கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: எதிர்பார்க்கைகள்: நவ நவீன வானொலி நாடகங்கள்

Page 1


Page 2

நவ நவீன வானொலி நாடகங்கள்
எதிர்பார்க்கைகள்
நெல்லை லதாங்கி
வெளியீடு: கலாசார கூட்டுறவுப் பெருமன்றம் கட்டைவேலி நெல்லியடி ப.நோ.கூ.சங்கம், கரவெட்டி,

Page 3
நூல்
விடயம்
நூலாசிரியர்
உரிமை
முதற்பதிப்பு கணனி அச்சுப்பதிப்பு
விலை
Title
Subject
Author
Copyright
1st Edition
Printers
Price
எதிர்பார்க்கைகள்
வானொலி நாடகம் : திருமதி. ஆனந்தராணி நாகேந்திரன் : ஆசிரியருக்கு
2007 ஆவணி லெட்சுமி ஒவ்செட், நாவலர்மடம், கரவெ
: ரூபா 225.00
: Ethirparkkaikal
: Drama
: Mrs. Anantharani Nagenthiran
: Author
: 2007 August : Ledchumi Offset, Navalarmadam, Karaveddy.
: RS. 225.00

தூண்களாகத் துணைநின்று ஏணிகளாய் ஏற்றிவைத்து தாரணி எனைப் புகழத் தாம் மகிழ்ந்து என்றென்றும் என் நலனையே நாடிநிற்கும் என் உறவுகளுக்கு இந்நூலைச் சமர்ப்பணமாக்குகின்றேன்

Page 4

அணிந்துரை
தமிழ் மொழியில் இன்று கவிதைத் தொகுப்புகளும், சிறுகதைத் தொகுதிகளும் வெளியிடுபவர்கள்தான் அதிகம். நாடக நூல்கள் வெளியிடுபவர்கள் அருமை. அவர்களிலும் நவீன நாடகங்கள் வெளியிடுபவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். திருமதி ஆ நாகேந்திரன் நவ நவீன வானொலி நாடகங்கள்’ என்ற இந்த நவீன நாடகநூலை வெளியிடுவதன் மூலம், அந்த விரல்விட்டு எண்ணக்கூடிய எழுத்தாளர் வரிசையில் இடம்பிடித்துக் கொள்கிறார்!
இலங்கையில் முதன்முதலாக பேராசிரியர்
க. கணபதிப்பிள்ளையே, 1950ம் ஆண்டளவில் இலங்கை மண்வாசனை நாடகங்கள் / நவீன நாடகங்களை (Modern Drama) எழுதி அரங்கேற்றிக் காட்டினார். இருந்தாலும் இலங்கை வாழ் தமிழ்பேசும் மக்கள் இன்றளவும் நவீன நாடகத்தின் சிறப்பை அறிந்துகொண்டதாகத் தெரியவில்லை. அதனால்தான் பாடப்புத்தகங்களில் புராண இதிகாசக் கதைகளை நாடகமாக்கிப் போட்டிருக்கிறார்கள். பல்கலைக் கழகங்களில் கவிதை நாடகங்களையும் நாட்டுக்கூத்துகளையும் கற்பிக்கிறார்கள். இலங்கை வானொலியின் தமிழ்சேவையினர் மட்டும்தான் நவீன நாடகத்தின் சிறப்பினை அறிந்து, அந்த வகை நாடகங்களையே தயாரித்து ஒலிபரப்பி வருகின்றனர். இலங்கை வானொலி நாடகங்களால் கவரப்பட்ட திருமதி நாகேந்திரன், தாமும் அதே வகை நாடகங்களை வானொலிக்கு எழுதத் தொடங்கினார். அவரது நாடகங்கள் வானொலி நிலையத்திலும், நாடக ரசிகர் மத்தியிலும் பெரு வரவேற்பைப் பெற்றன. இப்பொழுது தனது முதலாவது வானொலி நாடகநூலை வெளியிடுகிறார்.
திருமதி ஆ. நாகேந்திரன் எழுத்துலகிற்கு ஒன்றும் புதியவரல்லர். 1983ம் ஆண்டிலிருந்தே அவர் இலங்கை வானொலிக்கு நாடகங்கள் எழுதி வருகிறார். இலங்கை ஒருங்கிணைப்பு செயற்றிட்டப் பணியகமும், இலங்கை வானொலியும் இணைந்து, 1998ம் ஆண்டு நடாத்திய வானொலி நாடகம் எழுதும் போட்டியில் மிகச் சிறந்ததெனத் தெரிவுசெய்யப்பட்ட 10 ஆக்கங்களில் ஒன்றாகத் தெரிவுசெய்யப்பட்டு சிறந்த நாடகங்கள் பரிசு கிடைத்தது. ஏற்கனவே 'உறங்கும் உண்மைகள்' என்ற நாவலையும் வெளியிட்டிருக்கிறார்.

Page 5
மேலே கூறப்பட்ட நாடகப் போட்டியில் எனக்கு முதலாம் பரிசு கிடைத்தது. பரிசு வாங்குவதற்காக கொழும்பிற்குச் சென்ற பொழுதே திருமதி. நாகேந்திரனைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. பழகுவதற்கு இனியவர். நல்ல இலக்கிய ஆர்வம் கொண்டவர்.
அவர் ஒரு சங்கீத ஆசிரியை, குடும்பப் பெண்; பல பிள்ளைகளின் தாயார்; எவ்வளவு பெரிய பொறுப்புக்கள்! இவ்வளவு வேலைப் பழுவுடன் நாடகங்களும் எழுதி, நூல்களும் வெளியிடுகிறார் என்றால் அதுவே அவரது இலக்கிய ஆர்வத்திற்கும், நாடகப் புலமைக்கும் நல்ல சான்று.
தமிழ் மொழிக்கு இன்று கவிதைகளையும் சிறுகதைகளையும் விட, நாடகங்களே கூடுதலாகத் தேவைப்படுகின்றன. அரைத்தமாவையே அரைப்பதுபோல, மற்றவர்களைப் பின்பற்றிச் சிறுகதைத் தொகுதிகள் வெளியிடுவதில் உங்களுக்கு என்ன பெருமை இருக்கிறது? மற்றவர்கள் செய்யாததைச் செய்தால், பெருமை தானாகவே உங்களைத் தேடி வரும். உங்களிடம்தான் பல நாடகங்கள் இருக்கின்றனவே. ஒரு நாடக நூல் வெளியிடுங்கள். அது உங்களுக்குப் பெருமை சேர்ப்பதுடன், தமிழ் நாடகத்துறையின் வளர்ச்சிக்கு உங்களது பங்களிப்பாகவும் அமையும். என்று கூறி நானும் அவரை நாடகநூல் வெளியிடும்படி தூண்டினேன்.
இந்த நூலிலுள்ள ஒன்பது நாடகங்களும் இலங்கை மண்வாசனை நாடகங்களே!
"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்ற நாடகம், சாதி வேற்றுமையல்ல, இன மத வேற்றுமை கூடப் பாராட்டக் கூடாது. அப்படியாக வேற்றுமைகளைப் பாராட்டாது, இலங்கையர் எல்லோரும் ஒற்றுமையாக வாழ்ந்தால் எங்களது வாழ்வு சிறக்கும். இந்த நாடும் முன்னேறும் என்ற கருத்தைக் கூறுகிறது. இந்த நாட்டுக்கு இன்று அவசியம் வேண்டிய ஒரு கருத்து. அதில் வருகின்ற திவ்யா' என்ற தமிழ்ப்பெண் குணபால’ என்ற சிங்கள ஆசிரியரை திருமணம் செய்கிறாள். 'கல்யாணி என்ற தமிழ்ப்பெண் பாரூக்' என்ற முஸ்லிம் ஆசிரியரை விவாகம்செய்கிறாள்.

“நினைவெல்லாம் நித்தியா” என்ற நாடகம், இறந்துவிட்ட தனது தங்கையை மறக்கமுடியாமல் திண்டாடும் ஒரு தமயனது கதை.
வாழ்க்கையில் பெண்ணுக்கு ஏற்படக் கூடிய சோதனைகளை, அவலங்களைச் சுட்டிக்காட்டுகிறது "வெள்ளைப்புறா" நாடகம். எல்லோருக்குமே வாழ்க்கையில் சோதனைகள் தான். ஆனால் பெண்ணுக்கு அவை இரட்டிப்பானவை என்ற கருத்தை நாடகம் சித்தரித்துக் காட்டுகிறது.
"தோஷம்”நாடகத்தில் ராதிகாவிற்குத் தோஷம் இருக்கிறது என்று சொல்லி, அவளது கல்யாணத்தை தடுக்க முயல்கிறாள் அவளது அண்ணி வேணி. ராதிகாவின் அண்ணன் தேவனும் மனைவிக்கு தாளம் போடுகிறான். இறுதியில் தோஷத்தைப் பொருட்படுத்தாது ராதிகாவை மணக்க அருணன் முன்வரவே தேவன் தங்கைக்கும் அருணனுக்கும் கல்யாணம் செய்து வைக்கிறான். தேஷம் கீசம் என்று சொல்லி பிள்ளைகளது வாழ்க்கையை பாழடிக்கக் கூடாது என்பது நாடகம் கூறும் முற்போக்கான கருத்து.
தன்னை ஒறுத்து குடும்பத்திற்காகவே உழைத்து, மெழுகுதிரியாய் உருகிப்போன ஒரு பெண்ணின் கதை "தியாகச் சுடர்".
"நல்ல முடிவு" நல்ல கதை. தமிழ்ச் சமுதாயத்திற்கு வேண்டிய கதை. சாதிவித்தியாசம் பாராட்டுகிறாள் ஆசிரியையான பாக்கியம். அவளது மகன் ரிஷி, குறைந்த சாதிக்காரியான இந்துவைக் கல்யாணம் செய்கிறான். இறுதியில் இந்துதான் பாக்கியத்தை காப்பாற்றுகிறாள். சாதிவேற்றுமையின் அர்த்தமின்மையை எடுத்துச் சொல்லும் நாடகம்.
தன்னை ஆளாக்கிவிட்ட அண்ணிக்காகவும், அவளது குடும்பத்திற்காகவும், தான் கல்யாணம் செய்துகொள்ளாமல் தியாகம் செய்ய முடிவுசெய்கிறான் சங்கர். அண்ணி அவனைக் கட்டாயப்படுத்தி அவனுக்கு கல்யாணம் செய்து வைக்கிறாள். நன்றி மறவாமையை எடுத்துச்சொல்லும் நாடகம் “பரிசு”.

Page 6
எல்லா நாடகங்களும் இந்த நாட்டில் வாழுகின்ற தமிழ்மக்களது குடும்பக் கதைகள். இவற்றைப் படிக்கலாம், நடிக்கலாம்.
இந்த நாடகத் தொகுதியை வெளியிட்டதன்மூலம் திருமதி ஆ. நாகேந்திரன் தமிழ் நாடக வளர்ச்சிக்கு நல்லதொரு பங்களிப்பைச் செய்துள்ளார்! அவர் வருங்காலத்தில் இதுபோன்ற இன்னும் பல நாடகநூல்கள் வெளியிட்டுத் தமிழ் நாடகத்துறையை வளர்க்கவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
கலாபூஷணம் அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை
கடைச்சாமி விதி, நீராவியடி,
யாழ்ப்பாணம்.

என்னுரை
2005 இல் வெளியீடு செய்த “உறங்கும் உண்மைகள்" என்ற குறுநாவலைத் தொடர்ந்து நாடகநூல், சிறுகதைத் தொகுப்பு, நாவல்கள் என்று என்னிடம் இருக்கின்றவற்றை ஆண்டுதோறும் வெளியீடு செய்ய வேண்டும் என்ற என்னுடைய இலட்சியப் பயணத்தில், மனதை அரிக்கின்ற பல தடைக்கற்கள் வந்தபோது, என் பயணம் தடைப்படாது இப்போது இந்நூல் வெளியீடு செய்வதற்கு இறைவன் காலத்தை அமைத்துத்தந்தது நான் செய்த பாக்கியமே.
இந்நாடகங்கள் எழுதப்பட்ட காலத்திற்கும், வெளியீடு செய்யப்படுகின்ற காலத்திற்கும் இடையில் இரு தாசாப்தங்கள் கடந்துவிட்ட போதிலும் சமுதாயத்தில் புரையோடிப்போயிருக்கின்ற நச்சுக்களைகள் இன்றும் அகற்றப்படாமல் இருப்பது சமுதாய மாற்றமின்மையைக் காட்டுகின்றது. வாள்முனையைக் காட்டிலும் பேனாமுனைக்கு சக்தி அதிகம் என்பதற்கு ஆதாரமாக எனது எழுத்துக்கள் மனிதர்களிடையே மனமாற்றங்களை சிறுதளவாவது கொண்டுவருமாயின் அது இந்நூலின் மூலம் எனக்குக் கிடைத்த வெற்றி என்றே சொல்லவேண்டும்.
இந்நூலில் இடம்பெறும் ஒன்பது நாடகங்களில் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு எனும் நாடகம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும் தேசிய ஒருமைப்பாட்டுப் பணியகமும் நடாத்திய வானொலி நாடகம் எழுதும் போட்டியில் சிறந்த ஆக்கத்திற்கான பரிசு பெற்ற நாடகம் பரிசுப் பணம் 2000 ரூபாவாக இருந்தாலும் விமானமூலம் எங்களை கொழும்புக்கு அழைத்து கெளரவப்படுத்தியமை, அமைச்சர் ஜி. எஸ். பீரிஸ் அவர்களால் பரிசுவழங்கியமை எனக்கு மறக்கமுடியாத அனுபவமாகும். பரிசு, தியாகச்சுடர், வெள்ளைப்புறா, நினைவெல்லாம் நித்தியா ஆகிய நான்கு நாடகங்களும் 1982, 83 காலப்பகுதிகளில் எழுதியவை. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச்சேவை ஒன்றின் ஒலிபரப்புத் தடைப்பட்டமையால் ஒலிபரப்புக்கு அனுப்பமுடியாது போய்விட்டது. மீண்டும் தேசிய சேவை என்றபெயரில் ஒலிபரப்பு ஆரம்பமானதும் நாடகங்களை மீண்டும் இரவு பத்துமணிக்கு ஒலிபரப்புச் செய்தார்கள். அதை ஒட்டியே மேற்கூறிய நான்கு நாடகங்களும் 1997 காலப்பகுதியில் வெவ்வேறு
V

Page 7
மாதங்களில் ஒலிபரப்புச் செய்யப்பட்டது. அத்தூண்டுதலினால் 97, 98 காலப்பகுதிகளில் ஏனைய நாடகங்கள் எழுதப்பட்டன. அவை 1998, 1999, 2000 ஆண்டு காலப்பகுதிகளில் ஒலிபரப்புச் செய்யப்பட்டன. தற்போது தொலைக்காட்சிச் சேவைகள் அதிகாமாகி உள்ளதாலும், வானொலி தேசிய சேவை ஒலிபரப்புக்கள் தெளிவின்மையாலும் நாடகங்கள் எழுதுவதற்கான ஆர்வம் குறைந்துவிட்டது. ஆகையால் இதுவரையில் வானொலியில் ஒலிபரப்பாகிய நாடகங்களுள் ஒன்பது நாடகங்களைத் தெரிவுசெய்து ஒரு நூலாகப் புத்தக வடிவிற்கு கொண்டுவந்துள்ளேன். இந்நாடகங்கள் சமூக நாடகங்கள் ஆகையால் பாடசாலைகள், கழகங்கள், மன்றங்கள் போன்ற நிறுவனங்களில் பயிற்றுவித்து மேடையேற்றத் தகுதியானவை ஆகும்.
இதுபோன்ற எனது எழுத்துலக வாழ்க்கைக்கு வித்திட்டவரும் ஒளியூட்டியவரும் இணுவில் சா. வே. பஞ்சாட்சரம் ஐயா அவர்கள். அவரைத் தொடர்ந்து அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை ஐயா அவர்கள். 405 வாரொனலி நாடகங்களுக்கு மேல் எழுதிய சிறப்பு வாய்ந்த ஒருவர், இந்நூலுக்கு அணிந்துரை எழுதி இந்நூலுக்கு மேலும் மெருகூட்டி இருக்கிறார். அவர் காட்டிய உந்துதலுக்கும் ஊக்கத்திற்கும் என்றும் நன்றிக்கடன் பட்டவளாக இருப்பேன்.
அடுத்து இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கியவர் என்போன்ற படைப்பாளிகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் பெருந்தகை, வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. வ. செல்வராசா ஐயா அவர்கட்கும், இந்நூலினை உயர்நோக்கோடு பொறுப்பேற்று வெளியீடு செய்யும் கட்டைவேலி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கலாச்சார கூட்டுறவுப் பெருமன்றத்தினருக்கும் எனது மனமார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இந்நூலினை சிறந்தமுறையில் அச்சிட்டு உதவிய "லெட்சுமி ஒவ்செட் அச்சக உரிமையாளர் திரு. கி. லோகநாதன் அவர்களுக்கும் எனது மனம்நிறைந்த நன்றிகள்.
திருமதி ஆ. நாகேந்திரன்
Vi

வாழ்த்துரை
கரணவாய் பொன்னம்பல வித்தியாலய இசையாசிரியரான திருமதி. ஆனந்தராணி நாகேந்திரன் அவர்களின் "எதிர்பார்க்கைகள்” நூல் வெளியீட்டிற்கு வாழ்த்துரை வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன்.
திருமதி ஆ. நாகேந்திரன் வளர்ந்து வருகின்ற ஈழத்து எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, நாவல், நாடகம் ஆகிய பல்துறைகளிலும் அவர் தடம்பதித்துள்ளார். இரு வருடங்களுக்கு முன்னர் "உறங்கும் உண்மைகள்" குறுநாவலை வெளியிட்டுப் பலரது பாராட்டையும் பெற்றுள்ளார். அரச ஊழியர்களிடையே 2005, 2006 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆக்கத்திறன் போட்டிகளில் அவர் பங்குபற்றி வெற்றியீட்டியமை பாராட்டுக்குரியதாகும்.
திருமதி ஆ. நாகேந்திரனின் "எதிர்பார்க்கைகள்" நாடகநூல் ஒன்பது நாடகங்களைத் தாங்கி வெளிவருகிறது. இந்நாடகங்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச்சேவையில் ஒலிபரப்புச் செய்யப்பட்டுப் பலரது பாராட்டையும் பெற்றவையாகும். அவரது ஆக்கங்களுக்கு இலக்கிய ஆர்வலர்கள் ஆதரவளித்து ஊக்குவிப்பார்களென நம்புகிறேன்.
வ. செல்வராசா
வலயக் கல்வி பணிப்பாளர், வடமராட்சி.
Vii

Page 8
இதழினுள்ளே.
Viii
11
27
41
55
7Ο
86
Ο1
118

இதிார்க்கைகள்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
பங்குபற்றுவோர்
இடம் :
சரஸ்வதி - திவ்யாவின் தாயார்
கல்யாணி - திவ்யாவின் நண்பி
(5600TLIT6)IT - திவ்யாவுடன் வேலைபார்க்கும் ஆசிரியர் கந்தப்பு - சரஸ்வதியின் சகோதரன்
திவ்யா - சரஸ்வதியின் மகள்
பாரூக் - திவ்யாவுடன் வேலைபார்க்கும் ஆசிரியர்
காட்சி : 01 சரஸ்வதியின் வீடு
பாத்திரங்கள் : திவ்யா, சரஸ்வதி, கந்தப்பு
திவ்யா
சரஸ்
திவ்யா :
சரஸ்
திவ்யா :
சரஸ்
திவ்யா :
அம்மா! அம்மா! மேசையிலை வைச்ச சங்கீதக் கொப்பியைக் காணயில்லை. நீங்கள் எடுத்தனிங்களே.
(வேடிக் கையாக) ஓம் மகள் நேற்று சமைச் சுக் கொண்டிருக்கையிக்கை பத்து மணி தொடக்கம் பன்ரெண்டு மணிவரை ரேடியோவிலை பாட்டு இல்லையெல்லே. அதுதான் உன்ரை கொப்பியை எடுத்துப்பாடிப்பாடி சமைச்சனான்.
உங்களுக்கு எப்பவும் பகிடிதான். பகிடிக்கெண்டு ஒரு நேரகாலம் இல்லையே. (கோபத்துடன்) : நேரகாலம் பார்த்துச் சொன்னால் அது பகிடியாகுமோ. அது போகட்டும். உன்ரை பொருளைக் கவனமாக வைச்சு எடுக்கிறதுதானே. இஞ்சை என்ன குழந்தைப்பிள்ளையஸ் இருக்குதுகளே. ராணிமாதிரி நீ ஒருத்திதான் இருக்கிறாய்.
(தேடுதல்) எங்கை வைச்சன். ம். இஸ்கூலுக்கு நேரமும் போகுது. கொஞ்சம் பிந்திப்போனாலே ரெட்லைன் அடிச்சிடும் அந்த மனிசன். (தாயும் சேர்ந்து தேடுதல்) : தேடுறது உன்னோடை கூடப்பிறந்த குணமாப்போய்ச்சுது. ஆத்திலை வைச்சுட்டு குளத்திலை தேடுமாப்போலை என்ரை பிள்ளை தேடுது. தேடிப்பார்த்துவிட்டு, இஞ்சை கட்டிலிலை இருக்குது ஒரு கொப்பி.
அம்மா! சொறி அம்மா! இஞ்சை தாங்கோ. அம்மா! நான் போட்டுவாறன்.
நெல்லைலதங்கி

Page 9
எதிர்பார்க்கைகள்
சரஸ் : என்ன ரீயிலை கொஞ்சம் வைச்சிட்டுப் போறாய். திவ்யா : (போய்க்கொண்டு) மிச்சத்தை நீங்கள் குடியுங்கோ.
சரஸ் : பகிடியைப் பார். அம்மாமாரோடை இருக்குமட்டும்
செல்லத்தைக்காட்டுங்கோ.
கந்த : (வந்துகொண்டே) என்ன சரஸ்வதி மகள் பள்ளிக்கூடம்
போறாவே.
சரஸ் : ஒம் அண்ணை; கொஞ்சம் தூரமாய்ப்போச்சு, ஆனால் நல்ல பள்ளிக்கூடமாம். அதாலை தூரமெண்டாலும் நான்போறன்
மாற்றம் வேண்டாமெண்டு சொல்லுறாள்.
கந்த : எனக்கும் அந்தப்பள்ளிக்கூடத்தைப்பற்றித் தெரியும் சரஸ்வதி. அங்கை எல்லாஇனமக்களும் படிக்குதுகளாம். ஆசிரியர்மாரும் எல்லா இனத்திலும் இருக்கினமாம். அதாலை உன்ரை மகள் அங்கை படிப்பிக்கிறது எனக்கு அவ்வளவு விருப்பமில்லை.
சரஸ் ; ஏனண்ணை அப்படிச் சொல்லுறியள்?
கந்த இல்லை. ஒண்டாய் வேலைபார்க்கிறதாலை ஒண்டுமாறி ஒண்டு சாப்பிடுங்கள். நல்லது கெட்டதுக்கெல்லாம் போகுங்கள்.
எங்கடை கலாச்சாரம் பண்பாடு என்னாகிறது? சரஸ் : அண்ணை. நீங்கள் சொல்லுறதைப்பார்த்தால்.
கந்த : கிட்டடியிலை பக்கத்துரிலை நடந்தது தெரியுமே? தமிழ்ப்பிள்ளை ஒன்று சிங்களப்பொடியனைக் காதலிச்சிருக்குது. இது இரண்டு வீட்டாருக்கும் பிடிக்கயில்லை. பெட்டையின்ரை பகுதி பொடியனை வெட்ட, பொடியன்ரை பகுதி பெட்டையை வெட்ட, அதுமட்டுமே இரண்டுபகுதிக்கும் நல்ல காயமுமாம்.
அதாலைதான் நான் என்னசொல்லுறனெண்டால். சரஸ் : அன்ைனை; உதெல்லாம் எனக்கேன் சொல்லுறியள்?
கந்த ; உன்ரைமேள் ஆசிரியத்தொழில் பார்த்தாலும் அவளுக்கும் உணர்ச்சிகள் இருக்குந்தானே. சந்தர்ப்பம், சூழ்நிலை
சொல்லிக்கொண்டே.
சரஸ் : அண்ணை; நீங்கள் ஆரையெண்டாலும் அப்படிச்சொல்லுங்கோ. என்ரை பிள்ளை அப்பிடிப்பிழைவிடமாட்டாள். நான் அப்படி
வளக்கவுமில்லை. (சிறிது ஆவேசமாகக்கூறுதல்)
கந்த சரி, சரி. நான் உவன் சிவம்விட்டை வந்தனான் உன்னையும்
எட்டிப்பார்த்திட்டுப் போவமெண்டு வந்தனான். நான் வாறன். சரஸ் ; தேத்தண்ணியைக் குடிச்சிட்டுப்போங்கோவன் அண்ணை.
கந்த : இப்பதான் சிவம்விட்டை குடிச்சனான்; போட்டுவாறன். சரஸ் : ஒம், ஓம் போட்டுவாங்கோ.
நெல்லைலதங்கி

எதிர்பார்க்கைகள்
இடம் :
கட்சி 2
பாடசாலை ஸ்ராவ் கும்
மாத்திரங்கள் : குணபாலா, திவ்யா, பாகுக்
(3600TLIT : திவ்யா :
(5600TLJT :
திவ்யா :
(5600TLIT : திவ்யா :
பாரூக்
குணபா : பாரூக்
(5600TLuT:
பாரூக்
(5600TLIT :
பாரூக்
(5600TLust : UTebë :
குட்மோர்னிங் ரிச்சர்.
குட்மோர்னிங். இண்டைக்கு உங்கடை பெஸ்ட்பிரண்ட் லீவு. என்னட்டைத்தான் லிவுலெட்டர் தந்துவிட்டவ.
ஏன்சேர்? ஏதும் உடல்நிலை சரியில்லையே? சீ. சீ அவவின்ரை பேபியை கிளினிக் கொண்டுபோகவேனுமாம்.
அதுதானே. தேவையில்லாமல் ரகுநாதன் ரீச்சர் லீவு எடுக்கமாட்டா. அங்கை ஒரு கிளாஸ் பிறியாய் இருக்கு. நான் போய் எடுக்கப்போறன். நீங்கள் இருங்கோ சேர். (மெலிதாய் சிரித்தபடி கூறுதல்)
: என்ன மாஸ்ரர், திவ்யா ரீச்சரையே பார்த்தபடி இருக்கிறியள்.
(திடுக்கிட்டவாறு) ஆ. என்ன சொன்னிங்கள்.
: (சிரித்தபடி) அதுதான் சரி. நீங்களே கனவுகண்டால் மாணவரை
எங்கை ஒரு நிலைக்கு கொண்டுவரப்போறியள்.
இல்லை சேர். திவ்யா ரிச்சரின்ரை பண்பு, அவ ஆசிரியரோடை பழகிற விதம், மாணவர் மீது செலுத்துகிற அன்பு தனது இன மாணவரைவிட எங்கடை உங்கடை இன மாணவர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் எங்கடை நாடு போற போக்கில் ஒரு தமிழ் ரீச்சர் இவ்வாறு நடக்கிறதுக்கு எவ்வளவு பெருந்தன்மை வேணும். இப்பிடி நாட்டின்ரை ஒற்றுமைக்கு பாடுபடுறவா குடும்பத்தின்ரை ஒற்றுமைக்கு சமாதானத்திற்காக எவ்வளவு LTGUG6).T.
: நீங்கள் போற போக்கைப்பார்த்தால் (கேலியாகச் சிரித்தல்)
மனம் திறந்து உண்மையைச் சொல்லுறன் மாஸ்ரர். திவ்யா மட்டும் எனக்கு மனைவியாய் அமைந்தால்.
; உங்களுக்கென்ன மாஸ்ரர்; அழகில்லையோ! படிப்பில்லையோ!
வசதியில்லையோ! நீங்கள் ஒம் எண்டால் எத்தனை பேர் வரிசையிலை நிப்பினம்.
அந்த வரிசையிலை திவ்யாவுமெல்லோ நிக்கவேணும். திவ்யா ரிச்சர் பழகிற விதத்தைப் பார்க்கையுக்கை அவ சம்மதிப்பா. (யோசித்தபடி) அவவின்ரை குடும்பமெல்லோ சம்மதிக்கவேணும். அவவின்ரை இனத்தைப் பகைச்சுக்கொண்டு இதுக்கு சம்மதிப்பா எண்டு நான் நினைக்கயில்லை.
நெல்லைலதங்கி

Page 10
எதிர்பார்க்கைகள்
(g5600TLusT:
LunTibdi
g5690T UT :
பாரூக்
(5600TLust: பாரூக்
குணபா: பாரூக் :
குணபா:
பாரூக் :
(5600TLIT :
பாரூக் :
(5600T Lunt :
4
மாஸ்ரர், மக்களின்ரை அறியாத்தனத்தாலைதானை இவ்வளவும். இனக்கலவரம் எண்டு ஒண்டு தொடங்கின பிறகுதானை இவ்வளவும். அல்லது முந்தி என்ன மாதிரி தமிழ்ச்சனம், சிங்களச்சனம், முஸ்லிம் சனம் ஒண்டாய் இருந்ததுகள். இன்பத்திலும் சரி துனபத்திலும் சரி என்ன மாதிரி பங்கு கொண்டதுகள். முந்தினமாதிரி தமிழ்ச்சனம் சிங்களம் கதைக்கும், அதேபோல எங்கடை ஆட்களும் என்னமாதிரி தமிழ் கதைக்குங்கள். இப்ப உள்ள பிள்ளையளைக் கேளுங்கோ.
ஒண்டுக்கும் ஒண்டும் தெரியாது.
: (சிரித்தபடி) பழசையெல்லாம் ஏன் கிண்டிறியள் எண்டு எனக்கு
விளங் குது. நேரடியாக திவ்யா ரீச் சரை கேட்கவேண்டியதுதானே. நான் கேட்க, காதல் கிதல் எண்டு இஸ்கூல் முழுக்க பரவியிடும். அந்தப் பெயரை திவ்யா ரிச்சருக்கு நான் ஏற்படுத்த விரும்பயில்லை.
; அப்ப காதலை புதுவிதமாக ரைச் பண்ணப்போறியள்போலை
இருக்குது. நேரடியாக திவ்யா ரிச்சருடைய அம்மாட்டைக் கேட்கப்போறன்.
(கேலியாக) போகயுக்கை செருப்பையும் கையோடை கொண்டு
போங்கோ. அங்கை இஞ்சை தேடாமலே விசுக்கி விடுவா.
என்ன மாஸ்ரர், இதிலை என்ன தவறு இருக்குது?
ஒரு இனத்திற் கை உள்ள வணிகளே சம்மந்தம் பேசிப்போகமுடியாத சாபக்கேடு தமிழ்ச்சனத்துக்கை இருக்குது. என்ன சொல்லுறீங்கள் மாஸ்டர்? எனக் கொண்டும் விளங்கயில்லை.
அதுதான் மாஸ்டர் சாதிப்பிரச்சினை. (சிரித்தவாறு) ஏன்மாஸ்டர், இந்தத் தமிழ்ச்சனம்தானே விழுந்து விழுந்து சாதி இரணி டொழிய வேறிலி லை என்று கத்திப்படிப்பிக்குதுகள். சுப்பிரமணிய பாரதியார் வேறை சாதியை ஒழிக்க நிறைய பாடல்களைப் பாடியிருக்கிறாராம்.
ஏன் மாஸ்டர்? இஞ்சையே கவனியுங்கோ. படிப்பிக்கிறது போலவே நிஜவாழ்க்கையிலும் நடக்கினம். பெல்லடிச்சிட்டுது இயர் நைனிற்கு சோசல்ஸ்ரடி உங்களுக்குத்தானே? ஓம் மாஸ்டர்.
செலிலைலதங்கி

எதிர்பார்க்கைதன்
காட்சி 3 இடம் : சரஸ்வதியின் வீடு பாத்திரங்கள் : கல்யாணி, சரஸ்வதி, திவ்யா. கல்யா : திவ்யா, திவ்யா! சரஸ் : ஆர்? கல்யாணியே, வாரும் வாரும். திவ்யா கிணற்றடியிலை.
இப்படிஇரும் சுறுக்கெண்டு வந்திடுவாள். கல்யா : என்ன அன்ரி? திவ்யாவை ஸ்கூல் மாறச்சொல்லி
நிக்கிறியளாம். சரளல் ஓம் பிள்ளை. கண்ட சாதியள் எல்லாம் படிப்பிக்குதுகள்,
கண்டசாதிப்பிள்ளைகள் எல்லாம் படிக்குதுகள். கல்யா : (சிரித்தபடி) அன்ரி, அரசாங்கத்தாலை ஒவ்வொரு சாதிக்கும்
ஒவ்வொரு பள்ளிக்கூடம் கட்டஇயலாது. சரஸ் (வெறுப்புடன்) சாதிதான். அதைவிடும். எங்களுக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாத, எங்கடை கலாச்சாரம் பண்பாட்டிற்கு ஒத்துப்போகாத சிங்களச் சனமும், முஸ்லிம் சனமும் இந்தப் பள்ளிக்கூடத்திலை படிப்பிக்குதுகளாம், படிக் குதுகளாம் அதுதான் எனக்கு கொஞ்சமும் விருப்பமில்லாமல் இருக்குது. கல்யா : அன்ரி முதல்முதல் இங்கைதான் வேலைபார்க்கவேணும். கொஞ்சக்காலம் செல்லத்தான் சொந்தஊருக்கு மாறலாம். விரும்பித்தானே அன்ரி திவ்யாவோடை நீங்களும் வந்தனிங்கள். சரஸ் : அப்ப விரும்பித்தான் வந்தன். இப்ப. திவ்யா : (வந்துகொண்டு) இப்ப மாமா குழப்பிவிட்டார். அப்படித்தானே
அம்மா? கல்யா : அன்ரி உங்கடை அண்ணையும் இஞ்சை மனம்பொறுத்து
இருக்கிறார் தானே. சரஸ் : அவர் தானும் தன்ரைபாடும் எண்டு இருக்கிறார். கல்யா : நீங்களும் உங்கடைபாடெண்டு இருக்கவேண்டியதுதானே.
என்ன் அன்ரி யோசிக்கிறியள்? சரஸ் : நாங்கள் எங்கடையாட்டிலை இருந்தாலும் எத்தனைபிரச்சினை
வலியத்தேடிவரும். திவ்யா : “மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்” அந்த நிலைதான் அம்மாவுக்கு. என்னம்மா?, கல்யாணி! நீயும் குழம்பாமல் ரீயைக்குடி. (வேடிக்கையாக) சரஸ் இருந்து ரீயைக்குடிச்சிட்டு ஆறுதலாய் கதையும். எனக்கு
நெல்லைலதாங்கி

Page 11
எதிர்பார்க்கைகள்
கல்யா
$6.just : கல்யா :
திவ்யா :
56)ust :
திவ்யா
56but :
திவ்யா :
கல்யா :
திவ்யா :
கல்யா
குசினியுக்கை வேலைஇருக்கு.
: அன்ரி; இந்தப்பொம்பிை க்கு எட்பார்த்தாலும் குசினியுக் ன்
வேலை (சிரித்துக்கொண்டே கூறுதல்)
(மூவரும் சிரித்தல்) (தாய் விலகியபின்பு) என்ன திவ்யா? அம்மா பெரிசாய் கவலைப்படுறா. நீ. ஏதாவது. (சிரித்தவாறு கூறுதல்)
போடி, உனக்கெப்பவும் இந்தக்கதைதான். இல்லை. உங்கடை ஸ்கூல்லை படிப்பிக்கிற குணபாலா மாஸ்டரைப் பற்றித்தான் எல்லா ஸ்கூல்லையும் கதை. நல்ல வடிவாம். நான் ஒருநாளும் அவரைக் காணயில்லையடி.
அப்ப நீ என்ரை ஸ்கூலுக்கு ரான்சர் எடு. நான் உன்ரை ஸ்கூலுக்கு ரான்சர் எடுக்கிறன்.
நான் பகிடிக்குக் கதைக்க நீ சீரியஸாய் எடுக்கிறாய். எங்களுக்கு அந்தவயதெல்லாம் கடந்திட்டுது, அதோடை நாங்கள் ரிச்சேர்ஸ் வேறை. ஆ. நீ நாளைக்கு ஸ்கூலுக்குப் போவாய்தானே.
: நாளைக்கு கட்டுரைப்போட்டியெல்லே சுதந்திரதினத்தையொட்டி
வைக்கினம்.
ஒரு கெடிங் செலக்ட் பண்ணியிருக்கினம், “சமாதானமும் இன ஒற்றுமையும்” இந்தக் காலகட்டத்திலை முக்கியமான ஒண்டு இல்லையே திவ்யா?
பின்னை என்ன? எங்கடை நாட்டிலை இருக்கிறது மூன்று இனம். அதுக்குள்ளையே வெட்டுப்பட்டுச் சுடுபட்டுத் தாங்களும் அழிஞ்சு, நாட்டையும் அழிக்குதுகள். எல்லாருமே ஆறறிவு கொண்ட மக்கள் தான் எண் டு புரிஞ் சுகொண்டால் இனத்திற்கிடையிலை பிரச்சினையே வராது. இல்லையே கல்யாணி?
மக்கள் மாத்திரமில்லை, ஆட்சியிலுள்ளவர்கள், அதிகாரம் செலுத்துபவர் யாவரும் சகல இனத்திற்கும் சம அந்தஸ்தைக் கொடுத்தால் நாட்டிலை எப்பவோ சமாதானம் ஏற்பட்டிருக்கும். சாமாதானம் ஏற்பட்டிருந்தால் இன ஒற்றுமையும் எப்பவோ ஏற்பட்டிருக்கும். ம். (பெருமூச்சு விடுதல்) (சிரித்தபடி) பரவாயில்லை உன்னைப் போட்டிக்கு எழுதவிட்டால் வெஸ்ட் பிறைஸ் எடுப்பாய் போல இருக்கும்.
: நானும் நீயும் புரிஞ்சுகொண்டால் போதாது திவ்யா. இந்த
நெல்லைலதங்கி

எதிர்பார்க்கைகள்
திவ்யா :
கல்யா
சரஸ்
கல்யா
சரஸ்
சரஸ்
a56bun :
g56 unt :
7
நாட்டிலையுள்ள சகல ஜீவராசிகளும் சாதி வேற்றுமையின்றி இன வேற்றுமையின்றி எல்லாரும் ஒரு இனம் ஒருமக்கள் எண்டு வாழவேணும்.
(சிரித்தபடி) சகல ஜீவராசிகளுமோ, பாவங்கள் மற்றைய ஐந்தறிவு கொண்ட ஜீவன்களுக்கிடையிலை பாகுபாடில்லையடி. முதல் முதலிலை காணயுக்கை முழிக்குங்கள். பிறகு சேர்ந்திடுங்கள்.
: (சிரித்தபடி) அப்ப ஆறறிவு இருக்கிறதுதான் பிரச்சனையே.? திவ்யா :
ஆறறிவு இருக்கிறது பிரச்சனையில்லை. அதை யூஸ் பணி னாததுதான் பிரச்சனை. அது மாத்திரமில்லை எல்லாருடைய மனத்திலும் நாமெல்லாம் ஒரு குடும்பம் என்ற எண்ணம் ஏற்படவேணும்.
; அப்ப தொடக்கம் கேட்டுக்கொண்டுதானிருக்கிறன். எத்தனை
ஆயிரம் உயிருகளை இழந்திட்டம். இனி ஒரு ஒற்றுமை தேவையே?
: அன்ரி, சொந்தங்களுக்கிடையிலை எவ்வளவு அடிபாடு வரும்.
கொஞ்சக்காலம் போக மறந்து சொந்தங்களை சேர்க்கிறது இல்லையே. அதுபோல பழசுகளைக் கிளறாமல் இனியாவது ஒற்றுமையாக வாழவேணும், சுதந்திரமாக திரியவேணும்.
: நீங்கள் 2 பேருமே இஞ்சை இருந்து வாதிட்டால் போதுமே. 856)um :
அதுதான் அன்ரி. இப்ப ஒரு கட்டுரைப்போட்டி நடத்துறம். நாட்டிலையே மாணவர் தொகைதான் அதிகளவு பங்கை வகிக்குது. அதாலை ஒவ்வொரு மாணவருடைய மனதிலும் சமாதானமாக, ஒற்றுமையாக வாழவேணும் எண்ட எண்ணத்தை ஏற்படுத்த வேணும்.
; மனம் விரும்பி எத்தினை பேர் பங்குபற்றுதுகள்? திவ்யா :
அம்மா என்ன சொல்லுறா எண்டால் கல்யாணி, பரிசுக்காக எத்தினைபேர் பங்குபற்றுதுகளோ எண்டு நினைக்கிறியள். இல்லையே அம்மா?
அன்ரி விரும்பியோ விரும்பாமலோ எழுதத்துாண்டுறம். அது ஒரு அத்திவாரமாக இருக்கட்டுமன். அதுமாத்திரம் இல்லை அன்ரி, எழுத்திலை எழுதுறதை செயலிலை காட்டவேணும். இல்லையே திவ்யா?
நெல்லைலதாங்கி

Page 12
ഒffമമ്മള്
கல்யா :
8
சரி அன்ரி, திவ்யா, நான் வரப்போறன். எந்த ஸ்கூல் மாணவருக்கு அதிஷ்டம் அடிக்குதோ..?
திவ்யா : குழம்பாமல் போட்டுவா, எழுதுறது மாணவர் தானே.
காட்சி 05
இடம் : சரஸ்வதி வீடு
மாத்திரங்கள் : சரஸ்வதி, பாருக், குணமாலா
(கதவைத் தட்டுதல்)
சரஸ் : ஆரது. புதுமுகங்களாய் இருக்குது. ஆரிட்டை தம்பியவை
வந்தனிங்கள்.
பாரூக் ! உங்களிட்டைத் தானம்மா. உங்கள் மகள் திவ்யா ரீச்சர்
படிப்பிக்கிற ஸ்கூலிலைதான் நாங்களும் படிப்பிக்கிறம்.
சரஸ் : வாங்கோ, இருங்கோ தம்பியவை. திவ்யா வீட்டிலை இல்லை.
பாரூக் ! உங்களோடைதான் கதைக்கவந்தனாங்கள் அம்மா. குணபாலா
சொல்லன். (குணபாலாவைப் பார்த்து)
குண : ஒம் அம்மா.
சரஸ் முன்பின் தெரியாத நீங்கள், அப்பிடி என்னோடை என்ன
விஷயம் கதைக்கப்போறியள்?
குண : வந்து. வந்து. எனக்கு உறவெண்டு பெரிசாய் ஒருதரும் இல்லை. சின்ன வயதிலையே தாயைப் பறிகொடுத்திட்டு தாயன்புக்காக ஏங்கிறவன் நான்.
பாரூக் : தகப்பனும் போனவருஷம் காலமாயிட்டார். தனிப்பிள்ளை, சொத்துச்சுகமெண்டு நிறைய இருக்கு. எந்தக் கெட்டபழக்கமும் இல்லாதவன் அம்மா. உங்கடை மகள் திவ்யாவின் குணத்திற்கு ஏற்றவன். இப்ப புரிஞ்சிருக்கும் எண்டு நினைக்கிறன்.
சரஸ் : (தடுமாற்றத்துடன்) தம்பி நீங்கள்.
பாரூக் : அம்மா, நாங்கள் இவ்வளவு தயங்கித் தயங்கி கேட்கிறதுக்குக் காரணமே நாங்கள் வெவ்வேற இனம் எண்டபடியால் தானம்மா
சரஸ் தம்பி! இது கதையெழுதுறதுக்கு, கட்டுரை எழுதுறதுக்குச் சரிவரும். நிஜ வாழ்க்கைக்கு ஒத்துவராது. (கவலையுடன்) நான் ஒத்துக்கொண்டாலும் எங்கடை சொந்தபந்தம் எங்களை ஒதுக்கி வைச்சிடும் தம்பியவை.
பாரூக் : அம்மா! இப்பிடியே ஒவ்வொருவரும் ஒதுங்கிநிண்டால் பூனைக்கு
மணி கட்டுறது யாரம்மா? அதோடை திவ்யா ரீச்சர் பாகுபாடில்லாமல் பழகுறவ. அவவைமாதிரித்தான் நீங்களும்
நெல்லைலதங்கி

9 Afonufaasalah
இருப்பியள் எண்டு நம்பிவந்திட்டம். அவசரப்படாமல் யோசிச்சு
நல்லமுடிவாய்ச் சொல்லுங்கோ. (எழுந்து) நாங்கள் வாறம். சரஸ் : ஒண்டும் குடியாமல் போறியள். பாரூக் : சாப்பாடே போடப்போறியள். (சிரித்தபடி கூறுதல்) குண : வாறமம்மா.
காட்சி 06 இடம் : மாதையோரம் மாத்திரங்கள் : கல்யாணி திவ்யா. கல்யா : திவ்யா! நில்லு. நானும் உங்கடை வீட்டுக்குத்தான் வாறன். திவ்யா : கல்யாணியே..? வா. வா. கல்யா : வா. வா எண்டு வரவேர். ஆனால் ஒண்டையும் சொல்லியிடாதை. திவ்யா : நாங்களே இன்னுமொரு முடிவுக்கு வரயில்லை. நீ. கல்யா : நல்லாயிருக்குதடி. ஊருக்கு உபதேசம் உனக்கில்லை
எண்டதை நிருபிச்சிட்டாய். திவ்யா : (கவலையுடன்) பழகுறது வேறை. சம்மந்தம் வைக்கிறது.? கல்யா : இப்படி எல்லோருமே பின்னிண்ைடால், எங்கடை இனம் எப்ப ஒற்றுமையாகிறது. நாட்டிலை எப்ப சமாதானம் ஏற்படும் சொல்லு பாப்பம்? திவ்யா : அதுக்காக, நான் என்ரை சொந்தபந்தத்தை விட்டுட்டுத் தனிய
வாழுறதே. கல்யா : திவ்யா, வாழுற வாழ்க்கை முக்கியமில்லை. இப்பிடித்தான் வாழவேண்டும் எண்டும் வாழலாம். எப்படியும் வாழலாம் எண்டும் வாழலாம். ஆனால் ஒவ்வொருவரும் மானிடராய்ப் பிறந்ததுக்கு என்ன செய்யினம். ஏதோ சாப்பிட்டு, சாப்பாட்டுக்காகப் பாடுபட்டு உழைச்சு, அற்ப சந்தோஷத்தையும் அனுபவித்துக்கொண்டு வாழுதுகள். நாங்கள் மனிதராய்ப் பிறந்ததுக்கு எங்களலை இயன்றதை வீட்டுக்கோ அல்லது நாட்டுக்கோ செய்ய வேண்டும். உன்ரை அம்மாதான் குழப்புறா எண்டு நினைச்சன் ஆனால் நீதான் குழம்புறாய்போல இருக்கு. நீ ஒரு ஆசிரியை முன்மாதிரியாக நடந்துகாட்ட வேணும். நல்லாச் சிந்திச்சு ஒரு முடிவை எடு. நான் வாறன். திவ்யா : வீட்டை வாறனெண்டாய்..? கல்யா : கதைக்க வந்ததை உன்னோடை கதைச்சாச்சு.பிறகேன்? நான்
வாறன.
நெல்லைலதங்கி

Page 13
எதிர்பார்க்கைகள்
O
காட்சி 07
இடம் : சரஸ்வதி வீடு பாத்திரங்கள் : குணமாலா, பாருக் கல்யாணி திவ்யா, சரஸ்வதி. கல்யா, பாரூக் : அன்ரீ அன்ரி
சரஸ்
திவ்யா
: நீமட்டும் குறைவே? பயிற்றங்காய் மாதிரி இருந்தனி.
கல்யா பாரூக்
குண
Fj6t)
பாரூக்
குண
திவ்யா
சரஸ்
86 ouT
LuTubb
சரஸ்
வாங்கோ பிள்ளையஸ். இப்பிடி இருங்கோ. பொருத்தமான சோடி
என்ரை கண்ணே பட்டிடும்போல இருக்கு. திவ்யா. இஞ்சைவந்துபார் ஆர்வந்திருக்கிறதெண்டு. ஆ. கல்யாணி; என்னடி குண்டாகி நல்ல வடிவாய் வந்திட்டாய்.
குணபாலா, அதுகள் தங்களுக்குள்ளை அடிபடுகுதுகள். எங்களைப்பற்றி ஒருகதை. (கேலியாக)
; அதுதானே. (சிரித்தவாறு) எங்களைப்பற்றியும் ஒருவார்த்தை
tബൺ.
; தம்பியவை ஒரு பெண் சந்தோஷமாய்ப் பூரிச்சு இருக்கிறாள்
எண்டால் அதுக்கு காரணம் அவளுடைய கணவன்தான். அந்தவகையிலை உங்கள் இரண்டுபேருக்கும்தான் பெருமை. ஒரு இனத்துக்கை ஒரு சாதியுக்கை கட்டிக்கொடுத்த எத்தனை குடும்பங்கள் அடிபட்டு குத்துப்பட்டு சீரழிஞ்சு வாழுதுகள். குணபாலா தம்பி திவ்யாவை நீ எண்டுபாஞ்சதோ, பேசினதோ இல்லை; என்ரை கண்ணே பட்டிடும் எண்டு.சிலவேளை நினைப்பன். (கேலியாக) அம்மா! குணபாலா உங்கடை மகளை அடையவேண்டும் எண்ட ஆசையிலை இணைஞ்சவன். நாங்கள் முன்மாதிரியாய் நடக்கவேனும் எண்டு இணைஞ்சனாங்கள்.
: இப்ப என்னடாப்பா செய்யவேணும்? போஸ்டல் ஒட்டி விளம்பரம்
செய்யவேணுமே.
: விளம்பரம் செய்தாலென்ன, செய்யாட்டாலென்ன எங்கடை இந்த
திருமணங்களுக்குப்பிறகு நாட்டிலை எவ்வளவோ முன்னேறி ஒற்றுமையாக வாழுதுகள். அவ்வளவும் காணாதே?
: காணும் காணும், சாப்பாடு ஆயத்தம் சாப்பிட வாங்கோ. : திருமணம் மாத்திரம் இன ஒற்றுமையை ஏற்படுத்தாது திவ்யா,
சகலமக்களும் மனம்வைக்கவேணும்.
திவ்யா; நீங்கள் என்னசொன்னாலும் இப்ப எவ்வளவோ
முன்னேறியிட்டார்கள் எங்களுடைய மக்கள். அதை
ஏற்றுக்கொள்ளத்தான் வேணும்.
: சாப்பாடு ஆறுது கெதியாய் வாங்கோ.
- முற்றும் -
நெல்லைலதங்கி

