கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலங்கரை: யா/ உடுப்பிட்டி மகளிர் கல்லூரி 2011

Page 1

ស្ត្រីក្លាល្ងា

Page 2


Page 3

யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரி
தூரநோக்கு "முறையான கல்விச் செயற்பாடுகள் மூலம் தேர்ச்சி பெற்று, ஒழுக்கமும் பண்புமுள்ள ஒரு சமூகத்தை உருவாக்குதல்.”
நோக்கக் கூற்று
"ஆசிரிய ஆளணியினரை உலகமயமாக்கலுக்கு உள்வாங்கி வாண்மை விருத்திக்கு ஊக்கமளித்தலினூடாக மாணவிகளைத் தற்கால உலகுடன் இணைந்து செயற்படத்தக்கதான தகவல் தொழில்நுட்ப அறிவையும் கல்வியறிவையும் மனித விழுமியங்களையும் அறியச் செய்து சிறந்த நற்பிரஜைகளாக உருவாக்குவதற்குச் செயற்பாட்டுடன் கூடிய கல்வியைப் போதித்தல், அதற்குத் தேவையான வளங்களைப் பெற்றுக் கல்லூரியின் கவிநிலையை செம்மைப்படுத்தல்.”

Page 4

கற்றல் வள நிலையம்
தூரநோக்கு
“எதிர்கால உலகின் சமநிலை பேணத்தக்க மனிதப் பண்புள்ள வளமான
மாணவர்களை உருவாக்கும் நிலையமாக மிளிர்தல்”
பணிக்கூற்று
“பாடசாலைச் சமூகத்திற்குத் தேவையான தகவல் வளங்களை வழங்குவதோடு தகவல்களைத் தேடிச் சுயமாகக் கற்கும் திறனை வளர்ப்பதன் மூலம் புத்தாக்கங்களைப் படைப்பதற்கும் தொடர் கல்விக்குமான வழியைக் காட்டி மகிழ்ச்சிகரமான வாழ்வுக்குரிய நற்பிரஜைகளை உருவாக்கும் கற்றல் வள நிலையமாகச் செயற்படுதல்.”

Page 5
இதழின் பெயர் :
ஆலோசகர்
இதழாசிரியர்
தட்டச்சுப்பதிப்பு:
பதிப்பு
பக்கம்
வெளியீடு
உரிமை :
அச்சுப்பதிப்பு
கலங்கரை இதழ் - 2 (வாசிப்பு மாத சிறப்புச் சஞ்சிகை)
திருமதி.L.N.ஜோசேப் (அதிபர்)
திருமதி. ம. செல்வரஞ்சினி (ஆசிரிய நூலகர்)
திருமதி. ம. செல்வரஞ்சினி
நவெம்பர் 2011.
68 -- iX
நூலக வாசகர் வட்டம், யா/ உடுப்பிட்டி மகளிர் கல்லூரி, வல்வெட்டித்துறை.
நூலக வாசகர் வட்டம், யா/ உடுப்பிட்டி மகளிர் கல்லூரி, வல்வெட்டித்துறை.
Dial Net, Nelliady.

கற்றல் வள நிலையம்
தூரநோக்கு
“எதிர்கால உலகின் சமநிலை பேணத்தக்க மனிதப் பண்புள்ள வளமான
மாணவர்களை உருவாக்கும் நிலையமாக மிளிர்தல்”
பணிக்கூற்று
“பாடசாலைச் சமூகத்திற்குத் தேவையான தகவல் வளங்களை வழங்குவதோடு தகவல்களைத் தேடிச் சுயமாகக் கற்கும் திறனை வளர்ப்பதன் மூலம் புத்தாக்கங்களைப் படைப்பதற்கும் தொடர் கல்விக்குமான வழியைக் காட்டி மகிழ்ச்சிகரமான வாழ்வுக்குரிய நற்பிரஜைகளை உருவாக்கும் கற்றல் வள நிலையமாகச் செயற்படுதல்.”

Page 6
இதழின் பெயர் :
ஆலோசகர்
இதழாசிரியர்
தட்டச்சுப்பதிப்பு:
பதிப்பு
பக்கம்
வெளியீடு
உரிமை :
அச்சுப்பதிப்பு
கலங்கரை இதழ் - 2 (வாசிப்பு மாத சிறப்புச் சஞ்சிகை)
திருமதி.L.N.ஜோசேப் (அதிபர்)
திருமதி. ம. செல்வரஞ்சினி (ஆசிரிய நூலகர்)
திருமதி. ம. செல்வரஞ்சினி
நவெம்பர் 2011.
68+ix
நூலக வாசகர் வட்டம், யா/ உடுப்பிட்டி மகளிர் கல்லூரி, வல்வெட்டித்துறை.
நூலக வாசகர் வட்டம், யா/ உடுப்பிட்டி மகளிர் கல்லூரி, வல்வெட்டித்துறை.
DialNet, Nelliady.

வலயக் கல்விப் பணிப்பாளரின் ஆசிச்செய்தி
திரு.வ.செல்வராசா, வலயக் கல்விப் பணிப்பாளர், வலயக் கல்வி அலுவலகம், வடமராட்சி.
உடுப்பிட்டி மகளிர் கல்லூரி நூலக வாசகர் வட்டத்தினால் வெளியீடு செய்யப்படும் “கலங்கரை” இதழுக்கு ஆசிச்செய்தி வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன்.
இலத்திரனியல் ஊடகங்களின் வளர்ச்சியினால் ஒரு காலத்தில் உச்ச நிலையிலிருந்த வாசிப்புப் பழக்கம் தற்போது அருகிவருவது யாவரும் அறிந்த உண்மை. ஆயினும் மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை அதிகரிக்கும் நோக்குடன் பாடசாலைகள் தோறும் நூலகங்களை உருவாக்குவதுடன் அதற்கான நூல்களையும் நாம் வழங்கிவருகின்றோம். வாசிப்பினுாடான “தேடல்” மாணவர்களின் பல்வகை சார் ஆற்றல்களையும் அதிகரிக்குமென்ற நம்பிக்கை நம்மெல்லோருக்கும் உண்டு.
இவ்வகையில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி நூலக வாசகர் வட்டத்தினால் வெளியிடப்படும் “கலங்கரை” இதழ் - 2 வாசிப்பினுடான தேடலை வெளிக்காட்டுமென நம்புகின்றேன்.
“கலங்கரை” திக்குத் தெரியாது தவிக்கும் உள்ளங்களுக்கு வழிகாட்ட இறைவனின் ஆசி வேண்டி வாழ்த்துகின்றேன்.

Page 7
பிரதிக் கல்விப் பணிப்பாளரின் ஆசிச்செய்தி
திருமதி.இ.குட்டித்தம்பி, பிரதிக் கல்விப் பணிப்பாளர் (கல்வி முகாமைத்துவம்), வடமராட்சி வலயக் கல்வி அலுவலகம்.
உடுப்பிட்டி மகளிர் கல்லூரி நூலகக் கற்றல் வள நிலையத்தின் வாசிப்பு வட்டத்தின் செயற்பாடுகளில் ஒன்றாகக் கலங்கரை வெளியிடப்படுவதையிட்டுப் பேரூவகை அடைகின்றேன்.
நவீன கல்விச் சீர்திருத்தங்களுக்கு ஏற்பக் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாகப் பாடசாலை நூலகங்கள் இருக்கவேண்டும். ஆசிரியர்களும் மாணவர்களும் தமது அறிவுத் தேடலுக்கும் அறிவை விரிவுபடுத்துவதற்கும் நூலகக் கற்றல் வள நிலையத்தை முழுமையாகப் பயன்படுத்துவதற்கு வாசிப்புப் பழக்கத்தை விருத்திசெய்வது அவசியமாகும். அச்சுவடிவத்திலுள்ள நூல்களை வாசிப்பது மட்டும் இன்றைய அறிவுப் பசிக்குப் போதுமானதல்ல. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள கணனியூடான நவீன வாசிப்பு முறைமையும் பயன்படுத்தக்கூடிய ஒரு வளநிலையமாகப் பாடசாலை நூலகங்கள் மாறிவருகின்றமையை அவதானிக்கமுடிகின்றது.
இவ் வாசிப்புச் செயற்பாட்டினை மேம்படுத்துவதற்காக அதிபர், ஆசிரிய நூலகர், நூலக உதவியாளர் மற்றும் நூலக அபிவிருத்திக்குழுவினர் ஆகியோரின் முயற்சியில் இச் சஞ்சிகை தொடர்ச்சியாக வெளிவர முற்பட்டமை கல்லூரியின் வாசிப்பு மேம்பாட்டுச் செயற்பாட்டின் ஆரோக்கியமான நிலைமையை எடுத்துக்காட்டுகிறது. முதலாவது கலங்கரை வெளியீட்டின்போது இக் கல்லூரியின் அதிபராக இருந்து வாழ்த்துச்செய்தி வழங்கியிருந்தேன். இரண்டாவது இதழுக்கும் ஆசிச்செய்தி வழங்குவதில் மகிழ்வடைகின்றேன். தொடர்ந்து வரும் காலங்களிலும் கலங்கரை மென்மேலும் பூரணத்துவமடையவும் வாசகர் வட்டத்தின் செயற்பாடுகள் விரிவாக்கமடைந்து இலக்குகள் நிறைவேறவும் இறைவனின் ஆசியை வேண்டி என்றும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
நன்றி. - ii -

கல்லூரி அதிபரின் வாழ்த்துச்செய்தி
திருமதி. L.N.ஜோசேப்.
தேடல் நிறைந்த வாழ்வு அர்த்தமுடையது. அவ்வாறே தேடல் மூலம் கிடைக்கும் அறிவு நிரந்தரமானது. இன்று நவீன தொடர்பாடல் சாதனங்களின் பெருக்கம் மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தினைச் சுருக்கமடையச் செய்துள்ளது. அமைதியாக அமர்ந்து நூல்களை வாசிக்கும் பழக்கமும் அவற்றில் உள்ள விடயங்களை வாசிப்பதன் மூலம் புதிய சிந்தனைகளைப் பெற்று, மாற்றமடையும் சூழலுக்கேற்பத் தம்மையும் மாற்றிக்கொள்ளும் மனப்பக்குவமும் அருகிக்கொண்டே செல்கின்றன.
இந் நிலையில் மாற்றங் காணும் நோக்குடன் எமது நூலக வாசகர் வட்டத்தினால் வருடாவருடம் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகள் இவ்வருடமும் வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடாத்தப்பட்டன. மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இலைமறை காயாக மறைந்திருக்கும் அவர்களின் ஆற்றல்களை வெளிக்கொணரும் வகையிலும் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசில்களும் வழங்கப்படுகின்றன. இப் பரிசில் விழா நாளில் அவர்களின் ஆக்கங்களையும், ஆசிரியர்களின் கட்டுரைகளையும் தாங்கிய வண்ணம் “கலங்கரை” இரண்டாவது இதழாகக் கால்பதிக்கின்றது. இவ்விதழ் சிறப்பாக வெளிவருவதற்கு முன்னின்றுழைத்த அனைவருக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவிப்பதுடன் இவ்விதழ் தொடர்ந்து வெளிவர இறைவன் ஆசிகளை வேண்டி, “கலங்கரை” இதழ் சிறப்பாக வெளிவர வாழ்த்துகின்றேன்.
அறிவாம் கடலின் கரையினைக் காட்டும் - “கலங்கரையே நீ வாழி.
- iіі -

Page 8
வாழ்த்துச் செய்தி
திருமதி. கு. ஈஸ்வரி, பிரதி அதிபர்.
எமது பாடசாலையின் நூலக வட்டத்தினர் வெளியிடும் “கலங்கரை” 2ஆவது இதழுக்கு வாழ்த்துரை வழங்குவதில் மிக்க மகிழ்வடைகின்றேன்.
“கற்கக் கசடறக் கற்றவை கற்றபின் நிற்க அதற்குத் தக”
எனும் வள்ளுவர் வாக்கு, ஒருவன் கல்வியைக் கற்கும்போது சந்தேகமின்றிக் கற்க வேண்டும் எனக் கூறுகின்றது. மாணவர்களின் சந்தேகத்தைத் தீர்த்து வைப்பதில் ஆசிரியர்களுடன் நூலகத்தில் உள்ள நூல்களும் பெரும்பங்காற்றுகின்றன. எமது பாடசாலையின் நூலக வாசகர் வட்டம் மாணவர்களின் தேடலுக்கு வேண்டிய நூல்களை வழங்கி, கற்றல் செயற்பாடுகளை அபிவிருத்தி செய்வது பாராட்டத்தக்கது.
ஆசிரிய நூலகர், நூலக உதவியாளர் அவர்களின் விடாமுயற்சியும் மதிப்புக்குரிய அதிபர், ஆசிரியர், மாணவர்களின் ஒத்துழைப்பும் “கலங்கரை” இதழ் வெளிவருவதற்கு உந்துசக்திகளாயின. கலங்கரை அனைவருக்கும் வழிகாட்ட வேண்டுமென வாழ்த்தி இறைவனை இறைஞ்சி நிற்கின்றேன்.
நன்றி.
- iv -

மலரும் இந்த மலரைப் பற்றி .
எமது கல்லூரி நூலக வாசகர் வட்ட வெளியீடான “கலங்கரை” இவ் வருடமும் உங்கள் கரங்களில் தவழ்வதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன். கற்றலும் கற்பித்தலும் என்றிருக்கும் கல்வி நிலையத்தில் ஆக்கச் செயற்பாடுகளும் அவசியமானவை. அவை மாணவரின் ஆளுமையை விருத்தி செய்பவை. எனவே அச் செயற்பாடும் எமது கல்லூரியில் சிறப்புற நடைபெறுகிறது எனக் கட்டியம் கூறும் வகையில் இக் கலங்கரை வெளிவருகிறது.
2009ஆம் ஆண்டு வெளிவந்த கலங்கரை பாடசாலை மட்டத்தில் மட்டுமன்றிப் பாடசாலைக்கு வெளியேயும் வலய மட்டத்திலும் பெரு வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. மாணவர்கள் தங்கள் ஆக்கங்களைக் கலங்கரையில் கண்டு மகிழ்ந்தனர். மாணவரின் அறிவுப் பெரும் பயணத்திற்குக் கலங்கரை என்றும் உரியதாய் நிற்கும் என நம்புகின்றேன். தவிர்க்க முடியாத சில காரணங்களால் சென்ற வருடம் இவ் இதழ் வெளிவராமையையிட்டு மனம் வருந்துகின்றேன்.
நூலக வாசகர் வட்டத்தினரால் முதன் முதலில் (2009ஆம் ஆண்டு) “கலங்கரை” இதழ் வெளிவருவதற்குத் தூண்டுகோலாக நின்ற, எமது முன்னைநாள் அதிபரும் தற்போதைய வடமராட்சி கல்வி வலயப் பிரதிக் கல்விப்பணிப்பாளருமாகிய(கல்வி முகாமைத்துவம்) திருமதி. இ. குட்டித்தம்பி அவர்கள் என்றும் எம் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.
இம் முறை இந்தச் சஞ்சிகை வெளியிடுவது தொடர்பாக எமது அதிபர் திருமதி.எல்.என்.ஜோசேப் அவர்களிடம் அனுமதி கேட்டபோது, அதற்கான அனுமதியைத் தந்ததுடன் மட்டுமல்லாது அதற்குத் தேவையான ஆலோசனைகளையும் வழங்கி எம்மை உற்சாகப்படுத்திய அதிபர் என்றென்றும் நன்றிக்குரியவர். இதழ் வெளிவருவதற்குத் தன்னாலான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கிய பிரதி அதிபரையும் இவ்விடத்தில் நினைவுகொள்ளல் வேண்டும்.
தேசிய வாசிப்பு மாத இவ் வருடத்திற்கான தொனிப்பொருள்
“சுயதேடலூடான மானுடத்தின் மேம்பாடு’ ஆகும். இத் தொனிப்பொருளை
மையமாகக் கொண்டு வலய மட்டத்தினால் அனுப்பிவைக்கப்பட்ட
சுற்றுநிருபத்திற்கமைய மாணவரிடையே பல்வேறு போட்டிகள்
V

Page 9
நடாத்தப்பட்டன. கலங்கரை இதழின் ஆக்கங்களுக்காக மாணவர்களிடையே மேலும் பல போட்டிகளை நடாத்தினோம். இப் போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவர்களது ஆக்கங்களும் எழுது ஆசிரியர்களால் வழங்கப்பட்ட ஆக்கங்களும் இவ் இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர் களது விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
பல்வேறு வேலைப்பழுக்களுக்கு மத்தியிலும் மாணவர்களிடையே ாேட்டிகள் நடாத்தும்போது மேற்பார்வை செய்த, ஆக்கங்களை செவ்வை பார்த்த எமது ஆசிரியர்களும் போட்டி நடைபெறுவதற்கு உறுதுணையாகவிருந்த ஊழியர்களும் எம் நன்றிக்குரியவர்கள்.
இவ் இதழ் உருவாக்கத்திற்கு ஆசிச்செய்தி, வாழ்த்துச்செய்தி ஆகியவற்றை வழங்கியவர்களுக்கும், ஆக்கங்களை வழங்கியவர்களுக்கும் எம் நன்றிகள். மேலும் வாசிப்பு மாத Banner உருவாக்கம், இதழ் உருவாக்கம் ஆகியவற்றிற்கு உதவிய திரு.செ.கோபி, திரு.ந.துவாரகன் ஆகியோருக்கும், நூலகத்தின் பல்வேறு செயற்பாடுகளுக்குத் துணைபுரிந்து இந்த இதழ் வெளியீட்டிற்காகப் பல்வேறு உதவிகள் புரிந்த நூலக உதவியாளர் திருமதி.ஜெ.குணேஸ்வரன் அவர்களுக்கும் என் நன்றிகள்.
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நூல்கள்அன்பளிப்புச் செய்தவர்களுக்கும், பண உதவி செய்தவர்களுக்கும், சஞ்சிகை இறாக்கை (Periodical shelf) அன்பளிப்புச் செய்த எமது பாடசாலையின் ஒய்வு பெற்ற ஆசிரியை திருமதி. சா. முருகவேல் அவர்களுக்கும் எம் நன்றிகள்.
அத்துடன் எமது இந்த இதழ் வெளியீட்டிற்கு ஒத்துழைத்த அனைவருக்கும், இவ் இதழை அச்சுருவில் மலரச் செய்த Dial Net அச்சகத்தாருக்கும் எம் நன்றிகள்.
நன்றி.
இதழாசிரியர், திருமதி.ம.செல்வரஞ்சினி.
(இந்த இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ள ஆக்கங்களுக்கு ஆக்கியோரே பொறுப்பாளிகளவர்)
- vi

01.
02.
03.
04.
05.
06.
07.
O8.
09.
10.
11.
12.
13.
14.
யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரி
தேசிய வாசிப்பு மாதம்
நூலக வாசகர் வட்ட அபிவிருத்திக்குழு - 2011
திருமதி.எல்.என்.ஜோசேப் திருமதி.கு.ஈஸ்வரி திரு.சு.கிருஸ்ணராஜா திருமதி.க.கைலாசநாதன் திருமதி.சி.கமலசிங்கம் திருமதி.ஞா.கிருபாகரன் திருமதி.ம.செல்வரஞ்சினி திருமதி.ஜெ.குணேஸ்வரன் செல்வி.ப.கீரா செல்வி.இ.சாத்வீகா செல்வி.செ.பிரமிளா செல்வி.சு.வராகினி செல்வி.பா.பைரவி
செல்வி.து.நித்திலா
- vii
- அதிபர் - பிரதி அதிபர் - ஆசிரியர் - ஆசிரியர் - ஆசிரியர்,பா.அ.ச - ஆசிரியர் - ஆசிரிய நூலகர் - நூலக உதவியாளர் - மாணவி
- மாணவி
- மாணவி
- மாணவி
- மாணவி
- LDIT600T6)

Page 10
01.
02. 03.
04.
05.
06.
07. 08.
09.
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
நூலக வாசகர் வட்ட செயற்குழு உறுப்பினர்கள் 2011
தரம் மாணவர் பெயர்
06. A - பூலோகசிங்கம் ஏஞ்சலினா 06 B - தனேஸ்வரன் வைஷ்ணவி 06 C - சிவநாதன் லக்ஷனா
07A - பிரபாகரன் சானுகா
07 B - புவனேந்திரன் சேதுப்பிரியா 07 C - சச்சிதானந்தம் மதுசுயா 08 A - ஜெயச்சந்திரன் பானுஷா 08B - செல்வரட்ணம் வினோதினி 08 C - சுந்தர்ராஜ் நிவேதா
09A - செல்வரத்தினம் சங்கவி 09 B - நவரத்தினம் தர்சினி
10Ꭺ - சந்திரசேகர் அனோஜா 10B - சேகர் கிருத்திகா
10C - சுபாஸ்கரன் ரம்யா
11 A - குகேந்திரன் தேவப்பிரியா 11 В - ரவிச்சந்திரன் கோபிகா 11 C - பாலேந்திரன் அபிராமி 2012 Science - மகேந்திரன் மாதங்கி 2012 Com - வரதராஜன் மாதுகா 2012 Arts - கதிரவேல் வினோதா 2013 Science - குமாரலிங்கம் சுகன்யா 2013 COm -ஆனந்தகுமார் பிரியதர்சனா
2013Arts - குலசிங்கம் பகிதா
W
- viii
 

s
●
爵
冢

Page 11
: .
•
8. 3. s
*
:.
t 'ታ (:
-
,
yo,
'
t
-
"" را
. . .
-
--
- ჯ.· ·
s:
al
穹
ή. i.
تنوع
-. منبع
; ༣ " ק , .
, κ.
." ܫ ܬܐ
•i,.: \
. .
−
ܕܘ݂ ،؟
. VM 魏 *ಾ
re
፡‛
ܘ .
-
-*
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ዕሶና◊
W

Page 12

01.
02.
03.
. Thaipongal 05.
. My village 07.
08.
. ஆறிலும் சாவார் 0.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
பொருளடக்கம்
இந்து தர்மங்கள் எம்மை வாழவைக்கின்றன எழுத்துக்கள் எழுதும்போது கவனிக்கவேண்டியவை தொட்டில் குழந்தை
ராதாவும் அவளின் அறிவுப் பசியும்
கணனிக் கற்கை ஒரு பார்வை வாசிப்பு மனிதனைப் பூரணப்படுத்தும்
பெருமை பெறும் சிறுமி நான் Importance of reading உயிரின மண்டலத்தின் இயற்கை மரணம் தேடல் உள்ள மனிதன் வெற்றி காண்பான் Reading is for knowledge as well as pleasure ஈழத்துத் தமிழ்க் கவிஞர் - ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை சுயதேடலின் தேவை
Reading makes a full man பெண்ணியம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் What we gain from our school library தூய நற்கல்வி
Oh, My heart Aches எம்மை விட்டு நீங்கிச் செல்லும் பண்பாடு ஆவணமாக்கலில் பாடசாலை நூலகங்களின் பங்களிப்பு கேத்திர கணித அறிவை வளர்ப்போம் நிறுவனங்களும் தலைமைத்துவமும் பப்லோ ரூயிஸ் பிகாசோ - வாழ்க்கை வரலாறு Effective - communication காலத்துக்கேற்ற மின்நூலகம் வாசிப்புமாதப் போட்டிகளில் பரிசுபெற்றோர் விபரம் அன்பளிப்புக்கள் விபரம்
- іх -
பக்கம்
O1
05
:
12
19
20
21
23
24
25
28
29
30
33
36
38
39
47
51
53
57
60
62
64
67

