கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிவசக்தி 2005

Page 1

S.
իչի წჭწ.
წ

Page 2

※懿

Page 3

சிவசக்தி ԶOO5
றோயல் கல்லூரி 尊
இந்து மாணவர் மன்றம் * பெருமையுடன் வழங்கும்
%-238.2X23; ი. პრაკა:22:
கலைமகள் விழா 2005 |
戮鬣 魏 ※
ஞாயிற்றுக்கிழமை, 09.10.2005 LSDLJ856o 4. OO LD60Ofi
"நவரங்கஹல" சுவாமி ஆத்மகனானந்த பேராசிரியர். சந்திரசேகரம், திருமதி சந்திரசேகரம் திரு.H.A.உபாலி குணசேகர
Ꭰate . : Sunday, 09.10.2005
Time : 400 p.m
Venue * : "Navarangahala" Chief Guest | Swami Achmaganantha special Guest Prof. S. Chandrasekaram,
Mrs. Chandrasekaram.
Guest of Honour : Mr. H.A. Upali Gunsekara.

Page 4
சிவசக்தி 2OO 5
 
 
 
 
 
 


Page 5

சிவசக்தி 2OO5
பராசக்தி துணை
வாணி
வாணிகலைத் தெய்வம் மணிவாக் குதவிடுவாள் ஆணிமுத்தைப் போலே அறிவுமுத்து மாலையினாள் காணுகின்ற காட்சியாய்க் காண்பதெல்லாங் காட்டுவதாய் மானுயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோம்.
முரீதேவி பொன்னரசி, நாரணனார் தேவி, புகழரசி மின்னுநவ ரத்தினம்போல் மேனி யழகுடையாள் அன்னையவள் வையமெலாம் ஆதரிப்பாள் பூரீதேவி தன்னிருபொற் றாளே சரண்புகுந்து வாழ்வோமே.
பார்வதி மலையிலே தான்பிறந்தாள் சங்கரனை மாலையிட்டாள் உலையிலே யூதி உலகக் கனல்வளர்ப்பாள் நிலையி லுயர்த்திடுவாள். நேரே அவள்பாதம் தலையிலே தாங்கித் தரணிமிசை வாழ்வோமே.
03

Page 6
சிவசக்தி 2OO5 றோயல் கல்லூரி இந்து மாணவர் மன்றம் செயற்குழு 2005
தலைவர் திரு. HAU குணசேகர.
பொறுப்பாசிரியர் உபபொறுப்பாசிரியர்கள்
திரு. S. பாலேந்திரன் திருமதி. L. தவகுமார்
திரு. S சிவகுமார்
திருமதி S கஜந்தன்
மன்றத் தலைவர்
独 . كيني - உப பொருளாளர்கள்
உப செயலாளர் Ա5
Τ. சிதம்பரசுப்ரமணியன் இ J. நிரோஜன்
- 魏移 B. கோபிகிருஷ்னா
இணை இதழாசிரியர்கள்
T பூரீரமணன் S, fါ@hချိ’L၂ဓါT
துணை இதழாசிரியர்
S. மயூரன் M. g) (LDEFGT
செயற்குழு உறுப்பினர்கள்
A. விசாகன் M. மதுராங்கன் ARP ஜோன் S. திபேந்திரன் N. ரிஷிகேஷன் S. நிஷாந்தன் S. வாசுநேயன் G. பிரகலாதன் S. துவாரகன்
04
 
 
 
 

Thy spirit first to life awoke, In eighteen hundred and thirty five,
Beneath the sway of Marsh and Boake, Thenceforth did Lanka's learning thrive.
four Fathers
Refrain :
School where our fathers learnt the way before us, Learnt of books and learnt of men, through thee we'll do the same, True to Our Watchword "Disce Aut Discede" We will learn of books and men, and learn to play the game.
Within thy shade our fathers trod, The path that leads to man's estate, They have repaid the debt they owed, They kept thy fame inviolate.
And we their loyal sons now bear The torch, with heart: as sound as Oak Our lusty throats now raise a cheer For Hartley, Harward, Marsh and Boake
Words and music by Late Major H.L. Reed Principal 7927 - 7937

Page 7
fi
s
姿翠
夔
ge.
fff
O77 31 Ο91 38
క్ష్య
ಪ್ರಿ
přitra
II.
.........--
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O5
சிவசக்தி 2OO5
இதழாசிரியர் அணி
இணை இதழாசிரியர்கள் S ரிவர்பன் T முரீரமணன்
துணை இதழாசிரியர்கள் M. D (3LDGF601 S. மயூரன்
EDITORIAL BOARD
T. Sriramanen
Su ItO'S
M. Unne Shan S. Mayuran
வெளியீடு றோயல் கல்லூரி இந்துமாணவர் மன்றம்
Published by . . Royal college Hindu Students Union

Page 8

சிவசக்தி ԶՕ05
சொல்லடி சிவசக்தி. (இதழாசிரியர்களின் செய்தி)
நல்லதோர் வீணை செய்தே - அதை நலங்கெடப் புழுதியி லெறிவ துண்டோ? சொல்லடி சிவசக்தி - எனைச் சுடர்மிகு மறிவுடன் படைத்து விட்டாய், வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே? சொல்லடி சிவசக்தி -நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?
விசையுறு பந்தினைப்போல்-உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், நசையறு மனங்கேட்டேன்-நித்தம் நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன், தசையினைத் தீசுடினும் -சிவ சக்தியைப் பாடுநல் லகங்கேட்டேன், அசைவறு மதிகேட்டேன்; இவை அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?
இனி சிவசக்தி பேசட்டும்.
O7

Page 9
சிவசக்தி இ005
வாழ்த்துச் செய்தி
'ஐய நாராயணி நமோஸ்து தே'
கொழும்பு றோயல் கல்லூரி இந்து மாணவர் மன்றம் கொண்டாட வுள்ள கலைமகள் விழாவிலே வெளியிடப்படும் சிவசக்தி சிறப்பு மலருக்கு இவ்வாழ்த்துச் செய்தியை வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.
மனிதனின் துன்பங்களுக்கான காரணம் அவனது ஆணவமே. இறைசக்தியே உலகனைத்தையும் ஊடுருவியுள்ள காரணத்தினால்தான், உலகம் இயங்குகிறது. மனிதனும் இயங்குகிறான். ஒருவேளை மனிதன், தன்னைத்தானே இயக்கிக் கொள்கிறான் என்பது உண்மையானால், அவன் விருப்பத்தின்படி அவனது உடல் மற்றும் மதனதின் இயக்கங்களை நிறுத்தவோ, அல்லது கூட்டிக் குறைக்கவோ அவனால் இயல வேண்டும். ஆனால் அத்தகைய சக்தி மனிதனுக்கு இல்லை என்பது அனுபவ உண்மை. எனவே இறைசக்தியே நம்மை இயக்குகிறது என்ற உண்மையை நினைவுபடுத்தவே நவராத்திரி விழா அமைந்துள்ளது. எந்த அளவிற்கு இந்த உண்மையை உள்வாங்கி, அந்த இறைசக்தியை சரணடைந்து வாழ்கிறமோ, அந்த அளவிற்கு வாழ்க்கை, கவலையும், துன்பமும் அணுகமுடியாத ஆழ்ந்த அமைதியில் நிலை பெறும். எனவே நவராத்திரி யின் ஒன்பது நாட்களும், இறைசக்தியின் பல தோற்றங்களாக வடி வெடுத்துள்ள பராசக்தி அன்னையின் புகழைப் பாடியும், அவளை வழி பட்டும், அவளது திருவருளுக்குப் பாத்திரராவோமாக
'சிவசக்தி சிறப்பு மலரைத் தயாரித்து வழங்கும் மாணவர் அனைவருக்கும் எமது நல்வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் உரித்தாகுக!
சுவாமி ஆத்மகனானந்தா
08
 

சிவசக்தி 2OO5
Principal’s Message
It is a great pleasure to contribute this message to the souvenir "Sivashakthi " to be published on the occasion of "Kalaimagal vizha " which is an annual event celebrated by the Hindu Students' Union of Royal College.
Members of the Hindu Students' Union organize this festival to invoke the blessings of the Goddess of Education and Fine Arts. I am happy that the students feel the importance of Education and Fine Arts to develop their Own personalities and to become respected citizens of Sri Lanka.
Functions of this nature will no doubt help to inculcate correct values in the minds of the young Royalists of a multireligious, multi-cultural environment and thus promote ethnic harmony.
I thank the teachers and the organizing committee for their untiring efforts to make this event a complete success.
H.A. U. Gunasekara Principal Royal College
09

Page 10
சிவசக்தி 2OO5
Message from the vice Principal
It is with great pleasure that this message is contributed to the 'Sivasakthy 2005", the souvenir published to make the "Kalaimagal Vizha 2005", another important event of the Royal College calendar of the year, organized by the Hindu Students' Union of Royal College.
The Hindu Student's 'Union was able to organize this annual event almost every year from its inception in 1955. This gives immense opportunities to the children of Royal College as well as the children as of other schools, Since they have Organized intergrade as well as inter-school competitions in Hinduism.
Since religion is One of the Subjects taught in the School. I appreciate the efforts made by an Organized body like the Hindu Students' Union, in order to mollify the minds of the Tamil children at Royal College. Hence, I take this opportunity to thank Mr. Balendran the teacher - in - charge, the other teachers involved and also members of the committee for their hard work to bring this to the stage in the current year too.
Good Luckl
Prasana Upashantha Vice Principal Royal College.
10
 

சிவசக்தி 2OO5
பிரதி அதிபரின் ஆசிச் செய்தி
பாடசாலைச் சமூகத்தினரை மீண்டும் ஒரு தடவை இச்சக்தியால் இணையவைக்கும் சிவ சக்தி மலர் வெளியீட்டுக் குழுவினருக்கு எனது நன்றிகள். ஒரு மாணவன் நல்ல சித்தியடைந்துள்ளான் என்று சொல்லும் போது நாங்கள் அடையும் மகிழ்ச்சியை விட சமூகப் பொருத்தப்பாடுள்ள, பண் புள்ள மாணவன் ஒருவனை உருவாக்கியுள்ளிர்கள் என்று மற்றவர்கள் புகழும் போது ஏற்படும் புளகாங்கிதம் அளவிடற்கரியது. அத்தகைய பணியை கல்லூரி தொடங்கிய காலத்தில் இருந்து ஆற்றிவந்த ஆசிரியர் குழாத்துக்கு எனது பணிவான நன்றிகள்.
அப்பணியைத் தொடர்ந்து நடாத்த எனக்குக் கிடைத்துள்ள சந்தர்ப் பத்தை முழுமையாகப் பயன்படுத்துவேன் பண்புடையார் பட்டுண்டு உலகம்' என்பர். அத்தகைய பண்புள்ள குழந்தைகளை உருவாக்கும் முயற்சிக்கு கடந்த ஐம்பதாண்டுகளுக்கு மேலாகத் தன் பணியாற்றும் இந்து மாணவர் மன்ற முயற்சிகளுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள். பலவேறு பழுக்களின் மத்தியில் முழு முயற்சியுடன் ஈடுபட்டு வரும் செயற் குழுவிற்கும், பொறுப்பாசிரியர்கட்கும் எமது நன்றிகள் உங்கள் பணி வெற்றியளிக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
நன்றி
உங்கள் உண்மையுள்ள மா. கணபதிப்பிள்ளை.
11

Page 11
சிவசக்தி ?OO5
தமிழ்ப்பிரிவுத் தலைவரின் ஆசிச் செய்தி
எமது கல்லூரியின் சிவ சக்தி மலரின் ஊடாக உங்களோடு சில கருத்துக்களைப் பரிமாற்றிக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். பாடசாலையின் புறக்கிருத்திய நடவடிக்கைகள் மாணவர்களின் நடத்தைக் கோலங்களின் மாற்றத்தைத் தரத்தக்கவை பண்புள்ள மாணவர்களின் உள்ளங்களிற் தான் கற்றலடைவு சீராக அமையும்' என்பது காந்தியச் சிந்தனையாகும். எமது கல்லூரியின் இந்து மாணவர் மன்றம் கடந்த ஐம்பதாண்டுகளுக்கு மேலாகச் செவ்வனே இயங்கிவருவதுடன் முப் பெரும் தேவியருக்கும் விழாவெடுத்து அந் நிகழ்வின் அடையாளமாக 'சிவசக்தி மலரை வெளியிடுவது வழக்கம். அத்தகைய செயல் முறையில் இவ்வருடமும் தமது பங்களிப்பை நல்கும் பொறுப்பாசிரியர்கட்கும் செயற் குழுவுக்கும் எனது வாழ்த்துக்கள். உங்கள் முயற்சி வெற்றியளிக்கவும் எடுத்துக் கொண்ட குறிக்கோள் நிறைவேறவும் இறையாசியை வேண்டுகிறேன்.
நன்றி
அன்புடன்
திருமதி. ஆர். பிரேமநாத்.
12
 
 

சிவசக்தி இ005
Message from the Buddhist Brotherhood
Despite the basic differences, Buddhism and Hinduism are closely linked. The founder of Buddhist philosophy, Lord Buddha, was also a born Hindu. Further the Buddhist Culture and the Hindu Culture have many common features.
Whatever the religion, the purpose of it is to tame the uncultured and to improve the qualities of the cultured. So every human being needs a religion.
Whatever mental standard a person has, a religion helps for filrther development of the mind and to attain higher mental Standards. It also helps to be better morally.
In Royal College Various religious societies like Buddhist Brotherhood, Hindu Society and Islam Society are functioning. The purpose of having such societies in a school is to organize religious functions methodically.
In the case of Hindu Society, they have organized many colourful events in the school.
Royal has a multi-religious environment. So everything we do here must not affect the peace and harmony among religions. Hindu Society plays a leading role in Organizing religious events in the school without damaging the existing peace. I suppose they are up to the doctrines of Vedha Viyazar.
I hope this year also we will be fortunate enough to see the Souvenir "Siva Shakthi 2005" to be published to mark the annual event "Kalai Magal Wiza." Which influences not only eyes but also minds.
Aruna De Silva Master in Charge
13

Page 12
சிவசக்தி 2005
Massage from the Islamic Society
I take much pleasure in contributing this message for the Golden Jubilee of kalainagal Vizha for year of 2005
This fascinating ceremony marks the ritual of "Navarathree" for the three gode sess namely "Saraswathy" "Lakshmi" and "Thurka'. Hindus fast during the "Navarathri" and engage in special poojas as it reveals the attitude of the Hindu society as well as it's strength and belief this religions function removes the cruel and evil minds, lets people get-together and live in peace & harmony.
Finally I take this opportunity to congratulation Mr. Balendran and other teachers who encouraged and motivated the students of this society to put up a show worthwhile watching, whilst praying for everyone's success.
Mr.S. S. Nasmin Munaz Teacher in charge
14
 

சிவசக்தி 2OO5
Message from the Student christian
movement of Royal College
It is with great Pleasure that I send this message to the souvenir of the Hindu students union of Royal College. I am happy that the students of this union have always joined hands with the christian students to keep up to the traditions and continue to Work for the goodwill of the college during the coming years as well.
I wish the teacher in charge and the students all the best during the annual "Kalai magal Vizha' and congratulate them On their untiring efforts to make this endeavour a great success.
Anton De Silva
Master. In charge
15

Page 13
சிவசக்தி 2OO5
மன்றத் தலைவரின் தமிழ் நெஞ்சத்திலிருந்து
"பழக நிறமும் பவளச் செவ்வாயும் கழகமழ் பூந்தாமரை போற்கையும் - துழயிடையும் அல்லும் பகலும் அனவரதமும் துதித்தாற் கல்லுஞ் சொல்லாதோ கவி"
வேத காலத்திற்க்கு முற்பட்டே சக்தி வழிபாடு நிலவி வந்தது என்று "ரிக்" வேதம் கூறுகின்றது. இவ் வழிபாட்டை றோயல் கல்லூரியின் இந்து மாணவர் மன்றம் நவராத்திரி நாயகியான அம்பிகையின் கடாட்சம் வேண்டி வருடந்தோறும் மகுடவிழாவாக கொண்டாடி இவ் வருடத்தை ஐம்பதாவது ஆண்டு விழாவாக "பொன்விழா" வாக கொண்டாடுவதில் பெருமிதம் அடைகின்றோம்.
இன்றைய பொன் விழாவைப் பல இடையூறுகளுக்கு மத்தியில் சிறப்பாகக் கொண்டாடும் வேளையில் உதவி புரிந்த அதிபர், ஆசிரியர்கள், ஆசிரியைகளுக்கும், எமது மன்றத் தோழர்களுக்கும் நன்றி கூறுகின்றேன். நான் இம்முறை தலைவராகப் பொறுப்பேற்கும் போது இப்பதவியை எனக்கு வழங்கி என்னை ஆசிர்வதித்த திருமதி. புஷ்பா நீலலோஜனன் அவர்களுக்கும் நான் கோடானு கோடி நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன். எம்மாணவச் செல்வங்களுக்கு நாமகள் அருள் பாலிக்க வேண்டுமென்று விடைபெறுகின்றேன்.
"கல்விக் கரசே நமஸ்து கணக்களி தேவி நமஸ்து சொல்லும் பொருளே நமஸ்து சூட்சட ரூபி நமஸ்து"
ந. ரகுநாத் மன்றத் தலைவர் (2005/2006)
16
 
 

ueầueunųjew "W (NounspəAI Issy) būųSIDỊqopos (supjauɔɔS (SSF)ueĀŋuesW S’S L: GJ-II) supuess
· (əãapųɔ-ul-uayopas Issy). IbunyeAsS -S (əổipųɔ-us-uɔŋɔpɔI)ubupuəeleg S IVN (¿oupoj) uəueue IIISIL (sinjaloos) Ipuinosses L (2)da aoueųsedn (Won (oldioulua!) plexoscuno novo H IW '(upuup
过· > ·ssss)uetunɔsɛABUL · ·T·SIWN (23&dyo-ul-uayopas usss
oueupuəqųL'Souboere Anų Los (uolup, qns) upunse W.
£

Page 14
vło włłu o uso; IN S (oto-tstovo, Lso o szyu to sv++N1 •svo suvoo v uqosoqosov o ueųSueųje KIJA (CIWN “ueųneseoseid op oue3eųSIA (S * ue3eue.AnųL’S “ueųsə>{qs}}}'N LLLLLLLSLLLLLLLL L LLLL LL LLLLLLLLL L SLLLLLLLLLL SLLLLL LLL LLLLLLLL L LLLLLLLL LLLLLLLLLLLLSLSLSĤusputo)S. !!!!!!!!!LLLLLLLL L SLLLLLL LLLLS LLLLL LLL SLLLLS LLLLLLLLL L SLLLLLL LLLLLLL SLLLLLLLLL LLLLLLSųjeunāɛYI 'N
 

靈
澱
LLLLLLLLLLLLLLL L L S LSLLL LLS SLLLLSJS-------------

Page 15
****·
900‰-uoposunuyd-uosum sluopmışmpuh
壽還隱靈 -湖
 

சிவசக்தி 2OO 5
செயலாளரின் சிந்தனையிலிருந்து
வாழும் போது சைவனாக வாழவேண்டும் வீழ்த்துப்பழனி சைவம் வளர்த்து விழவேண்டும்.
கலைத்தாய்க்கு மகுடம் சூட்டும் முகமாக எமது 50வது வருடத்தில் மரபுகளும் பண்பாடுகளும் குன்றாது நடாத்தப்படும் "கலைமகள் விழா 2005" ஐ மேடையேற்றிக் கொண்டிருக்கும் தருணத்தில் உங்கள் கரங்களில் தவழும் "சிவசக்தி 2005" யினூடாக உங்களை அடைவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். "அன்பே சிவம்" என்ற அரும்பொருளை உணர்த்தவே 50 ஆண்டுகளாகப் பணியாற்றிவரும் ஒரு வேத்திய மன்றத்தில் செயலா ளராக இருப்பது நினைத்து நான் பெருமையடைகிறேன்.
எத்தனையோ ஏற்றங்களும் இறக்கங்களும் மாற்றங்களும் ஏமாற்றங் களும் ஏற்பட்ட போதிலும் எங்கள் அயராத உழைப்பிலே எமக்கு வழிகாட்டி உதவிய அதிபர் உபஅதிபர் பொறுப்பாசிரியர்கள் ஏனைய ஆசிரியர்கள், செயற்குழு உறுப்பினர்கள் பெற்றோர்கள், பழைய மாணவர் கள் மற்றும் பாடசாலைக்கிடையிலான போட்டிகளில் பங்குபற்றி எமக்கு பெரும் ஊக்கத்தினையும் வழங்கிய அனைத்து பாடசாலை சகோதர சகோதரிகளுக்கும் தமது பொன்னான நேரத்தினை எமக்காக ஒதுக்கிய நடுவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள் கிறோம். அத்துடன் எமது பொன்விழாவில் பங்கேற்று சிறப்பிக்கும் அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
இவை அனைத்திற்கும் மேலாக, எமக்கு ஒரு தாயாக, தலைவியாக ஏன் காவல் தெய்வமாக நின்று எம்மையெல்லாம் மன்றச் செயற்பாடுகளில் ஊக்குவித்து வழிகாட்டி இன்று ஓய்வு பெற்றிருக்கும் திருமதி. புஷ்பா நீலலோஜனன் அவர்களுக்கு இச் சிறியோனின் நன்றிகள்
எம் சமூகப்பணி தொடரவேண்டும். மேலும் மேலும் இந்து மதம் ஓங்கவேண்டும். அதற்கு தங்களது ஆதரவையும் ஒத்துழைப்பையும் வேண்டி அனைவருக்கும் கலைமகளின் அருள் வேண்டி விடை பெறுகிறோம்.
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்'
நன்றியுடன் தி. ராஜ்குமார்.

Page 16
Chicago Address
Response to Welcome
At the worlds parliament of religions
11th September 1893 Chicago,
சிவசக்தி ջOO5
Sisters and brothers of America,
- It fills my heart with joy un speakable to rise in response to the warm and cordial welcome which you have given us. I thank you in the name of the most ancient Order of monks in the World. I thank you in the name of the mother of religions, and I thank you in the name of millions and millions of Hindu people of all classes and sects.
My thanks, also, to some of the speakers on this platform, who, referring to the delegates of the Orient, have told you that these men from far off nations may well claim the honor of bearing to different lands the idea of toleration. I am proud to belong to a religion which has taught the world about tolerance and universal acceptance. We believe not only in universal toleration, but we accept all religions as true. I am proud to belong to a nation which has sheltered and persecuted the refugees of all religions and all nations of the earth. I am proud to tell you that we have gathered in our bosom the purest remnant of the Israelites, who came to southern India and took refuge with us the very year in which their holy temple was shattered to pieces by Roman tyranny. I am * proud to belong to the religion which has sheltered and is still fostering the remnant of the grand Zoroastrian nation. I will quote to you, brethren, a few lines from a hymn which I remember to have repeated from my earliest boyhood, which is every day repeated by millions of human beings. As the different streams having their sources in different places all mingle their water in
18
 

சிவசக்தி 2OO 5
the sea, so, O Lord, the different paths which men take through
different tendencies, various though they appear, Crooked or straight, all lead to Thee.
The present convention, which is one of the most august assemblies ever held, is in itself a vindication, a declaration to the world, of the wonderfill doctrine preached in the Gita: "Whosoever comes to Me, through Whatsoever form, I reach him, all men are Struggling through paths which in the end lead to Me." Sectarianism, bigotry, and its horrible descendant, fanaticism, have long possessed this beautiful earth. They have filled the earth with violence, drenched it often and often with human blood, destroyed civilization, and sent whole nations to despair. Had it not been for these horrible demons, human society would be far more advanced than it is now. But their time is come, and I fervently hope that the bell that tolled this morning in honor of this convention may be the death-knell of all fanaticism, of all persecutions with the Sword or with the pen, and of all uncharitable feelings between persons Wending their Way to the same goal.
19

Page 17

சிவசக்தி 2OO6
Science and Religion
By Swami Ranganathananda
Faith and Perseverance
The search for truth in the physical science (also) involve (sikilar) challenges, set-backs, and disappointments, and call for (Similar) courage and persistance to achieve final success. Behind a successful Scientific discovery lie many failures and disappointments. Take the Case of Madame Curie Who discovered and isolated radium. Behind that momentous discovery lie years and years of frustrating research with pitchblend, conducted in a damp and ill-equipped cellar, and in a spirit of what India calls tapas, or austere discipline in the pursuit of truth, in which she had the help and encouragement of her great scientist husband. Thus We see the close kinship in method and spirit and temper between the tapas and Sadhanas of physical science and of the Science of religion. Gauda pada refers refers to the dauntle SS persistance characteristic of all such tapas in a famous verse in his Mandukya Karika (III.41).
Utseka Udadhervadvat Kusagrenaika – binduma; Manaso nigrahas – tadvat bhavet aparikhedatah
"The disciplining of the mind is to be pursued with dauntless and cheerful determination just like the determination to empty the Ocean, drop by drop, by the tip of a kusa grass".
21

Page 18
சிவசக்தி 2OO 5 The spirit behind both pure science and religion, there fore, is the same, namely, persistent search for truth. difference is only in the field of the search. The physical scientists seek for truth in the physical universe, in the world revealed by the five senses, and by the instruments helpful to the senses. The seeker of the science of religion seeks for it in that field of experience that lies beyond that world revealed by the five senses, beyond where the Organ of speech (and other senses), and the mind (dependent on mere sensedate), do not reach " " Yato Vaco......... ” Ya to Vaco ni vartante aprapya manasa saha as the Taittiriya Upanisad puts it (11.9). Soul and God belong to that categong to that category, that is India's testament after long experiments and verifications, from the time of the Upanisads to Sri Ramakrishna.
The Tapas of Truth - seeking in Science and Religion
That is why, in the field of religion in India, the question is not of believing in a creed or dogma, but experimenting with and experienceing the truth about the soul, about the soul, about God. Belief is nothing. As I said in the beginning, any fool can say, 'I believe': and he or she believes, yet he or she remains the same Stagnant pool of a man or a woman for years. That belief has not made any difference in his or her character, or in his or her interhu-man relationships. But one who follows the way of the science of religion does not remain satisfied with such cosy yeilding only a static piety. He dares to question his belief, to experiment with it, and does not find satisfaction till has converted it into a true belief Indian history is full of accounts of spiritual seekers, drawn from all calisses and levels of society, who reached such true beliefs and became saints-scientific discoverers in the field of religion. Incidently, it also demonstrates the truth, that the scientific mind and the spirityal mind, in a free Society, can rise and flourish irrespective of caste or class Or education Or income levels. They meditated and prayed, Struggled and suffered, lived and worked, with dedication for years, before they experienced the light of Dod. The discoveries of physical science have also such tapasya behind
22
 

சிவசக்தி 2OO5
them, as the One example, Out of many, of Madame Curie mentioned earlier, makes clear. Training our children for pure science will in due course fit them for pure religion also. Search for truth in all science begins with the sense organs, by transforming mere seeing into observing. The training of the senses and the mind into effective instruments in the search for truth and character-excellence is education, and religion is only continued education.
Fundamental Science Education
The more Our children get such and education, the more will trained minds be made available to our country in all fields of national activity. But, today, we are far from it, Our current education is largely Stuffing the brain and not trainig the senses and the mind. Even in many of our university graduates, including science graduates, this power of Observation is very limited, and
the power of independent thinking and judgement and decision
making is still more limited. What the country needs is, there fore, not plenty of mere science graduates but batches and batches of scientific mind, Out of whom will come giants in all secular and spiritual fields. That is the wonderful type of mind that can bring the galvanic touch to rouse and raise the six hundred and fifty
million people of India. Ouantitatively, we are big, but qualitatively,
We are small. Our national mind is to be trained in Sraddha, Out of which will come the creative power of imagination and the critical power of thinking.
That is fundamental Science education. We need such and education to be imparted to Our children from primary classes upwards. We can inspire Our children with authentic stories taken from the history of physical Science, for example, the Story of the boy Watts who observed the power of steam and whose work later enabled Stevenson to develop the steam engine. When he was a young boy, Watts was sitting at breakfast table with the other members of his family, his mother was preparing the breakfast. The kettle, filled with water for tea, weas on the fire, the water was
23

Page 19
சிவசக்தி 2005 boiling. The boy looked at the kettle, he saw the lid of the kettle jumping up, he observed it, not merely saw, it, and felt it to be a unique phonomenon. The mother called the boy to join the party at breakfast, but he did not hear it, he was (concentrating) on that One single phenomenon in front of him, in the course of observation, his mind caught its significance imaginatively. There, is power, or energy, hidden in the steam, it makes the lid jump up all the time, and that energy of the steam can be disciplined and made to serve the purposes of man. Out of that experience came the great discovery of the steam engine which was one of the important ingredients be hind the early phase of the modern Industrial Revoloution. It is this Scientific Curiosity and power of Critical observation and love of truth, instilled in a big way in Our children, that will produce the much needed scientific, social and spiritual revolution in India.
The Example of a Modern Indian Scientist
In One such youth of Our country, the late Dr. Yellapragada Subba Row of Andhra Pradesh, we have a wonderful recent example of this scientific and Spiritual quest. When I read his Story a few years ago in the American Reporter of New Delhi (June 11, 1952), I felt deeply inspired and I felt that we have to awaken such Subba Row Spirit, consisting of love of truth and the inquiring Spirit, and also love of man, in many thousands of our youths, before we can become ascientific nation. What did he do? As a student at school at Madras, he was a bright boy, but very poor. His brother fell ill of sprue of a serious kind. The boy watched his brother sinking day by day from what, at that time, was an incurable malady. Helplessly watching his dear brother dying away, his imagination became fired with the thought, Why is my brother dying like this?
Is there no remedy for this serious ailment? And he, then and there, resolved within himself that he would dedicate his life to find such a remedy. That is the confuence of tapas and Svadhyaya, self-discipline and study-research, pursued by him thereafter till
24
 

சிவசக்தி 90O5
his own death a confluence highly praised and prized in Valmiki Ramayana and other great books of Indian culture.
What a resolution for a young and poor school boy to takes But, when behind such resolution lie love of truth and love of man, and courage, they cease to be idle resolutions of immature minds, but become silent Onward creative movements of the human Soul. Love of truth and love of man go together in many social undertakings like prison reform. All antiseptic measures in modern Surgery, and penicillin amoung drugs, are a few of the many Such Scientific examples. Buddha's compassion for man made him discover profound spiritual truths during his historic meditation under the bodhi tree at Buddha Gaya two thousand five hundred years ago. Gandhiji's going to prison, armed with truth and nonviolence only, was With a view to releasing millions of his countrymen from the larger prison of political slavery and helplessness.
Helped by friends to study medicine. He finished duly the M.B.B.S and M.S. courses. But, all through, only that One idea dominated his mind; how to discover a remedy for that pernicious ailment? So, after finishing his medical course at Madras, he wanted to do research. But where were such research facilities in India then? So he went first to U.K. in 1923 and then to America where he joined a research team at the Hardvard University. Along with doing commendable research work there, he also worked herd and obtained a degree in bio chemistry. During this time, he did also menial jobs to earn money to meet his expenses. He later accepted an invitation extended by the Lederle Laboratories of the American Cyanimid Company, New York, in 1940, to use its facilities for his research. Impressed with his garnestness and talents, the management of that drug-research laboratory encouraged him to go ahead in his search and, from 1942, to direct the research work of its team of scientists.
Research with tone of liver for experiment continued for years. Like many other scientific Seekers, he also must have often experienced frustration and dejection for not getting the expected
25

Page 20
சிவசக்தி 2ᏅᏅᏋ results. Ultimately, he succeeded in isolating a tiny bit folic acids, and, later; his team succeeded in producing synthetic folicacid in the form of a yellow powder in 1945. It was a great discovery. Then came its testing by application to hospital patients. When it Vvas aådministered, the results vivere marnivellours, and it soon entered the market as a wonderful remedy for this pernicious disease.
He did not take any personal credit for this descovery, but he gave that credit to the members of his team. Soon after, he and his team developed another wonder-drug, aureomycin. During all those years, he gave freely from his earnings to relieve the sufferings of other people around him. Dr. Yellapragada Subba Row died young in 1948 at the age of 52 in hite United States, after ensuring, through his work, life for millions of his fellow human beings. followed by the inscription. Science simply prolongs life, religion deepens it.
His illustrates the spirit conveyed in a brief but powerful utterance by queen-mother Vidula to her prince-son Sanjaya. as recorded in the Udyogaparva of the Mahabharata (120. 15)
Muhurtamjvahtam Sreyo Na tu dhumauitam Ciram
'It is better to fame forth for One instant than to Smoke away for ages!'
I have given this example of Young Subba Row to emphasise that pure science needs, along with critical reason, tremendous Sraddha, with its richness of imagination, Out of which Comes not only science but also humanism. And, in religion, we have this fund of imagination in our bhakti tradition, and this kind of critical reason in our jnana tradition.
(These are part of the lectures delive red by Swami Ranganathananda the Bengaloor University in 1976)
26
 

சிவசக்தி இ005
ஒழுக்கமுடையோரே உயர்ந்தோர்
குமாரசாமி சோமசுந்தரம்
வாழ்வில் சிறந்த ஒழுக்க விழுமியங்களைக் கடைப்பிடிப்பவர்களை உலகம் போற்றுகிறது. உத்தமர்கள், உயர்ந்தவர்கள், சீலர்கள் என்றெல்லாம் அவர்கள் புகழப்பெற்றுப் பாராட்டப்படுகிறாாகள். "உலகம் என்பது உயர்ந்தோர் மேற்று" என்ற உலகத்திற்கு வரைவிலக்கணம் கண்டவர்கள் நமது முன்னோர்கள். அவர்களால் உயர்ந்தோர்களாகக் கொள்ளப்பட்ட வர்கள் யாவர் என்பதை நோக்கின் நல்லொழுக்கம், நற் செய்கை, நன்னடத் தைகளினால் மேம்பட்டவர்களையே அவ்வாறு உயர்ந்தவர்கள் எனக் கொண்டார்கள் என்பது தெளிவாகப் புலப்படும்.
இன்று"உலகம் சுருங்கிவிட்டது" என்கிறார்கள் எத்துணை உண்மை யைான கூற்று இது. ஆம், இன்று உயர்ந்தோர்களின் எண்ணிக்கை குறைந்துதான் வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை. அப்படியாயின் நல்லொழுக்கங்களை வாழ்வில் கடைப்பிடிப்பவர்களின் தொகை சுருங்கி வருகினறது. "உலகம் என்பது உயர்ந்தோர் மேற்று" என்ற கூற்றின் அடிப் படையில் நோக்கும் போது, உலகம் சுருங்குகிறது என்பதற்கு உயர்ந் தோர்களின் தொகை குன்றிவருகின்றது என்று பொருள் கொள்வதில் தவறு இல்லை எனலாம். மக்களிடையே நல்லொழுக்கம் குன்றி வருவதை இது சுட்டிக் காட்டுகின்றது. உலகின் சில சுருங்குவதால் நன்மைகள் உண்டு இன்னும் சில பெருகுவதால் நன்மைகள் கிடைக்கும் ஒழுங்கீனங்கள் சுருங்கவேண்டும், பாவங்கள் அழிய வேண்டும், அறிவீனம் அகல வேண்டும். உலகிற்கு நன்மை அறிவு பெருக வேண்டும், ஒழுங்கமுறைகள் பேணப்படவேண்டும் அறம் ஓங்கவேண்டும், அன்பு தழைக்க வேண் டும். அவற்றின் பெருக்கத்திலும் விரிவிலும் தான் உலகம் உய்ய முடியும். பெருக வெண்டியவை சுருங்குவதாலும், சுருங்கவேண்டி யவை பெருகு வதாலும் உலகத்திற்குக் கெடுதல் ஏற்படுமேயன்றி. நன்மைகள் உண்டாக முடியாது இந்த உண்மையை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளு தல் மிக அவசியமாகும். மனிதகுலம் அமைதியும், சாந்தியும், நிம்மதியும்
27

Page 21
சிவசக்தி 2OO 5 பெற்று மகிழ்ச்சியாக வாழ்வதற்கு இந்த உண்மையைத் தெளிந்து ஒழுகுதல் இன்றிய்மையாதது.
ஒழுக்கம் விழுப்பம் தரும், உணர்வு தரும், உத்தமர்கள் ஆக்கும் என்ற உண்மை பண்தொட்டு இன்று வரை உரைக்கப்பட்டு வருகிறது. எல்லோருக்கும் தெரிந்த பாடம் தான் யாவரும் ஏற்றுக் கொண்டும் உள்ள னர் என்னும், தற்காலத்தில் ஒழுக்கம் பெரிதும் அசட்டை செய்யப்பட்டு வருவதைக் காணும் போது கவலை கொள்ள வேண்டியுள்ளது. ஒழுக்கத்தை ஒம்பாமல், அசிரத்தை செய்யும் நிலை நீடிக்குமேயானால், உலகில் அழிவும், அனர்த்தங்களும் தவிர்க்க முடியாதனவாகிவிடும் என்பதையும் கூறித்தான் ஆகவேண்டியுள்ளது. ஒழுக்கம் என்றால் பழைமையென்றும் சமய சம்பந்தப்பட்டதென்றும் முற்போக்கு அல்ல என்றும், முன்னேற்றத்திற்குத் தடையானது என்றும் கொள்ளப்படுகின்ற காலமாகத் தற்காலம் வந்து விட்டது. இந்த நிலைமை வருத்தத்திற்குரியது ஒழுக்கப் பண்புகள், விழுமியங்கள் பல மிகப் புராதன காலந்தொட்டு மக்களிடையே பேணப்பட்டுவருகின்றன. அதனால் அவையாவும் இந்நவீன காலத்தில் பழைமையாகி விட்டன, மனித நாகரிக முன்னேற்றத் திற்கு அவை இடைஞ்சலாக உள்ளன என்று கூறுவது பொருத்தமாக இல்லை அவ்வாறே ஒழுக்க விழுமியங்கள் நன்னடத்தைப் பண்புகள் என்பன கடந்த காலங்களில் சமயங்களோடு தொடர்புபடுத்தப்பட்டு வந்தமையால், சமயவாதிகள் அவற்றிற்கு உரிமை பாராட்டலாம், சமயங் களுடன் சார்பற்றவர்களிடம் சமய விழுமியங்களை ஏன் திணிக்க வேண் டும் என்றும் வினா எழுப்பப்படுகிறது விழுமியங்கள் நடத்தைப் பண்புகள் என்பன முழு மனித குலத்திற்குமே உரிமையானவை, பொதுவானவை சமயஞ் சார்ந்தவர்களுக்குத் தான் தேவை, சமயம் சாராதவர்களுக்குத் தேவையில்லை என்று பாகுபடுத்த முடியாது. சமயங்கள் மனித விழுமியங் களை உணர்த்தும் ஊடகங்களாக ஒரு காலத்தில் இருந்தன. இருந்தும் வருகின்றன. மக்களிடையே செல்வாக்குப் பெற்றுள்ள ஊடகங்கள் மூலம், அவர்களுக்குச் சொல்ல வேண்டியவற்றைச் சொல்வது நெடுங்காலமாக இருந்து வருகின்ற நடைமுறையும் உத்தியும் ஆகும். அந்த வகையில் விழுமியங்களைப் பரப்புவதற்கு மக்களிடையே செல்வாக்குப் பெற்ற சமயங்கள் பயன் படுத்தப்பட்டன. இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகின் றன. எவ்வாறாயினும், ஒழுக்கப் பண்புகளும், விழுமியங்களும் மனிதகுல நன்மையின் பொருட்டு எல்லோராலும் போற்றப்பட்டு வாழ்க்கையில் ஒம்பப்பட வேண்டியன என்பதை மனிதர்கள் ஒவ்வொருவரும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
28
 

சிவசக்தி 2005
ஒருகால், ஒழுக்கம் என்று குறிப்பிட்டால் அது நல்லொழுக்கத்தையே குறிப்பதாக இருந்தது. ஆனால் பின்னர் நல்லொழுக்கம் என்றும் தீயொழுக்கம் அல்லது கூடாவொழுக்கம் என்றும் பகுத்துப் பேசப்பட லாயிற்று தமக்கும் பிறருக்கும் நன்மையையே விளைவிக்கக் கூடிய சிந்தனைகள், பேச்சுக்கள், செய்கைகள் ஆகியவற்றில் ஈடுபாடு கொள்ப வர்கள் நல்லொழுக்கமுள்ளவர்கள். என்றும் சுயநலத்திற்காகப் பிறருக்குக் கேடு நினைப்பவர்கள், கெட்ட விளைவுகளை ஏற்படுத் தும் வார்த்தை களைப் பேசுபவர்கள், பிறருக்குத் துன்பங்களையும் தொல்லைகளையும், அழிவுகளையும் அனர்த்தங்களையும் விளைவிப்பதற்கென்றே திட்டமிட்டுக் கொடும் செயல்களையும் புரிபவர்கள் தீயொழுக்கம் கொண்டவர்கள் என்றும் கொள்ளப்படுகின்றனர். மனிதர் களுக்கு ஒரு மாபெரும் ஆற்றல் இயல்பாகவே உள்ளது. அது தான் நல்லவற்றையும் தீயவற்றையும் பாகுபடுத்திப் பிரித்துணரும் திறன் இந்தத் திறனே, விலங்குகள் போன்ற தாழ்ந்த உயிர் இனங்களிலிருந்து மனிதன் வேறுபடுத்தி, ஓர் உயர் படைப்பாக மனிதன் கொள்ளப்படுவதற்கு ஏதுவாக அமைந்த அம்சம் இது மனிதர்களுக்குத் தெரியாத ஒன்றல்ல ஆயினும், பிரித்துணரும் திறன் தமக்கு உண்டு என்பதில் பெருமிதம் அடைகின்ற மனிதர்கள், அந்தத் திறனைப் பயன்படுத்தி நல்லவற்றையும் தீயவற்றையும் பகுத்துணர்ந்து நல்லவற்றை ஏற்று, வாழ்க்கையில் மேற் கொண்டு தீயவற்றை விலக்கி, அவற்றை வாழ்ககையிலும் புறக்கணித்து, வளமாகவும் வாழ்வாங்கும் வாழமுடியாமல் ஏனோ தவிக்கிறார்கள் என்பது புரிந்து கொள்ளப்பட முடியாத புதிராகவும் அதிசயமாகவும் உள்ளது நல்ல பண்பு களையும் விழுமியங்களையும் இனங்கண்டு கொள்ள மனிதர்களுக்குத் தெரிகிறது. ஆனால் அந்த நல்ல ஒழுக்கங்களையும் நயமான மனித விழுமியங்களையும் தங்கள் வாழ்க்கையில் கைக் கொள்ளவதற்கு தைரியம் அற்றவர்களாக மனிதர்கள் வந்தவிட்டனர். இந்தத் தைரியம் அற்ற கோழைத் தனத்தால், மனிதர்கள் இன்று, மகிழ்ச்சியும் நிம்மதியும் அற்ற அவல வாழ்வினை வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப் பட்டள்ளனர்.
சரி, பிழை, நல்லது கெட்டது என்பவற்றை அறிந்து கொள்ளும் தகுதியும் தகைமையும் மனிதர்களிடம் உண்டு ஆனால் அவற்றால் என்ன பிரயோசனம்? அந்த உயர் தகுதியையும் சிறப்புத் தகைமையையும் தமது நல்வாழ்விற்கு ஆகவேனும் மனிதர்கள் பயன்படுத்தத் தவறி விடுகிறார் களே மனிதர்கள் மனிதர்களாக வாழ்வதற்கு தமக்கு வழங்கப்பட்டுள்ள தகுதி, தகைமை, ஆற்றல் யாவற்றையும் உதாசீனஞ் செய்து வரும் வரை உலகில் அமைதி, சாந்தி, சமாதானம் என்பவற்றைக் காண்பது முடியாத
29

Page 22
சிவசக்தி 2OO5 காரியம் ஆகும். நல்லொழுக்கம் என்கிறார்களே, அப்படியென்றால் என்ன? என்று கேட்பவர்களும் உளர் ஒன்றைத் தெரியாதவர்கள, தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது தான் முறை சிலர் இருக்கிறார்கள். அவர்கள் தெரிந்து கொண்டு தெரியாதவர் போல் பாசாங்கு செய்கிறார்கள். வேறு சிலர் தெரியாதவர்கள். ஆனால் தெரிந்தவர் போல் நடிக்கின்றாாகள். இவர்கள் யாவரும் போலிகள், ஆப்பத்தான பேர்வழி SଗT.
நல்லபழக்க வழக்கங்கள், ஆசாரங்கள், நல்ல மனிதப் பண்புகள் விழுமியங்கள் ஆகியவற்றை அறிந்து அவற்றை அன்றாட வாழ்க்கையில் கைக் கொண்டு ஒழுகுதல், நல்லொழுக்கம் ஆகும். கடின உழைப்பும் நல்லொழுக்கமுமே மனிதர்களை உயர்த்த வல்லன. அவ்வாறு பெறப் படுகின்ற உயர்வே, நிரந்தரமான உண்மை உயர்வு ஆகும். அத்தகைய உயர்ந்தவர்களையே இந்த உலகம் வேண்டி நிற்கின்றது "உலகம் என்பது உயர்ந்தோர் மேற்று" என்று நம் மூதாதையர் சொல்லித் தந்த பாடம் பொருள் பொதிந்தது. நன்மை பயப்பது அந்தப் பாடம் தினமும் நம்மால் நினைவு கூறப்பட வேண்டியது. மனிதர்கள் நல்லொழக்கமுள்ளவாகளாகத் திகழும் போது தான் தெய்வங்களுக்கு ஒப்பாகின்றனர். வேறு எந்த நிலையிலும் அவ்வாறு வந்து விடமுடியாது அரசனாயினும் குடிமகன் ஆயினும் தம் வீட்டிலும் நாட்டிலும் அமைதியைக் காணும் போதே தலை சிறந்த அளவற்ற மகிழ்ச்சியைப் பெறுகின்றனர். இத்தகைய அமைதியைக் காண்பதற்கு ஒரே வழி, அதுவும் நிகரற்ற வழி சம்பந்தப் பட்ட யாவரும் நல்லொழுக்கத்தைக் கடைப்பிடித்து வாழ்வது தான் அதைத் தவிர மகிழ்ச்சியையும், திருப்தியையும், நிம்மதியையும் அமைதி யையும் அடைய மாற்று வழி கிடையாது என்பதை உணர்வோமாக. நல்லவன் வாழ்வான், தீயவர் வாழ்வு வாழ்வாகக் கொள்ளப்படுதில்லை வாழ்வின் வெற்றிக்குக் காரணம் திறமையைக் காட்டிலும், நல்லொழுக்க மேயாகும் இவற்றைக் கருத்திற் கொண்டு நல்லொழுக்கப் பாதையில் நம் வாழ்வினை அமைத்துக் கொள்வோமாக,
K. ரஜிவன் 2H
ܒ o Ο ס ཀྱི་ ༠ཤི ད7༠༥༧་ཀ ཉིའ་ཨི༠༧r། ༈ 7 ༥༠ ཚི,༦༽ ༼ ༽.
cy o <া ক্টোub உரிபாடு @w劈星@ ੬ ੫੦uur
30
 

சிவசக்தி 2005 தியானமும் இலகு தியான முறைகளும்.
கா. சந்திரலிங்கம் B.A., Dip-in (S. m) P.G.D.E, S.L.P.S.-l யோகாப்பயிற்சி (பெங்களுர்)
அதிபர்
தொண்டர் வித்தியாலயம்
மனித வாழ்க்கை நிரந்தரமற்றது. இன்ப துன்பம் நிறைந்தது. மன மகிழ்ச்சியும் உண்டு. மனக்குழப்பமும் உண்டு நெருக்கடியான உலகில் முகம் கொடுக்கும் மனிதன், பல்வேறுபட்ட விடயங்களை ஒரே நேரத்தில் விரைவாக செயல்ப்படுத்துகின்ற போது, அல்லது முனைகின்ற போது மனநெருக்கடி ஏற்படுகின்றது. இதனால் அவன் மன அழுத்தத்திற்கு ஆளாகி அநேக நோய்களுக்குள் சிக்கித்தவிக்கிறான். குறிப்பாக நீரழிவு, மாரடைப்பு இரத்தழுத்தம், அஸ்மா, கோபம், நித்திரையின்மை போன்ற வைகளைக் குறிப்பிடலாம். விஞ்ஞானரீதியாக இது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இவற்றிலிருந்து விடுபட்டு, மனச்சஞ்சலமற்று அமைதியாக வாழ. தியானம் துணை செய்யும். தியானம் ஒரு பூரண விஞ்ஞானமாகவும், தேவரகசியங்கள் பலவற்றை, தன்னகத்தே கொண்டுள்ளதாகவும் காணப் படுகின்றது. ஒரு மனிதனின் தெய்வீகத்தன்மையை வெளிக்கொணரக் கூடிய அற்புத சாதனமாக தியானம் விளங்குகிறது. என்றால் அது மிகையாகாது.
தியானமென்றால் என்ன?
பதஞ்சலி முனிவரின் கருத்துப்படி "குறித்த ஒரு பொருளின் மீது மனத்தினை நிறுத்திவைக்கும் நிலையில் சிறிது நேரம் நிலைத்திருத்தல்" தியானம் எனப்படும். குறித்த ஒரு பொருளின் (Concentration) இந்நிலை
நீடிப்பது தியானம்.
பலர் தாம் தியானம் செய்வதாக நினைத்துக்கொண்டு தாரணையே செய்கின்றனர். இது தியானத்தின் முதற்படியாகக் கருதப்படுகின்றது. இந்
31

Page 23
சிவசக்தி 2OO 5 நிலையில் மனம் அசைவற்று நிறுத்தப்படுகின்றது. அசைவற்றுநிற்கும் மனம் அப்படியே நிலைத்து நிற்கும் போது தியானமாக மாறுகின்றது. (Meditation) இதனையே பதஞ்சலி "தத்ர ப்ரத்யயைகதான த்யானம்" என யோசூத்திரத்தில் குறிப்பிடுகின்றார்.
மனம், தான்வேறு எண்ணுகின்ற பொருள்வேறு என்றில்லாமல் அதுவாகவே அது மாறுதல். உதாரணம் தாமரைப்பூவை நினைத்துத் தியானம் செய்பவர் தானே தாமரை மலராகி அதன் மணம், குணம் போன்ற அனைத்துத் தன்மைகளையும் அறிந்தவராவார் மனத்திற்கு அப்பாற்பட்டது தியானம். ஆரம்பத்தில் மனதின் செயற்பாடாக இருந்த போதிலும் இறுதியில் அதன் செயற்பாடு அற்றுப்போகின்றது.
தியானம் செய்பவர் தன்னை மறந்தவராகின்றார். இது தூக்க நிலை போன்று இருக்கும். ஆனால் வழமையான நித்திரைக்கும் தியானத்திற்கும் வேறுபாடு உண்டு நித்திரை சாதாரண உணர்வு நிலை தியானமோ உணர் வுக்கு அப்பாற்பட்ட நிலை. அதாவது மனதைக்கடந்து உணர்வு பிரிந்து உள்முகப்படும் நிலை. இந்நிலையில் புதுவித அனுபவங்களையும் இன்பங்களையும் பெறலாம்
தியானம் செய்வதனால் ஏற்படும் நன்மைகள்
* மூளையின் ஆற்றல் பன்மடங்கு பெருகுகின்றது. * மன அழுத்தம் மட்டுமன்றி இரத்த அழுத்தம் குறைகின்றது. * பல் வேறுபட்ட நோய்கள் நீங்குகின்றன. * உறக்கத்தில் கிடைக்கும் ஓய்வைவிடக் கூடிய ஒய்வினைப்பெறலாம் O உடல் உள்ளம் ஆற்றல் பெருகும். * குறுகிய காலத்தில் பெரிய வேலைகளைச் செய்ய முடிதல். * தெய்வீக சக்தி பெருகும். * முகம் ஒளி பெறும் * கெட்ட எண்ணங்கள் நீங்கி நல்ல எண்ணங்களின் செயற்பாடு
அதிகரிக்கும்.
o மனம் அமைதியடையும்.
32
 

சிவசக்தி 92OO6
9 சிந்தனைத்திறன், ஞாபக சக்தி அதிகரிக்கும்.
உள்மனத்தை விழிப்படையச் செய்யும்.
மேலும் அன்பு அமைதி ஒற்றுமை சகோதரதத்துவ உணர்வு அறிவு தன்னம்பிக்கை நடைமுறை வாழ்க்கையில் சத்தியம், தர்மம் இவைகளை ஏற்படுத்த தியானம் உதவுகிறது.
தியானத்தில் ஈடுபடும் ஒருவர் கவனத்தில் எடுக்க
வேண்டியவை.
முடிந்தவரை தனி அறை ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதனைத் தூய்மையாக வைத்துக்கொள்ளல் வேண்டும். அறையில் முனிவர்கள், ரிஷிகள் மகான்கள். தேவர்கள் முதலியோரின் படங்கள் தொங்கவிடப் படலாம். சாம்பிராணி, ஊதுபத்தி போன்றவற்றை ஏற்றி மலர்களால் அலங் கரித்து, அறையைக் கவர்ச்சியுடையதாகவும், வாசணை பொருந்திய தாகவும் வைத்துக்கொள்ளலாம். கோபம், பயம், தீய எண்ணங்கள் அற்று நல்ல எண்ணங்களுடன் அறையில் நுழைதல், தீயவர்களை அறையினுள் அழைத்துச் செல்லாதிருத்தல், அறையினுள் விதண்டா வாதம் பேசுதல், நித்திரை செய்தல் தவிர்க்கப்படல் வேண்டும்.
நல்ல எண்ணங்களை எண்ணுதல், மகான்களை அறையினுள் அழைத்துச்செல்லுதல் அறையைத் தூய்மைப்படுத்துவதோடு தெய்வீகத் தன்மையுடையதாக மாற்றும் தனியறையில்லாதவர்கள் பூஞ்சோலை, கோயில்கள், விளையாட்டு மைதானங்களைக்கூட தியானத்திற்குரிய இடமாக பயன்படுத்தலாம்.
நாம் ஆரோக்கியமாக இருந்தால் தான் எதனையும் செய்யலாம். "சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம்" எனவே ஆரோக்கியமாக இருக்கச் சில ஆசனங்களைத் தினமும் செய்வது நீண்டதூரம் நடப்பது, சுவாசப் பயிற்சிகள் பலவற்றைச் செய்வது போன்றவற்றில் ஈடுபடலாம்.
எண்ணமே வாழ்வு என்பதை நாம் மறக்கக்கூடாது. பலமுறை எண்ணும் போது எண்ணத்தின் அலைகளின் சக்தியினால் மனம் வலிமை யடைந்து உடல், உளம் ஆரோக்கியமடையும். எனவே நாம் ஆரோக்கிய மாக இருக்கின்றோம் எனப் பலமுறை ஆழமாக எண்ணு வது போன்றன ஆரோக்கியத்தை உண்டாக்கும்.
33

