கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அபிராமியின் காதலன் (குறுநாவல்)

Page 1


Page 2


Page 3

ܬ݁ܶܘܬ݁ܝ . "فككمهم 96) (குறுநூறுல்
நீர்வை தி. மயூரகிரி

Page 4
நூல்:- "அபிராமியின் காதலன்"
665:- குறுநாவல்
நூலாசிரியர்- நீர்வை. தி. மயூரகிரி
பதிப்புரிமை:- நூலாசிரியர்
விலை:- 200 ரூபா
பக்கம்:- V + 106
முதற்பதிப்பு:- 2012 நவம்பர் 11
அச்சுப்பதிப்பு:- ஷாம்பவிபதிப்பகம்,
யாழ்ப்பாணம். கிளை:நீர்வேலி,
Book Title:- "Abramiyin Kathalan", (Short Novel)
Author:- TMayoorakiri, neervely
CopyRight:- Author
Price- 200/=
Page:- V + 106
First Edition:- 2012 November 11
Printers:- Shampaui Printers, Jaffna,
T. P.: 0212224143
Branch - Neervely.
shampaui2009Ggmail.com

கதை தொடங்கும் முன்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகவளங்கள் பயிற்சிகள் நிலையத் தில்,ஊடகவியல்கற்கையை மேற்கொண்டிருந்தேன்.
அப்போது, ஆவணப்படம் ஒன்று தயாரிக்க வேண்டி ஏற்பட்ட போது நான் தெரிவு செய்தது "யாழ்ப்பாண இராச்சியத்தின் அடையாளங்கள்” என்ற &ნQub.
ஆக, யாழ்ப்பாணத்தரசு, அதன் அடை யாளங்கள், தொல்பொருட்சான்றுகள், இலக்கியச் சான்றுகள், என்று பலவற்றையும் தேடத் தொடங் கினேன்.
நினைத்தது போலவே இல்லை. ஏறத்தாழ முந்நூறாண்டுகளுக்கு மேற்பட்ட வெளிநாட்டாரின் ஆட்சியிலும், அடக்குமுறையிலும் நம்மூரிலும் ஒரு அரசு நிலவியது என்பதே கேள்விக் குறியாகி, அதன் தடயங்கள் எல்லாம் அநேகமாக மறைந்து போயிருந்தன.
யாழ்ப்பாணத்தரசர் கால இலக்கியம் என்று கிடைத்த ரகுவம்சம், செகராசசேகரமாலை, கதிரமலைப்பள்ளு போன்றவைகளிலும் இவ்வரசின் வரலாறு பேசப்படவில்லை. பிற்கால இலக்கியங்களில்,

Page 5
ரிதும் திரிபும், ஒன்றுக்கொன்று மாறுபாடான செய்தி களும், கற்பனைகளும் கலந்துகிடந்தன.
இவ்வரசர் காலத்து கோயில்கள் என்று சொல்லப் பட்ட நல்லூர்க்கந்தன் ஆலயம் உள்ளிட்ட நல்லைநகர்க் கோயில்களிலும் இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார், பொன்னாலை வரதராஜப் பெருமாள், நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் என்றிருக்கிற நிறையக் கோயில்கள் எதிலும் பழம்பொருட் சின்னங்கள் எதுவுமே கிடைக்காத நிலையில், எல்லாம் பிற்பட்ட போர்த்துக்கேய மதவெறியரின் கொடுங் கோலில் அழிந்துவிட்டது என்கிற செய்திமட்டுமே கிடைத்தது.
இதற்கு பிறகு, சிலரிடம் பேசிய போது, அவர்களோ, “நீர் என்ன யாழ்ப்பாணத்தரசு என்றால் சிவாஜி நடித்த ராஜராஜசோழன் போல இருப்பர்" என்றும், தஞ்சைப் பெருங்கோயிலைக் காணலாம் என்றும், நினைத்தீரோ என்பது போன்ற, கேலிப் பேச்சுக்களையும் கேட்க நேர்ந்தது.
ஆக, இந்தத் தேடலின் விளைவாய், இந்த ஆண்டு யாழ்ப்பாண அரசின் காலத்தைக் கருவாக கொண்டு ஒருநாவல் எழுதவேண்டும் என்ற எண்ணம் பிறந்தது.
அது வழமையான பாணியிலிருந்து விடுபட்டு வித்தியாசமாக, முக்கியமாக என்னை ஒத்த இளைஞர்

களை சென்றடைய வேண்டும் என்ற விருப்பமும் இணைந்துகொண்டது.
அடிக்கடிபொன்னியின்செல்வனைப் பற்றி எனது நண்பனொருவன் புகழ்ந்துரைப்பதால், இந்த ஆர்வம் செயலுருக்கொண்டது.
"கதை முற்றிலும் மாறுபாடாக, எங்கள் எதிர் பார்ப்பை வளர்ப்பதாக இருக்கிறது" என்று பலரும் சொன்ன போது தான், புத்தகமாக்கும் எண்ணமும் பிறந்தது.
அதிகம் அறியப்படாத ஒரு காலத்தையும், வம்சத்தையும் நிலைக்களனாகக் கொண்டு இந்தக் கதையை காதல் நாவலாக எழுதியதில் ஓரளவு திருப்தி இருக்கிறது.
இந்த அரசில் எத்தனையோ, அரசர்கள் இருந்தாலும், சொல்லறியாக் கீர்த்தியும் பெருமையும் நிறைந்த பேரரசராக விளங்கியவர் நல்லைக்கந்தப் பெருமானே. எனவே, எனது இக்கதையை அவரின் திருவுலாவில் கொண்டு ରଥFରfig நிறைவு செய்திருக்கிறேன்.
யாழ்ப்பாணத்தாருக்கும், மலையாளிகளுக்கும் நிறையத்தொடர்பு உள்ளது. பேச்சு, உடை, நடை,
iii

Page 6
பாவனை, உணவு, வீடமைப்பு, எல்லாவற்றிலும் மலையாளச்சாயல் நிறையவே இருக்கிறது. யாழ்ப்பாணத்தாருக்காக பிரித்தானியர் காலத்தில் உருவாக்கப்பட்ட தேசவழமைச்சட்டம் δύλι - "யாழ்ப்பாணத்தில் வசிக்கும் மலாயின மக்களுக் கானது." என்றே ஆரம்பிப்பதாக சட்டவாளனாக விளங்கும் நண்பர் ஒருவர் குறிப்பிட்டார்.
எனவே, இந்த தொடர்பையும் கற்பனையோடு இந்த நாவலில் சுட்டிக் காட்டியிருக்கிறேன். எனவே, கேரளாவின் வீரஅரசனான பழசிராஜாவின் வரலாறு பேசும் திரைக்கதைப்புகைப்படங்களை இதிலே இணைக் கலாம் என்று சிலர், ஆலோசனை சொன்ன போது, அதனை ஏற்று அப்படங்களை பொருத்தமான இடங்களில் பிரசுரித்திருக்கிறோம்.
இந்த நாவல் எழுதப்படுகிறது என்பதை அறிந்தும், எழுதிய பின் பார்த்தும், ஊக்குவித்த என் தாய் தந்தையருக்கும், தமிழக மற்றும் ஈழத்து அறிஞர் களுக்கும், நண்பர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்நூலை சிறந்த முறையில் ஆர்வத்துடன், வடிவமைத்துப் பதிப்பித்த ஷாம்பவிபதிப்பகத்தாருக்கும் எனது மனம் கனிந்த நன்றிகள்.
V

இருபத்துமூன்றே வயதான எனது சிற்றனுபவம், அறிவினால் வரையப்பட்ட இந்நாவலிலின் குற்றங் களைக்களைந்து குணம் கொண்டு நோக்குமாறும், விண்ணப்பித்து, இந்நூல் பற்றிய தங்கள் மேலான கருத்துக்களை எனக்குத் தெரியப்படுத்துமாறும் வேண்டு கின்றேன்.
எனது சிறிய ஆற்றலைக் கொண்டு இந்நாவலை எழுதக் கருணை புரிந்த பேரருளாளனான நல்லை வள்ளி மணவாளன் திருவடிகளுக்கு இந்த நாவலைச் சமர்ப்பிக்கின்றேன்.
தியாகராஜசர்மா மயூரகிரி நீர்வேலி
யாழ்ப்பாணம் mayoorakiriGgmail.com

Page 7

"அபிராமியின் காதலன் ال گسسسس
அபிராமியின் காதலன்
பரராஜசேகரன் ஆண்ட யாழ்ப்பாணத்தரசு
அந்த ஆவணி மாதம் கடுமையான வெப்பம் காரணமாக கோடைக்காலம் போலிருந்தது. காதலனைப் பிரிந்து வரும் காதலி G3 TGO யாழ்ப்பாணத்தின் கடல் நீரேரிகளும் குளங்களும் உருமாறி இருந்தன.
கருணாகரத் தொண்டமானால் வெட்டுவிக்கப் பட்ட "தொண்டைமானாறு" ஆ நிரைகள் மேயும் தரையாக மாறியிருந்தது.
யாழ்ப்பாணத்தரசர்களாக "ஆரியச் சக்கரவர்த்தி களின்” தலைநகர் நல்லூர் இம்மாநகரின் நாற்றிசை யிலும் வெயிலுகந்த விநாயகர், கைலாசநாதர், வீரமாகாளி, சட்டநாதர் ஆகிய தெய்வங்களுக்கு ஆலயங்கள் இருந்தன. நகரின் நடுவே முருகக் கடவுளுக்கு பெரியதொரு தேவாலயம் உருவாக்கியிருந் தார்கள்.
நகரின் மையத்திலிருந்து சற்றே வடகிழக்காக "ப"கர வடிவில் அமைந்த "புனித யமுனா” என்ற ஏரி இருக்கிறது. அங்கிருந்து தான் அரண்மனை அந்தபுரத்துக்கு "குடிநீர்" போகிறது அதனை தோற்பைகளில் நிரப்பி எருமைமைள் மீது வைத்துக் கொண்டுபோகிறார்கள்.

Page 8
"9ty Tifusal assigoai O2 அதுமட்டுமல்ல, அதிகாலையில் வேதம் ஓதிய வாறு அர்ச்சகர்கள் தங்கக்குடங்களில் அந்த ஏரி நீரை எடுத்துச் சென்று தான் நல்லையாண்டவனாகிய கந்தனுக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.
இவற்றுக்கெல்லாம் அப்பால் புறநகர், நல்லை நகர் மக்கள் அங்கு தான் ஒய்வெடுத்துக் கொள்வார்கள். குழந்தைகள் அங்கே பரப்பப்பட்டிருந்த வெண்மணலில் விரும்பி விளையாடுவார்கள். மாலை நேரத்தில் அரசிளங் குமாரர்கள் அங்கே குதிரையேற்றம், வாள் பயிற்சி போன்றவற்றைப் பழகுவார்கள்.
கரியன் அஸ்தமித்துப் பதினைந்து நாழிகை ஆக, முன்னர் கோட்டைக் கதவுகளை மூடி விடுவார்கள் நகர் காவலர்கள் சுற்றி நின்று காவல் காப்பார்கள். பிறகு உள்ளேயிருந்து யாரும் வெளியேயோ, வெளியி லிருந்து உள்ளேயோ போக முடியாது. இது மன்னர் பரராஜசேகர சிங்கையாரியரின் கடுமையான உத்தரவு.
 

"glിത്സിuി brgബ് O3
நண்பர்களின் அந்தரங்கம்
அன்று அமாவாசைக்கு முந்தைய நாள் எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. இதனால் புறநகர்ப்பகுதி மணலிலும் நிசப்தம் இருந்தது. ஆனால் ஓரிடத்தில் இருவர் உட்கார்ந்து ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்.

Page 9
"85gmuffat காதலன் O4
மிகவும் உயரமான கம்பத்திலே "நந்திக்கொடி" பறந்து கொண்டிருந்தது. இந்தக் கம்பத்திற்கு அருகில் தான் இவர்கள் இருவரும் இருக்கிறார்கள். காவலர்கள் கூட அருகிலில்லை வழமையாக நாட்டு விஷயங்களைப் பேசும் இவர்களின் முகத்திலும் பேச்சிலும் அன்று பெரிய மாறுதல் தெரிந்தது.
"அழகா! என் மனம் ஓரிடத்தில் இல்லை. அந்த நான்கு நாட்களும் படுக்கையறையுள் வந்த அந்தப் பெண் கதவருகே நின்று."
"...... கடைசியில் அங்கேயே முந்தானையை விரித்துக் கொண்டு படுத்தும் விட்டாள். நான் அவளை ஏறெடுத்துப் பார்க்கவில்லை. பார்க்க நினைத்த போது எல்லாம் என் உள்ளத்தைக் கொள்ளையிட்ட மற்றொரு பெண்ணின் உருவமே எனது கண்ணிலும் கருத்திலும் நிறைகிறது. "என்று சொன்ன பரநிருபசிங்கன் எதிரிலிருந்த வெட்டவெளியைப் பார்த்தான்.
அருகிலிருந்த வேலழக பூபதியின் உடல் ஒரு கணம் நடுங்கியது. மீண்டும் பரநிருபசிங்கன் “அவளைப் போல வடிவான பெண்ணை இந்த உலகில் பார்க்கவே இயலாது அந்த ஊரில் இருந்தவரைக்கும் ஏதோ ஒரு சாட்டுச் சொல்லி, ஒவ்வொருநாளும் அவள் வீடு போய் வந்தேன் இரு மாதங்கள் வேகமாக ஓடிவிட்டது. அதற்கு முன் எனது தந்தை திரும்பி வருமாறு கட்டளையிட்டு

"அபிராமியின் காதலன் O35 விட்டார். நான் சாதாரண குடும்பத்தில் பிறந்திருந்தால் அவள் எனக்கு கட்டாயம் கிடைத்திருப்பாள்." என்று ஏக்கப் பெருமூச்சு விட்டான்.
"அவள் எந்த ஊர்.?” என்ற நண்பனின் மெல்லிய குரல் கேள்வி பரநிருபசிங்கனின் காதில் விழுந்ததாக இல்லை.
"அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் கூடத்தங்கள் வீட்டுக்கு நான் வந்து கொண்டிருப்பதைப் பற்றிச் சாதாரண மாகவே கருதியிருந்தார்கள். நாளடைவில் உண்மை தெரிந்தது. அவர்களுக்கும் மிகவும் பயமாக இருந்தது."
"..என் மாமன் குடும்பத்திற்கும் இந்த விஷயம் தெரிந்த போது என் தந்தை திரும்பி வருமாறு எனக்கு கட்டளையிட்டார்.சீ.இது என்ன வாழ்க்கை!
"அந்த பெண்ணை பற்றியும் நீஅறிவாயா? அவள் உன்னை விரும்புகிறாள.?" என்றான் வேலழகபூபதி.
மஹாமந்திரியான புலவர் அரசகேசரி சில வருஷங் களுக்கு முன் இரகுவம்சத்தை தமிழில் பாடி அரங்கேற்றி னார் அல்லவா..? அந்த அரங்கேற்ற வைபவத்திற்காக எனது மாமனார் நல்லூருக்கு வந்திருந்தார். போகிற போது நான் விரும்பியதால் என்னையும் தன் ஊருக்கு அழைத்துச் சென்றார்."

Page 10
"é9uôgmfôôadir asng5exadir" O6
"இதைவிட, முன்பு காக்கைவன்னியன் கலகம் செய்த போது நமது தந்தைக்கு மிகவும் உதவியவர் செகராசசேகரம். அவருக்கு வலது கையாக இருந்தவர் நான் குறிப்பிட்ட மாமனாரின் பாட்டனார். இதனால் இந்த உதவிக்காக அவர்களுக்கு நிறைய பணமும் நிலமும் புகழும் பரிசாக கொடுக்கப்பட்டது. உறவுக்காரர் அல்லாத போதும் இன்றும் அவர்களை உறவு பாராட்டி வருகிறோம்.
இந்த வரலாறுகளை கேட்பதில் வேலழக பூபதிக்கு அலாதி ஆனந்தம். அதனால் அவன் அமைதி யாக இருந்தான்.
"அங்கே இருக்கிற நம்மவர்கள் முன்பு கட்டுவித்த அழகான கோவில் பூந்தோட்டத்தில் தான் நான் அந்தப் பெண்ணை இரண்டு மூன்று தரம் பார்த்தேன். அவர்கள் பணக்காரர் அல்ல, என்றாலும் கெளரவமான குடும்பம்.
அவள் ஒரு நாள் மாலை தொடுத்துக் கொண்டு வந்தாள். அவளுடன் எப்படிப் பேசத் தொடங்குவது என்று சிந்தித்திருந்த நான் "பூஜைக்கு சொரிபூக்கள் கொண்டுவரவில்லையா?" என்றேன்.
இதற்கு முன் நாங்கள் நேருக்கு நேர் சந்திக்க வில்லை என்றாலும் என்னை யார் என்று அவள் அறிந்திருந்தாள் நான் சொன்னதைக் கேட்டு முதலில்

"அபிராமியின் காதலன் O7 பயந்து விட்டாள். பிறகு எனது முகத்தில் புன்முறுவல் இருப்பதைப் பார்த்து தானும் சிரித்து விட்டு தான் கொண்டு வந்த புஷ்பமாலையை என் காலடியில் போட்டு விட்டு வெட்கித்து ஓடிவிட்டாள். நான் எவ்வளவு துரதிஷ்டசாலி. இதற்கு மேலே பேச இயலாமல் பரநிருபசிங்கன்கண்ணிர் விட்டு அழுதான்.
"தோருலாம் குமுதச் செவ்வாய் சுந்தரிஇரவில் தொக்க மாருசால் அரசவீதிவயின் வயின் ஒருவிச்செல்லும் வீடிலா தெரிசெஞ்சோதிவிளக்கமதொத்தாள்வேந்தர் நீருகாலிருள் சேர்மாடநிரையினை நிகர்த்திட்டாரே"
என்ற அரசகேசரியின் இரகுவம்சச் செய்யுளை சொல்லிச் சொல்லிஅழுதான்.
வேலழக பூபதி அவனை அணைத்துக் கொண்டு "இளவரசே! நீ இப்படி வருந்தலாமோ..? இதை இந்நாட்டார் கேட்டால் என்ன சொல்லுவார்கள்? உனக்கு கல்யாணம் வேறு ஆகிவிட்டது. உன்மனைவி இதை கேட்டால் உடைந்து போவாள். இவ்வளவு ஆசையையும் நீஉன் மனைவிமீது மாற்றக்கூடாதா? என்றான்
"என்ன? அவளிடம் வைத்த காதலையும், ஆசையையும் இவளிடம் மாற்றுவதா? தெற்கிலிருந்து வடக்கே ஓடுகிற மகாவலியை வேறு பக்கம் மாற்ற லாமா? சீறி விழுந்தான் பரநிருபசிங்கன் கேவலம் வழுக்கையாறுகூட மாறுமா?"

Page 11
'gിസ്ഥിt agഖ് O8
“என்ன என் காதல் அவ்வளவு அல்பமானதா?” என்றான்.
வேலழகபூபதி அழகும் வீரமும் உடையவன் என்றாலும் பரநிருபசிங்கனின் நிலையை பார்த்தவுடன் அவனுக்கும் கலக்கமும் பயமும் ஏற்பட்டு விட்டது அப்போது ஒரு வித காற்று எழுந்து புழுதியை வாரி இறைத்தது.
வேலழகபூபதி "போகலாமா..?" என்றான் இரு வரும் புறப்பட்டனர். தன் மீது சாய்ந்து வரும் பரநிருபசிங்கனைப் பார்த்து “யுவராஜா! நீ இப்படி தைரியத்தை கை விடலாமா..? நாட்டின் நிலமை வேறு உனக்கு தெரியும். அவரவர் கஷ்டம் அவரவருக்கு. என் உள்ளத்தில் எரியும் தீயைப் பற்றி உனக்கு தெரியுமா? அப்புறம் சொல்லுவேன்." சமாதானம் செய்தான் பூபதி அவர்களுக்காக சிறிய தேர் ஒன்று காத்துநின்றது.
இருவரும் அதில் ஏறினார்கள் அரசமாளிகை முன்றலில் அது போய் நின்றது. பரநிருபசிங்கன் அதிலிருந்து இறங்கினான். வேலழக பூபதியை அவனது வீட்டில் விட்டு வருமாறு தேரோட்டிக்கு கட்டளை பிறப்பித்துவிட்டுதான் மட்டும் மாளிகையுள் புகுந்தான்.