Page 13

இந்து தர்மங்கள் எம்மை வாழவைக்கின்றன
திருமதி. ஈஸ்வரி குட்டித்தம்பி, B.A(Hons), Dip.in Ed.
பிரதி அதிபர்
“சனாதன தர்மம்’ என இன்றுவரை சிறப்பிக்கப்படுவது எமது இந்துமதம். பரந்த நோக்குடையதும் எல்லோருக்கும் உகந்ததுமான வாழ்வியல் அறக்கருத்துக்களைத் தன்னகத்தே கொண்டிருப்பதும் இந்துமதம் எனில் அது மிகையாகாது.
தர்மம் என்பது அறம், ஒழுக்கம், நீதி என்னும் ஒத்த பொருளைத் தரும். மனிதனின் இன்ப, துன்பங்களுக்கு அடிப்படையாக அமைவது அறமே என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதனையே எமது இந்துமத இலக்கியங்கள் போதிக்கின்றன. இப் போதனைகளை ஏற்று நடந்த பெரியோர்களும் தர்மத்தின் வழி நடத்தல் வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
“வேதோகிலோ தர்ம மூலம்”, இந்துமத முதனுலும், இறைநூலுமான வேதங்களே, தர்மங்கள் யாவற்றுக்கும் அடிப்படை எனக் கூறுகின்றது. உலகினைத் தாங்குவதும் அதை நிலைநிறுத்துவதும் ரிதமாகிய அறம் என வேதங்கள் குறிப்பிடுகின்றன. இந்த உலகத்தையே தாங்குவது அறம் எனில் நாம் அறத்துக்குக் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ளமுடியும்.
மிக உயர்ந்த ஒழுக்க விழுமியங்களையே சிறந்த அறப் பண்புகளாக, வேதாந்தம் எனப்படுகின்ற உபநிடதங்கள் போதிக்கின்றன. அனைவரிலும் தெய்வீகம் உண்டு, அனைவரையும் நேசி, அனைவரிடமும் அன்பாயிரு எனும் மனித நேயப்பண்புகளே அவையாகும். இவற்றை நாம் எமது வாழ்க்கையில் கடைப்பிடிப்போமேயானால் எமது வாழ்வு செம்மையர்னதாக அமையும் என்பதில் ஐயமில்லை.
“உண்மை பேசு, தர்ம வழியில் நட, தாயைத் தெய்வமாகப் போற்றுக். அதுபோல தந்தையை, குருவை, விருந்தினரைத் தெய்வமாகப் போற்றுக’ எனும் அறக் க்ட்டளைகளை உபநிடதங்களில் ஒன்றான

Page 14
தைத்திரிய உபநிடதம், மாணவப் பருவத்திலிருந்து இல்லறப் பருவத்துக்குப் போகும் ஒருவனுக்கு இறுதி அறிவுரையாகக் கூறியிருப்பது, வாழ்க்கைக்கு தர்மத்தின் வழிகாட்டலை இந்துமதம் போதித்திருப்பதன் உண்மை புலப்படுகின்றது. இவற்றை நாம் எமது வாழ்க்கையில் கடைப்பிடிக்கும் தன்மையிலேயே இந்து தர்மம் நிலைத்திருக்கும்.
வடமொழி இந்துமத இலக்கியங்களில் தர்ம சாத்திரங்கள், புராண இதிகாசங்கள் யாவற்றிலும் தர்மத்தின் தார்ப்பரியம் நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளன. தர்மசாத்திரங்களில் தனி மனிதனுக்குரிய தர்மங்களுடன் வாழ்க் கைப் படிநிலைகளிலுள்ளவர்களுக்கான தர்மங்களையும் கூறியுள்ளன. வர்ண தர்மம், ஆச்சிரம தர்மம், புருடார்த்த தர்மம் போன்ற பகுதிகள் தர்மத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுவனவாக உள்ளன. ஆசாரமே மேலான தர்மமென மனுதர்மசாஸ்திரம் குறிப்பிடுகின்றது. அதாவது தூய்மையாக நாம் வாழ்வதும் தர்மத்துள் அடக்கம் ஆகும்.
புராண இதிகாசங்களில், “தர்மத்தையும் ஒழுக்கத்தையும் கடைப்பிடிப்பவன் தனது பாவங்களில் இருந்து விடுபட்டு ஆத்மீகஞானம் அடைவான் ’ எனக் கூறுகளின் றது. இது DL GLD6oi Ws நல்லொழுக்கமுள்ளவர்களுக்கு நன்மை செய்வதும், அவர்களைத் தாங்கி நிற்பதும் தருமமே எனக் கூறுவதும் குறிப்பிடத்தக்கது. தர்மத்தின் வழி இவ்வுலகில் வாழ்வதற்கு ஏற்றதான வழிகாட்டல்களை இதிகாசங்கள் உள்ளடக்கி உள்ளன. இதிகாசங்களில் கூறப்படும் தர்மம் - ஒழுக்கம் பற்றிய கருத்துக்களை ஏனைய சமய இலக்கியங்கள் கையாள்வது கண்கூடானதாகும்.
மனித அறங்களின் பொக்கிஷமாகக் கருதப்படுகின்ற பகவத்கீதை, “எங்கே தர்மம் உள்ளதோ அங்கே வெற்றி உள்ளது” எனக் கூறுகின்றது. புராண இலக்கியங்களில் பிரம்ம, கருட புராணங்கள் கூறுகின்ற தர்மம் பற்றிய கருத்துக்களைப் பார்க்கும்போது இந்து தர்மங்கள் எமது வாழ்க்கையின் இம்மைக்கு மட்டுமன்றி மறுமைக்கும் வலுவூட்டுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள முடியும். “தர்மமே ஒருவனுக்கு மரணத்தின் பின்னரும் தொடர்ந்து வரும் மிக நெருங்கிய நண்பன், முழுமையும் பேரின்பமும் அளிக்கவல்ல நிரந்தரமான மூலம்’ என்பதே அதுவாகும்.
இவ்வாறு வடமொழி சார்ந்த இந்து இலக்கியங்கள், எமது வாழ்வை வளப்படுத்துகின்ற இந்து தர்மங்களைக் கூறியுள்ளன. இவை மட்டுமன்றி,
2

தமிழ் இலக்கியங்களிலும் அறம் சார்ந்த நூல்கள் எமக்கு இலகுவாக விளங்கக் கூடிய மொழிநடையில் அறக் கருத்துக் களை வலியுறுத்தியுள்ளன.
“நூல் முறை தெரிந்து சீலத்து ஒழுகு” என்ற ஒளவை வாக்கு. நீதி நூல்களில் கூறப்பட்டுள்ள நல்ல நீதி முறைகளைக் கற்று நல்ல ஒழுக்கத்துடன் வாழ் எனக் கூறியுள்ளார். “அறம் செய விரும்பு’ எனக் கூறும் ஆத்திசூடியிலும் அறத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ள முடியும். ஒளவையின் கொன்றை வேந்தனும், அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் எனக் கூறுவது அன்னை, தந்தை தெய்வத்திற்குச் சமமானவர்கள் என்பதும் புலனாகின்றது. நல்வழி என்ற ஒளவையாரின் நீதி நூலும் தர்மத்தின் வழி நல்வழி என வலியுறுத்துகின்றது.
உலகப் பொதுமறையாம் திருக்குறளில் கூறப்படுகின்ற அறமே, இந்து தர்ம வாழ்க்கைக்குப் பெரும் பங்காற்றுகின்றது எனலாம். திருக்குறளின் முப்பாலில் முதலாவதாக அமைவது அறத்துப்பால் ஆகும்.
“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது”
“அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை” என வாழ்க்கைக்கு அறத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றார். அறத்துப்பால் மட்டுமன்றி பொருட்பால், காமத்துப்பால் என்பவற்றிலும் அறமே மேலோங்கியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இன்னா நாற்பது, இனியவை நாற்பது.ஆசாரக்கோவை, நாலடியார் போன்ற அறநூல்களும் உலகநீதி, வெற்றி வேற்கை போன்ற நீதி நூல்களும் இந்து தர்மத்தையே வலியுறுத்துகின்றன.
மேற்கூறியவாறு இந்து இலக்கியங்களில் கூறப்படுகின்ற தர்மங்களை, இன்றைய காலகட்டத்தில், அவற்றில் நம்பிக்கையில்லாமல் நடந்து தமது வாழ்க்கையைத் தாமே அழித்துக்கொண்டவர்களையும் நாம் காண்கின்றோம்.
மண்ணில் நல்ல வண்ணம் வாழும் எண்ணங்களைப் பதிவு செய்த இலக்கியங்கள் இந்து ரிஷிகளால் படைக்கப்பட்டுள்ளன. பிறர் நலம், பிறருக்கான பிரார்த்தனைகள், விருந்தோம்பல் உணர்வுகள் என்பன
3

Page 15
சமயமாக, வாழ்வாதாரமாகத் தர்மமாக இந்துப் பண்பாட்டில் இணைக்கப்பட்டுள்ளமை எமது நடைமுறைத் தர்மங்களை இந்துமதம் எவ்வாறு கூறியுள்ளது என்பதைப் புரிந்து கொள்ளமுடியும்.
எனினும் “தர்மம் தலைகாக்கும்” என்ற ஆன்றோர் மொழியையும் தலைமேற்கொண்டு, இந்து தர்மங்களை நாம் வாழ்க்கையில் பேணி நடப்போமாக இருந்தால், அவை எம்மை வாழ வழிகாட்டும் கலங்கரை விளக்காக விளங்கும் என்பதில் எதுவிதமான ஐயப்பாடுமில்லை.
இங்கு ஒன்றைக் கூறிக்கொள்ள வேண்டும், இறைநம்பிக்கையின் அடிப்படையில் உண்மையான வாழ்க்கையை இந்து தர்மங்கள்
வாழவைக்கும் என்பது உறுதியானதும் முடிவானதும் ஆகும்.
“அறத்தால வருவதே இன்பம்’
எழுத்துக்கள் எழுதும்போது கவனிக்கவேண்டியவை
திருமதி. ச. மகாராஜா,
B.A, Dip.in Ed, ஆசிரியர்.
01. எழுத்துக்கள் சம அளவாக இருக்க வேண்டும். 02. எழுத்தின் இடைளிெ ஒரே அளவாக இருக்க வேண்டும். 03. சொல்லின் இடைவெளி ஒரே அளவாக இருக்க வேண்டும். 04. வரியின் காற்பகுதியிலிருந்து பந்தி தொடங்க வேண்டும். 05. எழுத்துக்களைக்கோட்டில் எழுத வேண்டும். 06. எழுத்தின் வடிவம் மாறாது இருக்க வேண்டும். 07. எழுத்து முழுமையாக இருக்க வேண்டும். 08. மெய்யெழுத்துக்களுக்குக் குற்று இட வேண்டும். 09. எழுத்துப் பிழையில்லாது எழுத வேண்டும். 10. குறியீடுகள் இட வேண்டும். 11. சொற்பிரிவுகளைக் கவனிக்க வேண்டும். 12. தனி எழுத்துக்கள் வராது பார்த்தல் வேண்டும். 13. மெய் எழுத்து முன்னே வராது பார்த்தல் வேண்டும். 14. சீரான வேகத்துடன் எழுத வேண்டும்.
4.

LustL6)T8585lb
சிதாட்டில் குழந்தை
சிநிரோவதிகா தரம் - 3
தொட்டிலிலே போட்ட குழந்தை தாலாட்டுப் பாட்டுக் கேட்டே தன் அறிவை வளர்த்தே தாய் என்ற சொல்லிலே பாலர் பள்ளி சென்றே அம்மா அப்பா என்ற சொல்லினைக் கற்று வளர்ந்து வந்ததே.
தானே கல்வி கற்றே நூலகத்திலே நூல்கள் எடுத்தே வாசித்ததை அறிவில் ஏற்றி வளரக் கல்வி படித்தே வைத்தியர், ஆசிரியர், வங்கியிலே வேலைசெய்து இத்தனையும் வாசிப்பாலே உண்டானதே.
Thai ФотдаІ
Miss.T.Mathusika Grade 5
O. We celebrated Thai Pongal festival in January. 02. We got ready for the festival by cleaning and decorating the houses. 03. On Thai Pongal day we wore new clothes. 04. We made pongal with cooking rice milk and jaggery. 05. Thai Pongal is a harvest festival. 06. The second day of the festival is called Madu Pongal. 07. On this day we treat the bulls and cows specially well, beacause they
help us to get good harvest. a 08. We bathe them and put garland offlowers round their necks. 09. I like Thai pongal festival.

Page 16
ராதாவும் அவளின் அறிவுப் பசியும்
செல்வி.ப.விதுர்சா
தரம் 11
மயில்கள் தோகைவிரித்தாடுகின்றன. பட்டாம் பூச்சிகள் மகிழ்ச்சியாகத் தேன் அருந்துகின்றன. இராணுவப் படையினர் போல அணிவகுத்து நிற்கும் அழகிய மரங்கள் காணப்படுகின்றன. பச்சைப் பசேல் எனக் காணப்படும் மலைத்தொடர்கள், அழகிய நீர்த்தடாகங்கள், பிரசித்திபெற்ற ஆலயங்கள் இத்தனை அழகு நிறைந்த அக் கிராமத்தில் மக்கள் மகிழ்ச்சியாகத் தமது தொழில்களில் ஈடுபட்டு வாழ்ந்து வந்தனர்.
அத்தனை சிறப்புப் பொருந்திய அந்தக் கிராமத்தில் ஒரு சிறிய குடிசையில் வறுமை மிகக் கொண்ட குடும்பத்தில் ராதா வாழ்ந்து வந்தாள். அவளது அம்மா கை, கால் இயங்க முடியாத நோயாளி. இதனால் தாயைப் பராமரிப்பதுடன் வீட்டு வேலைகளையும் அவளே கவனித்து வந்தாள். அவளின் அப்பா தோட்டத்தில் வேலை செய்துதான் தனது குடும்பத்தைப் பாதுகாத்து வருகின்றார். இந்த நிலையிலும் ராதா ஒரு சிறிய பாடசாலையில் தரம் 11இல் கல்வி கற்கும் மாணவி. அவளுக்குப் புத்தகம், கொப்பி வாங்குவதிலிருந்து பாடசாலைத் தேவைகளுக்கே பண வசதியில்லை. எனவே தனது படிப்பைத் தொடர மிகவும் கஸ்டமாக இருந்தது.
அவள் சில வேளைகளில் சிந்திப்பாள். இவ்வளவு அழகும் வனப்பும் பொருந்திய கிராமத்தில் ஒரு நூலகம் இல்லையே. அவள் தான் படித்துப் பெரிய எழுத்தாளராக வர வேண்டும் என்று தனது தாய்க்கும் தந்தைக்கும் அடிக்கடி கூறுவாள். அவர்கள் தமது பிள்ளையின் அறிவுப் பசியைக்கூடத் தீர்க்கமுடியாதவர்களாக உள்ளோமே என்று சிந்தித்து வருத்தமடைவார்கள்.
ஆனால் ராதா அதனையெல்லாம் விட்டுவிட்டு விடாமுயற்சியுடன் கற்றாள். அவள் கடைக்குச் செல்லும்போது அங்கே பலர் பத்திரிகைகளை எறிந்து இருப்பார்கள். அவள் அதை மிக ஆவலுடன் எடுத்து வாசிப்பாள். பார்ப்பவர்கள் அவளை ஏளனம் செய்வார்கள். அவள் அதை எல்லாம் கருத்தில் எடுப்பதில்லை. தேன் வண்டு போலத் தேடித்தேடிக் கற்றாள்.

அவள் வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்தில் ஒரு நூலகம் இருப்பதாகப் பாடசாலையில் யாரோ கூறியதைக் கேட்டு அவ்விடத்தைத் தேடி ஆராய்ந்து ஆவலுடன் நடந்து சென்றாள். அங்கு சென்று பல நூல்களைத் தேடி ஆராய்ந்து வீட்டிற்கு எடுத்து வந்து மிகவும் கவனமாகப் படித்துவிட்டு மிகவும் பத்திரமாக நூலகத்திற்குக் கொண்டு சென்று சேர்ப்பாள்.
இவ்வாறே அவள் தனது வீட்டு வேலைகள், தாயாரைக் கவனித்தல் ஆகியவற்றுடன் அந் நூலகத்திற்குச் சென்று தனக்கு வேண்டிய நூல்களை எடுத்து கற்றுத் தேறவும் தவறவிடுவதில்லை. இப்படிக் காலங்கள் ஓடிக்கொண்டிருக்க அவளின் அப்பா தன்னை விட்டுப் பிரிந்து இறந்து போனார். அப்பா இறந்த மனக்கவலையில் இனி தனது கல்வியைப் பாடசாலையில் தொடர வழியில்லை. அம்மா நான் பாடசாலைக்குப் போகமாட்டேன் என்று தாயிடம் கூறினாள். அதற்கு அவளின் தாய் மகளே நீ சிறந்த எழுத்தாளராக வரவேண்டும் என்பதே எனது ஆசையும் உனது ஆசையும். நீ பாடசாலைக் கல்வியைத் தொடர்ந்தால்தான் பெரிய எழுத்தாளராக வரமுடியும் என அறிவுரை கூறினாள்.
வீட்டின் கஸ்டம் ஒருபுறம். அம்மாவின் ஆசை ஒருபுறம். என்ன செய்வதென்று தெரியாது மிக வருத்தத்துடன் சோர்வாக ஒரு மரத்தின் கீழ் அமர்ந்திருந்தாள். காற்றோடு பறந்துவந்த செய்தித்தாள் துண்டு ஒன்றில் “நூல், நிலையம் செல். அறிவைப் பெருக்கு விடா முயற்சி வெற்றி தரும். உயர்வு உன்னிடமே” என்ற வாசகங்களைக் கண்டாள். அவள் தனக்கு ஆண்டவன் இட்ட கட்டளை அது என எண்ணி தொடர்ந்து நூலகம் சென்றாள்.
தினமும் உற்சாகமும் மகிழ்ச்சி பொங்க நூலகம் சென்று பல நூல்களை எடுத்துவந்து வீட்டில் கற்றாள். அன்று ஒரு நாள் அவள் வழமைபோல பல நூல்களை எடுத்து வந்தாள். பின்பு விளக்கு ஏற்றுவதற்குப் பார்த்தபோது எண்ணெய் இல்லை. எண்ணெய் வாங்கப் பணம் இல்லை. ஆகவே அன்றைய பாடத்தை அவள் தெருவிளக்கில் கற்றாள். இவ்வாறு நாளும் பொழுதும் அல்லும் பகலும் அயராது சழைக்காது தேடிக்கற்றுத் தேறினாள்.
இவ்வாறு இவளின் நடத்தைகளை அறிந்த நல்ல உள்ளம் கொண்ட ஒரு பெரியவர் அவளுக்குப் பெறுமதியான ஒரு புத்தகத்தைக் கொடுக்க நினைத்து அவளை அழைத்தார். அவள் பயத்துடனும் பதட்டத்துடனும் அவர் அருகே சென்றாள். அவர் அவளைப் பார்த்துப் பயப்படவேண்டாம்.

Page 17
நான் உனது வாசிப்பு ஆர்வத்தைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். அதற்குப் பரிசாக இந்த நூலை உனக்கு நான் தருகின்றேன் என்று அந் நூலை அவளிடம் கொடுத்தார்.
ராதாவிற்கு மிக்க மகிழ்ச்சி. தனக்கும் ஒரு நூல் கிடைத்துவிட்டதே என்ற மகிழ்வுடன் தாயிடம் காட்டி அதனை ஆவலுடன் வாசித்துப் பேணி வைத்திருக்க மேலும் பல நூல்கள் அவளை வந்து சேர்ந்தன. ராதா தனது முதல் சிறுகதையை எழுதி பெருவரவேற்புப் பெற்றாள். இச் சிறுகதை நூலுருவில் வெளிவர அவள் முயற்சி மிகவேகமாக முன்னேறி பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி எனவும் பார்க்கும் சஞ்சிகைகள் எங்கும் ராதாவின் ஆக்கங்கள். சமூகப்புரட்சி, உயர்ந்த கருத்துக்கள் அழியாத பொக்கிசங்களாக அச்சுருவில் வெளிவந்தன. குடிசையில் வறுமையில் வாடிய ராதா இன்று உலகம் போற்றும் எழுத்தாளர் ஆகிவிட்டாள். அன்று தன் அறிவுப் பசியைத் தீர்த்த நூல் நிலையங்கள் பலவற்றைத் தன் சொந்த முயற்சியில் அமைத்துப் பலரது அறிவுப் பசியைப் போக்கினாள்.
My village
Miss. S. Pameela
Grade - 4
01. My village is Uduppiddy. 02. My village is beautiful and natural. 03. There are schools, hospital, bank, post office and co
operative shop in my village. 04. There are many people living in my village. 05. There are paddy fields in my village. 06. There are Temples, Church and Kovil in my village. 07. My village is clean. 08. I love my village very much.

கணனிக் கற்கை ஒரு பார்வை.
திரு.ஆ.வினோதன், B.B.M.,
ஆசிரியர்.
உலகம் தற்பொழுது சுருங்கி உள்ளங்கைகளிலே வந்து விட்டது. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் எனும் புதிய பாடத்திட்டம் தற்பொழுது, காலத்தின் தேவை கருதியும் இளைய சந்ததியின் நலன் கருதியும் சம வாய்ப்புக் கல்வி வழங்கப்பட வேண்டும் எனும் உயரிய நோக்கோடு சகல பாடசாலைகளிலும் கல்வி அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.
கல்வி மறுசீரமைப்பில் ஆரம்பத்தில் 10ஆம் தரம் தொடக்கம் க.பொ.த(உத) வரை அறிமுகப்படுத்தப்பட்டிருந்த தகவல் தொழினுட்பம் எனும் பாடம் இனிவரும் காலங்களில் தரம் 6 தொடக்கம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இன்றைய சூழலில் “பாடசாலை இணையம்” என்பது ஆரம்பிக்கப்பட்டு மாணவர்கள் ஆசிரியரின் துணையின்றிச் சுயமாகக் கற்கக் கூடிய திறனைத் தொழில்நுட்பம் வழங்குகிறது. இனிவரும் காலங்களில் நேரடி வாய்மொழி மூலமான கற்பித்தல் குறைவடையும் என்றே நம்பப்படுகின்றது.
கணிதவியல் செயற்பாடுகளையும் வரைதற் செயற்பாடுகளையும் எளிதாக மேற்கொள்வதற்கான வசதிகளைக் கணனி உலகு கொண்டிருக்கிறது. வலையமைப்புக் களில் தகவல்களைத் தேடிப்பிடித்துக்கொள்ள வழிப்படுத்தும் தேடல் பொறிகள், தொடர்பூடக அம்சங்களான மின்னஞ்சல், முகநூல் (FACEBOOK) போன்றன பிரபல்யம் அடைந்து வருகிறது. எனினும் இவற்றினை சேதமாக்கக் கூடிய வைரசுகளும் அதிகமதிகம் நிகழ்ச்சிகளாக்கப்படுகின்றன.
கடித வரைவு தயாரிப்பு போன்ற விடயங்கள் முதல் உலகத்தின் கடைசி மூலையில் இருக்கக் கூடிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள இணையக் கற்கைகள் பயன்படுத்தப்படுகிறது.