Page 24
சிவசக்தி SC OS தியானம் செய்யும் போது கவனத்தில் வைக்கவேண்டியவை.
அதிக வெளிச்சம் குறைந்த தனி அறையில் வசதிக்கேற்ப்ப, சுகமாக, உடல் இறுக்கமற்ற நிலையில் நிமிர்ந்து உட்காருக. இதற்கு வஜ்ராசனம் பத்மாசனம், சுகாசனம் (வசதிக்கேற்ப இருப்பது) என்பவற்றைப் பயன் படுத்தலாம் எவ்வாறு உட்கார்ந்து இருப்பினும் முதுகு முள்ளந்தண்டு வளையாது நிமிர்ந்திருப்பதை உறுதிப்படுத்திக்கொள்க. தியானம் சித்திக்க இது உதவும்.
தியானம் செய்வதில் சுயநலமிருக்கக் கூடாது. உலகத்துக்காக, சமா தானத்துக்காக, மக்களின் நன்மைக்காக, தியானம் செய்யப்பட வேண்டும். குறிப்பிட்ட நேரத்தை தியானம் செய்ய ஒதுக்கி அதனைப்பயன்படுத்தும் போது மனம் பழக்கப்பட்டு இலகுவில் தியானநிலை சித்திக்கும். வடக்குப் பக்கம் பார்த்து தியானம் செய்வது சிறப்பானதாகும். சூரியன் உதயமாகும் முன்னரும். சூரியன் மறைந்த பின்னரும் வெறும் வயிற்றில் தியானம் செய்வது மிகப் பொருத்தமுடையதாக இருக்கும்.
பல்வேறுபட்ட முறைத் தியானங்களும் சித்திபெற இலகுவான வழிகளும்.
ஓம் காரத் தியானம்
"ஓம்" காரம் மிகச் சக்தி வாய்ந்த ஒலி வடிவமாகும். இதன் ஒலி அதிர்வுகள் உடலிலுள்ள கோளங்கள், கலங்கள் அனைத்திற்கும் சென்று, அவற்றைச் சக்தி வாய்ந்ததாக மாற்றமடையச் செய்து மன சக்தியை அதிகப் படுத்துவதோடு மன அமைதியையும் மன ஒருமைப்பாட்டையும் உருவாக் கும். தியானம் சித்திக்க உதவும். இதற்கு "ஓம்" பிரணவ மந்திரத்தை சுவாசத் தோடு இணைத்துச் செய்யவும். அதாவது மூச்சை உள் இழுக்கும்போது "ஒ" என்னும் உச்சரிப்பையும் சுவாசத்தை வெளி விடும் போது "ம்" என்னும் உச்சரிப்பையும் நினைத்து அதில் மனதைச் செலுத்திக் கொண்டி ருக்க வேண்டும்.
இதனைக் குறைந்தது பத்து நிமிடங்களாவது செய்வது சிறப்புடைய தாகும். இதனை நாம் தனியாக உட்கார்ந்திருக்கும் பொழுதோ, கடற்கரை, பூந்தோட்டம் போன்றவற்றில் உலாவும்போதோ மேற்கொள்ளலாம். தொடர்
34
 

சிவசக்தி 2OO 5
ந்து செய்து வர உங்களை அறியாமலே சுவாசத்தோடு ஓம்காரம் இணைந்து செயல்ப்படுவதைக்கண்டு நீங்களே அதிசயப்படுவீர்கள். மனம் அமைதியடைந்து நிச்சயம் தியான நிலை உருவாகும். கவலை, துன்பங்கள் மறையும்.
மனதைக்கட்டுப்படுத்தாமல் தியானம் செய்தல்
முதுகு முள்ளந்தண்டு வளையாது நிமிர்ந்திருந்து கொண்டு மனதைக் கட்டுப்படுத்தாமல் எண்ணங்களை மனத்தின் வழியே சுதந்திரமாக விடுங்கள். என்ன என்ன எண்ணங்கள் மனதில் உண்டாகின்றதோ அவற்றை முக்கியப்படுத்தாது அப்படியே விடுங்கள் மனதில் நல்ல எண்ணங்கள் மட்டுமன்றி தீய எண்ணங்களும் ஏற்படலாம் தீய எண்ணங் களைக் கட்டுப்படுத்த வேண்டுமென்று அவசியமில்லை. அதனை அதன்படியே விட்டுவிட வேண்டும். இவ்வளவு கெட்ட எண்ணங்கள் எம் மனதில் இருந்ததா? என்று எண்ணும் போது நீங்கள் ஆச்சரியப் படுவீர்கள். இதே போன்றே நல்ல எண்ணங்களும் உருவாகும். இவ்வாறு தினமும் பல்லாயிரக் கணக்கான எண்ணங்கள் தோன்றி இறுதி யில் எண்ணுவதற்கு எண்ணங்கள் இல்லாத நிலையில் தாமாகவே எண்ணங்கள்
குறைந்து கொண்டே வந்து இறுதியில் மனம் அமைதி யடையும்.
தியானம் செய்ய ஆரம்பித்த பின் அவசியமற்றவர்களின் தொடர் புகளை விட்டு விடுவதோடு மனத்தினைக்குழப்பும் காரியங்களிலும் ஈடுபடாதிருப்பது நலம் பயக்கும்.
மூன்று நிமிடத்தில் தியானம் செய்தல்
இதனைச்செய்ய ஒரு நாளோ நேரமோ அவசியமில்லை. ஆரம்பித்த பின் தேவைக்கேற்ப நேரத்தை மாற்றிக்கொள்ளலாம். உடல் நேராக இருக்கவேண்டும் கையிலுள்ள பெரிவிரலும் அதனை அடுத்த விரலும் இணைந்திருப்பது முக்கியமானதாகும். அதனை "சின்முத்திரா" என அழைப்பர். சின் முத்திரையில் மனதைச் செலுத்துக நடக்கும் போதோ இருக்கும் போதோ உரையாடும் போதோ குளிக்கும் போதோ அதனைப் பயன்படுத்தலாம். அதாவது குறிப்பிட்ட ஒரு பயிற்சி மனதை ஒரு நிலைப் படுத்த உதவும். அது எதுவாகவும் இருக்கலாம். பழக்கத்தில் வந்துவிட்டால் எங்கும், எதிலும் நாம் பயன்படுத்திப் பழகி வெற்றி பெறலாம்.
35

Page 25
சிவசக்தி 2OO 5 மூக்கு நுனியில் தியானம் செய்தல்
நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு மூக்கின் நுனியில் பார்வையை நிலை நிறுத்துக. மூக்கு நுனியினை உற்றுப்பார்க்கவேண்டிய அவசியமே இல்லை. மூக்கின் நுனிபற்றிச் சிந்தனைக்கு இடம் கொடுக்காமல் அமைதியாக எதையும் நினையாமல் இருக்கலாம் அல்லது ஏதாவது விருப்பத்திற்குரிய இறைவனின் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டிருக்கலாம். குறிப்பிட்ட நேரத்தில் தொடர்ந்து இதனைச் செய்வதால் மனம் பழக்கப்பட்டு, அமைதியடைந்து லயப்படும்.
சுவாசத்தையே அவதானித்து தியானம் செய்தல்
எப்போதும் தியானம் செய்யும்போது மனம் அமைதியுடன் இருக்கத் தக்கதாக உடலைத் தளர்த்தி நிமிர்ந்து உட்கார்ந்து கொள்ளவேண்டும். நன்றாக மூச்சை உள் இழுத்து வெளிவிடுக. பத்துத் தடவைகள் மிக அமைதியாக ஆழமாக மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுக. பின்பு சாதாரண மாக சுவாசிக்குக. சுவாசிக்கம் போது மூக்குத்துவாரத்தின் ஊடாகச் சுவாசம் செல்வது தொடக்கம் நுரையீரலை அடையும் வரை மனதைக் கொண்டு செல்க, மீண்டும் சுவாசம் வெளிவரும் வரை சுவாசத்தோடு மனதைக் கொண்டுவருக நாளடைவில் மனம் கட்டுப்பட்டு தியானம் சித்திக்கும்.
மன்னிப்புத் தியானம்
இத்தியானம் செய்வதால் பிறரை மன்னிக்கும் மனப்பாங்கும். சகிப்புத்தன்மையும் உருவாகும். பதகளிப்பு, பதட்டம் அற்றுப்போவதோடு கோபம் குறைகின்றது. நிமிர்ந்து இருந்துகொண்டு நீங்கள் யாரால் பாதிக்கப்பட்டீர்ளோ அவரது உருவத்தை மனதில் கொண்டு வந்து புருவத்தை உற்று நோக்கி அவரை மன்னித்தேன் எனப்பலமுறை கூறுங் கள். இதனால் அவரின் நடத்தையை மன்னிப்பதென்று அர்த்தமல்ல. அவரைப்பற்றிய கோப உணர்வை எம்மிடத்திருந்து அகற்றுவதே அதன் நோக்கம். இதனால் நாம் பிறரிடம் கோபம் கொள்ளாத நிலை ஏற்படு கின்றது. மனம் அமைதியடைகின்றது.
36

சிவசக்தி 2OO 5
மேலும் சில தியான முறைகள்
* தலையின் உச்சிக்கு அப்பால் ஒரு தாமரை இருப்பதாகக் கருதி அதன் மையத்தை குணமாகவும், காம்பை ஞானமாகவும் கருதித் தியானம் செய்யலாம்.
* இதயத்தில் ஒரு சிறு இடைவெளி இருப்பதாகவும் அதில் ஒரு சுடர் எரிவதாகவும் அச்சுடரை உங்கள் ஆன்மாவிற்கு ஆன்மாவாகிய கடவுளாகவும் நினைத்து தியானிக்கலாம்.
* தொண்டைக்குழிக்குக் கீழே ஆமை வடிவில் அமைந்தள்ள நாடியில் மனதைச்செலுத்த மனம் அசைவற்று நிற்கும் இதனை "கூர்ம நாட்யாம் ஸ்னைதர்யம்" என்று பதஞ்சலி சூத்திரம் விளக்கு கின்றது.
* புருவக மத்தியில் மனதை நிலை நிறுத்தியும் தியானம் செய்யலாம்.
ஏதாவது கடவுளின் திருவுருவத்தை மனக்கண்ணில் கொண்டு வந் தும் தியானம் செய்யலாம்.
பொதுவாகத் தியானம் செய்யும் வழிவகைகள் பல இருப்பினும், தியானம் என்பது ஒன்றே. எங்கள் வாழ்க்கை முறைகளின் பயனாக மன அமைதியடைய முடியாது என நம்மில் பலர் நினைக்கின்றோம். இதன் காரணமாக தியான நிலை சித்திக்காது எனக் கருதி அதனைச் செய்யாது விட்டு விடுகின்றோம். இதற்கான பல போலிக்காரணங்களாக நேரமில்லை, உணர்ச்சி வசப்படக்கூடிய என்னால் இது முடியாது. இதற்கு தனி இடம் வேண்டும். இதனால் எதுவித பிரயோசனமும் இல்லை. தொடர்ந்து செய்யக்கூடிய மன வலிமை எனக்கில்லை என்றெல்லாம் கூறி இதனை ஒதுக்கிவிடுகிறோம். எம்மால் வீணாக்கப்படும் பல மணி நேரங்களில் ஒரு சில நிமிடங்களைத் தியானத்திற்கு செலவிட்டால் நிச்சயம் எங்கள் வாழ்வில் கோபம், பயம், துக்கம், கவலை, ஆசை என்பன நீங்கப் பெற்று நிரந்தர மன அமைதியும் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் உண்டாகி தெய் வீக சக்தியும் பெருகும். வாழ்வும் வளம்பெறும்.
37

Page 26
சிவசக்தி
2OO5
38
 
 

சிவசக்தி 2OO 5
சிவ சின்னங்கள்
- மட்டுவில். ஆ. நடராசா,
சமயங்கள் பல. ஆனாலுஞ் சில சமயத்தவர் மாத்திரமே தத்தம் சமய சின்னங்களை அணிகின்றார்கள் கிறிஸ்தவர்களின் சின்னம் சிலுவை. இஸ்லாமியரின் உடை அவர்களை அடையாளங்காட்டுகின்றது. புத்த சமயத்தவர் எந்தச் சின்னத்தையும் அணிவதாகத் தெரியவில்லை. சைவ சமயிகள் விபூதி, உருத்திராக்கங்களைத் தமது சமய சின்னங்கள் என்கின்றனர்.
திருவதிகைப் பதிக்குத் திருநாவுக்கரசு சுவாமிகள் சென்ற கட்சியை,
"தூயவெண் ணிறு துதைந்தபொன் மேனியுந் தாழ்வடமும்
நாயகன் சேவழதைவருஞ் சிந்தையு நைந்துருகிப்
பாய்வது போலன்பு நீர்பொழி கண்ணும் பதிகச் செஞ்சொல்
மேயசெவ் வாயு முடையார் புகுந்தனர் வீதியுள்ளே' எனப் பெரிய புராணங் கூறுகின்றது.
தைவரும் சிந்தை - அன்போடு சிந்திக்கும் உள்ளம்.
இதில் தாழ்வடமென்றது உருத்திராக்க மாலையை இக்கூற்று. விபூதியும் உருத்திராக்கமும் சிவசின்னங்கள் என்பதை எடுத்துக் காட்டு கின்றது. இதனாலன்றோ நல்லை நகர் ஆறுமுக நாவலரும் தாமெழுதிய சைவ வினா விடையில், "சைவர்களால் அவசியமாகச் சரீரத்திலே தரிக்கற் பாலனவாகிய சிவசின்னங்கள் யாவை?" என்னும் வினாவுக்கு, "விபூதி உருத்திராக்கம் என்னும் இரண்டுமாம்" என விடை கூறியிருக்கிறார்.
திருநீறு சைவர்கள் தம்மை அடையாளங் காட்டுவதற்காக மாத்திரம் அணியும் பொருளல்ல. அது சிவபெருமானது அருளொளி விளக்கத்தைக் குறிக்குஞ் சின்னம், பாண்டியனுடைய வெப்புநோயைச் சமணரும் திரு ஞான சம்பந்தப்பிள்ளையாரும் தீர்க்கத் தொடங்கிய
39

Page 27
சிவசக்தி 2005 போது, சமணர் பாண்டியனது இடப்பாகத்திற் பொருந்திய நோயைத் தீர்க்கக் கருதி மயிற்பீலி கொண்டு தடவ அந்நோய் மேலும் மேலும் வளர்ந்தது. நோயின் வெம்மையைப் பொறுக்கலாற்றாத பாண்டிய மன்னன் சம்பந்தப் பிள்ளையாரை மனவருத்தத்துடன் நோக்கினான். சம்பந்தர்,
"தென்னவனோக்கங் கண்டு திருக்கழு மலத்தார் செல்வர் அன்னவன் வலப்பால் வெப்பை யாலவாயண்ணல் நிறே மன்னுமந்திரமு மாகி மருந்துமாய்த் தீர்ப்ப தென்று பன்னிய மறைகளேத்திப் பகர்திருப் பதிகம் பாடி" திருவளர் நீறு கொண்டு திருக்கையாற்றநடவத் தென்னனது வெப்பு நோய் தீர்ந்தது
கழுமலம் - சீர்காழி
சம்பந்தர் வெப்பு நோய் தீர்க்கப் பாடிய பதிகத்தினால், விபூதி மந்திரமாகவும் தந்திரமாகவும் பயன்படுவதோடன்றி போற்றி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பதென்பதையும் துதிக்கப் படுவதென்பதை யும் அறியலாம். துதிக்கப்படுவது நீறென்பது,
"மாலற நேய மலிந்தவர் வேடமும்
ஆலயந்தானும் அரனெனத் தொழுமே" என்னும் மெய்கண்டதேவ நாயனார் வாக்காலும் வலியறுத்தப்படுகின்றது.
விபூதி சைவசமயிகளுக் கோர் உண்மையை உணர்த்துகின்றது. விபூதியாவது பசுவின் சாணத்தை அக்கினியினாலே சுடுதலால் உண்டாகிய திருநீறு. பசு என்பது ஆன்மாவையும் சாணம் என்பது பசு வெனப்படும் ஆன்மாவைப் பற்றியிருக்கும் மலத்தையுங் குறிக்கும். எனவே விபூதி, பசுவின் சாணத்தை அக்கினியாற் சுட்டெரிக்க வெண்ணிறம் விளங்குவது போல ஆன்மாவைப் பற்றியிருக்கும் மலத்தை ஞானாக்கினியாற் சுட்டெரிக் கச் சிவ விளக்கம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
ஞானம் சைவ நாற்பாதத்தின் நாலாவது படி எனவே ஞானத்தைப் பெறும் பொருட்டு நாம் சரியை யாதியான நாற்பாத நெறியில் நிற்க வேண்டுமென்பதையும் விபூதி உணர்த்துகின்ற தெனலாம். விபூதியின் சிறப்பைக் குறிப்பிடக் கருதியதனாற் போலும், சேக்கிழார் பெருமான் தாம் பாடிய திருத்தொண்டர் புராணத்தின் முதற்காண்டத்து முதற்பாடலின் முதல் வரியில் திருநீறு" என்னுஞ் சொல்லை உபயோகித்திருக்கிறார்.
40
 

சிவசக்தி 92OO6
"பொன்னின் வெண்திருநீறு புனைந்தெனப் பண்னு நீள்பனி மால்வரைப் பாலது தன்னை யார்க்கு மறிவரியானென்றும் மன்னி வாழ்கயிலைத்திரு மாமலை" என்பது அப்பாடல்
பன்னும் - பாராட்டிச் சொல்லப்படும் மன்னும்-நீங்காமற் பொருந்தி யிருக்கும், மால்வரை - பெரியமலை
விபூதியை வடக்கு முகமாக வேனும் கிழக்கு முகமாகவேனும் இருந்து கொண்டு நிலத்திற் சிந்தாவண்ணம் அண்ணாந்து 'சிவ சிவ என்று சொல்லி வலக்கையின் நடுவிரல் மூன்றினாலும் உத்தூளனமாக அல்லது திரிபுண்டரமாக நெற்றியிலே தரித்தல் வேண்டும். இவ்விதிக்கு மாறாக ஒரு விரலால் விபூதி தரித்தல் குற்றமாகும். விபூதி தரித்தல் பற்றிய வியரங்களை ஆறுமுக நாவலர் அவர்கள் எழுதிய முதலாம், இடரண்டாம் சைவ வினாவிடைகளிற் காண்க
திரிபுண்டரம் - மூன்று குறி, உத்தூளனம் - பரவிப் பூசுதல்
உருத்திராக்கம் என்பது தேவர்கள் முப்புரத்து அசுரர்களால் தமக்கு நேர்ந்த துன்பத்தைச் சிவ பெருமானுக்குக் கூறியபோது அவருடைய மூன்று திருக்கண்களுஞ் சொரிந்த நீரிற்றொன்றிய மணிகளாகும். மதுபான மும் மாமிச போசனமும் இல்லாதவர்களாய் ஆசாரமுடையவராயுள்ளவர் கள் உருத்திராக்கந்தரிக்கலாம்.
உருத்திராக்கந் தரிப்போர் குடுமிலும் பூணுரலிலும் ஒவ்வொரு மணியும் தலையிலே இருபத்திரண்டு மணியும் காதில் ஒருமணி அல்லது ஆறுமணியும் கழுத்தில் முப்பத்திரண்டு மணியும் புயத்திற் பதினாறு மணியும் கையிற் பன்னிரண்டு மணியும் மார்பில் நூற்றெட்டு மணியுந் தரிக்க வேண்டும்மெனவும், நித்திரை செய்யும் போதும் மலசலங் கழிக்கும் போதும் நோயுற்றிருக்கும் போதும் பிறப் பிறப்புக்களால் வரும் ஆசெளக காலங்களிலும் குடுமி, காது. பூணுால் தவிர்ந்த மற்றைய தானங்களில் உருத்திராக்கம் தரிக்கக் கூடாதெனவுங் கூறப்படுகின்றது.
சிவபெருமானுடைய கண்ணிரிற்றோன்றிய உருத்திராக்கமணி அவருடைய கண்களிலிருந்து தோன்றுந் திருவருளைக் குறிக்கின்றது. எனவே திருநீறும் உருத்திராக்கமும் சிவபெருமானுடைய அருளொளி விளக்கத்தைக் குறிக்குஞ் சின்னங்களாகக் கருதப்படுகின்றன.
இக்காலத்தில் உருத்திராக்கந் தரிபோரைக் காணுதல் அரிதினும் அரிதாகிவிட்டது. விபூதி தரிப்போரிற் பலர் ஒரு விரலால் விபூதி
41

Page 28
சிவசக்தி 2OO 5 தரித்தலாகாது என்ற நாவலரின் அறிவுரையைப் புறக்கணிப்பவர்களாகவே காணப்படுகிறார்கள். அதனால், பாடசாலைகளில் சைவ சமயத்தைக் கற்பிக் கும் ஆசிரியர்கள், அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள், சைவ சமய விழாக்கள் எடுப்போர் ஆலய பரிபாலன்ஞ் செய்வோர் போதனை யோடமையாது. சைவ சமயிகளை அவர்களது சமயசின்னங்களை விதிப் படி அணியச் செய்வதற்காவது நடவடிக்கையெடுக்க வேண்டும்.
ኅ`› سے۔ مجھ ۔۔۔سمہ سن = ' • - மனோதது 55%
آبی دستہ ہوتے دوgریقی d07لادت رکھتے نہی کیریئے آویختم نہ{صلى الله عليه وسلم ہمدv سعبہ جسم r*-ot g-M ملتیب
కొర్రా క్తి Q
வி. கோகுலன்
2H
42
 

சிவசக்தி 2OO 5
விண்மட்டும் தெய்வமன்று மண்ணும் அ.தே!
- கம்பவாரிதி இ. ஜெயராஜ் -
உலகம் மயங்கும் ஒரு மாலைப்பொழுது மகாகவி பாரதியார்,
இயற்கையில் மனமொன்றி, தன்னை மறந்து தனித்திருக்கின்றார். காக்கைச் சிறகு, பார்க்கும் மரம், கேட்கும் ஒலி, அனைத்திலும் கண்ணனை அருவமாய்க்கண்டு. அகமகிழ்ந்து நிற்கிறது அவள் உள்ளம். ஒன்றாய், வேறாய், உடனாய், உலகோடு கலந்து நின்று. ഉ ഞെക இயக்கும் இறையின் கருணையை எண்ணி, விம்மித்தணிகிறது அவர் நெஞ்சம்.
ഉഓൿസ്ഫേ தெய்வமாய், தெய்வமே உலகாய்த் தரிசனப்பட தன்னை மறந்து தனியனாகிறார். மண்ணில் இறை தோன்ற, அவர் கண்ணில் நீராறு, தீக்குள் வைக்கும் விரலிலும் இறையைத்தீண்டும் இன்ப உணர்வு ഉ_സെഞ55 கடந்த உயர்நிலையில் அவர் உள்ளம். அனுபூதி நிலைக்கு அருகாமையில் அவர் செல்லும்போது, ‘ஐயனே ஓர் ஐயம். வளைந்து தொழுது வாய்பொத்தி பணிந்து நிற்கும் சீடனின் குரல். மகாகவியை இவ்வுலகிற்கு இழுக்கிறது. மாணவனின் பணிவு மகிழ்வைத் தர, கண்களால் அவனைக் கனிவிக்கிறார். குருவின் கண்களின் அறிவுக் கூர்மை, மாணவனை மயங்கச் செய்கிறது. தன்னையறியாமல் அவன் தாள்கள், இன்னும் இரண்டடி பின்செல்கின்றன. - குருவின் கண் நோக்கமுடியாது, கால்நோக்குகிறான்.
43

Page 29
சிவசக்தி 2005 பார்வையிலேயே பாதபூஜை முடிகிறது. மாணவனின் செயலெல்லாம் மகாகவியை மகிழ்விக்க, அவருள்ளத்தில் உற்சாகம்,
ஓங்கும் குரலெடுத்து,
“கேளப்பா சீடனே!” என கேள்விக்காம் அனுமதியினை அளிக்கின்றார்.
^ * 4
ஆசிரியர் அனுமதி கிடைத்ததில் அகமகிழ்ந்த அவ்அறிவுச்சீடன், மனம், மொழி, மெய்களில் பணிவு காட்டி இறையைத் தொழ ஏங்குகிறது நெஞ்சம். எங்கு தொழல் வேண்டும்? இயம்புக! எனக்கேட்டு, மலையாய் நிற்கும் அம்மகாகவிமுன், சிலையாய் அடங்கி செவி திறந்து, அறிவாகுதி பெற ஆயத்தமாய் நிறகிறான். சீடனின் வினாவைச் சிந்தையேற்று பதிலுரைக்க விழைகிறார் பாரதியார், ஆயிரம் கோயில்கள் சூழ இருக்கவும். அதுநோக்காது. ஆண்டவனை எங்கு தொழட்டும்?' எனக் கேட்கும். மாணவன்மேல் மதிப்புண்டாகிறது. கடவுளைக் கற்சிலையாய் மட்டும் காணவிழையாத மடமையிலா மாணவனின் மதிக்கூர்மை புரிகிறது. தக்கபடி பதிலுரைத்து அவன் தாகம் தீர்க்க, மக்கள் கவிஞர் மனங்கொள்கிறார். மாணவனின் மாண்புறு கேள்வியில் மகாகவியின் சிந்தனைக் குதிரை சிறகடித்துப் பறக்கிறது. வந்தனை செய்யும் வழியென்ன? கேள்வி பிறக்க கிளர்கிறது அறிவு
உலகைத் தோற்றுவித்தவன் இறைவன். எல்லா மதத்தாரும் ஏற்கும் கருத்திது. தோற்றுவித்தவன் இறைவன்.
44

சிவசக்தி 2OO 5
தோற்றியது உலகு. சர அசரம் அனைத்தும் அச்சக்தியின் படைப்பே உண்மை உணர உளத்துள் ஒரு கேள்வி. மகனில் தந்தையின் சாயல்,
குட்டியில் மாவின் சாயல், கவிதையில் புலவனின் சாயல், படைக்கப்பட்ட அனைத்திலும் படைத்தவனின் சாயல், இயற்கையின் ஏற்றம்புரிய மகாகவியின் மனத்துள் ஒர் ஒளிக்கிற்று அங்ங்னமாயின், படைக்கப்பட்ட உலகின் அனைத்துப் பொருள்களிலும், படைத்தவனின் சாயல் பதிந்திருத்தல் வேண்டுமன்றோ அஃது உண்மையாயின், உலகெலாம் கலந்திருக்கும் அவ்வுயர் இறையை, காணும் பொருளனைத்திலும் காணுதல் கூடுமன்றோ காணும் கண்ணிருந்தால், கடவுளைக் கல்லிலும் காணலாம், முள்ளிலும் காணலாம். காடு நெடுவானம், கடலெல்லாம் காணலாம். நீண்டு எரியும் நெருப்பிலும் காணலாம். பூச்சி, பறவை, புழு, விலங்கு அத்தனையும், ஆச்சரியம் விளைவிக்கும் ஆண்டவனின் வடிவமென. கண்டு வணங்கிக் களிப்புறலாம். உண்மை வெளிப்பட உவந்த மகாகவி, மாணவனை நோக்கி மனந்திறந்து பேசுகிறார். எல்லா உயிரும் இறையே எனும் உண்மை, சொல்லால் உரைக்க சோதிமிகு அறிவதனால், வல்ல மொழி தேடி வாய்திறந்து பாடுகிறார்.
கேளப்பா சீடனே கழுதையொன்றை
கீழான பன்றியினை தேளைக்கண்டு
தாளைப்பார்த்து இருகரமும் சிரம்) மேற் கூப்பி
சங்கர சங்கர என்று பணிதல் வேண்டும்.
பதில் கேட்டுப் பரவசப்படுகிது சீடனின் மனம்
ஆனால் குருவின் முகத்திலோ குழப்பம் தானுரைத்த
45

Page 30
சிவசக்தி 2OO5 பதிலில் பிழைகண்டு பதறுகிறது பாரதியார் நெஞ்சம் காணும் பொருளனைத்தும் கடவுளே! எங்கும் இறைத் தரிசனம் எய்தலாம் சொல்ல வந்த பதிலின் சாரமிது. பொருளுக்கு மாறான கருத்தோடு, சொற்கள் விழுந்து விட துவழ்கிறார் மகா கவி எல்லாம் இறையெனின், பன்றிக்கும், தேளுக்கும் அடைமொழியாய், "கீழான" எனும் சொல் அமைந்தது குற்றமன்றோ மற்றவர் அழுக்கை சுமந்து தூய்மை செய்ய உதவுவது கழுதை, மற்றவர் அழுக்கை உண்டு மகிழ்வது பன்றி. மற்றவரை விடத்தால் வருத்தி மகிழ்வது தேள் கழுதையின் செயலில் தியாகம் பன்றி, தேள்களின் செயல்களில் கீழ்மை, செயல் வேறுபாடுகளால் கழுதையில் மதிப்பும், பன்றிதேள்களில் வெறுப்பும் உண்டாக, கழுதையை வேறுபடுத்தி, பன்றிக்கும், தேளுக்கும் கீழான அடை கொடுத்துவிடுகிறது
அவர் அறிவு இது முதற்குற்றம். இறையோ, குணம், குறி கடந்த பொருள். ஒரு நாமம் ஓர் உருவம் அற்ற பொருள். எவ்வடிவத்துள் கண்டு தொழினும், அவ்வடிவேயாய் நின்று அருளும் பொருள் பெயர் கடந்த அப் பொருளை, வைதீக வாழ்வில் ஊறிய பாரதியின் அறிவு "சங்கர சங்கர" எனக் குறிகாட்டி பேசிவிடுகிறது. இஃது இரண்டாவது குற்றம். ஒன்றே ஆன பொருளை பிரித்த குற்றம். ஒன்றுமிலாப் பெயரை இட்ட குற்றம். இரண்டு வரிக்குள் இரண்டு குற்றங்கள் எழுந்து விட நாணுகிறது கவிஞர் நெஞ்சம். மாணவனின் அறிவை மயக்கும் பதிலினை தானறிந்தும் சொல்லுதல் தவறு என்று உணருகிார் சீடனை நோக்கி கீழான பொருளும் இறையே எனும் உண்மையை மீள உரைக்க மீண்டும் மொழிகிறார்
46
 

சிவசக்தி 92OO5
கேளப்பா சீடனே கழுதையொன்றை
கீழான பன்றியினை தேளைக்கண்டு
தாளைப்பாாத்து இருகரமும் சிரம்) மேற் கூப்பி
சங்கர சங்கர என்று பணிதல் வேண்டும்.
கூழத்தை. மலத்தினையும் வணங்கல் வேண்டும்."
மலத்தினையும் இறையென்று உரைக்கும் ஆசிரியன் மாண்பு கண்டு, சிலையாகிப் போன சீடன்.
ஞானகுருவின் நல்நெஞ்சின் நயத்தினை, மோனத்தால் வணங்கி முறுவலித்து நிற்கின்றான். மகாகவி நெஞ்சமோ மயங்குகிறது மீண்டும் பதிலில் எண்ணம் பதியாத பரிதவிப்பு அவர் பார்வையில் குப்பையும், மலமுங்கூடக் கடவுளே! கூழமும், மலமும் கீழ்மையின் குறியீடுகள் அவற்றுள்ளும் இறைவன் இருக்கிறான் என்றதில், பாதி உண்மையே பதிந்தது எல்லாம் இறையென்றது உண்மையெனின், தாழ்ந்தவையைத் தனித்து வரிசைப்படுத்தியது தவறன்றோ கூழமும், பொன்னுமென்றோ, அன்னமும் மலமுமென்றோ உரைக்க முடியாமல் போனதன் உண்மையென்ன? மகாகவியின் மனத்துள் குழப்பம் தாழ்வு,உயர்வு எனும் தரப்படுத்தல், தம்மையறியாமல் தம் மனதுள் பதிந்த
உண்மை புரிகிறது
எல்லாம் இறையெனின், வேறுபடுத்தி உரைத்தல் வீணன்றோ மாணவன் மனத்தை,
மயக்கும் இப்பதில் பாதித்தால், எங்கும் இறையைக் காணும் தகுதி, அவனுள் தங்காது என உணர்ந்து தயங்கித் தெளிகின்றார். மீண்டும் ஒரு தரம் மேன்மையாய்ப் பதிலுரைக்க, வேண்டித் தெளிவாய் விளம்புகிறார்
கேளப்பா சீடனே கழுதையொன்றை
கீழான பன்றியினை தேளைக்கண்டு
47

Page 31
சிவசக்தி 2OO 5
தாளைப்பார்த்து இருகரமும் சிரம்) மேற் கூப்பி
சங்கர சங்கர என்று பணிதல் வேண்டும் கூழத்தை. மலத்தினையும் வணங்கல் வேண்டும். கூடிநிற்கும் பொருளனைத்தின் கூட்டம் தெய்வம்
அறிவே வடிவான ஆசிரியனை, மாணவனின் கண்கள் மயங்கி நோக்குகின்றன. ஒரு கேள்விக்கு மூன்று பதில்கள் ஒருமைப்படாத பதிலால் உள்ளம் குழம்புகிறது. வாக்கின் நோக்கமறியாது வாடுகிறான் அவன். மாணவனின் மயக்கம் உணர்கிறார் மகாகவி தன் வார்த்தையின் மயக்கம், மாணவனின் அறிவின் மயக்கமாகும் ஆபத்துணர்ந்து, தெளிவுபட மீண்டும் பதிலுரைக்க சிந்தை கொள்கிறார். நீளத் தானுரைத்த நெடும்பதிலில், தன்னுடைய, ஆழம் குறைந்த அவலம் தெரிகிறது. மாணவனின் மனதை மயக்காது ஒரு வரியில், வானொத்த கடவுளைவணங்கும் இடம் காட்ட தேனொத்த கவியில் தெளிவாய்ப் பதிலமைத்து, மீள அதையுரைத்து, மேன்மையுறச் செய்கின்றார்.
கேளப்பா சீடனே கழுதை யொன்றை
கீழான பன்றியினை தேளைக்கண்டு
தாளைப்பார்த்து இருகரமும் சிரம்) மேற் கூப்பி
சங்கர சங்கர என்று பணிதல் வேண்டும்.
கூழத்தை, மலத்தினையும் வணங்கல் வேண்டும்.
கூடிநிற்கும் பொருளனைத்தின் கூட்டம் தெய்வம்
மீளத்தான் அதைத் தெளிவாய் விரித்துச் சொல்வேன்
முன் மூன்றுவரிகளில் சொன்ன பதில்களை விரிந்துரைக்கப்போவதாய் நான்காம் வரியின் அரையடி நவில்கிறது பதில் பல பாடல்களாய் விரியுமோ நம் மனதுள் ஐயம். என்ன ஆச்சரியம்
பாதியடியில் பதில் முடிந்து விடுகிறது. மூன்றடிக் கருத்தை முன்மொழியப் பாதியடியில் பதில்
48
 

சிவசக்தி 2OO5
சுருக்கியன்றோ சொல்லியிருக்கின்றார். விரித்துச் சொல்வதாய் விளம்பியது சரியா? ஆராய நம்முடைய அகமெல்லாம் மகிழ்ச்சி வினா நீளலாம்.
பதில் நீளலாமா? சிந்தை தெளிந்தால், செறிந்து பதில் பிறக்கும் சொல் விரியப் பொருள் சுருங்கிற்று. பொருள் விரியச் சொல் சுருங்கிற்று. சுருங்கிய சொல்லுள் விரிந்த பொருளையே, விரித்துச் சொல்வேனென விளம்பினார் போலும் வீறுடைய கவிவேந்தர் விரிந்துரைத்த பொருளென்ன? அப்பொருளில் அவர் நமக்கு அளித்த தெளிவென்ன? அண்ணார்ந்து பார்த்து ஆண்டவனைத் தொழுவோர்க்கு, மண்பார்த்து இறை வணங்கும் மாண்புரைக்க முயல்கின்றார். விண்மட்டும் கடவுளென விளம்பும் அறியார்க்கு மண்ணும் கடவுளெனும் மகிமையுரைக்கின்றார். தாள் பணிந்து நிற்பாரைத் தாம் உதறி மேலுள்ளோர். தாள் பணிந்து நிற்பதுவே தரணியதன் இயல்பானால், எல்லோர்க்கும் மேலே இருக்கின்ற இறையதுவும், மேன் நோக்குதலையன்றி, மேதினியை நோக்கிடுமோ? மக்கள் கவியின் மனத்துள் பெருங்கேள்வி
கீழுள்ளோர் தமை அன்பால் செழுமையுடன் நாம் நோக்க, மேலுள்ள இறைவிழியும், மேன்மையுற நமையெல்லாம், தான் நொக்கி அருள் செய்யும். தரணியது மேன்மையுறும். உண்மையுணர உவக்கிறது கவிநெஞ்சம். இம்மேன்மை நிகழ்தற்கு இறைதன்னை உலகெல்லாம், ஒன்றாகக் காணும் உயர்வே வழியாகும். சிந்தை தெளிய தெளிவாய்ப் பதில் பிறக்க, வந்து விழுகிறது வளமிக்க வார்த்தைகளும். ஓங்கும் கருத்தை உயர்வு சிதையாமல், பாங்காய் உரைத்து பாவை முடிக்கின்றார். பதில் தெளித பரவசத்தில் பணிகின்றான் அச்சீடன். அவன் மூலம் அறிவுணர்ந்து ஆனந்தம் கொள்கின்றோம்.
49

Page 32
சிவசக்தி 2ᏅᏅᏋ
கேளப்பா சீடனே கழுதையொன்றை
கீழான பன்றியினை தேளைக்கண்டு தாளைப் பார்த்து இருகரமும் சிரம்) மேற் கூப்பி சங்கர சங்கர என்று பணிதல் வேண்டும் கூழத்தை, மலத்தினையும் வணங்கல் வேண்டும்.
கூடிநிற்கும் பொருளனைத்தின் கூட்டம் தெய்வம் மீளத்தான் அதைத் தெளிவாய் விரித்துச் சொல்வேன்
விண்மட்டும் தெய்வமன்று மண்ணும் அஃதே
அ, ரோசன் لموقعے دO لۃ دینی تع గిల్ల రోg ,*6- تواجد فة حجيص المجتمع exఉగQం \pగింు LAలైఫ్ ఉvg 2H
50
 

சிவசக்தி
51
2OO 5

Page 33
சிவசக்தி 2005 இந்து தர்மத்தில் சதுள் வர்ணங்கள்
- ந. கார்த்திகேயன், விரிவுரையாளர், இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
"வர்ணம்" என்ற சொல்லுக்கு நிறம், சுபாவம் பெயர், தரம் எனப் பல பொருள்கள் உண்டு. உலகிலேயே மிகவும் பழைமை வாய்ந்த இந்து தர்ம நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள "வர்ணங்கள்" என்ற பதத்திற்கும், இன்று வழக்கத்திலுள்ள "சாதிகள்" அல்லது "Caste' என்ற பதத்திற்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஆனால் சிலர், தமது அறியாமை காரணமாக, சாதி ஏற்றத்தாழ்வுகள் பற்றி இந்து தர்ம நூல்களிற்தான் சொல்லப்பட்டுள்ளது என்ற பொய்க் கருத்தை முன்வைத்துப் பேசி, எழுதி வருவதையும் நாம் காணுகின்றோம். உண்மையில் எமது வேதங்களில் சாதிப் பிரிவுகளைப் பற்றியோ, மனிதர்களை உயர்ந்த-தாழ்ந்த சாதிகளாகப் பிரித்து, ஒரு பிரிவினரை ஒதுக்க வேண்டும் என்றோ எங்கும் கூறப்படவில்லை.
மாறாக, அனைவரும் இறைவனின் குழந்தைகள், அனைவரும் மிக உயர்ந்த தெய்வீக நிலையை அடையும் ஆற்றலை தம்முள் கொண் டுள்ளனர். அனைவரும் அதிசிறந்த சுபாவம் (பண்பு, குணம்), அதிசிறந்த திறன் (ஆற்றல்) உடையவர்களாக உயர்வதே வாழ்க்கையின் இலட்சியம் என்று எமது வேதங்கள் கூறுகின்றன. இந்த இலட்சியத்தை அடைய பல்வேறு பாதைகளையும், வழிமுறைகளையும் எமது வேதங்கள் தெளிவாகக் கூறுகின்றன. உயர்ந்த இலட்சியத்தை அடைவது ஒவ்வொரு மனிதரும் மேற்கொள்ளும் முயற்சியில், ஆற்றும் செயல்களில் தங்கி யுள்ளது.
ஆனால் இன்னுமொரு உண்மையையும் நாம் மறந்துவிடலாகாது. உலகிலுள்ள மனிதர்கள் அனைவரும் ஒரே மனப்பான்மை அல்லது ஒரே சுபாவம் உடையவர்கள் என்றோ, சம அளவு செயற்திறன் உடைய வர்கள் என்றோ கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியுமா? ஏன் ஒரு நாட்டில், ஒரு சமூகத்தில் அல்லது மிகச்சிறிய அலகான ஒரு குடும்பத்தில் உள்ள
52

சிவசக்தி 2OO 5
மக்கள் அனைவரும் ஒரே மனப்பான்மை உடையவர்கள் என்றோ, ஒரே அளவு செயற்திறன் உடையவர்கள் என்றோ நாம் உறுதிபடக் கூறி விடத்தான் முடியமா? நிச்சயமாக முடியாது' என்பதில் இருவேறு கருத்துக் கள் இருக்க முடியாது. இதுவே உலக இயல்பு. இந்த வேறுபாடுகளுக்குப் பிரதான காரணம் ஒவ்வொரு மனிதரும் மேற்கொள்ளும் முயற்சியும் செய்யும் செயல்களும் ஆகும்.
சதுர் வர்ணங்களின் அடிப்படை
சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்ட்டம் குனகர்ம விபாகச: தஸ்ய கர்தாரமU மாம் வித்த்யகர்த்தாரமவியயம் (4:15)
அதாவது, மனிதர்களின் குணம் மற்றும் செயல்களின் வேறுபாட்டி ற்கு ஏற்ப அவர்களை நான்கு வர்ணங்களாக நான் வகுத்தேன்' என்று வர்ணங்களின் தோற்றம் பற்றி பகவான் பூரீ கிருஷ்ணர் கீதையில் கூறி யுள்ளார்.
ஒவ்வொரு மனிதனுக்கும் இயற்கையாகவே குறிப்பிட்ட ஒருசில) செயற்திறன்(கள்), ஏனைய திறன்களைவிட மேலோங்கி இருக்கும். ஒரு மனிதன் உடலால் கடுமையாக உழைக்கும் ஆற்றல் உடையவனாகவும், இன்னும் ஒருவன் பொருட்களை உற்பத்தி செய்யும், விநியோகம் செய்யும் திறனுடையவனாகவும், மற்றும் ஒருவன் சமுதாயத்தை வழி நடத்தும், பாதுகாக்கும் திறன் பொருந்தியவனாகவும், பிறிதொருவன் சிந்தனை ஆற்றல், கற்பிக்கும் ஆற்றல் மிக்கவன் ஆகவும் இருப்பதை நாம் காணலாம். இது விதிவிலக்கின்றி அனைத்து நாடுகளிலும் காணப்படும் யதார்த்தம் ஆகும்.
அதுபோலவே உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனிலும் இயற்கை யாகவே ஒரு குணம் அல்லது மனோபாவம் மேலோங்கி இருக்கும். ஒரு மனிதன் அமைதி, சுயகட்டுப்பாடு, கற்கும் ஆர்வம், சிந்தனை ஆற்றல், விவேகம் முதலியன நிறைந்த சத்துவ குணம் மிக்கவனாகவும், இன்னும் ஒருவன் சுறுசுறுப்பு வீரம், பொருள் தேடும் ஆர்வம் முதலியன நிறைந்த இராஜச குணம் மிக்கவனாகவும், பிறிதொருவன் சுயமுயற்சி, சிந்திக்கும் ஆற்றல் முதலியன குறைந்த தாமச குணம் மிக்கவனாகவும் இருப்பதை நாம் காணலாம். இதுவும் விதிவிலக்கின்றி அனைத்து நாடுகளிலும் காணப்படும் யதார்த்தம் ஆகும்.

Page 34
சிவசக்தி 2OO5
மேற்கூறிய யதார்த்தங்களின், அதாவது மனிதர்களது செயற்திறத்தின தும் குணத்தினதும் அடிப்படையில் தான் சூத்திரர், வைசியர், சத்திரியர், பிராமணர் என்ற நான்கு வர்ணங்களும் வகுக்கப்பட்டுள்ளன. இங்கு ஒரு வர்ணம் உயர்ந்தது, இன்னொன்று தாழ்ந்தது என்ற குறுகிய கருத்துக்கு இடமேயில்லை.
பிராமணர் (சிந்தனையாளர், ஆலோசகர், ஆசிரியர், குரு)
பிராமண வாணத்தினர் சாந்தம், சுயகட்டுப்பாடு, தூய்மை, நம்பிக்கை, அன்பு கருணை, பொறுமை, மன ஒழுக்கம், உடல் ஒழுக்கம், புரிந்து கொள்ளும் பக்குவம், ஞாபக சக்தி விவேகம் முதலிய சுபாவங்களைக் கொண்டவர்கள் மக்களின் அறியாமையை, மாசுக்களை நீக்கும் கல்வியை ஊட்டி மக்களை மேன்மையுறச் செய்யும் வல்லமை உடையவர்கள் சிந்தித்து ஆராய்ந்து காலத்துக்கு அவசியமான புதிய கருத்துக்களை உருவாக்கும் வல்லமை உடையவர்கள் பொருட் செல்வங்களை தேடிக் குவிப்பதில் நாட்டம் அற்றவர்கள். இவர்களிடம் சத்துவ குணம் மேலோங் கிக் காணப்படும் ஒரளவு இராஜச குணமும், சிறிதளவு தாமச குணமும் இருக்கும்.
வர்ணத்திற்குரிய தர்மத்தின் வழி நின்று பொது மக்கள் தமது வாழ்க்கையின் குறிக்கோளை உணர்ந்து கொள்வதற்கும், சவால்களைச் சமாளித்து வாழ்க்கையைச் சிறப்பாக அமைத்துக் கொள்வதற்கும் தேவையான வழிகாட்டலை வழங்குவது மக்களைப் பண்புடையவர்கள் ஆக்கும் நீதி, தர்ம, ஆன்மிக போதனைகளை வழங்குவது சமுதாயத்தின் உயர்ச்சிக்குத் தேவையான புதிய வழிமுறைகளைச் சிந்திப்பது போன்றவை பிராமணர்களின் பிரதான கடமைகள் ஆகும்.
சத்திரியர் (ஆட்சியாளர், நீதியை அமுல்ப்படுத்துபவர்கள், நிர்வாகி)
சத்திரிய வர்ணத்தினர் சுறுசுறுப்பு, தலைமைத்துவம், தர்மத்தைப் பேணும் அவா, அதர்மத்தை அகற்றும் அவா, தைரியம், வீரம், மன ஒழுக்கம் முதலிய சுபாவங்களைக் கொண்டவர்கள் சமூகத்தை வழிநடத் தும் திறன், நிர்வாகத் திறன் மிக்கவர்கள் எதிரிகளுடன் போரிடும் ஆற்றல் உடையவர்கள் இராஜ தந்திரங்களை நன்கு அறிந்தவர்கள். இவர்களிடம் இராஜச குணம் மேலோங்கிக் காணப்படும் ஓரளவு சத்துவ குணமும், சிறிதளவு தாமச குணமும் இருக்கும்.
54
 

சிவசக்தி 2005 வர்ணத்திற்குரிய தர்மத்தின் வழி நின்று, சுரண்டல்கள் அநீதிகள், ஆதிக்கங்களைக் களைந்து நாட்டைச் சிறப்பாக நிர்வகித்தல் பொருட் களின் சீரான விநியோகங்களை உறுதிப்படுத்தல் செல்வத்தைப் பகிர்ந்து அளித்தல், பிணக்குகளைத் தீர்த்தல், சமூகத்தின் பாதுகாப்பு போன்றவை சத்திரியர்களின் பிரதான கடமைகள் ஆகும்.
வைசியர் (விவசாயி, உற்பத்தியாளர், வணிகர்)
வைசிய வர்ணத்தினர் செல்வங்களை ஈட்டும் ஆர்வம், சுறுசுறுப்பு முதலிய சுபாவங்களை உடையவர்கள் தமக்காகவும் சமூகத்தின் வளத்திற்காகவும் பொருட்களை உற்பத்தி செய்யும் ஆற்றலும், அவற்றை மக்களுக்கு பரந்தளவில் விநியோகிக்கும் ஆற்றலும் கொண்டவர்கள் உற்பத்தி, வியாபார நுட்பங்களை நன்கு அறிந்தவர்கள். இவர்களிடம் இராஜச குணம் மேலோங்கிக் காணப்படும் ஓரளவு தாமச குணமும், சிறிதளவு சத்துவ குணமும் இருக்கும்.
வர்ணத்திற்குரிய தர்மத்தின் வழி நின்று, மனித வாழ்விற்கு அத்தியாவசியமான உணவு உடை முதலியவற்றை உற்பத்தி செய்தல், அவற்றை விநியோகித்தல் போன்றவை வைசியர்களின் பிரதான கடமை கள் ஆகும்.
சூத்திரர் (தொழிலாளர், உதவியாளர், கலைஞர்கள்)
சூத்திர வர்ணத்தினர் கடின உடல் உழைப்பை நல்க வல்லவர்கள் சுயமாகச் சிந்திக்கும் ஆற்றல் குறைந்தவர்கள், பிறரின் நெறிப்படுத்தலின் படி செயற்படும் மனப்பான்மை உடையவர்கள் இவர்கள் சோம்பல், ஆர்வமின்மை, மந்தபுத்தி முதலிய சுபாவங்களை உடையவர்கள். இவர் களிடம் தாமச குணம் மேலோங்கிக் காணப்படும் ஓரளவு இராஜச குண மும், சிறிதளவு சத்துவ குணமும் இருக்கும்.
வர்ணத்திற்குரிய தர்மத்தின் வழி நின்று அனைத்துச் செயற்பாடு களுக்கும் தேவையான உதவிகளைச் செய்தல் சூத்திரரின் பிரதான கடமை
.LD 95) بطوكي
55

Page 35
சிவசக்தி 2OO5
சண்டாளர்கள்
இந்த நான்கு வர்ணங்களிலும் அடங்காதவர்களும் உண்டு. அந்தந்த வர்ணங்களுக்குரிய தர்மங்களுக்கு ஏற்ப செயற்படாதவர்கள் குறுக்கு வழிகளில், அதர்ம வழிகளில் தமது கடமைகளை நிறைவேற்ற, இலட்சி யத்தை அடைய முனைபவர்களே. சண்டாளர்கள் என அழைக்கப் படுகின்றனர்.
சாதிகளின் அடிப்படை
பல நூற்றாண்டுகளின் முன்னர், 'சாதி' என்ற சொல் தொழில் அடிப்படையில், மனிதர்களால் வகுக்கப்பட்ட சமுதாயப் பிரிவுகளைக் குறித்தது இன்று அச்சொல் வெறுமனே குடிப்பிறப்பின் அடிப்படையில், குறித்ததொரு சமுதாயத்தின் பரம்பரையைக் குறிக்கிறது. இன்று வழக்கத் திலுள்ள பிராமணர் சாதி' என்பது எமது தர்ம நூல்களில் குறிப்பிடப்படும் பிராமணர் வர்ணம்' என்பதைக் குறிக்காது.
எங்கும், எந்தவொரு இடத்திலும், சமூக உயர்ச்சிக்கென ஏற்படுத்தப் பட்ட ஒரு வசதியை தவறாகப் பயன்படுத்த முனைபவர்கள், சண்டாளர் கள், இருக்கத்தான் செய்கிறார்கள். இதனை நாம் எல்லா இடங்களிலும், எல்லா நாடுகளிலும், எல்லா மதங்களிலும் காணலாம். இத்தகையவர்கள் தான் இந்தச் சாதி அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகள் உருவாகக் காரணமாக இருந்துள்ளனர்.
அதன் பின்னர் மேலைநாட்டவர். ஒரு நாட்டை ஆக்கிரமித்து - அதைத் தக்க வைத்துக் கொள்ளவும், அங்கு தமது மதங்களைத் திணிக்க வும், அந்த நாட்டைச் சுரண்டவும் உதவுக் கூடிய பிரித்தாளும் தந்திரமாக - இந்த சாதி அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகளை மக்களிடம் திணித்த னர். அறியாமை காரணமாக மக்களும் இதற்கு இரையாகிவிட்டனர். சில மதத்தவர்கள் தம்மத்தியில் சாதி வேறுபாடுகள் இல்லை எனக் கூறிவந்தா லும், உண்மையில் இன்று அனைத்து மதங்களைச் சார்ந்த மக்களிடை யேயும் இந்த ஏற்றத்தாழ்வுகள், சாதி வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும் இவை அதிகமாகவே உள்ளன. சாதிகள் என்ற பெயரில் இடம்பெறும் கொடுமை கள் அனைத்தும் அகற்றப்பட வேண்டியவையே.
56
 

சிவசக்தி 2OO5
வர்ணத்தின் அடிப்படையில் சாதிப் பாகுபாடுகள் இல்லை
குணம், கள்மம் ஆகிய இரண்டின் அடிப்படையில் பகவானால் வகுக்கப்பட்ட வர்ணத்திற்கும். மேலாதிக்க எண்ணமுடைய மக்களால் குடிப்பிறப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சாதிகளுக்கும் இடை யில் உள்ள மாபெரும் வேறுபாட்டை தற்போது நாம் உணர்ந்திருப்போம். குடிப்பிறப்பின் அடிப்படையில் வர்ணங்களை நோக்குவதுதான் அனைத் துக் குழப்பங்களுக்கும் காரணமாக இருந்தது.
எனவே, குடிப்பிறப்பால் மட்டும் ஒருவர் குறித்ததொரு வர்ணத்தைச் சேர்ந்தவராக முடியாது. ஒருவரது இயல்பான சுபாவம், அவரது செயற் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே அவரது வர்ணம் நிர்ணயிக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, ஒருவர் அயராத முயற்சியின் மூலம் தனது செயற்திறனையும், ஞான வலிமை மற்றும் மனவலிமை மூலம் தனது சுபாவத்தையும் மாற்றியமைக்க முடியும். எனவே ஒருவர் பிறப்பு முதல் இறப்பு வரை குறித்ததொரு வர்ணத்தைச் சேர்ந்தவராகத் தான் இருக்க வேண்டும் என்ற நியதியுமில்லை. எனவே ஒருவர் குறித்ததொரு வர்ணத்துக்குள் அடங்குவதற்கு அவரே முழுக்காரணம் என்பது தெளிவாகப் புலப்படுகிறது.
மேலும், ஒரு சூத்திரரின் வைசியரின் / சத்திரியரின் பிள்ளை, இளைஞர் ஆகும் போது சிந்தனை ஆற்றல், கற்கும் ஆர்வம், மனித மேம்பாட்டிற்கு அவசியமான அனைத்தையும் கற்பிக்கும் வல்லமை போன்றவை நிறைந்தவராக இருப்பின் அவர் பிராமணர் எனப்படுவார். அவ்வாறே ஒரு பிராமணரின் / வைசியரின் / சத்திரியரின் பிள்ளை, இளைஞராகும் போது சிந்தித்துச் செயலாற்ற விருப்பமின்மை, சோம்பல், வாழ்வதற்காக கொடுக்கும் வேலைகளை பிறர் வழிநடத்தல்களுக்கு eg).4 60) || DULU செய்து உழைக்கும் மனப்பான்மை முதலிய சுபாவங்களை பெரிதும் கொண்டவராக இருந்தால் அவர் சூத்திரர் எனப்படுவார். இதிலிருந்து குடிப்பிறப்புடனோ அல்லது சாதியுடனோ வர்ணம் தொடர்பற்றது என்பது தெளிவாகப் புலப்படுகிறது.
இந்து தர்மத்தில் சாதிகளும் இல்லை, ஏற்றத் தாழ்வுகளும் இல்லை
உலகில் உள்ள எந்தவொரு சமுதாயமோ, அமைப்போ அல்லது நாடோ வெற்றிகரமாக இயங்குவதற்கு அந்தந்த அலகுகளில் இயல்
57

