கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பொது நிலையினரின் முதிர்ச்சி

Page 1
کھیے۔
அருட்திரு எஸ். ஜே. இம்மா
 


Page 2
உட்புகுமுன்
திருச்சபைகள் மறுமலர்ச்சியடைய வேண்டும். இதற்கு
பொதுநிலையினர் விழித்தெழவேண்டும், தமது தன்மையையும், இடத்" . தையும், உரிமைகளையும், பணியையும், நன்குணர்ந்து கெயல்பட் ܬܐ வேண்டும். இதுவே அகிலத்திருச்சபை ஆர்வத்துடன் ஆராய்ந்தெடுத்த 臀 தீர்க்க முடிவு.
* தமது வரைவிலக்கணத்திற்கு ஏற்றதாகவும், திரு ஆட்சி அமைப்பாளருடன் கூடிப் பணி புரியக் கூடியதாகவுமுள்ள பொதுநிலையினர் இல்லாவிட்டால், அவ்விடத்திலே திருச் சபை இன்னும் உண்மையாகவே வேரூன்றவுமில்லை, முழு மையாக வாழவுமில்லை, மனிதர் நடுவே கிறிஸ்துவின் சின்னமாகவுமில்லை." (A. G. 21)
சுருங்கக் கூறின், பொதுநிலையினர் செயற்படாத திருச்சபை வேர்ற்ற மரம், கருத்தற்ற சின்னம், உயிரற்ற பிணம்.
இச் சத்தியத்தை எமது ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலையினர் அனைவர் முன் நிறுத்தவும், அச்சத்தியம் விடுக்கும் சவால்களை அனைவரும் ஏற்கவும் உதவியாக இச்சிறு நூல் பயன்படுவதாக.
எஸ். ஜே. இம்மானுவேல்.
* தேசிய குருமடம் அம்பிட்டியா. (இலங்கை) 15 ஆணி 1981
ീർൂി ി
 
 
 
 
 
 
 
 
 
 

* 零wóro。
திருச்சபையின் மறுமலர்ச்சியில் கொப்பர்னீக்கசின் புரட்சி
* பூமியே அகிலத்தின் மையம். இப்பூமியைக் கதிரவன் ஒழுங் காகச் சுற்றி வருகின்றன்." இக்கொள்கை ஆயிரமாயிரம் ஆண்டு களாக - கி. பி. 15ஆம் நூற்ருண்டுவரை சகல மனிதராலும் சவர் லின்றிய சத்தியமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட "உண்மை’. (Geocentric Theory). ஆனல் நீக்கிலஸ் கப்பர்நீக்கஸ் என்ற விஞ்ஞானி 16ஆம் நூற்ருண்டில் இக்கொள்கைக்கு முற்றுப்புள்ளி போட்டு -கதிரவனே அகிலத்தின் மையமென்றும், பூமி இக்கதிரவனை ஒழுங்காகச் சுற்றி வருகின்ற ஒரு கிரகமென்றும் நிரூபித்து மனிதரை அதிசயிக்க வைத்தார் (Helio-Centric Theory), இதுவே விஞ்ஞான உலகில் கப் பர்னிக்கசின் புரட்சி என்று அழைக்கப்படுகின்றது.
இப்பேர்ப்பட்ட புரட்சியொன்று இந்த நூற்ருண்டில் 2ஆம் வத் திக்கான் சங்கத்தினூடாகத் திருச்சபையைப் பொறுத்தமட்டில் ஏற் படுத்தப்பட்டிருக்கிறது. அது பின்வருமாறு :
(அ) உலகம் - திருச்சபை
உலகையும் திருச்சபையையும் நோக்குமிடத்தில், திருச்சபை ஒரு குறைவற்ற நிறைவான மைய ஸ்தாபன மென்றும் உலகம் முழுவதும் இந்நிறைவான திருச்சபையுடனிணைந்து அதைச் சுற்றிச் சுழல்வதிலேயே நிறைவையடையுமென்றும் கருதி வந் தோம். ஆனல் 2ஆம் வத்திக்கான் சங்கம் அதை மாற்றியமைத்து திருச்சபை உலகத்திலேயேயிருந்து உலகத்திற்கு இரட்சணிய சேவை செய்வதற்காக உழைக்கும் அருட்சாதனமாக அமை கின்றதென்று கற்பிக்கின்றது. உலகம் திருச்சபைக்காகவல்ல, திருச்சபையே உலகத்தின் இரட்சணிய நிறைவுக்காக உழைக்கும் சேவைக் கருவியாக மாறிவிட்டது. (L. G. 1)
(ஆ) பொதுநிலையினர் - திருப்பணியாளர்
இருச்சபையினுள்ளே பொதுநிலையினருக்கும் திருப்பணியாள ருக்கும் இடையில் உள்ள தொடர்பை நோக்குமிடத்தில், திருப் பணியாளரே அருளினலும் ஆவியினலும் நிரப்பப்பட்ட மத்திய அத்திவாரமென்றும் பொதுநிலையினர் இவ்வதிகார பீடத்தை அமைச்சலுடன் அண்டி, அமைதியாகச் செவிமடுத்து, அவர் களின் கட்டளையே தமது கடமையாகச் செயல்படுத்தும் பெரும்

Page 3
ܐܗܗܗ ܗܗ
GEO-CENTRIC UNIVERSE HELO-CENTRIC INVERSE
பூமி மைய அகிலம் சூரிய ಉ೦ಗ್ಧ ಶ್ವಿನಿರಿ
Λ కీ-Oశివాతి ಒಂಟಿ ಹೀಗೆ f
இணியாளர் -0
V
M A. محے ܔ܀ *A. r. ==ూ صۓ
(a) Church-centred world (a) World-centred Church
runumannau)
'(b) Hierarchy-centred Church (b) People-centred Hierarchy
(a) திருச்சபையை மையமாகக் (a) உலகத்தை மையமாகக் கொண்ட உலகம் கொண்ட திருச்சபை
(b) திருப்பணியினரை மையமாகக் (b) மக்களை மையமாகக்கொண்ட
கொண்ட திருச்சபை திருப்பணியாளர்
 
 
 
 

A.
*
ஷா'டி
பான்மையினரென்றும் கருதப்பட்டது. சுருங்கக்கூறின் - திரு நிலைப்படுத்தப்பட்ட திருப்பணியாளரே திருச்சபையில் நிறைவான வரென்றும், ஏனையோர் அப்பணியாளரின் பணிவிடைக்கார ரென்றும், முக்கியத்திலும் தரத்திலும் குறைந்தவரென்றும் கருதப்பட்டது. ஆனல் 2ஆம் வத்திக்கான் சங்கம் இக்கொள் கையை மாற்றியமைத்திருக்கின்றது. பொதுநிலையினர் திருப்பணி யாளருக்காகவல்ல, திருப்பணியாளரே பொதுநிலையினருக்காக வென்றும், பொதுநிலையினருக்குச் சேவைசெய்யவே திருப்பணி யாளர் அருளும் அதிகாரமும் பெற்றிருக்கின்றனரென்றும், சங்கம் கற்பிக்கின்றது. (L. G. 18). மேலும் திருப்பணியாளர் செயற் படும் திருச்சபையாகவும் பொதுநிலையினர் மெளன திருச்சபை யாகவும் இருப்பது முறையல்ல; பணியாளரின் சேவையால் திடப் படுத்தப்பட்ட இறைமக்கள் முழுவதும், இயங்கும் திருச்சபையாக இருக்கவேண்டுமென்று சங்கம் கற்பிக்கின்றது (L. G. 13c).
மேற்கூறப்பட்ட இரண்டு கருத்துக்களையும், நாம் ஆரம்பத்தில் எடுத்துக்கொண்ட உதாரணத்தின் மூலம் தெளிவாகப் புரிந்துகொள் ளலாம். அகிலமனைத்தையும் சூரியனுக்கும், இறைமக்களனைவரையும் இப்பூமிக்கும், திருப்பணியாளர் கூட்டம் அனைத்தையும் சந்திரனுக்கும் ஒப்பிடலாம். விஞ்ஞான ரீதியாக வானவியல் (Astronomy) விளக்கப் படி, சந்திரன் பூமியைச்சுற்றி வலம் வருகின்றதெனவும், சந்திரனும் பூமியும் ஒன்ருகச் சூரியனைச் சுற்றி வருகின்றதெனவும் நாம் அறிந்துள் ளோம். இவ்வாறே திருப்பணியாளர்கட்டம் இறைமக்களுக்குச் சேவை செய்வதாகவும், மேலும் இவ்விரண்டு கூட்டத்தினரும் சேர்ந்து உலக மனைத்திற்கும் சேவை செய்வதாகவும் நாம் கருதிக்கொள்ளலாம். கிறிஸ்தவ சேவையை விளக்க விவிலியம் தெரிந்துகொண்ட " டியல் கொனியா ? (Diakonia) என்ற கிரேக்கச் சொல், சாதாரண சேவை யைக் குறிப்பதாகும். முக்கியமாக, உணவு அருந்தும்போது மேசை யைச்சுற்றிச் சேவை செய்பவர்களையே குறிக்கும். அதேபோன்று திருச்சபையிலும் சேவையாளர் சேவை பெறுபவர்களைச் சுற்றி சேவை செய்யும் புரட்சி மனப்பான்மையொன்று ஏற்படவேண்டும்.
ஆகவேதான் இன்று திருச்சபை இயலில் (Ecclesiology) உலகத் தின் மக்களையும், அவர்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளையும் மைய மாகக்கொண்ட கிறிஸ்தவத்தைப் பற்றிப் பேசப்படுகிறது (World-centred or Secular Christianity). g(s) is gapatasahifliusbaugia) g6ial lib எமது கூற்று-திருச்சபையினுள்ளே திருப்பணியாளர், பொதுநிலையி னர் என்று அலுவல் காரணமாகப் பிரிக்கப்பட்ட (L. G. 13C) இவர் களுக்கிடையில் ஏற்பட்டிருக்கும் தொடர்பு மாற்றமும், விசேடமாகப் பொதுநிலையினரைப்பற்றி மீண்டெடுக்கப்பட்ட புதிய உண்மைகளுமே எமது கவனத்தை ஈர்க்கவேண்டும். கப்பர்னீக்கஸ் புரட்சியின் உதாரணம் (ஆ) எம்முன்னிருப்பது நலம்,