அறிவார்க்கைகள்
11
வெள்ளைப் புறா
பங்குபற்றுவோர்
திலினி - depadat Sasadat (GLordLj) கிறேஸ் - Dostulat Baat
t - apalat saas opsub -aspalat sot SGambit - auGot Suià ரங்கனி - கிறேவினிகனவன் களதுரி -Gjað
காட்சி : 01
இடம் : ஹொஸ்பிட்டல் மாத்திரங்கள் : திலிமண், கிறேஸ், நேர்ல்
திலீபன் :
நேர்ஸ்
திலீபன் :
கிறேஸ் : திலீபன் கிறேஸ் : திலீபன் : கிறேஸ் : திலீபன் கிறேஸ் :
திலீபன் : கிறேஸ் :
திலீபன் : கிறேஸ் : திலீபன் :
நேர்ஸ்; பேசன்ற்ஸ் வாசலை அடைச்சுக்கொண்டு நிக்குதுகள். கொஞ்சம் விலகி நிக்கச் சொல்லுங்கோ.
: யெஸ் டொக்டர். (மக்களைப் பார்த்து) அம்மா தள்ளி நில்லுங்கோ.
இவ்வளவு பேரும் போனபிறகுதான் நீங்கள்.
இந்தாங்கோம்மா. இந்த துண்டை காட்டி குழந்தைக்கு ஊசியைப்போடுங்கோ. நெக்ஸ்ற். அடுத்தாள். (கிறேசைக்கண்டதும் எங்கோ கண்ட ஞாபகத்தில்) நீங்கள். உங்கடை நேம்.
கிறேஸ்மேரி யோசேப். (முணுமுணுத்தவாறு) கிறிஸ்ரியன் சரி. வயது. இருபத்திரெண்டு நல்லது. அட்றெஸ். தும்பளை சவுத், பொயின்ற் பீட்று. (ஏதோ யோசனையில்) சேர்ச்சுக்குப் போவீங்களா?
கிறிஸ்ரியன்ஸ் சேர்ச்சுக்குப் போகாமல் ஹிண்டுவின்ரை கோவிலுக்கா போவினம்?
நீங்க பொயின்ற் பீட்று சேர்ச்சுக்கா போறனிங்கள்?
ஆமா டொக்டர்; இவ்வளவு நேரமும் நீங்க கேள்வியளை கேட்டீங்கள். நான் ஒரே ஒரு கேள்வி கேட்கலாமா?
யெஸ். தாராளமாய் கேளுங்கோ. லேடீஸ் வந்தால் நோயை கேட்கிறதையே மறந்து போடுவீங்களா?
ஸ்ரொப் இற். உங்களுக்கு என்ன வருத்தம்?
நெல்லைலதங்கி

Page 14
Auveaed 2
கிறேஸ் : (கேலியாக) அடடா, மூக்குநுனியிலை கோபம். உங்கடை ஸ்ரொப் இற்றைக் கேட்டு எல்லாரும் என்னையே பார்க்கிறாங்கள். ஏதோ நான் உங்களை வம்புக்கிழுத்த மாதிரி.
திலீபன் : ப்ளிஸ் கிறேஸ். ஒ. நோ. மிஸ் ஒரு டவுட்டை கிளியர் பண்ணுறதுக்காக கேட்டேனே ஒழிய எந்தப் பெண்ணையுமே இந்தமாதிரி கேள்வி கேட்டது கிடையாது. உங்கடை நோயைச் சொல்லுங்கோ.
காட்சி : 02
இடம் : ஹொஸ்பிட்டல் வாசல் மாத்திரங்கள் : கிறேல், தேர்ல் நேர்ஸ் : மிஸ்; உங்களுக்கு சற்றடே போ."ருக்கு கிளினிக் இருக்காம்.
டொக்டர் சொல்லச்சொன்னவர். கிறேஸ் : துண்டிலை குறிக்கையில்லையே? நேர்ஸ் : அதாலைதான் நான் காத்திருந்து சொல்லுறன்; ஸ்பெசலிஸ்ற்
வருவார்; கண்டிப்பாய் வாங்க; மிஸ் பண்ணியிடாதையுங்கோ. கிறேஸ் : ரொம்ப தாங்ஸ். நான் வாறன். நேர்ஸ் : ஓம் ஓம். போட்டு வாங்கோ.
காட்சி : 03 இடம் : ஹொஸ்பிட்டல் மாத்திரங்கள் : கிறேல், நேர்ல், திலீபண் கிறேஸ் : (மனதிற்குள்) வோ'ருக்கு கிளினிக் எண்டு நேர்ஸ் சொன்னவா, ஆனால் ஒருத்தரையும் காணன் வோ'ர் தேர்ட்டி ஆய்ச்சுது ம். அந்த பொக்டரும் என்னை வரச்சொன்ன நேர்சும்தான் அறையுக்கை இருக்கினம் நேர்ஸ் : மிஸ்; வாங்கோ. உங்களைத்தான் காத்துக்கொண்டிருக்கிறம். கிறேஸ் : (கோபத்துடன்) எனக்கு ஒர்ாளுக்காக ஸ்பெசலிஸ்ற்
வந்திருக்கிறாரா? திலீபன் : ப்ளிஸ் ரேக் யுவர் சீற். கிறேஸ் : நோ தாங்ஸ். நேர்ஸ் : டொக்டர்; கிறேஸ் ஏமாத்தயில்லை. இரண்டு பேரும் கதையுங்கோ.
நான் அடுத்த நூமுக்குப் போட்டுவாறன். திலீபன் : கிறேஸ்; உங்களோடை தனிமையிலை கதைக்க விரும்பிறன். உங்கடை அட்றெசைக் கண்டுபிடிச்சு அங்கையே வந்து சந்திச்சிருப்பன். அது உங்களுக்கு அழகில்லை. அதனாலைதான். நெல்லைலதங்கி

13 Aatalaaaat
கிறேஸ் : விளங்குது டொக்டர். இப்பிடி எத்தனை பெண்களை
அழைச்சனிங்கள். நேர்ஸ்தான் முதலாவதாளா? திலீபன் : சட் அப். உங்களுக்கு எப்பிடி புரியவைக்கிறதெண்டே
தெரியயில்லை. கிறேஸ் : கோபத்துக்கு மாத்திரம் குறைச்சலில்லை. நீங்கள் அப்பிடியான எண்ணம் இல்லாதவரெண்டால், ஏன் என்னைப் பின் தொடருறிங்கள்? திலீபன் : அதுதான் எனக்கும் புரியயில்லை. உங்களை. முதல் முதல்
கண்ட அண்டே. கிறேஸ் : போதும் நான் வாறன். (கோபத்துடன்) திலீபன் : மிஸ். கிறேஸ் : மிஸ் இல்லை; மிஸிஸ் ஞாபகம் வைச்சிருங்கோ.
காட்சி : 04 இடம் : வீடு மாத்திரங்கள் : கிறேளல், டொறிண், மரியம் டொறின்: அக்கா; அக்கா; அறையுக்கை என்ன செய்யுறிங்க. கிறேஸ் : ஒண்டுமில்லை. என்ன? டொறின்: இண்டைக்கு புறோக்கர் தம்பிமுத்து வந்தவர். அக்கா; அம்மா
வாறா நான்போறன். மரியம் : பிள்ளை புறோக்கர் தம்பிமுத்து வந்தவர். நல்ல இடமாம். கொஞ்சம்
கூடக் கேட்கினம். கிறேஸ் : டொறினுக்கு விருப்பம் எண்டால் செய்து வையுங்கோவன். மரியம் : பிள்ளை இது உனக்கு பேசின சம்மந்தம். கிறேஸ் : (கோபமாக) உங்களுக்கு எத்தனை நாள் சொல்லியிருக்கிறன். என்ரை தலை எழுத்து அவ்வளவுதான். மூண்டு பேர் திருமண வயதிலை இருக்குதுகள். அதுகளின்ரை சந்தோசம்தான் என்ரை சந்தோசம். இதை பேசி முடிச்சு டொறினுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் குடுங்கோ. டொறின்: (இதனைக் கேட்ட டொறின்) அக்கா; பெரியவை கதைக்கிற இடத்திலை நான் கதைக்கிறன் எண்டு ஏசாதையுங்கோ. உங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்ச பிறகுதான் எங்களைப்பற்றி யோசியுங்கோ. கிறேஸ் : (ஆறுதலாக) மூண்டு குமர் வீட்டிலை இருக்கக் கூடாது. டொறின்: இப்பிடி ஒரு சம்மந்தம் வர குடுத்து வைக்க வேணும். டொறின்: அக்கா உங்களை ஏன் விட்டிட்டியள்? நாலு குமர் இருக்கலாம். நெல்லைலதங்கி

Page 15
14 Ajvlnkaaaař
ஒரு மாதம். அதுவும் ஒரு வாழ்க்கையே அக்கா? மரியம் : (கோபமாக) டொறின்; போய் உன்ரை அலுவலைப்பார்.
பழசையெல்லாம் கிளறிக்கொண்டு.
காட்சி : 05 இடம் : விடு பாத்திரங்கள் : கிறேல், டொறின் டொறின்: அக்கா; உங்களுக்கு ஒரு லெற்றர் வந்திருககு. கிறேஸ் : இஞ்சை கொண்டா. நிறைஞ்சினிதான் போட்டிருக்க வேணும். டொறின்: கடைசியிலை ஆர் எண்டு பார்த்துவிட்டு வாசியுங்கோவன்.
(கடைசியிலை டொறின் பார்த்துவிட்டு) டொக்டர். ஆரக்கா? கிறேஸ் : ஆரெண்டு பார்த்தபிறகு சொல்லுறன். அம்மா கூப்பிட்றா; ஒடு.
(கடிதத்தை வாசித்தல்)
அன்புமிக்க கிறேகக்கு,
உங்களை மறக்க முயற்சி செய்து தோல்வி கண்ட திலீபன் எழுதுவது. உங்கள் உருவத்தை முதல் முதல் கண்டா மோகம் கொண்டேன்? சேர்ச்சில் பஜனைப் பாடல்களை பாடிக்கொண்டிருந்த சமயம் தற்செயலாக உங்கள் குரல் இதயத்தில் ஒரு கீறலை உண்டாக்கியது. அப்பொழுதுதான் உங்கள் முகத்தைப் பார்ப்பதற்கு ஆவல் ஏற்பட்டது. தற்செயலாக நீங்கள் திரும்பிய போது இனிமையான குரல் மாத்திரமில்லை அழகையும் ஆண்டவன் வாரிவிட்டிருக்கிறான் என்பதைக்கண்டு என் இதயத்தின் கீறலில் ஒரு வளர்ச்சி. கிறேஸ் : (மனதிற்குள்) ம். அழகைத்தந்த ஆண்டவனுக்கு என் வாழ்க்கையை இனிமையாக தர முடியவில்லையே.
காதல் எண்டு கடிதம் எழுத விரும்பயில்லை. நேரே வந்து உங்களது பெற்றோருடன் கதைக்கிறேன். எனது விருப்பம்தான் அம்மாவின் விருப்பமும், மிகுதி உங்கள் பதில் கண்டு நேரில், டொறின்: என்னக்கா; கடிதத்தை வைச்சுக்கொண்டு யோசிக்கிறியள். ஆரக்கா
டொக்கடர்? கிறேஸ் : அது பெரிய கதை. நாளைக்கு ஹொஸ்பிட்டலுக்கு போட்டுவந்து
சொல்லுறன். டொறின்: என்னை ஏங்க வைக்கிறீங்கள். என்னெண்டு சொல்லுங்கோ. கிறேஸ் : ப்ளிஸ் டொறின்; நாளைமட்டும் பொறுத்திரு.
நெல்லைலதங்கி

attelaaaat
arh
15
காட்சி : 06
ஹொல்பிட்டல்
மாத்திரங்கள் : கிறேனல், திலீபன்
திலீபன் :
கிறேஸ் : திலீபன் : கிறேஸ் :
திலீபன்
கிறேஸ் :
திலீபன் : கிறேஸ் திலீபன் : கிறேஸ் :
திலீபன் : கிறேஸ் :
திலீபன் : கிறேஸ் :
திலீபன் :
கிறேஸ் :
வாங்கோ கிறேஸ்; இவ்வளவு கெதியாய் வருவிங்கள் எண்டு எதிர்பார்க்கயில்லை.
ஆக்களாய் இருக்கு. அந்த றுாமுக்கை போய் கதைப்பம். என்ன பேசாமலிருக்கிறீங்கள்.
ம். டொக்டர் நீங்க எதிர்பார்க்கிற அளவுக்கு நான் தகுதியானவளில்லை. ஏன் அப்பிடி சொல்லுறீங்கள். பணம், அந்தஸ்து இதுகள் எனக்கு தகுதியில்லை. உங்களுக்கு எப்பிடி சொல்லுறதெண்டே தெரியயில்லை. நீங்கள் எதிர்பார்க்கிறபடி நான் கன்னிப்பெண் இல்லை. எனக்கு ஏற்கனவே திருமணம் ஆயிட்டுது.
கிறேஸ்; பகிடி விட்றதுக்கு இதுதான் நேரமே? இல்லை டொக்டர். நான் சீரியஸாய்ச் சொல்லுறன். நான் நம்பமாட்டன். நீங்க நம்பித்தான் ஆகவேனும். நான் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
(ஆச்சரியத்துடன்) கிறேளல்;
இவ்வளவு கெதியாய் உங்களை சந்திக்க விரும்பியதுக்கு இதுதான் காரணம் டொக்டர்.
உங்கடை கணவர்? (கவலையுடன்) ஒரு கிழமைதான் டொக்டர். திருமணம் முடிஞ்சு ஒரு கிழமை தொழிலுக்குப் போகாமல் இருந்தார். அடுத்த நாள் விடிஞ்சதும் விடியாததுமாக கடலுக்கு போனவர்தான் திரும்பவே இல்லை.
கிறேஸ்; நான் உங்கள் உள்ளத்தை அடைய விரும்பினேனே யொழிய உங்கடை உடலை இல்லை. நீங்க வேலை பார்த்தாலும் உங்களுக்கு ஒரு துணை வேணும். கிறேஸ்; அந்தத் துணையாய் வர நான் விரும்புறன்.
நீங்கள் இருபதாம் நூற்றாண்டு இளைஞர்; இதுக்கு ஒத்துக்கொள்ளுவிங்கள். ஆனால், உங்கம்மா ஒரு நாளும் சம்மதிக்கமாட்டா.
நெல்லைலதங்கி

Page 16
6
எதிர்பார்க்கைகள் திலீபன் : அதாலைதான் கிறேஸ்; நீங்க ஒரு உதவி செய்யவேணும். உங்கடை முதலாவது திருமணத்தைப்பற்றி அவகிட்ட மூச்சே விடக்கூடாது. கிறேஸ் : பொய் சொல்லுறதா டொக்டர்? என்னாலை பொய் சொல்லேலாது. திலீபன் : ப்ளிஸ் கிறேஸ் நல்லதுக்காக பொய் சொல்லலாம். நாள் போக
அம்மாவை சரிப்படுத்துவன். கிறேஸ் : ஏதோ நல்லாய் முடிஞ்சால் சந்தோஷம்தான். நேரம் போகுது டொக்டர்; நான் வாறன்; எப்ப வருவீங்க எண்டு லெற்றர் போடுங்கோ. திலீபன் : ஒம் ஓம் மறக்கமாட்டன்; குட் பாய். கிறேஸ் : குட் பாய்.
BIT f : 07 இடம் : வீடு பாத்திரங்கள் : கிறேஸ், டொறின் டொறின்: அக்கா; ஹொஸ்பிற்றலுக்கு போட்டுவந்து சொல்லுறன் எண்டனிங்கள். பொறுமை அளவுக்கு மீறுது; சொல்லுங்கோக்கா. கிறேஸ் : ஒரு குட் நியூஸ். டொறின்: குட் நியூஸ் கேட்டு கனநாள். என்னண்டு சொல்லுங்கோ. கிறேஸ் : ஒரு மேடையிலை இரு திருமணம். டொறின்: சொல்லுறதை விளங்கச் சொல்லுங்கோவன். கிறேஸ் : டொறின்; உனக்கு சம்மந்தம் முற்றாயிட்டுது. டொறின்: (கோபமாக) போங்கோ. உதுதான் குட் நியூஸ்; என்னைப் பொறுத்தவரையிலை பாட் நியூஸ். உங்கடை கழுத்திலை தாலி ஏறினால்தான் நான் இதுக்கு சம்மதிப்பன். கிறேஸ் : டொறின் ஏன் இப்பிடி கோவிக்கிறாய்? என்னுடைய கழுத்திலையும்
தாலி ஏறத்தான் போகுது. டொறின்: (ஆச்சரியத்துடன்) உண்மையே அக்கா; அத்தான் ஆரக்கா? கிறேஸ் : அதுக்கிடையிலை உரிமையைப்பாரன்; டொக்டர் திலீபன். டொறின்: (கேலியாக) அதுதான் அடிக்கடி வருத்தம் வருது. என்னக்கா? கிறேஸ் : விசரி; உண்மையை தெரியாமல் கேலி பண்ணுறாய். டொறின்: அம்மாக்கு முதல்லை விசயத்தை சொல்லிப் போட்டுவாறன். கிறேஸ் : டொறின் அவசரப்படாதை. இப்ப சொன்னால் அம்மா என்னைத்தான் தப்பாய் எடைபோடுவா. அவரே வந்து கதைக்கயிக்கை சொல்லுவம்.
நெல்லைலதங்கி

aNingefaasaaf
Gurgfesör: Ap6): algar:
Dasib :
17
(கேலியாக) அவரே வந்து. குறும்பு. உனக்கு. (காதில் கிள்ளுதல்)
85TL f : 08 திலீபனின் வீடு
மத்திரங்கள் : கிறேஸ், திலீபன், அகுளம்மா
திலீபன் :
அடு
கிறேஸ் :
906ے
திலீபன் : கிறேஸ் : திலீபன் : கிறேஸ் :
திலீபன் :
அரு
905
கிறேஸ் : திலீபன் :
: கிறேசை சொல்லுறனப்பா. உனக்கு பொருத்தமான மனைவி.
905
கிறேஸ் திலீபன் :
அம்மா, அம்மா இஞ்சை பாருங்களன். ஆர் வந்திருக்கிறதெண்டு.
: மருமகள் வாம்மா. முதல் முதல் வாறாய். வலக்காலை எடுத்து
வைச்சுக்கொண்டு வா.
அத்தை; என்னை ஆசீர்வதியுங்கோ. (அத்தையின் காலில் விழுதல்)
: எழுந்திரம்மா. எல்லாம் வல்ல கர்த்தர் அருள் புரிவார். ரண்டு
பேரும் கதைச்சுக் கொண்டிருங்கோ. நான் ஏதாவது றிங்ஸ் கலந்து கொண்டு வாறன். (போய்க்கொண்டு) திலீபன்; மரத்திலை பப்பாப்பழம் பழுத்தது இருக்கவேணும். இடுங்கி வெட்டிக்குடு,
&sulbudt.
திலீபன்; நான் பூவுலகிலைதான் இருக்கிறனோ. என்ன கிறேஸ்; கனவு காண ஆரம்பிச்சிட்டிரோ? எவ்வளவு நல்லவா உங்கடை அம்மா. அவவை ஏமாத்துறதே? நான் உண்மையைச் சொல்லப்போறன் திலீபன். வெண்ணை திரண்டுவர தாழி உடைஞ்ச கதைதான் இது. கொஞ்சம் பொறுமையா இரும் கிறேஸ் , வாறன் பப் பாப் பழம் இடுங்கிக்கொண்டு.
: இந்தாம்மா இதைக்குடி. எங்கை திலீபன்? கிறேஸ் :
: கிறேஸ்; திலீபன் புதுசாய் சேட் எடுத்தாலே பிறெண்ஸ் எல்லாரும்,
அங்கை வாறார் பப்பாப்பழமும் கையுமாய்.
“உனக்கு நல்ல மச்சாய் இருக்கடா” எங்கையடா செலக்ட் பண்ணினனி எண்டு புகழுவாங்கள். இப்ப மனிசிக்காரியை செலக்ட் பண்ணினதை அறிஞ்சால்.
போங்கோ. அத்தை. (விளங்காமல்) என்னம்மா சொல்லுறீங்கள்?
எனக்குப் பொருத்தமான மருமகள்.
அத்தை நீங்க எதிர்பார்க்கிறதுபோலை. நீங்க எதிர்பார்க்கிறது போல கிறேஸ் பணக்காரி இல்லை எண்டு
நெல்லைலதல்கி

Page 17
afdunelaavanaf
அரு
கிறேஸ் :
அரு
sel(5
திலீபன் :
சொல்லுறது?
905
கிறேஸ் :
திலீபன்
கிறேஸ் :
திலீபன் :
கிறேஸ் :
திலீபன் :
18
சொல்லவாறா.
ஏழையளிடம் தான் நல்ல குணம் இருக்கு. கிறேஸ்; அது உன்னட்டையிருக்கு. இந்தச் சொத்தெல்லாம் ஆருக்கு திலீபனுக்குத் தானே. அத்தை நீங்க ஒரு உதவி செய்யவேணும்.
என்னண்டு சொல்லம்மா? கிறேஸ் :
திலீபன் என்னை வேலையிலிருந்து நிக்கட்டாம். நான் உழைக்காட்டால் என்ரை தங்கச்சியவை 2 பேரையும் ஆர் கரையேற்றுறது. அதோடை டொறினுக்கும் கொஞ்சம் கடன்பட்டிருக்கு. எங்கடை குடும்பமே உங்களுக்கு சுமையாய் இருக்கிறதை நான் விரும்பயில்லை அத்தை.
2 பேரையும் நல்ல இடத்திலை பிடிச்சுக் குடுக்குமட்டும் வேலையைச் செய்யட்டும். பிறகு நிக்கட்டுமன். திலீபன்; நீ என்ன சொல்லுறாய்?
கிறேளில் நல்லாய் பொடிவைச்சுட்டுது. நான் இனி என்ன
இந்த அல்பத்தை வைச்சுப்பாருங்கோ. போறதுக்கிடையிலை நான் ஏதாவது சிற்றுண்டி செய்துதாறன். வேண்டாம் அத்தை. உங்களுக்கேன் வீண் சிரமம். (திலிபனைப் பார்த்து) நானும் போய் ஏதாவது உதவி செய்திட்டுவாறன். (பொய்க்கோபத்துடன்) மாமியாற்றை வாலைப் பிடிச்சது காணும்; சும்மா இரும். இப்பவாவது அம்மா கழண்டாவே எண்டு நான் நினைச்சு சந்தோசப்பட நீர்.
ஆளைப்பாருங்கோவன். உங்களுக்குப் பக்கத்திலையே இருக்கிறன். அந்த அல்பத்தை எடுத்துத்தாங்கோ. இதார் அத்தையே திலீபன். இப்பவே தெரியுது. அப்ப எவ்வளவு வடிவாய் இருந்திருப்பா எண்டு.
(தான் குழந்தைப்பருவத்தில் எடுத்த படத்தைக் காட்டி) இதெப்பிடியிருக்கு?
கண்ணனை நேரிலை கண்டது போலையிருக்கு. எனக்கு இந்தப்படத்தை தாறிங்களே? (அதற்கிடையில் திலீபனின் அடையாள அட்டையை கண்டுவிட்டு சிரித்தல்) இதென்ன திலீபன் இஞ்சி திண்ட குரங்கு மாதிரி முழிக்கிறீங்கள்? (அடையாள அட்டையை பறித்தவாறு) உமக்கு நல்லாய் பகிடி கதிச்சுப் போய்ச்சுது.
நெல்லைலதங்கி

Munafaasaaf கிறேஸ் : ஏன் திலீபன்; இப்பிடி கோவிக்கிறீங்கள்? பகிடிக்கு சொல்ல. திலீபன் ; (பொய்க்கோபத்துடன்) பெரிய பகிடி. இதுவும் பகிடிக்கு
எப்பிடியிருக்கு? (காதில் கிள்ளுதல்) கிறேஸ் : ஆ. அத்தை. அரு : (குசினிக்குள் இருந்தவாறு) என்ன திலீபன்? திலீபன் : அம்மா வரப்போறா. ஒண்டுமில்லை அம்மா. அதிங்கை ஒறும்பு.
ତ[Bibl4. கிறேஸ் : (சிரித்தவாறு) ஒறும்பில்லை அத்தை; குரங்கு. திலீபன் : உம்மடை ஐடென்ரி கார்ட்டை பாத்தனே. அணில் ஏறவிட்ட நாய்
மாதிரி இருந்துது. கிறேஸ் : (கோபமாக) ஐடென்ரி கார்ட் படத்திலை எல்லாரும் அப்பிடித்தான். திலீபன் : உம்மைச் சொன்ன உடனே சமாளிக்கிறீர். (மறுபடியும் கிள்ளுதல்) கிறேஸ் : உங்களோடை இருக்கேலாது. நான் அத்தையிட்டை போகப்போறன்.
5Tld : 09 இடம் : கிறேசின் வீடு மாத்திரங்கள் : கிறேல், திலீபன், டொறின், மரியம் திலீபன் : (கதவைத்தட்டுதல்) டொறின்: ஆரது. நீங்களா? உள்ளுக்கை வாங்கோ. அக்கா வேலையாலை
இன்னும் வரயில்லை. திலீபன் : பரவாயில்லை; அம்மா இருக்கிறாதானே? டொறின்: ஒம்; அம்மா. அம்மா. மரியம் : டொறின் என்ன பழக்கம். வந்தவையை இருக்கச் சொல்லக்கூடத்
தெரியாதே? டொறின்: (முணுமுணுத்தல்) ஒரு கதிரைக்கு கூட வழியில்லை.
என்னத்திலை இருக்கிறது. திலீபன் : டொறின் புறுபுறுக்காதையுங்கோ. நான் இந்தக் குந்திலை
இருக்கிறன். மரியம் : இந்தாங்கோ தம்பி. இந்தப்பாயிலை இருங்கோ. பிள்ளை இப்ப
வத்திடும். திலீபன் : நான் உங்களோடைதான் கதைக்க வந்தனான். டொறின் எங்கை ஒடுறீங்கள்? இப்பிடி இருங்கோ. (டொறின் ரீ வைக்கச் செல்லுதல்) அம்மா; எனக்கு வெளிநாடு போக வாய்ப்பு வந்திருக்கு. மரியம் : (சந்தோசத்துடன்) அப்பிடியே தம்பி? பிள்ளையையும்
கூட்டிப்போறிங்களே?
நெல்லைலதங்கி

Page 18
20 awafunafanamazsaaf
திலீபன் : உங்களுக்கு ஆட்சேபணையில்லையெண்டால் கூட்டிப்போறன்.
டொறின்: (தேனிர் கொண்டு வருதல்) என்னையும் கூட்டிப்போறிங்களே?
எனக்கு வெளிநாடு சுத்திப்பார்க்க சரியான ஆசை.
திலீபன் ; அதுக்கென்ன; வெடிங் முடிய அவரையும் கூட்டிக்கொண்டு
வாருமன்.
டொறின்: போங்கோ. உங்களுக்கும் அக்காவுக்கும் இதுதான் கதை.
கிறேஸ் : (வருதல்) என்ன என்ரை கதை அடிபடுது. (திலிபனை காணுதல்) நீங்களும் இங்கையே இருக்கிறீங்கள். என்ன சொல்லாமல் கொள்ளாமல்.
திலீபன் : ஒரு குட் நியூஸ்.
டொறின்: வட்ற புதன்கிழமை பிளைற்றாம்.
கிறேஸ் : ஆருக்கு?
டொறின்: நீங்களும் அத்தானும் தான்.
கிறேஸ் : உண்மையே திலீபன்?
திலீபன் : ஒம் கிறேஸ், புதன் கிழமைக்கு முதலே போகலாம். றெஜிஸ்ரேசனை
திங்கட்கிழமை வைக்க எண்டு அம்மா சொல்லுறா.
கிறேஸ் : திலீபன் நானும் கட்டாயம் வரவேணுமா?
மரியம் : பிள்ளை உனக்கென்ன விசரே?
டொறின்: அக்கா; நீங்கள் எங்களுக்காக போகாமல் விட்டு அத்தானை
மனவருத்தப்படுத்தாதையுங்கோ.
திலீபன் : பரவாயில்லை. கிறேகக்கு விருப்பமில்லையெண்டால்.
கிறேஸ் : இல்லை திலீபன்; அம்மா, தங்கச்சியவையை விட்டுப்பிரியத்தான்
ஒரு மாதிரி இருக்கு.
டொறின்: மூன்று வருடம் மூன்று மாதம் போல பறந்திடும். அதோடை
இப்ப நாள் போறது எப்பிடியெண்டு தெரியாமல் போகுது.
திலீபன் ; போறதுக்கு வேண்டிய ஆயத்தமெல்லாம் செய்யவேணும். நான்
வாறனம்மா. கிறேஸ், டொறின் வாறன்.
டொறின்: நீங்க பயப்படாமல் போங்கோ. அக்காவை நான் அனுப்பி
வைக்கிறன்.
காட்சி : 10
இடம் : கிறேசின் வீடு மாத்திரங்கள் : கிறேஸ், ரங்கண், டொறிண், மரியம் ரங்கன் : டொறின்; டொறின்; என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்? டொறின்: (அதிர்ச்சியடைந்தவாறு) நீங்கள். நீங்கள்.
நெல்லைலதங்கி

இதிர்பார்க்கைகள்
ரங்கன் :
டொறின்:
டொறின்: கிறேஸ் : டொறின்: கிறேஸ் : ரங்கன்
மரியம் : ரங்கன் :
கிறேஸ் :
2
ரங்கனத்தான் தான். காலநிலை உருவத்தை மாத்தியிட்டுது.
எங்கை அக்கா?
அக்கா; அம்மா, அக்கா. என்னடி; விழுந்தடிச்சு ஓடிவாறாய். (இளைத்தவாறு) அத்தான். அத்தான். திலீபனுக்கென்ன? திலீபனத்தானில்லை. ரங்கனத்தான் வந்திருக்கிறார். என்ன,?
கிறேஸ்; என்ன சிலையாய் போனிர்? உங்கடை ஆச்சரியம் எனக்கு விளங்குது. என்னடா செத்துப்போனவன் ஒண்டரை வருசத் தாலை வந்து வெள்ளைக் காரணி மாதிரி நிக்கிறானெண்டுதானே?
உங்களுக்கென்ன நடந்தது?
மாமி; அது பெரிய கதை. ஆறுதலாய் சொல்லுறன். இதிலை எல்லாருக்கும் விரும்பின் உடுப்பெல்லாம் இருக்கு; எடுத்துப் பாருங்கோ. என்ன எல்லாரும் பேசாமல் இருக்கிறீங்கள். கிறேஸ்; உனக்கு விரும்பின சாறியை எடு.
நான் விரும்பினது எதுதான் நடந்தது? என்னை ஏன் இப்பிடி ஆண்டவன் சோதிக்கிறார். (மனதிற்குள் சொல்லுதல்)
ரங்கன் : சாறியைக்கண்ட உடனே அடிபட்ற டொறினும் பேசாமல் இருக்கு. என்னைக் கண்ட உடனே எவ்வளவு சந்தோசப்படுவீங்கள் எண்டு பார்த்தால். மரியம் : இல்லை தம்பி; எதிர்பாராத அதிர்ச்சியிலை அப்பிடி இருக்குதுகள்.
நீங்கள் கால் கையை கழுவிப்போட்டு வாங்கோ.
காட்சி : 11 இடம் : கிறேசின் வீடு (அறைக்குள்) மாத்திரங்கள் : கிறேளில், ரங்கண்
ரங்கன் : கிறேஸ்: என்னைக்கண்டு ஏன் இப்பிடி விலகி விலகிப் போறிர்?
உமக்கென்ன நடந்தது? ஒரு கிழமைதான் உம்முடன் வாழ்ந்திருந்தாலும் அந்த இனிமையான நாட்களை நினைத்துக்கொண்டு இவ்வளவு நாட்களையும் கடத்திப்போட்டு இண்டைக்கு ஓடி வந்திருக்கிறன்; நீர் என்னண்டால். (கிறேஸ் எழுந்து போதல்) கிறேஸ் நில்லும், (கையைப் பிடித்தல்)
நெல்லைலதங்கி

Page 19
22 எதிர்பார்க்கைகள்
கிறேஸ் : பிளிஸ் கையை விடுங்கோ; எனக்கு மனநிலை சரியில்லை.
(கிறேஸ் கையைப் பறித்துக்கொண்டு போதல்)
ரங்கன் : ம். ஏன் இப்பிடி விலகி விலகிப் போகுது? என்னை செத்திட்டுதெண்டு வேற ஆரையும். சீ. கிறேஸ் அப்பிடி ஒரு நாளும் செய்யாது.
காட்சி : 12 இடம் : கிறேசின் வீடு (விடியற் காட்சி) (மனதில் பதிந்த காட்சி) பாத்திரங்கள் : கிறேஸ், ரங்கன், டொறின், மரியம் ரங்கன் : (காலில் ஏதோபட திடுக்கிட்டு எழுதல்) (கிறேஸ் ரங்கனின் பாதங்களைத் தொட்டு வணங்குதல்) கிறேஸ்: என்ன உது? படிச்சனிங்களாயிருந்துகொண்டே உப்பிடி பட்டிக்காட்டுத்தனமாய் நடக்கிறீங்களே. கிறேஸ் : அத்தான் படிச்சால் பண்பாடுகளை மீற வேணுமெண்ட அவசியமில்லை. என்னைத்தொட்டு தாலிகட்டின அண்டே எனது தெய்வமாகியிட்டீங்கள்; உங்களை வணங்காமல். ரங்கன் : (சிரித்தவாறு) சரி சரி. நேரம் என்னண்டு பாருங்கோ. கிறேஸ் ; நாலரை ஆயிட்டுது. ரங்கன் : நல்லாய் விடிஞ்சிட்டுது. அந்த சாரத்தை எடுத்துத் தாங்கோ. கிறேஸ் : அத்தான்; இண்டைக்கு எப்பிடி உங்களை பிரிஞ்சிருக்கப்போறனோ
எனக்குத் தெரியாது. ரங்கன் : பத்து மணி மட்டும் பொறுமையாயிருங்கோ, மீன் வேளையோடை அகப்பட்டால் இந்த மீன் குஞ்சுவுவைப்பார்க்க ஓடோடி வந்திடுவன் கிறேஸ் : (கன்னத்தில் கிள்ளுதல்) கட்டாயம் இண்டைக்குப் போகவேணுமே? ரங்கன் : பைத்தியம்: புதிசிலை அப்பிடித்தானிருக்கும். போகப்போக எல்லாம்
சரியாயிடும். பழகப் பழகப் பாலும் புளிக்கும். கிறேஸ் : கணவன் - மனைவி உறவை அப்பிடிச் சொல்லாதையுங்கோ. மற்ற உறவுகளை விட இந்த உறவு வளரவளரத்தான் அன்பு அதிகமாகும். ரங்கன் : அஞ்சு மணி ஆகுது. ஒரு கிழமை தொழிலுக்குப் போகயில்லை. இண்டைக்கும் போகாமல் இருந்தால் ஐயா ஏசுவார். கண்ணை மூடிக்கொண்டிருங்கோ. இப்ப திரும்பி வந்திடுவன். கிறேஸ் : சீக்கிரம் வரப் பாருங்கோ. ரங்கன் : அஞ்சு நிமிசம் பிரியமுடியாமல் தவிச்ச அவளை ஒண்டரை
வருசமாய் தவிக்கவிட்டிட்டனே. டொறின்: அத்தான்; உங்களை சாப்பிட வரட்டாம். அறையுக்கை தனிய
இருந்து என்ன செய்யுறிங்கள்?
நெல்லைலதங்கி

a)Ilumnijaềazoasiasasử
ரங்கன் : டொறின்: ரங்கன் :
டொறின்
ரங்கன் டொறின்:
ரங்கன்
டொறின்
uofuub : ரங்கன்
மரியம் ரங்கன்
கிறேஸ் டொறின்:
கிறேஸ்
ரங்கன்
கிறேஸ் ரங்கன்
23
டொறின்; நான் ஒண்டு கேட்பன் உண்மையைச் சொல்லவேணும். என்னண்டு சொல்லுங்கோ. கிறேகக்கு என்ன நடந்தது? என்னைக் கண்ட உடனே எப்பிடி சந்தோசப்படுவா எணடு நினைச்சன். இப்பிடி விலகி விலகி ஒட்றாவே. இதுக்கெல்லாம் என்ன காரணம்? தயவு செய்து என்ன நடந்ததெண்டு சொல்லுங்கோ.
அத்தான் சொல்லவும் ஒரு மாதிரி இருக்குது. சொல்லாமல் இருக்கவும் முடியயில்லை.
: பரவாயில்லை. என்னண்டு சொல்லுங்கோ.
டொக்டர் திலீபன் அக்காவை மனைவியாக்க முன் வந்திருக்கிறார். அக்கா ஒரே பிடியாய் மறுத்தவா. எங்களை யோசிச்சிட்டுதான் ஓம் எண்டவா. அதோடை அவரோடை பழகியும் விட்டா. அத்தான்; நீங்களே சொல்லுங்கோ. இந்த நிலையிலை அவவாலை எந்த முடிவை எடுக்கமுடியும்?
: (யோசித்தல்) ம். டொறின்; எனக்கு இதைப்பற்றி தெரியுமெண்டு
ஒருத்தருக்கும் சொல்லாதையுங்கோ. இல்லை அத்தான். இப்ப வந்து சாப்பிடுங்கோ. (சாப்பிட வருதல். கிறேஸ் அமைதியாக பரிமாறுதல்) தம்பி; நீங்கள் ஒரு கடிதமாவது போட்டிருக்கலாம் தானே?
; அதுதான் மாமி நான் விட்ட பிழை.
தம்பி; நீங்கள் என்ன சொல்லுறியள்? (அதிர்ச்சியுடன்) : “சொக் றிற்மென்ட்” குடுக்க நினைச்சன். இப்ப அந்த றிற்மென்ட்
என்னோடை உங்களை கதைக்கமுடியாத அளவுக்கு திகைக்கச் செய்திட்டுது. கிறேஸ்; நீரும் சாப்பிடுமன். பிளிஸ் எனக்குப் பசிக்கயில்லை. நீங்க சாப்பிடுங்கோ. ஒண்டரை வருசத்துக்குப் பிறகு வந்திருக்கிறீங்கள். அக்காவின்ரை சாப்பாட்டையும் சேர்த்து சாப்பிடுங்கோ. (மனதிற்குள் சொல்லுதல்) இவளாலை எப்பிடி உப்பிடியெல்லாம் கதைக் க முடியுது. காட்டிக் குடுக் காமல் அவளாலை இருக்கமுடியுது. என்னாலை அப்பிடி இருக்கேலாதாமே.
கிறேஸ்; சோற்றைப்போடும்.
(பிளேட்டில் சோறில்லாததைக் கண்டு திகைத்தல்) ஆ.
: போதும். போதும். கிறேஸ்; நான் இண்டைக்கு அம்மா வீட்டை
போக வேணும். அவையும் என்னைக்கண்ட உடனே என்னமாதிரி நடக்கினமோ எனக்குத் தெரியாது.
நெல்லைலதங்கி

Page 20
24 எதிர்பார்க்கைகள்
கிறேஸ் : என்னைத்தான் நீங்கள் குத்திக்ககாட்டுறீங்கள். திறந்துகாட்டி புரிய வைக்கக்கூடிய பொருளென்றால் திறந்து காட்டி புரியவைக்கலாம். ஆனால் மனதை எப்பிடி உங்களுக்கு புரியவைக்கிறதெண்டு எனக்குத் தெரியயில்லை.
ரங்கன் : ஒண்டு மட்டும் எனக்கு புரியுது. உம்மடை மனநிலை இப்ப சரியில்லை. உம்மடை சந்தோஷம்தான் என்ரை சந்தோஷம். எதுக்கும் அம்மா வீட்டை போட்டுவாறன்.
assif : 13
இடம் : கிறேசின் வீடு மாத்திரங்கள் : கிறேஸ், திலிமண், டொறின், மரியம் திலீபன் : கிறேஸ்; கிறேஸ். டொறின்: வாங்கோ. (கவலையுடன்) திலீபன் : ஏன் கிறேஸ் என்னைக் கண்ட உடனே அறையுக்கை ஓடுது. டொறின்: இப்பிடி இருங்கோ. திலீபன் ; போறதுக்கு வேண்டிய ஆயத்தமெல்லாம் செய்திட்டாவா? டொறின்: ஆயத்தம் செய்யிறதைப்பற்றித்தான் எல்லாரும் யோசிச்சுக்
கொண்டிருக்கிறம். திலீபன் : ஏன் ஒரு மாதிரி பேசுறீங்கள்? கிறேகக்கு உங்களை விட்டுப்
பிரிய மனமில்லாட்டில் இருக்கட்டும். டொறின்: உங்கடை மனதைக் கொஞ்சம் தைரியப்படுத்திக் கொள்ளுங்கோ. திலீபன் : டொறின்; புதிர் போடாமல் விசயத்தைச் சொல்லுங்கோ. டொறின்: அக்காவின்ரை அத்தான் சாகயில்லை; உயிரோடைதான் இருக்கிறார். திலீபன் : (ஆச்சரியத்துடன்) என்ன..? டொறின்: இப்பிடி எல்லார் மனத்தையும் குழப்பத்தான் ஆண்டவன் அவரை
காப்பாற்றியிருக்கிறார். திலீபன் : ஆர் உங்களுக்குச் சொன்னது? டொறின்: மத்தியானம் அவரே வந்தவர்; சாப்பிட்டிட்டு மாமி வீட்டை போட்டார். திலீபன் : டொறின்; நான் போட்டுவாறன். டொறின்: அக்காவைக் கூப்பிட்டு விட்றன்; கதைச்சிட்டுப் போங்கோ. திலிபன்; அவவோடை கதைக்கிறதிலை இனி அர்த்தம் இல்லை. அதோடை அவ இப்ப இருக்கிற மனநிலையிலை என்னோடை கதைக்கச் சம்மதிக்கமாட்டா. மரியம் : (வந்தவாறு) தம்பி; எப்பிடி சொல்லுறதெண்டு எனக்குத்
தெரியயில்லை.
நெல்லைலதங்கி

ൾിffീമമ്
திலீபன் uofuub :
திலீபன் :
இடம் :
25
எல்லாம் டொறின் சொல்லியிட்டா.
ஆண்டவன் எப்பிடி எப்பிடியெல்லாம் சோதிக்கிறார். தம்பி; வாழ வேண்டிய வயதிலை அவளின்ரை வாழ்க்கையை பாழாக்கினார். அதைவிட நல்ல வாழ்க்கையை அமைச்சிட்டு அதையும் நீடிக்க
அம்மா, கவலைப்படாதையுங்கோ. எங்கை இருந்தாலும் கிறேஸ் நல்லாயிருந்தால் சந்தோஷம்தான். நான் வாறன்.
காட்சி : 14 கிறேசின் வீடு
பாத்திரங்கள் : கிறேல்,டொறின், மரியம்
uofuub டொறின்: மரியம் : டொறின்: மரியம் : டொறின்:
கிறேஸ் டொறின்:
டொறின்
டொறின்:
டொறின்:
: படலையுக்கை பெல் அடிச்சுக்கேக்குது. டொறின்; ஆரெண்டு பார்.
தபாலம்மா. அக்காவின்ரை பேருக்கு வந்திருக்குது. கிறேசைக் கூப்பிட்டுக்குடு. அக்கா; அக்கா ஒரிடமும் காணயில்லை. கிணத்தடிப் பக்கத்திலை பார்.
(கிணற்றடிக்கு செல்லல்) அக்கா; கிணற்றுக்கட்டிலையிருந்து என்ன செய்யிறியள். உங்களுக்கு ஒரு லெற்றர் வந்திருக்கு. உடிைச்சுப்படி.
உங்களுக்கு வந்த லெற்றைைர நான் படிக்கிறது சரியில்.ை இந்தாங்கோ. (வெறுப்புடன்) பரவாயில்லை, படி. (வாசித்தல்) அன்பை மறவாத கிறேகக்கு, பிரியமுடன் ரங்கன் எழுதிக் கொள்வது. நீங்கள் வாழ்விழந்தனிங்கள் என தெரிந்தும் உங்களுக்கு வாழ்வளிக்க முன் வந்த டொக்டரை மனதார பாராட்டுகிறேன். நான் நேற்று வந்ததை கெட்ட கனவாக நினைத்து மறந்து அந்தத் தியாக உள்ளத்துடன் புதுவாழ்க்கையை ஆரம்பியுங்கள். என் கால்களில் விழுந்து வணங்குவீர்களே; அது உண்மையாக இருந்தால்; என்னைத் தெய்வமாகக் கருதினால் இந்தத் தெய்வத்தின் ஆசையை நிறைவேற்றுங்கள். நான் எங்கோ போகிறேன். எங்கிருந்தாலும் என் மனம் உங்கள் இருவரையும் வாழ்த்திக்கொண்டேயிருக்கும்.
இப்ப என்னக்கா செய்யப்போறிங்கள்? இதென்ன புதுக்குழப்பம்? ம். உந்த லெற்றரை கொண்டே திலீபத்தானுக்கு காட்டுங்கோ.
நெல்லைலதங்கி

Page 21
எதிர்பார்க்கைகள்
காட்சி : 15
இடம் : திலீபனின் வீடு
பாத்திரங்கள் : கிறேல், அகுனம்மா
கிறேஸ் : திலீபன்; திலீபன் (பதட்டத்துடன்) திலீபன் எங்கையம்மா?
அரு : கிறேஸ்; அமைதியாய் இருந்த அவன்ரை வாழ்க்கையிலை புயலை
உண்டாக்கிப்போட்டு இப்ப என்னத்துக்கு வந்திருக்கிறாய்?
கிறேஸ் : அத்தை என்ரை மனநிலையை அறியாமல் உப்பிடிப் பேசுறிங்கள். இந்த லெற்றரை திலீபனுக்கு ஒருக்கா காட்டிப்போட்டுப்போறன்.
அரு : உதுகளை பார்க்க அவன் இங்கை இருந்தாலெல்லோ. எவ்வளவு உயரத்திலை பறந்து கொண்டிருக்கிறானோ ஆருக்குத் தெரியும்? விதவையான உனக்கு வாழ்வு தர விரும்பினானே அவனுக்கு இந்தத் தண்டனை போதாதுதான்.
கிறேஸ் : அத்தை.
அரு ; அத்தை எண்டு சொல்லாதை. அவன் விரும்பினது எதுவும் இதுவரை அடையாததல் லை. இப்ப எவ்வளவு மனக்கவலையோடை போறான்.
கிறேஸ் : உங்களை நான் குறை சொல்லயில்லை. இதெல்லாம் என்ரை
தலைவிதி.
காட்சி : 16
இடம் : கிறேசின் வீடு
மாத்திரங்கள் : கிறேளில், மரியம், டொறின்
டொறின்: அக்கா; என்னவாம் திலீபத்தான். இண்டைக்கு றிஜிஸ்ரேசனாமே. ஏனக்கா பொட்டளிக்கிறீங்கள்? தோட்டையும் கழட்டுறிங்கள். அம்மா, அக்காவை வந்து பாருங்கோ.
மரியம் : பிள்ளை உனக்கென்ன நடந்தது? ஏன் வெள்ளை சாறி
உடுக்கிறாய்?
கிறேஸ் : அம்மா; இந்தக் கோலத்திலைதான் என்னை ஆண்டவன் பார்க்க விரும்புறார். அவற்றை விருப்பத்தை அறியாமல் இடையிலை கொஞ்சம் தடுமாறியிட்டன். அவ்வளவும்தான்.
டொறின்: (ஆச்சரியத்துடன்) அக்கா.
முற்றும்
ஒலிபரப்புச்செய்யப்பட்ட திகதி : 04.01.1997
کاکامیوه کوه

27 Aeneitaaasař
நினைவெல்லாம் நித்தியா பங்குபற்றுவோர் :-
வரதன் - நந்தினியின் கணவன்
நந்தினி * வரதனின் மனைவி
நித்தியா - வரதனின் கூடப்பிறந்த சகோதரி
- வரதனின் கூடப்பிறவாத சகோதரி
Qaf6)6Ob - கங்காவின் தாய்
ரூபன் - கங்காவின் காதலன்
சுகுணா - கங்காவின் சினேகிதி
காட்சி : 01
இடம் : அலுவலகம் மாத்திரங்கள் : சுகுணா, கங்கா சுகுணா : கங்கா, இண்டைக்கொரு குட்நியூஸ். கங்கா : என்னடி ஒரே குசியாய் இருக்கிறாய். என்ன விசயம்? சுகுணா : சுடுமூஞ்சி மனேஜர் நேற்றையோடை சரி. பைக்றி க்கு புது
மனேஜர் வரப்போறாராம். பைக்றி எல்லாம் இதுதான் கதை. கங்கா : late news. எனக்கு நேற்றே தெரியும். நானும் ஏதோ உங்கடை
வீட்டை விசேஷம் நடந்திற்றுதெண்டு நினைச்சன். சுகுணா : (வேடிக்கையாக) கங்கா, புது மனேஜர் பிள்ளைகுட்டிக்காரனோ
தனிக்கட்டையாமோ. கங்கா : (பொய்க்கோபத்துடன்) தொடங்கியிட்டியே, பிள்ளைகுட்டிக்காரன்
தானாம். உனக்குப் பொருத்தமாயிருக்கும். சுகுனா : நான் தமாசுக்கு கேட்டணான். எப்படி இருந்தாலும் எங்களுக்கென்ன.
வா வா நைன் ஆகுது. உள்ளுக்கை போவம்.
காட்சி : 02 இடம் : அலுவலகம் மத்திரங்கள் : குமண், வரதன், சுகுணா, கங்கள்
பன் ; மோர்னிங் வரதன் ; வெறி குட் மோர்னிங் துபன் : இவர் எக்கவுண்ட் கிளாரக் வரகுணன், ரைப்பிஸ்ற் மிஸ் வசந்தி, கைசியர் மிஸ்டர் சிதம்பரம், ஸ்ரோகிப்பர் மிஸ்டர் கணேசலிங்கம்.
VM நெல்லைலதயல்கி

