கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பொது வாழ்வில் ஐம்பது ஆண்டுகள்

Page 1
பொது
ஐம்பது ஆ
கொல்வின் ஆ
ಕಿ
22.5.1982ல் கொழும்பு நவ
கெளரவிப்பு விழாவி

வாழ்வில்
ஆண்டுகள்
ஆர். டி. சில்வா
ரங்கல மண்டபத்தில் நிகழ்ந்த ல் நிகழ்த்திய உரை

Page 2

<うr ; )بنی Arაზე
منحصہ سچMیخ ک6Y
பொது வாழ்வில் ஐம்பது ஆண்டுகள்
பொது வாழ்வில் ஐம்பது ஆண்டுகளைப் பூர்த்தி செய்த ஒருவரை கெளரவிக்கும் இதுபோன்ற கூட்டத்தில் பங்குகொள்வது கிடைத்தற் கரிய பெரும் பேருகும். என்னை கெளரவித்தமைக்காக நான் எனது இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இச் சந் தர்ப்பத்தில் சனக்களிக்கப்படும் கெளரவத்தினை பெரிதும் மதிக்கக் கூடிய ஒருவர் இன்றை தினம் இங்கில்லாதது குறித்து நான் வருந்து கிறேன். அவள் இன்று உயிருடன் இருந்தால் பெருமையுடனும், பெரு மகிழ்ச்சியுடனும் உங்களை அரவணைத்து அகமகிழ்வாள்.
ஐம்பது ஆண்டுகள் என்பது எரு மனிதனின் வாழ்வில் மட்டுமல்ல, தேசத்தின் வரலாற்றிலும் மிகவும் குறிப்பிடத்தக்க காலகட்டமாகும். பொது வாழ்க்கையில் தொடர்ச்சியாக ஐம்பது ஆண்டுகள் இருக்கும் ஒருவர் இப்படியான சந்தர்ப்பத்தில், கடந்து சென்ற வருடங்களை பின் ணுேக்கிப் பார்ப்பதுடன் எதிர்காலத்தையும் உற்று நோக்குவது அவசிய மாகிறது.
அவசிய அழைப்பின் மீதோ அன்றி தீர்க்கதரிசனத்தின் அடிப்படை யிலோ அல்லாது என்னைப்போல் வெளி நாட்டில் கல்வியை முடித்துக் கொண்டு நாடு திரும்பி, 25 வயதில் எவரும் அரசியலுக்கு வந்ததில்லை. இப்போது எனக்கு 75 வயத்ாகிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே சுதந்திரமான உலகில் மனிதன் நல் வாழ்வு வாழ வேண்டு மென்ற தீர்க்கதரிசனம் என்னை அரசியலுக்கு உந்தி இழுத்தது.
மார்க்ஸிய அரசியல் முறையைப் பின்பற்றும் எம்போன்றவர் களுக்கு அந்த தீர்க்கதரிசனம் மிக்க சித்தாந்தம் உற்சாகத்தை அளிக் கிறது. எமது நாட்டின் சூழ்நிலைக்கும், மக்களின் வாழ்க்கை முறைக்கும் ஏற்ப நாம் அந்தசிந்தாந்தத்தை 1935 ம் ஆண்டே வெளிப்படுத்தி யுள்ளளோம். லங்கா சமசமாஜக் கட்சியை நாம் உருவாக்கிய சமயத் தில் கட்சியின் அடிப்படை இலட்சியமாகவும், நோக்கமாகவும் நாம் இச் சித்தாந்தத்தையே அறிவித்தோம். அவையாவன:
1. பூரண தேசிய சுதந்திரத்தை அடைதல்.
2. உற்பத்தி, விநியோகம், பண்டமாற்றம் ஆகியவற்றை தேசிய
மய அடிப்படையில் அமைத்தல்,

