கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இன்னுமோர் உலகம் (சிறுகதைகள்)

Page 1


Page 2


Page 3

இன்னுமோர் உலகம்
(சிறுகதைகள்)
கொற்றை பி. கிருஷ்ணானந்தன்
ஞானம் பதிப்பகம்
3-B, 46 ஆவது ஒழுங்கை கொழும்பு - 06.

Page 4
நூல்
இலக்கிய வகை
ஆசிரியர்
உரிமை
முதற்பதிப்பு
பக்கங்கள்
வெளியீடு
அச்சுப்பதிப்பு
ISBN
இன்னுமோர் உலகம்
சிறுகதைகள்
கொற்றை பி. கிருஷ்ணானந்தன்
திருமதி சந்திரா கிருஷ்ணானந்தன் “பிள்ளை நிலா"
கொற்றாவத்தை வல்வெட்டித்துறை
O5-02-2012
xii + 100
ஞானம் பதிப்பகம்
3 - B, 46 ஆவது ஒழுங்கை கொழும்பு - 06. editor (G) gnanam.info
யுனி ஆர்ட்ஸ் பிறைவேட் லிமிட்டட் 48B, புளுமெண்டால் வீதி, கொழும்பு 13 தொலைபேசி 2330195
ংখ্যLIT 250/
978-955-8354-42-1
 

aftDijuanab
என் வாழ்க்கைப்படகுதிசைமாறிப்போகாமல்
சுக்கானை தம் கையில் எடுத்து- என்னை சரியான வழியில் இன்று 6ᎧᎫ60ᎠᎫᎢ பயணிக்கச்செய்யும்
என் மூத்த அத்தான்
க. கணேசன்
என் சின்னண்ணன்
மு. நடேசன் (நயினார்)
ஆகிய இருவருக்கும்.

Page 5

பதிப்புரை
ஒவ்வொரு எழுத்தாளனும் தான் பயிலும் இலக்கிய உலகில் தனது முத்திரையைப் பதிப்பது தனது தரிசனத் தனித்துவத்தினாலேயே. அந்த வகையில் கொற்றை பி. கிருஷ்ணானந்தனும் தனது தனித்துவத்தினை இந்தச் சிறுகதைத் தொகுதி மூலம் நிலைநாட்டியுள்ளார். இவரது சிறுகதைகள் சமகாலச் சிறுகதைகளின் போக்கிலிருந்து மாறுபட்டவை, தனித்துவமானவை.
இவர் தனது பெரும்பாலான கதைகளின் பேசுபொருளாக சமகால எழுத்தாளர்களால் அதிகமாகக் கையாளப்படும் சாதிப் பிரச்சினையையோ அல்லது போர்க்கால அவலங்களையோ தேர்ந்தெடுக்கவில்லை. இவரது கதைகள் புதிய உள்ளடக்கங்கள் கொண்டவை; வித்தியாசமானவை.
கொற்றை பி. கிருஷ்ணானந்தன் ஆரம்பத்தில் இலங்கை வானொலியில் கவியரங்கம், நாடகம், தொடர்கட்டுரைகள் போன்றவற்றை எழுதியவர். பின்னர் ஒரு கவிஞராகவும் புனைகதையாளராகவும் இலக்கியத்துறையில் தடம் பதித்தவர்.
இவர் எமது ஞானம் சஞ்சிகையிலும் பல கவிதைகளையும் சிறுகதைகளையும் எழுதியுள்ளார். தற்போது "கொற்றாவத்தை கூறும் குட்டிக் கதைகள்’ என்ற தொடரை எழுதிவருகிறார். இவரிடம் நான் கண்ட சிறப்பு இவரிடம் ஒர் இலக்கியச் சிரத்தை உள்ளது. தனது படைப்பினை மீள மீளத் திருத்தஞ் செய்து பூரணப்படுத்தும் தன்மையை நான் அவதானித்திருக்கிறேன். படைப்பினை அச்சுக்கு அனுப்பிய பின்னரும் இவர் எம்மோடு தொடர்பு கொண்டு அதனைச் செதுக்கியும் புதுக்கியும் திருத்தங்களை மேற்கொள்வார். இதனால் இவரது படைப்புகள் செய்நேர்த்தியுடன் திகழ்கின்றன.

Page 6
கொற்றை பி. கிருஷ்ணானந்தனின் ஒவ்வொரு கதையிலும் கதைக்கான களமும் சூழலும் தத்ரூபமாகச் சித்திரிக்கப்படுகின்றன. இலக்கியப் பெறுமானமான மனித நிலைச் சித்திரிப்பும், செறிவும், அமைவடக்கமும் மேலோங்கியிருக்கின்றன.
இவரது கதைகளின் மற்றுமோர் உயிரோட்டமான அம்சம், இவர் கையாளும் உரைநடை அனுபவத்தை தொற்றவைப்பதற்கேற்ற வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உணர்ச்சிக் கூறுகள் நிறைந்த - அதேவேளை சமூக யதார்த்தத்திலிருந்து விட்டு விலகாத நடைச் சிறப்பு இவருடையது.
“இன்னுமோர் உலகம்” என்ற இந்தச் சிறுகதைத் தொகுதி மூலம் கொற்றை பி. கிருஷ்ணானந்தன் ஈழத்து இலக்கிய உலகில் தனது தடத்தினை ஆழமாகப் பதித்துள்ளார். இச்சிறுகதைத் தொகுதி வாசகருக்குப் புதிய அனுபவத்தைத் தரும் எனத் திடமாக நம்பலாம்.
இச்சிறுகதைத் தொகுதியினை எமது ஞானம் பதிப்பகத்தின் மூலம் வெளிக்கொணர்வதில் நாம் மகிழ்வடைகின்றோம்.
தி. ஞானசேகரன் ஞானம் பிரதம ஆசிரியர்
20.01.2012
"ஞானம் பதிப்பகம்’ 3-8, 46 ஆவது ஒழுங்கை, கொழும்பு-06
O777 306506
editor (agnanam.info
 

Vii
அணிந்துரை
அணிந்துரை எழுதுவதற்காக இச்சிறுகதைத் தொகுப்பினை வாசிக்க முற்பட்டபோது ஒரு வித சலிப்புணர்வுடன்தான் வாசிக்க ஆரம்பித்தேன். ஏனெனில், சமகாலத்தில் வெளிவருகின்ற சிறுகதைகள் பலவும் ஏறத்தாழ முப்பதாண்டுகளாக நிலவிவந்துள்ள போர்க்கால அவலங்களின் பன்முகப்பரிமாணங்களை வெளிப்படுத்தும் படைப்புகளைக் கொண்டுள்ளன. அன்றேல், நீண்டகாலமாக நிலவிவரும் சாதிப் பிரச்சினை பற்றியதாகவோ வர்க்கப் பிரச்சினை சார்ந்தனவாகவோ காணப்படுகின்றன. ஒரேபாணியில் வெளிப்படுவனவாகவும் உற்பத்திக் கதைகளாகவும்அமைந்துவிடுகின்றன. இத்தகைய ஆரோக்கியமற்ற சூழலில் இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகள் பலவும் மேற்கூறிய செல்நெறிகளிலிருந்து சற்று விலகி, வித்தியாசமான புதிய உள்ளடக்கங்கள் கொண்டனவாக விளங்குகின்றன. பழைய விடயங்களெனில் அவை வித்தியாசமான - புதிய-பார்வைக்குட்படுவனவாக வெளிப்படுகின்றன. இத்தியாதி காரணங்களினால் இவை வாசகரது சலிப்புணர்வைப்போக்கி தொடர்ந்து வாசிக்கத்தூண்டுவனவாக வெளிப்பட்டிருப்பது இவற்றின் சிறப்பியல்புகளென்று கருதுகின்றேன். ஆகவே அவை பற்றி மட்டும் இவ்வேளை எடுத்துரைப்பது பொருத்தமானதாகப்படுகின்றது.
வித்தியாசமான புதிய உள்ளடக்கங்கள் கொண்ட சிறுகதைகளாக, கிணறு, 'நெஞ்சு பொறுக்குதில்லையே'. 'அம்மாக்களின் ஆத்மா', 'ஒரு கோப்பை சோறு ஆகியவை காணப்படுகின்றன.
மேற்கூறியவற்றுளொன்றான கிணறு, கிராமப் புறங்களில் கடந்த சில வருடங்களாக ஏற்பட்டு வந்துள்ள பண்பாட்டு மாற்றங்களுளொன்றாக வெளிப்பட்டுள்ள குழாய்க் கிணறு தோண்டும் விவகாரம் பற்றியது. வீட்டிலிருந்துவரும் பழைய காலக் கிணற்றினை அழிய விட்டுவிட்டு புதிய குழாய்க் கிணறு தோண்ட முனையும் பிள்ளைகளுக்கும் அதற்கெதிராகப்

Page 7
Viii
போர்க்கொடி தூக்கி, சாப்பிடாமலிருக்கும் தாய்க்குமிடையில் நிகழ்கின்ற போராட்டம் பற்றியது. இத்தகைய உள்ளடக்கம் ஈழத்துச் சிறுகதை உலகிற்கு முற்றிலும் புதியதாகவுள்ளது
திருமணம் செய்யாதிருக்கின்ற, செய்ய முற்படும்போது தடைகள் பலவற்றை எதிர்நோக்குகின்ற பெண்களையே சந்திக்கின்ற வாசகர்கள், 'நெஞ்சு பொறுக்குதில்லையே சிறுகதையில் அத்தகைய இளைஞனொருவனைச் சந்திக்கின்றார்கள். அவனது திருமணம் தடைப்பட்டு வந்தமைக்கான
காரணமும் வித்தியாசமானதுதான்!
'அம்மாக்களின் ஆத்மா, வெளிப்படுத்தும் அனுபவம் எங்கள் பலரதும் வாழ்க்கையில் பலதடவைகள் ஏற்பட்டிருக்கக்கூடிய தொன்று. அம்மாவிற்காக காடாத்துப் படையல் படைப்பதற்கு முன்னரே மதிய உணவைச் சாப்பிட்டுவிட்ட மகனது செயல் காரணமாக ஏற்படுகின்ற பிரச்சினைபற்றிய அச் சிறுகதையில் மகன் கூறுகின்ற பதில்தான் கவனத்திற்குரியது. “அதோடை நான் ஏதும் வேலைப் பிரச்சினையிலை சாப்பிடாமல் பசியோடை இருந்தால் அம்மா என்னோடை சண்டைக்கு வாறவா. நேரத்துக்கு நான் சாப்பிட்டனெண்டால் அவ சந்தோஷப்படுகிறவ. இண்டைக்கு நான் சாப்பிட்டதாலை அம்மாவின்ரை ஆத்மா சந்தோஷப்படுமே தவிர அதாலை ஒரு பிரச்சனையுமில்லை.”
மேற்குறித்த சிறுகதையை வாசித்தபோது கு. ப. ரா எழுதியிருந்த தாயாரின் திருப்தி என்றொரு சிறுகதை நினைவிற்கு வருகின்றது. அப்படைப்பும் தாயாருக்குச் செய்கின்ற திவசத்துடன் தொடர்புபட்ட சம்பவமொன்றைப் பற்றியது. தேடல் ஆர்வமுள்ள வாசகர்கள் இவ்விரு சிறுகதைகளையும் ஒப்பிட்டு வாசிப்பின் புதியதொரு அனுபவத்தை சிந்தனை அகற்சியை பெறுவதற்கு வாய்ப்புள்ளது.
இத்தொகுப்பிலுள்ள ஒரு கோப்பை சோறு அத்தகைய விடயம்பற்றியது. முதியவரொருவரது இறுதி நாட்களின் அவல நிலையை விபரிப்பது மட்டுமன்றி, முதியவரது உறவினளொருத்தியின் அசிங்கமான மனநிலையையும் வெளிப்படுத்துவது இச்சிறுகதையின் மற்றொரு சிறப்பாகிறது.
ஒரளவு பழையதாகிப் போய்விட்ட விடயங்களை புதிய பார்வையில் அணுகுகின்ற சிறுகதைகளாக ஞானம், ஆருத்திரா தரிசனம், விலகும்
 

İX
திரைகள், இரத்தம் தடிப்பானதுதான்', 'தேவர் கூட்டத்தினுள் அசுரர்களாய்
s கோலங்கள் ஆகியவை காணப்படுகின்றன.
மேற்கூறியவற்றுள் ஞானம்', 'ஆருத்திரா தரிசனம் ஆகியவை புலம்பெயர்வாழ்வு காரணமாக இங்கு ஏற்படும் பாரதூரமான விளைவுகளைச் சித்திரிப்பவை. இப் பொருள்பற்றி சிறப்பான நாடகங்கள் (உ-ம் குழந்தை ம. சண்முகலிங்கத்தின் நாடகம்) நாவல்கள் (உ-ம் தெணியான், செங்கை ஆழியான் எழுதியவை) சில வெளிவந்துள்ளன; நினைவில் நிற்கும் சிறுகதைகள் குறைவே. இவ்விதத்தில், ஞானம் வித்தியாசமானதொன்று. புலம்பெயர் வாழ்வு காரணமாக இங்கே ஏற்படும் மாற்றங்களுளொன்று, அர்த்த ராத்திரியில் குடைபிடிப்பது. அதுபற்றி சிறப்பாக விவரணப்படுத்தும் ஞானம், எடுத்துரைப்புமுறைமை காரணமாகவும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆருத்திரா தரிசனம் அதே விடயத்தை இன்னொரு கோணத்தில் பதிவு செய்கிறது!
மனித உறவுகளையும் உறவுகளையொட்டிய பாச உணர்வுகளையும் வெளிப்படுத்தும் சிறுகதைகள் அனந்தம். இவ்வரிசையில் அடங்குபவை விலகும் திரைகள், இரத்தம் தடிப்பானதுதான், விலகும் திரையில் தாய் மீது கொண்ட பாசமிகுதியினால் வெளிநாட்டிலே திருமணம் செய்ய விரும்பாத மகளொருத்தியைச் சந்திக்கின்றோம். சகோதர பாசம் காரணமாக நேர்த்திக் கடன் வைத்து பறவைக்காவடி எடுக்கின்ற அண்ணன் ஒருவனை இனங்காட்டுகின்றது ஏனைய சிறுகதை
பாடசாலையைக் களமாகக் கொண்டு சிறுகதை எழுதியோர் பலருள்ளனர். எனினும் அவற்றுள் நினைவில் நிற்பவை குறைவே. இவ்வழியில் ‘தேவர் கூட்டத்தினுள் அசுரர்களாய். ', 'இரத்தம் சதையுமான பாத்திரமொன்றை (ஆசிரியை) சிருஷ்டித்திருப்பது காரணமாக கவனத்திற் குரியதொன்றாக விளங்குகின்றது.
விதவைகள் வாழ்க்கை நிலைச் சித்திரிப்பு, ஈழத்துச் சிறுகதை முன்னோடிகளுள் ஒருவரான சி. வைத்தியலிங்கம் காலம் தொடக்கம் அவ்வப்போது படைப்பாளர்களின் பார்வைக்குட்பட்டு வருவதுதான். இவ்விதத்தில் 'கோலங்கள் விதவையொருத்தியின் வாழ்க்கைச் சுமையை சற்று வித்தியாசமான கோணத்தில் சந்திக்கின்றது. விதவைகள் பற்றிய தமிழ்ச் சமூகத்தின் மனோபாவம் நீறுபூத்தநெருப்பாக இருப்பது புதியதொரு முறையில் எடுத்துக்காட்டப்படுகின்றது.

Page 8
போருக்குப் பிற்பட்ட பொது மக்களது அவலங்கள் பற்றி இப்போதுதான் எழுதப்பட்டு வருகின்ற சூழலில், அப்பொருள் சார்ந்து அமைந்துள்ளதென்ற விதத்திலே, இத்தொகுப்பிலுள்ள மேற்கூறப்பட்ட சிறுகதைகளின் போக்கிலிருந்து விலகி, எமது கவனத்தை அவாவுகின்ற படைப்பாகவிருக்கிறது இன்னுமோர் உலகம்.
இனி இறுதியாகக் குறிப்பிடப்படவேண்டியுள்ள மூன்று சிறுகதைகளிலும் சிற் சில குறைபாடுகள் தலைகாட்டுகின்றன. போர்க்கால அவலம் பற்றிக் கூறும் தண்ணீர் விட்டோ வளர்த்தோம் என்ற சிறுகதையில் கூறவரும் விடயம் போதியளவு அழுத்தமோ, தெளிவோ பெற்றிருப்பதாக காண முடியாதுள்ளது. இளந்தம்பதியரது உறவுப் பிரச்சினை பற்றிக் கவனம் செலுத்தும் இந்த இரவு விடிந்து விட வேண்டும் பழைய காலப் பார்வைக்குட்பட்டிருக்கிறதென்றே கூறவேண்டியுள்ளது. அவசரக் கோலமாகத் தரப்பட்டுள்ளது என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதாகவுள்ளது விதிகளே விதியாக
ஆக, பதினைந்து சிறுகதைகள் கொண்டதொரு தொகுப்பிலே பதினொரு சிறுகதைகள் புதிய வித்தியாசமான உள்ளடக்கம் அல்லது புதிய வித்தியாசமான பார்வை கொண்டனவாக வெளிப்பட்டிருப்பது நிச்சயம் பாராட்டிற்குரிய தொன்றே. எனினும் மேற் கூறிய சிறப்புகள், உள்ளடக்கம் சார்ந்த அவதானிப்பே சிறுகதை என்பது உள்ளடக்கத்துடன் மட்டும் தொடர்பு பட்டதொன்றன்று. அத்துடன் சிறுகதை வடிவம் என்பது உலகப்பொதுவான வடிவமுமாகும். அதற்கென்று வலுவான வளமான எடுத்துரைப்பு முறைகளுள்ளன. அவை காலத்திற்குக் காலமும் இடத்திற்கு இடமும் வேறுபடவுங் கூடும். ஆக, மண் மீது நின்று கொண்டு அத்தகைய விண்ணைத் தொடும் நிலைக்கு படிப்படியாக உயர்ந்து பறந்துசெல்வது அவசியமென்றே கருதுகின்றேன். வானகமிங்கு தென்படுவது, எளிதான காரியமன்று. ஆயினும், ஏலவே முக்கியமானதொரு கவிஞனாகவிருந்தாலும் சிறுகதை உலகிற்குள் கடந்த சில வருடகாலந்தொட்டே நடமாடி வருகின்ற கொற்றை கிருஷ்ணானந்தன் இக் குறுகிய காலத்துள் எமது கவனத்தை ஈர்க்கின்ற எழுத்தாளராகத் திகழ்ந்துள்ள நிலையில் மேற்குறிப்பிட்டவிடயமும் அவரால் இயலக் கூடியதொன்றென்பதில் மிகுந்த நம்பிக்கை எனக்குள்ளது!
வாழ்த்துக்களுடன், பேராசிரியர் செ. யோகராசா கிழக்குப் பல்கலைக்கழகம்
2012一01-0甘
 

உள்ளே p > 0 (0.
jO,
JJ.
2.
3.
4.
ஆருத்திரா தரிசனம்
நெஞ்சு பொறுக்குதில்லையே..!
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்.?
ஒரு கோப்பை சோறு.
விதிகளே விதியாக.
தேவர் கூட்டத்தினுள் அசுரர்களாய்
€5TGOrrib
விலகும் திரைகள்
கிணறு
இரத்தம் தடிப்பானதுதான்
இந்த இரவு விடிந்து விடவேண்டும்
அம்மாக்களின் ஆத்மா
கோலங்கள்
உறவு
இன்னுமோர் உலகம்
O
O8.
15
2
27
33
4O
45
52
58
67
74
83
89
94

Page 9

இன்னுமோர் உலகம்
மேகலா கொஞ்சம் கொஞ்சமாக பொறுமையை இழக்கின்ற நிலைமைக்கு வந்தவிட்டாள். தாய் ரெலிபோன் கதைக்க அந்தக்கூட்டுக்குள் நழைந்தவள் தன்னை தன் தமையனுடன் கதைக்க விடாமல் இவ்வளவு நேரமாக என்னதான் கதைத்து தொலைக்கிறாவோ என்று சினப்பட்டுக்கொண்டாள். எழுந்து இரண்டு மூன்று தடவை குறுக்குமறுக்குமாக நடந்த விட்டு மீண்டும் வந்து அமர்ந்தகொண்டாள்.

Page 10
2 கொற்றை பி. கிருஷ்ணானந்தன்
அந்த தொலைத்தொடர்பு நிலையத்தில் முன்பென்றால் ஓரளவு சனம் இருக்கும். ஒவ்வொருவரும் தங்களுக்கு வரும் அழைப்புக்களுக்கோ அல்லது தாமாக எடுத்தப் பேசுவதற்கோ காத்திருக்க வேண்டியிருக்கும். ஆனால் இப்போதெல்லாம் வீடுகளுக்கு ஓரளவு ரெலிபோன்கள் கிடைத்துவிட்டன. அதுமட்டும் அல்லாமல் எல்லோர் கைகளிலும் கைத்தொலைபேசிகள் வேறு.
மேகலாவும் தாயும் கேபிளுடனான தொலைபேசிக்கு எவ்வளவோ முயற்சி செய்தும் அது இதுவரை கைக்கூடவில்லை. இலண்டனில் இருந்து மேகலாவின் அண்ணன் ஆனந்தன் இரண்டு கைத்தொலைபேசிகள் அனுப்பியிருந்தம் அவைகளது சேவை ஒழுங்காக கிடைப்பதில்லை. அதிலும் நீண்ட நேரம் கதைக்க வேண்டிய தேவையிருந்தாலும் அவர்கள் இந்தத்தொலைத்தொடர்பு நிலையத்துக்கு வந்த ஆறுதலாக கதைத்து விட்டுச் செல்வதுதான் அவர்களுக்கு வசதியாக இருந்தது.
மூன்று நான்கு பேர்தான் அங்கே காத்திருந்தார்கள். தனது தாய் பவளம் நீண்ட நேரம் கதைத்துக்கொண்டிருப்பது அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றது என்பதை அவர்களது முகத்திலிருந்து மேகலா புரிந்து கொண்டாள். என்றாலும் தாயின் குணம் தெரியாததல்ல. “சுருக்கமாக கதையம்மா’ என்று சொன்னாலும் அவா கேட்கப்போறதில்லை என்று நினைத்துக்கொண்டு பேசாமல் இருந்தாள்.
“உங்கடை அண்ணாவோடயோ அம்மா கதைக்கிறா’ முன் கதிரையிலிருந்த வசந்தா மாமி பேச்சுக் கொடுத்தா”
“ஓமோம்” “உங்கடை அண்ணாவுக்கு ஒரு இடமும் பார்க்கேல்லையோ, உங்கை வயசும் முப்பது முப்பத்தொண்டை தாண்டியிருக்குமே” வசந்தா மாமி விடுப்பு கேட்கத் தொடங்கி விட்டா
‘அண்ணாவுக்கு இன்னும் விசா கிடைக்கேல்லை மாமி. அதனாலை இன்னும் ஒரு கல்யாணமும் சரிவருகுதில்லை. ஆரும் விசா உள்ள பொம்பிளை கிடைச்சா நல்லது. தேடுறம் இன்னும் பலன்வரவில்லைப் போல’.
இதற்கு மேலேயும் இருந்தால் வசந் தாமாமிக்குப் புதினம் சொல்லிக்கொண்டிருக்க வேணும் என்று நினைத்த மேகலா மெதுவாக எழுந்து போய், மேசையிலிருந்த தினசரிப்பத்திரிகைக்குள் முகத்தை புதைத்தாள்.
மேகலாவின் தாய் பவளத்தை வசந்தாமாமிக்குப் பிடிப்பதேயில்லை. வசந்தா மாமிக்கு மட்டுமல்ல அந்த பகுதியிலிருக்கின்ற அனேகம் பேருக்கு இப்போது பவளத்தை பிடிப்பதில்லை. அந்தரம் அவசரத்தக்கு ஏதம் காசு மாற வருபவர்கள்
 

இன்னுமோர் உலகம் 3.
மட்டும் பவளம் அன்ரி பவளம் அண்ரி என்று "ஐஸ்” வைத்து தாங்கள் வந்த காரியத்தை நிறைவேற்றிக்கொண்டு போய்விடுவார்கள். ஏதும் விசேஷங்களுக்கு இரவல் நகை வாங்க வருபவர்களும் அப்படியேதான். வாய் தடுமாறி பவளம் ஆச்சி என்று அழைத்த விட்டாலோ அவ்வளவுதான். எதுவித உதவியும் கிடைக்காத உடனே முகம் கறுத்துவிடும். ஏதும் சாக்குப் போக்குச் சொல்லி வெறுங்கையோடு அவர்களை அனுப்பிவிடுவா.
இப்போது அறுபத்தைந்தைத் தாண்டி விட்ட பவளம் அன்ரியை அவவை விட வயதால் குறைந்தவர்கள் பலர் மூன்று நான்கு வருடங்களுக்கு முன்னர் பவளம் ஆச்சி என்றுதான் அழைத்து வந்தனர். எப்போது அடிக்கடி கொழும்பு போய் வரத்தொடங்கினாவோ அதன் பிறகு
“பவளம் அன்ரி நீங்கள் அப்படி செய்தால்தான் நல்லது எண்டு பூபாலன்தான் சொன்னவன்”
என்றோ, “பவளம் அன்ரி எப்ப ஊருக்குப் போறியள் நான் கொஞ்சச் சாமான் தந்து விடப்போறன் என்று மரகதம் கேட்டவள் நான் மறுத்துபோட்டன்’ என்றோ சம்பாஷணையூடாக அடிக்கடி தானே சொல்லிச்சொல்லி பவளம் அன்ரி என்றே தன்னை அழைக்க வேண்டுமென்ற தனது விருப்பத்தை நிறைவேற்றியே விட்டா. பவளம் அன்ரியின் புருஷன் மேசன் வேலைதான் செய்து வந்தவர். பங்குனி சித்திரை காலங்களில் மட்டும் கள்ளுச்சீவுற தொழிலைச் செய்வார் ஆனால் அவர் பெரிய உழைப்பாளி அல்ல. தேட்டமென்று ஏதம் மிஞ்சாவிட்டாலும் சீவியப்பாடு போய்க்கொண்டிருந்தது. மகன் வெளிநாடு போய் இரண்டு மூன்று வருடங்களுக்குப் பிறகு அவரை தொழிலொன்றும் செய்யாதபடி இவர்கள் தடுத்தவிட்டார்கள். அதன் பின்னர் நாளொன்றுக்கு நாற்றியம்பத ரூபா மட்டும் பவளம் அண்ரி தன்னுடைய இல்லத்தரசனுக்கு "அலவன்ஸ்’ வழங்குவா, அது அவரது கள்ளுச்செலவு, பீடி போன்றவற்றுக்கு மிச்சம் மீதியாகப் போதும்.
இப்பகுதிகளில் அந்தக்காலத்திலென்றால் அறுபத்தைந்து வயதில் கூட உரம் பலமான உடல் வாகுடன் இயலக்கூடியளவு தொழில் களைச் செய்தவந்தார்கள். வெளிநாடு என்று எப்போத பிள்ளைகள் கிளம்பினார்களோ, தகப்பன்மார் ஐம்பத ஐம்பத்தைந்து வயதுடன் இவ்வளவு காலமும் சோறு போட்ட தொழில்களுக்கு முழுக்குப்போட்டு விட்டார்கள்-பிள்ளைகளின்
35LL60)6/Ts / My -
"மோன் தகப்பனை இனிவேலைக்கு விடவேண்டாமாம் ஐயா இவ்வளவு காலமும் கஸ்டப்பட்டு உழைச்சுப்பார்த்தது போதுமெண்டு சொல்லிப்போட்டான்’ என்றோ அல்லது “எங்கடை இவருக்கு பிறசருங்கோ, டயபற்றிசும் கொஞ்சம்

Page 11
4. கொற்றை பி. கிருஷ்ணானந்தன்
இருக்கு. பின்னை வேலைக்கு போறதை நிற்பாட்டிப்போட்டம்” என்றோ சொல்லிக்கொள்வது பாசனாகிவிட்டது. அதன் பின் அனேக குடும்பங்களில் தற்போதைய எங்களுடைய அரசியலமைப்பு முறையில் உள்ள ஜனாதிபதியாக தாய்மாரும் பிரதமராக தகப்பண்களும் மாறிவிட்டார்கள்.
பவளம் அன்ரியின் மகன் ஆனந்தன் தகப்பனைப்போல் அல்ல. பெரிய சீவல் தொழிலாளி. நல்ல வேலைகாரன். வீட்டுப்பொறுப்பையுணர்ந்த படிப்பை இடையில் நிறுத்திவிட்டு பதினேழு வயதில் தொடங்கி இருபத்திநான்கு வயதில் இலண்டனுக்கு போகும் வரை கள்ளுச்சீவியே நன்றாக உழுைத்தவன். மூன்று தடவை அதிகூடிய அளவில் கள்ளுச்சீவிகொடுத்தவன் என அவன் அங்கம் வகிக்கும் பனை தென்னை வள கூட்டுறவுச்சங்கத்தினால் கெளரவிக்கப்பட்டு பரிசுகள் பெற்றவன். என்றாலும் தன்னொடோத்த வயதினரைப்போல தானும் வெளிநாடு போனால்தான் தன் தமக்கைமார் இருவரையும் தங்கை ஒருத்தியையும் நல்ல முறையில் கரைசேர்க்கலாம் என்ற எண்ணத்தில் இலண்டன் போய்ச்சேர்ந்தான்.
இங்கே கஸ்டப்பட்டு உழைத்த அனுபவத்தில் இலண்டனிலும் ஆனந்தன் கடினமாக உழைக்கத்தயங்கவில்லை. அவனுக்கு நிரந்திர வதிவிட உரிமை கிடைக்காவிட்டாலும் கூட, அப்படி இப்படி இரண்டு நேரம் மூன்று நேரம் வேலை செய்த காசாக அனுப்பிக்கொண்டிருந்தான்.
என்னதானிருந்தாலும் பவளம் அன்ரி நல்ல நிர்வாகிதான். தனது மூத்த பெண்பிள்ளைகள் இருவரையும் வெளிநாட்டு மாப்பிள்ளைகளுக்கு அனுப்ப முயற்சி செய்து முடியாமற் போய்விட்டாலும் சோர்ந்த விடவில்லை. ஒருத்தியை அவன் காதலித்த அவளுடன் கூடப்படித்து பின்னர் ஆசிரியர் தொழில் பார்ப்பவனுக்கே, நல்ல சீதனம் கொடுத்து ஊரில் வீடுவாசலுடன் மணம் முடித்துக்கொடுத்தாள் அவள் கணவனின் தொழில் நிமித்தம் மன்னாரில் இருக்கின்றாள். அடுத்தவளுக்கும் இதேபோன்று சீதனங்களுடன் யாழ்ப்பாணத்தில் எழுதுவினைஞராக வேலை பார்க்கும் ஒருவனைக் கட்டிக்கொடுத்து, ஊரில் அவர்களுக்கு சீதனமாகக் கொடுத்து வீட்டிலேயே தானும் மகள் மேகலாவும் வசிக்கின்றார்கள்.
பவளம் அன்ரியை இரண்டு மூன்று வருடங்களாக இரண்டு ஆசைகள் பாடாய்ப்படுத்துகிறது. ஒன்று ஏ.எல் படித்த விட்டு வீட்டில் இருக்கும் மேகலாவை யாவது நல்ல வெளிநாட்டு மாப்பிள்ளையைப்பார்த்த அனுப்பிவைக்கவேண்டும். மற்றது கொழும்பில் வீடு வாங்க வேண்டும். வீடு வாங்கி விட்டு ஊரில் உள்ள இரண்டு வீடுகளையும் யாருக்காவது வாடகைக்கு கொடுத்து விட்டு மன்னாரில் இருப்பவளையும் ஊரில் இருப்பவளையும் அவரவர் கணவன்மாருக்கு வேலையில் இடமாற்றம் எடுத்துக்கொண்டு தானும் கொழும்பில் செற்றிலாகி விட வேண்டும்.
 

இன்னுமோர் உலகம் 5
அடிக்கடி கொழும்பு போய் வந்ததும் பவளம் அன்ரிக்கு கொழும்பு நன்றாகவே பிடித்து விட்டது. ஊரில் ஒரு சின்ன வருத்தம் என்றாலும் “கொழும்பில் அப்பலோவில் காட்டுகிறதுதான் நல்லது’ என்பதுதான் அவளது அட்வைஷாக இருக்கும். ஆனாலும் “லொட்ஜ்’ வாழ்க்கை பவளம் அன்ரிக்கு வெறுத்தப்போய்விட்டது.
இப்போதைய சராசரிப் பெண்களின் சிந்தனைக்குப் பவளம் அன்ரி மட்டும் விதிவிலக்கல்லவே. மேகலாவை வெளிநாட்டுக்கு அனுப்பி விட்டால் ஊரில் உள்ள சில தாய்மாரைப்போலவே தானும் அடிக்கடி பிள்ளைப்பேறு அது இது என்று வெளிநாடு போய் வரலாம் என்று நினைக்கின்றாள். அதிலும் கொழும்பில் வீடென்றால் இன்னும் சுகமல்லவா?
மகன் ஆனந்தன் இலண்டனில் ஒரு பெரிய சீட்டுக் கட்டுவது அவவுக்கு தெரியும். ஒருநாள் ரெலிபோன் கதைக்கும் போது 'தம்பி சீட்டு எடுத்து என்ன செய்யப்போறாய் மோனை. சீட்டுக்காசு கிட்டத்தட்ட எவ்வளவு வரும்” என்று கேட்டாள்.
“ஒரு ஐம்பது இலட்சம் வரும் என்ன செய்யிறதென்று பிறகு யோசிப்பமம்மா” “கவனம் தம்பி ஏமாத்திப்போடுவாங்க. நான் ஒண்டு கேட்கிறன். கோவிச்சுப்போடாதை மோனை'
'நீங்கள் கேட்டால் நான் எப்படியம்மா கோவிக்கிறது. தயங்காமல் கேளுங்கோ’
பவளம் அன்ரிக்கு தயக்கமாய்தான் இருந்தது. என்றாலும் கேட்டுவிட்டா? “சீட்டை எடுத்து கொழும்பில் ஒரு வீடு வாங்குவமே தம்பி” “உங்களுக்கென்ன விசரே அம்மா. கொழும்பில வீடு வாங்கிறது சின்ன அலுவலே. பிளற் சிலை வாங்கிறதெண் டாலேயே ஒண் டரைக்கோடி இரண்டுகோடிக்கு மேலே வேணும். உழைச்ச காசை உங்கை ஒண்டுக்கும் அனுப்பாமலிருந்தால் என்னட்டை காசிருந்திருக்கும். இப்ப உத முடியுமே”
பவளம் அன்ரிக்கு உஷார் வந்துவிட்டது. தனது கொழும்பு அனுபவம் கைகொடுக்க பேச்சை தொடர்ந்தாள்.
“அது தம்பி பம்பலப்பிட்டி வெள்ளவத்தைப்பக்கம் எண்டால் தான் கணக்க வேணும். மோதற, மட்டக்குளிப் பக்கமெண்டால் ஐம்பத அறுபது இலச்சத்தோடே சமாளிக்கலாம்”
கொஞ்ச நேரம் அந்தப்பக்கம் சத்தமில்லை.
G. o 4. „Q ל ל என்ன தம்பி ஒரு பதிலையும் காணேல்லை

Page 12
6 கொற்றை பி. கிருஷ்ணானந்தன்
“சரியம்மா அப்படியே செய்யுங்கோ. வாறமாசம் சீட்டுக்காசு கையிலை கிடைக்கும். ஆரிட்டையும் குடுத்த ஏமாறாமல் மன்னாரிலை இருக்கின்ற பெரியக்காவிண்ரை அத்தானிடம் சொல்லி நல்ல வீடாகப் பார்க்கச் சொல்லுங்கோ’
தொலைபேசி உரையாடல் இனித நிறைவேறியது. அதன் பின் பவளம் அன்ரி தனது மன்னார் மருமகனிடம் சொல்லியதோடு மட்டும் நின்றுவிடாது வேறு சிலரிடமும் சொல்லி வைத்த அதற்குரிய ஆயத்தங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றா. இன்று ஒரு மாதத்தின் பின் தாயையும் தங்கையையும் ஆனந்தண் ரெலிபோன் கதைக்க கூடப்பிட்டதன் பேரில்தான் இருவரும் தொலைபேசி நிலையத்திற்கு வற்திருக்கிறார்கள். பவளம் அன்ரிக்கு நிச்சயமாகத் தெரியும் மகனின் கையில் இப்போது சீட்டுக்காசு கிடைத்திருமென்று. மேகலா பத்திரிகையில் கவனத்தை செலுத்தியிருந்தாலும் இன்று வழமைக்கு மாறாக தாயின் குரல் அந்தக்கூட்டுக்கு வெளியிலே கேட்பதை உணர்ந்தாள். ஏதோ வாதாடுவது போல் தெரிந்தது. மற்றவர்களும் இதை அவதானிப்பதை இவள் அவதானித்தாள். இவளுக்கு காரணம் புரியவில்லை. மெல்ல எழுந்து தாயின் அருகே போக எத்தனிக்க, தீடிரென்று ரெலிபோன் கூடு திறந்தது. தாய் வேர்க்க விறலுவிறுக்க வெளியே வந்ததைக் கண்டு திடுக்கிட்டாள்.
“அவன் உன்னோடை கதைக்க வேணுமாம். போய் அந்த விசரனோடை கதை’
வெளியேறியதும் தனக்காக காத்திருக்காமல் நேரே வீடு நோக்கி கோபத்தோடு போய்க்கொண்டிருக்கின்ற தாயைப் பார்த்த போது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒருநாளும் அம்மா இப்படி அண்ணாவைக் கோபித்தத கிடையாதே என்று யோசித்தவள் மற்றவர்களும் இதைக்கவனித்ததையிட்டு கூனிக்குறுகினாள். கூட்டுக்குள் போனதும் றிசிவரை கையிலெடுத்து “ஹலோ அண்ணா” என்றார்.
ஆனந்தனின் குரல் மறுபுறத்தில் கேட்கிறது. “தங்கச்சி அம்மாவுக்கு ஒண்டும் விளங்காது. அவ கோவிச்சுக்கொண்டு போனாப்போகட்டும். பரவாயில்லை. நான் சொல்லுறதைக் கவனமாகக்கேள். எண்னை திருப்பி அனுப்புறநாள் வெகுதாரத்திலில்லை. போன மாசமும் நாறுபேருக்கு மேலை இங்கையிருந்த அனுப்பப் பட்டது உங்கை பேப் பரிலை பார்த்திருப்பாயெண்டு நினைக்கிறன், நாங்கள் சிலபேர் இப்ப கிழமைக்கொருக்கால் போய் கையெழுத்து வைக்க வேணும். இவங்களாகத்திருப்பியனுப்ப முந்தி நாங்களாகவே வந்திட்டால் சில நன்மைகளும் கிடைக்கும். என்ன தங்கச்சி ஒண்டும் பேசாம”
 

இன்னுமோர் உலகம் 7
'நீங்க சொல்லுங்கண்ணா’
"கொழும்பிலை வீடுவாங்கிற விஷயம் சரிவராது. நான் வந்து ങ്ങgഥ. கள்ளு, கருப்பனி சீவிறனோ அல்லது வேறையேதும் தொழில் செய்யிறனோ தெரியாது. உங்கை வந்த நிலைமையைப் பார்த்து ஏதும் செய்யலாம். ஆனால் என்ன தொழில் செய்தாவத உனக்கு நல்ல வாழ்க்கை அமைச்சுத்தருவன். அதைப்பற்றி நீ யோசிக்க வேண்டாம். நான் முந்தி கள்ளுச்சீவின எங்கடவீட்டுக்கு மேற்கால இருக்கிற காணி தெரியும் தானே. அத இருபது பரப்பு. அதுக்குள்ள குறைஞ்சது முன்னுாறு பனைக்கு கூடுதலாக நிண்டது. அந்தக் காணியை இப்ப வேலுப்பிள்ளை வாத்தியார் விக்கப்போறாராம். வித்துப்போட்டு கனடாவிக்குப்போய் மகனோட செற்றிலாகப்போறாரெண்டு அவரின்ரை பெறாமகன் இங்கை எனக்கு சொன்னவன். நான் சீட்டுக்காசு முழுவதையும் அனுப்புறன். ஐயாவையும் சின்னக்காவின்ரை அத்தானையும் அனுப்பி விலையைப் பேசி முடிவாக்கி உடனே வாங்கி போடுங்கோ காணி கைநழுவிப்போக விட்டிடவேண்டாம்.சரிதானே'
“சரியண்ணா அப்படியே செய்யிறம்’
சொல்லிவிட்டு றிசிவரை வைத்தாள் மேகலா. வீட்டைநோக்கி நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையுமாகச்சென்று கொண்டிருக்கும் அவள் தனது சிந்தையிலும் ஏதோ தெளிவான ஒளிக்கீற்றுக்கள் தென்படுவதுபோல் உணர்ந்தாள்.
("ஞானம்' பரிசுக் கதை - 2007)

Page 13
8 கொற்றை பி. கிருஷ்ணானந்தன்
"மாமா என்ரை கல்யாணத்தைப்பற்றிக் கவலைப்படாதையுங்கோ. அது ஆறுதலாக நடக்கிற காலத்திலை நடக்கட்டும். இப்ப நீங்கள் தங்கைச்சியள் இரண்டு பேரையும் கரை சேர்க்கிற முயற்சியைச் செய்யுங்கோ’.
“டேய் உனக்கு வயது இந்த ஆவணியோடை முப்பத்திநாலு முடியுத. அவளவை இரண்டு பேருக்கும் இருபத்தைந்துக்குள்ளதானை. அது பிறகு பார்ப்பம். இப்ப உண்ரை விஷயம் தான் முக்கியம்.”
 