Page 4
2 பொதுநிலையினர் பொருளை
மீண்டெடுக்க.
முழுத் திருச்சபைஇயலிலே.
பொதுநிலையினரின் புதிய பங்கைத் தேடுகையில் முழுத் திருச் சபையும் பணியாளரும் தமது புதிய தன்மையையும் பணியையும் கண்டடைவர். ஆகையால் பொதுநிலையினரைப் பொறுத்தமட்டில் அவர்களுக்கென்று தனிமையான மாற்றங்களில்லை-திருப்பணியாளர் களுக்கென தனிமையான மாற்றங்களில்லை - முழுத்திருக்சபையின் தன்மையையும், பணியையும் விளக்கிக் கூறும் முழுமையான திருச் சபை இயலே - பொதுநிலையினரின் தன்மையையும் பணியையும் விளக்கமுடியும், இதைத்தான் உலகப்பிரசித்திபெற்ற இறையியலாளர் gfö60s Glastiás stri (Y. Congar) 3,016.airopri : There can be only one sound and sufficent theolcgy of the laity and that is a total ecclesio logy. (Lay people in the church. p. xvi)
ஆகையால் பொதுநிலையினரின் உண்மையான தன்மையையும் பணியையும் உணர்ந்து அதற்கிணங்க வாழாத திருச்சபை அதன் பெயருக்கே இழுக்காகிவிடும் என வத்திக்கான் சங்கம் கற்பிக்கின் sog5 (A. G. 21).
கற்பித்ததைக் கடைப்பிடிக்க.
பொதுநிலையினரதும் பணியாளரினதும் நிலையைப்பற்றியும் பணி யைப்பற்றியும்-பற்பல கற்பிக்கப்பட்டிருப்பினும் - சங்கத்தின் கற்பித் தலுக்கும் எமது கடைப்பிடித்தலுக்குமிடையில் ஒரு நீண்ட பயணம். இப்பயணத்தைப் பணியாளரும் பொதுநிலையினரும் சம ஆர்வத்துட னும் துணிவுடனும் கையேற்கவேண்டும். இருபகுதியினரும் நீண்ட சரித்திரத்தில் ஒருவரையொருவர் தள்ளிவிட்டாற்போல தமது உண்மை இடத்தை இழந்துவிட்டனர். குருக்கள் திருச்சபை எனும் ஆலயத்தின் "அடுத்தாரில் (பீடத்தின் மேடையில் அல்லது பின்னல்) ஒதுக்கப்பட்டு விட்டனர். பொதுநிலையினர் அவ்வாலயத்தின் வெளியே தள்ளப்பட்டு விட்டனர். இப்போது திருச்சபையில் உண்மை இடத்தைத் தேடி யடைவதற்கு இருபகுதியினரும் கடினமான பயணத்தைத் துணிவுடன் மேற்கொள்ள வேண்டும். குருக்கள் மேடையைவிட்டு இறங்கவேண் டும்; பொதுநிலையினர் ஆலயத்துள்ளே புகவேண்டும்.

பொதுநிலையினர்
பொதுநிலையினர் : இவ்வார்த்தை சரித்திரம் நிறைந்த ஓர் ஆங் கில வார்த்தையின் (Laity) தமிழாக்கமாகும். திருநிலைப்படுத்தப்பட்ட திருப்பணியாளருக்கு அல்லது திருநிலையினருக்கு (Clergy) மாருகப் பொதுப்பணியினர் அல்லது பொதுநிலையினரென்று மொழிபெயர்க்கப் படுகின்றது. பொது ' (Common) என்ருல் திரு (Sacred) என்ப தற்கு எதிர்ப்பதமாகக் கருதப்படுகின்றது. திரு ' என்னும்போது சர்வ சாதாரணமானவைகளிலிருந்து ஒரு விசேட, புனித அல்லது தெய்வீக நோக்கத்திற்காகப் புறம்பாக்கப்பட்டதாகக் கருதப்படும். ஆகையால் பொதுநிலையினர் என்பது திருநிலைப்படுத்தப்படாது, எவ் வித விசேட புனித/தெய்வீக நோக்கத்திற்காகவும் தெரியப்படாத அல்லது ஒதுக்கப்படாத சாதாரண பகுதியினராகக் கருதப்பட்டது.
வார்த்தையின் இழுக்கு இவ்வார்த்தை திருநிலைப்படுத்தப்படாத பெரும்பான்மையான கிறிஸ்தவர்களின் ஆதிச் சரித்திரத்தையும் அதன் இயல்பான நிலைமையையும் எடுத்துக்காட்ட வலிமையற்றது. ஆதியில் திருநிலைப்படுத்தப்படாதவர்களையே Laity என்று அழைத்தனர். விவி லிய ஊற்றில் (Laos) " மக்கள் என்று கருதப்பட்டிருந்தாலும், சரித் திரத்தில் Laity எனப்பட்டவர்கள், படியாத பண்பாடு குறைந்த மடை யர்களாகவே கணிக்கப்பட்டனர்.
திருநிலைப்படுத்தப்பட்டவர்கள் லத்தீன் மொழியையும் தத்துவ மெய்யியல் போன்றவற்றையும் கற்றவர்களென்றும் திருச்சபையில் தெய்வீக அதிகாரத்தைப் பெற்றவர்களென்றும் கருதப்பட்டு ஏனை யோர் அதற்கெதிராக, படியாத பண்பாடற்ற மக்களாகக் கணிக்கப் பட்டனர். இன்றைக்கும் ஆங்கிலமொழியில் (Laymen) என்னும் பொழுது விஷயம்புரியாத சாதாரணமானவர்கள் என்று கருதப்படும்.
ஆகையினல் பொதுநிலையினர் எனப்படுவோருக்குச் சரித்திரத் தினல் சுமத்தப்பட்ட இழுக்கான குறைவான பதங்களனைத்தும் அகற்றப்பட்டு, அவர்களின் பெருமையான நிறைவான அம்சங்கள் அடங்கிய நேரான வரைவிலக்கணத்தைத் திருச்சபை அ  ைமக்க வேண்டும்.
குருகுலம் இறைகுலமாகப் பிரிந்து வளர்தல்
குருகுலம், இறைகுலம் என்ற வேறுபாடு ஆதித் திருச்சபையில் இருந்ததில்லை. ஒவ்வொருவரும் தமக்கு அளிக்கப்பட்ட கொடை களுக்கும் தகைமைகளுக்குமேற்ப இறைபணி புரிந்தனர் என அறிகின் ருேம். ஆனல் படிப்படியாக, சிறப்பாக 4-ம் நூற்ருண்டுதொட்டு

