கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அன்புடை நெஞ்சம்

Page 1


Page 2

அன்புடை நெஞ்சசி
நெல்லை லதாங்கி
ஆனந்தா வெளியீடு

Page 3
நூல்
விடயம்
நூலாசிரியர்
spo famouD
அட்டைப்படம்
முதற்பதிப்பு அச்சுப்பதிப்பு
Title
Author
Copy Right
Art
First Published Printers
Price
அன்புடை நெஞ்சம்
:குறுநாவல்
:திருமதி ஆனந்தராணி நாகேந்திரன் Mu.Trd, B.A (Ceylon) Dip.In. Edu
; திரு. அ. நாகேந்திரன்
: கோ. கைலாசநாதன்
: 2009 யூலை
: மதுரன்கிறாபிக்ஸ் & ஒவ்செற் பிறிண்ரேர்ஸ்
அல்வாய்.
• 18ο/-
: Anpudai nenjam : Mrs. Anantharany Nagendran
Mu. Tra B.A (Ceylon) Dip. In Edu.
: Mr. A. Nagendran
: Mr. K. Kailasanathan
: 2009 July
: Mathuran Graphics & Offset Printers
Alvai. (TP-021 2263099)
: 180/=


Page 4

அணிந்துரை
திருமதி. ஆனந்தராணி நாகேந்திரனின் இக்குறுநாவலைப் படிக்கும்போது திருப்தியேற்படுகின்றது. மிகவும் எளிய தமிழில் கதையை அவர் சொல்லியுள்ளார். சமூகத்தைநுணுக்கமாக அவதானித்து பாத்திரங்களை அவர் படைத்துள்ளார். தமிழினியும் மிதுனும் மனதைக்கவரும் பாத்திரங்களாக வருகின்றனர். அதேபோல் ஏனைய பாத்திரங்களுமுள்ளன. சிறியதொரு காதல் கதையை கிராமத்திலும் பல்கலைக்கழகத்திலும் நடமாடவிட்டு மனதில் பதியுமாறு எழுதியுள்ளமை வாசகனைக் கவரும் தன்மையது. பாத்திரங்களின் மன நிலையை தக்கவாறு புரிந்து உரையாடலை நகத்தியுள்ளமை அவர் திறனைக் காட்டுகின்றன. இக்குறுநாவல் மூலம் ஈழத்தெழுத்தாளர்கள் வரிசையில் இக்கதாசிரியையும் இடம்பெறுகிறார்.
எழுத்துலகிற்கு வருபவர்கள் ஓர் இலட்சியத்தினை முதலில் மனதளவில் வரித்துக்கொள்ள வேண்டும். அந்த இலட்சிய நோக்கினை அடைவதற்கான முயற்சியாக அவர்களது படைப்பு நகரவேண்டும். இலட்சியமில்லாதது இலக்கியமன்று. எதற்காக எழுகின்றோம் என்ற நோக்கம் இருக்க வேண்டும். ஒரு படைப்பாளியின் எழுத்துரு இச்சமூகத்திற்கு யாதைக் கூறமுயல்கின்றது. அதனை வரித்துக்கொண்டு பேனாவை நகர்த்தவேண்டும். அதனைத்தான் இலக்கியத்தினால் எதுவிதமான பிரயோசனமுமில்லை. எழுத்துலகிற்கு வருபவர்கள் இவற்றைப்

Page 5
புரிந்துகொள்ள வேண்டும். இன்றைய சமூகம் தாங்கொணாத துயரத்தில் வாழ்கிறது. நமது எழுத்து ஒரு சிறுஒளிப்புள்ளியை அத்துயரத்துக்கு விடையாகக் காட்டுமாயின் அது கோடி நன்மையாக அமையும். சாதியக் கொடுமைகள் களையப்படவில்லை. இனத்துவச்சிக்கல்கள்நீக்கப்படவில்லை. ஏற்றத்தாழ்வுகள் வறுமை, சீதனம் கழல்மாசுபடுதல், பெண்ணிய விடுதலை போன்ற பல பிரச்சினைகள் நம்மிடையே இருக்கின்றன. இவை ஏன் இளம் எழுத்தாளர்களின் கண்களில் படுவதில்லை? சமூக விடுதலை நோக்கி நிற்கின்ற பிரச்சினைகள் இவை. கதை ஒன்றைச் சொல்லிவிடுவது மட்டும் இலக்கியவாதியின் கடனாகாது. திருமதிஆனந்தராணிநாகேந்திரன் இக்குறுநாவல்மூலம்தன் எழுத்தாற்றலைக் காட்டியுள்ளார். அதனால் இச்சந்தர்ப்பத்தில் இவற்றைச் சுட்டிக்காட்டப் பொதுவாக முயன்றுள்ளேன்.
திருமதி ஆனந்தராணி நாகேந்திரனின் சிறுகதைகளைப் படித்துள்ளேன். மெச்சியுள்ளேன். அவ்வாறு மெச்சப்படவேண்டிய படைப்பு இக்குறுநாவல். இலட்சிய நோக்கோடு நகர்த்தியிருந்தால் இன்னமும் சிறப்பாக அமைந்திருக்குமென நம்புகின்றேன். ஆசிரியையின் எழுத்தாற்றல் சிறக்க வாழ்த்துகின்றேன்.
அன்புடன் கலாநிதி செங்கை ஆழியான் க.குணராசா 82. பிறவுண் வீதி,
யாழ்ப்பாணம்.
1O.O.5.2OO9
ii

பிரதேச செயலரின் வாழ்த்துச் செய்தி
எமது பிரதேசத்தின் எழுத்தாளர் திருமதி. ஆனந்தராணி நாகேந்திரன் அவர்களின் குறுநாவலிற்கு வாழ்த்துச்செய்தி வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
இவர் தனது இலக்கிய ஆர்வத்தினாலும், அயராத முயற்சியினாலும் பிரதேச, மாவட்ட, மாகாண போட்டிகளில் பங்குபற்றி பல பரிசில்களைப் பெற்றுள்ளமை எமது பிரதேசத்திற்குகெளரவத்தினையும் பெருமையினையும் பெற்றுத்தந்திருக்கின்றது. எமது பிரதேச கலை இலக்கிய விழாவிலும் இவரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது. ஆசிரியப் பணியில் ஈடுபட்டிக்கும் இவர் தனது கடமைகளுக்கு மேலதிகமாக இலக்கியப் பணிகளில் ஈடுபட்டு இத்துறையின் வளர்ச்சியில் பங்காற்றிவருவது பராட்டப்படத்தக்கதாகும். இவர் இன்னும் பல நூல்களை வெளியிட்டு இலக்கியத் துறையில் மேலும் வளர்ச்சியடைய எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
சி. சத்தியசீலன்
பிரதேச செயலர், கரவெட்டி.
iii

Page 6
என்னுரை
2005 இல் வெளியீடு செய்த “உறங்கும் உண்மைகள் என்ற குறுநாவலைத்தொடர்ந்து 2007இல்"எதிர் பார்க்கைகள்” என்றநவநவீன வானொலிநாடகநூல். அத்துடன் எனது இலக்கியப்பயணம் முற்றுப்பெற்றுவிட்டன என்றிருந்த வேளை மீண்டும் 2009 இல் ‘அன்புடை நெஞ்சம்" என்ற குறுநாவல்வெளிவர இறைவன்அருள்பாலித்ததையிட்டுமட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். வருடா வருடம் வகை வகையாக நூல்கள் வெளியீடு செய்ய வேண்டும் என்ற எனது அவா இருவருடங்களுக்குஒருதடவையாவதுநிறைவேறுகிறதே என்ற மனத்திருப்தியோடு என்னுரையைத்தொடர்கிறேன்.
சோகம் என்பது மானிட வாழ்க்கையில் வந்துபோக வேண்டியது தான். ஆனால் அதுவே வாழ்க்கையாகிவிட்டால்.
அவ்வாறான வாழ்வுதான் தமிழருக்கு சொந்தம் என்பது போல் அண்மைக்காலப்பகுதிகளில் நடந்த
திமேல் பழிபோட்டுத்தப்பித்துச் héâODTLİ அதனையும் மதியால் வென்றுவிடலாம்என்றுபறைசாற்றும்நல் உலகம். இவ்வாறான ஓர் சூழ்நிலைவயில்தான் மனித சமுதாயம் வாழ்ந்துகொண்டிருக்கிறது. எது எப்படியோ கண்ணன் கீதையில் எடுத்துரைத்த கீதாசாரம் இதுபோன்ற துயரங்களில் உழலும் உள்ளங்களுக்கு ஒரு அருமருந்துதான்.
עi

அந்தவகையில் நகரும் இக்குறுநாவலிற்கு அணிந்துரை, வாழ்த்துரை, அறிமுகவுரை என்று தந்துதவிய பேருள்ளம் கொண்ட பெருந்தகைகள் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டியவர்களும், பூஜிக்க வேண்டியவர்களுமாவார்கள். அவர்கள் எனக்கு அளித்த ஆக்கமும், ஊக்கமும் ' தான் இந்நூல் வெளிவரக் காரணமாகின்றது என்று சொன்னால் மிகையாகாது.
கலாநிதி கி. குணராசா செங்கை ஆழியான்) மூத்த எழுத்தாளர் அவர்கள் எனது நூலிற்கு அணிந்துரை தந்து சிறப்பித்தமைநான்முற்பிறவியில்செய்தபாக்கியமே. அதுபோல் பிரதேசசெயலர்திரு.எஸ்.சத்தியசீலன் அவர்களும், வல்வைந. அனந்தராஜ் அவர்களும் வாழ்த்துரை வழங்கி என்னைத்திக்கு முக்காடச் செய்துவிட்டார்கள். "என்ன தவம் செய்தனை” என்று இலக்கிய நெஞ்சங்கள் என்னைப் பார்த்துக் கேட்பது போன்ற பிரமை. அந்தளவிற்கு அவர்களது வாழ்த்துரைகள்
எனது நூலின் உருவுக்கு அணிசேர்ப்பதுபோல் கலாநிதி. த. கலாமணி அவர்களின் அறிமுகவுரைதான் என்று சொன்னால் அது யாராலும் மறுக்கமுடியாத ஒன்றாகும்.
அத்துடன் இந்நூலை அச்சிட்டு உதவிய 'மதுரன் கிறாபிக்ஸ் அண்ட் ஒவ்செற் பிறிண்டேர்ஸ் அச்சகத்தின் உரிமையாளர் திரு. மகேஸ்வரன் அவர்களுக்கும், மேற்கூறிய அனைத்துநல்உள்ளங்களுக்கும்எனதுமனமார்ந்தநன்றிகளை
மீண்டும் பெருமையுடன் கூறிக்கொள்கின்றேன்.
- நூலாசிரியர்

Page 7
வாழ்த்துரை
"என்னிடம் இருக்கின்றவற்றை ஆண்டுதோறும் வெளியீடு செய்யவேண்டும் என்ற என்னுடைய இலட்சியப் பயணத்தில் மனதை அரிக்கின்ற பல தடைக் கற்கள் வந்தபோதும், என்
பயணம் தடைப்படாது.” என்ற அந்த தன்னம்பிக்கையும், உறுதியும், எந்தச் சவால்களுக்கும் முகம்கொடுக்கக்கூடிய வல்லமையும்தான் “நெல்லை லதாங்கி என்ற புனைபெயரில் நாவல்கள், சிறுகதைகள், வானொலி நாடகங்கள் என்று பல்வேறு இலக்கியப் படைப்புகளையும் வெளியிட்டுவரும் திருமதி. ஆனந்தராணி நாகேந்திரன் அவர்களின் ஆத்ம தரிசனம்.
எதிர்பார்க்கைகள் என்ற நவ நவீன வானொலி நாடகங்களின் தொகுப்பு நூலின் முன்னுரையில் நெல்லை லதாங்கியின் மேற்படி உறுதிமிக்க கொள்கைப் பற்றுத்தான் எனக்குப் பிடித்திருந்தது.
புதிய, இளம் எழுத்தாளர்களை முளையிலேயே கிள்ளிஎறியும் சில முதிர்ந்த எழுத்தாளர்களும், ஆற்றல்மிக்க புதிய எழுத்தாளர்களின் படைப்புகளை அரங்கேற்றத் தயங்கும் பத்திரிகைகளும், எழுத்தாளர்களின் ஆத்மார்த்தமான படைப்புகளைச் சுரண்டி லாபமீட்டும் புத்தக விற்பனையாளர்களும் இருக்கின்ற நமது நாட்டில் நெல்லை லதாங்கி துணிச்சலுடன் நூல்களை வெளியிட்டு வருவதென்பது, ஒரு அசாத்தியமான முயற்சிதான்.
vi

நெல்லை லதாங்கி அவர்களின் இன்னுமொரு புதிய படைப்பாக வெளியிடப்படும் "அன்புடை நெஞ்சம்’ என்ற நாவலிலும் கூட அவரது புதுமையும், புரட்சியும் மேவும் கருத்துக்களை மிகவும் துணிவுடன் உலாவரவிட்டிருக்கின்றார் என்றால் அது வடமராட்சிக்குரிய தனித்துவமான பண்புதான்.
இந்த நாவலினுடாக 'மனித நேயம்’ ஒன்றுதான் மகத்தான சக்தி என்பதை சுவையான காதல் காவியம் ஒன்றினூடாக வெளிக்காட்ட முனைந்திருக்கின்றார். மனித குலத்தின் மனிதாபிமான உணர்வுகளையே உலுப்பிஎடுக்கும் அளவுக்குவேரோடிப்போயிருக்கும் சாதி, சமயமுரண்பாடுகள், விதவை மறுமண மறுப்பு போன்ற கொடுமைகளுக்குச் சாவுமனி அடிப்பதுபோல் உலகின் காதுகளுக்கு ஓங்கி அறைந்திருக்கின்றார்.
மிதுன், தமிழினி அவரது குடும்ப உறவுகள் என்ற சிறிய குடும்ப நீரோட்டத்தில் பல்வேறு கதாபாத்திரங்களைத் தோற்றுவித்து அவர்கள் ஒவ்வொருவரினதும் மாறுபட்ட உணர்வுகளுடாக ஒரு சந்திப்பு மோதல், பிரிவு, துயரம், ஒன்றுசேர்தல் என்ற பல்வேறு பரிமாணங்களினூடாக நாவலின் போக்கைச் சுவைகுன்றாது நகர்த்திச் செல்லும் லதாங்கி யின் எழுத்தின் முதிர்ச்சியை இந்நாவலினுடாகப் பார்க்கும்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.
6)ILLDUTL'éf) கரணவாய் பொன்னம்பல வித்தியாலயத்தின் இசை ஆசிரியராகவும், ஆசிரிய நூலகராகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் திருமதி.
νίί

Page 8
ஆனந்தராணிநகேந்திரன் அவர்களின் இலக்கியப்பணியின் முயற்சிகளை வெற்றிபெறவைப்பது தமிழ் அறிவுஜீவிகளின் கடமையாகும்.
அவரது இலக்கியப் படைப்புகள் ஒவ்வொரு பாடசாலை நூலகங்களிலும், ஒவ்வொரு தமிழர் வீட்டு நூலகங்களிலும் இடம்பிடிக்க வேண்டும். அதுதான் பல்வேறு சுமைகள், தடைகளின் மத்தியிலும் துணிந்து நூல்களை வெளியிட்டுதமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் 'நெல்லை லதாங்கி போன்ற இளம் எழுத்தாளர்களுக்கு நாம்வழங்கும் உந்துசக்தியாகும்.
வல்வைந. அனந்தராஜ்
6LIDITEST600TLB.
νίίί

- Ο1 -
நகரப் புறத்தில் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தது ஆடம்பரமற்ற அந்த அழகுமாடம். பார்ப்பவர் கண்களை இன்னொரு தடவை பார்க்கத்தூண்டும் அளவிற்கு ரம்மியமாகக் காட்சி தந்தது. வாயிற்கேற்றில் கூடாரமாக மஞ்சள் கலரில் அமைந்த பூக்களைக்கொண்ட கொடி. இருமருங்கிலும் வண்ண வண்ணக் குரோட்டன்ஸ்கள் இடையிடையே கமுகம் கன்றுகள். பச்சைப் பசேலென்ற புற்தரை வெயில் காலங்களிலும் பசுமையாகக் காட்சி, அளித்துக்கொண்டிருந்தது.
அந்த அழகுமாடத்தில் ஆசைக்கொரு பிள்ளை ஆஸ்திக்கொரு பிள்ளை என்பதுபோல் பெற்றோருக்கு தமிழினியும், தமிழரசனும் ஆகிய இரண்டு பேருமே, செல்லப்பிள்ளைகள். பெற்றோர் ஓரளவு வசதி படைத்தவர்கள். சுதந்திரம் கொடுக்கவேண்டிய இடத்தில் சுதந்திரத்தைக் கொடுத்தும் கட்டுப்படுத்தவேண்டிய இடத்தில் கட்டுப்படுத்தியும் வளர்த்துவந்தார்கள்.
தமிழினி க.பொ.தர உயர்கல்வி கற்று முடித்து பெறுபேற்றிற்காக காத்து இருந்த காலம். நல்ல முடிவு வரவேண்டுமென ஆலயம் ஆலயமாக ஏறி இறங்குவாள். அந்தநேரத்தில்தான் அவளின் வாழ்க்கையையே திசைதிருப்பும் அந்தச்சம்பவம் நிகழ்ந்தது.
அன்றும் ஆலயத்திற்குச் சென்றவள் வழமையாக பைசிக்கிள் விடும் இடத்தில் பைசிக்கிள்களை நிறுத்திவிட்டு
அன்புடை நெஞ்சம் நெல் லதாங்கி

Page 9
- 2 -
ஆண்டவனைத்தரிசிப்பதற்காக ஆலயத்தைநோக்கிச் சென்றாள். பூசை மணி டாங். டாங். என்று ஒலி எழுப்பி, பூசை ஆரம்பிக்கப்போகிறது என்ற அறிவித்தலைத் தந்துகொண்டிருந்தது. அவசர அவசரமாக கை, கால், முகத்தைக் கழுவி வாயை அலம்பிவிட்டு ஆலயத்தினுள்ளே புகுந்தாள்.
புகுந்தவளின் கண்களில் கண்ட ரம்மியமான காட்சி மேனியெல்லாம் புளகாங்கிதம் அடையச்செய்துவிட்டது. சுவாமி சுற்றுப்பிரகாரம் செய்வதற்கு ஆயத்தமாக நின்றது. அதன் அலங்காரம் சாத்துப்படி செய்தமாதிரி எல்லாம் சேர்ந்து தமிழினியை ஒரு கணம் மெய்மறக்கச் செய்தது. ஐயர் தீபாராதனை காட்டத்தொடங்க தமிழினி பக்திப்பரவசத்துடன் சில நிமிடம் அதிலே லயித்துவிட்டாள்.
"தமிழினி’ ஒருகரம் தோள்மீது விழுந்தபோதுதான் சுயஉணர்விற்குத்திரும்பினாள்.
"நான் பயந்தே போய்விட்டேன். இப்படியா தோள்மேலே சொல்லாமல் கொள்ளாமல் கைபோடுவது? என்னடி பழக்கம்.”
கடிந்துகொண்டாள் தமிழினி. “மன்னிச்சுக் கொள்ளடி, போயும்போயும் இதற்கு இப்படி அலட்டிக்கொள்வாய் என்று நான் கொஞ்சங்கூட எதிர்பார்க்கயில்லை”
தமிழினி நண்பிசர்மிதாவை முறாய்த்துப் பார்த்தாள். “சரி சரி , பூசை முடிந்ததும் பிரசாதம் வாங்கிவிட்டு போகப்போகிறாயா? அல்லது கொஞ்சநேரம் இருந்துவிட்டுப் போகப்போகிறயா?”
பிரசாதம் வாங்கினால் எனக்கு இங்கை என்னடி அன்புடை நெஞ்சல் --- நெல்லை லதாங்கி

- 3 - வேலை? நானும் உன்னுடன் வருகிறேன். இப்ப அமைதியாய் நில்லடி"
கூறிய தமிழினியைப் பார்த்து சிறிது புன்னகையை உதிர்த்துவிட்டு வழிபாட்டில் ஈடுபடலானாள் சர்மிதா. சிறிது நேரத்தில் வழிபாடு முடிந்து பிரசாதமும் வாங்கிக்கொண்டு நண்பிகள் இருவரும் ஆலயத்தை விட்டு வெளியேறினார்கள்.
"ஐயா! பிச்சை போடுங்க; அம்மா பிச்சை போடுங்க” சிறுவன் ஒருவன் ஊன்றுகோல் உதவியுடன் கைநீட்டிய வண்ணம் நின்றுகொண்டிருந்தான். தமிழினியும் சர்மிதாவும் அந்தச் சிறுவனருகே சென்றார்கள். சிறுவனின் கால்களைப் பார்த்ததும் தமிழினிக்கு பரிதாப உணர்வு மேலிட்டது. வெயில் ஏறிக்கொண்டிருந்த நேரம் ஆகையால் தமிழினிக்கும் சர்மிதாவுக்கும் கால்சுட்டது. இருவரும்துள்ளித்துள்ளிஒருகாலை ஒருகால் மாற்றியவாறு அந்தச் சிறுவன் நிற்கின்றான் தானே" என்று எண்ணியவர்களாக சிறுவனுக்கு அருகில் சென்றார்கள்.
'தம்பி உனக்கு அம்மா, அப்பா இல்லையா? தமிழினி பேச்சை ஆரம்பித்தாள். சிறுவனின் கணிகள் பனிக்கத் தொடங்கியது.
"வாப்பா நிழலுக்கு” என்று கூறிய சர்மிதா சிறுவனின் கரங்களைப் பிடித்தவாறு அருகே மரநிழலின் அருகே கொண்டுவந்து சேர்த்தாள். அவர்கள் இருவரையும் பின்தொடர்ந்தாள் தமிழினி.
இருவருவரினதும் அன்பினில் கட்டுண்டசிறுவன்,தான் அனாதையாகிய கதையைச் சுருக்கமாகக் கூறினான்.
2004ம் ஆண்டு மார்கழி மாதம் 26ம் திகதி வந்த சுனாமியில் குடும்பம், இனபந்துக்கள் யாவரையும்ஆழிப்பேரலை LTLTTLL TTTT SMMMSS M S MMSMMMM SMSMMSSS TTT TT

Page 10
- 4 - அடித்துச் சென்றுவிட்டதென்றும், மரம் ஒன்றில் சிக்கியதால்தான் மட்டும்தப்பியதாகவும் அந்தச் சிறுவன் கூறினான்.
தமிழினியும் சர்மிதாவும் சுனாமிப்பேரலையில் அகப்பட்ட பலரைச் சந்தித்திருக்கிறார்கள். அவர்கள் உடமைகளையும் உறவுகளையும் இழந்தவர்களே தவிர உடலின் எந்தப்பாகத்தையும் இழந்தவர்களில்லை. ஆனால் இந்தச்சிறுவன்.
சிறுவனைப் பார்க்க பார்க்க தமிழினிக்கு மனதிற்குள் ஏதோ செய்தது. அவளல் என்னசெய்யமுடியும்? வெற்றுத்தட்டில் நூறுரூபாய் நோட்டு ஒன்றைவைத்தாள்.சர்மிதாவும் பேஸிற்குள் துளவி இருபதுரூபா நோட்டொன்றை சிறுவனின்தட்டில் இட்டாள். கூடிய தொகையைக் கொடுக்கமுடியவில்லையே என்ற மனவருத்தத்துடன் சிறுவனின் முதுகில் தட்டி ஆறுதல் கூறிவிட்டு இருவரும் பைசிக்கிள் பாக்கை அடைந்தார்கள். சர்மிதா தனது பைசிக்கிளுக்கு அருகில் செல்ல,தமிழினிதான்பைசிக்கிள் விட்ட இடத்திற்குச் சென்றாள்.
என்ன அதிசயம்! விட்ட இடத்தில் பைசிக்கிளைக் காணவில்லை. பதறிப்போய்விட்டாள்தமிழினி. அவசரஅவசரமாக கைப்பையைத் திறந்து பார்த்தாள் "தற்செயலாக திறப்பு துலைய, திறப்பை எடுத்தவர்கள் பைசிக்கிளைக் கொண்டு போயிருந்தால்.” என்ற எண்ணமே அப்பொழுது தலைதுாக்கியது.
பேர்ஸைப் பார்த்த தமிழினி மேலும் பதறத் தொடங்கினாள்.
"சர்மிதா! சர்மிதா! என்னுடைய பைசிக்கிளைக் காணயில்லையடி; யாரோ பூட்டை உடைத்துப் போட்டு, அன்புடை நெஞ்சம் - நெல்லை லதாங்கி

கொண்டுபோய் விட்டார்களடி"
பதறிக்கொண்டிருந்த தமிழினிக்கு அருகில் "நன்றாகப் பார் தமிழினி’ என்றவாறு வந்தாள் சர்மிதா. * நிற்கிறதே நாலைந்து பைசிக்கிள் இதற்குள் கண்டுபிடிக்கிறதென்ன கஷ்டமா?"
“பேஸிற்குள் திறப்பு இருக்கிறதா என்று பார் தமிழினி’ *திறப்பு இருக்கிறதாலைதான் பயப்படுகிறன் சர்மி, புது பைசிக்கிள். எடுத்து ஒருகிழமைதான் ஆகுது. அம்மாதுலைக்கப் போகிறார்”
ஆர்ப்பரித்த தமிழினியின் கண்கள் கலங்கத்தொடங்கி விட்டது.
எவ்வளவுதான் பெரிய செல்வந்தர்களாக இருந்தாலும் சிறிய பொருளைக்கூடகைநழுவிவிடவிரும்புவார்களா? அதிலும் தமிழினி நடுத்தரக் குடும்பத்தினள்.
“பொறுமையாய் இரு தமிழினி, அங்கே அதிலை ஒரு புதுப்பைசிக்கிள் நிற்கிறது. வ்ா பார்ப்பம்"
"நான் இங்கைதானடி விட்டனான்" “எதற்கும் அங்கை பார்ப்பம் அழாமல் வாடி. எல்லாரும் உன்னைத்தான் பார்க்கிறார்கள்."
உணர்ச்சிக் கொந்தளிப்பில் எடி என்ற அன்பு வார்த்தை பகிரப்பட்டது. அந்த பைசிக்கிளுக்கு அருகில் சென்று தமிழினியிடம் திறப்பை வாங்கித் திறந்து பார்த்தாள் சர்மிதா, திறபடவில்லை.
* சர்மி சரியாய் என்னுடைய பைசிக்கிள் போல
அன்புடை நெஞ்சம் - நெல்லை லதாங்கி

Page 11
புலம்பினாள் தமிழினி
"திறப்பு திறக்காதாமே”
கூறிய சர்மிளா மும்முரமாக திறப்பதில் ஈடுபட்டாள். கைதான் நோஎடுக்கத் தொடங்கியதே தவிர எதுவித பயனும் இல்லை. என்ன செய்வதென்று இருவருக்கும் புரியவில்லை. இருவரும் அருகிலிருந்த சுவர்க்கட்டில் அமரந்து கொண்டார்கள். நேரம் அதிகமாக அதிகமாக ஆலயத்தில் சனக்கூட்டம் அதிகரித்தது. மதிய பூசைக்கான ஆயத்த மணியும் ஒலித்தது. செய்வதறியாது தமிழினியும் சர்மிதாவும் போகும், வரும் பைசிக்கிள் யாவற்றையும் பார்த்தவண்ணம் இருந்தார்கள். இடையிடையே தமிழினியின் கண்களிலிருந்து கண்ணிர்த் துளிகளும் எட்டிப்பார்த்தவண்ணம் இருந்தது.
- O2 -
ஒருமணி நேரம் கடந்திருக்கும் பார்க்கைநோக்கி வாலிபன் ஒருவன் வந்துகொண்டிருந்தான். வந்தவன் பைசிக்கிளை பாக்பண்ணிவிட்டுதமிழினியையும் சர்மிதாவையும் ஒருவிதமாக நோக்கினான்.தமிழினியோ இவ்வுலகத்தில் இல்லை.
"தமிழினி அங்கை பாரடி.”
எனத் தமிழினியின் தோளைத்தட்டி வாலிபன் ஒருவன் கொண்டுவந்து நிறுத்திய பைசிக்கிளைக் காட்டினாள். காட்டியதுதான் தாமதம் சர்மிதாவிடம் இருந்து திறப்பைப் பறித்துக்கொண்டு ஓடிச்சென்று திறந்து பார்த்தாள். பூட்டுத்திறந்து கொண்டது. அப்போதுதான் அருகில் நின்றவாலிபனை நிமிர்ந்து
TT TTT AS SMMMSS SSMM M SMMMS SSSSSS TT TT

- 7 - நோக்கினாள். அரும்பு மீசை, உடல் பருமனுக்கேற்ற உயரம், மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் காந்தக் கண்கள்.
கற்பனையில் கவிஞர்கள்கவிதையில்வார்க்கும் அழகை ஆண்டவன் இந்தஆடவன்மீதுநிஜத்திலே வடித்திருக்கிறான்.ஒரு நிமிடம் தன்னையே மறந்துநின்றவளைப் பார்த்து
"சொறி மிஸ். சொறி.” அந்த ஆடவனின் வார்த்தைகள் காதில்விழ நேருக்கு நேர்ஆடவனைப்பார்த்துமெய்மறந்திருந்ததமிழினிதுணுக்குற்று சர்மிதாவைப் பார்த்தாள்.
"இரண்டு பைக்கும் ஒரேமாதிரி இருந்ததாலை அவசரத்திலை எடுத்துக்கொண்டு போய்விட்டன். வீட்டிலை துடைக்கும்போதுதான் பைக்கின் மாறுபாட்டை உணர்ந்து கொண்டேன். என்னுடைய பைசிக்கிள் திறப்பு உங்களுடைய பைசிக்கிளைத் திறக்கவைத்துவிட்டது. திறந்துகொண்டதால் வேறுபாடு தெரியாமல் எடுத்துக்கொண்டு போய்விட்டேன்”
வாலிபன் அழகான உதட்டினால் அழகான தமிழில் கூறினான்.
வாலிபன் கண்டபடி ஏச்சுவாங்கப்போகிறான், என்று நினைத்த சர்மிதாவுக்கு, தமிழினியின் நகையொலி அதிசயத்தை உண்டுபண்ணியது.
தமிழினியை உற்றுநோக்கினாள் சர்மிதா. தமிழினியின் சிரிப்புஒருதுளியேனும் குறைவடையவில்லை. சிரித்துக்கொண்டே “என்ன சர்மி அப்பிடிப் பார்க்கிறாய்? இப்பிடித்தான் ஒருநாள் மார்க்கட்டில் என்னுடைய பைசிக்கிளுக்குப் பதிலாக இன்னொருவடைய பைசிக்கிளை உருட்டத்தொடங்கினேன். ஒரு அணியுடை நெஞ்சம் - நெல்லை லதாங்கி

Page 12
- 8 - பெண் ஓடிவந்து தன்னுடைய பைசிக்கிள் என்றபோதுதான் பைசிக்கிளை கவனித்தேன். அவமானத்தில் கூனிக்குறுகிப் போய்விட்டேன். அப்படி இருக்கும்போது இந்தத் தப்பு பெரிய தப்பில்லை. திறப்பில்தான் தப்பு"
மீண்டும் கலகலவென நகைத்தவாறு கூறினாள். தமிழினியின் வார்த்தைகள் சர்மிதாவுக்குமீண்டும்ஆச்சரியத்தை உண்டுபண்ணியது. இந்த வாலிபனின் அழகிலும் பேச்சிலும் மயங்கிவிட்டாளா? சொக்குப்பொடி போட்டதுபோல் இப்படிக் கட்டுண்டு விட்டாளோ?
எல்லோருடனும் பழகுகின்றோம். எல்லோருடைய அழகும் எல்லோரையும் கவர்வதில்லை. சிலருடைய அழகு சிலரைக் கவர்ந்திழுக்கும். சிலருடைய அழகு பலரையும் கவர்ந்திழுக்கும். அந்த வாலிபனின் அழகும் இதேபோல் பலரையும் சுண்டியிழுக்கும் அழகு. ஏன் சர்மிதாவுக்குகூட அவன் அழகை அப்படியே இரசித்துக்கொண்டிருக்கலாம்போல் இருந்தது என்றால் தமிழினி மட்டும் விதிவிலக்கா?
ஆனாலும் சர்மிதா குற்றத்தைப் பெரிதுபடுத்தி "L56nsld litesSb60Lu திறப்பு எங்களுடைய பைசிக்கிளைத் திறக்கும் என்றால் ஏன் எங்களுடைய திறப்பு உங்களுடைய பைசிக்கிளைத் திறக்கக் கூடாது?”
படபடவென வார்த்தைகளைக் கொட்டினாள். “என்னடி சர்மி” தமிழினி கெஞ்சுவதுபோல் பாவனை செய்தாள். "நீ சும்மா இரடி, என்ன மிஸ்டர்! தற தறவென தேள்கொட்டியதிருடன்போல் முழிக்கிறீர்கள்.”
வாலிபன் ஒன்றுமே பேசாமல் தமிழினியின் அன்புடை நெஞ்சம் - நெல்லை லதாங்கி

- 9 -
பைசிக்கிளைப் பூட்டி திறப்பை எடுத்து தனது பைசிக்கிளைத் திறந்தான். திறந்து கொண்டது.
சர்மிதாவுக்குசிறிதுவெட்கமாகப்போய்விட்டது. வாலிபன் சர்மிதாவைப்போல் படபடவென ஒன்றுமே கூறாமல் செயலில் காட்டிய அந்தப் பண்பு தமிழினியை மிகவும் கவர்ந்துவிட்டது. மெளனமாக மூவரும் விலகிக் கொண்டார்கள்.
வீட்டிற்குச் சென்ற தமிழினியால் நிம்மதியாக நடமாட முடியவில்லை. அந்த வாலிபனின் அழகான வதனமும், கம்பீரமாய் நின்ற அழகும், பைசிக்கிளை நிதானமாகத் திறந்த பாங்கும் மனக்கண்முன் வந்துபோய்க்கொண்டிருந்தது.
அந்த வாலிபனின் கொள்ளை அழகு தமிழினியை சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் சிந்திக்கவைத்தது.
தொடர்ந்து ஆலயத்திற்கு அடிக்கடி சென்றுவருவாள் தமிழினி. அந்த வாலிபனும் அடிக்கடி வந்துபோய்க் கொண்டிருந்தான். ஆலயத்திற்கு அடிக்கடி வரும் செயற்பாடா? இல்லை இந்த சந்திப்பின் பின் உண்டாகிய செயற்பாடா?
இருவரும் ஒருவரை ஒருவர் மாறி நினைத்துக் கொண்டார்கள். சந்திக்கும்போதெல்லாம் இருவரினது விழிகளும் பேசிக்கொண்டனவே தவிர உதட்டினால் ஒரு வார்த்தை கூடப் பேசியதில்லை.
ஒரு சமயம் தமிழினி ஆலயத்தின் உள்வீதியை சுற்றி வலம்வந்துகொண்டிருந்தாள். அந்த வாலிபனும் உள்வீதியைச் சுற்றிக்கொண்டு வந்தான். அவ்வாறு சுற்றிக்கொண்டு வந்தபோதுதான் முதன் முதலாக இருவரும் பேசிக்கொள்ளும் சந்தர்ப்பம் உருவானது.
அன்புடை நெஞ்சம் - நெல்லை லதாங்கி

Page 13
- 10 - தமிழினி கண்களைத் திறந்தபடிதான் சுற்றினாள். ஆனால் அவளது அகக்கண்முன்னே அந்த வாலிபனின் முகம் பதிந்திருந்தது. தேய்காய்கள் உடைத்து செறிந்திருந்த இளநீரில் அவளது மிருதுவான பாதங்கள் மெதுவாக நடந்துகொண்டிருந்தபோதுவழவழப்பானபொருளென்றுகாலில் அகப்பட்டதுதான் அப்படியே வழுக்கிக் கொண்டு போனாள் தமிழினி. வழுக்கிக்கொண்டு போனவளின் கரத்தை ஒருகரம் பற்றிக்கொண்டது. விழாமல் தப்பித்துக்கொண்ட தமிழினியின் முகக்கண்கள் அப்போதுதான் பார்வையைப் பெற்றது.
கரத்தைப் பற்றிய வாலிபன் வேறுயாருமல்ல அந்த பைசிக்கிள் பாட்டிதான். இந்த சம்பவத்தைப் பற்றி தன் நண்பிகளிடம் அளவளாவிய போது அந்த வாலிபனுக்கு “பைக்” என புனைபெயர் சூட்டியிருந்தாள் தமிழினி. அந்தநினைவில்
“பைக் நீங்களா?” என்று வாய்விட்டே கேட்டுவிட்டாள். அந்த வாலிபனின் முகம் சற்றுச் சுருங்கியது. ஆனாலும் அதனை வெளிக்காட்டாமல் "சுற்றுப்பிரகாரம் ஏன் சரியப்பார்த்தது?" எனத் தமிழினியையும் மடக்கிக்கொண்டான். இருவரும் ஒருவருக்கொருவர் பெயர்கட்டியமையை நினைத்துச் சிரித்துக்கொண்டார்கள்.
“சரி சரி! நன்றாகச் சுற்றிக்கும்பிட்டுவிட்டு அதே மரத்தடிக்கு வாருங்கள். பைக் காத்துக்கொண்டிருக்கும்”
“மரத்தடிக்கா?” பயத்துடன் வினாவினாள் தமிழினி. “ஆமா அந்த மரத்தடியை மறக்க முடியுமா? என்னால் மறக்க முடியவில்லை. உங்களால் மறக்கமுடிந்தால் அன்புடை நெஞ்சம் நெல்லை லதாங்கி