Page 22
எதிர்பார்த்தைதன்
சுகுணா :
கங்கா
சுகுணா :
கங்கா வரதன் கங்கா
வரதன் : கங்கா வரதன் : கங்கா : வரதன் கங்கா வரதன்
சுகுணா : வரதன் :
சுகுணா : வரதன் :
இடம்
28
2 பேர் லீவு சேர். இத்தனை கேள்ஸ்சும் பைக்றியிலை வேலை செய்யிறவை.
டியேய் கங்கா, வந்தவுடனே உன்னிலை கண் விழுந்திட்டுது. உன்னையே பார்க்குதடி.
: சும்மா இரடி உனக்கு வயது வித்தியாசமே கிடையாதடி, குடுகுடு
தாத்தாவையும் பகிடி பண்ணுவாய். நீ மூடி மறைச்சாலும் உண்மையடி அடிக்கடி உன்னைப்பார்த்துக் கொண்டு மற்றக் கேள்ஸ்ஸிட்டை கேள்வி கேட்குது.
; எங்கடை ரேண் வருது சும்மா இரடி. ! உங்கடை நேம்? ; மிஸ் கங்கா குணரட்ணம்
எது வரை படிச்சிருக்கிறீங்கள்.
: க. பொ. த உயர்தரம் வரை.
ஏன் மேல்கொண்டு படிக்கயில்லை?
: பரவாயில்லை சொல்லுங்கோ. : பொருளாதார வசதி பற்றாக்குறை. ; ஐ. சீ. உங்கடை நேம்?
Miss.சுகுணா கந்தவனம் நீங்க எதுவரை படிச்சிருக்கிறீங்கள்? க.பொ.த உயர்தரம் வரை. ஒல் றைற் எல்லாரும் வேலையைத் தொடங்குங்க.
காட்சி : 03
வரதண் வீடு
மாத்திரங்கள் : வரதன், தந்தினி
நந்தினி : வரதன் : நந்தினி :
வரதன் :
நந்தினி :
வந்திட்டீங்களே. எப்பிடி புது பைக்றி. ஆ. என்ன கேட்டனிர்? அப்பிடி என்ன போன அண்டே லயிக்கச் செய்த விசயம கேள்கம் நிறைய வேலை செய்யினமே.
பெண்களை மாற்றவே முடியாது. நீர் மட்டும் விதிவிலக்கே. மறக்க முயற்சி செயப் த நிகழ்ச்சியை மீண்டும் நினைக்கச்செய்துவிட்டுது. பைக்றி புது அனுபவம். கொஞ்சம் இருங்கோ. ரீ பிளாஸ்க்கிலை ஊத்தி வைச்சனான். எடுத்து வாறன். (நந்தினி உள் சென்று வருதல்) ஆ. இந்தாங்கோ
நெல்லைலதங்கி

29
இதிர்பார்க்கைகள்
ரீ; ரீயைக் குடிச்சிட்டு விசயத்தைச் சொல்லுங்கோ.
வரதன் : நித்தியாவை இண்டைக்கு பைக்றி யிலை கண்டனான்.
நந்தினி : உங்களுக்கென்ன வந்திட்டுது. நித்தியாதான் எங்களோடை சேர்ந்து வாழ கொடுத்து வைக்காமல் போய்ச் சேர்ந்திட்டுதே.
வரதன் : கங்கா எண்டு ஒரு கேள். சரியாய் நித்தியாவைப்போல்தான்.
ஆனால் கொஞ்சம் உயரம். மற்றும்படி நித்தியாவேதான்.
நந்தினி : நான் பயந்தே போயிட்டன். உதை நினைச்சால் சாப்பிடவும் மாட்டிங்கள். வந்து சாப்பிட்டிட்டு பேசாமல் படுங்கோ.
வரதன் : எனக்கு பசிக்கயில்லை. நீர் சாப்பிட்டிட்டீரே?
நந்தினி : எப்பவாவது உங்களை விட்டிட்டு சாப்பிட்டிருக்கிறனே.
வரதன் : அப்ப நீர் போய்ச்சாப்பிடும்.
நந்தினி : பிளிஸ் கொஞ்சமாய் சாப்பிட்டிட்டு வந்து இருங்கோ.
வரதன் : எனக்கு மனசு சரியில்லை நீர் போய்ச்சாப்பிடும். (நந்தினி போன
பின்பு) நித்தியா, உன்னை மறக்க முடியயில்லையேம்மா.
காட்சி : 04
இடம் : அலுவலகம்
பாத்திரங்கள் : வரதன், ரூபன், கங்கா
வரதன் : ரூபன்.
ரூபன் : ஜெஸ் சேர்
வரதன் : உள்ளுக்கை வேலை செய்யிற மிஸ் கங்காவை ஒருக்கா
வரச்சொல்லுங்கோ.
ரூபன் : சரி சேர்
கங்கா : குட்மோர்னிங்
வரதன் : மோர்ணிங் சிற்டவுண்
கங்கா : பரவாயில்லை சேர். சொல்லுங்கோ.
வரதன் : A/L படிச்சிட்டு இந்த வேலை செய்ய கஷ்டமாயில்லையா மிஸ்
கங்கா
கங்கா என்ன செய்யிறது சேர் வேலையில்லாத் திண்டாட்டம். A/L படிச்சனான் எண்ட பெருமையோடை இருந்தால் படிப்பிச்சு ஆளாக்கின தெய்வத்துக்கு ஆர் சார் கஞ்சி ஊத்துறது.
வரதன் : தொடர்ந்தும் இந்த வேலைதான் செய்யப்போறிங்களா?
கங்கா : நல்ல ஒரு வேலை கிடைக்குமட்டும் இதிலைதான் நிக்கவேணும்.
வரதன் : ஒவ்வீசிலை இலை ஒரு வேக்கன்சி இருக்கு. உங்களுக்கு
ஆட்சேபனையில்லையெண்டால் ஜி.எம் ஒடை கதைச்சு உங்களை
நெல்லைலதல்கி

Page 23
எதிர்பார்க்கைகள்
கங்கா
வரதன் :
85/85/T :
வரதன் :
இடம்
30
அந்த இடத்திற்குப் போடலாம்.
: எப்பிடி நன்றி சொல்லுறதெண்டே தெரியயில்லை சேர் இந்த
உதவியை செய்தால் உயிருள்ளவரை மறக்கமாட்டன்.
உங்கடைபமிலியைப்பற்றி அறிய விரும்புறன். தப்பாய் நினைக்காட்டாச் சொல்லுங்கோ.
இல்லை sir. நான் மட்டும் தான் அப்பா காலமாகி ஐந்து வருடமாகுது. அம்மா தான் எனக்கு எல்லாம்.
உங்களோடை நிறைய கதைக்கவேணும். வேலை நேரம் கதைக்கிறது சரியில்லை. போய் வேலையைச் செய்யுங்கோ. பிறகு ஆறுதலாய் கதைக்கிறன்.
காட்சி : 05
சந்தை
மாத்திரங்கள் : குமண், கங்கா
ரூபன்
கங்கா :
ரூபன்
கங்கா
ரூபன்
கங்கா ரூபன்
கங்கா :
ரூபன் கங்கா ரூபன்
: கங்கா நில்லும். உம்மைக் காணுறதுக்கே அருமையாய் இருக்கு. (ஆச்சரியத்துடன்) ரூபன் என்ன இண்டைக்கு சந்தை பக்கம் நீங்கள். ; அம்மாவுக்கு ஏலாது. அதுதான் நான். அதுசரி என்ன மனேஜர்
உம்மோடை நல்ல வாரப்பாடு. ; எனக்கே தெரியயில்லை ரூபன். தெய்வம்மாதிரி வந்து அந்த நரகத்திலையிருந்த என்னை விடுவிச்சிட்டார். அதோடை இப்ப கஷ்டமில்லாதவேலை. சம்பளமும் கூட. எனக்கும் மனிசன் ஒரு உதவி செய்திருக்கு. ; அப்பிடி என்ன? எனக்குத் தெரியாத உதவி? ; உம்மை ஒரு நாளிலை ரெண்டு மூண்டு தரம் பார்க்கிற எனக்கு அடிக்கடி பார்க்கிற சந்தர்ப்பத்தை உருவாக்கியிருக்கிறார். அது உதவியில்லையே?
நல்ல உதவி. அடிக்கடி பார்த்திங்களோ நிரந்தரமாய் வேலையிலிருந்து நிப்பாட்டுற உதவியையும் செய்திடுவார்.கவனம். ; கங்கா. ; குழையாமல் விசயத்தைச் சொல்லுங்கோ. ; லக்சுமியில் நல்லபடம் ஓடுது. ரூதேட்டிக்கு போவமே? பிரெண்ட்ஸ் எல்லாம் தங்கடை கேள் பிரெண்ட்சோடை போறாங்கள். எனக்குத்தான் அந்தப் பாக்கியம் இல்லை.
வரல்லைலதங்கி

a zájemíjelaasasaž
85s,6(T :
ரூபன்
இடம் :
3.
அந்தப் பாக்கியம் கிடைக்க என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள். என்னைவிட்டிட்டு வேறை ஆரையும் பாருங்கோ. நான் வாறன்.
; கங்கா, நில்லும்.
காட்சி : 06
அலுவலகம்
பாத்திரங்கள் : கங்கா, சுகுணா, குமண்
கங்கா :
சுகுனா :
: சுகுணா, எனக்கு மனக்கஷடமர்ய்த்தான் இருக்கு. என்னாலை
கங்கா
சுகுணா :
கங்கா
சுகுணா :
நில்லடி. நீ வேறை நான் வேறையே? (இருவரும் சிரித்தல்) ; கங்கா, மனேஜர் ஒவ் பண்ணிப்போட்டு போகயிக்கை தன்னை
கங்கா ரூபன்
சுகுனா :
ரூபன்
சுகுணா :
: சுகுணா முதல்லை வாயைக் கழுவு. அந்த நல்ல மனிசனைப்பற்றி
கங்கா
சுகுணா :
கங்கா
என்னடி சுகுணா, உன்னோடை கதைக்கவே முடியயில்லை. நீ ஒப்பிசிலை; நான் உள்ளுக்கை எப்பிடி கதைக்கிறது.
என்ன செய்ய முடியும்? விசரி, உன்ரை குவாலிபிகேசன் உந்தப் பதவியைத் தந்திருக்கு. அதோடை நீ வேறை நான் வேறையோ?
; உனக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படாட்டால் எனக்குச் சந்தோசம்
தான். உன்ரை ஆள் வருது. நான் வாறன்.
ஒருக்கா meet பண்ணட்டாம். சுகுணா, எப்படி உங்கடை பிறன்ட்க்கு கிடைச்ச அதிர்ஷ்டத்தை. ரூபன், காத்திருந்தவன் பெண்டாட்டியை நேற்று வந்தவன் கொண்டு போகப் போறான்.
: மனேஜர் மரிபண்ணியிட்டாராம்.
அப்ப ஏன் கங்காவை சுழட்டுறார்.
இப்பிடிக்கதைக்க உனக்கு வெட்கமாயில்லையே. பார்த்தீங்களே ரூபன், ஆளுக்கு வட்ற கோபத்தை.
; உங்களோடை நிண்டால் எனக்கு விசர்தான் பிடிக்கும். மனேஜரை
சந்திச்சிட்டு வாறன்.
که قهوه عسکو

Page 24
32 எதிர்பார்க்கைகள்
காட்சி : 07 இடம் : அலுவலகம் மாத்திரங்கள் : வரதன், காங்கா வரதன் : வாங்கோ கங் கா. உங்களைத் தான் எதிர்பார்த்துக்
கொண்டிருக்கிறன். கங்கா : சொறி சேர் சுகுணாவோடை கதைச்சுக்கொண்டிருந்ததிலை. வரதன் : பரவாயில்லை. கங்கா உம்மிலை நான் அக்கறை
செலுத்துறதைப்பற்றி என்ன நினைக்கிறீர்? கங்கா : எங்கடை குடும்ப வறுமையிலுள்ள அநுதாபம். திறமையான
குவாலிபிகேசன். வரதன் ; அதுதானில்லை கங்கா. உம்மைக் கண்ட அண்டே என்ரை
மனம் சஞ்சலப்பட்டிட்டுது. கங்கா : (மனதிற்குள்) சுகுணா சொன்னது உண்மையாயிருக்குமோ.
செருப்பாலைதான் வாங்கப்போறார். வரதன் : என்ன கங்கா பேசாமலிருக்கிறீர்? என்னோடை கூடப்பிறந்த நித்தியாவை வாழவைக்க வேண்டிய வயதிலை இழந்திட்டன். நித்தியாவைப்போல நீரும் இருந்ததாலை உம்மைக் கண்ட அண்டே என்ரை பழைய நினைவுகள் கிளறுப்பட்டிட்டுது கங்கா : “உன்னைப் பார்க்கிறப்போ என்ரை மனைவி லக்சுமியைப் பார்ப்பது போல இருக்கு அதனாலைதான் உன்னை மறக்க முடியயில்லை” எண்டு திரைப்படத்திலை வசனம் பேசுவினம். ஆனால் இவர், தங்கை நித்தியாவைப்போல இருந்ததாலைதான் உன்னிலை அநுதாபம் காட்டுறன் எண்டு சொல்லவாறாரோ? வரதன் : என்ன கங்கா, கடுமையாய் யோசிக்கிறீர்? எனக்கு ஒரு உதவி
செய்யிறீரா? கங்கா : “செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது’ எண்டு சொல்லுவினம். சேர் முன்பின் தெரியாத எனக்கு நீங்கள் உதவி செய்திருக்கயிக்கை உங்களுக்கு உதவி செய்ய காத்திருக்கிறன் சேர். வரதன் : இந்தப்படத்தைப்பார் கங்கா. எல்லாம் புரியும். கங்கா : சேர் சரியாய் என்னைமாதிரி இருக்கிறாவே. வரதன் : அம்மா, அப்பாவை இழந்த எனக்கு ஆறுதலாய் இருந்த ஒரே ஒரு தங்கை. எனக்கு அவள், அவளுக்கு நான் என்றிருந்த வேளையில் எனக்கொரு துணையைத் தேடித் தந்திட்டு ாேங்ச்சேர்த்தில்ான் நெல்லைலதங்கி

Ojmjášaaaař கங்கா :
வரதன்
வரதன்
நித்தி
வரதன் :
நித்தி
இடம் :
33
அப்பிடி என்ன சேர் நித்தியாவைப் பிரியிறதுக்கு காரணம் உங்களுக்கு ஆட்சேபணையில்லையெண்டால்.
! உங்களுக்குச் சொல்லாமல் வேறை ஆருக்கு கங்கா சொல்லுறது.
நான் நித்தியாவை என்னுடைய உயிருக்கு மேலாக நேசிச்சன். சின்ன வயசையும் பரவாய்படுத்தாமல், கலியாணம் பேசினன். ஆனால் அவளோ.
காட்சி : 08 (முன்பு நடந்தவை)
: ஹலோ வரதராஜா ஸ்பீக்கிங். நீங்க யார் பேசறது? : அண்ணா நான் நித்தியா பேசுறன். தலையிடியும் காய்ச்சலுமாய்
இருக்கு. நான் ரியூசன் ஐ இண்டைக்கு கட் பண்ணியிட்டன்.
ரியூசன் என்னம்மா பெரிய ரியூசன். டொக்டருக்கு போன் பண்ணிப்போட்டு இப்பவே வீட்டுக்கு வாறன். அசையாமல் பெட் இலை படுத்திரு.
: அண்ணா, சாதாரண தலையிடிதான் டொக்டர் வேண்டாம். நீங்களும்
வேலை முடிய வாங்கோ,
காட்சி : 09 வரதன் வீடு
மாத்திரங்கள் : வரதன், நித்தியா
வரதன்
நித்தி
வரதன் :
நித்தி
வரதன்
நித்தி
வரதன் :
: ஆ.ஆ. (தனது தலையைத்தொடுதல்)
சரி உன்மீதாணை. விசயத்தைச் சொல்லு,
நித்தி வரதன்
: நித்தியா. நித்தியா. எங்கையம்மா இருக்கிறாய்? ஒரு இடத்திலை
இருக்க மாட்டியே.
: அண்ணா, நான் இஞ்சை இருக்கிறன். ஏன் இப்பிடி பதறுறிங்கள்?
டொக்டர் சாம்பசிவம் டிஸ்பென்சறியிலை இல்லையாம். நீ வெளிக்கிடு வேறை டிஸ்பென்சறிக்குப் போவம்.
அண்ணா, டொக்டரை விட நீங்கள் ஒரு உதவி செய்யுங்கோ.
தற்செயலாய் நான் இறந்திட்டால்.
: ஏனம்மா இப்பிடியெல்லாம் கதைக்கிறாய். என்னுடைய உயிரைக்
குடுத்தாவது நீ கேட்கிறதை செய்வன். என்னெண்டு சொல்லு.
: முதல்லை புறொமிஸ் பண்ணுங்கோ பிறகுதான் சொல்லுவன்.
என் மீதாணை.
کكههgسه سعoسكاغو60
wrwr

Page 25
34
எதிர்பார்க்ை 4. நித்தி : அண்ணியை செலக்ட் பண்ணியிட்டன். மண மேடையிலை
உட்காருறதுதான் பாக்கி. வரதன் : நித்தியா விளையாடாதை. முதல்லை வெளிக்கிடு. நித்தி : அண்ணா புறொமிஸ் பண்ணியிட்டீங்கள். ஓம் எண்டு உங்கடை
வாயாலை சொன்னால் தான் வெளிக்கிடுவன். வரதன் : இதென்ன கரைச்சல். சரி வெளிக்கிடு. நித்தி : இப் பதான் என் ரை அணி னா. தலையிடியுமில்லை
காய்ச்சலுமில்லை. இப்பவே அண்ணியை பார்த்துக்கொண்டு வாறன், வரதன் : கள்ளி. இஞ்சை நில்லு.
காட்சி : 10
இடம் : வரதராஜன் வீடு பாத்திரங்கள் : வரதன், நித்தியா, நந்தினி வரதன் : நித்தியா உன்ரை ஆசையை நிறைவேற்றியிட்டன். என்ரை
ஆசையை நிறைவேற்றுறது உன்ரை கடமையில்லையா? நித்தி : என்னெண்டு சொல்லுங்கோண்ணா. வரதன் : நாளைக்கு என்னோடை வேர்க் பண்ணுற முகுந்தன் உன்னைப் பெண்பார்க்க வருறான். நல்ல உத்தியோகம். சொத்துபத்துக்கள் ஏராளம். தகப்பனுக்கு ஒரே வாரிசு உன்னை செல்வச்சீமாட்டியாய் வைச்சுப் பார்ப்பான். என்ன சொல்லுறாய் நித்தியா? நந்தினி : நித்தியா. என்ன சொல்லுறது. நித்தி : அண்ணி. (கெஞ்சலாக) நந்தினி : வந்து. வந்து. வரதன் : நித்தியாவைக்கேட்ட கேள்விக்கு நீர் மணப்பெண் மாதிரி வந்து.
வந்து. என்னப்பா வந்து. நந்தினி : நித்தியா, தனக்கேற்ற மணமகனைத் தேர்ந்தெடுத்திட்டா.
(மென்றுவிழுங்கி கூறுதல்) வரதன் : (ஆச்சரியத்துடன்) நந்தினி நீர் என்ன சொல்லுறீர்? நித்தி : அண்ணா; என்னை மன்னிச்சிடுங்கோ. வரதன் : ஆர் பொடியன்? நந்தினி : கந்தப்புவின்ரை மகன் பிரபுவாம். நித்தி : அண்ணா; நீங்க என்மேலை உயிரையே வைத்திருக்கிறீங்கள் எண்ட தைரியத்திலை நான் அவரை விரும்பியிட்டன்.
நெல்லைலதங்கி

எதிர்பார்க்கைகன் 35
வரதன் ; உன்னிலை என்ரை உயிரை வைத்திருக்கிறதாலைதான் சொல்லுறன்; இந்தச் சம்மந்தம் நடக்காது. கஷ்டப்பட்ட குடும்பத்திலை விட்டிட்டு பிச்சைக்கார கோலத்திலை பார்க்க விரும்பயில்லை நித்தியா.
நித்தி : அண்ணா: மனம்கொண்டதுதான் மாளிகை. மாளிகையிலையிருந்து
நிம்மதியில்லாமல் விதம்விதமான உணவை சாப்பிடுறதைவிட குடிசையிலிருந்து நிம்மதியாய் கஞ்சியைக் குடிக்கிறது பெற்றர்
ge6GT600.
வரதன் : நான் குடுத்த செல்லம் என்னையே கேள்விகேட்குது. நித்தியா; கடைசியாய் ஒண்டு சொல்லுறன். என்மேலை உயிரை வைச்சிருக்கிற அண்ணா எண்டு அடிக்கடி சொல்லுவியே அந்த அண்ணா பெரிசோ அல்லது இடையில் வந்த அந்த பிச்சைக்காரன் பெரிசோ எண்டு முடிவு செய்.
நித்தி : அண்ணா, அண்ணி. (அழுதல்)
காட்சி : 11
இடம் : அலுவலகம் பாத்திரங்கள் : வரதன், கங்கா வரதன் : எனக்குமில்லாமல் அவனுக்குமில்லாமல் விசத்தை குடிச்சு செத்ததை எப்பிடியம்மா மறக்கமுடியும். அந்த இடத்தை நீ நிரப்புவியாம்மா? கங்கா : சேர். (ஆச்சரியத்துடன்) வரதன் : பாசம் மிகுந்த அண்ணனாக நான் இருக்க விரும்புறன். நீ
என்ரை நித்தியாவாய் இருப்பியாம்மா? கங்கா : சேர்; எனக்கு வார்த்தையே வெளிவரவில்லை சேர். இப்பிடி ஒரு
அண்ணை எனக்கு கிடைச்சதையிட்டு சந்தோசப்படுறன் சேர். வரதன் : பக்டரியிலைதான் சேர்; வெளியிலை. கங்கா : அண்ணா. இஞ்சை கங்கா; வெளியிலை. வரதன் : நித்தியா. (இருவரும் சிரித்தல்)
காட்சி ; 12
இடம் : கங்கா வீடு பாத்திரங்கள் : காங்கா, வரதன், நந்தினி கங்கா : அம்மா; என்னை விட்டிட்டுப் போட்டிங்களே? எனக்கு ஆர் இனி இருக்கினம்? என்னை அநாதையாய் விட்டிட்டுப் போக எப்பிடியம்மா
மனம் வந்தது.

Page 26
36
6zdoljunjašozaboj
வரதன் நித்தியா.
கங்கள் அண்ணா: (அழுதல்) அண்ணி. நந்தினி : நாங்கள் இருக்கயிக்கை நீ ஏனம்மா அநாதையாகவேனும். வரதன் : அம்மாவின்ரை காரியங்கள் முடிஞ்சதும் எங்களோடை வந்திடு
நந்தினி :
நந்தினி :
கங்கா
இடம்
நித்தியா? அண்ண்ா; அம்மா அண்ணனை தந்த திருப்தியிலைதான் போய்ச் சேர்ந்திட்டா போலை,
நித்தியா: எழும்பி முகத்தைக் கழுவு, உன்னோடை வேர்க் பண்ணுறவையெல்லாரும் வந்திருக்கினம்.
அண்ணி; எப்பிடி இதுக் கெல்லாம் பிரதியுபகாரம் செய்யப்போறனோ?
காட்சி ; 13
வரதன் வீடு
பாத்திறங்கள் : குமண், கங்கா, ககுனா
ரூபன : கங்கா ரூபன்
கங்கா
ரூபன் கங்கா
ரூபன்
சுகுணா :
Ց5f5/86Ո
சுகுணா :
கங்கா
சுகுணா : கங்கா
விஸ்து மெனிமோர் ஹப்பி ரிடன்ற் ஒவ் த டே.
:ரூபன்; வாங்கோ வாங்கோ. உங்களை காணவே முடியிறகில்லை.
உம்மைத்தான் உம்முடைய அண்ணா வேலையிலையிருந்து நிப்பாட்டி என்னை திண்டாட வைச்சிட்டாரே.
என்ன செய்யிறது ரூபன். அவற்றை சொல்லை என்னாலை தட்டமுடியயில்லை.
; அப்ப என்ரை விசயத்திலும் உதுதான் முடிவு. (சோகத்துடன்) : "ஏன் இப்பிடி கோவிக்கிறீங்கள். இந்த ஒரு விசயத்திலை அவற்றை
சொல்லை தட்டத்தான் போறன்.
: இப்ப சொல்லுவீர். இன்னும் கொஞ்ச நாள் போக.
ஹப்பி பேர்த்டே ரூ யூ கங்கா. சொறி நித்தியா.
; வாடி சுகுணா. எங்கை நீ வராமல் விட்டிடுவியோ எண்டு பயந்தே
போனன்.
நான் வராமல் நீ கேக் வெட்டியிடுவியா? இந்தா என்னுடைய சின்ன பிறசென்ற். இவ்வளவு பிறசென்ற்றுக்கு முன்னாலை ஒரு தூசி.
: ஏன்ரி அப்பிடி சொல்லுறாய். தூய்மையான அன்புக்கு முன்னாலை
இதெல்லாம் வெறும் சல்லிக்காசு. உந்த சாறி உனக்கு நல்லாயிருக்கடி. சேர் இன்ரை செலக்சனே?
: இரண்டு சாறியும் அண்ணாவின்ரை செலக்சன்தான். கட்டியிருக்கிறது
நெல்லைலதங்கி

எதிர்பார்க்கைகள்
சுகுணா : கங்கா
இடம் :
37
பார்ட்டிக்கு எடுத்த சாறி. இது காலையிலை கோயிலுக்கு கட்டின சாறி. இந்த புறொக் பார்ட்டி முடிய போடுறதுக்கு. உண்மையிலேயே நீ அதிர்ஷ்டக்காரிதான்.
: என்ரை உருவத்துக்குத்தானடி நன்றி சொல்லவேணும். அங்கை
அண்ணாவும் அண்ணியும் வருகினம். பார்ட்டி தொடங்கப்போகுது. ஹோலுக்குப் போவம்.
காட்சி : 14 வரதன் வீடு
பாத்திரங்கள் : நந்தினி, வரதன், கங்கா
நந்தினி :
வரதன் : நந்தினி :
வரதன்
நந்தினி :
வரதன்
நந்தினி
வரதன் :
வந்து. வந்து. ககுனாட்டை அண்ணா. : சுகுணாவை இப்ப வழியிலை கண்டனான். உன்னை வந்ததாய்ச்
நித்தி
வரதன்
நித்தி
வரதன் :
நித்தி
வரதன்
வாங்கோப்பா, ஞாயிற்றுக்கிழமையிலையாவது நேரத்துக்குச் சாப்பிடுங்கோ.
நித்தியா வரட்டுமன்.
நித்தியா; நித்தியா; நித்தியா; நான் ஒருத்தி இருக்கிறன் எண்டதையே மறந்திட்டியள்.
: நந்தினி; நீ என்ரை மனைவியாகிறதுக்கு காரணமே நித்தியாதான்.
அதை மறந்திடாதை. அது உங்களோடை கூடப்பிறந்த நித்தியா; (கோபத்துடன்) இது கங்க்ா.
: நந்தினி, கங்கா எண்ட பெயரை மறந்தே மாதக்கணக்காகுது. நீ
மறக்காமல் அவளோடை நடந்திருக்கிறாய் எண்டு நினைக்க உம்மைப்பார்க்கவே வெறுப்பாயிருக்குது.
என்னை மன்னிச்சிடுங்கோப்பா. எங்கை என்மீது செலுத்துற அன்பை
குறைச்சிடுவீங்களோ எண்ட பயத்தாலை இப்பிடியெல்லாமம்
கதைச்சிட்டன். (நித்தியா வருதல்) நித்தியா; எங்கை போட்டுவாறாய்.
சொல்லயில்லையே.
வந்துண்ணா இப்பதான்.
ஒரு பொய்யை மறைக்க 9 பொய் சொல்ல வேண்டி வரும். ரூபனைத்தானே பார்க்கப்போட்டுவாறாய்.
: அண்ணா. (ஆச்சரியத்துடன்) ; வறுமையிலை கஷ்டப்படக்கூடாதெண்டு நினைக்க அவள் ஒருத்தி
நெல்லைலதங்கி

Page 27
6753ф:####xй
வரதன்
காங்,
நந்தினி :
*ᏖᏤdᏧᏏiᎢ
நந்தினி :
கங்கா
38
பழியைச் சுமத்தியிட்டுப் போய்ச்சேர்ந்திட்டாள். நீ என்ன செய்யப்போறாய். சாதிகுறைஞ்ச அந்த ரூபனைக்கட்டி எனக்கு அவமானத்தை தேடித் தரப்போறாயர? ஆரோ ஒருத்தியை சொந்த தங்கை போல வளர்த்தாராம் எ."ப். எம்: அது தன்ரை குணத்தைக் காட்டி சாதிகுறைஞ்சவனோடை ஓடியிட்டுது எண்டு சொல்ல வைக்கப் போறியா? சொல்லு நித்தியா.
! அண்ணா. (அழுதல்)
இஞ்சை ஒருக்கா வந்திட்டுப்போங்கோ. (வருதல்) நித்தியா செய்தது
போலை இவளும் ஏதாவது செய்தபிறகு கவலைப்படாமல் அந்த ரூபனையே கட்டி வையுங்கோ. W கொஞ்சம் பொறு நந்தினி. கடைசி வரையும் நித்தியா அப்பிடி செய்யமாட்டாள். எங்கடை வழிக்கு அவள் வந்திட்டால் சந்தோசம். இல்லையெண்டால் அவளின்ரை வழிக்குத்தான். நித்தியா; நான் வெளியிலை போட்டு வாறன், சாவகாசமாய் யோசிச்சு முடிவுசெய். அண்ணி; ரூபன் செய்த உதவியையும் மறக்கமுடியயில்லை. அண்ணா செய்த உதவியையும் மறக்கமுடியயில்லை. என்னண்ணி செய்யிறது? கொண்ணா செய்யாத உதவியையே அவன் செய்திருக்கிறான்?
: அண்ணி; நான் அவற்றை நித்தியாவைப்போல இருந்ததாலைதான்
உதவி செய்திருக்கிறார். ஆனால் ரூபன் பிரதியுபகாரத்தையே எதிர்பாராது ஐயா செத்த பொழுது நாங்கள் ஒரு கிழமையாய் பட்டினியாய்க்கிடக்க தன்ரை சாப்பாட்டை எங்களுக்கு தந்த உத்தமரை எப்பிடி மறக்கிறது? சாதி குறைஞ்சவன் எண்டு அண்ணா குதிக்கிறாரே; அப்போ கூடியசாதி, எங்கடை இனங்கள் எங்கை போனது? அந்த நல்லமனம்தான் என்னை அவரை விரும்பச் செய்தது. அண்ணி; ஏன் இப்பிடி ஆண்டவன் சோதிக்கிறான். நித்தியா கொஞ்சம் பொறுமையாயிரு. உன்னை அவர் சொந்த தங்கையாக நினைச்சுத்தான் இப்பிடி அதட்டிப்போட்டுப் போறார். சொகுசாய் வாழ்ந்த உன்னை வறுமையிலை வாட விட அவருக்கு இஷடமில்லை.
அண்ணி, ரூபன் நாளைக்கு தன்னோடை என்னை வரட்டாம். முந்தி வந்த செவியை பிந்தி வந்த கொம்பு மறைச்சிட்டுதெண்டு சொல்லுறார். நான் நாளைக்கு அவரோடை போகாட்டா தற்கொலை செய்திடுவராம். ஆண்டவனே. ஏன் எனக்கு இந்த வாழ்க்கையைத் தந்தாய்.
நெல்லைலதங்கி

jmýzžamaasaž
இடம் :
39
காட்சி : 15
வரதன் வீடு
மாத்திரங்கள் : வரதன், தந்தினி
வரதன் :
நந்தினி :
வரதன் : நந்தினி :
வரதன் :
(குசினிக்குள் தட்டுதல்) நந்தினி, நந்தினி குசினியுக்கை ஏதோ தட்டிக்கேட்குது. நித்தியாவை எழுப்பிக்கொண்டு போய்ப்பார்த்து வா. என்னப்பா, நித்திரையும் கொள்ளவிடாய்ங்களாம். (நித்தியாவின் அறைக்குச் செல்லுதல்) இஞ்சேயப்பா; நித்தியாவைக் காணயில்லை. வெளியிலை போகிலும் லையிற்றைப் போடாமல் போகமாட்டாள். நந்தினி; என்னப்பா சொல்லுறீர்? நான் அப்பவே சொன்னான். அவளின்ரை வழிக்கு விடுங்கோ எண்டு: கேட்டிங்களே? என்ன பெட்டிலை ஒரு லெற்றர் இருக்கு. (விரித்து வாசித்தல்)
அன்புக்குரிய அண்ணா, அண்ணி. இந்த நன்றிகெட்டவளை முதல்லை மன்னியுங்கோ. மன்னிப்புக்கே உரியவளில்லை நான். ”செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது” இது நீங்கள் செய்த உதவிக்கு பொருத்தமான குறள் அண்ணா. “காலத்தினாற் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது” இது ரூபன் செய்த உதவிக்கு பொருத்தமான குறள். நீங்கள் இருவரும் செய்த உதவிகள், ”ஒரு தராசில் இரு தட்டுகளும் சமமான நிலையில் இருப்பதுபோல்” என் உள்ளத்திலும் இருக்கிறது. இந்த நிலையில் நான் ரூபனுடன் போவதா அல்லது உங்கள் சொற்படி நடப்பதா என்று என் மனத்தை குழப்பினேன். என் மனம் இம்முடிவைத்தான் சரியெனச் சொல்லியது. அதனால் உங்கள் கண்களில் என் சடலமே கிடைக்க முடியாத இடத்திற்குப் போகிறேன். ஒருவருக்குமே உதவாத என்னை மீன்களுக்காவது இரையாக கொடுப்பதில் சந்தோசப்படுகிறேன்.
உங்க்ளுடன் கூடப்பிறந்த நித்தியாவின் கதையைக் கூறியும் இப்பிடி செய்திட்டாளே எண்டு மனவருத்தப்படுவது தெரிகிறதண்ணா. ஆனால்; நீங்கள் எனது நிலையிலிருந்து கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். எனது முடிவும் உங்களுடைய
کوکههوله عoسکو

Page 28
எதிர்பார்க்கைகள்
வரதன் :
நந்தினி :
வரதன் :
நித்தி
வரதன் : நந்தினி :
40
முடிவும் ஒன்றாக இருக்கும். உங்களுடைய நல்ல மனதிற்கு இன்னொரு நித்தியா வராமல் போகமாட்டாள். அண்ணா; மறுபிறப்பு எண்டு ஒண்டிருந்தால் உங்களுடைய கூடப்பிறந்த சகோதரியாக பிறப்பதற்கு ஆண்டவனைப் பிரார்த்தித்துக்கொண்டு போகிறேன்.
நன்றியுடன், நித்தியா இல்லை கங்கா. நந்தினி, கடலுக்குத்தான் போயிருக்கிறாள். அந்த டோர்ச்சை எடுத்துக்கொண்டோடிவா.
இந்தாங்கோ, ஓடி வாங்கோப்பா. (கடற்கரைக்கு போய்ச்சேரல்) அதிலை போறது நித்தியாதான். டோர்ச்சை அடியுங்கோ. டோர்ச்சை அடிக்க ஓடுறாளப்பா. ஒடிவாங்கோ.
நித்தியா, ஓடாதை. எங்களை விட்டிட்டு போகாதை நித்தியா. ரூபனையே உனக்கு கட்டிவைக்கிறன். சத்தியமாய்ச் சொல்லுறன் என்னை நம்பு.
அண்ணா; என்னை மன்னிச்சிடுங்கோ. உங்களை விட்டிட்டுப் போகவே மாட்டன். உங்களுக்கு விருப்பமில்லாத ரூபன் எனக்கும் வேண்டாம்.
உனக்கு பொருத்தமானவன் ரூபன்தான். கொஞ்சம் அவசரப்பட்டிட்டாய். நித்தியா; ஆண்டவனும் எங்கள் பக்கம்தான். அந்தநேரம் குசினியுக்கை தட்டாட்டா; இந்த நேரம்.
- (plg6) -
ஒலிபரப்புச் செய்யப்பட்ட திகதி : 08.03.1997
நெல்லைலதங்கி

ിസ്തുമ്
4.
தில்(கசின்டர்
பங்குபற்றுவோர்
анtaff - ரகுவின் சகோதரி Cuff - சங்கரியின் சகோதரி audibrords - Pinksfusar GBL)
- Guddai ataеuj Ciga -பக்கத்துவிட்டுபையன் Qurrous - Guðrúnar áGordý
காட்சி : 01
இடம் : சங்கரியின் வீடு மாத்திரங்கள் : செல்லாச்சி, பேபி, சங்கரி
செல்லா :
(3ut
GF6)6OT:
Gull
சங்கரி :
செல்லா :
சங்கரி (8 QF6)son:
(Bus சங்கரி
பிள்ளை பேபி, இஞ்சை மீனா வந்திருக்குது. இன்னும் வெளிக்கிட்டு
முடியயில்லையே?
: (உள்ளிருந்தவாறு) வாறன் ஆச்சி. மீனாவை கொஞ்சம் இருக்கச்
சொல்லுங்கோ.
பிள்ளை மீனா; உந்தக் கதிரையிலை இருங்கோ. அதுவும் பின்னல் விட்டுப் போய்ச்சுதுபோலை. ஒரு மாதிரி இருங்கோ.
: (சங்கரியிடம் கவலையுடன்) அக்கா; இண்டைக்கு கட்டாயம்
பீஸ் கட்ட வேணும் அல்லது எக்ஸாம் செய்யேலாது. என்ன பேபி செய்யிறது. இண்டைக்கு செலவுக்குத்தான் கையிலை கொஞ்ச காசு கிடக்குது. அதை எடுத்தா இண்டைக்கு பட்டினிதான். நான் இருப்பன்; நீயும் கொண்னனும்தான் பசிக்குதெண்டு துடிப்பியள். (வந்தபடி) சங்கரி; இருக்கிறதைக்குடு, உவள் மரகதத்திட்டை மாறிக்கேட்டுப் பார்ப்பம்.
: இந்தா பதினைந்து ரூபாதானே. : நல்ல அக்கா.
இப்ப சந்தோசப் படுங்கோ. பிறகு கொக்காவுக்கே வாலைக்காட்டுவியள்.
: அக்கா; ஆச்சி; போட்டுவாறன். : ஒம் ஓம் கவனமாகப்போ.
நெல்லைலதயங்கி

Page 29
எதிர்பார்க்கைகள்
இடம் :
42
assif : 02
சங்கரியின் வீடு
மாத்திரங்கள் : ரகு, சங்கரி
ரகு
சங்கரி
U(35
சங்கரி
ரகு சங்கரி
ரகு
சங்கரி
செல்லா :
ரகு GeF6)6)T:
ரகு செல்லா :
சங்கரி
ரகு
சங்கரி
ரகு
GF66).T :
(சங்கரி தைத்தல்) அக்கா; கொஞ்சம் விடுங்கோவன். நான் தைக்கிறன்.
; எனக்கு நீ ஒரு உதவியும் செய்யவேண்டாம். போய்ப்படி. ; உந்தப்படிப்பெல்லாம் எனக்கு சரிவராதக்கா. இரண்டு முறை
எடுத்தும் வோர்எஸ் தானே.
: இந்த முறை எடு. நல்ல றிசல்ட் வரும்.
(சமாளித்தவாறு) நான் வெளிநாட்டுக்குப் போகப்போறன். : (சிரித்தவாறு) நியாயமான ஆசைதான். ஆனால் வேளையோடை
வந்திட்டுது.
: அக்கா; எவ்வளவு காலத்துக்கு உந்த தையல் மெசினோடை
மாரடிக்கப்போறிங்கள். நான் வெளிநாட்டுக்குப் போனனெண்டால் நீங்கள் இப்பிடி இராப்பகல் கஷ்டப்படவேண்டிய அவசியமில்லை.
: ஆச்சி; ரகு சொல்லுற கதை கேக்குதே?
ஓம். ஓம் வளரும் காயை பிஞ்சிலை தெரியுமாம்.
; ஏன் ஆச்சி; நான் உழைச்சுப் பார்க்கமாட்டனே?
ஆர் இல்லையெண்டது. எல்லாம் அவரவர் மனசைப் பொறுத்ததுதான்.
: அக்கா; சாப்பிடுவமே? ஆச்சி; எழும்பணை.
எனக்கு மத்தியானம் சாப்பிட்ட சாப்பாடு செமிக்கயில்லை. நீங்கள்
போய்ச் சாப்பிடுங்கோ.
ரகு: பேபியையும் கூட்டிக்கொண்டே சாப்பிடு. எனக்கும் பசிக்கயில்லை.
: (கோபமாக) உங்களுக்குப் பசிக்காதுதான். நீங்கள் சாப்பிடாட்டால்
எங்களுக்கும் வேண்டாம்.
; உன்னோடை பெரிய கரைச்சல், பேபி படிக்கிறாள்; போய் கூட்டி
6T.
படிக்கிறாளோ இல்லை பாயிலை படுக்கிறாளோ ஆருக்குத் தெரியும்? உனக்கு எப்பவும் அவளோடை தனகல்தான். போய் மூண்டுபேரும் இருக்கிறதை குழைச்சு சாப்பிடுங்கோ.
வரல்லலதங்கி

43 எதிர்பார்க்கைகள்
காட்சி : 03
இடம் : சங்கரியின் வீடு
மாத்திரங்கள் : ரகு, சங்கரி, மேபி
(சங்கரி இரவு நேரம் தும்மித்தும்மி தைத்தல்)
J6 : (கோபத்துடன்) அக்கா; இந்தப்பனியுக்கை சாமம் சாமமாய்
தைக்காதையுங்கோ. வந்து படுங்கோ.
சங்கரி : தீபாவளிக்கு உடுப்பு குடுக்கவேணும். அதோடை இப்பிடி சாமம் &FTLDLDT 605&BT'LT6)....... எங்கடை பாடு. (பெருமூச்சு விடுதல்)
ரகு ; அதுக்காக தும்மி தும்மித் தைக்கப்போநீங்களே? உந்தத்
தும்மலை மாத்தேலாதே அக்கா?
சங்கரி : மாத்தலாம்; அதுக்கு நிறைய பணம் தேவை.
ரகு : அக்கா; அம்மாவின்ரை ஒற்றைப்பட்டு சங்கிலி இருக்கல்லே. அதை விற்றாலென்ன? உந்தத்தும்மல் அஸ்மாவைக் கொண்டு வரும். பெரிய கரைச்சல் படுவீங்கள்.
சங்கரி ; நல்ல கதைதான். எங்களிட்டை இருக்கிற சொத்து அது ஒண்டு
தான். அதையும் வித்தால்.
பேபி : உழைச்சுத்தேடலாம். ஆனால் இப்பிடி ஒரு அக்காவைத்
தேடலாமே.
பேபி : முன்னாலை ஐஸ் வைச்சாத்தான் உனக்காக சப்போட் பண்ணுவா.
ரகு : தேவையில்லாத கதை கதைக்காமல் இந்த பட்டனுகளை
வைச்சுத்தை.
பேபி : (கொட்டாவி விடுதல்) எனக்கு நித்திரை வருகுது. என்னாலை
ஏலாது.
ரகு : சீக். இவளுக்கு எப்பதான் நல்ல புத்தி வரப்போகுதோ.
சங்கரி ; அவள் சின்னப்பிள்ளை. போகப்போகத் திருந்தியிடுவாள்.
ரகு : ஓ. பால்ம்ணம் மாறாத பச்சிளங்குழந்தை. ஓ.எல் எக்ஷாமும்
எடுக்கப்போறாள். இவளை இப்பிடியே விட்டால் பிற்காலத்திலை ஏன் நாய் எண்டும் எங்களைக் கேட்கமாட்டாள். சங்கரி : அதெல்லாம் நடக்கிற நேரம் பார்ப்பம். நீ போய்ப்படு தம்பி.
இந்த மடிப்பை தைச்சிட்டு நானும் படுக்கிறன். ரகு : மடிப் பெண் டு சொல்லியிட்டு வேறை ஏதாவதையும் தைச்சுக்கொண்டிருக்காதையுங்கோ. எனக்கும் நித்திரை வருது. (கொட்டாவி விடுதல்)
நெல்லைலதங்கி

Page 30
எதிர்பார்ஃகைகன்
காட்சி : 04
இடம் : சங்கரியின் வீடு
மாத்திரங்கள் : ரகு, சங்கரி
ரகு : அக்கா; அக்கா;
சங்கரி : என்ன ரகு, வலு சந்தோஷத்தோடை வாறாய்.
ரகு : அக்கா உவன் விஜயன்ரை அப்பா, வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புற ஏஜென்சியிலைதான் வேலை பார்க்கிறார். இப்ப பதினையாயிரம் தந்தால் உடனேயே அனுப்புறாராம். (சங்கரி மெளனமாயிருத்தல்) என்னக்கா பேசாமல் இருக்கிறீங்கள்?
சங்கரி ; ரகு, எங்களுக்கு உறவெண்டு சொல்ல ஆர் இருக்கினம்? நீயும் போயிட்டால் நாங்கள் வாழுறதிலை என்ன அர்த்தம். ஒரு மாதம் இரண்டு மாதமே. முண்டு நாலு வருசம் எப்பிடி உன்னை பிரிஞ்சிருக்கிறது? வேண்டாம் ரகு வேண்டாம். (கவலையுடன்)
ரகு : (சிரித்தபடி) அக்கா; ஒவ்வொரு குடும்பத்திலையும் குறைஞ்சது ஒவ்வொருத்தர் வெளிநாட்டிலை. அவையள் எல்லாம் செத்திட்டினமே? ரெண்டு வருசம் ரெண்டு மாதம் போல பறந்திடும்.
சங்கரி : பாஸ்போட், விசா எல்லாம் எடுக்கவேணுமெல்லே.
明「@5 : அதெல்லாம் அவர் செய்வார். இப்ப பதினைந்திற்குத்தான் வழி
பார்க்கவேணும்.
சங்கரி : அம்மாவின்ரை மூண்டரை பவுண் சங்கிலி இருக்கு. குறைஞ்சது ஏழாயிரம் வரும். நான் பாங்கிலை போட்டிருக்கிறது ஒரு மூண்டு வரும். (யோசித்தல்) ம். ஐயாயிரத்திற்கு என்ன செய்யிறது.
ரகு : ஆற்றையும் காலிலை விழுந்தாவது ஒழுங்கு செய்யுங்கோ அக்கா.
நான் போய் ரெண்டு மாதத்திலை திருப்பிக் குடுத்திடலாம்.
சங்கரி : ம்.
ரகு : ஏதோ யோசிச்சுச்செய்யுங்கோ. நான் குளிச்சிட்டு விஜயன்ரை
அப்பாட்டைப் போகவேணும்.
காட்சி : 05
இடம் : சங்கரியின் வீடு பாத்திரங்கள் : கரேவுத், சங்கரி
சுரேஷ்
(பேபி படித்து முடித்து ஒவ்பீஸ் ஒன்றில் கிளார்க் ஆக வேலை
பார்த்தல். ரகு வெளிநாட்டில் இருத்தல்)
: சங்கரி அக்கா; சங்கரி அக்கா.
நெல்லைலதங்கி

45
2திர்பார்க்கைகள் சங்கரி : ஆரது கேற்றுக்குள்ள? அட! சுரேசே!! வா வா. என்ன அத்தி
பூத்தாப்போலை.
சுரேஷ் : பேபி இண்டைக்கு தன்னோடை வேர்க் பண்ணுற கேள்ஸ் 4,
பேரை கூட்டி வருகுதாம். ஸ்வீற் ஏதும் செய்து வைக்கச் சொன்னது.
சங்கரி ; ஒவ்பீஸ் முடியிற நேரமாயிட்டுது. (யோசித்தல்) அதுக்கிடையிலை
எப்பிடி செய்யிறது?
சுரேஷ் : அக்கா; என்னைக் கோவிக்காதையுங்கோ. வேளையோடைதான் சொன்னது பேபி. நான் மறந்து போனன். இப்பதான் நினைவு வந்தது. சைக்கிளை எடுத்துக்கொண்டு ஓடி வந்தனான். (சென்று திரும்ப வந்து) ஆ. உங்களையும் நல்ல டிறெஸ்ஸிலை நிக்கச் சொன்னது. நான் போட்டு வாறன்.
சங்கரி : ஒம் ஓம் போட்டு வா. என்னண்டு வட்றதுக்கிடையிலை செய்யிறது?
பார்ப்பம்.
காட்சி : 06 இடம் : சங்கரியின் வீடு மாத்திரங்கள் : பேபி, சங்கரி, வாணி, செல்லாச்சி பேபி : (பேபி வீட்டுக்கு வந்தவாறு) சாந்தி இங்காலை வாங்கோ. வாணி இதிலை இருங்கோ வாறன். (குசினிக்குள் நுழைந்தவாறு) அக்கா; அக்கா; என்னக்கா ஸ்வீற் ஒண்டும் இன்னும் செய்யயில்லையே? சங்கரி : அஞ்சு நிமிசத்திலை செய்துதாறன். நீ போய் அவையளோடை
கதைச்சுக்கொண்டிரு. பேபி : கெதியாய்க் கொண்டாங்கோ. என்ன வாணி உங்களுக்குள்ளையே
கதைச்சுச் சிரிக்கிறியள்? வாணி ; இல்லை பேபி. வீட்டைப்பார்க்க வொறின் காசிலை கட்டினதெண்டு
அப்பிடியே தெரியுதாம். சாந்தி சொல்லுறா. (குசினிக்குள்) செல்லா: சங்கரி; அவதிப்படாதை. நீ பட்ற அவதியிலை சுடுதண்ணி காலிலை
கொட்டினாலும் கொட்டியிடும். சங்கரி : ஆச்சி சரியில்லை. வந்ததுகள் பேபியைப்பற்றி என்ன
நினைக்குங்கள். ஸ்வீற் ஐ முதல்லை குடுத்திட்டு வாறன். (சங்கரி ஸ்வீற்) பேபி : மேரி எடுங்கோ. சாந்தி. வாணி; உங்களையும்தான்.
வெட்கப்படாதையுங்கோ. எடுத்துச் சாப்பிடுங்கோ.
நெல்லைலதங்கி