"8ിത്സിuി bgബീ' O9 பரநிருபசிங்கனின் படுக்கை அபிராமிக்கா?
அவன் சென்ற பாதையின் இருபுறமும் பலவித மரங்கள் பூத்துக்குலுங்கின. பாரிஜாதம், முல்லை போன்ற மலர்களின் நறுமணம் எங்கும் பரவியிருந்தது. அவனின் தந்தையின் மாளிகை இது. பெரிய அரச அதிகாரிகளுக்கு தனித்தனியே பிரத்தியேக மாளி
கைகள் நல்லூரில் இருந்தன.
ஆனால் பரநிருபசிங்கனின் தந்தையின் மாளிகை வேறு. அது ராஜமாளிகை அல்லவா? இவனின் தந்தை மஹாராஜ பரராஜசேகரசிங் கையாரிய சக்கரவர்த்தி. அது நல்லை ஷண்முகப் பெருமானின் திருக்கோவிலுக்கு அடுத்ததாய் இந்த அரசில் சிற்ப சித்திரச் செல்வம் நிறைந்தது.

Page 12
"அபிராமியின் காதலன்" O பரநிருபசிங்கன் தன் அறையுள் புகுந்தான். பல அழகிய மாடங்கள் அங்கிருந்தன. கனகசூரியசிங்கை யாரியன் போன்ற அரசர்களின் சிற்பங்கள் அங்கே இருந்தன. வள்ளியை திருமணம் செய்து கொள்ளும் முருகனின் அழகியசிற்பம் ஒன்றும் அங்கிருந்தது.
பனை ஓலைகளில் எழுதப்பட்ட பல்வேறு தமிழ், ஸமஸ்கிருத ஏடுகளும் அங்கிருந்தன. அர்த்தசாஸ்திரம், நீதி சாஸ்திரம், ரகுவம்சம், பெரியபுராணம், தொல்காப்பியம் போன்றன.அவற்றுள் சில.
ஒளி வீசும் தீபத்தின் வெளிச்சத்தில் பரநிருபன் இரவு உணவை எடுத்துக்கொண்டான். மாளிகையின் முன்புற மண்டபத்தில் விரித்திருந்த இரத்தின கம்பளத்தின் மீது உட்கார்ந்திருந்தான். நடுநிசியாகி விட்டது என்பதை அரண்மனைமணிஅறிவித்தது.
படுக்கை அறையுள் பரநிருபசிங்கன் சென்றான். சித்திர வேலைப்பாடுகள் மிக்க அந்த அறையுள் பவளமல்லிகையின் நறுமணமும் நிரம்பியிருந்தது. படுக்கைக் கட்டில்களில் கூட நாகம், பத்மம், குழுதம், யாளி, கஜதந்தம் போன்ற நிறைவான வேலைப்பாடுகள் இருந்தன. ஒரு கட்டில் சற்றுப் பெரியது. மற்றொன்று சிறியது.
பாம்புச்சட்டை போல் மெல்லிய வேஷடி அணிந்து கொணர் டு கட்டில் அருகில் வந்த பரநிருபசிங்கன் திடுக்கிட்டான். அந்த படுக்கையில்

8ിസിൽ agബ് அபிராமி படுத்திருந்தாள். அது அவனை கோபங் கொள்ளச் செய்தது. அந்தக் கால வழக்கப்படி புகுந்தவீடு வந்து இரண்டு மாதமாகியும் அபிராமி அந்தப் பெரிய படுக்கையில் படுக்கவில்லை. இதுவரை கணவனும் மனைவியும் பேசியது கூட இல்லை. பெரிய கட்டிலில் அவனும் சிறிய கட்டிலில் அவளுமே படுத்துறங்கி வந்தார்கள்.
வழக்கமாக மலையாள முறையில் காஞ்சிப் பட்டுக் கட்டிக் கொள்ளும் அபிராமி அன்றைக்கோ, பருத்தித்துறையில் அரசகுடும்பத்தாருக்காக பிரத்தியே கமாக நெய்த உள்ளூர்ப்பட்டுப் புடைவை அணிந் திருந்தாள். எல்லாமே, வழக்கத்திற்கு மாறா யிருந்தது. இவ்வளவு நாளாக இல்லாத தைரியமும், ஆசையும் அபிராமிக்குதிடீரென்று எப்படி ஏற்பட்டது.
"யார் என்னுடைய கட்டிலில் இடம்பெற வேண்டு மென்று நினைத்திருந்தேனோ, அவளுக்கும் எனக்கும் இந்தபிறவியில் சந்திப்புக்கூட இல்லாமல் போய் விட்டது. இப்போது என்னைப் பீடித்திருக்கும் இந்தப் பிசாசு எப்படி என்னை விடப் போகிறதோ..? இப்படி நினைந்து வருந்தினான் பரநிருபன்.
நேரம் செல்லச் செல்ல ஆத்திரம் சற்றுத் தணிந்தது "பாவம். என்ன இருந்தாலும், இவள் என் மனைவி. நான் கட்டிய தாலியை அணிந்தே

Page 13
ejസിൽ algഖ് 2
இருக்கிறாள். என்னை விட்டு எங்கே போவாள்? இவ்வளவு நாளும் நான் தன்னுடன் பேசாதது பற்றி எவ்வளவு துன்பப்பட்டிருப்பாள்.? ஆனாலும் என்னிடம் ஒன்றுமே சொன்னதில்லை. கணவன் முகம் கொடுத்துப் போசாதபோது ஒரு பெண் எப்படிப் பேசுவாள்?.
உறக்கத்தில் அபிராமி புரண்டு படுத்தாள். அவளது அழகு, தீப பிரகாசத்தில் தக தக என்று மின்னி யது "அவள் இவ்வளவு அழகி" என்று பரநிருபனுக்கு தெரியாது. கண் எடுத்தே பார்க்கவில்லையே. இன்றைக்கு முதல் முதலில் தனக்கே உரிய அந்தப் பெண்ணின் வடிவை பார்த்த போது அவனுக்குத் திகைப்பாயிருந்தது. ஆனால்,
"இவள் எவ்வளவு வடிவாயும் இருக்கட்டும் எனக்கு அதனால் என்ன? என்ற அலட்சிய எண்ணமும் அவனுக்கு தோன்றி மறைந்தது.
அப்படி நினைத்த போது அவளுடைய இடையில்
அணிந்திருந்த ஒட்டியாணம் கழன்று விழுந்தது அதனால் அவளின் மேலாடைசிறிது விலகிற்று.
பரநிருபன் உடனே தன் கண்களை மூடிக் கொண்டான். அவனது இதயத்தைக் கொள்ளை கொண்ட காதலரசி அவன் மனக்கண்ணில் ஒரு கணம் தோன்றி மறைந்தாள்.

"emfâai algoar 3. பித்துப் பிடித்த பரநிருபன் அபிராமியின் கன்னத்தில் ஓங்கிய கைகளுடன் எழுப்ப முயன்றான் கன்னத்தில் அடி விழவில்லை சாதாரணமாக தொட்டது \போல் இருந்தது. அவள் திடுக்கிட்டு எழுந்தாள் இருவரில் ஒருவரும் பேசவே இல்லை.
அபிராமியின் உள்ளம் குமுறியது "என் தந்தை இவரை எனக்கு மணம் செய்து மூன்று மாதம் ஆகிறது ஏன் நாயே? என்று கூட இவர் கேட்கவில்லை என் பெற்றோர் என்னைச் செல்லமாக வளர்த்து இப்படிச்
நான் ஒருவரை மனக்க விரும்பினேன். அவர் பெயர், ஊர் ஒன்றும் தெரியவில்லை சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர் போல தெரிந்தது. இனி அவரை நினைத்துப் பயனில்லை என் பூர்வ புண்ணியந்தான். மாமன்னரின் புதல்வர் எனக்கு மணவாளராகியிருக்கிறார். களங்கமற்ற ஹிருதயத் துடன் என்னை அவருக்கு அர்ப்பணித்திருக்கிறேன் ஆனால் இவருக்கு சிறிதும் பிரியமில்லை. இன்று என் செயலைக் கூட என்னவாக நினைக்கிறாரோ.?"
இவ்வாறு யோசித்தவன் அருகிலிருந்த, மல்லிகை மாலையை எடுத்து நாணத்துடன் பரநிருபனின் கழுத்தில் போட்டு முகம் கவிழ்ந்தாள். அவனோ, காமனை எரித்த கடவுள் போல கோபித்து, அதனைக் கழற்றி எறிந்தான். அந்தக் கொடிய இரவு அப்படியே கழிந்தது.

Page 14
9ിത്സിൽ alg(' 4
கிழ சிங்கத்தின் வீர வழிகாட்டல்
அடுத்த நாள் காலையில் பரநிருபசிங்கன் ஒரு
குதிரையில் ஏறி புறநகர் மைதானத்தைச் சென்று அடைந்தான்.
அங்கே பரநிருபசிங்கனின் சகோதரர்களும் இன்னும் வடமராட்சி, தென்மராட்சி, வவுனியா, மட்டக்களப்பு என்று பல பிரிவுகளிலிருந்தும் வந்துள்ள அதிபதிகளின் புதல்வர்களும், சேனாதிபதி, பிரதானி, தளபதி, ராயசம் முதலியோரின் குமாரர்களும் குதிரை களில் ஏறிஅவர்களுக்கு உரிய இடத்தில் நின்றனர். இளவரசர்கள பெற்ற பயிற்சிகளை இராணுவம் சற்றே தொலைவில் நின்று பார்த்துக் கொண்டிருந்தது.
 

"அபிராமியின் காதலன்" 5
இவர்களின் நடுவே துரோணாச்சார்யார் போல் ஒரு கிழசிங்கம் வெண்புரவியில் வீரத்துடன் அமர்ந் திருந்தார். அந்த வெண் தாடி வேந்தர் தான் இவர்கள் அனைவரதும் குருநாதர். ஒப்புயர்வற்ற பரராஜசேகர மாமன்னின் புதல் வர்களின் வளர்ச்சி இவரில் தங்கியிருந்தது. எவருக்கும் அடங்காத மன்னரின் இளைய மகன் சங்கிலிகுமாரன் கூட இவரிடம் அச்சத்துடனேயே பழகுவான்.
இராணுவத் தளபதியாகிய சேனாதிபதியே பரராஜசேகரனின் அரசில் மன்னருக்கு அடுத்த உயர்பதவி.அடுத்தது இந்த கிழசிங்கக்குருவின் பதவி
வாள் சுழற்றுதல், குறிவைத்து அம்பு எய்தல், கேடயத்தை பயன்படுத்தல், மல்யுத்தம் செய்தல். குதிரையேற்றம், கதைப்போர் புரிதல் போன்றவற்றில் எல்லாம் இளவல்களின் முன்னேற்றம் எப்படி என்று அவர் கவனித்தார்.
பறங்கியரின் பாவனையிலிருந்த நவீனரக கருவிகளைப் பற்றியும் அவற்றின் செயற்திறன், அவற்றின் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாப்பது பற்றி எல்லாமும் விவரித்தார் ஒவ்வொருவரிடமும் வினாக் களை தொடுத்தார். சில பயிற்சிகளைச் செய்யக் கட்டளையிட்டார்.

Page 15
8ി (" 6
பரநிருபனை அழைத்து தன்னுடன் வாட்போர் செய்யுமாறு கூறி சிறிது நேரம் ஒரு பிரளயத்தை உண்டாக்கி நிறுத்தி, பின் அவனை பத்மவியூகம், சர்வதோபத்ரவியூகம் போன்றவற்றை படைகளில் உருவாக்க சொன்னார்.
பிறகு அவனது திறமைகளைக் கண்டு பாராட்டிய
தோடு திருப்தி தெரிவித்தார். பயிற்சி முடிந்ததும் அவரவர் இருப்பிடங்களுக்குச் சென்றனர்.
அன்று மாலை நண்பர்களான பரநிருபனும் வேலழகபூபதியும் மீண்டும் யமுனா ஏரிக்கரை அரசமர நிழலில் இணைந்தார்கள்.
பரநிருபசிங்கன் சிவந்த மேனியன், குறுகிய உருவினன்,நீண்ட கண்கள், இருமொழிஅறிவு, அரசியல் ஞானம், இருபத்தி மூன்று வயதிருக்கும், கறுத்த முறுக்கிய மீசை, இயல்பான கம்பீரம், ஆண்கள் நாடும் வீரத்திருமுகம், வீரர்வழிவந்தவன் என்று காட்டும் நடை தேவையற்ற பேச்சில்லை, இவன் பரராஜசேகரனின் உன்னத நிலையை பேணுவான் என்று சொல்லியே விடலாம்.
வேலழகபூபதியும் செக்கச் சிவந்த உருவினன் உயரம், அமைதி நிறைந்த முகம், பேரழகு, பெண்கள்

"Saymfiah asingapar 7
விரும்பும் முக எழில், விவசாயத்திலும் படிப்பிலும் பன் பட்ட பரம்பரையைச் சேர்ந்தவன் எனச் சொல்லலாம்.
வேலழக பூபதி பிறந்த இடம் மிருசுவில் என்ற ஊர் தென்மராட்சி என்ற பகுதியில் உள்ளது. பெற்றோர் செல்வர்கள் அல்லர்.
அந்தக் காலத்து நல்லூரில் தமிழ்ச்சங்கம் அமைக்கப்பட்டு தமிழ் வளர்க்கப்பட்டது அது போலவே வேத பாடசாலைகளிலும் காவிய பாடசாலைகளிலும் சமஸ்கிருத போதனை நடந்தது. அவற்றுக்கெல்லாம் அரசமானியம் வழங்கப்பட்டது.
சேனாதிபதி நாட்டின் நிர்வாகம், இராணுவம் இரண்டையும் கவனித்து வந்தார். அடுத்தவர் பிரதானி, பொறுப்புகளின் அதிகாரிகள் அவருக்கு கீழே இருந்தவர்கள், இதை விட மண்டலாதிபதிகள் தங்களின் மாவட்டங்களை ஆண்டுவந்தார்கள்.

Page 16
"அபிராமியின் காதலன்" 8
வீரனின் காதலி
அன்றைக்கு கோநகர் (கோப்பாய்) கோட்டைக்கு நண்பர்கள் இருவரும் வந்தார்கள் "அதுசரி வேலழகா உனக்கு ஏதோ கவலை என்றாயே? என்று பரிவுடன் கேட்டான் பரநிருபசிங்கள்
அவனோ பெரு மூச்செறிந்து விட்டு என் சொல்வது, என் வாழ்க்கை பிரம்மச்சரியத்திலேயே போக்கி விட நினைத்தேன். அதுவும் நடக்காது போலுள்ளது என்றான்.
"நீ ராஜகுமாரன் நானோ ஏழை. ஒரே வகுப்பில் கற்றதால் மட்டுமே நமக்குள் இவ்வளவு சிநேகம் உண்டானது ஆச்சரியமானது. நீ உன் உயிரினும் மேலான அந்தரங்கங்களை சொன்னாய். நான் என்
 

"அபிராமியின் காதலன்" 9 விஷயங்களை எப்படி மறைப்பேன்" என்று சிறிது
நிறுத்தினான்.
"நான் விரும்பிய பெண் எனக்கு கிடைக்க வில்லை. இப்போது என் பெற்றோர்களின் விருப்பத்திற் காகவே விவாகம் செய்து கொள்ளப் போகிறேன். அது சரி, உன்னை நம்பி வந்த பெண்ணிடம் அன்பு செலுத்துவதாய் வாக்குக் கொடு" என்று பரநிருபனிடம் வேலழகன் வற்புறுத்தினான்.
பரநிருபனின் கண்களில் நீர் வழிந்ததே அன்றி அவன் வேறு ஒன்றும் பேசவில்லை.
"அவள் என்ன அழகாயில்லையா? "மீண்டும் கேட்டான் வேலழகபூபதி
"இல்லை. நேற்று தான் பார்த்தேன். தேவலோக பெண்கள் போல் இருந்தாள்” என்றான் பரநிருபன்.
"அப்படியென்றால் ஏன் நீ இப்படியிருக்கிறாய்? உனது கஷ்டத்தை பார்க்க முடியவில்லை. இல்லாள் கண்ணீர் விட்டால் அங்கே மஹாலகூழ்மி இருக்க மாட்டாளாம்" அவனுடைய கால்களைப் பிடித்தான் வேலழக பூபதி.
கண்ணிர்விட்ட பரநிருபசிங்கன்தான் அவளிடன் அன்பு செலுத்த முனைவதாய் உறுதி சொன்னான். அதன் பின் வேலழகபூபதி மெல்லிய குரலில் "எனக்கு இருபத்திரண்டு வயதாயிருந்த போது அதாவது மூன்று
- 19 -

Page 17
9înfiat angoar 2Ο வருடங்களுக்கு முன் அந்த ஊருக்கு ஒரு வசந்த காலத்தில் சென்றிருந்தேன் அங்கே பெரியமாளிகை ஒன்றின் வாசலில் அவளைக் கண்டேன். அதன் பிறகு எனக்கு விடியவுமில்லை, இருளவுமில்லை
இரண்டு நாட்களுக்கு பிறகு மீண்டும் அந்த வழியாக போன போது திரையை விலக்கிக் கொண்டு அழகின்தேவதைகாட்சிதந்தாள்."
"ஒரு நிமிஷம் ஒருவரை ஒருவர் பார்த்து மயங்கி விட்டோம். இரண்டு நாட்களுக்கு பிறகு அந்த வழியே சென்றபோது ஒரு தாமரைப்பூ சாளரம் வழியே என் மீது விழுந்தது அதன் தண்டில் ஒரு ஏடு தொங்கிக் கொண்டிருந்தது. அதிலிருந்த ஒவ்வொரு அட்சரமும் என்னைச் சந்தோஷ சமுத்திரத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தன. என்றாலும் அந்த மாளிகைக்காரர் மிகவும் பெரியவர்களாக இருக்க வேண்டும் ஆ. அவள் எங்கே? இந்தஏழை எங்கே..?
"அடுத்தநாள் எனது தந்தை என்னிடம் வந்து வற்புறுத்தி ஊருக்கு அழைத்து வந்தார். அப்போது என் விருப்பத்தை அறிந்து திடுக்கிட்டுப் போனார். என் ஆசை ஆபத்தானதாம். மீண்டும் நான் அந்த ஊர்த்தெருவுக்கு போனால் தன் உயிரை விட்டு விடுவேன் என்றும் என் தகப்பனார் கூறினார்.
வேலழகபூபதி மேலே சொல்ல இயலாமல் தடுமாறினான். எங்கும் நிசப்தமும் இருளும் நிலவியது.

"BILSymuônúa asngoa" 2 காதலும் கல்யாணமும்
யாழ்ப்பாணத்தின் முக்கிய நகரங்களுள் ஒன்று மாவிட்டபுரம் "துரகானன விமோசனபுரி" என்றும் இதனை அழைக்கிறார்கள். அங்கே நல்லூர் நகர கந்தன் கோவிலுக்கு நிகரான முருகன் ஆலயம் அமைந்திருக் கிறது. அருகிலே சொற்ப தூரத்தில் மிகப் புனிதமான கண்டகி தீர்த்தமும் தம்பலேசுவரர் கோயிலும் இருக் கிறது. இங்குதான் சோழ அரசியான மாருதபுரவீகவல்லி யின் குன்மநோயும் ஒரு முனிவரின் கீரிமுக நோயும் நீங்கியதாம்.
அந்த ஊரிலே சேரநாட்டிலிருந்து வந்த பரம் பரையை சேர்ந்த பரராஜசேகர மன்னனின் உற்ற நண்பர் இருந்தார். அவருக்கு கோட்டையும் இருந்தது.

Page 18
"அபிராமியின் காதலன்" 22 தளபதியாகவும் மந்திரியாகவும் அவருக்கு அரச பணிகள் வழங்கப்பட்டிருந்தன. அந்த மாவிட்டபுரக் காரருக்கு இரண்டு ஆண்பிள்ளைகளும் ஒரு பெண்ணும் இருந்தாள் அந்தப் பெண்தான் அபிராமி.
தனது அதிகாரத்திலிருந்த பத்துக் கிராமங்களை அந்த மாவிட்டபுரக்கார் சீதனமாகக் கொடுத்து தன் மகளை பரநிருபனுக்கு கல்யாணம் செய்து வைத்தார்.
திருமணமும் மாவிட்டபுரத்திலேயே அதிகோலா கலமாக நடந்தது. தந்தை சொல்லுக்கு எதிர்சொல்ல இயலாத பரநிருபன் வாய்மூடிச்சும்மா இருந்தான்.
அபிராமிக்கு அப்போது பதினேழுவயது கலை களிலும் அறிவிலும் ஆற்றலிலும் பண்பிலும் அவள் சிறந்து விளங்கினாள். பேரழகியான அவள் இந்தத் திருமணத்தில் பரநிருபனுக்கு சிறிதும் இஷ்டமில்லை என்று கண்டு மிகவும் மனமுடைந்துபோனாள்.
இப்போது மழைகாலம் ஆரம்பித்து இருக்கிறது ஆனால் பரநிருபசிங்கனின் உள்ளத்தீ ஆறுவதாகவே இல்லை. எண்ணம் பல நிலைப்பட்டு ஒடிக் கொண்டி ருந்தது.