Page 3
3. இன, வர்க்கம், சாதி, ஆண், பெண் என்ற பாகுபாடற்ற சுதந்
திர சமுதாயமொன்றைக் கட்டியெழுப்புதல்.
மேற் கூறிய இலட்சியங்கள் இலங்கையில் சமதர்ம சமுதாயமொன் றுக்கு அத்திவாரம் இட துணை செய்யும் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள்.
கட்சியின் முதலாவது இலட்சியத்தை நாம் மக்கள் முன் வைத்த அந்த காலகட்டத்தைப் பின்னுேக்கிப் பார்க்கிறேன். நமது நாட்டில் அது வரை எந்த அரசியல் இயக்கமும் அப்படியான இலட்சியத்தை மக் கள் முன்பு வைக்கவில்லை. இக் கொள்கையை அடைவதற்கு எங்கள் மீதும், மக்கள் மீதும் வைத்திருந்த ஒப்பற்ற நம்பிக்கையை அறிந்து, நாங்கள் அதிசயிக்கத் தக்க பெருமிதமடைந்தோம். வரலாற்றிலேயே வல்லமை படைத்த சாம்ராஜ்ஜியமே அந்த அடிப்படை இலட்சியத்தைக் கண்டு அஞ்சியது. நாம் நம்பிக்கையுடன் அக்கொள்கையை முன் னெடுத்துச் சென்ருேம். அக்கால சட்டத்தில் காலனித்துவ உலகம் முழுவதிலும் ஏகாதிபத்தியத்திலிருந்து விடுதலை பெரும் தேசியப் போராட்டங்கள் தோன்றி இருந்தன. அப்போராட்ட இயக்கங்க ளுடன் நாமும் எம்மை இணைத்துக்கொண்டோம். இதன் காரண மாகவே நாம் எமது ஆயுள் காலத்திலேயே அந்த விடுதலையைக் காண முடிந்தது.
1972ம் ஆண்டு மே மாதம் 22ம் திகதி இலங்கை மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபை சுதந்திர, இறைமை கொண்ட புதிய அரசியல் சட்டத்தை ஏற்று, பிரகடனப்படுத்தியது அரசியல் சட்ட விவகார அமைச்சர் என்ற முறையில் நான் புதிய அரசியல் சட் டத்தை நடைமுறைப்படுத்தும் பணியினை நிறைவேற்றிவைத்தேன். அந்த நாள் எனக்கும் எனது சகாக்களுக்கும் பெருமைக்குரிய நாளாகும்.
இந்த வைபவத்தினை ஒழுங்கு செய்தவர்கள் இன்றைய தினத்தை யும், இந்த இடத்தையும் தேர்ந்தெடுத்தமைக்காக நான் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். 1972ம் ஆண்டின் அரசியல் சட்டம் அங்கீகரிக் கப்பட்ட பத்தாவது ஆண்டு நிறைவு நாள் இன்ருகும். அதுவும் அச் சட்டம் பிரகடனப் படுத்தப்பட்ட இந்த நவரங்கல மண்டபத்திலே யே நாம் கூடியிருக்கிருேம்.
நமது வரலாற்றில் அந்த அரசியல் சட்டம் கொஞ்சக்காலமே அமு லில் இருந்தது. தற்போதய அரசாங்கம் அதனை அகற்றிவிட்டு, வேருெரு அரசியல் சட்டத்தை அதற்குப்பதிலாக நிறைவேற்றியுள்ளது. 1972ம் ஆண்டின் அரசியல் சட்டம் உறுதிப்படுத்திய பாராளுமன்ற
is
2