Page 36
சிவசக்தி 2OO 5 பாகவே காணப்படும் இந்த நான்கு வகையான மனிதர்களின் ஒத்திசை வான செயற்பாடுகள் அத்தியாவசியமானது என்றுதான் எமது சமய நூல்கள் கூறுகின்றன. ஒரு வர்ணம் உயர்ந்தது. இன்னொன்று தாழ்ந்தது என்று எங்கும் கூறப்படவில்லை. இந்த நான்கு வர்ணங்களில் ஏதாவது ஒன்றிலேனும் குறைகள் இருப்பின், ஏதாவது ஒன்றுக்காவது சமமுக்கியத்து வம் கொடுக்காது புறக்கணிக்கப்பட்டிருப்பின் அல்லது ஏதாவது ஒன்று இல்லாது போகினும் அந்தச் சமூகமோ அமைப்போ அல்லது நாடோ நிச்சயமாக வளம்பெற முடியாது சிறப்பாக இயங்கவும் முடியாது.
மக்கள் மத்தியில் சுபாவங்களின் அடிப்படையில், செயற்திறன் அடிப்படையில் வேறுபாடுகள் இருப்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. எனினும், அதன் அடிப்படையில் ஒருவர் உயர்ந்தவர், இன்னொருவர் தாழ்ந்தவர் என்ற கருத்து இந்து சமயத்தில் எங்கும் கூறப்படவில்லை. அனைவரும் முக்கியமானவர்கள்ே அனைவரும் சம அந்தஸ்து உடையவர்கள்ே இறைவன் முன்னால் அனைவரும் சமமான வர்கள்ே எமது புராணங்களும், இதிகாசங்களும் இதையே பறைசாற்றி நிற்கின்றன. எமது புராணங்களில் கூறப்பட்டுள்ள கண்ணப்ப நாயனர் கதையும், நமிநந்தியடிகள் கதையும், குகன்-இராமன் நட்பும் இதையே எமக்கு எடுத்துரைக்கின்றன.
வர்ணங்களின் முக்கியத்துவம்
உலகம், நாடு, சமூகம் அல்லது நிறுவனங்கள் வெற்றிகரமாக இயங்கு வது, அந்தந்த அலகு-களிலுள்ள மக்கள், தத்தமக்குரிய வேலைகளை ஈடுபாட்டுடனும் ஆர்வத்துடனும் செய்வதில் தங்கியுள்ளது. இதிலும் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. இயல்பாகவே இசைத் துறையில் ஈடுபாடுடைய சுபாவம் கொண்ட ஒருவரை இயந்திரப் பொறியியல் பிரிவில் வேலை செய்ய வைத்தால், அவர் நாளடைவில் சலிப்புடன் வேலை செய்வதைக் காணலாம். ஆனால் அவரை இசைத்துறை நிறுவனத்தில் பணிசெய்ய வைத்தால், அவர் கடைசிவரை ஆள்வத்துடன் வேலை செய்வதையும், வேலையைச் சிறப்பாகச் செய்வதையும் காண லாம். எனவே ஒரு மனிதன் ஆர்வத்துடனும், சிறப்பாகவும் ஒரு பணியைச் செய்ய அவனைத் தூண்டுவதில் பிரதான பங்கு வகிப்பது, அவனது அப்பணி சார்ந்த சுபாவம் ஆகும். அது போலவே ஒரு மனிதனின் செயற்திறனும் முக்கிய பங்கு வகிக்கிறது.
58
 

சிவசக்தி 2005
இதன் மூலம் ஒருநாடு, ஒரு சமூகம் அல்லது ஒரு அமைப்பு சிறப்பாக இயங்குவதற்கும், அத்துடன் ஒரு தனிமனிதன் தன்னைச் சுயமதிப்பீடு செய்து தன்னை உயர்த்திக் கொள்வதற்கும் இந்த வர்ணங்கள் பற்றிய அறிவு தெளிவு அவசியம் என்பது புலப்படுகிறது. இதனால் வர்ணங்களின் முக்கியத்துவம் உணரப்படுகிறது.
இந்த நவராத்திரி தினங்களில் அநாதியான, என்றும் நிலையான எமது இந்து சமயத்தின் உயர்ந்த தர்மங்களை திரிபற விளங்கிக் கொள்வதன் மூலம், எமது சிந்தனையாற்றல், வளங்கள், செயற்திறன் ஆகியவற்றைப் பெருக்கியும், தர்மம் காப்பவர்களாக, ஆற்றல் மிக்கவர் களாக சவால்களை வெல்பவர்களாக திகழ்வோம் எனப் பிரார்த்திப்போம்.
நன்றி மறிப்பகு நன்றன்மூ நசன்?றலது
நிதர்ஷன் ਹੈ0
நணறு 1H بولانا (ها
59

Page 37
சிவசக்தி 2005 சக்தி வழிபாட்டில் சப்த மாதர்கள்
மு. மனோகரன் (பீ ஏ. கல்வியயலில் டிப்ளோமா) ஆசிரியர் கல்வி வள ஆலோசகள் இந்து சமயம், இந்து நாகரிகம்)
மேல் மாகாணம் களுத்துறை மாவட்டம்
சண் மதங்களுள் சாக்தமும் ஒன்றாகும். சக்தியை முழுமுதற் கடவு ளாகக் கொண்டது சாக்தமாகும். இவ் சாக்த வழிபாட்டை தாய்த் தெய்வ வழிபாடு, பெண் தெய்வ வழிபாடு என்ற பெயர்களாலும் அழைக்கும் வழக்கம் உண்டு பன்னெடுங் காலமாக இவ்வழிபாடு இந்து மக்கள் வாழ்வடன் இணைந்து வந்துள்ளதை வரலாற்று ஆதாரங்கள் அறிய முடியும். இந்த வழிபாட்டில் சக்தி முழுமுதற் கடவுளாகக் கொள்ளப் படினும் அவள் பல நாமரூபங்களில் வழிபடப்பட்டுள்ளாற் இதற்கமைய சப்த மாதர்கள் என்ற பெண்களும் இந்த சக்தி வழிபாட்டில் அடக்கப்பட்டு விட்டார்கள். இச் சப்த கன்னிகள், சப்த மாந்திரிகள் என்ற பெயர்களும் அழைக்கப்படுகிறார்கள். இங்கு இச் சப்த மாதர்கள் யாவர் என்பது பற்றி யும், அவர்கள் தோற்றம் பொலிவு பற்றியும், எவ்எவ் காலங்களில் காணப் பட்டனர் என்பது பற்றியும், தோற்றம் பற்றியும் ஆராய்வதே இக் கட்டுரை யின் நோக்கமாகும்.
இந்துத் தெய்வங்களின் சக்திகள் என்ற வகையில் பிராமிசரஸ்வதி, மகேஸ்வரி (ருத்திரி), கெளமாரி (கார்திகாயினி) வைஷ்ணவி (லட்சுமி, வராகி, இருதிபாணி (மகேந்திரி), சாமுண்டா (சாமுண்டி) ஆகிய எழுவருமே சப்த மாதர்களாவர். இவர்கள் எழுவரும் முறையே பிரம்மா, சிவன், முரு கன். விஸ்ணு (வராகமூர்த்தி விஸ்ணுவின் அவதாரங்களுள் ஒன்று இந்திரன், இயமன் என்போரின்சக்திகளாவர் என்பதும் நோக்குதற்குரியது.
இச் சப்தமாதர்களின் தோற்றம் பற்றி புராணங்கள் மாறுபட்ட கருதுக் களை கூறுகின்றன. வராக புராணம்.மார்கண்டேய புராணம்,தேவி மகாத் மியம் என்பன எழு பெண்கள் என்றும் ஸ்கந்தபுராணம், தேவி புராணம், பிரம்ம வைத்த புராணம், தேவி பாகவதம், லிங்கபுராணம் போன்ற எட்டு புராணங்களும் குறிக்கப்பட்டுள்ளன.எனினும் வரலாற்றுக் காலங்களின்
60

சிவசக்தி 2OO 5
அடிப்படையில் தோன்றிய சிற்பங்களில் ஏழு மாந்திரிகர்களே குறிப்பிடப் பட்டுள்ளமையால் அவை தான் இந்து மக்கள் வழிபாட்டில் இடம்பெற்று விட்டன. இந்த சப்த மாதர்களின் தோற்றப் பொலிவு அவர்கள் ஆயுதங் கள், ஆபரணங்கள், வாகனம், கொடி என்பவை பற்றி அக்னி புராணம் பூர்ணகாரணாகமம், மச்ச புராணம், ரூப மண்டலம், விஸ்மதர்ம சாஸ்திரம், சிற்பாத்தினம், விஸ்ணுதர்மோத்திர புராணம் என்பன தெளிவாகக் கூறுகின்றன. இவற்றின் அடிப்டையில் சப்த மாதர்கள் பற்றி சுருக்கமாக நோக்குதல் பயனுடையதாகும்.
பிராமி ;-
இவள் மஞ்சள் நிறம் கொண்டவள். பிரம்மனின் சக்தியாவாள். நான்கு முகங்களையும் ஆறு கரங்களையும் தன்னகத்தே கொண்டவள் வலது பக்க மூன்று கரங்களில் ஒன்று வரதமுத்திரை ஏனைய இரு கரங்களிலும் அட்சமாலையும் சிருவா என்பனவும் இடது கரங்களில் ஒன்று அபயகர மாகவும் மற்றையன புத்தகம்,கமண்டலம் கொண்டனவாகவும் காணப் படும். செந்தாமரை மீது அமர்ந்து, அன்னத்தை வாகனமாகவும் கொடியாக வும் கொண்டு, மஞ்சள் ஆடையுடன் தோற்றமளிப்பாள் என்று ரூபமண்ட லம் கூறுகின்றது.
மகேசுவரி;-
இவள் பற்றி விஷ்ணு தர்மேரத்திரா புராணம் கூறுகின்றது. சிவனின் சக்தியான இவள் ஐந்துமுகங்களையும்.ஒவ்வொரு முகங்களிலும் மூன்று கண்களையும் கொண்டிருப்பாள் என்றும் இருநூல் கூறுகின்றது. இதே ரோம் பூரீ தத்துவநிதி என்ற நூல் இவளுக்குப் பத்துக்கரங்கள் உண்டெனக் கூறுகின்றது. இவளது தலையில் ஜடா மகுடம் காணப்படும் அதில் பிறைச் சந்திரன் காணப்படும் எருதினை வாகனமாகவும் கொடியாகவும் கொண் டுள்ளாகள் என்பதை இந்நூல்கள் கூறுகின்றன.
GlaљGITI DITT:-
முருகனின் சக்தியாயில் ஆறு முகங்களையும் பன்னிரு கரங்களை யும் கொண்டுள்ளாள் என்று பூரீதத்துவநிதி என்ற நூல் கூறுகின்றது. பன்னிரு கரங்களில் இருகரங்கள் வரத அபயகரங்களுடனும் மற்றைய கரங்கள் வேல், கொடி தண்டம், பாத்திரம், அம்பு, வில், மணி, தாமரை, சேவல், பரசு என்பவற்றுடன் காணப்படும். இவள் மயிலை வாகனமாகவும் கொடியாகவும் கொண்டுள்ளாள்.
61

Page 38
சிவசக்தி 2OO 5 வைஷ்ணவி;-
நீலநிறம் கொண்ட இவள் விஸ்ணுவின் சக்தியாவாள். அழகிய கண்களையும், முகத்தையும்.மார்பழகையும் கொண்டவள்.
மஞ்சள் ஆடையுள் காணப்படுவாள். ஆறு கரங்கள் கொண்டவள். வலது கரங்களுல் ஒன்று வரதகரமாகும். ஏனைய கரங்களில் கதை, தாமரை காணப்படும்.இடது சரங்களுள் ஒன்று அபய கரமாகவும் ஏனையன சங்கு கக்கரத்துடன் காணப்படுவாள் என்று ரூப மண்டலம் போன்ற நூல்கள்
தெரிவிக்கின்றன.
வராகி:-
கறுப்பு நிறம் கொண்டவள் வராக மூர்த்தியின் சக்தியாவாள். பூரீ தத்துவ ருதி என்ற நூல் இவள் பற்றி கூறுகின்றது. பன்றியின்
முகத்தை ஒத்தவள் பெரிய வற்றினையும் ஆறு கரங்களையும் கொண்டவள். வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையாகவும் மற்றையன தண்டம்,வாள் என்பவற்றடனும் காணப்படும். எருமையை வாகனமாகக் கொண்டவள். இவள் தண்டநாதவராகி சொப்பனவராகி, சுத்தவராகி என்ற மூன்ற வகைகளைக் கொண்டவள் என்பதை இருநூல் தெரிவிக்கின்றது.
இந்திராணி :-
பொன்னிறமும் ஆறு கரங்களையும் கொண்ட இவள் இருதிரனின் சக்தியாவாள். பூரீதத்துவருதியில் வலது கரங்களில் ஒன்று வரத கரமாக வும் ஏனையவற்றில் அட்சமாலை, வஜ்ரம் என்பன உண்டென்கிறது. இடது பக்க கரங்களில் ஒன்று அபய கரமாகவும் மற்றையன தாமரை, பாத்திரம் என்பனவற்றுடன் காணப்படும். இவளது கண்கள் பற்றி பூரீதத்துவருதி ஆயிரம் கண்கள் என்றும், அம்சுமத் பேதாகமம் மூன்று கண்கள் என்றும், பூர்வகாரணாகமம் இரு கண்கள் என்றும் கூறுகின்றன. இவளது தலையில் கிரீடம் காணப்படும். பல ஆபரணங்கள் அணிந்திருப்பாள் வாகனமாகவும் கொடியாகவும் யானை காணப்படும்.
சாமுண்டி
இயமனின் சக்தியாகக் காணப்படும் இவள் கறுப்பு நிறத்தையும் பயங்கரமான தோற்றத்தையும் கொண்டவள். இறந்த மனித உடலை இருக்கையாகக் கொண்டவள். பாம்புகளை உடலில் அணிந்திருப்பாள்.
62

சிவசக்தி 2OO5 ஒட்டிப்போன வயிறு, குழிவிழுந்த கண்களை உடையவள் பத்துக் கரங்களுடன் காணப்படுவாள். வலது கரங்களில் உலக்கை சக்கரம், சாமரை அங்குசம், வாளும் இடது கரங்களில் கேடயம் பாசம், வில், தண்டம், கோடரி என்பவற்றுடன் தோற்றமளிப்பாள் என்று விஸ்ணுதள் மோத்திர புராணம் கூறுகின்றது.
இவ்வாறாகத் சப்த மாதர்களிற் பலவகைப்பட்ட தோற்றப் பொலிவு களை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. இச் சப்த மாதர்கள் பல்வேறு ஆட்சிக் காலங்களில் காணப்பட்டனர். என்பதற்கு அவ்வவ் காலங்களில் தோன்றிய கோயில்களும், கோயிற் சிற்பங்களும் மற்றும் ஏனைய சான்று களும் துணையாக அமைகின்றன. குறிப்பாக தென்னிந்தியாவை விட வட பாரதத்தில் இவை காணப்பட்டதற்கான சான்றுகள் நிறைய உண டெனலாம்.
குஷாணர்களது ஆட்சிக் காலத்திலிருந்து சப்த மாதர்களது சிற்பங் களின் வளர்ச்சியினைக் காணலாம். ஆரம்பத்தில் சாதாரண பெண்கள் போன்று தனித்தனியான குறியீகள், வாகனங்கள் இன்றி நிற்கும் நிலையில் காணப்பட்டன. இக்காலத்தில் இம்மாதர்கள் குழந்தைகளுடன் காணும் நிலையும் இருந்துள்ளன.
குப்தர் ஆட்சிக் காலத்தில் இம்மாதர்கள் தனித்துவமான அம்சங் களுடன் சிற்பங்களாகப் படைக்கப் பட்டனர். இக்கால மன்னர்களது காவல் தெய்வங்களாக இவர்கள் கருதப்பட்டனர். 1 ம் குமார குப்தனின் கங்காதர சாசனம், ஸ்கந்த குப்தனின் பீகார் சாசனம் இக்காலத்தைச் சார்ந்த வாரகமிரசள் எழுதிய பிரம்ம சங்கிதை, மிருச்சடிகம், ஹேமசந்திரனின் திவ்யாசரய காவியம் என்பவற்றில் இம் மாதர்கள் பற்றிக் குறிப்பிட்டப் பட்டுள்ளன. ஒரிஸா மாநிலத்திலுள்ள பரசுராமர் கோயில், முத்தேஸ்வரர் கோயில் போன்ற கோயில் சிற்பங்களில் சப்த மாதர்கள் காணப்படுகின்றனர். வீரபத்திரர் விநாயகருடன் கூடிய சப்த மாதசிற்பங்கள் மத்திய பிரதேச ரேவாதில் கிடைக்கப் பெற்று அலகபாத் நூதன சாலையில் வைக்கப் பட்டுன.
இமத்பூர் என்ற இடத்தில் கிடைத்துள்ள வெண்கலத்திலான சப்த மாதர் வடிவம் இங்கிலாந்து நூதன சாலையில் உள்ளது. சிங்கபூர், ஜெய்பூர், கலகத்தா, ஆஷ்ரோஷ் படாசாலி போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்ட சப்த மாதர் வடிவங்களும் அவற்றிற்குரிய இலட்சணங்களுடன் காணப்படு கின்றன.
63

Page 39
சிவசக்தி 2OO 5
சப்த மாதாகளை தென்னிந்தியாவில் காணக் கூடியதாக இருக்கின்றது. தக்கணத்தை ஆட்சி செய்த முற்கால சாளுக்கியர் காலத்திலிருந்து அதா வது ஜகொனே, எல்லோரா இடங்களில் இவ் மாதர் சிற்பங்களைக் காண முடியும். பல்லவர் ஆட்சிக் காலத்தில் இவை சிறப்புப் பெற்றிருந்தது. பல்லவ மன்னன் இராசசிம்மனின் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலில் காணப்டும் மாதர்களின் சிற்பம் , திருக்கோகாணம், மலையடிப்பட்டி, குன்னத்தூர், திருக்காரைக்குடி, திருப்பரங்குன்றம் என்பன மாதத் சிற்பங்களுக்காக கருதப்படுகின்றன.
முற்பட்ட சோழர் காலத்தில் சப்த மாதர்கட்கு தனித்தனியான கோயில்கள் கட்டப்பட்டன. இக்காலத்தில் கட்டப்பட்ட கோயில்களில் செங்கல்பட்டு மாவட்ட வேறைச்சேரி என்ற இடத்திலுள்ள செல்லியம்மன் கோயில், திருச்சி மாவட்ட ஆலம் பாக்கத்திலுள்ள கோயில் என்பன குறிப்பிடத்தக்கன.
1ம் குலோத்துங்கனின் தளபதியான கருணாகரத் தொண்டைமான் கலிங்கதேசத்தை வெற்றி கொண்டமையைப் பற்றி ஐயங்கொண்டார் கலிங்கத்துப் பரணியைப் பாடினார். இதில் அவர் சப்த மாதர்களுக்கு வணக்கம் செலுத்தியதைக் காண முடிகின்றது. இவ்வாறு தென்னாட்டிலும் சப்த மாதர்கள் போற்றி வழிபடப்பட்டனர் என்பதையும் அறியக் கூடியதாகவே இருக்கின்றது.
இன்று 'சப்த மாதர் வழிபாடு தனியான ஒரு வழிபாடாக மேற் கொள்ளப்படாவிட்டாலும், சக்தி வழிபாட்டுடன் இணைக்கப்பட்டு வழி படப்பட்டு வருகின்றமை போற்றுதற்குரியதொன்றாகும்.
செயற் கரிய செய்வார் பெரியா சிதியார் சு சவீஷ் காந்த் செயற்கரிப செப்கலாதார். 2J
64

Currion Clearing ond говwАRDING (PVT) LTD.
Custom House Clearing & Forwarding, identing and Specialist in Import Matters ལ། རྗེ་《།
Office : Bronch : Z`ܠ 3/1A, Second CrOSS Street, Colll. 14 Mudalige Mawoho, Col s el: 2424006, 234837 se : 7 342098 Fox i 4 77834
96.03 e-mail: marriotA2003(CDyahoo.co
O Clegging di POOding (P
Imports & Exports Clearance (Air/sea)
Multi Plaza Complex an 93-2/10, 12 & 2nd Floor
Main Street, Colombo - 11 Tel : 0.094-11-242967, 53383934 Fax : 094 1-2331491
e-mail: sunmarkGisplanka.k.

Page 40
N RUBYHARDWARE
藻 Dealers in Hardware &
Building Materials
neer Sellers
Ic M199r Sijs
of Lanko Tor Steel
ی۔J22
| Egali: (
mmunication & Travel Departmen
| 358, Galle Road, Tel: 255354o Fax: 250553 WellcuwCffe, Colombo -06. Mobile : O777 - 32827
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிவசக்தி 2OO5
65

Page 41
சிவசக்தி 2OO5
புராணபடனம்
புராணபடனம் என்ற சொற்றொடர் புராணங்களைப் படித்தல் எனப் பொருள் தரும். கந்தபுராணம், பெரியபுராணம், திருவாதவூரடிகள் புராணம் ஆகிய புராணங்களைப் படித்தல் உரைசொல்லல் ஆகியன புராணபடனம் என்ற பெயரால் வழங்கப்படுவனவாகும். கோயில் மண்டபங்களிலும், மடங்களிலும் ஒருவர் புராணத்தைப் படிக்க மற்றொருவர் பயன் சொல்லு வார். பக்தர்கள் கூடியிருந்து அதனைக் கேட்பர். கந்த புராணம் பொது வாக மூன்று மாதம் படனம் செய்யப்படும். பெரிய புராணம் ஏறத்தாழ ஒருமாத காலத்துக்கு மேற் படனம் செய்யப்படுவதுண்டு. கந்த புராணப் படிப்பு பெரும்பாலும் அவ்வாலயத்தின் மகோற்சவ ஆரம்பத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன் தொடங்கப்பெற்று மகோற்சவ ஆரம்பத்தோடு முடிக்கப்படும்.
ஐப்பசி மாதத்திலே கந்தசட்டிவிரத நாட்களில் சூரபத்மன் வதைப் படலம் படனஞ் செய்யப்படும். அத்துடன் சேர்த்துத் தெய்வயானையம்மை திருமணப் படலத்தையும் படிக்கும் வழக்கமும் உண்டு. இக்காலத்திலே மக்கள் விரத ஒழுக்க நெறியைப் பின்பற்றுவர். திருவாதவூரடிகள் புராணம் திருவெம்பாவை நாட்களில் படிக்கப்படுவது வழக்கமாகும். புராண படனத்தைக் கோவிற் சந்நிதானங்களிலே தொடங்கு முன்னர் புத்தகபூசை இடம்பெறும் பீடத்திலே புத்தகத்தை வைத்து கள்ப்பூரதீபம் காட்டியதும் ஆலய அந்தணர் காப்புச் செய்யுளை படித்துப் புராணபடனத்தைத் தொடக்கி வைப்பர். காப்புச் செய்யுளை படிக்க ஆரம்பிக்கும் பொழுது தோடி காம்போதி, பைரவி நாட்டை இராகங்களிலே ஆரம்பிப்பது மரபு.
புராணபடனம் நடைபெறும் பொழுது பாடலைப் படிப்பவர் சந்நிதானத்தின் வலது பக்கத்தில் வடக்கு நோக்கி அமர்ந்து புராணத்தை வாசித்து அதனைப் பதச் சேதம் செய்து கொடுக்க, பொருள் கூறுபவர்
66

சிவசக்தி 2005
சந்நிதானத்திலே கிழக்கு முகமாக அமர்ந்து விரித்துரைப்பார். இவ்வாறு பொருள் விரித்துரைக்கும் முறைமை பயன் கூறுதல் எனப்படும். பாடு பவரின் குரலோசையை அடியொற்றியே பயன் கூறுபவரின் குரலோசை அமைவது வழக்கம்
புராணங்களைப் படிப்போரும் பொருள் சொல்வோரும் சில ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பர் பெரியோர். வாசிப்போர் சரீர சுத்தி செய்து அநுட்டானம் பண்ணிய பின்னர் பீடமிட்டும் புராணத்தை பீடத்திலே வைத்து அதனையும் அதன் ஆசிரியரையும் அருச்சித்து உட் கார்ந்து வாசித்தல் வேண்டும். வாசிப்பவர் சபையோர் யாவரும் கேட்கும் வகையில் தெளிவாக வாசித்தல் வேண்டும். வாசிக்கும் காலத்திற்கும் எடுத்துக் கொண்டவிடயத்தின் தன்மைக்கும் ஏற்ற இராகத்தில் வாசித்தல் வேண்டும். எச் சுருதியில் எவ்விராகத்தில் வாசிக்கப்படுகின்றதோ அச் சுருதியில் அவ்விராகத்தில் பொருள் சொல்ல வேண்டும். இலக்கணப் பிழையில்லாமலும் வெளிப்படையாகவும் பொருள் சொல்ல வேண்டும்.
புராண படனத்திற் பொருள் சொல்லும் பொழுது முதலில் பதப் பொருள், பின்னர் பொழிப்புரை, விசேடவுரை விருத்தியுரை அலங்கார வுரை. தத்துவ உரை என்ற வகையில் சொல்லி முடிப்பர். பொருள் சொல் லும் பொழுது சொல்வோரின் வித்துவ ஆற்றலுக்கு ஏற்ப அவரது இலக்கண இலக்கிய அறிவு வெளிப்பட்டு நிற்கும். அதனால் புராணம் வாசித்துப் பொருள் சொல்வோர் இலக்கண இலக்கியங்களில் வல்லவராய், நீதி நூல்களையும் சமய நூல்களையும் கற்றறிந்தவராய் நல்லொழுக்கத்திற் சிறந்தவராய் இருத்தல் வேண்டும்.
புராணபடனஞ் செய்யப்படும் பொழுது கேட்பவர்களும் சில ஒழுங்கு விதிகளைக்கடைப் பிடிக்க வேண்டும். நீராடித் தோய்த்து உலர்ந்த ஆடை அணிந்து நித்திய கருமம் முடித்துக் கொண்டு படிக்கும் நூலை வணங்கிப் பிறிது ஒன்றிலும் கருத்தைச் செலுத்தாது சிரத்தையோடு கேட்க வேண்டும். புராணம்படிக்கும் சபையிலே உயர்ந்த ஆசனத்தில் இருத்தல், காலை நீட்டிக் கொண்டிருத்தல், நித்திரை செய்தல், வீண் வார்த்தை, பேசுதல் எழுந்து திரிதல் வெற்றிலை போடல், சிரித்தல், வாசிப்போரை
அவமதித்தல்,என்பன பாவச்செயல்களாகும்.
புராணபடன முடிவிலும் புத்தகபூசை நடைபெறும் புராண நூல் பூசைக்கு வைக்கப்பட்டு வாத்திய இசையுடன் வீதி வலம் வந்த புராணத்தை ஆலயத்துட் கொண்டு செல்வர். பின் புராணப் படிப்பின் பின் உபயகாரர்களுக்குக் காப்புக் கட்டப்பட்டு புராணபயன் பெற்றோர் களும் புராணபடனஞ்செய்த ஆசிரியர்களுக்குக் காணிக்கை செலுத்துவர்.
67

Page 42
சிவசக்தி 2005 இதுவும் மரபு வழிப்பட்ட ஒரு ஒழுங்குமுறை விதியாகும். சிவபுராணம் படித்துப் பொருள் சொல்லுதற்குரிய இடங்களான தேவாலயம், திருமடம், நதிக்கரை, குளக்கரை, திருநந்தவனம், யாகசாலை முதலிய சுத்த ஸ்தானங்
5 (GTITLs).
புராணபடனம் சம்பிரதாய பூர்வமாக எமது நாட்டிலேயே பிரபல்யம் அடைந்தது. ஆறுமுக நாவலர் அவர்களது முயற்சியினாலே புராணங்கள் அச்சிடப்பட்டன. ஏட்டுச் சுவடிகள் நூலுருவம் பெற்றன. புராணபடனம் எவ்விதம் நடைபெற வேண்டும் என்று நாவலர் அவர்கள் வரையறுத்துக் கூறியுள்ளார்கள். ஈழத்திலே புராண படனத்தின் சிறப்பு கந்த புராணத்தைத் தொட்டே ஏற்பட்டது. இங்கு புராணபடனம் என்னும் சொல் கந்த புராணப் படிப்பினையே சிறப்பாகக் குறித்து நிற்கும். ஈழத்து மக்களிடையே புராண பாரம்பரியத்தையும் தத்துவசிந்தனையையும் சமய நோக்கினையும் வளர்த்துச் சென்றது கந்த புராணபடனமேயாகும். சைவ மக்களின் சமய கலாசார மறுமலர்ச்சியில் கந்த புராணம் முக்கிய பங்கு வகித்து வருகின்றது.
ஈழத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் வரை ஆலயங்களிலே நடைபெற்று வந்த புராணபடன முறையை நாவலரே கிறிஸ்தவ மிஷனரி மார்களின் பிரசாரத்திற்கு எதிரான பிரசாரக்கருவியாக்கி புனித நாட்களிலே புராணபடனவிதி முறைகளுக்கு அமைந்து வீடுகளிலும், புனித இடங் களிலும் வாசித்துப்பயன் பெறலாம் என்ற நிலைக்குக் கொண்டு வந்தார் கந்த புராணப் படிப்பே நாவலர் காலத்தில் உச்ச நிலை அடைந்தது என்று குறிப்பிடலாம்.
திரு.ச.சிவநாதன் R.A.M.ED
SAGNUU? Om Tod yr EÐ EIchigering, in_DGU அ. அருஷன் கனியிடுப்ப3 காய் கவர்ந் ஏற்று 2J
68
 

சிவசக்தி 2OO 5
"சொல்லும் செயலும் உங்களை உயர்த்தும்’
குரீராகவராஜன்
தெருவில் கிடக்கும் கண்ணாடித்துண்டு. பிளேடு முள், வாழைத் தோல், ஊசி ஆகியவற்றை எடுத்து அப்புறப்படுத்தும் சிறுவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். குருடருக்குத் தெருவைக் கடக்க உதவும் இளைஞர்கள் பேரூந்தில் ஊனமுற்றவர்களுக்கும், வயோதிபர்களுக்கும் உட்கார இடம் தரும் நல்ல மனிதர்கள் ஆகியோர் பாராட்டி உற்சாக மொழி கூறப்பட வேண்டியவர்கள். இதனால்தான் உண்மையான பாராட் டுக்குரியவர்களை சமயம் அறிந்து மனம் திறந்து பாராட்டுவதன் மூலம் அவர்களது நற் செயல்களை மேலும் வளர்க்க முடியும்.
அதுபோல சோகமான சூழ்நிலையை மாற்றிவிடும் "பேச்சு" என்பது வெள்ளி ஆனால் மெளனம் தங்கம் என்ற பழ மொழியை நினைவில் வைத்திருந்து எவர் நற்செயல்களையும் பாராட்டாமல் சரி பரவாயில்லை, ஏதோ இருக்கும். என்றெல்லாம் எண்ணிக் கொண்டு நக்கமுடியாத கறாரான ஆள்' என்று பெயர் எடுக்காதீர்கள். எவன் பிறரது நற் செயல் களைக் கண்டு மகிழ்ச்சி கொள்வதில்லையோ அவனால் நற் செயல்கள் எதுவும் செய்யமுடியாது. அது போல் எவன் மற்றவரது நற் செல்களை பாராட்ட மாட்டானோ, அவனால் அவனது நற் செயல்களுக்கு பாராட்டைப்பெற முடியாது என்பது உண்மை. எனவேதான் அறிவுக்கு வையகம் எப்போதும் வணக்கம் செலுத்தும், திறமைக்கு ஆதரவு தரும், தூய உள்ளத்தை வரவேற்கும். மகிழ்ச்சி பொங்குகின்ற முகம் கொண்ட ஒருவர் வீட்டில் நுழைந்தால் உடனே அந்த வீட்டில் புதிதாக கலகலப்பும், ஒளியும் தோன்றி விடுகின்றது அல்லவா?
வாதாட பலருக்குத் தெரியும். ஆனால் சரியாக உரையாட ஒரு சிலருக்கே தெரியும் "கருடன் மகன் குருடன்" என்று துரியோதனனைக் கேலி செய்தாள் திரெளபதி அதன் விளைவாக பாண்டவர்களை படாத பாடு படுத்தினான் துரியோதனன் கம்பரோ தன் நாவை அடக்க முடியாமல்
69

Page 43
சிவசக்தி 2005 சோழனின் பகையை சில காலம் சம்பாதிக்க வேண்டி வந்தது. துடுக்குப் பேச்சு நம்வீட்டு சிறு குழந்தைகளிடம் மட்டுமே நாம் ரசிக்கக் கூடியது. மற்றப்படி பெரியவர்கள் பேசினால் அது மற்றவரை புண்படுத்தக் கூடியதுதான். எக் காலத்திற்கும் அது எப்படிப் பேசினான் பார்த்தாயா? என்று உள்ளத்தில் ஆறாத வடுவை ஏற்படுத்தும்.
கோவலன் வேறோடு பெண்ணைப் புகழ்வது போல் பாட மாதவியும் விட்டுக் கொடுக்காமல் ஒர் ஆணைப் பற்றிப் பாட கோவலன் பிரிந்து சென்று விடுவதை காண்கின்றோம். பின்னர் தான் தான் மாதவி தன் வாயால் கெட்டதை உணர்கிறாள்.
"அறம் செய்ய விரும்பு" என்றார். ஒளவையார் ஆனால் நம்மில் எத்தனை பேர் பிச்சைக்காரருக்கு ஏசியபடி பிச்சை போடுகிறார்கள். அதற்கும் காரணம் உண்டு "பாத்திரம் அறிந்து பிச்சை இடு" என்ற காரணத்தினால் தான். மேலும் மகனின் முன்னேற்றம் எப்படி என்று கேட்டும் பெற்றோர்க்கு கிடைக்கும் பதில் அவன் முன்னேறமாட்டான். மிகக்குறைவு. இது எவ்வளவு கொடுமையான வார்த்தை. இதனையே அவன் முன்னேற இடமுண்டு, கவன மெழுத்தால் மேலும் சிறப்படை யலாம். போன்ற வார்த்தைகள் அவனை ஊக்கப்படுத்தும் முன்னேற்றும். எனவே வீட்டில், அயலில் பாடசாலையில், சமூகத் தொடர்பில் இனிமை யாகப் பேசப் பழகிக் கொள்ளுங்கள். பல நண்பர்கள் கிடைப்பார்கள் வழிகாட்டியாக உங்களை பின்பற்றுவார்கள். மாணவர்களே ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையமாட்டாது. இப்போதிருந்தே உங்கள் வாயில் இருந்து வெளிப்படும் இனிய சொற்களுக்காக மற்றவிகள் உங்களை புகழ இன்றே வழி செய்யுங்கள். நாளை நமதே.
G. திலக்சன் نوموړيږمerه كې لوي ,ئيزم تدرک ليكلوكاPغه نه؟
5°პorუ) , 1 Η| و لا نP) ص ص 5"
70
 

சிவசக்தி இ005
இந்துக்களின் பொருளாதாரச் சிந்தனை
செல்வி வழியாமளா பசுபதீஸ்வர சர்மா நல்லூர், யாழ்ப்பாணம்
சமூக வாழ்க்கையில் அன்றும் இன்றும் அத்தியாவசியப்படுத்தப் படும் ஒன்றாக விளங்குவது பொருள். மனிதன் தன் அடிப்படைத் தேவை களைப் பூர்த்தியாக்கும் வகையில் செயற்படும் இயல்பு உடையவன். ஆகையால் பொருள் பற்றிய சிந்தனை பொருளியல் என்றும் அது மனித வாழ்க்கை யில் தொடர்புபட்டு வருவதனால் பொருளாதாரம் என்றும் வழக்கம் பெற்றது. அப்பொருள் பற்றிய தேவையும் அதற்குரிய மதிப்பை யும் அன்றிலிருந்து இன்றுவரை வருகின்றது என்பதை புராதன இலக்கியம் சான்றாக அமைகின்றன.
இந்து மத மூல நூலாகிய வேதத்தில் "ஓ அக்கினியே உன்னை ஆதரிக்கின்றோம். உன்னிடம் நாம் தரும் ஆகுதிக்குரிய இடத்தில் நீ சேர்ப்பாயாக, அவர்களிடம் எங்கள் பயத்தை நீக்கக் கோரியும் நீண்ட செல்வம் தரக் கோரியும் நாம் தருவதைக் கொண்டு சேர்த்து நாம் கேட்பதைத் தருவிப்பாயாக’ எனும் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளுவதாகவும் அவற்றில் நீண்ட செல்வத்தை தரு மாறு கேட்கப் பட்டதன் மூலம் பொருளின் அத்தியாவசியம் உரைக்கப் படுகின்றது. “பொருள் இல்லாதவன் நடைப்பிணமாக கருதப்படுவான்’ , “பொரு ளுள்ளவன் ஏற்றப்படுவான்’ என்னும் கருத்து வாழ்க்கையில் நிலை பெற்றிருந்தது மற்றும் பொருள் உழைத்தும் அறவழியில் ஈட்டப்பட்டதாக இருத்தல் முக்கியம் என கூறப்பட்டுள்ளது.
வேதங்கள் வகுத்த வர்ண வகுப்பிலும் படிநிலை வாழ்க்கையிலும் இப்பொருள் பெற்றிருந்த முக்கியத்துவத்தை எடுத்து காட்டப்பட முடி கிறது. அதாவது வர்ண வகுப்பில் தெய்வத்திடம் இருந்தும் அன்னி
71.

Page 44
சிவசக்தி 2OO6 யரிடமிருந்தும் நாட்டைப் பாதுகாக்க நியமித்த பாதுகாவலர் போன்று வறுமையிடமிருந்து நாட்டைப் பாதுகாக்கும் பொளிட்டும் வர்க்கம் தனிமைப்படுத்தி வகுத்தமை பொருளின் அவசியத்தை உணர்த்தும் தன்மையே ஆகும். வேத இலக்கியத்தின் "அகன்யா' எனும் சிறப்பால் சூட்டப்பட்டது பசுவே அழிக்க கூடாததும் மதிக்கப்பட வேண்டியதும் எனும் பொருள்பட பசு அழைக்கப்பட்டமை அக்காலத்தின் பொருளை நிர்ணயம் செய்வதற்கு பசுக்களைக் கொண்டிருந்தனர். அக்கால மக்கள் தங்களைப் பாதுகாக்கின்ற சத்திரியனுக்கு 16 ஊதியமாகப் பசுக்களையே வழங்கினர் என்பதற்கு சான்றுகள் காணப்படுகின்றன. குற்றம் புரிந்தவர் தண்டமும் பசுவே ஆகும்.
வேத இலக்கியத்துடன் பொருளியல் நிலை கூறும் அரச நூலாக அர்த்த சாஸ்த்திரம் விளங்கியதை காணலாம். ஆதலால் அரசன் அரசி யலை சிறப்பிப்பதற்கும் பொருளிட்ட வேண்டியதவசியம் என பல இடங் களில் கூறப்பட்டுள்ளன. தொழில் மூலமே பொருளாதாரத்தை வளர்ச்சிக்கு கொண்டுவரலாம் என்பதை தொழில் முறைமை எனும் வகையில் வகுத் துள்ளது. அதாவது சுரங்கம், உப்பளம், முத்தெடுத்தல் போன்ற இயற்கை வளங்களை பயன்படுத்தியும் காட்டுவிலங்குகளையும் காடுகளையும் தனதாக்கும், மக்களின் தொழில் அற்ற பிரச்சினைகளை நீக்கக் கூடிய வழி முறைகளை உருவாக்கியும் நீர் நிலங்களை பயன்படுத்தி விவசாயம் செய்ய ஊக்குவித்தும் அதன் மூலம் அரசு பொருள் பெறலாம். இத்துடன் அடுத்த வழிமுறையாக வரி பெறுதல் கூறப்படுகிறது. இவ்வரியினை நிலவரி, வணிகவரி சாலைவரி, நீர் வரி என்பதன் மூலம் அறவிட்டனர்.
அத்துடன் திருக்குறளின் மூலம் பொருளில் முக்கியத்துவத்தைக் காணலாம். 'படை குடி கூழ் அமைச்சர் நட்பு, அரன் ஆறுமுடையான் அரசானது' எனுமிக் குறளில் கூழ் எனச் சூட்டியுள்ளது பொருளாகும். ஆதலால் அரசு ஏறு படையதாக அமையத் தேவையான ஒரு பொரு ளைச் செப்பமிடுதல் பொருளுக்கு அரசரீதியான அவசியத்தை அறிவு றுத்தலாகும். குடிமக்கள் தொடர்புறுமிடத்தில் "அருளில்லார்க்கு அவ்வுலக மில்லை’ எனக் கூறும்போது அருள் அவ்வுலக வாழ்க்கை செம்மைப் படுத்தும் பொருள் இவ்வுலகை செம்மைப்பயனதும் என்பதை அழுத்த மாகக் கூறியுள்ளது.
'அறனினுமின்பமுமினும். செய்க பொருளை செருனர் செருக்கறுக்கும் பொருள் அல்லாரைப் பொருளாகச் செய்யும். 99. அதாவது தனக்குரிய அறத்தையாற்றுவதற்கு இப்பொருளேயுதவுவதால் அறத்தால் வரும் பயன்களுக்கு பொருளே உதவியானதாகும். இது
72
 

சிவசக்தி 2005
இல்வாழ்வான் நிலையிலே தெளிவாகக் காணலாம். “இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றில் நின்றதுணை' என்றும் பழியஞ்சிப் பாத்தூண் உடையதாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ் ஞான்றுமில்” எனக்கூறும் பழிபாவத்திற்கஞ்சிப் பொருளிட்டி அப்பொரு ளைப் பயன்படுத்தல் வேண்டும் என்பதோடு பொருளேயறஞ் செய்ய வழிவகுக்குமாதலால் அறமும் அது தரும் இன்பமும் பொருளாலே பெறப் படுபவை என்பதைத் தெளிவாகக் காணலாம்.
ஜேக்கம் انگgئuنا தரவான் ஒேக்கம் S. Harivarshan உயிரினும் ம்ேபப் படும். 2H
73

Page 45
சிவசக்தி 2CO3.
முரீ ஆதிசங்கரர்
திரு. எஸ். சிவகுமார் B.A. dip in Edu,
ஜகத் குரு ஆதி சங்கர பகவத்பாதர் தென்னிந்தியாவில் வடதிருவி தாஸ்கூர் பிரதேசத்தில் காலடி என்னும் கிராமத்திலே நம்பூதிரி பிராமண வகுப்பில், ஆத்ரேய கோத்திரத்தில் சிவகுரு ஆரியாம்பா தம்பதிகளின் ஏகபுதல்வராகத் தோன்றினார். இவரின் பிள்ளைத் திருநாமம் சங்கரன் என்பர் கருவிலே திருவுடையவராக விளங்கிய சங்கரர் இளம் பிராயத்திலே குருகுலத்தில் சேர்ந்து கற்க வேண்டிய வேத சாஸ்த்திரங்கள் யாவற்றை யும் எட்டு வயதளவில் கற்று முடித்தார். இளம் வயதிலேயே சங்கரரிடம் பல திறமைகள் இருந்தன. இதற்குச் சான்றாக அவர் பாடிய கனகதாரா தோத்திரம் என வழங்கும் பொன்மழைத் துதிப்படாலை எடுத்துக் கூறலாம். குருகுல வாழ்வின் போது பிச்சை எடுக்கச் சென்று வீடொன்றின் வறுமை நிலையைப் போக்க இப்பாடலைப்பாடினார். இதனால் அவ் வீட்டில் நெல்லிக் கனிகளாகிய பொன்மழை பொழியச் செய்தார். சங்கரா சாரியார் வாழ்ந்த காலம் பற்றிய தெளிவு ஏற்படாத போதும் அவர் 32 வருடங்கள் இம்மாயாவுலகிலே வாழ்ந்தவர் என்பதைச் சங்கர விஜயங்கள் ஒரு சேரக் கூறி நிற்கின்றன. சங்கரர் வாழ்ந்த காலம் கி. பி 788 தொடக்கம் கி. பி 820 வரையென இப்போது பொதுவாகக் கருதப்படுகின்றன.
ஏகான்ம வாதிகளின் சந்தான பரம்பரை சதாசிவம், நாராயணர், பிரம்மா, வசிஷ்டர், அவர் மகன் சக்தி, அவர் மகன் பராசர், அவர்மகன் வேதவியாசர், அவர் மகன் சுகர், அவர் சீடர் கெளடபாதர் வழிவருவது கெளடபாதரின் சீடர் கோவிந்த பகவத்பாதரே ஆதிசங்கரரின் குருவாவர். இளம் வயதிலேயே வாழ்க்கையின் நோக்கையும் உலகின் போக்கையும் உணர்ந்த சங்கரர் துறவை மெற்கொண்டார். தமது குருவிடம் அத்து விததத்துவத்தைக் கற்று அதில் வல்லவரானார். காசிக்குச் சென்று அங்கு அத்துவிதவேதாந்தத்தை அனைவருக்கும் போதித்தார். பலர் அவரது
74
 

சிவசக்தி இ005 சீடரானார்கள். அத்தகையோருள் குருபக்தியில் சிறந்து விளங்கியவர். சனந்தனர் என்பர்.
சங்கரர் காசியில் வாழ்ந்த போது கங்கையில் நீராடி விட்டுத் திரும்பும் பொழுது புலையன் ஒருவனின் தோற்றத்தைக் கண்டு அரு வருப்படைந்தார். அப் புலையனோ "நீங்களாகிய சோற்றுப் பிண்டத்தி லிருந்து நானாகிய சோற்றுப்பிண்டம் விலகிச் செல்ல வேண்டுமா?’ எனத் தத்துவம் பேசலானான். சங்கரர் தன் தவறை உணர்ந்து தமக்கு முன் நின்ற புலையனைத் தமது ஞானகுருவாக மதித்து அவன் காலில் விழுந்து வணங்கினார் உடனடியாகச் சங்கரர் 'மரிஷர் பஞ்சகம்’ என்ற ஐந்து சுலோகங்களை இயற்றினார் சங்கரர் பாதராயணரின் வேதாந்த சூத்திரம், பகவத் கீதை என்பவற்றுக்கு உரை எழுதினார்.
மேலும் தசோபநிடதங்களுக்கும் உரை எழுதினார்.
-9|ଗ0) ରJUTରJଗ0'T':
1
ஈச உபநிடதம் கேன உபநிடதம் கட உபநிடதம் பிரஸ்ன உபநிடதம் முண்டக உபநிடதம் மாண்டுக்கிய உபநிடதம் ஐதரேய உபநிடதம் தைத்திரிய உபநிடதம் பிருகதாரணியக உபநிடதம்
1O.
சாந்தோக்கிய உபநிடதம்
ஆதிசங்கரர் கன்னியாகுமரி முதல் காஷ்மீரம் வரை யாத்திரை செய்து தம் ஏகான்மவாத தத்துவத்தைப் போதித்தும் வாதிட்டும் நிலை நாட்டுவதில் முன்னின்றவர். தென்னாட்டில் சங்கரர் அறியாமையினால் மக்கள் பின்பற்றிய மூடப்பழக்க வழக்கங்கள் பலவற்றை மறையச் செய்தார். சமயத்தின் பெயரால் நிகழ்ந்த சில கொடுமைகளையும் சங்கரர் களைந்தார். சங்கரர் சைவம், வைணவம், சாக்தம் காணபத்தியம், கெள மாரம், செளரம் என்னும் ஆறு சமயங்களையும் தாபித்தார். இதனால் இவர் "சண் மதத் தாபகர்’ எனச் சிறப்பிக்கப்பட்டார்.
75

Page 46
சிவசக்தி 20085
சங்கரர் சீடர்களுடன் துங்கபத்திரை நதி உற்பத்தியாகும் இடத்தை அடைந்தார். நதிக் கரையில் வெயிலின் கொடுமையால் கர்ப்பிணித் தவளை ஒன்று களைத்துப் போயிருந்தது. அதன் மீது வெயில் படாமலிருக்க ஒரு நாகபாம்பு தன் படத்தை விரித்துக் குடைபோல் பாதுகாத்தது. இதைக்கண்டு தவசிரேட்டர் ஒருவர் இங்கு வாழ்ந் திருக்க வேண்டுமெனச் சங்கரர் ஊகித்தார். அங்கு ரிஷ்ய சிருங்கமுனிவர் வாழ்ந்ததை அறிந்தார். இதனாலே அவ்விடம் சிருங்கேரி என அழைக்கப்படுவதையும் அறிந்தார். அங்கு சாரதாம்பிகை ஆலயத்தையும், அதனைச் சார்ந்த சிருங்கேரி மடத்தையும் தாபித்தார். பாரதத்தின் நான்கு திசைகளிலும் நான்கு மடங்களை நிறுவினார். சங்கரர் ஒவ்வொரு மடத்துக் கும் தலைவராக தமது பிரதம சீடர்களாகிய நால்வரை நியமித்தார். ஒவ் வொரு மடமும் ஒவ்வொரு வேதத்துக்கும். அதிலுள்ள மகாவாக்கியத் துக்கும் முக்கியத்துவம் அளித்தது.
வடதிசையில் ஜோதிர்மடம்
1
தலைவர் - தோடகர் வேதம் - அதர்வவேதம் மகாவாக்கியம் - அயம் ஆத்மா பிரமம்
(மாண்டுக்கிய உபநிடதம்)
2. கிழக்குத் திசையில் - கோவர்த்தன மடம்
தலைவர் - பத்மபாதர் வேதம் - இருக்கு வேதம் மகாவாக்கியம் - பிரக் ஞானம் பிரம்மா
(ஐதரேய உபநிடதம்)
3. தெற்குத்திசையில் - சிருங்கேரி மடம்
தலைவர் - சுரெசுவர் வேதம் - யசுர் வேதம் மகாவாக்கியம் - அகம் பிரம்மாஸ்மி
(பிருகதாரணியக உபநிடதம்)
76

சிவசக்தி 2005 4 மேற்குத் திசையில் - துவாரகா மடம்
தலைவர் - ஹஸ்தாமலகர்
வேதம் - சாமவேதம்
மகாவாக்கியம் - தத்துவம் அசி
(சாந்தோக்கிய உபநிடதம்)
“ஏகம் ஏவ அத்துவிதியம் பிரமம்” என்ற வேத மகாவாக்கியத்தில் வரும் அத்து விதியம் என்னும் சொல்லிலுள்ள அகரத்திற்கு ஏகான்ம வாதிகள் இன்மைப் பொருள் கொண்டு. பிரமம் ஒன்றே உள்பொருள், இரண்டாம் பொருள் ஒன்றும் இல்லை என்பர் ஏகான்ம வாதிகள் கண்ணுக் குப் புலனாகும் பல உயிர்களும் இவ்வுலகும் எல்லாம் மாயத்தோற்றமே. ஒரு சூரியனே பல குடங்களில் உள்ள நீரிற் பிரதிவிம்பித்துப் பலவற்றைத் தோற்றுவிப்பதுபோல ஒர் ஆன்மாவே பல உடல்களில் நின்று பலவாகத் தோன்றுகிறது. அந்த ஆன்மாவே பிரமம் என்று விளக்குவர். இரண்டி ல்லை எனும் ஏகான்ம வாதிகள் முத்தியில் இறைவன் ஒன்றேயுண்டு. ஆன்மா இல்லையாகிவிடும் என்பர்.
பிரமத்தின் இருமையற்ற நிலை. உலகத்தின் உண்மையற்ற நிலை, பிரமத்திலிருந்து ஆன்மா வேறுபடா நிலை. இவற்றையே சங்கரரது அத்துவைதம் இயம்புகின்றது.
77

Page 47
இ005
娜礦
礦
娜 氹娜
தி
சிவச
 
 

சிவசக்தி 9200Ꮛ Lu6) bl
பலம் தான் வாழ்வு பலவீனம் மரணம்
வி. விமலாதித்தன் மாணவர் தலைவர் (2004-2005) செயலாளர். இந்து மாணவர் மன்றம், (2002-2003)
இந்தப் பக்கத்தைப் புரட்டுகின்ற நீ மனஉறுதியும், பொறுமையும் இலட்சிய நோக்கும் கொண்ட வீரனா? அல்லது எந்த நேரமும் அஞ்சி அஞ்சிச் செத்துக் கொண்டிருக்கும் கோழையா?
இந்த இரண்டுபேரில் நீ யாராயிருந்தாலும் பக்கங்களைப் புரட்டி அப்பால் சென்றுவிடு! இது உனக்கான புகலிடம் அல்ல!
நீ வாழ்க்கையில் சில கணங்களில். அஞ்சியும், ஆளுமைஅற்ற பிறரிடம் பெறக்கூடிய இகழ்ச்சிக்காக துயரப்பட்டுக் கொண்டும், எதிர் காலம் பற்றிய ஏக்கங்களாலும் இறந்த காலம் பற்றிய சிந்தனைகளாலும், நிகழ்காலத்தை தொலைப்பவனாக இருக்கலாம். அல்லது. வாழ்வின் இன்னும் சில கணங்களில். மன உறுதி கொண்டவனாயும் ஒளி பொருந்திய விழிகளோடு பார்க்கும் கூரிய பார்வையும், சுயகட்டுப்பாடும். மனத்தை விட்டு புத்தியின் ஆலோசனைகளை பெற முயற்சிப்பவனாக வும் இருக்கலாம்.
நீ அப்படிப்பட்டவனானால். வா தோழா! நீ இங்கு வரவேற்கப் படுகின்றாய் இது உனக்கான இடம் தான்
நமது சமுதாயத்து மாந்தர்களில் பெரும்பாலானோர் உன்னைப் போலத்தான் இருக்கின்றார்கள் பாரதி சொல்வதைப் போல, தேடிச்சோறு நிதம் தின்று, வெறும் சின்னஞ்சிறு கதைகள் பேசி. மனம் வாடித்துயரில் உழன்று, பிறர் வாடப் பல செயல்கள் செய்து, நரை கூடிக். கிழப்பருவம் எய்தி. கொடுங்கூற்றுக்கிரையெனப் பின் மாயும் வேடிக்கை மனிதர்களா யிருக்கிறார்கள்! நீயும் இப்படித்தான் இருக்கிறாய் புழுக்களைப் போல் பிறந்து, உணவுண்டு உடல், பெருக்கி, இனப்பெருக்கம் செய்து நெளிந்து வளைந்து பின்பு செத்துப் போவதற்காகவா நீ பிறந்தாய்? இப்பேர்ப்பட்ட புன்மைச் சமுதாயத்தின் உறுப்பினனாக இனியும் இருக்கப் போகிறாயா?
79

