கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சேர்.பொன்.இராமநாதன்

Page 1


Page 2
is
.
തുക, ബ
。
 
 
 
 
 
 
 
 
 
 
 

,'? کچھ6 67 زبآ 6 لاں جG ... + (5)
(o , لما اهتما Gu@gరిg(), )86(feaقا°۹۹5لانه البران ب ,'T"ماس شش --- ہالیہ
*.ான
எனக்கு உயிர் ஊட்டி, உவப்பூட்டி என் கெஞ்சில்
என்றும் நிறைந்து நிற்கும் தமிழ்த் தாயின் திருவடி களில் இந்நூலே ஒப்படைக்கின்றேன்.

Page 3
47
அணிந்துரை
ஒர் இனத்தின் அரசியல் விடுதலை அவ்வினத்தின் கல்வாழ்வுக்கு இன்றியமையாதது. இனத்தின் அரசியல் விடுதலைக்கு அழிவு நேரிடும் பொழுது அவ்வினத் தலைவர் கள் யாவரும் பொங்கியெழுந்து தம் விடுதலையைப் பாது காக்கவேண்டும். இவ்வாறு செய்தற்கு வேண்டிய உணர்ச் 1 சியை அவ்வினத்துப் பெரியார்களின் வரலாறுகளும் வீரச் செயல்களும் கல்கும் தன்மையன. தமிழ் மக்களுக்கு அர சியல் விடுதலை இன்னும் கிடைக்கவில்லை. இச்சூழ்நிலை யில் தமிழ்ப்பெருந்தகை இராமாகாதன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை-வளமான பணியை குறிப்பாக அவர்களின் இறுதிக்கால அரசியற் பணியைச் சுருக்கமாக வெளியிடுதல் ஒரு பெரும் பணியாகும்.
இப்பணியைச் செய்துள்ள திரு. ஈழவேந்தன் அவர் களின் தொண்டு பாராட்டுதற்குரியது. படிப்பவர்களுக்கு தமிழ் இன உணர்ச்சியையும், தமிழ்மொழி உணர்ச்சியை யும், வரலாற்று உணர்வையும் உண்டாக்கத் தக்க முறை யில் துள்ளுங்டையில், தெள்ளுதமிழில் இந்நூல் எழுதப்பட் டுள்ளது. இராமாகாதனுடைய கருத்துக்களையும் கூற்றுக் களையும் இக்கால அரசியற் பின்னணியிற் பதித்துத் தமிழ் மக்களை தம் வீழ்ச்சி குறித்து, சிந்திக்கவும் செய்துள்ளார்
ஆசிரியர். அவர் பணி வெல்க! என்று வாழ்த்துகிறேன்.
அன்புள்ள
கா. பொ. இரத்தினம், பா. உ.
 
 
 

முன்னுரை
சேர். பொன், இராமநாதனின் பல்துறைப்பணி பற்றி யாம் காலத்
திற்குக்காலம் சுதந்திரன், வீரகேசரி, தினகரன், ஈழநாடு, செய்தி, விவே கானந்தன் முதலிய செய்தி இதழ்களுக்கு வரையப்பட்டுள்ள கட்டுரைகள்
தொகுக்கப்பெற்று, ஒழுங்கு செய்யப்பெற்று, சில பகுதிகள் கூட்டப்பட்டும்
இச்சிறு நூலாக வெளிவருகிறது.
சேர். பொன், இராமநாதன் பற்றி இதுகாலவரை பல கட்டுரைகள் ஆங்கிலத்திலும், தமிழிலிலும் வெளிவந்துள்ளன. அத்துடன் ஆங்கி லத்தில் ஒர் இரு சிறு வெளியீடுகளும் வெளிவந்துள்ளன. வெகுவிரைவில் ஆங்கிலத்தில் மிகவிரிந்த அடிப்படையில் இதுவரை வெளிவராத பல அரிய குறிப்புகளே உள்ளடக்கி சாவகச்சேரி இந்துக்கல்லூரி அதிபர் திரு. மு. வைத்திலிங்கம் அவர்கள் வரைந்த 'இராமநாதன் வரலாறு' வெளிவரயிருப் பதை யறிந்து எம் உள்ளம் உவகையில் மூழ்கிறது. ஆஞல் இதுகால வரை சேர் பொன் இராமநாதனைப் பற்றி தமிழில் ஒருசிறு நூலாகுதல் வெளிவந்துள்ளதை யாம் அறியோம். அந்த இடைவெளியை நிரப்பும் முறையிலும், ஏனைய தமிழ்ப் பேரறிஞர்கள் இராமநாதன் வரலாற்றை வள மான தமிழில் விரிவாக எழுதத்தூண்டும் முறையிலும் இச்சிறுநூல் வெளி வருகிறது. -
இச்சிறு நூலை இராமநாதனின் வரலாற்று நூல் என்று கூறுவதி
லும் பார்க்க இராமகாதன் அவர்களைக் காணவேண்டிய கண்கொண்டு காணும் நூல் என்று கூறுதல் பொருத்தமுடையது. இன்றைய அரசியற் சூழ்நிலை இராமநாதனின் இறுதிக்காலப் பணியின் முக்கியத்துவத்தை
நன்கு வலியுறுத்துகிறது. அதைத் துலக்கி விளக்கிக்காட்டுவது இந்
நூலின் முதன்மைநோக்கம்,
இராமகாதனைப்பற்றி கட்டுரை வரைவோர் பலர் 1915-ம் ஆண்டு இனக்கலவரத்தின்போது இராமநாதன் ஆற்றிய பணிக்குமட்டும் முக் கியத்துவம் கொடுத்து அதன்பின்பு அவர் வாழ்ந்தாரா என்று uLJIT ub ஐயுறும் முறையில் அவரின் பிற்கால அரசியல் வாழ்வு இருட்டடிக்கப் பட்டுள்ளது. இராமநாதனின் இறுதிக்காலப்பணிதான் தமிழரின் இத

Page 4
ᎦᎮfᎢ அளவு விரிவாக விளக்கப்பட்டு உணர்த்த வேண்டியளவு உணர்த்தப்பட் டுள்ளது. இன்றைய தமிழ் அரசியல் வாதிகள் தமிழ் منهم يوليو சான்ற வழியில் நடாத்திச் செல்வார்களோ என்ற ஐயம் எம் உள்ளத்தில் எழுந்துள்ளது. ஆனல் வருங்காலத்திலாவது தமிழஜனத்தமிழனுக வாழச் செய்யும் தலைவர்கள் தோன்றுவார்கள் என்ற நம்பிக்கையோடு உயர்நிஜலப்
யத்தில் தனியிடம் பெறும்தகைசான்ற பணியாகயிருப்பதினுல் அது
பள்ளி மாணவர்களையும், பல்கலைக்கழக மாணவர்களையும் நிஜனவிற் கொண்டு இச்சிறுநூல் வரையப்பட்டுள்ளது. தமிழ் இனத்தை வழி நடாத்த முன்வரும் எந்தத் தலைவனுக்கும் பழைய அரசியல் வரலாறு பற் றித் தெளிவான அறிவு வேண்டும். இந்தத் தெளிவான அரசியல் அறிவை முழுமையாக இந்நூல் தருகிறதென்று யாம் எவரையும் ஏமாற்ற விரும். పనులిమ. ஆனல் உறுதியாக அவ்வறிவைப் பெற இந்நூல் துணை செய்யும் என்ற துணிவுமட்டும் எமக்குண்டு. தமிழன் என்று ஒரு தனியினம் உண்டு. அவவினத்திற்கு என்று ஒரு தனிமொழி, தனிப்பண்பாடு, தனி வாழ்வியல்முறை உண்டு. இவற்றை எப்படியும் காப்பாற்றுவது தமிழ னின் தலையாய கடன், உலகம் உய்யக்கூட இப்பணி தேவைப்படுகிறது. இந்த உயர்ந்த உணர்வை இந்நூல் தமிழருக்கு ஊட்டுமெனின் யாம் ஈட்டிய வெற்றிகளுள் இதுவும் ஒன்று என்று கருதி உள்ள நிறைவு பெறுவோம்.
இந்நூலுக்கு கல்முறையில் அணிந்துறை நல்கிய 'தமிழ் முழங்கும் பண்டிதர் கா. பொ. இரத்தினம், பா. உ. அவர்களுக்கு நம் உளம்கனிந்த நன்றி. இந்நூலே சிறப்புறப் பதிப்பித்த இரஞ்சனு பதிப்பகத்திற்கும் அடுத்த நன்றி உரித்தாகுக.
வ ன க் கம்!
அன்பன்
ஈழவேந்தன்
 
 
 
 
 

