கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுவாமி ஞானப்பிரகாசரும் வரலாற்றாராய்ச்சியும்

Page 1
ஞானப்பிரகா
 

ia M.A. ceylon
,யாளர் چیختے

Page 2
---------|-- - ----|-|-——----!=- - - ----- :,:No|-
|-:----- - - - - -!!!!!!!!!!!!!!! |-:: - (No. !! !! !!|-!心 |----
|-—
|-|-| |-
------: 日 : |-|- |-—- 후----|- —
|-|-|-
 
 
 

<先 Gefox 2
めるのみィ
பன்மொழிப்புலவர் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் 98 - ஆவது ஆண்டு நினைவு தின விழாவை யொட்டி 30-8-1973-ல் திருநெல் வேலி ஞானப்பிரகாசர் ஆச்சிரமத் தில் நடைபெற்ற கருத்த ரங்கில்
- யாழ் ஆயர் அதி வண. வ. தீயோகுப்பிள்ளை ஆண்டகையின் தலைமையில் நிகழ்த்திய ஆய்வு உரையின் வெளியீடு,

Page 3
சுவாமி ஞானப்பிரகாசரும் வரலாற்ருராய்ச்சியும்
வாழ்க்கை வரலாறு:
சுவாமிநாதபிள்ளை வைத்திலிங்கம் (பிற்கால ஞானப் பிரகாச சுவாமிகள்) 1875 லே மானிப்பாயிற் பிறந்து 1947 லே தேகவியோகமாயினர். இளம் வயதிலே தமிழ், வடமொழி, ஆங் இலம் ஆகிய மொழிகளிலே தேர்ச்சிபெற்று 1893 லே நடை பெற்ற புகையிரதலிகிதர் சேவையிலே மிகத் திறமையாகச் சித்தி யடைந்து அதே சேவையில் இரண்டு ஆண்டுகள் செவ்வனே கடமை யாற்றினர். 1895-ல் அச்சேவையிலிருந்து விலகிக் கத் தோலிக்க கிறிஸ்தவ சமயத் திருப்பணி செய்தற்காக யாழ்ப் பாணத்திலிருந்த இறையியற் கல்லூரியிலே சேர்ந்து இறையிய லியே மிக்க தேர்ச்சிபெற்று 1901-ல் குருப்பட்டம் பெற்ருர், தொடர்ந்து தமது இறுதி மூச்சு உள்ளவரையிலே கத்தோலிக்க கிறீஸ்தவ சமயசேவையிலும் தமிழியற் பணியிலும் ஈடுபட்டு வந்தார்:
பன்மொழிப் புலமை பலதுறைத் தேர்ச்சி,
இவர் உலகிலுள்ள பல பிரதான மொழிகள், கிளை மொழிகளிற், சுமார் எழுபது மொழிகளிலே தேர்ச்சியுள்ளவர். அத்துடன் வரலாறு, தொல்பொருளியல், இந்துசமயம், பெளத் தம், சமணம் முதலியவற்றிலும் பாண்டித்தியம் பெற்றவர். இவற்றில் பல வற்றினைத் தாமே கற்றுக்கொண்டவர்.
பொது
இவர் புகையிரத சேவையினை விட்டதாலே கத்தோ இக்கத்திற் மட்டுமன்றித் தமிழிற்கும், தமிழர் வரலாற்றுக்கும்

س- 3 --س-
சுருங்கக்கூறின் தமிழியலுக்கும் (Tamilology) நற்பணியாற்ற வல்ல நல்ல ஆராய்ச்சியாளர் ஒருவரை ஈழம் பெற்றுப்பெருமை யடைந்தது.
ஈழகேசரி மதிப்பீடு:
இவருடைய மரணம் ஏற்பட்ட காலத்திலே (22-1-47)
யாழ்ப்பாணத்திலே வெளிவந்த கத்தோலிக்க மதச்சார்பற்ற
பத்திரிகை யொன்றிலே இவரைப்பற்றி பின்வருமாறு கூறப்பட் டிருந்தது.
‘இவர் தமிழ் ஆராய்ச்சியிலும், சரித்திர ஆராய்ச்சியி லும் சலியாது ஈடுபட்டு உழைத்தார். அறிவும், ஆற்றலும், சிந் தனத் தெளிவும் அவருடைய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் மிளிர் வதை அறிஞர் உணருவர். அவர் ஜேர்ம ணிக்குச்சென்று இருந்த போது அரசாங்கமே அவரைக் கெளரவித்தது. அவரின் புகைப் படம் தரித்த முத்திரையினை வெளியிட்டது . ஹெரஸ் சுவாமிகள் இலங்கைக்கு வந்தார். அவரின் முக்கியமான நோக்கம் ஞானப்பிரகாசரைக் கண்டு புதைபொருளாராய்ச்சி சம்பந்தமான சில சந்தேகங்களை நிவிர்த்திப்பதே. அவர் ஞானப் பிரகாசரின் மொழி ஆராய்ச்சித்திறனையும் புலமையினையும் கண்டு வியந்தார் பழைய ஏடுகள் சரித்திரக் குறிப்புகள் என் பனவே அவரின் செல்வம் , " 2 என்பதாம். சமகால உதயதா ரகை, சத்திய வேதபாதுகாவலன் போன்றவற்றிலே அவருடைய தமிழ்த் தொண்டுதான் விதந்தோதப்பட்டுள்ளது. கத்தோலிக் கத் திருப்பணிகளைத் தவிர்த்து. இவர் ஆற்றிய ஆக்கப்பணிகள் - தமிழியற்பணிகள் - தமிழ்ப்பணி, வரலாற்றுப்பணி ஆகியன வற்றுக்குச் சமமான முக்கியத்துவம் மேற்குறிப்பிட்ட ஈழகேசரிப் பந்திகளிலே ஒரளவு தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இவர் குறிப்பாக மேற்கொண்ட தமிழியலாராய்ச்சிக்கு - தமிழ்மொழி இலக்கிய ஆராய்ச்சிமட்டுமன்றித் தமிழர் வர லாற்றராய்ச்சியும் இன்றியமையாதவை இவற்றில் ஒன்றிலி ருந்து மற்றதைப் பிரிக்க முடியாது.

