கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நடராஜ தரிசனம்: திரு. கி. நடராசா அவர்களின் மணி விழா மலர்

Page 1

வெளியீடு: மணிவிழாக் குழு
டடுப்பிட்டி, அமெரிக்கன் மிஷன் கல்லூரி
2006

Page 2


Page 3

நடராஜ_தரிசனம் ܗܵܘ܂
པོ་ཡིན་པས་ངས་ང་ལས་ཁང་
čß5. čf6. IbLIITÖFIT ဗျိုက္ကံရွဲ့ அவூர்கள்ன் |||||||||||||||||5 گاڑھے
} 議 *f Vse r(, ለኦ ID6Of 6f DIT ID6Ds hề St. 鸟
Doors frust
செல்லத்துரை சுதர்சன் Σ தமிழ்த்துறை 葛 பேராதனைப் பல்கலைக்கழகம் பேராதனை இலங்கை
வெளியீடு: மணிவிழாக் குழு 際 யா/உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி இ
2OO6 靈》

Page 4
))

Mr. K. Nadarajafi
SIXTIETH BIRTHDAY Felicitation Volиие
Edited by Sellathurai Sultharsan 1Department of Tamil Cliniversity of Peradeniya Peradeniya Sri Lanka
Felicitation Committee
2006
JIUduppiddy American Mission College

Page 5

@ဒ္ဒန္တီအီးအီဒီအီဒ၉)
4. O/itt 6007 to
அறுபதாவது அகவை நிறைவுற்றுள்ள
திரு. கி. நடராசா
அவர்களைப் பாராட்டுமுகமாக இம்மலரைப்
பணிவன்புடன் சமர்ப்பிக்கிறோம்.
DEDICATION
This Special Volume is presented to SOMr. K. Nadarajah
in appreciation and affection to felicitate him upon the completion of his Sixtieth year.

Page 6

மணிவிழா நாயகன் யா/உடுப்பிட்டி அவமரிக்கன் மிஷன் கல்லூரி அதிபர், புகழ்பூத்த தமிழாசிரியர், சிறந்த சமூக சேவையாளர்
திரு. கிருஷ்ணபிள்ளை நடராசா

Page 7

AAM.. ZAS E. ಫ್ರೌ#
பல்லவி வாழிய வாழிய வாழியவே உடுப்பிட்டி அமெரிக் கன்மிஷன் கல்லூரி -வாழிய
அனுபல்லவி ஏழிசை போலவும் இன்றமிழ் போலவும் இசைபல திசைதொறும் இசைவுற
சரணம் ஒது கலைத்துறை யோடுவிஞ்ஞானமும் ஓங்கு முயிர்நலந் தாங்குமெய்ஞ் ஞானமும் நாத இசையொடு நங்கள் சமூகமும் நாடும் வளம்பெறப் பீடும் பெருக்கி
昌
உத்தம ஒழுக்கமும் உண்மை விழுப்பமும் உயிரினும் மேலாய் உன்னு தகவதும் சுத்த மனத்தொடு தொண்டுசெய் ஊக்கமும் சோம்பலில் லாவுழைப் போம்பலும் பெருக்கி
தன்னலம் நீக்கி இன்னலைப் போக்கித் தாய்த்திரு நாட்டினுக் காய்த்தினம் வாழ்ந்திடும் உன்னத வீரரை ஒய்விலா தாக்கி ஊழிதொ றுாழி ஊழிதொ றுாழி -வாழிய
ஆக்கம் : உடுப்பிட்டி மணிப்புலவர் கா. நீலகண்டன்

Page 8
மணிவிழாச் செயற்குழு
5 TIL IT GITTñT திரு. கா. நீலகண்டன் Dr. 6TLń. g5/i/e5/T/T#TT திரு. வே. கிருஷ்ணபிள்ளை திரு. ச. இரத்தினகோபால் தலைவர் திரு. க.தர்மலிங்கம் உபதலைவர் செல்வன் ம. பிரசாந்தன் செயலாளர் திரு. ப. ஜோதீஸ்வரன் உப செயலாளர் செல்வன். சி. ஹரிகரன் பொருளாளர் திரு. ஆ. விமலராஜ் விழா அமைப்பாளர் திரு. க. கனககேஸ்வரன் திரு. த. இராஜசேகரன் திரு. க. செபநேசன் திரு. இ. சு. முரளிதரன் மலராசிரியர் திரு. செ. சுதர்சன் உறுப்பினர் திருமதி சி பாலேந்திரன் திருமதி ச. சச்சிதானந்தம் திருமதி வ. கைலயங்கிரிச்செல்வம் திரு. தே. ஜெகன் திரு. ப. பார்த்திபன் செல்வன். பா. பிரதிபன் செல்வன். த. சுவர்ணராஜ் செல்வன். கு. கணேசானந் செல்வன். சி மணிமாறன் செல்வன். த. கெளரீஸ்வரன் செல்வி தெ. ஜெயந்தி செல்வி சே பவிலா செல்வி நிஜிதா
 
 

பொருளடக்கம்
மலரும் இந்த மலரைப் பற்றி
செல்லத்துரைசுதர்சன்
1. ஆசியியல்
1.
2.
3.
ஆதின முதல்வரின் அருளாசி தேசிகரின் ஆசி வணபிதாவின் வாழ்த்து
2. வாழ்த்தியலும் வாழ்வியலும்
1.
2.
1O.
11.
12.
13.
14.
15.
16.
திரு. கி. நடராசா - வாழ்வும் வளமும் கல்லூரி அதிபரின் வாழ்த்து க.தர்மலிங்கம் கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளரின் வாழ்த்து உடுவை எஸ்.தில்லை நடராஜா மாகாணக் கல்விச் செயலாளரின் ஆசி ஆர். தியாகலிங்கம் அறிவொளியின் அதிபர் வ. செல்வராசா பிரதேச செயலாளரின் வாழ்த்து சி. சத்தியசீலன் மணிவிழாச் சபைச் செயலாளரின் வாழ்த்து ப. ஜோதீஸ்வரன் செயலாற்றி வெற்றிகண்டார் வைத்தியகலாநிதி எம்.தங்கராஜா தலைமைக்கு ஓர் எடுத்துக்காட்டு பேராசிரியர்அ. சண்முகதாஸ் நல்ல நண்பனும் நல்ல கல்விமானும் பேராசிரியர் க. சின்னத்தம்பி புதுயுகத்தை மலரச் செய்தவர் பேராசிரியர்க, அருணாசலம் செயல்திறன் மிக்க அதிபர் பேராசிரியர் மா.நடராசசுந்தரம் சேண் விளங்கும் புகழ் கொண்டார் கலாநிதிதுரை. மனோகரன் நெஞ்சம் நிறைய வாழ்த்துகிறேன் பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா வித்தகத் தாயை வீறுபெறச் செய்தவர் கலாநிதித, வசந்தகுமார் 2 ui 56o 6lu9lu6oI 6Tobr வே.தி. செல்வரத்தினம்
ΧΙΙΙ
1
15
16
18
19
2O
21
22
23
24
25
28
3 O
3 1
34
36

Page 9
17.
18.
19.
2O.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
3O.
31.
32.
33.
உணர்வோடு தமிழ் கற்பிக்கும் ஆசிரியர் க. அம்பலவாணர் வடமராட்சி தந்த வளம்மிக்க அதிபர் சட்டத்தரணிக,நீலகண்டன் உயிர் கொடுத்த உத்தமன் சீதா வேலுப்பிள்ளை
ஆளுமை மிக்க அதிபர்
க. செபநேசன்
ஒளியினால் இருள் அகற்றியவர் இ. குட்டித்தம்பி வினைத்திறன் மிக்க அதிபர்
செ. சேதுராஜா முகாமைத்துவத் திறனுக்கு ஓர் முன்னுதாரணம் ஆ. விமல்ராஜ்
செயற்பாங்கு மிக்க ஆசான்
G2. அனந்தேஸ்வரன்
முருக பக்தன்
ந. அரியரத்தினம் ஞானம் தந்த ஞானத் தந்தை
சி. சஞ்ஜெய் பாடசாலையே எனும் கொள்கை கொண்டார் து. சங்கீர்த்தனன் சாதனை நாயகனின் சாசனம் செயலாளர்- பாடசாலை அபிவிருத்திச் சங்கம் தமிழ் தந்த ஆசிரியனுக்கு மாணவ மாணவிகள்- மொடோன் கல்விநிலையம் எங்கள் அதிபர்
த. கெளரீஸ்வரன் நடாவை வாழ்த்தும் நம் நாடும் ப. பார்த்தீபன்
நடராசா திருத்த சாங்கம் கவிஞர் இ. சு. முரளிதரன்
நடாவும் தமிழும்
தே. ஜெகன்
3. ஆய்வியல்
1.
தமிழர் சிந்தனை மரபில் ஆன்மிகமும் நாத்திகமும் பேராசிரியர் கா.சிவத்தம்பி ஈழத்துத் தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் பேராசிரியர் க.அருணாசலம்
மஹாகவியின் கிராமம்
பேராசிரியர் எம். ஏ. நுஃமான்
38
40
44
45
46
47
5 O
53
56
58
6 O
61
62
67
68
7 O
72
79
91
1O5
 

1O.
11.
12.
13.
15.
16.
17.
18.
19.
2O.
அத்வைதம் என்பதன் பொருள் விளக்கம் பேராசிரியர் இரா. வை. கனகரத்தினம் கூத்தரங்கின் புத்தாக்கம் : பேராசிரியர் சு.வித்தியானந்தனின் பங்கு பேராசிரியர் சி. மெளனகுரு அரசியல் விஞ்ஞானத்தைக் கற்பதற்கான அணுகுமுறைகள்
பேராசிரியர்அ. சிவராஜா
தர்மசாஸ்திரம்
பேராசிரியர் சி. பத்மநாதன் சிலப்பதிகாரத்தில் சிறு பாத்திரங்கள் கலாநிதிதுரை. மனோகரன் பாரதியாரின் விநாயகர் நான்மணிமாலை கலாநிதிவ. மகேஸ்வரன் ஈழத்துப் புகலிட இலக்கிய வளர்ச்சி ஒரு நோக்கு கலாநிதி செ. யோகராசா கம்பனி ஆளுகையும் அதன் போக்குகளும் பூ, சோதிநாதன் குழந்தை ம. சண்முகலிங்கத்தின் நாடகங்களில் ஈழத்துத் தமிழ் அரங்கின் தோற்றம் க. ரதீதரன் உள்நாட்டில் இடம்பெயர்ந்து வாழ்வோர் : யார் இவர்கள்?
ச. பாஸ்கரன்
. உலகின் தீவிர சூழற் பிரச்சினையாக
மாறிவிட்ட அமில மழை அருளரசிஅருளானந்தம் மனிதனின் ஆதார நிலை கலாநிதிசி, பூநீசற்குணராசா சேது சமுத்திரத்திட்டம் : இலங்கைக்கு வைக்கப்பட்ட பொறியா? கு. சசிகுமார் கல்வியும் சமூகமும் : அன்றும் இன்றும் கதிர்.தணிகாசலம் உடுப்பிட்டி சிவசம்புப் புலவர் க. சி.குலரத்தினம் தமிழ் இலக்கிய விமர்சனப் போக்கு மு. பொன்னம்பலம் ஆனந்த குமாரஸ்வாமியின் கலையும் வாழ்வும் வெங்கட் சாமிநாதன்
4.பதிவியல்
12
126
134
162
167
174
184
198
2O4.
2 O
29
224
234
238
254
264
267

Page 10

மலரும் இந்த மலரைப் பற்றி
*நடராஜர்’ - பஞ்ச கிருத்தியத்தை நிகழ்த்தும் பரம்பொருள். படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்துமே பஞ்சகிருத்தியம். நடராஜப் பெருமானின் பஞ்சகிருத்தியத்தினாலேதான் இப்பிரபஞ்சமே இயங்குகிறது - இது இந்துக்களின் நம்பிக்கை.
மானுட வடிவிலும் இப் பரம்பொருளின் நாமம் சூடிய பலர் உளர். அவர்கள் இருதிறத்தார். ஒருசாரார் பெயரினை மட்டுமே சூடியவர்கள். செயற்திறன் அற்றவர்கள் இவர்களுக்கு முகமும் இல்லை முகவரியும் இல்லை. இத்தன்மைத்தவர்கள் 'உண்டு, உறங்கி, உயிர் செய்து, செத்திடும் கலக மானிட பூச்சிகள்' மறுசாரார் முதற் கூறியவர்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமானவர்கள். முகமும் முகவரியும் உள்ளவர்கள். தம்பணியால் தம்பெயரைத் தக்க வைத்தவர்கள். இவர்களில் ஒருவரே 20.12.1945 அன்று யாழ்ப்பாணத்தின் வடமராட்சிப் பகுதியிலே கம்பர்மலை என்ற கவின்மிகு கிராமத்தில் கிருஷ்ண பிள்ளை - சரஸ்வதி தம்பதிகளுக்குப் பிறந்த நடராசா ஆவார். இவர் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரிக்கும், தமிழ்ச் சமூகத்திற்கும் ஆற்றிய அரும்பணியைப் பாராட்டுமுகமாகவே இம்மலர் மலர்கிறது.
*நடராஜ தரிசனம்’- இது இம்மலரின் நாமம். இம்மலரில் திரு. கி. நடராசா அவர்களின் ஆளுமையின் பல்பரிமாணத் தையும் அரும்பணியையும் அனைவரும் தரிசிக்க முடியும். அத்துடனமையாது அவர் பணியைத் தரிசித்த பின்னர் அறிவுத்தரிசனத்தையும் நீங்கள் அடையமுடியும். இத்தன்மை கருதியே நடராஜ தரிசனம்” என்ற நாமம் இம்மலருக்கு வழங்கப்பட்டது.
ஈழத்திருநாட்டின் தலைசிறந்த கல்லூரிகளில் யா/ உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரியும் ஒன்று. யுத்தத்தின் கொடிய கரங்களில் சிக்குண்டு இக்கல்லூரி முற்றாகச்
xiii

Page 11
சிதைவுற்றது. இவ்வேளையில் அதிபர் பதவியைத் துணிந்து ஏற்றுக் கல்லூரியை மீள் உருவாக்கம் செய்தவர், திரு. கி. நடராசா. கல்லூரி வரலாற்றில் இவரது காலம் 'மறுமலர்ச்சிக்காலம்’
நடராஜப் பெருமான் ஐந்தொழில்களை இயற்றுவது போல இவரும் ஐந்தொழில்களை இயற்றினார். சிதைந்து போன கல்லூரியை மீளக் கட்டியெழுப்பியும் மாணவர்களுக்கு அறிவினை வழங்கியும் படைத்தல் தொழில் ஆற்றினார். தான் கல்லூரிக்காகக் கடின உழைப்புடன் சேர்த்தவற்றையும், ஏற்கனவே கல்லூரிக்கு இருந்த பெருமையினையும் மாணவர்களது கல்வி நலனையும் அழியாது பேணிக் காத்தல் தொழில் ஆற்றினார். கல்லூரி வளர்ச்சிக்குத் தடையானவற்றைக் களைந்தும் மாணவர்களது அறியாமையை அகற்றியும், அழித்தல் தொழில் ஆற்றினார். கல்லூரியின் வளர்ச்சிக்காக கல்லூரியினை பொறுப்பேற்றும் கருணை உள்ளத்தோடு பாடுபட்டும் தனது நேரம் முழுவதினையும் கல்லூரிக்காக செலவு செய்தும், கல்லூரி வளர்ச்சி மீது பற்று கொண்டவர்களிடமும் தனது மாணவர்களிடமும் பாசத்தினை பொழிந்தும் கல்லூரி நலனை ஒரு சிலர் தமது அதிகாரத் துஷ்பிரயோகத் தனத்தின் மூலம் குறைத்த போது அவர்களை மன்னித்தருளியும் அருளல் தொழில் ஆற்றினார். கல்லூரியினதும், மாணவர்களதும் குறைகளை நீக்கி நிறைவாக்கும்வரை சமூகத்திற்குத் தெரியாமல் மறைத்ததால் மறைத்தல் தொழில் ஆற்றினார். - இதுவே திரு. கி. நடராசா அவர்களுக்காக மலரும் இந்த நடராஜ தரிசனம்
எனது தமிழாசிரியருக்காக மலரும் இம்மலர் நான்கு இயல்களைக் கொண்டமைந்தது. ஆசியியல், வாழ்த்தியலும் வாழ்வியலும், ஆய்வியல், பதிவியல் என்பனவே அவை. ஆசியியலில் சமயப் பெரியோர்களின் ஆசிச்செய்திகள் இடம்பெற்றுள்ளன. வாழ்த்தியலும் வாழ்வியலும் என்ற பகுதியில் கல்வித்துறை, பிறதுறை சார்ந்த பெரியோர்கள், நண்பர்கள் மணிவிழா நாயகரை வாழ்த்தி அவரது வாழ்வியல் அம்சங்களை எடுத்துரைக்கும் ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. ஆய்வியலில் அறிஞர்கள், இலக்கியவாதிகள், நண்பர்கள் முதலியோரின் ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. ஆய்வியல் பகுதியில் உள்ள பெரும்பாலான கட்டுரைகள் இம்மலருக்காக எழுதித்தரப்பட்டவை. ஒரு சில கட்டுரைகள் கல்லூரி மாணவர்களின் நன்மை கருதி சில நூல்களிலும், சஞ்சிகைகளிலும் இருந்து எடுக்கப்பட்டவை. அவ்வகையில் நாடகம் - அரங்கியல், செந்தமிழ் வளர்த்த செம்மல்கள், திறனாய்வு சார்ந்த சில பார்வைகள், கலை உலகில் ஒரு சஞ்சாரம் முதலிய நூல்களின் ஆசிரியர்களுக்கும் ஞானம், ஆற்றுகை முதலிய சஞ்சிகை ஆசிரியர்களுக்கும் நன்றிகள். அதுபோல இம்மலருக்காக ஆக்கங்களை
XIV
 

வழங்கிய அறிஞர்கள், நண்பர்கள் முதலியோருக்கும் என் நன்றி உரித்து. பதிவியலில் மணிவிழா நாயகனின் சுவடுகளைக் காட்டும் புகைப்படங்களைக் கல்லூரி ஆல்பத்திலிருந்தும், சம்பவத் திரட்டு புத்தகத்திலிருந்தும், பத்திரிகைகளில் வெளியாகிய செய்திகளிலிருந்தும் சேகரித்துக் தொகுத்துள்ளேன். பக்கவரையறை காரணமாக முழுவதையும் இங்கு தரமுடியவில்லை. சில கட்டுரைகளும் மலரின் பக்கவரையறை கருதி இடம்பெற முடியாது போயிற்று. மணிவிழா நாயகன் தயாரித்த கல்லூரி அதிபர்களின் பட்டியலும் பித்வியலில் இடம்பெற்றுள்ளது.
எனது தமிழாசிரியரின் மணிவிழாப் பணியில் என்னை மலராசிரியராக அமர்த்திய கல்லூரிச் சமூகத்திற்கு எனது நன்றிகள். கல்லூரியின் அதிபர் க. தர்மலிங்கம், பகுதித் தலைவர் ஆ. விமல்ராஜ், என் சக விரிவுரையாளர்கள் மல்லிகாதேவி நாராயணன், அஸ்மியா பேஹம், நண்பர்கள் பஞ்சலிங்கம் பார்த்தீபன், தேவராசா ஜெகன், சிவஞானம் ஞானரஞ்சன், ஷெரின் ஜோன்சன், பிரசன்னா நாராயணன் ஆகியோரின் உதவியை இம்மலராக்கத்தில் மறக்க முடியாது. ஆசிரியர் திரு. ஆ. விமல்ராஜ் யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டு செய்த பணிக்கு என்றும் நன்றியுடையேன். இம்மலருக்காகவும் மணிவிழாக்காகவும் நிதி உதவி செய்த அனைத்துக் கரங்களையும் நன்றி யுணர்வுடன் பற்றிக்கொள்கிறேன். மணிவிழாக் குழு உறுப்பினருக்கும் இதழை சிறந்த முறையில் உருவாக்கித் தந்த யூனி ஆர்ட்ஸ் நிறுவன அதிபர் பொன் . விமலேந்திரன் அவர்களுக்கும், அந்நிறுவன அலுவலர்களுக்கும் என் நன்றிகள்.
தனிமனிதனின் சரித்திரமாகக் கல்லூரியை மாற்றிய எனது தமிழ் ஆசிரியர், மணிவிழா நாயகன் திரு. கி. நடராசா அவர்களுக்கு மணிவிழாச் சபையின் சார்பில் எனது வாழ்த்துக்கள். கல்லூரியிலும், கற்பித்த ஆசிரியர்களிலும் பணிவுசெய்யப் பழக்கிய என் அம்மாவின் பாதங்களை இவ்வேளையில் நினைத்துப் பணிகிறேன்.
நன்றி
"This is our school
9Make it Proud of me Make me Proud of it."
தமிழ்த்துறை, செல்லத்துரை சுதர்சன்
பேராதனை பல்கலைக்கழகம், மலர் ஆசிரியர்,
பேராதனை, யா/உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி.
இலங்கை, 2.04.2006
XV

Page 12

లక్షలను
cെ%)
oൂ

Page 13

KSŞ
氯
༄
o
()()()K)
ΚΩ
ஆதீன முதல்வரின் அருள் ஆசி
அன்பு சால் பெருந்தகையீர் யாழ்ப்பாணம் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி அதிபராக இருந்து ஒய்வு பெறும் திரு. கி. நடராசா அவர்களைப் பாராட்டுகின்றோம். புனிதமான ஆசிரியப் பணியை நிறைவாகச் செய்தவர், திரு. நடராசா. எடுத்த விடயத்தை, எடுத்த செயலை நிறைவாகச் செய்யும் மனோபாவம் கொண்டவர். பாடசாலை வளர்ச்சிகாகத் தன்நிகர் இல்லாப் பணியை ஆற்றிய பெருமைக்குரியவர். சொல்வதையே செய்ய வேண்டும் என்கின்ற மனவிருப்பம் கொண்டவர். பல சமய சமூகப் பணிகளில் ஈடுபட்டு அனைவரையும் மகிழ்விக்கின்ற பெருமைக்குரியவர். இப்பாடசாலையின் வளர்ச்சிக்காகப் பணியாற்றிய திரு. நடராசாவினது ஒய்வு அனைவருக்கும் மன நெகிழ்வைத் தந்தாலும் அவருடைய பணி பாராட்டுதற்குரியது. அவர் தொடர்ந்தும் சமய, சமூகப் பணிகளில் ஈடுபட்டு இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக வாழ இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். திரு. நடராசாவிற்கு விழா எடுக்கும் மணி விழா சபையினரை வாழ்த்துகின்றோம்.
என்றும் வேண்டும் இன்ப அன்பு
பூணூரீலறுரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்
இரண்டாவது குருமஹாசந்நிதானம் நல்லை ஆதீனம்
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 3

Page 14
()
శ్లో
().。().
()影()()
夔
濠
()
4.
தேசிகளின் ஆசி
யா. உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி அதிபர் திரு. கிருஷ்ணபிள்ளை நடராசா அவர்களை அடியேன் முதன்முதலாக சந்தித்த இடம் கம்பர்மலை, வல்வெட்டி வன்னிச்சி பூரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தில், அன்று அவர் சமயச் சொற்பொழிவிற்காக வந்திருந்தார். அன்றே அவருடைய கல்வியின் ஆழத்தையும், நாவன்மையையும் கண்டு பிரமித்துப்போனேன். அன்றுதொட்டு இன்றுவரை அவரை எங்கு கண்டாலும் நான் மதிப்பதுண்டு. அவரும் வழியில் மரியாதை கொடுப்பார்.
மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்த அதிபர் அவர்கள் ஒர் ஆளுமைமிக்க வராகவும், திகழ்ந்தார். அவருடைய கல்வியறிவு கரையே காணமுடியாத மகாசமுத்திரம். வெளியூர்களில் தனது ஆசிரியப் பணியினை ஆரம்பித்த அதிபர் அவர்கள் யா/உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியில் அதிபராகப் பயணத்தினைத் தொடர்ந்தார்.
எனினும் யா/ உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியில் அதிபராக சுமார் எட்டு ஆண்டுகாலம் செய்த சேவைகள், சாதனைகள் அளப்பரியன. அத்தனையையும் தன்னுடைய ஆற்றலினாலும், விடாமுயற்சியினாலும் செய்தார் என்பதை எவரும் இலகுவில் மறந்துவிட முடியாது. மிகக் குறுகிய காலத்தில் இவை எல்லாவற்றையும் நிறைவேற்றியிருக்கிறார். இத்துடன் மட்டும் நின்றுவிடாமல் சமூகப் பணியையும் தான் பிறந்த ஊரிலும், புகுந்த ஊரிலும் சாதித்துள்ளார். இவற்றிற்கெல்லாம் காரணம் இவருடைய திறமையே என்றால் அது மிகையாகாது.
மேலும் விளையாட்டுத்துறையிலும் குறிப்பாக உதைபந்தாட்ட வீரராகப் பணிபுரிந்தமை, விவாத அரங்கு, பேச்சுப்போட்டிகளில் பங்கு பற்றியமை, பல்கலைக்கழகக் காலத்தில் நாடகநடிகராகத்
தொழிற்பட்டமை பல பட்டிமன்றங்களில் உரையாற்றியமை,
நடராஜ தரிசனம்
 
 
 
 

2ܠܰܢ
(O.
ళ్ల
器
器
இவையெல்லாவற்றையும் தன் ஆசிரியப் பணியுடன் செய்தது உண்மையிலேயே எவரும் செய்ய முடியாத மகாசாதனையாகும். யா/ உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியின் அதிபர்களாகக் கடமையாற்றியவர்களின் வரிசையில் முதல்
இடம் நான் கண்ட மகா அதிபருக்கே உரியதாகும். அதிபர்
NS
2
அவர்கள் இளைப்பாறிச் சென்றாலும் தனது ஆசிரியப் பணியைத் தொடரவேண்டும் என்பதே எம் அவா.
勿
愛。
இக்கல்லூரியின் பழைய மாணவர் என்ற வகையில் கல்விச் சமூகத்தின் உன்னத காவலராக அதிபர் அவர்கள் பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்தி அடியேனின் நல்லாசிகளையும் கூறி அமைகிறேன்.
வாழ்க வளமுடன்
சிவறுரீசோமாஸ்கந்த தண்டபாணிக தேசிகர்
வல்வையூரீமுத்துமாரிஅம்பாள் தேவஸ்தானபிரதமகுரு
'சிவாகமசித்தாந்த ஞானதேசிகபானு'
"பிரதிஸ்டாலங்காரசித்தாந்த ஸாகரம் பிரதிஸ்டா சிரோமணி
魯
().
*()()()()()
K3)
鑿
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 5

Page 15
β. N
()※()()()()()()KO)
夔
6
வண பிதாவின் வாழ்த்து
கல்விப் பணி, தீர்க்கதரிசனப் பணி, குணமளிக்கும் பணி இவை மூன்றும் திருச்சபையின் மையப் பணிகளாகும். திருச்சபை தோன்றிய இடமெல்லாம் கல்விப்பணி, நல் எதிர்பார்ப்பூட்டும் பணி, வைத்தியப் பணி என்பன நடைபெற்றுக்
கல்விப்பணியாக உடுப்பிட்டியில் 150 ஆண்டுகளுக்கு முன்னதாக ஆரம்பிக்கப்பட்டது. இக் கல்லூரியில் மணிவிழாக் கண்டு மகிழ்ந்த ஆசிரியர்கள், அதிபர்கள் பலர் ஆங்காங்கே வாழ்ந்தார்கள். அதனை இக்கல்லூரி வரலாற்றில் காணலாம்.
இக் கல்லூரி வரலாற்றில் 1997 முதல் இன்று வரை அதிபர்கள் வரிசையில் ஒருவராக திரு. கிருஷ்ணபிள்ளை நடராசா விளங்குகிறார். இவர் பணியாற்றி வந்த காலம் கல்லூரி வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த காலம். போர்க் கால சூழலில் இக் கல்லூரியின் கட்டடங்கள் தரை மட்டமாக்கப்பட்டு சுடுகாடு போலக் காட்சியளித்தது. ஆனாலும் கல்லூரி தற்காலிக கொட்டகைகளிலே நடாத்தப்பட்டது. இந்நிலை மாற அயராது உழைத்தவர்கள் சிலர். அவர்களில் மணிவிழாக் காணும் திரு. நடராசா அவர்கள் முக்கியமானவர். புதுப்பொலிவு தரும் மாடிக் கட்டடங்களை அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் கட்டி முடித்தார். கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தை அடிக்கடி
கூட்டியும் கல்லூரியின் நலன் விரும்பிகளின் ஒத்தாசையோடும்
கல்லூரியின் அத்தியாவசியமான தேவைகளைப் பூர்த்தி செய்தார். கல்லூரியில் கணனி முறைக் கல்வி, மற்றும் நவீன முறைகள் கல்வியில் நடைமுறைப்படுத்த முயற்சி எடுத்தார்.
கல்லூரியில் நூலக வளம் நிறைந்து காணப்பட நூல்கள் சேகரிப்பதில் ஆர்வம் காட்டினார்.
இவர் கல்லூரி அதிபராக மாத்திரமல்ல சமுதாயத்திலும் அரும் பணியாற்றினார். சன சமூக நிலையத் தலைவராகவும்
நடராஜ தரிசனம்
 
 

()()()()()
&
()
ಜ್ಞೆ
2
S
(O.
2
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர்
பணியாற்றியிருக்கிறார். கலைத்துறையிலும் இவரது ஈடுபாடுகளைக் காணக்கூடியதாக இருந்தது. பட்டி மன்றங்களில் பேசுவதிலும் மத்தியட்சம் வகிப்பதிலும் வல்லவராகக் காணப்பட்டார்.
இவரது ஆற்றல்கள் அனுபவங்கள் நினைவு கூறப்படுவதற்கு ஏற்ற பணிகளைத் தளமிடுவதற்கு இந்த மணிவிழாக் காலம் ஏற்றதாக இருக்கிறது. எனவே இவர் சந்திக்கும் இம் மணிவிழா அவருக்குப் புதிய சிந்தனையையும் புதிய ஆற்றலையும், புதிய காட்சியையும் கொடுக்கும் உயர்வின் காலமாக விளங்க வேண்டும்
என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
வண. பிதா. V. N. தர்மகுலசிங்கம் B, Th, B. D
பங்குத்தந்தை, உடுப்பிட்டி,

Page 16
8
நடராஜ தரிசனம்
 
 

ଅର୍ଣ୍ଣ .5)%&&_@
வாழ்த்தியனும் ബീബിശ്ചീ
്ൂ

Page 17

திரு. கி. நடராசா - வாழ்வும் வளமும்
பிறப்பு 20.12.1945
பிறந்த ஊர் : கம்பர்மலை, வடமராட்சி
தந்தை : ஆழ்வாப்பிள்ளை கிருஷ்ணபிள்ளை
தாய் : கிருஷ்ணபிள்ளை சரஸ்வதி
ஆரம்பக் கல்வி யா/வல்வெட்டி இந்து தமிழ்க் கலவன்
L][TLEF|T606)
இடைநிலைக் கல்வியும்,
சிரேஷ்ட இடைநிலைக்
கல்வியும் யா/சிதம்பராக் கல்லூரி
உயர் கல்வி : கொழும்புப் பல்கலைக்கழகம்,
பேராதனைப்பல்கலைக்கழகம்
பட்டப்பின் கல்வி டிப்ளோமா யாழ்பல்கலைக்கழகம் (1982-1983)
முதுகலைமாணி பட்டம் : யாழ் பல்கலைக்கழகம் (1985-1990)
கற்பித்தற் சேவை
01.11.1976 - 31.12.1977 கமு/அல்அஸ்ரக்கர் மகா வித்தியாலயம்
01.01.1978 - 08.06. 1997 யா/நெல்லியடி மத்திய மகாவித்தியாலயம்
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 11

Page 18
O9.06. 1997 இன்று வரை யா/உடுப்பிட்டி அமெரிக்கன்
மிஷன் கல்லூரி
01.11.1976 - ஆசிரியப் பணி
16.03.1982 - பகுதித் தலைவர்
21.12.1990 - பிரதி அதிபர்
09.06.1997 - அதிபர்
இடைவரவு விரிவுரையாளர் : பட்டப்பின் படிப்பு கல்வி டிப்ளோமா
மாணவர்களுக்கு 1997 தொடக்கம் 2000 வரை கல்வி நிர்வாகமும் முகாமைத் துவமும், யாழ். பல்கலைக்கழகம்
இடைவரவு விரிவுரையாளர் : முதுகலைமாணி மாணவர்கட்கு 2001
12
தொடக்கம் 2002 வரை கல்வி நிர்வாகமும் முகாமைத்துவமும், யாழ் பல்கலைக்கழகம்.
சமூகப் பணிகள்
தலைவர் - பாரதி சனசமூக நிலையம், கம்பர்மலை தலைவர் - பாரதிதாசன் சனசமூக நிலையம், அல்வாய் நிர்வாகக் குழு உறுப்பினர் - பரமானந்தா ஆச்சிரமம், வதிரி.
வேறு சேவைகள்.
பாடசாலை நாட்களில் விளையாட்டுத்துறையில் குறிப்பாக உதைபந்தாட்ட வீரராகப் பங்காற்றியமை, விவாத அரங்கு, பேச்சுப் போட்டிகளில் பங்குபற்றியமை.
பல்கலைக்கழக காலத்தில் நாடக நடிகராகத் தொழிற்பட்டமை, விவாத அரங்குகளில் பங்குகொண்டமை.
பல பட்டிமன்றங்களிலும் வழக்காடு மன்றங்களிலும் உரையாற்றியமை.
நடராஜ தரிசனம்
 

பாடசாலை பெளதிகவளத்துறை விருத்தி
1. மாகாணக் கல்விப் பணிப்பாளர் திரு. கே. கந்தசாமியின் அனுசரணையுடன் ஜேர்மன் தொழில்நுட்ப நிறுவனத்தினூடாக (CTZ) 180 X25 அளவுகொண்ட கட்டடம் ஒன்றை அமைத்தமை.
2. அடிப்படை வசதிகள் என்ற வகையில் மலசலகூடங்கள் ஜேர்மன் தொழில்நுட்ப நிறுவனத்தின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் ஏனைய பாடசாலைகளுக்கு முன்மாதிரியாக நவீனமான முறையில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3. மாகாணக் கல்விப்பணிப்பாளர் திரு.கே. கந்தசாமியின் உதவியினைப் பெற்று
செயற்பாட்டறை ஒன்று அமைத்தமை.
4. RRAN உதவித்திட்டத்தின் கீழ் 130 X 25 மாடிக்கட்டடத்தின் ஒரு பகுதி
வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
5. GEP25606u6) ni Lig-IBITL35IT, BOBLEP National Coordinator 505 W. 5inITT&T அவர்களுடைய உதவிகளைப் பெற்று நூலகம் ஒன்று அமைக்கப்பட்டது. நூலகத்தின் அளவு 60 X 30. இது மேலும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் உதவியுடன் 50 நீட்டப்பட்டது. இந்நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்புச் செய்வதில் கொழும்பு பழைய மாணவர் சங்கக்கிளையின் பங்கு மகத்தானது.
6. முன்னாள் வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளராக இருந்த திரு. வே. தி. செல்வரட்ணம் அவர்களின் உதவியினைப் பெற்று ஒரு தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஏற்கனவே பாடசாலை அபிவிருத்திச் சங்கம் ஒரு கணனிக்கூடம் ஒன்றினை அமைத்துத்தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
7. NECORD திட்டத் தலைவர் திரு. லங்கா நேசன், பாராளுமன்ற உறுப்பினர் திரு. சிவாஜிலிங்கம் இருவரினதும் உதவியுடன் 130 X 25 அளவு கொண்ட வகுப்பறைக் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.
8. NECORD திட்டத் தலைவர் திரு. லங்கா நேசன் உதவியுடன் தற்பொழுது பல்நோக்கு அரங்கு ஒன்றின் வேலைகள் நடைபெற்று வருகின்றன.
9. மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் திரு. ஆர். தியாகலிங்கத்தினுடாக இரட்டையலகு கொண்ட விஞ்ஞான ஆய்வு கூடம் பெற்றுக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 13

Page 19
10.
11.
12.
ஆங்கில உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. ச. சுந்தரமூர்த்தியின் அனுசரணையுடன் ஆங்கில மொழி விருத்தியினைக் கருத்திற் கொண்டு வெளிச்ச வீடு (Light House Programme) ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
கல்வி உயர்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் திரு. எஸ். தில்லை நடராசாவின் அனுசரணையோடு அதிபர், பிரதி அதிபர் காரியாலயம் ஒன்று நவீன முறையில் அமைக்கப்பட்டு வருகின்றது.
சிறுவர் நிதியத்தின் (SCF) உதவி பெற்று இரசாயன ஆய்வு கூடம் புனரமைப்பு செய்தல், தற்காலிகக் கொட்டகை அமைத்தல் போன்றன மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலதிக சேவைகள்
ஜேர்மன் தொழில்நுட்ப நிறுவனமான சேமிப்பு பண நிதியிலிருந்து சரஸ்வதி சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
தண்ணிர் தாங்கியும், நீர் விநியோகமும் மேற்கொள்ளப்பட்டது.
பாடசாலைக்குத் தேவையான மின்சார வசதி, தொலைபேசி வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தற்போது அதிபர் காரியாலயமாக இயங்கும் கட்டடம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
சில சாதனைகள்
பாடசாலையின் வரலாற்று ஆவணங்களைத் தேடிக்கண்டுபிடித்து 150 ஆவது ஆண்டு மலர் வெளியிட்டமை.
பாடசாலையின் கடந்தகால பல்துறை சாதனைகளையும் வெளிக் கொணரும் நோக்குடன் கொழும்பு பழைய மாணவ சங்கத்தின் உதவியுடன் தபால் தந்தித் திணைக்களத்தினால் முத்திரை ஒன்றும், முதல் நாள் தபால் உறை ஒன்றும் வெளியிட்டமை.
கனடாவில் இயங்கும் பழைய மாணவர் சங்கத்தின் உதவி பெற்று ஜேர்மன் தொழில் நுட்ப நிறுவனக் கட்டட உதவிக்கு மக்கள் பங்களிப்பாக உதவி பெறப்பட்டமை
நடராஜ தரிசனம்
 

கல்லூரி அதிபரின் வாழ்த்து க. தர்மலிங்கம்
அதிபர் உடுப்பிட்டி அ.மி.கல்லூரி தலைவர், மணிவிழாச் செயற்குழு
“என் கடன் பணி செய்து கிடப்பதே'
இது இளைப்பாறும் அதிபர் எனது இனிய நண்பர், மணிவிழா நாயகன் அவ்வப்போது உதிர்க்கும் வார்த்தை எனக்கும் இவருக்குமான தொடர்பு சரீரசரீரித் தொடர்பு போன்றது. இக் கல் லுTரியின் வளர்ச் சிக் கு அவர் ஆற்றிய பணிகள் பல்வகைப்பட்டவை. அப்பணிகளில் அவருக்குப் பக்க பலமாக இருந்து உழைத் திருக்கிறேன். அப்போதெல்லாம் அவர் பலத்தினுடைய முழு வீச்சினையும் கண்டு பிரமிப்படைந்திருக்கிறேன்.
“ஏது வரினும் இடர்ப்படமாட்டோம்” என்ற பாரதி வரியைப் பணிகள் செய்கின்றபோது கொள்கையாகக் கடைப்பிடித்து வந்தவர், இவர் கல்லூரியின் வளர்ச்சிக்காகத் துணிவுடன் செயற்பட்ட இவரின் ஒய்வுகூட ஓயாத பெருங்கவலைதான். -
இவரோடு சேவை செய்தகாலம் இனியது. தெவிட்டாது இனிப்பது தனக்குப் பின்னே வரும் அதிபர்கள் கல்லூரியை மேலும் மேலும் உயர்நிலைக்குக் கொண்டு செல்லப் புதுப்பாதை வகுத்தவர். வருங்காலத்தில் இக் கல்லூரி அடையும் ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டத்திலும் இவர் பணியின் வாசம் படிந்திருக்கும்.
தமிழனாய்ப் பிறந்து, தமிழைக் கற்று, தமிழையே கற்பித்து, தமிழ்க் கல்விச் சமூகத்தின் வளர்ச்சிக்குப் பணியாற்றிக் கொண்டிருக்கும் இவர் இன்றைய இளம் தமிழ் ஆசிரியர்கள் பலருக்கும் ஓர் உதாரண புருஷர். பன்முகப்பட்ட பணிகளில் ஈடுபட்ட இவரைப் பாராட்டி எடுக்கிற மணிவிழாச் சிறப்பாக அமைய எல்லாம் வல்ல மூத்த விநாயகப் பெருமானை வேண்டுவதோடு மணிவிழாக் குழுவின் சார்பில் அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அவரின் நினைவுகளோடும் பதிவுகளோடும் தமிழ் உலகுக்குப் பயன்தரும் இந்த மலரினைத் தயாரித்த ஆசிரியருக்கும், இம் முயற்சியில் கைகொடுத்த அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.
ஒளி இருளை அகற்றும்
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 15

Page 20
கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளரின் வாழ்த்து
உடுவை எஸ். தில்லை நடராசா மேலதிக செயலாளர் கல்விஅமைச்சு இகறுபாய பத்தரமுல்ல
உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி அதிபர் திரு. கிருஷ்ண பிள்ளை நடராசா இளைப்பாற இருக்கும் செய்தியை நம்புவது சிரமமாக இருக்கிறது.
சில வாரங்களுக்கு முன் அவரைச் சந்தித்த போது - கல்வி வளர்ச்சி, கல்லூரி அபிவிருத்தி குறித்து அவரின் ஆர்வம், ஆக்கபூர்வமான செயற்பாடுகள் துடிதுடிப்பும் சுறுசுறுப்பும் இணைந்த தோற்றம் ஆகியவற்றைக் கொண்டு மதிப்பீடு செய்தபோது நாற்பதுகளில் வாழும் அதிபராகவே கருத்திற் கொண்டேன்.
உடுப்பிட்டி அ.மி. கல்லூரி கிராமத்துப் பள்ளியானாலும் தொடர்ச்சியான வரலாறும், தொடராகப் பல சாதனைகளும் படைத்த கல்லூரி.
1980 களில் போராட்ட நடவடிக்கைகளால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்த கல்லூரியின் கட்டிடங்கள் சிதைக்கப்பட்டன; ஆவணங்கள் அழிக்கப்பட்டன, கல்வி நடவடிக்கைகள் கேள்விக் குறியாகின.
அக் காலத்தில் கடமையாற்றிய அதிபர்கள், ஆசிரியர்கள் கல்லூரியில் அக்கறை கொண்டோர் எடுத்த நடவடிக்கைகளால் கல்லூரி இடம்பெயர்ந்து தற்காலிக கொட்டகைகளில் வகுப்புகள் நடைபெற்றன.
1990 களின் பிற்பகுதியில் அதிபர் பதவியேற்ற திரு. கிருஷ்ணபிள்ளை நடராசா இடையூறுகள் இடையேயும் சாதனை நிகழ்த்த விரும்பினார். பட்டதாரிகளையும் பண்பாளர்களையும் பல்துறை விற்பன்னர்களையும் உருவாக்கத்தக்க உயர் கல்வியை மட்டும் போதிப்பதுடன் நின்றுவிடாமல், கல்விசார் நடவடிக்கைகள், கலைசார் நடவடிக்கைகளுடன் பெளதிக வளங்களான கட்டிடங்கள், தளபாடங்கள், உபகரணங்கள் ஆகியவற்றையும் கல்லூரி பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளில் முனைப்புடன் செயற்பட்டார்.
நிரந்தரக் கட்டடங்கள், நீர்வசதி, மலசலசுடட வசதி போன்ற அடிப்படைத் தேவைகள், கற்றல் கற்பித்தலுக்கு வசதியான சாதனங்கள் எல்லாம் நன்றாக அமைந்தால்தான் மாணவர்கள் கல்வி கற்பதில் அதிக அக்கறை கொள்வார்கள் என்பது அதிபர் நடராசாவின் கருத்து.
கல்வி அமைச்சு 1 திணைக்கள அதிகாரிகள், அரசு சார்பற்ற நிறுவனத்தினர், பழைய மாணவர் சங்கத்தினர் கல்லூரி அபிவிருத்திச் சபை அங்கத்தினர் என எல்லோருடனும் நல்லுறவு பேணியதால் வகுப்பறைகளை உள்ளடக்கிய மாடிக் கட்டடங்கள் உயர்ந்தன. மலசல கூட வசதிகள்
16 நடராஜ தரிசனம்

ஏற்படுத்தப்பட்டன. நூலகம், கணனி அறை, செயற்பாட்டறை என்பனவும் ஆரம்பிக்கப்பட்டன.
குறிப்பாக அதிபர் நடராசா புனரமைப்பு நடவடிக்கைகளிலும், புதிதாக
அமைப்புகளை ஆரம்பிப்பதிலும் அக்கறையுடன் செயற்பட்டார்.
விளையாட்டு, சாரணியம் போன்ற புறக்கிருத்திய நடவடிக்கைகளையும் ஊக்குவித்தார்.
பாடசாலையின் உயர்ச்சிக்காக சுமார் ஏழெட்டு ஆண்டுகளில் அதிபர் நடராசா ஆற்றிய பணிகள் பல. அத்தனையும் பாராட்டத்தக்கவை. அமெரிக்க மிஷன் கல்லூரி வரலாற்றில் அவருக்கும் ஒரிடம் உண்டு.
அரச நடைமுறை காரணமாக இளைப்பாறும் நல்லவருக்கு நன்றியையும் நல் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றேன்.
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 17

Page 21
மாகாணக் கல்விச் செயலாளரின் ஆசி
ஆர். தியாகலிங்கம் (6)glL6l)T60If கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத் துறை அமைச்சு வடக்கு - கிழக்கு மாகாணம்
உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி வடமராட்சியில்
மாத்திரமல்ல அகில இலங்கை ரீதியில் சாதனைபடைந்த கல்லூரிகளில் ஒன்றாகும். இக் கல்லூரியில் கடமையாற்றிய
அதிபர்கள் புகழ்பெற்றதுபோலவே திரு. கி. நடராசா அவர்களும்
தனது கடமைக் காலத்தில் இக்கல்லூரிக்கென அளப்பரிய
தியாகங்கள் செய்து அதன் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டுப்
புகழடைந்துள்ளார்.
இவரது இளைப் பாறும் கடமைகள் ஈடு செய்ய
முடியாதவைகளாக இருந்தபோதும் அவரது சேவையும் தியாகமும்
கல்லூரி வரலாற்றில் மறக்கமுடியாத மைல்கற்களாக இருக்க எனது
வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
18 நடராஜ தரிசனம்
 

அறிவொளியின் அதிபர்
வ. செல்வராசா வலயக்கல்விப்பணிப்பாளர்
வடமராட்சிக் கல்விவலயம்
கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்தை அண்மித்த திரு. கி. நடராசாவின்
சேவைக்காலம் சோதனைகளும் வேதனைகளும் நிறைந்தது. ஆனால்,
சாதனைகளும், போதனைகளும் நிகழ்ந்த ஒன்று. காலச் சூறாவளியால்
வரலாற்றுக் குறியீட்டுச் சின்னமாகக்கிடந்த கல்லூரித்தாய்க்கு உருவுந்
திருவுருந் தந்து கலைக்கோயிலாக்கிய சிற்பிகளிலே முன்னணியில் நிற்பவர்
நடா என்பது மிகையானதொன்றன்று.
அவரால் கல்லூரி உயர, கல்லூரியின் வளர்ச்சிப் பெருமிதத்திலே அவரும்
உயர்ந்துள்ளார். ஒய்வுபெற்றுச் செல்லும் அவர் தம் வாழ்வில் எண்ணிய
எண்ணியாங்கு சிறக்க இறைவனை வேண்டுகின்றேன்.
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 19

Page 22
பிரதேச செயலாளரின் வாழ்த்து
சி. சத்தியசீலன், பிரதேச செயலர் கரவெட்டி
உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி அதிபர் திரு. கி. நடராஜா அவர்களின் சேவைநலன் பாராட்டு விழாவினை முன்னிட்டு வெளியிடப்படும் சிறப்பு மலருக்கு வாழ்த்துச் செய்தி வழங்குவதில் பெரு மகிழ்ச்சியடைகின்றேன். இவர் அனுபவமும் ஆற்றலும் நிறைந்த கல்விமானாகத் தனது சேவைக்காலத்தில் பல்லாயிரக்கணக்கான நன் மாணவர்களையும் புத்திஜீவிகளையும் உருவாக்கி இந்த மண்ணிற்குப் பெருமை தேடித்தந்துள்ளார். இவர் ஆசிரியராக, பகுதித் தலைவராக, பிரதி அதிபராக, அதிபராக, விரிவுரையாளராகப் பல்வேறு பாத்திரங்களில் தனது பற்றுறுதியும் அர்ப்பணிப்பும் உள்ள சேவையினால் வடமராட்சிக் கல்விச் சமூகத்தின் வரலாற்றில் நிலையான இடத்தினைப் பிடித்துள்ளார்.
யாI உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியின் வரலாற்றில் இவருடைய சேவைக்காலம் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய காலமாகும். போர் அனர்த்தங்களினால் சேதமுற்றிருந்த இப்பாடசாலையின் கட்டுமானங்களையும், பெளதிக வளங்களையும் குறுகிய காலத்தில் திட்டமிட்ட முறையில் உருவாக்கி இப்பாடசாலையினை வளர்ச்சிப்பாதையில் இட்டுச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இவர் தனது கல்விப்பணிகளுக்கு மேலதிகமாக சமூகப்பணிகளையும், ஆன்மிகப்பணிகளையும் மேற்கொண்டு வருவதுடன் சிறந்த பேச்சாளராகவும், நாடக நடிகராகவும், பல விவாத அரங்குகளில் பங்குபற்றி தனது ஆளுமையினை வெளிப்படுத்தியிருப்பது சமூகச் சிந்தனையுள்ள ஒரு முழு மனிதனாக இவரை இனங்காட்டியுள்ளது. அரசாங்க சேவையிலிருந்து ஒய்வு பெற்ற போதிலும் தன்னை முழுமையாக சமூகப்பணிக்காகவும் பொதுச்சேவைக்காகவும் அர்ப்பணித்து இச் சமூகத்தின் வழிகாட்டியாக விளங்க இவருக்கு நீண்ட ஆயுளையும் உடல் நலத்தினையும் எல்லாம் வல்ல இறைவன் வழங்க வேண்டுமெனப் பிரார்த்தித்து எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
2O நடராஜ தரிசனம்
 

மணிவிழாச் சபைச் செயலாளரின் வாழதது
ப. ஜோதீஸ்வரன் செயலாளர்
மணிவிழாச் செயற்குழு, ஆசிரியர், உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி
LDணிவிழாக் காணும் திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா
மலருக்கு, மணிவிழாச் சபையின் செயலாளராக இருந்து, வாழ்த்துச்
செய்தி வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
"தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்படும்"
என்பது வள்ளுவர் வாக்கு. இவ்விழா நாயகன் செய்த பணிகள்
எதிர்காலத்தில் இவரை நினைவுறுத்துவன. இதனால் இவர் "தக்கார்"
என்ற தகுதியைத் தக்கவைத்தவராகிறார்.
இவர் நேற்று, இன்று, நாளை என்ற முக்காலத்துக்கும்
தக்கராகி முழுமையடைகிறார். இவர் என் இனிய நண்பர். தமிழால்
தன்னையும் தான்சார்ந்த சுற்றத்தையும் அனைத்து உயர்த்தியவர்.
இவரை அணி அணியாய்த் திரண்டு வாழ்த்துவோம். அவர் சேவை
தொடரப் பலம் சேர்ப்போம் வளம் பெறுவோம்.
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 2.

Page 23
செயலாற்றி வெற்றிகண்டார்
வைத்தியகலாநிதி எம். தங்கராஜா தலைவர் பழையமானவர் சங்கம்
திரு. கி. நடராசா அவர்கள் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன்
கல்லூரியின் அதிபராகப் பதவியேற்று எட்டரை வருடங்கள் சேவையாற்றினார்.
இன்று 60 ஆவது அகவை நிறைவு செய்து இளைப்பாறும் வேளையில் அவரது
சேவைகளைப் பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
திரு. கி. நடராசா எமது கல்லூரிக்கு அதிபராக அமைந்தது கல்லூரி பெற்ற
ஒரு பெரும்பாக்கியமாகும். பல்வேறு குறைபாடுகளுடன் கல்லூரி காணப்பட்ட
காலத்தில் தனது கடமையினைப் பொறுப்பேற்றுச் செயலாற்றி வெற்றிகண்டார்.
இவரது ஒய்வுக்காலம் நலத்துடனும் மகிழ்வுடனும் சிறப்பாக அமைய
இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவருக்கு எனது மணிவிழா வாழ்த்துக்
களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
22 நடராஜ தரிசனம்
 

தலைமைக்கு ஓர் எடுத்துக்காட்டு பேராசிரியர் அ. சண்முகதாஸ்
தகைசார்வாழ்நாட் பேராசிரியர் பணிப்பாளர்/ஊடக வளங்கள் மற்றும் பயிற்சிநிலையம்
திரு. கிருஷ்ணபிள்ளை நடராஜா அறுபதாவது அகவையில் கால் பதிக்கிறார். வாழ்வின் ஒரு சுற்றினை நிறைவு செய்து அடுத்த சுற்றிலே தடம் பதிக்கிறார். நிறைவு செய்த சுற்றிலே அவர் சாதித்தவை பல. பல்கலைக்கழ கத்திலே முதல் பட்டத்தினைப் பெறப் படிக்கின்ற பொழுது அவருடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கலைமாமணிப்பட்டம் பெற்ற அவர் தொடர்ந்து கல்வியியலிலே தன் உயர் கல்வியினை முன்னெடுத்துச் சென்றார். பட்டப்பின் கல்வி டிப்ளோமா, முதுகலைமாணிப் பட்டம் என்பனவற்றை விடாமுயற்சியுடன் பெற்றுக்கொண்டார்.
பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கிய திரு. நடராஜா பகுதித் தலைவராகப் பிரதி அதிபராக உயர்ந்து, 1997 இல் அதிபராகப் பதவி உயர்வு பெற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் படிப்பு கல்வி டிப்ளோமா, முதுகல்வியியல்மாணி மாணவர்களுக்கு விரிவுரையாளராகவும் பணி செய்துள்ளார்.
நடராஜாவும் அவருடைய தமையனார் திரு. குணசிங்கராசாவும் மிகச் சிறந்த மேடைப் பேச்சாளர்கள். இலக்கியம் தொடக்கம் அரசியல் வரை பேசக் கூடியவர். கருத்தமைதியுடன் ஒழுங்கு செய்யப்பட்ட முறையிலே பேச வல்லவர். பல மேடைகளிலே நாமிருவரும் பேசியுள்ளோம்.
பட்டி மன்றங்கள் பல கண்டவர் திரு. நடராஜா. கண்ணியத்துடன் கருத்து மோதல் செய்யும் அவர் திறனை நான் பல தடவை கண்டுள்ளேன். நகைச்சுவையுடன் நல்ல கருத்துச் செறிவுடன் வாதிடுபவர். யா/ உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி அதிபராகக் கடமையாற்றிய காலத்திலே அக் கல்லூரியின் பெளதிக வளத்துறை வளர்ச்சிக்குத் திரு. நடராஜா ஆற்றிய பங்கு அளப்பரியது. அரச உதவியுடனும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடனும் கல்லூரிக்கு பல பெறுமதியான பயன்பாடுடைய வளங்களைச் சேர்த்துள்ளார். தலைமைக்கு ஒர் எடுத்துக் காட்டாக விளங்குபவர் திரு. நடராஜா. அத்தலைமையின் முயற்சியாகத்தான் கல்லுரியின் வளர்ச்சி அமைந்துள்ளது.
திரு. நடராஜா ஒரு கலைஞன். பேராதனைப் பல்கலைக் கழகத்திலே நாடக நடிகராகத் திகழ்ந்தவர். தன்னுடைய கல்லூரியிலே சிறந்த நாடகங்களை மேடையேற்றுதற்கு உதவி வருபவர்.
கல்லூரியைப் பொறுப்பாள்கை செய்வதிலே மிகுந்த மனமகிழ்வு கொள்ளும் நடராஜா, அதன் மூலம் சமூகத்துக்கு அளப்பரிய தொண்டாற்றியுள்ளார். தன்னுடைய பூொறுப்பாள்கைத் திறனாலே கல்லூரியின் மேம்பாட்டினை விரைவுபடுத்தியுள்ளார்.
அறுபது அகவை காணும் என் அன்புக்குரிய மாணவன் நடராஜா எல்லா வளங்களையும் பெற்று இன்னும் பல்லாண்டு வாழவேண்டுமென வாழ்த்துகிறேன்.
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 23

Page 24
நலல நணபனும
@ நல்ல கல்விமானும் பேராசிரியர் க. சின்னத்தம்பி ஒய்வு பெற்ற கல்வியியற்றுறைத்தலைவரும் இணைப்பேராசியரும்
நீண்டகால கல்விச் சேவையின் பின்னர் ஒய்வு பெற்றுச் சென்றுள்ள திரு. கிருஷ்ணபிள்ளை நடராசா அவர்களின் உயர்வான கல்விச் சேவையை நயக்கும் வகையில் வெளிவரும் சிறப்பு வெளியீட்டில், அவரது சேவையை நினைவு கூர்ந்தும், நயந்தும், பாராட்டியும், வாழ்த்தியும் ஒரு செய்தியை அளிப்பதற்குக் கிடைத்த வாய்ப்பையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.
ஒரு சிறந்த ஆசிரியராகப் பணியாற்றிய நடராசாவினது சேவையின் இறுதித் தசாப்த காலச் சேவை மிக உன்னதமாக அமைந்துள்ளமை சிறப்பான விடயமாகும்.
நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் துணை அதிபராகப் பெற்றுக் கொண்ட அனுபவத்தினைத் தொடர்ந்து, உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் ஆண்கள் கல்லுரியின் அதிபராகச் சுமார் ஏழு வருடங்களாகச் சிறப்புறப் பணியாற்றிய இக் கல்விமானின் பங்களிப்பைக் கல்வி உலகம் என்றும் நினைவு கூரும்.
பெற்றோர், பழைய மாணவர், அரசு மற்றும் அரசு சார்பற்ற அமைப்புக்கள் எனப் பல்வேறு வளங்களையும் பாடசாலையின் பல்பரிமாண விருத்திக்குப் பல முறையில் பயன்படுத்தி உத்தம பயனைப் பெற்றுக் கொண்ட நண்பன் நடராசாவின் பணி, ஆற்றல் என்பன வியப்புக்குரியன; போற்றுதற்குரியன.
இவரது பல்துறை ஆற்றலுடன், அவர் கடைப்பிடித்த நேர முகாமைத்துவ மற்றும் ஏனைய பலகலை முகாமைத்துவ அணுகுமுறைகள் என்பவையே, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே கல்வியியற்றுறையின் பட்டப் பின் படிப்புக் கற்கை நெறிகளில் கல்வி நிர்வாகம் சார் வருகை விரிவுரையாளராக இவரை அமர்த்த ஏதுவாயிற்று எனலாம்.
அரச சேவையிலிருந்து ஒய்வு பெற்றாலும் இவரது கல்விப் பணி மேலும் தொடர வேண்டுமென்றும் உள்ளார்ந்த நோக்கில், இவரின் உடல், உள மேம்பாடு அடையவேண்டும் என்றும் இறைவனைப் பிரார்த்திப்பதுடன் எனது வாழ்த்துக்களையும் சமர்ப்பிக்கின்றேன்.
24 நடராஜ தரிசனம்
 

புதுயுகத்தை மலரச் செய்தவர் பேராசிரியர் க. அருணாசலம் தமிழ்த்துறை, பேராதனைப்பல்கலைக்கழகம்
1967 ஆம் ஆண்டு எனக்குப் பல்கலைக்கழக அனுமதி கிடைத்தது. அப்பொழுது பேராதனையில் பல்கலைக்கழகமும் கொழும்பில் வளாகமும் அமைந்திருந்தன. கலைப்பீட மாணவர்கள் முதலாம் வருடம் கொழும்பு வளாகத் திற்குச் செல்ல வேண்டும். முதலாம் வருடப் பரீட்சையில் சித்தியடைந்ததும் பேராதனைப் பல்கலைக் கழகத்துக்குச் செல்லவேண்டும். அதனால் முதலாம் வருடமும் இரண்டாம் வருடமும் நாம் பகிடிவதைக்குள்ளானோம்.
கொழும்பு வளாகத்தில் காலடிவைத்தபோது எனது இனிய நண்பன் நடாவையும் என்னையும் வேறு சிலரையும் பாட்டுப்பாடுமாறு இரண்டாம் ஆண்டு மாணவர்கள் பணித்தனர். நாம் சற்றே தயங்கிக் கொண்டிருந்த வேளையில நண்பன் நடா திடீரென உரத்த குரலில் "கல்யாணச் சாப்பாடு போடவா? எனப் பாடத் தொடங்கினார். அதனைப் பார்த்து நாம் மட்டுமன்றிப் பகிடிவதை செய்தவர்களும் வாய்விட்டுச் சிரித்து மகிழ்ந்தனர். அன்றிலிருந்து *நடராசா” என்னும் பெயர் மங்கிக் "கல்யாணச் சாப்பாடு” என்னும் பெயர் மேலோங்கலாயிற்று. அதேபோன்று எனக்கும் நடாவுக்குமிடையிலான நட்பும் ஆழம் பெறலாயிற்று. அவரது நற்குணங்களும் இனிய சுபாவமும் அவரிடம் மிகுதியாக ஈர்த்தன. 1967 ஆம் ஆண்டு ஏற்பட்ட நட்பு இன்று வரை இறுக்கம் பெற்று வருகின்றது.
முதலாமாண்டுப் பரீட்சையில் மூன்று பாடங்களிலும் விசேடசித்தியைப் பெற்ற நான் பேராதனைப் பல்கலைக்கழகத்துக்கு வந்ததும் பொருளியல், புவியியல் , தமிழ், கல்வியியல் ஆகிய பாடங்களில் சிறப்புப் பயிற்சியைப் பெறும் வாய்ப்பினைப் பெற்றேன். மேற்கண்ட நான்கு பாடங்களில் ஏதாவது ஒன்றாலேயே சிறப்புப் பயிற்சிபெற முடியும். பொருளியலைச் சிறப்புப் பாடமாகப் பயிலுமாறு பலரும் வற்புறுத்தியதால் ஒரு மாத காலத்துக்கும் மேலாகப் பொருளியலைப் பயின்றேன். ஆனால் நண்பன் நடாவோ ஆரம்பத்திலிருந்தே என்னைத் தமிழைச் சிறப்புப் பாடமாகப் பயிலுமாறு இடைவிடாது வற்புறுத்தி வந்தார். அறுதியில் அன்றைய தமிழ்ப் பேராசிரியர் செல்வநாயகம் என்னை அழைத்து வழங்கிய அறிவுரையைத் தொடர்ந்து நான் தமிழைச் சிறப்புப் பாடமாகப் பயின்றேன்.
அவ்வாறு நான் பயின்று கொண்டிருந்த வேளையில் நண்பன் நடா நீ கட்டாயம் தமிழ்த் துறைவிரிவுரையாளனாக வருவாய் என அடிக்கடி கூறுவார். அவரது நல்லாசியினாற் போலும் நான் விரிவுரையாளனாகிப் பேராசிரிய ராகவும் உயர்வு பெற்றேன்.
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 25