"அபிராமியின் காதலன்" 28 பண்பறியாப் பறங்கி
அந்த வேளையில் கங்காதரப்பட்டர் அங்கு வந்தார். பரநிருபனின் அறவாழ்கையைக் கண்காணிக் கவும், அவனை ஒழுக்கத்திலிருந்து பிறழாமல் வாழச் செய்யவும் பரராஜசேகர மாமன்னர் நியமித்த அதிகாரி ego).J.
"தங்களின் மாதா இணுவிலுக்குப் போயுள்ளார். அங்கே தங்கள் மாமா இல்லத்தில் தங்கியிருக்கிறாராம். நீங்களும் அங்கே சென்று இருநாட்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளுமாறுதங்கள்தந்தை குறிப்பிட்டார்."
அன்று மாலை, அழகிய இரட்டைமாடு பூட்டிய வண்டி ஒன்று பரநிருபன் முன்றலில் வந்து நின்றது. அவன் ஏறியதும் அது இணுவிலை நோக்கி விரைந்தது.

Page 19
"Symusikat angeload" 24
"நான் காதல் கொண்ட பெண்ணின் ஊர் இணுவில். இது என் தந்தைக்கும் நன்கு தெரியும் அப்படியிருக்க அங்கே செல்லுமாறு எப்படிக் கட்டளை இட்டார்? ஒரு வேளை அவள் கல்யாணம் செய்து கொண்டிருப்பாளே..?" என்று அவன் சிந்தித்தான் வண்டியை கொக்குவிலூர்ப்பக்கமாகச் செலுத்துமாறு கட்டளையிட்டான்.
கொக்குவிற் பகுதியில் ஒரு நீண்ட பற்றைக்காடு இருந்தது. அங்கே கள்ளர்களின் நடமாட்டமும் கணிசமாக இருந்தது. அதுவும் அன்று பேரிருள் கழ்ந்திருந்தது. எனினும் பரநிருபசிங்கனின் உத்தரவிற்கு மறு பேச்சின்றி அவனதும், அவனது பரிவாரங்களதும் வண்டில்கள் ஆறும் அந்த வழியே சென்று கொண்டிருந்தன.
திடீரென்று ஓரிடத்தில் கள்வர் கூட்டம் இவர் களைத்தாக்கியது. பரநிருபசிங்கன் கச்சமாக கட்டப்பட்ட தனது வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டு வண்டியி லிருந்து வாளுடன் இறங்கினான் அவனை யாரென்று அறியாத கொள்ளையர்கள் அவனைச் சுற்றிக் கொண் டார்கள்.
அடுத்த கணம், பரநிருபனின் வாள் ஒன்றின் வீச்சிலேயே பல கள்ளர்கள் விழுந்தார்கள் ஊர்க் கள்ளர்கள் ஓடினார்கள். சிலர் தலைகளும் உருண்டன.

*Synôsiad sorgoroar 25
கீழே விழுந்த ஒருவன் எழுந்திருக்க முடியாதிருந்தான். தீவட்டியுடன் அவனை பார்த்த பரநிருபனின் பணி யாட்கள் பறங்கி. பறங்கி.!" என்று கூச்சலிட்டனர். அவனை தூக்கி வண்டிலில் வைத்துக் கொண்டு இணுவிலுக்குப்புறப்பட்டனர்.
இந்த தகவலை பரநிருபன் தன் தந்தையாருக்கு ஒரு பணியாள் மூலம் தெரிவித்தானி. அதற்கு அவரும் அவன் மூலமே பதிலும் கொடுத்திருந்தார் அவ் வகையில். அந்தப் பறங்கியனின் காயத்திற்கு மருந்திட்டு நல்ல உணவும் கொடுத்தார்கள். இணுவிலின் பிள்ளையார் கோயில் முன்றலில் அவன் மீதான விசாரணை நடந்தது. பரநிருபசிங்கனே அவனை விசாரித்தான். அந்தச் சிறுகிராம மக்கள் அந்த வெள்ளைக்காரனை வேடிக்கை பார்க்க திரண்டிருந் தனர.
"உனக்குதமிழ் தெரியுமா..?" "ம். விளங்கும்." "நோ குறைந்திருக்கின்றதா.?" "ஆ. குறைந்திருக்குது" "உனது நாடு எது.?" ".இ.த்தாலி." "ஏன் இப்படித்திருடித்திரிகிறாய்..?"

Page 20
"8%uiôgmuôuôaß asmg56x»af" 26
“உங்களிடம் எக்கச்சக்க திரவியங்கள். ஆனால் நீங்கள் மூட நம்பிக்கையில் இருக்கிறீங்கள் அவற்றைக் கொள்ளையிட்டால் தப்பில்லை" என்று எங்க பாதிரி சொன்னார்.
கடைசியில் அவனை கடுமையாக எச்சரிக்கை செய்து பரநிருபன் விடுதலை செய்தான். ஆனால் அவனோ நாங்க இராணுவத்தைக் கொண்டுவந்து உங்களை எல்லாம் என்ன செய்வோம் பார் என்று முணுமுணுத்தவனாய் ஓடிப்போனான்.
 

"அபிராமியின் காதலன்" 27 பொன் ஆலயம் கண்டார்
அன்று மார்கழி மாத பூர்வபக்க எகாதசி பரமபத ஏகாதசி என்று கொண்டாடுவர். பரநிருபனின் தாயாரான பரராஜசேகரின் பட்டத்தரசி அன்று பகல் முழுவதும் பட்டினி கிடந்து இரவெல்லாம் விழித்திருந்து நோன்பு நோற்பார். அந்த விரதத்தை அனுசரிக்க பொன்னாலை! என்ற ஊருக்குச் செல்ல விரும்பினாள் தாயின் விருப்பத்தை நிறைவேற்ற பரநிருபனும் தனது பரிவாரங் களுடன் பொன்னாலைநோக்கிபுறப்பட்டான்.
திருவரங்கநகருக்கு இணையாக சதுரங்க கூேடித்திரம் என்றும் (சுவர்ணாலயம்) என்றும் கொண்டாடப்படுவது பொன்னாலை அங்கே மகா விஷ்ணு மூர்த்தியானவர் ஆமை(கூர்ம) வடிவெடுத் தாராம்.

Page 21
*அபிராமியின் காதலன் 28
அந்த திருவாலயத்தினதும் கழலும் எழில் அவனை கவர்ந்திருந்தது. கோயிலார் எதிர்பாராத நிலையில் திடிரென இவர்களின் வரவு கண்டு மிக மகிழ்ந்தனர். அங்கே பரநிருபசிங்கன் தனது பழைய நண்பன் ஒருவனைக் கண்டான். அவன் அவனது உறவினனும் கூட ஊர்காவற்துறை கோட்டையின் தளபதியாக அவன் விளங்கினான். நவீன வெடி பொருட்களின் பயன்பாடுகள் பற்றியும் அவற்றை பாவிக்கும்முறைபற்றியும் அவன் அறிந்திருந்தான்.
அவனுடன் முன்பு இணுவிலில் மாமன் இல்லத் திலும் பரநிருபன் இருந்திருந்தான் . அதனால் இவனது காதலை அவனும் அறிவான் எனவே அந்தப் பெண்ணுக்கு திருமணம் நிச்சயமாகி இருப்பதாகவும் அவனே இவனிடம் குறிப்பிட்டான்.
பரநிருபன் அதற்கு மேல்ே தனது பழைய காதலியைப்பற்றி பேசவிரும்ப வில்லை. “ எங்கிருந் தாலும் நன்கு வாழட்டும்" என்று வாழ்த்தினான். ஆயினும் அவனது வருத்தம்முகத்தில் தெரிந்தது.
அதனைக்கண்ட அவனது பழைய நண்பன் ஊர்காவற்துறை கோட்டை மீதான பறங்கியரின் பார்வைபற்றியும் ஊர்க்கள்வர்களுடன் அவர்கள் சேர்ந்து செய்கிற அட்டூழியங்கள் பற்றியும் விரிவாகச் சொன்னான்.

Sapmidai angoai 29
பொழுது சாய்ந்த பின், அவனிடம் விடைபெற்று எளிமையான வெள்ளாடை அணிந்தவனாக பரநிருபசிங்கன் பொன்னாலை திருக்கோயிலுக்குள் நுழைந்தான் அங்கே விஷ்ணுபக்தரும், மகாமந்திரியும் இவனின் மாமனுமான புலவர் அரசகேசரியும் வந்திருந் தார். இரவு முழுவதும் கோவிலில் சிறப்பான நிகழ்ச்சிகள் நடந்தன.
உடைந்து போன மனத்தவனாக இருந்த பரநிருபசிங்க இளவலுக்கு அந்த கலையும் பக்தியும் ஒருவிதபுத்துணர்வை ஊட்டின.
நள்ளிரவில் இடிமுழங்க, மின்னல் வெட்ட, வெளியில் கனமழை பொழிந்தது. ஆனால் சக்கரவர்த்தி களின் திருப்பணிகள், ஏழுபிரகாரங்களுடன் பொலிவு பெற்று விளங்கி பொன்னாலை வரதராலய கட்டட வலிமையால், உள்ளே இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மழையின் சிரமத்தை சிறிதும் உணரவில்லை.
நள்ளிரவில் எம் பெருமான் அடியாளான நர்த்தகி, விசாலியின் ஆடல் நடந்தது அவளின் மையிட்ட கண்களும், அபிநயம் காட்டும் பாதங்களும், சீரான வளைவுகளும், பரதக்கலையின் அழகை பரிபூரணமாக காட்டின.

Page 22
guyПбија, а проair 3O
“வென்றியே வேண்டி வீழ் பொருட்டு இரங்கி வேல் கணார் கலவியே கருதி நின்றவாநில்லா நெஞ்சினை உடையேன்
என்செய்கேன்! நெடுவிசும்பு அணவும் பன்றியாய் அன்று பாரகம் கீண்ட
பாழியான், ஆழியான் அருளே நன்று நான் உய்யநான்கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்"
என்ற திருமங்கையாழ்வார் பாசுரத்திற்கு அவளின் ஆடலைக்கண்ட பரநிருபனிற்கு பரமபக்தி உண்டாயிற்று. அந்தப்பாடலின் ஒவ்வொரு வரிகளும் தன்னை நோக்கியே, தன் இரக்கமாய் எழுந்ததாகவே அவனுக்கு தோன்றிற்று.
 

"அபிராமியின் காதலன்" 3. காதல் கன்னியும் கடவுளும்
கலியன் என்ற பெயர் கொண்ட அந்த வீர இளைஞன் ஒரு பெண்மீது காதல் உற்றான் அவன் அந்த சிற்றரசின் தலைவனாயும் இருந்தான். ஆகவே சிறிதும் அஞ்சாமல் அப்பெண்ணின் வளர்ப்புத் தந்தையிடம் சென்று பெண்கொடுக்குமாறு கேட்டான். அவரோ தன்பெண்ணிடமே கேட்கச் சொன்னார்.
இப்படி அங்கே "ஆழ்வார்கடியான்" என்ற வைணவபாகவதர் கதாகால கூேடிபம் செய்து கொண்டிருந்தார்.

Page 23
"ജ്ജത്തിൽ ഒgഓക്സ് - 82 பெரியபுராணம், கந்தபுராணம் போன்ற சைவ இலக்கியங்களை நன்குகற்றிருந்த பரநிருபன் அன் றைக்கு எதிர்பாராமல் வைணவ விடயங்களை அறியக் கிடைத்தமை இட்டு மகிழ்ந்திருந்தான்.
எதற்கும் அஞ்சாத அந்த குமுதவல்லி என் நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே உம்மை கல்யாணம் செய்து கொள்ளமுடியும் என்று சொல்லிவிட்டாள்.
எதற்கும் கோபித்துக் கொள்ளும் அந்த கலியனாள் இந்த மெல்லிடை, பெருமுலை, சிறுமுறுவல், காந்தக்கண்கள், நீள்கரும்கூந்தல், நங்கையிடம் கோபிக்க இயலவில்லை. நிபந்தனைகள் ஏற்கப்பட்டன.
ஆள்வார்க்கடியான் சொல்லச்சொல்ல இந்த வீர இளைஞனுக்கும் ஆவல் அதிகம் ஆயிற்று
"கல்யாணம் நடந்தது. கடவுள் நம்பிக்கையே இல்லாத கலியன் வைணவனான். திருமண் இட்டுக் கொண்டான் நாாயணனை பூஜித்தான். எட்டெழுத்தை எப்போதும் சொல்லிவந்தான்."
காதல் மங்கையின் கருத்துப்படி திருமால் கோயில் கொண்ட தலம் தோறும் சென்று வழிபட்டான் திருப்பணிகள் செய்தான். தினமும் ஆயிரக்கணக்கான அடியவர்களுக்கு அன்னதானம் செய்தான்.

SpmôAsad asgaoar 38
காலம் ஓட ஓட செல்வம் கரைந்தது, தன்னிடம் வரி கேட்ட சோழனையும் வீரவலிமையால் பேசா திருக்கச் செய்தான். கடைசியில் மாறுவேடம் போட்டுக் கொண்டு களவாடி அதன் மூலம் தான் தொட்ட அன்னப்பணி, அடியார்பணி, திருமால்பணி செய்தான்.?
ஒருநாள் ஒருதிருமண ஊர்வலத்தை மறித்துக் கொள்ளையடிக்க முற்பட்டாள். எல்லாம் கொள்ளை யடிக்கப்பட்டு மூட்டை கட்டியாகி விட்டது. ஆனால். தூக்கவே மூடியவில்லை. மணவாளனும் பெண்ணும் சிரித்தார்கள். இவனுக்கு அதிகமான கோபம் உண் டானது. என்ன மந்திரம் போட்டு விட்டாய்..? கோபத்தோடு மாப்பிள்ளையை உறுமினான் அவனோ, இவன் காதில் மெதுவாக எட்டெழுத்தைச் சொன்னான். சட்டென்று திருமகளும் திருமாலுமாய் தோன்றினான்."
"நீ இனியும் இத்தகைய இழிதொழிலை செய் யாமல், நம்மைத் தமிழால் பாடும் பணியைச் செய். உன் பெயர் திருமங்கையாழ்வான் என்று வழங்குக. என்று அந்த முறிமன் நாராயணன் கட்டளையிட்டு மறைந்தான். மங்கையின் மீது கொண்ட மையலால் மாதவன் மீது பக்தி கொண்ட இவர் பாடிய பாசுரங்கள் மிகச் சிறப்பானவை"
இப்படிச் சொன்ன ஆழ்வார்க் கடியான் திருமங்கையாழ்வாரின் சில பாசுரங்களையும் பாடி மகிழ்வித்தான்.

Page 24
eിത്സിഗി (gബ് 34
அப்போது சிறிது நேரம் முன் விசாலி ஆடிய பாடலும் இந்த ஆழ்வார் பாசுரமே என்பதை பரநிருபன் உணர்ந்து கொண்டான். அருகிருந்த சைவபக்தனான ஆடவல்ல தேசிகன்.
"இவர் சொன்ன கதையில் நம்பியாரூரரின் தடுத்தாண்டுகொண்ட வரலாற்றின்நிழல் தெரிகிறதே."
அப்போது நான்காம் யாமம் ஆகி விட்டது. பேரருளாளப் பெருமாள் நாச்சியார்கள் புடைகழ கருடாழ்வார் மீது எழுந்தருளினார்.
நடனம், பாடல், கதை எல்லாம் கேட்டு உருகி யிருந்த பரநிருபசிங்கன் பெருமானின் கருட சேவை கண்டுஉச்சிமீது கைகூப்பித் தொழுதான்
"மானஸாவை மனதில் வைப்பது . பிறகு அபிராமியை கல்யாணம் செய்வது என்னே கேவல வாழ்வு? எல்லாவற்றையும் விட்டு விட்டு கருடனைப் போல, அந்த ஆழ்வாரைப் போல பெருமாள் தொண்டனாய், இந்த ஆழ்வார்க்கடியானுடன் சேர்ந்து விடலாமோ? என்று கூட அவனுக்கு தோன்றிற்று.
சிறிது நேரத்தில் பெருமாள் திருவடிநிலை என்ற சமுத்திரத்தை நோக்கி தீர்த்த விழாவிற்காக சென்றா மகாராணி உள்ளிட்ட பக்த சமுத்திரமும் அந்த சமுத்திரத்தை நோக்கி பின் தொடர்ந்தது.

'éja ag(' 85 சங்கதம் பேசிய மங்கை
பொன்னாலை கோயிலில் இருந்து இரு ஊர் தொலைவில் அந்த சமுத்திர தீரம் இருக்கிறது இடையில் கடற்கரையும் பற்றைக்காடும் இருக்கிறது. அவ்விடத் திலும் கள்வர் தொல்லை இருந்து வந்தது.
எனவே பக்தர் கூட்டம் சென்ற பின் எளிய உடையுடன், தனியே ஒரு குதிரையில் ஏறி பரநிருபசிங்கன் திருவடி நிலைக்கு விரைந்தான் வழியில் உள்ள காட்டுப் பகுதிக்கு முன்னே ஒரு வண்டில் நின்றது. அந்த கூடாரம் இடப்பட்ட வண்டிலில் இருப்போருக்கு ஏதோ உதவி தேவை என்று பரநிருபசிங்கனிற்கு தெரிந்தது.
வண்டிலுக்கு அருகே சென்ற போது பின்புற திரைவிரிய உள்ளே பூரணசந்திரனைப் போல அழகிய முகத்தினளாய் ஒரு பெண் தனது மையிட்ட கூரிய விழிகளால் அவனை நோக்கினாள்.

Page 25
"895òpmôiúdait asigabad” 36 ஆர் ய! அனேனைவ மார்க் கேன ருரீ வரதராஜஸ்ய தீர்த்தயாத்ரா அகச்சத்திம்? என்று சமஸ் கிருத மொழியில் கேட்டாள். (ஐயா, ருரீ வரதராஜப் பெருமாளுடைய தீர்த்த வாரிக்கான திருவிழா இந்த வழியாகத்தானேசென்றது?)
"அனேனமார்க்கேணைவ நாரி" (பெண்மணியே இந்த மார்க்கத்தில்தான்) என்றான் பரநிருபன்.
உடனே அவள் தன்வண்டியில் இருந்து கீழே இறங்கினாள்.
"ஐயா! பொறுத்தருள்க! இப்பாதையில் கள்வர், பறங்கியர், பயமுண்டு என்று பலரும் எச்சரிக்கை செய்தார்கள். எனவே தான் உங்களிடம் சமஸ்கிருத பாஷையில் பேசினேன்.”
"நான் திருகோணாசலத்தைச் சேர்ந்தவள் பரமபத ஏகதாசி தரிசனத்துக்காக பொன்னாலை வந்தேன் வழியில் சிறிது நேரம் ஆகிவிட்டதால், உரிய நேரத்துக்கு, தலத்துக்கும் வர முடியவில்லை. இப்போது வந்த போது பெருமாள் தீர்த்தவாரிக்கு சென்று இருப்பதாய் அறிந்து அங்கு செல்ல விரும்புகின்றேன்."
அவன் “அச்சம் வேண்டாம்" என்று இவ் வண்டிலுக்கு முன்னே சமுத்திரத்தை நோக்கி தன்

Sigmusat angoori 37 குதிர்ையை செலுத்தினான். இவர்களது வண்டி பரநிருபனின் புரவி பின்சென்று தீர்த்த சமுத்திரக் கரையை அடைந்தது.
மறுநாள் பரநிருபனின் தாயார் பொன்னாலை மாளிகையில் ஒய்வெடுத்துக்கொண்டார்கள். அப்போது பரநிருபனுடன் பல விஷயங்களையும் பேசிய அவர் அவனது தலையை வருடியவாறே, அபிராமியின் சுகம் பற்றி விசாரித்தார். இவனோ, அந்த விசாரிப்புகளுக்கு, ஒழுங்கான விருப்பமான பதில்களைக் கூறவில்லை.
இதனால், மருமகள் பற்றி மகனிடம் உற்சாகம் இல்லை என்பதை தாயார் அறிந்து கொண்டார். எனக்கு வயதாகி வருகிறது உன் அண்ணனைப்போல், உனக்கும் ஒரு குழந்தை பிறந்து பார்த்துவிட்டால் எனக்கு திருப்தி யாய் இருக்கும். நீங்கள் இருவரும் மகிழ்வாய் இருந் தர்ல்போதும்" என்றாள்.
அன்று மாலை பரநிருபனின் தாயாரும், அவரது பரிவாரங்களும் இணுவிலை நோக்கிப் புறப்பட்டனர். அங்கே, தன் காதலி வேறொருவனுக்கு மனைவியாகப் போகிறாள் என்று அறிந்த பரநிருபனிற்கு அங்கு செல்லப் பிடிக்கவில்லை. அவன் நல்லூருக்கு புறப்பட்டு விடடான்.

