கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தெணியான் மணிவிழா மலர்

Page 1


Page 2


Page 3


Page 4

தொகுப்பாசிரியர் கொற்றை கிருஷ்ணானந்தன்
தெணியான் மணிவிழாக்குழு, கொற்றாவத்தை, வல்வெட்டித்துறை.

Page 5
தெணியானி மணிவிழா மலர்
தொகுப்பாசிரியர் கொற்றை கிருஷத்னானந்தனர் كې؟
உரிமை திருமதி செல்வபதி இராஜேந்திரம்
திருமதி கெனரி வரதனர்
முதற்பதிப்பு : ஏப்பிரல் 2003
வெளியீட்டானர் : மணிவிழாக்குழ கொற்றாவத்தை, வல்வெட்டித்துறை, - O7o.-2. Izso4
அச்சுப்பதிப்பு : மரசிலர அச்சகம், நெவிவியடி,
/ விலை : ரூ 150.00
//பினர்னட்டை: மணிவிழா நானன்ற தெனரியானர்
தாம்பதியினர்
மணிவிழாக் குழுவினர்:
இருப்பவர்கர்ை;~ க.வேலும்மயிலும்,
தெனரியானர். மு.வன்னியசிங்கம்.
நிற்பவர்கர்ை;~ சிரவிச்சந்திரனர்.
பிகிருஷத்ணானந்தனர். அ.அருணானந்தசோதி மரபாஸ்கரனர்.

கொற்றை கிருவுர்ணானந்தன்
தொகுப்பாசிரியரின் எண்ணத்திலிருந்து.
இம்மலரை உங்கள் கைகளில் தவழவிட முன்னர் ஓரிரு வார்த்தைகள் உங்களுடன் மனம் விட்டுப்பேசுவது எண்மனதுக்கு நிறைவைத் தருமென நினைக்கின்றேன். எழுபது களின் முற்பகுதியென்று ஞாபகம். நெல்லியடி அமெச்சூர் அக்கடமியிலும் பொது நூலகத்திலும் நாங்கள் சில இளை ஞர்கள் சேர்ந்து மாதமொருமுறை கருத்தரங்குகளை நடாத்திக் கொண்டிருந்த காலம் உழைக்கும் மக்களுக்காகப் பேனாவைத் தூக்கியதாகக் கூறிக்கொண்டிருந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆனந்த விகடனிடம் சோரம் போனது பற்றிய சாதக, பாதகக் கருத்துக்கள்தான் ஒருமுறை அன்றைய பேசு பொருளாக இருந்தது.
இக்கருத்தரங்கில் இம்மலரின் கதாநாயகன் தெணியானும் கலந்து கொணடு தனது கருத்துக்களை வழங்கினார். தெணியானின் கருத்துக்களை மறுதலித்த ஒரு அன்பர் தனது கருத்துக்களை வைப்பதிற்குப் பதிலாக, தெணியான் மீது தனது தனிப்பட்ட வக்கிரங்களைத் தீர்ப்பதில் மும்முரமாக இருந்தார்.
அடுத்ததாக பேசிய நான் "தெனியானின் வளர்ச்சியை ஜீரணிக்க முடியாததின் வெளிப்பாடுதான் இது' என்று கூறி
'தீய்க்கும் மனத்தவர் செய்கையை எணணித்
് திகைக்கும் பொழுதினிலே - நன்கு
காய்க்கும் மரம்எறி வாங்கிடும் உணமையைக் காலம் உணர்த்தியது”
என்று எனது ஆசான் கவிஞர் காரை சுந்தரம்
பிள்ளையின் கவிதையையும் கூறி முடித்திருந்தேன். இது நடந்துகிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களுக்கு பின்னர் இப்போது நோக்கினால், காலத்தின் வளர்ச்சியை விட தெணியானின் வளர்ச்சி சாதனை மிக அதிகமென்றே கூறலாம். எந்த
தெணியான் 1

Page 6
மக்களுக்காக அவர் பேனாவை எடுத்தாரோ, அந்த மக்களால் இது மிக நன்றாகவே நன்றியுடன் உணரப்படுகிறது. ஆனால் அவருடைய படைப்புக்கள் சாதியம் பற்றியது மட்டுமே என்று கூறமுற்படுபவர்கள் ஒடுக்கு முறை எந்த வடிவத்தில் இருந்தாலும் அதற்கெதிராகக் குரல் கொடுக்கும் சத்திய ஆவேசந்தான் அது என்பதை அவரது சகல படைப் புக்களையும் படிப்பதன் மூலம் உணர்ந்து கொள்ள முடியும்.
தெணியானுடைய இலக்கியங்களைப் பெரும் பகுதியினர் பாராட்டுகின்றனர். சிறுபகுதியினர் விமர்சன வரம்புகளுக்கு அப்பால் சென்று கூட சாடுகின்றனர். மொத்தத்தில் இருபகுதி யினருமே அவரது எழுத்துக்கு உரமூட்டியுள்ளனர் எனலாம். தெணியானுடைய கொள்கைகள் கருத்துக்கள் யாவற்றுடனும் நாமெல்லோரும் முழுமையாகவே ஒத்திசைகின்றோம7 இல்லையா என்பது பிரச்சினையல்ல. எல்லோரையும் திருப் திப்படுத்த நினைப்பவன் இலட்சியவாதியாக இருக்க முடியாது. அவன் ஒரு பம்மாத்துக்காரனாகவே இருக்க முடியும். எத்தனை வகையான ஆட்சியதிகாரங்களை ஒரு குறுகிய காலத்திற்குள் நாம்சந்தித்து விட்டோம். ஆனாலும் தெணியான் அவ்வப்போது வெவ்வேறு சாயங்களைப் பூசிக்கொள்ளவில்லை. அதே நேரம் விமர்சனக் கணைகளுக்கு அஞ்சி தன் இலட்சியப் பயணத்தின் திசையினை மாற்றிக் கொள்ளாத இந்த இலக்கிய ஜடாயுவின் கனர்களில் சமுதாயத்தில் நடக்கும் எந்த அநீதிகளும் படாமலும் விட்டதில்லை.
தெணியானின் மணிவிழாவின்போது தெணியானின் ஆத்மாவை முழுமையாகத் தரிசிக்கக் கூடிய வகையில் நூல் ஒன்றை வெளியிடவேணடுமென்றுதான் மணிவிழாக்குழு கருதியது. வெளிநாட்டிலுள்ள அவரது அபிமானிகளின் அபிப்பிராயமும் அதுவே. இந்த வகையில் இதுவரையில் வெளிவந்த 120க்கும் மேற்பட்ட அவரது சிறுகதைகள், 9 நாவல்கள் மற்றும் அவ்வப்போது பிரசுரமாகிய கட்டுரைகள் என்பவற்றை விமர்சகர்கள் ஆய்வாளர்களிடம் கொடுத்து, தனித்தனி விடயத்தலைப்பில் எழுதுவித்து நூலுருவில் கொணடுவரவே தொகுப்பாசிரியர் என்ற முறையில் சித்தம் கொண்டிருந்தேன். ஆனால் அவரது ஆக்கங்கள் யாவற்றையும் முழுமையாக வாசித்தவர்களாகவோ அல்லது பெரும்பாலான வற்றைப் படித்தவர்களும் அவற்றை அனமையில்
தெணியாண் 2

படித்தவர்களாகவோ காணப்படவில்லை. எனவே தற்போது எமது எண்ணம் முழுமையாக நிறைவேறாமல் போய்விட்டது.
மேலும் தெணியானின் மரக்கொக்கு (1994) நாவலின் பின்னர் காத்திருப்பு (1999), கானலிலமான் (2002) நாவல்கள், மற்றும் இக்காலகட்டத்து சிறுகதைகள் என்பவற்றின் இலக்கியத் தரம் வளர்ச்சி என்பன முறையாகக் கணிக்கப்பட வில்லை என்றே கருதுகின்றேன். தெணியானும் தினந்தோறும் பொண்முட்டையிடும் வாத்தாகவே இப்போதும் காணப்படுகின்றார். எனவே பின்னொரு காலத்தில் அத்தகையவொரு நூலை சமூகப்போராளி மற்றும் அலங்கார வார்த்தைகளற்ற ஆழ்ந்த கருத்துக்களை ஆணித்தரமாக அடித்துச் சொல்லுகின்ற ஒரு மேடைப்பேச்சாளன் என்ற வகையிலான கனர்னோட்டங்களையும் சேர்த்து மிகப்பெரியளவிலான முயற்சிகளுடன் வெளியிடுவோம் என்ற மன ஆறுதலுடனும், அந்நூலி நிச்சயமாகத் தமிழ் பேசும் நல்லுலகிற்கு, குறிப்பாகத் தமிழை ஒரு பாடமாகக் கற்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்ற எதிர்பார்ப்புடனான நம்பிக்கையுடனும், இன்று இந்நூலைத் தொகுத்துள்ளேன்.
தெணியானின் மணிவிழாவுக்கும் இந்நூல் வெளிவருவ தற்கும் தோன்றாத் துணையாக இருக்கும் புலம்பெயர்ந்து மேற்குலகநாடுகளில் வதியும் தெனணியானின் மாணவர்கள் மற்றும் அபிமானிகளுக்கும், குறிப்பாக திரு.பி.இராஜேந்திரம் (லணர்டன்) திரு.வ.வரதன் (சுவிளப்) ஆகியோருக்கும் பல வகையிலும் பின்பலமாக நின்றுதவிய பூமகள் சனசமூக நிலையத்தினருக்கும், பல சோலிகளுக்கு மத்தியிலும் ஆக்கங்கள் அனுப்பியுதவிய எழுத்துலகச் சிற்பிகளுக்கும், அட்டைப்படத்தை வடிவமைத்த ஓவியர் ரமணி அவர்களுக்கும், அழகுற அச்சிட்ட மாசிலா அச்சகத்தினருக்கும், மணிவிழாக்குழு சார்பில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நன்றி 'சந்திரோதயம்’ 22。一" கொற்றாவத்தை, 2. , ബീ வல்வெட்டித்துறை, கொற்றை கிருஷ்ணானந்தள் 02-01-2003.
தெணியாண்
3

Page 7
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி
தெணியாண் மணிவிழா மலருக்கு ஒரு வாழ்த்தரை வாழ்த்துரை மட்டுமா!
நணபன் தெணியானை நான் கனடு கொணடதும் 'அறிந்து கொணர்டதும் 1978ல் நான் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்குப் போன பின்னர்தான்.
முதலாவது தொடர்பு வீரகேசரி வெளியிட்ட அவரது 'விடிவை நோக்கி’ (1973) நாவலோடு தொடங்குகிறது. தெணியானின் வீடு பொலிகனடியில் எனது உறவினர் சிலருடைய வீட்டுக்கு அருகாமையில், மாலை வேளைகளில் வல்வெட்டித்துறை ஊரிக்காட்டிலுள்ள எங்கள் வீட்டுக்கு Cucle ல் வரும் அவருக்கு, வருவது மிகச்சுலபம். குறைந்தது வாரத்திற்கு ஒரு தடவையாவது மாலைவேளைகளில் வருவார். சில வேளைகளில் காலை வேளையிலும் வருவார். தேநீரின் பின்னர் பொக்கெற்றில் வைத்திருக்கும் ஒற்றை சிகரெட்டுக்கு நெருப்புப் பெட்டி கேட்பதில் உள்ள பவிவியம் வெகுவிரைவில் அவரை எங்கள் குடும்பத்தின் அத்தியந்த நணர்பர்களில் ஒருவராக்கியது. எனது மனைவியார் அக்காவான7ர். பிள்ளைகளுக்கு தெணியான் மாமாவில் ரொம்ப பிடித்தம். அவர்களுடைய படிப்புத் தேவைக்கு வேனடியன சிலவற்றை தெணியான் மாமாதான் உதவி செய்வார். சுருக்கமாகச் சொன்னால் என்னுடனிருந்த உறவை மீறிய ஊடாட்டம் என் குடும்பத்தோடு, இதனால் அவருடன் ஆற அமர இருந்து பேசுவதற்கான ஓய்வும் இருந்தது வாய்ப்பும் இருந்தது. -
தெணியான் மூன்றாந் தலைமுறை முற்போக்கு எழுத்தாளர் என்று நான் சொல்வதுணடு. அநக, கே.கணேஷ் ஆகியோர் முதல் தலைமுறை, டானியல், ஜீவா, ரகுநாதன் இரணடாந் தலைமுறை, தெணியான், சாந்தன் போன்றோர் மூன்றாந் தலைமுறை. இறுதியில் குறிப்பிடப்பட்டவர்கள் முற்போக்குவாதம் நிலையான ஒரு இலக்கிய கொள்கையாக ஏற்பட்டு அது சம்பந்தமாக எரிந்தகட்சி, எரியாதகட்சி ஆட்டங்கள் ஓய்ந்த பின்னர், எழுத்தாளர் எவ்வணியி
தெணியாண் 4.

னராயினும் சரி சமூக அந்தளிப்துள்ள ஒரு நிறுவனம் ஆகிய பின்னர் எழுத்துலகுக்கு வந்தவர்கள். இதனால் எழுத்தாளரென்ற அந்தளிப்துடனும் அதற்குரிய கணிப்புகளுடனும் சமூக ஏற்புடை மையைப் பெற்றுக் கொணடவர்கள்.
இந்த மூன்றாம் தலைமுறையினருக்கு இரண்டாந் தலைமுறையினருக்கிருந்த ஏற்புடைமைச் சிக்கல் இருக்க வில்லை. டானியல், டொமினிக் ஜீவா ஆகியோரை எழுத் தாளராக ஏற்றுக்கொள்வதற்கு வாணாசுரன் போர் நடத்திய இலக்கிய உலகு தெணியான் போன்றோரை மறுதலிக்க முடியாமல் ஏற்றுக் கொணடஆ/
தெணியான் பயிற்றப்பட்ட ஆசிரியருங்கூட. எனவே அவருக்கெதிராக தமிழ்த்தெரியாதென்று சொல்வது தங்கள் பக்கத்தவர் யாரோ ஒருவரது வாயில் மணனைக் கொட்டிய தாகிவிடும்.
சமூக நிறுவன நிலையில் அவர் தமிழ் அறிந்த ஒரு வராக ஏற்கப்பட்டிருந்தது வேறு. அதற்கான உறுதிப்பாடு அவர் அக்காலத்து பட்டிமன்றங்களில் பேச அழைக்கப்பட் டிருந்தமையாகும். (இந்த இலக்கியப் பிணியிலிருந்து தெணியானை விடுவிப்பதற்கு எனக்குப் போதும் போது மென்றாகி விட்டது)
ஈழத்தில் முற்போக்கு இலக்கியத்தின் செல்நெறி பற்றி இன்று பின்நோக்கிப் பார்க்கும் போது அந்த ஆக்க இலக் கியத்தின் விடயப் பொருளாக அமைந்தவற்றை ஏறத்தாழ ஒரு காலவரிசைப்படுத்தலாம் போலத் தோன்றுகிறது. முதலில் வந்த எழுத்துக்கள் குறிப்பாக, சிறுகதைகள் ஒடுக்கப்பட்ட சமூகத் தினரின் பாடுகள் பற்றியதாகவே பெரும்பாலும் அமைந் திருந்தமையை அவதானிக்கலாம். (கொம்யூனிஸப்ட் கட்சியின் கட்சி அங்கத்தவர்கள் என்ற முறையில் மற்றையோருடன் சரி சமமாக ஊடாடிய எழுத்தாளர்கள் சமூக நிலையில் தாங்கள் அநுபவிக்க வேண்டியிருந்த இயலாமைகள் பற்றி எழுதத் தூண்டப் பெற்றது ஆச்சரியமில்லை; கட்சியிலிருந்த இயலாமைக்கு ஆட்படாத சமூக மட்டத்தினரும் தமது வர்க்கத் தேடல்களின் பொழுது சாதியமைப்பின் குரூரத்தால் தாக்கப்பட்டு அதனை எழுதினர்)
தெணியான் 5

Page 8
இரணடாம் நிலையில் முதன்மை பெறுவதாகக் கொள் எப்படத்தக்கது ஒடுக்குமுறை இயந்திரம் எவ்வாறு தொழிற்படுகின்றதென்பதைச் சித்தரிப்பதாகும். முதல் கட்டத்தின ரே தமது வளர்ச்சிகளினூடாக இப் படிநிலைக்கு வருகின்றனர். டானியல் நல்ல உதாரணம் தனனிலிருந்து பஞ்சமருக்கு வருகிறார். அதனூடே ஒரு சிறுகதையாசிரியன் நாவலாசிரியனாக முகிழ்க்கும் ஒரு முதிர்வும் ஏற்படுகின்றது. துரதிஷ்டவசமாக இந்த முதிர்வு வேறு சிலருக்கு வாய்க்கவில்லை.
தெணியானுடைய ஆக்கங்கள் பெரும்பாலும் சாதியமைப் பின் கொடூரங்களுக்கான கருத்துநிலை, ஆள்நிலைப் பின்புலங் களை விவரிப்பதாகும். வடமராட்சியில் வாழும் ஒருவருக்கு இது பற்றி எழுதுவதற்கு கற்பனைத் தேடல் எதுவும் தேடவேணர்டிய அவசியமில்லை. தமக்குத் தெரிந்த, தாம் அறிந்த சிலருடைய வாழ்க்கைகளே போதுமானவையாகும். தெணியான் கதைகளில் இந்தச்சாயல் ரொம்ப கெட்டியாக இருக்கும். மரக்கொக்கு முதல் பொற்சிறையில் வாடும் புனிதர்கள் வரை ஒரு அகணட பார்வை வீச்சு உணடு. இந்த அகனட பார்வை வீச்சுக் காரணமாக இவர் யாரோ தெரிந்த சிலரைப்பற்றி எழுதுகிறார் என்ற குற்றச்சாட்டும் எல்லாக் காலத்திலுமுணடு. உணர்மையில் அத்தகையவொரு எளிமை நிலைப்படுத்தப்பட்ட பார்வை இவருடைய ரிஷி மூலத்தை வெளிக் கொணராது. உணர்மையில் தொல்காப்பிய நிலையில் நின்று கூறுவதானால் தெணியானுடைய எழுத்து நாடகவழக்கு இணைந்த புலநெறி வழக்காகும். நாடக வழக்கு என்பதை இளம்பூரணர் நிலை நின்று விளங்கிக் கொள்ளல் வேணடும். நாடக வழக்காவது சுவைபட வந்தனயாவற்றையும் ஓரிடத்தே வந்தனவாக தொகுத் துக் கூறல்' இங்கு சுவை என்பது சுவாரசியமானவை. (Interesing என்பவை அல்ல) சுவை என்பது இங்கு மெய்ப்பாடுகள், ரஸங்களாகும். (அழுகை, கோபம், காதல் அருவருப்பு என வருபவையாகும்)
யாழ்ப்பாணச் சமூக வாழ்க்கையில் 1940, 50களிலிருந்த நிலைமை 60 70களில் மாறிவிடுகிறது. தெணியான் இந்த இரணடாவது கட்டத்தைச் சேர்ந்தவர்.
தெணியான் பிரதானமாக ஒரு நாவலாசிரியரே. தன்னு 6001 II/ பார்வையின் கனடு பிடிப்புக்களையும் அந்த
தெணியான் 6

கணடுபிடிப்புகளின் தளமாக அமையும் மனித உறவுகளையுச் சித்தரிப்பதற்கு இவருக்கு நாவலென்ற அகண்ட கண்வளம் தேவைப்படுகிறது. இந்த நாவல்களினூடே தெணியானுடைய பார்வை அகற்கியின் போக்கை படமிட்டு விடலாம். இவரது கடைசி இரணடு நாவல்களையும் நான் வாசிக்கவில்லை. ஆனால் வாசித்தவற்றை வைத்துக்கொண்டு சொல்வதனால் இவரது எடுத்துரைப்பு முறை (Narative mode) வெறுங் கதைசொல்லியின் உலகமல்ல, கதை சொல்லிக்கும் பாத்திரங் களுக்குமிடையிலுள்ள உறவும் முக்கியமானது. இந்த எடுத்து ரைப்பு முறையில் ஏதாவது கணிசமான மாற்றங்களை கடைசி இரணடு நாவல்களில் செய்திருக்கிறாரோ தெரியவில்லை. தெணியான் என்ற படைப்பாளி இந்த அம்சங்களை மேலும் உன்னிப்பாகப் பார்க்க வேணடுமென்று விரும்புகிறேன்.
ஈழத்து முற்போக்குவாத இலக்கியத்தின் எடுத்துரைக் கப்படாத ஒரு அம்சம் 1983, 84ற்குப் பின்னர் அதன் பயில் வாளர்களுட் சிலர் 1960 களில் முற்போக்குவாதம் வரிந்து கட்டிப் பேசிய தேசிய நிலை விடுத்து எனபதுகள், தொணர் ணுறுகளின் சமூக அரசியல் யதார்த்தமான அரசின் இனக் குழும பயங்கரவாதத்தை எதிர்த்து எழுதிய மையமாகும். அத்தகைய ஒரு பட்டியலில் சாந்தன், தெணியானுக்கு கெளர வமான ஒரு இடமுணடு. இவர்கள் அரச பயங்கரவாதத்தின் மானிட எதிர்ப்பு வெறியை வெகுலாவகமாக சித்திரித்து உள்ளனர். நான் முன்னர் பல தடவைகள் கூறியுள்ளது போன்று தெணியானின் உவப்பு, (கர்ப்பிணியான பெணகாகம் மனித இறைச்சி வேணடுவது) மஜிக்கல் றியலிஸத்துக்கான நல்ல உதாரணமாகும். இந்த வகையில் சாந்தனது படைப்புகளும் நுணர்ணியதாக ஆராயப்படவேணடும்.
தெணியானிடம் மெச்சத்தகுந்த பலகுனங்களுள்ளன. அதிலொன்று கருத்து வேறுபாடுகளிடையேயும் அடிப்படை நட்பைப் பேணுவது, தெணியானுக்கும் டானியலுக்கும் அரசியல் கருத்தொருமைப்பாடு இருந்ததென்று கூறமுடியாது. ஆனால் மிக நல்ல நட்பு இருந்தது. டானியல் தெணியானிடம் மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். தான் இல்லாத காலத்து தான் எழுதாமல் விட்டுள்ள நாவல்களை தெணியானைக் கொணடு எழுதி முடித்துவிட வேணடுமென்று தெணியானுக்கும் கூறி யுள்ளார். எனக்கும் சொல்லியுள்ளார். டானியலது ஆளுமை
தெணியான் 7

Page 9
சிக்கலானது, பன்முகப்பட்டது. அவை யாவற்றுக்குமூடே தெணியான் மேல் மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். தெணியான் இல்லையென்றால் மல்லிகையில் டானியலின் படம் வந்திருக் கவும் மாட்டாது. டானியல் ஒரு ஆவேச மனிதாயதவாதி என்று நிான எழுதுவதற்கான வாய்ப்பும் கிட்டியிருக்காது. தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களினூடே ஒரு சமூகக் கருத்து நிலையுடையோரிடையே ஒற்றுமையைப் பேணுவதில் தெணியா அக்கு என்றுமே பெருஞ சிரத்தையுணர்டு,
தெணியான் ஒரு நல்ல நணபர் தெணியானை வழித் அவதென்பது எனது இடக்கை, வலக்கையை வழித்துவது போன்றதாகும். ஆயினும் தெணியான் என்ற எழுத்தாளனை, தெணியான் என்ற குடும்பளப்தனை, வழித்துவது எனது கடனென்றே கருதுகிறேன். இந்த வாழ்த்தினூடாக முற்போக்கு இலக்கியம் பற்றிய ஒரு முக்கிய தடத்தை தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன். காலத்தின் மாற்றங்கள் ஏற்படுத்தியுள்ள யதார்த் தங்களைக் கணடு கொள்ளது முந்தைய காலம் ஒன்றினது கோஷத்தின் மீது தொடர்ந்தும் நம்பிக்கை வைத்திருப்ப அவதான் அரசியல் கற்புடைமை என்று கருதுவது காலமுரணர் மாத்திரமல்ல, மார்க்கிய விளக்கப் போதாமையுமாகும். தெணியா னிடத்து இந்தப் போதாமையை நான் காணவில்லை அவர் வாழ்க! அவரது சிந்தனைச் செல்நெறி சிறப்பதாகுக!
தெணியான் 8

நந்தி
டானியலின் நம்பிக்கை
நண்பர் டானியலை நினைவு கூராமல் நண்பர் தெணியான் பற்றி எழுதமுடியவில்லை, தெணியானின் எழுத் தின் ஆளுகையை எனக்கு இனம் காட்டி விமர்சித்தவர் டானியல் அவரின் இலக்கியப் படைப்பாக்கல்மேல் வைத்திருந்த தனது நம்பிக்கையை 1985 மழை காலத்தின்போது மிக உருக் கமாக வெளிப்படுத்தினார். அவருக்குப் போதிய சுகம் இல்லை என்பதை அறிந்து, அவரின் தொழிலகத்தில் சந்தித்தேன். "டொக்டர், எனக்கு மரண பயம் வந்துவிட்டது.” என்று பேசத் தொடங்கினார். அந்த வசனம் என்னை உலுக்கியது.
"எதற்கும் நெஞ்சு கொடுக்கும் டானியல் என்ற இரும்பு இலக்கியவாதிக்கா மரண பயம்?
பின்பு தனக்கே உரிமையான விளக்கண முறையில் தனக்குக் கண முதல் குதிக்கால்வரை இருந்த உபாதிகளை கூறினார். இந்தியா சென்று முழு "செக்கப்' செய்து வருமாறு சொன்னேன். (அந்த ஆலோசனை சரியா தவறா என்பதை என் மனம் இப்போதும் விவாதிப்பது உணர்டு) அந்த சந்தர்ப்பத் தில்தான் டானியல், அவர் எழுதிக்கொண்டிருந்த நாவல் பற்றி கூறினார். 'என்னால் இனி ஏலாது, டொக்டர் என்றார், ஆனால் ஒரு நிம்மதி நான் எழுதிமுடிக்கேலாத L(557.0// எழுதுவதற்குச் சரியான ஒரு பொடியன் இருக்கிறான் - தெணியான். (தெணியான் அப்போது பையன் அல்ல. வயது 40 சொச்சம். அன்பிலும் நம்பிக்கையிலும் வயதுக் கணிப்பு தடுமாறும் போலும்)
‘என்னைப் போல் எழுதக்கூடிய. என்ற டானியலின் நம்பிக்கைக்கு மேல் ஒரு முற்போக்கு எழுத்தாளனுக்கு வேறு அணிகலன் வேணடுமா?
டானியல் அவர்களை தெணியான், கலாமணி ஆகிய இருநனர்பர்களும் உற்சாகப்படுத்தியதால் அவரே அந்த நாவலை
தெணியான் 9

Page 10
நிறைவேற்றினார். இந்தச் செய்தியை டானியல் தனது தணிணி என்ற நாவலின் முன்னுரையில் ஆவணப் படுத்தியுள்ளார். இது 1983-86 காலகட்டற்.
ஆனால் 1981 இலேயே தெணியானின் நாவலின் வன்மையை நான் உணர்ந்து கிளர்ச்சி அடைந்தது உண்டு. சம்பந்தப்பட்ட நாவல் கழுகுகள், நாவலில் மிகவும் வெறுக்க வைக்கப்படும் கழுகு ஒரு (6) //a/ /f – சேர்ஜன் கருணைநாயகம் £ഗ്ര மனிதனை எவ்வளவு அருவருப்பானவராக்க முடியுமோ அந்த அளவுக்கு சேர்ஜன் கருணைநாயகம் நாவலில் காட்டப்பட்டுள்ளார். 'ஏன்? இப்படி? என்று அப்போதே தெணியானை நான் கேட்டேன். "டொக்டர் இது என்னுடைய பயங்கர அனுபவம் என்னுடைய ஒரு சொந்தக்காரன் ஆளப்பத்திரியில் இருந்த போது.” என்று எனக்கு விபரம் கூறினார். அப்போதும் டானியலின் குரல் ஒலித்தது.
டானியலின் நாவல்கள் வெளிவரும் போதும் அவரிடம் சென்று 'ஏன், இப்படி எழுதினீர்கள்?’ என்று வினாவுவது உண்டு "டொக்டர், இதில்பார்க்க மோசமான விஷயமெல்லாம் நடக்குது என்று கூறி சில நடைமுறைகளைத் தெரிவிப்பார். என்ன மக்கள், எப்படியான சமூகம், நாடு' என்ற ஏக்கம் தான் மனத்தில் தங்கும்.
தெணியானின் கழுகுகள் வந்த காலம் தான் யாழ் மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. அவ்வப்போது நான் எனது மருத்துவ மாணவர்களுக்குக் கழுகுகள் பற்றிக் கூறுவதுண்டு. 4) 'தெணியானின் சேர்ஜன் கருணைநாயகம் ஆயிரம் டொக்டர்களில் ஒருவர்தான். ஆனால், அப்படியானவர் ஒரு எழுத்தாளனிடம் அகப்பட்டால், அந்த இருவர் மூலம் எமது தொழிலின் அபகீர்த்தி பல ஆயிரக்கணக்கான மக்களிடம் எழுத்து மூலம் சென்றடையும். ஆகவே கவனமாக இருங்கள் என்று எச்சரிப்பேன்.
ஒழுக்கம், நீதி நியாயம், மனிதாபிமானம், மனச்சாட்சி இவற்றைப் பொறுத்தவரை ஆயிரம் மக்களில் இழிவு
தெணியான் 10
 

எல்லையில் இருக்கும் ஒருவரைப்பற்றி எழுதுவதா, எதிர் எல்லையான உண்னத நிலையிலிருக்கும் ஒருவர்பற்றி எழுதுவதா, அல்லது நடுவில் பரந்திருக்கும் 998 மக்களை வைத்து இலக்கியம் படைப்பதா என்ற வினாக்கள் ஒரு எழுத்தாளனுக்குப் பதகளிப்பு தருவது உணர்டு தெணியானின் டொக்டர்கள் உலகில் அவருக்கு உபத்திரம் தந்த சேர்ஜன் கருணைநாயகம் ஒரு எல்லையில் இருப்பவர், அவரின் அன்புக்கும் நட்புக்கும் பாத்திரமான டொக்டர் எம்.கே.முருகானந்தன் எதிர் மூலையில் இருப்பவர்.
டொக்டர் முருகானந்தனே இப்படி கூறுகின்றார்: "சீறிச் சினந்து, கொத்திக் குதறும் தெணியானை கழுகுகள் நாவலில்
கனர்டோம்.
'அணிமைக் காலத்தில் உள்ளே நெகிழும் தெணியானை (அவர்) தனது படைப்புகளினூடே, உணர்வுபூர்வமாக வெளிப்படுத்துகிறார். (காத்திருப்பு முன்னுரை).
எந்த வர்க்கமானாலும் அவர்களுக்கு கொடுமைகள் இழைக்கப்பட்டால் நான் அவர்களுக்காகவும் பேனா பிடிக்க உறுதி பூணர்டேன்' என்றார் தெணியான். இந்த உறுதி மொழியின் செயற்பாட்டை 1989 இல் மெற்கிறையில் வாடும் புனிதர்கள் நாவலில் நான் முழுமையாக உணர்ந்தேன். ஆலயங்களின் பூசகர்கள் 'உள்ளே குமைந்து புழுங்கி வெளிவிடும் வேதனைப் பெருமூச்சுக்களை அன்பு கரிசனையுடன் சித்தரித்தார், நமது நாட்டிலே முதல் முதலாக, 'சிற்பியும் ஆகுதி 'சோமுவும் சுட்டிக் காட்டுவார்கள் என்று நாம் எதிர்பார்த்த சமூக களமும் மாந்தரும். அந்த நாவலைப் படித்த பின்பு தெணியான் ஒரு நடுவுநிலை இலக்கியகாரன்' தான் என்ற தீர்மானம் என் மனத்தில் பதிந்தது. நடுவு நிலை எழுத்திலே சத்தியம் இருக்கும், அதை துவேஷம் தீணடாது. அந்த இலக்கியம் வாழும்.
தெணியானின் சமூக பார்வையின் விசாலமும் எழுத்தின் முதிர்ச்சியும் கணணியமும் தொடர்ந்துகொணர்டே வருகின்றது. மரக்கொக்கும், காத்திருப்பு நாவல்களும் இதற்குச் சான்றுகள்
தெணியான் 11

Page 11
தெணியான ஆசிரியர் தொழிலிலிருந்து ஓய்வு பெறுகின்றார், தொடர்ந்து காத்திரமான நாவல்களையும் சிறு கதைக ளையும் தரவேணடும் என மக்களும் இலக்கிய அண்டர்களும் எதிர்பார்க்கிறார்கள்.
தெணியான நமது நவீன இலக்கிய சரித்திரத்தில் தனது பெயரை ஏற்கனவே பதித்துவிட்டார்.
1. அவரினி நாவல்களில் கிராமம் பேசும். 2. அவரது எழுத்துக்களில் இலக்கிய அந்தளிப்து உணர்டு, ஏனெனில் அவரது சமூக ஆய்வின் அறுவடைகள், மனிதாபிமான உணர்வுடன் சேர்ந்து, பக்குவமடைந்த மொழியிலே தரப்படுகின்றன. 3. அவரது முற்போக்கான சிந்தனை சமூகத்தின்
தாழ்மையைச் சீராக்க முயல்கின்றது. 4. அவரின் நாவலிகள் சிறியன 120-170 பக்கங்கள் கொணடன. ஆனால் நாவல்களில் எழுதப்படாத, அவரின் எழுத்து வரிகளுக்கு நடுவிலே வாசகர் களைச் சிந்திக்க வைக்கும் கருவூலமும், உணர்வு ஊற்றும் உறைந்து மறைந்துகிடக்கும. நமது நாட்டின் பாடசாலை ஆசிரிய - எழுத்தாளர் வரி சையில் தெணியான் குறிப்பிடத்தக்கவர். நாம் பெருமைப்படக்
கூடிய பலர் அந்த வரிசையில் உணர்டு - சம்பந்தன், கனக செந்திநாதன், சு.வே, சொக்கன், சிற்பி, வ.அ.இராசரத்தினம், எனப்பொ, அப்துளப்ளUமது, சட்டநாதன், பெனடிகற்பாலன்,
கோகிலா, பத்மா, ஆப்டீன், அருள் செல்வநாயகம், திக்வ லை கமால் . நீளும் வரிசை. அதில் தெணியானுக்கு ஒரு சிறப்பு இடம் உணர்டு, அவர் ஆசிரியர், உப அதிபர் தொழிலிலிருந்து ஓய்வு பெறுகிறார். அவரின் எழுத்து வாழ்க்கை இன்று ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங் குகிறது. தெணியான் பல வருடங்கள் சுகமாக வழிந்து, எழுத்துலகின் புதிய பரிணாமங்களைத் தன் வசமாக்கி தமிழுக்கும், மக்களுக்கும் பணி புரிய வேணடும்/ அதுதான் எனது பிரார்த்தனை,
தெணியாண் 12
 

ஆ.கந்தையா
படைப்புக்களில் படைப்பாளி தெணியான
திறனாய்வு என்பதைப் பக்கச்சார்பற்ற நிதானமான ஒரு நடு நிலை நோக்கு’ என எல்லோரும் ஏற்றுக் கொள்வர். ஆனாலி விமர்சனத்திற்குட்படுத்தப்படுபவர் தெணியானாக இருப்பின் இக் கோட்பாட்டைப் பின்பற்றுவதில் பல சிக்கல்கள் ஏற்படுவது இயல்பு.
தெணியானைப் பற்றிய முடிந்த முடிவான விமர்சனம் ஒன்றுண்டு. அவர் சாதியத்தை எழுதுபவர், வர்க்க பேதத்தைச் சாடுபவர் எனும் முத்திரை வைக்கப்பட்ட எழுத்தாளர் ஆக எல்லா விமர்சகர்களும் அவரை இந்த வட்டத்தில் வைத்துப் பார்ப்பது இயல்பு.
டானியல், தெணியானின் முதல் கதைத் தொகுதிக்கு வழங்கிய முன்னுரையில் இந்த நூலாசிரியர் திரு.தெனியான் அவர்கள் ஒரு நடு நிலைமை இலக்கியக்காரனல்ல என்பதை இக் கதைகளைப் படிக்கும்போது நீங்கள் உணர்வீர்கள். வர்க்கம் சார்ந்த ஒருவனாக இக் கதைகளில் உலாவி வரும் பாத்திரங்களோடு நசுக்கப்படும் வர்க்கப் பாத்திரங்களின் பங்காளனாக இவர் நிற்பதை நீங்கள் பார்ப்பீர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தெணியான் சாதியத்தை, வர்க்க பேதத்தை எழுதுபவர் என்பதில் இரண்டு பேச்சுக்கே இடமில்லை. எம்மில் பலர் தமது சாதியத்தை மறைத்து (அல்லது மறந்து) வழப் பழகிக் கொணடவர்கள். சாதியைக் குறிப்பிடுவது நாம் ஒரு குறைந்த மனிதப் பிரகிருதி என்பதைப் பிரகடனப்படுத்துவதாக அமையும் என வெட்கப்படுபவர்கள் இன்றும் எம்மிடையே உளர். என்று இவர்களெல்லோரும் தமது சாதியை மேடையில் பொது இடங்களில் கூச்சமின்றி உரத்துக் கூறுகிறார்களோ, அன்று சாதியம் செத்துவிடுமென்பதை ஏனோ இவர்கள் அறியவில்லை.
தெணியாண் 13

Page 12
தெணியான அப்படியான முதகெலும்பில்லாப் பிராணி அல்ல, அவர் இவி வகையில் இரு பணிகளைச் செய்ய வேண்டியுள்ளது.
1. தனது இனம் சார்ந்தவர்களெல்லோரையம் தட்டி
விழித்தெழச் செய்தல்
2. சாதியத்தின் கொடுமையைத் தனது எழுத்துக் களினூடாக வெளிக் கொணர்தல், இப் பணிகளை அவர் தனது எழுத்துக்களிலும், βάρβαρ, Δύ பேச்சுக்களிலும் சரியாகச்செய்கின்றார் எண்பதில் எமக்குப் பெருமை.
இருப்பினும் தெணியானை விமர்சிப்பவர்கள் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட, ஆனால் சரியாக எடை 6ż/77 viżi / L/75, அல்லது விமர்சனத்திற்குட்படுத்தப்படாத
அங்கீகரிக்கப்பட்ட திறனாய்வு கோல் கொனடு /ர்க்கும் தன்மைக்கு அப்பால் அல்லது அதற்குள் விகரித்து நிற்கும் ஏனைய இலக்கியப் பரிமானங்களையும் நாம் பார்ப்பது அவசியமாகின்றது.
சிலர் தெணியானது கதைகள் சாதியத்தைப் பற்றி எழுதப்பட்டமையால் சாதியம் அழியும் போது (அழியுமா?) கதைகளும் வலுவிழந்து நிற்கும் எனக் கூறுவர். இவர்கள் ஒரு வகையில் மேற் கூறிய அங்கீகரிக்கப்பட்ட திறனாய்வுக் கோல் கொனடு பார்ப்பவர்களே.
'போக்னர் கறுத்தவர்கள் பற்றி எழுதினார். கறுப்பின மக்கள் சுதந்திரம் அடைந்த பின் அவரது கதைகள் செத்து விட்டனவா? மாறாக அவரது கதைகள் அமெரிக்க மக்க விடையே பெரிய செல்வாக்குச் செலுத்துகின்றன எனில் அவரது கதைகள் சாதியத்துக்கப்பால் வேறு பரிமாணங்களையும் கொணடிருக்கின்றன என்பது புலனாகும்.
தெணியானின் சாதியம் பற்றிய கதைகளைக் கூர்ந்து பார்ப்பவர்கள் அங்கும் இரணடு முக்கிய அம்சங்களைக் கண்டு கொள்வர்.
1. சாதியத்தின் கொடுமை இலக்கியத்தினூடாக வெளியுலகத்திற்கு காட்டப்படல் வேணடும் எனும் ஆதங்கம்.
- தெணியான் 14

/2 கதை மாந்தர்கள் மனித நேயத்துடன் பக்க சார்பின்றிப்
பார்க்கப்படல் வேண்டும் என்பதில் உறுதி இவ்விரு அம்சங்களின் சங்கமத்திலேயே அவரது படைப்புக்கள் வளர்த்தெடுக்கப்படுகின்றன. சாதியத்தினூடாக மானுடமும், மானுடத்தினூடாகச் சாதியமும் அவரது கதைகளில் பார்க்கப்படுகின்றன. ஆகவே அவரது கதைகள் காலத்தை வென்று நிற்கும்.
தெணியான ஆரம்ப காலக் கதைகளின் பகைப்புலம் சாதியத்தின் மேலாதிக்கத்தின் மிருக வெறிக்குட்பட்ட மனிதர் களின் ஈனக் குரலாக இருந்தது. எனவே மனித மனம் படைத்த எந்தவொரு உணர்வு பூர்வமான மனிதனும் அதைப் பற்றி எழுதாமல் இருக்க முடியாது. அன்றியும் தெணியான் மிதிக்கப்பட்ட நசுக்கப்பட்ட இனத்தின் பிரதிநிதியாக விளங் குபவர். தனது இனம் நசுக்கப்பட்டு எள்ளி நகை மாடப்பட்டு புழுதியில் தூக்கி வீசப்படுவதைக் கணடு கொதித் தெழாது விட்டால், அந்த அனுபவங்கள் பதிவு செய்யப்படாது விட்டால் அவர் தனது வர்க்கத்திற்குச் செய்த வரலாற்றுத் தவறெனப் பிற்காலச் சந்ததி அவரைச் சாடும்.
அவர் தவிர்ந்த வேறு யாராவது சாதியம் பற்றி எழுதும் தகுதி கொண்டிருக்கிறார்களா? கீழ்மட்ட மக்களின் உணர்வின் உணர்வாக இருக்கும் ஒருவரால் மட்டுமே அவர்களது அவலத்தை எழுத முடியும்.
அழகு சுப்பிரமணியத்தின் கூலிக்கு மாரடிப்போர்’ சிறு கதையில் கீழ் மட்ட மக்களின் அவலத்தை அவர் எழுதுகிறார். அங்கு கீழ்மட்ட மக்களின் துயரம் வெளிவருவதற்குப் பதிலாக உயர் சாதியினரின் பரோபகாரம் எட்டிப் பார்க்கின்றது. காரணம் அழகு சுப்பிரமணியத்தால் தாழ்த்தப்பட்ட மக்களின் உணர் வுகளை உணர்ந்து கொள்ள முடியவில்லை.
அதே சமயம் தெணியானின் இன்னுமா?’ சிறுகதையை நோக்குங்கள். அழகு சுப்பிரமணியம் தனது கதையில் நிகழ் புலத்தை மட்டும் படம் பிடிக்கின்றார். தெனணியான் அகப் புலத்தின் ஒலத்தைக் காணர்கின்றார்.
இராணுவம் குனர்டு வைத்துக் கட்டிடத்தைத் தகர்த்தமையால் பலர் இறந்து விடுகின்றனர். ஆனால், சிறிது
தெணியான் 15

Page 13
கூட இரக்கமின்றி உயர் சாதியான கூறும் சொற்கள் எதுவித வேதனையையோ, இரக்கத்தையோ, காட்டவில்லை. நீங்கள் கவலைப்படாதையுங்கோ அனர்னே. எங்கடை ஆக்கள் ஒருதருமில்லை. அவையள். எல்லாம் சமரவாகுப் பள்ளரும்
இலந்தைக் காட்டு நளவருந்தானாம்
கீழ் சாதியினர் மனிதப் பிறவிகள் அல்ல. அவர்களின் சாவு பேசப்பட வேண்டிய ஒன்றல்ல. சாவு அவர்களைப் பொறுத்த மட்டில் ஒரு நிகழ்வு மட்டுமே.
தெணியான் இம் மக்கள் ഴ്ചഗ്ര போதும் உணராத வைகளின் உணர்வாகவும் என்றுமே வாழாது வழிந்து கொணடிருப்பவர்களின் வழிவாகவும் தன்னை இனங் காணு 5%0/07/f.
இவ்வாறு பாதிக்கப்பட்ட , நிந்திக்கப்பட்ட, தீணடத்தகர தவர்களென மணர்ணிலே வீசப்பட்டவர்களை எழுதும்போது கூடத் தெணியான் அநீதி இழைத்த அம் மக்களை மன்னிக்கும் சுபாவத்தைத் தனது எழுத்துக்களில் காட்டுகின்றார். காரணம் அவர்கள் ஒரு காலத்தில் தமது தவறை உணர்ந்து கொள்வர் எனும் துணிவு. இதுவே தெனணியானது உணர்மை நிலையும் கூட. ஏனெனில் அவரது பல நனயர்களெல்லாம் அவரது அக்கினித் தீயில் குளித்தெழுந்த உயர் சாதியினரே.
எம்மிடையே பெருமையுடன் பேசப்படும் பண்பாட்டுக் கோலமாக விளங்குவது திருமண உறவாகும். 'கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்பது இன்று பேசப்படும், அங்கீகரிக்கப்பட்டு வரும் ஒரு பொன் மொழியாகும். ஆனால், கல்லும் மணனும், எவ்வாறு கணவனாகும் என வேடிக் கைக்குத் தானும் கேட்க யாரும் தயாராக இல்லை.
ஆண வர்க்கத்தின் ஆதிக்கம் எவ்வாறு பெணனை அடிமையாக்கியது என்பதன் வரலாற்றுப் பதிவே இப் பொன் மொழி பெணனைப் பார்த்து இல்லத்தரசி எனப் புகழ்ந்து வீட்டுக்குள் வைத்தான். பெனர் தெய்வம் எனக் கூறி அவள் வாயை அடைத்தான். தெய்வம் பேசுமா? பெணணும் பேசது. தெய்வமானாள்.
தெணியான் 16
 