Page 25
பல்கலைக்கழகக்கல்வியை முடித்த பின்னர் நாம் பிரிய நேரிட்டாலும் அடிக்கடி கடிதத் தொடர்பும் தொலைபேசித் தொடர்பும் இடம் பெற்றுக் கொண்டேயிருக்கின்றன. நடா எப்போதும் எனது முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறை செலுத்தி வந்துள்ளார்.
எனது நெஞ்சம் நிறைந்த இனிய நண்பன் நடா எனக்குச் செய்த உதவிகளுள் மறக்க முடியாத பேருதவி இரண்டாயிரமாம் ஆண்டு 'மே' மாதம் நிகழ்ந்தது. நானும் மகனும் அப்பொழுது பேராதனைப் பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்தோம். மனையியும் மகளும் மீசாலையில் தங்கி யிருந்தனர். திடீரென ஏற்பட்டபோர் அணர்த்தங்களால் தென்மராட்சியுடன் எதுவிததொடர்பும் கொள்ள முடியவில்லை. எனது குடும்பநிலை பற்றி அறியமுடியாது தவித்துக் கொண்டிருந்தேன். எனது குடும்பத்தினர் பெரும்பாலும் வடமராட்சிக்கே இடம் பெயர்ந்திருக்கலாம் என ஊகித்தேன். அந்நிலையில் நடாவின் ஞாபகம் வந்தது. உடனே அவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு எனது மனத்தவிப்பைக் கூறினேன். தான் விரைவில் எப்படியாவது எனது குடும்பத்தினரைத் தேடிக் கண்டுபிடித்து விபரங்களைத் தருவதாக உறுதியளித்தார்.
அவர் கூறியவாறே மூன்று நாட்களுள் எனது குடும்பத்தினரைக் கண்டுபிடித்து எல்லா விபரங்களையும் எனக்கு அறிவித்தார். காலத்தினால் செய்த அந்த உதவியை என்னால் மறக்கமுடியுமா?
எனது நண்பர் நடா பட்டதாரி ஆசிரியராகக் கடமையாற்றிப் பின்னர் அதிபராகப் பதவி உயர்வுபெற்று உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியின் உயர்வுக்கு நெருக்கடி மிகுந்த சூழ்நிலையில் அரும்பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என்பது பலரும் அறிந்ததே
கடந்த இருபதாண்டுகளுக்கும் மேற்பட்ட யுத்த அனர்த்தங்களால் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறிக் கொழும்பிற்கும் தமிழகத்திற்கும் மேலைநாடுகளுக்கும் பல இலட்சக் கணக்கானோர் சென்று கொண்டிருந்தவேளையில் தமது மண்ணை விட்டு நீங்காமல் அடிக்கடி யாழ்ப்பாணப் பிரதேசத்துக்குள்ளேயே இடம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டு தமது பணிகளைத் தொடர்ந்தவர்களும் உள்ளனர். அவர்களுள் மிகமுக்கிய மான ஒருவர் அதிபர் நடராசா ஆவர்.
போர் அநர்த்தங்களால் பாழடைந்து போயிருந்த உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியின் அதிபர் பதவியை ஏற்கப்பலரும் தயங்கிக் கொண்டிருந்த வேளையில் துணிகர ஆண்மையுடன் 09-07-1997 ஆம் ஆண்டு அதனைப் பொறுப்பேற்றார்.
அதிபராகப் பதவியேற்றதைத் தொடர்ந்து தமது நேரத்தையும் சக்தியையும் கல்லூரியின் புனர் நிர்மாணத்திற்கும் முன்னேற்றத்திற்குமாகச் செலவிட்டார்.
26 நடராஜ தரிசனம்

பழைய மாணவர் சங்கம், கல்விப் பணிமனையைச் சேர்ந்த அதிகாரிகள், நிறுவனங்கள் முதலியவற்றின் உதவிகளைப் பெற்று அங்குமிங்குமாகச் சிதறுண்டிருந்த வகுப்பறைகளை ஒன்று சேர்த்தார்; இருமாடிக் கட்டத்தை நிறுவினார்; கல்லூரி மாணவர்களதும் ஆசிரியர்களதும் இடர்தீர புதிதாகக் கழிப்பறைகளையும் நீர் வசதியையும் ஏற்படுத்திக் கொடுத்தார். ஏற்கனவே இருந்த இருமாடிக் கட்டத்தைப் புனரமைப்புச் செய்தார்; பலவசதிகளுடன் கூடிய நூலகம் அவரால் அமைக்கப்பட்டன.
வசதியான நூலகத்தை அமைத்ததுடன் நில்லாது தமது விடாமுயற்சியால் கல்லூரியின் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், நலன் விரும்பிகள், கல்விமான்கள், நிறுவனங்கள் முதலிய பலதரப்பினரிடமிருந்தும் பெருந்தொகையான நூல்களைத் திரட்டி நூலகத்திற்கு வழங்கினார். கல்லூரிக்குப் பாதுகாப்பாகச் சுற்று மதில் கட்டப்பட்டது.
ஒரு கல்லூரியின் வளர்ச்சி வெறுமனே கட்டடங்களின் வளர்ச்சியில் மட்டும் தங்கியிருப்பதில்லை. வருடா வருடம் வெளி வரும் மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகள் முக்கிய இடம் பெறுகின்றன. பரீட்சைப் பெறுபேறுகள் நன்றாக அமையாதவிடத்து கல்லூரியில் மாணவர்கள் சேரும் தொகை குறைவடையும். மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகள் நன்றாக அமையுமிடத்து கல்லூரியிற் சேரும் மாணவர்களின் தொகையும் அதிகரிக்கும் கல்லூரியின் புகழும் ஒங்கும். கடந்த சில தசாப்தங்களில் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் பெருநகரங்களின் மத்தியில் சகலவசதிகளுடனும் அமைந்துள்ள கல்லூரிகளின் பரீட்சை பெறுபேறுகளிலும் பார்க்கக் கிராமப் புறங்களில் அரைகுறை வசதிகளுடன் அமைந்துள்ள கல்லூரிகளின் பரீட்சைப் பெறுபேறுகள் சிறப்பாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது.
இத்தகையதொரு போக்கிற்குவிதிவிலக்காக அமையாமல் திரு. நடராசா அவர்கள் அதிபராகப் பதவியேற்றதைத் தொடர்ந்து கல்லூரியின் சகல மட்டங்களிலுமான பரீட்சைப் பெறுபேறுகள் வருடா வருடம் சிறந்து விளங்குவதை அவதானக்கலாம்.
அதிபரது ஊக்கத்தினாலும் விடாமுயற்சியினாலும் விளையாட்டுத்துறை, சாரணியம், கலைநிகழ்ச்சிகள், தமிழ்மொழித்தினப் போட்டிகள் முதலியனவும் சிறந்து விளங்குகின்றன. 1997 ஆம் ஆண்டு அதிபராகப் பதவியேற்ற திரு. நடராசா அவர்கள் குறுகிய காலத்தில் மேற்கொண்ட சிறப்பான பணிகளால் கல்லூரியின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தினார்; புதுயுகத்தை மலரச் செய்தார். இத்தகைய வேலைச் சுமைகளுக்கு மத்தியிலும் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்துக் கல்வியியல் துறையில்முதுகல்விமாணிப் பட்டத்தினைப் பெற்றுக் கொண்டமை வியக்கத்தக்கது. அவர் ஒய்வு பெற்ற பின்பும் ஒய்ந்தி ருக்காது கல்லூரிக்கும் சமூகத்துக்கும் தொடர்ந்து பணிகள் செய்ய எல்லாம் வல்ல இறைவன் அருள் கிட்டுவதாக.
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 27

Page 26
செயல்திறன் மிக்க அதிபர் பேராசிரியர் மா. நடராசசுந்தரம் முகாமைக் கற்கையியல் வணிகபிடம்
யாழ்பல்கலைக்கழகம்
கிருஷ்ணபிள்ளை நடராசா அவர்கள் ஒரு ஆசிரியன், கல்விச் சேவையாளன், சமூகத் தொண்டன், எழுத்தாளன், செயல்திறன் மிக்க தூர நோக்குடைய நிர்வாகி எனப்பலவாறாக அழைக்கலாம். 1945 ஆண்டு மார்கழி மாதம் இருபதாம் திகதி இப்பூமியில் அவதரித்தார். தனது ஆரம்பக்கல்வியை வல்வெட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையிலும் இடைநிலைக்கல்வியையும் சிரேஷ்ட இடைநிலைக்கல்வியையும் யா/ சிதம்பராக் கல்லூரியிலும் பின்பு உயர்கல்வியைப் பேராதனைக் பல்கலைக்கழகத்திலும் பெற்று ஒரு சிறந்த ஆசிரியராகச் செயற்பட்டு வந்தார்.
1976 ஆண்டு கற்பித்தல் சேவையை கமு/ அல் - அஸ்ரக்கர் மகாவித்தியாலயத்தில் ஆரம்பித்து, பின் யா/ நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் 1978 ஆண்டு தொடக்கம் ஏறத்தாழ 10வருடங்கள் சிறந்த ஆசிரியராகச் செயற்பட்டு இக்காலகட்டத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் படிப்பு கல்வி டிப்ளோமாவையும்(1982-83) முது கலைமாணிப் பட்டத்தையும் (1985-90) பெற்று கல்வியாளன் என்ற ரீதியில் எல்லோராலும் போற்றக்கரிய அளவுக்கு ஒரு உயர்மட்டத்தை அடைந்தார். 1997" ஆண்டிலிருந்து யா/ உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியின் அதிபராக நியமனம் பெற்று ஒய்வு பெறும் வரை அளப்பரிய சேவையை ஆற்றி மாணவர்கள் ஆசிரியர்கள் பிரதேச மக்களால் செயல்திறமை மிக்க அதிபர் என்று அழைக்கப்பட்டு வாழ்த்தப்பட்டு ஒய்வு பெறுகின்றார். அதிபராக இருந்த காலப்பகுதியில் யாழ் பல்கலைக்கழகத்தில் இடைவரவு விரிவுரையாளராக இருந்து பட்டப்பின் படிப்பு டிப்ளோமா மாணவர்களுக்கு 1997 - 2000 வரை கல்வி நிர்வாகமும் முகாமைத்துவமும் என்ற பாட நெறியையும் முதுகலைமாணி மாணவர்களுக்கு 2001-2002 வரை கல்வி நிர்வாகமும் முகாமைத்துவமும் என்ற பாட நெறியையும் சிறப்பாக் கற்பித்துள்ளார்.
பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறியதன் பின்பு 1972 ஆண்டுகளில் நானும் நண்பர் நடராசாவும் ஆசிரியர் நவரத்தினமும் இணைந்து நெல்லியடியில் ஒரு கல்வி நிலையத்தை உருவாக்கி குறிப்பாக உயர்தர மாணவர்களுக்குக் கல்வி கற்பித்தோம் வருமானத்தைப் பெரிதும் பாராது சேவையையும் மாணவர்களின் நலனில் அக்கறையும் கொண்டு பல
28 நடராஜ தரிசனம்
 

மாணவர்களுக்கு குறுகியகாலப் பயிற்சிகள் மூலம் பல பரீட்சைகளில் சித்தியடைவதற்கு உதவினோம். நான் வேறுதிசையில் 1974லிருந்து மாறிச் சென்றாலும் இவர்கள் தொடர்ச்சியாக இன்று வரை அந்தக் கல்வி நிலையத்தை மேம்படச் செய்து வருகின்றார்கள். இதன்மூலம் அவருடைய அர்ப்பணிப்பு, விருப்பம், கடமை உணர்வு என்பவற்றை இலகுவாக விளங்கிக் கொள்ளலாம் -
அமெரிக்கன் மிசன் பாடசாலையின் இன்றைய நிலைக்கும் அதன் தோற்றம் வடிவமைப்புக்கும் எதிர்கால சுபீட்சத்திற்கும் ஒரு நீண்டதூர நோக்கில் பல தந்திரோபாய நிகழ்வு உருவாக்கி வெற்றிப்பாதையில் அவை சென்றுகொண்டு இருப்பதற்கு செயற்திறன் மிக்க அதிபராக விளங்கி ஒய்வு பெறும் இந்தச் சந்தர்ப்பத்திலும் அவரை மாணவர்கள், ஆசிரியர்கள், கல்விச் சமூகங்கள் என்றும் மறக்கமாட்டார்கள். அவர் ஒய்வு பெற்று வாழும் காலங்களில் சிறப்பாக நோய் நொடியின்றி வாழ்ந்து மேலும் சமூக சேவைகளை முன்னெடுக்க வேண்டும் என அவரை வாழ்த்துகின்றேன்.
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 29

Page 27
சேண் விளங்கும் புகழ் கொண்டார் கலாநிதி துரை. மனோகரன்,
தலைவர் தமிழ்த்துறை பேராதனைப்பல்கலைக்கழகம்
மணிவிழா நாயகன் திரு. கி. நடராஜா வயதால் மாத்திரம் மணிவிழாவுக்குத் தகுதி படைத்தவராக விளங்கவில்லை. அவரது அறிவும், கடமையுணர்வும், செயல்திறனுமே அவரை மணிவிழா நாயகனாக ஆக்கியுள்ளன. “செயற்கரிய செய்வார் பெரியர். அவர் தமது சேவைக்காலத்தில் தாம் அதிபராகக் கடமையாற்றிய கல்லூரியை நிமிரச்செய்து, தமது மாணவர்களை உயரச் செய்து, தாமும் உயர்ந்து, தமது கல்லூரியையும், மாணவர்களையும் தம்மையும் அகில இலங்கையும் அறியுமாறு செய்துள்ளார். “சேண் விளங்கும் புகழ் கொண்டவராக அவர் விளங்குகின்றார்.
திரு. நடராஜாவின் செயலாற்றலும், பேச்சாற்றலும் அவரது ஆளுமையின் முக்கிய பக்கங்களாக விளங்குகின்றன. தாமும் வளர்ந்து, பிறரையும் வளரச் செய்பவர்களே போற்றுதலுக்குரியவர்கள். அத்தகைய தகைமை திரு. நடராஜாவுக்கு இயல்பாகவே உண்டு. பிறரை ஊக்கமூட்டிச் செயலாற்றச் செய்வதில் அவர் வல்லவராக எப்போதும் விளங்கிவந்துள்ளார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிறந்த உற்பத்திகளுள் ஒருவராகத் திரு. நடராஜா விளங்குகின்றார். இப்பல்கலைக்கழகத்தின் அறிவொளி அவரிலும் பிரகாசிக்கிறது. அவரது மாணவர்களிலும் அதன் பிரதிபலிப்பைக் காணலாம்.
மணிவிழாக் காணும் திரு. நடராஜாவை வாழ்த்துவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன். செயற்கரிய செய்வாரை வாழ்த்துவது மனத்துக்கு இதமாக இருக்கிறது. திரு. நடராஜாவை வாழ்த்துவதால் ஏற்படும் மகிழ்ச்சியை நானும் அனுபவிக்கிறேன். அவர் பல்லாண்டுகள் நீடுழி வாழ்ந்து, மேன்மேலும் சேவைகள் ஆற்ற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!
30 நடராஜ தரிசனம்
 

நெஞ்சம் நிறைய வாழ்த்துகின்றேன் பேராசிரியர் கலாநிதி எஸ். சிவலிங்கராஜா
தலைவர் தமிழ்த்துறை யாழ்பல்கலைக்கழகம்
உடுப்பிட்டி . அமெரிக்க மிஷன் கல்லூரி அதிபர், நெஞ்சம் இனிக்க, நினைவுகள் சுவைக்க அன்பாய்ப் பழகும் இனிய நண்பன், நடராசாவும் ஒய்வு பெறுகிறார் என்ற செய்தியை மாணவன் ஒருவன் வந்து காதில் வீசிப் போனான்; முத்தையா முரளிதரனின் பந்து வீச்சாய் என்னில் அச்செய்தி பட்டுப் போனது. அப்பாடா . நடராசாவுக்கும் அறுபதாயிற்றா? நாற்பதுதானே மதிக்கலாம் பார்த்தோர், பழகியோர், மாணவர் யாவரும் இப்படித்தானே மதிப்பிட்டு இருப்பர், மெல்லிய உருவம், சுறுசுறுப்பாகச் சுற்றுலா வருவார், நெஞ்சைத் திறந்து வாயாற் சிரிப்பார், தனது கருத்தை ஆணித் தரமாய் அடித்துக் கூறுவார், கம்பர் மலை அது கவின்பெறுபூமி, மண்ணை வென்று
வளம்பல பெருக்கி
மனம் போல் விரிந்து விண்ணை அளாவும்
வீடுகள் கட்டிச்
செல்வச் செழிப்பில் ܕܠ சிலிர்க்கும் சிற்றுார்,
அந்த மண்ணில், அந்தமில் ஆற்றலாற் செந்தமிழ் வளர்த்த
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 31

Page 28
அறிஞர் பலபேர். அந்தப் பாதை வழியே நடந்த
என்,
இனிய நண்பன்; பேச்சுக் கலையைப் பெரிதும் பயின்றோன், பல்கலைக் கழக விரிவுரையாளனாய் பாரிடை நிமிர்ந்த குணசிங்க ராசாவின் இளவலாய் வந்து எம்மிடைப் பழகிய நடராசாவுக்கும் அறுபதாயிற்றா? பட்டிமண்டபம், பலபல மேடைகள் கவியரங்குகள், கருத்தரங்குகள் இப்படிப்பட்ட மேடையில் நாங்கள் இருவரும் ஒன்றாய் இணைந்து தோன்றிய இனிய நாள்கள் . என் இதயவான் பரப்பில் சிறகினை அசைக்கும், பேராதனையில் பல்கலை பயின்று ஆராக்காதலாய் ஆசிரியப் பணி தன்னில் இணைந்து உன்னை உயர்த்திய வரலாறு எங்கள் வடமராட்சியின் வரலாற்றோடு பின்னிப் பிணையும், மாணவர் தமக்கு இன்தமிழ் தன்னை வாரி இறைத்த வற்றாப் பெருஞ்சுனை, படிப் படியாகப் பதவியில்
உயர்ந்தோய், பல்கலைக் கழகப் பதவியில் இருந்து கல்விப் புலத்தைக் கனதி ஆக்கினாய், ஈழப் போரின் இலட்சியவழியில் அழிக்க வொண்ணாத் தடத்தினைப் பதித்த நெல்லியடி, மத்திய மகா வித்தியாலயத்தில் நற்பணி புரிந்து நம்மிடை உயர்ந்தாய், நாவலருக்குப் பலநாள் முன்பே தருமப் பள்ளிக் கூடம் கண்டதும், சிவசம்பு என்னும் சிறப்புறு புலவன் செய்யுள்கள் பாடிச் சிறப்புப் பெற்றதும் புராணபடனம், புத்திலக்கியம் என
32 நடராஜ தரிசனம்
 

இருமரபிலும் தடம்பல பதித்த உடுப்பிட்டி என்னும் ஊரிலே வந்து அமெரிக்க மிஷனரி அர்ப்பணிப்போடு நிறுவிய கல்விச் சாலையின் அதிபனாய் பதவியில் இருந்து பணிபல செய்தோய், கல்வி விருத்தி, கட்டிடப் பெருக்கம் கலை விழாக்கள், கருத்தாடல்கள், விளையாட்டாதியாம் பல்வேறு துறையிலும் கல்லூரியினைக் கலகலப்பாக்கி ஊரில், உலகில் உயர்த்திய அதிபர்
மாணவர் குழாமும் மற்றவர் தாமும் ஊருளோர் யாவரும் உன்னை வாழ்த்துவர், கொடுக்கக் கொடுக்க, குறையாது நிறையும் கல்விச் செல்வம் உன்னிடம் உள்ளது, ஆழ்ந்த படிப்பும் ஆய்வுத் தேடலும் வீழ்ந்தவர் தம்மையும் தூக்கி நிமிர்த்தும் வீரியம் யாவும் உன்வசம் உண்டு;
பல்லாண்டு வாழ்ந்து பணிகளைத் தொடர நெஞ்சம் நிறைய வாழ்த்துகின்றேன் யான்.
திரு கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 33

Page 29
வித்தகத்தாயை வீறுபெறச் செய்தவர் கலாநிதி தம்பிராசா வசந்தகுமார்
தலைவர் கனடா கிளைச் சங்கம்
உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி அதிபர் திரு. கி. நடராஜா அவர்கள் தனது அர்ப்பணிப்பு மிக்க 30 வருட ஆசிரிய சேவை, அதைத் தொடர்ந்து எட்டாண்டு காலம் எமது கல்லூரியை அதன் மீள் எழுச்சிப் பாதையில் வழி நடத்திய அதிபர் சேவை ஆகியவற்றிலிருந்து இன்று (மார்.20,2005) ஒய்வு பெறுகிறார். அகவை அறுபதை அடைகின்ற காரணத்தால் இளைஞர் நடராஜா இன்று ஒய்வு பெறுகிறார். அரச சேவையிலிருந்து ஒய்வு பெறுகின்ற போதும் உற்சாகம், உத்வேகம், உழைப்பு இவற்றில் ஒய்வு காணாத இந்த இளைஞரின் முன் இன்னும் பல திறமான சமூகப் பணிகள் பரந்து கிடக்கின்றன. இவருடைய கல்விச் சிறப்பு, மொழி இலக்கியத் திறன், சமூகப் பிரக்ஞை, எடுத்ததைத் தொகுத்து முடிக்கும் வல்லமை இவை யாவும் மென்மேலும் சமூகப் பணிகளில் அர்ப்பணமாகும் என்பது எமது உறுதியான நம்பிக்கை.
1996ம் ஆண்டு எமது கல்லூரி சந்தித்த சோதனைக் காலங்களில் ஒன்றாகும் கல்லூரியின் பதில் அதிபர் பொறுப்பையேற்றிருந்த திரு. S. தில்லையம்பலம் அவர்கள் நோய்வாய்ப்பட்ட நிலையில், கல்லூரி நிரந்தர அதிபர் ஒருவரின்றி தத்தளித்தது. அப்போது பழைய மாணவ சங்கம் திரு. நடராஜா அவர்களை அணுகிய போது தான் எமது கல்லூரியின் பழைய மாணவர் இல்லை என்ற தயக்கம் அவரிடம் இருந்தது. எனினும் அவர் கல்லூரியின் அயற்கிராமத்தைச் சார்ந்தவர், கல்லூரியைச் சிறப்பாக நிர்வகிக்கவல்ல திறமைசாலி, எமது மாணவ சமுதாயத்திற்கு ஏற்கனவே அறிமுகமான ஆசிரியர் இன்னோரன்ன காரணங்களை வலியுறுத்தி, எமது கல்லூரியின் தேவையையும் எடுத்துக்கூறி வேண்டிக் கொண்ட போது அவர் அதிபர் பொறுப்பை ஏற்கச் சம்மதித்தார், ஏற்றுக் கொண்டார். அது, எமது கல்லூரி புனரமைப்பை எதிர்பார்த்து நின்ற காலம், போரினழுத்தங்களால் கல்வி சாரா புறச் செயற்பாடுகளில் சோர்வுற்றிருந்த காலம், கல்லூரியின் தேவை உணர்ந்து, தன் பொறுப்புணர்ந்து தன் சிந்தை, சொல், செயல் யாவற்றிலும் கல்லூரியையே முன்னிறுத்தி அவர் சமர்ப்பணம் செய்த உழைப்பின் சான்றாக இன்று எம் கல்லூரி எழுந்து நிற்கிறது. வெறும் கட்டிடங்களாக அல்லாமல் வித்தகத் தாய் விதந்துறையும் வாசம் என்னும் உணர்வின் உந்துதலோடு கலை நயம் மேவ, கற்கும் சிறார்களிடமும், கற்பிக்கும் ஆசிரியர்களிடமும் உள்ளப் பரிமளிப்பை உருவாக்கும் வகையில்
34 நடராஜ தரிசனம்
 

கல்லூரியைக் கட்டியெழுப்பியமை அவரின் ஆளுமையின் தனித்துவமான கூறெனலாம். ஆழ்ந்த திட்டமிடல், அபாரமான முயற்சி இவற்றினூடாக இவர் நிர்மாணித்திருக்கும் அற்புதமான நூலகம் கல்வியூட்டல் வழிமுறைகளில் இவர் கொண்டுள்ள கருத்துத் தெளிவைப் பிரதிபலிக்கிறது. விளையாட்டு மைதான விஸ்தரிப்பு, குழு விளையாட்டுகளின் முன்னெடுப்பு முதலியன மாணவரின் ஆளுமை வளர்ச்சியில் அக்கறை கொண்டு இவர் எடுத்தாண்ட பல செயற்றிட்டங்கள் ஆகும். பெற்றோர் பழைய மாணவரின் ஒத்தாசை பொருள் வளம் படைத்தோரின் வள்ளண்மை, நலன் விரும்புவோரின் அனுசரணை, திணைக்களத்தின் வரைவாக்கம் இவை யாவற்றையும் தெளிவார்ந்த திட்டமிடலோடு ஆற்றுப்படுத்தி செம்மையுறச் செயல் வடிவம் பெறச் செய்த அதிபரின் தலைமைத்துவப் பண்பும் செயற்றிறனும் வியந்து பாராட்டுதற்குரியது. இயல்பில் பெற்றதனாலும், பின்னர் கற்றதனாலும் அவருள் உருப்பெற்றிருந்த ஆளுமைச் சிறப்பைப் பயனோடு வெளிக்கொணர இந்த எட்டாண்டுகளும் எமது கல்லூரி களமாய் அமைந்த பொருத்தப்பாட்டினை எண்ணி நாம் அகமகிழ்கிறோம். தன்னலமற்ற தங்கள் சேவையினால் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியின் உயர்வுக்கு வழி காட்டிய புகழ் பூத்த அதிபர் பரம்பரையில் திரு. நடராஜா அவர்களும் ஒருவராகினார். எங்கள் கல்லூரிக்கு அவராற்றிய அளப்பரிய சேவைக்காக அனைத்துப் பழைய மாணவர்கள் சார்பாகவும் எமது நன்றிகளைப் பணிவன்போடு சமர்ப்பிக்கிறோம்.
அவரின் ஆசிரியப் பணியின் ஆரம்ப காலத்தில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் அவர் ஆற்றிய சிறப்பான சேவை அக் கல்லூரியினாலும் அவர் தம் மாணவராலும் என்றும் நன்றியோடு நினைவில் போற்றப்படும். எழுபதில் புரண்டு போய் இன்னமும் சீரமைக்கப்படாத எம்நாட்டு உயர்கல்வித் தடத்தில் அன்றிலிருந்து இன்று வரை பயணிக்க நேர்ந்த பல்லாயிரம் மாணவர்களைப் பத்திரமாக அவர்களின் இலக்கின் இடம் சேர்ப்பிக்கின்ற சிரமமான பணியில் ஈடுபட்டு சேவை நல்கிக் கொண்டிருக்கும் ஆசிரியப் பெருந்தகைகளில் திரு. நடராஜா அவர்களும் ஒருவர் என்பதை யாவரும் நன்கறிவர். எனவே அவரின் பணி எமது சமூகத்தில் ஒரு தொடர்கதை. ஆசிரியப் பணி தவிர்த்து அவர் தம் இலக்கியப் பணிகளும் சமூகப் பணிகளும் மேலும் தொடரும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. கல்வி, கலை,இலக்கியம், ஆத்மீகம், பண்பாடு,ஒழுக்கம் என்பவற்றின் அடித்தளத்தில் எழுந்து நிற்கிற எமது சமூகக் கட்டுமாணத்தை சிதைவுறாவண்ணம் பேணி உலக அரங்கினில் உயர்ந்தோங்க வைக்கும் உன்னத பணியில் அதிபர் திரு. நடராஜா அவர்களின் கரங்களும் இணைந்தே நிற்கும். நீடிய வாழ்வும் நிறைந்த நலமும் பெற்று பணி பல செய்து சிறக்க அவர் தமக்கு இறையருள் என்றுமுடனிருக்க வேண்டி வாழ்த்தி நிற்கிறோம்.
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 35

Page 30
உயர் கல்வியியலாளன்
வே. தி. செல்வரத்தினம் வலயக்கல்விப்பணிப்பாளர் யாழ்ப்பாணம்
ஓர் ஆசிரியரே சிறந்த நிர்வாகியாக முகாமையாளராக இருக்கலாம் என்பதற்கு எடுத்துக் காட்டு அதிபர் திரு.கி.நடராஜா என்பதை ஆணித்தரமாகக் கூறலாம். அவரின் கற்பித்தலில் உருவான மாணவர்கள் பலரும் பல்கலைக்கழகத்திற் கற்றனர்; கற்கின்றனர்; விரிவுரையாளராகக் கடமையாற்றுகின்றனர்; முதல் நிலை மாணவர்களாக உள்ளனர். இன்னும் சிறப்பான புள்ளிவிபரம் யாதெனில் மிகவும் பின்தங்கிய கிராமத்தில் உள்ள பிள்ளைகள் அவ்வூர்ப் பாடசாலையில் சாதாரண தர வகுப்பினை முடித்து யா/ உடுப்பிட்டி அ. மி. கல்லூரியில் திரு. கி. நடராஜாவிடம் கற்று இலங்கையில் முதல் இருபது மாணவர்களில் தெரிவாகிப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கற்கின்றனர். தமிழில் பாண்டித்தியம் உடைய திரு. கி. நடராஜா, கல்வியியலில் முதுகலைமாணிப் பட்டம் உடைய வடமராட்சியில் உள்ள ஒரு சிறந்த கல்வியியலாளன் ஆவார்.
யா/உடுப்பிட்டி அ.மி. கல்லூரி அதிபரின்றி தவித்த காலத்தில் அவ்விடத்தை நிரப்ப திரு. கி. நடராஜாவிடம் பலராலும் கோரிக்கை விடப்பட்டது. அக் கோரிக்கையை ஏற்று இம் முதுநிலை ஆசிரியர் தனது பணியை இக்கல்லூரியில் ஆரம்பித்த நாட்களிலேயே நிர்வாக வித்தியாசம் பெரிதாகத் தெரியத்தொடங்கியது. ஆசிரியர்களை அரவணைத்துச் செல்வதில் தனது முதிர்வு நிலையைத் தெளிவாகக் காட்டியுள்ளார். ஆசிரியர்கள் பலருடனும் முரண்பட்டு ஆசிரியர்களை இடமாற்றத்திற்கும், அவஸ்தைக்கும் உள்ளாக்கும் அதிபர்கள் உள்ள இக்காலத்தில் ஆசிரியர் இடைத்தாக்கம், ஆசிரியர் முகாமை இடைத்தாக்கம் என்பன சீராக நடைபெற முரண்பாடுகளை நீக்கிய பெருமை திரு. கி. நடராஜா அதிபருக்குரிய ஒரு சிறப்பியல்பாகும். நான் வலயத்திற் கடமையாற்றிய காலத்தில் எந்த ஒர ஆசிரியர் பற்றிய எவ்விதக் குறைகளையும் எனக்குக் கூறியதில்லை அந்தளவில் இமயமாக உயர்ந்து நிற்கின்றார், அதிபர் திரு. கி. நடராஜா. இச் சந்தர்ப்பத்தில் தனக்கு இளையோராய் இருந்தாலும் வலயத்தில் வேலை செய்பவர்களின் பணிப்புரைகளை ஏற்று அவற்றை நிறைவு செய்தவர். இவர் அதிபராக இருந்த நினைவு வடமராட்சி வலயத்தில் இருக்க வேண்டு மென்பதற்காகத் தானோ என்னவோ வலயக்கல்வி அலுவலகத்திற்கு ஒரு பெரிய குத்துவிளக்கை அன்பளிப்புச் செய்துள்ளார்.
36 நடராஜ தரிசனம்
 

பாடசாலையின் பெளதிகத் தேவையை நிறைவு செய்வதில் திரு. கி. நடராஜாவின் பணி அளப்பரியது. சாம்பல் மேடாய் இருந்த பல தற்காலிகக் கொட்டகையிற் செயற்பட்ட வகுப்புக்கள் யாவும் தற்போது மாடிக்கட்டிடமாக, உகந்த கற்றல் கவின்நிலையுடையதாக மாற்றிய பெருமை அதிபர் திரு. கி. நடராஜாவினுடையது. பாடசாலையில் கணனிக் கற்கைக்கான ஒரு நிலையத்தை முதன் முதலில் வடமராட்சியில் உருவாக்கிய பெருமை திரு.கி. நடராஜாவையே சாரும். இதற்கான கணணிகளைப் பழையமானவரிடமிருந்து பெற்று வளத்தைப் பெருக்கியுள்ளார். அதிபர். திரு. கி. நடராஜாவின் முழு எண்ணமும் சுவாசமும் ஒரு சிறந்த நூலகத்தை உருவாக்குவதாகும். அவரே இதற்கான ஒரு நூலகத்தை உருவாக்கி அதற்குப் பல்லாயிரம் புத்தகங்களையும் சேர்த்துள்ளார். இந்நூலகம் வடமராட்சி வலயத்தில் முதலாமிடத்தைப் பெற்றமையை நீக்கியமை பற்றி முதலிற் கவலைப்பட்டாலும் பின்னர் திருக்குறளின் சிறுமை அதிகாரத்தைப் படித்த காரணத்தினாலோ என்னவோ அவற்றை மறந்துவிட்டார். இந்நூலகத்தை ஆசிரியர்களும் மாணவர்களும் பயன்படுத்துவதே திரு. கி. நடராஜாவிற்கு நாம் செய்யும் கைங்கரியமாகும். தற்போது க. பொ. த. உயர்தர விஞ்ஞான ஆய்வுகூடத்தையும் நிர்மாணித்துள்ளார். தற்போது எமது பழைய மாணவனும் கல்வியமைச்சின் சிரேஷ்ட செயலாளருமாகிய திரு. கி. தில்லை நடராஜாவினால் ஒதுக்கப்பட்ட 30 லட்சம் ரூபா நிதியில் அவர் எண்ணப்படி முகப்பில் கட்டிடம் அமைத்தால் சிறப்பான ஒரு உட்கட்டுமானமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
திரு. கி. நடராஜா அதிபர் மாணவர்களை மேம்படுத்தியமை, ஆசிரியர் நல்லுறவைப் பேணியமை, உட்கட்டுமானங்களை நிர்மாணித்தமை எல்லாவற்றையும் விடப் பொறுமை சகிப்புத்தன்மை ஆகிய உள்ளார்ந்த சிறந்த பண்பாற்றலை உடையவர். தான் கற்ற பாடசாலையை விடத் தான் அதிபராகக் கடமையாற்றிய எமது யா/ உடுப்பிட்டி அ. மி. கல்லூரியை நேசித்துக் கடமையாற்றியமைக்காக இக்கல்லூரியில் பழைய மாணவனாகிய யான் நன்றி தெரிவிக்கும் சந்தர்ப்பமாக இதனைப் பயன்படுத்தக்கூடியதாக உள்ளமை மகிழ்ச்சியைத் தருகிறது.
திரு. கி. நடராஜா கல்வியியலாளன் தொடர்ந்தும் கல்விச் சேவை செய்து சுகமே வாழ எனது பிரார்த்தனைகள்.
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 37

Page 31
உணர்வோடு தமிழ் கற்பிக்கும் ©ງຫົfuff
க. அம்பலவாணர் கோட்டக்கல்விப்பணிப்பாளர்
உணர்வோடு தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களை என்றும் உயர்வாகவே மதித்து வருகின்றன்ே. யாழ். நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் சிறந்த தமிழ் ஆசிரியராக விளங்கிய காலத்தில் இருந்து திரு. கிருஷ்ணபிள்ளை நடராசா ஆசிரியராகக் கடமையாற்றத் தொடங்கிய காலத்தில் இருந்து நெருங்கிய தொடர்பும் நட்பும் இருந்துவருகின்றது. இலக்கியச் செழுமைமிக்க தமிழ் மொழியில் புலமையுடையோர் பேச்சுவன்மையாலும் ஆற்றலும் எந்தக் காரியத்தையும் இலகுவாகச் சாதித்து விடுவர்.
திரு. கிருஷ்ணபிள்ளை நடராசா ஆசிரியரிடம் இந்த ஆற்றல் மிகுதியாகவே காணப்பட்டது. இவரது ஆற்றலை அறிந்து கொண்ட வடமராட்சி கல்வி அலுவலகம், உள்நாட்டுக் குழப்பங்களினால் பாதிக்கப்பட்டு மிகக் குறைந்த பெளதிகவளங்களுடன் நெருக்கடிகளுக்கு மத்தியில் இயங்கிவந்த யாழ். உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரிக்கு 1997.06.09 இல் அதிபராக நியமித்தது.
இவர் அதிபர் பொறுப்பை ஏற்ற போது பெளதிகவளப் பற்றாக் குறை என்ற பெரும்சவாலை எதிர்நோக்க வேண்டியிருந்தது. பிறந்து வளர்ந்த சூழலும் கற்ற கல்வி நிலையங்களின் பெற்ற பயிற்சியும் சவால்களை எதிர்கொள்ளும் துணிச்சலைக் கொடுத்திருந்தன. ஜேர்மன் தொழில்நுட்ப நிறுவனம் (GTZ) RRAN,NECOD, கல்வி உயர்கல்வி அமைச்சு, மாகாணக்கல்வி அமைச்சு, வலயக்கல்வி அலுவலகம் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டு,
பாடசாலையின் இடவசதியையும் கருத்திற்கொண்டு பல மாடிக்கட்டிடங்களை
கணனி அறைகள் நூலகங்கள் ஆகியவற்றையும் ஏற்படுத்திப் பெளதிக வளத் தேவையைப் பெருமளவிற்கு நிறைவு செய்திருக்கின்றார்.
பழம் பெருமைவாய்ந்த யாழ். உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியின் புகழை நிலை நிறுத்தி ஆவணப்படுத்தும் பொருட்டுக் கல்லூரியின் 150 ஆவது நிறைவு விழாமலர் மிகச் சிறப்பாக வெளியிடப்பட்டது. முத்திரை வெளியீடு
முதல்நாள் தபால் உறை வெளியீடு ஆகியவையும் கல்லூரியின் புகழை ஆவணப்
படுத்தியுள்ளன. இணையத்தளத்திலும் கல்லூரியின் பெருமை இணைக்கப்
பட்டுள்ளது. மெய்வன்மைப் போட்டிகள், கரப்பந்தாட்டம், துடுப்பாட்டம் போன்ற
38 நடராஜ தரிசனம்
 
 

வற்றிலும் கல்லூரி பலசாதனைகளை இவருடைய காலத்தில் படைத்தி ருக்கின்றது. க. பொ. த. (சா. த) வகுப்பில் கணிதம், விஞ்ஞானம், வர்த்தகம், கலை ஆகிய நான்கு துறைகளிலும் பல மாணவர்கள் திறமையான பெறுபேறு களைப் பல்கலைகழகம் சென்று பெற்று நாட்டிலுள்ள பல பல்கலைக் கழகங் களிலும் கல்லூரியின் புகழை நிலைநாட்டி வருகின்றார்கள்.
ஒரு நிறுவனத்தலைவரின் தலைமைத்துவ ஆற்றலின் குறிப்பிடக்கூடிய அம்சம் தனக்குப்பின்னர் நிறுவனம் மேலும் வளரக்கூடிய சூழலை ஏற்படுத்தியிட்டுச் செல்வதாகும். அந்த வகையில் தனக்குப் பின்னர் பொறுப்பேற்கப் போகும் அதிபரிடம் நிறைந்த பெளதிக வளத்தையும் திறமைமிக்க மாணவர் வளத்தையும் தகைமைமிக்க ஆசிரியர் வளத்தையும் ஏனைய ஊழியர் வளங்களையும் நல்ல சமூகத் தொடர்பையும் ஒப்படைத்து விட்டுச் செல்கின்றார். கல்லூரியின் வரலாறு வருங்காலத்தில் எழுதப்படும் பொழுது 1997-06-09 தொடக்கம் 2005-12-19 வரையான காலப்பகுதிக்குச் சிறப்பானதொரு இடம் வழங்கப்படும் என்பதில் ஐயமில்லை.
அகவை அறுபது நிறைந்து அரசபணியிலிருந்து ஒய்வு பெற்றாலும் அவரது கல்விப் பணி தொடர்ந்து கொண்டேயிருக்கும். ஆசிரியராய் பகுதித் தலைவராய் பிரதி அதிபராய், அதிபராய் பலநிலைகளில் பணியாற்றிய போதும் ஆசிரியப் பணியைத் தொடர்ந்து கொண்டிருப்பதனால் என்றும் எமது பார்வையில் நல்லாசான் நடராசாவாகவே இருக்கின்றார். பதவி உயர்வுகள் கிடைத்தபின்னர் ஆசிரியப் பணியை விட்டுவிட்டுக் கவலைப்ட்டுக் கொண்டிருப்போர் நம்மிடையே பலர் இருக்கின்றர். அதிபர் நடராசா தனது பாடசாலைக்கு அப்பாலும் கல்விப் பணியை மேற்கொண்டு வருவதனால் அரச பணியிலிருந்து ஒய்வு பெற்றாலும் அவரது கல்விப்பணி தொடரும். இதனால் அவரின் ஒய்வுகாலம் சிறப்பானதாகவும் மகிழ்ச்சியானதாகவும் அமையும்.
அவரது கல்விப் பணியை உள்ளத்திலிருந்து உதித்தெழுந்த வார்த்தை களால் பாராட்டி, நீண்ட காலம் வாழ்ந்து தமிழ்ப் பணி செய்ய இறைவனை வேண்டிக் கொள்கின்றேன்.
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 39

Page 32
வடமராட்சி தந்த வளம் மிக்க அதிபர் -சட்டத்தரணி கந்தையா நீலகண்டன்
தலைவர் உடுப்பிட்டி அமி பழைய சங்கக் கொழும்புக் கிளை
“வட்மராட்சி, பிரதேசம் கடந்த புகழுடையது. அதன் புகழுக்கு அடிப்படைக் காரணமாக அமைவது கல்வி வளமேயெனலாம்.” என்ற முடிவினை யாழ். பல்கலைக்கழகத்தின் இன்றைய தமிழ்த்துறைப் பேராசிரியர் சிவலிங்கராசா “வடமராட்சியின் கல்விப் பாரம்பரியமும் இலக்கியவளமும்” என்ற தலைப்பில் அன்றைய பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவனாக இரு தசாப்தங்களுக்கு முன் எழுதிய ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்திருக்கின்றார். அதே ஆய்வில் அவர் மேலும் குறிப்பிட்டிருக்கிறார் “வடமராட்சி யாழ்ப்பாணக் குடாநாட்டின் ஒரு சிறு பகுதி, வடமராட்சியை இலங்கையின் “மூளை”என்று சிலேடையாக அழைப்பார்கள். வடமராட்சியைச் சேர்ந்தவர்கள் “மூளைசாலிகள்” என்ற அபிப்பிராயமும் தீவடங்கலும் உண்டு. இந்த "அபிப்பிராயம்” வடமராட்சியின் கல்விப் பாரம்பரியத்தினாலும் இலக்கிய வளத்தினாலுமே ஏற்பட்டது எனலாம்.” வடமராட்சியின் தனித்துவத்தை பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் பின்வருமாறு சில வார்த்தைகளில் அழகுறப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார்:- “யாழ்ப்பாணப் பண்பாட்டு வட்டத்தினுள் வடமராட்சிப் பிரிவுக்குச் சில தனித்துவமான பண்புகள் உள்ளன. மற்றைய பிரிவுகளுடன் ஒப்பிட்டு நோக்கும் பொழுது இப் பிரதேசத்தில் பாரம்பரியத்தைப் பழமைபேண் உணர்வுடன் பேணுமதேவேளையில் மேலோங்குவதற்கான வாய்ப்புக்களைத் தரும் புதுமையை ஒதுக்காது பயன்படுத்தும் ஒரு கருத்து நிலையும் விடாமுயற்சிப்பண்பும் நிலவுவதைச் சுட்டிக்காட்டுவர். வடமராட்சியின் பிரதேச முக்கியத்துவம் கல்வித்துறையிலும் அதன் 85 ITU 600TLD T55 உத்தியோகத்துறையிலும் உணரப்பட்டது. வல்லை ஒரு புறத்திலும் உப்புக்கடல் மறுபுறத்திலுமாக இப் பிரதேசத்துக்குக் கிடைத்த ஒரு புவியியல் ஒதுக்கற்பாடும் சில தனித்துவமான சமூகப் பண்புகள் தொடர்ந்து பேணுவதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.”
ஆராய்ச்சியாளரும் எழுத்தாளருமான திரு. ஆ தேவராசன் அவர்கள் "ஈழத் தமிழர் வரலாற்றில் பல்வேறு துறைகளில் பல்வேறு காலகட்டங்களில் வடமராட்சிப் பகுதி தனது தனித்துவமான முத்திரையைப் பதித்திருக்கிறது” என்று எழுதியிருக்கிறார்.
இவ்வாறு வடமராட்சியின் பெருமை பேசப்படுமளவிற்கு உயர வைத்த இப் பிரதேசத்தில் கல்வி வளத்தின் சரித்திரத்தில் எங்களை வளர்த்து உயர்த்தி
40 நடராஜ தரிசனம்
 

விட்ட கல்வித் தாய் உடுப்பிட்டி அ.மி. கல்லூரிக்குத் தனி இடம் உண்டு. 150 ஆண்டுகளுக்கு மேலாக உடுப்பிட்டிக் கிராமத்தில் அமைந்திட்ட இந்த அறிவகம் உடுப்பிட்டியைச் சூழ்ந்து இருக்கும் வல்வெட்டி, கரணவாய், தொண்டமனாறு போன்ற கிராமங்களுக்கும் தன் அறிவுக் கதிரைப் பரப்பி ஒளி மயம் தந்த கல்விக் கூடம். 1852ம் ஆண்டு ஜனவரி 4ம் திகதி உதயமான இக் கல்லூரி 2002ம் ஆண்டு 150ம் ஆண்டு நிறைவினைக் கொண்டாடி மகிழ்ந்தது. அரசாங்கம் முத்திரை வெளியிட்டு கெளரவிக்க கல்லூரி சமூகம் 19.10.2002 அன்று 150ம் ஆண்டு நிறைவு விழா எடுத்து விழா மலர் வெளியிட்டு பூரித்து நின்றது. அத்தருணத்தில் கல்லூரிக்குத் தலைமைத்துவம் தந்து பெருமை தேடித்தந்த பெருமகனை நான் “வடமராட்சியான்” என்று வாய் நிறையப் புகழ்ந்து அழைத்து மனநிறைவு காண விரும்புகிறேன்.
வடமராட்சிக்கென்று ஒரு தனித்துவம் உண்டு. எமது பண்பாட்டு வட்டத்தினுள் எமது தனிப்பண்புகளைப் பேணுவதில் எமக்கும் பெருமை. ஆனால் மேலோங்குவதற்கான வாய்ப்புக்களையும் பயன்படுத்தி எமது தனித்துவத்துடன் இணைத்து வளர்த்திடுவோம். பேராசிரியர் சிவத்தம்பி பிடித்துக்காட்டிய படத்தின் பிரதிபலிப்பாகத் தான் நான் அதிபர் திரு. நடராஜாவைக் கண்டேன்; அந்த வடமராட்சியானைப் பார்த்து மகிழ்ந்தேன்.
கல்வித்துறை, இலக்கியத்துறை, ஆராய்ச்சித்துறை, சாரணியம், விளையாட்டுத்துறை இப்படி பல துறைகளிலும் சலித்தவர்கள் அல்லர். அரசியலில் தலைமைதரம் அன்று ஒரு ஜி.ஜி. பொன்னம்பலத்தைத் தந்த வடமராட்சி தான் இன்று தமிழர் தாயகம் காக்கும் தலைவன் பிரபாகரனையும் தந்து நிற்கின்றது. அந்த வடமராட்சி மண் வாசனையுடன் தான் எமது கல்லூரித் தாயும் உருவாக்கி அழைத்த புகழ் பூத்த பெருமக்கள் பலர். வடமராட்சி முழுவதையும் பிரதிநிதித்துவப்படுத்த முதலாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட திரு. தா. இராமலிங்கம், இலண்டன் சென்று அணுசக்தி ஆராய்ச்சி விஞ்ஞானியாகப் பிரபல்யமான திரு. கே. கந்தையா உயர்நீதிமன்றத்தில் அஞ்சா நெஞ்சத்துடன் நீதி வழுவாது பணியாற்றிய பெருமைமிக்க நீதியரசர் பொன். பூரீஸ்கந்தராஜா இந் நாட்டின் தேர்தல் ஆணையாளர் நாயகமாக உயர்ந்து வடமராட்சி இரு தொகுதிகளான போது தான் படித்த பூமியான உடுப்பிட்டியின் பெயரை ஒரு தொகுதியாக்கித் தந்த திரு. ஆ. அருட்பிரகாசம் யாழ். பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கே புகழ் தேடித் தந்து தன் மண்ணுக்கு இக்கட்டான காலகட்டத்தில்அளப்பரிய பணி புரிந்த பேராசிரியர் அ. துரைராசா என்று வரிசைப்படுத்தி தன் மைந்தர்களின் பெருமையைப் பாராட்டவல்ல வரலாறு மிக்க எமது கல்லூரித் தாயின் அப் புனித சரித்திரத்தில் முக்கிய அத்தியாயம் படைத்தவர் இந்த வடமராட்சியான் நடராசா.
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 41

Page 33
நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தின் துணையதிபராக இருந்த திரு. கி. நடராசா எமது கல்லூரியின் அதிபராக 09.06.1937 அன்று முதல் நியமிக்கப்பட்டார். அந்த நியமனத்தைப் பற்றி கல்லூரியின் முன்னை நாள் ஆசிரியையும் பழைய மாணவியான ஒரு சகோதரியின் வார்த்தைகளில் “சூரியனில்லாத வானம் போலவும் மன்னனில்லாத நாடு போலவும் சாரதியில்லாத வாகனம் போலவும் இலக்கற்ற அம்பு போலவும் தடுமாறிக் கொண்டிருந்த எம் கல்லூரியின் நிலை கண்ட பழைய மாணவர் சங்கம் கல்வித் திணைக்களத்தினை நச்சரித்ததன் பலனாக நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் உப அதிபராகக் கடமை புரிந்த திரு. கி. நடராசா புதிய அதிபராக நியமிக்கப்பட்டார். அதே சகோதரி அதிபர் நடராசா ஆற்றிக் கொண்டிருந்த சேவையை வர்ணிக்கும் பொழுது “காய்த்திருக்கும் வேருக்கு நீரூற்றி பின் தான் கனிகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்ற கொள்கைக்கிணங்க அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் அறிவின் அறுவடையைச் சிறப்புற நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்” என்று எழுதியிருந்தார்.
வடமராட்சியின் புகழைப் பாடும் போது கடந்த இரு தசாப்தங்களாக வடமராட்சி கண்ணிர் வடித்த சோகக் கதையையும் எழுத வேண்டும். “வடமராட்சி ஆபரேசன்” என்ற இராணுவ நடவடிக்கை செய்த கொடுமைகளோ பல. கவலைகளின் மத்தியிலும் ஒரேயொரு விடயத்தையும் மனதைத் திருப்திப்படுத்தக் கூற வேண்டும். வடமராட்சி ஆபரேசனின் பின் ஒரு முறை விமானத்தில் நான் பயணம் செய்து கொண்டிருக்கும் போது பக்கத்தில் இருந்த ஒருவர் எனது ஊர் படித்த பாடசாலை பற்றி கேட்டுக் கொண்டிருந்து விட்டு "ஒ வடமராட்சி!” என்று அடையாளம் கண்டார். உலகளாவிய ரீதியில் வடமராட்சிக்குப் பெயர் தேடித்தந்த அந்தக் கொடுமையும் பல இராணுவ தாக்குதல்களும் விட்டு வைத்துள்ள வடுக்கள் இன்றும் மாறவில்லை. 1987ம் ஆண்டு எமது கல்லூரி வளாகம் முழுவதும் ஒரே இரவில் இராணுவத் தாக்குதலால் நிர்மூலம் ஆக்கப்பட்டது. 11.07.1987 இரவு தான் அந்தக் கொடுமையான இரவு, நாங்கள் படித்துப் பயன் பெற்ற நூலகங்கள் ஆய்வு கூடங்கள் வகுப்புக்கள் எல்லாம் அழிந்து ஒழிந்து போயின. விளையாட்டு மைதானமான சண்முகாவளவிலும் அடுத்து இருந்த வீடுகளிலும் கொட்டகைகள் போட்டு பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. 1992ல் அதிபராக இருந்த திரு. ந. ஆனந்தராஜ் 'உடுப்பிட்டிக் கிராமம் முழுவதுமே வகுப்புக்கள் நடாத்தப்பட்டன” என்று எழுதியிருந்தார். 1995ல் தற்காலிகக் கொட்டகைகளுடன் திரும்பிய கல்லூரியை 09.07.1997 முதல் அயராது உழைத்து கட்டி எழுப்பிய பெருமைக்குரியவர் தான் சஷ்டி ஸப்த பூர்த்தியுடன்
42 நடராஜ தரிசனம்
 

20.12.2005 இல் இளைப்பாறிய திரு. கிருஷ்ணபிள்ளை நடராசா.
GTZ நிறுவனத்தின் உதவியுடன் 06.07.1998ல் இரண்டு மாடிக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. செயலகம் நூலகம் கணனி அறை சரஸ்வதி தடாகம் நவீன மலசலகூட வசதிகள் குழாய் நீர் சிறுவர் பூங்கா வசதி இப்படிப் பல முன்னேற்றங்கள். புதிய சிற்பியாக பழைய கல்லூரியை புதுமையாக உருவாக்கி வைத்தார் திரு. நடராஜா. பழமை பேணும் எமது பாரம்பரிய உணர்வுடன் நவீன வசதிகளையும் கொண்டு வந்து சேர்த்தார்.
அதிபர் நடராஜா அவர்களுடன் எனக்கு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தியது 150 ஆண்டு நிறைவு மலர். தொலைபேசி மூலம் இருவரும் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொண்டு மலரின் இணையாசிரியராகப் பணி புரிந்தோம். சில மாதங்களாக நாளாந்தம் தொலைபேசித் தொடர்பு எமது பணியை மேலெடுக்க வழிவகுத்தது. மலரின் பதிப்பிற்கு பேருதவி புரிந்த அவருக்குத் தான் அம்மலரை உருவாக்கிய பெருமை சேர வேண்டும். அதனை நன்றிநவிலும் பொறுப்பை நானே ஏற்று மலரிலும் எழுதியிருக்கிறேன். 19.10.2002 எமது கல்லூரித் தாயின் முன்றலில் விழாவும் வெளியீடும். அன்று தான் அவரை தான் முதல் முதல் நேரில் சந்தித்தேன். தொலைபேசி மூலம் அந்த வடமராட்சியானை ஏற்கனவே மனப்பூர்வமாகத் தரிசித்த உணர்வுடன் அவரைக் காண்கிறேன். கல்லூரி முதல்வர் - தலைவர் அவர். ஆனால் நான் கண்டதோ ஒரு தொண்டரை. எல்லோருடனும் இணைந்து கல்லூரிச் சமூகத்தில் ஒருவனாக ஒடியாடி கருமம் ஆற்றிக் கொண்டிருந்தார். அந்த வடமராட்சியானை நான் அதன் பின் பல தடவை கண்டு மனதார மெச்சிக் கொண்டிருக்கிறேன்.
20.12.2005 இல் ஒரு திரை - ஆம் எமது கல்லூரித் தாயின் வரலாற்றின் ஒர் அத்தியாயம் முற்றுப்புள்ளியுடன் நிற்கிறது. இருந்தும் எனக்கும் இன்றும் ஒரு மனத்துணிவு வடமராட்சி உடுப்பிட்டி அ.மி.கல்லூரி கைவிடமாட்டாது; உடுப்பிட்டி அ.மி. கல்லூரியை வடமராட்சி கைவிடமாட்டாது. என் இரத்தத்தில் ஒடுகின்ற வடமராட்சி மண் உணர்வுடன் பல மைல்களுக்கப்பால் இருந்து கொண்டுதான் இதனைக் கூறுகிறேன். சிறு வயதில் உடுப்பிட்டி அ.மி.கல்லூரி மண்ணில் விழுந்து காயம்பட்டு அந்த மண் மருத்துவத்தில் மாறிய வடுக்கள் இன்றும் என் முழங்கால்களில் இருக்கின்றன. ஆம். அந்த மண் - வடமராட்சி மண்- என் இரத்தத்துடன் பல தடவை கலந்து விட்ட அந்த மண் - அதன் வாசனையுடன் ஒரு வடமராட்சியான் ஒரு வடமராட்சியானாக எமது கல்லூரித் தாய்க்கு ஆற்றிய - சுமார் ஒரு தசாப்தமாகப் படைத்த புனித வரலாற்றை நினைந்து எழுச்சி அவன் வாழ - அவன் சந்ததி சிறப்புற என்றும் ஆண்டவன் அருளைப் பிரார்த்தித்து நிற்கின்றேன்.
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 43

Page 34
GED உயிர் கொடுத்த உத்தமன் செல்வி சீதா வேலுப்பிள்ளை பழைய மாணவர் சங்கம் கனடாக்கிளை
61ங்கள் அதிபர் அறுபது அகவை அடைந்துள்ளாரா? என்பதை நம்பவே முடியவில்லை. அவரின் சேவைகளைப்பாராட்ட சொற்கள் போதுமானதாகவில்லை.
எம் கல்லூரி 1987ல் படை இராணுவ நடவடிக்கையால் சாம்பல் மேடாகக் காட்சியளித்தது. இக்கல்லூரிக்கு மீண்டும் உயிர் வருமா என்ற ஏக்கப் பெருமூச்சு எல்லார் மனதிலும் இருந்தது. அத்தகையதொரு சூழ்நிலையில் பலமாடிக் கட்டிடங்களையும், நவீன தொழில் நுட்ப சாதனங்களுடன் கலை விஞ்ஞான ஆய்வுகூடங்களையும், வடக்கு கிழக்கிலேயே காணப்படாத பெரு நூலகமொன்றையும் அமைத்து கலைவாணிக்கு சிலையும் அமைத்து கல்லூரிக்கு உயிர் தந்தவராயிற்றே.
அவர் கதை ஆசிரியசேவைக் காலத்தில் எம் சிறார்களின் தமிழறிவை மட்டுமன்றி வடமராட்சியின் மாணவர்களுக்கும் தமிழறிவை ஊட்டியவர். இதனை எவராலும் மறுக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது. நாவன்மையால் அவர் நாவலரைப் போன்றவர். வாழ்த்துக்கள் அவர் வாயிலிருந்து கடல் மடை திறந்தது போல வந்து கொண்டிருப்பதை நான் அவதானித் திருக்கிறேன். வெள்ளி ஆராதனையில் மாணவர்க்கு அவர் காணும் பகவத்கீதை கருத்துக் களஞ்சியம் போன்றது.
அவரது தன்னலமற்ற அர்ப்பணிப்புடன் கூடிய சேவை கல்லூரியின் வரலாற்றில் தனித்துவம் வாய்ந்த காலமாகும். விளையாட்டுத்துறையில் அவரது ஆர்வத்தினால் கல்லூரி இன்று தலை நிமிர்ந்து நிற்கிறது. எடுத்த காரியத்தை நிறைவேற்றியே தீருவேன் என்ற வைராக்கிய மனம் அவரது சேவையின் வெற்றிக்குப் பின்னணியாக இருந்தது. கல்வித்துறையில் மட்டுமன்றி பல் துறைகளிலும் கல்லூரிக்கு உயிர் தந்த உத்தமர் நூற்றாண்டு விழாவையும் காண வேண்டுமென வாழ்த்துகிறேன்.
44 நடராஜ தரிசனம்
 

ஆளுமை மிக்க அதிபர்
க. செபநேசன் தலைவர், ஆசிரியஊழியர்நலன்புரிக்கழகம் யா/உ.அ. மி கல்லூரி
அன்பு, அறிவு ஆழ்ந்த சொல்வன்மை நிறைந்த ஆளுமைமிக்க அதிபராக விளங்கியவர் திரு. கி. நடராசா அவர்கள். தமிழ்மொழித்துறையில் பலநூறு மாணவர்களுக்கு வழிகாட்டியாக விளங்கி அரிய சேவையாற்றியவர். போர் அனர்த்தங்களினால் சீரழிந்த நிலையில் காணப்பட்ட எமது கல்லூரியை இன்றைய வளர்ச்சி நிலைக்கு உயர்த்த அயராது உழைத்தவர் எனக்கூறின் அது மிகையாகாது மாணவர்களின் கல்விச் செயற்பாட்டுக்கும் கல்வி நிர்வாகப் பணிகளுக்கும் பெரிதும் பணியாற்றிப் பலரது பாராட்டையும் நிறைவாகப் பெற்றவர். தெய்வ நம்பிக்கையோடும் தூய உள்ளத்தோடும் எவர்க்கும் அஞ்சா நெஞ்சோடும் எந்தவொரு பிரச்சினைக்கும் முடிவெடுக்கும் திறன் கொண்ட ஆளுமை மிக்க அதிபர். கல்லூரி நிர்வாகத்திலே அவரவர்களுக்கான பணிகளைப் பகிர்ந்தளித்துத் திறம்பட நடாத்திய செயல்வீரன். எப்போதும் இன்முகத்தோடு எல்லோரையும் உபசரிக்கும் பண்புடையவர்.
இதுமட்டுமல்லாது எமது கல்லூரியின் 150வது ஆண்டு நிறைவு நாளன்று அஞ்சல் திணைக்களத்தினால் முத்திரையொன்று வெளியிட்டு வைப்பதற்கு முன்னின்று உழைத்தவர் எமது அதிபரே. எமது கல்லூரி மாணவர்களின், ஆசிரிய குழாத்தின் முன்னேற்றத்திற்கு ஆதாரமாக விளங்கியவர். இவர் தமது ஒய்வுக் காலத்திலும் இறை அருளால் சிறப்புடன் விளங்க வேண்டுமென வாழ்த்துவதோடு அவரது சீரிய கல்விப் பணிக்கு சிரம் கூப்பி நன்றிகளைச் சமர்ப்பிக்கின்றோம்.
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 45

Page 35
ஒளியினால் இருள் அகற்றியவர்
இ. குட்டித்தம்பி அதிபர் யா/உடுப்பிட்டி மகளிர்கல்லூரி
உடுப்பிட்டியிலும் இதன் அயற் கிராமங்களிலும் வாழ்கின்ற மக்களுக்கு அறிவெனும் ஒளியினால் இருளகற்றிப் பல்வேறு மேதைகளையும் புத்திஜீவிகளையும் உருவாக்கி வருகின்ற உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியில் கடந்த எட்டு வருடங்களாக அதிபராகக் கடமையாற்றி டிசம்பர் இருபதாம் திகதியுடன் ஒய்வுபெறுகின்ற அதிபர் திரு. கி. நடராஜா அவர்களின் சேவை நலன் பாராட்டுக் குறித்த மலருக்கு வாழ்த்துச் செய்தி வழங்குவதில் பெருமகிழ்வடைகின்றேன்.
க. பொ. த உயர்தர வகுப்பில் புவியியல், தமிழ் ஆகிய இரு பாடங்களையும் திரு. கி. நடராஜா ஆசிரியர் அவர்களிடம் கற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இவ் இரு பாடங்களிலும் இவர் கொண்டிருந்த நுண்முறைக் கற்பித்தல் பிரயோகம் இன்றும் என் நினைவில் நீங்காதிருக்கின்றது. தற்போது உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றும்போதும் அன்று நான் கண்ட தோற்றமும் பாடப்புலமையிலிருந்து விடுபடாமல் தொடர்ந்தும் அதே எளிமையான தோற்றத்துடன் மிளிர்வதும் வியக்கத்தக்கதாகியுள்ளன.
சகல வளங்களும் உள்ள ஒரு கல்லூரியில் அதிபராகக் கடமையாற்றுவது மிகவும் மகிழ்ச்சிகரமான அனுபவமாயிருக்கக்கூடும். ஆனால் அதிபர் திரு. கி. நடராஜா அவர்கள் இக்கல்லூரியில் அழிந்த கட்டிடங்கள், வகுப்பறைகள் இல்லாமை, ஆசிரியர் பற்றாக்குறை ஏனைய வளங்களின் பற்றாக்குறை எனப் பல்வேறு குறைபாடுகளின் மத்தியில் தான் கடமையேற்றார். ஆனால் தற்போது மாணவர்கள் கற்கக்கூடியதொரு சூழலை உருவாக்கியுள்ளதுடன் கல்வி, ஒழுக்கம், விளையாட்டு, கலைநிகழ்ச்சிகள் எனப்பல்வேறு வழியிலும் முன்னேற்றமடையச் செய்துள்ளார். அதேவேளையில் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம், பாடசாலைச் சமூகம், கல்வித் திணைக்களம் மற்றும் உதவி புரியும் நிறுவனங்கள் ஆகியவற்றின் அனுசரணையுடன் படிப்படியாகக் கல்லூரிக்குத் தேவையான பெளதிக வளங்களை அதிகரித்துள்ளமை பாராட்டுதற்குரிய விடயமாகும்.
இதுவரை காலமும் இவர் ஆற்றிய அளவிட முடியாத பணிகளுக்காக எல்லாம் வல்ல ஆண்டவருக்கு நன்றி கூறுவதுடன் அரசசேவையிலிருந்து ஒய்வு பெற்றாலும் ஒரு கல்வியியலாளராயிருந்து எமது சமூகத்திற்குத் தொடர்ந்து சேவையாற்ற வேண்டுமென வாழ்த்துகின்றேன்.
46 நடராஜ தரிசனம்