Page 18
முன்னைய நாட்களில் (80 - 90) கண்களுக்கு எட்டிக் கைகளுக்கு எட்டாது இருந்து கணனி இன்று மேசைமேல் கணனி, மடிமேல் கணனி, உள்ளங்கை மேல் கணனி எனக் குறிப்பிட்டத்தக்கவர்களின் கைகளில் தவழ்கிறது. தட்டச்சுப் பாவனை மாறி வித்தைகள் புரியும் இயந்திரமாகக் கணனி மாறி வருகிறது.
மனிதனால் செயற்படுத்தப்பட்டு வந்த கணனி, இனி வரும் காலங்களில் தானே சிந்தித்துச் செயற்படக்கூடிய சிந்தனைத்திறன் கொண்ட (Artiticial intelligence) 36600T6óñat565Lb 6uJ6ñ(5ébé6ögu360I.
அத்தோடு தொழில்நிறுவனங்களில் கணனி அறிவும் ஆங்கிலத்துடன் இணைத்து வேண்டப்படுகிறது.
ஆக புத்தகக் கற்கைகள் மாத்திரம் எமது எதிர்காலத்தினைத் தீர்மானிக்காது. நவீன தொழினுட்பத் தொடர்பாடல் சாதனங்களையும் கையாளக்கூடிய திறனே எதிர்காலத்தினைத் தீர்மானிக்கும்.
எனவே எதிர்கால நவீன தொழினுட்பப் போக்குக் கருதி, அதனை உணர்ந்து கணனி பற்றிய கற்கையை மிக ஆர்வமுடன் தேடிக் கற்றல் வேண்டும்.
வாசிப்பின்போது ஒருங்கிணைவு, ஒருமைப்பாடு, உள்நோக்குடைமை, ஏற்புடைமை, தகவலுடைமை, சூழல் இயைபுடைமை, பிற பிரதித் தொடர்புடைமை முதலியவற்றைக் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.
- Robert de Beaugrande and Wolfgang Dressler

வாசிப்பு மனிதனைப்பூரணப்படுத்தும்
செல்வி.க.அபிசா தரம் - 5
ஒரு ஊரில் விவசாயி ஒருவன் தனது மனைவியுடனும் தனது இரண்டு பிள்ளைகளுடனும் இன்பமாக வாழ்ந்தான். அவனுடைய பிள்ளைகளினது பெயர் கமலா, விமலா ஆகும். இவர்கள் மிகவும் சாதுரியமானவர்கள். தினமும் விமலாவும் கமலாவும் தமது வீட்டிற்கு அருகில் உள்ள நூலகத்திற்குச் சென்று தமக்குப் பயனுள்ள நூல்கள் பலவற்றை வாசிப்பார்கள். அவற்றில் சந்தேகமானவற்றை எழுதித் தமது வகுப்பாசிரியர்களிடம் கேட்டுத் தீர்ப்பார்கள். தினமும் பாடசாலையில் உள்ள நூலகத்திற்குச் சென்று பல நூல்களை வாசித்துத் தெரியாத விடயங்களை அறிந்து கொள்வார்கள். இவர்களது முன்னேற்றத்தைக் கண்டு அவர்களது பெற்றோர்கள் உவகையடைந்தனர்.
சில காலங்கள் கழிந்தன. அவர்களது தந்தை நோயால் இறந்தார். அவர்களது தந்தை இறந்ததால் அவர்களுக்கு வருமானம் போதவில்லை. அவர்கள் தமது வாழ்வை வழிப்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அவர்களுக்கு ஒரு யோசனை வந்தது. அவர்கள் தாம் படித்த நூல்களில் உள்ள விடயங்களைத் தொகுத்து சிறுவர்களுக்கும் அனைவருக்கும் பயனுள்ள ஒரு நூலை வெளியிட முயற்சி செய்தனர். அந் நூலுக்குச் சித்திரங்களை அவர்களது தாயாரே வழங்கினார். இவ்வாறே தனது முதல் நூலை வெளியிட்டனர். இவர்கள் இவ்வாறு கதைமலர், பொது அறிவு எனப் பல நூல்களை வெளியிட்டு நாட்டில் பிரபல்யம் அடைந்தனர். ஏன் அவர்கள் நாட்டில் பிரபல்யம் அடைந்தனர்? அவர்களின் சுயதேடலும் முயற்சியும் வாசிப்புப் பழக்கமும் தான்.
எனவே வாசிப்பு மனிதனைப் பூரணப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
1.

Page 19
ஆறிலும் சாவார்
செல்வி.இ.மைதிலி க.பொ.த (உ/த)
(2011 - வடமாகாண தமிழ் மொழித்தினப் போட்டி குறு நாடக ஆக்கம் பிரிவு ஐந்தில் முதலிடம் பெற்ற நாடகம்)
பாத்திரங்கள்
ராமு - காலை இழந்தவன் வதனன் - இராமுவின் தோழன் வதனி - வதனனின் தோழி
இராஜேஸ்வரி - வதனின் தாய் கணேசமூர்த்தி - வதனனின் தந்தை
காட்சி 1
UR | UC || ULI CC - DGLD5 CR || CC || CIL நேரம் - பாடசாலை வேளை DR DC DL இடம் - வகுப்பறை
காட்சிப்பொருள் - வகுப்பறையில் காணப்படும் தளபாடங்கள் மேடையின் மத்தியில் காணப்படல். (மேடையில் இடப்புறத்தில் வதனன் தளபாடங்களை இழுத்துக் கூட்டிக்கொண்டிருத்தல்.) (வதனி வேகமாக வகுப்பறைக்கு வருதல்) (காலைப்பொழுதினைக் குறிக்க மங்களகரமாக வாத்தியங்களை ஒலிக்கச் செய்தல்) வதனி : குட்மோனிங் வதனன். இண்டைக்கு வேளைக்கு வந்திட்டீங்கள். வதனன் : குட்மோனிங் வதனி, ஓம் ஓம் இண்டைக்கு கூட்டுமுறை
எண்டதாலே கொஞ்சம் கெதியண்டு வந்திட்டன். வதனி : அப்படியோ? ஆ! மறந்திட்டன். நானும் இண்டைக்குக்
கூட்டுமுறைதான். நான் உங்களுக்கு உதவி செய்கிறன். (வதனி தளபாடங்களை எடுத்துக்கொடுத்தல்)
(தளபாடம் இழுக்கும் சத்தத்தினை மேடையெங்கும் ஒலிக்கச்செய்தல்)
12

வதனன் : கூட்டி முடிச்சிட்டன். குப்பைதான் அள்ளவேணும்.
வதனி : (முகத்தைச் சுழித்தவாறு) சரிசரி நானே அள்ளிக்கொட்டுறன். (வதனி குப்பையை அள்ளியவாறு மேடையின் (UI) நோக்கி வெளியேறல்.
(சிறிது நேரத்தால் வதனன் தனது புத்தகப் பையிலிருந்து புகைப்படத்தை எடுத்துப்பார்த்தல் வதனி வருதல், உடனே வதனன் புகைப்படத்தை ஒழித்தல்)
வதனி : வதனன் நேற்று சேர் ஏதோ தலைப்புத் தந்தாரே! ஆ.
“ஆறிலும் சாவார். நூறிலும் சாவார்” ஏதோ கதை எழுதச் சொன்னவர்.
வதனன் : ஒம் வதனி, நல்ல தலைப்புத் தான். நான் எழுதிட்டன்.
நீங்கள் எழுதியிட்டீங்களோ?
வதனி : இல்லை வதனன். அந்தத் தலைப்பு எனக்கு விளங்கவே இல்லை. நீங்கள் எந்தப் புத்தகத்தைப் பார்த்து எழுதினிங்கள்?
வதனன் : நான் ஒரு புத்தகத்தையும் பார்த்து எழுதேல்லை. என்ர நண்பனுடைய கதையைத்தான் எழுதினனான்.
வதனி : அப்படியோ! எனக்கு நல்ல ஆர்வமாய் இருக்குது.
சொல்லுங்கோ வதனன்.
வதனன் : சொல்லுறன் வதனி, சொல்லுறன். (வதனன் தனது பழைய
ஞாபகங்களைப்புரட்டத் தொடங்குகிறான்) (பழைய ஞாபகங்களுக்குச் செல்லுமுகமாக மேடையில் வாத்தியங்களை ஒலிக்கச் செய்தல்)
காட்சி II காலம் : காலை இடம் : யுத்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை வழங்கும் இடம் காட்சிப்பொருள் : யுத்தத்தினால் பாதிக்கப்பட்டோர் காணப்படுதல். அதன் மத்தியில் இராமு காணப்படல். மூன்று பக்கமும் பச்சைத் திரையால் மூடப்பட்டுக் காணப்படல் (வதனன் இராமுவைக் காணவருதல்) (அபாயகரமான ஒலியை மேடையில் ஒலிக்கச் செய்தல்)
13

Page 20
வதனன் : இராமு . இராமு (அழுதல்) உனக்காடா இந்த நிலைமை
. இராமு.இராமு கண்ணைத் திறந்து பாரடா! இராமு : (கண்களை மெதுவாகத் திறந்து) வதனா . (அழுதல்)
வதனா ! என்ர கால் . வதனன் : இராமு. உன்ர காலை நீ யுத்தத்தில பறிகொடுத்திட்டாய் எண்டு இப்பதான் எனக்குத் தெரிஞ்சது. அதுதான் ஓடி வந்தனான். இராமு : காலை மட்டுமா பறிகொடுத்தன். என்ர குடும்பத்தையும்
சேர்த்துப் பறிகொடுத்திட்டன். இனி இந்த அநாதை. அதுவும் கால்ல்லாத அநாதை யாரிட்டப் போகப்போறன். வதனன் : ஏனடா இராமு அப்படியெல்லாம் சொல்லுறாய்? நீ என்ர
நண்பன்டா. நான் உனக்கு இருக்கிறனடா. மறுபடியும் அநாதை எண்டு சொல்லாதே. இராமு : இல்லை வதனா. நான் சொன்னாலும் சொல்லாட்டியும்
அநாதை தான். என்ர காலைக் காவுகொண்ட அந்தச் செல் மொத்தமாய் என்ர உயிரை எடுத்திருக்கலாம். வதனன் : ஏனடா இராமு அப்படிச் சொல்லுறாய்? இனி நீ என்னோட என்ர வீட்டில தான் இருப்பாய். என்ர அப்பா அம்மாதான் உனக்கும் அப்பா அம்மா சரியா? இராமு : இல்லை வதனன் . ! வதனன்: (இடைமறித்தவாறு) நீ ஒண்டும் சொல்லத் தேவையில்லை. உன்ர வலக்கால் தானே உனக்கு இப்ப இல்லை. இந்தக் காலத்தில நிஜமான கால் மாதிரி எத்தினையோ பொய்க்கால் வந்திடுத்து. நீ கவலைப்பட வேண்டாம். என்னோடதான் வரப்போறாய். (மங்களகரமான வாத்தியங்களை பின்னணியில் ஒலிக்கச் செய்தல்)
(அன்றிலிருந்து இராமு வதனின் வீட்டில் வளரத் தொடங்கினான். வதனனின் பெற்றோர் இராமுவையும் தம் மகனைப் போலப் பராமரித்தனர்)
5Tlf III காலம் : சனிக்கிழமை (காலை) இடம் : வதனனின் தோட்டம்
காட்சிப்பொருள் : மேடையெங்கும் தோட்டம்போலக் காட்சியமைப்பினை வைத்தல். மேடையின் முன் வலப்பக்கத்தில் கிணறு காணப்படல். மேடையின் UR இல் பச்சைப் புதர் காணப்படல். (இராமும் வதனனும் மேடையின் நடு மத்தியில் காணப்படுகின்றனர்)
14

(மேடையில் காலைப்பொழுதினைக் குறிக்க குயில், கிளிகள் போன்று ஒலி எழுப்புதல்)
வதனன் : என்னடா இராமு கண்ணைக் கட்டி விளையாடுவமோ! இராமு : ஒம் வதனன் விடையாடுவம். முதலில் நீ கண்ணைக் கட்டு.
அதற்குப் பிறகு நான் கட்டுறன். வதனன் : அதெல்லாம் இல்லை. நீ தான் முதலில் கண்ணைக்
கட்டோனும். இராமு : ம். உன்ர விருப்பம். (வதனன் இராமுவின் கண்களைக்
கட்டுதல். இராமு கண்ணைக் கட்டியவாறு வதனனைத் தேடுதல்) இராமு : (தவறி விழுந்தவாறு) ஆ ! கால் நோவுதே! வதனா ..! வதனன் : ஆ. இராமு. என்னடா நடந்தது உனக்கு (பதற்றமடைந்து
இராமுவின் அருகில் செல்லுதல்) இராமு : ஏய்! வதனா நீ என்னிட்ட அம்பிட்டிட்டாய். உன்னை நான்
பிடிச்சிட்டன். (இராமு வதனனை இறுகப் பிடித்தல்) வதனன் : அட பாவி! என்னிட்டயே உன்ர வேலையைக் காட்டுறியா?
(இராமுவின் காதினை முறுக்குதல்) இராமு : ஆ! வதனா வலிக்குதடா! சரி சரி. நான் உன்னைப்
பிடிச்சிட்டன். இந்தா உன்ர கண்ணைக் கட்டு. வதனன் : (தன் கண்களைத் துணியால் கட்டியவாறு) சரி சரி நீ போய்
ஒழியடா நான் கண்டுபிடிக்கிறன். இராமு : ஒம் ஓம் நான் ஒழியிறன். (இராமு தோட்டத்தின் பின்
பகுதியில் உள்ள புதர்ப்பக்கமாகச் செல்கிறான்) (பொம் . பொ.ம்.பொ.ம் (மேடையெங்கும் ஒலிக்கின்றது. மேடையெங்கும் புகைமண்டலம் பரவுகின்றது. அபாய நிலையினைக் குறிக்க சிவப்பு விளக்கினை மேடையெங்கும் ஒளிரச் செய்தல்) வதனன் : (தனது கட்டினை அவிழ்த்தவாறு) இராமு. இராமு.எங்கடா
இருக்கிறாய். இராமு . எனக்குப் பயமாய் இருக்கு வாடா ..!
(வதனனின் கால்களில் இராமுவின் பொய்க்கால் தட்டுப்படல்) வதனன் : (உற்றுப் பார்த்தவாறு) இராமு . எங்கடா இருக்கிறாய். எனக்குப்
பயமாய் இருக்கு. என்னோடை விளையாடாதேடா!. இராமு. (இராமுவை அங்குமிங்கும் தேடிப்பார்த்தல். சிறிது நேரத்தில்
15

Page 21
இராமுவின் உடல் வதனது கண்களுக்குத் தென்படல்) (பின்னணியில் சோக இசையினை எழுப்புதல்)
(வதனனின் கண்கள் விறைத்துப்போய் நிற்கின்றன. வதனனின் கண்களில் இருந்து கண்ணிர் பெருக்கெடுக்கிறது)
வதனன் : (இராமுவின் உடலின் அருகே விழுந்தவாறு) இராமு .
எழும்படா. ஏனடா படுத்திருக்கிறாய். கண்ணைத் திறந்து பாரடா. விளையாடினது காணும் எழும்படா. இராமு . (அழுதல்) (கொடூரமான சத்தத்தினைக் கேட்டவுடன் வதனனின் பெற்றோர் ஓடோடி வருதல்) (பதற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் பின்னணி இசை எழுப்புதல்)
கணேசமூர்த்தி : இராமு . வதனா. இராமுக்கு என்ன நடந்தது வதனா?
வதனன் : அப்பா நாங்கள் கண்ணைக் கட்டி விளையாடிக்கொண்டிருந்தம். திடீரென்று ஒரு சத்தம் கேட்டது. கட்டை அவிழ்த்துப் பார்த்தால் இராமு இப்படிக் கிடக்கிறான். (கணேசமூர்த்தி இராமுவைத் தடவுதல்)
இராஜேஸ்வரி : (அழுதவாறு) எங்கட தோட்டத்திற்கு பின்னால மிதிவெடி இருக்கென்று உன்ர பாட்டி சொன்னவா. ஆனால் நாங்கள் பொருட்படுத்தவில்லை.
வதனன் : அப்பா . அப்பா. கெதியெண்டு இராமுவைத்
தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்குப் போவம் வாங்கோ அப்பா. கெதியெண்டு.
(கணேசமூர்த்தி இராமுவின் நாடித்துடிப்பைப் பார்த்தல்)
வதனன் : பார்த்தீங்களோ அப்பா. நான் சொன்னனான் தானே. அவன்
என்னைப் பயப்படுத்திப் பார்க்கிறான். அவனை எழும்பச் சொல்லுங்கோ (அழுதல்) இராஜேஸ்வரி : வதனா. வதனா.! வதனன் : அம்மா இராமுவை எழும்பச் சொல்லுங்கோ. எழும்பாட்டி நான்
பேந்து அவனோடை கதைக்கவே மாட்டன். (அழுதல்) கணேசமூர்த்தி : இனிமேல் அவன் யாரோடையுமே கதைக்க மாட்டான்
வதனன்.(அழுதல்) (இடி போன்ற சத்தத்தினை பின்னணியில் எழுப்புதல்)
16

வதனன் : (தன் அழுகையை நிறுத்தித் தந்தையை நோக்கி) என்னங்கோ
அப்பா சொல்லுறீங்கள்.
கணேசமூர்த்தி : வதனா! இராமு எங்கள் எல்லாரையும் விட்டிட்டு ஒரேயடியாய்ப் போய்ட்டான். இராமுவின் இதயத் துடிப்பு நின்றுவிட்டது. (சோகமான இசையினை பின்னணி இசையாகக் கொடுத்தல்)
வதனன் : (சிரித்தவாறு) பொய் சொல்லாதேங்கோ அப்பா. நீங்களும் சேர்ந்து என்னோடை விளையாடாதேங்கோ. (இராமுவின் உடலின் அருகே சென்று இராமுவைக் கட்டி அணைத்தவாறு) இராமு . டேய்.எழும்படா . கணேசமூர்த்தி : வதனா எழும்பப்பா. இராமுவின்ர உடலை எடுப்பம். வதனன் (இராமுவின் உடலை இறுக அணைத்து) இல்லை நான் என்ர இராமுவைத் தூக்க விடமாட்டன். இராமு. எழும்படா.(அழுதல்) இராஜேஸ்வரி : வதனா. அழாதே என் செல்வமே! வதனன் : அம்மா என்ர இராமுவைப் பாருங்கோ. இதுக்கா அம்மா நான்
அவனை இங்க கூட்டி வந்தனான். கணேசமூர்த்தி : வதனா சாவு என்பது எல்லோருக்கும் பொது. அது
எப்போதும் வரலாம். ஏன் குழந்தை பிறந்து சில நொடிகளில் கூட இறந்துவிடலாம். இராமுவின் உடலை எடுப்பம். வதனன் : இல்லை. நான் நம்ப மாட்டன். (இராமுவின் உடலை இறுக அணைத்து முத்தமிட்டவாறு) என்ர இராமுவைத் தூக்க நான் விடமாட்டன். (அழுதல்)
(கணேசமூர்த்தி இராஜேஸ்வரியைப் பார்த்து தலையை ஆட்டுதல். இராஜேஸ்வரி வதனனைப் பிடித்து இழுத்தல். கணேசமூர்த்தி இராமுவின் உடலைத் தூக்கி மேடையில் UR பக்கமாக நகர்ந்து செல்லுதல்.)
வதனன் : ஐயோ! இராமு. அப்பா நில்லுங்கோ. அம்மா என்னை
விடுங்கோ. இராமு. (அழுதல்) இரா.மு இல்லாத உலகத்தில் நானும் இருக்க மாட்டன்.
இராஜேஸ்வரி : என்னடா சொல்லுறாய் வதனா!. என் தங்கமே
அப்படிச் சொல்லாதே! (வதனன் தன் தாயின் கைகளை உதறியவாறு அருகில் இருந்த கிணற்றினுள் குதித்தல்)
17

Page 22
இராஜேஸ்வரி 1 ஐயோ! வதனா. (வாத்தியங்களை விரைவாக
மேடையில் வாசித்தல்)
(மேடையெங்கும் தண்ணீர் சலசலக்கும் சத்தம் கேட்டல். சிவப்பு, மஞ்சள், நீலம் என மேடையெங்கும் விளக்குகளை ஒளிரச் செய்தல். அனைத்து விளக்குகளையும் அணைத்தல்)
(மேடையின் திரை மூடப்படுகின்றது)
BIT'd 1V
இடம் : பாடசாலையின் வளாகம் காலம் : பாடசாலை ஆரம்பிக்கும் மணி ஓசை ஒலிக்கும் வேளை காட்சிப்பொருள் : பாடசாலையின் வகுப்புக்கள் மேடையின் வலப்புறத்தில் காணப்படுவது போன்ற அமைப்பினைக் காட்சிப்படுத்தல்.
(மணியோசை ஒலித்தல்)
வதனன் : (தன் கண்ணிரைத் துடைத்தவாறு) வதனி! சாவு என்பது எப்பவும் எந்த நேரத்திலும் எந்த வடிவத்திலும் வரும். நாங்களாய்த் தேடிப் போகக் கூடாது.
வதனி : ஓம் வதனன். அந்த சூழ்நிலையில் நீங்கள் கிணற்றுக்க விழுந்தனிங்கள். சாவு வரவேயில்லை. இருக்கிற கொஞ்சக் காலத்திலயாவது நாங்கள் பிறருக்கு உதவிசெய்து நல்லவராய் வாழவேணும்.
வதனன் : ஓம் வதணி! சரி வாங்கோ வகுப்புக்குப் போவம்.
(இருவரும் மேடையின் பின்புறமாக வெளியேறல்) (மேடையின் திரை மூடப்படுகின்றது)
தனிக்குரல் : வாசகர்களே! இறப்பும் பிறப்பும் அனைவருக்கும்
பொதுவானதே. வாழும் இந்தக் கொஞ்ச நாட்களாவது நல்லவராக வாழ்வோம். இறந்துபோன இராமுவின் ஆத்மா சாந்தியடைய அஞ்சலி செலுத்துவோம்.
ஓம் சாந்தி !!! சாந்தி!!! சாந்தி!!!

UITL6)IT8585lb
லிபருமைலபறும் சிறுமிநான்
சா. பமிலா தரம் 4
சின்னஞ் சிறிய சிறுமி நான் சிறந்த படிப்பைப் பெற்றிடுவேன் அம்மாவிடம் கற்றிடுவேன் அறிவை நன்றாய் பெற்றிடுவேன்
பள்ளி சென்று படித்திடுவேன் பாலரோடு சேர்ந்திடுவேன் உயர்ந்த படிப்பைப் பெற்றிடுன்ே உலகமெங்கும் சுற்றிடுவேன்
கணித அறிவைக் கற்றிடுவேன் கணித மேதையாய் வந்திடுவேன் விந்தை பலவும் செய்திடுவேன் நாட்டைக் கட்டி எழுப்பிடுவேன்
நல்லதை என்றுஞ் செய்திடுவேன் நன்மை பலவும் பெற்றிடுவேன் அம்மா சொல் கேட்டிடுவேன் பண்பாய் அன்பாய் நடந்திடுவேன்.