இன்னுமோர் உலகம் 9
“அதுக்காக நீங்களும் எவ்வளவு முயற்சி செய்திட்டியள். வயது கூடிய பெண்பிள்ளையஞக்கு மாப்பிள்ளை பார்க்க தாய் தகப்பன் கஸ்டப்படுகிற மாதிரியல்லே மாப்பிள்ளையை வைச்சுக்கொண்டு நீங்கள் கஸ்டப்படுகிறியள்.” “அதுக்கு நீயும்தான் காரணம். உண்ரை முப்பது வயதுக்கு முன்னம் எத்தனை பெரிய பெரிய இடங்களிலிருந்து கேட்டு வந்தவை. நீயும் மேற்படிப்பு முடியட்டும், பதவி உயர்வு வரட்டுமெண்டு எல்லாத்தையும் தட்டிக்கழிச்சுப் போட்டாய்”.
“ஓம் அது உண்மைதான் மாமா. ஆனால் இப்ப நாலு வருஷமாக உங்டகடை எண்ணத்திற்கு விட்டுத்தந்தனான்தானே.”
“அது சரியடா அதுக்கிடையிலை வாசிகசாலைப் பிரச்சினை வந்திட்டுத. உனக்கும் எதிரியள் ஊருக்குள்ளே உருவாகியிட்டாங்கள். உனக்குச் சரிவாற கலியாணங்களை போய் குழப்புறாங்கள். இப்ப வந்திருக்கிற சம்பந்தம் என்ரை உயிர்ச்சினேகிதண்ரை மகள். இதோடை எல்லாம் முடிவுக்கு வரும். நீ பேசாமல்
“கொஞ்சம் உரத்த தொனியில் கூறிவிட்டுப் பதிலை எதிர்பார்க்காமல் சென்று கொண்டிருந்த மாமன் மாதவனை இமைமுடாமல் பார்த்துக் கொண்டு நின்றான் கேசவன்.”
மாதவன் அன்று முழுவதுமாக இதைப்பற்றியே மூளையைக் குழப்பிக் கொண்டிருந்தார். கேசவனுடைய திருமணம் சரிவருகிற மாதிரி இருக்கும். எந்தெந்த ஊர்களிலிருந்தெல்லாம் தேடிவந்த ஒற்றைக்காலில் நிற்பார்கள். இளவயதிலேயே அவன் பெற்ற முதமாணிப்பட்டமும் அரச அலுவலகத்தில் வகிக்கின்ற நிர்வாக உத்தியோகத்தர் பதவியும்தான் இதற்குக்காரணம்.
ஆனால் இப்படியெல்லாம் தேடிவந்து விடாப்பீடியாக நின்றவர்கள் கடைசி நேரத்தில் தாமாகவே நின்று விடுவார்கள். மாதவன் போய் காரணத்தைக்கேட்டால் “முதலில் சாதகம் பொருந்தியதுதான். இப்போது வேறு சோதிடர் பொருத்தமில்லை என்கிறார்.’ என்பார்கள்.
- வேறு சிலர் எல்லாம் பேசி முடித்த இனி நாள் குறிப்பதுதான் பாக்கியாக இருக்கின்ற சமயத்தில் “பெண்ணுக்கு இப்போது காலம் சரியில்லையாம். இரண்டு வருடம் போகவேண்டுமாம். உங்களை வேறு இடம் பார்க்கட்டுமாம்.” என்று சொல்லியனுப்புவார்கள்.
மாதவன் நேரடியாகப் போய் கதைக்க முற்பட்ட சமயங்களில் அவர்கள் சொல்கின்ற காரணங்கள் உண்மையானவையல்ல என்பது தெரிய வந்தது.
நாட்கள் செல்ல செல்ல சில உண்மைகள் அந்தந்த ஊர்களிலிருந்து கசிந்த வெளிவந்தன. இங்கிருந்த இரண்டு மூன்று இளைஞர்கள் கேசவனுக்குச்

Page 14
10 கொற்றை பி. கிருஷ்ணானந்தன்
சம்பந்தம் சரிவருகின்ற வீடுகளுக்குப்போய் தங்கள் பெயர்களை மாற்றிச் சொல்லி கேசவனைப் பற்றி இல்லாதது பொல்லாதது எல்லாம் கூறி பெண் வீட்டாருடைய மனதைச் குழப்பிவிட்டு வருகிறார்கள்.
"நாங்கள் கேசவனின்ரை ஊர்தான் பாருங்கோ. உங்கடை பிள்ளைக்குத்தான் கலியாணம் சரிவாறதாகக் கேள்விப்பட்டனாங்கள். மற்றவையைப் போல ஆரும் எக்கேடும் கெட்டுப்போகட்டும் எண்டிருக்க எங்களுக்கு மனச்சாட்சி விடேல்லையுங்கோ. கேசவன் ஊரிலை பல பெண்பிள்ளையளை ஏமாத்திக் கெடுத்தவன். அதிலை இரண்டு பேர் கலியாணம் கட்டியிட்டுதுகள். இன்னும் இரண்டு பேர் கலியாணம் கட்டாமலே இருக்குதகள், நாங்களும் பெம்பிளைச் சகோதரங்களோடை பிறந்தனாங்கள். உங்கடை பிள்ளையின்ரை வாழ்க்கை நாசமாகிப் போய்விடக்கூடாதெண்டுதான் இதைச் சொல்ல வந்தனாங்கள்.”
இங்கிருந்து போய் அங்கு ஒப்புவிக்கிற பாடம் இதுதான். மாதவன் இந்த மூன்று இளைஞர்களையும் யார் யார் என்று தருவித் துருவி ஆராய்ந்து கண்டுபிடித்து விட்டார். எதற்கும் காலம் தான் பதில் சொல்லும் என்பது அவரது நம்பிக்கை. இத்தனைக்கும் இவர்கள் போய்ச் சொல்லுகின்ற எந்தப் பழிச் சொல்லுக்கும் கேசவன் தொடர்புடையவனல்ல. அப்படி ஒரு தப்பு என்றாலும் அவன் செய்திருந்தால் அந்தப்பிள்ளைக்கே அவனைக் கட்டிக்கொடுக்கக்கூடிய பிடிவாதக்காரன்தான் மாதவன். தண் அக்காவின் மகன் மீது அசையாத நம்பிக்கையும் பற்றும் இருந்தபடியால் விரைவில் யாவும் ஒரு முடிவுக்கு வரும் என்று பேசாமல் இருந்தார்.
கேசவனுக்கு ஊரில் எதிரிகள் முளைப்பதற்கு வாசிகசாலைப் பிரச்சினையைத் தவிர வேறு காரணங்களில்லை என்பது மாதவனுக்குத் தெரியும், வாசிகசாலை தொடர்ந்து பல ஆண்டுகளாக குறிப்பிட்ட ஒரு சிலருடைய ஆதிக்கத்தில் இருந்து வந்தது.
ஊரில் பெரும்பாலானோர் இராமன் ஆண்டாலென்ன. இராவணன் ஆண்டாலென்ன என்ற மனோபாவத்தில் தாமுண்டு தம் வேலையுண்டு என்று இருந்து வந்தார்கள். இந்த நிலையில் ஏனையோருக்கும் சந்தர்ப்பம் கொடுக்க வேண்டுமென்ற எண்ணத்தில் பல படித்த இளைஞர்கள் மும்முரமாகச் செயற்பட்டு நிர்வாகத்தை மாற்றி புதிய தலைமுறையினரிடம் கையளித்து விட்டார்கள்.
இது இவ்வளவு காலமும் பதவி வகித்தவர்களுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் அவர்கள் சகல செயற்பாடுகளிலிருந்தும் மரியாதையாக ஒதுங்கிக் கொண்டார்கள். அது அவர்களது பண்பு.
ஆனால் அவர்களின் தலைமைக்கு அதீத விசுவாசம் கொண்டு சாமரம் வீசியவர்களாலும் நிலப்பாவாடை விரித்து வந்தவர்களாலும் இதை ஜீரணித்துக்
 

இன்னுமோர் உலகம் 11
கொள்ளமுடியவில்லை. அவர்களது எசமானர்களது தலைமையை மாற்றியமைக்க முன்னின்று பாடுபட்ட கேசவன்மீது வஞ்சம் தீர்க்கப் புறப்பட்டுவிட்டார்கள். ஊரில் பல இடைஞ்சல்களைச் செய்ய வெளிக்கிட்டும், பெரும்பான்மையான தொகையினர் ஒன்றுபட்டு நின்றபடியால் அவர்கள் ஒன்றுமே செய்ய முடியவில்லை.
எல்லா முயற்சிகளிலும் தோல்வியைச் சந்தித்தவர்கள் இறுதியாகப் பேடித்தனமான முறையில் கேசவனின் திருமண விஷயத்தில் தலையை நழுைத்துக் கெடுக்கும் முயற்சியில் வெற்றிகண்டு களிபேருவகை கொண்டார்கள்.
மாதவனுக்கு கேசவனின் திருமணப் பிரச்சினை ஒரு சவாலாக அமைந்துவிட்டத. தனத அக்காவினதும் அத்தானினதம் மனங்கள் படுகிற தண்பத்தை அவர் உணர்ந்திருந்தார்.
கேசவனுடைய வயதில் தனக்கு ஐந்து பிள்ளைகளும் பிறந்த விட்டன என்று மாதவனுக்கு அத்தான் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்.
தமக்கையின் குடும்பத்தில் முதல் இரண்டு பையன்களையும் வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்ததிலிருந்த அவர்களுக்கு மணப்பெண்களைத் தேர்ந்தெடுத்த அவர்களையும் அந்நாடுகளுக்கு அனுப்பி வைத்ததுவரை மாதவனே பொறுப்பெடுத்து வெற்றியாக முடித்த வைத்தார்.
கேசவனுக்குத் தேவை ஒரு குடும்பப்பாங்கான பெண் மட்டுமே. சீதனம் ஒரு பிரச்சினையல்ல. ஏனென்றால் அவன் தனது இலட்சியத்திற்கமைவாக சீதனம் வாங்குவதற்கு எதிரான கொள்கையைக் கொண்டிருக்கிறான். பெற்றோரும் அவனுடைய கொள்கையுடன் முரண்படவில்லை. காரணம் வெளிநாட்டில் உழைத்துக் கொண்டிருக்கும் இருவரும் ஊரில் இருக்கின்ற இரு தங்கைகளுக்கும் தேவையான பணத்தை ஏற்கனவே அனுப்பி வைத்திருக்கிறார்கள். எனவே கேசவனை ஒரு பண்பான குடும்பத்தில் முடித்து வைத்தால் போதமென்பதாக மட்டுமே அவர்களது ஆசையும் இருந்தது.
கேசவனுடைய திருமணத்திற்கு தடையை ஏற்படுத்துவது போலவே பல பெண்களைப் பற்றி பலதையும் சொல்லியும், மொட்டைக்கடிதங்கள் எழுதியும், அவர்களுக்கு அமையவிருக்கும் நல் வாழ்க்கைக் கெடுப்பவர்கள் எல்லாக்காலங்களிலும் எல்லா ஊர்களிலும் இருந்து வந்ததை மாதவன் நன்கறிவார். ஆனால் இப்போது கல்வியறிவு வளர பண்புகள் வளர இத்தகைய இழிகுணத்தோரின் தொகையும் வெகுவாகக் குறைந்தவிட்டது. அப்படியிருக்க ஒரு ஆணுக்குத் திருமணத்திற்கு இப்படியாகத் தடங்கல்கள் ஏற்படுத்துவதை நினைக்க அவருக்குச் சிரிப்பும் மறுபுறம் சினமும் ஏற்பட்டது.

Page 15
12 கொற்றை பி. கிருஷ்ணானந்தன்
இப்போது கோண்டாவிலிலிருந்த தரகர்மூலம் கேசவனுக்கு ஒரு சம்பந்தம் பேசி வந்திருக்கிறது. ஜாதகம் நல்ல பொருத்தம். பெண்ணுடைய புகைப்படமும் கேசவனுக்குப் பிடித்துப் போய்விட்டது. சீதனப்பிரச்சினையுமில்லை.
இப்போதுதான் பெண் யாரென்று தரகர்களிடம் விசாரித்தப் பார்த்தால் தனது நண்பன் திருநாவுக்கரசுவின் மகள். ஆறேழு வருடங்களுக்கு முன் பலமுறை பார்த்திருக்கிறார். இப்போது புகைப்படத்தைப் பார்த்ததும் ஞாபகப்படுத்திக் கொள்ள முடிகிறது.
திருநாவுக்கரசுவும் மாதவனும் பத்து வருடங்களுக்கு முன் முல்லைத்தீவுக் கச்சேரியில் ஒன்றாக வேலை செய்தவர்கள். விடுமுறையில் ஒன்றாகப் பயணம் செய்த யாழ்ப்பாணத்திற்கு வந்து திரும்பவும்சேர்ந்தே முல்லைத்தீவுக்குப் போகிறவர்கள். இப்போது இருவருமே ஓய்வு பெற்று ஐந்து வருடங்களுக்கு மேலாகி விட்டபடியால் மூன்று நான்கு தடவைகள் மட்டும் சந்தித்து ஆறுதலாக பழையனவற்றை அசைபோட்டிருக்கிறார்கள். இப்போதும் அவர்களுடைய புரிந்துணர்வும் நட்புறவும் கொஞ்சங்கூட குறைந்துவிடவில்லை.
திருநாவுக்கரசுவின் மகளைத் தானி தனது மருமகனுக்கு பேசி வந்திருக்கிறார்கள் என்ற சங்கதி மாதவனுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. தங்களது நட்பு மேலும் தொடர்ந்து நெருக்கமாவது அவருக்கு மகிழ்ச்சியைத் தராதா என்ன?
கல்யாணம் பேசி வந்த தரகர்களுக்குரிய கொமிசனை முறைப்படி அவர்களுக்குக் கொடுத்துவிடவேண்டும். ஆனால் தானே நேரில் போய் நண்பனுடன் கதைத்து யாவற்றையும் கூறி முடிவெடுக்க வேண்டுமென்று மாதவன் தீர்மானித்தார்.
அதன்படி அக்கா அத்தான் இருவருக்கும் விஷயத்தைக் கூறிவிட்டு கேசவனையும் கூட்டிக்கொண்டு கோண்டாவிலுக்குப் புறப்பட்டுவிட்டார். திருநாவுக்கரசுவும் மனைவியும் நீண்டகாலத்திற்குப்பின்னர் தங்கள் வீட்டுக்கு மாதவன் வந்ததில் மகிழ்ந்த போனார்கள். மாதவனின் மருமகன்தான் தங்கள் மாப்பிள்ளை என்றறிந்ததும் அவர்கள் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. பெண்ணுக்கு மாப்பிள்ளையைப் பிடித்துவிட்டது. மாப்பிள்ளைக்கும் பெண்ணை பிடித்துவிட்டது. பிறகென்ன தடை தீர்க்கமான முடிவு எடுத்தாயிற்று.
புறப்படுவதற்கு முன் கேசவனை வெளியே போய் கொஞ்சநேரம் நிற்கும்படி கூறிவிட்டு திருநாவுக்கரசு, மனைவி, மணப்பெண் மூவருக்கும் கேசவனின் திருமண விஷயத்தில் இவ்வளவு நாட்களும் நடந்தவை யாவற்றையும் ஒன்றும் விடாமல்கூறி, இங்கேயும் அந்த இளைஞர்கள் வரலாம் கவனமாய் இருங்கள் என்று எச்சரித்த விட்டுப் புறப்பட்டார் மாதவன்.
 

இன்னுமோர் உலகம் 13
ஊருக்கு வந்ததம் கேசவனுக்கு இன்ன இடத்தில் இன்னாரின்ரை மகளுக்கு முடிவாகிவிட்டது என்று தேடிச் தேடித் சொல்லி ஊரில் கதையை வேகமாகப் பரவ விட்டார்.
★ ★ ★
நேரம் காலை 9.00 மணியிருக்கும் திருநாவுக்கரசு சாய்மனைக் கதிரையிலிருந்த அன்றைய செய்தித் தாளில் கண்களை மேய விடுகிறார். கேற்றுக்கு வெளியே இரண்டு மோட்டார் சைக்கிள்கள் வந்த நிற்கின்றன. சத்தம் கேட்டு மூக்குக் கண்ணாடிக்கு மேலாகப் பார்வையைத் திருப்புகிறார்.
நாகரிகமாக உடுத்திருந்த மூன்று வாலிபர்கள் கேற்றைதிறந்து உள்ளே வருகிறார்கள். நாய் படுத்திருந்ததைப் பார்த்ததும் சற்று தயங்குகிறார்கள்.
“வாருங்கோ தம்பியவை. அது கடிக்காத வாருங்கோ. உட்காருங்கோ.’ உற்சாகமாக வரவேற்கிறார். அவர்கள் உட்காருகிறார்கள்.
'தம்பியவையைத் தெரியேல்லை. வந்த விஷயம். "திருநாவுக்கரசு என்பவர் நீங்கள் தானே ஐயா.” "ஒமோம் நான்தான் விஷயத்தைச் சொல்லுங்கோ.” "நாங்கள் வடமராட்சியிலிருந்து வந்திருக்கிறம். உங்கடை மகளுக்கு எங்கடை ஊரிலைதான் கேசவன் எண்டவருக்கு முடிவாக்கியிருக்கிறியள் என்று கேள்விபட்டனாங்கள்’
“ஆ. அப்படியே. அப்ப எங்களுக்கு வேண்டிய ஆட்கள் தான் நீங்கள், ஆ. இஞ்சாரப்பா மூண்டு ரீ கொண்டு வாங்கோ, மாப்பிள்ளையின்ரை ஊரிலிருந்து ஆட்கள் வந்திருக்கினம்.”
திருநாவுக்கரசுவின் மனைவி வந்த எட்டிப்பார்த்த விட்டு ஒரு புன்முறுவலை வீசிவிட்டு சென்றாள். திருநாவுக்கரசு பேச்சைத் தொடர்ந்தார்.
9b . . . . . தம்பியவை இப்ப என்ன விஷயமாக வந்திருக்கிறியள்تک
"நாங்கள் பாருங்கோ நன்மை செய்யத்தான் வந்திருக்கிறம், நாங்களும் பெம்பிளைச் சகோதரங்களோடை பிறந்தனாங்கள். உங்கடை பிள்ளையின்ரை வாழ்க்கை சீரழிஞ்சு போறதை விரும்பமாட்டம்’
“ஏன் தம்பி என்ன பிரச்சினை எண்டு சொல்லுங்கோவன்.?”
'கேசவனுக்கு பெண்பிள்ளைகள் பலரோடு தொடர்பிருக்கு. இரண்டு மூன்று குமருகளையும் ஏமாத்திப் போட்டான். யூனிவசிற்றியில் படிக்கிற காலத்தில் ஒரு பிள்ளையை லவ் பண்ணினவன். பெட்டையும் நல்ல வடிவு அந்தப் பிள்ளையைக் கற்பமாக்கிப் போட்டு இடை நடுவில் ஏமாத்திப் போட்டான். பிள்ளை கஸ்டப்பட்ட

Page 16
14 கொற்றை பி. கிருஷ்ணானந்தன்
குடும்பத்தைச் சேர்ந்தவள், என்று அறிஞ்சவுடன் அப்படியே கைகழுவி விட்டவன் பாருங்கோ.”
“அட அப்படியான ஆளே. எங்கட மாப்பிள்ளை. இவ்வளவு அக்கறையோட இஞ்சை வந்த சொல்லுகிற உங்களுக்கு எண்ணெண்டு நன்றி சொல்லறதெண்டே தெரியேல்லை. உங்கடை ஐடென்ரிக்காட்டுகளை ஒருக்காத் தாறியளே. உங்கடை பேர்களை ஒருக்காப் பார்ப்போம்.”
“என்னங்கோ ஆமிக்காரன்மாதிரி ஐ.சி. கேட்கிறியள்.
“சரி தராவிட்டால் பரவாயில்லை அப்ப எங்கடை மாப்பிள்ளை முழுமையான ஆம்பிள்ளையெண்டு சொல்லுறியள்."
உங்கை சில மாப்பிள்ளையஞக்கு ஆண் மைக் குறைவெண்டு விவாகாரத்திலை போய் நிற்குதுகள், ஒண்டிரண்டு பெட்டையள் தற்கொலையும் செய்து போட்டுதகள். அப்ப எண்ரை பிள்ளைக்கு அப்படியான ஒரு பிரச்சினையும் வராது. அதோடை ஏற்கனவே அவருக்கு ஒரு பிள்ளையும் பிறந்திருக்கு எண்டும் சொல்லுறியள். அப்ப அவர் மலடும் இல்லை. கட்டாயம் அந்த மாப்பிள்ளையைத்தான் நான் செய்து வைக்கப் போகிறேன். எதுக்கும் உங்கடை ஐசியை தாருங்கோ. உங்கடை உண்மையான பேர்களை ஒருக்கால் அறிவம்.
கூறிவிட்டு திருநாவுக்கரசு அவர்களுடைய முகங்களை உற்று நோக்கினார். அவர்கள் மூவரும் ஒருவரையொருவர் முகத்தைப் பார்த்துவிட்டு விறுக்கென்று எழுந்து வெளியே புறப்பட்டார்கள்.
தேநீர் கோப்பைகளுடனான தட்டை ஏந்தி வந்த திருநாவுக்கரசுவின் மனைவி வேகமாகப் புறப்பட்டு செல்கின்ற மோட்டார் சைக்கிள்களைப் பார்த்துக் கொண்டு அப்படியே நின்றாள்.
(யாழ் தினக்குரல் ~ 2008)

இன்னுமோர் உலகம் 15
வேலையிலே கவனம் செலுத்தமுடியவில்லை. வந்து அலுவலக ரீதியாக உரையாடுபவர்களுக்கு சரியான முறையில் பதில் கூறமுடியவில்லை. கோபாலன் நன்றாகத்தான் குழம்பிப்போய்விட்டான்.
“àono a sua எதற்குமே கலங்காதவன் என்று நண்பர்களிடம் பேரெடுத்த நானா இப்படி’

Page 17
16 கொற்றை பி. கிருஷ்ணானந்தன்
“இன்று நம்நாட்டில் சர்வசாதாரணமாகிப் போய்விட்ட ஒன்றுதானே 95................. 99
“காலையிலே பேப்பரை எடுத்தால் அங்கு குண்டு வெடிப்பு ஏழு பேர் பலி. இங்கு குண்டு வெடிப்பு பதினொருபேர் பலி என்பது தானே செய்தி. இன்றைக்குமட்டும் ஏன் என்மனதில் இவ்வளவு குழப்பம்.”
அவனுக்குத் தனது தடுமாற்றத்தை நினைக்கும்போது வியப்பாக இருந்தது. வேலையில் கவனம் செலுத்த முயன்றான்.
“சேர். விஷயம் கேள்விப்பட்டனீங்களா? திருநேல்வெலியில சந்தைக்குக்கிட்ட குண்டு வெடிப்பாம். நாலுபேர் அதிலேயே சரியாம். கனபேருக்கு காயமாம்.”
“ஓமோம் இப்பதான் நானும் கேள்விப்பட்டனான்.” இவண்குரலில் சிறு பதட்டம் தெரிகிறது. பொதுவாகவே இவனுக்கு இளகிய மனது. ஆனால் எளிதில் எடுபடமாட்டான். மலையே விழுந்தாலும் தலையே சும என்று திடமாக இருப்பான். ஆனால் தேவையான காரியங்களை உறுதியாகச் செய்வான்.
இயற்கையான சாவின்றி அநியாயமாக யார் செத்தாலும் இவனது இதயத்தில் மெல்லிய சோகரேகை ஓடும். அதிலும் ஆயுதம் ஏந்தாத இந்த அப்பாவிச்சனங்கள் சாகடிக்கப்படும் போது இவனும் குமுறுவான். இது இலங்கையின் எந்தப்பகுதியிலும் நடந்தாலெனின உலகத்தின் எந்த மூலையில் நடந்தாலென்ன கண்ணுக்குத் தெரியாத அந்த உயிர்களுக்காக ஏங்குவாண்.
பள்ளிக்கூடத்தக்கு போய்க்கொண்டிருந்த பிள்ளைகள், வேலைக்குச் சென்றுகொண்டிருந்தவர்கள், சந்தைக்குச் சாமான் வாங்கச் சென்றவர்கள், பெற்ற தாய் தகப்பனுக்கோ அல்லது பிள்ளைகளுக்கோ மருந்த வாங்க வந்தவர்கள் இப்படியாய் தினமும் பலி கொள்ளப்படுவதற்கு எதிரான அபிப்பிராயங்களையே இவன் என்றும் வெளிப்படுத்தி வந்துள்ளான்.
“நாளாந்த நிகழ்வாகிப்போய்விட்ட இங்கு இன்று மட்டும் ஏன் இவ்வளவு பதட்டம் எனக்கு. ஒருவகையில் நான் சுயநலக்காரன் தான்’ அவன் மனதில் தன்னைப்பற்றி ஒரு சிறு சுயவிமர்சனம்.
“பிள்ளை போய்ச்சேர முந்தியே வெடிச்சிருக்குமோ அல்லது முதலே போப் ரெக்னிக்கொலிச்சுக்குள்ள இருக்கேக்கைதான் வெடிச்சிருக்குமோ? அப்படியெண்டால் பிரச்சினையில்லை.” தனக்குத்தானே சமாதானம் செய்து பார்க்கிறான். சரிவரவில்லை.

இன்னுமோர் உலகம் 17
முதல்நாள் தான் இவன் வேலைக்கு லீவு போட்டுவிட்டு உயர்தொழில் நட்பக்கல்லூரியில் சேர்ப்பதற்காக மகளை திருநெல்வேலிக்குக் கூட்டிச் சென்றான். பிறப்புச்சான்றிதழ், கிராம உத்தியோத்தரின் நற்சான்றிதழ் முதலானவற்றை கூடவே எடுத்துச் செல்லாதபடியால் காரியம் நிறைவேறாமல் திரும்பி வந்துவிட்டார்கள். இன்று தன்தமையனார் அதாவது பிள்ளையின் பெரிய தகப்பனுடன் அனுப்பிவிட்டு இவன் வேலைக்கு வந்துவிட்டான். தகப்பனை வருமாறுதான் அவள் வற்புறுத்தினாள். இவன்தான் தனக்கு லீவு இல்லை என்று கடறி பெரிய தகப்பனாருடன் அனுப்பி வைத்தான்.
“ச்சே இண்டைக்கெண்டு திருநெல்வேலியிலை இப்படி நடந்திருக்குதே பிள்ளையும் அண்ணரும் என்னபாடோ. %
வீட்டுக்கு ரெலிபோன் எடுத்தான். அங்கு இரண்டாவது மகள் பேசினாள். “பவி. அக்கா வந்திட்டாவா..?” “இல்லையப்பா. இவ்வளவு வெள்ளண வரமாட்டினம்தானே. ஏனப்பா என்ன அவசரம்?”
“பிரச்சனையொண்டுமில்லையடா. நீ ஏதும் கேள்விப்பட்டனியா.??? “இல்லையப்பா, எண்ணெண்டு சொல்லுங்கோவன்.” அவள் குரலில் சிறு பதட்டம் தெரிகிறது. "அம்மாவுக்கு இப்ப ஒண்டும் சொல்லிப்போடாதை. திருநெல்வேலியிலை குண்டுவெடிச்சதாம். அதுவும் சந்தைக்குப்பக்கத்திலை றோட்டிலையாம். நாலு பொதுசனம் செத்துப்போச்சுதாம்.கனபேருக்குக் காயமாம்.”
“என்னப்பா. அக்கா போன இண்டைகெண்டு இப்படி நடக்குத பயமாக்கிடக்கு”
“சரி சரி நீ பயப்படாதை பிள்ளையார் கைவிடமாட்டார். அக்கா வந்த உடனேயே எனக்கு எடுத்துக் கதைக்கச் சொல்லு.”
ரெலிபோனை வைத்துவிட்டு நாடியில் கைவைத்தான். தர்சனா, கோபாலனுக்கு மூத்த மகள் முடக்கு வாதத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டு எப்போது தாய் படுக்கையில் முடங்கினாளோ அன்றிலிருந்து இன்றுவரை தனது இரண்டு தங்கைகளையும் ஒரு தம்பியையும் ஒரு தாய்க்குரிய அரவணைப்புடனேயே பார்த்த வருகின்றாள்.
தர்சனாவும் ஐந்தாந்தரப் புலமைப் பரீட்சை முதற்கொண்டு ஓ எல் பரீட்சை வரை நல்ல பெறுபேறுகளைப் பெற்றவள்தான். சகதோழிகளைப் போலவே

Page 18
18 கொற்றை பி. கிருஷ்ணானந்தன்
உயர்ந்த எதிர்பார்ப்புகளோடு உயர்தர வகுப்பில் உயிரியல் பிரிவைத் தேர்ந்தெடுத்தாள்.
என்ன. மகளை டொக்டராக்கிப் பார்க்கிற ஆசைப்போல.” சிலர் தாண்டில் போட்டு கதையைக் கொழுவுவார்கள்.
“af....... சயன்ஸ் ரீச்சராக வந்தால் போதும் ரீச் சிங் தான் பெண்பிள்ளைகளுக்கு பொருத்தமான வேலை.”
இது கோபாலன் மற்றவர்களுக்கு சும்மா சொல்லுகிற கதை வசனம். ஆனால் உள்ளுர மகள் ஒரு டொக்டராக வந்தால் எப்படி இருக்கும் என்று ஆசையுடன் கற்பனை பண்ணிப் பார்க்கத் தவறுவதில்லை. தர்சனாவுடைய கெட்டகாலம் அவள் உயர்தர வகுப்புக்கு போகத்தொடங்கிய ஆரம்பத்திலேயே தாய் நோயில் படுத்துவிட்டாள். கொழும்பு ஈறாகச் சென்று காசைக் கொட்டியதுதான் மிச்சம்.
தர்சனா குடும்பச் சுமையையும் தாங்க வேண்டியது காலமிட்ட கட்டளையாகியது. அதிகாலை ஐந்து மணிக்கே எழும்பி தந்தையின் உதவியுடன் காலை, மதிய உணவுகளைத் தயாரித்துவிடுவாள். அதன்பின் வேர்க்க விறுவிறுக்க வெளிக்கிட்டு நான்கு கிலோமீற்றர் தாரம் உள்ளூர்ப்பாதைகளுடாக சைக்கிள் ஓடி பருத்தித்துறையிலுள்ள கல்லூரிக்குப் போய்ச் சேரவேண்டும். மாலையிலும் ரியூசனால் வந்த வீட்டைக் கவனிக்க வேண்டும். அடிக்கடி கல்லூரிக்கும் ரியூசனுக்கும் "கட்” வீட்டில் பாடத்தைத் திருப்பிப் பார்ப்பதற்கும் நேரம் குறைவு. அதனால் கல்வி தேய்ந்து கொண்டே போனது. இரண்டு முறை பரீட்சைக்கு தோற்றியும் இரண்டு பாடங்களே சித்தியடைந்தாள்.
தர்சனாவோடு சமமாகப் போட்டி போட்டுப் படித்த இருவர் இப்போது மருத்துவக்கல்லூரியில். ஆங்கிலத்தில் விசேட சித்தி பெற்ற மேகலா இன்று ஆங்கில ஆசிரியை. ஆனால் இவள் ஆங்கிலத்தில் அதிவிசேட சித்தி பெற்றிருந்தும் உயர்தரவகுப்பில் மூன்று பாடங்கள் இல்லாமையினால் இவளால் ஆங்கில ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியவில்லை. இவையெல்லாம் தர்சனாவை விரக்தியின் விளிம்புக்கு கொண்டு சென்றன.
“என்ன செல்லமாக இருந்த பிள்ளை’ மகளை நினைத்து தனக்குள் அடிக்கடி கவலைப்பட்டுக் கொள்ளுவான். ஆனாலும் தனது கவலையை வெளிக்காட்டாமல் மகளுக்கு ஆறுதல் கூறி பரீட்சைக்கு மீண்டும் தோற்றுவதற்குரிய உற்சாகத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தான். மூன்றாம் முறையும் தோற்றி மூன்று சாதாரண சித்திகளைப்

இன்னுமோர் உலகம் 19
பெற்றவிட்ட சற்தோஷத்தில் ஆங்கிலகற்கை நெறியொன்றைத் தொடர்வதற்காக பதிவுசெய்யச் சென்ற இன்றுதான் அங்கு அசம்பாவிதம்.
“என்ன பெரிய கண்டறியாத வேலை. இண்டைக்கும் லீவைப் போட்டிட்டு நானே பிள்ளைகயைக் கூட்டிக்கொண்டு போயிருக்கலாம்.”
"ஏன் நான் கூட்டிக்கொண்டு போனால் ஒண்டும் நடவாதா..? நடந்தாலும் நான் கூட இருந்தால் ஒரு திருப்தி பிள்ளைக்கும் ஒரு தணிவு”
இந்தப் பாழாப்போன மனம் எல்லாப்பக்கத்திற்கும் யோசித்தது. நேரம் நண்பகலைத் தாண்டிவிட்டது. வீட்டிற்கு மீண்டும் ரெலிபோன் எடுத்தான்.
'அக்கா இன்னம் வரவில்லை.” அதே பதில் காலையில் அவள் கட்டித் தந்த சாப்பாட்டுப் பார்சல் அப்படியே இருக்கிறது. “சப்பாடும் மண்ணாங்கட்டியும். வேலைகளைக் கெதியா முடிச்சிட்டு வெள்ளண வீட்டுக்குப்போவம்.”
வேலையில் கவனம் செலுத்த முயற்சிக்கின்றான். அடிக்கடி ரெலிபோன் அழைப்பு வருகிறது. ஒவ்வொருமுறையும் கொஞ்சம் பயத்துடனேயே ரெலிபோன் எடுத்தான். அலுவலகம் மூடி புறப்படுகிற நேரம் மீண்டும், ஒரு ரெலிபோன்
GG 99
941 J/T
இது தர்சனாவின் குரல். ”9b...... பிள்ளை எங்கையிருந்தம்மா கதைக்கிறாய்ك"" "நான் வீட்டிற்கு வந்திட்டனப்பா’ “அங்கை பிரச்சனையாம். நீங்கள் இரண்டு பேரும் என்ன மாதிரியடா. "நாங்க போறதுக்கு முன்னமே எல்லாம் நடந்த முடிஞ்சது. செத்தது எல்லாம் அப்பாவிப் பொதுசனங்களாம். பெரிய பாவமப்பா.”
தர்சனாவின் குரல் தளதளத்தத. “சரி. சரி நீ போனை வை. நான் நேரிலை வாறன்’ வீட்டிற்கு வந்த சேர்ந்தான் கோபாலன், ஓடிப்போய் மகளின் தலையைத் தடவிக்கொடுத்தான் அவனது கண்கள் சற்றுப் பனித்திருந்தன. தர்சனாவைச் சுற்றி எல்லோரும் வட்டம் போட்டுத் தகவல் அறிந்து கொண்டிருந்தனர். மகளின் இன்றைய அனுபவத்தை இவனும் கேட்டு அறிந்துகொண்டான்.
திடீரென்று இவர்களின் வீட்டிற்கு நாலைந்து வீடு தள்ளி "ஐயோ’ என்று கத்தி அழுவது கேட்கிறது.

Page 19
2O கொற்றை பி. கிருஷ்ணானந்தன்
"கதிரமலை திருநெல்வேலிக் குண்டு வெடிப்பிலை அகப்பட்டுச் செத்துப்போனானாம். பிரேதம் பெரியாஸ்ப்பத்திரியில் இருக்காம்’ தெருவில் யாரோ யாருக்கோ சொல்லிக்கொண்டு ஓடுகிறார்கள்.
கடவுளே வாழைக்குலை வியாபாரஞ் செய்த குடும்பத்தை காப்பாத்திக் கொண்டிருந்த அந்தப் பெடியனுக்கோ இந்தக்கதி”
சொல்லிக்கொண்டு கோபாலனும் ஓடுகின்றான் கூடவே அவனது முழுக்குடும்பமும் ஓடுகின்றது. முடக்குவாதத்தால் முடங்கிப்போயிருக்கும் ஒரு ஜீவனைத்தவிர.
(யாழ் 'தினக்குரல்’ ~ 2007)

இன்னுமோர் உலகம் 21
“லொக்கு லொக்கு.” என்று தொடர்ச்சியாக இருமுவதும்
காறாப்புவதமாக அந்த வீட்டிலிருந்து சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது. இருமிக் களைத்த அனுங்கலுடன் மூச்சு விடுவதும் கேட்கிறது.
இரண்டே இரண்டு அறைகளுடன் ஒரு விறாந்தையுமாக உள்ள அந்தச் சிறிய வீட்டின் விறாந்தையின் ஒரு மூலையில் கொஞ்சம் கிழிந்த ஒலைப்பாயில் அருளானந்தம் படுத்திருக்கிறார். பழைய ஒரு பெட்சீற் பாயின் மேல்

Page 20
22 கொற்றை பி. கிருஷ்ணானந்தன்
விரிக்கப்பட்டிருக்கின்ற படுக்கையில் சாரத்திற்குள் முழு உடம்பையும் ஆமைபோல் உள்ளிழுத்தப்படுத்திருக்கிறார். அழுக்கேறிப்போன தலையணைக்குப் பக்கத்தில் தப்பற்பேணி கிடக்கிறது. இருமியபின் தலையைக் கிளப்பிப் பேணிக்குள் காறாப்பிப் தப்புகிறார். அருகில் கோப்பையில் சோறு போட்டப்படி இருக்கிறது. அதற்கப்பால் தன் எஜமானைப்போலவே ஒட்டி உலர்ந்த வயிற்றுடன் அவருடைய நாய் ஜொனி படுத்திருக்கிறது. தன் எஜமான் எப்போது சாப்பிடத் தொடங்குவார். அதன் பின் தனது பங்கைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற ஆவல் அதன் கண்களில் தெரிகிறது.
ஆஸ்துமா நோயினால் அவதிப்படும் அருளானந்தத்திற்கு அந்நோய் புதிதல்ல. அவரால் உயிராய் நேசிக்கப்பட்ட உறவுகள் அவரைவிட்டுத்தாரப்போய் விட்ட போதம் அவரது சிறுவயதிலிருந்தே அவருடன் கூடவே இருந்து பிரியாமல் தொடர்வது இந்த ஆஸ்தமா நோய் மட்டும் தான்.
அருளானந்தம் வயது முதிர்ந்த உடல் பலவீனப்பட ஆஸ்துமா நோயும் அவருடனான நெருக்கத்தை அதிகரித்துக் கொண்டது. அவர் இழுத்து மூச்சு விடும் சத்தம் அயல் வீடுகளுக்குக் கேட்குமளவிற்கு நிலைமை மோசமாகிக்கொண்டு போகிறது. நேற்றையிலிருந்த இந்தச் சாப்பாட்டைச் சாப்பிடுவதில்லை என்று முடிவெடுத்துவிட்டார் அருளானந்தம். அதே சமயம் வேறு வகையில் சாப்பிடவும் வசதியில்லை. அருளானந்தத்தின் இயல்பான சுபாவமே நடப்புத்தான். எந்தச் சந்தர்ப்பத்திலும் தன்தானத்தை விட்டுக் கொடுக்காத போக்கு இன்று வயது அறுபத்தைந்தைக் கடந்துவிட்டபோதம், இங்கு தனக்கென யாரும் இல்லாத போதும் தன்மானத்தை இழக்க அவர் தயாரில்லை.
இந்தச் சிறிய வீடும், காணியும் தான் அவரது ஒரே சொத்தாக இருந்தது. இதுவும் அவரது தகப்பன் வழிவந்த முதசொம்தான். இப்போது அதுவும் அவருக்கு சொந்தமில்லை.
அவரது ஒரே மகன் பொறியியல் கல்விக்குத் தெரிவாகி பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குச் சென்றதும், படிப்பு முடிந்த பின் தன்னுடன் கூடப்படித்த பெண்ணொருத்தியை பதிவுத் திருமணம் செய்து கொண்டதும், இதைக் கேள்விப்பட்ட அருளானந்தம் மகனைத் தங்கள் சாவுக்குக்கூட வரக்கூடாது என்று சொல்லியனுப்பியதும் பழைய கதைகள்,
அப்பா ஆத்திரத்தில் அப்படிச் சொல்லியிருக்கலாம். அதற்காக நானும் அப்படியே இருந்த விடக்கூடாது என்று அவனும் நினைக்கவில்லை. பெற்றோருடனான தொடர்பை நன்றி கெட்டத்தனமாக அப்படியே முறித்துக் கொண்டான்.

