கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தேசிய இனப் பிரச்சினையும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும்

Page 1
LD50
1635, 35.
இல
リ。
:-: -
 
 
 
 
 
 
 

---
|-
L. 35.
前

Page 2

), @、今のい?”
義2っ*7 தேசிய இனப் பிரச்சினைக்கு கம்யூனிஸ்டுகளின் தீர்வு
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி
11வது தேசிய மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரகடனம்
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வெளியீடு
1980

Page 3
எமது பல்லின நாட்டின் சகல தேசிய இனங்களும் சமத்துவத் சூழ்நிலைகளில் வாழவும் உழைக்கவும், தமது மொழிகளையும் கலாசாரங்களையும் இனத் தனித்துவங்களை யும் சுதந்திரமாக தமது சொந்த எதிர்காலத்தை நிர்ண யிக்கவும் உரிமை உண்டு என்று இலங்கை கம்யூனிஸ்ட கட்சி பிரகடனஞ் செய்கிறது.
இனவாதத்தின் சகல வடிவங்களையும் அது எதிர்க் கிறது, இன, மத அல்லது சாதி வெறுப்பைத் தூண்டு வது தண்டனைக்குரிய குற்றமாக்கப்படவேண்டுமென ஆலோசனை கூறுகின்றது. -
சமத்துவத்திற்காகவும், தாம் அனுபவிக்கும் பல்வேறு விதமான பாரபட்சங்கள் மற்றும் துன்புறுத்தல்களுக்கு முடிவுகட்டவுமாக இலங்கையில் உள்ள தேசிய இனங் களின் நியாயமான கோரிக்கைகளை எமது கட்சி ஆதரிக் கிறது. அவர்களைப் பாதிக்கும் பலவிதமான அநீதியா னதும் குறைபாடுகளுக்கும் எதிராக சமத்துவத்திற்கான ஒதுக்கப்பட்ட சிறுபான்மையினர் நடத்தும் ஜனநாயகம் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான இலங்கையில் உள்ள எல்லா மக்களினதும் மொத்தமான போராட் டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக நாம் கருதுகிருேம்.
ஏகாதிபத்தியம், உள்நாட்டு நிலப்பிரபுத்துவம், முதலா ளித்துவப் பிற்போக்கு ஆகியன தமது வர்க்க நலன்களைப் பாதுகாக்கவும் தமது ஆட்சியைத் தொடரவுமாக இன வெறியையும், வகுப்புப் பிரிவினை மற்றும் பூசல்களை ஊக்குவித்தலையும் எவ்வாறு பயன்படுத்தி வந்துள்ளன என்பதற்கு இந்த நூற்றண்டில் எமது நாட்டின் வரலாறு பல உதாரணங்களைக் காட்டுகிறது. s
ஏகாதிபத்தியவாதிகள் இன உறவுகளையும் பகைமை களையும் தூண்டிவிட்டனர். அவர்கள் தமது பிரித்தா ளும் அடிப்படை உபாயத்தின் அடிப்படையில் ஒரு இனத் தினை மற்ற இனத்திற்கு எதிராகப் பயன்படுத்தினர். இவ் வாறு அரசியல் சுதந்திரம் வென்றெடுக்கப்படுவதை அவர்கள் நேர்மையின்றி தாமதப்படுத்தினர்.
2
 

அரசியல் சுதந்திரம் வென்றெடுக்கப்பட்டதன் பின் னரும் கூட, சமூகங்களுக்கிடையிலான உறவுகள் பற்றிய பிரச்னைகளுக்கு ஒரு நீதியான தீர்வு தோற்று விக்கப்பட வில்லை. பல அம்சங்களில் முன்னரை விட நிலைமை மோச மாகியது.
இலங்கையில் பிறந்தவர்களாக அல்லது பல தஸாப் தங்களாக இங்கே வசித்தவர்களாக இருப்பவர்களும், எமது தேசிய செல்வத்தைப் பாதுகாப்பதில் கணிசமான பங்களிப்பைச் செய்பவர்களுமான பல இலட்சக்கணக் $(T ତ୪r மலைநாட்டுத் தமிழர்கள்-இவர்களில் பெரும் பான்மையானேர் தோட்டத் தொழிலாளர்கள்-சட்டத் தின் மூலம் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டனர்; ஜன நாயக நிகழ்வுப் போக்கிலிருந்து நீக்கிவைக்கப்பட்டனர்.
தமிழ் பேசும் மக்கள் நிர்வாக நடைமுறையிலும் சமூக வர் ழ்விலும் பல்வேறு அநீதிகளுக்கும், அவமதிப்பு களுக்கும், பொது அதிகாரிகளுடஞன தொடர்புகள், உயர் கல்வி, பொது வேலைவாய்ப்பு, நிலம், வர்த்தகம் போன்றவற்றிற்கான அவர்களின் வாய்ப்புகளில் ஏற்றத் தாழ்வுகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஒரு சிறு தொகையினரான இலங்கை முஸ்லிம்கள் மாணிக்கக் கல் வர்த்தகம் மற்றும் ஊக வாணிப செயல்கள் மூலம் பெருஞ் செல்வத்தைக் குவிக்க முடிந்த போதிலும் கூட, இச் சமூகத்தைச் சேர்ந்த பெரும்பான்மையினர் கல்வி மற்றும் வரலாற்று ரீதியா கப் பெறப்பட்ட ஏனைய குறைபாடுகளை இன்னும் அணுப வித்து வருகின்றனர். அது ஏனைய இன சமூகங்களின் சமூக வளர்ச்சியைவிட அவர்களின் சமூக வளர்ச்சியைப் பின்தங்கச் செய்தது.
இனக்
கலவரங்கள்
சுதந்திரத்திற்குப் பிந்திய சகாப்தம் மூன்று பெரும் இனக்கலவரங்களைக் கண்டுவிட்டது; ஏற்படவிருந்த ஏனைய கலவரங்கள் நூலிழையில் தடுக்கப்பட்டன. தமிழ் மக் கள் இனக்கலவரம் மீண்டும் வெடிக்கும் என்ற தொடர் ச்சியான அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர் என்ற அம்சங்களேவிட, சமீப காலங்களில் சமூகங்களுக்கிடை
யிலான உறவுகள் எவ்வளவுக்கு மோசமடைந்துள்ளது
என்பதை வேறு எதனுலும் அவ்வளவு தெளிவாகவும் தீர்க்கமாகவும் காட்டவியலாது.
சமூகங்களுக்கிடையேயான உறவுகள் மோசமடைவது இலங்கையினதும் அதன் மக்களினதும் முன்னேற்றத்
கிறது.
N
திற்குப் பெரும் முட்டுக்கட்டையாக இருந்து வந்திருக்
ܮ݂