இந் நிலையில் திருமண உறவெண்பது பாலியல் சம்பந்தப்படாத ஒரு தெய்வீகச் சடங்காக மாறி விடுகின்றது. படித்தவர்கள், படியாதவர்கள், சமூக சீர்திருத்த வாதிகள், சமய வாதிகள், சமூக வாதிகள் எனப் பல்வேறு பிரிவினரும் ஒரு சமூக விழுமியமாக இதை ஏற்றுக் கொணர்டனர். கேள்வி கேட்க அஞ்சினர், இன்றும் அஞ்சுகின்றனர். ஆனர் பெனர் உறவுச் சிக்கல்களை முடிச்சவிழ்க்க முனைந்தவர்களில் முன்னோடி என அழைக்கப்படுபவர் டி.எச்.லேறன்எம் ஆவர். தனது கருத்துக்களை அப்பட்டமாக எழுதி பழமை வாதிகளின் சீற்றத்துக்குள்ளானவர். அவரது பாணியில் தெணியானும் ஆணர்
பெனர் உறவை நாசுக்காக நாகரிகமாக ஆனால், நிதானமாகத் தனது 'காத்திருப்பு’ புதினத்தில் அணுகியுள்ளார்.
தெணியான் சமூக விழுமியங்களில் மதிப்பும், மரியா தையும் கொணடவர். ஒரு இனத்தின் கலாசார முத்திரைகள் இவை என்பதை மனதார உணர்ந்தவர். ஆனால் விழுமியங்கள் காலத்திற்கு ஒவ்வது போகின் அவை மாற்றம் காணவேண டும். அல்லது அவைகளின் பொருத்தப்பாடின்மை அம்பலத் துக்கு கொண்டுவர வேணடுமென விரும்புபவர்.
'காத்திருப்பு’ புதினத்தின் கதை மாந்தர்கள் ஒரு வகை யில் ஒரு காலப் பின்னணியின் நீணட வரலாற்று நாயகர்கள் தான்.
இறுக்கமான, நெகிழ்ச்சியற்ற இப்பனர்பாட்டில் ஆணர் பெண உறவுகளில் பிறழ்தல்கள் ஏற்படுவதை அவர் காணர்கிறார். உலகத்துக்கு 'காம சூத்திரத்தை வழங்கிய முன் னோடிகள் நாம் என மெச்சிக் கொள்கின்றோம். ஆனால், அவற்றை அங்கீகரிக்கக் கூச்சப்படுபவர்கள் தான் எம்மில்
பலருண்ைடு. நாம் எல்லோரும் 'சொல்லேர் உழவர்கள் தானா?
இவர்கள் எமது அனுதாபத்துக்குரியவர்கள். இம் மனிதர்கள் இப் புனித உறவை மணர்னனின் மேல் வரைந்து கேலிச் சித்திரமாக்கி விட்டனர். இவற்றை மன வேதனையுடன் பார்க்கின்றார் தெணியான். ஆகவேதான் தனது புதினத்தில் இப் பிரச்சினையை நிதானமாக அணுகுகிறார். இது அவரது வயது முதிர்சியையும், அனுபவ முதிர்ச்சியையும், எழுத்து முதிர்ச்சியையும் காட்டி நிற்கின்றது.
தெணியாண் 17

Page 14
இந்நாவலில் கென்றியேம்எம் போன்றவர்கள் கையானர்ட கள நிலைக் கட்டவிழ்ப்பு (Stuation exposed) உத்தியைக் கையாளுகின்றார். இங்கு பிரதி வாசகனின் சொத்தாக மாற உரைஞனின் பின் புலத்தில் மறைந்து விடுகின்றான்.
'காத்திருப்பு’ புதினத்தின் கதை மாந்தர்கள் யாவரும் தெணியானின் அனுதாபத்தைப் பெற்றவர்கள். பிரதான பெனர் பாத்திரத்தை அவர் ஒரு தகப்பன் மகள் மேல் காட்டும் பரிவுடன் பார்க்கின்றார். அவள் உணர்ச்சிகளில்லாத உணர் வி/களில் வழிகின்றாள். வழிவுகாண வழிவின்றி வாழ்கின்றாள். அவளது இளமையின் எதிர் பார்ப்புகளெல்லாம் எரிந்து சாம்பராகி விட்டன. தனது உளத் தேவைகளைச் சமப்படுத்தும் உடல் தேவைக்காக ஏங்கி நிற்கின்றாள். 'கீட்ஸப்' கூறுவானே பெணணே நீ சிதைக்கப்படல் வேணடும்' என்று அதற்காக அவள் ஏங்கி நிற்கிறாள்.
ஆனால் அப்பாவிக்கனவளோ அவளைக் கடவுளாகக் காணர்கின்றான். அவளைப் பூப்போல் செடியில் பார்த்துப் பூசிக் கிறான். மாறாக அவள் செடியிலிருந்து பூவைப் பிடுங்கி அனுபவிப்பதை எதிர் பார்க்கின்றாள். முடிவு அவள் வேறொரு வனுடன் உறவு கொள்கிறாள். தனது கணவனை வெறுக்க முடியாதிருப்பினும் அவனை ஓரங்கட்டுகின்றாள்.
தெணியானின் மன இயல்பையும் ஆழமான பார்வை யையும் இங்கு நாம் காணர்கின்றோம். இது ஒரு நாவல் மட்டுமல்ல, வாழ்வின், வாழ்வு தரும் நிசத்தின் விமர்சனம்
வெறுக்கப்பட வேண்டியவள் அனுதாபத்துக்குரியவளாகி விடுகின்றாள். அவளது செயலில் குறை காண முடியாது வாசகன் தவிக்கின்றான். தெணியானின் பாத்திரப் படைப்புக்குக் கிடைத்த வெகுமதி இது. அவள் இவ்வகையில் ஒரு 'வட்ட பாத்திரமாகி ஒரு புதிய பரிமாணத்தைச் சுட்டி நிற்கின்றாள்.
இன்றைய யதார்த்த உலகில் விழுமியங்கள் சிதறிப் போவதைத்தெணியான் கவனிக்கத் தவறவில்லை. வாழ்வை நிறைவு செய்வதற்குப் பின் நிற்க வேணடிய விழுமியங்கள் வழிவுக்கு முன் நின்று முட்டுக் கட்டை போடுவதை அவரால் அங்கீகரிக்க முடியவில்லை. விழுமியங்கள் காலத்தின் தேவைக் கேற்ப மாற்றங்கள் காண வேணடுமென்பதை 'காத்திருப்பு' புதினம் மூலம் எமக்கு காட்டுகின்றார். "மரக் கொக்குகள்
தெணியான் 18
 

நமக்கு வேணடாம். வழிவை நேசிக்கின்ற மனிதர்கள் தான் எமக்கு வேணடுமெனத் தெணியான் கூறுகின்றார் போலும்,
தெணியானிடமுள்ள இரண்டு முக்கிய அம்சங்களையே இங்கு பார்த்தோம். அவரது மானுடம் பற்றிய கருத்துகள் சற்று விரிவானவை.
சீனப் பழமொழி ஒன்றுணர்டு, "உனது மகன் கொலைக் குற்றத்திற்காகக் கோட்டில் நிறுத்தப்பட்டால் அவனையே சார் ஏனெனில் அவற்றையே நீ செய்வாய் இது போன்று பொருத்தமில்லலாதது போன்று தோன்றும் பொருத்தப்பாடுடைய மானுடம் பற்றிய கொள்ளைகள் உடையவர் தெணியான் என் பதை மட்டும் இங்கு கூறிவைப்போம்.
தெணியானின் இன்றைய எழுத்துக்களில் ஒரு வித அமைதி ஆழ்ந்த நோக்குக் காணப்படுகின்றது. குறிப்பிட்ட ஒரு காலத்திற்குப் பின் படைப்பிலக்கியவாதியின் படைப்பாற்றல் செத்து விடுவதாகக் கூறுவர். உலகப் புகழ் பெற்ற 'சேக்ளப் பியர்', 'வேட்எப்வேத்' போன்றவர்கள் இதற்கு உதாரணம்.
ஆனால், இப்பொழுது தான் தெணியானின் எழுத்தில் இளமை திரும்புகின்றது. இப்பொழுது தான் அவரது எழுத்துக்களின் மற்றுமொரு புதிய பரிமாணம் உதயமாகின்றது. இவற்றை அவரது அணிமைக் காலச் சிறுகதைகளில் கவனிக்க முடியும். உதாரணமாக அவரது "பெத்தாச்சி, "மீட்சி', 'மனசோடு பேசு', 'ஆதங்கம்' போன்றவைகளைக் கூறலாம்.
தெணியான் 60 வயதைக் காணர்கின்றார். சிலர் 60 வயது வயதல்ல எனக் கூறுவர். இல்லை. அது முழுமையே. அவர் தனது உடையில் எவ்வளவு தூய்மையைக் காணர்கின்றாரோ அவ்வாறே தனது எழுத்துக்களிலும் செழுமையைப் புகுத்தி தனது எழுத்துக்களால் எம்மை மகிழ்விக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுவதே அவருக்கு நாம் தரும் வழித்தாகும்.
-மல்லிகை - ஆகஸ்ட் 2002
தெணியான் 19

Page 15
டொமினிக் ஜீவா
அவருடைய எழுத்து மொழியைப் போலவே அவரும் பாசாங்கற்றவர், எளிமையானவர்
தெணியான் அப்பொழுது நடேசன் என்ற சுயபெயரில் கொழும்புத்துறையில் உள்ள ஆசிரிய கலாசாலையில் ஆசிரிய மாணவனாகக் கல்வி பயின்றுகொண்டிருந்த அந்தக் காலம்
இந்தக்கால கட்டத்தில் நான் பூனிலங்கா சாஹித்திய மண்டலத்தின் கிருஷடி இலக்கியப் பரிசைப் பெற்றுக்கொணடு யாழ்ப்பாணம் திரும்பியிருந்தேன். பத்திரிகைகள் எல்லாம் எனது படங்களைப் பிரசுரித்து அமர்க்களப்படுத்திக் கொணடிருந்த சமயம், மாழிப்பான மேயர் துரைராஜா புகையிரத நிலையத்திற்கு நேரில் வந்து மாலை குட்டி வரவேற்ற காட்சி வீரகேசரிப் பத்திரிகையில் வெளிவந்த வேளை,
அன்று வகுப்புக்குப் பாடம் எடுக்க வந்த பண்டிதர் ஐயா அவர்கள் மாணவர்களைப் பார்த்து ஓர் ஆச்சரியம் கலந்த செய்தி ஒன்றைக் கூறி மகிழ்ந்தாராம்.
"உங்களுக்கு புதினம் ஒன்று சொல்லப்போகிறன. இந்த வருஷம் நாவிதன் ஒருவருக்கல்லவோ சாஹித்திய மணடலப் பரிசு கிடைச்சிருக்காம்"
கேட்டுக் கொணடிருந்த நடேசன் அந்த நிமிஷ மே தெணியானாக மலர்ந்து விட்டார்.
ஆத்திரத்தால் அவரது நெஞ்சு கொதித்துப் போய்விட்டது.
பணடிதத்தனத்திற்கே இயல்பான மொழியில் அவர் அதைக் கூறியிருக்கலாம். 'அதிகம் படிக்காத ஒருவனுக்கு, முறையாகக் கல்வி கற்காத ஒருவனுக்கு’ எனக்கூறியிருக்கலாம். அதையும் மீறி சாதியை வேணடுமென்றே அழுத்திச் சொல்லி வக்கனை பேசிச்சிரித்ததை நடேசனாலி தாங்கிக் கொள்ள இயலவில்லை. அந்தக்காலத்தில் தொடங்கிய நட்பு.
தெணியான் 20

கந்தபுராண கலாசாரத்தின் மகிமையையும் பெருமை யையும் பேசிப்பேசி மனசே உழுத்துப் போன இந்தப் பணடிதப் பெருமகனாரிடம் எப்படித்தான் தொடர்ந்து நடேசன் பாடம் கேட்டுப் பயின்றாரோ என நான் அடிக்கடி வியப்பதுண்டு.
இவர் பாடம் நடத்துவதில் கம்பராமாயணமும் ஒன்று. இராமாயணத்தின் மூலவர் வான்மீகி வான்மீகி ஒரு வேட்டுவர். வேடர் குலத்தைச் சேர்ந்த வான்மீகியின் மூலவித்தான கம்பராமாயணத்தை வயிற்றுச் சேற்றுக்காக பாடமெடுக்கும் இந்தப் பணடிதர் சாதித்திமிர் உணர்வை வெளிப்படுத்துவதற்காக நாவிதன் என ஏளனம் செய்ததின் வெளிப்பாட்டைக்கணடு கிரித்து விட்டேன் நான் எனப் பின்நாட்களில் தெணியான் என்னிடம் நேரில் சொன்னார்.
இந்தப் பணடிதப் பெருமகனார் இன்று அவுஸ்திரே லியாவில் புலம் பெயர்ந்து வசித்து வருகின்றார்.
லணடன் மாநகரில் ஓர் இலக்கியக் கூட்டம், நான் அந்தச் சம்பவத்தை அங்கு கூறி, "கவனம்/ இப்படியான மானுடச் சத்துராதிகள் சிலர் அங்கிருந்து வெளியேறி உலகெங்கும் வேர் பரப்பி வருகின்றனர். இவர்களைப் பற்றி ஐரோப்பிய, கனடிய மக்கள் வெகு கவனமாக இருக்க வேணடும். கவனம் தப்பினால் வெள்ளையர்களிடையே கூட சகோதரர்கள் வீட்டில் செம்பு தனணி எடுக்காத சாதிப் பிரிவுகளை இப்படியானவர்கள் உருவாக்கி விடுவார்கள்” எனக் கூறி வந்தேன்.
இந்தக் கல்விசார் சமூகப் பின்னணியிலேயேதான் தெணி யான் எழுத்தாளனாக உருவாகி மலர்ந்து வந்தார். இந்தச் குழல்தான் நடேசனைத் தெணியான் என்ற எழுத்தாளனாக ஆக்கித் தந்தது.
ஆரம்ப காலத்திலிருந்தே மல்லிகையுடன் அவரது தொடர்பு நீடித்து வந்துள்ளது. இதுவரை 48 சிறு கதைகளை அவர் மல்லிகையில் எழுதியுள்ளார். கணக்குப்படி பார்த்தால் திக்குவல்லைகமாலுக்கு அடுத்தபடியாக இவரது சிறு கதைப் படைப்புக்கள் தான் அதிகமாக மல்லிகையில் வெளிவந்துள் რ/60)/,
தெணியாண் 21

Page 16
"சும்மா கம்மா சாதியைப்பற்றித் தானா உங்களுக் கெல்
லாம் எழுதத்தெரியும்' எனப்பலர் கேட்டதுணர்டு இப்படியாகக் கேட்கப்பட்டவர்களில் தெணியானும் ஒருவர். இவர் எழுதிய பொற்சிறையில் வாடும் புனிதர்கள்'என்ற புதுவிதமான நாவலை இவர்கள் படித்திருக்கமாட்டார்கள். இந்தமணர்ணில் வழிந்து வரும் பிராமணர்களின் பிரச்சினைகளைப்பற்றிக் கூறும் நாவல் இது.
படைப்பாளி ஒரு வட்டத்திற்குள் நின்று நின்று சுற்றிச்சுழன்று வருபவன் அல்ல. அதனால் அவனது ஆளுமைவலுவடையது. அதே சமயம் தனக்கு முன்னால் நடக்கும் மானுடக் கொடுமைகளை மறந்து விட்டு வெறுங் கற்பனைகளில் மிதப்பவனும் அல்ல.
நவீன பம்மாத்து இலக்கிய மொழிகளில் தன்னைத் தொலைத்து விடாது பிரச்சினைகளின் தாக்க அழுத்தத்தினால் தேங்கிப் போய்விடாமல் தொடர்ந்து எழுதிக் கொணடிருப்ப வர்களில் இவரும் ஒருவர்.
சாதிவெறி சாதி அகம்பாவம் என்பது சிலரின் மனசையும் ஆன்மாவையும் பீடித்துள்ள கொடிய நோய், எத்தகைய மனித நோயையும் விட, இந்நோய் இந்தப் பாரம்பரிய விடுபடாத நோய், மகாபயங்கரமானது, மனித குலத்தையே அழிக்கத்தக்கது. எதார்த்த பூர்வமாக இந்த நோயின் கொடூரத்தை வழிவில் அனுபவித்தவர் மாத்திரம் அல்ல பின் விளைவுகளுக்கு முகங்கொடுத்து இன்று வழிந்து கொணடு பேனாயிடித்து வருபவர், தெணியான்.
தெணியானிடம் அன்றும் இன்றும் வெகு சிறப்பான குணம் ஒன்றுணர்டு, எந்த மக்களிடமிருந்து உருவாகினாரோ, எந்த மக்களுடன் தினசரி புழங்கி வருகிறாரோ அந்த மக்க ளுக்கான நிரந்தர விடுதலையின் பக்கம் அவர் திடமாக நின்று, சிந்தித்து, எழுதிப்பேசி வருகின்றார்.
இவருக்கென்று ஒரு தத்துவப் பார்வை உண்டு. ஆரம்ப காலந்தொட்டே அதன் வழிகாட்டுதல் வழியே தொடர்ந்து நடைபோட்டு வருபவரான இவரிடம் தடம்புரளும் மனப்பாண்மையே சிறிது கூடக் கிடையாது.
தெணியாண் 22
 

இன்று மணிவிழாக்காணும் இவரிடம் மெருகேறிய சிந்தனைச் செழுமையைப் பார்க்கலாம். வயதின் முதிர்ச்சியும் அனுபவத்தின் ஆழ அகலங்களையும் இவரது இன்றைய எழுத்தில் தரிசிக்கலாம்.
நடேசனாக அன்று வழிவைத் தொடர்ந்த ஒரு தமிழர சிரியர் அங்கே பணடிதர் ஒருவரால் ஒடுக்கப்பட்ட சமூக சகோதரன் ஒருவனுக்கு எதிராகச் சொல்லப்பட்ட வக்கணைச் சொல்லம்பைக் கேட்கச் சகிக்காமல் நெஞ்சு துடித்து, அதன் பெறுபேறாகத் தெணியானாக உருமாறிவந்துள்ளார்.
உறவுகள்வெறும் இரத்தசம்பந்தத்தினால் மாத்திரம் வந்துவிடுவதில்லை. அதற்குப் பாரிய ஆழமான வரலாறு உணர்டு,
தெணியான் 23

Page 17
எம்.கே.முருகானந்தன்
தினந்தினம் தளிர்விடும் படைப்பாளி
தெணியானுக்கு மணிவிழா
கேள்விப்பட்டதுமே மனத்திற்குள் மணியடித்து ஆனந்தம் கொள்கிறது. அதே நேரம் மனதிற்குள் ஏக்கமும் குடிகொள் கிறது. நாங்கள் நண்பர்கள். எல்லோரும் சேர்ந்து நின்று விழா வெடுத்துப் பேசி மகிழ்ந்து, போட்டோ பிடித்து, மணிவிழா மலரும் வெளியிட்டுக் குதூகலிக்க வேண்டியவர்கள். ஆனால் ஒவ்வொருவரும் பலரும் திக்குத் திக்காகப் பிரிந்து நிற் கின்றோம். வழித்துக் கடிதம் அனுப்புவதுடன் திருப்திப்பட வேண்டிய குழலில் இருக்கிறோம்.
ஆயினும் எங்கிருந்தாலும் மனத்தால் அவருடன் இணைந்து நிற்கின்ற திருப்தி இருக்கின்றது. இந்த இனிய நாளில், தனது வழிவில் புதிய மைற்கல்லை எட்டும் இந்த உன்னத தருணத்தில் அவரது பூரிப்பில் நாம் எல்லோரும் கலந்து ஒன்றிணைந்து நிற்கிறோம்.
இந்தச் சமயத்தில் ஒரு விடயம் ஞாபகத்திற்கு வருகிறது. இலக்கியக் கூட்டங்களில் நானும் அவரும் சேர்ந்து கலந்து கொள்ளும் தருணங்கள் பல வாய்ப்பதுணர்டு அவ்வாறு கலந்து கொள்ளும் தருணங்களில் அவரை நான் மூத்த எழுத்தாளர் என விழிப்பது வழக்கம் நணபர் குலசிங்கம் உரிமையோடு சீனர்டுவார். "என்ன டெரக்டர் நீங்கள் தெணியானை எல்லோருக்கும் முன்பாக மூத்த எழுத்தாளர் என்று சொல்லி அவரை வயசாளியாக்கிப் போட்டியள்' என்று.
நானும் தெணியானும் சிரித்துச் சமாளிப்போம்
உணர்மையில் வயசை வைத்து அவரை மூத்த எழுத்தாளர் என என்றும் நான் குறிப்பிட்டதில்லை. இது தெணியானுக்கும் தெரியும், குலசிங்கத்திற்கும் தெரியும். அவரது வயதும் எனக்குச் சரியாகத் தெரிந்திருக்கவில்லை. எழுத்
தெணியான் 24
 

தாளரான அவர் மீது எனக்கு நீண்டகாலமாக இருந்த மதிப்பே அவ்வாறு சொல்ல வைத்தது. அத்துடன் எமது நணபர் குழாமிடையே நீண்ட காலமாக எழுதி வருவதுடன் பரந்த அனுபவமும் கொண்டவர் அவர்.
சிறுகதை, நாவல், கட்டுரை, விவாதம் என்று பல்வேறு அதுறைகளிலும் விடலைப்பருவம் முதல் இன்று வரை 2 தொடர்ந்து எழுதி வருபவர் ஆழமும், அழுத்தமும், நயமும் அவரது படைப்புகளில் நிரவி நிற்பதைக் கனடு மகிழ்ந்தவன் நான். இவையே அவரை மூத்த எழுத்தாளர் என எண்னை அழைக்க வைப்பதுணடு.
இவை இவ்வாறிருக்க இப்பொழுதுதான் அவருக்கு மணிவிழா வருகிறது என்றதும் ஆச்சரியமாக இருக்கிறது. நான் அவரைக் கடைசியாகச் சந்தித்ததோ, மூத்த எழுத்தாளர் என்றே7 விழித்ததோ குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு முன் இருக்கும். அப்படியானால் முத்த எழுத்தாளர் என்று அன்று அழைத்தவரை இன்று எவ்வாறு அழைப்பது?
அவருக்கு மணிவிழா என்றதும் சற்றுப் பொறாமை கூட வருகிறது. எண்னைவிட ஆறு வயது மட்டும் மூத்தவரான அவர் இலக்கிய உலகில் சாதித்த சாதனைகள் மலைப்பைத்தருகின்றன. அவர் சாதித்ததில் ஒரு சதவிகித்தைக் கூட நாம் எட்டியிருப்போமா?
உணர்மையில் தெணியானின் இலக்கியப் பங்களிப்பு பன் முகம் கொண்டு பரந்து விரிந்தது.
எத்தனை நாவல்கள் அவரது பேனாவிலிருந்து ஊற் றெடுத்திருக்கின்றன.
வீரகேசரி வெளியீடான விடிவை நோக்கியைத் தொடர்ந்து, கழுகுகள் சென்னை நர்மதா வெளியீடாக வந்தது. தொடர்ந்து பொற்சிறையில் வாடும் புனிதர்கள், மரக்கொக்கு ஆகியன இலங்கையிலேயே வெளியாகின. மரக்கொக்கு நாவல் 1994ம் ஆணர்டின் இலக்கியத்திற்கான இலங்கை சாகித்திய மணடலப் பரிசையும், வடகிழக்கு மாகாண அரசின் பரிசையும், யாழ் இலக்கிய வட்டப் பரிசையும் ஒருங்கே தட்டிக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து வெளியான காத்திருப்பு ஈழத்து இலக்கிய உலகில் முன்னெப்போதும் பேசப்படாத பெனர்
தெணியான் 25

Page 18
சோரம் போனதை மிகுந்த அனுதாபத்துடனும் நிதானத்துடனும் பேசியது. அடுத்து வர இருப்பது காணவில் மான். அன்பிற்காக ஏங்கும் ஒருவனின் கதை. ஆசிரிய பயிற்சிக் கலாசாலை அனுபவங்களை அற்புதமாக வெளிக் கொணர்வது.
தினசரிகளில் வெளியான ஏனைய இரு குறுநாவல்களான பனையின் நிழல், பரம்பரை அகதிகள் ஆகியன நூலுருப் பெறத் தயாரான நிலையில் இருப்பதாக அறிகிறேன். சிதைவுகள் என்ற மற்றுமொரு குறுநாவல் சுபமங்களாவும், கலை இலக்கியப் பேரவையும் இணைந்து நடத்திய போட்டியில் பரிசு பெற்றது. பின்பு தினகரன் வார மஞ்சரியில் தொடராக வெளிவந்தது. இவற்றில் இரணடு குறுநாவல்கள் இப்பொழுது இரத்தின வேலோனின் மீரா பதிப்பாக வெளிவர இருக்கிறது.
சொத்து, மரத்துவேட்டி ஆகிய இரணடு சிறுகதைத் தொகுதிகள் ஏலவே வெளியாகியிருக்க, தெணியானின் ஏனைய ஏராளமான சிறுகதைகள் நூலுருப் பெறக்காத்திருக்கின்றன. கிட்டத்தட்ட 20 சிறுகதைகளை தெணியான் எழுதியுள்ளார். ஏராளமான இலக்கியக் கட்டுரைகளும் தெணியானின் ஆக்கங்க எ7ாக வெளிவந்து சிந்தனைகளைக் கிளறியுள்ளன.
தெணியானுடனான முதற் பரிச்சயம் நிச்சயம் அவரது படைப்புகளுடாகத்தான். நான் சாதாரண தரம் படிக்கும் காலம் முதல், அதாவது மல்லிகையின் ஆரம்பகாலம் முதல் அதன் வாசகன். தெனரியானின் 45 சிறுகதைகள் மல்லிகையில் வெளியாகியுள்ளன. தெணியானின் முதல் சிறுகதையான பிணைப்பு விவேகியில் வெளியான 1964 காலப்பகுதியில் விவேகியும் படித்திருக்கிறேன். எனவே படிப்பறிந்த காலம் முதல் எனது அபிமானப் படைப்பாளிகளில் அவரும் ஒருவராகிறார்.
அவருடனான நேரடித் தொடர்பு எப்பொழுது ஆரம் பித்தது என நினைவுகூர முடியவில்லை. ஒரு மல்லிகை விழாவா? தும்பளை ஞானசம்பந்தர் நிலையத்தில் நடந்த விழாவா? இரத்தினவேலோனின் அறிமுகவிழா வெளியீட்டுக் கூட்டமா? சரியாக ஞாபகத்தில் இல்லை.
ஆயினும் கடந்த 20 வருடங்களாக எனது நெருங்கிய நணபராக இருந்து வருகின்றார். இலக்கியக் கூட்ட மண்டப வாயிலாலோடு மறந்துவிடும் ரயில் சிநேகிதமல்ல, வைத்திய
தெணியான் 26
 

சாலையின் அறைக்கதவுடன் உதறிவிடும் தொழில் ரீதியான நட்புமல்ல, நெருங்கிய நட்பு. குடும்ப ரீதியான நட்பு, வீட்டில் நடக்கும் சுகதுக்கங்களில் அழைப்புக்காகக் காத்திருக் காது உரிமையோடு ஓடி வந்து கலந்து கொள்ளும் நட்பு. அவரது ஒவ்வொரு பிள்ளைகளும் எவ்வளவு அந்தளவிற்கு எனது பிரியத்துக்கு உரியவர்களோ, அதேபோல அல்லது அதற்கு மேலாக எனது பிள்ளைகளின் வளர்ச்சியிலும் முன் னேற்றத்திலும் அவரும் அன்பும் அக்கறையும் காட்டி வருகிறார். இன்று தொலைவிலிருக்கும்போது அவரது ஒவ்வொரு கடிதத்திலும் தொலைபேசி அழைப்பிலும் குடும்ப அங்கத்தவர்கள் பற்றிய அக்கறை நிச்சயம் வெளிப்பட்டே இருக்கும்.
ஆரம்பத்தில் தெணியான் என்ற எழுத்தாளர் என்னைக் கவர்ந்திழுத்தார் என்றால் நேரடித் தொடர்பின் பின் அந்த எழுத்தாளின் உள்ளேயிருந்த மென்மையான உள்ளம் என்னை ஆர்த்திழுத்தது. அவர் ஒரு ரோஜரச் செடி போன்றவர். முட்கள் நிறைந்த செடி, நெருங்கினால் குத்திவிடுமோ என்று தயங்க வைக்கும். காரசாரமான எழுத்தாளர், எதிராளியைத் துளைத்தெ டுக்கும் பேச்சாளர், கனடிப்பான ஆசிரியர், இவற்றால் அவரை நெருங்கப் பலரையும் தயங்க வைத்தன. ஆனால் உணர்மையில் அவர் அதிலுள்ள ரோஜா மலர் போன்றவர். மென்மையான மனதும் மிருதுவான குணங்களும் கொணடவர். உள்ளத்திலும் தோற்றத்திலும் வசீகரமானவர். நண்பர்களுக்கு எப்பொழுதும் இணக்கமானவர்.
பருத்தித்துறையில் அறிவோர் கூடல் இயங்க ஆரம்பித்த பின்னர் எமது நட்பு மேலும் இறுக்கமடைந்தது. ஆரம்ப காலம் முதல் அதன் வளர்ச்சிக்கும் தொடர்ச்சியான செயற்பாட்டிற்கும் உறுதுணையாக இருந்த நண்பர்களில் தெணியானும் முக்கிய மானவர். வடமராட்சி எழுத்தாளர்களும் பல்துறை ஆாவலர் களுமாகிய நாங்கள் இரண்டு வாரங்களுக்கு ஒரு முoசிற ஒன்றுகூடி இலக்கியம், கலை, கலாசாரம், விஞ்ஞானம், ஆரோக்கியம் எனப் பல விடயங்கள் பற்றிப் பேசுவோம். ஒரு முக்கிய பேச்சைத் தொடர்ந்து காரசாரமான கலந்துரையாடல் இடம் பெறும் அறிவோர் கூடலில் எல்லோரும் கலந்து கொணட அந்தச் சில ஆணர்டுகள் எல்லோர் மனத்திலும் பசுமையாக இருக்கிறது. ஆங்கு ஒருவரையொருவர் நேருக்கு
தெணியான் 27

Page 19
நேர் விமர்சித்து கடுமையாகவும் ஆவேசமாகவும் விவாதிப்பு துண்டு. ஆயினும் தேநீர் அருந்திப் பிரியும்போது நாம் அனை வரும் ஒரே குழுவினர் என்ற உணர்வே மேலோங்கி நிற்கும்.
சரி தெணியான் என்ற எழுத்தாளரிடம் நான் கனட சிறப்புகள் என்ன?
நான்கு விடயங்களைச் சிறப்பாகக் கூறலாம். 1 தொடர்ந்து எழுதுபவர். 1964 ஆண்டு முதல் இன்று வரை இடைவெளியின்றி தொடர்ச்சியாக எழுதி வருகிறார். அவரோடு படைப்புலகில் ஓடத் தொடங்கிய எழுத்தாளர்கள் பலர் எழுதுவதையே மறந்து ஓய்ந்து விட்டபோதும் தெணியான புதிதாகத் துளிர் விடும் செடி போல இன்றும் புத்துணர்வோடு எழுதுகிறார். 2. பல பழைய எழுத்தாளர்கள் தாம் எழுதத் தொடங்கிய || காலத்தில் எழுதியது போலவே இன்றும் தமது எழுத்தின் உள்ளடக்கத்திலும் உருவிலும் மாற்றமின்றி அரைத்த மாவையே அரைத்துக் கொணடிருக்க தெணியான் தனது ஒவ்வொரு படைப்பிலும் தனது ஆக்கத்திறனைப் புதிப்பித்து மெருகு ஊட்டிக் கொணடிருக்கிறார். உலக இலக்கிய அரங்கிலும், இலங்கைக்கு அப்பாலான தமிழ்ப் படைப்புகளிலும் நடக்கும் மாற்றங்களையும், புதிய பார்வைகளையும், வீச்சான படைப்புகளையும் அறியாமல் எமது பல பழம் பெருச்சாளிகள்
கிணற்றுத் தவளைகளாகக் கத்திக் கொணடிருக்க தெணியானோ தனது ஒவ்வொரு புதிய L/60), 11/56flof உள்ளடக்கத்திலும்,
உருவத்திலும், நடையிலும் புதுமை செய்ய முனைந்து கொணடிருக்கிறார்.
3. தடம் 1/767/5 67(4.5/67. முற்போக்குக் கொள்கைகளோடு தனது/ எழுத்துலகின் ஆரம்ப காலத்திலேயே தன்னை இணைத்துக் கொனட அவர் என்றும், எதற்காகவும், எவருக்காகவும் தனது கொள்கைகளை
ஒருபோதும் விட்டுக்கொடுக்காதவர்.
தெணியான் 28
 

4. தனது மணனை உணர்மையாக நேசிப் பவர். எத்தனை துன்பங்கள், துயரங்கள், ஏன் வாய்ப்புக்கள் வந்தபோதும் கூட இடம் பெயராது //лууд பெயராது தனது சொந்த மணனில், அந்த மணர்னனின் மக்களின் இழப்புகளில் பங்காளியாக நிற்பவர்.
சாதிப் பிரச்சினை தவிர வேறு எதைப் பற்றி இவரால் எழுத முடியும் எனச் சிலர் கிண்டலடிக்க, வேறு சிலரோ சாதிப் பிரச்சினை பற்றி இன்றும் துணிவோடு எழுதுவதில் டானியலுக்கு வாரிசு தெணியாண்தான் என மார் தட்டிப் பெருமை கொள்கிறார்கள். ஆனால் தெணியான் இரு பகுதியினரின் பார்வைகளுக்கும் அப்பால், இவர்கள் சிந்தனைகள் கூட எட்டமுடியாத உயரத்தில் பிரகாசித்துக் கொணடிருக்கிறார்.
அவர் தனது ஆயுதமாகப் பேனாவைத் தூக்குவதற்குக் காரணமாக இருந்தது சாதி வெறியர்களின் சீணடல்கள்தான். கொழும்புத்துறை ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் அவர் பயிற்சி பெற்றுக்கொணடிருந்த காலத்தில் அவர் பெற்ற புறக்கணிப்புக்களும், கசப்புணர்வுகளும், மனக்காயங்களும் அந்த இளம் ஆசிரியனில் எதிர்ப்புணர்வையும், ஆவேசத்தையும் தூணடிவிட, பயிற்சி முடிந்து ஆசிரிய நியமனம் பெற்று மலையகம் சென்ற கையோடு அவர் சாதியத்திற்கு எதிராக களத் தில் இறங்கினார். சிறுகதைகள் பிரசவமாக ஆரம்பித்தன.
சைவமரயில் பிறந்து வளர்ந்த அவர், முற்போக்கு கொள்கைகளோடு இணையவும் அவரது பார்வை உலகளாவிய ரீதியில் விரிந்தது. தொடர்ந்த வாசிப்பும் தேடலும் அவரது படைப்புக்களை மேலும் செழுமைப்படுத்தியது.
இதன் காரணமாக சாதிப்பிரச்சனையை மட்டும் எழுது பவர் என்ற எல்லையைத் தாண்டி, சமூகத்தால் வஞ்சிக்கப்பட ஒவ்வொருவருக்கும் தனது பேனாவினூடாகக் குரல் எழுப்பு வதற்கு இடம் கொடுத்தார். இதனால்த்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பேசிய அதே தெணியான், சாதியமைப்பின் உச்சத்தில் இருந்தபோதும், பொருளாதார ரீதியாக உறிஞ்சப்பட்ட பிராமணர்கள் பற்றி பெற் சிறையில் வாடும் புனிதர்கள் என நாவலாக உரைக்க முடிந்தது.
தெணியாண் 29

Page 20
|
நலிந்த பொருளாதாரத்தாலும், நிறைவுதராத குடும்ப சுகத்தாலும் வறுமைப்பட்டுக் கிடந்த குடும்பப்பெணணொ ருதீதியை வீட்டிற்கு வசதிகள் செய்து கொடுத்து இன்னொரு வனால் அவனது உடலை மசிய வைக்க முடிந்தது. அவள், சோரம் போன கதையை காத்திருப்பு நாவலில் அவரால் அனுதாபத்துடனும் நிதானமாகவும் சொல்ல முடிந்தது.
தெணியானின் ஆரம்ப காலக் கதைகளில் ஆக்ரோஷம் சற்று மிகுந்திருந்தது உணமைதான். ஆயினும் இவர் எழுத ஆரம்பித்த காலங்களில் எழுத ஆரம்பித்த, மற்றும் எழுதிக் கொணடிருந்த பலரது படைப்புகளில் இருந்த செயற்கைத்தனம் இவரது படைப்புகளில் இருக்கவில்லை. சாதிப் பிரச்சினையில் வஞ்சம் தீர்ப்பதற்கு என்றே உருவத்தைப் பற்றிய அக்க றையின்றி புனையப்பட்ட கதைகள் போலன்றியும், செவி வானமும், செங்கொடியும், முஷ்டியை உயர்த்தும் தொழிலாளியும் கதையில் எங்காவது வரும்படி பார்த்துக் கொணட புத்தகப் புரட்சியாளர்களின் கதைகள் போலன்றியும் இவரது படைப்புகள் போலிக் கற்பனைவாதக் கதைகள் அல்ல. மாறாக மக்களது ஏக்கப் பெருமூச்சுகளிலிருந்து பிறந்தவை. தான் கனடு கேட்டு உணர்ந்த LO4567f7;of துயரங்களையும், துன்பங்ளையும் சமூகத்தின் அவலங்களையும் இவர் சத்திய உணர்வோடு படைத்தார். இதனால் தன்னொத்த பல படைப்பாளிகளிலிருந்து இவர் ஆரம்ப முதலே வித்தியாசப்பட்டு நின்றதை நாம் காணர்கிறோம்.
தெணியானின் படைப்புலகில் உவப்பு என்ற கதை ஒரு மைற்கல் எனலாம். இனப்பிரச்சனை பற்றிய சிறுகதைகளில் ஒரு முக்கிய திருப்புமுனை என்பதோடு சிறுகதை என்ற இலக்கிய வகை தெணியானின் பேனாவில் அற்புத உருக்கொண்டதும் இக்கதையில்தான். நான் ஆளப்பட வேணடும் என்ற சிறு கதையும், காத்திருப்பு என்ற நாவலும் அடுத்த அடுத்த மைற்கற்கள். இவை பற்றியெல்லாம் இன்னும் நிறையவே பேசலாம்.
ஆயினும் இது அவரது மணிவிழாக்காலம் என்பதால் அதிகம் எழுதிக் கொணடிருக்காது அவரை முழு மனத்தோடு வாழ்த்தி மனம் மகிழ்கிறேன். மணிவிழா நிறைவான பின் பவளவிழா, அதைத் தொடரும் ஏனைய விழாக்கள் என எல்ல7 விழாக்களையும் கண்டு நிறைவழிவு வாழ வழித்துகிறேன்.
தெணியாண் 30
 

ஈழத்தமிழ் இலக்கியம் அவரிடமிருந்து இன்னும் நிறைய எதிர்பார்த்துக் காத்திருக்கிறது என்ற அவருக்கு ஏற்கனவே தெரிந்த செய்தியை மீணடும் நினைவூட்டி, வழித்தி விடை பெறுகின்றேன்.
தெணியாண் 31

Page 21
பேராசிரியர் சபா ஜெயராசா
கலை இலக்கியத் திறனாய்வில் மார்க்சிசமும் நவமார்க்சிசமும்
சமூக யதார்த்தங்கள், மற்றும் வரலாற்று நடப்பியல் முதலியவற்றுடன் தொடர்புபடுத்தி கலை இலக்கியங்களை விளங்கிக்கொள்ளல் வேண்டும் என்பது மார்க்சிச அணுகு முறையில் அடியாதாரம் பொருளாதாரக் கட்டுமானமே சமூகக் கட்டுமானத்தையும், அந்தச் சமூகத்திற்குரிய கருத்தியலையும், நிறுவனங்களையும் கலை இலக்கியங்களையும் தீர்மானிக்கும் அடிப்படையாகின்றது என்பது மார்க்சிச திறனாய்வில் பரிசீல னைக்கும் மீள் பரிசீலனைக்கும் உட்படுத்தப்பட்டு வரு கின்றது. மார்க்கிய திறனாய்வின் தீவிரமான இயங்கும் பணிபு, இன்றைய நிலையில் புதிய புதிய பரிமாணங்களை ஏற்படுத் தியுள்ளது.
மார்க்சிச சிந்தனை மரபுகளில் பல தரப்பட்ட கிளை விடும் வளர்ச்சிகள் படி மலர்ச்சி கொணடு வருதலைச் சுட்டிக் காட்ட வேணடியுள்ளது. மார்க்சிசத் திறனாய்வில் பன்முகப் பாங்குகள் செறிவுடன் வளரத் தொடங்கியுள்ளன.
1960 ஆம் ஆணர்டின் பின்னர் மார்க்கிய கலை இலக்கிய சிந்தனைகளில் மேலும் பன்முகப்பாங்குகள் வளர்ச்சியடையத் தொடங்கின. லுயிஎப் அல்துர் கட்டமைப்பியல், மற்றும் உளப் பகுப்பியல் முதலிய இயல்களை மார்க்கிய சிந்தனைகளுடன் இணைத்து வீச்சினை மேலும் அதிகரிக்கச் செய்தார். பல்வேறு மட்டங்களில் சமூக ஆக்கம் நிகழ்கின்றதென்பதும் சமூகத்தின் ஒவ்வோர் கட்டமைப்பியலும் சார்பு நிலையில் சுதந்திரமாகத் தொழிற்படுகின்றது என்றும் அவர் விளக்கினார். பாரம்பரிய மார்க் சியக் கருத்துக்களில் இருந்து அகல விரிந்தும் பரந்தும் சென்ற இவரது கருத்துக்களை அடியொற்றி ரெரி ஈகல்ரன் Lîløí á5L Z 6ØDLOZízfalz/Gnú (poststructural) á5(55g5/556ØD677 வளர்த்துச் சென்றார். லக்கானுடைய உளப்பகுப்பியலில் அணுகு முறை றோலன்ட்பார்தீசின் S/2கட்டிகள், முதலியவை மார்க்கிய சிந்தனைகளின் அடியாதாரத்தில் இருந்து விரிந்தவையாகும்.
தெணியான் 32
 

இவற்றையெல்லாம் தொகுத்து நோக்கும் பொழுது மார்க்சியக் கலை இலக்கியப் பார்வை ஒடுங்கியதென்றே7 சுருங்கியதென்றோ, ஒரே வாய்ப்பாட்டுக்கு உட்பட்டதென்றோ கூற முடியாது. பன்முகத்தன்மையான விரிவும் மலர்ச்சியும் மார்க்சியத் திறனாய்வின் பலத்தை ஒரு விதத்திலே விளக்கி நிற்கின்றன. மறுபுறம் அவற்றின் விரிவும் மலர்ச்சியும் மார்க்சிசத்தின் ஆன்மாவை நழுவவிட்டு இறகுகளைப் பற்றிப் பிடித்தனவாகவுமுள்ளன.
மார்க்சிச கலை இலக்கியத் திறனாய்வின் வளர்ச்சியில் 67). Ofé607 At 177/65 (critical realism) 6/46.5// நடப்பியல் என்ற இருகிளைகளையும் ஒப்பு நோக்குதல் கூர்ப்படையத் தொடங்கியுள்ளது. புதிய சமூக ஒழுங்கமைப்பை நிர்மானிப்பதற்கான பணி சோசலிச நடப்பியலின் கடப்பாடாக அமைகின்றது. சோசலிச நடப்பியல் சரியான உணர்வுகளில் இருந்து கட்டியெழுப்பப்படும் கலை இலக்கியங்களை இனங் காட்டுகின்றது. முதலாளித்துவக் கலை இலக்கியங்கள் முன் வைக்கும் போலி உணர்வுகள் தவறான உணர்வுகள் (false Conscicusness) முதலியவற்றை இனங்காணிபதற்கு இந்த அணுகுமுறை வினைத்திறன் வாய்ந்த அளவீடுகளை முன்வைக்கின்றது. நடப்பியலை நம்பகரமாகப் பிரதிபலிக்கும் பொழுது சரியான கருத்தியலும் பொருத்தமான அழகியற் பார்வையும் விளக்கமும் நடப்பியலின் முன் நிபந்தனை களாகின்றன.
மார்க்சிசத்தின் கருத்தியல் வலுவும் அதனூடாகப் பரிணமிக்கும் அழகியல் வலுவும் அவற்றின் சமூகப் பயன்பாடும் நடப்பியலின் பலத்திற்கு வலுவூட்டுகின்றன. விமர்சன நடப் பியலும் சோசலிச நடப்பியலும் நடப்பியலி அழகியலின் மேன்மையும் பிரதியீடில்லாத சிறப்பையும் எடுத்துக்காட்டு கின்றன : முன்னோக்கி நகர்வதற்கும் பிற்போக்குத் தனங்களால் இழுபடுவதற்குமுரிய முரண்பாடுகளையும் நடப்பியல் கலை இலக்கியங்களினால் மட்டுமே பொருத்தமான அகக் காட்சியுடன் சித்திரிக்க முடியும் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் இடையேயுள்ள முரணர்பாடுகளை விளக்காத எதிர் நடப்பியற் கோட்பாடுகள் தழு விய கலை இலக்கியம் கழுவுணர்டு செல்வதை காணமுடி கின்றது.
H தெணியான்
3
3

Page 22
மொழியின் நோக்கமல்ல, தொடர்பாடலை மேற்கொள்வதே அதன் நோக்கமாகும்.
நடப்பியலை மொழி வெளிப்படுத்தி நிற்பதனால் நடப்பி யலை மாதிரியடக்கும் மொழியைப் பயன்படுத்த வேண்டி யுள்ளது. மொழி என்பது பல்வேறு பணிபுகள், சந்தர்ப்பங்கள், மரபுகள் முதலியவற்றை பெரும் வளக் குவியலாக உள்ளது. இந்தப் பன்முகப் பாங்குகளின் தெரிவுடன் நடப்பியல் இணைந்துள்ளது.
பண்பாட்டுப் பொருள் முதல் வாதமும் புதிய வரலாற்று வாதமும் (CULTURAL MATERIALISMAND WEWHISTORICISM)
பண்பாட்டுப் பொருள் முதல்வாதம் என்ற தொடரை றேமனட வில்லியம்எம் உருவாக்கினார். மார்க்சிச சிந்தனை களிலும் திறனாய்விலும் நெகிழ்ச்சியற்ற இறுக்கம் இருப்பது போன்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டது. மரபு வழி மார்க்சிச வாதிகள் குறிப்பிட்டமை போன்ற பொருளாதாரக் கட்டமைப் புக்கும் அதன் மேலமைந்த அமைப்புகளுக்குமிடையேயுள்ள தொடர்புகள் அத்துனை எளிதானவை அல்ல என்றும் அவரது அறிக்கை வீச்சுக்குத் தெரிந்தன.
ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பொருளாதார அடிக் கட்டுமானத்தின் மீது பல பனர்பாட்டு விசைகள் தாக்கம் விளைவிக்கின்றன என்றும், ஆனால் அவற்றைக் கட்டு மானத்தினால் கட்டுப்படுத்த முடியாதுள்ளது என்றும் அவர் குறிப்பட்டுள்ளார். பண்பாட்டின் பன்முகப் பாங்கானது நிலப் பிரபுத்துவம் முதலாளித்துவம் போன்ற ஒவிவொன்றுக்குமுரிய மரபுகள், நிறுவனங்கள் ஆக்கப் பண்புகள் முதலியவை தொடர்ந்து நீடித்து நிற்பதனால் காணப்படுகின்றது. அதாவது நிலப் பிரபுத்துவத்தின் பண்பாட்டுத் துணிக்கைகள் முத லாளித்துவ சமூக அமைப்பிலும் நீடித்துக் காணப்படு கின்றன. இவை நீடித்து நிற்றலையும் வலுவுள்ளதாய் இருத்தலையும் சிக்கலாயிருத்தலையும் பண்பாட்டு சுவடுகளின் இயக்கமுள்ள உள்ளமைந்த தொடர்புகளை ஆராயும் பகுப்பாய்வு முறைமையை அவர் முன்னெடுத்தார். எத்தகைய ஒரு பணிபாடும் பழமையின் சுவடுகளைக் கொணடிருக்குமாயின் அவற்றின் சம கால இருப்பு மாறும் பணர்புடையதாகக் காணப்
தெணியாண் 36
 

