக்கைகள் போன்ற விடயங்களும் இக்குழுவினர் பொறுப்பிலேயே விடப்பட வேண்டுமெனச் சோல்பரிக் குழுவினர் கருதினர். இக்குழு, மூன்று உறுப்பினரைக் கொண்டதாக இருக்கும். இவ்வாணைக் குழுவின் பட்ச பாதகமின்மையைக் காப்பாற்றும் நோக்குடன், ஆள்பதி நாயகம் தன் இட்டப்படி இக்குழுவின் அங்கத் தினர்களையும் தலைவரையும் நியமிக்க வேண்டுமென விதிக்கப்பட்டது. அரசாங்க சேவை ஆணைக் குழுவினர், ஐந்து வருட பதவிக் காலத் துக்கு, ஆள்பதி நாயகத்தினல் நியமிக்கப்படுவர்.
5. நீதிச் செயலாக்ணக் குழு:
அரசாங்க சேவைகளைப் போன்று, நீதி பரிபாலன சேவைகளை மேற்பார்வை செய்தற்கு, மூவர் கொண்ட நீதிச் செயலாணைக் குழு ஒன்று நிறுவப்பட வேண்டுமென விதிக்கப்பட்டது. இச்சபைக்கு
-

Page 164
' 3Ꭸ Ꮧ இலங்கைச் சரித்திரம்
பிரதம நீதியரசர் த&லவராயிருப்பார்; மற்றிருவரும் நீதிபதிகளா
யிருப்பர். பிரதம நீதியரசரைத் தவிர்ந்த பிற ஈர் அங்கத்தினர் ஆள்பதி நாயகத்தினலேயே நியமிக்கப்படுவர். . . . .
6. ஆள்பதி நாயகம்:
புது அரசியற்றிட்டத்தின் கீழ், ஆள்பதி நாயகம் (Governor General), பிரித்தானிய மன்னரின் பிரதிநிதி மாத்திரமே எனும் நிலையை அடைந்தார். அவர், பிரதம மந்திரியின் சிபார்சின்
பேரில், மன்னரினல் நியமிக்கப்படுவார். அதனுடன், அவர்,
மன்னர் விரும்பிய காலத்துக்கு மாத்திரம் அப்பதவியை வகிக் கலாம். அதாவது பிரதம மந்திரியின் ஆதரவை இழக்கும் காலத்தில், அரசர், அவரை பதவியினின்று நீக்கலாம், என விதிக்கப்பட்டது. ஆள்பதி நாயகத்தின் கடமைகள் யாவும் அரசியற்றிட்டத்தில் விரிவாக வரையறை செய்யப்பட்டுள்ளன. அவர், ஏறக்குறைய இங்கிலாந்தின் அரசர் போன்று, சகல கருமங்களிலும் அமைச்சர் சபையின் ஆலோசனைப்படி நடக்க வேண்டுமென, புதுத் திட்டம் எதிர்பார்த்தது. இவற்றைத்தவிர, பாராளுமன்றத்தைக் கலைத்தல் கூட்டுதல், மந்திரிகளை நியமித்தல், நீக்குதல், பாராளுமன்றம் நிறைவேற்றும் சட்டதிட்டங்களுக்கு அங்கீகாரம் அளித்தல் போன்ற சம்பிரதாயமுறை அதிகாரங்கள் பல, அவருக்கு வழங்கப்பட்டன.
7. சிறுபான்மையினர் பிரச்சினை :
தடைகளின்றி அதிகார உரிமைகளைப் பெரும்பான்மையினர் கைகளிற் கொடுப்பதால் சிறுபான்மையினருக்கு ஆபத்தான நிலைமை ஏற்படுமெனச் சிறுபான்மைத் தலைவர்கள் எழுப்பிய குரலிற்குச் சோல்பரி விசாரணைச் சபையினர் செவிமடுத்தனர். அவர்கள், தம் திட்டத்தில், சிறுபான்மையினர் உரிமைகளைப் பாதுகாக்கும் வாயி லாய் பல வழிவகைகளைச் சிபார்சு செய்தனர். அவர்கள் எடுத் துரைத்த வழி முறைகள் பெரும்பாலும் இலங்கை அரசியலமைப்பிற் சேர்க்கப்பட்டுள்ளன. அவையாவன :
(i) சிறுபான்மையினருக்கு நியாயமான அளவில் பிரதிநிதிகள் இடமளித்தற் பொருட்டு, அவர்களது பிரதிநிதிகளின் எண்ணிக் கையை அதிகரிக்கும் திட்டம் சேர்க்கப்பட்டது. அதனுடன் பல உறுப்பினர் தொகுதிகளும் சிபார்சு செய்யப்பட்டன.
(i) ஆள்பதி நாயகம், பொதுத் தேர்தலின் பின், ஒரு முக்கியமான
பிரிவினர் பிரதிநிதித்துவம் பெருத பட்சத்தில், ஆறு உறுப்பினருக்கு
மேற்படாதவரை, நியமனம் செய்யலாம்.

