கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: என் தேசத்தில் நான்

Page 1
6 序 Ɛ § 6 o. | || [−] 5 ß 而 로비 CO
 


Page 2

്

Page 3


Page 4

«> Ab> db. (b. என் தேசத்தில்/நான் (பேராதனைப் பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் 37 கவிதைகள்)
தொகுத்தவர் செ.சுதர்சன்
V4/
LONASOdyLIGNJ
201-1/1, ரீகதிரேசன் வீதி, கொழும்பு - 13. தொலைபேசி: 2320721

Page 5
இது ஒரு மல்லிகைப் பந்தல் வெளியீடு
முதற் பதிப்பு : பெப்ரவரி - 2004
உரிமை : சங்கப்பலகைக்கு
Luisassiss6fi : 66+Xviii
விலை : 115/- (One Hundred Fifteen Rupees.)
அட்டைப்படம் சிக்கோ
அட்டை வடிவமைப்பு : எஸ். திவாகரன்
கணினி அச்சமைப்பு : எஸ். லிகோரின் றோசி
( ISBN: 955-8250-33-3
யு. கே. பிரிண்டர்ஸ், 98 A விவேகானந்த மேடு, கொழும்பு - 13. தொலைபேசி: 2344046, 074-614153

காகிதத்தில் கறிஸ்த 9றுளிச்சம்
பேராதனைப் பல்லைக்கழகம் சென்ற காலத்தில் இந்த மண்ணை இலக்கியத்துறையில் பிரகாசிக்கச் செய்துவரும் பல படைப்பாளிகளையும் விமரிசகர்களையும் உருவாக்கித் தந்த பல்கலைக்கழகமாகும்.
விரிவுரையாளர்கள் மாத்திரமல்ல, பல்கலைக்கழக மாணவர்களாக அன்று மிளிர்ந்தவர்கள், பின்னர் நாடு போற்றும் எழுத்தாளர்களாக உருவாகித் திகழ்வதை இலக்கிய 2லாம் நன்கறியும்.
இன்று இன்றைய காலகட்டத்தில் பேராதனைப் பல்கலைக் கழக மாணவ, மாணவியர் இருபத்திநாலு பேர் களுடைய 37 கவிதைகள் இந்த நூலில் இடம்பெறுகின்றன.
பல்வேறு மனப்பான்மையும் பல பிரதேசத்து வாழ்க்கைப் பின்னணியும் வாய்க்கப் பெற்ற இவர்கள், தமது கற்பனையில் தோன்றிய இலக்கிய வடிவத்திற்கு எழுத் துருவம் கொடுத்துக் கவிதைகளாக்கி இருக்கின்றனர்.
இதற்கு முன்னர், 2001 மார்ச் மாசத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 15 மாணவ, மாணவியரது சிறுகதைகளைத் தொகுத்து மண்ணின் மலர்கள் என்ற பெயரில் ஒரு நூலை மல்லிகைப் பந்தல் வெளியிட்டிருந்தது.
அந்த நூலில் இடம்பெற்ற சிறுகதைகளைச் சிருஷ்டித்த பல இளம் எழுத்தாளர்கள் இன்று நாடு போற்றும் எழுத் தாளர்களாக தரமான இலக்கியச்சுவைஞர்களால் அங்கீகாரிக்
iii

Page 6
கப்பட்டுள்ளனர் என்பது நமது கவனத்தில் கொள்ளத்தக்க தாகும்.
நாளை என்றொரு நாள் வரும்.
அந்தக் காலகட்டத்தில் இந்த நூலைத் தமது படைப்பு களால் அலங்கரிக்கும் சில படைப்பாளிகளாவது இந்த மண் ணின் சிறந்த எழுத்தார்கள் என முத்திரை பதிக்கப் பெற்று இலக்கிய உலகினரால் அங்கீரிக்கப்படுவார்கள் என்பது திண்ணம்.
இந்த நூலை மல்லிகைப் பந்தல் மூலம் நூலுருவாக்கித் தந்துதவ வேண்டுமென விடாப்பிடியாக வேண்டிக் கொண்டவர் மாணவநண்பர் செ.சுதர்சனவர்கள். இந்த நூலை தொகுத்தளித்தவர். அவருக்கு எனது நன்றி.
அதேபோல, இந்த நூலுக்கு அணிந்துரை நல்கிய எனது நீண்டகால நண்பரும் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த் துறைத் தலைவரும், சிறந்த கவிஞராகப் போற்றப் படுபவருமான பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் அவர்களுக்கும், முன்னுரையை எழுத்தில் பதிவு செய்து உதவிய கலாநிதி துரை.மனோகரன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.
எல்லாவற்றிற்கும் மேலாக இந்த நூலில் கவிதைகள் எழுதியுள்ள சகல மாணவக் கவிஞர்களுக்கும் மல்லிகைப் பந்தலின் சார்பாக எனது நன்றிகள் உரித்தாகட்டும். நாளைய இலக்கிய உலகம் உங்களிடமிருந்து தரமான படைப்புக்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. அந்த எதிர்பார்ப்பை நீங்கள் ஒவ்வொருவரும் நிச்சயமாக நிறைவேற்றி வைப்பீர்கள் என்ற அசைக்க முடியாத நல்லெண்ணமும் நம்பிக்கையும் என்னிடம் நிறையவே உண்டு.
- டொமினிக் ஜீவா
4-02-2004

என் தேசத்தில் நூல் அணிந்துரையாகச் சில குறிப்புகள்
ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் பேராதனைப் பல்கலைக்கழகம் கடந்த சுமார் அரை நூற்றாண்டு காலமாக முக்கிய பங்காற்றியவந்திருக்கின்றது. இலக்கியக் கல்வி, இலக்கிய ஆராய்ச்சி, இலக்கியத் திறனாய்வு, ஆக்க இலக்கியப் படைப்புகள் முதலிய துறைகளில் இதன் பங்களிப்பு கணிசமானது. இன்று ஈழத்தின் முக்கிய விமர்சகர் களாகவும், படைப்பாளிகளாகவும் கருதப்படும் பலர் இப்பல்கலைக்கழகத்தில் பயின்றவர்களே. 1970களின் நடுப் பகுதிவரை பேராதனைப் பல்கலைக்கழகமே இலங்கைத் தமிழ் கலை, இலக்கிய நடவடிக்கைகளின் புலமைசார் மைய மாக விளங்கியது. இப்பல்கலைக்கழத் தமிழ்த்துறையே இந்நடவடிக்கைகளை நெறிப்படுத்தும் கேந்திரமாகவும் அமைந்தது.
1974ல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடங்கப் பட்டமை, அதைத் தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக பிராந்தியப் பல்கலைக்கழகங்கள் தோற்றம் பெற்றமை, 1980க்குப் பின் இன முரண்பாடு உக்கிரமடைந்தமை முதலிய காரணங்களால் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி மூலம் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை வெகு வாக குறைந்ததோடு, தமிழ்க் கலை இலக்கிய மையம் என்ற நிலையையும் அது இழந்தது. எனினும் 1990களில் பேராதனை

Page 7
படிப்படியாக கலை இலக்கியத் துறையில் புத்துயிர் பெறுவதைக் காண்கின்றோம். ஆண்டு தோறும் இலக்கிய ஆர்வம் மிக்க மாணவர்களின் வருகையும், அவர்களின் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் புறநிலைத் தூண்டல்களும், பல்கலைக்கழகத்துள் இனமுறுகல் தளர்ந்து சுமூக நிலை தோன்றியதும் இதற்குச் சாதகமாய் அமைந்த காரணிகள் எனலாம். இப்புத்துயிர்ப்பின் அடையாளங்களுள் ஒன்றா கவே "என் தேசத்தில் நான் என்னும் இக்கவிதைத் தொகுப்பு அமைகின்றது. பல்கலைக்கழகச் சங்கப்பலகையில் ஏற்க னவே பல மாணவர்கள் படித்து ரசித்த இக்கவிதைகள் இப்போது முதல் முறையாக நூலுருப் பெறுகின்றன.
பேராதனைப் பல்கலைக்கழகக் கலைப்பீடத்தில் அமைந்துள்ள சங்கப்பலகை இலக்கிய ஆர்வமுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கான ஒரு வெளியீட்டுக் களமாகவும், எழுதுவதற்கான தூண்டுகோலாகவும் செயற் பட்டு வந்திருக்கின்றது. இதனை ஒரு கையெழுத்துச் சுவர்ச் சஞ்சிகை எனல் பொருந்தும். தமிழ்த்துறையின் பொறுப் பிலுள்ள இச்சுவர்ச் சஞ்சிகையில் மாணவர்கள் ஆர்வத்துடன் தங்கள் படைப்புகளை வெளியிட்டு வந்துள்ளனர். பேராசிரியர் தில்லைநாதன் இதனைத் தொடங்கி வைத்தார். கலாநிதி துரை. மனோகரன் உத்தியோகப்பற்றற்ற முறையில் சங்கப்பலகையின் பொறுப்பாளராக இருந்து மாணவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
கடந்த சுமார் பத்தாண்டுக் காலப் பகுதியில் சங்கப் பலகையில் இடம்பெற்ற ஏராளமான கவிதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 37 கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன. 24 இளம் கவிஞர்கள் இவற்றை எழுதியுள்ளனர். இளங் கவிஞர்கள் எனினும் இக்கவிதைகள் இவர்களின் கவித்துவ முதிர்ச்சியை இனங்காட்டுகின்றன. சில கவிதை வரிகள் வியப்பூட்டும் கவித்துவ வீச்சைக் கொண்டுள்ளன. உதாரணமாக, நிழலின் காலடியோசைகள்' என்ற தலைப்பில் அமைந்துள்ள ஒரு கவிதையை மட்டும் நான் இங்கு சுட்டிக் காட்டலாம். தலைப்பிலேயே கவித்துவ வீச்சு வெளிப்
w

படுகின்றது. இளம் உள்ளத்தின் ஒருதலைக் காதல் உணர்வை கவிதையின் ஒவ்வொரு படிமமும் மனதைக் கவ்வும் வகையில் வெளிப்படுத்துகின்றது.
காற்றென்னைக்
கடந்துபோகையிலும்
நிழலென்னைத்
தொடர்ந்து வருகையிலும்
அதன் காலடியோசை
உன்னுடையதோவென
திடுக்கிட்டுத்
திரும்புகிறேன்
என்ற இறுதி வரிகள் இடையறாது எதிர்பார்ப்பில் தவிக்கும் உள்ளத்தின் பதற்றத்தைச் சொற்சிக்கனத்துடன் வெளிப்படுத்துகின்றன. இத்தகைய கவிதை வரிகள் பல வற்றைக் கொண்ட பெண்களின் காதல் கவிதைகள் சில இத்தொகுப்பில் உள்ளன. மனஉறவின் நெருக்கத்தையும், தூய அன்புக்கான வேட்கையையும் அவை வெளிப்படுத்து கின்றன. ஆண்கள் எழுதும் உடல் வேட்கை சார்ந்த காதல் கவிதைகளிலிருந்து அவை நுட்பமான முறையில் வேறுபடு கின்றன. இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளவர்களுள் சுமார் அரைவாசிக் கவிஞர்கள் பெண்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. பெண்களின் அக உணர்வும், சமூக, அரசியல் பிரக்ஞையும் இக்கவிதைகளில் அவர்களுக்கே உரிய மொழி யில் வெளிப்படுவது ஒரு முக்கியமான அம்சமாகும். தலைப்புக் கவிதையான 'என் தேசத்தில் நான் ஷர்மிளாவின் தாக்கமான அரசியல் கவிதை என்பதும் கவனிக்கத்தக்கது.
ஆண்களாயினும் பெண்களாயினும் பேராதனையின் வளமான இலக்கியப் பாரம்பரியத்தின் வாரிசுகளாக உரு வாகும் தகுதி இதில் இடம்பெற்றுள்ள கவிஞர்கள் அனை வருக்கும் உண்டு என்பதை இத்தொகுதி உறுதிப்படுத்து கின்றது. பரந்த படிப்பறிவாலும் அனுபவத்தாலும் அவர்கள் தமது ஆற்றலை மென்மேலும் வளர்த்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
νii

