கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: முதுசொமாக

Page 1
sae
綬 ンシ · \,
 


Page 2

வதிரி இ.இராஜேஸ்கண்ணன்
வெளியீடு:
தூண்டி’ கேணியழு திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.

Page 3
நூலின் பெயர்
ஆசிரியர் வெளியீடு
முதற் பதிப்பு அச்சு வேலைகள்
முகப்பு ஓவியம்
பக்கங்கள்
உரிமை
தருகை
Title
Author
Publishers
First Edition Printing Works
Cover Picture
Pages Copy Right
Price
- முதுசொமாக
I ●
(சிறுகதைகளின் தொகுதி)
- வதிரி. இ. இராஜேஸ்கண்ணன்.
‘தூண்டி - சஞ்சிகை 141, கேணியடி, திருநெல்வேலி.
- ஜூன் 2002
- ராம் பிறின்ரேஸ், இலுப்பையடி சந்தி,
பலாலி வீதி, யாழ்ப்பாணம். ரமணி
XVii + 84
- திருமதி.சுனிதாஇராஜேஸ்கண்ணன்
‘சாத்வீக பிரஸ்தம்', தனகத் தோட்டம், இமையாணன் கிழக்கு, உடுப்பிட்டி 1 10/=
Bibliographical Data
“Muthusomaka”..... (Collection of Short stories)
:- - Vathiry. R. Rajeshkanman :- 'Thoondy - Magazine
141, Kerniyadi, Thirunelvely.
:- June 2002 :- RAM PRINTERS Iluppaiyadi Junction,
51, Palaly Road, Jaffna.
:- Ramani. :- xvii + 84
- Mrs. Sитitha Rajeshкатат
“Shaathveega Prastham”, Imayanan east, Udupiddy.
- RS. 110/=

(I) IOIGOOO イ என் பேனா எழுத் தெழுத
தன் உதிர மை தந்து
எனை வளாாதத
தனை கரைத்த அப்பா அமரர் வல்லிபுரம் இராஜேஸ்வரன்.
பாயிழைத்த படிக்க வைத்து பட்டம் பெற வைத்து என் உயிரின் சுரமாய் இன்றும் வாழும் அம்மா
இராஜேஸ்வரன் பிரபாவதி. பெட்டி பாய் சுமந்து விற்று அப்பாவை படிக்கவைத்த அக்காள்
‘தங்கப் பொழ’ ஆகியோருக்கு

Page 4
● 像
“சமூகக் கொடுமையிடை மனிதன் ஊமையாய் கிடந்தழுகின்றான் இயற்கை அவனுக்குக் கண்ணிரைத் தந்தது எனக்கோ இறைவன் ராகமும் சொல்லும் தந்தான்’என்பான் கதே' (Goethe). இந்த ராகமும் சொல்லும்தான் ஆக்க கலைஞனின் மூலதனங்கள் வெறுமனே இரங்குதல் என்பதற்கு அப்பால், துயருறும் மனிதருள் நுழைந்து அவன் வலியுணர்ந்து அவன் கதைபேசும் நிலையிலேயே (Empathy) உயர்ந்த சமூகப்படைப்புகள் உருப்பெறுகின்றன.
இந்த வகையில் எங்களுக்கு வீய்த்த ஆக்க இலக்கிய சக்தி இராஜேஸ்கண்ணன். நிகழும் பண்பாட்டு மாற்றங்களிடை எங்கள் புலங்களில் மனிதம் படும் பாட்டை துல்லியமான ஆக்க இலக்கியமாக்கும் - “முதுசொமாக. முதுசொமாக முதுமை எங்கள் பண்பாட்டில் எழுதிய அழகுக் கோலங்களும், நவீனத்துவத்தின் பெயரால் அவை அழியும் கோலங்களும் பெரும்பாலான இந்தப் படைப்புகளின் உயிர்மையமாக அமையக் காணலாம். தொலையும் மரபுவழி விழுமியங்களின் பெறுமதிகளை உணர்த்தும் அதே
வேளையில் , இன் றைய பாவனை வாழ் வின் போலித்தனங்களை - மாயமான் நிலைகளை மனதிலே தைக்கும் வண்ணம் இச்சிறுகதைகள் வெளிப்படுத்தி நிற்கின்றன.
இந்தச் சிறுகதைப் பாத்திரங்களிடை, "பிறருடைய கவலைகளைக் கேட்கும்’, 'பிறருக்காக பனிக்கும் கண்கள் எல்லாமே இராஜேஸ்கண்ணன் தான்.
(1)

கதைகளின் தொடர்பாடல வெற்றியிலே இராஜேஸ்கண்ணனின் மொழியாளுமையும் பெருந்துணை யாவது, நவீன வாழ்வின் அவலங்களைச் சித்திரிக்கும், 'மழை வெள்ளத்துக்குப் பயந்து செட்டை கட்டிய எறும்பு தேநீர் குவளைக்குள் விழுந்து தத்தளித்துத் தவிப்பது போன்ற விவரணங்களிடை இந்தச் சிறப்பினை நயக்கலாம்.
பல்கலைக்கழக மாணவனாக எங்கள் சமூகவியல் வகுப்பினுள் நுழைந்த நாள் முதல் இன்று சக விரிவுரையாளனாக இசைந்த பொழுதுவரை அவனுள் நிறைந்த மனிதத்தை, ஆக்கத்திறனை, சமூக ஆய்வு நுண்மையை உடன் நெருங்கிக் காணும் வாய்ப்பு எனக்கானது.
இன்று தன் முதல் ஆக்க இலக்கிய நூலைச் சமூகத்துக்காக்கும் இராஜேஸ்கண்ணனை வாழ்த்துவதில் எல்லையிலா மகிழ்ச்சியடைகின்றேன்.
கலாநிதி. என். சண்முகலிங்கன் தலைவர் அரசறிவியல் சமூகவியல் துறை யாழ். பல்கலைக்கழகம்
29.05.2002
(ii)

Page 5
அறிமுகவுரை
அறுபதுகளின் ஆரம்பத தல ஈழத் து இலக்கியத்துறைக்கு புதிய எழுத்தாளர் பலர் வந்து சேர்ந்தார்கள். இவர்களுள் ஒரு சாரார் பல்கலைக்கழகம் சார்ந்தவர்கள்ாக இருக்க ஏனையவர்கள் பல்கலைக் கழகத்துக்கு வெளியே இருந்து வந்தவர்களாகக் காணப்பட்டார்கள். இவர்கள் அனைவரும் தாய்மொழிமூலம் கல்விகற்று வந்த முதற் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது. தாய்மொழி மூலக்கல்வியின் விளைவாகவே இவர்களின் இலக்கியப் பிரவேசம் நிகழ்ந்ததாக வாய்பாடுபோல ஈழத்து இலக்கிய வரலாற்றில் சொல்லப்பட்டு வருகின்றது. ஆனால் தாய்மொழி மூலமான கல்வி அறுப்துகளின் பின்னர் இன்றுவரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது. அறுபதுகளின் ஆரம்பத்தில் கணிசமான ஒரு தொகையினர் இலக்கியம் படைக்க ஆரம்பித்தது போல, பின்னர் பெருமளவில் படைப்பாளர்கள் உருவாகவில்லை. எனவே அறுபதுகளின் ஆரம்பத்தில் புதியவர்கள் இலக்கியத்துறைக்கு வந்து சேர்ந்தமைக்கு, தாய்மொழி மூலக் கல்வி ஒன்று மாத்திரம் காரணமாக அமைந்ததெனக் கொள்ள இயலாது.
ஐம்பது, அறுபதுகள் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் எழுச்சிமிக்க காலம். முற்போக்கு இலக்கிய இயக்கம் மிகவிழிப்புடன் செயற்பட்ட காலம். இக் காலகட்டத்தில் அரசியலிலும், சமூகத்திலும் பலமாற்றங்கள் நிகழ்ந்தன. சமூக விடுதலைப் போராட்டங்கள் பல வீறுடன் நிகழ்ந்து, மாற்றங்களைத் தோற்றுவித்தன. இக்கால கட்டப் பின்னணி முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் செயற்பாடுகளுக்கும்,
(iii)

இலக்கிய உருவாக்கத்துக்கும் உகந்ததாக அமைந்தது. முற்போக்கு எழுத்தாளர்கள் அக்கால கட்டத்தில் தீவிரமாக இலக்கியங்களைப் படைத்தார்கள். முற்போக்கு இலக்கிய எழுச்சியின் பயனாக, முற்போக்கு இலக்கியச் கொள்கைகளை முழுமனதோடு ஏற்றுக் கொள்ளாதவர்களும், முற்போக்கு இலக்கிய இயக்கத்துடன் இணைந்து இலக்கியம் படைக்கவேண்டிய சூழ்நிலை அன்று உருவாகி இருந்தது. முற்போக்கு இலக்கியங்களை ஏற்றுக்கொள்ள மறுத்த மரபுவாதிகள், முற்போக்கு இலக்கியங்களுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்த போதும், அக்கால கட்டத்தின் முற்போக்கு எழுச்சியில் அவர்கள் முன்வைத்த கருத்துக்கள் அடிபட்டுப் போயின. ஆகவே அறுபதுகளின் ஆரம்பத்தில் ஈழத்து இலக்கியத்துறைக்குள் புதிய படைப்பாளிகள் பலர் வந்து சேர்ந்தமைக்கு, அன்றைய கால கட்டத்தில் இருந்த அரசியல் சமூகப் பின்னணிகள் பிரதான காரணிகளாக அமைந்தன என்றே கொள்ளுதல் வேண்டும்.
அறுபதுகளின் பின்னர் அக்கால கட்டத்து எழுச்சி போன்று இலக்கியங்கள் தோன்றுவதற்கு வேண்டிய காலச் சூழ்நிலை ஒன்று இன்று உருவாகி இருக்கின்றது. நான்கு தசாப்தங்கள் கழிந்த பின்னர் புதிய தலைமுறை எழுத்தாளர்கள் பலர் இன்று இலக்கியம் படைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இவர்களும் பல்கலைக்கழகம் சார்ந்தவர்களாகவும், பல்கலைக்கழகத்துக்கு வெளியே இருப்பவர்களாகவுமே காணப்படுகின்றார்கள். 'மண்ணின் மலர்கள்’, ‘ இங்கிருந்து. ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுதிகளும் இன்று எழுத்துலகப் பிரவேசம் செய்திருக்கும் புதிய எழுத்தாளர்களின் வருகையினைப் பதிவு செய்யும் ஆவணங்களாகத் தென்படுகின்றன.
(iv)

Page 6
ஈழத்து இலக்கிய உலகிற்குப் புதிய வருகையாக இன்று கணிப்புப் பெறும் எழுத்தாளர்களுள் ஒருவர் வதிரி.இ.இராஜேஸ்கண்ணன், யாழ் பல்கலைக்கழக சமூகவியல் துறையின் தற்காலிக உதவி விரிவுரையாளராக இருக்கும் இவரது பத்துச் சிறுகதைகளை உள்ளடக்கிய “முதுசொமாக'. என்னும் இத்தொகுதி ஈழத்து இலக்கியப் பரப்புக்குள் வந்து சேரும் புதிய வரவாகக் காணப்படுகின்றது.
இத்தொகுதியில் இடம்பெற்றுள்ள சிறுகதை களில் சிறப்பாக மேலோங்கி நிற்கும் ஓர் அம்சம் படைப்பாளியின் தெளிவான சமூக நோக்கு எனலாம். கதாசிரியரின் சமூகம் பற்றிய சிந்தனை, சமூகத்தின் மீது கொண்டுள்ள அக்கறை, நுணுக்கமான சமூகப்பார்வை என்பவற்றின் வெளிப்பாடே இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள படைப்புகள், இன்றைய போர்க்காலச் சூழ்நிலை, அதன் விளைவான புலம் பெயர்வுகள் என்பன தோற்றுவித்திருக்கும் அவலங்கள் இங்கு
இலக்கியங்கள் ஆக்கப்பட்டு இருக்கின்றன. துயரப்படும்
மக்கள் பக்கம் சார்ந்து நிற்கும் இவர், வாழ்வின் போலித்தனங்கள் கண்டு சினங்கொண்டு அவற்றை நையாண்டி இழையோடும் படைப்புக்களாகவும் உருவாக்கித் தந்திருக்கிறார். மனித நடத்தைகளை மிகக் கூர்மையுடன் நோக்கும் கதாசிரியரின் இயல்பு இப்படைப்புக்களில் தெளிவாகப் புலப்படுகின்றது.
பாத்திரங்களுக்கிடையே நிகழும் உரையாடல்கள் மூலம் கதையை வளர்த்துச் சென்று சிறுகதையை முற்றுப் பெறச் செய்வது முதிர்ந்த எழுத்தாளர்கள் கையாளும் ஓர் உத்திமுறை. இந்த உத்திமுறையைப் பயன்படுத்தி எல்லோரும் சிறந்த சிருஷ்டியை உருவாக்கிவிடவும் இயலாது. இத் தொகுதியின் ஆசிரியர் பாத்திரங்களின் உரையாடல்
(v)

மூலம் படைப்புக்களை உருவாக்கத் தகுந்த ஆற்றல் உடையவர் என்பதற்கான சாத் தரியக் கூறுகள் இப்படைப்புகளில் நிறைவாகக் காணப்படுகின்றன. சராசரி வாசிப்புப் பழக்கமுள்ளவர்களும் படித்து விளங்கிக் கொள்ளத்தகுந்த எளிய மொழிநடை இவரது படைப்புக்களின் சிறப்பம்சம் எனலாம்.
ஆக்க இலக்கியம் ஒன்றினைப் படித்து முடித்த பின்னர், அந்த இலக்கியத்தில் வரும் பாத்திரங்கள் எவையேனும் வாசகனின் நெஞ்சில் பதிவாகி நிற்குமேயானால், அதுவே அந்தப் படைப்பின் வெற்றி எனலாம் - படைப்பாளி தனது சிருஷ்டி முயற்சியில் பெற்றுக் கொண்ட வெற்றி எனலாம். இந்தத் தொகுதியில் இடம் பெற்றுள்ள சிறுகதைகளில் வரும் பாத்திரங்களான “சிங்களக் கந்தப்பு', 'ஜானகி அக்கா', “ஒவசியர் மாமி’, ‘வீரசிங்கத்தார்’, ‘சனத்’. போன்ற பாத்திரங்கள் வாசகன் உள்ளத்தில் பதிவாகி நிற்பது படைப்பின் வெற்றி என்று கொள்ளலாம். பத்துச் சிறுகதைகளை கொண்டுள்ள இத்தொகுதியில் “லிவு போம்” மிகச் சிறந்த ஒரு படைப்பு. சிருஷ்டியின் நேர்த்தி மிகச்சிறப்பாக கதாசிரியருக்குக் கைவந்திருக்கிறது. வாசகன் உள்ளத்தைக் கசியவைக்கும் மனித நேயம் மிக்க ஒரு படைப்பு.
இந்த நூலின் ஆசிரியர் இராஜேஸ் கண்ணன் தேவரையாளி இந்துக் கல்லூரியில் ஆரம்ப வகுப்பு முதற்கற்று, உயர்தர வகுப்புக் கல்வியை கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியிற் பெற்றுக் கொண்டார். பின்னர் யாழ் பல்கலைக் கழகத்தில் சமூகவியல் சிறப்புக் கலைப்பட்டதாரியான இவர் தனது மாணவப்பருவத்திலேயே கலை, இலக்கியத்துறையில் தன்னை அடையாளப்படுத்திக்
(vi)

Page 7
கொண்டவர். இவரது தந்தை இராஜேஸ்வரன் கலை, இலக்கியம் சார்ந்த நாட்டம் உடையவராக விளங்கினார். தந்தை வழிவந்த இவரது கலை ஆர்வம் காரணமாக சிறுகதை, கவிதை, நாடகம், ஓவியம் ஆகிய துறைகளில் இன்று இவர் ஈடுபாடு காட்டி வருகின்றார். கவிதைகளைச் ‘சத்திராதி’, ‘இராகன்’ என்னும் புனை பெயர்களில் எழுதி வருகின்றார்.
இன்னும் முப்பது வயது நிரம்பாத இளைஞனாக இருக்கும் இவரது “முதுசொமாக’ என்னும் இச்சிறுகதைத் தொகுதி சமகால இலக்கியத்தின் உண்மையான பதிவென்று சொல்லலாம். போர்க்காலச் சூழ்நிலையின் விளைவாக உருவாகி இருக்கும் பன்முகப்பட்ட துன்ப துயரங்கள் இங்கு படைப்பிலக்கியங்களாகத் தரப்பட்டுள்ளன. இப்படைப்புக்கள் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் ஒரு முதுசொமாக கொள்ளத் தக்கவை என்பேன்.
கலையருவி, தெணியான். கரணவாய் வடக்கு,
வல்வெட்டித்துறை.
27.05.2002.
(V11)

நயப்புரை
வதிரி. இராஜேஸ்கண்ணனின் முதுசொமாக’ என்ற இச் சிறுகதைத் தொகுதிக்கு நயப்புரை வழங்குவதற்குரிய காரணங்கள், (1) யாழ்ப்பான பல்கலைக்கழகத்தினூடாக 1990/2000 காலகட்டத்தில் என்றுமில்லாத வகையில் ஆரோக்கியமாக முகிழ்த்தெழுந்துள்ள சிறுகதைப் படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்க இளம் படைப்பாளி இராஜேஸ்கண்ணன், (2) சரியான இடத்தில் சிறுகதையை ஆரம்பித்து, முறையாக வளர்த்தி சரியானவிடத்தில் சிறுகதையை நிறைவுறுத்தும் இப்படைப்பாளியின் சிறுகதை வடிவநேர்த்தி, (3) இச்சிறுகதைகளின் உள்ளடக்கம் சமூக விமர்சனங்களாக மனதைத் தாக் கும் பாங்கு என பன வாமென நம் புகலிறேன் . தக் கதொரு இளம்படைப்பாளியை, ஈழத்துச் சிறுகதைத் துறைக்குப் பங்களிப்புச் செய்யக் கூடிய ஆக்கவிலக்கிய கர்த்தாவை
'முதுசொமாக’ என்ற இச் சிறுகதைத் தொகுதி அடையாளம்
காட்டியுள்ளது.
இராஜேஸ் கண்ணாவின் இத்தொகுதியிலுள்ள பெரும்பாலான சிறுகதைகள் நனவோடை உத்தியில் கூறப்பட்டுள்ளன. காவோலைகள், லீவுபோம், மாரீசம் ஆகிய சிறுகதைகள் இவ்வகையில் மிகவும் இலக்கிய நேர்த்தியாக எழுதப்பட்டுள்ளன. இச்சிறுகதைகளை எவ்விடத்தில் தொடங்கி, எவ்விடத்தில் நிறைவு செய்ய வேண்டுமென்ற படைப்பிலக்கிய இரகசியத்தை இந்த இளம் எழுத்தாளன் சரிவரப் புரிந்துள்ளமை வியப்பையும், மகிழ்வையும் ஒருங்கே தருகின்றன. இராஜேஸ்கண்ணாவின்
(viii)

Page 8
ஆரம்பச் சிறுகதைகளே இவ்வாறான வடிவ நேர்த்தியைக் கொண்டுள்ளன. இதனை நிறுவ அவரது சிறுகதைகளை விபரிப்பதன் மூலம், வாசகரின் சுய புரிதலைத் தடைப்படுத்த விரும்பவில்லை.
இராஜேஸ்கண்ணா நிறைய நல்ல சிறுகதைகளைப் படித்து உள்வாங்கியுள்ளார் என்பதை அவரது கதை நகர்த்தும் பாணியிலிருந்து புரிந்துகொள்ள முடிகின்றது. புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், ஜெயகாந்தன், சம்பந்தன், எஸ்.பொன்னுத்துரை, வ.அ.இராசரெத்தினம் போன்ற தமிழக ஈழச் சிறுகதை முன்னோடிகளின் படைப்புக்களின் பரிச்சயமில்லாமலேயே பல இளம் எழுத்தாளர் சிறுகதைக்களத்தில் இறங்கியுள்ள அவலம் அண்மைக் காலத்தில் வெளிவரும் சிறுகதைகளிலிருந்து புலனாகிறது. இராஜேஸ்கண்ணாவின் சிறுகதைகளில் காணப்படும் வடிவ நேர்த்தியும், கூற எடுத்துக் கொண்ட விடயத்தை அளவோடு எழுதி விடுகின்ற தன்மையும் முன்னோடிப் படைப்புக்களை அவர் உள்வாங்கி உணர்ந்திருப்பதை நிரூபிக்கின்றன.
இராஜேஸ் கண்ணாவின் சிறுகதைகள் சமூக விமர்சனங்களாக விளங்குவதற்கு, அவரது கூரிய அவதானிப்பே காரணமெனப்படுகின்றது. அத்தோடு அவர் சமூகவியல் சிறப்புப் பட்டதாரியாக விளங்குவது. அறிவு பூர்வமாக சமூகப்பார்வையை அவரது படைப்புகளில் பொதிய வைத்துள்ளன. அவரது இத்தொகுதியில் உள்ள பல சிறுகதைகளும் அவ்வாறான பாங் கினைக் கொண்டவை. எனினும், லீவுபோம்’ என்ற சிறுகதை அவ்வகையில் உச்சமானது என நினைக்கின்றேன்;
நெஞ்சைத் தொடும் படைப்பு. மானிட உணர்வுகள் எந்த
(ix)

இனத்தவருக்கும் ஒன்றே, எல்லாப் பக்கங்களிலும் சாவுகள் ஒவ்வொன்றின் பின்னும் ஒரு பெரும் சோகம் பொதிந்திருக்கிறது என ஆசிரியர் கூறும்போது இதயம் வலிக்கிறது. அவமான மரணங்களுக்கு எதிரான படைப்பாளியின் கருத்தியில்பு, முதுசொமாக’ என்ற சிறுகதையிலும் விழுந்துள்ளது. தொலைந்துபோன பரம்பரைகள், பெற்றோரைக் கவனியாத வெளிநாட்டுப் பிள்ளைகள், வெளிநாட்டு மாப்பிள்ளைகளின் மோசடி, இடம் பெயராது தமது வீட்டிலேயே தங்கிவிடும் வயோதிபர்கள் எதிர்நோக்கும் இன்னல்கள் எனப் பல்வேறு சமூகத்தின் அவலங்களைத் தன் படைப்பில் சமூக விமர்சனமாக்கி வழங்கியுள்ளனர்.
இராஜேஸ் கண் ணா விண் பாத் திர வார்ப்பு, கலைநேர்த்தி, மொழிவளம் என்பவற்றில் குறைபாடுகள் இல்லாமலில்லை. எனினும் இவற்றினை மேவி, சாதாரண சிறுகதைகளிலும் ஒருபடி மேலானவையாக விளங்குவதற்கு நான் மேற்சொன்ன வடிவ நேர்த்தியும், சமூக விமர்சனப் பார்வையும் காரணமாகவுள்ளன.
இத் தொகுதியில் இடம் பெற்றுள்ள படைப்புகளில் லீவுபோம், காவோலைகள், பித்துமனங்கள் ஆகிய சிறுகதைகள் தரமானவையாயும் எண் மனதைக் கவர்வனவாகவும் உள்ளன.
இராஜேஸ்கண்ணா கரவெட்டி வதிரியைச் சேர்ந்த ஈழத்து இளம்படைப்பாளி, சிறுகதைத் துறையோடு கவிதை, நாடகம் ஆகிய இலக்கியத் துறைகளிலும் கால்களை ஊன்றியிருப்பவர். சத் திராதி. இராகண் ஆகிய புனைப்பெயர்களுள் மறைந்து படைப்புக்களைத் தந்தவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல்துறை
(X)

Page 9
உதவி விரிவுரையாளராக இன்றுள்ளார். சஞ்சீவி, தினக்குரல், தூண்டி, இலங்கை வானொலி முதலான ஊடகங்களில் இவரது படைப்புகள் வெளிவந்துள்ள போதிலும், சஞ்சீவி வார இதழே இவரை எழுத்துத் துறைக்கு அறிமுகப்படுத்திய பெருமையைப் பெறுகிறது. 1992இலிருந்து சிறுகதைகளைப் படைத் துவரும் இராஜேஸ்கண்ணன் ஈழத்துச் சிறுகதைத் துறைக்கு நிச்சயம் பெருமை சேர்ப்பார் என உறுதியாக நம்புகிறேன்.
பிராந்திய ஆணையாளர், செங்கை ஆழியான்
யாழ்ப்பாண மாவட்டம், (க.குணராசா)
O.O.5.2002.
(xi)
 

என்னுரையாய் சில வார்த்தைகள். . .
முதுசொமாக என் முதலாவது சிறுகதைத் தொகுதி. இப்படி ஒரு பெருமுயற்சியை செய்யுமளவிற்கு நான் வளர்ந்து விட் டேனா? எண் பது எனக் குள் கேள் வியாகரிய வேளைகளிலெல் லாம் , உதிரிகளாக என்னுடைய சிறுகதைகளை பிரசுரித்து ஊக்கம் தந்த சஞ்சீவி, தூண்டி, தினக் குரல், மன்றம் (கையெழுத்துப் பிரதி) ஆகிய பத்திரிகைகளை, சஞ்சிகைகளை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். என்னை ஏற்றுக் கொண்டவை அவை; எழுதத் தூண்டியவையும் அவை; எடுத்துக் காட்டியவையும் அவையே.
“மன்றம்’- என்னுடைய வளர்ச்சியில் முக்கியமான இடம் - வதிரி தமிழ் மன்றம் - வட்டுவத்தை சனசமூகநிலையம் என்ற எனது ஊரின் தலைமைத்துவ நிறுவனம் ஒரு கால கட்டத்தில் கலைஞர்கள் , எழுத்தாளர்களின் சங்கமங்களை எமக்குத் தந்தது. அப்போது நான் சிறுவன். தமிழ் மன்றம் “மன்றம்’ என்ற பெயரில் ஒரு கையெழுத்துப் பிரதியையும் தொடர்ந்து வெளியிட்டு வந்தது. ஒரு இடைப்பட்ட காலத்தில் தமிழ் மன்றம் செயலிழந்திருந்த வேளையில் “மன்றம்’ கையெழுத்துப்பிரதி வெளியீட்டிலும் தடங்கல் ஏற்பட்டது. நான் உயர்தர வகுப்பு படித்து வந்த காலத்தில் ஏறத்தாழ 1990 - 93 காலப்பகுதியில் மீண்டும் “மன்றம் கையெழுத்துப் பிரதியை நானும் என்னோடு சேர்ந்த இளைஞர்கள் சிலரும் வெளியிட்டு வைத்தோம். எங்களால் மூன்று தடவைகள் பிரதிகள் வெளியிடப்பட்டன. அம் முயற்சியில் ஈடுபட்டமையே என்னை சிறுகதை, கவிதை போன்ற துறைகளில் நாட்டம் கொள்ள வைத்தது. எப்படி
(xii)