Page 4
சமூகங்களின் கொந்தளிப்பு நிலைமைகள், மோதல் கள் காரணமாக அப்பாவி மக்களின் உயிரிழப்பு, பொது சொந்த சொத்துக்களின் இழப்பு ஆகியன ஏற்பட்டதோடு மாத்திரமன்றி, இவை தேசிய உற்பத்தியில் காலா காலச் சீர்குலேவுக்கும், நபர்கள்-இவர்களின் தொழில்நுட்பத் தேர்ச்சி நாட்டிற்கு அவசியமானதாகும்.
வேளிநாடுகளுக்குக் குடிபெயர்வதற்கும், பெருமளவு திர்
வாக ஆற்றலின் மைக்கும், உயர், விஞ்ஞான, தொழில் நுட்பக் கல்விக்கான எல்லா சமூகங்களின் சிறப்புரிமை மீது தேவையற்ற கட்டுப்பாடுகளுக்கும் இட்டுச் சென் றுள்ளன.  ܼܓ
சுதந்திரத்திற்குப் பின்னரான காலகட்டத்தில் ஐக் கிய தேசியக் கட்சி, பூரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டுமுதலாளித்துவ அரசாங்கங்களும் சமூகங்களுக்கு இடையே உறவுகள் மோசமடைவதை உபயோகித்து அவசர கால நிலையைப் பிரகடனஞ் செய்யவும். பல த ஸ்ாப்த காலப் போராட்டத்தின் மூலம் மக்கள் @န္႔ရြ႔ါက္ကံ (၄) #?? ஜனநாயக உரிமைகளுக்குக் குழிபறிக்கும் நிரந்தர ச்
சட்டங்களை அறிமுகஞ் செய்யவும் பயன்படுத்தின. േ,
தப் பிரச்னை நாட்டின் சமூக, பொருளாதார மூன்னேற்
றத்திற்கு முட்டுக்கட்டையிட்ட போதிலும் கூட, இதைத்
தீர்த்துவைப்பதில் தமது இயலாமையையும், விருப்ப மின்மை யையும் அவை பலமுறை நிர்ணயித்துக் காட்டியுள்ளன.
முதலாளித்துவக்
கொள்கைகள்
ஜனதிபதி ஜே. ஆர். ஜயவர்தனவின் இன்றைய ஐக் கிய தேசியக் கட்சி அரசாங்கம் இவ்விஷயத்தில் முன்னை
ஆட்சி எல்லாவற்றையும் மிஞ்சியுள்ளது.
அரசியல் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும், சிலவேளைகளில் நேரடியாகவும், சிலவேளைகளில் தொழி லாளர்கள் இயக்கத்தில் இருந்த தமது ஏஜென்டுகள் மூலமாகவும் செயல்பட்ட பல்வேறு காலனியாதிக்க, முத லாளித்துவ அரசாங்கங்கள் தொழிலாளர் வர்க்கத்தின் மீது தாக்குதலைத் தொடுக்கவும், அதன் அணிக்ளைப் பிரிக்கவும், ஓர் ஐக்கியப்பட்ட வீருர்ந்த தொழிலாளி வர்க்க இயக்கத்தின் வளர்ச்சியைத் தடைசெய்யவும், மூலாதாரமான தொழிற்சங்க, ஜனநாயக உரிமைகளே ஒழித்துக் கட்டவும் இனவாதத்தை ஒரு சாதனமாகப் பயன்படுத்தி வந்தன .
1920-ம் ஆண்டுகளின்போது உறுதிவாய்ந்த ஆரம்ப கால தொழிற்சங்க இயக்கத்தை அழித் தொழிப்பதற்கு எவ்வாறு இனவாதம் பயன்படுத்தப்பட்டது என்பதை,
 
 
 
 
 
 
 
 
 

