கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

Page 1


Page 2


Page 3

32ーハン○2)と 3かっも○○
2ătoaeron
ඊ01ඤ[CC නිෂුණු ත්‍ර)

Page 4
தலைப்பு : கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்
ஆசிரியர் : தானா விஷ்ணு
உரிமை வி.சாந்தினி
பதிப்பு : செப்டெம்பர் 2012
L585856 : 56
வெளியீடு : தூண்டி.கேணியடி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.
பிரதிமை ஒவியம், அட்டை ஓவியம்
மற்றும் வடிவமைப்பு } (3LLJITES
அச்சிட்டோர் : கரிகணன் பிறிண்டேர்ஸ்,
இல,424, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்.
Title : Karuppuruvam Sumakkum Aanthaikal
Author : Thana Vishnu
CopyRight : V. Shanthiny
Edition : September 2012
Page : 56
Portrait, Cover Painting - and Design } Yohi
Published . Thundy, Kerniady, Thirunelvely, Jaffna.
Printed by : Harikanan Printers,
No.424, K.K.S. Road, Jaffna.
Price : 200/=
ISBN : 978-955-54773-0-7

என் பிள்ளைகள்
செல்லமாக இளையகுட்டியென அழைக்கும்
6leධීT ඌllb|DIIඛ|සීග්‍ය.....

Page 5
நன்றி
கருணாகரன், சித்தாந்தன், தபின், சி.ரமேஷ், மருதம்கேதீஸ், செல்வமனோகரன், சத்தியபாலன், யாத்திரிகன், கிருபா, தீபச்செல்வன், யோகி ஆகிய நண்பர்களுக்கும் எனது குடும்பத்தினருக்கும் தூண்டி பதிப்பகத்திற்கும் கவிதைகளைப் பிரசுரித்துதவிய வெளிச்சம், அம்பலம், உயிர்மை, கலைமுகம், தவிர, மறுபாதி ஆகிய இதழ்களுக்கும் ஆழி பதிப்பகத்திற் கும் வீரகேசரிப் பத்திரிகைக்கும் இணைய இதழ் களுக்கும்.

தானா விஷ்ணு (1976)
தம்பித்துரை விஷயசங்கர் என்ற இயற்பெயரையுடைய தானா விஷ்ணு 90களின் பிற்பகுதியிலிருந்து கவிதை எழுதி வருகிறார். 90களின் நடுப்பகுதியில் யுத்தம் தந்த பரிசாகத் தனது சொந்த ஊரான பலாலியிலிருந்து இடம்பெயர்ந்து இன்றுவரை தனது சொந்த ஊருக்குத் திரும்பமுடியாமல் இமையாணன் எனும் கிராமத்தில் வசித்து வருகிறார். யாழ். பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பாடத்தில் சிறப்புப்பட்டம் பெற்று ஆசிரியராகப் பணிபுரிகிறார். நினைவுள் மீள்தல்' இவரது முதலாவது கவிதைத் தொகுதி.
மனைவி சாந்தினி மகள் : விஷானுகா
மகன் வர்ஷணன்
முகவரி இமையாணன் கிழக்கு, உடுப்பிட்டி, யாழ்ப்பாணம். இலங்கை,
தொலைபேசி : +94770398554
L6airGoTajJ Gi) : thanavishnu (agmail.com

Page 6

O)6(86IT...
01.
O2.
03.
04.
O5.
06.
O7.
O8.
09.
10.
II.
12.
13.
14.
15.
16.
17.
18.
பிரியம் மறுத்தவளுக்கு-1 பிரியம் மறுத்தவளுக்கு - 2 பிரியம் மறுத்தவளுக்கு - 3 ஈரமற்ற புன்னகை கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள் மரங்கொத்தி தீப்பிடித்தெரியும் வார்த்தைகள் பூனைகளின் விழிகள் அல்லது பறவைகளின் உதிர்ந்த இறகுகள் நடுநிசிப் பொம்மைகள் பரிவு சிலந்திவலை தனலடங்காக் கோபம் அமைதியைத் தின்ற பூதம் உருக்குலைந்த எனது விம்பம் யேசுபிரானின் வெள்ளாடு ஒவியத்தின் கோடுகளில் நீளும்
- வாழ்ந்துபோனவனின் குறிப்பு கோடுகள்
கசப்புவெளி
Wii

Page 7
I9.
20.
2I.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
சிதறுண்ட காலக்கடிகாரம் கடைசி நட்சத்திரம்
கனத்தநாள்
பிரம்மதேவர்கள்
அந்நியமாதல்
வாழ்வொளிர்காலம்
நிழற்படங்கள்
வனாந்தர இரவுகள் குழந்தைகளின் விழிகளிலாடும் வெளவால் காலபைரவன்
ஒற்றைக்கால் கொக்கு பெருஞ்சுடரிற் கருகிப்போன விட்டிற்பூச்சி வெந்தனலென எரியும் தேகம் குயவன் வனையும் இரண்டுசோடிச் சிறகுகள் மூன்று நட்சத்திரங்கள் ஒரு சாம்ராட்சியம் - மூன்று நாய்கள்
Viii

பிரியம் மறுத்தவளுக்கு-1
எங்கிருந்து ஆரம்பித்தாலும் இறுதியில் என்னவோ பூச்சியத்திலேயே வந்துமுடிகிறது எமது எல்லா வார்த்தைகளும்,
நம்பிக்கை இழந்த பின்பும்
தூண்டில் போடும் சிறுவனாய் காத்திருக்கிறேன் உனதருகில் உன் ஒற்றைச்சிணுங்கலுக்காய்.
ஆயிரம் ஊசிமுனைகளினாலான வார்த்தைகளை என்மீது வீசிவிட்டு விலகிவிடுவாய் பல சந்தர்ப்பங்களில்,
அடிக்கடி முரண்படும் வார்த்தைகளுடன் தொடங்கும் எமது சந்திப்புக்களை முன்பே தவிர்த்துவிடுவதற்காய் முயன்று தோற்றுப்போய் வீடு திரும்புகையில் உன் வார்த்தைகள் என் அறைச்சுவரில் தொங்கியபடி உற்றுப்பார்க்கின்றன என்னை.
O3.03.2004
2, 21 C) vÅ S 2) S 3 e st S. & 2, 5, C5) 3, 2, en Ol