படும் பொருளாதார அடிக் கட்டுமானத்துடன் நேரடியாக இணைந்த பணிபாட்டு செயன்முறைக்கு மாற்று வகை 1/60 g/16 எதிரானதுமான பனபாட்டு செயல்முறையும் காணப்படும். ஒரு பணிபாட்டு செயன்முறையினூடே இன்னொரு பணிபாட்டு செயன் முறையும் முகிழ்த்தெழும் வாய்ப்பு உண்டு.
மார்க்சிச தளத்தில் விசைகொணர்டெழுந்த பிறிதொரு மலர்ச்சியாக அமைவது மார்க்சிச உளவியலாகும். மனித இருப்பும், உணர்வுகளும், மனவெழுச்சிகளும், முரண்பாடுகளும் சமூக தளத்துடன் கொணட இடை உறவுகளை மார்க்சிச உளவியல் அறிகை தெளிவாக புலப்படுத்துகின்றது. மார்க்சிச நோக்கில் உளப்பகுப்பு உளவியலை அணுகிய உளவியலாளர்கள் வீரியம் மிக்க கருத்துக்களை முன்னெடுகின்றனர்.
கலை, இலக்கிய ஆக்கங்களில் சிறப்பார்ந்த பரிமா ணங்களுள் ஒன்றாக அமைவது படைப்பாளியின் உள்ளாந்த மனக் கோலங்களை வெளிப்படுத்தி நிற்றலாகும். படைப்பாளியின் உள்ளம், சுவைப்பவரின் உள்ளத்தோடு தொடர்புபட்டு நிற் கின்றது. இது வர்க்கநிலைத் தொடர்பை பலப்படுத்தும், உளப் பகுப்புக்கோட்பாட்டின் அடிப்படையில் இதனை விளக்கு வதாயின் கலை இலக்கியங்கள் வாயிலாக படைப்பாளியின் நனவிலி மனக் கோலங்களுடன் தொடர்பாடல் கொள்ளும் உளவியல் நிலை தோன்றுகின்றது.
கலை இலக்கியங்கள் 'மாய' ஆற்றல்கள் கொணட செயற்பாடுகளாக அமைகின்றன. மனத்தை ஈடுபட வைக்கும் மாய ஆற்றலே கலை ஆக்கத்தின் மூல ஊற்றாக அமைகின்றது. நனவிலி மனதிலே குழந்தைப் பருவம் தொடக்கம் புதைக்கப்பட்டும், அடக்கப்பட்டும் வரும் நிறைவேறாத ஆசைகள் வினோத வடிவங்கள் கொண்ட விடு கற்பனைகளாகவும் (Fantasy) கலை ஆற்றல்கள் கொண்ட கனவுத் தோற்றங்களாகவும் வெளிவருதலை உளப்பகுப்பு உளவியலாளர் சுட்டிக்காட்டுவர். அவ்ை தாம் கலையாக் கங்களுக்குரிய வளம் மிக்க சொற் களஞ்சியங்களையும் படிமக் களஞ்சியங்களையும் கொண்டுள்ளன.
நனவிலி மனதின் புதையல்களை விடு கற்பனை களாக வெளிப்படுத்துவோரும் வெளிப்படுத்த அச்சங் கொண்ட
தெணியாண் 37

Page 23
வர்களும் கலைப்படைப்பின் வழியாக உள்ளார்ந்து அவற்றை அனுபவித்துக் கொள்கின்றார்கள். படைப்பாளியின் நனவிலி மனத்தோடு சுவைப்பவரது நனவிலி மனமும் ஒன்றுபடும் நிலையில் தோன்றும் ஒத்துணர்வு (empathy) கலைத் தொடர்பாடலை மேலும் வலிமை பெறச் செய்கின்றது. இதை மேலும் விளக்குவதாயின் கலைஞரது ஆழ் மனத்தில் ஏற்பட்ட சலனங்களும் அதிர்வுகளும் சுவைஞரது ஆழி மனத்திலும் ஏற்படுதல் ஒத்துணர்வைப்புலப்படுத்தும் கலைப் படைப்பில் ஈடுபடத் தூணடும் உளவியல் விசையை ஒத்துணர்வு துணர்டியும் வளர்த்தும் விடுகின்றது. இந்த ஒத்துணர்வு மனித உணர்வுகளை அந்நியப்படுத்தாது உளவியல் தளத்திலே மனிதர்களை ஐக்கியப்படுத்தி விடுகின்றது.
ஒவ்வொரு கலைப்படைப்பிலும் நனவிலி மனம் வெளிப்பட்டுக் கொணடிருக்கும். சமூக நிபந்தனைகளும் கட்டுப்பாடுகளும் நனவிலி மனத்திலே புதைந்த பாலியற் கோலங்களை வெளியிடுவதற்கு தடைகள் விதிக்கின்றன. கலைப் படைப்புகளின் வழியாக அவற்றை வெளிப்படுத்தும் பொழுது கலைஞருக்கு ஏற்படுகின்ற மனச்சுகம் கலைப் படைப்பைச் சுவைப்பவருக்கும் கிடைக்கப் பெறும் அதாவது ஒருவித உள அழுத்தத்திலிருந்தும் சுமையிலிருந்துதம் விடுதலை இருவருக்கும் கிடைக்கப் பெறுகின்றது.
இந்நிலையில் கலை இலக்கிங்கள் சமூக அடக்கு முறைக்கு எதிரான வடிவங்களாக உளப்பகுப்பு உளவியல் வெளிவருதலை நவமார்க்கிசவாதிகள் சுட்டிக்காட்டுவர் நடப் பியல் வாழ்வில் நிறைவேற்றுவதற்கு சமூகம் தடைவிதிக்கும்
நிறைவேற்றி வைத்து விடுகின்றார். கலைப்படைப்பிலே அது சித்திரிக்கப்படும் பொழுது சமூக அங்கீகாரம் கிடைத்து விடுகின்றது. எமது புராணங்களில் இடம் பெற்றுள்ள பாலியல் விகாரச் சித்திரிப்புகள் கற்பிக்க ஏற்புடைமை கொணட உருவங் களாகக் கையளிக்கப்படுகின்றன.
நனவிலி மனம் இன்பம் நாடி இன்பம் துய்க்கும் மனமாக விளங்குகின்றது. நனவிலியிலே கிளர்ந்தெழும் இன்ப ஊக்கலி கலையாக்க 27.556)/75/7 புறநிலைப்படுத் தப்படுகின்றது. இவ்வாறு புறநிலைப்படுத்தும் பொழுது நனவு
தெணியான் 38
 

மனத்தில் தருக்க ஒழுங்குகளும், நனவிலி மனத்தைச் சமாதானப்படுத்தும் நனவு மனத்தின் செயற்பாடுகளும் கலையாக் கத்திலே பங்கு கொள்கின்றன. அதாவது கலைப்படைப்புக்கள் முற்று முழுதான கனவுகள் போன்று அமைவதில்லை. ஒருபுறம் கனவும் மறுபுறம் நிஜமும் கலந்த தோற்றங்களாக வருதலையும் விளங்கிக் கொள்ள முடிகின்றது.
நனவிலி மனத்தை கட்டுப்பாடில்லாத நிலையில் வெளிப் படுத்தும்பொழுது காட்சி வடிவம் கருத்து வடிவமாக மாறு தலும், கருத்து வடிவம் காட்சி வடிவமாக மாறுதலும் என்ற இரு தளநிலைமாற்றம் நிகழும். அதாவது அருவம் உருவமாக மாறுதலும் உருவம் அருவமாக மாறுதலும் என்ற நிலைகளிற் கட்டற்ற வெளிப்பாடு வீச்சுக் கொள்ளும் கட்டற்ற உரையாடல், வரையறைகளை மீறிய பாத்திரங்கள், விநோதமான படிமங்கள், முதலியவை நனவிலியின் வெளிப்பாய்ச்சலாக வரும். சில எடுத்துக்காட்டுகள் வருமாறு:
அ) "வறுமை நுகத்தடியில் தொங்கிக்
கொணடிருக்கும் நிலவு' ஆ) "ஏழ்மைப் பொந்துக்குள் நுழைந்த
மணடியாறு' இ) 'திறந்த சந்தைக்குள் அக்கினிக் குஞ்சு’
கலை இலக்கியங்களின் மறைந்து நிற்கும் பரிமா னங்களை விளங்கிக் கொள்வதற்கு மார்க்கிய நோக்குடைய உளப்பகுப்பு உளவியல் ஒரு வகையில் கைகொடுத்து உதவு தலைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
இவ்வாறாகப் புதிய புதிய வளர்ச்சிகள் தோன்றினும், மார்க்கியத்தின் மூலாதாரமான கருத்துக்கள் பொருளாகி நிற்றலே மேலும் மேலும் துலக்கமடைகின்றன.
மார்க்கி/ நவமார்க்கிய அழகியல் மரபுகளை அடியொற்றிய கலையாக்கங்களுக்குரிய எடுத்துக்காட்டுகளைத் தரக்கூடிய எழுத்தாளர் வரிசையில் தெணியானுக்கு தனித்துவ மான ஓர் இடம் உண்டு

Page 24
கவிஞர் சோபத்மநாதன்
நிலைக்க வேணும்!
தணியாத சீர்திருத்தத் தாகத்தோடு
அநியாயம் காணுகையில் நெருப்பாய் மாறி
அதையெரிக்கும் போராளி அஞ்சி யார்க்கும் குனியாத தலைபடைத்த கொள்கைக் குன்று;
குளிர்கிரிப்பால் எமையீர்க்கும் குணவான் , எங்கள் தெணியானுக் கின்றுமணி விழாவென் கின்ற
செய்திகேட்டுளம் சிலிர்க்கும், வழித்துப்பாடும்/
கற்பனையாம் சிறகுதைத்துக் கணணுக் கெட்டாக்
கவினுலகில் உலவுகா தலர்கள் பற்றி
விற்பனமாய்ப் புதினங்கள் நெய்து வீசும் வெற்றார வாரங்கட் கப்பற் சென்று,
நிற்பனவும், நடப்பனவும், மனிதன் வந்த
நீள்வழியில் நிகழ்ந்தனவும், நுணுகி ஆய்ந்து
அற்புதங்கள் சாதித்தான் எழுது கோலை
ஆயுதமாய் ஏந்தியநம் தெணியான் என்பேன்/
பள்ளத்தே வீழ்ந்தோர்மேல் பரிவு கொணட
படைப்பாளி "பொற்சிறையில் வாடு வோரை
உள்ளத்தால் நேசிக்கும் உயர்பனர் பாளன், ஓயாத உழைப்பாளி உறவாய் நாடிக்
கொள்ளத்தான் ஏற்றதனிப் பிறவி நணபர்
கூட்டத்தே கலகலப்பின் மையம், அன்பு
வெள்ளத்தான் தெணியாண்பல் லாணடு வாழ
வேணும்/ அவன் பேரென்றும் நிலைக்க வேணும்/
தெணியான் 40
 

புலோலியூர் க.சதாசிவம்
ஈழத்துப் புனைகதை ஆக்க இலக்கிய வரலாற்றில் மூன்றாம் தலைமுறையின் முன்னணிப் பிரதிநிதி
பழகுவதற்கு இனிய தெணியான்
நல்ல நிலாக்காலம். வடமராட்சி மனனின் பனஞ்சோலைகள் பாலநிலவில் குளித்துக் கொணடிருக்கின்றன. நெல்லை க.பேரன் முன்னும் நான் பின்னுமாக சமிக்கிளில் அந்த பனஞர் சோலையினூடாகச் செல்லும் ஒற்றையடிப் பாதை வழியாகச் சென்று கொணடிருக்கிறோம். என்.கே.ரகுநாதனின் நிலவிலே பேசுவோம்’ என்ற சிறு கதையைப் பற்றி தனக்குரிய சுவாரசிய நடையில் தனக்குரிய கருத்துக்களைக்கூற நானும் என் கருத்துக்களை கூற ஆழ்ந்த சமூக இலக்கியக் கருத்துப் பரிமாறல் நடைபெற்றுக்கொணடிருக்கிறது. நாம் தேடிச் செல்லும் தெணியானின் வீடு நெருங்க எண்மனம் உரையாடலில் லயிக்காது போகும் காரியம் சித்திக்குமா என்ற ஆதங்கம்.
1973 ஆம் ஆண்டு நாவலப்பிட்டி எழுத்தாளர் சங்கம் வெளியிட்ட யுகப் பிரவேசம்’ என்ற எனது சிறுகதைத் தொகுதிக்கு ஓர் அறிமுக விழாவை ஊரில் வைக்க வேணடுமென விரும்பினர் ஊரில் உள்ள இளைஞர்கள். ஒரு வார லீவில் நான் ஊருக்கு வந்தபோது அது தொடர்பாக பல ஒழுங்குகளை என் கையில் ஒப்படைத்தனர் விழா அமைப் பாளர்கள். அறிமுக விழாவில் நூலைப் பற்றி ஆய்வு செய் வதற்கு சில இலக்கிய அறிஞர்களிடம் சென்றபோது 'ஒரு வாரத்துக்குள் புத்தகத்தைப் படித்து எப்படி ஆய்வு செய்வது கால அவகாசம் போதாது’ என்றனர் சில ஆய்வறிஞர்கள். அன்றைக்கு எனக்கு வேறு ஒரு "அப்போயிண்ட்மன்” என்றனர் பிஸியுடன் சிலர். 'தெணியான் ஆய்வுரைக்கு இணங்குவாரோ. மேற்கூறிய காரணங்கள் ஏதாவது சொல்லுவாரோ மனம் ஏக்கமுறுகிறது. 'அந்தாள் ஒரு மாதிரி வெட்டு ஒன்று துண்டு இரணடு என்று பேசிற மனுஷன் என முன்கூட்டியே சில
தெணியான் 41

Page 25


Page 26
வீடு வந்து சேர நடுச் சாமமாகி விடும். குறுகிய லீவில் ஊருக்கு வந்து குடும்ப வேலைகளைக் கவனிக்காது சுற்றித்திரியும் என்னை கடுங்கோபத்துடன் நோக்கும் என் மனைவி தெணியான் வீட்டிற்குப் போய்வருகிறேன் என்றால் மலர்ந்த முகத்துடன் வரவேற்பாள். காரணம், தெணியான் மேல் உள்ள நல்ல அபிப்பிராயம். 'எங்கு கனடாலும் மாளிப்டர் சமிக்கிளை நிப்பாட்டி எப்படி ரீச்சர் என்று கேட்டு பள்ளிக்கூடக் கதைகள் பிள்ளைகளெணர்டை படிப்பு, சுகம், டொக்டர் கடிதம் போட்டாரோ எல்லாம் விசாரிப்பார் தங்கமான மனுஷன்'
கடந்த நூற்றாணடின் நடுப்பகுதியில் ஐம்பதுகளில் பிற்கூற்றில் நம் நாட்டில் ஏற்பட்ட பாரிய அரசியல் பொருளாதார சமூக மாற்றங்களின் பிரதிபலிப்பாக ஆற்றல் மிகு எழுத்தாளர்கள் கூட்டமே உருவாகியது. சமுதாய நோக்கு, பொருள், மொழிநடை ஆகியவற்றில் தனித்துவமாக இயங்கி மணி வாசனை துலங்கும் தேசிய இலக்கியம் படைக்கலானார்கள். இவர்களில் சிலர் அறுபதின் முன் கூற்றில் கணிப்புக்குரிய எழுத்தாளர்களாக மேலெழுந்தார்கள். ஈழத்துப் புனைகதை வரலாற்றில் ஆய்வுக் கனர்னோட்டத்துடன் நோக்கும்போது மூன்றாம் தலைமுறை எழுத்தாளர்களாக இவர்கள் தோற்றம் கொடுக்கிறார்கள். இவர்களுள் வீச்சுடனும் வீரியத்துடனும் எழுதி இந்தத் தலை முறையின் பண்புகளை பதச்சோறாக சிறப்புடன் வெளிக்கொணர்ந்தவர் தெணியான் எனத் துணிந்து கூறலாம். உரிமை மறுக்கப்பட்ட மக்களின் விடுதலைக் குரலாக சாதியத்தால் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் ஆத்ம குரலாக தெணியான் படைப்புக்கள் திகழ்ந்தன. மார்க்கிய நோக்கில் இலக்கியம் படைத்த தெணியான உணர்வு நலம் குன்றிய வெறும் பிரசங்க எழுத்த்ாளனாகவோ அல்லது அக்கால கட்டத்தில் எழுதிய சிலரைப் போல தாம் விதித்துக் கொண்ட தத்துவக் கருத்துக்களை வாய்பாடு போல மீண்டும் வலியுறுத்தி, வலிந்து கூறவில்லை. சில இடங்களில் இயற்பணிபு சிதைந்து, பிறர் ஈனநிலை கணடு துள்ளும் ஆவேசம் முனைப்புப் பெற்று கதைக் கட்டுக்கோப்பின் ஒருமைப்பாட்டின் எல்லை உதைபட்டு நின்றது. அவற்றை தனது நடையால் ஈடுசெய்து விடுவார். வழிவியலின் அலகான குடும்ப உறவு களைப் பிணைக்கும் மெல்லிய உணர்வுகளை கலா நுட்பத் துடன், உயிர்த்துடிப்புடன் வடித்தெடுப்பார்.
தெணியான் 44
 

உள்ளடக்கமும் உருவமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதைப் படைப்பியற் பணியாகக் கொண்ட தெணியானை முற்போக்குப் பரம்பரையின் வாரிசாகப் பாவித்து மூன்றாம் தலைமுறை எழுத்தாளனாகப் பிரதிநிதிப்படுத்து வதற்கும், இதனை இலக்கிய உலகம் ஏற்புடையதாக முன்னணிப் பிரதிநிதியாக இணங்கிக்கொள்வதற்கும் அவரது ஆக்க ஆளுமையே காரணமாகும்.
தெணியான் நாவல் இலக்கியத்திற்குக் கணிசமான பங்களிப்புச் செய்துள்ளார். 'காத்திருப்பு' 'பொற்சிறையில் வாடும் புனிதர்கள்', "மரக்கொக்கு' பேசப்படக்கூடிய நாவல்களாகும். இவரது சிறுகதைகளில் உள்ள உருவ அமைதி நாவல் களில்லை என சில விமர்சகர்கள் கருதுகிறார்கள். நாவல் கட்டுக்கோப்பு சில இடங்களில் இடறுகிறது.
வழிவியலுக்கும், பாலியல் தோற்றுவிக்கும் உணர்வுக ளுக்கும் அத்தியந்த தொடர்புண்டு. ஆனால் அதனை ஆபாசமாக விரசமாகக் காட்டும்போது இலக்கியத்தில் சமுதாயப் பயன் பாதிக்கப்பட்டு விடும், மானிட நேசம் பின்தள்ளப்பட்டு விடும். மெல்லிய உணர்வுகளை கலாநுட்பத்துடள் சித்திரிக் காது விட்டு அதனை மலினப்படுத்தி ஆபாசமாக உருவாக்கி எமது தமிழ் சினிமா காட்டுவதைக் கனடு வேதனையும் வெறுப்புமடைந்த தெணியான் ஆரம்ப காலத்திலிருந்து நீண்ட காலம் பாலியல் பிரச்சினையை தீணடாது இருந்தார். ஆனால் அவரது படைப்புக்களில் கறிக்குப் போடும் அளவான உப்புப் போல அது அமைந்திருக்கும். சமீப காலமாக 'காத்திருப்பு' நாவலிலிருந்து எமது ஞானம்' சஞ்சிகையில் சமீபத்தில் வெளியாகிய அணையாத சோகம்’ சிறு கதை வரை பாலியியல் தோற்றுவிக்கும் மெல்லிய உணர்வுகளை மனித நயத்துடன் மானிடப் பரிவுடன் மேற்கிளம்ப வைத்துள்ளமை மெச்சக் கூடியதாக இருக்கிறது. தெணியானின் ஆளுமையில் என் அவதானிப்புக்குத் தெரியும் இன்னும் ஓர் அம்சம் கதை யாக்கத்தில் தான் எடுக்கும் பொருளின் பிரச்சினையை நன்றாகப் பகுப்பாய்வு செய்வதாகும். வெள்ளாடு கடிப்பது போல அணுகி பலவற்றை எழுதிக் குவித்து வெறும் ஆவணப் படுத்தும் சில எழுத்தாளர்கள் போலல்லாது தெணியானின்
தெணியான் 45

Page 27
அணுகுமுறை ஆழமானதாகவும் தெளிவானதாகவும் இருக்கும். ஞானம் சஞ்சிகையில் 'எனது எழுத்துலகம்' பற்றி எழுதும் போது கூறுகிறார். ஒரு படைப்பிலக்கியத்தை நான் உருவாக்க முன்னர் ஏன் எழுதப்போகிறேன் எதனை எழுதப்போகிறேன்? எப்படி எழுதப்போகிறேன்? என்ற வினாக்களுக்கு விடை கண்ட ിഞ്ഞ70് எழுதி ஆரம்பிக்கிறேன். இந்த வினாக்க ளுக்கான விடைகளைக் காணபதன் மூலம் இலக்கு, உள்ளடக்கம், உருவம் என்பவற்றைத் தெளிவுபடுத்திக் கொள் കിമീബ.' அவரது பகுப்பாய்வில் 67Iது/ சமுதாயத் தைப் பற்றி ஒரு கணிப்பு என் சிந்தனையைத் தொட்டது உணர்மையானதும் கூட. ஒன்றினை கூற விழைகிறேன் சாதியம் இன்னும் செத்து விடவில்லை, அடிபட்ட கொடிய பாம்பு குற்றுயிராய் அதுடித்து உயிருடன் கிடக்கிறது. இன்னும் அடிக்க வேண்டும் அதன் நச்சுத் தாக்கத்தை அறவே ஒழிக்க வேணடும்.
தெணியான் பிறந்த மனனின் கல்விப் பாரம்பரியத்தின் வாரிசு, குடும்ப உறவு, சுற்றம் இவற்றையெல்லாம் கட்டிக் காப்பவன். சித்திரை என்று சிறுத்ததுவுமில்லை. பங்குனி என்று பெருத்ததுவுமில்லை என்று உலாவும் எளிமையானவன். செய்யும் தொழிலில் பற்றும் கடமையும் உள்ளவன். சிரத்தையும் சொன்ன சொல்லைப் பேணும் நடத்தையும் கொனடவன். விடா முயற்சியுடையோன். எல்லோரையும் அனுசரித்துப் போகும் இயல்புடையோன். அசல் வடமராட்சி மனனனின் மைந்தன.
நண்பனே! நீ பங்காளி ஈழத்து புனைகதைத் துறைக்கு இன்னும் நீ பங்களிக்க வேணடும். பல்லானர்டு வழிந்து/ முற்றிய அடிக்கரும்புதான் இனிக்கும். நலம் காக்கும் நல் வைத்தியன், நல்லாசிரியன், எழுத்தாளன் இவர்களது முறையே எப்டெதளிப்ட் கோப் பயன்தரும்நூல் எழுதுகோல் இறுதிமூச்சு வரை அவர்களது கையிலே இருக்கும்.
வர தோழனே வளம் சேர்ப்போம் ஈழத்து இலக்கி யத்திற்கு முற்போக்கு அணிவழியே/
- தெணியான் 46
 

கலாநிதிசெ.யோகராசா
மரக்கொக்கு, சில குறிப்புக்கள்
ஈழத்தின் முற்போக்கு எழுத்தாளர்களுள் மூன்றாம் தலை முறையை சேர்ந்தவர் தெணியான்.
ஈழத்தின் முதலாம் தலைமுறை நாற்பதுகளின் பிற் பகுதியில் உருவானது, கே.கணேஷ், அந.கந்தசாமி முதலானோர் இத்தலைமுறையினர். இவர்களது காலத்திலேயே முதன்முதலாக முற்போக்கு இலக்கியச் சிந்தனைகள் பரவத் தொடங்கின. இதனாலும், இவர்கள் பல்துறை முயற்சிகளில் ஈடுபட்டமை யாலும் ஈழத்து இலக்கிய உலகில் இத்தலைமுறையினர் தடம் பதித்தாரல்லர்.
இரணடாம் தலைமுறை அறுபதுகளளவில் முகிழ்ந் தது. (இதற்கு முன்பே திமு.க செல்வாக்கினால் எழுதத் தொடங்கிய) இளங்கீரன், டொமினிக்ஜீவா, டானியல், செ.கணேசலிங்கம் முதலானோர் இத்தலைமுறையினர். இவர் களின் காலத்தில் முற்போக்கு இலக்கியச் சிந்தனைகள் உத்வேகமாகப் பரவத் தொடங்கிவிட்டன. பெருமளவு மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லாத இலக்கியச் சூழலில் இவர்களது படைப்புக்களுள் வெளிப்படையான பிரசாரம், கதைமுதன்மை, சம்பவத் தொகுப்பு, ஒரேபாணி இவை அனைத்தையும் விட கலையழகில் அக்கறையின்மை, எழுத்தில் முதிர்ச்சியின்மை முதலான பல குறைபாடுகள் காணப்பட்டன.
மூன்றாம் தலைமுறை எழுபதுகளளவில் உருவாகியது. முற்போக்கு இலக்கியம் தொடர்பான குறைபாடுகள், அத்தகைய சிந்தனை வட்டத்திற்கு வெளியே உள்ளவர்களால் மட்டுமன்றி முற்போக்கு இலக்கிய கர்த்தாக்களுள் சிலராலும் உணரப்பட்டன, உணர்த்தப்பட்டன. இத்தகைய குழலில் இத்தலைமுறை சார்ந் தவர7ன தெணியானின் படைப்புக்களுள் முற்கூறப்பட்ட குறைபாடுகள் படிப்படியாக அருகத் தொடங்கின. இவ்விதத்தில் மரக்கொக்கு முக்கியமானதொன்று.
தெணியாண் | 47

Page 28
மரக்கொக்கு நாவலில் செ.கணேசலிங்கத்தின் நாவல் கள் போன்று (632/67ŵŽLUGØDL LLIGIØy பிரச்சாரம் காணப் படுவதில்லை. டானியல், நாவல்கள் போல் கிளைக் கதைகள், சம்பவத் தொகுப்புக்கள் என்பன இல்லை.
அனைத்தையும் விட வேறு மூன்று முக்கிய அம்சங் களும் இந்நாவலில் காணப்படுகின்றன. இவற்றுளொன்று, பாத்திரவார்ப்பு, தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் கணிசமானோரது நாவல்களில் மறக்கமுடியாத பாத்திரவார்ப்புக்களுள்ளன. இவி விதத்தில் இலக்கிய ஆர்வலரொருவருக்கு கமலாம்பாள் சரித் திரத்தில் வரும் ஆடுவாட்டி அம்மையப்பிள்ளை, நாகம் மாளில் வரும் நாகம்மாள், பொய்த்தேவில் வரும் சோமு, இதயநாதத்தில் வரும் கிருஷண பாகவதர், அம்மாவந்தாளில் வரும் அப்பு, மரப்பசுவில் வரும் அம்மணி மோகமுள்ளி வரும் ஜமுனா முதலானோர் நினைவிற்கு வருவது தவிர்க்க இயலாததே. எனினும், ஈழத்து நாவலாசிரியர்கள் பாத்திர உருவாக்கத்தில் அக்கறை கொணடவர்களல்லர். உன்னத மான பாத்திர உருவாக்கம் என்பது ஆழமான அனுபவம், கூர்மையான அவதானிப்பு, நிதானமான எழுத்து முயற்சி ஞாபகசக்தி எழுத்துடனான ஒன்றிப்பு, தேர்ந்த வாசிப்பு, பழந் தமிழ் இலக்கியப்பயிற்சி முதலானவற்றினாலேயே உருவாகும். இத்தியாதி தன்மைகள் தெணியானிடம் காணப்பட்டமையாலேயே மரக்கொக்கு நாவல் ஊடாக விஜயலட்சுமி என்றொரு சிறந்த பாத்திரத்தினை ஈழத்து நாவலுலகம் பெற்றுக்கொணடது.
மற்றொரு அம்சம், தெணியானின் மொழிநடை, வேறெந்த ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களிடமும் காணப் படாத செழுமையான மொழிநடையை மரக்கொக்கிலே காண முடிகின்றது.
பிறிதொரு அம்சம் வித்தியாசமான வெளிப்பாட்டு முறைமை, அதாவது நாவல் பாத்திர அறிமுகம், பாத்திர இயக்கம், சம்பவங்கள், பின்புலச்சித்திரிப்பு யாவுமே ஒரு 'கமரா ஊடாகப் படம் பிடிக்கப்படுவது போன்று இந்நாவலில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இறுதியாக, நாவலின் உள்ளடக்கம் 65/77 siz/7(5 ஒன்றினைக் குறிப்பிட வேணடும். உயர் சமூகமொன்றின்
தெணியான் 48
 

வீழ்ச்சியினை சித்திரிப்பதென்பது மிகக்கடினமானதொரு விடயம். எனவே தான் தமிழில் இத்தகைய நாவல்கள் அரிதாகவுள்ளன. மாறாக மலையாளத்தில் இவ்வாறான படைப்புக்கள் அநேக முள்ளன. இவ்விதத்தில் ஒட்டுமொத்தமாக தமிழ் நாவல்
களின் வரிசையில் முக்கிய இடம் பெறக்கூடிய மரக்கொக்கு இதற்கு மலையாள நாவல்கள் சிலவற்றை (எ-டு அணடை வீட்டார்) வாசித்தது போன்று உணர்வினைத் தருவதையும் மறுப்பதற்கில்லை.
மேற்கூறிய பணிபுகளுள் பல ஏலவே வெளியான தெணியானின் பொற்சிறையில் வாடும் புனிதர்களுடன் முகிழ்க்கத் தொடங்கிவிட்டன. வேறு சில பணிபுகள் மரக்கொக்கின் பின் வெளியான காத்திருப்பு ஊடாக தலைகாட்டுகின்றன.
இவை யாவும் விரிவான ஆய்வை அவாவி நின்கின்றன/
தெணியான் 49

Page 29
கலாநிதி க.சொக்கலிங்கம் (சொக்கள்)
தெணியானின் எழுத்துலகம்
கண்டியிலிருந்து திஞானசேகரனை ஆசிரியராகக் கொணர்டு வெளிவரும் "ஞானம்' என்ற கலை இலக்கியச் சஞ்சிகையில் (ஒளி 03, சுடர் 03) பிரபல எழுத்தாளர் தெணியான், 'எனது எழுத்துலகம்' என்ற தலைப்பிலே விரிவானதொரு கட்டுரை எழுதியுள்ளார். இக் கட்டுரையில் தம்மை எழுத்தாளராய் உருவாக்கிய காரணிகளில் முதன்மை யானதாக, தாம் பயின்ற ஆசிரியர் கலாசாலையிலே தமது நெஞ்சிற்பட்ட காயங்களை அவர் குறிப்பிடுகின்றார்.
"கலாசாலைத் தமிழ்ப் பணடிதர் என்னை இனங்கணடு சந்தர்ப்பம் வாய்த்த போதில் எல்லாம் நெஞ்சைக் காயப்படுத்திக் கொண்டிருந்தார். நான் கலாசாலையில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் டொமினிக் ஜீவா அவர்களுக்கு, 'தணர்ணிரும் கணணிரும் சிறுகதைத் தொகுதிக்கான சாகித்திய மணடலப் பரிசு கிடைத்தது. அதனைக் கணடு மனம்பெறுக்க இயலாத
அந்தப் பணடிதர் இராசையா என்பவர் இந்த ஆண்டு ஒரு நாவிதனுக்குச் சாகித்திய மணடலப் பரிசு கிடைத்திருக்கிறது’ என்று வகுப்பிலே சொல்லி ஏளனமாகச் சிரித்தார்.
'உலகத்தோடு ஒட்ட ஒழுகத் தெரியாத பணடிதரின் நாவினாற் சுட்ட வடு, தெணியானின் நெஞ்சிலே நிலைத்து வேதனை தந்தது வியப்பிற்குரியதன்று. பணடிதர் பண்டைத் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கரைத்துக்குடித்தி ருக்கலாம். ஆனால் மனித சமுதாயத்தின் தோற்றம், அது பொதுமையிலிருந்து தனியுடைமை நோக்கி மாற்றம் பெற நேர்ந்த காரணிகள், சமூக ஏற்றத்தாழ்வுகளை உடைத்தெறிந்து உலகினைச் சமதர்ம சமுதாயமாக மீணடும் உருவாக்க முனைந்து போராடும் மாபெரும் சக்திகள் பற்றி அவர் அறிந்திருக்கவில்லை. இந்தக் குறையை மன்னித்தாலும், அவர் கற்ற பழந்தமிழிலக்கியங்களுடாக அவர் பெற்றிருக்க வேணடிய
தெணியான் 50
 

அடிப்படை மனிதாபிமானப் பணிபு, யதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பொதுமை நோக்கு, பணியெனப்படுவது
பாடறிந்தொழுதல்' என்ற பண்பாட்டுணர்வு அவருக்கு இல்லாமற்போனமையே வியப்பிற்குரியது.
இத்தகைய பணிபாட்டுத் திருவினை இழந்த ஏழையர் கூட்டத்துக்கு மேலே குறித்த பணடிதர் ஓர் எடுத்துக்காட்டே யன்றி அவர் போன்றார் பலர், பழைமைக்கே கொத்தடிமை களாகிப் போன பணடிதர்கள் பலர் இருந்தார்கள், அக் காலச்சமூக, அரசியற் பின்னணிகளாலும் தொழில் வாணமை களாலும் மேலிடங்களில் அமர்ந்து கொணர்டு அட்டகாசம் செய்த இவர்கள், இழிசினர் என்றும், இழிசினர் இலக்கியம் என்றும் டொமினிக்ஜீவா, டானியல், பெனடிக்ற்பாலன் போன்றோ ரையும் அவர்களின் எழுத்துகளையும் சாடினர்.
ஆல மரங்களின் பக்கலிலே, நிழலிலே வளர்ந்து கொண்டிருந்த கன்றுகளான தெணியான் போன்றவர்களுக்கும், அவர்களின் மூத்தபரம்பரையின் மேல் வீழ்ந்த அடிகள் சிவபெருமானின் முதுகில் வீழ்ந்த அடிகள் போன்று தாக்கவே செய்தன, காயங்களை உணடாக்கின. இவ்வுணர்மையையே மேலே தரப்பட்ட தெணியானின் கூற்று நிரூபிக்கின்றது.
ஊமைக் காயங்களால் உள்ளடங்கிக் கிடந்தவை சென்ற நூற்றாண்டின் அறுபதுகளில் தமிழ் மரபுப் போராட்டமாய் மேற்கிளம்பின. இழிசினர் இலக்கியம், தேசிய இலக்கியமாகி, எதார்த்த இலக்கியமாகி, அவையே வாழும் இலக்கியமாகி வளர்ச்சிகானபதற்கும், தெணியான் போன்ற போராட்டகாரர்களை ஆக்க இலக்கியகாரர்களாக்கி உலாப் போகவிட்டதும் மரபுப் போராட்டத்தின் விளைபயன்களே. 'பொய்ம்மையும் வாய்மையி டத்த’ என்பது போல, மரபழுத்தம் எனும் தீமையும், புதுமை வேட்கை எனும் நன்மையாகி நலம் பயந்தது என்றே கூறவேணடும். மரபுப் போராட்டத்தின் வரலாற்றைச் சுருக்க மான அளவில் தெணியான்-கந்தையா நடேசன்-மல்லிகையில் தொடர்ச்சியாக எழுதியமையும் இவ்விடத்தில் நினைவு கூருகின்றேன்.
சாதியத்தின் வெங்கொடுமையை, அதன் dዎó፵56l) பரிமாணங்களிலும் பட்டுணர்ந்து அதை அழித்தொழிக்கும் தீவிர
தெணியான் 51

Page 30
முயற்சியிலே இறங்கிச் சாவர இலக்கியங்களைப் படைத்த வர்களின் வரிசையிலே பிதாமகராக, மூத்த முதல்வனாக, தலித்திலக்கிய முன்னோடியாக விளங்கியவர் கேடானியல் என்பதை அவரின் மாற்றார்கூட மறுதலிக்கார் சமானியனின் மீது சுமத்தப்படும் அழுத்தங்கள் பாரச்சுமைகள் யாவும், அவன் பொறுத்தது போதும் எனப்பொங்கி எழும் பொழுது சுக்குனூறாகிப்போம் என்பதைத் தமது வீற7ர்ந்த எழுத்துக்களால் நிறுவியவர் அவர் என்பதைக் கல்வியுலகமும் அங்கீகரித்து விட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், டானியல் பற்றிய ஆய்வினை ஏற்று ஆய்வு நிகழ்த்தியவருக்குக் கலாநிதிப் பட்டமும் வழங்கியுள்ளது.
டானியலின் எழுத்துலக வாரிசாகத் தம்மை இனங்காட்டிப் பெருமைப்படும் தெணியானின் எழுத்துலகம் அவரது வழிகாட்டியின் உலகினை மேலும் விரிவுபடுத்திச் செல்லும் என்பதற்கு அவரின் இதுவரையான படைப்பிலக் கியங்கள் சான்றாகவும் நம்பிக்கை நட்சத்திரங்காளகவும் விளங்குகின்றன.
அறுபதானடு அளவில் நின்று மணிவிழாக் காணும் தெணியானுக்கு மேலும் ஒரு நீண்டகாலம் அமைந்து அக்காலம் அவரது படைப்புக்கள் மேலும் உச்சங்களைத் தொடல் வேணடும் என்று எனது வயதுரிமை கொணடு வாழ்த்தி மகிழ்கின்றேன்.
தெணியாண் - 52
 

மு.அதாதரட்சகன்
ஈழத்து இலக்கியத்தில் தெணியானின்
படைப்புலகம்
ஈழத்தில் கடந்த நான்கு தசாப்தங்கள் தனது இலக்கியப் பதிவுகளை தவமாக இயற்றி வருபவர் தெணியான். அவர் இன்று மணிவிழாக் காணும் மூத்த படைப்பாளியாக முதிர்ச்சி கண்டுள்ளார். நீண்ட காலமாக படைப்புலகில் கால்பதித்து புதுமையும், பொலிவும் குன்றாமல் உயிர்ப்புள்ள படைப்புக் களைத் தந்து கொணடிருப்பது என்பது எல்லோருக்கும் முடிந்த காரியமல்ல, அறுபதுகளிலிருந்து இன்று வரையும், இனிமேலும் அது தெணியானுக்கு சாத்தியமாகின்றதெனில் அவர் காலத்தை வென்ற படைப்பாளியாக நிமிர்ந்து நிற்பதுதான் காரணமாக இருக்க வேணடும்.
அவர் கடந்து வந்த காலம் ஈழத்து இலக்கியத்தின் நோக்கிலும், போக்கிலும் வளர்ச்சிக் கட்டங்களைக் கொணடது. முற்போக்கு இயக்கம் எழுச்சி பெற்றிருந்த காலத்தில் அவரது எழுத்துக்கள் ஆவேசமாக முனைப்புப் பெற்று, இன்று இன எழுச்சிக் காலத்திலும் வலுக்குன்றாமல் கலைத்துவ வெளிப் பாடுகளாக வெளிவருகின்றன.
இலக்கியத்தில் எத்தனையோ மறுதல்கள், இசங்கள், போக்குகள் என பயங்காட்டியபடி வந்து கொணடிருக்கின்றன. அவற்றையொட்டிய புதிலிறுக்க முடியாத பல கேள்விகளும் எழுந்த வணனமுள்ளன. ஆனால், இந்த சல சலப்புகள் ஆரவாரங்களுக்கு மத்தியிலும் தெணியான் தொடர்ந்து எழுதிக் கொணடிருக்கிறார் எனில், அவர் நிற்கின்ற தளம் மனிதத்தை நேசிக்கும் தளமாக இருப்பது தான்.
அவருடைய சமூகப் பார்வை மார்க்கியத்தை அடி யொற்றியது. அது குத்திரங்களுக்குள் அடங்கிய வரட்டுத் தனமானதல்ல. புதிய மாற்றங்களையும் போக்குதலிகளையும் உள் வாங்கிச் செழுமைப்பட்ட மார்க்கிய நோக்கினை முதன் மைப்படுத்தும் பார்வை அவருடையது. இதனால் அவ
தெணியான் 53

Page 31
ரது படைப்பியல் ஆளுமை காலத்தையும் மீறிய வளர்ச் சியையும், தொடர்ச்சியும் கொண்டது.
தெணியானின் படைப்புக்களை கால அடிப்படையில் எண்பதுகளின் நடுக் கூறுக்கு முற்பட்ட படைப்புக்கள், பிற்பட்ட படைப்புக்களென வகைப்படுத்திப் பார்க்க வேணடும்.
எணர்டதுகளின் நடுக்கூறுக்கு முற்பட்ட அவரது படைப்புக்களில் சமூக நீதிகோரி நிற்கும் சத்திய ஆவேசத் தினைக் காண முடிகிறது. இக்காலப் படைப்புக்களில் தீணடத்தகாதவர்களென ஒதுக்கப்பட்ட மக்களது அவலங்கள் வேதனைகள், கலகக் குரல்களைத் தரிசிக்கலாம். கால7 காலமாக ஒடுக்கப்பட்டு வாழ்ந்த மக்களின் தொலைந்து போன, வேருடன் பிடுங்கியெறியப்பட்ட வழிவினை மீட்டெடுத்தது. மறுக்கப்பட்ட அவர்களது மனித அடையாளத்தினை வெளிப்படுத்த முற்பட்ட டானியல், டொமினிக் ஜீவா போன்றோரின் படைப்புக்களின் தொடர்ச்சியாக தெணியானின் 1/60), 11/4.5677 விளங்கின. படைப்பியலில் இப்போக்கு அன்றைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாத தார்மீகக் குரலாக ஒலித்தது. அன்றைய தவிர்க்க முடியாத தேவையாகவும் இருந்தது.
சாதியத்துக்கெதிரான L/60), 11/4.56067 இலக்கியத் தரமற்றவையாகவும், கலைத்துவமற்றவையாகவும், வெறும் பிரச்சாரத் தன்மை கொணடவையாகவும் பார்க்கும் பார்வை ஒரு சாராரிடையே வளர்ந்துள்ளது. இது ஒடுக்கப்பட்ட மக்களது அடையாளத்தை, போர்க் குணத்தை, வழிவியல் சாராம்சத்தினை கொச்சைப்படுத்துவதாகவே உள்ளது. இப் படைப்புக்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் துணைக்கலாசார பண்பாட்டு விழுமியங்களையும் மதிப்பீடுகளையும் கொணட மானிடவியல் ஆவணங்கள் எண்டதும் கூட மறுக்கப்படுகிறது.
இன்றைய படைப்புக்களில் சாதியப் பிரச்சினை முதன் மைப்படவில்லை என்பதற்காக, இப்பிரச்சினைகள் இல்லாமல் போய்விடவில்லை. இன்று சாதி ஒடுக்கு முறையின் வடிவங்கள் நவீனமயப்படுத்தப்பட்டு மிக நுட்பமாக அரங்கேறி வருகின்றன எண்டது தான் உணர்மை நிலை, சாதியத்தின் கொடூரத் தன்மை குறைந்துள்ளது உணர்மைதான். அதற்கு அம்மக்களின் போராட்டங்களும், ஜனநாயகப் பங்குபற்றலின் வழி வந்த பொரு
தெணியாண் 54
 

எாதார கல்வி பணிபாட்டு மேம்பாடும் காரணமாகும். இங்கு சாதியத்துக்கெதிரான L/600L 17/456støj பங்களிப்பினையும், குறைத்து மதிப்பிட முடியாது. இவ் வகையில், இப் பிரச்சினை பற்றிய சமூக யதார்த்தத்தினை அனுபவத்தில் உள்வாங்கி நின்ற தெணியானின் படைப்புக்களும் வலுச் சேர்ந்துள்ளன எனலாம்.
எண்டதுகளின் நடுக்கூறுக்கு பிற்பட்ட தெணியானின் படைப்புக்கள் மத்தியதர வர்க்கத்தின் சிதைவுகளின் சாரம் எனப் பொதுவாகக் கூறலாம். மத்தியதர வர்க்கம் தனக்கென உருவாக்கிய மதிப்பீடுகளின் சட்டகத்தை அவ்வர்க்கமே மீறுகின்றபோது, எழுகின்ற அவலங்கள் அவரது நாவல்களில் எடுத்தாளப்பட்டுள்ளன. இம் மாந்தர்கள் வாழ்க்கையை எதிர்கொண்ட விதத்தில் அதிலுள்ள போலித்தனங்கள் பெற் சிறையில் வாடும் புனிதர்கள், மரக்கொக்கு, காத்திருப்பு நாவல்களில் கலபூர்வமாக வெளிப்படுத்தப்படுகின்றன. இந் நாவல்களில் மரக்கொக்கு குறிப்பிடத்தக்க அழகிய பதிவு எனில், காத்திருப்பு அதைவிட இப்பணியில் இன்னொரு பாய்ச்சலைக் காட்டி நிற்கிறது.
அவரது முன்னைய படைப்புக்களில் 'விடிவை நோக்கி', 'கழுகுகள்’ என்பனவற்றில் இல்லாத சோபைகளையும், நளினங்களையும், ஆழ அகலங்களையும் இவற்றில் தரிசிக்க முடிகிறது. அதே போல தெணியானின் அணமைய சிறு கதைகள் பிரச்சினைகளை நிதானத்துடன் அணுகி அவரிடம் உள்ளுறைந்துள்ள மெண்மையான சுபாவத்தினை வெளிக் கொணர்கின்றன. அவரது அக உலகில் இழையோடும் மனிதத் தின் மெல்லுணர்வுகள் இவற்றில் மிக நுட்பமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வகைக்கு சிறப்பான உதாரணங் களாக நான் ஆளப்படவேணடும்', 'உவப்பு', 'இன்னுமா? போன்ற சிறுகதைகளைக் கூறலாம். இவற்றில் உவப்பு இனப்பிரச்சினை குறித்து ஈழத்தில் வெளிவந்த கதைகளில் மிகுந்த கலை நுட்பத்துடன் கூடிய ஆழமும், அர்த்தமுள்ள கலைப் படைப்பாகும். அவரது அணமைய படைப்புக்கள் நிறைவின் அமைதி கூடியவை. படைப்புக்குரிய நிதானம், கவனம், நுட்பம், அழகியல் என்பனவற்றின் வலுக்களோடு வெளிவருபவை.
தெணியான் 55

Page 32
தெணியான் என்ற படைப்பாளியிடம் காணப்படும் இலக்கியச் செழுமைக்கு ஆதாரமாயமைவது அவரிடம் வயப்பட்டுப்போன மனிதப் பணிபுகளே ஆகும். மனிதனை அவனுக்குரிய பலம், பலவீனங்களுடன் பார்ப்பவர் அவர் சக எழுத்தாளர்களது நல்ல படைப்புக்களை மனந்திறந்து பாராட்டுபவர். வீட்டுக்கு வருபவர்களை வாசலில் வரவேற்று படலை வரை சென்று வழியனுப்பி வைக்கும் விருந்தோம்பல் அவருடையது. புதியவற்றைத் தேடிவரசிக்கும் வாசகன். சக மனிதர்களின் துன்பம் கனடு நெகிழ்ந்து போகும் சுபாவம் வாய்ந்தவர் எழுத்தைத் தவமாக மதிப்பவர். இத்தகைய பணிபுகளே அவரைப் படைப்புலகில் நிலைக்க உதவுகின்றன.
இவையாவற்றையும் மனங் கொள்ளும்போது, தெணி யான் ஈழத்து இலக்கிய உலகில் கவனிப்புக்குரியவர் எண்டது தெளிவாகும். அவரது படைப்புலகம் அழகியலுடன் கூடிய யதார்த்தப் பணிபுகளைக் கொணடது.
மணிவிழாக் காணும் அவர் இன்னும் பல வருடங்கள் வழிந்து நல்லன பலவற்றை எம்முடன் இலக்கியங்களாகப் பகிர்ந்து கொள்ள வேணடும். அதற்கான படைப்பியல்
நுட்பமும், தகுதியும் அவருக்குணர்டு,
-மல்லிகை ஆகஸ்ட் 2002
தெணியாண் 56
 