Page 10
தமிழ் மன்றத்திற்கு நன்றி சொல்வேனோ அப்படியே வதிரி பூவற்கரையான் தந்த மேடைகளும் மறக்க முடியாதவை. என் தந்தை எனக்குத் தந்த முதுசொத்தில் ஒன்று இந்த நிறுவனங்கள் மூலமான என் கலையார்வ வளர்ச்சி.
சமூகத்தில் பொய்மைகள். வேஷங்கள் , ஆதரவு அரவணைப்பு இன் மைகள் என்பவை எனது மன எண்ணப்பாடுகளுடன் முட்டிமோதி மறுதலிக்கப்படும் போது மனம் தாக் கப்பட்டு எழுத டா எனத் துTண்டும் பிரச்சினைகளை மற்றவர்கள் மனதிலே தைக்கும் வண்ணம் சொல்வதே என் சிறுகதைகள். எனது கதைகளில் வரும் ‘சிங்களக் கந்தப்பு’, ‘ஒவசியர் மாமி’, ‘கல்வெட்டு கந்தப்பு, “கொக்கு விசுவம்', 'வல்லினாச்சி’, ‘சனத்’, ‘ஜானகி, "தெய்வானை மாமி’, ‘வீரத்தார்’, ‘பொன்வாத்தியார்’, தில்லானாத் தியாகர்’, ‘நிக்ஷன்” - ஆகிய பாத்திரங்கள் எத்தனையோ இன்றைய சமூகத்தில் எம் மத்தியில் வாழ் கின்றன - வருந்துகின்றன. எனது மனதில் ஆழப்புதைந்துவிட்ட இந்தப் பாத்திரங்கள் எனக்குத்தந்த அனுபவங்களின் துவாரப்பார்வைகளே என் சிறுகதைகள். இவை என் சமுதாயத்துக்கு நான் தரும் முதுசொங்களாகி நிற்கின்றன. இத்தொகுதியில் 1992 தொடக்கம் 2002 வரையான பத்து வருடங்களில் எழுதிவந்த கதைகளில் சில மாத்திரமே தொகுப்பாகின்றன.
இந்த தொகுதியின் கருவிருப்பு ஒரு வருடம் பிரசவம் இப்போது என்னுடைய இந்தக் கதைகளை "தூண்டி’ வெளியீடாக பிரசுரித்துத் தருகின்ற என் அன்புக்கும் அபிமானத்துக்கும் உரிய தூண்டி ஆசிரியர் செல்வமனோகரன் தனித்து நன்றி சொல்லப்படவேண்டியவர்.
(xiii)
 

எனது முயற்சிக்கு வாழ்த்து வழங்கிடும் என் ஆசான் கலாநிதி. என். சண்முகலிங்கன் (தலைவர், அரசறிவியல் சமூகவியல் துறை, யாழ். பல்கலைக்கழகம்) எனது தொகுதிக்கு நயப்புரை வழங்கி எனக்கு ஊக்கமளித்த மதிப்புக்குரிய மூத்த எழுத்தாளர் “செங்கை ஆழியான்’ அறிமுகவுரை தந்து என்னைத் தட்டிக் கொடுத்த மூத்த எழுத்தாளர் தெணியான் குறுகத் தறித்த குறளாய் என்னை அட்டையில் அறிமுகம் செய்த மூத்த எழுத்தாளர் குப்பிளான் ஐ. சண்முகன் இவர்கள் தான் என் முகத்துக் கு முகவரியிட்டவர்கள். இவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
என் தொகுதிக்கு முகம் தந்து சிங்காரித்த ஓவியர் "ரமணி’ அவர்களுக்கும் அச்சு, நூல் வடிவமைப்புச் செய்த ராம் பிறின்ரேஸ் ஸ்தாபனத்தினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
அவ்வப் போது என் கதைகள் உதரியாக வெளிவரும்போது பாராட்டி தட்டிக்கொடுத்த சுவைஞர்களுக்கு ஒரு தொகுதியை தந்துள்ளேன். என்னை வளர்க்க வல்ல தங்கள் தரமான அளவுகோல்களை நீட்டி உதவுங்கள்.
"சாத்வீக பிரஸ்தம்’ வதிரி, இ.இராஜேஸ்கண்ணன். தனகத்தோட்டம்,
இமையாணன் கிழக்கு,
உடுப்பிட்டி,
O8.06.2002.
(xiv)

Page 11
பிரசுரவுரை
இரண்டு இளைய உள்ளங்களின் இதய சங்கமமே இந்நூல். தமிழ் ஈழத்தில் இன்று இளைய தலைமுறையிடம் இருந்து நவீன இலக்கியம் சார் படைப்புக்கள் ஆரோக்கியமாக வெளிவரத் தொடங்கியுள்ளன. தாம் சார்ந்த சூழல், உறவுகள் எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனித்து இழையிழையாய் பின்னித் தமது இலக்கியப் படைப்புக்களை (சிறுகதை, கவிதை, நாவல். ) மிகச் சிறப்பாக அமைக்கத் தொடங்கி விட்டனர்.
*பிடிபட்டதே பாஞ்சாலங்குறிச்சி." என்ற குரல் எங்கும் கேட்கத் தொடங்கியிருக்கிறது.
அதேவேளை இந்தத் தலைமுறையினருக்கு இருக்கின்ற முக்கியமான பிரச்சினை ஒரு படைப்பாளிக்கு இருக்கக் கூடாத பிரச்சினை - படைப்பை தொகுத்து வெளியிடல். தமது தொகுப்புக்களை தாமே தொகுத்து வெளியிடல், வெளியீட்டு விழா எடுத்தல்; புத்தகங்களை கமக்கட்டினுள் கொண்டு திரிந்து விற்றல், இவைதான் பிரச்சினைகள்.
எம்மவர்கள் யாவரும் சிறந்த வாசகர்கள். ஆனால் இரவல் புத்தகங்களை வாசிப்பதிலேயே நாட்டமுடையவர்கள். புத்தகம் சொந்தமாக வாங்கிப்படிப்பதில் பின்னடிப்பவர்கள். இந்தநிலை மாறவேண்டும் - மாறிக் கொண்டும் வருகிறது. இந்த அவல நிலையிலிருந்து ப்டைப்பாளியை மீட்டு அவர்தம் படைப்புகளை வெளியிட எமது தூண்டி
(XV)
 

வெளியீட்டகம் தீர்மானித்துள்ளது. இன்றைய இலக்கிய உலகில் இது சிறுதுளி. சிறுதுளிதானே பெருவெள்ளமா கிறது என்ற நம்பிக்கையை மூலமாகக் கொண்டு தான் கன்னித் தொகுப்பு முயற்சியாக திரு. இ.இராஜேஸ்கண்ணனின் “முதுசொமாக”. என்னும் இச்சிறுகதைத் தொகுப்பை வெளியிடுகின்றேன்.
iیا۔ જિ1< %1الي
I > rt.
தூண்டி’
மூன்று வருடங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் வெளிவந்த சிறு சஞ்சிகைகளில் ஒன்று. பாடசாலை மாணவனாக நான் இருந்த காலத்தில் என் மனதின் இலக்கிய உந்துதலால் பிரசவிக்கப்பட்டது. ஆறு இதழ்கள் வெளிவந்தன. பல படைப்பாளிகளின் பலவித படைப்புக்களை தாங்கிவந்த இச் சஞ்சிகையின் முதலாவது ஆண்டு விழாவிற்காக யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கிடையில் பல போட்டிகள் நடத்தி பரிசில்கள் கொடுத்தேன். ஆயினும் சில தவிர்க்க முடியாத காரணங்களினால் சஞ்சிகை தொடர்ந்து வெளிவர முடியாமல் போனது. இது வெறும் தற்காலிக தடங்கலே. இன்னும் சிறிது காலத்தில் தூண்டி வெளிவரும். உங்களுக்கு களம் அமைத்துத்தரும் நல் விருந்தாகும்.
தூண்டி சஞ்சிகையினால் நான் சம்பாதித்த உறவுகள்
பற்பல. அவ்வகை சிநேகிதத்துள் ஒன்றாக இன்றும்
தொடர்வதும் காலத்தால் பலப்படுவதுமாக இருப்பது திரு.
இ.இராஜேஸ் கண்ணன் அவர்களுடனான தொடர்பு
சொல் வதை தெளிவாக உறுதிபட அதேவேளை
முன்னிலையாளனின் மனம் கோணாதபடி சொல்லும் பாங்கு (xvii)

Page 12
இவருடையது. மிக ஜனரஞ்சகமாக, சமூகத்தை அப்படியே தன் சிருஷ்டிக்குள் படம் பிடித்துள்ள லாவகம் அவரை ஒருபடி மேலுயர்த்துகிறது. தூண்டியில் வெளிவந்த "பித்துமனங்கள் சிறுகதையும் இத் தொகுதியில் அடங்குகின்றது. -
இத்தொகுப்பு ஒரு கனதியான கன்னி முயற்சி - இருவருக்குமே. இது வாசகர்களான உங்களிடம் வரவேற்பைப் பெறும் என்பது நம்பிக்கை. இத்தொகுப்பு வெளிவர உதவிய அனைவருக்கும் நன்றி.
“தூயவை துணிந்தபோது பழிவந்து சேர்வதில்லை”
141,கேணியடி, என்றும் அன்புடன் திருநெல்வேலி, தி. செல்வமனோகரன். யாழ்ப்பாணம். பதிப்பாசிரியர். 30.05.2002
(xvii)
 

முதுசொமாய் உள்ளே..?"
1.
0.
வாழ்த்துரை
அறிமுகவுரை
நயப்புரை
என்னுரையாய் சில.
பிரசுரவுரை
காவோலைகள் சமாதான நீதிவான் மூன்றாம் தலைமுறை லீவுபோம் பித்து மனங்கள் மாரீசம்
dupg|Olaf IT DIT36 . மனிதம் மட்டுமல்ல இடைவெளி அகதி அந்தஸ்து
i - ii
iii - vii
viii - xi
xii - xiv.
XV - Xvii
01 - 08
09 - 15
16 - 22
23 - 30
31 - 36
37 - 44
45 - 53
54 - 62
62 - 69
70 - 84

Page 13

“வளர்த்துவிட்ட தாய் தகப்பனுக்கு வெற்றிைைல கூட வாங்கிக் கொடாத பிள்ளைகள். அந்தப் பிள்ளையார் கோயிலடியில் கச்சான் விற்கிற கிழவன், அந்த ஹோட்டலில் ஏச்சு வாங்கி வாங்கி மேசை துடைக்கும் கிழவன், தோப்பு வளவில் பெட்டி பொத்தி விற்று சீவியம் நடத்தும் பொன்னத்தை கிழவி எல்லாரும் என்
கண்முன் வந்து இதயத்துள் கரைந்தனர்”
6 6
虏 , இண்டைக்கு நல்லா அலைக்கழிஞ்சு
போனன். விடியக்காத்தாலை வெளிக்கிடேக் கையே மோட்டார் சைக்கிள் வேலையைக் குடுத்துட்டுது' என்னோடு கூடவே பஸ் பிடிப்பதற்காக பதகளித்துக் கொணி டு ஓட்டமும் B 60d L-U-LD T 5 வநீத அவருக்குச் சொல் லிக் கொண்டே நடந்தேன். நல்லவேளை ஒரு பஸ் - கடைசி பஸ்தான் ஸ்ராண்டில் நின்றது. பெரிதாகச் சனமும் இல்லை. சீற்றுக்காக அடிபடும் அளவுக்கு சனமே இல்லை.
"எங்கடை நல்ல நேரம்தான் பாருங்கோ சனமும் பெரிசாய் இல்லை. அஞ்சரையாகுது. செக் பொயின்ற் வழியவும் இறக்கமாட்டாங்கள் அலுப்பில்லாமல் போய்ச் சேர்ந்திடலாம்".
முதுசொமாக. வதிரி.இ.இராஜேஸ்கண்ணன்

Page 14
அவர் சுகப் பயணத்துக்கு ஆயத்தமானார் . ஆமோதித்துத் தலையை அசைத்தவாறு ஆசுவாசமாகச் சீற்றில் அமர்ந்து காலையில் நுனிப்புல் மேய்ந்த உதயன் பேப்பரை விரித்துப் புரட்டினேன்.
' வல்லையில் கண்டிகட்டி மீன்பிடிக்கச் சென்ற வயோதிபர் மரணம்' གྲྭ་
பத்திரிகையைப் புரட்டியவுடன் இந்தச் செய்திதான் கண்ணிலே பட்டது.
என் இதயத்தினுள் இனம்புரியாத ஒரு பாரம், ஏதோ ஒன்றை இழந்துவிடப் போகின்றேன் என்ற ஏக்கம், உடலில் ஒருவித படபடப்பு.
“ஒருவேளை ‘சிங்களக் கந்தப்பு தானோ?” எனக்குள் நானே கேள்வியானேன். திரும்பவும் வாசித்தேன்.
"வழமையாக வல்லைப் பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் அந்த வயோதிபர் உவர் நீரில் பிணமாகக் காணப்பட்டார் யாரும் உரிமை கோராத நிலையில் போதனா வைத்தியசாலை சடலத்தைப் பொறுப்பேற்றது’.
அங்கொன்று இங்கொன்றாகச் சிதறிய என் சிந்தனை, விறைத்து நின்றது. ५?) {
* சிங்களக் கந்தப்பு அவரும் அனாதைதானே. அந்தக் கிழவனும் கண்டிகட்டித்தானே வல்லையிலை மீன் பிடிக்கிறது
என் மனம் தன்னைத்தானே துருவிக்கொண்டது. “நாலைஞ்சு நாளா அந்தக் கிழவன் தவறனை வாசலுக்கு வரவேயில்லை. மற்றும் படியெண் டால் மத்தியானம் இரண்டு மணிக்கே கிழவன் வந்துவிடும் - வல் லை யிலை கிடந்தது ஒருவேளை சிங் களக் கந்தப்புவின்ரை?.”
CLP SIGG-TLDTes. வதிரி.இ.இராஜேஸ்கண்ணன்
فة بعد
 

"சீச்சி. அப்படி இருக்காது. அந்த மனு: 1ண்டால் எல்லாருக்கும் தெரியும். யாராவது உரிமை கோரி இருப்பினம் அது வேறை யாரோ போலை.
இந்தக் கிழவன் நிச்சயமாகக் சிங்களக் கந்தப்புவாக இருக்கக்கூடாது என்பதில் என்மனம் விடாப்பிடியாக நின்றது. வேலைக்குப் போய் வரும் போதெல்லாம் பூவரசடித் தவறணையிலே ஒருக்கால் இறங்கி ஒரு ஒண்டரை, இரண்டு அடிச்சு வருவதுதான் எனது வாடிக்கை.
இந்தப் பழக்கம் கள்ளின் மேல் உள்ள விருப்பினால் வந்ததோ. சிங்களக் கந்தப்பு மேல் கொண்ட ஈடுபாட்டால் வந்ததோ என்று பிரித்தறிய என்னால் முடியவில்லை.
சிங்களக் கந்தப்பு தான் பிடித்த மீன்களையும் கள்ளுக் குடிப்பவர்களுக்கான சில ‘ரேஸ்ற் களையும் பூவரசடித் தவறனை வாசலில் வைத்து விற்று வாழ்க்கை நடத்துபவர். அந்தக் கிழவனுக்கென்று உறவுகள் யாருமில்லை. "எட பொடியா. என்ரை மணிசி செத்து ரண்டு வரிசமாச்சுதடா. அந்தக் கிழவி போனதோடை பொடிபெட்டை இல்லாத என்னை ஆரடா கவனிக்கினம்? உந்த ஆச்சிரமத்திலை போய் பேசாமல் படுக்கலாமடா. ஆனால், என்ர பாட்டிலை இதுகளை வித்து மூண்டு நேரமும் பாணைத் திண்டிட்டு இந்த தவறனை விறாந்தையிலையே படுத்து எழும்புறது ஒருத்தருக்கும் ஆக்கினை இல்லைத்தானே' என்று கூறும் கந்தப்புவின் வார்த்தைகள் இப்போதும் என்காதில் ஒலித்துக் கொண்டே உள்ளன.
கந்தப்பு சாணை குழந்தையிலேயே நுவரெலியாவில் வேலை செய்த சீனியர் என்பவரால் அங்கிருந்து கொண்டுவரப்பட்டு அவரின் பிள்ளையாக வளர்க்கப்பட்டவர்.
CLP g5 G3FTLDT 35..... வதிரி.இ.இராஜேஸ்கண்ணன்

Page 15
“பொடியா. சிங்கள நாட்டிலை வேலை செய்த என்ர அப்பு சீனியர், அங்கை ஒரு கள்ளப் பெண்டில் வைச்சிருந்தாராம். இங்கை என்ரை அம்மாவுக்கு பிள்ளை ஒண்டுமில்லை. அதாலை அங்கத்தேல் பெண்டிலின்ரை மூண்டாம் பிள்ளை என்னை இங்கை கொண்டு வந்தாராம் என்று சீனியன் கந்தப்பு சிங்களக் கந்தப்பு என்று வழங்கப்படுவதன் காரணத்தை கிழவன் தானே ஒரு சமயம் கூறிவைத்தார்.
சிங்களக் கந்தப்பு நல்ல தொழிலாளியாக இருந்தவர். தன்னுடைய உறவினருக்கு உழைத்த காலத்தில் வாரி இறைத்தவர். பிள்ளை இல்லாத குறைபோக்க தனது மனைவி இராசமணியின் தங்கையின் மகளை சின்ன வயதிலிருந்து கலியாணம் முடித்து வைத்து மூத்த பேரப்பிள்ளை பிறக்கும் வரைக்கும் எல்லாம் செய்து வைத்தவர். \
“எடே தம்பி இராசமணி இருக்கும்வரை செல்வாக்குத்தாண்டா. அவள் போன உடனேயே நான் தனிச்சுப் போனனடா”. . .
என்று கந்தப்புக் கிழவன் சொன்னபோது கண்கள் பனித்ததை, அவர் மறைத்துக் கொண்டதை நான் கண்டேன்.
இப்ப ஒரு ஐந்தாறு மாதத்துக்கு முன்னர் கந்தப்புவுக்கு சரியான காய்ச்சல், நடுங்கிக் கொண்டே தன்னுடைய வியாபாரத்துக்கு வந்தார்.
‘அப்பா. மருந்து எடுக்கேல்லையே’ “டேய். கண்டதுக்கெல்லாம் மருந்து தின்னுறதேயடா’ "அப்ப உப்பிடி நடுங்குது' “பொடியா. மருந்தெடுக்கப்போய் ஆஸ்பத்திரியிலை
முதுசொமாக. - - - - - - - - - - - வதிரி.இ.இராஜேஸ்கண்ணன்

ፀ፲ "
நிண்டால் என்ரை வயித்துப்பாட்டை ஆர் பார்க்கிறது? ஆசுப்பத்திரிக்கு நடக்கிறதெண்டால் எவ்வளவு கரைச்சல்? ஆரெடா என்னை கூட்டிக் கொண்டு போக இருக்கினம்?”. ‘அப்பா. இப்ப பொழுதுபடுது நாளைக்கு காலமை நான் மோட்டார் சைக்கிள்ளை இவடத்துக்கு வாறன் நிக்கிறியே. கொஞ்சம் முந்தி வந்து உன்னை ஆஸ்பத்திரீயீலை விட்டிட்டு வேலைக்குப் போறன்’
" போடா...அதொண்டும் வேண்டாம். பனடோல் போட்டால் எல்லாம் சரி. நாளைக்குப் பாரன் என்னை.
உண்மைதான் முதல் நாள் இப்படி என்னோடு கதைத்த மனுசன் அடுத்த நாள் உசாராக இருந்து வியாபாரம் நடத்தினார். அந்தக் காலத்துச் சாப்பாடு அப்பிடி
அன்று பின்னேரம் சம்பளம் எடுத்த காசோடு வந்த நான் ஐம்பது ரூபாவை எடுத்து கந்தப்புவின் மடியில் திணித்தேன்.
"அப்பு வச்சிரணை வெத்திலை சுருட்டுக் காதல்’. “டேய் பொடியா இப்படியெல்லாம் செய்யாதை நீயும் குடும்பகாரன் . . . ?”
எனக்கு ஏதோ பெரிய கொடை செய்து விட்ட திருப்தி அதன் பின்னர் தீபாவளிக்கு முதல் நாள் பூட்டுமார்க் சாரம் ஒன்று வாங்கி வந்து கொடுத்தேன். கிழவன் அந்தச் சாரத்தை வாங்கும்போது வாய்விட்டு அழுதே விட்டார். ".
“பொடியா. என்னையும் மதிக்க நீ ஒருத்தன் இருக்கிறாயெடா. நீ என்ன என்ரை உறவே? என்ரை உறவுகள் அதுகள் நன்றி கெட்ட நாயளெடா. அவள்
முதுசொமாக. - வதிரி.இ.இராஜேஸ்கண்ணன்

Page 16
பொடிச்சி என்ரை வளர்ப்பிணி அடே. நான் அந்த பிள்ளையை வளர்ப் பிணி என்று ஒரு நாளும் குறைவிடேல்லையடா. ஏயெல் படிப்பிச்சனான்ரா. நல்ல ஒரு தோட்டத் தொழிலாளி மாப்பிள்ளை பார்த்து நான்தான்ரா கலியாணம் முடிச்சு வைச்சனான். என்ர உழைப்பிலை எட்டுத் தங்கப்பவுண் நகை போட்டனான்டா. நான் உழைச்சு வாங்கின காணி, உழைச்சுக் கட்டின வீடெல்லாம் அவளின்ரை பேரிலை ஒரு யோசினையும் இல்லாமல் எழுதி வச்சனானெடா. அப்படியெல்லாம் செய்த என்னை இராசமணி போன உடனை வீட்டை விட்டுக்கூட திரத்திப்போட்டுதுகளடா. நான் அனாதையாப் போனனடா.” கிழவன் குழந்தைப் பிள்ளைபோல் விக்கி விக்கி அழுதார்.
'ணேய் அழாதை. நீ உன்ரைபாட்டை பாக்கிறாய் தானே. ஒரு உறவுகளும் உனக்கு வேண்டாம்.”
என்னால் கந்தப்புவை சமாளிக்க முடியவில்லை. ‘அப்பா. கேக்கிறனெண்டு என்னைக் குறைப்படாதை. உன்னை உந்த ஆச்சிரமத்திலை சேத்து விடுறன். இருக்கிறியே?”
இப்படிக் கேட்கக்கூடாது போலத்தான் இருந்தது. இருந்தும் கேட்டு வைத்தேன்.
“பொடியா. என்னாலே எழும்பி நடக்கக்கூடியளவும் இதுகளவித்து சாப்பிடுறன். வேணுமெண்டால் அப்பிடி ஏலாமல் போக கேட்கிறன். கொண்டுபோய் சேத்துவிடன்’ அந்தக் கிழவனின் வைராக்கியம் இந்தக்கால இளசுகளிடமே இல்லை.
அன்று கந்தப்பு விட்ட கண்ணிர் என்னை வாட்டியது. இப்பிடி எத்தனை கந்தப்புமார்?. .
Cupg|Gafr Drtas..... - - - வதிரி.இ.இராஜேஸ்கண்ணன்
 

வளர்த்து விட்ட தாய் தகப்பனுக்கு வெற்றிலைகூட வாங்கிக் கொடாத பிள்ளைகள். அந்தப் பிள்ளையார் கோயிலடியில் கச்சான் விக்கிற கிழவன், அந்த ஹோட்டலில் ஏச்சு வாங்கி வாங்கி மேசை துடைக்கும் கிழவன், தோப்பு வளவில் பெட்டி பொத்தி விற்று சீவியம் நடத்தும் பொன்னாத்தைக் கிழவி எல்லோரும் என் கண்முன் வந்து இதயத்துள் கரைந்தனர்.
“எடே பொடி. காசு பணம் இல்லாமல் போகலாமடா. கடைசி காலத்திலை கவலைப்படாமல் போய்ச்சேர வேணுமடா என்ரை கவலையள், என்ரை தேவையள் எல்லாத்தையும் சொல்லக் கேட்க ஒருத்தரெண்டாலும் இருக்க வேணுமடா.”
என று அடிக் கடி கந்தப் புக் கிழவன் சொல்லும்போதெல்லாம் தோப்பு வளவுப் பொன்னாத்தை சொல்லுவது தான் ஞாபகம் வரும்.
“ டேய் தம்பி. என்ரை பொடிச்சியை 'கூழ் குடிச்சு எத்தினை வரிசமாச்சு கொஞ்சம் காச்சித் தாவன் பிள்ளை' என்று கேட்டால் வயசு போக போகத்தான் சுதி கேக்குதோ' எண்டெல்லே ஏறி விழுறாள்' என்று அந்தக் கிழவி சொல்லி வேதனைப்படுவதே ஞாபகம் வரும்.
பாவம் இந்த முதியவர்கள் இப்படி வேதனைப் படுவதைவிட ஐம்பது வயதுக்குப் பிறகு செத்துப்போக வேணும் என்ரை பிள்ளைகள் கூட இப்படித்தானோ. ?
‘பூவரசடி இறக்கம்’ யாரோ கூவிய சத்தம் கேட்டு நினைவு மீண்டேன். பஸ் ஜன்னலால் எட்டிப் பார்க்கிறேன். தவறனை வாசலில் இன்றும் கந்தப்பு இல்லை.