Page 4
- 4 -
இவையாவும் ஒருங்கேயமைந்தாற்ருன் தமிழியல் ஆராய்ச்சி முழுமையடையும், சுவாமிகள் கத்தோலிக்க கிறீஸ் தவ வரலாற்றிலும் ஆர்வமிக்குடையவர், சமகாலத்தில் யாழ்ப்பாணத்திலே நன்கு இயங்கிவந்த யாழ்ப்பாண வரலாற் றுச் சங்கத்தின் பிரபல அறிஞராகவும் விளங்கியவர். அதன் உபதலைவர், தலைவராகவும் விளங்கியவர் வேந்தியல் ஆசியக் கழ கத்தின் (இலங்கைக் கிளை) உறுப்பினராகவும் இலக்கிய ஆராய்ச் சியிலீடுபட்டவர்.
சுவாமிகளின் வரலாற்றுத் தொண்டினையும். ஆராய்ச்சி முறைகளையும் எடுத்துக்காட்டும் முக்கியமான நூல்களை முறைப் படுத்திக் குறிப்பிடலாம்.
1. யாழ்ப்பாண வரலாறு பற்றியவை;
gy. Kings of Jaffna during the Portuguese Period of
Ceylon History - 1920
ஆ. வையா வசனம் - பதிப்பித்தவர் - 92
இ. யாழ்ப்பாண வைபவ விமர்சனம் (ஆதிகாலம் தொட்டு கி, பி. 1624 வரையுள்ள யாழ்ப்பாண வரலாறு இதில் கூறப்பட்டுள்ளது) - 1928,
ஈ. செகராசசேகரன் - ஒரு சரித்திர நாவல். பத்திரிகை யொன்றிலே வெளிவந்தது. இதிற் பத்து அதிகாரங் களை மட்டும் பார்க்க முடிந்தது. ஆசிரியரிதனை நூல் வடிவமாக்கும் நோக்கம் கொன்டிருந்தார் என்பது அதில் அவர் மேற்கொண்டிருந்த திருத்தங்களாலும் அறியப்படும், -
11. பொதுவாகத் தமிழர் பற்றியவை :
அ. தமிழரின் பூர்வசரித்திரமும் சமயமும், சத்தியவேத பாது காவலனில் வெளிவந்து 1920-ல் நூல்வடிவம் பெற்றது. ஆ: தமிழரின் ஆதி இருப்பிடமும் பழஞ்சீர் திருத்தமும்
ஒரு புதிய ஆராய்ச்சி நூல்; செந்தமிழ் எனும் சஞ்சி

- 5 - சையில் ஆசிரியரின் இறுதித் தசாப்த காலத்திலே கட்டுரைகளாக வெளிவந்தது. பின் நூல்வடிவு பெறு தற்காக ஆசிரியர் இதனைத் திருத்தி அதற்குப் பீடிகை யும் எழுதியுள்ளார். ஆனல் அச்சேறவில்லை. 11. கத்தோலிக்க கிறிஸ்தவ வரலாறு பற்றியவை:
அ. ஆண்டவர் சரித்திரம்,
ஆ. ஆதி காலத்துப் பாப்புமார் சரித்திர சங்கிரகம் - பகுதி - 1 ( கி. பி. 33 - 337) - 1922, ஏனைய இரு பகுதிகள் முற்றுப் பெற்றன.
g). A History of the Catholic Church in Ceylon - Period of beginnings 505 - 1602, Colombo 1924:
FF. Catholicism in Jaffna. A brief sketch of it's history from the earliest times to the present day. Colombo 1926.
IV. இந்திய வரலாறு:
Indian's Ancient chnorology and civilization - Trichropoly 1921. V பிற சமயங்கள் குறிப்பாக இந்து சமயச் சார்
பான வரலாற்ருராய்ச்சி:
(இதன் சுருக்கம் ஒரளவு தமிழரின் பூர்வ சரித்திர மும் சமயமும் என்ற நூலிலும் காணப்படுகின்றது.)
gy, Philosophical Saivism. ஆ. சுப்பிரமணியர் ஆராய்ச்சி - 1918 இ. பிள்ளையார் ஆராய்ச்சி - 1921.
FF。
Historical aspect of christianity and Buddhism,
இவை பெரும்பாலும் ஆராய்ச்சி நூல்களாகவே மிளிர் கின்றன. இவற்றுட் பல யாழ்ப்பாணத்திலே வெளிவந்த The Catholic Guardian. அதன் தமிழ்ப் பிரசுரமான சத்தியவேத

Page 5
- 6 -
பாதுகாவலன் ஆகியவற்றிலே வெளிவந்து மறுபிரசுரமாக நூல் வடிவம் பெற்றவை. சிலவற்றிலே பிரசுர ஆண்டு குறிப்பிடப் படவில்லை. இவற்றைவிட ஈழத்திலும், வெளிநாடுகள் சில வற்றிலும் தமிழ், ஆங்கிலம் முதலிய மொழிகளிலே வெளி வரும் பத்திரிகைகள் சஞ்சிகைகளிலே சுவாமிகள் வரலாற்றுக் கட்டுரைகளும் பல எழுதியுள்ளார். குறிப்பாக,
Ceylon Antiquary and Literary Register, Journal of the Seylon Branch of the Royal Asiatic Society, Journal of the Mystic Society, Indian Historical Quarterly, Tamil culture செந்தமிழ் முதலியவற்றைக் குறிப்பிடலாம். இவை யாவற்றையும் தொகுத்து நோக்கும்பொழுது சுவாமி கள் வரலாற்றிலே அரசியல், சமூகம் முதலியனவற்றில் ஈடு பட்டவர் என்பது தெளிவு. இவற்றிலே தமிழர் வரலாறே அவரைக் கவர்ந்த பிரதான துறையாகும். -
வரலாற்று ஆராய்ச்சி நோக்கு முறைகள்:
சுவாமிகள் பின்பற்றிய வரலாற்று நோக்கு, ஆராய்ச்சி முறைகள் ஆகியன பற்றிச் சற்றுக் குறிப்பிடலாம். இவர் மனித குலம் ஒன்றே யென்ற அசையாத கருத்துடையவர். எடுத்துக்காட்டாக,
* மக்கட்படைப்பு ஒன்றே யென்பது இன்றைக்கு எல்லா உண்மை விஞ்ஞான சாத்திரிகளும் ஒப்புக் கொண்ட உண்மை" என்பதைக் குறிப்பிடலாம். இந்தக் கருத்தின் அடிப் படையிலேதான் இவருடைய தமிழியல் ஆராய்ச்சி அமைந்துள் ளமைகுறிப்பிடற்பாலது. இக்கருத்து அவரின் பன்மொழிப் புல மையாலோ, ஒப்பியலறிவாலோ, கிறீஸ்தவ வேதத்திற்கொண்ட அசையாத நம்பிக்கையாலோ, இவை எல்லாவற்றினுலுமோ ஏற்பட்டிருக்கலாம்.
சுவாமிகளின் தேசப்பற்றும், மொழிப்பற்றும் குறிப்
பிடற்பாலன. இளங்கோவடிகள் போன்று இவரிடத்து இவை நன்கு மிளிர்வதைக் காணலாம். எடுத்துக் காட்டாகத் தமிழ