Page 8
இக்கவிதைகளைத் தேர்வு செய்து தொகுத்தளிக்கும் செ.சுதர்சன் தமிழ்த்துறையில் பயிலும் மூன்றாம் வருட மாணவன். இலக்கிய ஆர்வம் மிக்கவர். தானே ஒரு கவிஞர். அவர் நம் பாராட்டுக்குரியவர். அவரது முயற்சியில் விரிவுரையாளர்கள் சிலரும் உதவியுள்ளனர். அவர்களுக்கும் நமது பாராட்டுக்கள்.
சங்கப்பலகையில் நான் படித்து ரசித்த சில கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெறவில்லை என்று நினைக்கின் றேன். பக்கவரையறை காரணமாக சில நல்ல கவிதைகளும் விடுபட்டிருக்கலாம். இன்னொரு தேர்வில் அவை பிறிதொரு தொகுப்பாக வரலாம், அல்லது இரண்டாம் பதிப்பில் அவற்றையும் சேர்த்து இத்தொகுப்பை இன்னும் சற்று விரிவு படுத்தலாம். சங்கப் பலகையில் எழுதிய எல்லாக் கவிஞர் களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் என் பாராட்டைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மல்லிகைப் பந்தல் வெளியீடாக இத்தொகுப்பை வெளியிடும் நண்பர் டொமினிக் ஜீவா அவர்களுக்கும் எனது நன்யுறிப் பாராட்டுக்களும்.
பேராசிரியர்
எம்.ஏ.நுஃமான் தலைவர், தமிழ்த்துறை பேராதனைப் பல்லைக்கழகம் பேராதனை.
21-01-2004
viii

தொகுப்qரை
பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் பொறுப்பில் உள்ளது, ‘சங்கப்பலகை" அதில் அரங்கேறிய கவிதைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 37 கவிதைகளே இத் தொகுதியில் அச்சுருப் பெறுகின்றன. 'என் தேசத்தில் நான் என்ற இத்தொகுப்பில் உள்ள கவிதைகளின் கர்த்தாக்கள் அனைவருமே இளங் கவிஞர்கள். என்னைப் போன்ற மாணவர்கள் என்பது மகிழ்வு தரும் விடயம்.
சங்கப்பலகையில் கவிதைகள், கட்டுரைகள், ஒவியங் கள்,துணுக்குகள், படித்துச்சுவைத்தவைகள் முதலியன வாரந் தோறும் அரங்கேறும். இவற்றில் பெருமளவிலானவை கவிதைகளே.
உணர்வினை வெளியிட உகந்த ஊடகம்.
பேராதனையின் கவின்மிகு சூழல்.
நேரச் சிக்கனம்.
பரந்துபட்ட வாசகர் கூட்டம்.
எழுதுவோரில் பெரும்பான்மையானோர் கவிஞர்கள்.
இவற்றையும் இன்னும் பலவற்றையும் பெருமளவி லான கவிதைகள் அரங்கேறக் காரணங்களாக அடுக்க முடியும்.
வெள்ளி தோறும் தமது கருத்துக்களை வெளிப்படுத்தி
அவற்றின் எதிர்வினைகளைப் பெறுவதும், ஆத்மதிருப்தி அடைவதும் சங்கப்பலகை படைப்பாளிகளின் இயல்பு
iX

Page 9
நிலை. அரங்கேறும் ஆக்கங்கள் சில நீண்ட சர்ச்சைகளை அவ்வப்போது ஏற்படுத்தும். கவிதை, கட்டுரை என்பன வற்றை ஆயுதமாகக் கொண்டு சுவாரசியமான மோதல்கள் நடக்கும். சிங்கள மாணவச் சோதரரும் அவ்வப்போது தம் ஆக்கத்தை தமிழில் அலங்கரிப்பர். இவை சங்கப்பலகை மாணவர் மத்தியில் பெறும் முதன்மையை விளக்கும்.
கற்றல், ஆய்வு செய்தல் என்பவற்றைவிட ஆக்க முயற்சி களிலேயே ஒருவனின் 'சுயம் அதிகம் வெளிப்படும். இது வெளிப்படை. எமது பல்கலைக்கழக மாணவர்களின் சுயம்’ காண்பதற்கு சங்கப்பலகையே தக்க உரைகல், மாணவர்களின் ஆக்கங்களை மல்லிகைப் பந்தல் வெளியிடுவது அச்சுயத்தின் தரத்திற்குக் கிடைத்த அங்கீகாரம்.
வாரந்தோறும் படித்த கவிதைகள் பதிவாகாமற் போய் விடுமோ என்ற அச்சத்தால் எழுந்ததே இந்த அரிய முயற்சி. ஈழத்து இலக்கிய இயலில் பேராதனை பதித்த பெருந் தடங்களில் இதுவும் ஒன்றாக அமைந்து இனிமை சேர்க்கும் என நம்புகிறேன்.
ஒரு சில ஆண்டுகளுக்கு முன் இந்த முயற்சியில் இறங்கி யோர் பூரீபிரசாந்தன், நிலாவெளி சர்மிளா. இருவரும் தமிழ்த்துறையின் முன்னாள் தற்காலிக விரிவுரையாளர்கள். சங்கப்பலகைக்காய் கவிதை சமைத்தவர்கள். அவர்களின் முயற்சி காலத்தால் கைகூடாமற் போயிற்று. எனினும் விருட்சமாகும் இந்த நூலுக்கு வித்திட்டோரை நன்றியோடு வியக்கிறேன். இத்தொகுப்பு முயற்சியில் நான் இறங்கிய போது என்னை மல்லிகை ஆசிரியருக்கு அறிமுகம் செய்து வைத்தவர், பூரீபிரசாந்தன். அவருக்கு மீண்டும் என் நன்றிகள்.
கலாநிதி துரை.மனோகரன் அவர்கள் 12 வருடகாலமாக அரங்கேறிய கவிதைகளை முழுமனதோடு எனக்கு அளித்தார். தெரிவு முயற்சியில் இறங்கியபோது சமகாலத்தில் அரங்கேறிய கவிதைகளை முழுவதுமாகப் பெறுவதற்கு இறுதிவரை முயற்சி செய்தேன். முயற்சி ஓரளவு கைகூடியி ருப்பது மகிழ்ச்சி. ஒருசில கவிதைகள் விடுபட்டுப் போயிருக்

கலாம். தவறியவற்றில் தரமானவை கிடைப்பின் அடுத்த பதிப்பிலோ அல்லது இன்னொரு தொகுப்பிலோ அவை சேர்த்துக்கொள்ளப்படலாம்.
கிடைத்தவற்றுள் தரங்கொண்டு தேர்வு நிகழ்த்தி 37 கவிதைகளைத் தெரிவு செய்தேன். பொருள் திறனும், கவித்துவக்கூர்மையும் கருதிய தெரிவு இது. நூலின் ஒருமைப் பாடும் ஒருசில விலத்தல்கள் நிகழக் காரணமாயிற்று. தெரிவின் பின்னான ஒழுங்கமைப்பு வாசக நிலையிலிருந்து செய்யப்பட்டது. மிகக் குறுகிய காலத்தில் தெரிவு, ஒழுங் கமைப்பு என்பனவற்றை மேற்கொண்டு மேற்பார்வைக்காக துரை. மனோகரன் அவர்களிடம் ஒப்படைத்தேன். தக்கதோர் தரம் நிறுத்துத் தந்த பின்னர் மற்றோர்க்காய் மலர்கிறது இத்தொகுப்பு.
அணிந்துரை அளித்து இம்முயற்சியில் என்னை ஊக்கப் படுத்தியவர் எனது பேராசான், தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் அவர்கள். அவர் தமக்கு என் நன்றிகளும் வணக்கங்களும். தமிழ் உலகின் அங்கீகாரம் பெற்ற அவர் தம் அங்கீகாரம் இந்நூலுக்குக் கிடைத்த மணி மகுடம்.
முன்னுரை தந்தவர் சங்கப்பலகைப் பொறுப்பாசிரியர், விரிவுரை வகுப்புகளிலும், பிரத்தியேகமாகவும் சங்கப் பலகைக்கு எழுதுமாறு இளையோரைத் தூண்டும் ஏந்தல், என்னை இம்முயற்சியில் இறக்கி வழகாட்டியவர், இம் முயற்சியின் மேற்பார்வையாளர், எனது ஆசான் கலாநிதி துரை. மனோகரன் அவர்கள். அவர் தமக்கும் என் நன்றிகள்.
வெளியிட்டு வைப்பவர் மூத்த இலக்கியவாதி திருமிகு டொமினிக் ஜீவா. மல்லிகை ஆசிரியர். வெளியிட்டது மாத்திரமன்றி ஆக்கபூர்வமான ஆலோசனைகளும் வழங் கியவர். அவருக்கும் என் நன்றிகள்.
அட்டைப் படத்தால் இந்நூலை அழகும் அர்த்தமும் பெறச் செய்தவர், ஓவியர் சிக்கோ. அவருக்கும் நன்றிகள்.
xi

Page 10
சங்கப்பலகையில் தக்க நேரத்தில் தவறாது ஆக்கங்களை அரங்கேற்றி எம்மை மகிழ்வித்தவர் பெரியார் வஹாப் நானா அவர்கள். அவருக்கு அன்பு கலந்த நன்றிகள்.
இத்தொகுதியில் இருக்கும் கவிதைகளை யாத்த என் சக கவிஞர்களையும் இந்தவேளையில் நன்றியோடு நினைகூறு கிறேன். சங்கப்பலகை வாசகர்கள் பல திறப்பட்டவர்கள். மாணவர்கள். விரிவுரையாளர்கள், சுற்றுலாப் பிரயாணிகள் வாசிப்பதோடு மட்டும் அமையாது, பாராட்டும் தருபவர்கள். அவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.
மிகக் கடிமான உழைப்பின் மத்தியிலேயே இத்தொகுதி வெளிவருகிறது. பல்கலைக்கழக வாழ்க்கையில், விரிவுரை வகுப்புகள், பரீட்சைக்கான ஆயத்தங்கள், ஒப்படைகள், ஆய்வுத் தேடல், கற்றல், ஆக்க முயற்சிகள் என வேலைகள் பலவாக நேரம் மருந்தாயிற்று. இவற்றுக்கிடையில் இம் முயற்சிக்கும் நேரத்தைத் தேடவேண்டியதாயிருந்தது. பெரியோர் தந்த ஊக்கமும் இறைவன் திருவருளுமே இம் முயற்சியைக் கைக்கூட்டிற்று எனலாம். மாணவர்களைக் கல்வி முயற்சியைக் கடந்து, ஆக்க முயற்சியிலும் ஈடு படுத்தும் ஆசிரியப் பெருந்தகைகள் கிடைத்தது எம்பேறு. சங்கப்பலகையில் எழுதியவர்களில் ஒருவன் என்ற வகையில் இத்தொகுதி வெளிவருவதில் பெருமிதமும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.
ஆக்கபூர்வமான விமர்சனங்களை ஆவலோடு எதிர் பார்க்கிறேன். அவை அடுத்ததொரு தொகுப்பிற்கு அத்திவார மாக அமையும் என்றும் நம்புகிறேன்.
நன்றி.
தொகுப்பாசியர் செ.சுதர்சன் தமிழ் விசேடதுறை மாணவன் பேராதனைப் பல்கலைக்கழகம் 21-01-2004
xii

முன்னுரை
பேராதனைப் பல்கலைக்கழகக் கலைப்பீடத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் கலை இலக்கிய வெளிப்பாட்டுக்குக் களம் அமைப்பதாகச் 'சங்கப்பலகை" விளங்குகின்றது. இப்பல்கலைக்கழகக் கலைப்பீடத்தின் தமிழ் பேசும் மாணவர்கள் தமது எழுத்தாக்கங்களை வெளிப்படுத்து வதற்குத் தகுந்த களமொன்றினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென 1991ஆம் ஆண்டளவில் நானும், நண்பர் கலாநிதி எம்.எஸ்.எம்.அனஸும் (மெய்யியல்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்) விரும்பினோம். எமது எண்ணத்தைச் செயற்படுத்துவதற்கென அப்போதைய தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் சி. தில்லைநாதன் அவர்களை அணுகினேன். அவரும் மனவிருப்போடு அதற் கான அனுமதியை வழங்கினார். மிக விரைவிலேயே "சங்கப் பலகை என்ற பெயரில் ஓர் எழுத்துக்களம் தமிழ்த்துறையை ஒட்டியதான சுவரில் உருவானது. நான் எதிர் பார்த்ததைப் போன்றே மாணவர்கள் முன்வந்து தமது எழுத்துத் திறனை வெளிப்படுத்தத் தொடங்கினர். சிலர்தமது ஓவியங்களையும் காட்சிப்படுத்தினர். தமிழ்த்துறைச் சிற்றூழியராக இருந்து அண்மையில் ஒய்வுபெற்ற ஜுமாறுான் வஹாப், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நான் தெரிவு செய்து கொடுக்கும் மாணவரின் எழுத்தாக்கங்களைச் சங்கப்பலகையிற் காட்சிப்படுத்தி, மாணவர்களை மகிழ்விப்பார்.
xiii

