கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மீண்டும் வசந்தம்

Page 1


Page 2


Page 3

மீண்டும் வசந்தம்
(பரிசு பெற்ற சிறுகதைகள்)
நெல்லை தைாங்கி
ஆனந்த வெளியீடு

Page 4
நூற்பெயர்
நூலாசிரியர் பக்கங்கள் அச்சிடுவோர்
பதிப்புரிமை முதற்பதிப்பு விலை தொலைபேசி
Author
Pages Printers CopyRight FirstEdition Price
TP
ISBN
: “மீண்டும் வசந்தம்”
(பரிசு பெற்ற சிறுகதைகள்)
: திருமதி ஆனந்தராணி நாகேந்திரன். : i - xiii 1-128 : லெட்சுமி ஒவ்(f) செற் பிறிண்டஸ்,
நாவலர்மடம், நெல்லியடி
0214909133
: ஆசிரியருக்கு : 2011 ஐப்பசி
300/ : 0770344614
: Mrs. Anantharani Nagenthiran.
Music.Tr, B.A, Dip. In. Edu : i-xiii 1-130
: Lechchimi Printers TP 02149091.33 : Author
: 2011 October : 300/=
- 0770344614

தி * &en 2
*܊ ܚܝ ܫ ܩ ܧ ܢܝ܀ و ... و سیص • ஃஅன்த் தெய்வித்திற்கு 3 ஐயிரண்டு திங்கள் வரை அடிவயிற்றில் எமை சுமந்து உயிர் தந்த உத்தமி எம் தாயல்லவோ - அவள் அன்னையல்ல எங்கள் அபிராமி - அவள் பெண்ணல்ல எங்கள் மகமாயி. O. O. O. O. O. O. P. e o O O
கருவறையில் எமைத்தரித்து அழகாக உருவகித்தாள் கதியின்றி அவள் அலைய விடுவதில் நியாய மென்ன சுகம் பல அவள் துறந்து சொத்தாக எமை நினைத்தாள் சோர்வின்றி உடல் உழைப்பால் சோகமின்றி எமை வளர்த்தாள்
அண்னையின் அடிபணிந்தால் அவனியில் புகழ் பெருகும் அவள் உளம் வருந்திக் கொண்டால் அத்தனையும் பொசுங்கிவிடும் பத்தரை மாற்றுத்தங்கம் பசும்பொன் அவளல்லவோ இத்தரை மீதினிலே ஈழல்லா அகல் விளக்கோ
பகல் இரவுதுயிலாமல் பாலூட்டி எமைக் காத்தாள்
பற்றுடன் பாசத்தையும் இரத்தத்துடன் சேர்த்தளித்தாள் வித்தகனாய் நாம் உயர விளக்கங்கள் பல அளித்தாள் கற்றபடி நாம் ஒழுகி பெற்ற மனம் குளிரச்செய்வோம்
தாய்க்கு பின் தாரம் என்ற தத்துவத்தையார் உணர்வார்
தள்ளாத வயதினிலே முள்ளாக ஒதுக்கிடுவார் உல்லாச வாழ்வுதண்ணில் சல்லாபம் அடித்திடுவார் ஊட்டிய அண்பு தண்ணில் குற்றம் குறை களைந்தெடுப்பார்
அம்மா என்ற வார்த்தைதானே குழந்தையின் முதல் வார்த்தை அகிலத்தில் இது போன்ற இணைவார்த்தை யாதுமுண்டா அறிவில்லா தீவன் கூட இசைத்திரும் இவ்வார்த்தை அவனியில் புகழ் பரப்ப உரைப்போமே இவ்வார்த்தை
பாராட்டுப்பரிசு, தேசியமட்டம் 2010
MOMO

Page 5
அணிந்துரை
ஈழத்து இலக்கிய உலகில் நாவல், சிறுகதை, நாடகம் என பல ஆக்க இலக்கியங்களில் தடம்பதித்துக் கொண்டிருக்கும், பெண் எழுத்தாளர்களின் ஒருவர். தான், “நெல்லை லதாங்கி." இவர் வெளியீடு செய்யும் மீண்டும் வசந்தம்’ என்ற பரிசுபெற்ற சிறுகதைகளுக்கான தொகுப்பிற்கு அணிந்துரை வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
க.பொ.த. உயர்தரத்தை நிறைவு செய்த காலத்தில் எழுத்துலகிற்குள் பிரவேசித்த இவர், இரண்டு தசாப்தங்களின் பின் நாவல்கள் இரண்டு, நாடகநூல் ஒன்று என வெளியீட்டினை நிறைவு செய்து நான்காவது வெளியிட்டினுள் பிரவேசிப்பதன் மூலம் தன்னாலான சிறந்த ஒரு இலக்கியப்பணியை ஆற்றியுள்ளார்.
இவரது படைப்புக்கள் சிறந்த ஆக்கங்களென முத்திரை குற்றப்பட்டு பல ஆக்கத்திறன் போட்டிகளில் வெற்றியும் ஈட்டியுள்ளது.
இன்றைய கல்வி அமைப்பு வாசிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த போதும் முப்பரிமாண இலத்திரனியல் சாதனங்களின் வருகையினால் மாணவர்கள் வாசிப்பதில் பெருமளவு ஆர்வம் காட்டுவதில்லை. இது மாணவர்களுக்கு மட்டுமல்லாது பெரியவர்களுக்கும் பொருந்தும். தொலைக்காட்சி, திரைப்படம், கையடக்கத்
iv

தொலைபேசி போன்றவற்றின் வருகையினால் பெரியவர்களும் இதிலே மூழ்கி தமது கற்பனை வளத்தை இழந்து விடுகின்றனர். வாசிப்பதன் மூலமேயே அதில் குறிப்பிடப்படும் விடயம் தொடர்பில் கற்பனை எழுகின்றது. அக்கற்பனையே அவர்களது சிந்தனையைத் தூண்டுவதற்கு ஏதுவாகின்றது. முப்பரிமாணப்படங்களின் மூலம் கற்பனைக்கு இடமில்லாது முழுவதுமே கட்புலக் காட்சியாக்கி காட்டப்படுவதனால் கற்பனை செய்வதற்கான வாய்ப்பு அறவே இல்லாது போகின்றது. கற்பனை இல்லாதபோது சிந்தனைக்கும் புத்தாக்கத்திற்கும் ஏது இடம் ?
இன்றைய பெற்றோர்கள் தமது பிள்ளைகளை படைப்பாக்கத்திறன் கொண்டவர்களாக வளர்க்க வேண்டுமாயின் நல்ல நூல்களை வாசிக்க கற்றுக் கொடுத்தல் வேண்டும். இதற்கு அவர்கள் ஒரு நாளில் அரைமணி நேரமாவது நூல்களை வாசித்து, தமது பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக இருத்தல் வேண்டும்.
இத்தகைய ஒரு பின்புலத்தில் வாசிப்பதற்கு துTணிடுதலை ஏற்படுத்தக் கூடிய வகையிலான மொழிவளத்தைக்கையாளும் கற்பனைத்திறன் கொண்ட கதைகளை உருவாக்கும் 'நெல்லை லதாங்கி அவர்களின் எழுத்தை நோக்குதல் வேண்டும்.
சிறந்த ஆளுமை மிக்க படைப்பாற்றலும் நிறைந்த முதிர்வும் கொண்டது இவரது கதைகள். அதற்கு இவர் கையாளும் மொழிவளம், கருத்துான்றிக் கவனிக்கத்தக்கது.

Page 6
அனர்த்தங்கள் பலவற்றிற்கு உள்ளாக்கப்பட்டுச் சிக்கிச்சுழலும் மனித மனங்களைப்படம் பிடித்துக்காட்டி பல இடர்ப்பாடுகளைச் சொல்லி நின்றாலும் முடிவில் ஒரு சுமூகத்தன்மையைப் பேணும் முறைமை சிறப்புக்குரியது.
இவர் ஒரு இசை ஆசிரியையாக இருந்து மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு மட்டும் உழையாது சமூகத்திற்கும் இலக்கிய நெஞ்சங்களுக்கும் பெரும்பணி ஆற்றுவது சாலச்சிறந்தது.
இவருடைய கதைகள் யாவும் பாராட்டுப் பெற்ற கதைகளாகவும் பரிசுபெற்ற கதைகளாகவும் அமைவது இவரது எழுத்துப்புலமையையும் எழுத்தின் மீது கொண்டுள்ள பற்றுதலையும் காட்டி நிற்கின்றது.
நான்காவது படைப்பினை பிரசவிக்கும் இவரது ஆற்றலும் முயற்சியும் மென்மேலும் தொடரவேண்டுமென வாழ்த்தி நிற்கின்றேன்.
முத்த ராதா கிருஸ்ணன் மேலதிக மாகாணக்கல்விப் பணிப்பாளர்,
all-ossessib.

வாழ்த்தரை
தமிழ் மொழியானது கிரேக்க, லத்தீன், கிபுறு,
சீன, அராபிய மொழிகள் போன்று செம்மொழியாக ஆயிரம் வருடங்களின் பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதினை நாம் அறிவோம். எம் மொழியின் சிறப்பே வாழ்மொழியாகத் தொடர்ந்து நிலைத்திருப்பதற்கு காரணமாகும். அத்துடன் உலகிலுள்ள பல்வேறுமொழிகளின் சிறப்புக்களையும் எம்மொழி கொண்டிருப்பதும் அதன் சிறப்புக்கான காரணமாகும்.
ஜப்பான் மொழியின் பாரம்பரியம், பிரான்சிய மொழியின் கவிதைச் சிறப்புக்கள், ஜேர்மனிய மொழியின் செழிப்பு, இத்தாலிய மொழியின் அழகிய சொற்களின் சிறப்பு, கிரேக்க மொழியின் சொல்வளம், ல்த்தின் மொழியின் தெளிவாக சுருங்கச் சொல்லல், சிறப்பு இவை அத்தனையும் தன்னகத்தே கொண்டது தமிழ்மொழி.
மொழி என்பது உலக ஒட்ட வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் வளம் பொருந்தியதாக பரிணாமம் கொள்ளல் வேண்டும். அதற்கேற்ப எம்மொழி விரிவடைந்துள்ளது. தகவல் தொழினுட்ப காலம் என்று கூறப்படும் நவீன காலத்திற்கு ஏற்ற வகையில் எம்மொழியும் வளர்ச்சி கண்டுள்ளது.

Page 7
இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் 25 வருடகாலமாக எம்மொழி கணனி மூலம் கற்பிக்கப்படுகின்றது. எம்மொழியின் வாழ்வியல் புலவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஆர்வலர்கள், சுவைஞர்கள், ஆராய்ச்சியாளர்களில் தங்கியுள்ளது. எழுத்தாளர்கள் பட்டியல் மிக நீண்டதாகும். அப்பட்டியலில் தனது ஆக்கங்கள் மூலம் தனக்கென இடம் பிடித்த ஈழத்து எழுத்தாளர் “நெல்லை லதாங்கி” என்ற புனை பெயர் கொண்ட ஆனந்தராணி நகேந்திரனுக்கு எனது வாழ்த்துக்கள். அவர் “மீண்டும் வசந்தம்” என்ற பெயரிலான பரிசு பெற்ற சிறுகதை தொகுப்பு ஒன்றினை வெளியிடுவதுன்மூலம் இலக்கிய உலகிற்கு சிறந்த ஒரு பணியாற்ற உள்ளார்.
அவரிடமிருந்து மேலும் அபூர்வமான ஆக்கங்கள் பலவற்றை ஈழத்து தமிழ் இலக்கியம் எதிர்பார்த்து நிற்கின்றது. அப்பணியில் அவர் ‘அர்த்தமாக தொடர்ந்து செயற்பட என் வாழ்த்துக்கள்.
சுந்தரம் டிவகலாலா
Upordoornro Caruaroaromrir, (asabafundurb é9gagandhasari, обавитиLфећајор еконода.
OnLdibus aspidius Hofrasaracionib)

முன்னுரை
இறை அருளால் இதுவரை குறுநாவல் (2005) நாடகம்(2007) நாவல்(2009) என சில வெளியீடுகளில் கால் பதித்து 2011இல் "மீண்டும் வசந்தம்” என்ற சிறுகதைத் தொகுப்பினை வெளியீடு செய்வதில் என் உளம் மிகுந்த புளகாங்கிதம் அடைகின்றது. "துணிச்சலுடன் நூல்கள் வெளியிடுவது என்பது ஒரு அசாத்தியமான முயற்சி தான்' என அன்புடை நெஞ்சம் குறுநாவலுக்கு வாழ்த்துரை வழங்கிய பெருந்தகை திரு.ந.அனந்தராஜ் (வடமாகாணம், கல்வித்திணைக்களம்) அவர்கள் குறிப்பிட்டது முற்றிலும் உண்மையே.
அந்த ரீதியில் இறுதியாக வெளியிடு செய்த நூலின் பிரதிகள் எனது வீட்டு நூலகத்தட்டினுள் முடக்கப்பட்டு விட்டாலும் எனது எழுத்துருவானது சிறிய அளவிலான வாசகர்களையாவது சென்றடைய வேண்டும், என்ற அவாவினால் இந்நூல் வெளிவருகின்றது.
தேசியமட்டம், மாகாணமட்டம், பிரதேசமட்டம் என்று பரிசுபெற்று, பாரட்டுப்பெற்ற ஆக்கங்களை மறையவிடுவதும் இலக்கிய உலகிற்கு நான் இழைக்கும் துரோகமாகவே கருதுகின்றேன். தேசியமட்டத்தில் பரிசு பெற்ற ஐந்து சிறுகதைகள், பிரதேசமட்டத்தில் பரிசு பெற்ற மூன்று சிறுகதைகள், பிரசுரமான நான்கு சிறுகதைகளென பன்னிரண்டு சிறுகதைகள் இந்நூலில் அடக்கப்பட்டுள்ளன.
இது போன்ற சில சிறுகதைகளுக்கான சான்றிதழ்கள் இருந்த போதிலும் அவற்றிற்கான பிரதிகள் கைவசம் இல்லாத பட்சத்தில் அவற்றினை இந்நூலில் சேர்க்க முடியாது இருப்பது மனவருத்தத்தைத் தருகின்றது.

Page 8
இது தவிர பத்திற்கு மேற்பட்ட சிறுகதைகள் போட்டிக்காக அனுப்பப்பட்டும், கைவசமும் இருக்கின்றன. அவையும் இறைசித்தம் இருந்தால், எதிர்வரும் ஆண்டுகளில் ஒரு தொகுதியாக வெளிவரும் என்பதில் ஐயமில்லை.
இந்நூல் வெளியீட்டிற்கு ஒத்துழைப்பு தந்தவர்கள் காத்திரமானவர்கள், மதிக்கப்பட வேண்டியவர்கள். அந்தப்பார்வையில் தொகுப்பிற்கு முத்தாய்ப்பு வைத்தது போல் அணிந்துரை வழங்கி சிறப்பித்த சி.முத்து இராதாகிருஸ்ணன். (மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர், வடமாகாணம்) அவர்களுக்கும்
வாழ்த்துரை வழங்கிக் கெளரவித்த மதிப்பிற்குரிய திரு.சுந்தரம் டிவகலாலா (முன்னாள் செயலாளர், கல்வி, பண்பாட்டு அலுவல்கள், விளையாட்டுத் துறை அமைச்சு, வடக்கு கிழக்கு மாகாணம்) அவர்களுக்கும் அறிமுக உரையை முகமலர்ச்சியுடன் தந்துதவிய குப்பிழான் ஐ.சண்முகன் அவர்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடையவளாக இருப்பேன்.
மேலும் முன் அட்டைப்படம், தொகுதியில் வரும் படங்கள் என்று தன் கைவண்ணத்தை ஒவியமாக்கிய செல்வன் இ.மேனன் அவர்கட்கும் எனது நன்றிகள்.
இந் நூலை அழகுற அச்சிட்டு உதவிய லெட்சுமி பதிப்பகத்தினருக்கும் எனது மனமுகந்த நன்றிகள்.
நெல்லை லதாங்கி

1)
2)
3)
4)
5)
(b)
7)
s)
9)
O)
II)
12)
தொகுப்புகளாக உள்ளே
மீண்டும் வசந்தம்
உதவு கோல்
சிறை
தானம்
ஆற்றல்கள் மழுங்கடிக்கப்படுகின்றன
காற்றம் அவளும்
இண்ரவியூ
உயர்ந்த உள்ளம்
முதமை சாபக்கேடல்ல
நாய்படாப்பாடு
மனங்கொண்ட மாங்கல்யம்
முடிச்சு
xis
O
直5
3 O
4直
52
58
74.
8.
92
99
19

Page 9
கலாசார அலுவல்கள் தேசிய மரபுரிமைகள் அமைச்சினால் நடாத்தப்பட்ட அரசு சேவையாளருக்கான நிருமான போட்டித்தொடர்
தேசியமட்டம், பாராட்டு பரிசு
1) Saltbb agfhpsb - 2005 2) Ogatsmåb - 2006
கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சு நடாத்தும் அரச ஊழியர்களின் ஆக்கத்திறன்களுக்கிடையிலான போட்டித் தொடர்
தேசியமட்டம் பாராட்டுப்பரிசு
8 ിഞ്ഞു - 2010
கலாசார அலுவலகள் திணைக் களம் நடாத்தும் பிரதேசமட்டப்போட்டி, கரவெட்டி பிரதேசமட்டம் திறந்தபிரிவு
4) dypoaro and oligo - 2002a: 2&fb Lib 5) Tarb - 2007ab 28b Lib 6) IBMülIILIrsulib - 20118 félib LíD
அகில இலங்கை கலை இலக்கிய சங்கம் நடாத்திய அமரர்
கந்தையா வடிவேலு ஞாபகார்த்த சிறுகதைப் போட்டி
தேசியமட்டம் சிறந்த ஆக்கம்
7) ஆற்றல்கள் மழுங்கடிக்கப்படுகின்றன
புதிய சிறகுகள் லங்கா கலைவிழா 2011இல் விசேட பரிசு.
8) உயர்ந்த உள்ளம்
பிரசுரம் 9) காற்றும் அவளும் (ஈழநாடு
10) 2diyaflı, தினக்குரல்) 11) மனங்கொண்டமாங்கல்யம் கவின்தழிழ் 2011
வடமாகாண தழிழ்மொழி தினச்சிறப்பு மலர்
12) முடிச்சு
யாழோசை, வீரகேசரி வாரஇதழ்
xii

மீண்டும் வசந்தம்
கிருமேகங்கள் இருணி டு Dഞ!p வ ரு வ த ற‘க ர ன அறிகுறிகள் ஆங்காங்கே தென்பட்டன. முற்றத்தில் 羧、 காய்ந்து கொண்டிருந்த l பன்னாடை, கொக்காரை, தூக்கம்பாளை, மட்டை 3W* போன்றவற்றை ஒடி ஒடிப்
பொறுக்கினாள் அகல்யா &) என்ற பன்னிரண்டு வயது
( மதிக்கத்தக்க சிறுமி. பொறுக் கி முடிந்ததும் வானம்" சிறிது வெளிறத்தொடங்கியது, ஈர விறகுகளை வீணாகப் பொறுக்கி விட்டேன் என்று மனமுடைந்தாள் அகல்யா. ஆனாலும் உலர்ந்த உடை உலராத உடை யாவற்றையும் கொடியிலிருந்து வேறு வேறாக எடுத்தாள்.
'மழை வந்தால் தம்பி கஜன் நனையப் போகின்றானே"
அந்தக்கவலையும் இடையே சூழ்ந்து கொண்டது. அகல்யா அன்னை அபிராமியை ஒரு சில நிமிடம் நினைத்துக் கொண்டாள். அவளுடைய நினைவுகள் பின்னோக்கி சுழல ஆரம்பித்தது.

Page 10
அகல்யாவின் அன்னை தலையில் விறகுப் பொதியுடனும் கையில் பை ஒன்றை பாரமாக தூக்கிய வண்ணமும் படலையை தாண்டி உள்ளே வந்து கொண்டிருந்தாள். அன்னை சுமக்க முடியாமல் சுமந்து வருவதைக் கண்டதும் “தாங்கம்மா” என்று ஓடிச்சென்று கையில் கொண்டு வந்த உரப்பையை வாங்க எத்தனித்தாள்.
“பாரமம்மா, நீ தூக்கமாட்ட.ய்" அன்னை அபிராமி கொடுக்க மறுத்தாள். “தாங்கம்மா” அடம்பிடித்தாள் அகல்யா. "நாலடி தூரம் தானை இருக்கு, அம்மா கொண்டு வாறன்". அன்னையின் சொற்படி மெளனமாக அன்னையைப் பின் தொடர்ந்தாள். வாயிற் திண்ணையில் பையை வைத்து விட்டு விறகுக்கட்டை முற்றத்தில் போட்டாள் அபிராமி. விறகுக்கட்டைச் சுற்றியிருந்த கயிற்றை அவிழ்க்க முற்பட்டாள் அகல்யா.
"அவசரக்குடுக்கை சும்மா அது இதுக்கை கை வைக்காதை. பாம்பு பூச்சி இருந்தாலும்." அபிராமி கூறிமுடிக்கவில்லை.
“அது உங்களுக்கும் தானை குத்தியிருக்கும் நீங்கள் தலையிலை சுமந்து வரயில்லை." தாயாரை மடக்கி விட்டேன். என்ற பெருமிதத்துடன் பதிலுக்கு இவ்வாறு கேட்டாள்.
இச்சம்பவம் மனதிற்குள் வந்து நிழலாடியதும் நெஞ்சம் ஈரமாகியது. கண்கள் குளம் ஆகின. ஏதோ அன்னை மறுக்க மறுக்க வலியச்சென்று கற்ற பழக்கங்கள் இப்போது தனித்து விடப்பட்ட நிலையில் கைகொடுத்து உதவி செய்தது.
 

வெளிறிய வானத்தில் மீண்டும் சாதுவாக இருள் கெளவத்தொடங்கியது. மழைத்துளி துமி துமியாக விழத் தொடங்கியது. தலையில் புத்தகப்பையை வைத்தவண்ணம் ஓடி வந்து கொண்டிருந்தான் குட்டித்தம்பி கஜன்.
“ஓடிவாடா தம்பி, மழை பெலக்கப் போகுது”
என்று கூறியவண்ணம் வளையில் தொங்கிய தாயின் பாவாடையை எடுத்து தம்பியாரின் தலையைத் துவட்டினாள்.
‘விடக்கா தலை நனைய இல்லை”
துவட்டிய கைகளைத் தட்டி விட்டான் கஜன். கையில்" வைத்திருந்த பாவாடையை ஒரு தடவை உற்று நோக்கினாள் அகல்யா. தாயார் மாறி மாறி உடுத்தும் பாவாடைகளில் ஒன்று. அகல்யாவின் கண்களிலிருந்து காட்டாற்று வெள்ளம் போல் கண்ணி அலை திரண்டு வந்தது.
"அம்மா, அம்மா”
என்று பாவாடையை நெஞ்சில் அணைத்தபடி முனகினாள். நெஞ்சம் குமுறியது. பாவாடையை முகர்ந்து முத்த மழை பொழிந்தாள். நெஞ்சிலே குமுறிய துக்கம் அடித்தொணிடை வாயிலாக வந்து நா வழியாக வெளியேறியது.
"நாங்கள் என்னம்மா பாவம் செய்தோம்? எங்களைத் தனிய விட்டிட்டுப்போக எப்பிடி அம்மா மனம் வந்தது? துடித்துப் போனாள் அகல்யா. ஆறுதல்படுத்த யாரும் இல்லை. மீண்டும் நினைவுகள்.
வறுமை என்றாலும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது அகல்யாவின் குடும்பம். அன்னை அபிராமி தனது

Page 11
கணவனைத்தானே தெரிவு செய்து கொண்டதால் அபிராமியின் பெற்றோர் அவளைத் தள்ளி வைத்தனர். காதில் இருந்த தோட்டுடன் வெளியேற்றப்பட்டவள் அபிராமி.
அபிராமியின் கணவன் காந்தனும் கைப் பிடித்தவளைக் கண் கலங்காமல் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தனக்குத் தெரிந்த எல்லாத் தொழிலிலும் ஈடுபடுவான். குழந்தைகளும் ஒன்று இரண்டாகி இரண்டு மூன்றாகி ஐந்தாகி விட்டது. தெரிந்த தொழில்களின் மூலம் கிடைத்த வருமானம் குன்றிப்போக தெரியாத தொழிலாகிய கடல் தொழிலைத் தெரிவு செய்து கொண்டான்.
கடலுக்குச் செல்லும் நேரத்தையும் தூரத்தையும் குறைப்பதற்காக கடல் தெரியுமளவில் அரசாங்கம் கொடுத்த காணி ஒன்றில் சிறு குடில் ஒன்றை அமைத்துக் கொண்டான். அதிகமான மீன்கள் வலையில் அகப்படும் காலங்களில் வருமானமும் பெருகிக் கொள்ளும் . அவ்வாறான சந்தர்ப்பங்களில்,
“நகரத்தில் காணி வாங்கி அழகான சிறிய வீடொன்று என் அகல்யாக்குட்டிக்கு கட்டித்தருவேன்” என்று கூறிக்கொள்வான் காந்தன்.
சேர்த்த சொத்துக்களை, உடன் பிறந்த ஆண் சகோதரங்களை, அன்பாய் ஆசையாய் வளர்த்த பெற்றோரை சுனாமி ஆழி அலை அள்ளிக்கொண்டு போனதை இந்தப்பச்சைப்பாலகள்கள் தாங்குவார்களா?
"அக்கா தேத்தண்ணியைத் தாவன்”
வந்து நின்று கெஞ்சினான் கஜன். கண்களைத்
 

துடைத்துக்கொண்டு கஜனை அணைத்து உச்சி மோர்ந்தாள் அகல்யா. அவளுக்கு இருக்கும் ஒரே ஒரு உறவு ஆறுதல் எல்லாம் கஜன் தான். கஜனுக்கும் எல்லாம் அகல்யா தான். ஆனால் அதைப்புரிந்து கொள்ளும் பக்குவம் கஜனுக்கு இல்ல்ை
அநாதரவாக நின்றவர்களுக்கு கைகொடுத்து உதவுபவர்கள் அருகிலி வசித்த ஒரு பணி பான குடும்பத்தவர்கள். மனிதர்கள் என்ற ரீதியில் ஒன்று பட்டவர்கள். சாதி என்ற ரீதியில் வேறுபட்டவர்கள். மனிதர்களே உண்டாக்கிக்கொண்ட சட்ட திட்டங்களில், வரம்பு முறைகளில் உயர்ந்தவர்கள் எனக்கருத்தில் கொள்ளப்படுபவர்கள்.
அகல்யா குடும்பத்தினர் தீண்டத்தகாத இனத்தைச் சேர்ந்தவர்கள் என ஆறறிவு படைத்த மானிட வர்க்கத்தால் வகுக்கப்பட்ட முடிவுக்கு உட்பட்டவர்கள். ஆனாலும் அந்தப்பண்பான குடும்பம் சாதியை மறந்து அவர்கள் துயரத்தில் பங்கு கொண்டது. தேவைக்கேற்ப உதவிகளை வசதிகளைச் செய்து வந்தார்கள்.
ஒரு சமயம் அகல்யா முதல் முதலாக பிட்டுக்கு மா குழைப்பதற்காக சுனாமி நிவாரணம் மூலம் கிடைத்த பானையில் நீரைக் கொதிக்க வைத்து மாவுக்குள் ஊற்றிய போது கொதி நீர் அந்தப்பிஞ்சுக்கரத்தைப்பதம் பார்த்துவிட்டது.
"stb DT"
என்று அலறிய அலறல் பக்கத்து வீட்டில் வசித்த ராகவன் வேணி குடும்பத்திற்கு கேட்ட போது பதறி அடித்துக்கொண்டு ஓடிவந்தார்கள். அகல்யா வேதனையில் "அம்மா, அம்மா” என்று அலறிய வண்ணம் கையை

Page 12
உதறிக்கொண்டு அங்கும் இங்கும் மாறி மாறி நடந்து கொண்டிருந்தாள். கஜன் செய்வதறியாது முழித்துக் கொண்டிருந்தான். வேணியைக் கண்டதும்
"அன்ரி" என்று வேணியை நோக்கி ஓடிவந்தாள். வேணி தடவிக் கொடுத்தாள். கையை ஊதிக் கொடுத்தாள். ராகவன், ஒடிச்சென்று தனது விட்டில் இருந்த பற்பசையை எடுத்து வந்து கொதி நீர் ஊற்றுப்பட்ட இடத்தில் பூசி விட்டாள். அகல்ய்ாவின் முனகல் சற்றுக் குறைந்தது.
"அகல்யா எரியுதாம்மா” வினவினாள் வேணி. "கொஞ்சம் குறைவாய் இருக்கன்ரி" வேணி குடும்பத்தை நன்றியுடன் நோக்கினாள் அகல்யா. கையை நன்றாக பார்த்தாள் வேணி நல்ல வேளை பொங்கவிலி லை. பொங் கிப் புண் ணாக்கினாலி அந்தச்சின்னஞ்சிறிசுகளை யார் கவனிப்பார்கள்"? வேணி மனதிற்குள் நினைத்து ஆறுதல் பட்டுக்கொண்டாள்.
அது தான் முதன் முதலாக வேணி குடும்பம் அகலி யாவுடன் பழகுவதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கியது. அதன் பின் அடிக்கடி அகல்யா, கஜன் சுகநலத்தை விசாரித்துக் கொள்வார்கள். தங்களாலான உதவிகளைச் செய்தும் வந்தார்கள்.
அகல்யாவின் குடும்பத்தை யூரிரும் விசாரித்து தேடி வந்ததில்லை. அகல்யாவின் பெற்றோர் சாதி மாறி காதலித்து திருமணம் செய்து கொண்டது தான் அதற்கு காரணம் என அகல்யா மூலம் அறிந்து கொண்டாள் வேணி.
அவ்வாறிருந்தும் ஒரு நாள், தூரத்து உறவினர் ஒருவர் அகல்யாவையும் சகோதரனையும் அழைத்துச்
O6)
 

மின்மும் வசந்தம்
செல்வதற்காக வந்திருந்தார். வந்தவர் முன் பின் அறிமுகம் இல்லாதவராகையால் அகல்யா மறுத்து விட்டாள். வேணியும் எவ்வளவோ சொல்லிப்பார்த்தாள். அகல்யா கேட்டபாடில்லை.
"அன்ரி எங்களாலை உங்களுக்கு கரைச்சலா" கண்களில் சிறிது நீர் மல்க கேட்டாள் அகல்யா. எங்கோ தூரத்தே விளையாடிக்கொண்டிருந்த கஜன் ஓடி வந்து அகலி யாவைக் கட்டிக் கொணி டு புதரியவரை முறைத்துப்பார்த்தான்.
“கஜன் உங்கடை மாமாவாம் இவர் உங்கள் இரண்டு பேரையும் தன்னோடை கூட்டிப்போக வந்திருக்கிறார். சம்மதம் தானை" வேணி அறிமுகத்துடன் வினாவ அகல்யாவைக் கட்டிக் கொண்டு நின்ற கஜன் அகல்யாவின் பின்புறமாக ஒளிந்து கொணி டான். வந்தவ்ரும் எவ்வளவோ சொல்லிப்பார்த்தார். அக்ல்யா மசியவில்லை. சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பார்கள் அது போல இவரிகளுக்கு கிடைக்கும் உதவிப்பணம், சுனாமி நிவாரணம் இவை கூட வந்தவரின் அக்கறைக்கு காரணமாய் இருக்கலாமல்லவா!
வேணி சிறிது நேரம் சிந்தித்தாள். தன்னாலும் அவர்களுக்கு முழுமையாக உதவ முடியாது. வந்தவருடனும் போக மறுக்கிறார்களே! பன்னிரண்டு வயதும் ஆறு வயதும் கொண்ட இந்தப்பிஞ்சுகள் எப்பிடிக்காலத்தை கழிக்கப்போகிறார்கள்? தாய் அல்லது தந்தையை இழந்த பிள்ளைகளே ஒழுங்காக வளர்கிறார்கள் இல்லை. ஏன் தாய் தந்தை உள்ள பிள்ளைகளே தறுதலைகளாகத் திரியும் இந்தக்காலத்தில். 99

Page 13
வேணியால் ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. மீண்டும் அதை இதைச் சொல்லி வந்தவருடன் அனுப்ப முயற்சித்தாள் வேணி முடியவில்லை. வந்தவருக்கு "சிறிது காலம் பொறுத்து வாருங்கள் ஐயா, இவர்கள் தனித்து வாழுறது என்பது முடியாத காரியம். அகல்யா இப்போ சிறுமி. இந்த வருடமோ அடுத்த வருடமோ அவள் பருவமடையலாம். அப்போது இவர்களுக்கு யார் காவல்? அதாலை கொஞ்ச நாளாலை வந்து பாருங்கள்”
வேணியின் வார்த்தையைக் கேட்ட பெரியவர் அகல்யாவையும் கஜனையும் மாறி மாறிப் பார்த்து விட்டு வெளியேறினார். ஏமாற்றத்துடன் திரும்புகிறார் என்பதை அவர் முகம் காட்டிக்கொண்டது.
நாட்கள் சில உருண்டோட சிறிய தாய் என்று ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி வந்து நின்றாள். அந்தப் பெண்மணியையும் முன் பின் காணாத அகல்யா மருண்டு நின்றாள். வேணி அன்ரியை விட்டுக் கஜனை அழைத்து வரச்செய்தாள்.
பார்ப்பதற்கு எளிமையான தோற்றம். அன்பான சாந்தமான முகம். சிறிது நேரம் கதைத் ததல் அகல்யாவையும் கஜனையும் அக்கறையாகப் பார்த்துக் கொள்வாள் என்பதை புரிந்து கொண்டாள் வேணி.
"அகல்யா, இவ உங்கடை அம்மாவின்ரை ஒன்றை விட்ட சகோதரியாம். அவவைப் பார்த்தாலே தெரியுது. உங்களை நன்றாக கவனிப்பா என்று" வேணி கூறி முடிக்கவில்லை,
“எனக்கு பன்னிரண்டு வயதாகியிட்டுது வேணி அன்ரி. இது வரை சொந்தம் கொண்டாட ஒருத்தரும் வரஇல்லை. இப்ப வந்திட்டினம்" கோபமாக அகல்யா கூறினாள்.
 

“அகல்யா என்ன பேச்சுப்பேசுறாய்? உங்கடை நிலமை தெரிஞ்சு உதவ வாறவையை இப்பிடியே கதைக்கிறது?’ சிறிது கோபமாக கூறினாள் வேணி. சிறிது நேரம் மெளனம் நிலவியது. மெளனத்தைக்கலைத்தாள் வந்த அந்தப்பெண்மணி.
என்னமாதிரி செல்லமாய் வளர்ந்த பெண் அபிராமி. சாதி மாறி திருமணம் முடிச்சு, எல்லாரையும் இழந்து எல்லாத்தையும் இழந்து. இப்ப அவளையும் நாங்கள் இழந்து நிற்கிறம்.
ஒரு சிறு பெருமூச்சுடன் கண்களில் நீர் வடிந்தும் வடியாமலும் கூறிமுடித்தாள். இவ்வாறு பழையகதைகள், புதிய கதைகள், சுனாமி பேரலையால் மக்கள் பட்ட அவலங்கள், கண்ட அநுபவங்கள் என்றெல்லாம் பலவற்றையும் வேணியும் வந்த பெணி மணியும் பேசிக்கொண்டார்கள். அகல்யாவும் கஜனும் அவர்களின் கதைக்கு காது கொடாமல் தங்கள் - பாட்டிலி விளையாடிக்கொண்டிருந்தார்கள். ஆனாலும் அவர்கள் கதைத்த கதைகள் இடைஇடையே காதில் விழுந்ததால் பெற்றோர், சகோதரர்கள், மனக்கண் முன் வந்து போய்க் கொண்டிருந்தார்கள்.
எவ்வளவு கலகலப்பாக வாழ்ந்த குடும்பம், அடிபட்டு உண்ட உணவு, அடிபட்டு விளையாடிய விளையாட்டுதாயுடன் படுத்து உறங்குவதற்கு போட்டி போட்ட விதம் யாவும் அகல்யாவுக்கு இப்போது நடந்தது போல் இருந்தது. துன்பமான நினைவுகள் கூட மீட்டிப் பார்க்கும் போது ஒரு இதமான சுகத்தை உண்டு பண்ணுகிறதல்லவா.
"அது சரி தங்கைச்சி! மூன்றுபிள்ளையஸ், தாய், தந்தை ஐந்து பேருக்கும் எவ்வளவு தொகை குடுப்பினம்?”