- 11 -
வரவேண்டாம்” கூறியவாறு சென்றுவிட்டான் அந்த வாலிபன்.
மரத்தடியை மறந்தாலும் அந்தக் கள்ளங்கபடமற்ற ஒளிவீசும் கணிகளையுடைய அந்த வாலிபனின் முகத்தை மறப்பாள?
மனதிற்குள் அந்த வாலிபனை இவ்வாறு முழுமையாக்கிக் கொண்டிருந்தாலும் வெளியே அவனுடன் உட்கார்ந்து பொதுஇடங்களில் பேசும் தைரியம் அவளிடம் இல்லை. அந்தத் தைரியத்தைப் பெற்றோரும் அவளுக்கு கொடுக்கவில்லை. பெற்றோரால் கண்டிப்பாகவும் செல்லமாகவும் வளர்க்கப்பட்டவள்தமிழினி பெற்றோர்கள் அவள்மீது உயிரையே வைத்திருந்தார்கள். அவளும் பெற்றோர் மீது உயிரையே வைத்திருந்தாள். பெற்றோரின் பாசம், பெற்றோர் அவள்மீது வைத்த நம்பிக்கை இவையாவும் தமிழினியை மரத்தடிக்குச் செல்லவிடாது தடுத்தது.
அவசரஅவசரமாகப்பிரசாதத்தைவாங்கிக்கொண்டவள் பின்புறவாசலால் வெளியேறிவிட்டாள். பின்புற பார்க்கில் பைசிக்கிள்விட்டதுஎவ்வளவ்ோநல்லதாகப்போய்விட்டது. முன்புற பார்க்கில் விட்டிருந்தால் எப்படியோ அந்த இடத்திற்கு போய்த்தானே ஆகவேண்டும். என்று மனதிற்குள் நினைத்தவளாக பைசிக்கிளிலில் ஏறிப்புறப்பட்டு விட்டாள்.
‘பைக்" என்ற புனைபெயர் கட்டப்பட்ட அந்த வாலிபன் மிதுனும் வாசலையே பார்த்துப்பார்த்து கண்கள் பூத்தவனாக எதையோ பறிகோடுத்தமனநிலையில் எழுந்து கொண்டான். ஒரு தடவை தனது வலது கரத்தைப் பார்த்துக்கொண்டான். மனதில் எங்கோ ஒரு மூலையில் மனநிறைவு வந்ததுபோன்ற உணர்வு.
LTLTLMT TTT JSMSMSMSMMS MM MMM MS TTT T

Page 14
- 12 - கைகளில் ஒட்டியிருந்த மண்துகள்களைத்
தட்டியவண்ணம் எழுந்தவன் தனது பைசிக்கிளை
எடுத்துக்கொண்டு வீடு நோக்கிப்புறப்பட்டான்.
- O3 -
நாட்கள் நகர்ந்தன தமிழினியின் முகம் லேசாக வாப்பங்காணஆரம்பித்தது. அன்னையும்தந்தையும் எவ்வளவோ கேட்டுப்பார்த்தார்கள். தமிழினியின் முகவாட்டத்திற்கான காரணத்தை அவர்களல் அறிந்துகொள்ளமுடியவில்லை. இந்த வேளையில்தான் பரீட்சை முடிவும் வெளிவந்தது. முடிவு நன்றாக இருந்ததால் பட்டப்படிப்பிற்கான ஆயத்தங்களை பெற்றோர்
வீட்டினுள் முடங்கிக் கிடந்ததமிழினியால் வழமையாகச் செல்லும் ஆலயத்திற்குச் செல்லாமல் இருக்க முடியவில்லை. பாஸ்பண்ணியதற்குஆண்டவனுக்குநன்றிசெலுத்தவேண்டுமே. தனது மனம் அந்தஅபூடவனை மறக்கவேண்டும் என்பதற்காகவே ஆலயத்திற்குச் செல்வதைநிறுத்தியிருந்தாள்தமிழினி.தமிழினி நிறுத்தியதைத் தொடர்ந்து மிதுனும் ஆலயத்திற்குச் செல்வதை நிறுத்திக்கொண்டான். ஒரு நாள் தமிழினி தன்னை அலங்கரித்துக்கொண்டு ஆலயத்திற்கு புறப்படலானாள்.தமிழினி உற்சாகம் அன்னைக்கு ஆறுதலாக இருந்தது. தமிழினியின் அருகில் வந்து
“என்னம்மா? எங்கே புறப்பட்டு விட்டாய்?" அன்னை அபிராமிகேட்டாள். அன்னையின் அனுமதியுடன்தான் வெளியில் புறப்படுவாள் தமிழினி. இன்று அனுமதி பெறாமல் அன்புடை நெஞ்சம் - நெல்லை லதாங்கி

- 13 - புறப்பட்டதற்கான காரணம் வழமையாகச் செல்லும் ஆலயத்திற்குத்தானே என்பதால் தான். அதனை அன்னை புரிந்துகொள்ளமையினால் விளக்கம் கொடுத்தாள் தமிழினி.
"அம்மாநல்ல றிசல்ஸ் கிடைத்ததற்காக நேர்த்திக்கடன் ஒன்றும் செய்யவில்லையே. அதுதான் எல்லாவற்றையும் இன்று பூர்த்திசெய்யலாம் என்று நினைத்துப் புறப்படுகிறேன்."
"நாங்கள் வராமல் எப்படி நேர்த்திக்கடன் எல்லாவற்றையும் நிறைவு செய்வாய்?" அன்னை அபிராமி வினாவினாள்.
* நீங்கள் நினைத்ததை நீங்கள் செய்யுங்கள். நான் நினைத்தவற்றை நான் பூர்த்தி செய்கிறேன். போய்வருகிறேன் அம்மா" சிரித்தவாறு கூறிவிட்டு புறப்பட்டுவிட்டாள் தமிழினி.
நன்றாகச் சுற்றிக் «Ցւճւմ)ւG6մlւ G தனது நேர்த்திக்கடன்களை முடித்தவள், ஆலயத்தின் ஒரு மூலையில் அப்பாடா என உட்கார்ந்து கொண்டாள். சிறிதுநேரம்தான் உட்கார்ந்திருப்பாள் ஆலயத்திற்குள் இருப்பதைவிட மரத்தடியில் உட்கார்ந்திருப்பது மனதிற்த் ஆறுதல் தரும்போல் இருந்ததால் எழுந்து மரத்தடிக்குச் சென்று அமர்ந்து கொண்டாள்.
நிறைய பைசிக்கிள்கள் நின்றனவே தவிர மரத்தடியில் ரிக்கெற் கிழிக்கும் பையனைத் தவிர வேறொருவரும் இல்லை. தனது பைசிக்கிள் நின்ற இடத்தைப் பார்த்தாள் தமிழினி. என்ன அதிசயம் பைசிக்கிளைக் காணவில்லை. பதறியவளாக "தம்பி என்னுடைய பைசிக்கிளை காணவில்லை. முன்பு ஒருபோதும்
தமிழினிகூறிமுடிக்கவில்லை"பதட்டப்படாதீங்க அக்கா, வடிவாய்ப் பாருங்க அப்படி ஒருத்தரும் சைக்கிளை
அன்புடை நெஞ்சம் நெல்லை லதாங்கி

Page 15
- 14எடுத்துக்கொண்டு போகேலாது”
நிதானமாய்க் கூறினான் சிறுவன். தம்பி உமக்கொன்றும் தெரியாது ஒரு நாள் இப்பிடித்தான் சைக்கிள் குறைவாக இருந்ததால் ஒருத்தரும் ரிக்கெற் கிழிக்கயில்லை. ஒருவர் என்னுடைய பைசிக்கிளை மாறிக்கொண்டுபோய், வீட்டை பார்த்துவிட்டு திருப்பிக் கொண்டுவந்து தந்தார்"
“எப்படியக்கா அது முடியும்” புதினம் பிடுங்கினான் சிறுவன்.
தம்பி விதிவிலக்காய் சில திறப்பு சில பைசிக்கிளைத் திறந்துவிடும்" சலிப்புடன் பதிலளித்தாள் தமிழினி.
"அவருடைய சைக்கிள் அவருக்குத் தெரியாதா?” மீண்டும் துருவினான் சிறுவன்.
தமிழினிக்கு கோபம் வந்துவிட்டது. ஆனாலும் "இரண்டும் புதுபைக்; அதுதான் எடுத்தவருக்கு தெரியவில்லை; போதுமா? தமிழினி பதிலளித்தாள்.
"அக்கா அங்கை பாருங்க, ஆலமரத்தடியிலை ஒரு புது பைக் நிக்குது, வாங்க திறந்து பார்ப்பம்” அழைத்தான் சிறுவன்.
தமிழினி அருகில் நின்ற ஆலமரத்தடியை உற்று நோக்கினாள். பைக்குக்கருகில் பின்புறமாக ஒரு வாலிபன் அமர்ந்திருந்தான். ஆனாலும் தமிழினி அடையாளம் கண்டுகொண்டு விட்டாள். பைசிக்கிள் ஆலமரத்தடிக்குப் போன காரணத்தையும் புரிந்து கொண்டாள்.
“வாங்கக்கா? சிறுவன் துரிதப்படுத்தினான். தமிழினியால் நகர
அன்புடை நெஞ்சம் - நெல்லை லதாங்கி

- 15 - முடியவில்லை. ஆனாலும் தன்னைச் சுதாகரித்தவளாக
“நான் சென்று பார்த்து வருகிறேன். நீர் உம்முடைய வேலையைப் பாரும். வேறை பைசிக்கிள்களையும் கோட்டை விட்டுவிடாதையும்”
கேலியாகக் கூறியவள் ஆலமரத்தடிக்குச்சென்றுதிறந்து பார்த்தாள். திறந்துகொண்டது. ஸ்ராண்டைத் தட்டிப் புறப்பட ஆயத்தமானாள்.
"ப்ளீஸ் நில்லுங்க.." என்ற மிதுனின் குரல் தடுத்து நிறுத்தியது. ஆனாலும் புறப்பட்டுவிட்டாள்.
“என் பெயர்கூடஉங்களுக்குத் தெரியாதே அதையாவது தெரிந்து கொள்ளுங்கள். எனது பெயர் மிதுன்” சற்று உரத்த குரலில் கூறினான். தமிழினிக்கு கேட்டிருக்க வேண்டும். திரும்பி ஒருதடவை நின்று பார்த்துவிட்டு பைசிக்கிளை ஒட்டிச் சென்றுவிட்டாள்.
“என்னப்பா? இந்தப் பெண்ணைப் புரிந்துகொள்ள முடியவில்லையே”
மனதிற்குள் ஒருவித கோபம், வெறுப்பு வந்தாலும் பொறுமையுடன் எழுந்துகொண்டான் மிதுன் என்ற அந்த Sims Susor.
நாட்கள்நகர்ந்துகொண்டிருந்தது. மிதுன் ஆலயத்திற்கு இடையிடையே சென்று வந்தான். தமிழினியைச் சந்திக்க முடியவில்லை. தமிழினி பெரிய அழகியென்றும் இல்லை; அப்படியிருக்க தன்னுடைய மனம் அவளையே சுற்றிச் சுற்றி வருகிறது. "காதலுக்கு கண்ணில்லை என்று அனுபவப்பட்டவர்கள்தான் கூறிவைத்திருக்கிறார்கள்” என்ற உண்மை அடிக்கடி மனதில் வந்து மோதியவண்ணம் இருந்தது. அணியுடை நெஞ்சம் --- நெல்லை லதாங்கி

Page 16
- 16
தமிழினி மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டு புறப்பட்டாளே தவிர அவளுடைய உள்ளம் அவனையும், அந்த மரத்தடியையுமே அடிக்கடி நினைத்துக்கொண்டது. எல்லாவற்றிற்கும் மேலாக
"ப்ளிஸ் நில்லுங்க”
என்ற வார்த்தைஎதிரொலிக்க எதிரொலிக்க அவளுடைய மனம் தவியாய்த்தவித்தது.
மிதுன் என்று தனது பெயரை உரத்துக்கூறிய பாங்கு மனதைச் சலட்லடையாகத் துளைத்து எடுத்தது. இப்படிப் பெற்றோருக்கு பயந்துசாகவேண்டுமா? சங்ககால காதல் ஒழுக்கம் இக்காலத்திலும் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். தனக்குத்தனக்கென்று வரும்போதுதான் அதன் இன்பதுன்பம் விளங்குமா?
காதலித்து திருமணம் செய்பவர்களை வெறுப்பவள் தமிழினி. பெற்றோர்கள் ஒவ்வொரு பிள்ளையையும் எவ்வாறெல்லாம் ஒவ்வொன்றாகக் கவனித்து, அக்கறையுடன் வளர்த்து வருகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பார்கள்தானே. காதல் திருமணங்களால் அது சம்பந்தப்பட்ட ஜோடிகள் நிம்மதியையும் சந்தோசத்தையும் அனுபவிக்கிறார்களே தவிர எத்தனை பேரை துன்பத்திற்கு உள்ளக்குகிறார்கள்.
சாதிமாறி ஜோடி சேர்பவர்களால் பெற்றோர்படும் அவஸ்தை, சமயம் மாறி ஜோடி சேர்பவர்களல் பெற்றோர் படும் அவஸ்தை, எத்தனையோ விதமான எதிர்பார்ப்புக்கள், கனவுகள்
அன்புடை நெஞ்சம் நெல் லதாங்கி

- 17
என்றுமணமதில் சுமந்து வாழ்ந்த பெற்றோர் ஏமாற்றந்தாங்காமல் படும் அவஸ்தை, தம் பிள்ளைகளின் திருமணக் கோலத்தைப் பெரிய பட்டாபிஷேகமாக கொண்டாட வேணுமென்று நினைத்து நினைத்துவாழ்ந்த பெற்றோர், அக்கோலத்தைக்காணமுடியாமல் போனதுடன் ஏனையோரின் வைபவங்களில் கலந்து கொள்ளும் போது அவர்களின் மனம் படும் வேதனை. இவ்வாறு பலதரப்பட்ட நிகழ்வுகளை கண்டும் கேட்டும் அனுபவப்பட்டவள் தமிழினி.
இந்தஎண்ணங்கள் கொண்டதமிழினியால் பெற்றோரை ஏமாற்ற முடியழா? அவனாக தனது பெயரை கூறினானே தவிர அவனுடைய பெயரைத் தெரிந்து கொள்ளும் ஆவலே இதுவரை ஏற்படவில்லை.
அவ்வாறிருக்கும்போது அவன் என்னகுலம், அவனுடைய கல்வித்தகைமை என்ன? ஏழையா? பணக்காரனா? இவற்றையெல்லாம் அறிந்துகொள்வாளா? சரி, இவை யெல்லாவற்றையும் அறிந்து அன்பு செய்தால், அது உண்மையான காதலாகுமா?அல்லது எல்லாமே பேவெக்ற்ஆய் இருந்தாலும் பிள்ளைகள் காதலிப்பதை எந்தப்பெற்றோராவது அனுமதித்து ஒத்தாசை புரிவார்களா?
விதிவிலக்காக பிள்ளைகள் காதலிப்பதை ஏற்று, ஒத்தாசை புரியும் பெற்றோர்கள் பற்றியும் தமிழினி அறிந்திருக்கிறாள். இவர்கள் எப்படி இதனைத் தாங்கிக் கொள்கிறார்கள்? கோப உணர்ச்சி கொஞ்சம் கூட இவர்களுக்கு ஏற்படுவதில்லையே? கண்கூடாக கண்டு கொண்ட விடயங்களை வைத்துக்கொண்டு. இவர்களும் மனிதப்பிறவிகள்தானா? என்று தன்னையே அடிக்கடி கேட்டுக்கொள்வாள்.
அணியுடை நெஞ்சம் - நெல்லை லதாங்கி

Page 17
س- 18 -
ஒருபக்க சிந்தனையுடையவளாய் தமிழினி இருந்திருந்தால் இப்போது அவளினது காதல் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கும். ஏனோ அவளால் அது முடியவில்லை. அதனால் அவள் ஆலயத்திற்கு செல்லும் பழக்கத்தைக் கைவிட்டுவிட்டாள். தொடர்ந்து சென்றால் எங்கே தனது பெற்றோரை ஏமாற்றி விடுவேனோ? என்ற பயம் உள்ளூர ஏற்பட்டது. ஆனாலும் அவன் அழகு வதனம் தமிழினியைப் படாதபாடு படுத்தியது. தன் உள்ளக்குமுறல்களை வெளியே காட்டாது பல்கலைக்கழகத்திற்கு செல்வதற்கான ஆயத்தங்களை செய்தாள்.
தனியார் விடுதிகளில் தங்கவிடுவது ஆபத்துக்களையும் அவதூறுகளையும் கொண்டுவரும் என நினைத்த பெற்றோர் தமிழினியை கொஸ்ரலில் சேர்ப்பதென முடிவு செய்தனர்.
ஆனாலும் மகளின் அபிப்பிராயத்தைக்கேட்கநினைத்த அன்னை அபிராமி.
"தமிழினி இங்கே வாம்மா” என்று தான் செய்த வேலையை அப்படியே போட்டுவிட்டு தமிழினியை அருகில் அழைத்தாள். புத்தகங்கள் அடுக்கியிருந்தஅலுமாரியில் புத்தகம் ஒன்றை தேடிக்கொண்டிருந்தாள் தமிழினி. கிட்டத்தட்ட அந்த அறை ஒரு சிறிய நூலகம் போலவே காட்சி தந்தது. பெரிய நூலகத்தில் புத்தகங்கள் அடுக்கி வைக்கும் பிலேயே அடுக்கி வைத்திருந்தார் அவள் தந்தை வாசிப்பே அவரது மூச்சு: சுவாசிப்பு என்று பலதடவைகளில் புரிந்துகொண்டிருக்கிறாள் தமிழினி. சிறிதளவு நாவல்கள் அவளது அன்னைக்காக வாங்கி வைத்திருந்தாரே
அன்புடை நெஞ்சம் நெல்லை லதாங்கி

- 19 - தவிர அறிவுபூர்வமான விடயங்கள் அடங்கியநூல்களையே தேடி வாசிப்பார்.
"உன் அப்பாவைப்போல உந்த அறைக்குள் போனால் வெளியே வரமாட்டாய். வந்து ஒரு கதை கேட்டுவிட்டுப்போம்மா” அன்னை அபிராமி மீண்டும் துரிதப்படுத்தினாள்.
“என்னம்மாதிடீரென கூப்பிடுகிறீர்கள்" எனத் தனது புத்தகம் தேடும் வேலையை இடையில் நிறுத்திவிட்டு அன்னை அருகில் வந்தாள் தமிழினி.
"தமிழினி, உனக்குகொஸ்ரலில்தாங்கிப்படிக்கச் சம்மதம் தானே. அப்பா கொஸ்ரல் எண்டால் எல்லாம் வசதியாயிருக்கும் என விரும்புகிறார். தேவையற்ற தொந்தரவுகளிலை இருந்து தப்பிக்கொள்ளலாம் என்கிறார். நீஎன்னம்மா சொல்லுகிறாய்?
அன்னையின் இக்கேள்வி தமிழினியை சற்று திக்குமுக்காடச் செய்தது. அதைக் காட்டிக்கொள்ளாதவளாக
"அதுக்கென்னம்மா, அப்பாவும் நீங்களும் என்னுடைய நன்மைக்காகத்தானே பாடுபடுவீர்கள்” என அன்னையின் மீது ஒரு பெரிய ஐஸ்கட்டியைத் தூக்கிப்புோட்டாள். அன்னையின் மனம் குளிர்ந்து கொண்டது.
"உனக்கு விருப்பமில்லை என்றால் நாங்கள் வற்புறுத்த மாட்டம்” மீண்டும் ஒருவித குற்ற உணர்வில் அன்னை இவ்வாறு கேட்டாள்.
"நீங்கள் என்னம்மா? எத்தனைபேர் கொஸ்ரல் வாழ்க்கை வாழ்கிறார்கள். அவர்கள்தான் கெட்டித்தனமாயும் இருக்கிறார்கள் மனதைப்போட்டு அலட்டிக்கொள்ளாமல் உங்களை வேலையைச் செய்யுங்கள். ஒரு புத்தகம்
എങ്ങuഞ്ഞു. (ബ്രബ് -n-m- ട്രൂ ബ്യൂf്കി

Page 18
- 20தேடப்போகிறேன்” எனக் கூறியவாறு அவ்விடத்தைவிட்டுநகர்ந்து கொண்டாள்.
- O4 -
சகோதரி விடுதிக்குப் போகப்போகிறாள் என்ற செய்தி தமிழரசனுக்கு கவலையை உண்டுபண்ணியது.
அக்கா இருக்கும் காலத்தில் களைகட்டிய வீடு, வெறிச்சோடப் போகின்றதே உன்று உள்மனம் வருத்தப்பட்டது. சாதாரணமாகவே விடுமுறை தினங்களில் அன்னை, தந்தை பிள்ளைகள் என்ற வேறுபாடின்றி சகல விளையாட்டுக்களையும் சகலரும் விளையாடுவார்கள்.
செஸ் ஆடுவார்கள், மாபிள் அடிப்பார்கள், பட்டம் விடுவார்கள். இதுபோன்ற பல விளையாட்டுக்களில்ஈடுபடுபவர்கள் வாரம் ஒருதடவை கடற்கரைக்குச் செல்வார்கள். எதனைத் தவறவிடுகிறார்களோ இல்லையோ கடலுக்குச் செல்வதைத் தவறவிடவே மாட்டார்கள். கடற்கரைக்காற்றின் சுகந்தம் யாவரையுமே கவர்ந்திழுக்கும் ஒரு அம்சம். அதிலேயே வாரம் ஒருதடவை மூழ்குபவர்களை கவர்ந்திழுக்காமல் விட்டுவிடுமா?
ஆனால் சில வாரங்கள் கடற்கரைக்குச்செல்ல பெற்றோர் பின்நின்றார்கள். காரணம் சுனாமி எந்தநேரத்திலும் தாக்கலாம் என்ற அச்சுறுத்தல். ஆனால் தமிழினிக்கோ சுனாமிக்குப்பின்பு அந்த இடங்கள் காட்சிகள் எவ்வாறு இருக்கும் என்பதைப்பார்ப்பதற்கு ஆவல். ஒருவாறு பெற்றோரைக் கெஞ்சி, பயந்த சுபாவமுடைய தனது சகோதரனை உற்சாகப்படுத்தி, சம்மதிக்க வைத்துவிட்டாள்.
அன்புடை நெஞ்சம் - நெல்லை லதாங்கி

- 21 ܚ "தமிழினிசாவை எல்லோரும் தேடிப்போகவைக்கிறாய்” தந்தைகூறியவாறு ஒரு போத்தலில் நீரை நிறைத்தார். அன்னை கடற்கரையில் வைத்து உண்பதற்காகப் பானையும் ஜாமையும் எடுத்து ஒரு சிறு பாய்க்கிலிட்டாள். தம்பி சிப்பி, சோகி பொறுக்குவதற்காக தனது பாடசாலைப்பையை தோளில் தொங்கவிட்டான்.
கடற்கரைக்குச் செல்ல ஆயத்தமானர்கள். இவர்களுடன் கடற்கரை செல்ல அருகிலுள்ள ஒரு குடும்பமும் சேர்ந்து கொண்டது. கடல் தெரியும் தூரத்திற்கு வந்தவர்கள் மணற்பிரதேசத்தில் சைக்கிளை ஓட்டவோ, உருட்டவோ முடியாமல் தள்ளாடினார்கள். பாதையிலுள்ள வீடொன்று கண்ணில் பட்டதும் சைக்கிள்களை விடுவதற்காக அந்த வீட்டிற்குச் சென்றனர். அவ்வீட்டிலிருந்து இரு பெண்கள் வெளியே வந்து எட்டிப்பார்த்தவண்ணம் நிற்க, ஒரு முதியவர் சற்று இருமியவாறு வாயிற்கதவைத்தாண்டி வந்தார். வந்தவர்,
"பிள்ளையஸ் எங்தை பயணம்? நையாண்டியாகக் கேட்டார்.தமிழினியின் பெற்றோருக்கு ஒரு மாதிரியாகப் போய்விட்டது. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். மீண்டும் அக்குடும்பத்திலிருந்து ஒரு நடுத்தரவயது மதிக்கத்தக்க ஆண்மகன் ஒருவர் வெளியேறியவாறு
“ரேடியோவிலை சொன்னதைக் கேட்கவில்லையே. நேற்றும் கடல் கொந்தழிச்சது. கடற்தொழிலுக்கே நாங்கள் ஒருவரும் போகயில்லை. நீங்கள் என்னடா என்றால்.”
“எதெது எப்படி எழுதி இருக்கிறதோ அப்படித்தான் நடக்கும். நடக்கிறநேரமென்றால் நடக்குமய்யா. பாம்பு கடித்து ിഞ്ഞL GI) -m ക്രൈ ക്ലെസ്കി

Page 19
- 22
தப்பியவனும் இருக்கிறான், கல்லுத்தடக்கிச் செத்தவனும் இருக்கிறான்.
முன்வைத்தகாலை பின்வைக்க மனம் வராமையினால் தமிழரசன் இவ்வாறு கூறினான். தமிழினியின் நிலையும் அதுதான். ஆனால் இத்தகவலைக் கேட்ட பெற்றோர் வீடுதிரும்புவோம் என்றனர்.
“எல்லாம் விதியின் படிதான் நடக்குமம்மா. மதிற்கரையோரமாக ஒதுங்கி நின்ற ஒரு மாஸ்ரறை வாகனம் ஒன்று வந்து அடிக்கவில்லையா?”தமிழரசன் சமாளித்தான்.
பெற்றோரும் உடன்வந்தவர்களும் பிள்ளைகளின் ஆசைப்படி பயந்து பயந்து கடற்கரையை நெருங்கினார்கள். வழமையாக கடற்தொழில் செய்யும் மீனவர்களில் ஒருவர் கூட அங்கில்லை. பாதுகாப்பு அரண்களில் இராணுவம் இருந்தது. ஓரளவு ஆறுதலைக் கொடுத்தது.
கடலில் இறங்கிக் குளிக்க ஆயத்தமானார்கள் தமிழினியும்,தமிழரசனும்உடன்வந்தவர்களில் சிலரும். ஆனால் பெற்றோர் உடன்படவில்லை. அதனால் கரையில் நின்றபடி காலைமட்டும் நனைத்து நனைத்து விளையாடினார்கள். என்ன அதிசயம்! திடீரென கிளம்பிய அலையொன்று அவர்களை நோக்கி வந்தது.
"ஐயோ அம்மா! என்று அலறியடித்துக்கொண்டு தமிழினியும் அவளது தம்பியும் பெற்றோரை நோக்கி ஓடி வந்தார்கள். அவர்களின் இடுப்புவரை நனைந்திருந்தது.
“பார்த்தீர்களா! பெரியவர்கள் சொல்லைக் கேட்காது தட்டிக்கழிப்பவர்கள் பட்டுத்தான் தெளியவேண்டும்.”
அன்புடை நெஞ்சம் - நெல்லை லதாங்கி

- 23என்று கோபமாக கூறியவாறு அபிராமி எழுந்து கொண்டாள். ஏனையோரும் கடற்கரையைவிட்டு வெளியேறினர். தமிழினிக்கும் தம்பியாருக்கும் நெஞ்சு பக் பக்கென்று அடித்துக் கொண்டது. இருவரும் ஒருவர் நெஞ்சை ஒருவர் மாறி மாறித் தொட்டுப்பார்த்துக்கொண்டனர். அப்பப்பாகடற்கரைக்குச்சென்ற அனைவருக்கும் சுனாமிஅனுபவமே ஏற்பட்டதுபோன்றஉணர்வு. மறுவாரம் அன்னை அபிராமியேதமிழினியைவிடுதிக்கு அழைத்துச் சென்று, தங்கவைத்துவிட்டு விடுதிக்காப்பாளருடன் அங்குள்ள நடைமுறைகளைப் பற்றிச் சிறிதுநேரம் உரையாடிவிட்டு வீட்டுக்குத்திரும்பிவிட்டாள்.
மறுநாள் திங்கட்கிழமை. பல்கலைக்கழகத்திற்குள் காலடி எடுத்துவைக்கும் முதலாவது நாள்.
சாதாரணமாக எந்தவிடயமானாலும் முதல் நாள் நடைபெறப்போகும் அனுபவத்தை ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள். ஆனால் தமிழினி பயந்துகொண்டே அந்த நாளை எதிர்கொண்டாள். முதல்நாள்என்பதைவிடறாக்கிங் என்றசொல் அவளை மேலும் பயங்கொள்ளச் செய்தது.
இரவு முழுவதும் இந்த நினைப்புடனேயே உறங்கியமையால் றாக்கிங் சம்பந்தமான கனவும் ஒன்று வந்துவிட்டது. உறக்கம் கலைந்தவள் அந்தக் கனவினை மீட்டி மீட்டிப்பார்த்துக்கொண்டாள்.
பல்கலைக்கழகவாசலில் கால்பதித்ததுமே தமிழினியை எங்கோ கொண்டு சென்றது போன்ற உணர்வு. பசுமையான புற்றரைகள் இருமருங்கிலும் நடைபாதைக்கு தார் றோட் போட்டிருந்தது. ஆங்காங்கே மரங்களும் செடிகளும், குரோட்டன்களும் சிறிதுகூட வாட்டமின்றி மிகவும் செழிப்பாகக் அன்புடை நெஞ்சம் -ண- நெல்லை லதாங்கி

Page 20
- 24
கூடாரமாகக் காட்சி தந்தது. மேனி முழுவதும் கிளுகிளுப்பை ஊட்டியது அப்பசுமை.
அந்த இன்பக் கிளுகிளுப்பில் சென்றுகொண்டிருந்த அவளின் இருகாதுகளிலும் ஒரேலயத்துடன் கைதட்டல் ஓசைகள். இருமருங்கிலும் பெண்களும் ஆண்களுமாக நின்று வரவேற்பதைப் போன்று இருந்தது.
பின்பு அங்கிருந்த மாணவர்கள் தமிழினியைப் பார்த்து எதையெல்லாமோ கூறி பரிகசித்தார்கள். தமிழினி கூனிக்குறுகி அழுவார் போல் செல்ல இவளைப்பின்தொடர்ந்துதுரத்தினார்கள். யார் யாரோ காப்பாற்றினார்கள். அவர்களின் முகங்கள் தெளிவாகத் தெரியவில்லை. ஆனாலும் எங்கோபார்த்துப்பழகிய வாலிபன் ஒருவனின் முகம் போன்று இருந்தது. அவன் வந்து காப்பாற்றுவது போன்றும் அவனைக்கண்டதும் ஏனையவர்கள் விலகுவதுபோலவும்.
இப்படியே அரைகுறையான காட்சிகளும் முகங்களும் கனவினைமீட்டியவள்நிறுத்திக்கொண்டாள். கடிகாரத்தில்நான்கு தடவை மனிஅடித்து ஓய்ந்தது.
விடிந்ததும் விடியாததுமாக நன்றாகக் குளித்து ஆடைகளை மாற்றி கண்ணாடி முன் வந்து நின்றாள். கண்ணாடியில் தனது உருவத்தைநன்றாக உற்றுநோக்கினாள். தன் அழகு அவனுடைய அழகுக்கு ஈடாகுமா?
யாரை மறக்கவேண்டும் என அல்லும் பகலும் பாடுபட்டாளோ, அவனுடைய முகம் கண்ணாடியில் தெரிந்தது. அவனுடைய அழகுக்கு முன் தனது அழகு ஈடாகாதுஎன்றுநன்கு தெரிந்தும் தன்னை நன்றாக அலங்கரித்துக்கொண்டாள்.
eങlഞ്ഞു. (i) --— ട്രൂസ്കി

- 25 - அலங்கரித்ததில் ஓரளவு திருப்தியுற்றவளக கட்டிலில் அமர்ந்து கொண்டாள். அதே நூமில் இன்னோர் கட்டிலில் படுத்திருந்தஅகல்யாநித்திரைபோல் பாசாங்குசெய்தவண்ணம் இவற்றையெல்லாம் அவதானித்துக் கொண்டிருந்தாள். அவதானித்துக் கொண்டிருந்தவள் நித்திரையைமுறிப்பவள் போல் உடம்பை முறித்து அலுப்பு எடுத்தாள்.
“அகலியாக்கா உடம்பு அலுப்பாக இருக்கிறதா? உங்களுக்கென்ன நீங்கள் செக்கன்ட் இயர்.”
ஏதோ வாயில் வந்ததைக் கூறினாள் தமிழினி. "நானும் முதல் வருடத்தைத் தாண்டி வந்தவள்தான் ஆனாலும் நீர் கொஞ்சம் ஓவர். கண்ணாடி முன் எப்பவந்தீரோ அப்ப தொடக்கம் நான் முழிப்பு. ஆரைக்கவர்ந்திழுக்க இந்த முயற்சி. 'போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்து உம்முடைய வடிவு போதுமானது"
“இல்லையக்கா ஏதோ ஒரு நினைவு அவ்வளவுதான், மற்றும்படி நீங்கள் நினைப்பதுபோல் ஒன்றுமில்லை”
"தமிழினி நீர் எவ்வளவு உம்மை அழகுபடுத்துகிறீரோ அவ்வளவுக்கு அவ்வளவு உமக்குத்தான் ஆபத்து. வடிவானவையைத்தான் கூட றாக்கிங் செய்வார்கள். கேள்சும் அப்படித்தான். அதாலை மேக்கப் செய்யிறதிலை நேரத்தைச் செலவிடாதையும். சரி சரிரீபோடும்பொழுது எனக்கும் போடும்”
தமிழினியின் சுதந்திரத்தில் தலையிட விரும்பாதவளாக அகலியா படுக்கையை விட்டு எழுந்து குளியலறையைத் தேடிப்போனாள்.
அகல்யா குளித்து முடித்து ஆடை அலங்காரம் முடிக்க சாப்பாடும் வந்துவிட்டது. தமிழினியால் நன்றாகச் சாப்பிட AMMMa. CaseFuó நெல்லை லதாங்கி

Page 21
a 26முடியவில்லை. காரணம் றாக்கிங்கை நினைத்துப் பயந்தவண்ணம் இருந்தாள். நாளாந்தம். சாப்பிடும் afniumLT605urts அகல்யாவாலும் நன்றாகச் சாப்பிடமுடியவில்லை. மிகுதி வயிற்றை ரீ ஆல் நிரப்பிவிட்டு இருவரும் புறப்பட்டார்கள். வழிமுழுவதும்
“அகல்யாக்கா நீங்கள் எனக்குப் பக்கத்திலையே நில்லுங்கோ என்னோடையே வாங்க"
கெஞ்சியவண்ணம் வந்தாள் தமிழினி. "d LBGLDITGOL 6peomLib, Guns6OTib. 260TT6 9 Lib D6CDL கிளாஸ் வேறை, என்னுடைய கிளாஸ் வேறை. அதுக்குப் பிரிந்துதானே ஆகணும்; சிலவேளை நானே உம்மை றாக்கிங் செய்யலாம்” சிரித்தவாறு தமிழினியின் கன்னத்தில் கிள்ளியபடி கூறினாள்.
பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்தவர்களை "வாராயண் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ” எனப்பாடலுடனும் அபிநயத்துடனும் ஒரு குழு வரவேற்றது. அகல்யாவிலகிக்கொண்டாள். முதல் வருடம் கற்கும் மாணவர்களுடன் ஏனைய வருடங்களில் கற்கும் மாணவர்கள் றாக்கிங் பீரியட் முடியுமட்டும் பல்கலைக்கழகத்திற்குள் நட்பு வைக்கக் கூடாது. அகல்யா விலகிக் கொள்வாள் என எதிர்பாராத தமிழினிக்கு அடுத்த அடி எடுத்து வைக்க மனதிலோ உடலிலோ தெம்பில்லை.
“ஆகா மெல்லநடமெல்ல நடமேனி என்னாகும்”- என்று அவளின்நடைக்கும் பாடல் பாடப்பட்டது. "மெல்ல மெல்ல நடந்து வந்து பாதம்” என்று இன்னொரு குழு.
அன்புடை நெஞ்சம் நெல்லை லதாங்கி

- 2756DLuirt gp56OLLIT..." என அப்பாடல்களுக்கு எதிர்ப்பாட்டு. இவ்வாறு நடைக்கும்பல பாடல்கள். மனதிற்குள் தமிழினி அகல்யாவை திட்டித் தீர்த்துக் கொண்டாள். இவ்வாறு நடுக்கடலில் கொண்டு வந்துவிடுவாள் எனுத் தெரிந்திருந்தால்தன்னுடைய முதல் வருட மாணவர்களுடன் சேர்ந்துவந்திருப்பாளே. அழுகை அழுகையாக வந்தது தமிழினிக்கு. இன்றைய நேயராகத் தமிழினியைத் தெரிவுசெய்தது போல அவளைச் சுற்றிப் பல்கலைக்கழகக் கூட்டமே நின்றது போன்ற உணர்வு. தலை குனிந்து மணப்பெண்போல் அடிமேல் அடிஎடுத்துவைப்பதைத்தவிர வேறு வழி தெரியவில்லை. அவளின் நடையைக் கவனித்த மாணவி ஒருத்திதமிழினிக்கு அருகில் வந்து
“நடை நன்றாக இருக்கிறது, கையிலை மாலையைக் காணவில்லையே?" பரிகசித்தவாறு வந்தவள். அருகில் சிலை ஒன்றிற்கு போடப்பட்டிருந்தகாய்ந்தபூமாலையைக் கழற்றினாள். தமிழினியின் கையிலிருந்த கொப்பிகள் அப்புறப்படுத்தப்பட்டன. காய்ந்தமாலையைத்தமிழினியின்கையில்திணித்தாள்.தமிழினி செய்வதறியாது வாங்கிக் கொண்டாள்.
"உனக்கு இஷ்ரமான தெய்வத்திற்கு மாலையைச் சூடு” தமிழினியைச் சூழ்ந்து பலகுரல்கள் ஒருமித்து ஒலித்தன. தமிழினிக்கு ஒரு புறம் ஆத்திரம், இன்னொருபுறம் அவமானம். இப்படியெல்லாம் கூனிக்குறுகி உயர்கல்வி கற்கவேண்டுமா? நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. தலைகுனிந்துநின்றாள்.
"நீயாகப் போடுகிறாயா? அல்லது நாங்கள் தெரிவு செய்து அனுப்பவா?”,
“இது சுயம்வரம் நீதான் தெரிவுசெய்யவேணும்"