Page 11
சங்கப்பலகையில் இடம்பெற்றுவரும் இளங் கவிஞர் களின் கவிதைகளை ஒரு தொகுதியாக வெளியிட வேண்டும் என்பது எனது நீண்டநாள் பேரவா. அது இப்போது நிறை வேறுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு முன்னரும் ஒரு தொகுப்பு முயற்சி நடைபெற்றது. எனது மாணவர்களும், பேராதனைப் பல்கலைக்கழகத்தமிழ்த்துறை விரிவுயாளர்களாக இருந்தவர்களுமான பூரீ பிரசாந்தன், நிலாவெளி ஷர்மிளா ரஹீம் (இத்தொகுதியில் அவர்களது கவிதைகளும் உள்ளன) ஆகியோர் முதன் முதலில் தொகுப்பு முயற்சி ஒன்றை மேற்கொண்டனர். எனினும், அவர்களது முயற்சி நிறைவேற முடியாமற் போய் விட்டது. அதன் பின்னர், இப்போது பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் சிறப்புக்கலை மாணவரான செ.சுதர்சன் "என் தேசத்தில் நான்” என்னும் புதிய இத்தொகுப்பு முயற்சியை மேற்கொண்டார். ஏறத்தாழப் பன்னிரண்டு ஆண்டுகளில் எழுதப்பட்ட கவிதை களிலிருந்து மிகத் தரமானவற்றைத் தேர்ந்தெடுப்பதென்பது இலகுவான ஒரு காரியமன்று. அதனைத் தனியொருவராக நின்று பொறுமையாகவும், விரைவாகவும் செய்து முடித்துள்ளார், சுதர்சன். அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்!
இத்தொகுப்பு முயற்சி முகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், கவிதைத் தரத்துக்கே முதன்ம்ை கொடுத்து மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. கவிதைத் தேர்வில் தொகுப் பாளர் போதிய கவனம் செலுத்தியுள்ளார் என்பது தொகுப் பில் இடம் பெற்ற கவிதைகளைப் புரட்டிப் பார்க்கும்போது தெள்ளெனத் தெரிகிறது. 24 கவிஞர்களின் முப்பத்தேழு கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இலங்கை யின் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் பேராதனைப் பல்கலைக்கழகம் வந்த மாணவர்களின் இயல்புகளும், நோக்குகளும், ஆர்வங்களும், திறமைகளும் இத்தொகுப்பின் கவிதைகளிற் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இத்தொகுதியிலுள்ள கவிதைகளை ஒருங்கு நோக்கும் போது உலக அரசியற் பார்வை, பேரினவாதம் கவிந்த
Xiv

இலங்கையின் அரசியற் சூழ்நிலை, போர் ஏற்படுத்திய அழிவுகள், சமூக வன்முறைகளுக்கு எதிரான எதிர்ப்புணர்வு, ஆணாதிக்கம் மீதான தார்மீக கோபம், தனிமனித உணர்வு களின் வெளிப்பாடு, இயற்கைச் சித்திரிப்பு, இயற்கைச் சித்திரிப்பினுடாக உணர்வின் அலசல்கள் முதலான பல்வேறு அம்சங்கள் இடம்பெறுவதைக் காணலாம். இக்கவிதைகள் வெறும் செய்திகளின் வெளிப்பாடுகளாக மாத்திரம் அம்ை யாது, கவிஞர்களின் கவித்துவ ஆற்றலையும் ஒருங்கே புலப்படுத்துவது திருப்தியைத் தருகிறது. திறமை வாய்ந்த இளங் கவிஞர்களின் படைப்புகளை ஒருங்கேதரிசிப்பது என்பது ஒரு வரப்பிரசாதம். அதனை இத்தொகுதியில் அனுபவிக்க முடிகிறது என்பதும் ஓர் இலக்கியப் பாக்கியம்,
இத்தொகுதியில் இடம்பெற்றுள்ள எல்லாக் கவிதை களுமே மனதை நிறைத்திருக்கின்றன. அவற்றுள் சில கவிதைகள் கவிதையின் சிகரத்தைத் தொட முயற்சிக்கின்றன. மரீனா இல்யாஸின் கனவுகள்... 1, கற்பிழந்த கதா நாயகனுக்கு..!, எம்.எம்.விஜிலியின் நேற்றைய மழை, நிலாவெளி ஷர்மிளா றஹீமின் சிவப்பு உலகம், ஒரு கறுப்பு இரவில், பூரீபிரசாந்தனின் அழைப்பு, முதலில் முடிதல், ஏ.எம்.எம்.சியாத்தின் அவர்களுக்காய்., லறினா ஹக்கின் வீசுக புயலே, மன்னார் மூன்றாம்பிறையின் கோடை, மனப்பசி, ஜெஸிமா ஹமீட்டின் நிழலின் காலடியோசைகள், நஸ்ரா நிசாமின் நிமிட சுட்டித்தனம், சே.சுதர்தனின் மெளனத்தின் அழுகையில், கிராமத்துக் கனவுகள், இறக்காமத் தென்றலின் கண்ணீரோடு., யாழினியின் காத்திருக்கிறேன்! முதலான கவிதைகள் அத்தகையவை. உதார்ணத்திற்கு மாத்திரம் ஒரு கவிதையை முழுமையாகத் தருகிறேன்.
வானத்தாச்சியில் அப்பம் சுட்டு மேகச் சம்பலோடு வாய் நிறைய உண்டேன்
XV

Page 12
சூரியக் கல்லில் ரொட்டி சுட்டு நிலாமுட்டை அவித்து நிதமும் சாப்பிட்டேன்.
நட்சத்திரப் பொறிகளையெல்லாம் வாய் முழுக்க போட்டுக் கொறித்துத் தள்ளினேன்.
வானவில்லை நூறு துண்டுகளாய் நறுக்கியெடுத்து நெய் தோய்த்து நாவொழுகச் சாப்பிட்டேன்.
பொழிகின்ற மழையெல்லாம் பூமியில் விழாதபடி கையேந்திக் குடித்தேன்.
G೫. தீருவதாவேயில்லை மனப்பசி.!
(மனப்பசி - மன்னார் மூன்றாம் பிறை)
சங்கப்பலகை யின் இத்தகைய அறுவடைகளை நூலுருவில் பார்க்கும்போது மகிழ்ச்சியாகவும், பெருமித மாகவும் இருக்கிறது. நமது பல்கலைக்கழக இளங் கவிஞர் களின் பங்களிப்புக் குறித்து மனந்திறந்து பாராட்டத் தோன்று கின்றது. ஒரு பெரிய சோகம் என்னவெனில், இத்தொகுதியில் இடம்பெற்ற கவிஞர்களுட் கணிசமானோர் பல்கலைக் கழகத்திற் படித்தபோது காட்டிய கவியார்வத்தைப் பின்னரும் காட்டப் பெரிதும் முயற்சிக்கவில்லை என்பது தான்.
இளங் கவிஞர்களது இக்கவிதைத் தொகுதியை இலங்கையின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான டொமினிக்
Xν

ஜீவா அவர்கள் தமது மல்லிகைப் பந்தல் மூலம் வெளி யிடுவது மகிழ்ச்சிக்குரியது. இத்தொகுதி வெளிவருவதில் மிகுந்த ஆர்வம் செலுத்தும் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் அவர்களும் எமது நன்றிக்குரியவர்.
இக்கவிதைத் தொகுதி இலங்கையின் இளம் படைப் பாளிகளின் ஆர்வத்தையும், ஆற்றலையும் புலப்படுத்துவது மாத்திரமன்றி, இந்நாட்டின் கவிதைப்போக்கின் ஒரு வெட்டுமுகத் தோற்றத்தையும் இனங்காட்டும் என்பது எனது நம்பிக்கை.
கலாநிதி துரை.மகோனரன்
தமிழ்த்துறை பேராதனைப் பல்கலைக்கழகம், பேராதனை, இலங்கை. 21-01-2004
Xvii

Page 13
upopulus)
ஒரு சிலரின் விளையாட்டு வினையாக
பகிடிவதையால்
உயிர்நீத்த சகோதரன் வரப்பிரகாஷ் சகோதரி இரட்ணசீலி
ஆகிய
இருவர்தம் ஆத்மசாந்திக்கு இக்கவி மலரைப் பிராயச்சித்தமாய்ப் படைக்கிறோம்.
XViii

8oCLGO
- குறிஞ்சிக்கிழான்
இயற்கையின் வெகுமதி
சூரிய பகவான் என்னில் அஸ்தமனம்.
நிலவைப் பிரசவிக்கும் அன்னை.
நான் - ஞானி ஆழ்கடலில் நான் அமைதி ஓரங்களில் சலசலப்பு - அது நானல்ல என் உறவினர்கள் ஆர்ப்பரிப்பு பாவம் -
தலை வீக்கங்களால் தலைகளையே உடைத்துக் கொள்கிறார்கள். அதில் - உங்களுக்கும் போதனை உண்டு
எனக்கும் ரோசம் வரும் அப்போது குமுறுவேன். சுழிகள் - இசை
என் நெற்றிக் கண்கள்

Page 14
குழந்தைகளே. என்மேல் சவாரி செய்யுங்கள். உதவுதல் என் கடன்.
என் முள்ளந்தண்டுப் பாதைகளில் செல்லுங்கள். திசையறியா அறிவீனர்கள் - என்னில்
தட்டுப்பட்டு முட்டிகளை இழக்கிறார்கள். ஒரு பெண்ணின் மனதில் நான் தோற்றுப் போகிறேன். ஏனெனில்,
அவள் மனம்
என்னைவிட ஆழமான(தாம்)து! நீலம் பச்சை என்று கட்சி நிறங்களில் நெகிழ்ந்திருப்பேன் என்று நினைக்கிறீர்களா? ஊஹஉம், அது உங்கள். கண்களின் மாயை. கட்சிவாதிகளை என்னுள் அனுப்புங்கள். காட்சி கதைவசனம் முடிவுவரை சொல்லிக் கொடுக்கிறேன்.
ஆங்காங்கு என் சிறு சீற்றங்கள். அழிவுக்காக அழுகிறேன். அழுவதால் அழுகிறார்கள். மனங்களின் முறிவுகள் நம்பிக்கை இழந்த தனங்கள் எல்லாம் என்னிடம் சங்கமம்.

பரிதாபம். உடைந்த உள்ளங்களின் திருப்திக்காய், உயிர்களை மட்டும்
வாங்குகிறேன்.
அத்தாட்சிக்காய் உடம்புகளை ஒதுக்குகிறேன்.
தோழர்களே! காதுகளைக் கூர்மையாக்குங்கள். கேளுங்கள்! என் அலையொலிகளைப் போல் உலகம் வெறும் சப்தம். பெரும் ஆர்ப்பாட்டம் முடிந்தால் என்னுள் சுழியோடுங்கள். அங்கே அமைதியின் பெறுமானம் முத்திரை பதிக்கும்.
இரவில் நான் கடனாளி பகலில் நான் கொடையாளி
தோணி, படகு, கப்பல்
எதுவாகட்டும் என்னில் பிரயாணிக்கட்டும் உழைப்புக்களை மதிக்கிறேன். மனித இராட்சத போர்வையில் வரும் மிருகங்களை வழிபார்க்கிறேன்.
நன்றி என்றால் என்ன? நாவுக்குச் சுவை சமையல் என்றால் என்ன? எப்படிப் பார்த்தாலும் என் வியாவைத் துளி அது - என் கொடை
மனித குணம் எனக்கும் தொற்றி விட்டதோ? யோசிக்கிறேன்.
சிலவேளைகளில்
3

Page 15
மண்ணை அரித்து விழுங்கிக் கொள்கிறேன்.
இளைய குருதிக் குமுறல்களே! புதிய புலர்வுகளே விஞ்ஞானிகள்
மெய்ஞ்ஞானிகள் எவருமே அறிந்திலர். என் ரகசியங்களின் மூலங்களைத் தேடுங்கள். நிச்சயமாய்
வரலாறு உங்கள் பெயர்களைத் தாங்கும்.
 

பதலிகள் நிருந்தகும் இல்லை.
காலம் மாறும். நிறங்கள் வெளுக்கும்.
உறவுகள், வெட்டி விலகும்.
மனைவி - பத்திரிகைக்குக் கூட, அருகிலிருந்து
போஸ்’ தரமாட்டாள்.
கழுத்து(க்)கள் - மாலைகள் இல்லாமல் கனப்பதாக இருக்கும்.
கண்கள் - கத்தரிக்கோல்களைக்
காணும்போது
கைகள் அரிக்கும்.
ஓய்வில்லாமல் உழைத்த தொலைபேசிகள் தொலைபேசியாகி கட்டாய ஓய்வூதியம் பெற்றுக்கொள்ளும்.
முன்னா(ல்)ள் பாதுகாவலர்கள்
5
- குறிஞ்சிக்கிழான்
விஷ(ய)மாய்ப் புன்னகைப்பர்.
காதுகள்
எங்கோ. கைதட்டல்கள் ஒலிப்பது போல் உணரும்.
மூக்குகள் பன்னீர் வாசமின்றி மூச்சுவிட மறுக்கும்.
சிற்றுண்டிகளால் தொந்தி போட்ட வயிறு வசதியாய் இளைத்துப் போகும். முடிவில் ஓர் அரசியல்வாதி மனிதனாகிப்
போவா(னா?)ன்.
காலம் மாறும் நிறங்கள் வெளுக்கும்.

