கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வயது வந்தோருக்கான சர்வஜன வாக்குரிமையின் சில உண்மை வடிவங்கள்

Page 1
வயது வந்ே சர்வஜன வா சில உண்மை
“ஏனென்று கேட் நாங்கள் உழைக்கவும் சா
ஒரு தோட்டத் தொழில் பொறிக்கப்ப
 
 

தாருக்கான க்குரிமையின்
) 6ւILգh! ங்கள்
க நாங்கள் யார்?
கவுமே பிறந்தவர்கள்.”
ாளியின் கல்லறையில் ட்ட வரிகள்,

Page 2
. ܬ ܢ
:ܘ
,
 
 
 
 
 

வயது வந்தோருக்கான சர்வஜன வாக்குரிமையின் சில உண்மை வடிவங்கள்
1981ம் ஆண்டு பிரித்தானியர்களால் வழங்கப்பட்ட சர்வஜன வாக்குரிமையின் 50வது ஆண்டு பூர்த்தியை கொண்டாடும் வேளை யில் அதன் உண்மையான வடிவங்களில் சிலவற்றை வெளிக் கொணர்வது அவசியமாகின்றது. வயது வந்தோர்க்கான சர்வஜன வாச்குரிமையானது 1927ல் பிரித்தானியாவில் நடைமுறைக்கு வந் தது. நான்கு வருடங்களுக்குள் அது இலங்கையில் அறிமுகப்படுத் தப்பட்டது. இலங்கையே இதை அனுபவித்த முதலாவது பிரித் தானிய காலனியாகும். இங்கு சர்வஜன வாக்குரிமைக்கும் இலங் கையின் சுதந்திரத்திற்கும் இடையேயான தொடர்பையும், சர்வ ஜன வாக்குரிமைக்கும் வாக்குரிமை பறிக்கப்பட்ட மக்களுக்கிடை யேயான தொடர்பையும் பற்றி மாத்திரமே சற்று விரிவாக ஆரா யப்படுகின்றது. சர்வஜன வாக்குரிமைக்கும் இலங்கைத் தமிழர் களுக்கும், சர்வஜன வாக்குரிமைக்கும் உழைக்கும் மக்களுக்கும் இடையேயான தொடர்புகளைப்பற்றி பொதுவாக குறிப்பிடுவது டன் நிறுத்திக் கொள்ளப்படுகின்றது.
சர்வஜன வாக்குரிமையும் இலங்கையின் சுதந்திரமும்
1920ம் ஆண்டளவில் இலங்கையின் உள்ளூர் முதலாளி வர்க் கத்துக்கும் பிரித்தானியர்களுக்கிடைபேயும் சுமூக உறவு நிலவி வந் தது. உள்ளூர் முதலாளிவர்க்கமும், நில உடமையாளர்களும் பிரித் தானியரால உருவாக்கப்பட்ட பொருளாதார அமைப்புடன் இணைந்து அதிலேயே தங்கியிருந்தார்கள். இவர்களது வர்க்க நல னும் பிரித் தானியரினது ‘தேசிய நலனும் முரண்பாடுகள் அற்ற

Page 3
( 2)
தாக இருந்தன. இந்தப் பின்னணியில் தான் காலனியல் ஆட்சியா ளர்களின் சார்பில் டொனமூர் ஆணைக்குழு பல சீர்திருத்தங்களை உள்ளடக்கிய பிரேரணைகளை முன் லை த்தது. இப் பிரேரணைகளி 6ாது பிரதான நோக்கம் கிட்டவாக்க, நிறைவேற்று, நிதித்துறைப் பொறுப்புகளின் ஒரு குறிப்பிட்ட பகுதியை உள்ளூர் பூர்ஷ்வாக் களின் கைகளுக்கு மாற்றுவதேயாகும். உள்ளூர் பிரதிநிதிகளுக்கு பொறுப்புகளிலும் அதிகாரத்திலும் 8 னசமான பகுதியை கை மாற்றிவிடுவதை உறுதிப்படுத்தக்கூடியதான நிறைவேற்றுக் கமிட்டி அமைப்பொன்றினை உருவாக்குவதே இதன் குறிக்கோளா கும். வயது வந்தோர்க்கான சர்வஜன வாக்குரிமையை வழங்குவ தானது இந்த யாப்பை செயல்படுத்துவதற்கு அவசியமான சூழலை உருவாக்கும் என்று சருகப்பட்டது. இலங்கைத்தீவின் காலணி ஆட்சியாளர்கள் இலங்கையை தொடர்ந்தும் தமது காலனியாக வைத்திருப்பதற்கு சர்வஜன வாக்குரிமை அவசியமானது என்று கருதினர்கள். ஆணுல் அவர்களின் நலனுக்கு சேவை செய்து, அதற்கு கீழ்படிந்திருந்த உள்ளூர் பூர்ஷ்வாக்களுக்கும், நில உடமையாளர் களுக்கும் இங்கிருந்த பிரித்தானிய தோட்டத்துரைமார்களுக்கும் இது புரியவில்லை. இதனல், இலங்கையின் அரசாங்க சபை வயது வந்தோர்க்கான சர்வஜன வாக்குரிமையை உள்ளடக்கியிருந்த டொனமூர் யாப்பை 2 மேலதிக வாக்குகளாலேயே நிறைவேற்றி யது. அரசாங்க சபையின் பெரும்பான்மையான இலங்கை அங்கத் தவர்கள் இச் சீர்திருத்தங்களை எதிர்த்தே வாக்களித்திருந்தார்கள். முதலாளித்துவ அரசு இயந்திரத்தை முழு மக்களினதுமாகக் காட் டும் முதலாளித்துவ ஆட்சிக் கலையில் அனுபவம் பெற்றிருந்த பிரித் தானிய காலனியல் ஆட்சியாளர்களால் புரிந்து கொள்ளப்பட்ட விஷயத்தை எமது உள்ளூர் ஆளும் வர்க்கங்களால் புரிந்து கொள்ள முடியாமல் போய் விட்டது. ܗ
1928ம் ஆண்டு, நவம்பர் மாதம் 8ம் தேதி சேர் பொன்னம்பலம் ராமனுதன் அவர்களால் அரசாங்க சபையில் முன் வைக்கப்பட்ட பின் வரும் கருத்துக்கள் இதற்கோர் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
*சர்வஜன வாச்குரிமையானது எமக்கு எதுவிக நன்மை யும் அளிக்காது என்று நான் கூறிக்கொள்கிறேன்."
'ஆணையாளர்கள் வயது வந்தோர்க்கான வாக்குரிமை யைப் பற்றி கூறுகிருர்கள். இவர்கள் எதற்காக இந்த நாறிப்போன தத்துவத்தை எமக்கு போதிச்கிருர்கள், எதற்காக எமது தொண்டைக்குள் இவற்றை திணிக்சிருர்
56ro * :
 

