கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மறுமலர்ச்சிக் கவிதைகள்

Page 1
தொகுப்பும் பதிப்பும் செல்லத்துரை சுதர்சன்
 


Page 2

மறுமலர்ச்சிக் கவிதைகள்
தொகுப்பும் பதிப்பும் செல்லத்துரை சுதர்சன்
(தமிழ்த் துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்)
2006

Page 3
“Marumalarchi Kavithaikal” (Collections of poems)
Compiled & Edited by Sellathurai Sutharsan° Dept. of Tamil, University of Peradeniya. E-mail : Suda3379 Gyahoo.com
ISBN : 955-544-1-2
Edition December 2006
Layout & Printing Kribs Printers Pvt Ltd.
"மறுமலர்ச்சிக் கவிதைகள்’ (கவிதைத் தொகுப்பு)
தொகுப்பும் பதிப்பும் செல்லத்துரை சுதர்சன்° தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்.
ISBN : 955-544-1-2
பதிப்பு
டிசெம்பர் 2006
அச்சிட்டோர் 'கிறிப்ஸ் பிறின்டேஸ்

'மறுமலர்ச்சி மறைந்துபோய் பல ஆண்டுகளுக்கு மேலாகியும் அதனுடையதாக்கம் இன்னும் எங்களைத் தொட்டுக்கொண்டு இருக்கிறது. மறுமலர்ச்சிக்கால நினைவு மிக இனிமையானது. ஏனென்றால் - அதில் இலக்கியத்தோடு எங்கள் இளமையும் கலந்திருக்கிறது.'
(வரதர், ஈழநாடு - 1987)
ஈழத்தில்
தமிழ் இலக்கிய மறுமலர்ச்சியை
ஏற்படுத்திய மறுமலர்ச்சி இலக்கியப் படைப்பாளிகளுக்கும்
மறுமலர்ச்சி இதழ்களைக் காலத்தால் அழியாது பாதுகாத்துவரும் எழுத்தாளர் கோப்பாய் சிவம் அவர்களுக்கும்
மறுமலர்ச்சிக் கவிதைகள் / 3

Page 4

நன்றி
பேராசிரியர். எம்.ஏ. நுஃமான் பேராசிரியர். கா. சிவத்தம்பி கலாநிதி. துரை மனோகரன் பூ. சோதிநாதன்
வரதர்
சொக்கன் மயிலங்கூடலூர் பி.நடராஜன் கோப்பாய் சிவம் பா. அகிலன்
ஞானறஞ்சன் பார்த்தீபன்
ஜெகன் சரவணகுமார் பவானி அம்மா, சகோதரிகள் பொ. சுரேஸ்குமார் கிறிப்ஸ் அச்சகம்
மறுமலர்ச்சிக் கவிதைகள் 15

Page 5

பொருளடக்கம்
அறிமுகம்
நவாலியூர் க. சோமசுந்தரப் புலவர் 37
கற்பகப் பழம் இலவுகாத்த கிளி
மஹாகவி (து. உருத்திரமூர்த்தி) 40
இரவு
35 Tg35621 GMTLD அலையெடுத்த கடலென. காதலியாள்
யாழ்ப்பாணன் (வே. சிவக்கொழுந்து) 45
சக்தியின் இருப்பிடம் முதற் துயரம் பொல்லாப்பு செய்யாதே தொழிலாளர் விதியிதுவோ? இனி உலகில். முதல்வன் யார்? அன்பின் திறன் பாரதி
சோ. நடராஜன் 53
எங்கே காணலாம்? மோட்டு விக்கிரகம் கழுதை!
மறுமலர்ச்சிக் கவிதைகள் 17

Page 6
நாவற்குழியூர் நடராஜன் நாங்கள் பெரிதும் சிறிதும் சுழற்சி கேட்டியோபாரதீ! சிறை எனக்கு அது முடியாது தெரியாதா? பச்சை பச்சையாய். என் மனைவிக்கு
எம்முன் இருந்த தெய்வம்
சாரதா (க.இ. சரவணமுத்து) துயிலெழுச்சி வாழ்க்கைச் சுவடு எங்கள் நாவலன்! அதுவும் ஒரு காலம் வேண்டாத புத்திமதி! வேண்டும் புத்திமதி! வேளை வரும்! கனக்கவேன் கதைகள் ஐயா! நிதானமில்லை!
வரதர் (தி. ச. வரதராசன்)
மீசையை முறுக்கி விட்டு அம்மான் மகள்
கலைவாணன்
உலாவிடுவேன்
கதிரேசன்
வேற்றுமை
வ.இ.
இலங்கை மாதாவுக்கு
8 1 மறுமலர்ச்சிக் கவிதைகள்
58
76
93
96
97
99

சோ. தியாகராஜன் OO
வாழ்வுத் திரையில்.
காவலூர்க் கைலாசன் IOI
புது யுகத்தில்!
கோட்டாறு எஸ். ஆதிமூலப்பெருமாள் ஆரியர் 105
பக்தியால் ஆகுமோ?
பரமேஸ் 103
குயிலின் பதில்
கவிஞன் 104
பொங்கலோ பொங்கல்!
கோட்டாறு தே. ப. பெருமாள் 105
அருட்கடலே வாழ்க!
கு.பெரியதம்பி 107
ஈழத்தாய்
சுவாமி விபுலாநந்த அடிகள் 108
பூஞ்சோலைக் காவலன்
தில்லைச் சிவன் III
பட்டணத்து மச்சினி
வித்துவான் வேந்தனார் 113
ஆட்டை வெட்டும் கத்திக்கு - உங்கள் ஆவிகொடுக்க வாருங்கள்
நடனம் 115
பட்டிக்காட்டான் பார்த்த படம்
பின்னிணைப்பு II6
மறுமலர்ச்சிக் கவிதைகள் 19

Page 7

அறிமுகம்
'கற்ற, பண்பாடுள்ள, பரந்த மனப்பான்மையுள்ள, முற்போக்குள்ள, தெளிவான ஞானமுள்ள, சுதந்திர சிந்தனையுள்ளது; மறுமலர்ச்சி’ - ஜே. ஏ. கொட்ரன் -
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விசேடதுறை இறுதி யாண்டு மாணவனாக இருந்தபோது பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் அவர்களின் மேற்பார்வையின் கீழ் இலக்கியமும் கருத்து நிலையும் - ஈழத்தில் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிச் சங்கத்தினால் வெளியிடப்பட்ட மறுமலர்ச்சி இதழ்களை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு' எனும் தலைப்பில் ஆய்வினை மேற் கொண்டேன். அப்போது மறுமலர்ச்சி இதழில் வெளிவந்த கவிதைகளையும் படிக்க நேர்ந்தது. அவற்றைத் தொகுத்துப் பதிப்பித்தால் இலக்கிய உலகிற்குப் பெரும் பயனளிக்கும் என்று எண்ணினேன். அந்த எண்ணமே இந்த நூலாக உருப்பெற்றுள்ளது. ஈழத்து நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் மறுமலர்ச்சிக் காலகட்டம் முக்கியமானது. கவிதை, சிறுகதை எனப் பல துறைகளிலும் முக்கியத்துவம் பெற்று விளங்குவது இக்காலம். அந்த வகையில் இந்த நூலினை முழுமையாகப் புரிந்து கொள்வ தற்கு முக்கியமான சில குறிப்புக்களை இவ்விடத்தில் பதிவு செய்வது பொருத்த மென்று எண்ணுகிறேன். இக்குறிப்புகள் வாசகர்களுக்குப் பயனளிக்கும் என்றும் கருதுகிறேன்.
மறுமலர்ச்சிக் கவிதைகள் ! 11

Page 8
I
நவீன தேவைகளுக்கு ஏற்பக் காலத்துக்கு ஒவ்வாத விடயங் களை நீக்கி கல்வி, பண்பாடு, மனிதத்துவம், முற்போக்கு, விடுதலை முதலாய உன்னத பண்புகளின் உயர்நிலை வளர்ச்சி யுடன் சமூகம், அரசியல், பொருளாதாரம், ஆன்மிகம், கலை, இலக்கியம் முதலிய அனைத்து அம்சங்களிலும் பழமையை மீட்டுருவாக்கலும் புதுமையை நிலை நாட்டுவதுமான கருத்தி யலே மறுமலர்ச்சி ஆகும். மறுமலர்ச்சியின் முக்கிய அம்சங்களாக இரண்டினைக் குறிப்பிடலாம்.
அ. பழமையைக் காலத் தேவைக்கேற்ப மீட்டுருவாக்கல் ஆ. புதுமையை நிலைநாட்டுதல்
பழமையை நிர்மூலமாக்காது பழமையின் அஸ்திபாரத்தில்,
பழமையின் உரத்தில்,பழமையைக் காலத் தேவைக்கேற்ப மாற்றி யமைத்து கலையின் பண்பை, அதன் கதியை, துடிப்பைச் செழுமையுறச் செய்வது முதலாவது அம்சமாகும். நவீன சிந்தனைகள் தொடர்பான அனைத்தினையும் அனைத்துத் துறைகளிலும் ஏற்படுத்துவது இரண்டாவது அம்சமாகும்
தனது கருத்தைப் பலமாக நிலைநாட்டுதல், பரம்பரையான கட்டுப்பாடுகளை உடைத்தெறிதல், நிகழ்கால உலகப் பார்வை யைக் கொண்டிருத்தல், தன்னோடும் தனக்கு வெளியேயும் இருப்பவற்றுடன் முரண்படுவதன் மூலம் வளர்ச்சி காணுதல், புதிய முறையில் அழகியல் பழக்கத்தை மேற்கொள்ளுதல் முதலியன மறுமலர்ச்சியின் முக்கியமான அம்சங்களாகும். இத்தகைய மறுமலர்ச்சிச் சிந்தனை இத்தாலியில் தோன்றி ஐரோப்பா முழுவதும் பரவிக் காலனித்துவ காலப்பகுதியில் இந்தியா, இலங்கை போன்ற கீழைத்தேய நாடுகளுக்கும் அறிமுக மாகியது. மனிதப் பண்பாட்டைப் புதிய திசைக்குச் செலுத்திய இச்சிந்தனை மொழியிலும் புதுமையை ஏற்படுத்தியது. இந்த வகையில் காலனித்துவ ஆட்சி நடைபெற்ற நாடுகளில் குறிப்பாக இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் உள்ள மொழிகள் அனைத்திலும் மறுமலர்ச்சிக் கருத்துநிலை செல்வாக்குச் செலுத்தியது. இந்தப் பின்னணியிலேயே தமிழில் மறுமலர்ச்சி பற்றி நோக்க வேண்டும்.
12 ! மறுமலர்ச்சிக் கவிதைகள்

II
தமிழின் மறுமலர்ச்சி என்பது தமிழ் மொழி சார்ந்த அனைத்துத் துறைகளிலும் ஏற்பட்ட மாற்றத்தினையும் வளர்ச்சி யினையும் குறித்து நிற்கும். அ. சுவாமிநாதன் மொழி நிலைப்பட்ட மறுமலர்ச்சியின் தோற்றத்துக்கான காரணத்தினைப் பின்வருமாறு குறிப்பிடுவார்.
'மறுமலர்ச்சி தோன்றக் காரணம் பாஷைக்கும் பொதுசனத்துக்கும் இடையே அறுபட்டிருந்த தொடர்பைப் பிணைக்கவே அன்றி வேறன்று'
தமிழ் மொழியின் சார்பு பற்றித் தோன்றிய முழுமுதல் வாதம் தூயதமிழ்வாதம், இலக்கணவாதம், பழந்தமிழ்வாதம் என்பன வும் பிற மொழிகளின் சார்புபற்றித் தோன்றிய வட மொழிவாதம், ஆங்கில வாதம், ஹிந்திவாதம் என்பனவும் சமயசார்பு பற்றிய சமயவாதமும் மொழிக்கும் பொதுசனத்துக்கும் இடையிலான தொடர்பினைப் பாதிக்கும் காரணிகளாக அமைந்தன. எனவே, மொழிக்கும் பொதுசனத்துக்குமான தொடர்பைப் பேணவும் அந்த அடிப்படையில் கலை இலக்கியங்களை வளர்த்தெடுக்கவும் மறுமலர்ச்சி இலக்கிய இயக்கங்கள் தோன்றின. இந்தப் பின்னணியிலேயே ஈழத்தில் தோன்றிய மறுமலர்ச்சி இயக்கத்தை யும் இலக்கியத்தையும் நோக்குதல் வேண்டும்.
III
மறுமலர்ச்சிக்கு முந்திய ஈழத்துத் தமிழ் இலக்கியமானது உருவம், உள்ளடக்கம், மொழி ஆகிய அம்சங்களில் மரபுத் தன்மையை இறுகப் பற்றியிருந்தது. செய்யுள் மரபு ரீதியான போக்கிலேயே அமைந்திருந்தது. சமயக் கருத்துக்களையும் தத்துவக் கருத்துக்களையும் கூறுவதற்குச் செய்யுளே பெரிதும் பயன்பட்டது. 19ஆம் நூற்றாண்டிலே ஆறுமுகநாவலர் போன் றோரின் முயற்சியால் தமிழ் நவீனத் தன்மை பெறத் தொடங் கியது. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலக்கியத் துறையில் செயற்பட்ட பாவலர் துரையப்பாப்பிள்ளை முதலியோரின் படைப்புக்கள் பழமை, புதுமை இரண்டுக்கும் இடைப்பட்டதாக
மறுமலர்ச்சிக் கவிதைகள் / 13

Page 9
வந்தன. 1930 ஆம் ஆண்டை அடுத்தே ஈழத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படுகின்றன. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியி லேயே சமூக மறுமலர்ச்சி ஈழத்தில் ஆரம்பித்து விட்டது. எனினும் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலப் பகுதியிலேயே அது தீவிரமாகியது. யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் முதலிய அமைப்புக்கள் சமூக மறுமலர்ச்சியோடு இலக்கியத்தில் புதிய முயற்சிகளையும் ஆரம்பித்து வைத்தன.
1931 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட டொனமூர் அரசியல் சீர்திருத்தம் சர்வசன வாக்குரிமையை வழங்கியது. 1944, 1949 ஆகிய ஆண்டுகளில் முறையே தமிழ்க் காங்கிரஸ் கட்சியும், தமிழரசுக் கட்சியும் தோன்றின. 1930களில் இலங்கையில் ஏற்படத் தொடங்கிய காந்தியத்தின் செல்வாக்கும் 1940 களில் பெருமளவு அதிகரித்தது. 1939 ஆம் ஆண்டு இலங்கையில் பொதுவுடமைக் கட்சி ஸ்தாபிக்கப்பட்டு 1947ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் அதன் கிளை உருவாக்கப்பட்டது. இத்தகைய சமூக, அரசியல் இயக்கங்கள் சமூகம் மரபு ரீதியாக வைத்திருந்த கருத்தியலில் குறிப்பிடத்தக்க பல மாற்றங்களை ஏற்படுத்தின.
ஈழத்தில் தமிழின் மறுமலர்ச்சி என்பதை மொழியமைப்பிலும் இலக்கிய ஆக்கத்திலும் ஏற்பட்ட புதுமையாகக் கொள்வதே பொருத்தமானதாகும். மொழியமைப்பில் ஏற்பட்ட மறுமலர்ச்சி என்பது முன்னர் கூறிய வாதங்களை நிராகரித்துத் தமிழை நவீனத்துவப்படுத்துவதில் பிறமொழிகளை எவ்வாறு பயன் படுத்தலாம் என்ற சிந்தனையை முதன்மைப்படுத்தியது. மறுமலர்ச்சி எழுத்தாளரான அ.செ. முருகானந்தன்,
'மழைத் தாரையினால் மாற்றமடையும் மரத்தைப்போலத் திசைப் பாஷைகளின் மோதலினாலும் புதிய வாழ்க்கை முறைகளினாலும் தமது பாஷையிலும் ஒரு புதுமை தோன்ற வேண்டும். இதுதான் எல்லா பாஷைகளின் இயற்கையுமாகும்* என்று கூறுவது நோக்கத்தக்கது.
ஐரோப்பிய மறுமலர்ச்சியில் விரிந்த அறிவுலகத்திற்குத் திறவுகோலாகக் கிரேக்க மொழி இலக்கியம் அமைந்ததுபோலத் தமிழின் மறுமலர்ச்சியில் ஆங்கில மொழி இலக்கியம் அதிக
14 1 மறுமலர்ச்சிக் கவிதைகள்

செல்வாக்குச் செலுத்தியது. இன்னும் மறுமலர்ச்சியாளர்கள் தமிழை மரபு ரீதியான மொழிநிலைவாதங்களில் இருந்து விடுதலை செய்யவேண்டும் என்று கருதினார்கள்.
'வழக்கொழிந்த சொற்களையும் பொருள்களையும் ஆளுதல் தமிழுக்கு விலங்கு பூட்டிச் சிறையிலிடுவது போலாகும். இப்படிப்பட்ட சொல்லாட்சி கொடிய வல்லரசு, இதில் நின்றும் தமிழ் விடுதலை பெற வேண்டியது அவசியம்.'
என்ற எஸ். வையாபுரிப்பிள்ளையின் கூற்று இவ்விடத்தில்
குறிப்பிடத்தக்கது.
18ஆம் 19ஆம் நூற்றாண்டு வரையும் தமிழ் மொழி இலக்கியம், இலக்கணம், தத்துவம் முதலிய விடயங்களை எழுதுவதற்கே உரியது என்று வரையறுக்கப்பட்ட பயன்பாட்டினை உடையதாக இருந்தது. ஆனால் 20ஆம் நூற்றாண்டில் சமூகத்தின் தேவை விரிவடையத் தமிழ் மொழியின் பயன்படு தளமும் விரிவடைய வேண்டிய தேவை உருவாகியது. இத்தேவை தமிழின் மறு மலர்ச்சியை அவசியமாக்கியது.
தமிழில் இலக்கிய ஆக்கத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சி என்பது மொழியமைப்பில் ஏற்பட்ட மறுமலர்ச்சியோடு நெருங்கிய தொடர்புடையது. தமிழ் மறுமலர்ச்சி இலக்கியம் உருவ முறை யிலும் உள்ளடக்க முறையிலும் முன்னைய தமிழ் இலக்கியத் தினின்றும் மாறுபட்டது. பரந்துபட்ட வாசகர் கூட்டத்தைக் கொண்டிருந்ததுடன் சமூகப் பிரச்சினைகளுக்கு முதன்மை கொடுத்தது. அத்துடன் ஆழமான சமூக ஆவணமாகவும் மறுமலர்ச்சி இலக்கியம் மேற்கிளம்பியது.
மறுமலர்ச்சி இலக்கியம் ஜனநாயகமயப்பாட்டையும் மதச் சார்பின்மையையும் வலியுறுத்தியது. தனிமனிதனைப் பற்றிய இலக்கியச் சித்திரிப்பும் மனித வாழ்வியல் மீதான சிரத்தையும் மறுமலர்ச்சி இலக்கியத்தில் பதிவாகின. மறுமலர்ச்சித் தமிழ் இலக்கியம் பத்திரிகைகள், சஞ்சிகைகளுடனும் நெருங்கிய
மறுமலர்ச்சிக் கவிதைகள் / 15

Page 10
தொடர்பு கொண்டிருந்தது. மறுமலர்ச்சி சமூகத்தைப் பிரதி பலித்ததோடு புதிய சமூக உருவாக்கத்திற்கும் அடிப்படையாக அமைந்தது. தமிழ் இலக்கிய ஆக்கத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சி பற்றிய பின்வரும் கூற்று இங்கு குறிப்பிடத்தக்கது.
"எங்கள் தமிழ்ப் பாஷை இதுகாலும் ஒரு புதிய பாதையில் சென்று கொண்டிருந்தது. காவியங்களும் நீதி நூல்களும் இவற்றுக்கு உரையான வசன நூல்களும்தான் பெரும் பான்மையும் பரவி இருந்தன. சங்க காலத்தில் தனித்தமிழ் வாழ்வைச் சித்திரிக்கும் நூல்கள் வெளிவந்தன. ஆரியத்தின் தொடர்பு பெற்றபோது இராமாயணம், பாரதம் முதலிய காவிய மலர்கள் பூத்தன. அதேபோலத்தான் இப்போதும் உலகத்தின் சிறந்த பாஷைகளுள் ஒன்றாகிய ஆங்கிலத்தின் தொடர்பு நமது பாஷைக்கு ஏற்படும்போது புது வாழ்க்கை முறைகளினால் உந்தப்பெற்று அங்கு வளர்ந்துவரும் புதிய இலக்கிய முறைகள் நம் பாஷையிலும் இடம்பெற்று வருகின்றன. நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், புதுவிதமான பாடல்கள், வசன கவிதைகள் என்பன இப் போது பூத்துவரும் புது மலர்கள். இவை மறுமலர்ச்சியின் சுகந்தத்தையும் லாவண்யத்தையும் நமக்கு எடுத்துக் கூறுவன. "
IV
ஈழத்தில் இலக்கிய மறுமலர்ச்சிக் காலகட்டத்தைப் பின்வரு மாறு வகுத்துக் கொள்வதே பொருத்தமானது. 1931 ஆம் ஆண்டு டொனமூர்அரசியல் சீர்த்திருத்தத்தின்படி வழங்கப்பட்ட சர்வஜன வாக்குரிமை மக்களுக்குத் தேசிய உரிமை பற்றிய சிரத்தையை ஏற்படுத்தக் காலாக அமைந்தது. 1943 இல் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் பின்னர் 1946இல் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. இவை 1931-1943 வரை வளர்ந்து வந்த இலக்கியச் செல்நெறியை வேகமாக வளர்த்தெடுத்து 1950 வரை கொண்டு சென்றன. 1956இல் தனிச்சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்டபின் தமிழ் இலக்கியம் தமிழ்த் தேசியவாதத்தை மையப்படுத்தி வளரத் தொடங்கியது.
16 1 மறுமலர்ச்சிக் கவிதைகள்