Page 23
Importance of reading
Miss.P.Sethuppiriya Grade 7.
we know the "Importance of reading”. Reading helps for work and speak. We must improve our reading knowledge because our second language is English. We read English books, Tamil books ect.... You go to the library and read the books.
I tell “reading use for what?” Reading is useful for many activities. For examble : The teacher asked me to read a paragraph. But we know reading well no problem. We read the pragraph successfully. Reading improves human knowledge. This world is a computer. We read news papers, books, magazines.... So our reading knowledge is improved.
SriLankan peoples get some knowledge from reading. You know reading is a hobby. You don't think reading is a problem. Our life is a travel. When you are free, You read books.
Our world has many languages. You don't feel. "I can't read english, I can't read french or sinhala'. That’s a small problem. This month is a reading month. This is a good time for us to improve our knowledge our school organizes many reading competitions. We join them and improve our knowledge. The competitions are reading, writing essays ect..... Our library has many good books. We have all facilities for gathering knowledge. But we don't think about reading. We has many tallents but reading a good tallent. We use books carefully. “Read
ing makes a full man” is a proverb. You read books. You decide your life.
20

உயிரின மண்டலத்தின் இயற்கை மரணம்
திரு.சு.கிருஷ்ணராஜா, B.A, Dip. in Ed. புவியியல் ஆசிரியர்.
பூமியின் உயிரின மண்டலத்தின் இயற்கை மரணம் நிகழும் காலம் நெருங்கிவிட்டது. பூமியின் பசுமை அழிந்து உயிர்ச்சூழல் அற்றுப் போகும் நிலைமையே உயிரின மண்டலத்தின் இயற்கை மரணமாகும். இது எப்போது நிகழும் என அடித்துக் கூறமுடியாது. ஆனால் வெகு விரைவாக நிகழக்கூடிய இயற்கை நியதி தெளிவாகத் தெரிகிறது. 2012 இல் சூரியனில் இருந்து வெளிவீசப்பட்ட வெப்பப் படைகள் பூமியைத் தாக்கும் எனவும் அப்போது புவியின் உயிரின மண்டலம் அழிந்து மரணம் சம்பவிக்கும் எனவும் நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஆனால் சூரியனில் ஏற்பட்டு வருகின்ற வெப்பம் தொடர்பான இயற்கை நியதி மாற்றம் உயிரின மண்டலத்தின் அழிவுக்குக் காரணமாக அமையும் எனப் புவிச்சரிதவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். எவ்வாறெனில், உயிர்ச்சூழல் அழிவு சூரியனின் வெப்பநிலை மாற்றத்தில் தங்கியுள்ளது. புவிக்கோளம் வெப்பமடையும்போது உயிர்ச்சூழலில் மரணம் நிகழும்.
எமது சூரியன் 4.5 மில்லியன் ஆண்டுகள் வயதைக் கொண்டது. சூரியனின் தற்போதைய மேற்பரப்பு வெப்பநிலை 6000°C ஆகும். ஆனால் இந்த வெப்பநிலை சூரியன் தோற்றம் பெற்ற காலம் முதல் இருக்காமல் குறைந்த நிலையில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. சூரியன் உருவாகியபோது அதன் நிறம் சிவப்பாகவும் அதன் மேற்பரப்பு வெப்பநிலை 3000°C ஆகவும் இருந்தது. பின்னர் அதன் வெப்பநிலை அதிகரித்தது. அதனால் அதன் நிறம் செம்மஞ்சள் ஆகவும் மேற்பரப்பு வெப்பநிலை 4000°C ஆகவும் மாறியது. தொடர்ந்து அதிகரித்து வரும் வெப்பத்தினால் அதன் நிறம் மஞ்சளாக மாற்றமடைந்து அதன் மேற்பரப்பு வெப்பநிலை 6000°C ஆக மாறியுள்ளது. நாளை அல்லது இனிவருங் காலத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் வெப்பத்தினால் அதன் நிறம் வெண்மையாக மாறும். அதனால் அதன் மேற்பரப்பு வெப்பநிலை 11000°C ஆக உயர்வடையும். இதன் காரணமாகப் புவிக்கோளத்தின் வெப்பநிலையும் அதிகரிக்கும். இந்த இயற்கைக் கூர்ப்பு நியதி காரணமாகப் புவியில் உயிரினங்கள் வாழமுடியாது மரணத்தைத் தேடிக்கொள்ளும்.
2

Page 24
எமது சூரியக் குடும்பத்தில் 8 கோள்கள் உள்ளன. அந்தக் கோள்கள் சூரியனில் இருந்து விலகியுள்ள தூரம், அதனால் நிலவும் கோள்களின் மேற்பரப்பு வெப்பநிலை என்பவற்றுக்கிடையே இயற்கைச் சமநிலை பேணப்படுகின்றது. இச் சமநிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாகக் கோள்களில் உயிரினங்கள் தோற்றம் பெற்று அழிந்து மாற்றமடைந்து வருகின்றது.
சூரியன் தோன்றியபோது அதன் நிறம் சிவப்பாகவும் மேற்பரப்பு வெப்பநிலை 3000°C ஆகவும் இருந்தபோது சூரியனுக்கு அண்மையில் உள்ள புதன் கோளில் உயிரின மண்டலம் தோன்றியிருக்க வேண்டுமென விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆனால் சூரியனின் வெப்பநிலை 4000°C ஆக உயர்வடைந்த போது அதன் நிறம் செம்மஞ்சளாக மாறியது. அதனால் புதன் கோளின் சூரியனின் பக்க வெப்பநிலை 510°C ஆக உயர்வடைந்தது. அதன் மறுபக்க வெப்பநிலை -110°C ஆகக் குறைவடைந்தது. இவ்வாறு ஏற்பட்ட வெப்பமாற்றம் காரணமாகப் புதனில் வாழ்ந்த உயிரினங்கள் அழிந்து அதன் உயிரின மண்டல மரணம் நிகழ்ந்தது.
சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை 4000°C ஆக அதிகரித்த போது அதன் நிறம் செம்மஞ்சளாக மாறியது. அப்போது சூரியக் குடும்பத்தின் இரண்டாவது கோளான வெள்ளியில் உயிரினங்கள் தோன்றியிருக்கலாம் எனப் புவியியல் அறிஞர்கள் கூறுகின்றனர். அதேசமயம் சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை 6000°C ஆகவும் அதன் நிறம் மஞ்சளாகவும் மாறியபோது வெள்ளியின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரித்து அதன் உயிரின மண்டல மரணம் நிகழ்ந்தது.
தற்போது சூரியனின் வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதன் மேற்பரப்பு வெப்பநிலை 11000°C ஆக உயர்வடையும் போது அதன் நிறம் வெண்ணிறமாக மாற்றமடையும். அப்போது புவியின் மேற்பரப்பு வெப்பநிலை என்றும் இல்லாத அளவிற்கு அதிகரித்துவிடும். அதனால் முனைவுகளில் பல ஆயிரம் மீற்றர்கள் தடிப்பில் கவிந்துள்ள பனி உருகி கடல் மட்டம் உயர்ந்து பூமியின் பெரும் பகுதி நீர்க்கோளமாக மாறும். அதே சமயம் அதிகரித்த வெப்பத்தினால் பூமியில் உள்ள நீர் முழுவதும் ஆவியாக மாறி வான் வெளிக்குத் தப்பிச் சென்றுவிடும். இதனால் புவியின் அனைத்து உயிரினங்களும் (தாவரங்கள், விலங்குகள், நுண்ணங்கிகள்) அழிந்து எமது பூமியின் உயிரின மண்டலத்தின் இயற்கை மரணம் நிகழும். புதன், வெள்ளி போன்று புவியும் உயிரினம் அற்ற புழுதிக் கோளமாக மாறிவிடும். இந்த இயற்கை நியதியை யாராலும் தடுக்க முடியாது.
“நல்லதையே சிந்தித்து நல்லதையே செய். உலகம் என்றும் உன்னை மறவாது”
22

O1.
O2.
O3.
04.
O5.
O6.
O7.
08.
O9.
10.
11.
12.
13.
14.
15.
தேடல் உள்ள மனிதன் வெற்றிகாண்பான்
செல்வி, இ. ஷாத்வீகா தரம் 5
மனிதனின் வெற்றிக்குக் காரணமாக அமையும் சக்தி சுயதேடலேயாகும். மனிதனின் வரலாறு அவனின் தேடிலின் வரலாறே ஆகும். மனிதன் தன் வாழ்வின் எல்லா உயர்வுகளையும் சயதேடலினால்தான் பெற்றுக்கொண்டான். தேடல் தான் வாழ்வை உயர்த்தியிருந்தது. மனிதனது விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் எல்லாம் தேடலினால்தான் உருவாகின. உணவைத் தேடி அலைந்து திரிந்த மனிதன் நெருப்பை சில்லுகளை மொழியைத் தேடித்தேடி வளரச்சி பெற்றான். மனிதன் தன் அறிவைத் தேடும் போது அதுவே கல்வியாகிறது. இன்று வலைத்தலங்களில் அறிவைத் தேடும் மனிதன் நூலகத்தை மறந்துவிடவில்லை. வாசிப்பு மூலமான தேடலுக்கு நூலகமே ஆதாரம். தேடல் உள்ள மனிதனுக்கு அறிவுப் பசி தீர்ப்பது நூலகங்கள் ஆகும். மனிதன் தன் உடல் உழைப்பால் பொருளைத் தேடுவான். நூலகங்களால் மாத்திரமே அறிவைத் தேடுவான். கோள்களைத் தேடிய மனிதன் விண்ணை வெற்றிகொண்டான். தேசங்களைத் தேடிச் சென்ற மனிதன் திரவியங்கள் பெற்று வந்தான். எனவே புதிய தேடல்களின் மூலம் புது உலகம் காண்போம்.
நூல் எழுதியவுடன் நூலாசிரியரின் பணி முடிந்து விடுகிறது. பின்னர் நூலும் வாசிப்புமே எஞ்சும். இன்னும் நூலை விடவும் வாசிப்பே முதன்மையானது.
- எம். ஏ. நு.மான் -
23

Page 25
Reading is for knowledge as well as pleasure
Miss.Y.Kirushika Grade 9.
Reading not only gives us good knowledge but also it gives us pleasure. A man who wants to become an intelligent man he should read good things. We must read good books because it will help us to study well.
First we must read our text books then we can read other books in library or some other places. A person who reads very much he will become a fulfilled man with knowledge. It will give happiness.
We must read books, magazines, newspapers and also novels. after reading we must take good news. Don't take bad news. In free time, we read story books. So we can get reading knowledge.
There are so many story books. They give us different feelings. They may be good feelings and bad feelings. Some stories are terrible. It gives pleasure. Reading improves our mind and develops our brain.
We must read books since till my old age. Reading is very important for a successful human life. Not only knowledge. It must help in life.
What is the meaning of pleasure? It means happy. Many things make us happy, but reading gives some more many people do this habitual action and hobby. We start our live with books. Now we are living with books. We will live with book.
We can develop our knowledge in studying, but reading is important any way read mostly and develop your brain. Be a knowledgable man. It will help to live as agentle man in the world. Reading is a pleasure activity. If you you miss the first step. you will not go to next step.
Library is the best place for reading. Any way read good things and live with pleasure. One is more thing, All the writers write about reading for students. Get good advices from teachers about reading. It will be useful.
So, we have to be cautious in selecting the reading materials to increse our knowledge.
24

ஈழத்துத் தமிழ்க் கவிஞர் ஆசுகவிகல்லடி வேலுப்பிள்ளை
திருமதி. லதாமணி அருந்தவச்செல்வம், B.A(Hons), Dip.in Ed. ஆசிரியர்
“தோன்றிற் புகழொடு தோன்றுக, அ.துஇலார்
தோன்றலின் தோன்றாமை நன்று”
என்ற வாக்கிற்கிணங்க யாழ்ப்பாணத்து வயாவிளானில் கந்தப்பிள்ளை வள்ளியம்மை தம்பதியினருக்கு 1860 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 06ஆந் திகதி வேலுப்பிள்ளை பிறந்தார். கல்லடி வேலுப்பிள்ளை என்றவுடன் அநேகமானவர்கள் இவர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர் என்றே எண்ணுவதுண்டு. அது மிகவும் தவறான ஒரு கருத்தாகும். வயாவிளானில் இவரது வீட்டினருகே பெரிய கல் ஒன்று காணப்படுகிறது. இதனாலேயே இவரது வீட்டை அடையாளம் சொல்லப் பயன்பட்ட சொல்லே இவருடைய பெயருடன் சேர்ந்து கல்லடி வேலுப்பிள்ளை என்ற பெயர் வரலாயிற்று. இயல்பாகவே கவிபாடும் ஆற்றல் வாய்ந்தவராக இருந்ததினாலேயும் “ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை’ எனப் பெயர் பெற்றார்.
இவர் சிறுவயதில் அகஸ்டின் என்பாரிடமும் பின்னர் பலாலி வேலுப்பிள்ளை உபாத்தியாயரிடமும் ஆரம்பக் கல்வியைக் கற்றார். அதன் பின் ஆவரங்கால் நமசிவாயப் புலவரிடமும், புன்னாலைக்கட்டுவன் கதிர்காமையரிடமும் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். மிகச் சிறுவயதிலேயே அஞ்சா நெஞ்சத்துடன் நகைச்சுவையாகவும் சிலேடையாகவும் பேசுவதில் வல்லவராகத் திகழ்ந்தார். இவரின் திறமையைப் பாராட்டி இவரது ஆசிரியர்கள் இவன் பிற்காலத்தில் பெரும் புலவனாக வருவான் என்று கூறினார். அதன் படியே இவரும் பிற்காலத்தில் பெரும் புலவனாகத் திகழ்ந்தார்.
இவர் தனது வாழ்நாளில் இருபதிற்கு மேற்பட்ட நூல்களை யாத்தார். யாழ்ப்பாண மக்களின் சமூக முறை கூறும் யாழ்ப்பாண வைபவ கெளமுதி, கதிரைமலைப் பேரின் பக் காதல் , உரும் பிராய் கருணாகரப்பிள்ளையார் பேரின்பக்காதல், உரும்பிராய் கருணாகர விநாயகர்
25

Page 26
தோத்திரப் பாமாலை, மேலைத்தேய மதுபான வேடிக்கைக்கும்பி போன்றன அவற்றுள் சிலவாகும்.
ஆசுகவி எனும் பட்டத்திற்கு உரியவரான இவர் கவிஞர் மட்டுமல்ல. சிறந்த உரைநடை வசன கள்த்தாவும்கூட. அத்துடன் அஞ்சாமை மிக்க பத்திரிகையாளர், சிறந்த சரித்திர ஆய்வாளர், உயர்ந்த சைவத் தொண்டர் எனப் பலவாறு போற்றப் பெற்றார். ஈழநாட்டில் மட்டுமல்ல இந்தியா, மலேசியா போன்ற தேசத்துப் பெரியார்களினாலும் “வித்தகர்’ எனப் பாராட்டப்பட்டவர்.
இவர் எழுதிய நூல்கள் கொழும்பு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூல் நிலையங்களில் மட்டுமன்றி சென்னைப் பல்கலைக்கழக நூல்நிலையத்திலும் மக்கள் பாவனைக்காக இன்றும் பேணிப் பாதுகாக்கப்படுகின்றன.
இவர் தமக்கெனச் சொந்தமாக அச்சகம் வைத்திருந்தார். அதில் “சுதேச நாட்டியம்’ எனும் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்து அப் பத்திரிகையை நடாத்தி வந்தார். சுதேச நாட்டியம் எனும் பத்திரிகை உதயமான பின்னரே ஆசுகவி வேலுப்பிள்ளையின் அறிவாற்றலைத் தமிழ் உலகம் இனம் கண்டு போற்றத் தொடங்கியது. இலங்கைத் தமிழர்கள் மட்டுமன்றி எல்லாத் தமிழர்களும் அறிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் இந்தப் பத்திரிகை அரிய சாதனமாக அமைந்தது. மகாத்மா காந்தி யாழ்ப்பாணத்திற்கு வந்து சென்ற பின் இவர் தமது பத்திரிகையில் “காந்தியும் கதரும்’ எனும் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதன் உட்பொருளானது காந்தியை நாம் மதிப்போமாக இருந்தால் எப்பொழுதும் கதர் ஆடையே அணிய வேண்டும் என்பதாகும். ஐரோப்பிய உடைகளை முற்றாக நீக்க வேண்டும். ஐரோப்பிய உடைகளினாலும் அந்த நாகரீகத்தினாலும் எம்மவர்க்கு ஏன் இத்துணை மோகம்? அவற்றை நாம் தவிர்ப்போம் என்று கண்டனம் தெரிவித்திருந்தார். இவ்வாறு தழிழ் மீது பற்றுக்கொண்டிருந்த கல்லடி வேலுப்பிள்ளை எங்கே தமிழ்ப்பிழை கண்டாலும் திருத்துவார் அல்லது திருந்த வைப்பார். இதற்கு எடுத்துக்காட்டாக புகையிரதக் கடவைகளில் அறிவிப்புப் பலகைகளில் “கோச்சி வரும் கவனம்” எனக் குறிப்பிடுவது வழக்கம். அதாவது Coach எனும் ஆங்கிலச் சொல்லின் தமிழ்வடிவம் போல் இச்சொல் வழக்கில் இருந்தது. இத் தவறைச் சுட்டிக்காட்ட எங்கெல்லாம் இவ் அறிவிப்பைக் கண்டாரோ அங்கெல்லாம் கரியினால் கோச்சி வரும் கவனம் என்பதன்
26

கீழ் கொப்பரும் வருவான் கவனம் என எழுதி விட்டாராம். இதன் பின் புகைவண்டி வரும் கவனம் எனும் வாசகம் புழக்கத்தில் வந்ததாகக் கூறுவர்.
ஆசுகவியின் கவி ஆற்றலை வெளிப்படுத்தப் பல கவிதைகள் காணப்படுகின்றன. அவர் தமது அன்பு மனைவி ஆச்சிக்குட்டியின் மறைவின் போது பின்வருமாறு எழுதினார்.
நீர்க்குமிழி வாழ்க்கையென நெஞ்சறிந்தோர் வார்த்தைக்கு உதாரணமாய் மாண்டாயோ - பூத்தவரி பாடுங் குயிலேயென் பைங்கிளியே நானிருந்து வாடுவதோ நிற்கு மனம்.
என அமைந்துள்ளமை அவரது கவி ஆற்றலையும் அவர் மனைவி மீது கொண்ட அன்பையும் வெளிப்படுத்துகின்றது.
எனவே தொகுத்து நோக்கும்போது இவர் தமிழ் மொழியும் தமிழ் மக்களும் மிகுந்த மேன்மை பெறவேண்டும், மேலோங்க வேண்டும் என அளப்பரிய ஆர்வங்கொண்டு வாழ்வு முழுவதும் தொண்டாற்றிய இவர் தமது 84ஆவது வயதில் 1944ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார். எனவே எடுத்த எடுப்பிலேயே கவி பாடும் ஆற்றலும் வீட்டினருகே கல் இருந்ததினாலும் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை என்றழைக்கப்படும் இவர் தமிழின் வளர்ச்சிக்கு உரமூட்டிய அரும்பெருமகனாவார்.
"வாசிப்பு என்பது ஒரு “பிக்னிக்”. அங்கே ஆசிரியன் வார்த்தைகளைக் கொண்டு வருகின்றான். வாசகன் அர்த்தத்தைக் கொண்டு வருகின்றான்".
- அ.மார்க்ஸ் -
27

Page 27

ாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற சிரமதான நிகழ்வு - 2011
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL

Page 28

I
ாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற சிரமதான நிகழ்வு - 2011

Page 29
6eV
Ca
loca
eW Sun
CW
We
sub is a do r
botl
are
is v.
OO1
al
to C
WOI
StuC
poS. boo

Reading makes a full man
Miss.S.Suvarna, Grade 11.
Reading is very important to our life. We read many books, magazines, is papers and other articles. Because they improve our knowledge. We i many things and we hear many which are held in our country.
First we can read a newspaper. A newspaper has many things like al news, Foreign news, feature articles, sports news etc... Many English spapers are layout in our country. Like Sunday observer, Sunday Times, day Leader etc... English papers are better than Tamil papers because by new items are photocopied them. When we have freetime we read Ispapers. First time we don’t understand it but we read every day and can understand it.
Next we are students and we must read many books. When we study a ject and we will go to our school library and read suitable books. Library public place where we will go and read manythings. But some children lot go to library. They are very foolish. Many magazines are in our library n English and Tamil. We can waste our golden time. When we are ill and unable to go to Schools or our work, we can read many books.
In the 21st century our country is developed in many ways. But reading ery important. We can read at many places like public libraries, class ms, home and any other places. Among all library is a good place to read hy items.
When we read manythings we can get more knowledge. They help us levelop in many ways. We read many things or news we hear new 'ds, new vocabularies and new sentences. A student who is talented in lies and he reads many books to widen his/her knowledge
We all read manythings and improve our knowledge and live a good ition. Reading makes a full man. So when we are free, we read many ks and other articles to improve our knowledge.
“Read many and get many”
29

Page 30
வபண்ணியம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்
திருமதி.ரா.ரேணுகா, B.A (Hons), Dip.in.Ed. ஆசிரியர்.
பெண்ணியம் தொடர்பான ஆய்வுகளும் கருத்தாடல்களும் இன்று பல்கிப் பெருகியுள்ள நிலையில் “பெண்ணியம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்’ என்ற தலைப்பில் என்னால் முன்வைக்கப்படும் கருத்துக்கள் பெண்ணியம் பற்றிய அறிமுகத்தையாவது மாணவர்களுக்கு வழங்கும் என எண்ணுகின்றேன்.
பெண்ணியம் என்று நாம் குறிப்பிடுவது, பெண்கள் சமுதாயத்தில் தொழில் ரீதியிலும் குடும்ப ரீதியிலும் சுரண்டப்பட்டுக் குறைவான அந்தஸ்து நிலையில் வைக்கப்பட்டுள்ளமையைத் தெளிவுபடுத்தி இந் நிலையைத் தமது செயற்பாட்டின் மூலம் மாற்றியமைக்க இரு गाJfb ஈடுபடுதலுமே ஆகும்.
“பெண்ணியம் பற்றிய கருத்துருவாக்கங்கள் இன்று பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சிலவற்றை இவ்விடத்தில் நோக்குவோம். பெண்கள் குடும்ப வாழ்க்கையிலும் சமுதாய, அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழ்நிலையிலும் ஆண்களுக்குச் சமமானவர்கள் என்ற உயர்நெறியை நிலைநாட்டும் நோக்கினைக் கருவாகக் கொண்டு இயங்கிவருகின்ற ஒரு அமைப்பு’.
- பிரித்தானிய கலைக்களஞ்சியம் -
வெண்ணியம் என்பது, சமூகத்திலும் வேலைத்தளத்திலும் குடும்பத்திலும் நிலவும் பெண் ஒடுக்குமுறை மற்றும் சுரண்டல் பற்றிய பெண்மையின் உணர்வு நிலைகளும் இந் நிலையை மாற்றுவதற்குழ் பெண்களும் ஆண்களும் எடுக்கும் உணர்வுபூர்வமான நடவடிக்கைகளும் ஆகும்”.
- பெண்கள் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் தேவதத்தா -
எனவே, மேலே வழங்கப்பட்டுள்ள கருத்து நிலைகளைக்கொண்டு நோக்கும்போது, பகுத்தறிவுமிக்க ஒரு உயிரினம் என்பதன் அடிப்படையில் தமது தேவைகள் பற்றித் தாமே சிந்திக்கவும், சிந்தித்தவற்றின் மூலம் தாமே ஒரு முடிவினை எடுக்கவும் அவற்றைச் சுதந்திரமான முறையில் தாமே நடைமுறைப்படுத்தவும் அதன்மூலம் உருவாகும் விளைவுகளுக்குத் தாமே முழுப்பொறுப்பினையும் ஏற்றுக்கொள்ளவும் கூடிய ஒரு சுயாதீன நிலையைப் பால்வேறுபாடற்ற நிலையில் பெற்றுக்கொள்ள முயல்வதே பெண்ணியம் என்று கூறுவதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.
30