Page 31
எதிர்பார்க்கைகன் AA
வாணி :
(3UL
வாணி
(3UL
செல்லா :
சங்கரி
பேபி
GF6)6OT:
பேபி
செல்லா :
பேபி
சீ. என்ன வெட்கம் சாப்பிட்றம் தானே? (சங்கரி ரீ கொண்டு வருதல்)
ஆ. ரீயை எடுங்கோ. : வந்து கனநேரமாயிட்டுது. போட்டுவாறம் பேபி. : ஓம் ஓம் போட்டுவாங்கோ. (அவர்கள் போன பிறகு கோபத்துடன்)
அக்கா; அக்கா இந்தாங்கோ உங்கடை கோலத்தை இந்தக் கண்ணாடியிலை பாருங்கோ. நல்ல காலம். அக்கா எங்கையெண்டு கேட்கயில்லை. நீங்கள் அழகெண்ட உடனே ஊத்தை உடுப்போடையும், கரி பூசிய முகத்தோடையும் இருக்கலாம் எண்ட எண்ணம். அதுதான் அரிவரியெண்டாலும் படிச்சிருக்கவேணும். (ஆத்திரத்துடன்) பேபி வாயை மூடு. அவள் எவ்வளவு அவசரப்பட்டு செய்தாளெண்டு எனக்குத்தான் தெரியும். தங்கச்சியின்ரை சிநேகிதிகள் வரப்போகுதுகளெண்டு அவள் பட்ட பாடு. அதுமாத்திரமே இந்தப் பெரிய வீட்டை உன்ரை வீடெண்டு பெருமையடிக்கிறதுக்கு மூலகாரணம் இந்த அரிவரி படிக்காத கொக்காதான். ஏ.எல் படிச்ச உன்னாலைகூட இதைச்சாதிக்க (ԼplգԱIT35l.
: (அழுதவாறு) ஆச்சி நீங்கள் பேசாமல் இருங்கோ. இப்பதான்
படிப்பெண்டு ஒண்டு வேணுமெண்டதை உணர்றன். நான் படிக்காட்டாலும் தங்கச்சி, தம்பி படிச்சால் நான் படிச்சதுக்குச்சமன் எண்டு நினைச்சன். அந்தப்படிப்பே இப்ப என்னைக் கேள்வி கேட்குது. அது அவளிலை குற்றம் இல்லை ஆச்சி
: இனி ஒப்பாரி வைக்கத் தொடங்கியாச்சு.
உனக்கு ஒப்பாரிமாதிரிதான் தெரியும். கொம்மாவும் கொய்யாவும் நேரகாலத்தோடை போயிட்டினம். பத்து வயதிலையிருந்து உங்களை சுமைதாங்கியாய் சுமந்ததற்கு அவளின்ரை மனதை புண்ணாக்கிறதே பிரதியுப்காரம்.
: இங்கை ஏதும் நீதி நியாயம் இருக்கே. நீங்கள் ரெண்டு பேரும்
சேர்ந்தாலும் என்னை ஒண்டும் செய்யேலரது. நீ உழைக்கிறாய் எண்ட உசாரிலை இப்பிடிச் சொல்லுறாய்.
சரி; உங்களாலைதான் உழைக்கிறன். இல்லையெண்டு சொல்லயில்லை. புத்தி தெரிஞ்ச நாளிலிருந்து எனக்கு செலவளிச்ச செலவுகள் எல்லாம் டயறியிலை எழுதி வைச்சிருக்கிறன். கூடிய கெதியிலை வட்டியும் முதலுமாய் திருப்பித்தல்லாம்.
நெல்லைலதுங்கி

jamkazasasaž
47
செல்லா; அவளின்ரை பணத்துக்கு வட்டி குடுக்கலாம். ஆனால் அவள்
உங்கள் ளை வைச் சிருக்கிற பாசத்திற்கு இந்த ஜென்மத்திலையில்லை எந்த ஜென்மத்திலையும் வட்டியைத் திருப்பிக்குடுக்கமாட்டாய். எத்தினை சந்தர்ப்பத்திலை அவள் உன்னிலை வைச்சிருக்கிற அன்பை நான் உணர்ந்திருக்கிறன். வல்லிபுரக்கோவில் தேர் அண்டைக்கு நடந்த சம்பவத்தை நினைச்சுப்பார்.
காட்சி: 07
(முன்பு நடந்த சம்பவம்) இடம் : சங்கரியின் வீடு மாத்திரங்கள் : பேபி, சங்கரி, செல்லாச்சி
சங்கரி : பேபி; தேர் இழுபடப்போகுது. இன்னும் தோயக்கூட இல்லை நீ
(3ul சங்கரி
(3u சங்கரி
(3u
இனி மேக்கப் பண்ணக்கிடையிலை தேர் சுத்தி வாசலுக்கு வந்திடும்.
: அக்கா; நான் வரயில்லை. நீங்கள் சாமினியோடை போட்டுவாங்கோ. : ஏன்; நேற்று முழுக்க தேருக்கு போறதெண்டுதானே கதைச்சனி.
இப்ப என்ன வந்தது.
: நான் வரயில்லை. : பேபி, அடம்பிடிக்காதை, வரயில்லை எண்டதுக்கு காரணத்தைச்
சொல்லு,
என்னோடை வேர்க் பண்ணுற கேள்ஸ் எல்லாம் தேருக்கு புதுசாறி.
நான் ஒபீசுக்கு கட்டின சாறியை எப்பிடி கட்டுறது?
செல்லா : பிள்ளை பேபி; விரலுக்கு தக்க வீக்கம் வேணும். இப்ப கொண்ணை
(3LL
சங்கரி (3UL
சங்கரி
வெளிநாட்டிலை எண்ட உடனே நாங்கள் நடந்து வந்த பாதையை மறக்கக்கூடாது.
: ஆச்சி; தேருக்குப் போய்த்தான் சாமியைக் கும்பிடவேணும் எண்ட
கட்டாயமில்லை. இன்னொரு நாளைக்கு கும்பிடலாம். தேருக்குப்போய் மற்றவையைப்பார்த்து மனக்கவலையோடை திரும்ப நான் தயாரில்லை.
: பேபி, இந்தா இதை உடு. : அக்கா; அண்ணா அனுப்பினதை நான் எப்பவோ கட்டியிட்டன்.
நீங்கள் தேருக்கெண்டு வைச்சிருந்தனிங்கள். நீங்கள் கட்டுங்கோ.
: இல்லை பேபி. நீ படிச்சனி, வேலைபார்க்கிறனி. உனக்கு நிறைய
பேரை தெரிஞ்சிருக்கும். எனக்கு ஆரைத்தெரியும்? புதிசு
நெல்லைலதங்கி

Page 32
48 எதிர்பார்த்தைகள்
கட்டினாலென்ன பழசு கட்டினாலென்ன ஒண்டுதான். கெதியாய் தோய்ஞ்சிட்டு வெளிக்கிடு.
பேபி : நான் வரயில்லை அக்கா. சந்தோசமாய்த்தான் சொல்லுறன். சங்கரி : என்னையும் போகவிடாமல் நிப்பாட்டுகில் சொல்லு. நானும்
போகயில்லை.
செல்லா : சரி சரி. வெளிக்கிடுங்கோ. தேர் இப்ப பின்வீதிக்கு வந்திடும்.
(சம்பவம் முடிதல்)
செல்லா : ம். பிள்ளையள் வளரையுக்கை நன்றித்தனத்தோடை
வளரவேணும்.
காட்சி : 08 இடம் : சங்கரியின் வீடு பாத்திரங்கள் : பேபி, சங்கரி சங்கரி : பேபி: பேபி, சரியாய்த்தும்முது. இந்த உடுப்புக்களைக் கொஞ்சம்
கழுவித்தாறியே? பேபி : ஏன் இப்ப எங்கை போறிங்கள்? சங்கரி : அம்மன் கோயிலுக்கு; சாமினியும் வாறனெண்டது. பேபி : இப்ப எனக்கு நேரமில்லை. பின்னேரம் போலை உடுப்புக்களைக்
கழுவிப்போட்றன். சங்கரி ; பின்னேரம் கழுவிப்போட்டு இரவுகாய்ஞ்சு நாளைக்கே கோயிலுக்குப்
போறது?
பேபி : (முணுமுணுத்தல்) வருத்தத்திலும் வாய்ப்பேச்சுக்கு குறைவில்லை.
சங்கரி : ஆச்சி இருந்தால் இப்ப. அதுக்குக்கூட கொடுத்து வைக்காத
பாவி ஆகியிட்டன்.
பேபி : இந்த வீட்டிலை கொஞ்சநேரம் நிம்மதியாய் இருக்கேலாது. ஆச்சி, அம்மா. ஐயா அதுகள் இப்ப சொர்க்கத்திலை இருக்குதுகளோ நரகத்திலை இருக்குதுகளோ தெரியாது. இங்கை கொண்டாங்கோ
2 (66)U.
காட்சி : 09 இடம் : சங்கரியின் வீடு 1ாத்திரங்கள் : பாபு, பேபி, சங்கரி
சங்கரி : (தும் முதல்)பேபி. பேபி. (முனகியபடி) பனியுக்கை எழும்பேலையில்லை. கொஞ்சம் தேத்தண்ணி ஊத்தித்தாறியே?
WMA/AWW நெல்லைலதங்கி

49 இதிர்பார்க்கைகள்
பேபி : (பக்கத்து அறையில் இருந்தவாறு மெதுவாகக் கேட்டல்) இனித்தொடங்கியாச்சு. நிம்மதியாய் நித்திரை கொள்ளமுடியுமே. நல்லாய்க் கூப்பிடட்டும்.
UITL : பேபி, பாவம் அக்கா. சரியாய்த்தும்முறா. போய் தேத்தண்ணி
ஊத்திக்குடுமன். பேபி : இந்தப் பனியுக்கை என்னாலை வெளியிலை போக ஏலாது. பாபு : உம்மாலை போகேலாது. அவவாலை போகமுடியுமே. பேபி : உங்களுக்கு அக்கறை இருந்தால், நீங்கள் போட்டுக்குடுங்கோ. LJТЦ : நான் போட்டுத்தான் குடுக்கப்போறன். நீரும் ஒரு சகோதரமே.
சீ. தான் முதல்லை திருமணம் செய்யாமல் உமக்கு திருமணம்
செய்து தந்த அந்த தியாக உள்ளத்துக்கு இதைச்செய்யாட்டால்
நான் ஒரு மனிதாபிமானம் உள்ளவனாக இருக்கேலாது. (சங்கரியின் அறைக்குள்)
LIslL| : அக்கா; அக்கா; இந்தாங்கோ தேத்தண்ணி.
சங்கரி : (முனகியபடி) ஏன் பாபு, பேபிக்கு ஏதும் உடம்பு சரியில்லையே?
UITL : (மனதிற்குள்) உடம்பு எல்லாம் சரியாய் இருக்கு. மனசிலைதான்
கோளாறு.
சங்கரி : என்ன பாபு சொல்லுறீங்கள்?
பாபு : இல்லை அக்கா, பேபி தலையுக்கை சரியாய் இடிக்குதாம்.
அதுதான் என்னைப் போட்டுக்குடுக்கச் சொன்னது.
சங்கரி ; பாபு: அந்த அலுமாரி கடைசித்தட்டிலை விக்ஸ் இருக்கு எடுத்துக்குடுங்கோ. பேபி பாவம் அதுக்கும் இப்ப எத்தினை கரைச்சல்,
காட்சி. 10 இடம் : சங்கரியின் வீடு பாத்திரங்கள் : பாபு, பேபி, சங்கரி சங்கரி : பேபி, ரகு இன்னும் காசனுப்பயில்லை. தெல்லிப்பளைக்குப்போக நூறு ரூபா எண்டாலும் வேணும். பிறகு ரகு அனுப்பத்தல்லாம்.
பேபி : ஏன் போனமாதம் அனுப்பின காசு அதுக்கிடையிலை முடிஞ்சு
போய்ச்சே,
சங்கரி ; உன்ரை கலியாணவீட்டுக்கு பட்டகடன் கொஞ்சம் இருந்தது.
அதைக்குடுத்திட்டன்.
பேபி : நீங்கள் எதிலும் எனக்குச் செய்ததைத்தான் குத்திக்காட்டுறியள்.
6త్రపణలు 644ణ్

Page 33
எதிர்பார்க்கைதன்
சங்கரி
LITЦ
பேபி
LITL
பேபி
LUTL
பேபி
LITЦ
பேபி
TL
பேபி
LT
50
உங்களை நான் கேட்டனானே நீங்கள் கலியாணம் செய்யாமல் எனக்குச் செய்து தாங்கோ எண்டு.
(பதட்டத்துடன்) பேபி, நீ கேட்டபடியால்தான் கடன் கதையைப்பற்றி
சொன்னனான்.
: (அறைக்குள் இருந்து கூப்பிடுதல்) பேபி இஞ்சை வந்திட்டுப்போம்.
உன்ரை நன்றிகெட்டத்தனம் இன்னும் போகயில்லை. ஒரு நூறுருபா குடுக்கிறதுக்கு ஏன் இந்தளவு தர்க்கம்?
: நீங்க பேசாமல் இருங்கோ. நான் சாறி எடுக்க வைச்ச காசு தான்
இருக்கு. அதைக்குடுத்திட்டு நான் என்ன செய்யிறது.
சாறி என்ன ஓடிப் போயிடுமே? இழுப்பு கூடுதலாக இருக்கிறதாலைதானே மருந்தெடுக்கப் போகப்போறா.
! எவ்வளவு காசு உந்த வருத்தத்தோடை முடிஞ்சுது. அது அங்கை
கஷடப்பட்டு உழைச்சு அனுப்புது. ஏதும் தர்மாஸ்பத்திரியிலை போய்க்காட்டக்கூடாதோ?
; வாயை மூடும் சீ. நீரும் ஒரு சகோதரமே. அவவின்ரை காதிலை
விழுந்தால். நாளைக்கு எனக்கும் ஒரு வருத்தம் வந்தால் உந்தக்கெதிதான்.
: ஏன் அப்பிடிச் சொல்லுறீங்கள்?
(கோபமாக) பின்னை எப்பிடி சொல்லுறது? அவவுக்கு முதல்லை
நான் வந்தனானே. அல்லது அவ உமக்கு செய்த உதவி நான் செய்தனானே. என்னிலை உண்மையான அன்பிருந்தால் நூறு ரூபாவைக் கொண்டே குடும்.
; (திரும்பிவந்து) அத்தான் அக்காவைக் காணயில்லை. உடுப்புப்
பெட்டியையும் காணன்.
: நீர் தர்மாஸ்பத்திரி கதை கதைக்கையுக்கையே போயிருப்பா
எண்டு நினைக்கிறன். இப்ப உமக்கு சந்தோசம் தானே?
; (கவலையும் பயத்துடனும்) ரகு இந்தக்கிழமையுக்கையெல்லே
வாறன் எண்டவன். அவன் கேட்டால் என்ன மறுமொழி சொல்லுறது.
: (குத்தலாக) வீட்டை விட்டுத்துரத்தியிட்டன் எண்டு சொல்லுமன்.
ஒவ்வீசுக்கு நேரம் போகுது. வரயிக்கை ஆஸ்பத்திரிப்பக்கம் போய் பார்த்திட்டுத்தான் வருவன்.
நெல்லைலதங்கி

1 Junájdamasasař 5
காட்சி : 11
இடம் : மருத்துவமனை மாத்திரங்கள்: மாடி, சங்கரி
UTL : அக்கா; அக்கா; (சங்கரி கண்திறந்து பார்த்தல்) சங்கரி : (வருத்தத்துடன் அனுங்கியவாறு) ஆர் பாபுவே.? LIL : அக்கா; பேபிக்காக நான் உங்களிட்டை மன்னிப்புக்கேட்கிறன்.
சங்கரி : பாபு ஏன் அப்பிடி சொல்லுறியள்? பேபி பாவம். ஏதோ அறியாத்தனத்தாலை இப்பிடியெல்லாம் நடக்கிறாள்.
பாபு : குளுக்கோசு இப்பவே ஏத்தினவை? நான் பேபியைக் கூட்டி
வந்தால் உங்களுக்கு உதவியாய் இருக்கும்.
சங்கரி : வேண்டாம் பாபு, இஞ்சை தெரிஞ்ச ஒரு பிள்ளை நர்ஸாக
இருக்குது. அது பார்த்துக்கொள்ளும்.
UTL : இழுப்பும் கூடவாயெல்லே இருக்குது.
சங்கரி ; குளுக்கோசுக்கை மருந்து கலந்துதான் ஏத்தி இருக்கினம். நடந்து வந்ததாலைதான் இழுப்பு கூடியிட்டுதெண்டு டொக்டர் சொன்னார்.
LUTL : நான் காசு எடுத்து வரக்கிடையிலை நீங்கள்.
சங்கரி ; பரவாயில்லை பாபு. இனி நான் ஆருக்காக வாழவேணும். ரகுவை
ஒரே ஒருக்கால் பார்த்தனே எண்டால் கண்ணை மூடியிடுவன்.
шпц : ஏன் அக்கா அப்பிடி சொல்லுறீங்கள்? உங்களுக்கு சாகிற வயதே
அக்கா.
சங்கரி : சாவுக்கு மூப்பு இளமை ஏது பாபு? அதிலும் நான் வருத்தக்காரி.
மூச்சுவிடவே எவ்வளவு கஷ்டமாயிருக்குது.
UTIL : அக்கா; நான் போய் பேபியை கூட்டிக்கொண்டுவாறன், யோசியாமல்
படுத்து இருங்கோ.
காட்சி : 12
இடம் : சங்கரியின் வீடு பாத்திரங்கள் : பேபி, பாபு பேபி : (முனகுதல்) ஆ. அம்மா. LuTL : பேபி; என்ன படுத்திருக்கிறீர்? பேபி : கிணற்றுத்தொட்டியுக்கை விழுந்திட்டன் அத்தான். காலும் கையும் சரியான நோ. எழும்பி ஒரு அடிகூட வைக்கமுடியாமல் இருக்குது. அக்கா ஆஸ்பத்திரியிலைதானே?
நெல்லைலதங்கி

Page 34
எதிர்பார்க்கைகள்
LUTL பேபி
LUTL
பேபி
UTIL
பேபி
UTIL
இடம் :
52
: (வெறுப்புடன்) அவ எங்கை போறது. ஆஸ்பத்திரியிலைதான்.
அத்தான்; பக்கத்துவீட்டு சாமினியைக்கொண்டு அள்ளிக் குளிச் சிட்டன். போட்டிருந்த உடுப்புக்களை ஒருக்கால் கழுவிப்போட்றீங்களே? எனக்கு இப்ப நேரமில்லை. உவன் செல்வத்தை ஒருக்கால் சந்திக்கவேணும். போட்டு வந்து பின்னேரம் நேரம் இருந்தால் கழுவிப்போட்றன்.
: (அழுதல்)
: (கோபத்துடன்) என்னத்துக்கு இப்ப அழுது துலைக்கிறாய். நான் சொன்னனானே கவனமில்லாமல் போய் தொட்டியுக்கை விழச்சொல்லி.
; அதுக்காக அழயில்லை அத்தான். அக்காவுக்கு எத்தினை நாள் நேரம் இருந்தும் நேரமில்லை எண்டிருக்கிறன். அப்ப அவவின்ரை மனம் எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும். ஒருக்கால் நீங்கள் நேரமில்லை எண்டதையே என்னாலை தாங்கிக் கொள்ள முடியயில்லை.
: தலையிடியும் காய்ச்சலும் தனக்குத்தனக்கு வந்தால்தான் தெரியும். அதுதான் கடவுள் உம்மை தொட்டியுக்கை விழச்செய்து அங்கை ஞானோதயத்தை தந்திருக்கிறான்.
காட்சி ; 13
சங்கரியின் வீடு
பாத்திரங்கள் : பேபி, மாடி, ரகு
ரகு
UITU
刃@
LUTL
ரகு
(ரகு வெளிநாட்டால் ஊருக்கு வருதல்)
: அக்கா; அக்கா:
: ஆர். ரகுவே நல்லாய் கொழுத்து வந்திருக்கிறாய். பேபி, இஞ்சை
ரகு வந்திட்டுது.
: (உள்ளுக்கு வந்து) ஏன் பேபி படுத்திருக்கிறாள்?
: தொட்டியுக்கை விழுந்திட்டுது. சரியான நோ.
ஆ. எங்கை அக்கா? வெளியிலை எங்கையும் போட்டாவே? ஊருக் கை ஒருத்தற் றை கணிணிலையும் படாமல் அக்காவைத்தான் முதல் முதல் பார்க்க எண்டு வந்தன். (கோபமாக) இந்தக்கிழமை வருவன் எண்டு அறிவிச்சனான்தானே. (பாபு, பேபி தலையைக் குனிந்திருப்பதை பார்த்து பதட்டத்துடன்) என்ன இரண்டுபேரும் பேசாமல் இருக்கிறியள். எங்கை அக்கா?
گینیزوہ مopمکمو6p سہہ

எதிர்பார்க்கைகள்
: அண்ணை என்னை மன்னிச்சிடு. நான் செய்தது எவ்வளவு பெரிய
பேபி
JG5
UTL
ரகு (3U
页@ (3UL
ரகு
பேபி
இடம் :
53
தவறெண்டு உணர்ந்திட்டன். (கோபத்துடன்) புதிர் போடாமல் விசயத்தைச்சொல்லு, பாபு; நீங்களாவது சொல்லுங்கோ. எங்கை அக்கா?
: நான் சொல்லுறதைவிட பேபியின்ரை வாயாலை கேட்டால்தான்
நல்லாயிருக்கும்.
: பேபி; என்னண்டு சொல்லடி. ; தெல்லிப்பளை ஆஸ்பத்திரியிலை. இழுப்புகூடி.
(வெளியேறுதல்) அண்ணா என்னை மன்னிச்சிடுங்கோ. என்னாலைதான் அக்கா.
பாபு நான் வாறன். அக்காவோடைதான் வருவன்; ஆனால் இங்கையில்லை.
; அத்தான் நீங்களும் போய் எப்பிடியாவது அக்காவை இங்கை
கூட்டிவாங்கோ. அவவின்ரை காலிலை விழுந்து மன்னிப்புக் கேட்டால்தான் என்ரை மனம் ஆறுதலாய் இருக்கும்.
காட்சி : 14 மருத்துவமனை
மாத்திரங்கள் : ரகு, டாக்டர்
ரகு
Je. LT6Lj : ரகு Lifeist j :
j65
டாக்டர் :
அக்கா; அக்கா; இந்தக்கோலத்திலை பார்க்கவே ஓடோடி வந்தனான். (சங்கரி மெதுவாக திறக்கமுடியாமல் கண்ணை திறந்து பார்த்தல். இழுப்பு கூடிய வண்ணமிருத்தல் டாக்டரின் றுாமுக்கு ரகு செல்லுதல்)
: டாக்டர்; அக்காவுக்கு ஒண்டுமில்லையே?
f56roLj....
ரகு.
மிஸ்டர் ரகு உங்களையும் ஏமாற்றி எங்களையும் ஏமாற்ற நான் தயாரில்லை. எங்கடை கடமை முடிஞ்சுது. எங்களுக்கு மேலையும் ஒருத்தர் இருக்கிறார்; அவரிலை பழியைப் போடுங்கோ.
டொக்டர்; அக்கா என்னை விட்டிட்டுப் போகப்போறா எண்டு
சொல்லாமல் சொல்லுறீங்களே? (அழுதல்)
மிஸ்டர் ரகு இப்ப இழுப்பு நல்லாய் கூடியிட்டுது. எதுக்கும் மனசை தைரியமாய் வைச்சிருங்கோ.
کكهgله لعaoكه60g

Page 35
54
எதிர்பார்க்கைகள்
காட்சி; 15 இடம் : சங்கரியின் வீடு மாத்திரங்கள் : ரகு, மேபி, மாடி பேபி : கார் ஒண்டு வந்து நிக்குது. ஆ. எழும்பவும் ஏலயில்லை. (பாபு
பேபி
LUTL
பேபி
TIL
பேபி
ரகு
வருதல்) அத்தான்; அக்காவும் வாறாவே? (பாபு பேசாமல் செல்லுதல்)
என்னத்தான் பேசாமல் இருக்கிறீங்கள்?
பேபி, அக்கா உன்னை மண் ணிக்கக் கூடாதெண் டு எங்களையெல்லாம் விட்டிட்டு. (அழுதல்)
: அக்கா. (அழுதல்) ; என்ரை ஆக்கினையாலைதான் பொடியைக்கூட இஞ்சை கொண்டர
சம்மதிச்சவன் ரகு.
: அண்ணா; நான் மன்னிக்கமுடியாத பாவியாகியிட்டன், : பேபி, அக்காவின் ஆத்மா தியாகச்சுடராய் இந்தவிட்டுக்கு எப்பவும்
ஒளியைத்தந்து கொண்டே இருக்கும்.
- முற்றும் -
ஒலிபரப்புச் செய்யப்பட்ட திகதி : 19.04.1997
நெல்லைலதங்கி

இதிர்பார்க்கைகள்
55
நல்ல முடிவு
மங்குபற்றவோர் :
udub - Afgot இந்து - fou ஆரபி - fou 8ơI0) - பாக்கியத்தினி கணவனி ரிஷி - Taunggol DiGof கந்தனி - கூலியாள் Fjfall -DITGOral 55 DT - ஆரரியின் தாய்
காட்சி: 01
இடம் 3 Ls_夺厦ö@ மாத்திரங்கள் : இந்து, மாக்கியம், ஆரபி இந்து : (வந்துகொண்டு) குட்மோனிங் மிஸ். பாக் : குட்மோனிங். என்ன இந்து; லோங் லீவு இந்து : சிஸ்டருக்கு வெடிங் ரீச்சர். எல்லாம் என்ரை பொறுப்புத்தான்.
அது தான் ஒரு கிழமை லீவு எடுத்திட்டன். பாக் : (வியப்புடன்) எங்களுக்கு ஒருத்தருக்கும் தெரியாதே? உம்முடைய
வெடிங்கையும் இரகசியமாகத்தான் செய்யப்போறிர் போலை. இந்து : (சிரித்து) பிறயர்ஸ் தொடங்கிவிட்டுது. நான் வாறன் மிஸ். பாக் : ஒம் ! ஒம் ! நானும் இந்த றெஜிஸ்ரர் அனுப்பியிட்டு வாறன், நீர்
GuTub. ஆரபி : என்ன இந்து பாக்கியம் ரிச்சர் உன்னோடை வலு கொந்தாயாய்
கதைச்சா. அப்படி என்ன தலைபோற காரியம். இந்து : தலைபோற காரியம் ஒண்டும் இல்லையடி. சிஸ்ரரின்டை வெடிங் நடந்தது தெரியாதாம். அதுபோலத்தான் உம்முடை வெடிங்கையும் இரகசியமாய் செய்விரோ எண்டு கேட்டவா. ஆரபி : (கோபமாக) தெரிஞ்சால் வந்து கிழிச்சிடுவா போலை. இந்து : (சிரித்தபடி) என்ன ஆரபி உதுக்கெல்லாம் உணர்ச்சி வசப்படுகிறாய். ஆரபி அதுக்கில்லையடி, வரதா ரீச்சர் தன்ரை மகளுக்கு வெடிங்
எண்டு அறிவிக்க எத்தனை பேரடி இந்த ஸ்கூலிலை இருந்து
போனதுகள். அதிலும் உந்த பாக்கியம் ரீச்சர் தானடி கொம்பு.
இதின்ரை எனுண்ணத்துக்கெல்லாம் மற்றதுகளும் <ီပြိငြိင္ငံမ္ဘီ
தில்லைலதல்கி

Page 36
56 எதிர்பார்க்கைகள்
இந்து : மெல்லமாய் கதையும். பிறின்சிப்பல் பார்த்துக்கொண்டு நிக்கிறார்.
வா பிறயர் ஹோலுக்குப் போவோம்
காட்சி : 02 இடம் : வகுப்பறை பாத்திரங்கள் : பாக்கியம், சர்மி, மாணவிகள் பாக் வணக்கம் பிள்ளைகளே (பிள்ளைகள் வணக்கம் கூறுதல்) பிள்ளையஸ் இன்று நாங்கள் படிக்கவேண்டிய பாடம் “ஒன்று பட்டால் உண்டு வாழ்வு” அதாவது நீங்கள் எல்லோரும் ஒற்றுமையாக எந்தவித பாகுபாடுமின்றி வாழவேணும். உங்களுக்கிடையிலை நீ பெரிசு நான் பெரிசு எண்ட ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது. இதனைத்தான் சுப்பிரமணிய பாரதியார் கூட “சாதிகள்”இல்லையடி பாப்பா உயர்ச்சி தாழ்ச்சி சொல்லல் பாவம் என்றும், சாதிகள் இரண்டொழிய வேறில்லை என்று ஒளவையாரும் பாடி இருக்கிறார்கள். ஏன் விவேகானந்தரும் கூட ஒரு மனிதனின் உயர்வு அவனின் பிறப்பால் வருவதில்லை என்றும் அது அவனுடைய பண்பாட்டினாலே தான் வருகிறதென்றும் கூறியிருக்கிறார். அதனாலை நீங்கள் ஒற்றுமையாக இருந்தால் தான் வாழ்விலும் முன்னேற இடமுண்டு. சர்மி : (முணுமுணுத்தல்) எல்லாம் வகுப்பிலைதான். உவவின்ரை
கிணத்திலை தண்ணி அள்ள விடுவாவே. பாக் என்ன சர்மிளா ஏதோ சொன்னது மாதிரி இருக்கு விளங்கயில்லையே? சர்மி : (சமாளித்து) நல்லாய் விளங்குது ரிச்சர்.
(பாடம் முடிந்து மணி அடித்தல்) பாக் - சரி பெல் அடிச்சிட்டுது எல்லாரும் இன்றைய பாடத்தை நல்லாய்ப்படிச்சுக் கொண்டு வரவேணும். நாளைக்கு கேள்வி கேட்பன். சரிதானே.
காட்சி : 03 இடம் : ஆசிரியர் ஒய்வு அறை மாத்திரங்கள் : ஆரபி, மாக்கியம் ஆரபி : பாக்கியம் ரிச்சர் இண்டைக்கு நல்ல இன்ரறெஸ்ராய் வகுப்பு O நடந்தது. பொன்மொழிகளை எல்லாம் சும்மா பறக்கவிட்டியள். பாக் : ஆரபி, உமக்கு எப்பவும் என்னோடை பகிடிதான். கற்பித்தல் كيكهمونه العسكو6

C^2}ưn/kẳanakassở
ஆரபி
UTi5
ஆரபி பாக்
ஆரபி
இடம்
57
ஒழுங்காய் நடக்க வேணும் எண்டபடியால் கொஞ்சம் பொயின்ற்ஸ் எடுத்து வந்தன். அதைப் படிப்பிச்சுத்தானே ஆக வேணும்.
(கேலியும் கோபமுமாக) அது தானே ரிச்சர், படிப்பிக்கிற எல்லாத்தையும் வாழ்க்கையிலே கடைப்பிடிக்க முடியுமே?
உமக்கு இப்ப பீறி பீரியட்டே. : ஒம் ரிச்சர். ; எனக்கு இப்ப ஐந்தாம் ரத்திதுக்குப் பாடம். எக்சாம் எடுக்கிற
வகுப்பெல்லே. சிலபஸ் முடிக்க வேணும். நான் வாறன். நீர் பேப்பரை பாரும்.
: ஒம் ரீச்சர் நீங்கள் வகுப்பை எடுங்கோ.
காட்சி : 04 : பாக்கியத்தின் வீடு
பாத்திரங்கள் : சோமு, பாக்கியம், ரிஷி, கந்தண்
ਸI(ਪੁp :
LuTes
சோமு பாக்
கந்தன்
சோமு LT
(உரத்து) பாக்கியம்; எணை பாக்கியம் கத்தியை இந்த தட்டிலை வைச்சனான் எல்லே? வைச்சால் வைச்ச இடத்திலை ஒரு பொருள் இருக்குமே?
; உங்கை பாருங்கோவன் எல்லாம் கையிலை எடுத்துத் தரவேணும்.
ஒரு இடத்திலை வைச்சா எல்லோ வைச்ச இடத்திலை எடுக்கிறது.
ம். உப்பிடித்தான் பிள்ளையஞக்கும் பாடம் நடக்குது போலை. (கோபத்துடன்) இஞ்சைபாருங்கோ எனக்கு எல்லாம் பிடிக்கும்,
உந்தப் பாடம், படிப்பு எண்டு இழுக்கிறது மட்டும் எனக்குப் பிடிக்காது. தெரிஞ்சு கொள்ளுங்கோ.
ரீச்சர். ரீச்சர் (வீட்டு வாசலில் வந்தவாறு) பள்ளிக்கூடம் இல்லாத
நேரம் வீட்டிலை பாடம் நடக்குதோ.
: நல்லாய்ச் சொல்லு கந்தன். இஞ்சை எந்ந நேரமும் சத்தம்தான். (கோபமாக) உந்த மனிசனோடை பெரியகரைச்சல் கந்தன். கத்தி
ஒண்டை வைச்சிட்டுத் தேடிக்கொண்டு திரியுறார். வயது செல்லச் செல்ல அறனைக்குணம் வரும் தான். அதுக்கு எங்கை வைச்சனான் எண்டு யோசிச்சிட்டுத் தேடவேண்டியது தானே. அதை விட்டுட்டு உப்பிடித்தான் பாடம் படிப்பிக்கிறனியெண்டு 6T6 (360Tsful வாறார் கந்தன். நீயே சொல்லடா கத்தியை வைச்சதுக்கும் நான் படிப்பிக்கிறதுக்கும் ஏதும் தொடர்பு இருக்கே. சொல்லனடா வாயை மூடிக்கொண்டு இருக்கிறாய்.
நெல்லைலதங்கி

Page 37
எதிர்பார்க்கைகள்
(83 T(p
பாக்
ரவழி
கந்த
ரிஷி
கந்த
ரிஷி
கந்த பாக்
ரிஷி
இடம்
58
; வயதுக்கு மூத்த மனிசரை 'டா' போட்டுக் கதைக்கிறதும் நல்ல
பண்பாடுதான். இதுகளைப் பின்பற்றி மாணவர் போனால் அதுகளின்ரை நிலை பரிதாபம் தான்.
இந்தாளோடை கதைச்சால் மனிசருக்குப் பைத்தியம் தான் பிடிக்கும். இந்தா கந்தன் இந்தச் சிரட்டையைப்பிடி, தேத்தண்ணி வாக்கிறன். குடிச்சிட்டுத் தோட்டத்துக்குப் போய் தண்ணியைப் UITuuéF3i.
; என்ன கந்தண்ணை உந்தச் சிரட்டையிலை குடிக்கிற பழக்கம்
இன்னும் மாற இல்லையே?
(மெதுவாக) தம்பி சத்தம் போடாதையுங்கோ உங்கடை அம்மாவோடை அப்பாவும் தனகியிட்டார். பிறகு உங்களோடை திரும்பியிடும்.
; அம்மா குசினியுக்கை போட்டா நாங்கள் எப்படிக் கதைச்சாலும்
அவவுக்கு கேளாது. அதுசரி கந்தண்ணை ஊர் உலகத்திலை எவ்வளவோ எல்லாம் மாறியிட்டுது. இந்த அம்மா மட்டும் மாறமாட்டாவாம். பிள்ளையஞக்கு முன்மாதிரியாய் இருக்க வேண்டிய ஆசிரிய தொழில் வேறை பாக்கிறா.
: என்ன செய்யிறது தம்பி உங்கடை அம்மாவிலை மட்டுமில்லை.
வயதுபோன கனபேர் இந்த விசயத்திலை ஊறியிட்டினம். அந்த வட்டத்துக்கை இருந்து வெளியிலை வரமாட்டினமாம். என்ன செய்யிறது. நீங்கள் இருக்கிற இடங்கள் எப்படித்தம்பி?
; அது எவ்வளவோ பரவாயில்லை அண்ணை. மூலை முடுக்கு
வழிய சிலதுகள் இருக்கத்தான் செய்யுது.
: மூக்குள்ள வரை சளியும் இருக்கும் தம்பி. : என்ன ரிஷி உங்கை கதை. வழவழவெண்டு கதையாமல் கந்தனை
வேலை செய்யவிடு.
; கந்தண்ணை நீங்கள் வேலையைச் செய்யுங்கோ. நான் வாறன்.
காட்சி : 05 : பாக்கியம் வீடு
பாத்திரங்கள் : ரிஷி, பாக்கியம், சோமு
ரிஷி
Lö
அம்மா. அம்மா. இஞ்சை நிக்கிறியளே. நான் தேடாத
இடம் இல்லை.
; அப்படி என்ன தலைபோற காரியம் ரிஷி?
நெல்லைலதங்கி

59
எதிர்பார்க்கைகள்
ரிஷி : அம்மா உவன் குமார் தன்ரை பேர்த்டே எண்டு என்னை இன்வைற்
பண்ணினவன் அதுதான். பாக் : (கோபமாக) ரிஷி உனக்கு எத்தனை நாள் சொல்லியிருக்கிறன்.
கண்டசாதி விடுவழியவும் திரியாதை எண்டு. ரிசி உங்களோடை வேலை செய்யிற ரீச்சேர்ஸ்,சாதியிலை
குறைஞ்சவை எண்டாலும் வீட்டுக்கு வந்தால் ரீ குடுத்து உபசரிக்கிறீங்கள் தானே. பாக் அது வேறை. நான் ஆற்றையும் வீட்டிலை பச்சத்தண்ணி
குடிக்கிறனான் எண்டு சொல்லு பாப்பம். ரிஷி : அப்ப உங்கடை வீட்டுக்கு வந்து அவையள் குடிக்கலாம். நீங்கள் அவையின்ரை வீட்டிலை குடிச்சால் உங்கடை கெளரவம் போயிடும். அப்படித்தானே. சோமு : அம்மாவும் பிள்ளையும் ஏதோ காரசாரமாய் கதைவழிப்படுறியள். பாக் : உண்ணாணை இந்தக் கதையை ஒருக்கால் கேளுங்கோ. சோமு : என்ன ரிஷி வந்து நிக்கிறது கொஞ்ச நாள் அதுக்கிடையிலை
ஏன் கொம்மாவோட தனகிறாய். ரிஷி : ஐயா, அம்மா அந்தக் காலத்தில நிக்கிறா. பாக்கி ; பின்னை என்னப்பா, எங்களைப்போல இருக்கிறவையாலை தான் இப்பவும் கோயிலுகளுக்கை கூட உள்ளடாமல் இருக்கினம். விட்டால் எங்கடை தலைக்கு மேலை ஏறி இருந்து விடுவினம். சோமு விசயத்தை சொல்லாமல் இரண்டு பேரும் கதைச்சால் நான்
என்னத்தை விளங்கிக் கொள்ளுறது? ரிஷி : ஐயா, என்னோட ஸ்கூலிலை ஒண்டாப் படிச்சவன் குமார் எணடு. உங்களுக்கு தெரியும் தானே. அவன்ரை பேர்த்டே இண்டைக்கு. கட்டாயம் வரச்சொன்னவன். சோமு மிச்சத்தை சொல்லாதை இப்ப எனக்கு எல்லாம் விளங்குது. ரிஷி, சூரியன் திசைமாறி உதிச்சாலும் உதிக்கும். ஆனால் கொம்மா மாறமாட்டா. இத்தினை வருஷ தாம் பத்ய வாழ்க்கையிலை கொம்மாவைப் பற்றி நல்லாய்ப் படிச்சிட்டன். பாக் அப்பிடிச் சொல்லுங்கோ. எல்லாரும் படிக்கத் தொடங்கி உத்தியோகம் எண்டெல்லாம் பார்க்கத் தொடங்கின உடனே தாங்களும் பெரியாக்கள் எண்ட தலைக்கணம் சிலபேருக்கு. ரிஷி : அம்மா கும்ாரின்ரை குடும்பத்தோடை பழகினால் தான் அந்தக்
குடும்பம். எவ்வளவு பண்பாடானதெண்டு உங்களுக்குத் தெரியும்.
நெல்லைலதங்கி

Page 38
எதிர்பார்க்கைகள்
: பாக்கியம்; உன்ரை சுதந்திரத்திலை நாங்கள் தலையிடயில்லை.
சோமு
LuTais
சோமு
UT சோமு
UTë
சோமு பாக்
ரிஷி
இடம்
60
அதைப்போல எங்கடை சுதந்திரத்திலை இந்த விடயத்திலை தலையிடாதை.
ஏதோ உங்கடை எண்ணப்படி செய்யுங்கோ.
பாக்கியம்; இஞ்சை வாணை. எடுத்ததுக் கெல்லாம் கோவிக்கக்கூடாது. “பொறுமை என்னும் நகையணிந்து பெருமை கொள்ள வேண்டும் பெண்கள்” எண்டு சும்மா பாடிவைக்க இல்லை.
; (கோபத்துடன்) இப்ப என்னை என்ன செய்யச் சொல்லுறியள். : பார் பிறகும் கோபம் தான். பாக்கியம் இப்ப இருபத்தோராம்
நூற்றாண்டு நடக்குதெனை. உன்ரை காலம் இல்லையெணை இந்தக் காலம். உன்னைப்போல பலபேர் இருந்தால் இந்த சாதியம் எண்ட நிலை ஒரு காலமும் மாறாது. நீ படிச்சனிதானே. இந்த தமிழ் இனத்துக் கிடையிலை அதுவும் ତୁ (b இனத்துக்கிடையிலையே ஒற்றுமை இல்லை. எத்தினை பாகுபாடு. அப்பிடி இருக்க நாட்டிலை எப்பிடி பல வேறு இன மக்கள் வாழ்க்கையில் சமாதானம் ஏற்படும் சொல்லு பார்ப்பம்?
: நீங்கள் இருபத்தோராம் நூற்றாண்டிலை நில்லுங்கோ என்னாலை
நிக்கேலாது.
: சரி. சரி ஒரு நூறு ரூபாவைக் கொடுத்து அனுப்பு : ரிஷி; இந்தா காசு. கெதியாய் வா. இடியப்பம் அவிச்சு பச்சடியும்
அரைச்சு வைக்கிறன்.
: சரி அம்மா நான் போட்டு கெதியாய் வாறன்.
காட்சி : 06
: ஆசிரியர் ஓய்வு அறை
பாத்திரங்கள் : இந்த, பாக்கியம், ஆரபி
LT85
ஆரபி
இந்து
ஆரபி
என்ன ஆரபி வடைப் பைக்கற், முறுக்கு பைக்கற், மிக்ஷர் பைக்கற்? ஆருக்கு என்ன விசேஷம்? (பாக்கியம் எடுத்தல்)
; எடுங்கோ ரீச்சர், மிஸிஸ் வேணுகோபால் அனுப்பினவ. மகன்ரை
பேர்த்டேயாம் தான் இண்டைக்கு லீவு எண்டபடியாலை குணசேகரம் மாஸ்ரரிட்டை குடுத்து விட்டவாம்.
; (இரகசியமாக) ஆரபி: கவனிச்சியே எடுத்த வடை, முறுக்கை
பாக்கியம் ரீச்சர் எறிஞ்சிட்டுதடி. கொழுப்புத்தான். நாளைக்கு சாப்பாட்டுக்கே வழியில்லாமல் திரியப்போகுதடி விருப்பமில்லாட்டால் பைக்கற்றுக்குள்ளை
நெல்லைலதாங்கி

எதிர்பார்க்கைகள்
இந்து
UTi5
இந்து UT85
ஆரபி
இந்து
பாக்
இடம்
61
போடலாம் அல்லது மறைவாய் கொண்டே எறியலாம். இவ்வளவு ஸ்ராவுக்கும் முன்னாலை சீ.
ஆரபி: உனக்கே இப்பிடி இருக்கு. மிஸிஸ் வேணுகோபால் அறிஞ்சால். ஆ. வாங்கோ மாஸ்டர். எடுங்கோ மிஸிஸ் வேணுகோபால் அனுப்பினவவாம். (முறுக்கு பைக்கற்றை நீட்டுதல்)
: ஆரபி, நடிப்பைப்பார். ; என்ன இந்து, ஆரபி: உங்களுக்குள்ள ஏதோ கதைக்கிறியள்.
நான் அறியக்கூடாதோ?
இல்லை ரீச்சர்; மிஸிஸ் வேணுகோபாலுக்கு ஒரே மகன். இவ்வளவு
வயது வந்த பிறகும் அந்த மகன் ரை பேர்த்டேயைக் கொண்டாடுறா. அதுதான் கதைச்சனாங்கள்.
: (பெல் அடித்தல்) இன்ரேவல் முடிஞ்சுது. கிளாசுக்குப் போவம்
ஆரபி. பாக்கியம் ரீச்சர்: உங்களுக்கு பிறி போலை இருக்கு.
: ஓம் ஓம் அந்த பேப்பரைத் தந்திட்டுப்போம். இன்னும் பேப்பரைக்கூட
வாசிக்கயில்லை.
காட்சி : 07 : ஆரபியின் வீடு
பாத்திரங்கள் : தங்கம்மா, ஆரபி
தங்கம் :
ஆரபி
தங்கம் :
ஆரபி
தங்கம் :
; அதுதான். வேணுகோபால் அனுப்பினவா எண்டு சொன்ன உடனே
ஆரபி
என்ன ஆரபி பள்ளிக்கூடத்தாலை வந்ததிலையிருந்து முணுமுணுத்துக்கொண்டிருக்கிறாய். என்ன விஷயம்? என்ன மனிசரம்மா. சீ. நினைக்க நினைக்க நெஞ்சு பத்தி எரியுது.
(வேடிக்கையாக) எனக்கும் விஷயத்தைச் சொல்லன். பத்தி எரியுதோ அல்லது.
உங்களுக்கு கிணி டல் அம் மா, இணி டைக் கு
மிஸிஸ்.வேணுகோபால் தன்ரை மகன்ரை பேர்த்டே எண்டு வடை, முறுக்கெல்லாம் அனுப்பினவா. எங்கடை ஸ்கூலிலை ஒண்டு இருக்குதுதெல்லே.
ஆர் பாக்கியம்ோ?
முறுக்கையும் வடையையும் வெளியிலை வீசிட்டுதம்மா. அந்தச் சம்பவம் மனக்கண் முன் இப்பவும் வந்து போய்க்கொண்டிருக்குதம்மா எனக்கே இப்பிடி எண்டால் இந்துவுக்கு எப்பிடி இருக்கும்?
நெல்லைலதரிகி

Page 39
எதிர்பார்க்கைகள்
தங்கம் :
ஆரபி
தங்கம் :
ஆரபி
தங்கம் :
ஆரபி
தங்கம் :
ஆரபி
தங்கம் :
ஆரபி
தங்கம் :
ஆரபி
62
ஆரபி; எங்களைப் போல எல்லாரும் இருப்பினமே?
அம்மா; எல்லாரும் மணிசர்தானே. பிறப்பு இவை கேட்டு வாங்கினதே. ஆண்டவன் இவையை குறைஞ்ச சாதியிலை பிறக்கச் செய்திருந்தால் என்ன செய்திருப்பினம்? நானும் முந்தின காலத்திலை பார்த்தனான் தான் இப்ப மாற இல்லையே? நாங்கள் என்ன சம்பந்தமோ பண்ணப்போறம். இப்பிடி பொது இடங்களிலை செய்யிறது படிச்சவைக்கு அழகே?
உங்களுக்கே தெரியுது. படிச்சு பட்டம் பெற்ற ஆளுக்குத் தெரியயில்லையே. உப்பிடிப்பட்டதுகளுக்கு நல்ல இருட்டடி குடுக்கவேணும். அண்டைக்கு பக்கத்துவீட்டு சிந்துஜா சொல்லிச்சுது. தங்கடை பள்ளிக்கூடத்திலை ஒரு கிளிக் ஒரு தண்ணிப்போத்திலை பாவிக்குமாம். வேறை ரீச்சர் மார் தண்ணிக்கு அனுப்பினால் இன்னொரு போத்தில் லைபிறறிக்கை இருக்கு அதை எடுத்துக் குடுங்கோ எண்டு சொல்லுவினமாம்.
: சீ. பிள்ளையஸ் முதல் என்ன நினைக்குங்கள். ஏனம்மா இப்ப
எங்கை பார்த்தாலும் ஒதுக்கிவைச்ச சாதியியலை உள்ளவைதானே நிறைய இடங்களிலை வேலைபார்க்குதுகள்; வசதியாய் இருக்குதுகள்.
ஏன் எத்தினை சாதி குறைஞ்சவையின்ரை தலைமையிலை நிர்வாகம் நடக்குது. அவையஞக்கு கீழே வேலை செய்யாமல் ஓடிட்டினமே?
; இல்லையம்மா நீங்கள் சொல்லுறது சிலபேருக்கு பொருந்தாது.
தங்களுக்கு குறைஞ்சவன் தலைமை வகிக்கிறான் எண்டு எத்தினை பேர் ரான்ஸ்பர் எடுத்ததுகள். உப்பிடியும் எல்லாம் நடக்குதே.
; அம்மா இந்து பாவம். அந்தச் சம்பவம் நடந்த பிறகு அவளின்ரை
முகமே சரியில்லை. அவள் வீட்டை போட்டு வாறன் அம்மா. சரி போட்டு பொழுது படுறதுக்கிடையிலை வந்திடு. கொப்பர் வந்தா குதி குதியெண்டு குதிப்பர்.
: ஓம் அம்மா. இப்ப வந்திடுவன்.
செலிலைலதங்கி