பேராசிரியர் நாஞானக்குமாரன் மெய்யியல் துறை, பழிப்பாணப் பல்கலைக்கழகம்
சைவ சித்தாந்தம் காட்டும் குருநெறி
உயர்ந்தோரை ஏற்றலும் உயர்வுடைப் பொருளை வணக்கத்திற்குரியதொன்றாக மதித்தலும் தொண்மைக்குரியதாக அமைந்திருந்தன. வேத இலக்கியங்கள் முதல் அனைத்து இலக்கியங்களும் குரு வணக்கத்தினை முதன்மைக்குரிய எணர் னக்கருத்தாக எடுத்தானடமை குறிப்பிடத்தக்கன. இறையியல் நிலையில் பரம்பொருளின் முழுமுதற் தன்மையினை அறிந்து மனம், வாக்கு, காயம் எனும் திரிகரண நிலை நின்று ணர்ந்து அனுபவிக்கும் முறையினைத் தெளிவாக்கும் தரத் ததாகக் குரு அமைகின்றார்.
"மாதா பிதா குரு தெய்வம்' எனும் சொல்லடையானது குருவின் முதன்மையினைப் பொதுவில் தெளிவுற உணர்
தலுக்கு வழி வகுத்து நிற்கின்றது. மணனில் உதித்த சகல ஜீவராசிகளும் மாதா பிதாவினை இவ்வுலகியல் வழிவிற்கு வழி
வகுத்த முதற் தெய்வமென எடுத்தாள்வர். 'அன்னையும்
பிதாவும் முன்னறி தெய்வம்' எனும் அடைக்கமைய பிரத் தியட்சமாகக் காணுதற்குரிய தெய்வமாக அமைப்பவர்கள் மாதா, பிதாவாகும். மாதா பிதா பிரத்தியட்ச நிலைக்குரியவர்களாக இருந்த போதிலும் மனிதர்கள் எனும் வகையில் பந்திக் கப்பட்ட நிலைக்குரியவர்களாவர். இந்நிலையில் பந்திக் கப்படாத நிலைக்குரிய பரம்பொருள் எனும் எண்ணக் கருத்தின் இருப்பிற்கு இது வழி வகுப்பதாக அமைகின்றது. முழுமுதற் தரத்தாய் பூரணம் கொண்டதான தெய்வம் எனும் எணர்ணக்கரு சிந்தனைக்குரியதாகின்றது. இச் சிந்தனைக் குரியதைத் தெளிவுற உணர்த்தும் நிலைக்குரியதாக அமைவது குருவாகின்றது. தெய்வத்திற்கும் பக்குவப்பட்ட ஆன்மாவிற்கும் இடையில் நின்று பக்குவப்பட்ட ஆன்மாவைத் தெய்வத்திடம் வழிப்படுத்தும் பணியை ஆற்றுபவர் குருவாகின்றார்.
குருவின் வழிப்படுத்தலும் வழிகாட்டலுமே தெய்வத்தின் உணர்மையை உணர்த்தலுக்கும் அனுபவித்தலுக்கும் வாய்ப்பா
தெணியான் 57

Page 33
கின்றது. இதனாலேயே குருவை, ஞானகுரு, சற்குரு, மெய்குரு எனப் பலவாறாக சுட்டுதல் காணலாம். ஆண்மீக ஞானமும் சரி உலகியல் அறிவும் சரி குருவழிக் கல்வியினாலேயே வழிப்படுத் தப்பட்டமை வரலாற்று வழிப்பெறப்படும் உணர்மைகளாகும். குருகுலக்கல்வி எண்டதும் குருகுலவாசம் எண்டதும் தொன் மையான அம்சங்களாகும். ஏட்டுக் கல்வி மரத்திரமன்றி வாழ்வியற் கல்வியும் இணைந்த ஒரு முழுமைத்துவம் அக்கால குருகுல மரபில் அமைவுற்றிருந்தது. நூல் சார்ந்த கல்வியை விட திறமை சார்ந்த (Learning of Skill) கல்விக்கான வில்வித்தை, மற்போர் போன்றனவும் குருவழி கல்வியினூடாகவே ஆரம்ப காலங்களில் அமைவுற்றதும் நோக்கத்தக்கதாகும். இது போலவே ஆன்மீக ஞானம், யோகக்கலை ஆகியனவும் குருவின் வழிப்படுத்தலுடனேயே அமைவுற்றமை குறிப்பிடத்தக்கனவாகும்.
குருவின் முதன்மை உணர்ந்த தகைமையினாலேயே ஆன்மீக ஞானத்தை விளக்கும் அனைத்துச் சாத்திரங்களும் குரு வணக்கத்தினை முதலாகக் கொணடமைவது காணலாம். 'சிவனை ஞானச் செய்தியால் சிந்தையுள்ளே மருளெலா நீக்கக் கனடு வாழலாம்' என்பது தெளிவிற்குரியதாயினும் அறியா மையறிவகற்றி யறிவினுள்ளே அறிவுதனை யருளினானறியாதே மறிந்து. குழைந்திருப்பையாற்றி பிரியாத சிவன்றானே பிரிந்து தோன்றி பிரபஞ்சபேதமெலா தானாய்த் தோன்றி நெறியாலேயி வையெல்லாம் மல்லவாகி நின்றென்றுந் தோன்றிடு வனிராதா ரனாயே’ எனும் வகையில் சிவனறிவு அமைதல் காணலாம். எனினும் இப்பக்குவத்தினை ஆன்மாக்கள் பெற்றுக்கொள்வ தற்குக் குருவில் நெறிபடுத்தல் அவசியமாகின்றது. மாணாக் கனுடைய பக்குவமறிந்து ஞானதிக்கை புரிந்து உணர்மைப் பொருளையெல்லாம் செவியறிவுறுத்தியும், அறிவுறுத்தப்பெற்ற வற்றை விளைவுற்றுச் சித்தாந்தவழி நிற்பாருக்கும் உணர்த்தியும் நிற்பது குருவின் பணியாகும். குருவழிப் பெற்ற அருள் வழிக்கொணட பொருளை உள்ளத்திடை நிறுத்தி உணர்ந்து உய்யப் பெறுதல் காணலாம். திருவருளும் குருவருளும் கைவரப்பெறுகின்ற பக்குவப்பட்ட ஆன்மாக் கள் உணர்வடைதல் காத்திரமாகின்றது. இங்கு குரு எண்டது இறைவனே எனும் நுட்பப் பொருளில் பொருள் அமைவதும்
தெனியாண் 58
 
 

தெளிதற்குரியது. 'தம்முதல் குருவுமாய் தவத்தினில் உணர்ந்த எனவும்' அஞ்ஞான வச்சகலாக்குக் குருவாய் மெய்ஞ்ஞானம் பின்னுணர்த்தும்' எனவும் காட்டி நிற்கும் மெய்கண்டாரின் மெய்ஞ்ஞானக் கூற்றானது இத்தன்மையினை வெளிப்படுத்தி நிற்கின்றது. இறைவனே பக்குவப்பட்ட ஆன்மாக்களின் பொறுப்பு குருவடிவினைத் தாங்கி வருகின்றார் எனும் கருத்து சித்தாந்தம் காட்டும் குரு நெறி விளக்கத்திற்குச் சிகரம் வைத்தது போலாகின்றது.
"வானாடர் காணாதமனி’ ஆக விளங்கிய இறைவன் எவ்விடத்தும் நிறைந்து நீங்காத ஞானமாய் அடியவர்க ளுக்கு மறையாமல் வெளியாக நின்று பேரின்பத்தைக் கொடுப் பார் எனத் திவருட் பயனில் உமாபதி சிவாச்சாரியார் சுட்டுவது இவ்விடத்தில் நோக்கத்தக்கதாகும். உணர்மையான பக்குவப்பட்ட ஆன்மாக்களின் நிலை அறிந்து தானே குரு வடிவாக இறை வன் வந்து அருள் புரிவான் எண்டது எடுத்துக் காட்டப் பட்டுள்ளது. இவ் வகையில் இறைவனின் திருவருளை நாடி நிற்கும் ஆன்மாக்கள் திருவருளைப் பெறுவதற்குரிய சாதனங் களைப் பேணிப் பயின்று வருதல் வேண்டியதாகும். சாதகர்கள் அருளைப் பெறுதற்கு சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்கு மார்க்கங்களையும் அனுட்டிக்க வேணடியவர்களாவர். இந்த நான்கு நெறிகளிலும் திழைத்த நிலையில் அவர்கள் உனர்நிலைப்பதம் அடைதலைச் சிவப்பிரகாசம்
நாடியசத் திநியாத நாலுயாத
நனனும்வகை யெனர்னரிய ஞானபாதங் கூடுமவர் தமக்குனர்வாய் நின்றஞானக்
கூத்தனொரு மூர்த்திகொடு குறுகி மோக நீடியகே வலசகல நிகழ7 வறு
நிறுத்தியமல மறுக்குமிது நிலையார் சுத்தம் கேடில்புகழ் தருஞ்சிரியை கிரியரயோகக்
கோணமையரே லிவையுணர்த்தக் கிளக்கு நூலே’
என அழகுற எடுத்தாளல் காணலாம். இம்மார்க்கங்களின் வழி உயர்வடைந்தோரே மந்த தரம், மந்தம், தீவிரம், தீவிர தரம் ஆகிய நான்கு சத்திநினி பாதத்திற்கும் உரித்துடையாராக
தெணியான் 59

Page 34
விளங்குவர். இரு வினைகளும் பிறப்பு இறப்பு எனும் நிலை களுக்குக் காரணமாய் அமைகின்றது. பக்குவநிலை எய்திய ஆண்மாக்களுக்கு சிவனே குருமூர்த்தியார் மானிட உருவத்தில் எழுந்தருளி கேவல, சகலம் நிகழாதவாறு மலத்தை நீக்கி அருள் வழங்குபவராவார். இதனையே சிவஞானபோதம்
ஜம்புலவேடரி னயுந்தனை வளர்ந்தெனக்
தம்முதல் குருவுமாயத் தவத்தினி லுணர்த்தவிட் டன்னிய மின்மையி னரணிகழல் செலுமே
67607 எடுத்தாளுகின்றது. ஐம்பொறிகள் எனும் அவளிப்தைக்குள் சிக்கித் தனது நிலையுணராத மயக்கத்தில் இருக்கின்றது ஆன்ம7. இதுகாறும் தனக்குள் நின்று உணர்த்தி வந்த பரம்பொருள் எனும் தன்மையை உணரப் பெற்றதும் ஐம்பொறிகளை விட்டு இறைவனோடு ஐக்கியப்படும் வகையில் அவனடியை விட்டகலாது இணைவுறுதல் எடுத்து தானப்படுவதாகின்றது. 'தம்முதலாய்” விளங்கிய சிவத்தினை, உயிருக்குயிராய் விளங்கிய அருளினை உயிர் முதலில் கனடுகொள்ளவில்லை. உயிர் ஆனது அருளைக் காணும் பக்குவத்தில் அருளே குருவாகத் தோன்றி உயிரை அனைதல் காணலாம். இதனை திருவருட பயனும்
அறியாமை யுனனின் ரளித்தே காணும் குறியாகி நீங்காத கோ எனச் சுட்டிநிற்கின்றது.
ஞானக் கணனனில்லாத பக்குவமில்லாத பாங்கில் ஆன் மாக்கள் அறிவுமயமாகிய அருளையும் அவ்வருள் அதிட் டித்து நிற்கின்ற குருவடிவத்தையும் அறியாத அறிவிலிகளாக விளங்குவர். இதனாலேயே மனித உருவில் குரு வடிவத்தோடு வருகின்ற தன்மையையும் பக்குவமில்லாத ஆன்மாக்கள் தம் குருவினை உணர்ந்து கொள்ளாதவர்களாக அமைந்து விடுகின் றனர். இத்தகைமை கருதியே 'தாரமும் குருவும் விதிப் படியே’ என எடுத்தாளும் கருத்தும் பக்குவத்தின் காத்திரத் தினை புலப்படுத்தி நிற்கின்றது போலும் வாயுசங்கிதை இரணடாம் பாகத்திலே பதின்மூன்றாம் அத்தியாயத்திலே தயை நெறியின் சம்பந்தத்தாலே எவ்விதம் ஒருவன் பதிதனாக அமைகின்றானோ அதே போல குருவினுடைய இணைவினாலே
தெணியான் 60
 

எணர்ணற்கரிய நற்பலன்களை அடைகின்றான் என குருவின் சிறப்புரைத்தல் நோக்கலாம். மேலும் குருவின் அண்மைத்துவ மானது தீய நினைவுகள் பாவங்களை எரித்து நன்னிலை அடையத் தகுந்தவனாகின்றான். குரு வழிபாடானது மனம், வாக்கு, காயம் எனும் முத்திறத்தாலும் ஒருங்கே ஒப்பி அமைவுறுதல் வேண்டியதாகும். இதனாலேயே குரு வழிபாடும், குரு வணக்கமும் இறைவழிபாடாகவும் இறை வணக்க மாகவும் அமைவது குறிப்பிடத்தக்கதாகும். குரு வணக்கம், குருபணியெண்பன இறைவனுக்கு அழிக்கும் அரும்பேறாகி அத்துவித முத்திக்குரிய சாதனமாகின்றது. இவ்வகையில் குரு எனும் சொல்லாட்சியானது மலபாவங்களை, பாசவிருளை அகற்றுபவராகவும் பொருள் கொள்ளத்தக்கதாகின்றது.
குருமுதன்மையினையும் இறைநிலையினையும் விளங்கி நிற்கும் வகையில் அருணந்தி சிவாசாரியார்.
"சனமில்லா ஞானகுரு வேதுருவு மிவனே ஈசனிவன் றானென்று மிறைஞ்சி: யேத்தே'
எனச் சிவஞானசித்தியாரில் எடுத்துரைத்தல் காணலாம். பக்குவமடைந்த ஆன்மாக்கள் அனைவருக்கும் ஞானகுரு வேண்டியதென்பது அழுத்தம் கொடுக்கப்படுவதுடன் இஞர் ஞானகுருவே ஈசன் என்பதும் பக்குவம் நோக்கி மலமகற்றும் பரமாச்சாரியனான சிவனும் மெய்குருவும் ஒன்றே என்பதும் தெளிந்து சிவஞானியரும் ஞானகுருவை வணங்குதல் இங்கு நோக்குதற்குரியதாகின்றது. சிவன் ஆன்மாக்களின் தகுதி தரமறிந்து குருவடிவில் வந்து ஆட்கொள்ளுவார் என்பது எடுத்தாளப்படுகின்ற போதில் அத்தகுதிக்குரிய நிலைப்பாட்டை நோக்கின் சிவாக்கிரயோகிகள் கீழ்வருமாறு அத்தகுதியைச் சுட்டுதல் நோக்கலாம்.
"ஆதரவுஞ் சாந்தியுநற் பொறுமை தானும்
மசத்தியம்மில் லாவுரையு மாசாரந்தவமும்
தீதான செயல்மறந்து நன்றியறிந்திடலும்
சிவாகமக் கேட்டதனைத் தெளித நானும்
போதலரப் பொறி வழியிநிற்றல்.’
எனவும்
தெணியான் 61

Page 35
"ஊசியிடாது இட்டபணி செய்து குருபக்தி குறைவிலனாய் நம்பினனாய் துரோகமின்றி மாசிலனாய் மனவாக்குக் காயத்தாற் குருவின்
வாக்கிய பலனஞர் செய்யு மதிமானாசி'
எனவும் அழகுற வெளிபடுத்தி நின்றார். (பக்குவ மடைந்த ஆன்மாக்கள்) குருவிற்குத் தகுந்த மாணவப் பனர்பினைக் கொனடமைகின்ற போதில் அவை இறையடி இணைதல் சித்தாந்தம் காட்டும் குரு நெறி முறைகுரித்தா கின்றது. "அவனருளாலே அவன் தாள் வணங்கி” எனவும் "அவன் கணனாகக் கணிலல்லால்' எனவும் எடுத்தாளப் படுகின்ற éFLOUIó அனுபவக் கூற்றுக்கள் இறைய ருளின் இனைவிலேயே ஆன்மாக்கள் இறைவனடி சார்தல் சாத்தியம் என்பதை தெளிவாக்கி நிற்கின்றது. பரமுத்திக்கு அடிப்படைக் காரணிகளுள் ஒன்றாக குரு வழிபாடு அமைகின்றது.
"ஒப்பில் குருலிங்கவேடமெனக் கூறில் இவை கொண்டார்
கருவொன்றி நில்லார்கள் காண'
எனத் திருவதிகை மனவாசங்கடந்தார் உணர்மை விளக்கத்தில் எடுத்தாள்வது சுட்டத்தக்கதாகும். ஒப்புதற்கு அரிதான குருவைப் பின்பற்றி பிறப்பிறப்பற்ற வழிவிற்கு ஏதுவாக அமைதல் அறிதற்குரியதாகும். பக்குவப்பட்ட ஆன்மாவானது ஞானத்தைக் கைவரப்பெற்ற நிலையில் 'களியே மிகு புலனாகக் கருதி ஞான ஒளியையே கருவியாகக் கொணர்டு வழின் உலகியல் வழிவில் சிக்குறது இறைய ருளில் ஆழ்ந்து உயர்வடைதல் கூடும் என்பது இங்கு பெறப்படும். இந்நிலையைத் தெளிவாக்கும் வகையில் திருக்கடவூர் உய்யவந்த தேவர்.
"என்னை உடையவன் வந்தென்னுடனாய் என்னளவில்
என்னைநய்தனாளாகக் கொள்ளுதல் - என்னை அறியப் பெற்றேன் நிந்த அன்பருக்கே ஆளாய்ச் செறியப் பெற்றேன் குழுவிற் சென்று'
தெணியான் 62
 

என குறிப்பிடுதல் காணலாம். பக்குவப்பட்ட தன்மையை அறிந்து இறைவன் மானிடவடிவில் வந்து நட்புக்குரியவனாக்கி துண்டநிலை நீக்கி ஞானநிலை கொணர்டோருடன் இணைத்துக் கொண்ட பெருமையினை அழகுறத் திருக்களிற்றுப் பாடியாரில் எடுத்துரைத்தது நோக்கத்தக்கதாகும்.
இவ்வாறாக ஆண்மாக்களின் பக்குவ நிலை அறிந்து ஞானகுருவாய் சற்குருவாய், மெய்குருவாய், ஆட்கொள்ளும் இறைவனின் நிலையினை அருணந்தி சிவாச்சாரியார் பலநிலைப் பரிணாமத்தில் கண்டு வந்து விளக்கி நிற்றல் குரு நெறியின் காத்திரத்தினைச் சொல்லாமல் சொல்லுவதாய் அமைகின் றது. பரப்பிரம்மமுமாய், பரமசிவனுமாய் பரஞானமுமாய், பராபர முமாய், அருட்குருவை இனங்கண்டு சிவனடியளிக்கு அரும் பெரும் சிவனருளைக் கீழ்வருமாறு சுட்டுகின்றார்.
'பரப்பிரம மிவனென்றும் பரசிவன் றானென்றும்
பரஞான மிவனென்றும் பராட்ரன்றா னென்றும் அரன்றருஞர்சீர் நிலையெல்லா மிவயெ னேன்றும்
அருட்குருவை வழிபடவே யவனிவன் றானாயே இரங்கிவா ரனமாயை மீண்டனர்டஞ் சினையை
இயல்பினொடு பரிசித்து நினைந்தும் பார்த்தும் பரிந்திவைதா மாக்குமா போற் சிவமேயாக்கும்
பரிசித்துஞர் சிந்தித்தும் பார்த்துந்தானே'
ஆன்மாக்கள் உய்வடைதற் பொருட்டு அவற்றின் பக்கு வத்திற்கமைய சிவனே குருவடிவாய் வந்து அருள் பலியா லித்து மோட்சம் எனும் முக்தி நிலைக்கு வழி சமைத்து வேறின்மையெனும் இரணடற்ற அத்துவிதப் பேரானந்தப் பெருநிலைக்கு இட்டுச் செல்லுவதாகின்றது. குரு நெறி உயர் நெறியாய் குறைவிலா இறைநெறியாகச் சித்தாந்தம் சித்தரிப்பது நயக்கத்தக்கதாகின்றது.
குரு நெறியானது உயர்ந்ததொரு உணமைப் பொரு ளாய் எடுத்தறியத்தக்க நிலையாக அமைகையில் அன்பிற்குரிய நணபராய் விளங்குகின்ற 'தெணியான் பல ஆணடுகளாய்
குருத்துவ சேவையை ஆற்றி ஓய்வு பெறுகின்றமை இன்று குறிப்பிடத்தக்கதாகும். பல் வகையான சோதனைகளை முகங்
தெணியான் 63

Page 36
கொடுத்து தனக்கென்ற ஒரு பாணியில் தன்னை வளர்த்துக் கொண்ட சமூகத்தின் வளர்ச்சிக்குப் பங்காற்றியவர் எண்டது காணலாம். தனது கடின உழைப்பால் உயர்ந்து முன்னுக்கு வந்தவர் தெணியான். மாணவர்களை அரவணைத்து அண்டால் கல்வியூட்டும் பனர்பிற்குரியவர். கராரும் கனடிப்பும் தெணியானின் இயல்பாகக் காணப்பட்டாலும் கனிவும் இரக்கமும் உள்ளீடாக விளங்குவது சிறிது காலம் இறுக்கமாக அவருடன் பழகும்போது புலனாகும் குணங்களாகின்றன. தன்னோடு இணைந்தவர்களின் உள்ளத்தைத் தொடும் நெகிழ்ச்சிக்குரிய அன்புப் பிரவாகத்தை தெணியானிடம் காணும்போது உணர் மையில் திகைப்போடு கூடிய உள்ளச் சிலிர்ப்பினைப் பெற்றிருக்கின்றேன். உள்ளார்த்தமாக அன்போடு பழகுகின்ற ஆத்மாக்களை இன்றைய சமூகங்களில் தேடிக்கணடுபிடிக்க வேண்டிய குழல்களில் தெணியானின் பழக்கமும் நெருக்கமும் உணர்மையில் எனக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என்றால் மிகையாகாது.
நெருக்கமான உறவுப் பிணைப்பினை தன் குடும்பத்தில் கொண்டு விளங்குகின்ற அவர் பலரின் இறுக்கமான அன்புப் பிணைப்பிற்கு ஆதாரமாக அமைந்துள்ளார் என்பது கனர்கூடு. இவ்வியல்பே அவருடன் குடும்பமாய் இணைந்து கொள்வதற்கு பலரிடம் தூணடுதல்களை ஏற்படுத்தக் காரணமாயிற்று. தெணியானிடத்து பல்வகையான சமூகப் பரிமாணங்களைக் கானர்டது சாத்தியமாகும். குடும்பமென்ற வட்டத்துள் இறுக் கமான அன்புப் பிணைப்பிற்குரியவராக விளங்குகின்றார். இன்றைய குடும்ப அமைப்புக்களில் மிக அருகிவருகின்ற ஒன்றான பாச பிணைப்பினை தெணியானின் குடும்ப உறவினுள் நிதர்சனமாகக் கணடு கொள்ளலாம். அடுத்து சமூகத்தோடு இணைந்த வட்டத்தில் நீதிக்காய், நியாயத்திற்காய் குரல் கொடுக்கின்ற ஒருவராகத் தெணியான் விளங்குகின்றார். இப் பரிமாணத்தில் ஓரியல்பாகவே 'தெணியான் எனப் பெயர் பெற்ற நடேசனைக் காணக்கூடியதாக இருக்கின்றது. சமூகத்தில் புரையேறிப்போயிருந்த பல செயற்பாடுகளைக் கணடிக்கின்ற கதாசிரியனான தெணியானை இனங்காணுதலும் கூடும். இப்போக்கின் வளர்ச்சியில் முதிர்ச்சி கொணட ஆக்க இலக்கிய
கர்த்தாவாக மனித உணர்வுகளின் நுணர்னிய இயல்புகளை
வெளிப்படுத்துகின்றவராக பிற்பட்ட காலங்களில் தெணியானைக்
தெணியான் 64
 
 

காணலாம். சமூகத்தில் ஆசிரியன் எனும் அடிப்படையில் மாணவர்கள் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்போடு பணியாற்றுகின்ற பிறிதொரு பாங்கும் தெணியானின் ஆளுமையாக விளங்குகிறது. மாணவர்களின் தகமையறிந்து அன்போடு அரவணைத்து ஆக்கமும் ஊக்கமும் அளிக்கின்ற ஆசிரியர்களில் ஒருவராக திகழ்வது காணலாம். சமூகம், குடும்பம் என்ற வட்டங்களுக்கு இடைப்பட்டதாகவோ அன்றேல் மேம்பட்டதாகவோ நட்பு எனும் வட்டத்தினுள்ளும் தெணியான் எனும் ஆத்மாவைக் கண்டு உவக்கலாம். அண்டால் இறுகப் பிணைந்து விரும்பியே7 விரும்பாமலோ பிரிந்து விடமுடியாத ஒரு பிணைப்பிற்குக் களமாக தெணியான் அமைவது உணர்மைக்குரிய தொன்றாகும். அதற்கு அடிப்படையானது தெணியானுள் பிரவாகித்துக் கொணடிருக்கும் மனிதநேயம் மிக்க நுணர்னிய செயற்பாடுகள் என்றால் மிகையாகாது. ஆத்மார்த்தமாய் உறவோடு கடமை யுணர்வோடு இணைந்து வாழும் தெணியான் வழிவு சிறக்கவும் என்றும் வளத்தோடு இன்புறவும் என் பணிவான வழித்துக்கள்.
தெணியாண் 65

Page 37
கலாநிதி ககுனராசா (செங்கை ஆழியான்)
படைப்பாளி தெணியான்
ஈழத்து இலக்கியவுலகில் மூன்றரை தசாப்தங்களுக்கு மேலாகத் தன் படைப்புக்களால் அணி சேர்த்திருக்கும் இலக்கியப் படைப்பாளி தெணியான் கநடேசன் ஈழத்து இலக்கிய புனைகதை வரலாற்றிலிடம்பெறும் தன்மையுடையவர். சிறுகதை, நாவல், இலக்கிய ஆய்வுநிலைக் கட்டுரை ஆகிய முத்துறைகளில் ஆழமாகக் கால்பதித்தவர். 1942 ஆம் ஆண்டு வல்வெட்டித்துறை, பொலிகனடியில் பிறந்த தெணியான் தனது ஆரம்பக் 6ീബിഞ// 476ിബ/ /g, தேவரையாளி இந்துக் கல்லூரியிலும், உயர் கல்வியை கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியிலும், பின்னர் கொழும்புத்துறை ஆசிரிய கலாசா லையிலும் பயின்று ஆசிரிய சேவையில் தன்னை இணைத்துக் கொணடார். தான்கல்வி கற்ற கல்லூரியில் உப அதிபராகக் கடமை புரிந்து ஓய்வுபெற்றார்.
1964 ஆம் ஆணடு 'விவேகி சஞ்சிகையில் இவரு டைய 'பிணைப்பு’ என்ற முதலாவது சிறுகதை வெளி வந்தது. அதன் பிறகு தெணியானின் பேனை என்றும் மூடிவைக்கப்படவில்லை. இதுவரை நூற்றிப்பதின்மூன்று சிறு கதைகளைப் படைத்துள்ளார். அவற்றில் 'மல்லிகையில் மட்டும் சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன. 'மல்லிகை کی 4 சஞ்சிகையின் தளத்தை நன்கு பயன்படுத்திக்கொண்ட தெணியான், தன்னைத் தரமான சிறுகதைப் படைப்பாளியாக அடையாளங் காட்டிக்கொணர்டார். இவரது சிறுகதைகளைக் கலைவாணி கலைச்செல்வி வீரகேசரி, ஈழநாடு, செய்தி ஞானதீபம், சிந்தாமணி தாமரை, அஞ்சலி புதுயுகம், மலர், தினகரன், ஈழமுரசு, முரசொலி நான்காவது பரிமாணம், ஞானம் முதலான பல சஞ்சிகைகளும் பத்திரிகைகளும் விரும்பிப் பெற்று பிரசுரித்துள்ளன. இவரது சிறுகதைகளின் தொகுப்புக்கள் சொத்து, மாத்துவேட்டி என்பன ஆகும். குறைந்தது எட்டுத் தொகுதிகள் வெளியிடக்கூடிய அளவுக்கு இவரிடம் படைப்
புக்கள் உள்ளன. 'மனசோடுபேசு’ என்ற தலைப்பில்
தெணியான் 66
 

தெணியானின் அடுத்த சிறுகதைத் - தொகுதி வெளிவர வுள்ளதென்ற செய்தி ஈழத்துச் சிறுகதைத்துறைக்கு ஆரோக் கியமான சங்கதி
1970 இன் பின்னர் உருவான படைப்பாளிகளில் முன்னணி சிறுகதையாசிரியராகத் தெணியானைக் கொள்ளலாம். மார்க்கியச் சிந்தனை வழி இலக்கியம் படைக்கும் முற்போக் காளனாகத் தெணியான் உள்ளார். தனக்குச் சரியெனப்பட்ட கருத்தைப் பிடிவாதமாக வலியுறுத்தும் பணியினை அவரது சிறுகதைகளில் காணலாம். தமது சமூகத்தின் ஒடுக்கு முறைகளை விபரிப்பதன் மூலமே இலக்கியக் கணிப்புப் பெற்று, மனித இன்னல்களைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளில் ஒன்று அவற்றை இலக்கியமாகக் காட்டும்போது ஏற்படும் மனிதாய ஆவேசம் என்னும் கொள்கையை வழிப்படுத்திய முற்போக்குப் பரம்பரையின் வாரிசான இவர், அந்த மனித இன்னல்களைக் குறிப்பதாக ஒரு குழுவினருக்கே மாத்திரமன்றிப் பாரம்பரியச் சமுதாயம் முழுவதிலுமே காணும் முதிர்ச்சியைப் பெற்றவர் எனப் பேராசிரியர் கா.சிவத்தம்பி இவர் பற்றிக் குறித்துள்ளமை ஏற்புடையதாகும். அடக்கியொடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக் குரலாக அவரது சிறுகதைகள் பலவும் பேசினாலும் குடும்ப உறவுகளை மென்மையான இறுக்கத்துடன் பிணைத்து எழுதுவதில் வல்லவர் சாதியம், வர்க்கியம் ஆகிய கருத்து நிலை இவரது சிறுகதைகளில் மிஞ்சி நிற்கின்றன. எல்லாம் மணிதான், கூரை ஒன்று தான், தன்னிறைவு தேடுகிறார்கள் இவளின் கதை, இனியொரு விதிசெய்வோம், மனிதம், மானங் கெட்டவர்கள், வடுக்கன் அழிய, மாத்துவேட்டி, உவப்பு, உள் அழுகல், பூதம் முதலான நல்ல சிறுகதைகளைப் படைத் துள்ளார். நான் ஆளப்படவேணடும். என்ற சிறுகதை உன்னதமான படைப்பு. இந்நூற்றாணர்டின் இறுதித் தசாப்தத்தில் இவர் எழுதிய சிறுகதைகள் தனித்து நோக்கத்தக்கன.
தெணியானின் சிறுகதைகள் சமூகத்தின் அடிவே ரைச்சுட்டி நிற்கும் சமூக விமர்சனங்கள் அவரது படைப்புக் களுடாக இந்தச் சமூகத்தின் பல்வேறு கோணத்து வெட்டு முகத் தோற்றங்களைக் கணடு கொள்ளலாம். பழைமை, பொய்ம்மை, அறியாமை இருளில் மூழ்கியும், அகம்பாவம் புரையோடியும் கிடக்கும் இந்தச் சமுதாயம் மாற்றமுற
தெணியான் 67

Page 38
வேண்டியது தவிர்க்க இயலாத இயங்கியல் நியதியாகும். மாற் றத்துக்கான இலக்கு எது என்பதையும் அவரது கதைகள் திசைகாட்டி நிற்பதற்குத் தவறவில்லை என அவரது மாத்து வேட்டிச் சிறுகதை முன்னுரை குறிப்பிடுகின்றது. எனினும் அவர் தான் கூற விரும்புகின்ற கருத்தை சில வேளை வலிந்து கதைகளில் முன்வைப்பது இயற்பணிபிற்கு மாறாக அவற்றின் கலைத்துவத்தை இழக்க வைத்துவிடுகின்றதென்ற கருத்துமுள்ளது.
சமகாலப் பிரச்சினைகளுக்கு வடிவம் தந்த படைப்பென இன்னுமா என்ற சிறுகதையைக் குறிப்பிடலாம். போராட்டச் குழலின் விளைவான யுத்த அனர்த்தங்கள் அவரது இச் சிறு கதையில் உள்ளடக்கமாக அமைந்தாலும், சாதியத்தின் பின்ன ணியிலேயே தெணியான் அவற்றை எழுதியுள்ளார். வெடிச்சத் தத்தில் ஊரே அல்லோலகல்லோலப்படுகின்றது. ஒரு குடும்பம் மாமா வீட்டில் அடைக்கலம் புகுகின்றது. சுற்றி வளைப்பில் இளைஞர்கள் பிடிபடுகின்றனர். செய்திவருகின்றது: "ஒரு ஐம்பது அறுபது பேர் வரையில் இருக்குமாம். எங்கடை வாசியசாலைக்கு உள்ளே அடைச்சுப்போட்டு குணடு
வைச்சுக்கொணர்டு போட்டாங்களாம்'.
"அது தம்பி உங்கை ஆரார் செத்தது?"
'நீங்கள் கவலைப்படாதேங்கோ, அணினை, எங்கடை ஆக்களில்லை. அது எல்லாம் சமரவாகுப் பள்ளரும் இலந்தைக் காட்டு நளவரும்தானாம்” என்று இச்சிறுகதை முடிகின்றது. மனம் வலிக்கின்றது. தெனணியானின் இக் காலகட்டத்துக் கதைகளில் இவளின் கதை, உவப்பு, இருளில் நடக்கின்றோம் என்பவை குறிப்பிடத்தக்கவை.
தெணியான், ஈழத்து நாவலாசிரியர்களில் முக்கியமானவர். விடிவை நோக்கி கழுகுகள், பொற்சிறையில் வாடும் புனிதர்கள், மரக்கொக்கு, காத்திருப்பு, கானலில் மான். முதலான நாவல்களை ஈழத்து இலக்கியத் துறைக்குத் தந்துள்ளார். தெணியானின் கருத்தியல் நிலை சிறுகதைகளில் உள்ளவாறு நாவல்களிலும் காணப்படுகின்ற போதிலும், நாவல்களில் மிகமிக நேர்த்தியாக அவை வந்துள்ளனவென்பேன். ஈழத்தில் வழிந்து
தெணியான் 68
 

வரும் பிராமணர்களில் ஒரு பகுதியினர் அனுபவிக்கும் ஏழ்மையை 'பொற்சிறையில் வாடும் புனிதர்கள்’ என்ற நாவல் பேசுகின்றது. 'காத்திருப்பு ஈழத்து நாவல்களில் ஒரு பரிசோதனை முயற்சி தெணியானின் நாவல்கள், சமூகத்தில் அதிகம் பேசப்படாத மூலைகளை நன்கு அவதானித்த ஒரு படைப்பாளனின் பார்வையாக அமைந்துள்ளன. நாவல்களைவிட சிதைவுகள், பனையின் நிழல், பரம்பரை அகதிகள் என்பன தெணியான் படைத்தளித்த குறுநாவல்களாம். அவை முறையே தினகரன், ஈழமுரசு, ஈழநாடு ஆகிய பத்திரிகைகளில் வெளிவந் தன. அவை வெளிவந்த வேளை பேசப்பட்ட நாவல்கள். நூலுருவில் வெளிவரில் ஆய்வாளரால் விதந்துரைக்கப்படும் தரத்தினை நிச்சயமுடையவை.
தெணியானைச் சிறுகதை, நாவல் துறைகளுக்கு அப்பால், நல்லதொரு ஆய்வுக் கட்டுரையாளன் என்பது பலரும் அறிந்த விடயமாகும். மல்லிகையில் பல்வேறு இலக்கிய நிலைகளின் செயற்பாடுகளையும், அவலங்களையும் சுட்டி எழுதியபோது, அவை இலக்கியவுலகில் கிளப்பிய சர்ச்சைகள் நிச்சயமாக ஆரோக்கியமானவையாக இருந்துள்ளன. நண்பனாக விருந்தாலும், அவருடைய பார்வையில் இலக்கியக் கருத்தியல் கண்டனத்துக்குள்ளாகாது தப்பிவிடவில்லை. கனடிக்கப்பட்ட வேண்டியதைக் கணடிப்பர். இவ்விடத்தில் தான் தெணியானை என்னாலி புரிந்து கொள்ள முடியவில்லை. எவர்கள் கனடிக் கப்பட்டார்களோ, அவர்கள் அனைவரும் தெணியானின் நட்புக் கும் அன்புக்கும் பாத்திரமானவர்களாக விளங்குகின்றனர்.
தெணியானின் பலபடைப்புக்கள் பரிசில்களையும், விருது களையும் பெற்றுள்ளன. 1967இல், யாழி,இலக்கிய நணபர்கள் கழ கம் நடாத்திய சிறுகதைப் போட்டியில் அவரின் 'பெனபாவை’ என்ற சிறுகதை முதற்பரிசினைப் பெற்றுள்ளது. சுபமங்கள7, தேசிய கலை இலக்கியப் பேரவை இணைந்து நடாத்திய குறுநாவல் போட்டியில் 'சிதைவுகள் பரிசு பெற்றது. தகவம்' அவருடைய பல சிறுகதைகளுக்குப் பரிசில்கள் வழங்கியுள்ளது. தகவத்தின் முதன்முதல் பரிசுத்தேர்வு, தெணியானின் குரு குலம்’ என்ற சிறுகதையாகும் தெணியானின் மரக்கொக்கு என்ற நாவல், 1994 இல் இலங்கை சாஹித்திய மணடலத்தின்
தெணியான் : 69

Page 39
சிறந்த நாவலுக்கான பரிசிலையும், வடக்கு-கிழக்கு மாகான இலக்கியப்பரிசினையும் இலங்கை இலக்கியப் பேரவையின் பரிசினையும் ஒருங்கே சுவீகரித்துக்கொணடது. ஒரே நாவல் மூன்று இலக்கிய நிறுவனங்களின் பரிசிலிகளைப் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். 'காத்திருப்பு’ என்ற தெணியானின் நாவல் 1999ம் ஆண்டுக்கான வடக்கு-கிழக்கு மாகாண இலக்கியப் பரிசினைப் பெற்றுக்கொண்டது.
தெணியான் கநடேசன் பல புனைப் பெயர்களுள் தன்னை மறைத்துக் கொணடு எழுதியவர். நிருத்தன், கூத்தன், (5,521/60777/7, அம்பலத்தரசன் 6/60/ A62) வடிவங்களை இலக்கியத்தில் அவர் எடுத்துள்ளார். கவிதைகள், வானொலி நாடகங்கள் என்பனவும் அவரால் படைக்கப்பட்டன.
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சார்ந்த தெணியானின் இலக்கிய நோக்கு, சமூக மாற்றத்திற்கான உந்து சக்தியாக இலக்கியம் அமைய வேணடும், துன்பப்படும் மக்களின் கணணிரே இலக்கியமாக வேணடும் என்பதாம் யாழ்ப்பாணத்து அடிநிலை மக்களின் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வின் அவலங்களையே தான் இலக்கியமாக்குவதாகக் கூறியுள்ளார். உணர்மையில் தெணியான் இலக்கிய நோக்கினை அவரது படைப்புகள் நன்கு பிரதிபலிக்கின்றன. படைப்பின் வெற்றி அதுவே. படைப்பனுபவம் வெளிப்படும் இலக்கியம் என்றும், எப்போதும் பேசப்படும்.
தெணியான் 70
 

கேடானியல்
தெணியாண் அவர்கள் ஒரு நடுநிலைமை இலக்கியக்காரணல்ல
இந்த நூலாசிரியர் திரு. தெணியான் அவர்கள் ஒரு நடு நிலைமை இலக்கியக்காரனல்ல என்பதனை இக் கதை களைப் படிக்கும் போதே நீங்கள் உணர்வீர்கள் வர்க்கம் சார்ந்த ஒருவனாக இக்கதைகளில் உலாவிவரும் பாத்திரங் களோடு, நசுக்கப்படும் வர்க்கப் பாத்திரங்களின் பங்காளனாக அவர் நிற்பதை நீங்கள் பார்ப்பீர்கள். நகரத்திலும், அது சார்ந்த பகுதிகளிலும் காணமுடியாத வாழ்க்கை முறையை இவரால் சித்திரிக்கப்படும் கிராமப்புறங்களில் நீங்கள் காணபீர்கள். நிலவுடைமைச் சமூக அமைப்பிலிருந்து விடுபட முடியாமல் மனச் சிக்கல்களுக்குட்பட்டு பாரம்பரியப் பெருமைகளை மட்டும் இறுகப் பிடித்துக் கொணடிருப்பவர்களையும், பழைய சம்பிரதாய எல்லைக் கோட்பாட்டுள்ளேயே சுற்றிச் சுற்றி வந்தமையால் புதிய வாழ்க்கையோடு ஒட்டிப்போக முடியாமல் தவிப்பவர்களையும் நீங்கள் சந்திப்பீர்கள். கிராமப்புறங்களின் அன்றாட வாழ்க்கையோடு சேர்ந்துபோயுள்ள பேச்சுத் தமிழ் சகல கதைகளிலும் இழையோடி நிற்கும் அழகையும் நீங்கள் காணபீர்கள்
கதைகளுக்கான கருவூலங்களை வெளியேயிருந்து கொண்டு வந்து சாதாரண மக்களின் வாழ்க்கையிடையே திணித்து கதைகள் கட்டப்படுவது ஒரு வகை. சாதாரண மக்களின் வழிக்கையோடு இழையோடி வெளிப்படும் கரு ஆலங்களைத்தேடி அடைந்து, அவைகளை முதன்மைப் படுத்தி அவர்களின் துன்ப துயரங்களைத் துடைத்தெறியக் குறிகாட்டி நிற்பது இன்னொருவகை. இந்தவகைகளில் இரண்டாவகையே சரியான ஆக்க இலக்கியமென ஏற்று இக்கதைத் தொகுதி வெளியிடப்படுகிறது.
ஒரு d(p.5// மாற்றத்துக்கான நடைமுறை வேலைகளில் தன்னையும் ஈடுபடுத்திக் கொள்ளும் ஒருவன், தான் வாழும் சமூகத்தையும் அதற்கு முற்பட்ட சமூகத்தின்
தெணியான் 71

Page 40
மிச்ச சொச்சங்களையும் நன்கு அவதானித்துக் கொள்ள வேணடும்.
நில ஆதிக்க சமூக அமைப்புக்காக வகுக்கப்பட்டுள்ள நெறிமுறைகள், புதிதான சமூக அமைப்புக்கான வளர்ச்சிக் காலகட்ட முற்பகுதியில் சிதையத் தொடங்குகிறது. பழைய நிலையில் கொடிகட்டி வாழ்ந்தவர்களின் பொருளாதாரச் சிதைவுகளிலிருந்து இது ஏற்படும்போது பழைய நினைவுகளிலி ருந்து இலகுவில் அவர்களால் விடுபட முடிவதில்லை. இத் தொகுதியின் பெரும்பாண்மைக் கதைகளின் மூலம் இக் கருத்து வற்புறுத்தப்படுகின்றது. புதிய கலை இலக்கியக்காரர்களுக்கும் புதிய சகாப்தத்தை எதிர்நோக்கும் சகலருக்கும் இது தேவை யான ஒன்றாகும்.
கொடுமையான சமூக அமைப்புக்குள்ளும் 'ஆத்மீக தர்மநீதி எனப்படும் ஒன்றை மனதுக்குள் உருப்போட்டுக் கொனடு அதையே நிரந்தரமாகக் காண முற்படுபவர்களையும், தங்களின் சகல சுக போகங்களையும் பாதுகாக்க, சாதி மத வரைமுறைகள் போன்ற கேடய அரணர்களுக்குள் வழிபவர் களையும், தங்களாலேயே சிருஷ்டிக்கப்பட்ட மன அங்கலாப் புக்களுக்குள் வெதும்பி வெதும்பித் துடிப்பவர்களையும், சந்ததி சந்ததியாக அதிகார வரம்புகளுக்குள் சிக்கி அழுது-புலம்பி வெந்து-கருகி அந்த வரம்புகளுக்கப்பால் மனங்களையும் வரம்புகளுக்குள்ளே கால்களையும் வைத்துக் கொணடு சரியான திசைக்கு வரமுடியாமல் தவிப்பவர்களையும் இக்கதைகளுக் கூடாகக் காணுமிடத்து, இக்கதை மானிடர்கள் எல்லோரிடத் திலுமே ஓர் அனுதாபம் பிறக்கிறது.
அணிந்துரை சொத்'து' (சிறுகதைத்தொகுப்பு - 1984) கிராமத்தில் பிறந்து, கிராம மத்தியிலேயே தொழில் புரிந்து, கிராம மணர்னோடேயே புரண்டு வழிவு நடத்திக்கொண்டிருக்கும் இவரது படைப்புக்களில் கிராமப் பகுதிகளுக்கே உரித்தான அம்சங்கள் எல்லாமே பரவிக் கிடக்கும்.
கிராமப்புற மனிதனின் இருதயத்தையே தனது படைப்புக்கள் மூலம் ஈழத்து வாசகனுக்கும், தமிழகத்து
தெணியாண் 72
 