- 7 -
சின் பூர்வ சரித்திரமும் சமயமும் என்ற நூலின் முகவுரை ” பழமையான சீர்திருத்தத்தினற் புகழ் படைத்தவர்களாய் உலகத்திலெல்லாம் அதி இனிமையான பாஷைகளுள் ஒன்றைப் பயிலுகின்றவர்களாய் தென்னிந்தியாவைத் தங்கள் சுய பூமி யெனக் கொண்டவர்களாய்ப் பல நூற்ருண்டுகள் தொட்டு விளங்கியிருக்கின்ற தமிழராவோர் யாவர், அவர்களது பூர் வோத்தரம் யாது, அவர்களது ஆதிச் சமயம் எத்தன்மையது என ஆராயும் இச் சிறு நூல். " எனத் தொடங்குகின்றது. மேற்குறிப்பிட்ட பந்தியிலே சுவாமிகளிள் நாட்டுப் பற்றும், மொழிப்பற்றும் உணர்ச்சி மேலீட்டால் அவரை உண்மையி லிருந்து பிறழவிடவில்லை.
தாம் கூறுவது எவ்விடயமாயினும், அவற்றிலே உண்மையெனத் தாம் கண்டவற்றினை எடுத்து இயம்புதற்குச் சுவாமிகள் பின்னின்றிலர் வரலாற்று ஆசிரியனுக்கு இன்றி யமையாத, திட்டவட்டமான சான்றுகளுடன் உண்மைகளை நிரூபிக்கும் அத்தியாவசிய இயல்பு சுவாமிகளிடம் நன்கு இலங் கியது. இத்தகைய இயல்பு இயற்கையாகவே அவரிடத்து ஏற்பட்டிருக்கலாம்.
* உள்ளதை உள்ளவாறு அழுத்தம் திருத்தமாகக் கூறுதலே வரலாற்று ஆசிரியனின் கடமை. இஃது ஓர் நற் GSFUL Gv Gör gp . ( lt is a duty and not a virtue ) 55 L1-L4-Láis துக்கு நன்கு செம்மையாக்கப்பட்ட மரத்தினைப் பயன்படுத்துவ தற்காகவோ அல்லது கட்டிடச் சாந்தினைப் பொருத்தமாகக் கலந்ததற்காகவோ சிற்பியினை ஒருவன் புகழ்தல் போல. உள்ளதை உள்ளவாறு அழுத்தம் திருத்தமாகக் கூறுவதற் காக வரலாற்ரு சிரிய னைப் புசழ்தள கும். இஃது அவனின் ஆய்வுக்கு இன்றியமையாத சூழ்நிலையாகும். ஆனல் இன்றிய மையாத கடமையன்று. இத்தகைய விடயங்களுக்காகத்தான் வரலாற்ருசிரியன் தொல்பொருளியல், சாசனவியல், நாணய வியல், காலவரையறை முதலிய துணை அறிவியல்களை நம்ப வேண்டியுள்ளான்.” 4 எனப் பேராசிரியர் இ. எச். கார் கூறி

Page 6
யிருப்பது சுவாமிகளுக்கும் நன்கு பொருந்தும், வரலாற்றிலே மட்டுமன்றி மேற்குறிப்பிட்ட துணை அறிவியல்களிலும் தேர்ச்சி பெற்று நடுவு நிலைமையினை கல்ஹணர் என்ற பன்னிரண்டாம் நூற்ருண்டுட் காஷ்மீர் ஆசிரியர் கூறுவது போன்று விருப்பு வெறுப்பின்றி நீதிபதி போலப் பின்பற்றுகின் முர் ‘எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு" என்ற வள்ளுவரின் இலக்கணத்திற்கு இலக்கிய மாகவும் சுவாமிகள் இலங்கினர்.
வரலாற்றின் தந்தை என்று கூறப்படும் ஹரொட்டற் றஸ் என்பவர் கிரேக்கரதும் மிலேச்சரதும் அருஞ்செயல் நினைவு களைப் பேணிப்பாதுகாப்பதும், யாவற்றிற்கும் மேலாகக் குறிப் பாக, அவர்களுக்கிடையில் ஏற்பட்ட போர்களின் காரணங் களைக் காட்டுவதுமே தமது நோக்கம் எனக்குறிப்பிட்டுள்ளார். 5
ஆனல் இன்றைய வரலாற்ருசிரியனின் நோக்கம் வேறு. கடந்த காலச் சமூகத்தினைப்பற்றி மனிதன் அறிதற்கும் சமகா லச் சமூகத்தில் அவன் திறம்படச் செயலாற்றுவதற்கும் துணை புரிதலே வரலாற்றின் இரு கடமைகளாம்" , என ஒர் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். 'வரலாற்ருசிரியன் கடந்த காலத்தினை விரும்பவேண்டும்." எனப்பேராசிரியர் றெவர்ருேபர் கூறியதற் கும் “வரலாற்றுநெறி பற்றிய கருத்தினைக்கண்டு உணர்ந்தோரே வரலாற்றினைச் செவ்வனே எழுதமுடியும்." எனப்பேராசிரி யர் கார் கூறியதற்கும் சுவாமிகள் சிறந்த எடுத்துக்காட்டாம்? உதாரணமாக, செகராசசேகரன் - ஒரு சரித்திர நாவல் என் பதன் முன்னுரையிலே, “பண்டைக் காலத்துச் சரித்திரங்களை ஆராயவேண்டுமென்ற ஒரு ஆவல் ஏதோ ஒரு விதமாய் என் மனதில் என் இளம் வயதிலே புகுந்து கொண்டது, எம்சுய நாடா கிய யாழ்ப்பாணத்தின் பூர்வ வரலாறே என் மனதைக் கவரு கிற விஷயமாக இருந்தது. பள்ளிக்கூட நாட்களில் பழைய கையெழுத்துப் பிரதிகளைச் சிரமத்தோடு எழுத்துக்கூட்டி வாசித்து வருவேன். முற்காலத்துக் கல்வெட்டுகள் வரையப் பட்டுள்ள லிபி அல்லது எழுத்துக்களின் வடிவம் தற்காலத் தாருக்குச் சாமானியமாய்த் தெரியாதல்லவா? இந்தப்பழைய