( 3 )
டொனமூர் ஆணை குழுவின் சீர்திருத்தங்கள் நாறிப்போன வையல்ல. முதலாளித்துவத்தைப் புரிந்து கொள்ளாத பொன்னம் பலமும் அவர்களின் சகாக்களும் தான் நாறிப் போனவர்களாக இருக்க வேண்டும்.
டொனமூர் திட்டத்தின் பின்பும் காலனியல் தேசாதிபதியும் அவரது உத்தியோசத்தர்களும் தமது அதிகாரத்தை தொடர்ந்தும் வைத்திருந்தார்கள். தேசாதிபதியின் நிலை மைக்கு தீங்க செய் வதற்குப் பதிலாக, டொனமூர் அமைப்பு அதை பலப்படுத்தியது தேசாதிபதி பிரித்தானிய அரசின் பிரதிநிதியாகக் கடமையாற்றி னர். ஆகையினல் அவர் உள்ளூர் பிரதிநிதித்துவ அங்கத்தினருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கயில்லை. அவரது அதிகா ரம் முக்கியத்துவம் மிக்க துறைகளில் பலவற்றை தழுவியதாக இருந்தது. பாதுகாப்பு, வெளிவிவகாரம், நிதித்துறை, வர்த்தக ஒப்பந்தங்கள், சேவைத்துறை, நீதிபரிபாலனம் ஆகியவையே அவை யாகும். இவ்விதமாக, பிரதிநிதித்துவ அங்கங்களுக்கு பகுதிப் பொ றுப்புகளை கைமாற்றிக் கொள்வதன் மூலம் தேசாதிபதிச்கு மேலதிக அதிகாரங்கள் கொடுக்கப்பட்டன.
சர்வஜன வாக்குரிமை என்பது மக்களால், மக்களுக்காக, மக்களை ஆளும் அரசு தேர்ந்தெடுப்பதற்கான உரிமையாகும். இலங் கை வாழ் மக்கள் மேன்மை தங்கிய பிரித்தானிய அரசரின் குடிமக் களாக அதாவது பிரித்தானிய பிரஜைகளாகி இருக்கக்கூடியதாக, இலங்கை அரசாங்கத்தின் பிரதான பொருளாதார நிர்வாகத் துறைகள் பிரித்தானிய அரசின் பிரதிநிதிகளால் தீர்மானிக்கப் படக்கூடியதாக இருந்த அதே நேரத்தில் நாம், எமக்காக, எம்மை ஆளும் உரிமையைப் பெற்று விட்டோம்; இதை நாம் நம்பவேண் டுமீ. நம்பத் தவறுவோமானுல் ராஜத் துரோகம், அபிவிருத்தி நட வடிக்கை9ளுக்குச் செய்யும் துரோகம் என்று குற்றஞ் சுமத்தப் படுவோம்.
காலனியல் அரசாங்கத்தின் அரசியல் அதிகாரத்தால் கட்டுண்டு கிடந்த நாம், "இலங்கை மக்களால், மக்களுக்காக, மக்களை அளு வதற்கான மூன்று தேர்தல்களில் பங்கு கொண்டோம். முதலாவது 1931 இலும், இரண்டாவது 1936 இலும், மூன் ருவது 1947 இலும் நடைபெற்றன. 1948ல் நாம் சுதந்திரம் பெற்ருேமாம். அப்படி யானுல் 1931ல் நாம், எமக்காக, எம்மை ஆள்வதற்குப் பெற்ற சுதந்திரம் பொய்யானதா? அல்லது 1948ல் நாம் எமது சுதந்திரத் தைப் புதுப்பித்துக் கொண்டேமா? 50வது நிறைவுவிழாவின் தலை வர்கள் பதிலைச் சொல்லட்டும்.