வாசகனுக்கும் தந்துள்ள தெணியான் அவர்கள், அமைதி நிறைந்த கிராமப்புறத்து மணனிலே காலத்தின் கோலத்தாலி கால் ஊன்றப் பார்க்கும் வேறோர் வழிவின் சீரழிவினை 'பனையின் நிழல்' என்ற நாவலுக்கூடாகத் தொட்டுக் காட்ட
முற்படுகிறார்.
அறிமுகம்
77удсудл7% —/984
இது தனனிர் நாவல் பிறப்பெடுத்ததற்கான சம்பவச் சுருக்கமாகும்.
இதைப் பத்தாவது அத்தியாயம்வரை எழுதிவிட்டு அதற்கு மேல் ஒருவரிகூட எழுத முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட நான் மறுபடியும் படுக்கைக்குத் தள்ளப்பட்டேன். நாவலைத் தொடர்வது சிரமமாகிவிட்டது, படுக்கையில் கிடந்தபடியேயாவது நான் வாய் மொழியாகச் சொல்ல வேறொருவரைக் கொண்டு எழுதுவிக்கலாமா என்று யோசித்து எனது கடைசி மகள் தாரகாவைக் கொணர்டு எழுத முயற்சித்தேன். அவள் உலகஞானம் அற்றவள். வயது பதின்மூன்றுதான். எனது உணர்வுகளைப் புரிந்து கொண்டு நாவலைத் தொடர அவளால் இயலவில்லை. பின்பு எனது அன்புக்குரியவரான தெணியானை அழைத்து நாவலின் முடிந்த விபரத்தைக் கூறி இரண்டு நாட்கள் அவரை எனது வீட்டோடு தங்க வைத்து, முடிந்ததை அவர் வாய்மூலமாகவே படிக்கவைத்து மிகுதியை இப்படி இப்படித்தான் செய்ய வேணடுமென்று எனது அபிப்பிராயங்களையும் அவரிடம் கலந்து கொணடபோது, அவர் அதை ஒப்புக் கொணடு முடிந்த பகுதியை எடுத்துச் சென்றார்.
சில நாட்களில் மறுபடியும் படுக்கையை விட்டு எழுந் தேன். அப்போது வந்திருந்த அவர் "உங்களால் முடிந்தவரை எழுதுங்கள். முடியாத நிலையில் நான் தொடர்கிறேன்' என உறுதி அளித்தார்.
மறுபடியும் தணணிரைத் தொடர்ந்தேன்.
முன்னுரை 'தனர்னிர்' - 1986
தெணியாண் 73

Page 41
கந்தவேள்
தெணியானின் “கானலில் மாண்’ ஓர் உளவியல் நோக்கு
எங்கள் மணர்ணில் அரிச்சந்திரர்கள் பலருணடு, அவர் களில் 'கூதல்' காயும் அடிவருடிகள் மேலும் பலருணடு. அதாவது இப்படித்தான் வாழ வேணடுமெனக் குரல் கொடுப்போர் பலருணடு, இப்படியும் வாழ்கின்றார்களென்பதைப் பார்க்கப் பயப்படும் மனிதர்கள் இவர்களைவிடப் பல மடங் குண்டு உணர்மை என்னவெனில் இவர்களுளெல்லோரும் உணர்மையைக் கணடு அஞ்சுபவர்கள். 'உணர்மை அவர்க ளைச் சுடுகின்றது.
எமது மக்களிடையே பொதுவாகக் குடி கொண்டி
ருக்கும் 'தப்பியோடும் மனப்பாங்கு' (escapism) சமூக
அடித்தளத்திலுள்ள மனிதர்களைப் பார்க்க இடமளிப்பதில்லை. ஆக்க இலக்கியகர்த்தர்களது பார்வை கூட இவர்கள் பக்கம் திரும்புவது குறைவாகவே உள்ளது. குறிப்பாக உளவியல் சார்ந்த ஆக்கங்கள் எமக்குக் கிடைப்பது அரிதிலும் அரிதென்றே கூற வேணடும். இக் குறைபாட்டை ஈடு செய்யும் வகையில் தெணியானின் 'கானலில் மான்' அவலம் நிறைந்த பரிதாபத் திற்குரிய ஒரு மனிதனது வழிவைப் பேசுகின்றது.
ஒருவன் செய்த சிறு பிழை யூதரகாரணமாக உருப் பெற்று அதிலும் மீள முடியாத நிலையில் அவன் அழிந்து போவதையே துன்பியல் அல்லது அவலச் சுவை கொணட படைப்பு என்போம். 'கானலில் மான்’ புதினத்தில் வரும் முத்துலிங்கம் தான் செய்யாத தவறே தன்னைச் குழுகையில் தன்னை அழித்துக் கொள்கின்ற வகையில் இந்நவீனமும் ஒரு வகையில் துன்பியல் படைப்பேயாகும்.
யாழ்ப்பான மக்களின் இன்றைய வாழ்க்கை முறை பணக் கணிப்பீட்டின் அடிப்படையில் கட்டியெழுப்பப்படுகின் றது. பணம் இருந்து விட்டால் 'எதையும் சரி செய்து விடலாமென இவர்கள் எனணி விடுகின்றனர். காசுப்
தெணியாண் 74
 

பெறுமானக் கணிப்பீட்டில் முத்துலிங்கம் என்ற அழகற்றவன் கலியானச் சந்தையில் விலை போகின்றான். ஆனால் வழிவு எனும் கோவிலில் பேய் குடி ஏறிவிடுகின்றது.
பேர்னாட் சேர நடுத்தர மக்களது நடத்தைக் கோட் பாட்டைக் 'கிடைநிலை வர்க்க ஒழுக்கவியல்' எனக் கூறிக் கிணடல் செய்வார். அதாவது இரணடும் கெட்டான் நிலையில் ஊசலாடும் நடத்தையியல் கொண்டவர்கள் எனக் கூறுவார். இவர்கள் எப்பொழுதும் தமது உயர் நடத்தையில் அதிகம் கவனம் செலுத்துவதால் வழிவின் அர்த்தத்தை அடகு வைத்தவர்களாகக் காணர்கின்றார் சோ. இவற்றால் ஒழுக்கக் கோட்பாட்டுக்கு எதிரானவர் சோ என எணர்னிவிடக் கூடாது.
யாழ்ப்பான மரபும் இவ்வாறான திரிசங்கு நிலையிலேயே உள்ளது. இம் மனனின் அவலம் நிரம்பிய மனிதர்களின் பிரதி நிதியாக முத்துலிங்கம் படைக்கப்படுகின்றான்.
கோகிலா மகேந்திரன் சில நாடகங்கள், சிறுகதைகள் நடுத்தர மக்களின் உளப் பிறழ்வுகளைப் பகைப் புலமாகக் கொணடிருக்கின்றன. தெணியானும் இந் நாவலில் தாழ்வுச் சிக்கலுக்குட்பட்ட உளப் பேதலிப்புக்குள்ளான ஒருவனின் கதையை அவலச்சுவை ததும்பத் தந்துள்ளார். இவ்வகையில் அவர் தனது முன்னுரையில் கூறியது போன்று இது ஒரு வித்தியாசமான நாவலெனக் கொள்ள முடியும்.
'கானலில் மானில்' வரும் கதை மாந்தர்கள் யாவரும் மாதிரிகளாகவே படைக்கப்படுகின்றனர். பாத்திரங்கள் யாவும் இம் மணர்ணின் மாதிரிகளே. கதை மாந்தர்கள் யாவரும் நெகிழ்ச் சியற்ற இச் சமுதாயத்தின் சாயல்களே. ஆகவே இப் பாத்திரங் கள் யாவும் தட்டையாகவே படைக்கப்பப்பட்டுள்ளன.
'கானலில் மான்’ யாழ்ப்பான மணனின் நடுத்தர மக்களைக் குறிப்பாகவும், வடமராட்சி மனனின் மக்களைச் சிறப்பாகவும் சுட்டி நிற்கின்றது. கதையின் நிகழ் புலம் கரவெட் டியையும் புலோலியையும் உள்ளடக்கியிருப்பது இங்கு கவனிக் கத்தக்கது.
இப் பிரதேசத்தின் சமூக விழுமியங்கள் மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாதவை. சிறப்பாக நடுத்தர வர்க்க மக்களின் நடைத்தையியல் அம் மனனைப் புரிந்தவர்க
தெணியாண் 75

Page 42
னாலேயே விளங்கிக்கொள்ள முடியும், தெணியான் இம் மணர் னின் நடுத்தர வர்க்க மனிதன் எதிர் கொள்ளும் பிரச் சனைகளை நாசுக்காக முன் வைக்கின்றார். இந்நவீனம் ஒரு பெரிய வட்டத்துள் பின்னப்பட்டமை அதற்கொரு பரந்த பரிமாணத்தை தருகின்றது.
ஆசிரியர் தெணியான் எமக்குப் பல நிகழ்புலக் குறிப்புக் களைத் தருகின்றார். முத்துலிங்கத்தின் இளமைப் பருவம் காட்டப்படுகின்றது. அப்ப7 குடிகாரன், அம்மா வாயில் லாப் பிராணி மனம் பேதலித்தவள். சகோதரி தன்னிச்சையான போக்குடையவள், இளமையில் அன்பென்பது முத்து லிங்கத்திற்குக் கானல் நீரே. அவனது அப்பாவையும் அம்மா வையும் பற்றிக் கூறுகையில் -
'அன்போடு ஒரு முத்தம் அப்பா தரவில்லை அம்மா. தன் ஊணாக உயிராக வயிற்றில் சுமந்து பெற்றவள். அருகில் இருந்தும் அவள் முத்தத்தைப் பெறாத குழந்தை இவன். அம்மாவின் பால் அமுதம் பருகாத பிள்ளை இவன்.
பாவம் அவள் (அம்மா) தன்னிலை மறந்த நோயாளி”
இவ்வாறான குடும்பச் சூழலில்தான் முத்துலிங்கத்தின் வாழ்க்கை ஆரம்பமாகின்றது.
மணவாழ்க்கையைப் பார்ப்போமாயின் அது இன்னும் வேடிக்கை நிறைந்த உலகை எமக்குக் காட்டுகின்றது. பதவிக் காகக் 'கழுத்தை நீட்டிய’ மனைவி அவனுக்கு ஒரு கோப்பை தேநீர் தருவதற்குத் தயாராக இல்லை. அதே வேளை அவனது பழுப்பேறிய பல்லை மறைமுகமாகக் கேலி வேறு செய்கின்றாள்.
'கண்டதாலையும் தீட்டித்தான் உங்கடை பல்லிலே செழும்பு 9 9 தொட்டுத் தாலி கட்டிய மனைவி கூட அவனை ஒதுக்கி வைக்கின்றாள்.
சமூகத்தை எடுத்துப் பார்ப்போமாயின் அதுவும் ஆரோக் கியம் நிறைந்ததாகத் தெரியவில்லை. புத்தி ஜீவிகளெனத்
தெணியான் 76
 

தம்மைக் கூறிக் கொள்பவர்கள் கூட "கூவில்கள்’ குடிப்ப வர்களே. அவர்களும் இவனை அங்கீகரிக்கவில்லை. ஏனெனில் இவன் 'நல்லவன்'
ஆசிரியத் தொழிலில் கூட அவன் கடமை செய்வதை அங்கீகரிக்க மறுக்கும் ஒரு கல்வி சார் உலகம் முடிவு உணர்மையிலேயே பைத்தியமான ஆனால் பைத்தியமில்லாததென ஏற்கப்பட்ட விழுமியம் சால் சமுதாயத்தில் இவன் பைத்திய காரனாகப் பார்க்கப்படுகின்றான்.
ஆரம்பத்திலிருந்தே முத்துலிங்கத்தின் வழிவு சிதறு வதைக் காணர்கின்றோம். படிப்படியாக இக் கதையின் பிரதான பாத்திரமான முத்துலிங்கம் தனது வீழ்ச்சியைக் காணர்கின்றான். அவன் ஒதுக்கப்படும் போதெல்லாம் ஒரு உள நோயாளியாக மாறிக் கொணர்டே வருகின்றான். அவன் சமுதாயத்தின் அங்கீகாரத்திற்காக எந்த ஈனச் செயலிலும் ஈடுபடத்தயார7 கின்றான்.
'கானலில் மான் நவீனத்தில் வரும் ஒரேயொரு உருணடையான பாத்திரம் முத்துலிங்கமே. அவன் யாழிமணர் விதந்துரைக்கும் அத்தனை விழுமியங்களின் சொந்தக்காரன். அவனிடமுள்ள குறை அவன் அழகில்லாதவன். இம் மண்ணில் ஒட்டிக்கொள்ள வழிவை அர்த்தமுள்ளதாக்க அவன் துடிக் கின்றான். அவனது முயற்சிகள் யாவும் உதாசீனம் செய்யப் படுகின்றன.
அவனை அங்கீகரிப்பதற்கு மனிதர்கள் இல்லாமல் இல்லை. பாவம். அவர்களும் சமூக அங்கீகாரம் பெற்றவர்கள் அல்ல. எனவே அவன் சமுதாயத்தினால் ஒதுக்கப்பட்டவர்களில் ஒருவனாகின்றான்.
பாத்திர வளர்ச்சியை முன்னெடுக்கையில் தெணியான் கதைக்குள் கதையைப் புகுத்திப் பின்னோக்கிய பார்வை எனும் (Flashback) உத்தியைக் கையாளுகின்றார்.
முத்துலிங்கம் எனும் கதைமானுடன் மனைவி வீட்டில் இருந்து ஒரு கோப்பை தேநீருக்காகத் தேநீர்க் கடைக்குச் சென்று வீடு திரும்புகின்ற இந்தக் குறுகிய கால வரையறைக்குள் அவனது 40 வருட வாழ்க்கையை ஆசிரியர் காட்டுகின்றார். தேநீருக்கான அவனது இன்றைய அலைச்சலே
தெணியான் 77

Page 43
அவனது வழிவு முழுவதுமான அவலமாகக் காட்டுவது வியக்க வைக்கின்றது. உறவிருந்தும் உறவில்லாமல் உரிமை இருந்தும் உரிமையில்லாமல் அன்பு இருந்தும் அன்பு கிடைக் காமல் துன்புறும் மனிதனாக இவன் மாறுகின்றான். இவன்தான் இன்றைய புறக்கணிக்கப்பட்ட இம் மணனின் மனிதனோ? கதையின் பின்புலம் விரிய நாம் அங்கும் இங்கும் விரவிக் கிடைக்கும் தகவல்களை ஒன்று சேர்த்துக் கோவைப் படுத்துகின்றோம். முத்துலிங்கத்தில் நாம் கொண்ட வெறுப்பு இப்பொழுது அனுதாபமாக மாறுகின்றது. வெறுக்கப்பட்ட பாத்திரம் வாசகனுக்கு விரும்பிப் படிக்கும் பாத்திரமாக மாறு கின்றது. இக்கதைப் பின்புலத்தினூடாகவே நாங்கள் நாவலை அணுகுகின்றோம்.
சமூகப் பிரஞ்ஞை உள்ள தெணியான் இப் பிரச் சனையை எவ்வாறு அணுகுகின்றார்?
மனிதன் நிகழ் காலத்தில் வாழ வேணடும்; எதிர்காலம் தன்னைப் பார்த்துக் கொள்ளுமென்பார்கள். ஆனால் நாமோ எதிர் காலத்தை எனணி நிகழ் காலத்தை இழந்து விடுகின்றோம். அல்பேட் எப்டுவைசர் கூறுவார், "மேற்கு வழிவின் உடன் போக்கைக் கொணடிருக்கும் கிழக்கு வழிவின் நிலையாமை பேசி நிற்கும்’ எம்மில் பலர் பட்டம், பதவி அந்தளிப்து எனக் கூறிக் கொணர்டே அதன் பின்னால் ஓடிக்கொணடிருக்கின்றார்கள். இவைகள் மனிதனது வழிவா கிவிட முடியாதென்பதை ஏற்க மறுக்கின்றார்கள். முடிவு fஎளப்.எலியட் கூறுவானே "வழிந்து கொணர்டே இறந்தவர் களென’ இவ்வாறே அர்த்தமற்ற வாழ்வு வழிந்து கொணடி ருக்கின்றர்கள். இவர்களும் ஒரு வகையில் முத்துலிங்கத்தின் மறு வார்ப்புக்களே.
இந்நாவலில் தெணியான் உயர் நடத்தை, நெறி வாழ்க்கை பற்றிப் பிரளப்தாபிக்கவில்லை, வழிவின் குறிக் கோள் பற்றிக் குறிப்பிடவில்லை, வழிவின் இலட்சியம் பற்றிப் பேசவில்லை. ஏனெனில் இக்கதை மாந்தர்களுக்கு வழிவே இல்லை. இவற்றைக் கருத்திற் கொணர்டே வாழ்வுக்கு ஏங்கும் ஒரு மனிதனாக முத்துலிங்கம் படைக்கப்படுகின்றான். இவ்வா றான ஒரு புறச் சூழலில் அகப்பட்ட மனிதன் எவ்வாறு
தெணியான் 78

—Hmmmmmmmm
இயங்குவாண் என்ற உளவியல் பார்வையைக் 'கானலில் மான்' காட்டுகின்றது. முத்துலிங்கம் தாழ்வுச் சிக்கலின் வெளிப்பாடு.
உளவியலாளர்கள் தாழ்வுச் சிக்கலுக்கு இருவகைக் காரணிகளை முன் வைப்பர்.
1. தனிமனித காரணிகள் 2. சமூகக் காரணிகள்
தனிமனிதக் காரணியில் முதன்மை வகிப்பது தோற்றப் பொலிவின்மையே றைபேன் எனும் உளவியலாளர் தனிமனிதக் காரணியின் வெளிப்பாடாகிய தாழ்வுச் சிக்கல் பற்றிக் கூறுகை யில் "பாதிப்புக்குள்ளானோன் தன்னை இழந்து காணப்ப டுவான். மற்றவர்களின் ஆலோசனைப் பிரகாரம் நடத்தப் படுவான். சில சிறிய விடயங்களில் சர்வாதிகாரப் போக்கைக்
99 கடைப் பிடிப்பாணி',
முத்துலிங்கம் ஒரு நாள் வீட்டுக்கு வருகின்றான். அவனது சகோதரி ஒரு ஆடவனுடன் கதைத்துக் கொணடிருக்கின்றாள். இவன் அவனுடன் சணடைக்குப் போகப் பயப்படுகின்றான். எனவே அவன் செல்வதற்கான நேர இடைவெளியை ஏற்படுத்தித்தருகின்றான். பின் சகோதரியுடன் சணர்டை பிடிக்கின்றான்.
"ஆரடி அவன்? 列列
"நான் கட்டப் போறவர்'
'மாப்பிள்ளை பிடிச்சுப் போட்டாய்”
"அதென்ரை விருப்பம், அதைக் கேட்க நீ ஆர்?" முடிவு -
பாய்ந்து அவள் தலைமயிரைப் பிடித்து இருக்கின்றான்
ஏனெனில் சகோதரி இவனிலும் பார்க்க வலிமை குறைந்தவள். எனவே இவன் சர்வாதிகாரப் போக்கைக் கடைப் பிடிக்கின்றான். மறுபுறம் அந்த ஆடவனை நெருங்க அச்சப் படுகின்றாள்.
வேறொரு நாள் இவள் முத்துலிங்கத்தின் நொய்ந்த பிரதேசத்தைப் "பதம்’ பார்க்கின்றாள்.
தெணியான் 79

Page 44
"உனக்கு என்னிலை பொறாமை?”
y என்னடி பொறாமை?
'உன்னை எவளும் விரும்புவதில்லை’
இவ்வாறே சமூகக் காரணிகளும் அவனுக்கு எதிராக இயங்குகின்றன. அவன் குடும்பத்தில் அங்கீகரிக்கப்படவில்லை, அவனை எல்லோரும் குற்றம் கணடு இம்சைப்படுத்துகின் றார்கள். அவனுடன் அணுகுபவர்கள் எதிர் மறைப் போக்கையே கடைப்பிடிக்கின்றனர். அவன் சரியாகச் செய்தாலும் அவனை மெச்சுவதற்கு யாருமில்லை.
தெணியான் தனது பல வருட ஆசிரியத் தொழிலின் ബ്രഖബ /്ക് ജിബ്ബ് ബL്കിത്സ/.
முத்துலிங்கம் என்ற பாத்திரம் அன்புக்காக ஏங்குகின் றதென்பதல்ல உணர்மை, அங்கீகாரத்தை எதிர்பார்த்து நிற்கின் றதென்பதே உணர்மை, முத்துலிங்கத்தை யாரும் அங்கீக ரிக்கத் தயாராக இல்லை. அவன் ஒரு உளவியல் நோயாளி ஆகின்றான்.
உள் மன நெருடல்கள் புற உலக விகர்ப்பங்களின் வெளிப்பாடே முத்துலிங்கம், சமூகத்தால் வஞ்சிக்கப்பட்ட ஒரு மனிதன் அவனது வீழ்ச்சி என்பது அவனைத் தாங்கி நிற்கும் சமுதாயத்தின் வீழ்ச்சியாகும்.
முத்துலிங்கம் கூறுவான் "நான் சந்தோஷமாக இருந்தால் இன்னுமொரு பிள்ளை பெற்றிருப்பேன்' அவன் குடும்ப வழிவைக்கூட இழந்து விட்ட மரம். இப்பட்ட மரம் துளிர் விடுமா? நிச்சயமாக இல்லை. ஆனால் முறிந்து விழாது. ஏன் தெரியுமா? அவன் இன்னும் மனிதனாக இருப்பதுதான்.
கானலில் நீர் இல்லைத்தான். ஆனால் நீர் என்னும் மாயத் தோற்றம் மனிதனை இயங்க வைக்குமல்லவா?
முத்துலிங்கம் தாழ்வுச் சிக்கலில் வீழ்ந்து விட்ட மன நோயாளிதான். அவனுடன் "மனோ' இருக்கும் வரையும் 'கானலில்' அவனுக்கு "நீர்’ தெரியும். அவனது வாழ்க்கை ஏதோ போய்க்கொணடிருக்கும்.
தெணியாண் | 80
 

மேண்கவி
தெணியாண் எனும் முற்போக்கான மனிதருக்கு
தெணியான் சேர் எப்படி இருக்கீறீள் கனநாளாச்சு உங்களப் பார்த்து
கனக்கச் சேதிகள் கிடக்கு உங்களுக்குச் சொல்ல
இவர்கள் எல்லாம் இணைந்து உங்களுக்கு மணிவிழா கொனடாடும் அவைதானே எங்களை போன்ற பொடியங்களுக்கு உங்களை மனசார வழித்த தருணம் கொடுக்கிறது.
போர்க்கால ஓர் நாளில் நேராய் சந்தித்தபின்
இன்று
ஊரெல்லாம் சமாதான தேர் ஓடும் ஓர் நாளில் மணிவிழா நாயகராய் எங்கள் தூசித் தெரு ஊர் வந்து இருக்கும் தெணியான் சேர் உங்களுடன் பேசி முடிக்க கனசேதிகள் கிடக்குது சேர். சின்ன பொடியனாய் நான் இருக்கையிலே, பொலிகனடி சந்தியிலே உங்களைச்
தெணியான்
8

Page 45
சநித்தித்த அதே மாறாப் பொலிவுடன்
மணிவிழா காலத்திலும் ஜொலிக்கும் தெணியான் சேர் கனநாளாச்சு உங்களைப் பார்த்து. கனக்கச் சேதிகள் கிடக்கு உங்களுக்கு சொல்ல,
மலிவான புகழுக்கு மயங்காத மல்லிகையின் எழுத்து முகம் அல்லவா நீங்கள்/ உங்கள் மனர் அழிவான யுகத்திலும் அடம் பிடித்து எத்தனையோ வலிகள் வந்த பொழுதும் எந்த வழியிலும் புலம் பெயராத உங்கள் திடத்திற்கு முன்னே உங்களை வழித்த எங்களுக்கு என்ன இருக்கிறது தகுதி? ஆனாலும் சேர் முற்போக்கு இயக்கத்தை உயிர்ப்புடன் வாழ வைத்த இந்த தேசத்தின் ஒரு பகுதிக்கான தளபதியான உங்களை வழித்த மணிவிழா ஒரு தருணம் தந்து இருக்குது சேர்.
முற்போக்கு பணிணையை விட்டு அணு அளவேனும் அசையது ஆர்ப்பாட்டமின்றி
அசையாத திடத்துடன் வாழும்
தெணியான் சேர் உங்கள் வசம் சொல்ல என் வசம் கணக்க சேதிகள் உணர்டு சேர்.
தெணியான்
82
 

SS
ஷெல்லும் துப்பாக்கி குணடும் உண்டாகி விட்ட பொல்லாத வழிவில் நீங்கள் அல்லோப்பட்டு கொணடிருந்த வேளையில் எண்னட அல்லாஹாவே எங்கட முற்போக்கு இயக்கத்த சங்கடப்படுத்த சில சக்திகள் தங்கட புத்தியினை காட்டி போட்ட கூத்துக்கள் இருக்கே சேர் அந்தக் கூத்துக்கள் உங்கட மணர்ணிலே ஆ/மிக்காரன் போட்ட குணர்டை விட மோசமானவை சேர்.
எங்கள் இனசனங்களை உங்கள் தம்பிமார்கள் விரட்டிய பொழுது மெளனமாய் நீங்கள் எழுதும் மேசையில் முகம் புதைத்து அழுத முற்போக்கு முகங்களில் உங்கள் முகமும் ஒன்று என்பதை நான் அறிவேன் பிந்திய இன்றைய ஓர் நாளில் பார் முழுதும் பார்த்து கொண்டிருக்க உங்கள் அருமை போர் முனை தம்பிமார்கள் சிந்திய மன்னிப்பு கணணிருக்கு பின்னும் புலித்தோல் போர்த்திய சில நாச கிடாக்கள் கிழக்கு மனனில் முளப்லிம் தமிழ் உறவுதனை வன்முறை சாக்கடையில் தள்ளிய பொழுது அந்த உறவுதனை
ஆழமாய் நேசித்த உங்கள்
முற்போக்கு இதயம்
தெணியான் 83

Page 46
அழுததையும் நான் அறிவேன். 43%ý/24/75 5607á45 சேதியை உரைக்க மனம் எணர்னினாலும் நேரத்தையும், அதன் மதிப்பையும் கருதி உட்கார்ந்து விடுகிறேன் உங்களுக்கு என் வழித்துக்கள்.
மல்லிகைப் பந்தல் ஆதரவில் வெள்ளவத்தை தமிழ்ச் சங்க குமாரசாமி விநோதன் ஞாபகார்த்த மனடபத்தில் 208.2002 இல் நடைபெற்ற மணிவிழாவின்போது வழங்கப்பட்ட கவி
வழித்து.
தெணியான்
84
 

எண் வண்னியகுலம்
ஒடுக்கப்பட்ட முழுச் சமூகத்திற்கும் உரிமை பூண்டவர் தெணியான்
தெணியானுக்கு மணிவிழா என அறிந்ததும் எனது மனதில் மகிழ்ச்சி பொங்கியது. அவருக்கு எனது வழித் துக்களை தெரிவிக்கும் அதேவேளை சமூகப் பொறுப்பு ணர்ச்சி மிக்க இந்த விழா அமைப்பாளர்களுக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.
தெணியான் ஓர் ஆசிரியர், அதிபர் வரையறைகளுக்கு அப்பால் எழுத்தாளன் என்ற வகையிலேயே யாவரினதும் கவனத்திற்கு ஆளாகின்றார். அதுவும் முற்போக்கு எழுத்தாளர் என்ற வகையில் முழுத் தமிழ்ச் சமுதாயத்தினதும் கருத்தூன்றிய கவனத்திற்கு அவர் இலக்காகின்றார். தெணி யான் யாழ்ப்பாண சமுதாயத்தின் தவிர்க்க முடியாத ஒரு தேவைப்பாடாக தோற்றம் பெற்றார்.
யாழ்ப்பாணத்தில் 1950களில் சமூக அடிமைத்தனத் திற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த ஒடுக்கப்பட்ட மக்கள் பல்வேறு விதமான வியூகங்களை வகுத்துக்கொணடனர். அஹிம்சை வழியினூடாக, கத்தியின்றி ரத்தமின்றி ஒரு போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லமுடியுமென மரபுவாதிகள் நம்பினர். இவர்கள் பெரும்பாண்மை உயர் சமூகத்தினரின் நல்லபிப்பிராயங் களையும் ஒத்தாசைகளையும் பெறுவதன் மூலம் சமுதாயத்தைச் சீர்திருத்தலாமென விசுவாசித்தனர். தேவரையாளி சைவப்பெரியார் குரண் தலைமையில் இவர்கள் அணிதிரணர்டனர்.
இன்னொரு பிரிவினர் அடக்குமுறைக்கும் அடிமைத் தனத்திற்கும் எதிரான போராட்டம் மூலமே சமூக விடுதலையை வென்றெடுக்க முடியுமென விசுவாசித்தனர். எளப்ரிஎன். நாகரட் ணம் தலைமையில் சிறுபான்மைத் தமிழர் மகா சபையூடாக இவர்கள் தங்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இன்னொரு பிரிவினர் சமூக விடுதலையை வென்றெ டுப்பதற்கு தனியே ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டம்
தெணியான் 85

Page 47
மட்டும் போதுமானதன்று. அந்தப் போராட்டத்தை வழிநடத் தக்கூடிய வகையிலே மக்களைப் பக்குவப்படுத்த வேணடு மென இவர்கள் விசுவாசித்தனர். தமது போராட்டத்துக்கு எழுத்தையும் ஓர் ஆயுதமாக இவர்கள் பயன்படுத்தினர். இவர்களிலே டானியல், டொமினிக்ஜீவா, என்.கே.ரகுநாதன், கவிஞர் பசுபதி போன்றவர்கள் முதன்மைப் பேராளர்களாக விளங்கினர். இந்தக் குழுவினரால் கவரப்பட்ட முதல் தலை முறையைச் சேர்ந்தவர்களாக தெணியான், பெனடிக்ற்பாலன், செ.யோகநாதன் போன்றவர்களைக் கொள்ளலாம்.
இவர்கள் தங்கள் எழுத்துகளினூடாக ஒடுக்கப்பட்ட மக் களை விழிப்படையச் செய்தனர். சமூக ஒடுக்கு முறையாளர் களின் போலித்தனங்களையும் பவிசுகேடுகளையும் தமது எழுத்துகளினூடாக வெளிக்கொணர்ந்தனர். ஒடுக்கப்பட்ட சமூ கம் எவ்வகையினும் இவர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடப் பதனை ஏற்றுக்கொணடதில்லை என்பதை அவ்வப்போது இடம்பெற்ற போராட்டங்களை மையப்படுத்தி உருசுப்படுத்தினர். இந்த சமூக அடிமைத்தனத்தை அயராத உழைப்பினாலும், உறுதியான போராட்டத்தினாலும், தெளிவான கல்வியறிவாலும் உடைத்தெறிய முடியும் என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் உருவாக்கினர். சமூக சமநிலையை உருவாக்குவதற்கு அந்த மக்களது புத்தெழுச்சியின் அவசியத்தை அவர்கள் உணர்ந் திருந்தனர்.
இந்தவேளை பெரும்பாண்மை சமூகத்தினரிடையே தமது போராட்டத்தின் நியாயப்பாட்டினையும் இவர்கள் விதைக்கத் தலைப்பட்டனர். அந்த முயற்சியில் அவர்கள் வெற்றியும் பெற்றனர். அடக்குமுறைக்கெதிரான கருத்தியல் ரீதியான போராட்டத்தை முன்னெடுப்பதில் பேராசிரியர் க.கைலாசபதி பேராசிரியர் கா.சிவத்தம்பி பிரேம்ஜி போன்றவர்கள் பெரும் பங்காற்றினர். முற்போக்கு இலக்கியக் கோட்பாட்டை ஏற்றுக் கொனடவர்கள் மட்டுமன்றி அதற்கு எதிரானவர்கள்கூட இந்த சமூக விடுதலைப் போராட்டத்துக்கு தமது பங்களிப்பை கணிசமான அளவில் வழங்கியுள்ளனர். இத்தகைய ஒரு போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதன் அவசியத்தை உணர்ந்த நிலையிலேதான் அமரர் கேடானியல் தமது இறுதிக் காலத்தில் தமது இலக்கிய வாரிசாகத் தெணியானையும்
தெணியான் 86
 

கொள்கைசார் வரது கேதங்கவடி வேலவர்களையும் இனங் கனடார்.
தெணியானின் வேகமிக்க எழுத்தும், தங்கவடிவேலின் உறுதியான கொள்துைசார் செயற்பாடுகளும் இணைந்து தொழிற்படுவதற்கான காலம் கனிந்துவிட்டது. ஒடுக்கப்பட்ட மக்களின் உறுதியான கொள்கைப் பிடிப்புடனும் தெளிவான செயுற்றிட்டங்களுடனும் உலக வியாபகமாக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. உலகமெங்கணும் பரந்து வழிகின்ற நேச சக்திகளை இனங்கணடு அவர்களிர் பங்களிப்பினையும் இந்த சமூகத்தின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தவேணடிய காலம் அண்மித்துவிட்டது.
யாழ்ப்பானத்தின் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் 1960 கவர் முன்னர் எதிர்நோக்கிய பிரச்சினைகள் இன்று ർബ/ബ്ബീഗ്ഗക് கின்றன என்பதி) கருத்து வேற்றுமைக்கு இடமில்லை. பொருளாதாரம், கல்வி .ெ இலக்கியத்துறைகளில் அவர்கர் தலைநிமிர்ந்து நிற்கும் தகைமைப்பாடுகளைப் பெற்றுள்ளனர் என்பதிலும் ஐயமில்லை. ஆயினுங்கூட இந்தத் துறைகளிலே இவர்கள் உறுதியான ஒரு நிலப்பாட்டையோ, நிறுவன மயப்ப டுத்தலையே இதுவரெ எட்டிவிடவில்லை என்பதையும் மறுப்பதற்கில்லை. இவற்றுக்கான சந்தர்ப்பங்களும் (f/06/77/7/4 களும் இந்த மக்களுக்கு இதுகாலவரை 624A/35/7/ 'ബീബ്,
பொருத்தமானதொரு அரசியல், சமூக தலைமைத்துவம் ஒன்றினை இந்த சமூகம் ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கிறது. இரணடு தசாப்தங்களுக்கு மேலாக அரசியல் அநாதைகளாகி நிற்கும் இவர்களை ஓரணியில் திரளச்செய்யும் பெரும் பொறுப்பு எம்மை எதிர்நேரத்தி நிற்கிறது.
எதிர்காலம், தென%ார் இவையற்றி தீர்க்கமாகச் சிந்தித்துச் செயலாற்ற கால அவகாசத்தை வழங்குமென நினைக்கின்றேன். இவர் அத்தகையதொரு முனைப்புடன் செயற்பட வேணடுமென இந்த சமூகம் எதிர்பார்க்கின்றது.
தெணியான் இன்று ஒரு தனிமனிதன் என்ற நிலைக்கு அப்பாற்பட்டவர். ஒடுக்கப்பட்ட முழுச் சமூகத்திற்கும் அவர் 2 /22d/o ஆண்டவராகின்றார். இந்த சமூகத்தின் நல்வழிக்கைது
தெணியான் 87

Page 48
காகவும், முன்னேற்றத்திற்காகவும் தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்குமப்பால் அவர் செயற்பட வேண்டியவராகின் றார். இவர் நீண்ட காலம் வழிந்து தமது எழுத்துப் பணியையும், சமூகப் பணியையும் தொடர்வதற்கு இறைவன் அவருக்கு நீணட நல்வழிக்கையைப் பெற்றுத்தரவேணடு மென இறைஞ்சுகின்றேன்.
தெணியான் 88
 

ரட்னம்
நான் அறிந்த தெணியாண்
தெணியான் ஆறாம் திகதி றிரயர் ஆகிறார். என்றார் நனபர். நம்பமுடியவில்லை.
மரணம் - தவிர்க்க முடியாதது எல்லாருக்கும் வருவது றிரயர்மெண்ட் - தவிர்க்க முடியாதது. அரச ஊழியருக்கு வருவது. நணர்பரை நம்ப வேண்டியதாயிற்று. நம்பவே தெணியான் பற்றி எனது நினைவலைகள் அடிக்க ஆரம்பித்துவிட்டது.
தெணியானை நேரில் கனடு பேசிப் பழகி நட்புறவு
கொள்வதற்கு மூன்று நான்கு வருடங்களுக்கு முன்னரே எனக்குத் தெரியும்-அவரின் சிறு கதைகள் மூலமாக,
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய ஒரு புதியவர், இளைஞர், தமிழ் இலக்கிய உலகில் கால் அடி எடுத்து வைத்துள்ளார் என்பதை நான் இனங்கண்டு கொணடிருந்தேன்.
அந்தக் கனடு பிடிப்பே அறுபதுகளின் பிற்பகுதியில் ஒரு நாள் என்னை கல்முனை ஸாஹிரா கல்லூரி வாசகர் வட்
டத்தில் இந்தத் தேசத்துக்காக ' என்ற சிறு கதையை அறிமுகப்படுத்த வைத்தது. இலக்கியம் பற்றி அதிலும் தமிழ் இலக்கியம் பற்றி பாணடித்தியம் இல்லாத நிலையிலும் என் னைக் கவர்ந்த எழுத்தாளர், நான் மனதார விரும்புகிற கருப்பொருளை மையமாகக் கொணடு எழுதுபவர் என்ற காரணங்களே என்னை அன்று பேசவைத்தது. அந்தப் பேச் சுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. பல எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆர்வலர்கள் அன்று தெணியானைப்பற்றி தெரிந்து கொணர்டனர்.
கூட்ட முடிவில் நணபர் நவம் என்னிடம் வந்து
பாராட்டிவிட்டு, "சேர், அந்த தாமரை இதழ் உங்களிடம்
தெணியாண் 89

Page 49
இருக்கிறதா?’ என்று கேட்டார். "ஆம்" என்று சொல்லி மறு நாள் தருவதாக கூறினேன். (அந்தக் கதையைத்தான் நவம் நாடகமாக்கி தங்கப்பதக்கத்தை பரிசிலாகப் பெற்றார். அது வேறு கதை
நவம் தொடர்ந்து கேட்டார் நீங்கள் போற்றிப் புகழ்கின்ற தெணியானைத் தெரியமா?' என்று,
"ஆளைத்தெரியாது. ஆனால் நல்லாய்த் தெரியும் எங் கடை பிரச்சினைகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஓர் இளம் எழுத்தாளர். நீங்களும் அவரை வாசிக்கவேணடும்” என்றேன்.
நணபர் நவம் சிரித்துக்கொணர்டே கூறினார். "அவர் என் அணனா’ என்று.
நான் அசந்து போனேன். பின்னர் நவம் மூலமாக தெணியான் வீடு தேடி வந்து எண்ணைக் சந்தித்தபோது அவரின் அன்பும், கனிவும் கொணட எடுப்பான திருவுருவும், அறிவுக் கனலை அள்ளி வீசும் கணகளும், அருள் கனிந்த முறுவலும், சமூக உணர்வும் கனடு எனது கண்டுபிடிப்பு ‘கெட்டிக்காரப் பொடியன் சரியானதே/ என்பதை உணர்ந்து கொனர்டேன்.
நாளடைவில் அவருடன் கற்பிக்கும் சந்தர்ப்பத்தை நானே வலிந்து ஏற்படுத்திக் கொணர்டபோது அவரின் பூரணமான அன்புக்கும், மதிப்புக்கும் ஆளானதோடு அவரையும் நன்கு எடை போடக் கூடியதாயுமிருந்தது.
அவர் எளப்எளப்சியில் முதலாம் வகுப்பில் தேர்ச்சிய டைந்து எச்எளப்சியில் படித்துக்கொண்டிருக்கும்போது குடும்ப நலன் கருதி படிப்பை இடைநிறுத்தி வாத்தியாரானவர். இந்த வகையில் தெணியான் ஒரு தியாகி
அவர் குடும்ப நலன் கருதி உழைத்து ஊர் உலகம் மெச்சத்தக்க வகையில் தனது கடமையை நிறைவேற்றியவர். அந்த வகையில் தெணியான் ஒரு சுமைதாங்கி- கடமை வீரர்.
அவர் வாத்தியாராகி சமூக நலன் கருதி தன்னை ஒரு முத்திரை குத்தப்பட்ட சிறையில் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அடைத்துக்கொனடவர். இந்த வகையில் தெணியான் ஒரு சமூகப் பற்றாளர்.
தெணியான் 90
 

一ー
அச் சிறைவாசம் தன்னை குடத்திலிட்ட விளக்காக, பத்தொடு ஒன்று என்ற ரீதியில் வெறும் "நடேசு மரணப்டர்' ஆக்கிவிடாதபடிக்கு குன்றின் மேலிட்ட தீபமாக, தமிழ் இலக்கிய உலகம் நன்கறிந்த படைப்பாளியாக ஆக்கிக் கொண்டவர். இந்த வகையில் தெணியான் ஒரு சாதனையாளர்.
இத்தகைய இயல்புகளைக் கொணட தெணியான் ஆசி ரியத் தொழிலின் மகத்துவத்தை நன்குணர்ந்தவர், மாணவர் நலன் கருதி கடமையாற்றியவர், நணபர்களை மனதார நேசிப்பவர், வீடு தேடி வந்து உதவுபவர், சமூக நிகழ்வுகளில் தவறாது பங்கு கொள்ளுபவர். இது தெணியானின் ஒரு பக்கம்
தெணியான் எந்தக் கொம்பனுக்கும் பணியாதவர், சிறு மை கண்டு சீறுபவர், சுரணர்டல் கணடு குறாவளியாகுபவர், தரக் குறைவு கணடு தாக்குபவர், ஆசாடயூதித்தனத்தை கண்டு ஆத்திரப்படுபவர். இது தெணியானின் மறு பக்கம்.
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாமை, மாக்ஸிய மெய்ஞ்ஞானப் பயிற்சி படைப்பாளி என்னும் செருக்கு, ஆத்திரம் இருக்குமளவுக்கும் அறிவும் இருத்தல் என்பனவே இவ்விரட்டைத் தன்மைக்கு காரணங்களாகும்.
தெணியானுடன் உரையாடுவது ஒரு சிறந்த அனு பவமாக இருக்கும். இவ்வுரையாடல்களிலிருந்து ஏதோ ஒரு புது விடயத்தை அல்லது கருத்தை அறியக்கூடியதாகவே இருக்கும். அவரிடம் சிறப்புச்சிந்தனையை காணலாம். அவர் உடலாலும் உயர்ந்தவர், உள்ளத்தாலும் உயர்ந்தவர். வழுக்கியும் தகாத சொல்லை சொன்னதில்லை, சக எழுத்தாளர்கள் எவரை யுமே தூற்றியதை கேட்டதில்லை. அத்தகைய பணிபாளர்களை காண்டது அரிது.
அவரின் உரையாடல்களில் நகைச் சுவையும், தெளிவும், நியாயமும் பளிச்சிடுவதைக் காணலாம்.
ஒருமுறை 'நவம் கதை சொல்லுகின்ற பாணி மிக நல்லதாயிருக்கு.’ என்றபோது 'அவன் மிக இளம் வயதிலே எழுதத் தொடங்கியவன். சரியான வழி காட்டலும் அவனுக்கு இருந்தது. பல பரிசில்கள் பெற்றவன். உணர்மையில் என்னை
விட நன்றாக எழுதுவான்’ என்றார். "அவரும் எழுதுகிறார்
தெணியான் 91

Page 50
என்றாலும் என்னாலும் அப்படி எழுதமுடியும்” என்ற விளக்கத்தை எதிர்பார்த்தவர் தெணியானின் நேர்மையை கனடு வியந்து போனார்.
இத்தகைய குண நலமுள்ள தெணியானை ஆவேசக் காரணி என்று பலர்சொல்லக் கேட்டதுணடு, அந்த ஆவேசத்தை நேரில் கண்டதுமுண்டு. ஆனால் அந்த ஆவேசம் அகங்காரத் திண்பாற்பட்டதன்று, ஆற்றாமையால் எழுவது என்பதை பலரும் அறியார் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதை கனடு ஆவேசப்படுவார். 69@55L/L/L. z மக்களிடையே இருக்கக்கூடிய புத்தி ஜீவிகள் தீக்கோழிகளாக நடிப்பதை கனடு ஆவேசப்படுவார், நீதி நியாயமற்றவையை கண்டு ஆவேசப்படுவார். மானிடத்தை நேசிக்கும் எவரிடமும் இருக்கக் கூடிய ஆவேசம் வரும் சந்தர்ப்பங்களில் அவர் எதிரியை தர்க்க ரீதியாகவும் நிஷடூரமாக வெட்டி விழுத்துவது கருத்துக்கு விருந்தாகவே இருக்கும்.
தார்மீக அடிப்படையிலான இந்த ஆவேசமே தெணி யானை ஒரு படைப்பாளியாக்கியது என்பது பலரும் அறியா தது. இந்தப் படைப்பாளியின் உயிர்நிலையாகவுள்ளது சமூக உணர்வுதான். இதை அவரின் படைப்புகளில் காணலாம்.
அவரின் கட்டுரைகள் கருத்தாழமானவை. கட்டுரை எழுத்தாளர் டானியலைப் பற்றியதாகவோ அல்லது சமூகத் தொனர்டர் கிருஷ்ணபிள்ளை பற்றியதாகவோ இருப்பினும் அவற்றில் தெணியான் ஒரு செய்தியை மறைமுகமாகவேனும் விட்டேயிருப்பார். கட்டுரை இலக்கியம் பற்றி ஓர் ஆய்வு மேற் கொள்ளப்படின் தெணியானுக்கு கணிசமானதோர் இடம் கிடைக்கும் என்பது உறுதி
தெணியானின் சிறுகதைகள் சரியான சமூக உணர்வை தருவன. சமூக உணர்வே அவரின் மூலதனம் என்றால் அது மிகையாகாது, கால நகர்ச்சி இன்று அவரை தனக்கு முன்பிருந்த முற்போக்கு எழுத்தாளர்களின் தோள்களில் நின்று சமூகத்தைப் பார்க்க வைத்துள்ளது. இது தவிர்க்க முடிய7 ததும் வரவேற்கத்தக்கதுமாகும். இன்றைய பார்வை வித்தியாச மானதாகத்தானே இருக்கும். ஆனால் இத்தொலைப் பார்வையை
தெணியான் 92
 

வைத்துக்கொணடு "தெணியான் ஒரு சாதிய எழுத்தாளர் அல்ல' என்பதுதான் வேடிக்கையாகும்.
சிறந்த சிறு கதை எழுத்தாளர் எனப் போற்றப்படும் தெணியான் நல்ல குறுநாவலாசிரியர், தரமான நாவலாசிரியர் என்னும் அங்கீகாரத்தையும் புகழையும் பெற்றிருப்பது மகிழ்ச் சிக்குரியது. அவரின் குறு நாவல் "பிஞ்சுப் பழம்' ஒரு நல்ல படைப்பு, அவரின் நாவல்களில் "பொற்சிறையில் வாடும் புனிதர்களும்', "மரக்கொக்கும்’ சிறந்த படைப்புக்களாகும். எனினும் அவரை நாவலாசிரியர் என்ற ரீதியில் பிறமொழி எழுத்தாளர்களுடன் ஒப்பிட்டும், சாகித்தியப் பரிசில் என்ற மாயையைக் காட்டியும் வஞ்சப் புகழ்ச்சி செய்வதில் பயனில்லை. நாவலிலக்கியத்தைப் பொறுத்தளவில் தெணியான் சாதிக்க வேணடியது நிரம்ப உள்ளது. அதில் அவர் வெற்றியடைய வேணடும் என்பதே எமது மனமார்ந்த விருப்பாகும்.
தெணியானைப் பற்றிக் குறிப்பிட வந்த பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் தெணியானின் பலம் அவர் தொடர்ந்து வளர்ந்து கொண்டிருப்பதுதான் என்றார். இது படைப்பாளி என்ற ரீதியில் தெணியானைப் பற்றிய மிகச் சரியான கணிப்பீடாகும். தெணியான் மேன் மேலும் வளர்ந்து மகத்தான இலக்கியங்களைப் படைப்பார் என நம்புவோமாக.
தெணியான் 93