Page 17
அவசர அவசரமாக எழுந்தேன். பஸ் புறப்பட்டுவிட்டது. மீண்டும் மணியை அடித்து “இவ்வளவும் என்ன கனவே கண்டுகொண்டு இருந்தநீர்?’ என்று கொண்டக்ரரிடம் ஏச்சும் வாங்கி இறங்கிவிட்டேன்.
தவறனையுள் புகுந்து கந்தப்புவை விசாரிக்கிறேன். 'அண்ணை அதையேன் கேக்கிறியள். நாலுநாளா உப்புத்தண்ணிக்கையே செத்துப் போய் கிடந்தது. என்ன நடந்ததோ தெரியாது. பாவம் கிழவன்ரை வளர்ப்பிணிப் பெட்டை கூட போகேல்லை. பெரியாஸ்பத்திரிக் காறர்தான் கொண்டு போனாங்கள்.
எனது இதயம் மாத்திரமல்ல புத்தியும் இடிந்து போய் நின்று விட்டேன். எங்கோ ஒரு தொலைவில் நான் ஏறி வந்த கடைசி பஸ் போவது தெரிகின்றது. அடுத்த பஸ் நாளைக்கென்றாலும் வரும் தானே!
சஞ்சீவி - செப்ரெம்பர் 1999.
முதுசொமாக. வதிரி.இ.இராஜேஸ்கண்ணன்
 

"அவனைப் பிடித்து இவனைப் பிடித்து குறுக்காலை" போக வீரசிங்கத்தாருக்கு அறவே விருப்பமில்லை. Seguit tgu DIGUT
சிந்தனை இருந்திருந்தால்.
இதுனுநீதிாலி
வீசிங்கத்தாருக்கு தான் செய்ததை நினைக்க
நினைக்க ஒரு மாதிரியாகத்தான் இருந்தது. தனக்கு சரியோ. பிழையோ. இடையிலை எழும்பி வந்ததைப் பார்த்த மற்றவர்கள் என்ன நினைத்தார்களோ என்று குழம்பிக் கொண்டிருந்தார். முன் னுக்கு இருந்து பார்த்துக்கொண்டிருந்த பொன் வாத்தியார் பிழையாகத்தான் விளங்கிக் கொண்டிருப்பாரே என்றும் சந்தேகம். வீரசிங்கத்தாருக்கு தமிழ் படிப்பித்த பொன்னம்பலம் வாத்தியாருக்கு சிறப்பாக வழங்கி வரும் பெயரே பொன் வாத்தியார்.
வீரசிங்கம் நல்லாகப் படிச்சவர்தான். ஆனால் ஒரு சின்ன உத்தியோகம் கூட கிடைக்கவில்லை. “அவன் வீரசிங்கம் படிச்ச படிப்பென்ன! இங்கிலீசிலை கதைக்க வெளிக்கிட்டானேயெண்டால் உட்ங்கினை ஊரிலை குழல்

Page 18
கொழுவிக் கொண்டு திரியிறவை எல்லாம் கழற்றிப் போடடுத்தான் ஒடுவினம்’ என்று ஊரார் கதைப்பது வீரசிங்கத்துக்குரிய இடத்தை தெளிவாகவே காட்டும்.
அவனைப் பிடித்து இவனைப் பிடித்து குறுக்காலை போக வீரசிங்கத்தாருக்கு அறவே விருப்பமில்லை. அப்படியான சிந்தனை இருந்திருந்தால், முப்பது வயது மூத்த மகனை இப்பவும் எத்தனை வழி இருந்தும்.
எத்தினை பேருக்கு 'பாங்கிலை கூட வேலை கிடைக்குது நீ என்ன உண்ரை மோனுக்கு ட்ரை பண்ணாமல்.’ என்று கேட்பவர்களுக்கு, 'உத்தியோகம் புருஷலட்சணம்தான். ஆனால் குறுக்காலை போன லட்சணமாகக் கூடாது. என்று கூறுவார் வீரசிங்கத்தார்.
வீரசிங்கம் ஒரு நல்ல தோட்டத் தொழிலாளி ஐந்து பிள்ளைகளை வளர்ப்பதுவும், படிக்க வைப்பதுவுமே இலக்காகக் கொண்டவர். வாசிகசாலை நிருவாக சபையில் இவர் இல்லாத நிருவாகமே இல்லை என்று சொல்லலாம். இன்றும் தனக்குத் தமிழ் படிப்பித்த பொன் வாத்தியாரைக் கண்டால் ஓடி வந்த சைக்கிளை விட்டுக் குதிக்குமளவிற்கு இருக்கிறார். நல்லதொரு பேச்சாளன். ஊரில் வீரத்தாரின் ரை பேச்சில்லாத நிகழ்ச்சியே இல்லை. கோயில் கூட்டம் தொடக்கம் செத்தவனைக் கிடத்தி சுத்தி நின்று பேசித்தள்ளும் இரங்கலுரை வரை ‘வீரத்தாரைக் கூப்பிட வேணும்” என்று கூறுமளவிற்கு ஒரு பிரமுகர் பிரயோசனமானவர்.
இப்படிப்பட்ட வீரத்தார் இடைநடுவில் மேடையை விட்டு இறங்கி வந்ததை சபையிலிருந்த ஒன்றிரண்டு பேராவது கரிசினையோடு கதைத்திருப்பார்கள் என்பது அவருக்கு நல்லாகத் தெரியும்.
முதுசொமாக. வதிரி.இ.இராஜேஸ்கண்ணன்
 

(d)
வீரசிங்கத்தாரின் வாழ்நாளில் பேச்சுக்குப்போய் கோபித்துக் கொண்டு இறங்கி வந்தது இதுதான் முதற்தடவை.
** f..... நான் தலைவரெட்டை பொய்க்கெண்டாலும் வயித்தைச் சாடையாக் குழப்புது என்று சாட்டுச் சொல்லிப் போட்டுத்தானே வந்தனான்’
‘அப்படிச் சொன்னது யாருக்குத் தெரியும்?. சனத்துக்குத் தெரியுமே”
* சனமென்ன தின்ம். எனக்குச் சரியெண்டு பட்டதை நான் செய்தன்” இபீடியாக தன்னுடைய செயலைத் தானே விமர்சித்துக்கொண்டிருந்தார் வீரத்தார். ' '
ஒரு நிலைப்டாதமனதை நிலைப்படுத்த பத்திரிகையை எடுத்துக் கொண்டு சாய்மனைக் கட்டிலோடு சாய்ந்தார் அவர் பத்திரிகையின் நடுப்புறத்தைப் புரட்டிய அவருக்கு * பாராட்டி வாழ்த்துகின்றோம்’ வாசகத்தைப் பார்த்தவுடனேயே எரிந்துகொண்டு வந்தது.
' சமாதான நீதிவானாக பதவி ஏற்ற முன்னாள் ஆலயத் தலைவர் சங்கரப் பிள்ளையை பாராட்டி வாழ்த்துகின்றோம். இவர். ’
என்று தொடரும் எழுத்துக் குவியலின் நடுவே இரண்டு சென்ரிமீற்றர் சதுரப்பரப்பில் வாயெல்லாம் பல்லாகச் சிரித்தபடி புகைப்படமான சங்கரப்பிள்ளை.
' என்ன கறுமம் இது. யாழ்ப் பணத்திலை முந்தியெல்லாம். தடக்குப்பட்டு விழுந்தால் ஒரு ரீச்சருக்கு மேலைதான் எண்ட நிலை மாறி, இப்ப சமாதான நீதிவான்மாருக்கு மேலைதான் விழுவினம். எண்ட நிலை வந்திட்டுது’ என்று வாய்விட்டே வீரத்தார் கூறிக் கொண்டிருக்க. . .
(pg. GlastLorras..... வதிரி.இ.இராஜேஸ்கண்ணன்

Page 19
டு
"அது தான் காணும் நீர் நேற்று இடையிலை இறங்கி வந்திட்டீர் போலை. உம்மைப் பற்றி எனக்குத் தெரியாதே?” என்ற படி வீரத்தாரின் பாலிய நண்பன் அருமையர் வந்து நின்றார்.
'பின்னை என்னடா அருமை? உவங்கள் மேடை கிடைச்சால் விளாசித்தள்ளுறாங்களெல்லே?.”
"நீயும் மேடைப் பேச்சுக்காறன் தானே?.” இது அருமையின் குத்தல்.
-ஃபொறு. அதுக்கு உவங்களைப் போலை புத்திக்கும் நாக்கும் சம்பந்தம் இல்லாமல் கத்தித் துலைக்கிறதே?. சவங்கள் 1. இஞ்சை பார் அருமை, பேசினால் உண்மையைப் பேச வேணும். பாத்துக் கொண்டிருக்கிற சனங்கள் என்ன பேச்சவங்களெண்ட நினைப்பே அவைக்கு. உவன் பஞ்சலிங்கத்துக்குச் சமாதான நீதிவான் பட்டம் கிடைச்சுது. பாராட்டினம்; வாழ்த்தினம் எண்டில்லாமல் அவர் அது செய்தார். இதைப் பண்ணினார். வெட்டிப் புடுங்கினார். எண்டு இல்லாத பொல்லாத எல்லாத்தையும் சொல்லி, அதுதானாம் அவருக்கு கெளரவ சமாதான நீதிவான் பட்டம் கிடைச்சதாம். எப்பிடியெல்லாம் கிடைச்ச தெண்டு எங்களுக்குத் தெரியாதே?”
ஏதோ ஒர் உண்மையைக் கண்டுபிடித்து விட்டது போல ஒரு நளினமான தலையசைப்பு.
"வீரா.எனக்குத் தெரியும் உது நடக்குமெண்டு. பொன் வாத்தியார் கேட்டவர். நானும் உப்பிடியே சொல்லிப்போட்டன்’ என்றார் அருமையர்.
'அருமை, பொன் வாத்தியார் அந்தாள் முன்னாலை இருந்து பாத்துக் கொண்டிருக்கிறாரடா. பாவம், அந்த மனிசன். எத்தினை நாள் நிர்வாக சபைக் கூட்டத்திலையும்,
 

டு)
பொதுக்கூட்டத்திலையும் கத்தி இருப்பன். அந்த மனிசனுக்கு ஒரு விழா எடுக்க வேணுமெண்டு. இதுவரை செய்தாங்களே?. மூதேசியள்”
வீரத்தார் பொரிந்து தள்ளினார். "அந்த மனிசன் என்ன செய்யேல்லை எங்களுக்கு? நாங்கள் அப்ப இளந்தாரியள். அந்தாள் வாசியசாலை செயலாளரா இருந்த நேரம், எத்தினை வெளியூர் வாத்திமாரை கூட்டியந்து காசில்லாமல் எங்கடை பொடியளுக்குப் படிப்பிச்சவர். எங்கடை ஊர்ப் பள்ளிக்கூடம் வாறதுக்கு அந்தாள் தானே காரணம்! ஊரிலை ரண்டு பொதுக் கிணறு, வெட்டுவிச்சது சின்ன வேலையே? ஆலமரத்துக்குக் கீழே கிடந்த கல்லு இப்ப கிடக்கிற பெரிய கோயிலாக வருமெண்டு ஆர் கண்டது. இதெல்லாம் அந்தப் பொன் வாத்தியார் இல்லாமல் வந்திருக்குமே? மூதேசிச் சாதியள் நன்றி கெட்டதுகள்' வீரத்தாரைக் குறுக்கிட்ட அருமை "வீரா. உனக்குத் தெரியாது. எங்கடை இப்போதை தலைவற்றை பொடியளும் அதோடை திரியிற நாலைஞ்சு கொசப்புகளும் அண்டைக்கு வெட்டையிலை பந்தடிச்சுக் கொண்டு நிண்டதுகள். அப்ப அதாலை பொன் வாத்தியார் வந்தவர். அதுகள் அவருக்கு விசிலடிச்சு எத்தினை நொட்டை சொல்லுதுகள் தெரியுமே?.”
'அருமை இப்ப இருக்கிறதுகளுக்கு வளமான வளப்பில்லை. அந்த காவாலியளுக்குத் தெரியுமே பொன் வாத்தியார் எங்களுக்கு விளையாட்டுப் பழக்கி விட்டதை. அந்த வெட்டையை வாங்கிறதுக்கும் அவர் தானே காரணம் நஷனல் போட்ட வாத்திமாரெண்டால் நக்கலாகப்
99

Page 20
“இப்படிப்பட்ட ஒரு மனிசன் சபையிலை ஒருவரா இருந்து பார்த்துக் கொண்டிருக்க நான் அந்தாளிட்டைப் படிச்சனான். மேடையிலை நின்று பஞ்சலிங்கத்துக்கு இல்லாத பொல்லாத எல்லாம் சொல்லி புகழ் பாடேல்லை என்று அவைக்கு சாடை கோவமும் எண்டு கேள்விப்பட்டன்’
'அருமை பொன் வாத்தியாரை ஜே.பி. ஆக்க வேணும் . அதுக்கு நாங்கள் அலுவல் பாக்க வேணுமெண்டு நான் நிர்வாக சபையிலை சொல்லி ஏற்பாடு செய்தாப் பிறகுதானேயடா, சுழியங்கள், பஞ்சானுக்கு அலுவல் பாத்தவங்கள் - பஞ்சனெட்டை காசு கிடக்கு ; பிள்ளையோ குட்டியோ? பாத்தும் பாக்காமல் சில வழிப்பான். கோட்டிலை இருந்து வீடு வரை மேள தாளத்தோடை அழைச்சதும் காசு செய்த வேலை தானே am o ab eo பாவம் பொன் வாத்தியாரெட்டை அவர் ஊருக்குச் செய்த சேவையை விட என்ன கிடக்கு? . ’ என்று சொல்லும் போது வீரசிங்கத்தாரின் குரல் தளதளத்தது. அவரின் கண்கள் கூட கலங்கி விட்டன.
' வீரா.நானும் நீயும் உப்பிடிக் கொதிச்சு என்னடா?. சனமெல்லாம் உப்பிடி யோசிக்குதுகள் இல்லையே.உதுக்கு நாங்கள் என்ன செய்யிறது?’ என்ற அருமையை ஊடறுத்தார் வீரசிங்கத்தார்.
‘ என்ன செய்யிறதோ!. நான் இண்டுமேல் பட்டு உந்த நிர்வாகத்துக்குப் போனால் பாரன் - மூதேசிச் சாதியளோடை மல்லுக் கட்டுறதை விட ரண்டு ஆடு வளத்தாலும் எங்க போற கணக்கு.”
՞ ՞ (8լա՞յ ..... டேய். உப்பிடிச் சொன்னவை எல்லாம் ஒதுங்கி விட்டினமே. சொல்லிப் போட்டும், தங்கடை லாபத்துக்காக ஊருக்குத் தொண்டளக்கின்ம் தீர்னே.
 

@ உந்தக் கதையை விட்டுட்டு உள்ளுக்கு இருந்து கொண்டே நல்லதை ச்ெய்விக்க வேணுமடா.”
வீரத்தாருக்கு அருமை சொல்வது சரியாகப்பட்டிருக்க வேண்டும். இருவரும் சில நிமிடங்களை மெளனத்துள் கரைத்திருக்க வெளியே படலை விடும் சத்தம் கேட்டது. “பொன் வாத்தியார் வாறார்” அருமை சொன்னவுடன் வீரசிங்கத்தார் வாசல் வரை போனார்.
வீரசிங்கத்தார் சமூகத்தில் த்ொலைந்து போய்விடும் நேரங்களில் அர்ச்சுனனுக்குப் பார்த்த சாரதி போல சமாதானம் சொல்ல பொன் வாத்தியார் வீடு தேடி வருவது வழக்கம் தானே.
சஞ்சீவி - ஜனவரி 2000
முதுசொடமாக - - - - - வதிரி.இ.இராஜேஸ்கண்ணன்

Page 21
“வேட்டி கட்டி அரையிலை சால்வை கட்டி "வெறும் மேலோடை கோயிலுக்குப் போய் வர முடியாத ஒரு கண்டறியாத நாகரிகம். செருப்புக் காலோடை அங்கத்தை தோட்டந் துரவுக்கை கூடப் போகாத எங்களுக்கு கோயிலுக்கும் சப்பாத்து வீட்டுக்கும்
சப்பாத்து கண்டறியாத . . . . .
விடியலின் பின்னே மடிந்துவிட்ட இரண்டு
மணித்தியாலங்களில் அறை “வெறிச்சோடிப் போய் விட்டது. வழமை போல வாத்தியார் ஜன்னல் வழியே வானத்தில் தனித்துப் பறக்கும் பறவைகளையும், பனிமுடிசூட்டி நிர்ச்சலனமாய் நிற்கும் மரங்களையும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அந்த மாடியின் மூன்றாம் தட்டிலேதான் அவர்களது "வாசஸ்தலம் அங்கிருந்து பார்க்கும் போதே வீதியின் பரபரப்பும் அவசரமும் வாத்தியாருக்கு சினத்தை மூட்டி விட்டது.
“சேச்சே . . . என்ன பதகளிப்பு. ஒரு ஆறுதலோ, சந்தோசமோ இல்லாதவங்கள் காலிலை இறக்கை கட்டிக் கொண்டு பறந்தடிக்கிறாங்கள்’
வறுமையாகி விட்ட உணர்வுகளோடு வாத்தியார் வாய்விட்டே கூறிக் கொண்டார்.
 
 

(1)
ஒரு காலத்தில் கந்தப்பு வாத்தியாரின் இலக்கியச் சொற்பொழிவு என்றால் திரளாத சனங்களே இல்லை எனலாம். கோயில் முகப்புகள், சனசமூக நிலைய மண்டபங்கள், பாடசாலைகள் என்று எல்லா இடங்களிலும் இலக்கிய வாரிதியாக பொழிந்து தள்ளுவார். பேசுவதோடு மாத்திரம் நின்று விட்டவர் அல்ல அவர். சிறுகதைகள, கட்டுரைகள், கவிதைகள் என்று பத்திரிகைகளிலே அவ்வப் போது எழுதி வந்தவரும் கூட.
கல்வெட்டுப் பிரலாபங்கள், பாடல்கள் எழுதுவதிலே தனியான தேர்ச்சி பெற்றவர். இதனால், இவருக்கு கல்வெட்டுக் கந்தப்பு' என்ற காரணப் பெயரும் வழங்கி வந்தது. எங்கெல்லாமோ இருந்து தேடி வந்து பிரலாபங்கள் எழுதுவிப்பார்கள். அந்தியேட்டிக்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் வந்து கேட்டாலும் மறுக்காத ஆசுகவி அவர். அந்தக் காலத்து தமிழ் வாத்திமார் என்றால் இப்படித்தான். இலக்கண இலக்கியங்களை கற்பித்து காசு சம் பாதிப்பதற்காக வாழ்ந்தவர்களல்ல அவர்கள். ஆத்மார்த்தமான திருப்தியே அவர்களின் பணிகள்.
வெள்ளை வேட்டி தொடை தொட்டு நீண்ட நஷனல், இரு கரையும் மடித்த சால்வை, தடித்த கறுப்பு "பிறேம்’ கண்ணாடி நெற்றியிலே திரிபுண்டரகத்தினுள் இலங்கும் சந்தனப் பொட்டு, கடைவாயோரம் தவழும் மெல்லிய முறுவல், அளந்து அடிவைக்கும் நடை, கந்தப்பு வாத்தியாரின் பிரதிமா இலக்கணங்கள் இவைதான்.
கந்தப்பு வாத்தியார் ‘பென்ஷன் எடுக்கவும் மூத்த பேரனுக்கு ஐந்து வயதாகி அவன் பாடசாலைக்கு செல்லவும் சரியாக இருந்தது. மூத்த பேரனுக்கு ஏடு தொடக்கி வைத்தவரும் கந்தப்பு வாத்தியார் தான்.
முதுசொமாக. வதிரிஇஇராஜேஸ்கண்ணன்

Page 22
டு பென்ஷன் எடுத்த பின்னர் கோயில் குளம் என்று புனிதராக அலைந்து திரிந்தவர் வெள்ளிதோறும் கூட்டுட் பிரார்த்தனை என்றும், திருவாசக முற்றோதல் என்றும் வரிந்து கட்டிக் கொண்டு அலைந்தவர் எல்லோரின் தலைக்கு மேலாலும் கையுயர்த்தி கடவுளோடு ஐக்கியமாவதாகக் காட்டிக் கொண்டு முன்னே நிற்கும் “பெண்டுகளின் முதுகைப் பார்க்கும் அடிமட்டமான பக்தராகவோ, வெள்ளி மாலை திருவாசகம் பாடி சனி காலை ஆடு குத்தும் அர்த்தமில்லாப் பக்தராகவோ அவரில்லை.
முழுதாகச் சொன்னால் கந்தப்பு வாத்தியார் யாழ்ப்பாணத்துச் சைவப் பாரம்பரியத்திலே தோன்றிய ஒரு தமிழ்ச் சட்டம்பியார் என்ற தனிப் பிரதிமையினை இறுதிவரை தக்க வைத்துக் கொண்டவர்.
உடலை இறுக்கிக் கொண்டிருந்த கம்பளியாலான ஸ்வேரர் வாத்தியாரின் எரிச்சலை மேலும் கிளறி விட்டது. பனியும், மழையும் சேர்ந்து கொட்டும் மார்கழி மாதத்துத் திருவெம்பாவைக் காலத்தில் கூட அதிகாலை நான்கு மணிக்கும் குளித்து விட்டு திருப்பள்ளியெழுச்சி பாராயணத்திற்குப் போய் வந்த வாத்தியாருக்கு இது உயிரை எரிக்கும் எரிச்சலாகவே வெளிப்பட்டது.
வேட்டி கட்டி அரையிலை சால்வை கட்டி 'வெறும் மேலோடை கோயிலுக்குப் போய்வர முடியாத ஒரு கண்டறியாத நாகரிகம். செருப்போடை அங்கத்தைத் தோட்டத் துரவுக்கை கூடப் போகாத எங்களுக்கு கோயிலுக்கும் சப்பாத்து, வீட்டுக்கும் சப்பாத்து கண்டறியாத
அத
. . . ്യ്
முதுசொமாக. வதிரி.இ.இராஜேஸ்கண்ணன்
 

தனிமை வாத்தியாரை தனக்குள்ளேயே 'புறுபுறுத்துக் கொள்ள வைத்து விட்டது.
ஊர் கடந்து வாழும் போது நினைவுகளில் மீளும் ஊர் வழக்குகள் மனசை சுட்டெரிப்பதில் உள்ள துயர்வேறு எதிலும் இல்லை. ஊரோடு வாழும் போது அர்த்தம் பெறாத சிறிய விஷயங்கள் கூட ஊர் விட்டு வாழும் போது பெரிய பெரிய தத்துவங்களைத் தருவது வழமைதான்.
கந்தப்பு வாத்தியாரும் அவரது மனைவியும் ஊரிலேதான் சென்ற வருடம் வரை வாழ்ந்தார்கள். அவருக்கு ஒரே ஒரு மகன்தான் கனகசிங்கம். கனகசிங்கம் இரண்டு பிள்ளைகளும் மனைவியுமாக இங்கிலாத்திலே குடியேடி இன்றோடு எட்டு வருடங்கள் கழிந்து விட்டன. தனது தாயாரின் ‘ஆண்டுத் திவசம்’ வரை பொறுத்திருந்த கனகசிங்கம் தகப்பனை தனியே தவிக்க விடாது தங்களோடு அங்கே அழைத்து விட்ட செயலை எண் ணி ஊரிலே எலி லாரும் பெருமையாகப் பேசிக்கொண்டார்கள்.
“தம்பி . . . எனக்கு உந்த நாடு சரிவராதப்பு. இந்த வயசு போன நேரத்திலை ஊரிலை இருக்கிறது தானப்பு நல்லது. நீ ஏதும் காசைக்கீசை அனுப்பி வையன் எனக் கேதும் நோய் நொடியென் றால் உண் ர சின்னம்மாவின்ரை பெடியள் இருக்கிறாங்கள் தானே, பாப்பாங்கள்:”
எப்போது வாத்தியாரை மகன் இங்கிலாந்து வருமாறு 'ரெலிபோன்’ எடுத்தாலும் வாய்ப்பாடாக இதைத்தான் கூறி வைப்பார் வாத்தியார்.
இளமை உதிர்ந்து போகும் நேரங்களில் உயிருக்கு நெருக்கமான உறவுகள் ஆதாரமாக இல்லாவிட்டால்
முதுசொமாக. வதிரி.இ.இராஜேஸ்கண்ணன்

Page 23
உண்டாகும் துன்பத்தை முழுதாயறிந்த போதிலும் ஊர் விட்டு ஊர் போவதென்பது வாத்தியாருக்கு சிறை உணர்வை விதைத்து விட்டது.
"ஐயா எனக்கு அம்மாவின்ரை செத்த வீட்டைக் காணாமலே மனச்சாட்சி சுட்டெரிக்குது அம்மாவுக்கு நீங்கள் இருந்தியள். உங்களுக்கு ஒரு தரும் இல்லை நான்தான். நீங்கள் இங்கை உங்கடை பேரண் பேத்தியோடை சந்தோசமாக கடைசி காலத்திலை இருக்கலாம். நான் எல்லா அலுவலும் பார்க்கிறன். நீங்கள் கொழும்புக்கு வாங்கோ’
"பேரன் பேத்தியோடை சந்தோசமா இருக்கலாம்’ என்று மகன் சொன்ன வாாத்தை அவரை ஏதோ செய்தது. "இந்த வயசு போன நேரம் என்னை அதுகள் வடிவாப் பாக்குங்கள். நான் கூட அதுகளை வழித்துணைக்குக் கூட்டிக் கொண்டு கோயில் குளத்துக்குப் போய் வருவன். அவன் பெடியனுக்கு தமிழிலை நல்ல விசயம் எல்லாம் சொல்லிக் குடுப்பன். வாத்தியார் எண்ணக் குதிரையில் வேகமாகப் பறந்தார்.
வாத்தியாருக்கு "ரெலிபோனில் காரண காரியத்தோடு கட்டளை’வந்து சேர்ந்ததுமே பென்சனை மாற்றிக்கொண்டு புறப்பட்டார்.
மூத்த பேரனுக்கு பத்து வயதில், பேத்திக்கு இரண்டு வயது. கனகசிங்கம் அந்த நேரம் போனவன்தான்.
ஒரு புறம் ஊர் மண்ணுக்கே உரமாகிவிடும் எண்ணம். மறுபுறம் பேரப்பிள்ளைகளோடு வாழும் இனிய சுகம். விமானம் ஏறிவிட்டார் கந்தப்பு வாத்தியார்.
“மூத்தவனுக்கு பதினெட்டு வயதாகி விட்டுது. பெடிச்சிக்கு பத்து வயது இன்னும் இரண்டொரு வயசிலை
முதுசொமாக. வதிரி.இ.இராஜேஸ்கண்ணன்
 

(2)
சாமத்தியப்பட்டுக் குமரியாகி விடுவாள். என்ரை மனிசி செல் லம் மாவும் பனி னிரண் டு வயசில தானி சாமத்தியப்பட்டவள் எண்டு சொல்லுவாள். ஊரிலை எண்டால் அவளின்ரை சாமத்தியத்திற்கு இனசனத்திற்குச் சொல்லி மச்சாள் மாமியைக் கொண்டு தண்ணி வாத்து எப்பிடி எப்பிடியெல்லாம் என்ரை சிலவிலையே.”
வாத்தியாரின் அடிமனதிலே ஆழப்புதைந்திருந்த எண்ணங்கள் பெருமூச்சாக வெளிப்பட்டு நின்றன.
“என்ரை பேரனுக்கு ஏடு தொடக்கி வைக்கேக்கை என்னென்ன கற்பனை எல்லாம் செய்தனான். அவனுக்கும் நல்லா தமிழ் படிப்பிச்சு ஒரு தமிழ்ப்பட்டதாரியாக்க வேணுமெண்டு. இப்ப என்னடா எண்டால் அதுகள் கொம்பியூட்டர். கொம்பியூட்டர் எண்டு கோதாரிலை போன படிப்புக்கள்’ நிராசை என்ற உஷ்ணக்காற்று வாத்தியாரின் மூக்கின் வழியே கொதித்து வெளியேறியது.
வாத்தியார் என்றால் மகனும் மருமகளும் மாத்திரமன்றி பேரன் பேத்தியரும் உயிர். எங்கு போய் வந்தாலும் வாத்தியாருக்கு ஒரு பட்சணமாவது வாங்கிவரா விட்டால் அவர்களுக்கு உயிர் வாடிப்போகும்.
அவர்கள் என்ன செய்வது. கனகசிங்கத்திற்கும் மனைவிக்கும் மாறிமாறி வேலை. பிள்ளைகள் இரண்டும் காலையிலை வீட்டைவிட்டு வெளிக்கிட்டால் படிப்பு முடிந்து வர பொழுது கடுகி விடும்.
பேத்தி இரவு படுக்கைக்கு போகும் நேரத்தில் மட்டும் வாத்தியாரின் முதுகோரம் கட்டியனைத்தபடி கிடப்பாள். அந்த வேளைகளில் வாத்தியார் பெறும் சுகானுபவம் . கனகசிங்கத்தின் பத்தாவது வயதுக்குப் பின்னர் இப்போதுதான்.