63
எதிர்பார்க்கைகள்
காட்சி : 08 இடம் : பஸ் கோல்ட் மாத்திரங்கள் ரிஷி, ஆரபி, இந்து ரிஷி - ஹாய் ஆரபி! உன்னைக் கண்டு எவ்வளவு காலம்?
ஆரபி : ரிஷி நீங்களே. பாக்கியம் ரீச்சர் சொன்னவா நீங்கள் வந்து
நிக்கிறியள் எண்டு. இந்து : (ரகசியமாக) பாக்கியம் ரீச்சற்றை மகனே ஆரபி. அவவுக்கு
நேர்மாறாய் இருக்குது. (ரிவழியைப் பார்த்து) ரிஷி : ஆரபி, உம்மடை பிறண்ட் போலை இருக்கு. (இந்துவைப் பார்த்து) ஆரபி : ஒம் ரிஷி. இந்து என்னோடை ரீச் பண்ணுறாள். ரிஷி : அம்மா ஆரும் புதிசாய் ரீச்சேர்ஸ் வந்தால் சொல்லுவா,
சொல்லயில்லையே. ஆரபி : மறந்திட்டா போலை. இந்து : (குத்தலாக இரகசியமாக) மறந்திட்டா எண்டு சொல்லாதை ஆரபி. தேவையில்லாதபடியால் விட்டிருப்பா எண்டு சொல்லு. ரிஷி : (கிண்டலாக) என்ன ஆரபி, உம்மடை பிறண்ட் அடிக்கடி ரகசியம்
பேசுறா. அல்லது உவ்வளவுதான் சவுண்டோ? அரபி : இந்து கெதியாய் வாயைத் திறக்கமாட்டா. திறந்தால்
ஒடியிடுவீங்கள். (மூவரும் சிரித்தல்) ரிஷி : ஆ. பஸ் வருது. ஆரபி வாறன். பிறண்ட் வாறன்.
காட்சி : 09
இடம் : கோயில் பாத்திரங்கள் : ரிஷி, இந்த ரிஷி : இந்து, சுத்திச் சுத்தி கும்பிடுறிங்கள். அப்பிடி என்ன பெரிய வேண்டுதல். (பின்தொடர்தல்) இந்து; என்ன பேசாமல் போறிங்கள்? இந்து. இந்து. பெரிய நடப்புத்தான் ஆரபியின்ரை பிறண்ட் எனக்கும் பிறண்ட் எண்டு கதைக்க வந்தால். இந்து : பிளிஸ் ரிஷி எங்களோடை கதைச்சாலே பாவம் எண்டு நினைக்கிறவா பாக்கியம் ரிச்சர். அப்படிப்பட்டவவின்ரை மகனோடை கதைக்கிறதை நான் விரும்பவில்லை. ரிஷி நில்லும் இந்து, அம்மாவோடை என்னை ஒப்பிட்டுப் பேசாதையும். இந்தக் காலத்திலை எங்களைப் போன்ற இளைஞர்களும் சாதிபார்த்தால்.
நெல்லைலதங்கி

Page 40
64
எதிர்பார்க்கைகள் இந்து : எங்கை போய் முடியும் எண்டு சொல்லவாறிங்கள். ரிஷி : இந்து; படிச்சும் பத்தாம் பசலியாய் நடக்கக் கூடாது. இதுதான் என்ரை பொலிசி. இப்பிடியே போனால் ஒரு பூகம்பம் வீட்டை வெடிக்கும் எண்டும் தெரியும். அம்மா செய்யிறது அம்மாவோடை ஒத்துப் போக என்னாலை முடியவில்லை. இந்து ! உங்கடை இந்த எண்ணத்தைப் பாராட்டுறன். உங்களைப் போல
எல்லா இளைஞர்களும் முன்வந்தால் சந்தோசம் தான். ரிஷி நடந்தே வந்தனிர்? இந்து : ஒம் ரிஷி. ரிஷி ஆட்சேபனை இல்லையெண்டால் மோட்டார் சைக்கிளிலை வாருமன்
ரொப் பண்ணிவிட்றன். இந்து (சிரித்து) என்ன ரிஷி; விளையாடுறிங்களே ஆண்களின்ரை பைசிக்கிள்ளை ஏறியே பழக்கமில்லை. அதிலும் முன்பின் தெரியாத உங்கடை பைசிக்கிள்ளை ஏறுவன் எண் டு நினைக்கிறீங்களே? ரிஷி : (கேலியாக) முன்பின் தெரியாதோ? கூடிய சீக்கிரம் இந்த இந்து என் பின்னாலை இருப்பா. நான் வாறன் இந்து. (மோட்டார் பைக்கில் பறத்தல்) ஆரபி : ஹாய். இந்து என்னடி விறைச்சபடி வாசல்படியிலை நிக்கிறாய்? இந்து ஆரபி வந்திட்டியே? உன்னை இவ்வளவு நேரமும் காத்து
இருந்துவிட்டு அம்மாட்டை சொல்லிப்போட்டு வந்தனான். ஆரபி : அதுக்கென்ன? போகயுக்கை சேர்ந்து போவம். அதுசரி இந்து; நான் வந்தது கூடத் தெரியாமல் எந்தக் கோட்டையைப்பிடிக்க கனவு கண்டனி? இந்து : ஆரபி, உனக்கு எப்பிடி சொல்லுறதெண்டு தெரியயில்லை. ஆரபி : நீ எப்பிடியாவது சொல்லு. நான் விளங்கிக் கொள்ளுறன். இந்து : ரிஷி கோயிலுக்கு வந்தது. ஆரபி : ஆர்? இந்து பாக்கியம் ரீச்சற்றை மகன். அண்டைக்கு உன்னோடை
பஸ்ராண்டிலை கதைச்சுது. ஆரபி : எல்லாரும் வருமாப்போலை ரிஷியும் வந்திருக்கும். அதுக்கும்
உன்ரை பகல் கனவுக்கும என்னடி தொடர்பு? இந்து : ரிஷி என்னோடை கதைக்க முயற்சி செய்தது. நான் அசட்டை
செய்தன்; அதைப் பொருட்படுத்தாமல் மீண்டும் கதைச்சுது. போகையுக்கை மோட்டார் பைக்கிளிலை வரச் சொல்லிச்சுது.
நெல்லைலதங்கி

Ajnýjčatabasaž
ஆரபி
இந்து
ஆரபி இந்து
ஆரபி இந்து ஆரபி இந்து ஆரபி
இடம்
65
: ரிஷி நான் அறிஞ்ச வரையிலை நல்ல போய். ஆ. நீ என்ன
சொன்னாய்?
நாங்கள் கண்டவையின்ரை பைக்கிலையும் ஏறுறதில்லை எண்டு
சொன்னன்.
: பிறகு.
(தடுமாறியபடி) கூடிய சீக்கிரம். இந்த இந்து என்பின்னாலை
: (சிரித்தபடி) அதுதான் இந்த சொக். (கோபத்துடன்) ஏன் சிரிக்கிறாய்? : இல்லை. ரிஷியின்ரை பார்வையிலை நீ விழுந்திட்டாய். : நல்ல பகிடி. அதுக்கு வேறை ஆரையும் பாக்கட்டும்.
சரி சரி இதிலை இரு. நான் உள்ளுக்கை போய் கும்பிட்டிட்டு
வாறன்.
காட்சி 10 : இந்தவின் வீடு
பாத்திரங்கள் : ரிஷி, இந்த
இந்து ரிஷி இந்து
ரிஷி
இந்து ரிஷி
இந்து ரிஷி
(கதவு தடடுப்படல்)
: ஆரது.? (கதவு திறத்தல்) நீங்களே. : என்னை எதிர்பார்த்திருக்க மாட்டீர். : அம்மா மாக்கற் போயிட்டா, ஏதும் கதைக்கில் அம்மா வந்தபிறகு
வாங்கோ.
: உம்மடை அம்மாவோடையும் கதைக்க வேண்டியதுதான். அதுக்கு
முதல் உம்மோடை கதைக்க.
என்னோடையா..? (சிரித்தவாறு) வந்தவனை இருக்கக்கூடிச் சொல்ல மாட்டீங்கள்
போலை.
(தடுமாறியபடி) இந்த செயாரிலை இருங்கோ. : இந்து, சுத்தி வளைச்சு நான் பேச விரும்பவில்லை. எத்தனையோ
பெண்களோடை பழகியிருக்கிறன். ஆனால் அந்தப் பெண்கள் எவரையும் நான் விரும்பயில்லை. ஆனால். உம்மைக் கண்ட அண்டே ஏனோ உம்மட்டை என்ரை மனசைப் பறி கொடுத்திட்டன். மனைவி எண்டு ஒருத்தி எனக்கு அமைஞ்சால் அது நீராய்த்தான் இருக்க வேணும் எண்டு எப்பவோ முடிவு செய்திட்டன். அந்த அர்த்தத்திலை தான் கோயிலிலை அப்பிடிச் சொன்னன்.
நெல்லைலதங்கி

Page 41
எதிர்பார்க்கைகள்
: (சிரித்தவாறு) ரிஷி நீங்கள் சொல்லுறது கதைக்கு சரியாயிருக்கும்.
இந்து
ரிஷி
இந்து ரிஷி
இந்து ரிஷி
இந்து ரிஷி
இந்து
இடம்
66
வாழ்க்கைக்கு ஒத்துவராது. சரி நீங்கள் என்னை ஏற்றுக் கொண்டாலும் உங்கடை அம்மாவைப் பற்றி கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தீங்களே?
; என்ன நடந்தாலும் சரி என்ரை முடிவிலை மாற்றமில்லை. நீர்
என்ன சொல்லுறீர்?
: யோசிக்க வேண்டிய விடயம் ரிஷி. : இந்து; நான் ஒரு லெற்றர் போட்டிருக்கலாம். இல்லை அங்கை
சந்தி, இங்கை சந்தி எண்டு ஆரிட்டையாவது சொல்லி அனுப்பி இருக்கலாம். ஆனால் நான் உமக்கு எந்த கெட்ட பெயரும் வரக்கூடாதெண்டு நேரை உம்மடை வீட்டுக்கு வந்தன். துரதிஷ்டம் உம்மடை அம்மா இல்லை.
உங்கடை கண்ணியத்தை உணர்ந்திட்டன் ரிஷி. ஆனால். ; ஆனால் என்ன ஆனால். உம்மடை முடிவை ஆரபியிட்டை
சொல்லிவிடும். நான் வாறன்.
ஒண்டும் குடிக்காமல்.
பரவாயில்லை (சிரித்தவாறு) உம்மடை கையாலை பாலே குடிக்கப்போறன். சரி இந்து வாறன்.
ம். போட்டு வாங்கோ.
காட்சி : 11
LSOs)
பாத்திரங்கள் : சர்மி, இந்து, ஆரபி, மாக்கியம்
சர்மி ஆரபி சர்மி
ஆரபி பாக்
இந்து
ஆரபி
(வந்தபடி) ரீச்சர் ரிச்சர். என்ன சர்மி பறந்தோடி வாறாய்? : (இளைத்தவாறு) ரிச்சர். பாக்கியம் ரிச்சர் வாசல்படியிலை தடுக்கி
விழுந்து மண்டையிலை பெரிய காயம். எல்லா ரீச்சர்மாரும் அங்கை தான் நிக்கினம்.
வா இந்து என்னண்டு பாப்பம். : (முனகுதல்) ஆ. அம்மா. இண்டைக்கு ஆரிலை முழிச்சன். ; பெரிய காயமாய் இருக்குது. இரத்தம் வேறை போகுது. காருக்கு
போயிட்டினமே? ஆரபி; தலையிலை கட்டுப் போடாட்டால் இந்த இரத்தத்தைக் கட்டுப்படுத்தேலாது. இந்தா இதாலை கட்டு. (சாறியை கிழித்தல் சத்தம்)
: இந்து போன கிழமையெல்லோ புதுசாய் உடுத்தனிர் இந்த சாறி.
நெல்லைலதங்கி

67
இதிரவிகைகள் இந்து : பரவாயில்லையடி. ஆபத்துக்கு உதையெல்லாம் பார்த்தால். பாக் - ஆ. அம்மா. ம். ஆரபி : பாக்கியம் ரிச்சர் செய்த புண்ணியம் நீ இண்டைக்கு வொயில் சாறி கட்டி வந்தது. அல்லது இந்த இரத்தத்தைக் கட்டுப்படுத்தேலாது. பாக் : கணக்க இரத்தம் போயிட்டுதே. அம்மா. ஆ. ஆரபி : இல்லை ரீச்சர். ஆ. அங்கை கார் வந்திட்டுது. இந்து : கூட ஆராம் போகினம்.? ஆரபி : இண்டைக்கு வெள்ளிக்கிழமையாம் தோஞ்சிட்டு வந்திட்டினமாம். இந்து : பிறின்சிப்பல் என்னவாம். ஆரபி : ஒரு மாஸ்ரரையும் கூட்டிக் கொண்டு என்னையும் உன்னையும்
போகட்டாம். ரீச்சர் மெதுவாக எழும்புங்கோ. பாக் : (முனகியபடி) ஆரபி இந்து என்னாலை எழும்ப முடியயில்லை.
தலையைச் சுத்திக்கொண்டு வருது. இந்து : ஆரபி. தூக்கு. மாஸ்டர் காலைப்பிடியுங்கோ.
காட்சி : 12 இடம் : ஆல்பத்திரி பாத்திரங்கள் : ரிஷி, இந்து, ஆரபி, பாக்கியம் ரிஷி : அம்மா, அம்மா. பாக் : வா ரிஷி; நான் தப்புவன் எண்டே நினைக்கயில்லை. ரிஷி : (நக்கலாக) இந்து இல்லாட்டில் தப்பியிருக்க மாட்டியள்தான். பாக் - (ஆச்சரியத்துடன்) என்ன ரிஷி சொல்லுறாய்? ரிஷி : (ஆறுதலாக) அம்மா, உங்கடை தலைக் காயத்தாலை நிறைய இரத்தம் வெளியேறியிட்டுதாம். இரத்தம் ஏத்தவேனும் அல்லது உயிருக்கே ஆபத்தெண்டு டொக்டர் சொன்னாராம். கூடவந்தது ஆரபியும் இந்துவும்தான். இரத்தத்துக்கு ஒடித்திரிஞ்சால் பிளட் பாங்கிலை இரத்தம் இல்லையாம். பாக் : பிறகு.? ரிஷி ; பிறகென்ன ஆரபியும் இந்துவும் தங்கடை பிளட் குறுப்பை பார்த்தால் இந்துவின்ரை பிளட் குறுப் உங்கடைஇரத்தத்துக்கு பொருத்தமாய் இருந்துதாம். உடனே இந்து இரத்தத்தைக்
குடுத்திட்டுது. பாக் : உண்மையே ரிஷி? ரிஷி : அம்மா; இப்பவாவது உணர்ந்து கொள்ளுங்கோ. யார் உயர்ந்த
நெல்லைலதங்கி

Page 42
எதிர்பார்க்கைகன்
LT85
ரிஷி
Lissé
ஆரபி பாக்
ரிஷி இந்து ரிஷி இந்து
LTS
ரிஷி
ஆரபி
ரிஷி
UsT85
68
சாதி, யார் தாழ்ந்த சாதி எண்டு. உங்களோடை திரிஞ்ச ரீச்சேர்ஸ் ஒருத்தர்கூட கூடவரயில்லை. வெள்ளிக்கிழமை எண்டு சாட்டு வேறை சொல்லிச்சினமாம். தாழ்ந்த சாதிகாரர் கொண்டுவந்த பலகாரம் தான் சாப்பிடவேண்டாம். அவையள் குடிச்ச தண்ணிர்ச் செம்புகூட பாவிக்கமாட்டியளாம். இப்ப அந்த கீழ்ச்சாதிக்கார இந்துவின்ரை இரத்தம் உங்கடை உடம்பிலை ஓடுது. என்ன செய்யப்போறிங்கள்? உடம்பை வெட்டி இரத்தத்தை வெளியேற்றிப்போட்டு உயிரை விடப்போறிங்களா?
(கவலையுடன்) ரிஷி; என்னை ஏனப்பா இப்பிடி சொல்லாலை
கொல்லுறாய்?
அம்மா, உங்களுக்காக மட்டும் நான் சொல்ல இல்லை. உங்களைப்போலை எத்தனை பேர் இந்த சமூகத்திலை இருக்கினம். அவையஞக்கெல்லாம் இது ஒரு பாடமாக இருக்க வேணும்.
! அங்கை ஆரபியும் இந்துவும் வருகினம் கொஞ்சம் பேசாமல் இரு.
ரீச்சர்; இப்ப பூரண சுகம்தானே? : ஓம் ஆரபி, நீயும் இந்துவும் செய்த உதவியை என்ரை உடம்பிலை
இந்துவின்ரை இரத்தம் இருக்குமட்டும் மறக்கமாட்டன்.
: இந்து இந்தாங்கோ.
; என்ன இது?
பிரிச்சுப் பாருங்கோவன்.
சாறி.
; என்ன ரிஷி என்னென்னவோ எல்லாம் நடக்குது. : அம்மா, உங்கடை தலையிலை கட்றதுக்காக புதுசாறி எண்டும்
பாராமல் இந்து கிழிச்சிட்டுது.
தலையிலை கட்டுப் போடுறதுக்கு மாத்திரமில்லை ரீச்சர், இரத்தம்பட்ட இடங்களை துடைக்கிறதுக்கும் இந்துவின்ரை ஹெட்பிஸ்தான் உதவிச்சுது. இனி அந்த சாறியை இந்துவாலை உடுக்க முடியாது.
: அம்மா; இரத்தம் ஒரு பைந்த் எடுக்க ஆயிரம் ரூபாய் வரை
செலவாகும். இந்து ஒரு சதம் கூட வேண்டாம் எண்டிட்டுது. கிழிச்ச சாறிக்குக்கூட பதில் சாறி குடுக்காட்டில் நாங்கள் என்ன மணிசரம்மா.
! நல்லாய்க் குடு ரிஷி. இந்து; இங்கை வாம்மா. உனக்கு நான்
என்ன கைமாறு செய்யப்போறனோ எனக்குத் தெரியாது.
நெல்லைலதங்கி

எதிர்பார்க்கைகள்
ஆரபி
ரிஷி
பாக்
ரிஷி
UT85 ரிஷி Luffä5
ரிஷி
பாக்
ரிஷி
பாக்
ஆரபி
Luftö ஆரபி
பாக் ரிஷி இந்து ஆரபி
69
ரீச்சர் உங்களைப் போல எல்லாரும் மனம் திருந்தி உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி எண்டு பாராமல் எல்லாரும் ஒரே குலம் போல வாழ்ந்தால் அதுவே இந்துபோல இருக்கிறவைக்கு செய்யுற கைமாறு ரீச்சர். அம்மா. உங்களுக்கு மாத்திரமில்லை இந்த உலகத்துக்கே ஒண்டு சொல்ல விரும்புறன். உயர்ந்த சாதி எண்டு பெருமை அடிக்கிறவையள், ஆஸ்பத்திரியிலை இரத்தம் தேவைப்பட்டால் ஆரிட்டை வாங்குகினம். உயர்ந்த சாதி குடுக்கிறானோ அல்லது படிச்ச பட்டதாரியள் குடுக்கினமோ. தாழ்ந்த சாதிக்காரன் தான் குடுக்கிறான். அதை வாங்கி ஏத்துறியள் அதுமட்டும் ஏன் இந்த சமுதாயத்திற்கு விளங்கயில்லை. விளங்கும் ரிஷி விளங்கும். பகுத்தறிவுக் கண்கொண்டு எப்ப மனிசன்
பார்க்த் தொடங்குகிறானோ அப்ப விளங்கும். : (கெஞ்சலாக) அம்மா. அம்மா.
என்ன ரிஷி; இவ்வளவு நேரமும் உசாராய் கதைச்சாய். இப்ப. : 6) bgbbLDT...
எதெண்டாலும் தயங்காமல் சொல்லு ரிஷி.
இந்துவை. என்னுடைய வாழ்க் கைத் துணையாயப் ஆக்கிக்கொள்ளப்போறன் அம்மா. : என்ன?
அம்மா நீங்கள் சம்மதிச்சால்தான். இல்லையெண்டால் வாழ்நாள் முழுதும் பிரம்மச்சாரியாய் இருக்கப்போறன். : ரிஷி, அப்பிடி எல்லாம் சொல்லாதை அப்பா. நீ எடுத்த முடிவுதான்
சரி ரிஷி. ; அப்பாடா. ஒரு மாதிரி. (சிரித்தவாறு) காலிலை விழு இந்து
ரீச்சற்றை மனம் மாறக்கிடையிலை. : இனிமேல் மாற மாட்டன் ஆரபி.
நீங்கள் மாறமாட்டீங்கள் ரீசசர். மாற்றுறதுக்கெண்டே சிலதுகள் இருக்குதுகள். ! எப்பிடியோ எல்லாம் நல்லதாக முடிஞ்சிட்டுது. அதுபோதும். : (மெதுவாக) இந்து இப்ப சந்தோசம் தானே. (காதில் கிள்ளுதல்) ; ஆ. ரீச்சர். : (மெதுவாக) ரிச்சர் எண்டு கத்தாதை; அத்தை எண்டு கத்து.
(எல்லோரும் சிரிக்கிறார்கள்) ~ முற்றும் ~ ஒலிபரப்புச் செய்யப்பட்ட திகதி 22.01.2000
நெல்லைலதங்கி

Page 43
70
aA)junÄjatapaavat
O sraVaWo
பங்குபற்றுபவர்கள்
சாரு - திலகாவின் நண்பி ராம் - சாருவின் காதலன் திலகா. சாருவின் நண்பி சேது . ராமின் நண்பன் ராசம் - ராமின் அன்னை
காட்சி 01
இடம் : பாதையோரம் மாத்திரங்கள் : ராம், சாரு, திலகா.
வாகனங்களின் ஒலி, சனநெரிசல் இப்படி வாங்கோ மிஸ். (கையைப்பிடித்து இழுத்தல்) ராம் : (மூச்சிரைத்தல்) பகல்லைகூட குருட்டுத்தனமாய் நடந்து கொள்ளுறீங்களே. நானில் லாட்டால் இப்ப பீஸ் பீஸ் ஆகியிருப்பீங்கள். வீட்டை சொல்லியிட்டு வெளிக்கிட்டீங்களே..? (சோகத்துடன்) நான் சொல்லிக்கொண்டே போறன் ஊமைபோல பேசாமல் இருக்கிறீங்கள். காப்பாற்றியதுக்கு ஒரு நன்றிகூட.
சாரு : காப்பாற்றியதாலைதான் மிஸ்டர் நான் நன்றி சொல்லமுடியாமல்
பேசாமல் இருக்கிறன். ராம் : ஏன்? உங்களுக்கு இத்தனை விரக்தி. பார்த்தால் பெரிய
இடத்துப்பெண் மாதிரித் தெரியுது. அழகு முழுவதையும் பிரமன் உங்கள்மீதே வாரிவிட்டிருக்கிறான். அப்படி இருக்க. சாரு : அழகு அழகு எண்டு சொல்லுறீங்களே அந்த அழகைக்கூட
பார்க்கமுடியாத பாவி ஆகியிட்டன். (அழுதல்) ராம் : மிஸ் நீங்கள். என்ன சொல்லுறீங்கள். சாரு : (கண்ணாடியைக் கழற்றியபடி) இப்ப பாருங்கோ மிஸ்டர். சண்கிளாஸ் உங்களுக்கு எல்லாத்தையும் மறைச்சிட்டுது. பகல்லைகூட குருட்டுத்தனமாய் நடக்கிறதுக்கு இதுதான் மிஸ்டர் காரணம். என்னையே காப்பாற்ற முடியாத பாவி; ஏன்
வாழனும்? ராம் : சொறி. வெரிசொறி.ப்ளிஸ். சாரு ! உங்களை மன்னிக்கிறதுக்கு நான்யார் சார்?
நெல்லைலதங்கி

71 எதிர்பார்க்கைகள்
திலகா : சாரு. சாரு. இங்கை என்ன செய்யிறாய். உன்னை நான் அந்த ஸ்ரோன் பெஞ் சிலை இரு எண் டெல் லோ சொல்லிப்போட்டுப் போனனான். (ராமைப் பார்த்து) நீங்கள்.
சாரு : இவர் இல்லாட்டில் நான் பீஸ் பீஸ் ஆகிப்போயிருப்பனாம். பீஸ் பீஸ் ஆகிப்போயிருந்தால் எவ்வளவு நல்லது.
திலகா : வாயை மூடு. கதைக்கிற கதையைப்பார். உனக்கு என்னடி
குறைவைச்சன். மிஸ்டர் நீங்கள்.
ராம் : ராமகிருஷ்ணன்.
திலகா : ஆ. ராமகிருஷ்ணன். நீங்களே சொல்லுங்கோ, இவளைப்பார்த்தா ஏதாவது குறை இருக்கும் எண்டு ஆராவது சொல்லுவினமோ?
சாரு : (சிரித்தபடி) அவர் அப்பவே சொல்லியிட்டார்.
திலகா : சிரி, சிரி எதுக்கெடுத்தாலும் வரட்டுச்சிரிப்பு (ராமகிருஷ்ணனைப் பார்த்து) மிஸ்டர் நீங்கள் செய்த உதவிக்கு என்ன கைமாறு செய்யப்போறனெண்டு தெரியயில்லை.
Jпио : பரவாயில் லை, எனிரை உயிர் போனாலும் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியுமெணி டால் அதைவிட வேறைபாக்கியம் என்ன இருக்கு.
திலகா : இந்தக்காலத்திலை இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்க சந்தோஷமாய் இருக்கு. சரி நாங்கள் வாறம் சார். உன்ரை பொன்னான வாயைத்திறந்து சொல்லனடி.
சாரு : வாறம் மிஸ்டர்.
ராம் : ராமகிருஷ்ணன்
சாரு : வாறம் மிஸ்டர் ராமகிருஷ்ணன்.
காட்சி 02 இடம் : ராமின் அறை பாத்திரங்கள் : ராம், சேது சேது : என்னடா மச்சான் நானும் அப்பதொடக்கம் பார்க்கிறன் புரண்டு புரண்டு படுக்கிறாய். என்ன விசயம்? அதாவது நோய். ஆ. ஒரு நோயின்ரை அறிகுறி போல இருக்கு (சிரித்தபடி கூறுதல்) ராம் : அப்பிடி ஒரு நோயும் எனக்கு வராதடா. இண்டைக்கு நடந்த சம்பவத்தை மறக்கமுடியயில்லை மச்சான். மனக்கண்முன் வந்து போய்க்கொண்டேயிருக்கு.
நெல்லைலதங்கி

Page 44
72
எதிர்பார்க்கைகள்
சேது : அப்படிப்பட்ட விசயத்தை இவ்வளவு நேரமும் எனக்குக்கூட
சொல்லாமல் இருந்திட்டியே.
ராம் அப்ப சொல்லவேணும் போலை இருக்கயில்லை மச்சான். ஆனால் கணிணைமூட அந்தக் காட்சிதான் வந்து போய்க்கொண்டிருக்குது.
சேது : (சிரித்தபடி) அப்பிடி என்ன மச்சான் திரையிலை ஒடுற காட்சி.
ராம் : என்ன திரையோ? உண்மையாய் நடந்த சம்பவம் மச்சான்.
சேது : நான் திரையெண்டு சொன்னது உன்ரை மனத்திரையை, சரி
விஷயத்தைச் சொல்லு.
ராம் இப்பிடி ஒரு அழகான பெண்ணை நான் வாழ்க்கையிலை
சந்திக்கயில்லை மச்சான். என்ன அழகு.
சேது . சரிதான் எந்த அழகிலும் மயங்கமாட்டாய் எண்டு நினைச்சனான்.
ஆனால் நீ.
ராம் : சேது நீயே இப்பிடிப் பேசுறாய்?
சேது : எந்தப்பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்காதனியெண்டு எனக்கு வடிவாய்த் தெரியும். அதுக்கு காரணம் இருக்குதெண்டும் தெரியும். ஒண்டு பெண்களுக்கு பின்னாலை திரியுறகுணமோ, சேட்டை செய்யிற எண்ணமோ உன்னட்டை இல்லை. இரண்டாவது உன்ரை அவலட்சணமான முகம். இதை யாரும் திரும்பிப்பார்ப்பாளோஎண்ட தாழ்வு மனப்பான்மை. சொல்லுறது சரிதானே மச்சான்.?
ராம் : மிச்சத்தைக் கேக்காமல் நீ என்னென்னவோ சொல்லிக்கொண்டு
போறாய்.
சேது : சரி சொல்லு,
J Tib அந்த அழகு, அந்தப் பெண்ணாலை பார்க்கமுடியாத
அழகுமச்சான்.
சேது : நீ சொல்லுறது எனக்கு விளங்கயில்லை மச்சான்.
ராம் அந்தப்பெண் பார்வையை இழந்த பெண் மச்சான். நான் அந்தப்பெண்ணைத் தொடவேண்டி வந்திட்டுதடா. தொட்டால் பாவம் எண்டு நினைச்சிருந்தால், அந்தப்பெண் இந்தநேரம் சொர்க்கத்திலையோ நரகத்திலையோ இருந்திருப்பாள்.
சேது . சரி தொட்டிட்டாய், மிச்சத்தைச் சொல்லு,
ராம் : அந்தப் பெண்ணை விட்டிட்டு அவளின்ரை பிறன்ட் அங்காலை
சொப்பிங் செய்திருக்கிறாள். இந்தப் பெண் லொறியுக்கை அகப்படப்பார்த்தது மச்சான். கொஞ்சம் தள்ளித்தான் லொறி
பேரழ்நிடிைது, கெலிலைலகங்கி

73 எதிர்பார்க்கைகள்
சேது : (கிண்டலாக) உயிர்கொடுத்த உத்தமன் ஆகியிட்டாய். இனி நீ சொல்லத் தேவையில்லை. சரி அந்தப்பெண்ணின்ரை ஊர், பேர் எல்லாம் அறிஞ்சிருப்பாயெண்டு நினைக்கிறன்.
JТLib : என்னடா, கொஞ்சம் கூட இரக்கம் உணர்வில்லாமல் கதைக்கிறாய். கண்பார்வையோடை இருக்கிற எங்களாலையே சில கஷ்டங்களை தாங்கமுடியயில்லை. அப்பிடியிருக்க கண்பார்வை இல்லாமல் அந்தப்பெண்ணாலை எப்பிடி
6ump(ypçu quid. சேது : ராம். உப்பிடி பார்க்க வெளிக்கிட்டால் நாட்டிலை
எத்தனையோபேர் கண்பார்வை இழந்து நிக்கிறார்கள். ராம் : ஏனோ அந்தப்பெண்ணை நினைக்க பாவமாய் இருக்கு.
அதிகின்ரை கதையிலை இருந்த விரக்தி. சேது : (கொட்டாவி விடுதல்) மச்சான் உதையே நினைச்சுக்
கொண்டுடிருந்தால் தூக்கம்தான் கெடும். எனக்கு நித்திரை வருது. நீயும் கண்ணைமூடிக்கொண்டு படு. உறக்கம் வரும்.
காட்சி 03
இடம் : சாகு, திலகா அறை பாத்திரங்கள் : சாரு, திலகா திலகா : சாரு, சாரும்மா என்ன படுக்காமல் கட்டில்லையே இருக்கிறாய்? சாரு : (திடுக்கிட்டபடி) நித்திரை வராதாம். நீ படுத்திட்டியே? திலகா : நான் படுத்திட்டன். நீ எதையோ நினைச்சு கவலைப்படுறாய்
போலஇருக்கு. சாரு : அப்பிடி எல்லாம் இல்லை திலகா. திலகா : சரி சொல்ல விரும்பாட்டால் விடு. சாரு : இதை என்னெண்டு சொல்லுறது. அல்லது எப்பிடி உனக்கு சொல்லாமல் விடுறது எண்டு எனக்குத் தெரியயில்லை திலகா. திலகா : சும்மா சொல்லு சாரு : இல்லை. பஸ்ரான்டிலை அவர் என்னைப் பிடிச்சு
இழுக்காட்டால். திலகா : ஆரைச் சொல்லுறாய்..? சாரு : (வெட்கப்பட்டபடி) அதுதான் அந்த இராமகிருஷ்ணன். திலகா : அட நீ எங்கை நிக்கிறாய் எண்டு, இப்பதான் விளங்குது. சாரு : இல்லை திலகா அவருடைய கதை. அவர்காட்டின கனிவு இப்பிடி ஒரு மனிதப்பிறவி இருக்குமோ எண்டு யோசிக்கிறன். நெல்லைலதங்கி

Page 45
74 எதிர்பார்க்கைகள்
குருடி எண்டு தெரிஞ்சே உதவ முன்வராத இந்த ஊரிலை அவர் தெரியாமல் செய்த உதவி. திலகா : நினைவிலை வைச்சிருக்க வேண்டியதுதான். அதுக்காக நித்திரையை மறக்க முடியுமா? அல்லது விடத்தான் முடியுமா? சாரு : உனக்கு எப்பவும் பகிடிதான் திலகா : சரி சரி படு. நீண்டநேரம் கண்முழிக்கிறது உனக்கும் கூடாது. சாரு (மனதிற்குள்) கண்தான் எப்பவோ மூடியிட்டுதே. இமையை
மூடவேண்டியதுதான் பாக்கி.
காட்சி 04
இடம் : கோயில்
மாத்திரங்கள் : ராம், திலகா, சாரு
திலகா : ( மணி அடித்தல்) சாரு, பூசைக்கு ஆயத்தம். கெதியாய்க்
காலைக் கழுவு. வழுக்கும். கவனமாய்க் கையைப்பிடி. (உள்ளேபோய் வணங்குதல்) மனதிற்குள் இருவரும் பிரார்த்தித்தல்.
திலகா : முருகா; சாருவுக்கு கண்ணைத்தான் உனக்கு குடுக்க முடியயில்லை அவளுக்கு நல்லதொரு வாழ்க்கையையாவது குடு. எங்கடை குடும்பநிலை கஷ்டம். எவ்வளவோ இருந்தும் எனக்காக உன்னட்டை ஒண்டும் வேண்டுதல் செய்யயில்லை.
சாரு : (சண்முகா, வேலவா அம்மாவை அப்பாவை இழந்த எனக்கு என்ரை இரு கணிகளைவிட உதவுற திலகாவின் ரை குடும்பத்தை நல்லாய் வாழச்செய். இந்த வருடத்தோடை என்ரை படிப்பும் முடியுது. இந்த மூண்டு வருசமும் திலகா இல்லாட்டால் நான் எப்பிடி படிச்சிருப்பேனோ எனக்குத் தெரியாது. அவளுக்கு படிப்பு முடிஞ்சதும் நல்ல ஒரு உத்தியோகமும் நல்ல ஒரு வாழ்க்கையும்குடு.
திலகா : சாரு, கோயிலை மூண்டு தரம் வலம்வாரும் அப்பவாவது
கண்திறப்பானோ எண்டு பார்ப்பம். (சுற்றிவந்து வாசலில் வரவும் ராமுவும் சேதுவும் வருதல்) தெரியாமல் ராமுடன் சாரு இடிபடுதல்.
ராம் : சொறி
சாரு : இடியட், நல்ல சொறி கண்டுபிடிச்சிருக்கினம்.
திலகா : ஆரையடி திட்டுறாய். (ராமைப் பார்த்துவிட்டு) ராம்;
நினைவிருக்குதா எங்களை?
நெல்லைலதங்கி

எதிர்பார்க்கைகள்
* * எப்பிடி மறக்கமுடியும். நாளாந்தம் அந்தச் சம்பவம் என்னை
UTLD
திலகா :
சாரு
திலகா :
: இல்லை. வந்து, திலகா; சொறிசொல்லடி அவருக்கு. : என்னத்துக்கு?
: இடி.
சாரு ராம்
சாரு ராம்
சாரு
திலகா :
ராம்
சாரு
ராம்
சாரு
75
சித்திரைவதைப்படுத்திக் கொண்டே இருக்கு.
v9. . . . . . சாரு நீ இடியட் எண்டு திட்டினது வேறை ஆரையும் இல்லை. ராமகிருஷ்ணன். ராம் நினைவிருக்கும் எண்டு நினைக்கிறன்.
: (மனதிற்குள்) மறக்கக்கூடிய பெயரா? அவருடைய குரல்கூட
எதிரொலித்துக் கொண்டே இருக்கெண்டு எப்பிடிச் சொல்லுறது. என்ன சாரு சொக்கடிச்சதுபோல நிக்கிறாய்
(சிரித்தபடி) தொப்பி அளவெண்டால்தானே ஏற்றுக்கொள்ள வேணும் . வேணுமெணி டு நாணி உங்களோடை மோதையில்லை. ஆரோ ஒருவர் போற அவசரத்திலை என்னைத் தள்ளிக்கொண்டு போனார், அதாலை வந்த வினை.
(மனதிற்குள்) (வினையெண்டு சொல்லாதீங்க ராம். நான்செய்த
புண்ணியம் எண்டு சொல்லுங்கோ. அல்லது உங்களை மீண்டும் சந்திக்கிற சந்தர்ப்பத்தையே இழந்திருப்பன்.
என்னடி அடிக்கடி மெளனமாகிறாய். ராம்.; சாருவோடை இந்த மரத்தடியிலை இருங்கோ; அர்ச்சனைக்கு கொடுத்தனான் உள்ளேபோய் பிரசாதம் வாங்கிக்கொண்டு வாறன்,
சாரு... என்ன பேசாமல் இருக்கிறீங்கள். ஏதாவது கதையுங்களன்.
ஆர் ஆரெண்டு தெரியாமலே சந்திக்கிற இரண்டாவது சந்தர்ப்பம். இதிலை என்னத்தைக் கதைக்கிறது மிஸ்டர் ராம். உங்கடை சினேகிதியோடை ஒரே றுTமிலை தங்கி இருக்கிறீங்கள் எண்டது மட்டும்தான் தெரியும்.
(சிரித்தபடி) பேர்சனல் மெற்றரை அறிய ஆசைப்பட்றீங்கள்.
சரி சொல்லுறன். அம்மா அப்பாவை மூண்டு வயதிலேயே ஒரு அக்சிடென்ரிலை இழந்த பாவி நான். என்ரை பார்வை போனதுக்கு அந்த அக்சிடென்தான் காரணம். அண்ணா ஒராள்தான் என்னை வளர்த்து ஆளாக்கி மேல்படிப்புக்கு அனுப்பி இருக்கிறார். அவர் இப்ப வெளிநாடு. என்ரை கண்கள் ஆப்பரேசனுக்கு நிறையப் பணம் தேவையெண்டபடியால் ஒரு வேலைக்காரியைப் பிடிச்சுவிட்டுட்டு வெளிநாடு சென்றிட்டார்.
செல்லைலதங்கி

Page 46
எதிர்பார்க்கைகன்
76
மேல்ப்படிப்புக்காக இங்கை வந்த இடத்திலை திலகா கிடைச்சிட்டாள். திலகா உற்ற துணையாய் இருக்கிறபடியாலை வேலைக்காரியை நிப்பாட்டியிட்டன். சரி என்னைப்பற்றி சொல்லியிட்டன். உங்களைப் பற்றி.
ராம் உங்களைப்போல எனக்கு வரலாறு கிடையாது. அம்மா, அப்பா ஊரிலை இருக்கினம். ஒரு அக்கா அவ மரியண்ணி வெளிநாடு போயிட்டா. என்னையும் வரச்சொல்லி அடிக்கடி எழுதுவா. எனக்கு வெளிநாடு போகஇஷடமில்லை. பாங் ஒ. . ப் சிலோனிலை எக்கவுண்டனாய் வேலை செய்யிறன். விரைவிலை மாற்றலாகிக்கொண்டு ஊருக்குப் போயிடுவன். திலகா : (வந்தவாறு) சொறி ராம், உங்களை மினக்கெடுத்தியிட்டன்
போல இருக்கு. Jmb அப்படியெல்லாம் இல்லை. திலகா : இரண்டு தடவை சந்திச்சும் நீங்கள் இருக்கிற இடம் தெரியயில்லையாம். உங்கடை அட்றெஸ்சைத் தந்தால் நாங்களும் இரண்டு பெண்கள் தனியாய் இருக்கிறம். உதவியாய் இருக்கும். ராம் அதுக்கென்ன! இந்தாங்கோ விசிற்றிங்காட். திலகா : (விசிற்றிங்காட்டைப் பார்த்தவாறு) கிட்டத்தான் இருக்கிறீங்கள். ராம் : என்ரை பிரன்ட் தேடுவான். நான் வாறன். சாரு வாறன். . . . . ويعي : 3f (bة
காட்சி 05
இடம் : தங்குமிடம் (அறை) மாத்திரங்கள் : சாரு, திலகா திலகா : விடு சாரு, நான் சோப்போடுறன். ஊத்தை இருக்கிற இடத்தை கூடக்கசக்கவேண்டும். சோப் முடியப்போகுதடி. ஒரு பிளவுசுக்கே வைச்சு சோப்பை போட்டுக்கொண்டிருக்கிறாய். .என்ன சொன்னனி திலகா .........کہ : fT([bڑ திலகா : சரிதான்; பகலிலையே கனவு காணத் தொடங்கியிட்டாய். கொஞ்ச நாளாய் நானும் பார்க்கிறன் முந்தின சாரு இல்லை. உன்னிலை ஒரு மாற்றமும் தெரியுது. என்ன நடந்தது? சாரு : (திலகாவின் கையைப்பிடித்தல்) திலகா, ஏனடி என்ரை மனம்
இப்பிடி தடுமாறுது? திலகா : விசயத்தை சொல்லடி, ஏன் இப்ப அழுகிறாய்?
நெல்லைலதங்கி

எதிர்பார்க்கைகள்
: என்ரை தகுதிக்கு மீறி ஆசைப்படுறன் திலகா. அந்த ஆசை
சாரு
திலகா :
சாரு
திலகா
சாரு
திலகா :
சாரு
சாரு
திலகா :
சாரு
திலகா :
77
நிறைவேறாதெண்டு தெரிஞ்சும் அந்த ஆசையை விடமுடிய இல்லையே. உன்ரை ஆசை என்னண்டு சொல்லு. என்னாலனவரை முயற்சி செய்யிறன்.
திலகா: ராம் ராம் எண்டு என்மனம் சொல்லிக்கொண்டே இருக்குது. அவர் காட்டிய பரிவு இவற்றையெல்லாம் பார்கையிக்கை அவர் எனக்கே கிடைக்க வேணும்போலை இருக்கு திலகா. அவற்றை பதவி என்ன? அந்தஸ்து என்ன? சாதாரண பெண்ணே அவரை அடையுறது கஷ்டம். அப்பிடி இருக்க இந்தக் குருடி.
: வாயை மூடு. எதுக்கெடுத்தாலும் குருடி குருடி எண்டுகொண்டு.
சரி ராம் உன்னை பெருமனதாய் ஏற்றுக்கொண்டாலும் உனக்குப் பொருத்தமானவர் இல்லை சாரு. அதுதான் யோசிக்கிறன்.
(ஆச்சரியத்துடன்) என்ன எனக்கு பொருத்தமில்லாதவரோ?
அப்பிடி என்ன தகுதி என்னட்டை இருக்கு?
உன்ரை அழகுக்கு முன்னாலை ராம்.
; அழகிலை என்ன இருக்கு திலகா. குணம்தான் முக்கியம். திலகா :
வாழ்க்கைக்கு குணம்தான் முக்கியம். ஒத்துக்கொள்ளுறன். ஆனால் ஆரைப் பார்த்தாலும் உடல் பொருத்தத்தைத்தானே முதல் பார்க்கிறார்கள். அதிலும் ராம் கொஞ்சங் கூட அழகில்லாதவன். உன்ரை வடிவுக்கு கால்தூசி பெறாது.
: என்ன திலகா? என்னட்டை எவ்வளவு பெரியகுறை இருக்கு.
அது என்ரை கண்ணுக்குத் தெரியயில்லையே. அவர் என்னை ஏற்பாரோ எண்ட சந்தேகம் எனக்கு. நீ என்னடா எண்டால். சரி; எதுக்கும் ராமோடை கதைச்சிட்டு சொல்லுறன். அவரும் உன்னை விரும்பினால் என்ரை பொறுப்பை அவரிட்டை ஒப்படைச்சிட்டு நான் நிம்மதியாகிவிடுவன்.
பார்த்தியே! பார்த்தியே! நான் இருக்கிறது உண்ரை நிம்மதியைக்கூடக் கெடுக்குது. வேலைக்காரியை வேண்டாம் எண்டு அனுப்பியது கூட நீ தானே? (கவலையுடன் கூறுதல்) அழாதை சாரு. நான் அந்த அர்த்தத் தி ைல சொல்லயில்லையடா, எதுக்கெடுத்தாலும் சின்னப்பிள்ளைமாதிரி அழாதை.
தெலிலைலதங்கி

Page 47
awafunafaasiassaf
காட்சி 06
இடம் : ராமிண் அறை
மாத்திரங்கள் : சாகு, திலகா, ராம், சேத
திலகா : ராம். ராமகிருஷ்ணன்
ராம் : ஆ. நீங்களே வாங்கோ வாங்கோ. மச்சான் நான் அண்டைக்குச் சொன்னன் அவைதான் இவையள். இது சாரு, இது திலகா. இருங்கோ சாப்பிட ஏதும் கொண்டுவாறன். மச்சான் இருந்து கதை.
திலகா : ராம் உங்களுக்கேன் வீண் சிரமம்.
ராம் : இதிலை என்ன சிரமம். சமையலே ஐயாமார்தான். ஆணுக்கு ஆணாய், பெண்ணுக்குப் பெண்ணாய் வளர்த்திருக்கிறேன்டா எண்டு அம்மா அடிக்கடி சொல்லுவா. சேது இருந்து கதை நான் ரீ போட்டுக்கொண்டு வாறன்.
சேது உங்களைப் பற்றி அடிக்கடி சொல்லுவான். அதிலையும் சாருவுக்கு அடிக்கடி புரையேறும் எண்டு நினைக்கிறன். ஏன் அப்பிடி சொல்லுறீங்கள் மிஸ்டர்.
சேது : சேது
திலகா : ஆ. சேது.
சேது : இல்லை. ராம் இரக்ககுணம் கொண்டவன். சுயநலம் கொஞ்சம் கூட இல்லாதவன். பொறுக்கித்தனம் கொஞ்சம்கூட இல்லை. (இரகசியமாக) ஏன் இவ்வளவும்? தான் அவலட்சணமாய் பிறந்து விட்டேனே எண்ட தாழ்வு மனப்பான்மை கொஞ்சம்கூட இல்லாதவன்.
திலகா : எந்தத் தியாகமும் செய்வாரெண்டு சொல்லாமல்
சொல்லுறீங்கள்
சாரு : திலகா, (இரகசியமாகக் கிள்ளுதல்)
திலகா : என்னடி?
சாரு : கொஞ்சம் பேசாமல் இரு.
ராம் : ஆ. இந்தாங்கோ ரீ எடுங்கோ. சாரு எடுங்கோ
திலகா : (கிண்டலாக) நானும் இங்காலை ஒருத்தி இருக்கிறன் ராம்.
ராம் : உங்களை மறப்பேனா திலகா. இந்தாங்கோ எடுங்கோ. சேது
நீயும் எடு. சரி என்ன இவ்வளவு தூரம்.
திலகா : சும்மா இருக்க போரடிக்குதெண்டாள் சாரு. அப்ப போரடிக்காத
இடம் எது எண்டு கேட்டன் இது எண்டாள்; வந்திட்டம்
சாரு : (இரகசியமாக) சும்மா இரடி.
நெல்லைலதங்கி

79
a)emielaasasat திலகா : ராம்; உங்களுக்கு பொறுப்பெண்டொண்டும் இல்லை. அப்ப ஏன் பிரம்ச்சாரியாகவே இருக்கிறீங்கள். ஏதாவது காதல் கிதல். சேது : சீச்சீ, அவனுக்கு உந்தக் காதல் கீதல் எல்லாம் சரி வராது. ஆனால் வீட்டிலை பெமிசன் குடுத்திட்டினம். எத்தனையோபேர் இவனுக்கு பின்னாலை திரிஞ்சதுகள் தான். ஆனால் அவன். ராம் : சும்மா புளுகாதையடா, போயும் போயும் எனக்குப்பின்னாலை
திரிந்ததுகள் என்ன? சேது . ஏன் நான் புழுகவேணும். நீ வடிவில்லாவிட்டாலும் உன்ரை குணத்துக்காக எத்தனையோ பேர் பின்னாலை திரிஞ்சது உண்மைதானே. திலகா : இப்ப ஏன் இரண்டுபேரும் புடுங்குப்படுறியள். ராமின் குணத்தை
நாங்கள் ஒரு நாளிலையே புரிஞ்சிட்டம். என்ன சாரு சாரு b..... திலகா : என்ன ‘ம்‘ வடிவாய் ஒம் எண்டு சொல்லு, சாரு வெளிக்கிடுவமே ராம் : என்ன வந்தது வரயில்லை அதுக்கிடையிலை வெளிக்கிடுறியள். திலகா : றுாமிலை கொஞ்சவேலை இருக்குது. நாங்கள் வாறம் ராம்.
சேது நாங்கள் வாறம். சாரு : போட்டு வாறம்.
காட்சி 07
இடம் : ராமின் வீடு மாத்திரங்கள் : ராம், ராசம். JTub : 9lubLDIT! 9jubLDIT! ராசம் : ஆர் ராமே? என்ன திடீரெண்டு வெளிக்கிட்டிட்டாய். ராம் : வந்தம்மா. ராசம் : சரி வந்திட்டாய், குளிச்சு சாப்பிட்டிட்டு ரெஸ்ட் எடு. ராம் : இல்லையம்மா நான் உடனே போகவேணும். உங்களிட்டை
ஒண்டு கேட்க வந்தனான். ராசம் : சொல்லன் ராசா, நீ கேட்டு இதுவரை ஏதும் செய்யயில்லையே. ராம் : அந்தத் துணிவிலைதானம்மா வந்தனான். ராசம் : விசயத்தை சொல்லு. ராம் : நான் ஒரு பெண்ணை விரும்புறனம்மா. ராசம் உன் ரை தகுதிக்கேற்ற பெண்ணாகத்தான் செலக்ட்
பண்ணியிருப்பாய். கொப்பாவோடை கதைச்சிட்டு கடிதம் போடுறம். எங்களுக்கேற்ற பெட்டைதானே.
நெல்லைலதங்கி