Page 5
- 6 -
15-ம் நூற்றண்டுவரை, கொன்ஸ்ரன்ரையின் காலத்தில் (Constantine
era) திருச்சபைத் தலைவர்கள் அதிகாரத்திலும், ஆதிக்கத்திலும் ஊறி
வளர்ந்து அரசாங்கங்களின் ஆதரவையும் சலுகைகளையும் பெற்று, ஓர் உயர்ந்த குலமாக இறைமக்களிலும் பார்க்க மேலானவர்களாக வாழ்ந்து வந்தனர். குருகுலம், கற்பிக்கும் திருச்சபையாகவும் (Ecclesia Docens) "இறைகுலம்’. கற்பிக்கப்படும் திருச்சபையாகவும் (Ecclesia Discons) பிரிந்து இருபகுதியினருக்குமிடையில் வேறுபாடுகள் வளர்ந்து ஓங்கியது. குருகுலத்தார் ஏதோ உயர்ந்த உலகிலிருந்து, மெய்யியல், இறையியல் போன்ற சாஸ்திரங்களை இலத்தீன் மொழியில் கற்று அதி காரத்துடன் இறங்கிவந்தோர் போலிருந்தனர். இவர்கள் திருச்சபை யைத் சார்ந்தவைகளில் அதிகாரமுள்ளவர்களாகவும், மெய்யியல் இறை யியல் சாஸ்திரங்களில் வல்லுனர்களாகவும் சலுகைகள் நிறைந்தவர் களாகவுமிருக்க, இறைகுலத்தவர் ஒரு சக்தியற்ற, உணர்ச்சியற்ற ஈடுபாடற்றவர்களாகவும், சாஸ்திரங்களை அறியாதவர்களாகவும், உரி மைகளோ, செல்வாக்கோ, அற்றவர்களாகவும் இருந்தனர்.
ஆதியிலே ஒரே தரத்தையும், மேன்மையையும் கொண்ட இறை மக்களின் சேவையைப் பொறுத்தமட்டில் இருந்த வேறுபாடுகள் (Functional Differences) காலாகாலத்தில் திருச்சபைக்குள்ளே இரண்டு பிரிந்த குலங்களை ஏற்படுத்தி இருக்கின்றது. இறைமக்களுக்கும், திருப்பணியாளருக்குமிடையில் அடிப்படையாக இருக்கவேண்டிய ஒற் றுமையையும், இணைப்பையும் குலைத்துவிட்டது. குருகுலத்தின் ஆதிக் கம் நிறைந்த திருச்சபையிலிருந்து இறைமக்கள் பல்வேறுவிதங்களில் பிரிந்து சென்றனர். திருச்சபைக்குள்ளே குருத்துவவாதம் (Clericalism) வழிபாட்டிலும், வாழ்விலும், அமைப்பிலும், அதிகாரத்திலும், ஞான வாழ்விலும் வளர்ந்து வந்தது. குருகுலமே திருச்சபை, குருக்களே நிறைவான கிறிஸ்தவர்கள், குருக்களே சரியான அறிவையும், வாழ்க்கை முறையையும் கொண்டவர்களெனக் கருதப்பட்டது. ஆகையினல் இறைகுலத்தார் இரட்சணியம் அடைவதற்கு இலட்சியவழி உலகத்தை விட்டோடி, திருமணம், குடும்பம், பா லி ய ல் போன்றவைகளை வெறுத்துக் குருக்களைப்போல் சீவிப்பதே எனக் கருதப்பட்டது. குருத் துவ குலத்தோர் முதலாந்தரக் கிறிஸ்தவரென்றும், ஏ ஆன யோர் வலிமையற்ற, உயர்ந்த இலட்சியமற்ற ரென்றும் கருதப்பட்டது.
லூதரின் முயற்சி
இக்குருத்துவ வாதத்திற்கு எதிராக 16-ம் நூற்றண்டில் மாட்
டின் லூதரும், சீர்திருத்தவாதிகளும், பல்வேறு மாற்றங்களுக்காகவும் திருத்தங்களுக்காகவும் போராடினர் (Reformation). ஆனல் திருச்
 

------- 7 جسسے
சபையோ இதற்கு எதிராகத் தனது குருத்துவ அமைப்பைக் கடுமை யான சட்ட திட்டங்களினுல் பலப்படுத்தி, சீர்திருத்தவாதிகளின் கோரிக்கைகளை முழுமையாகக் கண்டித்து கழித்தது (Counter-reformation). ஆகையினல் பலநூற்ருண்டுகளாகக் குருகுலம் திருச்சபையின் சிறிய பகுதியாக இருந்தும், தனது குருத்துவ வாதத்தினல் பெரும் பான்மையான இறைகுலத்தைக் கட்டுப்படுத்தி, ஆண்டு, அடக்கி, ஒடுக்கி, வழிநடாத்தியது. ஆகையினல் மாட்டின் லூதரைப் பின்பற் றிய சபைகள் படிப்படியாகக் குருத்துவமற்ற மக்களாக வளர்ந்துவர, ருேமன் கத்தோலிக்க திருச்சபை இறைமக்களற்ற, ஒரு குருகுலமாக வளர்ந்து வந்தது.
ஆகையினல் சரித்திரத்தினல் குருகுலம்-இறைகுலம் (Clergy-laity) எதிராளிகளாக தவருண முறையில் வளர்க்கப்பட்டதனுல், இப்பிரி வினையை முற்ருக அகற்றிவிடவேண்டுமென்று சில இறையியல் வல்லு GOTrias git 60 lb. Saotri (F. Klostermann, H. Kung).

Page 6
புதிய வரைவிலக்கணம்
2ஆம் வத்திக்கான் சங்கம் இதைப்பற்றித் தெளிவுபடுத்துகையில் குருகுலம்-இறைகுலம் எனும் பிரிவு, எதிர்க்கட்சிகளைத் திருச்சபையில் ஏற்படுத்தவல்ல-மாருக திருச்சபையான மறைஉடலில் ஒருவர் ஒருவ ருக்கிடையில் ஒற்றுமையையு , ஒருமையையும் பேணிவளர்ப்பதற்கா கவே என்கிறது.
ஒரே இறைமக்களைக் குருகுலமென்றும், பொதுநிலையினரென்றும் பிரித்தழைக்கும் நோக்கம் அவர்களைப் பிரிப்பதற்காகவல்ல, இணைப்ப தற்காகவே (L. G, 32). இறைமக்களின் ஒற்றுமை, அங்கத்தவர்கள%ன வரும் ஒரேவிதமான பணிபுரிவதிலல்ல, பலவிதமான பணிகள் புரிவ 5Ga) airpiggy 15 sibás Gali Gior Gubs Unity--not in uniformity, but in diver sity of functions).
குருகுலத்தவரும், பொதுநிலையினரும் பணியினல் மாத்திரமல்ல, தம் சாரத்திலும் வேறுபட்டிருக்கின்றனரென்று பலர் விவாதிக்கக் கூடும். ஆனல் இவ்விரு நிலையினரும் அடிப்படையில் கிறிஸ்தவர்க ளென்றும், அதுவே அவர்களுக்கு இரட்சணியம் அளிக்க வல்லதென் றும், குருப்பட்டமோ அபிஷேகமோ இரட்சணியமளிப்பதில்லை என்றும்
உணரவேண்டும்.
ஆகையினல் வத்திக்கான் சங்கம் குருகுலம் - இறைகுலம் என்ற பிரிவினைத் தலைப்புக்களைத் தவிர்த்து அநேகமாகத் திருப்பணியாளர்பொதுநிலையினர் என்ற பிரிவினையை விரும்புகின்றது. இப்பிரிவினை இறைமக்களுக்கிடையிலுள்ள அடிப்படையான சமத்துவத்திற்கோ, சகோதரத்துவத்திற்கோ, மாண்பிற்கோ, மதிப்பிற்கோ முரணுகாது செயல்படவேண்டும். இ தன்காரணமாக திருப்பணியாளரின் அமைப்பு (Hierarchical Structure) SOU L ? Tufólu "Liq-Gör 22 (UGuj,60G36) (Pyramidal Structure) அதாவது பாப்பரசர் உச்சியிலும், அதன்கீழ்ப் படிப்படியாகக் கருதினுல்மார் பேராயர்கள், ஆயர்கள், குரு க்க ள், மக்கள் என்ற ஒழுங்கில் இயங்காது - திருப்பணியாளருக்கும், பொது நிலையினருக்கு மிடையில் தொடர் புக ள் குழுப்பண்பு (Collegial) நிறைந்த பொது மைய வட்டங்களாக (Concentric circles) இயங்க வேண்டுமெனச் சங்கம் விரும்புகின்றது. அதாவது கிறிஸ்துவை மையமாகக்கொண்ட திருச்சபையில் பாப்பரசரைச் சுற்றி ஆயர்களும், ஆயர்களைச் சுற்றிக்
 