Page 24
(2)
“எங்கடை ஊருகளிலை ஒருதன்ர உழைப்பிலதான் பேரப்பிள்ளை, பூட்டப்பிள்ளை கூட சாப்பிடும். ஒரு தோட்டக்கார்ன் கூட தன்ரை தனி உழைப்பிலதான் அந்த நாளிலை கல்வீடு கட்டினவன்: இஞ்சை என்னடா எண்டால்.’
பின் னேரப் பொழுதுகளில்'ன்சகி கிள் கடை துரையண்ணையின் வீட்டு மூன்வளவு மரநிழலில் கடதாசி விளையாட்டு வல்லிபுர ஆழ்வார் கோயிலின் மார்கழி ஞாயிறு பூஜை பிள்ளையர் கோயிலின் அதிகாலை p-. :t_t?:ہn#&iخیبر 2چھ کہہ:نئی چ\*_e... بہ\ சுப்பிரபர்தீம் *နှီ႕ါဋ္ဌိက္ကုိir@ வீட்டுத் தென்னங்கன்றுகளுக்கு தண்ணி மிர்நீதில் என்பவற்றை நினைக்கும் போது எல்லாம் இனித்தாலும்.பேரப்பிள்ளைகளையும், கனகனையும் மருமகள்ையும் விட்டுச் செல்வது என்பது .
"ஹாய் கிறாண்ட் பப்பா' என்ற அழைப்போடு கதவு திறந்திடவே வாத்தியார் நெகிழ்ந்து திரும்பினார்.
'ஊரிலை எண்டால் இந்தப் பொடியள் அப்பையா' என்று தானே கூப்பிடுங்கள்’ கனகசிங்கம் ஐயா என்று அழைப்பதில் உள்ள சுகம் ‘கிறாண்ட் பப்பாவிற்கு” எள்ளளவும் இருப்பதாக வாத்தியாருக்குத் தெரியவில்sைல. வாத்தியாரின் பீெழுதுகள் விடை காணா விசாரணைகளாகவே கழிந்தன. ' '
வழமை போலாவே மூத்தவன் தான் "கிறாண்ட் பப்பாவிற்கு வாங்கி வந்த ஏதோ திண் பண்டத்தை வாத்தியாரின் கைகளில் பவ்வியமாய் திணித்து இறுகக் கட்டி அணைத்து விட்டு கட்டிலில் குப்புற விழுந்தான்.
வாத்தியார் மகன் கனகசிங்கத்தின் வருகைழைய எதிர்பார்த்தபடி இருந்தார். \瓜
'தினக்குரல் - நவம்பர் 2001
முதுசொமாக. வதிரி.இ.இராஜேஸ்கண்ணன்
 

“இவனுக்கு வேறு தொழில் இல்லையா? உழைப்பதற்கு உலகில் எத்தனை வழிகள் உண்டு? இது அவற்றிலெல்லாம் சுகமான வழியோ? அல்லது இப்ப இந்த வேலைதான் கிடைப்பது இலகுவோ? என்னவோ?. எனக்குள் முடிவு
இல்லை. , .”
േ இடப்புறத்தில் அருகருகே அடுக்கப்பட்ட
தகரப் பீப்பாய்களுக்கு முன்னே, தயவு செய்து இறங்கிப் போங்கள் என எழுதப்பட்ட அறிவுறுத்தல். வழமை போலவே முட்கம்பியால் ஆக்கப்பட்ட வீதியோர ஒழுங்கை, வழி எனது சைக்கிளை உருட்டுகின்றேன். -
'கோஹத யண்னே?" ' கெதற யனவா சேர்' 'கோஹத யந்தலாவ?" 'விஷ்வ வித்தியாலய' ‘ஹா. யண்ண யண்ண . . . எனக்குச் சிங்களம் பேசத் தெரியாது எனினும் வழமையான "செக் பொயின்ட் சிங்களம் யாழ்ப்பாணத்து சின்னப்பிள்ளைக்குக் கூட நன்றாகத் தெரியும்.
6 é.
(up ga Giafru Lorras..... வதிரி.இ.இராஜேஸ்கண்ணன்

Page 25
நேற்றுக் காலையிலே நான் 'கம்பசுக்கு போனபோது அந்தச் செக் பொயின்ற்றில் நின்ற முகங்கள் வேறு இன்று உள்ளவை வேறு. எங்கிருந்தோ புதியவர்களைக் கொண்டு வந்து மாற்றி விட்டிருந்தார்கள்.
வழமை போலவே இன்றும், என்னால் இயன்றவரை அந்தச் செக் பொயின்ற்றில் வெளித் தெரிந்த எல்லோர் முகத்தையும் ஒரு துழாவு துழாவிக் கொண்டே 'ஒத்துழைப்புக்கு நன்றி' என்ற வாசகத்தைக் கடந்து சைக்கிளை வலிக்கத் தொடங்குகின்றேன்.
பழைய - அறிமுகமான - ஆனால் நெஞ்சுக்கு நெருக்கமில்லாத - முகங்கள் ஒன்றிரண்டு நிற்கத்தான் செய்தன.
கேட்டு விடுவோமோ..? ஜீத் சி. என்ன நினைக்கிறாங்கள் தெரியாது. பாஷையும் அப்பிடியும் இப்பிடியும். பிறகு அவனேதும் கேட்டால். வேண்டாம் . வம்பில் மாட்டிக்கொண்டு விடுவேனோ என்ற பயத்தினால் என்வழியே போய்விடுகின்றேன். அந்த 'செக் பொயின்றில் இதுவே என் வாலாய நடைமுறையாகிப் போனது.
சனத்தைக் கண்டு இன்றோடு ஒரு மாதமும் நான்கு நாள்களும். காணாத நாள்களைக் கணிக்கும் அளவுக்கு அவன் என்னுள் பதிந்து விட்டானோ?
அவனுக்கு இருபத்தைந்து வயதுதான். கனிவான முகமும் அதன் சிரிப்பும் யாரையும் வசீகரித்து விடும். காக்கியுடையுள் அவன் களவு போயிருந்தான்.
ஏ.எல். படிக்கும் போது வீட்டில் சீனிப் பேணியினுள் கடிதம் எழுதி வைத்துவிட்டுப்போன எனது நண்பன் சந்திரனின் சாயூஷ்கந்திரனையும் இரண்டொரு தடவைகள்
முதுசொமாக. வதிரி இ.இராஜேஸ்கண்ணன்
 

இ)
காக்கியுடையுடனும் , கையில் துவக் குடனும் கண்டிருக்கின்றேன். சனத் சரியாகச் சந்திரனைப் போல இருந்ததால் தான் என்னவோ என்னுள் கலந்து விட்டான்.
சந்திரனைக் கண்டு நான்கைந்து வருடங்களாகி விட்டன. முன்பென்றால் ஆறுமாதங்களுக்கு ஒருமுறை சந்திரனி தாயப் தகப் பனையும் தனி இரண் டு சகோதரிகளையும் பார்க்க வந்து, இரண்டு மூன்று நாள்கள் தங்கிச் செல்லும் போதெல்லாம் இரவு வேளைகளில் நானும் அவனும் ஆரச்சோர மணற்கும்பியிலே இருந்து கதைப்போம். இப்போது அவன் என்ன செய்கின்றானோ.
? உயிருடன் இருக்கின்றானோ?
சந்திரன் என் மனதில் வலம் வரும் போதெல்லாம் சனத்தும் வலம் வருவதை என்னால் தவிர்த்து விட முடிவதில்லை.
சனத்திற்கும் எனக்கும் அறிமுகம் ஏற்பட்ட அந்த நாள் இன்றும் என் உள்ளத்துள் பசுமையாய்ப் பதிந்துள்ளது.
அன்று நான் அவசர அவசரமாக எட்டு மணி விரிவுரைக்கு வெளிக்கிட்டுப் போனேன். வழமை போலவே அந்த 'செக் பொயின்ற்றில் ஐ.சீ. கேட்டான் ஒருவன். நான் எனது காற்சட்டை பின் 'பொக்கட்டை துழாவினேன். எனக்கு இரத்தோட்டமே நின்று போனது. ஐ.சீயை அவசரத்தில் விட்டு விட்டு வந்துவிட்டதை அவனிடம் சொன்னேன். அவன் ஏற்றுக் கொள்வதாக இல்லை. அவனோடு கடமையில் ஈடுபட்ட இன்னும் மூவருக்கும் அவனுக்கும் ஒரு புலியை பிடித்து விட்ட புளகாங்கிதம்.

Page 26
(c.
நான் அவர்களை எவ்வளவோ கெஞ்சி மன்றாடினேன். அவர்கள் விடுவதாக இல்லை.
'ஏய். பெரிய தொரைக்கிட்டே கொண்டு போய், ஒன்னை கே.கே. எஸ். கொண்டு போறது"
நான் பாதி செத்துப்போய் விட்டேன். அப்போது தான் அங்கு 'சனத் வந்தான்.
"மூவ. மம ஹெந்தட்டம அந்த றெணுவா, யாண்ட தெண்ட, ஐ.சி. அறங்கெண்ட' (அவனை எனக்கு நல்லாய் தெரியும். விடு. அவன் ஐ.சி. எடுத்து வருவான்).
'ஏய். போய் ஐ.சி எடுத்திட்டு சுறுக்கா வரணு Ffu.?’’
நானும் அவனது நம்பிக்கைக்குப் பாத்திரமாகவே நடந்து கொண்டேன். முன்பு ஒரு போதும் அறிமுகமில்லாத என்னை நன்றாகத் தெரியும் என்று கூறி அன்று அவன் காத்த நன்றி இன்றும் என்மனதில் நிறைந்த கிடக்கின்றது. அன்றிலிருந்து நானும் சனத்தும் அடிக்கடி மனதைப் பகிர்ந்து கொள்வோம். அவனுக்கு நல்லாகவே தமிழ் தெரியும். மனங்களைப் பரிமாற மொழி ஒரு தடையாக இருந்துவிடக்கூடாது.
சிலவேளைகளில் நான் அந்த 'செக் பொயின்ற் வழியாக போகும் போது சனத் தனிமைப்பட்டு யோசித்து நிற்பான். ஆரம்பத்தில் எனக்குச் சற்று தயக்கம் இருந்த போதிலும் அவனை நோண்டிப் பார்த்து விடும் என் இயல்பு வி வில்லை.
சனத் ஐயே! என்ன யோசிச் சுக் கொண்டு நிற்கிறீங்கள்?' - நான் தான்.
"மொக்குத்நா சுதன் ஐயே’ சலிப்போடு பெருமூச்சாய் வந்த ஒன்றுமில்லை என்ற
முதுசொபமாக s. வதிரி.இ.இராஜேஸ்கண்ணன்
 
 

. මෙ
பதில் அவனுள் மறைந்துவிட்ட ஏதோ ஒன்றை தெளிவாக வெளிப்படுத்தியது.
* சனத் ஐயே! பொய் சொல்லாதேங்கோ. நீங்கள் எதுவோ நல்லா யோசிச்சுக்கொண்டு நிக்கிறீங்கள் என்ன?
‘என்ன சுதன் ஐயே! எல்லாம் வெறுத்துப் போச்சு. இந்த ஆமி வேலை நல்லமில்லே. ஆமில சேந்த நாங்க எல்லா சாவுறது தானே. எங்க வீட்டுக்காறங்கள பாக்கறது குறைவு. சரியா சாப்பாடு இல்லே. நித்திரை இல்லே." இரும்புத் துப்பாக்கிகள் உமிழும் மல்லிகைச் சன்னங்களாக அவன் வார்த்தைகள் என மனதோரம் தூவப்பட்டன.
'' சுதன் ஐயே! எனக்கு ஒரு அக்கா, ரண்ணு தங்கச்சிங்க இருக்காங்க. அப்பா செத்துப்போச்சு. அம்மா இருக்காங்க. அக்கா வீட்ல இருக்கா. தங்கச்சி ஒண்ணு ஏ.எல். சின்னத் தங்கச்சி டிசெம்பர் ஓ.எல். எடுக்கப்போறா. ஒரு கடே வைச்சுக்கிட்டிருந்தே சல்லி பத்தாது. ஆமீலே சேந்தே நாலு வரிசமாச்சு".
தன்னுடைய குடும்பத்தைப்பற்றியெல்லாம் பலவாறு சொல்லிக் கொண்டு இருப்பதே அவனுக்கு LD60 ஆறுதலைத் தந் திருக் க வேண் டும் . நான் சலித்துக்கொள்வதில்லை அவன் பாவம்.
ஒரு முறை நான் அந்த வழியே போகும் போது கடிதம் ஒன்றை வைத்துக் கொண்டு ஆழமாக உறைந்திருந்தான்.
‘சனத் ஐயே! மொகத கல்பனா கறன்ன. ? எனக்குத் தெரிந்த சிங்களம் பேசினேன். எனக்குச் சிங்களம் தெரியாதது அவனுக்குத் தெரியும். சிரித்துக் கொண்டே சொன்னான்.
Cup துசொமாக. வதிரி.இ.இராஜேஸ்கண்ணன்

Page 27
'' சுதன் ஐயே! தங்கச்சி ஓ.எல் எடுக்கிறா சொன்னேன்ல. அவ "போஸ்டல்" ஐ.சி எடுக்கிறதுக்கு போட்டோ எடுக்கணுமா. சல்லி அனுப்பச் சொல்லி எழுதிருக்கா. அக்காட கல்யாணப் பேச்சுக்கு நானு வீட்டே நிக்கணுமா எழுதிருக்காங்க.அத்தான் பாத்திட்டு இருக்கே". என்று கடிதத்தை என் முன்னே நீட்டினான். முழுதாய் முத்து முத்தான சிங்கள எழுத்துக்கள்.
'சனத் ஐயே! உங்கட தங்கச்சியின்ரை எழுத்து நல்ல வடிவா இருக்கு" -
“ஒவ். ஒ அவ நல்லா கெட்டிக்காரி. படிப்பா. என்னிலே நல்ல விருப்பம் அவவுக்கு வீட்டே ஏங்கூடவே படுப்பா. எங்கூடவே சாப்பிடுவா. எனக்கு அவவை பிரிஞ்சு நிக்கிறது பெரிய கஷ்ரம். போனவரிசம் நா போனே. அவ வேலை விட்டு விட்டே வரச்சொல்லி சொன்னா. முடியுமா? வேலையை விட்டுட்டு போனாலும் விடமாட்டாங்க. . . ஓங்களுக்குத் தெரியுமல்ல',
அவனுக்குள்ளும் உறவுகள் - பாசங்கள் - விருப்பு வெறுப்புக்கள்.
இவனுக்கு வேறு தொழில் இல் லையா? உழைப்பதற்கு உலகில் எத்தனை வழிகள் உண்டு? இது அவற்றிலெல்லாம் சுகமான வழியோ? அல்லது இப்ப இந்த வேலைதான் கிடைப்பது இலகுவோ? என்னவோ?. . . எனக்குள் முடிவு இல்லை.
"ஏன் சனத் ஐயே! வேலையை விட்டுட்டுப்போக முடியாட்டில் "லிவு எடுத்துக்கொண்டு கொஞ்சநாள் போய் வீட்டை தங்கச்சி சோதினை எடுக்கும் வரைக்கும் நிண்டு வரலாம்தானே".
முதுசொமாக. வதிரி இ.இராஜேஸ்கண்ணன்
 

* சுதன் ஐயே! லீவெல்லாம் நாங்க எடுக்கிறது கஷ்ரம். "லீவு எடுக்க லீவு போம் கூட கிடைக்காதுங்க. சுதன் ஐயே! எங்கையாச்சு சிங்கள 'லீவு போம் இருந்தா எடுத்திட்டு வந்து தர்ரீங்களா? எங்கிட்டை இருந்தது ரண்ணு ‘போம் போட்டும் "லீவு வரல்ல. . . கொறஞ்சது அக்காட கலியான பேச்சுக் காச்சும் போகணுல்லே. ?"
சனத் பொறுப்புணர்ச்சி மிகுந்தவனாக இருந்தான். அன்று முதல் அவனுக்காக சிங்களத்தில் அமைந்த லீவு படிவம்" ஒன்று தேடும் வேட்டையில் வெகு கரிசனையோடு என் மனம் ஈடுபடத் தொடங்கியது. அவனுக்கு லீவு எடுத்துக் கொடுப்பதில் எனக்கேன் இவ்வளவு அக்கறை?
இதற்கிடையே இரண்டொரு தடவை லீவு போம் பற்றி அவன் எனக்கு ஞாபகப் படுத்தினான்.
இதற்கிடையில் சனத்தை அங்கு காணவில்லை. அவனை எங்காது மாற்றியிருப்பார்களோ?. . . . அல்லது அவனுக்கு லீவு கிடைத்திருக்குமோ?
எண் மனம் ஒரு மாதமாக இப் படித் தான் பலகேள்விகளைக் கேட்டு சுமையேற்றிக் கொண்டு இருந்தது.
எனக்கும் மனம் இடங்கொடுக்கவில்லை. சைக்கிளை அதற்கு மேல் மிதிக்கவும் மனம் ஏவவில்லை. திரும்பி வருகின்றேன். 'செக் பொயின்றினுள்" மிக நிதானமாக நடந்து என்னைப் பார்த்துச் சிரிக்கும் ஒரு காக்கி உடைக்காக ஏங்குகின்றேன். நான் எதிர்பார்த்தவாறு ஒருவன் என்னிடம் ஐ.சி. கேட்டுச் சிரித்தான். அவனைச் சில சமயம் சனத் கூடவே கண்ட ஞாபகம்.

Page 28
“சேர். . . சனத் மாத்தையா எங்கே? கனநாளா காணேல்லை?. . .' நிதானமாகக் கேட்டேன்.
‘சனத்?. ஒங்களுக்குத் தெரியாது? சனத் செத்துப் போச்சு. ܝ .
என் டயறியினுள் இருந்த அவனுக்காக எடுத்து வைத்த லீவு போழ்'er முகம் தெரியாத சனத்தின் தங்கையாகவும், தமக்கையாகவும் நிரப்பப்படாமல் வெறுமையாக. . . கண்ணோடு கரைந்து நிலைத்தது. என் கால்கள் "செக் பொயின்றினுள் விதிப்படியே நடந்தன.
சனத் 'சந்திரன். எல்லாப் பக்கத்திலும் சாவுகள். ஒவ்வொன்றின் பின்னாலும் ஒரு பெரும் சோகம் பொதிந்திருப்பது மனதில் உறைக்க சைக்கிளில் ஏறி உழக்கத் தொடங்குகின்றேன்.
リー。
G. G.
சஞ்சீவி - பெப்ரவரி 2000
முதுசொமாக. வதிரி.இ.இராஜேஸ்கண்ணன்
 

“பொடிuளுக்கு செத்தவீட்டை வீடியோ பண்ணியாவது அனுப்பி, ஐவுக்கவேணும். தாயின்ரை செத்த வீட்டை
u intirisaism 6hift' u mresù
அதுகளின்ரை
மனம் என் Uri Gui Guh?. . .
பித்த மனங்கள்
LDTர்கழி மாதத்து நிஷப்த அதிகாலையின் கூதல்
முழுவதையும் வரட்டி எடுத்த்து அந்தக் குட்டை நாயின் ஊளை ஒலி. காற்றில் மிதந்து வந்த அந்த வெறுமை ஒலியின் ஒலம் என் இதயத்தினுள் இனம்புரியாத ஒரு கTதியை இறக்கிவிட்டுச் சென்றது. நேரம் அதிகாலை நான்கு மணியிருக்கும். ஏதோ ஒரு பெரிய இழப்பிற்கு அச்சாரமாகவே அமைந்து விட்டுப்போகும் ஒலியோ அது? அந்த அவல ஒலின்யிக் கேட்டுவிட்டு காற்றுக்கூட காதைப் பொத்திக் கொண்டது. அதன்பின் கண்கள் மூட மறுத்தன. கணங்கள் யுகங்கள்ாக ஊர்ந்தன.
கனகலிங்கம் ஒவசியர் வீட்டில் ஒரே சனக்கூட்டம். ஆண்களும், பெண்களுமாக முண்டியடித்துக்கொண்டு உள்ளே போகிறார்கள் வாசலிலே கருகிப்போன
முதுசொமாக. வதிரி.இ.இராஜேஸ்கண்ணன்
..

Page 29
(32)
பொன்னொச்சி மரம் மார்கழி மாதத்திலும் துளிர்விடாத பெரிய பலாமரம். ஆளளவில் வளர்ந்து நிற்கும் மழைப்புற்கள். அதன் நடுவே வாயில்வரை வகிர்ந்துவிட்ட ஒற்றையடிப்பாதை. நிலைகளும் , கதவுகளும் , இடித்தெடுக்கப்பட்ட அரைகுறை நிர்வாண வீடு.
“ஒவசியர் மாமி செத்துப் போச்சுதாம்” என்னைக் கடந்து சென்ற ஒரு சிறுவன் சொல்லிக்கொண்டே ஓடினான். ஓரிரவில் நாமெல்லாம் பெயர்ந்து சென்ற வேளையில், ‘மாமி எங்களோடை வாவனெனை கூட்டிக்கொண்டு போறம். இங்கை இருந்து வெடிச் சத்தத்துக்கே செத்துப்போவாய்' . என்று கேட்டபோது,
'இந்த வீடுவாசல், சாமான் சட்டை விட்டிட்டு கடைசிவரையும் நான் வரமாட்டேன். இதெல்லாம் கள்ளர் கொண்டு போக என்ரை பொடிபொட்டை வந்து என்னத்தை பாக்கிறது. அதுகள் பாவம் இரத்தத்தை புளிஞ்சு சேத்த சொத்துக்களெல்லே. நீங்கள் போங்கோ நான் செத்தாலும் என்ரை பிள்ளையளின்ரை வீட்டிலேயே செத்துப்போறன்’ என்று உறுதியாகச் சொல்லிவிட்டு ஒவசியர் மாமி’ இரண்டு வருடங்களின் பின்னே இன்று தன் பிள்ளைகளின் வெறும் வீட்டிலே இறந்துவிட்டாள்.
வேகமாகச் சைக்கிளை உழக்கிச் சென்று நானும் சனக்கூட்டத்தினுள் சங்கமிக்கின்றேன்.
செய்தி கேள்விப்பட்டு ஒவசியர் மாமியின் கணவன் கனகலிங்கம் ஒவசியரின் சகோதரர்களின் பிள்ளைகள் வந்திருந்தனர். ஒவசியரின் முதலாண்டுத் திவசத்திற்குப் பின்னர் இன்றுதான் அவர்களை ஒவசியர் வீட்டிலே நான் காண்கின்றேன்.
 

டு)
அந்த உறவுகள் ஆங்காங்கே நின்று ஏதேதோ குசுகுசுக்கின்றன. பார்த்துக் கொண்டிருந்த அயல் தம்முள் பேசிக்கொண்டது.
“என்னவாம் செத்தவீட்டை ஆர் பாக்கப் போகினமாம்” ஒருத்தி தக்கு வைத்துக் கேட்டாள். ' பெறாமக்களே வந்து நிண்டு ஆளையாளைப் பாக்கினம்”
இன்னொருத்தி புட்டு வைத்தாள். 'இந்தவிடு கிடக்கிற கேவலத்திலை இஞ்சைவைக்க என்னெண்டு செத்தவீடு கொண்டாடுகிறது? பெறாமக்களில் ஒருவர் அயலவர் ஒருவரிடம் பதிலை எதிர்பாராது கேள்வி கேட்டார்.
"பொடியளுக்கு செத்தவீட்டை வீடியோ பண்ணியாவது அனுப்பி வைக்க வேணும். தாயின்ரை செத்தவீட்டை பாக்காவிட்டால் அதுகளின்ரை மனம் என்ன பாடுபடும்.” தமக் குளிர் குசுகுசுத்து எடுத்த முடிவுகளை அயலவர்கள் அறியும் வண்ணம் பெறாமக்கள் சூசகமாக பறைசாற்றிக் கொண்டார்கள்.
உயிரடங்கிவிட்ட ஒவசியர் மாமி’ எப்படியெல்லாம் கஷ்டப் பட்டு வாழ் நீ திருந்தாள். தனது மூன்று பிள்ளைகளையும் ஆளாக்கி எடுப்பதற்கு அவள் பட்ட பாடுகள் வார்த்தைகளில் வசப்படாதவை.
கனகலிங்கம் ஒவசியருக்கென்ன வாழ்ந்த போதும் கவலையில்லை மடிந்த பின்பும் கவலையில்லை. அனுராதபுரத்திலே வேலை பார்த்த அவர் இறுதியாக நடந்த கலவரத்தின் பின் யாழ்ப்பாணம் வரவேயில்லை.
இன்னும் வராதபடியால் நிச்சயமாக அவர் கலவரத்திற்கு இரையாகி இருக்க வேண்டும்.

Page 30
ஒவசியர் இறந்த பின்னர் இரண்டு மூன்று வருடங்களின் பின்னேதான் அவனை இவனைப் பல்லிளித்து ஒருவாறு சொற்பதொகை பென்ஷன்' ஒன்றை பெறமுடிந்தது மாமிக்கு.
கணவன் இறந்த பின் னர் இரண்டு ஆணி பிள்ளைகளையும், ஒரே ஒரு பெண் பிள்ளையையும் படிக்கவைத்த வரலாற்றை கேட்டால் ஆட்லறிகூட அழுதே வெடிக்கும்.
முற்றத்து ஒற்றைக் கறுத்தக்கொழும்பான் மரத்துப் பழங்களை சந்தையில் நாள் முழுவதும் காத்திருந்து விற்ற நாள்கள்; பின்வளவு முருங்கைக் காய்களை தெருவில் சந்தை கூட்டி விற்ற காலம்; வீட்டிலே தோசை சுட்டு வீடுவீடாய் கொண்டலைந்து விற்ற நாள்கள்; காதில் போட்ட தோட்டை விற்று பிள்ளைகளுக்கு பாடசாலை யூனிபோம் தைத்த நாள்கள். இவைதான் அந்த மூன்று பிள்ளைகளுக்கும் இங்கிலாந்திற்கும் சுவிற்சலாந்துக்கும் விமானப் பாதைகளைச் சமைத்துக் கொடுத்தன என்பதை யார் சொல்வார்? சொன்னாலும் கேட்பதற்கு அவள் செவிகளில் ஆன்ம அணுக்கள் எவையுமே இப்போதில்லை. எவ்வாறு ஒவசியர் மாமியின் அடுப்படியில் இருந்து நெய்த்தோசை சாப்பிட்ட ஞாபகங்கள் பசுமையாய் உள்ளதோ அவ்வாறே அவள் பட்ட கஷ்டங்கள் கூட இன்றும் என் மனதில் நிணமும் சதையுமாக பதிந்துள்ளன. “சரிசரி .கார் வந்திட்டுது பொடியை தூக்குங்கோ’ மாமியின் உறவினர்கள் “பொடிக்கு" உறவினர்களாகி அமளிப்பட்டனர்.
ஒவசியர் மாமியின் முகத்தோடு நிலைத்து நனவிடைத் தோய்ந்த என் கண்கள் அத்தோடு மீண்டது.
 