ஆண், பெண்ணிடையே சமூகத்தில் நிலவும் பல்வேறு சமத்துவமின்மையை அடிப்படையாகக் கொண்டு, அவற்றிடையே சமத்துவத்தைப் பேணும் நோக்கிலேயே பெண்ணிய சிந்தனைகள் வலுப்பெறத் தொடங்கின. ஆயினும் பெண்களிடையே கூட சமூகத்தில் நிலவும் நாடு, மொழி, சாதி, இனம், நிலம், நகரம், கிராமம் முதலான அத்தனை பேதங்களும் நிலவுகின்றன என்பது பெண்ணியம் கணக்கில் எடுக்கவேண்டிய முக்கிய பிரச்சினை ஆகும். பெண்ணியம் தோன்றிய காலத்தில் எல்லோருக்குமான விடுதலை சாத்தியப்படாமல் நமக்கான விடுதலையை மட்டும் சாதித்துக்கொள்ளமுடியாது என்ற கோட்பாடு முன்வைக்கப்பட்டது. இந் நிலையில் பெண்ணியம் தனக்காக மட்டுமன்றி மானிட சமூகம் அனைத்திற்குமாகச் சிந்திக்கவும் செயற்படவும் வேண்டியுள்ளது. மேற்குறித்த பேதங்கள் யாவையும் கடந்து, எப்பொழுது எல்லோருக்குமான பெண்ணியமாக மலரத் தொடங்குகின்றதோ அப்பொழுதே பெண் விடுதலை சாத்தியமாகும்.
ஒரு சமூகத்தில் பெண்களின் நிலையை அறிந்துகொள்ள வேண்டுமாயின் அங்கு நிலவும் விபச்சாரத் தொழிலும் அதன் தன்மையும் சிறந்த அளவுகோல்கள் என்பர். இயற்கையான மனித உணர்வுகள் பெரிய பொருளாதார அமைப்பின் ஒரு கூறான பண்டப் பொருளாக மாறிப்போயுள்ள இவ் விபச்சாரத் தொழில் இந்த நூற்றாண்டிலும் குறைந்துவிடவில்லை. மாறாக முன்னரைவிடக் கொடுரமான முறையில் தொழில்மயமாகியுள்ளது. இன்று உலகினைப் போர்க்களமாக்கிக் கொண்டிருக்கும் வியாபார உலகில் இதுவும் ஏனைய தொழில்களைப் போன்றே வேகமெடுத்து வருகின்றது. இது “பெண்” எந்தளவிற்குப் பண்டமாகிப் போனாள் என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றது. இவ்விடயம் தொடர்பாகப் பெண்ணியம் ஆழமான எண்ணத்தையும் செயற்பாட்டையும் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகின்றது.
பெண்ணியம் எதிர்கொள்ளும் மற்றொரு பிரச்சினை பாலியல் ஒடுக்குமுறை ஆகும். இராணுவ ஆட்சி, சர்வாதிகார ஆட்சி போன்று அதிகாரம் கொடிகட்டிப் பறக்கின்ற ஆட்சிக் காலங்களில் கடுமையான பாலியல் ஒடுக்குமுறைகள் அமுலாக்கப்படும் என்பர்.
உளவியலாளரான ரீச் என்பவர், “சமூக வாழ்வுக்காகவும் அதிகாரத்துவத்துவப் பொருளாதாரக் குவியலுக்காகவும் மனிதர்களின் பாலியலைக் கடுமையாக ஒடுக்கியதாலேயே மனிதரின் பாலியல் வாழ்வு இடர்ப்பட நேர்ந்தது” என்றார்.
எனவே பெண்விடுதலை என்பது பாலியல் ஒடுக்குமுறையிலிருந்து விடுபடுதலுடன் தொடர்புடையது என்பதனையும் கவனத்திற்கொள்ள வேண்டும்.
3

Page 31
அடுத்து, பெண்ணியவாதிகள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினை பெண்விடுதலை பற்றிப் பேச வேண்டியவர்கள் யார் என்பதாகும். தற்காலத்தில் பெண் அறிவு ஜீவிகள், எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், பத்திரிகையாளர்கள் என்றாவது நடுத்தர வர்க்கத்தில் பல்வேறு சிந்தனையாளர்கள் உருவான போதிலும் பெண்விடுதலை பற்றிப் பெண்கள்தான் பேசவேண்டும். ஆண்கள் அதற்காகப் பரிந்துரை செய்வது முறையல்ல என்று கருதுவோர் இருபாலார் மத்தியிலும் இருக்கத்தான் செய்கின்றனர். வரலாற்று ரீதியாக நோக்குமிடத்து உடன்கட்டை ஏறும் வழக்கத்தினால் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் துயரங்களைத் தனது குடும்பத்திலேயே கண்ட ஆண்தான் இவ் வழக்கத்தினை நீக்கும் சட்டத்தினை உருவாக்குவதற்குக் காரணமாக இருந்துள்ளார். அவ்வாறே பாட்டாளிகளின் விடுதலைக்கான தத்துவத்தைப் பாட்டாளிகள் அல்லாத ஏங்கல்சும், மாக்சும் தான் உருவாக்கினர். இவ்வாறான பல நிகழ்வுகளை வரலாற்று ரீதியாக முன்வைக்கமுடியும்.
இன்றைய சமூகமானது அதிகார அமைப்புக்களின் உச்சக்கட்டமான சுரண்டலையும் தாம் சுரண்டப்படுகின்றோம் என்பதைப் புரிந்துகொள்ள முடியாத நிலையில் வாழும் மக்களையும் கொண்டமைந்தது. இன்று சிறிய அளவிலேனும் பொருளாதார ரீதியில் விடுதலை பெற்ற பெண்கள் கூட அதிகமான வேலைப்பளுவைச் சுமக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் ஒருத்தியே இரண்டு அடிமைகளாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளாள்.
எனவே பெண்களுக்கான சுதந்திரம் என்பது அவளை மேலும் அதிகப்படியான அடிமை வாழ்வினுள் தள்ளுவது என்பது புலனாகின்றது. ஆதலினால் மேற்குறிப்பிட்டது போன்று உரிமைப்போராட்டம் என்பது பெண்களுக்கானதாக மட்டும் நின்றுவிடாது ஒடுக்கப்பட்ட அனைவருக்குமான தளத்தில் இயங்கும்போதுதான் பொருத்தமான விளைவுகளை உருவாக்க முடியும்.
* சூழ்கின்ற பேதமெல்லாம்
துடைத்தே சமத்துவத்தில்
வாழ்கின்றார் வாழ்வின்பமாம் - சகியே
வாழ்கின்றார் - வாழ்வின்பமாம்”.
- பாரதிதாசன். உசாத்துணை நூல்கள் 1. சறோஜினி.வி - “பெண்ணியமும் கலை இலக்கியப் பிரதிகளும்” 2. ஹம்சா - மகளிர்தின அறிக்கை, மகளிர் அபிவிருத்தி நிலைய வெளியீடு,
யாழ்ப்பாணம் 1997 அனைவருக்குமான தளத்தில் இயங்கும்போதுதான் பொருத்தமான விளைவுகளை
உருவாக்க முடியும்.
32

What we gain from our school library
Miss. P. Hlcera, G.C.E(A/L)
Library is a place where we gather information which fills up our thirst. Every day we learn a lot actively or passively and the uncontroversial fact is that learning has already entered into our life and played a crucial role. On earth what is the major purpose of using Library? for a promising prospect to earn high salary after graduation? For growing knowledge and widening our horizon? for moulding our temperament and enlightening our mind? or, for just relaxing ourselves and relaxing ourselves from nervousness?
As far as Bacon was concerned, “Reading makes a full man” which is my stand point.
In our library we can gather many information which we have never known. There we can see different kinds of books. Each book is differenciated they are arranged and catagorised in sections for the identification. They are marked by numbers. So, it makes students to get the books very quickly. In the library we can build up our skills for example, reading,writing,learning, etc.
We can see books like dictionary, encyclopaedia, quize books, textbooks, past papers, newspapers, etc. Everything in the library guides the students to lead a good life. Especially reading skill is uniquely influenced by means of library.
Reading provides us the possibility of opening ourselves up to a magical world which helps us to become perfect. Histories make men wise, poets wisely, the mathematics subtle, natural philosophy deep, moral grave, logic and rhetoric able to content. So, if you are considered to be lack of wisdom, history will teach you how to think and heighten your ability of analysing and solving problems. If you always feel yourself stay in a confused state, philosophy will illuminate the path in front of you. If you hope your life is suffused with romance and passion, read
33

Page 32
poets please. Shakespeare, Byron and Shelley will put color on your life. So, the above instructions may give us about the excellency of the library COntent.
In our library we may see many quotations displayed. Fach and every quotes and lines that have hanged in our library give different kind of intelligable meaning to the readers. Reading is also exerting an invisible and formative influence on our character. Accumailated over a longperiod, the habit will lead us to a full man.
Confronted with an intractable issue you can resort to books such as which inherits with of ancient China. The reading book takes the most important role in the library. It is more important than ever in today's Society if you can not read well you will find it hard to have a successful career, earn people respect and it will be even difficult to operate in your daily activity.
The importance of library reading becoms more and more every day. With all the technology that we have today people think that they do not have to learn much when actually you probably need to be able to learn better. It is very important to learn how to learn at the young age. It is even easier to learn how to read at our young age. Because young are more interestes in learning than the matuared. Howevery if you teach a child to learn of the young age they can easily succeed their life in a short period.
Library helps to get the child interested in reading goodbooks even if all the people they hang around do not read. Even before the kid can read with the help, if the parent will read to them. This helps to get the child interested in reading books.
When there were no television or computer, library was a primary place to spend hour leisure, People spend hours reading books and travel far away they like. There are many other exciting and thrilling options available in the library. And that is a share because reading offers a productive approach to improving vocabulary and word power. It is advisable indulge in at least half an hourofusing library a day, keep abreast of the various styles of learning.
34

Children who use library have comparatively higher IQS. They are more creative and do better in school and college. Parents and teachers must incalcate the importance of using library to the students in the early years. Learning helps us in developing vocabulary and if builds a strong emotional bond between the students and the society.
Library learning helps in mental development and stimulate the muscles of the eyes. Library learning involves great level of concentration and adds to the conversational skills of the reader. It is an indulgence that enhances the knowledge acquired consistently. The habit of learning in the library also help the readers to find new words and phrases that they come across in day to day conversation.
The habit of using it can become a healthy addiction and adds to the information available on various topics. So, it is therefore essential to cultivate the habit of using library from an early age for self development.
In our library we may see above three thousandbooks to refer. They annually conduct some compitions for the students to uplift their knowledge and they give prizes for the winning persons. So, these activities motivate every student to do their best. If we have doubt in any subject or in anythings we may get it quickly from our library.
It is not only for the students, but also to the teachers, staffs also get benefit from the library. It is the resting place for improving our knowledge.
At last library is our mother because it gives abandunt knowledge to a weak child. So, get use of it and get many advantages and knowledge to uplift our future.
Francis Bucon said “Some books have to be tasted other to be swallowed, and some to bechewed and digested.

Page 33
தூய நற்கல்வி
திரு. சு. சிவலிங்கம், B.A, Dip in Ed. ஆசிரியர்.
கல்விக்குப் பயன் அறிவு அறிவுக்குப் பயன் ஒழுக்கம். கல்வியை அதிலும் கற்கப்பட வேண்டிய கல்வியைத் தேர்ந்து குற்றமற, ஐயம் திரிபு நீங்க கற்றல் முதல்நிலை. அடுத்த நிலை கற்ற கல்விக்குத் தக்கவாறு நெறியில் நின்று ஒழுகவேண்டும். கற்றல், நிற்றல் ஆகிய இரண்டும் கல்வி எனும் நாணயத்தின் இரு பக்கங்கள். கல்வி வாழ்க்கையோடு தொடர்புபட்டது. கல்வி வேறு வாழ்க்கை வேறு அல்ல. கல்வி வாழ்க்கையோடு தொடர்புபட்டு வாழ்க்கையை வளம்படுத்துவது, மேம்படுத்துவது கல்வியாகும்.
மனிதனை விலங்கு நிலையிலிருந்து மனிதத் தன்மைகளுடனான மனித நிலைக்கு இட்டுச் செல்வதும், தெய்வீக நிலைக்கு உயர்த்திச் செல்வதும் கல்வி. “கற்க மறுப்பவன் வாழ மறுக்கின்றான்” என்பது பூரீஇராமகிருஷ்ண பரமஹம்சர் கூறிய அமுதவாக்காகும். விழுமியக்கல்வி என்று தற்காலத்தில் கல்வியியலாளர்களால் விதந்துரைக்கப்படுவதும், மனிதரை மனிதத் தன்மைகள், மனிதப் பண்புகள், மனித தர்மம் நிறைந்த மனிதராக உருவாக உதவுவதும் நற்கல்வியாகும்.
கல்வி எனுஞ் சொல் “கல்’ எனும் வினையடிமூலம் பெறப்பட்டது. எனவே கல்வி என்பதற்குத் தோண்டுதல், கிளறுதல், கல்லுதல் எனப் பொருள்படும். கல்வியைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லின் கருத்து வெளிக்கொணர்தல் (Education,Educare) என்பதாகும். மனிதர்களுக்குள்ளே புதைந்து கிடக்கும் இயற்கை அறிவையும் தன்மையையும் ஆற்றல் திறன்களையும் நுண் புத்தியையும் வெளிக்கொணர்வது கல்வியாகும். மனிதரின் உடல், மனம், உயிர் ஆகியவற்றின் இயற்கைப் பேறுகளை வெளிக்கொணர்ந்து விளக்கம் பெறச் செய்வதே கல்வி எனக் காந்தியடிகள் கூறியுள்ளார். உலகினை ஒன்றாகக் காணுகின்ற ஆற்றலையும் மனமாட்சியையும் வழங்குவதாகக் கல்வி அமைய வேண்டும் என “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற புறநானூறு மகுடவாசகம் கூறியுள்ளது. தனிமனித அமைதி, குடும்ப அமைதி, சமுதாய அமைதி, நாட்டின் அமைதி, உலக சமுதாய அமைதியை வழங்கக்கூடிய கல்வி தான் நற்கல்வியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.
36

மனித விழுமியங்களான மனித நற்பண்புகள், நற்குணவியல்புகள், நன்னடத்தைகள், நல்லொழுக்கம் என்பவற்றை வழங்கக்கூடிய கல்விதான் நற்கல்வியாகும். கல்வியின் பிரதான நோக்கம் சான்றோர்களை உருவாக்குதலாகும். சான்றோர் சமுதாயம் ஒரு கல்விச் சமுதாயம் ஆகும். விழுமியப் பண்புகளை வாழ்க்கையில் கடைப்பிடித்து ஒழுகுபவர்கள் சான்றோர்களாவர். மேலும் மனத்தூய்மை, மொழித்தூய்மை, செயல்தூய்மை என்பவற்றை ஏற்படுத்தவல்லது விழுமியஞ் சார்ந்த தூய நற்கல்வியேயாகும்.
தற்காலத்தில் கல்வி முறைமையில் விழுமியக் கல்வி முக்கியத்துவத்தை இழந்து வருவதை உணரக் கூடியதாயுள்ளது. இன்றைய துன்பங்களுக்கெல்லாம் இந்த அறியாமையே காரணம். மேலும் உயர்வு அளிக்கக் கூடிய கல்வி தான் நற்கல்வியாகும். உயர்வு என்பதற்குப் பொருளாதார உயர்வு, சமூக அந்தஸ்து உயர்வு, பதவி பட்டங்களில் உயர்வு, புகழ் உயர்வு என்று பொருள்கொள்ளப்படுகின்றது. கல்வியில் பெற்ற அறிவு இத்தகைய உயர்வினை வழங்கவேண்டும். விழுமியக் கல்வியால் பெற்றுக்கொள்ளப்படும் தூய அறிவு இல்லாவிடில் அவ்வுயர்வுகள் மனித குலத்துக்குக் கேடுகள், கெடுதல்கள், துன்பங்களையே விளைவிக்கும் என்பதை உலகின் தற்கால நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.
அறிவின் வளர்ச்சியும் உணர்வின் பெருவளர்ச்சியும் மற்றும் பொருள் ஆதிக்கம், புகழ் என்பவற்றின் பெருவளர்ச்சியும் தூய்மையின் அடிப்படையில் ஏற்படாவிடில் உலகில் அமைதி, சாந்தி, சமாதானம் என்பன சீர்குலைந்துவிடும். எனவே மனித விழுமியங்கள் தரும் உயர்வுதான் உண்மையான உயர்வாகும். இதுவே மனிதரின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துகிறது. “மாந்தரின் உள்ளத்தனையது உயர்வு” என்கிறது திருக்குறள். வாழ்க்கைத் தரத்தை உயர்த்த விளைபவர்கள் முதலில் தமது மனங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளவேண்டும். மனித விழுமியங்களின் உற்பத்தித் தானம் மனித மனங்களேயாகும். மனம் உள்ளவன் மனிதன். நல்ல மனம் உள்ளவன் நல்ல மனிதன்.
விழுமியங்கள் தான் மனித அடையாளங்கள். மனிதர்களை வேறுபடுத்திக் காட்டும் அடையாளங்கள், விழுமியங்கள், மனித உரிமைகள். விழுமியங்கள் மனிதரை மனிதத் தன்மைகளுடைய மனிதர்களாக உருவாக்குகின்றன. எனவே விழுமியங்களை மறுப்பவரும் மறப்பவரும் வாழ மறுத்தவர்களாவார்கள். விழுமியக் கல்விதான் மனிதர்களைச் சான்றோர் ஆக்குவதும் மனிதப் பண்புடையோரை உருவாக்குவதும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும் மனித மனங்களை நல்ல மனம் உள்ளவனாக நல்ல மனிதனாக ஆக்குவதும் தூய நற்கல்வியேயாகும் என்பதே உறுதி.
37

Page 34
Oh, 9My Heart Aches
Mrs.N.Sriranganathan, B.A, Dip.in.English. Teacher.
Nasty Words no Age difference no Gratitude at all
Eager to know Secret matters, not Worry about others Anxious to critisise it Readily and steadily 'Y' these, ... Oh, my heart aches.
Blaming others is a simple task for everyone today Try to be loyal Sincer and faithful, Because some say They have never seen Humanism in human beings Oh, My heart aches.
Thers is one thing Northing to think We are going to live here for a certain years, Till, Be Pure, Merciful Lovable and believable This is what I expect.
38

எம்மை விட்டு நீங்கிச் செல்லும் பண்பாடு செல்வி. அ. அர்ச்சனா க.பொ.த (உத)
(2010 ஆம் ஆண்டு தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் நடாத்தப்பட்ட பிரிவு I கட்டுரைப்போட்டியில் நான்காம் இடத்தைப் பெற்றுக்கொண்ட கட்டுரை)
“தமிழன் என்றோர் இனம் உண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு”
என்று பாடினார் நாமக்கல் கவிஞர்.
கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தில் தோன்றிய மூத்தமொழி நாணமும் நளினமும் கொண்ட கன்னித்தமிழ். தன்னிகரில்லாக் காப்பியங்களைத் தன்னாபரணங்களாகக் கொண்ட தண்டமிழ், கன்னடமும் மலையாளமும் களிதெலுங்கும் பிள்ளைகளாக ஈன்ற தாய்த்தமிழ், தீந்தமிழ், பைந்தமிழ், செந்தமிழ், அமிழ்தினும் இனிய தமிழ் இவ்வாறு பெருமையுடன் கூறக்கூடிய தமிழ்மொழியிலே தமிழன் என்ற பெயருடன் வாழ்வதில் பெருமையுண்டாகின்றது. தமிழ் மக்கள் எனும்போது அவர்களுக்கென்று தனியே சில பண்பாடுகள் உரித்தாகின்றன.
பண்பாடு எனும் சொல்லானது “பண்படுத்தல்” எனும் சொல்லிலிருந்து தோற்றம் பெற்றதாகும். அகத்தில் மலர்வது பண்பாடு. அகம் எனும் புலத்தினைப் பண்படுத்துவது பண்பாடு. நிலபுலனைக் கலப்பையால் உழவன் உழுகின்றான். உளயுலனை அறிவு, உணர்வு என்பவற்றால் உழுகின்றான் பண்பட்ட மனிதன். பண்பட்ட தரையிலே பயிர்கள் செழித்து வளர்கின்றன. களைகள் பிடுங்கப்படுகின்றன. பாத்தி கட்டி நீர் பாய்ச்சப்படுகின்றன. பண்பட்டவனின் உள்ளத்தில் வளமான வாழ்க்கை நெறி என்னும் பயிர்கள் வளர்கின்றன. சமூகத்திற்கு ஒவ்வாத நடவடிக்கைகளாகக் களைகள் பிடுங்கி எறியப்படுகின்றன. உள்ளத்து உணர்ச்சிகள், மன எழுச்சிகள் அறிவுப் பாத்திகளால் பயன்தரவல்ல பயிர்களுக்குப் பாய்ச்சப்படுகின்ற நீர் போலாகின்றது. பண்பட்ட உள்ளம் கொண்டோரையே நாம் பண்பாடு உடையவர்கள் என்கின்றோம். பண்பாடு என்னும் சொல்லானது கி.பி 1930 இற்குப் பின்னரேயே பிரயோகத்தில் இருந்து வந்துள்ளது.
அன்றைய தமிழனின் கல்லறைகள் இன்றைய தமிழனின் பண்பாடு கண்டு கண்ணிர் வடிக்கும் நிலையில் எமது பண்பாடுகள் நீங்கிச் செல்வதைக்
39

Page 35
காணலாம். எமது பண்பாடானது எங்களை விட்டு நீங்கிச் செல்வதற்கு அறிவியல் வளர்ச்சியால் ஏற்பட்ட விஞ்ஞான தொழில்நுட்ப விநோத மாற்றங்களே முக்கிய காரணங்கள் எனலாம்.
எமது பண்பாட்டிலே மிக முக்கியமானதும் அனைவராலும் போற்றப்பட்டு வந்ததுமாகிய சிறந்த பண்பாடு விருந்தோம்பல் ஆகும். அதாவது பசி என வந்தோருக்கு இன்முகம் காட்டி, அறுசுவை உண்டி கொடுத்து அதன் பின்னரே தாம் அருந்தும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர். விருந்தினர் முன்னர் அறிந்தோராகவோ அறியாதோராகவோ இருக்கலாம். விருந்தினரை வீட்டிற்கு வெளியில் நிறுத்தி விட்டுத் தாம் மட்டும் உண்ணும் வழமையை அவர்கள் கொண்டிருக்கவில்லை. தானங்களில் சிறந்தது அன்னதானம் என்பர். அதாவது விருந்தோம்பல் சிறந்த பண்பாகும். தெய்வப் புலவர் திருவள்ளுவரும் விருந்தோம்பல் பற்றி மிகச் சிறந்த கருத்துக்களை அழகு தமிழில் எளிலுறக் கூறியிருப்பதைக் காணலாம். அதாவது இல்வாழ்க்கை வாழ்வது விருந்தினரைப் பேணுவதற்கே எனும் கருத்தினைப் பின்வரும் குறளிலே கூறியுள்ளார்.
“இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விரும்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு’
மேலும் விருந்தின்ரை இன்முகம் காட்டி வரவேற்று உபசரிக்க வேண்டும் என்பதனை “அனிச்சமலர் மோந்தால் தான் வாடும்’ ஆனால் விருந்தினரோ தம்மை இனிமையாக வரவேற்காமல் முகம் வேறுபட்டுப் பார்த்தாலே வாடிவிடுவர் என அழகாகக் கூறுகின்றார்.
கம்பராமாயணத்திலும் விருந்தோம்புதல் அழகாகக் குறிப்பிடப் பட்டுள்ளதைக் காணலாம். அதாவது சீதை இராமனைப் பிரிந்து அசோக வனத்தில் இராவணன் காப்பிலிருந்தபோது விருந்து வந்தால், தான் இல்லாமல் தன் கணவனாகிய இராமன் எத்தகைய துன்பம் அடைவானோ என்று எண்ணிக் கவலையடைந்ததாகக் கம்பர் கூறியிருப்பது இங்கு நினைவு கூறத்தக்கது.
இவ்வாறு தமிழ் மக்களிடத்து விருந்தோம்பல் பண்பு இன்று அருகிக்கொண்டு நீங்கிச் செல்வதை அனேகமாகக் காணக்கூடியதாக உள்ளது. அதாவது காலநேரங்கள் போதாமையாலும் அனைவரும் தொழில் உத்தியோகம் எனச் செல்வதாலும் அறிவியல் வளர்ச்சியினாலும் விருந்தோம்பல் பண்பாடு எம்மைவிட்டு நீங்கிச் செல்வதைக் காணலாம்.
40