இன்னுமோர் உலகம் 23
இது நடந்த இரண்டு வருடங்களில் கவலை மனதை அரித்தத்தின்ன அருளானந்தத்தின் மனைவியும் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் ஆறுமாதம் கிடந்து போய்ச் சேர்ந்துவிட்டாள்.
அருளானந்தத்திற்கு பசி வயிற்றைப் பிடுங்கினாலும் சோர்ந்த படுத்துக்கொண்டே போனவருடம் நடந்ததை நினைத்தப் பார்க்கிறார்.
"அத்தான் ஆறுதலாக இருக்கிறியளே. உங்களோடை ஒரு விஷயம் கதைக்கலாமெண்டு நினைக்கிறன்.”
பக்கத்து வளவில் இருக்கும் இவருடைய மைத்தனி மகேஸ்வரி வந்து விறாந்தையில் இருந்து கொண்டு பீடிகையோடு கேட்டாள்.
"ஒமோம் சும்மாதான் இருக்கிறன் விஷயத்தைச் சொல்லு'
"இவள் சின்னவளுக்கு ஒரு நல்ல இடத்திலையிருந்த சம்பந்தம் கேட்டு வந்திருக்கு கோண்டாவில் மாப்பிள்ளை. பெடியன் படிக்கிறான், பட்டதாரியாம். சீதனம் பெரிசாகக் கேட்கேல்லை. சின்னதாக எண்டாலும் ஒரு வீடும் பத்து இலட்சம் காசும் குடுத்தால் போதமாம். காசு ஒரு மாதிரிச் சரிப்பண்ணியிட்டம். எங்களுக்கிருந்த வீட்டையும் மூத்தவளுக்கு எழுதினது உங்களுக்குத் தெரியும்தானே வேறை காணியுமில்லை. ༡5
"அதுதானத்தான் இப்போதைக்கு இந்த வீடு காணியை பொறுப்பாய் எழுதிக் குடுத்தியளெண்டால் கல்யாணத்தை முடிச்சுப் போடலாம். பிறகு எண்ரை பெடியன் கனடாவிலிருந்து காசனுப்ப எங்கையெண்டாலும் காணி வேண்டி வீடு கட்டி குடுத்திட்டு உங்கடை வீட்டைத் திருப்பியெழுதித் தரலாம் எண்டு யோசிக்கிறம். உங்கடை முடிவைப் பொறுத்துத் தான் கல்யாணத்திற்கு முடிவு சொல்ல நினைச்சிருக்கிறம்”
"அப்படி நினைக்கிறதென்ன. சரியெண்டு சொல்லிவிடு. எனக்குப்பிறகு இந்த வீடு அவளுக்கெண்டுதான் நானும் நினைச்சிருக்கிறன். அது இப்பவே தேவையெண்டால் நான் எழுதித் தாறன், என்ரை காவாலி இனி இஞ்சை வரப்போறானே. இல்லைத்தானே. அதோடை இந்த வீடும் காணியும் நாங்கள் தேடினதேட்டமில்லை. என்ரை முதுசொம். தாயின்ரை பங்கெண்டு அவன் வந்து எதுவும் கேட்கேலாது. நீ எல்லா ஆயத்தங்களையும் செய்து போட்டுச் சொல்லு நாண் வந்து கையெழுத்து வைக்கிறன்.”
அத்தானின் நல்ல பதிலோடு மகேஸ்வரி எழுந்து சென்றாள். அதன்பின் எல்லாம் நல்லபடி நடந்த முடிந்தது.
அருளானந்தத்தின் சேமலாபநிதி மகனை பொறியியலாளராக படிப்பிப்பதற்காக மாதாமாதம் அனுப்பி வைப்பதற்குப் பட்ட கடனை வட்டியோடு

Page 21
24 கொற்றை பி கிருஷ்ணானந்தன்
கட்டிமுடித்ததம் மிஞ்சியத கொஞ்சப்பணமே. அதை வங்கியிலிட்டு தனது சிறு சிறு தேவைகளுக்கும் மருந்தச் செலவுகளுக்கும் எடுத்துச் செலவழித்துக் கொண்டுவர அதுவும் கரைந்த போய்விட்டது.
ஆஸ்துமா நோயும் தனது கொடுமையை அதிகரித்துக் கொண்டே போனது மகேஸ்வரியின் வற்புறுத்தலுக்குச் சம்மதித்து தனக்கென்று ஒரு ஆளுக்காக உலை வைப்பதை விட்டு அவள் கொண்டு வந்த மூடிவைத்து விட்டுப்போகும் ஒரு கோப்பை சோற்றுடன் ஒரு வருடம் கழிந்தது. காலை உணவு சாப்பிடுவதில்லை. இரவு சிலசமயம் பாணும், வாழைப்பழமும், சிலசமயம் சிவபட்டினி,
“இப்ப கொஞ்ச நாட்களாக மகேஸ்வரியோ, மகளோ சந்தோஷமாகச் சாப்பாடு கொண்டு வந்து வைப்பதில்லை என்பதை அருளானந்தம் அவதானித்துக் கொண்டே வந்தார். சிலசமயங்களில் எனக்கு வயிறு சரியில்லை சாப்பாட்டைக் கொண்டு போங்கோ என்றும், திருப்பி விட்டிருக்கிறார். அவர்களும் வற்புறுத்திக் கொடுப்பதாயுமில்லை.”
பசி நெருப்பின் கொடுமையை யார் தான் தாங்கிக் கொள்ளமுடியும், பசி வந்தால் பத்தம் பறந்த விடும் என்று அனுபவமில்லாமலா சொல்லி வைத்தார்கள். என்றாலுங்கூட இனி இவர்களிடம் சாப்பிடுவதில்லையென்று ஒரேயடியாக அருளானந்தம் முடிவெடுத்ததிற்குக் காரணம் ஆஸ்துமாவின் கொடுமையால் அவர் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருப்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தும் சிகிச்சைக்காக எங்காவது கூட்டிக்கொண்டு போவதற்குக் கேட்கவுமில்லை. அதை அவதானித்ததாகக் காட்டிக் கொள்ளவுமில்லை.
நேற்றும் மகேஸ்வரி விறாந்தையின் கீழ்ப்படியில் நின்றபடியே சோற்றுக் கோப்பையை விறாந்தை நிலத்தில் வைத்த வேகமாகத் தள்ளிவிட்டாள். சோறு நிலத்தில் சிந்தியதபாதி சிந்தாததுபாதியாக அருளானந்தத்தின் படுக்கைக்கு வந்த சேர்ந்தது. அருளானந்தத்தின் மங்கிய கண்களுக்கு சாப்பாட்டுக் கோப்பைக்குள் புழுக்கள் நெளிவது போன்ற உணர்வுதான் ஏற்பட்டது. அவர் அந்திசாய்கிறநேரம் மெல்ல மெல்ல படுக்கையிலிருந்து நகர்ந்த போய் நாய்க்கு விறாந்தையின் படிக்கட்டில் சாப்பாட்டைக் கொட்டி விட்டு இருந்தபடியே நகர்ந்து வந்த படுத்த விட்டார்.
இன்றும் மகேஸ்வரியின் மகள் சாப்பாட்டுடனான கோப்பையை அதே மாதிரியே தாரத்தில் நின்றபடி தள்ளிவிட்டாள். சாப்பாடு நிலத்தில் சிந்தியபடி அவரது கால்மாட்டிற்கு வந்த சேர்ந்தது. இன்றைக்கும் அருளானந்தம் எழும்பமுடியாமலிருந்தும் மெல்ல மெல்ல இருந்தபடியே நகர்ந்து வந்து விறாந்தைப்படியில் நாய்க்குச் சோற்றைக்கொட்டிவிட்டு மீண்டும் அதே மாதிரியே நகர்ந்த வந்த படுத்துவிட்டார்.

இன்னுமோர் உலகம் 25
முட்டிழுப்பு மோசமாக இருந்தாலும் பழைய நினைவுகள் கறுப்பு வெள்ளைப்படமாக அவரத மனத்திரையில் ஒடத்தொடங்குகிறது.
தொண்ணுாற்றைந்தாம் ஆண்டு வலிகாமத்த மக்கள் தென்மராட்சிக்கும் வடமராட்சிக்கும் இடம் பெயர்ந்து வந்த நேரம், எங்கும் எதற்கும் தட்டுப்பாடு. எல்லாவற்றுக்குமே கியூ பொருள் இல்லை. இருந்தாலும் அதை வாங்குவதந்கு பணமில்லை. தொழிலில்லை.
இவர்கள் வடமராட்சியில் சொந்த இடத்தில் இருந்தாலும் பஞ்சம்
இவர்களையும் விட்டு வைக்கவில்லை. அருளானந்தத்தின் இரு மைத்தனிகளின் கணவன்மாரும் சாதாரண கூலித்தொழிலாளிகள் தான். இரண்டு மாதமாகப் பிள்ளைகுட்டிகளுடன் ஒரு நேரச்சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டார்கள்.
இத்தனைக்கும் அருளானந்தம் பெரிய பணக்காரனல்ல. சாதாரண கூட்டுறவுச் சங்கக்கடை மனேஜர் குறைந்த வேதனமென்றாலும் தட்டுப்பாடான நேரம் தட்டுப்பாடில்லாமல் வாழச் சந்தர்ப்பமிருந்தது.
அருளானந்தம் தாங்கள் சாப்பிடும்போது பக்கத்த வீட்டில் அவர்கள் பட்டினி கிடக்கக்கூடாது என்பதற்காக சங்கக்கடையிலிருந்த அரிசி, பருப்பு, சீனி, தேயிலை, சவர்க்காரம் என்று தங்களுக்குக்கொண்டு வரும்போது அவர்களுக்கும் கொண்டு வந்து கொடுப்பார். அவர்கள் இவர் கொண்டு வந்து கொடுத்த சாமான்களில் சமைத்துச் சாப்பிட நேரஞ் செல்லும் என்றும் அதுவரை அந்தச் சின்னஞ்சிறுசுகள் பட்டினி கிடக்கக்கூடாதென்றும் தங்கள் சாப்பாட்டில் மத்தியானம் இரண்டு குடும்பங்களுக்கும் ஒவ்வொரு கோப்பை சோறு கொண்டு போய் கொடுக்கும்படியாக தன் மனைவிக்குச் சொல்லி அதன்படி நிலைமை ஓரளவு சீரடையும் வரை இந்த ஏற்பாடும் ஒழுங்காக நடைபெறுவதைக் கவனித்தார். அதில் திருப்தியடைந்த பின்னர்தான் தான் சாப்பிடத்தொடங்குவார். அப்போதெல்லாம் அத்தானும் அக்காவும்தான் மகேஸ்வரிக்கும் கமலாவுக்கு தெய்வங்கள்.
மூன்று நான்கு மாதங்கள் இப்படியே ஓடியபடியால் சங்கக்கடையில் இருப்புப் கணக்கெடுப்பின் போது "லீக்கேஜ் பிடிபட்டு மூன்று மாதங்கள் அருளானந்தம் வேலையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டார். மனைவியின் தாலிக்கொடியை விற்றுத் தண்டமும் சோர்வும் கட்டிமுடித்த பின்னர்தான் வேலையில் சேர்த்துக் கொள்ளப்பட்டமை மறக்கப்பட்ட ஒரு சின்ன விஷயம். ★ ★ ★
அருளானந்தத்தின் நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக மங்கத் தொடங்கி முற்றுப் பெற்றன.
மகேஸ்வரிக்கோ அவளது குடும்பத்திற்கோ நன்றியுணர்வு கொஞ்சமும் இருக்கவில்லை. கமலா அப்படியல்ல, தண்மகளை வெளிநாட்டு மாப்பிள்ளைக்குக்

Page 22
26 கொற்றை பி கிருஷ்ணானந்தன்
கட்டிக்கொடுத்து அதன்மூலம் முழுக்குடும்பமும் வெளிநாட்டில் குடியேறிவிட்டாலும் மகேஸ்வரிக்கு இடையிடையே பணம் அனுப்பும்போது அருளானந்தத்தைக் கவனிப்பதற்காக என்றும் சிறு தொகையை அனுப்புவாள். ஆனால் அத்தானுக்கு அனுப்பப்டும் பணத்தில் அரைவாசிகஉட மகேஸ்வரி செலவழிப்பதில்லை.
"அத்தான் தனியாள், பாவம் கவனமாகப் பாருங்கோ. ஒரு குறையும் வைக்காதையுங்கோ’ இது மகேஸ்வரியிடம் காசு அனுப்பும்போதெல்லாம் கமலா வற்புறுத்திச் சொல்லுகின்ற விஷயம். அத்தானுக்கு ஏதும் நடந்தால் அது சம்பந்தமான முழுச்செலவும் நானே பார்ப்பேன் என்று ஏற்கனவே மகேஸ்வரியிடம் சொல்லி வைத்திருந்தாள்.
★ ★ ★ கடந்த இரவுடன் அருளானந்தம் சாப்பிடாமல் விட்டு நான்கு நாட்கள் கடந்த விட்டன. இன்று காலை கதிரவன் தன் கதிர்களை பூமியின் மீது வாஞ்சையுடன் பரவ விடுகிறான். அருளானந்தத்தின் வீட்டில் பல நாய்கள் சண்டையிடுவது போன்று குரைக்கின்ற சத்தம் கேட்கிறது. நாய்களின் சத்தம் வித்தியாசமாக இருப்பதை உணர்ந்த மகேஸ்வரி அங்கு வருகிறாள். முதல்நாள் வைத்துவிட்டுப்போன ஒரு கோப்பை சோறு கொஞ்சம் சிந்தியபடி அப்படியே இருக்கிறது. தன் எஜமானுக்குரிய உணவை மற்ற நாய்கள் சாப்பிட்டு விடாதபடி ஜொனி பாதுகாக்க முயலுகையில் எழுந்த சண்டையே அந்தச்சத்தம் என்பதை உணர்வதந்கு மகேஸ்வரிக்கு கனநேரம் தேவைப்படவில்லை.
இங்கே அருளானந்தத்தின் பக்கம் பார்வையைத் திருப்புகிறாள். அவரது உடல் அசைவற்றுக் கிடக்கிறது. வாய் 'ஆ' வென்று திறந்திருக்கிறது. மூன்று நான்கு இலையான்கள் முகத்தில் மொய்ப்பதம் மேலெழுவதுமாக இருந்தன. கிட்டவந்து உன்னிப்பாக கவனித்துப் பார்த்ததும் அவளுக்கு நிலைமை விளங்கிவிடுகிறது. அத்தான் போய்விட்டார். சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது. என்றாலும் சுதாரித்தக் கொள்கிறாள்.
"அத்தான் எங்களை விட்டுட்டுப் போய் விட்டியளே’ பலமாக ஒப்பாரி வைக்கத் தொடங்குகிறாள். ஆனாலும் அவள் மனம் வீட்டை இடித்தப் புதிதாக கட்டுவதற்கு இனித் தடையேதுமில்லை என்றெண்ணியது. அத்துடன் உடனே கமலாவுக்கு அறிவிக்கவேண்டும். அவள் அனுப்புகிற பணத்தில் செத்த வீட்டுச் செலவு அந்தியேஸ்டிச் செலவுகளைச் சுருக்கமாகக் செய்தால் கொஞ்சமாவது தனக்கு மிஞ்சும் என்று இலாப நட்டக்கணக்கு பார்க்கவும் தவறவில்லை.
('மல்லிகை - 2008)

இன்னுமோர் உலகம் 27
"ஒரேயடியாகப் பிடிவாதமாக நிற்காதை பிள்ளை. படிப்பு விஷயத்திலை
பிடிவாதம் கூடாது. வாறகிழமை ரியுசன் காசு முழுவதும் கட்டலாம். இண்டைக்கு வெளிக்கிட்டுக் கொண்டு போ பிள்ளை’
'நீங்கள் என்னதான் சொன்னாலும் நான் போகமாட்டன். உப்பிடி எத்தனைமுறை சொல்லிச் சொல்லி என்னை அனுப்பினனிங்கள். இனி நான் அவமானப்படமாட்டன்.”

Page 23
28 கொற்றை பி. கிருஷ்ணானந்தன்
“பிள்ளை சொல்லுறதைக் கேள் பிள்ளை. மார்கழிச் சோதினை நெருங்கி வாற நேரத்திலை நீ இப்படிப் போகாமல் நிற்கிறது எவ்வளவு பாதிப்பு எண்டதை உனக்கு நாங்கள் சொல்லித்தர வேணுமே”
'அம்மா பிறகும் பிறகும் விளங்காமல் கதைக்காதையுங்கோ. நேற்றும் ரியூட்டறிக் கிளாக்கன் என்னை வகுப்பிலை எழுப்பி காசு கேட்டு, எண்ரை மானமே போயிட்டுத. காசில்லாமல் இனிப் போகவே மாட்டன்’
O/L பரீட்சைக்குத் தேற்றவிருக்கும் தன் மகளை எப்படியாவது ரியூசனுக்கு அனுப்பிவிட முயற்சித்தம் முடியாமல் தோற்றுப்போய் நிற்கும் மனைவியின் நிலையைப் பார்த்து விட்டு கவனிக்காதத போல் வேறு பக்கம் பார்வையைத் திருப்பினான் தங்கராசா,
மூன்று மாதங்களாகத் தொடர்ச்சியாக ரியூசன் காசு கொடுக்காமல் எந்தப்பிள்ளைதான் போகத் தணியும்?
'பிள்ளையஞக்கும் திண்னக்குடுக்காமல் கோழிமுட்டையளை வித்து வித்து சின்னதாகச் சீட்டுக்கட்டினன் அந்தரம் ஆபத்துக்கு உதவுமெண்டு. கோதாரியிலை போவாள் பாறுவதிதாச்சிக்கு நிண்டிட்டு எங்கடை காசை எடுத்துக் தன்ரை அலுவல் பார்த்துப் போட்டாள். உவளை இணக்கசபைக்கு இழுக்காமல் விடமாட்டன்’
தன்னுடைய பாட்டில் புறுபுறுத்துக் கொண்டிருந்த மனைவியின் புலம்பல் காதில் விழ, தன்னையறியாமலே சிரித்துவிட்டான் தங்கராசா. அவன் சிரித்தத்தான் எத்தனை நாட்கள். உந்தச் சீட்டுக்கள் ஒன்றிலும் சேரவேண்டாமென்று மனைவியை எச்சரித்திருந்தான். இப்போது சீட்டுக்காசுக்குத் தினமும் அவள் அலைவது அவனுக்குச் சிரிப்பைத்தான் தந்தது.
A/L பரீட்சைக்குத் தோற்றிவிட்டு முடிவுகள் வரும் வரை கணனி வகுப்புக்குப் போவதற்கு இரண்டாயிரம் ரூபாவை ஒரு மாதமாகக் கேட்டுக் கேட்டு அலுத்து, அந்த எண்ணத்தை கைவிட்டு, வாசிகசாலைச் சந்தியில் பொழுதைப் போக்கிவிட்டு, சாப்பாட்டு நேரம் மட்டும் வீட்டுக்கு வந்து போகிறான் அச்சுதன். அவனுந்தான் இடைக்கிடை லீவு நாட்கள் வரும்போது தகப்பனுடன் வேலைக்குச் செல்வதற்கு எவ்வளவோ முயற்சித்தம் தங்கராசா மறத்தவிட்டான். தான் படுகின்ற கஷ்டம் தன்னோடு போகட்டும், இடைக்கிடை தன்னுடன் மகன் வேலைக்கு வந்தால் உழைப்பில் ஆசைவந்த படிப்பில் ஆர்வம் குன்றிவிடும் என்பது தகப்பனது எண்ணம். ஆனால் இப்போது அவனுக்கே வேலை இல்லை. மூன்றாவது பிள்ளை கிருஷாந்தியை புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தயார் பண்ணும் விசேட வகுப்புகளுக்கு ஏனையோரைப் போலவே அனுப்பி வைக்கத் தங்கராசாவுக்கும், மனைவிக்கும் விருப்பம் இல்லாமலில்லை. அதற்கும் வசதி வேண்டுமே.

இன்னுமோர் உலகம் 29
தீபாவளியும் வந்த ஆரவாரமில்லாமல் போய்விட்டது. ஒருவருக்கும் புது உடுப்பு எடுக்கவுமில்லை. போனசித்திரை வருடப்பிறப்புக்கும் புதுசு எடுக்க முடியாமற் போனபோது பிறகு இடையிலே காசு கிடைக்கும் வேளையில் எடுத்துத் தரலாம் என்று பிள்ளைகளுக்குக் கூறிச் சமாளித்து, தீபாவளிக்கும் அதே நிலையாகிவிட்டது.
அக்கம் பக்கத்தில் ஐநாறு, ஆயிரம் என்று தங்கராசாவின் மனைவி கடன் கேட்டு வாங்கி வந்த இரண்டு நேரம் எனச் சமைத்தப் போட்டதில் அந்தக்கடன்களும் அடைத்தபாடில்லை, இனிக்கடன் மாறவும் வழியில்லை.
தங்கராசா போனமாதத்தில் மட்டும் ஒன்பது நாட்கள் மாத்திரமே வேலைக்குப் போனான். இந்தமாதம் பிறந்த இன்றுடன் பன்னிரண்டு நாட்களாகி விட்டன. ஐந்து நாட்கள் மட்டுமே வேலை கிடைத்தது. அதுவும் அவனது தொழிலான பனைமரம் வெட்டும் தொழில் கிடைக்கவில்லை. விசாரித்த விசாரித்து தேடித்திரிந்ததில், தோட்ட வேலை தான் ஐந்து நாட்களும் கிடைத்தது, இந்த ஐந்து நாட்களில் இரண்டு நேரமும், பின்னர் மூன்று நாட்களில், ஒரு நேரமும் அவர்களது அடுப்பு நெருப்பைக் கண்டது, அதன்பின் தொடர்ச்சியாகப் பாணும் சம்பலும், இன்று அதற்கும் வழியில்லை.
தங்கராசா ஒன்றும் வேலைக்குப் போகப் பஞ்சிப்படும் ஆளல்ல, வேலை தொடர்ச்சியாகக் கிடைக்கின்ற நாட்களில் தனது கூட்டுவேலையாட்களுடன் தினமும் காலை, நேரத்தோடு போய் மாலை சூரியன் மறைய வருபவன் தான். இப்போது கிழமையில் இரண்டு நாட்கள் மூன்று நாட்கள் மரம் வெட்டும் வேலைகிடைத்தால் ஏனைய நாட்களில் வேறு வேலைக்குப் போக முயற்ச்சிப்பான். அனேகமாகத் தோல்வி தான்.
பாய் இழைத்துக் கொண்டிருந்த மனைவியின் முகத்தைப் பார்த்தான் தங்கராசா. அவளது கண்களிலிருந்து மகாவலி ஆறு ஓடிக்கொண்டிருந்தது. கணவனி தன்னை உற்றுப் பார்க்கிறான் எண் பதை உணர்ந்தவள் தலையைக்குனிந்த கண்ணிரை மறைக்க முயற்சித்தாள். தங்கராசாவும் தலையைக் குனிந்து கொண்டான்.
இந்த நிலைமைக்காக அவனர் கவலைப் பட்டானே தவிர வெட்கப்படவில்லை. அவன் கையாலாகாதவன் என்றில்லையே. உடலில் வலுவிருக்கிறது. மனதில் தெம்பிருக்கிறது. பனைமரம் வெட்டும் தொழில் கடினமானதாக இருக்கலாம். மாதம் முப்பது நாட்களும் வேலை கிடைத்தாலும் போக அவன் தயார். ஆனால் வேலைதானில்லையே.
மீண்டும் தங்கராசா தலையை நிமிர்த்தி மனைவியைப் பார்த்தான். அவளிடமிருந்த அழகும் கவர்ச்சியும் எங்கே போயின. நாற்பதைத் தாண்டாத

Page 24
30 கொற்றை பி. கிருஷ்ணானந்தன்
அவளது தோற்றம் அறுபதுக்குரியதாய்க் காட்டியது. நல்லநாள் பெருநாளென்று ஆசையாய்ப் பெருமையாய் அவளுக்கு ஒரு சேலை தானும் எடுத்துக் கொடுக்க முடிகிறதா அவனால், வீட்டில் இருக்கப் பிடிக்கவேயில்லை, சைக்கிளை எடுத்துக் கொண்டு சிவராசாவைச் சந்திக்கப் புறப்பட்டான்.
கோயில் மடத்துக்குப் பக்கத்தில் ஆலமரத்தின் கீழ் ஒரு கூட்டம் சீட்டாடிக்கொண்டிருந்தது. இன்னொரு கூட்டம் அதைச் சுற்றி வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நின்றது. வாசிகசாலைச் சந்தியில் ஏழெட்டு இளைஞர்கள் நின்று பத்திரிகைப் புதினங்களை அசை போட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வேறென்னதான் செய்வது. எவருக்கும் வேலை கிடைத்தால்தான் தானே. யுத்தத்தின் கோரத்தாண்டவம் எல்லோருடைய வாழ்க்கையிலும் இயல்பு நிலையை அறவே மாற்றியிருந்தது. சிவராசாவின் கால்கள் சைக்கிள் பெடலை மிதித்தாலும் சிந்தனை எங்கோ போய்க் கொண்டிருந்தது.
உத்தியோகம் பார்க்கிறவனாவது ஐம்பத்தைந்த அறுபத வயதுடன் ஓய்வு பெறுகிறான். இந்தக் கடலிவேலை செய்கிற எங்கடை ஆட்கள் அறுபது அறுபத்தைந்தைக் தாண்டியும், இந்தக்கஸ்டமான வேலையைச் செய்யத் தயாராகத்தான் இருக்கிறார்கள். வேலைதான் இல்லை.
“வெளிநாட்டுக்குப் போனவங்களும் பிள்ளைகள் அனுப்பி வைச்சங்களும் ஓரளவு தப்பிவிட்டாங்கள். இந்த நாடே தஞ்சமென்றிருந்த நாங்கள் சண்டையையும் தாங்கி நிண்டு இப் பிடியே பஞ்சத்திலை கிடந்து சாகவேண்டியதுதான்.”
சிவராசாவின் வீடு வந்தவிட்டது. தங்கராசாவின் சிந்தனைச் சங்கிலி அறுந்து தொங்கியது. நல்லவேளை சிவராசா வீட்டில் நின்றான். வீட்டு விறாந்தையிலிருந்த பீடியடித்துக் கொண்டிருந்தான். சிவராசா நல்லதொரு மேசன், தங்கராசா தொழிலில்லாத சமயங்களில் இடைக்கிடை சிவராசாவுடன் மேசன் வேலைக்குச் சென்றிருக்கிறான், இப்போதம் ஏதும் வேலை அகப்படுமா என்ற அங்கலாய்ப்பில்தான் இங்கு வந்திருக்கிறான்.
சிவராசாவுக்கு முன்னால் இருந்த வாங்கில் தங்கராசா உட்கார்ந்தான். வேலைப்பற்றி விசாரித்தான். சிவராசாவும் வேலையில்லாமல் தான் இருக்கிறான் என்றறிந்தவுடன் மனம் சோர்ந்து போனான். இனித்தொடர்ந்த பட்டினிதான். அதுவும் எத்தனை நாட்களுக்கு இருக்க முடியும்.
“சிவராசா நீயும் உண்ரை மேசனர் கோஷி டியும் சீமெந்தத் தட்டுப்பாட்டாலைதான் வேலையில்லாமல் நிற்கிறியள். சீமெந்து கப்பலில் வந்தால் சுனாமி வீடு அரசாங்கக்கட்டிடங்கள் எண்டு இடைக்கிடை ஏதோ கிடைக்குத. அந்தச் சாட்டிலை எங்கடை நிலைமை வேற. ஏழையாய்ப் பிறந்தவன் ஒரு

இன்னுமோர் உலகம் 31
சின்னக் கொட்டில் போடுறதுக்கெண்டாலும் கூட பனை தறிக்கக்கூடாதெண்டு அரசாங்கம் கட்டுப்பாடு போட்டிருக்கு. பரம்பரையாக பனைமரம் வெட்டுற எங்களின்ரை நிலைமையைப்பற்றி எவருமே கொஞ்சமும் நினைச்சுப் பார்க்கேல்லே.” உணர்ச்சி வசப்பட்டு ஒரே மூச்சில் கூறி முடித்தான் தங்கராசா. "நீ சொல்லுறது சரிதான் அண்ணை. ஆனால் காட்டையழிக்கக் கூடாது எண் டதபோல பனைவளமும் அழிஞ்சு போகக் கூடாத எண்டுதானே கட்டுப்படுத்தியிருக்கினம். முற்றுமுழுதாக நிறுத்தவில்லைத்தானே அண்ணை.” சிவராசா சமாதானப்படுத்தினான்.
முற்றுமுழுதாக நிற்பாட்டேல்லைத்தான். ஆனால் அவை அனுமதிக்கிற பனைகளின் ரை தொகை எத்தனை. இந்தத் தொழிலை நம்பியிருக்கிற குடும் பங்களின் ரை தொகை எத்தனை. அதோடை இப்போதையில் இளம்பொடியங்கள் இந்தத் தொழிலுக்கு இப்ப வாறதம் மிக அருமை. அப்படியிருந்தம் வேலைத்தட்டுப்பாடு, எதிர்காலத்தை நோக்கமாகக் கொண்டு நிகழ்காலத்திலை நாங்கள் பட்டினி கிடந்து உயிரை விடேலாது சிவராசா.
“ஓமண்ணை அதுவும் சரிதான். ஆனையிறவுப் பாதை மூடினாப்பிறகு விவசாய உற்பத்தியளும் அங்காலை போகாமல், தோட்டத்திலையும் வேலை குறைவு. மீன்பிடியும் கிழமையிலை மூண்டு நாலு நாள்தான். மேசன் வேலையும் குறைவு. இப்படியே எல்லாத்தொழிலுக்கும் பாதிப்புத்தான். ஆனால் பனைமரம் வெட்டுறது ஆகச் சிக்கலாகிப் போட்டுத’
சொல்லிவிட்டு சிவராசா அடுத்த பீடியைப் பற்றவைத்தான். சிவராசாவின் மனைவி இருவருக்கும் தேநீரைக் கொடுத்துவிட்டுச் சென்றாள்.
“என்ரை வீடு மட்டுமல்லோ, என்னோடை வேலை செய்கிறவங்களின்ரை வீடுகளுக்குப் போய்ப் பார்த்தால்தான் தெரியும் அழுகையே வந்திடும். இப்பிடித்தானே இந்தத் தொழிலைச் செய்யிறவை இருக்கிற எல்லா ஊரிலையும் நிலைமை இருக்கும்’ தங்கராசாவின் குரல் தளதளத்தது.
'அண்ணை பனை தறிக்கிறதைக் கட்டுப்படுத்திறது நல்லதுதான். ஆனால் கட்டுப்படுத்திறதுக்குச்சட்டம் போடுறவை அதோடை நிற்கக்கூடாது. அதை நம்பியிருக்கிற குடும்பங்களைப் பற்றியும் யோசிச்சிருக்க வேணும். ஐநாறு பனை தறிக்க அனுமதிக்கவேணும், அதே நேரம் ஐயாயிரம் பணம் விதை நடுகுறதுக்கு ஏற்பாடும் செய்ய வேணும்.”
தங்கராசா இடையே குறுக்கிட்டுப் பேசினான். "அப்ப காடுவளர்புத்திட்டம் மாதிரிச் செய்ய வேணுமெண்டு சொல்லுறாய். அரசாங்க அதிகாரிகள் மட்டத்திலை ஒவ்வொரு ஏரியாவிலும் செய்யவேணும். அப்பதான் நிகழ்காலமும் பாதிக்கப்படாது. வருங்காலத்திலை பனைவளமும் பாதிக்கப்படாது.”

Page 25
32 கொற்றை பி. கிருஷ்ணானந்தன்
ஆழ்ந்த யோசனையின் பின் தங்கராசா ஒரு முடிவுக்கு வந்தான். இப்படியே தானும் மற்றும் பனைமரம் வெட்டுற தொழிலாளர் குடும்பங்களும் பட்டினிச் சாவுக்குப் பலியாகிற நிலைமைக்கு விட்டுவிடக்கூடாது. இந்தத் தொழிலைச் செய்கிற எல்லாத் தொழிலாளர்களையுஞ் சேர்த்து ஒரு சங்கம் அமைக்கவேணும். சங்கத்தினூடாகத் தங்களிண்ரை பிரச்சனையைப் பிரதேச செயலர், மாவட்ட செயலர் வரைக்கும் கொண்டு செல்ல வேணும் என்பது தான் அத. தனது எண்ணத்ததை சிவராசாவுக்கு தெரிவித்தான்.
“மிக நல்ல திட்டம். அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு சங்கத்தை உருவாக்கி அதனுாடாகப் பலமாக நிண்டு கோரிக்கையை வையுங்கோ. அவையாலே இயலாது போனால் மாதாமாதம் நிவாரணம் தரும்படி கேளுங்கோ.”
சிவராசா சொல்லிக் கொண்டிருக்கும் போதே தங்கராசா எழும்பி விட்டான். எழும்பிச் சைக்கிளை எடுத்துக் கொண்டு ஏனைய தொழிலாளர்களைச் சந்திக்கப் போய்கொண்டிருந்தான்.
('மல்லிகை" - 2008)

இன்னுமோர் உலகம் 33
ஓர் ஆந்தினுள் 寧蘇 öŠማ1 薇
பாடசாலை விட்டு வீட்டிற்கு வந்ததும், வைதேகி தாயிடம் ஏதோ முறையிட்டு அழுதுகொண்டிருந்தாள்.
அந்த அழுகைக் குக் காரணம் ஆங்கில ஆசிரியை பத்மாவாகத்தானிருக்குமென்று பாஸ்கரனுக்குத் தெரியும். இப்போது ஒரு வருட காலமாக அடிக்கடி வைதேகி பாடசாலை விட்டு வரும்போது அழுது கொண்டு வருவதும் தாய் ஏதாவது சமாதானம் சொல்வதும் நடந்த கொண்டிருக்கின்ற சமாச்சாரம் தான்.