Page 8
பிரியம் மறுத்தவளுக்கு - 2
உன் மீதில் எந்த வருத்தமும் இல்லை வெறுமனே ஒரு வட்டத்துள் சுற்றிக்கொண்டிருக்கிறேன்.
என் அறையுள் சுற்றும் வண்ணத்துப் பூச்சியின் இறக்கை மீது என் நட்புள் நசிங்கிப்போவதாய் நீ புலம்பும் உனது எதிர்காலத்தை ஏற்றிவிட்டிருக்கிறேன்.
நீ கேட்கும் உனது எதிர்காலம் வண்ணத்துப் பூச்சியின் வெளிக்கிளம்புகையுடன் மிளிர்ச்சி கொள்ளும்
என்அறை விட்டுப் போகும் வண்ணத்துப் பூச்சி போலவேதான்
எனக்கு இனி நீ எப்போதும்.
15.04.2004
O2 த n ன n தி ஜ் லு

பிரியம் மறுத்தவளுக்கு - 3
திண்மம் உருக்கும் உன் வார்த்தைகளுக்கு நடுவே அல்லாடிப் போகிறது மனசு. காதலின் மென்மை பற்றி நீ பேசிய வார்த்தைகள் நிறைந்து போன இருட்டறைக்குள்
மோதித் திரும்புகிறது குருட்டு வெளவால்.
உழுத்துப் போன முன்னைய நினைவுகள் மிதிபடுகையில் அருவருப்பேறுகிறது மனதுள்.
நான் எதனையும் நினைவுபடுத்துவதில்லை; முன்னெப்போதோ செத்துப்போன பல்லியை அப்புறப்படுத்துகிறேன் என் அறையிலிருந்து
15.04.2004
э, су, к л и 6 г). Ә, ә, е Э. э. Ә, ә, А, сто э э. ғ.) 03

Page 9
ஈரமற்ற புன்னகை
கடல் மணலின் சிறுகுழிகளெங்கும் நிறைந்து போயிருந்த எனது முன்னைய பாடல்களை அள்ளிப் போயிற்று அலை
கரையில் திட்டுமணல் மேல் அசையாது இருந்தபடி பாடிக்கொண்டிருக்கிறேன். மீண்டும் அள்ளிப் போகிறது
எனது பாடல்களை
பாதச் சுவடுகளை [n@qreါ၏) பதித்து
வீடு திரும்புகையில்
அதனையும் எடுத்துப் போகிறது அலை.
எனது தூக்கத்தைக் கலைத்து
துள்ளிச் சிரிக்கும் சிறுபிள்ளையாய் என்னுள் விரிக்கிறது தன்னை.
என் பாடல்களையும் பாதச்சுவடுகளையும் விழுங்கிய பின்னும் படர்த்த முனைகிறது என் மீது தன் புன்னகையை.
16.12.2004
04 த ம ன தி ஜ் லு

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்
நத்தையின் குரல்களிடை தெறிக்கும் யாரோ ஒருவனுடைய பாடல் சுமையாய்ப் படர்கிறது என்னுள்.
எல்லாச் சாமமும் கடந்து அழுக்கேறிப்போன வார்த்தைகளுடன் காற்று அலையும் வெளியின் ஒற்றைமரத்தில் குந்தியிருக்கிறது ஆந்தை. தூரத்தே முளைத்து வளர்கிறது கறுப்புருவம்.
நத்தையின் குரல்களை விழுங்கியபடியும் ஈரம் துளிர்க்கும் அன்பினாலான LUITL Gò560)GIT (QLDGÒGA), (OLDGÒGA) சிதைத்தபடியும் பிரமாண்டமாய் உருப்பெறுகிறது அது. ஆந்தை கறுப்புருவின் தோள் மீது வந்தமர்கிறது.
காற்றில் மெல்ல மெல்ல எழுகிறது நத்தையின் மெல்லிய குரல். கறுப்புருவம், பிரமாண்டமாய் வளர்கிறது. நத்தையின் கோது உக்கி விழுகிறது அதன் முன்னால்,
20.04.2004
බ්‍රි. පූl ෆ/ ෆ4 ණට 2) \ර් ජෝ) \න දී, ලූ, \ර් ටැං, පී. (හ 9 දි, ‘‘h 05

Page 10
மரங்கொத்தி
விடைபெறும் நேரங்களில் மெல்லிய புன்னகைக்குப் பின் நீர் கோர்க்கும் உன் விழிகள் எப்போதுமே ஞாபகத்தில் வரும்.
நத்தையின் உக்கிய கோதுகளுக்குள் நீர் தேங்குமளவு வாழ்க்கையுடன் கழியும் காலங்களை மெழுகுவர்த்தியின் உருக்குகளுக்குள் தேடியலைகிறேன்.
மெளனம் நிறைக்கும் எமது இடைவெளிகளில் சாம்பல் மேட்டிலிருந்து உயிர்க்கும் தவளைகளின் குரல்கள் நிறையும் வேளையில் உன் கண்ணிரில் கலந்துவரும் இயலாமைகளுக்கு என்னால் முகம் கொடுக்க முடிவதில்லை.
மெளனம் கலைக்க முனையும் உனது ராகங்களையும் தாண்டி
தெறித்தெழும்
O6 த ம ன ம தி ஜ் னு
 

தெரு நாய்களின் ஒலங்களிடை கலைந்து விலகும் உன் முகத்தை மழைத்தூறல்களிடையே தேட முனைகிறது மனசு,
பின்னொரு நிழல் தொடர பகல் அடங்கும் பொழுதுகளில் எமக்கிடையில் வந்து மறைகிறது கொத்தும் அலகுகளுடன் மரங்கொத்தி.
02.05.2005
2, 9 v M S 2) Žо з, vo Š. G. & a. 5, го з, e, on O7

Page 11
தீப்பிடித்தெரியும் வார்த்தைகள்
பொய்த்துப்போன வாக்குறுதிகளை உதறிவிடவும் மனமில்லாது முகமிழந்த மனிதனாய் அலைகிறேன் காலவெளியில்
சொல்லத் துணியா
சுமைகள் சூழும் வாக்குறுதிகள்
என்னைப் பற்றிக் கொள்ள
நிர்க்கதியற்ற மனிதக் குரங்கொன்றின் வாலைப் பற்றியபடி பறக்கிறேன்
பிரபஞ்சப் பந்தின் நுனியில்,
ஒவ்வொரு பூவாக அலைந்து வெறுமையாய் மீளத்திரும்பும் தும்பியின் விழிகளில் நிறைகிறது வாக்குறுதிகளின் காலம்
விட்டகலுதல் மீளவும் முயன்று முடியாது போய்விட தொடக்கப் புள்ளியிலேயே நிற்கிறது மனப் பம்பரம்.
08 த ம ன n தி x னு
 

மிக இலாவகமாகப் புனைந்த பூமாலைகளைப் பிய்த்தெறியும் குரங்குகளை அதிகமாய்க் கண்டிருப்பாய் எல்லாக் குரங்குகளும் மாலைகளைப் பிய்த்தெறிவதாய் உனக்குத் தோன்றக் கூடும்.
அமைதி உறைந்த இருளில் வானத்தை வெறித்துப் பார்க்கத் தோன்றும் மனக்களஞ்சியத்தில் தீப்பிடித்தெரிகிறது "எப்போதும் எனதருகில் இருப்பதாய்" சொன்ன ஒற்றை வாக்குறுதி
01.01.2006
2, 2) V V1 & 2) \2 3, \e 3, (3) \o 2, 3, ses) 2, 3, on
09