Page 48
சிவசக்தி 9ᎧᏅ0Ꮛ எவன் இந்த உலகத்தில் தலைவனாகப் போற்றப்படுகின்றான்? எவன் இங்கே மகாத்மாவாக வணங்கப்படுகின்றான்? அவர்களிடமிருந்து நாங்கள் படித்துக்கொள்ள வேண்டிய பாடங்கள் அனேகம். அவர்கள் பிறரை அடக்க முயற்சிக்கும் முன் தன்னை அடக்கியவர்கள் உணர்ச்சிகளை புறந்தள்ளி தங்களின் ஒவ்வொரு காய் நகர்த்தலிலும் அறிவை ஆலோ சனை கேட்டவர்கள்
கோடானு கோடி ஆண்டுகளுக்கு முன்னே அற்புத நாகரிகம் கண்டவர்கள் எங்கள் மூதாதையர்கள். அவர்கள் தங்கள் தவவலிமையா லும் ஞானத்தாலும் தந்த வேத உபநிடத சாத்திரங்களை நாத்திகர்கள் கூட்டம் புறந்தள்ளிப்போட்டது. நம்மவர்களிடையே வேதாந்த சாத்திர வாய் மொழிகள் உலவப்பெற்றாலும், அவற்றின் உள்ளர்த்தம் பெரும்பாலா னோர்க்குத் தெரிவதில்லை. அர்த்தம் தெரிந்தவர்கள் அந்த அர்த்தங்களை வாழ்க்கைப்படுத்த முயற்சிக்கின்றார்கள் இல்லை. காரணங்கள் என்ன? கேவலமான, அற்பமான வெளியுலகக் கவர்ச்சிகளில் மயங்கிக் கிடந்து தமது ஆத்மீக ஈடேற்றத்தை மறந்து நிற்கிறார்கள் தொலைக்காட்சி நிகழ்வு வானோலிகளின் ஈர்ப்பு நடிகைகளின் கவர்ச்சி, நடிகர்களின் கம்பீரம், இரட்டை அர்த்த நகைச்சுவை, திரைப்படம், விளையாட்டு, புகழ், இகழ், பணம், ஆடம்பரம். இத்யாதி. இத்யாதி தன் உள்ளே பார்க்க மறந்து வெளியுலகப் போலி வாழ்க்கையின், அழியும் அழகை, உடுத்திக்கொண்டு நடப்பவர்கள் எல்லாம், எவ்வாறு தன்னை அடக்கமுடியும்? தன்னை அடக்குதல் என்றால் என்ன?
உபநிடதங்களில் சிறந்ததொன்றான கதோபநிடதம் உனக்கு விளக்கு கின்றது. எவன் மனது சொல்லும் பாட்டுக்கு ஆடாமல், மனம் சொன்ன வழியில் போகாமல், தனது இலட்சியத்தை அடைவதற்காய் புத்தியை
பயன்படுத்தி விவேக விளக்கேற்றி, சூழ்ந்த வாழ்க்கைப் பாதையில்
போகின்றானோ. அவன், தன்னை அடக்கியவன்! அவனால்தான் சாதனைகள் படைக்க முடியும், அவனால்தான் அந்த ஆத்மஸ்வரூபமான பரம்பொருளை உணர முடியும்
ஆன்மீகப் பாதையின் முதற் படி தன்னை அடக்குதல் உனது மனம் வெளிப்படுத்துகின்ற உணர்ச்சிகளின் அடிபப்படையிலேயே நீ செய்யும் காரியங்கள் அமைகின்றன. எடுத்ததற்கெல்லாம் கோபப் படுகின்றாய் இழந்து போனதற்காக கண்ணிர் வடிக்கின்றாய் சத்தியமாய் எனக்கு ஒன்று புரியவில்லை நடந்து முடிந்ததற்காக கோபப்படுவத னாலோ. இழந்து போனதற்காக அழுவதனாலோ ஆகப்போவது என்ன? நீ கோபப்பட்டு ஆவேசப்பட்டு கத்துவதால், நடந்து முடிந்த
80


Page 49
ஜ Goties Jubiles -
இ
&ঃ?ჯგჯ
sc McIlwch Colombo -
Masco 175, Sri Sumcunctissa McIlwatha, Colombo - 12, Tel: 2325561 -3, Fax: 2449537 e-mail masconsGe rcko.lk www.mcascons.com
CARTIEI
PVC Co sted Polyester, Nylon, Oxford Pvc Films sheeting 薇 Soft Luggage, SportSW of Handbags, Bog Lining, Rain Weo Dory/Stoionery Covers, Shower Curtain i
208, Seca Street, Colombo 11.Te: 94-11-243.5006, 2320180,238 5408, LLLLS00SLLS00000000 S eA SLLLLLLSGLLLTLLLLLLLLSLLL
 

சிவசக்தி 2005
நிகழ்வு, மீண்டும் உனக்கு சாதகமாய் நடக்கப்போவதில்லை. நீ துயரப் பட்டு அழுது புலம்புவதால் இழந்த பொருள் திரும்பிக்கிடைக்கப் போவ தில்லை. கோபப்படுவதால் உன் உடல் பலமும், துயரப்பட்டுக் கண்ணிர் வடிப்பதால் உன் மன பலமும் அழிந்து கொண்டு போவதைத் தவிர வேறு ஒன்றுமே அங்கே நடைபெறப்போவதில்லை.
அன்புள்ள சகோதரனே. அருகில் வா! கோபம், துயரம் முதலிய உணர்ச்சிகள் எல்லாம் உன் மனதின் வெளிப்பாடுகளே. உணர்ச்சிகள் வெண்மதியை மறைக்கும் முகில்களை போன்று உன் அறிவை மறைக் கின்றன. அவற்றால் ஆகப்போவது ஒன்றுமில்லையென்று தெளிந்த பின், அவற்றில் ஏன் தங்கிக் கிடக்கிறாய்? உனக்கு இறைவன் தந்த அற்புதமான புத்தியை உபயோகப்படுத்தி உன் வாழ்க்கையின் ஒவ்வொருகணத்தையும் அறிவின் துணையோடு அனுபவித்துக்கொள் அறிவே உன் பலம் உணர்ச்சிகளே ஒருவனின் பலவீனம் உணர்ந்துகொள். உணர்ச்சிகளையும் அவற்றின் எஜமானனான மனத்தையும் உனக்கு அடிமையாக்கு
கதோபநிடதம் உன் கண்முன்னே ஓர் உருவக்காட்சியை கொண்டு வருகிறது தோழா. அதோ பார் புயல் காற்றுவீசிக் கொண்டிருக்கும் அந்தத்திறந்த வெளியின் கரடு முரடான பாதையில் ஒரு தேர் சென்று கொண்டு இருக்கிறது அழகான இரு சக்கரங்களோடு அமைந்த அற்புத மான தேரில் ஐந்து குதிரைகள் கட்டப்பட்டிருக்கின்றன. தேரினுள் ஆசனத் தில் பயணி ஒருவன் வீற்றிருப்பதைப் பார் சகோதரா. அவன் முன்னால் தேரின் முகப்பில் சாரதி ஒருவன் வீற்றிருக்கின்றான். அவனது கையில் அந்த ஐந்து குதிரைகளின் கடிவாளம் இருக்கிறது. அந்தப் பயணி செல்ல வேண்டிய இடம் வெகுதூரத்தில் இருக்கிறது. அவன் தனக்குக் கொடுக்கப் பட்ட இந்தத் தேரிலேயே சென்றாக வேண்டும்.
கதோபநிடதம் உனக்கு சொல்லுகின்றது அந்தத்தேர் தான் உடம்பு தேரினுள் இருப்பவன் தான் ஜீவாத்மாவாகிய நீ ஐந்து குதிரைகளும் உனது ஐம்புலன்கள் அந்த தேரின் சாரதி, உனது புத்தி ஐந்து குதிரைகளையும் சாரதியையும் இணைக்கும் கடிவாளமே மனம் சாரதி கடிவாளத்தை தொய்ய விட்டுவிட்டால், அந்த ஐந்து குதிரைகளும் தமது கட்டுப்பாட்டை இழந்து தம் இவஷ்டப்படி ஒவ்வொரு திக்கிலும் பாயத்தொடங்கிவிடும். தேரானது எங்காவது முட்டி மோதி நொருங்க வேண்டியது தான் தோழா. அது போலவே, நமது புத்தியாகிய சாரதி, புலன்களைக் கட்டுப் படுத் தாது. புலன்களாகிய குதிரைகளோடு தொடர்புகொள்ளும் மனத்தை தனது கட்டுப்பாட்டில் இருந்து விலக விட்டால், நாம் நமது இலட்சியத்தை அடைய முடியாது.
81

Page 50
சிவசக்தி 2OO6
அந்தத் தேரின் சாரதியான புத்தி கடிவாளமாகிய மனத்தை இறுக்கி தனது கட்டுப்பாட்டுக்கள் கொணர்ந்து, அதன் மூலம் ஐந்து குதிரைகளான ஐம்புலன்களையும் அடக்கி, தனது தேரை ஒட்டினால். எந்தப் புயல் அடித்தாலும், எந்த தடைக்கற்கள் வந்தாலும், நாம் நமது இலட்சியத்தை சென்று அடையமுடியும். தோழா அதோ புழுதி படிந்த அந்தத்தெருவில் போகின்றவர்களின் முகத்தை உற்றுப்பார் எத்தனை பேர் மகிழ்வோடு இருக்கிறார்கள்? பெரும்பாலானோரின் கண்கள் சோர்ந்திருக்கின்றன. முகங்கள் வாடியிருக்கின்றன. பலவீனங்களால் பாதிக்கப்பட்டு, தற்காலிக சந்தோஷங்களுக்காகவும் நிம்மதிக்காகவும் ஏங்கியிருப்பவர்களின் வதனங்களைப் பார்த்தாயா?
எப்படி செத்து நாறுகின்ற எலியின் வாலைப்பிடித்துத் தூக்கித் தூர எறிவாயோ, அதுபோல, உனது பலவீனங்களையும் தாழ்வான மனப்பான்மைகளையும் தூக்கித் தூர எறிந்துவிடு எவன் துக்கத்தையும் சந்தோஷத்தையும் புகழையும் இகழையும், தனக்குள் அந்நியப்படுத்திப் பார்க்கின்றானோ அவனே பாக்கியசாலி அவனே பலம் பொருந்தியவன் ஆகின்றான் வாழ்க்கையில் நடக்கும் எதுவும் அவனைப் பாதிப்பதில்லை. அதற்காக அவன் வாழ்க்கையை வாழாமல் விடுவதுமில்லை. தனது ஆயுளின் ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்து அமைதியோடும் நிம்மதியோடும் நிரந்தர உற்சாகத்தோடும் வாழ்கிறான். பலம் பொருந்திய அவனுக்கு மரணபயமுமில்லை. இத்தகைய "ஆன்மபலம்" பொருந்திய வனாலேயே இறைவனை தனக்குள் கண்டு ஆனந்திக்க முடியும். விவேகானந்தர் சொல்லி வைத்தார் பலம்! பலம்தான் வாழ்வு பலவீனம் மரணம்!
சகோதரனே வந்து உன் மென்மை விரல்களால் என்கையை பிடித்துக் கொள் அதோ. நமக்கான பாதை புலப்படுகிறது! இனி நம்மை அற்மான புகழ், இகழ், பணம், ஆடம்பரங்கள் ஈர்த்து அடிமையாக்கப் போவதில்லை. அற்புதமான ஆத்மபலத்தினால் அவற்றை துச்சமாக்கிக் கொள்வோம். தண்ணிரிலே வசித்தாலும் தாமரை இலை, தண்ணீரில் ஒட்டுவதில்லை! அதுபோல் நாமும் பந்தப்படாது இருப்போம்! அதோ. நமது வானத்தில் ஆதித்தன் உதிக்கத் தொடங்கி விட்டான் இனி, நமது பாதையிலும் ஒளி பரவும்.
(முற்றும்)
'98க்கம் விருப்பம் ஈரலான்டி. அஸ்வின்
உயிரினும் ஒம்பப் படும் $因诬ö 2H
82
 

சிவசக்தி 2OO5
The lessons I learned......
M. Brana van. Chairmain 2002-2003
As an ex-chairman of this union, I will be the most happiest person to hear that we are in the 50th year. I wish all the best to my juniors to make this event a big success. I take this opportunity to thank the organising committee. Teacher -in charge, Asst. principals and the principal of Our college for their precious ef. fort making this event as the glory to kalainagal.
The Royalists as per the college anthem learn a lot. It caters our minds with objective learning, apart from those learned through the extracurricular activities and co-curricular activities which they involve in Royal college gave us the chance to develop ourselves mentally and physically it really shaped us. The lesson we learned through Our college life is interesting and exciting The experience has made us a complete man. So, Once again. I thank our teachers and seniors who have prepared us to face this challenging world.
இந்து மாணவர் மன்றத்தின் மாணவர் தலைவனாக 2003ஆம் ஆண்டு இருந்தவன் என்ற பெருமையையும், மகிழ்ச்சியையும் விட எமது மன்றம் இன்று பொன்விழா காண்கிறது என்ற பெருமையும் மகிழ்வுமே மேலோங்கி நிற்கின்றது கல்வியின் தாயாம் கலைமகளுக்கு கிரீடம் சூட்டும் விழாவாக அரங்கேறும் கலைமகள் விழா இவ்வருடம் கலைமகளுக்கு பொற்கிரீடம் சூட்டுகிறது என்பதில் உள்ளம் பூரிப்படைகின்றது. றோயலின் நந்தவனமாம் நவரங்கஹலவில் பொற்கிரீடம் சூட்டும் பாக்கியம் எனக்கு எனக்கு கிடைக்கவில்லை அதைக் கண்டு மகிழவும் வாய்ப்பில்லை என்ற கவலையைத் தள்ளிவைத்துவிட்டு எனது தலைப்பிற்கு வருகின்றேன்
83

Page 51
சிவசக்தி 2005 இம்மன்றத்தின் தலைவனாக இருந்து நான் கற்ற வாழ்க்கைப் பாடங்கள். கடல்கடந்து வந்து கல்விகற்கும் இக்காலத்தில் பயன்படுவதை எண்ணிப் பார்த்தால் வியப்பாக இருக்கின்றது. ஒவ்வொரு மாணவனும் புத்தகக் கல்வியுடன் வாழ்க்கைப்பாடங்களையும் கற்றுக்கொள்ள வேண்டும் இவ் வாறான பாடங்களை எமக்கு வழங்கவே பாடசாலைகளில் மாணவர் மன்றங்கள், விளையாட்டுக் கழகங்கள் என்பன அமைக்கப்படுகின்றன. இவ்வாறான புறக்கிருத்திய நடவடிக்கைகள் மூலம் ஒவ்வொரு மாண வனும் சமூகத்துடன் ஒத்துப்போதல், குழு ஒருமித்த செயற்பாடுகளில் ஈடுபடல் போன்ற நற்பழக்கவழக்கங்களைக் கற்றுக் கொள்கின்றான்
பாடசாலையில் சரியானமுறையான கல்வியைக் கற்காதவனால் சமூகத்தில் வாழமுடியாது. தனது நிலைப்பாட்டைத் தைரியமாக எடுத்துச் சொல்ல முடியாது. இவ்வாறான ஒரு மாணவன் சமூகத்தில் உள்ள மற்றவர் களால் தள்ளிவைக்கப்படுவான். இவன் அனுபவங்கள் மூலம் அறிந்தவை மிகக் குறைவாக இருக்கும். உதாரணத்துக்கு ஒருவர் மறைமுகமாகச் சொல்லும் கூற்றைப்புரிந்து கொள்வதற்கு கஷ்டப்படுவான். அது மட்டுமல்லாது மிக அடிப்படையான விடயங்களில் கூட என்ன செய்வது. எப்படி ஒருவருக்கு தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வது என்பதில் பல குழப்பங்களுடன் காணப்படுவான். இதன் விளைவாக அச்சமுதாயத் தின் மீதான ஒரு வெறுப்பு, ஒரு பயம், தாழ்வு மனப்பான்மை என்பன ஏற்படும் இவ்வாறான விளைவுகள் மறைமுகமாக அவனது வாழ்க்கைப் பாதையைப் பாதிக்கும்.
ஒவ்வொரு மாணவனின் எதிாகாலமும் அவன் பெற்றோரின் வழி நடத்தலில் அமைந்திருக்கும். பெற்றோர் அனுபவசாலிகள். இவ்வாறான விடயங்களைப் புரிந்து கொள்வதில் கவஷ்டம் இருக்காது பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைச் சரியான பாதையில் வழிநடத்தல் வேண்டும். மன்றங்கள், விளையாட்டக் கழகங்கள் வழங்கும் பாடங்கள் வாழ்ககைப் பாதையின் முக்கிய தருணங்களில் கைகொடுக்கும் என்பதில் சந்தேக மில்லை. இவை ஒரு மனிதனின் சுயாதீன சிந்தனையை (Realitical thinking) விருத்தியடையச் செய்யும் ஒரு மனிதனின் Social Experiences என்று சொல்லப்படும் சமூக அனுபவங்கள் அதிகரிக்கும் இதன் மூலம் பற்பல சமுதாயங்களுடன் ஒத்துப் போகக்கூடிய தன்மை ஏற்படும். இவ்வாறான நல்வாழ்க்கைப் பாடங்களைத் தரும் மன்றங்கள் விளை யாட்டுக்கழகங்கள் தொடர்ந்து செயற்பட்டு எம் அனைவரக்கும் பயன்தர வேண்டும் எனக் கலைத்தாயை வேண்டி விடைபெறுகின்றேன்.
84
 

சிவசக்தி 2OO 5
சிந்துவெளி
நாகரிக காலம்
சைவத்தின் தொன்மையை விளக்கும் சான்றுகளுள் சிந்துவெளி நாகரிகம் முதன்மைபெறுகிறது. சிந்துவெளி ஆய்வாளர்கள் சிந்துவெளி காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வில் சைவம் சிறப்புப் பெற்று விளங்கி யது என்று கூறுகின்றனர். சிந்துவெளி நாகரிகம் இந்தியாவின் வடமேற்கு எல்லையில் சிந்து நதிபாயும் பள்ளத்தாக்கில் நிலவியது. தற்போது இப் பிரதேசம் பாகிஸ்தானுக்குச் சொந்தமாக உள்ளது. சிந்து வெளியில் மொகஞ்சதாரோ, கரப்பா என்ற இரு நகரங்களையும் ஆய்வு செய்த ஆய்வாளர்கள் இந்நாகரிகம் திராவிட நாகரிகத்தினை ஒத்துள்ளது எனக் கூறுகின்றனர்.
சிந்துவெளி நாகரிக மக்கள் திட்டமிட்ட நகர அமைப்பை அமைத்தி ருந்தனர். இவர்கள் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை உடையவர்களாய் இருந்தனர். இந்நாகரிகத்தின் சிறப்பை விளக்குவதற்கு அங்கு கிடைத்துள்ள எழுத்துக்கள் வாசிக்கப்படவில்லை. இவ்வெழுத்துக்கள் வாசிக்கப்பட முடியுமானால் உயர்ந்த நாகரிகம் இருந்தது என்ற விபரங்களைத் திரட்ட முடியும். சிந்துவெளி நகரங்களான மொகஞ்சதாரோ, கரப்பா ஆகிவற்றை ஆய்வு செய்த ஆய்வாளர்கள் சேர் ஜோன் மார்சல், சேர் அலெக்சாந்தள் கன்னிங்காம் சேர்வில்லியம் ஜோன்ஸ், மக்கே பண்டக்கார் போன்றோர் சிந்து வெளியில் நிலவிய சமயம் சிவனைப் பரம்பொருளாகக் கொண்ட சைவ சமயமே என விளக்கி நிற்கின்றனர்.
சிந்துவெளியில் கிடைத்த படிமங்களில் மிகவும் கருத்தைக் கவர்வது யோகி போன்ற அமைப்புடைய ஓர் உருவம். இதன் இரு பக்கங்களில் உட்கவிந்த இரு கொம்புகள் உள்ளன. கொம்புகளுக்கு இடையில் மலாக் கொத்து காணப்படுகின்றது. தலையின் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் இரு புடைப்புக்கள் காணப்படுகின்றன. இவற்றை இரு வேறு முகங்களாகக் கொண்டு இம் முக மூர்த்தியை முந்துசிவன் என்று சேர் ஜோன்மார்சல்
85

Page 52
சிவசக்தி 2OO 5 குறிப்பிடுகின்றார். இன்னொரு இலச்சினையில் இக்கடவுள் பத்மாசன முறையில் அமர்ந்திருப்பதோடு பார்வை மூக்கின் நுனியில் பதித்திருப்ப தாகவும் உள்ளது. இவ்வடிவத்தின் தொடர்பாக சிவன் மகாயோகி யோகேஸ்வரர் என அழைக்கப்படுவதைக் காணலாம். வேறு ஒரு படிமத் தில் இக்கடவுளரைச் சூழ யானை, புலி காண்டாமிருகம் ஆகிய விலங்கு கள் இருப்பதாகவும் இவ்விலங்குகள் கடவுளை நோக்கிக் கொண்டிருப்பது போலவும் காணப்படுகின்றது. கடவுள் அமர்ந்திருக்கும் பீடத்திற்குக் கீழே இரு மான்கள் காணப்படுகின்றன. இத்தோற்றம் உயிர்களின் தலைவனான பசுபதியைச் சுட்டுகின்றது.
சிந்து வெளியில் கண்டெடுக்கப்பட்ட இன்னொரு படிமத்தில் ஆண் உருவச்சிலை ஒன்றின் தலையிலிருந்து பல கொம்புகள் செல்வதாகக் காணப்படுகின்றன. பிற்காலத்தில் இவ்வழிபாடு திரிசூலவழிபாடாக மாறியது எனவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும் கரப்பாவில் அறுநூற் றுக்கும் மேற்பட்ட பெரிய, சிறிய இலிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எனவே இவற்றில் சிறிய இலிங்கங்களில் துளைகள் காணப்படுகின்றன. எனவே இச் சிறிய இலிங்கங்களை மக்கள் தமது கழுத்தில் அணிந்திருக்க லாம் எனவும் பெரிய இலிங்கங்களை நிலத்தில் வைத்து வழிபட்டிருக்கலாம் எனவும் ஊகிக்கப்படுகின்றது. இன்றும்கூட சிவன் கோயில் மூலத்தானத் தில் சிவலிங்கம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சிந்துவெளியில் காலைத் தூக்கி நடனமாடும் நிலையில் உள்ள ஆண் உருவப் படிமம் ஒன்றும் கிடைத்துள்ளது. இதனை ஆய்வாளர்கள் நடராசர் வடிவமாக இருக்கலாம் எனக் கருதுகின்றனர். இவை தவிர ஆண் பெண் இணைந்த படிமங்களும் சிந்து வெளியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை இன்றைய அர்த்தநாரீசுவர வழிபாட்டு க்கு முன்னோடியாக அமைந்திருக்கலாம். இவை தவிர இக்கால மக்கள் நாகவழிபாடு, முருகவழிபாடு, சூரியவழிபாடு, மரவழிபாடு, புனித நீராடல் ஆகிய வழிபாடுகளையும் மேற்கொண்டனர் என்பதற்குச் சான்றுகளும் உண்டு.
அக்கால மக்கள் இத்தெய்வப் படிமங்களுக்குப் பூசை முதலிய வற்றைச் தெய்தனர் என்பதற்குப் புகைபடிந்த பூசைத் தட்டுக்களும் பூசை உபகரணங்களும் சான்றாக அமைகின்றன. இவை தவிரத் தெய்வ உருவங் களுக்கு நிவேதனம் படைத்து வழிபட்டனர் என்பதற்கும் சான்றுகள் உண்டு. இங்கு கண்டெடுக்கப்பட்ட தெய்வப் படிமம் ஒன்றின் முன் உணவுப் பொருள்கள் படைக்கப்பட்டிருப்பதைக் காணமுடிகின்றது. இப் பூசைமுறையின் வளர்ச்சியாக இன்று கோயில்களில் நடைபெறும் ஆறு காலப் பூசையினை அவதானிக்கலாம்.
86

W
W
“.... ለ..
WOON %წ!XX W
!

Page 53


Page 54
N1S HARDWAR
General Hardware Merchants
2A, 8, 2B, Nelson Place. Te 236907 Colombo 06. Mobile : O7-48332
Sri Lanka ప్తిస్ట్చ్య e-mail: thavarajahnehofmail.com
Colombol Sri Lanka.
Keyzar Street, Colombo 11
Tel: 47363
 

s s 翁 ಸ್ಟ 器

Page 55

சிவசக்தி 2OO 5
இன்றுவரை எமக்குக்கிடைத்த சான்றுகளை அடிப்படையாக வைத்து நோக்கும்போது சிந்துவெளிகால மக்கள் வாழ்வில் சிவ வழிபாடு எனக்கூற முடியும். அதாவது சிவவழிபாடு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய சிந்துவெளி நாகரிக காலத்திலும் காணப்பட்டது என்பது குறிப் பிடத்தக்கது.
மனத்துக்கன் ΙΩΤέξίδυαότ goਪੰ
d o சு.சவின்நாத் ථුෆිෆා 19%, ճy. ෆිරෑhෆ්” සීඝ්‍ර , ධ්‍රැpෆ්
2H
87

Page 56
சிவசக்தி
"பரத நிருத்யம்'
88
 
 

சிவசக்தி ջ005
ஒரு நாட்டின் கலாசாரம், பண்பாடுகள், பழக்க வழக்கங்கள் முதலிய வற்றினை ஏனையோருக்கு வெளிப்படுத்தக் கூடிய ஒரு குறிப்பாக அந்நாட்டின் சாஸ்த்ரீய, பாமர அதாவது கிராமப் புறக் கலைகள் காணப்படுகின்றன. அந்த ரீதியில் பாரதத்தின் பல பகுதிகளிலும் பழகிவரும் கலைகளில் தென் பகுதியின் உயர் கலாசாரத்தைப் பிரதிபலிப் பதாக பரதம் அமைகிறது.
புராண வரலாற்றுப்படி பிரம்மாவினால் பாமரரும் விளங்கும் வண்ணம் 5 வது வேதமாகத் தொகுக்கப்பட்ட பரதம், பரதரிஷி மூலம் தேவராலும், அப்ஸரஸ்களாலும் சிவன் முன்னிலையில் அரங்கேற்றப் பட்டதாகக் கூறப்படுகிறது. பரதத்தின் இருபெரும் பிரிவுகளான தாண்டவம் சிவனாகவும், வாஷ்யம் உமையாலும் உலகில் பரவியது.
ஆரம்ப காலங்களில் பாரதத்தின் தென்பகுதியின் தஞ்சை முதலிய பிரதேசங்களில் கோயில் களில் தேவதாசிகளால் 'சதிர் பெயரால் ஆடப்பட்டு வந்தது. அக்காலத்து அரசர்களது அவையிலும் இந் நடன நிகழ்வுகள் இடம்பெற்றதாக வரலாறுகள் கூறுகின்றன. தஞ்சைக் கோவிலைக் கட்டுவித்து ராஜராஜசோழனின் மகள் பரதம் பயின்றதனைக் குறிக்கும் சிற்பங்கள் அக்கோயிலில் காணப்படுகின்றன. எனினும் தேவதாசிகள் சிலரின் ஒழுக்கக் கேட்டினால் பரதக் கலை தன் சிறப்பிழந்து போனது. எனினும் அதன் பின் வந்த பரதக் கலைஞர்களாலும் அவர்களின் சொல்காணாத முயற்சிகளாலும் பின்வந்த காலங்களில் அக் கலை புகழ் பரப்பத் தொடங்கியது.
ஒரு கலையானது, கலையைப் பிரயோகிக்கும் கலைஞனின் துயரத்தை நீக்குவதாகவும், அவனது ஜீவாத்மாவினைப் பரமாத்மாவிடம் இணைக்கும் பாலமாகவும், அவனிற்குப் பூரணமான திருப்தியையும், மகிழ்ச்சியையும் தரக் கூடியதாயும் இருத்தல் வேண்டும். நடனமாடும் ஒருவர் தமது நிஜமான குணாதிசியங்களை விடுத்துப் புதிதானதொரு வடிவம் கொள்கிறார். இசைக்கேற்ப அவயவங்கள் அசைய மனம் ஒருமித்து அபினயித்தலானது ஒரு விதமான தியானமாகவே கொள்ள
Gol)|TLD).
அது மட்டுமன்றிப் பார்வையாளர்களை ஸாஹித்தியத்தின் சந்தர்ப்
பத்திற்கே அழைத்துச் செல்லக் கூடிய வல்லமை நடனத்திற்கு உண்டு.
தெய்வீகத்தையும். மேன்மையையும் ஒருங்கே கொணர்ந்து பார்வை
யாளரிடம் சேர்க்கும் திறன் இக்கலையின் சிறப்பம்சமாகும்.
தனியே தமிழரிடம் மட்டுமன்றி இலங்கையில் சிங்களவரும்
விரும்பிப் பழகும் கலையாகவும், அத்துடன் மேலைத் தேயரிடம் புகழ்
89

Page 57
சிவசக்தி பரப்பிய தாகவும் காணப்படும் பரதம் எதிர்வரும் காலங்களிலும் புத்துயிர் பெற்ற புதுமைகளுடன் பரவும் என்பதில் ஐயமில்லை.
நாட்டியம் :
நாட்டியம் என்பதற்கு நட' என்பதே ஸம்ஸ்கிருத மூலச் சொல்லாகும். நட்' என்றால் சிலர் நடனம் என்றும், இன்னும் சிலர் நாடகம்' என்றும் பொருள் கொள்வர். இந்த மூலச் சொல், இந்த இரண்டு கலைகளையும் குறிக்கும். ஏனென்றால் பண்டைய பாரதத்தின் நாடகம், நடனத்தை ஒரு அங்கமாகக் கொண்டிருந்தது, நடிக நடிகையர்கள் யாவரும் வசனங் களைப் பேசுவதைத் தவிர, தாமே பாடவும், ஆடவும் வேண்டும். இசை, நடன அசைவு, வசனம் இவை மூன்றும் இசைந்து நிகழ்த்தப்பட்ட கலை தான் நாட்டியம். பரதரின் நூல் விவரிக்கும் நாட்டியம் நாடகவுருவில் அமைந்தது. இது ஒருவராலோ அல்லது பலராலோ ஆடப்படும் வெறும் நடனமன்று பலர் கூடி நடத்தப்படும் கூத்தே நாட்டியம். 'கூத்து' என்ற தமிழ்ச்சொல் நாட்டியத்தையே குறிக்கும். அதன் வடிவை கேரள நாட்டின் கூடியாட்டத்திலும், தமிழ்கத்தின் தெருக் கூத்திலும், கர்நாடகத்தின் யகூஷ்கானத்திலும் ஆந்திராவின் பாகவத மேளத்திலும் இன்றும் காணலாம். ஒவ்வொரு நடிகரும் ஒவ்வொரு பாத்திரத்தை சித்தரித்து பேசி, பாடி, ஆடி ஒரு கதையைத் தழுவி நடிப்பது நாட்டியம். பரதர் விவரிக்கும் நாட்டியத்தில் இடம் பெறாத கலையே இல்லை. இதில் இயல், இசை நாடகம் மூன்றும் இணைந்திருக்கின்றன. 'ஸங்கீதம்' என்ற சொல்லில் அடங்கியுள்ள கீதம்-(வாய்ப்பாட்டு), வாத்தியம்-கருவி இசை, நிருத்தம்நடனம்) ஆகிய மூன்றும் நாட்டியத்திற்கும் உறுப்புக்களாகும். தற்காலத்தில் வழக்கிலிருக்கும் வசன நாடகம், இசை நாடகம், நடன நாடகம் ஆகிய
மூன்றும் ஒருங்கே இணைந்த தன்மையுடைய கலைதான் "நாட்டியம்"
அபிநயம் :
கதையையும் கருத்துக்களையும் பாத்திரங்களின் குணசித்திரங்களை யும், கதையில் வரும் சூழ்நிலைகளையும் ரஸிகர்கள் புரிந்து கொண்டு மகிழுமாறு செய்வதே நாட்டியத்தின் குறிக்கோள். ரஸிகர்கள் மகிழ வேண் டும் என்றால், அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமாயின் கருத்துக்களும், உணர்ச்சிகளும் சரியான முறை
90
 

சிவசக்தி 2OO5 யில் வெளிப்படுத்தப்பட வேண்டும். கருத்துக்களை வெளிப்படுத்தும் கலைதான் அபிநயம். இது நான்கு பிரிவுகளைக் கொண்டது. உடலின் உறுப்புக்களால் வெளிப்படுத்துவது ஆங்கிக அபிநயம் சொற்களால் உணர்த்துவது வாசிக அபிநயம் உடை ஒப்பனை, காட்சி அமைப்பு ஆகிய புறப்பொருள்களால் உணர்த்துவது ஆஹார்ய அபிநயம். அகத்தின் அமைதியையும் கொந்தளிப்புகளையும் முகத்தாலும், மெய் சிலிர்த்தல் போன்ற உடலில் காணப்படும் உள்ளுணர்வின் பிரதி பலிப்பு களாலும் புலப்படுத்துவது சாத்வீக அபிநயம், பரதரின் நாட்டியம் இந்த நான்கு அபிநயங்களையும் கொண்டது.
தர்மி :
இந்த அபிநயங்கள் இரண்டு விதமாக சித்தரிக்க வாய்ப்பளிக்கின்றன. ஒன்று இயல்பான உலக வழக்கு-லோகதர்மி), மற்றொன்று, உலக இயல்பு க்கு சற்று அப்பாற்பட்டு கலை வடிவத்துக்கு முதலிடம் அளிக்கும் நாடக வழக்கு நாட்டியதர்மி, உதாரணமாக, கண்ணீர் சிந்துவதுபோல கை ஜாடைக் காட்டுவது நாட்டிய தர்மி நான்கு அபிநயங்களும், இரண்டு தர்மிகளும் வெவ்வேறு அளவில் கலைக்கப்பட்ட நிலைகளில் இன்னும் வேறு சில அம்சங்களின் சேர்க்கையினால் உருவானதே பத்துவிதமான நாட்டியங்கள். இவற்றை ரூபம் என்றும் ரூபகம் என்றும் குறிப்பிடுவர். ரூபகத்தின் கிளையாக எழுந்த நடன நாடகங்களும், இசை நாடகங்களும், உபரூபகம் என்று, பரதரின் காலத்திற்குப்பின் பெயர் பெற்றன. இவை யாவற்றிற்கும் உள்ள பொதுப் பெயர்தான் நாட்டியம். "நாட்டிய சாஸ்திரம்" நாட்டியத்தின் பல்வேறு அம்சங்களையும் விரிவாக விவரிக்கும் ஒரு கலைக்களஞ்சியமாக திகழ்கிறது.
நிருத்தம் :
நிருத்தம் என்ற சொல் அழகிய உடல் அசைவுகளைக் கொண்ட நடனக்கலையைக் குறிக்கும். உடலழகினையும், நெளிவு சுளிவுகளின் குழைவுகளையும், தாளக்கூறுகளின் விசித்திரக் கூர்மையினையும், பொறி பறக்கும் பாத ஜாலங்களையும் இசை, அதன் தாளம் இவற்றின் வல்லின மெல்லினங்களையும் உருவகப்படுத்தும் உன்னத கலை நிருத்தம், காண் பவர் மனதைக் காந்தமென ஈர்ப்பதோடு ஆடுபவர்களையும் ஆனந்தத் தில் ஆழ்த்தும் ஆற்றல் இதற்குண்டு மகிழ்ச்சியையும், மனவெழுச்சியை யும் உருவாக்கும் நிருத்தம் நாட்டியத்தின் ஒரு பெரும் பகுதியாக
91

Page 58
சிவசக்தி 2OO5 அமைந்திருந்தது. நிருத்தம் அறியாத நடிகன் பரதரின் நாட்டியத்தில் இல்லை, போர் புரிதல், தேரோட்டல் போன்ற காட்சிகள் ஆடப்பட்டு நிருத்த வடிவில் நடிக்கப்பட்டன. ஆகவே, நிருத்தம் பரதர் காலத்து நாட்டியத்தில் ஆங்கிக அபிநயத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இது தவிர, பிரத்யேக கருத்து ஒன்றும் வெளிப்படுத்தாமல் கலாரசனைக்காகவே ஆடப்ப்பட்ட நிருத்தமும் உண்டு. நாட்டியத்தின் தொடக்கத்தில் ஆராதனை நிகழ்வதை பூர்வாங்கம் என்பர். இந்த பூர்வாங்கத்தின் ஒரு விசேட நிகழ்ச்சி நிருத்தம். தேவர்களையும், அசுரர் களையும், மூதாதை யரின் ஆன்மாக்களையும் திருப்திப்படுத்த, முதலில் நிருத்தம் நிகழ்த்தப் பட்டது. ஆராதனையின் ஒரு பகுதியாக அமைந்த நிருத்தத்தின் ஆன் மீகத் தன்மையை இதனால் நன்கு அறியலாம். இது தவிர நாட்டியத்தில் சிருங்கார ரஸம் ஓங்கி நிற்கும். காட்சிகளிலும் நிருத்தம் ஒரு இன்றியமை யாத அம்சமாக இருந்தது. பரதரின் நூலை ஆராய்ந்தால் நிருத்தம், நாட்டியத்தின் ஒரு அங்கமாகத்தான் விளங்கியது என்று புலப்படும்.
நிருத்தத்தில் உடலின் எல்லா உறுப்புக்களும் அழகுற இயங்குகிறது. தலையிலிருந்து பாதம் வரை, உடலின் உறுப்புக்களை அங்கங்கள். பிரத்யாங்கங்கள், உபாங்கங்கள் என்று மூன்றாக வல்லுனர்கள் பாகுபாடு செய்துள்ளனர். உறுப்புக்கள் யாவற்றையும் தனித்தனியாகவும், மற்ற உறுப்புக்களோடு சேர்த்தும் அசைக்கப்பழகுதல் வேண்டும். இந்தப் பயிற்சி கள் ஒவ்வொன்றிற்கும் பெயர்கள் உள்ளன. அந்த அசைவுகளை, பொருத்தமான முறையில் நடனத்திலும், நாட்டியத்திலும் பொருள் படவும் உபயோகிக்கலாம். இந்த பியோகங்களையும் நாட்டிய சாஸ்திரம் போன்ற சிறந்த நூல்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன. நிருத்தம் என்பது வெறும் பாத அடவுகள் மட்டும் அல்ல. இதற்கு உடலின் எல்லா உறுப்புக்களும் நன்றாக பயிற்சி பெற்று கலை வடிவில் இயங்க வேண்டும்.
நிருத்தம் அங்க லாவண்யத்தின் பிரதிபலிப்பாக அமைய வேண்டும். அதோடன்றி துள்ளியெழும் உள்ளத்தின் மகிழ்ச்சி வெள்ளத்தின் பரிசளிப் பாக நிருத்தம் திகழ வேண்டும். மகிழ்ச்சி, பக்தி பரவசம், ஆனந்தம் ஆன்மீகம் இவற்றின் வெளித்தோற்றமாக அமைவது நிருத்தத்தின் சிறப்பாகும். நிருத்தத்திற்கு பாவம் இல்லை என்றும், ரஸம் இல்லை என்றும் சிலர் தவறாக கூறுகிறார்கள். ஆனால், உணர்வும் பாவம்), அதனால் உண்டாகும் மனநிறைவாகிய ரஸமும், நிருத்தத்திற்கு உண்டு. மனம் ஒன்றுபட்டுலயிக்காமல் ஆடப்படும் எந்த நடனமும், பாவத்தை யும், ரஸத்தையும் அளிக்க முடியுமா? மனம் லயிக்காமல் ஒருவர் நடித்தால் அது எப்படி நடிப்பாகும்? கருத்தூன்றாத படிப்பு அறிவை வளர்க்க
92
 

சிவசக்தி 92OO5
முடியுமா? மனம் லயிக்காமல் செய்யப்படும் எந்த ஒரு தொழிலும் பயனளிக்காது. நிருத்தமும் அதேபோலத்தான். மனதை நடனத்தில் செலுத்தி ஆடாவிட்டால், பொம்மை ஆடுவதுபோல் அல்லவா இருக்கும்? பரதமுனிவர் இதற்கு ஒரு அழகிய பாடலைத் தருகிறார்.
யதோ ஹஸ்தஸ் திருஷ்டி2 யதோ திருஷ்டிஸ் ததோ மனஹ யதோ மனஸ் ததோ பாவாஹ யதோ பாவஹஸ் ததோ ரஸ்ஹ
அதாவது,
கை வழி நயனம் செல்ல கண்வழி மனம் செல்ல மனம் வழி உணர்ச்சி செல்ல அதனின்று சுவை பிறக்கும்
ஆகவே, நிருத்தம் செய்பவர் யாவரும், கையோடு கண்களையும் அசைத்து, மனதை அதில் செலுத்தி, அநுபவித்து மகிழ்ந்தால் பார்ப்பதற்கு ரஸிக்கும் வண்ணம் இருக்கும்.
நிருத்தத்திற்கு இன்றியமையாத மற்றொரு அம்சம், அங்க சுத்தம்' இதைத்தான் பரதர், "ஸெளவஷ்டவம்' என்று குறிப்பிடுகிறார். அடவுகளை ஆடும்போதும், அபிநயிக்கும் போதும் இது மிகவும் அவசியம். முதுகை நன்றாக நிமிர்த்தி, தோள்களை இயற்கையாக நிறுத்தி, முழங்கைகளையும் தோள்களுக்கு நேராக வைத்து, வயிற்றை உள்ளே இழுத்து கைகளையும் மார்புக்கு ஒரு சாண் தள்ளி வைத்து இருத்தல் வேண்டும். காதுகள் இடுப்புக்கு நேராகவும் இருத்தல் சமசீர் (Symmetry) தன்மைக்கு இன்றியமையாததாகும். இவற்றைத்தான் 'ஸெளவஷ்டவம்' என்கிறார் பரதமுனி அங்க சுத்தம் என்றால், எந்த எந்த உறுப்புக்கள் எப்படி இயங்க வேண்டுமோ, அதன் முறையில் இயங்கினால், அனத சாதாரண பேச்சு வழக்கில், அங்க சுத்தம்' என்கிறோம். உதாரணமாக, அரை மண்டியில் அடவு ஆடும்பொழுது ஸெளஷ்டவத்திற்குக் கூறியவற்றுடன் முழங்கால் கள் மடிக்கப்பட்டு பாதங்கள் பக்கவாட்டில் திரும்பியிருக்க வேண்டும்.
அங்கங்கள் யாவும், துரித காலத்திலும் முறையான கோடுகளை பிரதிபலித்து இயங்குதல் அங்க சுத்தமாகும். ஆரம்ப பாடமுதல் பயிற்சியளிப்போரும், பயிற்சி பெறுவோரும் கவனிக்காவிடில் நிருத்தத்தின்
93

Page 59
சிவசக்தி 2OO5
தரம் தாழ்ந்துவிடும். முறைப்படி பயின்று மனத்தையும் செலுத்தி, ஆடப் படும் நிருத்தம் மன நிறைவை அளிக்கவல்ல தலையாய நுண்கலையாகும்.
நிருத்தியம் :
நடனமாகிய நிருத்தமும், அபிநயக் கலையால் கதையை (அல்லது கருத்துக்களை வெளிப்படுத்தும் நாட்டியமும் கலந்து திகழும் கலை நிருத்தியம். பாட்டின் பொருளுக்கேற்ப அபிநய கைளை இயக்கி வண்ணம், பாதங்களும் தாளத்திற்கேற்ப இயங்குவது இதன் இயல்பாகும். பல "நடன நாடகங்கள்" இன்று வழக்கில் தவறாக "நாட்டிய நாடகம்" என்று அழைக்கப்படுகின்றன. இவை நிருத்திய நாடகங்கள்' என்று தான் அழைக்கப்பட வேண்டும். ஏனென்றால் "நாட்டியம்" என்ற சொல்லுக்கே 'நாடகம்" என்றுதான் பொருள்.
நிருத்தத்தைப் போன்றறே, நிருத்தியமும், ஒருவராலோ, பலராலோ ஆடப்படலாம். ஒருவரே ஆடும் நிருத்தியம் இருவகைப்படும். ஒன்று. "பிருதகார்த்த" நிருத்தியம். அதாவது ஆடப்படும் ஒவ்வொரு பாடலும் வெவ்வேறு பொருளை மையமாகக் கொண்டிருத்தல், இன்று, "பரத நாட்டியம்" என்ற பெயரில் விளங்கும் சதிர்க் கச்சேரியே "பிருதகார்த்த" நிருத்தியமாகும். இரண்டாவது, 'ஏகார்த்த நிருத்தியம். இதில் காணும் ஒவ்வொரு பாடலும், ஏதேனும் ஒரு மையப்பொருளையே கொண்டு விளங்குவதாக இருக்கும். இது ஒரு கதையைத் தழுவி இருந்தாலும் இருக்கலாம், அல்லது ஒரு கருத்தை மையமாகக் கொண்டதாகவும் இருக்கலாம். நாட்டியத்தில் பல பாத்திரங்களுக்கேற்ற வெவ்வேறு விதமான உடை அணிந்து வருவது போலன்றி ஒருவரே பல பாத்திரங்களையும் ஆஹார்யத்தை மாற்றாமல் அபிநயிப்பதால், இதற்கு, 'ஏகஹார்ய நிருத்தியம் என்ற மற்றொரு பெயரும் உண்டு.
சிகர முதல எடுத்தெல்லாம் ஆதி
சு.சவிஷ்காந்த் பகவணி தெற்றே உலகி 2J
94
 

சிவசக்தி 2005
The Other Religion
T. Sriramanen A/L 2006- Maths.
Summer 1893, Vancouver: A Young Hindu Sanyasin had just landed - on his way to the parliament of religions, to be held at Chicago. He had no letter of introduction, knew no one in America, and what little money he had in his pockets, was soon robbed. The future seemed bleak indeed.
11th September 1893, Chicago. The parliament of Religions was in full session. A young man in Saffron robes stood to address them. Broad shouldered, well built, an intelligent looking, he scanned the crowd with penetrating eyes, which silenced them instantly, 'Sisters and brother of America' he began. The audience gasped...
To that dag Hinduism had been looked upon by the West and - the rest of the world, as a mere collection of rituals superstitions,
and as the Supreme manifestation of the caste system
How did this ever come to be? why had the religion - nurtured by great saints, reinforced with Vedhas, Upanishad and numerous other scriptures- ever let itself down into such chaos? This was the burning question in the mind of the Wandering Monk, as he traveled the length and bredth of India. He was not blind to the greatness of many Indian Princes They were true aristocrats and were open to noble thoughts which this Sanyasin communicated to them.
But, he also saw the dark side of India. Throughout India the curse of untouchability and the cruel innumanity, meted out to the
95

Page 60
சிவசக்தி இ005 poor by the higher caste Hindus revolted his whole being. In disgust he cried out, "No religion on earth preaches the dignity of humanity in such a lofty strain as Hinduism, yet no religion on earth Crushes down the poor and lowly in such a fashion as Hinduism'. He felt anguished to see the grandest religion of man being so misinterpreted by its own ignorant priests that Hindus were rushing out and often adopting other religions just to get a little kindness and fellow - feeling.
But the spirit of Naren was not crushed yet. His vision and wisdom, boldness and his faith in the value of our ancient heritage were beyond description. He possessed tremendous power, with the help of which, be resOived live to revive the fading glory of Hinduism. He defined religion in these famous word. Each soul is potentially divine. The goal is to manifest this divinity within by controlling nature, external and internal. Do this either by work, or worship or psychic control, or philosophy, by one or more, or all of these, and BE FREE. This is the whole of religion Doctrines, dogmas, rituals, books, temples Orforms, are but secondary details'
The core of Hinduism is the twin ideals, Renunciation and Service. But, overtime, the collective impact of invasion, corruption and selfishness of the Society, had each left its mark in the religion of the Indus Valley
The high ideals of Hinduism, was no more for the common man. It was considered as the sole property of Secret Societies sitting on the mountains of the Himalayas.
Swami Vivekananda realized the danger in this. He was convinced that religion was not to blame for people's ills and miseries. It was all because religion was not made practical. He brought out the wealth of religion from the scriptures and learned men, and broadcasted it among the Ordinary people.
Slowly but surely Hindus were waking up. as more and more began to realise the truth, Hinduism started spreading out from its cradle. Swami Vivekananda - ever the wandering monk- took it West. He wandered all over the world with his 'man-making
96


Page 61
104/5A, Sea Street, Colombo - 11 I Tel : 233263. Mobile i. O777-8781
Colombo
Seagul Droperty Developers (DVI) Ltd.
Bo APPROVED COMPANY
72. Melbo U rne Avern Ue, Colombo 04
Sri Lanka. Mobile : +94 (0777) 317075 Phone : +94 (0.112) 503266, Fax : +94(O112) 360481
Mail to vokeeson (a) onko.ccom.ik
Web: seadulonline.com
 

சிவசக்தி 2005
mission." He roared like a lion, waking up the masses. He took America by storm, carrying the message of Universal love. He preached to make man, a man of confidence, courage and Strength.
Within every religion, amidst the genuine Spiritual persons, there are many who cultivate narrow religious piety. They exploit religion and crate peacelessness in the Society. They divide under different religion banneus and engage themselves in Converting people Is there a place for conversion in real religion? No, it is just to add to their number of Community for Worldly gains. Hinduism talks only of internal conversion from Selfish Worldly life to an inner spiritual life. This was the conversion which Our Rish is and Saints and more recently Shri Ramakrishna Paramahamsa- the spiritual guru of Swami Vivekananda - Spoke
of
« .
The carving on stone pillars by Emperor Asoka reads, one Should resist the temptation to glorify One's Own religio 12 – by speaking ill of the religion of Others. By doing this he does harm to his own religion."
The message of Sri Krishna in the Bhagavad Gita and teachings of mahatma Gandhi, are all identical.
Many doctrines, many beliefs, many schools of thoughts, all lead to the salvation of man in its Own way. But it is unfortunate that there crops religious intolerences, resulting in disagreements and quarrels.
Hinduism is a commonwealth of religions. It cares not to oppose the progress of any other system. For it has no difficulty in embracing all other religions.
Hinduism preaches not TOLERANCE but ACCEPTANCE of all paths as true Yes, pure religion is always peaceful and unifying.
97

Page 62
சிவசக்தி 2OO 5
98
 
 
 
 

சிவசக்தி 2OO 5
யோகக்கலை
செ. ரிஷபன் உயிரியல் பிரிவு உயர்தரம் 2006
《 蔷 《
鬣
է:
99

Page 63
சிவசக்தி ஒ005
இறைவனது படைப்பில் மிக உயர்ந்தது மனிதப்பிறவியே ஆகும் இப்படைப்பின் மகத்துவம் பற்றியும், மேம்பாட்டிற்கும், தேவையான மார்க்கங்களும் போதனைகளும் வகுக்கப்பட்டுள்ளன. இவற்றில் சரியை, யோகம், ஞானம் என நான்கு மார்க்கங்களில் யோகக்கலைக்கு மூன்றா மிடம் யோகக்கலை இந்துக்களின் பிரிக்கமுடியாத ஒரு அங்கமாக பயிற்சி செய்யப்பட்டுள்ளது. இவற்றுக்கான சான்றுகளை நமது வேதம், புராண, இதிகாசங்களில் காணலாம். யோகமார்க்கத்தை கையாண்டு பலவித அற்புதங்களையும், சாதனைகளையும் படைத்த சான்றோர் ஏராளம். இத்தகைய யோக மார்க்கம் அட்டாங்க யோகமென அழைக்கப்படும் இமசயம், நியமம் ஆசனம், பிராணாயாமம். பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதியென என எட்டு வகையாக வகுக்கப்பட்டுள்ளது. அவை
இமயம் - புலனடக்கம், சத்தியம், ஆசையை அடக்குதல் நியமம் - சுத்தம், விரதம், இறைவனை நாடி ஒப்படைத்தல்
ஆசனம் - தூய்மையுடன் உட்கார்ந்து தியானித்தல் பிராணாயாமம் - சக்தியை ஒழுங்கமைத்தல்
பிரத்தியாகாரம் - மனக்கட்டுப்பாடு
தாரனை - மனதை ஒரு நிலைப் படுத்துதல்
தியானம் - ஒன்றைப்பற்றியே சிந்தனை செய்தல்
சமாதி - உச்ச நிலைக்கு நனவுலக நித்திரை செய்தல்
இவை எட்டுமே மனிதனை உச்ச நிலை தத்துவமான தெய்வீக சக்தி நிலைக்கு இட்டுச் செல்லும் பயிற்சி எனலாம். எனவே உடலையும், உள்ளத்தையும் பக்குவப்படுத்தும் இந்த சக்திமிகு யோகக்கலையை நாம் நமது எதிர்கால பரம்பரைக்கு எட்டும் விதத்தில் பயிற்றுவித்தலை மிக முக்கிய விடயமாக கொள்ளவேண்டும்.
இன்றைய விஞ்ஞான உலகம், கணணி அளவுகளின் மூலம் குக்கிராமமாக உலகை மாற்றம் கொண்டு வேகமாக முன்னேறினாலும் எதிர்கால பரம்பரைகள் உடலும், உள்ளமும், விகாரமாகி, சமுதாயத்திற்கு அச்சுருத்தலாக வளர்ந்து வருகிறது. இத்தகைய விகார பழக்க வழக்கங்கள் மனித நேயத்தை கொன்று மாபெரும் அபாயத்தை நமது நாகரீக உலகம் உள்வாங்கிக் கொண்டு வருகிறது. இன்று உலக சமுதாயம் நாகரீகம் என்ற
100