Page 26
34 கொற்றை பி. கிருஷ்ணானந்தன்
சில சமயங்களில் மகள் அழுவதைச் சகிக்காமல் இவள் இங்கிருந்து கொண்டே பத்மா ரீச்சரைத் திட்டுவாள். சிலவேளைகளில் புருஷன் என்றும் பார்க்காமல் பாஸ்கரனையும் நோக்கியும் சொல்லம்புகளை விடுவாள்.
“வேறை பிள்ளைகளின்ரை தகப்பண்மாரெண்டால் இத்தனைக்கும் அதிபரிடம் முறைப்பாடு கொடுத்திருப்பாங்கள். அல்லது பாடசாலை அபிவிருத்திச்சங்க கூட்டத்திலையாவது பத்மாவைப்பற்றிச் சொல்லியிருப்பாங்கள். எண்ரை புருஷன் எங்களிட்டைதான் வாய்வீரம், வெளியிலை போனால் எல்லாருக்கும் நல்ல பிள்ளையாய் நடிக்கிறதுதான் வேலை.”
இந்தக் கதைகளையெல்லாம் அவன் பெரிதாகக்காதில் வாங்கிக் கொள்வதில்லை. ஒரு ரீச்சரைபற்றி அம்மாவோடை சேர்ந்து நீயும் கதைக்கக்கூடாது என்று புத்திமதி கூறி, ஏதம் சமாதானம் சொல்லி மகளை ஆறுதல் படுத்தி விடுவான். அவள் படிப்பில் சோர்ந்த போகாமலிருக்கும் வண்ணம் நம்பிக்கையூட்டுவான்.
எல்லாவற்றுக்கும் காரணம் ஒரு சின்ன விஷயம்தான். பத்மா ரீச்சரின் மூத்த புதல்விக்குச் சாமத்தியச்சடங்கு. அடுத்த கிராமத்தில் இருக்கும் அவள் தான் வகுப்பாசிரியராக இருக்கும் அந்தப் பத்தாம் வகுப்பில் குறிப்பிட்ட சில பிள்ளைகளை முதல் நாளும், சடங்கில் அன்றும் வந்த வேலைகளை செய்து தரும்படி சொல்லி வைத்திருந்தாள். சாமத்தியச்சடங்கின் அடுத்தநாள் வைதேகி வீட்டினுள் புதுவீடு புகுவிழா என்றபடியால் தங்கள் விட்டிலேயே வேலைப்பளு கூடி, மற்ற மாணவர்களைப் போல் ரீச்சர் வீட்டிற்குப் போவதற்கு வைதேகியால் முடியாமற் போய்விட்டது.
மூன்றாம் நாள் பத்மா ரீச்சர் வகுப்பிற்கு வந்ததுமே வைதேகியை எழுப்பிக் கேட்டாள்.
“ஏன் வைதேகி நான் சொல்லி வைச்சபடி வரேல்லை’
"சொறி ரீச்சர் எங்கடை வீட்டையும் புதுவீட்டுக் கொண்டாட்டம் ரீச்சர். வீட்டிலை சரியான வேலையாப்போச்சு’
“உம். ஒரு கிளாஸ் ரீச்சர் முதலே சொல்லி வைச்சும் உதாசீனப்படுத்திப் போட்டீர். ஒரு எலக்றிக்கல் சுப்பிரண்டண்ரை மகள் எண்ட திமிர் உமக்கு. என்ன?”
“சரி இரும்?”
உறுக்கிச் சொன்னாள், அதன் பிறகுதான் பிரச்சனையே, வைதேகி எல்லாப்பாடங்களிலும் நல்ல புள்ளிகள் எடுக்கின்ற கெட்டிக்கார மாணவி
 

இன்னுமோர் உலகம் 35
விளையாட்டிலும் அப்படித்தான். பேச்சுப்போட்டி முதலானவற்றிலும் வலய மட்டத்தில் பரிசுகள் பெற்றிருக்கின்றாள்.
ஆசிரியர்களைக் கனம் பண்ணுவதிலும், சக மாணவர்களுடன் நல்லுறவைப் பேணுவதிலும் எந்தக்குறையும் வைக்காதவள். அதனால் மற்ற ஆசிரியர்களிடம் அவளுக்கு நல்லபேர் இருந்தது. இந்தச் சாமத்தியச்சடங்கிற்குப்பிறகு பத்மா ரீச்சர் காரணமின்றியே வைதேகியை அவமானப்படுத்தத் தொடங்கினாள். பாடசாலை விழாக்களில் ஆங்கிலப் பேச்சு, மற்றும் ஆங்கில நாடகங்களில் வைதேகிக்குச் சந்தர்ப்பமே கொடுப்பதில்லை, அதுதான் போகட்டும். படிப்பிலும் வைதேகி தொடர்ந்து பழிவாங்கப்பட்டுக் கொண்டே வருகிறாள்.
அந்தப் பாடசாலையில் படிப்பிப்பதுதான் தங்கள் தொழில் என்பதை மறந்து போய்விட்ட இரண்டு ஆசிரியைகளில் ஒருத்தி தான் பத்மா ரீச்சர். அடுத்த ஆசிரியை குணேஸ்வரி, இவர்கள் இருவரும் தாங்கள் தங்கள் பிள்ளைப்பேறு, பிள்ளை வளர்ப்பு, கணவருக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகள், ஊரில் நடைபெறும் நன்மை, தீமைகள் இவற்றையெல்லாம் சமாளித்து அதற்கு மேலாலும் தொடர்ந்த இந்த ஆசிரிய உத்தியோகத்தில் நிலைத்திருந்து தாக்குப் பிடிப்பதற்காகத் தான் மாதாமாதம் இந்தச் சம்பளமே தவிர படிப்பிப்பதற்காகவல்ல என்று நினைத்துக் கொண்டிருப்பதாகத்தான் அவர்களது செயற்பாடுகள் காணப்படும். அதனால் தானோ என்னவோ அவர்கள் இருவருக்குமிடையே நல்ல சினேகமும் காணப்படுகிறது. ஏற்கனவே அவர்களுக்கு தாரத்த உறவுமுறை இருப்பதும் அவர்களது நெருக்கத்திற்கு ஏதுவாக அமைந்தவிட்டது.
பத்மா வகுப்பிற்கு வந்தால் பத்து நிமிடங்கள் படிப்பிப்பாளோ தெரியாது. அதை இதைச் சொல்லிச் சமாளித்த நேரம் போக்காட்டுவதுதான் வேலை.
குணேஸ்வரி ரீச்சரோ வகுப்பிற்குப் போனால் பிள்ளைகளுக்கு ஏதாவது எழுத்து வேலையைக் கொடுத்து விட்டுத் தான் படிப்பதுதான் வேலை. ஏ எல்' உடன் ஆசிரியத தொழிலில் சேர்ந்த குணேஸ்வரி வெளிவாரிப் பட்டதாரியாகப் பட்டம் பெற்று பின் கல்வி டிப்பிளோமோ முடித்து இப்போது பட்டப்பின் படிப்பாக எம்.இடிபடித்துக் கொண்டிருக்கிறாள். அதனால் அவள் வகுப்பிற்கு வந்தால் தான் படித்துக் கொண்டிருப்பதில் பெருமளவு நேரத்தைச் செலவழிப்பாள்.
அல்லது பத்மாவும் குணேஸ்வரியையும் எங்காவது ஒன்றாக நின்று நாட்டு நடப்புகள், பாடசாலை ஆசிரியர்களின் குறை நிறைகள் விமர்சனங்களில் நேரத்தைக் கரைப்பார்கள். இவர்கள் இருவரும் பதினாறு வருடங்களுக்கு மேலாக இந்தக் கிராமப் பாடசாலையிலேயே தொடர்ந்த படிப்பித்து வருவதும் கற்பிப்பதில் ஒருவித அசமந்தப்போக்கு ஏற்பட்டதற்கு காரணமாக இருக்கலாம்.

Page 27
36 கொற்றை பி. கிருஷ்ணானந்தன்
ஆசிரியர்கள் தங்கள் அறிவை வளர்த்து வினைத்திறனை அதிகரித்து மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் உயர்ச்சியைக் காட்டுவதற்காக அரசாங்கம் அறிவித்திருக்கின்ற சில சம்பள அதிகரிப்புத் திட்டங்கள் சில ஆசிரியர்கள் மாணவர்களின் கல்வியைப் பாழாக்கித் தங்களை மட்டும் வளர்த்துக் கொள்ள வாய்ப்பாய்ப் போய்விடுகின்றதே என குணேஸ்வரி ரீச்சரைப் போன்றோரைப் பார்த்த ஆத்திரப்படுவர்களும் இருந்தார்கள்.
அதிபர் அல்லது கல்வி அதிகாரிகள் இவர்களது வகுப்பிற்கு வரும்போது “இப்படித்தான் சிங்கம் நித்திரை கொண்டது. அப்போது சுண்டெலி அதன் மீது ஏறி.” என்று சமாளித்த அந்தக் காலத்தை ஒரு வாத்தியாரை முன்மாதிரியாகக் கொண்டு ஏதோ சமாளித்து விடுகிறார்கள்.
அதிபருக்கும் இவர்கள் இருவரையும் பற்றி விளங்காமலில்லை. அவர் வேறு ஊரைச் சேர்ந்தவரான படியாலும், விரைவிலே ஓய்வு பெற்றுச் செல்லவிருப்பதாலும், தனிப்பட்ட பகைமையை உருவாக்கிக்கொள்ள விரும்பாமல் சமாளித்துக் கொண்டு வருகிறார்.
பத்மா ரீச்சரால் மூளைச்சலவை செய்யப்பட்டு, தன்சினேகிதியைச் சந்தோஷப்படுத்துவதற்காக வைதேகியைத் தாற்றுவதிலும், குணேஸ்வரி ரீச்சர் தன் பங்கைச் கச்சிதமாகக் செய்து கொண்டிருந்தாள். ஆனாலும் நல்ல வேளை குணேஸ்வரி இப்போது வைதேகியின் வகுப்புக்குப் பாடம் எடுப்பதில்லை.
தவணைப்பரீட்சைகளில் எவ்வளவு தான் திறமையாக வைதேகி எழுதினாலும் ஆங்கிலப்பாடத்தில் அவளுக்குப் புள்ளிகள் குறைவாகவே விழுந்து கொண்டிருந்தது. அன்றும் மூன்றாந் தவணைப்பரீட்சைக்குரிய புள்ளிகள் வழங்கப்பட்டிருந்தன.
எல்லாப்பாடத்திலும் அதிகஉடிய புள்ளிகளைப் பெற்றிருந்த வைதேகிக்கு ஆங்கிலத்தில் குறைவான புள்ளியே கிடைத்திருந்தது. தான் நன்றாகச் செய்திருந்தம், தன்னை விட வகுப்பில் குறைவாகவே செய்கின்ற நாலைந்து பிள்ளைகளுக்கு புள்ளிகள் தாராளமாகவே வழங்கப்பட்டிருந்ததை வைதேகி கவனித்தாள். அவர்கள் யாவரும் ரீச்சரின் வீட்டில் நடந்த சாமத்தியச்சடங்கில் இரண்டு மூன்று நாட்களாக நின்று பாடுபட்டவர்களாகவே காணப்பட்டார்கள். என்பதையும் அவதானித்தாள், நேராக பத்மா ரீச்சரிடம் சென்றாள்.
"ரீச்சர் என்னுடைய விடைப்பேப்பரை ஒருக்காத் தாருங்கோ ரீச்சர்” “ஓம் அதுக்கென்ன தாறன், இப்ப நான் அலுவலாக இருக்கிறன். நாளைக்கு வாரும்,'
அடுத்த நாள் போனாள், மீண்டும் அடுத்த நாள் சொல்லப்பட்ட, அடுத்த நாளும் போனாள், இம்முறை ரீச்சருக்குக் கோபம் வந்துவிட்டது
 

இன்னுமோர் உலகம் 37
“நீர் பெரிதாக வெட்டிப் பிடுங்கி எழுத நான் குறைவாக மார்க்ஸ் போட்டிட்டன் எண்டு நினைக்கிறீரோ?”
“இல்லை ரீச்சர். நான் என்னென்ன பிழையள் விட்டிருக்கிறன் எண்டு தெரிந்து கொள்ளுறதற்காகத்தான் கேட்கிறன்.”
“உம்முடைய திமிர் எனக்குத் தெரியாதே இந்தாரும். கொண்டு போய்ப்பாரும்’
முகத்தில் விசியெறியாத குறையாக விடைத்தாளை மேசையில் போட்டாள் பத்மா ரீச்சர்.
மெளனமாக அதை எடுத்துக் கொண்டுபோன வைதேகி வகுப்பிலிருந்து ஒவ்வொன்றாகச் சரி பார்த்தாள். அவளது அறிவுக்கெட்டிய வரை தொண்ணுாற்றைந்த வீதம் சரியாகத்தான் செய்திருந்தாளர். ஆனால் கட்டுரைப்பகுதியும் கடிதப்பகுதியும் வெட்டப்பட்டிருந்தது. அவற்றுக்குத் தப்பரவாகப் புள்ளிகள் வழங்கப்படவேயில்லை. அவள் பின் தள்ளப்பட்டதற்குக் காரணம் புரிந்து விட்டது. மீண்டும் ரீச்சரிடம் வந்தாள். இப்போது பத்மா ரீச்சரும், குணேஸ்டவரி ரீச்சரும் ஏதோ ஊர் வம்பளப்பதில் சுவாரஸ்யமாக ஈடுபட்டிருந்தனர். தயங்கித் தயங்கி வந்து வைதேகி பத்மாவை மெதுவாக விளித்தாள்.
முடியாமலிருக்கு. உமக்கு எத்தனையோ தடவை வகுப்பிலை சொல்லியிருக்கிறன் தானே எழுத்தை வடிவாக எழுதவேணுமெண்டு.”
“எழுத்து வடிவில்லாட்டி மார்க்ஸைக் குறைச்சுப் போட்டிருக்கலாம். அதுக்காக ஏன் ரீச்சர் ஒரேடியாக வெட்டினனீங்கள’
“ஐ சே! நீர் எனக்குப் படிப்பிக்க வெளிக்கிடாதையும், ட்ரெயினிங் கொலிச்சுக்குப்போய் வந்து இங்கேயே பதினாறு வருஷமாகப் படிப்பிக்கிறன். ஞாபகத்திலை வைச்சிரும்.”
வைதேகி கலங்கிய கண்களுடன் திரும்பினாள். குணேஸ்வரி ரீச்சர் ஒரு ஏளனச்சிரிப்புடன் வைதேகியைப் பார்த்துக்கொண்டு நின்றாள்.
அன்று பாடசாலை விட்டு வீட்டிற்கு வந்தவள் அறைக்குள் போயிருந்து ஒரேடியாக அழுது கொண்டிருந்தாள். சாப்பிடவுமில்லை. தாய் அவளைச் சமாதானம் பண்ணும் முயற்சியில் வழமைபோலல்லாமல் தோற்றுப் போய்விட்டாள்.

Page 28
38 கொற்றை பி. கிருஷ்ணானந்தன்
அந்த வெப்பிசாரத்தில் அந்தி சாயும் நேரம் பாஸ்கரன் வேலையால் வீட்டிற்கு வரும் போது வழமைக்கு மாறாக கேற்றடியில் அவனைக்கண்டதுமே தனது ஆத்திரத்தை அவன் மீது கொட்டித் தீர்த்தாள்.
"இஞ்சை வாருங்கோ. நீங்கள் சரியான ஒரு தகப்பனாக நடந்திருந்தால் பிள்ளைக்கு இப்படியெல்லாம் நடந்திருக்காது. பிள்ளை எல்கொலசிப் சோதனை பாஸ்பண்ணின மூட்டமே மற்றப்பிள்ளையளைப் போல ரவுண் பள்ளிக்கூடத்திற்கு மாத்தவ மெண்டு எத்தனை முறை சொன்னான். கேட்டியளே? அது ஊர்ப்பள்ளிக்கூடத்திற்குச் செய்கிற தரோகமெண்டு சொல்லி மறுத்தப் போட்டியள் பிறகு பத்மா ரீச்சர் செய்யிற கொடுமைக்குப் பிறகாவது பிள்ளையை வேறைபள்ளிக்கூடத்திற்கு மாத்துவமெண்டு கேட்டன். நீங்கள் சம்மதிக்கேல்லை. இப்ப பாத்தியளே என்ன நடந்ததெண்டு.”
“கொஞ்சம் பொறப்பா. உங்கைதானே வாறன். மோட்டார்சைக்கிளை முதலிலை விட்டிட்டு வாறன்.”
கூறிக்கொண்டே மோட்டார்ச்சைக்கிளை கராஜ்ச்சுக்குள் விட்டு விட்டு உடுப்பு மாற்றாமலே வந்து உட்கார்ந்தான் பாஸ்கரன். நடந்தவைகளைப் பொறுமையாக மனைவியிடம் கேட்டறிந்தான்.
ரீச்சர்மாரைப் பற்றி பிள்ளைகளுக்கிட்ட மரியாதைக்குறைவாகக் கதைக்காதையப்பா என்று கூறிக்கொண்டே வைதேகி படுத்திருந்த அறைக்குள் போனான். அழுதுகொண்டு படுத்திருந்த மகளின் பக்கத்தில் உட்கார்ந்த அவளது தலைமைத் தடவினான்.
“உதுக்கொல்லாம் அழுக்கூடாது பிள்ளை, ரியூசன் முறையையே விரும்பாத நான் பத்மாரீச்சரின்ரை போக்கைப் புரிஞ்சுகொண்டபடியால்தானே உன்னை இங்கிலீஷ் ரியூசனுக்கு விஷேஷமாக அனுப்புறனான். உவவின்ரை படிப்பிப்பாலை இதுவரை ஆரும் உங்கை இங்கிலிஸிலை நல்ல றிசல்ற் எடுத்தவையோ? இல்லைத்தானே.”
வைதேகி படுக்கையிலிருந்த எழும்பி, தகப்பனின் மடியில் தலையை வைத்தாள். இப்போது அழுகை விம்மலாக மாறியது. பிள்ளை ஓ.எல். பொதுப்பரீட்சையிலும் பத்மா ரீச்சரே உண்ரை விடைத்தாளைத் திருத்தப்போறா? இல்லைத்தானே! நீ கவனமாகப்படி மனம் தாக்கப்படாதை, ஏ.எல். வகுப்பிற்கு வேறை பெரிய பள்ளிக்கூடத்திற்குத்தானே போகப்போறாய். ஒண்டுக்கும் யோசிக்காதையம்மா. போய் முகத்தைக்கழுவிப் போட்டு வந்து சாப்பீடு சாப்பிட்டுப் போய்ப்படி போம்மா.போ!
தந்தையின் வார்த்தையில் மகுடிக்குக்கட்டுண்டவள் போல் எழுந்து பாத்றாமுக்குள் போனாள் வைதேகி.
 

இன்னுமோர் உலகம் 39
பொதுப்பரீட்சை முடிந்தது. மூன்று மாதங்களின் பின் முடிவுகள் வெளியாகின இணையத்தின்மூலம் அறிந்து தகவலின்படி பத்துப் பாடங்களிலும் ‘ஏ’ பெற்றுக் கொண்ட மாணவி அப்பாடசாலையில் வைதேகி மட்டுமே. அது அவள் எதிர்பார்த்ததுதான். ஆங்கிலத்தில் இவள் மட்டுமே ‘ஏ’ பெற்றிருந்தாள். சிலர் சாதாரண சித்தி பெற்றிருந்தனர். முந்திய வருஷங்களைப்போலவே பெரும்பாலானோர் சித்தி பெறத் தவறியிருந்தனர்.
பரீட்சை முடிவை முறைப்படி அறிவதற்காகவும், தனது மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவிப்பதற்காகவும் பாடசாலைக்குச் செல்கிறாள் வைதேகி, அதிபர், ஆசிரியர், மாணவர்களின் கைக்குலுக்கல்கள் மகிழ்ச்சி, ஆரவாரங்களில் மூழ்கிப் போனவள் எப்படியிருந்தபோதும் பத்மா ரீச்சரையும் மரியாதையின் நிமித்தம் போய்க்காணவேண்டும் என்ற நினைப்பில் அவளைத் தேடிப் போகிறாள்.
ஆசிரியர்களின் ஓய்வறையில் நான்கு ஆசிரியர்களுக்கு முன்பாக உரத்த குரலில் பத்மா ரீச்சர் சொல்லிக் கொண்டிருக்கிறாள்.
“எனக்கு முன்னமே தெரியும். வைதேகி என்ரை பாடத்திலை நிச்சயம் ‘ஏ’ எடுப்பாளெண்டு. ஏனெண்டால் அவள் ஒருத்திதான் எண்னட்டை அக்கறையாகப் படிக்கிறவள். நான் கஸ்டப்பட்டது வீண்போகேல்லை. மற்ற மூதேவியளும் ரியூசன் எண்டு அலையாமல் அவளைப் போல் என்னட்டை ஒழுங்காகப் படிச்சிருந்தால் நல்ல றிசல்ற் எடுத்திருக்கலாம். அதுகள் அக்கறையில்லை.”
இவற்றைக் காதில் வாங்கிக் கொண்டே பத்மா ரீச்சரின் கடைக்கண் பார்வைக்காக அறையின் வாசலில் காத்த நிற்கிறாள் வைதேகி.
('வீரகேசரி வாரமலர்' - 2009)

Page 29
40 கொற்றை பி. கிருஷ்ணானந்தன்
“இந்த அப்பாவுக்கு என்ன நடந்தது எண்டே தெரியேல்லை. ஜேர்மனிக்கு அண்ணாக்களிட்டை போய் வந்து ஒரு கிழமை ஆகியிட்டுத. அங்கத்தைக் கதையள் ஒண்டையும் சொல்லுறாரில்லை. கேட்கிற கேளிவியளுக்கு “வண்வேர்ட் ஆண்சராகப்’ பதில் சொல்லுறார்.”
தாய்க்குச் சொல்லிச் சலித்துக் கொண்டாள் ரூபா.
 

இன்னுமோர் உலகம் 41
'நானும் கவனிச்சுக் கொண்டுதானிருக்கிறன் பிள்ளை. எனக்கும் წ9ტb, விஷயத்தையும் விளக்கமாகச் சொல்லேல்லை. இண்டைக்கு ஆளை விடுகிறேல்லை. ஜேர்மனிப் புதினங்களெல்லாம் இரவுக்காவது கேட்டுப் பிடிக்க வேணும்.” கமலம் மகளுக்குக் கூறினாள்.
சிவஞானத்தார் ஜேர்மனியில் இரண்டு மாதங்கள் நின்றுவிட்டு வந்து ஒரு கிழமையாகியும் வீட்டில் ஆறுதலாக இருக்கவில்லை. அங்குள்ளவர்கள் கொடுத்துவிட்ட சாமான்களை உரிய இடங்களுக்குக் கொண்டு போய்க் கொடுக்க இரண்டு மூன்று நாட்களாவது எடுக்கும்தான் என்றாலும் அந்த அலுவல்கள் ஒருவாறாய் முடிந்தபிறகும் கார்புறோக்கள், மோர்டார் சைக்கிள் புறோக்கர்களுடன் திரிவது தெரிகிறது.
'பிறகும் ஏதும் கார் அல்லது மோட்டார் சைக்கிள் எடுத்து விடுகிற ஐடியாவோ தெரியேல்லை. ஜேர்மனியிலிருந்து நிறையக்காசு கொண்டுவந்தால் அதற்கொரு வேலை வைக்கத்தானே வேணும்’ ஊரில் சிலருடைய குசுகுசுப்பு இது.
சிவஞானத்தார் சாதாரண ஒரு மேசன் தொழிலாளிதான். கஸ்டப்பட்டு வேலை செய்து உழைத்துச் சேர்த்த பணத்துடன் மனைவியின் நகைகள்போதாதற்கு காணியையும் ஈடுவைத்துப் பெற்ற பணத்தையும் சேர்த்து மூத்தவனை ஜேர்மனிக்கு அனுப்பி வைத்தார். அவனது நல்லகாலத்திற்கு உடனேயே வதிவிட உரிமையும் கிடைத்த விட்டது. பின்னர் மூத்தவன் அங்கு உழைத்து தன் தம்பியையும் ஜேர்மனிக்கு கூப்பிட்டு விட்டான். இரண்டு பையன்களும் நன்றாக உழைத்தனுப்பத் தொடங்கிய பின்னர்தான் சிவஞானம் சிவஞானத்தார் ஆகி அவரில் பலமாற்றங்களும் ஏற்படத் தொடங்கின.
முதலில் இவ்வளவு காலமும் தான் செய்து வந்த வேலையைவிட்டுவிட்டார். மாளிகை போன்றதொரு வீடு கட்டினார். அடுத்த வருடம் தனக்கும் மூன்றாவது மகனுக்குமாக ஆளுக்கு ஒவ்வொரு மோட்டார் சைக்கிள் வாங்கினார். அடுத்த வருடம் ஒரு கார். மகளுக்கு ஒரு ஸ்கூட்டிபெப்.
கார் வாங்க முயற்சிக்கும் போதே கமலம் போர்க்கொடி தாக்கினாள். தினமும் தேவைப்படுகின்ற ஒன்றாக இருந்தால் பரவாயில்லை. எப்பவோ இருந்திட்டு ஒரு நாளைக்கு கோயில் குளம் என்று வெளிக்கிடும் போது வாடகைக்கார் பிடித்துக்கொண்டு போகலாந்தானே என்பது கமலத்தின் அபிப்பிராயம்.
ஒரு வீட்டிற்குள் ஆளுக்கொன்றாக மூன்று மோட்டார் சைக்கிள்கள் அவசியந்தானா என்பது சிவஞானத்தாரின் மூத்த அக்காவின் கேள்வி.
படிக்கின்ற பிள்ளைகளுக்குத் தேவைக்கு மிதமிஞ்சிய வசதிகளைச் செய்து கொடுத்து பிள்ளைகளைக் கெடுக்காதே என்பது இளைய அக்காவின் அறிவுரை.

Page 30
42 கொற்றை பி. கிருஷ்ணானந்தன்
சிவஞானத்தர் இவை எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அவருடைய ஒரே நோக்கம் இவற்றால் தனக்கு சமூக அந்தஸ்து அதிகரிக்க வேண்டும் அதபோதம் அவருக்கு பிள்ளைகள் இருவரையும் படி என்று ஒரு நாள்கூட வற்புறுத்தியது கிடையாது. சரியான நேரம் வரும்போது கடைசி மகனையும் மகளையும் வெளிநாட்டிற்கு அனுப்பிவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தார்.
இதைவிட சிவஞானத்தார் ஊரில் பண்ணுகிற அட்டகாசங்கள் ஒரு விதமானவை. ஊரில் யாரும் காணி வாங்க முடியாது. எந்தக் காணியாவது விலைப்படப்போகிறது என்று கேள்விப்பட்டால் போதும். மற்றவர்களுடன் போட்டிக்கு விலை பேசப்போய் விடுவார். வழமையான விலையை விட உச்ச விலைக்குப் போகப்பண்ணி ஒன்றில் இவர் வாங்குவார். அல்லது இவரைப்போன்ற ஆட்கள், யாராவது வாங்குவார்கள். சாதாரண ஏழை எளியதுகள் நினைத்துப் பார்க்கவே தேவையில்லை.
வெளிநாட்டில் உள்ள பிள்ளைகள் இங்கு குடியிருக்க வருவார்களோ தெரியாது. அப்படி வந்தாலும் நான்கு பிள்ளைகளுக்காக ஏன் இப்படியாய்த் தொடர்ந்த காணி வாங்கவேண்டும் என்று யாராவது கேட்டால் “ஒரு நமட்டுச் சிரிப்புத்தாண்’ அவருடைய பதிலாக இருக்கும்.
இனி மீன் சந்தைக்கு வருவோம், அந்தச் சின்ன ஊர்ச்சந்தையில் ஆறேழு மீன் வியாபாரிகள் மட்டுமே இருப்பார்கள். சனம் விலையில் பேரம் பேசுவதிலும் வாங்குவதிலும் தீவிரமாக இருக்கும். முந்நூறு ரூபா பெறுமதியான மீனை வியாபாரிகள் அறுநூறு என்பார்கள். சிவஞானத்தார் வருவார். இவரைக் கண்டதுமே வியாபாரிகளின் முகங்களில் மகிழ்ச்சி தாண்டவமாடும். சனங்களின் முகங்களில் கறுப்பு ரேகை படரத்தொடங்கும். சிவஞானத்தார் சேர்ட் பொக்கற்றிலிருந்து காசை எடுக்கும் போதே பல பச்சைத்தாள்கள் வெளியே எட்டிப் பார்க்கும். சொன்ன விலைப்படியே அறுநாறை எடுத்து இலாவகமாக வீசுவார். மீன் சிவஞானத்தாரின் மீன் பைக்குள் போகும். சனம் எரிச்சலுடன் பார்த்துக் கொண்டு நிற்க, சிவஞானத்தார் எதையும் லட்சியம் செய்யாமல் மோட்டார் சைக்கிளில் ஏறிப் புறப்படுவார். அன்று அதற்குப்பின் சந்தையில் மீன் உச்சவிலை தான்.
“இவ்வளவு மீனையும் இவ்வளவு காசுக்கு ஏன் நெடுக வாங்கி வந்து கொட்டுறியள்.’ இப்படியாய் பலநாள் கமலம் கணவனுடன் சண்டை பிடித்திருக்கிறாள்.
நான் காசு குடுத்து வாங்கி வந்த தாறன். வெட்டிச்சமைக்க உனக்கென்ன பஞ்சியாக்கிடக்கே "இது அவருடைய கேள்வி.”
"இதுகளை திருத்தவே ஏலாத’ இது கமலத்தினுடைய சலிப்பு. அதன்பின் அவள் அபிப்பிராயம் சொல்வதைத் தவிர்த்து வந்தாள்.
 

இன்னுமோர் உலகம் 43
“வாங்கிக் கொண்டு வந்த போடுறதை அவிச்சுப் போடுறது மட்டும்தான் எண்ரை வேலை” வாய் மட்டும் இப்படியாய் ஏதும் புறுபுறுக்கும். இப்படி நிலைமை இருக்கும்போது தான் பிள்ளைகள் இருவரினதும் அழைப்பின் பேரில் சிவஞானத்தார் ஜேர்மனி போய் வந்தார்.
மாலை ஐந்த மணி
இன்றைக்கு எப்படியாவது ஜேர்மனிப் புதினங்கள் பிள்ளைகளின் சமாச்சாரங்கள் பற்றியெல்லாம் அறிய வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தாள்
கமலம்,
சிவஞானத்தார் இரண்டு பேருடன் வீட்டிற்கு வந்தார். அவர்களை நேரே கார். மோட்டார் சைக்கிள்கள் நிற்குமிடத்திற்குக் கூட்டிச் சென்றார். அவர்கள் வாகனங்களை “ஸ்ரார்ட’ பண்ணிப் பார்த்தார்கள் ஏதோவெல்லாம் கதைத்தார்கள்.
“இதுகளை வித்தப் போட்டுப் பிறகும் புதிசாக வாங்கிற எண்ணம் போல’~ ரூபா
“என்னவாவது செய்து தொலைக்கட்டும்.” ~ கமலம்
“யாரையும் எதுவும் கேட்கிறதில்லை. எல்லாம் தண்ரை எண்ணம். இதுவும் ஒருவகை ஆணாதிக்கம்தான” ரூபா.
வந்தவர்கள் போய்விட்டார்கள்.
இரவு ஏழு மணி
6J LÚ.......... படிக்காமல் அங்கை இந்த நேரம் என்ன ரி.வி பார்க்கிறியள். போங்கோ. போய்ப் படியுங்கோ. அதட்டினார். சிவாஞானத்தார். இந்த அதட்டலைக் கேட்டதம் திகைத்தது ரூபாவும் தம்பியும் மட்டுமல்ல இரவுச்சாப்பாடு தயாரிப்பதில் மும்முரமாயிருந்த கமலம் குசினியை விட்டு வெளியே வந்து எட்டிப்பார்த்தாள். அப்பாவுக்கு என்ன நடந்தது என்று யோசித்தபடி அப்பாவைப் பார்த்துக்கொண்டே படிக்கிற அறைக்குள் நழைந்தார்கள் பிள்ளைகள்.
இரவு எட்டு மணி
“என்னப்பா கடுமையான யோசனையாயிருக்கிறியள்’
குசினியலுவல்களை முடித்துக் கொண்டு கணவனுக்குப்பக்கத்தில் வந்து உட்கார்ந்தபடி கேட்டாள் கமலம், சிவஞானத்தார் நிஜ உலகிற்கு வந்ததாய்த் தெரியவில்லை. மீண்டும் கேட்டாள்.
“என்னப்பா ஆழமான யோசனை. எனக்கும் சொல்லுங்கோவன்’
அப்போதுதான் திடுக்கிட்டவராக சிவஞானத்தார் இந்த உலகிற்கு வந்தார்.
"அப்பிடியொண்டுமில்லை’
"aff. சரி அது இருக்கட்டும். பிள்ளைகளின்ரை நிலைமையென்ன, கலியாணப் பேச்சை எடுத்தாலே இப் போதைக்கு வேண் டாமெணி டு

Page 31
44 கொற்றை பி. கிருஷ்ணானந்தன்
தட்டிக்கழிக்கிறவங்கள். நீங்கள் ஜேர்மனியிலே இருக்கேக்கை உங்களிட்டை ரெலிபோனிலை கேட்கவும் ஒணி டுஞ் சொல்லேல்லை. இப் பவாவது சொல்லுங்கோவன். எப்பிடியிருக்கிறாங்கள் பெடியள்.”
“அவங்களுக்கென்ன. இருக்கிறாங்கள்’ “என்னப்பா. மொட்டையாய்ப் பதில் சொல்லுறியள்’ "இதை விடப் பிறகென்ன சொல்லுறது. அவங்கள் இரண்டு பேரும் எப்பவாவது என்னோடை ஆறுதலாக இருந்த கதைச்சவங்களே. ഥങ്ങ விட்டுப் பேசினவங்களே. அதைப்பற்றி நான் ஏதும் உனக்குச் சொல்லுறதுக்கு. வேலை வேலையெண்டு திரிஞ்சாங்கள். சாமத்திலே வாறாங்கள். விடியமுந்தி எழும்பிக்கொண்டு போறாங்கள். நாலு மணத்தியாலங் கூட நித்திரை கொள்ளுறதில்லை. இந்த இரண்டு மாசத்திலையும் இரண்டு ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஓய்வாய் நிண்டு என்னை அங்கை இங்கையெண்டு கூட்டிக் கொண்டு போனவங்கள். மற்றும்படி நான் ஊரிலேயிருந்து கேட்க கேட்க மறுக்காமல் பாங்கடன், சீட்டுகள் எல்லாம் எடுத்து, எடுத்து அனுப்பிப்போட்டு இப்ப ஓய்வொழிச்சல் இல்லாமல் ஒடித்திரியிறாங்கள்.” கூறிவிட்டு அண்ணாந்து வீட்டு முகட்டைப் பார்த்துக் கொண்டு யோசித்தார்.”
இப்போது கமலமும் கடுமையான யோசனையில் ஆழ்ந்தாள். அடுத்தநாள் காலை கார் புறோக்கள் மோட்டார் சைக்கிள் புறோக்கர்கள் வந்தார்கள். ஒன்று மட்டும் வீட்டில் நிற்க ஏனைய இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் காரையும் உடன்காசு கொடுத்து வாங்கிக்கொண்டு போனார்கள் சிவஞானத்தார் அந்தக்காசைக் கொண்டு போய்க் கமலத்தின் கையில் வைத்தார். பிறகு ஒரு மோட்டர் சைக்கிள் வீட்டில் நிற்கத்தக்கத்கதாக சைக்கிளில் மீன் சந்தைக்குச் சென்றார். சந்தையால் வந்து மீண்பையைக் கமலத்திடம் கொடுத்தார். வழமையாக வாங்குகின்ற அளவின் நான்கில் ஒரு பங்காக மீன் இருந்ததைக் கண்ட கமலம் 'மீன் எவ்வளவுக்கப்பா வாங்கினீர்கள்’ என்று கேட்டாள்.
"நாற்றியம்பது ரூபாவுக்கு வாங்கினான். நாலு பேருக்கு மிச்சம் மிச்சமாகக் காணும். நீ கறியைக் காய்ச்சு’
கூறிவிட்டு சிவஞானத்தார் தான் முன்பு சேர்ந்து மேசன் வேலை செய்த பொன்னுத்தரை மேஸ்திரியாரைச் சந்திப்பதற்காக சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்படுகிறார். ஆம் இப்போதும் என்னால் தொழில் செய்ய முடியும் சிவஞானத்தின் மனம் சொல்லிக் கொள்கிறது.
(யாழ் தினக்குரல் - 2009)
 

இன்னுமோர் உலகம் 45
இத்தனை திருமணங்களைச் செய்த வைத்து மகிழ்ந்த எனக்கு, இதுவரை இல்லாத அளவுக்கு இன்று அளவுக்கதிகமான சந்தோஷமும் உற்சாகமும் ஏற்படுவதற்குரிய காரணம் லேசாகப் புரிகிறது.
பணக்காரர், நடுத்தரம், ஏழை என்று எல்லா வர்க்கத்திலும் இதுவரை எண் வயதுக்கு, முப்பதுக்கு மேலாகத் திருமணங்கள் செய்து வைத்த விட்டேன்.

Page 32
46 கொற்றை பி. கிருஷ்ணானந்தன்
ஆனால் இன்றைக்குத்தான் பரம ஏழை அதாவது ஒன்றுக்கும், வழியில்லாததுகள் என்று மற்றவர்களால் கருதப்படக் கூடிய ஒரு குடும்பத்தில் பிறந்த பெண் பிள்ளைக்குப் பேசி முடிக்கச் செல்கிறேன். இந்தக் கல்யாணம் மட்டும் நிறைவேறி விட்டால், இதைவிடச் சந்தோஷம் வேறு எனக்கு இருக்க
(LDL2/JTgJ.
"ஒரு ஏழைப் பெண்ணுக்குக் கல்யாணம் செய்து வைப்பது அல்லது ஒரு அனாதைப் பிணத்தை அடக்கம் செய்ய உதவுவது கோயில் கட்டிக் கும்பாபிஷேகம் செய்வதை விடக் கோடி புண்ணியமானது'
காஞ்சிப் பெரியவர் சொன்னதை நினைத்துக் கொள்கிறேன். உண்மையாகவே ஏழை என்ற சொல் இந்தப் பிள்ளைக்குத்தான் பொருத்தமானது என்று எனது தர்மபத்தினியும் பலமுறை எனக்கு எடுத்துரைத்துள்ளாள். ஒரு புடவைக் கடையில் மாதம் ஐயாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்த்துத் தன்னையும். தனது தாயையும் கொண்டதான சிறு குடும்பத்தை ஒட்டிச் செல்லும் கார்த்திகா என்கிற இந்தப் பிள்ளை தகப்பனில்லாமலே வளர்ந்த பிள்ளை.
முக்கால் பரப்புக் காணியும், அதற்குள் அமைந்துள்ள சிறு கொட்டிலும் தான் அவர்களது உறைவிடம் சொத்த எல்லாமே.
கறுத்து, மெலிந்து, குள்ளமாக, பார்க்கக் கொஞ்சம் மனதுக்குக் கஸ்டமான உருவ அமைப்புக் கொண்ட ஒருத்தியை அந்த நேர அவசரத்திற்காக, ஊரவன் ஒருவன் மின்னாமல் முழங்காமல் வந்த கல்யாணம் செய்த கொண்டான்.
கார்த்திகா வயிற்றில் இருக்கும் போதே வேலை தேடி வவுனியாவுக்குச் சென்றவன் மீண்டும் திரும்பி வரவேயில்லை, அங்கு வேறொரு கல்யாணம் செய்த குடியும் குடித்தனமுமாக இருப்பதாகத் தான் கேள்வி.
ஊரில் உள்ள புகையிலைத் தோட்டம், மரக்கறித் தோட்டங்களில் கூலி வேலை செய்து கிடைக்கும் வருமானத்தில், உணவு உடை போன்றவற்றில் குறைவிட்டிருந்தாலும் அன்பு என்ற சொத்துக்கு ஏகபோக உரித்தாளியாக்கிக் கார்த்திகாவை வளர்த்தாள் அவளது தாய்.
தாயினது ஒன்றுவிட்ட சகோதரர்கள், மாமாக்கள், சித்திகள் என்று பலர் ஊரில் நல்ல நிலையிலிருந்தம் தங்கள் வீட்டு முற்றமே தெரியாத அளவுக்குத்தான் அவர்களது உறவு இருப்பது கண்டு சிரிப்பும் வெறுப்பும் கலந்து ஓர் உணர்வைத்தான் கார்த்திகா தினமும் அனுபவித்தாள்.
எல்லாவற்றிலும் வறுமையைக் கொடுத்த இறைவன் அவளது அழகில் மட்டும் வறுமைக்கு இடம் வைக்கவில்லை. சிப்பியில் பிறந்த முத்தான அவளில்
 

இன்னுமோர் உலகம் 47
கொட்டிக்கிடந்த அழுகைக் கண்களால் மேய்வதற்கென்றே இளைஞர் கூட்டம் அவள் பாடசாலைக்குப் போகும் போதம் வரும் போதும் வீதிகளில் காத்திருக்கும். O/L பரீட்சையுடன் படிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்த கார்த்திகா புடவைக் கடையில் வேலைக்குச் சேர்ந்ததும் அவள் போய் வருகின்ற வீதிகளிலும் அந்த இளைஞர் கூட்டம் தவம் கிடக்கின்றது என்பதும், அவளோ இவர்களைச் சட்டை செய்வதில்லை என்பதும் நானறிந்த விஷயம். அவர்கள் காதலிக்கத் தயார். சொத்தில்லாமல் கல்யாணம் செய்யத்தான் தயாரில்லை என்பது அவள் அறியாததல்ல. ஆகவே மிகக் கவனமாகவே தனது கால்களை எடுத்து வைத்தாள். இப்படிப்பட்ட நிலையில் உள்ள கார்த்திகாவுக்குத் தான் கனடா மாப்பிள்ளை ஒருவனைப் பேசி முடிக்கப் போய்க் கொண்டிருக்கிறேன். இத்தனைக்கும் நான் ஒரு கல்யாணத் தரகண் அல்ல என்பது முக்கியமான விஷயம். ஐம்பத்தைந்த வயதுக்குள் முப்பத்தைந்த வருஷங்களைப் பூர்த்தி செய்த இப்போதும் நன்றாகப் படிப்பித்தக் கொண்டு நல்ல சம்பளம் எடுத்துக் கொண்டிருக்கின்ற ஒரு வாத்திதான் அடியேன்.
இத்தனை கல்யாணங்களைச் செய்து வைத்தும் ஒரு ரூபாய்க் காசு வாங்கினேன் என்று ஒருத்தன் என் சின்ன விரல் மடக்க முடியாது. அத்தனையும் இலவசச் சேவை. அவர்களது வாழ்த்துக்கள் என்னையும், எனது குடும்பத்தையும் வாழ வைக்கும் நானும் மனைவியும் இல்லாமற் போனாலுங் கூட, எனது பெண் பிள்ளைகளுக்கும் யாரோ ஒருவன் வந்து கல்யாணம் செய்து வைப்பான். விதைத்தத வீண் போகாது என்பது எனது அசையாத நம்பிக்கை
என்னால் பேசி முடிக்கப்பட்ட கல்யாணங்களின் போது தங்களது திருப்திக்காக எனக்கும் புதவேட்டி சேர்ட் எடுத்துத் தந்த வேளைகளில், அவர்களது சந்தோஷத்திற்காக அவற்றை வாங்கி உடுத்திக் கல்யாணங்களில் நின்றிருக்கிறேன். கல்யாணத் தரகள் வேலை இன்று ஒரு பரந்துபட்ட தொழிலாகவும், சில பட்டினங்களில் நிறுவன மயப்பட்டதாகவும் மாறிக்கொண்டு வருகின்றது. யாழ்ப்பாணத்தில் தடுக்கி விழுந்தாலும், ஒரு தரகள் முன்தான் விழவேண்டும் என்ற நிலையும் வந்த கொண்டிருக்கிறது. சரியாக வந்து வாய்த்தால், ஒரு கல்யாணத்திலேயே இரண்டு இலட்சம் சம்பாதிக்கக் கூடியதாகவும் சில சமயம் அமைந்த விடுகின்றது. ஆனால், இவர்களுக்கெல்லாம் ஒன்றுக்கும் வழியில்லாத ஏழைப் பெண்களின் வீட்டு விலாசம் தெரியவே தெரியாது. இந்தத் தரகர்களுக்கு என்னைப் போன்றவர்களைப் பிடிக்காது.
"ஒரு லாபமும் இல்லாமல் மாஸ்ரர் உப்பிடி ஒடித் திரியிறாரே. இப்படிக் கூறிவயித்தெரிச்சலைக் கொட்டித் தீர்த்தம் உள்ளனர்.