Page 22
- 28சில குரல்கள் இவ்விதம் ஒலித்தன. "நீயாகப் போடப்போவதில்லை. நண்பா இங்கை வா” என்ற ஒரு குரலின் ஏவுதலுக்கு ஏற்ப ஒருவன் வந்து அவள்முன் நிற்பது தெரிந்தது. என்ன செய்வது? என் தலைவிதி இதுவாக அமைந்தால் யார் என்ன செய்ய முடியும்? அவர்களின் கட்டளையைப் புறக்கணிக்க முடியாதவளாக நிமிர்ந்து பாராமல் மாலையைச் சூட்டினாள். ஆனாலும் அவன் முகத்தைப் பார்க்க வேண்டும்போல் மனதில் ஓர் ஆசை துளிர்விட்டது. நிமிர்ந்து நோக்கினாள். உலகம் ஒருமுறை சுற்றிச்சுழன்றுநின்றது போல் இருந்தது. என்ன அதிசயம்யாரைப்பார்க்ககூபாதுஎனஉயர்கல்வி கற்க வந்தாளோ அதே பைக். இருவர் கண்களும் சந்தித்துக் கொண்டன. ஒருவிதமறுப்பும் இல்லாமல் வந்துநிற்கிறானேஉந்த மடையன். எவ்வளவு கீழ்த்தரமானவனாக இருப்பான் என எண்ணியிருந்தாள் தமிழினி, ஆனால் அங்கே அதேபைக் வந்து நின்றதைப்பார்த்ததும் யாரெனதன்னை இனங்கண்டபின்புதான் துணிவாக வந்து கழுத்தை நீட்டியிருக்கிறான்; என நிம்மதி அடைந்தாள். ஆனாலும் இச்சம்பவம் எதிர் காலத்தில் எங்கே கொண்டுபோய்விட்டுவிடுமோ என அஞ்சவும் தொடங்கினாள்.
“என்னதம்பதிகள் மெளனமாக ஒருவரை ஒருவர்வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்? இந்தாங்க பால் பழம் சாப்பிடுங்க”
என ஒருவன் அருகில் இருந்த மரம் ஒன்றில் கனி ஒன்றைப் பறித்து தமிழினியின் கையில் கொடுத்தான். தமிழினி சுற்றும்முற்றும்பயந்தபடிமாணவர்களைப்பார்த்துவிட்டுமிதுனை நோக்கினாள். மிதுனின் முகத்தில் சிறிது மாறுதல் ஏற்பட்டிருந்ததை அவதானித்துக் கொண்டாள். அது கோபமா? அண்புடை நெஞ்சம் --- நெல்லை லதாங்கி

- 29தாபமா? என உணர்ந்து கொள்ள முடியவில்லை. அவர்களின் ஆக்கினையின்மத்தியில் அந்தகனியை வாய்க்கருகில்கொண்டு சென்றாள் தமிழினி. வாய்க்கருகில் கொண்டுசென்றவளின் கரத்தைத் தட்டிவிட்டான் மிதுன். காரணம் அது நஞ்சுப் பழமாக இருந்தால் தமிழினியின் நிலை என்ன ஆகும்.
“என்ன மச்சி அதுக்கிடையிலை உங்க வைவ்மேலை பாசமா? மூன்று முடிச்சு கூடப்போடவில்லை. மாலையை மட்டும் தானே போட்டா. மாலை கூடமாற்ற இல்லையே” மாணவர்கள் மாணவிகள் பரிகசித்தனர். “ப்ளிஸ் விடுங்கடா, இவ்வளவும் போதும்" என அழாத குறையாகக் கெஞ்சினான் மிதுன். மிதுன் 2ம் வருட மாணவன் ஆகையால் ஏனைய மாணவர்களும் அவர்கள் நிலையிலிருந்து சற்றுத்தளர்ந்தார்கள்.
“சரி சரி பாவமடா. மிதுன் அழுகிறான் விட்டுவிடுங்கடா, Gastop G: arren as Ass
என ஒரு மாணவன் கூறியதும் ஏனைய மாணவர்கள் கலைந்து சென்றார்கள். மிதுனும் தமிழினியுமே நின்றார்கள்.
“என்ன சுற்றுப்பிரகாரம் தலை சுற்றுகிறதா?” என திண்னமாகக் கேட்பான் மிதுன்.
"அதுதான் சுற்றுப்பிரகாரம் சரியும்போது மீண்டும் பைக் காப்பாற்றிவிட்டதே" என தமிழினியும் மடக்க இருவரும் சிரித்துக்
"சரிவாரும்உம்மைபாதுகாப்பாகக்கொண்டேஉம்மடை இாஸ்றுமில் விட்டுவிடுகிறேன்
என அழைத்துக்கொண்டே கிளாஸ்றுமில் விட்டுவிட்டு பிரிந்துசென்றான்மிதுன்.தமிழினி, மிதுன் சென்றதிசையையே ண்புடை நெஞ்சம் - நெல்லை லதாங்கி

Page 23
سے 30 ۔ வைத்த கண் வாங்காது பார்த்துக்கொண்டு நின்றாள்.
“அதுக்கிடையில் லவ்வா” என ஒரு மாணவி கேட்டதும் வகுப்பறைக்குள் நுழைந்தாள் தமிழினி.
மிதுன் அங்கு கற்றது தமிழினிக்கு ஆறுதலாகவும் சந்தோஷமாகவும் இருந்தாலும் தனது பெற்றோரின் கெளரவத்திற்கு பங்கம் விளைவித்துவிடுவேனோ? என அடிக்கடி பயந்தபடி கல்வியைத் தொடர்ந்தாள்.
- O5 -
இவ்வாறு நாட்கள் நகர்ந்து நகர்ந்து ஒரு வருடமாகிவிட்டது. தமிழினி கல்வியின் தரத்திலிருந்து சற்றும் குறையவில்லை. இருவரும் நண்பர்களாகவே பழகிக் கொண்டார்கள். ஆனாலும் தமிழினியுடன் யாராவது வேறு மாணவன் அதிக நட்பு வைத்துப் பழகினால் மிதுனுக்குப் பிடிக்காது. முகத்தை 'ம்' என்று வைத்துக்கொண்டிருப்பான். இவ்வாறு ஒரு சமயம் குருத்தா அணிந்து நன்கு சேவ்செய்த பிராமணப்பிள்ளையான சக மாணவனுடன் பாடம் சம்பந்தமாக அதிகநேரம் கதைத்துக்கொண்டிருந்ததை அவதானித்த மிதுன், தமிழினியைச் சந்தித்த வேளை கண்டும் காணாதவன் போல் சென்றான்.
“என்ன மிதுன் பேசாமல் போகிறீர்கள்”
என குறுக்கே வந்துநின்றாள் தமிழினி.
“உமக்கு இப்ப விறன்ட்ஸ் எல்லாம் கூடியிட்டுது. நீர் கதையும்நான்வாறன்"
என முகத்தை தொங்கப்போட்டவாறுகூறியபடி நடந்தான். அன்புடை நெஞ்சம் - நெல்லை லதாங்கி

- 31 - "ப்ளிஸ் நில்லுங்க மிதுன்” பின்தொடர்ந்தாள் தமிழினி. “பாடத்திலை ஒரு டவுட் அதை சஞ்சீவ் கிளிய பண்ணிச்சுது. உங்களை விட நான் ஒரு விறன்ட்சையும் வைத்திருக்கக்கூடாதா? ஏன் மிதுன் இப்பிடிகோவிக்கிறீங்கள்”
என மிதுனுடன் ஜோடிபோட்டு நடந்தபடி கேட்டாள் தமிழினி,
"நாங்கள் பழகிறது வெறும் நட்பா தமிழினி? உம்மை ஒருநாள் பார்க்காவிட்டால் கூட நான் படும் அவஸ்தை உமக்குத் தெரியுமா? பெண்கள் நீங்கள், உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்வீர்கள். அனால் ஆணர்கள் எங்களால் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லையே”
மிதுன் எங்கோ பார்த்தபடி கூறிக்கொண்டு வந்தான். "மிதுன் முதலில் இப்படி உட்காருங்க” என அருகில் இருந்த பெஞ்சைக் காட்டிவிட்டு ஒரு மூலையில் தானும் அமர்ந்துகொண்டாள் தமிழினி. சற்று விலகி உட்கார்ந்துகொண்பான்மிதுன். காற்றுச்சிறிதுபலமாகவீசியதால் மரத்திலிருந்த சருகுகள் நிலித்தில் கொட்டுப்படத் தொடங்கின. இருவரும் சிறிதுநேரம் மெளனமாக இருந்தார்கள். தமிழினியே பேச்சைத்தொடங்கினாள்.
"மிதுன் நான் சொல்லுறதைக் கொஞ்சம் ஆறுதலாய்க் கேளுங்க, காதல் என்ற நோயாலை எத்தினை பிள்ளையஸ் பெற்றோரை நோகடிக்குதுகள் சொல்லுங்கோ. ஏன் காதலித்துத் திருமணம் செய்த பெற்றோரே தங்கள் பிள்ளைகள் காதலிக்கும்போது அனுமதிப்பார்களா? தாங்கள் செய்ததவறால் பிள்ளைகளைக் கண்டிக்கமுடியாமல் எத்தனை பெற்றோர் திண்டாடுகிறார்கள்.நீங்கள் வேறுசாதி,நான்வேறு சாதி.நாங்கள் அணியுடை நெஞ்சம் --- நெல்லை லதாங்கி

Page 24
a 32ஒன்றாய் வாழ முடியுமா? சரி பெற்றோரை உதறித் தள்ளி அவர்களின் சாபத்தை ஏற்று வாழ்வோம் என்று வையுங்கள். குழந்தைஎன்றுஎமக்குப்பிறந்தால் அதனைநாம் எந்தச்சாதியில் மணம் முடித்து வைப்போம். யார் பெண்ணோ, பிள்ளையோ தர முன்வருவார்கள். சொல்லுங்கள் மிதுன், சொல்லுங்க. இல்லை எங்களைப்போல்நீங்களும் விரும்பியசாதியில் காதலியுங்க, என விட்டுவிடுகிறதா? வெள்ளம் வரமுன்தான் அணைகட்டவேணும் மிதுன். வெள்ளம் வந்தபின்அணைகட்டுகிறதாலை ஒரு பயனும் இல்லை. இது ஏன் உங்களுக்கு விளங்கமாட்டன் எண்குது."
எனப் பக்குவமாக எடுத்துக் கூறினாள் தமிழினி. இதுவரையும்தமிழினியின்விரிவுரையைக்கேட்டுக்கொண்டிருந்த மிதுன்
"தமிழினி அப்ப நீர் என்னை மறந்து உம் பெற்றோர் பார்க்கும் வரனுக்கு தலை நீட்டுவீர் என்று சொல்லாமல் சொல்லுகிறீர். அப்படித்தானே?"
“ஓம் மிதுன். இதிலை என்ன சந்தேகம்." “சரி எழும்பும் நேரமாகுது. குட்பை" எனக்கூறி மிதுன் அவ்விடத்தை விட்டு நகர்ந்து கொண்டான். தமிழினியும் மிதுனுக்கு விளங்கவைக்க முடியாமல் தன்பாதையில் சென்றுறுமை அடைந்தாள்.
மாதங்கள் நகர்ந்து கொண்டிருந்தது. லீவுக்கு மாத்திரம் தமிழினி வீடு செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும்போது பெற்றோர் தமிழினியை விழுந்து விழுந்து கவனிப்பார்கள்
"கொஸ்ரல் சாப்பாட்டாலை பிள்ளையின்ரை நாக்குச் செத்திருக்கும். அந்தநாக்குஉயிர்பெறத்தக் üsHTMLum"GB C&LUTOBB” தந்தை ஏவுவார். பிரிந்திருந்த சகோதரனுக்கும் TT TTT JS MM SMMSSMMMMSMMSMMS MTTTM TT

- 33 - சசோதரியைக் கண்டவுடன் உற்சாகம் பிறந்துவிடும். வீடும் சந்தோஷத்தில் களை கட்டிவிடும். வீட்டில் பெற்றோருடன் இன்பமாக இருந்தவேளை ஏனோ ஒருதடவை தமிழினியின் தாய் மாமன்வீட்டிற்கு வந்திருந்தார். வந்தவர் ஊர்ப்புதினங்கள், நாட்டு நடப்புகள் பலவற்றைப் பற்றியும் கதைத்து விட்டுச் சொந்த விடயத்திற்கு திரும்பினார்.
“9յլն)յIIIլճ]] நான் சொல்லுறன் எண்டு குறை நினைக்காதை"
“என்னண்ணை சொல்லுறியள்”
"காலம் கெட்டுப்போய் இருக்குது அபிராமி. எங்கைபார்த்தாலும் காதலும் கத்தரிக்காயுமெண்டு பெடியள் திரியுதுகள்”
"உதெல்லாம் ஏனண்ணை எனக்குச் சொல்லுறியள்”
*அபிராமி உன்னுடைய பிள்ளையும் கம்பஸிலை படிக்குது. அங்கனையிக்க ஏதாவது."
*அண்னை."
உறுக்கினாள் அபிராமி
"ஆரை எண்பாலும் சொல்லுங்கோ. ஆனால் தமிழினி நாங்கள் கிழிச்ச கோட்டை தாண்டமாட்டுது. உப்புப் போட்டுத் தானண்ணை சாப்பாடு போடுறன். சுரணை மரணை இல்லாத பிள்ளையளய் நான் வளர்க்கயில்லை”
"அப்ப காதலிக்கிறதுகளுக்கு சுரணை மரணை இல்லையென்று சொல்லுறீரே”
"el Liquisiaoso elsooroosoor
“சரி” எழுந்துகொண்டார் அபிராமியின் சகோதரன்.
அபிராமி பெருமிதமாகக் கூறிய வார்த்தைகள்ை அண்புடை நெஞ்சம் நெல்லை லதாங்கி

Page 25
- 34
குசினிக்குள் வெங்காயம் உரித்துக்கொண்டிருந்த தமிழினியின் காதில் நன்றாக விழுந்தது. நம்பி நம்பி எத்தனை மனக்கோட்டைகளைக் கட்டிக்கொண்டு வாழுற பெற்றோருடைய மனதை நோகடிக்கலாமா? அவர்களை ஏமாற்றலாமா? ஏன்? நாங்கள் கூட ஒரு நாளைக்குப் பெற்றோர் என்ற பாத்திரத்தை ஏற்பவர்கள் தானே? இது ஏன் மிதுனுக்கு விளங்கமாட்டேன் என்கிறது:மிதுனைப் பெற்றோர் அன்பாக வளர்க்கவில்லையா?
இவ்வாறெல்லாம் மனதிற்குள் போராட்டத்தை நடாத்திக்கொண்டிருக்கும் தமிழினிக்குச் சிரிப்புத்தான் வந்தது. காதலிக்கும் பிள்ளைகளுடைய பெற்றோர்கள் ஒருவரும் பிள்ளைகள் மீது அன்பு செலுத்தி வளர்ப்பதில்லையா? என்ன பைத்தியக்காரத்தனமான நினைப்பு. ஆனாலும் தமிழினிக்கு இப்போது என்பதுபோல் இருந்தது.
இவர்களுக்கு அருகில் வசிக்கும் ஒரு குடும்பத்தில் ஒரு பெண் வேறு சாதிக்காரன் ஒருவனைக் காதலித்தது மட்டுமல்லாமல், அவனுடன் பெற்றோருக்குத் தெரியாமல் போய், சேர்ந்து வாழவும் தொடங்கிவிட்டாள். அப்போது தமிழினியுடைய அத்தை கூறினாள்.
“வீட்டிலை அதுக்குப் பூரணமான அன்பு கிடைத்திருந்தால் அது உந்தக் காதல் வலையிலை விழுந்திராது"
இவ்வார்த்தை எந்தளவுதூரம் உண்மை அல்லது பொய் என்று அப்போது விளங்கவில்லை தமிழினிக்கு.
பாடசாலையில் கல்வி கற்கும்போது நண்பி ஒருத்தியும் இவ்வாறு தான் அவள்மீது பெற்றோர் உயிரையே வைத்திருந்தார்கள். அவளும் பெற்றோர்மீது உயிரையே வைத்திருந்தாள். ஆனால் கல்வி கற்கும்போதே ஒருவனைக் sബഞ്ഞ ബ്രേക്ഷl) — മറ്റ്ര് (സ്കി

- 35காதலிக்கத்தொடங்கிவிட்டாள். அப்பிடிப் பார்க்கும்போது அத்தை சொன்னது எவ்வளவு தூரம் உண்மை? மனம் போராட கையிலுள்ள கத்தி வெங்காயத்துடன் போராட்டம் நடாத்திக்கொண்டிருந்தது.
“வந்த மாமாவும் போய்விட்டார். இன்னும் வெங்காயம் உரிச்சு முடிக்க இல்லையே”
அம்மா கேட்க பதட்டத்துடன்
"சின்ன வெங்காயம் அம்மா. அதுதான் சீக்கிரம் உரிச்சு முடியவில்லை."
வாயில் வந்த பொய்யைக் கூறினாள் தமிழினி.
"உந்தப் பெரிய வெங்காயத்தைச் சின்ன வெங்காயம் எண்டால் உதைவிடச் சின்ன வெங்காயத்தை எப்பிடிச் சொல்லுவாய்”
சீரியஸாய் கேட்ட அபிராமிக்கு
“உறுக்குணி வெங்காயம் எண்டு சொல்லுவன்"
நகைச்சுவையாகப் பதிலளித்தாள் தமிழினி. இருவரும்
- O6
லீவு காலத்தை வீட்டில் கடத்துவது மிதுனுக்கு இயலாத காரியம். எங்காவது ஊர் உலாத்தப் புறப்பட்டு விடுவான். குடும்பத்தில் மூத்தபிள்ஏைர என்ற பொறுப்பு சற்றும் கிடையாது. அவனை நம்பியே குடும்பம் ஒரு எதிர்பார்ப்பில் வாழ்கிறது. இவையெல்லாம் தமிழினிக்குத் தெரியும்.
விடுமுறைகாலம் ஆகையால்தமிழினியைக்காணாமல் மிதுனால் இருக்க முடியவில்லை. தமிழினியின் வீட்டை ஒருவாறு அன்புடை நெஞ்சம் - நெல்லை லதாங்கி

Page 26
- 36 - கண்டுபிடித்து வீட்டிற்கே வந்துவிட்டான்.
பிரம்மாண்டமானகாணிப்பரப்பு.நடுவிலேஅழகான ஒரு பெரிய வீடு அமைந்திருந்தது. வீட்டைச் சுற்றி ஆங்காங்கே நிழல் தரும் மரங்கள் நாட்டப்பட்டிருந்தது. வாசலிலே நறுமணம் தரும் மல்லிகைக் கொடியைப் பந்தலாக போட்டிருந்தார்கள். அப்பந்தல் கூடாரமாக காட்சிதந்தது. கூட்டித்துப்பரவாக வைத்திருந்தார்கள். வெய்யில் அவ்விடத்தில் விழாதமையால் கதிரைகள் போடப்பட்டிருந்தன.
மிதுனுக்கு குழப்பமாக இருந்தது. அவ் இடத்திலேயே இருப்பதா? அல்லது வாயில் மணியை அழுத்துவதா? குழம்பிக் கொண்டிருந்த வேளை
"யார் நீங்க? யாரைப்பார்க்கணும்? நாற்பது, நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க பெண்மணி. கையில் மரக்கறிக் கூடையுடன் வாயிற்கதவைத் திறந்து உள்ளேநுழைந்தவாறு வினவினாள்.
"தமிழினியைப் பார்க்கணும்" பயபக்தியுடன் கூறினான் மிதுன். கூறியவன், தான் தமிழினியுடன் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படிக்கும் மாணவன் என்பதையும் தெரிவித்தான்”
"தமிழினியை ஏன் பார்க்கணும்?" வார்த்தையில் கடுகடுப்பு தெரிந்தது. காரணம் சொல்ல முடியாமல் தடுமாறினான் மிதுன்.
"தமிழினி வீட்டிலை இல்லை. ஏதாவது சொல்லனும் எண்பால் சொல்லிவிட்டுப்போங்க”
நடந்தவாறு கூறினாள் அந்தப் பெண்மணி
அன்புடை நெஞ்சம் - நெல்லை லதாங்கி

- 37"பரவாயில்லை, பிறகு ஒருநாளைக்கு வருகிறேன்” கூறியவாறு மிதுன்திரும்பி நடக்க “லிவுக்கு தமிழினி இஞ்சை இருக்கமாட்டா. அதனாலை கொலிச் தொடங்கஅங்கை பேசுறதைப் பேசுங்க”
என்று வெடுக்கெனச் சொல்லிவிட்டு உள்ளே நுழைந்துவிட்டாள் அந்தப் பெண்மணியான தமிழினியின் அன்னை.
தமிழினி, இவற்றையெல்லாம் ஜன்னல் வழியாக அவதானித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு ஒரு மாதிரியாகப் போய்விட்டது.
"என்ன அம்மா இவள்” எனஅன்னைமீதுகோபப்பட்டாள். ஆனாலும் அன்னை இவ்வாறுசெய்ததுஒருவிதத்தில் நல்லதாகப்போய்விட்டது. மிதுன் ஒதுங்கிவிடுவான் என நினைத்துக் கொண்டாள்.
உள்ளே நுழைந்தஅபிராமியிடம் ஒன்றும் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளமல் சமையலுக்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்தாள் தமிழினி. அபிராமிக்கு மனதிற்குள் பெருமிதமாக இருந்தது. ஜன்னல் ஓரமாக நின்ற தமிழினியை அபிராமி கவனித்துக் கொண்டுதான் மிதுனுடன் பேசினாள். ஆயினும் தமிழினி என்ன செய்கிறாள் என்பதைக் கண்கூடாகக் காண்பதற்காகவே அவ்வாறு நடந்து கொண்டாள்.
தமிழினிக்கு மனதிற்குள் ஒருமாதிரியாக இருந்தது. வீடு தேடிவந்த நண்பனை துரத்தி அடித்தது போல் நடந்து கொண்டேனே.
நான்கு வாரங்கள் ஓட விடுமுறை கழிந்து மீண்டும் கல்லூரி ஆரம்பமாகியது. ஓரிரு நாட்கள் மிதுன் தமிழினிக்கு LTMTLTTT TTT JSMMSMMSMSMMSMSMSMSMS TT TT

Page 27
- 38 - அருகேயும் வரவில்லை. தமிழினியும் வலிந்து வந்து கதைக்கவில்லை. வீட்டிற்கு வந்தவரை அவமதித்துவிட்டதால் உண்டாகிய ஒதுக்கமா? எதுவாயினும்தமிழினிஉள்ளூரமகிழ்ச்சி அடைந்தாள். மூன்றாம் நாள் தமிழினி ஒரு மரத்தடியின் கீழ் உட்கார்ந்து அன்றைய தினம் முடிந்த பாடத்தில் குறிப்புகளை எடுத்துக்கொண்டிருந்தாள்.
“என் உயிரினும் இனிய தமிழே” என்றவாறு அருகினில் உட்கார்ந்துகொண்டான் மிதுன். “என்ன மிதுன்! தமிழ்மீது இவ்வளவு பற்று” கேலியாக வினாவினாள். "தமிழ்மீது இல்லை, என்னுடையதமிழினிமீது”நிமிர்ந்து நோக்கினாள் தமிழினி. மிதுனின் கண்கள் பிரகாசம் குறைந்து இருந்தது. சோர்வாக காணப்பட்டான். அத்துடன் வாயிலிருந்து துர்நெடில் ஒன்று வீசியது. தமிழினிக்குப்புரிந்துவிட்டது.
'மிதுன்; குடித்திருக்கிறீர்களா?” ஆச்சரியமும் கோபமுமாகக் கேட்டாள் தமிழினி. "இதைக் குடிக்கவில்லையே” எனப்பைக்கட்டில் இருந்த சிறியபோத்தலை எடுத்துநீட்டினான்.நீட்டியபோத்தலை வாங்கிப் பார்த்ததமிழினி
“மிதுன் உங்களுக்கென்ன பைத்தியமா?” கூறியவாறு போத்தலை வீச எத்தனித்தபோது மிதுன் எட்டிப்பாய்ந்துதமிழினியின்கையிலிருந்தபோத்தலைப்பறித்துக் 6ിങ്കങ്ങL6.
"எனக்குப் பைத்தியம் வந்தால் உனக்கென்ன தமிழ், நிதான் எதையும் கண்டு கொள்ளமாட்டியே”
மிதுனின்வார்த்தைகள்தமிழினியின்மனதில்ஈட்டியாகப் gങ്ങuഞ്ഞു. ട്രൂ --— ട്രൂ (സ്കി

- 39
பாய்நதது.தான் ஜன்னல் ஊடாகப்பார்த்ததைக் கண்டுவிட்டானா என்று ஆச்சரியத்துடன் மிதுணை ஏறிட்டு நோக்கியவள்,
“ப்ளிஸ் மிதுன். நான் இன்றைக்கு நேற்று வந்தவள். உங்கடை குடும்பம், நீங்கள் பிறந்தகாலம் தொடக்கம் உங்ககூட இருக்கிறது.உங்களைஅழகுக்குஎத்தனை பணக்காரப்பெண்கள் இந்தக்கல்லூரியிலேயே போட்டி போடுகினம். அவர்களில் ஒருத்தியை அல்லது பெற்றோர்விரும்புகிறபெண்ணாய்ப்பார்த்து நிறைய சீதனம் வாங்கித்திருமணம் செய்யுங்க”
ஆதங்கத்துடன் தமிழினி கூற
* தமிழினி வெளி அழகுக்கு மயங்குகிறவனா இந்த மிதுன்? நெவர் உன்னுடைய உள்ளத்தின் அழகுக்கு முன்னால் இந்த முகஅழகு தூசி
அபிநயம் மூலம் கையை விரித்து ஊதிக்காட்டினான். தமிழினியால் ஒன்றும் செய்யமுடியவில்லை.
“மிதுன் இப்ப என்ன செய்யனும்?”
கோபமாகக் கேட்டாள்
"அப்பிடிக்கேள் எனிபத்தினி”
போதை தலைக்கேறியதால் வார்த்தை
“எனக்குச் சொந்தமான தமிழ் நீ உன்னை அந்நியர் busfies 66LLDITiCSL6"
“சரி சரி. நான் உங்களுக்குச் சொந்தமானவள் தான். இப்ப எழும்புங்க, போத்தலைத்தாங்க"
எனசிறுபிள்ளையைனழுப்புவதுபோல் கையைப்பிடித்து எழுப்பி நிறுத்தியவள் போத்தலைப் பிடுங்கிக் கொண்டாள். இதுவரை தொட்டுப்பேசிஅறியாத தமிழினி கையைப் பிடித்து LTTLTT TM SSSSSSMMMMMSS MMSSS TTCTM T

Page 28
- 40நிறுத்தியதும்மிதுனுக்குத்தமிழினிமீதுநம்பிக்கைபிறந்துவிட்டது. கல்லூரி முடிந்து றுாமுக்குச் சென்ற தமிழினியால் நிம்மதியாக ஒன்றுமே செய்யமுடியவில்லை. என்பதைவிடஎன்ன செய்வதென்றே தெரியவில்லை. கட்டிலின் மீது தொப்பென்று விழுந்தாள். முடிவு எடுக்க அதிகநேரம் தேவைப்படவில்லை. காரணம் அவள் பெற்றோரை ஏமாற்றவோ அவர்களுக்குத் துரோகம் செய்யவோ இதுவரை எள்ளளவும் நினைத்ததில்லை.
உடைகளை மடிக்கத் தொடங்கினாள். திடீரென நண்பி சர்மிதாவின் நினைவுகள். எவ்வளவு கெட்டிக்காரி, அத்துடன் பணக்காரிவேறு. சொந்தக்கார வீடுகளில் கூட கைநனைக்க விரும்பாத சாதித்திமிர்பிடித்த பெற்றோர். அப்பிடிப்பட்ட பெற்றோருக்குப் பிறந்து விட்டு சாதியில் குறைந்த குனாலைப் பதிவுத் திருமணம் செய்து கொண்டு வாழ்கிறாளே. இப்போது பாதிப்பில்லை. நாளைக்கு இவர்களுக்கென்று ஒரு சந்ததி உருவாகும்போதுஎவ்வாறுதாக்குப்பிடிப்பார்கள். என்னைப்போல ஒவ்வொரு பெண்களும் பகுத்தறிவுடன் செயற்பட்டால் பெற்றோர்களையும் வரும் சந்ததியினரையும் காப்பாற்றிக் கொள்ளலாமே. மனம் சிந்திக்க தமிழினியின் கண்களை இரு கரங்கள் திடீரெனப் பொத்திக்கொண்டன. அந்தக் கரங்களுக்குரியவள் வேறுயாருமல்ல. அவள் றும் நண்பி அகல்யாதான்.
“என்ன தமிழினி, கொலிச் தொடங்கி மூன்றுநாள் தான் ஆகுது. திரும்ப பெட்டிக்குள் உடுப்பெல்லாத்தையும் அடைக்கிறாய்” வினாவிய அகல்யாவின் கைகளைப் பற்றி
“அகல்யாக்காப்ளிஸ்,இப்பஒண்டும் கேளதையுங்கோ” கூறியவள் அகல்யாவின் கைகளை விடுத்து மீண்டும் தனது அன்புடை நெஞ்சம் நெ லதாங்கி

- 41 - முழுப்பொருட்களையும்பாய்க்பண்ணினாள். அகல்யாவற்புறுத்த விரும்பாமல் தனது வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினாள். மிதுன், தமிழினி விடயம் அகல்யாவும் அறிந்ததுதான். ஆனால் தமிழினி இந்த முடிவு எடுப்பாள் என்று அகல்யா கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை.
ஆட்டோ ஒன்றை அழைத்து பெட்டி, படுக்கைகளை ஏற்றினாள். அகல்யா உதவிக்கு வரவில்லை. புறப்படமுன்பு அகல்யாவிடம் சென்று
"அகல்யாக்கா இதுவரை என் கூட இருந்து எத்தனையோ உதவிகள் செய்திருப்பீர்கள். அதற்கெல்லாம் நன்றி என்ற ஒரு வார்த்தையைத்தவிர வேறு எதுவும் கூறமுடியாதநிலையில் நான் இருக்கிறேன். நன்றி நான் வருகிறேன்".
கூறிய தமிழினி ஆட்டோவுக்குள் ஏறிக்கொண்டாள். ஆட்டோவும் புறப்பட்டதுஅகல்யா ஆட்டோ சென்ற திசையையே பார்த்துக்கொண்டு நின்றாள்.
அகல்யாவுக்கு நறுக்கென்று பதில்சொல்லியதால் தமிழினியின் மனம் சிறிதுகலக்கத்திற்குள்ளாகியது. அகல்யா இந்தக்காலத்துப் பெண் காதலுக்குத் தான் சப்போட் செய்வாள். அவள் ஏதாவது கூறி மனம் மாறியிட்டுதென்றால் எல்லாமே பாழாகிவிடும். மிதுன் அன்றைய தினம் நடந்த விதமே தமிழினியின் மனதில் சிறிது மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. அவ்வாறிருக்கும்போது தொடர்ந்து கல்விகற்றால்.
நினைப்பதற்குள் வீடுவந்ததே தெரியவில்லை. வீட்டு வாசலில் ஆட்போ நின்றது. ஆட்டோ சத்தத்தைக் கேட்ட அபிராமி வெளியே வந்து எட்டிப்பார்த்தாள். ஆட்டோவிலிருந்து இறங்கிய தமிழினியைக் கண்டதும் பதற்றமடைந்தவாறு தமிழினிக்கு அண்புடை நெஞ்சம் நெல்லை லதாங்கி

Page 29
- 42 -
அருகில் வந்தாள்.
"தமிழினி என்னம்மா? "உடம்புக்கு ஏதாவதென்றால் கூட படுக்கை பெட்டிகளுடன் வரமாட்டாய். என்னம்மா?”
அன்னை அபிராமி கரங்கள் நடுங்க தமிழினியை அனைத்தவாறு வினாவினாள்.
"அம்மா பெட்டிபடுக்கையை இறக்கிஉள்ளை கொண்டு போங்க. றைவருக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு வருகிறேன்” அன்னையின் பிடியிலிருந்து விலகியவாறு அமைதியாகக் கூறினாள் தமிழினி.
“எனக்குக் கையும் ஓடயில்லை, காலும் ஓடயில்லை. கெதியாய் வாம்மா?
கட்கேசைத் தூக்கிக் கொண்டு உள்ளே நுழைந்த அபிராமி சற்று நின்று பின்னால் திரும்பிப் பார்த்தாள். தமிழினி வந்து கொண்டிருந்தாள். அபிராமியின் நெஞ்சம் பக்பக்கென அடித்துக்கொண்டது.
“என்ன தமிழினி என்னம்மா இது?” அன்னை குழைவாகக் கேட்டாள். "அம்மா இப்பிடி உட்காருங்க” என்று அன்னையை கதிரை ஒன்றில் அமர்த்திவிட்டு தானும் அருகில் இருந்த கதிரையில் அமர்ந்து கொண்டாள்.
தமிழினி மிதுனைக் கோயிலில் கண்ட நாள்தொடக்கம் இன்று வரை நடந்தது யாவற்றையும் மூச்சுவிடாமல் கூறிமுடித்தாள். அபிராமி சிலையாக இருந்தாள்.
"SufbLDst" என உலுப்பி நிஜத்திற்குக் கொண்டு வந்தாள் தமிழினி. ജ്ഞlഞ്ഞു. (ബ്രകഥ -— ബ്ലോബൈ ക്രൈസ്കി

- 43 - “இப்ப என்னம்மா செய்யப்போகிறாய்?" "படிப்புக்கு ஒருமுழுக்கு. வேறை என்னம்மா என்னாலை 6.Fullüulu diypQuqLib.”
“எங்கடை சாதிப்பெடியன் எண்டாலும் கொப்பாவை ஒரு மாதிரிச் சம்மதிக்க வைத்திடுவன். வேறை சாதி எண்டு வேறை சொல்லுறாய். உன் அப்பா இதுக்கு ஒருநாளும் சம்மதிக்கமாட்டார். உதாலை உன்னுடைய படிப்புத்தானை வீணாகப் போகுது”
கவலையுடன் கூறினாள் அபிராமி, எந்த அன்னையும் கல்வியில் பிள்ளைகளை முன்னுக்கு கொண்டுவரத்தானே விரும்புவார்கள். படித்த அம்மா மட்டும் விதிவிலக்கா?
"அம்மா உங்களுக்குப் படிப்புத்தான் பெரிது என்றால் வருகிற விளைவுகளையும் நீங்கள்தான் சந்தித்தாக வேண்டும்”. “வேண்டாம் அம்மாவேண்டாம்”பதற்றத்துடன் கூறினாள் 9 JITL5.
“எதுக்கும் அப்பா வரட்டும். நீபோய் உடுப்பை மாற்று” அபிராமி முடிவே எடுத்துவிட்டாள். சிறுவயதிலேயே தமிழினிக்கு நிச்சயம் செய்திருக்கும் தனது சகோதரனின் மகன் பிரபாவுக்கும் தமிழினிக்கும் திருமணத்தை உடனடியாக நடத்துவது என்று.
இம்முடிவு தமிழினிக்கு சற்று மனக்கவலையை உண்டுபண்ணினாலும் வேறு வழியில்லாமல் சம்மதமும் கொடுத்துவிட்டாள். இரு பகுதியும் நிச்சயதார்த்தம் செய்து திருமணத்திகதியையும்குறித்துக்கொண்டார்கள். ஆடம்பரமின்றி திருமணம் அண்மையிலுள்ள முருகன் கோவிலில் இனிதே நடந்தேறியது. நண்பர். நண்பிகள் கூட்டத்திற்கு அழைப்பே
എങ്ങuഞ്ഞു. ട്രൂI) --— (ബൈ ക്ലെമ്നി

Page 30
- 44
அனுப்பவில்லை தமிழினி. மிதுன் ஏதாவது பிரச்சனை எடுத்துவிட்டால். என்ற பயம். அவ்வாறிருந்தும் அறிந்தறிந்து சில மாணவ மாணவிகள் வந்திருந்தார்கள். மிதுனைப் பற்றி ஒரு வசனம் கூடப் பேசவிரும்பவில்லை தமிழினி, நண்பிகள் பேச்சுக் கொடுத்தாலும்தமிழினிகதையை மாற்றிக்கொள்வாள். அன்னை அபிராமியும் தமிழினியின் மனத்திடத்தை மனதிற்குள் பாராட்டிக் கொண்டாள்.
தமிழினியின் அன்னை அபிராமியைப் பார்த்து
"அன்ரி தமிழினிக்குத் திருமணம் இப்ப செய்தால் சரி அல்லது பலனில்லை என்று செய்து வைத்தீர்கள். அதுசரி. ஆனால் படிப்பை ஏன் இடைநிறுத்தினிர்கள்.
நண்பி ஒருத்தியின் கேள்வி இது.
“பிரபாவுக்கு விருப்பமில்லை. இரண்டு பேரும் வேலைபார்த்தால் பிறக்கிற பிள்ளைகளை அன்பாய் அக்கறையாய் வளர்க்க முடியாதாம். அவர்சொல்லுறதும்நியாயம் தானே. எத்தினை குடும்பங்கள் இரண்டு பேரும் வேலை பார்க்கிறதாலை கஷ்ரப்படுதுகள்.
அபிராமி கூற,
* நீங்கள் சொல்லுறதும் பாதிக்குமேல் உண்மைதான் அன்ரி. ஆனால் இந்தக் காலத்துப் பிள்ளையஸ் வசதியாய் வாழ ஆசைப்படுதுகள். அதுகளுக்காக இரண்டு பேரும் உழைக்கவேணும் தானே.”
இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த தமிழினி
“வேலைக்காகத் தான் படிக்கவேணும் எண்டது எனது நோக்கமில்லை. தொடர்ந்து படிக்க எனக்கு இஷ்டமில்லை. உயர் கல்விகற்கிற பலனுமில்லை." TTL TTT JSMMM MMM SSSS MMMM SMSMS SMSSMM SSS TTTTT TT