வினைத்திறன் மிக்க அதிபர்
திரு. செல்லத்துரை சேதுராஜா, அதிபர் யா/நெல்லியடி மத்தியமகா வித்தியாலயம் தலைவர் வடமாகாண அதிபர் சங்கம்
கல்வியின் நோக்கம் அதனை வெளிப்படுத்துவதன்று. அதனை உரிய முறையில் உள்வாங்கி உளமாற்றம் பெற்று வெளிக்கொண்டுவருவதேயாகும். அவ்வாறு வெளிவரும் போதுதான் அறிவு ஆன்மஊற்றாகப் பரிணமிக்கின்றது. அறிவெனும் ஆன்ம ஊற்றானது அன்பு, ஆற்றல், அழகு என்னும் மானிடப்பண்புகளின் வெளிப்பாடுகளுக்கு அடிப்படையாக அமைகின்றது. கல்வியெனும் கண்ணுடையோர் இப்பண்புகள் நிறைந்த கல்வியியலாளர் களாக அமைகின்றபோது சமூகம் அதனால் நன்மையடைகின்றது. இந்த வகையில் தனது அகவை அறுபதில் 20.12.2005 அன்று உத்தியோகபூர்வமாக ஒய்வுபெற்றுச்செல்கின்ற மதிப்புமிகு பள்ளி முதல்வர், நல்லாசான், மானிடநேயன், திருவாளர் கிருஷ்ணபிள்ளை நடராஜா அவர்களை நாம் ஒர் கனதிமிக்க கல்வியியலாளனாக அடையாளம் காணமுடியும்.
வடமராட்சியின் மறவர்குலம் வாழ் கம்பர்மலை என்னும் ஊரில் 20.12.1945 இல் திரு. ஆழ்வாப்பிள்ளை கிருஷ்ணபிள்ளை, திருமதி. கிருஸ்ணபிள்ளை சரஸ்வதி தம்பதிகளுக்குப் புதல்வராக அவதரித்த இவர் தனது ஆரம்பக்கல்வியை வல்வெட்டி இந்து தமிழ்க்கலவன் பாடசாலையிலும் இடைநிலைக்கல்வியை யா/ சிதம்பராக் கல்லூரியிலும் உயர்கல்வியினைக் கொழும்பு மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகங்களிலும் பெற்றார். பட்டப்பின் கல்வி டிப்ளோமா (1982/ 1983), கல்வி முதுகலைமாணி (1985/ 1990) பட்டங்களை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்ட இவர் தமிழ்மொழியை உயர்வகுப்புக்களிலும் இடைநிலை வகுப்புக்களிலும் கற்பிப்பதில் மாணவச்செல்வங்களது மனம்கவர்ந்த ஆசானாக இன்றுவரை மணம்பரப்பிவருகின்றார்.
திரு. கிருஸ்ணபிள்ளை நடராஜா அவர்கள் பரந்துபட்ட அறிவினையும் அனுபவத்தினையும் கொண்டவர். 01.11.1976 இல் தனது ஆசிரியப் பணியினை ஆரம்பித்த இவர் பகுதித்தலைவராக, பிரதியதிபராகப் படிமுறை அனுபவங்களைப்பெற்று இறுதியில் ஓர் உதாரண அதிபராக உருப்பெற்றுக் கல்விப்புலத்திற்கு மகத்தான சேவையினை வழங்கிய ஒரு
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 47

Page 36
கல்விச்சேவையாளர் கமு/ அல் அஸ்ரக் மகா வித்தியாலயத்தில் தனது ஆசிரியப்பணியினை ஆரம்பித்த இவர் 01.01.1978 முதல் 09.06.1997 வரையான சுமார் 19 ஆண்டுகாலம் வடமராட்சியின் புகழ்பூத்த கல்லூரிகளிலொன்றான யா! நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக, பகுதித்தலைவராக, பிரதி அதிபராகப்பணியாற்றி மிகநீண்டகால அனுபவங்களைப் பெற்றதோடு அக்கல்லூரியின் வளர்ச்சியிலும், மாணவர்களது கல்வி மேம்பாட்டிலும் மகத்தான பங்களிப்பைச் செய்தவர். பாடசாலைச் சமூகத்துடன் நெருக்கமானதும் ஆரோக்கியமானதுமான தொடர்புகள் மூலம் சீரிய கல்விப்பணியாற்றியவர். கல்லூரியின் நிலைமாறுகட்ட நிகழ்வுகளில் பிரச்சினைகளுக்கு முன்னின்று முகம் கொடுத்தவர். இவ்வாறாகத் தான் பெற்ற அறிவு மற்றும் அனுபவ ஆற்றல்களுடன் 09.06.1997 இல் வடமராட்சிப்பிரதேசத்தின் புகழ்மிக்க பழம்பெரும் கல்லூரியான யா/உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியின் அதிபர் பதவியினைப் பொறுப்பேற்று, தான் சேவையிலிருந்து ஓய்வுபெறும்வரை அக்கல்லூரியின் வளர்ச்சிக்காகவும், மாணவர்களது கல்விமேம் பாட்டிற்காகவும் அயராது உழைத்துவந்த திரு. நடராசா அவர்கள் பிரதேச மட்டத்திலும் மாவட்ட மட்டத்திலும், மாகாண மற்றும் தேசிய மட்டங்களிலும் புகழ்ந்து பேசப்படுகின்ற வினைத்திறனுடைய அதிபராகத்திகழ்ந்தார். அவரது முகாமைத்துவத்திலும் வழிகாட்டலிலும் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி பாடவிதான, இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் மேம்பாடடைந்ததுடன் பெளதிக வள விருத்தியிலும் பாடசாலைச் சுற்றுப்புறச்சூழல் மறுசீரமைப்பிலும் பெருவளர்ச்சிகண்டுள்ளது. வகுப்பறைக்கட்டட வசதிகள் நவீன மலசலகூட வசதிகள், சிறப்புமிக்க நூலகம், பூங்கா முற்றம், கலைமகள் அரங்கம், விஞ்ஞான ஆய்வுகூடம், நவீன இலத்திரனியல் கற்பித்தல் உபகரணங்கள் முதலான வளங்களை முயன்று பெற்று இப்பிரதேசத்தின் ஒரு முன்னோடிப்பாடசாலையாக இக்கல்லூரியினை உருவாக்கிய பள்ளி முதல்வர் திரு. கி. நடராசா அவர்கள் கல்வியுலகில் தனக்கெனத்தனியான ஒரு முத்திரையினைப் பதித்தவர்.
பேசுவதற்கும், பழகுவதற்கும் எளிமையான திரு. நடராசா அவர்கள் தெளிந்த கல்வி நோக்குடையவர். ஒளிவுமறைவற்றதும் உணர்வுபூர்வமானது மான அவரது கருத்துக்களும் செயற்பாடுகளும் கல்விப்புலத்திற்கு முன்மாதிரியானவையாகும். தான் பெற்ற கல்வியும் அனுபவங்களும் சமூகத்தைச் சென்றடைய வேண்டும் என்னும் சீரிய நோக்குடைய இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இடைவரவு விரிவுரையாளருமாவார். 1997 -2000 வரை கல்வி நிர்வாகமும் முகாமைத்துவமும் தொடர்பாக பட்டப்பின்
48 நடராஜ தரிசனம்

கல்வி டிப்ளோமா மாணவர்களுக்கும் 2001-2002 வரை கல்வி முதுமாணி மாணவர்களுக்கும் இடைவரவு விரிவுரையாளராகப் பணியாற்றினார். இவரது இச்சேவைகள் மாணவர்களாலும் பல்கலைக்கழகப் பேராசான்களாலும் பாராட்டிப்பேசப்பட்டன.
திரு நடராசா அவர்கள் வடமராட்சிக்கல்வி வலயத்தின் ஆசிரியர் வாண்மை விருத்தி நிகழ்ச்சித்திட்டங்களில் ஒரு வளவாளராகவும் பணியாற்றியதுடன் இப்பிரதேசத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் நல்ல ஆலோசகராகவும் செயற்பட்டு வந்தார். நம்பிக்கையான நட்புக்கும் ஒற்றுமைக்கும் அவர் முன்னுரிமை கொடுத்தார். அநீதிகளையும் பிழைகளையும் எதிர்ப்பதிலும் உரியவகையில் சுட்டிக்காட்டுவ திலும் அவர் பின்னிற்பதில்லை. பாடசாலைகளில் ஏற்படுகின்ற இயற்கையான மற்றும் செயற்கையான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதில் நேர்மையுடனும் துணிவுடனும் செயற்பட்ட இவர். ஏனைய பாடசாலை அதிபர்களுக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்தவர். தனது சொந்தக்காலில் நின்ற துணிவுமிக்க அதிபர் நவீன கல்விச்சிந்தனைகளின் வழிவந்த “பாடசாலைமட்ட முகாமைத்துவம்” என்ற பதத்திற்கும் பண்புகளிற்கும் வலுச்சேர்த்த இக்கல்விமான் கனதிமிக்க இப்பாடசாலைக் கடமைகளுடன் சமூகக் கடமைகளையும் திறம்பட ஆற்றிவந்துள்ளார். கம்பர்மலை பாரதி சனசமூக நிலையம், அல்வாய் பாரதிதாசன் சனசமூக நிலையம், வதிரி பரமானந்தா ஆச்சிரமம் முதலிய சமூக நிறுவனங்கள் இவரது பணிகளால் பொலிவுற்ற சில. இவை தவிர விளையாட்டுப்போட்டிகள், விவாத அரங்குகள், பட்டிமன்றங்கள், நூலாய்வுகள் என்பவற்றில் அவரது ஆக்கங்களும் அர்ப்பணிப்புக்களும் காலூன்றியுள்ளன.
முழுமையாக நோக்குகையில் திருவாளர் கிருஷ்ணபிள்ளை நடராசா அவர்கள் இப்பிரதேசக் கல்விப்புலத்தில் ஒளிவீசும் தாரகை, நல்ல ஆசிரியர், மனிதநேயமிக்க சமூக உறுப்பினர், நம்பிக்கைக்குரிய நட்பாளர், பரந்த மனப்பாங்காளர், பெருந்தன்மையாளர், துணிவுமிக்க தலைவர், சிறந்த கல்விமான், சீர்திருத்தக் கருத்தாளர் என இன்னோரன்ன பண்புகளனைத் தையும் கொண்டிருந்தமையானது அவரை ஓர் வினைத்திறனும் விளைத்திறனும் மிக்க அதிபராக மிளிரவைத்தது. அவரது சுகவாழ்வுக்கும் நீடித்த ஆயுளுக்கும் பிரார்த்தித்து அவரது சமூகப்பணி தொடர வாழ்த்துகின்றேன்.
தக்கார்தகவிலார் என்பது அவரவர்
எச்சத்தால் கொள்ளப்படும்’
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 49

Page 37
முகாமைத்துவத்திறனுக்கு ஓர் முன்னுதாரணம்
ஆ. விமல்ராஜ்
பகுதித்தலைவர் உடுப்பிட்டி அ.மி கல்லூரி
தலைமைத்துவம் எனப்படுவது பிறரை வழிநடத்தி அவர்களிடமிருந்து தன்னிச்சையான ஒத்துழைப்பினைப் பெற்று அதனூடாக நிறுவனத்தின் நோக்கினை அடைய முற்படும் ஒரு செயன்முறையாகும். பொதுவாக தலைமைத்துவத்தில் ஈடுபடுபவர் மனித நடத்தையினைச் சரியாக விளங்கிக் கொள்ளக் கூடிய ஆற்றலைக் கொண்டிருப்பதுடன் நல்ல பேச்சு வல்லமையினையும் கொண்டிருக்க வேண்டும். நியாயமான முறையில் செய்தித் தொடர்பினை மேற் கொள்பவராக இருத்தல் வேண்டும். நல்ல அம்சங்களை மிகைப்படுத்திக் கூறுபவராகவும், பாதகமான அம்சங்களைக் குறைத்துக் கூறுபவராகவும் காணப்படக் கூடாது. நிறுவனத்தின் இலக்கினை அடையும் பொருட்டு உழைப்பவராகவும் விசுவாசமானவராகவும் இருப்பதுடன் பிறர் தன்னை உதாரணம் காட்டிப் பின்பற்றக் கூடியவாறு நடத்தல் வேண்டும். எடுத்துக்காட்டாக ஊழியர்கள் கடினமாக உழைக்க வேண்டின் முகாமையாளர் முதலில் கடினமாக உழைக்க வேண்டும். மேலும் அவர் ஆபத்துக்களை எதிர் கொள்ளத் தயாராக உள்ளவராகவும் பொறுப்புக்களை முழு அளவில் ஏற்கத் தயாராக உள்ளவராகவும் இருத்தல் வேண்டும். அத்துடன் விமர்சனங்களை ஏற்கத் தயாராக உள்ளவராகவும் இருப்பதுடன் நேரத்தினைச் சரியாக முகாமை செய்யக் கூடிய ஆற்றலை உடையவராகவும் தீர்மானம் மேற்கொண்டு முடிவெடுப்பதில் உறுதி படைத்தவராகவும். இருத்தல் வேண்டும்.
மூன்று நான்கு தசாப்தத்திற்கு முந்திய காலப் பகுதியில் பாடசாலையை முகாமைத்துவம் செய்வது மிகப் பெருமையானது ஏனெனில் பாடசாலையில் போதிய வளங்கள் இருந்தன. அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் ஆசிரியர்கள் காணப்பட்டனர். கற்க வேண்டும் என்ற மாணவர் கூட்டம் இருந்தது மாணவர்கள் கல்வி நலனில் அக்கறை காட்டும் பெற்றோர் காணப்பட்டனர். அதிபர் சுதந்திரமாக எவ்வித கட்டுப்பாடுமின்றி முழுமையான அதிகாரத்துடன் காணப்பட்டார் பாடசாலையில் புறத் தலையீடு எதுவும் இல்லாமல் கல்லூரியை நிர்வகிக்கக் கூடியதாக இருந்தது. மாணவர் பெற்றோர் ஆசிரியர் இவர்களுக்கிடையே நெருக்கமான பிணைப்பும் காணப்பட்டது. ஆனால் இன்று நிலமை கல்வியிலே தலைகீழாகிவிட்டது.
50 நடராஜ தரிசனம்

எங்கள் கல்லூரியிலும் K.T. ஜோன், திரு. SS. செல்லத்துரை போன்ற அதிபர்கள் மாணவர் மனதில் மறையாத் தெய்வங்கள் போல் வாழ்ந்து சமூகத்தின் முன்னேற்றத்திற்கு அயராது உழைத்தனர். அர்ப்பணிப்பு, ஒழுக்கமான மேற்பார்வை, இலட்சியப் போக்கு, மனித நேயம், தனியார் கவனம், நேர்மை, துணிவு, மாணவர்களில் அக்கறை போன்ற இயல்புகளால் இன்றும் மக்களின் மனங்களில் வாழ்ந்து கொண்டே இருக்கின்றனர். குறிப்பிட்ட இடைக்காலத்தில் நாட்டுச் சூழ்நிலை காரணமாகப் பன்னிரண்டு ஆண்டுகளில் பதினான்கு அதிபர்களை எமது கல்லூரி சந்தித்தது. இந்நிலையில் 1987ல் படை இயக்க நடவடிக்கையால் எமது கல்லூரி முற்றாகச் சேதமடைந்தது. வளங்கள் யாவும் எரியூட்டப்பட்டன. இந்நிலையில் திரு. சிதம்பரப்பிள்ளை, திரு. அனந்தராஜ் போன்றவர்களின் பராமரிப்பில் கல்லூரி நிர்வாகத்தில் சிறந்த மாற்றம் ஏற்பாட்டதாயினும் பழைய நிலையைக் கல்லூரி அடைய முடியவில்லை. காரணம், கல்லூரி சொந்த இடத்திலே நடைபெறாது மைதானத்திலும் வீடுகளிலும் நடைபெற்றமை ஆகும். இந்நிலையில் 1997 எங்கள் கல்லூரி அதிபர் திரு. கி. நடராசாவின் வருகை கல்லூரி நிர்வாகத்தில், அதன் வளர்ச்சியில் ஒரு திருப்பு மையமாக அமைந்தது.
அதிபருடைய ஒழுக்கமும், நடத்தையும் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் மனப்பாங்கில் பாரிய செல்வாக்கினை ஏற்படுத்துகின்றது என்பதற்கு எங்கள் அதிபர் நல்ல முன்னுதாரணமாகும். திணைக்கள மட்டத்தில் குறைந்த பதவியையும் ஆசிரியர் மட்டத்தில் உயர் பதவியையும் வகிக்கும் எமது அதிபர் இருபகுதியினரையும் திருப்திப்படுத்தும் சிறந்த ஆளுமை உடையவராக காணப்பட்டார். இதற்குக் காரணம் அவரிடம் இயல்பாகக் காணப்பட்ட புன் சிரிப்பும், கோபமே வராத சாந்த குணமும், நேர்மை, துணிவு, அர்ப்பணிப்பு, மனித நேயம் கொண்ட குணவியல்புகளும் ஆகும். அவரிடம் நாம் கண்ட உயர்ந்த திறன்களாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
1. தலைமைத்துவத் திறன் 2. கூட்டுறவுடன் இயங்கும் தொழிற்பாடு 3. மனித நேயத் தொடர்பு 4. பொருத்தமான தீர்மானங்களை எடுக்கும் சமயோசிதத் திறன், நேர
முகாமைத்துவத் திறன். எனப் பல வகையான திறன்களைக் குறிப்பிடலாம். எங்கள் அதிபரிடம் உள்ள சிறந்த தலைமைத்துவப் பண்பு ஆளணியினரை விருப்பத்துடன் தொழிற்பட வைத்தமையே. ஆசிரியர்களிடையே முரண்பாடு வளர்வதைத் தடுத்தல் அவர்களது தேவைகளை இனம் காணல் அவர்களது வாண்மை விருத்தியில் அக்கறை காட்டுதல் ஆசிரியர்களுக்கான வளங்களைப் பெற்றுக் கொடுத்தல் போன்றவற்றின் ஊடாகத் தமது கடமையைச் செம்மையாகச் செய்ய முடிந்தது. புரிந்துணர்வு, திறந்த மனம், பொறுமை, நிதானம்,
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 5

Page 38
மகிழ்வூட்டுதல் தன்னம்பிக்கை போன்ற பண்பினால் கூட்டாக இயங்கும் திறனை அவரால் வளர்க்க முடிந்தது. கல்லூரியில் கற்பித்த ஆசிரியர்களில் 5% மேல் அவரது மாணவர்களாக இருந்தமையால் இக்காரியங்களை அவரால் எளிதாகச் செய்யக்கூடியதாக இருந்தது.
எங்கள் அதிபர் ஒரு சிறந்த நிர்வாகி என்பதற்கு அவரது சில சான்றுகளைக் குறிப்பிடலாம். அழிந்து போயிருந்த ஒரு கல்லூரியை எவ்வாறு கட்டி யெழுப்பலாம் என்பதைச் சிந்தித்து திட்டமிட்டு MASTER PLAN ஒன்று அவரால் போடப்பட்டது. பெளதீக வள விருத்திக்கு இதனையே அடிப்படையாகக் கொண்டிருந்தார். அத்துடன் அவர் சிறந்த கல்வியியலாளராகக் காணப்பட்டதால் குறைபாடுகளை எவ்வாறு சீர்செய்வது என்பதில் சிறந்த புலமை பெற்றிருந்தார். நேரசூசி தயாரிப்பதில் சிறந்த மன்னன் என்றே குறிப்பிடலாம். மாணவர்களின் தனியான வேறுபாடுகளை இனம் கண்டு பாடவிதானத்திற்கு வெளியே கூட தொழிற்பட்டிருக்கின்றார். மாதாந்தம் பெற்றோர்களைச் சந்தித்தல் வருடந்தோறும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தை கூட்டுதல் பழைய மாணவர் சங்கத்துடன் நெருக்கமாக ஒத்துழைத்தல் வருடந்தோறும் தவறாது கலை விழாக்களை எடுத்தல் போன்ற பல வகையில் சமூகத்திற்கும் பாடசாலைக்கும் உள்ள தொடர்பை மிக நெருக்கமாக்கியவர்.
விளையாட்டுத் துறையில் எங்கள் அதிபர் கொண்டிருந்த ஆர்வத்தினால் தேசிய மட்டப் போட்டிக்கு கூட பங்கு பற்றும் வகையில் உயர வைத்தவர். பாடசாலை அபிவிருத்தியில் மாற்றங்களைக் கொண்டு வரும்போது அதற்குத் தடைகள் எதிர்ப்புக்கள் காணப்பட்டன. அவரது முகாமைத்துவச் செயற்பாட்டினால் இவற்றை பாதுகாத்து வினைத்திறன் பாடசாலையாக மாற்றியவர்.
எங்கள் அதிபரிடம் மேலே குறிப்பிடப்படாத வேறு சில திறன்களும் காணப்பட்டன. சமூகத்திற்கு முன் மாதிரியாக நடந்து கொள்ளல், தூய்மையான ஆடை அணிதல், வெள்ளிக் கிழமைகளில் சமய ஆசார சீலராக உடையணிந்து வரல், விடுமுறை நாட்களிலும் பாடசாலையில் இருத்தல் சமூகப் பின்னணியை விளங்கி இருத்தல், மாணவனைப் பெயர் சொல்லி அழைக்காது மாணவரின் தந்தையின் பெயர் சொல்லி அழைத்தல், பக்கச்சார்பற்றவராகக் காணப்படுதல், நல்லாசிரியராகத் தொழிற்படல், சிறந்த மொழியாற்றல் பேச்சுவன்மை உடையவராகவும் விளங்கினார். அத்துடன் அதிகாரத்தை பரவலாக்கும் விதத்திலே வகுப்பாசிரியர்கள் ஒவ்வொருவரும் அதிபராக தொழிற்பட வைத்ததுடன், பகுதித் தலைவர்களுக்கும் பூரண அதிகாரம் அளித்து தனது நிர்வாக நடவடிக்கைகளை இலகுபடுத்தியவர். நேர முகாமைத்துவத்தை மிகச் சிறப்பாகக் கையாண்டவர்.
52 நடராஜ தரிசனம்

செயற்பாங்குமிக்க ஆசான்
மு. அனந்தேஸ்வரன் அதிபர்யா/புற்றளை ம. வி புலோலி
தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப்படும்’ 6ான்ற வள்ளுவர் வாக்குக் கிணங்க தனது அறிவாற்றலாலும், சிறப்புமிகு ஆளுமையாலும் ஆசிரியப் பணி, தலைமைத்துவப் பணி என்பவற்றை ஆற்றி பரந்துபட்ட சமுதாயத்தின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் வித்திட்டதன் விளைவே இன்று அவரது அன்புக்குரியோரால் வழங்கப்படும் மதிப்பும் கெளரவமுமாகும்.
திரு. நடராசா அவர்கள் பல்கலைக்கழகத்தில் துறைசார்ந்த பேராசான்களிடம் கல்வி கற்றதன் பேறாகத் தனது அறிவாற்றலை மேம்படுத்திக் கொண்டதோடு பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறியவுடன் தனக்கு நாட்டமுள்ள ஆசிரியப் பணியைத் தேர்ந்தெடுத்து சிறந்த முறையில் கற்பித்தலை மேற்கொண்டார். தனியார் கல்வி நிறுவனங்கள் பலவும் அவரது திறமையைப் பயன்படுத்தத் தவறவில்லை. “தாரமும் குருவும் தலைவிதிப்பயன்’ என்னும் முது மொழிக்கிணங்க நானும் அவரிடம் கல்வி கற்கும் பேறு பெற்றமைக்கு இறைவனுக்கு நன்றி கூறவேண்டியவனாகின்றேன். தமிழ் மொழி, புவியியல் பாடங்களை மிக ஆழமாக நுணுகி ஆராய்ந்து எமக்குக் கற்பித்த பாங்கு இன்றும் எமது மனதை விட்டகலவில்லை. தமிழ்மொழியைக் கற்பிக்கும் போது தமிழ் அறிஞர் ஒருவராகவும் புவியியலைக் கற்பிக்கும் போது புவியியல் அறிஞர் ஒருவராகவும் காட்சியளித்தார்.
வல்வெட்டித்துறை சிதம்பரக் கல்லூரியில் கற்பித்தலில் ஈடுபட்டபோது க. பொ.த உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்காக பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மூலமாக கருத்தரங்குகளை நடாத்தியமையும் இன்றும் எமது நினைவை விட்டகலவில்லை.
யா/நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் ஆசிரியப் பணியாற்றிய போது தமிழ், புவியியல், சமூகக் கல்வி ஆகிய பாடங்களில் மாணவர் புலமைபெறத்தக்க வகையில் கற்பித்தலை மேற்கொண்டு அவர்களின் அன்பைப் பெற்றுக் கொண்டார். சமூகத்தினரின் நன்மதிப்பையும் பெற்றுக் கொண்டார். பாடசாலைச் செயற்பாடுகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தியதோடு விடுமுறை தினங்களிலும் தனது சேவைகளைப் பாடசாலைக்கு வழங்கிக் கொண்டிருந்தமையும் மனங் கொள்ளத்தக்கது.
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 53

Page 39
இவ்வாறு பாடசாலையின் கல்விப்பணியைக் கடமையுணர்வு, நேரந்தவறாமை, அர்ப்பணிப்புத்தன்மை முதலியவற்றுடன் இறைபணியென்ற புனிதத் தன்மையுடனும் ஆற்றியமை காரணமாக நெல்லியடி மத்திய மகாவித்தி யாலயத்தின் பிரதி அதிபராகப் பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றார். பிரதி அதிபராகக் கடமையாற்றியபோது கற்பித்தல் பணியோடு பாடசாலையின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றினார். யுத்த சூழலின் காரணமாக சின்னாபின்னமாகிப் போன பாடசாலையைப் புனரமைக்கும் பணியிலும் பழைய நிலைக்குக் கொண்டுவரும் முயற்சியிலும் இவரது பணி பெருமளவு குறிப்பிடத்தக்கது. மாணவர்களுக்கு உதவி புரிவதில் அவருக்கு நிகர் அவராகவே விளங்கினார். இத்தகைய சேவையின் விளைவாக அவரை யா/ உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரிக்கு அதிபராக்கியது.
யா/ உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியில் அதிபர் பொறுப்பை ஏற்றபோது அப்பாடசாலையின் வளர்ச்சிக்காகவும், புனரமைப்புக்காகவும் பல்வேறு பணிகளை ஆற்றவேண்டிய தேவை காணப்பட்டது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் பாடசாலை பல்வேறு பெளதிக வளத் தேவைகளை வேண்டிநின்றது. தனது மதிநுட்பத்தாலும், செயல்திறனாலும் கல்வித் திணைக்களத்திடமிருந்தும் சமூகத்திடமிருந்தும் பாடசாலைக்குப் பன்முகப் படுத்தப்பட்ட உதவிகளைப் பெற்று பாடசாலையின் மேம்பாட்டுக்குப் பெருமளவு உதவி புரிந்தார். பாடசாலையின் அதிபராகப் பொறுப்பேற்றதும் பாடசாலையில் கல்வித் தெய்வமான சரஸ்வதி சிலையை நிறுவி மாணவர்களுக்கும், சமூகத்துக்கும் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தினார்.
கல்வியமைச்சு புதியகல்விச் சீர்திருத்தத்தின் கீழ் பாடசாலைகளில் விளையாட்டு முற்றச் செயற்பாடுகளை அறிமுகப்படுத்தியபோது பொருளாதார நெருக்கடி மிக்க காலத்தில் கிடைக்கக் கூடிய வளங்கள் மற்றும் சமூகத்தின் உதவியுடன் விளையாட்டு முற்றம் ஒன்றை அமைத்துக் காட்டியமை ஏனைய பாடசாலைகளுக்கும் வழிகாட்டும் செயற்பாடாக அமைந்தது. இவரது காலத்திலேயே பாடசாலை விளையாட்டு மைதானத்தின் விஸ்த்தரிப்புக்கான நிலமும் கட்டட விஸ்த்தரிப்புக்கான நிலமும் கொள்வனவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கனவாகும்.
கல்வித்திணைக்களம், பாடசாலைஅபிவிருத்திச்சங்கம் பழையமான வர் சங்கம் மற்றும் சமூக சேவை நிறுவனங்களுடன் நல்லுறவுகளைப் பேணி பாடசாலையின் செயற்பாட்டறை, வகுப்பறைக் கட்டடங்கள், கணினித் தொகுதி அறை, நூலகம், நீர்தாங்கி நீர்விநியோகம், விஞ்ஞான ஆய்வுகூடம் போன்ற வசதிகளை மாணவர்களின் பயன்பாட்டின் பொருட்டு ஏற்படுத்திக்
54 நடராஜ தரிசனம்

கொடுத்துள்ளார். கல்விச் செயற்பாடுகளிலும் இணைப் பாடவிதானச் செயற்பாடுகளிலும் மாணவர் மேம்பாடு பெறுவதற்கான பல்வேறு செயற்பாடுகளையும் மேற்கொண்டு அவர்களின் மேம்பாட்டிற்காகப், பெரிதும் உழைத்துள்ளார்.
இவரது கல்விப்புலம் சார்ந்த அறிவினாலும், ஆர்வத்தாலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்விப்புலம் இவரைப் பகுதி நேர விரிவுரையாளராக அரவணைத்துக்கொண்டது. இவரது கல்விக் கருத்துக்கள் சிந்தனைகள் கல்விப்பட்டப் பின் படிப்பு மாணவர் மூலமும், கல்வி முதுமாணி மாணவர்கள் மூலமும் சமூகத்துக்குக் கிடைக்கும் வாய்ப்பு இதன் மூலம் கிடைத்தது.
அதிபர் அவர்கள் சமயச் சொற்பொழிவுகள் மூலமும், பட்டிமன்றங்கள் மூலமும், அற நெறிக்கருத்துக்கள் மற்றும் இலக்கியக்கருத்துக்களை மக்களிடம் கொண்டு சென்று சமூக விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதில் பெரும்பங்காற்றியுள்ளார். தனது பிறந்த ஊரான கம்பர்மலையில் பாரதி நூலகத்தை வளர்த்து சமூகப்பணியாற்றியமை போல் புகுந்த ஊரான அவ்வாயிலும் பாரதிதாசன் படிப்பகத்தைப் புனரமைத்துப் புதுப்பொலிவுபெறச் செய்தும் சமூகம் பயன் பெறச் செய்வதில் அரும்பாடுபட்டுழைத்துள்ளார். அல்வாய் வேவிலந்தை முத்துமாரி அம்மன் ஆலயப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்தி சமயப்பணியிலும் பங்களிப்புச் செய்துள்ளார்.
இவ்வகையில் திரு. நடராசா அவர்கள் கல்விப் பணியாற்றி பெருமளவு மாணவர்கள் அறிவொளி பெறுவதற்கு அரும்பணியாற்றி சமூக சமயப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்தி வளம் மிக்க மனிதனாக விளங்கி பாடசாலைக் கடமையிலிருந்து ஒய்வு பெற்றபோதும் அவரது சேவை தொடர்ந்தும் சமூகத்துக்குக் கிடைக்கப் பெறுவதற்கு இறைவன் துணை நிற்பாராக.
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 55

Page 40
முருக பக்தன்
ந. அரியரத்தினம்
தன்னைப் பற்றி மற்றவர்கள் கதைக்கின்ற கதைகளை மீண்டும் ஒருமுறை சிந்தித்துப் பார்க்கின்றார் இளம் பட்டதாரியான திரு. கி. நடராசா அவர்கள் ஏன் தம்பி இன்னும் படிப்பு முடியவில்லையே. தம்பிக்கு வேலை கிடைப்பதற்கு இன்னும் எவ்வளவு செல்லும். ஏன் தம்பி வேலைக்கு எழுதிப்போட வில்லையோ. ஆம்! முப்பது வருடங்களுக்கு முன்பு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தனது கலைப்பட்டதாரிப் படிப்பை முடித்து விட்டுத் தனது கிராமத்திற்குத் திரும்பி வேலையில்லாது வாழ்ந்து குறுகிய காலத்தில் அவரது கிராமத்தவர்களாக முக்கியமாக வயது முதிர்ந்தவர்களால் விளங்கியும் விளங்காமலும் அவரைப் பார்த்துக்கேட்ட கேள்விகளே இங்கு தரப்பட்டுள்ளன.
30 வருடங்களுக்கு முன்பு அதாவது 1970 ஆம் ஆண்டு தசாப்தத்தில் திரு. கி. நடராசா போன்று நூற்றுக் கணக்கான பட்டதாரிகள் அப்பொழுது வேலை இல்லாது வருடக்கணக்கில் வேலைக்காகக் காத்திருந்தனர். பொதுவாகப் பலர் இந்த வேலையற்ற பட்டதாரிகளை வீட்டிற்கும் நாட்டிற்கும் சுமையாகவே கருதினார்கள். இவ்வாறு நாடு முழுவதும் வேலையற்றுக் காணப்பட்ட பட்டதாரிகளைக் கணக்கெடுத்து வேலை அற்ற பட்டதாரிகள் பட்டாளம் என்றும் இவர்களை அழைக்க முற்பட்டனர்.
பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மற்றும் உளவியல் ரீதியாகவும் பல்வேறு பிரச்சனைகளை எதிர் நோக்கிய இந்த வேலை அற்ற பட்டதாரிகள் மனம் குழம்பி நிம்மதி அற்ற வாழ்க்கை வாழ்ந்தது மட்டுமன்றிச் சிலர் வாழ்க்கையின் விளிம்பிற்கே சென்று தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் இடம்பெற்றன.
1970 ஆம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்து வேலை அற்ற பட்டதாரிகளில் ஒருவராக வாழ ஆரம்பித்த கம்பர்மலையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. கி. நடராசா அவர்களுக்குச் சந்நிதியான் ஏற்படுத்திய அற்புத நிகழ்வினை அடியார்களுக்கு வழங்குகின்றோம்.
திரு. கி. நடராசா அவர்கள் தனது தந்தையின் வழிநடாத்தலினால் வெள்ளி தோறும் சந்நிதிக்குச் சென்று சந்நிதியானை வழிபடுகின்ற ஒரு முருக பக்தனாக வாழ்ந்து வந்தார். அது மட்டுமன்றிச் சந்நிதியானே தனது வாழ்க்கைப் பயணத்தை வழி நடாத்துபவர் என்ற நம்பிக்கையும் அவருக்கு இருந்தது. வேலையற்ற பட்டதாரிகள் அனுபவித்து வருகின்ற துன்பங்களையும் அவர்கள் வாழ்க்கையில் நடைப்பிணமாக வாழ்ந்து கொண்டிருப்பதையும் அவர்களிற் பலர் வாழ்க்கையின் விளிம்பிற்கே சென்றதையும் கண்ணுற்று இது போன்ற ஒரு நிலை தனக்கு ஏற்படக்கூடாது என்பதை முன் எச்சரிக்கையுடன் முடிவு செய்த திரு. கி. நடராசா அவர்கள் இறை நம்பிக்கையான ஒரு முடிபை மேற் கொண்டார்கள்.
56 நடராஜ தரிசனம்

வழமை போல ஒரு வெள்ளிக்கிழமை சந்நிதி ஆலயத்திற்குச் சென்று பசிக்கின்ற ஒரு குழந்தை எவ்வாறு தனது தாயிடம் சென்று பாசத்துடனும் உரிமையுடனும் பசியைப் போக்க உணவைக் கேட்குமோ அதே போன்றுதான் குலதெய்வமாக வழிபட்டு வருகின்ற சந்நிதியானிடம் தான் எதிர்நோக்கி இருக்கும் துன்பங்களிலிருந்து தன்னைக் காப்பாற்றுமாறு, பக்தியுடனும் உரிமையுடனும் வழிபாடு நடத்தலானார்.
எனது துன்பம் உனக்குத் தெரியவில்லையா! உன்னை நம்பியிருக்கின்ற அடியவனை நீ துன்பப்பட வைக்கலாமா! எனது வேதனையைப் போக்க ஒரு வேலை கிடைப்பதற்கு நீ அருள் புரியமாட்டாயா! என்று உள்ளம் நெகிழச் சந்நிதியானிடம் தனது வேண்டுதலை வெளியிட்டார்கள். இவ்வாறு தனது மனக்குறையைச் சந்நிதியானின் திருப்பாதங்களில் ஒப்புவித்து விட்டு நீயே அபயம் அப்பா! எனச்சரணாகதி அடைந்தார்கள். இவ்வாறு தனது மனச்சுமையைச் சந்நிதியானிடம் இறக்கியதனால் அவருடைய மனத்தில் ஒரு நிம்மதி ஏற்பட்டாலும் கூடத் தனது வேண்டுதல் நிறைவேறுமா? எப்போது நிறைவேறும் என்ற ஆதங்கத்துடன் தனது வீடு திரும்பினார்கள்.
வீடு திரும்பிய சில நிமிடத்தில் அவரை யாரோ அழைக்கும் சத்தம் கேட்கின்றது. வெளியே சென்று பார்க்கின்றார். இருவர் அவரிடம் அலுவலாக வந்ததாகக் கூறுகின்றனர். வந்தவர்களிடம் விடயத்தை விபரமாகக் கேட்டார்கள்.
வந்தவர்களில் ஒருவராகக் காலம் சென்ற திரு. இராஜரத்தினம் அவர்கள் எமது கல்வி நிலையத்திற் புவியியற் பாடம் கற்பிப்பதற்கு ஆசிரியர் தேவை. நீங்கள் தான் பொருத்தமானவர் என்பதை அறிந்து உங்களிடம் வந்துள்ளோம். தயவு செய்து மறுக்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள் உங்களுடைய தகுதிக்கு ஏற்றவகையில் நாங்கள் கொடுப்பனவை வழங்குவதற்கு ஆயத்தமாக இருக்கிறோம். என்று விடயத்தைக் கூறி முடித்தனர்.
தான் கனவுதான் காண்கிறேனா? அல்லது நடக்கின்ற சம்பவம் நிஜம்தானா என்ற சந்தேகம் திரு. கி. நடராசா அவர்களுக்கு ஏற்பட்டது. ஆனாலும் நடக்கின்ற சம்பவம் நிஜம்தான் என்பதை அவர் உறுதிப்படுத்திய பொழுது அவரது உடம்பு மெய்சிலிர்க்கத் தொடங்கியது அவரை அறியாமலே அவரது உதடு கந்தா! கடம்பா கதிர்வேலா! . என முருகன் நாமங்களை உச்சரிக்க ஆரம்பித்தது.
தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட உயர்வுகளுக்கு மட்டுமன்றித் தனது குடும்பத்தின் வாழ்க்கைப் பயணத்தில் ஏற்படுகின்ற வேதனைகள், சோதனைகள், ஆபத்துக்கள் என்பவற்றிலெல்லாம் சந்நிதியானின் திருவருளே தனக்குப் பக்கபலமாக இருந்து வருகின்றது என்பதற்கு பல்வேறு சம்பவங்களை உள்ளம் உருக நன்றிப் பெருக்குடன் திரு. கி. நடராசா அவர்கள் எடுத்துக் கூறினார்கள்."
ஓம் முருகா!
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 57

Page 41
ஞானம்தந்த ஞானத் தந்தை
if.
A.M.C என்றாலே தனிமரியாதை 1852ம் ஆண்டு கிறிஸ்தவ பாடசாலையாக ஆரம்பித்து இன்று ஒர் தனித்துவமான இடத்தைத் தனதாக்கியுள்ளது. இவ்வாறான ஒரு கல்லூரித்தாய்க்குப் பெரும் இன்னலான காலப்பகுதியாக 20ம் நூற்றாண்டின் இறுதிக்காலமே அமைந்தது. சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையின் பிற்பாடு கல்லூரி தரைமட்டமானது. அப்போதுதான் எமது பாடசாலை சீரிய தலைமையின்றி தள்ளாடியது. அப்போதுதான் நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் உப அதிபராகக் கடமையாற்றிக் கொண்டிருந்த திருவாளர். கிருஷ்ணபிள்ளை நடராஜா அவர்கள் 9.06.1997 முதல் கல்லூரி அதிபராகப் பொறுப்பேற்றார். அன்றைய காலகட்டம் மிகவும் இக்கட்டானதாகவே காணப்பெற்றது. அப்போது பாடசாலை பல இடிபாடுகளுடனும் கூடியதாகக் காணப்பட்டது. அதனைப் பயன்படுத்திக் கொண்டு எமது பாடசாலையின் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்க உதவினார். மற்றும் சன்னா வளவிலும் அதன் சுற்றாடலிலும் தற்காலிகக் கொட்டகை அமைத்து முடங்கி கிடந்த கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்க உதவினார்.
இதன் விளைவாக முடங்கி கிடந்த கல்வி புத்துயிர் பெறத் தொடங்கியது. உயர்தரப் பிரிவில் சிறப்பான பெறுபேற்றினைப் பெற அதிபரின் செயற்பாடு ஆக்கபூர்வமானதாகக் காணப்பட்டது. இதன் விளைவாக 1998 ஆண்டில் கலைப்பிரிவில் 4A பெறுபேறுகிடைத்தது. இதனை பெற்றவர் செல்லத்துரை சுதர்சன். இவர் மாவட்ட நிலையிலும் முதல் நிலை பெற்றதோடு கல்லூரி வரலாற்றிலும் முதலாவது 4A பெற்றவரானார். இவ்வாறு வருடாவருடம் கல்லூரியிலிருந்து 10இற்கு மேற்பட்ட மாணவர்கள் பல்கலை நுழைகின்றனர். இவ்வாறாக எமது பாடசாலையில் நிலையை உயர்த்தி GTZஇன் உதவியுடன் மாடிக்கட்டிடம் நிறுவப்பட்டது. இதில் எம் அதிபரின் முயற்சி அளப்பரியது. இவ்வாறாக எமது கல்லூரி உருப்பெறத் தொடங்கியது. இதன் விளைவாக எமது அதிபரின் மனதிலே புது எண்ணம் குடி கொண்டது. அவற்றில் ஒன்று 5000 புத்தகங்களுக்கு மேற்பட்ட எண்ணிக்கையை உள்ளடக்கி சகல வசதிகளும் கொண்ட முதல் தரமான நூலகம் அமைப்பது. மற்றையது சிறந்த விஞ்ஞான ஆய்வுகூடம் அமைப்பதாகும். முதலில் தமது கருத்தை அறிவித்தார். பின்னர் செயல்வீரனாக உருவெடுத்துத் தனது முயற்சியில்
58 நடராஜ தரிசனம்

வெற்றிகண்டார். எமதுபாடசாலை மற்றைய பாடசாலைகளுடனான போட்டிகளில் சிம்மசொற்பனமாக விளங்கியது. அவரின் காலத்தில் தான் சோதனைகளுடன் சாதனைகளும் துளிர்த்தன. இவ்வாறான எம் அதிபரின் புன்னகை தவழும் கண்டிப்பான முகம் இன்றும் தெரிகின்றது. அதிபர், மாணவர்களுடன் கண்டிப்பாக இருக்கவேண்டிய நேரம் கண்டிப்பாகவும் மற்றைய வேளைகளில் அன்பாகவும் கதைப்பார். இதனால் இவரை ஞானம் தந்த ஞானத்தந்தை என்று கூடக் கூறலாம் - அவரின் பேச்சுவன்மைக்கு அவரே நிகர் எனலாம். ஒவ்வொரு சொற்களும் தேனாக இனிக்கும். அவரின் அறிவுரைகள் மிகவும் சிறப்பானவை. தமிழ் பாட ஆசிரியரில் அவருக்கு நிகர் யாருமில்லை. அவரின் கற்பித்தல் பாங்கு சிறப்பானதாக காணப்படுகிறது. அவர் அதிபராக இருந்தகாலத்தில் விடுமுறைநாட்களில் கூட பாடசாலையில் இருப்பதைகாணலாம். கட்டடவேலைகளைத் தானே நின்று அவதானிப்பார். இவ்வாறான ஒர் கலங்கரை விளக்காக வழிகாட்டிய உத்தமர் தனது கல்லூரி அதிபர் வாழ்வு நிறைவடைந்து 2005, 12 20 திகதி அன்று ஒய்வு பெற்றார். அவர் ஒய்வு பெற்றாலும் கூட அவரின் சேவை தொடரும்- வாழ்க பல்லாண்டு.
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 59

Page 42
பாடசாலையே என்னுயிர் எனும் வகாள்கை கொண்டார்
துரைராசா- சங்கீர்த்தனன் தரம்-5A உடுப்பிட்டி அ. மி கல்லூரி
61மது கல்லூரி அதிபர் திரு. கி. நடராஜா அவர்கள் 1997ல் எமது பாடசாலையைப் பொறுப்பேற்றார். அன்று தொடக்கம் இன்று வரை துரித வளர்ச்சியைக் கண்டது எமது கலைக்கூடம்.
பாடசாலையே என்னுயிர்” என்ற கொள்கையில் இயங்கும் அர்ப்பணமுள்ள அவர் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கென சதா உழைத்தவர்.
அவருடைய காலத்திலே பல வளங்களைப் பெற்றுத் தந்துள்ளார். சவால்களுக்கு முகம் கொடுப்பதில் அவரிடம் தனிச் சிறப்பொன்றே காணப்படும். அமைதியாக இருந்து சவால்களை ஜெயிப்பதில் அவருக்கு நிகர் அவரே.
கல்வி அதிகாரிகள், அமைச்சர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் ஆகிய பலரதும் நல்லபிப்பிராயத்தைப் பெற்றுக் கொண்ட எம் அதிபர் அவர்களின் உதவிகளைச் சிக்கலின்றிப் பெற்றுக் கொண்டு பாடசாலையைத் துரித கதியில் அபிவிருத்தி செய்த பெருமைக்குரியவர்.
ஒரு சிறந்த நேர்மையான அர்ப்பணமும் இறைபக்தியும் மிகுந்த எம் அதிபர் பார்ப்பதற்கு மிகவும் எளிமையானவர். அவர் அணியும் வெள்ளை வேட்டியும், சேட்டும் போலவே அவர் உள்ளமும் வெள்ளை. அவர் கைகளில் பிரம்பு இல்லை, கண்களில் கருணை இருக்கும், அன்பாக எமை அழைப்பார். ஆழமாகப் பார்த்தால் அதிலோர் கண்டிப்பு இருக்கும்.
பாடசாலைச் சுற்றாடலையும், வளங்களையும் நன்கு தெளிவாக அறிந்து வைத்துக் கொண்ட எம் அதிபர் பாடசாலை பரிணமித்து நிற்கும் சகல விடயங்களையும் மேற்கொண்டார். குறிப்பாக போர் அனர்த்தங்களினால் சிதைக்கப்பட்ட எமது கல்லூரியை குறிப்பிட்ட காலத்தில் திட்டமிட்டு உருவாக்கியும், மீளக் கட்டியமைத்த பெருமையும் இவரைச் சாரும்.
எமது கல்லூரிக்கு அதிபர் அவர்கள் ஆற்றிய சேவையினையும் அளப்பரிய பணியினையும் சொல்லிக்கொண்டே போகலாம். இன்று எம் அதிபர் தனது அகவை அறுபதை நிறைவு செய்து தனது பணியிலிருந்து இளைப்பாறிச் சென்றாலும் காலமெல்லாம் அவருக்கு கல்லூரியுடனான தொடர்பு தொடர்ந்து கொண்டே செல்லும் என்பதில் ஐயமில்லை.
அதிபரது ஓய்வுக்காலம் தனது குடும்பத்தாருடன் மகிழ்வாகவும் அமைதியாகவும் சிறப்பாக அமைய வேண்டுமென வேண்டிக் கொள்கிறோம்.
6 O நடராஜ தரிசனம்

சாதனை நாயகனின் சாசனம்
செயலாளர் பாடசாலை அபிவிருத்திச் சங்கம்
உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் என்னும் ஆலயத்தினை ஆழகாகப் போற்றி அகிலமெங்கும் புகழ் மணம் பரப்பிய அதிபர் கி. நடராசா அவர்களின் சேவையினைப் பாராட்டுவதில் மனநிறைவடைகின்றோம்.
பெளதிக வளப்பற்றாக்குறைகள் மிகுந்த காலகட்டத்தில் அனைத்து சவால்களையும் எதிர்நோக்கி பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து இன்றும் கல்லூரி நிமிர்ந்து நிற்க வேராகி விழுதான அவரின் சேவைகள் வார்த்தைகளுக்குள் அடங்கக் கூடியதல்ல. அவர் ஒய்வு பெறுவது தவிர்க்க முடியாது. எனினும் கல்லூயினுடனான உங்கள் உறவு காலமெல்லாம் நிலைத்திருக்கும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையோடு இனிவரும் காலங்களும் இன்பமயமாய் அமைய வாழ்த்துகின்றோம்.
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 61

Page 43
O O தமிழ் தந்த ஆசிரியனுக்கு 2006 A/L தமிழ் கற்ற மாணவமாணவிகள் மொடோன் கல்விநிறுவனம் பருத்தித்துறை
எமக்கு தமிழ் தந்த
ஆசிரியனுக்கு எழுதும்
மடல்
இவை வெறும் போலிகளல்ல என்றும் நிஜமானவை வெறும் தாள்களில் எழுதும் வரி வடிவங்களல்ல உணர்வின் உண்மையான சித்திரங்கள்
அன்றொரு நாள் தமிழ் வகுப்பிற்கு தயங்கி நடைபோட்டபடி நாம்
உயரமாய் ஒல்லியாய் மூக்குகண்ணாடிக்குள்
ஒளிந்து கொண்டு இருக்கும்
தீட்சண்யமான விழிகளோடு
பார்த்தவுடனேயே புரிந்துவிட்டது இவர் மனிதர்களைக் கற்கும்
பேராசான் எளிமையாய், இலகுவாய்
சிநேகிதனாய் பழகும் பண்பு நாம் கடைசி வாங்கிலிருந்து இரண்டாவது வாங்கிற்கு குரங்குகளாய் தாவல்
ஒவ்வொரு கதைக்கும் திருப்பி பதிலடி கொடுக்கும்
எம் நண்பியோடு கோபங் கொள்ளாமல் பகிடியை
இலகுவாய் ஏற்று பதில் சொல்லும் பாங்கு
நண்பியே! இவர் ஆசான் மட்டுமல்ல ஒரு அதிபரும் கூட
62 நடராஜ தரிசனம்
 

அதிர்ந்த நண்பிற்கு ஆறுதல் சொல்லி
ஆனால் பகிடியே வாடிக்கையாயிற்று
ஒவ்வொரு தமிழ் வகுப்பு முடிந்த பின்பும்
வீட்டிற்கு வந்து அப்பாவிற்கு, அம்மாவிற்கு
தங்கைகளிற்கு
உங்களுடைய கதைகள்
பகிர்ந்து கொள்ளப்பட்டன அப்பா இன்று தமிழ் சேர்
இப்படிச் சொன்னார் தங்கா தமிழ் சேர் இன்று
இப்படி பகிடி சொன்னார் நரகத்து முள்ளும்
மண்ணை வாரி தலையிலே கொட்டிப் போடுவன்' என்ற
வாசகங்களும் இன்றும் நினைவில் நிற்பதாய்
பெரியவரே! நாம் அபூர்வமாய்
சந்தித்தவர்களில் நீங்களும் ஒருவர்
குருவாய் மட்டுமல்ல தந்தையாயும், சிநேகிதனாயும்
in L.
ரமணிச்சந்திரனைத் தெரியுமா?
பைக்குள் புத்தகத்தை வைத்துக் கொண்டு
சேர்! யார் ரமணிச்சந்திரன் எங்களுக்குத் தெரியாதே
கல்கியையும், மு. வ வையும் ஜெயகாந்தனையும் கொஞ்சம்
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 63

Page 44
64
கொஞ்சம் தெரியுமென்றாலும் வாய்திறந்து சொல்லாமல்
மெளனமாய்
எமது பாடசாலையை
குறை சொல்லும்போது கோபங் கொள்ள நினைத்தாலும்
கோபங் கொள்ள முடியாமல் நீங்கள்! கல்விக் கூடத்தை
நிர்வகிக்கும் பாங்கு கண்டு அதிசயித்து .
தமிழ் படிக்கும் தங்கைகளுக்கு தமிழ் ஆசிரியரிடம் நல்ல
மதிப்பைப் பெற முயற்சி செய்யுங்கள் என்று அறிவுரை கூறி
உங்கள் கொள்கைகள், இலட்சியங்கள் கண்டு வியப்படைந்து
நாமும் அவ்வகையில் வருவதற்கு ஆசை கொண்டு
வேப்பங்காயாய் கசந்து வழிந்த இலக்கணத்தை இலகுவாய்
புகட்டிய பாங்கு இன்றுதான் இலக்கணத்தில்
ஒர் தெளிவு
இன்று விடை பெறும்
நேரம் . நெஞ்சம் கணக்கின்றது
ஆரம்பத்தில் ஐந்து மாதங்கள் உங்களிடம் கல்வி பயில
தவறியது இன்று வருத்தமாய் கொழும்பு பயணமும்,
மலேரியாக் காய்ச்சலும் சேர்ந்து தாமதத்திற்கு காரணமாய்
மற்றவர்கள் நீட்டுவது போல் கையெழுத்து ஏடு உங்களிடம்
நடராஜ தரிசனம்

நாம் நீட்டவில்லை. மறந்தால்தானே நினைப்பதற்கு
என்றும் அழியா ஒவியமாய் எம் இதயங்களில்.
நாம் சந்தித்த அபூர்வ மனிதர்களில் நீங்களும் ஒருவர்
உங்கள் எஞ்சிய காலத்தில் உங்கள் கடமைகளை
இனிது நிறைவு செய்து சந்தோஷமாய், அமைதியாய்
வாய் கொள்ளாச் சிரிப்புடன் வேலனிடமும், வாசுதேவனிடமும்
அமைதியாய், நிறைவாய் நீங்கள் தஞ்சம் புக
உங்கள் நிறைவை நாமும் கண்டு களிக்க
நாமும் அறிவுடையோராய் பண்புடையோராய் வளர்ந்து உங்களைக் காண்பதற்கு ஒரு பொழுது வேண்டும் என்று இறைவனிடம்
நிஜமாய் சத்தியமாய்
பிரார்த்தனை செய்து உங்களிடமிருந்து பிரியமனமில்லாமல்
விடை பெறுகின்றோம் அவ்வேளையில் ஒரு சிறு
விண்ணப்பம் கம்பராமாயண வகுப்பு
உங்களால் நடத்த முடியுமென்றால் நாமும் நிச்சயமாய் வருவோம்
நடாத்துவீர்களா? இது கவிதையா என்று எமக்குத்
தெரியவில்லை ஏனெனில் எம் கன்னிமுயற்சிகளில்
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர்
65

Page 45
66
இதுவும் ஒன்று இன்னும் பல விருப்பங்கள்
எழுத்தாளராய், கவிஞராய் வரவேண்டுமென்று அதற்கு
உங்கள் ஆசீர்வாதங்களை நாம் வேண்டி நிற்கிறோம்
நாம் சந்தித்த அபூர்வ மனிதர்களில் நீங்களும் ஒருவர்
இவை வெறும் போலிகளல்ல என்றும் நிஜமானவை
வெறும் தாள்களில் எழுதும் வரி வடிவங்களல்ல
உணர்வின் உண்மையான சித்திரங்கள்
உங்களிடமிருந்து பிரியமனமில்லாமல் விடைபெறும்
அன்பும் பணிவும் மிக்க உங்கள் அன்புச் செல்வங்கள்
நடராஜ தரிசனம்
 

எங்கள் அதிபர் த. கெளரீஸ்வரன்,
2007கலைப்பிரிவு உடுப்பிட்டி அமி கல்லூரி
தில்லைக் கூத்தனின் திருநாமம் தனதாக்கி எல்லை ஏதுமில்லா எம்தமிழை மொழியாக்கி வல்லவன் வந்தான் வண்டமிழ் தந்தான் கல்லும் கனியும் கவிகளும் தந்தான்
இன்முகம் மலரவே இனித்திடும் புன்னகை தன்நடை தன்னிலே தளர்ந்திடும் மெல்லிடை மன்னுடல் தன்னை மறைந்திடும் வெண்ணுடை என்னுடன் இன்றல்ல என்றும் நினைவிருக்கும்
அஞ்சிடா நெஞ்சமும் ஆளுமை ஆற்றலும் கொஞ்சி விளையாடிக் குலவிடும் தமிழ்மொழியும் வஞ்சனை சிறிதும் வந்திடா வெண் உள்ளமும் நெஞ்சிலே நினைவிலே நித்தமும் நிலைத்திடும்
முல்லைக் கொடிக்கு மன்னன் பாரியின் தேர் நல்வழி நல்கிய நம் அதிபர் எமக்கு வேர் சொல்லும் விழுதுகள் சோர்வை விடுத்து வெல்லும் பொழுதிலே விருட்சம் விளையும்.
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 67

Page 46
நடாவை வாழ்த்தும் நம் நாடு
ப. பார்த்திபன்
பழைய மாணவன் வீரகக்திப்பிள்ளை மகா வித்தியாலயம் தொண்டைமானாறு
நான். தொண்டைமானாற்றின்
தொன்மையை விளக்கும் வீரகத்திப்பிள்ளை (மகா) வித்தியாலயத்தில் விரும்பி விளைந்த பயிர்களுள் ஒன்று கரும்பாய்க் கல்வி இனித்த வயதில் அருந்திடத் தமிழ்நீர் தன்னை தேடினேன் தென்றலாய்க் குளிரும் தேன் தமிழ் தன்னை தேங்கிய சூடாய்த் தருவோர் தானே தமிழாசிரியராம் (?) தயங்கித் தயங்கித் தமிழாசிரியராம்! இப்படியிருக்கும் நாளிலே ஒர் நாள் வண்ண ஊரிலே சின்ன வயதில் செந்தமிழ் கற்கக் சைக்கிளில் விரைந்தேன் உடுப்பிட்டி சென்றேன்
உடுத்தினார் தமிழை உடுத்தின அவர் ஆர்? அந்தமொன்றில்லாம் ஆனந்தம் பெற நான் செந்தமிழாலே அணைத்தென்னை ஆண்டவன் சிந்தையில் இன்றும் குந்தியிருக்கின்ற ஞானத்தந்தை நடராசாதான் காலையும் மாலையும் கலகலப்போடு கல்வியை ஊட்டிக் களிப்புற வைத்த இவ் ஆளைப்போல் ஒருவரை அகிலத்தில் கண்டிலேன். வள்ளுவன் குறளும்
வகுத்த இலக்கணமும்
கல்வியிற் பெரிய
கம்பனின் பாட்டும்
பாரதி பாடலும்
68 நடராஜ தரிசனம்

பல்வகைக் கவிதையும் இலக்கிய வரலாறும் இயம்பிடக் கேட்டேன் தணியாத் தாகம் தமிழ் மேல் எனக்கு அணியாய் அணியாய் மேலெழலாயிற்று வேட்டியும் சேட்டுமாய் வெள்ளையில் வருமிவர் பாட்டியாம் ஒளவையின் பாடலும் ஊட்டினார். நாட்டிய மாடினேன் நான் நன்கு களித்து ஊட்டிய உன்னை நாளும் நான் வாழ்த்துவேன் நாடி உன்னை நாடும் வாழ்த்தும் வாழ்க நிரந்தரம்
வையத்தில் நிலைத்து.
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர்
69

Page 47
70
நடராசா திருத்தசாங்கம்
நேரிசை வெண்பாக்கள்
கவிஞர் இ. சு. முரளிதரன் ஆசிரியர், உடுப்பிட்டி. அ. மி கல்லூரி
(நாமம்) பூம்பொழில் வாழ் பொற்கிளியே! பூந்தமிழின் புத்திரனார் நாமமது நன்கு நவின்றிடு - காம வடம்பிடித்த கன்னித் தமிழ் தேரின் ஆழி நடராசா என்பாய்நா மம்.
(நாடு) அன்புநிறை அஞ்சுகமே! ஆனிப்பொன் அம்பலத்தான் சின்னத்திரு நாடு செப்பிவிடு - தண்டமிழ் வாழ வழிகேட்டு வாகைப்பூ சூழநிற்கும் ஈழநா டென்றே இயம்பு.
(நகர்) கீதமொழிக் கிள்ளாய்! இனிய சொல் பேசிடும் நாதனுார் நாமறியச் சொல்லிவிடு - காதலொடு ஏழிசைப் பாணனுக்கு ஈன்ற பரிசி தென்னும் யாழ்நகரே ஆசானுர் காண்
(ஆறு) சந்தக் கிளியே! சலசலத்து ஓடுகின்ற விந்தைத் தமிழ் மகனார் ஆறென்ன - சந்நிதியான் தெய்வானை வள்ளிக்குறத்தி அருகிருத்தி உய்வளிக்கும் தொண்டைமான் ஆறு
(மலை) பச்சை நிறக்கிளியே பண்புமிகு ஆசிரியன் நச்சுகின்ற நல்ல மலையென்ன - இச்சையுடன் செம்பூவில் வண்டுநிதம் நாதசுரம் ஊதுமந்தக் கம்பர் மலையெனக் காண்.
நடராஜ தரிசனம்
 

(ஊர்தி) மாஞ்சோலை வாழும் மரகதமே தேவகுரு வாஞ்சைகொள் ஊர்தியது வாய்விடு-ஆஞ்சநேயன் போலச்சிரஞ்சீவி யாகி உலாவரும் நீலநிற 'ஸ்கூட்டரே தேர்
(படை) நந்தவனம் நாடும் கிளியே! நமதிறைவன் சொந்தப் படைபென்ன சொல்லிவிடு - செந்தமிழை வானம் குனிந்து வணங்க விரும்புகின்ற மாணவரே ஆசான்படை
(முரசு) தேன்மொழி பேசுகின்ற தத்தையே கல்லூரி தூணாய் அமைந்தோன் முரசென்ன - என்றென்றும் பொங்கும் எழில் முரசு பூமகனார் நாத்தவழும் சங்கத் தமிழென்று சாற்று.
(தார்) மரகதப் பூ கிள்ளாய்! மணிவேந்தன் சூடும் நறுமணத் தாரென்ன கூறு - இறவாத பாட்டால் இதயம் நனைக்கும் கவிச் சீடர் சூட்டுவதே தாரென்று சொல்
(கொடி) சங்கத் தமிழ் மிளற்றும் தத்தாய் குருநாதர் மங்காப் புகழின் கொடியென்ன - தங்கும் தனியார் நிறுவனத்து மாதவிக்கு வெற்றிக் கனி நல்கும் கல்விக் கொடி
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 71