Page 33
48 கொற்றை பி. கிருஷ்ணானந்தன்
இந்தக் கல்யாணமும் எனக்கு நன்றாகப் பரிச்சயமுள்ள ஒருவரின் மகனுக்குத் தான் பேசிச் செல்கிறேன். கார்த்திகாவின் தாயிடம் சாதகம் வாங்கிப் பார்த்ததில் நல்ல பொருத்தம், கார்த்திகாவின் தாயினது சந்தோஷத்தைப் பார்த்த போது, எனக்கும் தானி எவ வளவு சந்தோஷமாக இருக்கிறது. இனி ற ஞாயிற்றுக்கிழமையென்றபடியால் கார்த்திகாவும் வீட்டில் நிற்பாள். அவளுடன் நேரில் பேசி ஒரு முடிவை எடுத்த விட வேண்டியத தான். இந்தக் கல்யாணம் எனக்கும் ஒரு சாதனை நிகழ்வாகத்தான் இருக்கப் போகிறது.
இதோ பிள்ளையார் கோயிலும் வந்து விட்டது. இனி அவர்களுடைய வீடுதான்.
"அப்பனே பிள்ளையாரப்பா எல்லாவற்றையும் நல்ல மாதிரி முடித்து வையப்பா.” மனம் கார்த்திகாவுக்காக வேண்டிக் கொள்கிறது.
கிடுகு வேலி, தகரப் படலை மூன்று வருடங்களுக்கு முன் நாண் பார்த்த மாதிரியே இருக்கின்றன. "பிள்ளை கார்த்திகா” என்று அழைத்துக் கொண்டே உள்ளே போகிறேன், காலை நேரம் என்றபடியால், கார்த்திகா விளக்குமாற்றால் வீட்டு முற்றத்தைக் கூட்டிப் பெருக்கிக் கொண்டு நிற்கிறாள்.
“வாருங்கோ மாமா' என்னைக் கண்டதும் விளக்குமாற்றை அருகில் நின்ற சின்ன மாமரத்துடன் சாத்தி வைத்துவிட்டு வந்து, கதிரையை எடுத்துக் கையால் தடைத்துவிட்டு வைக்கிறாள். அந்த வீட்டில் தளபாடம் என்று சொல்லக் கூடியதே அங்கிருந்த இரண்டு கதிரைகள் தான். இக்காலத்தில் பிளாஸ்ரிக் கதிரை என்ற ஒன்று பாவனைக்கு வந்த பிறகு எந்த ஏழை வீட்டிலும் வாங்கிப் போடக் கூடியதாக இருப்பது பெரிய விஷயம் தான்.
கதிரையில் உட்காருகிறேன். கார்த்திகாவும் வந்து எதிரே உட்காருகிறாள். தாய் வந்து, “பிள்ளையோடை எல்லாத்தையும் கதையுங்கோ அண்ணை, நான் இப்ப வந்திடுறன்.” என்று கூறிக் கொண்டு அந்தப் பனை மட்டைகளால் அழகாக வரிந்த கிடுகால் கூரை மேய்ந்துள்ள சிறு குசினிக்குள் நழைகிறாள். “பிள்ளை கார்த்திகா, அம்மா இந்தக் கல்யாண விஷயமாக ஏதும் சொன்ன வவோ?’
“ஓம் மாமா.” “இது சம்பந்தமாக நான் இனி உங்கடை குடும்பத்திலை யாரோடை கதைத் த முடிவெடுக்க வேணுமெணி டு நீயும் அம்மாவும் சொன்னியளெண்டால்.
 

இன்னுமோர் உலகம் 49
கார்த்திகா நிமிர்ந்து உட்காருகிறாள், முகம் சற்று மாறுகிறது. ஏதோ ஒரு விரக்தி முகத்தில் சாயலிடுகிறது.
"அப்படி எங்களுக்காகக் கரிசனையோடை கதைக்கிறதுக்கு ஆருமில்லை. சீதனம் நகையெண்டு ஏதும் தங்களிலை பொறுப்பு வந்திடுமெண்டு ஆருமே இதிலை தலைப் போட வரமாட்டினம். நீங்கள் அம்மாவோடையும் என்னோடையும்
99
கதைச்சாப் போதம் மாமா.
"அப்படியெண்டால் சரிதான், இது கனடா மாப்பிள்ளை. பெடியன்ரை படமும் கொண்டு வந்தனான். சீதனம் சொத்தப் பத்து ஒண்டுமே அவை கேட்கேல்லை. அவைக்குத் தேவை நல்ல குணமும், இலட்சணமுமுள்ள பெண் பிள்ளைதான். அதனாலதான் உண்னை முடிவாக்க நினைச்சனான். இந்தா. பெடியன்ரை போட்டோவை ஒருக்கால் பார்.
கார்த்திகா போட்டோவைக் கையில் வாங்கவேயில்லை. நான் சொன்னவற்றைக் கேட்டு மிக்க சந்தோஷமடைவாள் என நான் எதிர்பார்த்ததிற்குப் பதிலாக, அவளது முகத்தில் முன்பு காணப்பட்ட ஆவல் ஆர்வம் எல்லாம் பட்டென்று குறைந்தது போல் தெரிந்தது. அவள் பேசத் தொடங்கினாள்.
"மாமா எங்களுக்குள்ள நெருங்கிய சொந்தக்காரர் கண்பேர் இருந்தும் அக்கறைப்படாமலிருக்க, நீங்கள் வந்து தலைப்போட்டு எண்ரை கல்யாணத்தை ஒப்பேற்றி வைக்க நினைக்கிறியள், அதை எங்கடை ஜெண்மத்திலை மறக்கமாட்டம், ஆனால். வெளிநாட்டு மாப்பிள்ளை எனக்கு வேண்டாம். அதக்காக ஊரிலை நான் யாரையாவது விரும்புறனெண்டு தயவு செய்து சந்தேகப்படாதையுங்கோ மாமா. எங்கடை குடும்ப நிலைக்கு வெளிநாட்டு மாப்பிள்ளைக்கோ, உத்தியோக மாப்பிள்ளைக்கோ நான் ஆசைப்படேல்லை. எங்களோடை ஒத்துப்போகக் கூடிய ஒரு கூலிக்காற மாப்பிள்ளையெண்டாலும் போதும்.”
கார்த்திகா உணர்ச்சி வசப்பட்டவளாகச் சொல்லிமுடித்தாள். தேடி வருகிற நல்ல வாழ்க்கையை உதறியெறிகிறாளே என்று எனக்குச் சினமாக இருந்தது. என்றாலும், அவள் உறுதியாக நிற்பதில் ஏதோ ஒரு நியாயம் அவள் பக்கம் இருக்கத்தான் வேண்டுமென எண் மனம் சொல்லியது. என்னைச் சுதாகரித்துக் கொண்டு கேட்டேன்.
'வசதிகளோடை இருக்கிற குடும்பங்களிலேயே ஒரேயொரு பெட்டையாகப் பிறந்ததுகளே, அதுவும் நல்ல நல்ல உத்தியோகங்களலை இருந்ததுகள் கூட வெளிநாட்டுக்குப் பறந்திட்டாளவை. நீ இருபத்தாறு வயது கடந்தம் ஏன் இப்படி முடிவெடுக்கிறாய் கார்த்திகா?”

Page 34
50 கொற்றை பி. கிருஷ்ணானந்தன்
கர்த்திகா அங்குமிங்கும் பார்வையைத் திருப்புகிறாள், தாய் எங்கு நிற்கிறாள் என்பதைக் கவனிக்கிறாள். தாய் நெல்லி மரத்தக்குக் கீழ் சாம்பல் ് "" || {{ങ്ങ് கழுவிக் கொண்டிருக்கிறாள். தனக்குள் திருப்திப்பட்டு கொண்டவளாப் தாய்க்குக் கேட்காதவாறு குரலைத் தாழ்த்தி மெதுவாகக் கதைக்கத் தொடங்குகிறாள். முதலில் மறுத்தவள். இப்போது காதல் கதை ஏதும் தன் விஷயமாகச் சொல்லப் போகிறாளோ? என்று யோசிக்கிறேன் நான்.
"மாமா எங்கடை ஆட்களின்ரை கல்யாண வீடுகள், சாமத்திய வீடுகளிலை என்ரை அம்மாவைப் பின்னுக்கு நிண்டு சமையல் வேலையிலை, பாத்திரங்கள் கழுவுறதிலை இரண்டு மூன்று நாட்களாக உடம்பு முறியப் பண்ணுவினமே தவிர, ஒரு வேள்வு தாக்கு ஆரத்தியெடுக்க அல்லது வீடியோ போட்டோ எடுக்கிற நேரத்திலை அம்மாவையும் கூடப்பிட்டு சேர்ந்த ஒரு படம் எடுக்கப் பண்ணியதை இதுவரை நான் அறியேல்லை. அம்மாவுக்கு வருத்தம் துன்பம் எண்டு வரேக்கை அரும் பெரிய அக்கறையாக வந்த ஹோர்லிக்ஸ் போத்தல் ஒண்டு வாங்கித் தந்ததையும் நான் காணேல்லை. என்னை ஓரளவுக்கு மதிக்கினம் தான். அதை நான் இல்லையெண்டு சொல்லேல்லை. நான் வெளிநாட்டுக்குப் போனால் அம்மா தனிச்சுப் போடுவா வருத்தத்திலை அழுந்திக் கிடந்தாலும் பாக்கிறதுக்கு ஆளில்லை.”
நான் குறுக்கிட்டேன், “நீ கனடாவுக்குப் போனால், அம்மாவையும் அங்கை கடப்பிட்டு வைச்சிருக்கலாம் தானே.”
"அது திடமில்லை மாமா, அங்கையும் அம்மாவை என்ன மாதிரி நடத்தவினம் எண்டு தெரியாது. வெளிநாட்டுக்குப் போனதுகள் சில பேரின்ர தாய் தகப்பன் இஞ்சை காசிருந்தம் எப்படிச் சீரழியுதுகளெண்டு நீங்களும் பாக்கிறியள் தானே. கணக்க உதாரணம் வேண்டாம். உடுப்பிட்டிப் பகுதியிலை ஒரு இடத்திலை போன மாசம் என்ன நடந்தது எண் டு நீங்களும் கேள்விப்பட்டிருப்பியள் தானே, அந்த மனுஷனுக்கு அவரைப் பெற்ற தாயாவத
அவள் எதைச் சொல்கிறாள் என்று யோசித்தேன். பொன்னம்பலம் என்று ஒருவர் ஆறு ஆண்பிள்ளைகளின் தந்தை, கஸ்டப்பட்டுழைத்து நிறையப் பணம் தேடியிருந்தார். பிள்ளைகள் வளர முன்னரே மனைவி இறந்த விட்டாள். பொன்னம்பலத்தின் தாய் தான் இந்த ஆறு பிள்ளைகளையும். அதாவது பேரப்பிள்ளைகளைப் பிள்ளைகள் போலவே வளர்த்தாள். ஆறு பேரும் வளர்ந்து ஒவ்வொருவராக வெளிநாடு போய்ச் சேர்ந்து விட்டார்கள். பொன்னம்பலம் நீரிழிவு நோயினால் ஒரு காலை இழந்த படுக்கையாகிவிடப் பொன்னம்பலத்தின் தாய் தான் தள்ளாத வயதிலும் தான் பெற்ற பிள்ளையைப் பராமரித்து வந்தாள்.
 

இன்னுமோர் உலகம் 51
பொன்னம்பலம் இறந்தவிட, ஆறில் ஒரு பிள்ளை கூட வரவில்லை. வெளிநாட்டிலிருந்து காசு மட்டும் தான் வந்தது. இறுதியாகத் தன் பிள்ளைக்குத் தாயே கொள்ளி வைத்த இறுதிக் கடன்களை நிறைவேற்றிய நிகழ்வைத்தான் கார்த்திகா எனக்கு ஞாபகமூட்டுகிறாள்.
நான் கதிரையை விட்டு எழும்பி நின்றேன். "உனது முடிவிலை மாற்றமில்லை தானே கார்த்திகா.”
G.
எண் னை மணி னரிச் சுக் கொளர் ஞாவ் கோ மாமா, கனடா
மாப்பிள்ளையெண்டாலும் ஊரிலை எங்களோடை வந்திருக்கிறதெண்டால் நான்
சம்மதம்.”
அவளது குரலில் ஓர் உறுதி தெரிய, முகத்தில் ஒரு தேஜஎல்
வெளிப்படுகிறது.
நான் புறப்படுகிறேன். இவளது எண்ணத்திற்கேற்ப ஒரு மாப்பிள்ளையை
இனி நான் வலை போட்டுத் தேட வேண்டும் என்ற எண்ணத்தடன்,
('மல்லிகை - 2008)
SMS

Page 35
52 கொற்றை பி. கிருஷ்ணானந்தன்
'அம்மா சாப்பிட்டிட்டுப் படுங்கோ’
G. G. 9%
'9sbros...................... சொல்லுறதைக் கேளுங்கோ. படுங்கோ'
GG 9%
சாப்பிட்டிட்டுப்
 
 

இன்னுமோர் உலகம் 53
"அக்கா, நீங்கதான் வந்த எழுப்புங்கோ, என்னாலை இனி ஏலாது. பிடிவாதத்திற்கும் ஒரு அளவு இருக்க வேணும்”
‘நேற்று தொடக்கம் அவாவைக் கேட்டுக் கேட்டு களைச்சுத்தானே உன்னை விட்டனான். எண்னதான் இருந்தாலும் இந்த வயசிலை இப்பிடிப் பிடிவாதங் கூடாது.”
"பொறு பொறு தம்பியிட்டை ஆள் அனுப்பியிருக்கிறம் தானே. அவர் தானே அம்மாவின்ரை செல்லப்பிள்ளை. வந்து இரண்டு செல்லங்களும் சேர்ந்து சாப்பிடட்டும்.”
பவானியும் தங்கை தயானியும் தீர்மானித்து விட்டார்கள். தம்பி வரதன் வந்து தாயுடன் மல்லுக்கட்டி ஏதோ ஒரு முடிவுக்கு வரட்டுமென்று.
நேற்றையிலிருந்து தாய் தேவியம்மா பச்சைத் தண்ணீர்கூட வாயில் விடவில்லை. இதுதான் அவர்களுடைய பிரச்சனை. தேவியம்மா தன் கணவனை இழந்தபின் கொஞ்சம் பிடிவாத குணம் கூடத்தான். பேரப்பிள்ளைகள் வந்து "அம்மம்மா’ என்று சொல்லி கழுத்தைப் பிடித்து முத்தமிட்டு தேவியம்மாவின் கோபத்தையோ பிடிவாதத்தையோ மாற்றிவிடுவார்கள். புருசனின் மறைவுக்குப்பின் பெற்ற பிள்ளைகளென்றாலும் கூட, தனது மகனுடையதோ அல்லது பெண்பிள்ளைகளுடையதோ உழைப்பில் தண்டச்சோறு திண்னக்கூடாது என்பது அவவுடைய வைராக்கியம். அதனால் பிள்ளைகளுக்கு கொடுத்தது போக மிகுதியாக இருந்த தனது நகைகளை விற்றுப் பெற்ற தொகையையும், கையிருப்பில் இருந்த பணத்தையும் கொண்டு போய் வங்கியில் வைப்புச் செய்து அதிலிருந்து வருகிற மாதவட்டியை இரண்டு பெண்பிள்ளைகளிடமும் கொடுத்தத்தான் அவர்களுடன் சாப்பிடுகிறா. நாளைக்கு பிள்ளைகளோ மருமக்களோ தன்னைச் சினந்த விடக்கூடாத எண்பதில் அவ்வளவு உறுதி. தாயின் இந்தச் செயல் பிள்ளைகளுக்கு மனவருத்தத்தைத் தந்தாலும் ஏதோ அப்படியாவது தங்களுடன் சேர்ந்திருக்கட்டும் என்று விட்டுவிட்டார்கள்.
ஆனால் இப்போது பிரச்சினை வேறு. பெண் குஞ்சுகளிரண்டும் வளவுக்குள் குழாய்கிணறு அமைக்க வெளிக்கிட்டமைதான் பூதாகரமாகி தேவியம்மாவின் உண்ணாவிரதத்தில் வந்த நிற்கிறது.
குழாய்க்கிணறு தோண்டுவதென்பது ஏதும் செய்யக்கூடாத ஒரு குற்றமல்ல. வீட்டுக்கு வீடு ஒவ்வொருவரும் தங்கள் தேவைகருதி வளவுக்குள் அமைத்து வருகிற ஒரு விஷயம்தான். ஆனால் தேவியம்மாவைப் பொறுத்தவரையில் யார் எப்படியும் எண்ணவும் செய்து விட்டுப் போகட்டும். தனது பெண் பிள்ளைகள் இருவரும் தங்கள் வளவுக்குள் குழாய்க்கிணறு அமைக்கக்கூடாது என்பதுதான் பிரச்சினையே.

Page 36
56 கொற்றை பி. கிருஷ்ணானந்தன்
"அது உண்மைதானே அக்கா, ஐயா இருக்கிற காலந்தொட்டு போனாப்பிறகும் அடிக்கடி அம்மா சொல்லுறவதானே'
'91 - ................ அதுக்காக புதிய புதிய வசதியள் வரேக்கை பழசைக் கட்டிப் பிடிச்சுக்கொண்டு அழஏலுமே. நாங்களும் வேலைக்குப் போகிறனாங்கள். வளவுக்கேயே எல்லாம் இருந்திட்டால் எவ்வளவு வசதி நேரமும் மிச்சம். இது பவானி
"ஐயா இருக்கேக்கை கிணற்றுக்குத் துலாப் போடுறதுக்கு உயரப்பனை வாங்க எவ்வளவு இடங்கள் அலையிறவர். பிறகு கப்பியலுக்கு மாத்தினாப்பிறகு கப்பியல் அடிக்கடி பழுதாகும். வாளியள் மோதிப் பழுதாகும். கயிறு அடிக்கடி அறுந்து போகும். ஐயா இருக்கேக்கை அவர் எல்லாத்தையும் கவனிச்சுக் கொள்ளுவார். எங்களுக்கு உதெல்லாம் முடியுமே.” இது தயானி
வரதன் குறுக்கிட்டான். “அதெல்லாம் உண்மைதான் அக்கா, ஆனால் ஐயா பொது நோக்கோடை இந்தக் கிணற்றை வெட்டினவர். ஊரிலை, அயலிலை கன வெட்டுக் கிணறுகள் கைவிடப்பட்டு பாழாங்கிணறாகி, பிறகு குப்பை போட்டு நிரப்பி மூடப்படுகிறதையும் அவர் கண்டவர். வேதனைப் படுகிறவர். அதைப்பார்த்து அம்மா வேதனைப்படுகிறவா, தங்களின்ரை உழைப்பு, தேட்டம், தங்களிண்ரை கண்ணுக்கு முன்னாலேயே அழிஞ்சு போறதை அவையாலை ஜீரணிக்கமுடியாது.” "அப்ப. ஒண்டு செய்வம் அப்புண்ரை மாட்டுவண்டில் பழுதாகி வீட்டுக் கோடியுக்கை கிடக்கு. பழசை விடக்கூடாது எண்டதுக்காக நாங்கள் எங்கையெண்டாலும் போறதுக்கு அதைத் திருத்திப் பாவிப்பமோ”
தயானி சாதவாக கிண்டலடிப்பதுபோல வரதனுக்குட்பட்டது. அவன் சற்று சினங்கொண்டவன் போல் தயானியைப் பார்த்துக் கூறினான்.
"அதையும் இதையும் ஒப்பிட்டுக் கதைக்காதையக்கா, அந்தக் காலத்தில் ஐயா இந்தக் கிணற்றை வெட்டேக்கைதான் பொன்னுத்துரை மாமா அந்தப் பெரிய வீட்டைக் கட்டினவர். அதே காலத்திலை பெரியம்மா பக்கத்திலுள்ள பத்துப்பரப்புக் காணியை வாங்கி பிள்ளைகளின்ரை பேரிலை எழுதினாவ, இதுகளைவிட ஐயா கிணறுவெட்டச் செலவு கூட முடிஞ்சுதாம். ஆனால் ஐயா பொது நலத்தைத்தான் சிந்திச்சவர்.”
“அதுக்காக நாங்கள் இப்ப கிடைக்கிற வசதியளைப் பாவிக்கக்கூடாது
எண்டு சொல்லுறியோ’ பவானி கேட்டாள்.
"நான் அப்படிச் சொல்லேல்லையக்கா, இண்டைக்கு நாட்டிலை நடக்கிற
சண்டையிலை எத்தனை உயிர்கள் எவ்வளவு பெறுமதியான உடைமையள்
அழிஞ்சு போகுத. ஆனால் நாங்களாகவே எங்களைப் பெத்ததுகளின்ரை
கண்ணுக்கு முன்னாலையே அவையள் உயிராய் நேசிச்சதைச் சீரழிஞ்சு

இன்னுமோர் உலகம் 57
போகவிடக்கூடாது. அம்மா தன்ரை கூடுதலான நேரத்தை அந்தக் கிணற்றடி வளவுக்குள்ளை செலவழிக்கிறதைக் கவனிக்கிறனிங்கள் தானேயக்கா. அவ அந்தக் கிணற்று வடிவத்திலை ஐயாவைத்தான் காணுறா. அம்மா
நீங்கள் இரண்டுபேரும் உங்கடை வீட்டு வளவுக்கை குழாய்க்கிணறு தோண்டினாலும் தண்ணீர்தொட்டி, பாத்றாம் எல்லாம் கட்டப்போறியள்தானே.” "ஒமோம். அதில்லாமலே’ தயானி பதிலையே கேள்வியாக்கினாள்.
"அப்ப ஒண்டு செய்வம், பெரிய கிணற்றிலை மோட்டரைப் பூட்டி உங்கடை தண்ணித் தொட்டிக்கு தண்ணீர் வரப்பண்ணுவம். உங்கடை தேவையும் நிறைவேறும். கிணறும் பாவனையிலிருக்கும். நான் இதைப்பற்றி இரண்டு அத்தான்மாரோடையும் கதைக்கிறன்.”
“உம் சரியடா. உதுவும் நல்ல ஐடியாதான். இனியாவது அம்மாவைச் சாப்பிடப்பண்ணு போ. போடா. நாங்களுமெல்லோ இந்த மனிசியாலை பட்டினி கிடக்கிறம்” பவானி உற்சாகத்தோடு கூறினாள்.
வரதன் எழுந்து தாயிடம் போனாள். "அம்மா எழும்புங்கோ அக்காக்கள் குழாய்க்கிணறு தோண்டுற எண்ணத்தைத் கைவிட்டிட்டினம். எழும்பிச் சாப்பிடுங்கோ.
"அம்மா எழும்பியிருங்கோ. உங்களாலை எல்லாருமெல்லோ சாப்பிடாமல் இருக்கினம்.”
தேவியம்மா எழும்பி உட்கார முயலும் போது வரதன் தானும் பக்கத்தில் உட்கார்ந்து உதவி செய்தான். தயானி சாப்பாடும் தண்ணீரும் கொண்டு வந்து வைத்தாள். வரதன் இன்னொரு கோப்பைக்குள் தாயின் கையைத் தண்ணீர் விட்டுக் கழுவுகிறான். தானே சோற்றைக்குழைத்து உருண்டையாய்த் திரட்டி தாயின் கைக்குள் வைக்கிறான். தேவியம்மா அதை வாய்க்குக்கிட்ட கொண்டு போவதற்கிடையில் கண்களிலிருந்த இரண்டு சொட்டுக் கண்ணீர் அந்தச் சோற்று உருண்டையின்மேல் விழுந்து கலக்கிறது. அக்காட்சி வரதனின் கண்களையும் ஈரமாக்குகிறது.
('ஜீவநதி 2007)

Page 37
58 கொற்றை பி. கிருஷ்ணானந்தன்
என்னால் நம்ப முடியவில்லை. இவனா இப்படி? ஊரறிய நல்லவன் ஆனால் முரடண் என்று பேரெடுத்தவன் எஃகைவிட இறுகிய இதயத்திற்குச் சொந்தக்காரன். நியாயம் கேட்டு நிற்பதில் ஒருவகையான சண்டியன். பிழையென்று கண்டால் யார் எவர் என்று பார்க்காமலே தாக்கியெறிந்து நடப்பவன். நெருங்கிய உறவுகளின் உயிர்களுக்கே திடீர் இழப்புக்கள் ஏற்பட்ட சமயங்களில் கூட ஒடிந்தபோய் உட்காராமல் காசு செலவழிப்பது முதற்கொண்டு ஒடியாடி அலுவல் பார்ப்பவன்.
 

இன்னுமோர் உலகம் 59
இவனா இப்படி? இவனது கண்களிலிருந்து தானா கண்ணிர் வடிந்து கொண்டிருந்தது? எனக்குத் தெரியும் இந்த மோகன் எந்த உடல் வலியையும் தாங்கக் கூடியவன் என்று.
எங்களுக்கு ஆண் பிள்ளைகள் இல்லையென்றபடியால் எனது ஒன்றுவிட்ட அண்ணளின் பிள்ளைகளான இவனும் தம்பி வண்ணனுமே எங்களுக்கு அந்தக்குறை தெரியாதபடி கூப்பிட்ட குரலுக்கு வந்து நிற்பவர்கள். - ஒருநாள் சற்று எட்டத்திலுள்ள எங்கள் வடலிக்காணிக்கு நாங்கள் வேலியடைத்துக் கொண்டிருந்தோம். பனைமட்டையிலிருந்த நார்சீவிக் கொண்டிருந்த மோகனின் கையைக் கூரிய கத்தி பதம் பார்த்துவிட்டது. வெட்டுக்காயம் 'ஆ'வென்று வாயைப் பிளந்து நின்றது. இரத்தம் ஆறாக ஓடிக்கொண்டிருந்தது. அதைப்பார்த்ததும் எனக்கு மயக்கம் வரும் போலிருந்தது ஆனால் அவன் சிரித்துக் கொண்டு நின்றான்.
“அது சின்னக்காயம்தான் சித்தப்பா. நீங்கள் பயப்படாதேயுங்கோ’ என்றான். இவன் என்னடா மனிசனா இராட்சஷனா என்று யோசித்தேன், ஈரச்சீலையால் இறுக்கிக்கட்டி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றேன். ஏழு இழை போட்டார்கள். இழைபோடும் போது அவனது முகத்தில் வலியை உணருகிற பாவம் தெரிகிறதா என்று உற்றுப்பார்த்தபடி அவனது கையைத் தாக்கிப்பிடித்து டொக்டருக்கு ஒத்தாசை செய்து கொண்டிருந்தேன். அவன் என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தான்.
மூன்றாம் நாள் வைத்தியசாலையிலிருந்து விடுதலையாகி வீட்டிற்று வந்து விட்டான். மாலையில் அவனைப் பார்க்க வீட்டிற்குப் போன போது வாழைத்தோட்டத்தில் தண்ணீர் மாறிக்கொண்டிருந்தான். மருந்து கட்டையும் மீறி இரத்தம் கசிந்திருந்தது.
“டேய் மடையா பச்சைப்புண்ணோடை என்ன வேலை செய்யிறாய்.” ஏசிய எண்னைப் பார்த்துச் சிரித்தான். வாழைகள் வாடிப்போய் நிற்பதைக் காரணம் சொன்னான். வண்ணனைக் கொண்டு தண்ணி மாறியிருக்கலாமே என்று கடிந்து கொண்டேன். கூடவே மோகனின் மூத்தவனை வண்ணனிடம் அனுப்பிக் கூப்பிட்டு வாழைக்குத் தண்ணீர் விடுகின்ற வேலையை ஒப்படைத்தேன். ஒரு கிழமைக்கு சும்மா இரு என்று வற்புறுத்திச் சொல்லிவிட்டு வந்தேன். இப்படியானவன்தானா இன்று வலிதாங்கமுடியாமல் கண்ணிர் விட்டான்?
மோகனும் வண்ணனும் இன்று ஊரிலுள்ள அம்மன் கோவிலிலிருந்து செல்வச்சந்நிதிக்குப் பறவைக்காவடி எடுக்கின்ற நாள். அம்மன் கோவிலிலிருந்த காவடி புறப்படமுன்னரே நான் வீட்டிற்கு வந்துவிட்டேன்.

Page 38
60 - கொற்றை பி. கிருஷ்ணானந்தன்
எனது அலுவலகத்திற்கு இன்று தலைமையலுவலக அதிகாரிகள் வருகைதர இருந்தமையால் காவடி இறக்கி முடியும் வரை எண் னால் கூடவே செல்லமுடியவில்லை. அத்தோடு ஐந்து கிலோ மீற்றர் தரம் இவர்கள் இரண்டுபேரும் பறவையாகத் தாங்கிக்கொண்டு செல்வதைத் தொடர்ந்த பார்த்துக்கொண்டு செல்வது எனக்குக் கஸ்டமாகத்தான் இருக்கும் என்பதாலும் அதைத் தவிர்த்துக் கொண்டேன். திருவிழாக்காலங்களில் வழி தெருக்களில் பறவைக்காவடியென எடுத்து யாரோ முகம் தெரியாதவர்கள் அந்தரத்தில் தொங்கிக்கொண்டு போகும் போது என்னால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. இவைகள் இக்காலத்தில் அவசியந்தானா? என்று எனக்குள் எழும் கேள்வியை வேறு சிலரிடம் கேட்டு வைப்பதன் மூலம் எனது தர்மபத்தினியிடமிருந்த வக்கணம் வாங்கிய சந்தர்ப்பங்களுமுண்டு. இப்படிக் கதைப்பதன்மூலம் தெய்வசாபம் ஏற்பட்டு விடும் எண்பது அவளது அச்சம்.
அப்படியிருக்க நான் எப்படி இவங்கள் இரண்டு பேரையும் இந்த நிலையில் தொடர்ந்த பார்த்தபடி கூடவே போய்க் கொண்டிருப்பத? அதனாலும் அதைத் தவிர்த்தக் கொண்டேன்.
என்றாலும் செல்வச்சந்நிதியில் காவடிகளை இறக்கி பூசைகள் முடித்து இவர்கள் கொடுக்கும் அன்னதான நிகழ்வு முடிவதற்கிடையிலாவது இவர்களுடன் மீண்டும் இணைந்து விடுவேன் என்ற நம்பிக்கை அலுவலகப் பணியினால் நிறைவேறாமல் போய்விட்டது. இப்போதுதான் தலைமையலுவலக அதிகாரிகள் சென்றார்கள். இனிச் செல்வச் சந்நிதிக்குப் போவதில் பயனில்லை. அலுவலகம் விட்டதும் ஒரேயடியாக மோகன் வீட்டிற்கும் வண்ணன் வீட்டிற்கும் போக வேண்டியதான்.
இவங்கள் இரண்டு பேரும் பறவைக்காவடி எடுக்க நேர்ந்துவிட்ட சந்தர்ப்பத்தை எண்ணிப் பார்க்கின்றேன்.
கடும் உழைப்பாளியான மோகன் ஒரு தொழிலோடு மினக்கெட்டவனல்ல. சும்மா கிடந்த வெறுங்காணியைத் திருத்தி முருங்கைத்தடிகளைநாட்டு, அதன் மூலம் வருடாவருடம் கைநிறையக்காசு சம்பாதித்துக் கொண்டிருப்பவன். வாழைத்தோட்டத்தடன் பால் மாடுகள் வளர்ப்பது ஈறாக பலதம் பத்தமாகப் பணம் தேடினாலும் அவனது கையில் மிச்சப்பாடு என்று பெரிதாக ஏதுமில்லை. இத்தனைக்கும் புகைத்தல், மதுபானம் என்று எந்தப்பழக்கமும் இல்லை.
தன்னொடு பழுகுகிறவர்களுக்குத் தேவைப்படுகின்றபோது உடலுதவி மட்டுமல்லிாமல் பணஉதவியும் சிறியளவிலாவது செய்வதில் சந்தோஷம் காண்பவன்தான் மோகன். கையில் எவ்வளவு கிடைத்தாலும் அடுத்த நாள் வெறுங்கையோடு நிற்பவன். -

இன்னுமோர் உலகம் 61
தமையனுடைய இந்தப் போக்கில் தம்பிக்காரணி வண்ணனும், போவதைப்பார்த்த தாயும் தகப்பனும் எண்னிடம்தான் முறையிடுவார்கள்.
“சித்தப்பா நீங்களாவது இவங்களுக்குப் புத்தி சொல்லுறதில்லையே’ என்று அவர்கள் கேட்டால் ‘புத்தி சொல்லிக் களைச்சு இப்ப சொல்லுறதைக் கைவிட்டிட்டன” என்பதுதான் எனது பதிலாக இருக்கும்.
எங்களது வீட்டிலிருந்த ஐந்து நிமிட நடைதாரத்திலுள்ள இவர்களது வீடுகளெல்லாம் அண்ணன் அக்கா தம்பி என்ற வகையில் அக்கம்பக்கங்களிலேயே இருந்தன. இவங்கள் இரண்டுபேரும் நேரத்திற்கே காதலித்தக் கல்யாணம் செய்தபடியால், நான் பெற்றோருடன் சேர்த்த வைத்ததின் பேரில் தகப்பனே தனது காணிகளைக் கொடுத்து தனது பெண்பிள்ளைகளுக்குப் பக்கத்திலேயே இருத்தினார்.
ஒவ்வொருவரும் மூன்று நான்கு பிள்ளைகளைப் பெற்று தனித்தனியான குடும்பங்களாக இருந்தாலும் ஏதோ ஒரு வகையான பாசக்கயிற்றால் பிணைக்கப்பட்டிருந்தார்கள்.
இவர்களுக்குள் என்ன விதமான சிறு பிரச்சனைகள் தேவைகள் ஏற்பட்டாலும் “சித்தப்பாவுக்குச் சொல்லிப் போட்டு வா’ என்று எனக்குத்தான் தகவல் வரும்.
மோகன், வண்ணன் சகோதரிகள் மட்டுமல்லாமல் அவர்களது பிள்ளைகளும் என்னையும் மனைவியையும் சித்தப்பா சித்தி என்றே அழைத்தார்கள். அதன்பின் அந்த அயலிலுள்ள மூன்று தலைமுறையினருக்கும் நானும் என் மனைவியையும், சித்தப்பாவும் சித்தியும் தான்.
இப்படியிருக்க ஐந்தாறு மாதங்களுக்கு முன்னர் ஒரு நாள் மோகன் தனது தோட்டத்து வாழைக்குலைகளை மோட்டார் சைக்கிளில் கட்டிக்கொண்டு போய் நெல்லியடிச் சந்தை வியாபாரிகளிடம் கொடுத்து விட்டு வரும் போது வேகமாக வந்த ஹை-ஏஸ் வானால் மோதித் தாக்கி வீசப்பட்டான். தலைக்கவசம் அணியாதபடியால் தலையில் பலத்த அடி பிடரியில் இரத்தக்கசிவுடன் மயங்கிய நிலையில் மந்திகை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து அம்புலன்ஸ் மூலம் பெரியாஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டான்.
மூன்று நாட்களாக சுயநினைவற்ற நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப் பட்டானி , டாக்டர் களர் நம்பிக் கையினர் மையை வெளிப்படுத்திவிட்டார்கள். உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள் என்று எல்லோரும் ஆஸ்பத்திரிக்குப் படையெடுத்துக் கொண்டிருந்தார்கள். எல்லோர் முகத்திலும் பயமும், சோகமும், நானும் எண் மனைவி பிள்ளைகளும் தினமும் போய்ப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

Page 39
62 கொற்றை பி. கிருஷ்ணானந்தன்
நான் உள்ளே போய் மோகனைப் பார்த்துவிட்டு வெளியில் வரும்போதெல்லாம் மோகனின் மனைவி, பிள்ளைகள், வண்ணன் யாவரும் என்னைத்தான் சுற்றி வளைப்பார்கள்.
'சித்தப்பா. என்ன மாதிரி.”
தளதளக்கும் குரல்களையும் பயத்தில் வெருண்டு போய்க் கிடக்கும் முகங்களையும் தரிசிக்க எனக்குச் சக்தியில்லாமல்தானிருக்கும். வைத்திய நிபுணர்களின் அபிப்பிராயத்தை விட எனது பதிலையே அவர்கள் முழுமையாக நம்பத் தயாராக இருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன்.
"ஒண்டுக்கும் பயப்படத்தேவையில்லை. அவனிலை நல்ல மாற்றம் தெரியுது. சும்மா வீணாக நீங்கள் பட்டினி கிடந்த சாகவேண்டாம். கண்ரீனுக்குப் போய் ஏதும் சாப்பிட்டிட்டு வந்த நில்லுங்கோ.”
ஆனால் அவர்கள் அசைவதாக இல்லை. மூன்று நாட்களும் தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு முன்னால் நிற்பதம், தாண்களோடு சாய்ந்தபடியே இருப்பதும், பாதுகாவலர்கள் வந்து தரத்தும்போது வெளியில் போய் நிற்பதமாய் அங்கேயே பொழுது போனது, இரவில் மட்டும் ஏதும் பணிஸ், தேநீர் என தங்கள் உயிரைக் காத்தார்கள். வண்ணன் அதவுமில்லை.
நான்காம் நாள் மோகனின் உண்மையிலேயே நல்ல மாற்றம் தெரிந்தது. வார்ட்டுக்கு மாற்றம் செய்தார்கள். அதன் பின்னர் தான் மோகனின் உயிருக்கு உத்தரவாதமளிக்கப்பட்டது. எல்லோருக்கும் உயிர் வந்தது.
வார்ட்டிற்கு மாற்றம் செய்த நாள்முதல் தமையனோடு வார்ட்டிலேயே நின்றான் வண்ணன். வேறு ஆட்கள் மாறி நிற்க முயற்சித்தும் அவன் சம்மதிக்கவில்லை. எட்டாம் நாள் மோகனை வீட்டிற்கு விட்டார்கள்.
ஒருவாறாக எல்லாம் சாதாரண நிலைமைக்கு வந்த அவரவர் தங்கள் காரியங்களை பார்த்தக் கொண்டிருந்தார்கள்.
ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை என் விடுமுறை நாளில் வண்ணன் வந்தான். “சித்தப்பா. நான் சன்னதிக்குப் பறவைக்காவடி எடுக்க போறன்.” தினசரிப்பத்திரிகையில் மூழ்கியிருந்த நான் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தேன். "உனக்கென்ன விசரே. உனக்கு என்ன நடந்த போச்சுத.? எரிச்சலோடு கேட்டேன்.
"அண்ணர் ஆஸ்பத்திரியிலே கிடக்கேக்கை நான் நேர்த்தி வைச்சனான்
“டேய் அதக் கேனர் உப்பிடி நேர்த்தி வைச் சனி, உணர்ரை பறவைக்காவடியாலை ஒருதருக்கும் ஒரு பிரயோசனம் ஏற்படப்போறதில்லை.
 