Page 16
கனஉகள்.
- முரீடி இல்லாஸ்
என் இரவுகளைப்பற்றி உனக்கு
ஏதேனும் தெரியுமா..? சொல்கிறேன் கேள்.!
ஒரு வசந்தத் தேரில் என்னை உட்கார வைத்துக்கொண்டு நீ வானவெளியெங்கும் சுற்றித் திரிகிறாய்.
நட்சத்திரப் பூக்களைப் பறித்து மாலை தொடுத்து என் தோளுக்குச் சூட்டி மகிழ்விக்கிறாய்..! நிலவுக் கண்ணாடியை எடுத்து எனக்கு முகம் பார்க்கத் தருகிறாய்..! மேகக் கூட்டத்துக்குள் மறைந்து கொண்டு ஒளிந்து விளையாடுகிறாய்..! உன்னைத் தேடிக்களைத்துக் காணாமல் நான் தவிக்கும்போது மின்னலாய்ச் சிரித்து என்னை மெய்சிலிர்க்க வைக்கிறாய்..!
6

நீண்ட நேரச் சரசத்தின்பின் சந்திர ஒளியைச் சாட்சியாக வைத்து என்னோடு நீ
சங்கமமாகிறாய்..!
ஒரு சுவர்க்கலோகம் எம்மைக் கைநீட்டி அழைக்கும். அங்கே நாம் ஓடிவிடுவதற்குள் வானம் மெல்ல வெளுக்கும்.!
விடிந்தால். ஜன்னல் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு வீதியைப் பார்த்திருக்கும் எனக்கு உன் ஒரக்கண் பார்வை மட்டுமே பரிசாகக் கிடைக்கும்.!

Page 17
‘கற்பிறந்த கதவருவலகனுக்கு.
- முடி4 இல்லாஸ்
எதிர்ப்படாதே.! உன் கண்களுக்குள் நான் காணாமல் போய்விடுவேன்.
நீ உதிர்க்கும் புன்னகையில் உதிர்ந்துவிடத் துடிக்கும் இதயத்தைக் கெட்டியாகப் பிடித்து வைத்திருக்கிறேன். ஏற்கனவே உன் கூடையில் பல பூக்கள் இருப்பதால்..! என் எல்லைக்குள் மட்டுமே பயணிப்பதாக இருந்தால் உன் பாதங்களை நெஞ்சிலேயே சுமந்திருப்பேன்.! எங்கெல்லாமோ அலைந்து திரிந்துவிட்டு என் இமைகளுக்குள் துங்கவரும் உன்னை எப்படி ஏற்றுக்கொள்வது..?
உனக்கு வரம் தருவதால் சாபங்கள் என்னைத் தொடரும். அதனால் - கைகளை நீட்டாதே.! இந்த மலரைப் பறிக்க

அந்தக் கரங்களில் புனிதமில்லை. உன் சிட்டுக்கள் அழகானவைதாம் - ஆனாலும் தாவுகின்ற உனக்கு என்னைத் தாங்குகின்ற வரம்தர நான் தயாரில்லை.!
புத்தம்புதுத் தென்றலின் தழுவலுக்காகத்தான் நான் தவமிருக்கிறேன். அசுத்தக் காற்றைச் சுமந்துவந்து என்னை அசிங்கப்படுத்தாதே.!
வாசமுள்ள மலர்மாலையாய் ஒரு வாலிபனின் தோளில் தொங்க எனக்கும் ஆசையிருக்கிறது - ஆனால் அந்தத் தோளுக்குரிய தோழனிடத்தில் தூய்மையை எதிர்பார்க்கிறேன்..!
கறைபடிந்த கரங்களுக்கு இரையாகிப்போக எனக்கு இஷடமில்லை.!
புதருக்குள் பூத்தாலும் புழுதியைப் பூசிக்கொள்ள மாட்டேன் என்று நான் உறுதியாக இருக்கிறேன். தயவுசெய்து எதிர்ப்படாதே.! உன் கண்களுக்குள் நான் காணாமல் போய்விடுவேன்.

Page 18
சீதைக்கப்பட்ட உணஞ்லுகள்
- துறவி
உற்றுக் கேள்! கவிதைகள் சமாதிகளுக்குள் மெளனமாக வாசிக்கப்படுகின்றன.
இதயம் போர்க்கொடி சுமந்து புரட்சிப் பாதையில் முன்னோக்கிச் செல்கிறது தாஜ்மஹாலை இடித்துத் தள்ள!
உள்ளத்தால் உறுதியான அன்புகூட மானத்துக்காக
நடுச்சந்தியில்
தீக்குளிக்கின்றது! மானத்தின் வேலியாக மடமையைக் கருதிய மனிதத்தின் நிலைகண்டு, மயிரிழந்த மான்கூட வாழ விரும்புகிறது
DI 600LD600D 635
களைந்தெறிய துணை இழந்த அன்றில்கூடத் துணையைத் தேடுகிறது
வாழ்ந்து காட்ட!
10

பைத்தியமாக்கப்பட்ட மஜ்னுன் கத்தியோடு திரிகிறான் லைலாவைத் தேடி தூய அன்பை
வெளிச்சத்தில்
கீறிக் காட்ட!
JITLDT மீண்டும் உயிர்த்தெழுந்து நவீன சீதைகளைக் காண்பாயானால், உன் சீதையை ராவணனுக்கே தாரை வார்ப்பாய்!
உள்ளத்தால் அழுதுகொண்டு, அவன் சிரிக்கின்றான். சந்தோஷப்படுங்கள்! உங்களது நட்பினால் ஏற்பட்ட
வடு!
11

Page 19
ருேற்றைய மூ9ை2
- aம்.எம்.றிஜிலி
ତୁ(05 அந்திச் சறுக்கலில் பொழுதுகள்
மங்கிவர சூரியனின் முகமும் கோபத்தோடு கறுத்துச் சிரிப்பதாயும் இல்லை அவளைப் போல!
அதோ பார்! தங்க வளையல் பிளக்கப்பட்டு ஆகாசத்தில்
மின்னலாய்...!
அங்கே தலையைச் சவட்டி போய்க் கூத்தாடுகிறது
மரங்கள்!
g...
மறுபடியும் வான மகள் சீறிக் கொண்டு முனகுவதற்குள் வா. குடைக்குள்.
12

நினைப்பதுதலுறு
- ரஜிமுகம்
நான் போட்ட கணக்கெல்லாம் பொய்த்துப் போனால் உன்னை உன் நினைவு நாளில் மட்டும் நினைப்பதுதான் நியாயம்?
அன்பின் சூத்திரம் தன்னை விளக்க இயலாமல் தவித்தபோது உன்னைப் பிரசவித்தது என்னில்.
மெளனத்தையே என் தேசிய கீதமாக்கும் வித்தியாச அன்னம்
இன்னும் ஏன் இந்தப் பட்டுப்பூச்சியைக் கூட்டுப் புழுவாக்குகின்றாய்?
பாதித்தூரம்
வந்து வீதியில் விளக்கில்லாமல். தத்தளிக்கும் எனக்கு உன் மின்மினியின் தூர தரிசனம்
மட்டுமாவது?
3

Page 20
குெேைஜல் கனவுகளுக் தேேைபல நினைவுகளுக்
- கவிதா
95ى நிலாக்காலத்து நிஜங்கள் என்னை விட்டு அகன்றாலும்
இன்னும் நினைவுப் பெட்டிக்குள் பத்திரமாய் பாதுகாக்கப் படுகின்றன.
பாசத்தினால் மட்டுமே பாதுகாக்கப்பட்ட
அந்த பசுஞ்சோலையினின்றும் வெளியேறிவிட்டால். வேஷமிடப்பட்ட அழகான போலிகளின் அசிங்கமான ஊர்வலம்.
பொய்களற்ற அந்த வெள்ளை நினைவுகள் இன்று
புதைகுழியில் சமாதியாக்கப்பட்ட கறுப்புக் கனவுகள்.
14

சிரிப்பை மட்டுமே சீதனமாகக் கொண்ட அந்தச் சொர்க்கம் இன்று கறுப்பையே மனதில் பூசிக் கொண்ட கயமை உலகம்.
ஐந்து வயதில் வெள்ளைப் புறாவாகப் பரிணமித்தது ஐம்பதாவது வயதில் கறுப்புக் கழுகாகப் பரிணாமமடைந்து விடுகின்றது.
அந்தக் குழந்தைப் பருவத்துக் குதுாகலங்கள்
இன்று முக்காடிடப்பட்ட மூன்றாம் பிறைகள்
தொட்டிலில் படுத்து எண்ணிய விரல்கள் இன்று தோட்டாவை எண்ணுகின்றன.
அந்த வெள்ளை நினைவுகள் குருடாகிப் போயின. இன்று கறுப்புக் கனவுகள் மட்டும்
தமக்குக் கண்ணாடியிட்டுக் கொள்கின்றன.
15

Page 21
ஒரு குசேத்தீனக் ణం శీతలgugoడు.
- ஹலீமா செலினுடில்
இவள்
சொந்த முகவரியைச் சோகங்களுக்கு எழுதிக்கொண்டவள் இருந்தும்.
சொச்ச நம்பிக்கையில் உயிர் வாழ்கிறவள்
முகாரி ராகத்திலும் எங்கோ ஒர் மூலையில் சலங்கையின் சத்தம் சரிந்துபோன சம்பவங்களுக்குச் சத்தூட்ட முயற்சிக்கிறது. அதனால்தான்
உடைந்துபோன கண்ணாடித் துண்டொன்றை வைத்துக்கொண்டு இன்னும் இவள் அரைமுகம் பார்த்துக் கொள்கிறாள்
வரண்ட நிலத்தில் விழுந்த மழைத்துளி
16

வழுக்கி விழுந்த விடயங்களுக்கு விளக்கம் கூறமுயற்சிக்கிறது இருட்டில் பறக்கும் மின்மினிப் பூச்சொன்று கறுப்பைக் கலைத்து விடிவு உண்டென்ற விபரத்தைச் சொன்னது அதனால்தான் புதிய விடியலுக்கு ஏங்கிப் புண்பட்ட நெஞ்சத்தில்
இவள்புன்னகையைத்
தடவிக் கொள்கிறாள்
ஓட்டை விழுந்த சட்டைக்கும் - ஒரு ஒட்டுப் போட்டுக் கொள்கிறாள்
சந்தோஷம் கிடைக்குமென்று சாஸ்திரம் கூறியதால் இவள்
காயப்பட்ட மனதிற்கும் ஒரு கட்டுப் போட்டுக் கொள்கிறாள்
தூரத்தில் இருந்தொரு நட்சத்திரம் கண்சிமிட்டிக் கற்பனையை வளர்த்ததால்தான் ஒரு துளி
தண்ணீரிலும் கூட இந்த மீன் இன்னும் நீந்த முயற்சிக்கிறது மேக இருட்டில் தோன்றி மறையும் அந்த
இரவு கால நிலாபோல கற்பனைகளும் கனவுகளும் காலை விடியலுடன் கலைந்து போக,
91595. கனவுகளுடன் கைகோர்த்து நின்ற ஒரு துளி நம்பிக்கை மட்டும் இப்போதும் தனியாக இவளுடனே.!
17

Page 22
හියර්(Gහි හියර්(Gහි ஜீழ்ந்து பேலுைதல்ை.
தொலைந்துவிட்ட சமாதானத்தின் தேடல்கள் எதிர்காலம் பற்றிய எண்ண வேட்கைகளின் இடைவெளிகளை முடிவிலிக்குத் தள்ளுவதாய். துயரங்களின் விசாரிப்புகளால் ஜீவத்துவம் இழந்த நம்பிக்கை விடியல்கள் புதைகுழியின் சுவடுகளில் தடம்பதிக்கும்
நிகழ்வு
ஆத்மாவின் விலாசத்தைத் தேடுவதாய். உருத்தெரியாது
அழிந்து போய்விட்ட
18
- ஆறmடி இஸ்மாயில்
மன உணர்வுகளின் அழுத்தமான தடங்கள் நினைவுகளின் நிழலைக்கூட அனுமதிக்க மறுக்கும் அரக்கனாய்.
பீனிக்ஸ் பறவையின் சளைக்காத விடாமுயற்சியை நிகர்த்த உத்வேக உயிர்த்தலானது மீண்டும் மீண்டும் வீழ்ந்து போவதாய்.