Page 48
O O நடாவும் தமிழும்
தே. ஜெகன் தமிழ்த்துறை மாணவன் பேராதனைப் பல்கலைக்கழகம்
எமது கல்லூரியின் அதிபர் திரு. கிருஷ்ணபிள்ளை நடராஜா அவர்கள் எமது கல்லூரியில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்கின்ற செய்தி கல்லூரிக்கு மட்டுமன்றி அதனைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கும் கவலை தரும் செய்தியாகும். அந்தளவிற்கு கல்லூரியோடும் கல்லூரி சூழலோடும் ஒன்றிப் போனவர். போரினாலே மிகவும் பாதிக்கப்பட்ட எமது கல்லூரியை மீண்டும் கட்டியெழுப்பிய பெருமை இவரையே சாரும். அந்தவகையில் இவரது பணி விதந்து கூறத்தக்கது.
இவர் ஒரு சிறந்த அதிபர். சிறந்த சமூக சேவையாளன் என்ற நிலைகளுக்கு அப்பால், இவர் ஒரு சிறந்த தமிழ் ஆசிரியரும் கூட குறிப்பாக யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியிலே இருக்கின்ற தமிழ் ஆசிரியர்களுள் முதன்மையானவரும், அனுபவ முதிர்ச்சி பெற்றவருமாக இவர் விளங்குகிறார். இவரை ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவருமே "நடா" என்றே அழைப்பார்கள். அந்தவகையில் ஆசிரியர் திரு. நடா அவர்களின் கற்பித்தல் முறை பற்றி எடுத்துக்காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பேராசிரியர்கள் செல்வநாயகம், கணபதிப் பிள்ளை, வித்தியானந்தன், கைலாசபதி, வேலுப்பிள்ளை, சதாசிவம், தில்லைநாதன், சண்முகதாஸ் போன்ற தமிழ் இலக்கிய உலகில் தடம்பதித்த பல பேராசிரியர்களிடம் கல்வி கற்றவர். அவர்களுடைய வழிகாட்டலில் வந்த இவர் கல்லூரி ஆசிரியராக மட்டுமன்றி யாழ் பல்கலைக்கழக வருகை விரிவுரையாளராகவும் பணியாற்றியவர்
அவர் கற்பிக்க வருகின்ற போது, நீல ஸ்கூட்டர் மோட்டார் சைக்கிள் ஒன்றிலேயே வருவார். மெல்லிய நெடிய தோற்றம், தமிழ்ப் பாரம்பரிய உடைகளான வெள்ளை வேட்டி, வெள்ளைச் சேட்டு என்பவற்றை அணிவார். அவர் மோட்டார் சைக்கிளிலே வரும்போது, ஒரு வெள்ளை உருவம் காற்றில் ஊர்ந்து வருவதுபோல் இருக்கும். இவருடைய உருவத்தை வைத்து இவரை எடைபோட முடியாது. மிகவும் கண்டிப்பான ஆசிரியர் மாணவர்கள் படிப்பில் அக்கறை காட்டாத போது "நகரத்து முள்ளுகள்" என்று ஏசுவார்.
72 நடராஜ தரிசனம்
 

அத்தோடு மிகவும் அன்பாக மாணவர்களை வழிநடத்துவார். இது ஓர் ஆசிரியனுக்கு இருக்க வேண்டியவையே.
புன்னகை சொரிய வகுப்பறைக்குள் வந்து நுழைவார். வகுப்பறை வந்தவுடன் எல்லோரையும் நன்றாகப் பார்த்துவிட்டு படிப்பிக்கத் தொடங்குவார். அவர் கற்பிக்கத் தொடங்கி வகுப்பு முடியும்வரை அலுக்காது.
"தித்திக்கும் தெள்ளமுதாய் தென்னமுதின் மேலான
முத்திக்கனியே என் முத்தமிழே - புத்திக்குள் உண்ணப்படும் தேன்" என்பது போல இருக்கும். மாணவர்களின் மனோநிலையைப் புரிந்து கொண்டு, அவர்களுக்கு ஏற்றவகையில் கற்பிக்கும் திறன் அவரிடம் உண்டு. அவ்வாறு கற்பிப்பவனே சிறந்த ஆசிரியன். இதனை இவரிடமிருந்தே பிறர் கற்றுக்கொள்ள வேண்டும்.
மாணவர்களின் மனோநிலையைப் புரிந்து கொண்டு கற்பிக்கின்ற இவர், ஒவ்வொரு விடயத்தையும் ஒவ்வொரு விதமாக அவருக்கேயுரிய பாணியில் கற்பிப்பார். அவை ஒவ்வொன்றும் மாணவர்களின் மனங்களில் ஒவ்வொரு அனுபவ அலைகளை அடித்துச் செல்லும். இவர் மொழியைக் கற்பிப்பதும், பாடல்களைக் கற்பிப்பதும், இலக்கிய வரலாற்றைக் கற்பிப்பதும், புனைகதைகளைக் கற்பிப்பதும், இலக்கணத்தைக் கற்பிப்பதும் வித்தியாசமானதாக இருக்கும். அவற்றை அதற்கே உரிய முறையிற் கற்பிப்பார். இதுவே ஏனையவர்களிடமிருந்து இவரை வேறுபடுத்துகிறது.
இவர் மொழி கற்பிப்பதலின் போது மாணவர்களை ஊக்கப்படுத்துவார். அவர் வகுப்பறையிற் கற்பிக்கின்ற போது, ஒரு பாவத்துடனேயே எடுத்துரைப்பார். அவ்வாறு எடுத்துரைக்கின்ற போது, அவருடைய கருத்தாடல்களுக்கேற்ப அவருடைய முகபாவமும் வேறுபடும். அப் பாவத்தோடு ஒரு விதிப்பும் இருக்கும். இவ்வாறாக தனது கற்பித்தல் முறையை நகர்த்திச் செல்வார். இவ்வாறு கற்பிக்கின்ற போது, மாணவர்களுக்குக் கற்பவற்றை வாழக் கையோடு இணைத்துக் காட்டுவார். இதன் மூலம் மாணவர்களை புதிய தளங்களுக்கு இழுத்துச் செல்வார்.
இவர் இலக்கியப் பாடல்களைக் கற்பிக்கின்ற முறையானது,
நற்கருப்பஞ் சாற்றினிலே தேன்கலந்து பால்கலந்து
செழுங்கனித் தீன்சுவை கலந்து ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிக்கும்"
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 73

Page 49
என இருக்கும். குறிப்பாக இராமாயணச் செய்யுள்களை எடுத்து நோக்குவோமாக இருந்தால், அதில் வருகின்ற திருவடிசூட்டுப்படலச் செய்யுள்களை படிப்பிக்கின்ற முறையினூடாக இதனை உணரலாம். அவர் பாடல்களை நறுக்கென்று உச்சரிக்கின்ற விதம், அதனைப் பிரித்து பொருள் கொள்ளும் விதம் என்பன சுவையான அனுபவத்தைத் தரும். செய்யுள்களை விளங்கப்படுத்துகின்ற போது, வேறு பகுதிச் செய்யுள்களையும் உதாரணம் காட்டி அவற்றோடு ஒப்பிட்டுப் படிப்பிப்பார்.
கவிதையை எடுத்துக் கொண்டால், அவர் கவிதைகளைப் பிரித்துக் காட்டுகின்ற முறை அற்புதமானது. இவ்வாறு அவர் கவிதைகளைச் சொற்பிரித்து வாசிக்கின்றபோது, கவிதையில் கவிஞன் பொதிந்து வைத்த அதே உணர்வை அப்படியே எமக்குக் காட்டுவது போல் இருக்கும். இவருடைய இத்தகைய திறனைக் கண்டு மெய்சிலிர்த்துப் போன மாணவர்கள் பலர்.
புனைகதை இலக்கியத்தைப் பார்ப்போமானால், அவர் கதைகளைச் சொல்லுகின்ற விதம் மாணவர்களை அறுப்பதாக இருக்காது. அவரது கதை கற்பிக்கும் உத்தியால் கவரப்பட்ட மாணவர்கள் மெய்மறந்து கேட்டுக்கொண்டிருப்பார்கள். அதனைக் கேட்கின்ற போது, ஒரு திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற ஓர் உணர்வு ஏற்படும்.
இலக்கிய வரலாற்றைக் கற்பிக்கின்ற போது, அவர் வரலாறு மீது கொண்டுள்ள அறிவினை நாம் அறியமுடியும். செய்யுள்மரபு, பொருள்மரபு, மொழிமரபு என்ற பிரிப்பு முறைகளினூடாக இலக்கிய வரலாற்றை அணுகுகின்ற விதம் வித்தியாசமானது. இது அவருக்கேயுரிய பாணியாகும். இது சுருக்கமாகவும், இரசமாகவும், நிறைய விடயங்களை உள்ளடக்கியதுமாக இருக்கும். ஒவ்வொரு இலக்கிய வரலாற்றுச் சூழலையும் தெளிவுபடுத்துவதன் மூலம் அக்காலச் சமூக மாறுதல்களையும், சமூகம் பற்றிய புரிதலையும் ஏற்படுத்துவார்.
இலக்கணம் கற்பிப்பதிலே நடா கைதேர்ந்தவர். அதனை மாணவர்களுக்கு ஏற்றவகையில் விளங்கப்படுத்துவார். உதாரணம் காட்டும்போது புத்தகங்களில் உள்ள உதாரணங்களைத் தனியே எடுத்துக் கொள்ளமாட்டார். பெரும்பாலும் நடைமுறையில் உள்ள உதாரணங் களைக் காட் டியே விளங் கப் படுத் துவார். "வாழைப்பழத்திலே ஊசி ஏற்றுவது போல' இலகுவாக
74 நடராஜ தரிசனம்

மாணவர்களின் மனதில் பதியவைப்பார். ஒவ்வொரு அலகின் முடிவிலும் பயிற்சி வினாக்களைத் தந்து செய்யத் தூண்டுவார். இதன் மூலம் மாணவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டித் திருத்துவார். இதைவிட இலக்கணப் புத்தகங்களில் உள்ள பிழைகளையும் சுட்டிக்காட்டி, மாணவர்களுக்குச் சரியான பாதையை வகுக்கவும் தவறுவதில்லை.
இவ்வாறு மாணவர்களினுடைய மனோநிலையினைப் புரிந்துகொண்டு, அவர்களுக்கு ஏற்ற வகையில் கற்பிக்கக்கூடிய, சிறந்த ஆற்றல்மிகு ஆசிரியராக திரு. நடா அவர்களைக் காணமுடிகிறது. இவரது கற்பித்தல் முறையாற் கவரப்பட்ட மாணவர்கள் பலர். சிலர் இவரது கற்பித்தற் பாணியைப் பின்பற்றிக் கற்பிக்கின்றார்கள். இவருடைய கற்பித்தலினால் சிறந்த கல்விமான்களாக மாற்றப்பட்ட பலர் நம்மத்தியில் இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட ஆசிரியரது பணியானது மேலும் நமது சமூகத்திற்குத் தேவையான ஒன்றாகும். இவ்வேளையில் நமது தமிழ் ஆசான் திரு. நடா அவர்கள் நீண்ட ஆயுள் பெற்று வாழ்வார் என்ற நம்பிக்கை என்னைப் போன்று ஒவ்வொருவருக்கும் உண்டு.
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 75

Page 50

പ്രേ ଅର୍ଦ୍ଧ ،5%(މޭ&_@
ശ്രീബ)
కొక్యొకలా

Page 51
78
 

தமிழர் சிந்தனை மரபில் ஆன்மீகமும் நாத்திகமும்
பேராசிரியர் கா. சிவத்தம்பி
(LDGoు தரப்பட்டுள்ள தலைப்பினிற் கட்டுரை ஒன்று எழுதப்படல் வேண்டுமென்பதே எனக்குள்ள பணியாகும். இத்தலைப்பினை வாசிக்கும் போது கிளம்பும் வினாக்கள் தமிழர் சிந்தனை மரபு பற்றிய அடிப்படைத் தெளிவினை வேண்டி நிற்கின்றன. இவை சில முக்கிய பிரச்சினைகளை கிளப்புவதாகவே எனக்குப்படுகிறது. கட்டுரைத் தலைப்பினைச் சொல்லொடு பொருளாக எடுத்து தமிழகத்தில் ஆன்மீகம், நாத்திகம் என்பவற்றை பற்றிய ஒரு தரவுத் தொகுப்பினை செய்ய முனைவதிலும் பார்க்க இத்தகைய ஒரு தலைப்பு தோன்றுவதற்கான கருத்துநிலைப்பின்புலம் (Ideology) இந்த வினாக்கிளப்பும் உள்நிலைப்பட்ட ஏழுவினாக்கள் (Issues) ஆகியன பற்றிச் சிறிது ஆழமாக நோக்க வேண்டியது அவசியமாகிறது. முதலில் என் சிரத்தையை கவருவது இந்த வினாக்கிளப்பும் நிலைப்பாடாகும். பிற பண்பாட்டுச் சூழல்களில் தமது அறிவு, ஆற்றல் திறன் காரணமாகத் தம்மை வலுவுடன் நிலை நிறுத்திக் கொண்டுள்ள, அதே வேளை தமது தமிழ் அடையாளத்தை பேணுவதிலும் வளர்ப்பதிலும் அதேயளவு சிரத்தைகொண்ட ஒரு புலமைசார் தொழின்மைக் குழுவினரின் சமூக நிலையிலும், கற்றறி தலையிலும் (Academically) இது ஒரு முக்கிய பிரச்சனையாக அவர்களால் மனங்கொள்ளப்படுகிறது.
இது ஒரு முக்கியமான விடயமாகும். இந்த விடயம் எவ்வாறு இந்திய மட்டத்தினரின் புலமைச் சிரத்தைக்குள் வருகின்றது என்பது நோக்கப்பட வேண்டியது, மேலும் இரண்டு முக்கியமான விடயங்கள் உள்ளன. 1. ஆன்மீகம், நாத்தீகம் என்ற இரு நிலைப்பாட்டுப் பின்புலம் தமிழ் அடையாளம் பற்றிய பிரச்சினை உணர்வோடு எவ்வாறு பிணைந்து கொள்கிறது என்பதாகும். 2. தமிழர் சிந்தனை மரபு என்ற எண்ணக்கரு (Concept) பற்றியது.
இரண்டாவதனை முதலில் எடுத்துக் கொள்வோம். தமிழர் சிந்தனை மரபு என ஒன்றினை இந்தியப் பின்புலத்தில் எவ்வாறு இனங்கண்டு கொள்வது என்பது சிக்கல்கள் நிறைந்த வினாவாகும். முதலாவதாக கிளம்புவது இந்திய மரபிலிருந்து பிரித்து வைத்துப் பார்க்கத் தக்கதான தமிழர் சிந்தனை மரபு என ஒன்று உண்டா என்பதாகும். இரண்டாவதாக ஒட்டுமொத்தமான இந்திய
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 79

Page 52
சிந்தனை மரபில் தமிழரின் தமிழ் நாட்டில் உள்ளவர்களின் சிந்தனை எப்பொழுது இந்திய சிந்தனை ஒருமைக்குள் வரும் வந்தது என்பதாகும். இவை முக்கியமான வினாக்களாகும்.
தமிழரின் சிந்தனை வெளிப்பாட்டுத்தளமாக அமைவன பிரதானமாக இலக்கியங்களே. ஆனால் தமிழ் இலக்கியத்தை மாத்திரம் தனியே எடுத்தல் கூடாது. இந்திய முக்கியத்துவம் வாய்ந்த தமிழர் சிந்தனைகள் தமிழ் மொழி அல்லாத பிறமொழிகளில் குறிப்பாக இந்திய மொழிகளில் இருப்பின் அவற்றை உள்வாங்குதல் அவசியம். உதாரணமாக முற்றிலும் தமிழ்ச்சூழலில் வளர்த்தெடுக்கப்பட்டதான ஆழ்வார்கள் பக்தி நெறியை தளமாகக் கொண்டு இராமானுஜர் தமது விஷிஸ்டாத்துவைதக் கொள்கையினை எடுத்துக் கூறியுள்ளார். இதனைக் கணக்கில் கொள்ளாமல் நாம் தமிழர் சிந்தனை மரபு பற்றிக் கூற முடியாது.
அது மாத்திரமல்லாமல் ஏறத்தாழ 13, 14ம் நூற்றாண்டு வரை தென்னகத்தவர்கள் இந்து மத வியாக்கியானங்களிற்கு செய்துள்ள பங்களிப்புகள் முக்கியமானவையாகும். உதாரணமாக 9ம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கொள்ளப்படும் சங்கரர் தமிழ் பரிச்சயமுடையவராக இருந்திருப்பார், இருந்தார் என்பது நமக்குத் தெரிந்த ஒன்றாகும். மேலும் அத்வைதம் பற்றிய அவரது விளக்கம் அவரை பிரசன்ன பெளத்தராக சிலர் கண்முன் நிறுத்தியது. இது முக்கிய தடயமாகும். ஏனெனில் பெளத்தத்தைப் பற்றிய மிக ஆழமான மெய்யியற் சிந்தனைகள் தமிழ்நாட்டில் நிலவியுள்ளன, என்பதும் அதுவும் 9, 10, 11ம் நூற்றாண்டுகளில் முக்கியத்துவம் பெற்றது என்பதும் எமக்குத் தெரிந்ததே. சங்கரரை எதிர்த்த மாணிக்கவாசகரே பெளத்தருடன் வாதிட்டதாக அறிகிறோம். இது ஒரு புறமாக, மறுபுறத்தில் பக்தி நிலைப்பட்டனவாகக் கொள்ளப்பட்ட சைவம், வைஷ்ணவம் ஆகிய மதங்கள் நிலைப்பட்ட மெய்யியல் வளர்ச்சிகள் முக்கியமானவையாகும். இவ்விடயம் சம்பந்தமாக திருமந்திரம் (ஏறத்தாழ 7ம் நூற்றாண்டு) முக்கியமான இடத்தை வகிக்கிறது. ப. அருணாசலம் அவர்கள் திருமந்திரக் கருத்து பற்றிய தமது நூலில் (தமிழ் புத்தகாலயம், சென்னை) எடுத்துக் கூறியுள்ளது போன்று திருமந்திரமானது அக் காலத்து இந்து மதம் பற்றிய பல சிந்தனைப் போக்குகளை காட்டுவதாகவே கொள்ளப்படல் வேண்டும். சைவ சித்தாந்த மரபு கூறுவது போன்று அதை சித்தாந்த சாத்திரமாக மாத்திரம் கொள்ளுதல் கூடாது. திருமந்திரத்தை கி.பி 7 - 9ம் நூற்றாண்டுகளில் மேலோங்கிய பக்தி நெறி எழுச்சியின் பின்புலத்திலே தொழிற்பட்ட மெய்யியற் சிந்தனை மரபுகள் பற்றி அறிந்து கொள்வதற்கான ஒரு தடயமாகவே அதனைக் கொள்ளுதல் வேண்டும். தேவாரங்களில் மனவெழுச்சி (Eamotive) நிலையில்
8O நடராஜ தரிசனம்

வெளிப்படுத்தப்படும் பல சிந்தனைகள் எண்ணக்கருக்களாக (Concepts) வளர்த்தெடுக்கப்படுவதை திருமந்திரத்தில் காணலாம். சிவ - தாண்டவம்
பற்றிய எண்ணக்கருவாக்கத்திலும், அன்பு பற்றிய எண்ணக்கருவாக்கத்திலும்
இதனைக் காணலாம்.
இன்னொரு நிலையில் நால்வருக்குப் பின் பக்திப் பாடல் மரபு படிப்படியாக மறைஞானச் செல்நெறியினைப் (Mystictrends) பெற்றுக் கொள்வதனைக் திருவிசைப்பா மூலம் நன்கு கண்டுகொள்ளத் தக்கதாக இருக்கின்றது. இது தொடர்பாக கருவூர்த்தேவரின் இசைப்பாக்கள் மிக முக்கியமானவையாகும். தமிழ் நாட்டின் சிந்தனை மரபில் சித்தர் மரபு மிக முக்கியமானதாகும். இவர்களை மறைஞானிகள் (Mystics) என்று கொள்ளுதல் மரபு. அது உண்மையே. ஆனால் அந்த மரபுடன் தான் தமிழர் மருத்துவ மரபும் இணைத்துக் கொள்ளப்படுகிறது. சித்த வைத்தியம் தமிழுக்கேயுரிய வைத்திய முறைமை என்று இன்று கொண்டாடப் பெறுகின்றது.
சித்தர்களைப் பற்றிய குறிப்பு சம்பந்தர் காலம் முதலே இருந்து வருகிறது. ஆனால் அதற்கான கிடைத்துள்ள பாடல் மரபு அதனிலும் பார்க்க சற்றுப் பிந்தியதாகவே காணப்படுகிறது. பிராமணியம் சாராத பிரதான ஆதீனங்களில் ஒன்றாக விளங்கும் தருமபுர ஆதீனம் திருமூலரையே இப்போக்கின் பிதாமகராகக் கொள்ளும்.
துரதிஸ்டவசமாக சித்தர் பாடல்கள் பற்றிய ஆய்வு இலக்கிய நிலைக்கு அப்பாலே கொண்டு செல்லப்பட்டு ஒட்டு மொத்தமான தமிழர் சிந்தனை மெய்யியலின் வெளிப்பாடுகளிலொன்றாகவோ அன்றேல் ஒட்டு மொத்தமான இந்திய மெய்யியற் சிந்தனை மரபின் ஒர் அங்கமாகவோ பார்க்கப்படும். உண்மையில் நம்மிடையே இன்னும் தான் சித்தர் பாடல்களை பற்றிய அகவேறுபாட்டு ஆய்வுகள் தோன்றவில்லை. காமில் சுவெலபில் எழுதியுள்ள The poets of power (London) 6T66TD BITG) 566) gp5 (p65LDIT(5th.
சித்தர் பாடல்கள் யாவுமே ஒரே பண்பிற் பாற்பட்டவை என்று நிச்சயமாக கூறமுடியாவிட்டாலும் அவை பெரும்பாலும் தமிழ் நாட்டின் உத்தியோக பூர்வமான கோயிற் பண்பாட்டை (அரண்மனை ஆலயம்) நிராகரித்தவை எனக் கொள்ளலாம். ஆனால் அவை ஆத்மாவையோ, ஆன்ம உயிர்ப்பையோ நிராகரித்தவையாகக் கொள்ள முடியாது. ஆனால் அதே வேளையில் ஆன்மீகம் என்பது வாழ்வுலகுக்கு அப்பாற்பட்டதொன்றாகவோ அந்த வாழ்வுலகை நிராகரிப்பதாகவோ அமையவில்லை என்பதும் உண்மையாகும். இவ்வாறு நோக்கும் போது பக்திப் பாடல்களின் ஆன்மீகத் தன்மையின் ஆணிவேரான ஒர் அம்சத்தைக் குறிப்பிடல் வேண்டும். அது கடவுளை, வழிபடு தெய்வத்தை ஆள்நிலைப்படுத்தி (Personalise)
திரு கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 81

Page 53
கூறுவதாகவேயுள்ளது. அதாவது பக்தியின் ஆன்மீகம் மானுடத்துக் குள்ளேயே மையங்கொண்டு நிற்கிறது என்பது புலனாகும்.
இதுவரை கூறிய மரபுகளை விட இன்னும் இரண்டு முக்கிய தமிழ்ச் சிந்தனை மரபுகள் பற்றிக் குறிப்பிடல் வேண்டும். 1. சமண, பெளத்த, ஆசீவக வழியாக வருகின்ற நிலைப்பாடாகும். இவற்றினுள் ஆசீவகம் பற்றிய போதியளவு அறிவு நம்மிடையே இல்லை. (ஆசீவகம் பற்றி A. L. பசாம் எழுதிய AShort History of Aivikas என்ற நூலைப் பார்க்கவும்) கி. பி. 600க்கு முன் குறிப்பாகத் தமிழ் நாட்டில் மத்திய பகுதிகளில் கோயமுத்தூர் முதல் கன்னியாகுமரி முனை வரையுள்ள பகுதிகளில் சமணமே முதன்மை பெற்றிருந்தது. பெளத்தம் கிழக்குக் கடற்கரையோரத்தில் மேன்மைப்பட்டிருக்கலாம். தமிழ்நாட்டின் இலக்கிய மையங்கள் சமணத்தின் செல்வாக்குக்கு உட்பட்ட அளவு பெளத்தத்துக்கு உட்படவில்லை. இதனால் இன்று நாம் கொள்ளுகின்ற அறநூல்கள் என்பனவற்றுள் பல சமணச்சார்பு உடையனவாகவே காணப்படுகின்றன. வைதீகச் சார்புடையனவும் சில காணப்படுகின்றன. சமணப் பள்ளிகள் காரணமாக இந்த அறம் போதனைப் பாடல்கள் முக்கியத்துவம் பெற்றிருக்கலாம்.
மணிமேகலையை வாசிக்கும் போது பல நிலைப்பட்ட மதநிலை விவாதிப்புக்கள் தமிழ் நாட்டில் நிலவியுள்ளமையைக் காணலாம். மணிமேகலையின் மதவிவாதிப்பு ஏறத்தாழ கி. பி. 550 ஆகும்.
மணிமேகலையின் மத விவாதிப்புக்களை நோக்கும் போது தமிழ் மொழியின் பண்பாட்டுத் தளம் பற்றிய ஒரு முக்கிய உண்மை நன்கு தெரியவருகிறது. அதாவது ஒன்றுக்கொன்று முரண்பட்ட மத மெய்யியற் கருத்துக்களை தமிழிற் புலமைத் தெளிவுடன் எடுத்து கூறுவதற்கான சொற்களஞ்சிய மரபு ஒன்று இருந்ததென்பது புலனாகின்றது.
கி. பி. 600 - 900 காலப்பகுதியில் சைவம், வைஷ்ணவம் தமிழை தமதாகக் காட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனவெனினும் தொடர்ந்தும் அவைதீக மதங்கள் தமிழில் எழுதப்பட்டிருத்தல் வேண்டுமென்பது ஏறத்தாழ 13ம் நூற்றாண்டைச் சார்ந்த சிவஞான சித்தியார் பரபக்கத்திலிருந்து தெரியவருகிறது.
இவ்விடத்தில் தமிழ்நாட்டின் மதப்புவியியல் கருத்தொன்றினை குறிப்பிடல் வேண்டும். சமண பெளத்த மதங்கள் பட்டினங்களில் முதன்மைநிலை எய்துவதைக் காணலாம். சமணத் துறவிகளின் வதிவிடங்களை ஒதுக்கு நிலைப்பட்ட மலைப்பிரதேசங்களில் காணப்பட்டனவெனினும் இம்மதங்கள் வாழ்வியற் செழுமையுடன் விளங்கியமை முதலில் பட்டினங்களிலேயெனலாம். பெரும்பாலும் வணிகர்கள்
82 நடராஜ தரிசனம்

சமணர்கள், பெளத்தர்களாக இருந்தனரென்பது ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மையாகும். (கோவலன், கண்ணகியின் பெற்றோர்).
சைவ வைணவ எழுச்சியைப் பொறுத்தவரையில் ஆற்றுப்படுக்கைகள் குறிப்பாகக் காவேரிப்படுகை மிகமுக்கியமானதாகும். கொள்ளிடத்திலிருந்து காவேரி நதியோரம் வழியாக இந்த வரை கோடு மிகுந்த பலத்துடன் சென்றது என்பதும் நமக்குத் தெரிந்ததே. இச் செல்நெறி வைதீக மதவெழுச்சிக்கு விவசாயப் பிரதேசங்கள் களமாக அமைந்தன என்று கொள்ளத் தூண்டுகின்றது. பாண்டிய நாட்டுக் கோயில்களிலும் இந்த விவசாயத் தொடர்பு நன்கு புலனாகிறது என்பர். இதுபற்றிய ஒரு நல்ல விளக்கத்தினை வர்ற்ரன் ஸ்ரெயின் தமது கட்டுரையொன்றில் எடுத்துக் கூறியுள்ளார்.
கோயில் வளர்ச்சி நிறுவகமயப்படுவதற்கு இந்த விவசாயப்பின்புலம் முக்கியமாகிறது. இவற்றை விட தமிழர் சிந்தனையின் முக்கிய எடுத்துக்காட்டாக விளங்கும் திருக்குறளை நோக்க வேண்டுவது அவசியமாகிறது.
திருக்குறள் நிச்சயமாக ஒரு குறிப்பிட்ட மதத்துக்குரிய நூல் அல்ல. அதே வேளையில் அது தெய்வநம்பிக்கையை நிராகரிக்கவில்லை. அது கூறும் ‘தெய்வம் எண்ணக்கரு நிலைப்பட்டது. (Conceptual) அதில் ஆள் நிலைப்பாடே இல்லை.
திருக்குறளின் மதநிலைப்பாட்டுக்கான திறவுகோலை கடவுள் வாழ்த்திப் பார்ப்பதிலும் பார்க்க அத்துப்பாலில் பார்ப்பது பயன்தரும் முயற்சியாகும். திருவள்ளுவர் அறத்துக்கான வாழ்நிலைக் களமாகக் கொள்ளும் சமூகத்தில் இல்லறம், துறவறம் என்பன அங்கீகாரமுடைய நிறுவன அமைப்பினைக் கொண்டவையாகக் காணப்படுகின்றன. திருவள்ளுவரின் துறவி சந்நியாசி அல்லர். அவர் ஒரு நீத்தாரே (Renouncer) ஆனால் சமூகத்தினுள் வாழ்பவர். அருள் அவர் பற்றித்தான் பேசப்படுகிறது. அன்பு இல்லறத்தோருக்கே உரியது. திருவள்ளுவருடைய சமூக அமைப்பில் குடும்ப வாழ்வும் நீத்தார் இருப்பும் ஒரு வட்டத்தினுள்ளேயே இருப்பதாகக் கொள்ளல் வேண்டும். பின்னர் இந்த சமூக வட்டம் நாடு என்ற வட்டத்தினுள் வருகிறது.
இப்பொழுது நம் முன்னேயுள்ள முக்கிய வினா யாதெனில் இத்தகைய சமூக ஒழுங்குள்ள மதம் யாது? அல்லது மதங்கள் யாவை? என்பதேயாகும். தமிழ் நாட்டு வரலாற்றுப் பின்புலத்தை நோக்கும் போது அந்த வரலாற்றுக் காலகட்டத்திலே இந்த நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தவை இரண்டு மதங்களாகும். ஒன்று சமணம் மற்றையது பெளத்தம். இந்த மதங்களிலே தான் குடும்பிக்ரும் நீத்தாரும் உடன் உறைபவர்களாகின்றனர். ஆனால் இந்தச் சமூகக் கட்டுக் கோப்புக்குள் அவர் அக்காலச் சமூக அமைப்புக்கியைந்த தெய்வ நம்பிக்கைகளைக் கொண்டு வருகிறார்.
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 83

Page 54
திருக்குறளை உலகயதார்த்தத்தைக் காணமறுக்கும் ஓர் ஆன்மீக வலியுறுத்தலாக கொள்ளவே முடியாது. மதநிலை வாழ்வு என்பது அந்தச் சமூகத்துடன் இயைந்துள்ள ஒன்றாகும். தமிழின் அற, போதனை நூல் மரபிற்கு அப்பாலான ஒரளவுக்கு இந்த நூல்கள் தரும் கருத்து நிலைத் தளங்களிலிருந்து வேறுபடுகின்ற ஒரு சிந்தனை உலகினை பத்துப்பாட்டு எட்டுத்தொகை நூல்கள் காட்டுகின்றன. திருமுருகாற்றுப்படை பரிபாடல் ஆகியன வைதீக மரபுச் சூழலினுள்ளிருந்து வெளிவருவதைக் காணலாம். பரிபாடலில் செவ்வேள், திருமால் வழிபாடு முக்கியமாகும். வையை கூட வழிபாட்டுக்குரிய ஒன்றாகவே அங்கு இடம்பெறுகின்றதென நான் பிறிதோரிடத்தில் வாதிட்டுள்ளேன். பரிபாடல், திருமுருகாற்றுப்படை சங்க இலக்கியங்களுள் காலத்தாற் பிந்தியவை என்பதை ஏற்றுக் கொண்டு அவற்றினுள் முந்தியவை எனக் கொள்ளப்படத்தக்க நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, பதிற்றுப்பத்து என்பவற்றை நோக்கும் போது அவை மத நிலைச் சிந்தனை அடிப்படையில் இரண்டு தளங்களைக் காட்டுபவையாகக் கொள்ளலாம்.
1. வணிக உறவாடல், உபரிச் செல்வம் மிகுதி அற்ற சூழல்களில் பெரும்பாலும் குறிஞ்சி, முல்லை, நெய்தலில் மீன் பிடிக்கும் பிரதேசத்தில், மானுடவியலாளர் பூர்வீக மதம் என்று விபரிக்கும் ஒரு நிலையினையே காணலாம். தொல்காப்பியம் இந்த நிலங்களுக்கு மாயோன், சேயோன், வேந்தன், வருணன் ஆகிய கடவுள்கள், பெருந்தெய்வங்கள் என்று கூறும். எனினும் உண்மையில் வருணன், இந்திரன் (வேந்தன்) பற்றிய குறிப்புக்கள் அதிகம் இல்லை. முருகன் பற்றி நிறைய உண்டு. மாயோன் பற்றிய குறிப்புக்கள் சங்ககாலத்தை அடுத்து வருகின்ற காலப்பகுதியிலேயே மேல்நிலைப்படுகின்றன.
2. திணைநிலை வாழ்க்கையில் பூர்வீக மதங்களுக்குரிய சடங்குகள் பல உள்ளமையைக் காணலாம். உதாரணமாக வெறியாட்டு என்னும் சடங்கு ஒருவரைத் தெய்வம் பிடிக்கும்’ என்ற நம்பிக்கையினடியாகத் தோன்றுவதாகும். இந்த நம்பிக்கை (Possession) இன்றும் கிராமங்களிலுண்டு. இவற்றை விட நீர்நிலைகள் போன்ற இடங்களில் சூர் எனப்படும் அபெளதீக தெய்வங்கள் உறையும் எனக் கொள்ளப்பட்டது. பிற்காலத்தில் தமிழ் நாட்டில் வந்த சூரன் பற்றிய நம்பிக்கையினுள் சூர் உள்ளது போலத் தெரிகிறது. ஏனென்றால் இந்தச் சூரினை வேல் (முருகன்) தடிந்தான் என்ற குறிப்புக்கள் உள்ளன. முருக வணக்கத்தில் பின்னர் சூரன் மாமரவடிவத்தில் வந்த போது முருகனால் கொல்லப்பட்டான் என்ற ஐதீகம் உண்டு.
84 நடராஜ தரிசனம்

புறத்திணையில் வருகின்ற நம்பிக்கை நிலைகளில் பேய் என்பது பற்றிய நம்பிக்கை மிகமுக்கியமானதாகத் தெரிகிறது. போர்க்களங்களில் கொல்லப்பட்ட உடல்களைப் பேய் தின்னுமென்றும். அவ்வுடல்களை கூழாகச் சமைத்து படையலிட்டு பகிர்ந்து சாப்பிடும் எனக் கூறும் புறநானூற்றுப் பாடல்கள் பல உள்ளன. போர்க்களத்தில் கொல்லப்பட்ட உடல்களுக்காக அவற்றை கொன்ற வீரனை அப்பேய்கள் வாழ்த்தும் என்ற நம்பிக்கையும் இருந்தது. யாகமுறைமை வருவதன் முன்னம் முற்சொன்ன நம்பிக்கையில் அடியாகத் தோன்றிய களவேள்வியே முக்கியப்பட்டது போலத் தெரிகிறது.
திணைமரபின் அக, புற வாழ்க்கைகளில் இத்தகைய நம்பிக்கைகள் பல காணப்பெற்றன. அவற்றுள் முக்கியமானவைகளுள் ஒன்று தெய்வங்கள் மரங்களில் உறையும் என்பது. இந்த நம்பிக்கைகளை ஆன்மீகம் என்ற சொல்லால் குறிப்பிடமுடியாது. ஆனால் இவைதாம் அம்மக்களுடைய அடித்தள நம்பிக்கைகளாக அமைந்தன. இத்தகையதொரு சூழல் தீர்மானித்த வாழ்க்கையினூடாகவே முருகன், வள்ளி, ஐதீகம் தோன்றியிருத்தல் வேண்டும் போலத் தெரிகிறது. வள்ளி என்பது கிழங்கு வகைக்கான பெயர். நிலத்தின் கீழ் விளைவன. எனவே நிச்சயமாக கருவளச் சார்பு (Fertility) உடையன என்று துணிந்து கூறலாம். உண்மையில் வள்ளி திருமணக் கதை இத்தகைய ஒரு கருவளச் சடங்காகவே தொடங்கியிருத்தல் வேண்டும்.
இன்னொரு புறத்தில் திணை மரபின் முக்கிய உளவியற் பண்புகளிலொன்றாக விளங்குவது காஞ்சி எனக் குறிப்பிடப்படுவதாகும். காஞ்சிக்கு தொல்காப்பியர் தரும் விளக்கத்தின்படி அது உலக நிலையாமைதான். அதாவது உலகம் நிலையற்றது. எனவே ஆடம்பரமற்ற நிலையில் வாழவேண்டுமென்ற உட்குறிப்பும் அதனுள்ளிருந்தது. ஆனால் சங்க இலக்கியப் பாடல்களில் வரும் காஞ்சித் திணையைப் பார்க்கும் போது அந்நிலையில் மக்கள் எதுவந்தாலென்ன வீரத்துடன் முகம் கொடுப்போம். என்றைக்கோ ஒர்நாள் இறக்கப் போகின்றவர்கள் தானே. கொடுத்து வாழ்வோம் வேண்டுமானால் இறப்போம் என்ற கருத்துடையவர்களாகவும் இருந்ததும் தெரிகிறது.
உலக நிலையாமை பற்றிய கருத்து நிலை அவர்களுடைய நிலைப்பாட்டுடன் எவ்வளவு ஒத்துப் போகிறது எனப் பார்த்தல் வேண்டும். காஞ்சியற்றிய தொல்காப்பியக் குறிப்புக்கும் சங்க இலக்கிய குறிப்புக்களுக்குமிடையே கருத்து அழுத்த வேறுபாடு உண்டு. சங்க இலக்கியத்தினை இயற்கையோடு இயைந்த வாழ்வு எனக் கூறுவது பொருத்தமெனில் சங்ககால மத நம்பிக்கைகளும் இயற்கையோடு இயைந்தவைதான். ஆயினும் நிச்சயமாக ஒன்றினைக் கூறலாம். அக்காலத்தில் தெய்வ நம்பிக்கை நிலவிற்று.
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 85

Page 55
மத்திய காலத்து தமிழகத்திற் காணப்பட்ட இந்துமத வளர்ச்சிகளோடு நோக்கும் போது இவை வேறுபட்டனவாகக் காணப்படினும். இவை மத நம்பிக்கைகளின் பாற்பட்டவை என்பதை மறுத்தல் முடியாது.
இடைக்காலத் தமிழகத்தில் கி. பி. 600 - ஏறத்தாழ 1700 வரையுள்ள காலப்பகுதியை மூன்று அலகுகளாகப் பிரித்தல் வேண்டும்.
கி. பி 600 - 900
கி. பி 900 - 1300
கி. பி 1400 - 1700
இக்காலப்பகுதிகளிலேயே தான் உயர் சமூக வாழ்க்கை ஒழுங்கமைப்பில் மதங்கள் முக்கிய இடத்தை வகிப்பதை அவதானிக்கிறோம். ஆனால் அங்கு மதம் என்பது அரசியலும் பொருளாதாரமும் கலந்த நிலையே. ஆனால் இந்து மதம் கோபுரங்களைப் பற்றியும் பேசிற்றே தவிர கோயிலுக்குள்ளே புகமுடியாதவர்கள் வாழ்க்கை பற்றிப் பேசவில்லை. இந்த வேறுபாட்டை சேக்கிழாரின் திருநாளைப் போவார் புராணத்தையும் கோபாலகிருஷ்ண பாரதியின் நந்தனார் சரித்திரக் கீர்த்தனையையும் ஒப்பு நோக்கும்போது தெரிய வரும். பிற்கால மரபிலேதான் ஆன்மீகம் என்பது லெளகீகத்துக்கு எதிர் நிலைப்பட்ட ஒன்றாகக் கொள்ளப்படத் தொடங்கிற்றெனலாம்.
16ம், 17ம், 18ம் நூற்றாண்டுகளை இன்னொரு பக்தியுகமாகப் பார்க்க வேண்டுமென நான் பிறிதொரு இடத்தில் வாதிட்டுள்ளேன். அந்த நிலையில் சில அம்சங்கள் முக்கியமாகின்றன.
1. இஸ்டதெய்வ வழிபாடு தெய்வம் மிக அருகாமையிலிருப்பது போன்ற உணர்வு
2. உயர்மட்டத்தில் சைவ, வைஷ்ணவ பேதமிருந்தாலும் அடிநிலையில் அத்தகைய பேதமிருந்ததாகத் தெரியவில்லை. அருணகிரியாரில் இது நன்கு தெரிகிறது. அவர் முருகனையே பெருமாள் என்று கூப்பிடுகிறார்.
நாத்திகம் என்ற தொடர் திருநாவுக்கரசர் தேவாரத்திலும் (திருக்குறுந் தொகை), மாணிக்கவாசகர் திருவாசகத்திலும் காணப்படுகின்றது. இவ்விடத்தில் நாத்திகம் என்பது கடவுள் நம்பிக்கை இன்மை என்பது தெளிவாகவே வருகின்றது. (இவர்கள் கருத்துப்படி பெளத்தமும் நாத்திகம் ஆகலாம்)
3. இஸ்லாத்தின் வருகை. இது 7ம், 8ம் நூற்றாண்டுகளிலிருந்து தொடங்கி 16ம், 17ம் நூற்றாண்டுகளில் பொலிவெய்துகிறது.
86 நடராஜ தரிசனம்

4. கிறிஸ்தவத்தின் வருகை இஸ்லாத்தினதும் கிறிஸ்தவத்தினதும் வருகை தமிழர் மத சிந்தனை
மரபில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியது. கடவுள் பற்றிய எண்ணக்கரு,
மறுபிறப்பு, உயிர்ப்பு ஆகிய எண்ணக்கருக்கள் மிக முக்கிய இடம் பெறுகின்றன. இந்த இரு மதங்களும் மதப் பண்பாட்டு ஒதுக்கற்பாடுகளை ஏற்படுத்தினாலும் அடிநிலை மக்கள் நிலையில் சில மத இணைவுப் பாரம்பரியங்கள் காணப்பெற்றன. (துலுக்கநாச்சியார் வழிபாடு அந்தோனியார் பொங்கல்)
5. யோகநிலைப்பட்ட வழிபாடுகள்
தாயுமானவரை இதற்கான மிகச் சிறந்த உதாரணமாகக் காணலாம். ஆங்கில இலக்கிய மரபுவழி வரும் Metaphycial poetry (இயற்கை அதீத கவிதைக்கு, சிறந்த உதாரணமாகும்.
தமிழ்நாட்டினுள் இவ்வாறாக பாய்ந்து விரிந்து பரந்து சென்ற மதநிலை உணர்வு இராமலிங்க வள்ளலார் காலத்தில் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரித்தானிய காலனித்துவப் பாதிப்புக்களுக்கு முகம்கொடுப்பதான ஒரு மத நடைமுறையை வளர்த்தெடுத்தது.
பசியாற்றல், பால்வேறுபாட்டை அகற்றல், சாதிவேறுபாட்டை அகற்றல், ஒளியாகக் கடவுளைக் காணல் என்ற கொள்கைகள் இணைந்த ஒரு மத நெறிமுறையாக அமைந்தது. ஆயினும் வள்ளலாருக்கு இராமகிருஷ்ணருக்கு கிடைத்தது போன்ற செய்திறனும் தூரநோக்குமுள்ள விவேகானந்தர் போன்று ஒரு சீடர் இல்லாமையினால் அவர் மதம் பெறவேண்டிய வளர்ச்சியைப் பெறவில்லை.
உண்மையில் வள்ளலாருக்குப் பின்வந்த தமிழ்நாட்டின் சமூக அரசியற் சிந்தனைப் போக்கே ஆன்மீகம், நாத்திகம் என்று இன்று பேசப்படும் இந்த இரு கிளைப்பாட்டை ஏற்படுத்தியதெனலாம். இதனை சிந்தனைமட்டத்து வெளிப்பாடாகக் கொள்வது தவறு. உண்மையில் இது இக்காலத்தின் சமூக அரசியல் வரலாற்றினுள் கிடைக்கின்ற முக்கிய உண்மையாகும். இந்த மேலெழும்புகையை ஒரு சிறிதளவாவது விபரித்தல் வேண்டும்.
பிரித்தானியக் காலனித்துவ ஆட்சி தமிழகத்தின் பாரம்பரிய வாழ்க்கைக்கு அந்நியமான சட்டத்தின் முன் சமம் என்ற கொள்கையை ஓர் ஆட்சி எடுகோளாகக் கொண்டுவந்தது. இந்நோக்கு மத வலிமையுடன் இயங்கிய அதிகாரப் படிநிலைச் சமூகத்துக்கு சவாலாகவும் அச்சுறுத்தலாகவும் அமைந்தது. பிரித்தானிய ஆட்சியின் கல்வி சமூகக் கொள்கைகள் முன்னர் நிலவிய சமூக ஒழுங்கமைப்புக்குச் சவாலாக
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 87

Page 56
அமைந்தது. பிரித்தானியருடன் நெருக்கமாகப் பழக வேண்டிவந்த அடிநிலைச் சாதியினர் பாரம்பரிய அதிகாரப் படிநிலையினை எதிர்க்க முனைந்தனர். ஆரம்பத்தில் இந்திய மரபு வட்டத்தினுள்ளே நின்று கொண்டே அந்த மரபினை எதிர்த்தனர். அதனால் பெளத்தம் அவர்களுக்கு முக்கியத்துவமாயிற்று பிராமணிய சமூகத்தின் சாதிக் கொடூரமும் சடங்காசார மேலாண்மை ஆகியனவற்றை எதிர்க்க பெளத்தம் என்ற கருத்து நிலை உதவிற்று. இவ்விடயத்தில் ஆங்கிலேயர் சிலரின் உதவியும் கிடைத்தது. அயோத்திதாஸ் பண்டிதரின் எழுச்சியை 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இப் பின்புலத்திலேயே பார்த்தல் வேண்டும். பாரம்பரியத்தின் இறுக்கத்தில் வெடிப்புக்கள் ஏற்படத் தொடங்கின.
இன்னொரு புறத்தில் அரசியல் பொருளாதார நிலையில் இரண்டு செல் நெறிகள் காணப்பட்டன.
1. காலனித்துவ ஆட்சியின் நிர்வாகத்துக்கு வேண்டிய இடைநிலை உத்தியோகத்தினரை உள்ளூரிலிருந்தே நியமிக்கத் தொடங்கிய போது அதனால் பயன் பெற்றோர் பாரம்பரியமாக கல்வி வசதியும் சமூக இயங்கிசைவும் உடையோர்களாக இருந்தவர்களே. முதலில் பிராமணரும் (காவேரிப் படுகை) தொடர்ந்து வேளாளரும் (திருநெல்வேலி, கொங்கு) மேற்கிளம்பினர். இவர்களிடையே பலத்த போட்டியும் நிலவிற்று.
2. மறுபுறத்தில் ஒட்டுமொத்தமான சென்னைப் பிரசிடென்சியில் வாழ்ந்த பிராமணரல்லாத கன்னடத்து ரெட்டிமார், தெலுங்கானாவின் நாயுடுமார், மலையாளத்து நாயர்கள், தமிழ் நாட்டுப் பிள்ளைமார், செட்டிமார் உத்தியோக பொருளாதார மேலாண்மைக்குப் போட்டியிடத் தொடங்கினர்.
3. இந்தியா முழுவதையும் தனது ஆள்புலமாகக் கொண்டிருந்த பிரித்தானியக் காலனித்துவப் புலமையாளர் இந்திய ஒருமைப்பாட்டை வற்புறுத்துவதற்கு இந்து மதப் பழமையையும், சமஸ்கிருதமே மேன்மையையும் வற்புறுத்தத் தொடங்கினர். இது பிராமணிய மேலாண்மை உணர்வுக்கு மேலும் இடங்கொடுத்தது.
இந்த சமூக மேலாண்மை வாதங்களினின்றும் தங்களை விடுவித்துக் கொள்ள விரும்பியவர்கள் பிராமணியத்தை அதன் வெளிப்பாடுகளை அதன் நலங்களை ஊன்றியுள்ள இடங்களை எதிர்த்தனர். சுப்பிரமணிய பாரதியாரின் பாடங்களில் இதுவரை கூறிய சமூக மத விமர்சனங்கள் நன்கு வெளிப்படுவதைக் காணலாம். இந்திய ஒருமைப்பாட்டு வட்டத்தினுள் தமிழின் தனித்துவத்தையும் இந்திய இணைவையும் வேண்டிநிற்கும் பாரதியார் மதநிலை வழிவரும் சமூக ஏற்றத்தாழ்வுகளை கண்டிப்பதுடன் தான் கானும்
88 நடராஜ தரிசனம்

நவ இந்தியாவில் சகலரையும் (தலித்துகள் முதல் பிராமணர் வரை) சமமானவர்களாகவே காணுகின்றார். பாரதி 1921 ல் காலமானார். அதன் பின்னர் தமிழ் நாட்டில் ஏற்பட்ட பிராமணிய எதிர்ப்பியக்கம் சமூக அரசியல் வன்மையுடன் வளர்ந்தது.
இத்தகைய பின்புலத்திலேதான் ஈ. வெ. ராமசாமி நாயக்கர் எனும் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் (1926) தொடங்குகிறது. 19ம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியிலிருந்து படிப்படியாக மேற்கிளம்பி வந்த பிராமணிய மேலாண்மை எதிர்ப்பு இதனுடன் இணைந்த பொழுது தமிழர் சுயமரியாதையைக் காப்பாற்றுவதற்கு நாத்திகம் சமூக அத்தியாவசியமுடைய ஒரு நிலைப்பாடாயிற்று. இந்தப் பின்புலத்தில் வந்து தங்கள் சமூக ஒதுக்கற்பாடுகட்கு எதிராகப் போராடி பொறியியல், மருத்துவம், கல்விப்புலமை ஆகிய தொழில்களில் ஈடுபடத் தொடங்கிய தொழின்மையர் (Professionals) முக்கியமாகின்றனர். இந்தக் காலகட்டத்திலே தான் பாரதிதாசன் முக்கியமாகின்றார். அவர் 1930 களில் தமிழியக்க கவிஞராக மாத்திர மல்லாமல் திராவிட நிலை அரசியலின் வளர்ச்சிக் கட்டத்தையும் காட்டுபவராக அமைகின்றார். இதனால் பிராமண எதிர்ப்பு நாத்திகம் ஆகியன பாரதிதாசனது இக்காலத்துப் பாடல்களில் முக்கியமாகின்றன. இச்சமூக மதக் கொள்கைகள் அண்ணாத்துரை கருணாநிதி மூலமும் விரிவுடைந்தன.
இது ஒரு சமூக அரசியல் இயக்கமாக வளர்ந்தது. எனினும் இந்த சமூக அரசியல் வெளிப்பாடு ஏறத்தாழ நகர்ப்புற ஏழைகள், மத்திய தர வர்க்கத்தினர் இடையே பெரிதும் காணப்பட்டது.
அந்த சமூக அரசியல் நடவடிக்கை இணைப்பு முயற்சிகளினூடே ஏறத்தாழ ஒரு மத உத்வேகம் இருந்தது என்று சொல்லலாம். மேலும் வெகுஜன தொடர்பு ஊடகங்களை இவர்கள் பயன்படுத்திய முறையில் குறிப்பாக பத்திரிகைகள் திரைப்படங்கள் ஆகியனவற்றை பயன்படுத்திய முறையில் ஒரு பெருந்தாக்கம் ஏற்பட்டது. இதன் சமூக கல்வித் தளத்தில் நடைபெற்று வந்த கல்வி, உத்தியோக இட ஒதுக்கீடுகளே பாரம்பரிய அதிகாரப் படிநிலைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான வழிவகைகளாயின.
1949 முதல் 67, 70 வரை இது ஒரு பெரு வெள்ளமாகப் பாய்ந்தது. ஆனால் இதனூடே இரண்டு கிளை நிலைகளில் மதநிலை உணர்வு துளிர் விடத் தொடங்கிற்று. ஒரு மட்டத்தில் சென்னையை மையமாகக் கொண்ட பிராமணர்கள் படிப்படியாகத் தங்கள் மதப்பாரம்பரியங்களை புதிய சூழலுக்கேற்ப மீட்டெடுக்கத் தொடங்கினர். காஞ்சி காமகோடிப் பீடத்தலைவர் ஜயேந்திர சரஸ்வதி இதன் தலைவராக இருந்தார்.
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 89

Page 57
இன்னொரு நிலையில் தமிழ் நாட்டின் கிராமப்புறநிலையில் பிராமணரல்லாத இடைநிலைக் குடும்பத்தினர் மத்தியில் குன்றக்குடி அடிகளார் முக்கியத்துவம் பெறத் தொடங்கினார்.
மனித வாழ்வின் இருப்பியல் தேவைகள் மத உணர்வை வாழவைப்பவை. அதுவும் ஏழ்மையும் இயலாமையும் மிஞ்சிநிற்கின்ற சமூக மட்டங்களில் தெய்வ நம்பிக்கை வாழ்க்கைக்கான நியாயப்பாடாகி விடுகிறது. அந்த அளவில் அது தேவைப்படுகிறது. சமூக வைப்பு முறைக்குள் மத இன்றியமையாமையு ணர்வுக்கும் தொடர்பு உண்டு என்பதனைச் சமூகவியலாளர் வற்புறுத்துவர்.
சுதந்திரத்தின் பின் ஏற்பட்ட (1947 ன் பின்) படிப்படியான இந்திய வாழ்க்கைத் தர முன்னேற்றம் பண்பாட்டு நிலையில் மதச்சடங்கு மீட்புகளுக்கும் நிச்சயமாக இந்திய, தென்னிந்திய சூழல்களில் உதவிற்று என்பதனை M. N. பூரீநிவாஸ் சமஸ்கிருத நெறிப்படுகை என்ற, தான் முன்வைத்த சமூகவியற் கொள்கை மூலம் நிரூபித்தார். இந்தத் தாக்கத்தினை 1960,70 களில் ஏற்பட்ட மாரியம்மன், முருகன் வழிபாட்டு வளர்ச்சியிலும் அவை பின்னர் சமஸ்கிருதமயப்படுத்தப்பட்ட முறையிலும் காணலாம். ஆனால் இவை எதுவுமே இடைநிலைச் சமூகத்துக்கு கீழேயிருந்த தலித்துக்களிடத்து, திராவிடக் கருத்து நிலை வலுப்பெற்றிருந்த தமிழ்நாட்டிலேயே செல்லவில்லை என்னும் உண்மை புலனாயிற்று. அந்த அடிநிலை மக்கள் தங்கள் தமிழ், அடையாளத்திலும் பார்க்க தலித் அடையாளமே தமக்கு முக்கியமாகின்றது என்றனர். இந்தப் பின்புலத்திலே தான் தமிழ்நாட்டில் ஆன்மீகம் நாத்திகம் என்ற கொள்கைகள் எதிர்நிலை முனையங்களாக வளர்த்தெடுக்கப்பட்டன. இந்த எதிர் நிலைகளின் இணைநிலையாக வள்ளலாரைக் கொள்கின்ற ஒரு செல்நெறி தமிழ் நாட்டினுள்ளே படிப்படியாக வளர்ந்து வருகிறது.
90 நடராஜ தரிசனம்
 

ஈழத்துத் தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்
O சில குறிப்புகள் பேராசிரியர் க. அருணாசலம் தமிழ்த்துறை பேராதனைப்பல்கலைக்கழகம்
புனைகதை ஒர் அறிமுகம்:
உலக மொழிகளில் இன்று மிகுந்த முக்கியத்துவம் பெறும் இலக்கிய வடிவங்களுள் புனைகதை இலக்கியமே முதன்மையிடத்தைப் பெற்றுத்திகழ்கிறது. ஆரம்பத்தில் இத்தாலிய மொழியிலும் பிரெஞ்சு மொழியிலும் தோற்றம் பெற்ற இப்புனைகதை இலக்கியம், ஆங்கில மொழியில் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் வேரூன்றிக், காலப்போக்கில் உலகம்முழுவதும் பரவலாயிற்று.
ஆங்கில மொழியிற் புனைகதை இலக்கிய வளர்ச்சி பெரிய பிரித்தானியாவில் மட்டுமன்றிக் கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா, கீழைத்தேய நாடுகள் முதலியவற்றிலும் காணப்படுவது போன்று, இன்று தமிழ்ப் புனைகதை இலக்கியமும் தமிழகம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளில் மட்டுமன்றி ஜேர்மனி, பிரான்சு, சுவிற்சலாந்து, நோர்வே, டென்மார்க், பெரிய பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா முதலிய நாடுகளிலும் வளர்ச்சியடைந்து வருகின்றது. தமிழகத்தினைப் போன்றே ஈழத்திலும் புனைகதை இலக்கியத்தின் ஒரு பிரிவான சிறுகதை இலக்கியம் இன்று பூரணம் பெற்ற ஒர் இலக்கிய வடிவமாக வளர்ந்துள்ளது என்பதில் ஐயமில்லை.
தமிழ் புனைகதை இலக்கியத்தின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்குமான காரணங்கள்: ா
இந்தியா, இலங்கை முதலான கீழை நாடுகளில் ஏறத்தாழக் கி.பி. பதினாறாம் நூற்றாண்டிலிருந்தே போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், பிரான்சியர்
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 91

Page 58
முதலிய மேலைநாட்டவர்களது ஆதிக்கம் இடம்பெற்றபோதும் இவர்களது ஆட்சியைத் தொடர்ந்து இடம்பெற்ற பிரித்தானியரது ஆட்சியின் போதே கீழைநாடுகளில் பெரும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதற்கு இந்தியாவோ அதன் ஒரு கூறான தமிழகமோ, ஈழமோ விதிவிலக்கல்ல.
பிரித்தானியராட்சிக்காலத்தில் தமிழகத்திலும் அதன் அயலே அமைந்துள்ள ஈழத்திலும் பாரியமாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. இம்மாற்றங்கள் பாரம்பரியமாக நிலவிவந்த அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டுத் துறைகளிற் குறிப்பிடத்தக்க பாதிப்புக்களை ஏற்படுத்தின.
பிரித்தானியராட்சிக்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் மாற்றங்கள், நிர்வாகச் சீர்திருத்தங்கள், ஆங்கில கல்விவிருத்தி, நவீன கல்வியின் வளர்ச்சி, அச்சியந்திர விருத்தி, மத்திய தரவர்க்கத்தின் தோற்றம், மறுமலர்ச்சிக்கருத்துக்களின் பரம்பல், உரை நடைவளர்ச்சி, நவீனத்துவப் போக்கு, பாரம்பரியச் சமுதாய அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள், நிலப்பிரபுத்துவ வீழ்ச்சி, தனிமனிதன் சகலதுறைகளிலும் முக்கியத்துவம் பெறத் தொடங்கியமை, பத்திரிகைத்துறையின் வளர்ச்சி முதலியவற்றினால் “மேலைநாட்டுச் சரக்கு” எனத் தமிழ்ச் சிறுகதை மன்னனால் கூறப்பட்ட 'புனைகதை இலக்கியமும் முதலிலே தமிழகத்திலும் பின்னர் ஈழத்திலும் தோன்றி வளரலாயிற்று.
தமிழ்ச் சிறுகதையின் தந்தை எனப் போற்றப்படும் வ.வே.சு. ஐயர் (வரகனேரி வேங்கட சுப்பிரமணி ஐயர்) காலத்திலும், அதற்குச் சற்று முன்னரும் பலர் சிறுகதை முயற்சிகளில் ஈடுபட்டனர். காலம்காலமாக இடம்பெற்றுவந்த மரபுக்கதைகள் பலவும் நவீன உருவ உத்திகளுடன் கூடிய சிறுகதைகளுக்கும் மரபுக் கதைகளுக்கும் இடையிற் பாலமாக அமைந்த சிறிய கதைகள் பலவும் அச்சு வாகனமேறின. இதே நிலைமையினை நாம் ஈழத்திலும் அவதானிக்க முடிகின்றது.
III
ஈழத்தின் ஆரம்பகாலச் சிறுகதை முயற்சிகள் :
ஈழத்தின் ஆரம்பகாலச் சிறுகதை முதல்வர்களாக இலங்கையர்கோன், சி. வைத்தியலிங்கம், சம்பந்தன் ஆகியோரைக் கொள்வது இன்று மரபாகிவிட்டது. அதிற் பெருமளவு உண்மையும் உண்டு என்பதை இலகுவில் மறுக்க முடியாது. ஆயின், இவர்களது சமகாலத்திலும் அதற்குச் சற்று முன்னரும் சிறுகதை முயற்சிகளில் ஈடுபட்ட ஈழத்தறிஞர்களையும் நாம்
92 நடராஜ தரிசனம்

மனங்கொள்ளல் வேண்டும். இலங்கையர் கோனின் சிறுகதைகளுட் கணிசமானவை'வெள்ளிப்பாதரசம் என்னும் தொகுதியில் இடம்பெற்றுள்ளன. சி. வைத்தியலிங்கத்தின் கதைகளுட் கணிசமானவை'கங்காகிதம்' என்னும் தொகுதியில் இடம் பெற்றுள்ளன. சம்பந்தனது கதைகளுட் கணிசமானவை, சம்பந்தன் சிறுகதைகள்' என்னும் தொகுதியில் இடம் பெற்றன.
இதே போன்று இவர்களுக்குச் சற்று முன்னரும் இவர்களது சமகாலத்திலும் இலங்கையில் பலர் கதை இலக்கியம் படைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். சிலர் மரபு வழிக்கதைகளைத் தொகுத்து நூல்களாக வெளியிட முனைந்தனர். அத்தகையவர்களுள் ஆனால்ட் சதாசிவம்பிள்ளை, சோ. சிவபாதசுந்தரம், கோ. நடேசையர், நவாலியூர் சோ. நடராஜன், ஆனந்தன், பாணன் முதலியோர் விதந்து குறிப்பிடத்தக்கவர்கள். மரபுக்கதைகள் பல கதாசிந்தாமணி, நற்பவளத்திரட்டு, ஹைதர்ஷா சரித்திரம் முதலிய தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இவற்றுள் நன்னெறிக் கதாசங்கிரகம் முதலியன மரபுக் கதைகளாகவோ அன்றி நவீன உருவ உத்திகளுடன் கூடிய சிறுகதைகளாகவோ அன்றி இரண்டு வகைக் கதைகளுக்குமிடையில் பாலம் போல் அமைந்துள்ள மையையும் நாம் மிகுதியான கவனத்திற் கொள்ளல் வேண்டும்.
IV
ஈழத்தின் ஆரம்பகாலச் சிறுகதைகளின் முக்கிய பண்புகள் :
ஈழத்தின் ஆரம்பகாலச் சிறுகதையாசிரியர்களுள், மும்மூர்த்திகள் எனப் போற்றப்படும் இலங்கையர்கோன், வைத்தியலிங்கம், சம்பந்தன் ஆகியோரது கதைகளில் இடம் பெற்றுள்ள முக்கிய பண்புகள் சிலவற்றை இங்கு நோக்கலாம்.
இலங்கையர்கோனும் வைத்தியலிங்கமும் ஆங்கிலத்திலும் தமிழிலும் மிகுந்த பரிச்சயம் பெற்றவர்கள், சம்பந்தன் வடமொழியிலும் தமிழிலும் நன்கு பரிச்சயம் பெற்றவர், மூவரும் யாழ்ப்பாணக் குடாநாட்டின் குறிப்பிட்ட பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், நெருங்கிய அல்லது தூரத்து உறவினர்கள்.
பொதுவாக நோக்குகையில் இம் மூவரது கதைகளிலும் கிராமியப் பண்புகள், ஆண் - பெண் உறவு, மன உணர்வுப் போராட்டங்கள், மென்மையான காதல் உணர்வுகள், காதலுக்குத் தடையாக அமையும் சமூக பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், புராண இதிகாச நிகழ்ச்சிகள், வரலாற்றுச் சம்பவங்கள், மண்வாசனை முதலியன முக்கியத்துவம் பெற்றுள்ளதை
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 93