Page 26
"95yMTLólóhad assigeaoar 38
மனம் திறந்த மாமன்னன் மகன்
அதன் பிறகு அவனது வாழ்வில் பெரிய மாறுதல் தெரிந்தது. தனது மனைவியை பெயர் சொல்லி அழைத் தான். அவளை அணைத்துக்கொண்டு மனம் விட்டுப் பேசினான். இவை அபிராமிக்கு பெரிய ஆச்சரியமாக இருந்தது. அப்போது
"இணுவில் என்ற ஊரை நீ கேள்விப்பட்டு இருப்பாய், அங்கே எனது மாமனாரின் வீட்டருகில் ஒரு ஏழைக்குடும்பம் இருக்கிறது. அந்த குடும்பத்தவருக்கு மனஸ்வினி என்ற ஒரு பெண் அவளும் நானும் காதலித்தோம். ஆனால் என் விருப்பிற்கு மாறா
 

அபிராமியின் காதலன் 39 உன்னைக்கல்யாணம் செய்து வைத்துவிட்டார்கள். இப்ப அவளுக்கும் வேறொருவருக்கு கல்யாணம் செய்து வைக்க இருக்கிறார்கள் இனி நான் அவளை மறந்து விட்டு உன்னிடம் பிரியமாக நடந்து கொள்வேன். உனக்கு உன் விருப்பிற்கு மாறாக கல்யாணம் செய்து வைத்திருந்தால், எப்படி உணருவாய்? அதுபோலத்தான் என்நிலையும்." என்றான்.
அவளது தலை கிறுகிறுத்தது அவள் மயங்கி விழப்போனாள் அது கண்டு அவளை தாங்கிக்கொண்ட பரநிருபன்.
"எனக்கு வேலழகபூபதி என்றொரு நண்பன் இருக்கிறான் நீ பார்த்திருக்க மாட்டாய். அவனும் உன்னிடம் தூய அன்பு செலுத்துமாறு கூறுவான்” என்றான்.
அபிராமி பரநிருபசிங்க யுவராஜனின் கைக ளைப் பற்றிக்கொண்டாள். பரநிருபனின் கண்களில் நீர் வழிந்தோடியது. நீ புனிதமான அன்பிற்கு உரியவள் என்று சொல்லிமுத்தமிட்டுவிட்டு வெளியேறினான்.
அந்தக்காலத்தில் பெளர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் பாடசாலைக்கு விடுமுறை வழங்கியிருந்தார்கள் அன்றைய பெளர்ணமியன்று பரநிருபன் மற்றும் நண்பன் வேலழகபூபதி சந்தித்துக் கொண்டார்கள் பலவும் பேசியபின் வேலழகன்"என்னை

Page 27
"9pmufushat asgaoar 4Ο என்தந்தை ஊருக்கு வருமாறு எழுதியிருக்கிறார். திருமணம் செய்துதர உத்தேசம் போலிருக்கிறது. மீண்டு வர இரண்டுமாதம் ஆகலாம் என்று கூறிவிடைபெற்றான்.
அந்த மார்கழிமாத இறுதியில் நாட்டின் ஸ்தானாதிபதி என்ற பொறுப்பில் இருந்தவர் இறந்து போனார். அந்த பதவியை வேலழகபூபதிக்கு கொடுக்கு மாறு பரராஜசேகர மன்னனுக்கு பரநிருபசிங்கன்சிபார்சு செய்தான். மைந்தனின் வேண்டுகோளை மாமன்னரும் ஏற்றுக்கொண்டார். இந்தத்தகவலை வேலழகபூபதிக்கும் தெரிவித்து, ஒலை அனுப்பினான்.
அந்த தைப் புரணைக்கு முதல் நாள் வேலழகபூபதிக்கு அவனது சொந்தஊரான மிருசுவிலில் திருமணம் நடந்தது. அதற்கு பரநிருபனால் போக முடிய வில்லை. சித்திரை மாதம் புதுக்கணக்கு தொடங்கு வதற்கு முன்னதாக, பங்குனியிலேயே வேலழகன் நல்லூருக்கு வந்து பதவிஏற்றுக்கொண்டு, புத்திளம் மனைவியுடன் ஸ்தானாதிபதி மாளிகையில் குடியேறி
60TT60.
வேலழகபூபதிக்கு திருமணம் நடந்தமை குறித்தும், அவன் ஸ்தானாதிபதி பொறுப்பை ஒழுங்காக பொறுப்புடன் கவனிப்பதையிட்டும் பரராஜசேகர மகாராஜாவுக்கு சந்தோஷமாக இருந்தது. இனி என் புதல்வனும் தன்மனைவியுடன் மகிழ்வாய் இருப்பான் என்று கருதிதிருப்தியுற்றார்

'gിത്സിuിൽ ഒg(' 4. முழுநிலவில் புதுமணத்தம்பதி
அன்று சித்திராபூரணை இரவு உணவினை உண்டு விட்டு வேலழகபூபதி தனது மாளிகையின் மொட்டைமாடியில் வந்து படுத்தான். அவனது மனைவி அங்கே வெற்றிலை மடித்துக்கொடுத்தாள்.
"கால்வலிக்கிறது. சேவகனைக்கூப்பிடு என்று கத்தினான் வேலகபூபதி”
"ஏன் நானே பிடித்துவிடுகிறேனே." என்றாள் மனைவி. "நீதான் என்னைத் தொடமாட்டாயே."

Page 28
"9uymuôısalt asingeload" 42 “உங்கள் பணிப்பெண்ணாக உங்களைத் தொடுவதில் எந்த ஆட்சேபனையும் எனக்கு இல்லை உடலுறவுக்காகத் தொடுவதைத்தான் நான் இப் போதைக்கு விரும்பவில்லை"
அப்படியென்றால் ஏன்கல்யாணம்செய்தாய்?
என்பேச்சைப் பெற்றோர் கேட்கவில்லை. நீங்க ளாவது கேட்கலாமே?
உனக்கு என்னை விட நல்ல புருஷன் வர வேண்டும் என்று இருந்தது என்னவோ? இல்லாவிடில் எப்படி இவ்வளவு வெறுப்பு வரும்?
ஸ்தானாதிபதியின் மனைவியாக இருப்பதை விட வேறுஎன்ன பெரிய அந்தஸ்துகிடைக்கப்போகிறது? நீங்கள் எனக்குகிடைத்தது என்பாக்கியம்.
கல்யாணத்துக்குப் பிறகு தான் இந்த வேலை கிடைத்தது” எப்போது கிடைத்தாள் என்ன? நீ எந்த மகாராஜாவை மன்மத புருஷனை மணக்க விரும்பி 60TTGSuT?
ஏன்இப்படிஎல்லாம் பேசுகிறீர்கள்.?
இந்த உத்தியோகமும் நண்பனின் தயவால்
கிடைத்தது. இது இல்லை என்றால் கட்டிய பெண்டாட்டி கூட மதிக்கமாட்டாள்.

Cuprufushad as geoad 43
யார் அந்தநண்பன்.?
மகாராஜாவின்துவிதீயபுத்திரன்பரநிருபசிங்கன்"
இதைக்கேட்டது தான் அவள் சடக்கென்று போய்விட்டாள். வரவேயில்லை. வேலழகன் போய் பார்த்த போது அவள் படுக்கையில் தூங்கிக்கொண்டு இருந்தாள். அவள் தூங்குவதுபோல்நடித்தாள்.
அந்த வேளையில் அவன் தான் முதலில் காதலித்த பெண்ணினை வரைந்த சித்திரத்துடன் இப்பொழுது கல்யாணம் செய்துள்ள இவளின் சித்திரத் தையும் வரைந்து அவளை எழுப்பி இரண்டையும் காண்பித்தான். இவர்களில் யார் பேரழகி? என்று G35 LT6.
தன் ஓவியத்தை அடையாளம் கண்டு கொண்ட
அவள்” மற்றையது யார்? எனக் கேட்டாள்.
கொஞ்சம் தயங்கிய வேலழகன் பிறகு நடந்த காதல் சமாச்சாரங்களை ஒன்றும் விடாமல், அவளிடம் சொன்னான். அவள் வியந்துகேட்டாள்.

Page 29
8uipmfused assigoai 44
காமனின் கருத்தெண்ன?
பரநிருபசிங்கன் அபிராமி தம்பதியின் திருமண ஓராண்டு நிறைவும் வந்தது. பலரும் அதற்கு வாழ்த்துக் கூறினார்கள். நண்பன் வேலழகபூபதியும் தனியே பரநிருபனை அன்று மாலை சந்தித்த போது வாழ்த்தினான்.
ஆனால், பரநிருபனோ தன்னால் இன்னும் அபிராமியிடம் முழுமையான அன்பு செலுத்த இயல வில்லை என்று வருத்தம் தெரிவித்தான். அன்பு மிகுதியால் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டனர்.
 

ിത്സി 5gബ് 45
“என் நிலையோடு ஒப்பிட்டால் உன் நிலை எவ்வளவோ மேல். என் முன் காதல் வலியை முன்பே உனக்குச் சொன்னேன். இப்போது அடுத்த இடி ஆரம்பித்திருக்கிறது. என் மனைவி பேரழகி. ஆனால் நாமிருவரும் கணவர் மனைவியாவதில் அவளுக்கு உடன்பாடே இல்லை. இதை எப்படிச் சொல்லுவேன்?. என்னைப் பார்த்து நீ ஆறலாம்" என்று வேலழகபூபதி நண்பனிடம்தழுதழுத்த குரலில் சொன்னான்.
இருவரும் சோகமே உருவாக நீண்ட நேரம் ஒன்றும் பேசாதிருந்தனர், கடைசியில் "உன் மாமனார் வீடு எங்கிருக்கிறது? என்று கேட்டான் பரநிருபன்.
"இணுவில்."
"அவர் பெயர்.?
"சிதம்பரநாதர்.?
"6Lങ്ങി...?"
“மனஸ்வினி.”
பரநிருபன் திடீரென வலிப்பு வந்தவன் போல மயங்கி விழுந்தான். வேலழகன் நீர் தெளித்து ஆசுவாசப்படுத்திய பின் எழுந்த அவன் அவசரமாக தன் இருப்பிடம் ஏகினான். நண்பன் மனஸ்வினியின் பெயரைக் கேட்டதும் ஏன் இப்படி மயங்கி விழுந்தான் என்று வேலழகன் குழப்பமுற்றான்.

Page 30
ByTôia astgeoer 46
மறுநாள், மாலையில் நூறு பொன்மதிப்புள்ள காசிப்பட்டும் மஞ்சள், குங்குமமும் எடுத்துக் கொண்டு வேலழகபூபதியின் மாளிகைக்கு பரநிருபசிங்கன் நடந்தே போனான். இவற்றை கண்டு வேலழகன் வியந்து போனான். அங்கேயே உணவருந்துமாறு பரநிருபனைக் கேட்டுக் கொண்டான்.
"உன் மனைவி பரிமாறுவாள் என்றால் சாப்பிடலாம்"
நீ மஹாராஜாவின் புதல்வன். உன் எதிரில் அவள் வருவாளே, என்னவோ?
"என்ன அண்ணாவின் முன் வருவதற்கு கட்டுப்பாடில்லையே?"
வேலழகபூபதி மனஸ்வினியை கூப்பிட்டான் அவள் குனிந்த தலை நிமிராமல் வந்து நின்றாள். அவளைப் பார்த்த போது, புதிதாக குடித்தனம் நடத்தப் போன தங்கையைப் பார்த்தது போல பரநிருபசிங்கனுக்கு இருந்தது.
மானஸா! உன் அண்ணனுக்கு இன்று நீயே உணவு பரிமாற வேண்டுமாம். இவரைத் தெரியு

8ിത്സിൽ മgണ്ട് 45
“என் நிலையோடு ஒப்பிட்டால் உன் நிலை எவ்வளவோ மேல். என் முன் காதல் வலியை முன்பே உனக்குச் சொன்னேன். இப்போது அடுத்த இடி ஆரம்பித்திருக்கிறது. என் மனைவி பேரழகி. ஆனால் நாமிருவரும் கணவர் மனைவியாவதில் அவளுக்கு உடன்பாடே இல்லை. இதை எப்படிச் சொல்லுவேன்?. என்னைப் பார்த்து நீ ஆறலாம்" என்று வேலழகபூபதி நண்பனிடம்தழுதழுத்தகுரலில் சொன்னான்.
இருவரும் சோகமே உருவாக நீண்ட நேரம் ஒன்றும் பேசாதிருந்தனர், கடைசியில் "உன் மாமனார் வீடு எங்கிருக்கிறது? என்று கேட்டான் பரநிருபன்.
“இணுவில்."
"அவர் பெயர்.?
"சிதம்பரநாதர்.?
“பெண்.?"
"Logorasoa560s...."
பரநிருபன் திடீரென வலிப்பு வந்தவன் போல மயங்கி விழுந்தான். வேலழகன் நீர் தெளித்து ஆசுவாசப்படுத்திய பின் எழுந்த அவன் அவசரமாக தன் இருப்பிடம் ஏகினான். நண்பன் மனஸ்வினியின் பெயரைக் கேட்டதும் ஏன் இப்படி மயங்கி விழுந்தான் என்று வேலழகன் குழப்பமுற்றான்.

Page 31
"9pmôía asgenoa 46
மறுநாள், மாலையில் நூறு பொன்மதிப்புள்ள காசிப்பட்டும் மஞ்சள், குங்குமமும் எடுத்துக் கொண்டு வேலழகபூபதியின் மாளிகைக்கு பரநிருபசிங்கன் நடந்தே போனான். இவற்றை கண்டு வேலழகன் வியந்து போனான். அங்கேயே உணவருந்துமாறு பரநிருபனைக் கேட்டுக் கொண்டான்.
"உன் மனைவி பரிமாறுவாள் என்றால் öFTülül Cortlb”
நீ மஹாராஜாவின் புதல்வன். உன் எதிரில் அவள் வருவாளோ, என்னவோ?
“என்ன அண்ணாவின் முன் வருவதற்கு கட்டுப்பாடில்லையே?"
வேலழகபூபதி மனஸ்வினியை கூப்பிட்டான் அவள் குனிந்த தலை நிமிராமல் வந்து நின்றாள். அவளைப் பார்த்த போது, புதிதாக குடித்தனம் நடத்தப் போன தங்கையைப் பார்த்தது போல பரநிருபசிங்கனுக்கு இருந்தது.
மானஸா! உன் அண்ணனுக்கு இன்று நீயே உணவு பரிமாற வேண்டுமாம். இவரைத் தெரியு

supnits at alsoad 47 மல்லவா? என் நெருங்கிய நண்பர் பரநிருபசிங்க யுவராஜர். நான் உண்ணும் ஒவ்வொரு சோறும் படுக்கையும் இவர் தயவால் கிடைத்தது" என்றான் வேலழகபூபதி.
மனஸ்வினியின் கண்களிலிருந்து நீர்த்துளிகள் திரண்டு பொல பொலவென்று கன்னங்களில் உருண்டு
கீழே உதிர்ந்தன. பரநிருபனை அவளால் நிமிர்ந்தே பார்க்க இயலவில்லை. தலைகுனிந்தபடியே,
“பரிமாறுகிறேன், அண்ணா!" என்றாள்.
பிறகு அவள் பரிமாற இருவரும் உணவருந் தினர். அவளும் அதன் பின், சாப்பிட்டு விட்டு வந்தாள் மூவரும் அந்த ஆடிப்பூரணை நிலவொளியில் மொட்டை மாடியில் இரத்தினக் கம்பளம் விரித்து உட்கார்ந்
"உன்னிடம் சில விஷயங்கள் சொல்ல வேண்டும் அதற்கு என் சகோதரியின் அனுமதியும் வேண்டும் என்று வேலழகபூபதியை நோக்கி மனஸ்வினியின் முகத்தைப் பார்த்து பரநிருபன் கூறினான். அவள் தலையசைத்துச் சம்மதம் தெரிவித்தாள்.
பரநிருபன் “வேலழகா அதைரியத்தை விட்டு விட்டுப் பொறுமையாக கேள், நான் ஒரு பெண்ணைக்

Page 32
*&usingTu6uddadi asırğabad" 48 காதலித்ததாகச் சொன்னேனே. அந்தப் பெண் இவள் தான்!” என்றான் வேலழகனுக்கு உலகமே சுற்றுவதை விட்டு விட்டது போலிருந்தது. "ஆ" என்ற துயரக்குரல் மட்டும் அவனிடம் எழுந்தது. மனஸ்வினியோ, கண்ணீர் ஆறாக, கல்லாய் நின்றாள்.
"ஏன் இப்படி குழப்படைகிறாய் வேலழகா! எல்லாம் அந்த ஈசனின் திருவிளையாடல் போலிருக் கிறது. ஆனால்." என்று பரநிருபன்நிறுத்தினான்.
வேலழகபூபதி தன்னைக் கொஞ்சம் கொஞ்ச மாக இயல்புநிலைக்குள் கொணர்ந்தான்.
 

"8ിസ്ഥിt agബ് 49
காலனே மேலோன் காமனைக் காட்டிலும்
அதன் பிறகு பரநிருபசிங்கன் தொடர்ந்து நேற்று நீஉன் மனைவி பற்றிய விபரங்களினைத் தெரிவித்தாய். அவற்றைக் கேட்டதும் எனது சிந்தனாசக்தி, மனோசக்தி எல்லாம் போய்விட்டது. இப்போ, நான் கூறிய செய்தி உனக்கு எப்படியிருக்கிறதோ, அப்படியிருந்தது. யாரோ என்னை அதாலபாதாளத்தில் அழுத்தியதாய் இருந்தது.
"அதோ அந்த கைலாஸநாதக்கடவுள் தான் எனக்கு ஒரே துணையாய் இருந்தார். ஒருவாறு சோகக் கடலிலிருந்து என்னைக் கரையேற்றினார்.
“வேலழகா, எனக்கு சகோதரிகள் இல்லை. ஆனால் அந்தக் குறையை என் கைலாஸநாதகருணை வள்ளல் இன்று நீக்கி விட்டார். நீங்கள் மகிழ்வோடு வாழ்வதைப் பார்ப்பதே என் இன்பம்.

Page 33
8ീര് ( O
"ஆ. ஒரு முக்கிய விஷயம் இப்போது என் மனைவி மீது அன்பு வைக்கும் என் முயற்சி வெற்றி யடையும் என்று நினைக்கின்றேன்!” என்றான்.
வேலழகன் அவனது கைகளிரண்டையும் பற்றி "பரநிருபாநீமஹா சிரேஷ்டன் நீநண்பனாய் கிடைத்தது என் கொஞ்ச நஞ்சப் புண்ணியம். உன்னத்தின் உன்னதனான, உன் முன் நான் ஒரு அற்ப ஜீவன்" என்றான். அதன்மேல் அவனால் பேசவே முடியவில்லை.
பிறகு தான் கொண்டு வந்திருந்த புடவை, மஞ்சள், குங்குமம் போன்றவற்றை பரநிருபன் மனஸ்வினியிடம் கொடுத்துத்.
"தங்கையே! நீ விவேகி, படித்தவள். உலகம் அறிந்தவள். நீ இதைக் கட்டிக்கொள் என்றான். அவள் கண்களை துடைத்தவாறு உள்ளே சென்று புதுப் புடவையை அணிந்து வந்து பரநிருபனுக்கும் தன் கணவனுக்கும் வணக்கம் செலுத்தினாள். அப்படிச் செய்த போது வேலழகபூபதியாகிய தன் கணவனின் பாதங் களை இரு கைகளாலும் தொட்டு தன் இரு கண்களிலும் ஒற்றிக் கொண்டாள்.
இதன் பின் உண்மையான மகிழ்ச்சி சில நாட்கள் அங்கே தொடர்ந்தது.

95m66a angeoar 51
நாட்டில் நடந்த கலகங்கள்
இதற்கிடையில், மதுரையை அப்போது ஆண்டு வந்த நாயக்க மன்னரைச் சந்திப்பதற்காக பரநிருபனின் அண்ணனும், பரராஜசேகர மன்னரின் மூத்த புதல் வருமான பண்டாரம் அங்கு விரைந்தார்.
பொருளாதார சூழல் யாழ்ப்பாணத்தில் அரசிற்கு சார்பாக இல்லை என்றறிந்த வன்னியர்கள் காக்கை வன்னியன் தலைமையில் அப்பகுதியில் கலகம் செய்தனர். இவற்றைத் தடுப்பதற்கு தானே புறப்பட்டுப் போவதாக பரநிருபனின் இளைய சகோதரனும் பரராஜசேகரனின் இளைய மனைவியின் மகனுமான சங்கிலி குமாரன் படையுடன் வன்னிப்பகுதிக்கு விரைந் தான.