- 45என அச்சம்பாசனையைத் தொடரவிடாமல் அதற்கு
முற்றுப்புள்ளி வைத்துவிட்டாள்.
ஓரிருநாட்களில் மிதுன்,தமிழினி-பிரபாதிருமணத்தை அறிந்து கொண்டான். அறிந்தவன் கொலிச்சிற்கும் செல்லாது வீட்டிலேயே அடைப்பட்டுக்கிடந்தான். வீட்டில் இருக்கும்போதுதான் குடும்பத்தின்நிலை அவனின் கண்களுக்குப்புலப்பட்டது. அவன் மனதில் ஒரு புத்துணர்வு. பெற்றோரின் கெளரவத்திற்காகவும் சமுதாயத்தில் பிறழ்வு ஏற்படக்கூடாது என்பதற்காகவும் தமிழினி தியாகம் செய்திருக்கும் போது நான் ஏன் எனது குடும்பத்திற்காக எனது காதலைத் தியாகம் செய்யக்கூடாது. தமிழினி ளங்கிருந்தாலும் சந்தோஷமாக வாழ்ந்தால் அதுவே போதும் என மிதுனின் நெஞ்சம் வாழ்த்தியது.
- O7 -
நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது. பிரபாவும் தமிழினியும் ஜோடி சேர்ந்ததற்கு அத்தாட்சியாகக் குட்டிப்பயல் ஒன்று அவள் வயிற்றில் கருத்தரித்தான். அந்தக் காலகட்டத்தில்தான் தென்றலாக இருந்த அவள் வாழ்வு வரண்ட பாலைவனமாகியது.
யுத்தநிறுத்தமும் சமாதானத்திற்குமான பாதையும் திறக்கப்பட்டிருந்த காலப்பகுதி. மக்கள் எந்தவித கவலையுமின்றி உல்லாசமாகத்திரிந்தகாலப்பகுதியும்கூட ஏ9 பாதைதிறக்கப்பட்டு கொழும்பு, கண்டி வவுனியா, திருகோணமலை என்று சகல இடத்திற்கும் மக்கள் விரும்பியே புறப்பட்டு மிகுந்த களிப்பில் தமது அன்றாட அலுவல்களைப்பூர்த்திசெய்த காலம்.
அன்புடை நெஞ்சம் - நெல்லை லதாங்கி

Page 31
- 46 - அப்படிப்பட்ட ஒரு காலம் தமிழருக்குச் சொந்தமில்லை, நிரந்தரமில்லை என்றதுபோல் மீண்டும் ஒரு யுத்தம் 2006ம் ஆண்டு ஆவணிமாதம் பதினோராம் திகதி மாலை ஆரம்பமாகியது நீண்டகாலமாக மறந்திருந்த ஷெல்சத்தம், எறிகணை வாண வேடிக்கைகள் வானவெளியில் அட்டகாசமாக பொழியத் தொடங்கின. வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியநிலை. யாழ்நகரில் பற்பல இடங்களிலிருந்தும் மக்கள் இடம்பெயரத் தொடங்கினர்.
இடம்பெயர்வின்போது சொந்தவீடுவாசல்,சொத்துக்கள் இவற்றுடன் பெறுமதிமிக்க பல உயிர்களையும் இழந்து தமிழ்மக்கள் படாதபாடு பட்டனர்.
தொடர்ந்து யாழ்நகரில் அமுலில் இருந்த ஊரடங்குச் சட்டத்தினால் தாக்குதலுக்குள்ளான பொதுமக்களின் சடலங்கள், காயப்பட்டவர்கள் என்று அவர்களை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முடியாத அவலநிலை, டும், டும்’ என பட்டாசு வெடிப்பதுபோல் துப்பாக்கி வேட்டுச்சத்தம் பகல், இரவு, சாமம் என்றில்லாமல் காதைப்பிளக்கும் ஷெல் இடியோசை, விரல்விட்டு எண்ணமுடியாத அளவிற்கு தொடர்ந்து பல்குழல் தாக்குதல்.
அப்பப்பா! தமிழினி குடும்பம் தாக்குதல் நடந்த பிரதேசத்திற்கு அண்மையில் இருந்தமையால் இத்தனை துன்பங்களையும் அனுபவித்தது. தமிழினியும் கருவுற்றிருந்த காரணத்தினால் பிரபாவுடன் தனது பெற்றோரின் வீட்டில் வந்து தங்கி இருந்தாள்.
வீட்டிற்கு மேலால் கூவியவண்ணம் ஷெல்கள் பறந்தன. தமிழரசனுக்கு இவ்வாறான அனுபவம் ஏற்படாமையினால் வீட்டு முற்றத்திற்கு ஓடிவந்து வேடிக்கை பார்ப்பான். அன்னையும் அன்புடை நெஞ்சம் - நெல்லை லதாங்கி

- 47தந்தையும்தமிழரசனை இழுத்துக்கொண்டு உள்ளே ஓடுவார்கள். ஷெல் அடித்தசத்தம் கேட்டதும் சிறிதுநேரத்தில் விழுந்துவெடிக்கப் போகிறதே என்று நினைத்து காதைப் பொத்திக்கொண்டு ஆளேடு ஆள் ஒட்டிக்கொண்டு குப்புற விழுந்து படுப்பார்கள்.
தமிழரசனைத்தவிர்த்துஎல்லோரும் 1986ல் இடம்பெற்ற யூத்த சூழலில் அல்லோலகல்லோலப் பட்டவர்கள். முன்னைய போர்ச்சூழலில் பங்கர்களவதுகைகொடுத்தது. உயிர்ச்சேதங்கள் குறைந்தது. ஆனால் இன்றைய போர்ச்சூழலில் மக்கள் உயிர்களைக் கைகளில் பிடித்துக்கொண்டு வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலை.
திடீரென்று தமிழீழ வானொலியில் அறிவித்தல். இராணுவ காவலரண்களுக்கு அருகில் இருப்பவர்களும் நாக்குதல் நடந்துகொண்டிருக்கும் பிரதேசத்திற்கு அண்மையில் வசிப்பவர்களும் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருங்கள்.அறிவித்தலைக்கேட்டதமிழினியின் பெற்றோர் புதறத் தொடங்கினர்.
"கட்டிக்காத்தசொத்தெல்லாம் முன்புநடந்த யுத்தத்திலை பறிபோனது. போதாதென்று இப்பவேறை தொடங்கிவிட்டாங்கள்” இது தமிழினியின் அன்னையின் வாயிலிருந்து ஆற்றாமையால் வெளியேறுகிறது.
"சமாதானம், சமாதானம் என்று என்ன முடிவைக் கண்டம்? பேச்சுவார்த்தை நாடகம் பல மேடைகளைக் கண்டதே தவிர அதிலும் பயனில்லை.அப்பஅவங்கள் என்ன செய்யிறது?” சொத்து பத்து சேர்ப்பதில் பெரும்பாலும் பெண்களைவிட ஆண்கள்ஆர்வம்குறைந்தவர்கள்என்றநியதிக்கேற்பதமிழினியின் தந்தையின் வாயிலிருந்து இவ்வாறான வார்த்தைகள்.
அன்புடை நெஞ்சம் - நெல்லை லதாங்கி

Page 32
- 48 - பட படவெனப் பட்டாசு வெடிப்பது போல துப்பாக்கி வேட்டுக்கள் வெகு அண்மையில் கேட்க ஆரம்பித்தன.
“அங்கிள், அன்ரி தாமதிக்கிற ஒவ்வொரு நிமிடமும் ஆபத்து எங்களுக்குத்தான்”
“ஓம் அப்பா கதையளை விட்டிட்டு ஆளுக்கு இரண்டு உடுப்பு:சோப், சாப்பாட்டுச் சாமான், நகைநட்டு இதுகளை எடுத்து ஆயத்தப்படுத்துங்கோ”
எங்கை அம்மாபோறது? கே.வி. ஓடரும் போட்டிட்டாங்கள்”
தனது பங்குக்கு தமிழரசனும் அக்கறையுடன்
வினாவினான்.
“கொப்பா ஆரோடை ஒற்றுமையாய் இருக்கிறார். 6|LLDJT'sfulGodó) சொந்தபந்தங்களையெல்லாம் உதறித்தள்ளிப்போட்டு இங்கை கொண்டு வந்து குடியேற்றினார். இப்பளங்கை எண்டு போறது?”
“முதலிலை எல்லாத்தையும் எடுத்து வையுங்கோ. எப்ப என்ன கதைக்கிறதெண்டு ஒரு விவஸ்தையில்லை." தந்தையின் குரலில் ஒரு அதட்டல்.
“அன்ரி என்னுடைய நெருங்கிய நண்பன் ஒருத்தன் வடமராட்சியிலை இருக்கிறான். ஆனால் அங்கை இப்ப போகேலாது”
பிரபா சொல்லி வாய்மூடுமுன் மீண்டும் செல் அடிக்கும் சத்தம். காதைப்பொத்தியவாறு அவரவர் நின்ற இடத்தில் குப்புற விழுந்து படுத்தார்கள். ஷெல் வந்து டொங் என்றவாறு
அன்புடை நெஞ்சம் --- நெல்லை லதாங்கி

- 49 - உடுப்புக்களை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்ததமிழினி அம்மா! என்றுஅலறியவாறு அன்னைக்கு அருகில் ஓடிவந்தாள். கூப்பிடு துரத்தில் வேறொரு செல் வந்து வெடித்தது. அதனைத் தொடர்ந்து கீயோ, மாயோ என்று கூக்குரல்கள்.
"தமிழினி பயப்படாதையம்மா. பயப்படுறது உன்னுடைய வயிற்றிலை இருக்கிற குழந்தைக்குக் கூடாதம்மா”
அன்னை தமிழினியை அனைத்துத் தைரியப்படுத்தினாள்.
"இனிமேல் இங்கை நிற்கிற ஒவ்வொரு நிமிடமும் ஆபத்து,எங்களுக்குத்தான்; கையிலை கிடைத்ததை எடுத்துக் கொண்டு புறப்படுங்கள்” பிரபா கூறி முடிக்கவில்லை
“அம்மா பிஸ்கற்பெட்டி" வழமையாக ரீ குடிக்கும் போதெல்லாம் பிஸ்கற் டவேண்டும் தமிழரசனுக்கு. தமிழரசன் அங்கலாய்த்தான்.
"இனித் திறந்து எடுக்கிறதுக்கிடையிலை அடுத்த ஷெல் வந்துவிடும். விட்டுவிட்டு வாங்கோம்மா"
தமிழினிபயம்கலந்தகுரலில், ஒருவிதநடுக்கத்துடன்நா தழுதழுக்க கூறினாள்.
“முதல் நடந்த பிரச்சினையுக்கையும் உப்பிடித்தான் நீங்கள் இரண்டுபேரும் சின்னப்பிள்ளையஸ்.கல்பணிஸ், பிஸ்கற் என்று வாங்கி வைத்ததையெல்லாம் விட்டிட்டு ஓடிப்போய் பசிக்கு உன்னுடைய செரிலாக் மாவை அக்காவுக்கு குழைத்துக் கொடுத்தனான்.
அந்தச்கழுநிலையிலும் பழைய கதைசொல்லும்போது அபிராமிக்கு உள்ளூர ஒரு பெருமிதம். ஷெல் சத்தம் குறைந்திருந்தமையால் தமிழரசனுக்கு தெரியாத முன்னைய அர்ைபுடை நெஞ்சம் ---- நெல்லை லதாங்கி

Page 33
- 50 - யுத்தம்,கரும்புலிமில்லருடையதாக்குதல், இடம்பெயர்வின்போது தாங்கள் பட்டஇடர்கள், திரும்பி வந்து வீட்டைப் பார்த்தபோது தரைமட்டமாகக் கிடந்தகாட்சி, வாயைக்கட்டிவயிற்றைக்கட்டிஇந்த தென்மராட்சியில் ஒரு வீட்டைக் கட்டினம். இப்ப இந்த வீடும் தரைமட்டமாகப்போகுது.
இவையெல்லாவற்றையும் ஒன்றும் விடாமல் சொல்லிக் கொண்டு வந்தாள் அபிராமி. சிறிது தூரம் சென்றதும் இருட்டிக்கொண்டது. பிரபா டோர்ச்சை எப்பொழுதும் கையுடன் கொண்டு திரிபவன். மறக்காமல் எடுத்துக் கொண்டதால் இராணுவத்தின் கண்களுக்கு படாமல் உள்பாதைகளினூடாக சென்று கொண்டிருந்தார்கள்.
நாலைந்து பரப்புக்கு ஒவ்வோர் காணி என்பதால் சனத்தொகையும் அந்த ஊரில் குறைவு. ஆரம்பத்தில் தனித்தே பிரயாணத்தைத் தொடங்கினார்கள். அதனால் மனம் லபக் லபக் கென்றுஅடித்துக்கொண்டது.தமிழினியின் குடும்பம் சிறிதுதுரம் சென்றதும் வேறு சில குடும்பங்கள் சேர்ந்து கொண்டன. அவர்களுடன் கதைக்துக்கொண்டுசென்றது மனதிற்குகொஞ்சம் தைரியமாக இருந்தது . வரும் ஷெல்களை அவர்கள் ஏந்துவதில்லை. ஆனாலும் பலபேர் சேர்ந்திருக்கும்போது பயம் சிறிது குறைவுதான். இதனை முன்னைய போர்ச்சூழலில் உணர்ந்தவர்கள் தமிழினியின் பெற்றோர். தனித்து வீடுகளில் இருக்கப் பயந்து கோயில்களில் என்றும், மரத்தின் கீழ் என்றும் பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்திருந்தார்கள். உண்மையில் அது தான் பெருமளவு உயிர்ச்சேதங்களைக் கொண்டுவரும். ஆனாலும் அவ்வாறு சேர்ந்திருக்கும்பொழுது மனதில் ஒருவிதமான தெம்பு, பயம் குந்ைத உணர்வு. அர்ைபுடை நெஞ்சம் - நெல்லை லதாங்கி

- 51 - மீண்டும் ஷெல் அடிக்கும் சத்தம் கேட்கத்தொடங்கியது. இவர்களைத்தாண்டி தாண்டி வந்து விழுந்து வெடித்தன.
"இராணுவத்தினுடைய கண்களில் அகப்பட்டியளோ விெரைவிட்டுப்போக அனுமதிக்க மாட்டார்கள். எத்தனையோ குடும்பங்களை இடம்பெயரவிடாமல் இராணுவம் மறிச்சு வைத்திருக்குதாம். சுறுக்காய் நடவுங்கோ"
சேர்ந்துகொண்ட குடும்பத்தில் ஒருவர் இவ்வாறு சொன்னதும் எல்லோருடைய நடையிலும் வேகம் அதிகரித்தது. தமிழினியால் தொடர்ந்து நடக்க முடியவில்லை.
"இன்னும் கொஞ்சதுரம் போனால் ஷெல் அங்காலை வராது தமிழினி, நாங்கள் இப்ப வந்துகொண்டிருக்கிறது மிகவும் ஆபத்தான இடம். கொஞ்சம் கெதியாய் நடந்து வாரும்."
பிரபா ஊக்கம் கொடுத்தான். "துலைவார். பிரச்சினை நடக்கிற இடங்களுக்கு ஷெல் அடிக்காமல் பொதுமக்கள் வசிக்கிற இடங்களுக்கு ஷெல் அடிக்கிறாங்களே”
எல்லோரும் அவசரமாக விட்டு விலக தாம் தனித்து விடப்படப்போகிறோம் என்ற வயிற்றெரிச்சலில் அபிராமியின் உள்ளக்கொதிப்பு இது. தமிழினியால் விரைவாக நடக்க முடியாமையினால் தமிழினியின் குடும்பம் தனித்துப் பின்தொடர்ந்து கொண்டிருந்தது.
நிறைமாதக் கற்பிணி ஆகையால் சிறுநீர் கழிக்காமல் அதிக நேரம் தமிழினியால் இருக்கமுடியவில்லை. தமிழினியின் குடும்பம் ஓரிடத்தில் நிற்க ஏனைய குடும்பங்கள் சென்றுகொண்டிருந்தன. தமிழினி ஒதுக்குப்புறமான இடத்தை தேடிப்போனாள். உதவிக்கு வந்த அன்னையை சிறிதுநேரம் LMTT TTT JSSSMSSSSSSMMMMMMSS TT T

Page 34
- 52 - ஆறுமாறு கூறிவிட்டு டோர்ச்சை வாங்கிக்கொண்டுமரம் ஒன்றின் பின்னால் மறைவிற்குச் சென்றாள். மறுகணம் திடீரென கூவிக்கொண்டு வந்த ஷெல் தமிழினியின் குடும்பம் நின்ற இடத்தில் குத்தி வெடித்தது.
"ggGurls),LibLDT"
என்று குழறிக்கொண்டு ஓடிவந்தாள் தமிழினி. தனது கையிலும் சன்னம் பட்டு இரத்தம் கசிவது போன்ற உணர்வு. ஓடிவந்து பார்த்தவளின் கணிகளில் ஒருவரின் உருவமும் தெரியவில்லை.
"g2Gur"
என்று அலறியவள் மயக்கம் அடைந்துவிட்டாள்.
நாட்கள் நகர பிரபாவின் பெற்றோரும் பிரபாவின் இழப்பைத் தாங்கமுடியாமல் நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டனர். அயலவர்களின் உதவியுடன் வாடகை வீடொன்றில் தனித்து வாழத்தொடங்கினாள் தமிழினி.
சொத்து சுகம் ஓரளவு இருந்தாலும் வாழ்க்கையை ஒட்டுவதற்கு வருமானம் என்ற ஒன்று வேண்டும்தானே. இருக்கும் சொத்தை அழித்து உண்டு உடுத்தி வாழமுடியுமா? பிறக்கும் குழந்தை ஒன்று என்றாலும் அதன் எதிர்காலம்? அவள் படித்த அளவிற்கு ஒரு உத்தியோகம் பார்க்கலாம். ஆனால் பிறக்கும் குழந்தையை எங்கு விடுவது? யார் வளர்ப்பது? தமிழினியின் தந்தைஒருபோக்கு.தனக்குப்பிடித்தவர்களுடன் பழகுவாரேதவிர உறவு என்று பழகுவது கிடையாது. இந்த நிலையில் உறவினர் உதவும் அளவிற்கு அயலவர்கள் உதவுவார்கள? தமிழினியின் வாழ்வு தனித்த வாழ்வாகிவிட்டது. அவளுக்குத் தெரிந்த தையல்கலை கைகொடுத்தது. வீட்டில் இருந்தவாறே தொழில் TT TTT JSMMMMSSS SSMMM SM MMSSSMMMSSS TTT TT

- 53 -
ஒன்றைப் பெற்றுவிட்டாள்.
பக்கத்துவீட்டு அன்ரி சியாமளா தமிழினிக்கு உற்றதுணையாக இருந்தாள். தமிழினியும் சியாமளவுக்கு ஒத்தாசை புரிவாள். அன்று சியாமளா நெடுநேரமாகியும் வராத காரணத்தினால் தமிழினியே சியாமளாவைத் தேடிச்சென்றாள். கதவுகள் திறந்தவண்ணம் இருந்தன
"அன்ரி"
குரல் கொடுத்தாள் தமிழினி. பதிலில்லை. மனம் பதைபதைக்க உள்ளே சென்றாள். சியாமளா ஒருக்களித்துப் படுத்தவாறு நடுங்கிக்கொண்டிருந்தாள்.
“என்னன்ரி நடுங்குகிறீங்கள்? 6Tri CBEST ஆஸ்பத்திரிக்குப் போவம்" துரிதப்படுத்தினாள் தமிழினி.
"தமிழினி நீகிட்ட வராதையம்மா, நிறைமாதக் கற்பிணி நீ, சிக்கின் குனியா பொல்லாத நோய். உனக்கு வந்தால் நீ தாங்கமாட்டாய். முறி முறியெண்டு முறிச்சுப்போடும். இவர் வந்து ஏதாவது செய்வர். நீபோம்மா”சியாமளா நடுக்கம் கலந்தகுரலில் கூறினாள். தமிழினிக்கு சியாமள்வை அப்படியே விட்டுச் செல்ல மனம்வரவில்லை. அவளுக்குரிய கடமைகளை செய்துவிட்டே புறப்பட்டாள்.
சுனாமி மூலம் மக்கள் அழிந்தது போதாதென்று தற்போது சிக்கின் குனியா. முதியவர், குழந்தைகள் என்று பலபேர் இறந்ததைப் பத்திரிகை மூலம் அறிந்திருந்தாள். 'உப்பிட்டவரை உள்ளளவும் நினை” என்று சொல்வார்கள். உப்பிட்டவரே அவ்வாறென்றால் இந்த அன்ரியை எவ்வளவு நினைத்துக்கொள்ள வேண்டும். அந்தளவிற்கு சியாமளாவின் உதவியைப் பெற்றவள் தமிழினி.
ജ്ഞ്ഞL (Bബ്രക്കഥ -m-m ട്രൂ (ffിക്സി

Page 35
- 54மாதங்கள் உருண்டோடபிரபாவின் உறவின்சின்னமாக வந்து உதித்தான் தூயவன். தூய்மை எல்லாவற்றிலும் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் அங்கு அழகு தெரியும். ஒளி பிறக்கும், சந்தோஷம் கிடைக்கும். பொறாமை, வஞ்சனை, கது. எதிர்ப்பு என்று ஒன்றும் உருவாகாது. அதனால் தூயவன் என்ற பெயரைத் தெரிவு செய்து கொண்டாள். தூயவன் வளர்ந்து ஆண்டுகளும் மூன்றாகிவிட்டது.
- O8 -
கரியன் கண்களைச் சுட்டெரித்தது. முற்றத்தில் நின்ற பூவரசும் சருகுகளை ஆங்காங்கு கொட்டிக் கொண்டிருந்தது. காலையில் கூட்டினாலும் மதியம் சருகுகள் வந்து முற்றத்தில் குவிந்துவிடும். மனிதர்களே நடமாட்டம் இல்லாத வீடுபோல் காட்சி அளித்தது தமிழினியின் வாடகை வீடு. வைகாசிமாதமாகையால் காற்று வேறு சுழன்று அடித்தது.
புறுபுறுத்தவாறு நேரத்தைப் பார்த்தாள் தமிழினி பகல் பதினொரு மணியைத் தாண்டிக்கொண்டிருந்தது. தமிழினி அவசரஅவசரமாக உடையை மாற்றிக்கொண்டாள். தமிழினி அவசரப்படுவதற்கான காரணம் பெரிதாக ஒன்றுமில்லை.
மகன் தூயவனை நேசரிக்குச் சென்று ஏற்றி
வரவேண்டும். அவளின் உயிர்நாடியே தூயவன் தான். அவசர அவசரமாக வீட்டுக்கதவுகளைப் பூட்டினாள். ஒரு கதவு பூட்டிக்கொள்ள மறுத்தது. பழையகாலக் கதவு அது. நட்டு ஆணிகள் கழன்றவண்ணம் இருந்தது. அதனைத் திருத்தம் செய்வதற்கு வீட்டில் ஆண்துணை இல்லை. அன்புடை நெஞ்சம் --- நெல்லை லதாங்கி

- 55 - e600i துணைகள் இருக்கும் வீடுகளே, செப்பனிடப்படாமல் திருத்தப்படாமல் இருப்பதைக் கண்டிருக்கிறாள்தமிழினி. அதனால் ஆண்துணை இல்லையே? என்ற கவலை இந்த விடயங்களில் வந்ததில்லை. ஆனாலும் இன்றுஎப்படியாவது, யாரையாவது கொண்டுவந்ததுநட்டுகளைச் சரிபார்க்கவேண்டும்."
என்று நினைத்தவளாக ஒருவாறாகப் பூட்டி முடித்தவள் பைசிக்கிளை எடுத்துக்கொண்டு புறப்படத்தயாரானாள். கேற்றைச் சாத்திவிட்டு வெளியே விரைந்தவளுக்கு பக்கத்துவீட்டு அன்ரி கதைகொடுத்தாள்.
“என்ன தமிழனி! இண்டைக்கு நல்லாய் நேரம் போயிட்டுது”
“ஓம் அன்ரி அவசரமான தையல் வேலை ஒன்று அதுதானன்ரி"
தமிழினியின் பதில் அன்ரி மேனகாவின் காதுகளிற்கு எட்டியதோ? இல்லையோ? பைசிக்கிள் பறந்தது. மேனகா பெருமூச்செறிந்தாள்.
“இந்தச் சின்ன வயசிலை இந்தப்பிள்ளைக்கு இந்த நிலை. கடவுளுக்குக் கூடக் கண்ணில்லை”
மனதிற்குள் முட்டி மோதிய எண்ணம், ஆற்றாமையால் உதட்டின் வழியாக வெளியேறியது.
வளைவுகள் அதிகமாக உள்ள பாதை ஒன்றினையே பயன்படுத்துவாள் தமிழினி. குறுகிய நேரத்தில் நேசரியை அடைந்து விடலாம் என்பதே அதன் உள்நோக்கம்.
அப்பாதைகளும் நேர் சீரான பாதைகளல்ல. முட்களும் கற்களும் பள்ளங்களும் ஆங்காங்கே குவிந்து காணப்பட்டன. ജ്ഞLഞ്ഞു. (ബ്രിബ്) --m (ബൈ ക്ലെffമി

Page 36
- 56 ܗ
போதாக்குறைக்கு கிழுவை மரம் ஒன்று காற்றுக்கு முறிந்து குறுக்கே கிடந்தது. இரவில் யாராவது பயணம் செய்தால் விழுந்தெழும்ப வேண்டியதுதான்.
அவற்றையெல்லாம் பொறுமையுடன் விலக்கி ஓடியவளின் பைசிக்கிள் திடீரென ஓட்டம் குறைந்து தமிழினியை விழவைக்கப் பார்த்தது. ஆனாலும் பிரேக்கை அழுத்தி காலை ஊன்றிக் கொண்டாள்.
“பட்டகாலே படும், கெட்ட குடியே கெடும்” என்ற முதுமொழிபோல போனவாரம் சிறுகச் சிறுகச் சேமித்த பணத்தில் வாங்கியரியுருப்ஓட்டையாகிவிட்டதுபோலும், மனதிலும் உடலிலும் இருந்த அவசரம், பதற்றம் யாவும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டதனால் தமிழினியின் கண்களில் நீர் நிறைந்து முட்டிக்கொண்டது. வாய்விட்டு அழவேண்டும் போலிருந்தவளின் காதுகளில்
"அன்ரி காற்றுப்போய்விட்டதா?’ என்றது சிறுவனின் இனிமையான குரல் ஒன்று. குரல்வந்த திசையை நோக்கமுன்
"நில்லுங்க அன்ரிபம் எடுத்துக்கொண்டு வருகிறேன்”
என்றுகூறியவாறுசிட்டுக்குருவிபோல்பறந்துசென்றான் நான்கு வயது மதிக்கத்தக்க அந்தச் சிறுவன். சிறுவனைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டு நின்றாள். இந்தக் காலத்துப்பிள்ளைகளுக்கு வயதிற்கு கூடிய அறிவு இருக்கிறது என்பதை, தூயவனே பல சமயங்களில் எடுத்துக்காட்டி இருக்கிறான். அப்பிடியிருக்க இந்தச் சிறுவன்நடந்துகொண்டதில் வியப்பில்லைத்தான். ஆனாலும் ஒரு செயலைச் செய்யச் சொன்னால் அதனையே செய்யாதுதட்டிக்கழிப்பவர்கள் எத்தனை பேர் எது எப்படி என்றாலும்
ജ്ഞilഞ്ചL (Bബ്രക്കഥ -— ക്ലെബൈ ക്ലെസ്കി

- 57"நான்கு வயது மதிக்கத்தக்க அந்தச் சிறுவன் பாராட்டப்படவேண்டியவன்தான்”
மனதிற்குள் எண்ணியவாறு சிறுவன் சென்ற திசையையே பார்த்துக்கொண்டு நின்றாள். கூப்பிடு தூரத்தில் அமைந்திருந்த ஒரு கொட்டில் வீடொன்றிலிருந்து சிறுவன் பம்முடன் வெளியேறிக்கொண்டிருந்தான்.
கொட்டிலாக இருக்கும் வீட்டிலையேபம் இருக்கிறது. சில வீடுகளில் வசதி இருந்தும் அத்தியாவசியமான பொருட்களுக்குக் கூட வீட்டுக்கு வீடு திரிபவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். மனம் நினைத்துக்கொள்ள
"இந்தாங்க பம், நான் சைக்கிளைப் பிடிக்கிறன் நீங்கள் காற்றை அடியுங்கோ” மழலைமொழியில் கூறினான் சிறுவன்.
சிறுவன் சைக்கிளைப் பிடிப்பானா? என்ற சந்தேகம் தமிழினிக்கு. சிறுவனை உற்றுநோக்கினாள்.
“என்னன்ரி பார்க்கிறீர்கள்? பைசிக்கிளே ஒடுவேன். நீங்கள் என்னடா என்றால்.”
பெரிய பையன்போலப் பேசினான். உண்மைதானே பத்துப்பன்னிரண்டுவயதிலேயே சில பையன்கள் மோட்டார்பைக் ஓடுகிறார்கள். இவன் எம்மாத்திரம்,
காற்று அடித்து உதவிசெய்து தமிழினியின் துயரத்தில் ஒருசிறுதுளியைத்துடைத்துவிட்யான்அந்தநாலுவயதுச்சிறுவன். “ஆபத்துக்கு இப்பிடியும் கடவுள் உதவி செய்வாரா?” என்று கேட்டுக்கொண்டது தமிழினியின் உள்மனம். கடவுளே இல்லையென்று உறுதி பூண்டிருந்த அவளின் இதயத்தில் ஒரு சிறு நெருடல். தற்போது நாஸ்திகியாய் இருக்கும் தமிழினி, ஒரு காலத்தில்இறைவன் மீது அபார பக்தி கொண்டிருந்தவள். அன்புடை நெஞ்சம் - நெல்லை லதாங்கி

Page 37
س 58 - Sö6Ou Jib S96Ou tDIT& SJgólgdtáléku 616sr.
சிறிது நொடிகளில் நேசரி வாசலுக்கு வந்துவிட்டாள். நேசரியில் மணிஅடிக்கும் ஓசை காதில் விழநிம்மதிப் பெருமூச்சு வெளியேறுகிறது.
"அம்மா வந்திட்டீங்களா?” ஓடிவந்து அன்னையைக் கட்டி அணைத்துக் கொண்டான் தூயவன். அன்புகள் பகிரப்படாமல் ஒரு இடத்தில் செலுத்தும்போது அங்கே பாசஉணர்வுமிகுதியாகக் காணப்படும் என்பது பொது இயல்பு. தமிழினிக்கு தூயவனும் தூயவனுக்கு தமிழினியும்என்றுஇருவரது அன்பையும் ஒருகட்டுக்கோப்புக்குள் வைத்து வாழப்பழகிக் கொண்டார்கள்.
தூயவனைப் பின்சீற்றில் இருத்தியவாறு சைக்கிளை உழக்கத் தொடங்கினாள் தமிழினி. 2004.12.26ம் திகதி நடந்த சுனாமிப் பேரலை நினைவு தமிழினியை மாற்றிவிட்டது. தாய், தந்தை, கணவனை இழந்ததமிழினிதன் வாழ்வேமுடிந்துவிட்டது எனத்தான் நினைத்திருந்தாள். தூயவனுக்காக வாழவேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டது. தனித்து வாழும் போதெல்லாம் கணவனை இழந்த ஏக்கம், தவிப்பு மனதின் அடிமூலையில் இருந்த வண்ணம் இருந்தது. அந்த எக்கத்தை, பிரிவின் கொடுமையை உணர்வின்மூலம் அனுபவித்துத் தவித்துக் கொண்டாளே தவிர வார்த்தையால் வெளியில் கூறமுடியாது தத்தளித்தாள். இவ்வாறு தவித்த மனதிற்கு சுனாமிப் பேரலை அனர்த்தத்தின் நினைவு ஒரு தெம்பைக் கொடுத்தது. தைரியத்தைக் கொடுத்தது.
கணவனை இழந்த கைம்பெண்கள், மனைவிமாரை இழந்த கணவன்மார்கள், பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள், அன்புடை நெஞ்சம் --- நெல்லை லதாங்கி

- 59
பெற்றோர்களை இழந்த சின்னஞ்சிறிசுகள், சிறுவர்கள், சகோதரரைப் பறி கொடுத்த சகோதரிகள் சகோதரிகளைப் பறிகொடுத்த சகோதரர்கள், படிக்கும் காலத்தில் ஆலயத்தில் சந்தித்த சிறுவன் என்றெல்லாம் எத்தனை வகையான பிரிவுகள், துயரங்கள், அவலங்கள். இவர்களும் வாழ்ந்து தானே ஆகவேண்டும். இவர்களேடு ஒத்த துயரம் தானே தமிழினியின் துயரமும்,
பெற்றோருக்குத் தமிழினி ஒரேயொரு மகள் என்பதால் எவ்வளவு ஆசையாகவும் அன்பாகவும் கண்ணுங்கருத்துமாகவும் வளர்த்து வந்தார்கள். அந்தக் குலக்கொழுந்து செழித்துப் படரவென்று நல்லதொரு கொழுகொம்பைத் தாங்களே தெரிவுசெய்தார்கள். நடந்தது என்ன? விதி விளையாடியதா? அல்லது மிதுனுக்குத் தமிழினி செய்த துரோகமா? தமிழினியின் நெஞ்சம், தான் செய்தது துரோகம் என நினைக்க மறுத்து விதியின்மேல் பழிபோட்டது.
"அம்மா பிஸ்கற் வாங்கித்தாங்கோ"
என்ற வார்த்தை கன்வில் ஒலித்ததுபோல் ஒலிக்க சிறுபெருமூச்சொன்றைஉதிர்த்தவண்ணம் பைசிக்கிளை ஒரமாக நிறுத்திக்கொண்டவள்துயவனையும் இறக்கிக்கொண்டு இரு பக்கங்களையும் நன்றாக அவதானித்துவிட்டுக் கடைவீதிக்கு இறங்கினாள்.
கடையை அணிமித்ததும் குனிந்து பொருட்களை அடுக்கிக்கொண்டிருந்த வாலிபன் நிமிர்ந்ததும் ஒரு கணம் திக்குமுக்காடிவிட்டாள்தமிழினி. யாரை மறந்து ஐந்து வருடங்கள் ஆகின்றதோஅவனுடைய தோற்றம். முகச்சாயல் எல்லாம். மிதுனின் குணாதிசயங்களை விரும்பி, வியந்து பின்பு அவனை அன்புடை நெஞ்சம் --- நெல்லை லதாங்கி

Page 38
- 60 - மணப்பது நடவாத காரியம் என்ற நினைவு துரத்திய வேளையில் விலகி நின்றவள் தமிழினி. திடீரென அவன் நினைவு வந்ததும் அவன் தன்னை அடையப்பட்ட முயற்சிகள், அதனை தான் உதாசீனம் செய்தவிதம்யாவும் அவள் நெஞ்சில் ஒருகணம் வந்து முட்டிமோதின.
"அன்ரி என்ன வேணும்”
வாலிபன் கேட்ட கேள்விக்கு தனது மலைப்பைக் காட்டிக் 6asterett D6s
"பிஸ்கற் தாப்பா"
என்று பதிலளிக்க முடிந்ததே தவிர பிஸ்கற்றைத் தெரிவுசெய்ய முடியவில்லை.
"சொக்லேட் கிறீம் பிஸ்கற் தாங்க மாமா” குட்டிப்பயல்செல்லமாகக்கொக்கரிக்கவாலிபன்சிரித்தவாறுஅந்த பிஸ்கட்டை எடுத்து நீட்டினான். தூயவன் அன்னையைப் பார்த்தான்.
“வாங்கப்பா. நான் பணம் கொடுக்கிறேன்"
தமிழினிகூற தூயவன் வாங்கிக்கொண்டான். பைக்கற்றைக் கொடுக்க முன்பே பறித்துக்கொண்டு போகும் இக்காலச் சிறுவர்கள் மத்தியில் இருகரங்களையும் நீட்டி பிஸ்கற்றைப் பெற்றுக்கொண்ட விதம் கடைக்கார வாலிபனை வியப்படைய வைத்தது. இந்த மழலையின் பண்பைப் பார்த்துப் பெருமிதப்பட்டான் கடைக்கார வாலிபன். அதே நேரம் தமிழினியின் முகத்தை நேருக்கு நேர் பார்த்தவனால் ஜீரணிக்க முடியவில்லை. நெற்றியில் விபூதிக்கிறலே தவிரமங்களகரமான குங்குமம் இல்லை. அவன் பார்வை கழுத்துக்கு இறங்கியது. முறுக்குச் சங்கிலி ஒன்று கழுத்துடன் ஒட்டியவண்ணம் இருந்தது. ജൂൺuഞ്ഞു. (ബ്രക്കഥ - ക്ലെബൈ ക്ലെസ്കി