இறுதி வேளையின் மாமியின் பொடியை தூக்குவதற்கு ஒரு கை கொடுக்கப்போன என் கையில் அவளது தலையணைக்குக் கீழ் இருந்த ஒரு அந்நிய நாட்டுக் கடிதம் கிடைத்தது. எனது சராசரி மனித மனம் யாரது கண்ணும் படாமல் மறைக்கத் தூண்டியது.
ஒவசியர் மாமியை அன்று பிற்பகலிலேயே வீடியோ படப்பிடிப்பு மரியாதைகளோடு ஒரு பிடியில் அடக்கினார்கள்.
அதுவரை கைக்கெட்டிய அந்தக் கடிதத்தை வாசிக்கக் கொண்டிருந்த ஆவலை அடக்கிக் கொண்ட நான் அவசர அவசரமாக என் வீடுநோக்கி சைக்கிளை வலிக்கின்றேன.
லண்டன்
12.03.1995
அன்பின் அம்மா!
அம்மா நாங்கள் போன நாள் தொடக்கம் உன்னை இங்கே கூப்பிடுவதற்கு அலுவல் பார்த்தவாறே உள்ளோம். நிச்சயம் சரிவரும். உன்னை கூப்பிடுவோம். அப்பாவின் பென்சனில் அங்கர் வாங்கிக் குடி, உடம்பை கவனி “சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம்” வீடு கவனமெணை. மாம்பழத்தை, பிலாப்பழத்தை விற்று நல்லு சாப்பாடு வாங்கிச் சாப்பிடெணை. எமத பெரியப்பாவின் பிள்ளைகளுக்கு கடிதம் போட்டுள்ளோம். அவர்கள் உனக்கு வேண்டிய உதவிகளைச் செய்வார்கள்’.
இப்படிக்கு, உனது அன்பு மகன்.
மீண்டும் காலையில் கேட்ட அதே அவல ஒலி ஊளை ஒலி. மீண்டும் என் நெஞ்சில் இனம்புரியாத ஓர் கனத்தின் அழுத்தம்.
'இந்தக் குட்டை நாயின்ரை தொல்லை பெருந் தொல்லை. அடிச்சுக் கொல்ல வேணும்' அயல்வீட்டாரின் கனத்த வார்த்தைகள்.
முதுசொமாக. வதிரி.இ.இராஜேஸ்கண்ணன்

Page 31
நான் கனகலிங்கம் ஒவசியர் வீட்டிற்குச் செல்கின்றேன். ஒவசியர் மாமி’ படுத்திருந்த படுக் கையருகில் , புத்துறவுகளின் வருகை கண்டு ஒழிந்த அந்தக் குட்டை நாய் ஈனக் குரலில் ஊளை ஒலியால் ஆழமாக அழுதுகொண்டிருந்தது.
என் கண்கள் பிறருக்காகப் பணித்த நாட்களில் இதுவும் ஒன்றானது.அவர்களுக்கெங்கே தெரியும் முற்றத்து ஒற்றைக்
‘மண்ணின் மலர்கள்'- மார்ச் 2001
தூண்டி - மே 1998
 

“மாரீச மாயமான்கள் இருக்கும்வரை சீதைகள் அசோகவனம் செல்வதை ராபaர்களென்ன
as thusiast G6, Gui
தடுத்துவிட முடியாது. ’
6 6.
ஜானகி அக்கா இப்படிச் செய்வாளென்று நான்
கனவிலும் நினைக்கவில்வை. விசரி.”
எனக்கு மனம் நிலை கொள்ளவில்லை. காலையில் தொட்ட நெஞ்சுப் படபடப்பு இன்னும் நின்றபாடில்லை. அவள் வீட்டு கூக்குரல் கேட்டு வீட்டில் துடிதுடித்துப் (3urt (360TT b.
விசரி செய்த வேலையினால் அந்த வீடு சோபை இழந்து சுடுகாடாய்க் கிடக்குது. வேலாயுதம் மாமா ஒரு பக்க வானத்தை வெறித்துப் பார்த்தபடி இருக்கின்றார். கலியாணி மாமி முழங்காலில் முகம் புதைத்து அழுதபடியே உயிர்கரைந்து போகின்றாள். ராணியும் குமரனும் நான்
முதுசொமாக. வதிரி.இ.இராஜேஸ்கண்ணன்

Page 32
வரும் வரைக்கும் ஆஸ் பத்திரியிலிருந்து திரும்பி வரவேயில்லை. ஒருவருக்கு இன்னொருவர் ஆறுதல் சொல்லும் நிலையும் இல்லை.
‘போட்டு விடிய வாறன்’ என்று நான் சொன்ன வார்த்தைக்கு 'ஓம்' சொல்ல ஒருவருமில்லாது பிராணன் இழந்து போயிருந்தது அந்த வீடு. அவர்களின் பிராணனே ஜானகி அக்காதானே. எப்படி அவர்களால் பேசமுடியும்? மூத்த பெண்பிள்ளை அவள்.
வேலாயுதம் மாமா ஒரு பென்சனியர். கல்வித் திணைக்களச் சிற்றுாழியராக இருந்தவர். அவர் பென்சன் எடுத்து விடவும் சொல்லி வைத்தாற்போல் ஜானகி அக்காவுக்கு "ரீச்சிங்' கிடைத்து விட்டது. குமரனும் ராணியும் அவளுக்குப் பின்னேதான். குமரன் இரண்டாம் முறையும் ஏ.எல் எடுத்துவிட்டான். இன்னும் ஒன்றும் கிடைத்தபாடில்லை. ராணியும் ஒரே தரத்தோடு ஓ.எல்லைக் கோட்டை விட்டுவிட்டு இப்போது தாய்க்கு உதவியாக இருப்பதோடு தையல் பழகுவதற்கு போய் வருகின்றாள். ஜானகி அக் காவிற்கு உத தியோ கம் கிடைத்தவுடனேயே வேலாயுதம் மாமா சற்று ஒதுங்கிக் கொண்டார். பென்ஷன் எடுத்து வந்து கொடுப்பார். மாமி முக்கியமான விஷயம் என எதைக் கதைக்க எடுத்தாலும் 'பிள்ளையைக் கேட்டுச் செய்’ என்று சொல்லிச் சொல்லி ஜானகி அக் கா வை தனது சீற்றில உட் கார வைத்துவிடுவார்.
ஜானகி அக்கா நல்ல உள்ளமும் தெளிந்த புரிந்துணர்வும் கொண்டவள். தனது குடும்பத்தின் முன்னேற்றமே தன் குறிக்கோளாகக் கொண்டவள். பள்ளிக்கூடம் போய் வருவாள். பின்னேரப் பொழுதிலும்
முதுசொமாக. வதிரி.இ.இராஜேஸ்கண்ணன்

சனி ஞாயிறு நாள்களிலும் 'ஸ்கொலசிப் வகுப்புப் பிள்ளைகளுக்கு ரியூசன் சொல்லிக் கொடுப்பாள். இரவு வேளைகளில் ஜி.ஏ.கியூ நோட்சுகளோடு உறைந்து போவாள். சிலவேளை தங்கையோடு தையல் வேலைகளிலும் தாயோடு சமயல் வேலைகளிலும் இணைந்து கொள்வாள்.
ஜானகி அக்காவைவிட எனக்கு இரண்டொரு வயதுதான் குறைவு. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவளும் நானும் உளம் நிறையக் கதைத்துக் கொண்டிருப்பதில் எங்களுக்குள் சுகம்.
போயா நாளென்றால் போதும் நான் மத்தியான சாப்பாட்டை முடித்துக்கொண்டு ஜானகி அக்கா வீட்டுக்கு போய் வீடு திரும்ப மாலைப்பட்டுவிடும். அந்தரங்கங்களும் ஆதங்களும் அபிலாசைகளும் பரஸ்பரம் அலசப்படும் போது அதுவும் ஒரு சுகம்.
'மீனா. நான் ஒரு பட்டதாரியா வரவேணும் எண்டு ஆசைப்பட்டன் முடியேல்லை. வேலை கிடைச்சுது. எப்பிடியும் ஜி.ஏ.கியூ படித்து ஒரு பட்டம் எடுத்துப்போட வேணும்.ராணியும் சனியன் குறுக்காலை இழுத்துப்போட்டு கிடக்குது.அப்பா அவளை எத்தினை தரம் சொல்லியிருப் பார் இன்னுமொருக்கால் சோதினை எடடியெண்டு. அவள் கேட்டாளே.தம்பி பாவம் கஷ்ரப்பட்டு படிச்சும் கடவுள் கண்திறக்கிறார் இல்லை.அவனுக்கு ஒரு வேலை கிடைச் சிட்டால் அவனும் தன்ரைபாட்டைப் பாப்பான் தானே' என்று சொல்லும் போதெல்லாம் அவளின் கண்களில் இலட்சியக் கனவு விரியும்.
'மீனா. ராணிக்கு சீதனம் சேர்க்க அப்பாவாலையும் ஏலாது. என்னையும் எப்படியாவது ஆரோ ஒருத்தனுக்கு
முதுசொமாக. . . . . வதிரி.இ.இராஜேஸ்கண்ணன்

Page 33
(0)
கட்டி வைச்சிடுங்கள். பிறகு பாவம் ராணி தனிச்சுப் போவாள்.அதாலை என்ன கஷ்ரப்பட்டாவது தம்பியை ஒரு நல்ல நிலைக்கு எடுத்துப் போட வேண்டும். பிறகு அப்பாவையும் அம்மாவையும் நானும் ராணியும் பாப்பம்
த%
எதிர்கால வாழ்வின் தடங்களைத் திட்டமிட்டு பதிப்பதில் அவள் உறுதியாக இருப்பதைக் கண்டு எனக்குள் பிரமித்துப் போய்விடுவேன்.
ஓர் ஆணுக் குரிய துணிவு, தந் தைக் கு இருக்கவேண்டிய பொறுப்புணர்வு தாயின் தியாகம் எல்லாம் கூடியவள் ஜானகி அக்கா என்ற பிரதிமை என்னுள் அவளுக்கு ஓர் இடத்தைக் கொடுத்துவிட்டது.
அவள் அப்படி செய்துவிட்டாளே என்னும் போது என் இதயம் நிணம் புதைந்த செம்மணியாய் ஏமாற்றத்தைத் தந்து உறைந்துவிட்டது.
என்றுதான் சொன்னாங்கள். இருந்தாலும் எமேஜென்சியில் விட்டிருக்கெண்டால் பயம் தானே?
நல்ல காலம் அலரிக்காய் என்றபடியால். வேறை ஏதாவது மருந்தைக் குடிச்சிருந்தால்.
ஜானகி அக்காவை பொறுத்தவரை அவளால் அதை ஜீரணிக்க முடியாதுதான். அதற்காக இப் படி முடிவெடுத்திருக்கக்கூடாது.
அந்தக் கலியாணத்திற்கு அவள் முதலில் ஒத்துக் கொள்ளவே இல்லை. மாமாவும் மாமியும் தலையாலை கிடங்கு கிண்டினார்கள். அவள் மசிந்து கொடுக்கவே இல்லை.
 

* மீனா. எல்லாத்துக்கும் என்னைக் கேட்டு அம்மாவும் அப்பாவும் முடிவெடுப்பினம் ஆனால் இந்தக் கலியான விஷயத்திலை என்ர முடிவைக் கேளாயினம். தாங்கள் சொல்லுவதைத்தான் சரியெண்டு நிக்கினம். வெளிநாட்டு மாப்பிள்ளை எண்டவுடனே எங்கடை பிரச்சனை எல்லாம் தீந்திடுமே. இப்பதான் ஜி.ஏ.கியூ ‘பாஸ்' பண்ணி இருக்கிறன். இனி "பாட் வண்', 'பாட் ரூ’ எல்லாம் படிக்க வேணும். சரி. படிப்பை விடு. குமரனையும் ராணியையும் யோசிச்சினமே? அதுவுமில்லை. எடுத்தவுடனை கலியாணம். வெளிநாடு. சீதனமில்லை
99
ஜானகி அக்கா இப்படிப் பொரிந்ததை இதுவரை நாளில் நான் கண்டதே இல்லை.
அக்காவின் வார்த்தை மாமியை பொறுமை இழக்க வைத்திருக்க வேண்டும்.
'பிள்ளை.சும்மா கண்டபடி கதையாதை பேச்சி மாதிரி, உவள் பரம்சோதியின்ரை மேள் கம்பசிலை லெக்சரா இருந்தவள். அவள் கனடா மாப்பிளையை கட்டிக் கொண் டு போகேலி லையே டி. உவள் பூரணத்தின்ரை பெட்டை சுவிஸ் மாப்பிள்ளையைக் கட்டிப் போனவள் தன்ர இரண்டு சகோதரிகளையும் வெளிநாட்டு மாப்பிள்ளைகளுக்கு கட்டி வைக்கேல்லையோ? . கேக்கிறன். எங்களுக்கும் உன்னை எங்களுக்கு முன்னாலை வைச்சிருக்க விருப்பம்தான். ஆனால் உன்னை ஒருத்தனுக்கு கட்டி வைக்கிறதுக்கு லச்சக் கணக்கிலை சீதனம் குடுக்க கொப்பரெட்டை என்ன கிடக்குது..? உனக்கே இல்லை பிறகு? . 99
முதுசொமாக. வதிரிஇஇராஜேஸ்கண்ணன்

Page 34
மாமியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஈயக் குண்டுகளாக இறங்கின.
‘'நீ சொல்லடி மீனா. உவள் உப்படி ஒரு கரை சேர்ந்தால் ராணிக்கு ஒரு வாழ்க்கை வராதே. ஏன் - - - - அவன் குமரனையும் ஒரு மாதிரி கூப்பிட்டு எடுத்தால்
மாமியின் வார்த்தைகளை ஆமோதித்துவிட்டால் என் மனச்சாட்சியாக ஊறி நிற்கும் அக்காவிற்கு துரோகி ஆகிவிடுவேன் என்ற பயத்தில் மெளனத்தில் புதைத்தேன். அக்கா ஆழப் புதைந்துவிட்டாள். நானும் மாலையோடு அகன்று விட் டேனி . பிறகு ஒரு படி அக்கா சம்மதித்துவிட்டதாக மாமி சொல்லித்தான் எனக்குத் தெரியும் ‘வேறை வழியில்லையடி’ அக்காவின் இந்த வார்த்தைகள் அவளின் ஆன்மா அடகுபோனதை காட்டி நின்றன. அக்காவின் விரிந்த மனம் இந்த வார்த்தைகள் போலச் சுருங்கிப் போனதை உணர்ந்தேன்.
அக்காவின் சம்மதத்தின் வருகையோடு சீதனம் எதுவும் இன்றியே பேச்சுக்கால் முடிந்து "வெறும் பொம்பிளையாக எடுக்க மாப்பிள்ளை வீட்டார் ஒத்துக் கொண்டார்கள். மோதகமும் மாற்றியாயிற்று.
கலியாணப் பேச்சு முற்றுப்பெற்றதும் அக்காவை பிடிப்பதே பெரிய கஷ்ரம் லீவு கிடைத்தால் அவள் மாமியார் வீட்டுக்குப் போய்விட வேண்டும். இது கலியான பேச்சில் அடங்காத கட்டாய நடைமுறையாகிவிட்டது.
'மீனா என்னடி வாழ்க்கை இது? வேலையை விட்டிட்டு வாறமாதம் கொழும்புக்கு வரட்டாம். மாப்பிள்ளை “ஏஜென்சியோட கதைச்சுப் போட்டாராம். கூப்பிடுவாராம் எல்லாம் முடிஞ்சுதெடி - என்ர வேலை கூட.’
 

அக்கா கண்ணிராய் கரைந்தாள் நான் அக்காவின் முகத்தைப் போல இறுகிப் போனேன்.
அக்கா கொழும்பு போய் ஆறேழு மாதங்களாய் விமானமேற அலையாய் அலைந்தாள். முடியவில்லை. மாமியாரோடு திரும்பிவிட்டாள்.
அவள் ஊருக்கு திரும்பியதன் பின்னர்தான் அந்த மாப்பிள்ளை அங்கே ஒரு பெண்ணை காதலித்திருப்ப தாகவும், அவளையே கலியாணம் செய்யப்போவதாகவும் பெற்றோருக்கு ‘கோல் எடுத்த செய்தி வந்து சேர்ந்தது. இந்தச் செயப் தி அக் காவின் குடும் பத்தில் ஏனையவர்களைப் பாதித்ததைப் போல அக்காவை பாதித்ததாக எனக்குத் தெரியவில்லை. அவள் மெளனத்தின் தத்துப்பிள்ளையானாள்.
மீனா எல்லாம் முடிஞ்சுதடி என்ரை படிப்பு என்ரை வேலை; என்ரை தம்பி தங்கையினரின் வாழ்க்கை”.
நேற்று பின்னேரம் அபூர்வமாக வந்த அவளின் வார்த்தைகள் அவளின் இலட்சியம் ஆன்மா அனைத்தும் மழுங்கிப் போனதைக் காட்டின.
அப்போதுதான் என்முன் வைத்திருந்த 'ரீ ஆறிப்போய் இருப்பதைப் பார்த்தேன். அப்போதுதான் பறந்து வந்திருக்க வேண்டும் செட்டை முளைத்த எறும்பொன்று ரீயினுள் அது தத்தளித் துக் கொணி டிருந்தது. LD 60) p வெள்ளத்துக்குப் பயந்து செட்டை கட்டிய அந்த எறும்பு தேநீர் குவளையில் தத்தளித்துத் தவிப்பது கண்ணில் பட்டது.
மாரீச மான்கள் இருக்கும் வரை சீதைகள் அசோகவனம் செல்வதை ராமர்களென்ன கம்பர்களாலேயே தடுத்துவிட முடியாது ரேடியோவில் உபன்யாசகர்
முதுசொமாக. வதிரி.இ.இராஜேஸ்கண்ணன்

Page 35
ஒருவர் இராமாயணம் பேசுவது காற்றில் கரைந்து என் காதுகளில் சங்கமமாகின்றது.
விடிவிடியுதெண்ண அவளைப் போய் பார்த்துவிட வேண்டும் முடிந்தால் அவளது புத்தி மங்கிப் போன செயலுக்கு விளக்கத்தையும் கேட்டுவிட வேண்டும்.
சஞ்சீவி - டிசெம்பர் 1999.
 

“அவர்கள் இருவருக்கும் தமது மூச்சோடு கரைந்த மண்வாசனை வாழ்வோடு கரைந்த வாலாயங்கள் உயிரை உருக்கிக் கட்டிய வீடுவாசல் எதையும் விட்டு வெறும் கூடாகி வந்து விட முயவில்லை. . . . .
6 6
பொடிக்கு என்ன காய்சலோ தெரியாது
வைச் சுக் கொண்டு இருக்கிறியள். டெங்கு. டெங்கெண்டு சனமெல்லாம் பயந்து சாவுதுகள் நீங்கள் என்னெண்டால் ஒரு அறுப்பும் விளங்காத சனம் மாதிரி’. பக்கத்து வீட்டுப் பார்வதி மாமி வெற்றிலை தட்டத்தை எடுத்தவாறே பொரிந்து கொண்டாள்.
பார்வதி மாமிக்கு எங்கள் குடும்பத்தில் விஸ்தாரமான அக்கறை உண்டு. அவள் எங்கள் அப்பாவின் ஒன்றுவிட்ட சகோதரி. அப்பா என்றால் அவளுக்கு உயிர், நாங்கள் இடம்பெயர்ந்து வீடுவாசலை விட்டு வந்தபோது அவள்தான் தனது பக்கத்து வீட்டினை எமக்குப் பெற்றுத் தந்தவள். மாமிக்கு இரண்டாவது பெட்டை ' கட்டாமல்’ இருக்கிறாள்.
முதுசொமாக. வதிரி இ.இராஜேஸ்கண்ணன்

Page 36
III
I
சுவிஸ்ஸிலை நிற்கின்ற மூத்தண்ணாவிற்கு அவள் "தோதுதானே என்று சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மாமி சொல்லிவைத்து விடுவாள்.
“ராசு. என்ன நீ பொடி இப்பிடி வாடிப்போய் கிடக்குது? முகமெல்லாம் வெள்ளை பேர்ந்து போய்க் கிடக் குது. நீ விளையாட்டு மாதிரி காட்டாமல் வைச்சிருக்கிறாய்” .
அப்பாவை ராசு’ என்றுதான் எல்லோரும் கூப்பிடுவார்கள். மாமி உரிமையோடு அப்பாவைக் கடிந்து பேசினாள்.
‘மாமி. . . . அவனை மயில்வாகனம் டொக்ரரெட்டை கொண்டுபோய் காட்டி மருந்தெல்லே எடுத்தது'.
அக்கா மாமியை குறுக்கிட்டாள். **கண்டறியாத மயில்வாகனமும் மண்ணாங்கட்டியும். அவனுக்கு என்ன தெரியும்? தேங்காய்ப்பூ வைத்தியன். சும்மா பனடோலை அரைச்சு மாவாக்கி சரைகட்டி குடுக்கிறவனெல்லாம் டொக்ரரே?. ராசு நீ பொடியை கொண்டுபோய் ஆசுப்பத்திரீலை வடிவாக் காட்டி மருந்தெடு. வெற்றிலை போட்டால் மாமிக்கு உண்டாகும் சராசரி நளினத்தோடு கூறிமுடித்தாள்.
* தம்பி, பொடியன் சின்னவன்தான் எண்டாலும் அவன்ரை மனசிலை ஏதோ ஏக்கம் விழுந்து போச்சுது.
அவனுக்குக் காய்ச்சல் கீச்சலெண்டுட்டு மருந்துகளைக்
குடுக்கிறதை விட்டிட்டு பொடியனை ஒடியாடிச் சந்தோஷமா
விளையாடித்திரிய விடுங்கோ எல்லாம் சரிவரும்’
அப்பாவிற்கு மயில்வாகனம் டொக்ரர் இப்படிச்
சொல்லிவைக்கும் போது நானும் கூடவே நின்றேன்.
முதுசொமாக. வதிரி.இ.இராஜேஸ்கண்ணன்
 
 
 
 
 

தம்பிக்கு இப்ப பதினொரு வயதுதான் நடக்கிறது. இந்தப் பிஞ்சு வயசிலை அப்படி என்ன அவனுக்கு. எனக்கு இருபத்தாறு தாண்டியும் எவ்வித ஏக் கமோ. பொறுப்புணர்வோ இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அப்படித்தான் அம்மாவும் என்ன்ை "பொறுப்பில்லாத பொடி என்று அடிக்கடி கூறுவாள்.
தம்பியை எண்ணி எங்கள் குடும்பமே கலங்கி நிற்கின்றது. அடிக்கடி அர்த்தமில்லாமல் அவன் கண்கலங்குகிறான். உடலில் பதட்டம் ஏறி படபவென நடுங்குகின்றான். கண்களை இறுக மூடிக் கொண்டு படுக்கையிலே குப்புறப் படுத்து விசும்புகிறான்.
எனக்கு ஓரளவுக்கு தம்பியின் ஏக்கம் விளங்காம லில்லை.புரிந்ததை புகட்டும் அளவிற்கு எங்கள் குடும்பத்தா ரின் மனோநிலை, ஒன்றும் பக்குவப்பட்டும் விடவில்லை. 'மிருசுவில் காளியம்மன் கோயில் இப்ப புளியடிச் சந்திக்கு கிட்ட எங்கையோ ஒரு அண்ணமார் கோயிலுக்கு முன்னாலை நடக்கிறதாம். கட்டுச் சொல்லுகினமாம். அங் கை ஒருக்கால் கொண்டுபோனால் சரிவரும். நாங்களெல்லாம் ஊரிலை இருக்கையுக்கை போய் வந்த கோயில் ஏதும் குறைபாடாயிருக்கும். அம்மாளாத்தை தன்னெட்டை வரச்சொல்லிக் கூப்பிடத்தான் இப்பிடிச் செய்யிறா போலை கிடக்கு”.
இது அம்மாவின் கட்சி. இடம்பெயர்ந்து வந்தபின்னர் அம்மா இதை மறந்துவிட்டா என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் எப்படியோ காளியம்மன் இடம்மாறி இயங்குவதை மனுசி கண்டுபிடித்து விட்டா.
எனக்கு ஒரு பொழுதுபோக்கும் இல்லை. எங்கடை ஊர் பொடியள் சிலர் பின்னேரத்தில் புளியடிச் சந்தியிலை
CLP 25 I GN3FTLDT 35..... வதிரி.இ.இராஜேஸ்கண்ணன்

Page 37
கூடுவோம். எங்கடை ஊர் ரியூஷன் ஒன்றும் அந்தச் சந்திக்குப் பக்கத்திலைதான் இயங்கி வருகிறது. பின்னேரப் பொழுது ஒரு மாதிரி சந்தோஷமாய் போய்ச்சேரும்.
காளியம்மன் கோயிலும் இடம்மாறி இயங்குவதை அங்கு முன்னரே அறிந்தும் அம்மாவிடம் நான் சொல்லவில்லை. மனுசி உடனே தேசிக்காய், பால், பழம் எல்லாம் கொண்டு வெளிக்கிட்டுவிடும். பிறகு எனக்குத்தான் உலைச்சல், ஏற்றி இறக்க வேண்டும்.
"ஏதும் குறைபாடா இருக்கும்” என்று அம்மா கூறியது அப்பாவின் காதில் சாதுவாக விழுந்திருக்க வேண்டும். திரும்பி ஒரு பார்வை பார்த்தார். அம்மா கொங்கணவன் பார்த்த கொக்காகி நின்றாள்.
அவ்வளவும்தான் எனக்கு நல்ல புழுகம், காளியம்மன் கோயில் விஷயத்தில் அப்பாவும் நானும் ஒரு பக்கத்தில் தான் நிற்போம்.
இப்ப ஒருரண்டு மாதமிருக்கும். இதே மாதிரித் தான் தம்பி மனங்குழம்பிக் கொண்டு கிடந்தான் அப்ப ஒரு கிழமையாக பள்ளிக்கூடம் கூடப் போகமாட்டான் எண்டு படுத்திருந்தான். இப்பவும் அப்பிடித்தான் கிடக்கிறான். பள்ளிக்கூடம் லீவு எண்டதாலை பறவாயில்லை.
இரண்டு மாதத்துக்கு முதல் பேப்பரிலை ஒரு செய்தி வந்தது. கைதடியிலை இருந்த முதியோர் இல்லத்திலை ஷெல் விழுந்ததாம். அந்தச் செய்திதான் அவனை அப்போது உலுக்கியிருக்க வேண்டும். அப்போது அவன் வாய்விட்டே கேட்டான்.
** SlöLDIT...... எங்கடை விசுவப்பப்பாவும் பாட்டியும் அங் கைபோய் இருந்திருப்பினமோ? இல்லாட்டில் வீட்டிலைதான் இருந்திருப்பினமோ?”
 