Page 4
( 4 )
1941ல் நடத்தப்பட வேண்டிய தேர்தல் நடைபெறவில்லை. காலனியல் ஆட்சியாளர்கள் இத் தேர்தலை ஒத்திப்போட்டார்கள். பிரித்தானியா இரண்டாம் உலக மகாயுத்தத்தில் ஈடுபட்டிருந்ததே இதற்கான காரணமாகும். 1935ல் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்க சபையும், மந்திரி சபையும் 1947 வரை நிலைத்து நின்றன. அதா வது அரசாங்கத்தின் ஆட்சி காலம் நீடிக்கப்பட்டது. இதற்காக மக் அளிடம் எந்தவித அனுமதியும் பெறப்படவில்லை. பிரிததானியரின் நலனுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. பிரித்தானியர் யுத் தத்தில் ஈடுபட்டிருந்த இவ் வேளையில் பிரித்தானியருக்கு எதிரான உள்ளூர் எதிர்ப்புகள் வலுவடைந்தன. இவற்றை அடக்குவதற்கு சாதாரண சட்டங்கள் வலுவற்றிருந்ததன் காரணத்தால் 1939ல் உள்ளூர் பாதுகாப்புத் திட்டமொன்று வகுக்கப்பட்டது. இடது சாரிகள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். லங்கா சமசமாஜக் கட் சியும், ஐக்கிய சோசஷ லி F-5 கட்சியும் தடை செய்யப்பட்டன தொழிற்சங்க நடவடிக்கைகள் சட்ட விரோதமாக்கப்பட்டன. இடது சாரிகளுக்கு சார்பான செய்திப் பத்திரிகைகள் தடைசெய் யப்பட்டன.
ஜனநாயகத்தின் உச்ச வடிவமாகக் கருதப்படும் ‘சர்வஜன வாக்குரிமையை" பெற்றிருந்துங்கூட ஏகாதிபத்திய எஜமானர்களை எதிர்க்கும் ஜனநாயகம் எமக்கு இருக்கவில்லை.
1947ல் நான்காவது தேர்தல் நடைபெற்றது. அதே நேரத்தில் *சோல்பரி ஆணைக்குழுவினல் பிரேரிக்கப்பட்ட அரசியல் யாப்பு 1947ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய யாப்பு உள்ளூர் சட்டவாக்க சபையான அரசாங்க சபையில் கலந்துரையாடப்பட வோ, விவாதிக்கப்படவோ அல்லது நிறைவேற்றப்படவோயில்லை. இவ் யாப்பு "இலங்கை மக்களால்" தேர்ந்தெடுக்கப்பட்ட *பிரதிநிதிகளின் " அனுமதியுடன் தனது அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை. மாருக பிரிட்டிஷ் பாராளுமன்றத்தினதும், இங்கி லாந்து மன்னரினதும் அனுமதியுடனேயே தனது அதிகாரத்தைப் பெற்றது.
இதன் மூலம் டொனமூர் யாப்பின் சாதக குணம்சமாக இருந்த நிறைவேற்றுக் கமிட்டி அமைப்பு வெஸ்ட்மினிஸ்டர் வடிவான மந்திரி சபை அமைப்பால் பிரதியீடு செய்யப்பட்டது. இலங்கை பெரிய பிரித்தானியாவின் மன்னனை தலைமையாகக் கொண்ட பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துள் தொடர்ந்தும் நிலைத்து நிற்க வழி அமைக்கப்பட்டது. - ·
 

( 5 )
இலங்கையின் சட்ட வாக்க சபை பூரண சுயாதிபத்தியம் உள்ள சட்ட சபையாக செய்ல்படுவதை தடுப்பதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இலங்கைப்பாராளுமன்றம் இந்த யாப்பை மாற் றும், திருத்தும் அல்லது புதிதானவற்றை சேர்க்கும் அதிகாரம் அற்றதாக இருந்தது. சோல்பரி யாப்பில் அடிப்படை உரிமைகள் பற்றிய பிரகடனம் எதுவும் இருக்கவில்லை.
1947ல் அறிமுகப்படுத்தப்பட்ட இவ் யாப்பின் அடிப்படையில் தான் 1948ல் நாம் பெற்ற சுதந்திரம் அமைந்தது. அதே யாப்பே பின்பற்றப்பட்டது. இதுதான் நாம் பெற்ற சுதந்திரம். 1972 வரை சோல்பரி ஆணைக்குழுவின் யாப்பையே நாம் பின்பற்றினேம்.
ஆகவே இலங்கைக்கு வழங்கப்பட்ட சர்வஜன வாக்குரிமையா னது பிரித்தானியர்கள் எமது நாட்டை சுலபமாக ஆட்சி செய் வதற்கு உருவாக்கிய ஒரு தந்திரோபாய அமைப்பும், கண்துடைப்பு மேயாகும். 1972ல் முதலாவது குடியரசு அறிமுகப்படுத்தப்பட் டது. இதன் பின் சர்வஜன வாக்குரிமையானது தனது உண்மை யான அர்த்தத்தைப் பெற்று விட்டதா? அது நிஜமானதொன்முக மாறிவிட்டதா? இல்லை. தமது காலனியல் ஆட்சி அதிகாரத்தை பாதுகாப்பதற்காக காலனியல்வாதிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட *சர்வஜன வாக்குரிமையை" இன்று உள்ளூர் பூர்ஷ்வாக்கள் தமது வர்க்க அதிகாரத்தை பாதுகாப்பதற்காக பயன்படுத்திக்கொள் கிருர்கள். முழு மக்களினதும் அதிகாரமாக தமது வர்க்கத்தின் அதிகாரத்தை காட்டிக்கொள்ள முற்படுகிறர்கள். பிரித்தானியர் கள் கற்பித்த பாடத்தை சரியாக நிறைவேற்றுகிருர்கள்.
1971 ஜூலை மாதம் முதல் 1977 வரை நிலவிய அவசரகாலச் சட்டத்தினதும், புதிய அடக்கு முறைச் சட்டங்களினதும் மத்தியி லேயே (குற்றவியல் நீதி ஆணைக்குழுச் சட்டம் இதற்கோற் உதார ணம்) முதலாவது குடியரசு யாப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. 1947ல் இருந்து தொழிலாளி வர்க்கத்திற்கும், சிறுபான்மையினருக் கும் எதிராக பயன்படுத்தப்பட்டு வந்த பொதுஜன பாதுகாப்புச் சட்டம் 1972 யாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவசரகால கட்டளைகளுக்கு யாப்புரீதியான அந்தஸ்து வழங்கப்பட் டுள்ளது. இந்த குடியரசு யாப்பின் கீழ் உள்ளூர் ஆட்சி மன்ற தேர் தல்கள் நடாக சப்படவில்லை. இம் மன்றங்கள் கலைக்கப்பட்டபோது இவை அமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப் பட்டன. இந்நடவடிக்கைகளின் மூலம் தெரிவு செய்யப்பட்ட நிறு வனங்களினது அகிகாரம் மதிப்பிழக்கச் செய்யப்பட்டது. சுருக்க மாகச் சொல்லப் போனல் மக்களின் ஜனநாயகம் மதிக்கப்பட