- 61 - seed6 இழந்த 6L60of எப்படிப்பிள்ளையை வளர்த்திருக்கிறாள். தந்தைமார் இருக்கும் பிள்ளைகளே தறுதலைகளாகத் திரியும் இந்தக் காலத்தில் இப்படி ஒரு
sroosturt?
"LLITLDTLD"
என்று கூறிய வண்ணம் பையன் தாயின் கரத்தைப் பற்றியவாறு புறப்பட்டுவிட்டான். கடைக்காரனின் மனம் ஏனோ ஓரிடத்தில் இல்லை. சஞ்சலப்பட்டுக்கொண்டிருந்தது. சிறு வயதிலேயே அன்னையையும் பறிகொடுத்துவிட்டுதாயன்பிற்காக ஏங்குபவன். நல்ல வேளை அந்தச் சின்னஞ்சிறிசிற்கு அன்னை இருக்கிறாள். பிரிவு தரும் சோகத்தை அனுபவித்தாலே தவிர அதன் வேதனையை ரணத்தை எவராலும் புரிந்துகொள்ள முடியாது. உணவருந்திநல்லஉடைஉடுத்திபகட்டாகச் சமூகத்தின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருந்தால் அவர்களுக்கு வேதனை இல்லைஎன்பது கருத்தல்ல. யாவற்றையும் மறந்துவிட்டார்கள் என்பதுமல்ல. அவ்வாறு சொந்தபந்தங்களை இழந்து தவிப்பவர்களை சமூகம் ஏளன்க்கண்கொண்டு பார்ப்பதும், பொறாமையுடன் அவர்களுடன் பழகுவதும் நிறுத்தமுடியாத ஒன்றாகிவிட்டது.
பிரிவை அறியமுடியாத குடும்பங்கள் fe) கும்மாளமடிப்பதுவும் தற்போதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அன்னையைப் பறிகொடுத்தபிரிவின் வேதனையில் வாலிபனின் மனநிலை இவ்வாறிருக்க தமிழினி தனது வீட்டின் வாயிற்கேற்றை அடைந்துவிட்டாள்.
"தமிழினி வந்திட்டியா?”
என்றவண்ணம் பக்கத்து வீட்டு அன்ரி வந்துநின்றாள். AMTST TTT JSM M SM M MMMMS MMMSMM MS TTT LT

Page 39
- 62 - “என்னன்ரி" என்று தமிழினியின் வாய் கேள்வி கணைதொடுக்க கைகள் தூயவனின் ஆடைகளைக் களைந்து கொண்டிருந்தது.
"யாரோ ஒருவர் உன்னைத் தேடி வந்தார் தமிழினி’ அன்ரி அக்கறையுடன் கூற, “என்னன்ரி விளையாடுறீர்களா? என்னையாவது யாராவது தேடி வருவதாவது” விரக்திச்சிரிப்புடன் கூறினாள் தமிழினி’
"தமிழினிஉனக்கு எல்லாம்பகிடிதான். பெயர் கூடஏதோ சொன்னவர்."
அன்ரி இழுத்தவாறு யோசனை செய்ய, தூயவனின் ஆடையை மாற்றிய தமிழினி எழுந்து கொண்டாள்.
"அன்ரி போய் சமையலைப் பாருங்கோ, அதிகமாக யோசிக்க மூளை குழம்பினாலும் குழம்பியிடும்”
தமிழினி சிரித்தவாறு கூறிமுடிக்கவில்லை "ம் வரிசை தமிழினி. ஆ. மதனோ.” அன்ரி யோசனை செய்தவாறு கூற தமிழினியின் இதயத்துடிப்பு நின்றது போல இருந்தது. யாரை பல வருடமாக மறந்து சற்று முன் நினைத்தாளே! அவனா? ஊர்ஜிதம் செய்து கொள்வதற்காக
"அன்ரி; மதனா? மிதுனா?” தமிழினி வினாவ “மிதுன்தான்தமிழினி.எப்படிச் சரியாகச் சொன்னாய்? மிதுன் என்னோடை கிளாஸ் மற் அன்ரி. அதோடை நீங்கள் ஒரு எழுத்தைத் தானே மாற்றிச் சொல்லியிருக்கிறீர்கள். கண்டுபிடிக்கிறது கஷ்டமா?" அன்புடை நெஞ்சம் - நெல்லை லதாங்கி

- 63 - சமாளித்தாள் தமிழினி. அன்ரிவிடைபெற்றுக் கொண்டாள். தமிழினியின் மனம் அமைதி இழந்து தவித்தது. கடையில் அந்த வாலிபனைக் கண்டபோதேமனம் சஞ்சலப்படத்தொடங்கிவிட்டது. அதே மிதுன் நான் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து வந்துவிட்டானா? இப்போதுபடிப்பை முடித்துநல்ல ஒருவேலையில் அமர்ந்துபெரிய குடும்பஸ்தராகி இருப்பார். "ம்" பெருமூச்சொன்றை எறிந்தவாறு தனது அன்றாட வேலைகளில் ஈடுபடலானாள்.
கடமைகளை முடித்துக்கொண்டவள். சற்று உறங்கலாம் என்ற எண்ணத்தில் தூயவனையும் உறங்க வைத்து விட்டுப் பாயில்படுத்துக்கொண்டாள். உறக்கத்திற்கு பதில் மனக்கண்முன் மிதுன் வந்து போய்க்கொண்டிருந்தான். பல்கலைக்கழகத்தில் அவனுடன் பழகிய இனிய நாட்கள். திருமணம் என்ற பந்தத்திற்குள் ஈடுபடாமல் அந்த நினைவுகளுடனேயே வாழ்ந்திருக்கலாம் போல் இப்போது இருக்கிறது. கணவன் உயிருடன் இருந்திருந்தால் மிதுன் என்ற நாமத்தையே உச்சரித்திருக்கமாட்டாள். மிதுனை மறந்தே விட்டாள் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு அவள் கணபன் பிரபா, தமிழினியின் மீது அபார அன்பு வைத்திருந்தான்.
- O9 -
ஒரு இனிய காலைப்பொழுது, மங்களகரமான காற்று வாத்தியம் ஒலிக்க இனிய பொழுது புலருகிறது. வாசலிலே தோரணங்கள் திருமணத்திற்கு வரும் அத்தனை உள்ளங்களையும் வரவேற்க காங்கணம் கட்டிக்கொண்டு காத்து
அர்ைபுடை நெஞ்சம் நெல்லை லதாங்கி

Page 40
- 64நிற்கின்றது. நிறைந்தகனிகளுடன் பொன்னிறத்தில் வாழைமரம் இரண்டு வளைவாகக் கட்டப்பட்டு வாசலை அலங்கரிக்கிறது. கோலமிடப்பட்டு நிறைகுடம் வைப்பதற்கான ஏற்பாடுகளும் தடல் புடலாக நடைபெறுகின்றன.
"5 fspoof 6iguibulbudm
என்ற அன்னையின் குரல் உறக்கம் கலைந்திருந்த தமிழினியின் காதுகளில் நன்றாகக் கேட்டது. தமிழினியின் பூரணசம்மதத்துடன் நடைபெறுமு திருமணம் தான். ஆனாலும் ஒரு விதமான மன, உடல் சோர்வுதமிழினியின் உற்சாகத்தைக் குறைத்தவண்ணம் இருந்தது. உடலை முறித்துஎழுந்துமாடியில் நின்று பார்த்தபோது அலங்காரங்கள் பிரமாதமாகக் காட்சி அளித்தன. இன்னும் ஓரிரு மணித்தியாலங்களின் பின் பிரபாவுக்கு உடமையாகப் போகிறாள். இதுவரை தனக்கு வரப்போகும் கணவன் இவ்வாறு இருக்கவேணும், அவ்வாறு இருக்கவேணும் என்று எந்த நேரத்திலும் நினைத்ததில்லை. ஆனால் அந்தவேளை வரப்போகும் கணவன் மிதுனின் குணாதிசயங்களை ஒத்திருந்தால் தனது வாழ்வு ஒளிமயமாக இருப்பதுடன் எந்தப் பெற்றோருக்காக மிதுனை இழந்தாளோ அந்தப்பெற்றோரையும் மகிழ்வித்தாகவேண்டும் என்றளண்ணம் தலைதுாக்கியது. எண்ணங்கள், ஆசைகள், கனவுகள் எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு திருமணத்திற்கு ஆயத்தமானாள். பெற்றோர், பெரியோர் புடைசூழ மங்கலநாண் தமிழினியின் கழுத்தில் கட்டப்பட்டது.
திருமணம் நடந்த அன்றிரவே மிகச்சிறந்த பண்பாளனாகநடந்துகொண்டான் பிரபா. சிலகணவன்மாராயின் புதிதாக வந்த பெண்ணைப் பேட்டி கண்டே மூடவுட் அன்புடை நெஞ்சம் நெல்லை லதாங்கி

- 65 - வியூக்கிவிடுவார்கள். தமிழினி அதை நன்கு அறிந்திருந்தாள். உனக்கு யார்மீது அதிக அன்பு? யார் யார் உனது நண்பர், நண்பிகள்? காதலித்தஅனுபவம் உண்டா? இவ்வாறான மனதை உறுத்தும் கேள்விகளையெல்லாம் கேட்டுக் கொள்வார்கள். ஆனால் பிரபாவோ
"புதிய இடம், புதிய மனிதர்.சங்கடப்படாமல் எது தேவையானாலும் கேட்டுக்கோ”
என்று அன்பொழுகக் கூற நிமிர்ந்து நோக்கினாள் தமிழினி. அப்பார்வையில் எதனையோ தவறாகக் கூறிவிட்டான் போன்ற பாவனை தமிழினியின் முகஜாடையில் தெரிந்தது.
“இல்லை. நான் உனது முறை மைத்துனன்தான். ஆனால் நாம் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கவே இல்லையே? எங்களது வீட்டுக்குக்கூடநிர்வந்ததில்லையே? அந்த அளவிற்குப் பொத்திப் பொத்தி வளர்த்திருக்கிறார்கள் அத்தை"
தமிழினிக்கு நல்ல மார்க் விழுந்துவிட்டது. அந்த வகையில் நிம்மதிப் பெருமூச்செறிந்தாள் தமிழினி.
“என்ன தமிழ்மூச்சு பெரிதாக வருகிறது” தமிழ் என்ற சொல்லைக் கேட்டதும் தமிழினிக்கு ஒரு மாதிரியாகப் போய்விட்டது. சமாளித்தவாறு,
“இல்லை. தாயைச் சந்தையில் பார்த்தால் மகளைப் பார்க்கத்தேவையில்லை என்று கூறுவார்கள். அதேபோல் அம்மாவுக்கு நல்ல சேர்டிபிக்கற் கொடுத்துவிட்டீர்கள். நான் தப்பித்துவிட்டேன்”
பிரபா கல கலவென நகைத்துக்கொண்டான். அவன் புன்னகையில் ஒரு வசீகரம் தெரிந்தது. பார்ப்பதற்கு முரட்டுச்சுபாவம் உள்ளவன்போல் தோன்றினாலும் உள்ளுக்குள் ഷ്ണഞ്ഞു. ട്രൈബ്രക്കഥ — ട്രൂ ബുക്സിസ്കി

Page 41
- 66 - அவனுடையநல்லதன்மைகள்தமிழினிக்கு தெரியஆரம்பித்தன. ஒரு மாதம், ஒருவாரம் போல் ஓடியது.
திருமணம் என்பது ஒரு துன்பவலை என அனுபவப்பட்டவர் பலர் கருதுகின்றனர். ஆனால் தமிழினிக்குச் சொர்க்கமாகத் தெரிந்தது. பெண்களின் சந்தோஷம், நிம்மதி ஆண்களின் கைகளில் தானே இருக்கிறது. அவர்கள் ஒவ்வொருவரும் தமது மனவிைமார்களைப்புரிந்து அவர்களுடன் அனுசரணையாக நடந்துகொண்டால் திருமணம் சொர்க்கம் தானே. சில மனைவிமார்களும் நல்ல பண்பான ஆண்களையும் கொடுமைப்படுத்தி வாழ்கிறார்கள். அது புறநடை
இரக்கமுள்ளவர்களுக்கும் பரிதாபப்படுபவர்களுக்கும் தான் துன்பங்கள் தேடிவருமா? நல்ல குணம் கொண்ட கணவனைத் தந்ததும் அன்புள்ளம் கொண்ட பெற்றோரைத் தந்ததும் இதற்குத்தானா? மனிதனுடைய பிறப்பே துன்பகரமானது என்பது நிரூபணமாகிவிட்டதே. விழியோரங்களால் வழிந்த கண்ணிர்த்துளிகள் தலையணையை நனைத்தன. அதனைத் தட்டியவாறு மறுபக்கம் திரும்பிப் படுத்துக்கொண்டாள். உறக்கம் வர மறுத்தது.
இன்பக்கடலில் மூழ்கித்திளைத்த தமிழினி துன்ப அலைகளில் சிக்குண்ட அந்த நாள் மறக்கக்கூடிய நாளா? அதிர்ச்சியில் தமிழினி ஜடமாகிவிட்டாள். அன்னை,தந்தை, பிரபா, தமிழரசன் என்று கூட்டிக் குவித்துவைத்த சடலங்களின் மத்தியில் தமிழினியால் வாய்விட்டு அழமுடியவில்லை. அவர்களைக் கட்டித்தழுவி அழும் எண்ணம் ஏற்படவில்லை. கட்டித்தழுவும் அளவிற்கு அவர்களின் உருவங்களும் இருக்கவில்லை. எல்லோரும் தன்னுடன் கூடவே இருப்பது போன்ற உணர்வு. அன்புடை நெஞ்சம் - நெல்லை லதாங்கி

- 67யார் யாரோ வந்தார்கள். தமிழினியைக் கட்டித் தழுவி அழுதார்கள்; புரண்டார்கள்; முகத்துடன் முகம் வைத்துக் குழறி அடித்தார்கள். தமிழினியின் கண்களிலிருந்து நீர் வடிந்து கொண்டிருந்ததே தவிர புரண்டடித்து அழுது ஆர்ப்பாட்டம் செய்ய ஏனோ மனம் இடங்கொடுக்கவில்லை. ܝܝ உயிருள்ளவரை அழுவதற்கு தானே ஆண்டவன் இந்த தண்டனையைத் தந்திருக்கிறார்.நான் அழும்போதெல்லாம் யார் என்னுடன் வந்து அழப்போகிறார்கள்.
"ஆண்டாண்டுதோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தே" என்ற ஒளவையாரின் பாடலின் அர்த்தம் விளங்கியும் அழாமல் இருக்க முடிகிறதா? நாட்கள் நகர நகரத் தமிழினி ஆடிப்போய்விட்டாள்.
நினைக்கும்போதெல்லாம் இறுதி நாளன்று அழாத அழுகை, உருளாத உருளல், புரளாத புரளல், குமுறிக் குமுறி அழுவாள். யார் ஆறுதல் கூறப்போகிறார்கள? அருகில் உள்ளவர்களின் உதவியால் இன்று தூயவனுக்கும் தாயாகிவிட்டாள்.
நெஞ்சிற்குள் ஏதோ அடைப்பது போன்ற உணர்வு. நினைவுகளினால் வடிந்த கண்ணிர் தலையணையை ஈரமாக்கி விட்டது. தலையணையின் பக்கத்தை மாற்றி விட்டு தூயவனைப் பார்த்தாள். அவன் நன்கு உறங்கியவண்ணம் இருந்தான்.
குழந்தைகளாகவே இருந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். துன்பம் என்ற சாத்தானே நெருங்காமல் வாழலாமே. தூயவனை அனைத்துக்கொண்டாள். ஒருவாறாக உறக்கம் கண்களைத்தழுவ உறங்கிவிட்டாள். ജ്ഞilഞ്ഞ (ബ്രക്കഥ - ബൈ ക്ലെff്കി

Page 42
- 68
- 10 -
மறுநாள் இதமாக பொழுது புலர்கிறது. மனதில் ஏதோ புதுவித உற்சாகம். மிதுன் திரும்பவும் வந்துவிட்டால். என்ற எண்ணம் தலை தூக்கியது. தனது துயரத்தைக் கொட்டித் தீர்க்க ஒருஆள் இல்லையே? என்ற அங்கலாய்ப்பு:இதுவரை இல்லாமல் இல்லை. ஒரே சமயத்தில் பல இழப்புக்களை சந்தித்த பாவி அல்லவா அவள் சாதாரணமாக இருந்த தமிழினியின் நெஞ்சம் இழந்தஉறவுகளை நினைத்து ஒரு கணம் கொதித்துக்கொண்டது. கவலைகளுக்கும் மாற்று மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால்.
பெருமூச்சொன்றை எறிந்தாள் தமிழினி. ஏனோ இப்போது இயலாமையால் பெருமூச்சு அடிக்கடிவெளியேறுவதை உணர்ந்து கொண்டாள். வானொலிதான் அவளது உற்ற துணை. வானொலி நிகழ்ச்சிகளை தவறாது கேட்டுவருவபவள் தமிழினி.
இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில்தமிழ்ச்சேவை இரண்டு, தமிழ்ச்சேவை ஒன்று என்று இரண்டு சேவைகள் ஒலிபரப்பு செய்யப்பட்ட காலகட்டத்தில் தமிழினியின் அன்னை அபிராமி ஒரு வானொலிப் பிரியை. தமிழ்ச்சேவை இரண்டின் நிகழ்வுகள் பகல் சேவையாகவும், தமிழ்ச்சேவை ஒன்றின் நிகழ்வுகள் இரவு சேவையாகவும் நடைபெறும். சேவை ஒன்று முடியும் நேரம்தான் தமிழினியின் அன்னை யின் காதுகளுக்கு ஓய்வு கிடைக்கும், அன்னை அபிராமி கிராமத்தில் பிறந்தவளாகையால் dip TLDL5 தோறும் சென்று ஒலிபரப்பப்பட்டுவரும் இளஞ்சுடர் என்ற நிகழ்ச்சியை வாரந்தவறாது கேட்டு வருபவள். அந்த ஆவலில் இளஞ்சுடர் அன்புடை நெஞ்சம் ----- நெல்லை லதாங்கி

நிகழ்ச்சிக்கான பிரதிகளைத் தானே தயாரித்து அனுப்பியதுன் கொழும்பிலிருந்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்து அறிவிப்பாளர்கள் வந்து அந்தச் சிறியதும்பளை தெற்கு என்னும் கிராமத்தில் ஒலிப்பதிவு செய்யுமளவிற்கு வானொலி நிகழ்ச்சிகளுடன் தொடர்புடையவள்.
உறவினர்கள், சகோதரிஒருத்திஅவர்களின் உதவியுடன் அந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒலிப்பதிவு செய்யப்பட்டு வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பாகி அந்தக் கிராமத்திற்கே பெருமை சேர்த்தது. அபிராமி, சகோதரி ஆனந்தி இவர்களின் பெயர்கள் வானொலியில் ஒலிக்குமளவிற்கு வானொலியுடன் ஒட்டுறவாக இருந்தார்கள். அந்த வரிசையில் வந்த தமிழினிக்கு வானொலி உற்ற நண்பன்தானே!
வீட்டுக்கு வீடு தொலைக்காட்சியும் சண் நிகழ்சிகளும் ஒலிபரப்பப்படும் இக்காலகட்டத்திலும் வானொலியே தமிழினிக்கு தோள் கொடுக்கும் கரங்களாக காட்சி அளித்தது. வானொலி இல்லாத வீடுகள் இருந்தாலும் இருக்கும் ஆனால் தொலைக்காட்சி இல்லாத வீடுகள் இருக்கவே இருக்காது என்ற அளவிற்கு நகரப்புறங்களில் மாத்திரமல்ல கிராமங்களிலும் வீட்டுக்கு வீடு ஒவ்வோர் தொலைக்காட்சிப் பெட்டிகள்.
இருபத்துநான்கு மணிநேரமும் தொலைக்காட்சி சேவை நடைபெறுவதால் வானொலி இருப்பவர்கள் கூட வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்கமுடியாத துர்ப்பாக்கிய நிலை. மின்சாரம் இல்லாத வேளைகளில் மாத்திரம் அடிப்பெட்டிக்குள் இருக்கும் வானொலி வெளியில் வந்துவிடும். வானொலி அறிவுபூர்வமான, ஆக்கபூர்வமான விடயங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதுபோல் தொலைக்காட்சி சேவை சில முன்னுரிமை கொடுப்பதில்லை.
கூடிய அளவு பொழுதுபோக்கு சாதனமாகவே மக்கள் மத்தியில் அன்புடை நெஞ்சம் - நெல்லை லதாங்கி

Page 43
- 70 - தொலைக்காட்சி சேவை காட்சி அளிக்கிறது என்பது யாவரும் அறிந்த ஒன்று. தொடர்ச்சியான திரைப்படங்களும், தொடர்ச்சியான நாடகங்களும் இளஞ் சந்ததியினரைக் கவரும் நிகழ்ச்சியாக இருந்தாலும் வயது முதிர்ந்த சிலருக்கு அருவருப்பை ஊட்டும் விடயமாகவும் அமைந்து வருவதை பல தடவைதமிழினி உணர்ந்திருக்கிறாள்.
தொலைக்காட்சிகளில் இடம்பெறும் நாடகங்கள் கூட படிப்பினையை ஊட்டுவனவாக அமைவதில்லை. வஞ்சகம், கது. பொறாமை, சூழ்ச்சி இவற்றையெல்லாம் எப்படிப் பின்பற்றலாம் என்ற பாணிதான் பாத்திரங்களூடாக வெளிப்படுகிறது. படிப்பினையைஊட்டும் சிலநாடகங்கள்கூடபடிப்பினையைஊட்ட வருடக்கணக்காகி விடும். வருடக் கணக்காக, ரசிகர்கள் கதையையே மறந்து விடும் அளவுக்கு வந்து விடுவார்கள்.
ஆனால் வானொலி நாடகங்கள் அப்பிடிப்பட்டதல்ல. முப்பது நிமிடங்கள் அல்லது ஒரு மணித்தியாலத்தில் படிப்பினையை ஊட்டி விடும். தொடர் நாடகங்கள்கூட வருடக்கணக்காக இழுபட்டுச் செல்லாது.
வானொலியைக் கண்கொட்டாது பார்த்துகடந்தகால நினைவுகளில் தன்னை மறந்திருந்ததமிழினி அன்றையதனது சிந்தனையிலிருந்து விடுபடுவதற்காக வானொலியைத் திருகினாள். வானொலியில் ஒலிபரப்பாகிய பாடல் மனதில் பிரபாவுடன் கழிந்தஅந்த இனியநாட்களை மீண்டும்நினைவிற்கு கொண்டு வந்தது.
தமிழினிபுகுந்த வீட்டில் வாழ்ந்தாலும் வாரம் ஒருதடவை பிறந்த வீட்டிற்கும் அழைத்துச் செல்வான் பிரபா. காலை நேரமாகையால் வாகன நெரிசல்கள் அதிகமாகக் காணப்பட்டது. 9ങlഞ്ഞ മന്ത്രകഥ -— ബ്ലോബൈ ക്ലെmജി

- 7 - இன்னும் சிறிதுநிமிடத்தில் இராணுவவாகனங்கள் செல்வதற்காக ாதை மறிக்கப்பட்டுவிடும். அதற்கிடையில் செல்ல வேண்டும் ான்றஉத்வேகத்துடன் மோட்பார்பைக்கைச்செலுத்தினான்பிரபா. சலுத்தியவனின் காதுகளில் விசிலூதும் சத்தம். "இதில் நிற்கத்தான் நேரம் சரி” கூறியவனாகத் தமிழினியைநோக்கினான். தமிழினியின்முகத்திலும் சிறிதுமாறுதல். அன்னையின் வீட்டிற்கு
சல்ல அதிக நேரம் எடுக்கப்போகின்றதே என்ற ஆதங்கம்.
வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள், பைசிக்கிள்கள், ாதசாரிகள் என்று நிற்பவர்களுக்குப்பின்னால் மோட்டபைக்கை நிறுத்திக்கொண்டான் Ligum. ஒருமணித்தியாலம் நிற்கவேண்டுமே. தமிழினிக்கு நேரத்தை சும்மா கடத்துவது பிடிக்காத ஒன்று. அந்த நேரத்தில் என்ன செய்யலாம். சிந்தித்தவளின் கண்களில் அருகிலுள்ள நூலகம் தென்பட்டது.
"வாருங்கள் பிரபா, பத்திரிகையையாவது பார்ப்பம்” என்று பிரபாவை அழைக்க, மோட்டபைக்கை 5JT6Ab85ğ5ğ556ö9059egJLDIT85 நிறுத்திவிட்டு உள்ளே சென்றான் பிரபா. இருவரும் ஒவ்வொருபத்திரிகையாகபுரட்டிவீரகேசரி,தினக்குரல், ழநாடு, உதயன் என்று முழுவதையும் மேலோட்டமாக பார்த்து ழடித்துவிட்டார்கள். மீண்டும் விசிலூதும் சத்தம்.
“9ILIIILII” என்று இறுதியாகப் பார்த்த பத்திரிகையை முடிக்கொண்டு இருவரும் எழுந்து விட்டார்கள். முன்னே நின்ற வாகனங்கள் புறப்பட்டதும் நிறுத்திய மோட்டார் பைக்கை டுத்துக்கொண்டு இருவரும்புறப்பட்டு ஒருவாறாகப்பிறந்தவீட்டை அடைந்துவிட்டார்கள். yண்புடை நெஞ்சம் நெல்லை லதாங்கி

Page 44
- 72தமிழினியையும் பிரபாவையும் கண்டதும் அன்னை, தந்தை, தம்பி அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. எப்போது சனி, ஞாயிறு வரும் என நாட்களை எண்ணிக்கொண்டிருப்பவள் அன்னை. சிலவேளைகளில் பிரபாவுக்கு வேலை என்றால் தமிழினியை மட்டுமாவது கொண்டுவந்து சேர்த்துவிடுவான்.
இரவு உணவு அருந்தி முடித்ததும் எல்லோரும் அதிக நேரம் இருந்து கதைத்துக்கொண்டிருப்பார்கள். நேரம் கழிவதே தெரிவதில்லை.
பலதரப்பட்டவிடயங்கள்பேசிக்கொள்ளப்படும். பரவலாக இடம்பெறும் கிளைமோர்தாக்குதல்கள், இளைஞர்கடத்தப்படுதல், சுற்றிவளைப்பு, படுகொலைகள் இவை பற்றியே அதிகநேரம் பேசிக்கொள்வதுடன் அனுதாபமும் அடைந்து கொள்வார்கள்.
அன்றும் அப்படித்தான் இரவு 26066 முடித்துக்கொண்டு போட்டிக்கோவிற்கு வந்துவிட்டார்கள். முதலில் பேச்சை ஆரம்பித்தவர் தமிழினியின் தந்தை
“இணர்டைக்கும் சாவகச்சேரியிலைஇரண்டு பேரைச் சுட்டுப்போட்டிருக்கிறாங்களாம்"
தந்தை கூறி முடிக்கவில்லை “சாவகச்சேரியிலை மட்டுமே அப்பா, பத்திரிகைகளை எடுத்துப் பாருங்கோ வரிசையிலை போட்டிருக்கிறாங்கள். கோப்பாயிலை சுட்டுக்கொலை, திண்ணைவேலியிலை சுட்டுக்கொலை எண்டு ஒரே கொலைகள்பற்றித்தான்”
தமிழினி வெளியில் செல்லாது வீட்டிற்குள் இருப்பவளென்றாலும்பலதரப்பட்டபத்திரிகைகளையும் வாசிக்கும் பழக்கம் உடையவள். அந்த வகையில் அவளின் விளக்கம்.
திடீரென்று “டும்” என்ற இரைச்சலுடன் பாரிய குண்டு அன்புடை நெஞ்சம் - நெல்லை லதாங்கி

ہے 73.. ۔ ஒன்று வெடிக்கும் சத்தம் மிக அருகில் கேட்டது. அதனைத் தொடர்ந்து துப்பாக்கி வேட்டுக்கள் , நாய்கள் குரைக்கும் சத்தம் தமிழினியின் முகத்தைப் பார்க்கத்தேவையில்லை
“என்னக்கா பயந்துட்டியா? இங்கை இது வழமை” தமிழரசன் சகோதரியை தைரியப்படுத்தினான். "இந்த நேரத்திலும் உந்தவேலை செய்யுறாங்களே. தற்செயலாக பிடிபட்டால் உவங்கடை கதி என்ன? துணிஞ்ச கட்டையள்தான்” பிரபா கூறினான்.
“பிடிபடுகிறதோ அவங்களோ! எத்தனை செக்கிங், எத்தனை றவுண்டப். ஆனாலும் நடக்கிறது நடந்து கொண்டுதானை இருக்குது”
தமிழினியின் அன்னையும் தனது பங்கிற்கு இவ்வாறு கூறினாள்.
“எல்லாம் உயிர்தானே. உதிலை எத்தனை ஆமி செத்தாங்களோ ஆருக்குத்தெரியும். ஒரு தேவையுமில்லாமல் உயிர்கள் அழிக்கப்படுகின்றதே ஒழிய எந்த முடிவை இதுவரை கண்டிருக்கினம். ஆர் இதைப்பற்றி சிந்திக்குதுகள். உயர் பீடங்களிலை இருக்கிறவையினுடைய பிள்ளை குட்டியளின் உயிரைப்பறித்தால்தான் அவர்களுக்கு இந்தத்துன்பம் விளங்கும். சாமாதானத்திற்காகவாவது பாடுபடுவினம். பாதிக்கப்படுவது முழுக்க ஆர்? ஏழை எளியதுகள்தானே?”
இரக்கசுபாவமுடைய தமிழினியின் உள்ளத்திலிருந்து புறப்பட்ட வார்த்தை தொடர்ந்து பெய்த மழைபோல் உதடுவழியாக வெளியேறியது.
வானொலியில் பாடல் முடியவில்லை. பலரது ക്രമuഞ്ഞു. (ബ്രക്ഷt i-m (ബൈ ഖണ്ടിക്കി

Page 45
- 74துயரைக்கண்டுபரிதாபப்பட்டு ஆறுதலளித்ததமிழினிக்கு இந்தக் கொடுமை தேவை தானா? வானொலியில் ஒலிபரப்பாகிய பாடலைக் கேட்டவளப் தனது வேலைகளைத் தொடரலானாள்
- 11 -
ஒருவாறாக வேலைகளை முடித்துக்கொண்டு தூயவனைக் குளிப்பாட்ட கரிய உதயம் கண்களுக்குத் தெரியும் அளவிற்கு வந்துவிட்டது. அருகிலுள்ள ஆலயத்தில் ஒலித்த ஆலய மணியும் 8 மணியை நெருங்கி விட்டது என்பதை உணர்த்தியது. இன்று அதிகநேரம் உறங்கிவிட்டு எழுந்ததுதான் இந்தப் பரபரப்பு. தூயவனைத்துடைத்தெடுக்க 8.10 ஆகிவிட்டது. 8.30 மணிக்குத்தான் நேசரி ஆரம்பிக்கும். அதற்கிடையில் போய்விடலாம். நினைத்தவாறு உடைகளையும் மாட்டி உணவையும் கொடுத்துத் தயார்ப்படுத்திவிட்டாள்.
புத்தகபை, தொப்பி, க, தண்ணிர்ப் போத்தல் என்று அங்கு இங்கு அலையத் தேவையில்லாமல் எல்லாவற்றையும்அந்த அந்த இடத்தில் வைத்திருந்தான் தூயவன். அன்னை தமிழினி பழக்கிவைத்த பழக்கம் அது.
அவசர அவசரமாக தன்னையும் தயார்ப்படுத்தி அறைகளைத் தாளிட்டு விட்டு பைசிக்கிளை எடுத்தாள். காற்றுக் குறைந்து நின்றது. முதல் நாள் இடைவழியில் காற்றுப்போய் சிறுவன் ஒருவனிடம் பம் வாங்கி காற்று அடித்தது நினைவுக்கு வந்தது.
*áféi.*
என்று தன்னையே ஒரு கணம் நொந்து கொண்டு T TTTT AS MM SMMMS MMS MMSSMS MMMMSSSMMMSSS TTTT TTS

- 75தூயவனை ஏற்றி உருட்டத் தொடங்கினாள். பக்கத்து வீட்டு அன்ரியிடம் பம் வாங்கி காற்று அடித்துப் புறப்பட நேரம் 8.30 ஆகிவிட்டது. இன்னும் ஐந்துநிமிடங்களில் சென்றுவிடலாம். ஏன் இந்தப்படபடப்பு, ஆபீசா? ஸ்கூலா? நேசரிதானே என்று மனதை உசாராக்கியவள் எந்த நிறுவனமென்றாலும் உரிய நேரத்தில் நிற்பதுதானே ஒழுங்கு. நினைத்தவேகத்தில் நேசரிவாயிலுக்குச் சென்றுவிட்டாள்.
நேசரியில் தூயவனை இறக்கியவள் பாட்டா காட்டி விட்டு முதல்நாள் சென்ற கடைக்கு பைசிக்கிளைச் செலுத்தினாள். ஒரு பொருட்களும் வாங்கவேண்டிய தேவை அவளுக்கு இல்லை. ஆனாலும் அந்தக்கடைக்குச்செல்லவேண்டும் என்றுஉள்மனம் விரும்பியது.
பாதையைக் கடந்து சென்றவள் ஒரு கணம் திகைத்துவிட்டாள்.எதிரேமிதுன். எந்தவிதமாறுபாடும் இல்லாமல் கல்லூரியில் படித்த காலத்தில் இருந்தவாறே இப்போதும் இருந்தான். நல்லதொரு மனைவி வாய்த்திருக்கிறாள் போலிருக்கிறது. மனதிற்குள் நினைத்தவள் வலியச் சென்று
GBumuon (36hsod என்று bllé o ♦ பில்
"ஹாய் தமிழினி என்று கூறியவாறு எதிரே வந்துகொண்டிருந்தான் மிதுன்.தமிழ்,தமிழ்"என்றுவாய் ஓயாமல் கூப்பிடுபவன்தமிழினி என்கிறானே. இப்போது அவள் அந்நியவள்தானே.
"ஹாய் மிதுன்” என்று பதிலுக்கு மெதுவாகக் குரல் கொடுத்தாளே தவிர அருகில் நெருங்கியதும் அவளால் மிதுனை நேருக்கு நேர் நிமிர்ந்து பார்க்கமுடியவில்லை. காரணம்அவனுடைய நிலைக்கு அன்புடை நெஞ்சம் - நெல்லை லதாங்கி

Page 46
- 76முன்னால் தன்னால் நிற்கமுடியவில்லையே! என்ற ஆதங்கம் ஒருபுறம், நீண்டநாட்களுக்குப் பின் சந்தித்ததால் ஏற்பட்ட தடுமாற்றம் இன்னொருபுறம். பகட்டாகத்துள்ளித்திரிந்ததமிழினி சாதாரண உடையுடன் நெற்றியில் மங்களகரமான குங்குமமின்றி கழுத்தில் பெண்ணுக்குக் காவலான தாலியின்றி கூந்தலுக்கு அழகு சேர்க்கும் மலர்கள் இன்றி, இருக்கும் கோலத்தில் எவ்வாறு நிமிர்ந்து பார்ப்பாள்?
சாதாரண உடையுடன் ஆடம்பரமின்றி காட்சியளித்த தமிழினியைப் பர்க்க மிதுனுக்கு ஒரு மாதிரியாக இருந்தாலும் தமிழினி இன்னொருவனின் மனைவி என நினைத்தமிதுன்.
“என்ன தமிழினி நீண்டகாலத்துக்கப்புறம் சந்தித்திருக்கிறோம். தலையைக் குனிந்துகொண்டிருக்கிறீர்”
எதுவித மனக்கிலேசமுமின்றி மிதுன் சாதாரணமாகக் கேட்டான். மெதுவாக நிமிர்ந்துகொண்டாள் தமிழினி.
"தமிழ்” என்று அந்த வீதியே அதிரும்படி கத்தியவன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அவனுடைய அழகுக்கு அழகூட்டும் கண்ணாடியைக் கழற்றிக் கொண்டான். சிறிது நேர மெளனத்தின்பின் மிதுனே தொடர்ந்தான்.
"தமிழினி என்னம்மா உன்னுடைய கோலம். நீ சந்தோஷமாய் உன்னுடைய கணவனுடன் வாழ்கிறாய் என்று தானே உன்னைப் பார்க்க அன்று உனது வீடு தேடிவந்தேன்”
தனது கண்களில் வடிந்த கண்ணிர்த்துளிகளைத்தனது கைக்குட்டையால் துடைத்தவாறு கூறினான்மிதுன். ஆண்களின் கண்களிலிருந்து வழியும் ஒரு துளி கண்ணிர் பெண்களின் கண்ணிரோட்டத்திற்கே சமமாகி விடுமே. தமிழினியின் அன்புடை நெஞ்சம் - நெல்லை லதாங்கி