சிவசக்தி 2OO5
பெயரால் சமுதாய முன்னேற்றத்தை குழிதோண்டிப் புதைத்துக் கொண்டு தள்ளாடுகிறது.
நோயற்ற வாழ்வு என்ற நிலைமாறி விஷவாயு, பஞ்சம், வெள்ளம் என சூழல் மாற்றத்திற்கு உட்பட்டு நோய்களுக்கு போராடும் இயந்திரமாக மனித சமுதாயம் தள்ளாடுகிறது. ஆவற்றினால் புதிய புதிய நோய் பிறந்து மனித சமுதாயம் சீரழிந்து கொண்டிக்கின்றது. மனதை கட்டுப்படுத்தி உடல் வளர்த்த காலம் மாறி உடலின் ஆசைக்கு மனதை பறிகொடுத்து பரிதவிக் கும் மானிடம் பிழைக்க இந்துமத யோக மார்க்கமே ஒரேவழி. ஆராச்சி இன்றி. அதிக செலவு இன்றி, ஒவ்வொரு மனிதனும் உய்யவிக்கும் யோகக்கலை பாரெங்கும் பரவுமானால், சூழல்மாத சமுதாய சீரழிவு அடியோடு மாறி ஆரோக்கியமான எதிர்கால சமுதாயம் உருவாகும். அதற்குறிய ஒரேவழி நமது பாராம்பரிய யோகக்கலை LDL (SCL).
யோகக் கலையின் மூலம் உனது உடலை ஒளிவீசும் பரிசுத்த ஆலயமாக மாற்று. உனது உடலில் காணப்படும் எலும்பு, தசை சுரப்பி, நாள சுரப்பி, சுவாச ஜிரண உறுப்புக்கள் அனைத்தையும் சுத்திகரித்து சுருதி செய்து கொள்ள யோகத்தை பயில உறுதிசெய்து கொள். யோகம் குடி புகுதால் பாவம் பறந்தோடிவிடும். நோய் நொடி தாக்கவிடால் பாதுகாத்த கவசம்தான் யோகக்கலை காற்றடைத்த பையான இவ்வுடம்பை ஆண், பெண் என வித்தியாசமின்றி அனைத்து லெளதீக போக இச்சைகளுக்குள் மூழ்கி தத்தளிக்கும் இன்றைய சமுதாயத்திற்கு இருக்கும் ஒரே சஞ்சீவினி மருந்து யோகக்கலையே.
மூலாதாரத்தில் கருத்து புருமத்திவரைக்கும் தொழிபடும் வாயுக்கள் வசப்படுத்தி, பக்குவ படுத்தும் பிராணயாமம் எனும் மூச்சி பயிற்சி அற்புதமான யோகக்கலையின் ஒரு முக்கிய அங்கம். இதன் மூலம் உடல் தளர்ச்சியடையாது நோய், நொடியின்றி தீர்க்க ஆயுளைப்பெறலாம். இன்றைய அவசர உலகில் உழைப்பை மட்டுமே வேகப்படுத்தி அவசர அவசரமான உணவு உடை ஒழுக்கம் அனைத்தும் ஏனோதானோவென கடைபிடித்தற்கு இயர்க்கையை தொலைத்து தவிக்கிறது உலகம் சீர் கெட்ட இந்த சமுதாய ஒழுங்கு முறையினால் அளிவுற்று வாழும் நமது சமுதாய இழப்புக்களை சீசெய்து செம்மை படுத்தவும் குறைந்தது எமது எதிர்கால சந்ததியாவது நோயற்ற வாழ்வு, இன்ப வாழ்வு ஒரே மார்க்கமே. யோகக்கலையின் மூலம் மட்டும் ஆரோக்கியமான வாழ்க்கை இற்கையை, சூழலை காப்பாற்ற முடியும். இதன் மூலமே மீண்டும் புலனடக்கத்திற்கு, சக்தி மிகு மனித சமுதாயம் இழந்து போன வலிமை பெறமுடியும்.
101

Page 64
சிவசக்தி ୭005 ஆகவேதான் பரிசுத்தமான எதிர் காலத்திற்கு யோகக் கலையை உயிர்மூச்சென கருதி பயிலுவோமாக
இடையில்போன இந்த காலத்தில் தொலைத்த பல விடயங்களையும், பழுதுபட்டு போன பல நாடி நரம்பு, சுரப்பிளையும் மீளமைத்து சீர்படுத்தி வாழ ஆசனங்கள் பல உள்ளன. இவற்றில் சில சூரியநமஸ்காரம், பத்மா சனம், சித்தாசனம், வச்சிராசனம், தனுராசனம் ஹலாசனம, சுக்சாங்காசனம், சிரசாசனம், விபநிதகரணி என சில முக்கியமானவற்றை பயில்வது மூலம் நமது வாழ்க் கை பயணத் தை மீளமைத்து சரிசெய்யமுடியும் ஆசனமுறைகள் ஏராளமாக உள்ளன. இவற்றை தடுக்க ஆசானிடம் சென்று பயில்வது மூலம் ஏராளமான நன்மை பெறலாம். எனவேதான் எதிர்கால சந்ததியில் இவ்வாசனங்களில் முக்கிய ஒருசிலவற்றை தானும், அவரவர் வாழ்வியல், தொழில், பயிற்சி உணவு பழக்க வழக்கங்கற்கு ஏற்பவும் பயின்று நோயற்ற வாழ்வு பெற யோகக்கலை அனைவரினதும் உயர்ச்சி, உயர்ச்சி தருமென உறுதி கொள்வோமாக.
இத்தகைய அற்புத கலையினை இந்து மதம் சார்பான நிறுவனங்கள் மூலமாக மக்களுக்கு பயிற்றுவித்தல் பயன்தரக்கூடியதொரு விடயம் இது சாத்தியப்படாத நிலையில் அறநெறி பாடசாலைக் கூடாகவேனும் யோகக்கலையை சிறுவர்களுக்கு பயிற்றவிப்பது சாலச் சிறந்தது
இ. குதுண்டு வாழ்லாரே ങുഖt\} ரெல்லாம்.
அஸ்வின் 6) შვი ცხ%ათწიწ. U Guar 2H
102
 

சிவசக்தி 2OO5
தேசிய சொத்தாக பிரகடனப்படுத்தப்பட்ட விருக்கும் ஈழத்து ஈஸ்வரங்கள் அதன் மூலம் நாம் எதிர்நோக்கவுள்ள, அந்நிய ஆக்கிரமிப்புக்கள்
சூ சூரியப்பிரதாப், கணிதப்பிரிவு உயர்தரம் 2006
பண்டைக்காலம் தொட்டு சிவ பூமி என்று அழைக்கப்பட்டு வரு கின்ற எம்ஈழதேசத்தில் சிவநாமம் ஒதுகின்ற ஈழ ஈஸ்வரங்களில் எம்பெரு மான் எழுந்தருளி ஆயிரம் ஆயிரம் ஆண்டு காலமாக அடியார்களுக் கெல்லாம். அருள்பாலித்து வருகின்றார். எம்தேசத்தில் பெரும் சிறப்பு வாய்ந்த இந்த ஈஸ்வரங்கள் தெய்வீக சக்தி வாய்ந்தவை மட்டுமன்றி வரலாற்றுச் சிறப்புமிக்க அம்சங்களாகும். இத்தகைய ஈஸ்வரங்களை நாம் பாதுகாத்து இனிவரும் எம் சந்ததிகளுக்கு அச்சிறப்புக்களை எல்லாம் கொண்டு சென்று சேர்க்கும் கடமை எம்மைச் சார்ந்ததாகும். சைவம் காக்கும் சான்றோரும், ஆன்றோரும் காத்து வந்த எங்கள் சமய சொத்துக் கள் தேசிய சொத்தாக இலங்கை அரசினால் பிரகடனப்படுத்தப்படுமிடத்து எம் ஈழத்து ஈஸ்வரங்கள் அரசின் கண்காணிப்பில் பேணிப்பாதுகாக்கப் படும் என்ற கருத்து எம்மத்தியில் உண்டு. பல சந்தர்ப்பங்களில் இந்த ஈஸ்வரங்களை தேசிய சொத்தாக பிரகடணப்படுத்தப்பட வேண்டும் என எம் சமய அமைப்புக்கள் அரசிடம் கோரியிருந்தமையையும் நாம் அறிந்துள்ளோம். அதற்கேற்ப ஈழத்தின் புகழ் பெற்ற மூன்று ஈச்சரங்களான திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரம் ஆகியன தேசிய சொத்தாக பிரகடனப்படுத்தப்படவுள்ளது. இது எம் சைவத்திற்கு அரசால் கிடைத்த கெளரவம் என்று நாம் எல்லாம் பெருமைப்பட்டுக்கொண்டி ருக்கும் வேளையில், இந்த நடவடிக்கை தொடர்பாக நாம் அறியாத நம் கண்ணுக்குப் புலப்படாத பாதகமானதும், அபாய கரமானதுமான விளைவு கள் உருவாகப் போகிறது என்பது மாபெரும் உண்மையாகும்.
இம் மூன்று ஈஸ்வரங்களும் பல்லாண்டு காலம் பழமைப் பாரம் பரியமும் தனக்கென ஒரு தனித்துவமும் உடையவையாகும். தேசிய சொத்தாக பிரகடணப்படுத்தப்படுவதால் இவை பாதுகாக்கப்பட்டாலும் நாம் முன்பு பார்த்த பாரம்பரியமும், தனித்துவமும் தொடர்ந்தும் பேணப் படுமா? என்பது சந்தேகமே எம்சமயச் சொத்தை எம் சமயத்துக்கு உரிய
103

Page 65
சிவசக்தி 2OO 5 சொத்தாகவே அடுத்த சந்ததிக்கு கொண்டு சென்று சேர்க்க வேண்டியதே எமது தாள்மீகக் கடமையாகும். எவ்வாறு இத்தகைய அபாயங்கள் ஏற்படப் போகின்றன என்று ஆராயுமிடத்து ஆண்டாண்டு காலமாக எமது சைவம் எதிர் நோக்கிய பெரும் பிரச்சினையான அந்நிய ஆக்கிரமிப்பு ஒரு புதிய வியூகத்துடன் எம்மேல் படையெடுத்துள்ளது.
பாண்டிய மன்னர் காலத்தில் சமணமும், நாயக்க மன்னர் காலத்தில் மொகலாய சக்கரவர்த்திகளூடாக இஸ்லாமும், ஐரோப்பிய ஆட்சியாளர் காலத்தில் கிறிஸ்தவமுமாக ஆக்கிரமிப்புக்களை எதிர்கொண்ட எம் சைவம் இன்று பெளத்தத்தின் படையெடுப்பால் நிலை தடுமாறி நிற்கின்றது. இந் நிலை தொடரப் போகிறது என்பது எவராலும் மறுக்கமுடியாத உண்மை.
அந்த வகையில் எம்சைவத்தின் சடங்குகள் சம்பிரதாயங்களிலும் பண்பாடு கலாச்சாரத்திலும் எம் சமய முறமைகளைக் கொண்டும் முயற்சி யில் பெளத்தம் முனைப்பாக செயற்பட்டு வருகிறது. இதற்கு இலங்கை அரசும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ துணை புரிந்து வருகிறது. இதன் காரணமாக எம் சைவம் தன்பாரம்பரியத்தில் இருந்து விலகிச் செல்வதோடு, தனித்துவத்தை முழுமையாகவோ, பகுதியாகவோ இழந்தி ருக்கின்றது. இதற்கு நம் கண்முன் இருக்கும் எளிய உதாரணம் எம்சமய சொத்தாக முன்பொரு காலத்திலும் .இன்று தனித்துவத்தை இழந்து அந்நியர் ஆதிக்கம் மேலோங்கிக் காணப்பட்டும் வருகின்ற கதிர்காமக் கந்தன் ஆலயமாகும். "கதிர்காமக் கந்தன்" என்னும் பெயர் இன்று "ஹத்தர கம தெய்யோ" ஆகிவிட்ட இந்த ஒரு மாற்றமே போதும். எம் சமயம் இன்று எதிர்நோக்கியுள்ள பெரும்பிரச்சனைக்கு எடுத்துக் காட்டாக சொல் வதற்கு,
இன்று கதிர்காமத்தில் நாள்தோறும் அரங்கேறும் நடவடிக்கைகள் யாவும் உண்மையான ஒரு சைவனின் உள்ளத்தை கொதிக்க வைக்கும். நெஞ்சம் துடிக்க வைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. பெளத்த சமய தலங்களுக்கு பூசைப் பொருட்களைக் கொண்டு செல்வதைப்போலவே கதிர்காமக் கந்தனுக்கும் பூசைப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்ற அவல நிலை இந்த அந்நியர் ஆதிக்கத் தாலேயே ஏற்பட்டுள்ளது. இதுவரை காலமும் நறுமணம் மிக்க மலர்களின் மூலம் இறைவன் கழலடிக்கு உள்ளக் கமலத்தையும் நாட்ட விழி நெய்தலையும், கூப்பிய கை காந்தளையும் கொண்டு பூஜித்து வந்த எம் சைவ அடியாள்கள் வரலாற்றில் முதன் முறையாக பிளாஸ்ரிக் பூமாலை களை இறைவனுக்கு அணி வகுத்து எம்மை, எம் சமயத்தை நாதே கொச்சைப்படுத்தி வந்திருக்கிறோம். அந்நியனின் ஆதிக்கத்துக்கு ஒரு
104

சிவசக்தி 2005
வகையில் நாமும் துணை போயிருக்கின்றோம். இதைவிட மிகவும் நகைப்புக்கும் நாமெல்லாம் நானி வெட்கி நிற்கும் ஒரு சம்பவம். ஒரு தடவை அங்கு சென்றிருந்த பொழுது கந்தனின் தேவஸ்தானத்திற்குச் செல்லும் வழியில் வரையப்பட்டுள்ள முருகன் ஓவியங்களில் ஒரு ஓவியத் தில் எம்பெருமான் முருகனுக்கு கெளதம புத்தரைப்போல் செவியிரண்டும் நீண்டிருப்பதைக் கண்டு நெஞ்சு கொதித்தது.
இத்தகைய நிலையே நாளையும் எம் ஈஸ்வரங்களுக்கும் ஏற்படப் போகின்றது. தேசிய சொத்தாக பிரகடனப்படுத்தப்படாத இந்நிலை யிலேயே திருக்கோணேஸ்வரத்தில் இராணுவம் முகாமிட்டு இருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். கோணேஸ்வர ஆலயத்துக்குள் செல்பவர் 56Ö)GT சோதனையிட்டு அடையாள அட்டைகளை சோதனை சாவடியில் பணயம் வைத்து ஆலயத்திற்குச் சென்று ஆண்டவனைத் தரிசிக்க வேண்டியுள்ளது. மேலும் கோணேசர் சந்நிதிக்குப் போகும் வழியில் இராணுவ வீரர்கள் பயிற்சி பெறும் மைதானங்கள், ஆயுதக் கிடங்குகள், ஆயுதம் தாங்கும் கனரக வாகனங்கள் ஆங்காங்கே "அபாயம்" என்று எழுதப்பட்ட பலகைகள் என பக்தர்களின் பக்தி உணர்வை மீறி பதைபதைக்க வைக்கிறது.
பார்கும் இடமெங்கும் ஒரு நீக்கமற நிறைந்த பரிபூரண ஆனந்தமே.
என்று போற்றப்படும் இறைவனை தரிசிக்கும் வழியில் இராணுவம் - - - - - எம் சைவத்திற்கு வந்திருக்கின்ற வேதனைகளும், சோதனைகளும் தொடர்ந்து கொண்டே இருக்குமோ என்ற அச்சத்துடனான கேள்விக்குறி எம்மனதில் எழாமலில்லை. இதே போல இராணுவ நடமாட்டம் நிறைந்த பிரதேசமாக திருக்கேதீஸ்வர ஆலய பிரதேசம் விளங்கியமையையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். மேலும் மேற்கூறிய மூன்று ஆலயங்களும் வடக்குக் கிழக்குப் பிரதேசத்தில் காணப்படுபவை ஆகும். அவற்றை தேசிய சொத்தாக்குவதன் மூலம் இராணுவ ஆக்கிரமிப்பையும், அந்நிய குடியேற்றங்களையும் அந்தப்பிரதேசங்களில் ஏற்படுத்தும் ஒரு சந்தர்ப் பத்தை உருவாக்க சில சக்திகள் முனைகின்றன. சமய நடவடிக்கை களிலும் அரசியல் நோக்குடன் காய் நகர்த்தும் ஒரு சிலரின் இந்தத் திட்டத்தின் விளைவுகளை அறிந்தும் அறியாமலும் பலர் வரவேற்றுள்ளனர். ஆகவே இந்த பாதகமான நிலையை தடுப்பதற்கு நாம் அனைவரும் புறப்பட வேண்டும். இதுவரை காலமும் நாம் எதிர்கொண்ட ஆக்கிர மிப்புக்களைப் போல இதையும் வளர விடாது வேறோடு அறுக்க வேண்டும். தேசிய சொத்தாக்குவதன் மூலம் பாரம்பரியம் மிக்க எங்கள்
105

Page 66
சிவசக்தி 2OO6 ஆலயங்கள் சுற்றுலா மையங்களாக மாறும் அபாயத்தையும் அந்நிய ஆக்கிரமிப்புக்களால் தனித்தன்மையை இழக்கும் பாதகத்தையும் மாற்று வதற்கு இனியாவது நாம் சிந்திப்போம். இத்தகைய நடவடிக்கைகளுக்கு துணைபோகும் நிலையைத் தவிர்த்து நாம் விழிப்புடன் வீறுநடை போடுவோம். எம் சைவத்தின் தன்மையையும், வன்மையையும், தொன்மை யையும் இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டு காலம் போற்றுவோம். பறைசாற்றுவோம்.
リの5 *-p 5国のL」のou
529 pp(9ණ් சு.வித்தியாகர்
ஸ்ரீபின் நிற்க அதற்குத் தக. :
106
 

சிவசக்தி 2OO 5
கற்றது கைம்மண்ணளவு
அ. விசாகன் உயர்தரம் - 2006 கணிதப் பிரிவு
எனக்கு எல்லாம் தெரியும். என்னால் எதுவும் செய்ய முடியும். ஒருவரும் எனக்குப் படிப்பிக்கத் தேவையில்லை, என்று இறுமாப்புக் கொள்வோரையும், குறித்த ஒரு வேலையைத் தவிர வேறு யாராலுமே செய்ய முடியாது என்று தற்பெருமை கொள்வொரையும் நாம் நாளாந்த வாழ்க்கையில் கண்டு கேட்டும் வருகின்றோம். பெரும்பாலும் ஓரளவு படித்த பெரியார்கள் மத்தியிலேயே இப்படியான ஓர் ஆணவ, அகம்பாவ அல்லது கர்வப் போாக்கு இருப்பதைக் காணமுடிகின்றது.
இன்று பெரும்பாலான மக்கள் கல்வியறிவிற் சிறந்து விளங்குகின்றார்
கள். அந்தளவிற்கு கல்வி வளர்ச்சி அமைந்துள்ளது. இருப்பினும் படித்தவர்கள் எல்லோரும் பண்புடையவர்களாக அன்புடையவர்களாக,
அடுத்திருப்பவனின் துன்பத்தைப் புரிந்து கொள்ளக் கூடியவர்களாக இருக்கின்றார்களா என்றால் நிச்சயமாக இல்லை என்றே பதில் கூறலாம். இருப்பினும் படித்தவர்களில் சிலரே பண்புடையவர்களாக, அன்புடைய வர்களாக, மனிதப் பண்புகளோடு வாழ்ந்து வருவதை அறிவோம். இப்படியானவர்களாலேயே இவ்வுலகம் வாழ்கின்றதெனலாம். இதை மிகவும் சிற்ப்பாகத் தனது குறளிலே குறிப்பிடுகின்றார் தெய்வப் புலவர் திருவள்ளுவர்.
“பண்புஉடையார்ப் பட்டுஉண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்” -
கடலொன்றைக் கடப்பதற்காகப் புலவர் ஒருவர் படகில் செல் கின்றார். துடுப்பான இளைஞன் ஒருவன் படகை செலுத்துகின்றான். புலவர் படகோட்டிப் பையனோடு கதை தொடுக்கிறார். "உன் அப்பா படித்தவரா? உன் அம்மா படித்தவரா? நீ படித்திருக்கிறாயா?.” என்று கேட்க பையன் எல்லாவற்றிற்கும் இல்லை என்றே பதில் கூறுகிறான். பதிலுக்குப் புலவர் “நீ உன் வாழ்க்கையின் காற்பங்கை, அரைப்பங்கை,
107

Page 67
சிவசக்தி 92ᏅᏅᏋ முக்காற்பங்கை இழந்துவிட்டாய்” என்று கவலை தெரிவிக்கின்றார். படகு நடுக்கடலை அடைகின்றது. எதிர்பாராத விதமாய் கடல் கொந்தளிக்க ஆரம்பிக்கின்றது. படகோட்டி தனது திறமை முழுவதையும் பாவித்துப் படகைப் பாதுகாப்பாகக் கரைசேர்க்க முயல்கிறான். கொந்தளிக்கும் கடலுக் குப் படகுபியாகப் போகும் தவறுவாயில் படகோட்டி புலவரிடம் கேட்கிறான். “ ஐயா புலவரே உங்களுக்கு நீந்தத் தெரியுமா? என்று கேட்க ”தெரியாதே’ என்று பதில் வருகிறது புலவரிடமிருந்து. அப்படியாயின் புலவரே நீங்கள் வாழ்க்கை முழுவதையும் இழந்து விட்டீர்கள் என்று கவலைப்பட்டான். படகோடி
அவல். பொங்கல், மோதகம் ஒவ்வொருவருக்கும் தரப்படுகின்றது. இம்மூன்று பண்டங்களிலும் எது சிறந்தது என்றால் "மோதகம் தான் சிறந்தது” என்று கூறி நியாயப்படுத்த முடியுமா? ஒருவருக்கு மோதகம் சிறந்ததாக இருக்கையில் வேறொருவருக்குப் பொங்கல் சிறந்ததாகத் தெரியும். அதேநேரம் இன்னொருவருக்கும் அவல் சிறந்ததாக இருக்கும். இப்படி வேறுபாடுகள் இருக்கையில் பொங்கல்தான் சிறந்தது என்று ஒருவர் அடித்து வாதிடுவாரானால் அவரை எப்படிக் கூறுவது. அதே மனிதரிடம் இனிப்பு எப்படியிருக்கும் என்று கேட்டால் அதற்கே அவரால் பதில் கூறமுடியாது. இப்படியான விடயங்களில் ஒருவர் தான் குறிப்பிடுவதுதான் சரி என்று வாதிட முடியாது.
புலவர்கள் கூடியிருந்த அரண்மனையிலே சோழமன்னன் கம்பரிடம் இவ்வுலக இன்பங்களில் மிகச் சிறந்தது எது?' என்று வினவினவினான். அதற்குக் கம்பர் அளித்த பதில் பிழையானது எனக் கூறி தனது கருத்தைப் பாடல் மூலம் எடுத்துரைத்தார் ஒளவையார். இதனால் அழுக்காறுற்ற கம்பர் ஒரு நாள் ஒரு காலடி நாவிலைப் பந்தலடி என்பதை பொருள் யாதெனக் கேட்டார். கம்பர் கேட்டதில் அடி' என்ற இழிவான சொல்லுக்கு பதிலடி கொடுப்பது போல் 'அடா எனும் சொல் வருமாறு ஒரு செயுளமைத்து விடை பகர்ந்தார் ஒளவையார்.
புலவர்களிடையே ஏற்றத் தாழ்வுகள், செருக்கு இருந்ததை இலக் கியங்கள் மூலம் அறிகின்றோம். சோழ மன்னன் குலோத்துங்கனுடைய அவைப் புலவராக ஒட்டக் கூத்தர் இருந்தார். ஒட்டக் கூத்தர் கல்விச் செருக்கினால் ஏனைய புலவர்களை மதிப்பதில்லை ஒரு நாள் புகழேந்தி யுடன் ஒட்டக் கூத்தரும் ஒளவையாரிடம் செல்ல நேர்ந்த போது ஒளவை யார் புகழேந்திக்கு மட்டும் மரியாதை செய்தார். இதனால் வருத்தமடைந்த ஒட்டக் கூத்தர் அரசனிடம் சென்று ஒளவையார் தன்னை அவமதித்த தாகக் கூறினார். அதற்கு ஒளவையார் அவ்விரு புலவர்களுக்குள் உள்ள
108
 

சிவசக்தி 2OO 5
தாரதம்மியத்தை நோக்கியே அவ்வாறு செய்ததாகக் கூறி அதை நிறுவியும்
காட்டினார். ஓரடியில் மூன்றுமதி வரும்படி ஒரு பாட்டுப் பாடுக" என்றார்.
ஒட்டக் கூத்தர் பாடலில் இரண்டு மதியே காணப்பட்டது. ஆனால் புகழேந்தியின் பாடலில் மூன்று பிறைகள் காணப்பட்டன.
இதைக் கவனித்த ஒளவையார் ஒட்டக் கூத்தரின் செருக்கை அடக்க ஒட்டா ஒரு மதிகெட்டாய்' என்றார். ஒளவையாரும் செருக்கினாலா ஒட்டக் கூத்தருக்குமரியாதை செய்யாது விட்டார் உன்றொரு கேள்வி எழலாம். உண்மையில் ஒளவையாரிடம் அப்படியான செருக்கிருக்கவில்லை. மாறா கப் புலவர்களிடம் இருந்த கல்விச் செருக்கை ஒழித்து நல்வழிப்படுத்தும் பெருந் தன்மையே ஒளவையாரிடம் காணப்பட்டது. அத்தோடு நிற்காது எல்லாம்கற்ற சகலகலா வல்லவர்கள் என தங்களுக்குள் செருக்குற்றிருக் கும் புலவர்களுக்கு அவர்கள் செருக்குத் தவறானது என்பதை உணர்த்த கலைமகளை உதாரணங் காட்டி ஒரு பாயுள்ளார் ஒளவையார்.
கற்றதுகைம் மண்ணளவு கல்லா துலகளவென் றுற்ற கலைமடந்தை யோதுகிறாள். மொத்த வெறும்பந்தயம்கூற வேண்டாம் புலவீர் எறும்புந்தன் கையாலெண் சாண்
மேற்படி பாடல் மூலம் கலைமகளே புத்தகமும் கையுமாகப் படித்துக் கொண்டிருப்பதைச் சுட்டிக் காட்டி கல்விக்கு எல்லையில்லை என்பதைக் தெளிவுபடுத்துகின்றார்.
இவ்வாறு புகளும் பெருமையும் பெற்ற ஒளவப் பாட்டியே ஒரு மாடு மேய்க்கும் சிறுவனிடம் தோற்று வெட்கமுற்ற ஒரு சம்பவமும் உண்டு. வெய்யில் அதிகமாக உள்ள ஒரு நாள் ஒளவையார் காட்டு மார்க்கமாகப் போனார். அவ்வேளை அங்கு நன்கு பழுத்து நின்ற நாவல் மரத்தைக் கண்டு அதன் நிகழலிற் சென்று நின்றார். மரத்தில் ஒரு மாடுமேய்க்கும் சிறுவன் நிற்பதைக் கண்ட ஒளவைப்பாட்டி தனக்குச் சில நாவல் பழங்களைப் பறித்து தரும்கபடி அப்பையனிடம் கேட்டார். பாட்டி உனக்குச் சுட்ட பழம் வேண்டுமா என்று கேட்டான். பையன். வேடிக்கையாகவே அப்பையன் பேசுகிறான் என நினைத்து எங்கே சுடுகிற பழங்கள் போடு என்றார். பையன் மரக்கிளையொன்றைப் பிடித்துப் பலமாக அசைத்தான். பழங்கள் மணல்மீது விழுந்து அவற்றில் மணல் ஒட்டிக் கொண்டது. ஒளவைப்பாட்டி அட்டழங்களை எடுத்து மணல் போக வாயால் ஊதிச் சாப்பிட்டார். அப்போ அப்பையன், 'பாட்டி ஊதுகின்றாயே பழங்கள் சுடுகின்றனவா? என வினவினான். சுடுகிற பழம், சுடாத பழம் என்று அப்பையன் கேட்டதன் கருத்தைப் புரிந்து கொண்ட
109

Page 68
சிவசக்தி 2OO 5 ஒளவையார் வெட்கமடைந்தார். சீ போயும் போயும் ஒரு சிறு மாடு மேய்க்கும் பையன் என்னை வென்று விட்டானே என்று வருந்திப் பாடிய பாடல் இதுவாகும்.
சருங்காலிக் கட்டைக்கு நானாக் கோடாரி இருங்கதலித் தண்டுக்கு நாணும்-பெருங்கானில் காரெருமை மேய்க்கின்ற காளைக்கே நான் தோற்றேனர் ஈரிரவுந் துஞ்சாதென்ன கண்.
இப்பாடல் மூலம் ஒளவைப் பாட்டி தான் தோல்வியடைந்ததையும் அதனால் தூக்கம் எப்படித் தனக்கு வரும் என்று கேள்வி எழுப்புவதை யும் காணலாம். எனவே மேற்குறிப்பிட்ட சில சம்பவங்கள் மூலம் எவருமே எல்லாம் கற்றவரென்றில்லை என்பதையும், அப்படி எண்ணி னால் அதனால் ஆபத்து என்பதையும் உணரலாம்.
110
 

சிவசக்தி 2OO5 மானிட வாழ்வில் பிரார்த்தனை தரும் பேராற்றல்
ம. உமேசன் கணிதப் பிரிவு 2007
உண்மையான பிரார்த்தனைகள் முறையீடுகள் எல்லாம் இறைவ னால் செவிசாய்க்கப்பட்டு நிறை வேற்றப்படுகின்றன என்கிறார் பூரீ அரவிந்த அன்னை.
உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் இலட்சியங்களும், பிரச்சினைகளும் உள்ளன. இலட்சியங்களை அடையவும் பிரச்சினைகளை தீர்க்கவும் தன்னாலான முயற்சிகளை மேற்கொள்கிறான் தன் சுற்றத்தாரை யும் புறச்சூழ் நிலைகளையும் பயன்படுத்தி முயற்சிக்கிறான். எனினும் பலசமயங்களில் வெற்றி பெறுமா என்ற சந்தேகம் எழும்பி விடுகிறது. இந்நிலையில் தன்னைப்படைத்த இறைவனிடம் முழுமையாக சரணடை கிறான்.
இறைவன் மீது முழு நம்பிக்கை கொண்டு வாழ்க்கையை நடத்திச் செல்லப் பிரார்த்தனையில் ஈடுபடும்போது வாழ்வில் பல அற்புதங்கள் நிகழ்கின்றன. நினைத்தது நடைபெறுகிறது. தீர்க்கமுடியாத பிரச்சினைகள் தீர்க்கப்படுகின்றன குணப்படுத்தமுடியாத நோய்கள் கட்டுப்படுத்தப் படுகின்றன.
மனிதன் இறைவனிடம் தன் பிரச்சினைகள் மற்றும் ஆசைகளைச் சொல்கிறான். அவன் இறைவனிடம் சொல்லியவிதம் அவனது மனத் தூய்மை ஆகியவற்றிற்கேற்ப்ப இறைவன் அருள் பாலிக்கின்றான். இறைவனோடு தொடர்பு கொள்ளமிக இலகுவான முறை பிரார்த்தனை ஆகும்.
இறைவனை பிரார்த்திக்கும் ஒவ்வொரு மனிதனும் உடல் உள ரீதியாக ஆரோக்கியம் உள்ளவனாய் உருவாகிறான். ஒருவரது உடலும் உள்ளமும் தூய்மையாய் இருந்தால் அவன் செய்யும் எந்தவொரு செயலிலும் நேர்மையும் உண்மையும் சுடாவிட்டு பிரகாசிக்கும் எப்போதும்
111

Page 69
சிவசக்தி இ005 பிரார்த்தனை செய்து கொண்டே செயல்களில் ஆர்வத்துடன் ஈடுபட்டால் ஒருமுகச்சிந்தனை கடின உழைப்பு முதலியவை நம் மாபெரும் சொத்துக் களாய் அமையும்.
ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டும் இறையன்புடன் பிரார்த்தனை செய்தாலே அக்குடும்பத்தில் உள்ள அனைவரையும் அது அமைதி பெறச் செய்யும். இக்காலத்தில் கூட்டுப் பிரார்த்தனை கூட்டுத் தியானம் என்பன முக்கிய இடத்தை பெறுகிறது இலை மக்களிடையே அன்பையும் சமாதானத்தையும் ஏற்படுத்துகின்றன. ஆயிரக் கணக்கான மக்கள் ஒரேயிடத்தில் அமர்ந்து பிரார்த்திக்கும் போது அப்பிரார்த்தனை சக்தி மிக்கதாய் இறைவன் காதுகளில் ஓங்கி ஒலிக்கிறது. இதனால் தீர்க்க முடியாத பல பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடுகிறது.
"நம் வாழ்வு முழுவதும் தெய்வத்திடம் செலுத்தப்படும் பிரார்த்தனை யாய் அமைய வேண்டும்" என்கிறார் பூரீ அரவிந்த அன்னை
பிரார்த்தனை என்பது இறைஞ்சுவது அல்ல பக்தியுடன் இறை வனோடு கொள்ளும் உரையாடல் ஆகும். பிரார்த்தனை உதட்டால் செய்யப்படுவது அன்று முழுக்க முழுக்க இதயத்தால் செய்யப்பட வேண்டும். முழுப்பொறுப்பையும் இறைவன் காலடியில் வைத்து விட்டு மிகுந்த நம்பிக்கையுடன் பிரார்த்திக்க வேண்டும் இறைவன் இருக்கிறார் அவருடம் நம் பிரச்சினையை இறக்கி வைத்துவிட்டோம் என்ற தெளி வுடன் நாம் நமது அன்றாட கடமைகளில் ஈடுபடலாம்.
எல்லா உறவுகளும் மாறக்கூடியவை ஆனால் இறைவனிடம் நாம் கொண்ட அன்பு மட்டும் மாறாது அதனால் பிரார்த்தனை செய்து இறைவனிடம் இருந்து மாபெரும் உதவிகளைப் பெற்றவர்கள் எப்போதும் பணிவுள்ளவர்களாய் இருக்கின்றனர்.
பிரார்த்தனையில் ஈடுபடும் நேரமெல்லாம் இறைவனுடன் நாம் ஐக்கியமாகின்றோம். அப்போதெல்லாம் அவன் பேராற்றல், அருள் நம்மில்
இரண்டற கலந்து விடுகிறது. இதனால் நமது ஆன்மா மலர்கிறது. ஆகவே பிரார்த்தனை செய்து வளமுடன் வாழ்ந்து பேராற்றலைப் பெறுவோம்.
BPрѣсти லாய பயனென் கொல வாறிெவன்
ஹெகிசைன் וי לה ED pr67 リTé弟 ST 60f0ঠা • ##၅:#ခေါ် திவாகர்
112


Page 70

சிவசக்தி 2005
நவக்கிரக வேடித்திரங்களின் தலைமைக் கோயில்
சி. துவாரகன்
11R
இப்பரந்த உலகில் சகல உயிர்களுக்கும் ஆதாராமாக இருக்கும் சக்தி ஒன்று உண்டென்றால் அது கதிரவன் கிரணங்களே. சிவபெரு மானின் அருள் ஒளி சூரியனிடம் அமைந்து நின்று உயிரினங்கட்கு உதவு கின்றது. இப்பிரபஞ்சத்தில் உயிர் அணுக்கள் இயங்கவேண்டும் என்றால் அது கதிரவனின் காச்சல் இன்றி இயலாது. இந்த மாபெரும் சக்தியை தெய்வீகப் பதவிக்கு உயர்த்தி உலகெங்கும் அதை தெய்வமாகக் கொண் டாடினார்கள் என்றால் அதில் வியப்பு ஒன்றும் இல்லை.
தொன்று தொட்டே சூரிய வழிபாடு பல நாடுகளிலும் பரவி யுள்ளதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. கிரேக்க நாட்டினர் ஆதவனை அப்பலோ என்னும் ரோமானியர்கள் ஹைபீரியன்' என்றும் போற்றி வழிபட்டார்கள் என சரித்திர ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். தென் அமெரிக்காவின் "பெரு'விலுள்ள இன்காஸ்' எனும் பழங்குடியினர் சூரியனைத் தமது தெய்வமாகக கொண்டிருந்தனர். சுமார் 3500 வருடங்கட்கு முன்னர் எகிப்தை ஆண்ட பாரோ வம்சத்தினர் தம்மை சூரியவம்சத்தினர் என்றே கருதினர்.
இரண்டாயிரம் வருடங்கட்கு முன்பே தமிழ்நாட்டில் சூரிய வழிபாடு இருந்ததை தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் அறியத் தரு கின்றன. சூரியனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபட்ட சமயம் செளரம் ஆகும். கணித வகையில் சூரியனைத் தலைமையாக வைத்துக் கணிக்கும் முறைக்குச் சூரியசித்தாந்தம் என்ற பெயரும், அவ்வகை அளவுக்குச் செளரமானம் என்ற பெயரும் வழங்குகின்றன. ரிக்வேதம் மூன்று வித அக்கினிகளில் ஒருவனாகச் சூரியனை வர்ணிக்கின்றது. சூரியனுடைய சஞ்சாரம் உத்தராயணம் வடக்கு நோக்கிச் செல்லும், தட்சணாயணம் (தெற்கு நோக்கிச் செல்லும்) என வழங்கப்படும். தைமாதம் முதலாம் திகதி சூரியன் வடக்கு நோக்கிச் சஞ்சரிக்க ஆரம்பிக்கும் நாள்
113

Page 71
சிவசக்தி 2OO6 இந்நாள் மகரசங்கராந்தி எனப்படும் அந்நாளில் தைப்பொங்கல் பெருவிழா கொண்டாடப்படுகிறது. வயல்களில் அறுவடை முடிந்து களஞ்சியங்கள் நிரம்பி வழியும்போது தமிழக மக்களின் உள்ளமும் உவகையினால் பொங்குகிறது. கதிரவன் ஒளியில் புதுப்பானையில் பொங்கலிட்டு கதிரவன் வழிபாடு செய்வது மரபு. எனினும் சூரியனுக்கு ஆலயங்கள் ஆபூர் வமாகவே காணப்படுகின்றன. வடநாட்டில் கொனார்க்' எனும் கோயில் பிரசித்தமானது. தென்னகத்தில், இந்தியாவிலேயே வேறெங்கும் காணப்படாத பல அரிய தனிச்சிறப்புக்கள் நிரம்பியுள்ள சூரியனார் கோயில்
இருக்கிறது.
கும்பகோணத்திலிருந்து 15 கி. மீ தூரத்தில், காவிரியின் வாகரையில் சூரியனார்கோயில் எனும் நவக்கிரகத்தலமும் அதன் அருகில் திருமங் கலங்குடி எனும் பாடல் பெற்ற திருத்தலமும் உள்ளன. இக்கோயில் கி. பி 14ல் முதலாம் குலோத்துங்க சோழனால் சூரிய மண்டலத்தை மையமாக வைத்து, வான சாஸ்திரத்தை அடிப்படையாகவும் கொண்டு கட்டப்பட்டது. அக் காலத்தில் இது 'குலோத்துங்க சோழ மார்த் தாண்டாலயம்' என வழங்கிற்று. கொனார்க் கோயில் இதற்கு இரு நூற்றாண்டுகள் கழித்தே கட்டப்பட்டது. அதை முதலாம் நரசிம்ம சோடகங் கன் கட்டினான். இவனும் தென்னாட்டுச் சோழ மரபைச் சார்ந்தவனே என்பது வரலாற்றா சிரியர் கருத்து.
சூரியனார் கோயில் சூரியனுக்குரிய தலமாகும் அதோடுகூட ஒன்பது நவக்கிரங்களுக்கும் இங்கே தனிக்கோயில்கள் இருப்பதால் இது நவக்கிர கத்தலம்' எனப்படுகிறது. கோயிலின் மூலவர் சூரிய பகவானே. இங்கு நடக்கும் வழிபாடுகள், விழாக்கள் எல்லாம் அவருக்கே பிரதான மூர்த்தி யைச் சுற்றி மற்ற கிரகங்கள் பரிவார தேவதைகளாக எழுந்தருளியிருப்பது இத்தலத்தின் சிறப்பாகும். சூரியனார் கோயில் கருங்கல்லால் கட்டப்பட்டது. வானமண்டலத்தின் 360 டிகிரி வட்டத்தைக் கணக்கிட்டு மையத்தில் சூரியனையும் சுற்றுவட்டத்தில் அந்தந்தக் கணக்கின்படியே மற்றக் கிரகங்கங்களையும் அமைத்துள்ளார்கள். ஆண்டுக்கு இரண்டு முறை மும்மூன்று நாட்களுக்குச் சூரியனுடைய கதிர்கள் ஒரு நுழைவாயில் வழியாக உள்ளே வந்து சூரியமூர்த்தியின் பாதத்திலே விழுகின்றது.
சூரியதீர்த்தம்' எனும் திருக்குளம் ஆலய நுழைவாயிலில் காணப் படுகின்றது. சூரியபகவான் சந்நிதிக்கு முன்னர் பூரீவிசுவநாதர், விசாலாட்சி யன்னை சந்நிதி உள்ளது. கருவறையில் வட்டமான பிரபையுடன் சிவசூரியநாராயணதேவரும், உஷா பிரதியுஷா தேவியரும் காட்சி தருகிறார்கள் எதிரே தேவகுருவான வியாழபகவான் சூரியபகவானின்
114

சிவசக்தி 2OO5
சந்நிதியை நோக்கியவாறு அவரது உக்கிரத்தைத் தணித்துக் கொண்டு எழுந்தருளியுள்ளார். சூரியனுடைய வாகனமாகிய 'சப்தாச்டவம்' என்ற குதிரை சந்நிதிக்கு நேரே நிற்கிறது கோயில் விமானம் ஏழு குதிரைகள் இழுப்பது போன்ற அமைப்பிலுள்ளது. இங்குள்ள உற்சவ விக்கிரகங்கள் மிக அழகானவை. சூரியமூர்த்தி தம் இரு கரங்களிலும் தாமரையை ஏந்தி வட்ட வடிவமான பிரபையுடன் அழகுச் சுடராக நிற்கின்றார். கோயி லிலுள்ள அஸ்த்ர தேவர் பிம்பத்தில் சூரிய பகவானே காணப்படுகிறான்.
சிற்பச் சிறப்பும், வான மண்டலகோள்களின் நுட்பக்கணித இயல்பும், வழிபாட்டு நெறிமுறைகளும் ஒருங்கிணைந்த இக்கோயிலில் பல வர லாற்றுச் சிறப்புமிக்க கல்வெட்டுக்கள் உள்ளன. சைவத்தை வளர்க்கும் சிறப்பும் சீரும் மிக்க திருமடம் இப்பகுதியில் உள்ளன. ஏழரையாண்டுச் சனி, அட்டமத்துச் சனி, ஜென்மச் சனி உள்ளவர்களும் நவக்கிரக தோஷம் உள்ளவர்களும் இங்கு வந்து தங்கி, உபவாசம் இருந்து, தீர்த்தங்களில் நீராடி சூரிய நாராயண தேவரையும் உஷா பிரத்யுஷா தேவியாரையும் வணங்கி, நவகோள்களையும் முறைப்படி வழிபாடு செய்யின் தோஷம் நீங்கப் பெறுவர் என நம்பப்படுகின்றது. நவக்கிரகசாந்தி செய்வதற்கும். கிரகப் பெயர்ச்சிகளின் போது வழிபாடு செய்யும் மக்கள் திரள் திரளாக இங்கே வருகை தருகின்றனர். சந்தர்ப்பம் கிட்டும்போது நீங்களும் இங்கே
கர தேவ எடுத்தெல்லா ஆதி R, சிவவேந்தன்
リcm リga _。 2H

Page 72
சிவசக்தி 2005
இந்துமதம். அதுவே முத்து மதம்.
Prana Van
10 Q
எண்ணற்ற மதங்கள் உலகிலே உள்ளன. தொன்மையான மதங்கள் பல இன்று இல்லவே இல்லை. அன்றிருந்த கிரேக்க நாகரிகம். ரோம நாகரிகம் எல்லாமே இயற்கையால் அழிந்துவிட்டன. இந்து மதமும் அதன்றன் சிந்துவெளிநாகரிகமுமே அன்று முதல் இன்றுவரை அழியாது வந்துள்ளன. காலத்தால் முற்பட்ட இந்துமதமானது நிலையானது பரந்துகாணப்படும் மதங்கள் இன்றைய மதங்கள் ஆனால் இந்துமதம் ஆழமானது. நிலாவரைக் கிணறு போல ஆழம் காணமுடியாது ஒன்று. இந்துமக்களின் கலாச்சராமும் ஆழ்ந்த உன்னத கருத்துகளைக் கொண்டது. அந்நிய ஆக்கிரமிப்புகளின் போது எமது மதக்கருத்துக்கள் வெறுமனே மூடநம்பிக்கைகள் என்று கூறப்பட்டது. ஆனால் இன்றைய உலகு விஞ்ஞானபூர்வமாக அதை ஏற்றுக்கொண்டுவிட்டது ஒரு இந்துவானவன் விடியற்காலையில் எழுந்து குளித்து இறைதரிசனத்தின் பின் விபூதி தரித்து சந்தணம் இடுகிறான். திருநீறு ஒரு தொற்று நீக்கி என்பது உலகம் அறிந்ததே இதனால் நெற்றியில் உள்ள கிருமிகளெல்லாம் அழிகின்றன நெற்றியில் சந்தணம் இறுகிறான் சந்தணம் ஒரு குளிர்த்தி நெற்றியில் சந்தணம் இடும் இடத்திலே நரம்பு முடிச்சுகள் காணப்படுகின்றன சந்தணம் இடுவதால் அந்த இடத்தில் உள்ள வெம்மை நீங்குகிறது இதுவே உண்மை இத்தகு வழக்ங்கள் மட்டுமே இந்துமதத்தின் ஆழத்தைப் புலப்படுத்துகிறது. மேலும் "வடக்கே தலைவைத்துப் படுக்கக்கூடாது" என்பது இந்துக்கிளிடையே வழங்கிவரும் மற்றொரு
116
 

சிவசக்தி 2OO5
வழக்கம். இதற்குக்கூட விஞ்ஞான பூர்வ விளக்கம் உள்ளது. வடதுருவத்தில் நிலவும் ஒரு ஈர்வை விசையால் எமது மூளைக்கலங்கள் பாதிப்படையும். உலகு அறிந்த புதிய விடயங்கள் இந்துமதத்தைப் பொறுத்தவரையில் என்றோ கண்டுபிடித்தாகிவிட்டது. இன்னும் முழுமையாகா நிலையிலிருக்கும் அறைகளில் நிலவும் அமுக்கத்தைக் கொண்டு ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு இடம்மாறும் கலை என்றோ இந்துமதம் தன்னால் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. இதைக் கொண்டே, தேவர்கள், முனிவர்கள் என்போர் இடம் மாறியிருக்கவேண்டும். அணுகுண்டும். இதைவிடப் பெரியது; பாதிப்புக் கூடியது பிரம்மாஸ்திரம். இந்து அணுகுண்டு இல்லாது ஒழித்தது ஒரு நகரை மட்டுமே. ஆனால் பிரம்மாஸ்திரம் தார் பாலைவனத்தையே உண்டாக்கிவிட்டது மஹாபாரதம் மூலம் புலனாகின்றது. மேலும் ரொக்கற் விமானம் என இரண்டும் பல பரிமானங்களை அடைந்துள்ளன இன்று ஆனால் இந்துமதம் இதை விடப் பன்மடங்கு பரிமானமடைந்து. இரசத்தைச் சூரிய ஒளிமூலம் எரிபொருளாக்கி இயங்கும் புஷ்பக விமானத்தைச் சரித்திரகாலத்துக்கு முன்னேயே கண்டுவிட்டது இன்றைய உலகு இந்து மதத்தின் இந்தப் போரியல் நிலைக்குவர இன்னும் எத்தனை நூற்றாண்டுகளாகுமோ தெரியவில்லை. மேலும் கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்று நாம் கேள்வியுற்றுள்ளோம் இதன் ஆழம் பொதிந்த கருத்தினை யாரும் அறிந்ததில்லை. கோயிலிலானது நிலைமாற்றி போன்றது தொலைதூரத்திலிருந்து வரும் மின்னை மீள்நெறிப்படுத்தி அனுப்புகிறது இதேபோலவே இந்துமதம் தனின் வழிபாட்டுத் தலங்களில் காணப்படும் அதிர்வுகள் அமைதிநிலை என்பனவும் ஒருவன் என்ன மனநிலையில் செல்கிறானோ அம்மனநிலையை வளர்க்கத்தக்கது இதனாலேயே கோயிலுக்குச் செல்லும்போது உடற்சுத்தத்துடனும் உளச்சுத்தத்துடனும் செல்ல வேண்டும் என்பர் இந்துமதத்திலிருந்த ஏனைய மதங்களுக்கு எவரும் மதப் பெருமை காரணமாய் மாறிவர்களில்லர் ஆனால் இந்துமதப் பெருமை காரணமாய் எண்ணற்ற மேல்நாட்டவரே எம்மதத்தைத் தழுவியுள்ளனர் இத்தகு பரந்தகடலான இந்துக் கடலில் நீந்தி பக்தியின் மூலம் முக்தி அடைவோம்.
117

Page 73
சிவசக்தி 2OO 5
நலம் தரும் நவராத்திரி விரதம்
உதயகுமார் சஜீவ் 1 OR
"நாயகி, நான்முகி, நாராயணி, கைநளின பஞ்ச சாயகி, சாம்பவி, சங்கரி, சாமளை, சாதிநச்சு வாயகி, மாலினி, வாராகி, துலினி, மாதங்கி என்று ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே”
என பக்தி ரசம் ததும்பும் விதமாக அபிராமிப்பட்டரால் திருக் கடவூரில் அமிர்தகடேசுரருடன் வீற்றிருக்கும் சோதிமின்னம்மையை நோக்கி பாடப்பட்ட அபிராமிஅந்தாதியில் போற்றப்படும் சர்வலோக அன்னையாக இருந்து அருள் பாலிக்கும் ஆதிபராசக்தி தன் பிள்ளை களான இவ்வுலகத்தவர் தத்தம் வாழ்வின் மேன்மை பெற்றுயர்ந்திட கல்வி, செல்வம், வீரம் என்பன அருள் முறையே கலைமகளாயும் அலைம களாயும் மலைமகளாயும் அருள் பாலித்திட அவர்களின் சிறப்பினை உலகினுக்கு எடுத்துக் காட்டும் விதமாக கலைமகள், அலைமகள், மலைம கள் என்போரை விழா நாயகிகளாக வடக்கே காஷ்மீர் முதலாக தெற்கே கன்யாகுமரி வரையும், மேற்கே பாஞ்சாலத்தினின்று கிழக்கே பர்மாவின் எல்லைப்புறம் மட்டுமன்றி புவனேஸ்வரி பீடத்தை தன்னகத்தே கொண்ட இலங்கையிலும் சைவர் வைஷ்ணவர், சாக்தர் என்போர் மட்டுமன்றி செளரம், கெளமாரம், காணபத்தியம் என்பன கடைப்பிடிப்போராலும் புரட்டாதி மாத பூர்வபட்சத்துப் பிரதமைத் திதியிலிருந்து வளர்பிறைப் பிரதமை நவமித்திதி வரையான ஒன்பது நாளும் நவராத்திரி பூஜையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பத்தாவது நாளான தசமியன்று விஜயதசமி அதாவது மானம்பூத்திருவிழா கொண்டாடப்படும்.
118
 

சிவசக்தி - 2OO85
மலைமகள்
பரப்பிரம்மத்தினை பராசக்தி அன்பினால் கட்டுப்படுத்தி உள்ளாள் என்பதை உலகினை படைக்கும் பிரம்மாவையும், காக்கும் விஷ்ணுவை யும் அழிக்கும் உருத்திரனையும். இவர்கட்கு மேலாகவிருக்கும் ஈசுவரனை யும் தனக்குள் மறையும்படி செய்து மீண்டும் அவர்களை வெளிப்படுத்தி அவர்களது தத்துவர்த்தங்களை அவர்கள் மூலமாகவே இயற்றுவிக்கின் றாள் என பிரம்ம இருடிகளில் கண்டறிந்தனர். இதனாலேயே அம்பி கையை துர்க்கை என அதாவது துர்காம்பிகா என அழைக்கிறார்கள். ஆன்மாவை இறைவன்பால் வெளிப்படுத்தி நிலையான பேரின்பத்தை அனுபவிக்க திருவருள் தான் துணை நிற்கிறது. இத்திருவருட்சக்தி தான் சிவசக்தி, பராசக்தி, ஆதிபராசக்தி எனப்படுகிறது. இவ் ஆதிபராசக்தி தான் துர்க்கையாகும். இறைவன் நலந்தரும் பேதமாய் நிற்க ஆதிபரா சக்தியும் அதனுள் சங்கமிக்கும். இதனை சிவஞானசித்தியார் “எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பாள்' என்கிறது. புண்ணியங்களை
ஏற்றும், பாவங்களை துடைத்தும், ஒவ்வொருவரும் இன்புற்று வாழ
வேண்டுமாயின் துர்க்கை வழிபாடு, ஆராதனைகள், உற்சவ தரிசனங்கள் துணைசெய்திடுகின்றன. துர்க்கயானவள் மிருகங்களை போன்று வாழ் க்கை நடத்துவோர்க்கு பயங்கரமானவள். துர்க்கைாதேவி கொடியவர்களை நிச்சயம் கொன்றே தீர்ப்பாள். தீயவை செய்யும் யக்ஞங்களை நாசம் செய்பவள். தன்னை சரணடைந்த இறையடியார்களுக்கு அபயம் அளித்தே தீருவாள். யுகங்கள் தோறும் வளர்ந்து வந்த பாவங்கள் துர்க்கை வழிபாடு ஆராதனை என்பவற்றால் அம்பாளின் கருணையால் நொடிப் பொழுதில் அழிந்து போய் விடும். எனவேதான் சப்தரிஷிகளும் சர்வ வல்லமை கொண்ட பராசக்தியை துர்க்கை என வழிபட்டனர். அதனை தேவிமகாத்மியமானது,
'துர்க்கெ ஸ்மிருதாஹரஸ் - Uதி மசேஷ ஐந்தோ : ஸ்வஸ்தைஹறி ஸ்ம்ருதா மதி மதிவ சுபாம் ததாஸ்ரீ தாரித்திரிய துக்க பயஹாரிணி காத்வதன்யா - ஸர்வே உபகாரகரணான ஸதார்திர் சித்தா'
துர்க்கையை வழிபடுவதன் மூலமாக நிர்க்குணமும், ஸ்த்துவ குணமும், கருமமும், பக்தியும், யோகமும், ஞானமும் எல்லாவித சித்தி
119