Page 14
வந்த காரியத்துக்கு இறங்கினாள் அந்தப்பெண்மணி.
அகல்யாவும் சுயநினைவிற்கு திரும்பினாள். "மொத்தமாய் இரண்டு இலட்சம் குடுத்தவை. இரண்டு பேருடைய பெயரிலையும் பாங்க்கிலை போட்டிருக்கிறம்" வேணி கூறவும்
“அதுக்கிடையிலை குடுத்திட்டினமே? எங்கடை பக்கம் இன்னமும் குடுக்கஇல்லை. பெண்மணியின் முகத்தில் சற்று ஏமாற்றமும் சோகமும் கலந்திருந்தது. இதனை கவனிக்கத்தவறவில்லை வேணி.
"அப்ப சாப்பாட்டுக்கு என்ன செய்யுதுகள்? மீண்டும் வினாவைத் தொடுத்தாள் பெண்மணி. “நிவாரணமாய் உணவுப்பொருட்கள் குடுக்கினம். மாதாமாதம் கிடைக்கிற உதவிப்பணத்தையும் இரண்டு பேற்றை கணக்கிலும் போடப்போறம். வளர வளர செலவு அதிகரிக்குமெல்லே”
வேணி விழாவாரியாகக் கூற "அப்ப ராசா வீட்டுப்பிள்ளையளி எண் டு சொல்லுங்கோ, குடுத்து வைச்சதுகள்"
கூறியவாறு அமர்ந்திருந்த திண்ணையை விட்டு எழுந்து கொண்டாள் வந்த பெண்மணி. வேணிக்கு உலகமே சுழல்வது போன்ற உணர்வு என்ன மனிதரப்பா? இப்பிடிப பட்டமானிடரும் இந்தப்பூமியிலை இருக்கிறதாலை தான் இந்த அழிவுகளும் ஏற்படுகிறதா?
“பார்த்திர்களா அன்ரி. இவர்களை எல்லாம் நம்பி எங்களை ஒப்படைக்கப் பார்த்தீர்களே”
வேணி இருவரையும் அணைத்துக் கொண்டாள். இவ்வளவிற்கும் வேணியும் மூன்று பிள்ளைகளுக்குத் தாயானவள். அவளால் இவர்களைப் பொறுபேற்க முடியுமா?
 

நல்ல மனதோடை வலியத்தேடிச் செய்யும் உதவிகள் மற்றவர் கண்களுக்கு நன்றாகப் படாதே உலகத்தை நன்கு புடை போட்டு வைத்திருந்தாள்.
மாலை ஆகி இருள் சூழத் தொடங்கியது. பாடங்களைப்படித்து விட்டு இரவு உணவையும் உண்ட பின் படுக்கைக்குச் சென்றார்கள் இருவரும். கள்வர்களுக்குப் பயப்பிடவேண்டிய தேவை இருக்கவில்லை. காரணம் களவு போவதற்கென்று அங்கு ஒன்றும் இருக்கவில்லை. எல்லாவற்றையும் சுனாமி என்ற அரக்கன் தான் அள்ளிக்கொண்டு போய்விட்டானே! நிவாரணத்தில் கொடுத்த நுளம்புவலை, 3 கதிரை, லாம்பு இப்பிடி கொஞ்சக் கொஞ்சப் பொருட்கள்.
இருவரும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார்கள். "அக்கா" என்று அலறி அடித்தவாறு அகல்யாவைக்கடந்து அணைத்துக்கொண்டான் கஜன். அகல்யாவும் சற்றுப்பயந்து விட்டாள். சமாளித்தவாறு தனது பயத்தை வெளிக்காட்டாமல் “என்ன தம்பி” கனவு ஏதாவது கண்டியா? என்றவாறு அருகிலிருந்த லாம்பைத்திண்டினாள். "அங்கை பாரக்கா" பயத்துடன் கூறிய கஜன் கையை மட்டும் நீட்டிக்காட்டி கண்களை மூடிக்கொண்டான். இரண்டு மாதகாலமாக துணிந்து தனித்து படுத்த அகல்யாவை பயப்படச்செய்து விட்டான் கஜன்.
"அது ஒண்டும் இல்லை தம்பி, பேசாமல் படு” தட்டிக் தொடுத்தாள் 9856 busT.
"இல்லை அக்கா அங்கை பாருங்கோ" மீண்டும் கையால் காட்டி விட்டு கண்களை மூடிக்கொண்டான்.
"அண்டைக்கு அந்த அங்கிள் வந்தவர். இண்டைக்கு

Page 15
இந்த அன்ரி வந்தவா. நீ ஒருதரோடையும் போகாமல் இஞ்சை இருந்து சா” பயம் காரணமாக கஜன் சொன்ன வார்த்தையை பெரிதாக எடுக்கவில்லை அகல்யா உலகம் தெரியாத பையனல்லவா? அவன் சொல்வதில் என்ன தப்பு? நாலு நாட்கள் கடந்துவிட்டால் எந்த நல்லவரும் மாறிக் கொள்வார்கள். இது தம்பிக்கு எங்கை விளங்கப்போகுது? அகல்யாவுக்கு எல்லாவற்றையும் நினைக்க அழுகை வருமாப்போல் இருந்தது.
வேணி அன்ரி எவ்வளவு நல்லவா. அவவே எங்களை விரும்புகிறா இல்லை. எந்த நல்லவர்கள் எங்களை ஏற்கப்போகிறார்கள்?
ஒரு தடவை யூனிசெவ் மூலம், ஒரு வெளிநாட்டுத் தம்பதியினர் அழைத்துப்போக வந்திருந்தார்கள். அகல்யா ஒத்துக்கொள்ளவில்லை. எங்களுடைய இனமே எங்களுக்கு ஒரு வழி காட்டாத போது வேறு இனத்தவர் எப்பிடி எம்மீது உண்மையான அன்பைச் செலுத்துவார்கள். ஏதாவது ஆச்சிரமத்தில் போய்த்தங்கினால் அவர்கள் சரி சமமாக வழிநடத்துவார்கள்.
ஆனால் பெற்றோருடன் கொஞ்சிக் குலாவிய மனையை விட்டுப்போக அகல்யாவால் முடியவில்லை.
கஜனை மடியில் வைத்து தட்டிக்கொடுத்தவாறு அகல்யா சிந்தித்துக்கொண்டிருந்தாள். இன்று சிவராத்திரி தான். நாளை பாடசாலை. அங்கு தூங்கி வழிந்தால் ஆசிரியர்கள் திட்டித்தீர்ப்பார்கள். இவ்வாறு எத்தனை சிவராத்திரி வரப்போகிறதோ. மனதிற்குள் ஒரு மூலையில் பயமும் இருந்தது. தானும் பயந்து கொண்டால் கஜனை
 

எப்பிடி சமாளிப்பது? சிந்தித்தவளின் கண்களில் தூக்கம் எட்டிப்பார்க்க கஜனை மெதுவாகப்படுத்திவிட்டு தானும் உறங்கிக் கொண்டாள்.
உறங்கி சிறிது நேரம் தான் இருக்கும். கோழி கூவும் சத்தத்தைத் தொடர்ந்து காகம் கரையும் சத்தமும் கேட்டது. துடித்துப்பதைபதைத்து எழுந்தாள் அகல்யா. கஜனைப்பார்த்தாள். எந்த வித கவலையுமின்றி உறங்கிக் கொண்டிருந்தான்.
மறுநாள் காலைக்கடனை முடித்துவிட்டு சுனாமி நிவாரணத்தில் கிடைத்த குக்கரில் தண்ணிரைக்கொதிக்க வைத்தாள். ஒருவாறு வேலைகளை முடித்து தானும் தம்பியுமாக பாடசாலை சென்று மீண்டும் வீடு வந்து அவசர அவசரமாக உலையை வைத்து சுனாமி நிவாரணத்தில் கிடைத்த பச்சை அரிசி ஒரு சுண்டை உலையில் இட்டாள். காகம் கரைந்த வண்ணம் இருந்தது. காகம் கரைந்தால்" தாயார் சொல்லும் வார்த்தை நினைவுக்கு வந்தது. நெஞ்சம் கலங்கியது. காகத்தைப் பார்த்தவாறு.
"காக்கையாரே காக்கையாரே எங்காக்கள் வருகில் தத்தி அழு. உங்காக்கள் வருகில் பறந்தழு" என்று ஏதோ ஒரு ஆதங்கத்துடனும் எதிர்பார்ப்புடனும் கூறினாள். என்ன அதிசயம காகம் தத்தி தத்தி அழுதது. “எங்களைத் தேடி ஆர் வரப்போகினம் காக்கையாரே"? மீண்டும் காக்கை தத்தித்தத்தி அழுதது. தண்ணிரைத் தெளித்தாள். காகம் பறந்து சென்றது.
"அகல்யா"
என்று ஒரு சத்தம். அன்னை அபிராமியின் குரல். மனப்பிரம்மை என நினைத்த வண்ணம் காலையில் துருவிய தேங்காய் குறையை எடுத்துத் துருவினாள். மீண்டும்,

Page 16
"அகல்யாம்மா”
என்றது அன்னையின் குரல். 'தம்பி
பயந்தது நியாயம் தான் என மனதிற்குள் கூறிக்கொண்டாள் அகல்யா. இரவு நடந்த சம்பவம் பயத்தை ஏற்படுத்தியது.
"அகல்யாக்குட்டி” பின்னால் ஒலித்தது போன்று இருந்தது. சுற்று முற்றும் மிரண்டு பார்த்து விட்டு மெது மெதுவாக பின்னால் திரும்பி பார்த்தாள்.
"அம்மா”
என்று ஓடி வந்து அபிராமியைக் கட்டிக்கொண்டாள் அகல்யா. “இவ்வளவு நாளும் எங்களை விட்டிட்டு எங்கையம்மா இருந்தனி? தாயின் நெஞ்சில் தனது பிஞ்சுக்கரங்களால் குத்தியவாறு கேட்டாள். இருவர் கண்களிலும் ஆனந்தக்கண்ணிர் "எங்கையம்மா இருந்தாய்? மீண்டும் அதே கேள்வி
"ஆஸ்பத்திரியிலை இருந்தனான் அம்மா" நெற்றியில் இருந்த வடு அதை உறுதி செய்தது. நாங்கள் உயிரோடை இருக்கிறம் எண்டு உங்களுக்கு எப்பிடித் தெரியும்" மீண்டும் துருவினாள் அகல்யா.
“சுனாமி அலை வரயுக்கை நீங்கள் ரியூசனுக்கு போனனிங்களெல்லே. அதாலை நீங்கள் எங்காவது உயிரோடை இருப்பியள் எண்டு தெரியும். ஆனால் இஞ சையே தனிச்சு இருப்பியள் எண் டு நான் நினைக்கயில்லை”
சுனாமி தந்த இழப்பை பல வழிகளில் அறிந்த அபிராமிக்கு இரு செல் வங்களும் கிடைத்தது பெரும்பேறல்லவா! அதே போல அந்த பிஞ்சு உள்ளங்களின் வாழ்விலும் மீண்டும் வசந்தம் ஏற்பட வைத்தது, இறைவன் கருணை அல்லவா!
 

மீண்டும் வசந்தம்
(UP ச்சக்கர
நாற்காலியைத் தனது கைகளால் சுழற்றியபடி ஹோலிலிருந்து தனது
சென்று கொண்டிருந்தாள் சுவீற்றி.
க்ண்களிலிருந்து பொல பொலவென நீர் உதிர்கிறது.
"அம்மா அம்மா” O
என்ற முனகல், சிறிது விம்மலுடன் வெளிப்படுகிறது. போட்டோ பிரேமில் அன்னையின் படம். இவர்களைப் பற்றித் தெரியாதவர்கள் யாராவது பார்த்தால் சுவீற்றியின் சகோதரி என்று தான் அவள் அன்னையைச் சொல்வார்கள். அந்த அளவிற்கு அன்னையின் முகத்திலும் உருவத்திலும் இளமை 261186)Tigug).
மெல்லிய தேகம். சுழன்று சுழன்று ஓடி ஆடி வேலை செய்யும் பாங்கு. இவை யாவும் சுவீற்றியின் கண்களின் முன்னே வந்து நிழலாடியது. நினைவுகள் சுகமானவை, பசுமையானவை என்றெல்லாம் புத்தங்களில் வாசித்த

Page 17
மீனமும் வசந்தம்
சுவீற்றிக்கு துயர நினைவுகள் எப்பிடி சுகமானது? அது மீட்டிப் பார்க்கும் போது ஏதோ ஒரு சுகம் இருப்பதால் தானே மீட்டிப் பார்க்கிறோம்.
சுவீற்றியின் நினைவுகள் பின்னோக்கிச் சுழல ஆரம்பிக்கின்றன. அப்போது பதின்மூன்று வயதுச் சிறுமி. பாடசாலையில் சம்பியன் கப்பைத் தட்டியவள். “சுவிற்றியா! இங்கே வாம்மா” அன்பொழுக ஆசிரியர்கள் அழைப்பார்கள். அந்தளவிற்கு ஒழுக்கத்திலும் முதல் தர மாணவியாகத் திகழ்ந்தாள். பெற்றவர்களை மனதாரப் பாராட்டுவார்கள் ஆசிரியர்கள். அந்தப் பாராட்டுக்கெல்லாம் உரியவள் அன்னை மலர்விழிதான்.
பெயருக்கேற்ற விழிகள். அதிலே மதி மயங்கி மலர்விழியைச் சொந்தமாக்கியவன் தான் விசாகன். முதலிலே அன்னையிடமும் சுவீற்றியடமும் அணி பாகவும் அக்கறையாகவும் ஒழுகியவன், வேண்டாத நட்புகளால் நற்பண்பிலிருந்து சிறிது பிறழ்வாக நடக்கத் தொடங்கி விட்டான்.
ஒரு நாள் மது போதையில் தள்ளாடி வந்தான் விசாகன். பின்னால் பெண் ஒருத்தி. அன்னையின் அழகுக்கு முன்னால் அந்தப் பெண்மணி அவலட்சணமாகத் தென்பட்டாள் சுவீற்றிக்கு.
"மலர்விழி இங்கை வா" அதட்டலுடன் அழைத்தான் விசாகன். அன்னையும் கட்டுண்ட கோழி போல் முன்னே வந்து நின்றாள்.
"இவளுடைய பெயர் கீர்த்தனா. கீர்த்தி என்று எல்லோரும் அழைப்பார்கள், என்னுடன் ஆபீசிலை ஒன்றாக வேலை பார்க்கிறாள். இவள் ஒரு அனாதை. எங்கடை வீட்டிலை இவளுக்கு ஒரு றுமை ஒதுக்கிக்குடு" கூறியவாறு
 

நடந்தவன். மளமளவென்று ஓரளவு தள்ளாடியபடி மாடிப்படிகளில் ஏறித் தனது அறைக்குச் சென்று விட்டான்.
"அம்மா, யார் அம்மா இந்த அன்ரி"? மகளின் கேள்விக்குப் பதில் கூறமுடியாதவளாக அவ் இடத்தை விட்டு நகர்ந்து கொண்டாள் மலர்.
நாட்கள் வராங்களாகி வாரங்கள் மாதங்களாக கீர்த்தன என்ற அந்தப் பெண்கள்ப்பமாய் இருப்பதை அறிந்து கொண்டாள் மலர்விழி அறிந்த மறுகணமே வீட்டில் பூகம்பம் வெடித்தது. விசாகனும் தனது தவறை ஏற்றுக்கொண்டான். முன்பே ஆபீசில் ஏற்பட்ட தொடர்பா? அல்லது வீட்டில் ஏற்பட்ட தொடர்பா? ஒன்றையுமே அலசி ஆராய விரும்பாதவளாக சுவிற்றியையும் அழைத்துக் கொண்டு தனது பிறந்த இடத்தை நாடிப் போனாள்.
யுத்தம் முடிந்து ஓய்ந்து போன போர் நிறுத்தக்காலப்பகுதி அது மிதிவெடிகள் யாவும் அகற்றப்பட்டு விட்டன என்ற தகவலை ஊர்ஜிதம் செய்த பின்பு தான் அவ் இடத்திற்கு காலடி எடுத்து வைத்தாள் மலர்விழி. வைத்த மறுகணமே 'அம்மா’ என்ற அலறலுடன் தரையில் விழுந்தாள் சுவீற்றி. ஒரே புகைமண்டலம் “சுவிற்றி" என்று கத்திய வண்ணம் முன்னே ஓடிச் சென்று சுவீற்றியை நோக்கினாள் மலர். இரத்தத்தில் நோய்ந்திருந்தாள் சுவீற்றி "அம்மா அம்மா" என்ற முனகல் அன்னையின் உள்ளத்தைக் கலக்கியது.
“சுவிற்றி சுவீற்றி” தலையை மடியில் வைத்துக் கதறினாள் மலர்விழி. பட்டகாலே"படும் கெட்டகுடியே கெடுமி என்பது போலாகிவிட்டதே மீண்டும் மீணி டும் தலையிலடித்துக்கதறினாள். அக்கம் பக்கம் சிலர்
இலைதளங்கி)

Page 18
மீண்டும் வசந்தம்
குடிவந்திருந்தார்கள். மலர்விழியின் கூக்குரலைக் கேட்டு அவர்களில் சிலர் ஓடிவந்து அகப்பட்ட ராக்டர் ஒன்றில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள்.
அங்கே உடனடியாக ஆப்ரேசன் தியேட்டருக்கு கொண்டு செல்லப்பட்டது. தியேட்டர் வாசலில் மலர் துடிதுடித்தவாறு அங்கும் இங்கும் உலாவினாள். முடியவில்லை. நெஞ்செல்லாம் அடைப்பது போன்று இருந்தது. நெஞ்சைப் பொத்தியவாறு அருகிலிருந்த வாங்கு ஒன்றில் சரிந்து விட்டாள்.
சிறிது நேரத்தில் "அம்மா நீங்கதானே சுவீற்றியின் அம்மா" நர்ஸ் ஒருத்தி தட்டி எழுப்பினாள். மயக்கமா? உறக்கமா? எது என்று தெரியாத அளவில் சில நிமிடங்கள் சென்றிருக்கின்றன. கையெழுத்திடுவதற்கான ஒரு பத்திரம் ஒன்றை நீட்டினாள் நர்ஸ். மலர்விழிக்கு உடம்பெல்லாம் நடுங்கியது. கையெழுத்து வாங்குவதென்றால் பெரியதொரு ஆப்ரேசனாகத்தானே இருக்க வேண்டும். கைகள் நடுங்க வாங்கிக் கொண்டாள். வாங்கிய காகிதத்தைப் பார்த்தவாறு "ஐயோ எனது பிள்ளையின் கால். பார்த்துப் பார்த்து வளர்த்த பிள்ளையின் எதிர்காலம்.” வாய் புலம்பியது. கண்களில் நீர் முட்டி மோதின. நர்ஸ் ஆறுதல்ப்படுத்தினாள். மலர்விழியால் ஆறுதல் கொள்ள முடியுமா? ஒருவாறு தன்னைச் சுதாகரித்தவாறு கையெழுத்து வைத்துக் கொடுத்துவிட்டு மீண்டும் வாங்கிலில் சரிந்து விட்டாள்.
நாட்கள் நகர்ந்தன. மலர்விழி தனிமரமானதுடன் வேண்டாத துயரமும் சேர்ந்து கொண்டது. ஒடி ஆடி விளையாடிய மழலை ஊன்று கோல் உதவியுடனும் முச்சக்கரவண்டியின் உதவியுடனும் உலாவுவதைப்பார்க்க
 

பார்க்க இரத்த மெல்லாம் கொதித்தது. நாடி நரம்புகள் எல்லாம் புடைத்தன. விசாகன் எட்டியே பார்க்கவில்லை. அதை மலரும் விரும்பவில்லை. மலர்விழியின் துயர ரேகை சுவீற்றியின் மனதில் ஒரு தைரியத்தைக் கொடுத்திருக்க வேண்டும். அன்னையின் கண்களிலிருந்து கண்ணிர் வடிவதை சுவீற்றி விரும்பவில்லை.
மீண்டும் அயலிலுள்ள பிரபல்யமான பாடசாலை ஒன்றில் கல்வி கற்கத் தொடங்கினாள். அனைத்துப் பாடங்களிலும் முதல் தர புள்ளிகளைப் பெற்று அப்பாடசாலையிலும் முதல்தர மாணவியாகத் திகழ்ந்தாள். சுவீற்றியின் வளர்ச்சி மாணவர்கள் சிலர் மனதில் பொறாமை என்னும் தீயைக்கொழுந்து விட்டு எரியச்செய்தது. அவளது ஊனத்தைக்கூட பொருட்படுத்தாது அவள் மீது பொறாமை கொண்டார்கள். ஊனத்தை ஒரு குறையாக நினைத்து நையாண்டி செய்தார்கள். எதையுமே காதில் வாங்காதவளாக கல்வியில் ஆர்வம் காட்டினாள் சுவிற்றி.
நாட்கள் நகர சிறுமியாய் இருந்த சுவீற்றி பருவப்பெண் அடைந்து விட்டாள். அந்த இன்பமான நாள் சுவீற்றியையும் மலரையும் பொறுத்தவரை துன்பமான நாளாகவே இருந்தது. ஒரு பெண்ணைப்பொறுத்தவரை அவள் உடல் அமைப்பு தொடக்கம் வாழ்க்கை பூராவுமே பல இடர்ப்பாடுகளைச்சந்திக்க வேண்டி இருப்பது யாவரும் அறிந்த உண்மை. அதிலும் நொண்டியான அவளால் தனித்து எவ்வாறு வாழமுடியும்? அன்னை மலர், இருக்கும் மட்டும் சகல பணிவிடைகளையும் செய்வாள். அன்னையின் பின்பு.
சுவீற்றி சிறுமியாக இருந்தாலும் இவை யெல்லாவற்றையும் நினைத்துப்பார்ப்பதுண்டு. அன்னை மலரும்

Page 19
சுவீற்றியுடன் இது பற்றிச்சகஜமாகக் கலந்துரையாடுவதும் உண்டு.
“சுவிற்றி உன்னை நினைத்தால் தானம்மா என் நெஞ்செல்லாம் வெடிக்குது. கடவுள் ஏன் எனக்கு இந்தத் தண்டனையைக் கொடுத்தார்?"
மலர் வேதனையின் உச்சி விளிம்பில் நின்றவாறு இவ்வாறு பேசினாள். "அம்மா என்னம்மா? நீங்களா இப்பிடிப் பேசுறிங்கள்? உலகத்தில்ை எத்தனை எத்தனை பேர் எத்தினை விதமான அவலங்களோட்ை வாழுறார்கள். நான் மருத்துவமனையில் இருந்த போது பார்த்தனிங்கள் தானேயம்மா. எண்னைவிட இரண்டு கால்கள் கூட இல்லாமல்." சுவிற்றி முடிக்கவில்லை.
“வேண்டாமம்மா வேண்டாம். உதுகளை எனக்கு ஞாபகப்படுத்தாதை"
அன்னை மலர், ஒருவித பயம் கலந்த கலக்கத்துடன் கூறினாள். அந்த அளவிற்கு அவள் மனம் சுவிற்றியினால் கலங்கிக் கொண்டிருந்தது. ஆறுதலுக்கு ஒரு சகோதரம் கூட இல்லையே. விசாகனும் அந்தக்கீர்த்தனா என்ற கீர்த்தியுடன் நாலைந்து பிள்ளைகளைப்பெற்று வாழ்ந்து கொண்டிருப்பதை அறிந்திருக்கிறாள். இந்த விதத்திலும் பெண்கள் தானே பாதிக்கப்படுகிறார்கள். விசாகன் தேடியது போல் மலரால் இன்னொரு வ்ாழ்க்கையைத் தேடமுடியுமா? 'அம்மா என்னழி மா யோசிக் கிறியளி ? யோசிக்கவேண்டிய துன்பப்பவேண்டிய நானே சந்தோஷமாய் இருக்கிறன் நீங்கள்."
நின்று நிதானித்துக்கூறிய சுவீற்றி தாயாரைகிகட்டி அணைத்துக்கொண்டாள்.
காலங்கள் சில கழிய சிறுமியாய் இருந்த சுவீற்றி உயர்கல்வி கற்கும் நிலைக்கு உயர்ந்து விட்டாள். சுவீற்றி
- ܖ *" ܖ 1 Usag og
 
 

கல்வியைத்தொடர இருக்கும் கல்லூரிக்கு அருகில் வீடு ஒன்றை அமர்த்திக்கொண்டாள் மலர். கணவனைப் பிரிந்த ஒரு கைம்பெண்ணால் வாழ்க்கைச் செலவுகள் உயர்ந்த அக்காலக்கட்டத்தில் உழைப்பின்றி வாழமுடியுமா?
ஏதோ அன்னை தந்தை சேர்த்து வைத்த சொத்துக்கள், கைத்தொழில்கள் செய்வதால் கிட்டிய வருமானம். புலமைப்பரிசில் பெற்றதன் மூலம் சுவிற்றிக்கு கிடைத்த வருமானம் இவைகளின் மூலம் இவர்களது வாழ்க்கைச்சக்கரம் சுழன்று கொண்டிருந்தது.
கல்லூரிக்கு முச்சக்கரவண்டியின் உதவியுடனும் ஊன்று கோல் உதவியுடனும் முதன் முதலாக காலடி எடுத்து வைத்த அந்த நாள். சகல மாணவர்களது பார்வையும் சுவீற்றியையே சுற்றிச்சுற்றி வந்தன. அவர்கள் முக பார்வையில் பலப்பல அர்த்தங்கள் வெளிப்பட்டதை உணர்ந்து கொண்டாள் சுவீற்றி. ஒரு மாதிரியாகப் ‘போய்விட்டது. ஊனப்பட்டவர்களை இவர்கள் கண்டதே இல்லையா? கண்களை இழந்த மாணவர்களே எத்தனை எத்தனை பேர் பெரிய சாதனைகளைச் சாதித்திருக்கிறார்கள். வெற்றிகளைக் கண்டிருக்கிறார்கள். அற்லிஸ்ற் நான் ஒரு நொண்டிதானே. நான் உயர்கல்வி கற்பது இவர்களுக்கு ஏன் புதுமையாக இருக்கிறது?
மனதிற்குள் சிந்தித்தவாறு விரிவுரை நடைபெறும் மண்டபத்தை நெருங்கியதும் வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு ஊன்று கோல் உதவியுடன் ஓர் இருக்கையில் சென்று அமர்ந்தாள். சிறிது நேரத்தின் பின்பு விரிவுரையாளர் ஒருவர் வந்ததும் யாவரும் எழுந்து குட்மோர்னிங் சொன்னார்கள் சுவீற்றியும் ஊன்று கோல் உதவியுடன் எழுந்து ஏனைய மாணவர்களுடன் நின்று கொண்டாள்.

Page 20
"B SJibLDT"
சுவிற்றியை நோக்கியவாறு கூறினார் விரிவுரையாளர் "பரவாயில்லை சேர்” விரிவுரையாளர் மோர்னிங் சொன்னதும் அமர்ந்து கொணி டார்கள். மாணவர்களின் முதல் வகுப்பாகையால் அறிமுக நிகழ்வு ஆரம்பமாகியது. ஒவ்வொரு மாணவர்களும் தம்மைப்பல்வேறு விதமாக அறிமுகம் செய்து கொண்டார்கள். சுவிற்றி அறிமுகம் செய்யும் வேளை வந்ததும்,
பதின்மூன்று வயதுச் சிறுமியாக இருக்கும் போதே
மிதிவெடியால் ஏற்பட்ட விபத்து ஒன்றில் தனது கால் பறிபோனதென்றும் சுவீற்றி என்று தனது அன்னை பெயரிட்டமைக்கான அவள் ஊகத்தையும் சொன்னாள். சுவீற் என்றால் இனிப்பு. இனிப்பை விரும்பாதவர்கள் மிகச்சிலராகத்தான் இருப்பார்கள். என்னை எல்லோரும் விரும்புவதுடன் இனிமையானவளாக எப்போதும் இருக்க வேண்டும். அது தான் அன்னையின் விருப்பம், அதனால் தான் சுவீற்றி என்ற பெயரை நவநாகரீக யுகத்திற்கேற்ப தெரிவு செய்தார்கள்.
சுவிற்றி இவ்வாறு தன்னை அறிமுகம் செய்தது தான் தாமதம் கைதட்டல்களும் ஆரவாரமும் ஒருங்கே சேர்ந்து கொண்டன. மாணவர்கள், விரிவுரையாளர் முகத்தில் ஒரு பிரகாசம். தாங்கள் கேட்க இருந்த, தெரிந்து கொள்ள இருந்த விடயம் பற்றி, அறிமுக நிகழ்விலேயே எவ்வளவு நாசூக்காகத் தன்னைப்பற்றிக் கூறி விட்டாள். அவளது புத்திசாலித்தனத்தை மனதார மாத்திரமல்ல, தனது உரையிலும் சுட்டிக்காட்டிக்கூறி சுவிற்றியைப் பாராட்டினார்.
அது மாத்திரமல்ல காரண காரியமின்றி பெயர் வைக்கும் இக்காலத்தில் தனது பெயருக்கு இலக்கணம்
 
 

கூறியதுடன் தனது அன்னையின் பெருமையையும் அன்னையின் மீது வைத்த மதிப்பையும் மறைமுகமாக வெளிக்கொணர்ந்து விட்டாளே சுவிற்றி என்ற பெயர் யாவர் மனதிலும் மறக்க முடியாத பெயராகிவிட்டது. தன்னைப் போன்ற ஊனமான மாணவர்களைத்தேடி நட்பு கொண்டாள் சுவீற்றி. இப்படி ஒரு வாழ்க்கை வாழவேண்டுமா? என்று சலித்துக் கொள்ளும் மாணவ மாணவியர்களைத் தைரியப்படுத்தினாள். ஊக்கம் கொடுத்தாள். அந்த வகையில் அறிமுகமானவன் தான் சலீம்
சலீம் முஸ்லீம் இனத்தைச் சேர்ந்தவனாயிருந்தும் சுவீற்றி எந்தவித பாகுபாட்டையும் காட்டாது அவனுடன் அன்பாகப் பழகினாள். உணவைக்கூட மாற்றிச்சாப்பிடும் அளவிற்கு அவர்களுடைய நட்பு இருந்தது. சுவீற்றியுடன் பழகத்தொடங்கியதிலிருந்து சலீம் மகிழ்ச்சியாக வாழக்கற்றுக்கொண்டான். சலீம் தனது ஊனத்தைப் பெரிதுபடுத்தி கவலையடையும் சந்தர்ப்பங்களில் “சலீம் நாங்கள் ஒரு சிலர் எங்களுடைய உடலிலிை ஒரு அங்கத்தினைத்தான் இழந்திருக்கிறம். ஆனால் மனதிலை ஊனமிருக்கிறவை இந்த உலகத்திலை நிறையப்பேர் இருக்கினம் சலீம்"
உற்சாகப்படுத்துவாள் சுவீற்றி. சுவீற்றி தமது கல்லூரிக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகவே கருதினார்கள் சில மாணவர்கள். கவர்ச்சிகரமான பேச்சு, பண்பு இவை மாத்திரமல்ல குரலில் கூட ஒரு வித இனிமை, பொறுமை, சாந்தம். ஒன்றிலுமே பற்றில்லாமல் வாழும் குருடான சலீமுக்கே சுவீற்றியை ஒரே ஒரு தடவை பார்ப்பதற் காகவாவது கண் பார்வை கிடைக்க வேண்டுமே என்று நினைத்துக்கொள்வான்.

Page 21
சுவீற்றி தானே ஒரு நொண்டியாக இருந்து கூட கண்பார்வையற்ற சலீமுக்கு பலதடவைகள் உதவி புரிந்திருக்கிறாள். கணி பார்வையற்றவர்களுக்கு தனித்தனியாக வகுப்புகள் நடைபெற்றாலும் சில விரிவுரைகளுக்கு மண்டபத்தில் ஒன்று கூடுவது வழக்கம். அதே போல் அன்றும் சகல மாணவர்களும் ஒன்று கூடினார்கள். சுவிற்றிக்கு அருகில் அமர்ந்திருந்தான் சலீம்.
நல்ல ஜோடிப்பொருத்தம் மச்சானி. மாணவர்களில் யாரோ பினினால கூறியது சுவீற்றிக்கு நலில தெளிவாகக்கேட்டது. திரும்பிப்பார்த்தாள் சுவிற்றி. ஒருவருமே ஒன்றுமே சொல்லாதது போலவும் விரிவுரையில் கவனம் செலுத்துவது போலவும் பாவனை செய்தார்கள். சுவீற்றிக்கு பதிலடி கொடுக்க விருப்பம். ஆனால் அந்த இடத்தில் அவி வாறு நடந்து கொள்வது அநாகரீகம் எனத்தன்னைக்கட்டுப்படுத்திக் கொண்டு மெளனமாக இருந்தாள். விரிவுரையில் கவனம் செல்லவில்லை. என்ன சமூகம்? அன்பாகப்பழகிவிட்டால் போதும் முடிச்சுப்போட்டு விடுவார்கள்.
படித்தவர்களே இவ்வாறு நடந்து கொண்டால் படிப்பறிவு குறைந்த, உலகம் அடிபடாதவர்கள் ஊர்களில் இருப்பதில், கதைப்பதில் தவறென்ன? சாதாரணமாகவே சுவீற்றி தனக்கு முன்னே நடக்கும் அடாவடித்தனங்களை பார்த்துக்கொண்டு மெளனமாகச் செல்பவள் அல்ல. அந்த இடத்திலேயே தட்டிக் கேட்டு விடுவாள். ஆனால் இன்று ஊதிக்கெடுத்த சங்கு போலி தனது நிலை ஆகிவிடக்கூடாதென்று மெளனமாக இருந்தாள். விரிவுரை முடிவதற்கான நேரம் நெருங்கிக்கொண்டிருக்கிறது என்பதை கைக்கடிகாரத்தைப்பார்த்து உறுதி செய்து கொண்டாள்.
 