சோல்பரி விசாரணையும் திட்டமும் 315
(iii) அரசியலமைப்பை மாற்றும் திட்டம், முழுச் சபையின்' மூன் லிரண்டு பகுதியினரின் சம்மதத்தைப் பெறல்வேண்டும்.
(iv) சிறுபர்ன்மையினருக்கு, அவர்களது எண்ணிக்கைக்கேற்ற பிரதி நிதித்துவம் கொடுப்பதற்கும், அவசரமாயும் தீமையான எண்ணத் துடன் நிறைவேற்றப்படும் சட்ட திட்டங்களை திருத்தியமைக்கவும், மேற்சபை நிறுவப்படல் வேண்டும்.
(v) அரசியலமைப்பின் இருபத்தொன்பதாம் பிரிவின் உட்பிரிவுக ளாகிய இரண்டிலும் மூன்றிலும் (29(2-3)) சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன: 29(2) ஆம் பிரிவின்படி பார்ாளுமன்றத்தினலாக்கப்படும் எந்தச் சட்டமும்
(1) எந்தச் சமயத்தினதும் சுயமான செயல் முறையைத் தடுக்கவோ
அன்றிக் கட்டுப்படுத்தவோ கூடாது. - (2 பிற இனங்களையோ அல்லது சமயங்களையோ சேர்ந்தவர்களைப் பாதிக்காத இடையூறுகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும், ஒரு தனிப்பட்ட இனத்தை அல்லது சமயத்தைச் சேர்ந்தவர்களை உட்படுத்தக் கூடாது. - (3) பிற இனங்களுக்கு அல்லது சமயங்களைச் சேர்ந்தவர்களுக்கு 'அளிக்கப்படாத நயம் அல்லது பிரயோசனம், ஒரு குறிப்பிட்ட இனத்துக்கு அல்லது சமயத்தைச் சேர்ந்தவருக்கு அளிக்கக் drill-IT gil. - (4) எந்தவொரு சமயக் குழுவின் அமைப்பையும், அக்குழுவை யாழ்வோர் சம்மதமின்றி மாற்றியமைத்தல் கூடாது. ஒரு சமயப்பிரிவு சட்டத்தினல் இணைக்கப்பட்டிருப்பின், அக்குழு வின் பரரமரிப்பு அதிகாரத்தின் வேண்டுகோளின்படியே, அதன மைப்பு முதலியன மாற்றப்படலாம். ஆம். பிரிவின் படி, மேற்குறிப்பிட்ட உபபிரிவின் சரத் (3) 29:۔
துக்கு முரணுக ஆக்கப்பட்டவை செல்லுபடியாகா.
(vi) அரசாங்க சேவை ஆணைக்குழு, அரசாங்க உத்தியோகத்தரை நியம்னஞ் செய்வதில் எல்லாச் சமூகத்தினருக்கும் நடுநிலை கோணுது செயலாற்றும் என நம்பப்பட்டது. - . . . ". இவை தாம், சிறுபான்மையினரின் நலவுரிமைகளைப் பாது காத்தற்பொருட்டு, சோல்பரி விசாரணைச் சபையினர் செய்த காப் பீடுகளாகும். இவ்வேற்பாடுகளிலும் மேலாக, பெரும்பான்மையினர், தம் கைகளிலொப்புடைக்கப்பட்ட அதிகாரத்தை விரும்பத்தக்க வகை களிற் பயன்படுத்துவதால் தான், சிறுபான்மையினரின் நம்பிக்கையைப்