- 77 -
கண்களிலும் நீர் பனித்தது.
"ஐயோ மிதுன்”
என்று தனது துயரத்தைக் கொட்டித் தீர்க்கவேண்டும் போல அவள் உள்மனம் சொல்லியது. ஆனாலும் அதற்குரிய இடம், காலம் அதில்லை என்று நினைத்தவாறு.
“மிதுன் என்மீது நீங்கள் வைத்தஅன்பிற்கு நான் செய்த துரோகம், அனுபவிக்கிறேன்"
என்று விழியோரமாக எட்டிப்பார்த்த கண்ணிரைத் துடைத்தவாறு கூறினாள்.
"தமிழினி என்ன சொல்லுறீர். நீர் எனக்குச் செய்த துரோகமா? நெவர், ஒருபோதுமில்லை. பெற்றவர்களுக்காகவும், உடன் பிறந்தவர்களுக்காகவும் செய்யும் தியாகம் இருக்கிறதே! அதன் மூலம் கிடைக்கும் சுகம், நிம்மதி ஒன்றிலையும் S6ö606ou JLöLDIT”
மிதுன் கூற வீதியில் நின்றுகதைபப்பது மனதிற்கு ஒரு மாதிரியாக இருக்க, சைக்கிளை உருட்டத்தொடங்கினாள்தமிழினி. பைசிக்கிளைப்பார்த்தவாறுபின்த்ொடர்ந்தான்மிதுன் பைசிக்கிள் வோறாக இருந்தாலும் என்னென்னவோ ஞாபகங்களைக் கொண்டுவந்தது. அவற்றையெல்லாம் ஒரு புறமாக உதறித் தள்ளிவிட்டு, தமிழினியின் துயர வரலாற்றைக் கேட்டுத் தெரிந்து கொண்டான். அதன் பின் தமிழினியின் வீடு செல்ல மிதுனின் மனம் ஏனோ விரும்பவில்லை. தனித்து வாழும் தமிழினிக்குத் தன்னால் அவப்பெயர் வரக்கூடாது என்று நினைத்துக் கொண்டான்.
ബlഞ്ഞു. ട്രൂഥ -— (ബൈ ക്ലെIള്ളി

Page 47
- 78“என்ன மிதுன் பேசாமல் வருகிறீர்கள். என்னைப்போல எத்தனைபெண்கள் இந்தநாட்டில் பாரிய இழப்புக்களைசந்தித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பிரிவினால் ஏற்படும் இழப்பு இருக்கிறதேமிதுன், அதை அனுபவிப்பவர்களுக்குத்தான் அதன் வேதனையும் வலியும் தெரியும். அப்பிடிவாடுபவர்களைக் கூட இந்தச் சமூகம் கேலியும் கிண்டலும், நெருக்குதல்களும் கொடுத்துக் கொண்டுதானே இருக்கிறது. நிம்மதியாக வாழ விடுகிறதா?”
மீண்டும் தமிழினியின் விழியோரங்களில் நீர். “மிதுன் பிரபாவுடன் எவ்வளவு அந்நியோன்னியமாய் வாழ்க்கை நடத்தினேன். தெரியுமா? கண்ணுறு விழுந்ததுபோல் அவரையும் இழந்து எனது பெற்றோரையும் இழந்து."
மனதைக் கட்டுப்படுத்த முடியாமல் விக்கி விக்கி அழுதாள்.
"ப்ளிஸ் தமிழினி, கொஞ்சம் அமைதியாய் வாரும். சன நடமாட்டம் இல்லாத இடம். ஆகையால் பரவாயில்லை. அல்லது நீர் இப்பிடி அழுவதைப் பார்த்து என்னைத்தான் தப்பாக நினைக்கப் போகிறார்கள். விதிவழிநடப்பதுதானே வாழ்க்கை” சாமாதானம் செய்தான் மிதுன். தொடர்ந்து, "தமிழினி இந்தாரும் என்னுடைய அட்ரஸ். உம்முடைய வீட்டிற்கு நான் வருவது சரியில்லை. என்னுடைய வீட்டிற்கு நீர் வரலாம்தானே".
தமிழினி தலையை மட்டும் ஆட்டியவாறு அட்ரஸை வாங்கிக்கொண்டு பைசிக்கிளில் புறப்பட்டு விட்டாள்.
அன்புடை நெஞ்சம் நெல்லை லதாங்கி

- 79- 12 -
மிதுனின் மனக்கண்முன் தமிழினி இரண்டு கோலங்களில் வந்து போய்க்கொண்டு இருந்தாள். ஒன்று தற்போது பார்த்த வெறுமையான கோலம். இன்னொன்று கல்லூரியில் படித்தகாலங்களில்சாறிக்கேற்றபொட்டு, வுல்பான்ட், செருப்பு என்று எல்லாமே பொருத்தம் பார்த்து அலங்கரிக்கும் அணிகலன்களுடன் தோன்றும் காட்சி. நினைக்க நினைக்க நெஞ்சம் கனாங்கொண்டது.
"தமிழ் உனக்கா இந்த நிலை"
மிதுனின் வாய் தன்னையுமறியாமல் முணுமுணுத்தது.
எதுவுமே நிரந்தரமில்லை என்பது தமிழினியின் வாழ்க்கையின் மூலம் நிரூபணமாகிவிட்டதே. இதனை உணராமல் மனிதர்கள் படும்பாடு, ஆடும் ஆட்டங்கள், அடிக்கும் கொட்டங்கள் கொஞ்சனஞ்சமா? உறவுக்கும் உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்த காலம் போய் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் காலமல்லவா இது. தேவைக்கு மட்டும் உறவு இருந்தால் போதும் என்று நினைத்து வாழ்பவர்கள் கூட இந்தக் காலத்தில் வாழ்பவர்கள் தானே. முன்னைய காலத்தில் இருந்த கூட்டுக் குடும்பம் எவ்வளவு மகிழ்ச்சிகரமானது. போட்டி பொறாமை எதுவும் இல்லை. 'அன்பே இன்ப ஊற்று, அன்பே இன்ப ஜோதி, அன்பே உலகமகாசக்தி என்று வாழ்ந்தவர்கள் இன்பமாக வாழ்ந்தார்கள்.
இன்று ஒவ்வொரு மனித மனத்திலும் சந்தோஷம் இல்லை. நிம்மதி இல்லை. மனதில் வஞ்சகம், சூழ்ச்சி. என்னை விட்டால் யாருமில்லை என்ற மமதை. அன்புடை நெஞ்சம் நெல்லை லதாங்கி

Page 48
80 - தமிழினியின்மாற்றம்மிதுனை இந்தச்சமூகத்தைப்பற்றி இவ்வாறெல்லாம் சிந்திக்கவைத்தது. மாறாக பணத்தைதுச்சமாக மதித்து கல்விக்கும் ஒழுக்கத்திற்கும். முக்கியத்துவம் கொடுத்து வாழ்பவர்களும் ஒரு ஓரமாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். பொதுவாக மிதுன் நினைத்தானே தவிர தமிழினியும் மிதுனைப்போல்பணத்திற்கும்பனப்பேய்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பவளில்லை.
நாட்கள்உருண்டோடதூயவனுடன் ஒருவாறாக வீட்டைக் கண்டுபிடித்து மிதுனின் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் தமிழினி. கேற்றைத் திறந்ததும் வாயிலிலே சீராகக் கத்தரிக்கப்பட்ட புபோலங்கொடிதமிழினியை வரவேற்றுக்கொண்டது. பயன்தரும் புடோலாங்கொடி நிழலுடன் அழகையும் சுத்தமான காற்றையும் சேர்த்து தருகிறதே! மிதுனின் கைத்திறனை மனதிற்குள் புகழ்ந்தவாறு நடந்தவளின் காதுகளில்
"அம்மா வடிவான கீரை” என்று தூயவன் திடீரென ஆர்ப்பரித்ததும் நடைபாதை இரு ஓரங்களையும் அவதானித்தாள். அழகுக்காக சிறிய குறோட்டன்கள் நட்டதுபோல் கீரை செந்நிறத்திலும் பச்சையிலும் ஒரு வர்ணக்கோலத்தில் நாட்டப்பட்டிருந்தது.
“மிதுன் நீயாபா?.." ஒரு கணம் உணர்ச்சிக் கொந்தளிப்பில் அட போட வைத்துவிட்டது.
“என்னம்மா சொல்லுறீர்கள்?" என்று தூயவனும் தாயின் கையைப் பற்றியவாறு கேட்க “கீரை அழகாய் இருக்கிறதல்லவா? என்று தூயவனின் பக்கம் சாய்ந்தாள் தமிழினி. TT TTTT SMSM SMM SM SM MS MMS MMS TH T

- 81 - அதனைத் தொடர்ந்து வாழை மரங்கள். அவை ஒரே நிரையில் வைக்கப்பட்டிருந்தது. குட்டிகள் பெருகியது தெரியாத அளவிற்கு நேர் சீராக வெட்டப்பட்டுப் பார்ப்பதற்கு ஒழுங்காகவும் ரம்மியமாகவும் காட்சிதந்தது. தூரத்துக்குத்தூர ஓரிரு மாமரம், பலாமரம், தேசி என்று ஒரு பெரு நிலப்பரப்பையே கொண்டிருந்தது மிதுனின் இல்லம்.
வயதான ஓர் அம்மா எட்டிப்பார்த்துவிட்டு தமிழினியை நோக்கி வந்துகொண்டிருந்தார். அருகில் சென்றதும்
"யார் பிள்ளையஸ் நீங்கள்?" அந்த அம்மாவின் முகபாவத்தின் மூலம் முன்பின் அறியாதவர்களாக இருக்கிறார்களே என்ற கருத்து வெளிப்பட்டது. "அம்மாநான்மிதுனோடை ஒன்றாய் காலேஜிலைகல்வி கற்றனான். இது என்னுடைய மகன்” தமிழினி கூறி முடிக்கவில்லை
“மிதுன் சொன்ன தமிழினி நீயா அம்மா, வா! வா! உள்ளை வாம்மா. உன்னை மீண்டும் கண்ட அந்தநாள் அவன் 2-pres36 &6ô6o6ouLibLDT. உன் நினைவுதான் வாய்விட்டு சொல்லி சொல்லி அழுதானம்மா. எனக்கே உன்னுடைய நெற்றியைப் பார்க்க கஷ்ரமாய் இருக்கு. அவனுக்கு இருக்காதாம்மா”
அம்மா, அம்மா என்று அன்பொழுக அழைத்த அந்த 9LibLDT மிதுனின் அன்னையாகத்தான் இருக்கவேண்டும்: என்பதை ஒரு சில விநாடிகளில் புரிந்துகொண்டாள் தமிழினி.
“என்னம்மா ஒரு மாதிரியாகப் பார்க்கிறாய். நான் மிதுனின் அம்மா, கற்பகம்”
அன்னை கூற அன்புடை நெஞ்சம் --- நெல்லை லதாங்கி

Page 49
- 82 - “மிதுன் ஏன் இவ்வளவு அன்புள்ளம் கொண்டவராக இருக்கிறார் என்று அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு. அதற்கு நீங்கள்தான் காரணம் என்று இப்போது புரிந்துவிட்டதம்மா”
தமிழினி முகஸ்துதிக்காகக் கூறவில்லை. கற்கபகமும் தன் புகழ்ச்சியைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தமிழினி, தூயவனுடன் கற்பகமும் சேர்ந்து உட்கார்ந்தவாறு
"மிதுலா மிதுலா" என்று குரல் கொடுத்தாள். கூப்பிட்ட குரல் ஒயமுன்பே "6666OTLDLD" என்று வந்துநின்றாள் மிதுலா. "குடிக்க ஏதும் கூலாய்க் கொண்டுவாம்மா” மிதுலா உட்செல்ல "தமிழினி உம்மை அறிமுகம் செய்தால் மிதுலா இந்த இடத்தைவிட்டுநகரமாட்டாள். அந்த அளவிற்கு உன்மேல் பிரியம் வைத்திருக்கிறாள்"
'மிதுன் என்னைப்பற்றி எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறார் போல மனதிற்குள் நினைத்த தமிழினி கற்பகத்தின் உரையையும் கவனிக்கத்தவறவில்லை.
"அம்மா! இந்தக் காலத்திலை உன்னைப் போல ஒரு பிள்ளையா? கண்ணுக்குக் கண்ணாக ஊனின்றி உறக்கமின்றி தங்கடை உதிரத்தை பாலாக்கி வளர்த்துவிட, மனைவிமாரின் மக்குடி மாசாலாத்துக்களுக்குள்ளாகி பெற்றோரையே எடுத்தெறிஞ்சு வாழுற இந்தக் காலத்திலை, உன்னைப்போல. நினைக்கவே உள்ளம் புளகாங்கிதம் அடையுதம்மா” அன்னை தமிழினியின் புகழ்பாட "இல்லையம்மா என்னுடன் மிதுனும் பாராட்டப்பட அன்புடை நெஞ்சம் - நெல்லை லதாங்கி

- 83 -
G8660driguus"
தமிழினி கூறிமுடிக்கவில்லை
"நீ. "ம்". என்று ஒரு வார்த்தை கூறியிருந்தால் எங்களையெல்லாம் தூக்கி எறிஞ்சிட்டு உனக்குப் பின்னால் ஓடி வந்திருப்பானம்மா மிதுன். எல்லாத்தியாகத்துக்கும் நீதானம்மா காரணம். என்ன...? உனது விதிஉன்னைப் போட்டு ஆட்டுது?
மிதுலா நெல்லிக்கிறஸ் யூசை கொண்டுவந்து நீட்டினாள். மிதுன் சொன்ன அடையாளங்களிலிருந்து மிதுலா தமிழினியையாரென இனங்கண்டுகொண்டுவிட்டாள். ஏதோ ஒரு நினைவில்
"அண்ணி எடுத்துக்குங்க” என்றாள்
தமிழினியும் கற்பகமும் திகைத்துக் கொண்டனர். அவர்களின் திகைப்பைக் கவனியாதவள்போல்
"அன்ரி எடுங்க”
என்று மீண்டும் புன்னகை செய்தவாறு நீட்டினாள். அண்ணி என்று தான் முதலில் அழைத்தாள். கற்பகத்திற்கும் தமிழினிக்கும் நன்றாகக் கேட்ட்து. இவர்களின் திகைப்பைக் கண்டதும் மழுப்பிவிட்டாள் மிதுலா.
தொடர்ந்து கற்பகம், மிதுனின் தியாகத்தையும், திருமணம் செய்யாது தனது உடன்பிறந்தவர்களுக்காக வாழுவதையும் இனிமேல் தங்களது குடும்பத்தில் தமிழினியும் தூயவனும் இரு அங்கத்தவர்கள் என்பதையும் நாசுக்காகக் கூறி முடித்தாள்.தமிழினி ஒரு கணம் குழம்பிக்கொண்டாள்.
"அம்மா. நீங்கள்."
குரல்தடுமாறியவளானாள்
"தமிழினி நீர்எந்த உறவை எடுத்துக்கொள்ள அன்புடை நெஞ்சம் நெல்லை லதாங்கி

Page 50
- 84 - விரும்புகிறீரோ அந்தஉறவை எடுத்துக்கொள்ளலாம். மிதுனைத் தவிர நாங்கள் எல்லோரும் ஒன்றாய் சேர்ந்து எடுத்த முடிவு”
"உறவு அது இதென்று. என்னம்மா சொல்லுறியள்” தமிழினிபுரியாத பயம் கலந்த குரலில் வினவினாள்
*உன்னுடைய உடன்பிறவா உறவுகள் அம்மாநாங்கள். சொந்தங்கள் தானம்மா இந்தக் காலத்திலை எதிர், நட்பு எல்லாவற்றையும் விட மகத்தானது. உனது பொருட்கள் தளபாடங்கள் எல்லாவற்றையும் கொண்டுவர நாங்கள் உதவி 6&uupub. 856.606)6Ou 6iLLBLDIT"
கூறிய கற்பகம் எழுந்து உள்ளே சென்றுவிட்டாள். "அண்ணி அழகாய் இருக்கிறீங்கள்” என்று மிதுலா தமிழினியின் காதில் கிசுகிசுத்து விட்டு சென்றுவிட்டாள். இந்த நிலையிலேயே தமிழினியின் அழகு பாராட்டுப் பெறுகிறதென்றால் ஒழுங்காக அலங்கரித்து ஆடம்பரமான உடையும் அணிந்து பெண்களுக்குகே உரித்தான அணிகலான குங்குமத்தையும் அணிந்துகொண்டால். நினைத்த மாத்திரத்தில் உள்ளம் கொதிப்படைந்து அதனால் உண்டாகிய வெப்பம் அடி வயிற்றிலிருந்து பெருமூச்சாக வெளியேறியது.
பூக்கள் என்றால் அதிகம் பிரியம் தமிழினிக்கு. 6ம் நம்பரில் பிறந்தவர்கள் ரசனையுள்ளவர்கள்என்றுபுத்தகங்களில் வாசித்திருக்கிறாள். பிறர் சொல்லக் கேட்டும் இருக்கிறாள். அது உண்மையுங் கூட. பூக்களிலே மல்லிகை தமிழினியைக் கொள்ளை கொள்ள வைக்கும் பூ. எங்கு கண்டாலும் ஒரு பூவையாவது பறித்து தலையில் கடாமல் விடமாட்டாள். அப்படி
அன்புடை நெஞ்சம் - நெல்லை லதாங்கி

حد 85 م பூவின் மேல் அலாதிப்பிரியம் கொண்டவள் இன்று..?
சமூகம் கொண்டு வந்த பாரம்பரியத்தால் பூவைக்கூடத் தலையில் சூடமுடியாமல் எத்தனை இளம்பெண்கள் இன்னற் படுகிறார்கள். பெண்களுக்கே மங்களகரமான குங்குமத்தையும் பூவையும் ஏன் திருமணம்செய்துவிதவையாக நிற்கும்பெண்கள் அணியக்கூடாது? திருமணம் செய்யும் முன்பு குங்குமத்தைப் பெண்கள்அணியவிடுவதில்லை. திருணம் நடந்த அன்று தன் கணவனால்தரிக்கப்படுகிறது. அதனைத்தரிக்கவேண்டாம் என்று கூறுவது ஓரளவு நியாயம். ஆனால் பூ.? சிறுவயதிலிருந்தே பூவைச்சூட்டிஅழகு பார்க்கும் பெண்கள்விதவையானதும் அந்தப் பூவைச் சூட ஏன் மறுக்கிறது இந்தச் சமுதாயம். கேள்விக்கணைகள் மனதில் பாய எழுந்து கொண்டாள் தமிழினி. எல்லோரிடமும் விடைபெற்றுபஸ்தரிப்பிடத்திற்கு இருவரும் வந்து சேர்ந்தார்கள்.
மாலை நேரமாகையால் சனக்கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. வந்து நின்ற பஸ்ஸிலும் ஏறமுடியாத அளவிற்கு நெரிசலாக இருந்தது. அடுத்தபஸ்ஸிற்காகக் காத்துநின்றார்கள்.
"ஹாய் தமிழ்” என்று அழைத்தவாறு வந்து கொண்டிருந்தாள். பல்கலைக்கழகத்தில் ஒன்றாகக் கல்விகற்றவைஷ்ணவி. பழைய தமிழினியாக இருந்திருந்தால் பதிலுக்கு தானும் ஹாய் வைஷ் என்று அழைத்திருப்பாள்.
ஆனால் இப்போது முக்காடு போட்டு மூலைக்குள் இருத்தியது போலாகிவிட்டதே! பழகியவர்களுடன் கூட மனம் விட்டுப் பேசமுடியாத அளவிற்கு அவளுடைய நிலை தள்ளப்பட்டுவிட்டதே கண்களைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல் அன்புடை நெஞ்சம் ---- நெல்லை லதாங்கி

Page 51
- 86 - தானே ஒரவாழ்க்கை நடத்துகிறாள்.
“என்ன தமிழ், எவ்வளவு காலத்துக்குப் பிறகு மீற் பண்ணுறம். மெளனமாய் இருக்கிறாய்.”
தமிழினியை நன்றாகப் பார்த்தவளுக்கு அவளுடைய மெளனத்திற்கான காரணம் விளங்கிவிட்டது.
"சொறிதமிழ்” "பரவாயில்லை வைஷ். நீளப்பிடி இருக்கிறாய்” வைஷ்ணவியின் பூரித்த முகமும் குளு குளு என்ற தோற்றமும் ஆடைஅலங்காரமும் நன்றாக வாழ்கிறாள் என்பதைக் காட்டினாலும் சம்பிரதாயத்திற்காகக் கேட்டாள்.
"நான் பாங் ஒவ் சிலோனிலை வேர்க் பண்ணுறன். மனேஜர் போஸ்ற்றும் கூடிய கெதியிலை கிடைச்சிடும். ஆனாலும். இழுத்தாள் வைஸ்ணவி. அவளுடைய தொனியில் சிறிது வாட்டம் தெரிந்தது. தமிழினி போகும் பஸ் வந்து நின்றது. ஆனாலும் பேச்சை இடையில் முறித்துக்கொண்டு செல்வது நாகரிகமில்லை என்றுநினைத்தவளகவைஷ்ணவியின் பேச்சில் கவனம் செலுத்தினாள். வைஷ்ணவியே தொடர்ந்தாள்
"உனக்கு அந்தப் பிரச்சினை இல்லைத்தமிழ். ஆனால் எங்களுக்கு தீராத சாபக்கேடு ஒன்று இருக்கிறதல்லவா”
தமிழினிக்கு ஒன்றும் புரியவில்லை. 'தமிழ் எங்கடை பாங்கிலை எல்லாரும் உயர்ந்த சாதியைச் சேர்ந்தவை. நான் சொல்லயில்லை, அவர்களினுடைய பரம்பரை சொல்லிக்கொண்டிருக்கிறது.”
ஏளனமாகக் கூறியவள் "நானும் இன்னொரு பையனும்தான்குறைந்தசாதி. பல சம்பவங்களிலை நாங்கள் புறக்கணிக்கப்படுறதை
அன்புடை நெஞ்சம் - நெல்லை லதாங்கி

- 87 - அவதானித்திருக்கிறன். பேசுவினம், பழகுவினம் ஆனால் செயற்பாட்டிலை மனம் வேதனைப்படுகிற அளவிலை அவர்களுடைய நடத்தைகள் அமையும். சில வேளைகளிலை என்னுடைய பிறப்பை நினைத்து நானே ஆத்திரப்பட்டிருக்கிறன். எவ்வளவு தான் பெரிய பதவியிலை இருந்தாலும் இது ஒரு சாபக்கேடுதான் தமிழினி. சிங்கள, முஸ்லீம் இனம் இந்த விடயத்திலை பாராட்டப்படவேண்டியது, ஆனால் எங்கடை தமிழ்ச்சனம் அதிலும் வடமராட்சிச்சனம் சீ.
எவ்வளவு பெரியதொரு தாக்கம் வைஷ்ணவிக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதை அவளுடைய வார்த்தைகளிலிருந்து புரிந்து கொண்டாள் தமிழினி
“வைஷ்ணவிநீநினைக்கிறது போலைகவலைப்படுறது போலை எங்கடை பக்கம் உதுகள் பெரிசாய் இல்லை. மாறி
s
நாங்கள் உந்தப் பிறப்பிலை பிறந்திருந்தால்..? எல்லாம் கடவுளினுடைய படைப்பிலை தங்கி இருக்கிறதே ஒழிய, எங்கடை கையிலை ஒன்றுமில்லை. அது தெரியாமல் கொஞ்சம் ஆடுதுகள் உதுகளை எல்லாம்தூக்கிப்போட்டிட்டுநீமுன்னேறுகிறவழியைப் LImü”
தமிழினி இவ்வாறு ஆறுதற் படுத்தவும். தமிழினி செல்லும் அடுத்தபஸ் வந்துநிற்கவும் சரியாக இருந்தது.தமிழினி புறப்பட ஆரம்பித்த போதுதான் அருகில் நின்ற தூயவனைக் கவனித்தாள் வைஷ்ணவி
“இது உன்னுடைய மகனா? அழகாயிருக்கிறான்” என்று தூயவனின் கன்னத்தில் கிள்ளினாள் வைஷ்ணவி.
“சரிவைஷ் இருட்டாகிறதுநாங்கள் வருகிறோம்” என்று கூறி விடைபெற்றுக் கொண்டாள் தமிழினி. அன்புடை நெஞ்சம் --- நெல்லை எதாங்கி

Page 52
- 88 -
பஸ்ஸிற்குள் ஏறிய தமிழினி வைஷ்ணவியைப் பற்றியே சிந்தித்தாள். இது போலை எத்தனை எத்தனை பேர் இவ்வாறான மனக்கவுடத்திற்குள்ளாகிறார்கள். மூக்குள்ள வரை சளி என்றதுபோல் இது தீரக்கூடிய பிரச்சனையில்லை. மனிதன் தெய்வமாக நடக்காவிட்டாலும் பரவாயில்லை. மனிதன் மனிதனாக நடந்து கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். மனிதனை மனிதன் சரிசமமாக நடப்பது நம்கடமை என்று படிக்கிறார்களே தவிர எத்தனை பேர் வாழ்க்கையில் கடைப்பிடிக்கிறார்கள்.
"அம்மாபஸ் புறப்படுகிறது”
என்று அங்கலாய்த்த தூயவனின் அழகுவதனத்தைப் பார்த்துபுன்னகைத்துவிட்டு வெளியே நோட்டம் விட்டாள்தமிழினி.
- 13 -
நாட்கள் வாரங்களாக மிதுனின் அபிப்பிராயம் கேட்காமலே தமிழினியைத் தனது வீட்டிற்குக் கொண்டு சேர்த்துவிட்டாள் கற்பகம். தமிழினியாலும் மறுப்புச் சொல்ல முடியவில்லை. காரணம் மிதுனின் குடும்பத்தின் அன்புப்பிணைப்பிலிருந்து விடுபட அவளால் முடியவில்லை. அன்பு என்பதே பேசிப்பழகி உறவுகள் விரிவடையும் போதுதான் வலுப்பெறுகிறது. இதுவரை காலமும் உள்ளத்துக்குள்ளேயே பூட்டி வைத்த விடயங்கள் அன்புள்ளம் கொண்டவர்களிடம் உறவாடும் போதும் பகிரப்படும்போதும் உண்டாகும் சுகம் இருக்கிறதேஅந்தச் சுகத்தில் திளைப்பதற்கு விரும்பியே தமிழினியும் மிதுனின் இல்லத்தில் தங்கச் சம்மதித்தாள்.
ജ്ഞilഞ്ഞ ഗ്ലൈബ്രകഥ — ട്രൂ ക്ലെfള്കി

- 89 -
உறவுகளிடம் 9 p6IIILTLD65 தாழ்ப்பாளை இருபத்துநான்கு மணி நேரமும் பூட்டி வாழ்பவர்களுக்கு இந்தச் சுகத்தின் சுகந்தம் விளங்க நியாயமில்லைத்தான். அடிபாடுகள் இருக்கும் இடத்தில்தான்அன்பும் இருக்குமிஎன்று சொல்வார்கள். உறவாடாமலே வாழ விரும்பும் சமுதாயத்திற்கு அடிபாடுகள் எகே வரப்போகிறது. அன்பு எங்கே சுரக்கப்போகிறது?
மிதுனின் இல்லத்தில் தங்கினாளே தவிர எல்லா விடயங்களிலும் தனிக்குடித்தனம் தான். ஒன்று கூடும்போது எல்லோரும் ஒரே இடத்தில் ஒன்று கூடுவார்கள் பல்வேறுபட்ட கருத்துக்கள் உரையாடல்கள் தங்கள் தங்கள் தராதரத்திற்கேற்ப பகிரப்படும்.
அன்றும் அப்படித்தான் தூயவனுக்குப் பாடத்தை சொல்லிக்கொடுத்துஉணவூட்டி, உறங்கவைத்துவிட்டுநெடுநேரம் தையல்மிசினுடன்.மாரடிக்க விரும்பாமல் தையல் மிசினை மூடிவைத்துவிட்டு வந்திருந்தாள் தமிழினி.
இதமான காற்று மேனியை சிலிர்க்க வைக்க கண்களை மூடி அந்த ஸ்பரிசத்தை அநுபவித்துக்கொண்டிருந்தபோது கற்பகம், அவளுடைய கணவன் தணிகாசலம், மிதுன், மிதுலா, ஜமீலாயாவரும் வந்துவிட்டார்கள்முதலில் பேச்சை ஆரம்பித்தவர் மிதுனின் தந்தை தணிகாசலம்.
‘இன்று ஒரு ஞாபகார்த்த தினம் என்ன என்று சொல்லுங்கோ பார்ப்போம்”
திடீரென்று இவ்வாறு ஒரு கேள்வியைக் கேட்டதும் மிதுலா, மிதுன்,ஜமிலாயாவரும் ஒருவரை ஒருவர்மாறிப்பார்த்துக் கொண்டார்கள். என்னவாக இருக்குமென்று மூளையைக் குழப்பிய வண்ணம் இருந்தார்கள். தமிழினி பெரிதாகக் LTTTTLL TTT JSMMMS MMMMMSMMSMS S MM S S SSSSS SSAASS S TTTT TS

Page 53
ܚ 90 -
குழம்பவில்லை. காரணம் அவளது மனதில் ஒரு தினம் ஞாபகத்திற்கு வந்தது கூறுவோம் என்று வாய் உதடுகள் எத்தனித்தபோது.
“சரி நான் ஒரு குளு கொடுக்கிறேன்” அவர்களின் குழப்பநிலையைப் பார்த்துவிட்டுத் தணிகாசலம் இவ்வாறு கூறினார்.
"குளூ கொடுத்தால் நான் சொல்லுவேன்” என்றுஜமிலா தந்தைக்கு அருகில் வந்தாள்.
என்ன குளுகொடுக்கிறார் என்றுகேட்டுவிட்டுச்சரியாகச் சொல்லுவோம் . சிலவேளைகளில் தன்னுடைய பதில் தவறாகப் போய் விட்டால் தனது மரியாதை குறைந்துவிடும், என்ற எண்ணத்தில் அமைதியாய் இருந்தாள் தமிழினி.
மிதுன், மிதுலாவின்நிலை வேறு. ஏதோபோட்டிவைத்து பரிசில் கொடுப்பது போன்று இருவரின் மனமும் படக் படக் என்று அடித்துக் கொள்ள அதிகம் யோசித்துக் கொண்டார்கள்.
'பிள்ளைகள் கனக்க யோசிக்குதுகள் அப்பா' கற்பகத்தாலும் பொறுக்க முடியவில்லை.
‘சரி, இன்றுடன் ஆறு வருடங்கள் ஆகிறது அப்பிடியொரு துக்கதினம் தமிழ்ச்சனத்திற்கு ஒருபோதும் வரக்கூடாது. பெற்ற வயிறுகளின் துடிப்பு ஆறு வருடங்கள் சென்றாலும் அடங்குமா?’ குளூ கொடுத்த தணிகாசலத்தின் கண்களும் சாதுவாகக் கலங்கத் தொடங்கின தமிழினி தான் நினைத்த பதில் சரியென நினைத்தவளாக,
“அங்கிள் புதுக்குடியிருப்பிலை நான்கு பொம்மர்கள் வந்து பதினாறுகுண்டுகள் வீசி அறுபத்திரண்டு இளசுகளை. அந்தததினம் தானே அங்கிள்”
அன்புடை நெஞ்சம் --- நெல்லை லதாங்கி

- 91 - தமிழினியால் வார்த்தைகளை சரியாகச் சொல்லிமுடிக்க மனம் இடங்கொடுக்கவில்லை. கண்களிலிருந்து கண்ணிர் பொலபொலவெனஉதிரத்தொடங்கியது. பட்டவர்களுக்குத்தானே அதன் வேதனை தெரியும்.
தமிழினியின் பதில், அவளது மெய்ப்பாட்டுணர்வு அனைவரையும் சிறிது நேரம் மெளனத்தில் ஆழ்த்தியது. அதனைச் சகித்துக் கொள்ள முடியாமல் மிதுலாவும் ஜமிலாவும் மெதுவாக எழுந்து தத்தமது அறைக்குள் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டார்கள். கற்பகம், மிதுன், தமிழினி மூவரும் ஒவ்வொரு பக்கம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். தணிகாசலம் மாத்திரம் தமிழினியை நோக்கி,
“என்னம்மா செய்யிறதுநாங்கள் ஆறுதலானவார்த்தை கூறலாமே தவிர ஆறுதற்படுததிக் கொள்ளவேண்டியது நீதான்” தமிழினியின் கண்களில் நீர்த்திரைகள் எட்டிப்பார்த்தன. ஓடிச்சென்று தமிழினியின் கண்ணிரைத் துடைத்து, கரங்களைப் பற்றி, ஆறுதல் சொல்லவேண்டும்போல்மிதுனின்நாடிநரம்புகள் துடித்தன. அதற்குத்தான் வழியில்லையே!
தமிழினி வந்து ஓரிரு நாட்களிலேயே கற்பகமும் தணிகசலமும் தமிழினியிடம் வந்து மனம் விட்டுப் பேசினார்கள்.
‘அம்மா! நீ மிதுனை மறுமணம் செய்தாலென்ன?” தணிகாசலம் திடீரென இவ்வாறுஒரு கேள்வியைக் கேட்டுவிட்டார். “அங்கிள். நீங்கள். என்ன சொல்லுறீங்கள்?’ தடுமாறினாள் தமிழினி.
"நாங்கள் நன்கு யோசித்துத்தானம்மா இந்த முடிவு எடுத்திருக்கிறம். என்னுடைய குடும்ப பாரத்தை அவன் ஒருத்தன் தனித்து சுமந்தது போதும். இனிமேலாவது அவனுக்கென்று ஒரு ജ്ഞlഞ്ഞു. (Bബ്രകഥ — ട്രൂ ബട്ടുണ്ട്

Page 54
- 92 - குடும்பம் தேவை. நல்ல ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தால் தானம்மா பெற்றோர்களாகிய எங்கடை கடமை முடியும். உன்னை மறக்கமுடியாமல் தானம்மா இதுவரை அவன் திருமணத்திற்கே சம்மதிக்கவில்லை. திருமணம் நீ செய்திருந்தால்கூடவிதவையான உன்னை மணந்துகொள்வான் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கு. என்னம்மா நீ சொல்கிறாய்?
“அங்கிள் இனி எனக்கொரு குடும்பவாழ்க்கையா? நீங்கள் தந்த இந்த வாழ்க்கையே போதும் அங்கிள்”
நெஞ்சில் முட்டியது துக்கமா? மகிழ்ச்சியா? இனம்புரியாத உணர்வில் கூறினாள் தமிழினி.
"நாம் இருவரும் சேர்வதற்குதடையாக இருந்ததே இந்த சாதிப்பிரச்சனை. அப்படி இருக்கும்போது.” யோசித்தவள்
‘இவர்களுக்கு இது தெரியநியாயமில்லைத்தான். ஆனாலும் மிதுன் எல்லாவற்றையும் கூறியவர், நாம் பிரிவதற்கு காரணமாயிருந்த இந்த காரணத்தையும் கூறி இருப்பார் தானே எனது விதவைக்கோலத்தைப் பார்த்ததும் அதனை மறந்துவிட்டார்களா?”
அவர்களுடைய தாராள மனப்பாங்கு தமிழினியைத் திகைக்க வைத்தது. எல்லாம் நல்லபடியாக அமைந்த பெண்களுக்கே இக்காலத்தில்வரன்தேடுவதுகடினமானகாரியம். மிதுனின் தகுதிக்கும் அழகிற்கும், எத்தனையோ பல லட்சங்கள் வாங்கிகன்னிகழியாதபெண்ணைத்தேர்ந்தெடுக்கலாம். ஆனால்
இந்த உயர்ந்த பண்பு யாருக்கு வரும். சாதியில் என்ன இருக்கிறது? சமயத்தில் என்ன இருக்கிறது? ஒவ்வொரு மனித ജ്ഞlഞ്ഞു. (ബ്രക്കഥ -r- ബൈ ക്ലെffിക്കി

- 93 - மனத்திலும்புரையோடியிருக்கும்நச்சுக்களை அகற்றப்படுவதற்கு நல்ல சிந்தனை வேண்டும். நல்ல செயற்பாடு வேண்டும். அச்சிந்தனை செயற்பாடு தணிகாசலம் கற்பகம் குடும்பத்திடம் நிறையவே இருந்தது. எல்லோருமே ஆறு அறிவு நிரம்பப்பெற்ற மனிதர்கள் தான் என்ற எண்ணம் எல்லோருடைய மனதிலும் உதித்துவிட்டால், வைஷ்ணவி போன்ற பெண்கள் இதனைப் பெரியவிடயமாக நினைத்து அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. தமிழினிக்கு தன்மீதே ஒருகணம் வெறுப்பு வந்தது. ஊருக்குபதேசம் உனக்கில்லை என்றதுபோல் தானும் ஒரு காலத்தில் மிதுனுடன் இணையப் பின்னின்றவள் தானே. பழமையில் ஊறிய பெற்றோர்கள் ஒருகணம் மனக்கண்முன்னே வந்து போனார்கள்.
"இன்னாருக்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று என்ற பாடல்வரிகள் எவ்வளவு தத்துரூபமானவைகள்.
“தமிழினி என்னம்மா அதிகமாக யோசிக்கிறாய்? நானும் இவரும் இன்னும் எவ்வளவு காலத்துக்கு இருப்பம்? எல்லோரும் எல்லா நேரமும் ஒரே மாதிரி இருப்பினம் என்றும் என்ன நம்பிக்கை? உனக்கு ஒரு துணை தேவை தமிழினி’
கற்பகமும் ஒத்து ஊதினாள். “அம்மா! அது தான் மிதுன் இருக்கிறாரே திருமணம் என்ற பந்தத்திற்குள் புகுந்து அந்த இல்லற சுகத்தை அனுபவித்துத்தான் துணையாக இருக்கவேணும் என்று அவசியமில்லை. எப்போதும் நண்பர்களாக இருந்துவிட்டுப்போகின்றோம்.”
pങLഞL (Bബ്രക്കഥ - ബ്ലെ ഒക്രfളജി