அடுத்து இன்று உடையிலும் பண்பாடு நீங்கிச் செல்கின்றது. “ஆள்பாதி ஆடைபாதி’ என்பார்கள். ஒரு மனிதனுக்குப் பூரணத்துவத்தைக் கொடுப்பது அவன் அணிகின்ற ஆடையாகும். அதாவது சேலை அணிந்து தலைவாரிப் பூமாலை கட்டித் திலகமிட்டு பூமகளை நோக்கிச் சென்ற மகளிர் இன்று “கண்டதே காட்சி கொண்டதே கோலம்” என்று எடுத்த எடுப்பில் வெளிநாட்டு மோகம் காரணமாக அப் பண்பாட்டினைப் பின்பற்றி எமது பண்பாட்டினைச் சீரழிக்கின்ற ஆடைகளை அணிந்து உலகம் சுற்றித் திரிவதைக் காணும்போது மனம் கூசுகின்றது. ஆலயங்களுக்குச் செல்லும்போது கூந்தலினைக் கட்டையாக வெட்டிவிட்டு கோவலனை இழந்த கண்ணகி கோலத்தில் விரைகின்றார்கள். இதேபோல் ஆண்களும் வேட்டி சால்வை மேலங்கி அணியவேண்டிய இடத்தில் நீளக் காற்சட்டைகளை அணிந்து உலகம் சுற்றும் வாலிபர்களாகத் திரிகின்றார்கள். ஆலயங்களுக்குச் செல்லும்போது இதே நடைமுறையைப் பின்பற்றுகின்றார்கள். எனவே பட்டுச்சேலை, நீளப் பாவாடை, சட்டை, பாவாடை தாவணி, வேட்டி, சால்வை என எமது பண்பாடு எம்மைவிட்டு நீங்கிச்செல்வதைக் காணலாம்.
திருமணம் என்பது இருமனங்கள் ஒன்றிணைவது ஆகும். அதாவது ஆண், பெண் என இருவரும் தாய், தந்தை, சுற்றம் பெரியோரின் விருப்பிற்கிணங்க இல்லறம் என்னும் நல்லறத்திலே இனிதாக வாழ்தல் ஆகும். இதிலே தாலி எனப்படும் மங்கல நாண் கட்டப்பட்ட பின்னர் அம்மி மிதித்தல், அருந்ததி காட்டல், கோ தரிசனம் என்பன இடம்பெறும். ஆனால் அவை இன்று இந்துத் திருமணப் பண்பாட்டிலே இடம்பெறுவதே இல்லை. ஆனாலும் சில திருமணங்களிலே அம்மி மிதிக்கப்படுவது உண்டு. ஆனால் ஏனைய இரண்டும் இடம்பெறுவதில்லை. இவை எம்மை விட்டு நீங்கும் பண்பாடு ஆகும்.
மேலும் எம்மை விட்டு நீங்கும் முக்கிய பண்பாடாக வாழை இலையில் உணவு உண்ணும் பண்பாடு நீங்கி வருகின்றது. அதாவது சைவ மக்கள் என்றாலே வாழை இலையிலேயே உணவைப் புசிக்க வேண்டும். ஆனால் இன்று அந்நிய தேசத்தவரைப் போன்று தட்டங்களிலும் கரண்டிகளினாலும் உணவை உண்கின்றோம். அடுத்துக் குரக்கன் உணவுகள், ஒடியல் சார்ந்த உணவுகள் அனைத்தையுமே உண்ணாது விட் டுவிடுகின்றோம். இதனால் இன்று பல நோய்களுக்கு ஆட்பட்டிருக்கின்றோம்.
41

Page 36
இவை எல்லாவற்றிற்கும் மேலாக பெரிய பாவச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றோம். அதில் முக்கியமாகப் பசுவதையாகும். அதாவது பசுவின இறைச்சியை உண்ணுதல் ஆகும். ஆனால் எமது பண்பாடு மாட்டிறைச்சி உண்ணாது சைவ உணவுகள் உண்ண வேண்டும் என்பதாகும். இது இன்று மாறுபாடுடன் நடைபெறுவதைக் காணலாம்.
மேலும் அவசர கதியும், இயந்திர மயமுமாகவும் மாறிவிட்ட இந்தக் கணனி உலகிலே கடிதம் எழுதும் பண்பாடு எங்களை விட்டு நீங்கிச் செல்கின்றது. அதாவது தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் நேரகால அவசரங்களினாலும் கடிதம் எழுதாது தொலைபேசியிலே உடனே பேசிவிடுகின்றோம். இதைவிட இணையம் மின்னஞ்சல் என்பவற்றையும் பயன்படுத்தி விடுகின்றோம்.
“யாதும் ஊரே, யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா, நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன, சாதலும் புதுவது அன்றே, வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே, முனிலின் இன்னாது என்றலும் இலமே, பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே”
என்ற அந்தப் பண்பாடு எமக்கே உரித்தானதாகும். அதாவது சமரச உணர்வு இன்று அருகிப் போகின்றது. எதனையும் சுயநலத்துடன் பார்க்கும் மனநிலை வளர்ந்து வருகின்றது. எதனையும் பொதுநோக்கில் நோக்குகின்ற மனநிலையை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
எமது பண்பாட்டிலே சிறந்தது மானம் ஆகும். தமிழ் மக்கள் மானத்தை உயிரினும் மேலாக மதிப்பர். மானம் இழந்து வாழ்தலிலும் உயிரைத் துறத்தலே பெருமை எனக் கொள்வர். “மதியாதார் தலைவாசல் மிதியாதே’ என்ற ஒளவையின் கூற்றிற்கிணங்க முற்காலத்தில் பல புலவர்கள் மானத்தோடு வாழ்ந்துள்ளனர். அதாவது அன்பின்றிக் கொடுத்தாலும், காலந்தாழ்த்திக் கொடுத்தாலும் நேரில் காணாது பிறர் வாயிலாகக் கொடுத்தாலும் குறைவறக் கொடுத்தாலும் அப் பரிசினைப் புலவர் பெறுவதில்லை. ஆனால் இன்று மானம் எனும் பண்பாடு நீங்கிச் செல்வதைக் காணலாம்.
42

மேலும் எமது தமிழரின் பண்பாட்டிற்கு அடையாளங்களாக இருக்கும் ஒப்பாரிப் பாடல், தாலாட்டுப் பாடல் என்பன இன்று மெளனமாய் பண்பாட்டை விட்டு நீங்கிப் போகின்றது. அதாவது ஒரு குழந்தையைக் கண் வளரச் செய்வதற்காகப் பாடப்படுவதே தாலாட்டுப் பாடல் ஆகும். அதே போன்று ஒருவர் இறையடி சேர்ந்த பின்னர் கவலை மிகுதியினால் பிரிவுத் துயரைத் தாங்காது பாடப்படுவது ஒப்பாரிப் பாடலாகும். இவை இன்று பாடப்படுவதில்லை. இதைவிட ஒருவர் இறந்த பின்னர் அவரை அடக்கஞ் செய்வதற்காக மயானத்திற்கு இறந்த உடலைச் சுமந்து செல்லும் பண்பாடு மறைந்து வருகின்றது. பதிலாக வாகனங்களில் கொண்டுசெல்லப்படுகின்றது.
அடுத்து கலைகள் எம்மை விட்டு நீங்கும் பண்பாட்டு அம்சமாகக் காணப்படுகின்றது. கலைகள் எனும்போது இசை, நடனம், நாடகம் எனப் பலவகைப்படும். அதாவது சங்கீத இசைக் கச்சேரிகள் மற்றும் பரதநாட்டிய நிகழ்வுகள் என்பன கோயில் திருவிழாக் காலங்களில் கோயில் வீதிகளில் விடியவிடிய நடைபெற்றன. அத்தோடு நாடகம் எனும்போது கூத்துக்கள் மற்றும் இசை நாடகங்கள் என்பன மாலையிலிருந்து விடியவிடிய நடைபெற்றன. அதனைக் கண்டுகழிப்பதற்காகப் பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடுவர். இன்று இப் பண்பாட்டினைக் காண முடிவதில்லை. பதிலாக மக்கள் தொலைக்காட்சி நாடகங்களைப் பார்த்து பண்பாட்டினைச் சீரழிக்கின்றார்கள்.
மேலும் “நல்ல குடும்பம் நல்ல பல்கலைக்கழகம்” என்ற கூற்றின்படி சந்தோசத்துடனும் ஒற்றுமையுடனும் கூட்டுக் குடும்பமாகி வாழும் எமது பண்பாடு எம்மை விட்டு வெகு தொலைவிற்குச் சென்றுவிட்டது. கூட்டுக் குடும்பமாக வாழும்போது சமரச உணர்வு, விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு, ஒற்றுமை, மதிப்பளித்தல் போன்ற சகலவற்றையும் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் இன்று அநேகமாகத் தனிக்குடும்பங்களையே காணக்கூடியதாக உள்ளது.
இவ்வாறு பல பண்பாடுகள் எம்மை விட்டு நீங்கிச் செல்கின்ற வேளையில் எமது இந்துப் பண்பாட்டிலே இறைவனுக்குரிய அர்ச்சனைப் பொருட்களை பித்தளைத் தாம்பாளங்களில் கொண்டுசெல்லும் பண்பாடு அருகிவிட்டது. கொண்டு செல்ல வசதிக்காகவும் பெறுமதியின் குறைவிற்காகவும் பிளாஸ்ரிக்கினாலான கூடைகளையும் பொலித்தீன் பைகளையும் பயன்படுத்துகின்றனர். மேலும் உணவு தயாரிக்கும்போது மட்பாண்டத்தில் சமைக்கும் பண்பாடும் உரலில் இடித்து அம்மியில் அரைக்கும் முறையும் நீங்கிச் செல்கின்றது.
43

Page 37
எழுது பண்பாட்டிலே செய்ந்நன்றி மறவாமை எனும் பண்பு முக்கியமாகக் காணப்படுகின்றது. அதாவது ஒருவர் செய்த உதவியை மறத்தல் ஆகாது. செய்ந்நன்றி மறவாமை எனும் பண்பு மிக முக்கியமாகக் காணப்படுகின்றது. அதாவது ஒருவர் செய்த உதவியை மறத்தல் ஆகாது. செய்ந்நன்றி மறவாமை பற்றி ஒளவையார் பின்வருமாறு கூறுவதைக் காணலாம்.
“நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந் நன்றி
என்று தருங்கொல் என வேண்டா தளரா வளர்தெங்கு தலையாலே தாளுண்ட நீரைத் தான் தருதலால்’
அதாவது தென்னை மரத்திற்கு நாம் நீரை ஊற்றும்போது அது உடனே எமக்குப் பயன் தராது. ஆனால் அது வளர்ந்து, தான் வேரினால் உறிஞ்சிய நீரைத் தன் தலையினாலே இளநீராகத் தருகின்றது. அதுபோல நாம் ஒருவருக்கு உதவி செய்தால் அது எமக்குத் தக்க தருணத்திலே கிடைக்கும் எனக் கூறுகின்றது. இதைவிட திருவள்ளுவரும் “செய்ந்நன்றி அறிதல்’ என்ற அதிகாரத்திலே பத்துக் குறட்பாக்களிலும் மிக அழகாகக் கூறியுள்ளார். அதிலே பின்வரும் குறளை நோக்குவோம்.
“காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது’
அதாவது ஒருவன் தக்க சமயத்தில் செய்த உதவியானது சிறிதளவாக இருந்தாலும் அது இந்த உலகத்தை விட மிகப்பெரியதாகும் எனக் கூறுகின்றார். உதாரணமாக ஒருவன் பெரும் பசியுடன் வரும்போது அவனுக்கு அந்தக் கணத்தில் பெருந்தொகையான பொன்னைக் கொடுத்தாலும் எந்தப் பயனும் இல்லை. ஆனால் அப்பொழுது சிறிதளவு உணவைக் கொடுத்தாலும் அது பெரிய பயனுடையதாகும். இது தவிர எந்த நன்றியை மறந்தவர்களுக்கும் உய்வு உண்டு எனவும் ஆனால் ஒருவன் செய்த நன்றியை மறந்தவர்களுக்கு உய்வில்லை எனவும் மொழிகின்றார். அத்தோடு ஒருவன் செய்த நன்றியை மறப்பது பண்பல்ல என்றும் ஆனால் ஒருவன் செய்த தீமையை அப்பொழுதே மறப்பது நல்ல பண்பாகும் என்ற கருத்தினை எமது மனத்திலே பசுமரத்தாணி போலப் பதியவைக்கின்றார். இவ்வாறு செய்ந்நன்றி மறவாமை எனும் பண்பாடு முக்கியம் பெற்று விளங்க இன்று இப் பண்பாடு எம்மை விட்டு நீங்கிச்செல்வதைக் காணலாம். இன்று ஒருவர் செய்த நன்மையை அப்பொழுதே மறந்துவிடுகின்றார்கள்.
44

மாணவர்களாகிய நாமும் பெற்றோரும் ஆசிரியரும் எமக்காகப் பல நன்மைகளைப் புரிகின்றார்கள் என்பதை உணர்ந்து செய்ந்நன்றி மறவாது நன்றி உடையவர்களாக வாழ வேண்டும்.
எமது இந்து பண்பாட்டிலே நீங்கிச் செல்லும் முக்கிய பண்பாடாக சூரிய நமஸ்காரம் காணப்படுகின்றது. அதாவது சூரியனை வழிபடுதலாகும்.
தொடர்ந்து இன்று அருகிவரும் பண்பாடுகளில் ஒன்றாக ஒழுக்கம் காணப்படுகின்றது. ஒழுக்கத்தினால் மட்டுமே சிறப்பு வந்துசேரும். ஆதலால் உயிரினும் மேலாகக் கருதிக் கண்ணெனப் போற்றுதல் கடமையாகும். ஒருவருக்குப் பல்வேறு திறமைகள் இருக்கலாம். ஆனால் அவருக்கு ஒழுக்கம் இல்லையேல் எது இருந்தாலும் பயனில்லை. எதுவுமே இல்லாதவராகக் கருதப்படுவார். ஒழுக்கத்தின் மேன்மை பற்றி வள்ளுவப் பெருந்தகையும் மிகச் சிறப்பான கருத்துக்களை நயம்படக் கூறியிருப்பதைக் காணலாம்.
“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்”
எனக் கூறுகின்றார். அத்தோடு உலகத்தோடு ஒட்டி ஒழுகுதல் வேண்டும். தனியாக நிற்கக்கூடாது. “ஊர் ஓடின் ஒத்து ஓடு , ஒருவர் ஓடின் பார்த்து ஒடு” என்ற கூற்று இதனையே வலியுறுத்துகின்றது. நாம் சமூக ஒற்றுமை உள்ளவர்களாக வாழப்பழக வேண்டும். உண்மையையே பேசுதல் வேண்டும். தீய சொற்களைப் பேசி ஒருவரின் மனதினைப் புண்படுத்தாது நல்ல சொற்களைப் பேசுதல் வேண்டும். தீயினால் சுடப்பட்ட புண் விரைவில் ஆறிவிடும் ஆனால் சொற்களினால் சுடப்பட்ட புண் ஆறாது. எனப் பொய்யாமொழிப் புலவர் உலகப் பொதுமறையிலே கூறுகிறார். எனவே உண்மை பேசி நல்லவர்களாக வாழவேண்டும். ஆனால் இப் பண்பாடு எம்மை விட்டு நீங்கிச் செல்கின்றது.
மேலும் தன் கொள்கையில் இருந்து மாறாத இலட்சிய வாஞ்சை உடையவராக அனைவரும் இருத்தல் வேண்டும். ஆனால் மாணவர்கள் இன்று தம் கொள்கையிலிருந்து மாறும் தன்மை காணப்படுகின்றது. இதுவும் இன்று நீங்கிச் செல்வதைக் காணலாம்.
இன்று பிறர் குறிப்பறிந்து வாழும் பண்பாடு எங்கோ தொலைந்திருப்பதைக் காணமுடிகின்றது. இவற்றோடு இரக்கம் காட்டுதல், அறத்தின் வழியில் பொருட்களைச் சேர்த்து மகிழ்ந்து வாழல் போன்ற
45

Page 38
பண்பாடுகளும் நீங்கிச் செல்கின்றன.
எல்லாவற்றிற்கும் மேலாக இன்று பெரியோரை மதித்தல் எனும் எமது பணி பாடு மறைந்து வருவதை எமது கணி முன்னே காணக்கூடியதாகவுள்ளது. அதாவது நாம் பெரியோரைக் கனம் பண்ணி அவர்களின் ஆசிகளைப் பெறும் போதே வாழ்வில் சிறப்பாக உயர்வடையலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால் இன்று பெரியோரை உதாசீனப்படுத்துவதைக் காணலாம்.
இவ்வாறு எமது பாரம்பரியப் பண்பாடு அதிகாலையில் நீராடி வீட்டினை சாணியினால் மெழுகி மகளிர் கோலம் போடுதலாகும். ஆனால் இன்று இது அறவே இல்லை எனலாம். இவற்றோடு வீட்டிலே ஒரு பசுவையாவது வளர்ப்பது எமது பண்பாடு. இன்று இதனைக் காண்பது கடினம்.
தாகத்திற்காக இளநீர் அருந்தும் வழமைக்கு மாறாக இன்று பல்வேறு இரசாயனப்பொருட்கள் கலந்த பானங்களைக் குடித்து தம்மைப் பெரியவர் என நினைக்கின்றனர். இளநீர் குடிப்பதனால் கெளரவம் குறைந்து விடும் எனத் தமக்குள் எண்ணுகின்றனர்.
எனவே தொகுத்து நோக்கும் போது விருந்தோம்பல், மானம், ஒழுக்கம், திருமணம், உடை, பழக்கவழக்கம், கலைகள், எனப் பலவற்றிலும் பண்பாடு நீங்கிச் செல்வதைக் காணலாம். ஆகவே அகவயமானதும் உள்ளத்தோடு தொடர்புடையதும் குறியீட்டுத் தன்மையானதுமாகிய பண்பாட்டிலே கடைப்பிடிக்க வேண்டியவற்றைக் கடைப்பிடித்துத் தரணியெங்கும் தமிழர் வாழ்ந்தாலும் எமது பண்பாடு எம்மை விட்டு நீங்கிச் செல்லாது கன்னித் தமிழின் பண்பாட்டைக் கட்டியணைப்போமாக.
தமிழைக் காப்போம் ! பண்பாட்டைப் பேணுவோம்!
46

ஆவணமாக்கலில் பாடசாலை நூலகங்களின் பங்களிப்பு
திருமதி கு. ஜெயகெளரி நூலக உதவியாளர்
பண்டைக்காலம் தொட்டு ஏதோ ஒரு வகையில் மக்கள் தாம் வாழ்ந்த வாழ்வின் அடையாளங்களை தம் சந்ததிகளுக்கு கையளித்துவிட்டே செல்கிறார்கள். இது காலங்காலமாக இடம்பெற்றுவரும் ஒரு செயற்பாடாகும். அன்று ஏட்டிலும், சுடுமண் வடிவங்களிலும், கல்வெட்டுக்களிலும், செப்பேடுகளிலும் பதிவுசெய்தவற்றை இன்றும் ஆவணமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறோம். அந்த வகையில் பாடசாலை நூலகங்கள் இந்த ஆவணமாக்கலில் எவ்வாறு பங்கெடுக்கலாம் என்பது பற்றிய ஓர் அறிமுகமாக இக்கட்டுரை அமைகின்றது.
“ஆவணமாக்கல்(Documentation) என்பது ஒன்றைப் பற்றிய அறிவுக்குத் தேவையான ஆவணங்களைப் பெறுதல் அல்லது உருவாக்குதல் ஒழுங்கமைத்தல் பாதுகாத்தல் பகிர்தல் போன்ற செயற்பாடுகளைக் குறிக்கின்றது.’ (ஆதாரம்-விக்கிபீடியா)
ஒரு சமூகம் எப்படி வாழ்ந்தது என்பதை வருங்காலச் சந்ததிக்கு எடுத்துக் கூறும்முகமாக ஆவணமாக்கல் முக்கியமாக அமைந்துள்ளது. பண்டைய மக்களின் வாழ்வை அவர்களின் பண்பாட்டை இன்றும் கல்வெட்டுக்களிலும் செப்பேடுகளிலும் தேடிக்கொண்டுதானே இருக்கிறோம். அதேபோல் இன்றைய எமது வாழ்வும் சரியாகப் பேணப்படவேண்டியது மிக அவசியமாகும்.
தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரையில், அவர்தம் வரலாறோ வாழ்வு பற்றிய ஆதாரங்களோ தொடர்ச்சியாகப் பேணப்படவில்லை. அவ்வாறு பேணப்பட்ட சொற்ப ஆதாரங்களும் திட்டமிட்டு அழிக்கப்பட்டோ அல்லது மறைக்கப்பட்டோ அல்லது சிதைக்கப்பட்டோ வந்துள்ளமை நாம் அறிந்த வரலாறு ஆகும்.
இன்று எமது ஆவணங்கள் ஆங்காங்கு தனிநபர் முயற்சியாலும் கூட்டுழைப்பாலும் பேணப்படுகின்றன. இதற்கு சிறந்த உதாரணமாக நூலகம் திட்டத்தின் ஊடாக ஈழத்தமிழரின் பத்தாயிரம் வரையான எழுத்தாக்க ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளமையைக் குறிப்பிடலாம்.
47