GJ Ť GITGÖT. @T TID 5TJ565I
மறக்கமுடியாத நாள்
26.11.30 என்றுமே மறக்கமுடியாத துயர்தோய்ந்த நாள். ஈழத்து அரசியல் வானில் இருள் கவ்விய நாளும் அன்றே. ஆம்! அன்றுதான் ஈழத்து அரசியல் உலகில் தன்நிகர் அற்ற தனிப்பெருந்தலைவராய், முடி சூடா மன்னணுய் விளங்கிய முதுபெருந்த8லவர், “எல்லாக் காலத்திலும் தலை if (v)ibb g?((b @GOTĚJGOD5ului” (The greatest Ceylonese of all times) GTGörlap) காலம் சென்ற தலைமை அமைச்சர் திரு டி. எஸ். சேனாநாயகாவால் வழுத்தி வாழ்த்தப்பட்ட சேர் பொன். இராமனுதன், தனது எண்பதாவது அகவை யில் (வயதில்) தன்வாழ்வை முடித்துக்கொண்டார். அவருக்கு இறுதி வணக்கம் செலுத்த ஈழத்தின் நாற்றிசையிலும் இருந்து, இனம்-மதம் கடந்த நி?லயில் திரண்டிருந்த மக்கட் கூட்டம், அவர் பெற்றிருந்த ஒப்பற்ற நி?லயை - மக்கள் அவர்பால் காட்டிய அளப்பரிய அன்பைப் பாரினுக்குப் பறைசாற்றியது. -
நெஞ்சில் நிலைத்துவிட்டார்
இப்பெருமகன் மறைந்து 36 ஆண்டுகள் ஆகுகின்றன. ஆண்டு கள் பல உருண்டோடியும், அவர் நினைவு எம் நெஞ்சைவிட்டு அகல மறுக் கிறது. அவரை கேரிற் காணுத-அவர் வாழ்ந்த காலத்தில் இவ்வுலகில் தோன்ருத எம்மைேர்க்கே அங்ாநி2லயெனில், அவரோடு உரையாடி உறவு பூணும் பெரும்பேற்றினைப் பெற்று, இன்னும் உயிரோடு வாழும் எம் முதி யோரின் உள்ளத்தில் தோன்றும் இன்ப நிஜனவுகளுக்கு எல்லையில்லை என்றே கூறவேண்டும்.
பல்துறைப்பணி
சேர் பொன். இராமநாதனின் நினைவு நாள் நவம்பர் 26 இல் வரு கிறது. ஆண்டுதோறும் அவரின் நினைவைக் கொண்டாடும் ஈழத்துப் பல்வேறு நிறுவனங்கள், என்றென்றும் அவர் மறைந்தநாளை நன்றி உணர் வோடு சிறப்பாகக் கொண்டாடுவது உறுதி. சேர் பொன். இராமாநாதன் ஆற்றிய பணிகள் பலதுறைகளில் விரிவடைந்து கிடக்கின்றன. அவர் தொடாத துறைகளில்லை. அவர் தொட்டுத் துலங்காத துறைகளுமில்லை. எனினும் பலரின் உள்ளத்தில் அவரின் அரசியற் பணிதான் தலைதூக்கி மிளிர்கிறது என்பதை யாம் மறப்பதற்கில்லை.
அரை நூற்ருண்டு அரசியற்பணி
ஆதலால் அவரின் பல்துறைப்பணி பற்றி முதலிற் குறிப்பிட்டு இறுதியில் அவரின் அரசியற் பணிபற்றி, குறிப்பாக ஈழம் வாழ் தமிழ் பேசும் மக்களுக்கு அவர் ஆற்றிய அளப்பரிய பணிபற்றிக் கூடியவரை

Page 5
விளக்குவதே இச்சிறுநூலின் நோக்கம். எனினும், இப்போதைக்கு நல்லை நகர் ஆறுமுக நாவலரின் ஆதரவோடு 1879 ஆம் ஆண்டில், இராமநாதனின் 28 ஆம் அகவையில், தொடங்கிய அரசியல் வாழ்வு அவரின் எண்பதாவது
அகவை (வயது) வரை ஒளிவிட்டு விளங்கியதை மட்டும் இங்கு குறிப்பிட
விரும்புகின்றேன். வேறு சொற்களில் விளம்பின், ஈழத்து அரசியல் வர லாற்றை ஆராயும்போது, அதனின் அரை நூற்றண்டு வளர்ச்சி இராம நாதன் வாழ்வோடு இணைந்து பிணைந்து வளர்ந்திருப்பதை யாம் உணரத் தக்கதாய் இருக்கிறது.
பேரறிவுமிக்க பேருரைகள்
சேர் பொன். இராமாகாதனின் தமிழ்ப் புலமை, வடமொழி ஆற்றல், ஆங்கில அறிவு ஆகியன வியக்கத்தக்கன. மும்மொழியிலும் புலமை படைத்து உலகின் பல மொழிகளின் தன்மையை தகைசான்ற முறையில் உய்த்துணர்ந்த இம்மூதறிஞனை, உலகம் வியந்து போற்றியதில் வியப் பில்லை. இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் இவரின் பல்துறை அறிவுமிக்க பேச்சுக்களைக் கேட்டு, சிங்தை நிறைவு எய்திய மக்களின் எண்ணிக்கை எண்ணில் அடங்காது. இதனுற்ருன் ருேஸ் பெரிதுரை (Lord Rosebury) அவர்கள் “என் பேரரசின் தலைசிறந்த பேச்சா Grif' (the most accomplished Speaker in my Empire) 6T67 m) do stild சென்ருர் போலும், குறிப்பாகத் தென்னகத்திலும், ஈழத்திலும் இராமநாதன் அவர்கள் ஆற்றிய சமய மெய்ப்பொருட் (தத்துவ) சொற்பொழிவுகள் கற் றறிந்த நல்லறிஞருக்கு கல்விருந்து. வேதாந்தத்தை விளக்கி, சித்தாந்தத் தின் உட்பொருளைத் துலக்கி, புத்த, கிறித்தவ, இசுலாமிய கோட்பாடுகளு டன் ஒப்புநோக்கி அவர் ஆற்றிய விரிவுரைகள், அவரின் பரந்த நுண்அறி வுத்திறனுக்குத் தலைசிறந்த எடுத்துக்காட்டு. மறைமலையடிகளாரைச் செய லாளராய்க்கொண்டு இயங்கிய சைவசித்தாங் த சமாசத்தில் 1906லும், பின்பு 1922லும் அதே சமாசத்தில் அவர் சித்காந்தம் பற்றி நிகழ்த்திய பேருரை கள், அவரின் சிங்தை சித்தாங் தத்தில் மூழ்கியிருந்ததென்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. அமெரிக்காவில் தங்கியிருந்த காலத்தில் இராமாாதன் அவர்கள் ஓரிடத்தில் 'என்மார்க்கம் சைவமார்க்கம்’ என்று செப்பிய கருத்து யாம் மேலேகூறிய கருத்தினை வலியுறுத்தி நிற்கும்.
உலகிற்கு அளித்த உயர் நூல்கள்
அவர் பேச்சுக்கள் பல வெறும் காற்றேடு கலந்து பொய்யாப் - பழங் கதையாய் மாருது, மெய்யாய் அவர் புகழ்ாநிலமிசை நீடுவாழும் தன்மையு டையன, என்று கூறும் முறையில் அவர் வெளியிட்ட நூல்கள் சான்ருய் அமைந்து விளங்குகின்றன. அவர் வெளியிட்ட நூல்கள் ‘Culture of the Soulamong Western Nations” (மேற்கத்திய நாடுகளின் ஆன்மீகவளர்ச்சி) *Eastern Pictures to Western Students' (GuDGö (bT"G) LDT600TG)J(bö(5 5pg56 guud (os), 7 Girgo)8, 6), Girgahli) “Commentaries in the gospel according to Saint Mathew and Saint John” (gosmógögJGINGöIT DIT GOOI GJ i 35 GMTIT 36Muu
தூய மத்தீயு, தூய யோன் எழுதிய சிறப்புச் செய்திகளுக்கு, (சுவிசேடங்
- ? -