-س- 9 سسسه
லிபிகளையும் பிரித்து வாசிக்க ஏதோ ஒரு விதமாய்ச் சிறிது கற் றுக்கொண்டேன்." எனக்குறிப்பிட்டுள்ளார். ஆகவே சுவர் மிகள் பண்டைத் தமிழர் வரலாற்றிலும் குறிப்பாகப் பழைய யாழ்ப்பாண வரலாற்றிலும் நன்கு ஈடுபட்டதிலே வியப்பில்லே . சு மார் 2600 ஆண்டுகளுக்கு முன்னரே பண்டைய இந்திய ஞானி ஒருவர் "ஜனனி ஜன்ம பூமிசசுவர்க் காதபிகரீயஸி” என்ருர், இதனைப் பாரதியார் “பெற்றதாயும் பிறந்த பொன்னுடும் நற் றவ வானினும் நனி சிறந்தனவே" எனத் தமிழிற் பெயர்த்துள் ளார். வால்ரர்ஸ் கொட் என்ற ஆங்கி க் கவிஞர் நாட்டுப் பற்று அற்றவனுக்கு ஆன்மா இல்லையென்று குறிப்பிட்டுள் ளார். ஆனல் சுவாமிகளோ நாட்டுப்பற்று மிக்கவர்.
ஒப்பியலாய்வினைச் சுவாமிகள் தமிழ் ஆராய்ச்சியிலே மட்டுமன்றிப் பண்டைத் தமிழர் வரலாற்ருய்விலும் பயன் படுத்தியுள்ளார். தமிழர் வரலாற்றினை, ஆரியர், சீனர் குறிப் பாக ஆதிகால மேற்காசிய, எகிப்திய, சமூகங்கள் முதலிய பிற வரலாற்றுடன் ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளார்.
இவர் வாழ்ந்த காலச் சூழ்நிலையும் குறிப்பிடற்பாலது சம காலத்திலே யாழ்ப்பாண வரலாற்றுச் சங்கம் நன்கு இயங்கு வந்தது. ஈழத்திலே தேசீயம் வளர்ந்து வந்தது, முன்னையதிலே சுவாமிகள் நன்கு ஈடுபட்டவர் பின்னையதிலே நேரடியாக ஈடு பட்டாரோ தெரியவில்லை ஆனல் ஏற்கனவே குறிப்பிட்டவாறு நாட்டுப்பற்று, மொழிப்பற்று இவரின் நூல்களிலே நன்குகாணப் படுவன. சமகாலத்தில் இவரொடு சில வழிகளிலேசேர்ந்து யாழ்ப் பாண வரலாற்றில் ஈடுபட்டோரிலே முதலியார். செ. இராச நாயகம் குறிப்பிடத்தக்கவர். இதே காலப்பகுதியில் யாழ்ப் பாண வரலாறு பற்றிய பல நூல்கள் எழுந்தமையும் கவனித் தற்குரியது. சமகாலத்திலே தென்னிலங்கையிலே வண. பிதா எஸ். ஜி. பெரேரா என்பவர் இவரைப் போலவே இலங்கை வரலாற்ருய்விலும், கத்தோலிக்கம், சிங்கள மொழியாய்விலும் நன்கு ஈடுபட்டுப் புகழ் பெற்றவர். மேலும் ஸ்பெயின் நாட் டிலிருந்து வந்து பம்பாயிலே பல்லாண்டுகளாகக் கத்தோலிக்க திருப்பணியும், இந்தியவியல் ஆராய்ச்சி செய்த வரும் குறிப்பாகச்

Page 7
- io 一
சிந்து சமவெளி நாகரீக ஆய்வில் ஈடுபட்டு, அது தமிழர் நாக் ரீகம் என நன்கு எடுத்துக்காட்டி பவருமான வண. பிதா.
ஹெரஸ் சுவாமிகளும் ஞானப்பிரகாசருடன் தொடர்பு கொண்
டிருந்தார். சுவாமிகளின் சில கருத்துக்கள் - குறிப்பாகச் சிந்து சமவெளி பற்றியவை ஹெரஸ் சுவாமிகள் கொண்டிருந்த கருத்துக்களே. இருவரும் கருத்துப் பரிமாறல் செய்து வந்தனர். ஆகவே சமகாலச் சிந்தனைகள் இவரையும் பாதித்திருப்பன. * வரலாற்ற சிரியன் தன் காலத்தவனே. மனித வாழ்க்கை நிலைமைகளாலதற்குக் கட்டுப்படுத்தப்பட்டவன்" எனவும் 'வரலாற்ருசிரியன் கடந்த காலத்து அன்றி நிகழ் காலத்துக்கே உரியவன் எனவும் பேராசிரியர் கார் குறிப்பிடப்பட்டுள்ளமை சிந்தித்தற்குரியது.
சுவாமிகள் தமது ஆராய்ச்சி முடிவுகளைப் பன்முறை சிந்தித்தே எழுதியவர் என்பது அவரின் கையெழுத்துப் பிரதி கள் சிலவற்றிலும் காணக்கூடியதாயுள்ளது. " உள்ள மேற் கோள்களை ஒத்துப்பாராமல் விடாதே" என்ற ஆங்கிலப்புலவ ரின் கருத்தினை தாம் பின்பற்றித் திருத்தம் பெற்றதாகச் செந்தமிழ் என்ற சஞ்சிகையில் எழுதிய கட்டுரை யொன்றிலே குறிப்பிட்டுள்ளார். 11 மேலும் தம்மைப்போல பல ஆய்வா ளர் ஆய்விலீடுபடத் தூண்டும் வகையில் யாழ்ப்பாண வைபவ "விமர்சன முகவுரையிலே குறிப்பிட்டுள்ளார். இது பற்றிப்
பின்னர் விவரிக்கப்படும். - -
ஆசிரியர் தமது ஆராய்சி முடிவுகளை ஆங்சிலம் போன்ற சில பிற மொழிகளிலே மட்டுமன்றிக் குறிப்பாகத் தமிழிலே பரக்க எழுதியுள்ளார். தமிழ் மொழி தக்க இடத்தினைப் பாடத் திட்டத்திலோ, சமூகத்திலோ பெற்றிராத காலத்திலே சுவாமிகள் தமது தாய் மொழியிலே தமது ஆய்வுகளை எழுதி யுள்ளமை குறிப்பிடற்பாலது. இன்று தென்னிந்தியத் தமிழரி லும் பார்க்க ஈழத்துத் தமிழர் ஒரு வகையிலே பெருமைப் படத்தக் கவர்கள். ஆரம்பக்கல்வி தொடக்கம் பல்கலைக்கழகக் கல்வி - ஆராய்ச்சிக் கல்வி வரை தமிழ் போதன மொழி