எனவே, இங்கு மூன்று திருப்புமுனைகள் முக்கியமானவை யாகப் படுகின்றன.
1. 1931 - டொனமூர் அரசியற் சீர்திருத்தம் - சர்வஜன வாக்குரிமை
- இலங்கையர் என்ற அங்கீகாரம் பெற்றமை.
2. 1943 - இவ்வாண்டின் பின்னரே தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம், இலக்கிய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆகியன தோன்றியமை.
3. 1956 - தனிச் சிங்களச் சட்டம் - தமிழ் இலக்கியம் தமிழ்த்
தேசியவாதத்தை நோக்கி வளரத் தொடங்கியமை.
இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஈழத்துத் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்காலத்தைப் பின்வருமாறு வரையறுப்பது பொருத்த
மானது.
ஈழத்து இலக்கிய மறுமலர்ச்சிக் காலம் (1931 - 1956)
ஆரம்ப மறும்லர்ச்சிக் காலம் மறுமலர்ச்சிக் காலம்
(1931 - 1943) (1943 - 1956)
மறுமலர்ச்சி இதழின் காலம் (1946 பங்குனி - 1948 ஐப்பசி)
இக்கால வரையறை தொடர்பாக விரிவாக விளக்குவதற்கு இவ்இடம் பொருத்தமற்றது. அதனைப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாக நோக்கலாம்.
இக்கால கட்டத்திலே ஈழகேசரி (1930), வீரகேசரி (1930), தினகரன் (1932) ஆகிய பத்திரிகைகள் வெளிவந்தன. இவை மேலைநாட்டு மறுமலர்ச்சிக் கருத்துக்கள், இந்திய-தமிழக
மறுமலர்ச்சிக் கவிதைகள் / 17

Page 11
மறுமலர்ச்சிக் கருத்துக்கள் ஆகியவற்றை ஈழத்தவருக்கு அறிமுகம் செய்தன. பாரதி முதலிய தமிழின் மறுமலர்ச்சியாளர்கள் 'மணிக் கொடி’, ‘கிராம ஊழியன் முதலிய தமிழ் நாட்டுச் சஞ்சிகைகள் மூலம் ஈழத்தவருக்கு நன்கு அறிமுகமாயினர்.
அச்சு இயந்திரத்தின் தோற்றத்துடன் பத்திரிகைகள், சஞ்சிகைகள் தோன்றின. தமிழில் மறுமலர்ச்சிக்கு முந்திய இலக்கிய மரபினின்றும் பெரிதும் மாறுபட்ட இலக்கிய மரபை இவை ஆரம்பித்து வைத்தன. அரசியல் சமூக விமர்சனங்கள் தொடக்கம் சிறுகதை, நவீன கவிதை, இலக்கிய விமர்சனம் முதலான புதிய எழுத்து முறைகளை இவை தொடக்கி வைத்தன. வெகுஜன வாசிப்பு, காத்திர வாசிப்பு என்ற இரண்டுக்கும் இடை யிலான வாசிப்புத் தளத்தை அவை கொண்டிருந்தன. அத்துடன் அவை தாம் சார்ந்த வெளியீட்டு இயக்கத்தின் கருத்தியலையும் பிரதிபலித்தன.
V
அ. செ. முருகானந்தன், அ. ந. கந்தசாமி பஞ்சாட்சர சர்மா ஆகியோரைத் தி.ச. வரதராசன் இணைத்து 13-06-1943 பிற்பகல் 4.00 மணிக்கு யாழ்ப்பாணம் செம்மா தெருவில் (தற்போதைய கஸ்தூரியார் வீதி) உள்ள ரேவதி குப்புசாமி வீட்டு விறாந்தையில் ஒரு சிறிய கூட்டத்தைக் கூட்டினார். அக்கூட்டத்தில் 17 பேர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் நோக்கம் இலக்கியச் சங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதாகும். 'புதுமைப்பித்தர்கள் சங்கம்' என்று பெயர் வைக்கப்படவேண்டுமென்று வரதர் விரும்பினார். ஆனால் கூட்டத்தில் இருந்த பெருபாலானோருக்கு அவரின் விருப்பம் உடன்பாடற்றதாக இருந்தது. பெருபாலானோர் சார்பில் வை. ஏரம்பமூர்த்தி தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம்" (Tamil Literary Renaissance Society) என்று பெயர் அமையவேண்டுமென முன்மொழிய அதனைக் கனக. செந்திநாதன் வழிமொழிய சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. இச் சங்கத்தின் நோக்கங்கள் இரண்டு. இதனைப் பஞ்சாட்சர சர்மா பின்வருமாறு குறிப்பிடுவார்.
18 மறுமலர்ச்சிக் கவிதைகள்

"இச் சங்கத்தின் நோக்கங்கள் இரண்டு.
1. தமிழில் வெளியாகிய நூல்களை எல்லாம் சேர்த்து வைத்து நூல்நிலையம் ஒன்றை ஆக்கி அதன் அங்கத் தவர்கள் பயனடையச் செய்தலும் தமிழ்ப் பெரியார் களின் விழாக்களைக் கொண்டாடி நினைவு கூர்தலும்
மாதாந்த இலக்கியக் கூட்டங்களை நடத்தலும்.
2. பண்டித வர்க்கத்தின் மரபுத்தளையில் நின்று தமிழை விடுவித்து ஆக்க இலக்கியத்துறையில் அதனைச் செலுத்துதல்."
இவ்விருநோக்கங்களையும் மறுமலர்ச்சிச் சங்கம் நிறைவேற்ற அரும்பாடுபட்டது. இச்சங்கத்தினரின் இயக்க நிலைப்பட்ட தன்மையைக் கா. சிவத்தம்பி பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
'முன்னர் இருந்த மறுமலர்ச்சியை மீண்டும் கொண்டு வருதல், அந்த மலர்ச்சியை நவீன வடிவங்களில் கொண்டு வருதல், புதிய தேவைக்கேற்பக் கொண்டு வருதல். தமிழ் மீட்புவாதம் அல்ல. உண்மையில் திராவிடக் கருத்துநிலை யில் இருந்து வேறுபட்டு ஒரு மீட்புவாதமாக இல்லாமல் நவீன அடிப்படையில், நவீனத் தேவைகளுக்காகத் தமிழைப் பயன்படுதுவதாகிய ஓர் இயக்கம்.'
மறுமலர்ச்சிக்கு ஈழகேசரியே அடிப்படை என்ற கருத்து நுணுகி ஆராயும்போது பொருத்தமற்றதாகத் தெரிகின்றது. மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் ஈழகேசரியில் எழுதியிருப்பினும் இயக்க நிலைப் பட்ட அவர்களின் தேவையை அது பூர்த்தி செய்யவில்லை. அது மரபை இறுகப் பற்றியிருந்தது. மறுமலர்ச்சி இதழின் பிரதம ஆசிரியர் வரதர் ;
'ஈழகேசரி தனது இலக்கியத் துறையில் பழைய பண்டிதத் தனத்தில் இறுகக் கால்ஊன்றி இருந்தது. புதிய இலக்கியத் துறையில் ஓரளவே அக்கறைகாட்டியது."
என்று கூறுவது இங்கு குறிப்பிடத்தக்கது.
மலர்ச்சிக் கவிதைகள் / 19

Page 12
இதனையே கா. சிவத்தம்பியும்
'மறுமலர்ச்சி இயக்கத்திற்கு ஈழகேசரியே பூரண பிரசுர களமாக அமைந்திருப்பின் மறுமலர்ச்சி என்ற சஞ்சிகை தோன்றியிருக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.”* என்று கூறுகிறார்.
எனவே மறுமலர்ச்சி இயக்கத்தினைச் சார்ந்தவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யவும் நவீன இலக்கியத்திற்கான பிரசுர களத் தேவையை நிறைவுசெய்யவும் ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு முதன்மை கொடுத்துப் பிரசுரிக்கவும் மறு மலர்ச்சி இதழ் தனி ஒரு இதழாக வெளிவரவேண்டியிருந்தது.
இவ்விதழ் நான்கு காலகட்ட வளர்ச்சியைக் கொண்டது.
1. மறுமலர்ச்சிச் சங்கம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் அ. ந. கந்தசாமி அளவெட்டி வாசிகசாலை ஒன்றில் கையெழுத்துப் பிரதியாக மறுமலர்ச்சி இதழை நடாத்தியமை.
2. மறுமலர்ச்சிச் சங்கம் தொடங்கிய காலத்திலிருந்து சிறிது காலத்திற்கு (1943 - 1946) வரதர் கையெழுத்துப் பிரதியாக மறுமலர்ச்சி இதழை நடாத்தியமை.
3. மறுமலர்ச்சிச் சங்கத்தின் வெளியீடாக வரதர் முதலியோர் 1946 பங்குனி தொடக்கம் 1948 ஐப்பசி வரை மறுமலர்ச்சி இதழை அச்சில் வெளியிட்டமை. 23 இதழ்கள் இவ்வாறு வெளியிடப்
பட்டன.
4. 1999 இல் மறுமலர்ச்சி இதழை வரதர், சிப்பி செங்கை
ஆழியான் ஆகியோர் மீண்டும் வெளியிட்டமை. இரண்டு
இதழ்களே இவ்வாறு வெளியாகின.
இவற்றில் மூன்றாவது கட்டத்தில் இருக்கும் மறுமலர்ச்சி
இதழில் வெளியாகிய கவிதைகளின் தொகுப்பே இந்த நூலாகும். மறுமலர்ச்சி இதழ்களில் வெளிவந்த சிறுகதைகளைச் செங்கை ஆழியான் தொகுத்து நூலாக்கினார். அவருக்கு நன்றிகள்.
20 1 மறுமலர்ச்சிக் கவிதைகள்

VI
ஈழத்தில் மறுமலர்ச்சி இலக்கிய இயக்கத்தின் நோக்கத்தினை அது வெளியிட்ட மறுமலர்ச்சி இதழ்களும் தெளிவுபடுத்தின. முதலிரு மறுமலர்ச்சி இதழ்களின் முகத்து வாரங்கள் அந்த நோக்கத்தினைத் தெளிவாக விளக்குகின்றன.
'தமிழ்ப் பூங்காவில் உள்ள மறுமலர்ச்சி இலக்கியச் செடி யிலே இன்று ஒரு புதிய மலர் பூத்திருக்கிறது. எழுத்தாளர் களும் ரசிகர்களும் சேர்ந்து ஆரம்பித்த பத்திரிகை இது. இதனுடைய வளர்ச்சி இலக்கியத்தின் வளர்ச்சி இதனுடைய இதயத்துடிப்பு தமிழ் இலக்கியம்தான். இலக்கியத்தின் வளர்ச்சியிலே சமூகத்தின் வளர்ச்சி பின்னிவரும் என்பதனை மறுமலர்ச்சி நிரூபிக்கும்.'
'.இனிய கற்பனைகள், ஆழமான தத்துவங்கள் - இவை யெல்லாம் எளிய இனிய நடையிலே, புதிய வசன இலக்கி யங்களிலே சிருஷ்டிக்கப்படவேண்டும் என்று விரும்பு கிறோம். பழமையைப் புதுப்பிப்பதாலும் பிறநாட்டு நல்ல இலக்கியங்களைத் தமிழுக்குக் கொண்டு வருவ தாலும் புதிதாக இலக்கியங்களைச் சிருஷ்டிப்பதாலும் தமிழ்மொழிக்குப் புத்துயிர் அளிக்க விரும்புகிறோம். இன்று தமிழ் மொழி மறுமலர்ச்சியடைந்து வருகிறது. பிற்போக்காளர்கள் எவரும் வெறும் கூச்சலிடுவதனால்
இதைத் தடை செய்துவிட முடியாது."
மறுமலர்ச்சி இதழில் 51 கவிதைகளும் ஒரு மொழிபெயர்ப்புக் காவியமும் வெளியாகின. இவற்றை 22 கவிஞர்கள் எழுதியுள் ளனர். க. சோமசுந்தரப்புலவர், சுவாமி விபுலானந்த அடிகள், மஹாகவி (து. உருத்திரமூர்த்தி), யாழ்ப்பாணன் (வே. சிவக் கொழுந்து), சோ. நடராஜன், நாவற்குழியூர் நடராஜன், சாரதா (க. இ. சரவணமுத்து), வரதர் (தி.ச. வரதராஜன்), கலைவாணன், கதிரேசன், வ.இ., சோ. தியாகராஜன், காவலூர்க் கைலாசன்,
கோட்டாறு எஸ். ஆதிமூலப்பெருமாள், பரமேஸ், கவிஞன்,
மறுமலர்ச்சிக் கவிதைகள் / 21

Page 13
கோட்டாறு தே.ப. பெருமாள், கு. பெரியதம்பி, தில்லைச்சிவன், வித்துவான் வேந்தனார், நடனம் ஆகிய கவிஞர்களின் கவிதைகளே மறுமலர்ச்சி இதழ்களில் வெளியாகின. இக்கவிஞர்கள் மறு மலர்ச்சிக் கருத்துநிலையை ஏற்றுக்கொண்டவர்கள்.
ஈழத்து நவீன கவிதை மரபு மறுமலர்ச்சிக் கால கட்டத்துட னேயே ஆரம்பிக்கிறது.
'ஈழத்து இலக்கிய வரலாற்றில் 'மறுமலர்ச்சிக்காலம்’ என்று சொல்லப்படுகின்ற 1940ஆம் ஆண்டுகளிலேயே இங்கு இப் புதிய கவிதை மரபு தோன்றி வளர்ச்சியடையத் தொடங் கியது.' என்று எம்.ஏ.நுஃமான் முதலியோர் கூறுகின்றனர். செ. யோகராசா 'மறுமலர்ச்சிக் குழுவினரும் ஈழத்துக் கவிதையும் (1972) என்ற தனது கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
'இம் மறுமலர்ச்சிக் கவிஞர் கையிற்றான் ஈழத்தைப் பொறுத்தவரையில் முதன் முதலாக, செய்யுள் - கவிதை வேறுபாடுகள் வெளிப்படத் தொடங்கின; தெளிவுற்றன. *
ஈழத்து நவீன கவிதை மரபில் மறுமலர்ச்சிக் கவிதைகளுக்கு முக்கிய இடம் உண்டு. பாரம்பரியமாகச் செய்யுளின் இறுக்கமான கட்டுக்கோப்பையே கவிதை என்று கருதி வந்த நிலைமை மாறி இக்காலத்தில் கவிதைவேறு, செய்யுள்வேறு என்ற புரிதல் ஏற்படத் தொடங்குகிறது. இதனை மறுமலர்ச்சி இதழில் வெளிவந்த கவிதைகள் தெளிவுறக் காட்டுகின்றன.
நவீன கவிதை முயற்சியில் மறுமலர்ச்சியாளர் கொண்டிருந்த ஈடுபாட்டை சி. து. கன்னிசாமியின் 'மறுமலர்ச்சி இயக்கம்’ என்ற கட்டுரையின் பின்வரும் பகுதி தெளிவுபடுத்துகிறது.
'..தமிழ்க் கவிஞர்களும் யாப்பியல்புகளைச் சிறிதும் வழுவாத பாடல்கள் பாடி ‘இவைதான் மறுமலர்ச்சிப் பாடல்கள்!” என்று கூறும் வழக்கு அறவே ஒழிதல் வேண்டும். உண்மையான புலமை உண்டாயின், பாடப்
22 1 மறுமலர்ச்சிக் கவிதைகள்

பெறும் பாடல்கள் தாமாகவே பொருளமைதியோடு, யாப்பியல்புகளும் பெற்றுச் சாலச்சிறந்த அழகியலோடு காட்சியளியாவோ!'
பொதுவாகவே மறுமலர்ச்சி இதழில் வெளிவந்த கவிதைகள் அனைத்தும் பாரதிக்குப் பின்வந்த நவீன கவிதைக்குரிய பண்பினைக் கொண்டுள்ளன. பேச்சோசைப் பாங்கும் எளிமைத் தன்மையும் சமுதாய நோக்கும் கொண்ட புதுமையான கவிதை களாக அவை விளங்குகிறன.
"இன்னவைதான் கவியெழுத ஏற்றபொருள் என்றுபிறர் சொன்னவற்றை நீர் - திருப்பிச் சொல்லாதீர்! சோலை, கடல், மின்னல், முகில், தென்றலினை மறவுங்கள், மீந்திருக்கும் இன்னல், உழைப்பு, ஏழ்மை, அன்பு, என்பவற்றைப் பாடுங்கள்." என்கிறார்; மறுமலர்ச்சி கவிஞர் மஹாகவி. இக்கவிதை மறுமலர்ச்சிக் கவிஞர்கள் அனைவரதும் சமூகப் நோக்கைப் புலப்படுத்துவதாகக் கொள்ள முடியும்.
மறுமலர்ச்சிக் கருத்து நிலையின் பண்புகளில் ஒன்று ‘சுதந்திரத் தன்மை என்பது முன்னர் நோக்கப்பட்டது. ஐரோப்பிய நாடு களில் மறுமலர்ச்சி இலக்கிய காலத்தில் சுதந்திரத் தன்மையை வலியுறுத்தும் தேசிய இலக்கியங்கள் பல தோன்றின என்பதை இங்கு நினைவிற் கொள்வது பொருத்தமானது. அதேபோன்று இலங்கை சுதந்திரம் அடைவதற்கு நெருங்கிய காலத்தில் வெளிவந்த மறுமலர்ச்சி இதழ்களிலும் தேசிய உணர்வையும் சுதந்திரதாகத்தையும் வலியுறுத்திக் கவிதைகள் வெளிவந்துள்ளன.
'கருத்தியல் விழிப்பின் மூலம் மனிதர்கள் Subject களாக உருவாக்கப்படுகின்றனர்* என்று அல்துரசர் கூறுவார். அதே போன்று இலங்கையிலும் ஆங்கிலேயர்காலத்தில் மக்கள் இலங்கையர் என்றSubjectகளாக
மறுமலர்ச்சிக் கவிதைகள் 123

Page 14
உருவாக்கப்பட்டனர். இத்தன்மையைப் பிரதிபலிக்கும் பத்திற்கும் மேற்பட்ட கவிதைகள் மறுமலர்ச்சி இதழ்களில் வெளியாகியுள்ளன. அவற்றில் வா.இ. இன் இலங்கை மாதாவுக்கு, நாவற்குழியூர் நடராஜனின் என் மனைவிக்கு, நாங்கள், கு. பெரிய தம்பியின் ஈழத்தாய், காவலூர்க் கைலாசனின் புது யுகத்தில், சாரதாவின் துயிலெழுச்சி ஆகிய கவிதைகள் குறிப்பிடத்தக்கவை.
ஈழத்தாய் என்ற கவிதையில் ஈழத்தவர் என்ற உணர்வும், ஈழத்து வளமும் பின்வருமாறு பதிவு செய்யப்படுகிறது.
“ஈழத்துப் புத்திரர்கள் - ரத்தினத் - தீவத்துப் புத்திரர்கள் வாழ்த்துணிந்துநாம் ஒன்றுபட்டீழத் தாயை வணங்கிடுவோம் இந்து சமுத்திரத்தின் - நடுவே - சுந்தரமாய்த் துலங்கும் இந்த இலங்கையெந் நாட்டுவளத்திற்கும்ஈடுகுறைந்திடுமோ?
நன்மைதனிற் குறைந்தோ - வளத் - தன்மைதனிற் குறைந்தோ என்ன குறைவினால் இன்னலடைவது ஈழப்புதல்வர்கள் நாம்? சாதிகள் பேசல்விட்டு - சமயப் - பூசல்கள் ஒயவிட்டு சோதரர் நம்முட் பகைமையொழித்து நம்தாயை
வணங்கிடுவோம்!" காலனித்துவ காலப்பகுதியில் ஆங்கில மொழியும், விதேசி களின் நாகரிகமும் சுதேச பண்பாட்டை அதிகளவு பாதித்தன. எனவே, சுதேச பண்பாட்டை வலியுறுத்திப் பேச வேண்டிய தேவை உருவாகியது. நாவற்குழியூர் நடராஜனின் என் மனைவிக்கு என்ற கவிதை விதேசியப் பண்பாட்டின் வருகையோடு தமது பண்பாட்டை மறந்துபோன சுதேசிகளைப் பின்வருமாறு சாடுகிறது.
இங்குவந்து பார்த்தறிந்தேன் என்கிளியே! நாடு மங்குகின்றதற்கு இந்த மாந்தர்கள்தான் ஏது எங்கிருந்தோ இங்குவந்த இங்கிலிசைக் கண்டு
24 1 மறுமலர்ச்சிக் கவிதைகள்

தங்கள் நடை பாஷை உடை தாமனைத்தும் விட்டார் வேற்சண்டை செய்த விறல் வீரர்களின் மக்கள் காற்சட்டை தொப்பிக்குள்
கட்டுண்டு போனார்."
காவலூர்க் கைலாசனின் புதுயுகத்தில் என்ற கவிதை இலங்கை வளம், அதுதொடர்பான அபிவிருத்தி என்பவற்றைக் கூறுகிறது.
வன்னிமுழுதும் செந்நெல் கன்னல் பருத்தி - மிக வாய்க்கப் பயிரிட்டு நம் நாட்டைத்திருத்தி, மின்னும் நீர்வீழ்ச்சிகளில் இயந்திரமிட்டே - இங்கு மேலைத் தொழில்களிலே மேன்மை பெறுவோம்!
மாவலி கங்கைக்கொரு கால்வாய் அமைத்தே - கலை மன்னும் யாழ்ப்பாணத்தில் முப்போகம் சமைத்தே காவல் நகரில் ஒரு பாலந் தொடங்கி - எங்கள்
காதற்பரத நாட்டைக் கண்டுவருவோம்..”*
மறுமலர்ச்சியில் பாரதியார், மகாத்மா காந்தி, ஆறுமுகநாவலர் முதலிய பெரியவர்கள் பற்றிய கவிதைகள் வெளியாகியுள்ளன. மறுமலர்ச்சித் தமிழுக்குப் பாரதியாரையும், அரசியல் மறு மலர்ச்சிக்கு காந்தியையும், வசனநடை மறுமலர்ச்சிக்கு நாவலரை யும் மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் முன்னோடியாகக் கொண்டனர்.
மறுமலர்ச்சியாளர்கள் பாரதியை மறுமலர்ச்சித் தமிழின் தந்தை என்று கூறிச் சிறப்பித்தனர்.
'தமிழின் மறுமலர்ச்சியை விரும்பியவர்கள் பாரதியின் பாதையில் அதனை முன்னெடுக்க முனைந்தனர். அந்தவகையில் மறுமலர்ச்சியாளர்கள் பாரதியை அதிகம் முதன்மைப் படுத்தினர். ஈழத்து மறுமலர்ச்சிக் குழுவினரும் பாரதியை முதன்மைப்படுத்தினர். அவர்கள் பாரதியின் பாதையில்
மறுமலர்ச்சிக் கவிதைகள் / 25