களுக்கு) உரைவிளக்கம், பகவத்கீதைவிரிவுரை, செந்தமிழ் இலக்கணம், 1915 இனக்கலவரமும் இராணுவச்சட்டமும் (1915 Riots and Martial Law) ஆகியவை குறிப்பிடத்தக்கவை எனினும், எம் தீவினைப்பயனுல் அவ ரின் நூல்கள் பல கிடைத்தற்கரிய முறையில் செல்லரித்த நிலையில், நூல் கள் நிறம்மாறித் தொட்டவுடன் கிழியும் நிலையில் உள்ளன. அவரின் நூல் களே புதிய பதிப்பில் பொதுமக்கள் படித்துப் பயன் பெறும் வகையில் வெளிக்கொண்டுவருவதே, அவருக்கு யாம் செய்யும் தலையாய கைமாறு. அறிவாற்றல் மிக்க தமிழ் அறிஞரும், பணம் படைத்த செல்வந்தரும் இப் பணியில் இணைந்து ஈடுபடுமாறு வேண்டுகிருேம்.
அவரின் சட்டப் பணி
அவரின் பல்துறைப்பணியை முதலில் இங்கு சுருக்கிக் குறிப்பிடு வோம். சட்டப் படிப்பிற்குரிய அவையும், இலங்கை சட்டக் கல்லூரியும் தோன்றுவதற்கு இராமகா தன் ஆற்றிய பணியை யாம் எளிதில் மறக்க முடியாது. இவரின் விடாமுயற்சியினுற்றன் குற்றவியற் சட்ட, குடியியல் சட்ட நடைமுறை, கோவையாக்கப்பட்டது (He Codified the Criminal and the Civil procedure). 915 g/l 66 lig5u gll 91s55,60566ft (New law Reports) என்ற சட்ட இதழின் முதல் ஆசிரியராகயிருந்து சட்டத்துறையில் அவர் ஆற்றிய பணி மிகப் பெரிது. இவற்றுடன் குடியியல் (சிவில்) சேவையில் இலங்கையரைப் பெருமளவிற் சேர்ப்பதற்கும், அஞ்சல் சேமிப்பு வங்கிகளைத் திறப்பதற்கும், இவர் ஆற்றிய பணியையும் யாம் எளிதில் மறக்கமுடியாது. சந்திரனே அடைய அமைக்கப்பெறும் புகைவண்டிப் பாதை (Railway to the moon) என்று பலரினுல் எள்ளி நகையாடப்பட்ட போதும், கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு புகைவண்டிப்பாதை அமைப்பதற்கு பெரும் காரணமாய் விளங்கியவர் இராமநாதன் என்பதை யாம் நினைவிற்கொள்ளல் நலம். அத்துடன் தமிழ்ச் சைவனுய் இருந்த போதும் “புத்த கோவில் உடைமைப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தை (Buddhist Temporalities Ordinance) 3l LLDn 55u_1 Gll (560)LDufth இராமநாதனையே சாரும்.
பொன்னம்பலவாணேசுவரர் கோவில்
இராமாநாதன் அவர்களின் ஆழ்ந்த சமயப் பற்றிற்கும், திராவிட சிற் பக்கலையில் அவர் உள்ளம் தோய்ந்திருந்ததென்பதற்கும் கொழும்பு கொச் சிக்கடையில் செங்கற் கோயிலாக இருந்த பொன்னம்பலவாணேசுவரர் கோயிலை, மிகப்பெரிய அளவில் கருங்கற் கோயிலாக்கி, திராவிடச் சிற்பக் கலைக்கூடமாக விளங்கச் செய்த அவரின் வியத்தகு பணி சான்ருக மிளிர்கிறது. ‘இலங்கையில் கலை வளர்ச்சி' என்று கலைப்புலவர் நவரத்தினம் அவர்கள் எழுதிய நூல் இக்கோயிலின் சிறப்பை எடுத்து இயம்புகிறது. விரிவினையாண்டு கண்டுகொள்க.
கல்விப் பணி
திராவிட சிற்பக்கலையை வேற்று இனத்தவரும் கண்டுவியக்க பொன்னம்பலவாணேசுவரக் கோயிலைக் கொழும்பில் கட்டி எழுப்பிய இராம
-------- 3 --س-

Page 6
நாதன், கொழும்பில் கறுவாக்காட்டில் 'சுகஸ்தான்' என்ற மாடமாளிகை யில் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்த பெருமகன், சுகபோகம் அஜூனத் தும் கொழும்பில் உள்ள 'சுகஸ்தானில்'தான் அடங்கியுள்ளதென்று கருத வில்லை. மாருகத் தமிழ் இனத்தின் வருங்கால வாழ்வு எல்லாம்,எம்மரபுவழித் தாயகமாகிய வடக்கில் கிழக்கில்தான் உண்டென்பதை உணர்ந்து யாழ்ப் பாண மருதனுர்மடத்தில் மங்கையருக்கு இராமநாதன் கல்லூரியை 1913லும், ஆடவருக்குப் பரமேஸ்வரக் கல்லூரியை 1919இல் திருநெல்வேலியிலும் தோற்றுவித்த பெருமை இராமங்ாதன் அவர்களைச் சாரும். இறுதியில் குறிப் பிட்ட பரமேசுவரக் கல்லூரியை இயக்கும் சட்டத்தை உருவாக்குவதற்காக 18.6.1925இல் சட்ட நிருபண சபையில் அவர் நிகழ்த்திய உரை சிந்தனைச் செறிவோடு செங்தமிழருக்கு வழிகாட்டும் சிறந்த ஓர் பேருரையாக விளங்கு கிறது. அதன் விரிவு அனைத்தையும் இங்கு தரமுடியாததினுல், அவர் பேச் சினையே படித்துப் பயன்பெறுதல் நலம். இவை அனைத்திற்கும் மேலாக இக்கல்லூரிகள் பயன்பெற ஈழத்தின் தென்பகுதியில் இரப்பர் தோட்டமும் தேயிலைத் தோட்டமும் வாங்காது, கிளிநொச்சியில் கெற்காணிகளை வாங் கிய அவரின் வருவதை உணரும் அறிவு (தீர்க்கதரிசனம்) உண்மை யில் யாம் வியந்து பாராட்டுதற்குரியது. இலங்கைப் பல்கலைக்கழக இயக் கத்திற்கு வழிகோலியவர்களுள் இராமகாதன் அவர்களும் ஒருவர். ஆனல் அதே நேரத்தில் இப்பல்கலைக்கழகம் தமிழ்பேசும் இனத்தின் நிலையான கலத்தைப் பாதிக்கக்கூடாதென்ற கருத்தையும் கொண்டிருந்தார். அத குற்ருன் தன் தம்பி திரு. அருணுசலமவர்களோடும் கூட, மாறுபட்டுப் பேராதனையில் இப்பல்கலைக்கழகம் நிறுவுவதை எதிர்த்தார். இப்பேராதனைப் பல்கலைக்கழகம் காலப்போக்கில் சிங்கள மயமாய் மாறும் என்று திரு. இராமநாதன் அஞ்சினுர், அவர் அச்சம் உண்மையாகிவிட்டதென்பதை இன்றைய பேராதனைப் பல்கலைக்கழகம் எடுத்துக்காட்டுகிறது. வெகு விரைவில் இப்பல்கலைக்கழகம் சிங்களவர்களுக்கு மட்டுமே பயன்படுவது உறுதி. 'Battle of Sites” என்ற இடம் பற்றிய கருத்து அரங்கப் போராட்டக் கட்டுரையில், இராமகாதன் அவர்கள் அன்று தெரிவித்த கருத்தினை இன்று எம்மவர் படிப்பது பயன்பல அளிக்கும்.
இராமநாதனை இதயத்தில் ஏற்றவேண்டின்
தனியொரு மனிதனுகிய இராமநாதன் அவர்கள், பலதுறைப் பணிக ளிடை மேற் குறித்த இரு பெரும் கல்லூரிகளைத் தோற்றுவித்து, செந்தமி ழையும், சிவநெறியையும் சிறப்புற வளர்த்து, தமிழ் ஆடவர் அரிவையரின் அறிவைப்பெருக்கினர். நாமும் தமிழரென முப்பது இலட்சம் மக்கள் ஈழத்தில் வாழ்கிறேம். இதுவரையில் ஏதாவது ஒரு ஆக்கவேலை செய்திருக் கிருேமா? வடக்கினை கிழக்கினை இனைத்து, நிலவளத்தை, நீர்வளத்தை தன்னுள் அடக்கி, உலகின் மிகச் சிறந்த இயற்கைத் துறைமுகத்தை தன்னகத்தே தாங்கி, உலகமெல்லாம் உணர்ந்து ஒதற்கரிய கோணேசர் கோயிலைக் கொண்டு ஒளிவிடும் திருகோணமலையில் உருவாகிக்கொண்டி ருக்கும் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு, எம்முள் எத்தனைபேர் அதன் வளர்ச் சிக்குத் துணைபுரிந்துள்ளோம். எம்முள் நிதிமிகுந்தோர் பொற்குவை கொடுத்தும், நிதி குறைந்தவர் காசுகள் கொடுத்தும், அதுவுமற்றவர் வாய்ச்சொல்லாகுதல் அருளி, ஆண்மையாளர் உழைப்பினை நல்கி, தமிழர்
-- 4 س--
 
 
 