மேலாதிக்கம், 1978ம் ஆண்டின் அரசியல் சட்டத்தின் கீழ் இடமாற்றம் செய்யப்பட்டபோதிலும், அச்சட்டம் உறுதிப்படுத்திய மக்களின் இறைமையை மாற்ற முடியவில்லை. நாம் இப்போதும் தன்னதிக்கம் கொண்ட சுதந்திர நாடாகவே இருக்கிருேம். மக்களிடையே இறைமை இருக்கிறது.
லங்கா சமசமாஜக் கட்சியின் முதல் அடிப்படை இலட்சியமான தேசிய சுதந்திரத்தை நாம் பெற்றுள்ள போதிலும், இரண்டாவது அடிப் படை இலட்சியத்தில் வெற்றி ஈட்ட முடியவில்லை. நமது நாட்டில் சோஷலிஸத்தை அதிகாரத்திற்கு கொண்டுவரும் முயற்சிகளில் நாம் தோல்வியே கண்டிருக்கிருேம். இத்தோல்விக்கு நான் இரண்டு விஷயங் களைக் குறிப்பிடவிரும்புகிறேன். நமது முயற்சிக் குறைவினல் இந்த நிலை ஏற்படவில்லை. நாம் இக் கொள்கையை நிலை நாட்ட ஒய்வு ஒளி வின்றி வருடக் கணக்கில் போராடியிருக்கிருேம். சில வெற்றிகளையும் ஈட்டிருக்கிருேம்,
நாம் சோஷலிஸத்திற்காக போராட்டம் தொடங்கிய காலத்தில் அந்த தத்துவார்த்தம் பற்றி மக்கள் அறிந்திருக்கவில்லை. இப்போது முதலாளிதுவத்திற்கு மாற்றக சோஷலிஸம் என்ற கொள்கை ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. விஞ்ஞான சோஷலிஸமே மார்க்ஸிஸம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது என்பதையும் இப்போது மக்கள் அறிவார்கள். சோஷலிஸத்தை நிலை நிறுத்தும் போராட்டத்தின் விளை வாகவே நமது சமகாலத்து பொதுத்துறை பொருளாதாரம் அமைந் துள்ளது. முதலாளித்துவ அமைப்பு முறைக்கும் சோஷலிஸத்திற்கான அத்திவாரமாகவே பொதுத்துறை உருவாயிற்று.
சோஷலிஸத்தின் பெயரால் மேற்கொள்ளப்பட்ட அரைகுறை முயற்சிகளைவிட, நமது நாட்டில் சோஷலிஸத்தை அதிகரத்திற்குக் கொண்டுவர முடியாமல் போனதற்கு உண்மைக்காரணம் வேறு உண்டு. சுதந்திர இலங்கையில் மக்களின் கவனத்தை சோஷலிஸத்திலிருந்து திசை திருப்ப முதலாலித்துவம் வேறு வழியினைக் கண்டிருந்தது. அர சாங்க சமூக நலத்திட்டங்களே அதுவாகும்
1953 ம் ஆண்டின் ஆகஸ்ட் ஹர்த்தால், 1956ம் ஆண்டின் தேர்தல் சாதனை, 1970ம் ஆண்டின் தேர்தல் கிளர்ச்சி, 1972ம் ஆண்டின் நிலச் சீர்திருத்தம், 1975ம் ஆண்டின் அந்நியர் கம்பெனித் தோட்டங்கள் தேசியமயம்போன்ற மக்களின் தீவிரவாதக் கிளர்ச்சியை முனை மழுங் கச் செய்ய இலங்கை முதலாளித்துவம் இந்த சமூக நலத் திட்டங்களை யே கையாண்டன. இதற்காக முதலாளித்துவம் அதிக விலை கொடுக்க வேண்டியதாயிற்று. சோஷலிஸம் அதிகாரத்திற்கு வருவதை தடுக்க
3 لا