Page 74
சிவசக்தி 2OO 5 களையும் பெற முடியும். காளிதாஸர் முககவி, வித்யாரண்யர், திருமூலர் ஆதிசங்கரர் எனும் ஆன்றோர் தேவியின் அருள் பெற்றோரே திருமூலர் துர்க்கையை ஆராதித்தும் வழிபட்டும் பெற்ற பேறினை கூறும் போது,
"நேரிழையாவள் நிரதிசயானந்தம் பேரூடையாள் என் பிறப்பறுத்து ஆண்டவன் சீருடையாள் சிவனோடு தண்டுறை சீருடையாள் பதம் சேர்ந்திருந்தேனே'
என மகிழ்ச்சி ததும்ப பாடியுள்ளார். சிவசக்தியை துர்க்கை என வஷிட்டர் காசிபர், பிருகு போன்ற தவசிரேஷ்டர்கள் உடன் முனிபத்தினி களும் கண்டறிய துருவாச முனிவர் சிவசக்தியே துர்க்கையென தெளிவு பெற்று செய்யுள் நடையிலும், உரைநடையிலும் எழுதப்பட்ட வேதமான யசுர்வேதத்தில் துர்க்கா சூக்தத்தை பிரபல்யமடைய செய்தார். அது
வருமாறு,
“தாமக்கிவர்ணாம் தUஸா
ஜீவலந்திம்
வைரோஜனிம் கர்ப்பலோஷி
8.362 (Tub
துர்காம்தேவிம் சரணமஹம் ப்ரபத்தே"
ஸுதாஸிதரஸே நமஹ துர்க்காஸoக்தம்) என குறிப்பிடப்படுவதுடன் அதன் தமிழ் மொழிபெயர்ப்பானது 'மின்னொளி பொருந்தி சிவதத்து வங்களிற்கருகில் அமைந்து பிரகாசிக்கும் பேரொளி பொருந்தி சிவத்துடன் கலந்து நின்று ஜிவான்மாக்களுக்கு கர்ம பலனை அளிப்பதற்காக சிவனைச் சேவித்து மனம், வாக்கு காயம் எனும் ஆதியாம் திரிகரண சுத்தியுடன் உள்ளத்துள் ஆராதிக்கப்படுவளும் சுய பிரகாசம் கொண்டு ரட்சிக்க முன்வரும் அன்னை துர்க்கையை தஞ்சமென அடைகிறேன். சில ஆன்மாக்களுக்கும் போக போக்கியங்களை அளித்து பிறவிக் கடலைத் தாண்டுவிப்பவளே, அவ்வாறு நானும் தாண்டுவதற்காக வணங்கு கிறேன். “ என்று குறிப்பிடுகிறது. அந்த துர்க்கையைப் பூசித்து ராமர் மற்றும் அருச்சுனன் என்போர் பலன் பெற்றுள்ளனர். இச் சந்தர்ப்பத்தில் நவராத்திரியின் முதல் நாயகியாகிய துர்க்கையின் ஒன்பது வடிவங்களை யும் குறிப்பிட வேண்டியது அவசியம். அவ் ஒன்பது வடிவங்களும் வருமாறு:
முரீ சாமுண்டி, முரீ அக்கினி துர்க்கா, U வன துர்க்கா, முரீ விஷ்ணு துர்க்கா, பூரீஸ்கந்த துர்க்கா, Uரீஜய துர்க்கா,பூரீநவ துர்க்கா, பரீகூஷ்மாண்ட துர்க்கா, Uஷோடஷ புஜ துர்க்கா, முரீசண்டிகா துர்க்கா. -
120

சிவசக்தி 2OO 5
9603)L(356T
லட்சுமி என்றால் கருணையோடு பார்ப்பவள் என்று பொருள் சுத்த தத்துவ வடிவினளாக இருக்கும் அவள் செல்வத்துக்கு அதிபதியாக கருதப்படுகிறாள் இவளே சர்வ ஐஸ்வரியங்களுக்கும் அதிதேவதை. காத்தல் தொழிலைச் செய்கின்ற விஷ்ணுவின் சக்தியாவாள். இடது கையில் வில்வம் பழமும், வலக்கையில் தாமரையும் கொண்டு தங்க நிறத்துடன் இரண்டு யானைகள் பொற் கலசங்களில் கங்காஜலம் கொண்டு இருபறமும் துதிக்கையால் அபிஷேகம் செய்ய இருப்பவள் விஷ்ணுவின் இராம அவதாரத்தின்போது சீதையாகவும், கிருஷ்ண அவதாரத்தில் ருக்மணி யாகவும் வேதவதியாகவும் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாகவும் அவதரித் தவள். இவள் மனோகரி அமைதி, அழகு ஒளி, சாந்தி முதலியவற்றின் வடிவம் நற்குண மயமான சுசிலை.
காமம், லோபம், மோகம், மோட்ஷம், மதம், அகங்காரம் ஆகிய வற்றை வர்ஜிப்பவள் விஷ்ணுவின் பிராணனுக்கு இணையானவள். இவளை மகாவிஷ்ணு பாற்கடலில் சித்திரை, தை, புரட்டாதி மாதங்களிலும் செவ்வாய்க்கிழமைகளில் பிரம்ம தேவர் புரட்டாதிமாத சுக்கில அஷ்டமி யிலும் மனு வருட முடிவிலும் முறையே தைமாத மாசிமாத சங்கராந்தி யிலும் பூஜித்தமாக தேவி பாகவதம் கூறும்.
திரு என்றால் அழகு செல்வம் என்று பொருள் வட மொழியில் திரு என்பதை பூரீ என்று குறிப்பிடுவர். பூநீலக்ஷமி என்பதற்கு ரிக் வேதம் மங்களம், இனியகுணங்கள் எனும் விளக்கம் தருகிறது. பிரஜாபதியின் தவத்தினின்று எழில் மிக்க அரம்பையாக பூரீ தோன்றினாள் என தசபதப் பிராமணம் கூறுகின்றது. “அவளே விஷ்ணுவின் தேவியாக யாகத்திலிடும் பொருட்களைப் பெறுகிறாள்' என தைத்ரீய உபநிடதம் / தைத்ரீயா வாசியம் கூறுகின்றது. இவள் ஜேஸ்டா தேவியுடன் பிறந்தவள். வைரவருக்கு கபாலம் கைவிட்டு நீங்க பிச்சையிட்டவள். பிரம்மவைவர்த்த புராணத்தின் படி தேவரும் அசுரரும் பாற்கடலை கடைந்த போது சந்திரன், உச்சிரவசு எனும் குதிரை, ஐராவதம் எனும் யானை உடன் மகாலட்சுமி தோன்றியதாக குறிப்பிடுகிறது. எனினும் பிரம்மாண்ட புராணத்தின்படி பிருகு முனிவரது மகளாக பார்கவி எனும் பெயரில் மாகலட்சுமி தோன்றியதாக குறிப்பிடுகிறது. ஆனந்த ராமாயணத்தில் மகாலட்சுமி பத்மை எனும் பெயரில் பத்மாஷன் மகளாக தோன்றியதாக கூறும் லட்சுமியும் எட்டு வடிவுடன் அவஷ்ட வட்சமியாக திகழ்கிறாள். அவர்களின் பெயர்கள் முறையே
121

Page 75
சிவசக்தி 2OO5 ரீ ஆதி லட்சுமி, பூரீ தான்ய லட்சுமி, முரீதைர்ய லட்சுமி, பரீகஜலட்சுமி, முரீசந்தான லட்சுமி, பூரீவிஜய வட்சுமி, முரீவீர லட்சுமி, பூரீ ஐஸ்வரிய லட்சுமி
கலைமகள்
கலைகளின் வடிவமிவள் சரஸ்வதி என்றும் அழைக்கப்படுபவள். சரஸ் என்றால் பொய்கை என்றும் பொருள். இவள் பிரம்மனாலேயே உருவாக்கப்பட்டு பின் அவராலேயே மணக்கப்பட்டவள். கல்வியின் அதிதேவதை. இவள் வெண்ணிற மேனியுள்ளவள். வெள்ளை நிற வஸ்திரம், ஜபமாலை, புத்தகம், கச்சபி, வீணை, எழுத்தாணி தரித்து எழுந்தருளியிருப்பவள். இவளுக்கு பிரம்ம வித்தை முகமாகவும், சதுர் மறைகளும் கரங்களாகவும், எண்ணும் எழுத்தும் இதிகாசங்களும் பாதங் களாகவும் ஓம்காரம் வீணையாகவும் திகழ்கின்றன. தன்னை சிஷ்டித்த பிரமனே தன்னுடன் கூடவருதல் கண்டு மான் வடிவுடன் அஞ்சியோடப் பிரமனும் ஆண்மானுருக்கொண்டு துரத்தியதாகவும், பின் சிவன் கருணையால் பிரமனையே தன் நாயகனாகப் பெற்றதாகவும் புராணங்கள் கூறும் பிரம்மன். தன்னை நீக்கி யாகம் செய்ய சரஸ்வதி யாகத்தை அழிக்க வந்தாள்.
மகாசரஸ்வதியின் வரலாறு மார்க்கண்டேய புராணத்தில் காணப்படும் தேவிமகாத்மியத்தில் விரிவாக கூறப்பட்டுள்ளது. சும்பநிசும் பரால் வருத்தமுற்ற தேவர்தமைக் காப்பாற்றும்படி வேண்டிநிற்க பார்வதியின் கோசத்தினின்று வெளிவந்த காரணத்தால், கெளவிகி எனும் பெயருடன் கலீம் பீஜரூபிணியாக கைகளில் மணி, சூலம், ஏறு, சங்கு உலக்கை, சக்கரம், வில், அம்பு என்பன தாங்கி நிற்கிறாள். மேலும் தூம்ரலோசனை தன் ஓம்கார சத்தத்தினால் பஸ்பமாக்கியவள் மூலப் பிரகிருதியான பராசக்தியிட மிருந்து தோன்றிய 05 பிரதான சக்திகளில் சரஸ்வதியும் ஒருவள் என்றும், அம் மூலப் பிரகிருதியில் இருந்து தோன்றிய ராதா தேவியின் நாக்கு நுனியில் சரஸ்வதி தோன்றி பிரமனின் சக்தியானாள் என்றும் தேவி பாகவதம் கூறும். இவளை மகாவித்யா, மகாவாணி, பாரதி, பிரஹ்மி, வாக்சரஸ்வதி, சூரியா, ப்ராம்பூரீ காமதேனுவாக்தேவி, பிஜகர் பதீஸ்வரி என்றும் அழைப்பர். நவராத்திரியின் பிரதான அம்சங்களில் ஒன்று கொலு வைத்தல். படிப்படியாக வைக்கப்பட்ட விஷேடமான பீடங்களில் அல்லது மாடிப்படிகளில் விதவிதமாக பொம்மை எனப்படும் பதுமைகளை அழகாக அடுக்கி வைத்து 5 அல்லது 7 அல்லது 9 என ஒற்றை எண் நிரைகளாக அடுக்கிவைப்பர். கர்ம சகுனமான கீழ்படிகளில் வாழ்க்கைக்கு தேவையான பொருட்கள் வைப்பர் நடுப்பகுதியில் ராஜா,
122

சிவசக்தி 2OO5 ராணி படைவீரர்கள் மக்கள் எனும் பொம்மைகளை வைப்பர். இது சத்துவ குணத்தைக் குறிக்கும். மேலே கலசமும் தெய்வ பொம்மைகளை யும் வைப்பர் இது திருவருளைக் குறிப்பிடும்.
மேலும் ஆலயங்களில் இறைவியை நவராத்திரி நாட்கள் ஒன்பதிலும் முறையே மகேஸ்வரி, கெளமாரி, வராகி, மகாலக்ஷமி, வைஷ்ணவி. ஐந்திரி, பிராஹ்மி நாரஸிம்ஹி சாமுண்டி எனும் தேவியராக அலங்களிப்பர் இறுதி நாளான விஜயதசமியன்று மகிஷாசுரமர்த்தினியாக அலங்கரித்து வாழை வெட்டு / வன்னிவெட்டு எனும் மானம்பூத்திவிழாவை நடத்திடுவர்.
இவ்வாறு உலக அன்னையை நவராத்திரி தினங்களில் வழிபட்டு சகல செளபாக்கியமும் பெற்றிடுவோம்.
ĎE 29FLOD ECůDCO6)
嵩 இதுவாரகன்
2.
123

Page 76

சிவசக்தி 2OO 5
நம்மை நாம் அறிவோம்
S.Parathan (10O)
புறத்தோற்றத்தைவும், அக அழகையும் மேம்படுத்தல் ஒவ்வொரு வருக்கும் முக்கியமாகும். மக்கள் பெரும்பாலும் ஒரு தனிமனிதனது புறத்தோற்றத்தில் அதிகம் கவனம் செலுத்துகின்றனர். ஒருவரை
மதிப்பிடும்போது புறத்தோற்றத்தைக் கொண்டே மதிப்பிடுகிறோம்.
புறத்தோற்றமானது உடை, உடலமைப்பு, உறவாடும் தன்மை போன்ற வற்றை உள்ளடக்கியதாகும். கண்களுக்குத் தெரியும் இம்மூன்றும் எப்படிப்பட்டவர்களின் புறத்தோற்றத்தையும் சிறப்பித்துக் காட்டும்.
அக அழகானது மனநிலையையும், புத்தியையும், சக்தியையும் உள்ளடக்கியது. எத்துணை அக அழகானது கொண்ட நன்மனிதனையும் புறத்தோற்றம் வேறு நோக்குடன் நோக்கும்படி செய்யக்கூடியது.
புறத்தோற்றத்திலே உடையானது ஒவ்வொருவரின் அழகை மெருகூட்டியும், அழகில்லாதவரையும் அழகாகவும் காட்டக்கூடியது. அதனால் நாம் அணியும் உடைகள் சுத்தமாகவும், பொருத்தமானதாகவும், இடத்திற்கு ஏற்பவும் அமைந்திருத்தல் வேண்டும். உடையானது அவரவர் சுவைக்கு ஏற்றவாறு வேறுபடலாம்.
இடத்திற்கேற்ப உடை அணிவது முக்கியமாகும். உதாரணத்திற்கு பெரியோர் சொற்படி பொது சந்தோஷமான இடங்களிற்கு அணியும் உடைகள் பக்தி பரவசம் மிக்க கோயிலிற்கு அணியப்படமுடியாது அதே போன்று இளைஞர்கள் சொற்படி கோயிலிற்கு அணியும் உடைகளை பொதுவான சந்தோஷ இடங்களுக்கு அணியமுடியாது. "உங்களின் புறத்தோற்றத்தைக் கொண்டு மற்றவர்கள் கவரப்படுவதைவிட உங்களை அனைவரும் கெளரவ நோக்குடன் பார்த்தல் மிகச்சிறந்தது அல்லவா?
மிடுக்கும். ஆரோக்கியமும் உடல் கட்டமைப்பும் இருத்தல் மிக மிக அவசியம், உடல் நல்லாக இருந்தால் மனம் நல்லாக இருக்கும்
125

Page 77
சிவசக்தி 2OO5 என்பர் உடல் ஆரோக்கியம் இருந்தால் எதையும் சாதிக்கலாம். உடல் ஆரோக்கியத்திற்கு உண்ணும் உணவு உடற்பயிற்சி ஓய்வு போதுமான அளவு வேலை போன்றவை அவசியம்.
உதாரணத்திற்கு உணவை எடுப்போமாயின் குறைவாக உண்டு இறந்தவரை விட அதிகம் உண்டு இறந்தவரே அதிகம் என்று கண்ண தாசன் "அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் நூலில் கூறியுள்ளார்.
கட்டுக்கோப்பான, துடிபப்ான உடலமைப்பு உடையவர்கள் குழு உலகையும் தம்மிடம் ஈர்க்கிறார்கள். உடலை மதிப்பவர்களை உலகம்
மதிப்பதில் ஆச்சரியமில்லையே.
இவ்வுலகில் ஒருவர் சுட்டிக்காட்டப்படும் போது ஒரு குறையும் அவரிடம் கண்டுபிடிக்கப்படவில்லையேல், அம் மனிதனின் உறவாடும் தன்மை சிறப்பானதும், நல்லது எனவும் அறிய முடியும்.
சிந்தனை, சொல், செயல் இம்மூன்றும் ஒன்றுபோல் அமையுமானால் அம்மனிதனின் பழகும் தன்மையில் ஒரு குறையுமில்லை.
ஒருவரின் கண்ணைப்பார்த்து பேசல், சில இடங்கள் தவிர்த்து மற்ற இடங்களில் தலை நிமிர்ந்து இருத்தல், கூன் போடாமல் உடலை நேராக வைத்தல், இனிமையாகப் பேசுதல், மனித நேயத்துடன் பழகுதல், நம்மை மற்றவர்களின் நிலையில் வைத்துச் சிந்தித்தல் வேண்டும். புத்தியால் புரிந்து கொண்டு செயல்படும் இரக்கத்தைவிட இதயப்பூர்வமாக உணர்ந்து பழகுவது இறந்ததாகும்.
அடுத்தபடியான அக அழகிலே மனம் பலரிடமும் இன்று இல்லா தது கொடூரம், காமம் என சுத்தித்திரியும் எரிபொருளில்லா விமானம். மனமானது உடலுடன் நிலைத்து நின்றால் ஒரு மனிதனும் இவ்வுலகில்
தோல்வி காணமாட்டான்.
மனம் குழந்தையென்றால் புத்தி பெற்றோர் எனலாம் பெற்றோர் குழந்தையை அரவணைத்தும் கண்டித்தும் வளர்ப்பதுபோல் புத்தியைக் கொண்டு மனத்தை நெறிப்படுத்த வேண்டும்.
"உனக்குப் புத்தி இல்லையா?" என பிறர் கேட்டுகும்போது நமக்கு கோபம் வருகிறதே தவிர இதை பற்றி நாம் சிந்திப்பதில்லை.
இவை அனைத்துடன், இவை அனைத்தும் இயங்கத் தேவையான சக்தியையும் கொண்டால் நம்மை நாம் அறியலாம்.
126

சிவசக்தி 90O5
ஆலயமும் இறைவழிபாடும்
K. Avenash
Year - 9R
"ஆலயம்" அல்லது "கோவில்" என்பது "ஆண்டவன் உறைவிடம்" என்று பொருள்படும். எல்லா இடங்களிலும் இறைவன் இருக்கிறபோதிலும் திருக்கோவிலில் நாம் காண எழுந்தருளி உள்ளான்.
"ஆலயம் தொழுவது சாலவும் நன்று"
"கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"
என்று கோயிலின் பெருமையைப்பற்றி சான்றோர்கள் பழமொழி களாக கூறியுள்ளனர்.
மக்களின் நன்மைக்காக ஆலயம் அமைத்து வழிபடுகின்றோம். ஆலயத் தில் மக்களனைவரினதும் சார்பாக பூஜை நிகழ்த்தப்படுகின்றன. இறை வனை ஒரு மனத்தோடு வழிபடுவதற்குரிய சிறந்த அமைதியான சூழலாக திருக்கோயில் விளங்குகின்றது. வீடுகளில் அந்தவிதமான அமைதியான சூழல் கிடைப்பதில்லை.
பசுவின் உடலெங்கும் பால் வியாபித்திருந்தாலும் கூட அதன் மடியி லிருந்து மட்டுமே நாம் பாலை பெறமுடியும். பூமிக்கடியில் எங்கும் தண் ணிர் இருந்தாலும் கூட கிணற்றின் உதவியுடனே நாம் நீரை பெறு கின்றோம். அதுபோலவே இறைவன் எங்கும் எதிலும் வியாபகமாகி இருந்தாலும் கூட இறைவனருள் பெற வேண்டுமாயின் ஆலயத்திற்கு செல்லவேண்டியது அவசியமாகும். ஆலயங்கள் இறையுருவங்கள் வைத்து வழிபடுதலே இறைவனை வழிபடும் எளிய முறையாகும்.
கோயிலுக்குச் சென்று இறைவழிபாடு மேற்கொள்வதால் எமது ஐம்பொறிகளும் ஒடுக்கப்படுகின்றன. மந்திரங்களையும் இறைநாமங்களை கேட்டல், மணியோசையை கேட்டல் மூலம் எமது மனதிற்கு அமைதி கிடைக் கின்றது.
127

Page 78
சிவசக்தி ջ005 ஒர் மரத்திற்கடியே நின்று கொண்டு கையை தட்டினால் பறவைகள் பறக்கும் என்பதைப் போல கைதட்டி இறைநாமங்களையும் பஜனை செய்து பாடினால் மனதிலிருந்து பாவங்கள் அகன்று சாந்தம் ஏற்படும்.
கோவிலுக்குச் செல்லுமுன் உடல் தூய்மை செய்ய வேண்டும் தூய ஆடை அணியவேண்டும், திருநீறு, சந்தணம், குங்குமம், திருமணன் ஆகிய சமய சின்னங்கள் ஏதேனும் அணிய வேண்டும். திருநாமங்க்ளையோ திருப்பாடல்களையோ மெதுவாகச் சொல்லிக் கொண்டு செல்லவேண்டும். தெய்வச் சிந்தனையைத் தவிர வேறு எந்த சொல்லுக்கும் செயலுக்கும் இடம் கொடுத்தல் கூடாது. முதலில் கோயிலை வலம் வந்து வணங்க வேண்டும் பின் உட்கோயில் சென்று வழிபட வேண்டும். பிறர் வழி பாட்டுக்குத் தடையில்லாமல் ஒதுங்கி நின்று வணங்கவேண்டும். கோயி லுக்குப் புறப்படுவதிலிருந்து கோயில் சென்று திரும்பும் வரையிலும் வேறு சிந்தனையின்றி மனதிற்குள் நாமஜெபம் செய்த வண்ணம் இருக்க வேண்டும்.
128

*
Tel: 2852535/0777683231 141, Dutugemunu Mowatha, Fox; 2815315/2801.316 Kohuwala e-mail: dr(0slinet.lk

Page 79

சிவசக்தி 2005
தப் பொங்கல்
鞑 றோ. ராகுல் ரகுராம்
9Q
தைமாதம் ஒராண்டின் தொடக்கமாக ஏற்படும் சமய சமூகக் கொள்கைக்கு இணங்கக் கொண்டாடப்படும் பண்டிகை தைப்பொங்கல் ஆகும். தைப்பொங்கல் என்னும் பண்டிகையைப் பொங்கல் திருநாள், அறுவடைத் திருநாள், உழவர் திருநாள் என்று கூறுதல் இக்கால வழக்கம்.
போகிப் பண்டிகை என்பது மார்கழி இறுதித் தினம் ஆகிய ஆண்டிறுதியில் வீட்டிலுள்ள பழைய துணிகள், பொருட்கள், முதலிய வற்றை எரித்துப் பொங்கலுக்கு முதல் நாள் கொண்டாடப்படும் பண்டிகை. தைப் பொங்கலுக்காக வீட்டைத் தூய்மைப்படுத்தும் ஏற்பாடுகள் செய்யும் வைப தினமே போகிப்பண்டிகை ஆகும். தோட்டப் பொங்கல், தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல் என்பன உழவர்கள் தமது தொழில் வளர்ச்சிக்கும், அறுவடைக்கும் உதவும் சூரியனுக்கும், மாடுகளுக்கும், நிலத்திற்கும் நன்றி கூறும் சமய சமுதாய விழாவாகும். புதுப்பானையில் சமைக்கும் பச்சரிசிப் பொங்கலைச் சூரியனுக்குப் படைத்தல், புத்தாடை அணிதல், வாண விளையாட்டு என்பன பாரம்பரிய கொண்டாட்ட அம்சங்கள், இக்காலத்தில் பொங்கல் வாழ்த்து மடல் அமைத்தல், அதை அனுப்புதல், கலை நிகழ்ச்சிகள், சஞ்சிகைகள் வெளியிடும் பொங்கல் மலர்களைப் படித்து மகிழ்தல், கவியரங்குகள் போன்ற இலக்கிய நிகழ்வுகளில் பங்கு பற்றல் போன்ற அம்சங்கள் தைப்பொங்களில் இடம் பெறுதல் வழக்கம்.
தைப்பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பட்டிகளை அல்லது தொழு வங்களை துப்பரவு செய்து மாடுகளை நீராடி அலங்கரித்து சம்பிதாய பூர்வமாகச் சமைக்கும் பொங்கலை அவற்றுக்கு ஊட்டுதல் பட்டிப் பொங் கல் எனப்படும். இப்படிப் பொங்கல் முற்காலத்தில் வயல் வெளியிலுள்ள பட்டி மேடுகளில் கொண்டாடப்பட்டது. இவ்வழக்கத்தை நினைவூட்டும் வகையில் திருகோணமலையில் பட்டிமேடு" என்னும் வயலூர் இருக்கிறது.
129

Page 80
சிவசக்தி 2OO5 ஆனால், இக்காலத்தில் பட்டிப் பொங்கல் மாடு வளர்க்கும் வீடுகளில் மாட்டுத் தொழுவத்தில் கொண்டாடப்படுதலே வழக்கமாகியுள்ளது. மேலும் இம்மாட்டுப் பொங்கலைத் தொடர்ந்து மாட்டு வண்டிச் சவாரி என்னும் விளையாட்டுப் போட்டி கிராம பிரதேசத்தில் நடைபெறுதல் வழக்கம். இது போன்ற கிராமிய வழக்கில் சிறுசிறு துண்டுகளாகப் பிரிக்கப்பட்ட தோட்டவயல் நிலங்களில் தமது விவசாய செழிப்புக்கு உதவிய சூரியன், நிலம், விலங்குகள் என்பவற்றை வாழ்தத வும். நன்றி செலுத்தவும் தோட்டப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
சமய நூல்கள் தைப்பொங்கல் திருநாளை மகர சக்கரவர்த்தி என்று கூறுகின்றன. சூரியன் தெற்கிலிருந்து வடக்காகப் பூமத்திய ரேகையை கடக்கும் போது தனுராசியிலிருந்து மகர ராசிக்கு இடம் மாறுகிறது. இந்த இடப்பெயர்ச்சியே மகர சங்கராத்தி எனப்படும். மகர சங்கராந்தியை உத்தராயண சங்கராந்தி என்று கூறுதல் வழக்கம். உத்தரம் - வடக்கு அயனம் - செல்லல். எனவே சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் காலத் தொடக்கத் திருநாளே உத்தராயண சங்கராந்தி ஆகும். சூரியனின் இச் செல் திசைப் பெயர்வு உழவர்களுக்குச் சாதகமான காலநிலையை ஏற்படுத்துகிறது. விவசாய அறுவடைக்கு உகந்ததாக விளங்குகிறது.
வட பாரதத்தில் இந்தச் சங்கராதி பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா என்ற பெருவிழாவாக ஹிரித்துவார். பிரயாகை, திரிவேனி சங்கமம் போன்ற இடங்களில் கொண்டாடப்படும். தமிழ் நாட்டிலும் அவ்வாறே 'மகாமகம்' என்ற பெயரில் மகர சங்கராதி கொண்டாடப்படுவது வழக்கம், பன்னிரண்டு வருட இடைவெளி நீண்ட காலம் என்ற கருத்து மக்களிடையே பரவியதால் அலகபாத்தில் ஆறு வருடங்களுக்கு ஒரு முறை சங்கராந்தி அர்த்த கும்பமேளா என்ற பெயரில் கொண்டாடப்படும் புது வழக்கம் தோன்றியுள்ளது. வட பாரதத் தில் மகாமகம், கும்பமேளா, மகா கும்பமேளா என்ற பெயரில் கொண் டாடப்படும். மகர சங்கராந்தி தென் பாரதத்தில் கேரளத்தில் சபரிமலை மகர ஜோதி தரிசனம் என்ற பெயரிலும் தமிழ் நாட்டில் பொங்கல் என்ற பெயரிலும் வேறுபட்ட சம்பிரதாயத்துடன் கொண்டாடப்படுகின்றது. தமிழ் நாட்டிலும் தமிழ் மக்கள் வாழும் இலங்கை போன்ற இடங்களிலும் மார்கழி கடைசித் தினம் யோகிப் பண்டிகையாகவும் அடுத்த நாள் ஆகிய தை முதலாந் தினம் சூரியன் பொங்கல் அல்லது தைப் பொங்கலாகவும் தை இரண்டாம் தினம் மாட்டுப் பொங்கல் அல்லது பட்டிப் பொங்கலாகவும் கொண்டாடப்படுகிறது வழக்கம்
130

சிவசக்தி ջ005
விபுலானந்தர்
வி. வெங்கட்
7 Ο
மீன்பாடும் தேன் நாடு என்று போற்றப்படுவது மட்டக்களப்பு அங்கே தாரேறு மூதூரில் சாமித் தம்பிக்கும் கண்ணம்மைக்கும் அருந்தவப் புதல்வராக 1892 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 29ம் திகதி பிறந்தார். தாய் தந்தையர் அவருக்கு மயில்வாகணம் எனப் பெயர் சூட்டினர். இவர் இளமையில் தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகிய மும்மொழி களையும் கற்றார். ஆசிரியர் பட்டம் பெற்றார். பெளதிக சாஸ்திரத்தில் பி.எஸ். சி. பட்டமும் பெற்றார். இவர் மதுரைச் தமிழ்ச் சங்கத்தின் பண்டிதர் பட்டத்தையும் பெற்றார். யாழ்ப்பாணத்திலே மானிப்பாய் இந்துக்கல்லூரி உட்பட பல பாடசாலைகளில் ஆசிரியராகக் கடமையாற்றினார். மயில் வாகனம் தமது ஆசிரியர் பணியைச் சிறப்பாக ஆற்றிய காலத்தில் அவரது உள்ளம் துறவு வாழ்கையைப் பெரிதும் விரும்பியது. இதன் காரணமாக இவர் இராம கிருஷ்ண சங்கமடத்தைச் சேர்ந்து தமது முப்பதாவது வயதில் பூரண துறவியானார். மயில்வாகனம் என்னும் இளமைப் பெயரை துறந்து பிரபோத சைதன்யர் என்னும் பெயரை பெற்றார். பின்னர் தனது முப்பத்தி இரண்டாவது வயதில் துறவவறம் பெற்று விபுலானந்தர் என்னும் திரு நாமத்தைப் பெற்றார்.
131

Page 81
சிவசக்தி 2005
நான் வாசித்த நல்ல நூல்
சு. அருணன் 6 R
இவ்வுலகில் கோடிக்கணக்கான நூல்கள் உள்ளன. அவற்றில் மனிதன் தனக்கு விரும்பிய நூல்களையே வாசிக்கின்றான். அதேபோல் தான் நானும் எனக்கு விரும்பிய நூல்களையே வாசிக்கின்றேன். நான் அவ்வாறு வாசித்து மகிழ்ந்த நூல்களில் ஒன்று தான் வியாஸரால் எழுதப்பட்ட "மஹாபாரதம்" எனும் காப்பியமாகும. இவ்வையகம் அறிந்துள்ள இதிகாசங்களுள் மிகப் பெரியது மஹாபாரதமாம். அது வடமொழியில் ஒரு லட்சம் சுலோகங்களைக் கொண்டு அமைந்துள்ளது. வாழ்க்கைத் தத்துவங்களனைத்தும் அதில் அடங்கியிருக்கின்றன. வெறு மனே ஒரு குரு வம்சத்தாருடைய வரலாறு மட்டும் அடங்கிய நூலாக அது அமையவில்லை. மானுட வாழ்க்கையில் என்னென்ன பிரச்சினைகள் எழுகின்றனவோ அவை அனைத்துக்கும் விமோசனங்கள் இப்பரந்த நூலில் அடங்கியிருக்கின்றன. பரதவர்கூஷம் என அழைக்கப்பெறும் இந்திய நாட்டின் பண்புகளனைத்துக்கும் பொக்கிஷ ஆலயமாக இந்நூல் அமைந்திருக்கின்றது. வாழ்க்கைப் பிரச்சினைகள் இவ்வுலகத்துக்கு உரியவைகளாகவும், பாரதநாட்டுக்கு உரியவைகளாகவும் அமைந்துள்ளன. இப் புண்ணிய பூமியில் பெருமக்கள் அடைந்துள்ள பண்புகளனைத்தும் இதில் இடம் பெறுகின்றன. பகவத்கீதை என்னும் அரிய நூல் இந்த மஹாபாரதத் தின்கண் அமைக்கப் பெற்றிருக்கிறது. பகவத்கீதையிலே அமைக்கப் பெற்றிருக்கின்ற வாழ்க்கைத் தத்துவங்களை விரிவாக எடுத்து விளக்கினால் அந்த விளக்கம் மஹாபாரதமாக முடிவுறும். இப்போது மகாபாரதக் காப்பியத்தை சுருக்கமாக எழுதுகிறேன்.
சந்தனு மன்னனிலிருந்தே மஹாபாரதம் ஆரம்பமாகின்றது. சந்தனு மன்னனுக்கு கங்காதேவியால் மகனாக பிறந்தவன் தேவவிரதன். தேவ விரதன் தனது தந்தையின் நலனுக்காக தன் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாக இருக்க விரதம் பூண்டவன். அதனால் அவனுக்கு பீஷ்மர் என்னும் பெயர் வரலாயிற்று. அதனால் அவன் தந்தை அவனுக்கு
132

சிவசக்தி 2OO5 இச்சாமிருத்யு எனும் வரம் கொடுத்தார். அதாவது அவன் அனுமதித்தா லொழிய மரணம் அவனை அண்டாது பின்பு சந்தனு மன்னனுடைய மனைவியான சத்யவதி சித்திராங்கதன். விசித்திரியவீரியன் என்னும் இரண்டு மகன்களை பெற்று எடுத்தாள். சந்தனு மன்னன் இறந்த பின் சித்திராங்கதன் முடி சூடப்பட்டான். அவனும் சிறிது காலத்தில் இறந்தான். பின் விசித்திரவீரியன் முடி சூட்டப்பட்டான். அவனுக்கு அம்பிகாவும் அம்பாலிகாவும் முறையே திருமணம் செய்து கொடுக்கப்பட்டனர். விசித்திரவீரியன் குழந்தை பெறுவதற்கு முன்பே இறந்து விட்டான். அதனால் அவ் வம்சம் அழிய நேரிட்டது. அப்போது சத்யவதி பழைய கதை ஒன்றை கூறினாள். அதன்படி அவளுக்கு முதல் குழந்தை வியாசர் ஆகும். அதனால் அவரை அழைத்து அம்பிகாக்கும் அம்பாலிகாக்கும் குழந்தை பாக்கியம் கொடுக்குமாறு வேண்டினாள். அதனால் வியாஸரும் அப்படியே செய்தார். அதனால் அம்பிகாக்கு திருதராஷ்டிரன் எனும் குருட்டு மகன் பிறந்தான். அம்பாலிகாக்கு பாண்டு எனும் மகன் பிறந்தான். அம்பிகாவின் தாதிக்கு விதுரன் எனும் மகன் பிறந்தான். பாண்டு முடி சூட்டப்பட்டான். திருதராஷ்டிரனுக்கு காந்தாரியை மணம் முடித்து கொடுத்தார்கள். பாண்டுவுக்கு குந்தியை திருமணம் செய்து கொடுத்தார் கள். பாண்டு ஒரு சாபத்தின் காரணமாக தவ வாழ்வில் ஈடுபடுவதற்காக காட்டிற்கு சென்றான். அங்கே குந்தி தனக்கு கிடைத்த வரத்தால் தர்ம தேவதையின் மூலம் யுதிஷ்டிரனையும் வாயு பகவான் மூலம் பீமனையும் தேவேந்திரன் மூலம் அர்ஜூனனையும் பெற்றெடுத்தார். குந்தி பாண்டுவின் இன்னொரு மனைவியான மாத்ரிக்கு அந்த மந்திரத்தை சொல்லிக் கொடுத்தாள். அவள் இரட்டையர்களான அசுவினிகளை நினைத்து நகுலன், சஹாதேவன் எனும் இரண்டு இரட்டை யர்களை பெற்று எடுத்தாள். இவர்கள் பாண்டவர்கள் என அழைக்கப் பட்டனர். காந்தாரிக்கு அதே சமயத்தில் ஒவ்வொரு நாளாக ஒவ்வொரு குழந்தை பிறந்தது. மூத்த மகனான துரியோதனன் பிறந்த அதேநாளில் பீமன் பிறந்தான். துரியோதனன் பிறந்த நாளில் பல தீய சகுனங்கள் தென்பட்டன. பாண்டவர்களும் கெளரவர்களும் சேர்ந்தே வளர்ந்தார் கள். அவர்களு க்கு குருவாக துரோணாச்சாரியார் நியமிக்கப்பட்டார். துரோணாச்சாரியார் ஒரு தடவை தனது சீடர்களின் திறமையை வெளிப் படுத்துவதற்காக ஒரு நிகழ்ச்சியை நடாத்தினார். அதில் பிற நாட்டு வீரர்களும் தமது திறமையை வந்து வெளிப்படுத்தினர். அர்ஜூனனே எல்லோரையும் விட தலை சிறந்தவனாக காணப்பட்டான். ஆனால் கடைசியில் வந்தவன் அர்ஜூனனை விட சிறப்பாக தனது திறமைகளை வெளிக்காட்டினான். அவன் தன்னை கர்ணன் என்று அறிமுகப்படுத்தினான். முன்பு குந்தி
133

Page 82
சிவசக்தி 2OO5 சிறுமியாயிருந்த போது தனக்கு கிடைத்த அக் குழந்தையை பெட்டியில் போட்டு ஆற்றில் போட்டாள். அக் குழந்தை தான் இந்த கர்ணன் என குந்தி அறிந்தாள். கர்ணன் பாண்டவர் களின் எதிரிகளான கெளரவர்கள் பக்கம் சேர்ந்தான். பாண்டவர்கள் ஐவரும் திரெளபதையை மணம் முடித்தார்கள். பின்பு யுதிஷ்டிரன் முடி சூட்டப்பட்டான். கெளரவர்களுக்கு பாண்டவர்கள் மீது பொறாமை அதிகரித்தது. எப்படியோ பகடை விளையாட்டில் பாண்டவர்களை வென்று வனவாசம் செய்து ஆட்சியை பெறுமாறு பாண்டவர்களை வனத்துக்கு அனுப்பினார்கள். அவர்கள் வனத்திலிருந்து சிறந்த பயிற்சிகளை பெற்று பதின்மூன்று ஆண்டுகளின் பின் கெளரவர்களோடு போர் புரிந்தனர். போரில் கண்ணபரமாத்மாவான கிருஷ்ணன் பாண்டவர்களுக்கு பெரும் உதவி செய்தார். அர்ஜூனனுக்கு தேரோட்டியாக கிருஷ்ணன் இருந்தான். அர்ஜூனன் போர் செய்ய மறுத்த போது கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு கீதா உபதேசம் செய்தார். அதனால் அர்ஜூனனும் போர் செய்ய சம்மதித் தான். பாண்டவர்கள் கெளரவர்களை வென்று ஆட்சியை கைப்பற்றினர். இப்படியாக மஹாபாரதம் முடிவடை கிறது.
இக்காப்பியத்தில் எல்லோரும் சிறந்தவராக காணப்படினும் அர்ஜூ னனே எல்லோரையும் விட சிறந்தவனாக காணப்படுகிறான். அவன் தன் தளராத முயற்சியால் போரில் வென்றான். ஆனால் துரியோதனனோ மிகவும் கொடிய செயல்கள் செய்து அழிந்தான். அர்ஜூனனுக்கு அடுத்த தாக யுதிஷ்டிரன் சிறந்தவனாக காணப்படுகிறான். காரணம் அவனது பொறுமைக்குணம். உதாரணமாக கெளரவர்கள் பகடை விளையாட்டில் பாண்டவர்களை வென்ற போது அவன் பொறுமையாக இருந்தான். இக் காப்பியத்தில் எனக்கு பிடித்த பாத்திரம் பீஷ்மர் ஆகும். காரணம் கடுமையான விரதம் எடுத்தமை ஆகும். இக்காரணங்களால் தான் எனக்கு மஹாபாரதம் பிடித்த நூலாக மாறியது.
134

சிவசக்தி 2OO5
Wրի
W.
W W W FA
W
W W W W
M %;
իիիիիիիիի
// W П W
կի
燃 W
W Wի
W ീ
WM W W
// կի A կի
A E : կ կի կիիիիիիիիի է: կի կ կ A
կի
կ
W |||| |կ կկ կիիիիիիիիիիիիիիիիիիիիիիիի
BEGGE
战 ::
敷
Y.
-
1 3 r ",
.\”برما،

Page 83
சிவசக்தி
2OO 5
அழகு
M.A.C. சனீஜ் அஹமட் 6"F"
ஆணுக்கு வீரம் அழகு பெண்ணுக்கு பொறுமை அழகு
உலகிற்கு வானம் அழகு வானத்திற்கு முகில் அழகு
மனிதனிற்கு மெய்யழகு மெய்யிற்கு ஆடை அழகு
இதையெல்லாம் அறிவது தான் உண்மை அழகு
136

சிவசக்தி - 2OO5
137
குடும்பம்
S.F. Lig Isi)
6 'R'
தாயுண்டு தந்தையுண்டு கவலையில்லையே
தம்பியுண்டு தங்கையுண்டு (5:Tകഥ ജൂൺ ഞഓ(u)
அண்ணன் அக்கா இருக்கையில் வேற்றுமையில்லையே
தாத்தா பாட்டி கதையில் காதினிக்குதே
மாமா மாமி வருகையில் மகிழ்ச்சி பொங்குதே
சித்தா சித்தி உணவில் ரசம் இன்பமே

Page 84
சிவசக்தி ջ005
மழைக்காலப் பூக்கள்
பி. சுசாந்தன்
8R
அது ஒரு மழைக்காலம் - தினமும் தூவாணம் வந்து என் மனை மீது சாரலெனும் இன்பம் தனை சாரலாகத் தூவிச் செல்லும்
பள்ளிக் கூடம் முடிந்து வந்தேன் நண்பனுடன் பாதையை கடந்து வந்தேன் ஊர்க் கதைகள் ஊர்வலத்தில் வெளிவர கார்மேகம் விண்ணைப் போர்த்தியது.
குளிர்த் தென்றல் முன்னோக்கி துரத்தியது மண் வாசம் மூக்கருகில் தட்டியது - திடீரென சோவென மழை நன்னீர் கொட்டியதும் ஒடினோம் விரைவில் மழை வழிகாட்டியது.
விருட்சமொன்றோ கிளையை ஓங்கியது விழுதுகளோ தண்ணிர் அனுப்பியது இருந்தும் அந்த ஒழுகுங் குடையுள் இடத்திற்கு ஒரமாக ஒதுங்கினோம்.
தான் எழுதி வைத்த பூக்களெனும் வரவேற்புக் கவிதையை நம்மீது வாசிக்க ஆவலுடன் செவி மடுத்தோம் - அந்த மழைகாலப் பூக்களின் கானத்தை.
இலைகளோ தண்ணிரெனும் காசுகளை சேமித்து எமக்காக செலவழிக்க செல்வத்தைச் சேர்க்கும் அவாவில் சேர்த்தோம் பையினுள் கொட்டும் வரை.
138

சிவசக்தி 2OO6
அந்தி மழையின் ஈரச் சுவாசம் - என் நுரையீரல்களின் உட்சுவரில் அமுதம் பூசியது ஆயினும் - நானோ என் பெருமூச்சினால் குளிர்காய அழைத்தான் என் தோழன்
கூச்சலிட்டு எழவே - தெரிந்தது கண் விழித்து சொப்பனம் கண்டது இனிமேல் தெளிவுடனிருக்க மழைக்
காலப் பூக்களே உதாரணம் என்றுணர்ந்தேன்.
կիբի,
燃
I

Page 85
சிவசக்தி 2OO 5
இயற்கை
எம்.மிமாஸ், மதனி
9C)
இந்த பூமி பரந்தது போல் இயற்கை வளம் நிழலாடி நின்றது தானோ! வீசி வரும் தென்றலென்ன விரல் நீட்டும் கதிரவன் என்ன கண் சிமிட்டும் விண்மீனென்ன இரவில் உலாவரும் வெண்ணிற பந்துதான் என்ன? கண்ணை ஈர்க்கும் காட்சிகள் மனதில் வைரவரிகளை சுரக்கும் அழகின் பொக்கிஷங்கள் மேடு பள்ளம் தாண்டாது மேலேறி கீழிறங்கும் கடல் அலை கரையுடன் முத்தமிடும் பாசக்கரம் பூமி தந்த நீராலே பூமிதனை செவிப்பாக்கும் மழை தானும் இயற்கைத் தாயின் கருவன்றோ? ஒரு மணி விதையினில் பல உயிர் நிழல் தேட கிளைபரப்பி தூய சுவாசம் தரும் கூவும் குயிலானாலும் தோகை விரித்தாடும் மயிலானாலும் உலகின் பொதுப் பெயர் பறவைதானே நிறத்தாலும் மணத்தாலும் அமைப்பாலும்
140

சிவசக்தி 2OO 5
வேறாயிருக்கும் மங்கை மனங்கவர் மலர்தான் இயற்கையின்றி ஆகுமா? மலை உச்சியில் பிறப்பிடம் கொண்டு நூலாய் மலை ஊடே வழிந்தோடி கடல் தனை சேரும் நீர்வீழ்ச்சி. இயற்கை வர்ணனைக்கு பேனா மைகூட தடையாகும்.
விஞ்ஞான உலகினிலே வியப்பிக்கும் கண்டுபிடிப்புகள் கொண்டு அசத்தும் மனித கற்பனையில் கூட
இயற்கையை விலை மதிக்க
இயற்கைக்கு இயற்கையாலன்றி
வேறொன்றாலும் அழிவில்லை இல்லை
141

Page 86
சிவசக்தி 2OO 5
142
 
 
 

143
சிவசக்தி 2OO5
கருவறை முதல் கல்லறை வரை.
A.R. ரிமாஸ் அகமட் 9R
கருவறை அனுபவத்தை, கல்லறையில் மீட்டிப் பார்க்கிறேன்!
கனவுகளுக்கு, Make — up (éLJITL’ L -g5I (9Q6iI 6).qGu)55Lib...
கற்பனைகளை,
தூக்கிப் போட்டது இவ்வுலகம்.
கண்காணா இடம்,
உறக்கத்தில் ஆழ்ந்திருக்கிறேன். காணா இடம் சென்று கொண்டிருக்கிறேன்! சோமயமாகுனன், பள்ளி சேரப் பணம் கேட்ட போது, வேலைக்காக லஞ்சம் கொடுத்த போது, கொடுத்த லஞ்சம் சொள்ளை போனபோது சீரழிந்தேன்
சின்னபின்னமானேன் தூக்கி எறியப்பட்டேன். 3 வேளை பட்டினி கிடந்தபோது, கொடுமைகள் அனுபவித்தபோது, என்னைக்,
கையில் காசற்ற, பிச்சைக்காரனாய்க் கூட கவனிக்கவில்லை! நொந்தேன்!
வெந்தேன்
அம்மாவை இழந்தேன்,

Page 87
சிவசக்தி 2OO 5
அப்பாவை இழந்தேன்.
தம்பியை இழந்தேன்.
தங்கையை இழந்தேன.
ஏன்?
என் உயிரையே இழந்தேன்.
144
 

Dr. A.W. M. Arshad
B.D.S (SL
Den Surgen Reg No (1984) Dento Surgery
86, S.de JeyCSinghe McWate, KalubOwila.
(Close to Kalubowila Teaching Hospital)
Ig : 07-4850905|
OPD Treatment, Channelled Consultancy Service Lab Investigation, Dental Surgery, Ambulance Service can be arranged
No. 298, George R.De Silvo MW. Kotohena, Colombo 13. Tel:074-610459
Colombo.

Page 88

சிவசக்தி 2OO 5
அன்னையே
இ. அர்ச்சுனர். 1.O.R.
காத்திருந்தோம் காத்திருந்தோம் காத்திருந்தோம் - பலகாலம் பூத்திருந்தோம் பூத்திருந்தோம் பூத்திருந்தோம் - பலகாலம்
நெய்யுடன் நைவேத்தியப் பொங்கலும் படைத்துவைத்தோம் கடலையுடன் கொஞ்சம் கச்சானும் அனுப்பி வைத்தோம்.
கஸ்டப்பட்டு காலம் காலமாய் "கலைமகளை" நடத்தி வைத்தோம்
இஸ்டப்பட்டு பொன்விழாவை மாண்புறவும் செய்துவைப்போம்.
மும்மூன்று தினங்களுக்கும் உன்னையே நினைத்திருந்தோம். முக்கோடி வருடங்களும் அன்னையே - உனை வேண்டிநிற்போம்.
சீரற்ற வழியிலே சினம்பிடிக்கும் சிந்தையை சிறப்பாக மாற்றிவிட்டாய். போரற்ற வழியிலே மிக இனிக்கும் சிந்தையை மேலாக
தந்தருள்வாய்.
கதியற்று இருந்த எம்மை மதி தந்து உதிக்கச் செய்தாய் துன்பக்கடலில் இருந்த எம்மை துடுப்புத் தந்து தூக்கி விட்டாய்.
மழையோடு மழையாய் பெய்திருந்த எம் கண்ணிரை
துடைத்துவிட்டாய் கல்லுடன் கல்லாய் கட்டுண்ட எம் நெஞ்சத்தை உருக்கிவிட்டாய்
145

Page 89
சிவசக்தி 2OO 5
ե
է: ֆֆ
146
 

சிவசக்தி 2OO 5
147
கழல் கொண்ட கங்கை மகன்.
சி. துவாரகன்
| 1 'R'
அவஷ்ட வசுக்களில் ஒருவனாய் வீரப்புதல்வர்களின் தலைவனாய் ஒப்பற்ற ஆண்மகனாய், தேவவிரதன் எனும் திருநாமம் கொண்டு கங்கைக்கும் சந்தனுவுக்கும் எட்டாம் புத்திரனாய் அவதரித்தவர்
தாயிடம் கல்வியும் வித்தையும் பெற்று தந்தையிடம் நாடும் அரசும் பெற்று தந்தையின் விருப்பிற்காய் திருமணமே செய்யேன் எனச் சபதமிட்டு சத்தியம் காத்தவர்
எக்காலமும் எந்நேரமும் நன்மையும், நட்பும் கொண்டவர் வீரத்தின் உறைவிடமாய் உலகெல்லாம் நின்றவர் தம்பிக்காய் தன் வீரம் கொண்டு அம்பா, அம்பாலிகா, அம்பிகா என்ற
முக்கன்னியரை மூவுலகத்தோரும் எதிர்க்க தனியாய்க் கொண்டு சென்றவர் பண்புமிகு பாண்டவருக்கும் கொடுமை நிறை கெளரவர்க்கும் அன்புப் பாட்டனார்
எந்நேரமும் பெண்களை எதிர்க்கவே மாட்டேன் என்பதற்காயும் தன் பிரம்மச்சரிய விரதத்தை காப்பதற்காயும் சிகண்டி முன் நின்று நிகழ்த்திய போரிலே சிகண்டி மீது அம்பு தொடுக்காதவர்
குருஷேத்திரத்திலே தன் மீது சிகண்டி விட்ட அம்புகள் அவனதல்ல என்றியம்பி

Page 90
சிவசக்தி இ005
அவை அர்ச்சுனன் எய்தவை எனக்கூறி வில்லாளியின் விற்திறன் உணர்ந்தவர்
நன்மையின் பக்கமே சார்பவர் என்றாயினும் செஞ்சோற்றுக்கடனுக்காயும் தருமமே வெல்லும் என்பதை உலகறியச் செய்வதற்காயும் பாண்டவரை எதிர்த்துப் போரிட்டவர் தான் தன் தந்தைக்காக செய்த சரதத்தால் தன் தந்தையிடமிருந்து விரும்பியபோதே இறக்கும் வரத்தை தான் இரவாமலேயே பெற்றுக் கொண்டவர்
குருஷேத்திரத்திலே வீழ்ந்தபோதும் தன்னைக்கிடத்தியதோ அம்புப்படுக்கையில் தன் தலையைத் தொங்கவிட்டதோ அம்புகளில் பருகி வாழ்ந்ததோ காற்றையும் நீரையும்
தான் இறக்கட் போவது தெரிந்தும் தருமனுக்கு அரசாட்சியின் சூக்குமங்களை தெளிவறத் தெரிவித்தவர் பாரோர் புகழும் பொறுமையின் சிகரமாய் வாழ்ந்தவர்
கர்ணன் தன்னைக் கடுஞ்சொல் கொண்டு தாக்கியபோதும் இறுதி நிமிடம்வரை அவன்மேல் கொண்ட கருணையை அன்பை விலக்கிடாதவர்
இறுதிப் பொழுதில் அவன் கேட்ட வித்தைகளை களவறக் கற்பித்து அவனை மன்னித்தருளி வாழ்த்தியவர் இறக்கும்போது கூட அவ்வில்லாளி
அறிந்திருந்தான் தருமம் வெல்லும் என்று உள்ளுக்குள்ளேயே உண்மையிருக்க உத்தராயண காலம் வரை உயிர்கொண்டு ஜெயித்திருந்தான் காலனை
அவ்வீரன் உயிர் உடலினின்று நீங்கினும் அவர் கண்களின் சாந்தமும் வீரத்தின்
148
 

சிவசக்தி 2OO 5
149
நிழல்களும் சரதத்தின் வலிமையும் அவரைப் பிரியவில்லை
வாழும்வரை வாழ்வான் இவ்வுலகில் ஆண்மகன்களின் உருவமாய்! வீரத்தின் தலைவனாய் - பாரினில் ஒப்பற்ற ஒருவனாய்

Page 91
சிவசக்தி 2OO5
இதிகாசங்களின் வடித்திரியன்.
S. விசாகன்
1 1 R
ஆயிராமாயிரம் ஆண்மகன்கள் வீரப்புதல்வர்கள் இருந்தபோதும், அசகாய சூரனாய் அட்டாவதானியாய் தந்தையை மிஞ்சிய தனயனாய் குருவை மிஞ்சிய சீடனாய் குணங்கொண்ட வீரப்புதல்வன் அபிமன்யு
தாயின் கருவிலேயே சக்கரவியூகம் உடைக்கவும் போர்க்கலைகள் பற்றியும் பயின்றவன் குருஷேத்திரத்திலே தந்தையைத் தனியாகத் தந்திரம் செய்து அழைத்துச் சென்றுவிட
துரோணன் அமைத்த தந்திரவியூகம் அந்தச் சக்கரவியூகம் கண்டு தலைசுற்றி நின்ற தன் படைதனை தலை நிமிரச் சொல்லி விட்டு புயலென மாறிப்
புறப்பட்டான் படைகள் பின்வர
சிவனிடம் பெற்ற கொண்டு அர்ச்சுனன் தவிர மற்றபாண்டவரை படையுட் புகவிடாது தக்கவாறு தடுத்தனன் துரெளபதி மீது மையல் கொண்டு மானழிந்த ஐயரத்தன் அபிமன்யு மட்டும் தனியாய் வியூகத்துட் புகுந்தான்
அர்ச்சுனனோ தனியாக வேறிடம் சென்று வேங்கையாய் வில் ஏந்தி நாணேற்றிப் போரிட தன்னந்தனியவனாக சக்கர வியூகம் புகுந்து சற்றும் சளைக்காது சண்டாளர்களைச் சம்ஹாரம் செய்தான் உக்கிரனாய்
150
 

சிவசக்தி 2005
151
எதிரிகளை எல்லையிட விடாது எதிர்த்து நின்றான்! உள்ளே புக அறிந்தவன் விதிவசம் கொண்டதால் தாயின் கருவில் வெளிவரும் வித்தையை அறிந்திலான் அங்கே அவன் யார் காலனோ? என வியக்கவைத்து
தந்தைக்குத் தளராத தனயனாய் தனியே வெற்றி கொண்டான் பார்த்திபன் மைந்தன் அவ் வீரனின் வீரவித்தைகள் கண்டு விறைத்து விட்ட எதிரிகள் சிலர் வியர்த்து வீழ்ந்த எதிரிகள் பலர் அபிமன்யுவின் ஆற்றல் கண்டு துரோணன் கூட மனதிலே மகிழ்ந்தவனாய் புன்னகை பூத்தான் பூத்த புன்னகை வஞ்சகன் துரியோதனனை முள்ளாகக் குத்த ஆசாரியனை வசை கொண்டு தாக்கினான்
வேறுவழியின்றி யுத்ததர்மமறிந்த துரோணனே அவ்வாண்மகனை வஞ்சித்து நிராயுதமாக்கினான் நிராயுதமானாலும் தன்னந்தனியாக சற்றும் சளைக்காது அப்போர் பூமியிலே ஆயிரம் அர்ச்சுனனாய்
அறிவுடன் மதங்கொண்டு நின்றபோது நியாயம், நீதி, தர்மம் எல்லாம் அறிந்த வீரர்கள் ஆசாரியானின் ஏவலில் அச்சின்னஞ்சிறு ஆண்மகனை. என்ன கொடுமை?
நினைக்கக் கூட முடியவில்லை ஆயிரம் போர் இணைந்து எட்டுத் திக்குகளிலும் இருந்து ஆயுதம் வீசி இரக்கமின்றி அவ்வாண்மகனை மண்ணில் வீழ்த்தினர் வீரம் நிறைந்த அச்சிங்கக் குருளை வஞ்சித்து
வழிமாற்றப்பட்டு மண்ணில் வீழ்த்தப்பட்ட போதும் அவன் முகத்திலே மாறாதிருந்த வீரச்சிரிப்பும் மூடாத அவன் கண்களும்
அவ் ஆண்மகனின் அழியாவிரத்தைப் பறைசாற்றின இதிகாசங்களின் ஷத்திரயனாய் அவன் புகழ் கூறின

Page 92
சிவசக்தி 2005
அவன் அழிந்தபோதும். இல்லை அழிக்கப்பட்டபோதும் அவ் ஆண்மகனின் உயிரை மட்டுமே அழிக்கமுடிந்தது. அக்குருடர்களால். அவனது வீரத்தையல்ல! ஆயிரம் அர்ச்சுனனாய் ஆயிரமாயிரம் சூரியர்களாய்
அவ் ஆண்மகன் செருக்களம் சென்று செய்த போர் அவனை வரலாறுகளின் வல்லவனாய். அழியாவிரத்தின் அடையாளமாய் இதிகாசங்களின் ஷத்திரியனாய் சிங்காசனமேறி ஆயிரமாயிரம் யுகங்கள் செங்கோலோச்சும்.
152

சிவசக்தி 2OO 5
153
கண்ணின் நிறம் இதுவா?
பா. பார்த்திபன் உயிரியல் பிரிவு உயர்தரம் 2006,
அரையாண்டு இருக்கிறதாம் அது தான் இறுதித் தேர்வாம். ஆழ்ந்து கற்றிருந்தேன். அதற்குள் ஒரு துயரம் தலை தூக்கிப் பார்க்கிறது. பிரிவென்ற பெயர் கொண்டு.
சிந்தித்துப் பார்த்தேன் ஒ நட்பென்ற வரம்கொண்டு. நாற்றிசையும் நம் கையில் என்று நடை போட்ட காலங்கள் முடியப் போகிறதாம். கெடு போட்டு விட்டார்கள்.
அரை ஆண்டாம்.
நாளை என்ன செய்யப்போகிறோம். துயரங்கள் மறந்து துள்ளித்திரிந்த மண்ணில் நாளை நமக்கு இடமில்லை. துரோகங்கள் கண்டு
துவண்ட போதெல்லாம் தூக்கி அணைத்தாளே வேத்தியத் தாய் நாளை யார் வருவார்?.
பழைய மாணவன் என்று பட்டம் சூட்டி நம்மை ஒதுக்கப் போகிறீர்களா.