கள் பெருமைப்பட, தரணியோர் வியப்பெய்ய, இப்பெரும்பணியை நிறை வேற்றுதல் எம் தலையாய கடன். இராமநாதனை இதயத்தில் ஏற்றி அவர் புகழ்பாட விழைவோர், இன்றே இப்பணியில் ஈடுபடுதல் சாலச் சிறந்தது. இராமநாதனின் இன்னுயிர்க்கு இன்பம் அளிக்கும் செயல் இதை விட வேருென்று இருக்கமுடியாது.
விடுதலைக்கு வித்திட்ட பெருமகன்
பத்தொன்பதாம் நூற்றண்டின் இறுதியிலே, இலங்கைத் தேசிய Paolou (Ceylon National Association) தோற்றுவித்து, ஈழம் வாழ் மக் களுக்கு விடுதலை வேட்கையை உருவாக்கிய பெருமை சேர் பொன். இராம காதனேயே சாரும். மகாத்மா காந்தி தோன்றவிடினும் இந்தியா விடுதலை பெற்றிருக்கும். அதுபோல் இராமநாத வள்ளல் தோன்றவிடினும் ஈழம் விடுதலை பெற்றிருக்கும். ஆணுல் இவ்விருவரினதும் தோற்றத்தினுற்றன் இவ்விரு காட்டு மக்களிடையே ஒரு புது உணர்ச்சி - ஒரு புது உதவேகம் தோன்றியதென்பதை யாம் மறக்கமுடியாது. இராமாகாதனின் இணை யற்ற பணியை யாம் இங்கு குறிப்பிடும்போது, அன்னுரின் தம்பி சேர் பொன். அருணுசலம் அவர்களின் அரிய பணியையும் யாம் நன்றி உணர் வோடு போற்றவேண்டும். இலங்கைப் பாராளுமன்ற முன்றலில், இவ்விரு வரின் சிலைகள் முதலில் நிறுவப்பட்டதே இவர்கள் ஆற்றிய பணி ஏனைய தலைவர்கள் ஆற்றிய பணியிலும்பார்க்க பன்மடங்கு முதன்மை (முக்கயத் துவம்) வாய்ந்ததென்பதை எடுத்துக்காட்டுகின்றனவன்றே!
1915 இனக்கலவரமும் இராமநாதனின் இணையற்ற பணியும்
சேர் பொன். இராமகாதனின் அரசியற்பணி அனைத்தும் முதன்மை வாய்ந்ததெனினும், 1915 ஆம் ஆண்டு நடந்த இனக்கலவரமும், அதைத் தொடர்ந்து உருவாகிய இராணுவச்சட்டமும், இராமகாதனின் புகழை உச்ச நிலைக்கு அழைத்து ச் சென்றன. ஆம்! இந்த இராணுவச்சட்டம் (Martial Law) இக்காட்டுமக்களை -குறிப்பாகச் சிங்கள மக்களை எவ்வளவு தூரம் பாதித்துள்ளது என்பதை, மிக நுணுக்கமாக உள்ளம் உருக்கும் முறையில் இராமநாதன் அவர்கள் சட்டசபையில் எட்டு மனித்தியாலங்கள் தொடர்ச்சியாக எடுத்து விளக்கிப் பேசிய பேச்சு, பலரை வியப்பில் ஆழ்த்தி எல்லோரின் பாராட்டுதலையும் பெற்றுக்கொடுத்தது. இவ்விதம் வீரமுழக் கம் செய்த இராமநாதன், ஏதோ துடிப்புள்ள இளைஞன் என்று எண்ணி யாம் ஏமாறக்கூடாது. அவருக்கு வயது அப்போது 64என்பதை யாம் நினைவில் வைத்தல் கலம். சிங்கள இனத்தை அவர் உள்ளத்துடிப்போடு காப்பாற்றிய பாங்கை யாம விரித்துக் கூறுவதிலும் பார்க்க, முதுபெரும் சிங்களத் தலைவர்களில் ஒருவராய் விளங்கும் டாக்டர் சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா கழல்வதற்கு காதுகொடுப்போம். 'மிக நெருக்கடியான காலத்தில் வடக்குத் தந்த வீரமகன், உடனடியாக பெருக்தன்மையோடு எமக்குத் துணைபுரிய வந்தார். நாம் அவரை எம்பாதுகாவலராக உரிமை ust TT G.5Gogib’ (In the dire hour of our need the valiant son of the north came readily and generously to help us. We claim him as our saviour.)

Page 7
சிங்களத்தலைவர்கள் வண்டியில்வைத்து இழுத்தகாட்சி
முதல் உலகப்போர் நடந்துகொண்டிருக்கின்ற வேளையிற்றன் இவ்வினக்கலவரமும் ஈழத்தில் நடைபெற்றது. இவ்வினக்கலவரத்தை ஒரு சாக்காக வைத்துப் பிரித்தானிய அரசாங்கம் செய்த அட்டுழியங்கள் பல. அவற்றைச் சட்டசபையில் மட்டும் எதிர்த்துப்பேசுவதோடு நிறை வடையாத இராமநாதன் அவர்கள், தன் உயிரையே துச்சமென மதித்துக் கப்பலேறி இங்கிலாந்து சென்று ஆங்கில அரசோடு வாதிட்டு வெற்றி யோடு திரும்பினர். இக்ாநிகழ்ச்சியை நம் மாவைக் கவுண்ணிய வெண் ணெய்க் கண்ணனர் (கவதேக்கிருஷ்ண பாரதியார்) பின்வரும் பாவால் அழகுற கெஞ்சம் நெகிழ்ந்துருக எடுத்துக்காட்டுகிறர். இதோ அப்பாடல் :
“நெறி நெடுகப் புதைவெடியால் நீர் மூழ்கித்தாக்கால் நிலவுகப்பல் வழிச்செல்லாச் செருமன்போர் நாளில் இறையிழமாதேவி குறை மானம் நிறைக்க எண்ணியுடல் பொருளாவி எலாமறந்து லண்டன் துறையடைந்து கர்ச்சித்துறை செய்த சிங்கம் தொல்லுலகம் கொண்டாடும் தூயகுணத்தங்கம் தறையெல்லாம் சனகரிருவோரெனவே சாற்றத் தான்வந்த தவராமாகாதனவன் வாழி'
வெற்றியோடு ஈழம் திரும்பிய இராமநாதனை கொழும்புத் துறைமுகத்தில் சந்தித்த சிங்களத் தலைவர்கள் - டி. எஸ். செனாநாயக்கா, ஏ. இ. குணசிங்கா உட்பட அவரை அழகிய ஒரு வண்டியில் இருத்தி இழுத்துச் சென்ற காட்சி கண்கொள்ளாத காட்சி. இக்காட்சி வண்ண ஒவியமாய்த் தீட்டப்பட்டுப் பரமேசுவரக் கல்லூரியின் மண்டபத்தில் வைக்கப்பட்டிருப்பதாக அறி கிருேம்.
சிங்கள இனத்திற்கு இன உணர்வை ஊட்டியவர்
சேர் பொன். இராமநாதன் அவர்கள் 1904 ஆம் ஆண்டு ஆவணித் திங்கள் 3 ஆம் நாளில் (3.9.1904) ஆனந்தக் கல்லூரியின் பரிசளிப்பு விழா வில் அங்கு குழுமியிருந்த சிங்கள மக்களைப்பார்த்து, “சிங்கள காக்குகள் சிங்கள மொழியைப் பேசாவிடின் வேறுயார்தான் இதைப்பேசப்போகின்ருர் 3,6ir.’ (If Sinhalese lips will not speak the Sinhalese language who else is there to speak it). என்றுகூறி, தம் நிலைதவறிக்கிடந்த சிங்கள இனத் திற்கு, இன உணர்வை, மொழிப்பற்றை ஊட்டிய இராமநாதன், ஏறக் குறைய 10 ஆண்டுகள் கழித்து 1915 இல் நடைபெற்ற இனக்கலவரத்தின் போது, அவர்கள் பக்கம் நின்று பெரும்பணி ஆற்றிச் சிங்களத் தலைவர்க ளால் சிங்தை நிறைவோடு போற்றப்பட்ட இராமநாதன், மீண்டும் ஏறக் குறைய 10 ஆண்டுகால இடைவெளியில், அதே தலைவர்களால் தூற்றப் பட்டார். உச்சிமீதுவைத்து உவந்து போற்றப்பட்ட இப்பெருமகனுக்கு இக்கதி ஏன் ஏற்பட்டது? அவற்றின் அடிப்படைக் காரணங்கள் என்ன? அவற்றை ஆராய்வதே இனி யாம் வரைய இருக்கும் பகுதிகளின் முக்கிய நோக்கம்,
 

இறுதிக்காலப்பணி ஏன் இருட்டடிப்பு செய்யப்பட்டது
சேர் பொன். இராமாகாதனின் வரலாற்றை வரையும் கட்டுரையாசிரி பர்கள் சரி, நூலிலே வடிக்கும் நூல் ஆசிரியர்கள் சரி, அவரின் 1915 ஆம் ஆண்டு அரசியற் பணிக்கு முதன்மை கொடுத்து, அவரின் பிற்கால அரசி யற் பணி பற்றி மூடி மறைப்பவர் பலர். மேலெழுந்த வாரியாக எழுதி மழுப்புபவர் மற்றும் பலர். புதுப் புது விளக்கம் கூறுபவர் இன்னும் சிலர். இவர்களுள் பலர் இராமாநாதனின் இறுதிக்காலம் வகுப்புவாதத்திற்கு அடிமையானது வருந்தத்தக்கது என்று கூறி முடிப்பர். இவ்விடத்தில் ஏரிக் கரைச்செய்தி இதழாகிய "டெய்லி நியூஸ்" இராமநாதனின் நூற்றண்டு விழா வையொட்டி 14.4.51 இல் வரைந்த ஆசிரிய தலையங்கத்தின் ஒரு பகுதியை யும் அதற்கருகில் வெளியிடப்பட்ட கட்டுரையின் ஒரு பகுதியினையும் ஈண்டு எடுத்துக் காட்டல் பொருத்தமுடையது. “ஆகூழ்இன்மை (அதிட்டவச மின்மை) காரணமாக தனது இறுதிக்காலத்தில் அவர் கடைப்பிடித்த அதிகரித்த பிற்போக்கு வாதத்தினுல், அவர் முன்பு பெற்றிருந்த பெரும் மதிப்பையும் அன்பையும் ஓர் அளவு இழக்க நேர்ந்தது. டொனமோர் சீர் திருத்தத்திற்கும், பொதுமக்கள் வாக்குரிமைக்கும், அவர் காட்டிய தீவிர எதிர்ப்பும், அவருடைய அரசியல் சிந்தனையை மறைத்து வந்த அதி கரித்த வகுப்புவாதமும், அவரின் புகழ் மங்குவதற்குக் காரணமாய் இருந் தன, பிற்கால வரலாறு அவரின் இத்தகைய எண்ணங்கள் தவருனவை என்பதைக் காட்டியுள்ளது. ஆனல் இக்கொள்கைகள் கொண்டிருந்த அவரைப்பற்றிய எம்நோக்கும் கால ஓட்டத்தில் மென்மைபெற்றுவிட்டது. அத்துடன் நாட்டிற்குச் செய்த முன்னைய பணியை உரிய முறையில் கணிக்கவும் துணை செய்துள்ளது'.
(Unluckily in later years his increasingly reactionary outlook caused him to forfeit in some measure the great esteem and affection he had won. The sunset of his decline was clouded by his resolute opposition to the Donoughmore Reforms and the extension of the franchise and by the communalism which increasingly coloured his political thinking. The subsequent course of history has shown the error of these views but time has also softened our view of the man who held them and enable us to judge his earlier efforts for his country at their proper worth) - “Siba), TGogg56 g56öT (03, TGirGO)560)u தளரவிட்டிருந்தாரேயாயினும் சேர் பொன். இராமநாதனின் பெருமையும், ாட்டிற்காற்றிய அவரின் வியத்தகு பணியும், எல்லோராலும் மதிக்கப்பட் டது. நன்றி உணர்வுள்ள மக்களால் பதினறு ஆண்டுகளுக்குப்பின் அவர் நினைவாக ஒரு உருவச்சிலை நிறுவப்பட்டது.’ (Inspite of his later years of apostasy, the greatness of Sir Ponnambalam Ramanathan and the magnitude of his achievement in the service of his country was universally recognised. Sixteen years after his death a grateful people erected a statue to his memory) 3TTLDDIT g56ór (bst'lly-sp5IT fibnju
- 7 -