Page 39
இவ்விடத்தில் பாடசாலை நூலகங்கள் இந்த ஆவணமாக்கலில் எவ்வாறு பங்களிக்கலாம் என்பது பற்றிய சில ஆரம்ப நிலைகளை இக்கட்டுரையில் எடுத்துக் காட்டலாம். பாடசாலை என்பது ஒரு சமூகத்தின் மிகப் பெறுமதியான ஒரு நிறுவனமாகும் . எதிர்காலச் சந்ததFகளை ஆளுமையுடையவர்களாக ஆக்கும் முதல்நிலையான நிறுவனம் இது. இங்கு தனியே கற்றல் மட்டுமன்றி எதிர்காலத்தில் அந்த மாணவர்கள் சிறந்த தலைமுறையினராக உருவாகுதற்குரிய வழிகாட்டல்களும் வழங்கப்படுகின்றன.
இதற்கு ஏற்ற தேடலையும் வாசிப்பையும் நிகழ்த்துவதற்கு முக்கியமாக அமைபவை பாடசாலை நூலகங்கள் ஆகும். இந்த நூலகங்கள் தனியே நூல்களையும் பத்திரிகைகளையும் தாங்கி நிற்பனவாக அல்லாமல் எமது வாழ்வு வரலாறு சார்ந்தவற்றை சேகரித்து ஆவணப்படுத்தும் களமாகவும் திகழ வேண்டியது அவசியமாக உள்ளது. ஏற்கனவே இந்தச் செயற்பாடுகளில் இலங்கையில் உள்ள பொதுநூலகங்கள் மற்றும் பல்கலைக்கழக நூலகங்கள் செயலாற்றி வருகின்றன.
ஒரு பாடசாலை நூலகமும் ஏற்கனவே வழக்கத்தில் உள்ள நூல்கள் பத்திரிகைகள், சஞ்சிகைகள் மற்றும் பிற எழுத்தாக்க முயற்சிகளையும் சாதாரணமாக வாசிப்புக்கு வைத்திருக்கின்றது. இவை மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் வாசிப்புக்கும் ஆய்வுக்கும் உரியனவாக அமைந்திருப்பன. இதனை நூலகம் என்று சொல்லப்படுகின்ற எல்லா அமைப்புக்களுமே கடைப்பிடிக்கின்றன.
ஒரு பாடசாலை நூலகத்தில் இதற்கும் அப்பால் எவ்வாறானவற்றை ஆவணப்படுத்தலாம் என்று நோக்குவோம்.
0 பாடநூல்கள் - கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தால்
இலவசப்பாடநூல்களாக காலத்துக்குக் காலம் வெளியிடப்பட்ட எல்லாத்துறை சார்ந்த நூல்களும்
0 ஆசிரியர் கைந்நூல்கள் - தேசிய கல்வி நிறுவகம் மற்றும்
கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தால்
அறிமுகப்படுத்தப்படும் ஏனைய வழிகாட்டல்கள்
9 கல்வி அமைச்சினால் விசேடமாக வெளியிடப்படுவன.
(உதாரணம் - நூல்கள், மலர்கள்)
48

மாணவர்களின் செயற்றிட்டம் அல்லது ஆய்வுகள் (க.பொ. உத மாணவர்களினது)
குறித்த பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களது நூல்கள் மற்றும் ஆய்வேடுகள் (முடியுமானால்)
குறித்த பாடசாலைச் சூழல் சார்ந்த வெளியீடுகள் (எழுத்தாளர், மற்றும் பொது நிறுவனங்கள்)
பாடசாலை சார்ந்து செய்யப்படும் ஏனைய செயற்றிட்டம் அல்லது ஆய்வுகள் (மாணவர், ஆசிரியர், ஏனையவர்)
பாடசாலை ஆண்டு மலர்கள், மலர்கள், சஞ்சிகைகள், பருவ இதழ்கள், செய்தி மடல்கள்
பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலை சார்ந்த கிளைச்சங்கங்களால் வெளியிடப்படும் எழுத்தாக்க
ஆவணங்கள்
பாடசாலை வரலாறு, கட்டிட அமைப்பு மற்றும் அதனுடன் இணைந்த ஆவணங்கள்
பாடசாலை நிகழ்வுகள் தொடர்பான அழைப்பிதழ்கள், பத்திரிகை நறுக்குகள், புகைப்படங்கள்
பாடசாலை தொடர்பான முக்கியமான ஒளிப்பேழைகள், ஒளிநாடாக்கள்
ஸ்தாபகர், அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் முக்கியமான குறிப்புக்கள்
பாடசாலையின் சாதனைகள்
இவ்வாறானவற்றை ஆவணப்படுத்தும்போது ஒரு பிள்ளை அல்லது
பாடசாலை சார்ந்த சமூகம் தமது பாடசாலை பற்றியும் அது வளர்ந்து வந்த வரலாறு பற்றியும் அறிந்து கொள்வதற்கு வாய்ப்பு ஏற்படும். மிகப் பெறுமதியான ஆவணங்களாக இவை கருதப்படும் கட்டத்தில் எமது தமிழர் கல்வி வரலாற்றில் குறித்த பாடசாலையும் அது சார்ந்த சமூகமும் எவ்வாறான நிலையில் இருந்துள்ளன என்ற வரலாற்று ஆய்வுக்கு
49

Page 40
வழிவட்டிகளாக அவை அமையக்கூடும்.
இவ்வாறான வேலைகள் ஒரு பாடசாலை நூலகத்தின் வேலைச்சுமையை அதிகரிக்கும் என்றோ அல்லது பாடசாலைக் கற்றற் செயற்பாட்டில் இன்வ செல்வாக்குச் செலுத்தமாட்டா என்றோ கருதி பலர் இதனைத் தட்டிக் கழிக்கலாம்.
ஆண்ால் பாடசாலை சார்ந்த சமூகத்திற்கு எப்போதும் இவை தேவையானவையாக இருக்கின்றன. குறித்த பாடசாலையில் இருந்து கல்வி கற்று வெளியேறும் பிள்ளை தனது எதிர்கால ஆய்வுத் தேவைகளுக்கு இந்த நூலகங்களை மீளவும் நாடவேண்டிய நிலை உள்ளது. வரலாற்று நூல்களையும் பிற துறை சார்ந்த நூல்களையும் எழுதும் பேராசிரியர் மற்றும் ஆய்வாளர்களுக்கு மிஷனரிமார் ஸ்தாபித்த கல்லூரி நூலகங்கள் மிகப் பெறுமதியான ஆவணங்களை வழங்கியுள்ளன.
ஆனால் தமிழர் பிரதேசங்களைப் பொறுத்தவரையில் தொடர்ச்சியான போர்ச்சூழல் எல்லாவற்றையும் அழித்து விட்டிருக்கின்றது. இன்று வெளிநாடுகளில் கல்வி மற்றும் ஆய்வினைச் செய்யும் பலர் அந்தந்த நாடுகளில் உள்ள நூலகங்களில் இருந்து தமிழர் வாழ்வு பற்றியும் வரலாறு பற்றியும் மேலைத்தேசத்தவர்கள் எழுதிய குறிப்புக்களில் இருந்து தேடிப்பிடித்துத்தான் எமது வரலாற்றை எழுத வேண்டிய துர்ப்பாக்கிய நிலை தற்போதும் ஏற்பட்டுள்ளது.
எனவே எமது பிரதேசத்து ஆவணங்களையாவது நாம் பேணிப் பாதுக்காக்க முன்வரவேண்டும். அவை எமக்கு இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் வரப்போகின்ற எமது சந்ததிகளுக்கு நிச்சயம் உதவப்போகின்றன. இவ்வாறான செயற்றிட்டத்தை இலங்கையில் உள்ள பாடசாலை நூலகங்கள் தத்தமது தகுதிப்பாட்டுக்கு ஏற்ப மேற்கொள்ளும் போது எல்லாவற்றுக்கும் ஒருவரையோ அல்லது குறித் நூலகத்தையோ நாம் தேடிச்செல்லவேண்டிய நிலை ஏற்படாது. எல்லாவற்றுக்கும் மேலாக எமது வாழ்வையும் எமது வரலாற்றையும் எமது பண்பாட்டையும் எமக்கு அந்நியர் வந்து கற்றுத்தரவேண்டிய துர்ப்பாக்கியம் ஏற்படாது என்றும் சொல்லலாம்.
50

GeograndøvespøSpueuxOAmb திரு.கு.மனோகரன் B.Sc, Dip.im Ed.
ஆசிரியர்.
கணிதம் வாழ்க்கையோடு ஒன்றிணைந்துள்ளது. எமது தேவைகளை திறைவுசெய்யும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் கணித அறிவு இன்றியமையாததாகவுள்ளது. கணித பாடமானது எண்கணிதம், அட்சரகணிதம், கேத்திரகணிதம் எனும் மூன்று பிரிவுகளை உள்ளடக்கியது. இவற்றில் கேத்திரகணிதத்தை எடுத்துக்கொள்வோமெனில் இதனைக் கற்பதனுடாக சிந்திக்கும் ஆற்றல், விளக்கும் ஆற்றல், தர்க்கிக்கும் ஆற்றல், கற்கும் ஆற்றல் என்பவற்றினை வளர்த்துக்கொள்ளலாம். அத்துடன் வாழ்க்கையோடு கணிதத்தை இணைத்து அதனைப் பிரயோகிக்கும் பண்புகளையும் வளர்த்துக்கொள்ளலாம்.
கணிதபாட பரீட்சையை எதிர்நோக்கும் மாணவர்களில் அனேகமானோர் வினாக்களைத் தெரிவு செய்யும்போது கேத்திரகணிதம் சம்பந்தமான வினாக்களைத் தவிர்த்து விடுகின்றனர். இதனால் கணிதக் கல்வியின் நோக்கம் தடைப்படுவதோடு கணிதபாட அடைவுமட்டமும் குறைந்துவிடுகின்றது. அத்துடன் தொடர்ச்சியான கல்வியும் பாதிப்புக்குள்ளாகின்றது. இத்தகைய நிலை கணிதபாடம் கடினமானது என்பதற்குரிய ஒரு காரணமாகவும் அமைந்துவிட நேரிடுகிறது. இதனைச் சீர்செய்ய மாணவர்களிடத்தில் அடிப்படைக் கேத்திரகணித அறிவை வளர்க்க வேண்டும்.
கேத்திரகணித அணுகுமுறைகள் வாழ்க்கைக்கு மிகவும் பயன்படக்கூடியன. சிந்தனையைத் தூண்டும் நுட்பங்கள் இங்கு காணப்படுகின்றது. சட்டதிட்டங்களை அனுசரித்தல், திட்டமிடல், தீர்வுகாணல், கண்டுபிடித்தல், புதிய அனுபவங்களைப் பெறல் போன்ற பண்புகள் இதன்மூலம் வளர்க்கப்படுகின்றது. எனவே மாணவர்கள் கேத்திரகணிதத்தை ஆர்வத்தோடு கற்கவேண்டும். அடிப்படை விடயங்கள் சரியான முறையில் தெளிவுபடுத்தப்படாத காரணங்களினாலேயே மாணவர்கள் கேத்திரகணிதம் சம்பந்தமான பகுதிகளைக் கற்பதற்கு விரும்பாதவர்களாகவும் அது சம்பந்தமான பிரசினங்களை அணுகாதவர்களாகவும் உள்ளனர்.
5

Page 41
ஆசிரியர்கள் இந் நிலையிலிருந்து மாணவர்களை மாற்றியமைத்து கேத்திரகணிதம் இலகுவானது என்ற எண்ணத்தை உருவாக்கி கேத்திரகணித ரீதியில் அவர்களை அழைத்துச்செல்ல வேண்டும்.
கிரேக்க அறிஞர் பிளேற்றோ தான் ஆரம்பித்த அக்கடமியா என்ற பல்கலைக்கழகத்தின் முன் “கேத்திரகணிதம் அறியாதவன் இங்கு நுழையாதிருப்பானாக” என்று குறிப்பிட்டிருந்தார். இவ் வாசகத்திலிருந்து அந்தக் காலத்திலேயே கேத்திரகணிதம் முக்கியமானதாகக் காணப்பட்டது என்பதை அறிந்து கொள்ளலாம்.
மாறிவரும் உலகில் கேத்திரகணிதத்தின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டு செல்கின்றது. விஞ்ஞானத்துறையின் வளர்ச்சிக்குக் கேத்திரகணித்தின் பயன்பாடு இன்றியமையாததாகக் காணப்படுகின்றது. எனவே காலத்திற்கேற்ப ஈடுகொடுத்து வாழக்கூடிய முறையில் மாணவர் சமுதாயத்தை உருவாக்க வேண்டும். இதற்குக் கேத்திரகணித அறிவை வளம்படுத்த வேண்டியதும் ஒரு வழியாகும். கேத்திரகணிதம் தெரிந்தவன் வாழ்க்கையில் எந்தப் பிரச்சினையையும் சமாளிப்பான் என்பது முன்னோர்களின் கருத்தாகும்.
அன்பான மாணவர்களே, கேத்திரகணித அறிவை வளர்க்க ஆர்வத்தோடு முன்வாருங்கள். மாணவர்களிடத்தில் கேத்திரகணித அறிவை அடிப்படையிலிருந்து படிப்படியாக வளர்த்து அவர்களின் சிந்தனையைத் தூண்டி ஆற்றலை மேம்படுத்த வேண்டியது ஆசிரியர்களாகிய எமது (BL60)LDu IT(5lb.
“கேத்திரகணித அறிவை வளர்ப்போம். வாழ்வில் வளம் பெறுவோம்”.

நிறுவனங்களும் தலைமைத்துவமும் Organizations and the Leadership
செல்வி.சிவாந்தி தர்மலிங்கம், B.Com(Hons), Dip.in Ed. ஆசிரியர்.
மிக விரைவாக மாறுபட்டுச் செல்லும் இன்றைய சூழலிலே எந்த ஒரு நிறுவன அமைப்பும் வெற்றிகரமாகச் செயற்பட்டுத் தமது இலக்கினை அடைந்து கொள்ளவேண்டுமாயின் அங்கு சிறந்த தலைமைத்துவம் இருத்தல் அவசியமாகும். நிறுவனங்களின் இத் தலைமைத்துவக் கருமங்களைச் சிறப்பாக ஆற்றுவதற்குப் பொறுப்பாகத் தலைவர் காணப்படுவார். சிறந்த தலைமைத்துவம் இன்றி நிறுவனம் செயற்றிறனுடனும் வினைத்திறனுடனும் செயற்படமுடியாது. இந்த வகையில் தலைமைத்துவம் தொடர்பான சில விடயங்களைச் சுருக்கமாக ஆராய்வோம்.
த்துவம் தொடர்பான சில எற்றுக்கொள்ளப்பட் விலக்கணங்கள் (Some accepted definitions for Leadership)
ALBERT AND KHEDOORN : “அமைப்பொன்றின் இலக்கினை நிறைவேற்றிக்கொள்வதற்குத் தனிநபர் அல்லது குழுக்களின் நடத்தையின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றல் தலைமைத்துவம் ஆகும்.”
STONER AND FREEMAN : “குழு உறுப்பினர்களது தொழிலுடன் தொடர்புடைய கருமங்களுக்கு வழிகாட்டிச் செல்வாக்குச் செலுத்தும் செயல்முறை தலைமைத்துவம் ஆகும்.”
* தலைமைத்துவத்தின் முக்கியத்துவம் (Importance of Leadership)
நிறுவனங்கள் தமது இலக்கினை உரிய முறையில் அடைந்து கொள்வதற்கு, ஊழியர்கள் அனைவரது பங்களிப்பையும் பெறுவதற்கு.
நிறுவனக் கருமங்கள், நியமங்கள் விதிமுறைகளுக்கு அமைய மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு.
53

Page 42
米
மாறுபட்டுச் செல்லும் சூழலில் சூழல் மாற்றங்களை எதிர்கொண்டு தமது இலக்கினை அடைவதற்கு. உயர்ந்த பெறுபேறுகளைப் பெறுவதற்காக ஊழியர்களை ஊக்கப்படுத்துவதற்கு நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளுக்கிடையே இணைப்பையும் தொடர்புகளையும் ஏற்படுத்துவதற்கு. அமைப்பில ஏற்படுகின்ற குறைபாடுகளை இனங்கண்டு திருத்துவதற்கு. உதவியாளர்களிடையே தன்னம்பிக்கையையும் அர்ப்பணிப்பையும் ஏற்படுத்துவதற்கு.
g5606060)LD556) u60irs6ft (Characteristics of Leadership)
உடலியல் காரணிகள்
(உடல் ஆரோக்கியம், புருடத்துவம், நிறை, பொருத்தமான உயரம்)
சுய ஒழுக்கம். புத்திசாதுரியம் தன்னம்பிக்கை சமூகமயமான தன்மை செல்வாக்குச் செலுத்தும் ஆற்றல் நியாயத்துவம் நடுவுநிலைமை அர்ப்பணிப்பு
உறுதி முன்நிற்கும் ஆற்றல் மொழியாற்றல் ஆளுமைத் தன்மை விரும்பத்தக்க தன்மை
g5606060) Disgj6), 6 g) d5856ft (Leadership Powers)
பிறர்மீது செல்வாக்குச் செலுத்தி அவர்களது நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய ஆற்றல் அல்லது தன்மை வலு எனப்படும். இந்த வகையில் தலைவர் ஒருவரிடம் பின்வரும் வகையான வலுக்கள் காணப்படமுடியும்.
-
6)(3FL 69 (Expert Power)
குறித்த ஒரு துறையில் கொண்டுள்ள விசேட திறன், அனுபவம், கல்வி அறிவு போன்றவற்றால் ஏற்படும் வலு.
54

G6)(3LD5 96fligib 6.jg) (Reward Power)
தனது நோக்கத்தை அடைவதற்குப் பல்வேறு வகையான ஊக்கப்பாடுகளை வழங்குவதன் மூலம் செல்வாக்குச் செலுத்தும் பலம்.
dysOLDigiD 61g) (Charismatic Power)
பிழைகளை இனங்காணல், தவறுகளைத் திருத்துதல் மூலம் ஏனையவர்களில் செல்வாக்குச் செலுத்தும் வலு.
s(6560LD 6ig) (Personality Power)
அதிகாரத் தோற்றம், நடத்தை, தனிப்பட்ட பண்புகள் மூலம் செல்வாக்குச் செலுத்தும் பலம்.
5606)6OLD556 &ITuus) (Leadership style)
1. தலைவர் செயற்படும் முறைமையின் அடிப்படையில்
(Operational Trait approach basic)
Fj6JTg5a5.Tygi, g5606061.j (Autocratic Leader)
தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி உதவியாளர்கள் மீது செல்வாக்குச் செலுத்தும் ஆற்றல் உடையவர் இவராவர்.
g60, b|Tubgs b60606.j (Democratic Leader)
உதவியாளர்களுடைய கருத்துக்களையும் பெற்று நியாயமான முறையில் தீர்மானங்களை மேற்கொண்டு உதவியாளர்களை வழிநடாத்தும் ஆற்றல் பெற்றவர் இவர் ஆவார்.
தடைவிதியாத் தலைவர் ( Laisez - Fair Leader )
உதவியாளர்களுடைய செயற்பாடுகளில் எந்தவிதமான தடைகளும் விதியாது அவர்களைச் சுதந்திரமாகச் செயற்பட அனுமதிக்கும் தலைவர் இவராவார்.
2. தலைவரின் நடத்தைப் பாங்கின் அடிப்படையில் (Behavioural Approach Basic)
*** Gg5 Tf6d3FMTij (pab IT60oDgög56) #Tuu6d (Task Oriented Style)
ஊழியர்களைக் கொண்டு வேலைகளைச் செய்விப்பதில் கூடிய அக்கறைசெலுத்தும் முகாமைத்துவ சாயல் இதுவாவும்.
55

Page 43
Oslguuj 3 Tij (gp35T60LD5gj6 FITu6) (Employee - Oriented style)
நிறுவனப் பணிகளைச் செய்விக்கின்றபோது ஊழியர் நலனில் கூடிய அக்கறை செலுத்தும் முகாமைத்துவ சாயல் இதுவாகும்.
இவ்வாறாகச் சிறந்த தலைவர்களினூடாகப் பெறப்படுகின்ற சிறந்த தலைமைத்துவம் நிறுவனத்தையும் நிறுவன வழங்கலையும் ஒன்றுபடுத்தி நிறுவன இலக்கினை வெற்றிகரமாக அடைந்துகொள்வதற்குத் துணைபுரிகின்றது.
வழிப்படுத்திய துணை நூல்கள்
01. தேவராஜன் ஜெயராமன்.ந - முகாமைத்துவத்திற்கு ஓர் அறிமுகம் -
Pavala Rathna Publication - Kabdy - 2000)
02. தேன்கூடு - வடமராட்சி வலய ஆசிரிய மத்திய நிலையம், வெளியீடு
1, 2006.
03. வணிகக்கல்வி, ஆசிரிய அறிவுரைப்பு வழிகாட்டி - கல்வி
வெளியீட்டுத்திணைக்களம்,தரம் 13.
04. ஜகத் பண்டாரநாயக்க, சிவநேசராசா.அ - வணிகக்கல்வி - தரம் 13
UTB b 2-1 ., 2005.
05. LDųJ6ör.676mò - 6J60ofa5ä5 a56d6î Part II - Book I - V.M Publication -
Colombo.-2007.
வாசிப்புத் தொடர்ச்சியான ஒன்று. ஆனால் ஒரு நூல் முடிந்துபோன இறுதிப்பொருள்.
- ராஜ் கெளதமன் -
 

வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற கண்காட்சி - 2011
(240 நாடுகளிலிருந்து வெளியான நாணயங்கள், நாணயத்தாள்கள்
அடங்கிய சர்வதேச அரிய, புராதன நாணயக் கண்காட்சி)

Page 44

uïGBoom e5usisbúīc5mGBFI (Pablo Rutz Picasso)
O. O. வழககை வரலாறு
செல்வி B. பிரவீனா, B.F.A ஆசிரியர்.
உலகப்புகழ் பெற்ற ஒவியர், நவீன ஓவியத்தின் தந்தை, புதுமை ஓவியர், 91 வயது வரை வாழ்ந்த இளமை ஒவியர், "ஓவியத்தில்" இரண்டாவது மறுமலர்ச்சிக் காலத்தை உருவாக்கியவர். 20ஆம் நூற்றாண்டின் ஈடிணையற்ற மக்கள் ஒவியர் என்று போற்றப்பட்ட இவர் 25ம் திகதி ஒக்ரோபர் 1881 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டின் மலாக்கா (Malaga) என்ற கிராமத்தில் Don Jose Ruiz Blasco 6165 B Artist 3bgbub Maria Picasso Lopex என்பவருக்கும் குழந்தையாகப் பிறந்தார்.
இவரது இளமைப்பெயர் மிக நீளமானது. “பாப்லோ டீகோ ஜோசே .பிரான்சிஸ்கோ டிபெளலா ஜின் நெபோமியபூசெனோ கிறிஸ்பின் கிறிஸ்பீனியானோ டிலா சாண்டிஸிமா டிரினிடாட் ரைஜ் பிக்காஸோ” என்பது தான் வைக்கப்பட்ட முழுப்பெயர். தாயின் பெயரைக் கொண்டு "பாப்லோ பிக்காஸோ' என அழைக்கப்பட்டார்.
ஒன்பது வயதிலேயே அவர் கண்களை மூடிக்கொண்டு எந்த உருவத்தையும் வைத்த கையை எடுக்காமலே வரைந்து காட்டுவார். தந்தை அரைகுறையில் விட்டுச்சென்ற ஒவியத்தை வரைந்து முடித்து தந்தையின் பாராட்டைப் பெற்றார். அப் புறா ஒவியமானது உயிர்த்துடிப்புடன் காணப்பட்டது.
பிக்காஸோவின் தந்தை மகனை லாலொன்ஜா நுண்கலைக் கல்லூரியில் சேர்த்தார்.1897 இல் 16 ஆவது வயதில் ரோயல் அக்கடமியில் சேர்ந்தார்.
1900 ஆம் ஆண்டில் முதன்முதலாக ஸ்பெயின் நாட்டின் ஓவியரான பிக்காசோ பிரெஞ் நாட்டின் தலைநகரான பாரிஸிக்குச் சென்றார். அங்கே தங்கியிருந்து கலைகளைக் கற்று ஒவியங்களைப் படைக்க ஆரம்பித்தார்.
பிக்காசோ ஒரே நேரத்தில் பலவிதமான ஒவியங்களை, பலவிதமான கருவைக் கொண்டு வெவ்வேறு முறையில் படைத்தார். எனவே பிக்காசோவின் படைப்பை பகுதிகளாகவோ, சில காலங்களாகவோ பிரிந்து விமர்சிக்கும் முயற்சி அவ்வளவு சிறப்புடையதாகாது.
57