யாக எமது நாட்டிலே விளங்குகிறது. இவ்வகையில் எமது முயற்சிகளின் வெற்றிகள் எவ்வாறயினும், அவை தென்னிந் தியத் தயிழருக்கும் வழிகாட்டியாகவே அமைந்துள்ளன என லாம். இதற்கு முன்னுேடியாகத் தனிப்பட்ட வகையிலே பெருந் கொண்டாற்றியவர் வரிசையிலே ஞானப்பிரகாசர்பெரு மிடம் வகிக்கிழுர் என்பதில் ஐயமில்லை அரசியல், சமூக, சமய வரலாறு பற்றிய நுண்ணிய ஆய்வுகளைத் தர்க்க ரீதியா கத் தமிழில் எழுதித் தமிழின் வளத்தினையும், நெகிழ்வினை யும் நன்கு எழுதிக் காட்டியுள்ளார். தமிழினை ஆராய்ச்சி மொழியாக நடைமுறையில் எடுத்துக்காட்டியவர்கள் வரிசை யில் இவருக்கும் குறிப்பிடத்தக்க ஓரிடமுண்டு.
தமிழர் பற்றிய மூன்று நூல்கள் :
தமிழர் மத்தியிலே குறிப்பாக ஈழத் தமிழர் மத்தி யிலே வரலாற்று உணர்வு, வரலாற்று விமர்சன நோக்கு முதலியன திருப்திகரமாக இல்லை என்ற குறைபாட்டினை நீக்கு வதற்கு முயன்றவர்களிலே சுவாமிகளும் முக்கியமானவர். தமி ழர் பற்றி இவர் எழுதிய மூன்று பிரதான நூல்களைச் சுருக் கமாகக் குறிப்பிடலாம். அவையாவன: 's 1. தமிழரின் பூர்வ சரித்திரமும் சமயமும் -1920, 2. தமிழரின் ஆதியிருப்பிடமும் பழஞ்சீர்திருத்தமும்.
ட ஒரு புதிய ஆராய்ச்சி நூல் (அச்சிடப்படவில்லை) 3. யாழ்ப்பாண வைபவ விமர்சனம் - 1928.
இம்மூன்றும் ஆராய்ச்சி நூல்கள் - இவற்றுள் முன் னவை யிரண்டும் பண்டைத் தமிழர் பற்றியவை பின்ஜனபது யாழ்ப்பாண வரலாறு பற்றியதாகும் முதலாவது நூல் 106 பக்கங்கள் கொண்டது. முதல் 24 பக்கங்களிலும் பழந்தமிழர், ஆரியத் தொடர்புகள், பழைய தமிழ் நூல்கள் முதலியன பற்றியும், 24 - 48-ம் பக்கம் வரை பழந்தமிழர் மத்தியில் நிலவிய சமூக் நிலைமைகளைப் பற்றியும் 49 - 105 வரை பழந் தமிழரின் சமய நிலைமைகளைப் பற்றியும் ஆசிரியர் விவரிக்கின் ரூர். நூலிலே சமய வரலாறே பெருமிடம் பெற்றுள்ளது. -06-ம் பக்கத்திலேயுள்ள முடிவுரையிலே ஆசிரியரின் நோக்க

Page 8
حمص 12 حسـ
மும், வரலாற்ருய்வும் துலக்கமாகக் கூறப்பட்டுள்ள்ன. அதா வது,
** இவ்வியாசம் பங்குபங்காய் சத்தி பவேத பாதுகாவ லன் பத்திரிகையில் வெளியிடப்பட்ட காலையில், நம் சைவ நண்பர்களுட் சிலர் இதை எழுதுவதில், ந ம க் கி ரு ந் த நோக்கத்தைத் தேற விசாரியாமையினுற் போலும், சமய தூஷணம் செய்ய எழுந்தோமென்று எண்ணிக்கொள்வோரா ஞர்கள். தமிழகத்தின் பூர்வ சரித்திரத்தை இயன்ற வரை யில் நிச்சயம் செய்வதே நமது நோக்கமாயிற்றன்றி நம்முன் னேரை எதுவிதத்திலாவது இகழுதல் நோக்கமாகவில்லை. பூர்வத் தமிழரது தெய்வங்களை நிச்சயஞ் செய்தவிடத்து அத் தெய்வங்கள் ஆதியில் கொண்டிருந்த ரூபத்தை மறைப்பின்றி எடுத்துக்காட்டுவது அவசியமானமையினல் மட்டும் நாம் எழு தியவாறு எழுதினுேம், எழுதியனவெல்லாம் எமது சொந்த அபிப்பிராயங்களுமல்ல. பல அறிஞர்கள் பலவாறு ஆங்காங்கு குறித்துள்ள அபிப்பிராயங்களையே எடுத்துரைத்தல் ஆராய்ச்சி பின்பொருட்டு இன்றியமையாதாயிற்று. ஒரு சில இடங்க ளில் நமது ஊகத்தையும் குறித்துள்ளோம். ஊகங்கள் போதிய சான்றுகளால் தாபிக்கப்படுமெனவும் ஊகங்களாகவே நிற்கு மென்றதையும் மனதில் தெரித்துக் கொள்ளுதல் வேண்டும் ” என்பதாம். மேலும்; இந்நூலிலே கூறப்பட்டன யாவும் இன்றைய ஆராய்ச்சியாளர் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், சம காலச்சூழ் நிலையிலே நோக்கும்போது குறிப்பிடத்தக்க தொண் டாகும். இவற்றுட் சில பகுதிகளாவது இன்னும் ஏற்றுக்கொள் ளப்படுபவையே. - -
ஆசிரியரின் இந்துசமய வரலாற்று விமர்சனத்தைச் சைவ உலகம் முற்ருக வெறுத்தது எனக்கொள்ளமுடியாது. தமிழகத்திலுள்ள பிரபல சைவமடங்களில் ஒன்ருன திருப்ப
னந்தாள்மடம் சுவாமிகளின் தமிழ்த்தொண்டினைப் பாராட்டிக்
கெளரவித்தது. நன்கொடை வழங்கியது. மேலும் அவர் தமது கருத்தினை வாசகர் மீது திணிக்கவில்லையென்பதும், தமது குறை களை உணர்ந்தவர் என்பதும், இந்நூல் முடிவிலே வரும் "குற்