Page 5
( 6 )
வில்லை. "சர்வஜன வாச்குரிமை நிஜமான தொன்முக வேண்டு மானல் மக்கள் ஜனநாயகம் மதிக்கப்படவேண்டும்.
இரண்டாவது குடியரசு யாப்பு (இலங்கை ஜனநாயக சோஷ லிசக் குடியரசு) 1978ல் உருவாக்கப்பட்டது. இது மக்கள் ஜனநாய கத்திற்கு மதிப்பளிப்பதில் முன்னைய யாப்பை மிஞ்சிநிற்கின்றது.
சர்வஜன வாக்குரிமையும் வாக்குரிமை இழந்த மக்களும்
சர்வஜன வாக்குரிமையுள்ள ஒரு "ஜனநாயக நாடான இலங் கையில் 100 வருடத்துக்கு குறையாத இலங்கை வரலாறுள்ள நாடற்ற மக்களைப்பற்றி அறிய வேண்டியது அவசியமல்லவா?
‘இந்திய வம்சாவழியினர்" என்று உத்தியோக பூர்வமாக அழைக்கப்படும் மலையகத் தமிழர்களின் வாக்குரிமையை பறிப்பதற் கான இயக்கம் சர்வஜன வாக்குரிமையின் ஆரம்பத்தில் இருந்தே இருந்து வந்திருக்கின்றது.
1931ல் நடைமுறைக்கு வந்த சர்வஜன வாக்குரிமையானது உண்மையிலேயே வயது வந்தோர்க்கான சர்வஜன வாக்குரிமை யாக இருக்கவில்லை, அரசாங்க ச ையின் சிங்களத் தலைவர்கள் இந்திய குடியேற்ற தொழிலாளர்களில் ஒரு பகுதியையாவது வாக்களிப்பில் இருந்து ஒதுக்கி வைக்க விரும்பினர்கள். டொனமூர் ஆணைக்குழு வின் பிரேரணைகளை,திரிப்பதில் வெற்றி கண்டார்கள், ஒரு வாக்கா ளருக்குரிய அந்தஸ்தைப்பெறுவதற்கு இலங்கையில் ஐந்து வருடங் கள் தொடர்ச்சியாக வாசஞ் செய்ததற்கான சாட்சியுடன் ஒரு நிரந்தர குடியிருப்பாளர் என்பகை உறுதிப்படுத்தும் பொறுப் பான உத்தியோகத்தர் ஒருவரின் அத்தாட்சிப்பத்திரம் அவசியம் என்று கோரப்பட்டது. அது ஆகக்குறைந்தது இந்திய வம்சாவழி யினரின் ஓர் பகுதியையாவது வாக்காளராக பதிவு செய்யாமல் தடுக்கும் என்று இவர்கள் எதிர்பார்த்தார்கள். .
புதிய டொனமூர் திட்டத்தின் கீழான முதலாவது தேர்தல் 1931ல் நடைபெற்றது. அதிர்ஷ்ட சாலிகளான இவ் வாக்காளர்கள் தாமே தம்மை பதிந்து கொள்ள வேண்டிய நிலையில் இருந்தார் கள். கிராம சேவை அதிகாரியே (விதானையார்) இப் பதிவை மேற் கொண்டார். இவர் கிராம அதிகார அமைப்பின் ஓர் அங்கமாகும். ஏழை மக்களுக்கும், சிறுபான்மையோர்க்கும் விசேடமாக சிங்களப் பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கும் பதிவுகள் மறுக்கப்பட்டமை பொதுவானதாக இருந்தது