30ம் 40 ம் ஆண்டுகாலப் பகுதியில் இரண்டாம் உலகப் போரின் முன்னரும் அதன் பின்னரும் இடதுசாரி இயக்கத்தின் பெரும் முன்னேற்றத்தை முளையிலேயே கிள்ளிவிடும் முகமாக மலேயகத் தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் எவ்வாறு வாக்குரிமை அற்றவர்களாக ஆக்கப்பட்டனர், நாடற்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்பதை, முதலாளித்துவக் கட்சிகளது செல்வக்க்கின் கீழ் தொழிற்சங்க வாதம் எவ் வாறு இனவாத மொழிவாரி போக்குகளில் போற்றி வளர்க்கப்பட்டது என்பதை, மூலாதாரமான தொழிலாளி வர்க்க மற்றும் ஜனநாயக உரிமைகள்-அமைதியான மறியல், ஆர்ப்பாட்டங்கள், வேலை நிறுத்தங்கள் மற்றும் தொழிலாளர்கள் சுரண்டலிலிருந்து தம்மைத் தாமே பாதுகாத்துக் கொண்ட ஏனைய மார்க்கங்கள்-வகுப்பு வாத வன்முறையும் டயங்கரவாதத்தையும் ஒழித்துக் கட் டுவது என்ற போர்வையில் தாக்கப்பட்டன, அடிக்கடி சட்டபூர்வமாகத் தடை செய்யப்பட்டன என்பதை தொழிலாளி வர்க்கம் என்றுமே மறக்க முடியாது.
- சுதந்திரத்திற்குப் பின்னரான இந்த காலகட்டத்தின்போது, எல்லா அரசாங்கங்களாலுமே-அது ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கமாக இருந்தாலும் சரி, ஜீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கமாக இருந்தாலும் சரி மோசமாகிவரும் பிரச்னைகளைத் தீர்க்கமுடியாமற் போனது ஏன் என்பதற்கு முக்கியமான காரணங் களில் ஒன்று, அவை முதலாளித்துவப் பாதையில் இலங் கையை அபிவிருத்தி செய்ய முயலும் ஒரு கொள்கையை அடிப்படையாகவே பின்பற்றியதுதான்.
பல்லின நாடு ஒன்றில் தேசிய இனங்கள் அனைத்துக் குமான சமத்துவத்தையும் நீதியையும் முதலாளித்துவத் தின் கீழ் சாதிக்க முடியாது. ஏனெனில், ஏற்கனவே மனிதகுல வரலாற்றின் வழியிலிருந்து விலகிச் செல்கின்ற
அழிந்தொழியும் தறுவாயில் உள்ள இந்த சமூக அமைப்பு
மனிதனே மனிதனும் தேசத்தை தேசமும் சுரண்டுவதன் அடிப்படையில் மாத்திரமே நின்று நிலவமுடியும், இதனுல் தான், பாராளுமன்ற ஜனநாயகங்களாக அணிதிரண் டுள்ள நாடுகள் உள்ளிட, சமகால உலகின் எல்லா பல் லின முதலாளித்துவ நாடுகளிலும் இனப் பாகுபாடு இனப் பகைமை பிரச்னைகள் தொடர்ந்தும் நிலவுகின்றன.
இதைவிட, சுதந்திரம் பெற்றது முதல் இலங்கை யின் இரு பிரதான பூர் ஷ்வா அரசியற் கட்சிகள் பின் பற்றிய அபிவிருத்திப் பாதை உலக வங்கி போன்ற ஏகாதி பத்தியத்தின் சர்வதேச நிதி நிறுவனங்களுக்குக் கீழ்ப்படி வதாகவும், புதுக் காலனித்துவ உபாயத்திற்கு இடமளிப் பதாகவும் இருந்து வந்துள்ளது.
இதன் காரணமாக, இலங்கையின் மக்கள் தொகை இரண்டாம் உலகப் போரின் பின்னர் இரு மடங்குக்கும்

Page 5
、
அதிகமாகிய போதிலும் கூட அதன் பொருளாதாரம் அடிப்படையிலேயே தேக்கமுற்றும் தங்கியுள்ள நிலையிலும் இருந்து வந்துள்ளது. இவ்வாறு 1960-ம் ஆண்டுகளிஏம் 1970-ம் ஆண்டுகளிலும் குறிப்பாக கணிசமான வியாபித்த
பொதுத் துறையில் வேலைவாய்ப்புக்கும் நிலம், உயர் மற்
றும் விஞ்ஞான கல்விக்கும், அரசு ஆதரவுக்கு மான போட்டி முனேப்பாகியது; இது வகுப்புவாதத் தியைத் தூண்டுவதில் ஆர்வமுள்ள பிற்போக்குச் சக்திகளுக்கு என் ணெய் வார்த்தது. .
சமூகங்களுக்கிடையிலான உறவுகளின் பிரச்னைக்கு நீதியான அல்லது நிரந்தரமான தீர்வை முதலாளித்துவ உறவைகளின் கட்டமைப்புக்குள் அல்லது முதலாளித்து வக் கட்சிகளின் கொள்கைகளுக்குள் கண்டுவி (Մ. ԼԳ. ԱյIT 3/ என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி பிரகடனஞ் செய்தி றது. சிங்கள, தமிழ் மக்கள் மத்தியிலுள்ள பூர் ஷ்வா கட்சிகள், தலைவர்களின் அடிப்படை கொள்கைகளது வங்குரோத்துத்தனம் இதை நிரூபிக்கிறது. பலவந்த திணிப்புகள்
தமிழ் பேசும் மக்களை தமது மொழியையும் 5 (οι) ΓΓ சாரத்தையும் துறந்துவிட்டு சிங்கள மக்களின் மொழி
யையும் கலாசாரத்தையும் பலவந்தமாக ஏற்க நிர்ப்பந்
இக்கும் இந்தக் கொள்கையானது, அதன் ஆதரவாளர் கள் கோரியதைப் போல தேசிய ஐக்கியத்தை ஏற்ப டுத்த வில்லை. மாறக, தமிழ் மக்கள் மத்தியில் அது மனக் கசப்பை உண்டு பண் ணியது; அவர்களி_ைடு பிரிவினைப் போக்குகளை ஊக்குவித்தது: இலங்கையை இரு தனித்தனி அரசுகளாகப் பிரிப்பதற்கான கோரிக்கையில் போய் முடிந்தது. - அதைப்போலவே அரசாங்க அதிகாரத்திலும் அரச ஆதரவிலும் இரண்டாம் பட்சமான பங்கைக் கொடுத்து அதற்குப் பதிலாக தமிழ் மக்கள் மத்தியிலுள்ள சந்தர்ப் L. I 6) | IT ġ5, முதலாளித்துவ ஒப்பந்த வடிவங்களைப் பெறு வதன் மூலம் ஒரு போலியான 'தேசிய ஐக்கிய' த்தை ஏற்படுத்துவதற்குத் தற்போது எடுக்கப்பட்டுவரும் முஸ் இபுகளும் வெற்றிபெறவில்லை. ஏனெனில், எல்லா சமூகங் களையும் சேர்ந்த பரந்த வெகுஜனங்களின் ஜீவாவார நலன்களேயும் பிரச்னேகளேயும் அவை தொடரவில்லே. எனவே தான், 1965-ம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியினதும் அரசாங்கம் வீழ்ந்தது; அப்படியான நிலைமையை மீண்டும் ஏற்படுத்துவதற்கு இன்றைய ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் எடுக்கும் பிரயத்தனங்களும் நிச்சயம் தோல் வியடைந்தே தீரும்.
இலங்கைத் தமிழர்கள் மத்தியிலுள்ள முதலாளித் துவத் தலைவர்கள் பின்பற்றிய கொள்கைகளும் வங்கு ரோத்தில் முடிந்து விட்டன.
每
 
 