-'9 --
குருக்களும், குருக்களைச் சுற்றி மக்களும் கூடிவாழ்ந்து செயல்படவேண் GLn. (Community-Collegiality- Co-responsibility-Co-operation).
மேற்கூறப்பட்ட புரட்சியின் அடிப்படையில் பொதுநிலையினரின் முழுமையான வரைவிலக்கணத்தை அடைவதற்கு ஏதுவான அடிப் படையான சில அம்சங்களைச் சங்க ஏடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கலாம். திருச்சபையின் சிறுபான்மையான திருப்பணியாளர்களை மையமாக வைத்துப் பெரும்பான்மையான பொதுநிலையினரின் தன்மையையும் சாரத்தையும் (Nature & Essence) வர்ணிப்பது தலைகீழான ஒருசீரற்ற ஒழுங்கைப் பின்பற்றுவதாகும். பொதுநிலையினர் தங்கள் மட்டிலும் திருச்சபைக்கு வெளியேயுள்ளவர்களைச் சார்ந்தமட்டிலும் இவர்கள் யார் ? அவர்களுடைய கிறிஸ்தவ ஆள்தன்மையை (Christian PerSonality) அமைக்கும் அம்சங்கள் யாவை ?
2ஆம் வத்திக்கான்சங்கம் பொதுநிலையினரின் வரைவிலக்கணத்தை வகுத்துக் கொடுக்கவில்லை. ஆனல் அதற்குரிய அம்சங்களைத் 'திருச் சபை, இன்றைய உலகில் திருச்சபை, பொதுநிலையினரின் அப்போஸ் தலத்துவம், திருச்சபையின் மறைபரப்புப்பணி' போன்ற ஏடுகளில் பரவலாக ஆனல் தெளிவாகக் கொடுத்திருக்கின்றது. அவைகளில் நான்கு முக்கியமானவற்றை இங்கு காண்போம்.
1. பொதுநிலையினர் திருச்சபையில் உரிமையும் கடமையும் கொண்ட (popsanou TsoT 9y č. 5556), ň 355i (Full-fledged members with rights and duties)
புதிய ஏற்பாட்டின் இறைமக்கள் என்றழைக்கப்படும் திருச்சபை யினுள்ளே வகுப்பு வாதத்திற்கு இடமில்லை. திருமுழுக்கின் வழியாக கிறிஸ்துவின் மரணத்திலும் உயிர்ப்பிலும் பங்கெடுத்து உதித்த கிறிஸ்தவர்கள் எல்லோரும் ஒரே பரமபிதாவின் பிள்ளைகள், ஒரே மறை யுடலின் அங்கத்தவர்கள். உறுதிப்படுத்தலின் வழியாக முதிர்ச்சி யடையும் இவர்கள் தங்கள் உரிமைகளையும், கடமைகளையும் எக் காரணத்திற்காகவோ எவருடைய ஆதிக்கத்திற்காகவோ மறைக் கவோ மறுக்கவோ முடியாது. உரிமையில் குறைந்த இரண்டாந்தர கிறிஸ்தவர்களாகவோ, கடமையில் குறைந்த முக்கியத்துவமற்றவர்க ளாகவோ கருதுவது தவறு.
முழுமையான அங்கத்தவர்கள் என்றமட்டில் இறைவனின் வார்த் தையைப் போதியளவு கேட்கவும், இறைவனின் அருட்சாதனங்களை அடிக்கடி கொண்டாடி ஊட்டமும் உறுதியும் பெறவும், திருச்சபை
நலனுக்காகத் தமது ஆலோசனையைக் கூறவும் இவர்களுக்கு உரிமை
யுண்டு (L. G. 37). இவ்வுரிமைகள் தெய்வீக திட்டத்தில் பிறந்த

Page 7
سسست۔ 10 سے
உரிமைகளாகையால் (Divine right) இவைகளைத் திருச்சபை சரித்திரத் திலே திருப்பணியாளர்மேல் திணித்த கோட்பாடுகளின் (Ecclesias. tical Laws) காரணமாகவோ தனித் தலைவர்களின் அதிகாரத்தினூலோ மறுக்கமுடியாது. இக்கண்ணுேட்டத்தின்படி பொதுநிலையினரின் அருட் சாதன தேவைகளைத் திருஆட்சியாளரின் விருப்பத்திற்கும் இணக்கத் திற்கும் விட்டுவிடாது, திரு உரிமைகளை பூர்த்திசெய்யத் திருச்சபை யின் கோட்பாடுகள் மாற்றியமைக்கப்படவேண்டும். மேய்ப்பர்கள் மக்களின் உரிமையான கோரிக்கைகளுக்கு நன்கு செவிமடுக்கவேண்டும். உதாரணமாக கிராமங்களிலும் நகரத்தின் வெளிப்புறங்களிலும் பரந்து கிடக்கும் சிறிய கிறிஸ்தவ சமூகங்களும் தமக்குரிமையான சேவை களைப் பெறவேண்டும். பட்டணத் திருச்சபைகள் பலவிதமான அருட் சாதனங்களையும், சேவைகளையும். வழிபாடுகளையும் பெற்றுப்பருகி வளரும் அதேநேரத்தில் சிறிய கிறிஸ்தவ சமூகங்கள், தொகையில் சிறியனவென்றும் தூரத்தில் எட்டாதவைகளென்றும் காரணங்காட்டி, இறைவனின் வார்த்தையின்றி, வழிபாடின்றி, நற்கருணை உணவின்றி, சமூக உறவுமின்றி வாடி வதங்கவிடுவது அநீதி.
பொதுநிலையினர் உரிமைகள் மாத்திரமல்ல - கடமைகளும் பல உடையவர்களாயிருக்கின்றனர். கடமையும், உரிமையும் ஒரு நாண யத்தின் இருபக்கங்கள் அல்லது இருமுகங்கள். உழைக்கின்றவனுக்கே உண்ணவும் உரிமையுண்டு. அதேவிதத்தில் உரிமைகளை வாதாடி வாங் கினுல் போதாது. பொதுநிலையினர் திருச்சபையில் முக்கியமான கட மைகளையும் கொண்டிருக்கின்ருர்கள் என்பதை உணர்ந்து, முதிர்ச்சி யுடனும் பொறுப்புணர்ச்சியுடனும் செயற்படவேண்டும்.
கடந்த காலத்தில் திருஆட்சியமைப்பையே உருவாகக்கொண்ட திருச்சபை இயலில் (Hierarchology as Ecclesiology) பொதுநிலையினரின் இடம் ஆட்சியாளருக்கு அக்கமும், பக்கமும் நிற்பதிலேயே தங்கியிருந் வின் பணிசெய்யத் திருப்பணியாளர்கள் திருநிலைப்படுத்தப்பட்டிருக் கின்ருர்களென்றும், பொதுநிலையினர் திருநிலைப்படுத்தப்பட்ட பணியா Gitfair (Ordained Ministers-Bishops & Priests) uGaius Go) sy2roorg/2 or (Marginal) பங்கெடுக்கலாமென்றும் நம்பப்பட்டது. இதற்கிணங்க பொதுநிலை அப்போஸ்தலுத்துவர் (Lay apostles) ஆயர், குருக்களுக்கே உரித்தான பணியில் கையாட்களாகவும் கருவிகளாகவும் கணிக்கப்பட் டனர். பொதுநிலை அப்போஸ்தலத்துவம் பொலிந்த காலத்திலே (1940-1960) இவர்கள் ஆயர்-குருக்களின் கரங்களாகவும், பாதங் களாகவும் இருப்பதில் மேன்மைகொள்ள வேண்டுமென்று போதிக்கப் பட்டது.

...................... \\ 11///// ۔۔۔۔۔۔۔
ஆனல் 2ஆம் வத்தித்கான் சங்கம் இக்கொள்கையைத் தகர்த் தெறிகின்றது. பொதுநிலையினர் திருச்சபையினுள் இருப்பதற்கும், இயங்குவதற்கும் இன்னேர் பகுதியின் தயவும், தாராள மனதும் நிபந் தனையல்ல. தங்களுக்குரிமையான திருமுழுக்கு, உறுதிப்படுத்துதல், திருமணம் போன்ற அருட்சாதனங்களை அடித்தளமாகக் கொண்டிருக் கவும், இயங்கவும் அவர்களுக்கு உரிமையும் கடமையும் உண்டு. மேலும் கிறிஸ்துவின் இரட்சணியப்பணி திருச்சபை முழுவதன்மேலும் சுமத்தப்பட்டுள்ள ஒரு பொறுப்பு. இப்பொறுப்பை அல்லது அப்போஸ் தலிக்க கடமையை உறுதிப்படுத்தப்பட்டோரும், திருநிலைப்படுத்தப் பட்டோரும், இல்லறத்தோரும் துறவறத்தோரும் தமக்கேற்ற வடி வத்திலும் வட்டார்த்திலும் நிறைவேற்றக் கடமைப்பட்டிருக்கின்ற Götti (L. G. 32a, b).
சேவைகளைப் பொறுத்தமட்டில் மாத்திரமல்ல, திருச்சபையின் வாழ்விற்கு ஏதுவான சகல காரியங்களிலும் சுதந்திரத்தோடும், உரி மையோடும் கருத்துக்களைத் தெரிவிக்கவும், தவறுகளைக் கண்டிக்கவும், நன்மையானவற்றை முன்னுேக்கி எடுத்துச் செல்லவும் சொல்லவும் கடமைப்பட்டிருக்கின்றனர் (LG, 32). (திருச்சபையினுள்ளே பொறுப் புள்ளவர், பொறுப்பற்றவர் அல்லது முக்கியத்துவமுள்ளவர், முக்கி யத்துவமற்றவர் அல்லது உயர்ந்த புனிதர், தாழ்ந்த புனிதர் அல் உரிமை கூடியவர் குறைந்தவரென்று வகுப்புகள் கிடையாது.) წ), "ც" "
பொதுநிலையினர் தமக்குரிய இலக்கணத்தையும், இடத்தையும், உரிமையையும், சடமையையும் கண்டடையவும் நிறைவேற்றவும், திரு நிலைப்படுத்தப்பட்ட பணியாளர் வழிவிட்டு, ஒளிகொடுத்து உதவ வேண்டும் (L G. 33d). பொதுநிலையினர் திருச்சபையில் உண்மை யான உருவத்தையும் உரிமையான பங்கையும் எடுக்க ஆயர் குருக்களும் போதனையில் நின்றுவிடாது, சாதனையில் வரவேற்று வழி காட்டி, இடம்கொடுத்து நல்நம்பிக்கை காட்டிப் பொறுப்பைப் பகிர்ந்து
செய்யவேண்டியன பல.
2. பொதுநிலையினர் புதிய இறைமக்கள் என் ப தி ன் காரணமாகக் கிறிஸ்துவின் குருத்துவ, இறைவாக்கு, அரச பணிகளின் பங்காளிக SITT 5 Sui iš 56 sörgy GDTō. (Participants, in the Priestly, Propheti
and Royal Functions of Christ)
திருமுழுக்கின் வழியாகக் கிறிஸ்துவின் சாயலேப்பெற்ற ஒவ்வொரு வரும் கிறிஸ்து gu a ginair (pituallutai) (Messianic functions) பங்கு பெறுகின்றனர். கிறிஸ்து குருவாக இயங்கினர். பொதுநிஜயின