Page 4
இலங்கை முதலாலித்துவம் இலவசக் கல்வி, இலவச மருந்து, இலவச சுகாதார வேவை இலவச அரிசி, மான்ய ரீதியிலான அத்தியாவசிய உணவுப் பண்டங்கள் ஆகியவற்றை வழங்கி மக்களின் கவனத்தை திசை திருப்பின.
சமசமாஜிகள் இத்தகைய சூழ்நிலையைத் தங்களது அரசியல் போராட்டங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டனர். சமூக நலக் கோரிக்கைகளை மேலும் வலுப்படுத்தினர். இதற்குத் தேவைப்படும் பணத்தை பணக்காரர்களிடமிருந்தே பிழிந்தெடுக்க வேண்டும். பணக் காரர்களிடம் பெற்று ஏழைகளுக்கு செலவிட வேண்டும் என்பதனை வலியுறுத்தினர், சாதாரண பாமர மக்கள், வர்க்கப் போராட்டத்தினை விளங்கிக்கொள்ள இது ஏதுவாக அமைந்தது.
சமசமாஜக் கட்சியின் ஆரம்பத்தின்போது நாம் விடுத்த கோரிக்கை களுக்கு அமையவே இலங்கையில் சமூக நலத்திட்டங்கள் அமுலாக்கப் பட்டன என்பதை என்னுல் அச்சமின்றிக் கூற முடியும்,
\சமசமாஜக் கட்சியின் முதல் தலைவனுக நான் இருந்த நாட்களை பெருமையுடன் நினைவு கூறுகிறேன். யுத்தகாலத்தில் அப் பதவியை கட்சி ஒழித்தது. அதுவரை நான் அப் பதவியை வகித்துவந்தேன். இன்று மறுபடியும் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்று, அதன் பணி களையும், நோக்கங்களையும் நிறைவேற்றும் பொறுப்பை மிகத் தாழ்மை யுடன் ஏற்றிருக்கிறேன். எமது இயக்கத்தின் தந்தையும், நெருக்கடி யான அந்த ஆரம்பகாலத்தில் கட்சியை வழிநடத்திய வருமான அமரர் திரு. பிலிப் குணவர்தனவுக்குப் பின்னர் நான் இப்பெரிய பொறுப்பினை ஏற்க வேண்டியிருந்தது. திரு. பிலிப் குணவர்தன போராட்ட உணர் வும், ஆவேசப் பேச்சாற்றலும் நிறைந்தவர். அவரது பேச்சுக்கள் அச்ச மின்றி போராடத் தூண்டின.
பிலிப் குணவர்தனவை அடுத்து என். எம். பொறுப்பேற்று வழி நடத்தினர். அவரது புரட்சிகர அணுகு முறையும், போராட்ட உணர் வும் மகத்தானவை. போராட்டத்துடன் அமைப்பு வேலைகளையும், நிரு வாகத்தையும் அவர் திறம்படச் செய்தார். நவ இலங்கையின் வர லாற்றில் பெரும் பகுதியை அவர் பிடித்துக்கொண்டார். அவரது மரணத்தின்போது மக்கள் பட்ட துயரமும், செலுத்திய மரியாதையும் அண்மைக்காலத்தில் எந்த இலங்கையருக்கும் கிடைக்கவில்லை,
எமது காலத்தில் உருவான மக்கள் எழுச்சியின் முக்கிய அம்சங்களை விளக்கிய நாள் 1971 ஏப்ரல் கிளர்ச்சி பற்றி தவிர்த்துக்கொண்டுள்ளேன். நான் வேண்டுமென்றே, நல்ல காரணங்களுக்காவே அப்படிச் செய் தேன். 1971 ஏப்ரல் பயங்கரவாதக் கிளர்ச்சி இலங்கையில் மக்களின்
4
t