Page 48
ഒഴff്തമമ്
Jтић Uπ5ιb Jтић
ராசம்
DJ Tib
ராசம்
JTLb
ராசம்
JTLb
ராசம்
8()
: ஒரு குறையைத் தவிர வேறெந்த குறையுமில்லை அம்மா ; சின்னக் குறையோ, பெரிய குறையோ
என்னைப் பொறுத்தவரை சின்னக்குறை. உங்களைப் பொறுத்தவரை பெரியகுறை. அந்தப் பெண்ணுக்கு கண் தெரியாதம்மா.
; (ஆச்சரியத்துடன்) என்ன கண் தெரியாதோ? காதலுக்குத்தான்
கண் இல்லை என்பினம். ஆனால் காதலிச்ச பெட்டைக்கு கண்தெரியாதெண்டு சொல்லுறாய். என்ன மோனை உனக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கோ?
அம்மா நாங்கள் எதற்காக வாழவேணும் எண் டு நினைக்கிறதைவிட மற்றவர்களுக்காக வாழவேணும். அந்தப் பெண்ணும் வாழவேணும்தானே. காதல் என்று சொல்லுவதைவிட நான் அந்தப்பெண்மேலை கருணையைத்தான் செலுத்துறன். அதோடை என்ரை முகத்தின்ரை இலட்சணம் உங்களுக்கு தெரியும்தானே.
; என்னராம் சொல்லுறாய். ஆனை கறுத்தாலும் ஆயிரம் பொன்
பெறுமடா. எத்தினை லட்சங்களோடை பொம்பிளைபேசி வந்திருக்குதுகள், எதுக்கும் நீ வரட்டும் எண்டு காத்துக் கொண்டிருக்கிறன். நீ என்னடா எண்டால்.
பாவம் அம்மா அந்தக் கேளுக்கு ஒரு நாள் உதவி செய்யவேண்டி வந்திட்டுது. அந்த செயலை மனதிலை வைச்சு என்னை மனசுக்கையே நேசிக்கத் தொடங்கியிட்டுதாம். தாயப் தகப் பனும் இல் லையம் மா. உங் கடை குணம் தெரிஞ்சதாலை நானும் வாக்கு கொடுத்திட்டன். என்னம்மா சொல்லுறீங்கள்.
எதுக்கும் அப்பாவோடை கதைச்சிட்டு முடிவை எழுதுறன்.
இந்த ரீயைக் குடி.
(குடித்துவிட்டு கோப்பையை நீட்டுதல்) இந்தாங்கோ நான் போட்டுவாறன் . ஒரு நாள் லீவிலைதான் வந்தனான் அப்பாவுக்கும் நான் வந்ததாய் சொல்லுங்கோ. நான் வாறன் gешћLDT.
: ஓம் ஓம் போட்டுவா.
நெல்லைலதங்கி

8. எதிர்பார்க்கைகன்
காட்சி 08 இடம் : ராமின் வீடு பாத்திரங்கள் : ராம், சாகு சாரு : ராம். ராம். உங்களுக்கு எப்பிடி நன்றி சொல்லுறதெண்டு
எனக்குத் தெரியயில்லை.
ராம் : என்ன சாரு, நாங்கள் ஈருடல் ஒருயிர் ஆகியிட்டம். இனி
என்ன ஒருத்தருக்கு ஒருத்தர் நன்றி சொல்லிக்கொண்டு. சாரு : உங்கடை அம்மா அப்பாவுக்கும் பெருந்தன்மை ராம். வேறை
ஆருமெண்டால் ஒத்துக்கொள்ளுவினமோ. ராம் : உந்தக் கதையைவிட்டுட்டு வெடிங் முடிஞ்சு ஒரு கிழமை ஆகுது. வேலைக்குப் போகவேணும். வேறை ஒரு றுாம் பார்க்க வேணும். சாரு : ராம் உங்களுக்கு சொல்ல மறந்திட்டன். அண்ணா எங்கடை
விசயத்தை அறிஞ்சு ரொம்ப சந்தோஷப்பட்டு எழுதியிருக்கிறார். ஆனாலும் நீ கண்பார்வை அற்றநீ குருட்டு நம்பிக்கை வைத்திடாதையெண்டு எழுதி இருக்கிறார். அதோடை கண் ஆப்பரேசனுக்கு கால் பங்கு பணம் சேர்த்திட்டாராம். கடிதம் வந்து ஒரு கிழமைக்கு மேல் ஆகுது. நான் சொல்ல மறந்திட்டன். ராம் : (பெல் அடித்தல்) ஆர் கேற்றிலை, போஸ்மென் இரும் லெட்டர்
வாங்கிக்கொண்டு வாறன்.
(வந்தபடி) .வொறின் லெட் டர் . சாரு உம் மடை அண்ணவாகத்தான் இருக்கவேணும். சாரு உடைச்சு வாசியுங்கோ ராம். என் அன்பிற்குரிய சாருவுக்கு,
உன்ரை மனத்தைக் கொஞ்சமென்ன நிறையவே திடப்படுத்தி வைத்துக்கொள்ளம்மா. நான் வேலை செய்த கொம்பனி விபத்தொன்றில் எரிந்த இடத்தில் எனது கொஞ்சப் பணமும் எரிந்து போய்விட்டது. அத்துடன் இப்போதைக்கு வேலையும் இல்லை. ஏதோ கடவுள் நடக்கப்போவதை அறிந்து உனக்கு ஒரு துணையைத் தேடித் தந்துவிட்டார். ஆனால் கண்தான் ஆப்பரேசன் செய்யகாலம் எடுக்கப்போகிறது. நான் என்ன செய்ய அம்மா. இப்பிடி ஆண்டவன் என்னை சோதிச்சிட்டார் அம்மா. இத்துடன் முடித்து மறுமடலில் தொடர்கிறேன்.
நெல்லைலதங்கி

Page 49
82
எதிர்பார்க்கைகள்
சாரு : ராம் பார்த்தீங்களே! இந்த குருடியின்ரை அதிஷ்டத்தை.
(அழுதல்)
ராம் : சாரு; எதுக்கெடுத்தாலும் குடிமுழுகிப்போனது போலை
அழக்கூடாது. என்னட்டைப் பணம் இல்லையே? உம்முடைய ஆப்ரேசன் என்ரை செலவிலை செய்துமுடிக்கிறன்.
காட்சி 09 இடம் : வைத்தியசாலை பாத்திரங்கள் : டொக்ரர், ராம், சாரு டொக் ராம் உங்கள் மிஸ்ஸிசை செக் பண்ணியிட்டன். ஆப்பரேசன் செய்யக்கூடிய நிலையில கண் இருக்குது. இது மேஜர் ஒப்ரேசன். பணம் கொஞ்சம் அதிகமாக செலவாகும். ராம் : அதுக்கென்ன டொக்ரர். சாருவின்ரை கண் சுகமானால் போதும். டொக் : பார்வை கிடைக்கும் ராம். ஆப்பரேசன் செய்யுறது எங்கடை
கடமை. பார்வை சிலவேளை மீண்டும்.
ராம் : என்ன டொக்ரர் இழுக்கிறீங்கள் டொக் : சிலவேளை மீண்டும் பார்வை கிடைக்காமலும் போகலாம். ராம் : என்ன டொக்ரர் சொல்லுறீங்கள்
டொக் எதுக்கும் கடவுளிலை நம்பிக்கை வையுங்கோ. நாங்கள் எதுவும் திடமாக கூறமுடியாமல் இருக்குது. எங்கடை சக்தியையும் சிலவேளை மீறி. எதுக்கும் உங்களுக்குச் சம்மதமெண்டால் அடுத்த கிழமை ஆப்பரேசன் செய்யலாம்.
ராம் : டொக்ரர் முன்வைச்ச காலை பின்வைச்சு பழக்கம் இல்லை. பணம் போனாலும் பரவாயில்லை. ஒருமுயற்சி எடுத்து பார்ப்பம். நான் வாறன் டொக்ரர்.
டொக் : ஒம் ஓம் போயிட்டு வாங்கோ. பெஸ்ட் ஒவ் லக்.
காட்சி 10 இடம் : வைத்தியசாலை. பாத்திரங்கள் : சாகு, ராம் ராம் : சாரு. சாரும்மா. நாளை காலையிலை கட்டு அவிழ்படும்.
நீ முதல்லை ஆரைப்பார்க்க ஆசைப்படுறாய்? சாரு : என்ன பகிடி விட்றீங்களே. உயிர்கொடுத்த உத்தமர். இப்ப உயிரிலும் மேலான பார்வையை தந்திருக்கிறியள்.
நெல்லைலதங்கி

83 രിffതമബ്
உங்களைத்தவிர இந்த உலகத்திலை எதையும் பார்க்க விரும்பயில்லை ராம். ராம் : ஒகே நான் வாறன். நிம்மதியாய் இனியாவது நித்திரைகொள்
காட்சி 11
இடம் : ராம் தங்குமிடம் பாத்திரங்கள் : சாகு, ராம். ராம் : சாரு, நல்ல படம் ஒண்டு ஒடுதாம் குடும்பப் பெண்கள் பார்க்க
GB6J60őņu u ULLDTub. சாரு : (மனதிற்குள்) உங்களோடை வந்து எத்தனை இடத்திலை
எத்தனைபேரின் பார்வை எங்கள் மேலை விழுந்திருக்குது.
ஜாடைமாடையாய் அவர்கள் பேசுகிற விதம்.
ராம் : என்ன யோசிக்கிறீர்? சாரு : இல்லை எனக்கு தலையுக்கை இடிக்குது. டொக்ரர் படமும் பார்க்க கூடாதெண்டவர். நீங்கள் வேணுமெண்டால் போட்டு வாங்கோ. ராம் : சாரு; உம்மை நான் கவனிச்சுக் கொண்டுதான் வாறன். முந்தின
சாரு இல்லை. உம்மடை போக்கு எல்லாம் மாறியிட்டுது. வெளியிலை போவம் எண்டாலே ஏதாவது சாட்டுப்போக்கு
சொல்லுறது. சாரு : 'உங்களின்ரை அழகுக்கு உங்களோடை திரியாததுதான் ஒரு
கேடு ராம் : என்ன முணுமுணுக்கிறீர். சாரு : சும்மா கரைச்சல் குடாமல் போற இடத்திற்கு போட்டுவாங்கோ. ராம் : ராம் என்னைவிட்டுப் போகாதையுங்கோ எண்டு ஒரு காலம்
கெஞ்சினிர். இப்ப நான் இருக்கிறது உமக்கு கரைச்சலாய்ப் படுது என்ன?
சாரு : என்ரை வாழ்க்கையை பாழாக்கியதுமில்லாமல். ராம் : பாழாக்கின்னானோ? நானோ? என்னைப் பார்த்துச் சொல்லும். சாரு : எனக்கு வாழ்வு தந்தியள். அதிலை சுயநலமும்
அடங்கியிருக்குஎண்டு பார்வை வந்தபிறகுதானே தெரியுது. ராம் : சாரு. ஏன் இப்பிடி என்னை சித்திரைவதை படுத்துறிர். சாரு : கொஞ்சம் நிம்மதியாய் இருக்க விடுங்கோ (கதவைச் சாத்துதல்)
േഴ്സി

Page 50
எதிர்பார்க்கைகள்
காட்சி 12 இடம் : ராம் சாகு தங்குமிடம் பாத்திரங்கள் : சாகு. திலகா, ராம் திலகா : சாரு. சாரு. சாரு : வாடி, கணி பார்வை கிடைச் சபிறகு ஒருமுறைதான்
திலகா :
சாரு
திலகா :
சாரு
வந்திருக்கிறாய், கண்பார்வை இல்லாதநேரம் விழுந்து விழுந்து பழகினாய் கண்பார்வை வந்த பிறகு இந்தப்பக்கம் ஆளில்லை. எரிச்சல், பொறாமை எண்டு சொல்லனடி. சிலருக்கு பார்வை கிடைச் சபிறகு ஞானம் பிறக்கும். உனக்கு பார்வை கிடைச்சபிறகு இருந்த ஞானமெல்லாம் பறந்தோடியிட்டுது.
என்ன திலகா சொல்லுறாய். நீ சொல்லுறது ஒண்டும் விளங்கயில்லை.
என்னண்டு விளங்கும்; கடந்து வந்த பாதையை மறக்கிற சமுதாயத்திலை நீ மட்டும் விதிவிலக்கோ. அந்த ராம் உன்னிலை பரிதாபப்பட்டு உனக்கு வாழ்வுதந்தாரே தவிர உன்ரை கண்ணில்லாத அழகைப்பார்த்தில்லை. நீ ஒரே பைத்தியமாய் இருக்கிறாய் எண்டு சொன்னதிலைதான், அதிலும் தான் கொஞ்சம்கூட பொருத்தமில்லாதவன்; ஆப்பரேசன் முடிஞ்சா சாரு என்னைப் பார்த்து வெறுத்திடுவா எண்டெல்லாம் மறுத்தார். ஏன் நான் உனக்கு எத்தனை தடவை சொன்னனான். உன்ரை அழகுக்கு பொருத்தமில்லை யெண்டு. கேட்டியோ, அதிலும் சாரு அப்பிடிப்பட்டவள் இல்லை பழகின மூண்டு வருடத்தில நான் அவளைப்பற்றி தெரிஞ்சு வைச்சிருக்கிறன் எண் டு அடிச்சு சொன்னதாலைதான் உன்னைக் கட்ட சம்மதிச்சவர். சீதனத்தோடை எத்தனையோ சம்மந்தம் வந்தது. எல்லாத்தையும் தட்டிக்கழிச்சு உன்னை ஏற்றார். ஆனால் நீ. உன்ரை குணத்தைக் காட்டிட்டாய். என்னடி பொல்லாத அழகு. இந்த அழகு உனக்கு நிரந்தரமே. ராம் வந்து அழாக்குறையாய் நடந்ததுஎல்லாத்தையும் சொன்னார். உன்ரை சார்பிலை நான் அவரிட்டை மன்னிப்பு கேட்டிட்டுவாறன். உனக்கு மனச்சாட்சி எண்டு ஒண்டிருந்தால், உதைஎல்லாம் மறந்து ராமைச் சந்தோசப்படுத்து. அதுமட்டும் இந்த திலகா உன்ரை வாசல் படியைக்கூட மிதிக்கமாட்டாள்.
திலகா, திலகா.
நெல்லைலதங்கி

எதிர்பார்க்கைகள்
Jпић
சாரு
Uπιb
சாரு
ராம்
சாரு
JTub
சாரு
85
(மனசாட்சி) திலகா கூறினது உண்மைதானே. இந்த அழகு நிரந்தரமே சீ. ராமை எவ்வளவு மனம் நோகச் செய்திட்டன். நான் பாவி நான் பாவி. ராம் என்னை மன்னிப்பிங்களேஆண்டவா இந்தப் பாவியை மன்னிச்சுக்கொள். ராம். ராம். ராம்.
: (ராம் வந்தவாறு) சாரு என்ன? ஏன் இப்பிடி அழுகிறீர்? : இந்தப் பாவியை மன்னிப்பிங்களே (தலையில் அடித்து அழுதல்) : ஆப்பரேசன் செய்த கண். கண்ணிலை ஒரு சொட்டு நீர்கூட
வரக்கூடாது எண்டு சொல்லி இருக்கினம். அழுகையை
நிப்பாட்டும். என்னைப் பாரும். சிரியும்.
(அதிர்ச்சியுடன்) ராம், என்னாலை பார்க்க முடியயில்லை
ராம் என்னாலை பார்க்க முடியயில்லை. (அழுதல்)
சாரு என்னம்மா சொல்லுறாய் (கவலையுடன்) : நான் செய்த அட்டுழியம் ஆண்டவனுக்குகூட பொறுக்கயில்லை.
சாரு; சாரும்மா; நீ கவலைப்படாதை. ஒரு மனிதனாலை முடியாதது என்ன. தீரும்பவும் டொக்ரரைப் பார்ப்பம்.
: வேண்டாம்; ராம் எனக்கு பார்வை வேண்டாம் ராம். நீங்கள்
அருகே இருந்தால் போதும்.
முற்றும் -
ஒலிபரப்புச் செய்யப்பட்ட திகதி 23.05.1998
நெல்லைலதங்கி

Page 51
aljanjzamasasaž
தோஷம் பங்குபற்றுவோர் :-
தேவனி - ராதிகாவினி சகோதரணி வேணி --தேவனினி மனைவி Flull -ராதிகாவின் நண்பி அருணனி - ராதிகாவின் நண்பனி ராதிகா - தேவனினி சகோதரி தம்பிமுத்து - 6pj
காட்சி : 01 இடம் : தேவனின் வீடு மாத்திரங்கள் : தேவன், வேனி, ராதிகா வேணி : ராதிகா, இஞ்சை நான் ஒரு கையாலை கஷடப்பட்டுக் கொண்டிருக்கிறன். நீ உங்கை என்ன செய்யிறாய்? ராதிகா : நீங்கள் தானே அண்ணி தோய்ச்ச உடுப்புக்களை மடிச்சு
வையெண்டு சொன்னனிங்கள். வேணி : எதெது எப்ப செய்ய வேணுமெண்ட விவஸ்தையே இல்லை உனக்கு. எட்டு மணி எண்ட உடனே நீயும் வெளிக்கிட்டிடுவாய். நானும் வெளிக்கிட்டிடுவன் அதுக்கிடையிலை இந்த வேலையள் முடியுமே. ராதிகா : (இழுத்தவாறு) எல்லா வேலையும் செய்திட்டுத்தானே அண்ணி
வந்து உடுப்பு மடிச்சனான். வேணி : எதிர்க்கெதிர் கதையைப் பார். எல்லாம் நீ வேலை பார்க்கிற
திமிர். ராதிகா : (அழுது) இப்ப என்ன சொல்லியிட்டன் எண்டு இப்பிடிக் குத்திக்
கதைக்கிறீங்கள். தேவன் : (வந்துகொண்டு) விடியத் தொடங்கினால் இஞ்ச குத்துப்பாடுதான். உதிலை கடைக்குப் போய் வாறதுக்கிடையிலை. என்ன ராதிகா? ராதிகா : வந்தண்ணை.(மெதுவாக) வேணி : முதலிலை இஞ்சை வாங்கோ. தேவன் : என்னப்பா என்ன? வேணி : உங்கட தங்கச்சி முந்தினது போல இல்லை. என்ன சொன்னாலும் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தவள். இப்ப எடுத்ததுக்கெல்லாம்
நெல்லைலதங்கி

യുffീബ്
தேவன்
ராதிகா : தேவன் :
ராதிகா
தேவன் : ராதிகா : தேவன் :
வேணி
ராதிகா :
வேணி ராதிகா
87
நியாயம் கற்பிக்கிறாள். எல்லாம் உந்த வேலையாலும் அவளின்ரை கூட்டுக்களாலையும் தான்.
: (கோபத்துடன்) ராதிகா! ஏன் உன்ரை வாய் வீச்சு கூடப்பாக்குதாம்?
இல்லை அண்ணை. (மெதுவாக அருகில் வந்து) அண்ணியின்ரை மனம் நோகாமல் நடக்கப் பழகிக் கொள். : (விலகிவந்து மனதிற்குள்) என்ரை மணம் நோகிறது தெரியயில்லை. அடாவடித்தனம் பண்ணுற தன்ரை மனிசியின்ரை மனம் நோகக்கூடாதாம். அதுக்கு மனம் எண்டு ஒண்டு இருந்தால்தானே, நோகிறதுக்கு.
என்ன உங்கை முணுமுணுப்பு? திருக்குறள் பாடமாக்கிறனண்ணை. செய்யிற வேலை காணாதெண்டு ஒரு பட்டப்படிப்பு அதுவும் வெளிவாரியாய். எவ்வளவு பணம் உதுக்கை முடங்குது. செலவழிக்கிற பண்த்துக்கு ஒண்டு ரெண்டு பவுண் நகை செய்திடலாம். சீருக்காவது உதவும். : (வந்தவாறு) அவளுக்கு இருக்கிற துணிவிலை, தான் உழைக்கிற பணம் தானே எப்படியாவது செலவழிப்பன் எண்டு சொன்னாலும் சொல்லுவாள். நீங்கள் வந்து குளிச்சிட்டு வெளிக்கிடுங்கோ. ராதிகா; வாணியைக் கெதியாய்க் குளிப்பாட்டிவிடு.
(தனிமையில்) அம்மா என்னை ஏன் இளையவளாய்ப் பெற்றனிங்கள். உங்களோடை என்னையும் கூட்டிப் போங்கம்மா. இந்த நரக வேதனையில் இருந்து விடுபட எனக்கு ஒரு வழியும் தெரியயில்லையம்மா.
; ராதிகா.
: ஆ.வந்திட்டன்.
காட்சி : 02
இடம் : கண்ரீன் பாத்திரங்கள் : சந்தியா, ராதிகா, அருணன் சந்தியா : ராதிகா. என்னடி ஒரே டல்லாக இருக்கிறாய்.
ராதிகா :
(விரக்தியுடன்) என்ன வாழ்க்கையடி, இப்பிடி ஒரு வாழ்க்கை வாழ வேணுமோ? எண்டுகூட நான் அடிக்கடி யோசிக்கிறனான்.
சந்தியா : ராதிகா; உனக்கும் நல்ல காலம் வரும் தானே. வீணாய் மனதை
அலட்டாமல் சந்தோஷமாய் இருக்கப்பார்.
நெல்லைலதங்கி

Page 52
எதிர்பார்க்கைகள்
ராதிகா :
சந்தியா :
ராதிகா :
சந்தியா : ராதிகா :
அருண :
ராதிகா :
அருண :
சந்தியா :
அருண சந்தியா :
ராதிகா :
சந்தியா :
அருண சந்தியா :
அருண : சந்தியா :
88
எப்பிடியடி சந்தோஷமாய் இருக்கிறது? அப்பிடி சந்தோஷமாய் இருக்க அண்ணாவும் அண்ணியும் விட்டாலெல்லோ. நானும் உப்பிடி ஒரு சகோதரத்தைக் காணயில்லை. சகோதர பாசம் கிடைக்கிறதுக்கு நீ கொடுத்து வைக்கயில்லை.
சகோதர பாசம் மட்டுமே சந்தியா. சிறுவயதிலேயே தாய் தந்தையினுடைய அன்பை இழந்த பாவியெல்லே நான். (கவலையுடன்) அதெல்லாம் போக உன்ரை அக்கா எங்கையடி இப்ப இருக்கிறா? வெந்த புண்ணிலை ஏன் வேலைப் பாய்ச்சுகிறாய் நான் அப்படி ஒரு சகோதரம் இருக்கிறதையே மறந்திட்டன்.
(வந்தவாறு) அப்ப தொடக்கம் பார்த்துக் கொண்டிருக்கிறன். ரெண்டுபேரும் இன்ரேவல் ரைம் முடிஞ்சும் கதைச் சுக் கொண்டிருக்கிறியள் அப்படி என்ன முக்கியமான விசயம்?
அதெல்லாம் ஒண்டும் இல்லை அருணன். பெண்களின்ரை கதைக்கு அளவுகணக்கு இருக்கே. சில பெண்களின்ரை கதைக்கு அளவுகணக்கு இல்லைத்தான் அதைவிடுங்கோ. ஆனால் நீங்கள் இரண்டு பேரும். அதிலையும் ராதிகா அப்படிப்பட்டதில்லை.
அருணன், உங்களுக்கு ராதிகாவின்ரை ஸ்ரோறி கொஞ்சம் தெரிஞ்சதுதானே. (வெறுப்புடன்) ஆணி சகோதரமும்
அப்பிடி. பெண் சகோதரமும் அப்படி. : (ஆச்சரியத்துடன்) ராதிகாவுக்கு ஒரு சகோதரியும் இருக்கிறாவே?
இருக்கிறாவோ. ராதிகாவை இண்டைக்கு அநாதரவாய் நிக்கவைச்சதே அந்தச் சகோதரிதான். (இடைமறித்து) சந்தியா கொஞ்சம் பேசாமல் இரு.
ராதிகா உப்பிடிப்பட்டவர்களைப் பற்றி ஊர் ஊராயப் சொல்லித்திரியவேணும். அப்பதான் அதுகளும் உணருங்கள். அதுகளைப் போல இருக்கிறதுகளும் திருந்தி நடக்குங்கள்.
: சந்தியா! நீங்கள் விஷயத்தைச் சொல்லுங்கோ.
ராதிகாவின்ரை அம்மா, இருக்கிற வீடுவாசலை ராதிகாவின்ரை பேருக்கு எழுதிவிட்டா. ராதிகாவின்ரை சகோதரிக்கும் தன்னுடைய நகைநட்டைக் குடுத்திட்டு கண்ணை முடியிட்டா.
பிறகு.
சகோதரிக்கு வந்த மாப்பிள்ளைப் பகுதியள் வீடுவளவையும் தரச்சொல்லி நிண்டிருக்கினம். தமைக்கையின்ரை திருமணம்
நெல்லைலதங்கி

adanadaaaah
ராதிகா :
அருண
ராதிகா :
சந்தியா :
அருண :
இருவரும் :
இடம் :
89
நிற்கக்கூடாதெண்டு சகோதரிக்கு எழுதிக்குடுத்திட்டாள் தியாகி ராதிகா.
(பரிதாபத்துடன்) என்ன செய்யிறது அருணன். பேசிவாற மாப்பிள்ளை வீட்டார் அத்தனை பேருக்கும் வீட்டிலைதான் கண், விட்டுப் பிரச்சனையாலை வாற சம்பந்தம் எல்லாம் தடைப்பட்டிட்டுது அதோடை பெண்பிள்ளையளைப் பெற்ற பெற்றார் தங்களுடைய பிள்ளையஞக்கு ஒரு வீடு நிச்சயமாய் குடுக்க வேணும். வீடு இல்லாமல் கணவன் வீட்டிலை வாழுற பெண்களுக்கு நடக்கிற அட்டூழியம், பிரச்சினை வருகிற நேரமெல்லாம் வீட்டை விட்டுத் துரத்துற கணவன்மார், இதெல்லாத்தையும் யோசிச்சுட்டு அக்காவுக்குக் குடுத்திட்டன்.
: அக்கா, நல்ல நிலைக்கு வந்தால் உங்களைக் கண்கலங்காமல்
பார்ப்பா எண்ட நம்பிக்கை. அப்படித்தானே ராதிகா? வாழ்க்கையே ஒரு நம்பிக்கையிலைதானே நடக்குது, மிஸ்டர்
9(560T6. "நம்பநட நம்பி நடவாதே" எண்ட பழமொழியும் இருக்குது.
குடுக்கிறவைக்கு குறையில்லை எண்டு சொல்லுவினம். ராதிகாவின்ரை நல்ல மனதுக்கு எல்லாம் நல்லபடியாய் நடக்கும். நான் வாறன்.
நாங்களும்தான்; (எழும்புதல்) வாறம்.
காட்சி : 03 தேவனின் விடு
மாத்திரங்கள் : வேணி, ராதிகா வேணி ; ராதிகா. ராதிகா. பெல் அடிக்குது போஸ்ட்மன் போல இருக்குது.
என்னெண்டு பார்.
ராதிகா : (கடிதம் வாங்கி பிரித்து படித்தவாறு நடத்தல்) ம். எனக்குத்தான்.
தேவகி :
தேவகி போட்டிருக்கிறாள்.
(தேவகியின் குரல்) எனதாருயிர் நண்பி ராதிகாவுக்கு, நான் நலம். உன்னுடைய நலத்தை அறிவதற்காக உனது வீடு தேடிவந்தேன். ஆனால் என்ன ஏமாற்றம். உனது வீட்டில் நாய் தேவையில்லை. ஆட்களைத் துரத்துவதற்கு. நீ என்ன நினைக்கிறாயோ தெரியவில்லை. உனது அண்ணியின் பேச்சிலிருந்து உன்னைப் பார்ப்பதை விரும்பவில்லை என்பதை ஜாடைமாடையாக தெரிந்து கொண்டேன். அதனால் திரும்பி
که کهوله صنسکو

Page 53
ണ്ണിff്തബ്
வேணி
ராதிகா :
; (கோபத்துடன்) ஆர் கடிதம் போட்டது? ராதிகா :
: இஸ்கூலிலை படிச்சால் அதோடை விட வேண்டியதுதானே. ராதிகா :
வேணி
ഖങ്ങി
வேணி
ഖങ്ങി ராதிகா
வேணி
இடம் :
90
வந்துவிட்டேன். மீண்டும் இன்று கப்பல் போவதால் அவசரமாக இக் கடிதத்தை எழுதிவிட்டுப் புறப்படுகின்றேன். மிகுதி மறுமடலில் தொடர்கின்றேன். அன்புடன், நண்பி தேவகி.
: (வந்தவாறு) ஆருக்குக் கடிதம். ராதிகா : வேணி :
எனக்குத்தான்.
(முணுமுணுத்தல்) கடிதம் கடிதமாய் வருது. என்ன
மானக்கேடெல்லாம் நடக்குதோ தெரியயில்லை.
(6ોLD6I160Itb)
(வெறுப்புடன்) என்னோடை இஸ்கூலிலை படிச்ச ஒரு சிநேகிதி.
(கோபத்துடன்) இந்தக் கடிதம் வந்ததாலை உங்கடை குடியே மூழ்கிப்போனது மாதிரி அங்கலாய்ப்பு படுறீங்கள்.
; கடிதம் வரும், பிறகு அவளவை வருவினம். இது என்ன சத்திரமே. ராதிகா :
(மனதிற்குள்) தேவகி எழுதினதும் சரிதான்.
என்ன சரிதான். : இல்லை. தான் வரயுக்கை வாசலிலை நாய் ஒண்டு படுத்திருந்ததாம்.
உள்ளுக்கை போகவே விடயில்லையாம். தான் திரும்பிப் போயிட்டாளாம். அதைப்பற்றித்தான் விபரமாக கடிதம் எழுதியிருக்கிறாள்.
எப்படியோ போய்த்துலை. வாணியின்ரை உடுப்புக்கள் கொஞ்சம்
இருக்கு கழுவிவிடு.
காட்சி : 04 தேவனின் வீடு
பாத்திரங்கள் : புறோக்கர், தேவன், வேனி
புறோ
தேவன் :
வேணி
தேவன் :
(வந்தவாறு) தம்பி தேவன், உள்ளை வரலாமோ? தேவன்
வாங்கோ. வாங்கோ. வாங்கோ மாஸ்டர்
! (சிரித்தபடி) நான் இப்ப மாஸ்டர் இல்லை. ரிட்டையர் ஆகினயிறகு
புறோக்கர் தொழில் செய்யிறன் கண்டியோ. வேணி! இங்கை வந்து பாரும், ஆர் வந்திருக்கிறதெண்டு.
: (வந்துகொண்டு) சேர் நீங்களே. எவ்வளவு காலத்துக்குப் பிறகு.
இருங்கோ ரீ போட்டுக்கொண்டு வாறன். சேர் சொல்லுங்கோ. எப்பிடி உங்கடை பாடு.
நெல்லைலதங்கி

&ứẩ}ưn//cfia)&&ử
கடவுளே எண்டு எனக்கொரு குறையுமில்லை. (ராதிகா வருதல்)
புறோ
தேவன் :
புறோ ராதிகா
புறோ
வேணி
புறோ
தேவன் :
புறோ
தேவன் : வேணி :
புறோ
வேணி
91
வாறது ராதிகாவெல்லே. ஓம் சேர்.
: பிள்ளை வேலைக்குப் போறது போலை. : ஒம் சேர். கச்சேரியிலை வேக் பண்ணுறன். இருந்து கதையுங்கோ
8.
: ஓம் பிள்ளை. (தேவன்பக்கம் திரும்பி) தம்பி தேவன், நான் ஏன்
வந்தனான்? எதுக்கு வந்தனான்? எண்டு கேட்கமாட்டீர் போல இருக்கு.
ரீயை எடுங்கோ சேர். வந்தது வாறதுக்கிடையிலை ஏன் வந்தனி
எதுக்கு வந்தனி எண்டு கேக்கிறது நாகரீகமில்லை. அதோடை வந்த விஷயத்தை கொஞ்சம் பொறுத்து நீங்கள் சொல்லுவீங்கள்தானே.
: நான் சுத்தி வளைக்கயில்லை பிள்ளை. ராதிகாவுக்கு, நீங்கள்
இரண்டுபேரும்தானே தாயும் தகப்பனும். அதாலை இரண்டு பேரும் இருக்கையுக்கை கதைக்கிறது நல்லது, ராதிகாவுக்கு நல்ல ஒரு சம்பந்தம் கொண்டு வந்திருக்கிறன். பொடியன் மாஸ்டர் வேலை பாக்குது. நல்ல பண்பான குடும்பம். குடி, புகை ஒண்டும் அதுதளின்ரை வம்சத்திலும் இல்லை. தம்பி தேவன் உங்கடை பரம்பரையிலும் இந்த கெட்ட பழக்கங்கள் ஒண்டும் இல்லைத்தானே? இல்ல்ை சேர். ராதிகாவுக்கும் வயது முப்பத்திரெண்டு ஆகுது. எங்களுக்கும் அந்த எண்ணம் இல்லாமல் இல்லை சேர். ஆனால். (மெதுவாக) ஏன் தேவன், ராதிகா ஆரையும் காதல் கீதல் எண்டு. சீ. சீ. அப்பிடி எல்லாம் நான் வளர்க்க இல்லை சேர், வந்து. ஏன் சேர் மறைப்பான், ராதிகாவுக்கு தோஷம். நாகதோஷம். இதுவரை எத்தினை சம்பந்தம் வந்து ஒண்டு கூட ஒத்துப்போக இல்லை.
: பிள்ளை, நான் புறோக்கராய் வந்த பிறகு, செவ்வாய் தோஷம்,
சனி தோஷம், நாகதோஷம் எண்டு பல பிள்ளையளைச் சந்திச்சிருக்கிறன். வாழ்க்கையையும் அமைச்சுக் குடுத்திருக்கிறன். அதுகளும் நல்லாய் வாழுதுகள்.
; என்ன சேர், உப்பிடிச் சொல்லுறீங்கள். நாங்கள் அறிஞ்சு ஒரு
குடும்பம் ஆயுள் பூரா வாழ இல்லை.
6) A. áá.

Page 54
awafundadaDasara
பிள்ளை, தோஷமில்லாதவை மாத்திரம் என்ன நீடிச்ச ஆயுளுடன்
புறோ
வேணி புறோ
தேவன் :
புறோ
தேவன்
புறோ
வேணி :
புறோ
வேணி
புறோ
92
வாழுகினமே? எத்தினை எத்தினை இளசுகள் செல்லிலை, கண்ணி வெடியிலை பலியாக இல்லையே. உதெல்லாத்தையும்விட வடமராட்சி கடற்கரைப் பகுதியிலை ஒரு இளைஞனை இடி பலியாக்க இல்லையே.
; அது விதி சேர்.
(சிரித்தபடி) பிள்ளை இதுவும் விதிதான். என்ன தம்பி தேவன்,
நீர் உம்மடை பாட்டிலை ஏதோ எழுதிக்கொண்டிருக்கிறீர்? ஒவ்யிஸ் வேலை கொஞ்சம் சேர், நாளைக்குப் போகையுக்கை முடிச்சுக்கொண்டு போகவேனும். உந்தக் கரண்டை நம்பேலாது. எட்டு மணிக்கு வரும் ஒம்பது மணிக்குப் போகும். பிறகு ஒம்பதரை மணிக்கு வரும் பத்தரை மணிக்குப் போயிடும். அதுவும் ஒழுங்காய் வந்தால் எல்லோ. வந்தாலும் பத்துத் தரம் நிண்டு நிண்டு வரும்,
: எண்டாலும் தம்பி, உந்த வேலையை விட ராதிகாவின்ரை விசயம்
முக்கியம். ஆம்பிளைக்கு வயது ஏறினாலும், பொம்பிளையஸ் கிடைப்பினம். ஆனால் பொம்பிளையஸ் அப்படியே இருக்க வேண்டியதுதான்.
நீங்கள் உண்மையைச் சொல்லி கதைச்சுப் பாருங்கோ, முக்கியமாய் தோஷ விசயத்தை மறைச்சிடாதையுங்கோ. பிறகு சிக்கல்.
; ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கலியானம் செய் எண்டு
சொல்லுவினம். ஆனால் நான் ஒரு பொய் கூட சொல்லுறதில்லை. இந்த புறோக்கர் தொழிலிலை நிலைச்சு நிக்கிறனெண்டால் அதுக்கு காரணம் என்னுடைய நேர்மைதான். எதுக்கும் ராதிகாவின்ரை குறிப்பைத் தாருங்கோ.
மாமி இருக்கையுக்கை ராதிகாவின் ரை குறிப்பை கண்டவையிட்டையும் குடுப்பா, அது இப்ப துலைஞ்சிட்டுது,
: சரி பரவாயில்லை. எதுக்கும் நான் அவையிட்டைக் கதைச்சிட்டு
கெதியாய் வந்து ஒரு முடிவைச் சொல்லுறன்.
"ஏன் சேர் அவசரம். மாதங்களும் இப்ப சரியில்லைத்தானே. தேவன் :
ஓம் சேர். வேணி சொல்லுறதும் சரிதான்.
: ம். ம். நான் வாறன்.
தேவன், வேணி : ஒம் ஓம் போட்டு வாங்கோ.
که کهمونه عoسکو

எதிர்பார்க்கைகள்
: மாப்பிள்ளை எடுக்க படாத பாடுபடுதுகள். இஞ்சை என்னெண்டால்.
புறோ
இடம் :
93
(மனதிற்குள் கூறியவாறு செல்லுதல்)
காட்சி: 05 ஒவ்பீஸ்
மாத்திரங்கள் : சந்தியா, ராதிகா
சந்தியா : ராதிகா : சந்தியா :
ராதிகா
சந்தியா :
ராதிகா
சந்தியா : ராதிகா :
Fj5ġŠu JT :
ராதிகா :
சந்தியா :
ராதிகா :
சந்தியா :
ராதிகா, என்னடி எப்ப பார்த்தாலும் ஒரே டல்லாய் இருக்கிறாய். (அழுதல்)
(பதட்டத்துடன்) ராதிகா, என்னடி ஏன் அழுகிறாய் பிளிஸ் அழாதையடி ஆரும் பார்த்தாலும்.
: சந்தியா, எனக்கு வாழ்க்கையே வெறுத்திட்டுதடி நான் ஆருக்காக
வாழவேணும்? கடவுளே எண்டு நீ உழைக்கிறாய், நீ நினைச்சால் எப்படியும் வாழலாம் உந்தச் சிறையிலிருந்து வெளியிலை வா, நான் எத்தினை முறை சொல்லியிட்டன் எங்கடை வீட்டிலை வந்து எங்களோடை ஒருத்தியாய் இரு எண்டு, நீ தான் கேட்கிறாய் இல்லை.
: சந்தியா, உந்த முடிவு எடுக்கில் எப்பவோ எடுத்திருப்பன். உயிர்
போனாலும் நான் வெளியிலை வந்து அண்ணாவுக்கு ஒரு அவமானத்தை ஏற்படுத்த மாட்டன். அப்ப அதுக்கையே இருந்து சா. கோவிக்காதை சந்தியா, நீயும் இல்லாட்டில் நான் ஆரிட்டையடி ஆறுதல் அடையிறது. (அழுதல்) ராதிகா, நீ அவஸ்தைப்பட்றதை என்னாலை பார்க்க, கேட்க முடியயில்லையடி. நேற்று ஏதும் வீட்டிலை பிரச்சினையே?
சந்தியா, நேற்று புரோக்கர் தம்பிமுத்து எண்டு அண்ணா, அண்ணிக்கு படிப்பிச்ச சேர் ஒராள் வந்தவர். (இடைமறித்து) மிச்சத்தை நான் சொல்லுறன். வழக்கமாய் பாடுற பல்லவியை உன்ரை அண்ணாவும் அண்ணியும் சேர்ந்து பாடி இருப்பினம், இந்தச் சம்பந்தமும் சரிவராது. அப்படித்தானே. இவ்வளவு காலமும் நீ உழைச்சுப்போட்டது பத்தாதாமே. புறோக்கர், தான் முழுமனதாய் இதை செய்து முடிப்பன் என்று கூறிக்கூட.
கூறிக்கூட உன்ரை அண்ணாவும் அண்ணியும் ஒத்துப் போயிருக்காயினம். அப்படித்தானே.
நெல்லைலதங்கி

Page 55
எதிர்பார்க்கைகள் ராதிகா :
சந்தியா
ராதிகா :
சந்தியா :
அருண :
erjbgi5uLUIT : ராதிகா :
sei(5600T
சந்தியா :
அருண : சந்தியா :
அருண : சந்தியா : ராதிகா : சந்தியா : ராதிகா :
அருண :
சந்தியா :
94
திருமணம் செய்யாமல் வாழேலாது எண்டு நான் சொல்ல இல்லையடி, நினைக்கவுமில்லை. ஆனால் என்னுடைய இறுதிக்காலத்திற்கு ஒரு துணை தேவைதானே, உப்பிடியே அண்ணா அண்ணி கூட எத்தினை காலம் வாழுறது.
: (கோபத்துடன்) வாழுறது எண்டு சொல்லாதை சாகிறதெண்டு சொல்லு,
அந்த நேரத்திலை ஆரையெண்டாலும் காதலிச் சாவது தொலைச்சிருக்கலாம். அதுவும் செய்யாய். கண்ணகி பரம்பரை.
சந்தியா, உனக்கு இடைக்கிடை சித்த சுவாதீனம் வாறதே, விசர்க்கதை எல்லாம் கதைக்கிறாய். அம்மா, தாயே எனக்கு விசர்தான். அல்லது விசர் ஒண்டோடை, சேர்ந்து கதைச்சுக்கொண்டிருப்பனே?
(இருவரும் சிரித்தல்) (வந்தவாறு) என்ன கூட்டாளி. இரண்டு பேரும் வலு கப்பியாய் இருக்கிறீங்கள். ஏதாவது நல்ல சேதி. ராதிகாவுக்கு வரன் நிச்சயமாயிட்டுது.
இல்லை அருணன், இந்தக் கிழட்டுக்கு ஆரும் மாப்பிள்ளை தருகினமோ? (சிரித்தவாறு கூறல்)
; ஏன் ராதிகா அப்பிடிச் சொல்லுறீங்கள். உங்கடை வயதிலைதானே
இப்ப பெண்கள் திருமணம் செய்யினம். அதோட. அதுோட. (ஆவலுடன் கேட்டல்) வித்தியாசமாய் நினைக்காட்டில் ஒன்று சொல்லுறன்.
உங்களோடை இவ்வளவு அந்நியோன்னியமாய் பழகிறன். உங்கடை குணம் தெரியாதே. சும்மா சொல்லுங்கோ. ராதிகா சம்மதிச்சால். நான் அவவுக்கு வாழ்வு குடுக்கிறன். (ஆச்சரியத்துடன்) அருணன்; உண்மையாகவே சொல்லுறீங்கள்? சந்தியா. நீயும்.
சும்மா இரடி, எதற்கும் கரடிபோலை. நீங்கள் கதையுங்கோ, எனக்கு கொஞ்ச வேலை இருக்கு. சந்தியா; ராதிகா வேலைசெய்யிற காலத்திலை இருந்து நானும் இஞ்சை வேலை செய்யிறன். ராதிகாவின்ரை அடக்கம், அமைதியான அழகு, எந்தத் துன்பத்தையும் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம், ஏன் என்னுடைய அம்மாக்கிட்டையே ராதிகாவைப்பற்றிச் சொல்லிவைச்சிருக்கிறன்.
அருணன்; ராதிகாவுக்கு ஒரு சம்மந்தம் வந்திருக்கு. அது நடக்குமெண்டு நான் நம்பயில்லை. ராதிகா உங்களுக்குத்தான். சீர் சினத்தியெண்டு.? நெல்லைலதங்கி

எதிர்பார்க்கைகள் அருண :
சந்தியா :
அருண
சந்தியா :
அருண : சந்தியா :
ராதிகா :
சந்தியா :
ராதிகா
சந்தியா :
ராதிகா : சந்தியா : ராதிகா :
சந்தியா :
ராதிகா :
95
கேட்கமாட்டன் சந்தியா. உழைச்சுவாழ உடம்பிலை தெம்பு இருக்குது. உடம்பிலை தெம்பு இருக்கிறதெண்டு சொல்லுறதைப்பார்த்தால் சீதனம் வாங்கிறவை தெம்பில்லாதவையோ அருணன்?
: நீங்கள் நினைக்கிறது தவறு சந்தியா. இருக்கிறவை தங்களுடைய
பிள்ளைகள் நல்லாயிருக்கவேணும் எண்டு குடுக்குதுகள். இல்லாதவை குடுக்க வேணும் எண்டோ, அதுக்காக வசதியில்லாத குடும்பங்களை ஆண்கள் கஷ்டப்படுத்துவதோ கூடாது. எதுக்கும் ராதிகாவின்ரை சம்மதத்தையும் கேட்டுச்சொல்லுங்கோ. ராதிகா என்ன சொல்லுறது. ராதிகா வாறா. லஞ்ச்ரைம் முடியப்போகுது நான் வாறன்.
(ராதிகாவுக்கு அருகில் வந்து) ராதிகா; இவ்வளவு துன்பம் உனக்குவந்தது நல்ல ஒரு எதிர்காலத்திற்குத்தான். பாத்தியே. உனக்கு உண்மையாய் விசர்தானடி. திருமணம் செய்ய யார் முன்வந்தாலும் செய்துவைச்சிடுவாய் போலயிருக்குது. யார்வந்தாலும் இல்லை. அருணனின்ரை நல்ல பண்புகள் நாங்கள் அறிந்ததுதானே. ஏன் நீ கூட அருணனை மணம்முடிக்கிறதுகள் நல்ல அதிர்ஷ்டசாலிகள் எண்டு ஒருதடவை சொன்னனி தானே. எதுக்கெடுத்தாலும் ‘வள்’ என்கிற ஆம்பிளையைத்தான் பார்த்திருக்கிறன். ஆனால் அருணன் எவ்வளவு பொறுமைசாலி, அமைதியானது.
: நான் இல்லையெண்டு சொல்லயில்லை ஆனால். என்ன சாதியோ
பாத்தியே, பாத்தியே ஊருக்குபதேசம் உனக்கில்லை எண்டது போல சீர்திருத்தவாதிகள் மாதிரி கதைக்கேக்க கதைப்பியள். பிறகு உங்கடை குணத்தைக் காட்டிவிடுவியள். (சிரித்து) அப்பிடி இல்லையடி. அதெல்லாம் நான் அப்பவே விசாரிச்சுட்டன்.
அடிசக் கையெண்டானாம். நீயும் உன்ரை குணத்தைக் காட்டியிட்டாய் தானே.
ஆர் புதிசா வந்தாலும் அவையைப்பற்றி துருவித் துருவி அறிஞ்சிடுறதுதானே எங்கையுமுள்ள வழக்கம். அதுக்கு எங்கட ஒபீஸ் விதிவிலக்கே? இண்டைக்கு கணநேரம் கதைச்சுக்கொண்டிருந்திட்டம். வா, வா எங்கடை இடத்துக்குப் போவம்.
நெல்லைலதங்கி

Page 56
96 எதிர்பார்க்கைகள்
சந்தியா : முடிவைச் சொல்லிப்போட்டுப்போ.
ராதிகா : ஏதோ செய்துமுடி.
சந்தியா : முறைப்படி அருணன்ரை குடும்பத்தை உன்ரை வீட்டுக்கு அனுப்புறன். சந்தோஷம்தானே? இனிக்கொஞ்சம் சிரிபாப்பம். (இருவரும் சிரித்தல்)
காட்சி : 06 இடம் : தேவனின் வீடு பாத்திரங்கள் : தேவன், வேனி, ராதிகா தேவன் வேணி; ராதிகாவை எங்கைகாணன் அஞ்சு மணியுமாகுது.
இண்டைக்கு ஞாயிற்றுக்கிழமைதானே. வேணி : ஞாயிற்றுக்கிழமை எண்டால் உங்கடை தங்கச்சிக்கு லீவே?
வகுப்பு, வகுப்பெண்டு திரியும். தேவன் வேணி, சும் மா சின் னப் பிள்ளையளிர் மாதிரி ஆகக்கட்டுப்படுத்தக்கூடாது. அவளுக்கும் 30 வயதுக்கு மேலை ஆச்சுது. இனித்தப்புத்தண்டா செய்யுற வயசில்லை. அதோடை அம்மா அப்பிடி வளக்கவுமில்லை. வேலையெண்டு வெளிக்கிட்ட பிறகுதான் ஆண்களோடை கதைக்கிறாள். வேணி : இப்ப நானென்ன சொல்லிப்போட்டன் எண்டு, இவ்வளவு
கதைக்கிறியள். தேவன் : (ராதிகா வருதல்) அங்கை ராதிகா வாறாள். நீர் உள்ளுக்கை போம்; நான் கேக்கிறன். ராதிகா: எங்கை இவ்வளவு நேரமும் நிண்டிட்டு வாறாய். ராதிகா : எக்சாம் கிட்டுதண்ணை. அதுதான் என்னோட படிக்கிற
சுந்தரியிட்டை தமிழ் ரியூட்ஸ் கொஞ்சம் வாங்கிவாறன். தேவன் : வேலை செய்யிறாய் எண்டவுடனே சும்மா கண்டபடி சைக்கிளையும்
எடுத்துக்கொண்டு சுத்தக்கூடாது. ராதிகா : அணி ணை, நான் எப்பவும் தேவையரில் லாமல்
வெளிக்கிட்டிருக்கிறனே? தேவன் : நான் அப்பிடிச் சொல்லயில்லை. மற்றவை அப்பிடிச்
சொல்லவைக்கக் கூடாது. ராதிகா : சரி அண்ணை.
நெல்லைலதங்கி

எதிர்பார்க்கைகள்
இடம் :
97
காட்சி : 07 தெருவோரம்
பாத்திரங்கள் : தேவன், புறோக்கர்
புறோ
தேவன் :
ւյ8յ13T
புறோ
தேவன் :
புறோ
தேவன்
புறோ
தேவன் :
தம்பி தேவன். நில்லும். உம்மைத்தேடி வீட்டுக்கு வர இருந்தனான். பிறகு ஏன் எண்டிட்டு வராமல் விட்டிட்டன். பாத்திங்களோ சேர், நானும் வேணியும் அடிச்சுச் சொல்லியும் நீங்கள் ஏதோ சாதிக்கிறதாய்ச் சொல்லியிட்டுப் போனியள். இப்ப என்ன நடந்தது பாத்தியளே? தம்பி: உங்கடை வீட்டுக்கு வந்து கதைச்சு மூன்று, நாலு நாள் வரும். ராதிகா என்னைக்கண்டு சேர், தயவு செய்து எனக்கு மாப்பிள்ளை பாக்கிறதை நிப்பாட்டுங்கோ. உங்கடை நேரத்தை மண்ணாக்காதையுங்கோ. இந்த யென்மத்திலை எனக்கு திருமணம் நடக்காது. அப்பிடி நடந்தாலும் வீட்டுக்காறர் நடக்க விடமாட்டினம் எண்டு கெஞ்சிச்சுது. நானும் அண்டையோடை உந்தக் கதையைவிட் டிட் டு வேறை பெண் தேடுறன் அந்தப்பொடியனுக்கு. சேர்; நீங்கள் நினைக்கிறதுபோலை. நீ இல்லை தம்பி, உன்ரை இல்லாள் அப்பிடி நடத்துறாவே. உன்னைப்போல உள்ள ஆண்களும் இடையில வந்த உறவைப் பெரிசா நினைச்சு ஒரு கருப்பையில் இருந்துவந்த சகோதர உறவை, பாசத்தை மறந்திடுதுகள். பரஸ்பரம் புரிந்துணர்வு, விட்டுக்கொடுக்கிற மனப்பான்மை கணவன், மனைவிகிட்டை இருக்க வேண்டியதுதான். ஆனால் அதுக்காக மனைவிக்குப் பயப்படுற அளவுக்கு போகக்கூடாது. சேர். நீங்கள். ஒரு நாளிலையே உன்னுடைய குடும்பத்தை எடைபோட்டுட்டன் தேவன். பாவம் ராதிகா தோஷம் வேறை. நீங்கள் வந்த சம்மந்தத்தை பேசிமுடியுங்கோ. ஏதோ ராதிகாவின்ரை
தலைவிதிப்படி நடக்கட்டும். : இனி நான் நம்பயில்லை. நான் வாறன். எதற்கும் முயற்சி செய்யிறன்.
ஓம் சேர் போட்டுவாங்கோ.
நெல்லைலதங்கி