Page 34
sums at sagaai 52
இந்த நிலைகளைக் கண்டு கொண்ட பறங்கி யர்கள் வடமராட்சிகிழக்கில் தங்களுடன் கொள்ளையர் கூட்டத்தையும் இணைத்து ஒரு சிறு படையை ஏற்படுத்தினர்.
மணற்காடு, நாகர்கோவில், வல்லிபுரம், செம்பியன்பற்று, கட்டைக்காடு, தொட்டு பருத்தித்துறை வரையான கடலோரப்பகுதியைக் கண்காணிக்க வல்லிபுரத்தில் யாழ்ப்பாணத்தரசின் கோட்டை ஒன்று இருந்தது.
இவற்றை விட வடமராட்சிப் பகுதி யாழ்ப்பாண அரசின் கடல்வளத்திற்கும், கடல்பாதுகாப்பிற்கும் முக்கியமானதாக விளங்கியது. இவ்வளவு இக்கட்டான நிலையில் வடமராட்சிக் கடல்வழியே கொள்ளையர்கள் நாட்டுக்குள் புகுவதற்கான வாய்ப்பு நிறைவாக இருந்தது. எனினும் அப்போது யாழ்ப்பாண அரசின் படைபலம் மிகவும் குறைவாயிருந்தது. வன்னியை நோக்கி அதிக படையை சங்கிலிகுமாரன் கொண்டு சென்றதே இதற்கு காரணமாகும்.
எனவே, இந்த நிலையில் வடமராட்சியை பாதுகாக்கும் பொறுப்பை இருமாத காலத்திற்கு பரநிருபசிங்கனிடம் பரராஜசேகரப் பெருமன்னர் வழங்கியிருந்தார். பரநிருபனோ, நல்லூரிலும் கோப்பா

அபிராமியின் காதலன் 53 யிலும், உள்ள கோட்டைகளிலும் இடைக்காட்டில் இருந்த மாளிகையிலும் இருந்தே வடமராட்சியை கண்காணிக் கலானாள். இதனால் நண்பனுடன் சந்திப்பது பேசுவது மட்டுமல்ல தன் மனைவியுடன் பேசுவதற்கே அவனுக்கு நேரம் கிடைக்கவில்லை.
வேலழகபூபதியும் நாட்டின் ஸ்தான அதிபதியாக இருந்ததால் வீடு வரவே இயலாத அளவு வேலைப்பழு உண்டாகியிருந்தது. சிறிது நேரம் கிடைக்க போதும் அவன் வீடு வர விரும்பவில்லை அதனை அவனது வேலைப்பழுவாகவே அவனின் மனைவி மனஸ்வினி எடுத்துக்கொண்டான்.
ஆனால் வேலழகனின் எண்ணமோ, வேறா யிருந்தது பரநிருபனுக்கும் மனஸ்வினிக்கும் எவ்வித உடலுறவும் இல்லையென்று அவனுக்கு சிறிதும் ஐயமின்றித் தெரியும். ஆனால் அவளது உள்ளத்தை முதலில் அவனன்றோ கவர்ந்தான். அந்தப் பாசவேரை எப்படிக் களைய முடியும்? உயிருள்ள வரை அந்த உறவின் நினைவு மாறாது. அந்த நாட்களை நினைத்த போது வேலழகபூபதிக்கு ஊன், உறக்கமெல்லாம் இல்லாமற் போயிற்று.
இந்த உறவுகளின் சிக்கல்கள் ஒன்றுமே தெரியாதவளாய் அபிராமி அந்தப்புரத்தில் தனியுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு தான் முன்பு

Page 35
"அபிராமியின் காதலன் 54
காதலித்த நபரின் பெயர் கூடத்தெரியாது அப்படிப்பட்ட அவளுக்கு இப்போது தெரிந்தது கூட தனது கணவரும் ஸ்தானாதிபதியும் நெருங்கிய நண்பர்கள். ஸ்தானாதி பதியின் மனைவி மனஸ்வினி என்ற மானஸா தனது கணவரின் நண்பரின் மனைவி என்பதால் அவளுக்கும் மானஸாவுக்கும் நட்பு. இப்போது எப்போதாவது அபிராமியும் மனஸ்வினியும் சந்தித்துப் பேசிக் கொள் கிறார்கள்.
ஆனால் அந்த பழைய காதல் விவகாரங்களுக்கு அருகில் கூட அந்தப் பேச்சு செல்வதில்லை. அபிராமி நன்கு பாடுவாள். மானஸா அழகாக கோலம் போடுவாள். மொத்தத்தில் இருவருக்கும் கலையார்வம் இருந்தது அதுவே அவர்களின் பேச்சாகவும் அமைந்தது.
 

அபிராமியின் காதலன்" 55
யாரை நம்புவது..?
ஒருநாள் இடைக்காடு மாளிகையில் பரநிருபசிங்கன் தனது பரிவாரங்களுடன் இருந்தான் அப்போது ஒரு அவசர தூதுவன் வல்லிபுரக் கோட்டை யில் இருந்து அங்கு வந்தான். அவனுடன் முஸ்லீம் வியாபாரிகள் சிலரும் வந்திருந்தனர்.
நாட்டின் பொருளாதார அரசியல் ஸ்திரமின் மையை கண்ட ஒரு கொள்ளையர் கூட்டம் பறங்கியரின் ஆசியுடனும், சில உதவாக்கரை ஆட்களையும் சேர்த்துக் கொண்டு வல்லிபுரக்கோட்டையை முற்றுகையிட்டி ருந்தது. கோட்டைக்கு உள்ளே ஐம்பது வீரர்களும் வெளியே ஐம்பது வீரர்களும் இருந்தார்கள். என்றாலும் போதிய ஆயுதங்கள் இவ்விரு அரசவீரர்களிடமும் இருக்கவில்லை.

Page 36
“ತಿನbaugಖar 56
கொள்ளையர்களின் தொகை மிக அதிகம் அவர்களில் வெள்ளைக்காரர்களும் இருந்ததால் நவீன வெடி பொருட்களும் அவர்களிடம் இருந்தது இந்த அவசர நிலையில் எப்படியாவது வந்து கோட்டையை காப்பாற்றுமாறு பரநிருபனிடம் கேட்டுக் கொண்டனர். அதற்காக வந்த அவசர தூதனும், முஸ்லீம் வியாபாரி களும் பரநிருபன் வராதுவிடில் கோட்டை எதிரிகளிடம் விழுந்துவிடும் என்றனர்.
ஆனால் இந்த கோரிக்கையைப் பரநிருபன் நிராகரித்து விட்டான். தான் இல்லாவிடில் தொண்டமனாற்று பகுதியில் கலவரம் உண்டாகும். எனவே வல்லிபுரம் வர இயலாது என்று பரநிருபசிங்கன் குறிப்பிட்டான்.
இந்தச்செய்தி வடமராட்சிப்பகுதி எங்கும் பரவியது. கொள்ளைக் கூட்டத்தாருக்குச் சரியான கும்மாளம் அது சீனவெடிகொழுத்திமகிழ்ந்தது.
இருநாள் முற்றுகையின் பின் கோட்டை கதவை உடைத்து உட்புக இக்கொள்ளையர் கூட்டம் முயன்றது ஆனால் அக்கதவு உடைபடுவதாக தெரியவில்லை. அப்போது கொள்ளைக்கூட்டத்தில் புதிதாக இணைந் திருந்த வாலிபன் ஒரு யோசனையை முன்வைத்தான்.

"Signu6ula anapait 5フ
“கதவுக்குக் கீழே குழிவெட்டித் துப்பாக்கி மருந்தை நிரப்பித் தீ வைத்தால் கதவு சுக்குநூறாகி விடும்" என்றான் அந்த ஆலோசனையை முற்றுகைக்கு மறைமுக ஆதரவளித்த போத்துக்கேயத் தளபதியும் வரவேற்றான். உள்ளே இருந்தவர்கள் பயந்து போனார்கள். ஒரு நிபந்தனையுடன் தாங்களே கோட்டைக் கதவைத் திறந்து விடுவதாக அறிவித் தார்கள்.
அதன்படி அன்று அந்த நிபந்தனையை போத்துக்கேயர் உள்ளிட்ட அனைவரும் ஏற்றுக் கொண்டதால், கோட்டைக்கதவு உள்ளே இருந்தவர் களாலேயே திறந்து விடப்பட்டது நிபந்தனைக்கமைய உள்ளே இருந்த படையும் முற்றுகைப் படையாகவே, கருதப்பட்டு இருபடையும் ஒன்றாக்கப்பட்டது. போத்துக்கேயர் உள்ளிட்ட வெளிநாட்டார் இருபது GBUGBU GEBb5TÜ.
ஆகவே இந்த இருபடையும் இணைந்த ஒரு படையாக விளங்கிய அந்த முற்றுகைப்படைக்கு ஒரு தலைவர் நியமிக்கப்பட வேண்டியிருந்தது அத்தலைவர் ஒரு சுதேசியாகவும், சுதேசமதத்தைச் சேர்ந்தவராயு மிருக்க வேண்டுமென்று போத்துக்கேயரே அத்தருணத் தில் விரும்பினர். அப்படிச் செய்தால் மக்கள் ஆதரவைப் பெற்று இராஜதந்திர ரீதியில் நாட்டை முழுமையாக கொள்ளையடிக்கலாம் என்று அவர்கள் நம்பினர்

Page 37
"அபிராமியின் காதலன்" 58
போர்த்துக்கேயர் கண்ட தமிழ்வீரன்
அந்த வகையில், பலராலும் முற்றுகைக் காலத்தில் வீர தீரச் செயல்களைச் செய்த இளைஞனே கோட்டைத் தளபதியாகபட்ட முன்மொழியப்பட்டு நியமிக்கப்பட்டான். பலசாலியும் விவேகியுமான அவ் இளைஞன் விரைவாக கோட்டை இராணுவத்தை வளப்படுத்தினான் இப்போது வல்லிபுரக் கோட்டை இராணுவம் சுமார் ஐந்நூறாக பெருகி விட்டது. இப்படியே இருந்தால் விரைவில் யாழ்ப்பாண இராச்சியமே தம் வசம் வரும் என்று போர்த்துக்கேய தளபதிஅடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை.
ஒருநாள் திடீரென போர்த்துக்கேயர் உள்ளிட்ட நூறுபேரை அழைத்துக் கொண்டு அந்த இளைஞன் கோப்பாய் கோட்டைக்குப் புறப்பட்டான். என்ன ஆச்சரியம் எனில் வழியில் ஒரு எதிர்ப்பும் இன்றி
 

"அபிராமியின் காதலன் 59
இப்படை கோப்பாயை அடைந்தது. அந்த கோப்பாய் யாழ்ப்பாண அரசால் "கோ"நகர் என்று அழைக்கப்பட்ட முக்கிய கேந்திரமாகும்.
"ஆஹா. பரராஜசேகரன் ஓடிவிட்டான் கோ நகர் இனி எங்கள் வசம்” என்று சென்ற நூற்றுவர் படை கொக்கரித்தது அது மட்டுமன்றி "இனி யாழ்ப்பாண இராச்சியமே எங்களிடம்." என்று அவனுடன் சென்ற போர்த்துக்கேயரும் மகிழ்ந்தனர்.
கோட்டையை அடைந்த போது, கோவைப் பெரும்கோட்டை திறந்தே, இருந்தது அவர்கள் உள்ளே நுழைந்தபோதுகூட எவரும் ஆட்சேபிக்கவில்லை.
"ஜெயம் கிடைத்தால் இப்படியன்றோ கிடைக்க வேண்டும்" போர்த்துக்கேயருக்கு தலை கால் தெரிய ഖിണങ്ങാണു.
அந்த இளைஞன் மஹாவீராதி வீரன் நேரே தான் கொண்டு வந்த படையை கோட்டை மைதானத்துக்குள் கொண்டு சென்று விட்டான் அங்கே ஆயிரம் பேர் கொண்ட ஆரியர் சக்கரவர்த்திகளின் குதிரைப்படைகள் பயிற்சி செய்து கொண்டிருந்தன.

Page 38
"அபிராமியின் காதலன்" 6O
வந்திறங்கிய இளைஞனைப் பார்த்த உடன் அந்த ஆயிரம் குதிரைப்படைத் தலைவனாய் விளங்கிய "கோ" நகர் கோட்டைத் தலைவனாகிய, பரராஜசேகர மாமன்னரின் அந்தரங்க நண்பன் “சரே” லென்று குதிரையிலிருந்து இறங்கினான். வந்த படைகள் தமது ஆயுதங்களை முனைப்போடு எடுத்தனர். இளைஞன் அமைதிகாக்ககட்டளையிட்டான்.
இறங்கி வந்த யாழ்ப்பாண அரசர் படைத் தலைவன் “கோடி நமஸ்காரம். பரநிருபயுவராஜ." என்று இளைஞனுக்கு வணக்கம் செலுத்தினான். அந்த இளைஞனுடன் வந்தவர்களுக்கு "திகிர்” என்றது இளைஞனுக்கோசிரிப்பு வந்தது.
“வேண்டுமென்றால் இந்த எனது படையையும் உங்கள் படையுடன் சேர்த்துக் கொள்ளலாம்” என்றர்ன் அந்த இளைஞன்.
வந்தவர்கள் நடு நடுங்கிப் போனார்கள் "இது போல ஒரு ராணுவ தந்திரத்தை கேள்விப்பட்டதே இல்லையே” என்றான் ஒருவன் எது எப்படியோ எல்லோரும் சேர்ந்து.
"ராஜராஜநிருபசிங்க யுவராஜர் வாழ்க" என்று கோஷமிட்டனர். எங்கும் ஒரே உற்சாகம்.

Oyunussa angesor 6.
இவ்வாறாக ஒருவாறு வல்லிபுரக்கோட்டை முற்றுகை எவரும் எதிர்பாராத முறையில் பல மடங்கு இலாபத் துடன்,சிறிதும்சேதாரம் இன்றிவெற்றிகொள்ளப்பட்டது.
மீண்டும் வல்லிபுரம் சென்ற இந்த இளைஞனான பரநிருபன் கோட்டை வாயிலில் "சேது" என்ற மங்கல வாசத்தைப் பொறித்து உச்சி மீது நந்திக்கொடி ஏற்றினான். அவ்வமயம் பரராஜசேகர மாமன்னரே அங்கு வந்து வாழ்த்தினார். தந்தையும் மைந்தனுமாக கோட்டை அருகில் உள்ள வல்லிபுரப்பெருமாள் ஆலயத் திற்கும் சென்றனர்.
அங்கே சக்கரத்தாழ்வாரை வழிபாடு செய்தனர். நாட்டில் எதிரிகளின் தொல்லை இல்லாமல் போக வேண்டி அந்த வல்லிபுர சுதர்சன சக்கரக்கடவுளைப் போற்றிநல்லுருக்கு புறப்பட்டனர்.
வரும் வழியில் கரணவாய்ப்பகுதியில் ஒரு அரசிற்குச் சொந்தமான மாளிகை இருந்தது. திருமறைக் காட்டிலிருந்து வந்து குடியேறிய கணக்கர்கள் பலர் குடும்பம் குடும்பமாக அங்கு வாழ்ந்து வந்தனர். அவர்களில் முதல்வரான வேதாரண்யர் தமது மனைவி

Page 39
"BuffyTTôiókat asigabadi" 62 வீணாவாத விபூஷணியுடன் சென்று அரசரையும் பரநிருபரையும் அங்கே வந்து இருநாள் தங்கிச் செல்ல வேண்டினர். அவர்களும் அதற்கு உடன்பட்டு அவர்களின் கெளரவத்தை ஏற்று, சுற்றிலும் இருந்த கிராமங் களையும் பார்வையிட்டு இருநாட்கள் தங்கி, பின் கோப்பாய்ககோட்டையை அடைந்தனர்.
பரநிருபனுக்கு சில வேலைகள் இருந்ததால் அவன் கோப்பாயில் அடுத்து பத்து நாட்கள் தங்க நேரிட்டது. பரராஜசேகர மன்னர் அவனிடம் விடை பெற்று நல்லூரை அடைந்தார்.
 
 

eിത്സിഗി (gബ് 63
இறைவ
அப்போது கார்த்திகை மாதம் நடந்து கொண்டி ருந்தது. கார்த்திகை மாத பூரணை நாளில் நல்லூரில் பார்வதி பரமேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் வெகுசிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த விழாவை முன்னிட்டு இசை, நாட்டிய நிகழ்வுகளும் ஆங்காங்கே நிகழும் அந்த வகையில் அன்றைய வருட கல்யாண உற்சவமும் சிறப்பாக ஆரம்பித்திருந்தது.
வேலழகபூபதி எப்போதும் அரண்மனை வேலை என்றே இருந்தான். அதனால் அவனது மாளிகையில் அவன் மனைவி மனஸ்வினி தனிமையில் வாடினாள். அவளுக்கு பரநிருபன் இன்மையால் அவன் மனைவி அபிராமியும் தனியே தான் இருக்கிறாள் என்று தெரியும் அதனால் மாளிகைக்குச் சென்ற மனஸ்வினி அவளையும்

Page 40
"8ത്തിൽ ഒrgഭാര് 64 அழைத்துக் கொண்டு வந்து உலகின் ஆதி தம்பதியரான பார்வதி பரமேஸ்வரரின் திருக்கல்யாண விழாவை பார்க்கலானாள்.
யாழ்ப்பாணம் என்ற சொல்லின் பொருளை விளக்குவது போல பல்வகை யாழிசைக்கச்சேரிகளும், வீணை, இசை, நாதஸ்வரஇசை, குழலிசை, மிருதங்க இசை, கடஇசை ஆகியவற்றின் சங்கமக் கச்சேரிகளும் ஆங்காங்கே நடந்தன. யாழ்ப்பாண இராச்சியத்தின் தனித்துவமான இசைக்கருவியான "கடசிங்காரியின் இசையும் அந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்த தென்னிந் தியர்களின் மனதைகவர்ந்தது.
இன்னொருபுறம் "கதிரமலைப்பள்ளு" என்ற இலக்கியம் கூத்தாக நடிக்கப்பட்டது. இன்னும் ஒரு பக்கத்தில் "கண்ணகி வழக்குரை காதை" நாடகமாக நடிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
அந்தக் கண்ணகியின் கற்பும் அதன் வலிமையும் திறனும் மனஸ்வினி அபிராமி என்ற இரு பெண் களையும் வெகுவாகக் கவர்ந்து விட்டது. இந்த கண்ணகை பற்றிய நாடகம் நடந்த இடம் வேலழகனின் மாளிகை முன்றலாகும்.

eിത്സിഗി (gബ് 65
பிரிந்தவர் சேர்ந்தார் வந்தது பிரளயம்
கண்ணகி பற்றிய இந்த நாடக முக்கிய கட்டம் நடந்து கொண்டிருந்தது. அதனை மனஸ்வினி மிகவும் உணர்வு பூர்வமாக ரசித்துக் கொண்டிருந்தாள். அபிராமிக்கோ, திடீரென்று அவளது மாளிகையைச் சுற்றிபார்க்கும் ஆசை உண்டானது அவள்
“மானஸா, உன் மாளிகையைச் சுற்றிக் காட்டு வதாய் சொன்னாயே. பார்க்கலாமா?" என்றாள்.
நாடகத்தில் லயித்திருந்த மனஸ்வினியோ, நீயே சுற்றிப் பாரேன். எனக்கு இதைப் பார்க்கணும் போலிருக்கு" என்று சொல்லிவிட்டாள்.