- l3 -
றங்களைந்து குணமனைந்து வாசித்தல் கற்றறிந்தமாந்தர் கடன் என்பதால் அறியப்படும்.
இரண்டாவது நூல் -தமிழரின் ஆகியிருப்பிடமும்
பழஞ்சீர்திருத்தமும் :
இது செந்தமிழ் பத்திரிகையிலே கட்டுரைகளாக வெளி வந்தபின் ஆகிரியராலே தொகுக்கப்பட்டுத் திருத்தியும் புதுக்கியும் எழுதப்பட்டு அச்சேறுதற்கு ஆயத்தம் செய்யப்பட் நிலையிலே ஆசிரியர் அதற்கு எழுதியுள்ள பீடிகையுடன் கிடைத் துள்ளது இது பத்து அதிகாரங்கள் கொண்டது. முதலாவது அதிகாரத்திலே தமிழர் என்ற பதத்திலிருந்து திராவிடர்’ என்ற பதம் வந்ததாக ஆராயப்படுகின்றது. ஆனல் "திரைமே லர்" என்பதிலிருந்து ‘திரமிளர்’ வந்ததென இவர் கூறுவதை திடமாகக் கொள்ளமுடியாது, இரண்டாம் அதிகாரத்திலே தமி ழரின் ஆதியிருப்பிடம் பற்றிய சமகாலக் கருத்துக்கள் நான்கு நன்கு ஆராயப்படுகின்றன. அவையாவன:- -
1. இலமுரிக்கண்டக் கொள்கை 2. குமரிக்கண்டக் கொள்கை 3. இசுக்கித்திய மங்கோலிய உற்பத்திக்கொள்கை 4. ஆஸ்திரேலியப் பழங்குடிகளே தமிழர் என்ற
கொள் கை. என்பனவாம்.
இவற்றைத் தக்கவாறு ஆய்ந்து நிராகரிக்கிறர். இதன்பின் தமிழரின் முன்னைய இருப்பிடம் மத்தியதரைக்கடலைச் சார்ந்த பிரதேசங்களே என்பதும் அவர்களின் புலப்பெயர்ச்சி, நாகரீகம் பற்றியன குறிப்பிட்டு விரிவாக இதுபற்றி 3 - 8 வரையுள்ள அதிகாரங்களிலே ஆய்கின்ருர், தமது கருத்தினை மானிடவியல் (மனித உடற்கூறுகள் நிறம் முதலியன), சமூகவியல், எழுத்து முறை, சொல்லொற்றுமை, இடப்பெயர்கள், சமயவழிபாடுகள், பழக்க வழக்கங்கள் முதலியவற்றின் அடிப்படையில் ஆய்ந்துள் ளார். இவ்விடப்பெயர் ஆராய்ச்சி கிளெமென்ஸ்ஷ"ணர் என்ற ஜேர்மனியரின் முடிபுகளை அடங்கிய ஆர்மலூரிஸ் (ஆறு, மலே, ஊர்) என்ற அகராதியினைப் பின் பற்றியது. இப்பகுதியிலுள்ள சில கருத்துக்களை மொழிநூலார் இன்றைய ஆராய்ச்சி நிலை

Page 9
جس l4-سے
யில், ஏற்றுக்கொள்ளார். எடுத்துக்காட்டாக "இந்து ஐரோப்
பியம் திராவிடம் ஒரே அடியிலிருந்து எழுந்தவை" 9 என்ற கருத்
தினைக் குறிப்பிடலாம். இவ்விருபெரும் மொழிக் குடும்பங்களி
டையிலே தொடர்புகளிருந்திருக்கலாம் ஆனல், இவை ஒரே
அடியிற் தோன்றியவையல்ல. ஆனல் தமிழரின் ஆதி இருப்பி
படம் பற்றிச் சுவாமிகள் கூறியிருப்பது பொதுவாக ஏற்கத்தக்
கதே. ஒன்பதாவது அதிகாரத்திலே பரதகண்டத் தமிழர் நாக
ரீகம்; எனச் சிந்து சமவெளிநாகரீகத்தினைச் சுவாமிகள் விவரித்
திருப்பது இன்றைய ஆராய்ச்சி நிலையில் திடமாக ஏற்றுக்
கொள்ளமுடியாது. இங்கு வண. பிதா, ஹெராஸ் கொண்டிருந்த
கருத்தினையே திருப்பிக் கூறுகிருர் இதனை ஆதித்திராவிடர் நாக ரீகம் எனக்கூறினலும் ஒரளவு தகும் பத்தாவது அதிகாரத்
திலே தமிழ் நாகரீகமும் ஆரியமும் ஆராயப்படுகின்றன. இதில்
ஆரியரே பலவற்றைத் தமிழரிடமிருந்து பெற்றனர் எனக்கூறப்
படுகின்றது. ஆனல் கருத்துப்பறிமாறல் ஒருபுறமாகவன்றி இருபுறமும் ஏற்பட்டது, ஆனல் ஒருபுறத்தால் (திராவிடரிட மிருந்து) ஏற்பட்ட சாயல் கூடுதலாக இருக்கலாம்,
இதற்குமுன் இதுபோன்ற நூலொன்று நவாலியூர் த. சி. கந்தையா பிள்ளையவர்களாலும் வெளியிடப்பட்டது. இது பற்றியும் சுவாமிகள் தமது பீடிகையிலே குறிப்பிட்டுள்ளார் அதாவது "பல ஆராய்ச்சிகளையும் சங்கிரகங்களையும் உள்ளடக் கிச் சிறப்பு நோக்காய் சொற்களால் பெறப்படும் முடிபுகளை யும் அவ்விடத்திற் செய்து தமிழிலே முறைப்படி ஒரு விரிவான நூல் செய்யப்படுவதுண்டாயின் சரித்திர ஆராய்ச்சிப் பகுதி கற் போருக்கும் ஆராய்ச்சி விநோதர்களான பிறருக்கும் பயன் படும் என உன்னி இச்சிறிய பனுவல் அரங்கத்தில் விடப்படு கின்றது" என்பதாம். இப்பந்தியின் பிற்பகுதியிலே, “கடந்த காலத்தில் என்னென்ன சம்பவங்கள் எவ்வாறு நடைபெற்றன என்பதை இயன்றவரை மிகத்தெளிவாக அறிவதன்மூலம் அறிவு அறிவுக்காகவே என்ற குறிக்கோளுடன் மதிநுட்பவியல்ாளர் பலரின் தேவையினைத் திருப்திப்படுத்தலே வரலாற்ருய்வின் இறுதியான நோக்கமாகும்" எனவும் “மனிதனின் மதிநுட்பவியல் ஆர்வத்தினைத் திருப்திப்படுத்துவதான மிகத்தாழ்மையான