Page 15
பயணித்தவர்களே என்பதை அவர்களின் எழுத்துக்களில்
காணலாம்.”*
என்ற கூற்று இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது. பாரதியின் பிறந்த தின நினைவாக வெளிவந்த மறுமலர்ச்சி இதழின் முகத்துவாரத் தின் பின்வரும் பகுதி இதனை மேலும் தெளிவு படுத்துகிறது.
"மறுமலர்ச்சிக் கவிஞரான சுப்பிரமணிய பாரதியாரின் ஜனன தினத்தில் இந்த 'மறுமலர்ச்சி இதழைத் தமிழ் ரசிகர்களின் முன் சமர்ப்பிக்கின்றோம். பாரதியின் நினைவு, நம்மைக் கை கொடுத்துத் தூக்கிவிடுகிறது நமது இலட்சியப் பாதையிலே...”*
யாழ்ப்பாணனின் பாரதி, நாவற்குழியூர் நடராஜனின் கேட்டியோ பாரதி, மஹாகவியின்அலையெடுத்த கடலென முதலிய கவிதைகள் பாரதியைப் பற்றிய கவிதைகளில் குறிப்பிடத்தக்கவை.
கேட்டியோ அன்றுனைக் கீழ்மைப்படுத்திய நாட்டிலே உன்கவி நாதம் நிறைந்தது; ஈட்டிவேல் வாளெனத் தீட்டி நீ விட்டசொல் பாட்டினால் எம் தளைப் பாரம் குறைந்தது.' என்கிறார்; நாவற்குழியூர் நடராஜன்.
"அலையெடுத்த கடலென ஆற்றல்கொண்ட பாரதிக் கலைஞனின் கவிதை இக் காசினியெலாம் பெரும் ஒலிகிளர்த்த வேணும் - நாம் ஒன்றுபட்டு நின்று பல் சிலைசெதுக்கி நாட்டுவோம்
, »22
செந்தமிழர் நாடெலாம் என்று மஹாகவி பாடுகிறார்.
26 1 மறுமலர்ச்சிக் கவிதைகள்

இவ்விடத்தில் ஈழகேசரியில் வெளிவந்த நாட்டுக்கு ஒருவன் என்ற வரதருடைய கவிதையின் ஒரு பகுதியைக் குறிப்பிடுவது பொருத்தமானது.
“பாட்டெல்லாம் பண்டிதரின் கையில் சிக்கி பாழ்பட்டு உயிரற்றுப் போனவேளை, வீட்டுக்குட் பழம்புலவர் இருந்துகொண்டு வீணாகச் சண்டைபல போட்டவேளை, நாட்டுக்கு ஒரு புலவன் வந்தான்! வந்தான்! நல்ல பல கவிதைகளைச் செய்து தந்தான் காட்டிவைத்தான் 'கவி என்ற பெயரின் உண்மை கலங்காத வீரன் அவன் பெருமை வாழ்க’ கா. சிவத்தம்பி, அ. மார்க்ஸ் ஆகியோர் தமிழ் மறுமலர்ச்சியாளர் களைப் பற்றிக் குறிப்பிடுகையில்,
"முற்போக்கான நிலைப்பாடுள்ள இலக்கிய மறுமலர்ச்சிக் குழுவினரின் போராயுதமாகப் பாரதி பயன்பட்டான்.”* என்று கூறுவது ஈழத்து மறுமலர்ச்சியாளர்களுக்கும் பொருந்தும்.
சோ. சிவபாதசுந்தரம்
‘‘1930இற்குப் பின் எழுந்த மறுமலர்ச்சி யுக எழுத்தாளர் களுக்குப் பாரதி ஒரு பற்றுக்கோல்* என்று கூறுகிறார். பாரதிக்குப் பின்தமிழகத்தை விட ஈழத்திலேயே முற்போக்குச் சிந்தனை வளர்ந்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் மறுமலர்ச்சி இயக்கமும் அதன் செயற்பாடுகளுமே ஆகும். இவ் விடயத்தை விரிவாகத் தெளிவுபடுத்தும் வகையில் சு. வித்தி யானந்தன் கட்டுரையொன்றினை எழுதியுள்ளார்."
மறுமலர்ச்சிக் கவிஞர்கள் எழுதிய காந்தியைப் பற்றிய கவிதைகளில் தெ. ப. பெருமாளின் அருட் கடலே வாழ்க, சாரதாவின் நிதானமில்லை, யாழ்ப்பாணனின் இனி உலகின் முதல்வன் யார்?, நாவற்குழியூர் நடராஜனின் என்முன்னே இருந்த தெய்வம் முதலியவை குறிப்பிடத்தக்கவை. காந்தியின் இறப்பினையொட்டி எழுதப்பட்ட கவிதைகளாக இவை விளங்கு கின்றன. ஆயுத கலாசாரத்தினின்றும் மாறுபட்டு அகிம்சையை
மறுமலர்ச்சிக் கவிதைகள் / 27

Page 16
முதன்மைப்படுத்தி அரசியலில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய தற்காகக் காந்தியை இவர்கள் முதன்மைப்படுத்தினார்கள்.
மறுமலர்ச்சியில் வெளியாகிய நாவலர் பற்றிய கவிதைகளில் சாரதாவின் எங்கள் நாவலன் என்ற கவிதை சிறப்பிற்குரியது. இக்கவிதை 'மறுமலர்ச்சி - நாவலர் சிறப்பிதழி'ல் வெளியாகியது. அவ்விதழின் முகத்துவாரம் என்ற பகுதியில் பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது.
'இந்த இதழ் வசனத்தமிழின் புதுமலர்ச்சிக்கு வழிகாட்டிய நாவலரை நினைவூட்டிக்கொண்டு வெளிவருகின்றது.*
நாவலர் வசன நடையில் ஏற்படுத்திய மறுமலர்ச்சியைச் சாரதாவின் கவிதை பின்வருமாறு விளக்குகிறது.
“பாஷை நடையிலே பண்டிதவம்புகள் பல்கிப் பரவிய பான்மை, தமிழனைத் தோஷப் படுத்திய சூழ்ச்சி யுணர்ந்துதன் சொந்த - இலக்கணச் சோர்விலாப் பாதையில், லேசு நடைவகுத்(து) இன்தமிழ் நூல்பல ஈந்த அருமையை என்னென் றியம்புவோம் தேசம் ‘வசனநூற் சிந்தன்" இவனெனச் செப்புஞ் சரித்திரத்
தீர்ப்பை உணர்ந்திரோ.”*
ஜே. ஏ. கொட்ரன் மறுமலர்ச்சியின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக முற்போக்கு என்பதையும் குறிப்பிடுவார். மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் மறுமலர்ச்சி என்ற சொல்லை முற்போக்கு என்ற சொல்லுக்கு ஈடாகவே பயன்படுத்தி உள்ளனர். இவர்கள் சமூகத்தில் காணப்பட்ட பிற்போக்கான நடைமுறைகள் அனைத்தையும் எதிர்த்தனர். மறுமலர்ச்சி இரண்டாவது இதழின்
28 1 மறுமலர்ச்சிக் கவிதைகள்

முகத்துவாரம் பிற்போக்கைக் கடிந்து முற்போக்குச் சிந்தனையை முன்மொழிவது பற்றி முன்னர் குறிப்பிடப்பட்டது. இந்த வகை யில் முற்போக்குச் சிந்தனைகளைக் கொண்ட கவிதைகள் பல மறு மலர்ச்சி இதழில் வெளிவந்துள்ளன. இவ்வகையில் ஆதிமூலப் பெருமாளின் பக்தியால் ஆகுமோ, வேந்தனாரின் ஆட்டை வெட்டும் கத்திக்கு உங்கள் ஆவிகொடுக்க வாருங்கள், கதிரேசனின் வேற்றுமை, யாழ்ப்பாணனின் தொழிலாளர் விதி இதுவோ, சோ.நடராஜனின் எங்கே காணலாம் முதலிய கவிதைகள் குறிப்பிடத்தக்கவை.
உயிர்ப்பலியைக் கண்டிக்கும் ஆதிமூலப்பெருமாள்.
AP PP P
ஈசனின் கோயிலில் ஆடொடு கோழியை ஈவிரக்கஞ் சற்று இல்லாமல் நீசப்பலிசெய்து நின்று தொழுவது நீதியோ?. y y29
தெய்வமார்க்கும் குருதிப்பலியைச் செய்யும் வழக்கம் உண்டென சைவமாகும் நூலில் ஏதுஞ்
சான்றுகாட்ட முடியுமோ?."
என்றும் கேள்விகள் எழுப்புவதை இங்கே குறிப்பிடலாம்.
சோ. நடராஜனின் எங்கே காணலாம் என்ற கவிதை நட்ட கல்லைத் தெய்வமென்று நாலு புஷ்பம் சாத்தி." என்று சித்தர்கள் ஆடம்பர வழிபாட்டை வெறுப்பதுபோல வெறுத்து மனித நேசிப்பை வலியுறுத்துகிறது.
வேற்றுமை, தொழிலாளர் விதி இதுவோ முதலிய கவிதைகள் முதலாளி தொழிலாளி என்போருக்கிடையிலான வேறுபாட்டைக் காட்டுவதோடு முதலாளித்துவச் சுரண்டலைக் கடிந்து தொழிலாளர் புரட்சியை வலியுறுத்துகிறது. இதற்கு உதாரணமாக, யாழ்ப்பாணனின் தொழிலாளர் விதி இதுவோ? என்ற கவிதை யிலிருந்து பின்வரும் பகுதியைக் குறிப்பிடலாம்.
மறுமலர்ச்சிக் கவிதைகள் / 29

Page 17
பட்டங்கள் பெறமாட்டார் பார்புகழ மாட்டாது கட்டுக்களை உடைத்தெறிந்து கனபேராய்த் திரண்டெழுந்தால் சட்டங்கள் அடங்கிவிடும் சம்மாதிக்கா விட்டாலோ சுட்டுவிடும் துப்பாக்கி சுழலுலக விதியிதுவோ?"
காவலூர்க் கைலாசனின் புதுயுகத்தில் என்ற கவிதை சுரண்டலை எதிர்த்துச் சகோதரத்துவத்தைப் பின்வருமாறு வலியுறுத்துகிறது.
சாதி மதம் வகுப்பு வாதங்கள் விட்டே - யாரும் சகோதர ராக இந்த நாட்டை ஆளுவோம் நீதிப் படியே எங்கள் தேச மெமதே.எமை நெருடிச் சுரண்டுவோர்கள் போதல் மேலதே!”*
மறுமலர்ச்சி எழுத்தாளர்களில் பலர் இளைஞர்களாவர். காதல் என்பது ஒரு சமூகப் பாடுபொருள் என்ற வகையில் இவர்களில் பலர் காதல் கவிதைகள் பலவற்றை எழுதியுள்ளனர். அவற்றில் மஹாகவியின் காதலுளம், காதலியாள், வரதரின் அம்மான் மகள், யாழ்ப்பாணனின் முதற் துயரம், அன்பின் திறன் முதலியன குறிப்பிடத்தக்கவை. மஹாகவியின் காதலுளம் என்ற கவிதை புற ஆழகை விடுத்து ஆழ்ந்த உள்ளத்து அன்பினை வலியுறுத்து கின்றது. புற அழகுநலன்கள் காலமாற்றத்தால் அழிந்துவிடும். எனவே அவை விரும்பத்தக்கவை அல்ல என்று கூறி;
முத்திருக்கும் பவளத்தின் சிமிளில் மட்டும் மயங்கிவிட்டால், அவற்றையெல்லாம் காலக்கள்வன் எத்திவிட்டபின், ஆசை ஒழிந்துபோகும்! ஆதலால் அணங்கேயுன் எழில்களெல்லாம்,
30 1 மறுமலர்ச்சிக் கவிதைகள்

பத்தாதில் வாழ்க்கையிலே பயணம் போக, “பாதையெது வானாலும் கஷ்டப்பட்டும், அத்தானும் நானுமாய்ப் போகவேண்டும்."
p33
என்றுசொல்லும் காதலுளம் அதுவும் வேண்டும்.
என்று கூறுகிறார்.
இக்காலத்திலேயே 18ஆம் 19ஆம் நூற்றாண்டில் மேலைத்தேசக் கவிதை அரங்கில் செல்வாக்குச் செலுத்திய கற்பனாவாத மரபு ஈழத்திற்கு அறிமுகமாகியது. நகர்ப்புற நாகரிக வளர்ச்சி கிராமத் தின் அமைதியை, இயற்கை எழிலை இழக்கச் செய்து விடுகிறது. இதனால் கிராமத்தின் மீதான பல பாடல்கள் தோன்றலாயின. இந்தப் பின்னணியில் மறுமலர்ச்சி இதழில் வெளிவந்த கவிதை களில் மஹாகவியின் இரவு, நாவற்குழியூர் நடராசனது பெரிதும் சிறிதும், சுழற்சி ஆகிய கவிதைகள் குறிப்பிடத்தக்கவையாக அமைந்துள்ளன.
மறுமலர்ச்சிக் கருத்து நிலையின் ஒர் அம்சம் பிற மொழி இலக்கியங்களைத் தமிழுக்குக் கொண்டு வந்து வளம் சேர்த்த லாகும். அந்த வகையிலேயே குஜராத்தியக் கதையின் மொழி பெயர்ப்பினைச் சாரதா சுவர்க்கபூமி என்ற தலைப்பில் சிறு காவியமாக ஆறு இதழ்களில் தொடர்ச்சியாக எழுதினார். இச்சிறு காவியம் தனி ஒரு நூலாக வெளிவர இருக்கின்றது. எனவே, அதனை இந்நூலில் சேர்த்துக்கொள்ளவில்லை.
பொதுவாக, மறுமலர்ச்சிக் கவிதைகளின் முக்கிய பண்புகளாக யாப்பு வடிவங்களைப் பேச்சு ஒசைக்கு ஏற்ப எளிமைப்படுத்தல்; கிராமிய வழக்குச் சொற்களை கவிதையில் பயன்படுத்தல்; மனித வாழ்க்கையில் ஒர் ஆழமான நம்பிக்கையையும் மனிதாபிமானத் தையும் வெளிப்படுத்தல், மண்வாசனையைக் கொண்டிருத்தல் என்பவற்றைக் குறிப்பிடலாம். இத்தொகுப்பில் உள்ள கவிதை களில் இம்மூன்று அம்சங்களையும் தெளிவாகக் காணமுடியும்.
மறுமலர்ச்சிக் கவிஞர்களிடையே கவிதை மூலமாக விவாதங் களும் நடைபெற்றன. அவற்றைத் தொடர்புபடுத்திப்
மறுமலர்ச்சிக் கவிதைகள் / 31

Page 18
பார்ப்பதற்கும் ஒட்டுமொத்தமான கவிதைகளின் ஆவணமாகவும் இந் நூலின் இறுதியில் ஒரு பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. மறுமலர்ச்சிக் கவிஞர் சாரதாவின் பின்வரும் கவிதையுடன் இந்த அறிமுகத்தை நிறைவு செய்யலாம்.
'மறுமலர்ச்சி என்றதெல்லாம் மக்கள் வாழ்வை வளம் படுத்தத் துணைபுரியும் மனவெழுச்சி வறுமையிலும் மடைமையிலும் அடிமையாகி மாய்கின்ற நம்மவரை மனம் திருப்பிச் சுறுசுறுப்பைச் சுய உணர்வைத் தூண்டி வைக்கும்
சுகபேதி - அது வாழ்க!'
அடிக்குறிப்புகள்
I.
2.
IO.
II.
12.
13.
14.
15.
சுவாமிநாதன், அ, (22-02-1948) ஈழகேசரி , மறுமலர்ச்சித்தமிழ், ப. 3. முருகானந்தன், அ.செ., (18-07-1943) ஈழகேசரி, மறுமலர்ச்சித்தமிழ். ப.3. வையாபுரிப்பிள்ளை, எஸ்., (1955) தமிழின் மறுமலர்ச்சி, சென்னை: பாரிநிலையம் ப. 17.
முருகானந்தன், அ.செ. மு.கு.க. ப.3. சொக்கன் (10-08-1980) தினகரன், மறுமலர்ச்சி - காலமும் கருத்தும்; ப. 8. சிவத்தம்பி, கா., (மே - 2004) ஞானம், நேர்காணல், கண்டி ப. 37. வரதர், தொகுப்பாசிரியரின் நேர்காணல் 2004-12-22 (பிரசுரமாகாதது) சிவத்தம்பி, கா. (1978) ஈழத்தில் தமிழ் இலக்கியம், சென்னை; தமிழ்ப் புத்தகாலயம் ப. 43.
மறுமலர்ச்சி 1(1) 1946, ப. 3.
மறுமலர்ச்சி 1(2) 1946 , ப. 3. மெளனகுரு, சி., சித்திரலேகா, மெள, நுஃமான், எம்.ஏ., (1979) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம்,கல்முனை: வாசகர் சங்க வெளியீடு. tu. I 9. .
யோகராசா, செ., (1972) பாவலர் துரையப்பாப்பிள்ளை நூற்றாண்டு விழா மலர், மறுமலர்ச்சிக் குழுவினரும் ஈழத்துக் கவிதையும், தெல்லிப்பழை; நூற்றாண்டு விழாச்சபை, ப. 65. கன்னிசாமி, சி.து. (15-10-1950) ஈழகேசரி, மறுமலர்ச்சி இயக்கம், ப. 3. மஹாகவி கவிதைகள், பாடுங்கள் அத்தான் :5, மார்க்ஸ், அ. ரவிக்குமார்; வேல்சாமி, (1994) தேசியம் ஒரு கற்பிதம் கோவை: விடியல் பதிப்பகம். ப. 72.
32 / மறுமலர்ச்சிக் கவிதைகள்

I6.
17.
8.
9.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
3O.
3.
32.
33.
மறுமலர்ச்சி, 2(2), (1948) , ப. 18.
மறுமலர்ச்சி., 2(6) (1948) ப. 20.
மறுமலர்ச்சி., 2(3) (1947) ப. 29. சுதர்சன், செ., (ஜனவரி - 2005) மல்லிகை - 40 ஆவது -ஆண்டு மலர், நான்கு கவிதைகளும் ஒரு சிறுகதையும் - மறுமலர்ச்சி இதழில் மஹாகவியின் படைப்புகள் - சில குறிப்புகள், கொழும்பு. ப. 135 - 136. மறுமலர்ச்சி., 1(8) , (1946) ப. 4.
மேலது. ப. 6.
மேலது. ப.1.
வரதர் (12-9-1943) ஈழகேசரி, நாட்டுக்கு ஒருவன். ப. 3. சிவத்தம்பி, கா., மார்க்ஸ், அ., (1948) பாரதி மறைவு முதல் மகாகவிவரை, சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். ப. 134. சிவபாதசுந்தரம், சோ., (11-2-45) ஈழகேசரி, மறுமலர்ச்சிப் பின்னணி. ப. 5. வித்தியானந்தன், சு., (9-11-1986) வீரகேசரி, பாரதிக்குப்பின்தமிழகத்தைவிட ஈழத்தில் முற்போக்குச் சிந்தனை வளர்ந்துள்ளது. மறுமலர்ச்சி., 1(9) (1946) , ப. 3.
மேலது. ப. 28.
மறுமலர்ச்சி., 2(4) 1947) ப. 26. மறுமலர்ச்சி., (வைகாசி - ஆனி - 1948) ப. 25. மறுமலர்ச்சி., 2(2) (1947) ப. 26.
மறுமலர்ச்சி., 2(3) (1947) ப. 29.
மறுமலர்ச்சி., 1(4) (1946) ப. 23.
செல்லத்துரை சுதர்சன்
தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்,
பேராதனை.
23-2-2006.
மறுமலர்ச்சிக் கவிதைகள் / 33

Page 19

மறுமலர்ச்சிக் கவிதைகள்

Page 20

நவாலியூர் க. சோமசுந்தரப் புலவர்
கற்பகப் பழம்
திங்கட் குடையுடைச் சேரனுஞ் சோழனும்
தென்னவனு மெளவை சொற்படியே
மங்கல மாயுண்ட தெய்வப் பனம்பழம்
மரியாதை அற்றதோ? ஞானப்பெண்ணே!
கைப்புமுப்பும்போக நாலுமொன் றாகவே
கலந்து சுவைக்கும் பனம்பழத்தின்
துய்க்குஞ் சுவைக்கு நிகராக வேறொன்றைச்
சொல்ல முடியுமோ ஞானப்பெண்ணே!
அந்தப் பனைதரும் நல்ல பழத்தினை
ஆராய்ந்தெடுத்துத் தழலிலிட்டே
வெந்த பதத்தினில் நீரிற் கழுவியே
மேற்றோலை நீக்குவர் ஞானப்பெண்ணே!
கையாற் பிசைந்து கறந்து கறந்து
கழியினை வாய்வைத்துறிஞ்சியுண்டால் செய்தேன் திரட்சிப்பால் சீனி முதலிய
தித்திப்பென் றுண்ணாரோ ஞானப்பெண்ணே!
வாய்ச்சிட்ட கற்பக தாருவெ னும்பனை
மதுரப் பழத்தினை யாம்மறந்தே ஈச்சம் பழத்திற்கு வாயூறிக் கைப்பொருள்
இழக்கின்ற வாறென்ன ஞானப்பெண்ணே!
மறுமலர்ச்சிக் கவிதைகள் / 37