வெகு ஜன இயக்கத்தை மேலும் உயர்த்தும் நோக்கம் கொண்டதல்ல, மாருக, 1970 ம் ஆண்டு பூரீ லங்கா, சமசமாஜ, கம்யூனிஸ்ட் ஐக்கிய முன்னணியை ஆட்சிக்குக் கொண்டுவந்த தீவிரவாத மக்கள் எழுச்சியை முனை மழுங்கச் செய்து, முடமாக்கும் நோக்கம் கொண்டதாகும். அது பாட்டாளி வர்க்கத்தின் எழுச்சியல்ல.
சுய பாஷை கற்ற, விரக்தியடைந்த இளைஞர்கள் கண் மூடித்தன மாக, திட்டமெதுவுமின்றி, நோக்கமும் இலட்சியமும் இன்றி மேற் கொண்ட தற்கொலை நடவடிக்கையாகும். இதனை அக் கிளர்ச்சிக்குத் தூபமிட்ட போலித் தலைவர்களே பின்னர் பகிரங்கமாக ஏற்றுக்கொண் டுள்ளனர். கிளர்ச்சிக்கு வாய்ப்பான சூழ்நிலையோ அன்றி அறிகுறியோ அக்காலகட்டத்தில் இருக்கவில்லை என்பதை அவர்கள் ஏற்றுக்கொண் டுள்ளார்கள். நான் இத்தகைய தற்கொலைக்கொப்பான நடவடிக்கை களை அங்கீகரிக்கமாட்டேன். பொறுப்பற்றவர்களின் செயல்களினல் எண்ணற்ற நமது இளங்காளைகள் தங்கள் வாழ்க்கையை பலியிட்டுக் கொண்டார்கள். இது எமது நாட்டு புரட்சி இயக்கத்தையே பின் தள்ளி விட்டது. இந்த நிலையில் இருந்து நாம் இன்னும் விடுபடவில்லை.
இலங்கையில் வளர்ந்துவந்த தீவிரவாதத்தை முறியடிக்க எவ்வாறு முதலாளித்துவம் சமூகநலத் திட்டங்களை அறிமுகப்படுத்தியது என்பது குறித்து நான் முன்பே விளக்கினேன். இத்திட்டத்தினுல் ஏற்பட்ட செலவு இலங்கை முதலாளித்துவத்தினுல் செலுத்த முடியாத பரி மாணத்தை விரைவில் சென்றடைந்தது. யுத்தத்தின் பின்னர் உலகில் தென்பட்ட சுபீட்ச அலைகள் ஒயத்தொடங்கின. யுத்தம் முடிந்த 25 ஆண்டுகளின் பின்னர் இந்த சுபீட்ச நிலை ஈடுசெய்ய முடியாதளவு சரிந்துவிட்டது. .
இதனல் எமது பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கத்திலிருந்து மீளும் சக்தி இலங்கை முதலாளித்துவத்திடம் இருக்கவில்லை. முதலா ளித்துவம் அறிமுகப்படுத்திய சமூகநலத் திட்டங்களை முதலாளித்துவ மே வாபஸ் பெற வேண்டியதாயிற்று. 1977 ம் ஆண்டு முதல் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அதனைத்தான் செய்துவருகிறது. இந்த உண்மையை நாம் அவதானித்துக்கொண்டுதான் இருக்கிருேம்.
உலக முதலாளித்துவத்தில் படிந்துவரும் பொருளாதார அமுக்கத் தின் எதிரொலி நமது அபிவிருத்தி குன்றிய பொருளாதாரத்திலும் பாதிக்கிறது. பொருளாதார மந்த நிலையும், கட்டுப்பாடற்ற பண வீக் கமும் முதலாளித்துவ பொருளாதாரக் கட்டுக்கோப்பை தகர்த்துக் கொண்டிருக்கின்றன. வலுவான, அபிவிருத்தியடைந்த முதலாளித்
5