Page 45
1901 - 1904 இல் வரையப்பட்ட ஓவியங்கள் நீல யுகத்திற்குரிய (BuePeriod) ஒவியங்களாகக் காணப்பட்டன. இக்காலப்பகுதியில்தான் நவீன ஒவியங் களுக்கான பயிற்சி எடுக்கப்பட்ட காலம் ஆகும். எல்கிரகோ (EL Greco) என்ற ஓவியரது படைப்புக்களினால் பிக்காசோ பாதிப்புப் பெற்றது இந்த யுகத்தில்தான். இக் காலப்பகுதியில் பாரிஸிற்கும் பார்செலோனாவிற்கும் பலமுறை பயணம் செய்து அதன் விளைவாக அவர் பாரிஸ் நகரத்தெருவின் சோக வாழ்வை அதிலிருக்கும் பிச்சைக்காரர், விபச்சாரி, நோய்வாய்ப்பட்ட குழந்தை, பசி ஆகிய விசயங்கள் மூலம் ஓவியம் தீட்டுகையில் நீலநிறம்தான் கான்வஸ்களில் பிரதிபலித்தன. இதனால்தான் இக்காலப்பகுதி நீலயுகமாகக் கருதப்பட்டது. இக்காலத்தில் "பார்வையற்ற சிதார் கலைஞன்”, "இரு சகோதரர்கள்”, “குதிரையை நடத்திச் செல்லும் சிறுவன்", "துயரம்", "பெண்ணோடு காகம்", "தாயும் நோயுற்ற குழந்தையும்” என்ற ஒவியங்கள் முக்கியமானவை
1904 - 1907 ஆண்டுகளில் வரையப்பட்ட ஓவியங்கள் இளஞ்சிவப்புக் குரிய (Pink Period) காலமாகக காணப்பட்டது. இங்கே இவரது தொனிப்பொருள் சர்க்கஸ்காரர்களும், முகமூடிகள், கோமாளிகள் போன்றோர்களுடன் அந்த குழுக்களோடு பிக்காசோ ஒன்றாக வாழ்ந்தார். இதனாலே அவர்களது விடயங்களில் அதில் பாதிப்புப் பெற்றன. மென்மையான எண்ண ஓட்டங்கள், நடிகர்கள், சர்க்கஸ்காரர்கள், கோமாளிகள் ஆகியோர் இவரது மிருவான நிறங்களான மாநிறம் மற்றும் இளஞ்சிவப்பும் தீட்டப்பட்டனர். இதனாலேயே இக்காலம் இளஞ்சிவப்புக்காலம் எனப்பட்டது. இக்கால சிறந்த படைப்பாக சுழியோடியின் குடும்பமும் வானரமும் (The Family ofAcrobats with Ape) காணப்படுகிறது.
1907 ஆம் ஆண்டு நீக்ரோகாலம், கண்கள் காணும் தோற்றங்களின் அடிப்படையில் செயற்படுவதில்லை. சிந்தனையும், கருத்துக்களையும் மேற்போக்காக நம் வெளிப்பாட்டை அவை சித்தரிப்பதில்லை. மாறாக அவற்றுக்கு உருவம் கொடுக்கின்றன. நீக்ரோக்காலக் கலை எனப்பட்டது. 1907 ஆம் ஆண்டில் தொடங்கி கியூபிசம் தோற்றம் பெற்றது.
1925ம் ஆண்டளவில் அகயார்த்த வாதத்தில் சிறிது கவரப்பட்டார். எனினும் அதில் அதிக நாட்டம் கொள்ளாது வெளிப்பாட்டு வாத ஓவியங்களைப் படைக்கலாயினர்.
கியூபிசம் தொடக்கப்பட்ட இரண்டாண்டுகளிலே தேக்க நிலையை சந்தித்து கொலஸ் (Colase) என்ற சித்திர ஊடகத்தை உலகுக்குத்
58

தந்தார். 1917ல் பிக்காசோ தன் நண்பன் “ஜின்காக்கு" என்பவரிடம் ரோம் நகள் சென்று உடையலங்காரக் கலையில் ஈடுபட்டார். 1925 முதல் கொண்டு அவரது படைப்புக்கள் ஆழமும் வேகமும் உள்ளதாகவும், உணர்ச்சிக் கட்டுப்பாடற்ற வெளிப்பாடுகள் உள்ளதாகவும் அமைந்துள்ளன.
1923ல் நேர்ச்சலிசம் என்ற பாணி ஓவியத்தில் அதிகம் போற்றப்பட்டதாகும். இதில் "வெள்ளைநிறத்தில் பெண்” என்ற ஒவியத்தை வரைந்தார். 1932 இல் சரியலிச முறையைப் பின்பற்றி “கண்ணாடி முன் பெண் குழந்தைகளும்" என்ற ஒவியத்தைத் தீட்டினர். இதற்குக் காரணமாக கள்ணரிகா என்ற கலைப்பொக்கிஷம் உலகுக்குக் கிடைத்தது.
1937ல் ஜேர்மனிய குண்டுக்கள் பாதுகாப்பற்ற ஸ்பானிய நகரான கள்ணரிக்காவை தரமட்டமாக்கிவிட்டதை பிக்காசோ கேட்டுத்துடித்தார். இரவு பகல் பாராது “குவர்னிகா” என்ற ஒவியத்தைத் தீட்டினார். இதன் காரணமாக "குவர்னிகா” என்ற கலைப்பொக்கிஷம் உலகுக்குக் கிடைத்தது.
1947 இல் "இரவு உணவு தயார்” என்ற ஒவியம், "அல்ஜீரியப் பெண்கள்" என்ற தொடரோவியப் பரப்பில் தமது வழக்கமான நிறங்களுக்குப் பதிலாக கென்றிமன்ரிஸைப் போல் பளபளப்பான நிறத்தில் வரைந்து ஆச்சரியப்படுத்தினார்.
தனது 90வது வயதில் இளைஞனைப் போல் வேகம் குன்றாமல் ஒவியத்துறையில் ஈடுபட்டதுடன் எக்காலத்திலும், கட்டத்திலும், எந்த வயதிலும் காலத்திற்கு ஏற்றாற்போல் தந்தை அதாவது தனது பணியை புதுப்பித்துக் கொள்ளும் ஆற்றல் மிக்கவன் கலைஞன் என்று மெய்ப்பித்துக் காட்டியவர் பிக்காஸோ ஆவர்.
சமாதானத்தின் சின்னமாக வெண்புறாவை அமைத்துக்கொடுத்தவரும் பிக்காஸோதான். உலகிலேயே மிகப் பெரிய பணக்கார ஓவியர் இந்த பப்லோ பிக்காசோதான். ஒவியத்தின் மூலம் உலகிற்கே புதிய பாணியில் தொடங்கி வைத்தவரும் அதன் பாணியை பின்வந்தோரால் தொடர்ச்சியாகப் படைக்க உதவியவருமான பிக்காஸோ தனது 91வது வயதில் 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 07 ஆம் நாள் காலமானார்.
59

Page 46
EFFECTIVE - Communication
Mr. N. Prahas, Part Time English Teacher.
Communicationis the process of sharing information, thoughts and feelings between people through speaking, writing or body language. Effective communication extends the concept to require that transmitted contentis received and understood by someone in the way it was intended. The goals of effective communication include creating a common perception. Changing behaviour and acquiring information.
Components
The actofoommunication begins withinternal processing about information or feelings you want to share with some one else (called encording). After encoding the massage is sent through either spoken or written words, which complete encording. At the other end of communication is receiving and interpreting what was sent (called decording). The recipient can and should confirm receipt to the senderto clase the communication loop.
Context: considering the context of communication improves the its effectiveness. Context takes into consideration the age, region, sex and intellectual abilities of the recipient. It is also useful to assess receptivily and the emotional state of the sender and receiver at the time of communication. For example when spending to an elementary schoolchild about the importance of brushing teeth. You should choose different words and examples than you would when taking to a teenager oran adult.
Body language: s also calledmoverbal communication, body language include posture. Position of hands and arms, eye contact and facial expression. Children learn to read body language as a way to enhance understand60

ingofthe speaker's intention. Body language that is consonant with the verbal contentimproves understanding. Body language that is inconsistent with content creates a question in the mind of the listenerabout the real message. For example : someone maybe saying "I really want to hear your opinion on this”. However if the personis looking away has his arms foldedoris typinga textmessage at the same time. His body language communication requires that content and body language give the same massage.
Interference:
Emotion can interfere with effective communication.fthe sender is angry. His ability to send effective messages. Maybe negatively af. fected. In the same way. If the recipientis upset or disagrees with the message or the sender. He may hearsomething different that what was intended by the sender. Considering emotions,language and conceptual barriers is essential to effective communication.
Active Listening:
Effective communicationis areciprocal process that includes listening. Sucessfull listeningrequires eye contactobjective processing and feedback to the speaker. Active listening mayinvolve asking clarifying questions orrestating what was heard to assure that the intent of the messagesent was correctly received. Activelistening becomesparticularly importantwhen the communicationincludesemotional content.
61

Page 47
காலத்துக்கேற்றமின்நூலகம்
திருமதி.ம.செல்வரஞ்சினி, B.A(Hons), ஆசிரிய நூலகர்.
“காலத்துக்கேற்ற வகைகள் அவ்வக் காலத்துக்கேற்ற ஒழுக்கமும் நூலும்.” என்று பாடினான் யுகப் பெருங் கவிஞன் பாரதி. முற்றிலும் நிதர்சனமான அவன் வரிகள் நூலகத்திற்கும் பொருந்தும். காகிதம் தயாரிப்பதற்கான வசதி வருவதற்கு முன்பே களிமண், மரப்பட்டை, ஒலை முதலியவற்றில் எழுதிய நூல்களை மனிதன் பாதுகாக்கத் தொடங்கியபோது நூலகம் பிறந்தது.
அச்சுக் கலையின் வருகையாலும் வளர்ச்சியாலும் நூல்கள் அதிகளவு அச்சிடப்பட்டன. அறிவுப் பரவலாக்கம் ஏற்பட்டது. ஊர்தோறும் நூலகங்கள், பாடசாலை தோறும் நூலகங்கள் என்று மட்டும் இல்லாமல் இன்று வீடுகள் தோறும் நூலகங்கள் உருவாகும் நிலையும் தோன்றியது. தகவல் யுகத்தின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் மின் நூலகம் அறிமுகமாகியது. மின் நூலகத்தின் முக்கிய சில அம்சங்களை இக் கட்டுரையில் சுருக்கமான முறையில் குறிப்பிடலாம்.
வன்பொருள், மென்பொருள் ஆகியவற்றின் உதவியுடன் இந் நூலகம் அமைக்கப்படுகிறது. குறிப்பிட்ட ஒரு இடத்தில் நூல்கள் பாதுகாக்கப்பட்ட முறையில் இருந்து மாற்றம் பெற்று அனைவரும் பார்க்கக்கூடிய வகையில் மின்நூலகம் அமைவதால் பெருவளர்ச்சியை இன்று கண்டுள்ளது. பழைய நூல்களில் இருந்து தற்கால நூல்கள் வரை மின் நூலகத்தில் பார்வையிட முடியும். அது மட்டுமல்லாது தேவையானவற்றைப் பெற்றுக்கொள்ளவும் (UDQUID.
மின் நூலகத்தின் முக்கிய கருவியாகக் கணனியே விளங்குகின்றது. மின் நூலகத்தின் முக்கிய நோக்கம் இன்றைய தகவல் தொழில்நுட்ப அறிவு வளர்ச்சிக்கான தேவைகளைப் பூர்த்தி செய்தல் ஆகும். ஆனால் இலங்கையில் இதன் பயன்பாடு குறைவாகவே உள்ளது.
நூல்கள் நூலகத்தால் அழிந்து போகாமல் பாதுகாக்கும் முதன்மைப் பணியை இந் நூலகங்கள் மேற்கொள்கின்றன. நூல்களைக் காவிச்
62

செல்லுதல், பாதுகாத்தல் என்ற நிலைமாறி எங்கு சென்றாலும் நூல்களை மின்நூலகத்தில் பெறலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. குறைந்த செலவில் இருந்த இடத்தில் இருந்து கொண்டே நூல்களைப் பெற இந் நூலகம் உதவுகிறது. குறுகிய காலத் தேடலில், தேடும் நூலைக் கண்டுபிடிக்க முடிகிறது. சாதாரணமாக நூல்களைச் சேமித்து வைக்கும்போது ஏற்படும் இட நெருக்கடிப் பிரச்சினை இங்கு இல்லை. ஒரே நேரத்தில் பலர் ஒரு நூலைப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்புக்களை இந் நூலகம் ஏற்படுத்தித் தருகிறது. சாதாரணமாகக் கட்டடங்களில் உள்ள நூல்கள் தூசிபிடிக்க, பக்கங்கள் கிழியப் பழுதடைந்துவிடும். இங்கு அவ்வாறு பழுதடைவதற்கான சாத்தியங்கள் இல்லை.
மின் நூலகத்தின் வருகையால் நூலக நிர்வாகக் கட்டமைப்பும் மாற்றம் பெற்றுள்ளது. தகவற்கட்டமைப்பாளர், ஆவணக் காப்பாளர், அட்டவணையாளர், தகவல் முகாமையாளர், காப்பாளர் முதலிய பல நிர்வாகிகள் மின் நூலகக் கட்டமைப்பில் காணப்படுகின்றனர். இன்று நூலகர்கள் புத்தகத்தைப் பேணுபவர் என்பதில் இருந்து மின் நூலகங்களைப் பேணும் சிறப்புத் துறைசார் நிபுணர்களாகப் பரிணாமம் அடைந்துள்ளனர். மின் நூலகம் வாசிப்புப் பண்பாட்டை, கற்றற் பண்பாட்டை, காகிதப் பண்பாட்டிலிருந்து பிரித்தெடுத்தது. இது மின் நூலகத்தால் வந்த பண்பாட்டு மாற்றம் ஆகும். தேடல் என்பது மனிதனாகப் பிறந்த ஒவ்வொரு வாசகனுக்கும் இருக்க வேண்டியது அவசியமாகும். மின் நூலகத்தில் எந்தநேரமும் எந்த நூலையும் தேடிப் பெற முடியும். மின் நூலகம் மூடப்படுவதில்லை. அது எப்போதும் திறந்திருக்கும்.
மாணவர்கள் இன்றைய யுகத்திற்கான கணனி அறிவை நிரம்பப் பெற்று இருந்தால் மட்டுமே இந் நூலகத்தைப் பயன்பாடுடையதாக்க முடியும். மாணவர்கள் இணையத்தளத்தைத் தமது கல்வி வளர்ச்சிக்குப் பயன்படுத்துவது குறைந்து வருவதாகப் பரவலாகக் குற்றம் சுமத்தப்படுகிறது. அவர்கள் இணையத்தை, மின் நூலகத்தைப் பயன்படுத்துவதற்கும் கற்றலுக்கும் உபயோகித்தால் அவர்களது வாழ்வு வளம் பெறும்.
எனவே காலத்துக்கேற்ற வகையில் மனிதன் கண்டுபிடித்த பெரும் பேறாகிய மின் நூலகத்தை மாணவ சமுதாயம் நேரான வழியில் பயன்படுத்தினால் அறிவுப் புரட்சி ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது எனத் துணிந்து கூறலாம்.
63

Page 48
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுக்கொண்டவர்களின் விபரம் - 2011
தரம் போட்டியின் வகை
நிலை
மாணவர் பெயர்
ராகவி ன்
வாசிப்பு 85Lਸ சிங்கம்
அசோகலிங்கம் வாசிப்பு
பவச்செல்வன்
சிவபா ணவி விக்கினே
னி செல் பமிலா
BS
பாடலாக்கம்
பாடலாக்கம்
Making sentences in English
Making sentences in English
எழுத்தாக்கம்
English Essay
சுவரொட்டி
பொது அறிவு
1
2
3
1
2
3
2
3
1
2
3
2
3
1
2
3
1.
2
3
1.
2
3
2
3
2
3
6
4
 

English Essay
சிறுகதையாக்கம்
ஒவியம்
English Essay
கவிதையாக்கம்
விக்கினே ஓவியம்
65 urt கீரா பன்னீர்ச்செல்வம்
கோபிகா ன்
English Essay writing
"வாசிப்பு என்பது ஒரு தந்திக்கம்பி என்றும் சொல்லலாம். ஒரே நேரத்தில் மரணச்செய்தியும் போகும்; திருமணச் செய்தியும் போகும்; சில வேளை வியாபாரிகளின் விலையைச் சுட்டும் சமிக்ஞைகளும் போகும்; ஒரு கொலைக்கூட்டத்தின் குறிப்பு மொழியும் போகும். இந்தப் பல்வேறு குறிகளையும் ஒருங்கிணைப்பது வாசகம். எனவே அவன் தனக்கான அர்த்தத்தை அந்தக் குறிகளுக்குக் கொடுக்கின்றான்"
- தமிழவன் -
65

Page 49
பொது அறிவுப் போட்டி
இரு தினங்களுக்கு ஒரு தடவை ஒரு பொதுஅறிவு வினாவும் அதற்குரிய விடையும் கற்றல் வள நிலைய அறிவித்தல் பலகையில் காட்சிப்படுத்தப்படுவது வழமை. அதற்கிணங்க வேறுபல வினாக்களையும் உள்ளடக்கி 6 - 13 வரையான சகல மாணவரிடையேயும் ஒரே வினாப்பத்திரம் மூலம் நடாத்தப்பட்ட பொது அறிவுப் பரீட்சையில் பாராட்டுப் பெறுபவர்கள் விபரம். (30 புள்ளிகளுக்கு மேல்) - 2011.
இல பெயர் தரம் புள்ளிகள்
01. ச.மதுசுயா 7 48
02. இசைந்தவி 7 38
03. பு.சேதுப்பிரியா 7 30
04. ந.தர்சினி 9 50
05. ந.நவஜ்யோதி 9 44
06, ப.லவ்ஷிகா 9 42
07. unt.usf.Jgs 9 42
08. தி.கஜின்சனா 10 46
09. ச.ஜெயந்தினி 10 38
10. செ.செந்தாரகா 10 38
11. பு:மனோஜினி 11 50
12. வி.சர்மினா 11 40
13. சி.சுவர்ணா 11 36
14. சிதர்மிகா 11 36
15. பா.பைரவி A/L 44
16. செ.பிரமிளா A/L 42
17. சி.கஜிபா A/L 42
18.இபிரியதர்சினி A/L 38
19. ம.அனோஜா A/L 38
20. ர.நிரோஜா A/L 38
21. எஸ்.சைனுஜா A/L 38
22. அஜீவிதா A/L 36
66
 

2009 - 2010 காலப்பகுதியில் நூலகத்தை அதிகமாகப் பயன்படுத்திப் பரிசு பெறுபவர்
1. செல்வி.செல்லத்துரை பிரமிளா - உயர்தரம் 2. செல்வி.ந.நவஜ்யோதி - தரம் 9 வலய மட்டத்தில் நடாத்தப்பட்ட வாசிப்பு மாதப் போட்டியில் தெரிவுசெய்யப்பட்டோர்
1. பொது அறிவு
(கனிஷ்ட பிரிவு) - மதுசுயா சச்சிதானந்த ஐயர் - 1ஆம் இடம் 2. கவிதையாக்கம்
(மேற்பிரிவு) - மாதங்கி மகேந்திரன் - 1ஆம் இடம் 3. ஒவியம்
(மேற்பிரிவு) - தனுஜா விக்னேஸ்வரன் - 2ஆம் இடம்
எமது பாடசாலையின் ஓய்வுபெற்ற ஆசிரியை திருமதி. சா. முருகவேலி அவர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்ட சஞ்சிகை
Spirds60s (Periodical Shelf) 67

Page 50
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு வழங்கப்பட்ட
அன்பளிப்புக்கள் விபரம் - 2011
அன்பளிப்பு பெயர் பதவி/முகவரி 6)60)DGES 01 | திருமதி L.N. ஜோசேப் الانتياك நூல் 02 | திருமதி.கு. ஈஸ்வரி பிரதி அதிபர் நூல் 03 செல்வி.T.மதுவழிகா மாணவி, தரம் 5 நூல் 04 ) செல்வி.கி.தனபைரவி மாணவி, தரம் 5 நூல்கள் 05 செல்வி.சி.சிவபானுகா மாணவி, க.பொ.த(உத) நூல்கள் 06 திருமதிரா.ரேணுகா ஆசிரியர் நூல் 07 | திருமதி.ம.செல்வரஞ்சினி ஆசிரிய நூலகர் நூல் 08 திருமதி.ஜெ.குணேஸ்வரன் நூலக உதவியாளர் நூல் 09 செல்வி.தி.துஷானா மாணவி, தரம் 6 bUIT 300.00 10 | செல்வி.செ.பிரமிளா மாணவி, க.பொ.த(உத) bum 10000 11 | திருமதி.S.பொபிதா முன்னாள் ஆசிரியர் LUIT 5000.00 12 | திருமதி.புதயாபரன் நிகழ்ச்சித்திட்ட ரூபா 100000
உதவியாளர்டுதி) 13 ரஜினி பிடா ஸ்ரோர்ஸ் வதிரி வீதி, உடுப்பிட்டி நூல் 14 பிரியங்கா ஸ்ரோர்ஸ் VVTவிதி, உடுப்பிட்டி நூல்கள் 15 | மதுஷன் ஸ்ரோர்ஸ. VVT வீதி, உடுப்பிட்டி (5UT 5000.00 16 கரன் பூட்சிற்றி & VVT வீதி, உடுப்பிட்டி. ரூபா 2000.00
எலக்ரிக்கல்ஸ் 17 1 மக்கள் வங்கி வுல்வெட்டித்துறை (UUT 5000.00 18 சீலைன்ஸ் வதிரி வீதி, உடுப்பிட்டி ரூபா 5000.00
கொம்பிளெக்ஸ்
19 ழரீமுருகன் ஸ்ரோர்ஸ் காளிகோவிலடி, உடுப்பிட்டி ரூபா 3000.00 20 |பிக்கன் கல்வி நிலையம் உடுப்பிட்டி ரூபா 2000.00 21 Book Lab திருநெல்வேலி நூல்கள்
 
 

கலங்கரையின் பதிவுகள் - 2009
藝礙靈礙錳蠢
gæ& Más an í HEID SÉIPLÍDERGİYİ GÖSTA?" சஞ்சிகை வெளி 356T66), 鳢
LLLLLLLL LLLLLLLLLLLLLLLLLLLLLLL LLLLLL
I

Page 51


Page 52


Page 53
யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரி தனது வ சாதனை படைத்த பாடசாலையாகும். இத் தனக்கென ஒரு வாசகர் வட்டத்தை அமை மேற்கொண்டு வருவதுடன் தேசிய வாசிப் வெளிவருவது மிகவும் பாராட்டத்தக்கதொ
 

ரலாற்றில் பல சோதனைகளைச் சந்தித்துச் தகைய சிறப்பு மிக்க பாடசாலை நூலகம் >த்து அதன் மூலம் பல செயற்றிட்டங்களை பு மாத சஞ்சிகையாக “கலங்கரை - 2 ான்றாகும்.
திரு. வ. செல்வராசா
வலயக்கல்விப் பணிப்பாளர்,
வடமராட்சி.