Page 165
316 இலங்கைச் சரித்திரம்
பெறலாம் என்றும், இப்பொறுப்புணர்ச்சியைப் பெரும்பான்மை யினர் காட்டுவர் எனத் தாம் நம்புவதாகவும், சோல்பரிக் குழுவினர் தமது அறிக்கையில் (பகுதி 178) கூறிப்போயினர். ஆனல் சோல் பரிக் குழுவினரின் நம்பிக்கைகள் வீண்போனமையைப் பின் வந்த சம்பவங்கள் எடுத்துக் காட்டும்.
4. சோல்பரி அறிக்கையின் பின்
தொழிற் கட்சி வெற்றி பெறல்:
பிரித்தானிய அரசாங்கம், விசாரணைச் சபையின் அறிக் கையைப் பெற்றவுடன், திரு. D S சேனநாயக்காவை இலண் டனுக்கு வரவழைத்து, அவரதும், மந்திரி சபையினதும் கருத்துக் களை அறிய முனைந்தது. ஆனல் அவர் இலண்டன் போய்ச் சேர்ந்ததும், 1945 இல் நடைபெற்ற தேர்தலில் தொழிற் கட்சி வெற்றியீட்டி ஆட்சிப்பீடம் ஏறவே, அரசியல் நிலை முழுமையாக மாறியது. புது அரசாங்கத்தில் திரு. ஜோஜ் ஹோல் (Mr. George Hall), குடியேற்ற நாட்டுச் செயலாளராகவும், திரு. ஆத்தர் கிறீச் Gogorr657 6ño (Mr. Arthur Creech Jones) 20:56?¿i Geofu, Japonir6Truttré56 ipub பதவியேற்றனர். புதுப் பிரதமர் திரு. அட்லியும், அவரது அமைச் சரவையும் குடியேற்ற நாடுகளுக்குச் சுயாட்சி வழங்குவதற்குத் தமது பூரண ஆதரவைத் தெரிவித்தனர். குடியேற்ற நாட்டுக் காரியாலயம், சோல்பரி அறிக்கையைப்பற்றி தீர்மானங்கள் எடுக்க முன், இலண்டனிலிருந்த திரு. சேனநாயக்காவின் அபிப்பிராயங்களை அறிய முற்பட்டது.
1945 ஆம் ஆண்டு வெள்ளை அறிக்கை:
திரு. சேனநாயக்கா அவர்கள், 1945 ஆகத்தில், தமது திட்டத்தை ஓர் அறிக்கையின் மூலம் சமர்ப்பித்தார். அதில் அவர், இலங்கைக்கு உடனடியாக ஆணிலப் பதம் (Dominion Status) தரப்பட வேண்டுமென்றும், ஆள்பதி நாயகத்தின் அதி காரங்கள் குறைக்கப்பட வேண்டுமென்றும், செனட் சபை அவசிய மில்லை யென்றும் அறிவித்தார். அவரது அறிக்கையையும், ஆள்பதி சேர். ஹென்றி மூர் அவரது ஆலோசனைகளையும் நன்கு பரிசீலனை செய்தபின், பிரித்தானிய அரசாங்கம், சோல்பரி அறிக்கையை செப்டம்பரில் பிரசுரித்ததுடன் ஒக்ருேபர் 31 இல் அரசாங்கத்தின் தீர்மானங்களை ஒரு வெள்ளை அறிக்கையில் வெளியிட்டது. அதில், இலங்கை மக்கள், ஆணிலப்பதத்தை அடையக் கொண்ட விருப்பத் துக்குத் தாம் இணங்குவதாகவும், அவ்விலக்கையடைவதற்குத் தாம்
'.
 