Page 8
நல்ல பணியை நினைவுகூர்ந்து சிஜல எழுப்ப 'நன்றியுணர்வுமிக்க மக்கள்? பதினறு ஆண்டுகள் கழித்து, அதாவது 1930 இல் மறைந்த அவருக்கு 1946 இல் தான் சிலை எழுப்பினர்கள் என்பது இங்கு நினைவிற் கொள்ளத் தக்கது. அத்துடன் சேர் பொன். அருணசலத்தின் சிலையின் கீழ் அவரின் பல்துறைப் பணியின் பாங்கினை ‘நிரம்பிய கல்விப்புலமையும் அரசியல்
வன்மையும் ஆளும் திறனும் வாய்ந்த சிறிமான் சேர் பொன். அருணு சலம் 1853 - 1924 - தேச சேவைக்கென்றே தன் நாட்களை அர்ப்பணம் செய்த பெருந்தகையாளர். சட்ட மன்றத் திருத்தத்தினை அரிதின் முயன்று முற்றுவித்த வீரர். இலங்கையின் சர்வகலாசங்கம் அமைப் பதற்காய் அருந்தவம் ஆற்றித் தளராது உழைத்த பெருமகன். இவரது நன்றிகளை மறவா இலங்கைவாசிகளால் நிறுவிய நடுகல்’ எனப் பொறித்த சிங்கள அரசாங்கம் சேர் பொன், இராமநாதனின் சிலையின் கீழ் வேண்டா வெறுப்பாய் பின்வருமாறு உள்ளம் தொடாத முறையில் பொறித்துள்ளது. “மன்னவர், நியாயதுரந்தரர் மைக்கேல் ஜோர்ஜ் திருத்தொண்டர்களின் தோழர், சட்ட நிரூபண சபையின் இலங்கையரின் அங்கத்தினர், பொதுசனப் பண உதவியால் ஸ்தாபிக்கப்பட்டது (1915).? இதற்குக் காரணம் சேர் பொன். அருணசலம் தனது இறுதிக்காலத்தில் 'தமிழ் அவையை”த் (Tamil League) தோற்றுவித்து உரிமைக்குரல் எழுப்பினர் எனினும் இவ் அவை தோற்றுவிக்கப்பட்டு ஓர் இரு ஆண்டுகளுக்குள் அவர் மறைந்துவிட்டார். ஆனல் இராமாநாதன் அவர்கள் தமிழர்கள் சார்பில் எழுப்பிய போர்க்குரல் காரசாரமாய் விளங்கியதோடு நெடுங்காலம் நீடித்து சிங்கள அரசியல் தலைமைப்பீடத்தையே ஆட்டம்
காணச் செய்தது. இவ்விடத்தில் மேற்குறித்த ‘டெயிலி நியூஸ்” ஆசி ரியத் தலையங்கத்தையும், அதன் அருகில் வெளிவந்த கட்டுரையையும்
எதிர்த்து திரு. சி. சுந்தரலிங்கம் அவர்கள் எழுதிய ஆசிரியருக்குக்
கடிதம் என்ற கட்டுரை சுவையூட்டுவதோடு சிந்தனைக்கும் வேலை
கொடுக்கிறது. அதனையும் விரும்புவோர் படித்தல் நன்று.
வாழ்விடத்தைப் பறிக்கும் வஞ்சம் அன்றே உருவாகியது
தமிழர் பெரும்பான்மையாய் வதியும் வாழ்வகத்தை மெல்ல மெல்ல மாகக் கைப்பற்றி அவர்களை அவர்களின் இடத்திலேயே சிறுபான்மை யாக்கி பிரதிநிதித்துவத்தைக் குறைக்க வேண்டும் என்ற சதித்திட்டம் 1917 ஆம் ஆண்டிலேயே சிங்களத் தலைவர்களின் மூளையில் உருவாகி விட்டது என்று கூறின் அது தவருகாது. எடுத்துக்காட்டாக நாச் சடுவாத் திட்டம் (Nachchaduwa Scheme) முற்ருகச் சிங்களவருக்குக் கொடுத்த நிகழ்ச்சி சான்ருய் விளங்குகிறது. இதை இராமாநாதன் உட்பட அன்று சட்டசபையில் அங்கம் வகித்த பல தமிழ் உறுப்பினர்கள் எதிர்த்தனர். -
அருணசலத்தை அப்புறப்படுத்தி இராமநாதனை இழிவுபடுத்திய நன்றி மறந்த இனம்
ஆதியில் இலங்கையில் சட்டசபைப் பிரதிநிதித்துவம் சிங்களவ ருக்கும் தமிழருக்கும் ஏறக்குறைய சமத்துவ நிலையில் இருந்தது. பின்பு
- 8 -
 
 
 

காலப்போக்கில் எமது பிரதிநிதித்துவம் படிப்படியாகக் குறைக்கப்பட்டது. குறிப்பாக மேல்மாகாணத் தொகுதிக்கு தமிழ்ப் பிரதிநிதியைத் தெரிவு செய்யும் உரிமையை வழங்குவதாக இலங்கைத் தேசிய காங்கிரஸ் இக் காங்கிரசின் முன்நாள் தலைவராய் விளங்கிய சேர் பொன் 94(5(GOE) சலத்திற்கு உறுதியளித்தது. பின்பு அவ்வு றுதிமொழியைக் காப்பாற்றத் தவறியதோடு தேசிய காங்கிரஸ் சிங்களக் காங்கிரஸ் மயமாக மாறத் தொடங்கிவிட்டது. நிலைமையைக் கண்டு உள்ளம் கொதித்த அருணுசலம் அவர்கள் இத்தேசிய காங்கிரசில் இருந்து பிரிந்து தமிழ் அவையைத் (Tamil League) தோற்றுவித்தார். அவ்வவையில் தமிழரின் வருங்காலம் எவ்விதம் அமைய வேண்டும், நாம் ஏன் தனித்து நின்று Gjirit வேண்டும், யாம் ஏன் சிங்களத் தலைவர்களை நம்பி ஏமாறக்கூடா து என்று காட்டிய காரணங்கள் எம் நெஞ்சில் என்றும் கி2லத்து நிற்க வேண்டிய பகுதிகள். இக்காலத்திலேயே தமிழரின் உரிமைக்காக இராம ா தன் போர் தொடுக்கத் தொடங்கிவிட்டார். அதனுற்ருன் சேர் பொன். 。 அருறைசலம் நிகழ்த்திய மேற்குறித்த உரையில் ஒரு பகுதியில் ஈழத்தின் நல்வாழ்விற்காகத் தன்னை அர்ப்பணித்த இராமநாதனின் சிலையைக் கடலில் தூக்கியெறியச் சில சிங்களத் தலைவர்கள் எண்ணுவதாகக் குறிப்பிட்டுள்ளார். அப்பகுதியை அப்படியே இங்கு தருவாம். 'Who have done more for the welfare of All Ceylon than the Tamils? Who has fought more vigourously for the welfare of the Sinhalese ? In the dark days of 1915 when our Sinhalese bretheren were in distress and helpless who came to their rescue but the Tamils? That statue which was to be the grateful memorial of the help rendered may as proposed in some quarters be flung into the sea
அண்ணு தம்பிக்குக் கூறிய அறிவுரை
இந்த இடத்தில் தேசிய காங்கிரசைத் தோற்றுவித்த சேர் பொன் அருறைசலம் அதனின் பெருமையை அவரின் மூத்தோன் இராமநாதன் அவர்களிடம் கூறியபோது சேர் பொன். இராமநாதன் கூறிய அறிவுரை Iraolor() flig5 5.gifögsflug), “Go ahead, but take care you will presently meet with a storm which will hurl you off the chair (முன்னேறு. ஆணுல் கவனமாய் இரு விரைவில் வீசயிருக்கும் புயல் உன்னயே உனது நாற்காலியில் இருந்து தூக்கி எறியக் கூடும்.) (பக்கம் 1491 பாராளுமன்றப் பதிவேடு தொகுதி III 1928) சேர் பொன். இராமநாதன் எச்சரித்தபடி - முன்கூட்டி உணர்ந்தபடி சிங்கள வகுப்பு வாதம் தலைதூக்கியதால் தேசிய காங்கிரசில் இருந்து சேர் அருணுசலம் விலகித் தமிழ் அவையைத் தோற்றுவித்தார். எம் விதியின் பயன் தமிழ் அவையை கல்முறையில் இயக்க முன் அருளுசலத்தின் இன் லுயிரைக் காலன் கவர்ந்துவிட்டான்.
டொனமோர் சட்டம் தமிழரின் சாவோலை
Soof “Donoughmore means Tamils no more' (GLITGOTGori
... 9 -