Page 8
حس سے 12 سے
ரெல்லோரும் அவரைப்போன்ற குருக்களல்ல. ஆனல் கிறிஸ்துவின் குருத்துவ பணியின் சாயல் பொதுநிலையினரைச் சாருகின்றது.
இறைவனுக்கும் மனிதனுக்குமிடையில் உறவை மீண்டெடுத்து, இறைவனை மனிதனுக்கு வெளிப்படுத்தவும், மனிதனின் தேவைகளை இறைவன்முன் வேண்டவும் கிறிஸ்து மத்தியஸ்த குருவாக இயங்கி ஞர். அதே வரிசையில் பொதுநிலையினர் தாம் பெற்ற இறைவார்த் தையையும் வரத்தையும் உலகிற்கு வழங்கவும் உலகின் தேவைகளை யும், பிரச்சனைகளையும் இறைவன்முன் சமர்ப்பித்து வேண்டவும், மத்தியஸ்த குருத்துவபணியை (Mediatory Priesthood) ஏற்றிருக்கின் றனர். இறைமக்கள் முழுவதும் ஒரே குருகுலம் என்பது அண்மையில் 2ஆம் வத்திக்கான் சங்கத்தின் பின் கண்டெடுக்கப்பட்ட ஒரு புதிய அம்சம் அல்ல. மாட்டின் லூதருடன் சேர்ந்தவர்கள் பணிக் குருத்து வத்தைத் தாக்கி இப்பொதுக் குருத்துவத்தைத் திரு ஆட்சிக்கெதிரான ஒரு பிரச்சாரத் தலைப்பாக (Anti-hierarchical banner) உயர்த்தியதன் காரணமாக, திருச்சபை பொதுநிலையினரின் பொதுக் குருத்துவத்தைப் பற்றிப் பேச முன்வரவில்லை. பிரச்சாரத் தலைப்பாகத் தூக்கியவர்க ளும் இத்தலைப்பின் உள்ளடக்கத்தை வளர்க்கவில்லை. ஆனல் இன்று திருச்சபை பொதுக் குருத்துவத்தைப் போரற்ற மனப்பான்மையுடன் (Non-polemic attitude) நோக்கும்பொழுது பொதுநிலையினரின் குருத் துவத்தின் தன்மையையும் பணியையும் கருத்துடன் வளரும் ஓர் அம்ச மாகவும் பணிக்குருத்துவத்துடன் அடித்தளத்தில் ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்டதுமாகக் கருதுகின்றது (L. G. 10b).
புனித இராயப்பர் ஆதிக் கிறிஸ்தவர்களைப் பார்த்து, "நீங்கள் ஞானப்பலி நிறைவேற்றும் குருத்துவத் திருக்கூட்டம் " (1 இரா. 2:5) என்றும், ' தேர்ந்தெடுக்கப்பட்ட இனம், அரச குருத்துவத் திருக் கூட்டம் " (1 இரா. 2:9) என்றும் கூறுவதை ஆதாரமாகக் கொண்டு இன்றைய திருச்சபை பொதுநிலையினரைக் குருத்துவ குலமென்றும், குருத்துவ பணிபுரிய உரிமையும், கடமையும் உள்ளோர் என்றும் கூறுவதை வெறும் ஆறுதல் பிார்த்தைகளாகவோ போதனை முழக்கங் களாகவோ எடுக்காது, கருத்து நிறைந்த உண்மையாகக் கருதி அதைச் செயல்படுத்த வழிவகுக்கவேண்டும்.
பொதுநிலையினர் தமது குருத்துவ தன்மையை வழிபாடு, அருட் சாதனம், திருப்பலி விருந்து இவைகளில் பங்கெடுப்பதற்கு ஆதார மான அடித்தளமாகவும், இறைவனுக்கும் உலகத்திற்குமிடையில் புரிய வேண்டிய இணைப்புப் பணியின் காரணமாகவும் உணரவேண்டும்.
 

}
- 1 ? -
அதேவிதமாகக் கிறிஸ்து இறைவாக்கினராக, உண்மைக்குச் சொல்லிலும் செயலிலும் சாட்சி பகர்த்தார் என்பதன் காரணமாக, பொதுநிலையினர் உண்மைக்காக-விசேடமாக மனிதனேங்பற்றி தேவ னல் வெளிப்படுத்தப்பட்ட உண்மைக்காக-சொல்லாலும் செயலாலும் சாட்சியம் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கின்றனர். மனத் துணிவு டன் உண்மையைப் பேசவும், அநீதியைக் கண்டிக்கவும், மனிதஉரிமை களுக்காகப் போராடவும் பொதுநிலையினர் தனியாகவும், குழுவாக வும் கடமைப்பட்டிருக்கின்றனர். ஆகவே அக்கிரமம் அநீதி அடக்கு, முறை எவ்விதத்திலும் எவ்விடத்திலும் தலைகாட்டினும், அவைகள் கிறிஸ்தவத்திற்குப் புறம்பான அரசியல் பொருளாதார சமூக பிரச் சினைகளென்று தவிர்த்து நடப்பது முறையல்ல. (ஜெரிக்கோ வீதியில் விழுந்தவனை விலத்திச்சென்ற மதகுரு போலாகின்ருேம்.)
கிறிஸ்து அரசனுக-புதிய இறையரசின் தலைவனக, செயற் பட்டார். வார்த்தையாலும் வாழ்வாலும் புதிய இறை அரசை அறிவித்து, அவ்வரசுக்குரிய அன்பு, நீதி, சாந்தி, இரக்கம், புதிய வாழ்வு இவைகளைத் தமது புதுமைகளினலும் உயிர்ப்பினலும் அடி யிட்டார். அவருடன் மரித்து புதிய வாழ்விற்குப் பிறந்த கிறிஸ்தவர் களும் ஒரு நல்ல அரசனைப்போல, அதாவது மக்கள் நலத்தையே, தலைமேற் சுமந்த கடனகக் கொண்டவர்களாக, வாழ்க்கையின் எல்லா வட்டாரங்களிலும் புதிய இறையரசின் பெறுமதிகளை (Values of the Kingdom) நிலைநாட்ட உழைக்கவேண்டும்.
3. பொதுநிலையினர் உலகத்தைச் சேர்ந்தவர்களாவும் உலகத்தில் ஈடுபட்டிருப்பவர்களாகவும் உலகத்தின் பொறுப்புடையவர்களாகவும் செயல்படவேண்டும் (Secularity is his specific character and responsibility)
திருச்சபை உலகத்திலும் உலகத்திற்காகவும் ஏற்படுத்த்ப்பட்டது என்று மேற்கூறிய தத்துவத்தின்படி கிறிஸ்தவர்கள் - சிறப்பாக முழுமையாக உலகிலே வாழும் பொதுநிலையினர்-உலகத்தையும் அதன் வெவ்வேறு அம்சங்களையும் மீட்கும் சேவையில் ஈடுபட்டிருக் கிருர்கள். உலகம் எனும் வார்த்தையை நாம் பலவிதத்தில் பாவம் எனும் வார்த்தையுடன் தவருக மாற்றி எடுத்துவிட்டோம்.
உலகம் பாவம்நிறைந்த சாத்தானின் இராச்சியம், குடும்பம் சுய அடக்கமற்ற மனிதர் சீவிக்கும் வழி, பாலுணர்ச்சிகள் இயற்கையின் அழிவு உணர்ச்சிகள், உலகை விட்டேஈடுவதும், குடும்பத்தைத் தவிர்ப் பதும், பாலுணர்ச்சிகளை ஒடுக்குவதும், மடத்திற்குள்ளே புகுவதும்இவைகளே (மனிக்கேயிசம் Manicheism) கிறிஸ்தவத்தின் இலட்சிய
iš