ഒ് യേങ്ങര ഭൗജഈg.
- தோப்பூர் றிஸ்வி
வாழ்வென்னும் பாலையிலே தோன்றுகின்ற வனப்புமிகுங் கானல்தான் காதலென்பேன்! தாழ்வுற்றோம் இங்கினியும் உடலைத் தாங்கித் தரணியிலே திரிகின்றோம், அரும்பு முன்னர்
பாழ்பட்ட மலரானோம்!
எமக்குக் காதல் பனிகாலந் தருகின்ற வாடைக்காற்றாம்! சூழ்கின்ற சமுதாயக் கூண்டிற்குள்ளே சுதந்திரமாம் காதலினைத் தேடுகின்றோம்! கலையாத ஒவியமாய் உலக வாழ்வைக் கண்குளிரக் கண்டிடவே கனவு கண்டோம்!
மன்மதனின் கலை என்னும் காதலுக்கு மதிப்பளித்து மதியிழக்கும் மானிடர்கள்! மின்மினியை விண்மீனாய் எண்ணுகின்றீர் மன்னவனேயானாலும் ஆவி போனால் மண்ணகமே அரியணையாம் என்று சொன்னால் பின்னுகிறீர் காதலெனும் பொய்ப்புராணம்! பேசுகிறீர் ஏதேதோ பிதற்றுகின்றீர்!
பெண்மீதில் நீர் கொள்ளும் பேதை மோகம் பேயாடும் சுடுகாட்டிற் சாம்பலாகும்!
19

Page 23
மண்ணோடு மண்ணாவீர், ஆசைத்தீயால் மனமழியும் விட்டிலென வீழ்ந்து விட்டுக் கண்மூடிக் கற்பனைகள் வளர்க்கின்றீரே! காதலெனும் பொய்க்கனவு காண்கின்றீரே! தண்காற்று வீசுங்கால் முத்தமிட்டுத் தாமரைகள் ஒன்றின்மேல் ஒன்று சாயும் மண்குளிர மழை பொழியும் முகிலைக் கண்டு மயில் அழகு நடம்புரியும், அலையிரண்டும் விண்முட்ட ஆர்ப்பரித்துக் கடலரங்கில் விம்மியெழும், கைகோர்க்கும், நுரை சிரிக்கும்! கண்கூடாய் இங்கெல்லாம் காணும் அன்புக் காதலினை மாந்தரிடை என்று காண்பேன்!
20
 

லுேப்பு உலகக்
நான் நடக்கும்போது பூக்கள்கூட முட்களாகி விடுகின்றன. நான் வந்த பாதைகளில், என் பாதங்கள் பதித்த ரத்தச் சுவடுகள் இன்னும் காய்ந்து போகாமல் ஈரமாய்.
கனவுகளைச் சுமக்கும் விழிகளில் கண்ணிர் குளம் கட்டிக் கன்னங்களில் கால்வாய் வெட்டுகிறது. மறந்து போய்ச்
சிரிக்க நினைத்தாலும்
உதடுகள் பிரிய மறுக்கின்றன. உள்ளுக்குள் ஒப்பாரியின் ஒசை எத்தனை இடங்களில் இதுவே
தாலாட்டாய்ப் போனது!
திரும்பும் இடங்களெல்லாம்
- நீலா9றுfடிர்மிடி ஹgரீம்
ரத்தத்தின் சிகப்பு முத்திரை. குடிக்கும் தண்ணீரில்கூட ஏன் குருதியின் வாடை? சிரிக்கும் பூக்கள்கூட ரத்தச் சிவப்பாய். ஓ! இதுதான் இன்று
உலகின்
தேசிய நிறமோ!
பாடித் திரிகின்ற பறவையின் ஒலிகூட அவலக் குரலோசையாய். ஓ! இதுதான் இன்று உலகின்
தேசிய கீதமோ!
ஆண்டவா! இந்தச் சிவப்பு உலகில் மனிதன்தான் அபாயத்தின் சின்னமோ!

Page 24
என் தேசத்தீல் குவன்.
- நீலாற்றுளி டிர்மிடிாறgரீம்
என்னைக் கூறுகூறாய் நீங்கள் சிதைத்து விட்டாலும், என் சிதைவுகள் கூட என் தேசத்தின் விடுதலை பற்றிப் பேசும். வீரமரணத்தில் முடிந்து விடுவதல்ல போராட்டம்.
என் மரணத்தின் அந்தத்தில், விடியலுக்கான தீர்மானம் நிறைவேற்றப்படும். இதற்காக, லட்சம் முறையும் பிறந்து நான் இறப்பேன்.
என் இறப்பில் என் உடல் சிந்தும் ஒவ்வொரு துளி உதிரத்திலும் வேகமாய். மிக வேகமாய் முளைப்பார்கள், இந்த மண்ணின் மைந்தர்கள்.
22

ஒரு கறுப்பு இஞலில்
- நில49றுfடிர்மிடிதgறிம்
எல்லோரும் உறங்கிவிட்ட - அந்த ஒற்றை இரவில், நான் மட்டும் விழித்திருந்தேன்,
உன் நினைவுகளுடன்.
நீ காணாமல் போன அந்தக் கறுப்பு நாளில், என் சோகத்தைப் பகிர்ந்து கொண்டது, சுவர்க்கோழி மட்டும்தான்.
கண்மணி!
வானவில்லைக் காட்டி
என் வண்ணங்களைப் நம்பிக்கையை பறித்து விட்டாய். இழக்கச் செய்துவிட்டாய்.
கனவுகளைச் சிதைத்து என்னைக் கண்ணிரில்
தள்ளி விட்டாய்.
LITUlq!.
எந்தன் சோகப் பொழுதுகளின் விடியும்வரை - என்னை கண்ணீரில் விழித்திருக்க வைத்து, இந்தப் பிரபஞ்சமே நாளை என்ற நனைகிறது.
23

Page 25
అంrరాజీ త్రయ్
- இறக்காமம் ஒருஷமீர்
உயிர்களுக்கெல்லாம் உருவம் கொடுத்த மூலப் பொருள் நான் அந்த உருவங்களை ஆறடி நிலமாக நுகர்வு செய்யும் முடிவுப் பொருளும் நானே!
மலைகள் - என் மகுடங்கள் மரங்கள் - நான் கேட்ட வரங்கள் நதிகள் - என் உணர்ச்சி நரம்புகள் பாலை நிலம் - பரு முளைக்காத என் கன்னம்.
இரவும், பகலும் நான் மாற்றிக்கொள்ளும் ஆடைகள்.
கற்களும், முட்களும் என்னுடைய தரைப்படையினர் புயலும், சூறாவளியும்
என் விமானப் படையினர்.
சூரியன் என் அணுவுலை யுத்தம் நான் உங்களோடு
24

செய்து கொள்ளும்
ரத்த சம்பந்தம்.
பிணம் என்று
உறவுகள் உங்களை உதறிய போதும் உங்களைச் செல்லமாய்த் தத்தெடுப்பவள் - நான்
என்னில் உங்கள்
எல்லோருக்குமே சமத்துவமாகப் பங்கு பிரித்துள்ளேன். ஒவ்வொருவருக்கும் ஆறடி நிலம்’ எடுத்துக் கொள்ளுங்கள்.
என்மேல் ஆசை வைத்து என்னைக் கட்டியாள்பவர்களைப் பார்த்து நான் - சிரிக்கிறேன். என்றோ ஒருநாள் நான் அவர்களைக் கட்டியாள்வேன் என்பதால்தான்.
25

Page 26
முருகளும் ஆக்கனே!
- இறக்காமம் ஒருமீைர்
வானத்தை நீ வைத்துக் கொண்டு என்னிடம் பெளர்ணமியைக் கேட்பதில் என்ன நியாயம்.?
சுகங்களை மட்டுமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு முதலிரவுக்காரன் அல்ல நான். எனக்குத் துன்பங்களும் சுகங்களே!
மரம்
பூமி மட்டுமல்ல எனக்கு முக்கியம், வானமும் - ஏன் மழையும் கூட எனக்கு முக்கியமே!
இந்த யுத்தத்துக்கும் உனக்கும் எவ்வாறு தொடர்பில்லையோ
26

அவ்வாறுதான் நம் பிரிவுக்கும் - எனக்கும்.
பிரயாணிக்கும் போது மட்டுமே வந்து வந்து போகும் ஒரு கவிதையைப் போல் எழுத முடியாமலேயே மறைந்து விடுகின்றன உன் ஒற்றைப் பிரிவும்.
இங்கே முட்களும், மலருமுண்டு நான் முட்களையல்ல மலரை நேசிக்கிறேன் என்றாய்.
உனக்குத் தெரியாதா? மலர் தற்காலிகமானது. எல்லோரையும் பார்த்துச் சிரிக்கும் பாதையோரத்துப் பரத்தைகள் - மலர்கள்.
முள் என்றும் நிலையானது. யாராலும் நேசிக்கப்படாதது. யாரையும் நேசிக்காதது, தன் - கற்பைக் காப்பதற்காகவே அது குத்துகிறது.
இருந்தாலும்,
முட்களும், பூக்களும் எனக்குப் பூக்களே!
27

Page 27
&ico%2ბq
- ருரீ.பிரசாந்தல்
பல்கலைக் கழகப் பாதைக்கு வந்து செல்கையில் என்னைச் சிதறடித்தவளே! சலங்கை ஒலியின் சப்தத்தால்
என்னுயிர்க்கு
விலங்கை இட்டவளே!
வெளியே வா.
கோரப் பற்களோடும் வேட்டை விருப்போடும் சமுதாயப் புலி சஞ்சரித்த பொழுதுகளில் நமது காதல் பூத்தது. புல்லுத் தின்னாத புலி பூவைத் தின்னுமோ? தின்னவில்லை. ஆனால், காலின் நகங்களாற் காயம் செய்தது. கடுமையாய்., மிகக் கடுமையாய்த் தன் காலின் நகங்களாற் காயம் செய்தது. உனக்கு நானும்
எனக்கு நீயும் மருந்தாய் இருந்து வருத்தம் தொலைத்தோம். வசைமாரி பொழிந்தது வையம் வெருண்ட நீ வெளிவரப் பயந்தாய். ஒட்டுக்குள் தலை இழுக்கும் ஆமையாய் விடுதிக்குள் ஒடுங்கினாய். உனக்கே பூட்டுப் போட்டுப் புழுங்கினாய்.
9ILQ !
28

பூங்கா ஒன்றின் புறப்பாடு காணாமல் ஏங்கியது வீதி
எப்போது வெளிவருவாய்? உன் நெற்றிப்பிறை காணாமல் என் அமாவாசை நாள்கள் அதிகரித்து விட்டன. மலையைப் பார்க்கையில் உன் மார்பும் மலரைப் பார்க்கையில் உன் மனசும் ஞாபகம் வந்து கல்வித் தவத்தைக் கலைத்துக் கொல்கின்றன. எங்கே. உடனடியாய் நீ சுவாசித்து என்னை உயிர்ப்பி
நான், பிரிவுப் பாலையின் வெம்மை தாங்காமல் கற்பனைச் செருப்போடு காலங் கடக்கிறேன். இனியும் முடியாது. வெளியே வா. விரைவாய் வா. விழிகள் நமது மொழிகள் பேசவும் தடவும் விரல்களே நமது குரல்களாகவும் தழுவுவோம். தாங்காமல் விடுப்புப் புயல் விசுவரூபமெடுக்கும். சூறாவளி வீசும்.
சுற்றத்துக் கேலிகள் ஆறாய்ப் பெருக்கெடுத்து அவதி தரும். அச்சம் வேண்டாம், கவலை அழி நீ என் படகு, நான் உன் துடுப்பு. துணிந்து இறங்கித் துன்பங் கடப்போம். மீண்டும், வசைமாரி பொழியும் வையம். வருத்தங் கொள்ளாதே. நடுங்குவோம். சிலவேளை நனைவோம். என்றாலும். வா. ஒரு குடைக்குக் கீழே உட்கார்ந்து கொள்ளலாம்.
29

Page 28
ඌෂ්ඨඨ ද්‍රාදgෂ්ඨ
- ருரீ.பிரசாந்தல்
தேவனின் அப்பங்களைச் சாத்தான்கள் சாப்பிட்டுவிட்டன.
கல்வாரியாயிற்று மன்னார். கருணை வெள்ளத்தை இடம்பெயர்த்து மடுவினுள் ரத்தம் மட்டுமே தேங்கிற்று. தாயின் செட்டைக்குள் தங்கியிருந்த குஞ்சுகளைப் பருந்துகள் குதறிவிட்டன. மேய்ப்பனில்லா மந்தைகள் உலகை விதைத்தவள் வயலிலேயே உயிர்களை மேய்ந்துவிட்டன.
மாதாவே மாதாவே! உன் கருவறை முன்பே தருமத்தின் கல்லறையா?
ஏரோது மன்னனின் ஏவலர்கள்
உன் மடியிருந்த குழந்தைகளையுமா கொன்று விட்டார்கள்?