Page 41
anignusulat angsasai 68
ஒரு போதும் இல்லாதவாறு அபிராமி மனஸ்வினியின் மாளிகையை சுற்றிப் பார்த்தால் திடீர் என்று என்ன தோன்றியதோ? அவளது படுக்கையில் உட்கார்ந்து கொண்டாள்.
அப்போது தான் எங்கிருந்தோ, வேலழகபூபதி தன் மாளிகைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான். அபிராமியைப் பார்த்தான். அபிராமி வேலழகனைப் பார்த்தாள். முன்பு மாவிட்டபுரத்தில் இவர்கள் ஒருவரை ஒருவர் கண்ட பின் இப்போது தான் முதல்முறையாக பார்க்கிறார்கள்.
பிரிந்திருந்த இந்த காதலர்கள் தனியே கண்டதும் மெய்மறந்து போனார்கள் வேலழகனுக்கு “குப்" என்று வியர்த்தது அபிராமியின் கைகளைப் பற்றிக் கொள்ளவும், அவளை அணைத்துக் கொள்ளவும் முயன்றான்.
அப்போது தான், திடீரென அபிராமிக்கு நிகழ்
கால் உணர்வு உண்டாயிற்று தான் பரநிருபனின் மனைவி என உணர்ந்தாள்உடனே
“மானஸா.மானஸா." என்று சப்தமிட்டாள்.
கீழே நாடகம் பார்த்துக் கொண்டிருந்த மனஸ்வினி அபிராமியின் அவலக்குரல் கேட்டு தன்

அபிராமியின் காதலன் 67
மாளிகையுள் ஓடி வந்தாள். அதற்குள் அபிராமி மூச்சித்துநிலத்தில் விழுந்துவிட்டாள். வேலழகன் என்ன நடக்கிறது என்றே உணரும் ஆற்றலின்றிஇருந்தான்.
உள்ளே வந்த மன்வினியும் அபிராமி விழுந்து கிடப்பதையும், வேலழகன் நிற்பதையும் கண்டு திகைத் தாள்.
"நான் பல ஆண்டுகட்கு முன் காதலித்த காரிகை இவளே." வேலழகன் ஒப்புக் கொண்டான்.
மனஸ் வினியோ "இவள் பரநிருபசிங்க இளவரசனின் அன்பு மனைவி என்று சொன்னாள் வேலழகனோ இடி விழுந்தது போலவும், உலகம் தலை கீழாய்ப் புரண்டது போலவும் "ஐயையோ. ஐயோ!! என்றுதலையில் அடித்துக் கொண்டான்.
சிறிது நேரத்தில் அபிராமியும் கண் விழித்தாள். ஆனால் அவளலும் பேச முடியவில்லை. மனஸ்வினி ஒருத்தியேதான்பேசினாள்.
"அபிரா! இவர் தான் பரநிருப சிங்க ராஜாவின் பிரான சிநேகிதர். வேலழகபூபதி என்ற ஸ்தானாதிபதி எனது கணவர்.இதுஒ ஆச்சர்யம்" என்றாள்.

Page 42
9îJITôióadi asgaoar 68
சிறிது நேரத்தில் மனஸ்வினி மேலும் “பல ஆண்டுகட்கு முன் நீ இவரையும், நான் இளைய மகாராஜாவையும் மணக்க விரும்பினோம் அவர்களின் ஆசையும் அதுவே. ஆனால் இறைவனின் இஷ்டம் வேறாயிருந்தது. இளைய மஹாராஜா என்னைத் தன் சகோதரியாக ஏற்றுக் கொண்டார். அன்று முதல் அவருக்குநீயே உயிர்” என்றாள்.
அபிராமிக்கு என்ன சொல்வதென்றே தெரிய வில்லை. அவள் "சர சர" என்று மாளிகையை விட்டு வெளியேறினாள்.
மனஸ்வினியும் வேலழகனும் "வேண்டாம் இந்த வாழ்வு! "என்றநிலையை அடைந்து விட்டனர்.
நாடக கோஷ்டி களைந்து போயிருந்தது. கரியன் அஸ்தமித்துக் கொண்டிருந்தான். புஷ்பபல்லக்கில் கமலாம்பிகையுடன் புது மணவாளனாக கைலாஸநாதக் கடவுள் உலா வந்து கொண்டிருந்தார். இந்த மணக் கோலக் கடவுளைக் கண்டு அபிராமி கண்களில் அடக்க இயலாமல் கண்ணிர் பொழியதொழும் நினைவும் மறந்து நின்றாள். அவளைக் கடந்து அந்த ஊர்வலம் சென்று விட்டது.
அது அப்பால் செல்ல இவளது எண்ணம் பலவாறாக ஓடிற்று.

அபிராமியின் காதலன் 69
அந்தக் காலத்தில் இத்தாலிய கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் யாழ்ப்பாண இராச்சியத்தில் கிறிஸ்தவ பிரச்சாரம் செய்து வந்தார். தமிழ் மொழியில் ரீச்சயம் மிக்க அவரது முக்கிய குறியாக அரச குடும்பத்தில் சிலரை கிறிஸ்துவத்திற்கு மாற்றுவதாக இருந்தது.
அவர் அந்தப்புரப் பெண்மணியான ராஜ குடும்பத் தவளான அபிராமியைக் கண்டு விட்டார். அவளுடன் பேசி அவளை மதம் மாற்ற வேண்டும் என்று முடிவெடுத்தார். அவளின் கண்களில் ஏதோ கவலை தெரிந்ததும் அதையே முன்னிறுத்திப் பேசத் தொடங் கினார்.
ஆனால் அபிராமியோ சீறி எழுந்தாள். "ஏன் ஏதோதோ எல்லாம் சொல்லி ஏமாற்றித்திரியிறீர்? மதம் மாறுவோரால் வரும் பயன் என்ன? இன்று ஆயிரம் பேர் உம் மதத்தில் சேருவர் நாளை உம்மைத் தள்ளி விட்டு இன்னொருவர் வந்தால் இவர்கள் எல்லாம் பிறகு அந்த மதத்திற்கு ஓடி விடுவார்கள். இது ஒரு உபயோகமே இல்லாத உத்தியோகம். நமது ஸநாதன நெறி யுகயகமாக அழியாதிருப்பது. அந்த மஹாவீரர்களான சமணர்களால் கூட எங்களை நெருங்க இயலவில்லை. என்று கொதிப்புடன் கர்ஜித்தாள் இதைச் சிறிதும் எதிர்பாராத அந்தப் பாதிரியார் அகன்று போய் விட்டார்.

Page 43
"அபிராமியின் காதலன் 7Ο கண்ணிரின் காலம்
கனமழைபொழியும் கார்த்திகை மாத பூரணையில் நல்லூரில் நடக்கிற தீபத்திருவிழாவிலும் , இறைவனின் திருமணப் பெருவிழாவிலும் தனது மனைவியாகிய அபிராமியுடன் இணைந்து பங்கேற்கவே பரநிருபன் விரும்பினான் ஆனால் திடீர் வேலைப் பழுவால் அது நடக்காமற் போயிற்று எனவே வந்த வேலைகளை கோப்பாய் கோட்டையில் முழுமையாகச் செய்து விட்டு நல்லூர் திரும்பலாம் என்றவன் இருந்தான்.
ஆனால் கோப்பாய்க் கோட்டைக்கு நண்பன்
வேலழகபு, பதியரிடமிருந்து அவசர துTதுவன் பரநிருபனை நாடி வந்திருந்தான். அவன் கொண்டு
 

"அபிராமியின் காதலன்" 7
வந்திருந்த இரகசிய ஓலையைப் படித்த போது பரநிருபசிங்கனுக்குதலையேசுற்றியது அதில்,
"மிகவும் மரியாதைக்கும் நட்புக்கும் உரிய பரநிருபசிங்க மஹாராஜருக்கு கோடி வணக்கங்கள். தாங்கள் எனக்கு அளித்த ஸ்தானாதிபதி பதவியை சுயவிருப்பின் பேரில் துறக்க விரும்புகிறேன் மேலும் தாங்கள் நல்லூரை அடைகிற போது நான் ஸ்தானாதிபதியாக இருக்க மாட்டேன் அதற்கு என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.
தங்கள் மனைவியை இன்று இரவு தான் நான் கண்டேன் ஆனால் தங்கள் மனைவி என்று அறிய வில்லை. அவளே நான் பல வருடங்கட்கு முன் காதலித்த பெண்ணாதலில் என்னை மறந்து, அவளை தீண்ட முயன்றேன் கற்பிற்சிறந்த ക്രഖണേ. ஓடிவிட்டாள். மிகுந்த உயிர் நண்பரும் எஜமானரும் ராஜாவுமான தங்கள் மனைவியை தீண்ட எண்ணிய மாபாவியான நான் உயிர் வாழ்வதன் நோக்கம் என்ன? உயிரை விடுவதாகிய "தற்கொலையும் பாபமென்றே நீதிநூல்கள் சொல்வதால் அதற்கும் அஞ்சுகிறேன்.
பெண்கள், காதல், உலகம் இவற்றில் வெறுத்து விட்டது. நீயாவது சிறப்பாக வாழ வேண்டுமாயின் நானும் மனஸ்வினியும் உன் கண்முன் இருத்தல் தகாது.

Page 44
8ീ ജ് - 72 நன்றாக யோசித்துவிட்டேன் இதோ, இக்கணமே நான் துறவி.சந்நியாசிஇனிஎன்னைப் பற்றிநிநினைக்கவே கூடாது.
இந்த இராச்சிய நலன் கருதி நீயும் சகோதரி அபிராமியும் இணைந்து வாழ வேண்டும். அது ஒன்றே நான்கோரும் இறுதிவரம்.
நான் செய்த பாவங்களுக்காக இனி அந்த யோகீஸ்வரரான கேதீஸ்வரரை நோக்கிச் செல்லப் போகிறேன்
இதனைக் கண்டதும் புரவியில் ஏறி நல்லூருக்கு விரைந்தான் பரநிருபசிங்கன் வழியில் ஒரு பெளத்த பிக்கு தர்மஉபதேசம் செய்து கொண்டிருந்தார். இன்னோர் இடத்தில் இன்னொரு சந்நியாசி அத்வைத வேதாந்த போதனை நடத்திக் கொண்டிருந்தார். இந்த துறவிகளின் முகத்தில் எல்லாம் வேலழகனே தெரிந்த தால் இவன் வெகுண்டு போனான். அது கார்காலம் ஆதலால் கனமழை பொழிந்து எங்கும் வெள்ளக் காடாகக் கிடந்தது.
இது இவ்வாறிருக்க மனஸ்வினி தானே அபிராமியிடம் வந்து ஒரு அவசர ஓலை கொடுத்து விட்டுப் பறந்துபோனாள் அதில், "என் கணவர் என்னிடம்

"éuôgmuôtôañ a5Irğ56oad" ア3 ஒரு கட்டளை இட்டு விட்டு ஸந்நியாசியாகி கண்காண முடியாத இடத்திற்கு சென்று விட்டான். நானும் கடவுட் த்ொண்டுக்கே என் உடல், பொருள், ஆவி எல்லாம் அர்ப்பணிப்பதற்குசித்தமாகிவிட்டேன்.
உன்னிடம் நான் வேண்டிக் கொள்வது ஒன்றே, நீ அதை மறுக்க மாட்டாய் என நம்புகிறேன். நீ பரநிருபசிங்க மஹாராஜருடன் இல்லற வாழ்வை இனிமையாகப் பேண வேண்டும். அதன் மூலம் பரராஜசேகர மன்னரின் வம்சத்தை விருத்தி செய்ய வேண்டும்.
அதன் பொருட்டு உனது பழைய காதலை முழுமையாக மறக்க வேண்டும் அது பற்றி பரநிருபசிங்கரிடம் நீயாக ஒன்றும் பேசாதே உங்கள் இருவரையும் இறைவன் ஆசீர்வதிக்கட்டும்.
என்றிருந்தது. அதனைப் 'படித்த அபிராமி கண்களில் நீர் ஆறாக ஓட மனஸ்வினியின் விருப்பப்படி அந்த ஒலையையும் நெருப்பிலிட்டுவிட்டாள்.
அப்போது அவளை அறியாமலே "ஒ." என்று சத்தமிட்டு அழுதாள். அந்த நேரம் குதிரையில் பாய்ந்து வந்த பரநிருபசிங்கன் அவளை ஆரத்தழுவிக் கொண்டான்.

Page 45
9ിത്സിമ agബ് 74 நீலமயிலில் வந்த காதல் தலைவன்
"அபிரா எப்படி இருக்கிறாய்? இவ்வளவு நாளும் எப்படிப் பொழுது போயிற்று? என்று அவன் அவளிடம் கேட்டான் அவளிடம் அழுகையே பதிலாக வந்தது.
"நான் எல்லாம் அறிவேன். வேலழகபூபதியின் அவசர ஓலை படித்தேன். உனது கற்பின் பெருமை யையும் தெரிந்து கொண்டேன். இனி நீயே என் உயிர் ." என்று அவளை அணைத்தான்.
அவன் அவளைக் கைப்பிடித்தவாறு மாளிகைக்கு வெளியே வந்து பார்த்த போது ஓடி வந்த தூதுவன் வணக்கம் தெரித்துவிட்டு.
 

"அபிராமியின் காதலன்" 75
“ஸ்தானாதிபதி சந்நியாசியாகி எங்கோ போய் விட்டார். ஸ்தானாதிபதியின் மனைவியும் நகுலேஸ்வர பெருமான் ஆலயத்திற்கு சென்று ‘எம்பெருமான் அடியாள்களுள் ஒருத்தியாக பிரகடனம் செய்து கொண்டு விட்டாள். ஸ்தானாதிபதியின் சொந்த சொத்துக்கள் எல்லாம் நல்லை முருகவேளுக்கே என்று இருவரும் எழுதிபட்டயம் வைத்திருக்கிறார்கள்” என்று வியர்க்க வியர்க்க பலவீனனாக நின்று பயந்த குரலிலும் நடுங்கிங் உடலோடு சொன்னான். அவனை அன்போடு தொட்டு பரநிருபன் "நீ செல்லலாம்" என்று விடை கொடுத்தான்.
பரநிருபசிங்க இளவலும் அவனுடன் இணைந் தவளான அபிராமியும் அப்போது நல்லைக்குமரப் பெருமானின்ரதவீதியில்நின்றிருந்தார்கள்.
அன்றைக்கு கார்த்திகை நட்சத்திரமாக இருந்தது. எனவே நல்லைக்கந்தப்பெருமான் திருவுலா வந்து கொண்டிருந்தான்.
முன்னே தவில், நாதஸ்வர இசை முழக்கம். அடுத்து யானை, குதிரை, பசு ஆகியவற்றின் வருகை

Page 46
ejസ്ഥി (" 76 பின்னே ஆலவட்டம் ஆகிய உயசாரங்கள். தங்கப் பிரம்பு, வெள்ளிப்பிரம்பு ஏந்தியவர்கள் "எச்சரிக்கை. எச்சரிக்கை" என்று தங்கள் கைகளை ஓங்கித் தட்டிக் கொண்டுவந்தனர்.
திருமறை நான்கும் வல்ல அந்தணர்களும் திருமுறைவல்ல ஓதுவார்களும் அடுத்து வர. தீ வட்டிகளில் நெய்மணமும், அகிற்புகையின் சுகந்தமும் கலந்தன. “ஹரஹர." என்று பலரும் கோஷிக்க ருநீவல்லி தேவசேனா நாச்சியார்களுடன் அவ்வமயம் பச்சைமயில் மீது நல்லைப்பரமன். வள்ளிக்கு வாய்த்த
வள்ளல் எழுந்தருளிவந்தான்.
அவன் பரநிருபசிங்கனையும் அபிராமியையும் நெருங்கியபோது, ஒதுவார்கள்,
"நீலங்கொள் மேகத்தின் மயில் மீது
நீவந்த வாழ்வைக்கணிடு அதனாலே மால் கொணர்ட பேதைக்குனி மனம்நாடும்
மார்தங்கு வாழ்வைத்தந்து அருள்வாயே..”

"அபிராமியின் காதலன் 77
என்று பாட அர்ச்சகர் வள்ளிமணவாளனுக்கு தீபாராதனை சமர்ப்பித்தார். அந்தத் தீப ஒளியில் குமரன் குறுநகை செய்தான்.
இனி எத்தனை மாற்றங்களை. எத்தனை சிக்கல்களை இந்த ராஜ்யம் அனுபவிக்குமோ..? ஆனால் எதுவந்தாலும் அஞ்சாநிலை தருவேன். அமைதி அளிப்பேன் என்று அவனது முறுவல் சொல்கிறதே.
அந்நேரம் இவ்விருவரின் வாழ்வில் ஒரு புது ஒளி பிறந்தது. அதில் இருவரின்தியாகம் ஒளியூட்டியது.

Page 47
8uôlymffledir amgecoach" 78
நல்லூர் இராஜதானி சில சுவாரஸ்யமான s () O
நான் யாழ்ப்பாணப்பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சிகள் நிலையத்தில் மாணவனாக இருந்த போது 2010ஆம் ஆண்டில் ஒரு ஆவணப்படம் எடுக்க வேண்டி ஏற்பட்ட போது, யாழ்ப்பாண இராச்சியத்தை ஆவணப்படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். அப்போது, கிடைத்த செய்திகள் சிலவற்றையும், சந்தித்த வரலாற்று ஆய்வாளர்கள் சிலர் குறிப்பிட்ட விடயங்கள் சிலவற்றையும் விடயத்தின் பொருத்தப்பாடு கருதி இங்கே விவரிக்க விரும்புகின்றேன்.
யாழ்ப்பாணக்கோட்டைக்கும்அரசுக்கும்தொடர்பிருக்கிறதா?
யாழ்ப்பாண இராசதானிக் கால எச்ச்ங்கள் பல தற்போதைய யாழ். கோட்டைச் சுவர்களின் பிற் பகுதியிலும் கோட்டையின் பின்புறத்தும் காணப்படு கின்றன. என்ற கருத்தையும் அறியமுடிந்தது.
யாழ்ப்பாண வைபவ மாலை என்ற நூலில் ."பறங்கிகள் ஆட்சியினை ஒப்புக்கொண்டு நல்லூரில் குடியிருந்து கொண்டு தங்கள் கருமங்களை நடாத்திப் புறக்கோட்டை மதில்களை இடிப்பித்து அக்கற்களைக் கொண்டு போய்க் கடல் ஒரத்திலே சங்கிலியரசன் இடிப்பித்துப் பரவி விட்ட தங்கள் கோட்டையை மறுபடி கோட்டையாகக் கட்டி அதன் கீழ்ப்புறத்திலே வீடுகளை

Sigmuôía asgenoar 79. யும் அரசாட்சி மண்டபங்களையும் கட்டிவித்து குடிகள் சமீபத்தில் வீடு கட்டி வந்திருக்கும் படி வசதி பண்ணி னார்கள்." என்று எழுதியிருக்கிறது. இந்நூல் ஒல்லாந்தர் காலத்தைச் சேர்ந்ததாகும்.
இதே போல யாழ்ப்பாண சரித்திரம் எழுதிய வரலாற்றாசிரியரான ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை தனது யாழ்ப்பாண சரித்திரம் நூலில் "நல்லூர் இராசதானிக் குரிய கற்சாசனங்களும் கற்தூண்களும் கோட்டையில் வைத்துக் கட்டப்பட்டுள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார். கோட்டையின் மேற்குப்புறத் தூண் ஒன்றில் நேர்த்தி யான தாமரைவடிவம் ஒன்றை அவதானித்திருக் கிறார்கள்.
யமுனா ஏரிஅதில்என்னதான் இருக்கிறது?
யமுனா ஏரி யாழ்ப்பாணத்தின் வரலாற்றியல் அரும் பொக்கிஷம். பிரபல நல்லூர் கந்தஸ்வாமி கோயிலுக்கு மிக அண்மையில் மந்திரிமனைக்கு கிழக்காக பருத்தித்துறை நெடுஞ்சாலையிலிருந்து கிழக்கே சென்றால் வரக்கூடியது இது. ஆனால் தற்போது கண்டறிவது கடினம்.
இது இன்றைக்கு காண்பது மிக அருமை. பாதையும் சீரில்லை. இருக்கும் இடத்தைக் கேட்டாலும் பலரும் விழிப்பர். நல்லூரிலேயே குடியிருக்கும் பலருக்கும் யமுனாஏரி எங்கிருக்கிறது என்பது தெரி யாது என்பது வேதனைக்குரிய உண்மை.

Page 48
reyndad airgood
யாழ்ப்பாண மன்னர்களில் மிகமுக்கியமான வனான சிங்கைப்பரரஐசேகரன் என்பவன் தனது சமய ஆர்வத்தாலும் சமயப்பற்றினாலும் வட இந்தியா விலுள்ள யமுனை ஆற்றிலிருந்து நீர் கொண்டு வந்து இங்கு பிரதிஷ்டை செய்ததால் இது யமுனா ஏரி என்ப்படுகின்றது.
இப்போது முத்திரைச் சந்திக்கு அருகில் இருக்கும் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு மிக அண்மித்த தாக அதற்கு வடக்குப்புறமாக இவ்வேரி இருப்பதால் இது அக்கால நல்லூர்க் கோயிலின் புனித தீர்த்தக் குளமாகவும் பாவிக்கப்பட்டிருக்கலாம் எனவும் கருத முடிகின்றது.
இது எனது தனிப்பட்ட கருத்தாதலில் இது மேலும் ஆய்விற்குரியது. அவ்வாறு ஆய்ந்து உண்மை எனக் கருதப்படில் வருஷம் ஒரு முறையேனும் நல்லூர்க் கந்த ஸ்வாமிக்கு இந்த யமுனாஏரிக்கரையில் தீர்த்த விழாச் செய்வதும்சாலப்பொருத்தமாக இருக்கும்.
முதலியார் இராசநாயகம் அவர்கள் தனது யாழ்ப்பாண சரித்திரம் என்ற நூலில் "சிங்கைப் பரராசசேகரன் 1478ஆம் ஆண்டில் யமுனா ஆற்றி லிருந்து காவடிகளிலே புனிதநீரைக் கொண்டு வந்து இங்கு பிரதிஷ்டை செய்ததால் இது இப்பெயர் பெற்றது" என்று குறிப்பிட்டுளளதையும் காணமுடிகின்றது.