Page 55
ہے 94 ہے தணிகாசலமும் கற்பகமும் மிதுனுடைய பெற்றோர். அவர்களுக்கும் பேரன் பேர்த்தியைக் கொஞ்சவேண்டும் என்ற ஆசைகள் இருக்காதா? அதற்காக நாம் இருவரும் செய்த தியாகத்தைக் கொச்சைப்படுத்துவதா?
தமிழினி இந்த ஆழ்ந்த அர்த்தத்தில் தான் அவ்வாறு அமைதியாகப்பதிலளித்தாள்.
மிதுனுக்கும் பெற்றோரின் ஆசை தெரிந்திருக்க வேண்டும். அவன் ஆண்மகன் அதிலும் தமிழினியை உயிருக்குயிராக நேசித்தவன். பெற்றோரும் இந்த விடயத்தில் மும்முரமாக நின்று கொண்டதால் தமிழினிக்கு வாழ்வு கொடுக்க சம்மதித்துவிட்டான். அதற்கு தமிழினி மறுப்புத் தெரிவித்தும் கூட அதனைப்பொருட்படுத்தாது தொடர்ந்து அன்பாகவேபழகினான். எவ்வளவுதான் அன்பு மிக்கவர்களாகப் பழகிக் கொண்டாலும் இதுவரை எந்தச்சந்தர்ப்பத்திலும் தொட்டுப்பேசியதே கிடையாது. தொட்டும்பேசும் பழக்கத்தை இந்தச் சமூகம் ஏற்றுக்கொள்ளுமா? அல்லது தமிழினிதான் ஏற்றுக்கொள்வாள? மிதுனது அன்பில் குற்றம் கண்டுபிடித்துவிடுவாளல்லவா?
அருகில் சென்று தமிழினிக்கு ஆறுதல் கூற முடியாத “நிலையில் தன்னைக்கட்டுப்படுத்திக் கொண்டான் மிதுன்.
- 14 -
காலங்கள் உருண்போட மிதுலாவிற்கும் யமிலாவிற்கும் திருமணம் நடைபெற்று கணவன் மாரது வீட்டிற்கே குடிபோய்விட்டார்கள். மனைவிமாரின் வீட்டில் தஞ்சமடைவதை இருவருக்கும் வந்த கணவன்மார் விரும்பவில்லை. வீட்டோடு அன்புடை நெஞ்சம் - நெல்லை லதாங்கி

- 95பெண் எடுக்கும் இந்தக்காலத்தில் இவர்கள் இருவருக்கும் வந்தவர்கள் விதிவிலக்கானவர்கள் தான். ஆனாலும் இருக்கும் வீட்டை இருவருக்கும் பிரித்துக் கொடுத்துவிட வேண்டும் என்று கற்பகம் விரும்பினாள். காரணம் மாமியார் வீட்டில் போய் வாழும் பெண்கள கணவன்மாரால் துரத்தியடிக்கப்படுவதை பல சந்தர்ப்பங்களில் கண்டுகொண்டிருக்கிறாள். அந்தநிலைதனது பெண்பிள்ளைகளுக்கு வந்துவிடக்கூடாதே என்ற நல்லெண்ணத்தில்தான் இந்த முடிவு எடுத்தாள்.
வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி பாம்பீகமாகத் திரியாமல் சொத்துச்சேர்த்தவள் கற்பகம். அதற்காக உண்டு, உடுததி வாழாமல் இருக்கவில்லை. அவ்வாறு இருந்தும் கற்பகத்தை கஞ்சத்தனக்காரி என்று சொல்லுபவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். பிள்ளைகள் வசதியாக வாழவேண்டும் வசதிபடைத்தவர்களோடுஒரளவாவது சமனாக உலாவவேண்டும் என்ற ஒரே நோக்கம்தான் கற்பகத்தின் மனதில் மருமகன் மாரது விட்டுக்கொடுப்பால் தங்களது காலம் வரை அந்த வீட்டில் வாழும் பாக்கியத்தை பெற்றிருந்தார்கள் தணிகாசலம் கற்பகம் தம்பதியினர். அவர்களோடு மிதுன், தமிழினி தூயவன் மூவரும் தங்கி வாழ்ந்துகொண்டிருந்தார்கள்.
ー 15ー
தூயவன் தொடர்ந்து நேசரியில் கல்வி கற்றுக்கொண்டிருந்தான் தூயவனைத்தினமும் பாடசாலைக்குக்
கொண்டு சென்று திரும்ப ஏற்றிவரும் பொறுப்பை மிதுனும்
அன்புடை நெஞ்சம் --- நெல்லை லதாங்கி

Page 56
- 96 ܚ தணிகாசலமும் ஏற்றுக்கொண்டனர்.
அந்தக்காலத்து பத்து வயதுப்பிள்ளைகளுக்கு இந்தக்காலத்து மூன்று வயதுப்பிள்ளைகள் சமன். நவீன காலம் அவர்களின் அறிவை விருத்தி செய்ததோடு அவர்களின் நடை, உடை பாவனையை வயதுக்கு மீறியதாக அமையச் செய்து விட்டது. அந்த வகையில் தூயவனும் சாமர்த்தியசாலியாக நடந்து கொண்டான்.
மிதுலாயமீலா புகுந்த வீட்டிற்கு இடம் மாறியதும் வீட்டுப் பொறுப்புக்கள் யாவும் தமிழினியின் தலைமீது விழுந்தது. அதனைப் பாரமாகக் கருதாமல் தனது கடமையாக நினைத்து அந்தப் பொறுப்புக்களைச் சரிவரச் செய்து கொண்டிருந்தாள். தமிழினிக்கு தம்மால் இயன்ற உதவிகளைச் செய்துவந்தார்கள் தணிகாசலமும் கற்பகமும். இளம் வயதில் உள்ளவர்களே நோய்வாய்ப்பட்டு தமது அன்றாட கடமைகளையே செய்யமுடியாமல்அல்லற்படும் இந்தக்காலத்தில் தணிகாசலமும் கற்பகமும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
மிதுனதுகைவண்ணம்தான் அந்தவீடும் சுற்றுப்புறமும் என்று நினைத்திருந்தாள் தமிழினி. மாறாக மிதுனின் பெற்றோர்களே அதிக சிரத்தை எடுத்து பராமரிப்பதையும் வளரவளர வெட்டிச் சீராக்குவதையும் கண்டிருக்கிறாள். மிதுனும் குரோட்டன்களைக்கத்தரித்துவாய்க்கால்களில் தண்ணிர்பாய்ச்சி உதவுவானே தவிர அவனது பங்களிப்பு குறைவே.
இருவரும் சேர்ந்துதான் அந்த சோலைக்குள் இறங்குவார்கள். இந்த வயதிலும் அவர்களின் ஒற்றுமை, அன்பான உரையாடல் இவை யாவற்றையும் பார்த்து வியந்திருக்கிறாள் தமிழினி.
அன்புடை நெஞ்சம் - நெல்லை லதாங்கி

- 97எந்த நேரமும் கூக்குரல் இட்டுக்கொண்டு வாழும் குடும்பங்களைப் பார்த்து பார்த்து வெறுப்படைந்திருந்த தமிழினியின் மனதிற்கு இது ஒரு மாற்று அநுபவமாக இருந்தது. சில கணவன் மனைவிமார் இளமைப்பருவத்தில் நாய்கடி பூனை கடி என்று வாழ்ந்துவிட்டு முதுமையில் பக்குவப்பட்டு அன்பான குடும்பமாகக் காட்சி கொடுப்பார்கள். சில கணவன் மனைவிமார் இளமைப்பருவத்தில் அன்பொழுக வாழ்ந்துவிட்டு முதுமைப்பருவத்தில் சீறி அடித்து வாழ்வார்கள்.
எது எப்படியோ தமிழினிக்கு ஒரு அனுபவமும் ஏற்பட வில்லை. அநுபவம் பெறமுன்பே அவள் வாழ்க்கை பறிபோய்விட்டதே. எல்லாக் கொடுமைகளையும் விட கொடிய கொடுமை கணவனை இழப்பது. அந்தக் கொடிய துன்பத்தை அநுபவித்துக்கொண்டிருப்பவள் தமிழினி. அப்படிப்பட்ட துன்ப வலையில் சிக்கித்தவிக்கும் பெண்களுக்கு சமூகம் கொடுக்கும் உபாதை. எல்லாவற்றையும் விடக் கொடுமை.
இளம் விதவை பட்டுடுத்தி பகட்டாய் திரியக் கூடாது. ஆனால் முதும்விதவைபட்டுடுத்திப்பகப்பாகத்திரியலாம்.தமிழினி இந்தச் சமூகத்துடன் தான் ஒட்டி உறவாடி வாழ்ந்திருக்கிறாளே. அதனால் சமூகத்திற்கேற்ப வாழப்பழகி இருந்தாள்.
உடைகளைக் கழுவிக கொண்டிருந்த தமிழினியின் காதில்"அம்மா”என்றுகீச்சிட்டான்தூயவன்.தமிழினிஒருகணம திடுக்குற்றுவிட்டாள் சிறிது கோபம் வந்தாலும்.
“வந்திட்டியாப்பா” என்று எழுந்து தூயவனின் உடையைக்கழற்றினாள் தமிழினி. மாற்று உடைதூயவனின் கையில் ரெடியாக இருந்தது. அதனை வாங்கிக் கொடியில் போட்டுவிட்டு வியர்வையுடன் வந்த LTTT TTT JSS MMSMMSMSS MSM MMS MM SSS T TT

Page 57
- 98 - தூயவனைக் குளிப்பாட்டினாள். தூயவனின் முகம் சிறிது வாட்டமாகக் காட்சி அளித்தது.
“என்னப்பா! பசிக்கிறதா? முகம் வாடி இருக்கிறது” என்று அக்கறையுடன் விசாரித்தாள். தூயவனது கண்கள் மெதுவாகக் கலங்கத் தொடங்கின. தூயவனின் கண்களில் கண்ணிரைக் கண்டு அறியாத தமிழினிக்கு நெஞ்சம் பதைபதைத்தது.
என்னப்பா? உடம்புக்கு ஏதாவது சரியில்லையா? பதறியவாறு குளிப்பாட்டிய குறையில் உடம்பை நெற்றியைத் தொட்டுப்பார்த்தாள். உடம்பு சாதாரண கட்டில் இருந்தது.
‘தூயவா! ஏன் உன்னுடைய கண் கலங்குகிறது? உன்னுடைய கண்கலங்கக்கூடாது என்றுதானேநான்நித்தமும் கலங்கிக் கொண்டிருக்கிறேன்.”
"உன்கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி என்ற பாடல் வரிகள் போல் தமிழினியின் அன்பு நெஞ்சம் கொதித்தது. தமிழினியின் பொறுமையை சோதனை செய்ய விரும்பாத தூயவன்
‘அம்மா! என்னுடைய நண்பன் நர்மதனின் அப்பா இல்லாத அநாதை என்று சொல்லிவிட்டானம்மா? அனாதை என்றால் என்னம்மா? அப்பா இல்லாதவர்கள் அனாதையா?”
கலங்கிய குரலில் வினவினான் தூயவன்.தமிழினியின் கைகள் தூயவனின் உடம்பில் சோப்பைத்தேய்த்த வண்ணம் இருந்தது.தமிழினியால் உடனே ஒன்றும் சொல்லமுடியவில்லை. மனதைத்திடப்படுத்தியவள்.
மற்றவர்களின்நையாண்டிக்குச் ப்பப்பால் அன்புடை நெஞ்சம் :-ண-ண- நெல்லை லதாங்கி

- 99 - வாழேலாதப்பா. உனக்கென்றாலும் நான் இருக்கிறேன். எனக்கு யாரப்பா இருக்கிறார்கள்? உண்மையிலே நான்தான் அனாதை. ஆனால் நான் ஒருபோதும் மனம்வருந்தியதில்லை. ஆண்டவன் படைப்பில் எல்லோரும் சமமப்பா."
தூயவன் கேட்டகேள்வி ஏதோ, தமிழினிசொன்ன பதில் ஏதோ. தூயவனுக்கு விளங்க நியாயமில்லை. என்றாலும் தனது உள்ளக்கிடக்கையைத் தெரிவித்தாள்.
“எக்ஸியூஸ் மீ, யார் அனாதை?” உத்தரவை வாங்கிய வண்ணம் நுழைந்தான் மிதுன் கிணற்றடி பெரிதானதாகையாலும் தூயவனுக்குக்தானே குளிப்பாட்டப்படுகிறது என்ற காரணத்தாலும் தயக்கமின்றி தோளில் ரவலுடனவந்துநின்றான் மிதுன்.
"அங்கிள்! மனதளவில் நான் அனாதை இல்லை. நீங்கள், தாத்தா, பாட்டி, அம்மா மிதுலாஅன்ரி, யமிலா அன்ரி எல்லோரும் இருக்கிறீர்கள். வெளியுலகத்திற்கு.”
தூயவனின் வார்த்தைகள் மிதுனைக் குழப்பமடையச் செய்ததுடன் ஏதோ விபரீதமாக நடந்திருக்கிறது என்பதையும் புரிந்து கொண்டு தமிழினியை நோக்கினான்.
தமிழினி தூயவனைப் பார்க்க தூயவன் நடந்ததைக் கூறினான்.
"யூ ஆல், அனாதை என்றால் கெட்டிக்காரன், புத்திசாலி என்று அர்த்தம். உன்னுடைய கெட்டித்தனத்தைப் பார்த்து
அதிலும்சிறுமிகூறியவர்த்தை.இதனைஏன்பெரிதுபடுத்துகிறாய்? உடைமாற்றிவிட்டாயல்லவா? தலையைவாரி, பவுடர்போட்டுவிபூதி அணிந்துவிட்டுபாட்டியிடம் வாங்கிச் சாப்பிடு” அண்புடை நெஞ்சம் நெல்லை லதாங்கி

Page 58
- 100தமிழினி உடைகள் கழுவியது குறையில் நின்றதைப் பார்த்துவிட்டு இவ்வாறு கூறினான் மிதுன். கூறியவன் பக்கற்றுக்குள் நீர் நிறைத்து முகம் கழுவத் தொடங்கினான். உடைகளைக் கழுவிக் கொண்டிருந்த தமிழினி,
'மிதுன்! உங்களைப் பார்க்க பார்க்க எனக்குள்ளேயே ஒரு குற்றஉணர்வு”
தமிழினி கூறி முடிக்கவில்லை. "என்னதமிழினி திடீரென்று இப்படிஒருஞானோதயம்?” 'இல்லை. உங்கடை அம்மா அப்பாவினுடைய விருப்பத்தை பூர்த்தி செய்ய முடியவில்லையே மிதுன்”
வார்த்தைகளை இழுத்துக்கூறினாள் தமிழினி. "தமிழினி திருமணம் செய்துதான் வாழவேணுமென்றில்லை. மற்றவர்களுடைய கண்களுக்கு எப்படிப்படுகிறதோ தெரியாது. ஆனால் நான் உன் மீது அளவுக்கதிகமாய் பிரியம் வைததிருக்கிறேன். அதேபோல்நீரும் என் மீதும் என்னுடைய குடும்பத்தின் மீதும் மிகுந்த அன்பு வைத்திருக்கிறீர். ஒரே குடும்பம் போல் ஒன்றாகத்திரிகின்றோம். இதைவிட வேறு என்ன வேண்டும்?"
அந்த விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த மிதுன் “அதிக நேரம் தண்ணிருக்குள் நில்லாதையும், பிறகு நான்தான் கொண்டு திரியவேண்டும்”
அக்கறையுடனும் நையாண்டியுமாகக் கூறிவிட்டு கிணற்றடியை விட்டு வெளியேறினான்.
ஒரு மனைவி செய்யும் அத்தனை பணிவிடைகளையும் தமிழினி மிதுனுக்கு செய்து வந்தாள் அதேபோல் ஒரு கணவன் மனைவிக்கு, ஒரு தந்தை மகனுக்குச் செய்யும் பணிவிடைகள் அன்புடை நெஞ்சம் நெல்லை லதாங்கி

- 101 - அத்தனையையும்மிதுனும்தமிழினிக்கும் தூயவனுக்கும் செய்து வந்தான். எந்த ஒரு உறவால் கணவன் மனைவி உறவு
நிறச்சி க அந்தக்குடும்பம் ஓடிக்ெ കs.
-- 16 سے
மாதங்கள் நகர ஜமீலாவும் கருவுற்று நிறைமாதத்தை அடைந்தாள். தனது மகப்பேற்றைப்பூர்த்தி செய்யும் நோக்கில் பிறந்தவீட்டிற்கு மீண்டும்காலடிஎடுத்துவைத்திருந்தாள். குடும்பம் கலகலப்பாகியது. தணிகாசலம் கற்பகம் தம்பதிகளும், தாத்தா, பாட்டி ஆக தம்மைத் தயார்படுத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களின் ஆவலைத்தீர்த்து வைக்கும் முகமாக அந்தநாளும் வெகுவிரைவாக வந்தது.
கற்பகம், மகள் ஐமிலாவுடன் தனியார் மருத்துவமனை ஒன்றில் தங்கி இருந்தாள். ஜயிலா பிரசவ வேதனையால் துடித்துக்கொண்டிருந்தாள் அங்கு கடமையிலீடுபட்ட டாக்டர், தாதிமார் மருத்துவமாது அனைவரும் மிகுந்த அன்பாகக் கவினித்துக்கொண்டிருந்தார்கள். ஏனைய சேவைகளுடன் ஒப்பிடும்போது மருத்துவசேவை மகத்தானது வைத்தியர்கள், ஊழியர்கள் சிலரின் அதிகாரப் போக்கினாலும் எரிந்து விழும் தன்மையாலும் அவர்களின் சேவை மதிப்பில்லாமல்
கற்பகத்தின் மனதில் ஏனோ இவ்வாறான சிந்தனை உதயமாகிய நேரத்தில் ஐமிலாவும் மகப்பேற்று அறைக்குள் அழைத்துச்செல்லப்பப்பாள்கற்பகம் வேண்பாததெய்வம் இல்லை. ഏ്ങlഞ്ഞു. ബ്രങ്ങൾ — ക്ലെmജി

Page 59
- 102 -
“ஆண்டவா! தாயையும் பிள்ளையையும் வேறாக்கி விடப்பா”
மனதிற்குள் தியானித்துக் கொண்டிருந்தாள் கற்பகம். முப்பதுநிமிடங்கள் கழிந்திருக்கும் குழந்தையின் அழுகுரல் ஓசை ஒன்று.
“மாயவா! கோபாலா, கண்ணா, பாற்கடலில் பள்ளி கொள்ளும் பரந்தாமா! நன்றி அப்பா’ நன்றிப்பெருக்கில் ஒரு தெய்வத்தைப்பலபெயர்கொண்டு அழைத்துநன்றிதெரிவித்தாள்.
மகப்பேற்று அறைக்குள் ஜமீலாவைத்தவிர வேறு ஒருவரும் இல்லை என்பதை அறிந்து வைத்திருந்ததால் தனது பேரப்பிள்ளையின் குரல்தான், என்று ஊர்ஜிதம் செய்துகொள்ள அதிகநேரம் எடுக்கவில்லை. கற்பத்தின் பொறுமையை சோதிக்க விரும்பாததுபோல்.
"ஜமிலாவின் பெற்றோர் யார்?”
என்று வந்து நின்றாள் மருத்துவமாது. கற்பகத்தின் கண்களில் தவிப்பு. அதனை உணர்ந்து கொண்டதுபோல்.
"அம்மா! உங்கள் மகளுக்கு ஆண்குழந்தை சந்தோசம் தானே”
என்று கூறிவிட்டு அவ்விடத்தைவிட்டு நகர்ந்து கொண்டாள்.
அறிவித்தலைப்பெற்றதும் கற்பத்தின் உறவினர் அனைவரும் மருத்துவமனைக்கு அவசர அவசரமாக வந்து சேர்ந்தனர் ஜமிலாவையும் வார்ட்டுக்குள் கெர்னடுவந்து விப்பார்கள். கட்டிலைச் சுற்றிஉறவுகள். தூயவன்தமிழினிஉட்பட அனைவரும் வந்திருந்தனர்.
அன்புடை நெஞ்சம் நெல் லதாங்கி

ܝ 103 - கற்பகத்தின் மனதில் திடீரென சில வருடங்களிற்கு முன்பு அரசாங்க மருத்துவமனை ஒன்றில் நடந்த சம்பவங்கள் நினைவிற்கு வந்தது. இன்று போல அன்று உறவுகளெல்லாம் சுற்றி நின்று சல்லாபம் அடிக்கமுடியாத சூழல். அனுமதிஅட்டையுடன் ஒவ்வொருவராக தாயையும் சேயையும் பார்க்கச்செல்லவேண்டும்.பத்துவயதிற்குக்குறைந்த சிறுவர்கள் பிரசவவார்ட்டுக்குள்ர்நுழையவே GPQugl.
சகோதரியின் மகள் ஒருத்தியை மகப்பேற்றிற்காக மருத்துவமனை ஒன்றிற்கு அழைத்துச் சென்றிருந்தாள் கற்பகம். அந்தக்காலப்பகுதியில்யுத்தநிறுத்தம் அமுலில் இருக்கும்போதே வ்காங்குயுத்த ர் இடம்பெற்றுக்கொண்டிருந்தன. ஊரடங்குச்சட்டம் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட காலப்பகுதியும் அதுதான்.
சகோதரியின்மகளுக்குமுதல் பிரசவம். பெறாமகளைத தனியே விட்டு விட்டு வீடு செல்ல கற்பகததின் மனம் இடம்கொடுக்கவில்லை.பெறாமகள் பிரசவதேவதனையால் முனக கற்பகம் தலையைத்தடவிக் கொடுத்து ஆறுதல்படுத்திக் கொண்டிருந்தாள்.
“அம்மா கெதியாக ஒடுங்க கே.வி. ஒடர் போட்டாச்சு நாங்கள உங்கள் பிள்ளையைப் பார்த்துக் கொள்ளுவம்”
அவசரப்படுத்தினாள் மருத்துவமாது. கற்பகத்திற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. முதற்குழந்தை அனுபவமில்லாத அவளைத்தனித்து விடடுச்சென்றால் சகோதரி தன்னைக் கோபித்துக் கொள்ளுவாளே!
ஆனாலும் பிறர் சினப்பதை விரும்பாத கற்பகம் செய்வதறியாமல் திக்குமுக்காடினாள்.
அன்புடை நெஞ்சம்
நெல்லை லதாங்கி

Page 60
- 104“அம்மா சொல்லுறது விளங்க இல்லையே? பிறகு உதுவழிய நிண்டிட்டு வீட்டுக்குப்போக இராணுவம் விடவில்லை என்றுவந்துநிற்கக்கூடாது.” மீண்டும்மருத்துவமாதுஎச்சரித்தாள். இதன் பிறகு வார்ட்டுக்குள் நிற்க கற்பகத்திற்கு மரியாதைக்குறைவாக இருந்தது. பெறாமகளுக்குநிலைமையை உணர்த்திவிட்டு வாட்டை விட்டு வெளியேறினாள். வெளியேறியவளுக்கு வீடுசெல்லமனம் இடம்கொடுக்கவில்லை. வேறு வார்ட் ஒன்றில் நோயாளிகளுடன் நோயாளியாக இருந்துவிட்டு, பார்வையாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் மீண்டும் வாட்டுக்குள் நுழைந்தாள் குழந்தையுடன் தாயையும் வார்ட்டுக்குக் கொண்டு வந்துவிட்டார்கள்.
கற்பகத்திற்குமட்டற்றமகிழ்ச்சி. அந்த இனிய செய்தியை அறிவிக்க கையடக்கத் தொலைபேசிச் சேவையும் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்ட காலம். கேபிள் தொலைபேசியில் அறிவிக்க முனைந்து அதிலும் பலன் இல்லை. தானும் உதவிக்கு இல்லாது வீடு சென்றிருந்தால் பெறாமகளின் நிலை?
அதற்கிடையில் பெறாமகளின் கணவன் வைத்தியசாலை தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு பிறந்த குழந்தை ஆணா பெண்ணா என்பதை அறிந்துவிட்டார். என்றுதாதிஒருவர்கற்பகத்திற்கு தெரிவித்தாள். ஏதோவீட்டாருக்கு விடயம் தெரிந்துவிட்டது. அந்தவகையில் நிம்மதி.
மறுநாள் எல்லோரும் வந்து குவிவார்கள் என்று மனக்கணக்குப்போட்டாள்கற்பகம். ஆனாலும்விடிந்துவானொலி அறிவித்தல் கேட்டயின்பு தான் எதுவும், என்று நினைத்தவளாக பேரனைத் தூக்கிச் சுத்தம் செய்தாள். தொடர்ந்து அங்கு
TT TTT JSMSMM SMMGM SMMMM MSMMSMMMSMS TTTC TT

- 105தங்குவதற்கு வாட்டில் உள்ள தாதிமார் அனுமதிக்கவில்லை. அத்துடன்
*கே.வி.ஓ ரைம் எவ்வாறு வந்தனிர்கள்? ஒடுங்கோ ஒடுங்கோ என்று பார்வையாளர்க்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில்கூட துரத்தி அடித்தார்கள். கற்ப்பகம் வாட்டைவிட்டு வெளியேறி வெளிநோயாளர் பகுதியில் தஞ்சம் புகுந்தாள். அங்கும் காவலாளியிடம்திட்டுக்கள் வாங்கியபடி வாங்கில் ஒன்றில் சரிந்து கொண்டாள்.
முதற்குழந்தை பெறாமகள் என்ன செய்கிறாளோ தெரியவில்லையே? குழந்தை அழுது குழப்பம் விளைவித்தால் அனுபவமில்லாதவள் என்ன செய்வாள்? அருகில் இருந்தும் கவனித்துக்கொள்ளமுடியவில்லையே. சிந்தித்துக்கொண்டிருந்த நேரம் திடீரென ஷெல் அடி கேட்கத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கடல் அடி, துப்பாக்கிவேட்டுக்கள் என்று சரமாரியாகக் கேட்டது.
நோயாளர்களைப் பராமரிக்க நின்றவர்கள், உத்தியோகத்தர்கள் என்று யர்வரும் கூட்டம் கூட்டமாக நின்றுகொண்டார்கள். இரவுநேரம் ஆகையால்தூரத்தில் அடிபாடு நடந்தாலும் அருகில் கேட்பதுபோல் இருந்தது. சிலமணி நேரங்களில் சத்தங்கள் குறைவடைய மீண்டும் வாங்கிலில் சரிந்துகொண்டாள். அன்று முழுவதும் ஓடி ஆடித்திரிந்த அலுப்பால் உறக்கம் வெகுசீக்கிரமாக அவள் கண்களைத் தழுவிக்கொண்டது.
விடிந்ததும் விடியாததுமாக எழுந்து கொண்டவளால் பார்வைநேரத்திற்கு முன் ஒருவினாடி கூட முந்திச் செல்ல
എങ്ങuഞ്ഞ (ബ്രക്കഥ -— ബ്ലോബൈ ഖുളtളaി

Page 61
- 106 - தன்மானம் இடம்கொடுக்கவில்லை. ஆறுமணிவரை வாட்டிற்கு வெளியே நின்றுவிட்டு ஆறுமணியானதும் உள்ளே சென்றாள். பெறாமகளும் பேரனும் நன்கு உறங்கிக்கொண்டிருந்தார்கள்.
பெறாமகளை எழுப்பி அவளுக்கும் குழந்தைக்கும் செய்யவேண்டிய பணிவிடைகளை முடித்துக்கொள்ள ஆறுமணி முப்பது நிமிடமாகியது. வாட்டில் இருந்த வானொலியில் “பொதுமக்களுக்கான அறிவித்தல் ஒன்று” என்று தலைப்பு அறிவித்தலைக் கேட்டதும் வானொலிக்கு அருகில் சென்றாள் கற்பகம்.
"யாழ்குடாநாடு முழுவதும் அமுலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவு, மறுஅறிவித்தல் வரை தொடர்ந்து அமுலில் இருக்கும்.” இவ் அறிவித்தலைக் கேட்ட கற்பகம் தொடக்கம் வாட்டிலுள்ள அனைவரது முகத்திலும் சோகரேகைகள். பெறாமகளைப் பாத்தாள் கற்பகம். அவளின் முகமும் வாட்டம் கண்டிருந்தது. முதல் முதலில் குழந்தைகளைப் பார்க்க இன்றாவது உறவினர்கள் புடைசூழ்வார்கள் என்று மகிழ்ச்சி வெள்ளத்தில் புரண்டிருந்த அனைவரது முகத்திலும் ஏமாற்றம்.
குழந்தைகளை சுமந்து பெற்றெடுத்த புண்பட்ட உடம்பிற்கு ஒருசரக்குவைத்துக்கொடுக்கக்கூடமுடியவில்லையே. விலைவாசியைப் பாராமல் நானூறு ரூபாய்க்கு விற்ற செத்தலையும் சரக்குச் சாமான்களையும் வாங்கித் திரித்து வைத்திருந்தாள் சகோதரி. பயன் என்ன? எது எப்படியோ தான் எங்காவது சென்றுகொண்டுவருகின்றேன்என்றுபெறாமகளுக்கு கூறிவிட்டு வாட்டைவிட்டு வெளியேறினாள்.
ஊழியர்களுடன் சேர்ந்து தானும் மருத்துவமனையை
அன்புடை நெஞ்சம் - நெல்லை லதாங்கி

- 107விட்டு வெளியேறி நண்பி ஒருத்தி செய்த உதவியினால் பெறாமகளுக்கு உணவுதேடி, மீண்டும் மருத்துவமனை நோக்கி வந்துகொண்டிருந்தாள். நாற்பதுருபாய்விற்றதிட்டல்அரிசிகிலோ நூற்றுப்பத்து ரூபா விற்றது. அந்த நிலையிலும் இடியப்பம் தயாரித்து சரக்கு அரைத்து நண்பி, நண்பியின் அன்னை, நண்பியின்பிள்ளைகள் என்றுஎல்லோரும் ஓடிஓடி செய்தஉதவி மனதில் நிறுத்தி வைக்கவேண்டிய ஒன்று.
காலத்தினால் செய்த உதவிசிறிதெனினும் ஞாலத்தினும் மாணப்பெரிது. என்னதத்துருபமான குறள்.இதனையார் இக்காலத்தில் மனதில்நிறுத்திவாழ்கிறார்கள்?உதவிபெறுவதுடன் சரி. ஆனால் கற்பகம் எந்தச் சந்தர்ப்பத்திலும் மறக்கமாட்டாள்.
இராணுவம் 5LLDfTigdishesroof gobbgsg). வெள்ளைக்கொடி ஒன்றைக் கையிலேந்தியவாறு வந்தமையால் கற்பகத்திற்கு மனதில் பயம் சிறிது குறைந்து காணப்பட்டது. காவலரணுக்கு அருகிலிவந்ததும் இராணுவம்மறித்தது.கே.வி.ஓ பாஸ் கேட்டார்கள். கற்பகம் அர்ைத்த சரக்கு போத்தலைக் காட்டி ஒருவாறு சமாளித்ததும் மருத்துவமனை செல்ல அனுமதி கிடைத்தது.
இராணுவத்திடம் அனுமதிபெற்றுமருத்துவமனைக்குள் நுழைந்தாள். பார்வையாளர்களுக்கான நேரமாக இருந்தது. நேரே வாட்டுக்குள் நுழைந்தாள்.
"எப்படியம்மா வந்தனிர்கள்? வீட்டுக்குப்போகாமல் அங்கை இங்கை சுத்திக் கொண்டு திரிகிறீர்களா?
கற்பகத்தைக் கண்டது காணமுன்பு மருத்துவமாது ஒருத்தி இவ்வாறு கத்தினாள். கற்பகத்திற்கு கோபம் கோபமாக அணியுடை நெஞ்சம் நெல்லை லதாங்கி

Page 62
- 108வந்தது. பார்வையாளர் நேரத்தில் பார்ப்பதற்கு கூட கத்துகிறார்களே. கே.வி.ஓ என்றால் மருத்துவமனையையும் இழுத்துப் பூட்டிவிட்டார்களா? இராணுவமே அனுமதி தந்துவிட்டார்கள். ஆனால் இவர்கள்.? மரியாதைக்காக கற்பகம் எதிர்த்து வாதம் ஒன்றும் செய்யவில்லை.
“என்னம்மா சிலையாகி விட்டீர்கள்? பேரனைக் கண்ட sßGSIIsldm?"
தமிழினி கிண்டல் செய்ய, சுயநினைவிற்குத் திரும்பினாள் கற்பகம்.
"மூன்று வருடங்களுக்கு முன் மருத்துவமனை ஒன்றில் நிகழ்ந்த சம்பவம் நினைவிற்கு வந்திட்டுதம்மா”.
கூறியவள் சுடுநீர் நிரப்புவதற்காக சுடுநீர் போத்தலுடன் வெளியே சென்றாள். ஏனையோரும் உதயமான குழந்தையைப் பார்த்து ரசித்து மகிழ்ச்சிகளைப் பகிர்ந்து கொண்டு வெளியேறினார்கள். தூயவனுக்குக் குட்டிப்பாப்பாவைப் பிடித்து விட்டது. வெளியேற மனமின்றி தமிழினியுடன் வெளியேறினான்.
- 17 -
நாட்கள்நகர்ந்துகொண்டிருந்தது. மிதுனுக்கும் ஆபீசில் ஒரே வேலை. வேலை கூடிய நாட்களில் வீட்டிலும் வந்து எரிந்து விழுவான். கற்பகத்தின் உடல்நிலை இயலாமல் இருந்தமையால் தமிழினியே தனித்து வீட்டு வேலைகளைக் கவனிக்கலானாள்.
ஒருநாள் ஆபிசால் வந்த மிதுன் ஆட்கேசைக் கதிரை ஒன்றில் எறிந்துவிட்டு இன்னொரு கதிரையில் அமர்ந்து
அன்புடை நெஞ்சம் - நெல்லை லதாங்கி

- 109கணிகளை இறுகமூடிக்கொண்டான். இதனை அவதானித்த தமிழினிக்கோ அருகில் சென்று அவனை ஆறுதல்படுத்த வேண்டும்போல் இருந்தது. ஆனால் அவன் தனது எரிச்சலை தன்மீது காட்டி விட்டால் வீண்மனஸ்தாபம் ஆகிவிடுமல்லவா? அதனால் குசினிக்குள் சென்று விளாஸ்கில் ஏற்கனவே ஊற்றியிருந்தரீயினை வார்த்துவந்து
"இந்தாங்கோ மிதுன், ரீயைக் குடியுங்கோ களைப்பு ஆறும்"
மெதுவாக கூறினாள். "ரீ குடித்தால்தான் களைப்பு ஆறுமா? ஆபீசால் வந்து உணவு உண்ணாமல்ரீகுடித்ததைஎப்பவாவது கண்டிருக்கிறீரா? களைப்பு உமக்குத்தான். கொண்டே நீர் குடியும்.”
தேவையற்றுக் கத்தினான் மிதுன். பரிதாபப்பட்டதற்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். மனதிற்குள் புகைந்த வார்த்தையை விழுங்கிக்கொண்டு ரீயுடன் குசினிக்குள் நுழைந்தாள். அழுகை அழுகையாக வந்தது. மிதுனின் இல்லத்திற்கு வந்த பின்பு அவளது கண்களிலிருந்து நீர் வடிய மிதுன் விட்டதில்லை. அப்படிப்பட்ட மிதுன். குமுறிக் குமுறி அழுதாள். குமுறி அழுவதற்கு பெரிதாக ஒன்றும் நடைபெறவில்லை. ஆனாலும் அவளால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இவற்றையெல்லாம் அவதானித்துக்கொண்டிருந்த கற்பகம் மிதுனை ஏசுவது கேட்டது.
"அம்மா! என்னுடைய பேர்சனல் விசயமாக ஒரு ஆபிசுக்கு போனன்அம்மா. சீ. என்ன நிர்வாகம். அதைத் தட்டிக்கேட்ட எண்னை அந்த கிளாக் அவமரியாதை அன்புடை நெஞ்சம் நெல்லை லதாங்கி

Page 63
- 110 ܚ செய்துட்டானம்மா. சில இடங்களிலை என்னமாதிரி நிர்வாகம்
நடக்குது. சில இடங்களிலை உள்ளதுகள் ஒரு வேலைக்குப பத்துதரம் அலையவைக்குதுகள். விளக்கமாய்ச் சொல்லமாட்டினம். ஒரு தேவையுமில்லாமல் காக்க வைப்பினம். படித்த எங்களுக்கே இந்த நிலை என்றால் படிக்காத சாதாரண மக்கள் என்ன செய்வார்கள்? "தன்னைப் GUT6) பிறரையும் நேசி" என்றுபடிக்கிறார்களே தவிர யார்வாழ்க்கையில் பின்பற்றுகிறார்கள்?"
மிதுன் தனது உள்ளக்கிடக்கையினைக் கொட்டித்தீர்த்தான். தமிழினிக்குக் கேட்கவேண்டும் என்ற எண்ணத்தில் சிறிது உரத்துக்கூறினான்.
"உன்னுடைய பிரச்சினையை உன்னோடை வைத்துக்கொள்ள பழகு மிதுன், ‘அவலை நினைத்து உரலை இடிக்கக்கூடாது”
அன்னைகற்பகம் மகனை எச்சரித்தாள்.நிமிடங்கள் சில செல்ல தமிழினியை எடுத்தெறிந்து பேசியது தவறு எனப்பட்டது. அதிலும் தமிழினி தொட்டால் சிணுங்கி என்றும் தெரியும். தெரிந்திருந்தும். மிதுனுக்கு தன் மீதே வெறுப்பு வந்தது. மனச்சாட்சிஉறுத்தியது.
அன்னை கற்பகம் அவ்விடத்தைவிட்டு விலகியதும் குசினி வாசலில் நின்று மெதுவாக எட்டிப்பார்த்தான். தமிழினி முதுகுப்புறம் காட்டிநின்றுகொண்டிருந்தாள். குலுங்கிக் குலுங்கி அழுகிறாள் என்பதை முதுகுப்புறம் ஏறி இறங்குவதன் மூலம் தெரிந்துகொண்டான். எவ்வாறு ஆறுதல் சொல்வதென்று
ഫ്രഞ്ഞilഞ്ഞ (ബ്രക്കഥ -— ബ്ലോബൈ ക്ലെffക്സി