Page 5
துவ நாடுகள் இந்த சூழ்நிலைக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் தத்தளிக் கின்றன
இலங்கையில் இன்று நிலவும் உண்மை நிலையின் அடிப்படையை நான் கோடிட்டுக் காண்பித்தேன். பழைய நிலைமை மாற்றப்பட்டு அடிப்படைப் பொருளாதாரப் பிரச்சினைகள் மக்கள் முன்பு வைக்கப்பட் டுள்ளன. ஐம்பது ஆண்டுகளில் முதற்தடவையாக முதலாளித்துவத் திற்கும், சோஷலிஸத்திற்கும் இடையிலான பிரச்சினைகள் தொடர்ச்சி யாக மேலோங்கியுள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளாக வேறுவித கொள்கையை பின்பற்றியவர்கள் கூட இன்று முதற் தடவையாக தங்களது கொள்கை தோல்வியடைவதை உணர்கிருர்கள். நமது நாட் டில் சோஷலிஸத்தை ஆட்சிக்கு கொண்டுவரும் முதல் வாய்ப்பு இப் போது உருவாகியுள்ளது.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக, சோஷலிஸத்தை நிலைநாட்ட நாம் மேற்கொண்ட பணியின் சாயல் இப் போது தெளிவாகியுள்ளது. இலங்கையின் மிகப் பழைய அரசியல் கட்சி யான சமசமாஜக் கட்சிக்கு, அது பெற்றுள்ள ஆழ்ந்த அனுபவங்களின் அடிப்படையில், புதிதாக உருவாகியுள்ள சூழ்நிலையில் மிக முக்கிய பங்கு ஏற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. சூழ்நிலையை அவதா னித்து, சவாலை ஏற்று, வாய்ப்பினை பயன்படுத்த வேண்டிய பொறுப்பு நான் தலைமைதாங்கும் சமசமாஜக் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.
நான் எனதுரையை முடிக்கு முன்னர் 1935ம் ஆண்டு உருவாக்கப் பட்ட லங்கா சமசமாஜக் கட்சியின் மூன்ருவது அடிப்படை இலட்சிய மான “இன, வர்க்கம், சாதி, ஆண், பெண் என்ற பாகுபாடற்ற சுதந் திர சமுதாயமொன்றைக் கட்டியெழுப்புதல்' என்ற விஷயம் குறித் துக் குறிப்பிட விரும்புகிறேன் சோஷலிஸ் சமுதாயமொன்றில் தான் இந்த இலட்சியம் பூரணத்துவமடையும். அதற்காக அந்த சமுதாயம் உருவாகும் வரை காத்திருப்போம் என்று நாம் சும்மாயிருக்க முடியாது. நாம் வாழும் இந்த சமுதாயத்துக்குள்ளேயே இதற்கான போராட்டத்தை நாம் மேற்கொள்ள வேண்டும். ஏகாதிபத்திய, முதலாலித்துவ எதிர்ப்புப் போராட்டம் போல் இப் போராட்டமும் சக்திவாய்ந்ததாக
இருக்கவேண்டும், AG
சமசமாஜக் கட்சியின் தலைமையில் மக்கள் அரசியல், சமூக, மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வுகளைப் பெற்றிருக்கிருர்கள் இந்த உரி. மைகளை வென்றெடுக்க போராடவேண்டும் என்பதையும் அவர்கள் உணர்ந்திருக்கிருர்கள். இதற்கு தொழிற் சங்க இயக்கம் நல்லதொரு எடுத்துக்காட்டாகும். கடந்த ஐம்பது ஆண்டுகளில் இந்த இயக்கம் பல மான இயக்கமாக வளர்ந்துள்ளது. நியாயமான வாழ்க்கை முறையைப்
6