( 7 )
*சிங்கள பூர்ஷ்வாத் தலைவர்கள் வr க்காளர்களாக பதியும் மலை யக தமிழர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கு வரிசைக் கிரமமாக பல நடவடிக்கைகளை பேற் கொண்டார்கள். 1931க்கு பின்பு, இவர்கள் விரும்பிய குடியுரிமைப் பதிவு செய்வதில் கடுமை யான வழி முறைகளே மேற்கொள்ளுமாறு கோரினர்கள். 1940ல் இதில் வெற்றி சண்டார்கள். இதனது விளைவு மலையக தமிழ் வாக் காளர்களின் எண்ணிக்கை மீண்டும் குறைக்கப்பட்டது. 1939-43க் கும் இடையில் இது 57,000 ஆல் குறைக்கப்பட்டது.
1938ல் கிராமச் சபை சட்டத்திற்கு கொண்வரப்பட்ட திருத் தப் பிரேரணை பவலயக தமிழர்களின் வாக்குரிமைக்கு எதிரான தாக இருந்தது. அப்போதைய உள்ளூராட்சி அமைச்சராயிருந்த திரு. எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க இப் புதிய சட்டத் தை அறிமுகப்படுத்தினர். இப் புதிய சட்டமானது கிராமச் சபைத் தேர்தல்களில் மலையக மக்கள் தமது வாக்குரிமையை பிரயோகிப் பதை தடுத்தது.
இதன் பின்பு 1948ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டி. எஸ். சேன நாயக்கா அவர்களால் இந்தியப் பிராஜாவுரிமை மசோதா பாராளு மன்றத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
இச் சட்டத்தின் மூலம் மலையகத் சமிழர்கள் தங்களதும், இரண்டு, மூன்று கலை முறையினரினதும் பிறப்பு சாட்சிப் பத்திரங் களை சமர்பிக்க வேண்டி ஏற்பட்டது. பிறப்பு சாட்சிப் பத்திரம் தவிர்ந்த வேறு எந்த சாட்சியங்களையும் ஏற்பதற்கு அரசாங்கம் தயராக இருக்கவில்லை. (இருபதாம் நூற்றண்டின் முற்பகுதிக்கு முன்பாக பிறப்பை பதிவு செய்யும் கட்டாய சட்ட விதிகள் இலங் கையில் இருக்கவில்லை.) இதன் காரணத்தால் மலையகத் தமிழர்கள் இலங்கைப் பிரஜாவுரிமை அற்றவர்களானுர்கள்.
1949ம் ஆண்டு அமலுக்கு வந்த இலங்கைப் பாராளுமன்ற தேர்தல் சட்டம் இலங்கை பிரஜாவுரிமை அற்ற மலையகத் தமிழர் களை வாக்குரிமை அற்றவர்களாக்கியது.
1946ம் ஆண்டு அமுலுக்கு வந்த இந்திய, பாகிஸ்தானிய பிர ஜாவுரி மைச் சட்டத்தி ன் கீழ் மலயக தமிழ் மக்கள் தமது பிரஜா வுரி மயை பெற்றுக் கொள்ளுமாறு கோரப்பட்டனர். 8,25,000 பேர் இலங்கைப் பிரஜாவுரிசகு விண்ணப்பித்தனர். ஆனல் 1,34,188 பேருக்கு மட்டுமே பிரஜாவுரிமை வழங்கப்பட்டது. அதுவும் இவர் Awот பூவுப் பிரஜைகளானர்கள். இச் சட்டத்தின் மூலம் வம்சா

Page 6
( 8 )
மூவகைப் பிரிவினர் உருவாக்கப்பட்டனர்.
வழிப் பிரஜைகள், பதிவுப் பிரஜைகள், ! நாடற்றவர்கள் எனும்
பிரஜாவுரிமையை மறுக்கும் நிகழ்ச்சி உடனடியாக நடந்தேறி யது. 1950ல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலில் இருந்து கிட்டத்தட்ட சகல மலையக தமிழர்களினது ப்ெயர்களும் அப்புறப் படுத்தப்பட்டன. ஆனல் பதிவுப் பிரஜைகளாக பதிவு செய்யும் நிகழ்ச்சி மிக மெதுவாகவே நடைபெற்றது. 13:34,168 பேரையும் பதிவு செய்ய சுமார் 7 அல்லது 8 வருடங்கள் எடுத்தன.
1964ம் ஆண்டு நாடற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 9 75,000 பேர் என கணிக்கப்பட்டது. இப் பிரச்சினையை "தீர்த்துக் கட்டுவதற்காக? சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட் டது. இதன் படி 3,00,000 பேருக்கு இலங்கைப் பிரஜாவுரிமை வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது. எஞ்சியுள்ள 1,50,000 பேரையிட்டு எதுவித முடிவும் எடுக்கப்படவில்லை. இது 15 ஆண்டு களுக்குள் அமுல் படுத்தப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட் டது. விண்ணப்பங்கள் கோரப்பட்டபோது 7,00,000 பேர் இலங் கைப் பிரஜாவுரிமை கோரி விண்ணப்பித்தார்கள். ஆனல் பெரும் பான்மையானவர்களின் விண்ணப்பங்கள் எதுவித காரணமும் காட் டாமல் அரசாங்கத்தினுல் நிராகரிக்கப்பட்டன.
1974ல் சிறிமா - இந்திரா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதன்படி 1964ல் மீதமாயிருந்த 1,50,000 பேரை அரை, அரைவாசி யாக (ஆளுக்கு 75,000) இரு நாடுகளும் ஏற்பதென முடிவெடுக்கப் பட்டது.
1981ம் ஆண்டு ஒற்ருேபருடன் ஒப்பந்தம் காலவதியாகின்றது. ஆனலும் பிரச்சினைகள் தீரவில்லை. இன்னமும் சுமார் 500,000 பேர் நாடற்றவர்களாக இருப்பதாக அறிய முடிகின்றது.
பதிவுப் பிரஜைகளுக்கான அத்தாட்சிப்பத்திரம் குடும்பத்திற்கு ஒன்று என்ற முதையிலேயே வழங்கப்படுகின்றது. இப் பத்திரம் தொலைந்து விட்டால் வேறு பத்திரங்கள் எடுக்க முடியாது. அவர் கள் நாடற்ற பிரஜைகள் தான். சமீபத்திய இனக்கலவரங்கள் பல பதிவுப் பிரஜைகளை நாடற்ற பிரஜைகள் ஆக்கியிருக்கலாம்.
இலங்கையின் அரசியல் அதிகாரத்தை தொடர்ச்சியாக தமது கைகளில் கொண்டிருக்கும் சிங்கள பூர்ஷ்வாக்கள் மலையகத் தமிழர் களில் கணிசமான பகுதியினரை இந்தியாவுக்கு அனுப்புவதில்
 