Page 57
98
ബിസ്ത്രമബ്
காட்சி : 08 இடம் : தேவனின் வீடு பாத்திரங்கள் : தேவன், சந்தியா, வேணி அருணன் சந்தியா : ராதிகா, ராதிகா. வேணி : (வெறுப்புடன்) ஆரது? அட நீரே வாரும். ஆர் பின்னால.. சந்தியா: எங்கட ஒபீஸில வேலைசெய்யிறவர் அன்ரி. அருணனைப்பற்றி
ராதிகா ஒண்டும் சொல்லுறதில்லையே? வேணி : ஒபீஸ் கதையொண்டும் இஞ்சை கதைக்கிறதில்லை. ஆ. இப்பிடி
இருங்கோ. சந்தியா : அங்கிள் இல்லையோ அன்ரி. வேணி : அங்கிள் குளிச்சுக்கொண்டிருக்கிறார். ஏன் அங்கிளிட்டையோ
வந்தனிங்கள்? சந்தியா : இல்லை. இரண்டுபேரும் இருந்தால்தான் நல்லது. வேணி : இருங்கோ இப்ப வந்திடுவர். அருண : என்ன சந்தியா; ராதிகாவைக் காணவில்லை.? சந்தியா : (கேலியாக) அவசரத்தைப் பார், ராதிகா எங்கையோ வெளியிலை போயிட்டாள் போல. அவளில்லாததும் ஒரு வகையில் நல்லதுதான். தேவன் : (வந்துகொண்டு) ஆர் சந்தியாவே. (அருணனைப்பார்த்து) இவர்? சந்தியா : அருணன். எங்களோடை வேலை பார்க்கிறவர். (எழுந்து நின்றபடி
கூறுதல்) தேவன் : (சிரித்தபடி) இரு, இரு. வாத்தியாரைக்கண்டு பிள்ளையஸ்
எழும்பிறதுமாதிரி. வேணி : ரீ இந்தாருங்கோ. தம்பி எடுங்கோ. சந்தியா நீரும் எடும். சந்தியா : ஒம் அன்ரி. வேணி நீங்களும் குளிச்சிட்டு வந்திருக்கிறியள், குளிர்வேறை,
இந்தாங்கோ. சந்தியா : வந்தங்கிள். அருணன் எங்களோட மூன்று வருசமாய் வேலைபார்க்கிறார். நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர். ராதிகாவின் நடத்தை அருணனுக்கு பிடிச்சிட்டுது. அதாலை. நேரடியாக உங்களைக் கேட்டிட்டு போகவெண்டு வந்திருக்கிறார். அருண : என்ன. சிறிசுகள் சம்மந்தம் பேசுறம் எண்டு நினையாதையுங்கோ.
அம்மா படுத்தபடுக்கையில இருக்கிறா, மற்றும் பெரியாக்கள் எண்டுசொல்ல பெரிசா ஒருத்தரும் இல்லை. அதுதான்.
நெல்லைலதல்

99
எதிர்பார்க்கைகள் வேணி தம்பி இது வாழ்க்கைப் பிரச்சினை. ராதிகா பலனுள்ளவள்
எண்டால் எப்பவோ நாங்கள் முடிச்சிருக்க மாட்டோமே. தேவன் : தம்பி அருணன்; பேச்சுக்கு நல்லாயிருக்கும் நடைமுறைக்கு
ஒத்துவராது. வேணி : உங்களுக்கு ராதிகாவைப் பற்றி முழுவிபரமும் தெரியாது போலயிருக்கு. அல்லது இப்படி முன்னுக்கு வந்திருக்க மாட்டியள். சந்தியா : (தயக்கத்துடன்) அருணன், என்னை மன்னிச்சிடுங்கோ. ராதிகா சொல்லப்போறன் சொல்லப்போறன் எண்டு சொல்ல நான்தான் சொல்லவிடாமல் தடுத்திட்டன். அருண : (சிரித்தபடி) என்ன சந்தியா; தோஷத்தைப் பற்றித்தானே. அதெல்லாம் எனக்கு ராதிகா சொல்லியிட்டுது. சாத்திர சம்பிரதாயங்கள் பொய் எண்டோ, அல்லது இல்லை எண்டோ நான் சொல்லயில்லை. ஆனால், அளவுக்கு அதிகமாய் நம்புறதை நான் விரும்பயில்லை. காதலிச்சு எத்தனையோ பேர் திருமணம் செய்யுதுகள், அதுகள் பொருத்தம், நாள், நட்சத்திரம் பார்த்தே காதலிக்குதுகள், கலியாணம் செய்யுதுகள். யார்தடுத்தாலும் சரி நான் ராதிகாவுக்கு வாழ்வுகுடுக்கிறதாய் முடிவெடுத்திட்டன். தேவன் : நாங்கள் தடுத்தாலுமோ? (ராதிகா வருதல்) வேணி : இவையுளோடை என்ன கதை. அங்கை ராதிகா வருகுது
அவளையே கேளுங்கோவன். தேவன் : (கோபத்துடன்) ராதிகா; இதென்ன கூத்து..? ராதிகா : (பயந்தவாறு) என்னண்ணை? தேவன் : எல்லாரையும் செற்பண்ணி அனுப்பிப் போட்டு ஒண்டும்
தெரியாதமாதிரி நடிக்கிறாய்.
(வாசலில் கூப்பிடுதல்)
புறோ தேவன் : புறோ
வேணி
சந்தியா :
: (உள்ளே வந்தவாறு) தம்பி. தேவன்; என்ன கணபேர் இருக்கினம்?
வாங்கோ சேர். இப்பிடி இருங்கோ.
; தம்பி தேவன் உங்கடை அக்கறை இன்மையால வலியவந்த
சம்மந்தம் விலகிப்போட்டுது.
நான் சொன்னனான்தானே. ராதிகா ஒன்றுக்கும் பொசிப்பு இல்லாதவள் எண்டு.
ஏன் அன்ரி அப்பிடிச் சொல்லுறீங்கள். நீங்களே இப்பிடி ஒதுக்கிவைச்சால், ஒரு சம்மந்தமும் இணங்கி வராட்டால் ராதிகாவின்ரை கெதி. (சந்தியா புறோக்கரைப் பார்த்து) சேர் நீங்களே சொல்லுங்கோ. இவர் ராதிகாவோட வேலைசெய்யுறவர்
விெலைலதக்

Page 58
எதிர்பார்க்கைகள்
வேணி
அருண :
புறோ
ராதிகா
புறோ தேவன் :
சந்தியா :
100
எல்லாம் தெரிந்தும் ராதிகாவுக்கு வாழ்வு குடுக்கிறன் எண:டு முன்வந்திருக்கிறார். அதுக்குக்கூட ஒத்துப்போகாமல் இப்பிடி இழுத்தடிக்கினம்
நாங்கள் இழுத்தடிக்கையில்லை. ராதிகா விதவையாகிறதையோ
வாறமாப்பிள்ளையஸ் தபுதாரன் ஆகிறதையோ நாங்கள் விரும்பயில்லை. ஒருநாள் வாழ்ந்தாலென்ன, ஒருகிழமை வாழ்ந்தாலென்ன நான் ராதிகாவுடன்தான் வாழுவன். பழமையில ஊறின என்னுடைய அம்மாவே சம்மதிச்சிட்டா.
: பிறகென்ன தேவன். தம்பி இவ்வளவு உசாராய் இருக்கேக்க
நீங்கள். ராதிகா இஞ்சைவாரும். உமக்குச் சம்மதந்தானே?
: சேர் என்னுடைய விருப்பம் எண்டு ஒண்டில்லை, அண்ணா அண்ணி
காட்டுற ஒருவருக்கு என்ரை கழுத்தை நீட்ட நான் தயார். இல்லை கன்னியாய் இருக்கவேண்டும் எண்டால் அதுக்கும் தயார். அவரை மீறி ஒரு காரியம் செய்யவுமில்லை. செய்யப்போறதுமில்லை.
: பாத்தியோ தேவன், இதுக்குப்பிறகும் சீ.
சேர் என்னை மன்னிச்சிடுங்கோ. இவ்வளவு நாளும் சுயநலமாக வாழ்ந்திட்ட பாவி, உங்களுக்குள்ள அக்கறை எனக்கில்லாமல் போச் சுதே. வாறநாளுக்கு கலியாணம். எல்லோருக்கும் சந்தோசம்தானே.
அப்பாடா. (பெருமூச்சு விடுதல்)
- முற்றும் -
ஒலிபரப்புச் செய்யப்பட்ட திகதி 05.06.1998
நெல்லைலதங்கி

10
alnímsař
U66, பங்குபற்றுவோர் :-
(STLTò - Hüsflulaf 9lafa Gİ Gamt - 615 Tatrafod pGagraffi ali - ESTETTalat 5 affSTE - Fast Goes ரணி - சங்கரிணி நண்பனி
காட்சி : 01 இடம் : கோமாலின் விடு tarisdrasi : dari arsh, Gagaug, araj சங்கர் : அண்ணி, அண்ணி நான் ஸ்கூலுக்குப் போட்டு வாறன். ஜெயா : (குசினிக்குள் இருந்தபடி) ஓம். ஓம். போட்டுவா சாப்பாடு
மேசையிலை வைச்சனான் எடுத்திட்டியே? கோபா : (கிண்டலாக) நான் ஆபீசுக்கு போகக்கிடையிலை அண்ணைக்கு
ஸ்கூலுக்கு போறதுக்கு நேரம் செண்டிட்டுதே. ஜெயா : பொடியங்களோடை சேர்ந்து போக வேண்டாமே. சங்கர், நீ போட்டு வா. (சங்கர் போன பின்பு) அவனை சின்னப்பிள்ளை மாதிரி இப் பவும் கட்டுப்படுத்தாதையுங் கோ. அவன் இப்ப அட்வான்ஸ்லெவல் படிக்கிறான். கோபா : (ஆறுதலாக) ஏதோ, நீதான் அவனைக் கெடுக்கப்போறாய். ஜெயா : மாமி சாகயிக்கை சொன்னதைக் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கோ.
நான் அவவுக்குக் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேணும். கோபா : ஒமடியப்பா, நான் இல்லையெண்டு சொல்லயில்லை. ஆனால் இப்பத்தைப் பொடியளை நம்பேலாது. நாங்கள் அவங்களை முன்னுக்கு கொண்டர, நாளைக்கு எங்களையே ஆர் நீங்கள்? எண்டு கேப்பாங்கள். ஜெயா - ஆரையெண்டாலும் அப்பிடிச் சொல்லுங்கோ, ஆனால் சங்கர் ஒரு
நாளும் அப்பிடிச் செய்யாது. கோபா : சரி, சரி எனக்கு நேரம் போகுது சாப்பாட்டைத்தாரும்.
நெல்லைலதுங்கி

Page 59
102 az)n/2dasaiah y yr
காட்சி : 02 இடம் : கோமாலின் வீடு பாத்திரங்கள் : கோபால், ஜெயா, சங்கர் சங்கர் : (ஆறுதலாக) அண்ணா. சியல் பென் பழுதாயிட்டுது. ஒரு வோல்ப் பொயின்ற் வாங்கவேனும் ஒரு பத்து ரூபா தாநீங்களே? கோபா : (கோபமாக) போன கிழமைதானே இந்த சியல் பென் வாங்கித
தந்தனான். அதுக்கிடையிலை பழுதாயிட்டுதே. ஜெயா : ஏன் சங்கரைக் கோவிக்கிறீங்கள்? இப்பத்தை மைப்பென்னுகள் ஒரு கிழமைக்குப் பாவிக்கிறதே அருமை எந்தப்பிள்ளையளின்ரை கையிலை பார்த்தாலும் வோல்ப்பொயின்ற் தானே மைப்பென்னைக் கண்டிருக்கிறீங்களே. பத்து ரூபாவைக் குடுங்கோ. கோபா : ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு வோல்ப்பொயின்ற் வேண்ட
என்னட்டைக் காசில்லை. ஜெயா : சங்கர் நீ முதல்லை வந்து சாப்பிடு. சங்கர் : (கவலையுடன்) எனக்குச் சாப்பாடும் வேண்டாம் ஒண்டும் வேண்டாம் நான் ஸ்கூலுக்கும் போகயில்லை. சீக் ரெஸ்ருக்கு இன்னும் ரெண்டு மாதம் இருக்கு. ஒரு தடவையிலை பாஸ் பண்ணியிட்டனெண்டால் இப்பிடி எதுக்கெடுத்தாலும் பேச்சு வேண்டத் தேவையில்லை. ஜெயா (சிரித்தல்) சங்கர் : (கோபமாக) ஏன் இப்ப சிரிக்கிறீங்கள்? ஜெயா : உன்ரை முணுமுணுப்பைப் பார்த்துத்தான். கொண்ணாவின்ரை
குணம் தெரியும்தானே. இந்தா பத்து ரூபா, இப்ப சாப்பிடு. சங்கர் : (சந்தோசத்துடன்) என்ரை அண்ணி நல்ல அண்ணி இப்பதான்
பசிக்குது சாப்பாட்டைத் தாங்கோ.
காட்சி : 03 இடம் : கோபாலின் வீடு மாத்திரங்கள் : கோபால், ஜெயா, சங்கர் கோபா : ரிசல்ட் வரும்வரை வீட்டிலையாமே இருக்கப் போறான். ஒரு கடையிலை நல்ல வேலை இருக்கு. அதிலை சேர்த்து விட்டால் கரைச்சலில்லை. ஜெயா : ஏன் சங்கர் இருக்கிறது உங்களுக்கு கரைச்சலாகவே இருக்கு.
நெல்லைலதவிகி

agafunafanasaaf MTYM 103
கோபா : இல்லையடியப்பா. அவன் விட்டிலை சும்மா இருந்தால் றோட்டுக்குப் போகச்சொல்லும், றோட்டுக்குப் போனால் உதவாக்கரையளோடை சேர்ந்து கெட்டுப்போய் விடுவான். ஜெயா : நீங்கள் சொல்லுறதும் சரிதான். ஆனால். கோபா : என்ன ஆனால். ஜெயா ; ஏஎல் படிச்சிட்டு கடையிலை போய் நிக்கிறதே. கோபா : (வேடிக்கையாக) நிக்கிறதில்லை இருக்கிறதும்தான். அவன்
போனாலும் நீ போக விடமாட்டாய். ஜெயா : அங்கை சங்கர் வருது. அதிட்டைச் சொல்லுங்கோ. கோபா : சங்கர், இங்கை ஒருக்கால் வந்திட்டுப்போ. சங்கர் : (முணுமுணுத்தல்) இண்டைக்கு அண்ணா நல்ல மூட்டிலை
இருக்கிறார் போலை. (அருகில் வந்தவாறு) என்னண்ணா? கோபா : ரிசல்ஸ் வரும்வரை ஒரு கடையிலை வேலை செய்யன், சம்மதம்தானே. (சங்கர் அண்ணியைப்பார்த்தல்) என்ன அண்ணியைப் பார்க்கிறாய் சம்மதம்தானே? சங்கர் : (தடுமாற்றத்துடன்) ஓம் அண்ணா.
காட்சி : 04 (சிலகாலங்களின் பின்) இடம் : கோபாலின் வீடு மாத்திரங்கள் : கோபால், சங்கர் சங்கர் : (சந்தோசத்துடன்) அண்ணி, அண்ணி; இந்தாங்கோ என்ரை முதல் மாதச் சம்பளம். கடையிலை தந்த சம்பளத்தின்ரை நாலுமடங்கு இதுக்கெல்லாம் நான் என்ன கைம்மாறு செய்யப்போறனோ எனக்கே தெரியாது. கோபா : (சிரித்தபடி) ஒரேயடியாய் ஐஸ் வைக்காதை உச்சி குளிரப்போகுது. சங்கர் : அண்ணா, நான் உண்மையைத்தான் சொல்லுறன். தாயில்லாத
குறையை அண்ணி போக்கினா. கோபா : (இடைமறித்து) தகப்பனில்லாத குறையை நான் போக்கயில்லை எண்டு சொல்லவாறாய் சங்கர்; எல்லாம் உன்ரை நன்மைக்காகத்தான். ஜெயா, அப்பிடியே விறைச்சுப்போய் நிக்காதை, சங்கர் வைச்ச ஐஸ் இப்பவும் வேலை செய்யுதுபோலை. சங்கரிட்டை அந்தக் காசைக் குடு. நான் இப்ப உழைக்கிறன் தானே, நான் இல்லாத
vr کوکههوه مسکو سه

Page 60
104 எதிர்பார்க்கைகள்
காலத்திலையெண்டாலும் பரவாயில்லை நீ உழைச்சுக் குடுக்கலாம்.
சங்கர் : (தனது அறைக்குச் சென்றபடி) அண்ணி; அண்ணாவின்ரை கதையை விட்டிட்டு நீங்கள் வையுங்கோ ஏதும் தேவைப்பட்டால் நான் கேட்டு வாங்கிறன்.
காட்சி : 05 இடம் : வாசிகசாலை பாத்திரங்கள் : சங்கர், ரஜனி சங்கர் ; ஹெலோ, ரஜனி, என்ன இங் கால்ப் பக்கம்? எப்ப
கொழும்பிலையிருந்து வந்தனி? ரஜனி : முந்தனாள் தான். எப்பிடி? உனக்கும் வேலை கிடைச்சிட்டுதாம். சங்கர் : நல்ல வேளை மச்சான் கை நிறையச் சம்பளம். இதுக்கெல்லாம்
அண்ணாவுக்கும் அண்ணிக்கும் தான் நன்றி சொல்லவேணும். ரஜனி : படிக்கிற காலத்திலை உன்ரை கொண்ணாவைப்பற்றி குறை
சொல்லுவாய், இப்ப. சங்கர் : ரஜனி, அவர் அப்ப குறைவாய் நடத்தினது, இந்த உயர்வுக்கெண்டு
இப்பதான் விளங்குது. ரஜனி அதுசரி மச்சான். ஊரிலை ஏதும் புதினங்கள் நடந்ததே, ஊரே
அமைதியாய் இருக்கு.
சங்கர் : (சிரித்தபடி) ஊரிலை என்ன? பொடியள் எல்லாம் றேசிலை
நிக்குதுகள்.
ரஜனி : மச்சான் இண்டைக்குப் படத்துக்குப் போவமே. ஞாயிற்றுக்கிழமை
தானே.
சங்கர் : போகலாம் தான் ஆனால். ரஜனி : என்னடாப்பா ஆனால், எண்டு இழுக்கிறாய். சங்கர் : அண்ணாட்டை பெர்மிசன் எடுக்கிறதுதான் கஷ்டம். ரஜனி : (கேலியாக) என்னடா, இப்பவும் பயந்து சாகிறாய் நீ உழைக்கிறாய்தானே,
இனியும் ஏன் அவற்றை வாலைப் பிடிக்கவேனும் சங்கர் : அப்பிடி சொல்லாதை ரஜனி, அவையள் இப்பிடி கண்டிச்சு வளர்த்திராவிட்டால், நானும் இப்ப எந்த ரோட்டிலை சுத்திக் கொண்டிருப்பனோ தெரியாது. ரஜனி : தமையனுக்கு, தகப்பனுக்கு பிள்ளையஸ் அடிக்கிற காலம் இந்தக் காலம். இந்தக் காலத்திலை உன்னைப்போலை ஒருத்தனைப் பார்க்க முடியாது மச்சான்.
நெல்லைலதங்கி

105 எதிர்பார்க்கைகர் ராசார
சங்கர் : (ஆறுதலாக) ரஜனி, உண்மையிலேயே அண்ணா நல்லவர். ஒவ்வொரு குடும்பத்திலும் பார் பெற்றோர் பிள்ளையஸ்ளை அக்கறை செலுத்துறதும், குடும்பத்தில மூத்ததாய்ப் பிறந்ததுகள் சகோதரங்களைக் கண்டித்து வளர்க்கிறதும் அவை அவையின்ரை நன்மைக்குத்தான். இள வயதிலை அது கஷ்டமாயிருக்கும், வெறுப்பாயிருக்கும் அவையின்ரை பொறுப்பு எங்களுக்கு வரயிக்கை நாங்கள் புரிஞ்சி கொள்ளுவம். அதுமாதிரித்தான் அண்ணாவும், அவையள் இப்பிடி கண்டிச்சு வளர்த்திராவிட்டால், இப்ப நானும் எந்த றோட்டுச் சுத்திக் கொண்டிருப்பனோ எனக்குத் தெரியாது. ஆ. எப்பிடியாவது அண்ணியைக் கொண்டாவது பொமிசன் எடுக்கிறன் 2 மணி போல வாவன் வீட்டுப்பக்கம்.
காட்சி : 06
இடம் : கோமாலின் வீடு பாத்திரங்கள் : சங்கர், ஜெயா சங்கர் : (பதட்டத்துடன் ஓடி வருதல்) அண்ணி; அண்ணி; ஜெயா என்ன சங்கர் பதறிக்கொண்டு வாறாய்? சங்கர் : (இழுத்து இழுத்து மூச்சிரைத்துக் கூறுதல்) அண்ணா; அண்ணா: ஜெயா : அண்ணா..? சங்கர் : அண்ணா ஸ்கூட்டரிலை போகயுக்கை.
லொறி ஒண்டு மோதியிட்டுதாம். அண்ணாவை யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு போகினமாம். ஜெயா : (அழுதவாறு) பெரிய காயமே சங்கர்? சங்கர் : (மனதிற்குள் சொல்லுதல்) என்னண்டு உண்மையைச் சொல்றது. ஜெயா : ஸ்ன்ன சங்கர், நான் கேட்கிறன் நீ பேசாமல் நிக்கிறாய். சங்கர் : (தடுமாற்றத்துடன்) இல்லை, சின்னக்காயம் தானாம். கெதியாய்
வெளிக்கிடுங்கோ. ஜெயா : எனக்கு கையும் ஓடயில்லை. காலும் ஓடயில்லை கடவுளே. நாங்கள் ஆருக்கு என்ன கொடுமை செய்தனாங்கள். சங்கர் : அண்ணி அழுது கொண்டிருக்க இப்ப நேரம் இல்லை. கெதியாய் வெளிக்கிடுங்கோ. பிரசன்னாவை இஞ்சை தாங்கோ. நான் வெளிக்கிடுத்துறன்.
நெல்லைலதங்கி

Page 61
106 எதிர்பார்க்கைகள்
காட்சி : 07 இடம் : மருத்துவமனை பாத்திரங்கள் : சங்கர், ஜெயா, கோபால் சங்கர் : அண்ணா: அண்ணா: அண்ணி வந்திருக்கிறா. கண்ணை
முழிச்சுப்பாருங்கோ. கோபா : (முனகியபடி) ஆர். சங்கரே? அண்ணி எங்கை? சங்கர் : இங்காலை அழுது கொண்டு நிக்கிறா. (சங்கரும் அழுதல்) கோபா : ஜெயா. கிட்ட வா. அழாதை. ஆண்டவன் தலையிலை என்ன எழுதினானோ. அப்பிடித்தான் எல்லாம் நடக்கும். பிரசன்னா எங்கை? சங்கர் : இங்கை நான் வைச்சிருக்கிறன் அண்ணா. கோபா : பிரசன்னா; நான் உன்னை விட்டிட்டுப் போகப்போறன். நீதான் அம்மாவுக்குத் துணையாய் இருக்கவேணும். உனக்கு சித்தப்பா துணையாய் இருப்பார். என்ன சங்கர்? சங்கர் : (அழுதல்) ஜெயா : டொக்டர் உங்களை கரைச்சல் படுத்த வேண்டாம் எண்டு
சொன்னவர். சங்கர் : அண்ணா; எங்களை எண்டபடியால் தான் பார்க்கவிட்டவையாம்.
வேறை யாரும் வந்திருந்தால் பார்க்க விட மாட்டினமாம். கோபா : எப்பிடி சங்கர் என்னைப் பார்க்கவிடாமல் உங்களை அனுப்புவினம்? நான் இன்னும் இருக்கிறது அரை மணித்தியாலமோ. ஜெயா : (வாயைப்பொத்துதல்) அப்பிடி எல்லாம் சொல்லாதையுங்கோ.
உங்களுக்கு ஒண்டும் நேராது. கோபா : (வேதனையால் முனகியபடி) அம்மா. எப்பிடி நான் தப்புறது? தலையிலை நல்ல அடி. அது மட்டுமில்லை உடம்பு முழுக்க காயம். உங்களைப்பாக்கிறதுக்காகவோ என்னவோ. தெரியாது இவ்வளவு நேரமாவது உயிரோடை இருக்கிறன். அல்லது அடிபட்ட இடத்திலேயே உயிர் பிரிஞ்சிருக்கும். சங்கர் : அண்ணா, கொஞ்ச நேரம் பேசாமல் படுங்கோ. கோபா : சங்கர் இப்ப பேசாமல் படுத்தனெண்டால், பிறகு பேசுறதுக்கே சந்தர்ப்பம் இல்லாமல் போயிடும். சங்கர்; உன்னை நான் எவ்வளவு கொடுமைப்படுத்தி வளர்த்திட்டன். எல்லாம் உண்ரை நன்மைக்காகத்தான். கண்டித்து வளர்க்காட்டால், நீயும் மற்றவங்கள் மாதிரி கெட்டுவிடுவியோ எண்ட பயம்தான் அதுக்கு
நெவிலைலதங்கி

107 afonufaunahalaf
காரணம். ஆனால் நீ, நான் எதிர்பார்த்ததை விடி நல்லவனாகவும். நல்ல உத்தியோகத்திலையும் இருக்கிறாய், சங்கர் : இப்பிடி எல்லாம் இருக்கிறதுக்கு நீங்களும் அண்ணியும்
தானண்ணா காரணம். கோபா : அதாலைதான் இந்தக்கடைசி நேரத்திலை உன்னை ஒரு உதவி கேக்கப்போறன். பிரதியுபகாரமாய் கேக்கிறன் எண்டு நினையாதை, சங்கர் : என்ரை உயிரைத்தரவும் நான் ஆயத்தமண்ணா. என்னண்டு
சொல்லுங்கோ. கோபா : (வேதனையுடன் சிரித்தபடி) அந்தப் பெரிய பொருள் எனக்கு வேண்டாம் நான் இனித் தப்புவன் எண்டது பகற்கனவு. அதாலை ஜெயாவையும் பிரசன்னாவையும் உன்னட்டை ஒப்படைக்கிறன். அதுகளை
ஜெயா : (விக்கி விக்கி அழுதல்) சங்கர் : செய்வன் அண்ணா
(பார்வைக்கான நேரம் முடிந்து மணி அடித்தல்) கோபா : ஜெயா மணி அடிச்சிட்டாங்க. இனியும் நிண்டால் வார்ச்சர்மார் திரத்துவாங்கள். கண்ணைத்துடைச்சிட்டு வெளிக்கிடுங்கோ. சங்கர்; அண்ணியையும் பிரசன்னாவையும் கவனமாக கூட்டிப்போ. ஜெயா : இந்த நிலையில் உங்களை என்னண்டு தனிய விட்டிட்டுப் போறது? ஆற்றையும் காலைப் பிடிச்சாவது நானும் இஞ்சை நிக்கப் போறன். சங்கர் : அண்ணி; எனக்குத் தெரிஞ்ச ஒரு பிரண்ட் டொக்டர் ஆய் வேலை
செய்யுறான். அவனைப் பிடிச்சால் எங்கையும் தங்கலாம். (இந்தக் காட்சி முழுவதும் கோபால் முனகியபடியும் சங்கர், ஜெயா
கவலையுடன் கதைப்பதாகவும் கருத்தில் கொள்ளவும்)
SIT'd : 08 இடல்: கோமாலின் வீடு மாத்திரங்கள் : சங்கர், ஜெயா சங்கர் : அண்ணி; எத்தனை நாளைக்கு இப்பிடி சாப்பிடாமல்
இருக்கப்போறிங்கள்? ஜெயா : (அழுதபடி) இப்பகூட என்னாலை ஒண்டையும் நம்ப முடியயில்லை சங்கர். எல்லாம் ஒரு கனவு மாதிரி நடந்து முடிஞ்சிட்டுது. முற்பிறப்பிலை என்ன பாவம் செய்தனோ தெரியாது. அல்லது இந்த வயசிலை ஆண்டவன் எண்ரை வாழ்க்கையைப்
பறிச்சிருப்பானே.
asipnasada

Page 62
108 எதிர்பார்க்கைதவிர்
சங்கர் : அண்ணி; நீங்கள் அழுகிறதைப்பார்த்து பிரசன்னாவும் அழுகிறான். அழுது இனி என்ன பிரயோசனம். போன அண்ணா திரும்பி வந்திடுவாரே? அதோடை எத்தினை நாளைக்கு இப்பிடி சாப்பிடாமல் இருக்கமுடியும். நாங்கள் குடுத்து வைச்சது அவ்வளவுதான். (கவலையுடன் பெருமூச்சு விடுதல்) ஜெயா ; போன அண்ணா, திரும்பிவரமாட்டார் தான். ஆனால், அவற்றை
நினைவு ஒவ்வொண்டாய் வர எப்பிடி அழாமல் இருக்கிறது? சங்கர் சரசக்கா சாப்பாட்டைக் கொண்டந்து வைச்சிட்டு எங்களைக்கேட்டு,
அலுத்துப்போய் விட்டிட்டுப் போட்டா. ஜெயா : சங்கர்; பிரசன்னாவையும் கூட்டிக்கொண்டுபோய் நீ சாப்பிடு. சங்கர் : நீங்கள் சாப்பிடாட்டில் நானும் சாப்பிடயில்லை. ஜெயா : சங்கர்; பிடிவாதம் பிடிக்காதை. உன்ரை நிலைமை வேறை, என்ரை நிலைமை வேறை. என்னாலை சாப்பிட முடியயில்லை. சங்கர்; நீ போய்ச்சாப்பிடு. சங்கர் : அதெல்லாம் முடியாது. நீங்கள் எப்ப சாப்பிடுநீங்களோ, அப்பதான் நானும் சாப்பிடுவன். (கோபமாக) அதுமட்டும் என்னோடை ஒண்டும் கதைக்க வேண்டாம். நீ வாடா பிரசன்னா நாங்கள் வெளியிலை போட்டு வருவம். ஜெயா ; உன்னோடை பெரிய கரைச்சலாய்ப் போட்டுது. வா நானும்
சாப்பிடுறன்.
காட்சி : 09 இடம் : மஸ் ஸ்டாண்ட் பாத்திரங்கள் : சங்கர், ரஜனி ரஜனி ஹலோ சங்கர்; உன்னோடை எத்தினை நாளாய்க் கதைக்கவேனும் எண்டு நினைச்சனான். இண்டைக்குத்தான் உன்னைச் சந்திக்க முடிஞ்சுது. சங்கர் : (கவலையுடன்) ரஜனி, நீ எல்லாம் அறிஞ்சிருப்பாய் எண்டு
நினைக்கிறன். ரஜனி : ஓம் சங்கர்; உன்ரை அண்ணாவுக்கு இப்பிடி நேரும் எண்டு.
(கவலையுடன்) நான் எதிர்பார்க்கயில்லை. சங்கர் : (விரக்தியுடன்) ம். நாங்கள் மட்டும் எதிர்பார்த்தனாங்களே? அண்ணா அடிக்கடி சொல்லுவார், “தலை எழுத்தை ஆராலும் மாற்ற முடியாதெண்டு அது உண்மையெண்டு இப்பதான் தெரியுது. ரஜனி : செத்தவீட்டுக்கு தவிர்க்க முடியாத காரணத்தாலை வராமல் vr நெல்லைலதங்கி

alunafaaalar
88
ரஜனி
சங்கர் ரஜனி சங்கர் ரஜனி
சங்கர்
ரஜனி
சங்கர் ரஜனி சங்கர்
ரஜனி
சங்கர்
ரஜனி
சங்கர்
109
விட்டிட்டன் மச் சான். அதாலை நீ. என்னோடை கதைக்கமாட்டியோ தூண்டினது. குறைவிளங்காதை மச்சான்.
; ஆரையும் குறை கூறி என்ன பிரயோசனம், அவரவர்க்கு எத்தினை
சோலியள் இருக்கலாம்.
; உன்ரை அண்ணிதான் பாவம். இந்த சின்ன வயதிலை இப்பிடி
நேர்ந்திட்டுது.
: அண்ணியை நினைக்கயிக்கைதான், எனக்கும் கவலை ரஜனி. : சங்கர்; நான் ஒண்டு சொல்லுவன் கோவிக்கமாட்டியே. : நான் ஏன் கோவிக்கப்போறன். என்னண்டு சொல்லு, : இல்லை. உன்ரை அண்ணியாலைதான் நீ இந்த நிலைமைக்கு
வநீ தருகி கிறாயப் . அதாலை அணி னிக் காகவும் பிரசன்னாவுக்காகவும் உன்ரை வாழ்க்கையைத் தியாகம் செய்யக்கூடாதே.
: (சிரித்தபடி) ரஜனி, நீ என்ன சொல்ல வாறாய் எண்டு எனக்கு
விளங்குது. நான் எப்பவோ முடிவு எடுத்திட்டன்; கலியாணமே செய்யிறதில்லையெண்டு.
: சங்கர்; நான் உன்னைக் கலியாணம் செய் எண்டு சொல்லயில்லை
உன்ரை அண்ணிக்கு. வாழ்வு குடுக்கக் கூடாதோ எண்டுதான் கேக்கிறன்.
; (பதட்டத்துடன்) ரஜனி, முதல்லை வாயைக் கொப்பளியடா. : சங்கர்; ஊரிலை உலகத்திலை நடக்காத ஒண்டே?
(கோபமாக) ரஜனி; நான் அண்ணியை என்ரை அம்மாவுக்கு மேலாய் நேசிக்கிறன். அவவும் என்னை மகன் மாதிரித்தான் நடித்துறா. உருவத்திலை வயசிலை சமமாய் இருந்தாலும், எங்கடை உறவு அம்மா - பிள்ளை உறவுதான். இதிலை களங்கத்தை ஏற்படுத்தியிடாதை.
: உப்பிடி எத்தனையோ விசயங்கள் நடக்கிறதாலை நானும் மனம்
திறந்து சொல்லிட்டன். என்னை மன்னிச்சிடு, ஏதோ உங்கடை எல்லாற்றை நன்மைக்கும்தான் நான் சொன்னது.
: ரஜனி, உன்னை எனக்குத் தெரியாதே வா ஒரு டீ குடிச்சுட்டுப்
போவம்.
(சிரித்தபடி) சூடாய்க்குடிச்சால் மச்சான், இன்னும் கொதிச்சுக்
கொண்டிருக்கும். வா ஏதும் கூல்றிங்ஸ் குடிப்பம்.
: நீயும் பகிடி விடத் தொடங்கியிட்டாய். சரி சரி வா.
நெவிலைலதங்கி

Page 63
110
எதிர்பார்க்கைகள் w
காட்சி : 10 இடம் : கோபாலின் வீடு பாத்திரங்கள் : சங்கர், ஜெயா சங்கர் : (ஆபீசுக்கு வெளிக்கிட்டபடி) அண்ணி; எனக்கு சாப்பாட்டைத்
தாங்கோ, பிரசன்னாவையும் கூப்பிடுங்கோ. ஜெயா ; நீ சாப்பிடு பிரசன்னா இன்னும் நித்திரையாலை எழும்பயில்லை. சங்கர்; உன்னோடை ஒரு முக்கியமான விசயம் கதைக்கவேணும். சங்கர் : என்னண்ணி? ஜெயா : சங்கர்; இனியும் நீ கலியாணம் செய்யாமல் இருக்கிறது
சரியில்லை. சங்கர் (சிரித்தபடி) அட உதுதானே. நேற்று என்னோடை படிச்ச ரஜனியைக் கண்டனான். அவனும் இப்பிடித்தான் சொல்லுறான். ஆனால் நான் கலியாணமே செய்து கொள்ளப் போறதில்லை. ஜெயா : இன்னும் இடியப்பம் வைக்கட்டே? சங்கர் : போதும் போதும். ஜெயா : ஏன் சங்கர் கலியாணமே செய்து கொள்ளப் போறதில்லையெண்டு
சொல்லுறாய். சங்கர் அண்ணி; வட்றவள் உங்கடை மனம் நோகாமல் நடப்பாள் எண்டதிலை என்ன நம்பிக்கை? அதோடை பிரசன்னான்ரை எதிர்காலத்தைப்பற்றி கொஞ்சம் சிந்திச்சுப் பாருங்கோ. அவன்ரை படிப்பு இதெல்லாத்தையும் கவனிப்பாள் எண்டு என்ன நம்பிக்கை? ஜெயா : அதுக்காக உன்ரை வாழ்க்கையை வீணாக்கிறதே? வட்றவளோடை
ஒத்து நடக்கிறது நானல்லோ. சங்கர் : எனக்கென்ன வயது போயிட்டுதே, இப்பதானை இருபத்தைந்து
வயது. (சிரித்தவாறு கூறுதல்) ஜெயா : வயதுக்காக இல்லை சங்கர். சங்கர் : நீங்கள் என்ன சொன்னாலும் நான் கலியாணமே செய்து கொள்ளப்
போறதில்லை. ஜெயா (கவலையுடன்) அப்பிடியெண்டால் நானும் பிரசன்னாவும்
வீட்டைவிட்டு வெளிக்கிட வேண்டியதுதான். சங்கர் : அண்ணி; என்ன சொல்லுறீங்க? உங்கள் இரண்டு பேருக்காகவும்
தானை நான் இந்த முடிவு எடுத்ததே. ஜெயா : சங்கர்; நீ எங்களுக்காக கலியாணம் செய்யாவிட்டாலும், இந்த ஊர் சனத்துக்காகவாவது கலியாணம் செய்துதான் ஆக வேணும். ; (ஆச்சரியத்துடன்) என்ன சொல்லுறீங்கள்?
சங்கர்
நெல்லைலதங்கி ܫܠܚ

620undamagał ܥܣܚ
ஜெயா
சங்கர்
சங்கர்
இடம் :
: ஓம் சங்கர். இந்த ஊர் சனத்துக்கு, கதைக்கிறதுக்கு ஒண்டும்
அகப்படேல்லைப் போலக்கிடக்கு எங்கடை வீட்டுக் கதைதான் கிடைச்சிருக்கு.
அண்ணி; நீங்கள் சொல்லுறது எனக்கொண்டும் விளங்கேல்லை. ஜெயா :
(கவலையுடன்) சங்கர் நாங்கள் அப்பிடி பழகினாலெல்லோ விளங்கிறது. என்னையும் உன்னையும் இணைச்சு நரம்பில்லாத நாக்காலை இந்த ஊர் கதைக்க ஆரம்பிச்சிட்டுது. வாறவளாவது எங்கடை தூய்மையான அன்பை உணர்ந்தால் போதும். அண்ணி; உங்கடை விருப்பம் போல செய்யுங்கோ. எனக்கு நேரமாகுது நான் போட்டு வாறன்.
காட்சி : 11 கோமாலின் வீடு
பாத்திரங்கள் : சங்கர், ஜெயா, வினிதா
சங்கர் ஜெயா
சங்கர்
வினிதா
சங்கர்
சங்கர்
: (ஆறுதலாக) இப்பவும் தலையிடிக்குதே வினி? வினிதா
சங்கர்
சங்கர்
அண்ணி; அண்ணி இந்தாங்கோ இந்த மாதச்சம்பளம். : ஏன் என்னட்டைத் தாறாய்? உனக்கெண்டு ஒருத்தி வந்திட்டா.
இனியும் என்னட்டைத் தர்றது சரியில்லை.
இல்லை அண்ணி, நீங்களே வைச்சிருங்கோ. எதுக்கும் தேவைப்பட்டால்
நான் கேட்கிறன் வினிதா, உமக்கும் எதுக்கும் தேவையெண்டால் அண்ணியைக் கேளும் (தனது அறைக்குள் வந்தபடி) என்ன வினிதா ஒரு மாதிரி இருக்கிறீர்? வழக்கமான வரவேற்பில்லை.
(கோபமாக) ஒண்டுமில்லை. தலேக்கை இடிக்குது அவ்வளவுதான்.
பனடோலிலை போடுமன். வினிதா :
அதெல்லாம் போட்டிட்டன்.
; அப்ப வாரும் சாப்பிட, அண்ணி காத்துக்கொண்டிருப்பா. எனக்குச்
சரியாப் பசிக்குது. எனக்குப் பசியில்லை நீங்கள் போய்ச் சாப்பிடுங்கோ.
தலையிடி சுகம். ஆனால் பசிக்கேல்லை.
அப்ப சரி. வந்து போட்டாவது தாருமன். வினிதா :
ஏன்? உங்களுக்குத்தான் அண்ணியிருக்கிறாவே, அவன்வக் கொண்டு போட்டுச் சாப்பிடுங்கோ. (சம்பளம் வினிதாவிடம் கொடுக்காமல ஜெயாவிடம் கொடுத்தபடியால் வினிதா தலையிடினெக் கூறுவதாக அமைக்கப்பட்டுள்ளது.
நெல்லைலதுல்கி

Page 64
எதிர்பார்க்கைகள் 12
காட்சி : 12 இடம் : கோமாலின் வீடு பாத்திரங்கள் : சங்கர், வினிதா வினிதா : அத்தான்; வல்லிபுரம் மினி சினிமாவில ஜெயராம், குஷ்பு நடிச்ச ஒரு நல்ல படம் ஒடுதாம். இண்டைக்கு வெஸ்ட் சோவுக்குப் போவமே? சங்கர் ; வினிதா, உமக்கு எத்தனை நாளாய் சொல்லியிருக்கிறன். அண்ணியை விட்டு விட்டுப் போறது சரியில்லையெண்டு, கோயில் குளம் எண்டால் அண்ணியும் வருவா: படம் அண்ணா செத்த அண்டே விட்டுட்டாவே.
வினிதா : (கோபமாக) அப்ப உங்கடை அண்ணிக்காக என்ரை ஆசாபாசத்தையெல்லாம் அடக்கி வாழவேணுமெண்டு சொல்லாமல் சொல்லுறியள்.
சங்கர் : (கோபமாக) வினிதா, உமக்கு அப்பவே சொன்னனான்தானே
நான் இந்த நிலைமைக்கு வந்ததுக்கு அண்ணிதான் காரணம். அதாலை அவவின்ரை மனதிலை ஒரு ஏக்கமும் ஏற்படக்கூடாது.
வினிதா : (வெறுப்புடன்) ஆக, ஏஎல் வரைதானே படிப்பிச்சிருக்கினம். ஏதோ
கைம்பஸ் அனுப்பினமாதிரி.
சங்கர் : “காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தில் மாணப் பெரிது’ என்ற குறளை நீயும் படிச்சிருப்பாய். அவை அந்த நேரம் என்னைச் சின்ன வகுப்போடை நிப்பாட்டியிருந்தால் இப்ப நான் எந்தக் கடையிலை கூலிவேலை செய்துகொண்டிருப்பனோ எனக்குத் தெரியாது. ஆ. நான் குளிக்க வேணும். அந்த ரவன்ல எடுத்துத்தாரும்.
காட்சி : 13 இடம் : கோபாலின் வீடு பாத்திரங்கள் : ஜெயா, சங்கர், வினிதா ஜெயா : சங்கர்; வினிதாவும் எத்தனை நாளைக்கு விட்டிலையே அடைபட்டுக் கிடக்கிறது. எங்கையாவது வெளியிலை கூட்டிப்போ. ஆ. இண்டைக்கு ஞாயிற்றுக் கிழமைதானே ஒரு நல்ல, படத்துக்கு கூட்டிப்போவன். சங்கர் : ஒம். அண்ணி வினிதாவும் கன நாளாய் கேட்டபடி (வினிதாவின் அறைக்குள் சென்று) வினிதா வினிதா உம்மை படத்துக்கு அண்ணி
கூட்டிப்போகட்டாம். இப்ப அஞ்சு மணிதானே வெளிக்கிடும்.
நெல்லைலதங்கி

3
Munafanasaaf வினிதா : (கோபமாக) எனக்குத் தலேக்கை இடிக்குது நான் வரேல்லை. சங்கர் : (சிரித்தபடி) இதென்ன இப்ப ஒரு புதுத்தலையிடி, நீர்தானே படம்
படமெண்டு நிப்பீர். உமக்கு என்ன நடந்தது? வினிதா : எனக்கு ஒண்டும் நடக்கேல்லை. நீங்கள் பார்க்க விரும்பினால்
உங்கடை அண்ணியைக் கூட்டிக்கொண்டேப் பாருங்கோ. சங்கர் : (ஆச்சரியத்துடன்) என்ன வினிதா இண்டைக்கு என்னென்னவோ
கதைக்கிறீர்? வினிதா : (கேலியாக) ஒ. உங்களுக்கெங்கை உதெல்லாம் விளங்கப்போகுது? நீங்கள்தான் பால்மணம் மாறாத பச்சிளம் குழந்தையாச்சே. சங்கர் : சொல்லுறதை விளங்கச் சொல்லும், விளங்கிக்கொள்ள என்னாலை
(Մ)լգաfl:Bl. வினிதா ! உங்களுக்கெங்கை உதுக்கெல்லாம் நேரம். நான் அண்டைக்கு படத்துக்கு போவமெண்டு கேக்க, அண்ணியை விட்டிட்டுப் போறது சரியில்லை எண்டிங்கள். இப்ப அண்ணி போகச் சொன்ன உடனே நிண்டு தாளம் போடுறீங்கள். சங்கர் : கொஞ்சம் மெலலப் பேசும். அண்ணியின்ரை காதிலை விழப்போகுது. வினிதா : விழுந்தால் விழட்டுமன். சம்பளம் எடுத்தாலும் அண்ணியிட்டை, சாப்பிடுகிலும் அண்ணியோடை அண்ணியை விட்டிட்டு வெளியிலை போகவும் கூடாது. இப்பதான். எனக்கு எல்லாம் விளங்குது. சங்கர் : (கோபமாக) இப்ப என்னத்தை பெரிசாய் விளங்கிக்கொண்டிர்? வினிதா : ஊர் சொன்னது உண்மையெண்டு. சங்கர் : (பளாரென கன்னத்தில் ஒரு அடி அடித்தல்) வினிதா : ஒ. நல்லாய் அடிங்கோ. இப்ப அம்பலமாயிட்டுதெல்லே. அதை
மறைக்ககிறதுக்குத்தான் உந்த அடி உதை எல்லாம் சங்கர் : இந்த ஒப்பாரி வைப்போடை, இந்த றுமுக்கை நிக்கேலாது.
(வெளியேறுதல்)
காட்சி : 14 இடம் : கோபாலின் வீடு
பாத்திரங்கள் : ஜெயா, வினிதா (சங்கர் ஆபீசுக்குப் போனபின்)
வினிதா :
(மனதிற்குள் - என்னண்டு இங்கையிருந்து வெளிக்கிட்றது? உவவின்ரை மூஞ்சியிலை முழிக்கவே அருவருப்பாக இருக்குது. அம்மா லெட்டர் போட்டதாய் பொய் சொல்ல வேண்டியதுதான்) ஜெயாக்கா; வீட்டிலையிருந்து கடிதம் வந்திருக்குது அம்மாவுக்கு
தெலிலைலதங்கி

Page 65
14
nAspasaa マーーーーーマ
சுகமில்லையாம் அதுதான் போகவேனும். இவரிட்டைச் சொல்லுங்கோ. ஜெயா : சங்கரிட்டைச் சொல்லாமல் போறது சரியில்லை. அவன் வந்த
உடனே, அவனையும் கூட்டிக்கொண்டு போமன். வினிதா : கடிதத்திலை எழுதியிருக்கிறதைப் பார்த்தால் பயமாய் இருக்கு நான் போறன். அவர் வரச் சொல்லுங்கோ. என்ன மாதிரியோ தெரியாது; கொஞ்சநாள் பொறுத்துத்தான் வருவன் எண்டும் சொல்லுங்கோ. (மாலை சங்கர் ஆபீசிலிருந்து வருதல்) சங்கர் : என்னண்ணி; வினிதாவை றுாமிலை காணயில்லை. எங்கை
போட்டுது? ஜெயா : தாய்க்கு சுகமில்லையெண்டு கடிதம் வந்ததாம். நீ வந்த பிறகு உன்னையும் கூட்டிக்கொண்டு போ எண்டு சொன்னன், கடிதத்தைப் பார்க்கப் பயமாய் இருக்கெண்டு உனக்குச் சொல்லச் சொல்லியிட்டுப் போயிட்டுது. சங்கர் : (முணுமுணுத்தல்) எனக்குத் தெரியும். இப்பிடியெல்லாம்
நடக்குமெண்டு. வினிதா என்ன சங்கர் சொன்னனி? சங்கர் : இல்லை. கடிதத்தை நீங்கள் பாத்தனிங்களே? வினிதா : நான் குளிக்கப்போயிட்டன். பெல் அடிச்சு கேட்டதுதான். எதுக்கும்,
நீயும் போறதுதான் நல்லது. சங்கர் : என்னாலை இப்ப லீவு போட முடியாது. கொஞ்ச நாளைக்கு
இருந்துவிட்டு வரட்டுமன். ஜெயா : சங்கர்; போகயுக்கை வினிதாவின்ரை முகமும் வாடி இருந்தது. நீ போய் கூட்டி வராட்டில் அவள் இன்னமும் கவலைப்படுவாள். சங்கர் : (முணுமுணுத்தல்) கவலைப்பட்டால் படட்டுமன். ஜெயா நீ சொல்லுறது எனக்கு கேட்குது. ஏன் சங்கர் இப்பிடி எடுத்தெறிஞ்சு கதைக்கிறாய். கலியாணம் செய்து மூண்டு மாதமாகயில்லை அதுக்கிடையிலை. சங்கர் : (கோபமாக) அண்ணி; இந்த விசயத்திலை ஒருத்தற்றை
சொல்லையும் கேட்கமாட்டன். போனதுமாதிரி வரட்டும். ஜெயா : சங்கர், மறைக்காதை வினிதாவோடை ஏதும் மனஸ்தாபமே? சங்கர் : (ஆறுதலாக) ஒண்டுமில்லை அண்ணி, நான் கொஞ்சநேரம்
படுக்கப்போறன்.
நெல்லைலதங்கி