சோல்பரி விாசரணையும் திட்டமும் 31 7
ஒத்துழைக்க ஆயத்தமாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும் அதில், சோல்பரித் திட்டத்தின் அடிப்படையில், இலங் கைக்குப் புது அரசியற்றிட்டம் வழங்கப்படுமென்றும், கூடிய சீக்கிரம் ஆணிலப் பதம் கிடைக்குமென்றும் வாக்களிக்கப்பட்டது. இவ் வறிக்கை, இலங்கை அரசுக் கழகத்தில் விவாதிக்கப்பட்டு, ஏற்றுக் கொள்ளப்பட்டது.
தேர்தல்கள் :
சோல்பரித் திட்டம் விதித்ததன்படி, 1947 இல் தேர்தலுக் கான ஒழுங்குகள் பூர்த்தியாயின. நாட்டின் வரலாற்றில் முதன் முறையாகப் பொதுத் தேர்தல், கட்சிமுறையின் அடிப்படையில் நடாத்தப்பட்டது. D. S. சேனநாயக்கா அவர்கள் நிறுவிய ஐக்கிய தேசியக் கட்சி (United National Party) ஒன்று மாத்திரம், தேச அடிப்படையில் போட்டியிட்டது. அக்கட்சி, சிங்களரைப் பெரும் பான்மையினராகக் கொண்டிருந்த போதிலும், அஃது எல்லாச் சமூகத் தினரதும் ஆதரவைப் பெற்றுத் திகழ்ந்தது. ஒரு மாத காலமாக நடைபெற்ற தேர்தலில், ஐ. தே. க. அதிபெரிய கட்சியாக 42 உறுப் பினருடன் வெற்றி பெற்றது. 21 தொகுதிகளில் சுயேச்சையாளர் தெரிந்தெடுக்கப்பட்டனர்.
ஆள்பதி நாயகம், தேர்தல் முடிந்ததும், திரு. சேனநாயக்காவை
அழைத்து அரசாங்கத்தை அமைக்குமாறு பணித்தார். புது அமைச் சரவையில் 14 அமைச்சர்கள் இடம் பெற்றனர்.
5. இலங்கை ஒரு சுதந்திர அரசாகுதல்
ஐந்து ஒப்பந்தங்கள்
புது அமைச்சரவை, தன் முதல் வேலையாக, இலண்டனில் வரையப்பட்ட அரசியற்றிட்டத்தை ஏற்று அங்கீகரித்தது. இலங்கை, தனது அரசாங்க அமைப்பு முறையின் கட்டுப்பாட்டை நீக்கவும், வெஸ்ட்மினிஸ்டர் அரசியற் சட்டப்படி சட்டமியற்றும் அதிகாரம் தனக்குக் கிடைக்கும்படி செய்யவும், பாதுகாப்பு, வெளிநாட்டு விவகாரம், அரசாங்க உத்தியோகத்தர் பற்றிய விடயங்களைத் தனக்கு ஏற்புடையதாக்கி, ஆணிலப்பதத்தை நடை முறைக்குக் கொண்டு வருவதற்கு ஐந்து ஒப்பந்தங்கள் தேவைப்பட்டன. அவை fr GNJ GOST : ":پزه இ (1) சட்டமியற்றும் பூரண அதிது இலங்கைப் பாராளுமன்றத் துக்கு அளிப்பதற்கும், ஐக்கிய இர்ர்ச்சிய அரசாங்கத்துக்கு இலங்கை அரசாங்கத்தைப் பற்றிய எவ்வித பொறுப்பும் இல்லா திருப்பதற்கு, ஐக்கிய இராச்சிய பாராளுமன்றத்தின் இலங்கைச் Jugust 3& fell lib." (Ceylon Independence Act).