இன்னுமோர் உலகம் 63
சரி பரவாயில்லை. கோயிலிலை போய் சும்மா சாதாரண காவடி எடு, ஏழையஞக்கு நல்லமாதிரி அன்னதானம் குடு.” அது போதும்.
“இல்லைச் சித்தப்பா.நேர்த்தி வைச்சிட்டு அதை நிறைவேற்றாமல் விட்டு, பிறகும் அண்ணருக்கு ஏதும் நடந்திட்டால்..?
“டேய் வண்ணன்! அப்பிடியெல்லாம் கடவுள் தண்டிப்பாரென்றால் அவர் கடவுளில்லையடா கலியுகத்திலை கடுந்தவமெல்லாம் தேவையில்லையெண்டு பெரிய பெரிய மகான்கள் சொல்லியிருக்கினம். ஒரு நல்ல மனிசனாக வாழ்ந்தாலே போதும்.”
வண்ணன் எண்னை மறுத்துக் கதைக்கத் தயங்கினாலும் சம்மதிக்கிறதாக இல்லை. அந்தநேரம் பார்த்து மோகனும் வந்த விட்டான். எங்களுக்கிடையேயான உரையாடலைப் புரிந்து கொண்டான்.
“சித்தப்பா நானும் உங்களுக்குச் சொல்லவேணுமெண்டு நினைச்சும் மறந்து போனன். நான் சன்னதிக்கு வாற திருவிழாவுக்கு பறவைக் காவடி எடுக்கப் போறன். ஆனால் உவன் எடுக்க வேண்டாம். நான் எடுத்தால் உவன் எடுக்கத்தேவையில்லைத்தானே’
“உங்களுக்கு என்ரா இப்பிடிப் புத்தி போகுது. ஊரிலை எங்கடை திருவிழா, பூசையளுக்கே நீங்கள் இரண்டு பேரும் வாறதில்லை. வீதக்காசைக் குடுத்திட்டு உழைப்புக்குப் போய் விடுவியள். ஒரு நாளும் ஒரு விரதமும் பிடிச்சதையும் நானறியேல்லை. இப்ப மட்டும் ஏன்ரா இப்பிடி நிற்கிறியள்.
“சித்தப்பா. நானாக விரும்பி இதைச் செய்யேல்லை. நான் அக்சிடேன்ற்பட்டுக் கிடக்கேக்கை அம்மாவும் என்ரை மனிசியும், நான் உயிர் தப்பவேணும். தப்பினால் சன்னதிக்குப் பறவைக்காவடி எடுக்க நேர்த்தி வைச்சவையாம். அதுகளின்ரை நேர்த்தியை நிறைவேற்றி வைக்காவிட்டால் அதுகள் வாழ்நாள் முழுவதும் பயந்து கொண்டுதானே இருக்குங்கள் அதை முடிச்சு வைச்சிட்டால் பிரச்சினையில்லை சித்தப்பா’
நான் சிரித்தேன். “அவையள் உன்னிலை பாசத்திலை நேர்த்தி வைக்கிறதெண்டால் தங்களை வருத்தித் தாங்கள் செய்யிறதாகவல்லோ ஏதும் நேர்த்தி வைக்கவேணும். நீயே செய்யிறதாகவே நேர்த்தி வைக்கிறது? இபபடியெண்டால் எல்லோரும் ஒசியிலை லேசாக நேர்த்தி வைச்சிட்டு இருக்கலாம்”
எனக்கு முன்பொரு நாளைய ஞாபகம், மனத்திரையில் காட்சிக்கு வந்தது. எனது மனைவி முடக்குவாதத்தால் மோசமாக முடங்கிப் போயிருந்த நாட்களில் எனது ஒன்றுவிட்ட சகோதரி ஜெகதாம்பிகையக்கா வந்தா.

Page 40
64 கொற்றை பி. கிருஷ்ணானந்தன்
தம்பி. மச்சாளுக்கு வருத்தம் சுகமாகினால் நீ எங்கடை பிள்ளையாரிலிருந்த சன்னதிக்கு முள்ளு மிதியடியிலை காவடி எடுப்பாய் எண்டு நேர்ந்திருக்கிறன், சுகம் வந்தால் நிறைவேற்றிப்போடு.”
எனக்குக் கோபம் வந்து விட்டது. "நீ நேர்த்தி வைச்சால் நீதான் நிறைவேற்ற வேணும். என்னைக் கேளாதை, கடவுளிட்டை பேரம் பேசிறதை நான் விரும்புறேல்லை.”
நான் இப்படிச் சொல்வேனென்று அவ சற்றும் எதிர்பார்க்கவில்லை. முகம் கறுத்துவிட்டது.
“சரியடா நான் அதை நிறைவேற்றுவண் நீ பேசாமல் இரு” வெடுக்கெண்டு சொல்லி விட்டு எண் மனைவி படுத்திருக்கும் அறைக்குள் போய்விட்டா ஜெகதாம்பிகையக்கா,
நான் அப்படிக் கதைத்திருக்கக்கூடாது என்று எண் பிள்ளைகள் என்னைக் கண்டித்தார்கள். எனக்குள் அத பிழையாகத்தாண்பட்டது.
பின்பு என் மனைவியின் வருத்தமும் மாறவில்லை. ஜெகதாம்பிகையக்காவின் நேர்த்தியும் நிறைவேறவில்லை. இப்போது இவங்களின்ரை நேர்த்தி இப்படி,
இருவரும் பறவைக்காவடி எடுப்பது என்றே உறுதியாக நிற்கையில் எல்லோரும் அதற்கு முழுமையான ஆதரவு வழங்க நான் மட்டும் மறுத்துக் கதைத்துக் கொண்டிருக்க வேண்டாம் என்று மனைவி, பிள்ளைகளும் அபிப்பிராயப்பட்டார்கள்.
நாளும் வந்தது. இன்று செல்வச்சந்நிதியானின் பத்தாம் திருவிழா. ஊரில் அப்புக்குட்டிச் சாமியாரின் அம்மன் கோவிலில் அதிகாலை தொட்டு ஒலிபெருக்கியிலிருந்து பக்திப்பாடல்கள் காற்றில் கலந்து வந்தன.
நானும் குளித்த கோவிலுக்கேற்றபடி உடுத்து வெளிக்கிட்டுக் கோவிலுக்குப் புறப்பட்டேன்.
கோவிலடியில் கொஞ்சம் கொஞ்சமாக உறவினர்கள் வேண்டியவர்கள் என்று பலரும் வந்த சேர்ந்த கொண்டிருந்தார்கள். பறவைக்காவடிக்குரிய பனைமரத்தாலான இரண்டு தலாக்கள் பிணைத்துக் காட்டப்பட்டவாறு டிராக்டர் தயாராக நின்றது. வாழைமரம் கட்டி, பூமாலைகளால் அலங்கரித்திருந்தார்கள். ஒலிபெருக்கியும் "முருகனைக்கும்பிட்டு முறையிட்ட பேருக்கு’ முதலான டி.எம் எஸ்ஸின் பழைய பக்திப்பாடல்களைத் தொடர்ந்து தந்த பக்திப்பரவசத்தை ஊட்டிக் கொண்டிருந்தது.
மோகனையும் வண்ணனையும் இப்படிப் பக்தி பூர்வமான கோலத்தில் நான் ஒரு நாளும் பார்த்ததில்லை.
 

இன்னுமோர் உலகம் 65
பறவைக்காவடிக்கு “முள்” என்று சொல்லப்படுகின்ற கொழுக்கி ஊசிகளால் உடலில் துளைத்து கயிற்றிலே தாக்கி துலாக்களில் பிணைத்துக்கட்டுவது முதலான சகலவற்றையும் ஒப்பேற்றிக் கொடுப்பவர்கள் வந்த சேராததால் தாமதமாகிக்கொண்டிருந்தது. அவர்கள் அதில் தேர்ச்சி பெற்றவர்களாய். அக்கைங்கரியத்தை ஒரு சீசன் தொழிலாகவே செய்து வந்தார்கள்.
எனக்கும் அலுவலகத்திற்கு செல்லவேண்டிய நேரம் கடந்துவிட்டபடியால் மனம் ஒரு நிலையில் இல்லாமல் பதட்டமாக இருந்தது.
ஒருவாறாக அவர்களும் வந்துவிட்டார்கள். பூசை தொடங்கிவிட்டது. முதலில் மோகனை வடக்கு வீதிக்கு கூட்டிச் சென்றார்கள். கொழுக்கி போன்ற பெரிய ஊசிகளை எடுத்தார்கள். மோகனை குப்புறக்கிடத்தினார்கள். கோவில் மணி தொடர்ச்சியாக அடிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. கூடிநின்ற எல்லோரும் 'அரோகரா அரோகரா’ என்று ஒருமித்து சத்தமாகக் குரல் எழுப்பி உணர்ச்சியூட்டிக் கொண்டிருந்தார்கள்.
முதலில் முதுகில் தோள்ப்பட்டைக்குக் கீழ் இரண்டு பக்கமும், அதன்பின் நாரியில் இரண்டு பக்கமுமாக, ஒவ்வொரு முறையும் கொழுக்கியால் குத்தி இழுக்கும் போது மோகனின் முகத்தைக் கூர்ந்து அவதானித்தேன். வலிக்கும்போது பல்லை இறுக்கிக்கடித்த சாதாரணமாகவே தாங்கிக் கொள்கிறான் என்பது தெரிகிறது. அவனுக்கெல்லாம் இது பெரிய விஷயமல்ல.
என்ன ஆச்சரியம், அவனது கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வடிந்து கொண்டிருந்தது. என் கண்கள் நம்ப மறுக்கின்றன. இவனா அழுகிறான்? சுற்றி நின்றவர்களின் கண் ணிரை இவன் நிமிர்ந்த பார்க்கவும் சந்தர்ப்பமில்லை. வலியைத் தாங்க முடியவில்லையோ. அல்லது பக்திப்பரவசமாகி உணர்ச்சி வசப்படுகிறானோ..? ஏன். ஏன்.
மேலும் தொடைகள் இரண்டிலும் கெண்டைக்கால்கள் இரண்டிலுமாக எட்டு இடங்களில் குத்தி ஆளை நிமிர்த்தினார்கள். பின்னர் அலகில் வேல் குத்தினார்கள். இனி வண்ணனின் முறை ஆனாலும் இனி ஒரு நிமிடந்தானும் என்னால் தாமதிக்கமுடியாத நிலையில் புறப்பட்டு விட்டேன். வீட்டிற்கு வந்து உடுப்பை மாற்றிக்கொண்டு வேலைக்கு வந்த விட்டேன். ஆனால் அவனது கண்ணீருக்கான காரணத்தை இன்று அறிந்த விட வேண்டும்.
அலுவலகம் விட்டு வீட்டிற்குப் போகாமல் நேரே அங்கேயே போகின்றேன். இருவரது வீட்டிற்கும் போகத்தான் வேண்டும். முதலில் மோகனிடம் போகின்றேன். உடல் நோவிலும் அலுப்பிலும் மோகன் படுத்திருக்கக்கூடும் என்று மனம் எண்ணுகிறது. ஊஹீம். மாறாக அவன் மாட்டுக்கொட்டிலின் முன்னாலிருந்து

Page 41
66 கொற்றை பி. கிருஷ்ணானந்தன்
மாட்டுத்தீவனத்திற்காக, பனை ஓலைகளைத் தம்பாக்கிக்கொண்டிருந்தான். என்னைக் கண்டதும் “சித்தப்பா' என்றபடி எழுந்து வந்து எண்முன்னால் கதிரையில் உட்கார்ந்தான்.
அவனது உடலில் ஊசி குத்திய அடையாளங்களைப் பார்த்தேன் இரத்தச் சிவப்பேறியபடி தடிப்பாக இருந்தன.
நான் பேச்சைத் தொடங்கினேன். “நான் கேட்கிறதக்கு உண்மையைச் சொல்ல வேணும் வெள்ளண கொழுக்கி ஊசியாலை உனக்கு குத்தறபோதெல்லாம் உண்முகம் மாறிக் கண்ணீர் விட்டனி 'ஓ'வென்று அழாத குறை, உன்னாலை தாங்கமுடியாத அளவுக்கு வலிச்சதா? எண்ணெண்டு சொல்லு’
அவன் ஒரு நிமிடம் ஏதோ யோசித்தான். கண்கள் கலங்குகின்றன. “இல்லைச் சித்தப்பா சரியான வலிதான் ஆனால் என்னாலை தாங்கமுடியாததெண்டில்லை’
அப்ப. நான் ஆவலுடன் அவசரப்படுத்துகிறேன். “ஒவ்வொருக்காலும் குத்தேக்கை இதைத் தம்பி எண்ணெண்டு தாங்கப்போறான் எண்டு யோசிக்கேக்கைதான் எனக்கு அழுகை அழுகையாக வந்தது சித்தப்பா'
('மல்லிகை ஆண்டு மலர் - 2010.)
 

இன்னுமோர் உலகம் 67
இனியும் நான் இந்த உலகில் வாழக்கூடாது. நான் வாழ்ந்தால் அவமானம்
தான் மிஞ்சும். குடும்ப மானம் போகும். குடும்ப மானம் போனால் அப்பா உயிரோடிருப்பாரா? அதன் பின் அக்கா, அக்காவின் பிள்ளைகள் தம்பி எல்லோரும் ஊரில் தலை நிமிர்ந்து நடக்க முடியுமா?
தற்கொலை செய்ய வேண்டியது தான். தற்கொலை செய்தால் மட்டும் குடும்ப மானம் போகாதா?

Page 42
68 கொற்றை பி. கிருஷ்ணானந்தன்
ஏன் தற்கொலை செய்தாள்? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு என் குடும்பத்தையே திக்கு முக்காட வைத்து விடுவார்களே. இல்லாத பொல்லாத கதையெல்லாம் கற்பனை பண்ணிப் பரப்பியே எங்கள் குடும்பத்தை நாசமாக்கி விடுவார்களே.
நான் பிறந்திருக்கக் கூடாது. பிறந்திருக்கவே கூடாது. பிறந்தாலும் இந்தப் பிராமணக் குடும்பத்தில் - ஆசாரம் கெளரவம் மனச்சாட்சி என்றெல்லாம் உயிரையே விடுகின்ற இந்தக் குடும்பத்தில் பிறந்திருக்கவே கூடாது.
இப்படி இந்தக் குடும்பத்தில் பிறந்திருக்கா விட்டால் அல்லது மானம் மரியாதை கட்டுப்பாடு எல்லாவற்றையும் உயிராய் மதிக்கின்ற அப்பாவுக்கு - சமூகத்தளைகளை அறுத்தெறியத் தணியாத அப்பாவுக்கு மகளாகப் பிறந்திருக்கா விட்டால் போன வருடமே டிவோஸ் எடுத்திருக்கலாம். இப்படியெல்லாம் இவ்வளவு தன்பங்களையும் அனுபவித்திருக்க வேண்டாம்.
பெண்ணியம் என்றும் பெண் விடுதலை என்றும் பல்கலைக்கழகத்தில் படித்த காலத்திலும் வெளியே வந்த பின்பும் பேசியும் எழுதியும் வந்த நான் இன்று குடும்பம் என்ற வட்டத்தை தாண்ட முடியாமல் தவிக்கின்றேன். எண் எழுத்து பேச்சு எல்லாம் என்னவாயிற்று.
நானும் இல்லறம் நல்லறம் தாம்பத்தியம் என்றெல்லாம் சராசரிப் பெண்ணாய் கற்பனையில் திளைத்தவள் தான்.
பேராதனையில் பட்டப்படிப்பை மேற்கொண்ட காலங்களில் நான் பிராமணக் குடும்பத்தவள் என்ற எந்த ஈகோவும் இல்லாமல் எல்லோரையும் போலவே எல்லாச் செயற் பாடுகளிலும் பங்கேற்பேன். மாமிசம் சாப்பிடுகின்ற ஒரு விஷயத்தை தவிர, பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய் வாழ்ந்த காட்ட வேண்டும் என்றெல்லாம் தோழிகளுக்கு போதித்து வந்தவள் நான்.
பேராதனைக்குப் போகாமல் யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தில் படிப்பது தான் அப்பாவுக்கு விருப்பமாக இருந்தது. தங்களை விட்டு தாரப் போனால் தங்கள் ஆசாரங்களைக் கை விட்டு விடுவேனோ என்ற பயம் அப்பாவுக்கு. கூடப் படித்த மாணவிகள் மூவருடன் ஒருத்தியாய் போய் படிக்கின்றேன் என்று விடாப்பீடியாக நின்று அப்பாவைச் சம்மதிக்க வைத்ததே பெரிய விஷயம்.
யூனிவசிற்றியில்தான் எத்தனை தொல்லைகள். நான் பேரழகியாம். கிளியோபற்றாவாம். எனக்கு வந்த கடிதங்கள் எத்தனை. காதற் கவிதைகள் எத்தனை. எல்லாவற்றையும் எப்படித்தான் சமாளித்தேனோ. என் வாழ்வில் காதலுக்கு இடமேயில்லை. அப்படி ஒன்று ஏற்பட்டால் அப்பாவால் அதை தாங்கவே முடியாது. படிப்பு முடிந்து வீடு வந்து சேர்ந்ததன் பின்னர் தானே அப்பா நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.
என் படிப்புக் காலத்துக்குள் நடந்தேறிய அக்காவின் திருமணம் அம்மாவின் இழப்பு ஏ.எல். வகுப்புடனே படிப்பை நிறுத்தி விட்டு தம்பி நிறுவனமொன்றில்
 

இன்னுமோர் உலகம் 69
பாதுகாப்பு உத்தியோகத்தராகச் சேர்ந்தது. அதன் பின் கோவில் பிரசாதத்துடனேயே அப்பா பல நாட்கள் காலத்தை ஒட்டியது எல்லாம் என் நெஞ்சில் அடிக்கடி நிழலாடும் நிகழ்வுகள்.
அப்பாவின் கொள்கையே வித்தியாசமானது. அம்மாவும் இல்லாத அவரது தனித்த நிலையில் அவரோடு முரண்படக் கூடாது என்று தானே அவருடைய பிற்போக்குத் தனமான சில கொள்ளைகளுக்குக் கூட ஒத்துப் போகின்றேன்.
பிராமணருக்குரிய ஆசாரங்களை எள்ளளவும் பிசகாமல் கடைப்பிடிக்க வேண்டுமாம். ஆனால் தனது பரம்பரையிலேயே இனி ஒருவரும் கோவிற் பூசகராகத்தொழில் செய்யக் கூடாதாம். கோயில் மணியகாரன் அல்லது கோயில் சபையினர் சில சமையம் மரியாதைக் குறைவாக நடாத்தவதம் சிறு தவறு நடந்தாலும் அதைப் பெரிதாக்கி அவமானப்படுத்தவதம் அப்பாவின் மனதைப் பெரிதும் பாதித்து வந்தது. வாழ்க்கையை ஒட்டுவதற்குப் போதாத வருமானமும் இந்தத் தொழிலில் வெறுப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஆலயங்கள் அமைப்பதற்கு இடம் எடுத்துக் கொடுப்பது, பல கோயில்களுக்கு கும்பாபிஷேகங்கள் செய்யும் பிரதம குருக்களுக்கு உதவியாளராகப் போவது ஜாதகங்கள் கணிப்பது போன்ற மேலதிக உழைப்பால் தானே, அக்காவுக்கு ஒரு நிர்வாக உத்தியோகத்தரையும் எனக்கு ஒரு பட்டதாரி ஆசிரியரையும் மாப்பிள்ளைகளாக எடுக்க அவரால் முடிந்தது. நானும் ஒரு பட்டதாரி ஆசிரியை என்ற படியால் சீதனமும் பெரிதாக கேட்கப்படவுமில்லை. தன்னுடன் தன் குடும்பத்தில் பூசகள் தொழில் முற்றுப் பெறுகின்றது என்பதில் அப்பாவுக்கு பரம திருப்தி
என் திருமணம் முடிந்த அன்று என் அப்பா எவ்வளவு சந்தோஷப்பட்டாரோ அன்றிலிருந்த எண் சந்தோஷம் காணாமற் போனது.
சினிமாவில் பார்த்தம் கதைகளில் வாசித்தம் தோழிகளிடம் கேள்விப்பட்டதமான சங்கதிகளை மனதில் சுமந்து மகிழ்ச்சியும் அச்சமும் இரண்டறக் கலந்த எண்ணங்களுடன் படுக்கையில் நான்.
ஏமாற்றம்..! அடுத்தநாள். அடுத்தநாள். அடுத்தநாள். வாழ்க்கையே வெறுமையானது, அர்த்தமற்றுப் போனது போன்ற உணர்வு. நான் குழம்பிப் போய் விட்டேன்.
மூன்று மாதங்கள் இப்படியே கழிந்ததின் பின் நானே அவரிடம் மனம் விட்டுப் பேசினேன். நானும் படித்தவள் தானே. பேசா மடந்தையாய் அச்சம் மடம் நாணம் என்று எவ்வளவு காலத்திற்குத் தான் பொறுமையைக் காப்பத?
கேட்டு விட்டேன். வெட்கத்தை விட்டு கேட்டே விட்டேன். ஏன் நீங்கள் இப்படியாய். ஏற்றுக் கொண்டார். திருமணத்தின் பின் எல்லாம் சரியாகும்

Page 43
70 கொற்றை பி. கிருஷ்ணானந்தன்
என்று யாரோ நண்பன் சொன்னானாம். நானே அவரை நல்ல டொக்டரிடம் அழைத்துச் சென்றேன். எண் தலையில் இடி இறங்கியது. அவரில் எந்த மாற்றமும் ஏற்பட சந்தர்ப்பமேயில்லையாம். அவர் அப்படியாயின் எண்னை ஏன் மணந்தார். இலட்சத்தில் ஒருவர் இப்படியாய்.அது ஏன் என் தலையில் விழ வேண்டும்.
இப்போது அவரில் ஆத்திரத்தை விட அனுதாபமே மேலோங்கி நிற்கின்றது. எண்ணில் அவர் அன்பாகத் தானே இருக்கின்றார். பாடசாலை - ரியூசன் இவற்றோடு அவர் திருப்தியடைந்த விடுகின்றார்.
உறக்கமின்றி நான் விழித்திருந்த இரவுகள். “இந்த இரவு விடிந்து விட வேண்டும் ~ இல்லை எண் இளமை கரைந்து விட வேண்டும்.”
என்றோ ஒரு நாள் நான் ரசித்த சினிமாப்பாடலை இப்பொதெல்லாம் அடிக்கடி நினைத்தப் பார்க்கிறேன். அது இப்போது எனக்கே பொருந்தி விட்டது. ஆரம்ப நாட்கள் நான் நித்திரையின்றி தவித்த நாட்கள். அடுத்த நாள் பாடசாலையில் என்னோடு நெருங்கிப் பழகுகின்ற ஆசிரியத் தோழிகள் இருவர் என்னைக் கடிக்கின்றார்கள்.
“முகம் நல்லா வீங்கிக் கிடக்கு” “இரவு முழுக்கத் தாங்கவேயில்லை போல ~ பொல்லாதவர்தான்” ஓமோம்”
பொதுவாகவே சொல்லி வைத்தேன். இப்போது திருமணம் செய்து இரண்டு வருடமாகி விட்டபடியால் புதிதாகக கேள்விக் கணைகள்?
“என்ன வயிற்றிலை பூச்சி புழு ஒண்டையும் காணேல்லை. ஒருக்கா டொக்டரிடம் போய்க் காட்டுங்கோவன்.”
“சரியான எண்ஜொய்மெண்ருக்காக குழந்தை பெறுகிறதை தள்ளிப் பொட்டிருக்கிறியளோ'
“நாக தோஷம் இருந்தால் கர்ப்பம் தரிக்க விடாது. கோயிலுக்குப்போய் கரும்பாம்பு செய்து குடுங்கோ’ இப்படியாய் எல்லோரது கதைகளையும் நான் விழுங்கி ஜீரணிக்க வேண்டும். அக்கா என்னை அடிக்கடி அம்மா ஸ்தானத்திலிருந்த கேட்பது “என்னடி உன்னை உண்ரை ஆள் சந்தோஷமாக வைத்திருக்கிறாரே” "ஓ எனக்கென்ன குறை நாங்கள் சந்தோஷமாகத்தான் இருக்கிறோம்” ஆனால் எவ்வளவு காலத்துக்குத்தான் மனதுக்குள்ளேயே பூட்டி வைத்து நான் சித்திரவதைப்படுவது. என் பல்கலைக்கழக தோழியும் சக ஆசிரியையுமான தயானியிடம் மனம் விட்டு எல்லாவற்றையும் சொல்லியத எவ்வளவு தப்பாக போய் விட்டது. அவள் உடனே எனக்குத் தந்த புத்திமதி டிவோஸ் எடுப்பது.
 

இன்னுமோர் உலகம் 71
நான் அதை ஏற்றுக் கொள்ளவேயில்லை. பாவம் அவர். நான் டிவோஸ் கேட்டால் அவருக்கு அவமானம். அப்பாவுக்கும் அவமானம் ஆனால் தயானி செய்த பெரிய தவறு எங்களது பிரச்சனையை தன் கணவருக்குக் கூறியது. எவ்வளவு மரியாதையாய் என்னுடன் பழகிய தயானியின் கணவர் இப்போது பார்க்கின்ற பார்வையும் பழுகுகின்ற முறையும் சரியில்லை.
எங்களுக்குள் இருக்கின்ற குறைபாடு இப்போது வேறு சிலருக்கும் ஓரளவு தெரிந்து கொணடு வருகிறதோ என்ற கவலைதான் எண் மனதை அரித்துக் கொண்டிருக்கின்றது.
போயும் போயும் ஏ.எல் வகுப்பில் எண்ணிடம் தமிழ் படிக்கும் சுரேஷ் நடந்து கொண்ட முறைகள்.எரிச்சல் எரிச்சலாக வருகிறது. மூன்று தடவை தற்செயலாக நடந்தது போன்று எண் மேனியில் பண்ணின விசமம். முதல் நாள் நானும் தற் செயலானது என்று தானே நினைத்தேன். மூன்றாம் முறையும் அவன் அப்படி நடந்து கொண்ட பின்னர் தானே உஷாரானேன். எல்லா ஆத்திரத்தையும் சேர்த்த ரியூட்ஷ் எழுதாததை சாட்டாக வைத்த நல்ல அடி கொடுத்த பின்னர் தான் எண் மனம் அமைதி கொண்டது.
இன்று நான் இந்த முடிவுக்கு வந்தமைக்கு முக்கிய காரணம் ரகுவரன்தான். நான் யூனிவசிற்றிக்குப் போக முன்னமே தன் விருப்பத்தை தெரிவித்தவன். மைத்தனன் முறையான அவன் எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்த போனாலும் நாண் சலனப்படவில்லை. அவனது காதலை நிராகரித்து விட்ட எனக்கு இப்போது என்ன நடந்தது? ஏன் இந்த சலனம். எண்ணில் ஏன் இந்த மாற்றம். தயானியின் கணவரும் ரகுவரனும் ஒரே ஒவ்விசில் தான் வேலை செய்கின்றார்கள். அவர் தான் எங்கள் சம்பந்தமாக ரகுவரனுக்கு ஏதம் சொல்லியிருக்க வேண்டும். அதன் பின் தானே ஒருநாள் ரகுவரன் வழக்கம் போல வீட்டிற்கு வந்து விட்டு இவர் இல்லாத சந்தர்ப்பத்தை பயன் படுத்தி இவரது பிரச்சனை பற்றி என்னை நேரிலேயே கேட்டான். நான் கோபப்பட்டேன். அப்படியில்லை என அடித்துச் சொன்னேன். அவன் நம்பவேயில்லை.
அவன் போகும் போது சொல்லி விட்டுப் போன வசனம் “இப்பவும் நீ டிவோஸ் எடுத்து விட்டு வந்தால் நான் திருமணம் செய்ய தயாராக இருக்கிறேன்.” என்பதுதான்.
பாவம் இவர் தன் நிலை தெரிந்தம் என்னை மணந்தது தவறு தான் என்றாலும் நல்லவர். ஆனால் ரகுவரனுடன் நான் இப்போது கதை பேச்சுக்களை வெகுவாக குறைத்துக் கொண்டாலும் கூட ரகுவரனிலும் எண்ணிலும் சாதவாகச் சந்தேகம் இவருக்கு ஏற்பட்டுள்ளது என்பதை நான் உணருகின்றேன். அத இவரது தாழ்வு மனப்பான்மை காரணமாகவும் இருக்கலாம். ஆனால் ஒரு நாளும் தனது சந்தேகத்தை வெளிப்படையாக எண்ணிடம் கேட்டுப் பார்த்ததில்லை.

Page 44
72 கொற்றை பி. கிருஷ்ணானந்தன்
இவரின் பலவீனம் இப்போது ஓரளவு ஊருக்கும் தெரிந்து விட்டது போலிருக்கிறது. நான் இப்போது ஏளனத்துக்குரிய ஆளாகி விட்டேன் போல தெரிகிறது. இப்படியே நித்திரையுமின்றி நான் தொடர்ந்த கஷ்டப்படுவேனென்றால் மல்லிகா டீச்சர் மாதிரி வந்த விடுவேனோ, மல்லிகா டீச்சர் அந்தக் காலத்தில் பி.ஏ தமிழ் ஸ்பெசல் செய்தவ. ஏதோ காதலில் தோல்வியென்று மனதை விட்டிட்டா. எவ்வளவோ சொத்துப் பத்திருந்தும் பைத்தியமாகி வீடவீடாக சென்று சோறு வாங்கி சாப்பிடுகிறா. சொந்தக்காரர் எவ்வளவு வெட்கப்படுகினம். எனக்கும் இப்படி ஒரு நிலைமை வருமோ? அப்படி பைத்தியமாக அலைவதிலும் பார்க்க செத்தப் போகலாம்.
அது தான் பரவாயில்லை. நான் இந்த முடிவுக்கு வருவதற்கு இதுதான் - இதுவேதான் முக்கிய காரணம். இப்போதெல்லாம் ரகுவரன் அடிக்கடி என் மனதிற்குள் வந்த போகிறான்.
சலனம் - சலனம் - சலனம் நான் மனதால் கெட்டுப் போய் விட்டேனா? “இந்த இரவு விடிந்த விட வேண்டும் ~ இல்லை என் இளமை கரைந்து விட வேண்டும். விடியாத நீண்ட இரவையும் குறையாத இளமையையும் தந்த இறைவன் கொடியவன்.
சந்தர்ப்பம் சூழ்நிலைகளால் எண் மன உறுதி குலைந்து விட்டால்..? என் கணவர் ~ என் தந்தை . குடும்ப கெளரவம் . எண்ணில் எண் நம்பிக்கை இழந்து கொண்டே போகிறது. எப்போதோ வாங்கி வைத்த இருபது நித்திரை குளிசைககளையும் இப்போது சாப்பிட்டு விட வேண்டியது தான். மீளாத்துயில். இது வரை நான் இழந்து விட்ட நித்திரையெல்லாம சேர்த்து ஒரேயடியாக நித்திரை. இன்று இதில் எந்த மாற்றமில்லை.
தற்கொலை ~ அப்படியானால் நான் பேசிய பேச்சு ~ எழுதிய எழுத்து - கனவு கண்ட புதுமைப் பெண் ~ சராசரிப் பெண்ணுக்கு இவையெல்லாம் சரி. என்னைப் போல உள்ள இலட்சத்தில் ஒருத்திக்கு இலட்சியம் தோல்வி. தலையிடியும் காச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும். இது தான் யதார்த்தம். தற்கொலை செய்பவர்கள் நரகத்திற்குப் போவார்களாமே. ஏன் இப்போது மட்டும் நான் அனுபவிப்பது என்னவாம்.?
இவர் எந்தச் சலனமுமின்றி ஆழ்ந்த சயனம். பாவம் அவரையும் ஒரு நோயாளியாகத்தான் அனுதாபத்தோடு நான் நோக்க வேண்டுமே தவிர ஆத்திரப்படக் கூடாது. நான் தற்கொலை செய்வதால் அவருக்கு ஒரு பழியும் ஏற்பட்டு விடக்கூடாது.
 

இன்னுமோர் உலகம் 73
அப்பா ஏதோ சமாளித்துக் கொள்ளட்டும். அப்பாவுக்கு வேறு வகையில் அவமானத்தை ஏற்படுத்துவதை விட இது எவ்வளவோ பரவாயில்லை.
யாருக்கும் எந்தக் கதைக்கும் இடம் வைக்காமல் எனக்கு ஏற்கனவே இருக்கின்ற ஆஸ்தமா நோயைக் காரணம் காட்டி தாங்க முடியாத ஆஸ்துமாவினால் தற்கொலை செய்கின்றேன் என்று எழுதி வைத்து விட வேண்டியதுதான். பேப்பரையும் பேனாவையும் எடுக்கிறேன். எழுதத் தொடங்குகிறேன்.
அன்புள்ள அப்பா!
நான் இந்த முடிவுக்கு வந்தமைக்காக எண்னை மன்னித்து விடுங்கள். அம்மாவும் இல்லாமல் அக்காவும் இங்கில்லாமல் ஏகாந்த நிலையில் உங்களை விட்டு.
என்னால் தொடர்ந்து எழுத முடியவில்லை. என் கண்கள் ஏன் கண்ணிரை கொட்டுகின்றன. அப்பாவைத் தனியாக தவிக்க விட்டு. அப்பாவுக்கும் எண் கணவருக்கும் அவமானத்தை ஏற்படுத்தி இந்த முடிவை . வேண்டாம். வேண்டவே வேண்டாம். செக்ஸ் மட்டும் தானா வாழ்க்கை. செக்ஸ் வாழ்க்கையில் தவிர்க்க முடியாதது. அவசியமானது. விதி வசத்தால் அது இல்லையென்றால் வாழ்க்கையே இல்லையா? மீண்டும் இவரை கூட்டிச் சென்று மிகப் பெரிய டொக்டரிடம் காட்டுவேன். சக்செஸ் என்றால் சந்தோஷம் தோல்வியென்றாலும் வாழ்வேன் தலை நிமிர்ந்து வாழ்வேன்.
இனி இந்தச் சலனங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது. இனிமேல் எங்கள் வீட்டுக்கு ரகுவரன் வரவேண்டாம் வரவே கூடாது. அழுத்தந் திருத்தமாக சொல்லி விட வேண்டும்.
என் கணவர் நல்லவர். வேண்டுமென்று அவர் எனக்குத் தரோகம் செய்ய வில்லை. நான் வாழ்வேன். எனக்காக வாழ்வேன். என் அப்பாவுக்காக வாழ்வேன். எண் கணவருக்காக வாழ்வேன். நேர்மையாக தலை நிமிர்ந்து வாழ்வேன். வாழ்வேன்- வாழ்வேன் இது சத்தியம்.
எந்த வித சலனங்களுமின்றி இன்றும் இனி வரும் இரவுகளிலும் நிம்மதியாக நித்திரை கொள்வேன். அதில் சந்தேகமில்லை.
("வீரகேசரி’ வாரமலர் - 2008)

Page 45
74. கொற்றை பி. கிருஷ்ணானந்தன்
இரவு எனக்கு இதமாக இருக்கவில்லை. எல்லோருமே ஆழ்ந்த உறக்கத்திலிருக்கிறார்கள் என்னைத் தவிர என்பதை உணர்கிறேன். உள் விறாந்தையில் என் மனைவி பிள்ளைகளும் தங்கச்சியும் படுத்திருக்கிறார்கள். மற்றவர்கள் அடுத்த அடுத்த அறைகளில்,
என் தலையணை கண்ணிரால் நனைந்திருக்கின்றது. நான் அழுவதை ஒரு போதும் எவரும் பாத்திருக்க முடியாது. எழுந்த உட்காருகிறேன். என்னுடனே
 

இன்னுமோர் உலகம் 75
படுத்திருக்கும் என் இளைய மகளை பார்க்கிறேன். ஒருக்களித்துப் படுத்திருக்கிறாள். விறாந்தைக்கு வெளியே எரியும் பல்ப் வெளிச்சத்தில் அவளின் முகம் மங்கலாகத் தெரிகிறது. அம்மாவின் முகம் அவளில் அப்படியே அப்பியிருந்தது. அதனால் தானோ எனது மற்ற பிள்ளைகளை விட அவளில் கூடுதலான ஈர்ப்பிருக்கிறது என நான் நினைத்தப் பார்ப்பதுண்டு. தனது மகள் தனத தாயை போல என மற்றவர்கள் சொல்லும் போது யாருக்குத்தான் சந்தோஷமிருக்காதரி
நஞ்சமல்ல. அவள் சாயலில் மட்டுமல்ல நிறத்திலும் தன்னைப்போல கறுப்பாக இருந்ததாலோ எண்னவோ அப்படி ஒரு பட்சம்.
தனக்குப் பதிலாக இனி அவள் இருக்கிறாள் என்று நினைத்துப் போல அவள் பக்குவப்பட்டு மூன்று மாதத்திலேயே அம்மா போய்விட்டா.
வெளியே பார்க்கிறேன். கேற் திறந்திருக்கிறது. எட்டுச் செலவு முடியும் மட்டும் கேற் சாத்திமூடக் கூடாதாம். வீட்டிலிருந்த ஒரு உறவு பிரிந்து வெளியே போனால் அனுப்பிய உடனேயே எல்லாம் அடித்துச் சாத்தக் கூடாது என்ற மெல்லிய உணர்வின் வெளிப்பாடு போலும், பக்கத்தில் தண்ணீருடன் வாளி வைக்கப்பட்டிருக்கிறது.
நெருங்கிய உறவினர்களெல்லாம் இங்கே தான் தங்கச்சி வீட்டில் படுத்திருக்கிறார்கள். எட்டுச் செலவு முடியமட்டும் இங்கே வந்த தான் படுப்பார்கள். எங்கள் தக்கம் குறையும் வரைக்கும் உடனிருந்து பங்கு கொள்ளும் பண்பு.
எண் வீடு கூப்பிடு தாரத்திலிருந்தாலும் முப்பத்தோராம் நாள் வரைக்கும் நான், மனைவி, பிள்ளைகள் இங்கே தங்குவதென்று முடிவெடுத்து விட்டோம்.
விடிந்தால் அம்மா போய் மூன்றாம் நாள். மூத்தக்கா சின்னக்கா இளையக்கா மூவரும் தங்கச்சியை தேற்றுவதில் தோல்வி கண்டிருந்தனர்.
நீண்ட காலம் அம்மாவை படுக்கையில் வைத்துப் பார்த்தெடுத்ததில் தங்கச்சிக்கு சலிப்பு ஏற்பட்டதாக ஒருநாளும் நான் உணரவில்லை.
உயிரோடு அம்மாவை பார்த்து விட வேண்டுமென்று இலண்டனிலிருந்து ஓடி வந்த கடைசி தங்கச்சியோ அதை விட கத்திக் கதறிக் களைத்திருந்தாள். பத்து வருடங்களுக்கு மேலான பிரிவு அவளை பெரிதும் பாதித்திருந்தது.
அம்மாவை இழந்த சோகம் என் நெஞ்சில் பாறாங்கல்லாய் அழுத்தினாலும் ஆட்களுக்கு முன்னே என்னால் அழுகையை அடக்க முடிந்திருந்தது. ஆனால் நேற்றிரவை போலவே இன்றிரவும் நித்திரை தாரப் போய் விட்டது.
கவலை. அது கண்ணீர் விட்டழுதால் குறையுமாமே. கண்ணீர் ஆறாகப் பாயட்டும். ஆனால் கவலை குறைய வேண்டாம். அம்மாவை பற்றிய நினைவுகள் பிரிவுத் துயரம் எல்லாமே ஆயுள் மட்டும் ஆழமாக இருப்பதம் ஒரு மன நிறைவு தான்.