Page 59
அவதானிக்கலாம். இவர்களது சிறுகதைகள் பல ஈழத்தின் பல்வேறு பாகங்களைக் களமாகக் கொண்டமைந்துள்ள பொழுதும் ஈழத்துமக்களுக்கே பிரத்தியேகமாகவுரிய பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. தமிழகத்தின் மணிக்கொடி எழுத்தாளர்களுள் மெளனி, கு. ப. ரா. பிச்சமூர்த்தி, சிதம்பரசுப்பிரமணியன் ஆகியோரது சிறுகதைகளின் நேரடித் தாக்கமும், மேலைநாடுகளைச் சேர்ந்த சிறுகதை ஆசிரியர்கள் சிலரின் பாதிப்பும் இவர்களது கதைகளிற் காணப்படுகின்றன. இம்மூவரும் சமூக நோக்குக்கு முக்கியத்துவமளிக்காவிடினும் கலைத்துவம் மிக்க கதைகளைப் படைத்துள்ளமை விதந்து கூறக்கூடியதொன்றாகும். ஈழத்து மண்ணிலே தமிழ்ச்சிறுகதை இலக்கியம் வேரூன்றவும் வளர்ச்சியடையவும் பலமான அத்திவாரத்தை இம் மூவரும் இட்டனர் என்பதில் ஐயமில்லை.
V
மறுமலர்ச்சிக் காலச் சிறுகதைகள் :
ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் ஏறத்தாழ 1940 களின் ஆரம்பம் முதல் 1950 களின் முற்பகுதிவரையிலான காலப்பகுதியை மறுமலர்ச்சிக் காலம் எனலாம். 1943 ஆம் ஆண்டு வரதர் முதலியோரது ஒத்துழைப்புடன் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. அதற்குப்பக்கபலமாக ஈழத்தின் மணிக் கொடிப்பத்திரிகை எனப் போற்றப்படும் மறுமலர்ச்சி என்னும் பத்திரிகை 1945 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இக்காலப் பகுதிச் சிறுகதைகளில் மறுமலர்ச்சிக் கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுவதற்கு மேற்படிச்சங்கமும் பத்திரிகையும் முக்கிய பங்காற்றின என்பதில் ஐயமில்லை.
பாரதியார், புதுமைப்பித்தன் முதலியோரது படைப்புகளின் தாக்கமும், காந்தீயத்தின் செல்வாக்கும், மணிக்கொடிப் பத்திரிகையிலும் அதனைத் தொடர்ந்து தமிழ் நாட்டில் வெளிவந்து கொண்டிருந்த பத்திரிகைகளிலும் இடம்பெற்ற இலக்கியப் பரிசீலனைகளும், 1930 ம் ஆண்டு முதல் ஈழத்தில் வெளிவந்த ஈழகேசரிப் பத்திரிகையும் வீரகேசரிப்பத்திரிகையும் மறுமலர்ச்சிக் கருத்துக்களுக்கு வரவேற்பளித்தமையும் இக்காலப் பகுதியில் எழுந்த சிறுகதைகளில் மறுமலர்ச்சிக் கருத்துக்கள் முனைப்புப் பெறுவதற்கும் சமூகசீர்திருத்தக் கருத்துக்கள் அழுத்தம் பெறுவதற்கும் வழிசமைத்தன
எனலாம்.
94. நடராஜ தரிசனம்
 

தொடக்ககாலச் சிறுகதை ஆசிரியர்கள் சிலர் தொடர்ந்தும் எழுதலாயினர். அதேசமயம் மறுமலர்ச்சிச் சிந்தனையிலும் சமூக சீர்திருத்தச் சிந்தனையிலும் தீவிர ஈடுபாடு கொண்ட இளந்தலைமுறையினர் பலரும் சிறுகதைகளைப் படைப்பதில் ஆர்வம் காட்டினர். அத்தகையவர்களுள் அ. செ. முருகானந்தம், தி. ச. வரதராசன், அ. ந. கந்தசாமி, வ. அ. ராசரத்தினம், பித்தன (கே. எம். ஷா), சு. வேலுப்பிள்ளை, கனக செந்தினாதன், தாழையடி சபாரத்தினம், இராஜநாயகன், சு. நல்லையா, ஆனந்தன் சோ. தியாகராஜன், இராஜ அரியரத்தினம், நாவற்குழியூர் நடராஜன், கு. பெரியதம்பி, கே. கனேஸ் முதலியோர் முக்கியமாகக் குறிப்பிடத்தக் கவர்கள், இவர்களுட் கணிசமானோர் ஆரம்ப முயற்சிகளுடன் தமது எழுத்துப்பணிகளை நிறுத்தி விட்டமை துர்ப்பாக்கியமே.
மேற்குறிப்பிட்டவர்களுள் பலரது கதைகள் தொகுதிகளாக வெளிவந்துள்ளன. வ. அ. இராசரத்தினத்தின் தோணி', 'ஒரு காவியம் நிறைவுபெறுகிறது. தி. ச. வரதராசனின் “கயமை மயக்கம்”, “வரதர் கதைகள்”, பித்தனின் “பித்தன் கதைகள்' சொக்கனின் “கடல்', கனக செந்தினாதனின் “வெண்சங்கு', செங்கையாழியான் தொகுத்தளித்த “மறுமலர்ச்சிச் சிறுகதைகள்', க. சிவகுருநாதனின் “கசின் சிறுகதைகள்' செங்கையாழியான் தொகுத்தளித்த ‘ஈழகேசரிச் சிறுகதைகள்”, எஸ். பொன்னுத்துரை தொகுத்தளித்த “காந்தியக் கதைகள்' சு. வே. யின் மண்வாசனை, “அ. செ.முருகானந்தத்தின் கதைகள்'முதலியன இவ்வகையில் மனங்கொள்ளத்தக்கவை.
VI
மறுமலர்ச்சிக் காலச் சிறுகதைகளின் முக்கிய பண்புகள்:
இக்காலகட்டப் பகுதியைச் சேர்ந்த சிறுகதையாசிரியர்கள் பலர் மறுமலர்ச்சிச் சிந்தனைகளாலும் சமூகச்சீர்திருத்தக் கருத்துக்களாலும் அதிகம் ஈர்க்கப்பட்டவர்கள்; முற்போக்குச் சிந்தனைகளை வரவேற்றவர்கள் என்பதனை அவர்களது சிறுகதைகள் மட்டுமன்றி, அவர்களுட் சிலர் எழுதியுள்ள கட்டுரைகளும் நிரூபிக்கின்றன. இவையே இக்கால கட்டச் சிறுகதைகளில் முனைப்புப் பெற்று விளங்குவதையும் அவதானிக்கலாம்.
ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகள் தமிழகத்துச் சிறுகதைகளின் பிரதிபலிப்பாகவன்றி ஈழத்தையே களமாகக்கொண்டு ஈழத்தின் பல்வேறு பாகங்களிலும் வாழுகின்ற மக்களின் வாழ்வியலைப் பிரதிபலிப்பனவாகவும்
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 95

Page 60
ஈழத்து மண்வாசனையைப் புலப்படுத்துவனவாகவும் அமைதல் வேண்டும்; ஈழத்துத் தமிழ் பேசும் மக்களின் மத்தியில் காலங்காலமாக ஊறிப் போயிருக்கும் மூடநம்பிக்கைகளையும் அறியாமையையும் அகற்றுதல் வேண்டும்; அவர்கள் மத்தியில் மறுமலர்ச்சிக் கருத்துக்களும் முற்போக்குச் சிந்தனைகளும் சுவறவேண்டும் என்னும் துடிப்புடன் இக்கால கட்டத்துச் சிறுகதையாசிரியர்கள் பலரும் செயற்பட்டுள்ளமையை நாம் அவதானிக்க முடிகின்றது.
சமுதாயத்திலும் சமயத்திலும் காலம் காலமாக நிலவிவந்துள்ள குறைபாடுகள் பலவற்றை வன்மையாகக் கண்டித்தனர். கண்டித்ததோடு மட்டும் நில்லாது அவற்றுக்கான மாற்றுக் கருத்துக்களையும் புதிய சிந்தனைகளையும் துணிகர ஆண்மையுடன் முன்வைத்தனர். இதற்குச் சிறந்ததொரு எடுத்துக் காட்டாக முதுபெரும் எழுத்தாளரான வரதரின் “கயமை மயக்கம்” என்னும் சிறுகதைத் தொகுதியில் அமைந்துள்ள பல கதைகளும், பித்தனின் "பாதிக்குழந்தை'யும் அ. ந. கந்தசாமியின் கதைகள் சிலவும் விளங்குகின்றன. தமிழகத்தின் இலக்கிய மரபினை அழுங்குப் பிடியாகப் பின்பற்றும் போக்கினை விடுத்து, ஈழத்திற்கெனத் தனித்துவமான இலக்கியப் பாரம்பரியம் வளர்வதற்கு இவர்களே முதலில் வழிசமைத்தனர் என்பதில் ஐயமில்லை. இவர்களது சிறுகதைகளிலேயே முதன்முதல் சமுதாயநோக்கு அல்லது சமுதாய அக்கறை முனைப்புப் பெறத் தொடங்குவதனையும் அவதானிக்கலாம். பொதுவாக இக்கால கட்டத்து எழுத்தாளர்கள் பலர் தமது சிறுகதைகளின் மூலமாக, காலத்திற்கொவ்வாத பழையமரபுகளை நீக்கவும் புதியசிந்தனைகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தவும் சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களை பரப்பவும் தமது இலட்சிய வேகத்தையும் இலக்கிய வேட்கையையும் முற்போக்குச் சிந்தனைகளையும் பரப்பவும் முயன்றுள்ளதை அவதானிக்கலாம்.
இவர்களது முயற்சிகள் மூலமே ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை புதிய பாதையில் வீறுநடை போடத் தொடங்கிற்று; உருவத்திலும் உள்ளடக்கத்திலும் சிறப்புப் பெறலாயிற்று, ஈழத்துச் தமிழ்ச் சிறுகதையின் ஆழமான வளர்ச்சிக்கும் அகலமான விகச்சிப்புக்கும் அடிகோலலாயிற்று; அடுத்து வரும் கால கட்டவளர்ச்சிகளுக்கு முன்மாதிரியாக அமையலாயிற்று.
VII
தேசிய விழிப்புணர்ச்சிக்காலம் அல்லது சமுதாய விழிப்புணர்ச்சிக் காலம்:
க்காலகட்டக்ை ரண்டுபெரும் பிரிவுகளாக வகுத்து நோக்கலாம்
ததை (5 தது நே
அவையாவன.
96 நடராஜ தரிசனம்

1. 1950 களின் நடுப்பகுதியிலிருந்து 1960 களின் நடுப்பகுதிவரை. 2. 1960 களின் பிற்பகுதியிலிருந்து 1980 களின் ஆரம்பம் வரை.
இக்காலப் பகுதிச் சிறுகதை வளர்ச்சிப் போக்கை நிர்ணயித்த காரணிகளை இரு வகையாக நோக்கலாம். அவையாவன (01) அகக் காரணிகள் (02) புறக்காரணிகள்
இலங்கை சுதந்திரம் அடைந்ததும் உடனடியாகப் பெரும் மாற்றங்கள் எவையும் ஏற்படவில்லை. 1956 ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் மாற்றமும், அரசினால் மேற்கொள்ளப்பட்ட சிங்களம் மட்டும் சட்டமும், 1958 ஆம் ஆண்டு இடம் பெற்ற இனரீதியான வன்செயல்களும் தமிழ்மக்கள் மத்தியில் பெரும்விழிப் புணர்ச்சியை ஏற்படுத்தின.
எடுத்ததற்கெல்லாம் தமிழகத்தை எதிர்நோக்கியிருந்த இலங்கைத் தமிழ்மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படலாயிற்று. பிரதேச ரீதியான வேறுபாடுகள் ஒரளவு மழுங்கி இலங்கை வாழ்தமிழ் மக்கள் என்னும் தேசிய ரீதியிலான விழிப்புணர்வு ஏற்படலாயிற்று. இலங்கை வாழ் தமிழ்மக்களுக்கெனத் தனித்துவமானதோர் பாரம்பரியம் உண்டு, இலங்கைத் தமிழ் இலக்கியம் இலங்கைத் தமிழ் மக்களின் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் தேசிய இலக்கியமாக அமைதல் வேண்டும் என்னும் எண்ணக்கரு வளர்ச்சியடையலாயிற்று.
இலவச கல்வித்திட்டத்தினாலும் 1960 களின் தொடக்கத்திலிருந்து பல்கலைக்கழகம் வரைமேற் கொள்ளப்பட்ட தாய்மொழிக் கல்வி விருத்தியினாலும் கல்வி வளர்ச்சி சகல மட்டங்களிலும் பரவலாயிற்று. பின்தங்கிய பிரதேசங்கள், பின்தங்கிய கிராமப்புறங்கள், பின்தங்கிய குடும்பங்கள் எனப் பல மட்டங்களிலிருந்தும் மாணவர்கள் பல்கலைக்கழகம் நுழைந்து உயர் கல்வியைப் பெறலாயினர். இவர்களுட் கணிசமானோர் ஆக்க இலக்கியத்துறையில் தீவிர ஆர்வம் காட்டினர்.
சமூகத்திற் பெரும் விழிப்புணர்ச்சி ஏற்படலாயிற்று. ஆண்டாண்டு காலமாகச் சமூகரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், அறியாமை மூலமாகவும் அடக்கி ஒடுக்கப்பட்டிருந்த மக்கள் விழிப்புற்றெழுந்து தமது உரிமைகளுக்காகவும் விடுதலைக்காகவும் போராடத்தலைப்பட்டனர். ஆரம்பக் கல்வியை மட்டும் கற்ற பலர் இப்போராட்டத்தில் ஈடுபட்டதோடு இலக்கியத்தையும் போராட்டச் சாதனமாகப் பயன்படுத்தினர்.
இவர்களது போராட்டங்களுக்கும் விழிப்புணர்வுக்கும் எழுச்சிக்கும் மேலும் உந்து சக்தி அளிக்கும் வகையில் இடதுசாரிக் கருத்துக்கள் வலுவூட்டின. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வீறுடன் செயற்பட்டு இவற்றை மென்மேலும் முன்னெடுத்துச் சென்றது.
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 97

Page 61
சிறுகதை, நாவல் இலக்கியங்கள் இழிசனர் இலக்கியம்’ எனப் பழமைவாதிகளால் எள்ளிநகையாடப்பட்ட போது முற்போக்குவாதிகள் அதற்கெதிராகப் பெரும் போராட்டத்தையே நடாத்தி வெற்றியீட்டினர்.
தொழிற்சங்கங்களின் வளர்ச்சியினால் சமூகத்தின் அடித்தள மக்கள் மத்தியிலும் இலங்கையின் மலையகத் தோட்டத் தொழிலாளர் மத்தியிலும் விழிப்புணர்வும் எழுச்சியும் ஏற்பட்டமை.
தமிழகத்தில் மிகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கு இலங்கையின் பல துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியது.
பொதுவுடைமை நாடுகளினின்றும் பரவிய பொதுவுடைமைத் தத்துவமும், சோஷலிசச் சிந்தனைகளும், அவை சார்பான நூல்களும் இலக்கியங்களும் தமிழ்மொழியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் செல்வாக்குப் பெறலாயின; இலக்கிய கர்த்தாக்கள் பலரை ஈர்க்கலாயின.
இக்காலப் பகுதியில் தமிழ் நாட்டிலிருந்து இலங்கைக்கு வருகைதந்திருந்த பகீரதன், கி. வா. ஜகந்நாதன் முதலியோர் ஈழத்து இலக்கியம் பற்றித் தெரிவித்த அலட்சியமான கருத்துகளும் செய்த உபதேசங்களும் ஈழத்து இலக்கிய கர்த்தாக்களை விழிப்புற்றெழச் செய்தன.
தினகரன், சுதந்திரன், தேசாபிமானி, பாட்டாளி, பாரதி, மல்லிகை முதலிய பத்திரிகைகளும் சஞ்சிகைகளும், இக்காலப்பகுதியில் நடைபெற்ற இலக்கியக் கருத்தரங்குகளும் எழுத்தாளர் மாநாடுகளும் இலக்கிய நெறிப்பாடு பற்றிய கருத்து மோதல்களும் திறனாய்வு முயற்சிகளும் ஈழத்துத் தமிழ் இலக்கியம் தகுந்த முறையில் வளர்ச்சியடைய உதவலாயின.
இலங்கையில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களுக்கு அப்பால் வன்னி, மலையகம் முதலிய பிரதேசங்களிலும், பெரும்பான்மை மக்களால் சூழப்பட்ட பிரதேசங்களிலும், தென்னிலங்கையிலும் தென்மேற்கு வடமேற்குப் பிரதேசங்களிலும் ஏறத்தாழ 1960 களின் பிற்பகுதியிலிருந்து நவீன இலக்கிய முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டமையும், முஸ்லிம் இளந்தலை முறையினரும் பெண்களும், நவீன இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டமையும், சிறுகதைத் தொகுதிகள் பல வெளிவரத் தொடங்கியமையும், தேசிய இலக்கியம், மண்வாசனை இலக்கியம், யதார்த்த இலக்கியம் ஆகியனபற்றிய கருத்துக்கள் வலுவடைந்தமையும் மனங்கொளத்தக்கவை.
ஏறத்தாழ 1950 களின் ஆரம்பத்திலிருந்து சிறுகதை எழுதத் தொடங்கியவர்களுள் டானியல், டொமினிக் ஜீவா, எஸ். அகத்தியர், செ. கணேசலிங்கன், என். கே. ரகுநாதன், சிற்பி, என். எஸ். எம். ராமையா, காவலூர் இராசதுரை, நீர்வை. பொன்னையன், முத்துலிங்கம், நா. க. தங்கரத்தினம் முதலியோர் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவர்கள்.
98 நடராஜ தரிசனம்

1960 களிற் சிறுகதை எழுதத் தொடங்கியவர்களுள் மு. தளையசிங்கம், செ. கதிர்காமநாதன், செ. யோகநாதன், பெனடிக், பாலன், செங்கை ஆழியான், செம்பியன் செல்வன், கே. வி. நடராசன், தெணியான், க. சதாசிவம், நெல்லை க. பேரன், சாந்தன், மருதூர்க் கொத்தன், புதுமைப்பிரியை, குந்தவை, பவானி, நந்தி முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
1960 களின் இறுதியிலும் 1970 களிலும் சிறுகதை எழுதத் தொடங்கியவர்களுள் வன்னியூர்க் கவிராயர், திக்குவெல்லை கமால், அ. யேசுராசா, லெ. முருகபூபதி, சி. சண்முகநாதன், பொ. பத்மநாதன், எஸ். எம். இக்பால், என். கே. மகாலிங்கம், மருதூர் வாணன், எஸ். பாக்கியசாமி, காவலூர் எஸ். ஜெகந்நாதன், ப. ஆப்டீன், செந்தாரகை, செ. கந்தசாமி, அ. பாலமனோகரன், அ. ஸ. அப்துஸ்ஸமது, சட்டநாதன், அமுதன், வை. மு. திருநாவுக்கரசு, சுதாராஜ், மு. கனகராசா, மு. பொன்னம்பலம், குப்பிளான் ஐ. சண்முகம், சசி. கிருஷ்ணமூர்த்தி, யாதவன், நீள்கரை நம்பி, செளமினி, தி. ஞானசேகரன், எம். எம். நூர்டீன், துரை, சுப்பிரமணியன், க. நவம், எம். எச். எம். ஷம்ஸ் முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
VIII
இக் காலகட்டப்பகுதியில் எழுந்த சிறுகதைகளில் சமகாலப் பிரச்சினைகள் முக்கியத்துவம் பெறுவதையும் சிறுகதை எழுத்தாளர் பலர் பிரச்சினைகளை அலசுவதுடன் மட்டும் நில்லாது அவற்றுக்கான அடிப்படைக் காரணங்களையும் தீர்வு மார்க்கங்களையும் தமது கதைகளில் விண்டு காட்டத்தவறவில்லை முற்பட்ட காலக்கதைகளிலும் பார்க்க இக்காலப் பகுதிக் கதைகளில் பொருள் விரிவையும் அடிப்படையான கருத்துமாற்றங்களையும் காணலாம்.
முற்போக்குச் சிந்தனைகள் முக்கியத்துவம் பெற்றுக் காணப்படும் இக்காலப் பகுதிச் சிறுகதைகள் காலத்தின் குரலாகவும், காலத்தின் தேவைக்கேற்றனவாகவும், ஈழத்தின் சமூக பொருளாதாரப் பிரச்சினைகளைப் பிரதிபலிப்பனவாகவும், சமூகத்தை முன்னேற்றப் பாதையை நோக்கிச் செலுத்துவனவாகவும் யதார்த்தப்பண்பு மிக்கவையாகவும், சமுதாய ஆவணங்களாகவும் அமைந்துள்ளமை நோக்கத்தக்கது.
மறுமலர்ச்சிக்காலப் பகுதியில் அங்கும் இங்குமாகத் தொட்டுக் காட்டப்பட்ட சமூக பொருளாதாரப் பிரச்சினைகள் பல இக்காலப் பகுதிக் கதைகளில் விரிவாகவும் ஆழமாகவும் நோக்கப்பட்டுள்ளன. சாதிப் பிரச்சினை, தொழிலாளர் பிரச்சினை, சீதனப் பிரச்சினை, சுரண்டற் கொடுமை,
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 99

Page 62
வேலையில்லாத் திண்டாட்டம், இனரீதியான வன்செயல்கள், இனமுரண்பாடு முதலியன இக்காலப் பகுதிக் கதைகளில் முக்கியம் பெற்றுள்ளன.
இக்காலப்பகுதியைச் சேர்ந்த சிறுகதை எழுத்தாளர்கள் பலர் சமூகத்தின் தாழ்த்தப்பட்ட பகுதியினரிடையேயிருந்தும், தொழிலாளர், விவசாயிகள், மீனவர்கள் முதலியோர் மத்தியிலிருந்தும் தோன்றியமையினால் போலும், அது காலவரை எழுத்தாளர்கள் அதிகக்கவனம் செலுத்தாத, சமூகத்தின் தாழ்ந்த நிலையிலுள்ளவர்களதும் தொழிலாளர், மீனவர்கள், விவசாயிகள் முதலியோரதும் பல்வகைப்பட்ட பிரச்சினைகளையும் வாழ்க்கைப் போராட்டங்களையும் எண்ணங்கள் அபிலாஷைகளையும் மனிதாபி மானத்துடனும் யதார்த்தத்துடனும் தமது கதைகளிற் பிரதிபலித்துள்ளமை விண்டுரைக்கத்தக்கதாகும்.
இக்காலப் பகுதி எழுத்தாளர்கள் பலர் கதைகளின் உள்ளடக்கத்திலும் உருவத்திலும் பரவலான பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டனர். முற்பட்டகாலப் பகுதி எழுத்தாளர்கள் தொடுவதற்கு அஞ்சியவிடயங்கள் பல இக்காலப் பகுதிக் கதைகளில் விரிவாகவும் ஆழமாகவும் நோக்கப்பட்டுள்ளன. சமகால சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கும் அவற்றால் ஏற்படும் பிரச்சினைகளுக்கும் பொதுவுடைமை மலர்ச்சியின் மூலமே விடிவு காண முடியும் என்னும் கருத்துப் பலரது கதைகளின் அடிநாதமாக ஒலிக்கின்றது. ஈழத்துத் தமிழர் சமூகத்தில் விசுவரூபம் பெற்றுள்ள இன, மொழிப்பிரச்சினைகள் இக்காலப் பகுதிச் சிறுகதையாசிரியர்களின் அதிகவனத்திற்குள்ளாகாமை ஆய்வுக்குரியதாகும்.
VIII
1960 களின் பிற்பகுதியிலிருந்து ஏற்பட்ட மாற்றங்கள் :
ஏறத்தாழ 1960 களின் பிற்பகுதியிலிருந்து ஈழத்துச் சிறுகதை வளர்ச்சிப் போக்கில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் சில ஏற்படலாயின. அதுகாலவரை பிரசித்திபெற்ற சிறுகதை எழுத்தாளர்களாக விளங்கிய பலர் நாவல், நாடகம் முதலிய துறைகளிற் கவனம் செலுத்தமுற்பட்டனர். ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளின் களம் விரிவடையலாயிற்று. 1960 களின் பிற்பகுதி வரை பாரம்பரியமாகத் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களும் கொழும்பு நகரப் பிரதேசமும் சிறுகதைகளின் களங்களாக முக்கிய இடம் பெற்றிருந்தன. 1960 களின் பிற்பகுதியிலிருந்து நீர்கொழும்பு, திக்குவல்லை,
1OO நடராஜ தரிசனம்

அநுராதபுரம், குருநாகல், கெக்கிராவை, மினுவாங்கொடை, இரத்தினபுரி, பேருவலை முதலிய சிங்கள மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலிருந்தும்
இளைஞர்கள் குறிப்பாக முஸ்லிம் இளைஞர்கள் பலர் தோன்றிப் புதிய கருத்து
வீச்சுடன் சிறுகதைகளை எழுதி வருதல் குறிப்பிட்டுக் கூறக்கூடிய தொன்றாகும்.
திக்வல்லை எழுத்தாளர் சங்கம், மாத்தளை மக்கள் இலக்கியவட்டம் முதலியனவும், சஞ்சிகைகள் சிலவும் இவர்களது முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பணியாற்றிவருதல் போற்றத்தக்கதாகும். குறிப்பாகப் பல தசாப்தங்களாக ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு அயராது உழைத்து வரும் மல்லிகையின் பெரும்பணி விதந்து கூறக் கூடியதாகும். மேலும் 1960 களின் பிற்பகுதியிலிருந்தே வன்னிப் பிரதேசத்தின் முக்கிய பகுதிகளாகிய வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களிலும், உடப்பு, புத்தளம் முதலிய பகுதிகளிலும், அம்பாறைமாவட்டத்திலும் சிறுகதை உள்ளிட்ட நவீன இலக்கியமுயற்சிகள் மேற்கொள்ளப்படலாயின.
1960 களின் பிற்பகுதியிலிருந்து மலையகத் தொழிலாளர் மத்தியிலேயே பிறந்துவளர்ந்து அவர்களது துயரம் தோய்ந்த வாழ்க்கைப் போராட்டங் களையும் பிரச்சினைகளையும் இன்னல்களையும், அநுபவபூர்வமாக உணர்ந்த இளைஞர்கள் பலர் சிறுகதை எழுதும் முயற்சியில் ஈடுபடலாயினர். இவர்களுக்கு முன்பே மலையகத் தொழிலாளர் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு கணிசமான அளவு சிறுகதைகள் வெளிவந்துள்ள போதும் அக்கதைகளிற் காணமுடியாத சில சிறப்பம்சங்களை இவ்விளைஞர்களது கதைகளிற் காணலாம்.
மலையகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களுள் என். எஸ். எம். இராமையா, தெளிவத்தை ஜோசப், மாத்தளை சோமு, மாத்தளை வடிவேலன், பூரணி, மலரன்பன், சாரல்நாடன், மலைச்செல்வன், பன்னீர்செல்வன், திருச்செந்தூரன், பொ. கிருஷ்ணசாமி, நூரளை சண்முகநாதன், கேகாலை கைலைநாதன் முதலியோரும் தொழில் நிமித்தமாக மலையகத்தில் நீண்டகாலம் வாழ்ந்தவர்களும் வாழ்ந்து வருபவர்களுமான பெனடிக்ற்பாலன், நந்தி, டேவிட், ஞானசேகரன், சதாசிவம் முதலியோரும் குறிப்பிடத் தக்கவர்கள்.
“தமிழ் நாட்டு எழுத்தாளர்களைவிட இலங்கை எழுத்தாளர்களின் பொருளாதாரக் கண்ணோட்டத்தின் எதார்த்த நிலை மிக ஆழமானது, நுணுக்கமானது என்று சொல்லலாம், இலங்கை எழுத்தாளர்களின் தனித்தன்மையே சமுதாயப்பார்வை தான்’ எனத்தமிழ் நாட்டுத்
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 101

Page 63
திறனாய்வாளர் ஒருவர் ஈழத்துச் சிறுகதைகள் பற்றிக் கூறியுள்ளமை மனங்கொளத்தக்கது.
IX
தமிழ்த்தேசிய எழுச்சிக் காலம்: (1983 ஆம் ஆண்டிலிருந்து இற்றைவரை)
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே, இந்தநாட்டில் வாழும் தமிழர்களின் எதிர்காலம் பற்றிய கவலையும் பிரச்சினைகளும் ஆரம்பமாயிற்றெனலாம். இந்த நாட்டின் தேசியத்தலைவர்களுள் மிக முக்கியமானவர்கள் எனப் போற்றப்பட்ட சகோதரர்களான, சேர். பொன்னம்பலம் இராமநாதனும் சேர். பொன்னம்பலம் அருணாசலமும் நாடு போற்ற வாழ்ந்தாலும் பெரும் பான்மை அதிகாரவர்க்கத்தினர் தமிழர்களைப் புறக்கணிப்பதையும், சட்ட சபையில் தமிழருக்கு உரிய ஸ்தானத்தைக் கொடுக்கத் தயாரில்லை என்பதையும் கண்டு இருவரும் தம் வாழ்நாளின் பிற்பகுதியில் மனமுடைந்து போனார்கள். அவர்களைத் தொடர்ந்து, தமிழ்த்தலைவர்கள் பலர் பல தசாப்தங்களாகச் சாத்வீகப் போராட்டம் நடத்தினர். பலவழிகளிலும் பலதுறைகளிலும் அடக்கி ஒடுக்கப்பட்ட தமிழ்மக்கள் தமது உரிமைகளின் பொருட்டும் விடுதலைக்காகவும் பல தசாப்தங்களாக நடாத்திவந்த சாத்வீகப் போராட்டம் 1970 களின் நடுப் பகுதியிலிருந்து இளைஞர்களின் ஆயுதப் போராட்டமாகப் பரிணமிக் கலாயிற்று. 1980 களின் ஆரம்பத்திலிருந்து போராட்டம் மிக உக்கிரம் பெறத் தொடங்கியதுடன் அனைத்துலகின் கவனத்தையும் ஈர்க்கலாயிற்று.
போராட்டச் சூழ்நிலைகளினாலும் பொருளாதார நெருக்கடிகளினாலும் பிறகாரணங்களாலும் உயர் கல்வி அறிவைப் பெற்றவர்கள் மட்டுமன்றி ஆரம்பக் கல்வி பெற்றவர்களுமான இளந்தலை முறையினர் பல்லாயிரக் கணக்கில் அகதிகளாகவும், தொழில் தேடுவோராகவும் கடல் கடந்து மத்தியகிழக்கு நாடுகளுக்கும் மேற்கத்தைய நாடுகள் பலவற்றுக்கும் செல்லலாயினர். இவை காரணமாக நாட்டின் சகல சமூகங்களிலும் சமூக அமைப்புக்களிலும் சமுதாய மதிப்பீடுகள், நியதிகள், நம்பிக்கைகள், ஆசாரங்கள் முதலியவற்றிலும் மாற்றங்கள் பல வேகமாக ஏற்படலாயின.
ஏறத்தாழ இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து உலகின் பல பாகங்களிலும் குறிப்பாக 3ம் உலக நாடுகள் பலவற்றிலும் வேகமான மாற்றங்கள் பல ஏற்படத் தொடங்கின. அடக்கி ஒடுக்கப்பட்ட நாடுகளும்
102 நடராஜ தரிசனம்

இனங்களும் சமூகங்களும் பிரதேசங்களும் விழிப்புணர்ச்சி கொண்டு தமது விடுதலைக்காகவும், உரிமைகளின் பொருட்டும் அநீதிகளுக்கும் கொடுமைகளுக்கும் ஈவிரக்கமற்ற சுரண்டற் கொடூரங்களுக்கும் எதிராகத் கிளர்ந்தெழுந்து தமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்து போராடிச் சுதந்திரம் பெற்றுக் கொண்டிருக்கின்றன, சுதந்திரத்தின் பொருட்டுத் தொடர்ந்து போராடுகின்றன.
இத்தகைய போராட்டங்கள் பல சாத்வீக அடிப்படையில் ஆரம்பித்துக் காலகதியில் ஆயுதப் போராட்டங்களாகவும் பரிணமிப்பது இயல்பானதாகும். இந்நிலையில் மக்களது நிலைப்பாடுகளை மென்மேலும் முன்னெடுத்துச் செல்வது கலை இலக்கியங்களின் தவிர்க்கமுடியாத பணி ஆகின்றது. உலகம் முழுவதிலும், குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் (பாலஸ்தீனம், வியட்னாம், நிக்கரகுவா, எல்சல்வடோர், சிலி முதலிய நாடுகளின் அண்மைக்கால இலக்கியங்கள் இவ்வகையில் கூர்ந்து நோக்கத்தக்கவை) நாம் இன்று நிதர்சனமாகக் காணும் உண்மை இதுவாகும்.
கடந்த இருபதாண்டு காலப்பகுதியில் முன்னர் எப்போதையும் விட பெண் விடுதலை தொடர்பான சிந்தனைகளும் செயற்பாடுகளும் வேகமாக அதிகரித்து வருகின்றன. தமிழ் இலக்கிய உலகில், பெண்ணியம்' என்னும் சொல்லாட்சி இன்று பெருவழக்குப் பெற்ற ஒன்றாக விளங்குகின்றது. இன்று சகலதுறைகளிலும் பெண்கள் முன்னேறிவருகின்றனர். பெருவிடுதலைக்காகப் பெண்ணிய அமைப்புக்கள் பல தீவிரமாகச், செயற்பட்டு வருகின்றன. 'அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?’ என்ற நிலைமாறிக் கல்வித்துறையிற் பெண்கள் பெருஞ்சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றனர். உலகமே வியக்கும் வண்ணம், பூங்கொடிகளாக விளங்கிய பெண்கள் இன்று போர்க் கொடிகளாக மாறிப் போர்க்களம் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கின்றனர், போராடிக் கொண்டே இலக்கிய கர்த்தாக்களாகவும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அதிக அளவிலான பெண்கள் இன்று இலக்கியம் படைத்துக் கொண்டிருக்கின்றனர்.
கடந்த இருபதாண்டுகளுக்கு முன்னர் பெரும்பாலான இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் கேள்விப்பட்டிராத கணனி, இணையம், மின் அஞ்சல், தொலைமடல் முதலியன இன்று மக்கள் மத்தியிற் பெருஞ் செல்வாக்குப் பெற்றுள்ளன. இன்றையயுகம் கணனியுகம் எனப் போற்றப்படுகின்றது. கணனியின் செல்வாக்கும் ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியிற் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை அவதானிக்கலாம்.
கடந்த இருபதாண்டுகாலச் சிறுகதை வளர்ச்சியிற் காணத்தக்க சில அம்சங்களாவன: யுத்தச் சூழ்நிலை காரணமாக இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் பலர் நாட்டைவிட்டு புகலிட நாடுகளுக்குச் சென்று விட்ட
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் iO3

Page 64
போதும் பல நூற்றுக்கணக்கான இளம் எழுத்தாளர்கள் தோன்றிச் சிறுகதைகளைப் படைத்து வருகின்றனர். அதிக அளவிலான பெண்கள் எழுத்துத் துறையிற் காலடி எடுத்து வைத்துள்ளனர். ஈழத்துச் சிறுகதைகளுக்கான களங்கள் நாடு முழுவதும் வியாபித்துள்ளதுடன் கடல் கடந்த நாடுகளையும் களங்களாகக் கொண்டு அகில உலகச் சிறுகதைகளாகப் பரிணமித்துள்ளன.
பல்லவர்காலப் பக்தி இயக்கத்தின் போதும், இந்திய விடுதலைப் போராட்டத்தின் போதும், திராவிட இயக்க எழுச்சியின் போதும், பொதுவுடைமை இயக்கச் செயற்பாடுகளின் போதும், அவ்வவ் இயக்க கர்த்தாக்கள் பலர் இலக்கியகர்த்தாக்களாகவும் விளங்கியது போலவே கடந்த இருபதாண்டு காலப்பகுதியில் விடுதலைப் போராளிகள் பலர் இலக்கிய கர்த்தாக்களாகவும் விளங்கி வருதல் மனங்கொள்ளத்தக்கது. மேலும் யுத்த காலச் சூழ்நிலையிலேயே அதிக எண்ணிக்கையான சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்து கொண்டிருப்பதும் மனங்கொள்ளத்தக்கது.
இக்காலப் பகுதியில் பல நூற்றுக்கணக்கானோர் சிறுகதைகளைப் படைத்து வருகின்றனர். அவர்கள் எல்லோரையும் இச் சிறுகட்டுரையிற் சுடறமுடியாது.
பொதுவாக நோக்குகையில், 1980 களுக்கு முன்னரே எழுத்துத்துறையில் கால் பதித்திருந்த பலர், யுத்தகாலச் சூழ் நிலையிலும் தொடர்ந்து எழுதிவந்துள்ளதை அவதானிக்கலாம். 1980 களிலும் 1990 களிலும் எழுதத் தொடங்கிய இளந்தலைமுறையினர் பலருள் கணிசமானோர் இன்று நாடறிந்த சிறுகதையாசிரியர்களாக விளங்குவதையும் சிறுகதைத் தொகுதிகள் பலவற்றை வெளியிட்டுள்ளதையும் காணலாம்.
தெணியான், செங்கை ஆழியான், செம்பியன் செல்வன், செ. யோகநாதன், லெ. முருகபூபதி, பத்மா சோமகாந்தன், அ. முத்துலிங்கம், நந்தி, எஸ். அகஸ்தியர் (சில ஆண்டுகளுக்கு முன்னர் அமரத்துவம் அடைந்து விட்டார்) எஸ். பொன்னுத்துரை, மு. பொன்னம்பலம், புலோலியூர் சதாசிவம், தி. ஞானசேகரன், கோகிலா மகேந்திரன், சுதாராஜ், தாமரைச் செல்வி, மண்டூர் அசோகா, அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை, இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன், திக்குவல்லை கமால், க. தணிகாசலம், மு. பஷீர் முதலிய மூத்த எழுத்தாளர் பலரும் தொடர்ந்தும் எழுதி வருகின்றனர். இவர்களுள் அதிகமானோர் யுத்தகாலச் சூழ்நிலையையும் யுத்தம் ஏற்படுத்திய பாதிப்புக்களையும் மையமாகக் கொண்டு பல சிறுகதைகளைப் படைத்துள்ளனர். இவர்களுள்ளும், செங்கை ஆழியானும் செ. யோகநாதனும் யுத்தத்தின் பாதிப்புக்களை மையமாகக் கொண்டு அதிக எண்ணிக்கையான கதைகளைப் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
O4 நடராஜ தரிசனம்
 

மஹாகவியின் கிராமம்
பேராசிரியர் எம். ஏ. நுஃமான் தமிழ்த்துறை பேராதனைப்பல்கலைக்கழகம்
மஹாகவியின் பெரும்பாலான கவிதைகள் யாழ்ப்பாணக் கிராமிய வாழ்வைக் கருப்பொருளாகக் கொண்டவை. கிராமியத்தை மஹாகவிபோல் தமிழ்க் கவிதையில் கொண்டுவந்த பிறிதொரு கவிஞன் இல்லை எனலாம். இந்த வகையில் இவருக்கு அண்மையில் நிற்கக்கூடியவர் நீலாவணன் ஒருவர்தான். ஆனால், கிராமியத்தைப் பொறுத்தவரை அளவிலும் தன்மையிலும் மஹாகவி அவரை மிஞ்சி நிற்கிறார். மஹாகவியின் முக்கியமான பெரும்பாலான கவிதைகளில் யாழ்ப்பாணக் கிராமப்புற வாழ்க்கையே சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆயினும் மஹாகவியின் கிராமியச் சித்தரிப்பில் கால அடிப்படையில் இருவேறுபட்ட நிலைகளைக் காணமுடிகிறது. அவரது ஆரம்பகாலக் கவிதைகளில் கிராமம் ஓர் இலட்சிய பூமியாகச் சித்தரிக்கப் பட்டுள்ளதையும், அவரது பிற்காலப் படைப்புகளில் கிராமம் அதன் சகல முரண்பாடுகளுடனும் சித்தரிக்கப்பட்டுள்ளதையும் காண்கிறோம். ஆரம்பகாலத்தில் அவரிடம் காணப்பட்ட கற்பனாவாதமும் (ROman-ticism) பிற்காலத்தில் அவரிடம் வலுப்பெற்ற யதார்த்தவாதமும் (Realism) இந்த வேறுபாட்டுக்குக் காரணம் என்று கூறத் தோன்றுகின்றது.
மகாகவியின் ஆரம்பகாலக் கவிதைகளில் நகரமும் கிராமமும் எதிர்நிலைகளாகக் கட்டமைக்கப்பட்டுள்ளன. நகரம் மனித வாழ்வுக்கு உகந்ததன்று. பொய் நாகரிகம் மிகுந்தது. மனித மனத்தை மரத்துப்போகச் செய்வது. பதிலாக கிராமம் மனோரம்மியமானது. மனித மனத்துக்கு உயர்வைத் தருவது. அதுவே மனிதன் முட்டொழிந்து வாழத் தக்க இன்பபுரி. இந்தக் கண்ணோட்டம் 18,19ம் நூற்றாண்டு மேலைத்தேயக் கற்பனாவாதக் கவிதை மரபின் வழிவருவது எனலாம். கைத்தொழிற் புரட்சியின் விளைவாக நகர்ப்புற நாகரிக வளர்ச்சி கிராமத்தின் அமைதியிலும் இயற்கை எழிலிலும் மேலைக் கவிஞர்களுக்கு ஓர் ஈர்ப்பை ஏற்படுத்திய காலம் அது வில்லியம் பிளேக், வில்லியம் வேர்ட்ஸ்வேத், கோல்றிஜ் லோட் பைரன், ஷெல்லி, ஜோன் கீற்ஸ் போன்றவர்களை ஆங்கிலக் கவிதை மரபில் றொமன்ரிக் கவிஞர்கள் (Romantic Poets) என அழைப்பர். இவர்கள் இயற்கை எழிலுக்குத் தங்கள் கவிதைகளில் அதிக முக்கியத்துவம் கொடுத்தவர்கள். இயற்கை எழில், மாசுறாத கிராமத்துடன் இணைத்தே நோக்கப்பட்டது.
காலனித்துவ ஆதிக்கத்தின் கீழ் நகரமயமாக்கலுக்கு உட்பட்ட ஆசிய நாடுகள் பலவற்றிலும் கடந்த நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களில் நாம் இந்தக் குரலைக் கேட்கிறோம். இந்தியச் சூழலில் போலியான கைத்தொழில்
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் O5

Page 65
நாகரிகத்திலிருந்து விடுபட்டு இயற்கையோடியைந்த வாழ்வை நோக்கி கிராமத்துக்குத் திரும்புமாறு மகாத்மாகாந்தி அழைப்பு விடுத்தமையும் இது தொடர்பாக நாம் நினைவுகூரத்தக்கது. ஐரோப்பிய கற்பனாவாதக் கவிதையின் செல்வாக்கு கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதி வரை இந்திய கவிதையில் பெருமளவு காணப்பட்டது. குமாரன் ஆசான், உள்ளூர், வள்ளத்தோல் முதலிய கவிஞர்கள் மூலம் இது மலையாளக் கவிதையில் அதன் உச்சநிலை அடைந்தது என்பர். பாரதி மூலமே இது தமிழுக்கு அறிமுகமாயிற்று. ஆயினும் பாரதிதாசனும் அவரது வாரிசுகளுமே இதைத் தமிழில் பெருமளவு முன்னெடுத்துச் சென்றனர். எனினும், இவர்கள் ரொமன்டிஸத்தின் ஒர் அம்சமான இயற்கை அழகில் மனம் பறிகொடுத்தலுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தனர் எனலாம். பாரதிதாசனின் அழகின் சிரிப்பு இதற்கு உதாரணம். 1950, 60 கள் வரை தமிழ்நாட்டில் இருந்து வெளிவந்த பாரதிதாசன் பரம்பரையினரின் கவிதைத் தொகுதிகளில் இயற்கை என்ற தலைப்பில் ஒரு தனிப்பகுதி தப்பாமல் இடம்பெற்றிருக்கக் காணலாம். சங்க இலக்கிய மரபில் நாம் காண்பதுபோல் இயற்கை கவிப்பொருளின் பின்னணியாக இல்லாமல் இயற்கையே கவிப்பொருளாகிய தன்மையை இவர்களிடம் காணலாம்.
மஹாகவி தன் ஆரம்பகாலத்தில் இந்தக் கற்பனாவாதக் கவிதை மரபின் செல்வாக்குக்கு உட்பட்டிருந்தார். எனினும் பாரதிதாசன் மரபினர்போல் இயற்கையை இயற்கையாக அன்றி அதை கிராமியப் பண்பாட்டின் ஒர் பிரிக்கமுடியாத அம்சமாகவே நோக்கியுள்ளார். இயற்கையோடியைந்த வாழ்வு கிராமத்திலேயே, கிராமியப் பண்பாட்டிலேயே கிடைக்கும் என்ற உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதை அவரது ஆரம்பகாலக் கவிதைகள் சில காட்டுகின்றன. இந்த வகையில் கிராமம், யாழ்ப்பாணம் செல்வேன், செல்லாக்காசு ஆகிய அவரது மூன்று கவிதைகள் முக்கியமானவை.
கிராமம் 1950களின் ஆரம்பத்தில் அவர் எழுதிய கவிதை, கிராம மக்களின் உயர்ந்த பண்பாடு பற்றிய பின்வரும் படிமத்துடன் அது தொடங்குகின்றது.
நாள்முழுதும் பாடுபடுவார்கள்- ஒயார் நன்று புரிவார் இரங்குவார்கள்
ஆள் புதியன் ஆனாலும் ஆதரிப்பர் போய் உதவுவார்கள் - ஊரார்கள்.
iOS நடராஜ தரிசனம்

பின்னர் கவிதை கிராமத்தின் இயற்கை வனப்பை நோக்கிச் செல்கிறது. அதன் நெல் வயல், மாந்தோப்பு, ஆட்டிடையனின் இசை, வேப்பமர நிழல், பூமலியும் பொய்கை, குயில்பாட்டு இவற்றையெல்லாம் அனுபவிக்கும் போது “நீ மடிந்ததென்றிருந்த நின் கவிதை உணர்வுதலைதூக்கும் பா ஆக்கும்” என்று பாடுகின்றார் கவிஞர். கடைசியாகக் கவிதை இவ்வாறு முடிகிறது.
நல்லவர்களுக் கிதுதான் நாடு - பொய் நாகரிகத்துக் கப்பால் ஒடு! முல்லை நாடு பக்கத்தில் மூன்றறைகளோடு சிறு வீடு போதும் எடு ஏடு!
இங்கு நகரம் பொய் நாகரிகம் என்றும், கிராமம் நல்லவர்களுக்குரிய நாடு என்றும் கட்டமைக்கப்படுவதைக் காணலாம். இந்த கிராம-நகர முரண் யாழ்ப்பாணம் செல்வேன் கவிதையில் இன்னும் கூர்மையாக வெளிப்படுகிறது. இதுவும் 50களின் ஆரம்பத்தில் அவர் எழுதிய கவிதை. இது பத்திரிகையில் பிரசுரமானபோது, ஒரு ஆங்கிலக் கவிதையின் கருத்தைத் தழுவியது என்ற குறிப்பையும் மஹாகவி கொடுத்திருக்கிறார். வள்ளி தொகுப்பில் இது இடம்பெற்றபோது அந்தக் குறிப்பு காணப்படவில்லை. கவிதையைப் படிப்போருக்கு இது எந்த வகையில் ஆங்கிலக் கவிதையின் தழுவல் என்ற வியப்பு ஏற்படும். அவ்வளவு தற்புதுமையானதாக உள்ளது மஹாகவியின் கவிதை. பரபரப்பான கொழும்பில் வேலை செய்யும் ஒரு நடுத்தர வர்க்கத்தவன் சித்திரை விடுமுறையில் யாழ்ப்பாணம் செல்ல ஆயத்தமாகும் உணர்வு நிலையைக் கவிதை வெளிப்படுத்துகின்றது. நகர நாகரிகத்தின் முட்டில் இருந்து விட்டு விடுதலையாகும் உணர்வு நிலையே கவிதையின் மையம். இது கவிஞரின் உணர்வு நிலையாகவும் இருக்கலாம். கவிதை தற்கூற்றாகவே அமைகின்றது.
யாழ்ப்பாணக் கிராமத்தில் தன் வீட்டுச் சுற்றாடலின் இயற்கை வனப்புடன் ஆரம்பமாகிறது கவிதை.
இந்நாள் எல்லாம் எங்கள் வீட்டுப் பொன்னொச்சிச் செடி பூத்துச் சொரியும்! முல்லையும் அருகே மல்லிகைக் கொடியும்! கொல் லெனச் சிரித்துக் கொண்டிருக்குங்கள் அல்லவோ? வயல்கள் எல்லாம் பச்சை நெல் நிறைந்திருக்கும் என்நாட்டில் பாட்டுப்
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 107

Page 66
பாடாத உழவன் பாடுவான் துலாக்கள் ஆடாது நிற்கும் அன்றோ இன்றே!
கிராமத்தின் இயற்கை வனப்பில் இருந்து அதன் உணவுப் பண்பாட்டுக்கு நகர்கிறது மனம். கொழும்பின் ஹோட்டல் தரும் முட்டை ரொட்டிக்குச் சலித்து போன மனம் கிராமத்தில் தாய் அன்புடன் ஊட்டிய கூழையும், பழஞ்சோற்றையும் எண்ணி வாயூறுகின்றது.
கூழ்ப்பானையின் முன் கூடிக் குந்தி இருந்து இலைகோலி இடுப்பில் இட்டு ஊட்டிய கரம் தெரிந்து ஊற்றும் அவ்விருந்து அருந்திலனேல் பட்டினி போக்கா பழம், பால், இவ்வூர் ஒட்டலின் முட்டை ரொட்டிகள்! அன்னை பழஞ்சோற்றுண்டி கிழங்கொடு பிசைந்து வழங்கலை நினைத்தால் வாயூறாதோ? இந்த வாயூறலே பயணத்தைத் துரிதப்படுத்துகின்றது.
"கடவுளே உடனே உடுத்துக் கொண்டு அடுத்த ரயிலைப் பிடித்துக்கொள்கிறேன்” என்கிறார் கவிஞர்.
அந்தப் பெற்ற பொன்னாட்டைப் பிரிந்து இனிமேலே சற்றும் இக்கொழும்பில் தங்கேன்! இங்கே
என்று தனக்குத் தானே உறுதி கூறிக்கொள்கிறார். அடுத்த வரிகளில் மன, உடல் ரீதியில் முட்டையில் ஏற்படுத்தும் செயற்கையான நகர நாகரிகம் படிமமாக்கப்படுகின்றது.
முலை இளம் முளைகள் முனைந்தெழுவதனை கலை குறைத்து அணியும் கன்னியர் காட்டவும் தலை இழந்தே நாம் தடந்தோள் ஒளிக்கும் சட்டைகள் கைகள் முட்ட இட்டும் பட்டிகள் கழுத்தை வெட்ட விட்டும் கொட்டிடும் வியர்வையில் குமைவதா? என்ற கேள்வி இந்தப் படிமத்தின் ஊடாக மனத்தின் மேல் எழுகின்றது. அதற்குரிய பதிலோடு கவிதை இவ்வாறு முடிகிறது. "இவற்றை விட்டெறிந்து எண்சான் வேட்டி கட்டி முட்டொழியலாம் அம் மூதூர் செல்வேன். '
108 நடராஜ தரிசனம்

நகரத்துக்கும் கிராமத்துக்கும் இடையே உள்ள உணவு,உடைப்பண்பாட்டு வேறுபாட்டைக் குவிமையப்படுத்தி எளிமையான கிராமப் பண்பாடே உள, உடல்
இறுக்கத்தைத் தளர்த்தி ஒரு விடுதலை உணர்வைத் தருகிறது என்ற ஒரு
படிமத்தை இக்கவிதை நமக்குத் தருகின்றது. வாலிப வயதில் கிராமத்தைவிட்டு கொழும்புக்குத் தொழில் நிமித்தம் சென்ற இளம் மஹாகவியின் உண்மையான மன உணர்வையும் இக்கவிதை வெளிப்படுத்துகின்றது எனலாம்.
மூன்றாவது கவிதை "செல்லாக் காசு சற்றுப் பிந்தி 1960களின் ஆரம்பத்தில் எழுதப்பட்டது என்று நினைக்கின்றேன். இதுவும் நகரம், கிராமம் என்ற எதிர்முரண்பற்றிய கவிதைதான். இக்கவிதையும் தன்கூற்றாகவே அமைகின்றது. பணத்தை மையமாகக்கொண்ட ஒரே வட்டத்தில் சுற்றிச் சுழல்கிற, சாரமற்ற நகர வாழ்க்கைக்கு நீண்டகாலமாகப் பழக்கப்பட்ட ஒருவன், பிரதிபலன் எதிர்பாராத கிராம மக்களின் பரிவுக்கு ஆளாகி உயிர்தளிர்ப்புற்ற நிலையை கவிதை சித்தரிக்கின்றது.
பஸ் பயணத்துடன் கவிதை தொடங்குகின்றது. கவிசொல்லியான நகரத்தவன் பஸ்ஸில் பயணம் செய்கிறான். திட்டமான குறியிடம் நோக்கியதன்று அவன் பயணம். சாரமற்ற நகரவாழ்வில் இருந்து தற்காலிகமாகவேனும் விடுபடுவதே அவன் நோக்கமாகத் தெரிகிறது.
வண்டி செல்கிறது எந்த வழியிலோ! பல வாரமாய்ச் குட்டினில் மாடுபோல் செயல் மண்டிய நகரிலே வளைய வந்ததால் மானிட மனமுமோ மரத்துப் போனது! நொண்டிய அதனை அந் நோயின் நீக்கிடும் நோக்கமொன்றால் சில தூரம் தாண்டினேன்"
என்று தொடங்குகின்றது கவிதை, சூட்டினில் மாடு, மரத்துப்போய் நொண்டும் மனம் என்பன நகரத்தின் வரட்சியைக் காட்டும் சொற் குறியீடுகளாக உள்ளன. அவனுடைய பயணம் ஒரு ஆறுதல் தேடும் பயணம்தான் என்பது தொடக்கத்திலேயே தெரிவிக்கப்படுகின்றது.
கண்டது வழியிலே எழில் இறங்கினேன்; காலடிப் பாதையில் கால் நடந்தன.
எனத் தொடரும் அடுத்தவரிகளில் அவன் எதிர் பாராமலே அவனது நோய்க்கு மருந்து கிடைத்து விட்டது தெரிகிறது. அடுத்துவரும் வரிகளில் அவன் எதிர்கொள்ள நேர்ந்த அனுபவங்கள் விரித்துரைக்கப்படுகின்றன.
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 109

Page 67
"புல்லில் என் பாதங்கள் பட உண்டாகிய
போதையை சொல்லினில் போட்டுக் காட்டுதல் அல்ல என நினைவு’
என்று தொடர்கின்றான். சிலவேளை அது அவன் சொல்லுக்கு
அடங்காததாக இருக்கக் கூடும். வெம்பகல் எரித்த வேளையில் அவன் அங்கு
போய்ச் சேர்கிறான். அது தொலைவில் உள்ள பின்தங்கிய கிராமம்.
மாலையானதும் ஒரு கல்லில் அமர்கிறான். "காற்று எனை அனைத்து இன்பக் களைப்புண்டாக்கிற்று” என்கிறான். அந்தக் களைப்பில்
அவனுக்கு பொழுது போனதே தெரியவில்லை. இனிப் போகலாம் என்று
எழுப்பியபோது “அதோ செல்கிறதாம் இவ்வூர் கடைசி வண்டியும் ” எனத் தெரியவருகிறது. அடுத்து வரும் இரண்டு செய்யுள்கள் முன்பின்
அறிமுகமில்லாத அவனைக் கிராமத்துக் குடிசைவாசிகள் எவ்வாறு
உபசரித்தார்கள் என்பதைப் படம் பிடிக்கின்றன.
போய் ஒரு படலையில் தட்டினேன். அது பொக்கெனத் திறந்தது. பொழுதைத் தூங்க ஒர் பாய் கிடைத்து கிள்ளும் பசிக்கு விட்டவர் பச்சை அன்பொடு காய்ந்தபாண் கிடைத்தது.
என்ற வரிகள் தரும் கருத்தா இல்லாமலே காரியம் நடப்பதான இந்தச் சித்திரம், கிராமத்துப் பண்பாட்டில் இந்த உபசரணை சுயேச்சையான, இயல்பான நிகழ்வு என்ற உணர்வைத் தருகிறது. அன்றுதான் அவன் நிம்மதியான ஆழ்ந்த துயில் கொண்டான் போலும்.
வாய் இருந்தது அங்கே நுளம்புக்கு/ஆயினும் வந்தது மரணத்தின் துளியைப்போல் துயில் என்று கூறுகின்றான்"காய்கிற கதிர்களின் சவுக்குப் படும் வரை தூங்குகிறான். விடிந்ததும்தான் வீட்டவர் அவனை அன்புடன் விசாரிக்கின்றனர். "ஏங்கிடுவார் அன்றோ தேடி நும்மவர்?’ என ஆதங்கப்படுகின்றனர். இப்பொழுதுண்டு ஒரு வண்டி பட்டணம்’ என வழிப்படுத்துகின்றனர். அந்த வீட்டவரின் அன்பு அதே கணம் மறக்கற்பாலதன்று என்று அவன் நினைக்கின்றான். எல்லாவற்றையும் பணத்தினாலேயே அளவிடும் அவனது பட்டணத்து மனம் அவர்களது பயன்கருதா அன்பையும் அவ்வாறே அளவிட முயல்கின்றது. 'பலர்க்கும் நாம் நீட்டும் தாள் ஒன்றை அவன் அவர்களுக்கும் நீட்டுகிறான். அதற்கு, அவர்களுடைய எதிர்வினை அவனுக்கு
110 நடராஜ தரிசனம்

வாழ்வின் மறுபக்கத்தை, நகர்த்தவன் காணாத பிறிதொருபக்கத்தை உணர்த்துகின்றது. கவிதை பின்வருமாறு முடிக்கின்றது.
அப்பொழுதலாந்த இன்முகத்தின் மென்மலர் அப்படிக் குவிந்திருள் அடைந்ததேன்! துயர் கப்பியதேன் ஒளி விழிகள் மீதிலே! காசையோ அவற்றின் சந்நிதிமுன் வீசினேன்! குப்புற வீழ்ந்தன நிலத்தில் என்விழி கூறுதற் கின்றி என் உதடு மூடின. எப்படியோ பின்னர் நகர் திரும்பினேன். எனினும் என் உளத்திலே உயிர் தளிர்த்தது.
இந்த மூன்று கவிதைகளும் கிராமம் பற்றிய மஹாகவியின் ஆரம்பகாலக் கண்ணோட்டத்தைத் தெளிவுபடுத்துகின்றன. இங்கு கிராமம் முரண்பாடுகளும் மோதல்களும் அற்ற மனிதனின் உயிர் தளிர்க்கச் செய்யும் இலட்சிய பூமியாகவே படிமம் கொள்கிறது. கிராமம் பற்றிய மஹாகவியின் இந்த இலட்சியப் படிமம் 1960களில் அவர் எழுதிய தேரும் திங்களும் போன்ற சிறு கவிதைகளிலும் சடங்கு, கண்மணியாள் காதை, சாதாரண மனிதனது சரித்திரம், கோடை, புதிய தொரு வீடு போன்ற பெரிய படைப்புகளிலும் காணப்படவில்லை. இவையெல்லாம் கிராம வாழ்வையே மையமாகக்கொண்ட படைப்புகள். இவற்றில் சித்தரிக்கப்படும் கிராமம் இலட்சிய பூமியல்ல. இங்கும் முரண்பாடுகளும் மோதல்களும் உண்டு. பொய்மைகளும் போலித்தனங்களும் உண்டு. இங்கு அன்பும் அரவணைப்பும் மட்டுமன்றி வன்முறையும், ஒடுக்குமுறையும் படுகொலைகளும் உண்டு. நீதியை மறுதலிக்கும் கூறுகளும் நீதிக்கான போராட்டங்களும் உண்டு இந்தக் கிராமம் யதார்த்தமானது. மஹாகவி காட்டும் இந்த யதார்த்தமான கிராமத்தின் இயல்புகள் விரிவான ஆய்வுக்குரியன.
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 111

Page 68
@ @ அதவைதம்
鬱 @ O O () என்பதன் பொருள் விளக்கம் பேராசிரியர் இரா. வை. கனகரத்தினம் தமிழ்த்துறை,இந்துப்பண்பாடு பேராதனைப் பல்கலைக்கழகம்
அறிமுகம்
ஏகமேவா த்வீயம்
அத்விதியம் பிரமம் (சாந்தோக்கிய உபநிடதம்)
மேற்காட்டிய உபநிடத மகாவாக்கியங்களில் இடம்பெற்றுள்ள அத்விதியம், அத்வீயம் என்னும் சொற்கள் உணர்த்தும் அத்வைதிகம் சொல்லே இந்திய தத்துவ சிந்தனையில் நேரடியாய் விளங்குகின்றது. இறைவனுக்கும் ஆன்மாவுக்கும் முத்திநிலையுள்ள தொடர்பை விளக்க முயன்ற தத்துவ சிந்தனையாளர் 'அத்வைதம்’ என்னும் சொல் எத்தகைய பொருள் மரபினை உணர்த்தி நிற்கின்றதோ அதனைத் தனது கருத்து நிலைக்கு இயைபாகப் பொருள் கொள்ள முயன்றனர். இதனால் இந்திய இந்துத் தத்துவம் பல்வேறு தத்துவ சிந்தனைப்பிரிவுகளைக் கொண்டதாய் அமைவதாயிற்று.
கி.பி 7ஆம், 8ஆம் நூற்றாண்டு 'அத்வைதம்’ என்னும் சொல் முக்கியத்துவம் பெற்ற சொல்லாக விளங்கியது, விளங்குகின்றது. கேவலாத்துவிதம், விசிட்டாத்துவிதம், துவைதம், சுத்தாத்துவிதம் முதலான தத்துவங்கள் அத்வைதம் என்னும் சொல்லின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் தோன்றியனவே யாகும். மேற்கூறிய தத்துவங்கள் யாவும் அத்வைத தத்துவங்களே யாகும்.
அத்வைதம் என்பதன் இலக்கண விளக்கம்
அத்வைதம் என்னும் சொல்லுக்கு இலக்கண விளக்கம் சொல்ல வந்த
பேராசிரியர் கா. சுப்பிரமணியபிள்ளை பின்வருமாறு விளக்குவார்.
"அத்துவித” என்ற சொற்றொடர் 'அத்வைத மென்ற வடமொழித் தொடரின் திரிபு நஞ்+த்வைதம் என்பது 'அத்வைத மென்றாயிற்று (பாணிணிய இலக்கணத்துள் இரண்டாமத்தியாயத்துள் “நஞ்” என்று தொடங்குந்தந்திரத்தைப் பார்க்க) நஞ்+த்வைத மென்பது சந்திவிதிப்படி ஞகரம் கெட்டு நத்வைத மென்றாகிப்பின்னர், நகரமெய் கெட்டு அத்வைத மென்றாயிற்று.
வீரசோழியத்தில் “சொன்ன மொழிப்பொருள் நீக்கு நகாரம் அச்சொல்
முன் மெய்யேல், அந்நிலையாக உடல் கெடும், ஆவி முன்னாகில் அது - தன்னிலை மாற்றிடும்” என்னும் விதிப்படி, நகர உயிர்மெய்க்குப் பின் மெய்யெழுத்து வந்தால் நகரமெய் கெடும்
112 நடராஜ தரிசனம்