Page 166
3.18 இலங்கைச் சரித்திரம்
(2) இலங்கை அரசாங்க அமைப்பு முறையில் சுயாட்சியை மட்டுப் படுத்துவனவற்றை நீக்குவதற்கான இலங்கைச் சுயவாட்சி 9|Tórds as pasógill L1600h (Order in Council). (3) இலங்கையின் பாதுகாப்புக்குத் தேவையான பாதுகாப்பு
gluigi b (Defence Agreement). (4) வெளிநாட்டு விவகாரங்கள் சம்பந்தமாக சில விடயங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட வெளிநாட்டு அலுவல் ஒப்பந்தம் (External Affairs Agreement). (5) அரசாங்க உத்தியோகத்தர்கள் சம்பந்தமாக இதுவரை ஐக்கிய இராச்சிய அரசாங்கத்துக்கு இருந்த பொறுப்புக்களை இலங்கை அரசாங்கத்துக்கு மாற்றுவதற்காய அரசாங்க
9/8/6) arratif gluigilb (Public Officers' Agreement).
1947 நொவம்பர் 11 இல், ஐக்கிய இராச்சிய அரசாங் கத்தின் சார்பில் சேர். ஹென்றி மூரும், இலங்கை அரசாங்கத்தின் சார்பில் திரு. சேனநாயக்காவும், கொழும்பில் நகல் ஒப்பந்தங் களில் கைச்சாத்திட்டனர். இரு நாள்களுக்குப்பின் இலங்கை சுயவாட்சிச் சட்டம், பிரித்தானிய பாராளுமன்றத்தில் சமர்ப்பிக் கப்பட்டது. ஐரோப்பியரல்லாத மக்களைக் கொண்ட ஒரு குடியேற்ற நாடு, முதன் முதலாகச் சுதந்திரம் பெறுவதற்கு இலங்கையே முன்மாதிரி என்பதை எல்லோரும் உணர்ந்தனர்.
1947 நொவம்பர் 21 இல், பிரித்தானிய பாராளுமன்றத்தில் இலங்கைச் சுயவாட்சிச் சட்டத்தின் இரண்டாவது வாசினையின் பொழுது, ஆத்தர் ஜோன்ஸ் கூறியதாவது, 'இலங்கைக்கு எதிர் காலத்தில் பல கஷ்டங்கள் உண்டு . எனினும் அத்தீவின் மக்கள், தம்மிலும், தம் விதியிலும் துணிவும் நம்பிக்கையும், பொதுநல வமைப்பு மட்டில் பிரமாணிக்கமும், எங்கள் மட்டில் நல்லெண் ணமும் கொண்டவர்கள். உலகத்தில், அவர்களது பகுதியில் நடை பெற்றுவரும் கஷ்டங்களின் மத்தியில் கூட, அவர்கள் சுதந்திர, ஜனநாயக மக்கள் என்பதை நிரூபிப்பர் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு", என்பதாகும். நொவம்பர் 26 இல், பொதுமக்கள் சபையில், சட்டம் நிறைவெய்தியது.
பிரபுக்கள் சபையில் இரண்டாம் வாசினை, டிசம்பர் 4 ஆம் நாள் ஆரம்பமாயிற்று. 10 ஆம் நாளன்று, சுயவாட்சிச் சட்டம், மன்னரின் கைச்சாத்தைப் பெற்றது. ஏக காலத்தில் இலங்கைப் பாராளுமன்றமும் சுயவாட்சி விதிகளை அங்கீகரித்தது. 1948 பெப் ரவரி 4 ஆம் நாள் தான், சுதந்திர ஆட்சியின் உதயத்துக்கு உகந்த மிகச் சமீபமான நாள், என்பதை ஈர் அரசாங்கங்களும் ஏற்றன.
...'4 : 141