1S Dunafananala ལ། ན་ལ་ནད་ན་ད་ wer
ஜெயா : சாப்பிட்டுவிட்டுப் படு. சங்கர் : படுத்தெழும்பிச் சாப்பிடுறன் அண்ணி.
காட்சி : 15 இடம் : வினிதாவின் வீடு மாத்திரங்கள் : வினிதா (சங்கரின் குரல்)
(தபாலகாரன் மணியடித்தல்) வினிதா ஆர் பெல் அடிக்கிறது? அம்மா, ஆர் எண்டு பாருங்கோ. (எட்டிப்பார்த்துவிட்டு தபால்காரனைக்கண்டு தானே வருதல். கடிதத்தை வாங்கிய பின்) ஆராயரிருக்கும் ....... இவராய்த்தானிருக்கும். ஏதும் சமாதானப்படுத்துறதுக்காக எழுதியிருப்பார். சங்கரின் குரல் : அன்பின் வினிதாவுக்கு நீ வீட்டை விட்டு வந்த பின்புதான் நான் செய்தது எவ்வளவு பெரிய தப்பு என உணர்ந்து கொண்டேன். எங்களுடைய பிரச்சனை அண்ணிக்குத் தெரியாது. தாய்மாரையே உதறிவிட்டு மனைவிக்குப் பின்னால் திரிபவர்கள் எத்தனைபேர் இருக்கிறார்கள். அவ்வாறிருக்க நான் அண்ணியை முன்னுக்கு வைப்பதை கொஞ்சம் குறைக்கப் பாக்கிறேன். எங்கள் உறவை நீ தவறாக நினையாவிடின் கடிதம் கிடைத்ததும் மாலை ஆபீசுக்கு வரவும். இரண்டு பேருமாக வீட்டுக்குச் செல்வோம். மிகுதி நேரில்.
இங்ங்ணம், அன்புள்ள கணவன், சங்கர்.
காட்சி : 16 இடம் : ஆபீசுக்கு வெளியே பாத்திரங்கள் : வினிதா, சங்கர் வினிதா : அத்தான்; என்னை மன்னிச்சிடுங்கோ. நான் உங்களுக்கு
சொல்லாமல் வெளிக்கிட்டிருக்கக் கூடாதுதான். சங்கர் : வினிதா, எனக்குத் தெரியும் நீர் ஒரு கிழமைகூட பிரிஞ்சு இருக்க மாட்டிர் எண்டு. இரண்டு பேரும் சேர்ந்துபோக அண்ணிக்கு எவ்வளவு சந்தோசமாய் இருக்கும்.
வருவிலைலதங்கி

Page 66
6
ബില്ക്ക്
assif : 17 இடம் : கோமாலின் வீடு பாத்திரங்கள் : ஜெயா, வினிதா, சங்கர் சங்கர் : அண்ணி; அண்ணி. பிரசன்னா இங்கை விளையாடிக்
கொண்டிருக்கிறான், அண்ணி எங்கை போட்டா. வாரும், அண்ணியின்ரை அறைக்குப் போய்ப்பார்ப்பம். ஜெயா : (முனகுதல்) சங்கர் : அண்ணி; என்ன அண்ணி உங்கடை கோலம்? ஜெயா : (முனகியபடி) பதறாதை சங்கர்; உங்கள் இரண்டுபேரையும் தான்
காத்துக்கொண்டிருக்கிறன். சங்கர் : (பதறியபடி) வினிதா, அண்ணியைப்பாத்துக்கொள்ளும் நான்
டொக்டரை கூட்டிக்கொண்டு வாறன். ஜெயா : சங்கர். டொக்டர் கிட்டை போய்ப்பிரயோசனமில்லை. டொக்டரிட்டைப் போறதுக்காக நான் சிலீப்பிங் பில்ஸ் விழுங்கவுமில்லை. என்னாலை இனி கனநேரம் கதைக்க முடியாது. கண்ணை இருட்டிக்கொண்டு வருகுது. சங்கர் : (அழுதவாறு) இல்லை அண்ணி; நான் உங்களைச் சாக
விடமாட்டன். நான் ஓடிப்போய் கார் பிடிச்சுக்கொண்டு வாறன். ஜெயா நில் சங்கர்; நிறைய பில்ஸ் விழுங்கியிட்டன். இடைவழியிலை
என்ரை ஆத்மா போறதைவிட இந்த வீட்டிலையே போகட்டும். வினிதா : அக்கா, என்னை மன்னிச்சிடுங்கோ. அவற்றை முழு அன்பும் ஆதரவும் எனக்கு கிடைக்க வேணும் எண்டு ஆசைப்பட்டிட்டன். ஜெயா வினிதா நீ மட்டுமில்லை எந்தப் பெண்ணும் இதைத்தான்
விரும்புவாள். சங்கர் ; வினிதா, தான் செய்தது தப்பெண்டு தானே ஒத்துக்கொண்டு என்னைத்தேடி ஆபீசுக்கு வந்தது. அதுக்கிடையிலை இப்பிடிச் செய்திட்டிங்களே. ஜெயா (முனகியபடி சிரித்தல்) சங்கர்; வினிதா தானே உணர்ந்து வரவுமில்லை, வரவேண்டிய கட்டாயமுமில்லை. உன்னிலை பிழையை வைச்சுக்கொண்டு அவளிலை பிழை சொல்ல நான் தயாரில்லை. வினிதா : (ஆச்சரியத்துடனும், கவலையுடனும்) அத்தான் போட்டதாக ஒரு
கடிதம் காலமை வந்துதே. ஜெயா நான்தான் சங்கர் எழுதினது மாதிரி எழுதி அனுப்பியிட்டு உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறன். நீங்கள் வருகிற
நெல்லைலதங்கி

ണ്ണിഞ്ഞ് ഹ MMMMM
சங்கர்
ஜெயா
17
நேரமாய்த்தான் குளிசைகளை விழுங்கினனான். உங்களைக் காணாமல் செத்திடுவனோ எண்ட பயம் கூட இருந்தது. அதுக்கிடயிலை தெய்வம் உங்களை அனுப்பியிட்டுது.
அண்ணி; நான் அண்ணாவுக்கு மன்னிக்கமுடியாத குற்றம் செய்திட்டன். அவற்றை ஆத்மாகூட சாந்தியடையாது.
இல்லை சங்கர் அவர் கூட இதைத்தான் வரவேற்பார். உங்கள்
இரண்டு பேருக்கும் நான் ஒரு பிரச்சினையாய் இருக்க விரும்பயில்லை.
வினிதா : ஜெயாக்கா; நீங்கள் கொஞ்சம் யோசிச்சுச் செய்திருக்கக் கூடாதே?
ஜெயா
சங்கர்
யோசிக்க வேண்டியது பிரசன்னாவைப்பற்றித்தான் சங்கர், வினிதா
உங்கள் ரெண்டு பேருக்கும் நான் ஒரு பரிசு தந்திட்டுப் பேர்றன். பிரசன்னாவை பெற்ற பிள்ளை போல வளர்த்திடுங்கோ. ஆனா, பிரசன்னா, பிரசன்னா.
அண்ணி. (கதறல்)
வினிதா : அக்கா. (கதறல்)
(ஜெயா முனகுவதாகவும் வினிதா, சங்கர் கவலையுடன்
கதைப்பதாயும் அமைக்கப்பட்டுள்ளது)
முற்றும்
ஒலிபரப்புச் செய்ய்ப்பட்ட திகதி 27.09.1997
wr a நெவிலைலதங்கி

Page 67
8
எதிர்க்கைகள்
լ]] O வழிபிறந்தது
மாத்திரங்கள் :
தனமாக்கியம் ~ சணர்முகத்தின் மணைவி கல்யாணி ~ சண்முகத்தின் மகள் தேவகி ~ சண்முகத்தின் மகள் LS Jg ~ தேவகியின் மைத்துனன் பிரமு ~ சண்முகத்தின் நண்பன் சண்முகம் ~ தனபாக்கியத்தின் கணவன்
காட்சி - 01 இடம் : சண்முகத்தின் வீடு
பாத்திரங்கள் : கல்யாணி, தனபாக்கியம், தேவகி, சண்முகம்.
56bum :
தனபா !
356)urt :
தனபா ! கல்யா :
560TL T :
கல்யா
அம்மா! எணை அம்மா! எத்தனைதரம் கூப்பிட்டுட்டன். அவவின்ரை காதிலை விழுகுதே.
காதிலைவிழுகுதோ, காதுக்குள்ளேயே எதிரொலிச்சுக் கொண்டிருக்குது. இப்ப நீ அம்மாவெண்டு கத்துறாய்; அடுத்தது அங்கை வருகுது அம்மா எண்ணும். ரெண்டு இன்னும் நித்திரையால எழும்பயில்லை. ஒண்டு பிரச்சினையில்லாத பிள்ளை, மற்றது அம்மா எண்டு கத்திற பக்குவத்தை இன்னும் அடையஇல்லை.
உங்கடை புராண படனத்தைக் கேட்க, அம்மா எண்டு கூப்பிடயில்லை. வசதிக்கட்டணம் கட்டயில்லை; ஒருசட்டையை வேறை தோய்ச்சு தோய்ச்சுப் போடுறன், நேற்று எங்கடை ரீச்சர், ஜாடைமாடையை வேறைசொல்லிக் காட்டுறா.
(கோபத்துடன்) என்ன சொல்லிக் காட்டுறா? கோபத்துக்கு மாத்திரம் குறைச்சலில்லை. உள்ளதைத்தானே சொன்னவா.
(மீண்டும் கோபத்துடன்) என்ன உள்ளதை.
: (ஆறுதலாக) ஐயா ஒவ்வொரு நாளும் தண்ணியிலை வாறார்.
தணிணி எண் டு கள்ளில் லை; உயிரைக் கொல்லுற சாராயத்தைக் குடிச்சிட்டு. பக்கத்து அக்கத்துப் பிள்ளையஸ் இதைப்பற்றிச் சொல்லி இருக்குதுகள் போலை; “கொய்யா தன்ரை மருந்தை வேளை தவறாமல் குடிக்கிறார். உன்ரை பீஸ் கட்டமுடியாதோ?’ எண்டு அதுமாத்திரமே, “அரசாங்கம்
நெல்லைலதங்கி

119 Agnesař
56Aust
கல்யா :
தேவகி :
g56oT UT :
56buUT
தேவகி
சண்மு கல்யா :
தேவகி : கல்யா : &F60 (up :
56OTUT :
சண்மு
56trust
வெள்ளைத்துணி தசறது உங்களுக்கொ அல்லது உங்கடை பெற்றோர் வித்து தங்கடை ஆட்டம் ஆடவோ” எண்டு. எனக்கு நாக்கைப் பிடுங்கிச் சாகவேனும்போலை இருந்தது.
(கோபமாக) அரசாங்கம் தாற துணியை நாங்கள் என்னவும்
செய்வம். அவவந்தால் படிப்பிச்சிட்டு போகவேண்டியதுதானே. சபாஷ் (கையைத்தட்டுதல்) ஐயாவுக்கேற்ற அம்மா: புத்தி அப்பிடித்தான் போகும். ரீச்சர்மாற்றை வேலை, தனியப் படிப்பிக்கிறது இல்லை அம்மா. படிப்பிக்கிறதுதான் வேலையெண்டால் ஒரு பிள்ளையிட்டையும் நல்ல பண்பு, கீழ்ப்படிவு இதுகள் ஒண்டையும் காணேலாது. (வந்தவாறு) கல்யாணி! அம்மா அப்படிப்பட்டவ இல்லை; என்ன தன்னுடைய புருஷனைக் குறைவாய்ச் சொல்லியிட்டாய் எண்ட மனத்தாங்கல்தான்.
என்ன பிள்ளையஸ் நான் செய்யுறது, எத்தனை புத்தமதி, எவ்வளவநாள் அடிபிடி, உங்களுக்கு முன்னாலை இதுகள் வேண்டாமெண்டு பொறுமையாய் நானிருக்கிறன்.
அம்மாவைப்போல் பெண்கள் இருக்குமட்டும், ஐயாவைப்போல
ஆண்கள் இருக்கத்தான் செய்வினம். அம்மா உங்களை நாங்கள் குறைசொல்லயில்லை. ஐயாவுக்கு என்ன மதி?
(வந்துகொண்டு சிரித்தவாறு) என்ன? என்ரைகதை அடிபடுகுது.
(புறுபுறுத்தல்) சூரியன் உதிக்கேக்கை பசுத்தோல் போர்த்திய புலி, சூரியன் அஸ்தமிக்கேக்கை சுயரூபம் தெரியும், சும்மா இரடி. அக்கா, வா நாங்கள் குளிப்பம்.
பிள்ளைகள் என்னவாம் தனபாக்கியம். என்ன செயிறது என்னாலை விடமுடியயில்லை. சீக்கிரத்திலைவிட்டுடுவன் (கெஞ்சியவாறு) கொஞ்சநாள் பொறு தனபாக்கியம்.
(எரிச்சலாய்) அப்பா; ஒவ்வொரு நாளும் விடிய இந்தத் திருவாசகம் கேட்கிறதும், இரவிலை.
: சும்மா புறுபுறாதை, இரவும் வடிவாய்ச் சாப்பீடயில்லை, பழையது
ஏதும் இருக்கே?
: (கோபத்துடன்) பழையது கிடக்க இஞ்சை கிலோக்கணக்கிலை
தானே அரிசி போடுறன். ஏதோ நானும் உதிலை வெங்காயம் வைக்கப்போறதாலை உலை கொதிக்குது. அதிலும் என்ரை
کیتھوله لمopمتموہ6 ܫܿܩܫ

Page 68
20 எதிர்பார்க்கைகள்
வாயைக்கட்டி, வயிற்றைக் கட்டி உங்கடை வயிற்றுக்கு சோறு போடுறன். அதையும் அங் கைகொட்டி, இங்கைகொட்டி எத்தனை அநியாயம். சண்மு : நீ தொடங்கியிட்டாய். இனி உனக்குக்கிட்டை இருக்கேலாது.
நான்உவன் பரமன்வீட்டை ஒருக்கால் போட்டுவாறன்.
காட்சி - 02
இடம் : தனபாக்கியத்தின் வீடு பாத்திரங்கள் : சண்முகம், தனபாக்கியம், கல்யாணி, தேவகி சண்மு : (தள்ளாடியபடி) பாக்கியம்! தனபாக்கியம்! பார், அந்தக் காலத்திலைகூட உன்ரை கொப்பர் கருத்துப்பாத்துத்தான் பெயர் வைச் சிருக்கிறார். தனமெணி டால செல்வமெணி டு சொல்லுவாங்கள். இஞ்சைபாத்தால் தரித்திரமாய் எல்லோ இருக்கு. தனபாக்கியம்; தனபாக்கியம்! தனபா வந்திட்டுது; இனிப்பிள்ளைகள் படிக்கமுடியுமோ, நித்தரை
கொள்ளமுடியுமோ. சண்மு : வந்திட்டுதோ!, நான் என்னடி அ..ஹிணைப் பொருளோ, நான் மனிசனடி மனுசன். மனிதர்கள் தேவர்கள் எல்லாம் பெயர்ச் சொல்லுக்கை அடங்குமடி. நானும் அந்தக்காலத்திலை எஸ. எஸ். சி படிச்சனான்தான். என்ரை கஷ்டகாலம் ஒரு அரசாங்க வேலை கிடைக் கயில் லை. உவன் கதிரனைப் பார் பின்வாங்கிலிலை இருந்து கொப்பியடிச்சவன் இப்ப பெரிய ஆபிசர். தனபா : அதுகள் உந்த நஞ்சைக்குடிச்சு சாகுதுகளே, அல்லது
"தெருத்தெருவாய்த்தான் அலையுதுகளே..? சண்மு : அப்ப நான் அலையுறன்; வேறை என்ன சொன்னனி.? நஞ்சு, இது அமிர்தமடி; தேவாமிர்தமடி; உன் ரை வாயிலை கொஞ்சத்தை விட்டுப்பார். (வாய்க்குள் ஊற்றப்போதல்) தனபா : சீ.அங்காலை கொண்டுபோங்கொ. நான் பேசாமல் இருக்க
இருக்க உங்களுக்கு அளவுக்கு மிஞ்சுது. சண்மு : (நையாண்டியாக) பேசாமல் இருக்கிறாயோ? நீயோ? காலமை பசிக்குது எண்டு கேக்க என்ன சொன்னனி? அதுதான் இண்டைக்குப் புள்ளாய் போட்டுட்டு வந்தனான். தனபா ! நீங்கள் புள்ளாய்ப் போட்டிட்டு வாங்கோ. பிள்ளையஸ்
இஞ்சை கால்றாத்தல் பாணோடை இருக்குதுகள்.
স্মক நெல்லைலதங்கி

121 எதிர்பார்க்கைகள் 2
சண்மு : அதுகள் எண்டாலும் கால்றாத்தல் பாணோடை இருக்குதுகள். (போத்தலை தட்டியபடி) நான் இஞ்சை இதாலை வயிற்றை நிரப்பிக்கொண்டிருக்கிறன். தனபா : நீங்களும் ஒரு மனுஷனே சண்மு : என்னடி சொன்னனி.? (ஓடிவந்து கன்னத்தில் அடித்தல்) கல்யா : ஐயா!, இனி அம்மாமேலை ஒரு அடிவிழுந்தால். சண்மு : என்னடி செய்வியள்..? வளந்திட்டியள் எல்லே, அதுதான்
கொம்மாவுக்கு உந்த உஷார். தனபா ! (நெஞ்சைப்பிடித்தவாறு) பிள்ளை தேவகி கல்யாணி! நெஞ்சுக்கை ஏதோ செய்யுது. என்னைக் கொஞ்சம் பிடியுங்கோ.
காட்சி - 03 இடம் : மருத்துவமனை பாத்திரங்கள் : டொக்ரர், தேவகி கல்யாணி டொக் : பிள்ளையஸ் உங்கடை அம்மாவுக்கு வந்தது சாதாரண நெஞ்சுவலி இல்லை. இதுக்கு மேயர் ஒப்பிறேசன் செய்ய வேணும். கொழும்புக்கு அனுப்பினால்தான் சுகப்படுத்தலாம். தேவகி : உண்மையாகவோ டொக்ரர். பிளிஸ் டொக்ரர் , எங்களுக்கெண்டு இருக்கிறது அம்மா ஒராள்தான். இஞ்சையே அவவைச் சுகப்படுத்துங்கோ டொக்ரர். கல்யா : டொக்ரர், அம்மா இல்லாட்டால் நாங்களும் உயிரோடை இருக்கமாட்டம். கொழும்புக்கு அனுப்பி ரீட்மன்ற் செய்ய எங்களிட்டை அவ்வளவு வசதியில்லை டொக்ரர். டொக் - பிள்ளையஸ் உங்களைப் பாக்க பாவமாய்த்தான் இருக்கு,
நான் என்ன செய்யமுடியும். தேவகி : ஏதாவது வழி செய்யுங்கோ டொக்ரர். டொக் : உம். உம். ஒரு உதவி செய்வன். ரெட்குறோஸ் மூலம் கொழும்புக்கு அனுப்புவன். மிகுதிச்செலவை நீங்கள்தான் ஏற்கவேணும். தேவகி : மிகுதிச் செலவு எவ்வளவு வரும் டொக்ரர். டொக் : ஒராள் கூடப்போகவேனும் அந்தச் செலவு, எப்படியும் ரெண்டு கிழமை ரீட்மன் செய்யவேணும், சாப்பாட்டுச் செலவு: மருந்துச்செலவு எப்பிடியும் குறைந்தது இருபதாயிரம் ரூபா வேணும். தேவகி : இருபதாயிரம் ரூபாவா டொக்ரர்? (மயக்கமடைதல்) நெல்லைலதங்கி ܗܝܓܐ-ܡܐ

Page 69
22 alamaař
கல்யா : அக்கா! டொக் : தண்ணியைத் தெளியுங்கோ. (கல்யாணி தண்ணிரைத்
தெளித்தல்) தேவகி : (அழுதல்) டொக்ரர் அம்மாவைக் காப்பாற்ற முடியாத
பாவியளாகப் போகிறம் டொக்ரர். கல்யா : அக் கா! கணிணைத் துடையுங் கோ அம் மாவுக்கு
விளங்கப்போகுது. வாங்கோ அக்கா; வாறம் டொக்ரர் டொக் : ஒம் பிள்ளையஸ். காசுக்கு ஒழுங்கு செய்திட்டு வாங்கோ.
(வெளியே வந்ததும் வாங்கிலில் இருந்த தனபாக்கியம்) தனபா ! பிள்ளையஸ்! என்ன டொக்ரர் சொன்னவர்? அடிக்கடி
நெஞ்சுக்குத்து வருகுதெண்டு சொன்னியள் தானே? கல்யா : ஒம் அம்மா. தனபா : (தேவகியைப் பார்த்து) என்ன தேவகி ஒரு மாதிரி இருக்கிறாய்? தேவகி : இல்லையம்மா கண்ணுக்குள்ளை தூசி விழுந்துட்டுது கல்யா : அங்கை பஸ் வருகுது கெதியாய் நடவுங்கோ
காட்சி - 04
இடம் : தனபாக்கியத்தின் வீடு பாத்திரங்கள் : பாபு, தனபாக்கியம், கல்யாணி பாபு : மாமி. மாமி. தனபா ! ஆர். கேற்றுக்கை ஆரெண்டு பார் மோனை
(கல்யாணி வந்து பார்த்தல்) பாபு : எப்பிடி மாமி சுகமாய் இருக்கிறாவே? கல்யா : (கிண்டலாக) இதுவரை சுகமாயில்லை இப்ப நீங்கள்
வந்திட்டிங்கள், இனிச் சுகமாயிடும். பாபு : உமக்கு எப்பவும் பகிடிதான். கல்யா : (விரக்தியுடன்) பகிடியோ, நாங்கள் படுகிற வேதனை
ஆண்டவனுக்குத்தான் தெரியும்.
பாபு : கல்யாணி, என்ன நடந்தது?
கல்யா : அம்மாவுக்கு மேஜர் ஆப்ரேசன் கொழும்பிலை செய்ய
வேணுமாம்.
பாபு : செய்யிறது தானே.
கல்யா : ஆப்ரேசன் செய்யுறதுக்கு குறைஞ்சது இருபதாயிரம்
(35606)Juuff Lb.
நெல்லைலதங்கி

asumnjalananasa’
LT :
856)usT :
560TLJIT
LuffL
தனபா !
UITIL தேவகி :
UTL
தேவகி :
LT
தனபா
Լյուկ
தனபா !
தேவகி :
123
இருபதாயிரம் ரூபாவோ அதுக்கு நீங்கள் எங்கை போறது?
(தனபாக்கியத்திற்கு அருகில் வருதல்)
அம்மாவுக் குக் கிட்ட ஒப்பரேசன் , இருபதாயிரம்
உதொண்டையும் கதைச்சிடாதைங்கோ.
: தம்பி இங்காலை வாரும். உம்மைக் கண்டு எத்தனை நாள் : ரெஸ்ற் முடிஞ்சுதெல்லோ மாமி, றிசல்ற் வரும்வரை ஐயா
ஒரு கடையிலை நிற்கச் சொன்னார். அதுதான் மாமி உங்களைப் பார்க்க இவ்வளவுநாளும் வரயில்லை. இப்ப எப்பிடிச் சுகமே மாமி?
இருந்ததுக்கு கொஞ்சம் சுகம் ராசா, நான் என்னைப்பற்றி கவலைப்பட இல்லை பாபு. இந்தப் பிள்ளையளை நினைச்சால்தான் (அழுதல்)
: மாமி, அழாதைங்கோ “படைச்சவன் படிஅளப்பான்’.
படைச் சவன் படிஅளக்க நாங்களுமெல்லோ முயற்சி எடுக்கவேணும். இஞ்சை ஆறுபேரைப் படைச்சிட்டு ஐயா ஒரு கவலையுமில்லாமல் வாழ இல்லை.
மாமாவும் இன்னும் திருந்திறதைக் காணன். இவையளைப் போல ஆட்களுக்குக் காலந்தான் பதில்சொல்ல வேணும். தேவகி, ‘எப்படிப் படிப்பெல்லாம்; இந்தமுறை சோதனை எடுக்கிறது தானே.
எடுக்கிறன் அத்தான்; அம்மாவின்ரை வருத்தத்தாலைதான் யோசிக்கிறன்.
: எந்தக் கஷ்டம் வந்தாலும், அந்தந்தக்காலத்திலை அந்தந்த
பரீட்சையை எடுத்திடவேணும். ஆறப்போட்டால் ஆறினது ஆறினதுதான்.
: எல்லாப் பொறுப்பும் தேவகியிட்டைத்தான் குடுத்திட்டன். இந்தச்
சின்னவயதிலை என்ன பாடுபப்போகுதோ?
: ஏன் மாமி தேவையில்லாமல் பயந்து சாகிறியள்?
இல்லைத் தம்பி, எனக்கு இப்ப அடிக்கடி நெஞ்சுக்குத்து வருகுது. ஒரு வேலையும் செய்ய முடிய இல்லை. மூச்சே நிண்டுவிடும்போல மூச்சுத் திணறல். கொழும்புக்குப் போனால் நல்லதெண்டு டொக்ரர் சொன்னவராம்.
ஓம் அத்தான், இஞ்சை வைச்சு வைத்தியம் செய்தாலும் சுகம் வருமாம். ஆனால் நாங்கள்தான் கொழும்புக்குக்
நெல்லைலதங்கி

Page 70
24 எதிர்பார்க்கைகள்
கொண்டுபோனால் கெதியாயப் சுகப்படுத்தலாம் எண்டு விரும்பிறம். (தாய்க்காக பொய் கூறுதல்) பாபு : சரி மாமி; நான் வரப்போறன், வெயில்வழிய நிண்டு உழைக்கிறதை விட்டுட்டு ஒய்வெடுங்கோ. (பாபு வெளியேறுதல் தேவகியும் உடன் வருதல்) தேவகி : அத்தான்; அம்மாவுக்கு., அவவைக் கட்டாயம் கொழும்புக்கு கொண்டுபோகச் சொன்னது தெரியாது. அதாலை தான் அப்பிடிச் சொன்னான். பாபு : அதுதான் தேவகி நானும் யோசிச்சனான். கல்யாணி ஒரு
கதை சொல்லுது, நீர் ஒரு கதை சொல்லுறிர் எண்டு. தேவகி : ஆர் அத்தான் எங்களை நம்பி ஒரு ஐந்நூறு ரூபா எண்டாலும் தாறது? இல்லை. எங்கடை ஆக்கள் ஏதோ வசதியாய் இருக்கினமே, அதோடை தங்கடை வாழ்க்கையைப் பற்றியும் யோசிப்பினந்தானே. பாபு : அடுத்த தெருவிலை இராசம் எண்டு ஒருத்தி வட்டிக்கு கடன்
கொடுக்கிறவாவெல்லோ, அவவைக் கேட்டுப் பாருமன். தேவகி அவவையும் கேட்டனான். அவ. LTL என்ன சொல்லுறா? தேவகி : என்ன பெறுமதியாய் வைச்சிருக்கிறியள்; பெறுமதி இல்லாமல் தந்தாலும் அதை திருப்பித்தாற தைரியம் இருக்கோ, எண்டு கேக்கிறா. இந்த ஐயாவின்ரை குடியாலை அம்மாவை இழக்க வேண்டியதுதான் அத்தான். பாபு : எனக்கு என்ன சொல்லுறதெண்டு தெரியேல தேவகி. என்னாலும் ஒரு உதவியும் செய்யமுடியாமல் இருக்குது. ஏதோ விதியின் படி எல்லாம் நடக்கும் தேவகி; நான் வாறன். தேவகி : ஓம் அத்தான், போட்டுவாங்கோ
assif - 05 இடம் : தனமாக்கியத்தின் வீடு மாத்திரங்கள் : சணர்முகம், தேவகி கல்யாணி சண்மு : பிள்ளை தேவகி, ஒரு பத்துருபா தா தேவகி : பத்துரூபா எனக்கு என்னத்துக்கெண்டு தெரியும், என்னட்டை
இல்லை சண்மு : நேற்றுத்தானே சம்பளம் எடுத்தனி
-vr-v rr که قهوه سعیتکوک

125
எதிர்பார்க்கைகள் தேவகி : அம்மா போனதுக் குப் பிறகாவது உங்களுக்குப்
புத்திவருமெண்டால். கல்யா : (கோபத்துடன்) நாங்கள் எல்லாரும் சாகவேனும் அப்பதான் அவருக்குப் புத்திவரும். எங்களுக்குச் சீதனத்துக்கெண்டு ஒண்டும் சேர்க்கவேண்டாம் ஒரு வருத்தம் துன்பம் வந்தால் செலவழிக்கப் பணமில்லாவிட்டால் ஒரு மணிசர் ஏன் வாழவேணும்; அல்லது அம்மாவை இழந்திருப்பமே, அக்காதான் இந்தவயதில் உழைக்கப்போவாவே? தேவகி : கல்யாணி, காணும் விடு. (தேவகி காசு கொடுத்தல்) தேவகி : இந்தாங்கோ கொண்டுபோய் ஏதாவது செய்யுங்கோ. கல்யா : அம்மா குடுத்துக்கெடுத்தது போதாதெண்டு நீங்களும் குடுத்துக்
கெடுங்கோ எனக்கென்ன?
காட்சி 06 இடம் : தனபாக்கியத்தின் வீடு பாத்திரங்கள் : கல்யாணி, சண்முகம், தேவகி
சண்மு : (குடிபோதையில் வருதல்) தேவகி. தேவகி. கல்யாணி, அவளைக் கூப்பிடக்கூடாது அது தாயைப்போலை ராங்கிக்காரி மூத்தது என்னைப்போல அம்மா தேவகி. கல்யா : (கிண்டலாக) ஒடிப்போய் கதவைத்திற, இஞ்சை மூண்டு
குமருகள் இருக்கெண்டு ஏதும் எண்ணமாவது இருக்கே இருட்டி எவ்வளவு நேரம், இப்ப வருகுது. தேவகி ; கதவு திறந்திட்டன், உள்ளை வாங்கோ. ஒவ்வொரு நாளும்
இதுதான் வேலை சண்மு : பிள்ளை கோவியாதை, வெள்ளன வரவெண்டுதான் பாத்தனான் உவன் தம்பன் தன்ரை மகனின்ரை பிறந்தநாள், வா அண்ணை எண்டான் கல்யா : ஒவ்வொருநாளும் ஒவ்வொருத்தர் வருவினம்; நல்லாய் கதையளக்கிறார். நீங்கள் கேட்டுக்கொண்டிருங்கோ தேவகி : நான் என்னடி செய்ய? (இயலாமையுடன்) கல்யா : நாங்கள் எல்லாரும் நஞ்சைக்குடிச்சுச் சாவம்; அந்தாளுக்கும்
நஞ்சைக் குடுப்பம். தேவகி : என்ன கதையடி கதைக்கிறாய்? கல்யா ; பின்னை எண்னக் கா? அம்மாபோயப் ரெண்டுவருசம்
நெல்லைலதல்கி

Page 71
எதிர்பார்க்கைகள்
சண்மு :
கல்யா
இடம் :
26
ஆகப்போகுது இந்தாளுக்கு ஏதாவது கவலை, என்னாலை இந்த நரகவாழ்க்கையை அனுபவிக்க எலாது. அவள் சின்னப்பிள்ளை ஏதாவது கதைப்பாள், நீ சாப்பாட்டைத்தா மோனை உண்ணான வயித்துக்கை ஒண்டுமில்லை (வயிற்றைத் தடவியவாறு)
கொட்டு கொட்டு நான்போய் படுக்கப்போறன். ரெஸ்ற்வருகுது
படிக்கத்தான் முடியுமே.
abild - 07
தெருவோரம்
பாத்திரங்கள் : தம்பு, சண்முகன்
5լbւ
சண்மு :
தம்பு
சண்மு :
தம்பு
சண்மு : 5ւbւ
என்ன சண்முகம் வெள்ளணவே. உனக்கென்ன? உன்ரை
மகள் உழைக்கிறாள்.
ஓம் தம்பண்ணை, தேவகி நல்ல பொறுமைசாலி அடுத்தது இருக்கே அதோட்ை ஆடேலாது.
! நீ செய்யிறது உனக்கே சரியாய்ப்படுகுதோ? படிக்கவேண்டிய
வயதிலை படிக்காமல் அவளின்ரை திறமைய்ாலை ஒரு கொம் பணியிலை வேலை செய்யிறாள். நீ ஏதும் உழைக்கக்கூடாதோ?
தம்பண்ணை என்ரை உடம்பைப் பாருங்கோ, இதாலை ஒருவேலை துண்டு துணிவாய்ச் செய்ய ஏலுமோ?
; உந்த உடம்பு உப்பிடி உருகிப்போனதுக்கு என்ன காரணம்?
உன்ரை குடிதானே, இப்ப உனக்கென்ன ஐம்பது வயது
வருமே?
நாப்பத்தெட்டு வயதண்ணை
நாப்பத்தெட்டு வயதிலை அறுவதுவயதுக் கிழவன்போல
இருக்கிறாய். என்னைப்பார் அறுவத்திரெண்டு வயதிலை
சண்மு : தம்பு
சண்மு :
உன்னைவிட எவ்வளவு திடகாத்திரமாய் இருக்கிறன்.
உங்கடை சாப்பாடு.
: சாப்பாடு எண்டுமாத்திரம் சொல்லாதை, உயிரைக்கொல்லுற
உந்தச் சாராயத்தை மாத்திரமில்லை எந்தக்குடியைக்கூட நான் குடிக்கிறதில்லை. ஏன் புகைக் கிறதைக் கூட விட்டு கணவருஷமாகுது. அதோடை என்ரை கடின உழைப்பு. எனக்கு உதுகள் விளங்காமலில்லை அண்ணை, என்னாலை விடமுடியேல்லை அண்ணை
நெல்லைலதங்கி ܥܠܫ

agafiliumzikallanoassassaf MN y
: சண்முதம், நீதான் அதைவிட யோசிக்கவேணும், அது உன்னை
5լbւկ
சண்மு :
தம்பு
சண்மு தம்பு
இடம்
127
விடாது. அதுசரி. நல்ல ஒரு சம்பந்தம் வந்ததாம் உன்ரை மூத்த மேளுக்கு நல்ல சம்பந்தம்தான் நான் ஒத்துக்கொள்ளயில்லை, அவளும்
எங்களைவிட்டுப்போனால் மிச்சமிருக்கிறதுகள்ை ஆர் பாக்கிறது?
மிச்சமிருக்கிறதுகளை ஆர் பாக்கிறதெண்டு சொல்லாதை உனக்கு குடிக்கிறதுக்கு ஆர் காசு தருவினம் எண்டு சொல்லு.
: அண்ணை.
என்னை ஏன் கோவிக்கிறாய்? உள்ளதைத்தர்னே சொல்லுறன்,
ஏதோ உன்ரை புத்திக்கு எட்டினபடி நட நான் வாறன்.
காட்சி - 08 தேவகி விடு
மாத்திரங்கள் : பாபு, கல்யாணி, தேவகி
LTL
56)urt :
Listu!
56) unt :
UTIL
asbourt
Uru
தேவகி :
TL .
; தேவகி, கல்யாணி. வீட்டை ஒருத்தரும் இல்லையோ?
வாங்கோ அத்தான் வாங்கோ. கொழும்பிலை வேலை செய்யிறியளாம்; உங்களைக் கண்டு ரெண்டு வருஷமாகுது. எப்படிச் சுகமாய் இருக்கிறியளே? உங்களுக்கென்ன கொழும்பு வாழ்க்கை ஜொலிதான்.
: கேள்வியைக் கேட்டு நீயே பதிலையும் சொல்லிவிட்டாய்
(இருவரும் சிரித்தல்) ஆ. எங்கை தேவகி? ஞாயிற்றுக்கிழமை எல்லாரும் நிப்பியள் எண்டு வந்தால்.
அக்கா மாக்கெட்டுக்குப் போயிட்டா, இண்டைக்கு வாங்கின்ால்தான் சாமான் ஒருகிழமைக்கு இருக்கும்.
: மாமாவும் வீட்டிலைதான் நிக்கிறார் புோல (சண்முகத்தைப்
பார்த்தவாறு)
; அவர் வெளியிலைபோக நேரமிருக்கு : இன்னும் மாமா குடியை விடயில்லை எண்டு தேவகி கடிதம்
எழுதேக்கை எழுதும்.
(தேவகி வருதல்)
அங்கை தேவகியும் வருகுது. பாபு அத்தானே, வரயுக்கை குரல்கேக்கவே நினைச்சனான். எப்ப கொழும்பாலை வந்தனிங்கள்?
: நேற்றைக்குத்தான் தேவகி, உண்மையைச் சொல்லப்போனால்
நெல்லைலதங்கி

Page 72
128
đợẩ})/r/ộđanăöáở 1h
தேவகி :
பாபு கல்யா :
பாபு
LЈПЦ
சண்மு
LЈПЦ
தேவகி
TL சண்மு :
இடம் :
உங்கடை கள்ளமில்லாத வெள்ளைமனம், இந்தக் கஷ்டத்திலும் தளராமலிருக்கிற உங்கடை மனஉறுதி, அத்தான் அத்தானெண்டு வாய்நிறைய அழைக்கிற அன்பு, இந்த சின்னஞ்சிறுசுகளின்ரை குறும்பு வார்த்தைகள் இதெல்லாம் என் ரை நெஞ்சைவிட்டு அகலுறதில்லை அதுதான் வந்தமுறுநாளே ஓடி வந்தனான்.
அப்பாடா, எங்கை கொழும்புபோனால் எங்களையெல்லாம் மறந்திடுவியளோ எண்டு நினைச்சம்.
; மறக்கிறதா. அதுவும் உங்களையா?
இந்தாங்கோ தேனிரைக் குடிச் சிட்டு அக்காவோடை கதையுங்கோ நான் படிக்கவேணும்.
: தேவகி, எவ்வளவு கெட்டிக்காரி நீர்; வீணாய் ரெஸ்ட் எடுக்காமல்
விட்டுட்டீர்.
இது முடிஞ்சகதை பாபு அத்தான்; என்னுடைய படிப்பைப் பாத்திருந்தால் இப்ப எங்கடை குடும்பமே அழிஞ்சிருக்கும். இப்பகூட நீங்கள் எங்களோடை கதைச்சுக்கொண்டிருக்க LDITIquoir
அதுசரி கொழும்புவாழ்க்கை உங்களை ஒரு சுற்றுப் பெருக்க வைச்சிட்டுது. சினிமா நடிகர்போல வடிவாயும் வந்திட்டியள்.
; அப்பநான் முந்தி வடிவில்லையோ?
(இருவரும் சிரித்தல்) (சண்முகத்தைப் பார்த்து) என்ன மாமா பேசாமல் இருக்கிறியள்? ஒரு கதையையும் காணன்.
: நீங்கள் இளசுகள் கதையுங்கோ, இந்தக் கிழட்டோடை என்ன
கதைக்கப்போறியள்?
ஏன் மாமா அப்பிடிச் சொல்லுறியள்? சரி தேவகி நான்
போட்டுவாறன். இன்னு ஒருமாதம் இஞ்சை நிப்பன். நிக்கிற நேரத்திலை அடிக்கடி வாங்கோ அத்தான்.
: கட்டாயம் வருவன் கல்யாணியிட்டைச் சொல்லு
(மனதுக்குள் முணுமுணுத்தல்) கட்டாயம் வருவாய் தானே.
காட்சி - 09 தனமாக்கியத்தின் வீடு
பாத்திரங்கள் : கல்யாணி, தேவகி, சண்முகம்
&66ðu uT : தேவகி :
அக்கா; அக்கா; அங்கை ஒண்டு தெருவில விழுந்து கிடக்குதாம். என்னடி சாதாரணமாய்ச் சொல்லுறாய், எங்கையாம்?
நெல்லைலதங்கி

29 sstundasaro
கல்யா : சங்கவி அன்ரிவிட்டுத் தெருவிலையாம், நான் எட்டிக்கூடப்
பாக்கயில்லை
தேவகி : தம்பி வாடா ஐயாவைத் தூக்கிக்கொண்டு. வருவம்
(இருவரும் சென்று சண்முகத்தை கைத்தாங்கலாக அழைத்து வருதல்)
சண்மு : என்னை ஒரு மாங்காய் மடையன் எண்டு நினைச்சுக் கொண்டிருக்கினம். தம்பண்ணை எனக்குப் புத்திமதி சொல்லுவார் (இருவரையும் விலக்கி விட்டு) எனக்கு என்ன வெறியோ. இஞண்ச பாருங்கோ நான் என்ன ஸ்ரெடியாய் நிற்கிறன். (விழப்போதல் - இருவரும் தாங்கிப்பிடித்து வீட்டுக்கு கொண்டு
வருதல்) கல்யா : அக்கா, இந்தாள் இந்த வீட்டிலல இருக்க வேணும்;
இல்லையெண்டால்.
சண்மு : இலி லையெணர் டால் எங் கையடி போகப் போறாயப் ? கொக்காவின்ரை தயவிலைதான் நீயே வாழுறாய். கல்யா : சீ. நீங்களும் ஒரு மனிசனே? சண்மு : மனிசன் இல்லாமல். கல்யா : மனிசன்தான் ஆனால் மனிசக்குணம் கொஞ்சமாவது
இருந்தாலெல்லோ. தேவகி : கொஞ்சம் பேசாமல் இரு கல்யாணி. கல்யா : (கோபமாக) அக்கா; உங்களுக்கு என்னாலும் பிரச்சினை, பொறுமைக்கும் ஒரு அளவுவேனும்; நீங்கள் படுகிற பாடு எங்களுக்குத்தான் தெரியும் அக்கா. சண்மு : கொக்காவின்ரை பணத்திலை நான் குடிக்கயில்லை. அவன் பாலன் வாங்கித்தந்தவன். தந்தது மாத்திரமே. உங்கடை கூத்துகளைப்பற்றியும் சொன்னவன்; எபபிடி என்ரை வாயாலை சொல்லுறது? தேவகி : என்னையோ சொன்னவன்? கல்யா : அக்கா என்னெண்டு கேளுங்கோ; அம்மா போனதிலிலையிருந்து இண்டுவரை ஒருத்தரும் விரல்மடிக்க முடியாத அளவுக்குத்தான் நாங்கள் வாழுறம். தேவகி : ஐயா, என்னண்டு சொல்லப்போறியளோ? இல்லையோ? சண்மு ; அதுதான் கொத்தான் பாபு, அவன் உங்கள் ரெண்டுபேரையும்
வைச்சிருக்கிறானாம்.
நெல்லைலதங்கி

Page 73
130 எதிர்பார்க்கைகள்
தேவகி : அதுக்கு நீங்கள் என்ன சொன்னனியள்? சண்மு : நான் என்னத்தைச் சொல்லுறது, நாளாந்தம் நானும்
பார்த்துக்கொண்டுதானே இருக்கிறன் தேவகி : (கோபத்துடன்) ஐயா..! கல்யா : பாத்தியே அக்கா, இதுக்குப்பிறகும். தேவகி : கல்யாணி எங்கை போறாய் கல்யா : விடு என்னை, இந்த மண்ணெண்ணையை ஊற்றிச் சாகப்போறன். இவ்வளவு நாளும் இந்தாளின்ரை ஆய்க்கினை தானே எண்டு பொறுத்தம் எங்கடை கற்புக்கே சோதனை வந்திட்டுது. தேவகி : ப்ளிஸ் கல்யாணி, நான் படுற வேதனை காணாமல் நீயும் ஏனம்மா என்னை வேதனைப்படுத்திறாய். விடிய ஐயாவோடை கதைப்பம்; கொஞ்சம் பொறுமையாய் இரு.
sitd - 10 இடம் : தனமாக்கியத்தின் வீடு பாத்திரங்கள் : கல்யாணி, தேவகி, சணர்முகம் தேவகி : கல்யாணி, கல்யாணி, எங்கை போட்டாள்? நேரத்தோடை எழும்புற பழக்கமும் இல்லை கல்யாணி. (ஒதுக்குப்புறமாக விழுந்து கிடத்தல்) இதென்ன கோலம். ஏன் கல்யாணி இதிலை படுத்திருக்கிறாய், எழும்பு? கல்யா : அக்கா, என்னாலை எழும்ப முடியேல்லை, தலை சுத்துது. தேவகி : வாயெல்லாம் மருந்து மணம், என்னம்ா குடிச்சனி? கல்யா : அக்கா என்னை மன்னிச்சிடுங்கோ பொலிடோலைக் குடிச்சிட்டன் தேவகி : கல்யாணி. ஐயோ. தம்பி இஞ்சை ஒடிவா. சண்மு : என்ன ஒரே சத்தமாய் இருக்கு (உறக்கம் கலைந்தவாறு
இவர்களின் இடத்திற்கு வருதல்) கல்யா : அக்கா தயவுசெய்து என்னைக் காப்பாத்த ஒண்டும்
செய்யவேண்டாம். தேவகி : அடிபாவி, என்ன வார்த்தையடி சொல்லுறாய், உன்னைச் சாகவிட்டுட்டு பார்த்துக்கொண்டிருக்கிறதோ? அம்மாவை இழந்தம், இப்ப உன்னையும் இழந்து என்னாலை வாழ முடியாது. தம்பி கார் பிடிச்சுக்கொண்டு ஓடிவா. ஐயா, இவள் கல்யாணியைப் பாருங்கோ நஞ்சு குடிச்சிட்டாளாம். சண்மு : என்ன? (அதிர்ச்சியுடன்)
நெல்லைலதங்கி

131 abunidasas
தேவகி : எல்லாம் உங்களலை; இப்ப திருப்திதானே. ஒவ்வொருத்தராய் காக்காட்டியிட்டு நீங்கள் மட்டும் தனிய தனிய; என்ன உங்களுக்குத்தான் குடி பக்கபலமாய் இருக்குதே; அதோடை நிம்மதியாய் வாழுங்கோ. சண்மு : பிள்ளை நீயும். கல்யா : எங்களைப்பற்றி மற்றவை எரிச்சல் பொறாமையிலை
கதைக்கலாம். இந்த ஐயாவுக:கு எப்பிடி மனம்வந்திது. சண்மு : பிள்ளை கல்யாணி; என்னை மன்னிச்சிடு. கார் வந்திட்டுது
மெல்லமாய் எழும்பு மோனை. கல்யா : நான் கொஸ்பிற்றலுக்கு வரமாட்டான் என்னைச் சாக விடுங்கோ. சண்மு : பிள்ளை கல்யாணி என்னை மன்னிச்சிடம்மா கல்யா : மன்னிக்கிறதாலை எங்களுக்குப் பிடிச்ச சாபக்கேடு
திரப்போறதில்லை. சண்மு : பிள்ளை என்னம்மா செய்யவேணும்.? கல்யா : இண்டையிலிருந்து நீங்கள் குடிக்கிறதை நிப்பாட்ட வேணும். சத்தியம் செய்து தாங்கோ. நான் ஆஸ்பத்திரிக்கு வாறன். அல்லது இந்த இடத்திலை கிடந்து செத்துப் போறன். சண்மு : பிள்ளை கல்யாணி, உன்னைச் சாகவிடமாட்டன்; இது சத்தியம்; உன்மீது ஆணை, என்ரை தனபாக்கியத்தின் மீது ஆணை நான் இந்தக்குடியை தொட்டுக்கூடப் பார்க்கமாட்டன். என்னை நம்பு. தேவகி : சரிதானே கல்யாணி, நேரம் போகப்பொக பயமாயிருக்கு சண்மு : ஆண்டவன் கைவிடமாட்டான். மெல்ல எழும்பம்மா
காட்சி - 11 இடம் : தனமாக்கியத்தின் வீடு மாத்திரங்கள் : தேவகி கல்யாணி, சண்முகம், பாபு சண்மு : பிள்ளை தேவகி, உந்த சாரத்தைத்தா கொத்துவேலை
இருக்காம் தம்பண்ணை சொன்னவர். தேவகி : ஏன் ஐயா நீங்கள் கஷ்டப்படுவான், குடியை விட்டிட்டு வீட்டிலை
இருக்கிறதே காணும். சண்மு : பிள்ளை; மனதிலை துணிவிருந்தல் உடல்பலம் தேவையில்லை. அந்தத் துணிவு கல்யாணி தந்திட்டுது. நீயும் பிள்ளை உன்ரை படிப்பைத் தொடரு. நீ இவ்வளவு காலமும் உழைச்சுப் போட்டது காணும்.
நெல்லைலதல்கி

Page 74
132
எதிர்பார்க்கைகள்
Lu தேவகி; தேவகி.
சண்மு : ஆர் தம்பி பாபுவேவாரும் வாரும். எப்ப கொழும்பாலை வந்தனிர்.
LJAT L- : போனகிழமை வந்தனான் மாமா.
எங்கையோ வெளிக்கிடுறியள் போலை.?
சண்மு : ஒம் ராசா, இனித் தான் நான் உடலை வருத்தி
உழைக்கப்போறன். நீர் இருந்து கதைச்சிட்டுப் போம்.
பாபு இனிப் போனால் வரமாட்டன்; இப்போதைக்கு இஞ்சாலை
6uguDTut-6öt
சண்மு : என்னதம்பி குண்டைத்துக்கிப் போடுறீர்
List அதுமட்டுமில்லை மாமா, எனக்குத் திருமணம் நடக்கப்
போகுது. இந்தாங்கோ அழைப்பிதழ்.
சண்மு : (அதிர்ச்சியுடன்) தம்பி.
தேவகி : வாழ்த்துக்கள் அத்தான்.
கல்யா : கங்கிறாயுலேசன் அத்தான்.
LJTL : மாமா யோசிக்காமல் போங்கோ என்னுடைய நட்பு உங்கடை
குடும்பத்தோடை தொடர்ந்துகொண்டு இருக்கும்.
- முற்றும் -
ஒலிபரப்புச் செய்யப்பட்ட திகதி : 10.01.1998
நெல்லைலதங்கி


Page 75
| မှားဦး - ၊း 11:3è : 4 :1: ܗܵܐ:
リー
碟锣 、 圈量、 一。リ
 
 
 
 
 
 
 
 

-エリ
、 、
| .
. . .
s ട്ട് :
స్తో ള ܕܼܪ06.a¬ܐ .