இலங்கையை பிரித்தானிய ஏகாதிபத்தியம் ஆட்சி செலுத்தியபோது இந்தத் தலைவர்கள். நாட்டின் அரசி யல் விடுதலைக்கான பிரித்தானிய காலனியாதிக்க வாதிக ளின் எதிர்ப்புக்கு ஆதரவு அளிப்பதற்கு ஒரு மாற்ருக, மத்திய நிர்வாகத்தில் ஒரு சமபங்கினைப் பெறும் பொருட்டு அதன் பிரித்தாளும் கொள்கையைப் பயன் படுத்திக் கொள்ள விழைந்தனர். இது, அப்போது மிகவும் வலிமை பெற்றிருந்த தமிழ் காங்கிரஸ் ' சமவலுவுள்ள பிரதிநிதித்துவ'த்திற்காகவும்(ஐம்பதுக்கு ஐம்பது) இலங் கையில் பிரித்தானியர் நிரந்தர நிலைகொண்டிருப்பதற்கு விடுத்த கோரிக்கையில் மிகத் தெளிவாகத் தெரிந்து கொள்ளமுடியும்.
(96)T LI நோக்கங்கள்
பிரித்தானிய ஏகாதிபத்தியம் 1948-ம் ஆண்டில் ஐக் கிய கட்சியின் சிங்கள பூர் ஷ்வாத் தலைவர்களுடன் உடன் பாட்டிற்கு வந்தபோது பாராளுமன்ற ஆதரவுக்குப் பதி லாக எத்தகைய சலுகைகளைப் பெற முடியும் என்பது குறித்து ஏதாவதொரு பூர்ஷ்வாக் கட்சியுடன் பேரம் செய்துகொள்வதற்காக சிங்களப் பகுதிகளின் அரசியல் வேறுபாடுகளைப் பயன்படுத்தும் கொள்கையை தமிழ் பூர் ஷ்வாத் தலைவர்கள் பின்பற்றினர். தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் உள்ள பிற கட்சிகளுடன் தேர்தல் முன்னணிகளை அமைப்பதன் மூலம் இந்தப் பேரத்தின் வலிமையைப் பயன்படுத்தும் பிரயத்தனங்கள் இந்த நிகழ்வுப் போக்கின் பகுதிகளாக இருந்தன. உதாரணம் சோல்பரி சகாப்தத்தில் தமிழ்க் காங்கிரஸின் ‘*அகிலசிறுபான்மையினர் முன்னணியும் மற்றும் 1977 பொதுத் தேர்தலுக்கு முன்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தோற்றமும்' −
தமிழ் பூர் ஷ்வாத் தலைவர்களின் இந்த உபாயமும் தோல்வியடைந்தது. ஏனெனில், அநேக அரசாங்கங்கள் இவர்களின் ஆதரவு இல்லாமல் பாராளுமன்றத்தில் போதி யளவு பெரும்பான்மையைப் பெற்றிருந்தன. இதைத் தொடர்ந்து, சிங்களப் பூர்ஷ் வாத் தலைவர்களின் ஊக்கப் படுத்தலுக்கு ஸ்திரமற்ற அல்லது சத்தர்ப்பவாத சக்திகள் உட்பட்டதால் இந்த 'முன்னணிகள்' மென்மேலும் சிதை வுறத் தொடங்கின.
தமிழ் பூர்ஷ்வாத் தலைவர்களின் பாரம்பர்யமான உபாயங்களின் சிதைவும், ஐக்கிய தேசியக் கட்சியினதும் பூரீ லங்கா சுதந்திரக் கட்சியினதும் பூர்ஷ்வா 1 அரசாங்கங் கள் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை வழங்க மறுத்தமையும் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பரவலாக
7.

Page 6
வெறுப்பை அதிகரித்தன. வேலைவாய்ப்பு, நிலம் (குறிப்
பாக அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட குடியேற்றத்
திட்டங்களில்), வர்த்தகம் சம்பந்தமான கோரிக்4ை,5%
முன்வைத்தே இவர்களின் ஆதரவினை தமிழ் பூர் ஷ்வாத் தலைவர்கள் திரட்டினர். இளைஞர்களின் விருர்ந்த பகுதி களால் ஆதரிக்கப்படும் குட்டி பூர் ஷ்வாக்கள் தமிழர் விடு தலைக் கூட்டணிக்குள் பெருமளவில் முக்கியமான இடங் களேப் பெறத் தொடங்கினர். ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணங்கி நடந்துகொள்வதை வலியுறுத்தும் தமிழ்த் தலைவர் களுக்கெதிராக அவர்கள் தனியொரு ஈழ அரசை உரு வாக்குவதைக் கோரினர். அதன் உருவாக்கத்திற்காக சர்வ
தேச ஆதரவையும் பெற முயன்றனர்.
எதிர்பார்க்கப்பட்ட சர்வதேச ஆதரவு கிடைக்கா மற் போனமையானது வெறுப்பையும் மனக்கசப்பையும் அதிகரித்தது. ஒரு புறத்தில், தமிழர் விடுதலைக் கூட்டணி யில் உள்ள குட்டி பூர்ஷ்வா பகுதிகள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணங்கிப்போகும் போக்கினை நாடிய அதே வேளையில் தீவிரவாத இளைஞர்களில் ஒரு சிறு பகுதியினர் இதேபோன்று பிழையான தீர்வை பயங்கரவாதத்தைக் கைக்கொள்வதன் மூலம் Hெற விழைந்தனர். ஆயினும், தமிழர்கள் மத்தியில் பூர்ஷ்வா உபாயம் மற்றும் கொள் கைகளில் ஏற்பட்ட நெருக்கடியானது, தமிழ் இளைஞர் பகுதிகளிலும் சில குட்டி பூர் ஷ்வா தமிழ்த் தலைவர்களி டையேயும் ஒரு ஸ்தூல மான, வரவேற்கத்தக்க தீவிரமாக் கலையும் உண்டுபண்ணியது. விஞ்ஞான சோஷலிஸத்தின் பால் அதிகரித்துவரும் ஆர்வத்திலும், தே சி ய இனப் பிரச்ன்ைகளுக்கு அதனுல் மாத்திரமே நிரந்தரமான தீர்வை அளிக்கமுடியும் என்பதை ஏற்றுக்கொள்வதிலும், சோஷ லிஸ் நாடுகளின் பால் அதிகரித்துவரும் ஆர்வத்திலும், அவற்றின் கொள்கைகளுக்கான ஆதரவிலும் இலங்கை யில் தெற்கிலுள்ள இடதுசாரி சக்திகளுடன் நேய ஒத்து ழைப்பு உறவுகளை வளர்க்கும் அவசியம் குறித்து உணரப் படுவது அதிகரித்து வருவதிலும் இது வெளிப்படுகிறது.
இதேபோன்ற வங்குரோத்துத்தனமும் நெருக்கடியும்,
தமிழர்களின் பிரச்னைகள் சம்பந்தமாக பூர் ஷ்வா தலைவர்
களின் கொள்கைகளும் உபாயங்களும் வெளிக் காணப்படு கின்றது. கடந்த 30-ஆண்டுகளாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிர்ஜாவுரிமைச் சட்டங்களும் பூரீ லங்கா சுதந் திரக் கட்சியின் இலங்கை-இந்திய ஒப்பந்தங்களும் இப் பிரச்னையைத் தீர்ப்பதில் அடைந்த தோல்வியின்மூலம் இதைக் காணமுடிகிறது. 'ஆகக்கூடிய அளவில் சேர்த்துக் கொள்ளுதல்' என்று அழைக்கப்படும் தத்துவத்தை அடிப் படையாகக் கொண்டும், மலையகத் தமிழர்களது ஸ்தாப னங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியதன் அடிப் படையிலும் இந்தியாவின் பூர்ஷ்வா அரசாங்கங்களுடன்
 