Page 51
கலாநிதி எனப்.சிவலிங்கராஜா
யாழ்ப்பாணத்து உறவுமுறைச் சொற்கள் சில குறிப்புக்கள்
யாழ்ப்பாணச் சமூகத்திலே வழங்கிவந்த உறவுமுறைச் சொற்கள் பல இன்று வழக்கிழந்து போயுள்ளமையை அவதா னிக்க முடிகின்றது. பொதுவாகப் பேச்சு வழக்குச் சொற்கள், பழமொழிகள், மரபுத் தொடர்கள் முதலானவற்றைப் பேணிப் பாதுகாக்கும் பெரும்பணியை நாட்டார் இக்கியங்களும் ஆக்க இலக்கியங்களுமே செய்துவந்துள்ளன. இந்த வகையிலே யாழ்ப் பாணப் பகுதிக்குப் பொதுவாகவும் வடமராட்சிப் பகுதிக்குச் சிறப்பாகவும் உரிய பேச்சுவழக்குச் சொற்களை ஆக்க இலக்கியங்களிற் கையானர்டவர்களுள் பேராசிரியர் க.கணபதிப் பிள்ளை விதந்து குறிப்பிடப்பட வேண்டியவராவார். பேராசிரியரின் தொடர்ச்சியாக வடமராட்சியின் பேச்சு வழக்குச் சொற்க ബ് தொடர்களையும் பழமொழிகளையும் கையானடவர்களிலே தெணியானுக்குச் சிறப்பானதோர் இட முனர்டு, தெணியானின் நாவல்களையும் சிறுகதைகளையும் வாசித்ததின் அருட்டுணர்வாகவே யாழ்ப்பாணச் சமூகத்தில் வழங்கிவரும் உறவுமுறைச் சொற்கள் என்ற இச்சிறுகட்டுரை தோற்றம் பெறக் காரணம் எனலாம்.
தாய், தகப்பன்-பேரன், பேத்தி, மாமன், மாமி-பெரியதாம் பெரியதந்தை, சிறியதாய், சிறியதந்தை-மைத்துனன், மைத்துனிசகோதரன், சகோதரி முதலானவர்களை முறைகூறி அழைக்கும் சொற்கள் இன்று காலதேச வர்த்தமானங்களுக்கு ஏற்ப மாறு பட்டு வந்துள்ளமையை அவதானிக்க முடிகின்றது. சமூக மாற்றம், அகல் உலகத்தொடர்பு, பிறமொழிக்கல்வி முதலான பல்வேறு காரணிகள் உறவுமுறைச் சொற்களின் பயில்முறை யிலே செல்வாக்குச் செலுத்தியுள்ளமையும் கணடுகொள்ள முடிகின்றது.
இன்று வழங்கும் உறவுமுறைச் சொற்களிற் சில
பழந்தமிழ் இலக்கியங்களிலும், பிற்கால இக்கியங்களிலும் வழங்கி வந்துள்ளமையும் அவதானிக்கலாம்.
தெனியான் 94
 

_-=-
தாய்- ஆச்சி, ஆத்தை, அம்மா
தாயை ஆச்சி ஆத்தை என அழைக்கும் முறை இன்று வெகுவாக அருகிவிட்டது. அம்மா என்று அழைக்கும் வழக்காறே பெருவழக்காக உள்ளது. மேலைப்புலச் செல்வாக் கினால் இன்று தாயை "மம்மி என அழைக்கும் வழக்கமும் மெல்ல மெல்ல வளர்ந்து வருகின்றது. இன்றும் முதியோர் பலர் தாயை ஆச்சி ஆத்தை என்ற சொற்களாலேயே அழைப்பதை அவதானிக்கலாம். தாயை ஆச்சி என அழைக்கும் மரபே தொன் மையானதாக இருக்க வேணடும் எனக் கருதமுடிகின்றது.
தகப்பன் ----- அப்பு, ஐயா, அப்பா
இன்றும் முதியோர் பலர் தகப்பனை அப்பு என்று அழைப்பதை அவதானிக்கலாம். எனினும் தகப்பனை ஐயா என அழைக்கும் வழக்காறே பெரும்பான்மையாக இருந்து வந் துள்ளது. ஐய, ஐயன் என்ற சொல் தலைவன் என்ற பொரு விலே பழந்தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் வழங்கிவந்துள் ளமையை அவதானிக்கலாம். ஜயன், என்பதன் விளியாகவே ஐயா என்ற சொற்பிரயோகம் உருவானது எனக் கருதலாம். காவியங்களிலே சகோதரனை ஐய, என அழைக்கும் வழக்காறும்
காணப்படுகின்றது. உ-ம் "ஜய நீ அயோத்திவேந்தர்க்கு அடைக்கலம் ஆகி" (கம்பராமாயணம்)
மேலைப் புலத் தொடர்பினாலே தகப்பனை 'டடி' என்று அழைக்கும் வழக்காறும் இன்று மிகச் சிறுபான்மையாகக் காணப்படுகின்றது.
தகப்பனைப் 'பப்பா' என அழைக்கும் வழக்காறும் சிறுபான்மையாக உணர்டு பெரும்பாலும் சிங்கப்பூர், மலேசியா
விலே தொழில் புரிந்தவர்களின் பிள்ளைகளே தகப்பனை "பப்பா' என்று அழைப்பதைக் கணடு கொள்ள முடிகின்றது.
பேரன், பேத்தி ஆகியோரை அழைக்கும் சொற்கள் இன்று பெருமளவிற்கு மாற்றம் பெற்றுள்ளன.
பேரன் ----- e9/Z Ž/, s 9/Ziz Iziz III, LITZ L/T, e 9/LóLOLŽLJI7, அப்பையா முதலான சொற்களால் பேரனை அழைக்கும் வழக்காறு இன்றும் நிலவுகின்றது. தகப்பனுடைய தகப்பனை அப்பப்பா என்றும் தாயினுடைய தகப்பனை அம்மப்பா என்றும்
தெணியான் 95

Page 52
அழைப்பதே இன்று பெருவழக்காகும். பொதுவாகத் தகப்பனை ஐயா என்று அழைக்கும் இடங்களிலே பேரனை அப்பா, அப்பு என்று அழைப்பதும் உண்டு. இவ்விரு சொற்களும் இன்றும் வழக்கில் உள. மிகச்சிறுபாண்மையாகப் பேரனைப் 'பாட்டா' என்று அழைக்கும் வழக்கமும் காணப்படுகின்றது.
பேத்தி தாயினுடைய தாயை, ஆச்சி அம்மாச்சி பெத்தாத்தை, பேத்தி முதலான சொற்களால் அழைப்பதே பெரு வழக்காக இருந்து வந்துள்ளது. மிக அண்மைக் காலத்தில் இருந்தே 'அம்மம்மா’ என்ற சொற் பிரயோகம் வழங்கத் தொடங்கி இன்று பெரு வழக்காகிவிட்டது. அம்மாவின் அம்மா அம்மம்மா வழங்குவது அழகாக அமைவது உணர்மையே தாயின் தாயை (பேத்தியை) சிற் சில இடங்களில் பாட்டி என்று அழைக்கும் வழக்காறும் சிறுபாண்மையாக உணடு.
மாமன் தாயினுடைய சகோதரர்களை 'அம்மான் என அழைப்பதே மிக அண்மைக் காலம் வரை வழக்கில் இருந்து வந்தது. இன்று தாயினுடைய சகோதரனை 'மாமா' என அழைப்பதே பெருவழக்காக உள்ளது. தாய்க்குப் பல சகோதரர்கள் இருந்தால், மூத்தம்மான், பெரியம்மாண், சின்னம்மான், ஆசை அம்மான் எனப்பலவாறாக வேறுபடுத்தி அழைக்கும் வழக்காறு இன்று பெரிய மாமா, மூத்தமாமா, கிண்னமாமா, ஆசைமாமா என வழங்குகின்றது.
யாழ்ப்பாணச் சமூகத்திலே தாய்மாமனுக்குச் சிறப்பான முக்கியத்துவம் உண்டு. 'அம்மான் என்ற சொல்லுக்குத் தலைவன் என்றும் பொருள் உணர்டு தேவாரங்களிலும் நாலாயிரத்திவிவிய பிரபந்தத்திலும் அம்மான் என்ற சொல் தலைவன் என்ற பொருளிலே பரவலாக வழங்கிவருகின்றது. உ-ம்:- வீரட்டானத்துறை அம்மானே (தேவாரம்)
இன்று அம்மான் என்ற சொல்வழக்கிழந்து மாமா என்ற சொல்லும் சில இடங்களில் 'அங்கிள்' என்ற ஆங்கிலச் சொல்லுமே வழக்கிலுள்ளன.
to/IZA தகப்பனுடைய சகோதரிகளை, சகோதரி
முறையானவர்களை 'மாமி’ என்று அழைப்பதே இன்றும்
தெணியாண் 96
 

பெருவழக்காக உள்ளது. சில இடங்களில் 'அத்தை' என அழைக்கும் வழக்கமும் உணர்டு பெரும்பாலும் மாமி என்ற சொல் அதிகம் மற்றத்திற்கு உள்ளாகாமையைக் கணடுகொள்ள முடிகின்றது.
மைத்துனன் மைத்துணனை 'மச்சான்' அத்தான் என அழைப்பதே இன்றும் பெரும்பாலும் வழக்கில் உள்ளது. பெரும்பாலான இடங்களில் சின்ன, பெரிய, மூத்த முதலான அடைகளைச் சேர்த்து அத்தான், மச்சரன் என்றும் அழைக்கின்றனர். மூத்த சகோதரியின் கணவனை அத்தான் என்றும், இளைய சகோதரியின் கணவனை "மச்சான்' என்றும் அழைப்பதையும் அவதானிக்கலாம். அத்தான், அத்தார் என மரியாதை விகுதி பெற்று வழங்குவதும் உண்டு.
பெரிய தகப்பன்: தந்தையின் மூத்த சகோதரர்களைப் பெரியப்பு, பெரியப்பா, பெரியையா முதலான சொற்களால் அழைப்பதே வழக்காறாக உள்ளது. மிக அணமைக் காலம்வரை 'பெரியையா’ என்ற சொல்லே வழக்கில் இருந்தது. இன்று 'பெரியப்பா'என்பதே பெருவழக்காக உள்ளது.
பெரியம்ம7 தாயின் மூத்த சகோதரிகளைத் தகப்பனின் மூத்த சகோதரங்களின் மனைவிமாரை /ெ7/ச்சி பெரியத்தை, பெரியம்மா என அழைப்பது வழக்கம். பெரியம்மா என்ற சொல் பெருவழக்காக வழங்கிவந்தபோதும் இன்று பெரியன்ரி (பெரிய அன்ரி) என்ற சொல்லே பெரியம்மா என்ற சொல்லுக்குப் பதிலாகப் பலவிடங்களிலும் வழங்கிவருகிறது.
சிறிய தகப்பன் தகப்பனின் இளைய சகோதரனை, தகப்பனுக்கு இளைய சகோதர முறையானவர்களைச் சித்தப்பா என்று அழைப்பதே இன்று பெருவழக்காக உள்ளது. சிறிது காலத்திற்கு முன்னர் சித்தப்பா என்ற சொல்லுக்குப் பதிலாகக் குஞ்சி அப்பு, குஞ்சையா (குஞ்சி ஐயா), ஆசை ஐயா, ஆசை அப்பு முதலான சொற்களே வழக்கில் இருந்தன, இவை பெரும்பாலும் இன்று வழக்கொழிந்து போனதை அவதானிக்க முடிகின்றது.
தெணியான் 97

Page 53
சிறியதாய்: இன்று தாயின் இளைய சகோதரியை, சகோதரி முறையான இளையவர்களை 'அன்ரி என்று அழைப்பதே பெருவழக்காக உள்ளது. இது ஆங்கிலச் சொல்லின் திரிபு வழக்காகும். குஞ்சி ஆச்சி (குஞ்சாச்சி), குஞ்சி ஆத்தை முதலான சொற்களே வழக்கில் இருந்தன. மிகச் சிறுபான்மையாகக் குஞ்சம்மா, சின்னம்மா, ஆசை அம்மா என அழைக்கும் வழக்காறும் நிலவுகின்றது.
சகோதரர்; மூத்த சகோதரனைப் பெரியணனை, மூத்தணினை, (மூத்தணர்ணா) எனவும் மற்றைய சகோதரர்களைச் சின்னணினை, ஆசைஅணினை 6/607 அழைப்பதும் வழக்கம். அவ்வாறே இளைய சகோதரனைத் தம்பி சின்னத்தம்பி (சின்னாம்பி) என அழைப்பதும் வழக்கம் இன்றும் இவ்வழக்கறு நின்று நிலவுகின்றது.
சில உறவுமுறைச் சொற்களே, சிலரின் இயற் பெயர்களை மறையச் செய்து அவர்களின் இயற்பெயர் போல வழங்குவதும் உணர்டு. உதாரணமாக சின்னத்தம்பி பெரியதம்பி இளையதம்பி குஞ்சுத்தம்பி முதலான சொற்கள் சிலருக்கு உறவுமுறைச் சொற்களாகவும் சிலருக்கு இயற்பெயர்களாகவும் அமைவதுண்டு. இந்த இடத்திலே சுவையானதோர் குறிப்பையும் நினைவு கூர வேண்டியுள்ளது. நல்லூர்ச் சின்னத்தம்பிப் புலவர் என அழைக்கப்படுபவரின் இயற் பெயர் வேறு என்றும் அவர் வீட்டில் இளைய பிள்ளையாக இருந்தமையால் அவரை எல்லோரும் 'சின்னத்தம்பி’ என அழைத்தனர் என்றும், அதுவே காலப்போக்கில் அவரது இயற் பெயர் ஆயிற்று என்றும் முகாந்திரம் திசதாசிவஐயர் தாம்பதிப்பித்த கரவை வேலன் கோவைப் பதிப்புரையிலே குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணப் பிரதேசத்தில் வழங்கிவரும் உறவுமுறைச் சொற்களின் அடிச்சொற்களை (வேர்ச்சொற்களை) ஆராய்வது சுவை பயப்பதாகும். குடும்ப உறவு, சமூகத்தளம் முதலான வற்றையும் இங்கு வழங்கும் உறவுமுறைச் சொற்களினூடு ஓரளவுக்குக் கணடு கொள்ளலாம்.
தமிழில் வழங்கும் திசைச் சொற்களின் செல்வாக் குக்குக் கூறப்படும் காரணிகளை உறவுமுறைச் சொற்
தெணியான் 98
 

களுடனும் இணைத்து நோக்கலாம். காலமாற்றம், சமூகமாற்றம், பண்பாட்டுப் பரிமாற்றம், அகலுலகத் தொடர்பு, கல்வி குடும்ப உறவு விரிவு, முதலான பல்வேறு காரணிகளினால் பழைய உறவுமுறைச் சொற்கள் பல மறைந்து புதிய உறவுமுறைச் சொற்கள் புகுந்துள்ளன.
எமது பிரதேசத்தில் வழங்கிவரும் உறவுமுறைச் சொற்கள் பலவற்றை ஆவணப்படுத்திப் பாதுகாத்த பெருமை தெணியான் முதலான ஆக்க இலக்கியகாரர்களையே சாரும்
"பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினானே'
தெணியாண் 99

Page 54
'A STORY OF ANOUTSIDER
Marakokku (The woden crane), by Theniyan. Review by K.S.Sivakumaran
A Sri Lankan Tamil woman from Jaffna was
said to be domestic, docile and unassertive. But today,
the scene is completely changed. However during the
70s, there were a few women like the heroine of the
novel (Mara kollu - The wooden crane - by Theniyan), vijayaladchumi, who defied male influence and asserted her importance in a family of women as an unmarried head of the family, assuming that role after her father's death. Her father belonged to that class of feudal landlords who became weakened with the onslaught of political and social forces that changed the old order.
The daughter, unwisely failed or refused to understand the changing circumstances. She felt that she could continue to maintain caste and class and also orthodox race/religious distinctions, even though these 'Superiorities have begun to be challenged Worse still, the members of her own family - her sisters themselves had subtly turned against her, liberating themselves from the iron grip of their elder sister.
In other words, this novel is an interesting exposition of the fall of an idealistic woman in her thirties from a dream world, which did not exist outside. She is compared to a wooden crane standing
தெணியான் 100
 

on one foot awaiting a prey. She is proved impotent and unrealistic, not only in her vision, but also in her day-to-day dealings with two of her three sisters, her widowed mother and her niece. She is instrumental in getting her elder sister leave her husband and return to her house hold with the sister's child. But one of her sisters rebels against her by marrying into a family, which is a shade lower than her own vellala caste, This authoritative woman's youngest sister flirts with a toddy-tapper. A subservient man – a distant realative of her mother - who help this woman in managing the temples owned by her, has intimate relationship with a woman of lowcaste. This woman deserted her husband and lives in the house hold as a maid.
The locale is Jaffna and the period is late 40s to early 70s, when the temple entry of the socalled 'depressed class people came into force.
One may even call it an anti-feminist novel,
judging by the novelists point of view, at least in the
description of the 'heroines' actions and depiction of her character. But the overall purpose of the writer
seems to be to debunk the posture of a hardened,
vainglorious person, who happened to be a woman.
Ouit different to the usual formula-type novels (Casteism, capitalism etc), this novel interesting and readable. The structure is skillfully constructed and the style of the writer is literary as far as imaginative use of words is concerned and functional as irrelevent padding of cliches is avoided
தெணியான் 101

Page 55
This novel should be translated into Sinhala too, because it depicts parallels in the society whether it is Tamil or Sinhala. An English translation too could help a great deal in understanding the Tamil mind and the Jaffna society by world at large.
THE SUNDAY TIMES, SUNDAY JUNE O4, 1995
தெணியான் 102
 

மல்லிகை- ஆகஸ்ட் 2002
தெணியானுக்கு மணிவிழா
மல்லிகையின் ஆரம்பகால எழுத்தாளர்களில் ஒருவரும் சிறந்த முற்போக்கு எழுத்தாளருமான தெணியான் மணிவிழா வயதை அடைந்துள்ளார்.
அண்ணாரை இலக்கிய நண்பர்களின் சார்பாக மல்லிகை வழித்துகின்றது.
பல்வேறு நெருக்கடிகள், இலக்கிய முரண்பாடுகள், விமர்சனங்கள் மத்தியிலும் தடம் புரண்டு போகாமல் அவர் தொடர்ந்து முற்போக்கு அணியின் பக்கம் வலுவாகக் காலூன்றி நின்று, தனது இலக்கியப் பங்களிப்பைச் செய்துவருகின்றார்.
இந்த நாட்டு ஆரோக்கியமான இலக்கிய வளர்ச்சியில் பெரிதும் நாட்டம் கொண்டு செயலாற்றி வரும் இவரிடம், இளந்தலைமுறையினர் கற்றுத் தெரியக்கூடிய பல அநுபவ Z/WZL/25/256W 42 - 676/76zW.
தெணியானைப்பாராட்டும் அதே வேளையில் அவரை இலக்கிய உலகில் நின்று நிலைக்க வைக்கச்செய்த முற்போக்கு இலக்கியவாதிகளின் பங்களிப்பையும் இந்தக் கட்டத்தில் நினைவு கூருகின்றோம்.
இன்று இந்த மணிணில் ஓர் அருமையான குழி நிலை நிலவுகின்றது. மக்கள் கலைஞர்கள் மதிக்கப் படுகின்றனர். மக்களால் பாராட்டப்படுகின்றனர்.
தெணியான் 103

Page 56
கலாநிதி துரை மனோகரன்
மணிவிழா நாயகர்
ஈழத்து இலக்கியவுலகில் அடிக்கடி உச்சரிக்கப்படும் பெயர்களுள் ஒன்று, தெணியான் என்பது. கந்தையா நடேசன் என்ற இயற் பெயரைக் கொணட தெணியானின் எழுத்துக்கள் கடந்த நாற்பது ஆணர்டுகளாக இலக்கியத்துறையில் பவனி வந்துள்ளன. நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், வானொலி நாடகங்கள் ஆகிய இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் அவர் ஈடுபட்டுவந்துள்ளார். ஆயினும், நாவல், சிறுகதை ஆகிய துறைகளில் தெணியானின் பங்களிப்புக் குறிப்பிடத்தக்கது. இவற்றோடு பல கட்டுரைகள், நூல் மதிப்பீடுகள் என்பவற்றையும் அவர் எழுதியுள்ளார்.
தெணியானின் இலக்கியப் பங்களிப்புக்கள் தனியாக நோக்கப்படத்தக்கவை. யாழ்ப்பாணத்து வழிவியலின் ஒரு வெட்டுமுகத் தோற்றத்தை அவரது சிறுகதைகளில் தரிசிக்க முடிகிறது. அவரது நாவல் ஒவ்வொன்றும் புதிய புதிய அநுபவங்களை வாசகனுக்குத் தருகின்றது. குறிப்பாக, பொற்சிறையில் வாடும் புனிதர்கள்’ என்ற நாவல், யாழ்ப் பாணத்து பிராமண சமூகத்தின் நிலைப்பாட்டைத் தக்கபடி உணர்த்துகிறது. யாழ்ப்பானப் பிராமண சமூகம் பற்றியதான முதல் நாவல் இது எண்டதும் குறிப்பிடத்தக்கது. இவற்றோடு ஈழத்து இலக்கிய உலகில் சில ஆக்கபூர்வமான இலக்கியச் சச்சைகளுக்கு அவரே காரண கர்த்தராகவும், விளங்கியுள்ளார். தெணியானின் மிகப்பெரிய சாதனையாகக் கொள்ளத்தக்கது, சமுதாயத்தில் சவால்களுக்கு உறுதியுடன் முகம் கொடுத்து வெற்றி பெற்றமையாகும். இது அவரது எழுத்துக்கும் ஆக்கபூர்வமான ஒரு கனதியை ஏற்படுத்துகின்றது என்று கூறலாம. -
மாக்கிய சிந்தனைகளை வரித்துக்கொனட இலக்கிய வாதியான தெணியானின் எழுத்துக்கள் ஈழத்து இலக்கியத்தக்கு வலிவையும், வனப்பையும் சேர்த்து வருகின்றது. 50 ஆணடு
தெணியான் 104
 

கால சமூக மாற்றங்களை சித்தரிக்கும் நாவல் ஒன்று எழுத வேணடும் எண்டது எனது எணணம்' (ஞானம்) எனக் குறிப்பிடும் அவரது அத்தகைய நாவலை வாசகரும், விமர்சகரும் ஆர்வத்தோடு எதிர்பார்கின்றனர். மணிவிழா நாயகனாக விளங்கும் தெணியானின் எழுத்துப்பணி மேன்மேலும் தொடரவேணடுமென வழித்துகின்றோம்.
-ஞானம் ஜனவரி 2003
தெணியான் 105

Page 57
ஞானம் செப்ரொங்பர் 2008
வாழ்த்துகிறோம்
ஈழத்து பிரபல முற்போக்கு எழுத்தாளர் தெணியான் அவர்களின் அகவை 60 நிறைவை முன்னிட்டு, சென்ற இதழில் அவர் எழுதிய "எனது எழுத்துலகம்' கட்டுரையை பிரசுரித்திருந்தோம். தெணியானின் மணிவிழா யாழ்ப்பாணத் திலுள்ள அவரது கிராமத்திலும், பின்னர் கொழும்பிலும் இலக்கியவாதிகளால் சிறப்பாக கொனடாடப்பட்டது.
1964 இல் 'விவோகி' இதழில் வெளிவந்த
"பிணைப்பு” என்ற சிறுகதையுடன் ஆரம்பமாகிய அவரது
எழுத்துப்பணி நூற்றுக்கும் அதிகமான சிறுகதைகள், 5 நாவல்கள், 3 குறுநாவல்கள், கட்டுரைகள், கவிதைகள், நூல் மதிப்பீடுகள், வானொலி நாடகங்கள், தொகுப்பு நூல்களென விரிந்துள்ளது. 1994 இல் இவரது நாவலான "மரக்கொக்கு' இலங்கை அரசின் சாகித்திய மணடல பரிசினை பெற்றது. யாழ்ப்பாணத்து அடிநிலை மக்களின்-ஒடுக்கப்பட்ட மக்களை இலக்கியமாக்கி அம்மக்களது துயரங்களுக்கு (A476/ கிட்டவேண்டுமென்ற நோக்குடன் இலக்கியம் படைக்கும் தெணியான், முற்போக்கு அணியில் வலுவாக காலூன்றி 4 தசாப்தங்களாக இலக்கிய பணி புரிந்து வருபவர்.
மணி விழாக்காணும் தெணியான் பல்லாண்டு வாழ்க! அவரது இலக்கியப் பணி சிறந்தோங்குக என ஞானம் வழித்துகிறது.
தெணியான் 106

தெணியான்
எனது எழுத்தலகம்
அப்பொழுது பணடாரவளை அட்டம்பிட்டிய மகா வித்தியாலயத்தில் நான் ஆசிரியராகக் கடமையாற்றிக் கொண்டிருந்தேன். 1964 ஆகளிப்ட் இரணடாவது தவணை விடுமுறைக்காகப் பாடசாலை மூடப்பட்டயின் நான் வீடு வந்து சேர்ந்த அன்று காலை, அந்தமாத 'விவேகி தபாலில் வந்து எனது கையில் கிடைத்தது. மிகுந்த ஆவலுடன் அந்த விவே கியை விரித்துப் பார்த்தேன். என்ன ஆச்சரியம்/ என் கனர்களையே என்னால் நம்பமுடியவில்லை. எனது முதற் சிறுகதை 'பிணைப்பு அந்த இதழிற் பிரசுரமாகி இருந்தது.
அச்சில் பார்த்த எனது முதற் சிறுகதையை எத்தனை தடவைகள் நான் படித்திருப்பேன் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. எந்தவிதச் சலிப்புமில்லாது நான் மீண்டும் மீணடும் படித்து மகிழ்ந்த ஓர் இலக்கியம் எது என்றால் அது எனது முதற் சிறுகதைதான்.
அட்டம்பிட்டியில் நான் தங்கி இருந்த சீலைக்கடையின் மேல்மாடியில், அமர்ந்திருந்து எழுதுவதற்கு மேசை கதிரை வசதிதானும் இல்லாத நிலையில், கட்டிவில் அமர்ந்து மடிமீது தலையணையை வைத்து, அதன்மேல் பயில் ஒன்றைவைத்து நான் எழுதிய முதற் சிறுகதைதான் இந்தப் பிணைப்பு. தமிழ் இலக்கியத்துடன் எனக்கு நீங்காத நிரந்தரமான 'பிணைப்பு' உருவாக்கிய படைப்பு அது. எனக்குள்ளே ஒரு சபதத்துடன் தான் ஆசிரியர் கலாசாலையிலிருந்து வெளியே வந்தேன். வெளியே வந்த அதே ஆணடு (1964) எழுதுவதற்கு ஆரம்பித்தேன்.
எனது முதற்சிறுகதையை எழுதுவதற்கு முன்னரும் நான் கதை எழுதியிருக்கின்றேன்.
நான் பிறந்த பொலிகனடிக் கிராமத்தில் கடற்கரைப் பிரதேசத்தை அணடி ஒரு பாட்டி இருந்தாள்.
தெணியான் 107

Page 58
சில தினங்களில் காலைப்பொழுது புலர்ந்து மாலையில் பொழுது கருகி மையிருள் குழும்வரை அந்தப் பாட்டி ஓயாமல் ஒப்பாரி சொல்லி அழுது கொண்டிருப்பாள். அவளுக்கு கணவன் இல்லை. ஆணபிள்ளைகள் இருவரும் அவளோடு இல்லை. எனது தந்தையாரிடம் அவள் கதையைக் கேட்டறிந்த நான், அவள் கணினிரினால் உள்ளம் பெரிதும் பாதிக்கப் பட்டேன். அப்பொழுது பத்துவயது நிரம்பிய என்னால் அவளுக்கு எப்படி உதவி செய்யமுடியும்? இறுதியில் அவள் கதையை எழுதுவோம் எனத்தீர்மானித்து எழுதி முடித்தேன். அந்தப் பாட்டியின் அச்சேறாக் கதைதான உணர்மையில் என் முதற்கதை என்று சொல்லலாம்.
எனது எழுத்து முதன் முதலில் அச்சேறிய வேறுகதை ஒன்றுமுண்டு நான் எட்டாவது வகுப்புப் படித்துக் கொணடிருந்த காலத்தில் 'தினகரன் வாசகர் கடிதப் பகுதியில் எனது கடிதமொன்று பிரசுரமாகி எனது பெயரை அச்சேற்றி வைத்தது.
சிரேஷ்ட பாடசாலைத் தராதரப் பத்திரப் பரீட்சை எழுதிய பின் (SSC) ஓய்வாக இருந்த சமயம் சிறுகதைகள் சில எழுதினேன். பின்னர் அக்கதைகள் என் கவனத்துக்கு வராமல் அப்படியே விடுபட்டுப் போய்விட்டன.
அக்காலத்தில் அனனாத்துரை மீது இருந்து வந்த அதீத பற்றுதலினால் 'அணனாதாசன் என ஒரு புனைபெயரை எனக்கு நானே குட்டிக்கொணர்டேன். கருணாநிதியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்துகொண்டிருந்த 'முத்தாரம்' இலக்கியச் சஞ்சிகை என்னைப் பெரிதும் கவர்ந்தது. ஒவியர் மாதவனின் கருத்தும் கவர்ச்சியுமுள்ள ஓவியங்களை அட்டைப்படமாகத் தாங்கி வெளிவந்த அச்சஞ்சிகை பற்றி முறையான மதிப்பீடு இன்னும் செய்யப்படவில்லை எண்டது எனது கருத்து.
இக்கால கட்டத்தில், ஒருநாள் மாலைவேளை பருத்தித் அறை சென்ற சமயம் புத்தகக்கடை ஒன்றில் சுந்தரம் பிள்ளையின் 'மனோன்மணியம்’ நாடக நூல் இருக்கக்கணடு அதனை உடனே வாங்கிக் கொனர்டேன். பின்னர் பளம் ஏறி
தெணியான் 108
 

வீடுவந்து சேருவதற்குத் தேவையான பணம் இல்லாத காரணத்தினால் புத்தகத்தைக் கையில் தூக்கிக் கொண்டு மாலை வேளை ஐந்து கிலோமீற்றர் தூரம் நடந்தே வந்தேன்.
ஒரு தினம் சொல்லின் செல்வர் செஇராசதுரை எங்கள் கல்லூரிக்கு வருகை தந்து பாரதிதாசன் பாடலைச் சுவைபட விளக்கி இலக்கியச் சொற்பொழிவு ஒன்றினைச் சிறப்பாக ஆற்றினார். மறுநாள் இருபத்தைந்து கிலோமீற்றர் தூரம் பிரயாணம் செய்து யாழ்ப்பாணம் சென்று பூபாலசிங்கம் புத்தக சாலையில் பாரதிதாசன் கவிதைத்தொகுதி ஒன்றினை வாங்கிக் கொணர்டேன்.
பருத்தித்துறைப் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.கந்தையா அவர்களின் வருகையுடன் கருத்து நிலையில் எனக்குள்ளே மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன. அத்துடன் அகில இலங்கைச் சிறுபாண்மைத் தமிழர் மகாசபையின் தொடர்பு, இடதுசாரிகளின் நெருக்கமான உறவு என்பனவும் என்னைச் சரியான வழியில் திசை திருப்பிவிட்டன. சைவமும் காந்தியமுந்தான் சமூகவிடுதலைக்கான ஒரே மார்க்கமென்று கருதிக் கொணடிருந்த தேவரையாளிச் சமூக முன்னோடிகளின் வாரிசாக வளர்ந்து வந்தவன் நான். அவர்களது கருத்து நிலையில் இருந்து முற்றாக விடுபட்டு நான் மார்க்சிசக் கொள்கையைப் பின்பற்ற ஆரம்பித்தேன்.
அதன் பின்னர் நான் விரும்பிப் படிக்கும் நூல்களிலும் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. சிறந்த இலக்கியங்கள் என்று குறிப்பிட்டுச் சொல்லப்பட்டவைகளைத் தேடித்தேடி வாசித்தேன்.
பெரியவர்களின் ஆதரவும் ஆகியும் ஓர் இளம் எழுத்தா ளனை உற்சாகப்படுத்தும் என்பதை அனுபவித்து உணர்ந் தவன் நான். 'கலைச் செல்வி'க்கு என்று நான் அனுப்பி வைத்த முதற் சிறுகதை கிடைத்தும் அதன் ஆசிரியர் 'சிற்பி அவர்கள் பாராட்டுத் தெரிவித்து அனுப்பிய அஞ்சல் அட்டை என்னை உற்சாகப்படுத்தியது. சிந்தாமணி ஆசிரியர் இராஜ அரிமரத்தினம் அவர்கள் தமது கைப்படப் பாராட்டிக் கடிதம் ஒன்றினை எழுதியதுடன் தொடர்ந்து எனது படைப்புக்களைப் பிரசுரித்து வளர்ச்சிக்கு வழிகோலினார். 'வீரகேசரி இராஜகோபால் அவர்களையும் நான் மறந்து விடமுடியாது.
தெணியான் 109

Page 59
1968ம் ஆண்டு ஒரு தினம் பணடாரவளையிலிந்து புறப்பட்டு வந்து, கணடியில் பாடசாலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பாரதி பற்றிப் பேசினேன். மறுநாட் காலை கனடியிலிருந்து புறப்பட்டு மாத்தளை சென்று கவுடிப்பல வித்தியாலயத் தமிழ் விழாவில் சிறுகதை இலக்கியம் பற்றிப் பேசினேன். அந்த விழாவில் புலவர்மணி பெரியதம்பிப் பிள்ளையுடன் இரா.சிவலிங்கம், பணடிதர் தினகரிப்பிள்ளை ஆகியோரும் கலந்துகொணர்டனர். விழா ஏற்பாட்டாளர்கள் அளித்த மதிய உணவின்போது புலவர்மணி அவர்களுக்கு அருகே நான் அமர்ந்திருந்தேன். அப்போது புலவர்மணி அவர்கள் தமது கரத்தினால் எனது தோளை தடவித்தடவி 'தம்பி எங்களுடைய காலம் முடியுது இனி உங்களுடைய കെമിസ്ക് കഥീമ. കഥാമ ബക്സ, ബഞ്മ ബ് மெல்லக் கூறினார். ജഗ്ര தந்தையைப் போல புலவர்மணி அவர்கள் என்னை மெல்லத் தடவியதுடன், அவர் கூறிய வார்த்தைகள் என்றும் நல்லரசியாகவே இன்றும் நான் நினைவு கூருகின்றேன்.
மாத்தளையில் நடைபெற்ற இந்த விழாவிலே முன்னரே என்னுடன் கடிதத்தொடர்ப்பு வைத்திருந்த எனது நண்பர் மலரன்பன் அவர்களைச் சந்தித்தேன்.
விவேகியில் ஆரம்பித்து கலைவாணி கலைச்செல்வி மல்லிகை, மலர், சிந்தாமணி வீரகேசரி, ஈழநாடு, செய்தி தாமரை, அஞ்சலி புதுயுகம், தினகரன், ஈழமுரசு, முரசொலி நான்காவது பரிமானம் ஆகிய சஞ்சிகைகள், பத்திரிகைகளில் எல்லாம் இதுவரை எழுதி வந்திருக்கின்றேன். நூற்றுக்கும் அதிகமான சிறுகதைகள், ஐந்து நாவல்கள், மூன்று குறுநாவல்கள், பல கட்டுரைகள், கவிதைகள், நூல்மதிப்பீடுகள், ஒரு சில வானொலி நாடகங்கள் என்பவை எனது ஆக்கங்களாக இதுவரை வெளிவந்திருக்கின்றன. 'டொமினிக் ஜீவாவின் ஈழத்திலிருந்து ஒரு இலக்கியக் குரலினைத்' தொகுத்ததுடன் ஜீவாவின் மணி விழாவின்போது வெளியிடப் பட்ட 'மல்லிகை ஜீவா எனும் நூலின் தொகுப்பாசிரியர்களில் ஒருவராகவும் செயற்பட்டிருக்கின்றேன். எங்கள் கல்லூரி சஞ்சிகை 'தேவரையாளி இந்து வின் ஆசிரியராக இருதடவை
தெனியான் 10
 

இருந்து அதனை வெளியிட்டிருக்கிறேன். ஈழத்து இலக்கிய வரலாற்றில் குறிப்பிட்டுச் சொல்லத்தகுந்த இரணடு விவாதங் களை மல்லிகையில் ஆரம்பித்து பின்னர் முடித்து வைத்திருக்கின்றேன். அந்த விவாதங்களுள் ஒன்று பின்னர் பல்கலைக்கழக மாணவி ஒருவரின் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டு பின்பு அாைகவும் வெளிவந்திருக்கின்றது.
எனது நூல்களில் ஒன்றான பொற்சிறையில் வாடும்புனிதர்கர்’ ஈழத்து பிராமணர்கள் பற்றி வெளிவந்த முதல் நாவல் என்ற பெருமைக்குரியது. ஆனால் அந்த நாவல் பத்திரிகைகளிர் வெளியாகிக்கொணடிருந்த ്ബബി) பத்திரிகை ஆசிரியரால் அதன் ஒரு அத்தியாயம் நீக்கப்பட்டது எண்டது பலருக்கு தெரியவராத മഗ്ര சங்கதி
/b/ഞ് 7ேழுதுவதമിത്ര ஆரம்பித்தபோது தெ 600/7//76of 670ിന്ന ബ/% எனது முதற் சிறுகதையை எழுதினேன்.
பலருக்குத் தெரியது. எனது பாடசாலை மாணவர்களுள் பெரும்பாலானோர் அதை அறியமாட்டார்கள். கவிதைகளை
மிருத்தன் 9 9 67രിമ ബ/%/ எழுதி வந்திருக்கின்றேன். இன்னும் சில 4னைபெயர்கள் எனக்குனடு. ஒரு வருட காலம் முரசொலியில் வெளிவந்த சிறுகதைகளை A/5/7ZO/5/6 'அம்பலத்தரசன்' எனும் புனைபெயரிலேயே மதிப்பீடு செய்து வந்திருக்கின்றேன்.
," எழுதுவதற்கு ஆரம்பித்து இரணடாவது ஆண்டில் யாழ் இளைஞர் இலக்கிய மன்றம் நடத்திய போட்டியில் 'பெணபாவை' எனும் எனது சிறுகதை முதற் //loz பெற்றுக்கொண்டஅது. அதன் பின்னர் நடைபெற்ற ஓர் இக்கிய போட்டியில் பரிசுபெறத் தவறிய எல்லாம் மனதான் (,ഥേ/ബ/ /g எனும் சிறுகதை மல்லிகையில் பிரசுரமாகியது. அக்கதை பேராசி/ கா.சிவத்தம்பி அவர்களின் பாராட்டைப் பெற்றது. போட்டிக்கு அனுப்பி வைத்து பரிசு பெறத் தவறிய 4/60 zŻy என்பதை பேராசிரியரு க்கு நான் எடுத்துச் சொன்னேன். அப்பொழுது சில உ)ை எடுத்து விளக்கி போட்டிகளுக்கு இனிமேல் எழுத வேணடாம் என பேராசிரியர் ஆலோசனை கூறினார். அதனை ஏற்று போட்டிகளுக்கு

Page 60
எழுதுவதை தவிர்த்து வந்திருக்கிறேன். ஒரு காலத்தில் பட்டிமன்றப் பேச்சாளனாக இருந்திருக்கின்றேன். அதனையும் பேராசிரியரும் டானியலும் தடுத்தார்கள். பல வருடங்களின் பின்னர் எனது மகளின் வேணடுகோளுக்கு இணங்கி சுபமங்களா நடத்திய குறுநாவல்ப் போட்டியில் எனது முடிவை மாற்றிக் கலந்து கொணர்டேன். தகவம் மாதந் தோறும் சிறந்த சிறுகதைகளாக தேர்ந்து பரிசளிக்கும் திட்டத்தை ஆரம்பித்தபோது எனது குருகுலம் சிறுகதைக்கே முதன் முதலாக பரிசில் வழங்கியது. அதன் பின்னரும் தகவம் பரிசிலை எனது சிறுகதைகள் பல பெற்றுக்கொண்டன. 1994 இல் "மரக்கொக்கு நாவல் அரசின் சாகித்திய மணடலப் பரிசு, வடக்குக்கிழக்கு மாகாண அரசின் பரிசு, யாழ் இலக்கிய வட்டத்தின் பரிசு என்பவற்றைப் பெற்றுக்கொணர்டது. 1999ம் ஆனடுக்கான வடக்குக்கிழக்கு மாகாண அமைச்சின் சிறந்த
நாவலுக்குரிய பரிசு 'காத்திருப்பு’ நாவலுக்கு கிடைத்தது.
எனது எழுத்துலக வாழ்வுடன் சம்பந்தப்பட்டவர்கள் டானியல், ஜீவா, பேராசிரியர் கா.சிவத்தம்பி இந்த மூவரும் என்னை நேசித்தவர்கள். யாழ்ப்பாணத்து மல்லிகை எனது எழுத்துக்களுக்குரிய களமாக அக்காலத்தில் அமைந்திருந்தது. இதுவரை வெளிவந்திருக்கும் எனது சிறுகதைகளில் ஐம்பது வீதமானவை மல்லிகையில் வெளிவந்தவைதான். நான் யாழ்ப்பாணத்து மல்லிகையை நன்றாகப் பயன்படுத்திக் கொணர்டேன். மல்லிகை என்னைப் பயன்படுத்திக் கொணடது. நான் மல்லிகை எழுத்தாளன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகின்றேன். 'மல்லிகை எனது படத்தினை அட்டையாகப் பொறித்து என்னைக் கெளரவித்தது.
அடிப்படையில் எனது எழுத்துக்களுக்கு ஒரு நோக்க முனடு. நான் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சார்ந்தவன். அந்தச் சங்கத்தின் யாழ்கிளைச் செயலாளராக இருந்தவன். சமூக மாற்றத்திற்கான உந்து சக்திகளாக இலக்கியம் அமையவேண்டுமெனக் கருதுகின்றவன். கடும் பசியோடு இருப்பவன் ருசியைப் பற்றிப் பார்ப்பதில்லை. பசிவேகம் தணிந்த பின்னரே ருசியை எதிர்பார்ப்பான். ஈழத்துத் தமிழ் இலக்கியங்கள் ருசியுடன் படைக்கப்பட வேணடிய காலம்
தெணியான் 12

இது. ஆனால் ருசிமாத்திரம் உணவாகி விடமாட்டாது எண்ப தையும் கவனத்தில் கொள்ளுதல் வேணடும்.
இலக்கிய நண்பர்களுடன் தொடர்ந்து கடிதத் தொடர் புகள் வைத்துக்கொள்ளாது விடுவதால் இலக்கிய நணபர்கள் இல்லையென்றாகிவிடாது. இலக்கிய நனiபர்கள் LAGUIf எனக்குனர்டு
இந்தச் சமூகத்தில் ஒருவனாக வழிந்து
கொண்டிருக்கும் எனக்கு எனது எழுத்துக்களுக்கான கரு இந்தச் சமூகத்தில் இருந்தே கிடைக்கின்றது. அதுன்பப்படும் மக்களின் வழிவின் கனணிரை இலக்கியமாக்க வேணடும். அந்தத் துயரங்களுக்கு விடிவுகிட்ட வேணடும் என்று எதிர்பார்க்கின்றேன். அதனால் யாழ்ப்பானத்து அடிமை நிலை மக்களின் ஒடுக்கப்பட்ட மக்களின் வழிவின் அவலங்களை இலக்கியமாக்குகின்றேன். இவர்களது துயரங்களைப்பற்றி எழுதுவது ஒன்றுதான் எனது எழுத்தின் ஒரே நோக்கமல்ல, துயரப்படும் மக்கள் எவராக இருப்பினும் அவர்கள் பக்கம் சார்ந்து நிற்பவன் நான். ஈழத்துப் பிராமணர்கள் கண்டு வேதனையுற்று அவர்கள் பற்றியும் எழுதியிருப்பவன் நான்.
ஒரு படைப்பிலக்கியத்தை நான் உருவாக்க முன்னர் ஏன் எழுதப் போகின்றேன்? எதனை எழுதப் போகின்றேன்? எப்படி எழுதப் போகின்றேன்? என்ற வினாக்களுக்கு என்னுள்ளே விடைகணட பின்னரே எழுத ஆரம்பிக்கின்றேன். இந்த வினாக் களுக்கான விடைகளைக் காணபதன் மூலம் இலக்கு, உள்ள டக்கம், உருவம் என்பவற்றைத் தெளிவுபடுத்திக் கொள்கின் றேன். இதுவே ஒரு சிருஷ்டியை நான் செய்யும்போது முதலில் எனக்குள் செய்து முடிக்கும் ஆரம்பப்பணி
இந்த ஆகளிப்ட் மாதம் ஆறாந்திகதி எனது பணியில் இருந்து நான் ஓய்வு பெறுகின்றேன். ஓய்வு காலத்தில் நிறைய வாசிக்கவும், சிலவற்றை எழுதவும் திட்டமிட்டிருக்கின்றேன். ஐம்பதாண்டு காலச் சமூக மாற்றங்களைச் சித்திரிக்கும் நாவல் ஒன்று எழுத வேணடும் என்பது எனது எனணம் இலக்கிய முயற்சிகளோடு எனது பேரப்பிள்ளைகளுடன் ஓய்வுகாலம் பயனுள்ள இனிமையைத்தர வேண்டுமென நான் விரும்பு கின்றேன்.
-ஞானம் - ஆகஸ்ட் 2002
தெணியான் 13

Page 61
தெணியான்
பெயர்:- கந்தையா நடேசு
பிறந்த திகதி:- 06-08-1942.
பிறந்த இடம்:- தெணியகம், பொலிகண்டி, கொற்றாவத்தை.
தந்தையார்:- நா.கந்தையா.
தாயார்:- க.சின்னம்மா-வயல், வடஅல்வை.
உடன் பிறந்தவர்கள்:-
தமையனார் - க.சிவபாக்கியன் (கணேசன்), தம்பி - கநவரத்தினம் (எழுத்தாளர் கநவம்), தங்கைகள் - பாக்கியவதி சரவணமுத்து, மலர் சிவராசா, சந்திரலேகா கந்தசாமி
கல்விச் சாலைகள்:- யா/தேவரையாளி இந்துக் கல்லூரி
ய7கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரி யா/கொழும்புத்துறை ஆசிரியர் கலாசாலை,
215/0600/15:- 22-05-1968.
மனைவி- நமரகதம்,
பிள்ளைகள் - உமா ஞானசீலன், நஜானகி நஆதவன்,
நதுஷ்யந்தன் மருமக்கள் - க.ஞானசீலன், துஷ்யந்தி ஆதவன்.
பேரக்குழந்தைகள்:- ஞா.கார்த்திகேயன், ஆ.ஆதித்தியா,
ஞா. ஆரணி
வகித்த பதவிகள்:- 1. ஆசிரியர், பகுதித்தலைவர், கனிஷ்ட
அதிபர், உப அதிபர். 2 தொலைக்கல்விப் போதனாசிரியர்
தெணியான் 114