Page 21
நவாலியூர் க. சோமசுந்தரப் புலவர்
இலவுகாத்த கிளி
செந்தீயின் நாப்போலச் செழுந்தளிர்களின்று திருமாலின் நிறம்போலப் பசியதழை பொதுளி நந்தாத பெருந்தெருப்போல் கிளைகள்பல வோச்சி நடுக்காட்டி லோரிலவ மரம் வளர்ந்த தன்றே
மஞ்சுதொட வளர்ந்தவந்த விலவமர மதனில் மரகதமா மணிபோலப் பசுமைநிறம் வாய்ந்த கொஞ்சுமொழிக் கிஞ்சுகவா யஞ்சுகமொன்றினிதே குடியிருந்து நெடுநாளாய் வாழந்துவந்த தன்றே.
அங்கொருநாளிலவமர மரும்புகட்டக் கண்டே அலராகிப் பிஞ்சாகிக் காயாகிக் கனியும் இங்கிதனைக் கவ்வியெடுத தென்காலே கரமாய் ஏந்திமகிழ்ந் தேபுசிப்பே னெனநினைத்த தன்றே.
காலையிலே யெழுந்துசெயுங் கடமைகளை முடித்தே கடவுளடி கைதொழுது கதிரெடுக்கப் போகும் மாலையிலே திரும்பிவந்து மற்றதனைப் பார்த்தே வாயூறிக் கனியாக வரட்டுமென மகிழும்
எண்ணுமலர் பிஞ்சாகிக் காயாகித் தூங்க இனியென்ன பழுத்துவிடு மெடுத்துண்பே னென்றே கண்ணையிமை காப்பதுபோல் நாடோறும் போற்றி காத்துவந்த திரவுபகல் காதலித்துக் கிளியே
வறியதொரு மகன்குதிரைப் பந்தயத்திற் காசு வந்துவிழும் வந்துவிழு மென்றுமகிழ் வதுபோல பிறிதுநினை வொன்றுமின்றி யாசைமிகு கிள்ளைப் பிள்ளைமகிழ்ந் திருந்ததங்கே பேணியதைப் பார்த்தே
38 1 மறுமலர்ச்சிக் கவிதைகள்

நன்றுவரும் பழமெடுத்து நானுமின சனமும் நயந்துவிருந் தருந்துகின்ற நல்லபெருந் திருநாள் என்றுவரு மின்றுவரும் நாளைவரு மென்றே எண்ணியிருந்ததுமலடு கறக்கண்ண்ணு வார் போல்
பச்சைநிறம் மாறியந்தப் பழம்பழுத்த போது பைந்தார்ச்செம் பவளவிதழ் பசுங்கிளியும் பார்த்தே இச்சையுடன் தன்னுடைய வினசனத்துக் கெல்லாம் என்வீட்டிற் பழவிருந்து நாளையென வியம்பி
துஞ்சாது விழித்திருந்தே யதிகாலை யெழுந்து சொல்லிவைத்தோரையுங்கூட்டித் திரும்பிவரும் போது பஞ்சாகிக் காற்றுடனே பறந்ததுவே வெடித்துப் பைங்கிளியார் போற்றிவந்த முள்ளிலவம் பழமே
அந்தோவக் கிளியடைந்த மனவருத்த மெல்லாம் அளவிட்டுச் சொல்லமுடியாதுவிருந்தாக வந்தோரும் மிகநாணி வெறுவயிற்றி னோடு வந்தவழி மீண்டனரே சிந்தைபிறிதாகி
உள்ளிடு சிறிதுமில்லா பதர்க் குவையை நெல்லென் றுரலிலிட்டுக் குத்தவெறு முமியானவா போல் இல்லாத பயன்விரும்பி ஏமாந்த பேரை இலவுகாத் திட்டகிளியென்பருல கோரே.
மறுமலர்ச்சிக் கவிதைகள் / 39

Page 22
மஹாகவி
இரவு
கூச்சலிடும் 'ரேடியோ'க் கூக்குரல்கள் ஒயவும், கூட்டம்போடும் மாந்தர்தம் குகைகளிலே தூங்கவும், ஒச்சலின்றி வண்டிகள் ஒடுகின்ற வீதியில் ஒன்றுமின்றிப், போகவும், இரவுவந்து சேர்ந்தது!
பட்டணத்தி லேயுள 'பளபள'ப்பெ லாம்செல, பாலைவனம் மீதிலே, பால்மழைபொழிந்தபோல், நட்டநடு 'ரா' வர நல்லநேரம் வந்தது! நாலுதிசை தம்மிலும் நிம்மதி பிறந்தது!
சன்னல்களைச் சாத்தியிச் சனமெலாம் உறங்கிட, சலனமற்ற ராவில் இரு சாமமாக வும், அட என்னபுது மையில் இங்(கு) எத்திசையும் மெளனியாய் எழில் சிறந்திருக்குது. ஆறுதல் கொடுக்குது!
40 ! மறுமலர்ச்சிக் கவிதைகள்

மஹாகவி
காதலுளம்
கடல்மணலைக் குவித்தாற்போ லேயிருக்கும் கன்முலைகளைச்செதுக்கும் காலச்சிற்பி உடல்சோர வருகின்ற முதுமையாலே அதுவுந்தான் அழிகிறது! முழுதாய்முற்றி, வடிவாகப் பழுத்தபழக் கன்னமெல்லாம் வீழ்ந்தழுகித் தான்போகும்! துடியைப் போன்ற, இடையுந்தான் இப்படியே இருக்கப்போவ(து) இல்லை! காமத்திற்கும் உண்டேஎல்லை!
பாற்கடலில் ஆலமாம் கண்ணின்வேல்கள் பழுதாகும்; பாயுமா, பின்னும்? தென்றற் காற்றலைக்கும் கருங்கூந்தல் முகிலும் என்றும் கார்முகிலாய் இருக்கமாட்டாது! வெள்ளிக் காற்சிலம்பும் கைவளையும் கதைத்துக்கொள்ள கைவீசி வருகின்றாள், காலத்திற்குத் தோற்றுவிட்டால், நடைதளர்ந்து கையிற்கோலும் ஏற்றுவிட்டால், காமத்திற் கிடம் அங்கேது?
முத்திருக்கும் பவளத்தின் சிமிளில்மட்டும் மயங்கிவிட்டால், அவற்றையெல்லாம் காலக்கள்வன் எத்திவிட்ட பின், ஆசை ஒழிந்துபோகும்! ஆதலால் அணங்கேயுன் எழில்களெல்லாம் பத்தாதில் வாழ்க்கையிலே பயணம்போக, 'பாதையெது வானாலும் கஷ்டப்பட்டும், அத்தானும் நானுமாய்ப் போகவேண்டும்’ என்றுசொல்லும் காதலுளம் அதுவும்வேண்டும்.
மறுமலர்ச்சிக் கவிதைகள் | 41

Page 23
மஹாகவி
அலையெடுத்த கடலென.
அலை யெடுத்த கடலென ஆற்றல் கொண்ட பாரதிக் கலைஞனின் கவிதை இக் காசினி யெலாம் பெரும் ஒலி கிளர்த்த வேணும் - நாம் ஒன்று பட்டு நின்று பல் சிலை செதுக்கி நாட்டுவோம், செந் தமிழர் நாடெ லாம்
42 | மறுமலர்ச்சிக் கவிதைகள்

மஹாகவி
காதலியாள்
கன இருட்டைக் கதிர் கிழிக்கக் காலையாக, கஷ்டமெல்லாம் மறந்துவிட, காற்று வாங்கும் நினைவோடு யான் சென்றிருந்தேன்; சோலையூடு; நீள்நிழல்கள் நிலத்தினிலே கோலங்கீற, மனமுருகக் குயில் பாட மயில்களாடும், மாமரங்கள் மலர்ந்து மணம் வீசுஞ் சோலை, எனை மறந்து நடந்து செல எந்தன் ஆகம், ஈர்த்தனைத்தாள் தென்றலவள், அந்த நேரம்;
வளைகின்ற இடையினிலே குடமொன் றேந்தி, வார்குழலில் வாயவிழும் வனசம் ஏந்தி, கிளிமொழியாள் என்னுடைய நெஞ்சைக் கிள்ளி ஹிருதயத்தி லேபொருத்திச் சென்றாள் மாது! அளிமொய்க்கும் அலங்காரப் பதுமப் பூப்போல், ஆவியெல்லாம் உருக்குகின்ற அழகு மார்பைக் குளிர்கின்ற பூநிலவை முகில்வெண் பட்டுக் கிழிசலினால் மூடியபோல் மூடிச் சென்றாள்!
தாசியவள் தலையிருந்து தண்ணிர் சொட்டித் தனக் குவியல் தனில் தவழும், தரளமாகும்; வீசுகின்ற காற்றினிலே புரண்டு பொங்கும்; விளையாடும்; வனப்பினுக்கு வனப்புக் கூட்டும் மாசியிலே பனிப்புகார் படர்ந்த போது, மலர்ந்தொளிக்கும் வெயில்போல, மங்கையாளின் தேசொழுகும் முகம் பார்த்தால், கண்கள் கூசும்,
தேன்மொழியாள் என்நெஞ்சை அள்ளிவிட்டாள்!
மறுமலர்ச்சிக் கவிதைகள் | 43

Page 24
நடையழகில், நவமணிகள் இழைத்த வாயில், நயனத்தில் நெளிந்தங்கே நடனமாடும் இடையழகில், இருதனத்தில், இருளைப் பிய்த்து இரண்டாக்கி ஓடுகின்ற எழில் வகிட்டில் படைபடையாய் வந்தின்பம் பாய்ந்தபோது, பரிதவித்தேன்! பாடுபட்டேன்! பட்சம் பொங்கக் கடைவிழியில் கருவண்டைச் செலுத்திக் காதல்
கக்க விட்டாள் காதலியாள் கண்டேன் இன்பம்!
44 / மறுமலர்ச்சிக் கவிதைகள்

யாழ்ப்பாணன்
சக்தியின் இருப்பிடம்
பெண்ணுயர் வதனந் தன்னில் பிரமனின் நாவு தன்னில் எண்ணினி லடங்கா இன்பம் ஏந்திய மழலை தன்னில் கண்ணிய மக்கள் காட்டுங் கருணைசேரிதயந் தன்னில் பண்ணிறை பாட லோதும் பக்தரின் குழாங்கள் தன்னில்
வீணையின் நரம்பி னோடு மேவிடும் விரல்கள் தன்னில் பாணியின் சேர்க்கை யோடும் பாடுவார் பதங்கள் தன்னில் ஆணையின் மீறா வீரர் அமரொளிர் புயங்கள் தன்னில் தூணிறை சிற்பங் கொத்தும் சுத்தநல் வித்தை தன்னில்
கவிஞனின் கனவு தன்னில் கற்பனையுள்ளந் தன்னில் புவியினிற் புனைந்து காட்டும் பொருளுறை பாடல் தன்னில் அவனியி லறிஞர் கூறும் அரும்பதவுரைகள் தன்னில் நவரஞ் சொட்ட நன்கு நடிப்பவன் நடனந் தன்னில்
அழகினைச் சொட்டும் பூக்கள் ஆடியே திரியும் மஞ்ஞை எழிலுறு திங்கள் வானம் எழுந்திடும் பரிதிச் சோதி வழிந்துயர் குன்றிலூரும் வையத்து நதிக ளெங்கும் விழைவுறு சக்தி யன்னை வீற்றிருந்தரசு செய்வாள்.
மறுமலர்ச்சிக் கவிதைகள் / 45

Page 25
யாழ்ப்பாணன்
முதற் துயரம்
மலையெனத் திரண்டு விம்மும்
மற்புயத் திண்டோள் தன்னை
நலிசெயும் எரிகுன் றென்றே
நானின்று கண்டேன் தோழி!
பத்தினி நீதா னென்று
பசப்பிய வார்த்தை யெல்லாம்
சத்தினை யுறுஞ்சக் கட்டும்
சிலந்தியின் தளைகளெடீ!
'மனத்திரை யுனக்கே சொந்தம்
மற்றுமிங் குருவ முண்டோ?
எனச்சொலுஞ் சொற்களெல்லாம்
ஏமாற்றும் வித்தை யெடீ!
பசுவினின் தோலைப் போர்த்த
பலவரிப் புலியே யென்னக் கசடனின் செயலைக் கண்டு
கலக்கம் யான் கொண்டே னெடீ!
மதுவினை யுறுஞ்சும் வண்டு
மலர்பல அலைதல் போல விதியினை யெள்ள விட்டு
வேற்றிடம் நாட்ட மெடீ!
வாக்கினி லமிர்தம் சொட்டும்;
மறைந்துள விடமுங் கொட்டும் ஆக்கையோ பலருந் தொட்ட
அழுக்குறை பாண்ட மெடீ!
46 மறுமலர்ச்சிக் கவிதைகள்

யாழ்ப்பாணன்
பொல்லாப்பு செய்யாதே
நண்டின் காலை ஒடிக்காதே; நாயைக் கல்லா லடிக்காதே; வண்டைப் பிடித்து வருத்தாதே; வாயில் பிராணியை வதைக்காதே!
கோழிக் குஞ்சைத் திருகாதே; குருவிக் கூண்டைச் சருவாதே; ஆழி சூழும் உலகேத்த, அன்பு காட்டி வருவாயே!
ஊனைத் தின்று வாழாதே; உயிரைக் கொன்று தாழாதே; மானைக் கொன்றால் மான்கன்று வருந்தல் நீயும் அறியாயோ?
கிளியைக் கூண்டில் அடைக்காதே, கேடுனை வந்து சூழ்ந்திடுமே; ஒளியே யில்லாச் சிறைதனிலே,
உன்னை வைத்தாற் சகிப்பாயோ?
எல்லா உயிரும் இறைமகவே; இன்பம் நாடி உழைப்பனவே; பொல்லாப் பொன்றுஞ் செய்யாதே; புனித வாழ்வு காண்பாயே!
மறுமலர்ச்சிக் கவிதைகள் / 47

Page 26
யாழ்ப்பாணன்
தொழிலாளர் விதியிதுவோ?
பார்சிறக்கும்; படைசிறக்கும்; பாவலர்தம் தேனினிய சீர்சிறக்கும்; திருசிறக்கும்; திருக்கோயில் பலசிறக்கும்; கார்வளர்க்கும் புவிதனிலே கனகமணிப் பொருள் சிறக்கும்; ஊர் சிறக்க ஒலிபெருக்கும் உளியாள்வோர் திறந்தாலே!
ஏராள்வோர் வினைசிறக்கும்; எழில்பெறுநல் மனைசிறக்கும்; சீராளர் தொழிலதனால் சிற்பமெனும் இவைசிறக்கும்; பாராள்வோர் முடிசிறக்கும்; படியிலவர் குடிசிறக்கும்; நீராளும் மரக்கலங்கள் நெடுங்கடலில் நிரைசிறக்கும்
புவியிலுயர் கொடிபறக்கும் பூபாலர் தம்முடைய நவிலினிய மனைகளையும், நற்கோட்டை நலன்களையும் அவனிதனில் அளிப்பவர்கள் அருந்தொழிலோர்; அவரின்றி நவமணிசேர் முடிசிறக்கா;
நாற்படையும் தாம்நடக்கா!
48 | மறுமலர்ச்சிக் கவிதைகள்

இத்தகைய தொழிலாளர்,
பட்டங்கள் பெறமாட்டார்! பார்புகழ மாட்டாது! கட்டுகளை உடைத்தெறியக் கனபேராய்த்திரண்டெழுந்தால் சட்டங்கள் அடக்கிவிடும்; சம்மதிக்கா விட்டாலோ, சுட்டுவிடும் துப்பாக்கி! சுழலுலக விதியிதுவோ?
மறுமலர்ச்சிக் கவிதைகள் / 49

Page 27
யாழ்ப்பாணன்
இனி உலகில். முதல்வன் யார்?
எச்சாதி எச்சமயத்(து) எந்நாட் டாரும் இன்றுலகில் முதல்வன்யார் என்னக் கேட்டால் நிச்சயமாய்க் காந்திதான் என்று கூறும் நிகரற்ற பெருமையினைப் பரதந் தாங்கக் கச்சைதான் ஆடையாய் அரையிற் கட்டிக் காசினியைக் கருணையினால் ஆண்டுவந்தாய்; நச்சேகொள் உளமுடையான் நமனாய் வந்து
நாயகமே ஆருயிரைக் கவர்ந்தான் அந்தோ!
இனியுலகில் முதல்வன்யார் என்னும் போது யாருளரோ யாமுந்தான் காணோ மையா பனிவரைசேர் பாரதத்தின் துயரந் தானும் பல்லாண்டு சென்றாலும் தீருமோ தான்? கனவினிலும் உனையேயாம் மறக்கோ மையா கண்ணிரும் ஒருபோதும் தீரா தையா உனதுயிரை நமனேதான் கவர்ந்த போதும் உலகுவரை உன்ஜோதி ஓங்குந்தானே!
சத்தியத்துக்;(கு) அரிச்சந்த்ரன் ஒருவன் தானோ? தரணிதனில் பொறுமைக்குத் தருமன் தானோ? உத்தமநற் கருணையினால் உலகை வென்றோன் உயர்புத்தன் என்று சொலும் ஒருவன் தானோ? நித்தியமும் மாற்றலரிற் பரிவு காட்டி நிமலனெனும் நிலையடைந்தோன் யேசு தானோ? இத்தரையில் நீவந்து உதித்ததாலே இவரிருவர் இருவரென இயம்பப் பெற்றார்
50 | மறுமலர்ச்சிக் கவிதைகள்

யாழ்ப்பாணன்
அன்பின் திறன்
வளைந்துதான் வீழுமொரு படுகொம் பொன்றை வஞ்சிநீ வையத்திலுறுதி யென்றே இளந்தளிர்கள் பலவெறிந்து சுற்றிக் கொண்டாய் இன்பமென அதிற்படர்ந்து பூத்து நின்றாய் விழுந்தழியும் படுகொம்பும் மீட்சிபெற்று மேதினியில் தளிர்விடுதல் விந்தை யன்றோ உளந்தனில்நின் றுநூறுமோ ருயர்பே ரன்பின் உறுதியுனை யின்றுலக மறியச் செப்பும்.
அன்பினிலே கவிதையெழும் அகந்தை மாயும் அடுத்துவருந்துன்பமெலாங் மஞ்சி யோடும் மன்பதைகளுய்வுகொளும் மகிழ்வுதேரும் மகிதலத்தி லன்பினுக்கோர் விலையுமில்லை இன்பமென விண்ணவர்கள் துய்த்து வாழும் இன்னமுதும் அன்பினுக்கே ஈடுமில்லை அன்புள்ள முருகுங்கால் ஆங்குத் தோற்றும் அருட்சக்தி வடிவமெலாமவனியோர்க்கே
இத்தகைய அன்புநீ என்னிற் காட்டி இருளான என் அகத்தின் அகந்தை யோட்டி புத்துணர்வு தருமுந்தன் காதலாலே பொற்பாக என்னிதய வீணை மீட்டி இத்தரையில் சுவர்க்கத்தை எளிதிற் காட்டி இன்ப அருட்கடலினிலே ஆழ்த்தி வைத்தாய் நித்தியமாய் நின் அன்பே விளக்கமாக நின் நினைவே உயிராக வாழுகின்றேன்
மறுமலர்ச்சிக் கவிதைகள் / 51

Page 28
யாழ்ப்பாணன்
பாரதி
பண்ணொழுகும் இன்சுவை சேர் பற்பலநற் பாடல்களால் கண்மணியாம் நந்தமிழைக் காசினியி லொளிர்வித்தான் விண்ணவர்தாம் விழைந்தேத்தும் விண்ணுலகின் நல்லமுதும் அண்ணலவன் பாரதியின் பாடலுக்கோர் இணையாமோ?
உளங்குன்றி வலியிழந்தே ஒடுங்கியநம் மக்களைத்தான் விளங்குமொரு பாடலதால் மின்சக்தி பெறச்செய்தான் களங்கண்டு நடுங்குபவர் கைதனிலே வாளேந்தி இளஞ்சிங்க மேனும்படியே துடிதுடித்தல் காண்கின்றோம்.
தாய்நாட்டின் விடுதலைக்கே தன் வாழ்க்கை யினைக் கொடுத்தான்; சாய்வுறினும் அவள்நலத்தைத் தரணிதனில் பெறுமென்றான். வாய்ச்சொல்லின் வீரமெலாம் வாழ்க்கையினுக் குதவாது; பேய்ச்சனத்தீர், கொட்டுங்கள் ஜயபே ரிகையென்றான்.
பெண்ணலத்தைச் சிறைப்படுத்தும் பேடிகளைத் தலைசாய்த்து மண்ணதனில் பெண்ணலத்தை வளர்த்திடவே வந்துதித்தான் கண்ணதுதா னெனமதிக்கும் கல்விதனில் விழைவூட்டிப் பண்ணமைந்த பாடல்களால் பாவையரின் உளம் வளர்த்தான்.
கண்ணம்மா வேனும்பாடல் கனிவாகப், பலவிசைத்து எண்ணமையா இன்பமதை எம்மனதி லுதிப்பித்தான் பண்ணிசைக்கும் கண்ணனது பார்மகிழும் லீலைகளைக் கண்முன்னே காட்சிதரக் காண்பதுவுங் காண்கின்றோம்.
பாரதியின் பொன்நினைவைப் பரிவுடனே போற்றிடுவோம்; பாரதியின் பாவினைநற் பண்புடனே பாடிடுவோம்; பாரதியின் திருநாமம் பார்முழுதும் இசைத்திடுவோம்; பாரதியின் பொன்னடியைப் பக்குவமாய்ப் பின்தொடர்வோம்.
52 | மறுமலர்ச்சிக் கவிதைகள்