பெற அவசியப்படும் மன உணர்வு, வேற்றுயையில் ஒற்றுமை காணும் மனுேபக்குவம், விழிப்புணர்வு ஆகியவற்றை இந்நாட்டுத் தொழி லாளர் வர்க்கம் பெற்றிருக்கிறது. குறைந்த பட்ச சம்பளம், எட்டுமணி நேர வேலை, வாரத்திற்கு ஐந்து நாள் உழைப்பு, வேலைப் பாதுகாப்பு ஏற் பாடுகள் என்பன தொழிற்சங்க இயக்கத்தின் சாதனைகளாகும் மக்கள் சமூக அசைவுகள் ஐம்பது ஆண்டுகளில் குறிப்பாக விரிவுபட்டுள்ளன.
சகல சோஷலிஸ் வாதிகளைப்போல் நாமும், ஐக்கிய இலங்கையில் சிறு பான்மையினருக்கு சம அந்தஸ்த்து கிட்ட வேண்டுமென்ற போராட் டத்தில் முன்னணியில் நிற்கிருேம். என்ருலும் இந்த விவகாரத்தில் எதிர்பார்த்த பலன் கிட்டவில்லை. இன்னும் பிரச்சினைகள் இருக்கத் தான் செய்கின்றன. சோஷலிஸ் இலங்கையை உருவாக்கும் போராட் டத்தில் சிறுபான்மையினரை முற்ருக ஒன்று சேர்ப்பதென்பது சுலப மான காரியமல்ல என்ருலும் பெரும்பான்மை, சிறுபான்மை பிரச் சினைக்கு முற்ருகத் தீர்வுகாண அதைவிட வேறுமார்க்கமும் கிடையாது. எனது ஐம்பது ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில், சோஷலிஸப் போராட்டமும், இன ஒற்றுமையும் பிரிக்க முடியாதது என்ற உண்மையை பல தடவை கற்றுக்கொண்டுள்ளேன்.
எனது ஆருயிர் நண்பர்களே, நான் முதலில் ஒரு அரசியல்வாதி. சமுதா யத்தின் சகல பிரிவிலும் மனிதனுல் சுரண்டப்படுவதை ஒழிக்கப் போரா டுவதே அரசியல் வாதியின் முதற் கடமையாகும். அதன் அடிப்படை யிலேயே நான் மார்க்ஸியத்தின் துணையுடன் ஐம்பது ஆண்டுகளுக்குமுன் அரசியலில் பிரவேசித்தேன். மார்க்ஸியம் என்பது வெறும் தத்துவார்த் தமல்ல அது செயலுக்கு வழிகாட்டும் கோட்பாடாகும். மார்க்ஸ் கூறியதுபோல், உலகை விவரிக்காமல் அதனை மக்களின் நன்மைக்கு மாற்ற வேண்டும் எனது ஐம்பது ஆண்டுகால பொதுவாழ்வில் நான் எனது ஆற்றலுக்கேற்ப மனிதனுக்கு நல்வாழ்வு கிட்ட, அவனது வாழ்க்கைத்தரம் உயர, உழைத்திருப்பதாக நீங்கள் கணித்தால் அதுவே எனக்கு தரும் பெரும் திருப்தி. இன்னும் எவ்வளவோ செய்ய வேண்டி யுள்ளது. அப்படிச்செய்ய எத்தனையோ பேர் இருப்பார்கள். எனது காலத்தில் நான் அந்தக் கடமையை ஏற்று நிறைவேற்ற முயன்றுள் ளேன் என் முயற்சிக்கு இங்கு கூடியிருக்கும் நீங்கள் அளித்த மகிழ்ச்சிக் காக, எனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Page 6
। । ,' ;)( *), *
* *
岑
,
, 1
, ' ' ' "...
%、 t
- 臀 ", *、 s U 熵 , ,
,臀
th of 鷲 , ',
, ' ' ' +
1 ܛܢܐ܂
11 10.1 ܐܐ - , '
. h
-
. ’、 .
*
it
. . . . . . .
ി 。 }
t ... . .
*、 , Ayiti *闇 。
". . . A.
*“ KA NA "K", " " " " Y%"} 魯
 ി
' '
,
". .
リ
. . . . 、 t *
। ' ' ' ' ' * ,
。 ,
. . )
*
':
V. .
s
', ' *。
. . . . , ' . .'' " ... . .
! ി ' , , "
r s 1%'YV 3. ് { , ' '; *
.
奧
*
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 7
கொழும் 8, க்ொன் கட்டிடத்தி லக்ஸ்மன் 9profidis.
 
 
 
 

Ly is 1 1, rசிஸ்டரி ல் அமைந்த
பிரசினுல் ப்பட்டது