கடமையாற்றிய இடங்கள்:-
1 ய/தேவரையாளி இந்துக் கல்லூரி
2 /அட்டம்பிட்டிய மகா வித்தியாலயம்,
1/600ft (7.762/620.67
3. //கரவெட்டி மரீ நாரதவித்தியாலயம் 4 ய7அல்வாய் றுரீலங்கா வித்தியாலயம் சி. ய7தேவரையாளி இந்துக் கல்லூரி
சொந்த முகவரி - கலைமருவி கரணவாய் o/-iö5,
கொற்றாவத்தை, േ வல்வெட்டித்துறை, முதற் படைப்பு:- பிணைப்பு (சிறுகதை) "விவேகி 1964
ஆகளிப்ட் இதுவரை வெளிவந்த படைப்புக்கள்:-
4 சிறுகதைகள்- 15, நாவல்கள் - 06
குறுநாவல்கள் - 03, கட்டுரைகள், விமர்சனங்கள், கவிதைகள், விவாதங்கள், வானொலி நாடகங்கள் பயன்படுத்திய பெயர்கள் - நிருத்தன், அம்பலத்தரசன்,
கந்தையா நடேசன், ஐயனார், கந, கூத்தன் வெளிவந்த நூல்கள் -
/ விடிவை நோக்கி (நாவல்) வீரகேசரி வெளியீடு-1973 2. கழுகுகள் (நாவல்) தமிழ்நாடு, நர்மதா வெளியீடு-1981 3. சொத்து (சிறுகதைகள்) தமிழ்நாடு என்.சிபிஎச்
வெளியீடு-1994 4 பொற்சிறையில் வாடும் புனிதர்கள் (நாவல்) முரசொலி
வெளியீடு-1989 5. மரக்கொக்கு (நாவல்) கனடா, நான்காவது பரிமாணம்
வெளியீடு-1994 இலங்கைச் சாஹித்திய மணடலப் பரிசு, வடக்குகிழக்கு மகாண அமைச்சுப் பரிசு, யாழ் இலக்கிய வட்டப் பரிசு. 6 மாத்துவேட்டி (சிறுகதைகள்) மல்லிகைப்பந்தல்
வெளியீடு-1996
தெணியான் 15

Page 62
7 காத்திருப்பு (நாவல்) பூபாலசிங்கம் வெளியீடு-1999
வடக்கு/கிழக்கு மாகாண அமைச்சுப் பரிசு 8. கானலில் மான் (நாவல்) பூபாலசிங்கம் வெளியீடு-2002
வெளிவர இருக்கும் நூல்:-
1. சிதைவுகள் (இரு குறு நாவல்கள்)
சுபமங்கள7 தேசிய கலை இலக்கியப்பேரவை பரிசு 2. மனசோடு பேசு (சிறுகதைகள்)
தொகுத்த நூல்கள்:
1. டொமினிக் ஜீவாவின் ஈழத்தில் இருந்து ஓர்
இலக்கியக்குரல் 2 மல்லிகைஜிவா (இணையாசிரியர்) 3. தேவரையாளி இந்து (இரணடு வெளியீடுகள்)
தெணியான் 1 16
 

மூன்றாவது மனிதன் சஞ்சிகையின் 2003 பெப்ரவரிமார்ச் மாத இதழில் வெளிவந்த தெணியானின் பேட்டியை இம் மலரில் இணைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
“தேசிய இனப்பிரச்சனையினுள்ளே சாதியம் மறைந்து போய்விட்டதாக சாதியத்தை வர்ைக்க விரும்புகின்றவர்களே சொல்லிக்கொண்டிருக்கின்றனர்”
=தெணியாள்
1960களில் இருந்து எழுதிவரும் தெணியானி (கந்தையா நடேசன்) முற்போக்கு எழுத்தாளர்களில் மிகவும் கவனிப்புக் குரியவர். சமூக ஒடுக்குமுறைகளை இலக்கியமாக்குவதன் மூலம் ஒரு படைப்பாளியாக கணிப்புப்பெற்றவர். இவரது படைப்புக்களில் மிகப் பெரும்பாலானவை அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக் குரலாகவே உள்ளன. மேலும் குடும்ப உறவுகளை மென்போக்கான நிலையில் எழுதக்கூடிய ஒருவராயுமு 6,767/7/f.
தெணியான் ஒரு படைப்பாளியாக, தீவிர இடதுசாரியாக மார்க்சிய சித்தாந்தத்தின் வழிநின்றவர் என்பதோடு, முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் முக்கிய பங்கினை வகித்து வந்தவர். அகில இலங்கை சிறுபான்மைத் தமிழர் மகா சபையினருடனும், இடதுசாரிகளுடனும் மிக நெருக்கமான தொடர்பினைக் கொண்டிருந்தவர். 1960களில் முக்கியமாக பேசப்பட்ட 'ஆலயப் பிரவேசத்தில்' முக்கிய பங்கு வகித்தவர். தமிழ் ஆசிரியராக கடமையாற்றி வந்த இவர் கடந்த ஆகளிப்ட் மாதம் தமது பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
தெணியான் 7

Page 63
ஈழத்து இலக்கிய உலகுக்கு தெணியானின் பங்களிப்பு புறக்கணிக்க முடியாததாகும். மரக்கொக்கு நாவல், உளவியல் சிக்கல்களை முதன்மைப்பபடுத்துவதாய் வித்தியாசமான படைப்பாகவே மிளிர்கிறது. இது இலங்கை அரசின் சாகித்திய மணடல பரிசினையும் பெற்றுள்ளது. அத்துடன் 'காத்திருப்பு' எனும் நாவல் பாலியல், மற்றும் சுரணர்டல் ரீதியான பிரச்சினைகளை எடுத்துக்கூறும் வித்தியாசமான படைப்பாகும்.
சொத்து' (சிறுகதைத் தொகுதி) மாத்துவேட்டி (சிறுகதைத் தொகுதி), கழுகுகள் (நாவல்) விடிவை நோக்கி (நாவல்) பொற்சிறையில் வாழும் புனிதர்கள் (நாவல்) என்பன கவனிப்புக்குரிய இவரது ஏனைய படைப்புக்களாகும். இவரது படைப்புகளும் கருத்துக்களும் எப்பொழுதும் சர்ச்சைக்குரியனவாக இருந்து வருவதால் அதிக கவனம் பெற்ற படைப்பாளியாக உள்ளார்.
சந்திப்பு : இராகவன் உங்களுடைய படைப்புலக பிரவேசம் அதற்கான உந்துதல் பற்றி கூறுங்கள்?
எனது முதலாவது சிறுகதை 1964ம் வருடம் விவேகியில் வெளிவந்தது. அது 'பிணைப்பு’ எனும் சிறுகதையாகும். இதற்கு முன்னரும் மாணவ பருவத்தில் கதைகள் சிலவற்றை எழுதிப் பார்த்திருக்கின்றேன். அவையெல்லாம் அச்சேறாத கதைகளாகும். எனது எழுத்துலகப் பிரவேசத்திற்கு என்னிடத்திலிருந்த வாசிப்பு பழக்கமும் எனக்கு நெஞ்சில் பட்ட காயங்களும்தான் காரணமாக அமைந்தன. நான் கொழும்புத்துறை ஆசிரியர் கலாசாலையில் படித்துக்கொண்டி ருந்தபோது டொமினிக் ஜீவாவிற்கு அவரது 'தனணிரும் கணணிரும்’ சிறுகதைத் தொகுதிக்கான இலங்கை அரசின் சாகித்திய மணடலப் பரிசு கிடைத்தது. அதைக் கனடு மனம் பொறுக்க முடியாத ஆசிரிய கலாசாலை தமிழ் பண்டிதர் 'நாவிதனுக்கு இவ்வாணர்டின் சாகித்திய மணடலப் பரிசு கிடைத்திருக்கின்ற'தென வகுப்பில் நக்கலாகச் சொன்னார்/ இதே பணடிதர் அல்வாயூர் கவிஞர் செல்லையாவை ஒரு தடவை சந்தித்த பின்னர் என்னிடத்தில் தனக்குச் சொந்தக்காரன்
தெணியான் 118

என்று சொன்னதாகவும் சொன்னார். அதன் பின்னர் பணடிதருக்கு எண்மீதுள்ள பார்வையில் பாரிய மாற்றம் எற்பட்டது. நான் நல்லது எதைச் செய்தாலும் பண்டிதருக்கு அதன் பின் உவப்பாக இருப்பதில்லை. எதிலும் குறை கணடுகொண்டே இருப்பார் ஒரு சமயம் வகுப்பில் கவிதை எழுதுவதற்கு தந்தார். எங்களுடைய மாணவ தலைவரின் வேணடுகோளுக்கு செவிசாய்த்து அவனுக்கும் ஒரு கவிதை எழுதிக் கொடுத்தேன். அவனுடைய கவிதையை சிலாகித்து பகிரங்கமாகப் பாராட்டிய பணடிதர் என்னுடைய கவிதையை சத்திர சிகிச்சை செய்து என்னை கிணர்டல் பணிணினார்.
சாதியின் பெயரால் இவ்வாறு எனக்கிழைக்கப்பட்ட கொடுமைகள் பல ஆசிரிய கலாசலையிலிருந்து வருடா வருடம் வெளியிடப்படும் கலாசலை சஞ்சிகைக்கு நான் ஆசிரியனாக வராதவாறு மிகுந்த முயற்சியெடுத்து என்னைத் தடுத்தார்கள். ஆயினும் கலாசாலை சஞ்சிகையில் எழுதுமாறு அவர்களும் வேறு பலரும் என்னை வற்புறுத்திக் கேட்டனர். நான் எழுத மறுத்ததோடு அன்றே என்னுடைய உள்ளத்தில் 'பேனா பிடிப்பேன்’ என்ற சபதத்தை எடுத்துக் கொணர்டேன். கலாசாலையை விட்டு வெளியேறுகின்ற போது 'நான் வெளியில் போய் எழுதுகின்றேன்' என்று சொல்லிவிட்டே வந்தேன். பயிற்சி முடிந்து வெளியேறி பணடாரவளை அட்டம்பிட்டிய மகாவித்தியாலயத்திற்கு ஆசிரியனாக அனுப்பப்பட்டேன். எனக்கு ஒரு வருடம் மூத்த ஆசிரிய கலாசாலை மாணவனாக இருந்த எழுத்தாளர் தாபிசுப்பிரமணியம் அவர்கள் பணடாரவளை சென் மேரிளம் கல்லூாயில் அப்போது (1964) ஆசிரியராக இருந்தார். அவர் பத்திரிகைகளுக்கு எழுதுமாறு தூண்டி அடிக்கடி கடிதம் எழுதிக்கொணடிருந்தார். அவர் தந்த உற்சாகத்திலேயே முதல் கதையை எழுதினேன்.
"தெணியனணி” என்ற பெயருக்கான காரணம் எண்ன?
எனது குடும்பப் பெயரே தெணியான. எனது பாட்டனாரினது பாட்டனாருடைய பெயர் மடந்தையன். இவர் பருத்தித்துறை காங்கேசன்துறையில் 67னது 26717/7607 பொலிகனடியில் தற்போது மீன் விற்கும் இடமான ஆலடி
தெணியான் 19

Page 64
என்று சொல்லப்படும் இடத்திற்கெதிரே இன்றைய வீதிக்கு தெற்கே 250,300 ஆண்டுகளுக்கு முன் குடியிருந்தவர். அவர் வாழ்ந்த இடத்தில் இன்றும் 14 பரப்பு நிலம் அவரது சந்ததியாராகிய எங்களுக்கு உரிமையுடையதாக ஆவணங்கள் சொல்லுகின்றன. அந்த நிலத்தில் எனது மூதாதை நிறுவிய மடம் இன்று புனர் நிருமானம் செய்யப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் வாழும் முதியவர்களால் இன்றும் 'பள்ளண் மடம்' என பெயர் குட்டி அழைக்கப்படுகின்றது. அந்த நிலத்தின் பெயர்தான் 'நீத்துவான் தெணி கடற்கரையோரமாக பிரதான வீதியின் அருகே தனது வீட்டின் அருகாக மடமொன்றையும் அமைத்து வாழ்ந்து வந்த எனது மூதாதை, சமூக நிர்ப்பந்தம் காரணமாக அந்த இடத்தை விட்டு நீங்கி தற்போது எனது குடும்பம் வாழ்கின்ற இடத்தில் வந்து குடியேறினர். நீத்துவான் தெணியிலிருந்து வந்து குடியேறியமையால் அவர்கள் வழி விடம் தெணி என அழைக்கப்பட்டது. எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தெணியார் என இன்றும் அழைக்கப்படுகிறார்கள். இலக்கிய உலகிற்கு தெணியான் என நான் இப்படித்தான் அறிமுகமானேன்.
இடதுசுவி எழுத்தாளர்களுக்குமி உவிகளுக்கும் இடையின தொடர்புகள் புற்றி குறியிட முடியுமா?
ஆரம்ப காலத்தில் நான் திராவிட முன்னேற்ற கழக நூல்களைப் படிக்கின்ற ஒரு வாசகனாக இருந்தேன். பின்னர் பொன் கற்தையாவின் வருகையுடன் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக மார்க்கிய, லெனினிய கருத்துக்களுடன் கூடிய நூல்களையும் ஈழத்து இலக்கிய நூல்களையும் படிக்க ஆரம்பித்தேன். இக்காலகட்டத்தில் டானியல், ஜீவா, கணேசலிங்கன், நந்தி போன்றவர்களுடைய படைப்புக்களை வாசித்தேன். அந்தப் படைப்புக்களின் மூலம் இவர்கள் எனக்குப் பரிச்சயமாக இருந்தார்கள். 1960 ஆம் ஆணர்டளவில் அகில இலங்கைச் சிறுபாண்மைத் தமிழர் மகாசபைக் கூட்டங்களுக்கு நான் போகவாரம்பித்தேன். அங்கு டானியல், ஜீவா இவர்களைப் பார்த்திருக்கிறேன். இவர்களுக்கென ஒரு கெளரவம், வரவேற்பு இருந்ததையும் அவதானித்திருக்கின்றேன். பின்னர் பொன்.கந்தை யாவின் தேர்தல் பிரசாரத்தை கிராமம் கிராமமாக மேற்கொள்கின்ற
தெணியான் 120

நடவடிக்கையின்போது டானியல் அவர்கள் வீடு தேடி எண்னிடம் வந்து, தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்று கூட்டங்களில் பேசவைத்திருக்கின்றார். ஜீவாவுடனான உறவின் நெருக்கம் நான் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இணைந்த பிறகும் ஜீவா மல்லிகையை வெளியிட ஆரம்பித்த பிறகுமே உணடானது. இவர்கள் இருவரும் பேராசிரியர் கா.சிவத்தம்பியும் எனது இலக்கியத்துறை சார்ந்த வளர்ச்சியிலும் எனது ஏனைய முன்னேற்றங்களிலும் அக்கறை காட்டி வந்துள்ளனர்.
இலக்கையிலி ரகுநாதனைமே, எலினெண்னுத்துரையையோ ஒரு தலித்தாகப் பணிப்பதிலீலை. டானியல் ஜீவா, தெணியானி ாேன்றவர்கள் எங்களுடைய தமிழ்ப்புலமை மரபிலி முக்கிய மாணவர்கள் இங்கு அவர்கள் தலித் ரோட்டத்தினூடாக அந்த அங்கீகாரத்தைப் பெறவில்லை. இதுதான் தமிழ் நாட்டுக்குர் இலங்கைக்குமான வித்தியாசர்" எனப் ரோகிணி காகிவத்தார்பி குறியிட்டுவினர். இது பற்றி உங்கள் அயிர்வார் எண்ன?
பேராசிரியர் குறிப்பிடுகின்ற கருத்து இன்றைய தமிழ்நாட்டு தலித்தியவாதிகளின் பின்னணியைக் கொண்டதே. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தலித்தியவாதிகள் தங்களது அடையாளமாக தலித்தியத்தை முன்வைத்து அதன் அடிப்படை யிலேயே தங்களை இலக்கியவாதிகளாக வெளிப்படுத்துகின் றார்கள். இலங்கையைப் பொறுத்தவரையில் எனப்பொரகுநாதன் போன்றவர்கள் வரன்முறையான கல்வியைக் கற்று ஆசிரியராக வந்தவர்கள். ரகுநாதனின் 'நிலவிலே பேசுவோம்’ என்ற சிறுகதை குறிப்பிட்டுச் சொல்லப்பட்ட போதும், இவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினைகளை அடியொற்றி பெருமளவு இலக்கியம் படைத்தவர்களல்ல. ஆனால், டானியல், ஜீவா போன்றவர்கள் இந்தப் பிரச்சினைகளை மையப்படுத்தி A2,020// எழுதியிருக்கிறார்கள். இவர்களுள் தெணியான் வரன்முறையான கல்வியைக் கற்ற ஆசிரியராக இருந்தவர். இவர்கள் மாக்ஸிஸக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு இலக்கியம் படைத்தவர்கள். வர்க்க அடிப்படையில் ஒடுக்கப் பட்ட மக்களின் பிரச்சினையை உள்வாங்கிக் கொணர்டவர்கள். எனவே இவர்கள் முற்போக்கு இலக்கியம் சார்ந்த இலக்கிய
தெனியான்

Page 65
வாதிகளாக இலக்கிய உலகில் அங்கீகரிக்கப்பட்டவர்களேயன்றி தமிழ் நாட்டைப் போல் தலித் இலக்கியவாதிகள் எனும் அடையாளத்துடன் இலக்கிய உலகில் பேசப்படுபவர் அல்ல.
டானியல் தேசிய இனம்பிர்ச்சினை முனைம்புப் பெற்றிருந்த காலம்பகுதியிலும் கூட, அவர் சாதியர் பற்றியே திருமிபதி திரும்ப எழுதிக்கொண்டிருந்தார் என்று செனலிலம்படுவது பற்றி உங்கவிண் கருத்து எண்ன?
தேசிய இனப்பிரச்சினை பல்வேறு நியாயங்கள் அடிப் படையில் முனைப்புப் பெற்றபோதும் பல்கலைக்கழகங்களுக்கு தமிழ் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில் இழைக்கப்பட்ட அநீதி காரணமாகவே தேசிய இனப்பிரச்சினை விஷத்வரூப மெடுத்தது. ஒடுக்கப்பட்ட மாணவர்களின் கல்வி உரிமைகள் மறுக்கப்பட்டபோது அது சாதியப் பிரச்சினையாக இருந்து வந்தது. இதே பிரச்சினை பெரும்பான்மை தமிழ் மாணவர் களுக்கு ஏற்படுகின்றபோது இனப்பிரச்சினையாக பேசப்பட்டதை மீணடும் நான் வலியுறுத்த விரும்புகின்றேன். எனவே தேசிய இனப்பிரச்சினையினது எழுச்சியின் போது தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினை முற்றாக தீர்ந்துவிடாமலும், அந்தப் பிரச்சினை இல்லாதது போல் பின்தள்ளியும், இருட்டடிப்புச் செய்தும் இருந்த சூழ்நிலையில் ஒடுக்கப்பட்ட அல்லது 5/MAÁő5ZÍLII Z மக்களின் பிரச்சினையை முனைப்புடன் முன்வைக்க வேணடியிருந்தது. தேசிய இனப்பிரச்சினையோடு தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினை/ை/ முனைப்புடன் முன்வைக்க வேணடியிருந்தது. தேசிய இனப்பிரச்சினையோடு தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினைகளும் சமகாலத்தில் நியாயமாக முன்னெடுக்கப்பட்டிருக்குமாயின் டானியலுக்கோ தெணியானுக்கோ இப்பிரச்சினையதை தொடர்ந்து பேசவேனடிய அவசியம் ஏற்பட்டிருக்காது. தமிழ் மக்கள் மத்தியில் இருந்து வந்த சாதியக் கொடுமையை அழித்தொழித்து தமிழ் மக்களை ஒன்றுபடுத்துவதற்கு முற்பட்டதன் மூலம் தேசிய இனப்பிரச் சினையில் டானியல் பங்காளியாக நிற்கிறார் என்பதுதான் இன்னொரு உணர்மை,
தெணியான் 122
 

ܕ ܫܒ=
டானியலின் படைப்புக்கள் ஒவிவென்றும் ஆவணம்படுத்தல் களாகவே கருத முடியும் அவற்றின் கலைத்துவத்தை கான முடிவது எனும் திறனாய்வாளர்களின் கருத்து பற்றி.?
திறனாய்வாளர்கள் என்று சொல்லப்படுபவர்கள் அனைவரது பார்வையும் ஒன்றுபட்டதல்ல. பல்வேறு பக்கச் சார்புகள் அவர்களிடம் காணப்படுகின்றன. டானியலின் படைப்புக்களை விளங்கிக்கொள்ள வேண்டுமானால் அடிநிலை மக்கள். அவர் தம் வாழ்வு. அவர் தம் பேச்சுவழக்கு அவர்களுக்கான பிரத்தியேகமான சடங்குகள், சம்பிரதாயங்கள் என்பவற்றை அறிய வேண்டும், புரிந்துகொள்ள வேண்டும். அத்தகைய புரிந்துகொள்ளல் நிகழும் இடத்திற்தான் டானியலின் எழுத்தின் கலைத்துவத்தை புரிந்துகொள்ள முடியும். அவற்றிற்கு அந்நியப்பட்டு நிற்கின்ற விமர்சனங்கள், டானியலின் படைப்புக்களில் கலைத்துவம் இல்லையெண்டதும், அவரின் படைப்புக்கள் வெறும் ஆவணப்படுத்தல்கள் என்று சொல்வதும் கண்டு ஆச்சரிப்படுவதற்கில்லை. அந்த விமர் சனங்கள் அந்நியப்பட்டு நிற்கும் அறியாமையே அவர்கள் கருத்தின் மூலம் வெளிப்படுகின்றது. அவர்கள் அப்படிச் சொல்வதன் மூலமும் மணர்டைக்குள் இருக்கும் தமது திமிரை வெளிப்படுத்துகின்றனர்.
எழுத்தாளர்கள் சாதியர் மற்றி எழுதாவிட்டனூர் காலப்ாேக்கிலி அரசியல் சமூக வெருவதார, கலாசார மற்றங்கள் சாதிபத்திலும் கணிசமான மற்றத்தை ஏற்படுத்தி இருக்குமண்லவா?
இலக்கியம் என்று சொல்லப்படுவது ஒரு சமூகத்தில் நேரடியாகச் சென்று சமூக மாற்றத்தை உருவாக்குவதில்லை என்பது உணர்மை, அதே சமயம் சமூக மாற்றத்தின் உந்து சக்தியாக இருந்து இலக்கியம் சமூகத்தை மாற்றியமைத் திருக்கின்றது என்பதற்கு பல ஆதாரங்கள் உண்டு இன்றைய காலகட்ட சமூகமாற்றம் என்று சொல்லப்படுவது பொதுவாக மக்கள் எல்லோர் மத்தியிலும் ஏற்பட்டு வந்த போதும் தாழ்த்தப்பட்ட மக்களை இன்றைய நிலைக்கு தயார் செய்ததில் எழுத்தாளர்களுடைய எழுத்திற்கு பங்குண்டு தாழ்த்தப்பட்ட
தெணியான் 123

Page 66
மக்கள் தமது உரிமைகளை 1950, 60களில் போராடியே பெற்றார்கள். அப்போராட்டம் அரசியல், சமூக இயக்கங்களின் பின்னணியில் நிகழ்ந்தபோதும் அவற்றிற்கு உறுதுணையாக எழுத்தாளர்களின் எழுத்துக்கள் பயன்பட்டிருக்கின்றன. தாழ்த் தப்பட்ட மக்கள் தங்களைத் தாங்கள் கனடுகொள்ளவும், தங்களை அடிமைப்படுத்தி அமுக்கி வைத்திருக்கும் சாதியத்தின் கொடுமையையும் உணர்ந்து கொள்ளவும், அவற்றை உடைத்தெறிந்து தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னே நவும் அவர்களது படைப்புக்கள் பயன்பட்டிருக்கின்றன. உயர் சாதியைச் சேர்ந்தவர்களுள் தமது காட்டுமிராணடித்தனத்தைக் கண்டு வெட்கப்பட்டு தம்மை மாற்றிக் கொள்வதற்கும் இவர்களது படைப்புக்கள் உதவியுள்ளன.
"முற்னேக்கு எழுத்தாளர் சங்கம் ஆரம்பித்த காலர் தொடக்கம் அது ஆற்றிவரும் இலக்கிய வளர்ச்சிக்கான பணியைப் பரட்டலாம். எனினும்கூட இந்த முற்னேக்கு எழுத்தாளர் சங்கத்தை நடத்தியவர்களும் அதிலிருந் தவர்களும் இலக்கிய பணிபுரிந்தவர்களும் தழந்த்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர்கள். ஆதலால் அந்த சமூகத்தின் குறைபாடுகனை ஒட்டியவர்களும் வருகிறார்கள். இவர்கள் காலங்காலமாக உயர் சாதியினரிடத்தில் ஒருவித வெறும்பும் /2தி உணர்ச்சியும் கொண்டிருந்ததாலி அதைத் தீர்ப்பதற்காக தங்கள் எழுத்தைப் பயண்படுத்தினார்கள்”
நீங்கள் எண்ன கூற விரும்புகிறீர்கள்?
முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆரம்பித்த காலம் தொடக்கம் அது ஆற்றிவரும் இலக்கிய வளர்ச்சிக்கான பணியை இன்று மறுத்து, மறுதலித்து இலக்கிய வரலாறு சொல்லுவதும், எழுதுவதுமே தமது பெருந்தொணர்டெனக் கருதி மூர்க்கத்தனமாக செயற்பட்டுக்கொணடிருக்கிறார்கள் பலர். இந்த சூழ்நிலையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் இலக்கிய வளர்ச்சிக்கான பணியை உணர்ந்து பாராட்டியிருக்கும் மு.பொன்னம்பலத்தை நான் எப்படி பாராட்டாமல் விட்டுவிட முடியும்.
தெணியான் 124
 

அடுத்து முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை நடத்தி யவர்களும், அதிலிருந்தவர்களும், இலக்கியப் பணிபுரிந்தவர்க ளும் தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர்களென சொல்லுவதன் மூலம் இச்சங்கம் பற்றிய மு.பொ.வின் குழப்பமான பார்வை நன்றாக புலப்படுகிறது. இங்கு ஒரு பட்டியல் தர விரும்பாத காரணத்தில் இச்சங்கத்திலிருந்தவர்களின் பெயர் பட்டியலைத் தருவதை தவிர்த்துக்கொள்கிறேன். வேணடு மானால் பின்னர் அதனைக் குறிப்பிடலாம். ஒரு சமூகத்தில் தோன்றியவர்கள் குறிப்பிட்ட அச்சமூகத்திற்கென்றே உரிய குறைபாடுகளோடு பிறக்கிறார்கள் எண்டது மிக அற்பத்த னமானது. 'சாதிப் புத்தி’ என்று சொல்வதை இவர் இன்னொரு வகையாக குறிப்பிடுகிறார் எந்தவொரு சாதியில் பிறந்தவனாக இருந்தாலும் அவன் பிறந்த குடும்பச் சூழலின் தாக்கம் அவனுக்கிருந்தேயாகும். அது மு.பொ.வுக்கும் பொருந்தும் காலகதியில் இவன் பெறுகின்ற பல்வேறு வளர்ச்சியின் காரணமான அவன் உருவாக்கம் பெறுகிறான். உயர் சாதியார் என்று சொல்லப்படுபவர்களின் சமூகத்தில் மிகப் பின்தங்கிய பகுதியில் பிறந்தவனும் இவ்வாறே வளர்ந்து வருகின்றான். இவனுக்கு பிறப்புரிமையான விசேட குணங்கள் எதுவும் கிடையாது. இந்த பின்னணியில் முற்போக்கு எழுத்தாளர்களாக வளர்ந்து வந்தவர்கள் தமது சமூகத்துக்கு இழைக்கப்படுகின்ற கொடுமையை உயிர்ப்புடன் எடுத்துச் சொல்வதற்கு முன்னர் இந்த மக்களின் பிரச்சினைகள் எடுத்துச் சொல்லப்படவில்லை. காலங் காலமாக சமூகத்தில் உயர்ந் தவர்கள் அல்லது உயர் சாதியினர் என்று சொல்லப்படுவோரே கல்வியைப் பெறுகின்றவர்களாகவும் தமத வர்க்க நலன் களைப் பேணும் இலக்கியங்களை படைப்பவர்களாகவும் இருந்து வந்திருக்கின்றார்கள். இவர்களுடைய இலக்கியங்கள் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தியே காட்டின. தணடிகைக் கனகராயன் பள்ளு எனும் பள்ளுப்பாடலைப் பாடிய புலவன் ஒரு பள்ளனாக இருந்திருந்தால் அந்தப் பள்ளுப் பாடல் எப்படி அமைந்திருக்கும்? தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அதிகாரம் செலுத்தி அவர்களை சமூக ரீதியாகவும், இலக்கியங்களுக் கூடாகவும் இழிவுபடுத்தி வந்த ஒரு சமூகத்திற்கெதிராக, அச்சமூகத்தின் குறைபாடுகளை முற்போக்கு எழுத்தாளர்கள் எடுத்து முன்வைக்கப்படுகையில் மு.பொ. போன்றவர்களால் அதை ஜீரணிக்க முடியவில்லை. தமிழ்ச்
தெணியாண் 125

Page 67
சமூகத்தின் அக முரணர்பாடுகளை மூடிமறைக்க வேண்டிய போலித்தனத்தில் மூச்சிறைக்கிறார்கள். இதன் மூலம் யாருடைய பிரதிநிதி தான் என்பதை மிகத் தெளிவாக மு.பொ. வெளிப்படுத்துகிறார்.
அகில இலங்கை சிறபாண்மைத் தமிழர் மகா சபையினர் தொடர்பு. இடதுசாரிகனினர் நெருக்கமான உறவு என்பன உங்கனை எவிவிதாம் பாதித்தன?
சிறுபராயம் முதல் வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் எனக்கு இருந்து வந்துள்ளது. நான் ஏழாம் வகுப்பு படிக்கின்ற காலத்திலேயே எனது தந்தையார் தினகரன் பத்திரியையை தினமும் எடுத்துவந்து எனக்குப் படிக்கத் தந்தார். நான் எட்டாம் வகுப்பு படிக்கையில் நான் படித்த தேவரையாளி இந்துக் கல்லூரியில் 'சுற்றி வாசிப்பு' என்று சொல்லப்படுகின்ற ஒரு திட்டம் காரணமாக ஒவ்வொரு வகுப்பிலும் சமார் 45, 40 நூல்களை வாசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அக்காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் வெளியிடுகின்ற நூல்கள், சஞ்சிகைகளை விரும்பிப் படித்தேன். இவைகளை யெல்லாம் வாங்கிப் படிப்பதற்கு எனக்குப் பணம் தந்துகொணர்டி ருந்தவர் என்னுடைய தாய். இந்த வாசிப்புக் காரணமாக எனக்குள்ளே சமூக அக்கறையுள்ள சிந்தனைகள், மனித விடுதலைக்கான சிந்தனைகள் என்பவற்றோடு என்னிடமிருந்து வந்த மானுட நேயமும் வளர்ந்து வந்தது. பின்னர் பொன்.கந்தையா, பருத்தித்துறை பாராளுமனறத் தேர்தலில் போட்டியிட்ட சமயம் என்னுடைய குடும்பத்தவர்கள் கந்தை யாவின் ஆதரவாளர்களாக இருந்தார்கள். இந்தக் காலத்தில்தான் டானியல், எம்.சி.சுப்பிரமணியம் போன்ற இடதுசாரிகளை மாணவனாகிய நான் சந்தித்தேன்.
கந்தையாவின் வருகையோடு எனது வாசிப்பு இரசனையிலும் சிறிதுசிறிதாக மாற்றம் ஏற்படத் தொடங்கியது. இடதுசாரிக் கருத்துள்ள நூல்களையும் இலக்கியங்களையும் நான் வாசிக்கவரம்பித்தேன். அகில இலங்கைச் சிறுபாண்மை தமிழர் மகாசபைக்குள் போனபோது அதன் தலைவராக இருந்த எம்.சி.சுப்பிரமணியம் அவர்களோடு நெருக்கமான உறவு ஏற்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியின் வட பிரதேச முக்கிய
தெணியாண் 126

மாணவர்களுள் ஒருவரான அவர், அகில இலங்கை சிறுபான்மை தமிழர் மகாசபையின் தலைவராக இருந்தமையால் அங்கு இடதுசாரிகளின் செல்வாக்கு மேலோங்கியிருந்தது. இந்த (Od/fa)// தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திலும் போராட்டங்களிலும் அக்கறையுடையதாகவிருந்து வந்துள்ளது. சமூகக் கொடுமையினால் LIMø6755/ĵ/ // Z , 35/gó-55Lý // z - மக்களின் குரலாகவும், அவர்களின் பாதுகாப்பு அரனாகவும் இந்த மகாசபை விளங்கியது. உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்லலாம். நீர்வேலியில் தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள் உயர் சாதியினரால் தீவைத்துக் கொளுத்தப்பட்டபோது மகாசபையைச் சேர்ந்தவர்கள் திரணடு சென்று மீணடும் அவர்களுடைய வீடுகளை அமைத்துக் கொடுத்ததுடன் நிதியுதவி செய்து பக்கபலமாக இருந்தோம். அவர்களுக்கு வேணடிய நிதியைத் திட்டுவதற்காக நான் வீடு வீடாக உணர்டியல் குலுக்கிப் பணம் சேர்த்தேன். இது மாத்திரமல்லாமல் எமது ஊரான பொலிகனடி கந்தவனக்கடவை ஆலயக் கதவை திறப்பதற்கான போராட் டத்தை நானும் என்னுடன் சேர்ந்த இளைஞர்களும் முன்னெடுத் தபோது மகாசபையின் பின்னணிப்பலம் எமக்கிருந்தது. ஆலயப் பிரவேசம் நடைபெற்ற சமயம் எம்.சி.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார் என்பதும் குறிப்பிட்டுச் சொல்ல வேனடியதாகும்.
இடதுசாரித் தலைவரான எம்.சி.சுப்பிரமணிம் போன்றவர் தொடர்பும் இயல்பாகவே எனக்கிருந்த மானுட நேசமும் விடுதலையுணர்வும் காரணமாக நான் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இணைந்து கொணர்டேன். அங்கு ஏ.வைத்தி யலிங்கம், வி.பொன்னம்பலம், ஆர்பூபாலசிங்கம், ஐ.ஆர்.அரியரட்னம் போன்றவர்களையும், முற்போக்குச் சிந்தனையுடைய பல தோழர்களையும் சந்தித்தேன். பிற்காலத்தில் பொன். குமாரசாமி அவர்களோடு மிக நெருக்கமான உறவு இருந்து வந்திருக்கிறது. தென்னிலங்கையிலிருந்து வந்த பல தலைவர்களை நான் சந்தித்திருக்கிறேன். அவர்களுடைய கருத்துக்களைக் கேட்டிருக்கிறேன். எனது உருவாக்கத்திற்கு இவை யாவும் முக்கிய காரணிகளாக இருந்திருக்கின்றன.
தெணியான் 127

Page 68
நீங்கர்ை சாதியம் பற்றியே எழுதாம் எழுத்தானர் எனும் கருத்தினையே பலர் கொணர்டிருப்பது பற்றி உங்கர்ை கருத்தேர்ைன?
நான் சாதியம் பற்றியும் எழுதுகின்ற எழுத்தாளனேயன்றி சாதியம் பற்றி மாத்திரம் எழுதுகின்ற ஒரு எழுத்தாளனல்ல. ஆனாலி என்னை அப்படி நோக்குகின்றார்கள் என்றால் சாதியம் என்பது ஒழிந்து போய்விட்டதெனப் போலியாகச் சொல்லிக் கொனடு அதை மறைக்க முற்படுகின்றவர்கள் மத்தியில்
சாதியக் கொடுமைகளை இடையிடையே எடுத்து முன்வைக்கின்றவர் நானாகவேயிருக்கிறேன். தேசிய இனப்பிரச்சினையினுள்ளே சாதியம் மறைந்து போய்விட்டதாகச் சாதியத்தை வாைர்க்க விரும்புகின்றவர்களே சொல்லிக்
கொண்டிருக்கின்றார்கள். எனவே சாதியப் பிரச்சினையை அது இன்று கூர்மையடைந்துள்ள முறைமையினை வெளியே எடுத்துச் சொல்வதன் மூலம், அதனைத் தீர்க்க வேணடுமென்னும் சமூகக் கடமையை நான் செய்து கொணடிருக்கின்றேன். தெணியான, டானியல் போல சாதியம் பற்றியே எழுதவேணடுமென சொல்கின்றவர்கள், எதிர்பார்க்கின்ற ஒரு சாரார் இருக்கின்றனர். இல்லை தெணியான் சாதியத்தை எழுதவேணடிய அவசியமில்லை. அவர் 'காத்திருப்பு', 'கானலில்
மான் போன்ற சாதியம் பேசாத படைப்புகளையே தர வேணடுமென்று எதிர்பார்க்கின்ற இன்னொரு சாராரும் இருக்கின்றனர்.
நான் இந்த இருசாராரையும் ஏற்றுக்கொள்ளாதவன். சாதியம் மரத்திரம்தான் நமது பிரச்சினையென்று எனணுகின் றவனல்ல. அதேசமயம் சாதியப் பிரச்சினைகள் தீர்ந்து விட்டதென்றும் தவறாக எணனவில்லை. பழக்கப்பட்டதொரு மிருகத்தைப் பிடித்து கயிறு கொழுவி கட்டையில் கட்டி 62% Z L/7óný அது/ எந்தப் பிரச்சினையுமில்லாமல் தான் மிகச்செளகரியமாக இருப்பதாக எணணிக்கொண்டுபடுத்திருக் கும். அந்த மிருகத்தை ஒத்தவர்களாகவே தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்த கற்றோர் சிலர் இருந்து வருகின் றார்கள் எழுத்தாளர்கள் சிலர் இருக்கின்றார்கள் தெணியானால் அப்படியிருக்க முடியாது. கட்டையில் பிடித்துக் கட்டப்படும் பழக்கப்பட்ட மிருகமல்ல நான்.
தெணியான் 128
 

உங்களுடைய படைப்புக்கர்ை, அவை எப்படி நாலுருப்பெற்றன.?
நான் எழுத ஆரம்பித்து 8ே ஆண்டுகளாகின்றது. இந்த சீ8 ஆணர்டுகளில் எட்டுநூல்கள் மாத்திரம் வெளிவந்துள்ளன. ஈழத்தைப் பொறுத்தவரையில் நூல் வெளியீடெண்டது படைப் பாளிகளுக்கு பெரியதொரு பிரச்சினை. வசதிபடைத்த எழுத்தாளர்கள் தமது படைப்புக்களைப் பொறுத்தவரையில் (ஒருசிலர்) நூல் வடிவங் கொடுத்து வெளிக்கொணடு வருகின்றார்கள். வசதியற்றவர்கள் திIது/ ஆக்கத்தை நூல்வடிவில் கொண்டுவரும் ஆர்வம் காரணமாக கடன்பட்டே வெளியீட்டை செய்து சிரமப்படுகின்றார்கள். எனது ஆக்கங்கள் நூலாக இதுவரை வெளிவந்திருப்பின் இந்த எட்டு நூல்கள் மாத்திரமல்ல இன்னும் பல நூல்கள் வெளிவந்திருக்க வேணடும். எனது பணத்தை முதலீடு செய்து என்னுடைய படைப்புகளை நூலாகக் கொணர்டு வரும் நிலையில் நானில்லை. ஆனால் இதுவரை வெளிவந்த நூல்களை வெளியீட்டாளர்கள் சிலர் மனம் விரும்பி வெளியீடு செய்துள்ளனர். எனது முதல் நாவலான 'விடிவை நோக்கி (1973) வீரகேசரிப் பிரசுரமாக வெளிவந்தது. 'கழுகுகள்’ நாவல் (1981), சொத்து’ சிறுகதைத் தொகுதி (1984) இவையிரணடும் தமிழ்நாட்டில் நூலுருப்பெற்றன. 'கழுகுகள் நர்மதா வெளியீடாகவும், சொத்து’ என்.சிபிஎச் வெளியீடாகவும் வெளிவந்தன. இந்த இரண்டு நூல்களும் தமிழ் நாட்டில் நூலுருப்பெறக் காரணமாக இருந்தவர் டொமினிக் ஜீவா ஆவார். பிரதிகளை அவரே எடுத்துச் சென்று நூலாக வெளிவருவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார் என்பதை நன்றியுடன் நினைவு கூர்கின்றேன். பொற்சிறையில் வாடும் புனிதர்கள்', 'முரசொலி வெளியீடாக (1989) வெளிவந்துள்ளது. 'மாத்துவேட்டி’ சிறுகதைத்தொகுதி மல்லிகைப்பந்தல் வெளியீடாக (1990) ஜீவா வெளியிட்டுள்ளார். மரக்கொக்கு’ நாவல் (1994), 'காத்திருப்பு’ நாவல் (1999), 'கானலில் மான் நாவல் (2002) ஆகிய படைப்புகளை பூபாலசிங்கம் புத்தக நிலையத்தினர் வெளியிட்டுள்ளனர். பூபாலசிங்கம் பதிப்பக உரிமையாளர் சிறிதர்சிங் அவர்களின் தந்தையார் அமரர் பூபாலசிங்கம் அவர்கள் எமது கட்சியின்
தெணியான் 129

Page 69
முன்னோடிகளுள் ஒருவர் என்மீது தோழமையும், அன்பும், அக்கறையுமுடையவராகவும் அவர் இருந்தார். அந்த உறவின் தொடர்ச்சியாகவே அவரது மகன் சிறிதரகிங் அவர்கள் எனது படைப்புகளை நூல்வடிவில் தந்து கொணடிருக்கின்றார். என்னுடைய நூல்களை தொடர்ந்தும் இவ்வாறு வெளியீட் டாளர்கள் வெளியிட்டு வைப்பார்கள் என்று நான் நம்புகின்றேன். அந்த நம்பிக்கை வாசகர்களுக்கு நூல்களாக கிடைக்கவே 6*//ó.
நீங்கர்ை எழுதவாரம்பித்த காலப்பகுதியிலிருந்து இன்று வரையான கால இடைவெனரியில் படைப்பிலக்கியார் கணினர் உட்பொருளில் எத்தகைய மாறாதல்கனை இனங்கர்ைடுர்ைனிர்கர்ை?
ஒரு படைப்பாளி தான் வாழும் சமூகத்திலிருந்தே தனது படைப்பிலக்கியங்களுக்கான கருவை தேடிக்கொள் கின்றான். படைப்பிலக்கியம் என்பது அந்த இலக்கியம் தோன்றிய காலத்தின், சமூகத்தின் 90/62/60/ //736/7 அல்லது வெளிப்பாடாகவோ தோன்றுகின்றது. அவ்வாறு இல்லாத இலக்கியங்கள் வெறும் கற்பனாவாத இலக்கியங்களாகவே கொள்ளப்படும். அவைகளினால் சமூகத்திற்கு எந்தவிதமான பெரும் பயனும் விளைந்துவிடப் போவதில்லை, காலத்தின் விளைவாக சமூகத்திலிருந்த பிறக்கின்ற இலக்கியங்கள் சமூகத்தின் மாற்றங்களையும் வெளிக்கொணர தவறுவதில்லை. இந்த அடிப்படையில் 1950, 60 களில் அதனைத் தொடர்ந்து 70 வரை முற்போக்கு இலக்கியம் வீச்சுடன் எழுச்சியுற்று வெளிவந்த காலம். இக்காலகட்டத்தில் வர்க்கப் பிரச்சினை, சாதியப் பிரச்சினை எண்பனவே ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் பேசப்படும் பொருளாக இருந்தது.
70களின் பின்னர் இன முரண்பாடு வலுப்பெற்று போராட்டங்கள் தலைதூக்கின. இக்காலகட்டத்தில் இனமுரணர் பாடு பற்றிய ஆக்க இலக்கியங்கள் இனப்பிரச்சினையின் (5/7/76007/O/735 அதுன்பப்படும் தமிழர்களது அவலங்களும் இலக்கியங்களாகின. இவை இரணடும்தான் பிரதானமாக கோடிடப்பட வேணடிய காலகட்டங்கள் எனலாம். எந்தவொரு இலக்கியமும் அதன் வளர்ச்சியும் வரலாற்று அடிப்படையிலேயே
தெணியான் 130

தோன்றுகின்றது. முற்போக்கு இலக்கியத்தின் எழுச்சி மிக்க வளர்ச்சியின் வழிவந்ததே இன்றைய இலக்கியம். நாளைய இலக்கியங்கள் இன்றைய இலக்கியங்களை உள்வாங்கி இவற்றிலிருந்து மேலெழுகின்றவையாகவே அமையும். எனவே இன்றைய இலக்கியங்கள் கடந்தகால இலக்கியங்களை விட மிக உன்னதமானது எனக்கருதுவது மிகத் தவறானதாகும். இனப்பிரச்சினை பற்றிப் பேசும் இலக்கியங்கள்தான் சிறந்த இலக்கியங்கள் எனச்சொல்லப்படும் ஒரு பக்கப்பார்வை ஆரோக்கியமானதல்ல.
நீங்கர்ை ஒரு சிறுகதைப் படைப்பானியாகவும் இருக்கிறீர்கனர், வாசகர்களுக்கு நாவலாசிரியனாகவே பரிச்சயமாகி உர்ைனமைக்கான காரணம் எனர்ன?
பெரும்பாலும் நாவலாசிரியர்கள் எல்லோரும் ஆரம்பத்தில் சிறுகதைகள் எழுதிய பின்னர் நாவல் எழுதியவர்களே, என்னுடைய நிலையும் அதுவேதான். பத்திரிகை, சஞ்சிகைகளில் சிறுகதைகளை உதிரியாக படைப்பதன் மூலம் ஓர் எழுத்தாளன் இலக்கிய கணிப்பைப் பெற்றுவிடுவதில்லை. அவனுடைய சிறுகதைகள் நூல் வடிவில் தொகுக்கப்பெற்று வெளிவரும் போதுதான் விமர்சகர்களிடமிருந்தும் வாசகர்களிடமிருந்தும் அந்த எழுத்தாளன் கணிப்பைப் பெறுகின்றான். என்னுடைய படைப்புகளாக இதுவரை எட்டு நூல்கள் வெளிவந்துள்ளன. இவற்றுள் ஆறு நாவல்கள், ஏனைய இரணடு சிறுகதைத் தொகுதிகளாக இருந்த போதும் அவைகளும் வாசகர்களின் கவனத்தைப் பெறத் தவறிவிட்டன. முதல் தொகுதியான சொத்து தமிழ் நாட்டில் நூலுருப்பெற்றது. மிகச் சொற்பமான பிரதிகளே இலங்கைக்கு வந்து சேர்ந்தன. அதனால் வாசகர் கருத்துக்கு எட்டாத நூலாக அது போய்விட்டது. நணபர் செங்கையாழியான் எழுதி அணமையில் வெளிவந்திருக்கும் "ஈழத்து சிறுகதை வரலாறு' நூலில்கூட சொத்துப் பற்றிய தகவல் இல்லை. அடுத்த சிறுகதைத் தொகுதி 'மாத்துவேட்டி மல்லிகைப் பந்தல் வெளியீடாக வந்தது. மிகச் சிறிய எழுத்துக்களில் நிறைந்த அச்சுப் பிழைகளோடு வெளி வந்திருக்கும் நூல் இது. மல்லிகைப்பந்தல் வெளியீடுகளின் தயாரிப்பில் மிக மோசமான நூல் எது என்று கேட்டால் அது
தெணியான் 131