( 9 )
தொடர்ந்து விடாப்பிடியாக இருந்து வந்துள்ளார்கள். மலையகத் தமிழர்களை பொறுத்தவரையிலோ அவர்கள் இலங்கையில் நிரந்தர மாக வாழ்வதையே விரும்பி வந்துள்ளார்கா என்பதை புள்ளி விபரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. - -
1. 1928ம் ஆண்டு டொனமூர் ஆணைக் குழுவின் கணிப்பின்படி 40 முதல் 50 சத வீதமானவர்கள் இந் நாட்டையே தமது நிரந்தர வசிப்பிடமாகக் கொண்டுள்ளனர்.
2. 1938ம் ஆண்டு ஜக்சன் அறிக்கை இவ் எண்ணிக்கை 60 சத
வீதம் என்று கூறுகிறது.
3. 1946ம் ஆண்டு சோல்பரி அறிக்கை இவ் எண்ணிக்கை 80%
என்று கூறுகின்றது.
4. 1949ம் ஆண்டு இந்திய - பாகிஸ்தானிய பிரஜாவுரிமைச் சட் டத்தின் கீழ் 825,000 பேர் இலங்கைப் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பித்தனர்.
5. 1964ம் ஆண்டு சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் 7,00,000
பேர் இலங்கை பிரஜாவுரிமை கோரி விண்ணப்பித்தனர்.
இலங்கையின் சிங்கள பூர்ஷ்வாக்கள் இதனுல் கொதிப்படைற் துள்ளார்கள். அவர்களை எவ்வளவில் நிர்ப்பந்திக்க முடியுமோ அவ் வளவிற்கு நிர்ப்பந்தித்துள்ளார்கள். மலையகத் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த இனவாத தாக்குதல்களும், 1972ல் தோட்டத் தேசியமயமாக்கலின் போது அவர்கள் தோட்டங்களை விட்டு விரட் டப்பட்டதும் இந் நிர்ப்பந்தங்களுக்கு சில உதாரணங்களாகும். தமது உண்மையான நோக்கத்தை மூடிமறைப்பதற்காக “யாழ்ப் பாணத்தவர்கள்? மேல் குற்றஞ் சுமத்துகிருர்கள். இலங்கையின் பூர்ஷ்வாக்கள் குறிப்பாக சிங்கள பூர்ஷ்வாக்கள் மலையகத் தமிழர் களுக்கெதிராக எதற்காக இவ்விதம் நடந்து கொள்கிறர்கள்?
இதற்கான காரணங்கள் பின்வருமாறு அமைந்துள்ளன.
(1) வர்க்க ஒடுக்கு முறையை இலகுபடுத்துவது;
(2) இலங்கையர் மயப்படுத்தலின்" ஒரு பகுதியாகக்
- கொள்வது.
(3) அரசாங்கத்துறையிலான அ தி கா ரத் தி ல் எழும்
போட்டிகள்,

Page 7
( 10 )
1. வர்க்க ஒடுக்கு முறையை இலகுபடுத்துவது
மலையகத் தமிழரை நாடற்றவர்களாக்கி தனிமைப்படுத்துவதன் மூலம் அவர்களை மலிவான, இலகுவில் அடிமைப்படுத்தக் கூடிய கூலிகளாக மாற்றுவதில் இலங்கையின் ஆளும் வர்க்கம் வெற்றி கண்டுள்ளது. ஒரு புறத்தில் பிரித்தானியர் சர்வஜன வாக்குரிமை யை நடைமுறைப்படுததுவதில் உறுதியாக நின்ருலும், மறுபுறத் திலி மலையகத் தமிழர்களை சர்வஜன வாக்குரிமையில் இருந்து ஒதுக்கிவைப்பதில் இலங்கைப் பூர் ஷ்வாக்குடன் ஒத்துழைத்தார் as6ir. தாமாக இதைச் செய்யாமல் உள்ளூர் பூர்ஷ்வாக்களைக் கொண்டு பிரித்தானியர் இதைச் செய்வித்தார்கள். ஏன் எனில் முதலாளித்துவ சுதந்திர தொழிலாளர்களுக்குப் பதிலாக பண்ணை அடிமைத் தன நிலையில் உள்ள தொழிலாளர்களைக் கொண்டும் தேசிய இயக்கங்களுடன் இணைந்து நிற்பதற்குப் பதிலாக அவற்றில் இருந்து புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருக்கும் தொழிலாளர் களைக் கொண்டும் பெருந்தோட்டத் துறையை இயக்குவது கூடிய லாபகரமானதும், ஒழுங்கானதுமாகும், பிரித்தானிய பெருந் தோட்ட முதலாளிகளினது வர்க்க நலனே இங்கு அடிப்படையா னது
இதனுல் தான் மலையகத் தமிழர்களை "சர்வஜனப் பகுதியில் இருந்து ஒதுக்குவதை தமிழ் தலைவர்கள் நேரடியாகவும், மறைமுக மாகவும் ஆதரித்தார்கள். ஜி. ஜி. பொன்னம்பலம் நேரடியாக ஆதரித்தார், செல்வநாயகம் போன்ற தலைவர்களும் அவரின் வழித் தோனறல்களும் அரசாங்க சபையிலும், பாராளுமன்றத்திலும் இதைக் கண்டித்திருந்தாலும் இதற்கெதிரான ஒரு இயகசத்தை முன் னெடுத்துச் செல்லவில்லை. வாக்குரிமை பறிக்கப்பட்ட இம் மக்களை ஸ்தாபனரீதியாக அணிதிரட்டவும் முற்படவில்லை.
இலகுவில் அடிமைப்படுத்தக்கூடிய மலிவான கூலிகளாக இருந்த இவர்களே பெருந்தோட்டத்துறை மாத்திரம் பயன்படுத்த வில்லை. ஏனைய துறைகளிலான முதலாளித்துவ வளர்ச்சிக்கு இவர் களின் உழைப்பு உரமாகியுள்ளது. வட-கிழக்கு மாகாண விவசா பத்துறை இதற்கோர் காரணமாகும்.
பூர்ஷ்வாக்களுக்கும், நில உடமையாளர்களுக்கும் சாதகமான தொழில் நிபந்தனைகளுக்கும், மலிவான கூலிக்கும் ‘சர்வஜன வாக் குரிமை தடையாக இருக்குமானல் "பிரஜாவுரிமையை’ மறுப் பதன் மூலம் இத்தடை அபற்றப்படும். அதாவது வாக்குரிமை பறிக்கப்படும்.