Page 12
பூனைகளின் விழிகள் அல்லது பறவைகளின் உதிர்ந்த இறகுகள்
நித்தியமான மெளனத்தில்
அச்சம் நிரம்பும் இரவில்
விழித்திருக்கும் பூனை விழிகளுள்
அலைந்து கொண்டிருக்கிறது பறவைகளின் உதிர்ந்த இறகுகளின் உஷ்ணம்.
|
யாருடைய குரல்களுக்கும்
பதில் தராத இரவு.
அந்நியமாகிறது
இரவுகளில் தெரு,
பூனையின் விழிகளிலிருந்து தப்பிக்கும் எலிகளின் விம்பம் மனது பறவையின் உதிர்ந்த இறகுகளைச் சப்பியபடி
|
பறவைகள் கொல்லப்படும்
இரவுகளில்
அந்தத் தெருக்களில் பூனைகள் புணர்ந்து கொண்டிருக்கின்றன; காற்றில் படபடக்கின்றன பறவைகளின் உதிர்ந்த இறகுகள்
11.04.2006
IO த ம ன ம தி x னு

நடுநிசிப் பொம்மைகள்
நடு நிசிகளில் பொம்மைகள் அச்சம் கொண்டெழுகின்றன. அவற்றின் விழிகளுள் படர்கிறது உதிர்ந்துகிடக்கும் மிரட்டும் விழிகள்
பொம்மைகள் சிரித்துப் பேசும் மனநிலையில் இருப்பதில்லை. மிரட்டும் விழிகள் ஆணியடிக்கிறது அவற்றின் அடி மனதில்
எப்போதும் அறையின் ஏதாவதொரு மூலையில் மெளனமாய் முகத்தில் சோகம் நிரப்பி அம்மணமாகச் சிலவேளை உறங்குகின்றன
அல்லது விழித்திருக்கின்றன.
பொம்மைகள் விழித்திருக்கும் போதும் அல்லது உறங்கும் போதும் விழிகள் கொடூரமான மிருகமொன்றினதோ கொடூரமான பறவையொன்றினதாகவோ கொடூரமான மனிதனுடையதாகவோ தன்னை அடையாளம் காட்டுகிறது.
3, 29) V VM 6S 2) vğb э, ә д, с, 2- 2 o, ares) 3» 2, con II

Page 13
அறையின் மத்தியில் உதிர்ந்துகிடக்கும் விழிகள் நினைவில் வரும்போதெல்லாம்
பொம்மைகள் தமது முகங்களைக் கண்ணாடியிற் பார்ப்பதற்கு அச்சப்படுகின்றன.
23.05.2006
12 த ம ன n தி ஜ் லு

பரிவு
என்னை மன்னிக்க நேரிடும் ਯ5600ਯ66)
ஒருதாயின் பரிவுக்குச் சென்றுவிடுகிறாய்.
எம் குழந்தையின் தலையினைக்
கோதியபடி
உன் பார்வைகளால் எல்லாவற்றினையும் துடைத்தெறிந்துவிடுகிறாய்.
எல்லாவற்றையுமென்றால்
என் தவறுகளை
என் மீதான கோபங்களை
இன்னமும் இருக்கக் கூடிய ஏதேனும் எல்லாவற்றையும்.
24.05.2006
2, 9) v VM & 2 \ž 9 vo 3, 3 2 24, 3. os) 3, 3, (*h 13

Page 14
சிலந்திவலை
பகலின் நிரந்தரமின்மைக்கும் அப்பால் தெருவெளியெங்கும் சுற்றித்திரியும் பொட்டுப்பூச்சிகளையும் எண்ணத் தோன்றுகிறது.
பொட்டுப்பூச்சியின் நிரந்தரமின்மையும் தோன்றி மறையும் கணங்களில் மனத்திடை விரிகிறது. இறைவனுக்காய்ப் படைக்கப்படும்
பலியாடுகளின் கடைசிக் கணங்கள்.
நிரந்தரமின்மைகளால் பின்னப்பட்ட சிலந்திவலைகளில்
நிறைகின்றன பகலின் வெளிச்சம், பொட்டுப்பூச்சியின் நிறம், பலியாடுகளின் விழிகள்.
18.08. 2006
14 த ம ன n தி ஜ் னு

தனலடங்காக் கோபம்
வார்த்தைகள் நிறைந்திராத பொழுதொன்றில் மெளனமான காத்திருப்புகளில் -
நிறைகின்றன உன்னைப்பற்றியதான துக்கம்.
நினைவுகள் மயக்கும் மாலைப் பொழுதொன்றில் கொத்திச் செல்கிறது உன் மூளையில் ஒரு செவிட்டுக்காகம்.
நட்சத்திரங்கள் அற்றுப்போன இரவில் வானத்தில் நிலைத்திருக்கும் என் விழிகளில் நிழலாடுகிறது உன் விம்பம்.
எனது எல்லாத் துயர்களையும் பிரார்த்தனைகளையும் அனுப்பிய காகிதத்தில் தீப்பிடித்தெரிகிறது உன் கோபம்.
என் துயரும் பிரார்த்தனையும் உன்னிடம் ஒலித்துக் கொண்டிருக்கும் பொழுதில் மனப்பாத்திரத்தில் நிறைந்துபோன
බ්‍රි. පූl ෆ/ \A ණ න්‍ය) ශ්‍ර මා \න ශ්‍රී. ල. ඊ ටැං ෂී (හ 9. පී. “h 15

Page 15
நெருப்பு வார்த்தைகளால் நீ ஒரு அழகிய புல்வெளியை எரித்துக் கொண்டிருக்கிறாய் குளிரிரவில் விட்டுப் பிரியா பூனையின் பிரியத்தைப் பரிசளித்த உன்னால் தீப்பிடித்தெரியும் அழகிய புல்வெளியைப் பார்த்து ரசிக்கும்
வல்லூறொன்றின் விம்பத்தைத் திருடி வைத்திருக்க எப்படி முடிகிறது.
20.08.2006
16 த ம ன ம தி x னு