ந+ த்வைதம் = அத்வைதம், அதற்குப்பின் உயிர் எழுத்து வந்தால் நகர உயிர் மெய்யிலுள்ள உயிர், நகர மெய்க்கு முன் நிற்கும். உ-ம். ந+அர்த்தம் -ந்+அ+ அர்த்தம் = அந்+அர்த்தம் = அநர்தம் 'த்வைத மென்ற சொல் துவித மென்றே தமிழில் வழங்கும். அதற்கு இருதிறன் என்று பொருள்.
அத்வைதம் என்பதன் பொருள் விளக்கம்
நகரத்துக்குப் பதஞ்சலிமுனிவர் ஆறுவிதமான பொருள் கொள்வார். ஆதலால், அத்துவிதம் என்ற சொல்லின் அகரத்துக்கும் அவ்வகையான ஆறுவகைப் பொருள் கொள்ளப்படும். அவையாவன, அன்மை (சாதிருசியம்) இன்மை (சுபாவம்) மறுதலை (விரோதம்) வேற்றுமை (பேதம்) சிறுமை (அற்பதையம்) பொறயின்மை (அப்பிராசங்தியம்) என்பனவாம். இவை உணர்த்தும் பொருள் மரபினை உதாரணத்தின் மூலம் நோக்கலாம். (1) அன்மைப் பொருள் (உ-ம்)
அப்பிராமணன் (அ+பிராமணன்) என்னும் சொல்லின் அகரம் இருவேறு பொருளில் பொருள் கொள்ளப்படுகின்றது. (1) அல்ல வென்ற பொருளிலும் (2) ஒப்புப் பொருளிலும் கொள்ளப்படுகின்றது. மேற் கூறப்பட்ட அப்பிரமாணன் என்ற சொல் பிராமணன் அல்லாத பிறிதொருவகைச் சுட்டும் பிறப்பால் அப்பிராமணன் என்ற விடத்துச் செயலால் பிராமணனுக்குப் ஒப்பானவனென்ற பொருள் தொனிப்பதால் அச்சொல்லில் வரும் அகரம் ஒப்புப் பொருள் கொள்ளும் என்பர். இதனை வடமொழிநூலார் தாமியமென்பர்.
முத்தன் சிவசாமியமடைகின்றான்' என்றால் ஒருவாறு சிவத்துக்கும் சமமான நிலையை முத்தன் அடைகின்றான் என்பதே பொருள்.
(2) இன்மைப் பொருள் (உ-ம்)
அப்பிரகாசம் என்னும் சொல்லில் வரும் அகரம் எதிர் மறை உணர்த்தும் இன்மைப் பொருளில் வந்துள்ளது. இச் சொல் பிரகாசமின்மையைக் (ஒளியின்மையை) குறித்து நிற்கின்றது. அது அப்பிரமாணன் போல் பிரகாசமல்லாத என்ற பொருளை வழங்கமாட்டாது. இன்மையை வடநூலார் அபாவம் என்பர்.
(3) மறுதலைப்பொருள் (உ-ம்)
மறுதலை என்பது நேர் எதிர்மறைப் பொருளைத் தருவதாக அமைந்துள்ளது. குறிப்பாக அதர்மம், அசுரர் போன்ற சொற்கள் தர்மம், சுரர் முதலான சொற்களின் விரோதமாக - நேர் எதிர்மறையான பொருளை உணர்த்தி நிற்பதை அவதானிக்கலாம் மறுதலையை விரோதம் என்பார் வடநூலார்.
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 113

Page 69
(4) வேற்றுமைப் பொருள் (உ-ம்)
அநாகாச பூமி என்ற விடத்துப் பூமி ஆகாசத்தின் வேறு என்பது பொருளாகும். அன்மைப் பொருள் ஒப்பினைக் காட்டும் பேதப் பொருள் வேற்றுமையைக் காட்டும்.
(5) சிறுமை (உ-ம்)
அநுதரா கன்யா = அந்+உதரா+ கன்யா சிறுத்த வயிறுடைய கன்னி. இங்கே அந் என்பது சிறுமையைக் காட்டிற்று இன்மையைக் காட்டவில்லை. சிறுமையை வட நூலார் அல்பம் என்பர்.
(6) பொறையின்மை (உ-ம்)
அமரகா தேவா = தேவர்கள் மரணத்தைத் தாங்காதவர்கள் அபார என்ற சொல் தாங்கமுடியாத பாரத்தைக் குறிக்குமிடத்து அகரம் பொறையின்மைப் பொருளில் வந்தது. பொறையின்மையை வடநூலார் அப்ராசஸ்த்ய என்பர்.
இந்து தத்துவ மரபில் அத்வைதத்துக்கு இன்மைப் பொருள் கொண்டு பிரமம் ஒன்றே உண்மைப் பொருளென நிறுவுவோக கேவலாத்துவிதவாதிகள். கேவலம் - தனிமை. இக்கொள்கையை முன்னெடுத்தவர் சங்கராச்சாரியார். இவர் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இராமாநுஜரும் அத்துவித மென்பதற்கு இன்மைப் பொருள் கொண்டார் என்பார் சிவஞான முனிவர். சிவாத்து வித சைவர்களும் இன்மைப் பொருளையே கொள்கின்றனர் என்பர்.
மேலும் மருத்துவர் முதலான அத்துவித வாதிகளும் அத்துவிதம் என்பதற்கு இரண்டின் மறுதலையாகிய ஒன்று எனப் பொருள் கொண்டு பிரமம் ஒன்றே என்பார் என்னும் பெயருக்கு முன்வரும் அகரம் அன்மைப் பொருளைக் குறிக்குமேயொழிய, இன்மைப் பொருளைக் குறிக்காது. அப்போது அ+துவிதம் என்னும் சொல் இரண்டல்ல, (இரண்டற்ற) என்ற பொருளை உணர்த்தி ஒன்றுக்கு மேற்பட்ட எண்களை உணர்த்தி நிற்கும். சைவ சுத்தாத்வைத வாதிகள் உண்மைகள் பொருட்கள் இரண்டற்ற தன்மையில் கலப்பதன் மூலம் பெறட்டும் முத்தியே (உறவே) அத்துவிதம்
என்பர்.
114 நடராஜ தரிசனம்
 

கூத்தரங்கின் புத்தாக்கம் : பேராசிரியர் சு.வித்தியானந்தனின் பங்கு
பேராசிரியர் சி. மெளனகுரு
கிழக்குப்பல்கலைக்கழகம்
ஒரு சாராரின் கண்டனத்திற்கும், இன்னொரு சாராரின் வரவேற்புக்குமிடையில் அவர் செய்த இந்த மகத்தான பணி இன்றைய இளம் தலைமுறையினரும், கலைஞர்களும் அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று.
FFழத்துத் தமிழரின் பாரம்பரியத்தை மீள் கண்டுபிடிப்புச் செய்தவராக பேராசிரியர் சு. வித்தியானந்தன் கருதப்படுகிறார். ஈழத்துத் தமிழருக்குரிய தனித்துவ நாடக மரபு கூத்து மரபேயாகும். இக்கூத்துக் கலையை வளர்க்க அவர் ஆற்றிய பணிகளை மூன்று வகைக்குள் அடக்கலாம். ஒன்று, கூத்து நூல்களைப் பதிப்பித்ததும் அது சம்பந்தமாக ஆய்வுக் கட்டுரைகளை எழுதியதுமான புலமைசார் பணிகள், இன்னொன்று, கலைக்கழகத் தலைவராயிருந்து அண்ணாவிமார் மாநாடுகளையும் கூத்துப் போட்டிகளையும் மட்டக்களப்பு, மன்னார், வவுனியா ஆகிய பகுதிகளில் நடத்தி, பிரதேசக் கூத்துக்கள் வளர ஊக்கிய உற்சாகமூட்டும் பணிகள். மற்றது பல்கலைக்கழக மாணாக்கரைக் கொண்டு தானே கூத்துக்களைத் தயாரித்து அவற்றை இலங்கையின் பல பாகங்களுக்கும் அறிமுகம் செய்த கலைப் பணிகள்.
கூத்து என்பது கதை தழுவிவரும் ஆட்டமாகும். கூத்தின் அடிநாதம் ஆட்டமே. ஈழம் வாழ் தமிழ் மக்களிடையே உள்ள பல கூத்துக்கள் ஆட்ட மரபுகள், பலவற்றை இழந்தபோதும் அவை ஓரளவு பேணப்படுவது ஈழத்தின் கிழக்குப் பிரதேசத் தமிழ் மக்களிடையேதான். ஈழத்துத் தமிழருக்குரிய நாடக மரபு ஒன்றினைத் தோற்றுவிக்க வேண்டுமானால் இம்மரபினின்றே அதைக்கட்டி எழுப்ப வேண்டுமென்று நினைத்த பேராசிரியர் இந்த ஆட்ட மரபு நிறைந்த வடமோடி, தென்மோடிக் கூத்து மரபினடியாகவே தானும் கூத்துக்களைத் தயாரிக்கும் பணியிலீடுபட்டார். 1960 களில் இம் முயற்சி அவரால் மேற்கொள்ளப்பட்டது. ஒரு சாராரின் கண்டனத்திற்கும், இன்னொரு சாராரின் வரவேற்புக்குமிடையில் அவர் செய்த இந்த மகத்தான பணி இன்றைய இளம் தலைமுறையினரும் கலைஞர்களும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று. பேராசிரியர் சு. வித்தியானந்தனின் பெயரைக் குறிப்பாக ஈழத்துத் தமிழ்க்கலையுலகிலும், சிறப்பாக தமிழ் நாடகத் துறையிலும்
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 115

Page 70
வன்மையாகப் பொறித்துவிட்ட பணி அது. தமிழகத்தில் இன்றுதான் படித்தவர்களினதும், பல்கலைக்கழகங்களினதும் கண்பார்வை தெருக்கூத்தின் மீது திரும்பியுள்ளது. இன்றைய நவீன நாடக ஆர்வலர்கள் கூத்தின் சாரத்தை தம் நாடக நெறியுடன் இணைக்கின்றனர். இவற்றிற் கெல்லாம் முன்னோடி பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்களே. பல்கலைக்கழக மாணாக்கரைக் கொண்டு அவர் தயாரித்த கூத்துக்கள் பற்றிய தயாரிப்பு நெறிகளே இக்கட்டுரையில் எடுத்து விளக்கப்படுகின்றன.
கிழக்குப் பிரதேசத்தில் இக்கூத்துக்கள் ஆடப்படும் முறைமையைச் சுருக்கமாகவேனும் அறிந்துகொள்ளுதல் பேராசிரியரின் தயாரிப்புக்களை நன்கு புரிந்துகொள்வதற்குப் பேருதவி புரியும். கிழக்கு பிரதேசத்தில் கூத்துக்கள் விடியவிடிய ஆடப்படுகின்றன. பெரும்பாலும் கிராமப்புறங்களில் நடைபெறும் இக்கூத்துக்கள், ஒரு சமூக விழாவாகவே நடத்தப்படுகின்றன. வட்டமாக உயர்த்தப்பட்டதும், குருத்தோலை, சேலை, வண்ணக் கடதாசிகளால் அலங்கரிக்கப்பட்டதுமான மேடையில் பார்வையாளர் சூழ்ந்திருக்க, கூத்தைப் பழக்கிய அண்ணாவியார் (இவர் பெரும்பாலும் மத்தளத்தை இடுப்பிலே கட்டியபடி நின்றுகொண்டு வாசிப்பார்) பக்கப்பாட்டுக்காரர், தாளக்காரர், ஏடு பார்ப்போர் என்பவர்கள் மேடைமீது நடுவே நிற்க, கூத்தர் அவர்களைச் சுற்றிச்சுற்றி சூழ்ந்துள்ள மக்களைப் பார்த்தப்படி ஆடிப்பாடிக் கூத்தினை நடத்துவர். கூத்தில் பின்னணி வாத்தியங்களாகப் பாவிக்கப்படுபவை சுத்த மத்தளமும், சிறிய கைத்தாளமுமேயாம். கூத்தர் தமது பாத்திரத்தை ஆடிமுடித்ததும் பக்கப்பாட்டுக்காரராக அதே உடையுடன் அல்லது உடையைக் கலைத்த பின்னர் மாறிப் பணிபுரிவர். கூத்தில் பெண் பாத்திரங்களுக்கும் ஆண்களே ஆடுவர்.
கூத்தின் பார்வையாளர்கள் கிராமிய மக்களே. பாய், தலையணை சகிதம் வந்து மிகவும் செளகரியமாக அமர்ந்திருந்தும் படுத்திருந்தும் கூத்தைப் பார்த்து மகிழ்வர் இவை புராண இதிகாசக் கதைகளை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளன. கூத்திற்கென உடை ஒப்பனை, ஆபரணம், முடி, ஆயுதங்கள் என்பன தனித்துவமாயுள்ளன. ஒவ்வொரு பாத்திரமும் தன்னைப் பற்றிய அறிமுக விருத்தத்தைப் பாடியதும் ஒரு நீண்ட தாளக்கட்டுக்கு ஆடிய பின்னரேயே தருப் பாடலைப் பாட ஆரம்பிக்கும். மேடை மீது நடுவில் நிற்கும் சபையோரினால் இத்தாளக்கட்டுக்கள் கூறப்படும். இது ஒரு வகையில் நட்டுவாங்கத்தை ஒத்தது. பாடல்களை அனைவரும் உச்சத்தொனியிற் பாடுவர். சுருதி அவ்வளவாகக் கவனிக்கப்படுவதில்லை.
116 நடராஜ தரிசனம்

இத்தகைய முறையில் கிராமத்தில் நடைபெற்ற கூத்துக்களின் பாணியிலேயே பேராசிரியர் கூத்துக்களைத் தயாரித்தார். ஆனால் அவர் தன்
தயாரிப்பில் பல மாற்றங்களைச் செய்தார். அவையே நாம் இங்கு கவனிக்க
வேண்டியனவாம். பாமர மக்கள் ஆடிய கூத்தை, படித்துக்கொண்டிருக்கிற மாணாக்கரைக் கொண்டு தயாரித்தமை அவரது மிக முக்கிய பணிகளுள் ஒன்று. இதனால் கூத்துக்கலைக்குக் கற்றோர் மத்தியில் ஒர் அங்கீகாரம் ஏற்பட்டதுடன், அது கணிப்பிற்குரிய ஒரு கலையாயும் மாறியது. முதன்முதலிற் கூத்தில் பெண் பாத்திரத்திற்குப் பெண்களையே நடிக்க வைத்த பெருமையும் இவருக்குண்டு. இது ஒரு பெரிய மரபு மாற்றத்தின் குறியீடு.
பேராசிரியர் பல்கலைக்கழக மாணாக்கரைக் கொண்டு நான்கு கூத்துக்களைத் தயாரித்தார். அவையாவன கர்ணன் போர் (1962), நொண்டி நாடகம் (1963), இராவணேசன் (1964), வாலிவதை (1985) இவற்றுள் நொண்டி நாடகம் தென்மோடிக் கூத்து வகை சார்ந்தது. ஏனையவை வடமோடிக் கூத்துவகை சார்ந்தன. விடிய விடிய ஆடப்பட்ட கூத்துக்களை ஒன்றரை மணி நேரமாகச் சுருக்கியதும், வட்டமேடையில் ஆடப்பட்ட கூத்துக்களை அனைவருக்கும் இன்று பழகிப்போன படச்சட்ட மேடைக்குள் கொண்டு வந்ததும், கிராமியப் பார்வையாளருக்கு அல்லாமல் படித்த மத்தியதர வர்க்கப் பார்வையாளரை மனதிற்கொண்டு இந்நாடகங்களைத் தயாரித்ததும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய அம்சங்களாகும். ஏனெனில் இவை அவரின் கூத்துத் தயாரிப்பினை நிர்ணயித்த முக்கியமான மூன்று காரணங்களாகும். கிராமியக் கூத்தினின்றும் இவரது கூத்துக்கள் வேறுபட்டு நிற்பதற்கான அடிப்படைகளும் இவைகள்தான்.
இவர் கூத்தின் தயாரிப்பில் செய்த மாற்றங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று நாடகப் பிரதியிற் செய்த மாற்றங்கள். இன்னொன்று கூத்தை அவைக்காற்றும் முறையிற் செய்த மாற்றங்கள்.
இக்கூத்துக்களைத் தயாரிக்க இவருக்கு மிக உதவியாக இருந்த மூவர் குறிப்பிடத்தக்கவர்கள். ஒருவர் கூத்துக்களை மாணாக்கர் வரன்முறையாகப் பழக உதவிய பாரம்பரியக் கூத்துக் கலைஞரான வந்தாறுமூலை க.செல்லையா அண்ணாவியார். மற்றவர், இவைகளை நாடகமாகப் பரிணமிக்க உதவிய (31 ITT ef ffurf கா.சிவத்தம்பி, இன்னொருவர் நாடகப்பிரதிகள் உருவாக்கத்திலும் மாணாக்கருக்கு ஆட்டப்பயிற்சி அளிப்பதிலும் உதவி புரிந்த இக்கட்டுரையாசிரியர். இவர்களைத் தவிர பல்வேறு வகைகளிலும் இத்தயாரிப்புக்களுக்கு உதவிய பேராசிரியர் க.கைலாசபதி, பேராசிரியர் அ.சண்முகதாஸ், பேராசிரியர் நா.பாலகிருஷ்ணன் ஆகியோரும் குறிப்பிடற்குரியவர்கள். பேராசிரியர் சு.வித்தியானந்தன் தயாரித்த
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் j 117

Page 71
கர்ணன்போர், நொண்டி நாடகம் இரண்டும் பாரம்பரியமாக விடியவிடிய ஆடப்பட்ட கூத்துக்களாகும். அனாவசியமான பாத்திரங்கள், கதை ஒட்டத்திற்கு அவசியமில்லாத பாடல்கள் ஒன்றுக்கு மேற்பட்ட காப்புவிருத்தங்கள் என்பவற்றை நீக்கி, பழைய பிரதியை ஒன்றரை மணிநேரத்திற்கு நிகழ்த்தக்கூடிய கூத்துப்பிரதியாக்கியமை ஒரு முக்கிய அம்சம். இதை அவர் தமது மாணாக்கரின் உதவியைக் கொண்டு செய்து முடித்தார்.
கர்ணன் போர், நொண்டி நாடகம் ஆகிய நாடகங்கள் தயாரித்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு புதிதாக எழுதப்பட்ட கூத்துக்களே இராவணேசனும், வாலிவதையும்.
இராவணேசன் நாடகப்பிரதி பற்றிய விஸ்தாரமான விளக்கம், எப்படி பாரம்பரியக் கூத்து முறையில் குணாதிசயத்தினை அடிப்படையாகக் கொண்ட பாத்திரம் உருவாக்கப்பட்டது என்பதனை அறிய உதவும்.
இராவணேசனின் வீரம் என்ற குணாம்சம்தான் இதில் முக்கியம். வீரத்திற்காகவே இலங்கையின் வீழ்ச்சியை ஏற்ற தலைவனாக இதில் அவன் சித்திரிக்கப்படுகின்றான். கம்பராமாயணத்தில் யுத்த காண்டத்தை அடிப்படையாக வைத்துத்தான் அவன் வீரம் இதிற் புலப்படுத்தப்படுகின்றது. அங்கதன் தூதுடன் முரண் ஆரம்பமாகின்றது. அங்கதன் தூதை அலட்சியம் பண்ணிய இராவணன் மீது இராமன் போர் தொடுக்கிறான். தான் தோற்றும், தன் தம்பிமார், மக்கள், படைவீரர் இறந்தும் இராவணன் சோர்ந்தானில்லை. தான் தோற்பது உறுதி என்று கண்டும் வீர உணர்வு உந்துதலினால் இராமனுடன் போரிட்டு மடிகிறான். இங்கே இராவணனின் வீரம் என்ற குணத்தை நோக்கி கதை நகர்த்தப்படுகிறது.
அங்கதன் வந்து “துன்றிடும்” பெண்ணை விட்டுத் தொழுதுவாழ் என்று கூறிய சொல் இராவணனின் வீர உணர்வினைத் தூண்டி விடுகின்றது. மகனை இழந்து கதறுகையிலும், தம்பியை இழந்து தவிக்கையிலும் இராவணனின் மனித சுபாவமும் நேயமும் நன்கு வெளிப்படுத்தப்படுகின்றன. அதே பாசம் அவன் வீரத்திற்று ஊற்றப்படும் நெய்யாகவும் காட்டப்படுகின்றது. அவனுக்கேற்பட்ட கஷ்டங்கள் யாவும் அவன் வீர உணர்வை மென்மேலும் தூண்டுகின்றன. இறுதியில் தனக்கு இறப்பு நிச்சயம் என்று திட்டவட்டமாக உணர்ந்தும் “இன்றுளார் நாளை மாள்வார் புகழுக்கும் இறுதியுண்டோ?” எனக்கேட்டுச் சமர்க்களம் சென்று உயிர்விடுகின்றான்.
இந்நாடகத்தில் தனி ஒரு பாத்திரத்தின் குணாம்ச வளர்ச்சிதான் முக்கியமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதில் வரும் ஏனைய பாத்திரங்கள் இராவணனின் குணாம்ச வளர்ச்சியினை எடுத்துக்காட்டும் வகையிற் படைக்கப்பட்டுள்ளார்கள். மண்டோதரி, இந்திரஜித், கும்பகர்ணன்
118 நடராஜ தரிசனம்
 

ஆகியோருடன் இராவணன் புரியும் சம்பாஷனைகள் அவன் வீரத்தை உயர்த்துகின்றன. இராமனுடன்அவன் புரியும் விற்போரும் சொற்போரும் அவனை வீரத்தின் சிகரத்திற்கே அழைத்துச் சென்றுவிடுகின்றன. முழுக்க முழுக்க நாடகம் வீரத்திற்காகவே தன் வீழ்ச்சியை தெரிந்தும் ஏற்றுக்கொண்ட இராவணனின் குணாம்சத்தை மையமாகக் கொண்டு செல்கிறது. நாடகம் முடிவடையும் போது இராவணன் என்ற பாத்திரம் நெஞ்சில் இடம்பெறுகின்றது. வாலிவதையில் வாலிதான் நாயகன். இராவணனின் குணாம்ச வளர்ச்சி போல, சிறியன சிந்தியாத இவன் குணாம்சமும் வளர்த்தெடுக்கப்படுகிறது. இந்நாடகங்களில் வரும் இராவணன், வாலி ஆகிய இரண்டு பாத்திரங்களுமே கம்பன் படைத்த சாயலில் உருவாக்கப்பட்ட பாத்திரங்களாகும். கம்பராமாயணத்திலிருந்து சில முழுமையாக விருத்தங்களும், சில பாடல் வரிகளும் இவ்விரண்டு கூத்துகளிலும் சேர்க்கப்பட்டுள்ளன.
நேரச் சுருக்கத்திற்கும் நாடகச் செம்மைக்கும் நான் முன்னரேயே குறிப்பிட்ட மத்தியதர வர்க்கப் பார்வையாளருக்கும் தொடர்புண்டு. இவர்கள் பாரம்பரியக் கூத்துக்களைப் படுத்துக்கொண்டே விடிய விடியப் பார்க்கும் கிராமிய மக்களைப் போன்றோர் அல்லர். இப்பார்வையாளர்கள் விடிய விடிய அமர்ந்தும் நாடகம் பார்க்கும் பின்னணி இல்லாதவர்கள். இவர்கள் அடுத்த நாள் அதிக அலுவல்கள் உள்ளவர்கள். அன்றியும் பல்வேறு நாடகம் பார்த்து, படித்து இரசனை கூடியவர்கள். இதிகாச புராணங்களைக் கல்வி மூலம் கற்றவர்கள், விமர்சனப் பாங்குடையவர்கள். கூத்தை கிராமிய மக்களைப்போல அன்றி புறவயமாக நின்று பார்ப்பவர்கள். எனவே இப்பார்வையாளருக்குத் தக நேரச் சுருக்கமும் செம்மைப்படுத்தலும் இன்றியமையாததாயின. இச் செம்மைப்படுத்தலின் அதி உயர் நிலையினை இக்கூத்தினைப் பேராசிரியர் அரங்கிற்கென அவைக்காற்றிய முறையிலேதான் காணலாம்.
பாரம்பரியக் கூத்து மரபிலே பாத்திரம் தன் வரவினைக் கூறும் வரவு விருத்தம் முதல் ஏனைய சகல விருத்தங்களும் பாடி முடிந்ததும், மேடையில் நிற்கும் பிற்பாட்டுக்காரர் தம் மூச்சின் வீச்சுக்கு ஏற்ப அந்த ஒசை முடிவை இழுத்தும், ஆலாபனை செய்தும் பாடிமுடித்தல் இயல்பு சுருதி பேதங்கள் மிகுந்த பலரின் குரலின் அசைவு கிராமத்தவர்க்குப் பழக்கமாக இருப்பினும் சங்கீதம் கேட்ட புதிய பார்வையாளருக்கு சங்கடம் தரும் எனக் கருதி அத்தகைய பெரும் "இழுப்புக்கள்' நீக்கப்பட்டன. அத்தோடு பாரம்பரியக் கூத்து மரபில், பாடல் எப்போதும் உச்சத் தொனியிலேயே பாடப்பட்டது. மைக் வசதிகள் இல்லாத அக்காலத்தில் மிகுந்த தொலைவிலுள்ளோரும் கேட்பதற்கு அது அவசியமே. ஆனால் அடக்கமான மண்டபங்களுக்குள் போடப்படும், இக்கூத்துக்களுக்கு அம்முறை அவசியம் இல்லை எனக்கருதி
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 119

Page 72
உரத்த தொனியில் கண்டபடி கத்திப்பாடும் முறை நீக்கப்பட்டு, பதிலாக சொற்களுக்கும் பாடலின் கருத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்துப்பாடும் முறை புகுத்தப்பட்டது. பாரம்பரியக் கூத்துக்களிற் பாடலைப் பாடும் முறையில் உணர்ச்சி புலப்படுத்தப்படுவதில்லை. உரத்த தொனியில் அது சாத்தியமும் இல்லை. ஆனால் பேராசிரியர் பாடலைப் பாடும் முறையில் உணர்ச்சிக்கு முக்கியத்துவமளித்தார். உதாரணமாக இராவனேசனில் இராவணன் தன் ஆயுதங்கள் அனைத்தையும் யுத்த களத்தில் இழந்து, தனியனாகச் செல்லும் காட்சியில் ஒலிக்கும் கம்பனின் “வாரணம் பொருதமார்பும் வரையினை எடுத்த தோளும்” என்ற விருத்தம் இராவணனின் சோகத்தையும், யுத்தத்தின் அவலத்தையும் தரும் சோக உணர்வில் உருக்கமாகப் பாடப்பட்டது.
பாரம்பரியக் கூத்தில் ஒவ்வொரு பாத்திரமும் மேடைக்கு வருகையில் திரைபிடித்து, காப்பு விருத்தம், வரவு விருத்தம் பாடியே மேடைக்கு அறிமுகப்படுத்தப்படும். இம்முறை நீக்கப்பட்டது. அன்றியும் கூத்தில் பாத்திரம் வரவு விருத்தம் கூறிய பின்னர் அதற்குரிய வரவுத் தாளக்கட்டுக்கு நீண்ட நேரம் ஆடும். நிற்றல், திரும்பல், சுழலல், வீசாணம், பொடியடி, நாலடி, எட்டு, ஒய்யாரம், பாய்ச்சல் போன்ற பல ஆட்ட முறைகளை ஆடியபின் தாளம் தீர்த்தலுக்குப் பின்னரே பாத்திரம் தன் வரவுத் தருவைப்பாடி ஆடி கூத்தின் கதைகளுள் பிரவேசிக்கும். இவ்வரவுத் தாளக்கட்டு ஏறத்தாழ 20-30 நிமிட நேரம் நடைபெறும். இத்தாளக்கட்டின் நீட்சி ஒன்றரை மணிநேரக் கூத்துக்குப் பொருந்தாது எனக்கண்டு வரவுத் தாளக்கட்டுக்களைப் பேராசிரியர் சுருக்கினார். நிற்றல், வீசாணம், எட்டு என்பவற்றுடன் வரவுத் தாளம் தீர்க்கப்பட்டது. ஏறத்தாழ 3 நிமிடங்களுக்குள் வரவுத்தாளம் முடிக்கப்பட்டது. வரவுத் தாளக்கட்டுக்களைப் பிற்பாட்டுக்காரர் வாயாற் கூறுதல் பாரம்பரிய மரபு. உதாரணமாக வீரர் வரவுக்குரிய ஒரு தாளக்கட்டு “தந்தத் தகிர்தத் தகிர்தத் தாம் திந்தக் திகிர்தத் திகிர்தத் தெய்' என்பதாகும். இதனையும் இதைத் தொடர்ந்த ஜதிகளையும் பிற்பாட்டுக்காரர் நட்டுவாங்க பாணியில் சொல்லுதலே பழைய முறை. இம்முறை பேராசிரியரின் தயாரிப்பிற் சில இடங்களில் நீக்கப்பட்டன. வாயால் சொல்லும் தாளக்கட்டுக்குப் பதில் மத்தளத்திலேயே அந்த ஜதிகள் வாசிக்கப்பட்டன. (இதே முறையினைத்தான் பேராசிரியர் சரத் சந்திர தனது மனமே, சிங்கபாகு ஆகிய நாடகங்களிற் கையாண்டிருந்தார்) பாரம்பரியக்கூத்தில் பாத்திரங்கள் சம்பாஷணை புரியும் பாடல் தர்க்கத்தரு எனப்படும். ஒவ்வொரு பாத்திரமும் அதனதனுக்குரிய தர்க்கத் தருவைப் பாடி முடித்ததும் தெய்யதா தாளங்கு ததிங்கினதோம் என தாளம் தீர்க்கப்படும். இதற்குக் கூத்தர் ஆடி முடித்த பின்னரேயே அடுத்த பாடலைத் தொடங்குவர். இம்முறை மாற்றப்பட்டு, பாத்திரம் இரண்டோ
12O நடராஜ தரிசனம்

அல்லது அதற்கு மேற்பட்டதோ அனைவரும் பாடி முடித்த பின்னர்தான் தாளம் தீர்க்கப்பட்டது.
இதனைவிட படச்சட்ட மேடைக்குள் கூத்தினைக் கொணர்ந்தமையினால் ஆட்ட முறைகளில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியிருந்தது. நாலுபக்கப் பார்வையாளரையும் பார்த்தபடி சுற்றிச் சுற்றி ஆடும் முறைக்கு அதிக முக்கியத்துவமளிக்கப்படவில்லை. முன்னால் இருக்கும் ஒருபக்கப் பார்வையாளரை நேராகப் பார்த்தபடி ஆடும் முறைக்கே அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனால் சுற்றி ஆடுதலுக்குப் பதில் ஒரு நேர்கோட்டில் ஆடும் ஆட்டமுறை புகுத்தப்பட்டது. சபையோர்க்கு நடிகர் பின்பக்கம் காட்டக்கூடாது என்ற ஒருவகைக் கோட்பாட்டை மனங்கொண்டு சில ஆட்டமுறைகள் நீக்கப்பட்டன. இவை யாவும் நேரச்சுருக்கம், படச்சட்ட மேடை என்ற வரையறைகளினால் தீர்மானிக்கப்பட்டன என்பது மனங்கொள்ளத் தக்கது.
சில ஆட்ட முறைகளை அப்படியே பேணாது பலவற்றைத் தொகுத்து ஒரு நிகழ்ச்சியைத் தோற்றுவிக்கும் முறையும் ஒர் உத்தியாகப் பயன்படுத்தப்பட்டது. உதாரணமாக இராம - இராவண யுத்தத்தில் கடைசிப் பாடலுடன் இராமன் அம்பு விட்டதும் இராவணன் வீழ்தல் - அல்லது மேடையை விட்டுச் செல்லுதல் மரபு. ஆனால் பேராசிரியர் தயாரிப்பில் கடைசிப் பாடலின் பின் "தாகிட தரிகிட தத்திமி தரிகிட” என்ற ஜதிக்கு இராவணனும் இராமனும் ஆளை ஆள் துரத்திச் செல்வது போல் ஆடி, பின்னர் தத்தித்தாம் தரிகிட தித் தித் தெய்யா தெய்ய என சேவற்போர் புரிந்து பின்னர் "தாகிட தரிகிட என்று இராவணன் தனி ஆட்டம் ஆடி வீழ்வதாக ஜதியும் ஆட்டமும் அமைக்கப்பட்டன. இது கூத்து ஜதிகள் புதிய தயாரிப்பிற் பயன்படுத்தப்பட்ட விதம்.
மேடையில் பாத்திரங்கள் நிற்கும் நிலையிலும் பேராசிரியர் மாற்றங்களைக் கொணர்ந்தார். மேடையில் அண்ணாவியாரும் பிற்பாட்டுக்காரரும் ஏடுபார்ப்போரும், தாளக்காரரும் நடுவிலே நிற்கும் மரபு மாற்றப்படுகிறது. ஆண் பெண் இருபாலரும் நடித்த இக்கூத்துக்களில் பெண் பாத்திரங்கள் பாடும் பாட்டைப் பின்பாட்டிற் பாடப் பெண்களையும், ஆண் பாத்திரங்கள் பாடும் பாடல்களைப் பின்பாட்டிற் பாட ஆண்களையும் பேராசிரியர் பயன்படுத்தினார். நான்கு ஆண்களையும் நான்கு பெண்களையும் மேடையில் அரைவட்ட வடிவில் நிறுத்தினார். மாணாக்கரால் அமைக்கப்பட்ட இந்த அரைவட்ட வடிவையே பின் சுவராகக் கொண்டு கூத்து நிகழ்த்தப்பட்டது. இரு பிரிவாக நின்ற ஆண் பெண் பாலாரின் இடைவெளியே மேடைக்கு வரும் வழியாகவும் பயன்படுத்தப்பட்டது.
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 121

Page 73
மரபுவழிக் கூத்தில் நடிப்பு கவனிக்கப்படுவதேயில்லை. அதன் மரபும் அதுவன்று. தாளக்கட்டுக்களும், உடையும் பாத்திரத்தின் குணாதிசயத்தைக் கூறிவிடும். ஆடலும் பாடலுமே கூத்தின் முக்கியம். முக பாவங்கள் அதிற் குறைவு. பேராசிரியர் வித்தியானந்தன் இம்மரபினை மாற்றினார். ஆங்கிக அபிநயம் மூலமும் முக பாவத்தின் மூலமும் நடிப்பிற்கு முக்கியத்துவமளித்தார். இது அவர் கூத்து மரபிற்குச் செய்த புதிய பங்களிப்பு எனலாம். இதனால் ஆட்ட மரபிற்குள் நடிப்பு முறை புகுந்தது. இவர் கூத்துக்களில் நடித்த இக்கட்டுரையாசிரியர் (கர்ணன், செட்டியார், இராவணன்), க. பேரின்பராசா (நொண்டி), இந்திரஜித்(சல்லியன்) அ. சண்முகதாஸ் (கிருஷ்ணர்), சீவரத்தினம் (வாலி) ஆகியோர் அவர்களின் ஆட்டச் சிறப்பிற்காக மாத்திரமன்றி, நடிப்புத் திறனுக்காகவும் அன்று விமர்சகர்களாற் புகழப்பட்டனர். கர்ணன் போரில் நாகாஸ்திரத்தை இழந்த கர்ணன் வேறு வழியின்றி வெறும் வில் நாணைச் சுண்டியபடி, சலிப்போடு எங்கோ பார்த்துக்கொண்டு நிற்கும் நடிப்பு முறை பாரம்பரியக் கூத்திற் காணப்படாத ஒன்று.
முகபாவங்களால் மாத்திரமன்று, ஆடல் பாடல்கனினுடாகவும் நடிப்பு முறையினை அறிமுகப்படுத்தினார் பேராசிரியர். கர்ணன் போரில் கர்ணன் பட்ட செய்தியினைக் குந்தியிடம் கூற கிருஷ்ணர் வருகின்றார். "குந்தம்மாதேவி கேளாய் குணவான்கள் ஐவருக்கும் முந்தியே பிறந்த கர்ணன்' என்று விருத்தத்திற் கூறத் தொடங்குகின்றார். இதில் கிருஷ்ணர் மேடைக்கு வந்து கூறும் “குந்தம்மா’ என்ற ஒரு சொல் அழைப்புக்கு குந்தி ஒடி வருகிறாள். அதன் பின்னரேயே கிருஷ்ணர் குந்தம்மாதேவி கேளாய் என்று பாடலைத் தொடங்குகின்றார். இங்கு பாடல் மூலம் நடிப்பு புலப்படுத்தப்படுகிறது.
இராவணேசனில் இராவணன் தன் மகனான இந்திரஜித்தை இழந்த பின் "இறந்தாயோ என் மகனே என் ஆவி சோருதடா மகனே' என்று பாடி ஆடுகிறான். தாளம், ததிந்தத்தா தா ததிந்தத்தெய் தெய்ததிந்தத் ததிந்தக தளாங்குததிங்கின தோம் என்று முடிகிறது. இந்த ஜதிக்கு சோகமாக ஆட்ட அடிகளை வைத்து சுழன்று தன் கதாயுதத்தின் மீது விழுகிறான் இராவணன். இங்கு ஆட்ட முறைகள் மூலம் நடிப்பு புலப்படுத்தப்படுகிறது.
வாத்தியங்களை பாவித்தலிலும், பாத்திரங்களின் உடை, ஒப்பனைகளிலும் பேராசிரியர் ஏற்படுத்திய மாற்றங்கள் குறிப்பிடத்தக்கவை. சுத்த மத்தளமும் தாளமுமே கூத்துக்குரியவை. இவற்றினோடு உடுக்கு, சவணிக்கை, பறை, மேளம், சங்கு, சிரட்டை முதலான வாத்தியங்களையும் பாவித்தார் இவர். இராவணன் தேர் ஏறுகையில் பின்னணியில் மேளம், சங்கு என்பன ஒலித்தன.
122 நடராஜ தரிசனம்

இராவணன் தன் வரவினை அறிக்கையிலும், இந்திரஜித்தின் வருகையிலும் உடுக்கு ஒலித்தது. இராமன் படை எடுத்துவரும் காட்சியில் உடுக்கும்,
மத்தளமும் மாறி மாறி ஒலித்தன. இராவணன் யுத்தகளத்திற்குப் படைகளை
அனுப்பும் காட்சியில் பறையும் தாளமும் ஒலித்தன. குந்தி அழுதபோது சவணிக்கையும், மத்தளமும் ஒலித்தன. இவ்வண்ணம் அடிப்படையான வாத்தியங்களாக மத்தளமும் தாளமும் இருந்தபோதும் நிகழ்ச்சிகளுக்குத் தக ஏனைய வாத்தியங்களையும் பாவிக்கும் முறையையும் பேராசிரியர் புகுத்தினார். கூத்திற்கேயுரிய பாரம்பரிய உடுப்புக்களை விட்டு இன்னொரு பாணியில் உடுப்புக்களை அவர் புகுத்தினார். வடமோடி நாடகங்களைப் பொறுத்தவரை அவர் உடுப்பில் ஒரு புதிய நெறியை உண்டாக்கினார் என்பதைவிட சினிமா முறையினையே பின்பற்றினார் எனலாம். தகதகக்கும் முடிகள், ஆடை ஆபரணங்கள், பட்டுச்சேலைகள் என்பன பயன்படுத்தப்பட்டன. பிற்பாட்டுக்காரர்கள் வெள்ளை வேட்டி சிவப்புத் துண்டு என்பன அணிந்து தலைப்பாகையுடன் காட்சி தந்தனர். பெண் பிற்பாட்டுக்காரருக்கும் ஒரே நிறத்தில் உடுப்புகள் தரப்பட்டன. உடுப்பில் ஒர் ஒழுங்குமுறை பேணப்பட்டது. எனினும் தென்மோடிக் கூத்தான நொண்டி நாடகத்தில் பாரம்பரிய மரபை வெகுவாக மீறினார். அரசனுக்குரிய பூமுடி, மார்புப்பதக்கம், அலங்காரவாள் என்பன உபயோகிக்கப்படவில்லை. மிக எளிமையும் அழகும் வாய்ந்தனவாக உடைகள் அமைக்கப்பட்டன. வெற்று மேலுடம்புடன் ஆண் பாத்திரங்கள் அனைவரும் தோன்றினர். இதேபோல் கூத்துமரபிற்குரிய பழைய அரிதார ஒப்பனை முறையை நீக்கி, மென்மையும் நுணுக்கமும் மிக்க நவீன ஒப்பனை உபகரணங்களையும், முகப்பூச்சுக்களையும் பாவித்தார். ஒப்பனையாளர்கள் நா. சுந்தரலிங்கம் கா.சிவத்தம்பி.
மேடை அசைவுகள் நவீன நாடக நெறிமுறைகளுக்கியையச் சிற்சில இடங்களிற் புகுத்தப்பட்டமை குறிப்பிடற்குரியது. பாத்திரங்களின் நிலை, அசைவுகள் என்பன நிகழ்ச்சிகளையும், பாத்திரங்களின் மன உணர்வுகளையும் புலப்படுத்துவனவாக அமைதல் வேண்டும் என்பது நவீன மேடை அரங்கின் மேடை நெறியாகும். இராவனேசனில் கும்பகர்ணனும் இராவணனும் சீதையை விடுவது சம்பந்தமாக உரையாடி முரண்படுகிறார்கள். பின்யுத்தகளம் செல்வதாக கும்பகர்ணன் அண்ணன் சொல்லுக்கு இறங்கி வருகிறான். முரண்படும் பாடல் வரும் இடத்தில் இருபாத்திரங்களும் ஆடியபடி பிரிந்து போவதும், ஒற்றுமைப்படும் இடத்தில் ஆடியபடி நெருங்கிவருவதும் போன்றதுமான மேடை ஆட்ட அசைவு முறை நவீன நாடகமேடை நெறிமுறைகட்கு இயையப் புகுத்தப்பட்டதாகும்.
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 123

Page 74
நொண்டி நாடகத்தில் செட்டி, நொண்டி, செட்டி மனைவி ஆகியோர் ஆறு ஒன்றைக் கடந்து செல்கிறார்கள். இது ஊமப்பாணியில் அபிநயிக்கப்பட்டது. இதே போல் செட்டியும், நொண்டியும் இருபெரும் பெட்டிகளைத் தூக்கிச் செல்லும் காட்சியும் ஊமப்பாணியில் அபிநயிக்கப்பட்டது. இவை யாவும் பாரம்பரியக் கூத்து முறைகளில் இல்லை. நவீன மேடை நெறி யுத்திகளாகும். இதேபோல் நவீன நாடக மேடை தந்த ஒளியமைப்பினையும் கூத்திற்குப் பயன்படுத்தினார் பேராசிரியர். பாத்திர மனநிலைகளைப் புலப்படுத்த மங்கிய அம்பர் ஒளியை பாவித்தார். மனப்போராட்டங்களை வெளிப்படுத்த ஒளியைக் கூட்டிக் குறைத்தார். காலை மாலை வேளைகளையும் புலப்படுத்த ஒளியினைப் பாவித்தார். இவ்வண்ணம் பல ஒளி ஜாலங்கள் அளவறிந்து மேடையிற் செய்யப்பட்டன. இது பாரம்பரியக்கூத்து மரபிற்குப் புதிது. இராவனேசனில் இராவணன் போருக்குப் புறப்படுகிறான். இது ஒரு தனி ஒளிப்பொட்டுக்குள் நடைபெறுகிறது. இராமனும் புறப்படுகிறான். இது இன்னொரு ஒளிப் பொட்டுக்குள் நடைபெறுகிறது. இருவரும் தேரில் வருகிறார்கள். இது இரண்டு ஒளிப் பொட்டுக்குள் நடைபெறுகிறது. இருவரும் போர்க்களத்திற் சந்திக்கையிற் பிரகாசமான ஒளியிற் சந்திக்கிறார்கள். இவ்வொளி வீச்சுகள் கூத்துக்கு மேடையில் இன்னொரு பரிணாமத்தைக் கொடுத்தன. ஒளியமைத்தவர் கா.சிவத்தம்பி.
இவைகள் யாவும் பேராசிரியர் தம் மாணாக்கருடனிணைந்து கூத்து மரபைச் செம்மைப்படுத்தவும், முன்னெடுக்கவும் செய்த முயற்சிகளாகும். இக் கூத்துக்கள் மட்டக்களப்பு, மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் மேடையிடப்பட்டன. மட்டக்களப்பில் இம் முறையினாற் கவரப்பட்ட சில பாடசாலை ஆசிரியர்கள் இதே முறையில் கூத்துக்களைத் தயாரிக்க முயன்றனர். க. தம்பிராசா, திருமதி திரவியம் இராமச்சந்திரன், எல். மத்தியசிஞ்ஞோ ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களால் முறையே குருக்கேத்திரன் போர், உத்தமன் பரதன், சூர்ப்பனகை சபதம் ஆகிய கூத்துக்கள் தயாரிக்கப்பட்டன.
இதே முறையினையும், நவீன நாடக நெறிகளையும், உள்வாங்கி கட்டுரை ஆசிரியரால் 1969 இல் 'சங்காரம்’ தயாரிக்கப்பட்டது. மனுக்குலத்தின் தோற்றத்தையும் வளர்ச்சியையும், போராட்டத்தையும் மக்கள் எழுச்சியையும் உன்னதமான எதிர்காலத்தையும் இக்கூத்து உள்ளடக்கமாகக் கொண்டிருந்தது. கூத்தில் சமூக உள்ளடக்கம் பாய்ச்சிய முதல் நாடகம் என இதனை நாடக விமர்சகர் கூறுவர். இக்கட்டுரையாசிரியர் தன் நாடகத் தயாரிப்புக்களில் கூத்து ஆடல் பாடல் முறைகளை நிறையக் கையாளுபவர். இவ்வழியில் சமூகப் பிரச்சினையினை மையமாகக் கொண்ட கூத்துக்கள் சில
124 நடராஜ தரிசனம்

நவீன நாடகப் பிரக்ஞையுடன் மேடையேறின. யாழ்ப்பாணக் காத்தான் கூத்துப் பாணியில் நெல்லியடி அம்பலத்தடிகளாலும் பின்னர் அ. தாசீசியஸினாலும் நெறியாள்கை செய்யப்பட்ட கந்தன் கருணை முக்கியமான நாடகமாகும்.
1970 களில் கூத்தின் சாரத்தை உள்வாங்கி அதனைத் தமது நவீன நாடகங்களிலும் இணைக்கும் முயற்சியைப் பலர் மேற்கொண்டனர். அ. தாசீசியஸ், நா. சுந்தரலிங்கம், இக்கட்டுரையாசிரியர், இளைய பத்மநாதன் என்போர் இவ்வகையிற் குறிப்பிடத்தக்கவர்கள். பின்னாளில் நாடக உலகிற்குள் புகுந்த க. சிதம்பரநாதன், வி. எம். குகராஜா போன்றோரும் இம் முறையினைப் பின்பற்றினர். இவ்வண்ணம் பேராசிரியர் சு. வித்தியானந்தன் ஆரம்பித்து வைத்த ஒரு மரபு பல்வேறு வகைகளிலும் அரங்கில் இன்று இடம்பெறுகிறது. அவர் தோற்றுவித்த மரபு இன்றும் நிலைத்து நிற்பதனை அவரின் கலைப்பணிச் சிறப்புக்கான முக்கிய காரணங்களுள் ஒன்றாகக் கூறலாம்.
1986 ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைக் கழகத்தில் பேராசிரியர் சிவத்தம்பி தலைமையில் பேராசிரியர் சு. வித்தியானந்தன் ஒரு முக்கியமான கூட்டத்தைக் கூட்டினார். அதில் ஈழத்துக் கூத்து மரபினையும். அதன் சிறப்பம்சங்களையும் விளக்கி, நமது மண்ணுக்குரிய ஆடல் மரபான கூத்தை அங்கு நடனப்பயிற்சி பெறும் மாணாக்கர் பழக வேண்டுமென்று வலியுறுத்தி அதனை ஆரம்பித்து வைத்தார். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அவர் முயற்சி தொடர வாய்ப்பு ஏற்படவில்லை. அவரது அபிலாசைகளை நிறைவேற்ற நிறைந்த மனதோடு முன்வருதல் அவருக்கு நாம் அளிக்கும் கெளரவங்களுள் ஒன்றாகும்.
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா OGOរាំ 125

Page 75
அரசியல் விஞ்ஞானத்தைக் கற்பதற்கான அணுகு முறைகள்
பேராசிரியர் அ. சிவராஜா அரசியல் விஞ்ஞானத்துறை பேராதனைப்பல்கலைக்கழகம்
அனுகு முறைகள் என்ற பதத்தின் பொருள் அணுகு முறை என்றால் என்ன என்பதை இலகுவான வார்த்தைகளில் கூறினால் ஒரு குறிப்பிட்ட காட்சியினை நோக்குவதும் பின்னர்அதனை விளக்குவதுமாகும்.
பிரச்சினைகளை அல்லது வினாக்களை விளக்குவதற்கு பயன்படுத்தும் அளவு கோலின் நிபந்தனையை அணுகுமுறை கொண்டிருக்கும் கவனத்தில் எடுக்கப் படவேண்டிய பிரச்சினைகளை வினாக்களை, தரவுகளை வெளிக்கொணர்வதையும் அது உள்ளடக்கும். எந்த வினாக்களை அல்லது தரவுகளை சேர்க்கவேண்டும் அல்லது விடுதல் வேண்டும் என்பதை வழிநடத்தும் தகுதிகளை அது கொண்டிருக்கும் சிலசமயங்களில் ஆய்வுமுறை என்ற சொல்லும் பயன்படுத்தப்படுகிறது அது ஆய்வு முறை பற்றிய கற்கை யெனப் பொருள் படும் அரசியல் விஞ்ஞானத்தைக் கற்பதற்கு இரண்டு பிரதான அணுகு முறைகள் உள்ளன. அவை மரபு ரீதியான அணுகு முறைகளும் நவீன அணுகுமுறைகளுமாகும் அவற்றுள் முதலில் மரபுரீதியான அணுகு முறைகளைக் கவனத்தில் எடுப்போம்.
மரபுரீதியான அணுகுமுறைகள்
1. வரலாற்று அணுகுமுறை
இவ்வணுகுமுறையின் பிரத்தியேகமான இயல்பு கடந்த காலத்தில் அல்லது தெரிவு செய்யப்பட்ட ஒரு காலக் கட்டத்தின் மீதும் குறிப்பிட்ட சகாப்தத்தில் நடந்ததெரிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் மீது கவனம் செலுத்தி ஸ்தாபனங்கள் என்றால் என்ன அவை எத்தகைய போக்கினை எடுக்கின்றன. அவை எவ்வாறு இருந்தன அவை எவ்வாறு வளர்ச்சியடைந்தன என்பவற்றை விளக்கப்படுத்துவதாகும் ஒர் ஆய்வாளர் வரலாற்றை ஒரு பரம்பரை வழிமுறையாகவே கொள்கிறார். இத்தகைய வழிமுறையில் அரசியலைக் கற்கும்போது வரலாற்றின் தொடர்ச்சியிலும் மாற்றத்திலும் தனிப்பட்டவர்களின்
126 நடராஜ தரிசனம்

நோக்கம், நடத்தைகள் சாதனைகள் பெறுபேறுகள் தோல்விகளின் பங்கினையும் ஒர் ஆய்வாளனை பார்க்கவைக்கிறது.
வரலாற்று அணுகுமுறை அரசியற் கோட்பாடு சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் எவ்வாறு மாபெரும் சிந்தனையாளர்களின் மனங்களின் மீது பிரதிபலிக்கின்றன என்பதை எடு கோளாகக் கொள்கிறது. அரசியற் கோட்பாட்டை விளங்கிக் கொள்வதற்கு அது வளர்ச்சியடைந்த நேரம், இடம், சூழ்நிலையை விளங்கிக் கொள்வது முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையே மேற்சொன்ன கருத்து உணர்த்துகிறது. அரசியற் கோட்பாட்டாளர்கள் நிகழ்ச்சிகளை உருவாக்குவதில் உண்மையாகப் பங்கு பற்ற வேண்டுமென்றோ பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் பங்கு பற்ற வேண்டு வேண்டுமென்பதோ கட்டாயமல்ல ஆனால் எது அவசியம் என்றால் அவற்றால் கோட்பாட்டாளர்கள் பாதிக்கப் படவேண்டும் அதன்மீது கோட்பாட்டாளர் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும்.
ஒர் ஆய்வாளர் பயன்படுத்தும் தெரிவின் நோக்கத்திலேயே எரிகின்ற அரசியற் பிரச்சினைகளுக்கான வரலாற்று அணுகுமுறை வேறுபடும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும் எட்மண்ட் போக்கும் மற்றையோரும் தமது பழமை பேண் அவதானிப்புக்களை நியாயப்படுத்தவே வரலாற்று அணுகுமுறையைக் கைக் கொண்டனர்.
வரலாற்று அணுகுமுறை சில வகையான பலவீனங்களைக் கொண்டுள்ளது. உதாரணமாக யதார்த்தத்தன்மையற்ற ஒருமைப்பாடுகளை உள்ளடக்குகிறது. ஆகவே அது தவறான முடிவுக்கு இட்டுச்செல்லும், நடைமுறை அரசியலிலுள்ள பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு காணும் முயற்சிகளுக்கு வரலாற்று அணுகுமுறை அடிப்படையில் பயன்படுத்தப் படுவதில்லை. இருந்த போதிலும் வரலாற்று அணுகுமுறையின் உண்மையான முக்கியத்துவத்தினை மறுக்க முடியாது.
2. மெய்யியல் அணுகுமுறை
அரசியலைக் கற்பதற்கான மிகவும் பழமையான அணுகுமுறை மெய்யியல் அணுகுமுறையாகும். அது எதிர்வு கூறல் சடத்துவ அணுகுமுறைகள் எனவும் அழைக்கப்படுகின்றது. இங்கு அரசு, அரசாங்கம், அதிகாரம், மனிதன் ஒரு அரசியல்பிராணி என்பவற்றைப் படித்தல் மாற்றமுடியாதளவுக்குச் சில வகையான இலக்குகளை அடைதல், நன் நடத்தை, உண்மைகள், உயர்தத்துவங்கள் என்பவற்றோடு தொடர்பு படுகின்றது. மேற்சொன்னவை 6T66) IT அறிவுக்கும் யதார்த்தத்திற்கும் அடியிலுள்ளதாகக் கொள்ளப்படுகின்றன. இந்த அணுகுமுறை எதிர்வு கூறல் இயல்பினையும் பெறுகின்றது. ஏனெனில் மெய்யியல் என்ற சொல்லே சிந்தனை என்பதைக் குறிக்கின்றது. மெய்யியல் அணுகு முறையைப் பயன் படுத்தும் ஒருவர்
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 27

Page 76
மொழியை தெளிவை உயர்த்துவதை இலக்காக கொள்வதோடு மொழியியல் மயக்கத்தைக் குறைப்பதையும் இலக்காகக் கொள்கிறார் அத்தகையவர் பயன்படுத்தும் மொழி யதார்த்தத்திள் எண்ணக் கருவை பிரதி பலிப்பதாகக் கொள்கிறார்.
இத்தகைய அணுகுமுறையை அரசியலைக் கற்பதற்குப் பயன்படுத்துவோர் அதனை அரசியல் மெய்யியலாக மாற்றுகின்றனர் இங்கு மேலோட்டமாகத் தெரியும் யதார்த்தத்திற்குப் பின்னேயிருக்கும் யதார்த்தத்தை கண்டு பிடிக்க முயற்சிக்கின்றனர். புலனால் அறியக்கூடிய யதார்த்தமே விஞ்ஞானத்தின் நோக்கமாகும். கற்பனை நிலை யதார்த்தம் மெய்யியலின் நோக்கமாகும். இயல்பாக அரசியல் மெய்யியல் தூய விஞ்ஞானத்தை விட அழமானதாகும். மெய்யியல் அணுகுமுறை எதிர்வு கூறல் தன்மையும் மனித வாழ்விற்கு அப்பாற்பட்டதாயும் இருப்பதாகக் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.
3. சட்ட அணுகுமுறை
இந்த அணுகுமுறையில் அரசியல் பற்றிய கற்கை சட்டம் அல்லது நீதித்துறை வழி முறைகளோடும் ஸ்தாபனங்களோடும் தொடர்புபடுகின்றது. அதாவது அரசியல் ஒழுங்கு முறையைப் பராமரிப்பதற்கு உருவாக்கப்பட்ட ஸ்தாபனங்களின் நீதித்துறை வழி முறைகள் பற்றிய படிப்பாக கொள்ளப் படுகின்றது. சட்டமும் நீதியும் நீதித்துறையின் விடயங்கள் எனக்கொள்ளப் படாது, அரசியற் கோட்பாட்டளர்கள் அரசு தாக்கமானது சமத்துவமானதுமான சட்டமும் ஒழுங்கும் என்ற முறையினை அரசு பராமரிக்கிறது எனக் கொள் கிறார்கள்.
4. ஸ்தாபன ரீதியான அணுகுமுறை
இந்த அணுகுமுறையில் ஒரு அரசியல் மாணவன் சட்டசபை, நிர்வாகம் , நீதி, போன்ற அரசியல் ஒழுங்கமைப்பின் முறை சார்ந்த கட்டமைப்பினை வற்புறுத்துடன் பல எண்ணிக்கையான அரசியல் சிந்தனையாளர்களின் எழுத்துகளில் இந்தப் போக்கினைக் காணலாம் :அரிஸ்டோட்டில் லங்கி, பைளர் முதல் சமகாலம்வரை
5. சமூகவியல் அணுகுமுறை
சமூகவியல் என்றகற்கை நெறிக்கு பிரான்சைச் சேர்ந்த கொம்ரேயும் இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்பென்சரும் பங்களித்த காலத்திலிருந்து அரசியற் கோட்பாட்டாளர்கள் அரசியற் கற்கைக்கு சமூகவியல் அணுகு முறையின் பொருத்தப்பாட்டை உணர தொடங்கினர். சமகாலத்தின் குறிப்பிடத்தக்களவு ஐக்கிய அமெரிக்காவில் வளர்ச்சியடைந்துள்ளது. ஆர். எம். மைக்ஜவர், டேவிட் ஈஸ்ரன், ஜி. ஏ. அல்மண்ட் என்போர் அரசியல் நடத்தைக்கான அனுபவரீதியான விதிகளை இயற்றுவதற்கு சமூகவியலில் தேவையான தரவுகள் இருக்கின்றன என்பதை அங்கீகரித்தனர்.
128 நடராஜ தரிசனம்

ஜேர்மனியின் முன்னணி சமூகவியலாளரான மக்ஸ் வெபர் அரசியலின் அடிப்படை சமூகவியல் எனக் காட்டியுள்ளார். டேவிட் ஈஸ்ரன் அரசியல் முறை பற்றிய சில கோட்பாடுகளை அபிவிருத்தி செய்தார். இதன் விளைவாக புதிய ஒரு கற்கை நெறியான அரசியல் சமூகவியல் என்பது தோற்றம் பெற்றது.
6. உளவியல் அணுகுமுறை
கிறகம் வலஸ், சார்ல்ஸ் மெரியம், கறோல்ட் லாஸ்வெல், றொபேர்ட்டால், எறிக் பிறோமன் என்பவர்களது முயற்சியினால் அரசியல் விஞ்ஞானம் உளவியல் கற்கை நெறியை நோக்கி மிகவும் நெருங்கிச் சென்றுள்ளது. நவீன யுகத்தின் ஆரம்பத்தில் மக்கியாவலி, கொப்ஸ் போன்றோர் வாழ்க்கைக்கான பாதுகாப்பு, செல்வம் பொருட்களைக் கொண்டிருத்தல் என்பனவே தூண்டுதல் சக்திகள் எனவும் இவற்றை அடைவதற்கான அவா அதிகாரத்தைப் பெறுவதற்கான அவாவிலிருந்து பிரிக்க முடியாதவை என்பதை வலியுறுத்தினர். அண்மையில் பல அரசியல் கோட்பாட்டாளர்கள் பிரபல்யமான உளவியலாளர்களான புறோட் யங் போன்றோரது எழுத்துக்களிலிருந்து கடன் வாங்கி அரசியல் நடத்தைக்கான பெறுமதியான விதிகளை முன் வைத்துள்ளனர். இந்த எழுத்தாளர்கள் அரசியல் பற்றிய கற்கை உணர்ச்சிகள் பழக்க வழக்கங்கள், எதிர்பார்ப்பு, அகம்பாவம் என்பவற்றில் பங்கினோடு சம்பந்தப்படுகிறது என்பதை காட்டியுள்ளனர்.
III
நவீன அணுகுமுறைகள்
1. முறையியல் அணுகுமுறை
முதன்முதலில் அரசியல் காட்சிகள் பற்றிய கற்கையில் முறை என்ற எண்ணக் கருவினை அறிமுகப்படுத்திய பெருமை டேவிட் ஈஸ்ரனையே சேர்கின்றது. அவர் சகல அரசியல் வழிமுறைகளையும் சக்திகளையும் பகுப்பாய்வு செய்வதற்கு மிகவும் பொருத்தமான அலகு அரசியல் முறை என்பதைக் கண்டார். அவருக்கு முந்திய அரசியல் விஞ்ஞானிகள் தனிமைப்படுத்தப்பட்ட ஸ்தாபனங்கள் அல்லது பிரதேசத்தையே கற்றனர். இது சுற்றியுள்ள சுற்றாடல்களை முழுமையாக பாராமுகப்படுத்தியதனால் அது பயனுள்ள கற்கையாக இருக்கவில்லை அத்தகைய ஆய்வு பேரண்ட பன் முகத்தன்மை கொண்ட பிராந்திய தேசீய முக்கியத்துவம் கொண்ட காட்சிகளை விளக்குவதில் தோல்விகண்டது. அத்தகைய காட்சிகளை அரசியல் பகுப்பாய்வின் ஒரு அடிப்படை அலகாக அரசியல் முறையைக் கொள்வதன் மூலம் மட்டுமே விளக்க முடியும் என்றார் இதனையே ஈஸ்டன்
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா DGoff 129