அன்று தம்பியின் முகத்திலே பார்த்த அதே ஏக்கம் தான் இன்றும்.
இரணி டு நாட்களுக்கு முன் னர் யாரோ நாலைந்துபேரை வெட்டிப் போட்டதாக கதை ஒன்று பரவலாக அடிபட்டபோதும் அம்மாவிடம் தம்பி அதே மாதிரி ஏக்கத்தோடு கேட்டான்.
'அம்மா.விசுவப்பப்பாவும் பாட்டியும் வீட்டிலை இருப்பினமே கிழவி கிழவரையும் வெட்டுவினமே?”. அவனது மனதில் இந்தக் கேள்வியோடு தொட்ட ஏக் கம் மூனர் று நாளாகிவிட்டது. இனி னும் குறைந்தபாடில்லை.
விசுவப்பப்பாவும் பாட்டியும் மூன்று தலைமுறையை முழுதாகக் கண்டவர்கள். அதுகளுக்கு அப்பா பெற்றெடுத்த பிள்ளை இல்லை என்பது எங்கள் தலைமுறையிலே யாருக்கும் தெரியாது. ஏன் தம்பிக்குக் கூடத் தெரியாது. விசுவப்பப்பாவுக்கும் பாட்டிக்கும் பிள்ளைகள் இல்லை. அப்பாதான் அவர்களின் பிள்ளை - வளர்ப்புப் பிள்ளை. பாட்டியை எல்லோரும் வல்லி ஆச்சி என்றுதான் கூப்பிடுவினம் என்றாலும் வல்லினாச்சி' என்பதுதான் அவவிண் பெயர் எண் பது சுனி னாகம் சந்தை வியாபாரிகளுக்குத்தான் நன்றாகத் தெரியும்.
பெட்டி பாய் வியாபாரம் செய்கின்ற வல்லினாச்சி’ என்றால் சுன்னாகம் சந்தையிலே அறியாதவர்கள் எவருமில்லை.
கால மாற்றத் தை அனுசரித்தோ என்னவோ சட்டைபோட்டு அதற்கு மேலே குறுக்குக்கட்டி வியாபாரம் செய்கின்ற ஒரே ஒரு கிழவி அவதான்.

Page 38
ஊருக்குள்ளே வீடுவீடாகச் சென்றும் ஊர்விட்டு ஊர் சென்றும் பாய் பெட்டி சேகரித்து விற்பதுதான் பாட்டியின் வியாபாரம், சிலவேளைகளில் பருத்தித்துறைக்குக் கூட பாய்பெட்டி சேகரிக்கச் சென்று வருவா. சார்வோலைப்பாய், குருத்தோலைப்பாய், தடுக்கு, நார்க்கடகம், தட்டுப்பெட்டி, மூடல்பெட்டி, அடுக்குப்பெட்டி, சுளகு, சும்மாடு, அடவியன், பனம் ஈர்க்கு என்று பாட்டியின் "அயிற்றங்கள்’ பல.
விசுவப்பப்பா ஒரு தோட்டக்ககூலி. கொத்துவேலை, பாத்திகட்டு, வெண்காயம் வைப்பு, கண்டடி கிண்டல், தண்ணிகட்டு, புகையிலை வெட்டு என்று ஒரு காலமும் ஓய்வில்லாத தொடர் வேலைதான். மத்தியானத்தோடு வேலை முடித்து ஒன்றரைப் போத்தல் தென்னங்கள்ளடித்து விட்டு குளித்து சாப்பிட்டு குட்டித்தூக்கம் போட்டு பாட்டியின் வருகைக்காய் பஸ்தரிப்பிற்குச் சென்று காத்திருப்பது. இதுதான். அப்பப்பாவின் அன்றாட வேலை.
அப்பா எங்கடை கல்விக் கந்தோரில் ஒரு தலைமை கிளார்க் நாலு பேரின் பார்வையில் நல்லாக படித்த மனுசன் என்றெல்லாம் வருவதற்கு அந்த ரண்டு கிழடுகளும்தான் காரணம்.
' வல்லியாச்சி உண்ரை பொடியனை இங்கினை ஊர்ப்பள்ளிக்கூடத்திலை சேர். யாழ்ப்பாணம் போய் பெரிய பள்ளிக்கூடத்திலை படிக்க பெட்டியாய் வித்து நீ என்ன செய்யப் போறாய்”.
என்ற சிவசம்பு வாத்தியாரின் குத்தல் கதைக்காகவே நெஞ்சில் உறுதியேற்றி அப்பாவை யாழ்ப்பாணக் கல்லூரியில் படிக்க வைத்தவள் பாட்டி
அப்பாவின் 'கிளார்க் சம்பளம் நான்கு பிள்ளைகளை வளர்த்து படிப்பித்து எடுக்க காணாதுபோய் துண்டுவிழும்
முதுசொமாக. வதிரி.இ.இராஜேஸ்கண்ணன்
 

(57) المسيحية
வேளைகளிலெல்லாம் குறைநிரப்புச் செய்யும் மத்திய வங்கியாக அந்தக் கிழடுகளின் வருமானமே இருந்துவரும் வழக்கம் அண்ணா வெளிநாடு செல்லும் வரை வாலாயமாகவே இருந்தது.
அக்காவிற்கு கலியான வயது வந்ததும் அப்பாவால் ஒரு காணித்துண்டு வாங்க முடியாதிருக்கும் நிலை இன்று அன்று சொந்த உழைப்பால் இரண்டறை, குசினி,விறாந்தை, சவுக்கண்டி என்பவற்றோடு கூடிய ஒரு தனிவீடே கட்டிய வர்கள் அவர்கள்.அந்த வீடுதான் இன்றும் எங்கள் வீடு. பாட்டி தன்னுடைய வியாபார இலாபத்திலும் பனங்கிழங்கு வித்துச் சேர்த்த காசிலும் அக்காவிற்கு ஒரு இரட்டைப்பட்டுச் சங்கிலி செய்து கொடுத்தவேளை அக்கா பட்ட புளகாங்கிதத்தை நான் கண்ணால் கண்டவன். தம்பி என்றால் பாட்டிக்கு உயிர். சுன்னாகத்தால் வரும்போது தம்பிக்கு ஏதாவது பட்சணம் இல்லாது வருவதே கிடையாது. பேரீச்சம்பழமும் வறுத்த கடலையும் அவனுக்கு வாங்கி வருவது வழமை.
சேலைத் தொங்கலிலே முடிந்து வைத்த சில்லறைக் காசை யாருக்கும் தெரியாது அவிழ்த்துக் கொடுத்து 'பட்டத்தாள் வாங்கிவா அப்பப்பா கட்டித்தருவாா’. என்று கொடுப்பதும், இரண்டு இலந்தைப் பழத்தை சேலைத்தொங்கலிலே முடிந்து வந்து யார் கண்ணிலும் படாமல் தம்பியின் வாயுள் திணிப்பதையும் அவ்வப்போது ரசிப்பதில் ஒரு தனிச் சுகம்.
விசுவப்பப்பா பட்டம் கட்டுவதில் வல்லவர்- பேர் பெற்றவர். கொக்கு விசுவம்' என்பது அவருக்கு ஒரு பட்டப்பெயர் கொக்குப் பட்டம் கட்டுவதில் விண்ணர் அவர். ஆனால் தம்பிக்கு ‘பெட்டிப்பட்டம்' என்றால், அலாதி

Page 39
(2)
விருப்பம் - நிறைய பலவர்ணக் குஞ்சங்கள் ஒட்டிய பெட்டிப் பட்டம் கட்டி, தானே நூலும் வாங்கி வயல் காணியில் கொண்டு சென்று குழந்தைபோல பட்டம் ஏத்துவார்.
தம்பி விசுவப்பப்பாவோடும் பாட்டியோடும் தான் மாறிமாறி படுப்பான். அவன் அம்மா அப்பாவுடன் பொழுதுகளை கழித்ததிலும் அப்பாவுடனும் பாட்டியுடனும் கழித்ததுதான் அதிகம்.
அப் படிப் பட்டவனுக்கு அந்தக் கிழடுகளின் நினைவில்லாமல் போய்விடுமா?
நாமெல்லாம் இடம் பெயர்ந்து வந்த வேளை அப்பாவையும் பாட்டியையும் கூட்டிவர அப்பா படாதபாடுபட்டார். அவர்கள் வரவேயில்லை.
'தம்பி. ராசு. பிள்ளையளை கூட்டிக்கொண்டு போ நாங்கள் இரண்டுபேரும் நிக்கிறம். வீடு விராயை விட்டிட்டு எல்லாரும் வெளிக்கிட்டால் சரிவராது. நாங்கள் வயதுபோன நாங்கள் தானே. எங்களை ஒருதரும் ஒண்டும் செய்யாயினம்?’.
என்று பாட்டி அறுதியாகவே கூறிவிட்டாள். நாங்கள் எல்லாரும் கெஞ்சி மன்றாடினோம். தம்பி அழத்தொடங்கி விட்டான்.
அவர்கள் இருவருக்கும் தமது மூச்சோடு கரைந்த மண்வாசனை வாழ்வோடு கரைந்த வாலாயங்கள்; உயிரை உருக்கிக்கட்டிய வீடுவாசல் எதையும் விட்டு வெறும் கூடாகி வந்துவிட முடியவில்லை.
'அம்மா. நான் சாமான்களை வரணியிலை ஒரு வீட்டிலை வைச்சிட்டு பொடியளை வடமராட்சியிலை விட்டிட்டு வாறன் நீங்கள் எப்பிடியும் வரவேணும். வெளிக்கிட்டு நில்லுங்கோ’.
முதுசொமாக. வதிரி.இ.இராஜேஸ்கண்ணன்
 

(3)
என்ற அப்பாவின் கண்டிப்பான கட்டளைக்கு தலை யசைக்காது இருக்க முடியாது போனது அவர்களுக்கு.
அப்பா அன்று பின்னேரம் ஊருக்கு திரும்பிப்போக, எமது பகுதிக்குள் பிரவேசிக்கவே முடியாத நிலையில் திரும்பிவிட்டார். அவ்வளவு வெடி முழக்கம். அன்றுவரை அந்த இரண்டு ஜீவன்களையும் அடிக்கடி நினைத்து வீடே விறைத்துப் போகும். அப்பா முதற்கொண்டு தம்பி வரை எல்லாருமே சாப்பாடு சந்தோஷம் இன்றி மெளனத்துள் அமிழ்ந்துவிடுவோம்.
இன்றும் அதே விறைப்புத்தான். தம்பி இப்போதும் அப்படியே கிடக்கிறான். ஓரளவு உறங்கிவிட்டான். அவனது மார்பில் அவனின் கைப்பிடிக்குள் அப்பப்பாவும் பாட்டியும் அவனது கடைசி பிறந்த தினத்துக்கு அவனோடு கூடி நின்று எடுத்த புகைப்படம் முதுசொத்தோடு (pg|Old TLDIT35.
ஏப்ரல் 2001,

Page 40
“குண்டுவீச்சு விமானங்களின் ஒலி வானவெளியில் எழும் வேளைகளில் எல்லாம் ஒவ்வொரு உயிரும் உறைந்து போவது வழமையே. ஆனால்,
மனிதம் மட்டுமல்ல.
நிக்ஷனுக்கு மனக்குழப்பம். அவனுடைய நிலை வழமையானதல்ல. அவனால் தன்மன எண்ண அலை களைச் சொல்ல முடியாதுதானே. ஆனால் உடற்கூறுகளின் நிலைமைகளும், அவனது நடத்தை மாற்றங்களும் அவனை வழமையை விட வேறுபடுத்திக் காட்டின. எங்களைப் போல அவனுக்கும் உளம் என்ற ஒன்றும், அவற்றில் ஏற்படும் தாக்கங்களும் இருக்கத்தான் செய்யும்.
ஏனோ தெரியவில்லை. அவனை இப்போதெல்லாம் இரவில் கூட நாங்கள் அவிழ்த்து விடுவதில்லை. அவனை அவிழ்த்துவிட்டால் அவனை நாங்கள் இழந்து விடுவோமோ என்ற ஒரு உளைச்சல் நிறைந்த மன ஏக்கம் எங்கள் இதயத்தை அமுக்குகின்றது.
முதுசொமாக. வதிரி.இ.இராஜேஸ்கண்ணன்
 

(3)
அவன் என்ன சின்னவனா?. . . . . அவிழ்த்து விட்டால் எம்மை விட்டு ஓடிப் பிரிந்து போக வளர்ந்து பெரியவனானவன்தானே இப்படித்தான் என்மனமும் ஏதேதோ வாதப்பிரதிவாதங்கள் செய்கின்றது. நிக்ஷனுக்கு உள்ள மனக்குழப்பத்தில் பாதியாவது என்னிடமும், என்ன எண்ண மணல்மேட்டில் புதையுண்டு கிடக்கின்றது.
எல்லாவற்றிற்கும் காரணம். நிக்ஷன் மேல் நாங்கள் குறிப்பாக நாண் வைத்திருக்கும் அன்புதான் என நினைக் கிறேன் , நாங்கள் அன்பு வைப் பதில் வியப் பொன்றுமில்லை. ஆனால் அவன் எங்களில் வைத்திக்கும் அன்பு அதுதான் வியக்கத்தக்கது. சின்னப் பருவத்திலிருந்து அவன் என்னோடு விளையாடி, தானும் மகிழ்ந்து, என்னையும் மகிழ வைத்த காலம். அது இனியதுதான்.
என் வீட்டில் நான்தான் ஒரேபிள்ளை. எனக்கு தம்பியில்லாத குறையை தீர்க்கின்றவன் நிக்ஷன்தான். நான் எனது தாயின் அணைப்பில் கிடந்த நாட்களைவிட அவனின் அணைப்பில் இருந்த நாட்கள் ஏராளம், பந்து உருட்டி விளையாடிய காலந்தொட்டு என்னோடு குலாவியவன். அவன் சாப்பிட்ட பின்னர்தான் நான் சாப்பிட்ட காலங்கள் என் மனதை உலுக்குகின்றன.
எனது அம்மா அப்பா என்னில் எவ்வளவு பாசம் வைத்திருக்கின்றனரோ அதில் பாதிக்கு மேலே நிக்ஷனிலும் ஆராத அன்பு வைத்திருந்தனர்.
நிக்ஷன் எங்களில் ஒருவன். எங்கள் மேல் அவன் கொண்ட பாசம் எங்களிற்கும்; அவன்மேல் நாம் கொண்ட பாசம் அவனுக்குத்தான் தெரியும். வார்த்தைகள் அந்தப்பாசத்தை விபரிக்க நாணும்.

Page 41
நிக்ஷனை சங்கிலி போட்ட கழுத்துப் பட்டியில் போட்டு கட்டிவைத்திருப்பதை என்மனம் தாங்க முடியாது குமுறுகிறது. என்ன 'சோக்காக ஒடித்திரிந்து விளையாடிய நிக்ஷன் கட்டுண்டு கிடப்பதை என்னால் பொறுக்க முடியவில்லை. ஆனால், அவனை அப்படிக் கட்டி வைத்த பாவியும் நானே.
நல்ல தளதள என்ற உடம்பும், அந்த உடலைப் போர்த்த கறுப்பு வெள்ளை உரோமமும்.எல்லாம் அவனை விட்டுப் பிரிந்து விட்டன. ஆனால் அவற்றை என்னால் மறக்க முடியவில்லை.
அவன் மெலிந்து போனான். இப்போதெல்லாம் அவன் சாப்பிடுவதேயில்லை. எவ்வளவு பாசத்தைக் கொட்டினாலும் அவன் சாப் பிடுவதில் லை; அவனால் சாப் பிட முடிவதுமில்லை. விலா எலும்புகளெல்லாம் புடைத்து வெளியே தள்ளவும் தொடங்கிவிட்டன.
'நிக்ஷனுக்கு ஏதேன் சுகமில்லையோ? அப்பா மிருக வைத்தியசாலை மூலம் மருந்து வாங்கிச் சாப் பாட்டுடன் கலந்து கொடுத்தார் . நிக் ஷணி சாப்பிடவில்லை. அன்றுதான் அப்பாவிற்கு கோபம் வந்ததை நேரே கண்டேன்.
'மூதேசி நாயே! சாப்பாட்டை வைச் சாலும் தின்னாதாம், மருந்தை வைச்சாலும் தின்னாதாம்' பொத்துக்கொண்டு வந்த கோபத்தினால் நிக்ஷனைக் காலால் உதைத்தார் அப்பா.
நிக்ஷன் வீரிட்டான், ஈனக் குரலால் குளறினான். பின்னர் அப்பாவே தடவிக்கொடுத்து தேற்றியும் விட்டார். நிக்ஷன் மீதுள்ள அன்பின் உச்சமே அவரை அப்படிக் கோபம் கொள்ள வைத்திருந்தது.
6 é
முதுசொமாக. வதிரி.இ.இராஜேஸ்கண்ணன்
 

ஞ)
முன்னரெல்லாம் என்னைக் கண்டவுடன் உடலை நெளித்து வாலை உசாராக குழைத்து பின்னங்காலிலே தொங்கி என் தோள்களில் கைபோடும் நிக்ஷன் இப்போது என்னைப் பார்த்து வாலைக்கூட அசைப்பதில்லை. நல்லாக நலிந்து போனான்.
அவனிடமிருந்த செந்தளிப்பு - உற்சாகம் - சந்தோஷம் எல்லாம் எங்கோ தொலைந்துவிட்டன. எந்த நேரமும் ஏதோ ஒருவித ஏக்கம். சிலவேளைகளில் நீண்ட அமைதி. அந்த அமைதி வேளையில் நிக்ஷனின் கண்கள் நிலைக்குத்தி அவை கண்ணிர் வடிக்கும் சிலவேளை மிகுந்த பரபரப்பு. எதற்காகவோ பயப்பட்டுத் துடிக்கிறான்.
இவை எல்லாம் ஓரிரண்டு நாட்களில் நிக்ஷனின் மாற்றங்களல்ல. இப்போது இரண்டு மாதங்களாக நிக்ஷன் இப்படித்தான். அவன் எதையோ இழந்து துடிப்பவன் போல துடிக்கிறானா? அல்லது இழக்கக் கூடாததை இழக்கப் போவதற்காக வருந்தி பரபரப்படைகின்றானா?. . .
சூனியத்தை வெறித்துப் பார்க்கின்ற பார்வை பின்னர் அதே சூனியத்தைப் பார்த்து கண்ணிர் விடும் கண்கள் ஈனக் குரலில் ஊளையிடும் அழுகை, சிலவேளை, அவனுக்கு ஆண்டவன் வாய்பேசும் சக்தியைக் கொடுத்து விட்டால் கூட அவனால் அந்த நிலையினின்றும் விடுபட முடியுமோ?. . . சந்தேகம் தான்.
இப்போது இரண்டு மூன்று நாட்களாக நிக்ஷனின் பரபரப்பு உயர்வானது. கண்டவற்றுக்கெல்லாம் உடல் குறுகி நடுங்குகின்றான். கட்டிவைத்த சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓட முயற்சிக்கிறான். இயலாமையால் ஓலமிட்டு கத்துகின்றான்.
முதுசொபDாக. - . . . . . * வதிரி.இ.இராஜேஸ்கண்ணன்

Page 42
இப்போது காற்று மிகமோசம், இரவிலும் கூட அப்படித்தான். அந்தக் காற்றின் வேகத்திற்குக் கூட ஈடுகொடுக்க முடியாது பயந்து நடுங்குகின்றான். காற்றின் வேகத்தில் ஆடும் மர நிழல்களின் அசைவுகளின் பயம்கொண்டு பரபரப்படைகிறான்.
காற்றின் அசைவுடன் சங்கமமாகி வரும் விமான ஒலிகள் கேட்டால் போதும், வானத்தைப் பரபரப் போடு அண்ணார்ந்து பார்ப்பான். தன் சக்தியை எல்லாம் சேர்த்துப் பலமாகக் குரைப்பான் கட்டிவைத்த சங்கிலியை பல்லாலே கடித்து அறுத்துவிடத் துடிப்பான். அவனால் முடிவதில்லை. உடனே உடலைக் குறுக்கி சுருண்டு படுத்தவாறு ஊளையிடுவான். அந்த ஒல ஒலி ஒரு வித பீதி உணர்வை என்னுள்ளேயும் உற்பவிக்கும்.
இவை எல்லாம் இந்த இரண்டு மாதங்களிலே பலதடவை நிகழ்ந்தவைதான். அவனது செயற்பாடுகள் யாவும் உயிரை உருக்குலைக்கும் செயல்களாகவே அமைந்தன.
குண்டு வீச்சு விமானங்களின் ஒலி வானவெளியில் எழும் வேளைகளில் எல்லாம் ஒவ்வொரு உயிரும்
என்மனம் வெகுவாக குழம்பிக் கொள்வதை என் சக்திக்கு உட்பட்டவரை தடுக்க முடியவில்லை.
திடீரென எங்கோ ஒரு புறத்தில் விமானங்கள் வரும் ஓசை. எனக்குள் உள்ளுர எழுந்த பயம் உடலை சூடேற்றியது. சற்று நேரத்தில் அவை எங்கே தொலைவில் வட்டமிடுகின்றன என்பதை உணர்ந்து என்மனம் தணிந்தது.
முதுசொமாக. வதிரி.இ.இராஜேஸ்கண்ணன்
 

༼《་ (39)
நிக் ஷண் துடித்தான் விானத்தைப் பார்த்து குரைத்தான். துள்ளி எகிறி கட்டிவைத்த சங்கிலியை இழுத்தான் ஒல ஒலி-எழுப்பி ஊளையிட டான்.
விமான உறுமலும் அலையலையாய் காற்றுடன் சங்கமமாயின. திடீரென விமானத்தின் வேகம் அதிகரித்த ஒலி குடலை நடுங்க வைத்தது. எங்கோ விமானம் குத்துகிறது போல. . . .
நிக் ஷனின் பரபரப்பு வலுத்தது. உடல்
எங்கோ ஒரு குண்டு வெடித்து உயிரை உலுக்கியது. அதே வேகத்தில் நிக்ஷன் சங்கிலியை அறுத்துக்கொண்டு ஒடுகின்றான். எல்லாம் ஒருசில கணங்கள்தான்.
நிக்ஷனின் பின்னே நான் ஓடுகின்றேன் அவனுக்கு அந்தவேகம் எங்கிருந்து வந்ததோ? என்னால் முயவில்லை.
எங்கள் வீட்டின் இரண்டாம் ஒழுங்கையில் உள்ள எங்கள் "அன்ரி’ வீடுநோக்கி ஓடுகிறான்.நான் அமைதி யானேன். அதற்கு மேல் அவன் ஓடித்தொலைந்து போய்விடமாட்டான்.
'அன்ரி’ வீட்டினுள் நான் நுழையும்போதே நிக்ஷனை என் குரல் உயரும்வரை உயர்த்தி கூப்பிடுகிறேன். எல்லோரும் சேர்ந்து என்னோடு கூப்பிடுகின்றார்கள்.
இப்போது விமானம் தொலைவில் எங்கோ வேகமாக தாழ்கிறது. குண்டொன்று வெடித்து அதிர்கிறது. எங்கிருந்தோ நிக்ஷனின் குரல். தாழ்ந்த குரலில் ஊழையிடுகின்றான். அந்தக் குரலில் பொதிந்த பச்சாத்தாபம் உடல் அணுக்களுள் ஏதோ உணர்வுகளை பிரசவித்தது.
முதுசொமாக. - . . . வதிரி.இ.இராஜேஸ்கண்ணன்

Page 43
நிக்ஷனின் ஒலிவந்த திசைநோக்கி ஓடுகிறேன். வீட்டின் பின்புறம் இருந்த பதுங்கு குழியிலிருந்து நிக்ஷனின் குரல் தாழ்ந்த ஸ்தாயியில் அழுகின்றது.
இப்போது என் மனவீணையின் நரம்புகளில் ஒன்று மீட்டத் தொடங்கியது பழைய சுரம் ஒன்று மீள
அன்று மூன்று “பொம்மர்கள் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டு. உறுமியவாறு எங்கள் ஊரின் வான்பரப்பில் சன்னதம் கொண்டு ஆடின. உறுமின; வட்டமிட்டன; தாழ்ந்தன, உயர்ந்தன. ஏதோ எம் தலைதான் அவற்றின் இலக்கு என்பது போல நாமெல்லாம் பதகளித்து உயிர்கொண்டு ஓடினோம்.
"அன்ரி வீட்டு பங்களினுள் இறங்கியும் உடலில் ஏற்பட்ட படபடப்பு நின்றபாடில்லை. எங்கள் வீட்டில் பங்கர் இல்லை. ‘அன்ரி வீட்டின் பங்கர் வாயிலில் வரும் வரை எங்கே எங்கள் தலையில் குண்டு வீழ்ந்து விடுமோ என்ற உயிரின் ஏக்கம்.
எங்கோ இதயத்தை இடியவைத்த ஒரு பெருவெடிப்பு. அதனோடு ஒருவித கொடிய அமைதி. அந்த அமைதியின் கொடுமை ஏதோ ஒரு இழப்பிற்கு அச்சாரமாகவே தெரிந்தது நாய்கள் ஊழையிட்டுக் குரைத்தன.
ஐயோ! நிக் ஷண் . அவனை அவிழ்த் து
நிக்ஷனை அவிழ்த்து வரலாம் என பங்கரின் வெளியே தலையை நீட்டினேன். "ஐயோ! எங் கடை வீடுதான்.எங்கடை வீடுதான்?. வேகமாக பதிந்துவந்த விமானமொன்று உமிழ்ந்த குண்டு உயிரைக் கருக்கும் உஷ்ணத்தோடு வெடித்தது. குண்டு வீழ்ந்த அதிர்வு
முதுசொமாக. வதிரி.இ.இராஜேஸ்கண்ணன்
 