சோ. நடராஜன்
எங்கே காணலாம்?
எங்கு போயெனைத் தேடினை? அன்பனே! இங்கு பாருன்றன் பக்கத் திருக்கிறேன்; அங்கு மிங்கு மலைந்திட வேண்டுமோ? தங்கித் தேடு; சடுதியிற் காணுவாய்.
கோயிலென்றும் குளமென்றும், பள்ளியின் வாயிலென்றும் வகையறியாதுநீ போய லைந்து புறம்புறந் தேடினாய்! மாயமில்லை; உன் பக்கத் திருக்கிறேன்.
கைலை யில்இலைக் காபாவி வில்லைநான்; பயிலும் வேள்விகள் பூசைகள் நிட்டைகள் முயலும் யோகந் துறவினி லில்லைநான்; அயலில் இம்மெனும் போதி லறியலாம்
உண்மை யாயெனைத் தேடினை யாயினி அண்மை யிற்கண நேரத்திற் காணலாம்; திண்மை யாகக் கபீர் இது சொல்லுவேன்
உண்மை யீசன் உயிர்க்குயி ராயினான்.
மொழிபெயர்ப்பு மூலம் : கபீர்
மறுமலர்ச்சிக் கவிதைகள் / 53

Page 29
சோ. நடராஜன்
மோட்டு விக்கிரகம்
மரத்தாலே செய்ததன்மேல் மண்சாந்து பூசியதால் உருவான சாமியொன்றை யூராரதிசயித்தார்
முக்காலச் செய்தியுமம் மூர்த்திசொல்லி வந்ததனால் எக்கால மும்மதனை யேத்திப் பணிந்துவந்தார்
பொன்னா லலங்கரித்தார் பூமாலை போட்டுவைத்தார்
மன்னாதி மன்னரெல்லாம் வந்து வணங்கிநின்றார்
தெய்வ மிரங்கியெங்கள் தீமைகளைப் போக்குதற்கு மெய்யா யளித்ததொரு மேலாம் வரமிதென்றார்
கைகட்டி நின்றார்கள் கண்ணிர் சொரிந்தார்கள்
நெய்யட்டிச் சோறுகறி நெறியாய்ப் படைத்துவைத்தார்
ஊர்வலங்கள் செய்தார் உலகெங்கும் போய்ச்சொன்னார்
நாவழங்கு மட்டும் நமதிறைவ னென்றார்கள்
சபையஞ்சா வீரனென்றார் சர்வ உரிமைகளும்
நவையின்றி நம்மவர்க்கு நன்கு வழங்குமென்றார்
நாமோ சிறுதொகையார் நங்கள் குலத்துரிமை போமா றினியில்லைப் போற்றியெனப் பூரித்தார்
தூபத்தைப் போட்டார் சுடர்விளக்கைக் காட்டிவைத்தார்
நாமத்தை யேசொல்லி நன்றாய்ச் செபஞ்செய்தார்
கேட்டதெல் லாங்கொடுக்கும் கேளாததுங்கொடுக்கும் கோட்டமினி யில்லையென்றே குதித்துக் குதித்தெழுந்தார்
54 1 மறுமலர்ச்சிக் கவிதைகள்

அந்தோ விதியினலங் கோலத்தைக் கேட்டீரோ! சிந்தா மணிபோன்ற தெய்வச் சிலையொருநாள்
அற்புதமுங் கெட்டவ் வதிசயமுந் தானழிந்து பொற்பிழந்து தீர்க்க தரிசனமும் போயிற்றே
முக்கால முஞ்சொல்லி முடிவேந்தர் தாழவைத்த இக்கால வற்புதத்தின் நிலைமையிழி வாயிற்றே
கண்டதெல் லாஞ்சொல்லிக் கருத்தறியா தேயுளறிப் பண்டிருந்த தேசு பறிமுதலாய்ப் போயிற்றே
கேட்டவரெல் லாந்திகைத்தார் கேலிசெய்தா ரெங்கேதான் 'போட்டு திதன்பெருமை? புதுமை! எனக்குழைந்தார்
விக்கிரகம் பேசினதும் வேண்டுவரஞ் சொன்னதுவும் இக்கதையும் பொய்யல்ல; ஆனால் அதனடியில்
ஒட்டை யிருந்ததற்குள்ளே மறைந்திருந்தார் சேட்டர் குருக்களவர் செத்துப்போய் விட்டதன்பின்
மோட்டுப் பயலொருவன் முன்னே புகுந்திருந்தே சேட்டைபுரிந்தானதனால் திருவுருவும் மோடாச்சே!
மறுமலர்ச்சிக் கவிதைகள் / 55

Page 30
சோ. நடராஜன்
கழுதை!
கழுதையென்றேயொரு கருத்தில் செந்துவும் பொழுதுபோக் காகப் புகுத்தினன் பிரம்மா. ஆதியி லதனுருக்கட்டெறும் பளவெனும் சேதியை உலகினர் சிறிதுமே யறியார். உருவிற் சிறியதக் கர்த்தப மெனினும் பெருமை யடிப்பதில் பிறரிலை யுலகில். நான்முகன் சந்நிதி நாளும் நெருங்கித் "தேன்முகம் பிலிற்றுஞ் செம்மலர்ப் பிறந்தோய்! படத்துயர் முடியாதினிநானுலகில் மடப்பிடி சிங்கம் மானே புலியே உருப்பெரி தடைந்தோ ருன்னருள் மறவேன் வரப்பிரசாதம் மதியிலிக் கருளு' கென் றாற்றிய வண்ண மழுதழு தழுதது. கழுதையின் கரைச்சல் தாங்காக் கடவுள் 'முழுதுமுன் விருப்பம் போலநீ பொலிவாய்' என்றருள் செய்தனன். ஏறுபோற் கழுதையும் துன்றிய வுருவும் குரலுமுற் றதுவே. 'என்ன மிருகமஃ தெச்சா தியதோ? கூரிய பற்கள் போலுமற் றதற்கே சீரிய கொம்புஞ் சிலவுண் டாலோ’ என்று விலங்கெலாங் கன்றிய பயத்தினால் குசு குசு வென்றே கூறித் திரிந்தன. கானக மெங்குமக் கழுதையின் பேச்சே வானகம் வரையு மெட்டிய சிலநாள். ஆயினோ ராண்டு கழிந்திடு முன்னர்
56 1 மறுமலர்ச்சிக் கவிதைகள்

போயின ததன்பேர் புகழு மெல்லாம். காயம் பெரிததன் செவியும் பெரிதுதான்; வாயும் பெரிதெனின் வறிததன் விவேகம். மடைமை மத்தியின் மந்தமற் றிதற்கெலாம் உடைமை கழுதை' என்றுதாரணங் காட்டினர். நீளமே பருமையே பதவியே நிறையினும் ஆழமில்லாவிடி னவற்றா லென்னோ?
மறுமலர்ச்சிக் கவிதைகள் / 57

Page 31
நாவற்குழியூர் நடராஜன்
நாங்கள்
பகைவர்தம்மை நடுநடுங்கப் பண்ணிவைத்த பாண்டியர்
பாதுகாப்பின் கீழுயிர்த்த பாரதர்கள் நாங்களா? வகைகள்கொண்ட சேனைவந்து வளையமிட்ட போதெலாம் வாளைவீசி வாகைபூண்ட வம்சத்தார் நாங்களா? தகைமைகொண்ட சேரசோழர்தங்குலத்துதித்தநாம்
தாழ்மடித்துக் கைகுவித்துத் தலைவணங்கி நிற்பதா? சிகைகள்போவதாயினும்நம் ஜென்மபூமி வேறு ஓர்
சீமையாளர் கைக்கொடுத்துச் சீரிழந்து வாழ்வதா?
அந்நியர்கள் வந்துநாட்டை அடிமைகொள்ளப் பார்க்கையில்
ஆர்த்தெழுந்த திங்குமுன்னர் ஆண்பிள்ளைகள் மட்டுமா? கன்னியர்கை வாளெடுத்துக் கட்டுமீறிச் சென்றுபோர்க்
காட்டினுாடு பகைவர்தம்மைக் கண்டதுண்ட மாக்கினர்; சென்னிவீழ.வீழநின்று ஜென்மபூமிக் காகநம்
சிறுவர்கூடச் சமர்புரிந்த சீருமுண்டு; அஃதெலாம் பன்னியென்ன பயனுடைத்து? பண்டைநாள் திகழ்ந்தபோற் பண்ணிவைக்க வேண்டும்இந்தப் பாரிலெங்கள்
நாட்டினை.
கொடியர்தம்மை முடிவுசெய்யக் கொற்றவர்கள் இல்லையோ?
கோதிலாத பேரைவாழ வைக்கமற்றோர் இல்லையோ? கடமையென்று நாடுகாக்கக் கற்றவர்கள் இல்லையோ?
கடையர்தம்மை ஒட்ட வலிமை உற்றவர்கள் இல்லையோ? அடிமையாக நாங்கள் என்றும் படியில்அஞ்சி வாழவோ?
அவர்கள்ஆளநாங்கள்என்ன ஆண்மையற்றுமாழவோ? கடவுயானை தேர்கள்கொண்ட பெருமையின்று போகவோ?
கடவுளே! இதென்ன இந்தக் காலம்வந்து சேரவோ?
58 ! மறுமலர்ச்சிக் கவிதைகள்

நாவற்குழியூர் நடராஜன்
பெரிதும் சிறிதும்
காற்றடிக்குது மழைவருகுது
கனத்தமரங்கள் சுழருது;
நேற்றெழுந்தஓர் சிறியயூண்டு
நீண்டு நிமிர்ந்து நிற்குது!
அலையடிக்குது புயல்குலுக்குது
ஆழமான கடலெலாம் நிலைதளருது; சிறியகுட்டை
நிசப்தமாக நிற்குது!
உள்ளம்நடுங்க வெள்ளம்போடுது
ஊரில்முதியர் கலங்குறார்; துள்ளிச்சிறுவர் வெள்ளம்வழியே தோணிவிட்டுத் திரிகிறார்!
மறுமலர்ச்சிக் கவிதைகள் / 59

Page 32
நாவற்குழியூர் நடராஜன்
சுழற்சி
மாரி வந்து போனது;
மாநிலத்தாய் நீரினை
வாரி வைத்துக் கொண்டனள்,
வறுமை யுற்றுக் கோடையில்
நீரிலாமல் உயிரெலாம்
நின்று வாட, அரசினர்
பாரி லுணவு தருதல்போல்
பங்கு பண்ணித் தந்திட
கோடை யின்னும் வரவிலை;
கூதல் விட்டுப் போகலை; வாடை யின்னும் வீசுது
மாசி தானிப் பாகுது; ஒடை நீரும் சலசலென்
றோடி யெங்கும் பாயுது; சாடை யாய்வ சந்தமும்
சஞ்சரிக்கப் பார்க்குது.
குயிலு மொன்றி ரண்டுதான்
கூவி வந்து, பாடல்கள் பயிலு கின்ற பாவையர்
பண்பி னொத்துப் பாடுது வெயிலும் நன்று காயுது;
விடியற் காலைப் பணியிலே மயிலும் நாணு மழகினை
மரமுந் தடியுஞ் சொட்டுது
60 ! மறுமலர்ச்சிக் கவிதைகள்

ஆட்கள் சொல்லி வைத்தபோல்
ஆத வனைக் கண்டதும், பூக்க ளென்ன ஜாலமாய்
புன் சிரிப்புக் கொள்ளுது!
வாட்கண் மாதர் மேனியின்
வர்ண ஜாலப் பொலிவெலாம்
மாக்கள் நீட்டுந் தளிர்களில்
மட்டுங் காட்டி நிற்குதே!
காலங் கொஞ்சங் கொஞ்சமாய்
கட்டு மீறியோடவே
ஞாலங் 'கோடை யென்றது; நாச காலம் வந்த தென்
றோல மிட்டு இலையெலாம்
ஒவ்வொன் றாயு திர்ந்தன;
சீலம் நண்ணு முன்னரோர்
சிதைவு நண்ணல் போலவே.
வற்றி வாடி யென்புரு
வாகி நின்ற மரமெலாம் சற்று நாட்கள் சென்றதும்
சருகு திர்ந்த கொம்பிடை, அற்று வீழ்ந்த பழமையின்
அடியிற் புதுமை தோன்றல்போல் கற்றை கற்றை யாய்த்துளிர்
கக்கி யின்ப மெய்தின.
காற்றெழுந்த டித்த(து); ஆ
காயத் தேவெண் முகில்வட
பாற்ப றந்து சென்றது
படையெடுத்து; ஒர்சில
மறுமலர்ச்சிக் கவிதைகள் / 61

Page 33
நாட்கள் சென்றதும்நில
நாய கியைச் சேர்ந்திட
வேட்கை யுற்றுத் தென்திசை
விம்மி யோடி வந்தது.
பின்னும் மாரி ஆனது;
பிறகுங் கோடை வந்தது; இன்னுங் கால மிப்படி
யேசு ழன்று வந்தது முன்னிருந்த உலகுதான்,
முன்னடைந்து விடவிலை என்னு முண்மை காட்டுதிங்
கேற்ற மில்லை மாற்றமே.
62 | மறுமலர்ச்சிக் கவிதைகள்

நாவற்குழியூர் நடராஜன்
கேட்டியோ பாரதீ!
நாட்டிலே மிக்குயர்
நம்தமிழ் நாடது கேட்டிலே மிக்குயர்
கீழ்நிலை எய்தலும், ஏட்டிலே தீட்டிய
எண்ணரும் இன்சுவைப் பாட்டினா லேயதைப்
பாலித்த பாரதீ!
கேட்டியோ! அன்றுனைக் கீழ்மைப் படுத்திய நாட்டிலே உன்கவி
நாதம் நிறைந்தது; ஈட்டிவேல் வாளெனத்
தீட்டிநீ விட்டசொற் பாட்டினால் எம்தளைப்
பாரம் குறைந்தது.
குறைவுறு நின்குறிக்
கோளெலாம் கண்முனே நிறைவுறு முன்உயிர்
நீத்தனை ஆயின்என்? மறைவுறு நின்புகழ்
மண்டிப் பரக்கஅத் துறையெலாம் புலமையில்
தோன்றினோம் பாரதர்!
மறுமலர்ச்சிக் கவிதைகள் / 63

Page 34
போர்தனைப் பாடிடோம்
புதுயுகந் தோன்றலால்; ‘பேர் களைப் பாடிநாம்
பிச்சையும் வாங்கிடோம்! வார்தலைக் கச்சணி
வனிதையர் காதலை ஆர்இனிப் பாடுவார்
அண்ணலுன் புகழலால்!
64 1 மறுமலர்ச்சிக் கவிதைகள்

நாவற்குழியூர் நடராஜன்
சிறை
குறையொன்றும் புரியாமுன் குணமொன்றும் அறியா(து) சிறைசெய்தா ளேபத்துப் பிறைமட்டும் அன்னை!
தப்பிப் பிழைத்ததில் தத்தித் திரிந்தேன், அப்பிக்கொண்டான்ஏதோ செப்பிக் கொடுப்போன்!
பத்தெட்டாய் வருஷங்கள் பறந்தோடிப் போக வித்திட்ட தந்தைஎன் விளைவெதிர் பார்த்து,
கொத்தடிமைத் தொழில் கோதிலை என்று சித்தங்கொண் டென்னைஅச் சிறைவிடுத் திட்டான்!
மீளாமல் இங்கிவர்க்(கு) ஆளாகி மாள, வாளான கண்கொண்ட
வனிதை ஒருத்தி,
பாரான என்மனப் பாறை உளக்கி, கூறாமல் கொள்ளாமல் கொண்டாள் சிறைக்கு!
மறுமலர்ச்சிக் கவிதைகள் / 65

Page 35
'காரணகாரியம் ஏதுமே யின்றி, கார சார9 வி சாரணை யின்றி,
சிறைசெய்யும் முறையென்ன? குறையென்ன செய்தேன்? அறை என்று கேட்டும்என்? உரையொன்று சொல்லார்
நாற்சுவர்க் குட்சிறைப் பட்டுள கைதி போற்சிறை மீண்டுநான் போகஅ வாவி,
போயினன் எங்கெங்கோ புத்திடங்கட்கு; ஆயின்என்? அங்கும் அதேசிறைக் கூடம்!
ஏகிட ஏகிட எங்கும் அதுவாய்ப் போகிடப் போகிடப் போனஅப் ப்ாதை,
மீண்டது அன்றியோர் மீட்சியதில்லை! கூண்டது வாய்உல கும்சிறை என்னை,
கொண்டது கொண்டது! கொண்டது என்றே கண்டது சிந்தை கலங்கிட, இந்த
விந்தைச் சிறைகளின் வேரிட மான கந்தை உடற்சிறைக் கட்டுள் கிடந்தேன்
66 மறுமலர்ச்சிக் கவிதைகள்

நாவற்குழியூர் நடராஜன்
எனக்கு அது முடியாது
மலரதன் அழகுக் காக, மணவினை மாலைக் காக, பலர்அதைப் புகழ்தற் காக, பரிமள மிகுதற் காக, அலரதைப் பறித்தென் அற்ப ஆசையின் பலிய தாக்க, குலமலர் வாட்டம் - முள்ளின் குத்தல்கள் தாங்கமாட்டேன்!
செவ்விதழ் முத்துக் காக, சிற்றிடை முயக்கிற்காக, திவ்விய மென்று மாந்தர் செப்பிடு வாழ்வுக் காக, செவ்வரிக் கண்ணாள் தன்னைச் செகத்தினிற் பிரியே னென்று எவ்விதம் இசைப்பேன் பொய்மை! எனக்கது முடியாதப்பா!
புத்திர வாஞ்சைக் காக, புவியினி லதனா லெய்தும் உத்தம வாழ்வுக் காக, உருக்குலைத்(து) அவளை ஒரோர் பத்தொடு பத்து மாதம் பாழ் படுநிலையி லாழ்த்தி எத்திடு வாழ்வு வாழ எனக்கது முடியா தப்பா!
மறுமலர்ச்சிக் கவிதைகள் / 67

Page 36
நாவற்குழியூர் நடராஜன்
தெரியாதா?
கூடுகட்டி முட்டையிடும் குருவிக் குலங்களுக்கு வீடுகட்டி வாழும் அந்த வித்தை தெரியாதா?
வீடுகட்டி வாழ்ந்தொழுங்கு விதி வகுத்து ஒற்றுமையாய்ப் பாடுபடும் எறும்புகட்குப் பறையத் தெரியாதா?
காலக் குறிப்பறிந்து காதல்செயும் விலங்குகட்கு சீலக் குடித்தனங்கள் செய்யத் தெரியாதா?
தெரியாமல் என்ன? எலாம் தெரியுந்தான்; ஆனாலோ புரியாதாம் அவ்வவற்றின் போக்கிம் மனிதருக்கு
வாழப் பிறந்த அந்த வர்க்க உயிர்க் குலங்கள் தாழும் வகையொழிக்கத் தவிர்த்ததிவை; வேறென்ன?
681 மறுமலர்ச்சிக் கவிதைகள்

நாவற்குழியூர் நடராஜன்
பச்சை பச்சையாய்.
'எனக்கது முடியா’ தென்று என்னவோ சொன்னே னென்று மனக் கொதிப்புற்றுப் 'புத்தி மதி" புகல் 'சாரதா! நான் எனக்கெது முடியா தென்றேன் என்பதை உண்மை யாக மனத்திலே கொண்டீ ரிலை! மறுத்துரை செய்ய லானிர்
பச்சையாய்ச் சொன்னால், இன்பம் பருகிட உலகில் யார்க்கும் இச்சைதான்; அதற்கா னாலும் இசைந்திடேன் எவரையேனும் விச்சையால் 'உச்ச என்றேன்; வேறிலை; எதையோ எண்ணிச் சர்ச்சையைக் கிளப்பி ஒவ்வாச் சங்கதி பலவுஞ் சொன்னீர்
சரியெது பிழையெ தென்று சாற்றிடல் உலகில் யார்க்கும் அரிதரி(து); அதிக பேர்கள் அனுசரிப் பவைதா னென்றும் சரியல; வாழ்வில் ஆண்பெண் சங்கமம் என்ப தேதான் பெரிதல; அதைவிடுத்தல் பிழையெனல் எவ்வாறம்மா?
மறுமலர்ச்சிக் கவிதைகள் / 69

Page 37
கானிடை அலரும் பூவும் கருங்கடல் ஈனும் முத்தும் மானிடர்சுகியாவிட்டால் 'மண் எனல் என்ன நீதி? தேனொடு மாறு கொள்ளும் தீஞ்சுவை மொழியார் இங்கு ஆணொடு கூடாவிட்டால் அதர்மமா? செயற்கை யாமா?
இயற்கையின் நியதி தன்னை இலர்பலர் கடக்க வல்லார்; கயற்கணார் மோக மென்ன கத்தரிக் காயா தள்ள? வியப்பிது! எதற்கு மொவ்வோர் விதிவிலக் குண்டென்றால்நீர் பயப்படுகின்ற தேன், இப் பார்முறை சிலர் வெறுத்தால்?
70 | மறுமலர்ச்சிக் கவிதைகள்