Page 70
'மாத்துவேட்டி தான். நான் கையில் எடுத்துப் படிப்பதற்கே சிரமமாக உள்ளது. இதுவரை நான் எழுதிய சிறுகதைகளை தொகுதிகளாக வெளியிட்டிருந்தால் 10 தொகுதிகள் தேறியிருக்கும். இதில் ஒரு ஐந்து தொகுதிகளைத் தானும் என்னால் நூல் வடிவில் பார்க்கமுடியவில்லை. ஆகவே ஆறு நாவல்கள் வெளிவந்து நான் நாவலாசிரியனாக நோக்கப்படு வதற்கு வழிகோலியுள்ளது.
உங்கர்ை 'காத்திருப்பு நாவல் மிகப் பெருமனவில் A tigajaraj சார்ந்த நாவல் எனக் கஉறப்படும் விமர்சனார் 1ற்றி?
‘காத்திருப்பு பாலியல் பிரச்சினையைப் பற்றி மட்டும் பேசும் ஒரு நாவல் அல்ல. இது பாலியல் பிரச்சினையோடு சுரண்டல் பற்றியும் பேசுகின்ற ஒரு படைப்பு. உளவியல் நோக்கும் இந்த நாவல் ஊடு பாவாக பொதிந்திருக்கிறது. இந்த நாவலை பாலியல் பிரச்சினை சார்ந்த நாவல் என்று சொல்லுகின்றபோது நான் மிக எச்சரிக்கையாகவே பேச விரும்புகின்றேன். கடந்த காலத்தில் பாலியல் நாவல்கள் என்று குறிப்பிட்ட படைப்புக்கள் பற்றி ஒரு மனப்பதிவு வாசகன் உள்ளத்தில் இருக்கவே செய்யும். அந்த மனப்பதிவோடு எனத காத்திருப்பு நாவலை வாசகர்கள் நோக்குதல் கூடாது. இந்த நாவலில் பேசப்படாத ஒரு பொருளாக பாலியல் பேசப்படுகின்றது. பாலியல் பிரச்சனைகளை யாரும் முகஞ்சுழிக்கா வணனம் எவ்வாறு இலக்கியத்தினுள் கொனடு வரலாம் என்பதை மிக நிதானத்துடள் இந்தப் படையில் நான் செய்து காட்டியுள்ளேன். இந்த வகையில் இது என் வெற்றி என்றும் கருதுகிறேன். இந்த நாவல் பெரிய அளவில் பலருடைய கவனத்தை இன்னும் ஈர்க்காதிருப்பது தான் எனக்கு வியப்பாக இருக்கிறது.
'அறிவோர் கூடல்' நிகழ்வு உங்கனை எவ்விதம் பாதித்தது?
பருத்தித்துறையில் டொக்ரர் முருகானந்தன், நணபர் குலசிங்கம், ரகுவரன் போன்றோர் முன்னின்று ஆரம்பித்ததுதான் இந்த அறிவோர் கூடல் மாதத்தில் இரணடு தடவை. பின்னர் ஒருதடவை இந்தக் இருந்த நணர்டர்கள்
தெணியான் 132
 

குறித்தவொரு தினத்தில் ஒன்றுகூடினோம். இந்த ஒன்றுகூடல் பெரும்பாலும் டொக்ரர் முருகானந்தன் இல்லத்தில் நடைபெற்று வந்தது. ஒரு கூடலின்போது கூடலைச் சேர்ந்த நணபர் ஒருவர் அல்லது வெளியார் ஒருவர் குறித்தவொரு பொருள் பற்றிப் பேசுவார். பேச்சு முடிந்ததும் கூடலிலிருந்த நணபர்கள் கலந்துரையாடுவர். கூடல் முடிந்து நணபர்கள் சிலர் பேசிக்கொணடிருப்போம். வீடு திரும்புவதற்கு இரவு ஒன்பது பத்து மணிகூட ஆகலாம். இந்தக் கூடலில் இலக்கியம் பற்றிய கருத்துரைகள் மாத்திரம்தான் இடம்பெற்றன என்றில்லை. பல்வேறு துறை சார்ந்தவர்களும் தமது துறைசார்ந்த பொருள் பற்றிக் கருத்துரை வழங்கியுள்ளனர். பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் முதற்கொணர்டு பல பல்கலைக்கழக பேராசிரியர்கள் அங்கு சமூகந்தந்துள்ளனர். அங்கு இடம்பெற்ற கருத்துரைகள் பல்துறை சார்ந்த விடயங்களை எடுத்துச் சொல்வனவாகவும், தெளிவுபடுத்துவனவாகவும் கருத்து மோதல்கள் மூலம் புதியவற்றை வெளிக்கொணர்பவையாகவும் இடம்பெற்றன. இன்று இவைகளைத் திரும்பிப் பார்க்கையில் நான் கேட்டறிந்த விடயங்கள் எனக்குப் பெரிதாகப்படவில்லை, நூல்கள் வாயிலாக ஆற அமர அந்த விடயங்களை நான் படித்தறிந்திருக்க முடியும் அறிவோர் கூடல் மூலம் உணர்மையில் நான் பெற்றுக்கொணடது நல்ல நணபர்களைத்தான். அறிவோர் கூடல் இன்று நடைபெறாது தடைப்பட்டு விட்டபோதும் அந்த நணபர்களில் ஆழ்ந்த அன்போடு கூடிய நட்பே எனக்கு மிஞ்சி நின்கிறது.
நீங்கர்ை ஓர் ஆசிரியர் என்ற வகையில் இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் கல்விமுறை பற்றி தங்கனது கருத்து என்ன?
கடந்த காலத்தில் அமுலுக்கு கொண்டுவரப்பட்ட புதிய கல்வி முறைகள் பல பின்னர் தவறானவையாக விமர்சிக்கப்பட்டு கைவிடப்பட்டன. இன்று புதியதொரு கல்விமுறை அறிமுகப்ப டுத்தப்பட்டுள்ளபோதும் கடந்த காலத்தில் நடைமுறையிலிருந்த கல்வி அமைப்பு முற்றாக மாற்றியமைக்கப்படவில்லை. குறிப்பாகச் சொல்வதாக இருந்தால் ஆரம்ப வகுப்புகளிலும் செயல் முறையிலான கல்வி இன்று நடைமுறைப்படுத்தப் படுகின்றது. இது மிகவும் வரவேற்கப்பட வேணடியதொன்று.
தெணியான் 133

Page 71
இச்செயல் திட்டத்தினை அமுல்படுத்துகின்ற ஆசிரியர்கள் அதற்கான தயார் நிலையில் இருக்க வேண்டியது மிக அவசியம். அவ்வாறிருக்கின்றார்களோ என்பது கேள்விக்குரிய தொன்றுதான். அதே சமயம் புலமைப்பரிசில் பரீட்சை (தரம் 5) என்று வருகின்றபோது மாணவன் பழைய பரீட்சை முறைக்குள்ளே தள்ளப்படுகிறான். இங்கே இரணடுங்கெட்டான் நிலையிலேயே மாணவர்கட்கான போதனை உள்ளது. ஆரம்ப வகுப்புகளுக்கு மேலேயுள்ள வகுப்புக்களை நோக்கினால் பாட அலகுகள் தோறும் கணியீடுகள் இடம்பெற்று செம்புள்ளி, கரும்புள்ளி குத்தப்படுகின்றது. புள்ளியை ஒழுங்காகக் குத்தி மேலதிகாரிகளுக்கு நேர்த்தியாகக் காட்டுவதன் மூலம் மாணவர்களின் கல்வி நிறைவு பெற்றவிட்டதாக கொள்ள முடியாது. இங்கும் ஆரம்பப் பிரிவுக்கல்வி போல ஒரு பிரச்சினை எழுகின்றது. அலகுகள் தோறும் கணிப்பீடுகள் நடைபெற்ற போதும் க.பொத போன்ற (உத/சாத) பகிரங்கப் பரீட்சைகளின்போது பழைய பரீட்சை முறைக்கே மாணவர் மீணடும் தள்ளப்படுகின்றனர். கணிப்பீட்டுப் புள்ளிகளில் குறிப்பிட்டதொரு வீதம் அரசின் பொதுப் பரீட்சையின்போது சேர்ந்தே புள்ளி வழங்கப்படுமென அணர்மையில் அறிவிக்கப்பட் டிருக்கிறது. மாணவர்களை நேரடியாக அறிந்து வைத்துள்ள ஆசிரியர்களின் சாதக, பாதக நடத்தைகளால் எதிர்காலத்தில் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். இவையெல்லாம் முழுமையாக மாற்றியமைக்காது இடையிடையே செய்கின்ற சீர்தித்தங்களினால் விளைகின்ற குழப்பம் எனலாம். இது சமூகத்துக்கும் பொருந்தும்.
நான்காவது பரிமாணம்’ இதழுடன் நீங்கர்ை எத்தகைய தொடர்பினைக் கொணர்டிருந்திர்கர்ை? அவ்விதழ் ஏன் தொடர்ந்து வெனிவராத போயிற்றர?
நான்காவது பரிமாணம் கனடாவிலிருந்து வெளிவந்த ஒரு மாதாந்த சஞ்சிகையாகும். அதன் ஆசிரியராக இருந்து வெளியிட்டு வந்தவர் எனது சொந்தத் தம்பி நவரத்தினம். சஞ்சிகை பற்றிச் சொல்வதற்கு முன்னர் அவரைப் பற்றி சொல்வதன் மூலம் சஞ்சிகையின் பின்னணியை ஓரளவுக்கு விளங்கிக் கொள்ளலாம். அவர் ஒரு MSC பட்டதாரி கொழும்பு விவேகானந்தா கல்லூாயில் ஆசிரியராக இருந்தவர். சீம்ே
தெணியாண் 134

ஆண்டு கலவரத்தின்போது அவரது குடும்பம், வீடு பாதிக்கப்பட்டதனால் நாட்டை விட்டு வெளியேற வேண்டி நேர்ந்தது. சங்கீதம், சித்திரம், நாடகம், நடிப்பு, உதைபந்தாட்டம், கிரிக்கெட் போன்ற பல்துறை ஆற்றல்கள் அவரிடமிருந்தன. கநவம் என்ற பெயரில் சிறுகதைகள், உருவகக் கதைகள், கட்டுரைகள் என்பவற்றை எழுதி வந்தார். 'உள்ளும் புறமும் என்ற சிறுகதைத் தொகுதியும் உணர்மையின் மெளன ஊர்வலங்கள்’ எனும் அரசியல் கட்டுரைத் தொகுதியும் அவருடைய படைப்புக்களாக நூல்வடிவில் வெளிவந்துள்ளன. எனக்குக் கீழே அவர் வளர்ந்து வந்த காரணத்தால், சிறுவயதுமுதல் கலை இலக்கியச் குழலொன்று அவருக்கு வாய்ப்பாக அமைந்திருந்தது. அதனால் பெருமளவில் இல்லாது விட்டாலும் எப்போதும் கலை இலக்கிய ஈடுபாடுள்ளவராக செயற்பட்டுக் கொணடிருந்தார். அந்த உணர்வும், தமிழுக்கு, தமிழிலக்கியத்துக்கு தன்னால் இயன்றது எதையாவது செய்ய வேணடும் என்ற ஆர்வம் காரணமாக தனித்து நின்றே நான்காவது பரிமாணத்தை வெளியிட்டு வந்தார். ஒரு சஞ்சிகை வெளியிடுவதன் மூலம் பொருளாதார ரீதியாக நட்டப்படுவதைத் தவிர வேறு எந்தவித இலாபத்தையும் பெறமுடியது என்பதைத் தெரிந்து கொணர்டே வெளியீட்டு முயற்சியில் இறங்கியிருந்தார். இங்கிருந்து சில படை//ானிகளின் படைப்புக்கள் அவருக்கு கிடைக்கச் செய்தது ஒன்றே எனக்கந்தச் சஞ்சிகையோடு இருந்த தொடர்பு எனலாம். எனது ஆக்கங்கள் சில அச்சஞ்சிகையில் இடம்பெற்றுள்ளன. இச்சஞ்சிகை அன்று பலருடைய கவனத்துக்கும் உள்ளான ஒன்றாக இருந்தது. வாசகர்களின் கருத்தைக் கவர்ந்தமை இச்சஞ்சிகை மீது சிலருடைய அதிருப்தியை தோற்றுவித்தது. எந்தவித அரசியல் அல்லது குழுவாதக் கருத்தினையும் பின்னணியாகக் கொண்டிருக்காத நான்காவது பரிமாணத்தின் மீது கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக இச்சஞ்சிகையை அவர் தொடர்ந்து வெளியிடாமல் நிறுத்திக் கொண்டார். இதுதான் தமிழுக்கும், தமிழிலக்கியத்துக்கும் செய்த பெருந்தொண்டு.
தெணியான் 135

Page 72
உங்கனது தற்போதைய படைப்புக்கர்ை முக்கியமாக உனவியல் சிக்கவிகனைக் கருப்பொருனாகக் கொணர்டுர்ைனன. இதற்கான காரணம் என்ன?
இலக்கியம் என்று சொல்லப்படுவது ஒரு சமூகத்தின் வழிவியல் நிலையிலிருந்தே எழுகிறது. நான் எழுத ஆரம்பித்த காலத்திலிருந்த சமூகம் இன்றைக்கு எந்தவித மாற்றமு மடையது அப்படியே இருந்துவிடவில்லை, சமூகம் மாறிக் கொனடேயிருக்கிறது. அடக்கியொடுக்கப்பட்ட மக்களும் அக்காலத்திலிருந்ததுபோல இன்று அவர்களின் வாழ்வு நிலையில்லை, கல்வி வெளிநாடுகளிலிருந்து வரக்கூடிய பணம் என்பவற்றால் மாற்றங்கள் நிகழ்ந்து கொணடுள்ளன. அக்காலத்தில் அடக்கியொடுக்கியது போல இன்று இலகுவாகச் செய்ய முடியது. வெளிப்படையான அடக்கியொடுக்குதல் வெகுவாக குறைந்து கொணர்டே வருகிறது. ஆ07ால் உள்ளீடாக கூர்மைப்படுத்தப்பட்டதாக அது இன்று வேறு பரிமாணத்தைப் பெற்றிருக்கின்றது. இந் நிலையில் அடக்கி பொடுக்குதல் பற்றிக் கடந்தகாலம்போல் சொல்லுகின்ற இலக்கியம் தோன்றுவதற்கான வாய்ப்பில்லை. அதே சமயம் வெளியே தோன்றும் மனிதன் ஒருவனாகவும் உள்ளேயிருக்கும் மனிதன் வேறு ஒருவனாகவும் வழிவதை நான் அவதானிக் கின்றேன். இத்தகைய அவதானிப்பும் எனது அனுபவமும் இணைந்தே உளவியல் அடிப்படையிலான இலக்கியங்கள் என்னிடமிருந்து பிறக்கின்றன.
இன்றைய ஈழத்துப் //ഞ്ഞുമ இலக்கியார் எந்நிலையிலுர்ைனது? நம்பிக்கை தரும் Lf6oz_Lž மானியாக உங்கனாலி இனங்காணப்பட்டுர்ைனோர் //ரவர்?
இன்றைய ஈழத்துப் புனைகதை இலக்கியம் வளர்முகமாகச் செல்கின்றது என்பது என்னுடைய கருத்தாகும். இளைய தலைமுறை எழுத்தாளர்கள் சிலரும் மூத்த தலைமுறை எழுத்தாளர்கள் சிலரும் நல்ல படைப்புக்களைத் தந்து கொணடிருக்கின்றனர். (360.67// தலைமுறை எழுத்தாளர்களின் படைப்புக்களுக்கு இன்றைய போர்க்காலச் குழல், புலம்பெயர் வாழ்வு என்பன தகுந்த கருப் பொருளாக அமைகின்றன. அதே சமயம் இளையதலைமுறை எழுத்
தெணியான் 136

தாளர்கள் சிலரிடத்தில் ஒரு பலவீனமும் காணப்படுகின்றது. வார்த்தை ஜாலங்களினால் ஒருவகை மாயத்தோற்றங்களை உருவாக்கி இதுதான் இலக்கியம் என முன்வைக்கப் பார்க்கின்றனர். சிறிய ஒரு கருப்பொருளை வைத்துக்கொண்டு வார்த்தை சோடனைகளால் வாசகனை சிறங்கடித்து இறுதியில் ஏமாற்றத்திற்குள்ளாக்குகின்றார்கள். இத்தகைய குறைபாட்டி லிருந்து இளந்தலைமுறை எழுத்தாளர்கள் சிலர் விடுபட வேணடும். இலக்கியம் இரசனையுள்ளதாக இருக்கின்ற அதே சமயத்தில் இலக்கும் பயனுமுள்ளதாக அமைதலி வேணடும்.
இன்றைய கால கட்டத்தில் நம்பிக்கை தரும் படைப்பாளிகள் எனக் குறிப்பாக யாருடைய பெயரையும் சுட்டுவதற்கு நான் விரும்பவில்லை. நம்பிக்கை தரும் படைப்புகள் ஒன்றிரணடைத்தந்தவர்கள் பின்னர் எழுதாமலே இருந்து விடுகின்றார்கள். இவ்வாறு ஏன் இவர்கள் எழுதாமல் இருக்க வேணடும்? 6)IJug. UI6076/7562967, நம்பிக்கை தரும்படைப்பாளிகளாக 6777/7 நான் சொல்லமுடியம்? இப்பொழுது எழுதிக்கொணடிருக்கின்ற சிலரது சில படைப் புக்கள் நம்பிக்கைக்குரியவையாகக் காணப்படுகின்றன. இவர்களும் எமக்கு ஊட்டிய இந்த நம்பிக்கையோடு பேனாவைக் கீழேவைத்து விட்டுச் சும்மா இருந்துவிடலாம். எதிர்காலத்தில் இவர்கள் தரப்போகின்ற படைப்புக்களைக் கருத்திற்கொணர்டே இவர்களைப் பற்றியும் தீர்மானிக்க முடியும். தொடர்ந்து எழுதிக்கொணடிருக்கும் மூத்த எழுத்தாளர்கள் சிலர் இன்றும் நல்ல படைப்புக்களைத் தந்த வணணமுள்ளனர். நான் இவ்வாறு குறிப்பிடுவதன் மூலம் இளைய தலைமுறை எழுத் தாளர்களின் ஆற்றலை மழுங்கடிப்பது என்பது நோக்கமல்ல, அவர்கள் தொடர்ந்தும் எழுதவேணடும். தமிழிலக்கியத்திற்கு வளம் சேர்க்க வேணடும் என்பதே எனது அவா!
தெணியாண் 137

Page 73
பின்னிணைப்பு
இம்மலர் கணனிப்பதிப்பில் நிறைவேறும் தறுவாயில் வெளிநாடுகளிலுள்ள தெணியானின் மாணவர்களிடமி ருந்து சில கட்டுரைகள் வந்து சேர்ந்துள்ளன. ஆகவே அக் கட்டுரைகளும் இம் மலரின் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளன.
தொகுப்பாசிரியர்
தம்பையா தயாபரணி - இலண்டனர்
தெணியாண் மல பார்வைகள், சில பதிவுகள்
அப்போது பன்னிரணடு பதின்மூன்று வயதிருக்கும் என நினைக்கிறேன். அம்புலிமாமாவிலிருந்து மெதுவாக ஆனந்த விகடனிற்கு மாறிய தருணங்கள். எதேச்சையாக கையில் கிடைத்தது ஒரு நாவல். அந்த வயதிற்கு அது சற்று கூடுதலாக இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக அந்த புத்தகத்தில் ஈடுபடலானேன். அதுவரை, முன்பு தமிழ்நாட்டுச் குழலில் வந்த அவர்களின் பேச்சு மொழியிலமைந்த கதைகளை வாசித்துக் கொணடிருந்த எனக்கு அட, "எங்கட' சனங்களின் பேச்சு வழக்கையும், அதில் வெகு சகஜமாக உலாவரும் எங்கள் மனிதர்களையும் வாசித்தபோது வித்தியாசமாகவும், வியப்பாகவும் இருந்தது. அதுவும் எனக்கு மிகவும் தெரிந்த ஒருவர் எழுதியது. இன்னும் கூடுதல் ஆச்சரியம். அந்த நாவலில் வந்த "ஆறுமுகத்தார்' என்னும் யாழ்ப்பாணத்து நடுத்தர வர்க்கத்துப் பிரதிநிதியை இன்றளவும் மறக்க முடியவில்லை. வாசித்துப் பல வருடங்கள் ஆன பின்னும்கூட அனேகமாக அந்நாவலின் பெயர் "கழுகுகள்” என
தெணியான் 138
 
 
 
 
 
 
 

நினைக்கிறேன். அதன்பிறகு விடிவைநோக்கி பெற்சிறையில் வாடும் புனிதர்கள், மரக்கொக்கு என நீணர்டது. இதில் குறிப்பாக "பொற்சிறையில் வாடும் புனிதர்கள்’ நாவல் ஈழத்தில் அதுவரை யாரும் பார்க்காத அல்லது பார்க்க முயற்சிக்காத ஒரு புலத்திலிருந்து வந்தது. தமிழ்நாட்டில் எழுந்த திராவிட இயக்கங்களின் தோற்றமும் வளர்ச்சியும் அதன் பிரதான கொள்கையில் ஒன்றான பார்ப்பனர் எதிர்ப்பும், தமிழ்நாட்டுடன் ஒப்பிடும்போது சற்று மாறுபாடான சமூகவியல் நடத்தைகள் கொணட ஈழத்திலும் கூட எதிரொலித்தது. இந்நாவல் இவற்றிற்கு ஒரு "முரண’ ஆக இருந்தது எனலாம். தவிர அந்நாவலின் கதை சொல்லும் போக்கும், நகர்வும் ஒரு கட்டிறுக்கமான திரைக்கதை போல் இருந்தது. அதன்பிறகு வந்த பாரதிராஜாவின் "வேதம் புதிது’ ///_ớig5//_ốỡ அந்நாவலை ஒப்பிட்டுப் பார்த்தேன்.
நான் ஹாட்லிக் கல்லூ7யில் படித்தபோது எங்கள் உயர்தர மாணவர் மன்ற இலக்கிய கூட்டமொன்றிற்கு சொற்பொழிவாற்ற தெணியான் அவர்களை அழைத்திருந்தோம். ஐந்து நிமிடங்களிற்கு மேல் யாருடைய பேச்சையும் சகிக்காத எங்கள் உயர்தர மாணவர்கள் நீண்ட மணிநேரம் பேசிய தெணியானின் பேச்சை நிசப்தத்துடன் சந்தித்திருந்தனர்.
தெணியானின் தோற்றமும், அவரின் 'மானரிசங்களும்' உடைகளும் என்னை அவரை எப்போதுமே ஆர்வத்துடன் பார்க்க வைத்திருக்கின்றன. எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி சிகரெட்டை அனுபவித்து புகைப்பதில்கூட (இப்போது சிகரெட் இல்லை என நினைக்கிறேன்) என் அப்பாவை "அணனை' என விளிக்கும்போது அதில் உள்ள பிசிறில்லாத அன்பும், மரியாதையும் வெகு இயல்பாகவும் பாசாங்கில்லாமலும் இருந்ததை உணர்ந்திருக்கிறேன்.
யாழ்ப்பாண எழுத்துச்சூழல் காலத்திற்கு காலம் வெவ்வேறு தத்துவச் சிக்கலாலும், சித்தாந்த குளறுபடிகளாலும் தனிக்குழுமங்களாகவே இருந்து வந்திருக்கின்றன. பின்பு அது கொழும்பிற்கு இடம்பெயர்ந்தபோது பல எழுத்தாளர்கள், விமர்சகர்களுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களில் மு.பொ. கே.எஸ்.சிவகுமாரன், கவிஞர் வில்வரத்தினம் ஆகியோர்
தெணியாண் 139

Page 74
ஞாபகம் வருகிறார்கள். சித்தாந்தங்கள் தாண்டி அனைவரும் தெணியானின் எழுத்திலும் அவரிலும் மரியாதை கொணடிருக் கிறார்கள் எண்டது தெரியவந்தது.
ஏன் தெணியான் எழுதினார்? எழுதுகிறார்? சமூக எழுச்சி அல்லது ஒடுக்குமுறைக்கான ஒரு எதிர்வினை அடையாளப்படுத்துதல் என்பவற்றைத் தானடி "வாழ்க்கையில் மனிதர்கள் வெகு சகஜமாக காட்சியளிக்கின்றனர். இலக்கியம் என்ற கற்பனையின் ஊடே வாழ்க்கையை வெளிப்படுத்தும்போது அதன் மீது ஒரு மாயத்திரை படிந்து விடுகிறது. இந்த மாயத்திரை இன்றி இலக்கியத்தை எம்மால் நேசிக்க முடியுமா? வாழ்க்கைக்கு இல்லாத பூச்சை இலக்கியத்திற்கு தந்து அதை நேசிப்பது போல் ஆகுமா? குணங்களுடனும் குறைகளுடனும் வாழ்க்கை ஒடிக்கொணடிருக்கிறது. உயர்வின் மிகப்பெரிய வீச்சும் மிக மோசமான குறுகலும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கமுடியாதபடி வழிவில் விரவிக்கிடக்கிறது. வாழ்க்கையை ஆழ அறிந்து அதனுடன் உறவு வைத்துக்கொள்வதே நேசம். இந்த நேசத்தை உருவாக்குவதே இலக்கியம். இந்த நேசத்தின் அடிப்படையில்தான் வாழ்க்கையை மாற்ற முடியும்' என சுந்தராமசாமி சொன்னது இதற்கு ஒரு சரசுவதமான பதிலாக அமையும் என நினைக்கிறேன்.
இவற்றிற்கு அப்பால், இப்பாராட்டு விழாவும் நூல் வெளியீட்டு விழாவும், தெணியான் அவர்களிற்கு ஒரு சுய உலாவாக (Egorp) இருக்காது என நினைக்கின்றேன்.
I belive that when I die I shall rot and nothing of my Ego will survive
–Petterent Russel
தெணியான் 140

வையாபுரி VP.வேலாயுதம் (சுவிஸர்)
தெளிவு மிக்கவர்
நாம் சிலரை வெறுப்பதற்குக் காரணம் அவர்களைப் பற்றிச் சரியாக புரிந்து கொள்ளாமைதான். அவர்களைப் பற்றி சரியாகப் புரிந்துகொள்ளாமைக்குக் காரணம் நாம் அவர்களை வெறுப்பதுதான். இதனை ஒவ்வொருவரும் ஆழமாகப் புரிந்துகொண்டால் யாருக்கும் யாரும் எதிரிகளாக முடியாது.
62/ /O777 f பாடசாலைகளுக்கிடையிலான பேச்சுப் போட்டிகளின்போது தே.இ.க. சார்/7க திரு.தெணியான் அவர்களுக்குப் போட்டியாக மெ.மிபாடசாலை சார்பாக என்னை இறக்க ஆசிரியர்கள் துடித்தபோது, மோட்சத்தில் அடிமையாக இருப்பதைவிட நரகத்தில் தலைவனாக இருக்க விரும்பும் நான் தெணியானுடன் முட்டி மோதி தோல்வியை அணைக்க விரும்பது நழுவிக்கொள்வது எனது கடந்தகால வரலாறாகும்.
தெணியானுக்கு 2/ வயதாக இருக்கும்போது பொலிகணடி கந்தசுவாமி ஆலய மேற்கு வீதியில் தேர்பவனி வரும்போது எம் இளைஞர்கள் எல்லோரும் மேலங்கி இல்லாது ஆசார சீலர்களாக நின்று, 'ஏன் ஆலயத்திற்கு வந்தீர், வணங் கத்தானே' என்று பல இளைஞர்கள் கேள்விக்கணைகளைத் தொடுத்தபோது, மேலங்கியுடன் நின்ற தெணியான் "அழகியலை ரசிப்பதற்காகவே வந்தேன்’ என்று அவருக்கு உரிய ஆலாபனைகளோடு அமர்க்களப்படுத்தினார். அந்த முறனர்பாடுகளின் மூலவிசைகளினால் ஈர்க்கப்பட்ட நாள் தெணியானுக்கு பின்புறத்தே அவருக்கு பாதுகாப்பாக நின்றது இன்றும் என் மனதில் நிழலாடுகிறது.
எமது சமூகத்துக்கு பிரச்சினைகளைப் பேசித்தீர்ப் பதற்காக ஆயுதம் தாங்கிய இயக்கங்களின் பாசறைகளைத் தேடிப் போகவேனடிய சமயங்களில் வாதிட்டு நியாயத்தை எடுத்துச் சொல்லி தீர்வுகாணபதற்கு எமது சமூகத்தில் பலரை அணுகி ஏமாந்திருக்கின்றோம். எல்லோரும் சொல்வீரர்கள் பயம் காரணமாக வரவே மாட்டார்கள். ஆனால் தெணியான் அவர்கள்
தெணியான் 141

Page 75
அந்தப்பாசறைகளுக்கு வந்ததும் அங்கே ஒரு இனம் புரியாத மதிப்புடன் விவாதத்திற்கு இடமேயில்லது வெற்றிவாகை குடிய சில சாதனைகளும் உண்டு. அவை எமது சமூகத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியவை விரிவஞ்சி விட்டு ബിറ്റക്റ്റിങ്ങ്.
பொற்சிறையில் "வாடும் புனிதர்கள்” என்ற நாவலைத் தெணியான் அவர்கள் எழுதியிருக்கிறார்கள். அதனைப் படித்த மாறாம்புலத்து நாகேந்திரசர்மாவிலிருந்து சுவினர் கஜேந்திர சர்மரவரை போற்றிப்புகழும்போது பூவோடு சேர்ந்த வாழை நாராக நாங்களும் பெருமையடைகின்றோம். ஆஜாகுபாகுவாள தோற்றத்தையுடைய தெனணியானின் மேடைப்பேச்சுக்கு நிகராக எவருமே நிற்கமுடியாது.
67மது சமூகத்தின் பிரச்சினைகளைத் தமிழ்த் தலைவர்களுக்கு உறுதியுடன் எடுத்துச்சொன்ன அவரின் வாதப் பிரதிவாதத் திறமைகளை இன்றும் எம் மனக்கனர்களில் வைத்துப் பூசிக்கின்றோம். சுவிசில் நடைபெறுகிற பட்டி மன்றங்களிலும், வானொலியில் நடைபெறும் விவாதங்களிலும் எமது சமூகப் பிரச்சினைகளையும் எமது சமூக தலைவர்களின் சாதனைகளையும் நாம் துருத்திக் கொணடிருப்பதே உயர்திரு தெணியான் அவர்களுக்கு நாம் செய்யும் கைம்மாறு அமரர் சூரனிலிருந்து தெணியான் வரை எமது சமூகத்துக்காக உழைத்தவர்களின் பெயர்கள் அழியாவணனம் பாதுகாத்து அவர்களுக்கு விழா எடுத்து அவர்களின் செயற்பாடுகள் எமது சமூகத்துக்கு என்றும் பயன்படப் பாதுகாப்போம்.
தெணியான் 142

R.சண்முகநாதனி (சுவினர்)
என்றும் எண் ஆசான்
தெணியான்-சிறந்த மேடைப் பேச்சாளர், சிறுகதை எழுத்தாளர், உப அதிபராக இருந்து ஓய்வு பெற்றவர்.
தெணியான இலக்கிய உலகிற்கு நன்கு பழக்கப்பட்டவர். 70களில் முதன் முதலாக 'விடிவை நோக்கி’ எனும் நாவல் வெளியிடப்பட்டது. தெணியானின் சிறுகதைகள் வீரகேசரி ஈழநாடு, மல்லிகை போன்ற சஞ்சிகைகளில் வெளிவருபவை.
தமிழ்ச்சிறுகதைகளைப் பொறுத்த வரை இலங்கையர் கோன், சம்பந்தன் போன்றவர்கள் தொடக்கம் செங்கை ஆழியான், டானியல், டொமினிக்ஜீவா, தெணியான், நந்தி சாந்தன் வரை போர்க்காலச்சூழலிலும் தொடர்ந்து தம் இலக்கியப் படைப்புக்களை ஆற்றி வருபவர்கள் வரிசையில் அடங்குவர்.
எழுத்தாளன் தன்னைச் சூழவுள்ளதுதான் யதார்த்தம் என்று கருதும் ஒன்றைத் தன்னுடைய படைப்பின் பொருளாகக் கொள்வான். இவ்வாறு கொள்கின்றபோது அவனுடைய குழல், அவனுடைய பின்புலம், அவனுடைய கருத்து வெளிப்படுகிறது. இவற்றுக்கு எடுத்துக்காட்டாக தெணியானின் "மரக்கொக்கு' எனும் நாவல் வடமராட்சி மணனுக்கு உரித்தான சாதியின் கெடுபிடியினை சமூக அந்தளிப்தில் உயர்ந்தவர்கள் எனத் தம்மை முத்திரை குத்திக்கொணர்டு அவர்களால் மேற்கொள்ளப் பட்ட அத்துமீறல்கள், அதிகாரத்தொனி வரட்டுக்கெளரவம் இவற்றினால் ஏற்பட்ட விளைவுகளின் பலர பலன்களை எடுத்துக்காட்டுவதுடன், குறிக்கப்பட்ட சமூகத்திலுள்ள பெணகளின் வாழ்வியல் நிலை எவ்வளவுக்கு கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டது என்பதைக் கருவாகக் கொண்டு எழுதப்பட்டது. 1994 இல் இந்த நாவலுக்கு அகில இலங்கை சாகித்திய மணடலப் பரிசு கிடைக்கப்பெற்றது.
"இலக்கியம் என்பது சமூக இயல்புடையனவாகவும், மனதின் உணர்வுகளைத் தட்டி எழுச்சியுறச் 6/#////// வேணடியனவாகவும் அமைதல் வேணடும். அந்த வகையில்
தெணியானின் 'கழுகுகள்' (சமூக நாவல்) யாழ்ப்பாணச்
ר . עם கெனியான் 143

Page 76
சமூகக் குடும்பச் சிதைவு இந்த நாவலின் வாயிலாக வெளிக் கொணரப்பட்டுள்ளது.
டொமினிக்ஜீவா, டானியல், தெணியான் போன்றவர்களது ஆரம்பகால சிறுகதைகள் மார்க்ஸிச சிந்தனை கொணர்டனவாக அமைந்திருந்தன. காரணம் அன்றைய அரசியல், பொருளாதார அமைப்புக்கேற்ப அவை படைக்கப்பட்டன. காலவேட்டத்தின் அரசியல் சூழ்நிலையால் அவர்களது சிந்தனைகள், கருத் தோட்டங்கள் தற்பொழுது போர்க்காலச் சூழலுக்கு அமைவான ஆக்க இலக்கியப்பணியினை ஆற்றி வருகின்றன.
ஒரு படைப்பாளி எவ்வளவு வயதானாலும் அவனுடைய 1/60/16 மாத்திரம் இளமையாக இருக்க வேணடும். அப்போதுதான் அவனுடைய படைப்பிலும் உயிர்த்துடிப்பு இருக்கும்.
தெணியானைப் பற்றி திரு.கா.சிவத்தம்பி குறிப்பிடு கையில் 'இலக்கிய முதிர்ச்சிப் போக்கினைக் காட்டியவர்களில் சாந்தன், நந்தி தெணியான்' போன்றவர்கள் முக்கியமாக குறிப்பிடவேனடியவர்கள் என்கிறார்.
கலைஞன், ஆசிரியன், இலக்கியப் படைப்பாளி அவன் வழிகின்ற காலத்தில் அவனைப்பற்றிய திறன்களைப் பாராட்டும் போது நிச்சயமாக அவன் உள்ளம் புளகாங்கிதம் கொள்ளும். அதுவே நாம் கொடுக்கும் யதார்த்தமான கணிப்பீடு அல்லது மதிப்பீடு எனக் கூறலாம். என்னைப் பொறுத்த வரையில் ஆங்கிலத்திற்கு காலஞ்சென்ற திருதம்பயைா ஆசிரியர், தமிழிற்கு திரு.தெனியான் இருவரையும் என் இருகணர்களாக நேசிப்பவன்.
திரு.தெனியானைப் பொறுத்தவரை என் பாடசாலைக் காலங்களில் அவர்களுடன் நிறையப்பழகும் வாய்ப்புக்கிடைத்தது. அப்பொழுதெல்லாம் எமது சமூகத்தைப் பற்றியும், கல்வியின் முக்கியத்துவம் பற்றியும் நிறையக் கூறுவார். எனக்குச் சிறந்த ஆலோசகராக, நல்ல வழிகாட்டியாக, இத்தனைக்கும் மேலாக என் தமிழ் ஆசிரியராக இருந்தவர். அவர்களது இலக்கியப் Z uGØØf7 மென்மேலும் வளரவேணடுமென வழித்தும் அதேவேளையில், நீண்ட ஆயுளுடன் கூடிய நல்வழிவு வழ என் வாழ்த்துக்கள்.
தெணியாண் 144

வவரதணி (கவிர்சலந்து)
தெணியாண் ஒரு சமூகப்போராளி
'தம்பி எந்த இடம்' “62/y LOITIIZZ #7” 'வடமராட்சியிலை. "கொற்றாவத்தை' "கொற்றாவத்தையிலை.'
"தெணியான வீட்டுக்கு கிட்ட”
இருபது, இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னராக பிரயாணங்களின்போது பளப்களிலும், புகைவண்டிகளிலும் அடிக்கடி நிகழும் சம்பாசனைகளை நினைத்துப்பார்க்கிறேன். பல வருடங்களுக்கு முன்பிருந்தே எங்களை அறிமுகப்படுத்தக் கூடிய ஓர் அடையாளச் சின்னமாகத் திகழ்ந்து கொண்டிருப் //62//f தெணியான் அவர்கள். சாதாரணமாகச் சிலரும் உள்நோக்கத்தோடு சிலரும் எங்களை விசாரிக்கும்போது நாங்கள் தெணியானின் உறவினர்கள் என்று பெருமையோடு சொல்லிக் கொள்ளக்கூடிய வகையில் அவர் தன்னை உயர்த்தியுள்ளார்.
சமூக அநீதிகளுக்கெதிராக கிளர்ந்தெழுந்து அவற்றை அம்பலப்படுத்தி நீதி தேட முனையும் இலக்கியவாதிகள்கூட போராளிகள்தான். இந்த வகையில் "தெணியான அவர்கள் ஆக் ரோசமான ஓர் போராளியாகவே காட்சியளிக்கிறார். அவருடைய பேனா நிறையவே சாதித்துள்ளது.
பிரச்சினை ஒன்றிற்கு தீர்வு காணும்போது அப்பிரச்சி னையின் வரலாற்றுப் பின்னணி தெளிவாக இனங்காணப்படல் வேணடும். சமூகப்பிரச்சினைகளை முன்வைக்கும்போது அவற் றின் வரலாற்றுப் பின்னணிகளை தர்க்க ரீதியாக இனங்காட்டி நி/யமான தீர்வொன்றிற்கு சமூகத்தை முன்னகர்த்தும் சமூகப் /ெறுப்பு தெணியானின் பேனாவிற்கே உரிய தனித்துவமான தொண்றாகும்.
மணிவிழா காணும் தெணியானை வழித்துவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
H கெணியாண் ) 145

Page 77
பூமகள் ச.சநிலையம் - கவினம் கிளை அளிட்டியம்புலம் முருகன் ஆலயம் - சுவினர் கிளை
ஊர்ப் பற்றாளன்
தலித்துக்களின் வரலாறை அதாவது அடக்கி ஒடுக்கப் பட்ட ஒரு சமூக மக்களின் வரலாற்றை பதிவு செய்து எழுத்து வடிவம் கொடுத்து உலாவவிட்டவர்களில் மிக முக்கியமானவர் தெணியான் ஆவார். வட அல்லை க.முருகேசனாரின் பவளவிழா மலரில் தேவரையாளிச் சமூகம் பற்றி எழுதிய கட்டுரை மூலம் தேவரையாளி பாடசாலையையும், அதனுடன் சார்ந்த மக்களைப் பற்றியும் மற்றைய சமூகத்தவரும் அறியும்படி ஆழமான கருத்துக்களை முன்வைத்துள்ளார் என்று பேராசிரியர் க.சிவத்தம்பி அவர்களே பாராட்டியுள்ளார்.
(é952ólýzÝM Z இக் கட்டுரையை பிரான்சிலிருந்து வெளிவரும் உயிர்நிழல் என்ற சஞ்சிகை தனது வைகாசி-ஆடி 2001 இதழில் மறு பிரசுரம் செய்து தெணியானுக்கு பெருமை தேடிக்கொடுத்துள்ளது.
பூமகள் ச.சநிலைய மக்கட்கு பெருமை சேர்க்கும் விதமாக கேட்போரை கவரும் கனிர் என்ற குரலில் அறுத்துறுத்து பேசும் ஓர் சிறந்த பேச்சாளரும், பட்டிமன்ற வாதியும் ஆவார்.
பொலிகனடி கந்தவன ஆலயப்பிரவேச நாளில் எமதுரர் பூனிமுருகன் ஆலய முன்றலில் கூடிநின்ற மக்கள் மத்தியில் தெணியான் ஆற்றிய உரை அந்தக் கூட்டத்திலுள்ள மக்களின் அடிமனதில் தூங்கிக்கிடந்த உணர்சிகளைத் தட்டியெழுப்பி அவர்கட்கு வீராவேசம் ஊட்டி நின்றதை மறக்க முடியாது.
'விடிவை நோக்கி', "மரக்கொக்கு', 'பொற்சிறையில் வாடும் புனிதர்கள்' போன்ற நாவல்களை சிறந்த கற்பனையோட்டத்துடன் அதிலும் "பொற்சிறையில் வாடும்
புனிதர்கள்’ எனும் நாவலில் தமிழ் சமூகத்தில் உயர் சாதியாக மதிக்கப்படும் ஐயர்மார்கள் LULO ஏழைகள் என்ற யதார்த்தத்துடன் பொருந்திய நடைமுறை உணர்மையை
தெணியாண் 146

அவர்களில் ஒருத்தன் போல மிக அழகாக சித்திரித்துக் காட்டியது மிக அருமை.
எமதுர், அயலூரில் எங்கு துக்கநிகழ்வு நடந்தாலும் முதன் முதல் சமூகம் கொடுக்கும் ஓர் அரச உத்தியோகத்தர் தெணியான் மட்டுமே.
தனது ஊரை நேசிப்பவர்தான் தனது மொழியை நேசிப்பான். தனது மொழியை நேசிப்பவன்தான் நாட்டை நேசிப்பான் என்ற இந்த அறிஞனின் விளக்கத்தைபோல!
எமது ஊரின்மேல் உள்ள பற்றின்பால் எம்மூரின் மரியாதையை காப்பாற்றுவதில் என்றும் முன் நிற்கும் ஊர்ப்பற்று எமதுர் மக்கள் மனதில் ஓர் நீங்காத இடத்தில் நிறுத்தியது.
என்றென்றும் தெணியான வழிக. அவர் குடும்பம் வழிக.
தெணியாண் 147

Page 78
கிருஷ்ணபிள்ளை ஜெகதீஸ்வரன் (அன்பு) ஜெஇந்திரா
எமது சொத்த
தெணியானுக்கு மணிவிழா என்று அறியவந்த போது எமது நீண்டநாள் அவர ஒன்று நிறைவேறும் தருணம் வந்துவிட்டது என்று மனம் மகிழ்ச்சியடைகிறது. எங்கள் யாவருக்குமே பெருமை சேர்க்கும் வணர்ணம் இலக்கியப்பணி சமூகப்பணி முதலியவற்றை முழு நேரமாக செய்யும் தெணியான் புலம்பெயர்ந்து வாழும் நம் இளைஞர்களுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார்.
தெணியான் தான் பேனை பிடித்த கதையை தனது
"சொத்து' சிறுகதைத் தொகுதியின் முன்னுரையில் இவ்வாறு கூறுகிறார்.
"யாழ்ப்பாணத்து நிலவுடைமைச் சமுதாயத்தின் பாரம்பரியத்தினதும் பனபாட்டினதும் தவிர்க்க இயலாத
சவாலாகவே நான் பேனா பிடிக்க ஆரம்பித்தேன்'
இலங்கை முற்போக்கு இலக்கிய வரலாற்றில் தனக்கென்றோர் முத்திரை பதித்த தெணியான் மேலும் மேலும் படைப்புக்களை எமக்கு வழங்க அவர் நீடுழி காலம் வாழ வேணடும் என்று இறைவனை இறைஞ்சுகின்றோம்.
தெணியான் 148

1 ܥܠ ܐ ܝ .
லணிடன் மாநகரிலிருந்து.
மணிவிழா சிறப்புற வாழ்த்துவோர்
பிள்ளையார் இராஜேந்திரம் - செல்வபதி செல்லையா ரமேளம் - ரமண7 மாசிலாமணி மனோகரன் - பாமர வீரபத்திரன் தீபன்
சிவலிங்கம் சிவாஜி - தீப7 பொன்னையா செல்வேந்திரா
இரத்தினம் ரவி - உதயகல7 முத்துக்கிருளப்ணன் - பத்மலிங்கன் ஆழ்வாப்பிள்ளை மதியமுதன் தம்பையா தயாபரன் மாம்பழம் யோகநாதன் - பிரேம7
சிவபாதம் இளங்கீரன் - வேல்ரஜனி
தெணியாண் | 149

Page 79
சுவினம் நாட்டிலிருந்து.
மணிவிழா சிறப்புற வாழ்த்துவோர்
கிருஷ்ணபிள்ளை ஜெகதீஸப்வரன் (அன்பு) - இந்திரா வடிவேல் வரதன் - கெளரி செல்வமாணிக்கம் எதிர்வீரசிங்கம் இரத்தினம் வரதன் - இன்பரானி ஆறுமுகம் தங்கராச7 - மதிவதன7 செல்லையா அருமைத்துரை ஆறுமுகம் ஆனந்தன் - நேபா தம்பையா லிங்கநாதன் - கதாசினி நந்தகுமார் சுகந்தினி இராமு சண்முகநாதன் - சாந்தி பன்னிருகரம் பாயு - ரகுனா புதியான் வையாபுரி வீரபத்திரன் சுதாகரன் - அண்டரசி வீரபத்திரன் பிரபாகரன் (கணணன்) சிவப்பிரகாசம் பாளம்கரன் - கவிதா அருளானந்தம் அருட்செல்வம் - அமுதா சுதா - ஜெயவாணி கிருஷ்ணபிள்ளை ஜெகதீஸ்வரன் (ஜெகன்) - யோகேஸ்வரி சின்னராசா உதயன் - தனேளப்வரி மகாலிங்கம் ரகு - வனிதா பன்னிருகரம் காணeபன் - தவமலர் இராசா திருத்தணிகாசலம் - செல்வராணி நித்தியானந்தம் ஞானமனோகரி கிருஷ்ணபிள்ளை செந்திலநாதன் கதிரவேலி சிவனொளி திருநாவுக்கரசு மின்னொளி பன்னிருகரம் ஜெயக்கொடி - தெய்வநாயகி முரளிதரன் பிரியா
தெணியான் 150


Page 80
|-