கலையாத அந்தக் கணத்திவேயே நிக்ஷன் பங்கரினுள் பாய்ந்து வந்து வீழ்ந்தான். அவனை கட்டிவைத்திருந்த சங்கிலியில் பாதி அவனது கழுத்தோடு தொங்கிக் கொண்டிருந்தது. நடுகினான்; துடித்தான்; வானத்தை பங்கள் வாசலூடு வெறித்துப் பார்த்து ஊளையிடு
விமானத்தின் இரைவுகள் எங்கோ ஒரு திசைநோக்கி படிப்படியாகச் சென்று மறைந்தன.வெளியே ஒரு குழறல் ஒலி. பங்கரின் வெளியே எங்கள் வாழ்வுகள் வந்தபோதும் உயிரைக் கருக்கிய அந்த நிலப்தம் மட்டும் விலகவில்லை. எமது வீட்டின் அயல் வீடு - கணேஷ் மாமா வீடு. ஒரே சனம். எல்லோரும் குழறி அழுகிறார்கள். நாங்கள் சஞ்சலித்தோம்.
கணேஷ் மாமா வீட்டின் முன்னிருந்த மாமரத்தின் கீழிருந்த பங்கர் வாசலில் உடல் சிதைந்த நிலையில் 35360076)? LDITLDIT . . . . . .
அன்று நிக்ஷனில் கண்ட அதே விறைப்பு, அதே ஈனக்குரல் ஒலி இன்றும்.
நிக்ஷன் வாடா. 6ĩ60DL (BLITT6JLD 6 JITLIT.......
அவன் வர மறுத்தான். அன்றும் இப்படித்தான். நிலத்திலே முன் இரு கால்களையும் நீட்டி, அக்கால் களிடையே கீழ் தாடையைப் புதைத்து, பச்சாத் தாபத்துடன் என்னைப் பார்த்து ஈனக் குரலெடுத்து அழுதான்.
கழுத்துப் பட்டியிலே பிடித்திருந்த என் கையை விட்டு விடுகிறேன். மீண்டும் ஒடி பங்கரினுள் புகுந்தான். பங்கள் வாயிலால் எட்டிப் பார்த்தேன். இப்போது அவனது வால் மெதுவாக அசைந்தது.
'வானொலி - நவம்பர் 1993

Page 44
“பிள்ளை, , , உவன் சாந்தனுக்கு வெளிநாட்டுக்கு பொம்பிளை அனுப்பிறத்ல்லை. உழைச்சுக்கொண்டு வரட்டும், , , இங்கை தான் கலிuாணம், இங்கை
ஒ9
தான் பிள்ளைப் பெத்து எல்லாம். . . .
6 6.
ங்ெகளுக்கு ஒரு குறையும் இல்லை. எங்கடை பிள்  ைள குட்டி எங் க ைள நல் லாத் தானி வைச்சிருக்குதுகள்’.
சந்தர்ப்பம் வரும் போதெல்லாம் தெய்வானை அப்புவாச்சி இப்படிச் சொல்லிப் பெருமையடிப்பா. பரமசாமி ஆசையும் அப்படித்தான்.
உண்மையில் அவர்கள் கொடுத்து வைத்தவர்கள்தான். சாமந்தி மச்சாள் மூத்த பெண் பிள்ளை - கனடாவில். சாந்தன் அத்தான் லண்டனில் இரண்டு பிள்ளைகளும் மாதாமாதம் காசு அனுப்பிக் கொண்டிருக்க எப்படி அப்புவாச்சியால் இப்படிச் சொல்லாமல் இருக்க முடியும்.?
Cupg, Glaf TLDT.gs..... வதிரி.இ.இராஜேஸ்கண்ணன்
 
 

'உவள் தெய்வானை முந்திப்பட்ட கஷ்ரத்துக்கு இப்ப அவளின் ரை எடுப் பெனி ன? " கோல் ட் பிறேம் கண்ணாடியென்ன?. முன்னுடுப்பென்ன?. ரீவி, டெக்,
வெளிநாடு தோத்துப்போமெனை’
பக்கத்துவீட்டுச் செல்லச்சிவம் மாமி அடிக்கடி வெற்றிலையோடு சேர்த்துக்குதப்பும் வார்த்தைகள் இவை. ‘தெய்வானேன்ரை சாமந்திப் பெட்டைக்கு கல்யாணம் முடிச் சுக் குடுக்க அவள் பட்ட கஷரம் , அவள் பெட் டையினி ரை வடிவெண் ன?. பூர் தேவி மாதிரியெல்லே. அப்படியிருந்தும் சீதனம் கொடுக்க வசதி இல்லாமல் கலியாணம் கட்டேக்கை இருப்பத்தெட்டு வயசாப்போச்சு. மாப்பிள்ளை உரும்பிராய்ப் பொடியன். அவன் இவளின்ரை போட்டோவை பார்த்தவுடனை மயங்கிப் போனான். ஒரு சதமும் சீதனபாதனம் எண்டு கதையே இல்லை. பொடிச்சியை கூப்பிட்டு எடுத்துப் போட்டான். இப்ப சாமந்திப் பெட்டைக்கு ரண்டு பிள்ளைகளுமெல்லே. மாப்பிள்ளையும் நல்ல பொடியன் போலை. உவன் சாந் தனி உங் கினேக் க பந்தடிச் சுக் கொண்டும் , பெட்டைகளுக்குப் பின்னாலை சுத்திக் கொண்டும் திரிஞ்சவன். அவனை லண்டனுக்கு அனுப்பிறதுக்கு மாப்பிள்ளைப் பொடியன்தான் காசனுப்பினவன்.”
அம்மாவும் செல்லச்சிவம் மாமியும் சேர்ந்துவிட்டால் போதும். பிஞ்சு மிளகாய் தொடக்கம் பில் கிளின்ரன் வரையும் ஒன்றும் விடமாட்டார்கள். வெற்றிலைப் பணிக்கம் பாவம் மெளனியாக கேட்டுக் கொண்டிருக்கும்.
ஊரில எ ல லோரும் மூக் கிலே விர  ைல வைக்குமளவிற்குத்தான் தெய்வானை அப்புவாச்சி
முதுசொமாக. - வதிரி.இ.இராஜேஸ்கண்ணன்

Page 45
இருக்கின்றா. ஆனால், எல்லாரையும் போல காசைக் கண்டு பழையவற்றை மறந்துவிட்டு வாழவில்லை அவ. என்னில் அப்புவாச்சிக்கு நல்ல பிடிப்பு. நான் அவவிட்டை ரீ.வி பார்க்கப்போற நேரங்களில் அமைதியாக என்னோடு பலதடவை கதைத்திருக்கின்றா.
* பிள்ளை வேணி. ஒரு நாளும் பழைசை மறக்கக்கூடாதெனை. காசைக் கண்டிட்டு குதியன் குத்தினால் கடவுள் கண்ணை மூடிப்போடுவான். உன்ரை மச்சாள் சாமந்தியைக் கரைசேர்க்க நான் பட்ட கஷரம் தெரியுமே? எனக்கு அவளை வெளிநாட்டுக்கு அனுப்ப விருப்பமே இல்லையெணை. மருமேனைப் பேச முன்னம் ஒரு பத்துப்பேர் வராதே. ஒண்டும் வேண்டாம் பெட்டையை அனுப்பினால் போதும் எண் டு ஊருக்குள்ளேயே கேட்கக்கூட நான் விரும்பேல்லை. கோசை கூட அவளை நாங்கள் வெளிநாட்டுக்கு விடவில்லை எண்டே சொல்லிப்
போட்டார்”.
தெய்வானை அப்புவாச்சியின் வார்த்தைகளில் இலட்சியம் தவறிய ஓர் ஏமாற்றம் நின்றது.
'கோசை பெரிய சொத்துப் பத்துக் காரணில்லை. நானும் அப்பிடித்தான் சாமந்திக்கு வயசு போய்க் கொண்டிருந்தது. ஊரிலை கட்டிக்குடுத்து எங்கடை கண்ணுக்கு முன்னாலை வைச்சிருக்கிறத்துக்கு அஞ்சு பத்து லச்சம் குடுக்க எங்களெட்டை என்னடியாத்தை கிடந்தது? பிறகுதான் அந்த முடிவுக்கு வந்தார் கோசை ஒரே ஒரு பொம்பிளைப் பிள்ளை நினைக்கத்தான் பெரிய கவலை.” என்று கூறும்போது தளர்ந்த வார்த்தைகள் அப்புவாச்சியின் தொண்டைக் குழியில் அடைபட்டுக் கொண்டன.
முதுசொமாக. வதிரி.இ.இராஜேஸ்கண்ணன்
 

எண் னதானி ரொறன்ரோ வை வீட்டுக் குளிர் வரவழைத்திருந்தாலும் சில சமயங்களில் அப்புவாச்சி தளர்ந்துபோய் விடுவா. வெறித்து யோசித்துக் கொண்டிருப்பா. அவவின் கோல்ட் பிறேம் கண்ணாடி யினுள் சிறைப்பட்ட கண்ணிரும் என்னைச் சலனப்பட
வைத்திருக்கிறது.
வேணி, உவன் சாந்தனைப் பற்றி எனக்கு கவலையில்லையெணை. அவன் ஆம்பிள்ளைதானே.
ஆனால் என்ரை ஒரே ஒரு பொம்பிளைப் பிள்ளையை’. வார்த்தைகள் விக்கித்து நின்று விடும். மிக கஷரப்பட்டு தொடருவா. அப்புவாச்சி, ' எத்தனை ஆசைகளை அடக்கி வைக்க வேண்டிக்கிடக்கு. என்ரை பொடிச்சி ரண்டு பிள்ளைப் பெத்துக்கும் என்னபாடு பட்டிருக்கும். தலைப் பிள்ளைப் பெத்து கஷ்ரமாத்தான் நடந்ததெண்டு கடிதம் போட்டவள். தாயெண்டிருக்கற நான் பக்கத்திலை இருக்குமாப்போலை வருமேயணை? ஒரு பிள்ளைப் பெத்துக்குக்கூட அரைச்சுக் காச்சிக் குடுக்க எண்டாலும் நான் புண்ணியஞ் செய்யேல்லை’.
தெய்வானை அப்புவாச்சியின் வார்த்தைகள் கிபிர் குண்டுகளாக எண் இதயத்தினுள் வெடிக் கும் . அம்மாவையும் செல்லச்சிவம் மாமியையும் நினைத்தால் எனக்குள் எரிந்துகொண்டு வரும்.
" உன்ரை பொடிச்சி வேணியையும் ஒரு மாதிரி வெளிநாட்டுக்காரன் ஒருதனுக்கு முடிச்சு வைச்சியோ நீயும் தெய்வானைபோல வந்திடுவாய். எனக்கும் ஒரு பெட்டை இருந்தால் அப்படித்தான் செய்வேன். என்ரை மூண்டும் பொடியளாப் போச்சு”. என்று கெக்கட்டம் விட்டுச் சிரிக்கும் செல்லச் சிவம் மாமியின் வார்த்தைக் குத் முதுசொமாக. வதிரி.இ.இராஜேஸ்கண்ணன்

Page 46
டு
தலையாட்டும் அம்மாவைக் கண்டாலே கோபம்தான வருகிறது.
ஒரு மாதம் இருக்கும். ஒரு பின்னேரம் தெய்வானை அப்புவாச்சி வீட்டிற்கு நான் சென்றபோது அப்புவாச்சி கையிலே இரண்டு போட்டோக்களோடு விறைத்துட் போயிருந்தார். புகைப்படங்கள் கூட இல்லையென்றால் இந்த உலகிலே இரத்த உறவுகள் கூட முகம் தெரியாது முடிந்துவிடும்.
புகைப்படத்துள் புதைத்துவிட்ட அப்புவாச்சி என்னைக் கண்டு நினைவு மீண்டா
‘'வேணி. வானை, இரணை' போட்டோவும் கையுமாக நின்ற அப்புவாச்சி குசினிப் பக்கமாக போய் ஒரு தட்டோடு வந்தார்.
‘'வேணி. சாப்பிடெணை, கேக், கண்டோஸ் எல்லாம் இருக்கு. சாப்பிடணை’.
என்ன விஷேஷம் என்ற தொனிப்போடு அண்ணார்ந்த என்னைப் பார்த்த அப்புவாச்சி 'பிள்ளை. போன பத்தாம் திகதி என்ரை பேத்திக்கு பிறந்த நாளாம் இண்டைக்குத்தான் கடிதம், போட்டோ எல்லாம் வந்தது. நானொரு பேச்சி. எங் கடை சாத் திரியைக் கொண் டு பொடிக் கு குறிப்பெழுதிச்சனான். அதிலை பிறந்த திகதி எல்லாம் கிடக்குமெண்டதை திர மறந்தெல்லே போனேன். பேத்தியின்ரை பிறந்தநாள் முடிந்தாலும், இதைப் பிறந்தநாள் பலகாரமாக நினைச்சு சாப்பிடனை”
பிறப்பிலிருந்து இறப்புவரை எல்லாவற்றையும் பாவனை செய்ய வேண்டியதே எங்கள் வாழ்வாகிப் போனதே. போட்டோவுக்கு தாலி கட்டுவது முதல் செத்தவீட்டுக்குப் பந்தம் பிடித்து வீடியோ எடுப்பது வரை.
 

@?)
67 الصمد
“வேணி. இங்கை பாரெணை போடடோ என்ரை பேத்தியைப் பாத்தியே, சரியா சாமந்தியை உரிச்சு வைத்திருக்கிறாள். எண்ரை மூத்த பேரனைப் பார் சரிபா கோசையின்ரை முகச்சேப்புத்தான். மருமேனுக்கும் கொஞ்சம் வண்டி வைச்சிக்கிடக்கு. உண்ரை மச்சாள் காறியின்ரை சொக்கை பாரன்”
அப்புவாச்சி போட்டோவை எனது கையில் தந்து திருவிளையாடல் படத்தில் பார்த்த தருமிபோல எல்லாவற்றையும் தானே சொல்லி முடித்தார்.
என்னவோ தெரியாது. எனக்கே அந்தச் சிறுசுகளை அள்ளிக் கொஞ்ச வேண்டும் போல இருந்தது. அப்புவாச்சிக்கு எப்படி இருக்கும்?
“வேனி. இன்னுமொண்டு சொல்ல மறந்து போன எணை. இண்டைக்குப் பதினஞ்செல்லே திகதி. இந்த மாச முடிவிலை மருமகனுக்கு லீவு வருதாம். பேரப்பிள்ளை யளைக் கூட்டிக் கொண்டு இங்கை வந்து போகினமாம். கடிதத்திலை எழுதிக்கிடக்குது. எனக்கேதோ என்ரை பேரப்பிள்ளையஸ் "அம்மம்மா, அம்மம்மா’ என்று என்னைச் சுத்தி ஒடித்திரியிறது போலை கிடக்குது.”
அப்புவாச்சியின் இறக் கை கட்டிய உள்ளம் விண்தாண்டிப் பறப்பதை என்னாலும் அனுபவிக்க முடிந்தது. இருபது விடியல்களின் மடிவில் ஒருநாள் பின்னேரம் தெய்வானை அப்புவாச்சி வீட்டில் ஒரே குதூகலம். உலகத்து இன்பங்கள் எல்லாம் ஒரு வீட்டில் புகுந்து விட்டால் எப்படி இருக்குமோ அப்படி
"வேனி. வேணி. சாமந்தி மச் சாளும் பிள்ளைகளும் வந்திட்டினமெணை. இதிலை வந்திட்டுப் போவன்”
முதுசொமாக. வதிரி.இ.இராஜேஸ்கண்ணன்

Page 47
டு)
அந்தப் புழுகத்திலும் அப்புவாச்சி என்னை மறந்து விடவில்லை என்பதில் எனக்கு ஒரே சந்தோசம்.
எனக்குள் ஒர் ஆவல் உந்தியது. அந்த ஆவலினுள் தெய்வானை அப்புவாச்சியின் தவிப்பை உண்மையில் தரிசித்தேன்.
சாமந்தி மச்சாளின் பிள்ளைகள் இரண்டும் தங்கப் பூனைகுட்டிகள் தான். மச்சாள் கூட தேவயாணி மாதிரி அவ்வளவு வடிவு.
“நிரோஷ். கம். கம். சீஸ் ஆன்ரி’ சாமந்தி மச்சாள் கனடாவில் பிறந்த தன் மகனுக்கு என்னை முறை தவறாது அறிமுகப்படுத்தி வைத்தாள். நானும் வாஞ்சையோடு கட்டி முத்தமிட்டேன்.
தமையனும், தங்கையுமாக அந்த இரு பிள்ளைகளும் ஏதோ பாஷையில் பொம்மைகளோடு பேசியவாறு விளையாடிக் கொண்டிருந்தன. குழந்தைகளோடு குழந்தையாக அப்புவாச்சியும்.
"ஐயா! . நிரோஸ். அம்மம்மாவைப் பாரெணை அங்கை தாத்தா வாறார். கூப்பிடெனை. தாத்தா.”
பரமசாமி ஆசை மட்டும் சும்மா வா நின்றார். “நிரோஸ். இங்கை. ஐயா!. அம்.மம்.மா கூப்பிடெனைன். அம்மம்மா.” ܡ
தங்கள் பேரப்பிள்ளைகளின் மழலை கேட்க பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டு இருந்தனர். பிள்ளைகள் மலங்க மலங்க விழித்தன.
அப்புவாச்சி மட்டுமல்ல, பிள்ளைகளும் பாவம்தான். "அம்மா அதுகள் பத்து பதினஞ்சு நாளைக்கு நிக்குங்கள் தானே. எப்படியும் உன்னை பழக்கப்படாமலே விடப்போகுது.”
 

தாயின் பிரயத்தனத்தைக் கண்ட மச்சாள் சிரித்துக் கொண்டே சொல்லிச் சென்றாள்.
பழக்கத்தினால் பாசமா? பாசத்தினால் பழக்கமா? பாஷை கூட பழக்கமா?. ஒரே குழப்பம்.
"அப்புவாச்சி, போட்டு வாறன் பிறகு வாறன்
எனக்குள் ஒரு வித அகதிமுகாம் அந்நியம் மேலெழுந்துவரவே அப்புவாச்சி வீட்டிலிருந்து அகன்று விட்டேன். அந்தப் பத்து நாட்களும் குழந்தைகள் நிலத்தில் நடக்கவே இல்லை. பேரனையும் பேர்த்தியையும் இடுப்பிலே வைத்தபடி அப்புவாச்சியும், ஆசையும் - மழலைக்குள் மழலையாய் மறைந்தனர்.
மச்சாள் குடும்பம் போய் கடிதம் ஒன்றும் வந்து விட்டது.
“வேணி. என்ரை பேரனும் பேத்தியும் வந்து பத்து நாள் நிண்டும் ஒருநாளும் 'அம்மம்மா’ என்று கூப்பிடவைக்க முடியாமல் போச்செனை’
கண்ணிர்துளிகளோடு, அலுத்து வந்த அப்புவாச்சியின் வார்த்தைகள், சாமந்தி மச்சாள் குடும்பத்தை பயணம் அனுப்பியவேளை, கண்ணிர் விட்டதன் காரணத்தை இப்போது சொல்லியது.
“பிள்ளை உவன் சாந்தனுக்கு வெளிநாட்டுக்கு பொம்பிளை அனுப்பிறதல் லை. உழைச்சுக் கொண்டு வரட்டும். இங்கைதான் கலியாணம். இங்கை தான் பிள்ளைப் பெத்து
அப்புவாச்சியின் வார்த்தைகள் இதயத்தின் அடியிலிருந்து உறுதியாய் கிளர்ந்தன. எனக்குள் ஒரு விடுதலை உணர்வு
துளிர்த்தது.
"சஞ்சீவி - ஒக்ரோபர் 1999.
SMASMS SJS S S S S S SSSSSSJSSSSJS S S S S S SAAASJSMSASSMSSSMSSSMSSSSSSS S

Page 48
தியாகருக்கு உடலெல்லாம் வெடவுெடத்தது. வியர்த்துக் கொட்டியது. ஏமாற்றம் நெஞ்சை அடைப்பது போலிருந்தது. சாதாரவை திரும் பிப் பார்த்தார். அவள் இடிந்துபோய் இருந் தாள். இரண்டாந்தரம் தன் ஆண்பிள்ளை
காணாமற் போய்விட்டதொரு உணர்வு.
அகதி அந்தஸ்து
டுகு இடுக்கின் வழியே “கண்ணாடி - லாம்பின்’
வெளிச்சத்தில் சாரதாவின் முகம் துலாம்பரமாக தெரிந்தது. முகத்தில் அப்பிப்போய் இருந்த யோசனையின் ரேகைகள் கூட தெளிவாகத் தெரிந்தன.
முற்றமெல் லாம் முழுதாயப் பால் வார்க் கும் நிலாவொளியில் இல்லாத அர்த்தக் கிடக்கைகள் கிடுகிடுக்கின் வழியான அந்தப் பொட்டொளியில் பொதிந்திருந்தது.
"கொட்டகைக்கு வெளியே, நிர்ச்சலனமாய் விரிந்து கிடக்கும் வானத்தை வெறித்துப் பார்த்தபடி யோசனையில் அமிழ்ந்திருந்த தியாகலிங்கத்துக்கு மனைவி சாரதாவின் கண்களிலிருந்து துளித்த இருசொட்டுகளும் இதயத்தின் சுவரில் எரிகுழம்பாகவே விழுந்தன.
முதுசொமாக. - - - வதிரி.இ.இராஜேஸ்கண்ணன்
 

டு)
வீட்டை விட்டு வெளிக்கிட்டு ஒரு வருடத்துக்கு மேலாகிவிட்ட போதிலும் வாழ்க்கை இயல்புக்குத் திரும்பவில்லை என்பதற்கு அந்தக் கொட்டகையே சாட்சி கூறுகின்றது.
அகதி’ என்ற பெயரைவிட இடம்பெயர்ந்தவர் என்ற பெயர் ஓரளவு கெளரவமாகிவிட்ட போதிலும் , அடையாளங்கள் மட்டும் அப்படியே மாறாதிருந்து கதியறுந்த நிலையை பிரதிபலித்து நிற்கின்றன.
இரண்டு பெண்பிள்ளைகளும் தாயுமாக கால்நீட்டிப் படுக்க இயலாத கிடுகு கொட்டகை வீட்டினுள், தியாகலிங்கத்தின் அந்த சைக்கிளுக்கும், நாயனத்துக்கும் தனிச்சிம்மாசனம். ܪܕ
பெரியவள் விடவேமாட்டாள். வாரத்தில் மூன்று நாள்கள் கிடுகு கொட்டகை மெழுகி புனிதமாக்கப்படும். நாயனம்’ வைப்பதற்கென தனியான ஒரு சிறுதிண்ணை. அதன்மேல் அளந்து இழைக்கப்பட்ட தடுக்கிலும் சிறிய பனையோலைப்பாய். அதன்மேல் மடித்துப் போடப்பட்ட கம்பளித்துணி, அதன்மீது நாயனத்தின் கம்பீரமான நிலை. அதனருகே நாள்தோறும் ரயர்கள் கழுவப்பட்டு துடைத்து ஏற்றி விடப்படும் அந்த 'சைக்கிள்’.
இரண்டு பிள்ளைகளையும் மனைவியையும் தவிர தியாகரிடம் இப்போதுள்ள விலைகூடிய சொத்துகள் அந்த நாதஸ்வரமும் சைக்கிளும் தான்.
தியாகலிங்கத்தை எல்லோரும் தியாகர் என்றுதான் அழைப்பார்கள். தில்லானாத் தியாகர்’ என்றொரு பட்டப்பெயரும் தியாகருக்கு உள்ளதை எல்லோரும் அறிவார்கள், தில்லானா மோகனாம்பாள் படத்திலே வந்த சிவாஜிகணேஷனின் நெளிவும் சுழிவுகள், பாவனைகளோடு

Page 49
(2)
நாதஸ்வரம் வாசிப்பது மட்டுமன்றி தில் லானா மோகனாம்பாள் படப்பாடல்களை ஒருவித பிசிறுமின்றி அப்படியே வாசித்தும் ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டதனால் தான் இந்தப் பட்டப்பெயர்.
ஒரு காலத்தில் தியாகர் என்றால் சிறுபிள்ளைகள் கூட அவரை அறிந்திருந்தனர். கோயில் விழாக்கள், திருமணங்கள், மேடை நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் தியாகலிங்கத்தின் "குழல்’ தான். தியாகரின் சுபபந்துவராளி, நாகபராளிகளுக்கு தலையசைக்க அவர் வாசிக்கும் இடங்களிலெல்லாம் பெரிய கூட்டமே இருக்கும். கீர்த்தனைகள், ஆலாபனைகள் முடிந்து அவர் வாசிக்கும் பழைய சினிமாப்பாடல் கேட்க முண்டியடிக்கும் இளம் ரசிகர்கள் ஒரு வகை.
“தியாகன்ரை கலை ஞானத்துக்கு அவன் மட்டும் ஒரு நட்டுவனாயிருந்தால்
அவன்ரை நாயனந்தான் நாடெல்லாம் கேட்கும்.” என்று தியாகரின் குருவான ‘குழல்காரத் தங்கமணி' அடிக்கடி கூறிப் பெருமை கொள்வார்.
கலையின் மீது தியாகரிற்கு உள்ள நாட்டம் தனது வருவாயிலோ, வாழி க் கையில் உயர்விலோ இருக்கவில்லை. நாதஸ்வரத்தை தொட்டு நாற்பது வருடங்களாகியும் பெரிதாக ஒன்றும் தன் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு அவர் சேர்த்து வைக்கவில்லை.
நாதஸ்வரக் காரன் என்றால் தொப்பூழை முட்டும் நான்கு வடம் சங்கிலி, வாய்நிறைய வாசனை வெற்றிலை, கையிலே தங்க வளையற் சங்கிலி; இடுப்பில் அகன்ற கறுத்தப்பட்டி, முன்னே மேற்கரையை தொங்க விழுத்தி உடுத்தியிருக்கும் வேட்டி; தோளில் முழங்கால்வரை
 

டு)
தொங்கும் பட்டுச் சால்வை என்ற பிரதிமையில் எதுவுமே இல்லாத பிரதிமைதான் தியாகர்.
இப்போதெல்லாம் தியாகரின் நாயனம்’ குரலிழந்து கிடந்தது. சாதகம் செய்யக் கூட தியாகர் அதனைத் தொடும் சந்தர்ப்பமே இல்லாது போய்விட்டது. அவரோடு ஒட்டியிருந்த தவில் வாத்தியக்காரர்களும் வேறு கூட்டுக்களையே விரும்புகின்றனர்.
அவர் நல்லாயிருந்த காலத்தில் செய்த கச்சேரிகளில் அவரின் இடதுகாலின் இலாவகமான அசைவினால் விடும் தாளத்தினையே கவனித்து தவில் வாசித்த கூட்டுக்கள் கூட இப்போது வேறு கூட்டுக்களோடு.
தியாகர் கையாலாகாத வெறும் கலைஞர் அல்ல. நல்லாயிருந்தவர்தான். எப்போது தியாகரின் மூத்த மகன் காணாமற் போனானோ அப்போதிருந்தே தியாகரின் நாதஸ்வரம் முகாரியைத் தவிர வேறு ராகம் வாசிக்க முடியாமல் மூச்சிழந்து கிடந்தது. சாடை ‘பூசிக்கொள்ளும்’ வழக்கமும் தியாகரிடம் வந்துவிட்டது.
‘நாயனக் காரன் அமங்கலமாகி விடக்கூடாது என்னெட்டை இருந்த மங்கலமெல்லாம் போச்சு என்ரை ஒரே ஒரு ஆம் பிள்ளைப் பிள்ளையை கடவுள் பறிச்சுப்போட்டான். கோயில் சந்நிதானங்களில் மேடை ஏறி வாசிக்க எனக்கு மனம் வரவில்லை”
போன வருடங்களில் நடந்த எங்கள் ஊர் பிள்ளையார் கோயில் திருவிழாவில் நாயனம்’வாசிக்க இப்படிச் சொல்லி மறுத்துவிட்டார் தியாகர்.
மட்டுவில்லில் இருந்து சென்று யாழ்ப்பாணத்தில் பிரபலமான பாடசாலை ஒன்றில் படித்த அவரது மூத்த மகன் மண்ணோடு எல்லாரும் இடம் பெயர்ந்து, மீண்டும்