Page 93
சிவசக்தி 2005
சொந்த வீட்டுக்கு நாளை விருந்தினராய் வரும் சாபக்கேடு. தாங்கும் வலிமை இருக்கிறதா எமக்கு.
உணவில் பங்கு கேட்டு முட்டி மோதிக் கொண்ட வேளை. உறவில் பங்கு போட்டு துயர்கள் பகிர்ந்து கொண்ட வேளை. இனிமேல் வருமா. இதுதான் விதியா.
உறவுகள் பிரியலாம். நினைவுகள் பிரியுமா. வாழ்நாள் முழுதும் நிழலாய் தொடரும் நினைவுகள் என்னை நடைப்பிணமாய் மாற்றிவிடுமே. நாளைய வாழ்வு நரகத்தில் தானா.
வெற்றிக் கேடயங்களை வென்று வந்த போதும்
அரங்கில் ஏறி
அற்புதம் செய்த போதும். விவாதங்களில் விண்தொட்டபோதும் உள்ளத்துள் பூரித்தோமே. அந்தப் பூரிப்புகள் நாளை பொய்த்திடுமோ.
வெற்றுக் குடம் நானும் வேத்தியன் என்ற பெயரில் வீறு நடை போட்டேனே மீண்டும் என்னை வெற்றுக்குடம் ஆக்கிவிடாதீர்கள். வேத்திய மண் போனால் வேறு தஞ்சம் இல்லா அகதி நான்.
புளிய மர நிழலில் பொழுது கழித்த கணங்களும்.
154

மைதானப் புல்லில் மல்லாந்து படுத்த கணங்களும் மரணப் படுக்கையிலும் மனதில் மறையாது நிற்கட்டும்.
ஒருநாள் வாழ்வென்று
உணர்ந்த பின்னும்
முகம் மலர்ந்து சிரிக்க நானென்ன முல்லைப் பூவா. ഗ്രl-l@ീൺങ്ങഖ பிரிவின் துயரம் மறைக்க.
ஒரு தாய் பிள்ளை என்று ஒன்றாகி நின்றோமே. நமக்குள் பிரிவென்று வந்த பின் நாளை தனித்தனியாவோமா. என்றேனும் ஒரு நாள் ஒன்றாய் இணைவோமா.
சிவசக்தி - - 2OO5
வெள்ளைச் சீருடையில் நானே கொஞ்சம் அழகாய்த் தெரிவேனே. இனி அந்த அழகுக்கு
எங்கே போவது.
நினைத்துப் பார்க்கவே நெஞ்சு கனக்கிறது.
பிரிவின் வேதனை சொல்லியடங்குமா. கலங்கிப் போய் நின்றேன். கரைபுரண்டு வந்த கண்ணிர் வைத்தது முற்றுப் புள்ளி.
ஆச்சரியமாய்ப் பார்க்கிறேன்.
கண்ணிரின் நிறம் இதுவா?
155

Page 94
சிவசக்தி
կի M W
R
կի Wի
կի
ի կի M
Այլ W
W
2OO 5
 
 

சிவசக்தி
2OO 5
றோயல் கல்லூரி இந்து மாணவர் மன்றத்தினால் அதி கீழ்ப்பிரிவு கல்லூரிகளுக்குள் நடத்தப்பட்ட போட்டிகளின் முடிவுகள்
H
சகலகலாவல்லி மாலை
1) S. சபேஸ் i) G. திலக்ஷன்
iii) R. Lygi 16öt iV) S. TLD LÓILL JGÖT
பூமாலை கட்டுதல்
i) G. விபுதேவஷ் i) S. சபோஸ் i) S. மிதுஸ்சனன்
iv) K. செந்தூர்
சைவவினாவிடை
1) R. அனோவிஷ் ராஜ் i) S குகணேஷ் i) P ஷாஸ்வதன் iV) G. GoĵL_1(3g56) ĝa
2 Η
சகலகலாவல்லி மாலை
i) V. நலின் i) B. கோகுல் i) M. மயூரன்
157
J
சகலகலாவல்லி மாலை
1) G. சுலக்ஷன் i) S. அஜிடேஷ் i) H.S. சசிதரன் iv) A.G. பாலரட்ணராஜ்
பூமாலை கட்டுதல் i) A.நெஸ்வின் i) C. ரசந்தன் i) T ரிஷிகேன் iv) S.S. ബ്രി(കട്ടെ,
சைவவினாவிடை
i) T ரிஷிக்கேசன் i) A. பாலரட்ணராஜா i) K. ஜனகன்
iv) S. தூபிதாரன்
2 J
சகலகலாவல்லி மாலை
i) T மயூரன் i) K. திவ்வியன் i) S. சபேஸ்காந் i) R ரஜிவன்

Page 95
சிவசக்தி 2005
மாலை கட்டல் மாலை கட்டல்
i) V. நவின் i) 1. தினுஷான் திவாகர் ii) R. J5(& JQq- i) S. துபிஷேக்குமார் i) K. நரேன் iii) R. கிரிஷிகன் iv) G. G-GLJSFGỐT iv) S. (356) q6)
சைவ வினாவிடை சைவ வினாவிடை
i) B. கோகுல் i) K. திவ்வியன் i) V, கோகுலன் ii) S. Goġbu u T95 fi i) S. ஷவீன்நாத் i) S. வழியாம் சந்தோஷ் iV) M. LDų, UTGÖT iV) T. LDų, UTGÖT
V) S. சிபேஷ்காந்
3 H 3 J.
சகலகலா வல்லிமாலை சகலகலா வல்லிமாலை
i) K. கெளதமன் i) W.A. அவினேஸ் i) N. ராஜ்காந்த் i) A. சஞ்சயன் i) S. அருள்வர்ணன் i) S. மிதுனகாஸ் iV) B. éÂULUTLb5, GSGOTGġ iV) S. GEGq.
தோரணம் கட்டுதல் தோரணம் கட்டுதல்
i) C. நிதிஷன் 1) S. சதீஸ் i) Y டினேவஷ் i) S லக்சன் iii) N. flgOJGA ġ5ff i) . அபிஷேக் iv) S. அருள்வர்மன் iv) C. துசியந்தன்
158
 

சிவசக்தி
சமய அறிவுப் போட்டி
i) T விசாகன் i) S. ഫേഖാജങ് iii) S. L6lg, GÖTEE TGA ġi iv) S லக்ஷன்
4 H
சகலகலா வல்லிமாலை
1) R. உதிஸ்வரன் i) K. ஹிரிஷகன் iii) S. L'INTEFITf5
цртбOGO கட்டுதல்
i) T. ஹரிசுதன் i) L. கீர்த்திகன் i) P மகிழன்
gIDuISló6)]í GLIILLa
i) K.S. துவாரகன் ii) R. (9)JT(g56ñ) i) R. குரேன் iv) K. சிந்துஜன்
159
2OO 5
சமய அறிவுப் போட்டி
1) A கெளத்தம் செல்லசாமி i) A. பூரீ சுபத்சன் i) N. ராஜ்காந் iv) B. குருபரன்
4 J
சகலகலா வல்லிமாலை
1) T. காந்தரூபன் i) G. ஹரிநாத் i) V துவராகேஷ் iv) B, ஷரந்தன்
பூமாலை கட்டுதல்
1) Y மனோஜ்அமிலாவஷ் i) V துவாரகேஷ் i) G. ஜெகன்
iV) V. IŠGJġ55F GÖT
சமய9றிவுப் போட்டி
i) V. துவாரகேஷ் i) E. பிரம்மானந்தன் iii) G. @ Df5 Tĝ5

Page 96
சிவசக்தி
5 H.
சகலகலா வல்லிமாலை
i) V மிதுஷன் ii) N. S.9|6ü6)j55. i) J. சசிசேகர்
சமய9றிவுப் போட்டி
i) J. சசிசேகர் i) C. சாய்கிருஷ்ணா
iii) Y. L'îTGOOTGAJ GÖT
பேச்சு
i) V மிதுஷன் i) M. பானுகோபன் iii) C. OFIT LI Jgħleb Għqu 600T FT
2OO6
5 J
சகலகலா வல்லிமாலை
i) A. செந்தூரன் i) P. அனந்தராம் iii) S. 99|(5 Gq GỐT
சமய9றிவுப் போட்டி
i) A. செந்தூரன் i) S. சைலொளிபவன் iii) S. LUTGI) 55ĝg6ÖT
iV) K. GÉNCS@JGĝi
பேச்சு
i) S. பாலகஜன் i) A. செந்தூரன் i) V ஜிவிதுர்சன்
160

சிவசக்தி
2OO6
கல்லூரிக்குள்ளான சமயத்திறன் போட்டிகளின்
கீழ்ப்பிரிவு
மத்திய பிரிவு
முடிவுகள்-2005
பேச்சுப் போட்டி
) N பிரவீன்
i) B. அஜன் i) S. அருணோதயன் iv) T தியங்கேஷன்
i) W.K. அசோக் பரன் i) S. துலுக்ஷன்
i) P ஜெயமயூரேஸ்
கீழ்ப்பிரிவு
மத்திய பிரிவு
161
iV) S. GGJUFÉJ35U GÖT
கட்டுரைப் போட்டி
1) S. திவ்யகாஸ் i) J. ஹர்ஷந்த் i) J. அருஷன்
1) S. பால மயூரன் ii) R. LİDų, GITGIĠ, i) . முகுந்தராஜ் iV) S. GÓlë, GEGOTGIĠ,

Page 97
சிவசக்தி
கீழ்ப்பிரிவு
i)
ii) iii)
மத்தியப்பிரிவு
i) ii) iii)
கீழ்ப்பிரிவு
i) ii) iii)
மத்திய பிரிவு
i) ii)
iii)
2OO 5 கவிதைப் போட்டி
P. சுசாந்தன் S.S. சத்தியெந்திரன் M.S. ஷிபசுபியன்
B. அர்ஜூனா S. ராகுலன் S. கிரிதரன்
சிறுகதைப் போட்டி
P நிருசன் S. இராகவேந்தன் P. விஷாகசரன்
S. அர்ச்சுனா
V லிபூஜிதன் T றாக்கேஷ்
162
 

சிவசக்தி 2OO6
பாடசாலைக்குள்ளான போட்டிகளில் கீழ்பிரிவில் முதலிடம் பெற்ற கட்டுரை
பெரிய புராணம்
S. திவ்யகாஷ்
பெரிய புராணம் என்பது அறுபத்து மூன்று நாயன்மார்களினதும் ஒன்பது தொகையடியார்களதும் வரலாற்றை விளக்கிக் கூறுவதாகும். இதைத் திருத்தொண்டர் புராணம் என்றும் அழைப்பர். இதற்கு பெரிய புராணம் என்ற பெயர் வந்த காரணம் இறைவன் எல்லாவற்றையும் விடப் பெரியவர் அவர் மனதினுள் இருக்கும் அடியார்கள் அதைவிடப் பெரியவர்கள் அதனாலேயே இது பெரிய புராணம் என அழைக்கப் படுகிறது.
பெரிய புராணத்தை இயற்றியவர் சேக்கிழார் பெருமானாராவார். இவர் கி.பி. 1200 அளவில் ஆட்சி செலுத்திய அநபாய சோழன் எனப்படும் இரண்டாம் குலோத்துங்க சோழனுடைய அரசவையில் புலவராக விளங்கினார். அநபாய சோழன் சமண சமயக் காவியமான் 'சீவக சிந்தாமணி" என்ற நூலைப் படிப்பதில் ஆர்வம் காட்டினார். இதையறிந்த சேக்கிழார் இதை இப்படியே விட்டால் சமண சமயம் தலைதூக்கிவிடும் சைவம் குன்றிவிடுமென்றெண்ணி அரசனிடம் சென்று சீவக சிந்தா மணியை விடச் சிறந்த காவியம் சைவ சமயத்திலுண்டு எனக் கூறினார். இதையறிந்த மன்னன் அதை இயற்றி வருமாறு பணித்தார். சேக்கிழார் பெருமான் சிதம்பரத்திற்கு சென்று இறைவனை அடியெடுத் துத் தருமாறு வேண்டினார். அங்கு "உலகெலாம் உணர்ந்து" என ஒர் அசரீரி கேட்டது. அதை முதலடியாக வைத்தே பெரிய புராணத்தை இயற்றினார்.
பெரிய புராணத்தில் திருமணச் சருக்கத்திலிருந்து சுந்தரருக்கு வெள்ளை யானை கொடுத்த படலத்தில் முடிவடைகிறது. அறுபத்து மூவரினதும் வரலாறுகளை திரட்ட சேக்கிழார் பெருமான் அவர்களின் ஊர்களிற்குச் சென்று தகவல்களை திரட்டியதுடன் பெரியபுராணத்தின் வழி நூலாக சுந்தரர் இயற்றிய திருத்தொண்டர் தொகையையும் சார்பு வழி நூலாக நம்பியாண்டார் நம்பி இயற்றிய திருத்தொண்டர் திருவந்
163

Page 98
சிவசக்தி 2OOට් தாதியையும் விளங்குகின்றது. ஒரு காவியத்திற்கு வேண்டிய சகல இலக் கணங்களையும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. பெரிய புராணத்தில் நாம் சிறந்த உவமைகளைக் காணலாம். உவமை நயம் சிறந்த நூலாகும். இக் காவியத்தில் குரு, லிங்க சங்கம வழிபாட்டால் ஏற்படும் நன்மைகளை யும் அதை பின்தொடர்ந்து ஒழுகியோர் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பன்னிரண்டாம் திருமுறையில் அடங்கும். ஆலயங்களில் திருமுறை பாராயணத்தின் போது ஐந்தாவதாக பெரிய புராணமும் பாடப்படுகிறது.
இன்று பல இடங்களிலும் இது ஒதப்படுகின்றது. இது சைவசமயி களுக்கு கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய ஒன்றாகும். இன்று நாம் அறுபத்து மூவரினதும் ஒன்பது தொகையடியார்களினதும் வரலாற்றை அறிந்திருக்கின்றோமென்றால் அதற்கு காரணம் சேக்கிழார் பெருமானது விடா முயற்சியேயாகும். இது சைவ காவியமாக மட்டும் விளங்காது சிறந்த தமிழிலக்கியமாகவும் விளங்குகின்றது. நாமும் பெரிய புராணத்தை படித்து பெரியோர் வாழ்க்கையை அறிந்து நாமும் அதன்படி ஒழுகுவோம்.
"மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்"
164

சிவசக்தி 2OO 5
பாடசாலைக்குள்ளான போட்டிகளில் மத்திய பிரிவில் முதலிடம் பெற்ற கட்டுரை
சைவசமயி
S. பாலமயூரன்
"அரிது அரிது மானிடராய்ப்பிறத்தல் அரிது அதனினும் அரிது கூண்,குருடு, செவிடுமுடம் நீங்கிப்பிறத்தல்'
சைவசமயத்திற்கும் அதனுடன் சார்ந்த மொழித்துறைக்கும் பாரிய சேவையினை நல்கி, சைவசமய வழிகாட்டியாகத் திகழ்ந்த முத்தமிழ் பிராட்டி ஒளவையாரின் கருத்தே இவை இதன் மூலம் நாம் மானிடராய் பிறந்ததன் மகிமையையும் அதன் மூலம் நாம் பெற்றுள்ள அருமைத் தன்மையையும், அது மட்டுமல்லாது நாம் ஆதியற்று தொன்று தொட்டு நிலவி வந்து சமயகுரவர்கள் மெய்ச்சமயமென நிரூபிக்கப்பெற்ற சைவ சமய குலத்தில் அவதரித்துள்ளோம். மெய்ச்சமயமாம் சைவசமயத்தின் மைந்தர்களாகத் திகழும் நாம், மெய்ச்சைவசமயிகளாக வாழ்வதே உத்தம மாகும் உயர்வானதாகும். சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சைவசமயத்தை அதன் வாழ்க்கைமுறையை, கருத்துக்களை முற்றிலும் தழுவி நடப்பது ஒரு சைவசமயி என்ற ரீதியில் எம்மிடம் எதிர்பார்க்கப்படுவது. சைவர்களாய் பிறந்த நாம், பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட அந்த குறுகிய ஆயுளை உடைய நாம் தூயசைவசமயியாக வாழ்ந்து அதன் கோட்பாடுகளை ஏற்று முத்தி பெறுவதே சிறப்பானது.
* அன்பு சிவம் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவது யாரும் அறிகிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே' என்றார் திருமூலர் அன்புதான் சிவம் சிவம் வேறு அன்பு வேறு அல்ல. சிவம் தான் சைவம், ஆகவே அன்புதான் சைவம் இதனை புலப்படுத்துவதே திருமந்திரம். இதன் மூலம் நாம் தூய சைவசமயியாக வாழ்வதற்கு. கடைப்பிடிக்க வேண்டிய தாரகமந்திரம் அன்புதான். நாம் எமது மீதும், நண்பர்கள் மீதும், ஏனைய மனிதர்கள் மீதும் ஏன்? ஏனைய அனைத்து ஜீவராசிகள் மீதும் அன்பு.
1.65

Page 99
சிவசக்தி 2OO6 னும் கருணையுடனும் செயற்படல். இப்பூவுலகில் பிறந்த அனைத்து உயிர்களும் அன்புக்காக ஏங்குகின்றன. எம்மீது ஒருவர் அன்புடன் இருக்கும்பொழுது எமது மனதில் ஒரு அளவுகடந்த மகிழ்ச்சி ஏற்படுகின்ற தல்லவா? அதேபோல் ஏனைய ஜீவராசிகள் மீது அன்பு செலுத்தி அவற்றை மகிழ்விக்க வேண்டும்.
அன்பு என்பதன் உள்ளடக்கங்களுள் ஒன்று கொல்லாம்ை இதுவே அன்பு என்ற பதத்தின் மூலம் பிரதானமாக வலியுறுத்தப்படும் கோட்பாடு சைவ உணவு உண்பதே உத்தமமான செயலாகும். சைவ உணவு எனும் போது காய்கறிகள், பழவகைகள், கிழங்குகள் என்பவற்றை உணவாகக் கொள்ளலாம். இன்னொரு விலங்கை கொன்று தின்று வாழுவது சைவ சமயத்திற்கு முரணானது. அவற்றை செய்தல் பாவம். எம்போல் பிற உயிர்கள் மீதும் அன்புடனும் சீவகாருண்யத்துடனும் இருத்தல் வாழ்தல். வாழ்ந்த சைவசமயிக்கு அழகாகும்.
அடுத்தாக சைவசமயி கடைப்பிடிக்க வேண்டிய ஒரு ஒழுக்கமாகக் கருதக்கூடியது பணிவு ஆகும் ‘பணிவு' எனும் பண்பானது அருமருந் தாகும் பெற்றோர். ஆசிரியர்கள், மூத்தோர்கள் ஆகியவர்களுக்கு பணிந்து நடத்தல் உத்தமமானது நாம் இன்னெருவருக்கு பணிந்து போவதால் எதனையும் இழப்பதில்லை. மாறாக இறைவனின் கருணைக்கும். அன்புக் கும் பாத்திரமாகின்றோம். ஆணவம் என்பது ஒருவனை பற்றிக் கொண்டு விட்டால் அவனுக்கும் வீடுபேறு கிடையாது. ஆணவம், அகந்தை என்பன பணிவுக்கு முரணானவை.
"பணிவுடையன் இன்சொலன் ஆதல் : ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற" என்கிறது பொய்யாமொழி ஒருவன் அணியக் கூடிய மிகவும் பெறுமதிவாய்ந்த ஆபரணங்கள் இரண்டு உள்ளன. ஒன்று பணிவுடன் இருத்தல், மற்றையது இன்சொல் பேசுதல் ‘பணிவு காத்தல் என்பது ஒரு தவம் சைவசமயிகளின் தலையாய கடமை. வாய்மை என்பது அனைத்து சைவசமயிகளாலும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒரு தருமமாகும். வாய்மை என்பது யாதெனப் பார்ப்போமா னால் எவருக்கும் எச்சந்தர்ப்பத்திலும் தீங்கு பயக்காத ஒன்று அதாவது நன்மையே பயக்கும் தவமாகும். இதனையே வள்ளுவர்
"வாய்மை எனப்படுவது யாதெனில், யாதென்றும்
தீமை இலாத சொலல்’ என்று கூறுகின்றார் வாய்மைக்காகவே வாழ்ந்தவன் அரிச்சந்திரன் வாய்மையை ஒரு தவமாகக் கொண்டு, சத்திய நெறியை உயிர் மூச்சாகக் கொண்டு திகழ்ந்தவன் வாய்மை காக்கும் தவத்திற்காக நாடிழந்து நகரிழந்து, தனது சொத்துக்களையெல்லாம் இழந்து
166

சிவசக்தி 2OO 5
கட்டிய மனையாளையிழந்து ஈற்றில் ஈன்ற மைந்தனையும் இழந்தான். அரசனாக இருந்தவன் ஈற்றில் ஆண்டியாக சுடலை காக்கும் தொழிலை யும் கொண்டான். இவ்வாறாக தாங்கொணா இன்னல்களை அனுபவித்த வேளையிலும் வாய்மை எனும் தவத்தை தவறின்றி காத்துவந்த காரணத்தி னால் அரிச்சந்திரன் சிவனின் திருவருள் வாய்க்கப் பெற்றான். இன்றும் நாம் 'சொல்லுக்கு அரிச்சந்திரன்’ என்று கூறுவதிலிருந்து வாய்மையின் மகிமையையும், வாய்மைக்காக்க வேண்டியதன் அவசியத்தையும் விளங் கிக் கொள்ளலாம்.
“வாய்மை தவறேல்'
அடுத்து நாம் நன்றி மறவாமை பற்றி பார்ப்போம் சைவசமயம் வலியுறுத்தும் மற்றுமொரு கோட்பாடு நன்றி மறவாமை ஆகும். எம்மைப் படைத்து வாழ வைக்கும் இறைவன், எம்மை ஈன்று வளர்த் தெடுக்கும் பெற்றோர், கல்விகற்பிக்கும் ஆசான், அறிவுரை கூறி நல்வழிப் படுத்தும் மூத்தோர் என பலருக்கு கடமைப்பட்டுள்ளோம். அவர்களுக்கு நாம் நன்றியுடைவராக இருத்தல் வேண்டும். எம்மைப் படைத்து காத்து வரும் இறைவனை நன்றியுடன் பிரார்த்திக்கவேண்டும், பெற்றோரின் மனம் நோகாது அவர்களுக்கு தக்கவேளையில் உதவுதல் வேண்டும்.
குருமார்களுக்கு பணிந்து நடத்தல் வேண்டும். இவ்வாறாக நன்றியை
சீர்தூக்கி நடத்தல் வேண்டும். இதனை உலகப்பொதுமறை -
'நன்றி மறப்பது நன்றன்று: நன்றல்லது அன்றே மறப்பது நன்று’ எனக் கூறுகின்றது
சிவ சின்னங்கள்அணிதல் அதி முக்கிய சைவக் கடமைகளில் ஒன்றாகும். பசுவின் சாணத்தை அக்கினியால் சுட்டுப் பெறப்படும் சாம்பல் விபூதி ஆகும். சிவனது கண் எனப்படுவது உருத்தி ராக்கம். மற்றும் குங்குமம், சந்தனம் போன்றன சிவசின்னங்கள் எனப்படும். இவை புறத்தே அணியும் சிவசின்னங்கள் ஆகும். அகத்தே அணியும் சிவசின்னம் 'நமசிவாய' எனும் திருவைந்தெழுத்து மந்திரம். இவற்றை அணிவதால் உடல் தூய்மை பெறும், உள்ளம் தெளிவடையும், சைவப் பற்று ஏற்படும் இறைபக்தி வளரும் இதனால் சிவசின்னங்கள் அணிதல் ஒவ்வொரு சைவசமயிக்கும் உரிய சிறப்பான கடமையாகும். சிவசின்னங் கள் அணிந்த வனே தூய சைவசமயி எனக் கருதப்படக் கூடியவன்.
மற்றுமொரு முக்கிய சைவ ஒழுக்கம் சிவதீட்சை பெறலாகும். சிவதீட்சை என்பது மலங்களால் கட்டுண்டு கிடக்கும் இப்பிறவியை சிவனின் அருளுடன் தூயதாக்கும் முயற்சியாகும். தேவாரங்கள். திரு
167

Page 100
சிவசக்தி 2OO5 முறைகள், தோத்திரப்பாடல்கள், வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள் ஆகிய அருட்பாமாலைகளை ஒதி, தகுந்த பெற்ற சைவாச்சாரியாரின் அறிவுரை பெற்று சைவசமயப் பற்றை வளர்ந்து தூய சைவசமயியாக சத்தியப்பெறுமானம் பெறலே தீட்சையின் ஒழுங்காகும் தீட்சை பெறுவ தனால் மனம் தூய்மைபெற்று தீய எண்ணங்கள் அகலும், அகத்தில் ஞானம் பிறக்கும் இதன் மூலம் சைவசமயிகளான நாம் தீட்சை பெறுதலின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளுமுடியும்.
சைவர்களாகிய நாம் சைவர்களாகவே வாழ்வதற்கு தினமும் ஆலய வழிபாடு மேற்கொள்ளல் வேண்டும் தினமும் ஆலயம் செல்ல முடியா திருப்பின் சிறப்பான நாட்களிலோ அல்லது வெள்ளிக்கிழமை களிலோ அல்லது வாரம் ஒரு ஆலயம் சென்று இறைவனை வழிப்படுதல் வேண் டும். அங்கு திருவாசகம், தேவாரம், திருமுறைப்பாடல்கள், தோத்திரப் பாடல்களால் இறைவன் மனதை குளிர்விக்க வேண்டும். ஆலயத்தை வலம் வந்து விதிப்படி வழிபடுதல் வேண்டும். மனத்தைக் கட்டுப்படுத்தி விரதக்காத்தல் வேண்டும். காலையிலும் மாலையிலும் இறைவனை வணங்கி விபூதி தரித்துக் கொள்ளல் வேண்டும். அன்பு, சீவகாருண்யம், அற்றாரக்கு உதவுதல், நன்றி மறவாமை, பணிவு, சைவ உணவு உண்ணல் போன்ற சைவப்பண்புகளை வளர்த்துக்கொள்ளல் வேண்டும். தியானம் செய்து மனத்தை ஒருநிலைப்படுத்தி இறைவனைக் காணவேண்டும். இயன்றளவு ஏனையோருக்கு உதவுதல் வேண்டும். -
"மக்கட் சேவை மகேசன் சேவை"
இத்தகைய விதிமுறைகளுக்கமைய வாழும்போதே ஒருவன் சைவ சமயி ஆகின்றான்.
நன்றி
168

சிவசக்தி 2OO 5
பாடசாலைக்குள்ளான போட்டிகளில் கீழ்பிரிவில்
முதலிடம் பெற்ற கவிதை
புதியதோர் உலகம் செய்வோம்
169
P. சுசாந்தன்
நெஞ்சத்தில் வஞ்சங்கள் கொண்டு குறையும் நேசமுடைய பற்பல நெஞ்சங்களைக் கூட வஞ்சத்தில் வீழ்த்தி வேலை வாங்கும் - மனித வஞ்சனையர் வாழும் விஞ்ஞான யுகமாம் அவனியிலே தஞ்சத்தில் ஊர் விட்டு காடு, மேடு கடந்தாலும் தக்க நேரத்தில் தரவில்லையே உதவிகளை - வன்பெனும் மஞ்சத்தில் துயில் களையும் மேலோர்கள் சொன்னவுடன் மலைகள் எத்தனை கடந்தும் வந்தனராம் ஊர்தியிலே,
விலையென்னும் கூரான கத்தியினால் தீட்டினர் விடமற்ற மனிதர் பல நெஞ்செனும் கல்லிலே - சீர்கெட்ட நிலையென்னும் படுகுழியில் விழுகையிலே - அவமானமென்னும் நிலைமண்ணால் மீதியில்லாது புதைத்தனரே கிளை, பலவுடன் ஆலத்தைப் போல் நிமிர்ந்த எம்மை கிளை வேருடன் வந்தறுத்தனர் கோடரியாலே பிழைகள் பல கண்டோம் சமூகத்திலே - எதிர்க்க
பின் விளைவு முன் வந்தது யுத்தத்திலே
போரென்னும் வாளியால் நீர் இறைத்தனர் - உலக
போதையினில் இடம் கண்டு வற்றி விட்டாலும்
நாரென்னும் அமைதியால் யுத்த நிறுத்துகையிலே நாசக்காரர் அறுக்க வீழ்ந்தது மண்ணிலத்திலே வேரென்னும் அமைதி ஒதுங்கி நிற்க - மர வேடத்தால் மேலும் இருட்டிவிட்டனர் பூமியையே பாரென்னும் வரலாறு வரையறுத்து - புதிதாக பார்க்கச் செய்ய வேண்டும் மானிடரே!

Page 101
சிவசக்தி 2OO5
முப்பது நாள் தேய்ந்து வளரும் நிலவே முத்தமிழ் என்று ஒன்றாம் செந்தமிழே இப்போதும் நடந்து வரும் பல துன்பம் கூறினாலும் இனியொன்றும் நடைபெறவிருக்கும் பல கதை மறந்தாலும் எப்போதும் வஞ்சனையில்லா நெஞ்சங்கள் கொண்டு எக்கணமும் முளைக்கும் தீமைபல வென்று அப்போதும் வடிகட்டி நன்னீரையும் உரத்தையும் அளவாக இட்டு செய்வோம் உலகத்தையே,
170

சிவசக்தி 2OO 5 பாடசாலைக்குள்ளான போட்டிகளில் மத்திய பிரிவில் முதலிடம் பெற்ற கவிதை
சுவரில்லாச் சித்திரங்கள்
E. அர்ஜுனர்
நாம் களிக்கும் நேரங்கள் நாம் களித்த நேரங்கள் நாம் சுமக்கும் பாரங்கள் நாம் சுமந்த பாரங்கள் - இவையாவும் சுவரில்லாச் சித்திரங்கள்
தமிழர் பெற்ற தழும்புகள் மார்பை கிழித்த குண்டுகள் சிதைந்து போன இதயங்கள் புதைந்து போன சடலங்கள் - இவையாவும் சுவரில்லாச் சித்திரங்கள்.
இழந்து போன இன்பங்கள் அறுந்து போன உறவுகள் இதயம் களித்த இடர்கள் ஒளிந்து இருந்த முட்புதர்கள் - இவையாவும் சுவரில்லாச் சித்திரங்கள்.
நிலத்திற்கு உரமான உடல்கள் - எமை அழிப்பதற்காய் இறக்கிய படைகள் கற்றுக் களித்த தமிழ்க் - கலைகள் வெதுப்பில் வெம்பிய வெங் குடல்கள் - இவையாவும் சுவரில்லாச் சித்திரங்கள்.
171

Page 102
சிவசக்தி 2OO 5
கைச்சாத்திட்ட பல ஒப்பந்தங்கள் படையினருக் களித்த பல பொற்பந்தங்கள் ஊரைவிட்டொளிய வேண்டி வந்த நிர்ப்பந்தங்கள் உறவுடல் களுக் கேற்றிய தீப்பந்தங்கள் - இவையாவும் சுவரில்லாச் சித்திரங்கள்.
உதிரத்திலேற்பட்ட பல ஊனங்கள் புரதத்திலேற்பட்ட பல விளைவுகள் உள்ளத்திலேற்பட்ட பல உளறல்கள் இதயத்திலேற்பட்ட பல குமுறல்கள் - இவையாவும் சுவரில்லாச் சித்திரங்கள்.
இருட்டிலனுபவித்த இன்னல்கள் ஒளிதந்து தாக்கிய மின்னல்கள் ஊரூராய் உடைக்கப்பட்ட ஜன்னல்கள் விடியலை தேடிய பயணங்கள் - இவையாவும் சுவரில்லாச் சித்திரங்கள்.
வரும் வருடங்களில் உறவும் பல வருடங்களில் பகையும் பல வருடங்களில் நீயும் சில வருடங்களில் நானும் சுவரில்லாச் சித்திரங்கள்.
172

சிவசக்தி 2OO 5
பாடசாலைக்குள்ளான போட்டிகளில் கீழப்பிரிவில் முதலிடம் பெற்ற சிறுகதை
சுனாமி அகதி
P நிருசன்
அது ஒரு இன்பமான மாரிகாலம். ஒவ்வொருநாளும் மழைத்தாய வளின் இன்பக் கோடை போல் இடைவிடாது சிலமணி நேரம் மழை பெய்யும். ஒரு சிறு கிராமம் ஒன்று அங்கு காணப்பட்டது. அதிகாலை நேரம் தனது குடிசையின் வெளியே வந்து ஒரு கணம் எட்டிப்பார்த்தார், கோபால் இன்பமான இரைச்சலை கொடுத்தது கடலைகள், அது அவருக்கு பழக்கப்பட்டதாக இருந்தாலும் சற்று அவரை இரசிக்க வைத்தது. அத்தோடு, உலக்குக்கு வெளிச்சம் தர உதயமாகிக் கொண்டி ருந்த அந்தச் சூரியனின் கதிர்கள் அவருக்கு மென்மையான புத்துணர்ச்சி ஒன்றை ஊட்டியது.
மழை பெய்து ஓய்ந்திருந்தது. இவையொன்றிலிருந்து மழைத்துளிகள் ஒவ்வொரு துளியாக கொட்டிக்கொண்டிருந்தது. அவ்வேளை "அப்பா, நேரமாகிடிச்சி சீக்கிரம் புறப்படுங்கப்பா, அந்தா பாண்டியனங்கிள் வந்திருக்காரு வாங்கப்பா, வாங்க" என்றவாறு அவர் மகன் கூப்பிட்டுச் சொன்னான். உடனடியாக தனது வலையை தோளில் போட்டுக்கொண்டு மனைவி மரகதம் கொடுத்த தேநீரை, கருப்பட்டியுடன் கடித்துக் கொண்டு, புறப்பட்டார். அவர் புறப்பட்டதும் பிள்ளைகள் அனைவரும் ஓடிப்போய் பார்ப்பார்கள். அப்போது, நீல நிறமான கடலில் சிறு படகு தெரியும். அதை பார்த்து மகிழ்வர் அப்பிள்ளைகள்.
இவ்வாறாக தனது வாழ்க்கையை ஒட்டிக் கொண்டிருந்தார் கோபால், தனச்செல்வம் இல்லாவிடினும் அவருக்கு பிள்ளைச் செல்வங்கள் இருந்தது. பணம் தரும் மகிழ்ச்சியை விட அப்பிள்ளைகள் அவருக்கு இன்பகரமான செல்வமாக இருந்தது. ஒருநாள் அதிகாலை வழக்கம் போல் கோபாலும் கடலுக்குச் சென்று விட்டார். "ஐயோ காப்பாத்துங்க" என்ற சத்தம் எங்கும். கடற்கரைக்குப் பக்கத்திலிருந்தது, அவர்கள் செய்த பாவமோ தெரிய வில்லை, கண்ணிமைக்கும் நொடியில் ஒரு பேரலை
173

Page 103
சிவசக்தி OC) அவர்களை தாக்கியது எங்கும் பிணமாக காணப்பட்டது. ஆஸ்பத்திரி யொன்றிலிருந்து அகதி முகாதமொன்றிக்கு கோபால் அனுப்பட்டான். உடலெங்கும் காயம். தனது செல்வங்கள், அதாவது மனைவி, பிள்ளைகள் அனைவரையும் இழந்தார். தனது மகிழ்ச்சி மனைவி மரகதம் தரும் தேநீர் இனி கிடைக்குமா? நான் நேரம் தவறினாலும் என்னை சரியான நேரத்திற்கு மீன்பிடிக்க அனுப்ப ஓடிவரும் என் மகன் வருவானா? என்ற பல கேள்விகளோடு ஒரு அகதிகள் முகாமில், அகதி என்ற போர்வையோடு ஏங்கிக் கொண்டிருக்கிறார். சூரியன் உதித்து மறைகிறது தான், ஆனால் என் செல்வங்கள் வரவில்லையே! என்ற ஏக்கத்தோடு அந்த உதய சூரியனை பார்த்த வண்ணம், சுனாமி அகதியாய் நிற்கிறார் கோபால், ܦ
174

சிவசக்தி 2OO5
பாடசாலைக்குள்ளான போட்டிகளில் மத்திய பிரிவில் முதலிடம் பெற்ற சிறுகதை
விடியலைத் தேடி
S. அர்ச்சுனா
பூமாதேவியைக் கெளவிக் கொண்டிருந்த இருள் அரக்கன் சூரியக் கதிர்களால் தாக்கப்பட்டு மெல்ல மெல்ல விலகி ஓடுகிறான் என் ஆயிரம் நட்சத்திரம் ஒன்று சேர்ந்தது போல ஒரு ஒளிவெள்ளம் பூமியில் பிரகாசிக்கின்றது. அது ஒரு அழகான விடியல் தனது நாயகனை வரவேற்க சிரித்துக் கொண்டே விரிகின்றது. சூரியனது ஒளி எங்கும் பரவுகிறது அந்த ஒளி அந்தக் குடிசையின் கூரைத்துவாரத்தின் ஊடாக பாயிலே படுத்திருந்த ராகேஷின் முகத்தை தாக்கியது. அவன் விடிந்து விட்டது. என்பதை அறிந்து கொண்டு எழும்பி சோம்பல் முறித்தான். பாடசாலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் வரவே சுறுசுறுப்பாயி னான். கிணற்றடிக்குச் சென்று பல்லைத் துலக்கி குளிக்கலானான். எடே ராகேஷ் இண்ணைக்கு கடையில சாமான் கொஞ்சம் வேண்டனும் வாறியா கிணற்றிடிக்கு வந்து கொண்டே கேட்டார் ராகேஷின் தந்தையான சிவலிங்கம் இல்லையப்பா இண்டைக்கு ஸ்கூலில எக்ஸாம் இருக்குப்பா என்று பதில் கூறினான் ராகேஷ் ஆமா இவன் படிச்சு என்னத்த கிழக்கப்போறானோ என்று அவனது தந்தையார் முணுமுணுப்பது கேட்டது. என்றாலும் அதை கவனத்தில் கொள்ளாமல் குளிக்கலானன். இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாணத்திலே பருத்தித் துறையைச் சேர்ந்தவர் தான் சிவலிங்கம். ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் கள் சிவலிங்கம் இவரது மகன் ராஜேஷ் சிறுவயதிலேயே தனது தாயை யுத்தத்திலே பறிகொடுத்தவன். தாயாருடைய மரணத்திற்கு பிறகு அவனு க்கு எல்லாம் அவனுடைய தந்தையார் அவர் அவனை ஆரம்பத்தில் பாடசாலையில் சேர்த்து அவனை படிக்கவைக்கலானார் அவனும் சிறந்த மாணவனாக படிந்து வந்தான். காலம் செல்லச் செல்ல அவருக்கு தனது மகனை படிப்பிப்பதில் ஆர்வமில்லை அவன் படித்து என்னத்தை காணப் போகிறான் என்ற எண்ணத்தில் அவனை கல்வியில் இருந்து இடைநிறுத்த எண்ணினார். ஆனாலும் ராகேஷின் வகுப்பாசிரியரின் வற்புறுத்தலால்
175

Page 104
சிவசக்தி 2005 - அவனை படிப்பித்துக் கொண்டுவந்தார். ராகேஷம் சிறந்த முறையில் பரீட்சைகளில் சித்தியடைந்து தற்போது அவன் ஏழாம் வகுப்பிலே படித்துக் கொண்டிருக்கிறான். ஒன்பதாம் வகுப்புவரை அவனை படிப்பிப்பதே சிவலிங்கத்தினது நோக்கம் அதன் பின்பு விவசாயத்தை கவனித்துக்கொள்வான் என்கின்றதே இவரது எண்ணம்
அன்று மாலை பாடசாலையில் நடைபெற்ற பரீட்சையைப் பற்றி நினைத்துக்கொண்டு வீடு திரும்பினான் கால் கை எல்லாவற்றையும் அலம்பி விட்டு மதிய உணவை உண்டான். அப்போது தான் வயலுக்கு தேவையான சாமான்களை வாங்கிக் கொண்டு வீட்டுக்குள் வந்தார் சிவலிங்கம். அவரும் கால் கை கழுவிவிட்டு மதிய உணவை உண்ணத் தொடங்கினார். இருவரும் உணவை உண்டபின் இருவரும் திண்ணையில் வந்து அமர்ந்து கொண்டனர். அப்போது ராகேஷ் மெதுவாக பேச்சுக் கொடுத்தான். "அப்பா நாளைக்கு ஸ்கூலில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் இருக்குப்பா’ என்றான். 'அதுக்கு என்ன?’ என்று கேட்டார். "எல்லா
ܗܰ ݂6
மாணவர்களது பெற்றோரையும் ஆசிரியர் வரச் சொன்னாரு’ என்று கூறினான் ராகேஷ் “எத்தனை மணிக்கு?’ என்று கேட்டார் சிவலிங்கம் “காலையில 8 மணிக்கு' என்று கூறினான் ராகேஷ், “சரி” என்று கூறினார் அவன் மேலும் அங்கிருந்தால் தந்தையார் ஏதாவது கூறுவார் என்று நினைத்து வீட்டினுள் சென்றான்.
அடுத்த நாள் பொழுதும் நன்றாக விடிந்தது. காலைக்கடன்களை முடித்து கொண்டு ராகேஷ்க்கும் சிவலிங்கமும் பாடசாலையை நோக்கிச் சென்றனர். இருவரும் நடந்து கொண்டு அந்தத் தெருவின் முனைவை அடைந்த போது அந்த தெருமுனையில் இருந்த கடையின் உரிமை யாளரான சோமசுந்தரம் சிவலிங்கத்தை கூப்பிட்டார். “எடே சிவலிங்கம் எப்ப என்னிட்ட வேண்டின 50000 காச திருப்பி தரப்போற” என்று கேட்டார். “கொஞ்சம் இருங்கோ மகனிட பாடசாலையில் ஒரு கூட்டமாம் அதுக்கு போயிற்று வந்து சொல்றன்’ என்று கூறினார் சிவலிங்கம் "எதைப்பற்றி" என்று கேட்டார் சோமசுந்தரம். "எல்லாம் உன்னிட்ட வேண்டின கடனைப் பற்றித்தான்’ என்று கூற சோமசுந்தரத்தின் விழிகள் வியப்பால் விரிந்தன. ராகேஷ்க்கு ஒன்றும்புரியவில்லை ஆனால் அது அவனுக்கு ஒரு பேரிடியாக இருக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நிறைவுபெற்றது. சிவலிங்கம் வீடு திரும்பினார் ராகேஷ் பாடசாலையை முடித்துக் கொண்டு வீடு திரும் பினான். கடமைகளை எல்லாம் முடித்த பின் அவனது அப்பா அவனை அழைத்தார். ’ எல ராகேஷ் இண்டையில இருந்து நீ பாடசாலைக்கு
176

சிவசக்தி 2OO 5
போவேணாம். சோமசுந்தரத்துடைய கடயில போய் இரண்டு அல்லது மூணு வருஷத்துக்கு வேல செய்தா போதும் நான் வேண்டின கடனை அடைச்சிடலாம் அதுக்கு பிறகு நீ நம்ப வயலில் வந்து வேல செய்தாப் போதும் என்று சர்வ சாதாரணமாக கூறிவிட்டுச் சென்றார். ஆனால் ராகேஷ்க்கோ கதி கலங்கிவிட்டது போலிருந்தது அவனுக்கு தனது தந்தையுடைய கட்டளையை மீற முடியவில்லை.
அடுத்த நாள் காலை சோமசுந்தரத்தினுடைய கடையில் ராகேஷை காணமுடிந்தது. அன்று மட்டுமல்ல இனி இரண்டு மூணு வருஷத்தக்கு அவனை அங்கு காணமுடியும் தனது கடையைத் தாண்டிச் செல்லும் சீருடை மாணவர்களை காணும் போது அவனையும் மீறி அவனது கண்களில் இருந்து கண்ணிர் வரும் அதை துடைத்துக்கொண்டு வேலையில் ஈடுபடுவான் அவன். அன்று அவனது கடைக்கு சாமான் வாங்க வந்த அவனது வகுப்பு மாணவி நந்தினி அவனது கண்களில் இருந்து கண்ணிர் வருவதைக் கண்டு ராகேஷ் ஏன் அழுகிறாய்? இப்போது உன்னை பாடசாலையில் காணமுடிவில்லையே ஏன் வரு வதில்லை என்று கேட்டாள். ராகேஷ் முழு விபரத்தையும் கூறினான். தாய் தந்தை ஏழையாக இருந்தாலும் அவர்களது பிள்ளைகளை படிக்க வைப்பதே அவர்களது குறிக்கோளாக இருக்க வேண்டும். அவர்களது காலம் முடிவடைந்துவிட்டது. இனி நீ உனது எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும். உனது எதிர்காலத்தேவைகளுக்கு கல்வியே மிகவும் அவசிய மாகும். நான் எனது வகுப்பாசிரியருடன் இது பற்றி கதைக்கிறேன். என்று கூறி அங்கிருந்து விடை பெற்றுச் சென்றாள் ராகேஷ் இதுபற்றி சிந்திக்க தொடங்கினான்.
அடுத்த நாள் காலை சோமசுந்தரம் ராகேஷிடம், "ராகேஷ் நான் யாழ்ப்பாணத்திற்கு போய் சில சாமான் வாங்கப் போறன் கடைய பத்திரமாக பார்த்துக்கொள' என்று கூறிவிட்டு அவர் யாழ்ப்பாணத்திற்கு புறப்பட்டார். சோமசுந்தரம் சென்ற சிறிது நேரத்தின் பின் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவனாக ராகேஷ் கடையின் கதவை சாத்திக் கொண்டு வீட்டிற்கு புறப்பட தயாரானான். அப்போது சோமசுந்தரத்தை கண்டு திகைத்து போய் செயலற்று நின்றான். சோமசுந்தரம் அவனைப் பார்த்து சிரித்து ’எங்க போகிறாய்” என்று கேட்டார் “பாடசாலைக்கு’ என்று நடுங்கியபடி பதில் கூறினான் ராகேஷ் “சரி போ’ என்று முதுகில் தட்டினார். ராகேஷ் செயலற்று நின்றான். "அப்பா’ என்று திணறினான் அவன். உனது அப்பாவிடம் போய் சொல்லு நான் உன்னை படிக்க வைக்கிறேன். நீ கடயில சேர்ந்த நாள் முதல் உன்னைக் கவனிச்சன்
177

Page 105
சிவசக்தி இ005 உனக்கு படிக்க நிறைய ஆசை இருக்கு என தெரிந்துக்கொண்டேன். என்று கூறி அவனை நாளையிலிருந்து பாடசாலைக்கு செல்லுமாறு அனுப்பினார்.
ராகேஷைப் பொறுத்தவரை அடுத்த நாள் விடியலுக்காக அவன் காத்துக்கொண்டிருக்கிறான். அவனது வாழ்க்கையும் கல்வியும் விடியலை தேடி.
178

சிவசக்தி
2OO5
04.03.2005 அன்று றோயல் கல்லூரி இந்து மாணவர் மன்றத்தால் அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான
"சமயத்திறன்கான் போட்டி முடிவுகள் 2005'
கீழ்பிரிவு
1ub 9Lüb
2Lid LLio
3ம் இடம்
3ம் இடம்
மத்தியபிரிவு
1Liò GALLİ)
2LÒ QLLð
3ம் இடம்
3ம் இடம்
மேற்பிரிவு
1ம் இடம் 2ம் இடம்
5ம் இடம்
179
பேச்சுப்போட்டி
K.மேனருபன்
S. கவிதாஈஸ்வரி
P தர்சன்
R, வைஷ்ணவி
K. நிரோஜி
S. காயத்ரி P, அஜந்தன்
S. சிவரம்யா
R. தர்ஷக
K. கமலேஷ்வரன்
P. வனிதா
டீ.எஸ். சேனாநாயக்க கல்லூரி கொழும்பு-07
கொ/விவேகானந்தா கல்லூரி கொழும்பு-13
புனித பெனடிக்ட் கல்லூரி கொழும்பு-13
திருக்குடும்பக் கன்னியர்மடம் கொழும்பு-04
தெஹிவளை தமிழ் மகாவித்தியாலயம்
பிஷப்ஸ் கல்லூரி கொழும்பு-03
கொ/இந்துக் கல்லூரி கொழும்பு-04
இராமநாதன் இந்துமகளிர் கல்லூரி கொழும்பு-04
இந்துக் கல்லூரி கொழும்பு-04
யாழ்பாணம் மத்திய கல்லூரி
இராமநாதன் இந்துமகளிர் கல்லூரி கொழும்பு-04

Page 106
சிவசக்தி
கீழ்பிரிவு
1ம் இடம்
2|b 9)|-Lb
3ம் இடம்
மத்தியபிரிவு
1ம் இடம்
2ம் இடம்
3ம் இடம்
3ம் இடம்
3ம் இடம்
மேற்பரிவு 1ம் இடம்
2ம் இடம்
3ம் இடம்
கிழ்ப்பிரிவு
1ம் இடம்
2ம் இடம்
2OO5
கட்டுரைப்போட்டி
1. ப்ரியலக்ஷ்மி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி
கொழும்பு-04
A. அகல்யா இந்துமகளிர் கல்லூரி கொழும்பு-06
T துஷ்யந்தி வுல்பென்டல் மகளிர் உயர் பாடசாலை கொழும்பு - 13.
R. திவாகர் இந்துக்கல்லூரி கொழும்பு-04
1. தேனுவரன் இந்துக்கல்லூரி கொழும்பு-04
S. கருணாகரன்
S. திவ்விகா
J. தியனன்
J. காயத்ரி R, ஷர்மதா தேவி
இந்துக்கல்லூரி இரத்மலானை
இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி
கொழும்பு-04
டீ எஸ். சேனாநாயக்க கல்லூரி கொழும்பு-03
கண்டி உயர்தரப் பாடசாலை
இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி
கொழும்பு-13
R, குமுதினி மனோகரி கொ/விவேகானந்தா கல்லூரி
கொழும்பு-13
கவிதைப் போட்டி
S. சிந்துஜா
S. அம்ரிதா
இந்துமகளிர் கல்லூரி கொழும்பு-04 பிஷப்ஸ் கல்லுஸரி கொழும்பு-03
180.