Page 9
----س--- 14 / س----
மென்முற்போல் குருக்கள்-துறவிகள் அல்லாதவர்களைப் பெலவீனம் நிறைந்த இரண்டாந்தர கிறிஸ்தவராகக் கருதினுேம், இதற்கிணங்கப் பொதுநிலையினரும் தாம் தரத்தில், பொறுப்பில், ஒழுக்கத்தில், பரித்தி யாகத்தில் குறைந்த இரண்டாந்தர கிறிஸ்தவர்களாகத் தம்மைக் கரு தினர். இது தவறு. எனவே இந்நிலை மாறவேண்டும்.
உலகம் நல்லது - இறைவனின் படைப்பு. குடுப்பம் நல்லதுஇறைவனின் சமூக அமைப்பு. பாலுணர்ச்சி தன்னும் நல்லது-மனித அன்பின் உயர்ந்த உணர்ச்சி, இவைகளே மறுப்பதிலும் தவிர்ப்பதி லும்தான் கிறிஸ்தவம் தங்கவில்லை. இவைகளை இறைவனின் இரட் சணிய திட்டத்திற் கேற்ப அமைப்பதிலும் ஒழுங்குபடுத்துவதிலும், இவைகளை மீட்டெடுத்து ' புதிய மனித குலத்தையும் புதிய மண்ணை யும் புதிய விண்ணையும் ' வளர்ப்பதிலும் தளர்ச்சியடையாது உழைப் பதிலும் தங்கியிருக்கிறது (G. S. 39b). இதற்கிணங்க உலகம், மனித சமூகம், குடும்பம், திருமணம், திருமண அன்பு இவைகளைப்பற்றியும் சமுக, அரசியல், பொருளாதார வாழ்வுபற்றியும் திருச்சபை முன்பொரு பொழுதும் இல்லாத முறையில் இன்று கற்பிக்கின்றது (G. S.). இவை களையெல்லாம் திருச்சபை இன்றைய உலகில் புரியவேண்டிய முக்கிய பணியாக உணரும்பொழுது பொதுநிலையினரின் பணி அவர்களுடைய சொந்த உலகத்தில் அதிகரிக்கின்றது. உலகமே அவர்களின் பணிக்களம், ஆகையால் இப்பணியைப் புரிவதில் இவர்கள் திருநிலைப்படுத்தப்பட்ட வர்களின் பதிலாளிகளாகவோ, பிரதிநிதிகளாகவோ அல்லது துணை வர்களாகவோ செயற்படாது தாங்களும் திருமுழுக்கினுலும் உறுதிப் படுத்துதலினலும் கிறிஸ்துவின் பணியை ஏற்ற முதிர்ச்சியான அங் கத்தவர்களென்ற மட்டில் தம் சொந்தப் பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட வேண்டும்.
இறையியலாளர் கார்ல் ரானர் (Karl Rahner) கண்ணுேட்டத்தில் பொதுநிலையினர் என்பது உலகின் வாழ்விலும் அமைப்பிலும் ஒருவனுக்கு இருந்துவரும் ஈடுபடுதல் அவனுடைய கிறிஸ்தவ சீவியத்திற்கு உருக் கொடுக்கின்றன என்பதா குமென்கின்ருர், One whose Christian experience and responsibilities are determined by his native involvement in the life and organisation of the world (MRT 78 1956, pp. 4-32)-
இக்கண்ணுேட்டம் டீற்றிக் பென்கொவ்வர் (Dietrich Bonhoeffer), போல் வான் பூறன் (Pan Wan Buren) இவர்களின் கருத்துடன் சேர்ந்தது.
 

---- 5 1 | سس--
உலகத்தையும் மனுக்குலத்தையும் மையமாகக்கொண்டு சேவை யில் சுற்றும் திருச்சபையின் பொதுநிலையினர் இனிமேல் ஸ்தாபன திருச்சபையையோ, குருகுலத்தையோ, பீடத்தையோ மாத்திரம் மையமாகக் கொண்டிருக்க முடியாது. திருவழிபாடு மையமாகவும் குருக்கள் தலைவர்களாகவும் இருந்தபொழுதிலும், பொதுநிலையினரின் முக்கிய பணி இவ்வுலகத்தையும் அதன் மனுக்குல வாழ் வை யு ம் கிறிஸ்தவ தத்துவங்களுடன் கட்டி எழுப்புவதே. பொன்கொவ்வர் கூறுகிருர் : பொதுநிலையினர் உலக காரியங்களில் ஈடுபடும்பொழுது அங்கே திருச்சபையின் பெயரைப் பாதுகாக்கவல்ல, ஆணுல் கிறிஸ்து வுடன் ஒன்றித்து விடுதலை தேடும் சகல மனிதர்களுக்காகவும்-சகல வாழ்க்கை வட்டாரங்களுக்காகவுமே செயல்படுகிருர்கள்,
4, பொதுநிலையினர் தமது சமூகத்தின் வளர்ச்சிக்காக உண்மையான
அருங்கொடைகளைப் பெற்றவர்கள்.
அருங்கொடைகள் தனியரின் நலனுக்காகத் ஒரு வ ரு க்கு (privately) அளிக்கப்படும் கொடையல்ல. ஆனல் சமூகத்தின் நல னுக்காக, சமூகத்தை வளர்ப்பதற்காக ஒருவருக்கு கொடுக்கப்பட்ட கொடை. இப்பேர்ப்பட்ட கொடைகள் ஆதித்திருச்சபையில் அதிக மாக இருந்தன. அக்கொடைகள் நிலைநிற்கும் / நிரந்தர சேவை களாகவும் (Services / Ministries) வளர்ந்தன. ஆனல் திருச்சபை யின் நீண்ட சரித்திரத்தில் இவைகள் திருநிலைப்படுத்தப்பட்டோரின் கொடைகளாக மாத்திரம் தவருகக் கருதப்பட்டன.
ஆனல் 2-ம் வத்திக்கான் சங்கம் இத்தவருன அபிப்பிராயத்தைத் திருத்தியது. ஆவியானவர் எல்லா நிலையிலுள்ள விசுவாசிகளுக்கும் தமது விருப்பும்போல் சிறப்பான அருங்கொடைகளை வழங்குகின்ருரென் றும், இக்கொடைகள் பொதுநிலையினர் பல்வேறு அலுவல்களையும் கடமைகளையும் மேற்கொள்ள தகுதியும் ஆர்வமும் அளிக்கின்றதென் றும் கற்பிக்கின்றது ( L. G. 12 b ). இக்கொடைகளை ஆயர், குருக் கள் இலேசாக நசுக்கிவிடாது உண்மையானவற்றைத் தேர்ந்து மனமார நன்றியுடன் வரவேற்று வளர்த்து பயன்படுத்த வேண்டும் (L.G. 12b,c; A.A. 3 c).
விசேடமாக திருநிலைப்படுத்தப்பட்டோர், துறவிகள் குறைந் தும் பணிகள் அதிகரித்தும் இருக்கும் இன்றைய நிலையில் பொதுநிலை யினரின் அருங்கொடைகளை விழிப்புடன் தேர்ந்தெடுத்து ஆர்வத்து டன் பயன்படுத்துவது அவசியம். இதற்கிணங்க பொது நிலையினர்

Page 10
பட 16 டி.
வெட்கம், தகுதியின்மை, கல்வித்தராதரம் இவைகளை ஒதுக்கி தாம் பெற்ற அருங்கொடைகளைச் சமூக வளர்ச்சிக்குப் பயன்படுத்தப் பல் வேறு பொறுப்புகளையும் துணிவுடன் கையேற்க வேண்டும். எல்லா வழிபாட்டிற்கும் எல்லா பங்கு வைபவங்களுக்கும், எல்லா மறை நிகழ்ச்சிகளுக்கும், எல்லா சமூக சம்பவங்களுக்கும் திருநிலைப்படுத்தப் பட்ட குரு அல்லது ஒரு துறவி இருக்க வேண்டும், இவர்களே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டுமென்ற கண்ணேட்டம் எம் மத்தி யிலிருந்து மறைய வேண்டும். மறை ஆசிரியர்கள், சமூகத் தலைவர்கள், செபத்தலைவர்கள், போதகர்கள், அபிவிருத்தித் தலைவர்கள், வாலிபர் இயக்குனர்.இப்படியாக அருங்கொடை பெற்றவர் அநேகர் எம் மத்தியில் செயற்பட வேண்டிய காலம் இது.
பொதுநிலையினரின் வாழ்வும் பணியும்
இப்படியாகப் பொதுநிலையினர் உரிமையும் கடமையும் கொண்ட முழு அங்கத்தவரென்றும், கிறிஸ்துவின் முப்பணியின் பங்காளிகளென் றும், அருங்கொடை பெற்று உலகிலே உரிமையுடன் செயற்படுகிற வர்களென்றும் 2-ம் வத்திக்கான் சங்கப் படிப்பினையில் வரைவிலக்க ணம் அமைக்கின்ருேம். இப்படிச் செய்வது பொதுநிலையினரின் அப் போஸ்தலத்துவம், திருப்பணிகள், ஆன்மவாழ்வு (Lay Apostolate Ministry, Spirituality) இவைகளில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும். அத்திருப்பங்களை இவ்விடம் விரிவாக ஆராய முடியாது. ஆகையால் இவைகளை விருத்தி செய்ய சுருங்கச் சிலவற்றைச் சுட்டிக்காட்டுவோம்.