அவர்களுக்கென்ன..? பாவங்களைக் கைகழுவிக் கொள்ள எங்கள் கண்ணீர் இருக்கிறவரை அவர்களுக்கென்ன..?
பாவ வெம்மைக்கான பரிசுத்த நிழலே! உறங்கி ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தோர்க்கு உடனேயே இறுதி மேடையை அளித்துவிட்டாயே! எங்களதும் மாதாவே! எல்லாப் புனித யாத்திரைகளும் முடிவடைகிற உன் முற்றத்திலிருந்தே இறுதி யாத்திரைகள் ஆரம்பமாயின. "யுத்த சூனியப் பிரதேசம்' யுத்தத்தால் சூனியமாகிட மடுவினுள் ரத்தம் மட்டுமே தேங்கிற்று. மன்னாரும் கல்வாரியாயிற்று. கன்னி அன்னைக்குக்
கருணை தெரியாதென உன்னை உலகம் பழிக்குமே!
என்ன செய்குவாய்
அம்மையே! இனிமேல்.?
(யுத்த சூனியப் பிரதேசமான மடுமாதா தேவாலயத்தில் உறங்கிக் கொண்டிருந்த அகதிகள் குண்டு வீச்சினால் கொல்லப்பட்டதன் நினைவாக.)

Page 29
தெலிஜ
- ருரீ.பிரசாந்தல்
”இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற மனிதர் எவர்?’ என விருதை வைத்துக் கொண்டு வினவுகிறது
உலகு.
ஐன்ஸ்டீன், காந்தி என்ற பிரபல முகங்களைப் பிரேரிக்க முடியவில்லை.
தோற் சுருக்கம் ஒவ்வொன்றினுள்ளும் சோகங்களைச் சொருகி வைத்திருக்கும் நாகஸாகி நண்பனே!
பிரபல முகங்களைப் பிரேரிக்க முடியவில்லை. உந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய சொர்க்கம் ஒரே கணத்திற் சுடலையாயிற்று. சகோதரத்துவத்துக்கு அங்கே கட்டப்பட்ட சமாதி மேலே
இன்று துளிர்க்கிறாய் நீ மானுடத்தை மானுடமே கழுவேற்றிய தூக்கு மரத்தில் தொங்கும் அபாய அறிவிப்பாய் அமைந்ததுன் வாழ்வு உடலே சிலுவையென உயிர் வளர்ப்போனே! அமெரிக்க வல்லூறின் அணுகுண்டு எச்சம்
32

உன் பரம்பரைச் சட்டையை பாதித்து கழுவினாற் போகாத கறையாயிற்று. ஆணவம் போர்த்திய அச்செயல் நிர்வாணத்தை விடவும் வெட்கம் தந்தது.
சந்திரனை நோக்கிய விண்கலத்தில் சாதனைகள் நிரப்பிய அதே கரங்களே, விமானத்தில்
உங்கட்கான சவப்பெட்டிகள் தந்தன.
விண்வெளி முட்ட வளர்ந்த விசுவரூபம் வழுக்கி உங்கள் வயலுள் வீழ்ந்ததில் பயிர்கள் மட்டுமா பாழாய் போயின. ஓ! சந்ததி விதைகளும் சிதைவுற்றனவே.
நீ சிதைவுற்ற வித்தே எனினும் சிரமப்பட்டு. சிறுகச் சிறுக. சகோதரத்துவத்துக்கு அவர்கள் கட்டிய சமாதி மேலே துளிர்க்கிறாய் இன்று.
அணுகுண்டு கர்ப்பம் வளரவும் மறைக்க முயன்று மலடி நான்’ என்று நாடுகள் செய்யும் நடிப்பைப் பார்த்தும்.
‘சமாதானத்துக்கான யுத்தம் என்னும் நரபலி அவாவும் வார்த்தைகள் கேட்டும்,
இன்று நீ துளிர்த்து நகைக்கிறாய்.
கருப்பைக்குள்ளே கந்தகம் குடித்து இருப்பைத் துயர்மேல் ஆக்கிய நண்பா!
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற மனிதர்' என வேறெவரை நோக்கி
என் கரம் நீளும்? சொல்.
(மல்லிகை 36வது ஆண்டு மலரில் சங்கப்பலகையில் வந்த பின்னர் வெளிவந்தது.)
3
3

Page 30
அலுஞ்களுக்கல்ை.
ஒப்பந்தங்களுடன் ஒற்றைக் கயிற்றினால் பிணைக்கப்பட்டது எமது குடும்ப உறவு
அதற்காய். அவர்களுக்கெனச் செருப்பாய்ப் பணிவிடைசெய்ய வேண்டுமென்பது நியதி.
சலவைக்காரனின் சலவைக்கல்லாய். நாள்தோறும் - எமக்கு வேதனையும் தேய்வும்.
சந்தேகத்தின் பேரில் கைதிகளாய். அவர்களின் கண்காணிப்புச்
சிறையில்
கண்ணகிகளாய். நாம்,
ஓய்வூதியமும் சம்பளமுமில்லாத உழைப்பாளி 6lijds&SLDITui... அவர்களின்
9....
ஆசைக்கென ஒதுக்கப்பட்ட பேராதனைப் பூங்காவாய்.
தலைச் சுமை கூடத் தாங்கமாட்டாத உடலுக்கு வயிற்றுச் சுமையும்
அவர்களால்.
எந்த யாப்பிலும் சட்டங்களால் - நாங்கள் நசுக்கப்பட்டு வீசப்படுவது என்ன நியாயம்?
நாங்கள் வெறுக்கப்பட்ட சாக்கடை நீராய். நாயகிகளாகவும், தேவதைகளாகவும் சில நேரம்தான்.
வீசப்பட்ட சாத்தானிகளாய். அவர்களின் இமைகளுக்கு, ஆனாலும் உண்மை ஒன்று! அரைக்கணமாவது எங்களின் அடிமைகளாய் அவர்கள்.

రీ80ళ అంత
- அப்துல் கரீம்
மேகம் தன்னை மறைத்தாலும் பகலைப் பகிரும் கதிரவன் போல், தீயில் உன்னை எரித்தாலும் விடிவை ஈந்தது உன் சுடரே!
வருடம் உன் மேல் கவிழ்ந்தாலும் மனதின் அலைக்குள் உன்பெயர்தான். மாற்றம் இங்கு வந்தாலும் அதிலும் அடியில் உன்பெயர்தான்.
விடியும் கதிரை உதிர்த்தவன் நீ உயிரை விடிவில் புதைத்தவன் நீ புதையும் மனிதம் அகழ்வதற்காய்ப் புதைகுழி தேடிப் புகுந்தவன் நீ மறையும் வதைக்குச் திசை சொன்னாய். படரும் பகைக்கு வகை சொன்னாய். இடரும் கல்லில் நீ வீழ்ந்தும், இடறாப் பாதை நீ திறந்தாய்.
சட்டம் தந்த சத்தியனே! தட்டி உன்னைப் பாராட்டக் கட்டப்பட்ட கல்லறையைத் தட்டும் எங்கள் அஞ்சலிகள்.
(குறிப்பு: பகிடி வதையால் இறந்துபோன எமது பல்கலைக் கழக மாணவன் வரப்பிரகாஷ் நினைவாக.)
35

Page 31
மிந்து செல்லுகை
- ஸ்ரீடி. ர.gறக்
போதும்! நான் நீயாகவும் நீ நானாகவும் உணர்தலில் என் ஆன்மா சிலுவைகள் சுமந்தது இனிப்போதும்!
உனை நானாக கற்பிதம் செய்கையில் என் இதயமே செவியாகி உந்தன் வலிகளை விசாரித்து இமை ஒத்தடங்கள் தந்து போனதை - நீ அறிந்ததில்லை.
ஏன, இந்த மெளனத் தவத்தில் எனக்கு நானே அந்நியமாகும்வரை நான்கூட அதை உணர்ந்திருக்கவில்லைத்தான்!
36

போதும்!
நீயாக நானும் நானாக நீயும் உணர்ந்து. சுயம் தொலைத்து. சாத்தியமற்றதின் வெளிச்சத்தில் விடியல் தேடியது இனிப்போதும்! எனவே. வா, வந்து எடுத்துச் செல், என்னிலிருந்து உன்னை! இனியேனும் நான் நானாகவே உயிர்க்க விழைகிறேன். என்னிலிருந்தான அந்தப் பிரிந்து செல்லுகை - என் உயிரினை(யும்) ஈர்த்துப் போனாலும் அக்கறையில்லை. அதற்கேனும் உதவிடு!
உனது மெள்னத்திலும் அது. அத்தனை கொடிதில்லை!

Page 32
ග්රූණි. ඇහෙය!
- ஸ்ரீடி. ர.ஹக்
அவர்கள் என் விழிகளின் ஒளியை அபகரித்த பொழுதிலும் நரம்பிடைக் குருதியை உறிஞ்சிய பொழுதிலும் - நான் மெளனித்திருந்தேன்!
பரம்பரை வீட்டின் கூரை கழற்றிச் சுவர்கள் சிதைத்து தோட்டத்தில் படர்ந்த திராட்சைக் கொடிகளை ஜைத்துான் மரங்களை அறுத்தனர், தறித்தனர். பொறுத்தேயிருந்தேன்! அமைதியின் பெயரால் - ஈன அடக்குமுறைகளை - நிதம் கட்டவிழ்த்த போதிலும் நான் தலை கவிழ்ந்தே இருந்தேன்!
என்றாலும் இனி. மெளனத்தை மெளனித்தும் பொறுமையைப் பொறுத்தும் இருக்குமாறு நான் பணித்துவிட்டேன்! கவிழ்த்த சிரசினை சிலிர்த்து நிமிர்த்தினேன்!

தாயே! பலஸ்தீனே! விழியின் ஒளியினும் நரம்பிடைக் குருதியினும் ஐசுவரியங்கள் அனைத்திலும் மேலாய் நீயே எனது
காதலுக்குரியவள். நீதான் உயிர்க்கு மிக உவப்பானவள்! உன்னை அரக்கர்கள் அழிக்கின்ற வேளையில் வாளாவிருந்திடல் இனிமுடியாது!
என்னுள் உறையும் சீற்றமே எழுக! என்மண் மீதான காதலே பெருகுக! காதலும் சீற்றமும் கலந்தே வெறியரை துவம்சம் செய்திடும் புயலென மாறுக! இனியென் மண்ணில் வீசுக புயலே! விடுதலை பிறந்திட வீசுக புயலே!
(ஜைத்துான் மரம் - ஒலிவ மரம்)

Page 33
(38oOCDC
எங்கும் உஷ்ணம் சூரியனின் ஒருபங்கு இறங்கிவிட்டதான கொதிப்பு.
பள்ளங்களால் மாத்திரம்
அறியப்படுகின்ற ஆறுகள்.
பாதங்களைக்கூட
ஈரப்படுத்தாத குளங்கள்.
எல்லோருக்குமே மஞ்சள்காமாலையா..? மரம், கொடி, புல் எல்லாமே மஞ்சளாய்.
பித்தம் பிடித்தவனின் பாதமாய் பூமி வெடித்துப்
பாளம் பாளமாய்.
உதடுகள் சகாராதான் உடம்பிலோ. ஆடிமாத வைகையாய் வியர்வை பெருக்கெடுக்கும்.
- மன்ஜர் மூன்றாம் விரை
மண் தெரு, தார் வீதி வித்தியாசமில்லாமல் கானல்நீர் காட்சி கொடுக்கும்.
இதெல்லாம் எம்மட்டு.! மறந்து விடென்று மடலனுப்பினாயே அப்போது. என் வாழ்க்கையிலடித்த கோடையிருக்கிறதே அதைவிடவா..?
40

esarólos
- முல்ஜர் மூன்றாம் பிறை
வானத்தாச்சியில் அப்பம் சுட்டு மேகச் சம்பலோடு வாய் நிறைய உண்டேன்.
சூரியக் கல்லில் ரொட்டி சுட்டு நிலாமுட்டை அவித்து நிதமும் சாப்பிட்டேன். நட்சத்திரப் பொறிகளையெல்லாம் வாய் முழுக்கப் போட்டுக் கொறித்துத் தள்ளினேன்.
வானவில்லை நூறு துண்டுகளாய் நறுக்கியெடுத்து நெய் தோய்த்து நாவொழுகச் சாப்பிட்டேன். பொழிகின்ற மழையெல்லாம் பூமியில் விழாதபடி கையேந்திக் குடித்தேன்.
தீருவதாகவேயில்லை
மனப்பசி.!
41

Page 34
நிற
லின்
SoooOeGewoo Goos-asocir
- ஜெmறாலுமீட்
என் உள்ளச்சிறையில் நீயொரு ஆயுள் கைதி யாருக்குமே உன்னைப் பிணைதர மறுக்கும் இந்த நீதியே உன்னில் சிறைப்படத் தலைவிரித்துப் துடிப்பதை புலம்பும் நீ எப்போது அறிவாய்.? மரங்களின்
மரண ஒலங்களிலேனும்
பூக்களின் சரி நீ இவளை ຜ່ சிதறலில் நினைத்துப் பாதையோரததுச பார்ச் க்கிmாயா..? ಙ್ಕ್ತ್ ಆಫ್ರಿಕೆಅಕಕಣ விரிவுரையறையின் காற்றென்னைக் நிசப்தத்தில் கடந்து போகையிலும் நானும் நேசத்தை நிழலென்னைத்
ஆழமாய் உணர்கிறேன். சிறியதொரு பூவின் உதிர்வுக்குப் பின்னேனும் புயல் காற்றில்
தொடர்ந்து வருகையிலும் அதன் காலடியோசை உன்னுடையதோவென திடுக்கிட்டுத் திரும்புகிறேன்.