λανήθινό ιμι ή να விரிவுரை முடிவடைந்து மாணவர்கள் ஒழுங்காக வெளியேறிக்கொண்டிருந்தார்கள். தன்னையும் சலிமையும் இணைத்துக்கதைத்த மாணவர்களை சுவீற்றிக்கு நன்கு தெரியும். ஊன்று கோல் உதவியுடன் வெளியேறியவள், தனது முச்சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டாள். மாணவர்கள் தொடர்ந்து வெளியேறிக்கொண்டிருந்தார்கள். வரிசை இடையே கேலி செய்த மாணவர்கள் வந்து கொண்டிருந்தார்கள்.
"டியர் பிறண்ட்ஸ் இங்கை ஒரு சில நிமிடம் வந்திட்டுப்போங்க" முச்சக்கர வண்டியில் இருந்தவாறு சர்வ சாதாரணமாக அழைத்தாள் சுவிற்றி. அந்த மாணவர்கள் சுவீற்றிக்கு அருகில் வந்தார்கள்.
“பிறண்ட்ஸ் நீங்க கேலி செய்தது உங்கடை தவறில்லை. உங்கடை வயசின்ரை தவறு. ஊனமுடைய நாங்கள் ஒவ்வொருவரும் படும் உடல் கஷ்டம் மனக்கஷ்டம் ஏதாவது உங்களுக்கு விளங்குமா? ஆனாலும் நாங்கள் எங்களுடைய குறைகள் மற்றையவர்களுக்குதி தெரியக்கூடாதென்று மனவைராக்கியத்தோடை "வாழ்ந்து கொண்டிருக்கிறம். ஒரு மூலையுக்கை இருந்து வாழ எங்களுக்கும் தெரியும். ஆனால் அது வாழ்க்கையில்லை மேடு பள்ளம், கரடு முரடு, நெளிவு சுழிவு இவை யெல்லாவற்றையும் கடந்து வாழ்வது தான் வாழ்க்கை, துன்பம் இல்லாமல் வாழ்க்கை இல்லை, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான துன்பம்"
சுவீற்றி முடிக்கவில்லை “மிஸ் , நாங்கள்." மாணவர்கள் ஏதோ கூறவர இடைமறித்த சுவிற்றி
“பகிடிக்குச் சொன்னாங்கள் என்று சொல்ல வாறியள் அப்படித்தானே"
சுவீற்றி இவ்வாறு காரசாரமாகமுடித்துக்கொள்ள
C25)

Page 22
βαήφόάμα (ή βάό
மாணவர்கள் மெளனமானார்கள். ஒருவரை ஒருவர் வேறு பார்த்துக்கொண்டார்கள்
“சுவீற்றி இவங்களை மன்னிச்சிடுங்க, ஏதோ தெரியாமல் சொல்லியிட்டாங்கள்” குரலில் ஒரு குழைவு. ஏறிட்டு அந்த மாணவனை நோக்கினாள். குரலைப்போன்று முகத்தில் ஒரு வசீகரக்களை. தனக்கும் இவர்களுடைய விசாரணைக்கும் சம்பந்தம் இல்லை என்பதைத் தெரியப்படுத்துவதற்காகவோ அல்லது அவர்களின் தவறை உணர்த்துவிக்க அவர்கள் சார்பில் மன்னிப்புக் கேட்டானோ என்னவோ இவ்வாறு கூறினான்.
'சுவீற்றி" என்று தனக்கு அறிமுகமில்லாத மாணவர்களே அழைக்குமளவிற்கு தான் பிரபல்யமாகி விட்டேனா? ஒரு கணம் தன்னை மெய்மறந்தவள்.
"மன்னிப்பு என்று ஒரு வார்த்தை இருப்பதால் நாம் எவ்வளவு பெரிய தவறுகளையும் செய்யலாமா பிறண்ட்”
மதனுக்கு ஒரு மாதிரியாகப் போய்விட்டது. அகத்தின் அழகு முகத்தில் தெரிந்தது. அதனைக் கவனிக்கத்தவறவில்லை சுவிற்றி. “சரி சரி என்னைப்போல எல்லோருக்கும் எல்லாவற்றையும் தாங்கிக் கொள்கிற மனப்பக்குவம் இருக்காது பிறண்ட்ஸ்" கூறிய சுவீற்றி, வண்டிலைச்சுழற்றிய வண்ணம் அவ் இடத்தை விட்டு நகர்ந்து கொண்டாள்.
நாட்கள் நகர சுவீற்றியும் இரண்டு வருடப்படிப்பை பூர்த்தி செய்துவிட்டாள். இன்னும் ஒரு வருடப்படிப்புத்தானே! அன்னை மாப்பிள்ளை தேடும் படலத்தில் ஈடுபடத்தொடங்கி விட்டாள். சராசரிப்பெண்களுக்கே வரன் கிடைப்பது கஷ்டம். நொண்டியான சுவிற்றிக்கு.?
உயர்கல்வி கற்றவர்களுக்குத்தானே சீதனமும் அதிகம் கொடுக்க வேண்டி இருக்கிறது. அன்னையின்
 
 

ീw്, 47്:
தேடுதலால் ஒரு பயனும் கிடைக்கவில்லை நொண்டி என்று அறிந்ததும் கிட்ட வந்த வரன்களும் எட்டி ஓடி விட்டார்கள்.
பாலைவனம் ஆகியது. தாயாரின் வேலைப்பளுவைக் குறைப்பதற்காக சுவீற்றியே குக்கரைப்பற்ற வைத்தாள். எண்ணெய் போதாத காரணத்தினால் எரிந்து கொண்டிருந்த குக்கரின் மூடியைத் திறந்து எண்ணெய் ஊற்றினாள். பக்கென்று பற்றியது குக்கர்.
“SubDIT”
என்ற அலறலைக்கேட்டு அன்னை மலர்
ஓடி வந்து சுவிற்றியைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டாளே தவிர, தன்னைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடவில்லை. அருகிலிருந்த மண்ணெண்ணெய்க்குப்பியும் தட்டுப்பட அன்னை மலர், அந்த அக்கினிக்கு இரையானாள். சுவிற்றியும் செய்வதறியாது, செய்ய இயலாது
"ஜயோ அம்மாவைக் காப்பாற்றுங்க” என்று சத்தம் போட்டவாறு அன்னையை நெருங்கினாள். அன்னை முற்றத்திற்கு ஓடி வந்து நிலத்தில் புரண்டாள். அயலவர்கள் ஓடி வந்து தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்க்ள். மலரைக் காப்பாற்ற முடியவில்லை.
"அம்மா! அம்மா! நானும் உன்னுடன் வரவிடாமல் ஏனம்மா வெளியிலை ஒடி வந்தாய்"
சக்கர நாற்காலியை உதறித்தள்ளிவிட்டு தாயாரின் எரிந்த உடலின் மீது புரிண்டு புரண்டு அழுதாள். அதற்கிடையில் ஒரு பெண்மணி சாக்கு ஒன்றைக் கொண்டு வந்து மலரைப் போர்த்தி விட்டாள்.
“என்ன அநியாயம்மா. . என்னால் தான் எல்லாம் வந்தது. நீ இல்லாத காலம் என்னுடைய வேலைகளைச்

Page 23
செய்ய குக்கரைப்பற்ற வைத்தேன். அதுவே உன்னை என்னிடமிருந்து பிரித்து வைத்து விட்டதம்மா. என்னைப்பரிதாபம் பார்க்க யாரம்மா இருக்கிறாங்க. மீண்டும் மீண்டும் தலையிலடித்துக்கதறினாள். என்னுடைய குறையைக் கூடப்பெரிது படுத்தாமல் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்த எனக்குக் கடவுள் தந்த தண்டனையா?
கண்களிலிருந்து ஆறாகப் பெருகிய கண்ணிரைத் துடைத்து விட்டது இருகரங்கள். பதற்றத்துடன் சுயநினைவிற்குத் திரும்பினாள். சுவிற்றி.
அருகிலே அறிமுகமான ஒரு வாலிபன். சலிமையும் தன்னையும் இணைத்துக்கதைத்த மாணவர்களுக்காக மன்னிப்புக்கேட்ட அந்த மாணவன் தான் நின்றிருந்தான். அவனுடைய பெயர் மதன் என்று ஒரு சிலர் சொல்லக்கேள்வி. அதை விட அவன் எந்த விதத்திலும் பழக்கப்பட்டவனில்லை.
ஆனால் அன்னையின் இறுதிக்கிரியைகளில் முழு வேலையையும் சக மாணவன் என்ற ரீதியில் இழத்துப் போட்டுச் செய்தவன். இவை தான் மதனைப்பற்றி சுவீற்றிக்குத் தெரிந்தவை.
எது எப்படியிருந்தாலும் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளே வந்தது மாத்திரமல்லாமல்.கண்ணிரைத் துடைக்கும் அளவிற்கு யார் இந்த உரிமையைக் கொடுத்தது? மனதிற்குள் நினைத்த சுவீற்றி ஒரு மாதிரியாக மதனை ஏறிட்டு நோக்கினாள்.
"மிஸ் சுவிற்றி, நான் உங்களைப் பல தடவைகள் வெளியே நின்று அழைத்து விட்டுத்தான் உள்ளே நுழைந்தேன்" மதன் கூறிய வார்த்தை, ஒரு வினாவிற்கான பதிலைக் கொடுத்துவிட்டது.
 

(ി%ി 09ീg/ மீண்டும் ஒரு மாதிரியாக நோக்கினாள் சுவீற்றி. எதையோ விளங்கிக் கொண்டவன் போல
"சுவீற்றி, உங்கடை கண்களிலிருந்து கண்ணிர் பெருகிக் கொணிடே இருந்தது. அதைப்பார்த்துக் கொண்டிருக்கும் மனத்தைரியம் எனக்கில்லை, இனி ஒரு போதும் உங்கடை கணிகளிலிருந்து கணிணிர் வெளியேறக்கூடாது. வெளியேற விடவும் மாட்டான்.
மதனின் வார்த்தைகள் சுவீற்றியை மேலும் குழப்பமடையச் செய்தது.
“சுவிற்றி, அநுதாபத்தில் எடுத்த முடிவு இல்லை இது. அதே நேரம் ஆசையிலும் எடுத்த முடிவு இல்லை. உங்களைப் போல நல்ல மனம் உள்ளவையின்ரை தன்னம்பிக்கைக்கு நான் ஒரு உதவு கோல். அவ்வளவு தான். நீங்கள் என்ன சொல்லுறிங்கள்"
சுவீற்றியின் முடிவை அறிய விரும்பியவனாக ஆவலுடன் கேட்டான் மதன். சுவீற்றி அன்னையை நோக்கினாள். அன்னையின் முகத்திலிருந்து வீசிய ஒளி ஆமோதித்ததுடன் இருவரையும் ஆசிர்வதிக்கவும் செய்தது.
“மதன், எப்பிடி உங்களுக்கு நன்றி. வார்த்தைகள் வெளியேறாது தடம்புரண்டது
“இற்ஸ் ஓகே" என்று சுவிற்றியின் கரங்களைப்பற்றி ஆறுதல்ப்படுத்தினான். சுவிற்றி என்றும் சுவிற்றாய் இருக்க மதன் வந்தான். இதே போல் ஊனமுள்ள எல்லாப்பெண்கள் வாழ்க்கையிலும் ஒவ்வொரு மதன் வருவார்களா?

Page 24
மீண்டும் வசந்தம்
99
66fறை
Statet
அம்மம்மா” என்று ஒருமித்த
குரல்களுக்குரிய முகங்கள் மறைந்து கொணி டன. மீண்டும் உள்ளே துருவிப் பார்த்தாள்.
sib DbLDITsubdubLDIT
போட்டிக்கு இரு குரல்களும் சேர்ந்து ஒலித்தவாறு வெளிப்பட்டுக் கொண்டன. அவர்கள் வேறு யாருமல்ல. பிலோமினாவின் பேர்த்திகள், மூன்று வயதில் கிறிஸ்ரினாவும் ஒன்றரை வயதில் சகீனாவும்.
களை இழந்து இருண்டிருந்த இரு வதனங்களும் ஒளி பெற்றன. கணிகளிலி ஒருவித பூரிப்பு. கதவினைத்திறந்து அம்மம்மா வெளியே கொண்டு வரப்போகிறா என்ற ஆனந்தம். இரு பேர்த்திகளும் துள்ளிக்குதித்து ஆரவாரம் செய்தனர். சிறிது நேரம் அவர்களைச் சமாளிப்பதற்காக கைப்பைக்குள் இருந்த இரு கண்டோஸ் பைக்கற்றுக்களையும் ஜன்னல் வழியாக
 
 
 

நீட்டினாள். பிஞ்சுக்கரங்கள் அவற்றைப் பற்றிக் கொண்டன. பற்றிக்கொண்ட கரங்களைப் பிடித்து முத்தமெல்லாம் பொழிந்து விட்டு தனது வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தாள். ஏனோ அவளது கால்கள் தள்ளாடின. அறையைத் திறந்தவள், உடைகளைக்களைய முடியாதவளாக கதிரை ஒன்றில் அமர்ந்து கொண்டாள். நெஞ்சமெல்லாம் முட்டிக்கொண்டது. ஏதோ ஒருவித அமுக்கம். இதனைத்தான் பிறசர் என்று சொல்லுவார்களா?
பேரப்பிள்ளைகலூை ஜன்னல் வழியாகப் பார்த்த பிலோமினாவின் நெஞ்சத்தில் ஏற்கனவே பதியப்பட்டிருந்த பதிவுகள் வெளிவரத்துடித்தன.
பிள்ளைகளைப் பெற்றவர்கள் மாபாவிகள் என்பதுதான் பிலோமினாவின் தாரக மந்திரம். அவ்வளவு தூரம் பிள்ளைகளால் மனம் வெந்து புண்ணாகியவள். மனநோய் என்று டாக்டராலும் ஏனையவர்களாலும் உறுதிப்படுத்தப்படவில்லையே தவிர பிலோமினாவைப் பொறுத்தவரை தான் ஒரு மனநோயாளி என்பது தான் எண்ணம். தனக்குத்தானே மனதிற்குள் பேசும் விடயங்கள் ஒருவருமில்லா தனிப்பட்ட இடங்களில் உதடுவழியாக வெளிவந்து விடும். இது ஒரு மனநோய்க்குரிய அறிகுறிதானே!
தவம் இருக்காவிடினும் முதல் முதலில் உதயமாகும் புதல்வனை தவப்புதல்வன் என்று சொல்வார்கள். அந்த வகையில் வந்துதித்தான் டேமியன். டேமியன் பிறந்து ஐந்தாவது நாளில் அவனை மஞ்சள் காமாலை பற்றிக்கொண்டது. பிலோமினா உட்பட சகோதரி, உறவினர்கள் என்று மருத்துவமனைக்கு பறந்தடித்தார்கள். நேர்த்திகள் வைக்கப்பட்டன. டேமியன் காப்பாற்றப்பட்டு விட்டான்.

Page 25
வளர்ந்து வரும் நாளில் அவன் செய்த திருக்கூத்துக்கள் எண்ணிலடங்கா. வெண்ணெயப் திருடிலீலைகள் புரிந்த கண்ணனை வென்று விடுவான். ஆனாலும் பெற்றவளுக்கு பிள்ளை அல்லவா. டேமியனுக்கு பின் இரண்டு பெண்கள். மூன்று பிள்ளைகளையுமே சமமாக வளர்த்து வந்தாள். காலம் விடவில்லை. ,வன்னிக்குத் தாய்மாமனிடம் சென்ற டேமியன் பாதை மூடியதால் திரும்பி வரமுடியாத நிலைமை. அதனைத் தொடர்ந்து வன்னி யுத்தம் பிலோமினா ஆடிப்போய்விட்டாள்.
நாஸ்திகியாய் இருந்த பிலோமினா ஆஸ்திகியாய் மாறி ஆலயம் ஆலயமாக ஏறி முழந்தாளிட்டு மடிப்பிச்சை கேட்டாள். அவளின் கண்ணிர் கண்டு பொறுக்க முடியாத மாதாவும் டேமியனை சிறிது காயத்துடனி தப்பவைத்துவிட்டார்.
காயப்பட்ட டேமியனைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு ஏறி இறங்கினாள் பிலோமினா, தரைப்போக்குவரத்து மூடப்பட்டு கப்பலில் சென்ற காலம். கப்பல் பயணமே பிலோமினாவுக்கு வெறுப்பைத் தந்து விட்டது. பயணம் முடிவதற்குள் செத்துப்பிழைத்து விட்டாள். கப்பலைக் கண்டுபிடித்த தொழில்நுட்ப வல்லுனரையே ஒரு கணம் மனம் திட்டித்தீர்த்துக்கொண்டது. கப்பலுக்குள் பட்ட அகெளரவங்கள், சிப்பாய்கள் பிரயாணிகளை நடாத்திய விதம் எல்லாமே துன்பகரமாக இருந்தது.
மருத்துவமனைக்குள் கண்ட காட்சிகளும் அப்பப்பர். சொல்லில் அடங்கா. தமிழராகப் பிறப்பதே மாபெரும் பாவம். அந்த அளவிற்கு ஒருகால், ஒரு கை, இருகை, பாதம் என்று பலவிதமான அங்கங்களை இழந்து, பிறந்த குழந்தை
 

தொடக்கம் முதியவர் வரை. அதனை விடக் கொடுமையானது முகாம் வாழ்க்கை.
டேமியன் சிகிச்சை முடிந்ததும் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டான். தரைப்பாதை திறந்ததால் பிலோமினா மீண்டும் வெளியூர் பயணமானாள். டேமியனுக்கு அறிவித்தல் சென்று வெகு நேரமாகிவிட்டது. அவனது தலைக்கறுப்பும் தெரியவில்லை. ஒவ்வொரு முகாமிலும் ஆயிரத்திற்கு மேற்பட்ட கூடாரங்கள். அறிவித்தல் கொடுப்பவர் நடந்து செல்ல வேண்டும். அவருக்கு நடைகூலி நூறுரூபா. அறிவித்தலைப் பெற்றவர் அந்தத் தேசத்திலிருந்து வருமுன் வந்த விருந்தினரைப் பார்ப்பதற்கான ஆவல் குறைந்துவிடும், அந்த அளவிற்குக்களைத்துப் போய்விடுவார்கள். இதனாலோ என்னவோ முகாமுக்குள் இருக்கும் சிலர் தம்மை உறவினர் வந்து பார்ப்பதை தவிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் உணி மைத் தனிமை இப்போது பிலோமினாவை உணரவைத்தது.
நேரத்தைப் பார்த்துக் கொண்டாள். அவனது நினைப்பில் பத்து நிமிடங்கள் கழிந்து விட்டன. புண்ணுக்கு விஷமா? மருந்துக்கு விஷமா? பிலோமினா பொறுத்துத்தானே ஆக வேண்டும். கண்ணுக்கு எட்டிய தாரம் வரை பார்த்துப் பார்த்து கண்கள் பூர்க்கின்ற வேளையில் தொலைதூர்த்தில் தலையை ஒரு டவலால் போர்த்திய வண்ணம் . ஒருவன் வந்துகொண்டிருந்தான். பார்ப்பதற்கு டேமியனைப் போன்றிருந்தது. ஆனாலும் உறுதி செய்து கொள்ள பிலோமின்ாவால் முடியவில்லை. காரணம் பலபேரை இவ்வாறு நினைத்து நினைத்து ஏமாற்றம் அடைந்தவள். தொலைதூரத்தில் தெரிந்தவன் கண்ணுக்கு எட்டிய தூரம் வர மேலும் பதினைந்து நிமிடங்கள் கழிந்தன. வருவது டேமியன்தான் என உறுதி பூண்டு கொண்டாள்.

Page 26
மீண்டும் வசந்தம்
வெய்யில் உச்சியைப் பிளந்தது. சாதாரண வெப்பத்தை தாங்க முடியாமலே இருபத்துநான்கு மணிநேரமும் காற்றாடியைச் சுழலவிடும் எம் போன்றவர்கள் மத்தியில் இந்த முகாம் மக்கள்.
டேமியன் குடை கேட்டிருந்தான்.
முகாமுக்குள் இருப்பவர்களுக்கு குடை ஏன் என்று பரிகசித்தவள் பிலோமினா.
“தேவையான பொருட்கள் அத்தியாவசிய தேவைகள் என்று அதற்கே பலதூரம் நடக்க வேண்டுமாம்" அருகிலிருந்து உரையாடியவர்களின் உரையாடல்கள் பிலோமினாவுக்கு விளங்க வைத்துவிட்டது. தனது பாதுகாப்பிற்காக் குடையுடன் சென்றது. நல்லதாகிப் போய்விட்டது. திரும்பும் நேரம் வெய்யில்தான். ஒருநாள் வெய்யிலி உயிரையா கொணிடு போய்விடும்? நினைத்தவளாக வந்துகொண்டிருந்த டேமியனையே வைத்தகண் வாங்காது பார்த்த வண்ணம் இருந்தாள்.
உறவுகள் சந்திக்கும் இடங்களில் மட்டும் கொட்டில்கள் போடப்பட்டிருந்தன. பார்ப்பதற்காக அறிவித்தல் கொடுக்கப்பட்ட முகாம் மக்களும், பார்க்கச் சென்றவர்களும்
மழையில் நனைய வேண்டும். பார்த்துப் பேசுவதற்கு பத்துநிமிடம் தான் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அறிந்து கொண்டாள் பிலோமினா.
முகாம் என்று வரையறை செய்யப்பட்ட கம்பி வேலிக்குள் நின்று பிலோமினாவை எட்டி எட்டிப் பார்த்தான் டேமியன். பிலோமினாவின் கண்களுக்கு டேமியன் தென்பட்டுவிட்டான். அவனது உயரம் அதற்கு உதவி செய்தது. ஆனால் டேமியனுக்கு அன்னையின் உருவம்

ീ6', ' &#്g/ தெரியவாய்ப்பில்லை. காரணம் பிலோமினா குட்டையானவள். மக்களும் நெருக்கடித்து கொண்டு நின்றனர்.
பத்து நிமிடம் கழிந்திருக்கும் அடுத்து ஒரு பகுதியினர் உட்சென்றார்கள். அங்கிருந்தும் வந்தார்கள். அதற்குள் பிலோமினா அடங்கவில்லை. டேமியன் அடங்கி விட்டான். அதனால் இருவரும் சந்திக்க முடியாத நிலை. அன்னையும் பிள்ளையும் ஒருவனுர ஒருவர் பார்ப்பதுவும் கைக்கடிகாரத்தைப் பார்ப்பதுமாக் அடுத்து ஒரு பத்து நிமிடத்தைக் கழித்துக்கொண்டிருந்தார்கள். ஒருவாறாக பத்து நிமிடங்கள் கழிய பிலோமினா உட்பட ஒரு தொகுதியினர் உள் எடுக்கப்பட்டார்கள். பிலோமினா டேமியனின் கரங்களைப் பற்றித் தனது கண்களில் ஒற்றிக்கொண்டாளி. பதிலுக்கு டேமியனும் அன்னையின் கரங்களைப் பற்றி தனது கணிகளில் ஒற்றிக்கொண்டான்.சதுரமாக வடிவமைக்கப்பட்ட முட்கம்பி வேலி பூரண ஒத்துழைப்புக் கொடுக்காவிடினும் ஓரளவு ஒத்துழைப்புக் கொடுத்தது.
காட்சிகளைப் பார்த்திருக்கிறாள் பிலோமினா அதே காட்சிக்கு உள்ளாக்கப்பட்டு விட்டார்கள் முகாம் மக்கள். சிறைக்கம்பிகளுக்கு முன்னால் சிறைச்சாலையில் நிற்கும் உணர்வு தான் மேலிட்டது. பார்ப்பதற்கு கொடுமையாக இருந்தது.
நெஞ்சினுள் விரவிய துக்கம் நாடி நரம்புகளின் ஊடாக மேலேறி விழிகளை செந்நிறமாக்கின அவ்விழிகளிலிருந்து வடிந்த இரத்தக் கண்ணிர் அவள் ஆடைகளை நனைத்தது. தாரை தாரையாக வழிந்தோடி லோமினாவின் கைக்குட்டையை தோய்த்து விட்டது.
C350

Page 27
டேமியனின் கண்களும் சிறிது கலங்கத் தொடங்கின. ஆண்பிள்ளையானாலும் சாண் பிள்ளையல்லவா? தனது கண்ணிரைக்கட்டுப்படுத்த முனைந்து வெற்றியும் கண்டு கொண்டான்.
“என்னம்மா: நான் தான் உயிரோடு இருக்கிறேனே, எல்லோரும் மடிந்தது போல் நானும் மடியாமல் உங்கள் நினைவால் தானம்மா பதுங்கு குழிக்குள் பாதுகாப்புத் தேடினேன்” எனக் கூறியவாறு அன்னை மூக்குச் சிந்திச் சிந்தி அழுவதைப் பார்க்க பொறுமையற்ற டேமியன் அன்னையின் கணினிரை தனது வலிமை மிகு கரங்களால் மென்மையாகத் துடைத்தெறிந்தான்.
பிலோமினா சுற்றும் முற்றும் நோக்கினாள். குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என்று அந்தப்புறம் பார்க்கச் சென்றவர்கள் இந்தப்புறம் எல்லோரது விழிகளும் நீர்முட்டி வழிந்த குளங்களாகக் காட்சி அளித்தன.
"இதைவிட செத்திருக்கலாம். இந்தக் குழந்தை குஞ்சுகளோடை நாங்கள் படுகிற கஷ்டம். அந்தக் கடவுளுக்கும் முகாமுக்கை இருக்கிறதுகளுக்கும் தான் தெரியும்?
ஒரு பெண்மணி தனது குஞ்சுகளை அனைத்தவாறு தனது உறவுகளுக்குக் கூறிக்கொண்டிருந்தாள். “உடனே மரணித்தவர்கள் ஒரு நாளில் செத்து மடிந்தார்கள். இவர்கள் நாளாந்தம் செத்து மடிந்து கொண்டிருக்கிறார்களே!" பிலோமினா மனதிற்குள் நினைத்துக்கொண்டாள்.
“எல்லாத்துக்கும் கியூ கியூவிலை நிண்டே எங்கடை பாதிக்காலம் கழிஞ்சுவிடும் போலை இருக்கு" இன்னொரு பெண்மணியின் அங்கலாய்ப்பு.
 

“எங்களை எப்ப வெளியிலை எடுக்கப்போறியள்? ஏதோ இங்கிலீஷ் போமாம். கடைசியாய் வந்ததாம். அதெலி லாம் நிரப் பரி விதானையிட் டை சைன் வாங்கியிட்டியளே”
பல குரல்கள் ஒருமித்து வினாவின. முகாமை விட்டு எப்போது வெளியேறுவோம் என்ற அவா அவர்களுடைய உரையாடல்களில் பிரதிபலித்தது.
“பாழாய்ப் போனவங்கள். துலைவான்கள். இனி வெளிக்கிடுவாங்களே! உவங்களை நானே தீமூட்டிக் கொழுத்தியிடுவன்"
வயது முதிர்ந்த மூதாட்டியின் உதடுகளிலிருந்து புறப்பட்டது இந்த வார்த்தை. குரலில் சிறிது நடுக்கமும் சேர்ந்துகொண்டது.
"ஏன் பாட்டி ரென்சனாகிறியள்" முன் பின் பாட்டியைத் தெரியாத பொடிப்பயல் ஒன்று, பிலோமினாவின் பக்கத்திலிருந்து வினாவியது.
“ரென்சனோ ஒவ்வொரு சடலங்களுக்கையும் உழக்கப்பட்டு வந்த எங்களுக்கெல்லோ தெரியும். செத்தது எது, குறை உயிரிலையிருந்தது எது, துடிச்சுக் கொண்டிருந்தது எது எண்டு தெரியாமல் எங்கடை எங்கடை உயிரைக் காப்பாத்தினால் போதுமெலன்டு ஓடி வந்தமே. இந்தத் தண்டனையை நீ அனுப்பலிச்சிருக்கிறியா?”
அந்தச் சிறுவனைப் பார்த்து தொண்டை கரகரக்க நா தழு தழுக்கக் கூறினாள் மூதாட்டி, மனம் பொறுக்க முடியாத பிலோமினா,
"ஏன் பாட்டி: அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களை வெளியிலை எடுக்கலாமாம். உங்கடை உறவுகள் முயற்சி
எடுக்கேல்லையே”

Page 28
ീjീ മpി
மூதாட்டிக்கு காது கேட்பது குறைவென்பதை ஊகித்த பிலோமினா உரத்த தொனியில் வினாவினாள்.
“என்ரை உறவெல்லாம் ஒவ்வொரு முகாமிலை இருக்குதுகள். நான் எங்கை போறது? போகில் பரலோகம் தான் போக வேணும். அதுக்கும் கிளியறன்ஸ், "ரோக்கன் எண்டு ஏதாவது எடுக்க வேணுமே”
உரத்த குரலில் திக்கித் திக்கி உண்மை போலவே வினாவினாள் மூதாட்டி, அந்தச் சூழ்நிலை ஒருவருக்கும் சிரிப்பை மூட்டவில்லை. மாறாக அங்தாப உணர்வினை ஏற்படுத்தியது. பத்து நிமிடங்களுக்கு மேல்நின்று விட்டாள் பிலோமின. இராணுவ உடையில் நின்ற பையன் அவரசம் காட்டினான். பிலோமினா தான் கொண்டு சென்ற உணவுப் பொட்டலங்களை முழுமையாகக் கொடுக்க முடியாமையால் பாகங்களாக்கி அந்தச் சிறிய சதுர கம்பிகளுக்கிடைாேல் கொடுத்து முடிந்நாள். அதற்கிடையின் அடுத்த குறுப் வந்தது.
ஊன்றுகோலி உதவியுடன் இருபது வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன், டேமியனின் பக்கம் வந்து நின்றான். முப்பத்தைந்து நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி, பிலோமினாவின் பக்கம் வந்து நின்றாள் அந்த இளைஞனைக் கண்டதும் ஓவென்று கதறினாள் அந்தப் பெண்மணி வெள்ளை வெளேரென இருந்த தனது பையன் காய்ந்து கருவாடாக இருந்த நிலையைப் பார்க்க அவளால் தாங்க முடியவில்லை போலும்,
அவள் தனது பையனுடன் உரையாடிய விதத்திலிருந்து உணர்ந்து கொண்டாள் பிலோமினா,
டேமியனுடன் உரையாடிய வண்ணம் அந்தக் குடும்பத்தின் சம்பாஷணையிலும் கவனம் செலுத்தினாள்.
Y
 

όάκήθάλαμπρή σάό சிறிது நேரம் அன்பினைப் பகிர்ந்து கொண்டதன் பின், தான் கொண்டு வந்த உணவுப் பார்சலைப் பிரித்துக் கொண்டாள் அந்தப் பெண்மணி.
உணவுப் பொட்டலம் வெப்பத்தில் ஈரமாகி கடதாசி கிழியத் தொடங்கியது.ஒருவாறாக பொலித்தின் பையை மடியில் விரித்து அதன்மேல்வைத்துக் குழைத்து வாய்க்குள் ஊட்டச் சென்றாள். சிரமமாக இருந்தது. ஒருவாறாக தனது கரங்களை வலிந்து பிடித்து ஊட்ட முற்பட்டாள். சரியாக வாய்க்குள் ஊட்ட முடியவில்லை. அன்னைக்கும் கடினமாக இருந்தது. அந்தப் பையனுக்கும் கடினமாக இருந்தது. இடது கையினாலே எல்லா விட்ய்ங்களையும் செய்து முடிக்கும் அந்த இளைஞனுக்கு இன்று உண்பது முடியாத காரியமல்ல. ஆனாலும் தனது அன்னையின் கரங்கள்ாலே ஊட்டுவதை விரும்பியிருப்பான். அந்த அன்னையின் கண்களில் மாத்திரமல்ல அதனைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவரினது கண்களிலும் நீர்த்திவலைகள்
"அம்மா இவரைக் கூட்வா உங்களால் எடுக்க முடியவில்லை”
பிறர் துயரங்களைப் பார்த்து ஜீரணிக்க முடியாத பிலோமினா இவ்வாறு அந்தப் பெண்மணியைப் பார்த்துக் கேட்டாள்.
“சிறுவர்கள் எண்டால் எடுக்கலாமாம். அதுக்கும் கோட், கேஸ் எண்டு திரிய வேணுமாம். அது மாத்திரமில்லை வழக்கு அது இதெண்டு பல இலட்சங்கள் செலவழிக்க வேணுமாம். ஒரு இலட்சத்தையே கண்டறியாத நாங்கள் பல இலட்சங்க்ளுக்கு எங்கையம்மா போறது"
அன்னையின் கண்ணீர்த்துளிகள் உருட்டிக் கொண்டிருந்த சோற்றுக் கவளத்துடன் சேர்ந்து கொண்டது. அதனை அவதானித்த அந்த அன்னை அந்தக் கவளத்தை வீச முற்ப்ட்டாள்.
நாங்கி) C39)

Page 29
"பரவாயில்லை தாங்கம்மா” அந்த இளைஞன் வீச விடவில்லை. அதனை வாங்கி ருசித்து உண்டு கொண்டான். “உப்பு போதாதிருந்த உணவு இப்போது அமிர்தமாகிவிட்டதம்மா”
கூறிய அந்த இளைஞனின் வதனத்தில் சிறிது மலர்ச்சி. அந்த வார்த்தைகளை செவிசாய்த்த அத்தனை உள்ளங்களிலும் ஒருவித இன்பக் கிளர்ச்சி.
இவற்றையெல்லாம் அவதானித்துக் கொண்டிருந்த இராணுவ வீரனினது வதனத்திலும் ஒருவித மாறுதல். பிலோமினாவை ஒரு சிறிய புன்னகையுடன் நோக்கினான். நீண்ட நேரமாகிவிட்டது என்பதை அந்தப் புன்னகை உணர்த்தியது. டேமியனிடமிருந்து பிரியமுடியாமல் பிரிந்து கொண்டாள் பிலோமினா, சிறிது துTரம் வந்து முட்கம்பிகளுக்கூடாகத் திரும்பிப் பார்த்தாள். டேமியன் நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தான். இருவரது கரங்களும்
அசைந்து கொண்டன.
பிலோமினா உட்கார்ந்திருந்த கதிரையிலும் ஒரு அசைவு ஏற்பட்டது.
“gobupbpТ: 9ШbobШDт"
என்று இரு பிஞ்சுகளும் கதிரையைப் பிடித்து ஆட்டியவண்ணம் நின்றார்கள். கணிகளில் கசிந்த கண்ணினைக் கைக் குட்டையால் ஒற்றிக்கொண்டு.
"அம்மா கதவினைத் திறந்து விட்டாளா? சுதந்திரம் உங்களுக்கு கிடைத்து விட்டதா?
என்று கூறி இரு மழலைகளையும் வாரி அணைத்துக் கொண்டாள் பிலோமினா.
 

ീ0%, #ff
(j. கூவும் ஒசை.
பொழுது ஆரவாரமின்றிப் புலர்கிறது. மனிதர்கள் SD "Lu Suff607 i 56 எல்லாம் தம்மை மறந்து துயில் கொள்ளும் நேரம் ஆனால் தேன்மொழி மட்டும் உறங்காது அங்கும் இங்கும் புரண்டு கொண்டிருந்தாள். பைத்தியம் பிடித்துவிடும் போலிருந்தது
தேன்மொழிக்கு. ஒரு நாளா? இரண்டு pT6m2 ஒன்றரை வருடங்கள் தனிமையில் வாழ்க்கையை நடாத்துவதென்றால். அதை விட வேறு என்ன கொடுமை இருக்கிறது. கணவன் பிள்ளைகள் என்ன பாடுபடுகிறார்களே! தொழிலின்மை ஒரு புறமும் விலை ஏற்றம்
மறுபுறமாக யாழ்ப்பாணத்திலேயே மக்கள் வாழ முடியாமல் தவிக்கும் போது வன்னியில். நினைக்க நினைக்க
நெஞ்சமெல்லாம் பற்றி எரிய படுக்கையை விட்டு எழுந்து உட்கார்ந்து கொண்டாள் தேன் மொழி.
நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தது தான் தேன்மொழியின் குடும்பம். கணவன் வாசன், பெரிய வீடு வளவு என்று அதிக வசதியுடன் வாழ்விக்காது போதிலும் உண்டு உடுத்து பிள்ளைகள் கல்வி கற்கும் அளவிற்கு

Page 30
தனது குடும்பத்தைக் காப்பாற்றி வந்தான். எண்பத்தேழில் இடம்பெற்ற இடம் பெயர்வின் போது வாசனது சகோதரி வசுமதியின் குடும்பம் வன்னிப் பெரும் நிலப்பரப்புக்குள் காலடி எடுத்து வைத்துவிட்டது.
ஏ9 பாதை இரண்டாயிரத்து இரண்டில் திறந்தும் வாசன் தனது சகோதரியை மருமக்கள்மாரை பார்க்க முடியாத துர்ப்பாக்கிய நிலை. குடும்பமாக வன்னி சென்று வருவதற்கு பஸ் கட்டணமாக இரண்டாயிரம் ரூபாவது தேவைப்படும். பந்த பாசத்தைக் கட்டுப்படுத்தி இரண்டு வருடங்களைக் கடத்திக் கொண்டு சென்று விட்டார்கள். அவ்வாறு எப்போதும் நாட்களைக் கடத்த முடியுமா? ஏதோ வகையில் பணத்தைப் புரட்டி தற்போது வன்னிக்கு சென்றுவிட்டார்கள்.
சகோதரியின் வீட்டை அடைந்ததும் "அண்ணா" என்று ஓடி வந்து ஆரத்தழுவிக் கொண்டாள் வசுமதி. "மாமா" என்று தழுவிக் கொண்டார்கள் வசுமதியின் வளர்ந்த பிள்ளைகள். நாடகங்கள் திரைப்படங்களில் இடம் பெறும் இதே போன்ற காட்சிகள் கூட, நிஜத்தைத் தானே பிரதி பலிக்கின்றன. பல காலம் பிரிந்து பின் ஒன்று சேர்பவர்களின்
நிலை கூட இது தானே!
இரண்டு குடும்பங்களும் இரண்டு தசாப்தமாக அளவளாவி மகிழாத விடயங்களை அளவளாவி ஆடிப்பாடி மகிழ்ந்து இரண்டு நாட்கள் ஓடவில்லை. தேன்மொழிக்கு அவசர தொலைபேசி அறிவித்தல். நெருங்கிய உறவினள் ஒருத்தியின் மரண அறிவித்தல் தான் அது. உடன் பிறந்தவர்களின் சந்தோஷத்தைக் குலைக்க விரும்பாதவளாக தனித்து வன்னியிலிருந்து புறப்பட்டாள்.
 