 
 
 

ஒப்பந்தங்களைச் செய்து கொள்வதன் மூலம் ஒரு தீர்வினை ஏற்படுத்தும் பூர்ஷ்வாக் கட்சிகளின் கொள்கை பல இலட் முக்கணக்கான மலையகத் தமிழர்களின் 'நாடற்ற நிலை"யை முடிவுக்குக் கொண்டு வருவதில் தோல்விக் கண்டதோடு மாத்திரமன்றி, புதிய நாடற்றவர்' களையும் உருவாக்கி
விட்டுள்ளது.
நிலைமை மாறவில்லை
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பூர் ஷ்வா தலே மையானது, தனது இலட்சியங்களை அடையும் பொருட்டு இந்திய பூர் ஷ்வா சக்திகளின் ஆதரவைத் திரட்டுவதற்கு முதலில் முயற்சி செய்து, இந்த பிரயத்தனங்களில் தோல்வி அடைந்ததால் ஐக்கிய தேசியக் கட்சியில் அணிசேரும் கொள்கையை தெரிவித்திருந்தனர். இலங்கை தொழிலா ளர் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவை யில் சேர்ந்துள்ளதானது சிறுசிறு சலுகைகளை பெறுவ தைத் தவிர, தொழிலாளர்கள் என்ற வகையிலும் தேசிய சிறுபான்மையினர் என்ற வகையிலும் மலையகத் தமிழர் கள் அநீதியான அடிமைத்தனமான நிலைக்குக் குறைக்கப்
பட்டிருப்பதை எவ்விதத்திலும் மாற்றவில்லை, மாற்றவும்
(Քւգ սյո Ժ/:
பெரும்பான்மை, ஒடுக்கப்படுகின்ற சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த பூர் ஷ்வாக் கட்சிகளது தலைமைக ளால் அல்லது அவற்றின் கொள்கைகளால் எமது நாட் டின் தேசிய இனங்களின் பிரச்னைக்கு எந்தவிதத் தீர்வை யும் காணமுடியாது என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி பிர
கடனஞ் செய்கிறது.
எமது நாட்டின் தொழிலாளி வர்க்கச் சக்திகள்
தேசிய இனப் பிரச்னைகளுக்குத் தமது சொந்தத் தீர்வினை
முன்வைக்கவேண்டும் எனவும் அதற்கு பெரும்பான்மை சமூகம் மற்றும் சிறுபான்மையினர் மத்தியிலுள்ள அனைத்து முற்போக்கு, ஜனநாயகப் பகுதிகளினதும் ஆ த ர வை
வென்றெடுக்கவேண்டும் எனவும் இலங்கை கம்யூனிஸ்ட்
கட்சி கருதுகிறது.
சமூக நீதிக்காக மாத்திரமன்றி, முதலாளித்துவக் கட்சிகளிலிருந்தும் அவற்றின் அதிகரித்துவரும் எதேச்சாதி காரத் தாக்குதல்களிலிருந்தும் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் போராட் டத்தை வலுப்படுத்துவதற்கும் இது அத்தியாவசியமான தாகும். இலங்கையை சோஷலிஸத்தை நோக்கி இட்டுச் செல்லக்கூடிய ஓர் ஐக்கியப்பட்ட தொழிலாளி வர்க்கத்
慧