)
சோல்பரி விசாரணையும் திட்டமும் 39 சுதந்திர தினம் :
இலங்கையின் வரலாற்றில் அதி முக்கிய தினமான, சுதந்திர நாளையிட்டு ஆயத்தங்கள் விமரிசையாக நடந்தன. பிரதமரின் அழைப் புக்கிணங்கி, குளொஸ்ரர் கோமகன் (Duke of Gloucester), இலங் கையின் பாராளுமன்றத்தைத் திறந்து வைக்க ஒப்புக் கொண்டார். பெப்ரவரி நான்காம் நாள் வந்தது. சேர். ஹென்றி மூர், இலங்கை சுதந்திரமடைவதற்குச் செய்த நற் சேவைக்குப் பிரதியுப காரமாக, சேனநாயக்கா அவர்களின் வேண்டுகோளின் பேரில், முதல் ஆள்பதி நாயகமாகச் சத்தியப் பிரமாணம் செய்து, பதவியை ஏற்றர். அன்று தினம் இலங்கை மக்கள், நாட்டுக்குச் சேவை செய்த பெருமக்களை மறக்கவில்லை. சேர். பொன். இராமநாதனின் சிலைக்கு மலர் மாலை சூட்டப்பட்டு, அவர் இலங்கையின் சுதந்திரத் துக்கு வழியமைத்த உத்தம புருஷனென நினைவு கூரப்பட்டார்.
பெப்ரவரி 8 இல், குளொஸ்ரர் தம்பதிகள், இலங்கை வந்து சேர்ந்தனர். 10 ஆம் நாள், அவர்கள், சுதந்திர இலங்கையின் முதற் பாராளுமன்றத்தைத் திறந்து வைத்து, மாட்சிமை தங்கிய மன்னரின் செய்தியைச் சபையில் வாசித்தார். அதில் கூறப்பட்டதாவது, 'இலங்கையிலுள்ள எமது மக்கள், சுதந்திர மக்களைக் கொண்ட இப் பொதுநலவமைப்புடன் பூரணமாக ஒத்துழைக்க ஆயத்தமாயிருக் கின்றனர் என்பதையும், நீங்கள், உங்கள் புதுப் பொறுப்புக்களைக் கடமையுணர்ச்சியுடன் நிறைவேற்றி வைப்பீர்கள் என்பதையும் நான் பூரணமாக நம்புகின்றேன். இம் மகத்தான சுபதினத்தில் எமது ஆசிகள் உங்களுக்கு உரித்தாகுக, பரிபூரணமான சமாதானத் தையும், சுபீட்சத்தையும் இலங்கை எஞ்ஞான்றும் அனுபவிக்க வேண்டு மென இறைவனைப் பிரார்த்திக்கிருேம். எதிர் காலத்தில் உங்கள் நாடு நல்வழியில் செல்ல, உங்களுக்கு இறைவன் வழிகாட்டி, அருள் புரிவாராக", என்பதாகும்.
குளொஸ்டர் கோமகன், பாராளுமன்றத்தைத் திறந்து வைத்ததற்கு நன்றி தெரிவித்து சபை முதல்வர், திரு. S. W. R. D பண்டாரநாயக்கா, 'நாம் பெற்றுக்கொண்ட இச்சுதந்திரம், பல்லா யிரக்கணக்கான எமது மக்களைப் பொறுத்த வரையில் வெறும் கோட்பாடாக, கருத்தற்ற பொருளாக ஆகவிடமாட்டோம், விடவும் கூடாது. எல்லோர்க்கும் எல்லா இன்பங்களையும், வளங்களையும் வழங்குவதற்கு, அது பிரயோகிக்கப்படல் வேண்டும். வறுமையின்மை, நோயின்மை, அறியாமையின்மை, பய்மின்மை எனும் பிற சுதந் திரங்களைப் பெறும்பொழுதுதான் அரசியற் சுதந்திரம் உயிர்ச் சக்தி யாகச் சுடர்விட ஆரம்பிக்கின்றது. அது மாத்திரமல்ல, ஜனநாயக வாழ்வுக்கு ஆதார சுருதியாக அமையும் சுயமரியாதை, சுமுகமான மனிதத் தொடர்பு ஆகியவற்றை எல்லோரும் பெறக்கூடிய அள