ծ : s . ീ0% %9ീ5ി
புறப்பட்ட அன்று இரவு துப்பாக்கி வேட்டுக்களுடன் கூடிய இனிய இசை வெள்ளத்தில் மங்களகரமாக ஏ9 பாதை மூடப்பட்டு விட்டது. தேன் மொழி ஆடிப்போய்விட்டாள். இன்று திறபடுமி, நாளை திறபடும், என்று ஒன்றரை வருடங்கள் ஒடி மறைந்தது தான் தேன்மொழி கண்ட மிச்சம். சரி கப்பலிலாவது செல்லாம் என்றால் நாலாயிரம் ரூபாய் பணத்திற்கு எங்கே போவாள்?
நினைவுகளோடு பொழுது நன்றாக விடிந்து விட்டது. அவசரப்பட்டு எழுந்து தான், என்ன கைங்கரியங்களை செய்யப்போகிறாள்? படுக்கையை சுருட்டியவளின் காதுகளில் தூரத்தே முழங்கும் ஷெல் சத்தங்கள் தொடர்ந்து கேட்ட வண்ணமிருந்தன.
"ஐயோ என் பிள்ளைகள் என் பிள்ளைகள்" என்று ஊர் எல்லைக்கு கேட்கும் படி தொண்டை கிழியக் கத்துகிறாள். தேன்மொழியின் கதறலால் ஊர்மக்கள் அனைவரும் தேன்மொழியின் இல்லத்தின் முற்றத்தில் கூடி விடுகிறார்கள். பித்துப் பிடித்தவள் போல் சொன்ன வார்த்தைகளையே சொல்லிச் சொல்லிக் கதறுகிறாள்.
“தேன்மொழி உன்னுடைய புருஷன் பிள்ளைகள் இருக்கிறது உள்ளுக்கையெல்லே கிளிநொச்சியில் தான்
பொம்மர்கள் சரமாரியாக குண்டுகளைப் பொழிஞ்சு தள்ளுகுதாம். நீ பயப்பிடாதை. அதுகளின்ரை உயிருக்கு ஒரு ஆபத்தும் ஏற்படாது"
ஆறுதல் படுத்துகிறாள் பக்கத்து விட்டு அன்ரி. தேன்மொழியின் அழுகை குறைந்த பாடில்லை. மரணவீட்டில் ஓலமிடுபவள் போல எல்லோரையும் கட்டி அணைத்துக்கதறி அடிக்கிறாள்.
“தேன்மொழி அழாதை உன்னுடைய மனதுக்கு
C430

Page 31
கடவுள் ஒரு குறையும் வைக்கமாட்டார். பிள்ளைகள் சுகமாக இருப்பார்கள்"
வயது முதிர்ந்த மூதாட்டி ஒருவர் இவ்வாறு கூறுகிறார். மூதாட்டியின் வார்த்தை தேன்மொழிக்கு அந்த வலியினூடும் சிரிப்பைத் தான் வரவழைக்கிறது. உள்ளத்தில் எழுந்த வார்த்தைகளை உதட்டில் புரளவிடுகிறாள் தேன்மொழி.
“என்னம்மா உங்கடை கதை? இரண்டாயிரத்து ஐந்தாம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அழிவு தொடக்கம் இன்று வரை எத்தினை எத்தினை ஆயிரம் உயிர்களை இழந்து எங்கடை சனம் அல்லல்படுகுது. அப்ப அவையளின்ரை மனம் கூடாதென்றே அர்த்தம்”
தேன்மொழியின் வார்த்தை மூதாட்டியை மெளனத்தில் ஆழ்த்துகிறது. ஆனாலும் மூதாட்டியே தொடர்கிறாள்.
“தேன் மொழி ஏதாவது முயற்சி எடுத்து கப்பலிலையாவது போகப்பார். இப்பிடியே இருந்தால் உன்னைப் பைத்தியக்கார ஆஸ்பத்தியிலை தான் சேர்க்க வேணும். உன்னைப் போல எத்தினை பேர் அங்கையும் இஞ்சையுமாய் நிக்குதுகள். பிளேனிலை கப்பலிலையெண்டு போக வசதியுமெல்லோ இருக்க வேணும்"
மூதாட்டியும் ஏதோ கரிசனையுடன் கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்து விடுகிறாள். நூறு, இருநூறு ரூபாவா? யாரிடமாவது மாறிக்கொள்வதற்கு. முடிவு எடுக்க முடியாமல் தவித்தாள். மீண்டும் டுமீல் டுமீல் என ஷெல் சத்தங்கள். காதுகளைப் பொத்திக் கொள்கிறாள்.
திடீரென ஓர் நினைவு. பஸ் ஸ்ராண்டில் கையில் குழந்தையுடன் பிச்சை எடுத்த ஓர் இளம் பெண்ணின் தோற்றம் கண் முன்னே வந்தது.
 

ീg/ി 4p(ി
மானம் மரியாதை பார்த்தால் தனது துயர்திருமா? தானும் அறிமுகம் இல்லாத ஒரு பிரதேசத்தை தேர்ந்தெடுத்தாலென்ன? சிந்தித்தவளின் காதுகளில்
‘தேன்மொழி தேன்மொழி" என பரீட்சயமான அன்ரியின் குரல் ஒலித்தது. வந்த அன்ரி பணம் புரட்டுவதற்கான வழி ஒன்றைத் தெரிவித்தாள். அதற்கு தனது உடல் நிலை ஒத்துழைக்குமா? என ஒரு கணம் யோசித்தாள்.
மறுகணம் யாழ் மருத்துவமனைக்கு புறப்பட்டு விட்டாள். அங்கே நேராக இரத்தவங்கியை நாடிச்சென்றாள். தனது நிலைமையை விளக்கியதும் டாக்டர் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
புறப்பட்டு மூன்று மணித்தியாலத்திற்குள் ஐயாயிரம் ரூபா பணம் கிடைத்து விடுகிறது. சந்தோச மிகுதியில் அணி ரியையும் மனதிற்குளி வாழ் திதிக் கொணி டு கிளியறன்சையும் முடித்துக்கொண்டு திரும்பிக் கொண்டிருந்த தேன்மொழி, மறிப்புப் பாதை ஒன்றினுள் முடக்கப்பட்டு விடுகிறாள். தேன்மொழியின் பஸ் நின்ற இடத்திற்கு முன்னால் வாகனங்களும் பைசிக்கிள்களும் மோட்டார் வண்டிகளும் முட்டி மோதி நின்று கொண்டிருந்தன.
வழமையான பாதைமறிப்பு நேரமாயின் மக்கள் கூட்டம் இவ்வாறு பெருகி இருக்கமாட்டாது. காரணம் பாதை மறிப்பு நேரங்களைக் கவனத்தில் கொண்டு தான் பெரும்பாலான மக்கள் தமது நாளாந்த பிரயாண ஒழுங்குகளை செய்து கொள்கிறார்கள்.
வீதியில் நின்ற வாகனங்கள், வல்லை பரந்த வெளியில் இறக்கப்படுகிறது. மோட்டார் வண்டிகளிலும் பைசிக்கிள்களிலும் வந்தவர்கள் நிழல்களை நாடிய வண்ணம் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தார்கள். நேரம்
G45.)

Page 32
போய்க்கொண்டிருந்தது. பாதை திறந்த பாடில்லை. புழுக்கம் தாங்க முடியாமல் இறங்கி, இன்னோர் பஸ் நிழலில் நின்று கொள்கிறாள்.
"அம்மா பசிக்குதம்மா” பஸ்ஸிற்குள் இருந்த பத்துவயது மதிக்கத்தக்க சிறுமி அன்னையைத் தட்டித்தட்டிக் கரைச்சல் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
"என்ன செய்யிறது பத்து மணிக்கு மறிச்சவங்கள் ஒரு நாளும் இப்பிடி மறிக்கிறதில்லை"
சிறுமியை ஆறுதல்ப்படுத்தினாள் அன்னை. அருகில் நின்றவரிடம் நேரத்தைக் கேட்டுக் கொள்கிறாள் தேன்மொழி. நான்கு மணி ஐந்து நிமிடம் கிட்டத்தட்ட ஆறு மணித்தியாலம் நின்றிருக்கிறார்களா? என்ன கொடுமை? தமிழராய்ப் பிறந்தவர்கள் எத்தினை எத்தினை விதமான கொடுமைகளை அநுபவிக்கிறார்கள். யார் மேல் யார் குற்றம் சொல்வது? யாரின் மீது பழி போடுவது? மனதிற்குள் பல சிந்தனைத் துளிகள்.
"இப்படி ஒரு வாழ்க்கை தேவைதானா?” என்றது ஒரு பெண்மணியின் குரல். வாகனத்திற்குள் நோட்டம் விட்டாள். கூறிய அந்தப்பெண்மணி குளித்தது போல ஆகிவிட்டாள். அருகில் இருந்தவர் அவள் கணவராயிருக்க வேண்டும். தொப்பி ஒன்றினால் விசிறிக் கொண்டிருந்தார். எழுந்து நிற்பதுவும் இருப்பதுவுமாக திணி டாடிக் கொண்டிருந்தாள். அந்தப் பெண்மணி. கர்ப்பவதி போலும் காட்சி அளித்தாள். தேன்மொழி பொறுமை கடந்தவளாக
‘ஏணி நிணி ட நேரமாக பாதையை மறித்திருக்கிறார்கள்” அருகிலி நின்றவர்களிடம் வினாவுகிறாள்.

** * gع 4) 474 : 4)
“பருத்தித்துறையிலை கிளைமோர் வெடிச்சிட்டுதாம்" "அது தான் கிளியர் பண்ணிக் கொண்டிருக்கினம் போல” ஒரு கேள்விக் கணைக்கு இரு வேறு பதில்கள். "பருத்தித்துறையில் குண்டு வெடிச்சதுக்கு வல்லையில் ஏன் எங்களை வெய்யிலிலை காயவைக்கிறார்கள்?"
ஆற்றாமையால் இவ்வாறு ஒரு குரல் வெளிப்பட்டது. மோட்டார் பைசிக்கிளில் சென்று சோடாவுடன் திரும்பும் காட்சிகளும், தேன்மொழியின் கண்களில் பட்டவண்ணம் இருந்தது. சில வாகனங்கள் தமது பிரயாணிகளை இன்னோர் வாகனத்தில் ஏற்றிவிட்டு யாழ் நோக்கிச் சென்று கொண்டிருந்தன. சில பிரயாணிகள் இறங்காமல் வந்த வாகனத்திலேயே திரும்பிக் கொண்டிருந்தார்கள். சில பிரயாணிகள் தங்களுடைய வாகனங்களிலிருந்து இறங்கி திரும்பிக் கொண்டிருக்கும் வாகனங்களில் ஏறிக் கொள்கிறார்கள்.
"இனி என்னண்டு வடமராட்சிக்குப் போய்த்திரும்புவது அது தான் வந்த பஸ்ஸிலையே திரும்புதுகள்" இவற்றையெல்லாம் அவதானித்துக் கொண்டிருந்த ஒரு பெண்மணி தனது ஊகத்தை தெரியப்படுத்துகிறாள். ஊகம் என்ன? அது தான் உண்மை. தேன் மொழியின் மனம் இவ்வாறு எண்ணிக் கொள்கிறது.
விடியிறதுக்கிடையில் தனது இடத்துக்குச் சென்று செய்ய வேண்டிய ஒழுங்குகளை மனதில் பட்டியல் படுத்திக் கொள்கிறாள்.
"அம்மா பசிக்குதம்மா, அம்மா பசிக்குதம்மா” அந்தச் சிறுமியின் குரலில் முனகல் தெரிகிறது. சிறுமி சோர்ந்து போய்விட்டாள். தேன்மொழி அங்கும் இங்கும் பார்க்கிறாள். கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒரு பெட்டிக்கடை கச்சான் கடை போன்றிருந்தது. களைப்பும் பசியும் மிகுந்த
G47)

Page 33
சிறுமிக்கு கச்சானைக் கொடுத்து தாக்காட்ட முடியுமா?
நீண்ட நேரமாக நின்று கால்கள் வலிக்க வாகனத்திற்குள் ஏறித்தனது சிற்றில் அமர்ந்து கொள்கிறாள் தேன்மொழி. அருகில் இருந்த பெண்மணியின் மடியில் ஒரு வயது மதிக்கத்தக்க குழந்தை ஆடையின்றி ரவலால் சுற்றப்பட்டிருந்தது. அழுது அழுது களைத்துப் போய் உறங்கிக் கொண்டிருந்தது.
“மாற்றுடைகள் எல்லாம் தீர்ந்துவிட்டன" தேன்மொழியின் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட அந்தப் பெண்மணி மிகுந்த வேதனையுடன் கூறினாள்.
"இந்தப் பிஞ்சு என்ன பாவம் செய்தது" ஆற்றாமையில் சிற்றில் சாய்ந்தவாறு இறுகக் கண்களை மூடிக்கொள்கிறாள்.
மனக்கண் முன் கணவனும் பிள்ளைகளும் பல்வேறு கோலங்களில் வந்து போய்க்கொண்டிருந்தார்கள் வன்னிக்கு தொலைத்தொடர்பு கூட செய்ய முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலை. அறிவுப் பிரவாகம் பெருக்கெடுத்துச் சென்றுதான் என்ன பயன்? தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப மனிதனுடைய மனப்பாங்கு வளரவில்லையே! தொழில்நுட்பம் வளர வளர அவனுடைய மனப்பாங்குகள் குறுகிக் கொண்டல்லவா செல்கிறது. தேன்மொழி படித்தவள். அவளுடைய வளர்ச்சிக்குத் தடைக்கல்லாக அமைந்தது காதல் என்ற மூன்றெழுத்து. அதனால் தான் உறவுகளின் உதவியைக் கூடப்பெற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறாள்.
"தங்கைச்சி” என்ற குரல் தட்டி எழுப்புகிறது. விழித்தவளின் கண்களின் எதிரே கையில் ஒரு துண்டுக் காகிதத்துடன் ஒரு பெண்மணி. தேன்மொழியிடம் அந்தத் துண்டை நீட்டுகிறாள். அவளின் விழியோரங்களில் வடிந்து காய்ந்த கண்ணிர்த் திரைகள்.

ീg/ീ മff
"அன்பார்ந்த தமிழ் உள்ளங்களே! வவுனியாவைச் சேர்ந்த பெண்மணி நான். யாழ் வந்த நேரம் ஏ9 பாதை மூடப்பட்டதால் இரண்டு வருடங்களாகியும் என்னால் திரும்பிச் செல்ல முடியவில்லை. கப்பலில் செல்வதாயினும் நாலாயிரம் ரூபாய் பண்ம் தேவை. அதனைக் கொடுத்து உதவுவதற்கு எனது உறவினர்களும் வசதியானவர்கள் அல்ல. அன்றாடங்காய்ச்சிகள். "சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல் நீங்கள் செய்யும் உதவி, என்னை என் குடும்பத்துடன் சேர்ப்பித்த புண்ணியத்தைப் பெற்றுத் தரும்.
தேன்மொழியின் உடலெல்லாம் ஒரு கணம் சிலிர்த்துக் கொள்கிறது. இரப்பதிலும் இறப்பது மேல் என்று சொல்வார்கள். அதனால் தான் இரக்காமல் தனது இரத்தத்தைத் தானம் செய்து விட்டுத் திரும்பிக் கொண்டிருக்கிறாள். இரக்கும் நிலை யாருக்கும் வரலாம். எந் தவேளையும் வரலாம். தானி பட்ட அதே துன்பத்தைத்தானே இதுவரை காலமும் இவளும் அநுபவித்திருப்பாள். இவ்வாறு எத்தனை இதயங்கள் துடிதுடித்துக் கொண்டிருக்கின்றனவோ யார் அறிவார்?
மணிபேசிற்குள் இருந்த ஐயாயிரம் ரூபாவில் ஐந்நூறு ரூபா நோட்டு ஒன்றை எடுத்து அவள் கரங்களுக்குள் திணிக்கிறாள். பெற்றுக்கொண்ட அவளது கண்களில் வடிந்து காய்ந்திருந்த கண்ணிர்த் திரைகள் மீண்டும் பனித்துக் கொள்கிறது.
"இதுவரை எவ்வளவு அம்மா சேர்த்து விட்டீர்கள்?" ஏதோ ஆர்வத்தில் இவ்வாறு கேட்கிறாள் தேன்மொழி
“இன்று தான் தொடங்கியிருக்கிறேன், உங்களைப்

Page 34
ീjി മpി
போல புண்ணியவாட்டிகள் எட்டுப்பேர் தந்தால் நாளையே வவுனியா பறந்து விடுவேன்"
வவுனியாவிற்கு போய்ச் சென்று விட்டது போன்ற மகிழ்ச்சி அந்தப் பெண்மணியின் அழகு வதனத்தில் தெரிந்தது. அந்தப் பெண்மணி கூறியது உண்மை தான். ஆனால் இவ்வாறு கொடுத்து உதவுபவர்கள் யார்? தன்னுடைய நிலையை மறந்து தானும் அந்தக் கொடிய துன்பத்தை அநுபவித்தவள் என்ற உணர்வில் ஐந்நூறு ரூபா நோட்டை எடுத்து உடனே நீட்டி விட்டாள். அவ்வாறு எல்லோரும் முன்வருவார்களா? ஐந்து பத்தாகச் சேர்த்து அவள் எப்போது வவுனியா போய்ச் சேர்வது?
நன்றியுணர்வுடன் தேன்மொழியை நோக்கி விட்டு பின் ஆசனங்களை நோக்கிச் செல்கிறாள் அந்தப் பெண்மணி. சில்லறைக்குற்றிகள் தட்டில் விழுவது தேன்மொழியின் செவிகளில் நன்றாகக் கேட்கிறது. அந்தப் பெண்மணி எப்போது தன்னுடைய குடும்பத்தினருடன் சேர்வது?
பிரிவு தரும் கொடுமை இருக்கிறதே! அதனால் உண்டாகும் வலி எந்தக் கொடிய நோயினாலும் ஏற்படாது. இந்த வலியைத் தானே பெரும்பாலான மானிட ஜென்மங்கள் அநுபவித்துக் கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் யார்? நாங்களா?
தேன்மொழியின் மனதில் பொருத்தப்பாடற்ற சிந்தனைகள் வந்து முட்டி மோதிக் கொள்கின்றன. ஒரு மனிதனினி ஆயுட் காலம் அறுபதோ, எழுபதோ அதற்கிடையில் மனிதர்கள் படும் சித்திரவதை. அவஸ்தை. அப்பப்பா!
G50)
 

ീ0%, #fp/ நீண்ட நேரம் இருந்ததால் மீண்டும் கால்கள் வலிக்க இறங்கி வெயில்படாத பஸ் நிழலில் நின்று கொள்கிறாள். அவள் பார்வை நாலாபக்கமும் சுற்றிச் சுழல்கிறது! ஆண்களில் சிலர் பற்றை மறைவைத் தேடிச் சென்று கொண்டிருந்தார்கள். பெண்கள் எங்கே செல்வார்கள்?
திடீரென விசில் ஊதும் சத்தம். இறங்கி நின்றவர்கள் வாகனங்களில் ஓடிச்சென்று ஏறிக்கொள்ள தேன்மொழியும் தனது பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொள்கிறாள். வாகனங்கள் புறப்படும் ஓசைகள். தேன்மொழி பிரயாணம் செய்த பஸ் வண்டியும் ஒரு குலுக்கலுடனும் நிம்மதியுடனும் புறப்படுகிறது.

Page 35
மிர்ரும்வசந்தம்
ஆற்றல்கள் மழுங்கடிக்கப்படுகின்றன
1னம் இருண்டு வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. அவசர அவசரமாக கொடியில் தொங்கிய உலர்ந்த ஆடைகளை சேகரித்த
:வேணி டிய கடமைகள்
நிறைந்திருந்தன.
இரவு உணவு தயாரித்து பிள்ளைகளின் படிப்பில் கவனம் செலுத்தி மறுநாள் பாடசாலையில் கற்பித்தலுக்கான பாடக்குறிப்பு எழுதி கற்பித்தல் உபகரணங்கள் தயாரித்து சேகரித்து. நினைக்கவே வாழ்க்கை வெறுத்தது. மனித வாழ்வு தேவைதானா என்ற எண்ணம் கூட மனதில் எட்டிப்பார்த்துச் சென்றது.
"அம்மா எனது யூனிவோம் அயன் பண்ணவேணும்" வந்து நின்றாள் கடைக்குட்டி சகானா. அதனையும் காதில் வாங்கிய வண்ணம் சேகரித்த உடைகளை மடிக்கத் தொடங்கினாள்.
ஒருவாறாக தனது கடமைகளை முடித்து படிக்கும் மேசைக்கு வர இரவு பதினொரு மணியாகிவிட்டது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

η
"பதினொரு மணியாகி விட்டது, நாளைக்கு பாடசாலை போகும் எண்ணம் இல்லையா?" ஓரளவு கரிசனையுடன் கணவன் கோகுலன் வினவினான். அதற்கு பதில் சொல்ல முடியாத அளவிற்கு துவாரகாவிற்கு மூளை கனமாகக் கொதித்தது. காரணம் இன்றுடன் ஒன்றரை மாதமாகி விட்டது. மேசை முன் வந்து பேப்பர் பேனாவுடன், அமர்வதும் பின்பு எல்லாவற்றையும் கைப்பைக்குள் திணித்து விட்டு உறங்க செல்வதும் வழக்கமாகிவிட்டது.
இன்றும் அதே பேனா பேப்பருடன் உட்கார்ந்தாள் துவாரகா. அவளால் எதுவுமே எழுத முடியவில்லை. சிறுகதை, நாடகம் என்று எழுதி அத்தனைக்கும்
பரிசைப்பெற்ற துவாரகாவால் இன்று ஒரு வரி கூட எழுத
முடியவில்லையே? துவாரகாவுடன் அன்பாக பழகும் நண்பிகளிடம்
“எந்த நேரமும் என்னால் எழுதமுடியும்" அதற்கென்று ஒரு சூழ் நிலையோ, மனநிலையோ தேவையில்லை" என்று பெருமிதமாகக்கூறிய துவாரகாவா? இன்று பேனாவுடனும் பேப்பருடனும் போராடிக் கொண்டிருக்கிறாள்.
"எழுத்தாளர்களே தைபிறந்து விட்டது! உறங்கியது போதும், விழுத்தெழுங்கள்! உங்கள் பேனாக்களை எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் சிறுகதைகளை 25.02.2008ஆம் தரிகதரிக்கு முன்னர் எமக்கு அனுப்பிவையுங்கள். தெரிவாகும் தரமான சிறுகதைகள் தினக்குரல் இலக்கியத் தென்றலில் பிரசுரக்கப்படுவதுடன் பின்னர் தினக்குரல் சிறுகதைத் தொகுதியாக வெளியீடாகும். அத்தொகுதியிற் பிரசுரமாகும் சிறுகதைகளுக்கு வழமையான சன்மானமுள்ளது.
2008 தைமாதம் 20ஆம் திகதி வந்த நியூஸ் இது.
8.8

Page 36
மீண்டும் வசந்தம் சன்மானத்திற்கு ஒரு போதும் ஆசைப்படவில்லை துவாரகா. பத்திரிகையில் பிரசுரித்தாலே போதும். ஆனால் அதற்கு கூட நாலு பக்கங்கள் எழுத முடியவில்லையே! இதற்கு காரணம் என்ன? அவளுடைய குடும்பத்தில் ஏற்பட்ட மீளாத துயரங்களா? அல்லது அவளது கற்பிக்கும் பாடசாலையில் திணிக்கப்படும் அழுத்தங்களா? அல்லது சமூகத்தினால் அவளுக்கு கண்ணுாறு ஏற்பட்டுவிட்டதா?
சிந்தனையில் மூழ்கியிருந்த துவாரகாவிற்கு அலுமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அண்மையில் வெளியீடு செய்த புத்தகங்கள் கண்ணில்பட்டதும் அவளுடைய நினைவுகள் பின்னோக்கி நகர ஆரம்பித்தன.
க.பொ.த உயர்தரம் வரை கல்வி கற்று விட்டு வீட்டில் இருந்த காலங்களிலேயே எழுத்துலகிற்குள் பிரவேசித்தவள் துவாரகா. தன்னை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் அவ்வளவாகக் கிடைக்காமையால் எழுதியவற்றைப்பேணிப்பாதுகாத்து வைக்க முடிந்ததே தவிர வெளியீடு செய்ய முடியவில்லை.
இருபது வருடங்களின் பின்பே அவற்றை வெளியீடு செய்யும் பேறு கிடைத்தது. வெளியீட்டு விழா, கல்வியாளர்களதும் உறவினர்களதும் முன்னிலையில் மிகவும் சிறப்பாக நடாத்தப்பட்டது. துவாரகாவின் வளர்ச்சியில் அக்கறையும் ஆர்வமும் கொண்ட நண்பிகள் சிலர் துவாரகாவை அள்ளி அணைத்து ஆரத் தழுவிக் கொண்டார்கள்.
எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நல்ல எண்ணம் கொணி டவர்கள் கொடுத்த ஆதரவு இனினோர் நூல்வெளியீட்டிற்கும் அத்திவாரமிட்டது.
G54)
 
 
 

மீளாத்துயர் ஒன்றை மனதில் சுமந்த வண்ணம் தான் துவாரகாவின் முதல்வெளியிடே நடந்தேறியது. இது பலருக்குத்தெரியாத ஒன்று.
துன்பவலையில் சுழன்று தவிக்கும் துவாரகாவின் உள்ளக்குமுறல் யாருக்கு விளங்கப் போகிறது? தனது துன்பநிலையைப் பிரதிபலிப்பதாக அவளது செயற்பாடுகள் ஒரு போதும் அமைவதில்லை. மற்றையவர்கள் முன்பு, தான் தனது குடும்பம் குறைந்து போகக்கூடாது என்பதற்காக ஏனையோர் போன்று உலா வருவாள். மனதிற்கு விரும்பாத விடயங்களைக் கூட செய்து முடிக்க வேண்டிய நிர்ப்பந்தம். அதே நேரம் துவாரகாவை எண்ணி நகையாடு பவர்களும் போகவிட்டுப்புறம் சொல்பவர்களும் சமூகத்தில் இருக்கத்தான் செய்தார்கள்.
துவாரகா புத்தக விற்பனைக்குச் சென்ற சமயம் தனது உள்ளத்தின் காயங்களை மறைத்துச்சுற்றியிருந்த பன்டேச் கட்டுக்களை, ஒரு அதிபர் முன்னிலையில் அவிழ்க்க வேண்டிய நிர்ப்பந்தம். அவளது வாழ்க்கை ஒரு வரலாறாகத் தென்பட்டது அதிபருக்கு. அதிபர் ஆடிப்போய்விட்டார்.
"அம்மா நீங்களென்றபடியாலி இவ்வளவு துயரங்களையும் சுமந்து கொண்டு இவ்வாறெல்லாம் செயற்படுகிறீர்கள். என்னால் என்றால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. உங்களைப்பாராட்ட வேண்டும்"
அதிபரின் அந்த வார்த்தைகள் துவாரகாவை ஊக்குவித்த அதேவேளை சிறிது சோர்வடையவும் செய்து விட்டது. ஆனாலும் முன்வைத்த காலைப்பின் வைக்க விரும்பாத துவாரகா பேணிக்காத்த சிலவற்றுடன் புதிதாக எழுதிய ஓர் இரு விடயங்களையும் கணனியில் பதிவு செய்யக்கொடுத்து விட்டாள்.
..34.Iر۔ .11- <,,... S

Page 37
விதியா? மதியா? சதியா? அல்லது துவாரகா செய்த a56öILD DIT?
முதல் நாள் இன்பச் செய்தி கேட்டு
முடிந்தது பட்டதுயர் பாதி என்று இருந்த வேளை
பேரிடியொன்று அவள் தலையில்
மீண்டும் விழுந்து விட்டால். எழுந்திருப்பதேது?
நெஞ்சு துடிக்க இரத்தம் கொதிக்க நாடி நரம்புகள் புடைக்க அவற்றை அடக்க வழியில்லாமல் துவண்டு போனாள்.
நெஞ்சம் குமுற விம்மல் பொரும கண்கள் குளமாக ஐயோ! ஐயோ! என்று ஊர்கேட்க அழமுடியாத பாவி, உள்ளுக்குள்ளே வெந்து வெந்து வெடித்தாள். வாழ்க்கை சூன்யமாகப்பட்டது. ஆசிரிய தொழிலையே வெறுத்தாளி. நீண்ட நாள் லீவில் வீட்டில் முடக்கப்பட்டாள்.
துவாரகாவின் வளர்ச்சியை அவளது ஆற்றல்களை போற்றிப் பேசிய சமூகம் நான்கு மாதங்களின் பின் தூற்றிப்பேசும் நிலைக்கு துவாரகாவின் விதி தள்ளிவிட்டது. மனிதப்பிறவி எடுத்த அத்தனை பேருக்கும் இடையில் சாவு வருகிறதா? இல்லையே! ஓர் இருவரைத்தானே தேடி வருகிறது. கூனிக்குறுகிப் போனாள்.
பொம்மர் குண்டு விச்சுக்கு அஞ்சி மகளின் விட்டிற்குச் சென்ற பெண்ணை யானை தாக்கவில்லையா? அதே போல் தனக்கு ஏற்பட்ட இழப்புக்கும் விதிதான் காரணமென விதி மேல் பழி போட்டாள். ஆனால் சமூகம் துவாரகாவின் மீது பழி போட்டது. தலையிடியும் காய்ச்சலும் தனக்குத்தனக்கு என்று வரும் போதுதானே அதன் வேதனையும் வலியும் தெரியும். யாரை யார் நோவது?
இந்த நிலையிலும் துவாரகாவை குறை சொல்பவர்
 

է ն՝: . , : ,
குறையவில்லை "அவ் பிள்ளைகளைக்கவனிப்பதில்லை ஒரே எழுதுறது தான் வேலை. தன்னுடைய படிப்பும் வேலை எண்டும் திரிவா"
இவ்வாறான சொல் அம்புகள் துவாரகாவின் ஈரநெஞ்சைத்துளைத்தெடுத்தன. சிறப்பாகக் கொண்டாடப்பட்ட அந்த நூல்வெளியீட்டின் விளைவு தான் இவ்வாறான குதர்க்கப்பேச்சுக்கள்.
துவாரகா பிள்ளைகளின் கல்வியில் ஒழுக்கத்தில் நலனில் கொண்ட அக்கறை அந்த ஊரில் ஒரு தாய் கொண்டிருக்கமாட்டாள். பிள்ளைகளைத் தங்களுடன் வைத்துச்சீராக வளர்க்க முடியாமல் வெளிநாடுகளுக்கு அனுப்பும் பெற்றோர், உயிருள்ள மனிதர் உயிரற்ற விடுவாசல், பணம் பண்டத்திற்கும் சம அந்தஸ்தைக்கொடுக்கும் பெற்றோர், பிள்ளைகளின் எண்ணப்படியே வாழவிடும் பெற்றோர் இவ்வாறான ஒரு சமுதாயம் தான் துவாரகாவில் பழி போட்ட சமுதாயம்.
"பிள்ளைகள் மீது அளவுக்கு மீறிய கட்டுப்பாடும் கூடாது" என்றனர் ஒரு சிலர். அதையும் "காதில் வாங்கிக்கொண்டாள் துவாரகா. தனது பிள்ளைகளுக்கு மட்டுமல்ல தன்னிடம் கற்கும் மாணவர்களுக்குக்கூட அடிபோடமாட்டாள். அவ்வாறு அடிப்பவர்களையும் துவாரகாவிற்குப் பிடிக்காது. அப்படிப்பட்ட துவாரகாவிற்கு இது வேண்டியது தான். “பிள்ளைகளைச் சிறுவயதிலேயே கண்டித்து வளர்க்க வேண்டும். அல்லது துவாரகாவிற்கு ஏற்பட்ட நிலைதான் எமக்கும் ஏற்படும்"
வாய்விட்டுக்கூறினர் வேறு சிலர். நாவிற்கு தடை ஏது? அது தன் இஷ்டத்திற்கு சுற்றிச் சுழன்றது. இவ்வாறான மனிதர்கள் மத்தியிலும் மாணிக்கங்கள் இருக்கத்தானே செய்கின்றன.

Page 38
αδαήφάό ωμά ήέάό
"ரீச்சர் இருக்கிற பிள்ளைகளைக் கொஞ்சம் நினைத்துப்பாருங்கோ. போனவர்களோடு நீங்களும் போனால் இதுகளின்ரை நிலை என்ன?”
"பிறப்பும் இறப்பும் இறைவனின் விருப்பம் எது எப்படி நடக்கவேண்டுமோ அது அவன் வகுத்து வைத்த எழுதி வைத்தசட்டம். அதில் எதனையும் அழித்து விடவோ மாற்றி விடவோ எவருக்கும் அதிகாரம் இல்லை. ஆகையினால் தான் நடந்து போகின்ற துன்பநிகழ்வுக்கான சமாதானத்தை சகிப்புத்தன்மையை எங்களுக்குள்ளேயே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்”
"துவாரகா உங்களுக்கு ஏற்பட்ட இழப்பு நிவர்த்தி செய்யமுடியாததுதான். நீங்களே உங்களை ஆறுதல் படுத்தினாலே தவிர ஆறுதல்படுத்த முடியாது”
இவ்வாறு பல பல எழுத்துக்கள், கூற்றுக்கள், புத்திமதிகள்.
ஆறுதல் வார்த்தைகள் துவாரகாவின் செவிகளில் வலுவிழந்து வந்து குவிந்தன. இருக்கின்ற பிள்ளைகளின் நலனில் அக்கறை கொண்டவளாக மீண்டும் பாடசாலைக்குள் காலடி எடுத்துவைத்தாள். எதிர்பார்த்துச்சென்ற ஆதரவோ அநுதாபமோ அங்கே கிடைக்கவில்லை. மாறாக “யாருக்கு பிரச்சினை இல்லை, யாருக்கு துயரம் இல்லை, உதையெல்லாம் விட்டிட்டு படிப்பிக்கிறதிலை கவனம் செலுத்துங்கோ"
என்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அந்தக் கட்டளைக்குக் கட்டுப்பட்டவளாக கற்பித்தலில் மாத்திரமின்றி பாடசாலை கலை நிகழ்வுகளிலும் ஆடிப்பாடிப்பயிற்றுவிக்க வேண்டிய கட்டாயம். அதற்கும் தலைசாய்த்தாள் துவாரகா.
 