Page 46
76 கொற்றை பி. கிருஷ்ணானந்தன்
நேற்றும் இன்றும் தக்கத்தில் கலந்து கொள்ள வந்தவர்கள் அம்மா எண்பது வயதுக்கு மேல் இருந்தவதானே. பரவாயில்லை என்கிறார்கள். எனக்கு நாற்பத்தைந்து வயது வந்தும்,அம்மாவுக்கு நான் சின்னப் பிள்ளை போலத்தான். அப்படியே அம்மாவுக்கு எண்பது வயதுக்கு மேலென்றாலும் அம்மா அம்மா தான். பெரியம்மாவாகிவிடுவாவா என்ன?
ஐயாவின் உழைப்பு குடும்பத்தை பராமரிக்க போதாத நிலையில் அம்மா பாய் பெட்டி வியாபாரத்தை தொடங்கினா. அக்காவையை விலைப்படுத்துவதில் ஐயாவுக்குத் தோளோடு தோள் நின்றா. நான் படித்த நகர சபையில் கிளார்க்காக உத்தியோகத்தில் சேர்ந்த அம்மாவுக்கு கட்டாய ஓய்வு கொடுக்கும் வரை கடுமையாகப் பாடு பட்டு உழைத்தா.
பாய் பெட்டி வியாபாரத்திலிருந்துதான் ஓய்வு கிடைத்ததே தவிர உண்மையில் அம்மாவுக்கு ஓய்வு கிடைக்கவில்லை. மூன்று அக்காவையினதும் இரண்டு தங்கச்சியவையினதும் பிள்ளைப் பேறு பார்த்தெடுக்க பேரப் பிள்ளைகளை பராமரிக்க அம்மாவின் உடலும் தளர்ந்து போக அதன் பின்னர் தான் உண்மையான ஓய்வு கிடைத்தது.
இப்படியிருக்கிற நேரத்தில்தான் அந்த விபத்து நடந்தது. மூத்தக்காவின் வீட்டு வாசற் படியில் ஏறும் போது கால் தவறி விழுந்து இடுப்பெலும்பு முறிந்து விட்டது. தடித்துப் பதைத் த யாழ்ப்பாணம் பெரியாஸ் பத்திரிக்கு கொண்டோடினோம். ஒரு கிழமையாக சிகிச்சை அளித்தார்கள். பின்னர் காலில் கம்பி குத்தி மண்மூடை கட்டி வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். s
வீட்டில் நான்கு நாட்களாக அம்மா பட்ட அவஸ்தை .அப்பப்பா. சொல்லியடங்காது. அக்காவையள் தங்கச்சி நான் ஒருவருமே நித்திரை கொள்வதில்லை. எங்களால் பார்த்துச் சகித்துக் கொள்ளவும் முடியவில்லை.
இந்நேரத்தில் தான் வெளிநாட்டிலிருந்து தங்கச்சியின் அறிவித்தல் வந்தது. கொழும்பில் தனியார் வைத்திய சாலையில் ரெலிபோன் மூலம் பேசி ஒழுங்கு பண்ணியிருக்கிறேன். உடனே அம்மாவை கொழும்புக்கு கொண்டு போங்கள் என்று. நான் ஒரு மாத லீவு போட்டேன். கொழும்பிலிருந்தே டொக்டர் நேர்எல் சகிதம் அம்புலன்ஸ் வந்தது. என்னுடன் மூத்தக்காவும் இளையக்காவும் வந்தனர். அம்மாவை கொண்டு சென்ற அடுத்த நாளே சத்திர சிகிச்சை நடந்தத. என்ன ஆச்சரியம். அம்மாவின் எழுபது வயதில் செய்யப்பட்ட அந்த சத்திர சிகிச்சையின் மூன்றாம் நாளே அம்மா மெல்ல மெல்ல நடந்தா. அதன் பின் சாதாரணமாகி பத்து வருடங்கள் நடமாடித் திரிந்தா.
வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் மிகச் சாமானியமான ஒருவருக்கு இந்தச் சந்தர்ப்பம் கிடைத்திருக்குமா என்று பல தடவை நான் சிந்தித்துப் பார்த்ததுண்டு. அந்த வகையில் அம்மா கொடுத்து வைத்தவா.
 

இன்னுமோர் உலகம் 77
அம்மாவை நினைத்து நாங்கள் எப்போதுமே பெருமைப்படுவதுண்டு. வருமானம் உழைக்காத காலத்தில் அல்லது வயது போன நேரத்தில் புருசனை மதிக்காத பல பெண்களை எண் வாழ் நாளில் நான் கண்டிருக்கிறேன். ஆனால் அம்மா அப்படியில்லை.
ஒருமுறை தங்கச்சியின் மத்தியான சமையல் பிந்திவிட்டது. ஐயாவுக்கு சாப்பாடு கொடுப்பதற்காக அம்மா வந்து குசினியை அடிக்கடி எட்டிப்பார்த்தா, தங்கச்சிக்கு கூடமாட அம்மா உதவி செய்து விட்டுப் போயுங்கூட சமையல் முடியவில்லை.
காலையில் சாப்பிடும் வழக்கமில்லாத ஐயா பசியோடிருப்பதை அம்மாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
“எடியே நீ எங்களுக்கு இனி சாப்பாடு தர வேண்டாம். நாளையிலிருந்து நாண் புறம்பாகச் சமைச்சு கொய்யாவுக்குச் சாப்பாடு கொடுக்கப் போறன்.”
அவா சொன்ன மாதிரிச் செய்த போடுவா. அப்படியான ஆள். தங்கச்சி வந்த எனக்கு விஷயத்தை சொல்லி அம்மாவை நான் சமாதானம் பண்ண வேண்டியதாகி விட்டது.
எல்லோரும் சாப்பிட்டு முடிந்ததும் நான் சொன்னேன். 'அம்மாவுக்கு இப்ப இலண்டன் மகள் மாதாமாதம் சிலவுக்கு காசனுப்புவதாலை இந்த நடப்பு.’
“போடா போ. நீங்களொருவருமே எங்களை பாக்க வேண்டாம். எங்கடை காணி வருமானம் எங்களிரண்டு பேருக்கும் வடிவாகக் காணும்'.
இப்படிச் சொன்னாலும் தனிக் குடுவை வைத்துச் சமைக்கிறதை அம்மா ஒரு நாளும் செய்யவில்லை.
நானும் மனைவியும் சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம் சில சமையங்களில் பிரச்சினைப்படுவதுண்டு.
‘போய் அப்பப்பா அப்பம்மாவை பார்த்தாவது திருந்துங்கோ. இந்த வயதிலயும் என்ன மாதிரி ஒற்றுமையாய் இருக்குதுகள்.”
இது எங்களுக்கான பிள்ளைகளின் புத்திமதி. அந்தளவுக்கு ஐயாவும் அம்மாவும் உதாரண தம்பதியினராக வாழ்ந்த வாழ்க்கையல்லவா அது.
கண்ணுாறு பட்டதோ என்னவோ. ஒரு நாள் ஐயா நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சரிந்தார். எழுந்திருக்கவேயில்லை. ஐயாவை கொஞ்சக் காலத்திற்காவது படுக்கையில் வைத்துப் பார்த்தெடுக்கக் கிடைக்கவில்லை என்று அம்மாவின்
്ffക കബങ്ങബ.
இரண்டு வருஷத்திற்குப் பிறகு அண்ணர் - எங்கள் எல்லோருக்கும் மூத்தவர் ஐயா போன வழியே போய்விட்டார்.
இந்த இரண்டு நிகழ்வுகளும் எங்கள் எல்லோரையும் பாதித்திருந்தாலும் அம்மாவை வெகுவாகப் பாதித்த விட்டது. மெல்ல மெல்ல படுக்கையில் போட்டு

Page 47
78 கொற்றை பி. கிருஷ்ணானந்தன்
விட்டது. மந்திகை, யாழ்ப்பாணம் பெரியானல்பத்திரி என்று கொண்டு அலைந்தது தான் மிச்சம். அம்மாவின் கதை, பேச்சு கூட வெகுவாக குறைந்த போனது. நான் கலியாணம் செய்ததும் அருகாமையில் தான் என்றபடியால் ஒவ்வொரு நாளும் வேலையால் வந்ததம் அம்மாவிடம் போய் பக்கத்தில் இருந்து ஏதும் கதை கேட்டுக் கொண்டிருப்பது மனதுக்கு நிம்மதி
எனது பிள்ளைகள் பள்ளிக்கூடம் மற்றும் ரியூசன் தவிர்ந்த நேரங்களில் ஒரு முறையாவது ஆள் மாறி ஆள் அப்பம்மாவிடம் போயிருந்து ஏதும் கதைத்தப் பேசி வருவதும் எனக்கேதம் சொல்ல வேண்டியிருந்தால் சொல்வதும் வழமையாகியிருந்தன. இரவில் கொஞ்ச நேரமாவது அம்மா பெற்ற பிள்ளைகள் அம்மாவிடத்தில் ஒன்று சேர்ந்த பலதும் பத்தும் கதைத்தப் பேசி கலைவது எழுதாத சட்டமாகியிருந்தது.
எனக்குத் திருமணப் பேச்சுக்கள் கொழுத்த சீதனத்துடன் தார இடங்களிலிருந்து கேட்டு வந்த போதெல்லாம் ஐயா அம்மா சொன்னவற்றை நினைத்தப் பார்க்கிறேன்.
“காசு பணத்துக்கும் சொத்தப் பத்துக்கும் ஆசைப்பட்டு பஸ் ஏறி கார் ஏறிப் பயணம் போக வேண்டிய இடத்திலை தம்பியைக் கட்டிக் குடுக்கிறதிலும் பார்க்க ஊருக்கை கட்டிக் கொடுத்தால் தினமும் தம்பியை எங்கடை முத்தத்திலை காணலாம். எங்களுக்கு ஏதம் அந்தரம் ஆபத்தெண்டால் உடனே அதர் வந்து நிற்கும்.”
அம்மாவுக்குத் தேவையான மருந்து வகைகள் பால்மா மற்றும் சத்துக் குளிசைகள் எல்லாம் கிரமம் தவறாமல் நான் வாங்கி வந்து தங்கச்சியிடம் கொடுத்து விடுவேன்.
அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. தங்கச்சியும் பாவம். பிள்ளைகளுடன் கஷ்டப்படுகிறாள் என்று அம்மாவின் படுக்கை விரிப்பு உடுப்புகள் சிலவற்றை வீட்டுக் கிணற்றடியில் கொண்டு போய் சவர்க்காரம் போட்டுத் துவைக்கத் தொடங்கினேன். மூத்தக்கா தற்செயலாக வந்த விட்டா.
“டேய் அம்மா பெத்த ஐஞ்சு பெட்டையள் நாங்களிருக்க நீ உடுப்புத் தோய்க்க நாங்கள் விடுவமே . அதெல்லாம் எங்களுக்குத் தெரியும் நீ எழும்பு.இஞ்சாலை வா.”
வேறு வழியில்லாமல் அந்தக் கைங்கரியத்தைத் தொடர முடியாமல் போய் விட்டது. ஆனால் இரவுச்சாப்பாட்டை மட்டும் குழைத்து நான் அம்மாவுக்கு ஊட்டி விடும் வழக்கத்தை யாரும் தடுக்க வில்லை. எனக்கு அதில் ஒரு வித திருப்தியிருப்பதை அவர்கள் உணர்ந்து எனக்கு விட்டுத் தந்திருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். நான் வந்ததம் அம்மாவின் சாப்பாட்டைக் கொண்டு வந்து தருவது தான் தங்கச்சியின் வேலை.

இன்னுமோர் உலகம் 79
அம்மா நடமாடித் திரிந்த காலத்தில் தங்கச்சி வீட்டில் ஏதும் நல்ல சாப்பாடு செய்தால் போதும் அடுத்த வினாடி ஒரு பார்சலுடன் அம்மாவை எங்கள் வீட்டில் காணலாம். பேரப்பிள்ளைகளுக்குக் கொடுத்து அதிலும் எங்கள் கறுப்பியைத் தன்மடியில் வைத்து ஊட்டி விட்டுத்தான் மறு காரியம் பார்ப்பா. 'அம்மா சிறு பிள்ளையாக இருக்கும் போது இவளைப் போலவே இருந்திருப்பா. இவள் பிற்காலத்தில் வயது போக இப்ப அம்மா இருக்கிற கோலத்திலை இருப்பாள்.'
இப்படியாக எண் மனதில் தோன்றும் எண்ணங்கள். ஒரு வருடம் அம்மாவின் படுக்கை வாழ்க்கை. பின்னர் நிலைமை மோசமாகியது. பேச்சு வார்த்தையில்லை. நாங்கள் சொல்லுவது எதுவும் அம்மாவால் புரிந்து கொள்ள முடியவில்லை. நீராகாரம் மட்டும் என்ற நிலைக்கு உடல் நிலைமை வந்து விட்டது. ஒரு தெம்பையளிக்கும் நோக்கத்திற்காக வேலும்மயிலும் டொக்டர் இடையிடையே வந்து ക്കേജ് ஏற்றிவிட்டு சென்றார்.
படுக்கையை ஒருநாளைக்கு மூன்று நான்கு முறை தப்பரவாக்கி விரித்தோம். எங்களை யார் எவரென்று தெரியவில்லை. கண்ணீர் மட்டும் வடிந்து கொண்டிருந்தது.
“வெளிநாட்டிலை இருக்கிற பிள்ளையை நினைக்கிறா போலை.” வருத்தம் பார்க்க வரும் சிலரின் அபிப்பிராயம். என்ன கொடுமை, அம்மாவுக்குப் படுக்கைப் புண் வந்த விட்டது. தினமும் தப்பரவாக்கி மருந்து போடும் போது அம்மா படும் தண்பம் எங்களால் தாங்க முடியவில்லை.
அம்மா யாருக்கும் தீங்கு நினைப்பதில்லை. அடுப்படித் தருமம் என்று சொல்லுவார்களே. அதில் அம்மாவுக்கு நல்ல பேர். அம்மாவுக்கு ஏனிந்த நிலைமை.
நான் மூத்தக்காவுக்குச் சொன்னேன். 'அக்கா ஆரும் தண்ரை தாய் சாகவேணுமெண்டு நினைக்கவே மாட்டினம். ஆனால் நான் சொல்றன். அம்மாவுக்கு இந்த நிலைமையிலிருந்த விடுதலை கிடைக்க வேணுமெண்டுதான் இப்பநான் கடவுளை வேண்டுறன்.”
அக்காவின் கண்கள் குளமாகிவிட்டது. அதை ஏற்றுக் கொண்டது போலவும் தெரிந்தது.
மேலும் நிலைமை மோசமடைய வேலும் மயிலும் டொக்டர் வந்த மூன்று நாள் தவணை சொன்னார். இலண்டனுக்கு செய்தி பறந்தது.
தங்கச்சி புறப்பட்டு கொழும்புக்கு வந்து சேர்ந்து விட்டாள். இரவு கொழும்பிலிருந்த வெளிக்கிட்டால் அதிகாலை ஆளை இங்கே காணலாம். அதற்கிடையில் அம்மாவுக்கு விக்கல் தொடங்கியிருந்தது. சொந்தக்காரர் பலரும் கூடிவிட்டனர். எல்லோரும் தெளிவு கிள்ளிவிட்டார்கள். இறுதியாக என்னையும்

Page 48
B0 கொற்றை பி. கிருஷ்ணானந்தன்
விடும்படி சொன்னார்கள். தயங்கித் தயங்கி மூன்று முறை விட்டேன். விக்கல் நின்றது.
"ஐயோ எங்கடை அம்மா” ஒரேயடியாகப பல குரல்கள். அதைத் தொடர்ந்து மேலும் பல குரல்கள் நான் அதிர்ந்த போய் அம்மாவின் கால்களை கட்டிப் பிடித்தேன்.
★ ★ ★ கோயில் மணி அடிக்கிறது. நேரத்தை பார்க்கிறேன் அதிகாலை ஐந்த மணி. ஒவ்வொருவராக அசைவது, எழுவது தெரிகிறது. அவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது நான் இன்னும் உறங்கவே இல்லை என்பது.
வீட்டைக்கூட்டுவதும் முற்றத்தைக்கூட்டிப் பெருக்குவதும் நேற்றைய சமையல் பாத்திரங்களை கழுவுவதுமாகப் பெண்கள் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கினர். ஆண்கள் தேநீர் வரும்வரை படுக்கைப் பாயில் அங்குமிங்குமாக சோம்பிக் கிடந்தனர்.
படுக்கையை விட்டெழு எனக்கு மனம் வரவில்லை. எல்லாப் பெண்களுக்கும் ஆணை பிறப்பிக்கும் தோரணையில் பொன்னம்மா மாமியின் குரல் ஏறி உயர்ந்த கேட்கிறது. இப்படியான நன்மை தீமைக்காரியங்களில் எல்லோரும் பொன்னம்மா மாமியின் ஆணைகளை சிரமேற் கொண்டு ஏற்றுத்தானாக வேண்டும்.
இல்லாத போனால் தேவையில்லாத பிரச்சனைகள் வரும். பொன்னம்மா மாமி கோவித்துக் கொண்டு போய் விடுவா.
"நீங்க தான் மாமி எல்லாவற்றையும் பொறுப்பேற்றி நடாத்தி முடிக்க வேண்டும் என்று விட்டால் அறுபத்தைந்து வயதுக்கு மேற்பட்ட ஒருத்தி என்று சொல்ல முடியாத அளவுக்கு உஷாராக நின்று எல்லா காரியங்களையும் ஒப்பேற்றி வைப்பா.”
அம்மாவின் ஒன்று விட்ட தம்பியின் மனைவிதான் பொன்னம்மா மாமி. ஆள் கொஞ்சம் வாய்க்காரி என்றபடியாலும் ஒரு இடத்தில் சின்னப் பிழை நடந்தாலும் ஊரெல்லாம் முரசறைந்த திரிகிற சுபாவம் என்ற படியாலும் அம்மா முதலாக எல்லோரும் கொஞ்சம் பயந்து நடப்பதுதான் வழக்கம்.
“டேய் எழும்புங்கோடா. வெய்யில் குண்டியில படேக்கை எழும்பினால் காரியம் முடியுமோ? எழும்புங்கோடா.”
எல்லோரும் ஒவ்வொருவராக எழும்பவும் தேனீர் கையில் கிடைக்கவும் சரியாக இருந்தது.
"நீ தேத்தண்ணி கீத்தண்ணி குடிச்சிடாதை காடாத்து முடிஞ்சாப்பிறகு தான் சாப்பிட்டாலென்ன தேத்தண்ணி குடிச்சாலென்ன..சரியே.”
என்னைப் பார்த்துத்தான் சொன்னா, நான் ஓம் என்று தலையாட்டுகிறேன்.

இன்னுமோர் உலகம் 81
"வெயில் ஏற முந்தி காடாத்தை முடிச்சிட்டு வாங்கோ. பிந்தினால் சுடலையில நிற்க மாட்டியள்.”
மீண்டும் எல்லோருக்கும் ஆணை பிறந்தது. என்னுடன் எண் அத்தான் மார் இரண்டுபேர். ஒன்று விட்ட அண்ணன்மார் இரண்டு பேர். காரியங்களை ஒழுங்காக செய்த முடிக்கக் கூடிய கொஞ்சம் விஷயமறிந்த சித்தப்பாமுறையானவர் எல்லோரையும் கேற்றுக்கு வெளியே ஒப்பாரி வைத்து சுடலைக்கு வழியனுப்பி வைத்தார்கள். பொன்னம்மா மாமி தலைமையிலான பெரியக்கா உட்பட அயல்வாழ் உறவுப் பெண்கள். ஒருவாறாக காடாத்த முடித்த சுடலையால் வந்த விட்டோம். தோய்ந்த, குளித்த மாட்டுக்கு குழை கொடுத்து அம்மி மிதித்த மூன்று தடவை சுற்றியதம் காடாத்துக்கான எனது கடமை முடிந்ததாக எண்ணிக் கொண்டேன். இனி காடாத்துப் படையல் மட்டும் தான்.
மூத்தக்கா வந்தா "இடியப்பம் தோசையள் வந்த கிடக்கு போய் சாப்பிடு” என்றா. எனது மனைவியை கண்டதும்.
“அவன் நேற்றும் முந்தநாளும் ஒரு நேரச் சாப்பாடு கூட ஒழுங்காக சாப்பிடேல்லை. உங்கை இடியப்பம் தோசையள் கணக்க வந்து கிடக்கு அவனுக்கு சாப்பாட்டை கொண்டு வந்து கொடுங்கோ’
என்ற போது மூத்தக்கா சொன்னபடி கொஞ்சம் சாப்பிடுவம் என்று மனம் சொல்லியது.
மனைவி கொண்டு வந்த சாப்பாட்டை கையில் வாங்கிக் கொண்டேன். 'நீங்கள் சாப்பிட்டியளோ பிள்ளைகள் சாப்பிட்டதுகளோ’ கேட்டுத் திருப்திப்பட்டுக் கொண்டேன்.
சாப்பிட்டு விட்டு கை கழுவும் போது பொன்னம்மா மாமி வந்தா, என்னைப் பார்த்த திடுக்கிட்டுப் போனா.
“அட .நீ சாப்பிட்டிட்டியே. என்ன கோதாரி.காடாத்தப் படையல் இன்னும் முடியேல்லை அதுக்குள்ள அவசரப்பட்டு சாப்பிட்டிட்டியே’
நானும் திடுக்கிட்டு விட்டேன். மூத்தக்கா எண் மனைவி எல்லோரும் ஏதோ தவறு செய்து விட்டது போல பயந்து கொண்டு நின்றார்கள்.
'நீங்கள் தானே மாமி காலமை சொன்னீங்கள் காடாத்த முடிஞ்சாப்பிறகு தான் சாப்பிட வேணுமெண்டு. சுடலையில காடாத்த முடிஞ்சு வந்திட்டம் தானே அதனாலே தான் சாப்பிட்டன்.”
"அது தம்பி காடாத்த படையல் முடிஞ்சு அதிலை தான் நீ சாப்பிட வேணும். என்ன வேலை இத”
“சரி.சரி.பசி வந்திட்டுதாக்கும் தம்பி சாப்பிட்டுது உதைப்பிரச்சனை ஆக்காதீங்கோ.போய் மற்ற அலுவல்களை பாருங்கோ’
இது அண்ணியின் குரல்.

Page 49
82 கொற்றை பி. கிருஷ்ணானந்தன்
"அப்படியில்லை. அண்ணி நான் எவ்வளவு நேரமும் பசி கிடப்பண். காடாத்த முடிஞ்சாப் பிறகு சாப்பிடலாம் எண்டதை நான் பிழையாக விளங்கிட்டன்.” “என்ன பிழையாய் விளங்கிட்டன் எண்டிறாய். குழந்தை பிள்ளை மாதிரி.” மாமி கடறிய படியே பின்னுக்குப் போய் சமையல் பகுதியில் நிற்கும் பெண்களுக்கெல்லாம் பட்டயம் வாசிப்பது எனக்குக் கேட்கிறது.
எனக்கும் மனம் குழம்பிவிட்டது. காடாத்தப் படையல் இப்போது ஆரம்பித்து விட்ட படியால் பயபக்தியுடன் அம்மாவை நினைத்துக் கொண்டு சித்தப்பா சொல்லுகிற படி படையல் காரியங்களை செய்து கொண்டிருந்தேன்.
படையல் முடிந்ததும் அம்மாவை நினைத்துக் கொண்டு எல்லா உணவு வகைகளிலும் ஒவ்வோரு பிடியாக எடுத்த வாழை இலையில் போட்டுக் கொண்டிருந்தேன். இவை பசு மாட்டுக்கு கொடுக்கப்பட வேண்டுமாம்.
“கொள்ளிக்காரன் தன்னைப்பெத்த தாயின்ரை காடாத்தப்படையல் முடிய முந்தி சாப்பிட்டதெண்டால் இனி என்ன செய்து மென்ன? இதை யாரும் கேள்விப் பட்டால் சிரிக்கப் போகினம்’
மாமி இன்னும் ஓயவில்லை. படையல் அலுவல்களை முடித்துக் கொண்டு எழும்பி வருகிறேன்.
'மாமி . அம்மா இதுக்கு முந்தி ஒரு நாளும் சாகேல்லை. இப்பதான் முதன் முறையா செத்தவ. நானும் முதன் முறையாகத்தான் கொள்ளி வைச்சனான். அதனாலை எனக்கு முன் அனுபவமில்லை..ம்ம். அதோடை நான் ஏதும் வேலைப்பிராக்கிலை சாப்பிடாமல் பசியோடை இருந்தால் தான் அம்மா என்னோடை சண்டைக்கு வாறவ. நேரத்துக்கு நாண் சாப்பிட்டனெண் டால் அவ சந்தோஷப்படுகிறவ. இண்டைக்கு நான் சாப்பிட்டதாலை அம்மாவினரை ஆத்மா சந்தோஷப்படுமே தவிர அதாலை ஒரு பிரச்சினையுமில்லை. நீங்கள் எங்கடை மனங்களை குழப்பாமலிருந்தாலே போதும்’
சொல்லி விட்டுத் திரும்பினேன். அங்கிருந்தவர்களின் முகங்களில் ஒரு வித திருப்தி தென்பட்டதை நான் அவதானிக்கத் தவற வில்லை.
('உதயன் வெள்ளி விழா பரிசுக் கதை - 2010)
 

இன்னுமோர் உலகம் 83
நிர்மலா மிகவும் சந்தோஷமாகவும் உற்சாகமாகவும் இருந்தாள். பிள்ளைகள் மூவரையும் யாழ்நகருக்கு பஸ்ஸில் கூட்டிச்சென்று அவர்களுக்கும் தனக்கும் விருப்பமான நல்ல உடுப்புகளை வாங்கிக் கொண்டு இப்போது தான் வந்திருந்தாள்.
பெரியம்மாவின் மகள் ரூபாவின் திருமணத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. அதனால்தான் நிர்மலாவின் உள்ளத்தில் உற்சாக வெள்ளம் கரைபுரண்டோடிக் கொண்டிருந்தது.

Page 50
84 கொற்றை பி. கிருஷ்ணானந்தன்
இது நிர்மலா ஒழுங்கு பண்ணிய திருமணம். இதற்கு முன்னரும் நாலைந்து திருமணங்கள் ஒழுங்கு பண்ணிச் செய்து வைத்திருக்கிறாள் தான். அந்தக் குடும்பங்கள் சீரும், சிறப்புமாக வாழ்வதை பார்த்துப் பெருமிதம் அடைந்திருக்கிறாள் தான்
ஆனால் இந்தக் கல்யாணத்தை அவள் ஒழுங்கு செய்து முடித்தது அவளைப் பொறுத்த வரை ஒரு சாதனையாகத்தான் நினைக்கிறாள். பெரியம்மாவின் குடும்பத்தினரும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
வெளிநாட்டு வருமானமுள்ள பெரியம்மாவின் குடும்பம் பொருளாதார ரீதியாகப் பரவாயில்லாமலிருந்தது. ஆனால் முப்பத்தொரு வயது கடந்த ரூபா கன்னியாகவே இருப்பதற்கு காரணமும் இருந்தது.
பிறப்பிலேயே ரூபாவின் கால் சற்றுக் கூழை, அதனால் நடக்கும் போது வித்தியாசம் தெரிந்தது. சிறுபிள்ளையாக இருக்கும் போது அவளும் அதைப் பெரிது படுத்தவில்லை. பாடசாலை விளையாட்டுக்களில் பங்கு பற்றுவதை மட்டும் தவிர்த்து வந்தாள்.
உயர் வகுப்புக்கு வந்ததும் அவள் சற்று நொண்டி நடப்பது பற்றிக் கேட்பவர்களுக்குக் காரணம் சொல்ல வேண்டியிருப்பதும் பலர் முன்னிலையில் அப்படி நடப்பதற்கு தயக்கமாக இருப்பதம் அவள் படிப்பை தொடர மறுப்பதற்கு ஏதவாக அமைந்த விட்டன.
திருமண வயதை எட்டியதம் ரூபாவுக்கு மாப்பிள்ளை தேடாத ஊரே இல்லை என்றே சொல்லலாம். ரூபாவுக்கு மாப்பிள்ளை தேடும் கல்யாணத் தரகர்களுக்கு ஊக்க மாத்திரையாக அவ்வப்போது கொடுக்கும் ஆயிரம் இரண்டாயிரங்கள் இலட்சத்தை தாண்டியிருந்தன.
மூன்று அண்ணன்மார்கள் வெளிநாட்டில் இருந்து உழைத்து வீட்டிற்கு அனுப்பிக் கொண்டிருந்தும் என்ன பிரயோசனம். எத்தனை இலட்சங்களை சீதனமாக கொடுத்தென்றாலும் தங்கச்சிக்கு நல்ல மாப்பிள்ளையாகப் பார்த்த செய்து வையுங்கள் என்று அவர்கள் தினமும் ரெலிபோனில் நச்சரித்துக் கொண்டிரந்தாலும் மாப்பிள்ளை கிடைக்க வேண்டுமே.
சீதனத் தொகையை கருத்திற் கொண்டாவது ரூபாவின் காலின் குறைபாட்டைப் பொருட்படுத்தாமல் திருமணத்திற்கு யாராவது முன் வருவார்கள் என்ற நம்பிக்கையும் அடியோடு போய் விட்டது.
இந்த நிலைமையில் தான் ஒருநாள் அந்தி நேரத்தில் பெரியம்மா நிர்மலாவை தேடி வந்தா.
“வாங்கோ பெரியம்மா. உதிலை இருங்கோ கிட்டக் கிட்ட இருந்தம் ஒராளை ஒராள் காணுறதே இப்ப அருமையாய் போயிட்டுத’

இன்னுமோர் உலகம் 85
"நீ இப்ப எங்கடை பக்கம் வாறதையே குறைச்சுப் போட்டாய். உன்னையும் ஒருக்கால் பாக்க வேணும் போல இருந்தது. ஒரு அலுவலும் உன்னோட கதைக்க வேணும் அது தான் வந்தனான்.
“எங்கை பெரியம்மா நேரம் . மூத்தவன் இந்த முறை ஏ.எல் சோதினை எடுக்கிறான். அடுத்தவன் ஓ.எல். கடைக்குட்டி கிருஷாந்தி எட்டாம் வகுப்பு. அதுகள் பள்ளிக்கூடம் ரியூசன் எண்டு போறதுக்கு ஏற்றதுகளை செய்து கொடுக்கவே எனக்கு நேரம் சரியாய்ப் போய் விடும். அதுக்கும் மேலாலை எனக்கும் பள்ளிக்கூட வேலைகள் பிறகு செமினார் அது இதெண்டு சனி ஞாயிறு இடைக்கிடை செலவழிஞ்சு போயிடும். பிறகெங்கை சொந்தம் பந்தமெண்டு திரிய நேரங்கிடக்கு.
நிர்மலா அலுத்துக் கொண்டாள். “அதுவுஞ் சரிதான். புருசன் பெண்டாட்டி எண்டு இரண்டு பேருமாய் உள்ளதுகளே வீட்டு வேலைகளை சமாளிக்க முடியாமல் திண்டாடுதுகள். நீ தனியன் அதுவும் கைம்பெண்டாடிச்சி என்னெண்டுதான் சமாளிக்கிறது. அது பெரிய காரியம் தான்.
“ஓம் பெரியம்மா அவர் போய் பத்து வருடமாயிட்டுத. அவர் இல்லாத குறை தெரியாமல் பிள்ளைகளை இவ்வளவுக்குக் கொண்டு வந்திட்டன். இனி மேலும் அப்படிச் சமாளிச்சுப் போடுவண் எண்ட நம்பிக்கை இருக்கு. இனிக் கடவுள் விட்ட வழி.”
இதைக் காதில் வாங்கிக் கொண்டு பெரியம்மா தான் வந்த விஷயத்தை தொடங்கினா.
“பிள்ளை நிர்மலா. ஊருலகத்தில பல பேருக்கு நீ கலியாணம் பேசி முடிச்சிருக்கிறாய். உண்ரை தங்கச்சி அததான் எங்கடை ரூபாவுக்கு ஒரு மாப்பிள்ளை பாத்துச் சரிப்பண்ணித் தாறாயில்லை. அவளுக்கும் வயது ஏறிக் கொண்டு போய்விட்டுத”.
“என்ன பெரியம்மா கதைக்கிறியள். நீங்கள். அதை எனக்குச் சொல்ல வேணுமே. அவள் என்ர தங்கச்சியல்லே. நானும் எனக்குத் தெரிஞ்ச ஆட்களிட்டை சொல்லி முயற்சி செய்து கொண்டு தானிருக்கிறன். இன்னும் பலன் வரேல்ல போல கிடக்கு எதுக்கும் நீங்கள் புறோக்கர்மார் மூலம் முயற்சி செய்யிறதையும் கை விட்டிடாதையுங்கோ. அவளுக்கு வயதம் கூடி விட்டதாலை நானும் இனி முழுமூச்சாய் இறங்கிறன். எல்லாம் நல்ல மாதிரி நடக்கும் பயப்படாதையுங்கோ’
மேலும் பலதும் பத்தும் கதைத்தார்கள். பிறகு பெரியம்மா விடைபெற்றுக் கொண்டு சென்று விட்டா.

Page 51
86 கொற்றை பி. கிருஷ்ணானந்தன்
பெரியம்மா போனதும் கடைக்குட்டிக்குக் கணித பாடம் சொல்லிக் கொடுத்தாள். பின்னர் இரவு உணவைத் தயாரிப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருக்க சிந்தனை மட்டும் பின்னோக்கி நகர்ந்தது.
நிர்மலா பக்கத்து ஊரில் உள்ள பாடசாலையில் இப்போது பிரதி அதிபரைக இருக்கிறாள். அவள் உதவி ஆசிரியையாக இருக்கும் காலத்தில்தான் அந்தக் கொடூரம் நிகழ்ந்தது.
அண்று ஒரு ஞாயிற்றுக்கிழமை. தபால் அதிபராக இருந்த அவளது கணவன் நாளாந்த தேவைக்குரிய சமையல் சாமான்கள் மற்றும் மரக்கறிகள் வாங்குவதற்காக வல்வெட்டித்துறைச் சந்தைக்குப் போயிருந்தான். சந்தைக்கருகே இராணுவத்தினருக்கும் இயக்கத்திற்குமிடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் மாண்டு போன பொது மக்களின் பட்டியலில் அவனும் இடம் பெற்று இவள் இளமையிலேயே விதவையாக்கப்பட்டாள்.
ஒரு வருடம் வேலையும் வீடுமாகத் தன்னை ஒடுக்கிக் கொண்ட நிர்மலா நாளடைவில் தன்னைச் சுதாகரித்துக் கொண்டாள். தான் எற்கனவே ஈடுபாடு காட்டி செயற்பட்டுக் கொண்டிருந்த பெண் விடுதலை அமைப்பு மாதர் சங்கங்கள் முதலியவற்றில் மீண்டும் உற்சாகமாக செயற்பட்டாள். தான் எல்லாவற்றிலும் ஒதுங்கிக் கொண்டிருந்தால் தனது பிள்ளைகளும் தாழ்வுச் சிக்கலில் மாட்டிக் கொண்டு விடுவார்கள் என்பதை உணர்ந்த நல்ல நாள் பெருநாட்களில் பிள்ளைகளைக் கோயில்களுக்கு கூட்டிச் சென்றாள். ஊரில் நடக்கின்ற திருமணங்கள் புதுவீடு முதலானவற்றுக்கு முறையான அன்பான அழைப்புக் கிடைத்தால் பிள்ளைகளுடன் போய் கலந்து கொண்டாள்.
ஆயினும் விதவைகள் விஷயத்தில் பழமை பேணும் சிலரால் கடைப்பிடிக்கப்பட்டு வரும் மூடநம்பிக்கைகளில் தனக்கு நம்பிக்கை இல்லாது விட்டாலும் மற்றவர்கள் விஷயத்தில் இவள் தன்னைத் தவிர்த்தே வந்தாள். திருமணத்தில் கலந்து கொண்டாலும் கல்யாண வீட்டுக்காரர் முற்போக்காகச் சிந்தித்து முழுமனத்துடன் வந்து வற்புறுத்தி அழைத்தாலொழிய அறுகரிசி போட்டு வாழ்த்தவத முதலானவற்றுக்கு முண்டியடிக்கும் வரிசையில் அவள் சேர்ந்து கொள்வதில்லை. திருமணத்தில் கலந்து கொண்ட திருப்தியுடன் வீட்டிற்கு வந்த விடுவாள்.
இது புறம் இருக்க. பெரியம்மாவின் மகள் ருபாவின் திருமண நாளில் அதே சுப வேளையில் நிர்மலாவின் பாடசாலை ஆசிரியராக இருக்கும் நிமலனின் புதுமனைப் புகுவிழாவும் இருந்தத.
நிமலன் நிர்மலாவின் நேசத்துக்குரியவன் மாத்திரமல்ல ஒரு உடன் பிறந்த சகோதரன் போலவே நிர்மலாவின் நன்மை தீமை யாவற்றிலும் மனைவி

இன்னுமோர் உலகம் 87
சகிதம் வந்த முன் நிற்பவன். அதே போல தன் வீட்டு விஷேசங்கள் யாவற்றிலும் நிர்மலாவை முன்னுக்கு வைப்பவன். நிர்மலாவின் கையால் சித்திரை வருடப் பிறப்பு போன்ற நல்ல நாட்களில் கை விஷேசம் வாங்கித் திருப்தி கொள்பவன். பிரச்சினையான சந்தர்ப்பங்களில் நிர்மலாவை அக்காவாக நினைத்து ஆலோசனை கேட்டு அதன்படி நடப்பவன்.
நேற்றுத்தான் புதுமனை புகு விழாவுக்குரிய அழைப்பிதழையும் கொண்டு நிமலனும் மனைவியும் முதற்பத்திரிகை வைப்பதற்காக நிர்மலா வீட்டிற்கு வந்திருந்தனர்.
"அக்கா அந்த நேரத்துக்கு மட்டும் வந்திட்டு போகாமல் பிள்ளையளோடை வெள்ளண வந்த எல்லாவற்றையும் முன்நிண்டு நடத்த வேணும்.”
இருவரும் ஏகோபித்த குரலில் வேண்டுகோள் விடுத்தனர். “இல்லை நிமல். இந்த முறை எனக்கு நீங்கள் மன்னிப்பு தர வேணும் உங்கடை கல்யாணம் முதற் கொண்டு பிள்ளையளின்ற தொட்டிலாட்டு வைபவம் வரை எல்லாவற்றுக்கும் நான் நாள் முழுவதும் நிண்டனான். பெரியம்மா வீட்டிலை கன காலத்திற்குப் பிறகு ஒரு நல்ல காரியம் நடக்குது. அது நான் பேசி முடிக்கிற கல்யாணம். நான் நிற்காவிட்டால் பெரியம்மா கோவிப்பா, என்ர நிலைமையை நீங்கள் இரண்டு பேரும் தயவு செய்து புரிஞ்சு கொள்ள வேணும்.”
நிர்மலா இப்படி சொன்னதுமே அவர்களின் முகம் கறுத்து விட்டது. 'நீங்கள் உரிய நேரத்தில் நிற்காவிட்டால் எங்களை பொறுத்த வரையிலை அது பெரிய குறைதான். சரி பறவாயில்லையக்கா, முதல் நாள் புதுவீட்டுக்கு ஐயர் வந்த சாந்தி செய்யப் போறார். அதுக்காவது வந்த நில்லுங்கோ, பிறகு அடுத்த நாள் உங்கடை பெரியம்மா வீட்டுக்கலியாணம் முடிஞ்சவுடனேயே எங்கட வீட்டுக்கு வந்திடுங்கோ’
முடிஞ்ச உடனேயே நிச்சயமாக நாண் வந்த விடுவன். நீங்க சந்தோஷமாக போய் வாங்கோ.”
அவர்களை வழியனுப்பிவிட்டு வந்த நிர்மலாவுக்கு அவர்களை நினைக்கவும் சங்கடமாகத்தான் இருந்தது. ஆனாலும் அதைவிட இந்தக் கல்யாணம் அவளுக்கு முக்கியமானது. ஏனென்றால் ரூபாவுக்கு மாப்பிள்ளை தேடி களைத்தப் போய் கடைசியில் தனது தம்பியுடன் படித்து சமுர்த்தி உத்தியோகத்தராக இருக்கும் தம்பியின் உயிர் நண்பன் முகுந்தனை அவனிடமே நேரில் கேட்டு சம்மதம் பெற்றாள். பின்னர் தாய் தகப்பனிடம் போய்ப் பேசிய போது அவர்கள் ரூபாவின் குறைபாட்டை எடுத்துக்காட்டி தயக்கம் தெரிவித்தனர். பின்னர் நிர்மலாவின் மேல் வைத்திருக்கும் அன்பையும் மதிப்பையும் கருத்திற் கொண்டு திருமணத்திற்குச் சம்மதித்தனர். சாதகப் பொருத்தம் திருப்தியாக அமைந்தமை. எல்லாவற்றிற்கும் சாதகமாகி விட்டது.