Page 9
னத்தின் பிரதிநிதிகள் அன்ருே, எல்2ல கடந்த நிஜலயில் தெரிவு சய்யப்பட்டுச் சிறுபான்மையோர் ஒதுக்கப்படுவர். இது சிறுபான்மை யாருக்குப் பெரும் தீங்கையல்லவோ விளைவிக்கும் என்று வினவினர் இராமநாதன். (பக்கம் 1350, பாராளுமன்றப் பதிவேடு தொகுதி 11, 1928) பான்மை இனத்தவருக்குப் போதிய பாதுகாப்பு அளிக்காத நிலையில் துசன வாக்குரிமை (Universal Franchise) சிறுபான்மையினரின் விற்ருன் கொண்டுபோய் விடும் என்பதைப் பின்வருமாறு கூறு i. “Then with regard to universal suffrage they give us, 000 voters mostly of Sinhalese Community. I have no aint against the Sinhalese. Long may the Sinhalese live, out of these 1,500,000 voters how many will vote? *Ꮛ than about 50,000 or 60,000 will vote, because they ote properly at a secret ballot. When the voters come in the nature of things they will put in their own len. I once heard the great Gladstone in Edinburgh g his Midlothian Campaign. I was on the same platform h him and he told us:- “I expect every Englishman to be Englishman, every Scotchman to be a Scotchman, every shman to be a Welshman and every Irishman to be an shman'. Every nation will have its own leaders and those ders will speak for the particular nation and espouse their generally. Otherwise there will be confusion and conflict. : then is it not natural for a Sinhalese man to vote for a alese gentleman in his own constituency? Then who will be representatives in the Legislative Council. Most of the epresentatives of the Legislative Council will be Sinhalese gentlemen. I bear no ill-will towards them. I believe that the minority and majority communities should both prosper. Then the ministers are elected by the council constituted as it would
to the minority communities? How can I agree to that? Are we
me for competition? I say I find this difficulty. This is not entioned here. If it is said that the ministers should be lected by the legislative council as it stands now I will say ht. But some people would say “Not as it stands now
........................ 10 .....................
under the new scheme of election would it not be a death blow
o be just and righteous? or are we to treat politics as a
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

but according to the wishes of the Donoughmore Commissioners.” I say no, that will not do. That will work the greatest possible harm to the minorities. That is the trouble I see with regard to these three propositions. If we accept the Donoughmore recommendations we will see that there is death to the minority communities and that we should not be a party to that.' (Gurg மக்கள் வாக்குரிமையைப் பொறுத்த வரை அவர்கள் எமக்குத் தரும் வாக்காளர்கள் 1,500,000. அவர்களுள் பெரும்பான்மையோர் சிங்களவராய் இருப்பர். சிங்களவர் மீது எனக்கு ஒரு கோபமும் இல்லை. அவர்கள் நீடுழி வாழட்டும். ஆணுல் சபாநாயகர் அவர்களே, இந்த 1,500,000 வாக் காளர்களுள் எத்தனை பேர் வாக்களிப்பார்கள் ? ஆகக்கூடியது 50,000 அல்லது 60,000 பேர் தான் வாக்களிப்பார்கள். ஏனெனில் முறையாக வாக்களிக்கும் அனுபவம் அவர்களுக்கில்லை. வாக்களிக்க வரும் இம் மக்கள் தங்கள் இனத்தைச் சார்ந்தவர்களையே தெரிவு செய்வார்கள். யான் கிலாட்சன் பெருமகன் மிடிலோதியன் (Midlothian) தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசியதைக் கேட்டேன். யானும் அதே மேடை யில் இருந்தேன். அவர் எங்களுக்குக் கூறியதாவது 'யான் ஒவ்வொரு ஆங்கிலேயனும் ஆங்கிலேயனுய் இருப்பதையும், ஒவ்வொரு ஸ்கொத்லாந்தினனும் ஸ்கொத்லாந்தனுயும், ஒவ்வொரு வெல்சியனை யும் வெல்சியணுகவும், ஒவ்வொரு அயர்லாந்தனையும் அயர்லாந்தவ ஞகவும் இருப்பான் என எதிர்பார்க்கிறேன்." ஒவ்வொரு தேசிய இனமும் தனக்கெனச் சொந்தமான சில தலைவர்களைப் பெற்றிருக்கும். இத்தலைவர்கள் குறிப்பிட்ட தேசிய இனத்தவர்களின் சார்பில் அவர் களின் இலட்சியத்தை பொதுவாக எடுத்துக் கூறுவர். இல்லாவிடில் அது பெரும் குழப்பத்திலும் மாறுபாட்டிலும் முடிவடையும். ஆகவே
பாளர்களாக (பிரதிநிதிகளாக) இருப்பர். பெரும்பாலான பிரதிநிதிகள்
மீது எவ்வித வெறுப்புமில்லை. பெரும்பான்மையோரும் சிறுபான்மை யோரும் ஒற்றுமையாய் சிறப்புடன் வாழ்வதையே விரும்புகிறேன். அப்படியானல் மேலே குறித்த அடிப்படையில் சட்டசபைக்கு உறுப் பினர்கள் தெரிவு செய்யப்பட்டால் அது சிறுபான்மையோரின் அழிவில் அல்லவா முடியும், இதற்கு யான் எப்படி உடந்தையாக இருக்க முடியும்.
விளையாட்டுப் போட்டியாகக் கருதுவதா? என்னைப் பொறுத்த வரை இந்நிலையை ஏற்பது கடினமாய் இருக்கிறது. இது இங்கு குறிப்பிடப் படவில்லை. சட்டசபை உறுப்பினரே அமைச்சர்மாரைத் தெரிவு செய்ய வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இதற்கு யான் உடன்பாடு தெரிவிக்கக்கூடும். ஆனல் இதற்கு சிலர் இப்போது இருக்கும் நிலை யில் அல்ல டொனமூர்க் குழுவின் விருப்பப்படிதான் என்று கூறக் கூடும். யான் அக்கருத்தினை ஏற்க முடியாது. காரணம் சிறுபான்மைய ருக்கு அது பெரும் அபாயத்தைக் கொண்டுவரும். டொனமூர்க் குழு வின் சீர்திருத்தங்களில் இத்தீங்குகளையே யான் காண்கிறேன். இந்நிலை
- 11 -
ஒரு சிங்கள மகன் ஒரு சிங்களவருக்காகத் தன் தொகுதியில் வாக்களிப்பது இயற்கையல்லவா? இங்ாநிலையில் சட்டநிரூபண சபையில் யார் சார்
சிங்களவராகவே இருப்பர் என்பது வெள்ளிடைமலை, எனக்கு அவர்கள்
யாம் நீதி நியாய அடிப்படையில் இயங்குவதா அல்லது அரசியலை ஒரு *