இவற்றையெல்லாம் அவதானித்துக்கொண்டிருக்கும் சமூகம் துவாரகாவை தவறாகத்தானே எடைபோடும். ஆனால் ஒவ்வொரு வினாடியும் துவாரகா படும் அவஸ்தை...?
நாளாந்தம் கண்ணிர் கரையக்கரைய நாட்களும் கரைந்து கொண்டிருந்தது. தனது உறவினர் நண்பர்களைச் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் தன்னுடைய பிள்ளைகளின் எதிர்காலத்தைப்பற்றியும் அதற்காக தான் செய்த முயற்சிகள் பற்றியும் அவையெல்லாம் விழலுக்கு இறைத்த நீர் போல் ஆகிவிட்டதே என்றும் நெக்குருகி கண்ணிர் சிந்துவாள். அதனுடன் இணைத்து தனது எழுத்தாற்றல். அதில் தான் கொண்டுள்ள பற்றுதலி, எழுத்துறையின் மீது கொண்ட தாகம், எதையாவது சாதிக்க வேண்டுமே என்ற வெறி, தான் மேற்கொள்ளப்போகின்ற ஆக்கங்கள் யாவற்றைப் பற்றியும் தெரியப்படுத்த மறப்பதில்லை
இது சிலருக்குப்பிடிக்காதிருக்கலாம். ஆனால் அதற்காக அவள் சலித்துப்போய் விடுதில்லை. தன்னுடன் இருக்கும் மூன்று பிள்ளைகளின் வளர்ச்சியிலும் தன் எழுத்திலும் உறுதியுடன் செயல்பட்டாள். அந்த வரிசையில் கணனியில் பதிவு செய்யப்பட்டிருந்த எழுத்துருவை புத்தகவடிவிற்குக் கொண்டு வந்தாள்.
ஏ9 பாதை மூடி பத்திரிகைத்தாள்களின் விலை ஏற்றம் கடுகதியில் சென்றும் தனது முயற்சியைக்கைவிடாது அலைந்து திரிந்து அடுத்த நூல் வெளியீட்டையும் அதே கல்வியாளர்கள், மூத்த எழுத்தாளர்கள் முன்னிலையில் கனத்த இதயத்துடன் நிறைவேற்றினாள். இந்த வெளியிடும் பலரைப்பலவாறு பேசவைத்திருக்கலாம்.
"வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்"

Page 39
அப்படிப்பட்ட இந்த வையகத்தைப் பற்றி துவாரகா கவலைப்படவில்லை. இரண்டு நூல் வெளியீடுகளும் துவாரகாற்கு பல அநுபவங்களைப் பெற்றுக்கொடுத்தது. பல இடங்களுக்கு ஏறி இறங்குவாள்.
புத்தகம் இருநூறு ரூபாவாயின் மோட்டார் சைக்கிளுக்கு ஊற்றும் பெற்றோல் நூற்றைம்பது ரூபாவாக இருந்தது. இட்டமுதல் வந்தால் போதும் என்ற மனநிலையிலே தான் வெளியிட்டினை மேற்கொண்டாள். இட்டமுதலில் ஜந்தில் ஒரு பங்குதான் வெளியீட்டிலே கிடைத்தது. மிகுதியை நிரப்புவதற்கு பலரிடம் கையேந்த வேண்டிய இரக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை. கிட்டத்தட்ட கெளரவமான பிச்சை எடுப்பு என அவளின் மனதில் பட்டது.
ஆனாலும் மனம் தளராது தனது முயற்சியைத் தொடர்ந்தாள். சில இடங்களில் நல்ல வரவேற்பு ஆதரவு சில இடங்களில் அநாதரவு. முகச்சுழிப்பு. புத்தகங்கள் வாசிப்பதில்லை, வாசிக்க நேரம் கிடைப்பதில்லை, என்ற சாட்டுக்கள். காரணம் இருநூறு ரூபா பணம் தங்கள் கைகளை விட்டுப்போகப்போகின்றதே என்ற ஆதங்கமோ! என்னவோ?
வசதி குறைந்த பல பேர் துவாரகாவிற்கு பலத்த ஆதரவு வழங்கினார்கள். அதே வேளை வசதி படைத்த சிலரின் செய்கைகள் சுவரில் ஆணி அறைந்தது போல் மனதில் பதிந்து விட்டது. வசதிபடைத்தவர் என்று கருதி ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியையின் இல்லத்திற்கு பெற்றோல் செலவையும் பொருட்படுத்தாது போய் நின்று "ரீச்சர்" என அழைத்தாள். அந்த ஆசிரியையோ துவாரகாவின் கையில் புத்தகத்தைக் கண்டதும்.
"நான் புத்தகம் வாசிக்கிறதில்லை ரீச்சர். அதோடை கையிலையும் காசில்லை" என்றார்
 

துவாரகாவிற்கு பெருத்த அவமானமாகப் போய்விட்டது. இத்தனைக்கும் மறுவார்த்தை பேசவில்லை துவாரகா. வெளிநாட்டில் பிள்ளைகள். எண்ணியவாறு மோட்டார் சைக்கிளை ஒரு உழக்கு உழக்கி விட்டு புறப்பட்டு விட்டாள்.
இதே போன்று இன்னோர் வசதிபடைத்த குடும்பம். செல்வத்தில் புரள்பவர்கள். சுற்றாத நாடுகள் இல்லை. குழந்தைச் செல்வங்களும் கிடையாது. முதல் நூல் வெளியீட்டிற்கு சிறப்புப்பிரதி பெறுவதற்கான பெயர் பதிவதில் ஆர்வம் காட்டினார்கள். ஆனால் சிறப்பு பிரதி பெறுவதற்கு சமூகம் தரவில்லை. சிறப்பு பிரதியை அவர்களின் இல்லத்திற்கு கொண்டு சென்றால் ஆசிரியை விட்டில் இல்லை. பிறகு வாருங்கள் என்றார் அவரது கணவன். பரவாயில்லை புத்தகத்தை உங்கள் மனைவியிடம் கொடுங்கள். என்று கூறிக்கொடுத்து விட்டு வந்து விட்டாள். சில மாதங்களின் பின் அவர்கள் வீட்டுப்பாதையால் சென்ற போது வாயிலிலிருந்த அழைப்பு மணியை அழுத்தினாள். மிஞ்சியது ஏமாற்றம் தான். ஆனாலும் ஏதோ ஒரு நப்பாசையில் பல மாதங்களின் பின் இரண்டாவது நூலுடன் அவர்கள் மனைபுகுந்தாளி.
“கையில் அலுவலாக இருக்கிறார்" என்று பதில் வந்தது. அந்தப்பதிலைக்கேட்டதுமே துவாரகாவிற்கு ஒரு மாதிரியாகப் போய்விட்டது. யோசித்து விட்டு அருகில் இருந்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டாள். கையிலே அலுவலாக இருந்த அவர் மனைவி உடனே தரிசனம் தந்து விட்டார். கணவன் கூறியது எவ்வளவு தூரம் உண்மை யென்று துவாரகாவிற்கு விளங்கவில்லை. ஆனாலும் எழுந்தவாறு.
"ரீச்சர் இரண்டாவது நூலும் வெளியிட்டு விட்டேன். முதல் நூலுக்கும் கவனிக்கவில்லை. இரண்டையும் சேர்த்து

Page 40
• 湾* ? 。 ? */
外
நன்றாகக்கவனியுங்கள்" மற்றைய புத்தகத்தையும் நீட்டினாள் புன்முறுவலுடன்
"ஐயோ! ரீச்சர் என்னுடைய கையிலை ஒரு நூறு ரூபா கூட இல்லை”
அந்தப்பதில் துவாரகாவிற்கு திகைப்பை ஊட்டியது. ஏமாற்றத்தை மறைக்க முடியாதவளாக “என்ன ரிச்சர் ஒரு நூறு ரூபா கூட கையிலை இல்லாமலா இன்றைய பொழுதைக் கழிக்கப்போகிறீர்கள்"
வினாவினாள் துவாரகா
“கற்காட்டிலை எடுக்க வேணும் ரிச்சர். பதில் அளித்தாள் ஆசிரியை. மனதிற்குள் சிரித்துக்கொண்டாள் துவாரகா. அந்தச்சிரிப்பின் வெளிப்பாடு அவள் உதட்டிலும் பிரதிபலித்தது.
இந்த யாழ்ப்பாணத்திலி நாளை என்ன நடக்கப்போகிறது என்பதை விட இன்று என்ன நடக்கும் என்பதே நிச்சயமில்லாத ஒன்று. திடீரென ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் இந்த ஆசிரியரின் நிலை? மெளனமான்ாள் துவாரகா, மெளனத்தைக் கலைத்த அந்த ஆசிரியர்
"ரீச்சர், உந்தப்புத்தகத்தைக்கொண்டு போங்கோ. முதல் புத்தகத்திற்கு காசு அனுப்புறன்"
பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்று சொல்வார்கள். அந்த வகையில் ஒரே ஒட்டமாக மோட்டார் பைசிக்கிளில் வீடு வந்து சேர்ந்தாள் துவாரகா.
விட்டிற்கு வந்த துவாரகாவின் மனம் ஒரு நிலையில் இல்லை. இவ்வாறு யாவரும் இருந்தால் எழுத்தாளர்கள் எவ்வாறு தம்மை வளர்த்துக்கொள்வார்கள்? எல்லோருக்கும் எல்லா ஆற்றல்களும் இருப்பதில்லை. அவ்வாறிருக்க என்னைப்போன்ற எழுத்தாளர்களை ஊக்குவிக்க பரிசுகள்
a
የፈኅን
 
 
 

வழங்கினால் மட்டும் போதுமா? இப்படிப்பட்ட அநுபவங்களைச் சந்தித்தபின் தன்மானமுள்ள யாராவது நூல்களை எழுதி வெளியீடு செய்ய முன்வருவார்களா? இதனால் தான் பல எழுத்தாளர்கள் இலைமறை காயாக இருக்கிறார்களா?
இதே நேரம் துவாரகாவை மதித்து அவளது எழுத்தாற்றலை மதித்து ஊக்குவித்த பண்பாளர்களும் இருக்கத்தான் செய்தார்கள்? பெரிய அதிகாரி ஒருவரிடம்
“சேர், உங்கள் விட்டிற்குத்தான் போகிறேன்." அவள் கூறிமுடிக்கவில்லை, தனது ப்ரீட்கேசைத்திறந்து ஐந்நூறு ரூபா பணத்தை எடுத்து நீட்டினார். துவாரகாவிற்கு மெய் சிலிர்த்துக்கொண்டது. நன்றியை மனதுக்குள் கூறிவிட்டு பணத்தைப்பெற்றுக் கொண்டாள்.
இதே போன்று ஒரு ஆசிரியர் துவாரகாவின் விட்டுக்கே தேடி வந்துவிட்டார்.
"இந்தாங்கோ ரீச்சர், இவ்வளவு நாளும் உங்களைச் சந்திக்க முடியவில்லை" என்றவாறு இருநூறுருபர் பணத்தை நீட்டினார். நீட்டிய பணத்தை வாங்கிய இரு கரங்களும் சிறிது ஆட்டம் கண்டது. உள்ளத்தில் ஏற்பட்ட இனம் புரியாத உணர்வு. புல்லினிடையே பனித்த பனித்துளிகள் போல விழியோரங்களில் நீர் மறைந்து சென்றது. ஆசிரியர் விடைபெற்றுவிட்டார். மலைத்து நின்றாள் துவாரகா.
கடிகாரத்தில் டாண் டாண் என்று பன்னிரண்டு ഗ്രഞ്ഞു அடித்து ஓய்ந்தது. கடிகாரத்தை நிமிர்ந்து பார்க்காமலே பன்னிரண்டு மணி ஆகிவிட்டது, என்பதை உணர்ந்து கொண்டாள். ஒரு மணித்தியாலம் தனது பழைய நினைவுகளில் மூழ்கி இருந்திருக்கிறாளே! ஏதோ ஒரு நினைப்பில் மேசை மீது பரப்பப்பட்டு வைத்திருந்த கொப்பிகளின் மீது கவனத்தைச் செலுத்தினாள்.

Page 41
ஜயையோ பாடக்குறிப்பு எழுதவேண்டுமே என்ற நினைப்பு வந்ததும் பாடசாலை அதிபரின் நினைவு வந்து மீண்டும் பழைய நினைவுகளுக்குள் மூழ்கடிப்பட்டுவிட்டாள்.
தற்கால தகவல் தொழில் நுட்ப உலகிற்கேற்ப கற்பித்தல் முறையின் படி பாடசாலை வேலைகள் ஆசிரியர்களுக்கு சுமக்க முடியாத சுமைகள் . தனித்துப்பிரம்புடன் வாத்தியார் சென்று கல்வி கற்பித்த காலம் போய்,
மனதிலி எத்தனையோ திட்டங்களுடனும் செயற்பாடுகளுடனும் வகுப்பறைக்குள் நுழையும் காலம். பாடசாலை வேலைகளையே பாடசாலையில் எழுதமுடியாமல் விட்டிற்கு கொண்டு செல்வாள் துவாரகா, அவ்வாறிருக்க துவாரகாவின் பலவீனத்தை, எழுத்துலகில் அவள் வசிக்கும் பங்கினை, ஆர்வத்தை மனதில் நிறுத்தி
"ரீச்சர் கதை எழுதுறதிலை இருந்திபாதையுங்கோ" அதிபர் துவாரகாவைச் சந்திக்கும் போதெல்லாம் இவ்வாறு கூறுவார்.
'குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பார்கள் அதற்கிணங்க துவாரகா அந்த வார்த்தையைப் பெரிதுபடுத்துவதில்லை. ஆனால் அதிபர் விட்டபாடில்லை. "ரிச்சர் பனைக்கு கீழே இருந்து பால் குடிச்சாலும் கள் குடிக்கிறதாகத்தான் சொல்வார்கள்"
அதிபரின் இந்த வார்த்தையைக் கேட்டதும் துவாரகாவிற்கு தூக்கிவாரிப்போட்டது. மறுவார்த்தை பேசமுடியாதவாறு நாக்குச் செத்துவிட்டது. சப்த நாடிகளும் ஒடுங்கிவிட்டது. அவளது ஆற்றல்கள் வளர்க்கப்பட வேண்டாம். மதிக்கப்பட வேண்டாம். மிதிக்கப்படாமலாவது இருக்கலாம் அல்லவா!
 
 

இந்த நிலையில் அவளால் எவ்வாறு கதைகள் எழுதமுடியும்? போட்டிகள் அதிகரித்துக்கொண்டு செல்லும் இவ்வேளைகளில் போட்டிகளில் எவ்வாறு பங்குபற்ற முடியும்? அவ்வாறு பங்கு பற்றி வெற்றியிட்டினாலும் பாடசாலைகளில் எழுதுவதாக அல்லவா முடியும்.
கடிகாரத்தில் பாண் என்று ஒரு மணி ஓசை. ஒரு மணியைக்காட்டி நின்றது. தொடர்ந்தது அவள் நினைவு. இன்ரவியூ ஒன்றில் துவாரகாவின் சான்றிதழ்கள் பார்வையிடப்பட்டன. பார்வையிட்டவர்கள் அதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டனர். துவாரகா அவை ஒன்றையும் எடுத்துச்செல்லவில்லை. பார்வையிட்டவர் சான்றிதழ்களை ஏற்க மறுத்துவிட்டார். இன்ரவியூ போட்டில் இருந்த இன்னொரு பெண்மணி
"நீங்கள் ஒரு ஆசிரியர், குடும்பப் பெண் எழுதுவதற்கு எங்கே நேரமிருக்கிறது? என வினாவினார்.
துவாரகாவிற்கு இந்த வினாவிற்கு விடை அளிப்பது கடினமாக இருக்கவில்லை. காரணம் அவள் சாமம் சாமமாக எழுதுவாள். இது தான் உண்மை நிலை. அந்தப்பதிலையே துவாரகா கூறினாள்.
இவ்வாறு மூன்று பொறுப்புக்களையும் சுமந்து கொணி டு அலி லலி படும் அவளினி மனத்தைப் படாதபாடுபடுத்துகிறதே இந்த அதிபரின் செயற்பாடு.
நேரத்தைப்பார்க்கிறாள். ஒன்று முப்பது. கணவரின் குறட்டை ஒலி காதுகளில் ரீங்காரமாக ஒலித்தது. பிள்ளைகள் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தார்கள்.
மீண்டும் எல்லாவற்றையும் மறந்து ஒற்றையையும் பேனாவையும் கையிலெடுத்து கற்பனையில் ஆழ்ந்தாள். பரிசு பெறுவதற்கான கருவாகவும் சிறந்த மொழி

Page 42
மிர்ரும் வசந்தம்
நடையாகவும் உணர்வுகளைத்தட்டி எழுப்புவனவாகவும் அமைய வேண்டுமே" என்று மனதில் நினைத்தவளாக எழுதத்தொடங்கினாள். திருப்தியில்லை.
ஒற்றையைக் கசக்கி எறிந்து விட்டு மீண்டும் இன்னோர் ஒற்றை எடுத்தாள். ஏதோ கைக்கு வந்ததை எழுதினாள். திருப்தியில்லை
“எனக்கு என்ன நேர்ந்து விட்டது. சாபம் ஏதாவது என் மீது போடப்பட்டுவிட்டதா?”
தலையைப் பிய்த்துக் கொள்ள வேணிடும் போலிருந்தது. புல், பூண்டு, செடி, கொடி என்று சகலவற்றையும் பார்த்து ரசிக்கும் ஒருவனுக்கு இடையில் பார்வை போனது போன்றும்
இனிமையான ஓசைகளைக் கேட்டு மகிழ்ந்த ஒருவனது செவிப்பறை உடைந்தது போன்றும்
நன்றாக ருசித்து ருசித்துச் சாப்பிட்ட ஒருவன் பற்களை இழந்தது போன்றும்
துவாரகாவின் நிலை. மனதில் அமைதி இன்றி தவிக்கும் நேரங்களிலும் தனிமையில் இருக்கும் நேரங்களிலும் சுவரில் தொங்கிக்கொண்டிருக்கும் உருவப்படத்திற்கு, தன்ைையுமறியாமல் கண்கள் இழுத்துச் சென்றுவிடும். இது நாளாந்தம் நடைபெறும் ஒரு விடயம். சாமம், விடியற்காலை, உணவு உண்ணும் நேரம் என்று மணித்தியாலங்களில் பல தடவைகள், உயிரைக்கொல்லும் நினைவுகள்.
கண்களிலிருந்து கண்ணிர் தாரை தாரையாக வழிந்தோடிக்கொண்டிருந்தது. மீளாத்துயரில் துவாரகா கண்ணிர் சிந்த ஆழ்ந்த துயிலில் இருந்தார்கள். கணவனும் பிள்ளைகளும்.
 

c 4Ꮫ ᎤᏃᎩ76Ꮓ Ᏹ7 %Ꭿ7? 73ᏃᏎ?
தன்னைத்தானே ஆறுதல்படுத்திக் கொண்டாள் துவாரகா. இரண்டு முறை மணி அடித்து ஓய்ந்தது. தொலைக்காட்சியில் ‘புத்தம் புதிது நிகழ்வில் பாடல்கள் ஒலித்த வண்ணம் இருந்தது. நடுநிசியின் அமைதி துவாரகாவிற்கு மனதில் ய்யத்தினை உண்டு பண்ணும். அதனால் தொலைக்காட்சி பாடிக்கொண்டிருக்க வேண்டும்.
தொலைக்காட்சியில் சிவாஜி படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் ஒலித்தது. பாடசாலையில் இசையும் அசைவும் நிகழ்வுக்காகத் தெரிவு செய்த பாடல் அது. துவாரகா பாடலின் நடன அசைவுகளில் புலனைச் செலுத்தினாள். அப்போதுதானே திறமையாகப் பயிற்சி அளிக்கலாம்.
அழுது வடிவந்த கண்களாலேயே ரசிக்க வேண்டிய கடமையுணர்வு. அது தான் துவாரகாவிற்கு இறைவன் கொடுத்தவரம். அதனால் அவள் ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அல்லது அவள் செத்து மடிந்த இடத்தில் பெரியதொரு விருட்சமே உருவாகியிருக்கும். சமூகம் எதையாவது பேசட்டும். பாடல் முடிவடைந்துவிட்டது.
ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவளாக மீண்டும் பேனாவையும் ஒற்றையையும் கையில் எடுத்தாள். பரிசு கிடைக்குதோ! இல்லையோ? தனது ஆத்ம திருப்திக்காக வாழ்க் கைப் புத்தகத்திலி ஒரிரு பக்கங்களை வைத்துக்கொண்டு
“ஆற்றல்கள் மழுங்கடிக்கப்படுகின்றன” என்ற
தலைப்பில் சிறுகதை ஒன்றை எழுதத்தயாரானாள். நேரமோ அதிகாலை மூன்று மணி.

Page 43
மீண்டும் வசந்தம்
&šák ஜோ 96.8FJ 96.8FULDT85 {{இலுவலகத்திற்கு புறப்படத்
Nதயாரானாள். பலத்த காற்றும் *வேறு வீசிக் கொண்டிருந்தது.
"அம்மா பள்ளிக்கூடத்திற்கு நேரமாகிறது. நான் போகப்போகிறன்” என காருண்யா வந்துநின்றதுக்கு அனுப்புவதா வேண்டாமா என்று குழம்பிய வண்ணம் வானத்தை எட்டிப்பார்த்தாள் சாருஜா. இருள் கோலங்கள் மேகக் கூட்டங்களை சூழ்ந்து கொண்டிருந்தது. மழை இப்போதைக்கு விடுமாப் போல தெரியவில்லையே! இப்பொழுது அதனுடைய காலம். அது தன்னுடைய குணத்தைக் காட்டாமல் விட்டு விடுமா? சாருஜா முடிவு எடுக்க முடியாமல் தவிக்க
“என்னம்மா பேசாமல் நிக்கிறியள். இண்டைக்கு தமிழ் பாடத்திலை கணிப்பீடு. போகாட்டால் பிறகு எங்கடை ரீச்சர் வைக்க மாட்டா” காருண்யா கூறவும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

"பொல்லாத கணிப்பீடு, இந்த அடை மழையுக்கை உங்கடை ரீச்சரே வாறாவோ தெரியயில்லை. நீ என்னடா
"நீங்கள் அலுவலகத்திற்குப் போகப்போறியள் தானே! அது போல அவவம் வருவா. நான் போகப் போறன்” அடம் பிடித்தாள் காருண்யா.
காருண்யாவை ஸ்கூலால் மறித்தால் அவள் தனித்துத்தான் வீட்டிலை நிற்க வேண்டி வரும். காலம் வேறு கெட்டுக்கிடக்கிறது. நாள் தோறும் பத்திரிகைகளில் வரும் செய்தி அவள் நெஞ்சைத் துளைத்தெடுத்தது. பாலியல் வல்லுறவு, பாலியல் துஷபிரயோகம், சிறுமி கடத்தல் இவ்வாறு பலப்பல செய்திகள்.
"அம்மா நான் போட்டுவாறன்" என்று கூறியவாறு றெயின் கோட்டுக்குள் தஞ்சமடைந்தவள், சைக்கிளை எடுத்தவாறு புறப்பட்டு விட்டாள்.
வழமையாக மோட்டார் சைக்கிளில் தான் அலுவலகத்திற்கு செல்வாள் சாருஜா. மழைக்காலம் ஆகையால் சைக்கிளை எடுத்து ஆயத்தப்படுத்திக் கொண்டாள். நேரத்தைப் பார்த்தாள், எட்டைந்தாகிவிட்டது. வழமையை விட ஜந்து நிமிடம் பிந்தி விட்டது.
ஓடி ஒடி அறைகளைப் பூட்டியவள், வாயிற்கதவைச் சாத்துவதற்குள் மூன்று நிமிடம் ஆகிவிட்டது. ஒருவாறு பூட்டியவள், சைக்கிளை உருட்டிக்கொண்டு கேற்றடிக்கு வந்தாள். சைக்கிள் பின் ரயர் காற்று போய் நின்றது. மீண்டும் வாயிற்கதவைத்திறந்து பம் எடுக்க வேண்டிய நிலைமை. மனம் பதட்டப்பட்டதுடன் குமுறவும் தொடங்கியது. “சீ. இதுகளும் ஒரு பிள்ளைகளா” காலையில் மகனிடம் காற்றடிக்குமாறு கூறியிருந்தாள் சாருஜா. அவளின் அவசரம், அந்தரம் யாருக்கு விளங்கப் போகிறது?

Page 44
ff 0ff
மாதக்கடைசி வேறு, அலுவலகத்தில் நிறைய வேலைக்ள் காத்துக்கிடக்கு. புறுபுறுத்து, புறுபுறுத்து பம்மை எடுத்து வந்து காற்றாடித்தாள். அது ஏற மறுத்தது. காற்றடித்துப் பழக்கமும் இல்லை.
குடையைப்பிடித்தவாறு பக்கத்து வீட்டுக்கு ஓடினாள். அங்கு காற்று அடிக்கத்தக்கதாக ஒருவரும் இல்லை. அருகில் இருந்த இன்னோர் வீட்டிற்கு ஓடினாள்
“இவ்வளவுக்கும் காரணம் எனது பிள்ளை" நெஞ்சம் திட்டத்தொடங்கியது.
வேலைக்குப்புறப்படவிருந்த இளைஞன் ஒருவன் சாருஜாவின் பதட்டத்தையும் அவலநிலையையும் பார்த்து மனமிரங்கி “வாங்கக்கா நான் காற்றடித்து விடுகிறேன்" என்று கூறியவாறு சாருஜாவிற்கு முன்னே சென்று காற்றடித்து வாசல் வரை சைக்கிளை கொண்டு வந்து விட்டான்.
மீண்டும் பம்மை உள்ளே வைத்து விட்டுப்பர்ர்த்தாள். எட்டுப்பதினெட்டு. பத்து நிமிடம் எனது பிள்ளையால் வீணாகிப் போய் விட்டது. நச்சரித்தவள் கேற்றைப் பூட்டிக்கொண்டு சைக்கிளில் ஏறி உழக்கத் தொடங்கினாள்.
சைக்கிள் நெளிவு சுழிவான ஒழுங்கைகளைக் கடந்து பிரதான வீதிக்கு வந்தது. சாருஜாவிற்கு கற்பனை செய்வதற்கு நேரமோ காலமோ தேவையில்லை. இந்த அவசரமான வேளையிலே கூட அவளது எண்ணங்கள் சிந்திக்க சிறதடிக்கத் தொடங்கியது.
ஒரு கையில் குடை, றெயின் கோட் அணிந்திருந்தமையால் ஓரளவு சாறியை நனைய விடாமல் காத்துக் கொண்டது. எல்லாவற்றுக்கும் மேலாக அவளது கண்கள் சைக்கிளை ஒரு தடவை பார்த்துக்கொண்டது.
மனிதன் செய்ய "முடியாத வேலையை இந்த சாதாரண இரண்டு சில்லு சைக்கிள் செய்கிறதே! சாருஜாவின்
 
 

நிறை அறுபத்தைந்து கிலோவைத்தாண்டும். ஏன் சாருஜா தன்னையே தூக்க முடியாமையால் தான் நடப்பதே குறைவு. விழுந்து கிடந்தால் கூட தன்னைத் தூக்குவதற்கு நாலு பேராவது வேணும். இந்நிலையில் சொற்ப காற்று என்னைச் சுமக்கிறதே!
பஞ்ச பூதங்களில் கண்ணால் பார்க்க முடியாத ஒன்று இந்தக்காற்றுத் தான். இதனை உணருகிறோமே தவிர அதனைத் தொட்டுப் பார்க்க கூட முடியாது. அப்படிப்பட்ட காற்றிற்கு எந்தளவு வலிமை!
மனம் இவ்வாறெல்லாம் காற்றைப் பற்றி சிந்திக்க வைத்ததுடன் அதன் அருமையையும் நன்றாக உணரவைத்தது.
“பாதையைப் போங்கம்மா” என்ற ஒருவரின் குரல் அவளைப்பாதையைப் பார்த்து ஓடவைத்தது. மனம் எங்கெல்லாமோ சென்றாலும் பாதையைக் கவனித்துத்தான் ஓடுவாள். இவ்வாறு ஒரு நாளும் யாரிடமும் ஏச்சு வாங்கியதில்லை. சிறிது அவமானமாகப் போய் விட்டது. சொன்னவர் யாரென்று தெரியாது. ஆனாலும் மனதில் சிறு நெருடல்.
எதிரே மினிபஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. எத்தனை பயணிகளை சுமந்து வந்து கொண்டு வருகிறதோ! இதற்கு கூட காற்றுத் தானே பயன்படுகிறது. பெற்றோல் இல்லாவிட்டால் மண்ணெண்ணையில் ஓடுவார்கள். காற்றுக்கு பிரதியீடு உண்டா?
ஆகாயத்தில் விமானம் பறப்பதற்கும் கடலில் கப்பல் செல்லுவதற்கும் கூட இந்தக்காற்று தேவைப்படுகிறது. ஏன் நாம் உயிர் வாழ்வதற்கு கூட இந்த்க் காற்று தேவைப்படுகிறது. மனம் கற்பனை செய்ய பலமாக வீசிய காற்று கர்ரென்று குட்ையைப்பின் தள்ளியது. குடை மறுபக்கம் திரும்பி விட்டது.

Page 45
“சீ. இதென்ன காற்று” சைக்கிளை நிறுத்திய சாருஜா, புறு புறுத்த வண்ணம் குடையைச் சரிப்படுத்தினாள். சற்றுமுன் காற்றைப்பற்றியெல்லாம் நினைத்து பூரித்த மனம் சில விநாடியில் திட்டி விட்டதே!
மீண்டும் சைக்கிள் சாருஜாவை சுமந்து வந்து அலுவலக வாசலில் நிறுத்தியது. அங்கே அவள் கண்ட காட்சி ஒரு கணம் மனதை சில்லிட வைத்தது. மரங்கள் பாதையைத் தடை செய்தவாறு முறிந்து கிடந்தது.
"சூறாவளி வரப்போகுது எண்டு நியூஸ் வந்த தெல்லே, அதுக்கு ஆயத்தம் தான் இது" கூறியவாறு முறிந்த மரத்தின் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்திக் கொண்டு நின்றார், அங்கு பியூனாக வேலை செய்யும் செந்தில்.
சற்றுமுன் பாராட்டிய அதே காற்று இந்த வேலையையும் செய்கிறதே. செந்தில் கூறிய விடயத்தை கவனித்தது போல அவருக்கு ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு, கையொப்பம் இடும் இடத்தை அடைந்தாள்.
அலுவலக வேலைகளை அவசர அவசரமாக செய்து முடித்தவளுக்கு வீடு செல்லும் நேரமும் நெருங்கி விட்டது. மழைக்காலமாகையால் வீட்டிலே ஒரு இடமும் நின்று வேலை செய்யமுடியாது. போட்டது போட்டபடி வந்தவள், மீதி வேலைகளை இனித்தான் செய்தாக வேண்டும்.
வீட்டுக்கு வந்து தனது வேலைகளை ஓரளவு நிறைவு செய்துவிட்டு தொடர்ச்சியாக பார்க்கும் நாடகத்தைப் பார்ப்பதற்காக ரீவியை ஒண் பண்ணினாள். நாடகம் தொடங்கி ஒரு காட்சி முடிந்து விளம்பரம் நடந்து கொண்டிருந்தது.
“வீட்டில் இருக்கும் பெண்கள் எவ்வளவு புண்ணியம் செய்தவர்கள்” ஒரு காட்சியை பார்க்கத்தவறியதன்
 

ýýý 4774
『ク ԱյՉ:
மனத்தாங்கல் அவளது புலம்பலில் தெரிந்தது.
“வேலை செய்யும் பெண்கள், பாக்கியம் செய்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள்’ என்று வீட்டில் இருக்கும் பெண்கள் சொல்வது சாருஜாவுக்குக் தெரியுமா என்ன?
அக்கரைக்கு இக்கரை பச்சைதானே! விளம்பரம் முடிந்ததும் அடுத்த காட்சி பார்க்க ஆவலாய் இருந்தவளுக்கு முக்கிய அறிவித்தல் என்ற செய்தி அவளை திக்கு முக்காடச் செய்து விட்டது. அறிவித்தல் இதுதான்.
மட்டக்களப்பு பிரதேசத்திலே கடும் சூறாவளியினால் சுமார் இரண்டாயிரம் பேர் இடப்பெயர்வு, முப்பது பேர் மரணம், எழுபத்தைந்து பேர் சூறாவளி வீசிய பிரதேசங்களில் சிக்குண்டு அவஸ்தை, மீட்பு பணி தொடர்கிறது"
காலையில் காற்று என்னைச் சுமக்கிறதே! என்று எவ்வளவு சந்தோசப்பட்டேன். காற்றின் பெருமையை மனதிற்குள் பாராட்டினேனே, இவ்வளவு அழிவுகளுக்கும். இந்தக் காற்றுத்தானே காரணம்.
"கொன்றன்ன இன்னா செய்யினும் அவர் செய்த ஒன்று நன்று உள்ளக்கெடும்"
என்ற திருக்குறள் நெஞ்சில் வந்து முட்டி மோதியது. தொடர்ந்து நாடகத்தின் காட்சி வந்தது. சாருஜாவால் தொடர்ந்து ரிவி பார்க்க முடியவில்லை. ரீவியை ஒவ்பண்ணி விட்டு தனது வேலைகளைத் தொடரலானாள்.

Page 46
இண்ரவியூ
Dனப்புழுக்கத்துடன் துவிட் டுவாசலிலி வந்து இறங்குகிறாள் மதுமிதா. *ஆபீசில் சாப்பாடு வயிறு
நிறையக் கிடைத்து விட்டது. அந்தப் புழுக்கம் தான் உடம்பிலும் உதிரத்திலும் சூடேற்றிக் கொணி டு
ןr ހޯކީ கிடைத்
III60 அன்று சற்றுلعيو/لينكسيكية. أركان .ASத் தயாசமானதாக
அசீமந்தமையால் மதுமிதா
ད༽ A கொண்டிருந்தாள். ஆபீசில் நிர்வாகியின் வாயிலிருந்து புறப்படும் சொல்லத்தகாத வார்த்தைகள் தான் அந்தச் சாப்பாடு. இந்த ஆபீசிற்கு மாற்றலாகி வந்த காலம் தொடக்கம் இதே சாப்பாடு தான். வீட்டிலும் விதம் விதமான தொல்லைகள். வேலை பார்க்கும் இடத்திலும் தொல்லை. வாழ்க்கையே சூன்யமாகப்பட்டது.
பைசிக்கிளை விட்டு இறங்கியவள், அவசர அவசரமாக சாறியைக் களைந்து எறிந்துவிட்டு குசினிக்குள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I *,*
ர்ேபூர்வர்தம்) நுழைகிறாள். அதிகாலையில் சமைத்து வைத்த சோறு மழைக்குளிரில் ஜில்லென்று இருந்தது. பருப்புக்கறியும் மீன்குளம்பும் சிறிது வாசனையைக் கிளப்பிக் கொண்டிருந்தன. பொரித்தெடுக்கும் தாழியை அடுப்பில் வைத்து நெருப்பைப் பற்ற வைக்கிறாள். மனம் ஆபீஸிற்குள்ளேயே நிற்கின்றது. அன்று நடந்த சம்பவம் மனத்திரையில் றிவைன்ட் கொடுத்த றிமோட் மாதிரி மீண்டும் வந்து மதுமிதாவைப் படாதபாடுபடுத்தியது. தாழியில் எண்ணெயை ஊற்றி அவித்து வைத்திருந்த மீன் துண்டங்களை தாழியில் இட்டாள். சிறிது நேரத்தில் எண்ணெய் கொதித்துக் கொதித்துப் பறந்தடித்தது. முகம், கண்கள், கைகளில் தெறிக்கப் பக்கத்தில் நின்று கொண்டிருந்தாள். மனதிற்குள் எரிந்து சிதறுகின்ற நினைவுகளை விடவா இது கொடியது. இரண்டொரு ஆபிசில் வேலை பார்த்திருக்கிறாள். பலபேருடன் பழகி இருக்கிறாள். நட்பு வைத்திருக்கிறாள். இவ்வாறான ஓர் நிர்வாகியை உலகின் எந்த மூலைமுடக்கிலும் கண்டிருக்க முடியாது.
"தான் கள்ளன் பிறரை நம்பான்" என்று சொல்வார்கள். அது போல் எந்த விடயத்திலும் சந்தேகம், விசாரணை, மதுமிதா உட்பட ஊழியர்கள் அனைவரும் நிர்வாகியின் குணத்தை அறிந்து எதிலும் ஒதுங்கியே நிற்பார்கள். மதுமிதா ஒதுங்கி ஒதுங்கி இருந்தாலும் அவளுடைய போதாத காலம் எதிலையாவது கொண்டு போய் மாட்டிவிடும்.
"அம்மா சாப்பாட்டைத் தீர்த்தி விடுங்கள், ரியூசனுக்கு நேரம் போகுது. இளையமகள் சொப்ன கேட்டவாறு அருகில் வந்தாள். வழமையாக மதுமிதா சாப்பிடும் போது சொப்னாவிற்கு ஊட்டி ஊட்டித்தான் சாப்பிடுவாள். காரணம் பாடசாலை விடும் நேரத்திற்கும் ரியூசன் தொடங்கும்

Page 47
ീഗ്ഗീ 695/
நேரத்திற்கும் இடைவெளி முப்பது நிமிடம். இந்த நேரத்திற்குள் உடைமாற்றி முகம், கை, கால், கழுவி உணவருந்தி தலைசீவிச்செல்வது என்பது முடியாத காரியம். ஆனால் இன்று மதுமிதாவால் ஊட்டிவிட முடியவில்லை. பித்துப்பிடித்தவள் போல் பொரித்தொடுத்துக் கொண்டு நின்றாள்.
"அம்மா” உலுப்பினாள் சொப்னா
“சாப்பிடுறதைச் சாப்பிட்டிட்டுப் போம்மா” குரலில் ஒருவித சலிப்புத்தென்பட்டது. மதுமிதாவின் உணர்வற்ற செயற்பாட்டை அவதானித்த சொப்னா கோப்பையில் போடப்பட்டிருந்த சாப்பாட்டை எடுத்துத் தானே உண்ணத் தொடங்கினாள்.
அரசாங்க உத்தியோகத்திலேயே வெறுப்பு வந்தது. படித்துப் பட்டம் பெற்று உயர்தகைமைகள் பெற்று விட்டு பிறரிடம் அர்த்தமில்லாத சினப்புக்களைக் கேட்பதை விட படிக்காது சொந்தமாக தொழில் செய்பவர்கள் எவ்வளவோ மேல்.
மதுமிதா மாத்திரமல்ல, அந்த ஆபிசில் வேலை பார்க்கும் அத்தனை ஊழியர்களும் எவ்வளவு தான் சிறப்பாகத் தமது கடமைகளை ஆற்றினாலும் அந்த நிர்வாகியிடம் பாராட்டுப் பெறமுடியாது. எதிலையாவது குறை பிடித்து விட்டு எல்லோர் முன்னிலையிலும் டமாரம் அடித்துக் கொண்டு திரிவார். கோழி முட்டையில் ஏதோ எடுப்பது என்று சொல்வார்கள். அவ்வாறு குறைகள் இல்லாத இடங்களிலும் குறை கண்டு பிடித்துவிடுவதில் வல்லமை படைத்த ஜீவன். ஏதோ கையில் அகப்பட்ட காரியங்களை முடித்துக்கொண்டு குசினியை விட்டு வெளியேறினாள்.
"அம்மம்மா" என்று மதுமிதாவின் லுங்கியைப் பற்றினாள் பேர்த்தி சம்ஜா. அரவணைக்கும் மதுமிதா
Cエ) USA
 
 