Page 167
320 இலங்கைச் சரித்திரம்
விற்கு நாம் இச்சுதந்திரத்தைப் பேணி வளர்த்தல் வேண்டும். உலகின் பிற நாடுகளுடன் நட்புறவு கொண்டும், மனித சமுதா யத்தின் சாந்திக்கும் சமாதான வாழ்வுக்குமானவற்றை, எம்மால் முடிந்த அளவுக்கு, அது சிற்றளவினதாக இருப்பினுங்கூட, நன்கு ஆற்றுவதற்காக, உலக நிறுவகங்களில் எம் பணியை செவ்வனே செய் தல் வேண்டும்', எனக் கூறி முடித்தார்.
பிரித்தானியர் ஆட்சி ஆரம்பித்த ஒன்றரை நூற்றண்டுகளுக் குப்பின், பிரித்தானியக் கொடி, கொடிமரத்திலிருந்து இறக்கப்பட்டு, சுதந்திர இலங்கையின் சிங்கக்கொடி கம்பீரமாக பறக்க விடப்பட்டது. இலங்கையின் வரலாற்றில் மீண்டுமொரு சுதந்திர யுகம் மலர்ந்தது.
வினுக்கள்
1. 1910 இலிருந்து 1947 வரை இலங்கையின் அரசியலமைப்பு முறையிலுண்டான மாற்றங்களைச் சுருக்கமாக ஆராய்க.
2 1927 ஆம் ஆண்டின் விசாரணைச் சபையினதும், 1944 ஆம் ஆண்டின் விசாரணைச் சபையினதும் ஆலோசனைகளில் காணக் கூடியனவாக இருந்த வேறுபாடுகள் எவை ? இவ்வேற்று மைகள் தோன்றுவதற்கு வழிகோ லிய பிரதான காரணங்களைச் சுருக்கமாகத் தருக.
3. டொனமூர் அரசியற்றிட்டத்தின் குறைகள் யாவை? சோல்பரி அரசியற்றிட்டம் இவற்றை நீக்குதற்கு எவ்வாறு வழி வகுத்தது ?
4. இலங்கையில் மந்திரி சபை ஆட்சி முறை வளர்ச்சியடை
வதற்கு சோல்பரி ஆணைக்குழுவினர் செய்த உதவி யாது ?
சோல்பரிக் குழுவினர் இலங்கை அரசியல் முறையிற் கண்ட குறைபாடுகள் எவை ? அவற்றை அவர்கள் எவ்வாறு திருத்த எண்ணினர் ?
5
6. சோல்பரித் திட்டத்தின் கீழ் உருவாகின கபினெட் சபையினை டொனமூர் திட்டத்தின் கீழிருந்த மந்திரி சபையுடன் ஒப்பிட்டு ஆராய்க.
7. இலங்கை, ஆணிலப்பதம் எய்திய வரலாற்றினை படி முறைப்
படி கூறுக. ܐܸܢܵܐܬܐ
சோல்பரித் திட்டத்தின் சிபார்சுகள் எவை ? அவை ... این
': ஆணிலப்ப்த நிலையிலிருந்து எவ்வகைகளில் குறைந்து காணப்
பட்டன? ... -
9. சிறுபான்மையின்ர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சோல்பரித்
திட்டம் கையாண்ட் வழி வகைகளைக் கூறுக.
10. சோல்பரித் திட்டத்தின் கீழ், சிறுபான்மையினரின் நலவுரிமைகள்
எத்துணையளவுக்குப் பாதுகாக்கப்பட்டுள்ளன?
 
 
 

மாதிரி வினப் பத்திரங்கள் Model Question Papers G. C. E. (O. L.) Dec. 1965
Lugb5 III இலங்கை வரலாறும் உலக வரலாறும் (கி. பி. 1776 இலிருந்து இற்றைவரை)
(எட்டு வினுக்களுள் ஐந்து உலக வரலாறு சம்பந்தமானவை. இலங்கைச் சரித்திரத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட "மிகுதி மூன்று வினக்கள் மாத்திரம் இங்கு தரப்படுகின்றன.) 3. கரையோர மாகாணங்களில் பிரித்தானிய ஆட்சியை வலு வடையச் செய்வதற்கு மெயிற்லன்ட் தேசாதிபதி மேற் கொண்ட நடவடிக்கைகளை விவரிக்க. 5. பிரித்தானியக் கைத்தொழிற் புரட்சியால் இலங்கையில் ஏற்பட்ட விளைவுகள் யாவை ? உதாரணவாயிலாக விளக்குக. 7. கி. பி. 1910 இலிருந்து கி. பி. 1947 வரை எமது நாட்டின்
அரசியற்றிட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்களை எழுதுக.
T. C. Final (Nov. 1965) இரண்டாம் பகுதியிலிருந்து மூன்று வினக்களுக்கு விடை தருக. Lugg) II 6. ஐரோப்பிய நாடுகளுக்கிடையே அப்பொழுது நிலவிய அரசியற்
போட்டி எமது நாடு பிரித்தானிய ஆட்சிக்குட்படுவதற்கு எவ்வாறு வழிகோலியது?
7
1817-18 மலைநாட்டுப் புரட்சியின் காரணங்களையும் அதன்
பெறுபேறுகளையும் காட்டுக. نه : 8. ஐரோப்பாவில் ஏற்பட்ட கைத்தொழிற் புரட்சி
நாட்டை எவ்வாறு பாதித்தது? -
శ్లో
ல்ல்து வில்மற் ஹோட்டன்
9. மேட்லன்ட் தேசாதிபதியின் *بنی தேசாதிபதியின் பரிபாலனத்தை
0. ll. உலக சரித்திரம். 12. 鲨
321