Page 7
தின் தலைமையில் இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்தி களின் ஓர் உண்யையான மாற்றை நிலைநிறுத்துவதற்கும் இது அத்தியாவசியமானது. -
மக்கள் மத்தியில் சுரண்டல் உறவுமுறை ஒழிக்கப் பட்டு ஒழிக்கப்படுகின்ற சோஷலிஸ் உறவுமுறையின் கீழ் மாத்திரமே சமூக, தேசிய பிரச்னைகளுக்கு நிரந்தரமாகத் தீர்வுகாண முடியும் என்பதை வரலாறு தெளிவாகக் காட்டியுள்ளது. -
எனவே, இலங்கையில் உள்ள தேசிய - இனங்களின் பிரச்னைகளுக்கு ஒரு நீதியான, நிரந்தரமான தீர்வக் குரிய போராட்டமானது, பூர் ஷ்வா கட்சிகள் தலைவர் களால் திணிக்கப்பட்ட முதலாளித்துவக் கட்டமைப்பை உடைத்துக் கொண்டு செல்வதற்கும், சோஷலிஸ சமுதாய த்தை நோக்கிமுன்னேற்றுவதற் குமானஒட்டுமொத்தப் போராட்டத் துடன் நிச்சயம் இணைந்து செல்ல வேண்டும்.
மார்க்ஸிய-லெனினியப் போதனைகளையும், விஞ்ஞா னக் கம்யூனிஸத்தையும் அடிப்படையாகக் கொண்டு இல ங்கை கம்யூனிஸ்ட் கட்சி இவ்விஷயத்தில் தனது சொந்த ஆலோசனைகளைத் தெரிவிக்கிறது.
தொழிலாளி வர்க்கக் கட்சியான எமது கட்சி பாட் டாளி வர்க்க சர்வதேசியம் என்ற அடிப்படை நிலைப்பாட் டின் மூலம் தேசிய இன, சாதி அல்லது மத வேறுபாடு பற்றிய வித்தியாசங்கள் இல்லாமல் தமது பொது நலன் களுக்கான போராட்டத்தில் அனைத்து உழைக்கும் மக்களி னதும் அடிப்படை ஒற்றுமையின் அவசியத்தினை வலியு றுத்துகின்றது. வெவ்வேறு தேசிய இனங்கள் மனித இன சமூகங்களின் மக்களது சமத்துவத்திற்கும் நாம் செயல்படுவது போலவே அதே வழியில் அவர்கள் மத்தியில் ஒற்றுமை நட்புறவு மற்றும் சகோதரத்துவக் கோட்பாட்டை நாம் உயர்த்திப் பிடிக்
Gcago.
சமூகங்களுக்கிடையிலான எல்லா உறவுகளையும் விஞ்சி நிற்கும் இந்தக் கோட்பாட்டிற்கு எமது நாட்டில் உள்ள எல்லா இனங்களையும் சேர்ந்த தொழிலாளர்களையும் பொது தாபனங்களில் அணிதிரட்டுவதன் மூலமும் மற் றைய எல்லா நாடுகளிலுமுள்ள தொழிலாள மக்களுடனு மான ஒருமைப்பாட்டின் மூலமும், வெளிப்பாட்டினைக் கொடுப்பதற்கு எமது கட்சி விரும்புகின்றது.
அதே வேளையில் மற்றுமொரு அடிப்படை மார்க் லிஸ்-லெனினிஸ் கோட்பாடான விரும்பினுல் தங்களது சொந்த அரசினை அமைப்பதற்கான உரிமை உட்பட தேசிய இனங்களுக்குள்ள சுயநிர்ணய உரிமையினை கட்சி பின்பற்றுகின்றது. ” ܝ
Ա (): Y

இலங்கை தமிழ் மக்களின் பிரச்னை தொடர்பான பிரச்னைக்கான தீர்வினை, முதலாளித்துவத்தின் ஒரு வெளிப் பாடான மனிதன்ை மனிதன் சுரண்டும் முறையின் ஒரு உப அம்சமே தேசிய சுரண்டல் என்ற அடிப்படையில் எமது கட்சி அணுகுகின்றது. சோஷலிலத்தினுல் மாத்தி ரமே தமிழ் தேசிய இனத்தின் அடிப்பட்ை உரிமைகளை உத்தரவாதப்படுத்த முடியும் என்பது எமது நம்பிக்கை. ஆகவே இலங்கைத் தமிழ் மக்கள் நடத்தும் தமது அடிப் படை உரிமைக்கான போராட்டத்தினை இலங்கையில் உள்ள எல்லா உழைக்கும் மக்களின் சோஷலிசப் பாதையில் முன்னேறுவதற்கான போராட்டத்துடன் இணைந்து நட த்த வேண்டும் என நாம் நம்புகின்ருேம். இந்தக் கார ணத்தினுல் இலங்கையினை இரண்டாகப் பிரிப்பதற்கான கோரிக்கை தொழிலாளி வர்க்கத்தினதும், ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினாதும் நலனுக்கும் பாதகமான தென நாம் கருதுகின்ருேம்.
சுயநிர்ணய உரிமை
ஆகவே தமிழ் தேசிய இனத்திற்குள்ள சுயநிர் ணய உரிமையை அங்கீகரிக்கும் அதே வேளையில் பிரதேச சுயாட்சிக் கோட்பாட்டினை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இந்த உரிமையைப் பிரயோகிக்க முடியுமென எமது கட்சி பிரேரிக்கின்றது. இது எமது நாட்டில் உள்ள எல்லா தேசிய இனங்களினதும் உழைக்கும் மக்களின் ஐக்கி யத்தினை தேசிய சமூக விடுதலைக்கான போராட்டத்தில் பலப்படுத்தும் என நாம் நம்புகின்ருேம்.
சிங்கள மக்கள் மத்தியில் செயற்படுகின்ற கம்யூனிஸ் டுகள் தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையினை ஏற்றுக் கொள்வதை வலியுறுத்துகின்ற அதே வேளையில் தமிழ் மக்கள் மத்தியில் செயற்படுகின்ற கம்யூனிஸ்டு கள் நாட் ைடஇரண்டாகப் பிரிக்காது இந்த உரிமையைப் பிரயோகிப்பதற்கான வழி முறைகளை வலியுறுத்துதல் வேண்டும்.
தமிழ்-சிங்கள மக்கள் மத்தியில் ஐக்கியத்தினே வளர்ப் பதற்கும் மக்களின் அடிப்படை நலன்களுக்காகவும் ஜன நாயக உரிமைகள் சமூக முன்னேற்றம் சோஷலிஸம் ஆகிய வற்றிற்கான போரா ட்டத்தில் சகோதர ஒத்துழைப்பினைப் பெறுவதற்கும் எமது கட்சி பின்வருவனவற்றைக் கூறுகின் நிறது .
(1) இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில், இப்பகுதி மக்களின் விருப்பத்திற்கு இசைவாக, ஒன்று