நாவற்குழியூர் நடராஜன்
என் மனைவிக்கு
மாந்தர்குல வீதி, இது மண்ணுலகம், இங்கே சார்ந்தவர்கள் பற்பலர்க்குட் சச்சரவென் றெங்கள் ஏந்தல் இறை யோனுமெனை இங்கனுப்ப, எங்கள் காந்தருவ நாடு விட்டென் நன்றாய்த்தம் கண்மணியே! இங்கு,
உந்தனுக்கும் சொல்லவில்லை ஓடிவந்து விட்டேன்; என்கவலை அவ்வளவு, என்தமிழர் நாடுசெந்தமிழும் தீரமதும் தேங்கிய இத் தேசம் - நொந்திழிந்து போகுதென்ற
நோக்கமத னாலே
இங்கு வந்து பார்த்தறிந்தேன் என் கிளியே! நாடு மங்குகின்ற தற்கு இந்த மாந்தர்கள்தான் ஏது! எங்கிருந்தோ இங்குவந்த
இங்கிலிசைக் கண்டு, தங்கள்நடை பாஷைஉடை தாமனைத்தும் விட்டார்
மறுமலர்ச்சிக் கவிதைகள் 171

Page 38
வேற்சண்டை செய்தவிறல்விட வீரர்களின் மக்கள் காற்சட்டை தொப்பிகளுள் கட்டுண்டு போனார்! நாற்றண்டை யெட்டிடவும் நாணமுறு கின்றார், சோற்றுக்கும் சீலைக்கும் சீமைக்குப் போறார்!
கச்சேரி கோடு கந்தோர்க் கட்டிடங்கட் குள்ளே கைலஞ்சம் வாங்கவும், பொய் கள்ளமதுரம் ஓங்க, நச்சேறிப் போனமன நல்லபிள்ளைப் பேர்கள் நாட்டிலெங்கும் நன்றாய்த்தம் பாட்டிலுழைக் கின்றார்
அறத்துக்கும் திறத்துக்கும் ஆய்வாழ்ந்தோர் மறத்துக்கும் நிறத்துக்கும் மதத்துக்கு மாக, உறுகின்ற பகைமைக்கிங் கோரெல்லை யில்லை, பெறுகின்ற பேறின்னல், பிறிதொன்று மில்லை.
பைங்கூந்தற் பெண்மயிலே பாரில் எனைத் தேடி, எங்கூர்ந்து விட்டாயோ என்பிரிவால் வாடி! இங்கே இம் மங்கையர்போல் ஏட்டிக்குப் போட்டி
72 | மறுமலர்ச்சிக் கவிதைகள்

எங்கே இட் டெம்வாழ்வை இன்னாமற் காட்டி
விட இங்கு நீகற்று விடுவாயோ என்றே மட அன்னமே! அங்கு மறித்துன்னை வந்தேன்; சுடவைத்த சொல்லம்பு சுறுக்கென்று ஏற்றும் திடமுள்ள பெண்கள்வாழ் தேசம்பார்! மோசம்.
மறுமலர்ச்சிக் கவிதைகள் / 73

Page 39
நாவற்குழியூர் நடராஜன்
எம்முன் இருந்த தெய்வம்
இஷ்ட குலக்கடவுள் - எம்முன் இருந்த தெய்வமொன்று - மனித
துஷ்டத்தனத்தாலே - அதுவும் சூக்குமம் ஆகிவிட,
‘எட்டு வரியெனினும் அதைமுன் னிட்டுக் கவிதையொன்று கட்டி அனுப்பு; கென்ற - உங்கள் காகிதம் வந்ததுதான், - ஒரு
சொட்டுக் கவிதையுமே - அன்றென் சோக உளத்தினிலே தட்டுப் படவுமில்லை; - இதுவரை தாபமும் ஆறவில்லை
உள்ளந் தெளிந்ததிப்போ - கொஞ்சம் ஊக்கம் பிறந்ததுதான்; - ஆயின் வெள்ளம் எனப்புரளும் - கவிதை வேகம் பிறக்கவில்லை
'ஆறாத துக்கம்இதெம் - உள்ளம் ஆற்றாத பேரிழவு; மாறாத கேட்டா - நுாறு
மாமாங்கம் ஆனாலும் .'
என்று எழுங்கவியும் - குண்டு எப்படி அண்ணலினைக் கொன்றிடும்?' என்றளண்ணம் - எழவும்
நின்றிடும்; நின்றுவிட
74 மறுமலர்ச்சிக் கவிதைகள்

'இந்திய நாட்டினுக்கு - இல்லை இத்தல முற்றினுக்கும் சொந்தம தாயஒரு - மனிதச் சொத்தினை - வித்தகனை.'
என்று தொடங்கிடுவேன் - ஆனால்! ஏக்க அலையினிலே ஒன்றல, ஒன்பதெனச் - சிந்தை ஓடி மறைந்துவிடும்
செத்தன னோஅடடா - காந்தி செத்து மடிபவனோ? - இல்லை; உத்தமன் வாழுகிறான்! - எந்தன் உயிரும் வாழுகுதே
நித்தியன் வாழுகின்றான்; - என்றும் நிமலன் வாழுகிறான்; சத்தியம் வாழுகுது; - அஹிம்சைச் சாதகன் வாழானோ?
பத்திரி காசிரியீர் - என்ன பாதகம் செய்துவிட்டீர்! செத்தனன் என்றேதோ - என்னைச்
செப்பிடச் சொன்னீரே!
வையம் அழிந்திடினும் - இந்த வாழ்வு பறந்திடினும் ஐய! அது குறித்து - ஒரு அடியும் பாடேனே!
மறுமலர்ச்சிக் கவிதைகள் | 75

Page 40
சாரதா
துயிலெழுச்சி
‘பாழ்வயிற்றைக் கழுவுதற்குப் படும்பா டிங்கே
பஞ்சுபடாப் பாடு’ என்று பாடு கின்றாய்; கேள்தமிழா, துக்கசுகம் இரண்டும் நித்தம்
கிளைத்துவரும் யார்க்குமிது சகசம் அப்பா, கூழ்குடித்தும் நாள்முழுக்கக் கூலிக்காகக்
குடல்தெறிக்க ஓடுகிறான்றிக்ஷோக் காரன்; 'ஊழ்’ இதென்று சோர்ந்திருந்தான் என்றால் எங்கே
உணவருந்தப் போவதவன்? உடைக்கென் செய்வான்
கட்டுதற்குக் கந்தையில்லைக் கால் வயிற்றுக்
கஞ்சியுமோ கிடையாது என்றால் வீணே நட்டகட்டை போலிருந்து “நாமென் செய்வோம்?
நம்தலையெ முத்தி' தென்று நாணம் இன்றி வெற்றுரைகள் பேசுகிறோம்; விழல்வே தாந்த மேதையிலே யாருமெமை மிஞ்சார்; பாடு பட்டவனே பயன்பெறுவான்; பருவம் பார்த்துப்
பயிரிடுவோன் அதன்விளைவைப் பறிப்பான் அன்றோ!
தொழில்களிலே உயர்விழிவு இல்லை; ஆனால்,
தொழும்புசெயும் அடிமைமுறை தொலைய வேண்டும்; உழவு, குடி கைத்தொழில் வியாபாரங்கள்
உயர்முறையில் நடத்திடுவோம்; உலகத்தோடு சரிநிகராய்த் தமிழரினித் தலை யெடுக்கச்
சாத்திரஞானம் தமிழில் தழைக்க வேண்டும்; அரசியல்விஞ்ஞானநிலை பொருளாதாரம்.
அனைத்தையும்நாம் ஆய்ந்துபுது ஆக்கஞ் செய்வோம்.
76 ! மறுமலர்ச்சிக் கவிதைகள்

"பழந்தமிழர் அதுசெய்தார் இதுவுஞ் செய்தார்
பண்ணாத(து) அவர்கணக்கில் இல்லை' யென்று குழந்தை மொழி வழங்கலிலோர் கொள்கை இல்லை;
குவலயமெல்லாம் ‘புரட்சி'க் கூச்சல் கேட்டும் விலங்குகளாய் உணர்விழந்து அறிவும் மங்கி
வேதாந்தம் பேசுகிறோம் விழல்வே தாந்தம்! இளந்த பIழா, எழுந்துலகம் எல்லாம் சுற்றி
எங்கள்நிலை கண்டு,நவ எழுச்சி காண்பாய்!
கழிந்ததற்கு இரங்காமல் வருங்காலத்துக்
கவலையிலே மாழ்காமல் காரியங்கள் புரிந்தவர்க்கே வெற்றியுண்டு; வீனில் நாளைப்
போக்குகிறாய் பொல்லாத சோம்பற் காளாய், எரிந்தகுறங் கொள்ளியென இருக்கா தேகேள்:
இப்பொழுதே உன்கடமை எதுவென் றெண்ணிச் சிரித்தமுகத் தோடுதிட சித்தத் தோடு
தீவிரமாய் ஈடுபட்டுச் செய்வாய் அப்பா!
மறுமலர்ச்சிக் கவிதைகள் | 77

Page 41
சாரதா
வாழ்க்கைச் சுவடு
தென்னை மரத்தினைப் பார் அதன் - உடன்
சேர்ந்து கிடக்கிற ஒலையின் - பல
சின்ன மிருக்கிற வாறினை - அதிற்
சிந்தை கணித்ததைக் கேளினி:
வாழ்க்கைப் படலமோர் தென்னையாம் - அதில் மண்டி வளர்தளிர் மாந்தராம் - குலை
காய்த்துக் கனிவது போலவே - அவர் காலம் முடிந்ததும் போவராம்!
மாந்தர் இறந்துபட்டாலுமே - அவர்
வாழ்க்கைச் சுவடுகள் மங்கிடா - இதைக்
காய்ந்து விழுந்தபல் ஒலையின் - அடிக் கட்டைத் தழும்புகள் காட்டுமே!
மண்ணிற் பிறந்தபேர் எத்தனை? - அவர்
வாழ்க்கைச் சுவடுகள் எத்தனை? - வெறுந்
தண்ணிர் எழுத்தெனப் போவதில் - ஒரு சார மிருக்குதோ சோதரா?
வாழப் பிறந்தவன் நானென - இளம்
மார்பைத் துணிவுடன் வைத்துநீ - உள நாளைப் பயனுள தாக்குவாய் - ஒரு
நாளு மழிவணு காதடா!
தென்னை மரத்தினைப் பாரதன் - உடன்
சேர்ந்து கிடக்கிற ஒலைபோல் - உயர் வண்ணச் சுவடுகள் ஆக்குவாய் - பிறர்
வாழத் துணைபுரி வாயெனில்!
78 | மறுமலர்ச்சிக் கவிதைகள்

சாரதா
எங்கள் நாவலன்!
'நற்றமிழ் முற்றிய நாட்டினர்'என்றயல் நாட்டவர் சொற்புகழ் நாட்டிட, யாழ்நகர், முற்பல நற்றவம் முற்றிய மூச்சினால் மோகன ரூபமும் முத்தமிழ் ஞானமும் பெற்றொரு “சத்தியப் பித்த' னென் றேபிறர் பேசிட வாழ்ந்தநம் பேரறி வாளனைப் பற்றுடன் 'நாவல’ப் பட்டமிட் டேதொழப் பாக்கியம் பெற்றதிப் பாரத நாடுதான்!
பண்டை இலக்கியப் பைந்தமிழ்ச் சோலையில், பாடிப் பழகிய பான்மையால், பல்சுவை மண்டுந் தமிழ்க்கவி வாய்மை விளக்கியே, வாத மிடுபவர் வாயடக் கிச்சிவ தொண்டு விளைத்தவன்; தோத்திர மாலைகள் சொல்லுந் திறத்தினால், தூய நடத்தையால்கண்டவர் கேட்டவர்
மறுமலர்ச்சிக் கவிதைகள் / 79

Page 42
கைதொழு தேத்திடக் காந்திபோல் வாழ்ந்தநம் காளையைப் போற்றுவாம்!
பாஷை நடையிலே பண்டித வம்புகள் பல்கிப் பரவிய பான்மை, தமிழனைத் தோஷப் படுத்திய சூழ்ச்சி யுணர்ந்துதன் சொந்த - இலக்கணச் சோர்விலாப்-பாதையில் லேசு நடைவகுத்(து) இன்தமிழ் நூால்பல ஈந்த அருமையை என்னென் றியம்புவோம் தேசம் ‘வசன நுாற் சித்தன்' இவனெனச் செப்புஞ் சரித்திரத்
தீர்ப்பை உணர்ந்திரோ?
பாட்டிலும் பேச்சிலும் பண்கனி யச்சொலும் 'பண்டித மாமணி பக்தியாய்ச் சொல்லுவார் 'நாட்டிலே, நந்தமிழ் நாவலன் போலொரு நல்லவன் இன்றிலை, நம்மவர் பாதிரி வேட்டையில் வீழ்கிற வேஷம் விலக்கிட.? வேறிலை நாவலன் மேதை விளக்கிட, பாட்டிலே சொல்லுவேன்; பாரத நாட்டிலே பக்திமான், உத்தமன்பாதம் பணிகுவோம்!
80 | மறுமலர்ச்சிக் கவிதைகள்

சாரதா
அதுவும் ஒரு காலம்
அந்த இளம்பருவத்(து) ஆயிரமோ தறுகுறும்பு? மந்திக் குரங்குகள்போல் மதிசிதறும் காலமது!
கவலை சிறிதுமிலாக் கட்டிளமைச் செட்டுடனே தவளைக் குஞ்செனநாம் சஞ்சரித்த காலமது!
சொல்லில் அமுதொழுகச் 'சோச்சி"அம்மா’பாச்சி'என்று செல்ல மொழிபயின்று சிரித்துவந்த காலமது!
'பிள்ளைக் கனியமுதே! பேசும்பொற்சித்திரம்' என்று அள்ளி அன்னைமுலை அருள்சுரந்த காலமது!
முந்தங் கொடுத்துஅன்னை முகத்தோடு முகமனைத்துப் புத்திர வாஞ்சையினால் புளகமுற்ற காலமது!
ஈயெறும்பு அணுகாமல். எமக்காகத் தனையொறுத்துத் தாய்மைப் பணிபுரிந்தாள் தயாநிதி; ஒர்காலமது!
மறுமலர்ச்சிக் கவிதைகள் / 81

Page 43
அடிப்பாள் ஒருகையால், அணைப்பாள் மறுகையால்; துடிக்கும்நம(து) உயிர்த்தாய்த் தோணி இன்று சோர்ந்ததடா!
தின்னத் தந்துநம்மைச் சீராட்டிப் பாராட்டி முன்னேற்றி வைத்தவன்னை முடிந்தாளோ சூனியமாய்!
பர்த்தாவின் கடமையுடன் பாரிலெம்மை வளர்த்தெடுத்த பெற்றாள் மறைந்து விட்டாள்; பேணுதற்கோர் பேருமில்லை!
பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போனதந்தக் காலமெல்லாம் ஐயோ, அவ(ள்) அகன்றாள், அநியாயம்ஆர்க்குரைப்பேன்?
82 ! மறுமலர்ச்சிக் கவிதைகள்

சாரதா
வேண்டாத புத்திமதி
கேளப்பா, பெரியவனாய்ப் போக வென்ற 'கெடுபிடிடுயில், கெட்டு நொந்துன் வாழும் நாளைப் பாழடிக்கத் துணியாதே; 'பரோபகாரம் பரமனுக்குப் பிரிய' மென்றாய்-பசப்பு வார்த்தை; நாளைக்குக் கிடைக்குமென்ற புகழ்தா னின்று நாலகப்பை சோறிடுமோ? நண்பா, சொன்னேன்; வேளைக்கு ஏற்றபடி வேஷம் போடும் வித்தைகளைக் கற்பினெல்லாம் விருத்தி யாமே
நீதிமா னாயிருந்து, உலகம் உய்ய நீண்டதிட்டம் போடவென்று நித்தம் எண்ணி, பேதையென்றும் பித்தனென்றும் வாழா வெட்டிப் பேயனென்றும் பேரெடுக்க வேண்டாமப்பா; பூதலத்தில் பாவிகளைக் காக்க யேசு போதகஞ்செய் தென்னபலன் கண்டா ரப்போ? வேதமொழி யாகவுணர்; நீதிமான் போல் வேஷமிட்டு நடிப்பதுதான் மேன்மை யப்பா
அறியாமைச் சேற்றினிலே உழலும் மாந்தர் அனைவரையும் கைகொடுத்துத் தூக்க வெண்ணிப் பெரியோரென்னப்பட்டோர் என்ன பட்டார்? பீடைகளும் அவமதிப்புப் பேச்சுந்தானே; நெறியாகச் சொல்லி வைத்தேன்; எதிர்காலத்து நீண்டபுகழ் என்னசெயும்? நிகழ்காலத்தே குறியாக, உன்வாழ்க்கைக் கோட்டுள் நின்று
குடிகெடுத்தும் சுகவழியைக் கோலு வாயே!
மறுமலர்ச்சிக் கவிதைகள் / N !

Page 44
ஏழைபணக் காரனென்ற பேதம் இன்றி எல்லோரும் சமமாக, இன்ப மாக வாழவென்று பொதுவுடமைத் தத்து வத்தை வகுத்துவைத்த கார்ல்மாக்ஸே வாழ்நாள் முற்றும் ஏழைமையில், அரசாங்க எதிர்ப்பு என்னும் ஈட்டிமுனை நடுவிலிருந்து இன்னலுற்றான்; மூளையின்றி அவர்வழியே நீபின் பற்ற முந்துவையேல், துயர்க்கடலில் மூழ்கு வாயே!
அடிமையிலே கிடந்துழலும் இந்தி யாவை ஆங்கிலரின் பிடியிருந்து அகற்ற வென்று துடிதுடித்துச் சுகபோக வாழ்வை யெல்லாம் துச்சமென விட்ட சுபாஷ், ஜவஹர், காந்தி தடியடியும் கொடுஞ்சிறையும் பெற்றுப் பெற்றுச் சஞ்சலத்தே தம்முயிரைத் தாங்கக் கண்டும், படியின்மிசை லட்சியமென்றேதோ சொல்லிப் பகற்கனவில் உன்வாழ்வைப் பலிகொ டாதே!
உண்டுடுத்து உவப்பாக இருக்க வேண்டும்; ஊர் வம்பு அளப்பதிலே ஊக்கம் வேண்டும்; பெண்பித்துக் கொண்டலையும் நண்பர் சூழப் பேர்பெற்ற மதுவெறியைப் பேண வேண்டும்; கண்டிக்கோ கம்பளைக்கோ ஒடி யோடிக் கள்ளவிலைப் பொருள்களினாற் காசு தேடிக் கொண்டிருந்தால், ஜனங்களெல்லாம் 'ராஜா' என்றே கும்பிட்டுக் குறிப்பறிந்து ஒழுகு வாரே!
84 / மறுமலர்ச்சிக் கவிதைகள்

சாரதா
வேண்டும் புத்திமதி!
என்னதான் சொன்னி ரையா? எனக்கது முடியா தென்றீர்; உண்மைதான், நீரும் ஏதோ உருப்படா வழிதான் சொன்னீர்; மண்ணிலே உம்போல் யாரும் ஈமணவினை விரும்போடு மென்றால் பெண்மையுங் குன்றும்; ஆணின் பெருமிதங் குறையும் வாழ்வு;
கானலிற் பெய்யும் மாரி கடுவனத் தெறிக்குந் திங்கள் வினிலே போவ தேபோல், விருத்தியற் றழியும் ஐயா, ஆணொடு பெண்ணின் சேர்க்கை அவனியில் இயற்கை யாக, ஏனதை வெறுத்தீர்? பாட்டில் எனக்கது முடியா தென்றீர்?
இல்லறம் என்பதெல்லாம் இயற்கையின் நியதி தானே? பிள்ளைகள் வேண்டா மென்றால், பிறப்பையே பழித்தீர் ஐயா, 'முள்ளென வாழ்வைத் தள்ளும் முகாந்திரம் முழுதும் பொய் பொய்; கள்ளவை ராக்கியத்தால்
கனவிலும் கவலை தானே!
மறுமலர்ச்சிக் கவிதைகள் ! 85

Page 45
புத்தியைக் கேளும் ஐயா! புதுமையாய்க் கலகஞ் செய்து, பக்திபோற் காட்டிப் பெண்ணை பரிகசித் திடவே வேண்டாம், முத்தமிழ் நாட்(டு)ஓர் பெண்ணை முறைமையாய் மணமுஞ் செய்து பக்குவ மாகப் பேணின்,
பரிமளித் திடுமே வாழ்க்கை!
86 ! மறுமலர்ச்சிக் கவிதைகள்

சாரதா
வேளை வரும்!
நாய்கள் குலைத்து வரும்; நடுவழியிற் பாம்புறங்கும்; பேய்கள் முட்புதராய்ப் புனர்ஜன்மம் பெற்றிருக்கும்; நோய்கொண் டாயென, நான் நொந்துவரும் போதிலெல்லாம் ஈஈகூய், கூய்டுடு எனவிளிக்கும்
குள்ளநரிக் கூட்டமடி!
கள்ளுக்குடித்தவர்கள், கண்டபடி கால்பெயர்க்கும் கல்லுக் கலட்டியது; கள்வரிரா வேளைகளில், கொள்ளையடிப்பதற்கும் கூசாமற் செல்லுகிற தொல்லை பிடித்தவிடம்; சோர்வுமிகத் தோன்றுதடி!
பாசம் பிடித்திழுக்கப் பாடுபட்டு வந்தாலும், (இ)லேசன்றுணையணுக எண்ணுவது; உன்செவிலி, வாசற் படியருகே வாங்குவைத்துத் தூங்கிடுவாள்; ஓசைப் படினெழுவாள்;
ஊர்வம்பும் ஓங்கிவிடும்!
மறுமலர்ச்சிக் கவிதைகள் | 87

Page 46
வேண்டாம் களவொழுக்கம்: வீண்பழிகள் கொண்டுவரும்; 'தூண்டிற் புழு'வென நீ சொல்லிமிகச் சோருவதும் நீண்ட கனவுகளால் நித்திரையை நீக்குவதும் வேண்டப் படுவதன்று;
வேளைவரும், காத்திருப்போம்!
பூசி மெழுகவில்லை; போலிவேஷம் போடவில்லை; வாசி வரும்பொழுது வந்துவந்து கண்டுகொள்வேன் நேசித் திருப்பதிலுன் நெஞ்சுரத்தைக் காட்டுவையேல், பேசிப் பொருத்துவரெம் பெற்றார்; பொறுத்திருப்போம்!
88 / மறுமலர்ச்சிக் கவிதைகள்