Page 77
செய்தார். இந்த அணுகுமுறையை அவர் தழுவிக்கொண்டு தனது நூலான அரசியல் பகுப்பாய்வுக்கு ஒரு சட்டகம்” என்பதில் விளக்கினார்.
எல்லா அரசியல் முறைகளும் மற்றைய சமூக முறைகள் என்ற சுற்றாடல்களிலேயே செயற்படுகின்றன. அதாவது அது மற்றைய சமூக முறைகளோடு நெருங்கிய தொடர்பு கொண்டது என்றே பொருள்படுகின்றது. சுற்றாடலிலிருந்து கிரமமாக அரசியல் முறைமீது செல்வாக்குச் செலுத்துகின்றது. இவ்வாறு பாதிப்புச் செலுத்தும் காரணிகளை அவர் உள்ளீடுகள் என்றார். உள்ளீடுகள் கோரிக்கைகளையும் ஆதரவுகளையும் கொண்டவை ஒரு அரசியல் முறையின் வெளியீடுகள் அதிகாரிகளின் தீர்மானங்களும் நடவடிக்கைகளும் ஆகும். (படம் 1ஐ)ப் பார்க்கவும்)
சுற்றாடல்
கோரிக்கைகள்) தீர்மானங்கள் ஒரு அரசியல் உள்ளிடுகள்
5Մ6ւ Հ முறை / கொள்கைகள்
N كر
2. கட்டமைவு செயற்பாட்டு அணுகுமுறை
பரந்ததொரு முறையில் பார்க்கும்போது கட்டமைவு செயற்பாட்டு அணுகுமுறை அரசியல் முறைகள் என்ன கடமைகளை ஆற்றுகின்றன என்பதைக் கற்பதை வலியுறுத்துகிறது. ஒரு சமூகத்திலுள்ள தாபனங்களும் செயற்பாடுகளும் அரசியல் ஒழுங்கிற்கு எந்த நோக்கங்களுக்காக சேவையாற்றுகின்றன என்பதையே விளவுகின்றது. இருந்த போதிலும் அரசியல் முறைகளுள் செயற்படுத்தும் கடமைகளின் இயல்புகளின் மீதே செயற்பாட்டு அணுகுமுறை கூடிய கவனம் செலுத்துகிறது. மேற் சொன்ன செயற்பாடுகளை அடையாளங்கான முயற்சிப்பதோடு அது கட்டமைவுகள் ஸ்தாபனங்கள் மீதும் கவனங் கொள்கின்றது. செயற்பாட்டு அணுகுமுறை அரசியல் முறை ஒன்றின் கட்டுமான செயற்பாட்டு மீது கவனம் கொள்வதோடு நாம்வாழும் இவ்வுலகின் குழப்பமான அரசியலை விளங்கிக் கொள்ளும் திறமையையும் விருத்தி செய்கின்றது.
3. தொடர்புகள் அணுகுமுறை
மனிதர்கள் சகல சமூக ஊடாட்டங்களுக்கும் அடிப்படை தொடர்புமுறை ஏற்றுள்ளது. ஒருவரோடு ஒருவர் ஊடாடுவதற்கு இம்முறை உதவும். அக்கறையுள்ள குடிமக்கள் தமது தேவைகளையும் விருப்பங்களையும் அரசாங்கத்துக்கு எடுத்துச்சொல்லவேண்டும். எந்தவிதமானதொரு ஒழுங் கமைப்பும் தொடர்புகளிலேயே தங்கியுள்ளது. இந்த அணுகுமுறையை
13 O நடராஜ தரிசனம்

முன்வைத்தவர்கள், எல்லா தனிப்பட்டவர்களும் அவர்களது சங்கங்களும் அரசியல் முறைகளும் தொடர்புகள் அபிப்பிராயங்கள் எதிர்பார்ப்புகள் என்பவற்றால் கட்டியெடுக்கப்பட்டு ஒன்றாக்கப்பட்டுள்ளது எனக் கொள்கிறார்கள்.
இந்த உண்மை அவர்களை அரசியல் முறைமை அரசியல் காட்சி என்பவற்றை தொடர்புகள் அம்சத்தின் ஊடாக கற்பதற்கு இட்டுச்சென்றது. இவர்கள் தொடர்புகள் அரசியல் முறையின் குவிமையம் எனக் கொள்வதோடு தொடர்புகள் முறையினை ஒன்றாகக் வைத்திருப்பதோடு அது வளர்ச்சியடையவும் உதவுகிறது எனவும் கொள்கின்றனர்.
தொடர்புகள் மட்டுமே ஒரு குழுவினை ஒன்றாகச் சிந்திப்பதற்கும் ஒன்றாகப் பார்ப்பதற்கும் ஒன்றாகச் செயற்படுவதற்கும் வழிவகுக்கிறது.
4. தீர்மானம் எடுக்கும் அணுகுமுறை
தீர்மானம் எடுத்தல் என்பது அரசியலுக்கு மாத்திரமல்ல மற்றைய எல்லா
மனித நடவடிக்கைகளுக்கும் அடிப்படையான பகுதியாகும். கிட்டத்தட்ட எல்லா விஞ்ஞானங்களிலும் தீர்மானங்கள் எடுக்கும் எண்ணக் கருவுக்கும் முக்கிய மான இடம் வழங்கப்படுகின்றது. ஒரு சமூகத்திற்கு பெறுமதிகளை அதிகார பூர்வமாக பங்கீடு செய்வதே அதிகாரமாகும். இவ்வாறு தீர்மானங்களை எடுத்தல் அதிகாரம் மிக்க அரசியல் உத்தியோகத்தர்களது தெரிவும் ஒரு குறிப்பிட்ட நடவடிக்கை முறையாகும். அதாவது இரண்டோ அல்லது இரண்டிற்கு மேற்பட்ட மாற்றுவழிகளைத் தெரிவதாரும்.
தீர்மானங்களை எடுத்தல் என்ற அணுகுமுறை, கொள்கைகளைத் தீர்மானித்தல் என்பதன் ஒரு பகுதியாகும். அரசியல் வழிமுறையின் தீர்மானம் எடுத்தல் என்ற மயக்க நிலையினைப் பார்க்கும்போது தீர்மானம் எடுத்தல் என்பதன் தேவை தெளிவாகின்றது.
5. அபிவிருத்தி அணுகுமுறை
சமூக மாற்றத்தில் ஒரு முக்கியமான பரிமாணம் மீது விசேட கவனத்தைப் பிரதி பலிப்பதே அரசியல் பற்றிய கற்கையில் அபிவிருத்தி அணுகு முறையாகும். இந்த அணுகுமுறையின் படி பொருளாதார அபிவிருத்தியானது கூடியளவு சமூக, பொருளாதார குழப்பங்களையும் ஏற்படுத்துவதனால் விசேட இடத்தைப் பெறுகிறது. அரசியல் பற்றிய கல்வியில் அபிவிருத்தி பற்றிய அணுகுமுறை மனித சமூகத்தின் மாற்றத்தின் முக்கியத்தினால் மட்டுமல்ல அது ஒரு காலம் பற்றிய பரிமாணத்தையும் வழங்குவதால் முக்கியத்துவம் பெறுகின்றது.
6. நடத்தை வாத அரசியல் அணுகுமுறை (1) நடத்தை அணுகுமுறையின் பிதாமகன் சார்ல்ஸ் E மெரியம் ஆவார். (2) gosi 1921ggio American Political Science Review 6T66TD 365 fló03, LSlái)
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 131

Page 78
(3)
(4)
(5)
(6)
(7)
(8)
(9)
(10)
(11)
(12)
(13.)
எழுதிய ஒரு கட்டுரையில் சமூகவியல், உளவியல், புவியியல், உயிரியல் புள்ளி விபரவியல் என்பவற்றின் கண்டுபிடிப்புக்கும் அணுகுமுறைக்கும் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என எழுதினார்.
அரசியல் விஞ்ஞானத்தில் நிலவிய அடிப்படை அணுகுமுறையான அவதானித்தலும் பகுப்பாய்வு செய்தலும் என்பதில் அதிருப்தி அடைந்த மெறியம் ஆய்வுக்கான யந்திரத்தை ஏற்படுத்துவதற்காக தனது முயற்சிகளில் இறங்கினார்.
அதற்காக அமெரிக்க அரசியல் விஞ்ஞான சங்கத்தினுள் ஒரு ஆய்வுக் குழுவினையும் அரசியல் விஞ்ஞானத்துக்கான ஒரு மகாநாட்டினையும் ஆரம்பித்தார். (செனேற்றராகவும் நியமிக்கப்பட்டனார்)
வானியல், இரசாயனம், பெளதீகம், உயிரியல், உளவியல் போன்ற சமூக இயற்கை விஞ்ஞானங்கள் ஏற்படுத்திய முன்னேற்றங்களை அரசியல் ஆய்வு முழுமையாக பயன்படுத்த வேண்டுமென விரும்பினார்.
ஆழமான ஆய்வுகள் அவசியம்
விசாரணைகளின் இன்றியமையா நோக்கங்களை ஏற்று அரசியல் நடததல
உளப்பாங்கு
சிக்காகோவில் ஒரு ந. வா. த. பாடசாலை நிறுவுதல்
மூன்று சட்ட விதிகள்
60இல் தூயகணித நுட்பங்கள் பல தன்மை மாற்றுப்பகுப்பாய்வுக்குட்பட்ட அரசியல் தொடர்புகள் எவ்வாறு அமைய வேண்டுமென எப்படி அமைகிறது என்பது ஆராயப்பட வேண்டும்.
கட்டமைவுகளும், கட்டமைப்பு அதிகாரங்களும் முக்கியமாக தனிப் பட்டவர்களின் உளப்பாங்கு முறைப்படி அமையாத தொடர்புமே முக்கியம் எனக் கொள்கிறார்.
முகாமைத்துவ படிப்பின் - மனிதத் தொடர்புகள் குழுவினரோடு கருத்தொருமைப் பாடுடையவர்களாக உள்ளனர்.
6. Sps 5 (6 9500) dip Gosp (Comprative Approach)
ஒப்பீட்டு அணுகுமுறையானது (அரசியல் ஆய்வுமுறையானது)
வளர்ச்சியடைந்து வியாபித்து வரும் துறையாக அரசறிவியலில் உள்ளது. உலக நாடுகளின் அரசியலையும் வளர்ச்சியடைந்துவரும் நாடுகளின் அரசியல்
132
நடராஜ தரிசனம்

(முறைகளை)யும் அறிந்து கொள்வதற்கு ஒப்பீட்டு அணுகுமுறையானது ஒரு பயனுள்ள முறையாகக் கருதப்படுகின்றது. அரிஸ்ரோட்டில் காலம் முதல் - அண்மைக்காலம் வரை கடைபிடிக்கப்பட்டு வந்த மரபுரீதியான அணுகு முறையானது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் தன்மை உடையதாகவே, தெளிவான ஆய்வு ரீதியான முறைகளைக் கொண்டதாக இல்லாமல் அடிப்படையில் ஒரு விபரிப்புத்தன்மை உடையதாகவே விளங்கியது. அது கோட்பாடுகளை அபிவிருத்தி செய்வதாக குறிப்பிட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு கருது கோள்களை (Concepts) பரீட்சிப்பதாக அமையவில்லை. மாறாக வல்லரசு நாடுகளின் அரசியல் முறைகளையும் அரசாங்கங்களையும் பற்றி விவரணம் செய்வதாக மட்டுமே கட்டுண்டிருந்தது. ஆனால் நடத்தை வாத அரசியல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஒப்பீட்டாய்வு ஒப்பீட்டரசியலில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. மரபுரீதியான அணுகுமுறைகளின் குறைபாடுகளை அறிந்து கொண்டமையின் விளைவாக அண்மைக்காலத்தில் ஒரு ஒழுங்குமுறையான ஆய்வு முறைக்கு ஒப்பீட்டரசியல் உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதனை இன்னும் விஞ்ஞான ரீதியானதாக்க வேண்டுமென்ற எண்ணம் வளர்கின்றது. இதனால் ஒப்பீட்டரசியலில் புதிய அணுகுமுறையானது அதிக ஆராய்ச்சி உண்மை கொண்டதாகவும், ஒழுங்குமுறையானதாகவும் காணப்படுகின்றது. இன்று மேலும் ஒழுங்குமுறையான அணுகுமுறையின் அவசியம் பற்றி அறிந்து கொண்டதன் விளைவாக - சமூக, அரசியற் கட்டமைவுகளில் அரசுக்கும் சமூகத்துக்குமிடையிலுள்ள பரஸ்பர தொடர்புகள் பற்றி அறிந்துகொள்ளும் அவசியத்தை பெறுபேறாக்கியது. இந்த இரண்டையுமிணைத்து ஒரு கணிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக பழைய விபரிப்பு முறையிலிருந்த வரைவிலக்கணங்களும், வகையீடுகளும் இல்லாமல் செய்யப் பட்டு விட்டன. மரபுரீதியாக “ஒரு அரசு என்பது குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழும் மக்கள்’ என்று விளக்கப்பட்டது. எங்கெல்லாம் ஆளுவோருக்கும் ஆளப்படுவோருக்குமிடையே ஒரு நிலையான உறவு இருந்ததோ, அங்கெல்லாம் ஒரு அரசு இருந்ததாகக் கருதப்பட்டது. இந்த வகையில் மேற் சொன்ன பிரபல்யமான வரைவிலக்கணமானது, ஏன்? எவ்வாறு? இரு அரசாங்கங்கள் வேறுபடுகின்றன? எங்கே? எதனை? நோக்குவது, என்பது பற்றி எதனையும் தெரிவிக்கவில்லை. கோட்பாடு அல்லது இலட்சியம், சமூக வெளித்தோற்றம், அரசியல் பிரச்சீனைத்தீர்வு, மேற்கொள்ளும் வழிகள் அமைப்பு என்ற வகையில் அரசாங்கம் போன்ற விளக்கங்களைப் பயன்படுத்துகின்றது. ஒற்றுமையீனங்களையும் ஒற்றுமைகளையும் விளங்கிக் கொள்ள மாணவர் களுக்கும் உதவவில்லை.
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 133

Page 79
@ O O தர்மசாஸ்திரங்கள் சி. பத்மநாதன் வரலாற்றுத்துறைப் பேராசிரியர் பேராதனைப்பல்கலைக்கழகம்
1 ஸ்மிருதி என்று சொல்லப்படும் தர்மசாஸ்திரங்கள் இந்து சமுதாயத்திலே கடந்த ஈராயிரம் வருடங்களை உள்ளடக்கிய காலப்பகுதியிற் பெருஞ்செல்வாக்கினை ஏற்படுத்தியுள்ளன. தர்ம சூத்திரங்களைப் போலன்றி அவை செய்யுள் நடையில் அமைந்தவை; ஆயினும் பொருள் மரபில் தர்மசூத்திரங்களை ஒத்துள்ளன; பொதுவான விடயங்களைப் பற்றியே அவை விவரிக்கின்றன. தர்மசாஸ்திரங்கள் அளவிலே விரிவானவை. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தர்மசூத்திரத்தை மூலமாகக் கொண்டுள்ளன என்று சில அறிஞர் கருதுவர். ஸ்மிருதிகள் சமகால வழமைகளையும் சிந்தனைகளையும் மேலதிகமாகப் பதிவு செய்கின்றன. அவற்றில் நாகரிக முன்னேற்றங்களுக்கு ஏற்பவும் அறிவியல் வளர்ச்சிகளுக்கு அமையவும் சிந்தனை வளர்ச்சியும் சமுதாய நோக்கில் நெகிழ்ச்சியும் ஏற்பட்டுள்ளன.
தர்மசாஸ்திரங்கள் காலத்தால் தர்மசூத்திரங்களுக்குப் பிற்பட்டவை. கி. மு. 600 - 200 வரையான காலத்துக்குரியவை தர்மசூத்திரங்கள். அதனை அடுத்து வந்த எட்டு நூற்றாண்டுகளில் தர்மசாத்திரங்கள் எழுதப்பட்டன. தர்மசாஸ்திரம் என்னும் வகைக்குரிய நுல்கள் பலவாகும். மனுதர்மசாஸ்திரம் அவற்றுள் மிகவும் பிரசித்தமானது. யாக்ஞவல்க்ய, நாரதர், பிருகஸ்பதி, காத்யாயனர், விஷ்ணு என்போரின் பெயர்களால் வழங்கும் நூல்கள் உள்ளன. சுக்கிரநீதி என்பதும் இந்த வகையைச் சேர்ந்த நூலாகும்.
தர்ம சாஸ்திரங்களின் காலம் பற்றி அறிஞரிடையே கருத்து வேற்றுமை உண்டு. நூலின் காலம் பற்றிய விவரங்கள் அவற்றுள் எதனிலுங் காணப்படவில்லை. அவற்றிலே காணப்படும் விவரங்கள், சிந்தனைகள், மொழிநடை, சொல்வளம் என்பனவற்றின் அடிப்படையில் மட்டுமே காலநிர்ணயஞ் செய்தல் முடியும். அது இலகுவானதன்று, குறிப்பிட்ட ஒரு நூல் இன்ன நூற்றாண்டுக்கு உரியதென்று உறுதியாகக் கூறுவதும் கஷ்டமானது. தர்மசாஸ்திரங்களின் வரலாற்றை விரிவாக ஆராய்ந்தவரான கானே அவற்றின் காலவரையறையை மேல்வருமாறு அமைத்துள்ளார் :
யக்ஞவல்க்ய ஸ்மிருதி - கி. பி. 100 - 300 நாரத ஸ்மிருதி கி. பி. 100 - 400 பிருகஸ்பதி ஸ்மிருதி- f. S. 300 - 500
134 நடராஜ தரிசனம்

காத்யாயன ஸ்மிருதி- கி. பி. 400 - 600
ஜொலி முதலான ஐரோப்பிய ஆய்வாளர் இந்நூல்கள் கி.பி. 300 - 700 ஆகிய
காலத்துக்குரியன என்று கொள்வர். 2. தர்ம சாஸ்திரங்களில் மனுஸ்மிருதி காலத்தால் மிக முற்பட்டது; மிகவும் பிரசித்தமானது; தனியான பண்புகளைக் கொண்டது. தர்ம சாஸ்திரம் என்னும் வகைக்குரிய நூல்களின் அம்சங்களை முழுமையாகப் பிரதிபலிக்கும் நூல் என்ற வகையில் அது சிறப்பிடம் பெறுகின்றது. பரதகண்டம் முழுவதிலும் அதனை ஒரு ஆதாரபூர்வமான நூலாகக் கொண்டனர். குருகுலங்களிலும், கல்லூரிகளிலும் ஆச்சிரமங்களிலும் அதனை விரும்பிக் கற்றனர்.
மனுதர்மத்தைக் கடைப்பிடிப்பது இராசதர்மம் என்ற சிந்தனை அரண்மனை அதிகாரிகளிடையிற் காணப்பட்டது. அதனை நிலை நாட்டுவதற்கே அரசர்கள் முடி சூடினார்கள் என்ற கருத்தும் முன் வைக்கப்பட்டது. சோழ மன்னரின் மெய்க்கீர்த்திகளில் மேல்வரும் தொடர்கள் உள்ளமை கவனித்தற்குரியது;
"வேதநீதியை விளக்கி மீதுயர் வீரத் தனிக்கொடி தியாகக் கொடியொடும் ஏற்பவர் வருகென்று நிற்பக் கோத்தொழில் உரிமையி னெய்தி அரைசு வீற்றிருந்து மேவரு மனுநெறி விளக்கிய. உடையார் பூரீ வீர ராசேந்திர தேவர்.”
“மனுவாறு பெருகக் கலியாறு வறப்பச் செங்கோல் திசைதொறுஞ் செல்ல வெண்குடை இருநில வளாக மெங்கனுந் தனாது
திருநிழல் வெண்ணிலா திகழ .
(முதலாம் குலோத்துங்க சோழன்)
7 “மன்னுயிர்க் கெல்லா மின்னுயிர்த் தாய்போல்
தண்ணளி பரப்பித் தனித்தனி பார்த்து மண்முழுதுங்களிப்ப மனுநெறி வளர்த்துத் தன் கோயிற் கொற்ற வாசல் புறத்து மணிநா வொடுங்க முரசுகள் முழங்க விசையமும் புகழும் மேன்மேலோங்க வாழி வாழி இம் மாநிலங் காக்க.”
(விக்கிரம சோழன்)
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 135

Page 80
இந்துக்களின் அரசியற் சிந்தனையில் அரசியல் முதலான யாவற்றுக்கும் தர்மமே ஆதாரமானது. அரசன் “தர்மத்தின் காவலன்” என்ற கோட்பாடு வேதகாலம் முதலாக வழங்கி வந்த ஒன்றாகும். தர்மத்தை நிலைநாட்டுவது அரசனுடைய கடமையாகும். தர்மத்தோடு கொண்டுள்ள தொடர்பினால் அரசன் சிறப்புகளைப் பெறுகின்றான். குடிகளைக் காப்பாற்றுவது மகாயாகத்துக்குச் சமமானதென்று ஸ்மிருதி நூல்கள் சொல்லும். அரசன் தனது கடமைகளை நிறைவேற்றுவதனால் இராச்சியத்திலே சுகபோகங்களும் வளமும் உண்டாகின்றன. ஒழுக்கம், கல்வி, நல்லோரிணக்கம், வீரம், சாதுரியம், விழிப்புணர்ச்சி முதலான இயல்புகள் பொருந்தியவனாக மன்னன் இருக்கவேண்டும் என்பதைச் ஸ்மிருதி நூல்கள் வலியுறுத்துகின்றன. மன்னன் தனது தவவலிமையால் அரசபதவியைப் பெறுகிறான் என்பார் நாரதர். ஒருவன் செய்த குற்றத்துக்குக் கார்ஷாபனம் ஒன்று தண்டமாக விதிக்கப்பட்டால் அதே குற்றத்தைப் புரிகின்ற அரசனுக்கு 1,000 கார்ஷாபனம் அபராதமாகும் என்பதே விதி என்பார் மனு.
தர்மசாஸ்திரங்கள் விவரிக்கின்ற அரசியல், முடியாட்சி முறையினை அடிப்படையாகக் கொண்டது. மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்பதே அவற்றின் ஒருமித்த கருத்தாகும். அரசன் இல்லாதவிடத்து அராஜகம் தோன்றும். சமுத்திரத்திலே சிறுமீன்களைப் பெருமீன்கள் விழுங்குவதைப் போலவும் வனத்திலே மிருதுவான மிருகங்களைக் கொடிய விலங்குகள் கொன்று தின்னுவதைப் போலவும் மனிதர்களிடையே வலியார் மெலியாரைத் துன்புறுத்துவர். எனவே அராஜகம் என்பது தவிர்க்கப்பட வேண்டியது. அரசனை அபிஷேகஞ் செய்து அவனுக்குக் கட்டுப்படுவதன் மூலமே அராஜகத்தைத் தவிர்த்துக் கொள்ளலாம் என்பது மனுமுதலியோரின் கருத்தாகும்.
அரசன் இந்திரன், வருணன், அக்கினி, யாமன் முதலிய தேவர்களின் அம்சங்கள் பொருந்தியவனென்று மனு முதலியோர் சொல்வர். அவனுடைய மகிமையினையும் குடிகள் அரசனுக்கு அடங்கியிருக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தும் நோக்குடன் அரசனுடைய தெய்வாம்சங்கள் பற்றிய கருத்துக்களைக் குறிப்பிட்டனர்.
தர்மசாஸ்திரங்கள் அரசனுடைய இயல்புகளையும் கடமைகளையும் தேவர்களுக்குரியவற்றோடு ஒப்பிடுகின்றன. ஆயினும் இராசனை ஈஸ்வரனாகக் கொள்ளும் சிந்தனை தர்மசாஸ்திரங்களுக்கு அன்னியமானது. அவை உருவகப்படுத்தும் அரசன் தர்மத்தின் காவலன்; தர்மத்தினாற் கட்டுப்பட்டவன். தர்மத்திலிருந்து விலகிச் செல்லுமிடத்து அவன் தண்டனைக்குரியவனாகி விடுகின்றான்; அவனையும் சுற்றத்தவரையும் இராச்சியத்தவரையும் தர்மம் அழித்துவிடும். இந்தக் கருத்தினையே
138 நடராஜ தரிசனம்
 

அரைசியல் பிழைத்தோர்க்கு அறங் கூற்றாவதும் என்று இளங்கோ சிலப்பதிகாரத்தில் மிக அழுத்தமாகக் கூறுகின்றார்.
அரசனைப் பற்றி மனு கூறுவன கெளடில்யரின் கருத்துகளை ஒத்தனவாகும். அவன் வேதம், பொருளியல், தத்துவம் ஆகியவற்றைத் துறை போகக் கற்றிருத்தல் வேண்டும். கற்ற கல்விக்கு தக்க ஒழுக்கமுடையனாக விளங்க வேண்டும். ஜம்புலன்களையும் கட்டுப்படுத்த வல்ல ஒருவனால் மட்டுமே குடிகளின் மீது அதிகாரஞ் செலுத்த முடியும். அவன் தனது கடமைகள் தொடர்பாக இரவு பகலாக விழிப்புடனிருந்து கருமங்களைக் கவனித்தல் வேண்டும். இச்சை, பேராசை, கோபம் என்பவற்றால் ஏற்படும் தீய பழக்கங்களை அரசன் தவிர்த்துக்கொள்ள வேண்டும். அவன் வேளாண்மையினை விருத்தி செய்யவேண்டும்; போக்குவரத்துப் பாதைகளை அமைக்க வேண்டும்; காடுகளை அழித்து நாடுகளை உருவாக்க வேண்டும்; சுரங்கங்களை நன்கு பயன் கொள்ளவேண்டும்; குடியில்லா நிலங்களிலே குடியிருப்புகளை ஏற்படுத்த வேண்டும்; கொத்தளங்களையும் பாலங்களையும் அமைத்தல் வேண்டும்; யானைகளைப் பிடித்துப் பழக்குதல் வேண்டும். அரசன் தனது கடமைகளை இடைவிடாது செய்யவேண்டும்.
நாள்தோறும் அரசன் செய்யவேண்டிய கருமங்களைப் பற்றியும் மனு முதலியோர் குறிப்பிடுகின்றனர். அவன் அதிகாலையில் எழுந்து வழிபாடுகளைச் செய்யவேண்டும்; பிராமணரைத் தரிசிக்க வேண்டும். அதன் பின் சபாமண்டபத்திலிருந்து தன்னைப் பார்க்க வருவோரைக் காணவேண்டும். அதன் பின்பு அவன் அமைச்சர்களோடு ஆலோசனை நடத்தவேண்டும். ஏழு அல்லது எட்டு அமைச்சர்களை அரசன் நியமிக்க வேண்டுமென்று மனு சொல்வார். அவர்கள் அரசபதவிகளைப் பெற்றிருந்தவர்களின் பரம்பரையினராதல் வேண்டும்; அவர்கள் வீரவான்களாயும் படைக்கலப் பயிற்சி பெற்றோராயும் இருத்தல் வேண்டும்; அரசனுக்கு விசுவாசமான சான்றோர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாய் இருத்தல் வேண்டும். அரசன் அமைச்சர்களில் ஒவ்வொருவரோடும் தனித்தனியாக ஆலோசனை நடத்தவேண்டும். அதன் பின்பு அவர்கள் எல்லோரையும் ஒன்றாகக் கூட்டி ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். மன்னனொருவனாலே தனியாக அரசாட்சி செய்யமுடியாது என்பதால் அரசன் தனக்கு உதவியாக அமைச்சர்களையும் அதிகாரிகளையும் அலுவலர்களையும் நியமிக்க வேண்டும் என்பது எல்லோரதும் கருத்தாகும். அரசன் அமைச்சர்களை நியமிப்பதோடு மந்திரிபரிஷத் என்னும் அமைச்சரவையினையும் உருவாக்க வேண்டும் என்பார் கெளடில்யர். நிர்வாகம்
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 139

Page 81
தொடர்பான நடவடிக்கைகளும் மந்திராலோசனையின் பின் நடைபெறவேண்டும் என்பது அவரின் கோட்பாடாகும்.
அரசன் ஆலோசனை பெறுமிடத்து, அமைச்சர்கள் ஒவ்வொருவரையுந் தனித்தனியாகச் சந்தித்த பின்பே அவர்கள் அனைவரோடும் கூட்டாக ஆலோசிக்க வேண்டும் என்பது அவரின் கருத்தாகும். அமைச்சர்களில் ஒருவரை அரசன் பிரதான அமைச்சராக நியமித்தல் வேண்டும்.
விவசாயம், நெசவுத்தொழில், மேச்சல் நிலங்கள், சுரங்கங்கள், வாணிபம், வரிகள், இராணுவம், வனங்கள், அளவைக் கருவிகள், ஆவணங்கள், பண்டகசாலை, கணக்குப் பரிசோதனை முதலிய துறைகள் ஒவ்வொன்றுக்கும் பொறுப்பாக அதிகாரிகளையும் அத்தியகூஷர்களையும் அரசன் நியமிக்கவேண்டும். பிரதேச அடிப்படையிலும் பல்வேறு மட்டங்களிலுள்ள அலுவலாளரை அரசன் நியமிக்கவேண்டும். கிராமங்கள் ஒவ்வொன்றுக்கும் பொறுப்பாகக் கிராமிக என்னும் பதவியாளரை அரசன் நியமிக்க வேண்டுமென்று மனு கூறுவார்.
புரவலன் என்ற காரணத்தால் அரசன் குடிகளிடமிருந்து இறை கடமைகளைக் கொள்வதற்கு உரிமையுடையவன் என்பதில் கெளடில்யருக்கும் தர்ம சாஸ்திரகாரருக்கும் இடையிற் கருத்தொற்றுமை உண்டு. 'நிலம், அதிலுள்ள காடுகளை வெட்டிச் செய்கை பண்ணுபவனுக்கு உரியதாகும் ; வனவிலங்குகள் அவற்றை வேட்டையாடுவோருக்கு உரியனவாகும்” என்பது உடைமை பற்றிய மனுவின் கருத்தாகும். முறை செய்து காப்பாற்றும் மன்னனே குடிகளிடமிருந்து இறைகொள்வதற்கு உரிமையுடையன். காவலனுக்குரிய கடமைகளை அவன் செய்யாதவிடத்து அந்த உரிமையை அரசன் இழந்துவிடுவான்; குடிகளின் பழிகள் யாவும் ஒன்று திரண்டு அவனைச் சூழ்ந்துவிடும். “கன்று, தேன்வண்டு, ஒட்டுண்ணி ஆகியன சிறிதளவாகத் தமக்கு வேண்டிய ஊணை உறிஞ்சிக் கொள்வது போல அரசன் ஆண்டுதோறும் குடிகளிடமிருந்து அளவளவாக வரிகளைப் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும்” என்று மனுதர்ம சாஸ்திரம் கூறும்.
நிலவரி மொத்த விளைவில் ஆறிலொன்றாகவோ, எட்டிலொன்றாகவோ, நான்கிலொன்றாகவோ சூழ்நிலைக்கேற்ப அமைதல் கூடும். மந்தைகளிலும் தங்கத்திலும் இரண்டு வீதமானவை அரசனுக்குரியவை என்பது மனுவின் கருத்து. மரங்கள், மாமிசம், வெண்ணெய், நெய், தேன், வாசனைப் பொருட்கள், மருந்து மூலிகைகள், பிரப்பம் பொருட்கள், தோல்கள், மட்பாண்டங்கள், உலோகப் பொருட்கள் முதலியவற்றின் பெறுமதியில் ஆறிலொன்றினை அரசன் வரியாகக் கொள்ளலாம்.
140 நடராஜ தரிசனம்

வணிகர்மீது விதிக்கப்படும் வரிகளைப் பொறுத்தவரையில் அவற்றின் கொள்விலை, விற்பனவு விலை, போக்குவரத்து வசதிகள், சுங்கத் தீர்வைகள், தொழில் காரணமாக அவர்களுக்கு ஏற்படும் மற்றுஞ் செலவுகள் என்பவற்றைக் கருத்திற் கொண்டே அவற்றை நிர்ணயிக்க வேண்டும் என்பது மனுவின் கோட்பாடாகும். பெறுமதியின் ஐந்து வீதத்தை வரியாகக் கொள்ளலாம் என்று சிலவிடங்களில் அவர் கூறுவார். போக்குவரத்துத் தொடர்பான தொழில்களில் ஈடுபடுவோர் எல்லோரும் ஒரு குறிப்பிட்டளவு வரியினை அது சொற்பமாயினும், அரசனுக்குச் செலுத்தவேண்டும். வரிசெலுத்தாதவர்களின் சொத்துகள் யாவும் பறிமுதலாகும். சுங்கவரித் தலங்களில் ஏமாற்றுவித்தைகளில் யாராவது ஈடுபட்டால் அவர்கள் இறுக்க வேண்டிய தொகையின் எட்டுமடங்கு முதல் அபராதமாகும். கூலிக்கு வேலை செய்வோர் அனைவரும் மாதமொன்றுக்கு ஒருநாள் என்றபடியாக ஒவ்வொரு வருடமும் 12 நாட்களுக்கு அரசனுக்கு ஊழியஞ் செய்தல் வேண்டும்.
காணாமற்போய்விட்ட பெறுமதிமிக்க பொருள்கள் கண்டெடுக்கப்படுமிடத்து அதில் ஆறிலொன்றோ, பத்திலொன்றோ, பன்னிரண்டிலொன்றோ அரசனுக்கு உரியதென்று கொள்ளப்படும். அது தற்காலிகமாக அதிகாரிகளின் பொறுப்பில் வைக்கப்படும். நிலத்திலுள்ள புதையல்களில் அரைப்பங்கு அரசனுக்குரியது. அரசன் பூபதி என்ற காரணத்தால் நிலத்தின் கீழிருந்து பெறப்படும் கனிவளங்களில் அரைவாசியும் அவனது உடைமையாகும். பாதை படவுகளிற் கொண்டு செல்லப்படும் பொருள்கள் மீதும் சொற்பமான வரிகள் கொள்ளப்பட்டன. “பாதை' ஒன்றில் ஏற்றிச் செல்லப்படும் வண்டி ஒன்றுக்கு ஒரு பணமும் ஆட்சுமை ஒன்றினுக்கு அரைப்பணமும் பொதிகளை ஏற்றிச் செல்லும் வண்டிக்கு அவற்றின் பெறுமதிக்கேற்பவும் வரிகொள்ள வேண்டும் என்பது மனுவின் கூற்றாகும்.
பிற்காலத்து நூலான பிருகத் பராசர ஸ்மிருதியிலே பாஷாண்டர்கள், சூதாட்டக்காரர் பரத்தையர் என்போரின் பொருளை அரசன் அபகரித்துக் கொள்ளலாம் என்று சொல்லப்படுகின்றது. ஆனால் இத்தகைய சிந்தனை நடைமுறைச் சாத்தியமற்றது என்பதே வரலாறாகும். பிராமணர்கள் தங்கள் கடமைகளின் மூலமாகப் பல நன்மைகள் செய்வதால் அவர்களுக்கு வரிவிலக்குண்டு என்கின்றது விஷ்ணு ஸ்மிருதி. எனினும் பிரம்மதேயங்கள் மூலம் மன்னர் வரிகளைச் சேர்த்தமை பற்றிப் பல நூற்றுக்கணக்கான ஆவணங்களின் சான்றுண்டு. நிலவரி ஆறிலொன்று என்பதும் வாணிபவரி பத்திலொன்று என்பதும் அந்நூலாசிரியரின் கோட்பாடாகும். அதுவே பொதுவழமையுமாகும். பிறதேசங்களில் வாணிபம் செய்வோர் ஐந்து வீதம் வரியாகக் கொடுக்க வேண்டுமென்று அவர் கொள்வார். இடையர்,
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 141

Page 82
பொற்கொல்லர், நெசவாளர் என்போர் இரண்டு வீதம் வரி செலுத்தவேண்டும் என்றும் அவர் சொல்வார். மேலும் அவரின் கருத்துப்படி கிழங்குவகைகள், கனி வர்க்கங்கள், திராவகங்கள், மருந்து மூலிகைகள், வாசனைச் சரக்குகள், மரம், தோற்பொருட்கள், மட்பாண்டங்கள் என்பவற்றின் மீது 16 2/3ரூ வரி கொள்ளப்படும். ஊழியச்சேவை மாதமொன்றுக்கு இரு நாட்கள் என்பார் அவர். ஆயினும் ஊழியம் மாதமொன்றுக்கு ஒருநாள் என்பதே பொதுவழமை. சட்டமும் நீதிபரிபாலனமும்
இந்து சமுதாயத்தின் நீதிமுறையினை விவரமாக விளக்கும் மரபொன்று மனுஸ்மிருதியில் ஆரம்பமாகி அதற்குப் பிந்திய தர்மசாஸ்திரங்களிற் பெரு வளர்ச்சி பெற்றது. யக்ஞயவல்க்ய(ர்), நாரத(ர்), பிருகஸ்பதி என்போரின் பெயர்களால் வழங்கும் நூல்கள் இந்த வகையில் அதிக சிறப்புடையவை. சட்டம் தொடர்பான அம்சங்களைப் பற்றி அர்த்தசாஸ்திரத்திலும் சில குறிப்புகள் உள்ளன.
தர்மம் (மறைநூல் வழக்கு), வியவகாரம்) (ஒப்பந்தம்), சாரித்திரம் (மேலோர் வழக்கு), ராஜசாசனம் (அரசரின் கட்டளைகள்) என்னும் நான்கும் சட்டத்திற்கு மூலமானவை; இவற்றுள் முன்னைய ஒவ்வொன்றும் அதன் பின்னையதைக் காட்டிலும் வலியுடையது என்பது தர்மசாஸ்திரங்களின் பொதுவான கோட்பாடாகும். வைதீக மரபிலுள்ள இந்தக் கோட்பாடு கெளடில்யரால் மறுக்கப்பட்டது. சட்டத்திற்கு மூலமான நான்கிலும் பின்னைய ஒவ்வொன்றும் அதன் முன்னதைக் காட்டிலும் வலிகொண்டது என்பதே அவரின் உறுதியான கருத்தாகும். அந்த வகையில் ராஜசாசனம் மற்றைய எல்லாவற்றிலும் வலுவானது; அதிகாரபூர்வமானது. கெளடில்யரின் சிந்தனை, மரபு பிறழ்ந்தது; புதுமையானது; எல்லா அதிகாரங்களும் அரசருக்குரியவை என்ற அரசியற் கோட்பாட்டிற்கு இசைவானது. சட்டம் தொடர்பாகச் சாஸ்திரம், தர்மநியாயம் என்பவற்றுக்கிடையில் முரண்பாடு ஏற்படுமிடத்து தர்மநியாயமே ஆதாரபூர்வமானதென்று கொள்ள வேண்டும் என்பார் கெளடில்யர். இது தர்மசாஸ்திர மரபிற்கு ஒவ்வாத வொன்று. வேதசாஸ்திரங்கள் வழியான மரபுகள் அரசனது தீர்மானங்களைக் காட்டிலும் பிரதானமானவை என்பது தர்மசாஸ்திரங்களின் பொதுவான கருத்தாகும்.
வழமையாகிய சட்டங்கள், சாஸ்திரங்களிலும் எழுத்து வடிவம் பெறாத மரபுகளிலும் அடங்கியுள்ளன. அவை தேவர்களின் நியதிகளையும் முன்னோர்களின் அறிவு, அனுபவங்களையும் ஆதாரமாகக் கொண்டவை. சாஸ்திரங்கள் வழியாகவும் மறைநூல்கள் மூலமாகவும் தலைமுறை தலைமுறையாகச் செவிவழியாகச் சமுதாயப் பிரிவுகளினாற் பேணப்பட்டு வந்த மரபுகளும் சட்டத்திற்கு மூலமானவை. அரசனும் அரசின் எல்லாத்
142 நடராஜ தரிசனம்

துறைகளைச் சேர்ந்தவர்களும் அவற்றை அனுசரிக்க வேண்டும். அவற்றால் அவர்கள் அனைவரும் கட்டுப்படுகின்றனர் என்பது தர்மசாஸ்திரங்கள் எல்லாவற்றுக்கும் பொதுவான சிந்தனையாகும். காலதேச வர்த்தமானங்களுக்கு அமைவாக அவற்றைப் பயன்படுத்துவதற்கும் தெளிவுபடுத்திக் கொள்வதற்கும் தர்மசாஸ்திரங்கள் பலரால் எழுதப்பட்டன. அவற்றுக்கு உரைகளும் விருத்தி உரைகளும் எழுதப்பட்டன. அவை அனைத்தும் காலப்போக்கிலே பலவாகிப் பெருகி தர்மசாஸ்திரம் என்னும் பொதுப் பெயரால் வழங்கிவந்துள்ளன.
நீதிமன்றங்கள்
பத்து அல்லது மூன்று உறுப்பினர்களைக் கொண்ட பரிஷத் என்னும் சபை
நீதிபரிபாலனத்துக்குப் பொறுப்பாக அமைதல் வேண்டும் என்பது மனுவின்
கருத்தாகும். சபை மூவரைக் கொண்டதாய் இருப்பின் அவர்களில்
ஒவ்வொருவரும் இருக்கு, யசுர், சாமம் ஆகிய வேதங்கள் ஒவ்வொன்றிலே
பாண்டியத்தியம் பெற்றவர்களாய் இருத்தல் வேண்டும். பத்துப் பேரைக்
கொண்ட சபையில் மேலதிகமாக நியாயம், மீமாம்சை, நிருக்தம் என்பவற்றில்
ஒவ்வொன்றிலே புலமை பெற்றவர்களையும் தர்மசாஸ்திரங்களைக் கிரமமாக
ஒதுவானொருவனையும் முதல் மூன்று வர்ணங்களைச் சேர்ந்த
ஒவ்வொருவரையும் உறுப்பினர்களாகக் கொண்டிருத்தல் வேண்டும்.
வழக்கு வகைகள்
வழக்குகளுக்கு ஏதுவான காரணங்களை முதன்முதலாக மனுவே
வகைப்படுத்திக் கூறியுள்ளார். அவை மேல்வருவனவாகும்.
(1) கடன் கொடாமை (2) முதலீடு, உத்தரவாதம்,
(3) உரிமையில்லாதனவற்றை விற்றல்
(4) பங்காளிகளின் விவகாரங்கள்
(5) நன்கொடைகளை மீளப்பெறுதல்
(6) கூலி கொடாமை
(7) ஒப்பந்தங்களை நிறைவேற்றாமை
(8) கொள்வனவு, விற்பனவுகளைத் தடை செய்தல்
(9) பண்ணையார் - பணிமக்கள் தகராறுகள்,
(10) எல்லைத் தகராறுகள்
(1) அடித்துத் துன்புறுத்துதல்
(12) மானபங்கம் (13) களவு (14) கொள்ளை, வன்செயல்
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 143

Page 83
(15) கற்பழித்தல், பிறன்மனையாளைக் கெடுத்தல் (16) கணவன் - மனைவி விவகாரங்கள் (17) பாகப்பிரிவினை
(18) சூதாட்டம்.
வன்செயல்களும் தண்டனைகளும்
குற்றங்களுக்கு ஏற்றவாறு உறுத்துதல், கண்டனம், அபராதம், உடல் வருத்துதல் என்ற வகையிலே தண்டனைகள் அமையவேண்டும் என்பார் மனு. சில பெருங்குற்றங்களுக்குத் தேசப்பிரஷ்டமும் தண்டனையாகும். 'குற்றத்தின் இயல்பு அதற்கான நோக்கம், இடம், காலம் என்பவற்றையும் குற்றவாளி தண்டனையைத் தாங்கிக் கொள்ளும் சக்தியையும் தீர்க்கமாக ஆராய்ந்து அறிந்த பின்பு, குற்றவாளிகளுக்கு வேண்டிய தண்டனையை அரசன் வழங்கவேண்டும்” “நீதியில்லாத தண்டனை வழங்குவதன் மூலம் அரசனுடைய பேரும் புகழும் மக்களிடையே மங்கிவிடும். மறுமையில் வானுலகத்து வாழ்க்கையினையும் இழக்க நேரிடும். ஆதலால் அரசன் கவனமாகத் தண்டனை வழங்க வேண்டும்.”
'குற்றம் புரியாதவர்களைத் தண்டிக்குமிடத்தும் குற்றம் புரிந்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்காதவிடத்தும் இவ்விதமான கெடுதிகள் ஏற்படும்” என்பது மனுவின் கூற்றாகும். பிராமணர், பெண்கள், பாலகர்கள் ஆகியோரைக் கொலை செய்வோருக்கும் அமைச்சர்களின் விசுவாசத்தைக் கெடுக்கும் முயற்சிகளில் ஈடுபடுவோருக்கும் இராசதுரோகம், பொய்ப்பிரகடனங்கள் ஆகியவற்றைச் செய்வோருக்கும் மரண தண்டனை உரியதாகுமென்று மனுதர்மசாஸ்திரங் கூறுகின்றது. கொள்ளையிடுவோர், காசு பணங்களைப் பறிமுதல் செய்வோர், பொது நலனுக்கு விரோதஞ் செய்வோர், பிராமணர்களுடைய பசுக்களைக் கவர்ந்து செல்வோர் முதலானோருக்கு உடலுறுப்புகளைச் சேதம் செய்யவேண்டும். ஒரு நகரத்தினுடைய சுவர்களை இடித்தல், அதன் அகழிகளைத் தூர்த்தல் போன்ற சமுதாயத்தின் பாதுகாப்பிற்கு விரோதமான செயல்களில் ஈடுபடுவோரை நாடு கடத்தல் வேண்டும். சூதாடுவோர், வேஷதாரிகள், கொடுமை புரிவோர், விலக்கப்பட்ட தொழில்களில் ஈடுபடுவோர், மதுபானங்களை விற்பனை செய்வோர் முதலியோருக்கும் அத்தகைய தண்டனை வழங்க வேண்டுமென்று சொல்லப்படுகின்றது. பாலங்களை உடைத்தல், கோயில், அரண்மனை ஆகியவற்றின் கொடிகளைச் சேதப்படுத்துதல், வழிபாட்டிற்குரிய படிமங்களை உடைத்தல், கிணற்றிலுள்ள கயிறு, நீரேந்து கலம் ஆகியவற்றைக் களவாடல், தண்ணிர்ப் பந்தலைச் சேதப்படுத்துதல் முதலிய குற்றங்களைப் புரிவோருக்கு
144 நடராஜ தரிசனம்
 

அபராதம் விதிக்கப்படுவதோடு அவர்களிடமிருந்து நஷ்ட ஈடும் கொள்ளப்பட வேண்டும்.
சில குறிப்பிட்ட கொடுமையான குற்றங்கள் புரிவோருக்கு மரண தண்டனை வழங்கவேண்டுமென்று கெளடில்யரும் கொள்வார். தகராறு காரணமாகப் பிறரைக் கொலை செய்பவரைச் சித்திரவதை செய்து கொல்ல வேண்டும் என்றும் அவர் சொல்வார். பொய் வதந்திகளைப் பரப்புதல், வீடுகளை உடைத்தல், களவு, அரண்மனைக்குரிய யானைகள், குதிரைகள், வண்டிகள் ஆகியவற்றைச் சேதப்படுத்துவோருக்கும் மரணதண்டனை உரியதென்று அர்த்த சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்குச் சதிசெய்தல் அரசனுடைய அந்தப்புரத்திலே பலோற்காரமாக நுழைதல், அரசனுக்கெதிராகக் கிளர்ச்சி புரியுமாறு வனவாசிகளைத் தூண்டிவிடுதல், கோட்டைகளிலும் எல்லைப் புறங்களிலும் இராணுவத்திலும் துரோகச் செயல்களைப் புரியுமாறு தூண்டுதல் ஆகியவற்றில் ஈடுபடுவோரைத் தீயிட்டுக் கொல்ல வேண்டும் என்பார் மனு, கணவன், குரு, பெற்ற பிள்ளை ஆகியோரைக் கொல்லுமிடத்தும் பிறரது உடைமைகளுக்கு தீவைக்குமிடத்தும் அவற்றில் ஈடுபடுவோரை பெண்களாயினும் சித்திரவதைப்படுத்திக் கொல்லவேண்டும் என்பது கெளடில்யரின் கருத்தாகும்.
குடியியல் வழக்குகள் தொடர்பான சட்டங்கள்
இவ்விடயந் தொடர்பான சட்டங்கள் மனுமுதலியோரின் நூல்களிலே மிக விரிவாக விளக்கப்படுகின்றன. ஆயினும், இங்கு முக்கியமான ஒரு சில அம்சங்களை மட்டுமே குறிப்பிட முடியும். வட்டி வீதம் பற்றிப் பொதுவான விதிகள் சொல்லப்படவில்லை. மாதம் ஒன்றுக்கு 2 முதல் 5 வீதம் வட்டியினைப் பெறலாம் என்று சொல்லப்படுகின்றது. ஆயினும், நடைமுறையில் ஆண்டொன்றுக்கு 12 வீதம் என்பதே வழக்கமாகும் என்பதைப் பிற்கால ஸ்மிருதிகள் மூலம் அறிய முடிகின்றது. சொத்துக்களை ஒருவர் பத்து வருடங்களுக்கு மேலாக ஆண்டனுபவிக்குமிடத்து அவை அவரின் உடைமையாகிவிடும். ஆயினும் பாலர்களின் உடைமைகள், முதலீடுகள், பெண்களின் உடைமைகள், எல்லைப்புறங்கள், அரசனுக்குரிய சொத்துக்கள், வேதம் ஒதுகின்ற பிராமணரின் உடைமைகள் என்பவை இந்த விதிக்குப் புறநடையானவை. மதுபோதையி லுள்ளவர், புத்தி சுவாதீனமற்றவர், பாலர், மிகுந்த வயோதிபர், பிறரிலே தங்கியிருப்பவர் என்போர் செய்யும் ஒப்பந்தங்கள் எல்லாம் செல்லுபடியற்றனவாகும். சட்டத்திற்கு முரணான ஒப்பந்தங்களும் சான்றோர் வழக்கிற்கு ஒவ்வாத உடன்படிக்கைகளும் செல்லுபடியற்றன
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 145

Page 84
வாகவே கொள்ளப்படும். தாயபாகம், பெற்றோர்கள் இறந்த பின்பு நடைபெறவேண்டிய ஒன்றாகும். பாகப்பிரிவினையில் மூத்த மகனுக்கு முன்னுரிமையுண்டு. அத்துடன் விவாகஞ் செய்யாத சகோதரிகளுக்கும் பெற்றோர்களின் உடைமைகளிற் பங்குண்டு. பாகப் பிரிவினை பற்றி தர்மசாஸ்திர நூல்கள் மிகவிரிவாகக் குறிப்பிடுகின்றன. அவற்றுட் காலத்தாற் பிற்பட்டனவும் உரை நூல்களுமே தேசவழமைகளை ஒரளவிற்கு உள்ளவாறு பதிவு செய்கின்றன.
நீதி நிர்வாகம்
மக்களைக் காப்பாற்றுவது அரசாங்கத்தினுடைய பிரதானமான கடமையென்பதுவும் நீதி பரிபாலனம் அதிலே இணைபிரியாத அம்சம் என்பதுவும் இந்துக்களின் மரபுவழியான அரசியற் சிந்தனையாகும். அரசனது தண்டனை வழங்கும் அதிகாரத்தைத் தண்டம் என்று மனு கொள்கின்றார். அதனைக் கருமையான வண்ணமுடையதென்றும் சிவந்த கண்களையுடையதென்றும் பயங்கரமானதென்றும் குற்றம் புரிவோர்க்குத் தண்டனை வழங்குவதென்றும் உருவகிக்கின்றார். பிரமனின் மகிமையின் பிரதிபலனான தண்டமே உண்மையில் ஆட்சி புரிகின்றதென்று அவர் கொள்வார். தண்டனை குற்றத்திற்கேற்ப வழங்கப்படுவது, அது குற்றச் செயல்களைத் தடுக்கும் ஆற்றல் பொருந்தியது என்ற சிந்தனைகள் மனுஸ்மிருதியில் அடங்கியுள்ளன. தண்டனை நீதியானதாக அமைய வேண்டும். அது எல்லோருக்கும் ஒத்த வகையில் வழங்கப்பட வேண்டும். மனு, மேல் வருமாறு சொல்வார்: “எங்கு நீதி முறை அநீதியினாற் பாதிக்கப்படுகின்றதோ, எங்கு நீதிபதிகள் நீதி முறைப்படி தண்டனை வழங்காதிருக்கின்றார்களோ அங்கு அவர்கள் அநீதியின் பானங்களினாலே அழிக்கப்படுகின்றனர்.” நீதி பரிபாலனம் அநீதியினாலும் பொய்யான வாதங்களினாலும் அழிவுறுமிடத்து நீதிபதிகள் பராமுகமாக இருப்பின் அவர்களும் அழிவார்கள். நீதி பரிபாலனம் முறைகேடாகின்றபொழுது அதனால் அது அழியும். நீதி நிலை நிறுத்தப்படுமிடத்து அது எல்லாவற்றையும் நிலை பெறச் செய்யும். “நீதிக்கு விரோதமான செயல்கள் எம்மை அழித்துவிடும் என்பதால் நீதிக்கு மாறானவற்றைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.”
நீதிமன்றிலே அரசன் தலைவனாக இருக்கவேண்டுமென்பது மனுவின் கருத்து. அவன் பிராமணர்களதும் அனுபவமுடைய அத்யகூஷர்களதும் உதவியோடு நீதி பரிபாலனஞ் செய்ய வேண்டும். அரசனில்லாதவிடத்து பிராமணரொருவரை நீதிமன்றத்தின் தலைவராக அரசன் நியமிக்க
146 ܓ நடராஜ தரிசனம்

வேண்டும். வேதம் வல்ல பிராமணரான அத்யகூஷிர் மூவரை துணையாளராக அவன் நியமிக்க வேண்டும். வயல்நிலங்கள், கிராமங்கள் போன்றவற்றின் எல்லைகள் தொடர்பான தகராறுகளில் சமூக, தேச வழமைகளின்படி விசாரணைகளை நடத்தித் தீர்ப்புகள் வழங்கவேண்டும். குளம், கிணறு, நீரூற்று, தேவாலயம் போன்றவற்றைப் பற்றிய பரிசோதனைகள் மூலம் தீர்க்கமான சான்றுகள் கிடைக்காதவிடத்து சாட்சியங்களை விசாரணை பண்ணித் தீர்ப்பளிக்க வேண்டும். இத்தகைய தகராறுகள் கிராமவாசிகளின் முன்னிலையிலும் தகராறு கொள்வோரின் முன்னிலையிலும் விசாரிக்கப்பட வேண்டும். ஏகமனதான முடிவின் பிரகாரம் அரசன் எல்லையை வரையறை செய்ய வேண்டும்.
as 1 á
குற்றவாளி ஒருவன் தன்மீது சுமத்தப்பட்ட குற்றத்தை ஒப்புக் கொள்ளாதவிடத்து வழக்காளி தனது வாதங்களை நிரூபிக்குமுகமாகச் சாட்சியங்களை அழைக்கவேண்டும். அல்லது வேறு சான்றாதாரங்கள் மூலம் அவற்றை நிரூபிக்க வேண்டும். சாதிபேதம் இன்றி எவரையுஞ் சாட்சியாக அழைத்துக் கொள்ளலாம். ஆனால், அத்தகையவர் பேராசையற்றவராகவும் நம்பிக்கையானவராகவும் தனது கடமைகளை நன்கு உணர்ந்தவராகவும் இருத்தல வேண்டும். வழக்கிலே ஈடுபாடு கொண்டவர்கள், சினேகிதர்கள், சகபாடிகள், பகைவர்கள், பொய், களவு முதலிய குற்றங்களுக்குத் தண்டனை பெற்றவர்கள் போன்றோரைச் சாட்சிகளாக அழைக்கக் கூடாது.
பெண்கள், பிராமணர், ஷத்திரியர், வைசிகர், சூத்திரர், மிலேச்சர் ஆகிய வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் தத்தம் வகுப்பினரின் சார்பில் சாட்சி வழங்கலாம். ஆயினும், கொலை, வீட்டிலே நடந்த குற்றங்கள், காட்டிலே நடந்த சம்பவங்கள் என்பன தொடர்பான விடயங்களை நேரிற்கண்டு அறிந்தவர்கள் எவரையுஞ் சாட்சியாக அழைக்கலாம். தகைமை சான்ற சாட்சிகளில்லாதவிடத்துப் பாலர், சீடர், உறவினர், அடிமைகள், பணிமக்கள், பெண்கள் ஆகியோரையும் சாட்சிக்கு அழைக்கலாம். வன்செயல், பெண்களைப் பலாத்காரமாகப் புணர்தல், அவமானம், அடித்துத் துன்புறுத்தல் போன்ற பாரிய குற்றங்களைப் பொறுத்தவரையிற் கிடைக்கின்ற சாட்சியங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். சாட்சியங்களைத் தீர விசாரித்த பின்பு முடிவுகளை எடுக்க வேண்டும்.
யக்ஞவல்க்ய ஸ்மிருதி நீதிமன்றங்கள்
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 147

Page 85
சட்டம், நீதிபரிபாலனம் ஆகியவற்றைப் பொறுத்த வரையில் யக்ஞவல்க்யர், பிருஹஸ்பதி, நாரதர் என்போரின் பெயர்களால் வழங்கும் நூல்கள் மனுஸ்மிருதியைக் காட்டிலும் முக்கியமானவை. அந்நூல்களிலே சட்டம், நீதிபரிபாலனம் என்பன பற்றிய விவரங்களே முதன்மை பெறுகின்றன. அவர்களிற் காலத்தால் முற்பட்டவரான நாரதர் மனுஸ்மிருதியிலே காணப்படும் நீதிபற்றிய விடயங்களைச் சுருக்கமாகவும் மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையிலும் விளக்குகின்றார். அரசனது தலைமையில் இயங்கும் நீதிமன்றங்களைப் பற்றி மனுவும் யக்ஞவல்க்யரும் வழங்கும் விவரங்கள் ஒரே விதமானவை. ஆனால், அதற்குக் கீழ்நிலையிலுள்ள நீதிமன்றங்களை ஒரு படி நிலையில் யக்ஞவல்க்யர் வரிசைப்படுத்தும் முறை புதுமையானது. அவர் மேல்வருவன பற்றிச் சொல்வார்.
1) அரசன் நியமித்த உறுப்பினர்களைக் கொண்ட தர்மாசனம். 2) நாடு, நகரங்களின் சபையார், மன்றங்கள் (பூக) 3) வணிகர், தொழில் வினைஞர் போன்றோரின் கூட்டுறவு அமைப்புகள்
(ஸ்ரேனி சபைகள்) 4) குடும்பங்கள், குலங்கள் ஆகியவற்றின் சபைகள்.
வழக்கும் விசாரணைகளும்
யக்ஞவல்க்யர் விவகாரத்தின் நான்கு படி நிலைகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். வழக்குத் தாக்கல் செய்யப்படுமிடத்து பிரதிவாதிகளின் முன்னிலையிலே வழக்கு விவரங்கள் பத்திரமாக எழுதப்பட்டு ஒப்படைக்கப்பட வேண்டும். அதிலே ஆண்டு, மாதம், திகதி என்பன குறிப்பிடப்பட வேண்டும். வழக்காளி, பிரதிவாதி ஆகியோரின் பெயர்களும் அவர்களின் சமூகநிலை பற்றிய விவரங்களும் எழுதப்பட வேண்டும். அதனையடுத்து அதற்குரிய உத்தரம் வழக்காளியின் முன்னிலையிலே பத்திரத்தில் எழுதப்படல் வேண்டும். அதனைத் தொடர்ந்து வழக்காளி முன்வைக்கும் சாட்சியங்கள் ஒப்படைக்கப்பட வேண்டும். வழக்குப் பத்திரம் பற்றித் தீர்மானிப்பதற்கு முன்பு அதற்கு எதிரான குற்றச்சாட்டெதுவும் சமர்ப்பிப்பதற்கு இடமளிக்கப் படுவதில்லை. கலகம், வன்செயல் தொடர்பானவை இதற்குப் புறநீங்கலாகும். ஒருவர் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருப்பின் அது தீர்மானிக்கப்படும் வரை அவருக்கெதிராக மேலதிகமாகக் குற்றஞ் சுமத்த இயலாது. வன்செயல், களவு, சரீரத்துன்புறுத்தல், பெண்களை அவமானப்படுத்தல் என்பன தொடர்பான வழக்குப் பத்திரங்களுக்கு உடனடியாகவே உத்தரம் வழங்கல் வேண்டும். வேறு விடயங்களைப் பொறுத்த வரையிலே நீதிமன்றத்தின் எண்ணப்படி கால அவகாசம் வழங்கப்படலாம். வழக்குத் தொடர்பாக
148 நடராஜ தரிசனம்
 

வழக்காளி, குற்றவாளி ஆகியோர் தீர்ப்பளிக்கும் வரை பிணைவைத்தல் வேண்டும். வழக்கைப் பொறுத்தவரையில் வழக்குப் பத்திரமும் உத்தரமான பத்திரமும் சமர்ப்பிக்கப்பட்ட பின்பு நீதிமன்றத்திலே ஆதாரங்களை ஒப்படைக்க வேண்டும். ஆவணம், சாட்சி, ஆட்சி என்பனவற்றை ஆதாரங்களாக யக்ஞவல்க்யர் கொள்வார். கடன் சம்பந்தமான விதிகளைப் பற்றிச் சொல்லுமிடத்து ஆவணம், சாட்சி என்பன பற்றிய விவரங்களை அவர் விரிவாக விளக்குகின்றார். இருவர் செய்யும் ஒப்பந்தங்கள் அமைக்கப்பட வேண்டிய விதிகளைப் பற்றிய விவரங்களை அவர் குறிப்பிடுகின்றார்.
அவர் விளக்கும் நீதிமன்றங்களின் செயற்பாடுகள் ஸ்மிருதி நூல்களின் விதிகளை ஆதாரமாகக் கொண்டவை. மேலும் வழமை சமச்சீரான நோக்கு என்பனவும் அவருடைய கருத்தில் இடம் பெறுகின்றன. ஸ்மிருதிகளுக்கும் சமூக வழமைக்குமிடையே முரண்பாடு காணப்படுமிடத்துச் சமூக வழமைகளே ஒப்புக் கொள்ளப்பட வேண்டுமென்கிறார். தர்மசாஸ்திரம், அர்த்தசாஸ்திரம் என்பனவற்றிலுள்ள விதிகளுக்கிடையிலே முரண்பாடு காணப்படுமிடத்து தர்மசாஸ்திரங்களே பின்பற்றப்பட வேண்டியன. குடியியல் சட்டம்
உரிமைகளைப் பொறுத்தவரை உடைமையைக் காட்டிலும் மரபுவழியான உரித்துக்களே மேலானவை என்பது அவரது கருத்தாகும். முன்னோர்கள் வழியாகப் பல தலைமுறையாக உடைமை கொண்டிருந்த பொருட்கள் மீதே ஒருவர் உரிமை கொள்ள முடியுமென்று குறிப்பிடுகின்றார். ஆயினும், சிறிது காலத்திற்கேனும் உடைமை கொண்டிருக்காதவிடத்து மரபு வழியான உரிமை வலுவிழந்துவிடும் என்கிறார். எனவே, ஒருவர் தனது உடைமைகளாகக் கொண்ட பொருட்களையே உரிமைவழிப் பெற்றுக்கொள்ள முடியும். கடனாகப் பெறும் முதல், பொருட்கள் என்பவற்றின் மீது கொள்ளப்படும் வட்டி விவரங்களைத் தெளிவாக அவர் குறிப்பிடுகின்றார். அவருடைய கருத்துக்கள் மனுவின் கருத்துக்களைப் போன்றனவாகும்.
பாகப்பிரிவினை (தாயபாகம்)
பாகப்பிரிவினை தந்தையின் காலத்திலோ அவர் இறந்த பின்போ நடைபெறலாம் என்கிறார். தந்தை தனது சொத்துக்களைத் தனது புதல்வர்களுக்குச் சமபங்குகளாகப் பிரித்துக் கொடுக்கலாம். அவன் விரும்பியவிடத்து மூத்தமகனுக்குக் கூடுதலான பாகத்தைக் கொடுக்கலாம். தந்தை இறந்த பின்பு ஆண்மக்கள் சொத்துகளைப் பிரித்துச் சமபங்குகளில் எடுத்துக்கொள்வர். அவர்களில் ஒருவனுக்கு உரியளவு பங்கு தாய்க்குரியது. பெண்பிள்ளைகள் இருப்பின் அவர்களில் ஒவ்வொருவரும் ஆண்சகோதரன்
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 149