Page 8
அல்லது அதற்கு மேற்பட்ட சுயாட்சிப் பிராந்தி யங் களே அமைப்பதற்கானதும் அத்தகைய பிராந்தியங் களை அவை விரும்பினுல் ஒன்றிணைப்பதற்கான உரி மையுமான பிரதேச சுயாட்சிக் (39;[T Lo... LIFT Lo...6(7) L 1 2 ஏற்றுக் கொள்வதும், பிராயா கஞ் செய்வதும்.
(2) இலங்கையிலுள்ள ஒவ்வொரு பிரஜையும் அர சாங்கத்துடனும் நீதிமன்றத்துடனும் தனது சொந்த மொழியில் தொடர்பு கொள்ளவும், அரசாங்கமும் நீதிமன்றமும் அவரது மொழியில் அவருடன் தொடர்
கொள்ளவுமான உரிமைக்கும் நாட்டின் எந்தப் பகுதி
யிலும் வாழவும் பணியாற்றவுமான உரிமைகளும் உத்தரவாதம் அளிப்பது. -
இந்த வழிகாட்டும் கோட்பாடுகள் அவ்வாறு ஏற் றுக் கொள்ளப்பட்டதும் சுயாட்சிப் பிரதேசத்தின் அதி காரங்கள், செயற்பாடுகள் மத்திய நிர்வாகத்துடனு ன அவற்றின் உறவுகள் பற்றிய விபரங்களையும் இலங்கையின் இரு தேசிய மொழிகளான சிங்களம், தமிழ் இரண்டினை யும் மத்திய அரசாங்கத்திலும் சுயாட்சிப் பிராந்தியங்களி லும் பயன்படுத்துவது குறித்த வழிகளையும் பரஸ்பர நேச பூர்வ கலந்துரையாடல்கள் மூலம் வகுப்பது கஷ்டமல்ல என கட்சி கருதுகின்றது.
பிரதேச
Juli FTG
இலங்கைத் தமிழர்களின் சுய-நிர்ணய உரிமை, பிர தேச சுயாட்சி மூலமாக அதன் வெளிப்பாடு சம்பந்த மான எமது கட்சியின் ஆலோசனைகளின் சரியான தன்மையை சில இடதுசாரி இயக்கங்கள் மத்தியிலும், சிறுபான்மையினர் மத்தியிலும் ஏற்கப்பட்டு வளர்ந்து வருவது கண்டு கட்சி மகிழ்ச்சி அடைகின்றது. இடதுசாரி கட்சிகள் செயலூக்கமாகவும் ஐக்கியப்பட்டும் இந்த கோட்பாடுகளுக் காக இயக்கம் நடத்துமானுல் இன்னும் விரிந்த அளவி லான ஒப்புதலைச் சாதிக்க முடியும் கல்வி; வேலை வாய்ப்பு அரசாங்கத்தில் வகை செய்யப்படும் சமூக வசதிகள் போன்ற துறைகளில் தேசிய சிறுபான்மை இனங்களைச் சேர்ந்தவர்கள் அனுபவிக்கும் அநீதிகளுக்கு எதிராகவும் எமது கட்சி செயலூக்கமுடன் போராடுகின்றது; இதைச் செய்யுமென ஏனைய எல்லா இடதுசாரி, ஜனநாயக சக்திகளே யும் அது கேட்டுக் கொள்கின்றது. அரசகரும மொழி, பிரஜா go i ffil 60) LD சம்பந்தமான சட்டங்களுக்கு அளிக்கப்படும் பாரபட்சமான விளக்கங்கள், பிரயோகம் மூலம் எழுகின்ற நீதிகளையும் இது உள்ளடக்குகிறது. v
72
 
 
 
 
 
 

ஒடுக்கு முறைக்குள்ளாக்கப்பட்டள்ள சிறுபான்மையி னரின் நீதியான குறைபாடுகளுக்கு நிவாரணம் பெறு வதற்காக மேற்கொள்ளப்படும் கிளர்ச்சியை அவசர காலச் சட்டத்தின் மூலம் அடக்கியொடுக்கும் முயற்சிகளே பும் அல்லது அடக்கியொடுக்குவதற்காக, அல்லது அவர்களின் பிரதேசங்களைக் கைப்பற்றிக் கொள்வதற் காக அரசின் ஆயுதப் படைகளைப் பயன்படுத்துவதையும் நாம் எதிர்க்கிருேம்.
தேசிய இனங்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதன் மூலமாகவும், சுயவிருப்பக் கோட்பாட்டிற்கு மரியாதை செலுத்துவதன் மூலமாகவும் தான் சமூகங்களுக்கிடையி உறவுக்கு ஒரு தீர்வினைக்கான முடியும்; வன்முறைப் பிர போக்த்தாலோ, வன்முறைப் பிரயோக அச் சிறுத்தலலோர்ூட 呜y(),
நாடற்ற நிலை
மலையகத் தமிழர்கள் சம்பந்தமாக எமது கட்சி பின் வருவனவற்றைப் பரிந்துரைக்கிறது:
(1) 1964, 1974 இலங்கை-இந்திய ஒப்பந்தங்களின் கீழ் இலங்கைப் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பஞ் செய் தவர்களுக்கு, ஆனல், ஒப்பந்தங்கள் காலாவதியா வதற்கு முன்னர் அவ்வாறு பதிவு செய்யப்படாதவர் களுக்கு உடனடியாக இலங்கைப் பிரஜாவுரிமிை வழங்கப்படல் வேண்டும். ܡ
(2) இலங்கையில் வசிக்கின்ற இந்திய வம்சாவளியினரான
ஏனைய எல்லா நாடற்றவர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட திகதிக்குள் இலங்கை அல்லது இந்தியப் பிரஜா வுரிமை கோரி விண்ணப்பித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும். இலங்கை பிரஜாவுரிமை கோரி விண் ணப்பிப்போருக்கு அதை வழங்கவேண்டும்.
(3) 1964, 1974 ஒப்பந்தங்களின் கீழ் இந்திய பிரஜா வுரிமைக்கு விண்ணப்பஞ் செய்தவர்களும் இன்னும் இலங்கையில் இருப்பவர்களும் புதிதாக அளிக்கப் பட்ட வாய்ப்பின் கீழ் இந்தியப் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்கும் ஏனையோரும் இந்திய பிரஜைகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்களின் சுயவிருப்பத் தின் பேரில் ஒய்வு பெறும் வயதில் அல்லது அதற்கு முன்னர் இந்தியாவுக்குத் திரும்பும் வண்ணம் ஒரு திட்டத்தை உருவாக்கும் பொருட்டு இந்திய அரசாங் கத்துடன் பேச்சுக்களே நடத்த வேணடும். ".
罩奚