அமைதியைத் தின்ற பூதம்
நொருங்கிய கண்ணாடியின் விம்பங்களில் தலை சீவுகிறது காலம்.
காலபூதம் உனக்குமெனக்குமிடையில் எழும்பிய சுவரில் முட்டிமோதுகிறது தும்பி பனிப்பெய்யும் இரவில் கூதல் காயும் பூனையென குறுகிப்போகிறது
உன் நினைவுகளுடன் உயிர்
கனவுகள் உதிர்ந்துகிடக்கும் இரவில் மின்மினிப் பூச்சியின் ஒளிபோல் ஒட்டிக் கொள்கிறது உன் மெல்லிய பிரியம்.
நிலவற்ற ஒவ்வொரு இரவும் அமைதியெனும் பூதம் கொத்திச் செல்கிறது மனதை
சீழ்வடிய சீழ்வடிய துடைத்தெறியும் காகிதமாச்சு மனதுள் ஆடும் நினைவுச் சுமை. காற்றில் விளக்கணைய விளக்கணைய ஒளியூட்டும் முயற்சியெனத் தொடர்கிறது எனக்குள்ளான புன்னகை.
கைதவறிய பிரம்பைத் தேடியலையும் குருட்டுக்கிழவனைப் போல் மனம் நாடியலைகிறது வாழ்வை.
28.08.2006
ஆ ஜ v M S 2 மே 3, 2 ஆ இ 2 2ஆ ந்,  ைத ஆ ?) 17

Page 16
உருக்குலைந்த எனது விம்பம்
காகிதக் கப்பல்கள் கரையடையுமெனக் காத்திருக்கும் சிறு பிள்ளைகளின் நம்பிக்கைகளாய்த் தொடர்கிறது எனது பயணம்
எது வரையெனத் தெரியாத பயணத்தில் கூடவே ஏறிக் கொள்கிறது குக்குடு ஒன்றின் மெல்லிய முனகல்,
ஒய்வுக்கென மரத்தடியில் சாய்ந்து அமர்கையில் மரத்திலிருந்து கசிந்து விழும் பச்சயம் பற்றிக் கொள்கிறது கழுத்தை
இலக்கு விளங்காப் பயணத்தைச் சூழ்கிறது நான் எப்போதோ விட்டெறிந்த பிச்சைப் பாத்திரமும் கோவணமும்
14.09.2006
18 த  ைn தி ஜ் னு

யேசுபிரானின் வெள்ளாடு
முடிவுறாக் காலங்களில் யேசுபிரானின் தவறிப்போன வெள்ளாடு போல் திரும்பக் கிடைக்காத என் முன்னோர்களின் நாட்களில் அவர்களின் மகிழ்வும் துயரும் நிறைந்த பெருவெளிக்குத்
தனியே வந்திருக்கிறேன்.
தனிமையில்
எஞ்சியிருக்கிறது ஒரு ஆலமரம். என் முன்னோர்களின் சாட்சியமாய் அவர்களின் ஞாபகங்கள் தொங்கும் அதன் விழுதுகளை மெல்லத் தடவியபடி கத்தத் தோன்றுகிறது, சொல் என் முன்னோர்கள் என்னைத் தனியேவிட்டு எங்கே போனார்கள்? அவர்கள் எனக்காக விட்டுப் போன
கதைகள் எவை?"
மாலை வேளைகளில் என்னிடம் சொல்வதற்கென கதைகள் பல சேமித்திருப்பர். அவர்களிடமிருந்த சொற்கள் இங்கு எங்கோதான் அலைகின்றன
ஆ ஜ & M S 2 ம் 3, 2 ஆ (3, 2 2ஆ ந்,  ைத ஆ ? 19

Page 17
மரமே சொல்; அவை எவை?" கணனியுடன் அலையும் எனக்கு சேமித்து வைப்பதற்கென அவர்களின் ஒரு வார்த்தைதானுமில்லை.
நொண்டி நாயொன்றின் வாலில் தொங்கியபடி அலையும் இந்தப்போர் அவர்களின் வார்த்தைகளை விழுங்கி பின்னவருக்காய் என்னிடமுள்ள எல்லாவற்றையும் விழுங்க அலைகிறது.
ஆலமரத்தின் விழுதுகளின் நுனியில் துளிர்க்கும் வேர்களாய் என் முன்னோர்களின் புன்னகை அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் அல்லது உயிர்த்திருக்கிறார்கள்.
01.10.2006
2O த n ன n தி ஷ் னு

ஓவியத்தின் கோடுகளில் நீளும் வாழ்ந்து போனவனின் குறிப்பு
வாழ்தல் மீதான வேணவாவினை நிர்க்கதிக்குள்ளாக்கும் போர் மீதில் கவிகிறது மீளவும் எனது சாபம்
தேவதைகாள் உமது இறுதிப் பிரார்த்தனைகளும் அர்த்தமிழந்தன.
தூக்கிலிடப்பட்ட எனது இளமையை குற்றுயிராகவேனும் காப்பாற்ற முடியா விழிகள் இழந்த குரங்கென தொங்கித் திரிகிறேன் பிரபஞ்சக் கிளைகளெங்கும்.
சுருக்கில் நசுங்கும் கழுத்தில் கயிறு வரைந்த கோடுகளை யாவரும் அறிவதற்காய் யாரேனும் பத்திரப்படுத்தட்டும்.
தேவதைகாள் அர்த்தமிழந்துபோன எங்களுக்கான துயர் மிகுந்த பிரார்த்தனைகளையும் மீளத்தாரும். வாழ்வினைத் தொலைத்தலையும்
8, 9 v V1 & 2) \o 2; \e 3, (3 \o 2, 3, (8) 2, 3, coh 21

Page 18
பைத்தியக்காரனின் நாட்குறிப்புக்களில் அவற்றினைச் சேமித்தல் வேண்டும்.
வரலாற்றிலிருந்து துடைத்தழிக்கப்படப் போகும் எனது குறிப்புகளை
நான் வரையும் சிக்கல் நிறைந்த ஒவியங்களிலிருந்து யாவரும் வேறுபடுத்திக் கொளளட்டும்.
வாழ்வின் மீதான வேணவாவினை நிர்க்கதிக்குள்ளாக்கும் போர் மீது கவிகிறது மீள மீள எனது சாபம்
ஒரு குடுகுடுப்பைக்காரனின் வார்த்தைகள் போல.
23.02.2007
22 19 ^ এক7 7, 25 26 ছেণ্ড)

கோடுகள்
கோடுகள் மீள மீள வரைவதிலிருந்து உருப்பெறுகிறது எனது சித்திரம்.
என்னிடம் வேறெதுவும் இல்லை.
வெறும் கோடுகளால் மட்டுமேயானது எனது சித்திரம். எனது கோடுகள் மெலிதாய், நீளமாய், குறிப்பாக வட்டமாய்
மாறுகின்றது.
கோடுகளின் பின்னிருந்து மிளிர்க்கும் பறவை சிறகரும்பி வெளியேறும் தருணமொன்றில் கோடுகளால் மட்டுமே நிறைந்த காலக்கிழவனின் சபிப்பில் சிறகறுந்து துடிக்கிறது.
பாழடைந்த சுவற்றில் காலக்கிழவன் குருதியால் வரைந்த கோடுகளின் நிண ஈரம் காய்வதற்கு முன்பாய்
உலகம் கோடுகளால் நிறைக்கிறது தன்னை.
12.06.2007
3, 9 v. M és 2 2 23