சம்ஜாவைப் பொருட்படுத்தாமல் ஹோலில் வந்து ஒரு கதிரையில் அமர்ந்து கொண்டாள்.
பல்கலைக்கழகக் கல்வியைத் தொடர வேண்டிய மூத்தமகள் கீர்த்தனா, பொருத்தமற்ற காதல் மயக்கத்தில் சம்ஜாவிற்கு அன்னையாகியது தான் கண்ட சுகம். அதுவும் மதுமிதாவின் அடி மனதில் எரிச்சல் ஊட்டிக் கொண்டிருக்கும் ஒரு அம்சம். தான் விட்ட தவறை மனதிற்கொண்டு கிர்த்தனா ஒதுங்கியே நடந்து கொள்வாள். அன்றும் சம்ஜாவைத் தூக்கியவாறு விலகிக் கொண்டாள்.
ஒரு வகையில் மதுமிதாவின் வாழ்க்கையை விட கீர்த்தனாவின் வாழ்க்கை மேலாகப்பட்டது. படிக்காது இருந்து விட்டால் உத்தியோகம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. குடும்ப வாழ்க்கையில் கணவனிடம் தவிர ஒருவரிடமும் அடிமைப்பட வேண்டிய அவசியமில்லை. அன்று முழுவதும் அதே நினைவுடன் பிரமை பிடித்தவள் போல இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.
தலையிடியும் தொடங்க சித்தாலேபையைத் தட்விய வண்ணம் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.
"அன்ரி" என்று ஒரு குரல். பக்கத்து விட்டு நர்மதன் காலையில் சொன்னவிடயம், நர்மதனைக் கண்டதும் தான் நினைவில் வந்தது.
“தம்பி,மறந்து போய்விட்டன் குறைநினைக்காதையும். நாளை கட்டாயம் செய்யுறணி”
நர்மதன் சென்று விட்டான். மதுமிதாவின் உளநிலை அவனுக்கு எங்கே விளங்கப்போகிறது? அவள் மனதிற்குள் பட்ட அவஸ்தையை வெளியில் காட்டிக்கொள்ள முடிமா? "அந்தத்தம்பி தன்னைப் பற்றி என்ன நினைக்கப் போகிறது எல்லாம் அந்த நிர்வாகியால்"
மனதிற்குள் சாபமிட்டவாறு மீண்டும் கண்களை இறுக

Page 48
மூடிக்கொண்டாளர். வெளியே சென்றிருந்த கணவன் ராம் பைசிக்கிளை நிறுத்தி விட்டு உள்ளே வரும் அரவம் கேட்டது. வழமையான வரவேற்பு மதுமிதாவிடம் இல்லை. அதனைப் பொருட்படுத்தாது.
“என்ன மது? உங்கடை டிரக்டர் என்னவாம் நேற்றுப்போன இன்ரவியூ சக்சஸாமே அவர் மனம் வைச்சால் சரி வருமாம்."
ராம் மதுமிதாவின் நிலையை உணராதவனாகத் தொடராக, கேள்விக்கணைகளைத் தொடுத்தான்.
"இன்ரவியூ" அந்த வார்த்தையைக் கேட்டதும் இரு காதுகளையும் பொத்திக் கொண்டாள் மதுமிதா. அந்த இன்ரவியூ தானே மதுமிதாவை விரக்தியின் எல்லைக்கே கொண்டு போய் விட்டிருக்கிறது.
சாதாரண எழுதுவினைஞராக கடமை ஆற்றும் மதுமிதாவின் ஆற்றலிகளையும் திறமைகளையும் தகைமைகளையும் அறிந்தவர் என்ற வகையில் தானே நிர்வாகி அந்த விண்ணப்பப்படிவத்தினை மதுமிதாவிடம் கையளித்தார். மதுமிதாவும் முகாமையாளர் பதவியே கைகளில கிடைத்தது போன்ற மகிழ்ச்சியிலி , விண்ணப்பப்படிவத்தினை பூர்த்தி செய்து உரிய இடத்தில் கையளித்து விட்டாளே!
இன்ரவியூவிற்கான திகதியும் அறிவிக்கப்பட்டது. கடிதத்தில் குறிப்பிடப்பட்ட அத்தனை விபரங்களையும் சேகரித்து போட்டோப்பிரதிகளுடனும் உண்மைப் பிரதிகளுடனும் நேர்முகப்பரீட்சைக்குத் தயாரானாள்.
“மதுமிதா உங்களைப் போல எனக்கும் முகாமையாளர் பதவிக்கான எல்லாத்தகுதிகளும் இருக்கு. ஆனால் நான் அப்ளை பண்ணயில்லை”
 

மதுமிதாவின் ஆபீசில் வேலைபார்க்கும் சரவணபவன் என்பவர் இவ்வாறு கூறினார். மதுமிதாவிற்கு ஒரு மாதிரியாகப் போய்விட்டது.
“6J6ë (85st" குழப்பம் மிகுந்தவளாகக்கேட்டாள் மதுமிதா
"மதுமிதா, நீங்கள் உலகம் அறியாதவர் ஏற்கனவே முகாமையாளரைத் தெரிவு செய்துவிடுவார்கள். இது (5 கண்துடைப்பு ஹெட் ஆபீசுக்குப் போய் வரவேணும் என்றெல்லாம் சொல்வார்கள். அது உண்மையில்லை”
தனது ஆதங்கத்தைக் கொட்டித்தீர்த்தார் சரவணபவன். வெளுத்ததெல்லாம் பால் என்று நம்புவள் மதுமிதா, அதனால் சரவணபவன் கூறியது எவ்வளவு தூரம் உண்மை என்று புரிந்து கொள்ள முடியவில்லை.
நேர்முகப்பரீட்சை குறித்த தினத்தில் குறித்த நேரத்தில் ஆரம்பமாகியது. ஒருவரின் தெரிவுக்காக இருபது பேர் சமூகமளித்திருந்தார்கள். கடிதத்தில் கேட்கப்பட்டிருந்த அத்தனை விடயங்களும் பார்வையிடப்படவில்லை. சிலவற்றைத் தவிர்த்துவிட்டார்கள். அவற்றில் தான் மதுமிதா நிறைய சான்றிதழ்களை வைத்திருந்தாள்.
சரவணபவன் சேர் கூறியது உண்மைதான். என்று மனதைத் திருப்திப் படுத்தியவளாக வந்து சேர்ந்தாள்.
மறுநாள் எப்போது விடியும் நிர்வாகி நல்ல சேதி ஏதாவது சொல்லுவார் என்ற ஆவலில் ஆபிசிற்குள் காலடி எடுத்துவைத்தாள். ஆனால் வெடிகுண்டு ஒன்று அங்கே தயாராயிருந்தது. மதுமிதாவின் நெஞ்சத்தையே பிளக்கவைத்துவிட்டது அந்தச்செய்தி. பொல்லைக்கொடுத்து அடிவாங்கிவிட்டாள் மதுமிதா
இன்ரவியூவில் முகாமையாளர் பதவியை ஏன் விரும்புகிறீர்கள் என்று கேட்டிருந்தார்கள். அதற்கு
C9)

Page 49
எழுதுவினைஞர் பதவியிலிருந்து விலகுவதற்கான காரணம் ஒன்றைக்கூறி இருந்தாள் மதுமிதா. ஆனால் அதுவே வெடிகுண்டாக மாறும் என்று நினைக்கவில்லை.
"மதுமிதா நீங்கள் கூறிய பதிலால் உங்களை எழுதுவினைஞருக்கும் தகுதியில்லை முகாமையாளருக்கும் தகுதியில்லை என்ற நிலைக்குத்தள்ளிவிட்டது. ஏன் அந்தக் காரணத்தைக் கூறினீர்கள்? ”
நிர்வாகி கடிந்து கொண்டார். மதுமிதாவிற்கு பெருத்த அவமானமாகிப் போய்விட்டது. ஏனைய ஊழியர்களுக்கு முன் கூனிக்குறுகிப் போனாள்.
மதுமிதாவின் கணவன் ராமின் அதீத விருப்பத்தின் பேரில் தான் பொறுப்புக்கள் கூடிய அந்தப் பதவியைச் சுமக்கத்தயாராயிருந்தாள். பதவி மோகம் எல்லோரும் விரும்பும் ஒன்று. இந்த இரண்டு காரணங்களையும் கூற விரும்பாது அவர்கள் நம்பக் கூடிய பொருத்தமான காரணத்தைக் கூறினாள். அதுவே வினையாகிப் போய்விட்டதே! பதவி உயர்வே வேண்டாம் என்ற நிலைக்குத் தள்ளிவிட்டதே! இச்சம்பவங்கள்.
"மது என்ன பேசாமல் இருக்கிறீர்? காயோ! பழமோ!" மீண்டும் ஆவலில் மதுமிதாவின் உணர்வலைகளை விளங்காதவனாக வினவினான் ராம்.
மதுமிதா கண்களைத் திறந்து கைகளை உயர்த்தி ஒரு கும்பிடு போட்டாள். மதுமிதாவின் உணர்ச்சிகளைப்புரிந்து கொண்டவனாக விலகிக்கொண்டான் ராம்.
 

உயர்ந்த உள்ளம்
மருத்துவமனை
வாயிலில் பெருந்திரளான சனக் கூட்டம் அமைதியாக நோ யா ளர் க  ைள ப பார்வையிட முடியவில்லை. ஏனைய டாக்டர்களிடம் SRஇனது பொறுப்பை S படைத்து விட்டு, s நித்துவனை வாயிலுக்கு エZ梨augリ S6)I & J LDI 65 M விரைந் தான் டாக்டர் # ஜெயசூர்யா.
...,
-e.
ܚܫܒܼܒܵܒܸܡܩܕܢܐ
வாகனம் ஒன்றில் இருந்து ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என்று வயது வேறுபாடின்றி இறக்கப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். பிரயாணிகளுடன் யாழ் நோக்கிச் சென்று கொண்டிருந்த மினிபஸ் ஒன்று பாரிய விபத்துக் குள்ளாகியதால் ஏற்பட்ட விளைவு என்பதை சில விநாடிகளில் தெரிந்து கொண்டான்.
வாகனத்தினுள் நோட்டம் விட்டான். வாகனம் முழுவதும் இரத்தக்காடாக காட்சி அளித்தது. டாக்டர் என்ற நிலையையும் மறந்து ஏனைய சிற்றுாழியர்களுடன் காயப்பட்டவர்களை இறக்கும் பணியிலும் ஸ்றெச்சரில் வைத்துத்தள்ளும் பணியிலும் ஈடுபட்டான்.
ஒருவாறாக ஓ.பீ.டிக்கென்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கென்றும் தியேட்டருக்கென்றும் நோயாளர்களைப்

Page 50
மீண்டும் வசந்தம்
பாகுபடுத்திக் கொண்டிருந்தான். தனது டாக்டர் பணியிலும் பார்க்க இந்தப்பணி அவசரமானதும் அவசியமானதாகவும் அவன் மனதில் பட்டது.
இறுதியாக முழங்கால் பகுதியில் கட்டுப்போட்டவாறு இருபத்துமூன்று, இருபத்துநான்கு வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருத்தி இறக்கப்பட்டாள். ஸ்றெச்சர் எல்லாம் காயப்பட்டவர்களை ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபட்டதால் அவசரத்துக்கு ஒன்றும் இல்லாமல் போய்விட்டது. முழங்கால் பகுதியில் இரத்தம் பீறிட்டுக் கொண்டிருந்தது. கைத்தாங்கலாக அந்தப்பெண்ணைத் தூக்கியவாறு சென்று கொண்டிருந்த வேளை ஸ்றெச் சர் ஒன்று வந்து கொண்டிருந்தது. பணியாளர்கள் உதவியுடன் ஸ்றெச்சரில் படுக்க வைத்தவாறு தள்ளிக்கொண்டு சென்றான்.
சிகிச்சைக் காக வந்த நோயாளர்கள், பார்வையாளர்கள், ஊழியர்கள், தாதிமார், டாக்டர்கள் என்று யாவரையும் வியக்க வைத்தது இச்சம்பவம்.
"என்ன பிறவியப்பா இந்த டாக்டர்? தான் ஒரு டாக்டர் என்பதையும் மறந்து. 99
பார்வையாளர்களோ, ஊழியர்களோ தெரியவில்லை. யாரோ ஒருவரின் உதடுகளிலிருந்து புறப்பட்ட வார்த்தை அரைகுறையில் நிறுத்தப்பட்டது. ஜெயசூர்யாவின் பாதங்கள் தியேட்டரை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்தன.
ஜெயசூர்யா ஒரு சத்திர சிகிச்சை நிபுணர். அங்கும் அவனது பணி காத்திரமாக இருந்தது. அவசரமாக உடையை மாற்றிக் கொண்டு கையுறைகளை அணிந்தவாறு தியேட்டரின் உள்ளே சென்றான்.
“என்னைக் காப்பாற்ற வேண்டாம் என்னைக் காப்பாற்ற வேண்டாம் தயவு செய்து என்னைச்சாக விடுங்கள்" முழங்கால் பகுதியில் கட்டுப்போட்ட அக்கன்னியின் கதறல்.
 

உண்மை தானே ஒரு காலை இழந்து நொண்டியாக வாழ்நாள் பூராக அநுபவிக்கப்போகும் துன்பங்களை விட இறப்பது எவ்வளவு மேல். அதற்காக டாக்டர்கள் நோயாளர்களைக் காப்பாற்றாமல் இருக்க முடியுமா?
மனதில் உதயமாகிய எண்ணங்களுடன் அந்தப் பெண்ணைப் பார்வையிட்டான். நிறைய இரத்தம் வெளியேறி இருந்தது. முதலில் அவசரசிகிச்சை அளிக்கப்பட்டது. அச்சிகிச்சை முடிந்து கட்டுக்களை எனைய டாக்டர், தாதி என்று போட, அடுத்த நோயாளிக்குச் சிகிச்சை வழங்கப்பட்டது. இவ்வாறு ஓடி ஒடி சிகிச்சை செய்து முடிய இரவு எட்டு மணி ஆகிவிட்டது. இவ்வளவிற்கும் ஜெயசூர்யா காலையில் எடுத்த உணவு. ஜெயசூர்யா களைத்தவாறு ஒரு கதிரையில் அமர்ந்து கொண்டான்.
மறுநாள் எப்படியாவது அந்தப் பெண்ணுக்கு இரத்தம் ஏற்ற வேண்டும். உறவினர் விபரம் அறிய வேண்டும். எண்ணங்கள் அலை மோத இருந்தவனை
“என்ன டாக்டர், உங்களைப்பற்றிச் சிந்திக்கவே uDTI løffeb6IIIT?"
என்றவாறு கப்பில் ரீயுடன் வந்து நின்றாள் நர்ஸ் கீதா. அன்று முழுவதும் டாக்டர் பட்ட கஷ்டங்களால் அவன் மீது ஒரு பரிதாப உணர்வை ஏற்படுத்தியது. விடுமுறையின் போது கூட சொந்த ஊருக்குச் செல்லாமல் பணியாற்றும் மனப்பாங்கு, எத்தனையோ வைத்திய நிபுணர்கள் வெளிநாடு செல்லும் போது இந்த டாக்டர் வைத்திய வசதி குறைந்த இந்தப் பிரதேசத்தில் கடமையாற்றும் நல்லெண்ணம், உண்மையிலேயே இறைவனுக்கு அடுத்த படியாக வைத்துப் பசிக்கப்பட வேண்டியவர்.
மனதிற்குள் வியந்தவளாக ரீக்கப்பை மேசை மீது வைத்தாள். ஜெயசூர்யாவால் அந்த ரீயைப் பருக

Page 51
முடியவில்லை. நாளாந்தம் வன்னிப் பெருநிலப்பரப்பில் செத்து மடியும் மக்களின் எண்ணிக்கை, அங்கவீனங்களுக்கு உள்ளாகும் சிறுவர்கள், முதியோர்கள், என்று நாளாந்தம் தொலைக்காட்சியில் பார்க்கும் அவலங்கள், பஞ்சு மெத்தையில் நாம் சுக போகம் அநுபவிக்க பற்றைக் காட்டுக்குள் பாம்பு பூச்சிகளுக்கு மத்தியில் அல்லலுறும் மக்கள், சிறார்கள்.
ஜெயசூர்யாவின் கண்கள் பனிக்கத் தொடங்கின. “டாக்டர் என்ன இது? ஏன் உங்கள் கண்கள் கலங்குது. களைப்பு அதிகமாகி விட்டதா? அல்லது வீட்டு நினைவு வந்துவிட்டதா?”
நர்ஸ், டாக்டரின் நிலையைக் கண்டு கேள்வி மேல் கேள்வி கேட்டாள். ஜெயசூர்யாவால் உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை.
சிறிது நிமிடங்கள் கழிய தன்னை சுதாகரித்தவாறு ஏதோ ஒன்றை புரிந்துக்கொண்டவளாக
"வன்னியில் பொது மக்கள் படும் அவலம் தானே LATÈL”
என்று சர்வ சாதாரணமாகக்கேட்டாள். நர்ஸ் கீதாவைப்போல் எத்தனையோ பேர் வன்னி மக்களின் அவலங்களை கவனத்திலேயே கொள்ளாது இங்கு வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
கேளிக்கைகள், களியாட்டங்கள், கொண்டாட்டங்கள் என்று நடந்து கொண்டுதானிருக்கிறது. ஆனால் அயல் நாடான இந்தியாவில் தீக்குளிப்புக்களும் உண்ணாவிரதங்களும் கணக்கிட முடியாமல் நடந்து கொண்டிருக்கின்றன. பெரிய பிரமுகர்கள் எல்லாம் தமது பிறந்த நாட்களையே கொண்டாடாது தியாகம் செய்திருக்கிறார்கள்.
"டொக்டர், ரீயைக் குடியுங்க” சுயநினைவிற்கு
 
 

கொண்டு வந்தாள் நர்ஸ். ரீயைக் குடித்தவன் மீண்டும் சத்திரசிகிச்சை செய்த நோயாளர்களைப் பார்வையிடுவதற்கு வாட்டுக்குச் செல்வதற்காக எழுந்து கொண்டான்.
வாட்டுக்குள் நுழைந்தவன் அவசியமாகப் பார்க்க வேண்டிய நோயாளர்களைப் பார்வையிட்டான். காலை இழந்த பெண்ணிற்கு அருகில் செல்ல ஏனோ அவன் மனம் சிறிது கலங்கியது. இரு கால்களும் இருக்கும் பெண்களே வறுமை, சீதனக் கொடுமை என்று திருமணங்கள் இழத்துக் கொண்டு செல்லும் போது இந்துப் பெண்.
ஏனைய.நோயாளிக்கு அருகில் சென்று கண்களைத் திறந்து பார்த்தான். மயக்கம் பூரணமாகத் தெளியவில்லை. பாரிய ஆப்ரேசன் என்பதால் மயக்கமருந்து கொஞ்சம் அதிகமாகக் கொடுக்கப்பட்டிருந்தது. அதனை தாதியிடம்
கூறி
இறுதியாக விடப்பட்டிருந்த கட்டிலுக்கருகில் வந்தான். வந்தவனின் காதுகளில் முனகல் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. ரிக்கற்றில் பெயரைப் பார்த்துவிட்டு
"மிஸ் சாமந்தி, எப்பிடி நோ எதுவும் குறைவாக இருக்கிறதா?”
டாக்டரின் குரலைக்கேட்ட சாமந்தி ரவலால் முகத்தைத் துடைத்தவாறு அவசர அவசரமாக எழ முயற்சி செய்தாள். முடியவில்லை.
“மெதுவாக”
டாக்டர் கூற நர்ஸ் உதவியுடன் எழுந்து கொண்டாள். முகமெல்லாம் விங்கி கன்னங்கள் சிவந்து சூடேறி இருந்தன. கண்ணிருடன் வெளியேறிய உப்புக்கள் வேறு கன்னத்தில் கோடாகப் படிந்திருந்தது.
“என்ன சாமந்தி இரவிரவாக அழுதிருக்கிறீரா? ” நர்ஸ் வினாவிய மறுகணமே சாமந்தியின் கண்களில் இருந்து
. . . . . . . . . . . . ? غح

Page 52
கண்ணிர் தாரை தாரையாக வழிந்தோடியது. கண்களிலிருந்து தானா இவ்வளவு நீரும் வெளியேறுகிறது? சூழ நின்றவர்கள் அதிசயித்துக்கொண்டனர். சகித்துக்கொள்ள முடியாத சூர்யா
“சாமந்தி ஏன் அழுகிறீர்? ஒரு வாரத்தில் குணமாகி வீட்டிற்குப் போகலாம்." சில இடங்களில் நோயாளர்களுக்கு பொய் தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் டாக்டர் சூர்யாவின் ஆறுதல் வார்த்தை
"குணமாகியா? எது டாக்டர் குணமாகனும்? இழந்த ஒரு கால் உருவாகிவிடுமா டாக்டர்’விரக்திச்சிரிப்புடன் கேட்டாள் சாமந்தி
மருத்துவமனையில் வேலை பார்க்கும் அத்தனை ஊழியர்களும் இது போல் பலரைச்சந்தித்து இருக்கிறார்கள். நோயாளர்களும் இது தான் விதி என்று தம்மைச்சமாதானம் செய்து கொள்வார்கள். ஆனால் சாமந்தியால் அவ்வாறு சமாதானம் செய்து கொள்ள முடியவில்லை.
“டாக்டர், நான் ஏன் வாழனும்? ஊசி அடிச்சு சாகடியுங்க டாக்டர்" கூறிய வார்த்தைகளையே கூறிக்கூறி இரு கரங்களையும் கூப்பிக் கெஞ்சிக்கேட்டுக் கொண்டாள். “சாமந்தி எமக்குக் கீழ்ப்பட்டவர்களை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டுமே தவிர மேற்பட்டவர்களைப் பார்க்கக்கூடாது. இந்த அளவில் நீங்கள் தப்பியதுக்கு ஆண்டவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். இதை விட எத்தனை எத்தனை அவலங்கள் ஏற்படுகின்றன தெரியுமா?" டாக்டர் சூர்யாவின் வார்த்தைகள் சாமந்தியின் உதடுகளுக்குப் பூட்டுப்போட்டு விட்டது.
ரிக்கற்றில் குறிப்புக்கள் எழுதியவன் "நித்திரைக்கு ஊசி போடுவினம். மதியம் இரத்தமும்
இநல்லைகுரங்கி
 
 

ஏற்றுவினம்" கூறியவன் நர்சிடமும் நோயாளர்களைப் பற்றிக் கூறவேண்டிய யாவற்றையும் கூறிவிட்டு பிளட்பாங்கை நோக்கிச் சென்றான்.
சாமந்தியின் விபரங்களை வாட் சுற்றிப் பார்க்க முன்பே தாதி கூறி இருந்தாள்.
சாமந்தி ஒரு பல்கலைக்கழக மாணவி என்றும் அவர்கள் குடும்பம் வன்னியில் வசிக்குது என்றும் இங்கு நண்பிகளுடன் றுாம் ஒன்றில் தங்கியிருப்பதாகவும் தெரிவித்திருந்தாள்.
இரத்தம் கொடுப்பதற்கு ஒருவரின் உதவியையும் பெறமுடியாது என்பதைத் தெரிந்து கொண்டான் சூர்யா. அதனால் பிளட்பாங்கில் இருக்கும் இரத்தத்தை ஏற்ற முடிவு செய்திருந்தான்.
பிளட்பாங்குக்குள் சென்றவனுக்கு ஏமாற்றம். சாமந்திக்கு ஏற்றத்தக்கதான குறுப் இரத்தம் எதுவுமில்லை. சூர்யாவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இன்று எப்படியாவது ஏற்றி ஆக வேண்டுமே. அல்லது சாமந்தியின் உடல் பலவீனப்பட்டு உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்.
சிந்தித்தவன் முடிவுக்கு வர வெகுநாழிகை எடுக்கவில்லை. முடிவே செய்துவிட்டான். பிளட்பாங்கில் நின்ற தாதியின் உதவியுடன் அவனது இரத்தம் பரிசீலிக்கப்பட்டு போத்தலில் நிரப்பப்பட்டு வாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
'மனிதருக்குள் ஒடும் இரத்தத்தில் பாகுபாடு இல்லை. மனிதருக்குள் தான் எத்தனை பாகுபாடு, எத்தனை கலவரமி, எத்தனை உயிரழப்பு
சூர்யாவின் மனதில் உதித்த எண்ணங்களை அங்கு நின்ற தாதி சொல்வடிவமாக்கினாள். சூர்யா சிறியதான ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு பிளட்பாங்கை விட்டு வெளியேறினான்.
356:

Page 53
நாட்கள் ஓடிக்கொண்டிருந்தது. ஊழியர்களின் அன்பான உபசரிப்பாலும் ஆறுதல் வார்த்தைகளாலும் மனத்தைரியம் அடைந்து கொண்டிருந்தாள் சாமந்தி, டாக்டர் சூர்யாவும் சாமந்தியை வந்து அடிக்கடி பார்த்துக் கொண்டான். தமிழ் அவ்வளவாக தெரியாவிடினும் பேசும் வார்த்தைகளை சுத்தமான தமிழில் பேசுவான்.
சாமந்தியின் மனமாற்றம் சூர்யாவிற்கு கிடைத்த வெற்றியாக அமைந்தது. தனது வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு இயல்பு நிலைக்குத் திரும்பிய சாமந்தியை நினைத்துப் பூரித்துப் போவான்.
உடலாலும் உள்ளதி தாலும் புணி பட்டுக் கொண்டிருக்கும் நோயாளர்களுடன் அந்நியோன்னியமாக வந்து உரையாடிக் கொள்வான். அதிலும் சாமந்தியுடன் அதிக நேரம் உரையாடுவான். அந்த நேரத்தில் தான் சாமந்தி ஒரு ஓட்ட வீராங்கனை என்பதைத் தெரிந்து கொண்டான். தேசிய மட்டத்தில் முதல் பரிசினைப் பெற்றிருந்தாள். இந்த நிலையில் சாமந்தி தன்னை சமாதானம் செய்து கொள்வது எவ்வாறு?
சூர்யாவிற்கே சில சமயங்களில் சங்கடமாகிப் போய் விடும். சூர்யா அடிக்கடி வந்து உரையாடிச் செல்வது சாமந்திக்கு ஒரு மனநிறைவைக் கொடுத்தது. இன ரீதியாக வேறுபாடு இருந்தாலும் மனரீதியாக பலவிடயங்களில் ஒற்றுமைத் தன்மை இருந்தது. இந்த மனநிறைவு நீடிக்க (8660ÖT(BGBlo!
கால் பூரணமாக குணமாகியதும் வீடு செல்ல வேண்டியவள். தானே சாமந்தி. சூர்யாவுக்கும் சாமந்தியுடன் ஒரு நாள் பேசாது விடினும் தலை வெடித்து விடும்
 

போலிருந்தது. அவ்வாறான ஓர் அன்புப்பிணைப்பு. எல்லா விடயங்களையும் பரிமாறிக் கொள்வார்கள். பார்ப்பவர் கண்களுக்கு ஒரு மாதிரியாகப் பட்டாலும் சூர்யாவின் கடமைக்கூறுகள் அவர்களைப் பேசாது செய்து விடும்.
ஒரு தடவை சாமந்தியைத் தியேட்டருக்கு எடுக்க வேண்டி இருந்தது. சாமந்தியுடன் டொக்டர் சூர்யா அன்பாகப்பழகுவது நர்ஸ் கீதாவுக்கு ஏனோ பிடிக்கவில்லை.
"டொக்டர் நீங்கள் சாமந்திக்கு ஆகத்தான் இடம் கொடுக்கிறீர்கள்” மனதில் பதிந்துவைத்திருந்த வார்த்தை உதடுவழியாக வெளியேறியது.
“என்ன சொல்லுறீங்கள் மிஸ்" சூர்யாவின் குரலில் சற்றுக்கடுமை தொனித்தது. “இல்லை டொக்டர். gy இழுத்தாள் நர்ஸ்.
"பிளிஸ் மிஸ், பாவப்பட்டதுகள் அதுகள். உதவி செய்ய வேண்டாம். உபத்திரமாவது செய்யாமல் இருங்க." அந்த வார்த்தையுடன் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.என்று நினைத்தான் சூர்யா. ஆனால் அதுவே கொழுந்து விட்டு எரியக் காரணமாகிவிட்டது.
சாமந்திக்கும் சூர்யாவுக்கும் முடிச்சே போட்டு விட்டாள். கண் மூக்கு வாய் எல்லாம் வைத்து கதைகள் கட்டவீழ்த்து விடப்பட்டது. டாக்டர் சூர்யாவால் இந்த விடயத்தைப் பெரிது படுத்தாமல் இருக்க முடியவில்லை. காரணம் சாமந்தி,
சாமந்தியுடன் பழகிய நாட்களில் ஒரு தடவையேனும் அவ்வாறான எண்ணத்துடன் அவள் பழகியதில்லை. அது போல் தான் சூர்யாவும். அன்பாகப்பழகும் போது அது யாராக இருக்கட்டும், அவர்களுடன் உறவாடும் போதெல்லாம் பேரின்பம் கிடைக்கின்றது. அந்த உணர்வில் தான் சூர்யாவும்

Page 54
சாமந்தியிடம் அன்பு வைத்திருந்தான். ஆனால் இந்த மருத்துவமனைச் சமூகம்.?
சீ. என்ற நிலை சூர்யாவுக்கு. மதம் வேறு, சாதி வேறு, அங்கவீனம் என்று யோசிக்கவில்லை சூர்யா. ஆனால் ஜோடித்த கட்டுக்கதை உண்மையாகி விடுமிே என்று தான் யோசித்தான்.
சாமந்தியின் கால் குணமாகிக் கொண்டிருந்தது. ஊன்றுகோலி உதவியுடன் நடப்பத்றிகு பயிற்சி அளிக்கப்பட்டது. நோயாளர்களைப் பார்வையிட்டுக் கொண்டு வந்தவன்,
சாமந்தியின் கட்டிலுக்கருகில் வந்ததும் அவனது பாதங்கள் வலுவிழந்தன. சூர்யாவைக் கண்டதும் தேம்பித் தேம்பி அழத்தொடங்கினாள் சாமந்தி.
"டொக்டர் என்னாலை உங்களுக்குக் கெட்ட பெயர், செத்து போகலாம் என்று நினைத்த என் மனதை மாற்றி, இந்த உலகிலே நடமாட வைத்த தெய்வம் நீங்கள். இரண்டு நாட்களில் நான் போய்விடுவேன். அதற்கிடையில் உங்களுக்கு ஏற்பட்ட அவப்பெயர் நீங்க வேண்டுமே! நான் என்ன செய்யனும் டொக்டர்? "
“சாமந்தி. ஒன்று செய்வீங்களா" அமைதியுடன் வினாவினான் சூர்யா.
"சொல்லுங்க டாக்டர்" மனநிறைவுடன் பதிலளித்தாள் சாமந்தி.
"நீங்கள் என்னைத் திருமணம் செய்ய சம்மதிப்பீர்களா? சூர்யாவின் உதடுகள் மூடவில்லை.
“GLITŠLs” மருத்துவமனைக் கட்டிடமே அதிரும் வண்ணம் கத்தியவள்
 

ரிமமும் வசந்தம்
“என்னிடம் என்ன தகுதி இருக்குது டாக்டர்? ஒரு கால் முடமாகிய நொண்டி டாக்டர் இந்த சாமந்தி. இந்த நொண்டிக்கு இந்தப் பெரிய வாழ்வா? இந்தப் பெரிய கெளரவமா”?
நெஞ்சைப் பொத்தி ஆர்ப்பரித்தாள் சாமந்தி.
“என்னைப் போன்ற இளைஞர்களது தியாகம் தான் சாமந்தி, இந்த நாட்டுப் பிரச்சினைகளுக்கு கூட ஒரு தீர்வாக இருக்கும்"
டாக்டர் சூர்யாவின் முடிவான பதிலைக் கேட்டு சூழ நின்ற அனைத்து ஊழியர்களும் கை குலுக்கி, ஆரவாரம் செய்து. ஆனந்தக்கண்ணிர் வடித்தனர்.

Page 55
மீண்டும்வந்த்ர்
முதுமை சாபக் கேடல்ல
விழயோரம் நீர் ஒழுக கிழிந்த ஒலைப்பாயில் நடுநடுங்கி ஒருக்களித்துப் படுத்துக்கிடந்தாள் சீதேவிக் கிழவி. போர்த்திப் படுக்க அவள் பாவித்துக் கிழிந்து இத்துப் போன ஒரு வொயில் சாறி. அதிகாலையில் ஜில் என்று வீசிய காற்றுடன் சேர்ந்த பனிக்குளிருக்கு இச்சாறி எந்த மூலைக்கு காணும்? பொழுது விடிந்ததைக்கூட உணர அவள் விழிகளில் திராணியில்லை. பறவைகள் ஒலி எழுப்பும் சத்தம் காதில் மெதுவாகக் கேட்கிறது.
"இந்தாணை தேத்தண்ணி” மகள் உதயாவின் குரல். எழும்ப முடியாமல் எழும்பினாள். சீதேவிக்கிழவி. சுடுதண்ணி குடிக்கும் ஆவலில் பலவீனத்தால் வாங்கிய கைகள் நடுங்க, தேத்தண்ணிக் கோப்பை, மடிமீது வீழ்ந்தது. பதறிப் போனாள் சீதேவி. தேநீர் மடிமீது கொட்டி விட்டதே! தொடைதொப்பளிக்கப் போகின்றதே. கொதிக்கப்போகின்றதே! என்ற பதற்றம்
C92)
 
 
 

a “ /ሪነሪ`/ነ ,“ /J5ሥ /7ኃ” “
அல்ல. மகள் உதயா சத்தம் போடப்போறாளே என்ற பதற்றம் தான் காரணம். ஆனால், ஏனோ உதயா வாயே திறக்கவில்லை. தேநீர் குடு இல்லாத காரணத்தால் சீதேவியின் மடியிலோ கொதிப்புத்தன்மை, எரிவு ஒன்றுமே ஏற்படவில்லை.
“புண்ணியவதி” மனதிற்குள் நையாண்டி செய்தாள். சீதேவி தேநீரைக் கொதியாகத் தந்திருந்தால் தன்னுடைய நிலை. அந்த வகையில் புண்ணியவதி தானே. உதயா படிக்கும் காலத்தில் தேநீர் ஆறக்கூடாது. கொதிக்கக் கொதிக்கக் கொடுக்க வேண்டும். அவ்வாறு ஆறிவிட்டால் மீண்டும் பாத்திரத்தில் விட்டு கொதிக்க வைத்துக் கொடுத்து வளர்த்தவள் தான் சீதேவிக்கிழவி
“9ubLDT sbor" என்று வளரும் காலத்தில் அன்பாக ஒழுகி வந்தவள், இப்போது ‘வள்’ என்று பாய்கிறாளே
"சீதேவி பிள்ளையஸ்ளை அன்பு வைக்கத்தான் வேனும். ஆனால் நீ வைக்கிறது கண்மூடித்தனமான அன்பு. நீ படுக்கையிலை கிடந்தால் உன்னை ஒரு பிள்ளையும் கவனிக்காது. Alhasi தான் உலக வழக்கம்."
கணவன் சின்னவன் கூறிய வார்த்தை. “ஆற்றை பிள்ளையெண்டாலும் அப்பிடிச் செய்யுங்களி. ஆனால் நான் வளர்த்த பிள்ளையஸ் ஒரு நாளும் அப்பிடிச் செய்யாதுகள்"
பழைய நினைவில் மூழ்கியவளுக்கு மதியம் வந்ததையே உணர முடியவில்லை.
“தட்டைத் தாணை சோறு போட" மீண்டும் உதயாவின் குரல் காதில் விழுந்ததும் தடவி எடுத்துத் தட்டை நீட்டுகிறாள். காலைத் தேநீரும்

Page 56
இல்லை, பசி வயிற்றைப் பிடுங்க மளமளவென சோற்றை அள்ளி வாய்க்குள் போடுகிறாள். உதடு நடுங்குகிறது. சோற்றிலும் சூடில்லை 'ஜில்" என்று இருக்கிறது. 'பழைய சோறு மனதிற்குள் நினைத்துக் கொள்கிறாள்.
ஏதோ ஆனம் போன்று சிறிது நாக்கில் உறைக்கிறது. சாதுவான மீன் வாசனை. நப்பாசையில் மீன் துண்டைத்தேடி கைகளால் துளாவுகிறாள். நடு முறிகளைக் கொடுத்து விட்டு தலையையும் வால்ப்பகுதியையுமே தானும் எடுத்து கணவனுக்கும் கொடுத்திருக்கிறாள். ஒரு விதத்தில் கணவனுக்குக் கூடத் துரோகம் இளைத்திருக்கிறாள். அவ்வாறு வளர்த்த பிள்ளைகள்.
கண்களிலிருந்து நீர் பொலபொலவென உதிர்கிறது. “சாப்பிடிட்டிட்யே இந்தாணை தண்ணி" தண்ணிர் குடிக்கும் குவளையை நீட்டுகிறாள். கழுவாமலே நீர் ஊற்றும் சத்தம். இளமையில் கட்டிக்காத்த சுத்தம். . நினைக்க நினைக்க அடக்கி வைத்த துக்கம் மீண்டும் கண்களிலிருந்து நீரைப் பெருக்குகிறது.
"ஏனனை அழுகிறாய்?" அந்த வார்த்தை கூட அதட்டலுடன் உதயாவின் வாயிலிருந்து வெளிவருகிறது "ஏனம்மா அழுகிறீங்கள் நாங்கள் இல்லை” என்று தந்தை இறந்த காலத்தில் கூறிய உதயாவா இவள்? “அழயில்லை பிள்ளை உறைக்குது" பட்டும் படாமலும் சீதேவி கூறிய வார்த்தை உதயாவின் மனச்சாட்சியை குறு குறுக்கச் செய்தது. ஆனாலும் "வரவர நீயும் நையாண்டி செய்யத் தொடங்கியிட்டாய்” என்று கூறி அவ் இடத்தை விட்டு நகர்ந்து கொண்டாள்.
உதயாவும் இரண்டு பிள்ளைகளுக்குத் தாயாகி விட்டாள். என்ரை நிலை உனக்கு வர எத்தினை நாளாகும்?
 