Page 9
இலங்கையர்களாக ஆகுபவர்கள் ஏனைய பிரஜை களுடன் சமத்துவ அடிப்படையில் செயல்படும் வகை யில் தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படல் வேண்டும். இது தொடர்பாக எல்லா தோட்டப் பாட சாலைகளும், மருந்தகங்களும், தேசியக் கல்வி, சுகாதார அமைப்பின் கீழ் சேர்க்கப்படல் வேண்டும் தோட்டங்க ளிெல் இம்மக்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் லயன்
முறைகள் ஒழிக்கப்பட்டு குடியமர்த்தப்பட்ட சமூகங்க
ளின் நலன்களுக்கு இசைவான வகையில் F (f) u jfr GOT வீடமைப்பு முறைகள் உருவாக்கப்படல் வேண்டும்.
தோட்டத் தொழிலாளர்களில் மிகப் பெரும்பான்
மையினராக இருக்கும் மலையகத் தமிழர்கள், எமது நாட்டின் தொழிலாளி வர்க்கத்தின் வலிமைக்கு ஒரு பெரும் ஊற்றுக் கண்ணுய் இருக்கின்றனர். ஜனநாயக
போக்கிலிருந்து அவர்கள் தவிர்க்கப்பட்டிருப்பதை முடிவுக்
குக் கொண்டு வருவது மாத்திர மன்றி, அவர்களுக்கும் ஸ்தாபனரீதியாக அணிதிரண்டுள்ள தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் எஞ்சியோருக்கும் இடையே நிலவுகின்ற பிரிவினையையும் (இது பூர் ஷ்வா தலைவர்களால் அறிமுகஞ் செய்யப்பட்டது) விரைவாக முடிவுக்குக் கொண்டு
வர வேண்டும். தொழிலாளி வர்க்க இயக்கத்தின் பொதுப்
போராட்டங்கள், பொதுவான வர்க்க ஸ்கா பனங்களுடன்
மென்மேலும் அதிகமாக அவர்களை நெருக்கமாக்க
வேண்டும்.
சோஷலிச அமைப்பின் கீழ் சோவியத் யூனியனின் மத்திய ஆசியக் குடியரசுகளில் முஸ்லிம் மக்கள் கண்டுள்ள பெரும் முன்னேற்றங்களின் செல்வாக்கின் காரணமாகவும் அரபு மற்றும் பிற முஸ்லிம் மக்களின் ஏகாதிபத்திய விரோதப் போராட்டத்தினது செல்வாக்கின் காரண மாகவும் இலங்கை முஸ்லிம் மக்கள் மத்தியில் உள்ள இளைஞர்கள் புத்திஜீவிகள் மத்தியில் வளர்ந்து வரும் முற் போக்கு இயக்கத்தினை எமது கட்சி வரவேற்கின்றது.
இச் சமூகத்தில் முதலாளித்துவத் தலைவர்களின் ஆதிக்கத்திற்கு எதிராகவும், இவற்றைக் குருட்டுத்தன மான அல்லது சோஷலிச விரோத நிலைப்பாடுகளுக்குத் திருப்புவதன் மூலம் அவற்றின் ஏகாதிபத்திய-விரோத நிலைப்பாட்டை முனைப்பாக்கும் - ஏகாதிபத்தியத்தினதும் அதன் மாவோவாதக் கூட்டணியினதும் பிரயத்தனங்க ளுக்கு எதிராகவும் இந்நாட்டின் இடதுசாரி மற்றும் ஜன நாயகக் சக்திகளுடன் சேர்ந்து பொதுவான இலட்சியத் தைக் கொள்ளும் பொருட்டு இந்தச் சக்திகள் மேற் கொள்ளும் முயற்சிகளை நாம் ஆதரிக்கிருேம்,
4
 
 
 
 
 

வரலாற்று ரீதியாகப் பெற்ற கல்வி மற்றும் பிற அநீதிகளால் இலங்கை முஸ்லிம்கள் இன்னும் துன்புறுகின் றனர். இந்த அநீதிகளை கூடிய விரைவில் தாண்டும் பொருட்டு குறிப்பாக உயர் கல்விக்கான சிறப்புரிமையில் விசேட இடைக்கால ஏற்பாடுகள் செய்யப்படல் வேண்டு மென எம்து கட்சி பரிந்துரைக்கின்றது. இலங்கையில் பல தலேமுறைகளாக வாழ்ந்து வரும் ஏனே : சிறு சிறு சமூகங்
களின் கலாசார உரிமைகளும், மத நம்பிக்கைகளும்
பழக்க வழக்கங்களும் மதிக்கப்பட வேண்டும்.
இன ஐயுறவையும் பகைமையையும் பரஸ்பர நம்பிக் கையுணர் வால் அகற்றுவதற்கு மாத்திரமன்றி, Iisal
காலனித்துவம் மற்றும் முதலாளித்துவ ஆதிக்கத்திற்கு
எதிராகவும், ஒளிமிக்க சோஷலிஸ் எதிர்காலத்திற்காக
வும7 ன போராட்டத்தில் எல்லா இடதுசாரி மற்றும்
ஜனநாயக சக்திகளை ஐக்கியப்படுத்தவும் உதவுகின்ற அத் தகைய ஒரு வேலைத் திட்டத்தை ஒன்றிணைத்து ஆதரிக்கு மாறு சிங்கள மக்கள் மத்தியிலும் தேசிய சிறுபான் மையினங்கள் மத்தியிலும் உள்ள எல்லா இடதுசாரி,
ஜனநாயக சக்திகளுக்கும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி
லிண்ணப்பித்துக் கொள்கிறது.
f
15

Page 10
2, . . . . . ருேட், கொழும்பு-10
 


Page 11
Lulgusia bait
öF8:
விபரங்களுக்கு:
சக்தி" 91, G57ււT Gցմ, (oldstigքtւլ-8.

கை கம்யூனிஸ்ட் கட்சியின்
t