ByIി (" 8. இந்த ஏரியானது "ப"கர வடிவில் அமைந்து காணப்படு கிறது. இதனால் இதனை “முக்கூடற்கூபம்" என்றும் பகரவடிவ ஏரி என்றும் அழைப்பர். பொழிந்த முருங்கைக் கற்களையும் வெள்ளைக் கற்களையும் கொண்டு இந்த ஏரி அமைக்கப் பெற்றிருக்கிறது. இவ்வேரியுள் இறங்கிச் செல்ல வசதியாகவும் படிக்கட்டுகள் அமைக்கப்பெற்றுள்ளன.
இந்த யமுனாஏரியைச் சுற்றி பல்வேறு கட்டடங்களின் சிதைவுகளையும் அவதானிக்க முடிகின்றது. இவை யாவும் நல்லூரைத் தலைநகராகக் கொண்டு யாழ்ப்பாணத்தை ஆண்ட மன்னர்களின் தொழில்நுட்பத்திறனைப் பறைசாற்றுகின்றது எனலாம். இந்த ஏரியினுள்ளிருந்து மரத்தாலான அம்மன் விக்கிரகம் (யாழ்ப்பாண அரசர் காலத்திற்குரியது) ஒன்றும் கண்டெடுக்கப்பட்டதாகக் கருதப்படுகின்றது.
யமுனாஏரிமட்டுமல்ல. இன்னும்.
யமுனா ஏரிக்குச் செல்லும் பாதையில் ஒரு பெரிய குளமும் அதனோடிணைந்த சிறிய அழகிய பைரவர் ஆலயமும் காணமுடியும். யமுனாஏரியைத் தேடிச் செல்லும் பலரும் இந்தக் குளத்தையே பார்த்து விட்டு இதுவே யமுனாஏரி என மயங்கித் திரும்புவதும் உண்டு.

Page 49
8ത്തിൽ $(' 82
இந்தக் குளத்திற்கு அருகில் ஒரு செங்கல் மேடையைக் காண முடியும். இது ஒல்லாந்தர் கால கல்விச் சாலை ஒன்றின் அடிக்கட்டுமானம் என்றும் கருதப்படுகின்ற போதிலும் முக்கியமாக சங்கிலியன் மன்னனின் அரண்மனை அத்திவாரம் என்ற கருத்தும்
நிலவுகின்றது.
1957ல் இப்பகுதியை ஆய்வு செய்த தொல்லிய லாளரான எஸ்.சண்முகநாதன் என்பவர் இக்கட்டிட அழிபாடுகளிடையே சங்கிலிய மன்னனின் அரண்மனை அத்திவாரம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். எனினும் இன்று இம்மேடையையிலும் மரங்கள் வளர்ந்து சிதைந்து போய்க்கிடக்கிறது. இங்கும் காட்சிப்படுத்து வதற்குத் தக்க படியான விஷயங்கள் எதனையும் காண இயலவில்லை.
இவை யாவும் இவ்வாறிருக்க பண்டாரக்குளம் என்ற ஒன்று இருப்பதாயும் அதுவும் யாழ்ப்பாண அரசர் காலத்தைச் சேர்ந்தது என்றும் குறிப்பிடப்பட்ட போதும் அங்கே எந்தப் பழம் பொருளையும், அரசர் காலச்சின்னங்கள் எதனையும் காணமுடியவில்லை. அங்கே இருக்கும் விஷயங்கள் எதுவும் காட்சிப் படுத்தக்(வீடியோ அல்லது புகைப்படமாக) கூடியதாக 8ൺങ്ങാണു.
தந்திரமாக அணுக வேண்டிய மந்திரிமனை
எனவே அடுத்த ஆய்வுக்களமாக மந்திரி மனையே காணப்பெற்றது. இங்கு சுரங்க வழிப்பாதை

அபிராமியின் காதலன் 83 காணப்படுகிறது. இல்லை.அது இப்போது தூர்ந்து போய்க்கிடக்கிறது. இதெல்லாம் நம்பத்தக்கதல்ல. இப்படி எத்தனையோ கதைகள். உண்மையறிய அது நோக்கிப் பயணித்தேன்.
யாழ் பருத்தித்துறை வீதியில் சட்டநாதர் கோயிலுக்குச் சற்றுத் தெற்காக நல்லூரின் பாரம்பரியச் சின்னமான, யாழ்ப்பாணத்தரசரின் மந்திரி மனை என்று மக்களால் கருதப்பெறும் மந்திரிமனையைக் காண முடிகின்றது. நீண்ட காலமாக (1990) க்கு முன்னர் சட்டநாத ஈஸ்வரர் கோயில் அர்ச்சகர்களின் இல்லமாகத் திகழ்ந்த மந்திரிமனை தற்போது தனித்திருக்கிறது. என்ற போதிலும் இந்த மனையினுள் அவ்வப்போது போர்ச் கழலில் அகதிகளாக அவலப்பட்ட மக்கள் வாழந்திருக் கிறார்கள். தற்போதும் ஒரு சில மக்களின் தண்ணீர்த் தேவையை இம்மனையினுள் உள்ள கிணறே பூர்த்தி செய்வதையும் காணமுடிந்தது.
இதன் கலைமரபைப் பார்க்கும் ஒருவர் இயல்பாக இது "ஒல்லாந்த மரபை" சேர்ந்த கட்டடத் தொகுதி என்றே கண்டு கொள்வர். ஆனால் இதற்கு மாறான கொடுங்கைக்ள் போன்ற வேலைப்பாடு களையும் இந்த மனையினுள் அவதானிக்க முடிந்தது. இவை இந்துத்துவ மரபை வெளிக்காட்டிக் கொண்டி ருந்தன.
ஆனால் இது போன்ற கட்டடங்கள் பலவற்றை நாம் யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் காண

Page 50
"Lymffat asing6ixa" 84 முடிவது குழப்பமாக இருந்தது. ஆக, அவற்றையும் நாம் யாழ்ப்பாணத்தரசர் காலத்தைச் சேர்ந்தது என்று சொல்லி விடலாமா? அப்படிச் சொல்லி விட்டால் அதை யாரேனும் ஏற்றுக் கொள்வார்கள?
இந்த மனையினுள் ஒரு அதிசயமான கிணறு இருக்கிறது. அதன் ஒரு பகுதி மனையினுள்ளும் மறுபகுதி வெளியேயும் அமைந்துள்ளது. அதாவது வட்டவடிவமான அக்கிணற்றின் அரைப்பகுதி உள்ளும் மறு அரைப்பகுதி வெளியிலும் உள்ளது. இந்த கிணற்றை இன்றும் இப்பகுதி மக்கள் குளித்தல் முதலிய தேவைகளுக்குப் பயன்படுத்துவதையும் காண்கிறேன்.
இந்தக் கிணற்றிற்கும் யமுனா ஏரிக்கும் இடையி லேயே யாழ்ப்பாணத்தரசர் காலத்தில் சுரங்க வழிப் பாதை இருந்ததாகச் சொல்லப்படுகின்றது. ஆனால் இதை நமக்கு நேர்காணல் தந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைப் பேராசிரி யரும் பட்டப்பின் படிப்புகள் பீடாதிபதியுமான எஸ்.சத்தியசீலன் அவர்கள் நம்பத் தகுந்த செய்தியல்ல" என்று மறுத்திருக்கிறார்கள். நம்மாலும் இச்செய்தியை நம்பமுடியாமலேயே இருக்கிறது.
ஆனால் இம்மனையின் பின் புறத்தில் நிலவறை ஒன்றிருந்தது என்று சொல்வதை ஓரளவிற்கு ஏற்றுக்
கொள்ள முடிந்தது. இந்த நிலவறை பிற்காலத்தில் அடைக்கப்பட்டமைக்கான சான்றுகளைக் காண

resymffurfiad essageoedd E. முடிந்தது. இந்த விஷயம் பற்றி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் வெளியிட்ட“யாழ்ப்பாண இராச்சியம்" என்றநூலின் குறிப்புகள் இவ்வாறுள்ளன. (1995)
"மந்திரிமனையிலிருக்கும் பழைமையான கிணற்றிற்கும் யாழ்ப்பாண மன்னர் கால யமுனா ஏரிக்கும் இடையில் சுரங்க வழிப்பாதை இருந்ததாகவும் சில காலங்களில் இக்கிணற்றில் நீர்ப்பெருக்கு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது இச்சுரங்கப் பாதை அடைக்கப்பெற்றுக் காணப்படுகின்றது. மேலும் இம்மனையின் பின்புறத்தில் நில அறையொன்றும் அதற்கு மேல் மூடு சாந்தினால் அமைக்கப்பெற்ற மண்டபம் ஒன்றும் இருந்ததாகத் தெரிகிறது.
தற்போது இவை இடிந்த நிலையில் மூடுண்டு காணப்படுகின்றது. இவ்விடத்திலிருந்து வீட்டுக்குச் செல்லும் சுரங்கவாசல் ஒன்று பிற்காலத்தில் அடைக்கப்பட்டதற்கான அடை யாளங்கள் காணப்படு கின்றன. இதே போல வீட்டுக் குள்ளே இருந்த நில அறையும் அதற்குள்ளே இருந்த படிக்கட்டுக்களும் பிற்காலத்தில் அடைக்கப்பட்டதாகத் தெரிகிறது. இவ்வாறான கட்டடத் தொகுதிகள் சில யாழ்ப்பாண மன்னர் காலத்தில் கட்டப் பெற்றவை என்பது தொல்லியலாளர் பலரின் பொதுவான கருத்தாகும்"

Page 51
*తిand Bread" B6 சர்ச்சைக்குரியதோரணம்
இந்த மந்திரி மனை போலவே சர்ச்சைக்குரிய விஷயமாக இருக்கும் இன்னொரு அடையாளமே சங்கிலியன் தோப்புக்கல்தோரண வாயில் ஆகும். முத்திரைச்சந்திக்கு வடக்காக சிறிது தொலைவில் பருத்தித்துறை வீதியின் கிழக்கே அழைந்துள்ளது இத்தோரணவாயில். தற்போது நல்லூர் இராசதானியை நினைவு படுத்தும் சின்னமாக கொட்டகை அமைத்துப் பாதுகாக்கப் பெறுகின்றது. ஆங்கிலேய அரச அதிகாரி ஒருவர் தமது நினைவுப் பதிவேட்டில் 1803ம் ஆண்டில் கூறியுள்ளதும் இங்குநினைவிற்கொள்ளத்தக்கது.
"பருத்தித்துறை வீதியிலே நல்லூரில் உள்ள யாழ்ப்பாண மன்னர் இருந்த இடத்தைத் தரிசிக்கச் சென்றேன். இது சங்கிலித்தோப்பு என்று கடைசியாக ஆட்சி செய்த சங்கிலி மன்னன் பெயரால் அழைக்கப் பட்டது. இது இப்போது கோயில் ஆதனம் ஆகும். இங்கே ஒரு பழைய வாசல் கட்டடம் உண்டு. இது டச்சுக்காரார் காலக் கட்டடம் ஆகும். இங்கே இது எப்படி எழுந்தது என்பதற்கு விளக்கம் யாதெனில் டச்சுக்கம்பனியார் தங்கள் தலைமைக்காரியாலயத்தை நல்லூரிலே ஒரு போது நிறுவியிருக்கலாம். அல்லது இது கொம் மாந்தரின் பழைய வாசல்த் தலமாக அமைக்கப் பட்டிருக்கலாம்."

"Sapnuôusat sangeload" 87
ஆகவே இது எப்படியிருந்தாலும் ஒல்லாந்தர் காலத்தைச் சேர்ந்த நினைவுச் சின்னம் என்பதில் -ஐயமில்லை. ஆயினும் இது அமைந்திருக்கிற இடம் மட்டும் நல்லூர்த் தமிழரசிற்குச் சொந்தமாகும் என்று கண்டுகொண்டோம்.
யூதராயராஃ? பூதநாதராஃ? பூதவராஜராஃ?
இவற்றுக்கு அடுத்த படியாக நம் ஆய்விற்குரிய நிலையிலிருந்தது பூதவராயர் கோயிலே ஆகும்.
பூதவராயர் கோயில் எங்கிருக்கிறது என்பதைத் தேடியறிவதும் ஒரு சவாலான காரியமே. அவ்வாறு எப்படியோ தடவிக் கேட்டுச் சென்று விட்டாலும் இந்தப் பூதவராயர் கோயில் வேறு. நாம் தேடி வந்த கோயில் வேறு என்று வரும் ஆய்வாளர்கள் திரும்பி விடுவர். அவ்வாறன்றி அங்கிருக்கிறவர்களிடம் வினவினாலும் அவர்களிடம் உரிய பதிலை திருப்தியாகப் பெற்றுக் கொள்வது மிகக் கடினம். அவர்களுக்கு கோயில் வரலாறு தொடர்பான விஷயங்கள் எதுவும் தெரியாதிருக்கும்நிலையையும் காணலாம்.
இவ்வாலயம் யாழ் பருத்தித்துறை நெடுஞ் சாலையில் சட்டநாதர் கோயிலுக்கு வடக்காக இராஜவீதியை நோக்கிச் செல்லும் பாதையூடாகப் பயணிக்கும் போது சிறிது தொலைவில் இராஜவீதியை அடைவதற்கு முன்னர் வடக்காகத் திரும்பிச் செல்லும் சிற்றொழுங்கைஊடாகச் சென்றால் காணமுடியும்.

Page 52
"895gmôôadit asarg5eabadi 88 அருகருகே அமைந்த மூன்று ஆலயங்கள். அவற்றில் இரண்டு முருகன் ஆலயங்கள் நடுவே அமைந்திருப்பது பூதவராயர் ஆலயம். ஆலய அர்ச்ச கரிடம் கேட்ட போது அவர் “இங்கே தற்போது மூலஸ் தானத்தில் சிவலிங்கமூர்த்தமே உள்ளது" என்றும் இது ஒரு சிவாலயம் என்றும் குறிப்பிட்டார்கள். மேலும் இங்கிருக்கும் பெருமானுக்கு பூதநாதர் என்பதே திரு நாமம் என்றும் சொன்னார்கள்.
நான் சென்ற நாளில் ஆலயம் புனரமைக்கப் பெற்று மஹாகும் பாபிஷேகமும் நிறைவேறி மண்டலாபிஷேகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அவர்களிடம் அங்கிருந்த பழைய எச்ச சொச்சங்கள் மற்றும் கருவறை பற்றிகேட்டேன்.
பழைய கருவறை கிழக்கு நோக்கியதாக அமைந்து காணப்பட்டுள்ளது. சங்கிலிய மன்னன் கால வேலைப்பாடுகளுடன் இற்றைக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை சிறப்பாக விளங்கியிருக்கிறது. ஆனால் காலப் போக்கில் சிறிது சிறிதாகச் சிதையத் தொடங்கியிருக்கிறது. வரலாற்றுணர்வு இல்லாத கோயில் சமூகத்தினர் கோயிலைப் புனரமைக்க வேண்டும். எங்கள் கோயில் பிற கோயில்கள் போல மிக அழகாக இருக்க வேண்டும் என்று விரும்பியிருக் கிறார்களே தவிர பழைய கருவறையின் சிறப்பை அறியவில்லை.

"Saymôdsfalt asgaoer 39.
தொல்பொருளளர்களும் இது பற்றி சிறிதும் அக்கறையே காட்டவில்லை. இதன் காரணமாக இன்றைக்கு கோயில் அழகாக வடக்கு நோக்கி இருக்கிறது. பழைய கருவறையை மட்டும் காணவே முடியவில்லை.
இன்றைக்கு புதுப் பொலிவுடன் காணப்பெறும் மஹாகும்பாபிஷேகம் ‘நிகழ்ந்த ஆலய மூலஸ்தான விமானம் மற்றும் பிரகாரம் , மண்டபங்கள் ஆகிய வற்றையே காணலாம்.
பாதுகாப்பார் இன்றிச் சிதைந்து போன அரசர் கால மூலஸ்தான (கருவறை) கற்கள் வெளி வீதியில் சிதறிக்கிடக்கிற காட்சியையும் காண முடிந்தது. இவை எல்லாம் இவ்வாறிருக்க இக்கோயில் அர்ச்சகர் சொல்லுமாப் போல சிவாலயமா? அல்லது சிறு தெய்வ, காவல் தெய்வவழிபாட்டிடமா? இக்கேள்வி பிறந்தது.
வரலாற்றுப் பேராசிரியர் எஸ்.சத்தியசீலன் அவர்களிடம் இது பற்றிக் கேட்டோம். அவர் "கண்ணகி வழிபாட்டிடங்கள் இராஜராஜேஸ்வரி ஆலயங்களாக மாறியதுபோல இதுவும் சிறுதெய்வ வழிபாடாக இருந்து பின்னர் காலப்போக்கில் உயர்ந்திருக்கலாம்" என்று குறிப்பிட்டார்.
பழைய கருவறை இருந்த இடத்தில் புதிய
சபாமண்டபம் எழுந்திருக்கிற மாட்சியைக் கண்டோம். என்ன சொல்வது?

Page 53
8pmasat sagaa O பழைய காலத்தில் (சங்கிலியன் காலத்தில்) வழிபடப்பெற்ற பத்மபீடம், பலிபீடம், மற்றும் இடைக் காலத்தில் முருகன் ஆலயமாக மாறியபோது வணங்கப் பெற்ற மயிலுருவம் மற்றும் விநாயகர் வடிவம் இவற்றை இன்றும் ஆலயவீதியில்காணலாம்.
“முதலாம் சங்கிலி அரசன் காலத்தில் கோட்டை அரசன் தர்மபாலனின் தகப்பனான விதிய பண்டாரன் போர்த்துக்கேயருக்குப் பயந்து கோட்டையின் சொத்துக் களோடு சங்கிலி அரசனிடம் அடைக்கலமாக இருந்து வருகையில் வெடிவிபத்தொன்றில் இவன் இறக்க இவனின் நினைவாகச் சங்கிலி அரசன் கட்டிய கோயில் இது"
என்கிறார் சி.எஸ்.நவரத்தினம் (Navaratnam. C.S., Tamils and Ceylon (Jaffna) 1950., Page, 152)
பழைய மூலஸ்தானம் அண்மை வரையிருந்த தல்லவா? அதன் அமைப்பு இப்படியிருந்ததாம்.
ஏழெமுக்காலடி நீளம், எட்டரையடி அகலம், கொண்டது இக்கருவறை. 9" உயரம், கொண்ட மூலஸ்தானம். ஆதன் ம்ேல் 6" உயரம் கொண்ட விமானம்.(ஸ்தூபி) இது மூன்று தளங்களுடையது. கீழிரண்டும் வட்டவடிவம். மூன்றாம்தளம் சதுரவடிவம்.