மனதிற்குள் நினைத்த வார்த்தை வாய் வழியாக வெளியேறாமல் மனதிற்குள்ளேயே புதைந்து கொண்டது. சிறிது நேரத்தின் பின்பு அம்மா! அம்மா! என்ற அலறல்
"அம்மா, அம்மா” என்ற வார்த்தை சீதேவியின் இளகிய நெஞ்சை கலங்கத் செய்தது.
“என்னடி பிள்ளை! என்னடி பிள்ளை' எழும்புவதற்கு முயற்சி செய்தாள். முடியவில்லை. "கோபு சிந்து!" கொம்மா குழறுகிறாள். என்னண்டு பாருங்கோ பிள்ளையஸ்” சீதேவியின் கை கால்கள் நடுங்கத் தொடங்குகிறது. "பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்பார்கள். சீதேவி மட்டும் விதிவிலக்கா என்ன!
"ஐயோ! அம்மா எரியுது. கண்களைத் திறக்க ஏலாதாம்.” மீண்டும் மீண்டும் உதயாவின் குரல். சீதேவிக்கிழவிக்கு பேரப்பிள்ளைகள் மீது கோபம் கோபமாக வருகிறது. கோபுவுக்கு இருபத்தாறு வயது. சிந்துவுக்கு இருபத்து இரண்டு வயது. இருவரும் வேலை பார்க்கிறார்கள். அவர்களைப் பார்த்துப் பார்த்து வளர்த்தவள் சீதேவிக்கிழவி. அப்பிடிப்பட்டவளையே ஒரு மாதகாலத்திலும் எட்டிப் பார்த்திருக்க மாட்டார்கள் பேரனும் பேர்த்தியும். அவ்வாறிருக்கும் போது பாலை மட்டும் ஊட்டியவளின் வேதனை அவர்களுக்கு எங்கே புரியப் போகுது?
உதயாவுக்கு உதவ அவள் கணவனும் அருகில் இல்லை. அவனும் வெளிநாடு சென்று பல வருடங்கள் ஆகிறது. என்னாலும் என்ன செய்ய முடியும்? இது சீதேவியின் உள்ளக்கிடக்கை
உதயாவின் கதறல் குறைந்து போன நேரத்தில் தான்
"6T660TubLD"

Page 57
40ரும் சந்த/
என்று இருவரும் கேட்கும் கேள்வி சீதேவியின் காதுகளில் விழுகிறது. பின்பு மோட்டார் சைக்கிள் புறப்படும் சத்தம். வீடு அமைதியாகி விட்டது. சீதேவிக் கிழவியின் நெஞ்சம் கலக்க முறுகிறது. மீண்டும் மோட்டார் சைக்கிளின் சத்தத்தை எதிர்பார்த்து காது கொடுத்தபடி காத்திருந்தாள். பசித்த பசி எங்கு போனது என்று தெரியவில்லை நீண்ட நேரத்தின் பின் வீட்டு வாசலில் மோட்டார் சைக்கிள் வந்து நிற்கும் சத்தம்.
"பிள்ளையஸ், பிள்ளையஸ் என்ன கொம்மாவுக்கு"? துடிதுடிக்கிறாள் சீதேவிக்கிழவி.
“பாட்டி அம்மாவுக்கு கண்ணுக்குள்ளை எண்ணெய் பறந்திட்டுது. டொக்டரிட்டை காட்டியிட்டு வாறம்" பேரன் கோபு கூறினான்.
"கொம்மாவுக்கு கவனம் இல்லை, பாக்குத்தர் என்ன
ஒரு வித பதட்டம். "ஒயின்மென்ற் ஒண்டு தந்தவை பாட்டி, ஆப்ரேசன் செய்தால் தான் சரியாகுமாம்"
சிந்து முடிக்கவில்லை. “பிள்ளையஸ் அவள் பாவம் எவ்வளவு செலவழிஞ்சாலும் பரவாயில்லை. அவளின்ரை கண்ணைத் தெரியப்படுத்துங்கோ”
“பாட்டி நீ மட்டும் கண் தெரியாமல் இருக்கலாம், அம்மா இருக்கக் கூடாதே" படாரெனக் கேட்டு விட்டாள் சிந்து. "உதயா உங்களைப் பெத்தவளடி, பிள்ளையஸ்”
"பெத்தவா தான், ஏன் நீங்கள் அம்மாவைப் பெற இல்லையே? நீங்கள் மட்டும் வருடக்கணக்காய் கண் தெரியாமல் இருக்கலாம். அம்மா இருக்கக் கூடாதே?” மடக்கினான் கோபு.
“என்ரை கதை வேறை பிள்ளையஸ். உதயா பாவம், அவள் இந்தத் துன்பத்தைத் தாங்க மாட்டாளர். ஆற்றிலையோ
Goaoga)
 
 

ഗ്ഗീ/ി 0്വീg/
குளத்திலையோ விழுந்து செத்து விடுவாள் பிள்ளையஸ்” கண்ணில் நீர் பொங்கக் கூறினாள் சீதேவி. சீதேவியின் வார்த்தைகளை செவிசாய்க்கவில்லை பேரப்பிள்ளைகள்.
சீதேவிக்கு அருகில் படுக்கை போடப்பட்டது. அன்பு, அரவணைப்பு, வசதியான வாழ்க்கை என்று வாழவைத்த அன்னையை தரையில் படுத்த மனம் வரவில்லை. கட்டிலில் படுத்தினார்கள். அதிக அக்கறை எடுத்துப் பார்க்க ஏனோ அவர்களுடைய மனம் இடங்கொடுக்கவில்லை. அதற்கான காரணம் அவர்கள் மனதில் ஒரு மூலையில் ஏற்கனவே இருந்து வந்த ஒரு நெருடல் தான்.
பாட்டி சீதேவியை, அன்னை உதயா ஒதுக்கி வைத்தமையும் அன்பு அக்கறை செலுத்தாமல் விட்டமையுமே அவர்கள் மனத்தில் நீங்காத ஒரு வடுவாக இருந்து வந்துவிட்டது. உதயாவும் ஓரங்கட்டுப்பட்டு விட்டாள். உதயாவின் மனச்சாட்சி உறுத்தத் தொடங்குகிறது. வேதனையும் வலியும் ஒன்று சேர
"அம்மா அம்மா” என்று தாயை அன்புடன் அழைத்து முனகுகிறாள் உதயா. கோபு, சிந்து எடுத்தெறிந்து வேண்டா வெறுப்பாக அன்னையைக் கவனிக்கிறார்கள். பொறுமை கடந்த உதயா, சீதேவியின் இரு கரங்களையும் பற்றி தனது தலையிலடித்துக் கொள்கிறாள்.
“விடு உதயா உனக்கென்ன பைத்தியமே?” "அம்மா பைத்தியம் தான். உங்களைக் கொடுமை செய்த பைத்தியம்" தாயின் மடியில் விழுந்து கதறுகிறாள். உதயாவைத் தடவிக் கொடுக்கிறாள் அன்னை சீதேவி.
"அம்மா! பாட்டி!' என ஒரே நேரத்தில் அழைக்கிறார்கள் கோபுவும் சிந்துவும்.
அருகில் டாக்டர் ஒருவர்.
سسسسسسسسسسسسهاست
O97)

Page 58
ീw/ി 4,905
இருவரது கண்களும் பார்வையிடப்படுகிறது. மறுநாள் ஆட்டோ ஒன்றில் கண் கிளினிக்கிற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள் உதயாவும் சீதேவியும். உதயாவுக்கு சிகிச்சை பயனளிக்கும் என்றும் சீதேவிக்கு காலம் கடந்து விட்டது என்றும் டாக்டர் கூறுகிறார்கள்.
"பிள்ளையஸ் மண்ணுக்குள்ளை போற எனக்கு இனி கண் வேண்டாம். கொம்மாவுக்கு கண்பார்வை கிடைச்சால் எனக்குக் கிடைச்சது மாதிரி" சீதேவிக்கிழவி ஆனந்தமாகக் கூறுகிறாள்.
"பார்த்தியளே அம்மா பாட்டியை. எங்களுக்குப் பாட்டி மேலை ஒரு வெறுப்போ அருவருப்போ கிடையாது. உங்கடை அடாவடித்தனம் எத்தனை நாளைக்கு எண்டு பொறுமையாய் இருந்தம். ஆண்டவனுக்கே உங்கடை அட்டாதுப்டித்தனம் பிடிக்கயில்லை" சிந்து கூற
"பிள்ளையஸ் என்னை மன்னிச்சிடுங்கோ, உங்களைப் பிள்ளையளாய் பெத்ததுக்கு முற்பிறவியிலை புண்ணியம் செய்திருக்க வேணும். காவோலை விழக் குருத்தோலை சிரிக்குமாம் என்று பழமொழி இருக்கு. அது இயற்கை. ஆனால் நாங்கள் மனம் வைச்சால் முதுமையிலை உள்ளவையையும் சந்தோசப்படுத்தலாம். என்னைப்போல உள்ளவைக்கு."
உதயா கூறி முடிக்கவில்லை. "நீங்கள் கற்றுக்கொடுத்த பாடம் எண்டாலும் என்ரை பேரப்பிள்ளையஸ் எல்லே"
என்று முடித்துக் கொண்ட சீதேவி, இருவரையும் அருகில் அணைத்து உச்சிமுகர்கிறாள்.
நெண்ணைதாங்கி
 
 
 
 

நாப்படாப்பாடு
öllnu
ஆடைகளை தனது பயணப்பைக்குள் அவக் அவக்கெனத்திணித்தாள். 5.30ற்கு பஸ் ரவுணுக்கு வந்து விடும். அதனை விட்டால் 10 மணிக்கு. காவியா பாடசாலை போய்ச்சேர மாலை 5 மணி ஆகிவிடும். பரபரப்புடன் திணித்தவளுக்கு தனது செய்கை அசிங்கமாகப் பட்டது.
முன்பு என்றால் ஆடைகளை மடித்து வைத்தால் வைத்தததுதான். பார்ப்பதற்கு மிகவும் நேர்த்தியாக இருக்கும். ஆனால் தற்போது எல்லாமே குதம்பலாகக் காட்சி அளித்தது.
"ஆரும் பார்த்து புள்ளியே போடப்போகினம்" மனதிற்குள் புகைந்த வார்த்தை உதடுவழியாக வெளியே வந்து விட்டது. "அம்மா, அம்மா, இண்டைக்கு எங்கடை நேசரி ரீச்சர் பேரன்சை வரச் சொன்னவா. ஒன்பது மணிக்கு எல்லாப் பேரன்சும் நிக்கவேணுமாம்” ஆங்கிலம் கலந்த கொச்சைத் தமிழில் மகள் சானுஜா, வெகு நிதானமாகக் கூறினாள். அதனை ரசிக்கும் மனநிலை காவியாவுக்கு ஏது. “போடி போ பேரன்சை வாடகைக்குப் பிடி"சினத்துடன் கூறி, சானுஜாவை அங்காலே தள்ளிவிட்டாள்,

Page 59
அதே நேரம் பதுமையான ஏதோ ஒன்று பாதத்தில் ஊருவது போன்ற எரிச்சல் உணர்வு அவசர அவசரமாக குனிந்து பார்த்தாள். ஒன்பது மாதக்குழந்தையான தேனுஜா.
“虫... அடுத்த சனியன் போ, போய்க் கொப்பரோடை இரு”
அந்தப்பிஞ்சினை காலால் உதறித்தள்ளி விட்டாள். தனது செயற்பாடுகள் அத்துமீறியாதாகவும் தென்பட்டது. என்ன செய்ய முடியும்? 'அழுதும் பிள்ளை அவள் தானே பெற்றாக வேண்டும் பஸ்ஸை விடப்போகுறோமே! என்ற ஆதங்கம் தான் இந்த மூர்க்கத்தனமான வெளிப்பாடுகள். காவியாவின் அரக்கத்தனமான திட்டலைக்கேட்டு சகிக்க முடியாத மாமி காந்திமதி அரக்கி அரக்கி வந்து தேனுஜாவைத் தூக்கி மடியில் இருத்திக் கொண்டாள். அந்தப்பாலன் கீரிட்டுக் கத்தத் தொடங்கியது.
"உனக்கேனனை இந்தத் தேவையில்லாத வேலை. தான் போகத் தெரியாத மூஞ்சூறு விளக்குமாத்தைத் தூக்கின கதைதான் இது"
காவியாவின் கணவன் குமரனுக்கு இவ்வார்த்தைகள் செவிப்பறையைப் பிளந்தது. அன்னை காந்திமதியின் இயலாமையைக் குத்திக்காட்டியது போல் இருந்தது. நெஞ்செல்லாம் பற்றி எரியத்தொடங்கியது. ஆனாலும் ஒன்றுமே செய்யமுடியாத நிலைமை.
காவியா படும் கஷ்டத்தை நாள் தோறும் பார்த்து துயருறுபவன். கணவன் ஒரு வாரம் லிவில் நின்றால் மனைவி அடுத்தவாரம். இவ்வாறுதான் அவர்களது குடும்பம் ஓடிக்கொண்டிருந்து. இந்நிலையில் மாவட்ட இடமாற்றம் அவர்களால் எவ்வாறு தாக்குப்பிடிக்க முடியும்?
சானுஜாவின் பராமரிப்பை மட்டும் நிறைவேற்றி விட்டு,
9.
 

அன்னை சுதமதி விண்ணுலகம் பறந்தோடி விட்டாள். காவியாவின் சிறுபராயத்திலே தந்தையும் விண்ணுலகம் சென்று விட்டார். உதவிக்கு ஒருவரையும் பெற்றும் போடவில்லை. இந்த நிலையில் மாமி அரைப்படுக்கைக்காரி. மாமன் முழுப்படுக்கைக்காரன். இவற்றையெல்லாம் காரணம் காட்டி ரான்சரை கான்சல் பண்ணலாம் என்றால்.
“ஒரு கதையும் தேவையில்லை. போட்ட இடத்திற்குப் போகவேண்டியது தான்” அதிகாரிகளிடமிருந்து வந்த முடிவான பதில் இது.
இந்தக்காலத்தில் சேவன்ற் கேளை எங்கே பிடிப்பது? அவ்வாறு பிடித்தாலும் காவியா இல்லாத சூழ்நிலையில் குடும்பத்தில் வேறு பிரச்சினைகள் உருவாகி விடுமே. கலிகாலமான இக்காலத்தில் நடந்தேறிக் கொண்டிருக்கும் கலாச்சார சீரழிவுகள் நாள்தோறும் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுக் கொண்டு தானே இருக்கின்றன.
அப்பிலுக்குப் போட்டு விட்டு இருப்பதுவும் காவியாவுக்கு சரியாகப்படவில்லை. அதன் விளைவு இன்றைய ரசசாம்பார். குமரனின் மெளனம் காவியாவின் மனதில் குற்ற உணர்வை ஏற்படுத்தியது. "நான் என்ன செய்யிறது குமரன்” அழாக்குறையாக குரல் சோர வினாவினாள் காவியா.
"நீர் மனதை அலட்டிக் கொள்ளாமல் வெளிக்கிடும் பிள்ளையளின்ரை கடமைகளை நான் செய்யிறன்"
குமரன் கூறிய ஆறுதலான வார்த்தைகள் காவியாவின் உள்ளத்திலும் உடலிலும் ஒரு புதுத்தெம்பினை ஏற்படுத்தியது. அவசர அவசரமாக தனது கடமைகளை முடித்துக்கொண்டு பிள்ளைகளுக்கும் டாட்டா காட்டி மாமா, மாமி, கணவன் யாவரிடமும் விடைபெற்று பஸ் நிலையத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தாள்.

Page 60
ീ% 01:ീg/
அவளுடன் வேலை செய்யும் சில ஆசிரியைகள் அவளைத்தாண்டி மோட்டார் வண்டிகளின் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தார்கள். கைக்குழந்தை தனியாகி விடும் என்ற காரணத்தால் தனது பயணப்பொதிகளை சுமக்க முடியாமல் சுமந்து கொண்டிருந்தாள் காவியா.
செக்கன் முட்களின் சுழற்சி வேகத்தாலி நிமிடமுட்கள் அசைய பஸ் ஸ்ராண்டை அடைந்து விட்டாள் காவியா. ஸ்ராண்டை அடையவும் பஸ் வந்து நிற்கவும் சரியாக இருந்தது. ஒருவாறாக கண்ணாடிக்கதவினால் கான்ப்பாய்க்கை வீசி ஆசனம் ஒன்றைத் தனது உரிமையாக்கிக் கொண்டாள். சிறிது நேரத்தின் பின்பு பஸ் புறப்பட்டதும் காவியாவின் குடும்பநினைவும் புறந்தள்ளுப் பட்டு விட்டது.
பாடசாலை நினைவும் தமிழ்த்தினப் போட்டியில் எவற்றை எவற்றை தெரிவு செய்து பயிற்சி அளித்தால் மாவட்டமட்டம் வரை கொண்டு செல்லலாம் என்ற நினைவுகளுமே மனதில் நிழலாடிய வண்ணம் இருந்தது.
“என்னதான் இருந்தாலும் பெண்கள் வேலை பார்க்கக் கூடாது"
வயது முதிர்ந்த ஜயா ஒருவர் தனது பொக்கை வாயால் அருகிலிருந்த நடுத்தர வயது மதிக்கத்தக்க ஒருவருக்கு கூறிக் கொண்டது காவியாவின் செவிகளில் மிகத்துல்லியமாக ஒலித்தது. காவியா தனது புலன்களை ஓடும் பஸ்ஸிற்குள் செலுத்தினாள்.
பஸ் நிறுத்தத்தில் ஒரு கர்ப்பிணி ஆசிரியை கையில் பைல் கட்டுக்களுடன் ஏறிக்கொண்டதுதான் அந்த முதியவரின் அங்கலாய்ப்புக்குக் காரணம் என்பதை ஒரு நொடியில் புரிந்து கொண்டாள் காவியா. அதுமாத்திரமல்லாது அந்த முதியவர் எழுந்து அந்தப் பெண்ணுக்கு இடம் கொடுக்கப்போனார்.
 

அந்த நிகழ்வு அருகிலிருந்த மனிதருக்கு வெட்க உணர்வை ஏற்படுத்தி இருக்க வேண்டும். அவர் முதியவரை இருத்திவிட்டு தான் எழுந்து, அந்தப் பெண்ணுக்கு இடம் கொடுத்தார். அவர்களுக்கு முன் சீற்றில் அமர்ந்திருந்த இளைஞர்கள் அதனைக் கண்டு கொள்ளாதவர்கள் போல் பாஷாங்கு செய்தார்கள். முதியவரே தொடர்ந்தார்.
"தம்பி, பாதை மூடியிருந்த நேரம் அறம்பிறமான செக்கிங்குகளெல்லே. ஒருதரும் சீற்றிலை இருக்கேலாது. இறக்கி விட்டுவிடுவாங்கள். திரும்ப ஏத்தயுக்கை பாக்க வெல்லோ வேணும். கிழடுகளை விழுத்தித் தள்ளிப்போட்டு இளவட்டங்கள் ஏறிவிடுவினம்”
நகைத்தவாறு முதியவர் கூறிய வார்த்தைகள் முன்சிற்றிற்கு மட்டுமல்ல அந்தப் பஸ்ஸிற்குள் பயணம் செய்த அரைவாசிப் பேரின் காதுகளிலும் விழுந்திருக்கும். காவியாவும் முன்பு டிப்ளோமா கற்கை நெறிக்காக யாழ்வரை பயணம் செய்தவள் தான். அவள் அப்போது கண்டு குமுறிய விடயங்களைத்தான் தற்போது முதியவர் தைரியமாகக் கூறினார்.
கஷ்டப்பட்டு சிற் பிடித்த எத்தனையோ முதியவர்களை தாங்கள் ஏற்கனவே இருந்து வந்த சிற் என்று காரணம் காட்டி எழுப்பிவிட்டிருக்கிறார்கள். இளைஞர் யுவதிகள். மரியாதைக்காகப் பதில் வார்த்தை கூறாது எழும்பியவர்களைப் பார்க்க ரத்தம் கொதித்துவிடும் காவியாவுக்கு.
முதியோரைப் போற்றுதல், முதியோருக்கு உதவிசெய்தல், முதியோரை மதித்தல் என்பதெல்லாம் தற்காலத்தில் செல்லாக்காசாகி விட்டது. குருவையே மதிக் காத சமூகம் தான் இப்போது வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆசிரியர்களையே தோழமை பூணும்

Page 61
ff fig/ി சமுதாயம் தான் இக்காலத்து மாணவ சமுதாயம். அவ்வாறிருக்க ஈவு, இரக்கம், கருணை, காருண்யம் எங்கே பிறக்கப்போகின்றது?
அடுத்த பஸ்கோட்டில் காவியாவுடன் கடமையாற்றும் தேவிப்பிரியா ஏறிக்கொள்வாள். அதன் பிறகு ஒருவாறு பொழுது போய் விடும். மனம் நினைத்துக்கொள்ள பஸ் கோல்ட்டும் வந்து விட்டது. தேவிப்பிரியா ஏறிக்கொண்டாள். காவியாவின் முகம் அன்றலர்ந்த தாமரை போல் மலர்ந்து கொண்டது. தேவிப்பிரியாவுக்கு சிற்கிடைக்கப்போவதில்லை காவியாவுடன் சமாளித்து இருந்து விடுவாள்.
நீண்ட பயணத்தை எவ்வாறு நின்று கழிக்கமுடியும். தேவிப்பிரியாவே காவியாவுக்கு அருகில் அமர்ந்து தன்னை இலகுவாக்கிக்கொண்டு பேச்சைத் தொடங்கினாள்.
"குழந்தைப்பிள்ளைக்காரர், வயது வந்தவை எண்டு ரான்சரெல்லாம் நிப்பாட்டி இருக்கினமாம். நீ ஏனடி தேவையில்லாமல் கஷ்டப்படுகிறாய். உனக்கு ஆரும் சினக்கக்கூடாது"
காவியாவின் கஷ்டத்தை நன்கு தெரிந்தமையால் இவ்வாறு கேட்டாள் பிரியா.
"நானும் அறிஞ்சனான் கைப்பிள்ளையோடை எல்லாம் போய் நிண்டதுகளாம்"
காவியா நகைப்புடன் கூற "உனக்கு நையாண்டி, குமரன் இருக்கிற தைரியம். இரண்டு நாள் விட்பண்ணாட்டால் நீ படுகிற வேதனை எனக்கெல்லோ தெரியும்" பிரியா மீண்டும் அக்கறையுடன் கூறினாள்.
காவியாவும் அறிந்த விடயங்கள் தான். குழந்தையுடன் போய் நிற்க, உங்கடை குழந்தை தானே! என்று பகிடிக்குத் தன்னும் கேட்டு விட்டால். என்ற பயம் அவளை ஆட்டிப்படைத்தது.
 
 

அதிகாரிகளும் மனிதர்கள் தானே அவர்களுக்கும் புரிந்துணர்வு இருக்கும் தானே. அந்தந்த இடத்தில் இருந்தால் தான் அதன் கஷடநஷ்டங்கள் விளங்கும். எழுந்த மானத்துக்கு கதைக்கவும் கூடாது. ஆனாலும் சில விடயங்கள் பாரபட்சமாக நடந்தேறிக்கொண்டு தான் இருக்கின்றன.
சில ஆசிரியர்களுக்கு கேற் வாசலில் பாடசாலை. பதினைந்து வருடங்களுக்கு மேலாக இருக்கிறார்கள். மற்றையவர்களின் பார்வைக்கு பதவி மாற்றம். இத்தகைய போர்வையை போர்த்தி வைத்திருக்கும் அதிகாரிகளும் இருக்கத்தானே செய்கிறார்கள்.
எதற்கும் நாளை விட்டுக்குப் போனவுடன் தைரியமாக அதிகாரிகளுடன் கதைக்க வேணும். முடிவு கட்டிய காவியா, அந்த முடிவைப் பிரியாவுக்குத் தெரிவித்தாள். பிரியாவுக்கு மகிழ்ச்சி. அந்த மகிழ்வுடன் பிரயாணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள் இருவரும்.
ஒருவாறாக மறுநாள் விடிந்து பாடசாலை விடும் நேரமும் வந்துவிட்டது. பிரியா வார இறுதியில் தான் புறப்படுவாள். அதனால் அரக்கப்பறக்க காவியா பஸ் ஏறிப்புறப்பட்டு விட்டாள்.
பஸ் குலுங்கிக் குலுங்கி பள்ளம் மேடு என்று ஒன்றும் பார்ககாது ஓடிக்கொண்டிருந்தது. திடீரென வயிற்றுப்பகுதி சுற்று ஈரலிப்பது போன்ற உணர்வு. உணர்வென்ன உண்மையாகவே ஈரலித்தது. குழந்தைக்குப் பாலூட்டும் நேரம் அதிகமானதால் தான் இந்த அவலநிலை. கைப்பைக்குள் இருந்த கைலேஞ்சியை எடுத்து ஒற்றிக்கொண்டிருந்தாள். அது பாயும் வேகத்திற்கு லேஞ்சி ஈடுகொடுக்குமா?
105

Page 62
ഗ്ഗwീjീ 4p/ി
அக்கம் பார்க்கம் பார்த்து விட்டு தனது பயணப்பைக்குள் இருந்த சிறிய டவலை எடுத்து வயிற்றுப் பகுதிக்குள்ளே வைத்து சாறியால் பரவி மறைத்துக் கொண்டாள். செக்கிங் இல்லாத காலம். அல்லது ஏழெட்டு இடம் இறங்கி ஏறுறதுக்கிடையிலை நரக வேதனைப் பட்டிருப்பாள். குண்டு கிண்டென்று அவளைத் தள்ளிக் கொண்டும் போயிருப்பார்கள்.
சில விடயங்கள் எதிர்ப்பார்ப்புக்கள் தேவையான போது நிகழ்வதில்லை. தேவைக்கு ஊத ஊத எரியாத அடுப்பு அணைக்கும் போது பற்றிக் கொழுந்து விட்டு எரியும். அது போல் காவியா, வீட்டில் இருக்கும் சந்தர்ப்பத்தில் குழந்தை பாலுக்கு அழும், அதன் பசியை பூரணமாகப் போக்குவதற்கு புட்டிப்பாலே உதவிக்கரம் கொடுக்கும். அவ்வாறிருக்கும் போது இப்போது தேவையற்று பால் சுரந்து கொணி டிருந்தது. மார்பகங்கள் வீங்கிப்புடைத்து வேதனையைக் கொடுத்தது.
இந்த இடமாற்றங்கள் யாருக்கு என்ன செய்யப்போகிறது? களைத்து விழுந்து தாங்கொணாத மனக்கிலேசத்துடன் சென்று ஒழுங்கான திருப்திகரமான கல்வியை வழங்கமுடியுமா?
முன்பு கஷ்டப்பிரதேசங்களில் வேலை செய்தார்கள். அங்கு தான் அவர்கள் செய்ய வேண்டும் என்ற கட்டாயநிலை. யாழ்ப்பாணத்தையே ஒருகாலம் விரும்பாதவர்கள் தற்போது பெயர் வந்தது வரமுன்பே மூட்டை முடிச்சுடன் வந்து இறங்கி விட்டார்கள். அது போல் முன்பு விரும்பியும் வெளி மாவட்டங்களில் வேலை செய்யமுடியாத நிலைமை. ஆனால் இன்று இடமாற்றங்கள் கட்டாயமாக்கப்பட்டுவிட்டது.
காரணங்களைக் காட்டி சிலர் தப்பிவிட்டோம் என்று
 
 

ஒதுங்க இந்த மீளாத்துயருள் மாழ்பவர்கள் எத்தனை பேர். வால் பிடிப்பவர்களுக்கும் பந்தம் பிடிப்பவர்களுக்கும் செல்வாக்கு மிக்கவர்களுக்கும் தான் சலுகைகளும் பதவி உயர்வுகளும் என்றாகி விட்டகாலம்.?
உடலும் உள்ளமும் ஒருங்கு சேர்ந்து வலிக்க உள்ளுர இந்த மனக் கொதிப்பு காவியாவுக்கு. இந்தக்கொதிப்பு அடங்க முன்பு அவளுடைய இடமும் வந்து சேர்ந்து விட்டது. வழமைபோல் விட்டிற்கு நடந்து செல்வதற்கு அவளது உடல் நிலை ஒத்துழைப்பு செய்யவில்லை. ஆட்டோவுக்கு நூறு ரூபா, அநியாயக் காசுதான். ஆனால் என்ன செய்வது?
ஆட்டோ ஒன்றை அமர்த்தி அதில் புறப்பட்டுக் கொணி டாள். நினைவுகள் இரணிடு வருடம் முன்னோக்கிப்பறந்தது.
இப்போது போலிருந்து ரோக்கன் பயணம். வவுனியாவிலிருந்து மாலை ஐந்து மணி பஸ்ஸில் யாழ் வர, ரோக்கன் எடுப்பதற்கு அதிகாலையிலேயே தவம் இருக்க வேண்டும். காவியா முகாமில் தங்கியிருந்த சகோதரனைப் பார்த்து விட்டு வவுனியா ரவுணுக்கு மூன்று மணியளவில் வந்து சேர்ந்தாள்.
அந்த சமயம் பயணம் செய்பவர்களின் தொகை குறைவானமையால் மூன்று மணிக்கு சென்றாலும் ரோக்கன் எடுத்து பயணம் செய்யலாம், என்ற ஒரு நம்பிக்கை.
இ.போ.ச.வில், ரோக்கன் எடுக்கும் இடத்தை அடைய பத்து ரூபா ரிக்கெற். பதினைந்து நிமிடத்தில் அடைந்து விடலாம். நேரம் மட்டுமட்டானமையால் ஆட்டோ ஒன்றை பேரம் பேசிய போது நானூறு ரூபா கேட்டுக்கொண்டான். அதனால் பஸ் ஒன்றில் தொற்றிக் கொண்டாள். ஒரு நாளும் இல்லாதவாறு அந்த பஸ்ஸம்

Page 63
%/ി ബ്%
மிக மெதுவாகவும் அடிக்கடி பயணிகளை ஏற்றி இறக்கியும் சென்று கொண்டிருந்தது. மனம் கிலி கொள்ளத் தொடங்கியது.
சனம் குறைவென்று வேளையோடு பஸ்கள் புறப்பட்டுவிட்டால்.
ஜன்னல் கண்ணாடியூடாக பஸ்கள் அணிவகுத்து வருகின்றதா என மனம் பதைபதைக்க எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தாள் காவியா.
அணிவகுப்பு தொடங்கினால் ரோக்கன் எடுத்தாலும் இடைவழியில் ஏறமுடியாது. யாழ் வர வேறு மார்க்கமும் இல்லை. மறுநாள் பாடசாலைக்கு கட்டாயம் சமூகம் கொடுக்க வேண்டும்.
"கண்ணா, கண்ணா" என்று மனம் துதிபாட கண்கள் உற்று நோக்க அணிவகுப்புடன் தொடராக பஸ்கள் வந்து கொண்டிருந்தன. காவியா இறங்கவும் இறுதிபஸ் கம்பிக் கூட்டைத்தாண்டி வெளியே வரவும் சரியாக இருந்தது. சனம் குறைவென்ற படியால் நான்கு மணிக்கு புறப்பட வேண்டிய பஸ் மூன்று மணிக்கே புறப்பட்டு விட்டது. அங்காலாய்ப்பு அடைந்த போது கிடைத்த தகவல்.
மனவேதனையுடன் வவுனியாவில் தங்க வேண்டிய அவல நிலை. அங்கு நின்றதனால் நானூறு ரூபாவுக்கு அதிகமான செலவு மூன்று வேளை உணவு, ரீ, எக்ஸட்ரா எக்ஸட்ரா.
பணத்தைப் பெரிதுபடுத்தாமல் ஆட்டோவில் சென்றிருந்தால் இறுதி பஸ்ஸிலாவது தொற்றி இருப்பாள். இந்த அவலநிலையும் ஏற்பட்டிருக்காது. அன்றிலிருந்து பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காது சூழ்நிலைக்கே முக்கியத்துவம் கொடுத்து வந்தாள்.
 