--سے 15 سے
பணியே வரலாற்ருய்வின் இன்றியமையாத நோக்கமாகும்” 3 எனவும் சமீபகாலத்திலே பிரபல வரலாற்ருசிரியரான ஏ. எல் பசாம் அவர்கள் வரலாற்றின் நோக்கம் பற்றிக் குறிப்பிடு வன ஒரளவு தொனிக்கின்றன.
மேற்குறிப்பிட்ட இரு நூல்களும் ஒரு வகையிலே பல அறிஞர்களின் கருத்துக்களைத் தொகுத்துக் கூறுவனவாகவே குறிப்பிட்டு இருப்பினும், அவை முதனூல்கள் போன்றே விளகி குகின்றன. மேலும் ஒன்றினை ஒன்று பூரணப்படுத்துவனவாகவே பண்டைத் தமிழர் வரலாற்றினை எடுத்து இயம்புகின்றன
மூன்ருவது நூல் - யாழ்ப்பாண வைபவ விமர்சனம் அது வெளிவந்த காலத்திற்கு (1928) முன் யாழ்ப்பாண் வரலாறுபற்றி எழுதப்பட்டுள்ள பல நூல்கள்: 1. (சைமன் காசிச்
Gafl lig- 6TCup Su On the History of Jaffna from the earliest Period to the Dutch Conquis: 847)
2. எஸ். ஜோன் எழுதிய யாழ்ப்பாணச்சரித்திரம் - 1847 3. வி. சதாசிவம்பிள்ளை எழுதிய யாழ்ப்பாண வைபவம்
1884 4 ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை எழுதிய யாழ்ப்பாணச் சரித்
திரம் - 1912 5. க. வேலுப்பிள்ளை எழுதிய யாழ்ப்பாண வைபவக்
கெளமூதி - 1918 6. இராசநாயக (yp5a3urri aT(p3)u Ancient Jaffna
(1926).
ஆகியவற்றிலும் பார்க்க வரலாற்று ரீதியிலே மிக முக்கியமானது. இராசநாயக முதலியார் முதன் முதலாகப் பல் வேறு வகையான வரலாற்று மூலகங்களைப் பல ஆண்டுகளாக ஆராய்ந்து தமக்கு முற்பட்ட யாழப்பாண வரலாறு பற்றிய நூல்களிலும் பார்க்கச் சிறந்த நூல் எழுதியவர். ஆனல் ஆராய்ச்சி முறைகள் சிலவற்றிலே தவறுகள் இழைத்து விட் டார். ஆனல் சுவாமிகள் அவரிலும் பார்க்கத் தற்கால விஞ் ஞான ரீதியான ஆய்வு முறைகளைப் பயன்படுத்தித் தமது

Page 10
--س۔ 6! --س۔
நூலை யாத்து, முதலியார் விட்ட சில தவறுகளேயாவது நிவிர்த்தி செய்துள்ளார்.
இந்நூல். நூல் தலைப்புப்பக்கம், உபோற்காதம் உள் ளடக்கம் முதலியன தவிர்த்து 15 அதிகாரங்களும் 172 பக்கங் களும் கொண்டது, போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றித் திட்டவட்டமான ஆட்சியேற்படுத்தும் வரையி லான கி. பி. 1624 வரையுள்ள யாழ்ப்பாண வரலாற்றைப் பல சான்றுகளின் நுண்ணிய ஆய்வுடன் எடுத்துக் கூறுகின்றது, பாழ்ப்பாண மன்னர் தனியான நாணயங்களை (சேது, நந்தி, பிறை முதலியன பொறித்த நாணயங்களை) வெளியிட்டனர் என முதலியார் செ. இராசநாயகம் கூறிய குறிப்பினைக் கொண்டு, சுவாமிகளே முதன் முதலாகத் தக்க சான்றுகளுடன் ஈழத்திலே வெளிவந்த ஆங்கிலச் சஞ்சிகை யொன்றிலும்," பின்னர் இந்நூலிலும் ஆணித்தரமாக எடுத்துக்காட்டியவர்." * யாழ்ப்பாண மன்னர் பரராசசேகரன், செகராசசேகரன் என்ற சிம்மாசனப் பெயர்களை மாறி மாறித் தரித்தனர்." என எச். டபிள்யூ. கொட்றிங்ரன் தமது விரிவுரை யொன்றிலே கூறிய கருத்தினை நன்கு ஆராய்ந்து நிலைநாட்டியவர் இவரே. 6 யாழ்ப்பாண வரலாற்று மூலங்களிலே காணப்படும் கட்டுக் கதைகள், உருவகக் கதைகள், யாழ்ப்பண இடப் பெயர்கள் முதலியனவற்றை மிக நுண்ணியதாக ஆராய்ந்து கூறியுள்ளார். இடப் பெயராய்ச்சியிலே இவருக்கு முன்னேடியாக பூரீ ச. குமார்சுவாமிப்பிள்ளை அவர்கள் விளங்சினர்."
சுவாமிகள் கண்ட வரலாற்று முடிபுகள் சில தற்கால
வரலாற் ஆராய்ச்சிகளால் ஏற்றுக்கொள்ளப்படாவிடினும்," ,
சமகாலத்திலே, தற்கால ஆய்வு முறைகளோ, வசதிகளோ குறைவாயிருந்தன என்பதனையும் அவர் ஒழுங்கான வரலாற் முய்வுப் பயிற்சி பெருதவர் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். அக்கால சூழ்நிலையிலே சுவாமிகளின் சாதனைகள் மகத்தானவையே.
அவரின் உண்மை மதிப்பிற்கு ஒர் உதாரணமாக, ** போர்த்துக்கேயர், குருமார் பலவந்தமாக மதப்பிரசாரங்