Page 50
திரும்பி வந்து பாடசாலை சென்று வந்த சமயம் தட்டாதெரு’ சந்தியில் வைத்துப் பிடிக்கப்பட்டதாகவே எல்லோரும் பேசிக் கொண்டனர். ஐந்து வருடமாகியும் அவன் வரவில்லை. புதைகுழிகள் தோண்டப்பட்ட வேளையில் கூட தியாகர் போயிருந்தார். எதுவித பலனும்
அந்த மகனின் இழப்போடு மனதை விட்டவர் தான். தன் னைத் தானே அமங்கலம் ஆக் கரிக் கொண்டார்.இடமழ9ை8
இசைஞானம் தந்த வெகுமதிகள் எல்லாவற்றையும் தன் மகனது முன்னேற்றத்துக்கு முதலீடுகளாகவே தியாகர் தந்துவைத்தார்.
“என்ரை ரண்டு பொம்பிளை பிள்ளையளையும் நினைச்சுத்தான் இப்பவும் ஏதோ செய்யிறன். அதுகளும் இல் லாட்டி இந்தக் கட்டை எப்பவோ து ைலஞ்சு போயிருக்கும்’
என்று தியாகர் சொல்வது இப்போதைய அவரின் இருப்பிற்கு அர்த்தம் கற்பிப்பதாகவே அமையும்.
நாதஸ்வரம் மெளனித்துவிடவுமே தியாகர் தனது தோட்ட நிலங்களில் தொலைந்து போயிருந்தார். துளை அழுத்திச் சுரம் சேர்த்த கைகள் சோழியன் மணி வெட் டி யொ டு சொந் தங் கொணி டா டியது பெண்பிள்ளைகளுக்காக உழைத்தார்.
தென் மராட்சியின் வாழ்வு வேரோடு சாய்ந்த வேளையில் தான் தியாகர் தன் குடும்பத்தோடு அந்த அகதிமுகாம் கொட்டகையுள் குறுகிப்போனார்.
தியாகருக்கு அந்தப் பகுதியிலே அறிமுகமானவர்கள் இருக்கத்தான் செய்தனர். ஆனால் அவர்களின் வீடுகளின்
Cup SIGNÆFTLDT ES..... வதிரி.இ.இராஜேஸ்கண்ணன்

டு)
மேலதிக அறைகள் (அடிஷனல் றும்ஸ்) அல்ஷேஷ்யன்’ வளர்ப்பு நாய்களோடு வருபவர்களைத்தான் அனுமதிக்கக் காத்திருந்தன. வயதான பெண்பிள்ளைகளோடு வந்ததால் முயற்சித்தார் முடியவில்லை. முகாம் தான் அவரின் குடும்பத்தை முழுதாக அனுமதித்தது.
இங்கெல் லாம் அகதி முகாம் கள் தான் சமத்துவபுரங்களாகி நிற்கின்றன. யாழ்ப்பாணத்தின் நிலவுடமைச் சமுதாய அந்தஸ்துகளை நிர்மூலமாக்கும் வல்லமைகள் சில அகதி முகாம்களுக்கு உள்ளதை தியாகர் உணர்ந்து கொண்டார்.
தியாகரின் குடும்பம் இருந்த அகதிகள் முகாம் கரவெட்டியின் கிழக்கே அந்த வயலோரக் கிராமத்தின் ஒரு குறிச்சியிலே இருந்தது. சில இடங்களில் அகதி முகாம்கள் அல்லோலகல்லோலப் பட்டவையாகவும் இருந்தன. கசிப்புக் காய்ச்சுதல், கடத்தல் பொருள் பதுக்குதல் தொடக்கம் கத்திக்குத்துவரை நடந்த முகாம்களிலிருந்து தியாகர் இருந்த முகாம் முற்றிலும் வேறுபட்டதுதான்.
இருந்தாலும் தனது பெண்பிள்ளைகள் சுதந்திரமாகப் படுத்துறங்க ஒரு இடம் பெற்றுத்தர முடியாது ‘சுதியிழந்த சுபபந்துவராளியாக மாறிவிட்டதை எண்ணித் தன்னுள் கலங்கி நிற்பார்.
“என்ன செய்யிறதெடி ஆத்தை ஒரு மாதிரி சமாளிச்சுத்தான் போகவேனும். எல்லா இடமும் வீட்டிலை இருக்கிறதைப் போலை வசதிகள் வருமே. கொஞ்சம் 'அட்ஜஸ் பண்ணிக் கொள்ளு’
CLP g5Gol-5-FrTLDT95 . . . . . வதிரி.இ.இராஜேஸ்கண்ணன்

Page 51
தன் மனைவி சாராதா கூறும் அசெளகரியங்களை கேட்கும் போதெல்லாம் தியாகர் இதைத் தான் வாய்ப்பாடாகச் சொல்லி வைப்பார்.
சாரதா இப்போது கண்ணீர் விட்டதைப் போலத்தான் போன பொங்கல் நாளுக்கு முதனாளும் கண்ணிர் விட்டாள்.
“ஊரிலை எண்டால் எங்கடை வயலிலை வாற நெல்லரிசியிலை பொங்கல் பொங்குவம், தேங்காய், பால்பழம் எல்லாம் எங்கடை வீட்டான்தான். இங்கை
எங்கை? . இஞ்சரப்பா . விடிஞ்சால் பொங்கல் ஒரு அரைக் கொத்து பச்சையரிசி போட்டாதல் பொங்கிறதுக்கு”.
“என்ன பேய்க்கதை கதைக்கிறாய் நீ”
சாரதா கூறியதை முடிக்கும் முன்னரே தியாகர் "மல்ரி பெரலாக வெடித்தார். அவள் மெளனமானாள்.
“விசர் கதையள் பேசக் கூடாது . எனக்கென்ன ஆசையில  ைலயே . ஊரிலை எண் டா லி பொங்கலென்ன பட்டிப் பொங்கலெண்ன எல்லாம் செய்யலாம் . ஏதோ உன்ரை வீட்டு முத்தத்திலை பொங்கப் போறது மாதிரி வெளிக்கிடுறாய். சரி அதுதான் பறவாயில்லை காலமை காற்றுப்போன சைக்கிளை ஒட்ட வழியில் லாமல் நான் முழிசுறன் நீ கதைக் கிற கதையெண்டால்”.
முதுசொத் தை மட்டுமல்ல முற் றத் தையும் தொலைத்துவிட்ட கொதிப்பில் தியாகர் பொரிந்து தள்ளினார். இருப்புக்கள் தடுமாறியதால் இவர்களின் வாழ்வில் மரபுகள் வாழ்விழந்து நிற்கின்றன.
"சைக்கிள் ஒட்ட வழியில்லாமல்’ என்ற வார்த்தை யுடன் சாரதாவின் மரபுவழிப் பொங்கல் விரும்பம்

டு)
அர்த்தமற்றதென்பதை உணர்ந்து, தன்னைச் சுதாகரித்துக் கொண்டாள். அன்று கண்ட கண்ணின்பின் இன்றுதான் சாரதா வினி கண் கள் உளத் தைக் கரைத் து
உடைப்பெடுத்தன.
"சாரதா. இங்கரப்பா. இதிலை வா. ஆகு தியாகர் மனைவியின் தனிமையை குலைத்தார்.
“என்னப்பா. ஏன்?. பிள்ளையவளளும் படுத்திருக்கிறாளஸ். நீ அழுறதைக் கண்டால் கவலைப்படுங்களெல்லே. 99
தியாகர் மனைவியை தேற்ற முனைந்தார் ஆனால், அவளோ விம்மிப் பொருமினாள்.
"(ਥ..... இங்கை. நீ கவலைப்படாதை கடவுள் எங்களை கைவிடமாட்டான். எல்லாம் சரியாத்தான் வரும்.”
தியாகர் சாரதாவின் தலையில் வாஞ்சையோடு இரண்டுமுறை தடவிக் கொடுத்தார்.
“என் னப் பா. அவை திடீரெணி டு தானி எல்லாத்தையும் சொல்லினம். வரீனம் . முதலிலை பிள்ளையைப் பாக்க வந்ததும் அப்பிடித்தான். இப்ப கலப்புக்கு நாளைக்கு வாறமெண்டு திடீரெண்டு சொன்னால். கையிலை மடியிலை ஒண்டுமில்லை. எங்களையும் நாளை இண் டைக்கு வரட் டுமாம். எல்லாத்துக்கும் சிலவுக்கு என்ன செய்யிறது. பிள்ளைக்கு நல்ல ஒரு வாழ்க்கை வரேக்கை இப்பிடியாகக் கிடக்குது. ஊரிலை எண்டால். 99
சாரதாவிற்கு வாாத்தைகள் தொண்டை குழியில் சுருதி கலைந்தன. ஒரு கணம் வீடு, வாசல், தோட்டம், வயல், தென்னந்தோப்பு எல்லாம் கண்முன் வந்து நிழலாடி மறைந்தன.

Page 52
-
66 - 5 و و
ED . . . . . . சாரதாதான். “என்னப்பா பெருமூச்சு விடுகிறாய்?’. “இல்லை. சம்பந்தக் கலப்புக்கே இப்பிடி முழிச வேண்டிக் கிடக்கு. சீதன பாதனங்களை எல்லாம் எப்பிடி?”. -
“எங்கடை தோட்டந்துரவு, வயல் எல்லாத்தையும் இரண்டாப்பிரிச்சு பாதியை பெரியவளுக்கு எழுதுவம். பாதியை சின்னவளுக்கு விடுவம் கிடக்கட்டும். ஆனால் வீடு முழுசா எழுதட்டுமாம்”.
என்றவுடன் தியாகர் ஒருகணம் இறுகிப்போனார். சற்று நேர மெளனத்துள்,
“உந்த வெடியளுக்கை எல்லாம் வீடு என்னபாடு பட்டிருக்குமோ தெரியாது. என்ன நடந்தாலும் என்ரை ஆம்பிளைப்பிள்ளை இருந்திருந்தால் சின்னவளுக்கு அவனிருக்கிறான் தானேயெண் டு ஒருத்தினையும் யோசியாமல் பெரியவளுக்கு முழுவீட்டையும் எழுதிப் போடுவன் அதுதான் எங்களுக்கு குடுத்து வைக்க’. மனைவியை தேற்றிய தியாகர் இப்போது நெஞ்சுக் கூட்டினுள் சுமையழுத்த தானும் பொருமினார்.
“இஞ சரப் பா. பொரு மாதை யுங் கோ பெரியவளுக்கு வீட்டுப் பிரச்சினையாலை குழப்பிவிடக் கூடாது. அவளுக்கு வீட்டை எழுதுங்கோ. ஊருக்குப் போன பிறகு ஒரு வயலை வித்தாதல் சின்னனா மற்றக்காணியிலை ஒரு வீடு போடலாம். “பாங்கிலை கடனெடுத்தெண்டாலும் ஊரோடை போய் பிறகு அதைச் செய்யலாம். இப்ப பெரியவளின்ரை கருமம் முடியட்டும். 99
நல்ல மனைவி நல்ல அமைச்சர். தியாகரின் மனப்பாரம் சற்று இறங்குவதைப் போன்று இருந்தது.
CLgpg5 I Gha9FT LAD f'Tas ..... - - - வதிரி.இ.இராஜேஸ்கண்ணன்

“அதுசரி. நாளைக் குப் பின்னேரம் அவை வந்தால். சிலவுக்கு இல்லாதது ஒரு பக்கம் கிடக்க. இங்கை இந்தக் கொட்டிலுக்கை என்ன
செய்யிறது. ? பத்துப்பேர் மட்டிலை வருவினமாம் புறோக்கர் சொன்னவர்.
சாரதா கருமத்தில் கண்ணாகி உணர்ச்சியை அடக்கி அறிவுக்கு சந்தர்ப்பம் கொடுத்தாள்.
“இடப் பிரச்சினை சரி. அந்தக் கடை வச்சிருக்கிற தம்பு அண்ணையெட்டை கேட்டணான் தன்ரை வீட்டிலை கலியாணம் வரைக்கும் எல்லாம் செய்யச் சொல்லிப் போட்டார். நல்ல மனிசன். அவருக்கு எங்கடை குடும்பத்துக்கு தங்கடை வீட்டிலை இடந்தர வசதியில்லை எண்டு சரியான கவலை. பாவம். அவரும் ஒரு சின்ன மண்வீடுதான் கட்டி வச்சிருக்கிறார்”.
மனம் உள்ளவர்களுக்க இடமில்லை. இடம் உள்ளவர்களுக்கு மனம் இல்லை.
"இங்கை . . நான் சொல் லுறணி எண் டு கோவிக்காதையுங்கோ. . என்ரை தாலியிலை கிடக்கிற காசு ரண்டையும் வித்து. ஒருமாதிரி’.
“என்ன சாரதா கதைக்கிறாய். பிள்ளைக்கு நகை போடுறதைப் பற்றி அவை கதைச் சதுக்கு அதை நம்பித்தானே தலையாட்டின நாங்கள் பிறகு அதிலை தாலி கூட இப்போது பெண்ணைப் பெற்றெடுத்த தாய்க்கு பெண்ணின் திருமணத்தோடு போதும் என்ற பொருளாகி விடுகின்றது.
"அப்ப என்னப்பா செய்யிறது?’. “கலப்புக்கு எவ்வளவு சிலவு வரும்?”.
(LP SIGléFr TLDITSG ..... - வதிரி.இ.இராஜேஸ்கண்ணன்

Page 53
“இப்ப உள்ள சாமான் விலையிலை அவை வாறதுக்கும், நாங்கள் போறதுக்கும் சேத்து குறைஞ்சது மூவாயிரமெண்டாலும். 9%
சாரதா ஆகக் குறைந்த எஸ்ரிமேற் சொன்னாள். விரலுக்கேற்ற வீக்கத்துக்கு ஏற்றதொரு எஸ்ரிமேற்’
இரண்டு மூன்று நிமிடம் மெளனமாகவே இருந்து ஆழமாக யோசித்தார் தியாகர். ஒரு செருமல் செருமி மெளனத்தை கலைத்துக் கொண்டு,
“சாரதா. நான் சொல்லுறபடி செய்வம். நீ மாட்டனெண்டு சொல்லக்கூடாது. பிள்ளையின் வாழ்க்கை விஷயம். நாங்கள் வேறை இடத்தை காசுகேட்டு அலைஞ்சு நாளைக்கு கிடைக்காவிட்டால் எல்லாம் சீரழிஞ்சு
தியாகர் விஷயத்தை அணுகும் தயக்கத்தில் நீட்டினாரே ஒழிய. அவரின் நா தளதளத்தது. “என்னப்பா சொல்லுங்கோவன்” - சாரதா.
* இல்லை. நாயனகார சண்முகம் நாயனம் ஒண்டு விலைக்கு வேணுமெண்டவன். என்ரை நாயனமும் சும்மாதானே”.
“நான் சம்மதிக்கமாட்டன். நாயனத்தை விக்கிறது உங்களை வித்து கலப்பு நடத்திறது மாதிரியெல்லே. என்னப்பா நீங்கள்.
அது வந்த வரலாறு தெரிஞ்சும்’.
சாரதா அழுதே விட்டாள். “உங்களாலை முடிஞ்சால் அந்தச் சயிக்கிளை வித்து சம்பந்தக் கலப்புக்குச் சிலவழியுங்கோ . நாயனத்தை
 

தியாகரின் நாயனத்துக்கும் அவரது ஆண் பிள்ளைக் கும் ஒரே வயது. இந்த வருடத்தோடு இருபத்தெட்டு வயது முடிகின்றது. தியாகரும், சாரதாவும் பெற்றெடுத்த முதற்பிள்ளை ஆண்பிள்ளை. அவன் பிறந்து முப் பத் தோராம் நாளி ல துடக் குக் கழிவு' அறிந்தவர்களுக்குச் சொல்லிச் செய்தார் தியாகர். அன்று பிள்ளையின் கைகளில் உறவினர்கள் திணித்த அன்பளிப்புக் காசுதான் அந்த நாதஸ்வரம்.
"சாரதா. என்ரை பழைய நாதஸ்வரம் பழுதாகிப் போச்சு, தம்பியின்ரை முப்பத்தொண்டிலை வந்த காசிலை ஒரு நாயனம் வாங்கினால், அதை வாசிச்சே வாற வருவாயிலை தம்பியை படிப்பிச்சு ஒரு டாக்குத்தராக்கிப்
தியாகர் அப்போது கூறிய வார்த்தைகள் இன்றும் பசுமை பாய்ச்சி சாரதாவின் மனதிலே உள்ளது.
“சாரதா என்ரை கதையைக்கேள். அழாதை. என்ரை ஆம்பிளைப்பிள்ளை இருந்தால் அது உழைச்சுத் தங்கையாருக்குச் சீதனம் குடுக்காதே?. அதுமாதிரி நினையன். நாயனத்தை வித்தால் பாதிப்பு இல்லை. சைக்கிளை வித்தால் என்ரை தேங்காய் வியாபாரம் எப்பிடி நடக்கும். யோசிச்சுப்பார். பிறகு சீவியப்பாட்டுக்கு என்ன
செய்யிறது?’. རྒྱུའི་
சாரதாவை சமாதானப்படுத்துவதற்கு இவ்வாறு சொனி னாலும் தன் கலையோடு ஆண் மகனின் நினைவுகளையும் காசுக்காக விற்பது தியாகரின் மனதை ஊடுருவி எரித்தது. சுதாகரித்துக் கொண்டார். இருவரும் நீண்ட நேரம் மெளனத்துள் தோய்ந்தனர். இறுதியில்,

Page 54
“சாரதா. கவலைப்படாதை என்ரை ஆம்பிளைப் பிள்ளையை கலியாணம் முடிச்சுக் குடுத்து, சீதனம் வாங்கி, அந்தச் சீதனக் காசிலை பெரியவளின் ரை கலப்பு நடக்கிறதா நினைச்சுக் கொள். எழும்பு போய் படு. நாளைக்கு வேலையள் கிடக்கு. 99
அறுதியான முடிவோடு எழுந்தார் தியாகர். இரவு ஊர்ந்தது. அதிகாலையிலேயே நாதஸ்வரத்தை எடுத்துக் கொண்டு நாயனகார சண்முகம் வீடு நோக்கி சைக்கிள் வலித்தார்.
அன்று பிற்பகலில் கடைக்காரத் தம்புவின் வீட்டில் ஆரவாரத்துடன் சம்பந்தக்கலப்பு. மாப்பிள்ளை வீடடார் விரும்பியவாறான உபசரிப்புகள். இட்லி, சாம்பார், சட்னி என்பவற்றோடு வடை, வாழைப்பழம், பாயாசம் என்று மாப்பிளை வீட்டுக்காரரின் மனம் நிறைய உபசாரம்.
"அப்ப என்ன. நாளைக்கு பொம்பிளை வீட்டுக்காரர் மாப்பிளை வீட்டை வருவினம் தானே . நாங்கள் வெளிக்கிடுவம்'.
புறோக்கரின் நிறைவுரையுடன் கலப்பு நிறைவுற்றது. மறுநாள் அதிகாலையில் கிழக்கை இறுகப் போர்த்திருந்த இருள் முகிலில் சிக்கி சூரியஒளி சிறைப்பட்டிருந்ததால் ஆறரையாகியும் விடியாதது போல இருள் படிந்த வேளையில் புறோக்கர் 'முகாமிற்கு வந்தார். “என்ன புறோக்கர் வெள்ளாப்போடை’. கரவின்றியே கேட்டார் தியாகர்.
“ஒரு முக்கியமான விஷயம் அதுதான்’. என்று கீழ்ஸ்தாயியில் இழுத்தார் புறோக்கர்.
“என் ன சொல் லுங் கோ. பின் னேரம் வேளைக்கு வரவேணுமோ. இல்லாட்டி வேறை
 

ஏதாவது பேச்சு- கலியான விஷயமோ?’.
"(é(B5. . . . . . . விழுங்கினார் புறோக்கர். “ஒரு சின்னப் பிரச்சினை’. “பிரச்சினையோ?”. தியாகர் குழம்பிப்போனார் “ஓமோம். நீங்கள் பார்த்த வேலையாலை மாப்பிளை வீட்டுக்காரர் என்னை போட்டு திப்பிலி ஆட்டுதுகள்”. -
“என்ன சொல்லுறியள். என்ன வேலை பாத்தநாங்கள் எனக்கொண்டும் விளங்கேல்லை’ தியாகர் பரபரத்தார்.
"பின்னை என்ன?. நீங்கள் ஆர். கடைகார தம்பன் ஆர்?. ஒண்டும் விசாரிக்காமல் அலுவல் பார்க்கிறதே?. உங்களையும் கடைகார தம்பனின்ரை
ஆக் களெனி டெல் லே அதுகள் நினைக் குதுகள் . உங்களைப் பின்னேரம் வரவேண்டாமாம் பிறகு எல்லாம் கதைக்கலாமாம்”.
புரோக்கர் நழுவும் தோரணையிலே காரமாக கதைத்தார்.
“என்ன புறோக்கர் கலப்புச் செய்ய முகாமிலை எங்கடை கொட்டகை காணாது அதாலை தம்பு அண்ணை இடந்தந்தாரே ஒழிய. நான்தான் அவரை இடம் கேட்டனான். அதுக்கு அவை அப்பிடியே நினைக்கிறது. கைநனைச்சு, வாய் நனைச்சுப் போனாப்போலை தான். உதென்ன, உதிலை என்ன கிடக்கு தம்பு ஆரெண்டாலும் என்ன?. தருணத்திலை ஒராளெட்டை உதவி கேக் கிற தில் லையே?. அவையெனி ன எங்களோடையோ?. தம்புவோடையோ கலப்புச் செய்யினம்?. தியாகர் கோபமாகவே பேசினார்.

Page 55
(6)
“இல்லை பாருங்கோ. அவை சந்தேகப் LILO 60Tb...... உங்களோடை முகாமிலை இருக்கிறவை அரைவாசிப் பேரும் தம்பன் அவையின்ரை ஆக்களாம் அ ைவயோ டை இருக கிறதா  ைல உங்களைச் சந்தேகப்படுறதிலை பிழையில்லை”
தரகர் நடுவராகித் தீர்ப்பளித்தார்.
“புறோக்கர். என்ன பிழையில்லை எண்ணுறியள். உதெனி ன நியாயம் . .. ஒரு மாதிரிச் சரிப்படுத்துங்கோ. சொல்லி “சேப்” பண்ணுங்கோ
உங்களுக்கு எங்களைத் தெரியும் தானே’. மீண்டும் தியாகர் ஏக்கத்துடன் பரபரத்தார்.
"அண்ணை. நான் எல்லாம் சொல்லிப் பாத்திட்டன். அவை விரும்பினமில்லை. உங்களை வரவேண்டாமாம். செல்லி விட்டவை. ஆளறிஞ்சு பழகிறதில்லையே?. எல்லாத்தையும் பிழைக்க விட்டிட்டியள்’.
தியாகருக்கு உடலெல்லாம் வெடவெடத்தது. வியர்த்துக் கொட்டியது. ஏமாற்றம் நெஞ்சை அடைப்பது போலிருந்தது. சாரதாவை திரும்பிப்பார்த்தார். அவள் இடிந்து போய் இருந்தாள். இரண்டாந்தரம் தன்ஆண்பிள்ளை காணாமற் போய்விட்டதொரு உணர்வு. எங்கிருந்தோ ஒரு நாதஸ்வர ஒலி முகாரியை காதுகளில் சேர்த்தது. குழந்தைபோல தியாகர் விம்மி விம்மிக் கரைந்தார்.
அகதி வாழ்வில் கூட உயர்ந்தரக அல்ஷேஷ்யன்கள்
தியாகரின் உள்ளம் உறைந்து போனது.
ஜனவரி 2002


Page 56
இந்த எனக்குப்பரீட்
க ைதக  ை6 படித்திருக்கின்றேன். அக்கை சேர்ந்து இப்போது "முதுசொம
இராஜேஸ்கண்ணன். பாணியில், அவரைப் பாதித்த பிசிறுகளில்லாத இயல்பான பேச்சு வழக்குச் சொற்களை கையாள்கின்றார். இளமை முற்றமெல்லாம் பால்வார்க்கு காதைப் பொத்திக் கொண்டது கவிதை தோய் நீது வி
நாம் எமது வாழ்வில் இவருடைய பாத்திரங்கள். சி கந்தப்பு வாத்தியார், சாமந்த விசுவப்பா, செல்லச்சிவம் மாமி | பாத்திரங்கள்தான். இவர்கள் | உணர்வுகள், பிரச்சினைக
சகமனிதன், சக உயி பரிவே இவரின் கதைகளின் கதைகளின் மிகப் பெரிய ப எதிர்கால உன்னதங்களுக்
03.06.2002
Տ
ராம் பிறிண்ரேஸ் 31,
 
 

வரியாக.
இளைஞனின் எழுத்துக்கள்
சயமானவை. சஞ்சீவியில் இவரின் பெரும்பாலான Π நான் ஏற்கனவே தகளும்,வேறுசில கதைகளும்
66
35...... என்ற நூலுருவாக.
அவருக்கே உரித்தான விடயங்களை எழுதுகின்றார். மொழிநடை யாழ்ப்பாணத்துப் ப் பொருத்தமான இடங்களில் உதிர்ந்து போகும் நேரம்", ம் நிலாவொளி', 'காற்றுக்கூட என்றெல்லாம் இடையிடையே வரும் வரிகள் .
அன்றாடம் சந்திப்பவர்களே ங்களக் கந்தப்பு, வீரசிங்கம், தி மச்சாள், வல்லி ஆச்சி, என்று எல்லோருமே நாமறிந்த ரின் மனங்களில் கனக்கும் 5ளே கதைகளாகி.
பிரிகள் மீது இவர் கொண்ட ஆதார சுருதி. இதுவே இவர் லம். இதுவே இவரை இவரது குக் கட்டியம் கூறும்.
குப்பிழான் ஐ. சண்முகன்
லாலி வீதி, யாழ்ப்பாணம்,
ཛོད་