 
 

நூறு ரூபாவை இழந்தாலும் பெரியதொரு நிம்மதியுடன் வீட்டு வாயிலில் வந்து இறங்கினாள். ஆட்டோ வந்து நின்றதும் மான்குட்டி போல் துள்ளி ஓடி வந்து அன்னையைக் கட்டிக் கொண்டாள் சானுஜா. w
உடல் உபாதையை இரண்டு நாள் பிரிவு மறக்கச் செய்து விட்டது. சானுஜாவை பதிலுக்கு கட்டி அணைத்து முத்தம் கொடுக்க வைத்தது. குமரன் வந்து உடுப்பு பாக்கை எடுத்துக்கொண்டான். தேனுஜா நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள்.
“காவியா, பிள்ளையைத் தூக்காதை, போய் நல்லாய் ஒரு குளிப்புப் போட்டு பாலைக்கறந்து ஊத்தியிட்டு வா. பால் புளி, புளி எண்டு புளிச்சிருக்கும்"
மாமி தனது பாரம்பரியத்தையும் செல்வாக்கையும் ஒரு அதட்டல் மூலம் தெரிவித்தாள். காவியாவுக்கு சிரிப்புத்தான் வந்தது. தான் அறிந்தவரை இது விளங்காத்தனம் எண்டு தெரியும். ஆனால் சில வேளைகளில் ‘மாமியார் சொல் மந்திரம்' என்று தலை ஆட்டித்தானே தீர வேண்டும். உடம்புச் சூட்டிலேயே இருக்கும் பால் எவ்வாறு புளிக்கும் என்று டொக்ரேசே நையாணி டி செய்திருக்கிறார்கள். அவ்வாறிருக்க இந்தப்பழமை வாதிகள்?
மறுத்துப் பேசுவதில் ஒன்றுமே ஆகப் போவதில்லை என்று நினைத்தவளாக குளியலறையில் தஞ்சம் புகுந்தாள்.
குளித்து வெளியில் வரவும் சூடான தேநீர் ஒன்றை ஆவி பறக்க நீட்டினான் குமரன். கண் கொட்டாது நோக்கினாள் காவியா. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பது போல இவ்வாறு ஒரு கணவனை அடைவதற்கு என்ன தவம் செய்திருக்க வேண்டும் காவியா.
R
55.JOJEUS)

Page 64
θαήβ (θ άρθ ή5ό
முகம் மலரப் பெற்றுக்கொண்டவள், பிரியா கூறிய விடயதைக் குமரனுக்குத் தெரிவித்தாள்.
"அப்பிடியா! நாளை காலையே போவம். அகதிக்கு ஆகாயம் துணை செட்டிகப்பலுக்கு தெய்வம் துணை எண்டு அம்மா அடிக்கடி சொல்லுவா. அது போல எங்களுக்கும் வழிபிறக்கும். ரீ ஆறப்போகுது குடியும்"
மறுநாள் கடிகாரம் எட்டடிக்கவும் இருவரும் புறப்பட்டு விட்டார்கள். அதிகாரியின் ஆபிசில் இன் என்று பார்த்தவுடன் ஒரு மகிழ்வு. தாங்கள் கொண்டு வந்த மனுவை நீட்டினார்கள். அதிகாரி பார்த்து விட்டு
"உங்களுக்குச் செய்து தரலாம். ஏன் இவ்வளவு நாளும் றிஸ்க் எடுத்தீர்கள்"
அவருடைய ஆதங்கம் இருவரையும் இன்பக்களிப்பில் ஆழ்த்தியது. நன்றியைத் தெரிவித்து விட்டு மனநிறைவுடன் வீடு திரும்பினர் காவியாவும் குமரனும்,
 
 

மனங்கொண்ட மாங்கல்யம்
டையில் ஒரு சறுக்க்ல் தென்படவே காலில் மாட்டியிருந்த பாட்டாவைப் பார்த்துக் கொண்டார் சாமிநாதன். பாட்டாவின் குதிக்கால் பக்கம் தேயப் நீ து பிறைவடிவத்தை ஒத்துக் காட்சி தந்தது. அதனைப் பார்த் த சாமிநாதனின் மனமும் கரைந்து கனக் கத் தொடங்கியது.
மூன்று பெண்பிள்ளைகளின் தோற்றமும் கண் எதிரே மும்மூர்த்திகளின் தோற்றம் போல் காட்சி தந்தது. ஒரு பெண்பிள்ளையைப் பெற்றவர்களே வரன் தேடுவதில் சிரமத்தை எதிர்நோக்கும் இக்காலத்தில் மூன்று பெண்பிள்ளைகளின் தந்தையின் மனநிலை சொல்லவும் (86.60ör(6LDIT?
மாப்பிள்ளை தேடும் படலத்தின் உச்சக்கட்டத்தில் தான் பாட்டா தன் களையை இழந்திருந்தது. என்பது அவர் மட்டும் அறிந்த உண்மை. காதலித்து திருமணம் செய்யும் பிள்ளைகளைப் பெற்றோர் திட்டித்தீர்க்கிறார்கள். ஒதுக்கி வைக்கிறார்கள். ஆனால் அவர்கள் பெற்றோருக்கு ஒரு விதத்தில் நல்லதைத் தானே செய்கிறார்கள். நண்பர்கள்

Page 65
கூடும் இடத்தில் நண்பன் சந்திரசேகரனுக்கும் பேரம்பலத்திற்கும் இடையில் இடம்பெற்ற உரையாடல் ஒன்று சாமிநாதனின் நினைவுக்கு வந்தது.
"பேரம்பலம் அண்ணை! உங்கடை பெட்டையள் கெட்டிக்காரியள். உங்களுக்கு ஒரு செலவோ அலைச்சலோ இல்லாமல் காரியத்தைச் சாதிச்சிட்டுதுகள். நீங்களும் எந்தவித கவலையோ பொறுப்போ இல்லாமல் எவ்வளவு சந்தோசமாய் இருக்கிறியள். சாமிநாதனைப் பார். பிள்ளையஸ் குமராகிறதுக்கு முன்னம் இருந்த இருப்பும் இப்ப இருக்கிற இருப்பும், சோர்ந்து வடிஞ்சு போயிருக்கிறான
பாவம்.”
நினைவுகளைச் சுமந்து கொண்டு படலையைத் திறந்தவரை வாசலில் வரவேற்றாள் செண்பகமாலை.
“என்னப்பா காயோ பழமோ" நெஞ்செல்லாம் படக் படக் என அடிக்கப் பதட்டத்துடன் வினவினாள் செண்பகமாலை. பிள்ளைகளும் வெளியே வந்து எட்டிப் பார்த்துக் கொண்டார்கள். காய் என்று சொல்ல மனம் தயங்கியது. செண்பகமாலை தலையில் கைவைத்து புலம்பத் தொடங்கி விடுவாள். அதனால் அதனை வெளிக்காட்டாமல்
"பழம் தான் உள்ளை நடவப்பா" இறுகிப் போயிருந்த மனதைத் தளர்வு படுத்தியவராகக் கூறினார் சாமிநாதன். மூன்று பெண்பிள்ளைகளின் வதனங்களும் வர்ண மின் குமிழ்களுக்கு மின்சாரம் பாய்ச்சியது போல் ஒரே நேரத்தில் ஒளியைப் பெற்றன. ஒரு பெண் வெளியேறினால் தான் மற்றைய இருவருக்கும் சுபீட்சம் என்று சொல்லி விட்டார் குறிப்பு பார்த்த சாத்திரியார். சாண் ஏற முழம் சறுக்கும் என்பார்கள். அது போல்
 
 
 
 

பொருத்தம் கூடும் சம்பந்தங்கள் எல்லாம் தொழில் ஏற்றத் தாழ்வில் கலைந்து போய்விட்டன.
ஏதோ மூன்று பெண்களையும் படிக்க வைத்து தொழில் ஒன்றையும் மூவருக்கும் பெற்றுக்கொடுத்து விட்டார் சாமிநாதன். அந்த வகையில் அவர் பாக்கியசாலி. அது தவிர மூவரும் அழகிலும் குறைந்தவர்களில்லை. மூத்தவளின் வயது கடுகதியில் ஏறிக்கொண்டிருந்தது. வரம்புயர நெல் உயரும் என்பது போல் மூத்தவளின் வயது ஏற ஏற அடுத்தவர்களின் வயதும் அதிகரித்துக் கொண்டிருந்தது.
கால் கழுவுவதற்காக நீர் நிறைந்த செம்புடன் வந்து நின்றாள் மூத்த பெண் ஹேமவதி. அவளது கூர்மையான விழிகள், தந்தையின் முகவோட்டத்தைத் துளாவிக் கொண்டிருந்தன. அதனைக் கவனிக்கத் தவறவில்லை சாமிநாதன்.
கைகால அலம்பிவிட்டு உட்சென்றவரைக் குளிர்மைப்படுத்த தேசிக்காய்த் தண்ணியைக் கொண்டு வந்து நீட்டினாள் இரண்டாவது மகள் சேனாவதி. அவளது வதனமும் வழமையை விட சற்று பொலிவு பெற்றிருந்தது. சாமிநாதனுக்கு தர்மசங்கடமாகிப் போய்விட்டது. அமர்ந்தபடி வாங்கிப் பருகிக் கொண்டார்.
சிறிது நிமிடம் கழிய தந்தையின் சாரத்தையும் பெனியனையும் கொண்டு வந்து நீட்டினாள் மூன்றாவது பெண் ரூபவதி. கடைக்குட்டி என்பதால் தந்தையைப் பார்த்து செல்லமாகச் சிரித்துக் கொண்டாள்.
திடீரென வாயிலில் புறோக்கர் சீனிவாசனின் அழைப்புக்குரல். சாமிநாதன் மனமகிழ்வுடன் வரவேற்றுக் கொண்டார். சால்வைத் தலைப்பால் முகத்தில் விசிறியபடி
நெத்தைாங்கி 113

Page 66
சாமிநாதனுக்கு அருகில் இருந்த கதிரையில் அமர்ந்து கொண்டார் சீனிவாசன்.
பங்குனிமாத வெய்யில் உச்சியைப் பிளந்தது. இக்காலப்பகுதியில் தான் திருமணங்களும் களைகட்டும். ஊருக்கு ஒரு திருமணமாவது நடந்தேறி விடும். சாமிநாதனே பேச்சைத் தொடங்கினார்.
“என்ன புறோக்கர்? ஏதாவது நல்ல செய்தி” சாமிநாதனின் தொனியில் ஒரு அவசரம் தெரிந்ததை புறோக்கள் கவனிக்கத் தவறவில்லை.
“எல்லாம் நல்ல சேதி தான். ஆனால் முடிவெடுக்க வேண்டியது உன்னுடைய பிள்ளைகள்” பீடிகை போட்டார் சீனிவாசன். சாமிநாதனின் முகத்தில் ஆச்சரியக் குறி. “ஒரு குறிப்பு நல்லாய்ப் பொருந்தியிட்டுது. சீதனம் வரதட்சணை எண்டு அவையள் ஒண்டும் எதிர்பார்க்கையில்லை." சீனிவாசன் இழுக்க.
“உத்தியோகம் பார்க்கிற பிள்ளையைக் கொடுக்கிறம். பிறகேன் சீதனம், வரதட்சணை?” மனம் விரக்தியில் உழல சாமிநாதனின் வார்த்தைகள் குறுக்கீடு செய்தது.
"அப்படிச் சொலி லக் கூடாது சாமிநாதன். உத்தியோகம் பார்க்கிற பிள்ளையஞக்குத்தான் நிறைய சீதனம் கொடுத்து மாப்பிள்ளை தேடுதுகள். எடுக்குதுகள். உனக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
“ஓம் அண்ணை, நீங்கள் சொல்லுறதும் சரிதான். எங்கடை அயலிலை இப்ப ஒரு சம்மந்தம் கைகூடினது.
இருண்ாைங்
 
 

இரண்டு பேரும் டாக்குத்தர். இருபது லட்சம் ரொக்கப்பணம், பெரிய விடுவளவு, ஐம்பது பவுண் நகை எண்டு பெரிய அட்டகாசம்'
சாமிநாதனின் மனைவியின் அனுசரணை புறோக்கருக்கு சாதகமாக அமைந்தது.
“சரி, சரி விசயத்துக்கு வாருங்கோ” துரிதப்படுத்தினார் சாமிநாதன்.
“என்ன. பொடியனுக்கு வேலை இல்லை. புறோக்கள் வார்த்தைகளை நீட்டிமுழக்க.
“என்ன வேலையில்லையோ? எழும்பும் சீனிவாசன் எழும்பும். நடையைக் கட்டும்” சாமிநாதனின் வார்த்தைகள் காரசாரமாக ரீங்காரமிட்டது"
"சாமிநாதன் அவசரப்படாதை. பொடியன் அரசாங்க வேலை இல்லையே தவிர கை நிறையச் சம்பாதிக்கிறான். மெக்கானிக்காய் வேலைபார்க்கிறது கேவலமானதில்லை. இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு நல்லது எது? கெட்டது எது? எண்டு வடிவாத்தெரியும், நாங்கள் ஒண்டும் விளங்க வைக்கத் தேவையில்லை. எல்லாம் நல்ல பொருத்தம் இப்பிடி ஒரு பொருத்தம் நான் இதுவரை கண்டதில்லை. பிள்ளையஸ் உங்கடை விருப்பம் என்ன?’ முற்றுப்புள்ளி வைத்தார் சீனிவாசன்.
சிறிது வினாடிகள் அங்கே மெளனம் ஊசலாடியது. ரூபவதி தன்னைத் தயார்படுத்திக் கொண்டாள்.
"அப்யா! ஏன் மெக்கானிக் தொழிலைக் கேவலமாகப் பார்க்கிறியள். அவர்கள் அணிந்து வேலை செய்யும் ஆடைகள் தான் அழுக்கே தவிர அவர்கள் செய்யும் தொழில் அழுக்கில்லை. டாக்டர் எஞ்சினியர் என்று படித்தவை
115

Page 67
செய்ய முடியாத சாதிக்க முடியாத காரியங்களை இவர்கள் சாதிக்கிறார்கள். மெக்கானிக் எண்டு ஒரு தொழிலாளி இல்லை எண்டால் நாங்கள் பாவிக்கிற அத்தனை வாகனங்களுக்கும் ஒரு பிழை வந்தால் தூக்கி வீசவேண்டியது தான்".
தைரியமாகக் கூறி ரூபவதி தொடர்ந்து ஒரு கதையினைக் கூறத்தொடங்கினாள்.
படித்த ஒரு மேதையைப் படிக்காத ஒரு சிறுவன் தோணியில் ஏற்றிச் சென்று கொண்டிருந்தான். பொழுதினை எவ்வாறு கழிப்பது என்று சிந்தித்த மேதை சிறுவனைப் பார்த்து.
“தம்பி நீ இராமாயணம் படித்திருக்கிறாயா?” என்றாராம். சிறுவன் முழிகளைப் பிதுக்கி உதட்டினால் மறுப்பைத் தெரிவித்தான்.
"வாழ்க்கையில் கால்பகுதியை இழந்து விட்டாயே தம்பி" பெரியவர் சலிப்புடன் கூறிவிட்டு. “சரி, நீ மகாபாரதம் படித்திருக்கிறாயா?" என்றாராம் மீண்டும் சிறுவன் உதட்டினால் மறுப்பைத் தெரிவித்தான்.
"தம்பி! நீ வாழ்க்கையில் அரைப்பகுதியை இழந்துவிட்டாய். சரி போகட்டும். உனக்கு ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி பாடிய ஒளவைப் பாட்டியைத் தெரியுமா?" என்றாராம் பெரியவர். சிறுவன் முகத்தில் எரிச்சல் பற்றிக் கொண்டது. “பெரியவரே இந்தத் தோணியை ஒட்டுவதைத் தவிர எனக்கு எதுவுமே தெரியாது. என்னை விட்டு விடுங்கள்”
"தம்பி, நீ வாழ்க்கையில் முக்கால் பகுதியை இழந்து விட்டாயே” என்று பூரித்துக் கொண்டாராம் பெரியவர்.
 

“சரி பெரியவரே நான் ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்கிறேன். இந்தப் பகுதியில் ஆழம் அதிகம் தோணி கவிண்டால் உதவிக்கு ஒருவரும் வரமாட்டார்கள். உங்களுக்கு நீந்தத் தெரியுமா?’ என்றானாம்.
பெரியவரின் முகத்தில் கலக்கம். வியர்வைத் துளிகள் நெற்றியில் பொட்டுக்களாக் காட்சியளித்தன.
“என்னப்பா சொல்கிறாய்”
“பெரியவரே நீங்கள் வாழ்க்கையில் முழுப் பகுதியையும் இழந்து விட்டீர்களே” என்றானாம்.
ரூபவதியின் குட்டிக் கதையைக் கேட்டு எல்லோரும் விழுந்து விழுந்து நகைக்கத் தொடங்கினர். தந்தைக்கு சிரிப்பு முட்டி நெஞ்சை அடைக்கத் தொடங்கியது. சிரிப்பின் கனதியால் சிலர் நெஞ்சைப் பற்றிக் கொள்ள சிலர் வயிற்றைப் பொத்திக் கொண்டார்கள். ரூபவதி விடயத்திற்கு இறங்கினாள்.
"அப்பா! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கிறது. படித்துத் தான் உலகை அறிய வேண்டும் என்றில்லை. உலகப்படிப்பு நிறைய இருக்கிறது. அதைக் கற்றுக்கொண்டாலே பல அறிவுபூர்வமான விடயங்களை அறிந்து சாதனைகள் படைத்துக்கொள்ளலாம். அதனை அரச உத்தியோகம் மாத்திரம் தீர்மானித்துக் கொள்ளாது”
“பிறகென்ன இதை விட ஒரு நிரூபணம் தேவையில்லை. என்ன சொல்லுகிறாய் சாமிநாதன்”
117

Page 68
மினமும் வசந்தம்
சாமிநாதன் முகத்தில் பூரண தெளிவு. ஆனாலும் உடனடியாக ஒத்துக்கொள்ள விரும்பாதவராக
“என்ன செண்பகமாலை, நீ என்ன சொல்லுகிறாய்?" மனைவியின் தலையில் பாரத்தைப் போட்டுவிட்டார் சாமிநாதன்.
“கைப் புண்ணுக்கு கண்ணாடி வேண்டுமோ? பிள்ளைதான் தெளிவாகப் புரியவைத்துவிட்டாளே! வாழவேண்டிய இளம் பிள்ளையளே இதை ஏற்றுக் கொள்ளயிக்கை நாங்கள் ஏன் தடை விதிப்பான். எல்லோரும் உத்தியோகம் பார்த்தால் மற்றைய வேலைகளை ஆர்செய்யிறது? உத்தியோகஸ்தர்கள் சம்பாதிக்கிற பணம் மூக்குக்கை விட்டுத் தும்மக்காணுமே.”
பெருமூச்செறிந்தாள் சாமிநாதனின் மனைவி. “சரி புறோக்கர், மெக்கானிக் சம்பந்தத்தை முடிச்சிடும்" சாமிநாதன் முடிவுக்கு வர புறோக்கர் மனநிம்மதியுடன் விடை பெற்றுக்கொண்டார்.
 

மீண்டும் வசந்தம்
ལྟ་གྲུ་༤༡།༄༅༅།། 9% செல்வதற்காக பஸ்ராண்டை நோக்கி நடந்து சென்று
கொண்டிருந்தான் சாருஜன். அழுக்குத் துணியுடன் தலைமயிர்கள் உருண்டு
> பார்ப் பதற்கு அருவருப் பாக இல் ஆ– நடைபாதையில் அமர்ந்திருந்தாள் ஒரு
vক பெண்.
அந்தப் பெண் பல்கலைக்கழகத்தில் தன்னுடன் ஒன்றாகக் கற்ற சாண்டில்யாவின் சாயலை ஒத்து இருந்தாள். அந்தப் பெண்ணை மீண்டும் பார்க்க வேண்டும் போலிருந்தது சாருஜனுக்கு. உற்று நோக்கினான். சாண்டில்யா போலவே காணப்பட்டாள். மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டது. அருகில் சென்றான். சாண்டில்யாவேதான். ஒரு கணம் அவனது இதயத்துடிப்பு நின்றது போன்ற உணர்வு.
சாண்டில்யா முற்று முழுக்க சித்தப்பிரமையுடன் காணப்பட்டாள். தனக்கு முன்னால் ஒரு உலகம் இருக்கிறது என்பதையே மறந்திருந்தாள். சூழலையும் சட்டை செய்யாமல் மிக அருகில் சென்றான் சாருஜன்.
"அம்மா என்னம்மா செய்யிறாய்! ஏன் பேசாமல் இருக்கிறாய்.? அப்பா, அம்மாவைப் பாருங்கோ நான்
1830)1606 iji.

Page 69
όάκήφθάμπρόσθό
டொக்டராய் வந்து உனக்குப் பெரிய ஊசியாய்ப் போடுவன். அப்பதான் நீ என்னோடை கதைச்சுச் சிரிப்பாய் உம்மணாமூஞ்சி சீ. GL町”
அபிநயத்துடன் அங்கும் இங்கும் கண்களை உருட்டி சிரித்து அழுது சிணுங்கி கோபித்து பல பாவங்களைக் காட்டி கொண்டிருந்தாள் சாண்டில்யா. சாருஜனின் இரத்தமெல்லாம் கொதித்தது.
பல்கலைக்கழகத்தில் மான்குட்டி போல் துள்ளித் திரிந்த சாண்டில்யாவா இவள்? கல்லூரி வைபவங்களில் முன்னின்று உழைப்பவள். பல நிகழ்வுகளிலும் கலந்து கலை அரங்கத்தையே களைகட்டச் செய்பவள். சுருக்கமாகக் கூறின் “கல்லூரி தாரகை” என மாணவர்களால் பட்டம் சூட்டப்பெற்றவள். ஒரு வருடம் சீனியராய் இருந்தும் சாண்டில் யாவுடன் நன்கு பழகியவன். அதை விட சாண்டில்யாவின் குழந்தைத்தனமான அன்பில் கட்டுண்டு மனதைப் பறி கொடுத்தவன். சாதி, சமயம், சம்பிரதாயம் என்று பல கட்டுக் கோப்புக்கள் இடையூறாக வந்த போது சிறிது விலகிக் கொண்டான்.
சாண்டில்யாவின் பெற்றோர் உறவினர் யாவரும் வன்னிப் பிரதேசவாசிகள். சாண்டில்யாவுக்கு என்று நண்பர்கள் நண்பிகளைத்தவிர யாழில் ஒரு உறவும் கிடையாது. இவை மட்டுமே சாண்டில்யாவைப் பற்றித் தெரிந்த விடயங்கள். சாருஜனின் கல்வியும் கடந்த வருடத்துடன் நிறைவு பெற்றதால் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறி விட்டான்.
இன்று தான் சாணி டில் யாவை மீணி டும் சந்தித் திருக்கிறான். இவ்வாறு அனாதையாக
is . . .
 

விட்டிருக்கிறார்களே. நண்பர் நண்பிகள் கூடவா உதவவில்லை.
"சாண்டில்யா, சாண்டி" மனமுருக அழைத்தான் சாருஜன். சட்டென நிமிர்ந்து நோக்கியவள்
"ஹாய் பபி நெஞ்சுக்குத்து எண்டு அடிக்கடி சொல்லுறணியெல்லே, இந்தா இந்த மருந்தைக் கடையிலை வாங்கு”
என்று கூறியவாறு கைப்பைக்குள் இருந்த கசங்கிய பேப்பர் ஒன்றில் அருகிலிருந்த தடிக்குச்சி ஒன்றினால் கிறுக்கி சாருஜனின் கைகளில் ஒப்படைத்தாள். சாருஜனுக்கு இப்போது புரிந்து விட்டது. குடும்பத்தின் பிரிவும் வன்னிப்போரும் தான் சாண்டில்யாவை இந்த நிலைக்கு ஆளாக்கிவிட்டது. அவளின் பேச்சு போக்கு யாவும் குடும்பம் சம்பந்தமாகவே இருந்தது.
"ஹாய் பபா, இந்தா, அக்கா உனக்கு கன்டோஸ் வாங்கி வந்தனான். கப்பலிலை வரயுக்கை நனைஞ்சிட்டுது." பைக்குள் கைகளால் துழாவிய வண்ணம் வீதியோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த சிறுமியை அழைத்தாள்.
"சாண்டிம்மா, சாண்டிம்மா, எழுந்திரு வா வீட்டிற்குப் (3uTeB6)Th”
அழைத்தான் சாருஜன், சாண்டில்யா செவிசாய்த்தது மாதிரி இல்லை. கையைப் பிடித்து எழச் செய்யவும் முடியவில்லை. சனம் நடமாடிக் கொண்டிருந்தது. சிந்தித்தவன் கண்களில் அவனது ஊர் யுவதி ஒருத்தி தென்பட்டாள். அவளை அணுகி விபரத்தைக் கூறினான் சாருஜன். தனது கடமையையும் பொருட்படுத்தாது
121

Page 70
ീjി 45:5)
சாருஜனுக்கு உதவ முன் வந்தாள் அந்த யுவதி. ஆட்டோ ஒன்றை அழைத்து பெருமுயற்சியுடன் ஆட்டோவுக்குள் ஏற்றினார்கள்.
"ஹாய் நான் விட்டிற்குப் போகிறேன். டாட்டா, பாய்
штuti”
என்று அமர்க்களம் செய்தவாறு ஒருவாறு ஏறி விட்டாள். சாண்டில்யாவுக்கு அருகில் இருவராலும் இருக்க முடியவில்லை. நாற்றம் மூக்கைத் துளைத்தெடுத்தது. எந்த நேரமும் கமகம என வாசனை வீசிய சாண்டில்யாவுக்கா இந்த நிலை! எதுவுமே எம்முடைய கையில் இல்லை. இது தெரியாமல் மனிதர்களில் சிலர் குதிக்கும் குதிப்பு
சமுதாயத்தின் மீதே வெறுப்பு வந்தது.
கவனிக்க ஆள் இல்லாது அக்கறை இல்லாது ஓரிருவர் இவ்வாறு கைவிடப்பட்டு தெருவழிய திரிவதைக் கண்டிருக்கிறான். அப்போது அவர்கள் மீது ஒரு பரிதாப உணர்வு ஏற்படுவதை உணர்ந்திருக்கிறான். அவனால் தனித்து என்ன செய்ய முடியும்? ஒதுங்கிவிடுவான். அவ்வாறு இப்போது ஒதுங்கிவிட முடியுமா?
ஆட்டோ குலுக்கலுடன் நின்று, மருத்துவமனை வந்து விட்டது, என்பதை உணர்த்தியது. சாண்டில்யா ஒத்துழைப்புக் கொடுக்காமல் முரண்டு பிடித்தாள். ஒருவாறு இறக்கிய போது கைகளை உதறித் தள்ளிவிட்டு ஓட முயன்றாள். அதற்கிடையில் மருத்துவமனை பெண் ஊழியர்கள் ஓடிவந்து கெட்டியாகப்பிடித்துக் கொண்டனர்.
ரிக்கற் போடப்பட்டு மன நோயாளர்களுக்குரிய வாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். இவர்களின் நல்ல
 
 
 

காலம் மன நோய்க்குரிய நிபுணரும் நோயாளர்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தார். சாண்டில்யாவைப் பற்றிய முழுவிபரங்களையும் ஒன்று விடாமல் டாக்டரிடம் கூறினான். டாக்டரும் சாண்டில்யாவின் பரிதாபக் கோலத்தைக் கண்டு அவளுக்கு பூரணசிகிச்சை வழங்க சம்மதித்தார். பெண் தொழிலாளி ஒருவரை அழைத்து சாண்டில்யாவைத் தூய்மைப்படுத்துமாறு பணிப்பு விடப்பட்டது. சாருஜனும் டாக்டருக்கு தனது மனமுவந்த நன்றியைக் கூறி உடன் வந்த யுவதிக்கும் நன்றியைத் தெரிவித்து மருத்துவமனையை விட்டு வெளியேறினான்.
ஆபீசுக்கு செல்வதற்கான மனநிலை இல்லை. நேரமும் பத்து மணி ஆகிவிட்டது. ஏதோ நினைத்தவனாக சாண்டில்யாவின் உற்ற நண்பி சிந்துவைத்தேடிச் சென்றான். சிந்து வீட்டிலையே நின்றது சாருஜனுக்கு மனநிம்மதியைக் கொடுத்தது. சாருஜனைக் கண்டதும்.
"வாங்க சாருஜன் வாங்க” வரவேற்றாள் சிந்து சாருஜனின் முகவாட்டத்தைக் கண்டதும் “என்ன சாருஜன் சோர்ந்து போயிருக்கிறீர்கள்? பிரயாணக்களைப்பா? வினாவியவாறு இருக்கையில் அமர்த்தினாள்.
"சிந்து நீர் கூடவா" சாருஜனின் கண்களில் கண்ணிர்த் துளிகள் எட்டிப் பார்த்தது. சிந்துவுக்கு என்னவோ போலாகிவிட்டது.
"பிளிஸ் சாருஜன், விசயத்தைச் சொல்லுங்க” "நீரும் சாண்டில்யாவைப் புறக்கணித்து விட்டீர்” “வாட். ? என்ன சொல்லுறிங்க சாருஜன்? சாண்டில்யாவைப் பார்த்தீர்களா?” முகத்தில் பலவித ஆச்சரியக் குறிகளுடன் வினவினாள் சிந்து. சாருஜன் சாண்டில்யாவை எவ்வாறு சந்தித்தான் என்ற விபரத்தைக் கூறினான்.

Page 71
ീ0% (19ീg/
"நோ சாருஜன், நீங்கள் நினைப்பது தவறு. சாண்டியைத் தேடாதே இடமில்லை சாருஜன்"
உணர்ச்சிவசப்பட்ட தொனியில் கூறினாள் சிந்து. "சாண்டில்யா ஏன் இப்படி ஆகினாள். பிளிஸ் முதலில் அதைச் சொல்லும்” குரலில் சோகம் இழையோட துரிதப்படுத்தினான் சாருஜன். சிந்து கூறத் தொடங்கினாள்.
"வன்னிப் பிரதேசத்தில் யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து நியூஸ் பார்ப்பதுவும் பத்திரிகைகள் படிப்பதுவும் தான் அவளுடைய நாளாந்த கடமையாகக் கொண்டாள் சாருஜன், மூன்று வேளை உணவை ஒரு வேளை உணவாகச் சுருக்கிக் கொண்டாள். பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக பத்திரிகைகள் தான் மேசையில் பரப்பட்டிருக்கும். யுத்த நிறுத்த அறிவிப்பை அரசாங்கம் ஏற்கமாட்டுது என்று அறிந்ததும் பிரமை பிடித்தவள் போலானாள் சாருஜன். எப்போது அமைதி கிடைக்கும்? எப்போது சமாதானக் கதவு திறக்கும்? என்று எங்கள் ஒவ்வொருவரையும் அரித்துக் கொண்டே இருப்பாள். ஒரு நாள். 99.
முடிக்க முடியாது சிந்துவின் தொண்டைக் குழியுடன் வார்த்தைகள் நின்று விட்டது. இருவர் விழிகளும் கலங்கிக் கொண்டன.
“ஒரு நாள் சாண்டில்யா காணாமல் போய் விட்டாள் சாருஜன், மேசை மீது பரப்பட்டிருந்த பத்திரிகையில் அவளது குடும்பத்திலுள்ள அனைவரது பெயர்களும் சடலமாக மீட்கப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியலில் இருந்தது சாருஜன்" சிந்து விம்மி விம்மி அழத் தொடங்கினாள். சாருஜனால் அவ்வாறு அழ முடியவில்லை. வன்னி யுத்தத்தில் சிக்குண்டு நாளாந்தம் மக்கள் படும்
 
 

ரீனரும் வசந்தம்
அவஸ்தைகளை தொலைக்காட்சி நியூஸ்களில் பார்த்து வெந்து வெந்து வெடிப்பவன். சிந்து கூறிய அவ்வளவு நிகழ்வுகளும் நேரிலே கண்டது போல் சாருஜனின் மனத் திரையில் பதிந்து கொண்டது.
"தேடாத இடமில்லை சாருஜன், விளம்பரம் போடாத பத்திரிகையில்லை, சாருஜன். இப்போதும் தேடிக் கொண்டு தானிருக்கிறோம். அவளை நாங்கள் கைவிட்டுவிடுவோமா”
சிந்து நா தழுதழுக்கக் கூறினாள் "சொல்வதற்கு சுகம் சிந்து. நடைமுறைக்குச் சாத்தியமாகுமா? எத்தனை நாளைக்கு சாண்டிக்கு நீங்கள் ஆறுதலாய் இருப்பியள்? சொல்லும் சிந்து"
சாருஜன் கூறிய வார்த்தையில் உண்மைகள் இல்லாமலில்லை. அதற்காக அனாதையாக விட்டு விடுவார்களா?
சாண்டில்யாவை அனுமதித்த மருத்துவமனையின் பெயரைக் கூறிவிட்டு சிந்துவிடமிருந்து விடை பெற்றுக் கொண்டான்.
வீடு செல்ல ஏனோ அவனது மனம் இடம் கொடுக்கவில்லை. உடல் அசதியாக இருந்தது. அதனையும் பொருட்படுத்தாது மீண்டும் மருத்துவமனைக்குச் செல்ல அவன் மனம் துடித்தது.
மதிய உணவைக் கன்ரீனில் வாங்கியவன் பிஸ்கற், கன்டோஸ், மிக்சர் என்று பலவகையான சிற்றுண்டிகளையும் வாங்கி கைப்பைக்குள் போட்டவாறு சாண்டில்யாவை அட்மிட் செய்த வாட்டை நெருங்கினான். வெளிவாங்கிலில் சாண்டில்யா அமைதியே உருவாக உட்கார்ந்திருந்தாள். தனது கண்களையே நம்ப முடியாத சாருஜன், கைக்குட்டையால் கண்களை ஒற்றி முகத்தைத் துடைத்துக் கொண்டான்.
125

Page 72
ஊழியர்துளின் அன்பான கவனிப்பால் பழைய சாண்டில்யாவாகவே ஆக்கப்பட்டு விட்டாள். தலை மயிர்கள் காற்றில் பறக்க அழகு தேவதையாக காட்சி அளித்தாள். தலை குளிப்பாட்டி, இரட்டை ஜடை, பின்னி பொட்டு வைத்து, பஞ்சாபி அணிவித்து.
ஊழியர்களின் சேவை மனப்பான்மையை மனதிற்குள் வியந்தவாறு சாண்டிக்கு அருகில் சென்றான்.
"ஹாய் பபி, வந்திட்டியா?.” காலையில் கூறிய அதே பெயர், அதே குழந்தைத்தனமான முகபாவம், கண்களில் சிமிட்டல்.
“உருவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறோம் மிஸ்டர் சாருஜன். உள்ளத்தில் மாற்றத்தை ஏற்படுத்த கொஞ்ச நாளாகும்"
புன்னகைத்தவாறு சாருஜனை நெருங்கினார் டாக்டர். "டாக்டர் இதுவே போதும் டாக்டர்" கண்களில் நன்றி கலந்த ஆனந்தக் கண்ணிர் வடிந்தது.
"சாருஜன் நாங்கள் உங்களைத்தான் பாராட்ட வேணும். தானுண்டு தன் வேலையுண்டு என்று சுயநலத்துடன் வாழும் மக்கள் மத்தியில் நீர் எடுத்த முயற்சி. ա, Ցl, கிறேற்' சாருஜன்"
தோளைத்தட்டிப் பாராட்டியவர், சாப்பாட்டு மேசையைக் காட்டி, அங்கு வைத்து சாப்பாட்டைக் கொடுக்குமாறு பணித்து விட்டுச் சென்று விட்டார்.
சாப்பாட்டு மேசைக்கு அழைத்துச் சென்றவன், பார்சலைப் பிரித்து உண்ணுமாறு சைகையால் காண்பித்தான். அவள் உண்ணுவதாக இல்லை. முரண்டு பிடித்தாள். நேரம்
 

மின்மும் வசந்தம்
சென்று கொண்டிருந்தது. பார்வையாளருக்கான நேரமும் முடிவடைகிறது என்பதை உணர்ந்த சாருஜன், சோற்றைக் குழைத்து ஊட்டத் தொடங்கினான். எந்த வித ஆர்ப்பாட்டமும் செய்யாமல் உணவைக் கண்டு பல நாட்கள் ஆனவள் போல் 'அவக் அவக்' என உணவைச் சிந்தி அருந்தத் தொடங்கினாள்.
சிந்திய உணவுத் துகள்களையும் பார்ஷல் சுற்றிய பேப்பரையும் கூடைக்குள் போட்டவன், தாதியிடம் சிற்றுண்டிகளை கொடுத்து, தேவைப்படும் போது கொடுக்குமாறு அன்பாக பணித்து விட்டு, வாட்டை விட்டு வெளியேறினான்.
மீண்டும் மறு நாட்காலை வரவேண்டும். உள் மனது சொல்லிக் கொண்டது. அவனுடைய சொத்தாகி விட்டாள் சாண்டில்யா. அதனைப் பரிபூரணமாக பாதுகாக்க வேண்டியது அவனுடைய கடமை அல்லவா. அவளுக்குத்தான் அவன் என்று ஏற்கனவே போடப்பட்ட முடிச்சை யாரால் அவிழ்க்க முடியும்? யாரால் மாற்ற முடியும்.?
மீண்டும் மறுநாட்காலை அவசர அவசரமாக எழுந்து கொண்டவன், நண்பன் ஒருவனைப் பார்க்க மருத்துவமனைக்கு செல்கிறேன் என்று அன்னைக்குக் கூறிவிட்டு புறப்பட்டு விட்டான்.
சாண்டில்யா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.
"சாண்டி’
என்று அழைத்தது தான், துள்ளி எழுந்துகொண்டாள். அவளுக்கான பணிவிடைகள் செய்து, காலை உணவையும் ஊட்டிவிட்டு வீடு திரும்பினான்.
இநுண்ணதாங்கி)

Page 73
மனர்டும் வசந்தம்
நாட்கள் நகர்ந்து கொணி டிருந்தது. சாண்டில்யாவிடமும் சுய அறிவு ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. சாருஜனுக்கு நிம்மதியாக இருந்தது. வீட்டிலும் மெதுவாக சாண்டில்யாவைப் பற்றி எடுத்துக்கூறினான்.
மனிதர்களால் வரையறை செய்யப்பட்டு, கீழ்ச்சாதிக்காரர் என ஒதுக்கி வைக்கும் மக்களை, விறாந்தையுடன் நிறுத்தி அனுப்பும், சாருஜனின் பெற்றோர்களையும் வன்னி யுத்தம் மாற்றிவிட்டது.
அவர்களும் சாண்டில்யாவை ஏற்கச்சம்மதித்து விட்டார்கள். சாண்டில்யா பாக்கியம் செய்தவள். சாண்டில்யாவைப் போல் அவலம் அடைந்த எல்லாக் கன்னிப்பெண்களுக்கும் இவ்வாறு வாழ்வு கிட்டுமா.
 


Page 74
நெல்லை லதாங்கி என நாகேந்திரனின் எழுத் நாடக எழுத்தாளராக
ஆரம்பத்தில் வானொ
ஆசிரியை ஆவார்.
பட்டப்பின் கல்வி ப்ே
அசுரகதியில் எழுதுகி கும் விடயமாகும்.
கும் ஆனந்தத்தை ஏற்
சமூக குடும்ப படைப்புக்களின் மை மனிதர்களே இவரின்
 

ற புனை பெயரில் எழுதும் திருமதி ஆனந்தரானி துலகம் பலமுகங்களைக் கொண்டது. வானொலி சிறுகதை எழுத்தாளராக நாவல் எழுத்தாளராக
இசையும் கதையும் எழுத்தாளராக ஈழத்தமிழ் ©րնանալ Laհ:
தொழில் ரீதியில் இவர் ஒரு பயிற்றப்பட்ட சங்கீத இeர் தன் சுய முயற்சியால் பட்டதாரி ஆகி
ாமா பட்டமும் பெற்றுள்ளார். இப்போது யாlநாகர் ாலயத்தில் சங்கீத ஆசிரியையாக பணிபுரிகின்
ள குடும்பப் பென்னான இவர் வீட்டு வேலைச் இல் ரீதியான சுமைகளுடனும் எவ்வாறு இவ்வாறு ன்றாளரன்பது எனக்கு எப்போதும் ஆச்சரியமளிக்
நிலையில் பிறந்து வளர்ந்து படித்து வாழ்வில் கடிகளுக்கும் துன்பங்களுக்கும் சோகங்களுக்கும் லிக்காது தளர்வின்றி உழைக்கும் எழுதும் ලිංඛuf1
வாழ்வின் சலனங்களும் நிகழ்வுகளுமே இவரின் பொருள். நம் வாழ்வில் அன்றாடம் சந்திக்கும் பாத்திரங்கள். அன்றாட நிகழ்வுகளே இவரின்
ாறும் கொள்கின்றன.
ன்று நூல்களை வெளியிட்ட இவரின் நான் டும் வசந்தம் என்ற இந்த நூல் வெளிவருகின்றது