Page 10
யில் டொனமூர்க் குழுவின் கருத்துக்களை யாம் ஏற்கின் சிறுபான்மை இனங்கள் அழிவது திண்ணம். இதற்கு யாம் உடந்தையாக இருக்க முடியாது." இப்படிப் பல இடங்களில் வெறும் தொகுதிவாரி யாகயிருக்கா து இன அடிப்படையிலும் (Communal representation) வாக்களிக்கிற உரிமை சிறுபான்மையினருக்கு வழங்கவேண்டும் என்பதை இராமநாதன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். விரிவை (தொகுதி 11, பாராளுமன்றப் பதிவேடு 1928-ல்) கண்டுகொள்க. இராமநாதன் அவர்கள் தன் பேச்சின் ஊடே உலகின் பல நாடுகளில் குறிப்பாக அயர்லாந்து, கனடா, அமெரிக்கா முதலிய நாடுகளில் சிறுபான்மை இனத்தவருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை சான்றுகளோடு விளக்கியுள்ளார். தனது தம்பி அருணுசலம் அவர்கள் ஆளுநர் (Governor) சேர் வில்லியம் மானிங் அவர்களுக்கு 1923 இல் அனுப்பிய அறிக்கையையும் வாசித்துக் நாட்டி அதில் அவர் சிறுபான்மையினர் நிலைபற்றிக் குறிப்பிட்ட பகுதிகளை சிக்தனையைத் தூண்டும் முறையில் விளக்கினர். (பாராளு மன்றப் பதிவேடு - பக்கம் 2023, தொகுதி 11, 1928)
இராமநாதனும் இந்திய மரபுவழியினரும்
இராமநாதன் அவர்கள் இலங்கை வாழ் தமிழ் மக்கள் சார்பில் மட்டும் போர்க்குரல் எழுப்பவில்லை. மலைநாட்டுத் தமிழ் மக்கள் (இந்திய வம்சாவழியினர்) சார்பிலும் அவர் போர்க்குரல் எழுப்பினர். இந்திய வம்சாவழியினரை காட்டை வளம்படுத்தும் வெறும் கூலியினராக |''N''' மதித்து அவர்களுக்கு வாக்குரிமை வழங்கக் கூடாது என்ற சதிநோக்கு இனவெறி பிடித்த சிங்களத் தலைவர்களிடம் அன்றே வேர் ஊன்றத் தொடங்கிவிட்டது. இதை வன்மையாகக் கண்டித்த இராமநாதன் அவர்கள் "இந்தியாவில் இருந்து 2500 ஆண்டுகளுக்கு முன் காற்றின் வீச்சினுல் தற்செயலாக இலங்கை வந்தடைந்த சிங்கள மக்கள் எப்படித் தோட்டத் தொழிலாளிகளைப் பார்த்து இந்தியனே வெளி யேறு என்று கூற முடியும். தேளைப் பாம்பைக் கொல்லாது துரத்தும் சிங்கள மக்கள் எப்படி மனம் வந்து இம்மலைநாட்டுத் தமிழரை வெளியேறச் சொல்ல முடியும். இது புத்தநெறிக்கோ சந்தானதருமத்திற்கோ ஒத்துப்போகுமா' என்று இடித்துக் கூறி அறிவுரை வழங்கினுர். இவ்விதம் தமிழ் மக்கள் கலன் கருதி இராம நாதன் போர்க்குரல் எழுப்பும்போது அவருக்கு வயது ஏறக்குறைய 78 என்பதை யாம் மறப்பதற்கில்லை. (பக்கம் 1791 - பாராளுமன்றப் பதி வேடு தொகுதி II - 1928)
உள்ளத்தை எடுத்துக்காட்டும் உயர்ந்த கூற்று
இராமங்ாதன் அவர்களுக்கு தமிழ் பேசும் இனத்தின் வருங் காலத்தில் இருந்த அக்கறை உண்மையில் உள்ளம் உருக்கும் தன்மை வாய்ந்தது. டொனமோர் சட்டத்தை எதிர்த்துப் பேசிய இராமநாதன் அவர்கள் ஓர் இடத்தில் பின்வருமாறு கூறுகிறர். "1 think Sir, I have said all that I need say and considering the exceedingly difficult task that I have had to perform, standing on my legs and
 
 
 
 
 
 
 
 
 
 
 

speaking for such lengths of time, it would have suited my
personal feelings better if I have said “let things drift, wherever they may" but sir unfortunately, I am not bred that way. To the last breath of my life I shall raise my voice against the exercise of tyranny and for the suppression of falsehood. That is my reason for speaking at such length.” (gyGODGJá, g5&ava i gjawiaj,GBGwr, u utgör கூறவேண்டிய அனைத்தும் கூறிவிட்டேன், என்று நம்புகிறே இந்த முதிய வயதில் இப்படி நீண்ட நேரம் பேசுவது எனக்கு மிக கடுமையான செயல், எப்படியாவது நிகழ்ச்சிகள் நடைபெறட்டும் நடப்பவை நடக்கட்டும், என்று கூறி யான் சும்மாய் இருக்க முடியும் எனக்கு எளிதும் கூட. ஆணுல் அவைத் தலைவர் அவர்களே அப் யான் வளர்க்கப்பட்டவன் அல்ல. என் இறுதி மூச்சுவரைய அட்டுழியங்களையும் பொய்மையையும் எதிர்த்துக் குரல் எழுப் தயங்கேன். இவ்விதம் நீண்ட நேரம் பேசுவதற்கு இதுவே காரண
இவ்விதம் உரிமைக்குரல் எழுப்பிய இராமநா தனின் பேச்சைச் செவி மடுத்த திரு. கே. பி. எஸ். மெனன் (K. P. S. Menon) பின்வருமாறு கெஞ்சம் தொடுமுறையில் கூ றுகிறர். *அவர் டொன மோர் யாப்பை (சட்ட அமைப்பை) வன்மையாக எதிர்த்து எமது. கண்க2ளத் திறந்து சிந்தனையைக் கிளறி தன்னில் நிறைவெய்திய மக்களின் அறியாமையை சிதறடித்தபோது மேல் உலகத்தில் இருந்து எமக்கு வழிகாட்ட ஒரு வருவதை உணர்பவர் (தீர்க்கதரிசி) வந்துள்ளார் GTsirol GTGoo Goot (3L Li Gait Gäggs.' (On that particular occasion when he denounced the Donoughmore constitution one felt as if a prophet hadi come from another world opening the eyes, stirring the hearts and shattering the illusions of smug, self complacent individuals)
மேலே கூறியதற்கு அமைய அவர் தன் வாழ்வில் இறுதிவரை எ te உரிமைக்காகப் போராடினர். இராமநாதன் 26.11.30 இல் மறைந்தார் அதே ஆண்டு அக்டோபர் முப்பத்தி ஒன்று வரை சட்டசபையில் அங்கம் வகித்தார். அது மட்டுமல்ல அதே ஆண்டு தைத்திங்களில் தள்ளாத தன் எழுபத்தொன்பதாவது அகவையில் கடல் கடந்து இங்கிலாங்து சென்று டொனமூர் சட்டத்திற்கு எதிரா ன அறிக்கையை (மகஜரை) (Memorandum) ஆங்கில அரசரிடம் ஒப்படைத்து தமிழ்மக்கள் சார்பில் உரிமைக்குரல் எழுப்பினர். அவர் ஒப்படைத்த மகஜரின் ஒரு முக்கி பகுதியை அப்படியே இங்கு தருவாம். “கடவுளால் தோற்றுவிக்கப் பட்ட ஒவ்வொரு மனிதனதும் பிறப்புரிமை, அவனது மரபுவழித் தாயகம், குடும்பம், மொழி, இனம், சமூகம், சமயம் என்பதை யாம் ஏற்றேயாகவேண்டும். இந்த நம்பிக்கை அடிப்படையில் அ6 கூறினர், டொனமோர் ஆணையாளரில் விதந்துரை (சிபார்சு) பறங்கி யர், முகமதியர், இந்தியர், மேல்மாகாணத் தமிழர் ஆகியோரின் தொகுதிகளை பூண்டோடு அழிப்பதாகயிருப்பதோடு சட்டத்திற்கு எதிராகவும் வருந்தத்தக்கதாகவும் இருக்கிறது. 1923 அரசவைக் கட்டளைப்படி (Order in Council) இந்தச் சமூகங்களுக்கு இன அடிப் படையில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. இதன்படி 12 உத்தி
- 13 .

Page 11
የ  ̈ y
88ኃ
யோகபூர்வமான உறுப்பினர்களும் 37 உத்தியோகபூர்வமற்ற உறுப்பி னர்களும் தெரிவுசெய்யப்படுவர். இவர்களுள் 23 பேர்கள் தொகுதிவாரி யாகவும் 11 பேர் இன அடிப்படையிலும் 3 பேர் நியமன அடிப்படை யிலும் தெரிவு செய்யப்படுவர். இந்த யாப்பு (சட்ட அமைப்பு) அர சவைக் கட்டளை 1923 இன்படி, இலங்கைச் சட்டநிரூபண சபையை பிரித்தானியப் பாராளுமன்றத்தோடு ஒத்தநிலையில் வைத்துள்ளது. மேலும் அவர் கூறுகையில் 1924-ம் ஆண்டில் தை (சனவரி) 24-ல் ஆளுநர் மானிங்கிற்கு மேன்மைதங்கிய பிரித்தானிய அரசாங்க சார்பில் டிவன்சயர் (Devonshire) கோமகன் அனுப்பியிருந்த அறிக் கையில் தெளிவாக 'முக்கிய விடயங்கள் அனைத்திலும் வெவ்வேறு போக்கோடு பல சமூகங்கள் தொடர்ந்து வாழும் வரையும் இப்போது இருப்பது போன்று அவர்களின் இன அடிப்படையில் சட்ட நிரூபண பையில் பிரதிநிதித்துவம் இருப்பதற்கு ஆகுவன செய்ய வேண்டும்' ன்று எடுத்துக் காட்டியுள்ளார். தொடர்ந்து அவர் கூறுகையில் நி3லபெற்றுள்ள சமுகங்கள் அனைத்தையும் முறையே அவற்றின் ண்பாட்டையும் பாதுகாத்தல் அரச1ங்கத்தின் மிக முக்கிய கடமை பாகும்' என்று கூறினர். மேலும் அவர் கூறுகையில் 'பண்டைய மர பும் மிக அருமையான மொழி இலக்கியக் களஞ்சியமும் தொடர்ச்சி யான வியப்பூட்டும் ஆற்றலும், மதிப்பும் வீரத்தன்மையும் பொருந் திய ஒவ்வொரு சமுகமும் தம் புகழையும் பழமையையும் பேணி மதிப் பிற்குரிய பெருமக்களைப் பின்பற்ருவிடில் அச்சமுகம் மதிப்பிழந்து விடும். தமது மொழியைப் பேசி தம் முன்னுேரால் அளிக்கப்பட்ட மரபின்படி இறைவனை வணங்கி தமக்கென்ற தனிப்பாதுகாப்பு வாய்ப்போடு, தமக்கென்ற தனி உடை, நோன்பு, விருந்து, சமுகப் பழக்கவழக்கங்களோடு அமைந்துள்ள இலங்கையின் பல்வேறு இனங்களை எவ்வாறுதான் மேலே குறித்த அனைத்தையும் கைவிடும்படி கட்டளையிட்டு இதனுல் வரும் விளைவுகளே நாளுக்குநாள் அனுபவிக்கச் செய்யமுடியும். (The birth right of every human being is the territory, the family, the language, the tribe, the society and the religion into which he has ushered by God. Based on these convictions he said “Equally legal and sorrowful is the political extinction recommended by the missioners of the Burgher, Mohammedan, Indian and Western vince Tamil Constituencies. ... ... Communal representation granted to these Communities by the order in Council of 1923 ovided that there should be 12 officials and 37 unofficials, of whom should be elected territorially and 11. Communally and 3 nominaThis constitution (1923 order in Council) placed the Ceylon islature on a par with the House of Commons.** In support of this argument he urged the distinct pledge of 1924. The then Secretary of State, the Duke of Devonshire as the mouthpiece of His Majesty's Government; gave a distinct pledge, in his dispatch to Governor Manning dated 22nd January 1924 stated so long as the several Communities in Ceylon remain convinced, as they appear now to be,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