Page 19
கசப்புவெளி
பல்லியொன்றிற்கு இரையாகும் பூச்சியினது
மூச்சின் வெப்பத்தினை அவசரமாய்த் தேடியலைகின்றன சருகுகள்
நிகழ்காலத்து இரவுகளில் வெறும் கதையாய் நிம்மதி ஒடும் பேரூந்தின் சக்கரத்தில் நசியுண்ட அட்டையின் உடலாகிப் போயிற்று மனசு,
எல்லாச் சிதிலங்களிடை இரத்தச் சகதியுடன் தவறுதலாய்த் தப்பி எழும் ஒருவனாய்த் திரும்புகிறது வாழ்க்கை
ஒரு பாவற்காய் மல்லிகைக் கொடியொன்றில்
தொங்கிக் கொண்டிருக்கிறது.
30.07.2007
24 த ம ன ம தி ஜ் லு

சிதறுண்ட காலக்கழகாரம்
முக்காடு போட்ட வயோதிபன்
உன்னிடம் வருகையில் உபயோகமற்ற பொருளின் ஞாபகம்
உனக்கு வரக்கூடும். உடைந்த கண்ணாடித் துண்டுகளைப் போல் மிக அவதானமாய் அவனையும் அவன் ஞாபகங்களையும் உன்னிடமிருந்து அகற்ற முனைகிறாய்.
ஒளிமிகு உலகத்தை உனக்குப் பரிசளித்த அந்த வயோதிபன் தெருவோரத்தில் அல்லது ஆலமரத்தின் கீழ் முடங்கிப் படுக்கையில் பல வர்ணங்களினாலான இந்த உலகம் மெல்ல மெல்ல உருகிச் சிதைவதனை நீ காணத் தலைப்படுவாய்.
வாழ்வின் அர்த்தங்களை அர்த்தங்களின் வர்ணங்களை குழைத்துத் தந்த வயோதிபனின் காலக்கடிகாரம் சிதறுண்டு கிடக்கும் மெளனவெளியில் கொத்தும் அலகுகளைத் தீட்டியபடி ஒரு மரங்கொத்தி சிறகசைக்க எப்படி அனுமதிக்க முடிகிறது உன்னால்,
24.08.2007
ஆ ஜ v M S 2 2, 3, 2 ஆ (3, 2 ஆ ,  ைத ஆ ? 25

Page 20
கடைசி நட்சத்திரம்
கடைசியகத்திலிருந்து உதிர்கிறது 566)Lé நட்சத்திரமும்
விழி கொள்ளாத்துயரில் கண்ணயர்ந்து தூங்கும் கட்டிலின் கீழ் நெளிகிறது உதிர்ந்த நட்சத்திரமொன்று.
பிரார்த்தனையால் கடைசிவரை உயிர்வாழத் துடிக்கும் நரைத்த ஆன்மா, இருள் அடர்ந்த கனதியில் கனவினை நிறைத்துக் கொள்கிறது.
கனவுப் பெருவெடிப்புகளில் நிறையும் சலனத் துப்பல்களை நிறைத்தபடி உலகம் கிழிந்து கொள்ள விழுகிறது அந்தக் கடைசி நட்சத்திரம் கடைசியுகத்திலிருந்து,
18.10.2007
26 த ம ன தி ஜ் லு

கனத்தநாள்
இராக்காலத்தில் வேதனைகளை வீசியெறியும் ஒற்றைக் குயிலின் குரலாய் ஒலிக்கிறது பாதியிரவில் வெற்றுடலாய் வீடு திரும்பும் பிள்ளைகளைக் கண்டவரின் ஒப்பாரி
எங்கும் பிணக்காடு
எங்கும் பிணவாடை எந்தப் புலன்களும் இயங்காத விருந்தாளிகளாய் வீடுகளுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் கனவுகள் எரிய கட்டாயத்திற்காய் சமராடிய பிள்ளைகள்.
எல்லோரும் கூடி தருவிக்கப்பட்ட பெட்டியினுள் ஆசைகள் அழிந்த வழி தெரியாது முகம் காட்டா மெளனத்துயில் கொள்ளும் பிள்ளைகளின் நினைவுச் சுமைகளுடன் இறந்து கொண்டே அழுதுழலும் தாய்மைகளின் அவலம் பொறுக்காமல் துடிப்பர் யாவரும்.
27

Page 21
கனவுகள் எரிந்துபோய் வெற்றுடலாய் வரவிருக்கும் தமது பிள்ளைகளையும் நினைத்து அழுதெரியும் தாய்மைகளின் அவலம் பொறுக்காமல் கூடவே கதறும் உயிரற்ற ஏதாவது ஒவ்வொன்றும்.
மாண்டவர் இனி வரார்; எந்தப் பிள்ளையும் உயிர் திரும்பா, தகிக்கும் பிணக்குவியலுக்குள் இரத்தம் உறைந்த தங்கவாள் கண்டெடுத்தென்ன பிரயோசனம்
நாமிழந்து போன முகவரிகளைத் தேடி அர்த்தமற்றலையும் கனத்தநாட்கள் பற்றி யாவரும் அச்சம் கொண்டலறிய படி தெருவுக்கு வருகிறார்கள்; சிரிக்கிறார்கள்; ஆடைகளைக்கழற்றி நடனமிடுகிறார்கள்; சிலவேளை ஒலமிடுகிறார்கள்.
கனவழிந்து போய் கருப்பையில் கனன்றெரியும் தீயினால் சபிக்கும் தாய்மைகளை ஆற்றுமாற்றல் யாருக்குள்ளது இங்கே
28.04.2008
28 த  ைn தி 2ழ் னு

பிரம்ம தேவர்கள்
துர் சொப்பனம் கண்டு விழித்தெழும் குழந்தையின் விழிகள் பாதியிரவில் மிரட்டுகின்றன. நடக்கக் கூடாதது நடந்து விட்டதைப்போல.
வீரிட்டழும் எந்தக் குழந்தையும் விரைவில் சமரசமாகிவிடுவதில்லை. குழந்தைகள் அழாதிருக்க பொம்மைகள் சிரிக்கவைக்கப்படுகின்றன. ஆற்றாமையால் பொம்மைகளே அழுதுவிடும் அபத்தத்தினை யாரும் கண்டு கொள்வதில்லை.
பொம்மைகளின் தலையும் உடலும் வேறுவேறாய் உழலும் கட்டிலில் ஒண்டுக்கிருந்துவிட்டு தூங்கிப்போகும் குழந்தைகளை விடிய விடியப்
பார்த்துக்கொண்டேயிருக்கலாம்.
விடிந்ததும் வேறுவேறாய்க் கிடக்கும் தலையையும் உடலையும் பொருத்துவதில் குழந்தைகளின் ஆர்வம். பொம்மைகளுக்கு உயிர்கொடுப்பதில் அத்தனை பிரியம் அவர்களுக்கு
23.05.2008
3 2 シ vs ○ 2) と ● ● を @ と 2 う rs 3 3 * 29