- 111 - மிதுனுக்கு தெரியவில்லை. எந்த ஆறுதல் வார்த்தை கூறியும் தமிழினியைச் சமாதானப்படுத்த முடியாதென்பதும் தெரியும். ஏனோ திடீரென்று பல்கலைக்கழக நினைவு வந்தது.
“என் உயிரினும் மேலான தமிழே” இவ்வார்த்தையை மறந்திருந்ததமிழினிக்கு திடீரென இவ்வார்த்தையைக் கேட்டதும் திடுக்குற்றுத்திரும்பினாள். அவ்வார்த்தை அவளுடைய அழுகை, வேதனை எல்லாவற்றையும் நிறுத்திவிட்டது.
பாம்பின்கால்பாம்பறியும் என்று கூறுவார்கள். மிதுனும் அதற்கிணங்க தந்திரோபாயத்தைப் பயன்படுத்தினான்.
“ஏதோ ஆத்திரத்திலையும் மனவேதனையிலும் கூறிவிட்டேன் தமிழினி மிதுன் கூறி முடிக்கவில்லை
“உங்களுடைய சிலநிமிட மனவேதனையை என்மீது தீர்த்துவிட்டீர்கள். நான் அனுபவித்துக்கொண்டிருக்கும் ஆயுள் வரையான வேதனையையார்மீது கொட்டித்தீர்ப்பது?"
கட்டுப்படுத்தியிருந்த கண்ணிர் அணைகடந்த வெள்ளம்போல பீறிட்டுக் கொண்டு வந்தது. ஆறுதல் கூறக்கூற துன்பப்பட்டவர்களின் கண்ணிர் மிகுதியாகுவது நியதி. அந்தவகையில் தமிழினியின் கண்ணிரும் கட்டுக்கடங்காது வெளியேறி மிதுனின் நெஞ்சத்தையும் ஈரமாக்கியது.
“ப்ளிஸ் தமிழினி, எண்னைப்பற்றித் தெரிந்த நீரே."
கண்ணிருக்குப் பெறுமதி அதிகம் அல்லவா. தமிழினியும் மிதுனின் கண்ணிரைக் கண்டதும் தன்னைத் தேற்றிக் 65T600LT6.
“சரி சரி முகம் கை, கால்களைக் கழுவிக்கொண்டு வாருங்கள். எனக்கும் பசிக்கிறது" கூறினாள் தமிழினி. TTT TT JSS MMMSSSMMMMSSMMMMSMMSMSMM S TT TTS

Page 64
- 1 12“முதலில் நீர் போட்ட ரீயைத் தாரும், குடித்துவிட்டு களைப்பாறிமுகம், கை, காலைக் கழுவுகிறேன்" சிரித்தவாறு கூறினான் மிதுன். “களைப்புஎனக்கல்லவா. நான்ரீயைக்குடித்துவிட்டேன்” கிண்டலாகக் கூறினாள் தமிழினி.
"அழுதுவடிவதற்கே நேரம் சரி. இதில் எங்கே நீர் ரீயைக் குடிப்பது" மடக்கினான் மிதுன்.
ஆனாலும் தான் கூறியதற்கு பதிலடிதான் இது என்று புரிந்துகொண்டு திரும்பினான், ரீகப் முன்னே நீட்டப்பட்டது. தமிழினி சிறிது புன்னகையுடன் நீட்டிக்கொண்டிருந்தாள். தொட்டுப்பார்த்த மிதுன் மளமளவெனக் குடித்து முடித்து கப்பை நீட்டினான்.
தமிழினிமிதுணை ஏறிட்டு நோக்கினாள். "விஷம் தந்தாலும் குடிப்பேன் அம்மணி என்றதுபோல் இருந்தது அந்தப் பார்வை.
- 18 ܘܗܝ
நாட்கள் ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. தற்போது கற்பகத்திற்குப்பதில்தமிழினியேசந்தைக்குச் செல்வது வழக்கம்.அன்றும்அப்படித்தான்சந்தைக்குப்போய்சாமான்களை வாங்கித் gTöödplquit LD65 தூக்கிக்கொண்டு நடந்துகொண்டுடிருந்தாள் தமிழினி. வலதுகையில் தேங்காய், மளிகைச் சாமான்கள் என்று அதனால் நிரம்பிய கூடை இடது கையில் மரக்கறிக்கூடை, மரக்கறிக்கூடையின் பாரம் வழமையைவிட நன்குறைந்திருந்தது. அதற்குக் காரணம் அன்புடை நெஞ்சம் - நெல்லை லதாங்கி

- 113 -
அண்மையில் யாழ்குடாநாடு முழுவதையும் ஒரு கலக்கு கலக்கிவிட்ட நிஷாதான்.
நிஷாப்புயலினால்மரக்கறிச்சந்தைவெறிச்சோடிப்போய் இருந்தது. நூறுரூபா பெறுமதியான நூறுகிராம் பச்சைமிளகாய்க் கூடைக்குள் அங்குமிங்கும் நடனமாடியது. கத்தரிக்காயோகிலோ நானூறு ரூபாய். முதியவர்களுக்கு ஒத்துக்கொள்ளாது என்று ஒதுக்கிவிட்டாள். குளிர்மை தருக் மரக்கறி வெண்டி அதில் அரைகிலோ நூறுரூபாய்க்கு வாங்கியிருந்தாள்.
இறைச்சி,மீன் என்று செலவழிப்பதில்லையா? அந்தவகையில் கோவா, கரட், கீரை, வெங்காயம் என்றுகிட்டத்தட்ட ஆயிரம் ரூபா அடங்கிய மரக்கறிப்பொதி கூரைக்குள் கணிசிமிட்டிக்கொண்டிருந்தது. தமிழினி தனித்து நடந்துகொண்டிருந்தாள்.
பஸ்கள் ஓடும் பாதை அல்லாததால் சிறிது தூரம் நடக்க வேண்டும். சிலவேளைகளில்நடந்துபோவதானால் அருகிலுள்ள அயலவர்களைத் துணைக்குத் தேடுவாள். அவர்களுடன் கதைத்துக்கொண்டு சென்றால் தூரமும் தெரியாது. பாரமும் தெரியாது. ஆனால் இன்று தூரமும் அதிகமாகத் தெரிந்தது. பாரமும் அதிகமாகத் தெரிந்தது.
56oflsoLD மனதில் பல சிந்தனைகளை ஓடவைத்தது. மனம் சோர்ந்தால்உடலில் எவ்வளவுதான் வலிமை இருந்தாலும் ஒரு காரியத்தை நிறைவேற்ற முடியாது. தமிழினியின் உடல் சோரத்தொடங்கியது. முடிந்தது முடிந்துவிட்டது என்று ஒதுக்கவும் மனம் இடங்கொடுக்கவில்லை. ஆனால் தொடர்ந்து சிந்தனையை ஓடவிட்டு, தனது மனநிலை பாதிக்கப்பட்டால் தூயவன் அனாதையாகி விடுவானே என்ற எண்ணம் மேலிட சிறிது அன்புடை நெஞ்சம் --- நெல்லை லதாங்கி

Page 65
- 1 14உற்சாகமாக நடக்கத்தொடங்கினாள்.
நடந்து கொண்டிருந்தவளின் பின்னால் இரு வாலிபர்கள், பைசிக்கிளில் மிக மெதுவாக வந்து கொண்டிருந்தார்கள். முன்னேறுவார்கள் தானே என்ற எண்ணத்தில்தமிழினிதொடர்ந்துநடந்துகொண்டிருந்தாள். சிறிது தூரம்சென்றதும் அவர்கள் முன்னேறும் அறிகுறி இல்லை. திரும்பிப்பார்த்ததமிழினிக்கு அவர்களின் பார்வையும்பைசிக்கிள் ஓடும் விதமும் பிடிக்கவில்லை. நெஞ்சில் சிறிது பயம் கெளவிக்கொண்டாலும் வெளியே காட்டாமல் நடந்து கொண்டிருந்தாள்.
"örüLj öTu JLT LDës-T6ör”
ஒருவன் இவ்வாறு கூறுவது நன்கு கேட்டது. சனநடமாட்டம் இல்லாத இடம். தூரத்துக்கு ஒவ்வோர் வீடு. கத்தினாலும் யாரும் துணைக்கு வரமாட்டார்கள். பாலியல் வல்லுறவு என்ற தலைப்பின் கீழ் வயது வித்தியாசம் இன்றி உறவு முறையின்றிசமதன்மையின்றிநடக்கும் சீர்கேடுகளைநாளந்தம் பத்திரிகையில் வாசிப்பவள் தமிழினி. அதனால் விறுவிறுவனெ வேர்க்க விறுவிறுக்க நடந்தாள். பைசிக்கிள் என்றால் எவ்வளவு உதவி. ஒரே ஓட்டமாய் ஓடியிருப்பாளல்லவா?
"மிஸ் கூடையைத் தாங்கோ. நாங்கள் கொண்டு வருகிறோம்” ஒருவன் பைசிக்கிளிலிருந்து இறங்கி இவ்வாறு கேட்டான்.
“ரொம்பதாங்ஸ்”
முகத்திலடித்தாற்போல் நன்றியைத் தெரிவித்து விட்டு மடமடவென அங்கும் இங்கும் பார்த்தவாறு நடந்தாள் தமிழினி. மற்றைய பொடிப்பிள்ளையும் பைசிக்கிளை விட்டு இறங்கி
ജ്ഞilഞ്ഞു. ട്രൈക്കഥ -— ബ്ലോബൈ ക്ലെമ്നി

- 115 - முன்னையவனுடன் சேர்ந்து பைசிக்கிளை உருட்டிக்கெர்னடு தமிழினியுடன் சமாந்தரமாக நடந்தார்கள். தமிழினிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நெஞ்சில் முட்டிய பயம் மறைந்து கோபம்தலைக்கேறியது. மூச்சு வெப்பக்காற்றாக வெளியேறியது. கண்களில் கோபக்கனல்ஒளிவீசியது. இந்த உணர்வுகளெல்லாம் ஒருங்குசேர நடையின் வேகம் அதிகரித்தது. கைகளில் கனத்த மரக்கறிக்கூடை பஞ்சுப்பொதியாக மாறியது.
"கொடியிடை துவளப்போகிறது! என்னடா மச்சான் பார்த்துக்கொண்டு வருகிறாய் கூடையை வாங்கடா!"
பைசிக்கிளை உருட்டிக்கொண்டு வந்தவன் கூற மற்றையவன் கூடையை வாங்க நெருங்கினான். கூடையை கீழே வைத்துவிட்டு நெருங்கியவனின் கன்னததில் பளாரென்று அறைந்தாள் தமிழினி.
“என்னடா நினைத்துக்கொண்டு அலையிறியள். பெண்கள் என்றால் என்ன? கிள்ளுக்கீரையா? மூன்று வயதுச் சிறுவனுக்கு தாயடா நான். உங்களுக்கு வயதுக்கு மூத்தவளிடம் நடந்து கொள்ளும் விதமாடா இது?”
படபடவென தமிழினியின் கன்னங்கள் சூடேறக் கத்தினாள்.
“உங்களுக்கு உதவலாம் எண்டுதானக்கா” ஒருவன் சமாளித்தான். "உதவி செய்வதிலும் பார்க்க உபத்திரவம் செய்யாமல் இருப்பது மேல்” இந்தப்பழமொழியைக் கற்கவில்லையா? கற்றிருந்தால் ஏன் தெருவைச் சுத்தப்போறியள்”
தொனி குறையாமல் கத்தினாள் தமிழினி. "சொறி அக்கா” அன்புடை நெஞ்சம் - நெல்லை லதாங்கி

Page 66
- 116 - என்றுவிட்டு இருவரும் காதைப்பொத்திக்கொண்டு சென்று விட்டார்கள். காதைப்பொத்திக்கொண்டு அந்த இருவரும் சென்றது தமிழினிக்கு ஒரு மாதிரியாகப் போய்விட்டது. 'அந்த அளவிற்கு கத்திவிட்டேனா? மனதில் எழுந்த கேள்வியுடன் கூடையைத் தூக்கிக்கொண்டுசென்றவளின்மனதில்தப்பு அவர்கள்மீதில்லை என்ற எண்ணம் தலைதூக்க தன்னையே நொந்துகொண்டாள்.
நெற்றியில் குங்குமம் இல்லை. கழுத்தில் மாங்கல்யம் இல்லை. பதின்நான்கு முழச்சாறியைச் சுற்றுவது இந்தக்காலப் பெண்களுக்கு பிடிக்காத ஒன்று. செளகரியத்திற்காக பாவாடை சட்டை கவுண்,பஞ்சாபிஎன்று அணிந்துகொள்வர்கள். தமிழினி மட்டும் நவநாகரீகமான இக்காலத்திற்கு விதிவிலக்கா,
முன்னைய காலங்களில் பெண்கள் வீட்டில் அடைபட்டுக் கிடப்பார்கள். ஆனால் தற்காலத்தில் ஆண்களைவிட பெண்கள்தானே அதிகமாக வெளிவேலைகளுக்குத்திரிகிறார்கள். வேலை பார்க்கும் சில நிறுவனங்களில் கூட ஆண்களைவிட பெண்கள்தானே அதிகமாகக் காணப்படுகிறார்கள்.
நாகரீக உடை என்ற காரணத்தை தவிர அணிவதற்கு நீண்டநேரம் தேவையில்லை.கழுவுவதற்கு இலகுவாய் இருக்கும். உடம்பிற்கு சுவாத்தியமாக, செளகரியமாக இருக்கம். இதுபோன்ற காரணங்களினால் இவ் ஆடைகளை அணிந்து கொள்கிறார்கள். இக்காரணங்கள் யாருக்கு விளங்கப்போகிறது?
சிந்தித்தவளுக்கு வீடு வந்ததே கண்களுக்குப் புலப்படவில்லை. அவசர அவசரமாக வீட்டிற்குள் நுழைந்து கதிரை ஒன்றில் அமர்ந்தவாறு கீழ்மூச்சு மேல்மூச்சு வாங்கினாள்.
TTM0 TT SMM M M M M M M M M SMM MS TT TTTMS

- 117“என்ன தமிழினி நல்லாய்க் களைத்துப் போட்டீரே? சைக்கிளை நேற்றே ஒட்டச்சொன்னனான். ஒருத்தரும் கவனிக்க இல்லை”
நடந்து வந்ததால் ஏற்பட்ட களைப்பு என்று நினைத்து
கற்பகம் இவ்வாறு கூறினாள்.
"இல்லை அன்ரி. இன்றைக்கு." தமிழினியின் உடல் நடுக்கம் நீங்கவில்லை.
“என்னம்மா என்ன நடந்தது?" மனம் பதைபதைக்கக் கேட்டாள் கற்பகம். நடந்ததை விலாவாரியாகக் கூறினாள் தமிழினி. "இந்த யுத்த பூமியிலை மனிதர் வாழுறதே பெரும்பாடு. அப்பிடி இருக்க இப்பிடிப்பட்ட தறுதலைகளும் உலாவுதுகள் தானே.”
கற்பகத்தின் உள்ளக்கொதிப்பில்வார்த்தைகள் இவ்வாறு வெளியேறின.
"கொஞ்சநேரம் உட்காரம்மா. எதாவது கூலாய்க் கொண்டு வாறன்” என்று கூறி கற்பகம் உட்சென்று குளிர்பானத்துடன் வந்துநின்றாள்.
“உங்களுக்கு ஏனம்மா வீண் சிரமம்” கூறிய தமிழினி இரண்டு கைகளாலும் கப்பை வாங்கிக் கொண்டாள்.
சிறுவயதிலிருந்தே பழக்கப்பட்ட பழக்கம். பெரியவர்களிடம் எதனை வாங்கும்போதும் இரு கைகளாலே வாங்கவேண்டும் என்ற பண்பை அன்னை ஊட்டிஊட்டி வளர்த்திருந்தாள். தமிழினியின்பண்புகளைப்பார்த்துபலதடவை
அணர்புடை நெஞ்சம் நெல்லை லதாங்கி

Page 67
- 1 18பெருமைப்பட்டிருக்கிறாள்கற்பகம். தூயவனும் அதேபாணிதான்.
“மகன்தந்தைக்காற்றும் உதவி
இவன்தந்தை எந்நோற்றான் கொல் எனும் சொல்” இந்தக் குறளுக்கிணங்க பிள்ளைகள் வளரவேண்டும் என்றுதானே பெற்றோர்கள் பிள்ளைகளை நச்சரித்து நச்சரித்து வளர்க்கிறார்கள். அதுகூட சில பிள்ளைகளை எங்கோ கொண்டு போய்விட்டுவிடுகிறது. அவர்களும் பெற்றோர்கள் ஆகும்போது இந்தஉண்மைகள்விளங்கும். அப்போதுவிளங்கிப்பலன் என்ன ஆகப்போகிறது?
தமிழினியின் செய்கை கற்பகம் மனதில் சம்பந்தா சம்பந்தமில்லாச் சிந்தனைகளைத் தோற்றுவித்தது.
குளிர்பானத்தைப் பருகிவிட்டு உடைமாற்றிக் கொண்டு சமையலறைப் பக்கம் சென்றாள் தமிழினி. கற்பகமும் துணைக்குச் சென்றாள். கற்பகத்தின் கைகள் மரக்கறிகளை நறுக்கிக்கொண்டிருந்தாலும் மனம்தமிழினியையே சுற்றிச்சுற்றி வந்தது. இன்று ஒரு முடிவுகட்டவேண்டும். எல்லோரும் கூடும் நேரம் வரவேண்டுமே! மனதைப் பொறுமைப்படுத்தியவாறு இரவுப்பொழுதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஒழுக்கத்தில்தமிழினிபோல்தான் கற்பகமும். இளமைப் பருவத்தில் பிற ஆடவர்களுடன் அதிகம்பேசமாட்டாள், பழகமாட்டாள். அரட்டை அடிப்பவர்களையும் கற்பகத்திற்குப் பிடிக்காது. பயணம் செய்வதென்றால் உயிர்போய் உயிர் வரும். U6 அனுபவம் ஒன்றை நினைத்ததும் கற்பகத்திற்குச் சிரிப்புத்தான் வந்தது.
சனநெருக்கடி நிறைந்த பஸ். ஏற்கனவே சீற்றில்
அன்புடை நெஞ்சம் நெல்லை லதாங்கி

- 119 - இருந்ததால் தப்பித்துக்கொண்டதாக நினைத்தாள் கற்பகம். ஆனால் அருகில் இருந்த பெண்மணி இடையில் இறங்க கணவர் தணிகாசலத்தை இருத்த விரும்பினாள். அதற்கு முன் தணிகாசலத்தின் வயதை ஒத்த ஒருவர் வந்தமர்ந்து கொண்டார். தணிகாசலத்தின் வயதே ஒழிய பருமனில் இருமடங்கு, கற்பகம் ஒடுங்கி ஒடுங்கி அமர்ந்திருந்தாள். முடியவில்லை, எழுந்து நிற்கலாம் என்றால் எழுந்து நிற்பதற்கும் இடமில்லை. புழுவாய்த் துடித்தாள். பஸ்சரிந்து சரிந்துஒடஅருகிலுள்ளவர் வேணுமென்று விழுவது போன்று இருந்தது.
திடீரென இடுப்பில் கரம் ஒன்று பட்டு விலகுவது போல உணர்வு, கூனிக்குறுகிப்போனாள் கற்பகம். அருகிலுள்ளவரின் கைதானா என்பதைப் பார்ப்போம் என்றால் அதற்கும் கூச்சமாக இருந்தது. எவ்வாறு இன்னொரு ஆடவனின் கைகளை உற்றுப்பார்ப்பது?
தொடர்ந்தும் இடுப்பில் ஒருதொடுகை, பொறுமை கடந்து அருவருப்புடன் அருகிலுள்ளவரின்கைகளைப்பார்த்தாள். மடிமீது இருந்த பிரிட்கேஸ் மீது அவரது கை இருந்தது. பிரிட்கேஸ் தான் பஸ் பிரேக்போடும் போதும் குலுக்கும்போதும் இடுப்பினைத் தொட்டவண்ணம் இருந்திருக்கிறது. கற்பகத்திற்கு வாய்விட்டுச் சிரிக்கவேண்டும் போல் இருந்தது. பிரயாணிகள் வித்தியாசமாக நினைப்பார்களே என்ற எண்ணத்தில் மனதிற்குள் சிரித்துக்கொண்டாள். மனதிற்குள் அப்போது சிரித்த சிரிப்பு இப்போது வாய்வழியாகவெளியேறியது.
"எண்ண்ம்மா உங்களுக்குள்ளேயே சிரிக்கிறீர்கள் உலைக்குள் அரிசியைப் போட்டவண்ணம் கேட்டாள்
தமிழினி.
அன்புடை நெஞ்சம் - நெல்லை லதாங்கி

Page 68
- 120 -
“இன்று உன்னுடன் சேட்டை விட்ட இளைஞர்களின் சம்பவத்தை நினைத்துப் பார்த்தேன், பழைய நினைவு ஒன்று வந்துவிட்டது தமிழினி"
கூறியவள் மனதிற்குள் நினைத்துச் சிரித்த சம்பவத்தை வாய்விட்டுக் கூறினாள். தமிழினியால் இதனைப் பெரிதான நகைச்சுவையாகஏற்றுக்கொள்ளமுடியவில்லை. காரணம்அவள் கல்விகற்கும் காலத்திலே இது போன்ற பல அனுபவங்களைச் சந்தித்தவள். மனிதர்களை ஆடு மாடுபோல் நடாத்தும் நடத்துனர்கள். அவ்வாறு யாராவது ஒத்துழைக்காது விட்டால் தனிக்காரிலிசெல்ல வேண்டியது தானே என்று எடுத்தெறிந்து பேசும்விதம், இதுவும்ஒரு வாழ்க்கையா? என்றுசலிப்படைந்தபல நாட்கள். கற்பகத்திற்கு இது சிரிப்பாகத் தோன்றியதில் வியப்பில்லைத்தான். ஏனெனில் அவர்கள் இருந்துவிட்டுப்
Juureb 68uu686.
பொழுது கதையில் கழிந்ததால் சமையல் முடிந்ததும் தெரியவில்லை.
- 18 -
ஒருவாறு மதியம் கழிந்து பொழுது சாய்ந்தது. அனைவரும் ஒன்று கூடும் நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. இரவு ஆனதும் தூயவன் மேசையில் படித்துக்கொண்டிருந்தான். அதே மேசையில் மிதுன் ஏதோ எழுதிக்கொண்டிருந்தான். நாற்காலியில் அமர்ந்தவாறு தமிழினி நாவல் ஒன்றில் மூழ்கியிருந்தாள். கற்பகமும்,தணிகாசலமும்தத்தமக்குரியஈஸிச் செயரில் தஞ்சமடைந்திருந்தார்கள். சுவர்க் கடிகாரத்தில் எட்டுத் அண்புடை நெஞ்சம் - நெல்லை லதாங்கி

- 121 - தரம் மணிஅடித்து ஓய்ந்தது.தமிழினிநாவலை மூடிவைத்துவிட்டு எழுந்து கொண்டாள்.
தமிழினி இந்த வீட்டிற்கு அடி எடுத்து வைத்தநாளே சில மாற்றங்களைக் கொண்டுவந்தாள். அவைநல்ல மாற்றங்களாக இருந்தமையால் சகலரும் ஒத்துழைப்புக் கொடுத்தார்கள். அந்த மாற்றங்களில் ஒன்றுதான் இரவு எட்டு மணிக்கு உணவருந்தும் செயற்பாடு. குடும்பம் என்றாலும் சரி ஊர் என்றாலும் சரி, நாடென்றாலும் சரி ஒருவர் இடறினாலும் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர முடியாது. மாற்றங்களை ஏற்பதற்கும் நல்ல மனப்பாங்கு வேண்டும். மனப்பாங்கு நன்றாக அமையாவிட்டால் சரியென மனதில்பட்டாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், ஒத்துழைப்புக்கொடுக்கமாட்யார்கள். இந்தவகையில்தமிழினியின் மனதில் பூரிப்புத்தான். யாவரும் உணவருந்தும் மேசைக்கு கைகளைக் கழுவிவிட்டு வந்தமர்ந்தார்கள். மிதுனும் தனது வேலையைக் குறையில் நிறுத்திவிட்டு வந்தமர்ந்திருந்தான்.
தூயவன் படித்துக்கொண்டிருந்த நேரம், மிதுன் ஆபீஸ் வேலைகளை மேசையில் பரப்பிக்கொண்டிருந்த நேரம் பேசமுடியாது மெளனம் சாதித்த கற்பகத்தால் உணவருந்தி முடியும்வரை பொறுத்திருக்க முடியவில்லை. அதனால் தமிழினி பரிமாறிக்கொண்டிருந்த போதே அன்று தமிழினிக்கு நடந்த அசம்பாவிதத்தை மெதுவாக, பக்குவமாக எடுத்து கூறினாள்.
உலகத்தில் சகஜமாக நடக்கும் விடயம்தான். ஆனாலும் தமிழினிக்கு என்றவுடன் மிதுனுக்கு ஆத்திரம் தலைக்கேறியது.
"தமிழினி ஆரெண்டு தெரியுமா? உள்ளை தள்ளி இரண்டு போட்டால் எல்லாம் சரிவரும்”
அணிபுடை நெஞ்சம் - நெல்லை லதாங்கி

Page 69
- . 122 - கொதித்தான் மிதுன். “மிதுன்நாய்களென்றால் தெருவிலை போகவரயுக்கை குலைக்கத்தான் செய்யும். அதற்காக நாங்கள் தெருவிலை உலாவாமல் இருக்கமுடியுமா? அதுபோல தான் இதுவும். ஆத்திரப்படாதையுங்கோ"
“ஆத்திரப்படாமல் என்னெண்டு இருக்கிறது? உம்முடைய நெற்றியிலை குங்குமம் இல்லை. கழுத்திலை தாலியில்லை. காவல் இல்லாத வீடென்றால் கண்ட நாய்களும் நுழையத்தான் செய்யும்”
ஏதோ மனவேகத்தில் வார்த்தைகள் இவ்வாறு தடம்புரண்டது. மிதுனின் கோபத்திற்கான காரணம் தமிழினிக்கு மாத்திரமல்ல, கற்பகம் தணிகாசலம் தம்பதியினருக்கும் விளங்கத்தான் செய்தது. சாப்பாட்டு மேசையில் சிறிது நேரம் அமைதி தவழ்ந்தது. ஒருவரும் சாப்பாட்டில் கைபோடவில்லை. திடீரென எழுந்த தூயவன் சாமிஅறைப்பக்கம் சென்றான். தூயவன் இவ்வாறு எழுந்து சென்றது. எல்லோருக்கும் ஒரு மாதிரியாக இருந்தது.
உணவு அருந்தும் நேரத்தில் தேவையற்ற கதைகள் கதைத்துவிட்டதால் ஏற்பட்ட கோபமாக இருக்குமா? என்ற உணர்வில்
"தூயவா! வாப்பா வந்து இருந்து சாப்பிடு” என்று தணிகாசலம் அன்பொழுக அழைத்தார். சாமி அறைப்பக்கம் சென்ற அதே வேகத்தில் திரும்பி வந்தான் தூயவன். கையில் குங்குமச்சிமிழ் ஒன்று கண் சிமிட்டியது. தூயவன் கண்களிலும் ஒரு பிரகாசம்
"elibLDT 6).This 956 6. Frties
அன்புடை நெஞ்சம் --- நெல்லை லதாங்கி

- 123
என்றுஇருவரது கரங்களையும் பற்றி இழுத்துக்கொண்டு பிரேமில் மாட்டியிருந்ததந்தையின் உருவப்படத்திற்கு முன்வந்து நின்றான் தூயவன். எல்லோரும் அதிசயக்கண் கொண்டு தூயவனை நோக்கினார்கள். ஆனால் கற்பகம் மட்டும் தெளிவாக இருந்தாள். காரணம், தூயவனுக்குப் புரியும் வயது இல்லை என்றாலும் இடைஇடையே மிதுன், தமிழினி, பிரபாசம்பந்தப்பட்ட விடயங்கள் சிலவற்றைக் கதையாகக் கூறி இருந்தாள்.
தந்தை பிரபாவின் படத்தை சாமியின் படம் என்றும், அதனால் தான் உனது அன்னை பூவைத்து வணங்குகிறார் என்றும், இனிமேல் உனக்கு மிதுன்தான் அந்த அப்பாவுக்குச் சமனானவன் என்றும் கூறி இருந்தாள். அதுமாத்திரமல்ல
“எனது கழுத்தில் இருக்கிறதே இந்தத்தாலி அது போல் உனது அம்மாவின் கழுத்தில் மிதுன்மாமா எப்போது தாலிகட்டுகிறாரோஅப்போதுதான் உனக்குச் சொந்தமான அப்பா ஆவார்".
இதுபோலப் பல கதைகள் மிதுனும் ஆத்திரத்தில் நெற்றியில் குங்குமமில்லை, தாலியில்லை என்று கத்திவிட்டானே. அவை தூயவனுக்கு வாய்ப்பாகப் போய்விட்டது. தமிழினிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. தூயவனின் கைகளில் தவழ்ந்த குங்குமச் சிமிழ் அவன் செய்யப்போகும் காரியம் எதுவென்பதை உணர்த்தியதுதான் தாமதம்
"தூயவா என்ன இது? உனக்கென்ன பைத்தியமா? விடு கையை” உதறினாள் தமிழினி
“அங்கிள் இந்தாங்கோ. இந்தக் குங்குமத்தை
ജ്ഞ്ഞL Gഥ -— ഖൈ ഖുകt്കി

Page 70
- 124 - அம்மாவினுடைய நெற்றியிலை வைத்துவிடுங்கோ"
டப்பாவைத்திறந்து மிதுனின் முன் நீட்டினான் தூயவன் திரைப்படங்கள் மூலம் பெற்ற அறிவு அனுபவம் தூயவனை இவ்வாறுசெய்யத்தூண்டி இருக்கவேண்டும். அலலது தூயவனின் அடிமனதில் இருந்த ஓர் தவிப்பு ஆவல் இவ்வாறு செய்யத் தூண்டி இருக்கவேண்டும். எது எப்படியோ.
"தூயவன் நீதான் சரி” என்று கற்பகமும் தணிகாசலமும் புன்னகை தவழ மனதில் துயவனைப் பாராட்டிக் கொண்டதுடன் பாதையில் தொந்தரவு கொடுத்த இரு இளைஞர்களுக்கும் மனதார நன்றி செலுத்தினார்கள்.
தொடர்ந்து ஏமாற்றத்திற்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் மிதுணை ஏறிட்டு நோக்கினாள் தமிழினி. அவன் வதனம் களை இழந்து இருந்தது. விபரிக்கமுடியாத உணர்வுகள் அவனது முகத்திரையில் தெறித்துக் கொண்டிருந்தது.
"பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்குது. தமிழினி. உனக்கு ஒரு பாதுகாப்பு வேணும் என்று தூயவனே புரிந்துகொண்டு விட்டான். உனக்கு ஏன் புரியமாட்டேன் என்குது. அடம்பிடியாதை தமிழினி"
"பொறுமை என்னும் நகை அணிந்துபெருமை கொள்ள வேண்டும் பெண்கள்” என்று பாடிய ஒளவையின் பொன் மொழியைக் கடைப்பிடிக்கும்தமிழினியின் செய்கைகற்பகத்திற்கு பொறுமையைக் கடக்கச்செய்தது. கற்பகம் பொறுமை இழந்து இவ்வாறு கூறினாள்.
"உன்னுடைய நன்மைக்காகத்தான் நாங்கள் எல்லாம் பாடுபடுகிறம்என்பதுஏனம்மாஉனக்குவிளங்காமல்போயிட்டுது?” அன்புடை நெஞ்சம் - நெல்லை லதாங்கி

- 125 - சாந்தமாகக் கூறினார் தணிகாசலம். தனது பார்வையை தரையின் மீது செலுத்தினாள் தமிழினி. கண்கள் தரையை நோக்க தலை தானாகக் குனிந்து கொண்டது. மெளனம் சம்மதத்திற்கு அறிகுறி என்பார்கள். அதிற்கிணங்க தமிழினியின் நாடியை உயர்த்தி, அவளின் விழிகளைத் தனது விழிகளால் தேடுதல் செய்தான். சம்மதம் ஒளிக்கீற்றாக மின்னியது. குங்குமத்தை எடுத்து தமிழினியின் பர்ந்த நீள் நெற்றியின் மையப்பகுதியில் அழகாகத் திலகம் இட்டான். அந்த நேரம் என்று அருகிலிருந்த ஆலயத்தின் ஆலயமணி வழமைக்கு மாறாக டாண் டாணி என்று ஒலி எழுப்பியது. அன்று வைகுந்த ஏகாதசி. கண்ணன் ஆலய மாகையால் இரவுப் பூசை நடைபெறப் போகிறது என்பதற்கான ஆயத்தம் அது. எல்லோருடைய மனதிலும் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டோடியது.
மிதுன் தமிழினி இருவரும் தணிகாசலம் கற்பகம் தம்பதியினரின் பாதங்களில் வீழந்து வணங்கினார்கள். கற்பகத்தின் கண்ணில் பனித்தஅனந்தக்கண்ணீர்தமிழினியின் கரங்களில் பட்டுத் தெறித்தது.
"நாள் ஒன்றைப் பார்த்து அம்மாவினுடைய கழுத்தில் தாலியையும் ஏற்றி விடுங்கள். நான்தப்பித்துக் கொள்ள”
கூறியவாறு ஒழிந்து கொண்டான் தூயவன். "நீதப்பித்துக் கொள்ள நானா மாட்டிக் கொள்வது” தூயவனைத் துரத்தினான் மிதுன். தூயவன் ஹோலைச் சுற்றி ஓடினான்.
"இருவரும் என்னிடமிருந்து தப்பித்துக் கொள்ள மாட்டீர்கள்" அன்புடை நெஞ்சம் - நெல்லை லதாங்கி

Page 71
- 126 -
என்று இருவரையும் துரத்தினாள் தமிழினி. ஒடிப்பிடித்து விளையாடியது அதிக காலமாகையால் மிதுனும் தமிழினியும் இளைத்தவாறு சாப்பாட்டு மேசையில் வந்து உட்கார்ந்தார்கள். தூயவனையும் உட்கார்த்திவிட்டு அனைவருக்கும் உணவு பரிமாறினாள் கற்பகம். இந்த கண்கொள்ளாக் காட்சியைக் காணத்தானே கற்பகமும் தணிகாசலமும் தவம் இருந்தார்கள்.
குங்குமம் தமிழினிக்கு பாதுகாப்பு மட்டும் அளிக்குமா? அல்லது இல்லறம் எனும்நல்லறத்திலும் இணைக்குமா? இதற்குத் தமிழினிதான் பதில் சொல்ல வேண்டும்.
எதற்காக மிதுனின் காதலை ஏற்கமறுத்தாளேதமிழினி அதனைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் தற்போது இல்லை. சாதி, சமயம், சம்பிரதாயம். சமூகம் என்ற பொய்மையான கூட்டுக்குள்ளிருந்து வெளியே வந்துவிட்டாள்.
- முற்றும் -
: ، r مبارز و به نام ری مردم زدا و }


Page 72
நெல்லை வரும் திருமதி. ஈழத்தின் கணி ஒருவர். தும்ட நெல்லியடியில் யா/கரணவாய்
இசை ஆசிரிய
திருமதி. ஆனந்தராணியின் ஒழுங்கிலானது. வானொலி அருட்டுணர்வில் ஆரம்பித்த இவரி பத்திரிகைகளிலும், சிறுகதை, நாட வகைமைகளிலும் ஈடுபாடு கொள்ள தழுவிய போட்டிகளில் பல பரிசுக
இவரை உயர்த்தியுள்ளது. 'உ குறுநாவல்களின் தொகுதியையும் " நாடகத் தொகுதியையும் தந்திருக் இந்நாவல் மலர்ந்துள்ளமை இவரின்
கோப்பாய் ஆசிரிய பயிற் விசேட பயிற்சி பெற்றதோடு பட்டப்படிப்பை முடித்து, அதன் பி6 பட்டத்தையும் இவர் GL விடாமுயற்சியையும் சுயமுயற்சியை
துன்பங்களைக் கண்டு து ஆனந்தராணியின் விடாமுயற்சியும் இருக்கும்வரை இவருக்கு மென வெற்றியையும் அவை பெற்றுத்தரும்
கல்வியியற்றுறை
 

லதாங்கி என்ற பெயரில் எழுதிஆனந்தராணி நாகேந்திரன், இன்று ப்பிற்குரிய பெண் எழுத்தாளர்களுள் ளையில் பிறந்த இவர், இன்று வசித்து வருகிறார். இவர் பொன்னம்பல வித்தியாலயத்தின் ரும் ஆவார்.
ன் இலக்கிய வளர்ச்சி, படிமுறை நிகழ்ச்சிகளை விரும்பிக்கேட்ட ன் எழுத்தார்வம், வானொலியிலும் டகம் போன்ற பல்வேறு இலக்கிய ாவைத்ததோடு மலர்ச்சியுற்று, நாடு ளை வெற்றிகொள்ளும் நிலைக்கு உறங்கும் உண்மைகள் என்ற எதிர்பார்க்கைகள்' என்ற வானொலி கும் இவரின் மூன்றாவது நூலாக தன்னார்வத்தையே காட்டுகின்றது.
சிக் கலாசாலையில் சங்கீதத்தில் நின்றுவிடாமல், வெளிவாரியாகப் ன்னர் பட்டப்பின் கல்வி டிப்ளோமா ற்றுக்கொண்டமையே இவரின் பும் வெளிக்காட்டுவதாகும்.
வளாமல், சளைக்காது எழுதிவரும் சுய நம்பிக்கையும் இவருடன் மேலும் பல ஆற்றல்களையும் என்பதில் சந்தேகம் இல்லை.
கலாநிதி த. கலாமணி சிரேஷ்ட விரிவுரையாளர் ), யாழ்ப்பாணப் பல்கலைக்கழம்.