சாரதா
கனக்கவேன் கதைகள் ஐயா!
பச்சையாய்ச் சொல்வே னென்று பாடுபட் டேதம் பாட்டில் உச்சமாய் எதையோ வைத்து, உருக்கொடுத்துணர்ச்சி யோடு கர்ச்சனை புரிந்து நிற்குங் கவிநடராஜருக்கு, நற்சுக செய்தி சொல்லி
நயப்புடன் எழுதும் ஒலை;
வேண்டிய புத்தி யென்று விளம்பரஞ் செய்ய வில்லை; ஆண்பெணின் உறவி யற்கை, ஆதலின் நீரோர் பெண்ணை வேண்டுமேல் மணந்து வாழ்தல் விவேகமென் றேனே யன்றி நீண்டசொற் போர்கள் செய்ய
நினைத்ததே யில்லை ஐயா!
ஆயினும் உமது பேச்சு அளபெடை போல நீளம் பாய்கிற விதத்தைப் பார்த்தால் பலப்பரி சோதனைக்கு ஆயுதந்தாங்கி வந்து அணிவகுக் கின்றீர் போலும்; நேய, நும் போக்கிலுள்ள
நேர்மையை நினைந்து பாரும்!
மறுமலர்ச்சிக் கவிதைகள் | 89

Page 47
சொற்பொருள் பதசா ரங்கள் தொகை வகை விரியாய்ப் பார்த்தும் உட்பொருள் விவாக பந்தத்(து) உமக்குவப் பில்லை யென்ற "அற்புத முடிவை யன்றி, அங்குவே றர்த்த மொன்றைக் கற்பனை செய்தற் கில்லை;
கனக்கவேன் கதைகள் ஐயா?
துறவிதான் நீரும்; உண்மை, சொல்லிலே தெரிந்து போச்சு; திறமையை உணரா தேதோ செப்பினேன் பொறுக்க வேணும்; அறவழி நின்று உம்பேர் ஆற்றலை அறியக் காட்டிப் பிறவியின் பயனை யெல்லாம் பெற்றிடப் பிரார்த்திக்கின்றேன்!
90 ! மறுமலர்ச்சிக் கவிதைகள்

சாரதா
நிதானமில்லை!
1.
யார்சொன்னார் காந்திமகான் மாண்டா ரென்று? நான்சொல்ல வில்லையதை நம்ப வேண்டாம்: பாரெங்கும் ஏதேதோ அனுதாபங்கள் பரப்புகிறார்; அவையெல்லாம் பரிகா சந்தான்; ஆர்சொன்னால் நமக்கென்ன? அண்ணல் காந்தி அகிலத்தில் என்றென்றும் அழியா வண்ணம் பேர்பெற்ற புகழுடம்பைப் பெற்றி ருக்கப் பேதைகளே பூதவுடற் பேச்செடுப்பார்!
ஐம்பூதத் தாலான உடலைத் தானும் அழிந்ததென்று சொல்லுவதில் அறிவே யில்லை; ஐம்பூதத்(து) உயிரியக்கம் அற்ற போது, அவற்றினது கூட்டுறவும் அகல்வதன்றி ஐம்பூதம் அழிவதில்லை; அண்ணல் காந்தி அவனியிலே இன்றுமுளார், என்று முள்ளார்; ஐம்பூதம் உள்ளவரை அவரும் உண்டு;
ஆகையினால் நாம்கவலை அடைதற் கில்லை!
‘என்னப்பா பைத்தியமோ??? - என்று கேட்பீர்; என்னளவில் பைத்தியமாய் இருந்துவிட்டால், உண்மையிலே உலகுய்ய வந்த காந்தி - உத்தமரின் பிரிவை நினைந்(து) உருகமாட்டேன்; என்னளவில், பைத்தியந்தான் இப்போ தேற்டும்; ஏனென்றால் உருகுதற்கு இடமே யில்லை; அன்னவரைச் சுட்டகதை கேட்ட பின்பும்
அறிவுவோடு நானிருக்க அஞ்சு கின்றேன்!
மறுமலர்ச்சிக் கவிதைகள் / 91

Page 48
4. அச்சமெதற் கென்றுநீர் கேட்க வேண்டாம்;
அறிவாளிக் கிவ்வுலகம் அடுக்கா தையா; பொய்ச்சரக்கை மெச்சுகிற போலிக் கூட்டம் பூதலத்தில் நிறைந்திருக்கும் போது, உண்மைக் கைச்சரக்கை விற்கவந்த காந்தி யார்க்குங் கையின்மேற் பலன்கிடைத்த காட்சி கண்டோம்; நிச்சயமாய்ச் சொல்லுகின்றேன்: உலகச் சந்தை
நிலைபரங்கள் இப்பொழுது நிதானமில்லை!
921 மறுமலர்ச்சிக் கவிதைகள்

வரதர்
மீசையை முறுக்கிவிட்டு.
மீசையை முறுக்கி விட்டு முண்டாசைக் கட்டிக் கொண்டு ஆசையான பாடல்களை அள்ளி அள்ளி நீ சொரிந்தாய், பாரதி! பாரதி! பாரதி!
மறுமலர்ச்சிக் கவிதைகள் / 93

Page 49
வரதர்
அம்மான் மகள்
சும்மா சும்மா என்ரை மனசு சுத்தித் திரியுது; சுருதி கெட்ட பாட்டுப் போலே சோர்ந்து போகுது! அம்மான் மகளைக் கட்டிக் கொள்ள ஆசைப் படுகுது; அதையே நினைச்சு நினைச்சுப் பாத்து
நெஞ்சு புளுகுது!
நேத்துச் சின்னக் குருவி போலே நின்ற பெட்டைதான்; நேரங் காலம் வந்திட்டுது, நிமிந்து நிக்கிறா! சேத்துக் குளத்துப் பூவைப் போலே பூத்து நிக்கிறா! சேலைகட்டிச் சட்டை போட்டுச்
சிரிச்சுப் பார்க்கிறா!
என்னைக் கண்டா, ஒடி ஒளிச்சு ஒட்டிப் பார்க்கிறா; சின்னத் தம்பி மூலம் ஏதும் சொல்லி அனுப்பிறா! மின்னி மின்னித் தூரத் திலே அழகு காட்டுறா; மிச்சம் ஆசை யோடு கண்ணை
வெட்டிப் பாக்கிறா!
94 / மறுமலர்ச்சிக் கவிதைகள்

'அம்மான் மகளே! ஆசைக் கிளியே! அருகில்வா’ என்றால்,
"சும்மா போங்கோ' என்று சொல்லித் தலையை ஆட்டுறா! விம்மி விம்மி நெஞ்செழும்ப விளிச்சுப் பார்க்கிறா; வீட்டை திரும்பும் நேரத்திலே
கண்ண டிக்கிறா!
சோறு புட்டுத் தின்ன யில்லைச் சோர்ந்து போகிறாய்; சோலி என்ன தம்பி? என்று ஆச்சி கேக்கிறா!
தேறும் வயசில் தேகம் மெலிஞ்சு தேஞ்சு போகிறாய்; தேங்கித் தேங்கிப் பார்க்கிறாய் ஏன்? என்று கேக்கிறா!
அத்தான் மெலிஞ்சு சாகப் போறேன் ஆதலினாலே, - அடி அம்மான் மகளே சும்மா வாடி ஆனாத் தன்னாலே! நித்த நித்தம் நினைச்சு நினைச்சு நெஞ்சு வேகிறேன்; நீண்ட காலம் வாழ வேணும்
வீட்டுக்கு வாடி!
மறுமலர்ச்சிக் கவிதைகள் / 95

Page 50
கலைவாணன்
உலாவிடுவேன்
ஏட்டுப் புலவர்சொலுக் கெட்டா அழகுடனே நாட்டுப் புறத்துறையும் நஞ்சை வயல்களிலும் இச்சையுடன் வானுலகை எட்டிப் பிடிக்கமலை மச்சினிலே கைநீட்டும் மல்லிகைப்பூங் காவினிலும் சுத்தத் தெளிவில்லார் சிந்தனையைப் போல்வீனே கத்திக் குதிக்கின்ற கடலின் கரைகளிலும்
இன்னல் மறந்துலகம் இன்பத் துயில்புரியும் கன்னங் கருக்கிருளில் கண்சிமிட்டும் மீனொளியில் சந்தனமும் பாடகமும் சாந்தியுடன் சேர்ந்தவெளி தந்துதவ வானுலவும் தண்மதியின் வெண்ணிலவில் வெய்யில் கதிர்க்கரங்கள் வீசி நடைநடந்து வையத் திருள்அகற்ற வந்தொளிரும் வெஞ்சுடரில்
பெண்ணுலகில் பேரழகி பிரியாதவளான எண்ணமெனும் என்னுடைய இல்லாள் தொடர்ந்துவர கள்ளமிலா நெஞ்சுடனே கத்திக் குதித்தாசைப் பிள்ளைஅவள் கைப்பற்றிப் பின்னே நடந்துவர வேண்டியபோதுள்ளுணர்ச்சி தூண்டியவாறெல்லாம்என்
நீண்டமதிக் கோலுடனே நித்தம் உலாவிடுவேன்.
96 1 மறுமலர்ச்சிக் கவிதைகள்

கதிரேசன்
வேற்றுமை
துரை
வெய்யில் மிக இன்று காயுது - மிக வேர்வையோ வெள்ளமாய்ப் பாயுது செய்வதென்ன? இங்கு வேலைகள் - எனச் செப்பி அமளியில் சாய்கிறார்.
தொழிலாளி வெய்யில் எறிக்குது வீட்டிலே - கொஞ்ச விறகினைச் சேர்த்திட லாமென கையிலே கோடரி கொண்டவன் - மலைக் காட்டிற் கயிற்றொடு போகிறான்.
துரை
நல்ல பெருமழை பெய்யுது - குளிர் நடுக்கி ஒடுக்குது மாந்தரை இல்லிற் படுக்கையிற் கம்பளி - எடுத்(து) ஏக்கமில்லாதவர் தூங்குறார்
தொழிலாளி நல்ல பெருமை பெய்யுது - எனை
நாடிய ஆடுமாட்டுக்குண (வு) இல்லையே என்றொரு கம்பளி - எடுத்(து) ஏகிறான் 'சாக்கு', அரி வாளுடன்,
துரை
வேலை முடிந்தது; வீட்டிலே - பல வேஷங்கள் போடிடும் பெண்மயில் பாலின் மொழியினிற் பேசிடும்; - அந்தப் பைங்கிளி யாளுடன் கொஞ்சுறார்.
மறுமலர்ச்சிக் கவிதைகள் | 97

Page 51
தொழிலாளி வேலை முடிந்தது வீட்டிலே - வந்து வீட்டலுவல் செயும் மாதிடம் காலை யுணவினுக் கென்செய - எனக் கருத்தழிகின்றனன் காதலன்.
981 மறுமலர்ச்சிக் கவிதைகள்

இலங்கை மாதாவுக்கு!
அரசிழந்து நிதியழிந்து அந்நியர்கள் தளைகள்நின் கரமிகுந்(து) இறுக்கநின்று கதிகலங்கு(ம்) அன்னையே, உரமிருக்கு மார்பருன்னை உய்யவைக்க வந்துளோம்; சிரநிமிர்த்து, கவலைநீக்(கு); எம் செய்திகேட்டு வாழ்த்துநீ!
பாடுகொண் டுயர்ந்தஎம் புயங்களன்னை பார்த்திநீ! ஒடுகொண்(டு) இரந்தவக் கரங்களெங்(கு) ஒழிந்தன; காடுகொண்டிருந்தநன் னிலங்களுங் கொழிந்தன; நாடுகொண்டிருந்தவாழிச் செல்வமுங் கொழித்ததே!
மூலையோடு குந்திவாழ்வ மோ? முயற்சி தாழ்வமோ? சீலையோடு ஊர் தியாதி செய்யிடங்களுங் கரும்(பு) ஆலையோடு ரத்தினங்கள் அணியுறுத்(து) இடங்களும் வேலையோடு கப்பலோடு மேவுமிந்த நாட்டிலே!
வீறுகொண்ட ஈழமைந்தர் வீரர்நாங்கள் சொல்கிறோம்; மாறுகொண்ட சாதியென்றுன் வயிற்றுமைந்த(ர்) எங்களை வேறுகொண்ட கூறுசெய்யும் வீணர்தங்கள் கொள்கையை நுாறுகண்டதுண்டமாக நொடியில்வெட்டி வீழ்த்துவோம்!
ஆட்சியென்ப(து) இன்னதென்(று) அறிந்துளந்
தெளிந்துளோம்! ஆட்சியென்ப(து) ஒருசமூக மடக்கியாள்வதாமெனச் சூழ்ச்சியென்பதே புரிந்த சுயநலக் குழாங்களின் வீழ்ச்சியென்ப(து) உன்செவிக்கு விரைவில்வீழும் அன்னையே!
தலைமையுற்ற கலையின்சேவை தரணிமெச்சப் புரிகுவோம், உலகுபெற்ற கலைகளால்இங்குதயமாகும் புதுமையால் நிலைதிருந்தி வாழுஞான நெறியினாலுன் நற்சுதர் கலையருந்தி வெறிமிகுந்து களிதிறைந்து வாழவே!
மறுமலர்ச்சிக் கவிதைகள் / 99

Page 52
சோ. தியாகராஜன்
வாழ்வுத் திரையில்.
முகை அரும்பி மலர்ந்து கீழே விழுகிறது; நாம் அறிகின்றோமா? காய் கனிந்து கீழே உதிர்கின்றது; பார்க்கின்றோமா? இளமை முற்றி, கனிந்து முதுமையாக வாடுகின்றது; கவனிக்கின்றோமா? கிணற்று நீர் மீண்டும் மழையாக மாறிவிடுகின்றது! குயிலோசை சென்று சோலையெங்கும் பரந்து விடுகின்றது; கடல் அலைகள் மீண்டும் மீண்டும் பிறந்து கரையில்
செவிசாய்க்கின்றன கவியின் மட்டற்ற எண்ணங்கள் நுரைபோல் கொந்தளிக்கின்றன; புன்னகை வியாபகமாகித் துயர் உண்டாக்குகின்றது; ஏனோ
இப்படி வாழ்வு? சுடுகாடு வாழ்ந்த வாழ்க்கையை நினைப்பூட்டுமாகில் வறுமை உணவின் கொடுமையை ஆராய்ந்து பார்க்குமாயின் வெறுமையான இன்பங்கள் மட்டற்ற வாழ்க்கையை
நினைப்பூட்டுமாயின் இயற்கையின் மடியிலே குழந்தை நித்திரையும், மடிதலும்
செய்கின்றது என்போம் சூரியன் வந்த வேலையைச் செய்யட்டும், கூட்டுபவளைப் போல, பணக்காரன் ஏழையை வதைக்கட்டும், அரிவாளைப் போல; உடம்பெடுத்தவன் உயிரோடு போராடட்டும், நண்பர்களைப்
போல; எல்லோரும் சென்ற வழியிலே நடப்போமா, எப்படி
வந்தாலும் நடக்கட்டுமென்று? விளக்கிலே எண்ணெய் வற்றி விடுகின்றது - காணவில்லை காதலிலே இன்பம் மறைந்து விடுகின்றது - தெரியவில்லை பேச்சினிலே பொழுது போய்விடுகிறது - தோன்றவில்லை இறைவனிலே பக்தி தேய்ந்து விடுகிறது - பார்க்க முடியவில்லை எல்லாம் தேய்விலே ஒளிபெறுகிறது; இயற்கைக்கு ஆறுதல்
இது ஒன்றுதானோ?
100 | மறுமலர்ச்சிக் கவிதைகள்

காவலூர்க் கைலாசன்
புது யுகத்தில்!
காட்டை அழித்துவயற் காடுசெய்குவோம் - வெறுங் கட்டாந் தரையில்கனிக் காக்கள் அமைப் போம்; நாட்டிற் பலகுளங்கள் ஆறுகளுண்டு - அவை நாளும்நீர்ப் பாசனத்தில் ஏறிடச்செய்வோம்!
தேசம் முழுதுங்கலைக் கூடங்கள் செய்வோம் - அங்கு செல்வச் சிறுவருக்குப் பாடங்கள்சொல் வோம்; பேசுந் தொழில்களெல்லாம் தேடிவருவோம் - அதைப் பெருக்க, நம்நாட்டினுக்கே ஓடிவருவோம்!
வன்னி முழுதும்செந்நெல், கன்னல்பருத்தி - மிக வாய்க்கப் பயிரிட்டுநம் நாட்டைத் திருத்தி, மின்னும் நீர்வீழ்ச்சிகளில் யந்திரமிட்டே - இங்கு மேலைத் தொழில்களிலே மேன்மைபெறுவோம்!
கரையைத் திருத்திப்பெருங் கப்பல்கட்டு வோம் - பெருங் கடலும் கடந்துபுதுக் கரைகள் காணுவோம்; தரையைக் குடைந்துபல லோகமெடுப் போம் - அங்கு தாழா துழைக்கும்எந்தர சாலைதொடுப் போம்!
மாவலி கங்கைக்கொரு கால்வாய் அமைத்தே - கலை மன்னும் யாழ்ப்பாணத்தில்முப் போகம் சமைத்தே; காவல் நகரிலொரு பாலந் தொடங்கி - எங்கள் காதற் பரதநாட்டைக் கண்டு வருவோம்!
சாதி மதம்வகுப்பு வாதங்கள் விட்டே - யாரும் சகோதர ராகஇந்த நாட்டை ஆளுவோம் 'நீதிப் படியேனங்கள் தேச மெமதே - எமை நெருடிச் சுரண்டுவோர்கள் போதல் மேலதே!’
மறுமலர்ச்சிக் கவிதைகள் | 101

Page 53
கோட்டாறு எஸ். ஆதிமூலப்பெருமாள் ஆரியர்
பக்தியால் ஆகுமோ?
ஈசனின் கோயிலில் ஆடொடு கோழியை ஈவிரக் கஞ்சற்றும் இல்லாமல் நீசப் பலிசெய்து நின்று தொழுவது நீதியோ? என்பதை ஆய்வோமையா!
இத்தரை மீதுள்ள எல்லா உயிருக்கும் ஈசனே தந்தையுந் தாயுமென்றால் அத்தனை ஜீவியும் ஆண்டவனார்தம்மின் அன்புக் குழந்தைகள் அல்லவோகாண்!
மற்றையோர் வந்துநம் பிள்ளையைத் தொட்டிடில் மாறாத கோபத்தால் போரிடுநாம் பெற்றவரான கடவுளின் முன்னவர் பிள்ளையை வெட்டுதல் நல்லதாமோ?
எல்லா உயிர்களும் ஈசன்சேய் என்றிடில் யாவும்நம் சோதரர் அல்லவோகாண்! பொல்லாக் குணத்துடன் சோதரரைக்கொல்லல் புண்ணிய மாகுமோ அன்பர்களே!
எந்த உயிரிலும் ஈசன் ஒளிர்கின்றான் என்ற பேர் உண்மையை நம்பிடும்நாம் அந்த உயிர்களைக் கோயிலிற் கொன்றிடில் ஆண்டவனுஞ்சகிப் பானோஐயா?
பக்தி மிகக்கொண்டு பாவத்தை எண்ணாது பாழாய் உயிர்களைக் கொன்றிடலாம்; செத்த பிராணிக்கு மீண்டும் உயிர்வரச் செய்யநம் பக்தியால் ஆமோஐயா?
102 மறுமலர்ச்சிக் கவிதைகள்

பரமேஸ்
குயிலின் பதில்
சின்னஞ் சிறு கூட்டில் - இரவினில் சென்று நீ வாழ்கையிலே வன்னக் கவிதை எங்கே? - குயிலே மன்னும் மகிழ்ச்சி யெங்கே?
கூட்டிலிருக்கையிலே - உளந்தான் கூம்பி யொடுங்குதம்மா! பாட்டும் மறந்த தம்மா! - உலகமும் பாழெனப் பட்டதம்மா!
மீண்டுமிக் காலையினில் - அம்மே விஞ்சும் வெளி வரவே தூண்டும் கவி சொலவே - மகிழ்ந்துளம் துள்ளித் துடிக்கு தம்மா!
வெட்ட வெளிதனிலே - கதிரொளி வெள்ளத்தில் மூழ்கியதும் பட்ட மனந் தழைத்தே - கனிந்திசை பாடவும் வன்மை கண்டேன்!
வானொளி கண்டவுடன் - உவந்திசை வாரி வழங்குகிறேன்! தேனை நிகர்க்கு மின்பம் - அதனில் தேங்கிக் கிடப்பதுவே!
மறுமலர்ச்சிக் கவிதைகள் / 103

Page 54
கவிஞன்
பொங்கலோ பொங்கல்!
பொங்கல் பொங்கி எங்கும் இன்பம் தங்க வேணு மே - இந்தப் பூதலத்தில் மாந்தர் வாழ்வு ஓங்க வேணுமே!
நாடு கண்ட நன்செய் புன்செய் நன்மை யாக வும் - அங்கு பாடு பட்ட பஞ்சை மக்கள் பசிய டங்கவும்
கட்டுப் பாடு என்று சொல்லும் கதை ஒழிக்க வும் - பெரும் 'கள்ளச் சந்தை' என்று சொல்லும் கொள்ளை போக்கவும்
சங்க டங்கள் தந்து நிற்கும் சாதிப் பூசல்கள் - எனும் சஞ்ச லங்கள் தீர்ந்து நன்மை சார்ந்து வாழவும்
அமுதமான தமிழ்மொழிக்கு அன்பர் கூட வும் - பல அறிஞர் கூடி நல்ல நுால்கள் ஆக்கி வைக்க வும்
பொங்கல் பொங்க வேணும், அன்பு பொங்கி வாழ வேணு மே - நல்ல மங்க ளங்கள் பொங்கி இந்த மாந்தர் வாழ வேணு மே
104 மறுமலர்ச்சிக் கவிதைகள்
(பொங்)
(பொங்)
(பொங்)
(பொங்)
(பொங்)
(பொங்)