Page 22
அந்நியமாதல்
யார் யாரோ வந்து போகிறார்கள் எனது வெளியெங்கும். எப்போதுமே கண்டிராத
அவர்களது முகங்கள் வீசிவிட்டுச் செல்லும் புன்னகைகளை பத்திரமாக வாங்கிக்கொண்டபின் எனது புன்னகையைப் பதிலாக அளிக்கிறேன் வெறும் சம்பிரதாயமாகப் பரிமாறப்படும் புன்னகைகள்
வெறுமையாய்
உதிர்ந்து விழுகிறது மண்ணில்,
23.10.2008
30 த n ன தி ஜ் லு

வாழ்வொளிர் காலம்
முன்னோர்களிடம் - எண்கள் பற்றிய கதைகளிருந்தன அவர்களின் வாழ்க்கை எண்களால் நிறைந்திருந்தது. ஆதியிலிருந்து எண்களுக்கே வணக்கம் செலுத்தினர் விழாவும் எடுத்தனர் எண்களைக் கூட்டலாம், கழிக்கலாம், வகுக்கலாம், பெருக்கலாம் ஒன்றுமில்லாமலாக்க முடிவதில்லை. ஒத்தவெண்ணைக் கழிக்கும் போது மிஞ்சும் பூச்சியத்திலிருந்து தோன்றியது அவர்களின் வாழ்வு.
பூச்சியம், எல்லாவற்றிலும் நிறைந்திருக்கிறது. மனிதனில், அவன் வாழ்வில் அவனது அர்த்தங்களில் அவனது செயல்களில்,
முடிவில் உலகு பூச்சியமாய் மாறுகின்றது.
பூச்சியத்திலிருந்து மீண்டும் எல்லாம் எல்லாமுமாய் நிறைகின்றன;
3, 9) V Vi 6 2) \2 e vo è (3, \o 2, 3) e e, con 31

Page 23
எல்லாம் எண்களால் கணக்கிடப்படுகின்றன, மனித ஆயுள் தொடக்கம் புழுவின் ஆயள்வரையில் கணக்குகள் சரியாகவுமுள்ளன; பிழையாகவுமுள்ளன. ஆனால், வானம் மட்டும் எந்த எண்களுக்குள்ளும் சிக்காமல் விரிந்த கிடக்கின்றது. அங்கு ஒரு பிரமாண்ட வாசல்.
நீரினடியிலோ அல்லது பாதாளக் குகையினுள்ளோ தான் எண்கள் பற்றிய உண்மைகளை எழுதி வைத்துள்ளனர் முன்னோர்கள். அங்கிருந்துதான் உருக்கொண்டெழுந்தன எல்லாம் எல்லாமுமாய்.
01. II. 2008
32 த ம ன ம தி ழ் ஜ

நிழற்படங்கள்
வெளவால்களும் சிலந்திகளுமாய் கூடிவாழும் வீடொன்றில் தொங்கியபடி இனம் தெரியாதொருவனின் நிழற்படம். முன்னெப்போதுமே கண்டிராத அந்த முகம் நன்கு பழகியவனைப் போல் புன்னகைக்கிறது. எல்லோரும் விட்டுக்கிளம்பிய பின் தனித்திருப்பது கூடத் தெரியாமல் புன்னகைக்கும் அந்த உருவம் என்னுடையதாய் மாறுகின்றது.
நான் திகைத்துத் திரும்புகையில் சுவர் எங்கும்
தொங்கிக் கொண்டிருக்கின்றன என்னையொத்த நிழற்படங்கள் இன்னும் பல.
15.12.2008
2, 91 C) vÅ S 2) S 3 e st, S. & 2, 3, O 3, 2 en 33

Page 24
வனாந்தர இரவுகள்
நியாயமற்றுக் கடந்து செல்கிறது காலம். காலமெங்கும் உதிர்ந்து கிடக்கின்றது நட்சத்திரங்களுடன் இரவு.
காலம் மிகப் பெரும் வானாந்தரங்களை சபித்துக் கடந்து செல்கையில் பற்றிக் கொள்ளவென எம்பித் தெறிக்கிறது இணைபிரிந்த தும்பி
விழி கொள்ளாத் துயருடன் இணைபிரிந்த தும்பி, இறக்கைகளின் அசைவில் சிக்காது விலகும் காலத்தினைப் பற்றிக் கொள்ளமுடியாது தனது அலகுகளால் உலகத்தைக் கெளவிக் கொண்டலைகிறது.
17.12.2008
34 த n ன n தி x னு

குழந்தையின் விழிகளிலாடும் வெளவால்
குழந்தைகள் அழுகிறார்கள் எதையாவது கேட்டபடி எதனைக் கொடுத்தாலும் சமரசமாகாத அவர்களின் பிடிவாதத்தை ஆற்றத்தெரியவில்லை எவருக்கும்.
சமரசத்திற்காய்க் கொடுக்கப்பட்ட பொம்மைகள் வீசியெறியப்பட்டு சிதறிக்கிடக்கின்றன அறையெங்கும்.
சிரித்தபடி உற்றுப்பார்க்கும் எல்லா பொம்மைகளையும் குழந்தைகள் உதைக்கிறார்கள். அவர்களின் மூளையில் தொங்குகிற வெளவாலின் பிடிவாதம். .
சமரசத்திற்கு வராத குழந்தைகள் நேற்றைய திருநாளில் வாங்கிய துப்பாக்கிப் பொம்மைகளைக் கண்டதும் கையிலேந்தி பொம்மைகளின் முன் நீட்டி உரத்துச் சிரிக்கின்றன.
பாவம் அவர்களின் பிஞ்சு உதடுகளும் கண்களும்.
வெளவால் ஒற்றைக்காலில் தொங்கியபடி தலைகீழாய் அவர்களின் விழிகளுள்.
25.12.2008
ஆ ஜ & V S 2 மே 3, 2 ஆ இ 2 2ஆ ந்,  ைத ஆ ? 35