of the divergency of theirań teres sin many important matters, so long must some provision be made for the maintenance of communal representation in the Legislative Council' Continuing his plan Sir. P. Ramanathan says “the protection of existing communities and their respective customs is indeed the prime duty of Government. unless each of the communities which are blessed with ancient traditions, rare lingual and literary treasures and with a series of doughty decd with amazing ability and honour bear in mind the glorious past and imitate their great Sires, they will sink into insignificance. How could the different communities in Ceylon each speaking its own language, each worshipping God according to the tradition handed down by its sheers, each enjoying prescribed shelter, form of dress, and its own fasts, feasts and social customs be commanded to throw everything into the melting pot and take the consequences as they come from day to day) இந்த மகஜரை நல்ல தமிழ் அரசியல் அறிஞ கள் பலர் 'தமிழரின் சட்ட அமைப்பு விவிலியம் (The Constitutiona! Bible of the Tamils) என்று கூறும் கூற்று வெறும் வெற்றுரையல்ல
தன் மூச்சுள்ளவரை எம் நிலைத்த கல் வாழ்விற்காக பாடுட்ட இராம காதனே இன்று எண்ணும்போதுகூட கண்களில் நீர் பெருகுகிறது. இன்று இராமநாதன் மறைந்து 36 ஆண்டுகள் ஆகுகின்றன. ஆண்டுகள் எத்தனே சென்ருலும் அவரின் காலத்தால் சாகாத ஞாலத்தில் என்றும் நிலைத்து நிற்கும் பணியை நாமோ எம் வருங்கால வழித்தோன்றல்களோ மறக்கநினைத்தாலும் மறக்க முடியுமா?
ஏமாற்றப்பட்ட தமிழ் இனம் பற்றி சிங்களத் தலைவர் செப்டம் கருத்து,
இவ்விதம் யாம் விரிவாக இராமநாதனின் காட்டுப்பணியை குறிப் பாகத் தமிழருக்கு அவர் ஆற்றிய பணியை எடுத்துக்கூறினும் இராம நாதன் இறுதிக்காலத்தில் வகுப்புவாதியாகவே வாழ்க்தார் என்று வாதிடு பவர் ஈழத்தில் இன்னும் இருக்கக்கூடும். இராமகாதன் சரி, அருஞசலம் சரி, மற்றும் ஏனைய தமிழ்த்தலைவர்கள் சரி, ஏன் தமிழ் பேசும் மக்களும் காலத்திற்குக்காலம் சிங்களத் தலைவர்களிகுல் ஏமாற்றப்பட்டே வந்திருக் கிருர்கள் என்பதற்கு வரலாறு தரும் சான்றுகள் பல முன்நாள் எதிர்க் கட்சித்த2லவராகவும் நிதிமந்திரியாகவும் விளங்கிய சிங்களத்தலைவர்களுள் ஒருவராகிய டாக்டர் என். எம். பெரேரா அவர்கள் சிங்களம் மட்டும் சட் டம் 1956-ல் விவாதிக்கப்பட்டபோது கூறிய கருத்துக்கள் இதோ" “In point of fact if you go back to the history of this country you Will find that the minorities have been betrayed at every possible turn From the tim Yof Mr. D. S. Senanayake when the Donoughmore Constitute came up, the minorities particularly the Indian Community were given certain promises which were broken. Then again when the Soulbury Constitution too came up similar concessions which were promised were broken right along. In the Indian Immigrants and Emigrants bill various promises were made over and
- 15 -

Page 12
over again with regard to the treat and everyone of these promises we of the bill. In the light of that are are gibbling at the acceptance of Language Debate 1956.) '36). லும் சிறுபான்மையோர் பெரும்பான் இழைக்கப்பட்டவர்களாகவே காணப்பு திட்டம் வெளிவந்த திரு. டி. எஸ். சேன பான்மையோருக்கு குறிப்பாக இந்திய 6 கள் அளிக்கப்பட்டு காலப்போக்கில் விடப்பட்டன. மீண்டும் சோல்பரி
அவர்களுக்குக்கொடுக்கப்பட்ட வாக்குறு டன. இந்திய குடியேற்ற வெளியேற்ற எத்தனையோ உறுதிமொழிகள் அளிக்க அனைத்தும் அவர்களுக்கு எதிராகவே யில் சிறுபான்மை மக்கள் எங்கள் உ யாடுவது வியப்பிற்குரியதா? (பாராளு சட்டம் விவாதம் 1956)
எம் முடிபு என்ன?
ஆதலால் இனிமேலாவது இர பிடும்போது அவரின் கல்விப்பணி, ! பற்றியோ அவரின் மெய்விளக்க (த நினைவில் வைத்திராது அவர் வாழ்வி உரிய மதிப்புக் கொடுக்க வேண்டும், போது அவர் ஆற்றிய பணி வியந்து மூர் சட்டம் எவ்விதம் சிறுபான்மை இனத்தைப் பாரதூரமாகப் பாதிக்கும் ளோடு வாதிட்டுத் தன் உயிர் உள்ள6 வாழ்விற்குப் பாடுபட்ட இப்பெருமகே தமிழ்இனத்தின் அழிவிற்தான் தாம், என்று எண்ணி செயலாற்றும் சிங்கள இறுதிக்காலம் வகுப்புவாதத்தின் சாய ஆனுல் எம்மைப் பொறுத்தவரை தய னலே-ஆபத்தை அன்றே உணர்ந்து தீர்க்கதரிசி என்பதே எம் தீர்க்கமான
Gj Gjor g
 
 

ment to be given to the Indians re broken in the implementation we surprised that the minorities these assurances..? (Hansard. ங்கையில் ஒவ்வொரு திருப்பத்தி ாமைத்தலைவர்களால் துரோ கம் படுகின்றனர். டொனமூர் அரசியல் ாநாயகாவின் காலம் தொட்டு சிறு
வம்சாவழியினருக்கு சில வாக்குறுதி
அவை காற்றேடு கலந்து பறக்க அரசியல் உருவாகியகாலத்திலும் றுதிகள் இறுதியில் முறியடிக்கப்பட் ற சட்டத்திலும் மீண்டும் மீண்டும்
கப்பட்டு நடைமுறையில் அவைகள் :
அமுல் செய்யப்பட்டன. இந்நிலை உறுதிமொழிகளேயிட்டு எள்ளிககை மன்ற பதிவேடு, சிங்களம் மட்டும்
ாமநாத ஏந்தலின் வாழ்வை மதிப் சட்டப்பணி, இலக்கிய படைப்புகள் த்துவ) ஈடுபாடுபற்றியோ மட்டும் ன்பணி அனைத்தையும் ஆராய்ந்து 1915-ல் நடந்த இனக்கலவரத்தின் போற்றுதற்குரியதெனினும் டொன இனத்தவரைக் குறிப்பாக தமிழ் என்பதை அன்றே தக்க சான்றுக வரை தமிழ் இனத்தின் நிலைத்த கல் எ யாம் என்றும் மறப்பதற்கில்லே. தம் பேர் அரசை நிறுவமுடியும் வகுப்புவாதிகளுக்கு இராமாகாதனின் பல் பெற்றதாகத் தோன்றக்கூடும். மிழ் இனத்திற்கு ஏற்படும் பேரின் பணியாற்றிய இராமநாதன் ஒரு T (PL. L.
Y
黑
為"