( lil )
2. இலங்கையர் மயப்படுத்தலின் ஒரு
பகுதியாகக் கொள்வது
இலங்கையர் மயப்படுத்தல்" என்பது உண்மையிலேயே "சிங் கள மயப்படுத்தலேயாகும். மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வழியின்றி தவிக்கும் முதலாளித்துவம் புதிதான வேலைவாய்ப்பு களை உருவாக்குவதற்குப் பதிலாக சிலரின் தொழில் வாய்ப்புகளைப் பறித்து வேறு சிலரிடம் ஒப்படைத்து வருகிறது. சிங்கள பூர்ஷ்வாக் களே ஆட்சியதிகாரத்தில் இருப்பதால் தமிழ் பேசும் மக்களினது தொழில் வாய்ப்புகள் பறிக்கப்பட்டு அவை சிங்கள மக்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன. இதன் மூலம் சிங்கள மக்களின் பிரச்சினை கள் சற்று தணிக்கப்படுகின்றன. சிங்கள பூர்ஷ்வாக்களின் ‘சிங்கள மயப்படுத்தல்" என்ற கழுகின் கண்களுக்கு தென்பட்ட முதலாவதுஇரை இந்திய வம்சாவழித் தமிழர்களேயாகும். (மிக நீண்ட காலத்திற்குப் பின்னர் தான் “யாழ்ப்பாணத்தவர்கள்? அகப்பட் டுக் கொள்கிருர்கள் என்பதை இங்கு நினைவு கூரவேண்டும்.)
1950 களில் பெருந்தோட்டத்துறை ஒன்று தான் ‘இந்திய வம்சாவழியினருக்கு மிஞ்சி இருந்த தொன்ருகும். அவர்கள் ஏனைய துறைகளிலும் செல்வா க்குச் செலுத்தி வந்தார்கள். ஆணுல் "இலங் கையர் மயப்படுத்தலின் விளைவால் பெருந்தோட்டத்துறை ஒன்று தான் அவர்களுக்கு மீதமானது. 1936 களில் கு டி யேறி ய இந்தியர்கள் அரசுத் திணைகளங்களில் 26% வீதத்தை ஆக்கு பவர்களாக இருந்தார்கள். ஆணுல் இலங்கையர் மயப்படுத்தலின்" பின்பு 1939ல் இது 19% வீதமானது, 1941ல் இது 12% வீதமானது. சகல நாளாந்த இந்திய கூலிகளையும் அரசாங்கம் பதவி நீக்கம் செய் தது. பெருந்தோட்டத் துறையிலான தொழில் வாய்ப்புகளை சிங்கள இனத்தவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பதற்காக அவர்களில் ஓர் பகுதியினரை பெருந்தோட்டத்துறை யை விட்டு ஒதுக்க இன்று முற்படுகிருர்கள். -
மலேயகத் தமிழ் தொழிலாளர்கள் இலங்கை பூர்ஷ்வாக்களுக்கு கிடைத்த ஓர் அளப்பரிய பொக்கிஷமாகும். ஆனல் இதன் எண் ணிக்கை கூடும் போது உபரித் தொழிலாளர் பிரச்சினை உருவாக்கப் படுகின்றது. உள்ளூர் தொழிலாளர்களின் தொழில் வாய்ப்புகள் பாதிக்கப்படும். சம நிலை சீர்கெடும் எண்ணிக்கை குறையுமானுல் கூலித்தட்டுப்பாடு ஏற்படும். கூலிகளின் சம்பளம் அதிகரிக்கும். இவ் இரு நிலைமையும் முதலாளித்துவத்தின் நலனுக்கு எதிரானது. ஆகவே இலங்கை முதலாளித்துவம் தனககு தேவையானளவு