ග්‍රීහිත රූපශුෂීර්ශrභී
- குஸ்ரா நிசாம் சில நேரங்களில். கண்ணாடி முன்னாடியிருப்பது மறந்து போகும்! இருவிழிகள் இருவிழிகளை நோக்கும் தனக்குள்ளே பேசிக்கொள்ளும் இமைகளும் இதயமும் அதற்குத் துணைபோகும். நிமிடங்கள் நிசப்தத்தையுருவாக்கும். விழியியம்பும் வார்த்தைகள் படையெடுத்தால் புரியாது போகும்.! அணிந்த ஆடை வண்ணம் சொல்லும் கவிதை அசையுமுதடுகள் இசைக்கும் கவிதை பல்லிடை புன்னகையாய்த் துள்ளும் கவிதை பேசும் பேச்சுக்கிடையே மெளனங்கள் கவிதை கவிகள். கவிதைகள்.

Page 35
விழியிடையே பரிமாற்றங்கள் கவிதை! இனியும் பேசாது
இமைகள் துடிக்கும் கண்ணாடி சிரிக்கும்
இதயம் பூரிக்கும் ஒருமுறை எனக்கு நானே கண்சிமிட்டிச் சுற்றும்முற்றும் பார்ப்பேன் யாருமில்லை.
ஓடி மறைவேன் கண்ணாடி தனித்திருக்க..!
44
" --ჯ• xxx: ა.
 
 
 
 

பெண் என்ன குலுக்
ஆறந்தவ
பூமாலைகள் சேரவேண்டிய தோள்களிலே ஏக்கங்களைச் சூடிக்கொண்டு ஏந்திழை அவளும் ஏமாறிய கணங்கள் கோடியாகச் சேர்ந்து கைகொட்டிச்
சிரிக்கிறது.
சொத்துக்கள் அவளுக்குத் தூரமாகிப் போனதால் விற்பனைக்கு விலக்கப்பட்ட இந்த முதிர் புஷ்பம் இன்று கதவு இடுக்குகளுக்குள் அகப்பட்டுக்
கசங்கிப்
போனதோ?
மணாளன் வரும் வழிதேடி. மலர்ந்திருந்து பூமிக்குள் புதைந்துபோன இளமைகள்
45
ள்.?
- йфобом 9. வgறி
இங்கு - பொய்யற்ற கணக்கு
நிலவையும் நீலவானத்தையும் காதல் செய்த கன்னியர்க்கு அடைக்கலம் தந்து அரவணைத்தது அமாவாசைகள்தாம்.
அரிவையரும் தெரிவையராகி பேரிளம் பெண் தெரிகிறாள் பார். முதுமை மாளிகையின் சாளரத்தைத் திறந்து வயதின் படிகளைக் கணித்தபடி
இன்னும் கனவுகள் எட்டிப் பார்க்கும் மருண்ட விழிகளை விரிக்க நினைத்து தவித்தபடி. அப்பப்பா..! பெண் என்ன
தவம் மறந்தாள்
இத்தனைக்கும்?

Page 36
மூெனனத்தீன் அழுகையில்
- ot.hujith
தலையணையை நனைக்கும் மெளனத்தின் அழுகையில் ஊர் முழுவதும் நள்ளிரவின் நிசப்தத்தில். தொடர்கிறது.
ஊர் நாய்களின் ஊளைக் கச்சேரி பீதி தோய்ந்து. தோய்ந்து. காற்றலைகளில் ԼDԱյIւIIԳայլb... LDԱյLIIգայլի... ஊர்ப்புறத்தில் உறங்கும் மயானம் போல
ஊரே உறங்கிக் கொண்டிருக்கின்றது.
அந்தத் தெரு..! நேற்றுப் போல் இல்லை.
கிளுவை மர இலைகள் உடைத்து உடைத்து நிலத்திற் போடும் நிலா ஒளிச் சிதறல்கள்
அதன்மேல் பிய்ந்து. பிய்ந்து.
46

மெல்ல அசையும் மனித நிழல் கிடுகு வேலியின்
சரசரப்பு சர். என்று சொரியும் கறையான் மண் இவை அவளுக்கு ஆட்காட்டிக் குருவிகளாய்.
மகனுக்காய் மண்சட்டியில் அவித்த மரவெள்ளிக் கிழங்கோடு வளமைபோல
இந்த இரவிலும்.
பல்லி மட்டும் சொல்லியது "இனி படைக்க வேண்டியதுதான்”

Page 37
கீஞழுைத்துக் கனவுகள்
- 9ሁ.ፅh9jሁጳ
கிராமத்துக் கனவுகளைக் கிண்டி எடுத்துத் தின்று தின்று மீண்டும் திருப்தியடையாமல்
நின்று விழிக்கிறேன்.
தென்னைகளின் அணிவகுப்பு தேகம் சிலிர்க்க நிற்கும் பனைமரத்தின் பரவலாக்கம் கண்ணைத் துயில வைக்கும் காற்றுவழி பெண்ணைப் போலிருந்த பேரழகுச் சிற்றுாரே! உன்னைப் பிரிகையிலே உள்ளம் கனக்கிறது.
உருக்குலைந்து உன் பொட்டழிந்து கட்டழகு மேனியிலே இரத்தக் கறை படிந்து காடாய்க் கிடக்கும் உந்தன் கதை படித்துத் திரும்புகையில் பாடாய்ப் படுத்தும் நெஞ்சு
48

வட்டிழந்த பனைமரத்தில்..! செருக்கு எங்கே? கட்டுடைந்த கழனிகளில்..! திலகமெங்கே? குண்டு பட்டுடைந்த பண்ணைகளில்..! பரிவு எங்கே? உன் கட்டழகுக் கைகளாய் நாம் கதை படித்த தெருக்களெங்கே?
அத்தனையும் அழிந்த என்
அநாதைச் சிற்றுாரே! சற்றுமுனைப் பிரியமனம் மறுக்கிறது.
சரி, கடமை கற்று முடித்துன் கதைபடிக்க காற்றாகி நான் வருவேன். காத்திருப்பாய்.

Page 38
மூவனுடத்திற்கவல் ஜக்கடுைகிறேன்
- லேமுல்ஸ்
எனக்குத் தெரியவில்லை ஏன்?
எதற்கு? எனக்குத் தெரியவில்லை! இரத்தினச் சோலையில் இரத்த நெடி.
தி
கற்காலத்தில் மீளவும் நம் காலடிகளா?
ஒரு தேசத்தில் மலர் வளையங்களுக்காக மட்டுமே மலர்கள் பூப்பதா?
ଦ୍ବିଡ଼(05
தேசியக் கொடி நிரந்தரமாய் அரைக்கம்பத்தில். நாகரீகம் வளராமலில்லை! தேசிய கீதம்
துப்பாக்கி வெடியோசைகளால்
50

இசைக்கப்படுகிறதே!
ஆமாம், நாகரீகம் வளராமலில்லை! அறிவியல்
வளரவில்லையென்று யார் சொன்னது? எங்கள் வாண்டுகள் கூட்டல் கழித்தல் படிப்பது துப்பாக்கித் தோட்டாக்களில்தானே!
இது நடந்திருக்கக் கூடாதுதான்! பிரம்மன்
அரைத்தூக்கத்தில் எங்கள் பூமியை வரைந்திருக்கக் கூடாதுதான்! இல்லையென்றால் பிறகெப்படி எங்கள் குளங்களில் பிணங்கள்
பூக்கின்றன.
இது நடந்திருக்கக் கூடாதுதான்! அவன்
அரைத்தூக்கத்தில் இருந்திருக்கக் கூடாதுதான்!
நம் தலைமுறை
கண்ணீரில்
தேசப்படத்தில் நம் தாய் நாட்டைப் போல.
தேசத்துத் திறைசேரியைப் போலத்தான் எங்கள்
வயிறுகளும்
51

Page 39
காலியாய்.
யார் சொன்னது நாங்கள் மதபேதம் பார்ப்பதாய், இல்லையே எல்லோரும் சிலுவைகளைச்
சுமக்கிறோமே!
இடுகாட்டுப் பூமியில் 69(5
சுதந்திர தேசம்!
எங்கள் சோதரங்களின் புதைகுழியில் பூக்கும் சுதந்திர ரோஜாக்களை யார் கேட்டது? அமைதிதான் என்பதற்காய் சுடுகாட்டில் குடியிருப்பதா?
சரித்திரத்தைத் துப்பாக்கி முனையில் ரத்தத்தில்
தோய்த்து எழுத நினைப்பதா?
ஆதலினால், என் சோதரங்களே! நாம்
எதிரிகளாய்ச் சேர்ந்திருக்க
வேண்டாம்,
நண்பர்களாய்ப்
பிரிவோம்!
ஆயினும். ஒரு சுமாரான எழுதுகோல், உலர்ந்து போகாத ஈர இதயம்
வேற்றுக் கிரகத்திலிருந்தேனும் இரவல் வாங்கி வாருங்கள்! இனியேனும். அழகான தேசப்படமொன்று வரைந்து வைப்போம். எல்லைக் கோடுகளே இல்லாமல்.
52

அந்த అడాయజీణ్వాయ్ ல்.
- லேமுல்ஸ்
மலை மகளின் முகப்பருக்களில் ஒரு தேர்த்திருவிழா
சிறுபிள்ளையைப் போல எங்கள் குதிப்புகள் சந்தோஷமாய் அந்த மலைமுகடுகளில்
எங்கள் பால்யப் பருவம் மீண்டும் ஒருமுறை அரங்கேறியது அங்கே தத்தித். தவழ்ந்து. விழுந்து. எழும்பி.
எத்துணை அழகு! ஒரமாய் ஒதுங்கியே இருந்தாலும் எத்துணை
ஒய்யாரமாயிருக்கிறது அந்த மலையுச்சி
யார் கற்றுத் தந்ததோ
அந்த மலைச்சாய்வுகளுக்கு மனித நாகரிகத்தை
53

Page 40
பச்சையாயப் உடுத்தியிருக்கிறதே!
மலைமகளின் இடுப்பில் செல்லமாய் கிள்ளிப்போகும் அந்த ஈரக்காற்று! சிரித்துக்கொண்டே ஓடிவரும் அந்தச் சிற்றோடை, அதில் வழுக்கிச் சுழுக்கிப் போனது கால் மட்டுமல்ல, மனசுந்தான்!
கர்வமாய்ச் சொல்லிக் கொள்ளலாம் அந்தப் பூமியை நனைத்தது சின்ன மழை மட்டுமல்ல, எங்களின்
வியர்வைத்துளிகளுந்தான்!
வகுப்பறையில் மூச்சுவிடாத என் தோழியொருத்தியின் சில்லறைச் சிரிப்பொலி அந்த ஹந்தானைக் காற்றோடு கலந்து.
பழைய புராணங்களை எரித்துப் போடுங்கள்!
54

சுவர்க்கம் எங்கேயோ இருப்பதாய் தப்பாக சொல்லியதற்காய்.
மனிதன் வாழ்க்கையை காபன் புகையிலும் தார்ச் சாலையிலும்
தொலைத்துவிட்டு
தேடிக் கொண்டிருக்கிறான்.
ஆனால்,
வாழ்க்கை
அந்த
மலைத்தொடரைப் போல
அந்நியமாய்
இருக்கிறது,
ஓர் ஓரத்தில்.
யாரேனும்
கண்டீர்களா?
அல்லது, கடைசிப் இனியேனும் புள்ளிவரை! காண்பீர்களா? கடைசியாய் மலைச்சரிவில் ஒரு வேண்டுகோள்! கவிதையெழுதிய மனிதக் கால்களே, அநதத அந்த மண்ணை தேவதையை. அடிக்கடி காயப்படுத்த முடிநதால வேண்டாம்! சொல்லுங்கள் கொஞ்சம்
அவளிடம் விலகியே இருங்கள்! அவளோடு அந்த பூமியேனும் கை குலுகக பவித்திரமாக காத்திருப்பதாய். இருந்துவிட்டுப் என் ஆயுளின் போகட்டும்!
55