Page 168
322
இலங்கைச் சரித்திரம்
G. C. E. (A. L.) Dec. 1965
இலங்கை வரலாறு 11 (கி. பி. 1505 இலிருந்து)
款
(பன்னிரண்டாம் வினவுக்கும் ஒவ்வொரு பகுதியிலிருந்து இரு வினுக்களுக்கும் விடை எழுதுக.)
10.
11.
12.
(i)
(i) 1815ஆம் ஆண்டுக் (i) பைபஸ் தூது
Lu (göĝ9. III பிரித்தானியருக்கும் பிரான்ஸியருக்கும் திருகோணமலையின் முக்கியத்துவத்தை ஆராய்ந்து, அதனைத் தம் வசப்படுத்திக் கொள்ள அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளைச் சுருக்கமாக எழுதுக. 1803 இல் கண்டியைக் கைப்பற்றுவதற்கான பிரித்தானியரின் படையெடுப்பு தோல்வியுற்றமைக்கும் 1815 இல் வெற்றி பெற்றமைக்குமுரிய காரணங்களை எழுதுக. 1848 ஆம் ஆண்டுக் கலகத்துக்கான காரணங்களை ஆராய்க. பத்தொன்பதாம் நூற்ருண்டின் பின்னரை நூற்ருண்டில் இலங்கையில் விவசாயிகள் கமச் செய்கையை வளம்படுத்தப் பிரித்தானிய தேசாதிபதிகள் மேற்கொண்ட கொள்கையைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுக. டொனமூர் ஆணைக்குழுவினர் சர்வஜன வாக்குரிமை வழங் கப்பட வேண்டும் என எக்காரணங்களுக்காகச் சிபார்சு செய் தனர்?அவர்கள் எதிர்பார்த்தது எவ்வளவுதூரம் பூர்த்தியாயது? நிர்வாக சபை அமைப்பு முறை தோல்வியுற்றதெனக் கருதிய மைக்குரிய காரணமென்ன?
பகுதி III
பின்வ னவற்றுள் எவையேனும் ஐந்தினைப் பற்றிச் சுருக்க மான் வேர்லாற்றுக் குறிப்புக்கள் எழுதுக.
அனகாரிக தர்மபால்
1. ul. *உடன்படிக்கை
(iv) சேர், ஜேம்ஸ் பீரிஸ்
 
 
 
 
 
 
 
 

இலங்கைச் சரித்திரம் - 323
ஆராயப்பட்ட ஆங்கில, நூல்கள் ,
Ceylon under the British-G. C. Mendis
Ceylon Yesterday & Today-G. C. Mendis.
Ceylon Under the British Occupation 1795-1833-Colvin R. De Silva 2 Vols.
Ceylon Under British Rule 1795-1932-Lennox A. Mills.
A History of Ceylon for Schools-British Period-Rev. Fr, S. G. Perera.
- Report of the Special Commission on the Ceylon
Constitution-1928
Report of the Special Commission on the Ceylon
Constitution - l947
Ceylon Journals of Historical & Social Studies
British Governors of Ceylon-Hulugalle
Education in Colonial Ceylon-Ranjit Ruberu
Story of Ceylon-E. F. C. Ludowyke
. Ceylon-A Divided Nation-B. H. Farmer
3.
I4.
15,
16.
17.
Our Legislature-J. R. Weinman Ceylon-Path to Independence-Sir. Charles Jeffries
Short History of Ceylon-Codrington Ceylon-S. A. Pakeraan
Ceylon under Western Rule-L. Horace Perera.

Page 169
324
இலங்கைச் சரித்திரம்
G.C.E. (A.L.) Examination Syllabus
History with effect from 1965.
History will be counted as one Subject.
Will consist of two papers.
Paper I-Ceylon History (- - 1948) Paper II. A. Indian History (- - 1526)
ΟΥ II B. European History (1494——1945).
Test on the knowledge of Important topics, places and
dates will cover the whole period.
Attention to be paid to the influences of Geography on historical development.
Map drawing and Map reading should be a regular feature.
 


Page 170


Page 171