பொதுநிலையினரின் அப்போஸ்தலத்துவம் (Lay Apostolate)
திருச்சபை தனது இரட்சணிய பணியை நடைமுறையில் நிறை வேற்ற செய்யும் அலுவல் அனைத்தும் அப்போஸ்தலத்துவம் எனப் படும். ஒரே இரட்சகர் தம் பணியை முழுத் திருச்சபீையிட்ம் ஒப் படைத்தார். இப்பணி மறைபரப்புதல், புனிதப்படுத்துதல், உலகை (!p(p GOLDulu ITá5 6@(upīši (5 LIGáš 35756) (evangelisation, sanctification, perfection of the temporal order) Gr6örsp/ LJâbGoupi Joyiboités பிரித் தெடுப்பினும் முழுப்பணியும் முழுத்திருச்சபையிடமும் ஒப்படைக்கப் பட்டுள்ளது.
திருச்சபைக்குள்ளே குறிக்கப்பட்ட ஒரு குழுவிடம் மாத்திரம் ஒப் படைக்கப்படவில்லை. உலகை மீட்கும் பணியாகிய திருச்சபையின் அலுவல் (அப்போஸ்தலத்துவம்) முழுவதையும் தாங்கள் மட் டுமே தனிமையில் செய்து முடிக்கத் தங்களைக் கிறிஸ்து நியமிக்க வில்லை என்று (திருநிலைப்பணியாளர்) அறிவர். (LG 30a)
ஆகவே ஒரே இரட்சணிய பணி முழுத்திருச்சபையின் அப்போஸ் தலத்துவமாக நடைமுறையில் அலுவல் காரணமாகப் பகிர்ந்து கொள் ளப்படுகின்றது.
கடந்த காலத்தில் திருப்பணியாளர்களிடம் நேராக ஒப்படைக் கப்பட்ட பணியிலே பங்கெடுப்பதே பொது நிலையினரின் அப்போஸ்த லத்துவம் ஆகக் கருதப்பட்டது. இது தவறு. கிறிஸ்துவின் இரட்சணிய பணி முழுத்திருச்சபையிடமும் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. இப் பணிக்கு எல்லாக் கிறிஸ்தவர்களும் திருமுழுக்கு, திடப்படுத்துதல் வழியாக-ஆண்டவரினல் அதிகாரத்துடன் நேராக அழைக்கப்படுகின் றனர் (L. G. 33b). பொது நிலையினரின் அப்போஸ்தலத்துவம் திரு ஆட்சி அமைப்பாளரின் அழைத்தலிலோ, அதிகாரத்திலோ அல்ல, ஆண்டவரின் அதிகாரத்திலே பிறக்கின்றது.
மேற்கூறிய தப்பபிப்பிராயத்தின் காரணமாக பொதுநிலையினரின் அப்போஸ்தலத்துவம் திருநிலைப்படுத்தப்பட்டோரின் அக்க பக்க பணி LiTS மாத்திரம் இருந்தது. 2-ம் உலக யுத்தத்தின்பின் ஐரோப்பாவில் 3 க மும்முரமாக எழுந்த சில பொதுநிலையினர் இயக்கங்களின் (Catholic

Page 11
qıfle, s@@ae@ayoungƆŋko ---ırısıų,9@
qırīqi@@ (A%R)(KụeT so 'dy) 1932-og) igolonilirmųjơiqıfle, șasowo ungƆŋso 1g orige? --ırısı-ışırsık,
199ựae ngog@iss urīC) ggg· **(qɔunųƆ jo uosss!W)(\sųųɔ yo uosss!W) (Kristusw KɛT) _que@geoasur prile se- perisirngoo-105 nego sog) çığı sögn --Tarī£7Ųooo'goorinarnųosso-adễடிegஅrேeரகு sognrico oo@@• 1,9±1,9 usposourī£(KųɔJeJos H. Jo od V)- குeழ)ெெqires gegajo urīg)ņko 史jkm"J egsbjpges gd* gg

- 19 -
Action) காரணமாகவும் 13-ம் சிங்கராயர் தொட்டு 12-ம் பத்தி நாதர் வரை படிப்படியாக முதிர்ச்சியடைந்த சிந்தனைகளினலும், பொதுநிலையினரின் அப்போஸ்தலத்துவம் 2-ம் வத்திக்கான் சங்கத்தில் ஒரு முக்கிய திருப்பத்தைக் கண்டிருக்கின்றது, திருநிலைப்படுத்தப்பட்ட வர் தம் நிலைக்கேற்ப திருச்சபையின் அப்போஸ்தலத்தில் ஒரு பணி யைப் புரிவதுபோல், பொதுநிலையினரும் தம் நிலைக்கேற்ப (Secularity) ஒரு பணியைப் புரிகின்றனர்,
போதிய திருநிலைப்படுத்தப்பட்ட பணியாளர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தலைவர்கள் அழைத்தாலும் அடக் கி ஞ லு ம் பொதுநிலையினர் தமக்கென்று ஒரு பணியைக் கடமையாகப் பெற் றிருக்கின்றனர். இப்பணியைச் செய்வதில் தங்களுக்குரிய திறனையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்துவர். ஆகையால் இவர்களின் சேவை
பீடத்தைச் சுற்றியும், கோவிலைச் சுற்றியும், பங்குக்குள்ளேயும், திரு.
வருட்சகதனங்களைப் பொறுத்ததாகவும் இருக்கவேண்டிய நிபந்தனை யில்லை. மாழுகக் குருக்கள் கன்னியர்கள் ஈடுபடாத பரந்த வாழ்க்கை வட்டாரங்களில் இவர்களின் சேவை மலர வேண்டும்.
கடந்த காலத்தில் மரியாயின் சேனை, கிறிஸ்தவ தொழிலாளர், மாணவர் இயக்கங்கள், புனித வின்சென்டிபோல் சபை இவைகளின் சேவை பங்கின் எல்லைகட்குள்ளே குருக்களின் ஏவுதலிலும் வழிநடத் தலிலும் தங்கி ஆக்கத்தன்மை (Creativity) துரிதுரிப்பு (Dynamism) இல்லாதவையாகவும் நடந்தன. ஆகையால் பொதுநிலையினரைப் பற் றியும் உலகம்-திருச்சபை தொடர்பு பற்றியும் மேற்கூறிய சிந்தனைக ளுக்கிணங்க பொது நிலையினரின் அப்போஸ்தலத்துவம் உலகையே பணித்தளமாகவும், பொதுநிலையினரின் ஆக்க வன்மையை (Initiatives( ஆதாரமாகவும் வைத்து பலவிதத்தில் மாற்றி அமைக்கப்பட வேண் டும்.

Page 12
5
பொதுநிலைத் திருப்பணி (Lay Ministry)
கடந்த காலத்தில் திருநிலைப்படுத்தப்பட்ட பணியாளர்களே (Ordained Ministers) திருச்சபையின் பணியாளர்களாகக் கருதப் பட்டனர். ஆயர், குருக்கள், (தியாக்கோன்) இவர்களே திருச்சபையில் நிலையான முழுமையான சேவையாளராகக் கருதப்பட்டு திருப்பணி யாளர் எல்லோரும் திருஆட்சி அமைப்பின் (Hierarchy) அங்கத்தவர் களாகக் கருதப்பட்டனர். ஆனல் இப்போது விவிலிய ஆராய்ச்சியின் அடிப்படையில் திருப்பணியாளரின் வரைவிலக்கணம் மாற்றி அமைக்கப் படுகின்றது. திருச்சபையில் நிலையான பகிரங்க சேவை புரிபவர் திருப் பணியாளர் ஆவர். இவர்கள் திருநிலைப்படுத்தப்பட்ட திருப்பணியாள ரென்றும் பொதுநிலைத் திருப்பணியாளரென்றும் பிரிக்கப்படுகின்றனர்.
திருநிலைப்படுத்தப்பட்ட திருப்பணியாளர் Sol Lugoofurrotfi (Ordained Ministers) (Ministers) பொதுநிலேத் திருப்பணியாளர்
(Lay Ministers)
2-ம் வத்திக்கான் சங்கம் ஆயர்களைப் பற்றி ஆராய்வதற்கு முன் **ஆண்டவர் கிறீஸ்து இறைமக்களை ஊட்டி வளர்ப்பதற்காகவும், என்றும் அவர்கள் பெருகுவதற்காகவும் தமது திருச்சபையிலே பல் வேறுபட்ட பணிகளை ஏற்படுத்தினர் ' (L. G. 18a) என்கின்றது. பொதுநிலைத்திருப்பணியாளர் (திருநிலைப்படுத்தப்படாத/non-ordained) பற்றிய பேச்சு சங்க ஏடுகளில் நேரடியாக இடம் பெருவிடினும், விவிலிய ஆராய்ச்சிக்கும், சங்கப் படிப்பினைக்கும் பிரமாணிக்கமாக 616triiga (Djib gaOspuSul 1656 (Post-Vatican Biblical Theology) GLuft நி. தி. பற்றிய விளக்கம் தெளிவாகிறது. பொது நிலையினர் பொது நி?லயினராகவே உலகத்தில் இருந்துகொண்டு, தமது திருமுழுக்கு திடப்படுத்துதல் அருட்சாதனங்களின் வல்லமையில் திருச்சபையின் பேரில் பகிரங்கமாகவும் நிலையாகவும் (Stable) கையேற்கும்பணி பொதுநிலைத் திருப்பணியாகும். இத்திருப்பணிக்குத் திருநிலைப்படுத்தல் சாரமாகவோ நிபந்தனையாகவோ egy65)LDI JfTgül.
வங்கால திருச்சபையில் கிறிஸ்தவ சமூகங்கள் ஒவ்வொன்றும் திருநிலைப்படுத்தப்பட்ட திருப்பணியாளர்களை மாத்திரம் தனித்தலை

مسیح۔ 231 --سمت۔
வர்களாகக் கொண்டு இயங்க முடியாது. எல்லாச் சமூகங்களிலும் அருங்கொடைகள் (Charisms) வரவேற்கப்பட்டு, சமூகத்திற்கு இன்றி யமையாத சில, திருப்பணியாக (Ministry) ஏற்றுக்கொள்ளப்படும். பொதுநிலையினர்-ஆண்களும் பெண்களும்-சமூகத் தலைவர்களாகவும் (Community Leaders) LD60so g5thurstá56th (Lay Catechists) செபத் தலைவர்களாகவும் (Prayer Leaders), சுகாதார, சமூக, தொழில் சேவை யாளராகவும் (Sanitary, Social, Work Leaders) திருப்பணி ஏற்பார்கள். இவ்வமைப்பில் குருக்கள் வட்டாரத் தலைவர்களாகவும் (Regional Leaders), கூட்டமைப்பாளர்களாகவும் (Co-ordirators), திருப்பலிவிருந் தின் தலைவர்களாகவும் (Eucharistic Presidents) திருப்பணியேற்பர்.