Page 8
( 12 )
மலையகத் தமிழ் தொழிலாளர்களையே தொடர்ந்தும் அடிமை நிலை யில் வைத்திருக்க விரும்புகின்றது. கைத்தொழில் துறையிலும், பயிற்செய்கைத் துறையிலுமான அந்நிய மூலதன வருகையான கூலித் தொழிலாளர்களின் தேவையை அதிகரிக்கும். ஆகவே இலங் கை முதலாளித்துவம் மலேயக தமிழ் தோட்டத்தொழிலாளர்களின் கணிசமான பகுதியினர் இங்கு இருப்பதை விருப்பக் கூடும்.
எவ்வாருயினும் “சிங்கள மயப்படுத்தல்" என்ற நிகழ்ச்சி சிங்கள தேசிய இனத்தின் நலனைப் பொறுத்ததொன்றல்ல. சிங்கள பூர்ஷ்வாக்களின் நலனைப் பொறுத்த விஷயமேயாகும். இங்கும் வர்க்க நலனே செல்வாக்குச் செலுத்துகின்றது. ஆனல் சிங்கள மக்களுக்கு ‘சிங்கள மயப்படுத்தல்' என்ற பக்க மே காட்டப் பட்டது.
இந்த கட்டத்தில் தான் இடதுசாரி இயக்கங்களின் பங்கை சற்று பின்னேக்கிப் பார்க்க வேண்டியுள்ளது.
1930 களில் இருந்து 40 கள் வரை இடதுசாரிகள் மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்படுவதை எதிர்த்து பாராளுமன்றத் தில் விவாதங்கள் நடாத்துவதுடன் நிறு கதிக் கொண்டுள்ளார்கள். மலையகத் தமிழர்கள் பி ர ஜா வு ரி  ைம அற்றவர்களாக்கப்படு வதை எதிர்த்து திரு. பீட்டர் கெனமன் அவர்கள் பாராளுமன்றத் துக்கு வெளியிலும், உள்ளும் பெரும் போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று பாராளுமன்றத்தில உரை நிகழ்த்தும் போது குறிப்பிட்டிருந்தாலுங்கூட, பாராளுமன்ற பேச்சுகளுக்கு அப்பால் இவர்களால் ஓர் அங்குலம் தானும் முன்செல்ல முடியவில்லை. மலையக மக்களுக்கெதிரான இந் நடவடிக்கைகள் ஒரு வர்க்க அடக்கு முறையேயன்றி வேறு ஒன்றுமல்ல என்று இவர்கள் தெட் டத்தெளிவாக பாராளுமன்றத்தில் விவாதித்தார்கள். ஆணுல் சிங்கள பூர்ஷ்வாக்கள் இதை ‘இலங்கையர் மயப்படுத்தலுடன் தொடர்புபட்ட பிரச்சனையாக்கி சிங்கள பெருத் தேசி பவாத "தேசிய வாதத்தால்" மூடிமறைக்க முயன்றபோது பாராளுமன்ற விரர்கள் தோல்வி சண்டார்கள். முதலில் மெளனம் சாதித்தார் கள் பினனர் தாமும் இத்தேசிய வாதத்தை ஏற்றுக்கொண்டார் கள், பூர்ஷ்வா ஆட்சி அதிகாரத்தின் அத்திவாரத்தை ஆட்டங் காண வைக்கும் நோக்கம் எள்ளவும் இல்லாமல் இவ் அதிகாரததின் தற்காலிக அங்கமாக உள்ள பாரா ஞமன்றத்தின் சில அதிகாரங் களை (இங்குங்கூட முழுமையல்ல) கைப்பற்றுவதையே இவ் இடது சாரி கள் தமது இறுதி எல்லையாகக் கொண்டிருந்தார்கள். இதனுல் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக பூர்ஷ்வாக்களால்
 

( 3 )
வகுக்கப்படும் தந்திரோபாயங்களை இவர்களும் பின்பற் பிச் சென் முர்கள். வாக்கு ஈள் இல்லாத மக்களை இவர்கள் கைவிட்டார்கள். இதன் மூலம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற முற் பட்டார்கள். இன்று பரிதாபத்துக்குரியவர்களாக மாறியுள்ளார்
66.
* சிங்கள மயப்படுத்தல்" தான் இலங்கை “ன் தேசிய இயக்கம் என இடதுசாரிகள் உட்பட சகல ஜனநாயகவாதிகளும் 60 களின் முற்பகுதிவரை ஏற்றுக் கொண்டிருந்தனர். இக் காரணத்தால் *சிங்கள மயப்படுத் சலுக்கு" எதிரான போக்குகள் அனைத்தும் இலங்கையின் தேசிய நலனுக்கு எதிரானதாகக் காதப்பட்டது. ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் தேசிய இயக்கங்கள் முற் போக்கு சந்தேகக் கண்கொண்டு நோக்கப்பட்டது. யாழ்ப் பாணத்து நகர குட்டி பூாஷ் வாக்களும், சிறு முதலாளித்துவ புத்தி ஜவிகளும் யாழ்ப்பாண சமூக அமைப்பில் சக்தி பெற்றவர்களாக இருந்ததன் சாரணத்தாலும், இலங்கைத் தமிழர்கள் வாச்குரிமை பெற்றியிருந்ததன் காரணத்தாலும், இங்கு தமிழ் தேசிய இயக்கம் வளர்ச்சி பெற்றது. ஆனல் மலேயகத்தில் இது இன்னமும் குறிப் பிட்டுச் சொல்லக்கூடியளவிற்கு வளர்ச்சியடையவில்லை. இலங்கை யின் ஆளும்வர்க்கங்கள் குறிப்பாக சிங்கள பூர் ஷ்வாக்கள் இது விஷயத்தில் வெற்றி பெற்று விட்டார்கள் என் றே கூறவேண்டும். அந்த மசிழ்ச்சியில் அவர்கள் சர்வஜன வாக்குரிமையின் 50வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடத் தகுதி பெற்றவர்களே. ஆணுல் மக்கள் எப்படி அதனைக் கொண்டாடமுடியும்? *நாடற்ற வர்கள் ஒருபுறம், சொந்த நாட்டில் வாழ்ந்தும் தமது பிரதேசங் களில் சுதந்திரமாக வாழமுடியாமல் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத் தில் வாழ்வது போன்று தேசிய உரிமைகள் இழந்து வாழும் மக்கள் மற்ருேர் புறம் "தேசிய வரப்பிரசாதங்கள்" பெற்றுவிட்டதாக மாய்மாலங்காட்டி தொழிற் சங்க உரிமைகள் பறிக்கப்பட்டு, ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு வாழும் "ஆளும் இன மக்கள் மற் ருே புறம், இந்த நிலைமையில் யாருக்கு வேண்டும் சர்வஜன வாக்குரிமைக் கொண்டாட்டம்?

Page 9
தொகுப்பு:அ
வெளியீடு :
ஜனநாயக உரிை இயக்கம் (M.
167, காசல் வீதி
இனங் களுக்கின. சமத்துவத்து க்கு 6; எலோய் அவெ
அ, லி, சே
-

" · கெளரிகாந்தன் ஆர்)
tač v to e čln)
மகளை வென்றெடுப்பதற்கான DDR) |-
, கொழும்பு- 8.
-யில் நீதிக்கும் மான இயக்கம் (MIRE) னியூ கொழும்பு 3.’ බ්
விலை : 50 சதம்
மு. அச்சகம்