கோட்டாறு தே. ப. பெருமாள்
அருட்கடலே வாழ்க!
உலகமக்கள் உள்ளமதில் கோவில் கொண்டே உண்மையெனும் பேரொளியை எங்கும் வீசி இலங்குகின்ற அறத்தலைவா! அன்பின் சோதி! இவ்வுகலம் வியந்திடவே அஹிம்சை யென்னும் வலுப்படையால், இணையில்லா வீரத்தாலே வாழ்விழந்த பாரதத்தின் தளைத கர்த்தே உலைவில்லாச் சுதந்திரத்தை வாங்கித் தந்த உத்தமனே! அருட்கடலே! காந்தீ வாழ்க!
ஏழைமக்கள் பசிநீங்கி இந்த நாட்டில் இன்புறவும், செல்வரெலாம் சோம்ப லென்னும் பாழகற்றி உழைத்திடவும், உயர்வு தாழ்வுப் படுமோசம் தொலைந்திடவும், வஞ்சப் பொய்ம்மை ஊழலினைக் குழிதோண்டிப் புதைத்துப் பின்னர் ஒழுங்கிற்கும், நேர்மைக்கும் உயிர்ப்புத் தந்த தோழனெங்கள் அறியாமை இருளைப் போக்கும்
சுடர்க்கதிரோன் காந்தியினாற் பெருமை கொள்வோம்!
மதவெறியால் மக்களெலாம் விலங்கே யாகி மறக்கொலைகள் இந்நாட்டில் மலிந்த வேளை இதயத்தைத் தாக்கிடத்தன் உயிரைக் கவ்வும் ஏதமதை எண்ணாதே எங்கள் கோமான் விதவிதமாய் அன்புரைகளாற்றி யங்கே வெறியர்களின், மனமாற்றி யன்பு கூட்டி இதமாக யாவருமே இணைந்து வாழ இயன்றவழி கால்நடையாற் பலவும் செய்தார்.
மறுமலர்ச்சிக் கவிதைகள் | 105

Page 55
உணவிற்கு வழியின்றி வருந்தி வாடி, உலகத்தின் வாழ்வுதனை வெறுக்கும் மக்கள் இணையில்லாக் கைத்தொழிலை ஏற்பா ராயின் எந்நாளும் பட்டினியை மாய்த்து நிற்பார் பணிபுரிவோர்க் கிந்நாடு சொந்த மாகும்! பாட்டாளி இந்நாட்டின் மன்னராவார்! மணியான இம்மொழிகள் கூறி வாழ்வில் செயல்காட்டும் மஹாத்மாநீ வாழ்க! வாழ்க!
106 மறுமலர்ச்சிக் கவிதைகள்

கு.பெரியதம்பி
ஈழத்தாய்
ஈழத்துப் புத்திரர்கள் - ரத்தினத் - தீவத்துப் புத்திரர்கள் வாழத்துணிந்துநாம் ஒன்றுபட்டீழத் தாயை வணங்கிடுவோம்.
இந்து சமுத்திரத்தின் - நடுவே - சுந்தரமாய்த்துலங்கும் இந்தஇலங்கையெந் நாட்டுவளத்திற்கும் ஈடுகுறைந்திடுமோ?
பாத மலையுமுண்டு - பீதுறு - தால மலையுமுண்டு மோதியுயர்ந்து முகிற்குலங்கொட்டு மழையிற் குறைந்திடுமோ?
மாவலி கங்கையிலே - மற்றும் - பாய்வலி கங்கையிலே தாவி நுரைகள் திரளப்பரந்திடும் நீரிற் குறைந்திடுமோ?
காடு நிரம்பவெல்லாம் - உயர் - மேடு நிரம்பவெல்லாம் கூடிமகிழ்ந்து விதைத்துப்பின்நெல்லினைப் பாடி அளப்போமே.
தெங்கிற் படுபொருள்கள் - மலையிற் - பொங்கிடும் தேயிரப்பர் எங்குமிருந்திவை பெற்றுப்பின்னேகிடத் தங்கத்துடன்வருவர்
பெற்றிடும் முத்தினங்கள் - ரத்தினக் - கற்கள் பலவினங்கள் பெற்றிவைகொண்டுதம் நாடுகளேகிடக் கப்பல்திரள்குவியும்
வாழை கமுகினங்கள் - தானியம் - பாளைப் பனை பலாக்கள் நாளும்வளமுயர்ந்தோங்கிடக்காய்கள் காய்த்துக்குலுங்கிடுமே நன்மை தனிற்குறைந்தோ - வளத் - தன்மை தனிற்குறைந்தோ என்னகுறைவினால் இன்னலடைவது ஈழப்புதல்வர்கள்நாம்?
சாதிகள் பேசல்விட்டுச் - சமயப் - பூசல்கள் ஒயவிட்டுப் சோதர்நம்முட் பகைமையொழித்துநம் தாயைவணங்கிடுவோம்!
மறுமலர்ச்சிக் கவிதைகள் | 107

Page 56
சுவாமி விபுலாநந்த அடிகள்
பூஞ்சோலை காவலன்
புள்ளினங்க ளார்க்கும் புலரிப் பொழுதினிலே பள்ளியறைத் தீபம் பதிந்தணைய - மெள்ள அமளி துறந்தெழுந்தே னன்றலர்ந்து வாசங் கமழுமலர் மாலையொன்று கைக்கொண் - டமிழ்தனையாய் சோர்குழன்மேற் சூட்டினேன் சோர்விலா வான்வளிசேர் சாளரத்தி னண்டை தனித்திருந்தேன் - கோளில் இளங்கதிர்ச் செம்மை யியைந்த விடியல் வளங்கெழு நீள்வழியே வந்தா - னுளங்கவரும் நீர்மையான் றோள்சிரத்தி னித்திலத்தின் கோவை வெயில் சாரவொளி வீசுந் தனிமகுடஞ் - சேரவே பொங்குகின்ற வார்வத்தான் போந்தெங்கண் முன்றிநின்றான் எங்கே யவளென் றியம்பினான் - அங்கவன்றான் சொன்னமொழி கேட்டேன் சடரிழாய் நாணத்தால் இன்னாமை யுற்றங் கிருந்தேனால் - அந்நாள் இவளே வழிச்செல் விளையோய் நீதேடும் அவளிவளே யென்றே னலேன்.
மாலைப் பொழுதின் மணிவிளக்க மேற்றுகின்ற காலம் வருமுன் கவலையற்றுக் - கோலக் குழலைக்கை யாற்கோதிக் கொண்டிருந்தேன் பொன்னங் கழலோன் வரவினையான் கண்டேன் - அழகுசெறி செம்பரிதி யின்கிரணஞ் சேருமணித் தேர்பூட்டும் வெம்பரியின் வாயினுரை மேவவே- அம்பரத்திற் செங்களப மென்னத் தெருப்பூழி சேரவந்தான் எங்கே யவளென் றியம்பினான் - அங்கவன்றான் சொன்ன மொழிகேட்டுச் சுடரிழாய் நாணத்தால் இன்னாமை யுற்றங் கிருந்தேனால் - அந்நாள் இவளே வழிசென் றிளைத்தோய் நீதேடும் அவளிவளே யென்றே னலேன்
108 1 மறுமலர்ச்சிக் கவிதைகள்

வேனிலிரவின் விளக்கு மனைவிளக்க வானின் மலையமந்த மாருதமே - தேனிமிர்ப்பக் கீச்சுக்கீச் சென்னுங் கிளிப்பிள்ளை கூண்டினிலே பேச்சற்றுத் தூங்கும் பெரும்பொழுதில் - வீச்சரவிற் கென்றும் பகையா மிளமையிலின் வார்கழுத்தே யொன்றுநிறக் கச்சொன்று வந்தணிந்து - மன்றல் விரிபசும்புல் போன்றதொரு மேலாடை போர்த்தி வருவழிசேர் சாளரத்தை மன்னித் - தெருமுகமாய்ப் போவார், வருவார் பொருந்தா நடுநிசியில் ஆவியனையானை யெண்ணி யன்பகத்தில் - மேவுதலால் தேடிநொந்தோ யிங்கிவளே சிந்தைவைத்து நீவிரும்பி நாடுமவ ளென்றுரைத்தே னான்
OOO
திருவனையாய் செயலொழித்துச் செவிசாயம்மா செல்வரவர் வந்துநின்ற செய்திசொல்வேன் உரிமையுடன் கதவச்சங் கிலியைமெல்லென் ஒசையெழ வசைத்தனரஷ் வுண்மைதேராய் பரிபுரஞ்செம் பாதத்திற் பதறாவண்ணம் பாவையே வெளிவருவா யவரைக்காண்போம் திருவனையாய் செயலொழித்துச் செவிசாயம்மா செல்வரவர் வந்துநின்ற செய்திசொல்வேன்
மணமகளே குலமணியே மாலைக்கால வளியோவென் றெண்ணிநீ மயங்கவேண்டாம் அணிமதியம் மணிமுன்றி லிருளைநீக்கி யணைகின்ற விளவேனி லழகிதம்மா இணைவிழியைப் பூந்துகிலான் மறைத்துக்கொள்வாய் எழிற்கரத்திற் சிறுவிளக்கொன்றெடுத்துக்கொள்வாய் மணமகளே குலமணியே மாலைக்கால வளியோவென் றெண்ணிநீ மயங்கவேண்டாம்.
நானுற்றாலவரொடுநீமொழியாடாதே நாடியொரு புறமாக நண்ணுநங்காய் பேணித்தா னவருரைக்கும் வார்த்தைகேட்டுப்
மறுமலர்ச்சிக் கவிதைகள் | 109

Page 57
பேசாது நிலநோக்கிச் சார்வாயம்மா ஆணிப்பொன் பதித்தவளை யரற்றாவண்ணம் அணிவிளக்கங்கரத்தேந்தி யழைத்துள்வாராய் நானுற்றாலவரொடுநீமொழியாடாதே நாடியொரு புறமாக நண்ணுநங்காய்
வேலையின்னு மொழிந்ததின்றோ மின்னேபொன்னே விருந்தினரெம் முயிரனையார் மேவிநின்றார் சாலைவிளக் கேற்றிவைப்பாய் மாலைக்காலச் சடங்கிற்கு வேண்டுவன தருவாயம்மா சீலமிகு பூங்குழலை வகிர்ந்துவாசச் சிந்துரத்தால் வரிதீட்டிச் செவ்விசேர்ப்பாய் வேலையின்னு மொழிந்ததின்றோ மின்னேபொன்னே விருந்தினரெம் முயிரனையார் மேவிநின்றார்
மொழிபெயர்ப்பு மூலம்: ரவீந்திரநாத் தாகூர்
110 | மறுமலர்ச்சிக் கவிதைகள்

தில்லைச் சிவன்
பட்டணத்து மச்சினி
பார்த்துப் பார்த்துக் காத்திருந்த பட்ட ணத்து மச்சினி நேத்து வந்தா, அவவைப் பார்க்க ஆத்திரந்தான் வருகுது!
'சலச லென்று சரிகை காற்றில் அலை யெடுத்து வீசுது பளபளென்று மின்னிக் கண்ணைப்
பறித்துக் கொண்டு போகுது!
கையில் இருக்கும் வண்ணக் குடையும் கரணம் போட்டுச் சுழலுது! மெய்யிலிருந்து அத்தர் சென்ரு மேலும் மேலும் வீசுது!
கையில் லேஞ்சி வைத்துக் கொண்டு கண்ணை மூக்கைத் துடைக்கிறார் பையில் பெளடர் கொண்டு சென்று பகட்டி மினுக்கித் திரிகிறா!
கையைக் கையைத் தூக்கிச் சின்னக் கடிகாரத்தைப் பார்க்கிறா; காரைக் காணேன் என்று சொல்லிக் கடுமை யாகப் பேசுறா!
'கார் இரைந்து "ஹோன் அடித்துக் காலத்தோடு வந்ததும் காற்செருப்புக் கடக டென்னக் காரில் ஏறிப் போகிறார்
மறுமலர்ச்சிக் கவிதைகள் / 111

Page 58
பொழுது பட்டுப் பன்னிரண்டு மணியளவில் வருகிறா, 'பொழுது போக்குக் கேற்ற படம் என்று சொல்லிப் புழுகுறா!
பட்ட னத்து மச்சி னியைப் பார்க்கப் பயம் ஆகுது; கட்டிக் கொண்டால் வேறு சனியன் வேண்டா மென்று தோணுது!
112 ! மறுமலர்ச்சிக் கவிதைகள்

வித்துவான் வேந்தனார்
ஆட்டை வெட்டும் கத்திக்கு - உங்கள் ஆவிகொடுக்க வாருங்கள்
கோவில் முகத்துப் பலிகொடுக்கும் கொடுவழக்கை ஒட்டுவோம்; ஆவி கொடுத்துங் காந்தி போல அன்பு நெறியை நாட்டுவோம்
தெய்வத் தமிழர் கண்ட அன்பின் சிறப்பை யென்றும் போற்றுவோம்; சைவக் கொள்கை வாழ்க வென்று சாற்றிப் பலியை மாற்றுவோம்.
அன்பு நெறியைப் போற்றுங் கோவில் ஆட்டுப் பலியின் ஆக்கமோ? இன்ப நெறியின் உலக மிந்த இழிவழக்கை ஏற்குமோ?
அவிசொரிந்து வேள்வி கோடி ஆற்று கின்ற பேற்றினும் உயிர்புரந்த பேற்றை ஒம்பும் உண்மை தமிழ்க் கல்லவோ?
தெய்வ மாரக் குருதிப் பலியைச் செய்யும் வழக்கம் உண்டெனச் சைவ மாரும் நுாலில் ஏதுஞ் சான்று காட்ட முடியுமோ?
அன்புக் கடவுள் கோவில் முற்றம் ஆட்டுக் குருதி நாற்றமோ? என்பை உருக்கும் அன்பரானார் எவரு மிதனை ஏற்பரோ?
மறுமலர்ச்சிக் கவிதைகள் / 113

Page 59
கொல்லும் வேள்விக் கொள்கை கொண்ட கொடிய பண்பின் வடவரை வெல்லும் புத்தன் அன்பின் ஆற்றல் விருந்தளிக்கும் உலகெலாம்
கடவுள் பெயரால் உயிரைக் கொல்லும் காட்சி கண்டும் நாமெலாம் உடலில் உயிரைத் தாங்கி வாழ்தல் உண்மைத் தொண்டர் நகைக்கவோ!
ஆட்டை வெட்டுங் கத்திக் குங்கள் ஆவி கொடுக்குந்துணிவுடன் நாட்டைக் காக்கும் வீரத் தொண்டர் ஞாலம் போற்றக் கூடுங்கள்!
தோளைத் தட்டி வீறு கொண்டு தொண்டு செய்யச் சேருங்கள்! வாளைக் கொண்டு வெட்டி னாலும் வாய்மை வெல்லும் வாருங்கள்
114 1 மறுமலர்ச்சிக் கவிதைகள்

நடனம்”
பட்டிக்காட்டான் பார்த்த படம்
நேற்றுப் படம்பார்க்கப் போயிருந் தேன்நான் - அதை நினைக்க நினைக்கநெஞ்சு நிறையுதே அண்ணே! சோற்றுக்கு வழியின்றிச் சீரழிந்தாலும் - நீ சாகமுன் ஒருமுறைபோய்ப் பார்த்துவா அண்ணே
என்னென்ன அற்புதங்கள் கண்டிட்டே னண்ணே - அதில் எதைத்தான் நானுனக்குச் சொல்லுவே னண்ணே! வன்னப் பறவையெலாம் பாடுதே அண்ணே - அங்கு வானத்திற் சந்திரனும் தோன்றுதே யண்ணே!
கண்ணைப் பறிக்குமிளம் கன்னிகளண்ணே - அங்கு காதல்விளையாடிமிகக் களிக்கிறாரண்ணே! எண்ணம் பறிகொடுத் தங்கவர்களுடனே - நான் ஏதோ கதைப்பதுபோல் இருந்தது அண்ணே!
அப்பன் அறுமுகனும் ஆனை முகனும் - அங்கு ஆளாக வந்துஅருள் புரிகிறாரண்ணே! தப்பை யுணர்ந்துகைகள் கூப்புமுன்னமே-அவர் தாவிப் பறந்தோடி மறைகிறாரண்ணே!
பாட்டன் கொப்பாட்டனிதைப் பார்த்தாரோ அண்ணே - அன்றி அப்பனுக்கும் ஆச்சிக்கும் தெரிந்ததோ அண்ணே! ஏட்டுப் படிப்பையெல்லாம் படித்ததே யல்லால் - அவர் ஏதுமே அறியாம லிறந்திட்டா ரண்ணே!
மறுமலர்ச்சிக் கவிதைகள் / 11

Page 60
பின்னிணைப்பு
t கவிஞர்களும் கவிதைகளும் மறுமலர்ச்சி இதழ் இல.
நவாலியூர் க. சோமசுந்தரப் புலவர்
கற்பகப் பழம் 8 இலவுகாத்த கிளி 12
மஹாகவி (து. உருத்திரமூர்த்தி)
இரவு 2 காதலுளம் 4 அலையெடுத்த கடலென. 8 காதலியாள் 2
யாழ்ப்பாணன் (வே. சிவக்கொழுந்து)
சக்தியின் இருப்பிடம் 3 முதற் துயரம் 7 பொல்லாப்பு செய்யாதே III தொழிலாளர் விதியிதுவோ? 13 இனி உலகில். முதல்வன் யார்? 18 அன்பின் திறன் 19 23 ($ g חו_ו
சோ. நடராஜன்
எங்கே காணலாம்? I மோட்டு விக்கிரகம் 3
கழுதை!
நாவற்குழியூர் நடராஜன்
நாங்கள் I பெரிதும் சிறிதும் 2 சுழற்சி 6 கேட்டியோ பாரதீ! 8 சிறை O எனக்கு அது முடியாது 12 தெரியாதா? பச்சை பச்சையாய். I6 என் மனைவிக்கு 17 எம்முன் இருந்த தெய்வம் 19
116 மறுமலர்ச்சிக் கவிதைகள்

சாரதா (க.இ. சரவணமுத்து)
துயிலெழுச்சி 2
வாழ்க்கைச் சுவடு 5
எங்கள் நாவலன்! O
அதுவும் ஒரு காலம் IO
வேண்டாத புத்திமதி! 12
வேண்டும் புத்திமதி! 15
வேளை வரும்! 16
கனக்கவேன் கதைகள் ஐயா! 17
நிதானமில்லை! 18
வரதர் (தி. ச. வரதராசன்)
மீசையை முறுக்கி விட்டு 8
அம்மான் மகள் 13
கலைவாணன்
உலாவிடுவேன் 4
கதிரேசன்
வேற்றுமை 5
வ.இ.
இலங்கை மாதாவுக்கு! 6
சோ. தியாகராஜன்
வாழ்வுத் திரையில். II
காவலூர்க் கைலாசன்
புது யுகத்தில்! 14
கோட்டாறு எஸ். ஆதிமூலப்பெருமாள் ஆரியர்
பக்தியால் ஆகுமோ? 15
பரமேஸ்
குயிலின் பதில் 15
கவிஞன்
பொங்கலோ பொங்கல்! II 7
கோட்டாறு தே. ப. பெருமாள்
அருட்கடலே வாழ்க! 17
மறுமலர்ச்சிக்
கவிதைகள் / 117

Page 61
கு.பெரியதம்பி
ஈழத்தாய் 18
சுவாமி விபுலாநந்த அடிகள்
பூஞ்சோலைக் காவலன் 2O
தில்லைச் சிவன்
பட்டணத்து மச்சினி 2O
வித்துவான் வேந்தனார்
ஆட்டை வெட்டும் கத்திக்கு - உங்கள்
ஆவிகொடுக்க வாருங்கள் 2I
நடனம்
பட்டிக்காட்டான் பார்த்த படம் 21
118 / மறுமலர்ச்சிக் கவிதைகள்


Page 62
வரலாற்று ஆவணம்
ஈழத்தில் நவீன தமிழ்க் கவிதையின் 6 புள்ளியாக 1940களை நாம் கருதலாம் கட்டத்தில் உருவாகிய நாவற்குழியூர் அ. ந. கந்தசாமி மஹாகவி முத பிற்காலத்தில் மிக முக்கியமான கவி வளர்ந்தனர். 1943ல் யாழ்ப்பாணத்தில் மறுமலர்ச்சிச் சங்கமும் 1946 முதல்
அச்சங்கம் வெளியிட்ட மறுமலர்ச்சி ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சியி உந்துசக்திகளாக அமைந்தன என்பது பல தசாப்தங்களாக ஒரு வரலாற்றுச் ெ மட்டும் இருந்த இச் சஞ்சிகையில் சிறுகதைகளை நண்பர் செங்கை அண்மையில் தொகுத்து ਉ) வாசகர்களுக்கு வழங்கினார். இப்பொ மாணவன் திரு செ. சுதர்சன் இச்சஞ் வெளிவந்த கவிதைகள் அனைத்தை தொகுப்பாக்கி இருக்கிறார். 23 ம இதழ்களில் வெளிவந்த 2 கவிஞர் கவிதைகள் இத்தொகுப்பில் இடம் பெ
நிர்ணயிப்பதற்கும் இந்நூல்
வாய்ப்பாக அம்ை இ றது. அரிதி இத்தொகுப்பை உருவாக்கிய இரு ெ நம் பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியவ
- Genghui arrier. நுஃமான் ■
ISBN 955-544-1-2
||||
9" 7895.55' 0.04411
ത въставо оo
CONCEP.
 

[ချဲ႕) pbd IIIIIIIIIIIIIIIIIII
002 MARUMALARCH KAVI THAIKAL
C C O AsO c