"Bigmufushat asseroar 9. (ஆதாரம்- யாழ்ப்பாண இராச்சியம், யாழ். பல்கலைக் கழக வெளியீடு)
இதனைப் போலவே இராசாவின் தோட்டம் என்ற பகுதியும் யாழ். அரசர் காலத்தைச் சேர்ந்தது என்று கருதியிருக்கிறார்கள். ஆனால் தற்போது அங்கே பார்க்கக்கூடிய வகையில் எதுவும் கிடைக்கவில்லை.
யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச்சக்கர வர்த்திகள் பற்றிய பெயர்களைத் திரட்டி அவர்கள் எக்காலம் தொட்டு எக்காலம் வரை ஆட்சி செய்தார்கள் என்றுநோக்கினால்.
யாழ்ப்பானத்தை ஆண்ட மன்னர்கள்
1282-13O2 விக்கிரமசிங்கையாரியன் 1302-1325 வரோதயச் சிங்கையாரியன் 1325-1348 மார்த்தாண்ட சிங்கையாரியன் 1348-1371 குணபூஷணசிங்கையாரியன் 1371-13802ம் வரோதய சிங்கையாரியன் 1381-1410 ஜெயவீரசிங்கையாரியன் 1410-1440 குணவீரசிங்கையாரியன் 1440-1450 கனககரிய சிங்கையாரியன் 145 O - 14 67 فاه பராக் ang LouT g5 8 Ti UT85 செண்பகப்பெருமாள் (கைப்பற்றிஆண்டான்)

Page 54
*Bynuôiad argoad 92. 1467 மீள கனகசூரிய சிங்கையாரியன் கைப்பற்றினான். (1467- 1478) 1478- 1519 சிங்கைப் பரராஜசேகரன் (இது யாழ்ப்பாண அரசின் பொற்காலம்) 1519- 1816 பரராஜசேகரனின் குமாரர்களான புவிராஜபண்டாரம் போன்றவர்கள் தமக்குள் மாறி மாறி ஆட்சிசெய்தனர்
புரராஜசேகரனின் இரணர் டாவது புதல் வனே பரநிருபசிங்கன். இவனை மையமாகக் கொண்டே "அபிராமியின்காதலன் நாவல் எழுதியுள்ளேன்.
1616- 1620 வீர சங்கிலி குமாரன் செகராஜசேகரன் (யாழ்ப்பாண அரசின் இறுதியரசன், இறுதி வரை போர்த்துக்கேயருக்கு எதிராகப் போராடியவன்)
நல்லுளில் ஆரியச் சக்கரவர்த்திகள் கால ஸ்தலங்கள்
01. கைலாசநாதஸ்வாமி கோயில் (தற்போது கைலாசப் பிள்ளையார் கோயில் என்றும் வழங்கப்
பெறுகிறது)
O2. சட்டநாத ஸ்வாமி கோயில் (சட்டநாத சிவன்
கோயில் என்றும் வழங்கப்பெறுகிறது.)
03. வெயில் உகந்தபிள்ளையார் கோயில்
04. வீரமாகாளியம்மன் கோயில்

அபிராமியின் காதலன் 93 என்ற நான்கு கோயில்களும் நல்லூர் இராஜதானியின் நாற்றிசைக் கோயில்கள் என்று அழைக்கப்பெறுகின்றனர். இவற்றினுள் அமைந்துள்ள தொல்லியல் பொருட்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்ளவும் முயன்றபோது எதுவும் கிடைக்கவில்லை.
கைலாசநாதர் கோயில்
செகராசன் என்னும் செங்கையாரியன் நல்லையில் கைலாசநாதர் கோயிலைக் கட்டினான் என்று "கைலாயமாலை" என்ற நூல் கூறுகிறது. இக்கோயில் பற்றிய தகவல்களை தேடிய போது சில விஷயங்கள் கிடைத்தன.
சிங்கையாரியன் மதுரையில் எழுந்தருளியுள்ள அங்கயற்கண்ணி உடனாய சோமசுந்தரேஸ்வரரை வழிபட முடியவில்லையே என்று வருந்திக் கொண்டிருந்த போது இறைவன் ஒரு நாள் இரவு அவன் கனவில் தோன்றி நம் பெயர் கைலைநாதன். எம்மை மறந்தாயோ?" என்று வினவியதாகவும் இதன் வண்ணம் அவன் இக்கோயிலைக் கட்டியதாகவும் காசியிலிருந்து அந்தணராகிய காங்காதரக் குருக்கள் என்பாரை அழைத்து கும்பாபிஷேகம் செய்து வழிபாடுகள் ஆற்றியதாகவும் மேற்படி யாழ்ப்பாணத்தரசர் கால நூலான கைலாயமாலை சான்று பகருகிறது.
மதவெறியர்களான போர்த்துக்கேயர் இந்த ஆலயத்தையும் அழிக்க முற்பட்ட போது ஆலயக்

Page 55
8ിത്സി (് 94. குருக்கள் அம்பாள் மற்றும் சிவலிங்கத் திருவுருவங் களை ஒரு வண்டியிலேற்றி பாதுகாப்பாக தன் ஊரான மட்டுவிலுக்குக் கொண்டு செல்ல முற்பட்டதாயும் பாரம் மிகுந்திருந்ததால் அவரால் சிவலிங்கத்தை மட்டுமே கொண்டு செல்ல முடிந்த தாகவும் அந்தச் சிவலிங்கமே தற்போது மட்டுவிலில் உள்ள சந்திரமௌலீசர் ஆலயக் கருவறையில் காட்சி தருவதாகவும் ம.க.வேற்பிள்ளை பாடிய "ஈழமண்டலச் சதகம்" என்ற நூல்கூறுகிறது.
சட்டநாதர்கோயில்
மந்திரி மனைக்கு வடக்கே சட்டநாதர் கோயில் அமைந்திருக்கிறது. சட்டநாதர் என்றால் என்ன? சிவனது வைரவமூர்த்தங்களுள் ஒன்று என்கிறது “யாழ்ப்பாண இராச்சியம்" என்ற நூல். இக்கோயிலின் முன் வாயிலில் மணிக்கூட்டுக் கோபுரம் ஒன்று வித்தியாசமான வடிவில் காணப்படுகின்றது.
இந்த மணிக்கோபுர அடித்தளத்தில் சில பழம் பொருட்கள் பெறப்பட்டதாகவும் தெரிகிறது. இக் கோயிலும் போர்த்துக்கேயரின் கலையழிவுக் கொள்ளைக்கு முற்றாக இலக்காகிப் புதுப்பிக்கப் பட்டிருக்கிறது.

"அபிராமியின் காதலன்" 95 வவயில்உகந்தபிள்ளையார்கோயில்
முத்திரைச் சந்தியிலிருந்து கிழக்காக அமைந் துள்ளது இக் கோயில் புக் தன் ஒருவன் இப் பிள்ளையாருக்கு நெய்வேதனம் செய்ய அரிசி காயவைத்திருந்த போது திடீரென நல்ல மழை பொழிந்தது. மிகவும் பஞ்சமான அந்தக் காலத்தில் என் அரிசி வீணானதே. என்று அழுது புலம்பிய வண்ணம் வந்த பக்தன் அதிசயம் கண்டான். அவன் அரிசி காயவைத்திருந்த இடம் மட்டும் வெயில் பிடித்துக் கொண்டிருந்தது. சிறிதளவு வெள்ளமும் அதை அணுகவில்லை. இந்த அற்புதத்தை செய்த தன்மையால் இப்பிள்ளையாருக்கு வெயில் உகந்த பிள்ளையார் என்று பெயர் வந்ததாகக் கூறுவர்.இக்கோயில் பற்றிய மேலதிக விவரங்களை என்னால் பெறமுடியவில்லை.
வீரமாகாளியம்மன்கோயில்
யாழ். பருத்தித்துறை நெடுஞ்சாலையில் ஆனைப்பந்திச் சந்திக்கு அப்பால் நல்லூரை அடையும் போது மஞ்சள் நிறத்தில் அமைந்த ஐந்தடுக்கு இராஜகோபுரத்துடன் காணப்படுகிறது வீரமா காளியம்மன் கோயில்.
யாழ்ப்பாணத்தரசரின் போர்த்தெய்வம் இக் காளியம்மன். இக்கோயிலில் சங்கிலி மன்னனின்

Page 56
"8ിത്സിൽ alg(' 96 வீரவாள் இருந்ததாகச் சொல்லப்படும்போதும் என்னால் அதனைக் காணமுடியவில்லை.
இது சிங்கையாரியன் என்ற மன்னனால் நல்லூரின் மேற்குத் திசைக்காவலுக்காக் கட்டப்பெற்ற ஆலயம் என்று யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது.
"யுத்தம் நடப்பதற்கு நல்லூர்க் கோட்டையில் மேற்கு வாசல்ப் புறத்தே வீரமாகாளியம்மன் கோயிலுக்கு முன்னாக இருந்த வெளியையே இடமாக நியமித்துக் குறித்த நாளிலே யுத்தத்தை ஆரம்பித்து பதினொரு நாளாக நடாத்தினார்கள். பறங்கிகள் துப் பாக்கிச் சூத்திரத்தைக் கையிற் கொண்டு அணியணியாய் நின்றார்கள். தமிழர்கள் வாள் முதலிய படைக்கலங்களைக் கொண்டு நின்றார்கள்."
இந்த வரிகள் யாழ்ப்பாணத்தரசர் பறங்கியரின் துப்பாக்கிகளுக்கும் பீரங்கிகளுக்கும் எதிர்நின்று வாள் கொண்டு நேருக்கு நேராகப் போராடியதாக எண்ணச் செய்கிறது. இது சாத்தியம் எனில் மிக அற்புதமேயாகும்.
இக்கோயில் பற்றி போர்த்துக்கேய மதகுருவான குவேறோஸின் கருத்துக்கள் பலவும் இதன் முக்கியத் துவத்தையும் வெளிப்படுத்துவதாகக் கருதுவர்.

"Sudymusulad asgaoer Z போர்த்துக்கேயப்யாதிரியார்என்னலசால்கிறார்?
குவேறோஸ் பாதிரியாரின் முக்கியமான குறிப்பு பலநூல்களில் மேற்கோள்காட்டப்பட்டிருக்கிறது.
“யாழ்ப்பாணத்தை இறுதியாக வென்ற போர்த்துக்கேயத் தளபதி பிலிப்டி ஒலிவீரா 1620ஆம் ஆண்டிலே நல்லூருக்குச் சென்றான். ஆங்கிருந்த பெரிய கோயிலிலே (கந்தசுவாமி கோயில்) கிறிஸ்தவர்கள் அல்லாதவர் (சைவர்) மிக்க ஈடுபாடு உடையவர்கள். அவர்கள் அதனை அழியாது விட்டுச் சென்றால் அவன் விரும்பிய எல்லாவற்றையும் வழங்குவதாகவும் அவனுக்கு வீடு கட்டித் தருவதாகவும் பலமுறை வாக்குறுதிசெய்து வந்தனர்.
ஆனால் அவன் மதப்பற்று மிக்க கத்தோலிக்கனா கையால் அவர்களின் நடவடிக்கை அக்கோயிலை அவன் அழிகக் கொண்டிருந்த விருப் பத்தை மேலும் அதிகரிக்கச் செய்தது. எனவே அத்ன் அத்திவாரத்தையும் இல்லாதழிக்கக்கட்டளையிட்டான்."
Oueyriz. Fr.De, The Temporal and Spritual Conouests of the Island of Ceylon (Tr) Perera, S.G., (Colombo) 1930.

Page 57
"Buyumsulfat asingeroad" 98. இந்தச் செய்தியை யாழ்ப்பாண வைபவமாலை
மற்றும் யாழ்ப்பாண இராச்சியம் என்ற நூல்களும்
குறிப்பிட்டிருக்கக்காணமுடிந்தது.
ஆக, ஒரு போர்த்துக்கேயரால் அவர்களின் மதகுருவால், அவர்களின் விசுவாசத்தையே தன் விசுவாசமாகவும் கொண்டவரால் எழுதப்பெற்றுள்ள் இக்குறிப்பு மிகவும் முக்கியமானது என்றே கருத வேண்டியிருக்கிறது. குவேறோஸ் சைவர் என்ற சொல்லைக் கூடப் பாவிக்காமல் விட்டிருப்பதும் கிறிஸ்தவர் அல்லாதவர் என்று கூறுவதும் அவரது உணர்வையே காட்டிநிற்கிறது.
19.03.2010 வெள்ளிக்கிழமை இப்படம் ஊடக வளங்கள் மற்றும் பயிற்சிகள் நிலையத்தில் சுவீடன் நாட்டு பிரபல ஊடகவியலாளர் திரு.ஹென்றிக் (ஆவணப்பட உருவாக்கத் துறையில் சுமார் 25 ஆண்டு கால அனுபவம் வாய்ந்தவர்) அவர்கள் முன்னிலை வகிக்கதிரையிடப்பெற்றது.
ஆவணப்படவாக்கத்திற்காக நான் எடுத்துக் கொண்ட விஷயம் மிக நீண்டது. மிக ஆழமானது. பல நூற்றாண்டுகளுக்கு பழைமையானது. சிதைந்தும் அழிந்தும் போன ஒரு வரலாற்றை மீள திரும்பிப் பார்க்கும் நிலையுடையது.
அதிலும் வெறும் "மனோரதம்" என்று சிலரால் இகழப்படும் ஒரு இராசதானியின் இருப்பை நிலை

Symuflóa esangeoad 99.
நிறுத்துவது ஆகவே, இந்த விஷயத்தில் நான் அதீத கவனம் செலுத்தியதால் தொழில் நுட்ப விஷயத்தில் பாரிய கவனம் செலுத்த வில்லை. இந்தக் குறைபாடு இவ்வாவணப்படத் தயாரிப்பில் இறுதி வரை நிலைத்து விட்டது.
உதவியநூல்கள்.
(இவற்றில் சில நூல்களின் ஒரு பகுதியை மாத்திரமே என்னால் பார்க்க முடிந்தது.)
01. முத்துத்தம்பிப்பிள்ளை.ஆ, யாழ்ப்பாண சரித்திரம்
(யாழ்ப்பாணம், 1915)
02. சபாநாதன்.கு., (மீள்பதிப்பு) யாழ்ப் பாண
வைபவமாலை (கொழும்பு, 1956)
o3. Navaratnam, C.S., Tamils and Ceylon (Jaffna, 1950)
04. சண்முகநாதன்,எஸ்.வீரகேசரிக்கட்டுரைகள் (1951)
05. இராசநாயகம்.செ.முதலியார், யாழ்ப்பாண
சரித்திரம் (யாழ்ப்பாணம், 1933)
O6. Oueyroz, Fr. de.., The emporal and Spiritual con Ouest of the Island of Ceylon (Tr) Perera, S.G, (Colombo, 1930)

Page 58
*తిand agaar - KOO
O7.
O8.
O9.
1Ο.
11.
12.
13.
14.
15.
16.
சிற்றம்பலம் .க. பேராசிரியர். யாழ்ப்பாண இராச்சியம் (பல்வேறுதுறை சார்ந்தவர்களின் கட்டுரைகளின் தொகுப்பு), யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். (யாழ்ப்பாணம்) Pathmanathan,.S., The Kingdom of Jaffna (Colombo. 1978)
சிவசரவணபவன்.சி (சிற்பி) நல்லூர்க் கந்தசுவாமி கோயில், இந்து சாதனம். (யாழ்ப்பாணம், 2009, ஆவணி) செல்வவடிவேல். இரா., கைலாசநாதர் கோயில், இந்துசாதனம், (யாழ்ப்பாணம், 2009,சித்திரை) குணராசா.க.கலாநிதி, யாழ்ப்பான தேசம், (வரதர் வெளியீடு, 2006, யாழ்ப்பாணம்) குணராசா.க. கலாநிதி, நல்லூர்க் கந்தசுவாமி கோயில், யாழ்ப்பாணம். வேலுப்பிள்ளைக, யாழ்ப்பாண வைபவ கெளமுதி, (1918, யாழ்ப்பாணம்)
Nadesn.S., The Northern Kingdom (1960, Jaffna) ஜோன், யாழ்ப்பாண சரித்திரம்,(1930, யாழ்ப்பாணம்) ஜெகந்நாதன், பொ. புலவர் - பணி டிதர்.
யாழ்ப்பாணத்தரசர் வரலாறும் காலமும் (யாழ். இலக்கிய வட்டவெளியீடு, 1987)

"அபிராமியின் காதலன் O யாழ்ப்பாணத்தரசர் காலத்திற்கு உரியதாகக் கருதப்படும் செகராசசேகரமாலையில் யாழ்ப்பாணத்ததசின் உருவாக்கம்பற்றியும், அவர்களின் முன்னோர் பற்றியும் உள்ள ஐதீக வரலாற்றுச் செய்யுள்கள். சில
epimoeir
எழில்வாய்ந்த மணிமெளலித்துளவணிந்த
மாதசரதன்தன் சேயெனவந்தெய்தி தொழில்வாய்ந்த இளவலொடுசென்று
முனிவோனின் அருள்சுரந்துகாத்து பொழில்வாய்ந்த மிதிலைநகர் வில்லிறுத்துத்
திருவைமணம் புரிந்துவெண்சங்கு குழிவாய்ந்த மணிகொழிக்கும் தன்னகர்வந்து
அன்னைதருமுரையை வேண்டி
அராவணன் வதம்
மின்னுடனே நெடியகானகம் புகுந்து விராதனை மாயமாரீசன் தன்னை வாலியை ஏழ்மராமரங்களை
வெஞ்சாயகமொன்றினால்தடிந்து மன்னுநீர்வேலையடைத்தடலிலங்கை வளநகர்புகுந்தெழிற்கும்ப கன்னனை அரக்கர்கோவினைச்செயித்துக் கமலநாயகியைச் சிறைகடிந்து

Page 59
"&euïTuñuña asigsawar O2
அறமேஸ்வரம்
கருங்கடற்சேனை வெள்ளமுந்தானும்
கந்தமால்வரைப்புறத்தணுக இருங்கதத்தரக்கன் சாயை விட்டகன்ற
இயல்பினைத் திருவுளத்தெண்ணி அருங்கலைப் பொதியமாமுனிக்குரைப்ப அவனுமத்தலத்தினது இயல்பை பெருங்கதைப்படுத்த அதிசயதித்துஅந்தப் பெருங்கதை ஆதரம்பிணிப்ப.
பாசுபத சைவர்கள்
அந்தமாதலத்தில் அரன்தனைத்தாபித்து
அருச்சனைபுரிந்துதன்னாமம் சிந்தையாலருளிஅப்பதிதனக்குத்
திருபெயரென்னதேயாக்கி நந்தலில் பஞ்சக்கிராமவேதியராய்
நான்மறைப் பொருளுளம் பிரியாப் பைந்தொடைப் பாசுபதர்களை
ஐந்நூற்றுப் பன்னிருவரை வரவழைத்து.
ஆரியச்சக்கரவர்த்திகள்
பூசனைசெய்மின்நீரெனக் கருணை
புரிந்தவர் தங்களில் இருவர்
காசினிதாங்கும்படிவரங்கொடுத்துக் கமழ்செழுந்துளபமாலிகையும்

“8ງmມົາມົວຕໍ່ Bigavaສໍາ O3
மாசறுசுருதி ஆரிய வேந்தென்று அணி
மணிப்பட்டமுங் கொடுத்துத்
தேசுறுகுடையும் மொற்றையும் வெற்றி திகழ்விடைத்துவசமும் நல்க.
fail eiA
அன்றுமுதற் சதுரயுகநாலாறிற்
புவிபுரந்த அரசர்தம்மில் வென்றிதிகழ் மீனவன்முன்
செப்பேடங்கத்தழைக்கும் வேதவேந்துஞ் சென்றுகருநாடகரை அந்தரவல்லியிற் பொருது
செயித்தவேந்துங் கன்றிவருமதவேனங்கரந்துணித்துப் போசலனைக் கடிந்தவேந்தும்.
செகராசசேகரன் விபருமை
ஐந்தருவுநவநிதியும் குலமணியும்
பொன்முகிலும்மாவும் ஒன்றாய் வந்தனையகொடைக்குரிசில்
வரியளிகளிசை குலவுவனசத்தாமன் சந்ததமுந்தருமநெறிகோடாததவப்பெருமான்
தழைத்தகிர்த்திக் கந்தமலையாரியர் கோன்
செகராசசேகரமன் கங்கைநாடன்.

Page 60
"அபிராமியின் காதலன் O4 இந் நூல் ஆக்கத்தை அறிந்தும், பார்த்தும் தங்கள் கருத்தை வெளிப்படுத்திய தமிழக அறிஞர்கள் சிலரின் வாழ்த்துக்கள் dad.....
அன்புடையீர், வணக்கம் நலம்தானே!
அற்புதமான முயற்சி இது. தங்களின் நாவல் குறித்தான பதிவு என ஆவலை அதிகப்படுத்தியிருக் கிறது. "அபிராமியின் காதலன்" குறுநாவல் தமிழ் நாவல் உலகில் ஆகச்சிறந்த பதிவாகிதங்களுக்கு பெருமையும், புகழும் கிடைக்க வாழ்த்திமகிழ்கிறேன்.
கவிஞர். வதிலைபிரபா தலைவர், உலகத்தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம், ஆசிரியர், மகாகவி மாத இதழ், திருச்சி, தமிழ்நாடு.
ഗ്ര്,
உங்களை நினைக்கும் போது வியப்பின் விளிம்பிற்கே செல்ல வேண்டியிருக்கின்றது. உங்கள் ஆற்றல் கண்டுஆராதிக்கத்தோன்றுகின்றது.

அபிராமியின் காதலன் Os
தலைப்பும் அழகாக இருக்கின்றது. அதுபோல உள்கருத்தும் உன்னதமாக இருக்கும் என்பது உறுதிப்படுத்தப்படுகின்றது. தொடரவேண்டும் உங்கள் தொண்டு. திக்கெட்டும் பரவட்டும் உங்கள் புகழ்.
என்றும் எமது பரிபூரண வாழ்த்துக்கள் உண்டு.
முரீசிவ முறி. த. நடராஜதீகூழிதர் அறங்காவலரும் அர்ச்சகரும், சிதம்பரம் முரீ நடராஜர் திருக்கோயில், சிதம்பரம்.
அன்புடையீர்! தங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்
முனைவர் கோ. ந. முத்துக்குமாரசுவாமி (ஓய்வு பெற்ற பேராசிரியர்)
8ഖ,
தமிழ்நாடு.

Page 61


Page 62


Page 63