Page 41
O O ஒரு கறுப்புக் கறிதை
- எம்.எஸ்.ஆவிழா பரிசுத்த நேசத்தினை பளிங்கு வார்த்தைகளால் முன்னுரை செதுக்கிய - என் ஆத்ம ஜீவிதத்தின் அஸ்திபாரம் நீ! என் வசந்த வாழ்த்துக்கள் - உன் ஸ்நேக மனசுக்கு என் ஞாபக மலர்மீது நாளெல்லாம் இளைப்பாறும் நேசச் சிறகுகளின் கனவுக் கூட்டில் வேச(ம்) முலாமிடாத பாச ஓலையினால் வாழ்வின் கரையோரங்களில் வாழ்த்துப்பாவிசைத்த கவிக்குயில் நீ! மடல் பாலங்களில் அலைந்து திரிந்த - நம் இதயங்களின் கால்களுக்கு மெளன விலங்குகளால் சங்கிலி பூட்டியதேன்? நம் நேச வரலாற்றின் ஜீவ வாசகங்களை - என் சுவாசச் சுவடுகள் இன்னும் சுமக்கின்றன. உறவு முகங்களுக்குப் புரியாத - ஒரு நேச உள்ளத்தின் சுவாச வீணை நீ உன் மனசின் விரிசல்களால்
56

எனக்குள் கண்ணிர்(ப்) பிரளயம் உதடுகளின் உச்சரிப்பில் உறவுகளால் உருவாக்கப்படாத - ஓர் பாசக் கவிதையை - நாம் உயிர்களில் எழுதி வைத்தோமே, அந்த சந்தோஷம் செத்த தினத்தில்தான் எழுகிறது என் கறுப்புக் கவிதை உன் ஸ்நேகப் புன்னகையின் சில்லறைச் சிதறல்கள் உதிராப் பூக்களாய் - எனக்குள் மலர்வனம் அமைத்த - அந்த பசுமை நினைவுகள் இன்றும் என் கண்ணில். ஊனப்பட்ட விழிகளின் கோணல் பார்வைகளால் நம் நட்புத்தானே கொச்சைப்படுத்தப்பட்டது?
தோழா,
காதலுக்கப்பால்
நாம் கட்டிய நட்பின் கோட்டையை - இந்த சமூகப் பட்டாசுகள் என்ன செய்துவிடும்? காயப்பட்ட நினைவுகளுக்கு கடன்பட முடியாது இனியும்
இது,
கற்புள்ள நட்பு என்பதை சமூகச் சடங்களுக்குப் புரியவைப்போம் 6) JIT!
எங்கேனும் ஓர் சிநேக தேசத்தில் இனியாவது நாம் சுதந்திரமாய்ச் சுவாசிப்போம்! காகித விரல்களினால் தொடர்ந்தும் கைகுலுக்கிக் கொள்வதற்கு புதிய முகவரிகளிலாவது முகங்களைத் திறப்போம்!
57

Page 42
கவுதல் ஹிந்தபைனல்
-இதயம்
பெப்ரவரி பதினாலு திறந்த பூங்கா காதல் தேசம் சுதந்திரவுலகு முகவரியிலே சோடிகள் தேசத்து மாநாடு - விடுதலை தினம் காதல் தேசத்து மகாராணியும் அதே தேசத்து மாமன்னனும் கொண்ட சோடிகளின் விடுதலை விஞ்ஞாபனம்
பெற்றோர் அரசுகளுடனான காதலர் தடை நீக்கலுக்கான பேச்சுவார்த்தைத் தீர்மானம் கதியற்ற
தனியன்களின் ஊடுருவல் தலையிடலுக்கெதிரான மானசீகப்
போர்ப்பிரகடனம் திகதி குறிக்கப் பிரத்தியேக காரியாலயங்களும் இலவச
58

திருமண ஏற்பாடுகளும் ஏமாற்றப்படுவோருக்கு நீதி வழங்கத் தனியான நீதிமன்றங்களமைத்தல் உயிர்கொல்லி நாசினியுற்பத்தி நிறுவனங்களை முற்றாகத் தடை செய்தல் சோடிகள் பொது எதிரிகளை கூட்டாக எதிர்ப்பதற்கான சட்ட உடன்பாடு
விரும்பியவர்
தூதுவரின்றி
நேரடித் தொடர்பு கொள்ளவும்
விரும்பியதைத் தெரிந்திடவும்
உரிமையினை
உறுதிப்படுத்தல்.
59

Page 43
கண்ணிருேடுை.
- இறக்காமத் தென்றல்
அன்பே, அடிக்கடி என் கடிதம் எதிர்பார்த்து ஏமாந்திருப்பாய் என்பது எனக்குத்
தெரியும்!
அன்பே, என்னால் அடிக்கடி கடிதம் எழுத முடியாது என்பதும் உனக்குத் தெரியும். ஏனெனில்
நானும் ஒரு இராணுவச் சிப்பாய்தான்! இது அநேகமாய் கடைசிக் கடிதமாய் இருக்கலாம், சென்ற கடிதம் போல!!
60

அன்பே,
என் அப்பாவின்
சுருட்டுக்கும்.
அம்மாவின்
வெற்றிலைக்கும். உன் உடுதுணிக்கும். என் பிள்ளைகளின் பால் புட்டிக்கும். இந்தப் படிப்பேறாத இராணுவ வீரன் காவலரண்களில் கண் விழித்து. நுளம்புகளோடு உறவாடி. உன்னினதும். என் அன்புச் செல்வங்களினதும் நினைவுக் கானலில்
போராடி.
அரை நித்திரையில் கண் விழித்திருப்பதும் உனக்குத் தெரியுமா?!
கண்ணே, நானும் உன்னைப் போல் பட்டதாரியாகலாம் என நினைத்தவன்தான். என்றாலும் இலகுவாக கிடைக்கின்ற தொழில்
இராணுவம்தான்!! மீண்டும் ஒரு கடிதத்திற்காய். 'கணவன் கையொப்பத்தோடு.
6

Page 44
கலத்தீருக்கீறேன்!
- 'tudiრრ"
மோனக்கடலுக்குள் எழும்பும் மாபெரும் அலைகளுக்குள் என்னைத் தேடுகிறேன்.
விரிந்து விழுந்த அலைப்பரப்பினுள் நான்’ தென்படவேயில்லை.
அந்த மாபெரும் சமுத்திரத்தில், ஏகாந்தத்தைக் கிழிக்கும் பேரிரைச்சலில், என்னைத் தேடும் என் ஒலம். எனக்கே கேட்கவில்லை.
ஆனாலும், காத்திருக்கிறேன். ஏதோ ஒரு கணத்தில் அலைக்கரங்களால் தள்ளுண்டு கரையொதுங்கப் போகும் எனக்காக அதோ!
அந்தக் கடற்கரை மணலில் இன்னும் நான் காத்திருக்கிறேன்!
62

மூழைக்கலை சீளுேகல்
- «Jղփh
அன்றும் மழை பெய்தது. ஒரு கடைக்காப்பில் ஒன்றாகவே நடந்தோம் நெடுநேரம்.
வழி நெடுக பால்யகாலச் சந்தோஷங்களை என்னோடு பகிர்ந்து கொண்டே நடந்தாய்.
மழைச்சாரலில் கரம் நனைத்து, உனை நனைத்து பால்ய காலத்துக்கே பயணப்பட்டிருந்தேன் நான்.
அச்சங்களில்லா அவசரங்களில்லா - நம் கற்பனைப் பூமியில் மழையின் குளிரை விரட்ட நேசவேள்வியின் சுடர் வளர்த்தோம்.
یہ ہی

Page 45
இன்றும் மழை பெய்கிறது. குடை பகிர - மறுத்து நனைந்து நடக்கிறாய் இடைவெளி விட்டு.
வார்த்தைச் சேகரிப்பில் வறுமைப்பட்டு மெளனம் காக்கிறாய். கண்ணில் மட்டும் நேசம் தேக்கி விலகிப் போகிறாய்.
கலாசாரக் காவலர்களின்’
நம்
மழைப்பயணம் குறித்தான விமர்சனங்கள் உன் காதுகளையும் காயப்படுத்திற்றுப் போலும்
வேண்டாம்,
யதார்த்த உலகின் பரிமாணங்களால் சட்டமிடப்பட்ட தீயென்றும்
சாதாரணனல்ல.
நாளையும் மழை பெய்யும். நட்புக் கரம் கோர்த்து, மழையில் நடக்கும் அற்புதக் கணங்களைத் தவற விட்டோருக்காய் சில நிமிஷம் அஞ்சலி செலுத்தி, இணைந்து நனைவோம்
6.шт!
64

4.
10.
11.
12.
13.
14.
15.
16.
கடல் - குறிஞ்சிக்கிழான்
பதவிகள் நிரந்தரம்
இல்லை. - குறிஞ்சிக்கிழான் கனவுகள் - மரீனா இல்யாஸ் கற்பிழந்த
கதாநாயகனுக்கு...! - மரீனா இல்யாஸ் சிதைக்கப்பட்ட உணர்வுகள் - துறவி நேற்றைய மழை - எம்.எம்.விஜிலி
நினைப்பது தவறு - ரஜிமுகம் தொட்டில் கனவுகளும் தோட்ட நினைவுகளும் - கவிதா
ஒரு நட்சத்திரம் கண்
சிமிட்டியதால் - ஹலீமா செயினுடின்
மீண்டும் மீண்டும்
வீழ்ந்து போவதாய் -ஹளினா இஸ்மாயில்
என் பேனா பேசுகிறது - தோப்பூர் நிஸ்வி சிவப்பு உலகம் - நிலாவெளி ஷர்மிளா றஹீம்
என் தேசத்தில்
நான் - நிலாவெளி ஷர்மிளா றஹீம்
ஒரு கறுப்பு
இரவில் -நிலாவெளி ஷர்மிளா றஹீம் மண்ணின் குரல் - இறக்காமம் தெளபீர்
முட்களும் பூக்களே - இறக்காமம் தெளபீர்
65

Page 46
1Z
18.
19.
2O.
21.
22.
23.
24.
25.
26.
2Z
28.
29.
3O.
31.
32.
33.
34.
35.
36.
37.
அழைப்பு - பூgபிரசாந்தன்
முதலில் முடிதல் - பூஞரீபிரசாந்தன்
தெரிவு - பூஞரீபிரசாந்தன்
அவர்களுக்காய் - ஏ.எம்.எம்.சியாத்
பிரகாஷ் வாரம் - அப்துல் கரீம்
பிரிந்து செல்லுகை - லறினா ஏ.ஹக்
வீசுக புயலே - லறினா ஏ.ஹக்
கோடை - மன்னார்’ மூன்றாம் பிறை
மனப்பசி - மன்னார்’ மூன்றாம் பிறை
நிழலின்
காலடியோசைகள் - ஜெஸிமாஹமீட்
நிமிட சுட்டித்தனம் - நஸ்ரா நிசாம்
பெண் என்ன தவம்
மறந்தாள்? - அஸ்மியா ஏ.வாஹிட்
மெளனத்தின் அழுகையில் - செ.சுதர்சன்
கிராமத்துக் கனவுகள் - செ.சுதர்சன்
மானுடத்திற்காய்
வழக்காடுகிறேன் - லோறன்ஸ்
அந்த மலைச்சாரலில் - லோறன்ஸ்
ஒரு கறுப்புக் கவிதை - எம்.எஸ்.ஆயிஷா
காதல் விஞ்ஞாபனம் - இதயன்
கண்ணிரோடு - இறக்காமத் தென்றல்
காத்திருக்கிறேன் - யாழினி
மழைக்கால சிநேகம் - யாழினி
66


Page 47


Page 48
பேராதனைப் பல்கலைக்கழகக் கை Uடத்தில் அமைந்துள்ள சங்கப்பலை இலக்கிய ஆர்வமுடைய பல்கலைக் மானவர்களுக்கான ஒரு வெளியிட்டு களமாகவும் எழுதுவதற்கா 35/Toma ei agul இதனை ஒரு கையெழுத் சஞ்சிகை எனல் பொருந்தும் துறையினர் பொறுப்பிலுள்ள இச் சஞ்சிகையில் மாணவர்கள் ஆர்வத் தங்கள் படைப்புகளை வெளியிட்டு வந்துள்ளனர். பேராசிரியர் தில்லைநாதன் இதனைத் தொடங்க வைத்தா தி.துரை மனோகர
உத்யோகப் பறிமுறையில் ச பலகையின் பொறுப்பாளராக இருந் DIT GOOI GJÍC5C0GT உற்சாகப் படுத்தி
கடந்த சுமார் பத்தாண்டு 6ՍՍ ՍՓg
ճ0:5Մ6ն ՖԱ-նցՄՄՄ
 

ISBN 95.5825 033-3
|
917. 99 558 125 033.