Page 25
காலபைரவன்
சூரியன் களவாடப்பட்ட பகல்
காலபைரவன் கண்ணிழந்த நாயொன்றில் சவாரி செய்கிறான்.
குழந்தைகள்'ஓடிமறைந்தனர்.
தெருக்களில் வீசிக்கிடந்தன
அவர்களின் பொம்மைகள்.
பொம்மைகளின் தலையறுத்துத் தூக்கிலிட்டுச் சிரிக்கிறான் காலபைரவன்.
திக்கெட்டையும் குதறுகிறது அவன் சிரிப்பொலி.
பாதாளச்சிறையுள் பதுங்கிக்கொள்வதில் பிரியம் நிறைந்து இருள் உறைந்த இடுக்கில் அஞ்சிக்கிடந்தனா குழந்தைகள்
அவர்களின் பகலில் இருளில்
பாதாளச் சிறையுள் நிழலாய்ப் படிகிறான் காலபைரவன்.
36 த n ன ம தி ஜ் னு

குழந்தைகள் பாதாளச்சிறையுள் விறைத்துக்கிடக்க குழந்தைகளின் பறவைகள் தீ மணலில் வீழ்ந்து புரண்டன. அவர்களின் மூளையைத் திண்றபடி உட்கார்ந்திருக்கிறது நொண்டிநாய்.
பாதாளம் விட்டு வெளி மீள்கிறது கண்ணிழந்த இன்னொரு நாய்.
காலபைரவன் தலையற்ற பொம்மைகளை எண்ணிக்கொண்டிருக்கிறான் தனக்குள்
12.II. 2009
S TAAA L S LS LS0 AJ S CS S s S sSJe S0SS S S TT SS S St 37

Page 26
ஒற்றைக்கால் கொக்கு
அலைகள் தீர்ந்துபோன கடலை
மோதி மீள்கிறது கொக்கு
கொக்கு நீலமாகி வானத்தை எட்டி நட்சத்திரங்களை உண்டு செத்து வீழ்கிறது பாலை மணலில்
L UTGÖDGAD LD6OOTG)
வெம்மையில் தகித்து நெருப்பாறாய் ஒடி நிறைகிறது கடலில்,
கடல் கொதித்து வற்றிப்போக கொக்கு உயிர்த்து மீன் கொத்துகிறது மிக நிதானமாக ஒற்றைக்காலில் நின்றபடி
18.II. 2009
38 த ம ன தி ஜ் லு

பெருஞ்சுடரில் கருகிப்போன விட்டிற்பூச்சி
முடிவிலாப் பெருஞ்சுடரே
சுடரில் முகம் காட்டும் கடவுளரின் குறியீடுகளில் கரைந்து படிகிறது துயர் மீளா மனிதர்களின் வேண்டுதல்கள்.
கடவுள்
வேண்டுதல்களும் கேவுதல்களுமற்ற
உலகத்தில் வாழ்வது பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கையில் வேண்டுதல்களாலும், கேவுதல்களாலும் கூடிய இன்னொரு உலகத்தை இன்னொரு கடவுள் படைத்தான்.
இணையற்ற மனிதச் சுடரே
கடவுள், கடவுளராக மாறிப்போயினர் காமத்தாலும் காமக்குறியீடுகளாலும் வடிவமைந்த கல்லாகிப்போயினர்.
பெருஞ்சுடரில் அகப்பட்டு கருகிப்போன விட்டிற் பூச்சிகளின் இறக்கையின் மீதாய் மனிதர்களின் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும்
ஆ ஜ & V S 2 மே 3, 2 ஆ இ 2 2ஆ ,  ைத ஆ ?) 39

Page 27
கடவுளர் காமத்தினாலும் காமக்குறியீடுகளினாலும் கட்டுண்டு
மீண்டுமொரு உலகைப் படைத்தனர்.
விழிகொள்ளாப் பெருஞ்சுடரே
இளஞ்சுடரின் விகாசிப்பில் காமம் உருகிக் கசிந்து ஒளியாய் ஒளியின் அருளாய் உலகமெங்கும் நிறைந்தது.
எண்ணற்ற பெருவிளக்கின் கீழ் மனிதர்கள் அலைவுறும் தேசத்தில் ஊழையிடும் நாய்களின் விம்பமாய் வைரவர் உருக்கொண்டார்.
ஒளியுறு தேசத்தில் மனிதர்கள் குறிகளற்றுப் போகும்படி சபிக்கப்பட்டனர். குறிகளை, காமவெளிகளை இழந்த அவர்கள் தேசத்தின் தொலைவொன்றில் குறுகிப் போயினர்.
காமப்பெருந்தீயே
மனிதர்களை விட்டகன்ற குறிகளை மாலைகளாய்ச் சூடி திமிரெடுத்தாடினார் வைரவர். வைரவரின் குறியிலிருந்து சிறுதுளி விந்து கசிந்து வீழ்ந்தது மண்ணில்,
16.02.2010
40 த n ன தி ஜ் லு

வெந்தனலென எரியும் தேகம் (காதலாகிக் கசிந்து கண்ணி மல்கி.)
LDITUJ60s -
LDITg5!60LD -
LDITUGöt –
LDT.g|60LD -
உள்ளெரியும் பெருந்தீயில் வேகும் என் இறக்கைகள் வீழ்ந்து வீழ்ந்து புரளும் ஒரு அற்பப் புறா.
எனையொறுத்து வாழ்கிறேன்; இரவுகளில் தீண்டும் காற்றின் மீதினில்
உன் விம்பம் ஊர்வது இனிமை,
தீண்டுதல் பின் தீண்டாமை ஊருதல் பின் ஊராமை. உன் ஸ்நேகத்தில் உள்ளொளி பெருகி பேராறாய் வீங்கிப் பெருத்து அனலாய் நீண்டோடும்
ஆற்றில் நீந்துதல் முடிவிலி.
உண்மைதான், அனலில் வெந்து வெந்து உருகும் மெழுகானேன்.
D. g.) V M S 2) \že 9 ve Šė, G, \że 2 , CAS) 3, 5, roh 41

Page 28
தாகம் அடங்கிடா ஆட்டுக் குட்டியின் சூக்குமம். பருகிடப் படர்கிறாய் பாதியிருள் வேளை மல்லிகைக் கொடியெங்கும்.
LDTugor - பூத்தல், காய்த்தல், கணிதலில் சுவைத்தல். இன்புறு உள்ளொளி பருகி எனைத்தொலைத்தேன் ஆழ்தொலை மாயப்பிறப்பெனவே.
மாதுLைD- t"
துயின்றிட முடியா வெந்தணலென எரியும் தேகத்திடை நீ வனைகிறாய்; மெல்ல மெல்ல உருப்பெறுகிறது ஒரு தண்ணீர்க் கூசா,
01.07.2010
42 த ம ன தி x லு