Page 52
88 கொற்றை பி. கிருஷ்ணானந்தன்
இப்படியாகப் பாடுபட்டு பேசி முடிவாக்கிய நிர்மலா கல்யாணத்திற்கு நிற்காமல் புது வீடு வைபவத்திற்கு போக முடியுமா என்ன? நிர்மலா தனக்குள் திருப்திப் பட்டுக் கொண்டாள்.
நினைவில் மூழ்கியபடியே அன்று வாங்கிவந்த உடுப்புகளை சீராக அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள். யாரோ வருவது போல உணர்ந்தவள் வாசற்பக்கம் பார்க்க பெரியம்மா வந்து கொண்டிருப்பது தெரிந்தது.
“வாங்கோ பெரியம்மா. இருங்கோ’ “பிள்ளை ஆறுதலாக நானிருக்க எங்கையடா எனக்கு நேரம்? அங்கை பலகாரங்கள் சுட்டுக் கொண்டிருக்கினம். அதுக்கிடையில் உன்னட்டை வந்த கதையொண்டு சொல்லிப் போட்டுப் போக வேணுமெண்டு ஓடி வந்தனான்.”
சொல்லுங்கோ பெரியம்மா” “பிள்ளை இது நீ பேசி முடிச்ச கல்யாணம். ஆனால் நீ புருசனை இழந்தவள். கைம் பெண்டாட்டிச்சியெண்டு கல்யாணத்தக்கு வராமல் நிண்டிடுவாய். அந்தப் பயத்திலதான் நான் இப்ப ஓடி வந்தனான். நீ வராமல் விட்டிடாதை தாலி கட்டி மாப்பிள்ளை பொம்பிளை கால் மாறி அவைவிட்டை போய் வந்தாப் பிறகு பின்னேரம் நீ வரத்தான் வேணும். பிறகாவது நீ வரத்தான் வேணுமெண்டு சொல்லிவிட்டு போகத்தான் இப்ப நான் வந்தனான்.”
நிர்மலா திகைத்துப் போய் பெரியம்மாவை பார்த்துக் கொண்டு நின்றாள். “சரி பிள்ளை நான் போயிட்டு வாறன்’ பெரியம்மா போய்க் கொண்டிருந்தா. திகைப்பிலிருந்த விடுபட்ட நிர்மலா பிள்ளைகளுடன் புது வீட்டுக் கொண்டாட்டத்திற்கே நேரத்தோடு போய் நிற்பதற்கு முடிவு செய்து கொண்டாள்.
('மல்லிகை ஆண்டு மலர் - 2011)

இன்னுமோர் உலகம் 89
இரண்டு மூன்று நாட்களாக வீடு அமர்க்களப்பட்டுக் கொண்டிருக்கிறது. தவேஸ் மாமாவைக் கூட்டிக்கொண்டு வந்த வீட்டு வளவிலுள்ள புற்களையெல்லாம் வெட்டுவித்த தப்புரவு செய்து கொண்டிருந்தாள் தாரணி
தானும் கூடவே நின்று புற்கள், கற்கள் எல்லாவற்றையும் அள்ளிக் கூட்டி நார்க்கடகத்திற்குள் நிரப்பி, நிரப்பி பக்கத்துக் காணிக்குள் தார்ந்து போய்க்கொண்டிருக்கின்ற பாழ்ங் கிணற்றுக்குள் கொட்டிக்கொண்டிருந்தாள் தாரணி

Page 53
90 கொற்றை பி. கிருஷ்ணானந்தன்
யாழினி வீட்டைத் தாசி தட்டிக் கொண்டிருந்தாள். மாலினி முற்றத்திலும் மதில் கரையிலும் நிற்கும் பூச்செடிகளை ஒரே மட்டத்திற்குக் கத்தரித்துக் கொண்டிருந்தாள்.
“பெண்பிள்ளைகள் இருக்கின்ற வீடு சிறப்பாக இருக்கும். சுத்தமாக இருக்கும், அலங்காரமாக இருக்கும், இலட்சுமிகரமாக இருக்கும்’
இத்திராவுக்கு அடுத்தடுத்து மூன்றும் பெண்பிள்ளைகள் பிறந்தபோது உறவினர்கள் இப்படித்தான் சொல்லிவைத்தார்கள்.
அப்போதெல்லாம் - தனக்கு ஒரு ஆண்பிள்ளை இல்லையே என்று கவலைப்படாதபடி ஏதோ சொல்லுகிறார்கள் என்றுதான் இந்திரா நினைத்தாள். ஆனால் அவர்கள் உண்மையைத்தான் சொன்னார்கள் என்பதை இந்திரா இப்போது
உண்மைதான் முன்பெல்லாம் கணவன் தன் வேலையும் ஆளுமாகத் திரிய, வீட்டு வேலை முழுவதையும் இந்திரா தனியொருத்தியாகவே
வேலைமுடியாத,
இப்போது பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள். பாடசாலைநேரம் ரியூசன் நேரம் தவிர்ந்த ஏனைய வேளைகளில் பிள்ளைகள் வேலைகளைப் பங்கிட்டுச் செய்வதால் இந்திரா எவ்வளவோ ஆறுதல் அனுபவிக்கிறாள்.
ஆனால் இந்திரா இப்போது வாதநோயினால் படுகின்ற அவஸ்தை ஒருபக்கம். சிலசமயங்களில் கிழமைக் கணக்காகப் படுக்கையிலிருக்கவேண்டிய சந்தர்ப்பங்களும் ஏற்படுவதுண்டு. பெண்பிள்ளைகள் என்ற படியால் ஏதோ சமாளித்துக் கொண்டு போகின்றார்கள். தங்களால் இயலாத வேலைகள் என்றால் தவேஸ் மாமாவைத்தான் அழைப்பார்கள்.
தவேஸ் மாமா என்றால் உண்மையில் இவர்களுக்கு மாமா முறையில் உள்ளவரல்ல. எங்கோயிருந்து வந்த பக்கத்து ஊரில் திருமணம் செயதவர். கூலிவேலைக்கு வருகின்ற வேறொரு சமூகத்து ஆளை மாமா என்று அழைத்து அதிக உரிமைகள் சலுகைகள் வழங்குவதை இவர்களது உறவினர்கள் விரும்புவதில்லை. அதைப்பற்றி இவர்கள் கவலைப்படுவதில்லை.
மனைவி இறந்தபின்னர் ஒரேயொரு மகனைத் தாய்க்குத்தாயாகவும் இருந்து வளர்த்து வந்தார். தனது முதுமைக்காலத்தில் மகனது நிழலே தனக்குத் தஞ்சம் தரும் என மனப்பால் குடித்தார்.
மகனோ கடுக்கண்டதும் அடுத்த ஊரில் பெண்ணெடுத்துக் கொண்டு அங்கேயே தங்கிவிட்டான். நல்லநாள் பெருநாள் என்றால் மட்டும் பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு வருவான். தகப்பனின் உழைப்பில் ஏதும் மிச்சம் இருந்தால் அதையும் வாங்கிக்கொண்டு போய் விடுவான்.

இன்னுமோர் உலகம் 91
வயது அறுபதைத் தாண்டிய முதுமைக்காலத்தில் கூட ஒருநாள் இல்லை ஒருநாள் என்று ஏதோ கூலிவேலை செய்து காலத்தை ஒட்டிக் கொண்டிருக்கிறார். தவேஸ் மாமாவின் முதுமை காரணமாக பெரிதாக இப்போது ஊரில் ஒருவரும் வேலைக்குக் கூப்பிடுவதில்லை.
ஆனால் இவர்கள் மட்டும் கிழமையில் ஒருநாளாவது கூப்பிடுவார்கள். விறகு கொத்துவது, வீட்டுவளவுக்குள் நிற்கும் வாழை மரங்களுக்குத்தண்ணீர் பாய்ச்சுவது, வரம்பு கட்டுவது, தென்னம் பிள்ளைகளுக்குப் பசளை தாழ்ப்பது என்று ஏதோ வேலை இருக்கும்.
தட்டித்தவறி வேறு யாராவது வேலைக்குக் கூப்பிட்டால் அது இவர்கள் வேலைக்கு வரச் சொன்ன நாளாக இருந்தாலுங்கூட இங்கு வராமல் அங்குபோய் விடுவார். காரணம் இங்கு எப்படியோ தனக்காக வேலை காத்திருக்கும் என்ற அசையாத நம்பிக்கைதான்.
இப்படி இரண்டு மூன்று சந்தர்ப்பங்களில் தாங்கள் திட்டமிட்டபடி தங்களுக்கும் வசதியான நாட்களில் வேலை முடித்துத் தரவில்லையே என்ற ஆத்திரத்தில் இனி இவர் இங்கு வேலைக்கு வரத்தேவையில்லை என்று தாரணி சத்தம் போட்டிருக்கிறாள்.
அப்போதெல்லாம் தாய் கூறுவது இதுதான் 'பாவமடி வேலையில்லாத நேரத்திலை எங்கையெண்டாலும் வேலை கிடைச்சாச் செய்யட்டும். நேரம் கிடைச்ச வேளையிலை இஞ்சை வரட்டும்; சாமாளிச்சு நடவுங்கோ’ அப்படியிருந்தம்,
“நாளைக்கு வரட்டும் நான் நாலு கேள்வி கேட்கிறான்’ என்பாள் தாரணி ஆனால் தவேஸ் மாமா நேரில் வரும்போது ஏசுவதற்கு அவளுக்கும் மனம் இருக்காது.
இப்போதெல்லாம் முதமையின் நிமித்தம் தவேஸ் மாமாவுக்கு வேலை ஓடாது. களைப்பு வந்ததும் அடிக்கடி போய் உட்காருவார். வெற்றிலை சப்புவார். “வெத்திலை சப்பாதவன் கூலி வேலைக்குப் போகக் கூடாது.” இந்தக்கிராமத்து வழக்கு மொழியை தாரணி இடையிடையே தாய்க்கும் தமக்கைமாருக்கும் சொல்லிச் சிரிப்பாள், தவேஸ் மாமாவுக்கு கேட்டுவிடாதபடி, வேலைக்கு ஏற்றபடி வழமையான கூலியான எழுநாறு ரூபாவைக் குறைத்து ஐநாறு ரூபாவைக் கொடுப்போம் என்ற பிரேரணையை முன்வைத்தாள் தாரணி
ஆனால் சபையில் ஏனைய அங்கத்தவர்கள் ஏற்றுக் கொள்ளாததனால் இந்தப்பிரேரணை நிறை வேற்றப்படவில்லை.
"அவர் தன்னால் இயலக்கூடியதைச் செய்து விட்டுப்போகட்டும், கூலியைக் குறைத்துப் பாவம் செய்ய வேண்டாம்”

Page 54
92 கொற்றை பி. கிருஷ்ணானந்தன்
இதுதான் ஏனைய அங்கத்தவர்களுடைய உறுதியான அபிப்பிராயம். வேலையில்லாத நேரங்களிலேயோ இருமல் காய்ச்சல் என்று வந்த நேரங்களிலேயோ இங்கு வந்த நூறு, இருநாறு என்று வாங்கிக் கொண்டு போவார். பிறகு கடலியில் கழிக்கும்படி, ஆனால் இவர்கள் அதைக் கூலியில் பிடிப்பதேயில்லை.
இந்தமுறை வீடுவளவு எல்லாவற்றையும் சுத்தமாக்குவதிலும் அழகு படுத்துவதிலும் தவே ஸ் மாமாவை முழுமையாகப் பயனர் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களைப் பொறுத்தவரையில் இந்தமுறை மிகவும் விஷேசமான ஒரு தைப்பொங்கல்.
இந்தப் புது வீடு கட்டிக் குடிபுகுந்து நான்கு வருடங்கள் கழிந்து விட்டன. இன்னுமே இந்த வீட்டில் தைப்பொங்கல் நாளுக்குப் பொங்கிப் படைக்கவில்லை.
அதற்குக் காரணங்களும் இல்லாமலில்லை முதல்வருடம் அப்பப்பா.அதாவது அப்பாவின் அப்பா.அடுத்தவருடம் அப்பம்மா.
அடுத்த அடுத்த வருஷங்களில் பெரியப்பா. இளையத்தையின்மாமா. ஒப்பந்தம் செய்து கொண்டதுபோல் வரிசைகட்டி இந்தப் பூவுலகை விட்டுப் போய்விட்டார்கள்.
இப்படியே குடும்பத்தில் நான்குபேர் மறைந்தபடியால் நான்கு வருஷங்களுமே பொங்காமல் கழிந்து விட்டன. அதனாற்தான் இம்முறை பெரிய அமர்க்களமாகச் செய்வதில் ஆர்வமாக இருக்கிறார்கள்.
தடக்குக் காரணமாக இம்முறை பொங்கல் இல்லாத பூபாலு மாமா முதற் கொண்டு பெரியத்தான், ஆனந்தன், விவேகானந்தன் மாமாவரை யார் யாருக்கு பொங்கல் கொடுத்தனுப்பவேண்டும் என்று சிறு பட்டியலும் வைத்திருக்கிறார்கள். தவேஸ் மாமா இரண்டு நாளைக்கு முன்னர் விறகு கொத்திவிட்டுப் போனவர் வேலை செய்யக்கூடிய அளவுக்கு உடம்பு கொஞ்சம் சரியில்லை என்று சொன்னவர். பொழுது போகவில்லை என்று நேற்றுச் சும்மா வந்தார். காலைச்சாப்பாட்டை இங்கேயே தேநீருடன் முடித்தார்.
பிறகும் கனநேரம் இருந்து தாயுடன் ஏதோவெலாம் கதைத்ததையும், இடையிடையே மகன் மருமக்கள் பேரப்பிள்ளைகள் பற்றி கதை போய்கொண்டிருப்பதையும் தாரணி அவதானித்தாள். பிறகு தவேஸ் மாமா புறப்பட்டுவிட்டார்.
“மத்தியானமாகுது பெட்டையள் சமையல் முடிச்சிட்டாளவை. நில்லுங்கோ அண்ணை சாப்பிட்டிட்டுப்போகலாம்”
இந்திரா தவேஸண்ணையை மறித்தாள்.

இன்னுமோர் உலகம் 93
“இல்லையடா தங்கச்சி இப்பதானே காலைமைச் சாப்பாடு திண்டானான். பசிக்கேல்லை இன்னும் ஐஞ்சு நாளையிலை பொங்கல் வருகுத தானே அண்டைக்கு வாறன் சாப்பிடுறன்.”
என்றாலும் இவர்கள் விடவில்லை. ஒரு சாப்பாட்டு பார்சலைக் கொண்டுவந்த கையில் திணித்தாள் தாரணி
அடுத்தநாள் காலை இவர்களுக்குப் பால் கொண்டு வருகிற ஈசன்மாமா பாற்போத்தலுடன் பரபரப்பாக ஓடிவருகிறார்.
“ஆசையக்கா. தவேஸண்ணை ராத்திரிச் செத்துப்போனாராம்.” இதயமே நின்று விட்டது போலிருந்தது எல்லோருக்கும். வீட்டுவேலைகளில் மூழ்கியிருந்தவர்கள் போட்டது போட்டபடி அப்படியே உட்கார்ந்து விட்டார்கள்.
“ஏண்ரா ஈசன் என்ன நடந்தது.” இந்திரா பதட்டத்துடன் கேட்டாள். “ராத்திரி நெஞ்சுக்கை குத்தது எண்டவராம். ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோறதுக்குள்ள சீவன் போவிட்டுதாம்’
எல்லோருமே வெளிக் கிட்டுப் போய் விட்டார்கள். நெருங்கிய உறவுகளுக்குள் நடந்த நன்மை தீமைகளுக்குக் கூட குமர்ப்பிள்ளைகளான இவர்கள் மூவரும் ஒன்றாகப் போனது கிடையாது.
பின்னேரம் வரை நின்று அவரது இறுதிச்சடங்குகள் யாவும் முடிந்த பின்னர்தான் வீட்டிற்கு வந்தார்கள். வரமுன்னர் தவேஸ் மாமாவின் மகனின் கைக்குள் இரகசியமாக ஒரு ஐயாயிரம் ரூபாவை வைத்த விட்டு வந்தாள் இந்திரா.
மூன்று நாட்கள் கழிந்த விட்டன. நாளை விடிந்தால் தைப்பொங்கல். யாழினி சொன்னாள்.
"அம்மா இன்னும் புதுப் பானை வாங்கேல்லை. நானும் தங்கைச்சியும் வண்ணன் அண்ணாவின் ஓட்டோவிலை நெல்லியடிக்குப் போய் புதுப்பானை. பச்சையரிசி முதற்கொண்டு வாழைப்பழம் வரை எல்லாச்சாமானையும் வாங்கிவாறம் காசைத்தாங்கோ அம்மா.”
“வேண்டாம் வேண்டாம் இந்த முறையும் பொங்கவேண்டாம்” தாரணிதான் கத்தினாள். "உறவு எண்டால் சொந்தத்திற்குள்ளைதான் இருக்கவேணுமெண்டில்லை. தவேஸ் மாமாவும் எங்கடை உறவினரிலை ஒருவர் மாதிரித்தான் நடந்து கொண்டவர். இந்த வருஷமும் துக்கம்தான். நாங்கள் பொங்கவேண்டாம்.”
> e

Page 55
E4 கொற்றை பி. கிருஷ்ணானந்தன்
பொழுது விடிந்த இவ்வளவு நேரமாகியும் படுக்கையை விட்டு எழும்ப வேண்டுமென்ற எண்ணம் இவளுக்கு ஏற்படவில்லை. பிள்ளைகள்
படுத்திருக்கிறார்கள். அந்த பாய்கள் கூட தொண்டு நிறுவனங்களால் கொடுக்கப்பட்டவை தான். அப்படியும் கிடைக்காதிருந்நால் அவர்களத படுக்கையும் எப்படியிருக்குமோ?
 
 

இன்னுமோர் உலகம் 95
இன்று சனிக்கிழமை என்ற படியால் பாடசாலைக்குப் போகத் தேவையில்லை. அப்படி ஒரு திருப்தியில் தான் காலையில் கண் விழித்த பிறகும் எழும்பாமலே படுத்திருக்கிறார்கள்.
மற்றப் பிள்ளைகள் போல சனி ஞாயிறு என்றதும் ரியூசன் அது இது என்று இவர்கள் விரைவதுமில்லை. அதற்கு வசதியுமில்லை.
புத்தம் முடிந்து வெளிக்கிட்டு இரண்டு வருடங்களாகி விட்டன. இங்கு வந்த சேர்ந்த ஒன்றரை வருஷ காலத்தில் இவள் பெற்ற அனுபவங்கள் ஐம்பது வருச காலத்தில் பட்டுப் பெற வேண்டியவை. எத்தனை விதமான மனிதர்கள். எத்தனை விதமான சம்பவங்கள்.
கண்ணுக்கு முன்னே கணவனும் இரண்டு பிள்ளைகளும் குண்டு வீச்சில் சிதறிப் போக உறவுகள் என்றில்லாத அயலவரோடு பட்டு அனுபவித்த வெறுமை வறுமை எல்லாம் விரட்டிய வழியின் படி பிறந்த இடத்திற்கு வந்த சேர்ந்தவள் இவள்,
காலம் இவளது முகத்திலிருந்து சிரிப்பு என்பதை முற்றாகவே வழித்தத் துடைத்திருந்தது. விழிகளில் ஒளி என்பது எப்போதோ காணாமற் போய் விட்டது. தனது வாழ்க்கை இத்தனை பொட்டலாகிச் சிதிலமாகிவிடுமென்று இவள் எள்ளளவும் எண்ணியிருக்க ApI, ALITAS தான்.
இவள் எல்லாவற்றைறையும் இழந்த இந்த ஊருக்கு வந்த போது இவளது ஒரே ஒரு அண்ணன் இவளைக் கட்டிப்பிடித்துக் கதறி அழுதான் அச்சம் இன்னமும் கலையாமல் விழி பிதுங்கிக் கொண்டு நின்ற பெண் மருமக்களை கட்டியணைத்த மாமா நான் இருக்கிறேன் என்று ஆறுதல் கூறினான். தனது வீட்டு வளவுக்குள்ளேயே சிறிய கொட்டில் போட்டு இருக்க வைத்து அடைக்கலம் தந்தான். ஒரு கிழமையாய் ஒன்றாக சமைத்துச் சாப்பிட வைத்தான்.
இவர்கள் வந்த சேதியறிந்து உறவினர்கள் ஒருநாள் இரண்டு நாள் என்று சமைத்த உணவாகக் கொண்டு வந்த கொடுத்தார்கள். ஆள் தவறாமல் வந்த ஆறுதல் கூறினார்கள்.
இவள் நெக்குருகிப் போனாள். தானாடா விட்ாலும் தன் தசையாடும் எண்பார்களே. படித்த பழமொழியை நினைத்துப் பார்த்தாள்.
இவ்வளவு காலமும் இந்த உறவுகளையெல்லாம் விட்டுப்பிரிந்து வன்னியில் வாழ்ந்தமைக்காக கவலைப்பட்டாள். இப்போதாவது தனி பிள்ளைச் செல்வங்களுக்கு தன் சொந்தங்களை அறிந்து கொள்ளவும் பழகவும் சந்தர்ப்பம் கிடைத்ததற்காக இந்த தக்கத்திலும் மனதில் ஆறுதல் உண்டாகியிருப்பதை உணர்ந்தாள்.

Page 56
96 战 கொற்றை பி. கிருஷ்ணானந்தன்
வன்னியில் மீள் குடியேற்றம் நிகழ்ந்த போது ஒரு முறை போய் வீட்டைப் பார்த்து வந்தாள். வீடு பெரிதாக சேதமடையவில்லை என்பது மனதுக்கு கொஞ்சம் நிம்மதியை தந்தது. விவசாய காணி புதர் மண்டிக் கிடந்தது.
சந்தர்ப்பம் கிடைக்கும் போது வன்னிக்குச் சென்று அங்குள்ள வீட்டையும் விவசாயக் காணியையும் விற்று விட்டு இங்கேயே ஒரு காணி வாங்கி குடியிருக்க வேண்டும். தானும் பிள்ளைகளும் உறவுகளோடு சேர்ந்த வாழ வேண்டும். அது தான் எப்போதம் பலம் என்று நினைத்துக் கொண்டாள்.
இப்போது தொண்டு நிறுவனங்களிடமிருந்தும் அரசாங்கத்திடமிருந்தும் நிவாரணச் சாமான்கள் கிடைக்கத் தொடங்கியமையால் தனியாகவே சமையலை செய்ய தொடங்கி விட்டிருந்தாள்.
இப்போது இவள் தஞசம் புகுந்துள்ள வீடு அமைந்துள்ள காணியில் ஒரு காலத்தில் இவளுக்கும் உரித்து இருந்தது. தகப்பன் தாய் பெரிய வசதியானவர்கள் அல்ல. மூன்று பரப்பு கொண்ட காணியில் ஒரு சிறு குடிசையில் குடியிருந்தார்கள். இவளது அண்ணன் சிறு வயதிலேயே வேலைக்குப் போனவன். தாயின் மாறாத வருத்தத்திற்கு அவன் உழைத்து நிறையவே செலவு செய்தவன் தாய் செத்த போது செத்த வீட்டுச் செலவு அந்தியெட்டி செலவு என்றெல்லாம் ஏற்பட்ட கடன்களை கடினமாக உழைத்து தீர்த்தவன். அதே போல தனக்கும் அவன் தானே எல்லாம் என்று நினைத்து வழமைக்கும் மாறாக மகளுக்கும் மகனுக்கும் தகப்பன் சமமாகவே காணியைப் பங்கிட்டு எழுதிக் கொடுத்தார்.
பிறகு வன்னிக்கு இடம் பெயர்ந்து போன போது இவள் அங்கே காதலித்துக் கல்யாணம் செய்த விட்டாள். இதனால் மற்றவர்கள் திரும்பி வந்த போது இவள் அங்கேயே கணவனோடு தங்கி விட்டாள்.
இவள் கணவனும் நல்ல உழைப்பாளி சிறியதொரு பலசரக்குக் கடையோடு மட்டும் நின்று விடாது தனக்குச் சொந்தமான ஒரு ஏக்கள் வயலில் பாடுபட்டுழைத்து நல்ல அறுவடையை கண்டு வந்தான். இவளும் அவனோடு சேர்ந்து பாடுபட்டாள். கொஞ்சக் காசும் கையிருப்பில் சேரத் தொடங்கியது.
ஆறு பிள்ளைகளாக குடும்பம் பெருத்து விட்டது. இனியாவது ஒரு நல்ல வீடு கட்டவேண்டு மென்ற ஆசை இருவருக்கும் வந்த விட்டது.
வீடும் கட்டி முடிக்கக் கொஞ்சக் கடனும் வந்த விட்டது. வட்டியில் மூழ்கி விடாமல் கடனை அடைத்து விட வேண்டுமென்ற முடிவில் இவள் ஊருக்கு வந்தாள். தனது ஒன்றரைப் பரப்புக் காணியை கறாராக விலை பேசாமல் அண்ணனுக்கே விற்றாள்.
காணியை தமையனுக்கு விற்கும் போது கையெழுத்து வைக்கும் தருணத்தில் நெஞ்சில் ஒரு வலி ஏற்பட்டதை இவள் அப்போது உணராமலில்லை.

இன்னுமோர் உலகம் 97
இவளுக்குத் தெரியும். தகப்பன் உயிரோடு இருந்திருந்தால் இவள் பிறந்த
இடத்துக் காணியை விற்று விட்டு ஒரு சோந்தையும் இல்லாமல் முற்றுமுழுதாக தொடர்பைத் தண்டித்துக் கொண்டு போக அனுமதித்திருக்க மாட்டார் என்று. காணி விற்ற காசை கொண்டு வந்த வீட்டுக்கடனை அடைத்தாள்.
இப்போது குடும்ப வண்டி சந்தோஷமாக ஓடிக் கொண்டிருந்தது. இந்தச் சமயத்தில்தான் அந்தப் பிரளயம் தொடங்கியது.
இரண்டு குழந்தைகளையும் புருஷனையும் பறி கொடுத்து விட்டு முகாம் வாழ்க்கையை முடித்துக் கொண்டு பிறந்த மண்ணை நோக்கி ஓடியவளுக்கு ஏமாற்றாமல் அடைக்கலம் கொடுத்தது உறவுகள்தான்.
இப்போது அடுத்தடுத்த இரண்டு பேர் வயதுக்கு வந்த விட்டார்கள். அவர்களுக்கு வயது கூடக்கூட செலவும் கூடிக் கொண்டு போனது. இரண்டு பேர் குமராக இருக்கிறார்கள் என்ற மனச்சுமை வேறு.
ஒரேயோரு பெடியன் சின்ன வயசிலேயே மேசன் கூலியாகப் போய் வந்த கொண்டிருந்த நாட்களில் பரவாயில்லாமல் குடும்பம் நடந்தது. கொஞ்சக் காலமாக ஒழுங்காக வேலை கிடைப்பதில்லை. நிவாரணச்சாமான்களும் வெகுவாகக் குறைந்த விட்டன. மூன்று நேரம் சாப்பிட்டு அது இரண்டு நேரமாகி ஒரு நேரத்திற்கே தடுமாற வேண்டிய நிலைமை ஏற்படத் தொடங்கியது.
அண்ணர் காலையில் வேலைக்குப் போய் இரவில் வருவதற்கிடையில அண்ணியின் புறுபுறுப்பு குத்தல்கதைகள் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்து இப்போது பெரு வளர்ச்சி கண்டிருந்தது.
கொஞ்ச நாட்களுக்கு முன்னர் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகளுக்கிடையில் சண்டை ஏற்பட்டு சத்தம் கேட்க இவள் வெளியில் வராமலே உள்ளிருந்து அவதானித்தாள்.
தமையனின் மகள் தாயிடம் ஏதோ முறையிட இவளது மகளும் ஏதோ பதிலுக்கு விளக்கம் கொடுக்க
“தரித்திரங்கள். நீ இதுகளோட விளையாட வேண்டாம். உள்ள வா.’ அண்ணி மெதுவாகச் சொன்னாலும் அது முள்ளிவாய்க்கால் செல்வீச்சையும் மிஞ்சியதாக அகோரமாக காதுள் சல்லடையிட்டு நெஞ்சைப் பிளந்தது.
எது நடந்தாலும் அண்ணனுக்குச் சொல்வதில்லை. சொல்லி அவர்களுக்குள் பிரச்சினை உருவாக்கக் கூடாது என்பதில் இவள் உறுதியாக இருந்தாள்.
என்றாலும் ஆரம்பத்தில் இருந்ததைப் போல அண்ணனும் இப்போது இல்லை என்ற எண்ணம் இவள் மனதில் லேசாக அரும்பத் தொடங்கியது.

Page 57
98 * கொற்றை பி. கிருஷ்ணானந்தன்
முன்பென்றால் மரக்கறி தேங்காய் வகையென்றாலென்ன, வேலைக்குப் போகாமல் நிற்கின்ற நேரங்களில் மீன் இறைச்சி வகையென்றாலென்ன, தங்களுக்கு வாங்கும் போது தங்கச்சிக்கும் வாங்கி வந்து கொடுப்பதை வழமையாகக் கொண்டிருந்தான். இப்போது அதைத் தவிர்த்து வந்தான்.
முன் போல தங்கையுடனோ மருமக்களுடனோ வந்திருந்த மனம் திறந்த கதைப்பது கிடையாது. அவசிய அலுவல் இருந்தால் மட்டுமே அவர்களுடன் பேச்சுவார்த்தை வைத்திருந்தான். அதிலும் கசிவு கனிவு துளியும் இருப்பதில்லை. இந்த ஒரு மாத காலத்துள் நடந்த இரண்டு சாமத்திய வீட்டுக் கொண்டாட்டங்கள் இவளை பெரிதாக வெகுவாக பாதித்துவிட்டன. ஒன்று சிறிய தாயார் வீட்டிலும் இன்னொன்று மச்சாள் வீட்டிலும் மிக ஆடம்பரமாக அரங்கேறின. மச்சாள் வீட்டிற்குத் தவிர்க்க முடியாமல் அழைக்கப்பட்டார்களே தவிர உறவு முறையின்படி தோழிக்கு நிற்க வேண்டிய இவளது பிள்ளைகளில் ஒன்றுக்காவது அந்தக் கெளரவம் கொடுக்கப் படவில்லை.
அதுதான் போகட்டும் சிறியதாயார் வீட்டில் யார் யாரையோ எல்லாம் கூடப்பிட்டு வற்புறுத்தி வீடியோ போட்டோ எல்லாம் எடுக்கிறார்கள். சும்மா ஒப்புக்காகவேனும் இவற்றுக்கு இவளையோ பிள்ளைகளையோ ஒருவரும் அழைக்கவேயில்லை. இவர்களுடைய வறுமைத் தோற்றம்தான் இவற்றுக்கெல்லாம் காரணம் என்பதை இவளும் உணராமலில்லை. ஒரு ஓரமாக நின்று அப்பாவித் தனமான விடுப்புப் பார்த்துக் கொண்டு நின்ற பிள்ளைகளை அழுைத்தக் கொண்டு யாருக்கும் சொல்லிக் கொள்ளாமல் வீடு வந்த சேர்ந்து விட்டாள்.
போனகிழமை ஐஸ்கிறீம் வாகனம் பாடிக் கொண்டே வீட்டுத் தெருவில் நின்ற போது இவளது பிள்ளைகள் வீட்டு விறாந்தையிலிருந்த பார்த்துக் கொண்டிருக்க தமையன் தனது பிள்ளைக்கு மட்டும் ஐஸ்கிறீம் வாங்கிக் கொடுத்தக் கூட்டிக் கொண்டு வந்தானே. அதுதான் நினைவில் வரும் போதெல்லாம் இன்று வரை இவளுக்கு அருவருப்பாய் வருகிறது.
நேற்றுத் தமையனின் பிள்ளையுடன் விளையாடிக் கொண்டிருந்த இவளது மூன்றாவது மகள் மத்தியானச் சாப்பாட்டிற்கு சம்பல் அரைத்துக் கொண்டிருந்த இவளிடம் இரகசியம் சொல்ல முற்படுகிறாள்.
*@p" “என்னம்மா சொல்லு’
“ஏனம்மா பேசாமல் நிற்கிறாய். சொல்ல வந்ததைச் சொல்லடா' “மகளின் முகத்தில் ஒருவித தயக்கமும் அங்கலாய்ப்பும் தென்பட்டதை இவள் அவதானிக்கிறாள்.

இன்னுமோர் உலகம் 99
"அம்மா .மாமா வீட்டிலை இண்டைக்கு கோழி இறைச்சி சமைத்துச் சாப்பிடுகினம். எண்னை சாப்பிட கேட்கேல்லை.”
பிள்ளையின் வாயை இவள் இறுகப் பொத்துகிறாள். கலங்கிய கண்களில் பழைய நினைவுகள் நிழலாடுகிறது.
அண்ணன் ஆசையுடன் சொல்லியனுப்பச் சொல்லியனுப்ப எத்தனை தடவை வன்னியிலிருந்து பன்றி இறைச்சி மான் இறைச்சி முயல் இறைச்சி என்று ஒழித்த மறைத்து யாரிடமாவுது கொடுத்தனுப்பி இருக்கிறாள். நல்ல காட்டுத்தேன் அனுப்பியிருக்கிறாள். இவளோ புருஷனோ இங்கு வருகின்ற சந்தாப்பங்களிலெல்லாம் கொண்டுவந்த கொடுத்திருக்கிறார்கள். இவர்களுக்கு மட்டுமல்ல நெருங்கிய உறவுகளுக்கும் தான்.
பிள்ளைகள் கண்டு விடாதபடி வழிந்தோடும் கண்ணிரைத் துடைத்து விடுகிறாள். இருள் சூழ்ந்த ஒரு வனாந்தரத்துள் தனித்த விடப்பட்டு விட்டதான ஓர் உணர்வு உறவுகள் என்று யாரைப் பார்த்தாலும் பேய் பிசாசுகளாக சூனியக் காரர்களாகவே இவளது கண்களுக்குத் தெரிகிறது.
ஒரு முடிவுக்கு வருகிறாள். நாளை காலை பள்ளிக் கூடத்திற்குப் போய் பிள்ளைகளை பள்ளிக் கூடடத்திலிருந்து மாற்றுவதற்குரிய பத்திரங்களைப் பெற்றுக்கொண்டு வந்த விட வேண்டும். அடுத்த நாளே வன்னிக்குப் புறப்பட்டு தங்கள் வீட்டைத் திருத்திக் குடியிருப்பதற்கான அலுவலையும் விவசாயக் காணியைத் திருத்துவதற்கான அலுவலையும் பார்க்க வேண்டும் என்பது தான் அது.
(பருத்தித்துறைப் பிரதேச செயலகம், சிறுகதைத்தொகுதி - 2012)

Page 58
1OO
கொற்றை பி. கிருஷ்ணானந்தன்
இந் நூலின் பங்காளிகள்
★
தி. ஞானசேகரன் (ஞானம்) திருமதி ஞானம் ஞானசேகரன்
டொமினிக் ஜீவா (மல்லிகை)
க. பரணிதரன் (ஜீவநதி)
ஆசி. நடராஜா (யாழ். தினக்குரல்)
திருமதி ரேணுகா பிரபாகரன் பி. அற்புதானந்தன் (வீரகேசரி வாரமலர்)
ச. ம . கானமயில்நாதன் (உதயன்)
தெணியான்
GlaF. (ŠuUITG5JITFIT
சீனா, உதயகுமார்
ஓவியர் கெளதமன் (ஞானம்)
சி. இந்திரன்
யுனி ஆர்ட்ஸ் (பிறைவேட்) லிமிடட்


Page 59


Page 60
ஆரம்பத்தில் கவியரங்கம், நாடக மாதகாலத் தொட பி. கிருஷ்ணானந்த தனது முதற்கவி ஈழத்துச்சஞ்சிகைக: நாட்டு நிலைமை க கீழே வைத்துவிட் அஞ்ஞாதவாசம் ெ மீண்டும் எழு 2007 முதல் பை கணிசமான சிறுகை பரிசில்களும் பெற்று மொழி இன்றி இல நேர்த்தியான மொ எழுத்துக்களில் ெ காணப்படுகின்றன. அதன் பாதிப்பின கலைநயத்துடன் அவ்வப்போது உதிரி தொகுக்கப்பெற்று வெற்றி படைப்பாக பெறுகின்றன. பலது வருகின்ற இவர் ப வங்கிச் சேவையில்
முகாமையாளராகப் தன்னை இவர் அன உன்னதமான இல கூறுவார்கள். இந்தக் தொகுப்பினைப் படி என நம்புகின்றேன்.
PRIMJEDEM JNE ARIS (PVT) LTD.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இலங்கை வானொலியைத் தளமாகக் கொண்டு ம், "இதிகாசங்களும் கதாபாத்திரங்களும்” என நான்கு ர்கட்டுரை என்பவற்றை வழங்கிவந்தவர் கொற்றை ன். அக்காலகட்டத்தில் 1972 ‘ஈழநாடு’ பத்திரிகையில் தையை எழுதினார். அதனைத் தொடர்ந்து ா, பத்திரிகைகளில் இவரது கவிதைகள் வெளிவந்தன.
ரணமாகப் படைப்பாளிகள் சிலர் தங்கள் பேனாக்களைக் டு மெளனமாக இருந்தவேளை இவரும் இலக்கிய ய்தார்.
டக்கத் தொடங்கினார். மிகக்குறுகிய காலத்துக்குள் தகளை எழுதி இருப்பதுடன் போட்டிகளில் பங்குபற்றி
க்கொண்டார். இக்கியங்களின் மூல அலகு மொழிதான்.
க்கியங்கள் பிறப்பதில்லை. கலை அம்சம் இழையோடும் ஜிப் பிரயோக எழுத்து இலக்கியமாகின்றது. இவரது ாழியின் வீச்சு மொழிச்சிறப்பு என்பன இயல்பாகக்
இவர் வாழும் சமுதாயத்தை அவதானித்துப் பார்த்து
ால் எழுதிக்கொண்டிருக்கின்றார். அந்தப் பார்வை
வெளிப்படும்போது இலக்கியம் உருவாகின்றது.
துவதற்கு ஆரம்பித்து கவிதைகளுடன் சிறுகதைகளும்
களாக வெளிவரும் படைப்புக்கள் பின்னர் ஒரு நூலாகத்
வெளிவரும் சமயத்திலேயே அந்தப் படைப்புக்களின்
ரியின் ஆளுமை என்பன சரியான கணிப்பைப்
றைசார் இலக்கியங்களிலும் வெகு ஈடுபாடு காட்டி
ல்கலைக்கழக கல்விக்கான சந்தர்ப்பத்தைக் கைவிட்டு இணைந்து இன்று பருத்தித்துறை மக்கள்வங்கி
பதவி வகித்து வருகின்றார். ஒரு கவிஞராக முன்னரே
டையாளப்படுத்திக் கொண்டுள்ள ஒரு படைப்பாளி மிக க்கியப்படைப்புக்கள் “கவிதை போல” என விதந்து கவிஞரின் இன்னுமோர் உலகம்' என்னும் சிறுகதைத் த்துப் பார்த்து நல்லதொரு அனுபவத்தைப் பெறுவீர்கள்
- தெணியான்
||| |
OOMEO 3 E395 விலை: ரூபா 250
ISBN: 978-955-8354-42-1