சிவசக்தி
3Liò QLLð
மத்தியபிரிவு
1ம் இடம்
2ம் இடம்
5LD 19QLLib
3ம் இடம்
மேற்பிரிவு
1ð SQLLİ)
2ம் இடம்
கீழ்ப்பிரிவு
1ம் இடம்
2ம் இடம்
3ம் இடம்
5Lb 9l Lb
மத்தியப்பிரிவு
1ம் இடம்
2Lifo QLLð
3ம் இடம்
181
V கார்த்திகா
D. றிசட்சன்
2OO 5
கொவிவேகானந்தாக் கல்லூரி கொழும்பு-13
புனித அந்தோனியார் ஆண்கள் மகா வித்தியாலயம் கொழும்பு-13
B. கிறிலோர் சமிலாவ4 புனித பெனடிக்ட் கல்லூரி
S. அபிலாஷா
S. விதேஷ்
Y திலகேஷ்வரி
, M.M.T. (LpÜg5 TáJIT
கொழும்பு-13
இராமநாதன் இந்துமகளிர் கல்லூரி
கொழும்பு-04
இந்துக் கல்லூரி கொழும்பு-04
புனித திருக்குடும்பக் கன்னியர்மடம் கொழும்பு-04
இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி
கொழும்பு-04
சிறுகதைப் போட்டி
P அனுஷ்க்கரன்
K. GET6ÖIT
K. யாழினி
S. பத்மபூரீ
R. 55 GOD Gaou_JDJé
D. தினேளினி
R. அஷ்வினி
டீ.எஸ். சேனாநாயக்க கல்லூரி கொழும்பு-03
இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி கொழும்பு-04
பிஷப்ஸ் கல்லூரி கொழும்பு-03
இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி கொழும்பு-04
இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி கொழும்பு-04
இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி கொழும்பு-04
பிஷப்ஸ் கல்லூரி கொழும்பு-03

Page 107
சிவசக்தி மேற்ப்பிரிவு
1ம் இடம்
2io g. LLio
3ம் இடம்
5th 9LLћ
கீழ்ப்பிரிவு
1Lio QLLÎò
2ம் இடம்
3ம் இடம்
31ð (9) lí)
மத்தியப்பிரிவு
1ம் இடம்
2Lb 9Lub
3ம் இடம்
மேற்ப்பிரிவு
1ம் இடம்
V. பவித்ரா
P. நவீன்குமார்
N. வியாசன்
A, நிரோசினி
இ005
இந்துமகளிர் கல்லூரி கொழும்பு-06
கொவிவேகனந்தா கல்லுாரி கொழும்பு-13
கொ/விவேகனந்தா கல்லுாரி கொழும்பு-13
திருக் குடும்பக் கன்னியர்மடம் கொழும்பு-04
பண்ணிசைப் போட்டி
M. gg5T60াIT
A சாருகா
S. ஆனந்தலக்ஷ்மி
S, 45 TILL EF ATLI'N GŴN
S. FJ 600TUIT
R. பிரஷாந்தி
V கனிஷ்டிகா
ப. சிவமைந்தன்
கொ/விவேகானந்தா கல்லூரி கொழும்பு-13
இந்து மகளிர் கல்லூரி கொழும்பு-06
இந்து மகளிர் கல்லூரி கொழும்பு-06
இந்து மகளிர் கல்லூரி கொழும்பு-06
இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி கொழும்பு-04
இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி கொழும்பு-04
வுல்பென்டல் மகளிர் உயர்பாடசாலை
கொழும்பு-13
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி
182

சிவசக்தி
1ம் இடம்
2Lð SQLLb
3ம் இடம்
3ம் இடம்
1ம் இடம்
2Lifo i QLLb
3ம் இடம்
183
2OO5 திருக்குறள் போட்டி
S, சியானி இந்து மகளிர் கல்லூரி கொழும்பு-06
S. நிரோசிகா இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி
கொழும்பு-04
R. ஆரபி மயூரா இந்து மகளிர் கல்லூரி கொழும்பு-06
L. சாய்லக்ஷ்மி இந்து மகளிர் கல்லூரி கொழும்பு-06
தேவாரமனனப் போட்டி
S. கணிவிழி கொ/விவேகானந்தா கல்லூரி
கொழும்பு-13
S. சிரோஜன் கொ/விவேகானந்தா கல்லூரி
கொழும்பு-13
S. பிரணவன் இந்து மகளிர் கல்லூரி கொழும்பு-04

Page 108
சிவசக்தி
1ம் இடம்
2ii) (2) Luis
ம்ே இடம்
2OO5 சமய அறிவுப் போட்டி - 2005
புனித பேதுருக் கல்லூரி கொழும்பு-04 i) , கஜேந்திரன்
i) V சுரேன்
i) A விதுஷன்
iv) S. faổUGÖT
இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி கொழும்பு-04
i). M. EFTGS)667
i) T ஜெயசக்தி
i) S அபிராமி
iv) R றுவானி நிரோஷி
இந்து மகளிர் கல்லூரி கொழும்பு-06 l) M. Jø)|{}%ủì|||||
i) N அஜந்தா
i) S குமுதினி
iV) K. L'AffluLUIT
இறுதிப் போட்டி சிறந்த போட்டியாளர் M. g|TG6l6ốì இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி கொழும்பு-04
சுற்றுப் போட்டியின் சிறந்த போட்டியாளர் 1. கஜேந்திரன் புனித பேதுருக் கல்லூரி கொழும்பு-04
184

LLIL) 23|L—LL)
2Li Luis
3ம் இடம்
185
ჯშ|J|ILI)|bllჯან01 BIJbssbli LDébbli III &bნსgy]IIII
1) S காயத்திரி i) N. கவிதாபிரியதர்சினி iii) M. GEITGńNGriff
iv) K. நிரோஜா
V) K. நளினி Vi) E. தேனுஷா Vi) S. அருட்செல்வி viii) S. g5fffaf ix) T ஜிவிதா X) N ஜெயந்தபூரீ Xi) M. ġibġi ggIT xii) S. L'î fîl u Jg5fféÁGÓî xi) R. ருவானி நிரோஷினி
பிஷப் கல்லூரி
i) R வினிதா
ii) R. L'ngo" GÖTT i) P வினுஜா iv) R. ഞഖഖങ്ങTഖി V) K. றோஷிகா Vi) N. பவித்திரா
புனித சூசியப்பர் கல்லுஸரி
1) S. அனிதாப் ii) A. g9|FIT f i) ). நிரோஷ்காந்த் iV) B. GEGAADLIDLIGIJGÖT

Page 109
V1) M. கணேஷ் viii) T. JITLDL NTG; IT Gậ

சிவசக்தி OOS
பாடசாலைகளுக்குள்ளான போட்டிகளில் கீழ்ப் பிரிவில் முதலிடம் பெற்ற கட்டுரை
சமயவாழ்வும் நானும்
1. ப்ரியலக்ஷ்மி, இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி கொழும்பு-4
நாம் வாழும் இந்தப்பரந்த உலகைப்படைத்து, காத்து வருபவன் இறைவன் ஒருவனே ஆவான். அவ்வகையில் இந்த சமயத்தைப் பின் பற்றி வாழும் நாம், நமது முழுதற்கடவுளான சிவபெருமானை வழிபட்டு வருகின்றோம்.
இக்காலக்கட்டத்தில் நாம் சிந்திக்கவேண்டியதொன்று என்ன வெனில், இங்கு எத்தனை சதவீதமானோர் சமய வாழ்வைப் பின்பற்றி நல்வழியில் செல்கின்றார்கள் என்பதேயாகும். இக்கால பெற்றோர்கள் தமது குழந்தைகள் சமயவாழ்வை பின்பற்றுவதை விரும்புவதில்லை. மாறாக வேறு சில பாதைகளில் வழிநடத்துகின்றார்கள். ஆனால் நான் எனது பெற்றொரின் வார்த்தைக்கிணங்க, சமயவாழ்வு ஒன்றே வாழ்க்கை க்கு உறுதுணையாகும் என ஏற்று சமயவாழ்வை கடைப்பிடிக்கின்றேன்.
தினமும் ஆலயத்திற்கு சென்று இறைவனுக்கு வழிபாடு செய்து வருகின்றேன். ஆலயத்தில் எனது கண்கள் காணும் திருவுருவக் காட்சியும், காதுகள், கேட்கும் மந்திர ஒலிகளும், நாசிக்கினிய நறுமணமும் எனது மனதை ஒருமுகப்படுத்தி என்னை இறைவன் பால் இட்டுச் செல்கின்றன. இவ்வாறு சமயவாழ்வைப் பின்பற்றுவதால் கிடைக்கும் சந்தோஷம் வேறு எத்துறையில் கிடைக்கும்? இறைவனுக்காக நான் பாடும் தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா போன்றவற்றால் கிடைக்கும் இனிமை, சுகம், சந்தோஷம் என்பவை வேறு எந்தப்பாடல்களில் கிடைக் கும்? அவற்றிற்கு வேறு எந்தப்பாடல்கள் தான் ஈடாகும்? அவை நமது சமயத்திற்கு கிடைத்துள்ள அரிய பொக்கிஷங்கள்! நான் சமயவாழ்வைப் பின்பற்றுவதன் மூலம் அத்தகைய அரிய பொக்கிஷங்களைப் பாதுகாத்து வருகின்றேன்.
187

Page 110
சிவசக்தி 2OO 5 ஒவ்வொருவரும் பல்வேறு துறைகளில் சென்று வைத்தியரா கவோ அல்லது ஒரு விஞ்ஞானியாகவோ வந்து தமக்கும் தமது பெற்றோர் களுக்கும் பெருமை சேர்க்கின்றனர். ஆனால் எனது இலட்சியம் என்ன வெனில், சமயவாழ்வைப்பின்பற்றி நாட்டிற்கும். வீட்டிற்கும் வருமை பெருமை சேர்ப்ப தேயாகும்.
விவேகானந்தரும், பூரீ இராமகிருஷ்ணரும் காட்டிய வழியில் நின்று திருஞான சம்பந்தரும். நாவுக்கரசரும் சுந்தரரும் சமயவாழ்வை வளர்க்க அதில் அனைவரையும் ஈடுபடச்செய்ய, எவ்வளவு அரும் பாடுபட்டார்களோ அவ்வளவு நானும் சமயவாழ்வைப் பின்பற்றி அதில் அனைவரையும் ஈடுபடச் செய்து சமய வாழ்வை நிலைநாட்டுவேன்.
சமயவாழ்வைப்பின்பற்றினாலே வாழ்வில் முன்னேரலாம் என அனைவருக்கும் உணர்த்துவேன். அதற்காக பாமரமக்களும் விளங்கி நடக்கக்கூடிய அளவில் புத்தகங்களை வெளியிட்டு, போதனைகளையும் நடத்துவேன் நான் சமயவாழ்வை பின்பற்றுவது போன்று அனைவரையும் பின்பற்ற வைத்து அவர்களுக்கு வழிகாட்டியாக நின்று சமயத்தை என் உயிரைக் கொடுத்தாவது காப்பேன், அதனை வளர்ப்பேன். வேதனை களையும், சோதனைகளையும் தாண்டி போதனைகளை நடத்தி சாதனை யாளான் ஆகுவேன். சமயத்தை நிலைநாட்டி சமயவாழ்வில் நின்றவர் என்னும் பெயரையும் பெற்று நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை சேர் பேன் என திடசங்கற்பம் பூணுகிறேன்.
"சமயவாழ்வே வாழ்க்கை"
கால்களாற் Uயனென் கறைக்கண்டனுறைக் கோயில் கோலக் கோபுரக் கோகரணஞ் சூழாக் கால்களாற் பயனென்
188

சிவசக்தி 2005
பாடசாலைகளுக்குள்ளான போட்டிகளில் மத்திய பிரிவில் முதலிடம் பெற்ற கட்டுரை
சைவம் காட்டும் வாழ்க்கை நெறி
R திவாகர் இந்துக் கல்லூரி கொழும்பு - 04,
"அகரமுகல எழுத்தெல்லாம் ஆதி பகவான் முதற்றே உலகு" என்ற வள்ளுவ பெருந்தகையின் வாக்கிற்கிணங்க, எழுத்துக்
கெல்லாம் அகரம் எவ்வாறு முதன்மை பெறுகின்றதோ அதுபோலதான் இறைவன் இந்த உலகிற்கு முதன்மைவகிக்கின்றான். இன்றைய உலகிலே பல சமயங்கள் காணப்படுகின்றன. அதிலும் சைவசமயத்தின் சிறப்பு மங்காது இருப்பதற்கு காரணம் அதன் பண்புகளாகும் சமயங்கள் எம்மிடையே தோன்றக்காரணம், இந்த மனிதப்பிறவியானது எம்மை அதாவது எமது ஆன்மாவை இறைவனடியில் சேர்ப்பிப்பதற்காகும். இறைவனடிக்கு செல்வது என்பதே அனைத்து சமயங்களும் கொண் டுள்ள பிரதான நோக்கம் இவற்றுள் சைவசமயம் ஒரு மனிதன் இறை வனை அடைவதற்கு எவ்வாறாக வாழ வேண்டும் என்ற வாழ்க்கை நெறி யினை போதிக்கம் ஒர் ஆசிரியனாக விளங்குகின்றது.
சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு நிலைகளை தாண் டும் போதே ஒரு மனிதன் பூரணப்படுகின்றான். சரியையானது இறை வனை எமது உடல்ரீதியாகவும் உள்ளம்ரீதியாகவும் வழிபடுதலாகும். இங்கு நாம் இறைவனை எமது உடல்ரீதியாக வழிபடுகின்றோம். அதனால் எமது உடல் புனிதமடைகின்றது. உளரீதியாக வழிபடுகின்றோம். இதனால் எமது மனம் தூய்மையடைகின்றது எம்முடைய செயல்கள் சிறப்புப் பெறுகின்றன. நாம் நினைப்பவை நல்லவையாக அமைகின்றன. இவ்வாறு சரியையானது எமது வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்துகின்றது. இதே போன்றே கிரியை, இறைவனை பூசைசெய்து அவரை வாயால் வாழ்த்தி வணங்கும் நெறியை கூறுகின்றது. இவை வாழ்க்கையில் இறைவனை வாழ்த்தி அவன் மட்டும்தான் உண்மை என்ற ஒரு பக்குவ
189

Page 111
சிவசக்தி 2005 நிலையை எய்தச் செய்கின்றது. இவ்வாறு யோகம் எமது உடலை பக்குவப் படுத்தி மனதையும் பக்குவப்படுத்துகின்றது. பக்குவப்படுதல் என்பது எம்முடைய மனம், வாக்கு, மெய் இவையனைத்தையும் இறை வன்பால் செலுத்துதலாகும். இவ்வாறு பலபடிகளை தாண்டிவந்து இறுதியில் ஞானநிலையை அடையுவதே பிறவியின் நோக்கம் என்பதை இவை வலியுத்துகின்றன. இவ்வாறு நாம் ஒவ்வொரு கட்டங்களைத்தாண்டும் போதும் நாம் எம்மையே உணரச் செய்கின்றது. ஆன்மா இலயப்படும் இடம் ஆலயம் எனவே எமது வாழ்க்கையின் நெறியினை இவை மிகவும் தெளிவாக உணர்த்துகின்றன.
சைவசமயத்தில் புராணங்கள். இதிகாசங்கள், ஆகமங்கள், வேதங்கள் என எத்தனையோ நூல்கள் எழுந்துள்ளன. இவை எமது வாழ்க்கை நெறினை வழிநடத்துபவையாக உள்ளது. வேதத்தில் வரும் உபநிடதங்கள் வாழ்க்கையின் பாடமாக காணப்படுகினறது. உபநிடதம் என்பது மறை பொருட் கோட்பாடுகளை அறிவுருத்தும் ஓர் ஆசிரியன் அருகில் இருந்து கேட்டால் எனப் பொருள்படும் ஓர் ஆசிரியின் தனது மாணாக் கனை. உண்மை பேசுக தந்தை தாயை பேணுக, குருவழி நடக்க என கூறுகின்றார். இவை ஒரு மாணவன் எவ்வாறு சமூகத்தில் வாழ வேண்டும் என கூறுகினறது. இவ்வாறு வேதசிரசு கூறுகின்றது. இவ்வாறு வேதசிரசு அதே போன்றே இதிகாசங்களில் இராமாயணம், மகாபாரதம் என்பவற்றில் மாகாபாரதம் பஞ்சபாண்டவர்களினதும் கெளரவர்களினதும் வாழ்க்கை நெறியினை கூறுகின்றது. பஞ்சபாண்டவர்கள் நேர்மை, தவறாது தாயின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்ததனால் அவர்களே வெற்றி பெற்றனர். யுத்தகளத்தில் மனந்தளர்ந்த அர்ஜூனன் கண்ணபிரானின் உபதேசங்களினால் வெற்றியடைந்தான். இது பிற்காலத்தில் பகவத்கீதை யானது. இவ்வாறு தீயவழியில் செல்பவர்கள் அழிந்து போவார்கள் என மிகத் தெளிவாக இதிகாசங்கள் விளக்குகின்றது இன்றை காலத்தில் தீய வழியில் செல்வதால் அழிவே ஏற்படும் என்பதை வாழ்க்கைப் பாடமாக எடுத்துக்கூறுகின்றது.
சைவசமயமானது விரிந்த கடல்போன்றது. அது பல பாடங்களை ஒவ்வொரு சம்பவங்களாக அல்லது ஒவ்வொரு கதைகளாக எடுத்துக் கூறுகின்றது. சைவசமயத்தில் சிறந்த வாழ்க்கை நெறியை கடைப்பிடித்தவர் கள் நாயன்மார்கள் இவர்களின் வாழ்க்கையை இன்றைய காலத்தில் பின்பற்றுவது சிறந்தது என்பது சைவத்தின் நெறியாகும். இளையான் குடிமாறநாயனார் தனது வாழ்வில் விருந்தோம்பல் பண்பை செவ்வனே செய்தார் அப்பர் சுவாமிகள் சரியைத் தொண்டு செய்தார். இவ்வாறு
190

சிவசக்தி Զ005
ஒவ்வொருவரின் வாழ்க்கை நெறியே எம்மை வழிநடத்துவனவாக உள்ளது.
உயிர்களிடத்தில் அன்பு செலுத்து, உண்மை பேசு ஒழுக்கம் தவறாதே. ஆலயம் செல் என ஒவ்வொரு கட்டளைகள் மனிதனை பக்குவப்படுத்தாது. எனவேதான் சைவம் ஒவ்வொரு அம்சங்களாக கூறுகின்றது. சைவத்தை வளர்த்தவர்களுள் ஒருவரான விவேகானந்தர் சிறந்த போதகர் அவர் ஒரு மனிதன் உணவு உண்ணும் போது கூட அவனுடைய பண்புகள் தொடர்பாடப்படுகின்றது. என கூறுகின்றார் அதாவது மது அருந்துபவன், இழிகுலத்தோன். நன்நடத்தை இல்லாதவன் போன்றோர் வீடுகளில் உண்ணுதல் தவறு என கூறுகின்றார் ஏன்?
என்றவினாவை எழுப்பினோமேயானால் இவர்கள் பண்பில் தாழ்ந்த வர்கள் என்பதேவாகும். இழிகுலத்தோன் என அவர் கூறுவது சுத்த மில்லாதவன். ஆச்சாரங்களை மதிக்காதவன், சமயத்தைப் பின்பற்றாதவன் இவர்களையே இவ்வாறு எம்முடைய பண்பு நாம் சேரும் மனிதர் களிடையேயும் தங்கியுள்ளது. இவை எமது வாழ்க்கையின் நெறியாகவும் அமைகின்றது. நாம் உண்ணும் உணவு சாத்வீககுணத்தை ஏற்படத்த வேண்டும் எனவேதான் மாமிசத்தை எமது சைவம் விலக்கவைத்துள்ளது. அத்தோடு உயிர்களிடத்தில் அன்பு செலுத்துதல் அவசியம் என்பதை வழியுறுத்துகின்றது. திருவுருவங்கள் பல காணப்படும் சமயமாக சைவம் திகழ்கின்றது. இவையனைத்தும் மனிதன் வாழும் வாழ்க்கையை கூறு கின்றது. உதாரணமாக தட்சணாமூர்த்தியை எடுத்தோமேயானால் அவர் சீடர்களுக்கு நல்லுரைகளை வழங்குகின்றார். இதே போல குருவானவர் வாழவேண்டும் என்பதை அத்திருவுருவும் வலியுறுத்துகின்றது. அதே போல் இலிங்கோற்பவர் ஆணவம் கொண்டோர் இறைவனை அடைவது எளிதன்று எனவும் கூறுகின்றது.
எனவே சைவசமயமானது மனிதனின் வாழ்க்கை நெறிப்படுத்தும் ஒரு சிறந்த கருவியாக உள்ளது என்பதில் ஐயமில்லை "ஒற்றவன் தானே, ஒருவனே தேவன்" என கூறும் சைவம் இறைவனை வழிபடுதலே சிறந்தது. வாழ்க்கையின் நெறிகளை கடைப்பிடிப்பதே இறைவனை அடையும் சிறந்த வழி எனவும் கூறுகின்றது. என்பது உண்மை.
191

Page 112
சிவசக்தி 2OO5 பாடசாலைகளுக்குள்ளான போட்டிகளில் மேற்பிரிவில் முதலிடம் பெற்ற கட்டுரை
மனிதனும் தெய்வமாகலாம்
J. காயத்ரி
கண்டி உயர்தர பாடசாலை
"அன்பகத்தில்லா உயிர் வாழ்க்கை வனபாற்கண் வற்றல் மரம் தளிர்த் தற்று" என்பது வள்ளுவர் வாக்கு ஆம் மனிதன் தெய்வமாவதற் குரிய ஒரே சாதனம் அன்பு அன்பற்ற மனிதன் உணர்ச்சிகளற்ற வெற்றுடம்புக்கு ஈடானவன் இதை ஐயம் திரிபற விளக்குவதாயின் உதாரணத்திற்கு திருமூலர் திருமந்திரத்தை எடுத்துக் கொள்வோமாயின்
"அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவதாரும் அறிகிலார் அன்பே சிவமாவதாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே என்கின்றனர் இவ்வாறு அன்பும் சிவமும் இருவேறரக் கலந்திருப்பதால் மனிதனும் உயிர்களுக்கு அன்பு செலுத்துவானாகில் அவனும் தெய்வமாகலாம்.
கடவுள் விலங்குகளுக்கு ஐந்து அறிவையும் மனிதனுக்கு பகுத் தறிவையும் சேர்த்த ஆறு அறிவுகளை வழங்கியுள்ளான். இதன் மூலம் இறைவன் உணர்த்துவது யாதாயின் உலகில் உள்ள தீயகுணங்களை விடுத்த அன்பு போன்ற நற்குணங்களை அன்னம் நீரிலிருந்து பாலைப் பிரிப்பது போல் பரித்துக்கொள் என்பதாகும்.
அடுத்ததாக “பசுவிற்கு வாயுறை” என்பது அறங்களுக்குள் அடக் கம் இது விலங்குகளிடமும் மனிதன் அன்பாக நடந்து கொள்வதற்கு ஒர் எடுத்துக் காட்டாய் விளங்குகிறது. “கண்ணிர் என்பது பெண்ணுக்கு உரிய ஆயுதம்' என்பர். அது போல் மனிதன் இலட்சியத்தை அடையவும், வாழ்வை நிறைவு செய்யவும் அன்பே ஊடகம் என்றால் அது மிகையா காது அன்பானாது ஒருவரை நல்லவழியில் திசை திருப்ப அதாவது மறத்தை அழிப்பதற்குரிய ஆயுதமாகும் இதனையே திருவள்ளுவர் இவ் வாறு கூறுகிறார்.
192

சிவசக்தி 2OO 5
“அறத்திற்கே அன்பு சார்பு என்பர் அறியார் மறத்திற்கும் அஃதே துணை'
அன்பு என்பது ஒரு கண்ணாடிப் (அடுத்தது காட்டும் பளிங்கு பளிங்கு போன்றது ஒரவர் மற்றொருவர் மீது அன்பு செழுத்தும் போது அவரை மீண்டும் சென்றடைகிறது இவ்வாறான நிலைமை காணப்படின் எங்கும் சாந்தமும் அமைதியும் நிலவும் அப்பொழுது தெய்வமாகிய மனிதனைக் காணலாம்.
அன்பு என்ற குணம் அனைவரிடத்திலும் கட்டாயம் இருக்க வேண்டிய ஒன்றாகும். அன்பு ஒருவரிடத்தில் இல்லாது போயின் அவரை வெயில்பட்ட புழு துடிப்பதைப் போல் அறக்கடவுள் வருத்துவார் அது மட்டுமல்லாது அன்பில்லாதவரைக் காணின் இவ்வுலகத்தவா அவர் பிறந்த குடியை சந்தேகிப்பர் இதையே "நலத்தின் கண் நாரின்மை தோன்றின் அவனைக் குலத்தின் கண் ஐயப்படும்’ என்று வள்ளுவர் உரைக்கிறார்.
அன்பு என்பது நிச்சியம் இறைவனின் குணம் அதனாலோ என்னவோ சிவனை கருணாமூர்த்தி என்றும், அன்பினில் விளைந்த ஆரமுது எனவும் சகல சீவ தயாபரன் எனவும் அழைக்கின்றனர்.
"அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு”
என்கிறார் திருவள்ளுவர் அதாவது ஒருவன் மனிதனாகப் பிறந்த தன் பயன் அன்பு செலுத்துதலே என்கிறார் அனைத்திலும் கிடைத்தற்கு அரிய பிறப்பு மானிடப் பிறப்பு இதை ஒளவையார் இவ்வாறு கூறுகிறார் “அரிது அரிதுமானிடராய்ப் பிறத்தல் அரிது’ இப்பிறவியைப் பெற்றதன் காரணமும் அன்பு செலுத்துதலேயாகும் உலகினதும் இறைவனினதும் சீவ நாடியே அன்பாகும். அன்பு செலுத்துவது என்ற கருத்தை மனிதன் தவறாகப் புரிந்து கொள்கிறான். ஒரு தாய் தன் மகனுக்கு அன்பு செழுத்துவது யதார்த்தமானது உண்மையான அன்பென்பது யாரென்றே அறியாத ஒரு உயிருக்கு பிரச்சினையான சூழ்நிலையிலோ அல்லது வேறு சந்தர்ப் பங்களிலோ அன்பு செலுத்துவதேயாகும்.
ஒரு மனிதனது வாழ்க்கையில் அன்பானது ஒரு இன்ப ஊற்றாகக் காணப்படின் அவன் நிச்சயம் ஒருநாள் தெய்வமாகி சாதிப்பான் அதற்கு உதாரணம் விபுலாநந்தரின் வாழ்வு இவர் இந்தியப் பல்கலைக்கழகத்தில்
பணி புரிந்த வேளை அங்கிருந்த ஏழைகளுக்கு உதவியது உலகறிந்த
கதை விபுலாநந்தர் மட்டுமல்ல புத்தர் பெருமானது வாழ்க்கையும் அன்பில்
193

Page 113
சிவசக்தி 2OO5 இரண்டறக் கலந்த வாழ்க்கையாகும் விபுலாந்தர் கூறியபடி பார்ப் போமாயின் "உள்ளக்கமலமடி உத்தமனார் வேண்டுவது” அதாவது தூய்மையான அன்புநிறைந்த உள்ளத்தையே இறைவன் வேண்டுகிறார். அதுவே வாழ்வை உயர்த்தி மனிதன் தெய்வமாக சிறந்த வழி அதுமட்டு மல்லாது ஒளவையாரின் கூற்றுப்படி
"பெரிது பெரிது புவனம் பெரிது புவனமோ நான்முகன் படைப்பு நான்முகனோ கரியமால் உந்தியில் வந்தோன் கரியமாலோ அலைகடல் துயின்றோன் அலைகடலோ குறுமுனி அம்கையில் அடக்கம் குறுமுனியோ கலசத்தில் பிறந்தோன் கலசமோ புவியிற் சிறுமண் புவியோ அரவினுக்கோர் தலைப்பாரம் அரவமோ உமையவள் சிறுவிரல் மோதிரம் உமையவளோ இறைவன் பாகத்து ஒடுக்கம் இறையவரோ தொண்டர் பாகத்து ஒடுக்கம் தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதோ'
இவ்வாறு இறைவனையே தம் வசப்படுத்திய தொண்டருக்கு அன்பின் மூலம் இறையடியைச் சேர்ந்து இறைவனாதல் பெரிதன்று ஆகவே அன்பே புதுயுகத்தின் விடிவெள்ளி புதுமையின் வழிகாட்டி இருளின் ஒளி
194

சிவசக்தி 2005 பாடசாலைகளுக்குள்ளான போட்டிகளில் கீழ்ப் பிரிவில் முதலிடம் பெற்ற கவிதை
விழிகளின் அருகினில்,
S. சிந்துஜா இந்துமகளிர் கல்லூரி கொழும்பு -06.
உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் அந்த விழிகளின் அருகினில் ஒரு சில நீர்துளி
அது தான் கவலை
சிறந்த நடிகன் தன் நடிப்பை வெளிப்படுத்தும் அந்த விழிகளின் அருகினில் ஒரு விரிவு அது தான் ஆர்வம்
ஒரு சிற்பி சிலையை செதுக்கும். போது அவனது கற்பனையை வெளிப்படுத்தும் அந்த விழிகளின் அருகினில் ஒரு கலக்கம் . அது தான் தேடல்.
மகபாவத்துக்கு அடிப்படையாக வள்ள அந்த விழிகளின் அருகினில் ஓர் உற்சாகம்
அது தான் மகிழ்ச்சி இந்த உலகத்தில் உள்ள பொருட்களை கண்டு களிக்க உதவும் அந்த விழிகளின் அருகினில் ஒரு வித ஆர்பரிப்பு புதுவித வியப்பு.
அந்த விழிகளின் அருகினில்
தோன்றும் ஒரு வித வெறி அது தான் கோபம்
195

Page 114
சிவசக்தி 2OO 5
அந்த விழிகளின் அருகினில் வரும் ஒரு வித பரிவு அது தான் பாகம்.
இந்த விழிகளின் அருகினின் வருகிற கனவினை தெளிகிற
திருவாய் தருபவன் தனிப் பெரும் கவிஞனே.
196

சிவசக்தி 2OO 5
பாடசாலைகளுக்குள்ளான போட்டிகளில் மத்தியப்
197
பிரிவில் முதலிடம் பெற்ற கவிதை
விடை கொடு எங்கள் நாடே
D. றிசட்சன் புனித அந்தோனியார் ஆண்கள் மகாவித்தியாலயம்
கொழும்பு - 13.
பாவிகளாய் பிறந்தோம் பாவிகளாய் வளர்ந்தோம் பாலை நிலத்தில் பாதையோரம் நிற்கின்றோம் - இதற்கு விடை கொடு எங்கள் நாடே
பூவாய் தினம் மலரவும் புன்னகித்து பூத்து குலுங்கவும் புதுயுகம் படைக்கவும் புறப்பட நிற்கும் எங்களுக்கு விடை கொடு எங்கள் நாடே
மன்னிக்கும் மனதோடு மறப்பதை நினையாது மனதில் இருப்பதை வெளிக்காட்ட மறுக்கின்றோம் - இதற்கு விடை கொடு எங்கள் நாடே
சமாதானமாய் வாழவும் சமத்தவமாய் இருக்கவும் சத்தியில்லாமல் இருக்கின்றோம் சக்தி எமக்கு கிடைக்க விடை கொடு எங்கள் நாடே

Page 115
சிவசக்தி 2OO 5
சிக்கனமாய் வாழவும் சிந்தித்து செயல்படவும் சிறகு முளைத்து சிவனை தேட விடை கொடு எங்கள் நாடே
அன்னையின் அரவணைப்பிலே அன்பை காணவும் அகமகிழ்ந்து அணைத்து கொள்ளவும் அன்பை வெளிக்காட்டவும் விடை கொடு எங்கள் நாடே
செந்தமிழில் பேசிடவும் செழிப்பாக வாழ்ந்திடவும் செம்மையானதை நினைத்திடவும் செல்வந்தராய் வாழ்ந்திடவும் விடை கொடு எங்கள் நாடே
நன்மைகள் செய்திடவும் நல்லதை நினைத்திடவும் நம்பியவரை காப்பாற்றவும் நடுநிலைமையில் வாழ்ந்திடவும் விடை கொடு எங்கள் நாடே
விடை கொடு எங்கள் நாடே வினையினை தீர்க்கவும் வினையினை அறுக்கவும் விடை கொடு எங்கள் நாடே விடை கொடு
198

சிவசக்தி 2OO5
பாடசாலைகளுக்குள்ளான போட்டிகளில் மேற்பிரிவில் முதலிடம் பெற்ற சிறுகதை
வைகறை நிலவு
R. தர்ஷக இந்துக் கல்லூரி, கொழும்பு -04.
பிளந்து கொண்டிருந்தன. சிறுவர்கள் வானவெடிகளைக் கொளுத்தி வர்ண வேடிக்கையை இரசித்துக் கொண்டிருந்தனர். பெண்கள் பல வகையான சிற்றுண்டிகளை செய்வதில் மும்முரமாய் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். ஆடவர்களோ தமது அலுப்பையெல்லாம் மறந்து ஆடல்பாடல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்தக் கிராமமே மகிழ்ச்சியில் மூழ்கியிருந் தது. இருக்காதா? எத்தனை துன்பங்களையும் துயரங்களையும் கடந்து வந்திருக்கிறார்கள்? இன்பமும் துன்பமும் வாழ்க்கையின் சுழல் சக்கரம்
விடிந்தால் தீபாவளி பட்டாசுகளும் வெடிச்சத்தங்களும் காதைப்
என்பது உண்மைதான். ஆனால் வாழ்க்கையே துன்பமாகிவிட்டால்?
யுத்தம், போர், பஞ்சம், பட்டினி என்று எத்தனையோ அவலங்களைக் கடந்து வந்தவர்களுக்கு மீண்டும் பேரிடியாக கடல் கொந்தளித்துக்
கொண்டதால் அக்கிராமத்தில் மட்டுமே இருநூறு உயிர்கள் பலியாயின. பொழுதெல்லாம் கடலிலே உழைத்துச் சேர்ந்த சொத்துக்களெல்லாம் ஒரே நிமிடத்தில் கண்முன்னே அழிந்தன. அத்தனை துயர்களிலிருந்தும் இப்போதுதான் மெல்ல மீண்டு வந்திருக்கிறார்கள். இந்தத் தீபாவளிக் கொண்டாட்டம் கூட அத்துயரை மறக்கவே.
ஆனால் எத்தனை மாற்றங்கள் வந்தாலும் இழப்புக்களின் வடுக்கள் எளிதில் மறைவதில்லை. இவ்வளவு களியாட்டங்களில் இருந்தும் ஒருத்தி மட்டும் விலகியிருந்தாள். குடிசைக்குள் முடங்கியிருந்தாள். விளக்குக்கூட ஏற்றாது அவ்விருட்டுக்குள் குருட்டுத்தவமா செய்கிறாள்? உண்மையைச் சொல்லப்போனால் இம்முறை தீபாவளியை விமர்சையாகக் கொண்டாடி யிருக்க வேண்டியது அவளல்லவா?
காலங்கள் பின்னோக்கி நகர்கின்றன. அவள் வீட்டிலிருந்து சோற்றையும் மீனையும் சமைத்து விட்டு தந்தைக்காக காத்திருக்கிறாள்.
199

Page 116
சிவசக்தி - 2005 தினமும் தட்டுத் தடுமாறி வருடவர் இன்று திடமாய் நடந்து வருகிறார். அவளால் தன்னையே நம்ப முடியவில்லை.
"என்னம்மா பாக்குறாய்? இன்னிக்கு நான் ஏன் குடிக்கல என்றா? குடிக்கத்தான் போறன். நான்கு போத்தல் அதிகமாய். ஆனால் அதற்கு முன் விஷயத்தை உன்னிடம் சொல்லனும் என்று ஓடி வந்தேன். என் நண்பன் முருகேசன் உன்னைத்தங்க விட்டுப் பெண்ணாக்கனும் என்று விரும்புறார்."
"என்னப்பா சொல்கிறீர்கள்? ஒன்றுமே புரியவில்லை"
"ஆமாம்மா, முருகேசனின் மகன் ரவி. அதான் டாக்டருக்கு படித்த பெடியன் உன்னை அன்றைக்குக் கோயிலிலே பார்த்தானாம். பிடிச்சுப் போயிட்டு நாளைக்கே வீட்டிற்கு வருகிறார்களாம்"
கீதாவாள் நம்ப முடியவில்லை. ரவியுடன் முன்னர் பேசியது கிடையாது. ஆனால் பார்த்திருக்கிறாள். தோழிகளின் வாயிலாக அவனைப் பற்றி நன்கு அறிந்திருந்தாள் ரவி படித்தவன் மட்டுமல்ல பண்பானவனும் கூட செல்வத்தில் அவன் குடும்பம் ஏழைகள் என்றாலும் குணத்தில் மலை போன்றது. கீதா ரவியைப் போன்று படித்தவளல்ல. உயர்தரம் மட்டும் படித்தாள் பின்னர் வசதியின்மையாலும் தாய் திடீரென நோய் வாய்ப்பட்டதாலும் படிப்பை நிறுத்திக் கொண்டாள். படிப்பில் ரவிக்கு நிகரானவள் இல்லாத போதும் குணத்தில் அவனை விட உயர்ந்தவள்.
மறுநாள் வீட்டிற்கு அவர்கள் வந்தார்கள் முதற் சந்திப்பிலேயே இருவரது உள்ளங்களும் செம்புலப்பெயல்நீர் போல கலந்து விட்டன. சில வாரங்களிலேயே திருமணம் நடந்தேறியது. இல்லறத்திலே நல்லறம் கொண்ட இருவரும் இன்பமாய் வாழ்ந்து கொண்டிருந்தனர். இருவரது ஜோடிப் பொருத்தத்தை கண்டு பலர் வியந்தனர். சில பெண்கள் பொறாமை கொண்டனர். ரவி தொழில் விடயமாய் அடிக்கடி வெளியூர் களுக்குச் சென்று வருவான். சில வேளைகளில் கீதாவும் சென்று வருவாள். இப்படி இன்பமாய் வாழ்ந்து வரும் காலத்தில்தான் கூற்றுவன் அவர்கள் வாழ்வில் சதி செய்தான். கீதா தோழி ஒருத்தியின் திருமணத்திற் காக வெளியூர் சென்றிருந்தாள். ரவி மட்டுமே வீட்டிலிருந்தான். ஞாயிற்றுக் கிழமை என்பதால் ஒய்வு நாள். வீட்டிருப்பதற்கே அலுப்பாக இருந்தது கடற்கரை வரை சென்று வர புறப்பட்டான்.
"என்ன டாக்டரய்யா அதிசயமாய் கடற்கரைக்கு வந்திருக்கிறீர்கள் கடலுக்குப் போறம் வாறிங்களோ?"
200

சிவசக்தி 2005
வீட்டில்தான் கீதாவும் இல்லையே என்று சம்மதித்துவிட்டான்
அன்றுதான் அவனையும் அவனுடன் சென்ற மற்றவர்களையும் அக்
கிராம மக்கள் இறுதியாய்ப் பார்த்த நாள்.
ஊருக்குத் திரும்பிய கீதாவிற்கு கிராமத்தின் நிலையே தலைகீழாய்க் கிடந்தது. சமுத்திராதேவி பெருக்கெடுத்து உயிர்களைப் பலியெடுத்து தன் பசியைப் போக்கிக் கொண்டான் என்பதை நம்ப முடியவில்லை. ஒரே சமயத்தில் அத்தனை உறவுகளையும் இழந்து தனிமரமானாள். தந்தை, மாமா, மாமி என்று அனைவரின் சடலங்களும் கிடைக்கப்பெற்றன. ஆனால் ரவி? அவனுக்கு என்ன ஆயிற்று ஒன்றுமே தெரியவில்லை. நாட்கள், வாரங்கள் மாதங்கள் என்று காலங்கள் நகர்ந்தன. ரவி உயிருடன் இருந்திருந்தால் நாளை மகிழ்வாய் தலைத் தீபாவளி கொண்டாடி யிருப்பாள் என்ன செய்வது அவள் வாழ்வில் விதி சதி செய்து விட்டதே தனது சோகமான வாழ்வை நினைத்துக் கொண்டிருந்தவளின் கண்கள் தானாகவே மூடின. நித்திராதேவி அவளை ஆக்கிரமித்துக்கொண்டாள்.
அதிகாலை ஐந்து மணியிருக்கும் கதவுகள் தட்டப்பட்டன. கீதா விளித்துக்கொண்டாள். இந்த வேளையில் யாராக இருக்கும் தனியாக இருக்கும் தனது வீட்டைத் தட்டுகிறார்களே பயந்தவண்ணம் கதவை மெதுவாய்த் திறந்தாள். யாரோ இரு ஆடவர்கள், கூச்சலிடுவோமா என்றவனை அவர்களில் ஒருவனின் கை பற்றியது. மூச்சடைந்து விழுந்தாள். சிறிது நேரம் கழித்து கண் விளித்த போது அக்கிராமமக்கள் அவனை சூழ்ந்து கொண்டிருந்தனர். அவள் எதிரே கைபிடித்தவன் நின்று கொண்டிருந்தான். அவளால் நம்பவே முடியவில்லை. இன்று அவளின் கை பிடித்தவன் அன்று அக்கினி சாட்சியாய் அவள் கைபிடித்தவனே. அவளது வினாக்களை புரிந்த கொண்டு அவனே தொடர்ந்தான். நடுக்கடலிலே சென்று கொண்டிருக்கும் போது கடல்பெருக்கெடுத்ததால் கப்பல் கவிழ்ந்த பின்னர் றேறொரு இடத்தில் கரையொதுங்கியதையும் பின்னர் ஒருவாறாக இவ்விடம் வந்து சேர்ந்தவரை அனைத்து விடயங் களையும் கூறினான். அவள் கண்களிலிருந்து கண்ணிர் பெருக்கெடுத்து ஒடிக் கொண்டிருந்தது. ஆனால் இது அவள் இதுவரை வடித்த துன்பக் கண்ணிரல்ல ஆனந்தக்கண்ணிர் வானத்திலே பிரகாசித்துக்கொண்டிருந்து விட்டு நிலவு மறைந்து கொண்டிருந்தது. ஆனால் அவள் வாழ்விலோ அமாவாசையாய் இருந்த இருட்டு விலகி வைகறை நிலவு தோன்றியது. இனி அவள் வாழ்வில் என்றும் வசந்தம்தான் தினமும் தீபாவளிதான்.
201

Page 117
சிவசக்தி Grade IJ
A. Dar II./ A. Haywin sella sany A. G. Balla ratna rajah B. Arjun C. Rayllianthar G. Sulaksanaith H. P.S. Shas it haran J. Sharat than K. Janagan K.Saunyan L. KaveeShan M. A ra vindhanair M. Se yon N. Senthuran S. Abithaaran S.A. Ajitesh S. Bha Vapriyan S. Siranjiv S. Sayatheasan TI Rii:Walike Shean TSa ruke Nhan TThl/Varakan
S. San Lujan
Grade 2J
K. Abishek baren S. Abishekumar A. Arushan J. Dinushan Divagar R. Krishikan T. Mayooran I. Prashanth Aingaran P Ragul R. Rajee van - S. S'ha vie Shikanth R.Siva v nthicarn S.Sripuruhsthanan I. Thuvrahan S. Vidyahar S. Ziyanı Santhosh. K. Thivvyan N.Artunesh
Grade 3.J.
A. E. Sathiyapala Sathees A. Sanjayan
B. Harish CDushiyanthan E. Gouthaman
G. Anoian J. Abisheck Prashanthan M.Arcle una M. With wasaharan P. Harakrishlan P Raglt waren P. Midlus har R. Suwamiraj R.Ashragan R.Aagashraj S. Prana van Arunan S. Lakshan S. Ragu raka van S. Aravintha Subramania Sharma S. Mithunagash S. Ha riadhak Shan T. WISCR
WA.AVinéa 8h. S. Ha rike Shan S. Megajan
Grade 4/
B. Balann urali E. Brahmanandan G. Jegal V Nellaan Krinath J. Nivendranath V.Sudheshan B. Sharounthan V. Thu Vvaragesh B. Branthaaban G. Harinath S. Harishman TKatharupan S. Khowe reshan J. Kiritharan S. Rajineesh VSrivathson Y Unasuthen V.Jee vinoyan Y. Manoj Abhilash
2OO 5
Grade 5.J.
R. Vishnu venthan L. Dilip kumar S. Prathie iban K. Dinushan P.Ananthraan S. Arushan VJee Vidfilt San A. Senthuran C. Saroonan S. Balagajan PPradeep R. Gorgul Gobiran J. Vir Sharth R. Ravindran Day R. Vishka M. Virpal rha K. Velves
S.Prasad Arjuna
V. Duhakaran S. Raadhikesh S.Shyloliva van N. Sarujan
2O2

சிவசக்தி
Grade IH
A. E.S. Scles G. Thilak ya F I. Mathiltshart (IF7 J. Natharshan K. Ser 2 thoor Arumugan M.S. Certi tra PScts afficer B. As win Pragash R.A anos hraj R. Pradeepan R. Riis la rir Abishek S. Kohlular S. Midtt share S. Midusan Harie S.Nirzu,S/ucarz V. Dhivye sh V IShia FeS/ V Kuganesh S. Arnest U/. Dananjayan G. Viputhesh S. Ra Inyan
Grade 2H
A. Praveen . B. Gokhul
G.Sabe San J. ViSnu, ve ankat K. Naran K. Rajee van K.A ro),Shcafn M. Vasigharan M. Mayooran R. Derily On Nareyh S. Withu, San S. Shaiviennath S. SMvCab ipnca,Sh. TSinthurjan VNali. R V. Kogulan S. Hariya rushan A. Udayakimar
203
Grade 3H
Nif Welse yn N. Itir 2 bushkan K. Nia vin S. Karnar 2 B. S/hiyaI7zgaFue,S/z K. GOM'thanan N. Rajkanth B. Gurtuba ran S. Arulvaraan R. Anoj Krishanthan Y.Diple Shı R. Sri Sabath Son A. Gowthann S. Varna,Suthan S. Mithu Shan S. Sooriapradeep N. Praveel R. Nareshwar L. Sarve Sh. C. Thushyanthan
Grade 5H
VArawird Kumar WMahendranath S. Mahadevh G. A runsenthooran A.Nagedritan K. Pirabanjan V Yoga Sabapathipilla T.Dirila, Shan D. Ramendraraj G, Guiganathan R. Kawe eSwaran V. Baskaran J. Sa Shishe lar K. Viajyakumar G. Dharshan N.Abir C. Sai Krishna VMithzuur"Sarz, S. Ajanthan M. Bhanugoban
2OO5
Grade 4H.
S. Dushyanthan S. Du wa rakan THaris authan R. Mithoosihan Baarath P Mahilan S. Prashan th R.Ragul VSujee van K. Sindujan S. Dushiyanthan B. Gajive B. Hiranjan L. Keerthigan J. Kesavan R. Kogulan C. Senthural R.Sharunaith VThivyan R. U thishtiran J. Kavin HaShwarth R. Durrayn Dinnu sh M. Pavithrin
* TAathi Shankar
K. Hirishegal U. Thangabalu

Page 118
சிவசக்தி 2005
Our grate full thanks to....
o Swami Afmagadananda for gracing this event day his esteemed presents S. Chandirasakeran, Our chief guest.
o Our principal Mr. H.A.U.Gunasekara for giving us permission
and encouragement us in our venture.
o Our Vice Principal, Assistant Principals and Teachers.
o Mr.Antony Rajah for giving us the permission to screen films
for benefit show.
o Our Teacher in charge Mr. S. Balanderan who stood by us in all our troubles , Mrs. L. Thavakumar, Mr. S. Sivakumr, Mr.S.S. Gajanthan and all the other teachers who gave us their Support.
O All those who contributed articles for this souvenir.
e All representatives who participated in this Kalainagal Vizha
2005.
o The advertisers and well-Wishers Who have contributed to
the Success of this Souvenir.
o The Manager and Staff of Ekwality Graphics Pvt (Ltd), not Only for their magnificient job, but also for their unrelenting patience.
o M. N. Printers Pvt (Ltd) for having printed the invitation cards
and certificates.
O Ministry of Hindu religious and cultural affairs.
o "Nimal Super Lights" for providing lights and sound systems
for this event.
o The Video graphics photographers of "A Sohk Video". o Parents who have granted their support for this event.
o And all patrons who came to grace this Kalainagal Vizha
2005.
204

சிவசக்தி 2OO5
205
நன்றி நவிலல்
இன்று இவ்விழாவிலே கலந்து கொண்டு ஆசி நல்கி எம்மை யெல்லாம் சிறப்பித்துக் கொண்டிருக்கும் சுவாமி ஆத்மகனானந்த ஜி அவர்களுக்கும், - இளையவர் எம் அழைப்பை ஏற்று வருகைதந்த சிறப்பு விருந்தினர் பேராசிரியர் திரு.சோ. சந்திரசேகரம் அவர்களுக்கும். கற்பக வல்லியின் பொற்பாதங்களைப் போற்றி விழா எடுக்க அனுமதியும், ஆதரவும் வழங்கிய எமது கல்லூரி அதிபர் H.A. உபாலி குணாசேகர அவர்களுக்கும். எம் கல்லூரியின் உப அதிபர், துணை அதிபர், மற்றும் ஆசிரியர் களுக்கும்,
தந்தையாக நின்று. நாம் தளந்தபோதெல்லாம் தட்டியெழுப்பிய எமது மன்றப் பொறுப்பாசிரியர் திரு. S. பாலேந்திரன் அவர்களுக்கும் உதவிப் பொறுப்பாசிரியர்கள் திருமதி. L. தவக்குமார், திரு. S. சிவகுமார், திருமதி. S. கஜந்தன், ஆகியோருக்கும், ஆசிச் செய்திகளையும் ஆக்கங்களையும் அளித்து உதவிய அனைவருக்கும்.
GTLD5) பாடசாலையில் நடத்தப்பட்ட அகில இலங்கை சமயதிறன் காண் போட்டிகளில் கலந்து கொண்ட ஏனைய பாடசாலை மாணவர் களுக்கும் நடுவர்களுக்கும். மிகக் குறைந்த காலக்கெடுக்குள் எம்மை அனுசரித்து, தளராப் பொறுமையுடன் இம்மலரை மிகச்சிறந்த முறையில் அச்சிட்டு GGJGifu'll L Ekwality Graphics Pvt (Ltd) ISDGJGT55.jpg, b, அழைப்பிதழ்கள், சான்றிதழ்களை அச்சிட்டு உதவிய M.N. அச்சகத்தாருக்கும்.
GTLD5) பாடசாலையில் நடைபெற்ற சமயதிறன்காண் போட்டி களுக்கும், விழாவிற்கும் எமக்கு உதவி வழங்கிய இந்து சமய கலாச்சார அலுவல்கள் அமைச்சிற்கும். இசையமுதம் இருவெட்டை வெளியிடுவதற்கு உதவிநல்கிய இசைய மைப்பாளர் சவாஹிர் அவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும்.

Page 119
சிவசக்தி 2005
எமது மன்ற நிதி நிலைமையை அறிந்து எமக்கு உதவிய அனைத்து 1 தொடக்கம் 5ம் ஆண்டு மாணவர்களது பெற்றோர்களுக்கும்
எமது 50வது கலைமகள் விழாவை முன்னிட்டு எம்முடன் நின்று உழைத்த பெற்றோர் மாணவர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள
2O6

சிவசக்தி
Year
1963/1964 1964/1965 1965/1966
1966/1967
1968
1973/1974 1974/1975 1976/1977 1978/1979 1979/1980 1980/1981 1982/983 1984/1985 1985/1986
1986/1987 1990/1991 1992/1993 1993/1994 1994/1995 1998/1999 999/2000
2000/2001.
2001/2002 2002/2003
2003/2004
2004/2005 2005/2006
2O7
2OO 5
Royal College
Student Chairman
S. Baskaran S.Gangadaran L.N.'Shanmugaratnam K. Wijendra A.Rajeswaran
S.Surendran R. Sashidaram S.Jayakumar R. Ajanthan S. Manikkalingam T.Aathirayen T.Arthirailyen V. Karunakaran V.V. Sabaratnam
S.Senthilkumaran B. Balaretnarajah S. Chandramohan G. Navadeepan K. Gangatharan N.Sudarshan P.S. Senthuran S. Gajendran H. Sriram S. Aravindh
| M. Brana Van
N. Janagan N. Ragunath
Hindu Students’ Union
Secretary
M. Oerakumar R.Balla Subramanium R.Rajaliya R.Rajaliya K.Premarupan S. Rajasunderam P. Udhayanan
S.Lingan S.Sathiendra
S.Rajkumar V.Jeyaprakash A. Segar S.Jeyanthan R. Anandan T.Yogendran B. Baherathan N.Vivek, M.Pradeep G.Saroj Pragash V.Vimlathithan P Mayuran T. Rajkumar

Page 120
சிவசக்தி 2OO6
Hindu Students' Union
Editors
E. Bramavinayagan N. Shangeethkanna B. Kandeepan U.L. M. Resha, K.T. Suvagithan T. Jeyapragash P. Suntharakumar | M. ThiVakaran, V. Ratheesh S. Resheeban, T. Sriramanen
208
 
 

ARAM COnfraetornos
Estate Suppliers. Commercial Works, Timber Cutting. Timber Supplier, Building Meterials Supplers, Building Repairing & Building Constractors.
Office : A.R.M. Contraction's P.O. Box O5 Main Street, Maskeliya. Sri Lanka.
Workshop : No 50/7.9th Street, Maskeliya. Te: O52-2277O77
και 22O7Ο
Grandpass Denik. Surgery No 28, Stace Road, Colombo. Mobile O777-651301

Page 121
CARGO LINKS
to 6 + 5 T | C 3
நகைப் பூங்கா
தங்க, வைர நகை வியாபாரம்
185, கஸ்தூரியார் வீதி 。、 185, Kasthuriar Road (சந்தோஷம் தெரு) (Santhosam Road) யாழ்ப்பாணம் ---
 

சிவசக்தி 2OO5
PROGRAMME
Lighting of oil lamp Prayers poоја Childran 's Programme Welcome Speech Speech by the Guest of Honur Release of Souvenir Childran's programme Speech by the Principal Palliyam Prize - giving
Dance Speech by the Chief Guest Villu Pattu
Prize - giving Drama
Vote of Thanks School Song National Anthem
209

Page 122
சிவசக்தி 2OO5
நிகழ்ச்சி நிரல்
மங்கள விளக்கேற்றல்
பூசிை
சிறுவர் நிகழ்ச்சி
வரவேற்புரை
சிறுவர் நிகழ்ச்சி
சிறப்பு விருந்தினர் உரை
மலர் வெளியீடு
அதிபர் உரை
Uல்லியம்
Urfeg GrfUc/
நடனம்
பிரதம அதிதி உரை
வில்லுப்பாட்டு
பரிசளிப்பு
நாடகம்
நன்றியுரை
பாடசாலை கீதம்
தேசிய கீதம்
210

dding Sarees, Shawar Kameez, Blouse Materials, Childrens Wear, Shiring, Suiring & Readymade Garments.

Page 123
12, Melbourne Avenue,
Colombo -- O4, Sri Lanka. Tel: + 94 (OT12)5O3266 Fax: +94 (OTT2) 5O3266
Mobile : 94 (O777). 317075
e-mail: VakeesonGlanka.com.lk, web: www.seagullonline.com
 

சிவசக்தி
2OO6
-(utograpsís
211

Page 124
சிவசக்தி
2005
><(utograpsís
212

சிவசக்தி
2OOS
நீங்காத நினைவுகளில்.
T. Sriramanen S. Resheeban
مسس سے۔
': '-
M. Umeshan S. Mayuran
213

Page 125


Page 126


Page 127