سے۔ 7! -......
செய்யவில்லை. ஆனல் தம் சமயத்திற் சேர்வோருக்கு விசேட உத்தியோகமாகிய சணுவுகளையும், அடிமை மீட்சியாகிய சுதந்திரங்களையும் கொடுத்ததொன்றுமே அரசினர் சமயப் பிர சார விருத்தி சம்பந்தமாகப் பண்ணிய உ த வி ப் பா டாம் என்பதைக் குறிப்பிடலாம். மேலும், யாழ்ப்பாணத்தை அடிப்படுத்திப் போர்த்துக்கேயராட்சியினை ஏற்படுத்தி இங்கு முதலாவது போர்த்துக்கேயத் தேசாதிபதியாகக் கடமையாற் றிய பிலிப்டிஒலிவீராவின் இந்துக் கோவில் அழிவுக் கொள் கைக்குப் பின்வருமாறு விளக்கம் தந்துள்ளார். ' அரசர் நிலத்தின் சொந்தக்காரர். எனவே, பறங்கியர் தம் நிலமென வெற்றிகண்ட தேசத்திலே பொய்த் தெய்வங்கள் என்று தாங் கள் (சரியாகவோ பிழையாகவோ ஆயின் மனதார ) கருதி யோரின் ஆலயங்களிருக்கவிடாது அழிப்பது அவசியமெனக்
கண்டார்”** 9
நூலின் உபோற்காதத்திலே சுவாமிகள் தமது நோக் கத்தினைப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். “யாழ்ப்பாண வைபவ விமர்சனம் என்னும் இச்சிறு நூல் யாழ்ப்பாண இராச்சியத்தின் ஆதிகால உண்மைச் சரித்திர ஆராய்ச்சியை யும் யாழ்ப்பாண வைபவ மாலை எனப் பெயரிய தூலின் உள் ளூறை ஆராய்ச்சியையும் கையாளுவது . யாழ்ப்பாணத்துப் பண்டைநாள் வரலாற்றின்கணுள்ள சிக்கல்களையெல்லாம் இந் நூல் அறுத்துவிடும் எனக் கூற அமையாது, எமது ஆராய்ச்சி அறிஞர்களால் மேலும் ஆராயப்படவேண்டிய தொன்று. எல் லாத் துறைகளிலும் முடிந்த முடிபை எடுத்தோதுவதன்று. பலப்பல அருந்துறைகளில் புது ஆராய்ச்சியின் மேல் ஊக்கத் தைக் கிளர்த்தி விடுவதே இந்நூலின் கருத்தாம் என அறிக", என்பதாம். உண்மையான வரலாற்ருசிரியரின் நோக்கங்கள் இதிலே நன்கு பிரதிபலிக்கின்றன. தமது ஆய்வுகளிலே குறை பாடிருக்கலாம் என்பதை நூலாசிரியரும் ஒப்புக்கொண்டு மற்ற வர்களையும் தமது ஆய்விற்குத் திருப்பிவிடுகிருர், புதிய ஆய் வாளர்களையும் தூண்டுகிருர் இவருக்குப்பின் இவரினை ஒரளவா வது பின்பற்றி மிக அண்மைக் காலத்திலே, யாழ்ப்பாணத்

Page 11
حصص۔ l8 -حصے
தைச் சேர்ந்தவர்களும், இலங்கைப் பல்கலைக் கழகத்திலே வர் லாறு விரிவுரையாளர்களுமாக விளங்கும் கலாநிதி காடு இந்திர பாலா?*. கலாநிதி சி. பத்மநாதன்* ஆகிய இரு ஆய்வா ளர்கள் தமது கலாநிதிப்பட்ட ஆய்வுக்கு யாழ்ப்பாண வர லாற்றையே பெரும்பாலும் மேற்கொண்டனர். இவர்கள் ஆயாத பகுதிகள் மேலும் சுவாமிகள் கூறியுள்ளபடி ஆராயப் படவேண்டும்
பொதுவாக நோக்கும்போது. சுவாமி ஞானப்பிர காசர் ஒரு சிறந்த தேசீய தமிழியலறிஞர் எனக்குறிப்பிடலாம் சமகாலத்திலே நிலவிய தாம் அறிந்த நுணுக்கமான ஆய்வு முறைகளைப் பயன்படுத்திப் பண்டைத்தமிழர் வரலாற்றினையும் குறிப்பாக யாழ்ப்பாண வரலாற்றினையும், எழுதினுர் என்ற வகையிலே வரலாற்று ரீதியிலே நினைவு கூரத்தக்கவர். முன் னுெரு போதுமில்லாத வகையிலே யாழ்ப்பாண வரலாற்றை ஒரளவாவது விஞ்ஞான முறைப்படி ஒழுங்கு படுத்திக் கூறி unitia
۹- سه سوی هم به قج * جھ2ےہ دوسرسوlقی\

-س- 19 --
அடிக் குறிப்புகள்
. Fernando J. S. Brief Rice ord of a Crowded Life or A life
sketch of the Rev. Fr. Gnanaprakasar, O. M. I. in Commemoration of the sarcedetal Silver Jubilee. 90 - 926
2. ஈழகேசரி மலர் 17. இதழ் 25, 26 1.1947.
3
2.
3
4.
5,
6. 7.
. பழந்தமிழரின் ஆதியிருப்பிடமும் பெருஞ்சீர்திருத்தமும்:
அதிகாரம் II
Carr E. H what is History - Great Britain 1924 L IO-I
Carr E. H. Gud sibt i Lq Lu 87 Carr E. H. 99. i. 55
. Introduction - to J. Burckhard, Judgements on History
and Historians 959 u. 17
. Carr E. H. மேற்குறிப்பிட்டது ப. 32 sy 99 .24 • נ_ו 0.
.
op U. 25 செந்தமிழ் 39. 1941-1942 ப. 149-5 தமிழரின் ஆதியிருப்பிடமும் பழஞ்சீர்திருத்தமும் அதிகாரம் Basham A. L. Studies in Indian History and Culture Calcutta 964
Preface P. VII - VIII
Gnanaprakasar. S. “The Forgotten Coinage of the Kings of Jaffna' Ceylon Antiquary and Literary Register v. Part IV . , 72-79 சுவாமி ஞானப்பிரகாசர் - யாழ்ப்பாண வைபவ விமர்சனத் அச்சுவேலி 1928 ப. 62 - 63,
மேற்படி ப. 78-81. குமாரசாமிப்பிள்ளை ச. வடமாகாணத்தில் உள்ள ஒல இடப் பெயர்களின் வரலாறு,

Page 12
8.
9. 20.
2
22.
- 20 -
எடுத்துக்காட்டாக முதலில் வல்லிபுரமும் (சிங்கைநகர்) பின் நல்லூரும் யாழ்ப்பாணத்தின் தலைநகராய் விளங்கின,
மாகனே கூழங்கைச்சக்கரவர்த்தி முதலியன குறிப்பிடலாம்.
சுவாமி ஞானப்பிரகாசர் மேற்குறிப்பிட்டது ப. 68, 169. மேற்படி ப. 69.
... Indrapala K, Dravidian Settlements in Ceylon and the
beginnings of the kingdom of Jaffna - 1965
London university
Pathmanathan S. The Kingdom of Jaffna Circa, A. D.
1969 H4509 سس i2509
London University
 


Page 13
---