Page 13
6
பொது நிலையினரின் ஆன்மீகம் (Lay Spirituality)
திருச்சபையில் புனிதமடைய அனைவருக்கும் ஒரே ஆழமான அழைப்பிருக்கிறது (L .ே 39, 40). புனிதத்தின் சாரம் அ ன் பி ன் நிறைவை நாடுவதாகும். இதை நாடுவதிலும், சீவிப்பதிலும் வெவ் Gagi Guyauyajor G. BibQat is sistjayaoud, air (Evangelical Counsels) என வழங்கப்பெறும் நெறிகளைக் கடைப்பிடிப்பது ஒரு வழி (Reli. gious Life). ஆனல் இதுதான் இலட்சிய வழி அல்லது இதுதான் முதற்தர புனிதத்துவத்தின் வழி என்ருற்போல் பொது நிலையினரும் இவ்வழியைக் குறுகிய முறையில் (Mini-form) பின்பற்றுவதே அவர் களின் ஒரே ஆன்மீகம் என்பது தவறு. குருக்களோ துறவிகளோ 5Logi gairl is alyssaht (Priestly Spirituality, Monastic Spirituality) பொதுநிலையினர்மீது எவ்விதத்திலாவது திணித்தலாகாது. பொது நிலையினரும் அவ்வழிகளைத் தம் வழிகளாக எற்பதும் தவறு.
SfSaigo gaitlis 5th (Christian Spirituality) 6Tailoss.jSá) play கத்தை தங்கள் வாழ்க்கை வட்டாரமாகக் கொண்ட பொதுநிலையினர் மத்தியில் கருத்தும் பொருத்தமுமுள்ளதாக அவதாரப்படுத்தப்படவேண் டும், (incarnate) என்பது ஆர்ாய்ந்து படிக்க வேண்டிய தொன்ருகும்.
பொதுநிலையினரின் ஆன்மீகம் இறைவார்த்தை, திருவருட்சாத னம், திருவழிபாடு இவைகளை இறைவனுடன் ஒன்றிப்பதற்கும் தம்மை ஊட்டி வளர்ப்பதற்கும் இன்றியமையாத ஊற்றுக்களாகக் கொண்டிருப் பினும் அவர்கள் குடும்பத்திலும், சமுதாயத்திலும் வகிக்கும் நிலையும், பொறுப்பும், பணியும் அவர்களின் ஆன்மீக உருவத்தை நிர்ணயிக் கும். தங்கள் வாழ்க்கை வட்டாரங்களிலே கிறிஸ்தவ தத்துவங்களைக் கடைப்பிடிப்பதிலும், கிறிஸ்தவ அன்பை வளர்ப்பதிலும் இவர்கள் ஆன்மீக வளர்ச்சி இன்றியமையாதது.
இறைவன் கிறிஸ்துவிலே உலகிற்குக் காட்டிய தன்னலமற்ற அன்பை தம் சேவையில் எடுத்துக்காட்டவும், இறைவன் சித்தத் தையும் தத்துவத்தையும் தம் வாழ்க்கை நிலைகள் அனைத்திலும் கடைப்பிடிப்பதே பொதுநிலையினரின் ஆன்மீகமென சங்கம் s0-6avoTrfAöğ5/6R?6öv/pğI (LGʻ. 41g).
ஆகையால் பொதுநிலையினரின் ஆன்மீக ஆழத்தை அவர்கள் குருத்துவ துறவற ஆன்மீகத்தை எவ்வளவு பிரதிபலிக்கிருர்களென் பதை வைத்துக் கணக்கிட முடியாது. அவனவன் தன் உலகில்
 

--سے 338 ) حسی
குடும்பம், தொழில், சமுதாயம்) எவ்வளவிற்கு கிறிஸ்தவ அன்பை யும், தத்துவங்களையும் கடைப்பிடிக்கின்றன் என்பதே ஆன்மீக அளவு கோலாகும். வருங்காலத் திருச்சபை
திருச்சபை தன் நோக்கிற்கிணங்க வருங்கால உலகின் இரட் சணிய குறியாகவும், சேவையாளனுகவும் (Sign & Servant of Salvation) பணிபுரிய வேண்டுமாயின் திருச்சபையினுள்ளே திருநிலைப்படுத்தப் பட்ட தலைவர்களும் ஏனைய பொதுநிலையினரும் தங்கள் இடத்தையும், பணியையும் நன்குணர வேண்டும். பெரும்பான்மையான பொதுநிலை யினரின் வரைவிலக்கணத்தை சிறுபான்மையான குருகுலத்தின் தொடர் பிலே (in relation to clergy) தேடும் காலம் மலையேறி விட்டது. பொதுநிலையினர் திருச்சபையில் உரிமைகளும், கடமைகளும் கொண்ட முழுமையான அங்கத்தவர்கள். அவர்கள் கிறீஸ்து இரட்சகரின் குருத்துவ இறைவாக்கு அரச பணிகளில் பங்கெடுப்பவர்கள். அவர் களுக்குகந்த உண்மையான அருங்கொடைகள் வழங்கப்பட்டிருக்கின் றன. உலகமும் உலகத்தின் அமைப்புகளும் இவர்களுக்குரிய வாழ்க்கை வட்டாரமும் பணிக்களமுமாகும். இந்த விளக்கத்தில் இவர்களின் அப்போஸ்தல சேவை, திருப்பணி, ஆன்மீகம் அனைத்தும் ஆராயப் பட வேண்டும். எவ்வளவிற்கு இவைகளை ஆராய்ந்து வழிவகுக்கிருே மோ அவ்வளவிற்குத்தான் திருச்சபை உலகிற்கு பொருத்தமான இரட் சணிய பணி புரிய முடியும்,
"தனது வரைவிலக்கணத்திற்கு ஏற்றதாகவும், திருஆட்சிஅமைப் பாளருடன் கூடி பணிபுரியக் கூடியதாகவுமுள்ள ஒரு பொது நிலை யினர் கூட்டம் இல்லாவிட்டால். திருச்சபை உண்மை யாக வே வேரூன்றவில்லை-முழுவாழ்வைக் கொள்ளவுமில்லை. - மனிதர் நடுவே கிறீஸ்துவின் சின்னமாகவுமில்லை." (A. G. 21)
குறிப்பு: 2ம் வத்திக்கான் சங்க ஏடுகளுக்கான குறியீடுகள் L, C, திருச்சபை G. S. இன்றைய உலகில் திருச்சபை A. G. திருச்சபையின் மறைபரப்புப் பணி A. A. பொதுநிலையினரின் அப்போஸ்தலத்துவம்

Page 14

பொதுநிலையினரின் முதிர்ச்சி
LJož5th உட்புகுமுன்
1. திருச்சபையின் மறுமலர்ச்சியில் 2
2. பொதுநிலையினர் பொருளை மீண்டெடுக்க 4.
3. புதிய வரைவிலக்கணம் to a 8
4. அப்போஸ்தலத்துவம் 7
5. பொதுநிலைத் திருப்பணி 20
6. பொது நிலையினரின் ஆன்மீகம் 22
அட்டைப்பட விளக்கம்
ൈ'g'്യ്","g":"
ஆழமாக வேரூன்றி, பரந்து விரிந்த கிளைகளுடன் செழித்து வள ரும் மரம், முதிர்ச்சியடையும்பொழுது, வானத்துப்பறவைகளுக்குப் புகலிடமாக அமைகின்றது. அதேபோல, திருச்சபையில் பொதுநிலை யினர் தமக்குரிய உரிமைகளுடன் வளர்ந்து, வாழ்ந்து உலகில் உயி ருள்ள விருட்சம்போல முதிர்ச்சியடைந்து, அமைதி தேடும் மானி டர்க்கு அடைக்கலமாக அமையவேண்டும்.

Page 15
そ
C. AMMMSAJAS S SJSYY S SAsMSAJ
* s
Jo ခွံ့ ဎွိ ဇိုး ၂စဧ။်
லே 3.
ཀ་ 罹
-50

Fምዌማmer في مطعمحسن حظه معه جموعاصمة. holic Press, Jafa
லங்கை)
ந்தியா)