குயவன் வனையும் இரண்டு சோழச்சிறகுகள்
வார்த்தைகளற்ற உலகத்தை வனைந்து கொண்டிருக்கும் குயவன் உருட்டிவிடும் சக்கரத்தில் உட்கார்ந்திருக்கிறது வாழ்வின் வெறுமை.
குயவனின் உலகம் பானை வடிவில் உருவேறும் தருணம் எண்ணற்ற இறகுகள் உதிர்ந்து விழுகிறது முன்னால்,
உதிர்ந்த இறகுகளில் ஒட்டியிருக்கும் குருதி கொத்திச் செல்லும் வல்லூறொன்றை ஞாபகத்தில் இருத்த குயவனின் கையிலிருந்து வழுக்கிச் செல்கிறது பானை வடிவிலான உலகம்.
வார்த்தைகளற்ற உலகத்தை வணையத்தொடங்கிய குயவன் உலகத்தின் வடிவிலான பானையை வனைந்து சிதறிக்கிடக்கும் இறகுகளையிட்டு உலகத்தில் இல்லாத வார்த்தைகளால் வனைந்து கொண்டிருக்கிறான் இரண்டு சோடிச் சிறகுகளை
24.05.2011
2, 9 v M & 2 \ž 2, \a 3 (3 \ž 24, 5, 68) 2, 3, roh 43

Page 29
மூன்று நட்சத்திரங்கள்
மீதமான மனிதர்களும் சிலுவையில் அறையப்படுமொரு நாளில் மீண்டுமொரு முறை மூன்று நட்சத்திரங்கள் வானத்தில் தோன்றக்கூடும்.
எனதன்பே மூன்று நட்சத்திரங்கள் துக்கத்திற்கானதா? மகிழ்விற்கானதா?
என் மனிதர்கள் குருதி கொப்பளித்து அனல்நிறைந்த இறுதி வெளியொன்றில் சவப்பெட்டிகளுமற்று கீறல் இடுக்குகளில் புதைக்கப்பட்டபோது தோன்றிய மூன்று நட்சத்திரங்கள் பற்றிய கதைகள் புண்ணிய ஆத்மாக்களின் வருகையோடு தோன்றியதனை நான் அறிவேன்.
மகிழ்வுறு கதைகளின் குறியீடாகிப்போன மூன்று நட்சத்திரங்கள்
44 த ம ன n தி ஜ் லு

என் மகிழ்வுலர்ந்த வாழ்வுப்பெருவெளியில் அனல் அருந்திச் செல்லும் கொடுமை உணர்தல், உணர்த்தல் அரிது யுத்தத்தின் இறுதிவெளியில் மண் அடுக்கின் கீழ் அனற் சிறையுள் அடுக்கப்பட்ட சோதரரின் விழிகளாய் மூடுண்டன இரண்டு நட்சத்திரங்கள். மற்றையது
அவர்களின் வார்த்தைகளில் மெளனித்துப்போயிருந்தது.
ள்னதன்பே
அந்த மூன்று நட்சத்திரங்கள் எதன் குறியீடென நீ அறிவாயா? நான் அறியேன்.
23.08.2011.
e, 9) vy V - 2) \b o vo è c3 \b 2, res) e, e con 45

Page 30
ஒரு சாம்ராட்சியம் - மூன்று நாய்கள்
புன்னகை அழிந்த பொம்மைகளின் காதுவழி கசியும் குருதியின் சுவையறிய அலையுமொரு மோப்பநாய்,
கோரனின் கடைசி வாரிசின் கிரீடம் தாங்கிய தெருநாயின் மெளனத்துள் நாற்றமெடுக்கும் விஷநீரில் அழிகின்றன பொம்மைகளின் வெளிர்நிறப் பறவைகள்
தோல்வியின் மெளனத்தை அணிந்து வெளியேறும் குட்டி இளவரசன் பொம்மைகளைப் பற்றியபடி
செத்து வீழ்கிறான் சாம்ராட்சியத்தின் இறுதி மயானவெளியொன்றில்
தெருநாய்களின் ஊளைகளுடன் நிகழும் மரண ஊர்வலத்தில்
அமர்ந்து வருகிறான் வெற்றியின் கடைசிக் கனவான்.
மூக்கு வேர்த்திருக்கிறது; உமிழ் நீர் சொட்டுகிறது.
22.11.2011
46 த n ன ம தி x னு

எனது அலைவுகளையும் ஏமாற்றங்களையும் இழப்புக்களையும் இவற்றால் விளையும் துயரங்களை யும் கவிதைகளில் வெளிப்படுத்த முனைந்திருக்கி றேன். எப்போதும் தோற்றுப்போன மனத்துடன் வாழ்க்கையை மோதவிட்டு அதிலிருந்து பிறப்பித்த கவிதைகளாகவே இவற்றை நான் காண்கின்றேன்.
நான் அலைந்து திரிந்த எல்லாக் காலங்களி லும் காவித்திரிந்த எனது கவிதைகளை இப்போது எல்லோருடைய வாசிப்பிற்காகவும் தருவது மகிழ்ச்சி யளிக்கிறது. இக்கவிதைகள் என்னை பிரதிபலிக்கும் ஒரு கருவியாக அமையும் என்பது எனது எண்ணம்.
ജുറഞ്ഞ ക്ലൈ
12.09.2012

Page 31


Page 32
தானா விஷ்ணு - ஈழத்தின் ந4 தன்னைப் பாதித்த, அருட்டு6 அழகியலோடும் கவித்துவத்தோ ஈழத்தின் கோரநாட்களைத் தன் செய்தவன். காய்தல் உவத்தல் வெளிப்படுத்துகின்றவன். அதேவே என்பவற்றையும் உணர்ந்தவன். த தொலைந்து போகவிடாது; தே. ബേമ മഞ്ഞീമജ് . முறைமையைப் புத்தாக்கம் செய சமக்கும் ஆந்தைகள்' எனும் அ கவித்துவப் புலமையின் வெளிப்ப அமைந்துள்ளது. நண்பனின் தொ
|
SN
89.5
 
 
 
 
 

ம்பிக்கை தருகின்ற இளங்கவிஞன். ணர்வைத் தந்த விடயங்களை டும் வெளிப்படுத்தும் கவிஞன். * ‘சிதழுறும் வரிகளால் பதிவு இன்றி நிஜத்தைக் கவிதைகளால் /ளை காலத்தின் தேவை, கடமை னது எழுத்தை வாழ்வை போரோடு ாற்றடங்கா மனத்திண்மையுடன் தனக்கான மொழியை, சொல் யும் தன்மையன். 'கறுப்புருவம் சிவனது இரண்டாவது தொகுப்பு, டாகவும், காலத்தின் பதிவாகவும் குப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி.
தி. செல்வமனோகரன்
துண்டி வெளியீட்டகம்