Page 86
ஒருவன் பெறும் சொத்தில் 1/4 பங்கினைப் பெற்றுக் கொள்வர். ஆண்பிள்ளைகளில்லாத இடத்து மனைவி, பெண்மக்கள், இருவரதும் பெற்றோர், ஆண்சகோதரர், அவர்களின் புதல்வர்கள், ஆண்வழிச்சந்தான உறவினர் (ஹேத்ரஜன்), இனபந்துக்கள், சீடன், சகமாணாக்கன் என்னும் வரிசையில் உரிமைகள் சென்றடையும்.
பெண்களின் உரிமைகள் தொடர்பாக யக்ஞவல்க்ய ஸ்மிருதியிற் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படுகின்றது. கணவன் இறந்த பின் ஆண்பிள்ளைகள் இல்லாதவிடத்து விதவையானவள் சொத்துக்களில் எல்லா உரிமைகளையும் பெறுகின்றாள். இந்தக் கோட்பாட்டைப்பின்வந்த ஆசிரியரும் உரை நூலோரும் ஒப்புக் கொண்டனர்.
பெண்களின் ஆறுவகையான உடைமைகளைப் பற்றி யக்ஞவல்க்யரின் நூல் குறிப்பிடுகின்றது. அவையாவன :
1. அவளுடைய தகப்பன், தாய், கணவன், சகோதரன் ஆ கி யே ர்
வழங்கியவை. 2. கலியாணச் சடங்கில் உபகாரமாகவும் நன்கொடை யாகவும் கிடைத்த
பொருள்கள். 3. கணவன் வேறொரு பெண்ணை விவாகம் செய்தபோது மனைவிக்கு
உபகாரமாக வழங்கப்பட்டவை. 4. உறவினர்களாற் பெண்ணொருத்திக்கு வழங்கப்பட்ட பொருள்கள். 5. கலியாண சமயத்திற் கொள்வனவுப் பொருளாகப் பெண்ணுக்கு
வழங்கப்பட்ட சம்பத்துகள். 6. கலியாணத்தின் பின் பெண்ணுக்குக் கொடுக்கப்பட்ட பொருள்கள்.
ஸ்திரீதனமான (சீதனம்) உடைமைகள் மீதான உரிமைகள் பெண்ணுக்குரியவை. பெண்ணொருத்தி பிள்ளையின்றி இறக்க நேர்ந்தால் அவளுடைய சீதனம் கணவனுக்கோ அவளுடைய பெற்றோருக்கோ உரியதாகும்.
வன்செயல் பற்றிய சட்டங்கள்
வன்செயல் குற்றங்கள் பற்றி யக்ஞவல்க்யர் கூறுவன மனுஸ்மிருதியிலுள்ளவற்றை ஒத்தனவாகும். பொது நீதிக்கு எதிரான குற்றங்கள் பலவற்றைப் பற்றிய விவரங்களை அவர் குறிப்பிடுகின்றார். நீதிமன்றங்களுக்கு அப்பால் தமது குற்றச் சாட்டுக்களை நிரூபிக்க முற்படுவோரும், குற்றஞ் சுமத்தப்பட்டவிடத்தும் நீதிமன்றத்திற்குப் போகாதோரும், அம்மன்றத்தினால் அழைக்கப்பட்டவிடத்து அங்கே
150 நடராஜ தரிசனம்

சமூகமளிக்காதவர்களும் உண்மைக்குப் புறம்பானவற்றில் ஈடுபடுபவர்கள் என்றும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றும் சொல்லப்படுகின்றது. தொடர்ந்து வழக்குகளைத் திரிபுபடுத்துபவர்களும் பொய்ச் சாட்சி சொல்வோரும் சாட்சியாகச் சத்தியப்பிரமாணம் செய்த பின்பும் தெரிந்தவற்றை வெளிப்படுத்தாது மறைப்போரும் அபராதம் செலுத்த வேண்டியவராவர்.
நாரத ஸ்மிருதி
நாரத ஸ்மிருதி, மனுநூலை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டது. ஆயினும் அதிற் பல புதிய அம்சங்கள் உள்ளன. நீதிமன்றங்களைப் பற்றி அதில் காணப்படும் வர்ணனைகளில் மனு, யக்ஞவல்க்யர் ஆகியோர் சொல்வனவற்றைக் காட்டிலுங் கூடுதலான விவரங்கள் அடங்கியுள்ளன. அடிமட்டத்திலிருந்து மேலாக அமைந்துள்ள நீதிமன்றங்களை அவர் மேல்வருமாறு வரிசைப்படுத்துகிறார். (1) குலங்கள் (குடும்பங்கள்), (2) ஸ்ரேணிகள் (வணிகர் கழகங்கள்), (3) கண (ங்கள்), (4) அதிகாரம் பெற்ற பிரதிநிதிகள், (5) அரசன்.
நீதிபரிபாலனமுறை தர்மம், வியவகாரம், சரித்திரம், ராஜசாசனம் என்னும் நான்கு பாதங்களை உடையது என்பார் நாரதர். அவற்றுட் பின்னைய ஒவ்வொன்றும் அதன் முன்னையதைக் காட்டிலும் வலிவுடையதென்று கெளடில்யரைப் போல நாரதரும் கொள்வார். தர்மசாஸ்திர மரபில் நாரதர், பிருஹஸ்பதி ஆகியோர் நீதிபரிபாலனந் தொடர்பான விடயங்களில் அரசனது கட்டளைகளே எல்லாவற்றிலும் முதன்மையானதென்று கொள்வர்.
குடியியற் சட்டம்
கடன்களைப்பற்றி மனு கூறும் விதிகளை நாரதர் விரிவுபடுத்திச் சொல்கின்றார்.
காலிக (வெவ்வேறு காலகட்டங்களிலே செலுத்தப்படுவது), காரித (நிர்மாணிக்கப்பட்டது), காயிக (ஊழியமாகச் செய்து தீர்க்க வேண்டியது), சக்ரவிருத்தி (நிலை பொலியூட்டானது) என்னும் நான்கு வகையான வட்டிகொள்ளும் முறைகளை அவர் வர்ணிக்கின்றார். அவற்றுள் முதலாவது தவிர்ந்த எல்லாம் மனுவினால் ஒப்புக்கொள்ளப்படாதவை. ஒருவர் பட்ட கடன்களை, அவரின் பின்பு அவரது சொத்துகளை முதுசொமாகப் பெறும் ஆண்மக்களும் அவர்கள் வழிச் சந்தான முறையில் வரும் ஆண்களும் உத்தரிக்கும் விதங்கள் பற்றி நாரதர் விளக்குவார். ஒருவரின் ஆண்மக்களும் அவர்களின் ஆண்பிள்ளைகளும் சொத்துகளைத் தாயபாகமாகப்
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 151

Page 87
பெறாதவிடத்தும் அவரின் கடன்களைத் தீர்ப்பதற்குப் பொறுப்புடையவர்கள் என்பது நாரதரின் கொள்கை.
தாயபாகம் பற்றிய புதிய அம்சங்கள்
தாயபாகம் பற்றிய விதிகளிலே சில புதிய அம்சங்களை நாரதர் குறிப்பிடுகின்றார். ஒருவன் தனது சொத்துகளைத் தனது மக்களுக்குப் பகுந்து கொடுக்குமிடத்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் சமமான அளவிலும் தனது விருப்பத்திற்கு ஏற்ப சிலருக்குக் கூட்டிக் குறைத்துக் கொடுக்கலாம் என்கிறார். தகப்பன் தனக்கென்று இரு பங்குகளை வைத்துக் கொள்ளலாம். தகப்பன் இறந்த பின்பு, அவன்பட்ட கடன்களைக் கொடுத்துவிட்டு, சொத்துகளை ஆண்மக்கள் சமபங்குகளிற் பிரித்துக்கொள்ளலாம். ஆண்மக்கள் இல்லாதவிடத்துச் சொத்துகள் பெண்மக்களைச் சேரும். விதவைப் பெண்களுக்குச் சீவாதாரம் பற்றிய உரிமை மட்டுமே கிடைக்கும். ஆண்பிள்ளைகளில் இளைய சகோதரனும் குடும்பப் பொறுப்புகள் தொடர்பான முகாமைத்துவத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற கருத்து மரபுவழிச் சிந்தனையிற் புதுமையானது.
சாகலவியல்
வன்செயல் தொடர்பான குற்றங்கள் பற்றிய மரபுவழியான விதிகளை ஒழுங்குபடுத்தி, அவற்றைக் கூடுதலாக விவரிக்கும் நாரதர் சில மாற்றங்களையும் ஏற்படுத்துகின்றார். களவினைச் சாகசவியலிலிருந்து வேறுபடுத்தி, களவாடப்பட்ட பொருளின் பெறுமதிக்கேற்பக் குற்றங்களை மூன்று வகையினவாகப் பாகுபாடு செய்கின்றார். கள்வர்களுக்கு உணவு, புகலிடம் என்பவற்றைக் கொடுப்பவர்களும், கள்வர்களைத் தெரிந்தும் அவர்களை கண்டுபிடிப்பதற்கு உதவி புரியாதவர்களும் கள்வர் பொருட்களை எடுத்துச் செல்லும்போது அவற்றை மீட்பதற்கு உதவி புரியாதவர்களும் குற்றவாளிகளாகவே கொள்ளப்படுகின்றனர். கள்வரின் அடிச்சுவடுகள் காணப்படும் கிராமங்கள், மேய்ச்சல் நிலங்கள், வெளியிடங்கள் என்பவற்றிலே சஞ்சாரஞ் செய்வோர் இழந்த பொருட்களின் பெறுமதியை இறுப்பதற்குப் பொறுப்புடையோராவர். ஒருவர் இழந்த பொருள்களைக் கண்டெடுக்க முடியாதவிடத்து அவற்றின் நட்டத்துக்கு ஈடான பெறுமதியினை உரியவர்களுக்கு வழங்கவேண்டுமென்ற பழைய தர்மசாஸ்திரகாரரின் கருத்தை நாரதர் உறுதிப்படுத்துகின்றார். பொருள்களின் பெறுமதிக்கேற்பக் கள்வர்களுக்கு அங்கவீனம், கொலை, மெய் வருத்துதல் போன்ற தண்டனைகளை வழங்க வேண்டும். களவு ஒரு பாவச்செயல் என்று
152 நடராஜ தரிசனம்

கருதப்பட்டது. கள்வன் ஒருவன் அரசனிடம் சென்று தனது குற்றத்தை ஒப்புக் கொள்ளுமிடத்து அவன் பாவ விமோசனம் பெறுவான்.
5 பிருஹஸ்பதி ஸ்மிருதி
பிருஹஸ்பதி ஸ்மிருதி மனுஸ்மிருதியோடு அதிக தொடர்புடையது. அது மனுஸ்மிருதியின் வார்த்திகம் போலானது. தர்ம சாஸ்திரங்களில் மனுநூலுக்கே பிருஹஸ்பதி முதலிடம் அளிக்கின்றார். சட்டம் தொடர்பாக மனுநூலிற் காணப்படும் விதிகளை விளக்குவதோடு, சில சமயங்களில் அவற்றைப் பிருஹஸ்பதி மாற்றிவிடுகின்றார். மேலும், அவர் மனுநூலின் கோட்பாடுகளை உறுதிப்படுத்து முகமாகவும் பல புதிய விடயங்களைச் சேர்த்துள்ளார்.
நாரதர் நீதிமன்றம் 8 உறுப்பினர்களைக் கொண்டதாயிருக்கும் என்பார். ஆனால் பிருஹஸ்பதி அதில் 10 உறுப்பினர் அடங்குவர் என்பார். நாரதர் சொல்லும் சத்புருஷரின் இடத்தில் அதிகிருத என்னும் அத்யகூஷரைக் குறிப்பிடுகின்றார். சபையோர் வழக்கை விசாரிக்க வேண்டும். ஸ்மிருதிகளின் அடிப்படையில் விசாரணைகள் நடைபெற வேண்டும். விசாரணை சம்பந்தமான விடயங்களை லிகிதர் எழுதவேண்டும். அத்யகூஷர் தீர்ப்பினை வழங்கவேண்டும். வழக்காளி, சாட்சிக்காரர், நீதிமன்ற உறுப்பினர்கள் ஆகியோரைப் பிரசன்னமாக இருக்கச் செய்வது அதிகிருதரின் கடமையாகும். வழக்குத் தீர்ப்பை அமுல்படுத்துவது அரசனின் பொறுப்பாகும். நிலையானவை, இடம்பெயர்ந்து இயங்குபவை, அரசமுத்திரையின் பெயரால் இயங்குப்வை, அரசனின் தலைமையில் அமைந்தவை என்ற நான்கு வகையான நீதிமன்றங்களைப் பிருஹஸ்பதி விவரிக்கின்றார்.
சட்டத்தின் மூலங்களில் ராஜசாசனமே முதன்மையானதென்று நாரதரைப் போல பிருஹஸ்பதியும் கொள்வார். ஏனையவற்றைப் பொறுத்தவரையில் சாஸ்திரங்களை மட்டும் மூலமாகக் கொண்டது வியவகாரமென்றும், தேசவழமை, அனுமானம், வணிகரின் அபிப்பிராயம் என்பனவற்றை ஆதாரமாகக் கொண்டது சாரித்திரம் என்றும், தேசவழக்குகளைப் பொருட்படுத்தாத அரசனின் தீர்ப்பே ராஜாக்ஞா என்றுஞ் சொல்லும் செய்யுளொன்று ஸ்மிருதிசந்திரிகா என்னும் நூலிலிருந்து மேற்கோளாகக் கையாளப்படுகின்றது.
சாட்சி ஆதாரங்கள்
சாட்சியங்களைப் பற்றி பிருஹஸ்பதி கூறுவன நாரத ஸ்மிருதியில் உள்ளவற்றைக் காட்டிலும் விரிவானவை. அவர் 12 வகையான சாட்சியங்கள்
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 153

Page 88
பற்றி விளக்குகிறார். அவற்றுள் ஒவ்வொன்றினதும் இயல்புகளை அவரே முதன்முதலாக வர்ணிக்கின்றார். ஒரு வழக்குப் பத்திரத்தில் அடங்கிய விவரங்கள் சாட்சிகள் மூலம் நிரூபிக்கப்படுமிடத்து அந்தச் சாட்சிகள் ஆதாரபூர்வமானவையாகக் கொள்ளப்படும் என்று பிருஹஸ்பதி சொல்வார். சாட்சியங்கள் குறித்த பரிசீலனை, எதிர்ப்பரிசீலனை, மறுபரிசீலனை என்பன பற்றியும் அவரே முதன்முதலாக விவரமாக வர்ணித்துள்ளார். சாட்சிகளும் ஆவணங்களும் வழக்கு விசாரணையின் போதே பரிசீலிக்கப்படல் வேண்டும். வழக்கு விசாரணை முடிந்த பின் அவற்றைப் பற்றி மேற்கொள்ளப்படும் எந்தவிதமான பரிசீலனையும் ஒப்புக்கொள்ளப்படுவதில்லை.
ஆவணங்களைப் பற்றி பிருஹஸ்பதி சொல்வன மிகவும் விவரமானவை. அரசனால் எழுதப்பட்ட பத்திரங்கள், லிகிதர்களால் ஒரிடத்திலிருந்து எழுதப்பட்ட பத்திரங்கள், தனியொருவர் எழுதிய கையெழுத்துப் பிரதி என ஆவணங்கள் மூன்று வகையினவாகக் கொள்ளப்படுகின்றன. அரச பத்திரங்களும் மூன்றுவிதமானவை. அவை பூமிதானம் போன்றன பற்றிய முழுமையான விவரங்கள் அடங்கிய ஆவணங்கள், தனக்கு இசைவானவர்களுக்கு நிலம், பிரதேசங்கள், வருமானங்கள், பதவிகள், அதிகாரங்கள் என்பனவற்றை அதிகாரபூர்வமாக அரசன் வழங்கிய பத்திரங்கள், வழக்கு விசாரணை, தீர்ப்பு என்பனவற்றைப் பற்றிய விவரங்கள் அடங்கிய, அரசமுத்திரையோடு கூடிய ஜயபத்திரம் என்னும் ஆவணங்கள் என்னும் மூன்றுமாம். பாகப்பிரிவினை பற்றிய உறுதிகள், நன்கொடை, கொள்வனவு, ஈடு, உடன்படிக்கை, பிணை, கடன் என்பன பற்றிய ஆவணங்கள் எனத் தனியார் பத்திரங்கள் ஏழு வகைப்படும் என்றும் அவர் கொள்வார். ஆவணங்களைப் பகிரங்கப்படுத்துவதும் குலம், ஸ்ரேணி, கணம் முதலியவற்றைச் சேர்ந்தவர்களின் முன்னிலையில் அவற்றை வாசித்து விளக்குவதும் அவசியமானது. 30 வருடங்களுக்கும் மேலாக வாசிக்கப்படாதும் எவராலும் காணப்படாதுமிருந்த ஆவணங்கள் ஆதரமற்றனவாகிவிடும்.
ஒருவரின் தேட்டமான சொத்துகளைப் பொறுத்தமட்டில் அவற்றின் மீதான உரிமைக்கு ஏதுவான ஆவணங்களை அவர் ஒப்படைக்க வேண்டும். ஆனால் அத்தகைய சொத்துகள் மகன் ஒருவருக்கு உரிமையாகுமிடத்து அந்த மகன் ஆட்சியின் காரணமாக அவற்றின் உடைமை அதிகாரம் பெறலாம்.
வழக்குகள்
வழக்குகளைக் குடியியல் பற்றியவை, சாகசவியல் பற்றியவை என்ற இரு வேறு பிரிவுகளாக பிருஹஸ்பதியே உறுதியாகவும் தெளிவாகவும்
154 நடராஜ தரிசனம்
 

முதன்முதலாக வகைப்படுத்தினார். மனு 18 தலைப்புகளிலான வழக்குகளை விவரித்தார். அவற்றுட் 14 குடியியல் பற்றியவை என்றும் 4 சாகசவியல் (சரீரத்
துன்பம் விளைத்தல், கொலை) பற்றியவை என்னும் பிருஹஸ்பதி
வகைப்படுத்தியுள்ளார்.
வட்டிக்குக் கடன் கொடுக்குமிடத்து உத்தரவாதம் (ஆதி) வைப்புப்
பொருள் (பந்த), பிணை, உறுதிப்பத்திரம் என்பவற்றில் ஒன்றைப் பெற்றுக் கொண்ட பின்னரே கொடுக்க வேண்டும் என்பார் பிருஹஸ்பதி. காலிக (ம்), காரிதம் (ம்) , காயிக (ம்), சக்ரவ்ர்த்தி என வட்டிகள் நான்கு வகைப்படும் என்பார் நாரதர். சிகாவிருத்தி (மூலதனம் உள்ள வரை தலைமயிரைப் போலப் பொலிந்து பெருகும் வட்டி), போகலாபம் (ஒற்றி) என்ற மேலான இருவகைகளைப் பற்றியும் பிருஹஸ்பதி விளக்கியுள்ளார்.
தாயபாகத்தில் ஒருவருடைய தேட்டமான சொத்துகள் அவருடைய மகனுக்கும் மகனுடைய ஆண்மக்களுக்கும் சமபங்குகளில் உரிமையாகும் என்பது பிருஹஸ்பதியின் கருத்து. ஆயினும் ஒருவருடைய சொத்துரிமைகளைப் பொறுத்தவரையில் அவரது உடன்பாடின்றி மக்கள் உரிமை பெறுவதில்லை. இந்தக் கருத்து மிதாகூடிர நூல்வழி மரபினரின் கோட்பாடுகளுக்கு ஆதாரமாகிவிட்டது.
சாகசவியற் குற்றங்களைப் பொறுத்தவரையில் மேல்வரும் சிந்தனைகள் கவனித்தற்குரியவை. ஒருவர் தன்னை அவதூறான வார்த்தைகளால் இம்சைப்படுத்தியவரை அத்தகைய வார்த்தைகளால் நிந்தனை செய்யுமிடத்து அது குற்றமாகக் கொள்ளப்படுவதில்லை. அதேபோல அடிபட்டவிடத்து ஒருவர் தன்னை அடித்தவருக்குத் திருப்பி அடிக்கினும் தன்னைக் கடுமையாகத் தாக்குபவரைக் கொலை செய்யினும் அவர் குற்றவாளி ஆவதில்லை. குற்றங்களுக்கு ஏற்பக் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும். ஒருவருடைய உடலுறுப்பினைத் தாக்கிக் காயப்படுத்துபவர் காய சிகிச்சைக்கான செலவை உத்தரிக்க வேண்டும். தகராறுற்று ஒருவரின் உடைமைகளைக் கவர்ந்து செல்பவர் அவற்றை உரியவருக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டும். ஒரு மனிதரைப் பலர் கூடி அடித்துக் கொல்லுமிடத்து மரண அடிக்குப் பொறுப்பானவருக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். கலகத்தை முதன் முதலாகத் தொடக்கியவரும் அவரது கூட்டாளிகள் பிறரும் அரைப்பங்களவான தண்டனையை உத்தரிக்க வேண்டும்.
குப்தர் காலத்து ஸ்மிருதிகளும் நீதிபரிபாலனமும்
இந்துக்களின் சட்டவியல், நீதிபரிபாலனம் ஆகியவற்றின் வரலாற்றிலே கி.பி நான்காம் நூற்றாண்டு முதல் எட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதி
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 155

Page 89
வரையான காலம் மிக முக்கியமானது. ஸ்மிருதி நூல்களிற் காலத்தாற் பிற்பட்டவை இக்காலத்தில் எழுந்தன. தர்மசாஸ்திரங்களுக்கு விரிவான உரைகளை எழுதும் மரபு இக்காலத்தில் ஆரம்பமாகியது. நாரத ஸ்மிருதிக்கு அஸ்ஹாயர் எழுதிய உரையினை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். தர்ம சாஸ்திரங்களைத் தொகுக்கும் நீண்ட வரலாறுடைய இலக்கிய மரபு நிறைவு பெற்றதோடு குப்தர் காலத்தில் அவற்றைப் பற்றிய விமர்சன இலக்கிய மரபொன்று உதயமாகியது.
நீதிபரிபாலனத் துறையில் பிரதானமான ஆதார நூல்களாகக் கொள்ளப்படும் பிருகஸ்பதி ஸ்மிருதி, நாரத ஸ்மிருதி, காத்யாயன ஸ்மிருதி ஆகிய மூன்றும் இக்காலத்தில் வழங்கிய நூல்களாகும். அவற்றுள் நாரத ஸ்மிருதி மட்டுமே முழுமையாகக் கிடைத்துள்ளது. ஏனையவற்றைப் பொறுத்தவரையில் பிற்காலத்து நூல்களிற் காணப்படும் மேற்கோள்களின் தொகுப்புக்கள் மட்டுமே உள்ளன. பராசர, வியாச என்போரின் பெயர்களால் வழங்கும் ஸ்மிருதிகளும் அவ்வண்ணமானமை, இக்காலத்து நூல்கள் நீதிமன்றங்கள், நீதி விசாரணை, சட்டவியல் என்னும் மூன்று பிரதான விடயங்கள் பற்றிய விவரங்களைக் கொண்டுள்ளன.
நீதிமன்றங்கள்
சமுதாயத்திலே பல்வேறு நிலைகளில் நீதிவிசாரணை நடைபெற்றது. ஊராட்சி மன்றங்களிலும் தனிச்சமுதாயப் பிரிவுகளின் சபைகளிலும், தொழில்சார் சமூகப்பிரிவுகளின் சபைகளிலும் தேச, சமூக வழமைகளுக்கு ஏற்ப நீதிவிசாரணைகள் நடைபெற்றன. குறிப்பிட்ட தலங்களிலமைந்த நீதிமன்றங்கள் வேறொரு வகையானவை. அவை ஆட்சியாளரிடமிருந்து அதிகாரம் பெற்றவை. அரசனின் ஆணைப்படி நீதித்துறை சார்ந்த அதிகாரிகள் குறிப்பிட்ட தலங்களுக்குச் சென்று செயற்படுத்தும் நீதிமன்றங்கள் வேறொரு வகையினவாகும். இராசதானியில் அரசனுடைய தலைமையில் இயங்கும் நீதிமன்றங்கள் இன்னொரு வகையானவை. அரசாங்கத்தின் ஏற்பாட்டில் இயங்கும் நான்கு வகையான நீதிமன்றங்களைப் பற்றிப் பிருகஸ்பதி குறிப்பிடுவார். தலமொன்றில் அமைந்துள்ள நீதிமன்றங்கள், இடம் பெயர்ந்து செயற்படும் நீதிமன்றங்கள், அரசனால் நியமிக்கப்பட்டோரின் தலைமையிலும் அரசமுத்திரையோடும் இயங்கும் நீதிமன்றங்கள், அரசனின் தலைமையிற் கூடும் நீதிமன்றங்கள் என்பவையே அந்நான்கு வகைகளாகும். குலம் (கிராம சபை), சிரேணி, கணம், அரசசபை ஆகியவற்றால் நடத்தப்படும் நீதிவிசாரணை மன்றங்கள் பற்றி நாரதர் குறிப்பிடுகின்றார்.
156 நடராஜ தரிசனம்

அரசனது தலைமையில் இயங்கும் நீதிமன்றங்கள் சபா, தர்மஸ்தானம், தர்மாதிகரணம், தர்மாசனம் எனப் பலவாறு வழங்கிவந்தன. நீதிபதிகள் அமைச்சர், வித்தியாவிருத்தரான பிராமணர், புரோகிதர் என்போருடன் கூடி அரசன் தீர்ப்புகளை வழங்கவேண்டுமென்று காத்யாயனர் கூறுவார். நீதிமன்றத்தின் பத்து அங்கங்கள் பற்றி பிருகஸ்பதி குறிப்பிடுகின்றார். அரசன், பிரதம நீதிபதி, அத்யகூஷர், கணக்கர், அலுவலர் என்போர் அவற்றுள் அடங்குவர். சட்டப்படி நீதிபதிகள் தீர்ப்பினை அறிவிப்பர். அரசன் உரிய தண்டனையை வழங்குவான்; அத்யகூடிகர்கள் வழக்கின் விவரங்களைப் பரிசீலனை செய்வர். வழக்குத் தொடர்பான ஆவணங்கள், பொருட்கள், பணம் முதலியவற்றின் பெறுமதியை நிச்சயிப்பது கணக்கனின் கடமையாகும். வழக்குத் தொடர்பான குற்றச்சாட்டுகள், பிரதிவாதங்கள், சாட்சியங்கள், தீர்ப்புகள் முதலிய எல்லாவற்றையும் லிகிதர் பதிவு செய்வர். நீதிமன்றத்தின் எல்லா உறுப்புக்களையும் வியாசரும் வர்ணிக்கின்றார். அரசன், நீதிபதிகள், அத்யகூடிர், பிராமணப் பண்டிதர் ஆகியோரே வழக்குகளை விசாரணை பண்ணுவதிலும் தீர்ப்பு வழங்குவதிலும் ஈடுபட்டனர். ஏனையோர் நீதிமன்றத்திற் கடமை புரியும் பணியாளராகவே செயற்பட்டனர். நீதிபதியின் தீர்ப்பை அரசன் ஒப்புக்கொள்ள வேண்டும் என்பது நாரதரின் கருத்து. சபையோர் நீதியான முறையிலே தீர்ப்பினை வழங்கவேண்டும் என்பது காத்யாயனரால் வலியுறுத்தப்படுகின்றது. காலதேச வர்த்தமானங்களுக் கேற்பச் செயற்பட்ட நீதிபரிபாலனம் தொடர்பான நிறுவனங்களின் பொதுவான அம்சங்களை ஸ்மிருதி நூல்கள் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றங்களின் செயற்பாட்டு முறைகள்
வழக்குப் பத்திரத்தை ஒப்புக்கொள்ளுதல், வழக்குப் பொருளை நிர்ணயித்தல், வாதப்பிரதி வாதங்களை ஆராய்தல், தீர்ப்பு வழங்குதல் என்னும் நான்கு கட்டங்களைக் கொண்டது நீதிவிசாரணை என்பது நாரதரின் கூற்றாகும். இவ்விடயம் பற்றி பிருகஸ்பதி, வியாசர் ஆகியோர் சற்று வேறு விதமாகச் சொல்வர்.
விசாரணையின் முதற்கட்டமாக, வழக்குத் தொடருபவரை வழக்கின் விவரங்கள் பற்றி நீதிபதி விசாரணை பண்ண வேண்டும் என்பது காத்யாயனரின் கோட்பாடாகும். சொல்லப்படும் விளக்கங்களை அத்யகூஷர், பிராமணர் என்போர் சகிதமாகக் கேட்ட பின்பு, தனது தீர்ப்பினை நீதிபதி முத்திரையிட்டு வழங்க வேண்டும். வழக்குச் சட்டப்படி விசாரிக்கப்பட வேண்டியதென்று கருதப்படுமிடத்து நீதிமன்ற அலுவலர் மூலமாகக் குற்றஞ் சுமத்தப்பட்டவரை நீதித்தலத்துக்கு அழைக்க வேண்டும். குற்றப்பத்திரம்
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 357

Page 90
ஒலையிலோ கடாதாசியிலோ எழுதப்பட வேண்டும். அது தெளிவாகவும் முரண்பாடு இல்லாத விதமாகவும் எழுதப்படல் வேண்டும். சமூகநலன்களுக்கு ஒவ்வாதனவாயும் வழக்குப் பொருள் பற்றித் தெளிவற்றுங் காணப்படும் வழக்குப் பத்திரங்கள் நிராகரிக்கப்படும். குற்றம் சுமத்தப்பட்டவர் நீதிமன்றத்தின் அழைப்பின் பிரகாரம் சமூகமளிக்காதவிடத்து அவருக்குத் தண்டனை வழங்கப்படும். நோயாளிகள், ஆசாரசீலரான மாதர், விதவைகள், இடையர், வேளாண்மை செய்யும் விவசாயிகள், கம்மாளர் முதலியோர் தாம் நீதித்தலத்துக்குப் போகமுடியாதவிடத்து தங்கள் சார்பிலே பிறரை அனுப்பிக்கொள்ள முடியும். ஆயினும், குற்றங்கள் பாரதூரமானவை என்று கொள்ளுமிடத்துக் குற்றவாளி நீதித்தலத்திற்குச் சமூகமளிக்க வேண்டும். வழக்கிலே சம்பந்தமானவர்களிடமிருந்து பிணை இறுக்க வேண்டுமென்பது காத்யாயனரின் கருத்து. தகுந்த ஆதாரங்களின்றி வழக்குத் தொடர்பவர்களும் பிறரின் முகவர்களாக அதிகாரபூர்வமாக நியமனம் பெறாது வழக்குத் தொடர்பவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
குற்றவாளி ஒருவர் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக உத்தரங்கொடுக்க வேண்டும். சில சமயங்களில் அது உடனடியாக வழங்கப்பட வேண்டும். வேறு சில சமயங்களில் அவருக்கு அதன் பொருட்டுக் கால அவகாசம் கொடுக்கப்படும். குற்றத்தை ஒப்புக்கொள்ளுதல், அதனை நிராகரித்தல், விசேஷமான காரணங்களின் நிமித்தம் மன்னிப்புக் கோருதல், நீதிமன்றத் தீர்ப்புகளை அனுசரணையாகக் கொண்டு மன்னிப்புக் கோருதல் என உத்தரம் நான்கு வகைப்படும் என்று நாரதர், காத்தியாயனர் பிருகஸ்பதி ஆகியோர் கொள்வர்.
ஒருவர் மீது சுமத்தப்படுங் குற்றங்களைத் தகுந்த ஆதாரங்களோடு நிரூபிப்பது வழக்காளியின் கடமையாகும். எதிரியின் வாக்குமூலத்தை நிராகரிக்கும் வண்ணமாக எழுதுகின்ற பத்திரத்தில் அவற்றை நிரூபிக்க வேண்டும். சமுதாய பூர்வமானவை, தெய்வீகமானவை என ஆதாரங்கள் இரு வகைப்படும். ஆட்சி, ஆவணம், அயலார் வழங்கும் சாட்சி என்பவை ஒரு வகையானவை; தெய்வீகமானவை மற்றொரு வகையானவை. காய்ச்சிய இரும்பினைக் கையில் ஏந்துதல், நீரில் அமிழ்த்துதல் போன்றவை தெய்வீகமானவை என்பர். ஒருவர் சுற்றவாளி எனில் அவர் அத்தகைய கொடூரமான பரிசோதனைகளினாற் பாதிக்கப்படுவதில்லை என்பது ஒரு நம்பிக்கை. சமுதாயபூர்வமான ஆதாரங்கள் கிடைக்காதவிடத்து மட்டுமே தெய்வீகமானவற்றைப் பயன்படுத்த வேண்டுமென்று நாரதரும் காத்யாயனருங் கூறுகின்றனர்.
158 நடராஜ தரிசனம்

வழக்கு விசாரணை முடிந்த பின்பு வழங்கப்படும் தீர்ப்பு, பத்திரத்தில் எழுதிக் கொடுக்கப்படும். அது ஜயபத்திரம் என்று சொல்லப்படும். வழக்கில் இடம்பெற்ற எல்லா விவரங்களும் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பும் அதில் அடங்கியிருக்கும்.
a LL so
சட்டம் பற்றிக் குப்தர்காலச் சிந்தனைகள் முற்காலங்களில் உள்ளவற்றைப் போன்றனவாகும். மறைநூல் வழக்கும் சான்றோர் ஒப்புக்கொள்ளும் சமூகவழமைகளும் சட்டத்தின் ஆதாரங்களாகக் கொள்ளப்பட்டன. சுருதி, ஸ்மிருதி என்பவற்றோடு முரண்படாத தேசவழமைகள் எழுதப்பட்டு அவற்றில் இராசமுத்திரை இடப்பட வேண்டுமென்று காத்யாயனர் கூறுவர். முன்பு மனு முதலியோர் வழக்குகளைப் பதினெட்டுப் பிரிவுகளாக வகை செய்தனர். நாரதர் அவற்றை 132 பிரிவுகளாக வகை செய்தார். உடலுக்கும் உள்ளத்துக்கும் துன்பம் உண்டாக்கும் செயல்களும் உரியனவற்றைக் கொடாதமையும் வழக்குகளின் மூலகாரணங்கள் என்று காத்யாயனரும் பிருகஸ்பதியுங் கொள்வர்.
சொத்துரிமைகள், சீதனம், அபவாதம், உடலுக்கு ஊறுசெய்தல், களவு, வன்செயல் ஆகியனவே இக்கால ஸ்மிருதிகளின் கவனத்தைக் கூடுதலாகப் பெற்றுள்ளன. இக்கால நூலாசிரியர்கள் பெண்களின் சொத்துரிமைகளை ஒப்புக்கொண்டுள்ளனர். கணவன் ஒருவன் இறக்குமிடத்து, ஆண்மக்கள் இல்லாதுபோனால், கணவனுடைய சொத்துகள் மனைவியின் உரிமையாகிவிடும் என்று சொல்லப்படுகின்றது. யக்ஞவல்க்ய, விஷ்ணு ஆகியோரின் பெயர்களால் வழங்கும் ஸ்மிருதிகள் இதனை அழுத்தமாகக் கூறுகின்றன. காத்யாயனர், பிருகஸ்பதி ஆகியோரும் அதே கருத்தைக் குறிப்பிடுகின்றனர். தாய்க்குப் பின் சொத்துரிமைகள் பெண்மக்களுக்கு உரித்தானவை. அவர்களில் மணமாகாதவர்கள் முன்னுரிமை பெறுவர். பெண்பிள்ளைகளும் இல்லாதவிடத்து ஒருவனின் சொத்துகள் முறையே அவனது தகப்பன், தாய், ஆண் சகோதரர், அவர்களின் ஆண்மக்கள் ஆகியோருக்கு உரியனவாகும்.
ஸ்திரீதனம் என்பது பெண் ஒருத்திக்கு நன்கொடையாகவோ உபகாரமாகவோ வழங்கப்பட்ட சொத்துக்களைக் குறிக்கும். ஸ்திரீதனம் பற்றிய விவரங்களைக் காத்யாயனர் விரிவாக விளக்குகின்றார். ஸ்த்ரீதனத்தில் அடங்கும் ஆறு வகையான சொத்துக்கள் பற்றிக் குறிப்பிடுகின்றார். அவை (1) கலியாணச் சடங்கின் முன் கொடுக்கப்பட்டவை (அத்யக்னி) (2) கணவனோடு மணப்பெண்ணாக ஊர்வலமாகச்
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 1.59

Page 91
செல்லும்பொழுது கொடுக்கப்பட்டவை (அத்யாவாஹனிக) (3) பாசத்தினால் பிறர் அவளுக்கு வழங்கியவை (ப்ரீதிதத்த) (4) தந்தை, தாய், சகோதரன் ஆகியோர் வழங்கியவை (5) கலியாணத்தின் பொருட்டு உபகாரமாகக் கணவன் வழங்கிய பொருள்கள் (சுல்க) (6) கலியாணத்தின் பின்பு தனதும், கணவனதும் வீடுகளிலிருந்து உபகாரமாகப் பெற்றவை (அன்வாதேய).
கலியாணத்தின் முன்பும், கலியாணச் சடங்கிலும் அதன் பின்பும் பெண்ணுக்கு நன்கொடையாகவும் உபகாரமாகவும் கிடைக்கும் பொருள்கள் யாவும் ஸ்த்ரீதனத்தில் அடங்கும். கணவன், மகன், தகப்பன், தாய் ஆகியோர் பெண்ணொருத்தியின் ஸ்த்ரீதனத்தை எடுத்துக்கொள்வதற்கோ அதைப் பிறருக்குக் கொடுப்பதற்கோ உரிமை பெறுவதில்லை. அதில் அடங்கிய யாவற்றிலும் பெண் எல்லா உரிமைகளையும் கொண்டிருப்பாள். அவர்களில் எவரேனும் ஸ்த்ரீதனத்தில் ஒரு பகுதியை வலோற்காரமாக எடுத்துக்கொண்டால் அதனைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். அதற்குரிய வட்டியையும் செலுத்த வேண்டும். மேலதிகமாக அபராதம் செலுத்த வேண்டும். ஸ்த்ரீதனத்தைப் பொறுத்த வரையில் சொத்துரிமைகள் பெண் வழியானவை. தாய்க்குரிய ஸ்த்ரீதனம் எல்லாம் அவளின் பின்பு பெண்மக்களின் உரிமையாகும். அவளுக்குப் பிள்ளைகள் இல்லாதவிடத்துப் பெற்றோரும் கணவனும் உரிமை பெறுவர். பெண்பிள்ளைகளில் விவாகம் பண்ணாதவர்களே மிகக் கூடிய பங்கினைப் பெறுவர் என்பார் பிருகஸ்பதி. பெண்மக்கள் இல்லாதவிடத்து ஸ்த்ரீதனம் ஆண்மக்களைச் சேரும் என்பது காத்யாயனரின் கருத்தாகும்.
மானபங்கம் (வாக்பாருஷ்ய) நிஷ்டூர(ம்), அஸ்லீல, தீவிர(ம்) என மூவகைப்படும் என்று நாரதரும் காத்யானருங் கொள்வர். ஆயினும், பிருகஸ்பதி குறைவானது, மத்திமமானது, தீவிரமானது என்னும் தரங்களிலான அபவாதங்களைக் குறிப்பிடுகின்றார். அவற்றின் தன்மைக்கும் சம்பந்தப்பட்டவர்களின் சமுதாய நிலைகளுக்கும் ஏற்பத் தண்டனைகள் அமையும். தீவிரமான வார்த்தைகளால் ஒருவரை அபவாதம் செய்பவர் தனது செயலுக்கு ஏதுவான ஆதாரங்களை நிரூபிக்காதவிடத்து தண்டனைக்கு உரியவராவார்.
ஒருவரைத் தாக்கி அவரின் உடலுறுப்புகளைக் காயப்படுத்துமிடத்து உண்டாகும் சேதத்திற்கு ஏற்றபடியாகத் தண்டனை வழங்குவது நியதி. பொருந்தாக் காலங்களிலும் தீனின்றிச் சோர்வடைந்த வேளையிலும் விலங்குகளைப் பாரமிழுத்துச் செல்வதற்குப் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். தேவையின்றிப் பயன்தரு மரங்களையும் வனவிருட்சங்களையும் தறிப்பதும் பெருங்குற்றமாகும்.
160 நடராஜ தரிசனம்

களவு தொடர்பான குற்றங்கள் வெளிப்படையானவை. மறைமுகமானவை என இரு வகைப்படும். அளவு குறைந்த தராசுகள், படிகள், நாழிகள் போன்றவற்றைப் பயன்படுத்தும் வியாபாரிகள், சூதாடுவோர், ஏமாற்றுவோர், பொருள்களைக் கலப்படஞ் செய்வோர், பொய்ச்சாத்திரஞ் சொல்லிப் பிழைப்போர் ஆகியோரை வெளிப்படையாகவே களவு செய்வோர் என்னும் வகையினருள் மனு முதலியோர் அடக்குவர். அத்தியயனம் பெறாது யாகஞ் செய்வோர் போதிக்கும் தகைமையில்லாத போலிப்பண்டிதர்கள் என்போரும் அத்தகையோரென்று காத்யாயனர் கொள்வார். சிறைவாசம், அங்கவீனம், உடைமைகளின் அபகரணம், தேசப்பிரஷ்டம், சிரச்சேதம் முதலியன களவு, கொள்ளை ஆகிய பாதகங்களில் ஈடுபடுவோருக்குரிய தண்டனைகளாகக் கொள்ளப்பட்டன.
களவாடப்பட்ட பொருள்களைத் தேடிப்பெற்று, அவற்றை உடையவர்களுக்கு அரசன் வழங்கவேண்டும் என்பது ஸ்மிருதி நூலோரின் ஒருமித்த கருத்தாகும். அந்தக் கடமை அரசாங்க அதிகாரிகளுக்கும் சமுதாயத்திலுள்ள எல்லா வகுப்பினருக்கும் உரியதாகும்.
தண்டனைக்குரியனவும் பாதகமானவையுமாகிய வன்செயல்கள் மூவகைப்படும். விவசாயக் கருவிகளைச் சேதப்படுத்துதல்; கிழங்கு, கனி வர்க்கங்களை உழக்கி அழித்தல் போன்றவை ஒரு வகையானவை. புடவைகள், உணவு வகைகள், பானங்கள், வீட்டுத் தளபாடங்கள் முதலியவற்றை நாசஞ் செய்தல் முன்னையவற்றைக் காட்டிலுங் கடுமையான வன்செயல்களாகும். கொலை வன்முறைகளோடு கூடிய கொள்ளை பிறன் மனையாளைத் தாக்குதல், பெறுமதிமிக்க பொருள்களைக் கெடுத்தல், கோயில்களையும் கடவுட் படிமங்களையுஞ் சேதப்படுத்துதல், நகரத்து எல்லைச் சுவர்களை உடைத்தல், கால்வாய்களில் நீரோட்டத்தைத் தடை செய்தல் ஆகியன மிகவும் தீவிரமான வன்செயல்களாகும். வன்செயல்களை (சாகஸ்)ப் பொறுத்தவரையில் வழங்கப்படும் தண்டனை அவற்றின் இயல்பிற்கு ஏற்ப அமைந்திருக்கும்.
நீதிவிசாரணையின்போது கேட்கப்படும் கேள்விகளுக்கு விடையளிக்க மறுக்கும் சாட்சிக்காரர் மீது அபராதம் விதிக்கப்படும். வழக்கு விவரங்களை நேரிலே கண்டறிந்தவர்கள் சாட்சி சொல்ல மறுக்குமிடத்து அவர்கள் குற்றவாளிகளாகக் கொள்ளப்படுவர். பொய்ச்சாட்சி சொல்வோர் மீது கடுந்தண்டனை விதிக்கப்பட வேண்டும். நீதிபதியும் நீதிமன்றத்து அத்யஷர்களும் வழக்காளியுடனோ எதிரியுடனோ தனியாகவும் இரகசியமாகவும் பேசிக்கொள்ளுமிடத்து அவர்களும் தண்டனைக்கு உரியோராகிவிடுகின்றனர்.
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 161

Page 92
சிலப்பதிகாரத்தில் சிறு பாத்திரங்கள் கலாநிதி துரை. மனோகரன்
தலைவர் தமிழ்த்துறை பேராதனைப்பல்கலைக்கழகம்
தமிழிலே தோன்றிய முதற் காவியமாகச் சிலப்பதிகாரம் விளங்குகின்றது. முதன்முதலாகக் கதையமைப்பினைக் கொண்ட தொடர்நிலைச் செய்யுளால் அமைந்த இக்காவியம், களப்பிரர் காலத்தில் தோற்றம் பெற்றது. சிலப்பதிகாரத்தின் சிறப்புக்களில் ஒன்று. அதன் பாத்திர அமைப்பாகும். எந்த இலக்கியத்திலும் கதையும் சம்பவங்களும் பாத்திரங்கள் மூலமாகவே நகர்த்தப்படுகின்றன. காவியமும் இதற்கு விதிவிலக்கன்று. காவியத்தின் உயிரோட்டம் பாத்திரப் படைப்பிலேயே தங்கியுள்ளது. வகைவகையான பாத்திரங்கள் காவியத்துக்குச் சிறப்பினைக் கொடுக்கும். வாழ்வைப் பல முறைகளிலே தரிசிப்பதற்கு அவை உதவும். பாத்திர வார்ப்புக்கு மனித இயல்புகளே அடிப்படையாக அமைந்துள்ளன. ஆயினும், காவியங்களிலே அசாதாரண இயல்புகளும், அதீத ஆற்றல்களும் கொண்டபாத்திரங்களும் இடம்பெறுவதுண்டு.
சோழர் காலத்திலேயே தமிழில் முதன்முதலிற் காவிய இலக்கணம் அறிமுகமாயிற்று. அதனால், அதற்கு முன்னர் களப்பிரர் காலத்திலே தோன்றிய சிலப்பதிகாரமும், மணிமேகலையும் சோழர் காலத்துக் காவிய உறுப்புக்களைக் கொண்டமைய வாய்ப்பு இருந்திருக்கவில்லை. சோழர் காலத்திலே தோன்றிய தண்டியலங்காரம் தன்னிகரற்ற தலைவனையே காவியத் தலைவனாக வலியுறுத்த, அதற்கு முன்னர் தோன்றிய சிலப்பதிகாரமும், மணிமேகலையும் கதைத் தலைவியரையே காப்பியத் தலைவியராகக் கொண்டு அமைந்துள்ளன.
தமிழ்க் காவியப் பரப்பில், கம்பரும், வில்லிபுத்தூரரும் ஏராளமான பாத்திரங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். பாத்திர வார்ப்பில் கம்பர் தமது முழுத் திறமையையும் காட்டியுள்ளார். ஆயினும், சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றமை போன்று வகை மாதிரியான வளர்நிலைப் பாத்திரங்கள் பெரும்பாலும் கம்பராமாயணத்திலும், வில்லிபாரதத்திலும் அமையவில்லை எனலாம். சிலப்பதிகாரத்தின் காவியத் தலைவி கண்ணகியும், கதைத் தலைவன் கோவலனும் வளர்நிலைப் பாத்திரங்களாகவே விளங்குகின்றனர். அதாவது, பண்புநலனைப் பொறுத்தவரையில், அவர்களிடையே வளர்ச்சிநிலை காணப்படுகின்றது. சாதாரண வணிக குடும்பத்துப் பெண் கண்ணகி, நூலின் இறுதியில் பத்தினித் தெய்வம் என்ற நிலைக்கு உயர்வடைகின்றாள். வாழ்வில் நல்ல செயல்களையும், தவறுகளையும் செய்த கோவலன்மீது வாசகர் அனுதாபம் கொள்ளத் தொடங்கும் சமயத்தில் அவன் அநியாயமாக இறப்பைத்
162 நடராஜ தரிசனம்

தழுவுகின்றான். மாதவி பிறந்து வளர்ந்த சூழ்நிலைக்கும், கோவலனோடு வாழ்ந்த சூழ்நிலைக்கும், ஈற்றில் துறவியாகும் சூழ்நிலைக்கும் இடையே முரண்நிலை காணப்படுகின்றது. இவ்வாறு, இக்காவியத்தின் தலைமைப் பாத்திரங்கள் மூன்றும் தம்மளவில் குண இயல்புகளில் வளர்ச்சி பெறும் பாத்திரங்களாக விளங்குவதைக் காணமுடிகின்றது.
காவியங்களில் எதிர்மைப் பாத்திரங்களும் முக்கியத்துவம் பெறுவதுண்டு. இராமாயணத்தில் இராவணனும், சீவகசிந்தாமணியிற் கட்டியக்காரனும் இத்தகையவராகக் காட்சிதருகின்றனர். ஆனால், தமிழின் முதற் காவியமான சிலப்பதிகாரத்தில் எதிர்மைப் பாத்திரம், மற்றக் காவியங்களினின்றும் வேறு பட்ட நிலையிலேயே காணப்படுகின்றது. இக்காவியத்தில் ஊழ்வினையே மறை முகமான எதிர்மைப் பாத்திரமாக விளங்குகின்றது. பொற்கொல்லன் என்ற பாத்திரம் ஊழ்வினையின் கருவியாக இக்காவியத்திற் பயன்படுத்தப்பட்டுள்ளது. தலைமைப் பாத்திரங்களும், எதிர்மைப் பாத்திரங்களும் காவியத்தில் முதன்மைநிலை பெற்றாலும், கதையின் நகர்வுக்குச் சிறுபாத்திரங்களின் துணை இன்றியமையாததாகும். அத்தகைய சிறுபாத்திரங்கள் காவியப்போக்கின் திசை திருப்பத்துக்கும் தலைமைப்பாத்திரங்களின் சிறப்பியல்புகளை வெளிக்கொணர்வதற்கும் பயன்படுத்துவதைக் காணலாம். தண்டியலங்காரம் காவியத்தின் தலைமைப் பாத்திரத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. ஆனால், பொதுவாகக் காவியப் பாத்திரங்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றி அது கருத்துச் செலுத்தவில்லை. காவியத்தில் தலைமைப் பாத்திரங்கள், அவற்றின் குண இயல்புகளைப் பொறுத்தவரையில் வளர்நிலைப் பாத்திரங்களாக அமைகின்றன. எதிர்மைப் பாத்திரங்கள் எப்போதும் முரண்நிலைத் தன்மைகொண்டவையாக அமையும். சிறுபாத்திரங்கள் ஒரேநிலை அமைப்பு உடையவையாக விளங்குகின்றன.
காவியங்களை அடிப்படையாகக் கொண்டு, சிறுபாத்திரங்களை அல்லது துணைப் பாத்திரங்களை நோக்கிய கா. மீனாட்சிசுந்தரம் அவர்கள், அவற்றை ஒன்றிய பாத்திரங்கள், ஒட்டிய பாத்திரங்கள், ஊன்று பாத்திரங்கள் என வகைப்படுத்துவர். கதைத்தலைவன் தலைவியரது வாழ்க்கைப்போக்கில் மாறுதலை ஏற்படுத்துவதற்கு வெளிப்படையாக உதவும் பாத்திரங்களை ஒன்றிய பாத்திரங்கள் எனக் குறிப்பிடுவர். தலைவன் தலைவியருடன் உடனுறைந்தோ, சந்தித்தோ அவர்களுக்கு உதவியாகவோ, விளக்கமாகவோ அமைவன ஒட்டிய பாத்திரங்களாகும். கதைப்போக்கில் ஊன்றுகோல் போன்று ஆங்காங்குத் தோன்றிச் சிறுபங்கு வகிக்கும் பாத்திரங்கள் ஊன்று பாத்திரங்கள் எனக் கருதப்படுகின்றன. ஆயினும், கா. மீனாட்சிசுந்தரம் அவர்களின் இத்தகைய வகைப்பாடு தெளிவின்றி, சிக்கலை ஏற்படுத்தும் முறையில் அமைந்துள்ளது. எனவே, காவியங்களில் இடம் பெறும் சிறு பாத்திரங்களை வேறுமுறையில் நாம் வகைப்படுத்தலாம். சில பாத்திரங்களை முதன்மைநிலைச் சிறுபாத்திரங்கள்
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 163

Page 93
எனவும், வேறு சிலவற்றைத் துணைமைநிலைச் சிறுபாத்திரங்கள் என்றும் வகைப்படுத்திக் கூறலாம்.
சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் சிறுபாத்திரங்கள் அனைத்தும் தலைமை மாந்தர் மூவரதும் சிறப்பியல்புகளை வெளிக்கொணரப் பயன்படுத்தப் படுபவையாக விளங்குகின்றன. இந்தவகையில், இக்காவியத்தில் முக்கிய இடத்தினை வகிக்கும் பாத்திரங்களாக அமைந்த கவுந்தியடிகள், பாண்டியன் நெடுஞ்செழியன், சேரமன்னன் செங்குட்டுவன் முதலானோர் முதன்மை நிலைச் சிறுபாத்திரங்கள் எனக்கொள்ளத்தக்கவர். முக்கிய இடத்தினை வகிக்காவிடினும், துணைமை நிலையில் நின்று தலைமை மாந்தரின் சிறப்பியல்புகள் புலப்படுமாறு பங்களிப்புச் செலுத்தும் சிறுபாத்திரங்கள் பல சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ளன. மாடலன், கோசிகமாணி, தேவந்தி, மாதரி, சாலினி, மதுராபதித் தெய்வம் போன்றவர்கள் இத்தகைய பாத்திரங்களாவர். இவர்கள் துணைமைநிலைச் சிறுபாத்திரங்கள் என்ற வகையில் வைத்து எண்ணத்தக்கவர். சிலப்பதிகாரத்தில் இவ்வாறு இடம் பெறும் சிறுபாத்திரங்களில், முதன்மைநிலைச் சிறுபாத்திரங்களாக அமைவோர் காவியத் தலைவி கண்ணகியின் பெருமையைப் புலப்படுத்துவதற்காக வார்க்கப்பட்ட பாத்திரங்களாகத் தோன்றுகின்றனர். துணைமைநிலைச் சிறுபாத்திரங்கள் தலைமை மாந்தர் மூவரினதும் சிறப்புகளை எடுத்துக் காட்டுபவையாக விளங்குகின்றன.
முதன்மைநிலைச் சிறுபாத்திரங்கள் பற்றி முதலில் சிறிது நோக்குவோம். இப்பாத்திரங்களில், முதலில் வைத்து எண்ணத்தக்கவர், கவுந்தியடிகளாவர். நாடு காண்காதை முதலாக, அடைக்கலக்காதை வரையில், கோவலனுக்கும் கண்ணகிக்கும் துணையாக அமைந்த பாத்திரமாக அவர் விளங்குகின்றார். சமணப் பெண் துறவியான அவர், ஒரு புறத்தில் சமணசமயக் கொள்கைகளைச் சந்தர்ப்பம் வாய்க்குந்தோறும் விளக்கும் வகையில் வார்க்கப்பட்டுள்ளார்; மறுபுறத்தில் கண்ணகியின் பெருமையை விளக்கும் பாத்திரமாக இடம் பெற்றுள்ளார். கண்ணகியை மாதரியிடம் அடைக்கலமாக ஒப்புவிக்கும்போது கவுந்தியடிகள் கூறுவதை ஒர் உதாரணமாகக் கொள்ளலாம். “இன்துணை மகளிர்க்கின்றியமையாக் கற்புக்கடம் பூண்ட இத்தெய்வமல்லது பொற்புடைத் தெய்வம் யாங் கண்டிலமால்” என்ற அவரது கூற்று, கண்ணகிக்கு வழங்கப்பட்ட நற்சான்றாக அமைந்துள்ளது.
பாண்டியன் நெடுஞ்செழியனும், சேரன் செங்குட்டுவனும் மற்றைய முதன்மைநிலைச் சிறுபாத்திரங்கள் ஆவர். இவர்களுள் பாண்டிய மன்னன் கண்ணகியின் ஆளுமை முழுவதும் வெளிப்படுத்தப்படுவதற்குக் காரணகர்த்தனாக விளங்குகின்றான். கண்ணகியைப் பத்தினித் தெய்வம் என்ற நிலைக்கு உயர்த்தும் வகையில் சேரன் செங்குட்டுவனின் பாத்திரம் விளங்குகின்றது. இக்காவியத்தின் வஞ்சிக்காண்டம் முழுவதும் சேர
164 நடராஜ தரிசனம்

மன்னனின் ஆளுமை விரவிநின்று, கண்ணகியின் தெய்வீக இயல்புகள் புலப்படுத்தப்படுவதற்குப் பெரும்பங்கு ஆற்றியுள்ளது.
துணைமைநிலைச் சிறுபாத்திரங்களைப் பொறுத்தவரையில், மாடலன் என்ற பாத்திரம் கோவலனின் பழைய வாழ்வின் சிறப்புக்களை எடுத்துவிளக்கும் வகையில் அமைந்துள்ளது. "கருணை மறவ'இல்லோர் செம்மல்.’செல்லாச் செல்வ” எனக் கோவலனைப் பற்றிய அவனது விழிகளிலிருந்து இதனை உணரலாம். கோவலன் யானையொன்றிடமிருந்து முதிய அந்தணன் ஒருவனைக் காப்பற்றியமை பற்றியும் உண்மை அறியாது கீரியைக் கொன்ற அந்தணப் பெண்ணின் பாவவிமோசனத்துக்காகத் தானம் செய்து, பிரிந்த கணவனை அவளுடன் இணைத்துவைத்துப் பொருள் அளித்தமை பற்றியும், பூதமொன்று உண்ணவிருந்த ஒருவனுக்காகத் தன்னுயிரைக் கொடுக்க முனைந்தும், அது முடியாமையால் இறந்தவனின் உறவினரைப் பல்லாண்டுகள் பராமரித்தமை பற்றியும் மாடலன் கூறுவதன் வாயிலாகக் கோவலனின் பெருமைகளை உணரமுடிகிறது. சிலப்பதிகாரத்தைப் பயிலும் வாசகர் மனத்தில் கோவலனின் நடத்தைபற்றிய தவறான எண்ணம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, ஆசிரியர் இளங்கோ மாடலன் என்ற பாத்திரத்தைப் பட்ைத்துள்ளார் என்பதனை உணரமுடிகின்றது. "இம்மைச் செய்தனயானறி நல்வினை” எனக் கோவலனைப் பற்றி அப்பாத்திரம் குறிப்பிடுவது, கதைத்தலைவனின் பெருமையை ஒட்டு மொத்தமாகக் காட்டிநிற்கின்றது. மேலும், இப்பாத்திரம் கதைப்போக்கோடு ஒரளவுக்குத் தொடர்பு கொண்டதாகவும் விளங்குகின்றது. கோவலனுக்கு நேர்ந்த நிலையை அவனது பெற்றோரும், மாதவியும் அறிவதற்கு இவனே துணையாகின்றான். சேரன் செங்குட்டுவனுக்கும் இத்தகைய செய்திகளைத் தெரிவிப்பவனாகவும் அவன் விளங்குவதைக் காணமுடிகின்றது.
மாதவி பற்றிக் கோவலன் கொண்டிருந்த தவறான கருத்துக்களை மாற்றுவிக்கும் பாத்திரமாகக் கோசிகமாணி என்பவன் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளான். மாதவியால் கோவலனுக்கு எழுதப்பட்ட ஒலையைத் தாங்கிவந்த அவன், மதுரை செல்லும் வழியிலே கோவலனைக் காண்கின்றான். அங்கு கோவலனின் பிரிவால் மாதவியடைந்த துன்பத்தையும், அவனின் பெற்றோர் அடைந்த துன்பத்தையும் எடுத்தியம்புகின்றான். அதன் விளைவாக மாதவி பற்றிய தனது தவறான கருத்தினை மாற்றவேண்டியவனாகக் கோவலன் காணப்படுகின்றான். இதனை, “தன் தீதிலள் எனத் தளர்ச்சி நீங்கி என் தீதென்றே எய்தியது உணர்ந்து' என இளங்கோ காட்டுகின்றார். மாதவியின் ஒலை பொருள் பொதிந்து எழுதப்பட்டிருந்தமையால், அதனையே தனது பெற்றோருக்கும் கோசிகமாணி மூலமாக அனுப்பி வைக்கின்றான். இவ்வாறு, கோவலனிடத்து மனமாற்றத்தை ஏற்படுத்தி, மாதவியின் பெருமையைப் புலப்படுத்தும் பாத்திரமாகக் கோசிகமாணி இடம்பெறுவதை நோக்க முடிகின்றது.
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 1.65

Page 94
கண்ணகியின் தோழியான தேவந்தி என்னும் பாத்திரம் மற்றொரு சிறுபாத்திரமாகும். புகார்க் காண்டத்தில், பிரிந்த கணவனை மீண்டும் கண்ணகி அடையுமுகமாகச் சில வழிவகைகளைத் தெரிவிப்பவளாக அவள் விளங்குகின்றாள். ஆனால், கண்ணகி அவற்றை மேற்கொள்வது தனக்குப் பெருமையன்று என மறுத்துவிடுகிறாள். இத்தகைய சந்தர்ப்பத்தில் கண்ணகியின் மனநிலையை வெளிப்படுத்தும் பாத்திரமாகத் தேவந்தி விளங்குகின்றாள். வஞ்சிக் காண்டத்தில் கண்ணகிக்குச் சேரமன்னன் செங்குட்டுவன் எடுப்பித்த கோயிலின் பூசகியாகவும் இப்பாத்திரத்தை இளங்கோ காட்டுகிறார். சுருங்கக்கூறின், கண்ணகி குடும்பப் பெண்ணாக இருந்தபோது அவளது தோழியாகவும், அவள் தெய்வீக நிலையினைப் பெற்ற பின்னர் அவளது கோயிற் பூசகியாகவும் தேவந்தி விளங்குவதைக் காணலாம். சாலினி என்ற பாத்திரம், கண்ணகி பிற்காலத்தில் பெறப்போகின்ற பெருமைகளை முன்னரே தெரிவிப்பவளாக விளங்குகின்றாள். வழிபாட்டு நிகழ்ச்சியொன்றின் போது தெய்வமேறப்பெற்ற சாலினி, "இவளோ கொங்கச் செல்வி குடமலையாட்டி தென்தமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து ஒருமாமணியாய் உலகிற் கோங்கிய திருமாமணி’ எனக் கண்ணகியைப் போற்றுவது குறிப்பிடத்தக்கது. அவளைச் சிறப்பிப்பதற்காகப் பயன்படுத்தப் பட்ட இன்னொரு பாத்திரமாகச் சாலினி விளங்குகின்றாள்.
சிலப்பதிகாரத்தில் தெய்வங்களும் பாத்திரங்களாக அமைந்துள்ளன. அவற்றுட் குறிப்பிடத்தக்கதாக மதுராபதித் தெய்வம் விளங்குகின்றது. கண்ணகி மதுரை நகரை எரித்த சமயத்தில், அவள் முன்னிலையில் தோன்றத் தயங்கிய நிலையில் அத்தெய்வம் காட்டப்பட்டுள்ளது. இதன்மூலம், மதுராபதித் தெய்வத்தை விடவும், தெய்வீகநிலை பெற்ற கண்ணகியை உயர்த்திக் காட்ட விரும்பிய இளங்கோவின் நோக்கம் வெளியாகின்றது. மேலும், கோவலனுக்கு ஏற்பட்ட துன்பநிலைக்கான முற்பிறப்பு வரலாற்றைத் தெரிவித்து, ஊழ்வினையின் செயற்பாட்டினை உணர்த்துவதாகவும் இப்பாத்திரம் விளங்குகின்றது.
இவ்வாறு, சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் சிறுபாத்திரங்கள் தலைமைப் பாத்திரங்களின் சிறப்பியல்புகளைப் புலப்படுத்துவதாகவும், ஒரளவு கதையோட்டத்துக்குத் தம்மளவிலான பங்களிப்பைச் செலுத்துவதாகவும் இளங்கோவடிகளால் வார்க்கப்பட்டுள்ளன. -
சிலப்பதிகாரத்தில் சிறுபாத்திரங்கள் பல இடம்பெறினும், கவுந்தியடிகள், பாண்டியன் நெடுஞ்செழியன், சேரன் செங்குட்டுவன் முதலான முதன்மைநிலைச் சிறுபாத்திரங்கள் இக்காவியத்தைப் படிப்பவர் மனதில் நீங்கா இடத்தினைப் பெறக்கூடியவையாக உள்ளன.
166 நடராஜ தரிசனம்
 

பாரதியாரின் விநாயகர் நான்மணிமாலை
கலாநிதி வ. மகேஸ்வரன் தமிழ்த்துறை, பேராதனைப்பல்கலைக்கழகம்
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதையின் செல்நெறியில் மிகப்பெரும் ஆளுமையாக விளங்கியவர் பாரதி. சொல், சுவை, பொருள் முதலியவற்றைப் புதிதாக்கி நவ கவிதை படைப்பதே அவரது தாரக மந்திரமாக விளங்கியது. அவ்வாறே கவிதையையும் படைத்தார். அவ்வாறு படைத்தவர் கண்மூடித்தனமாகப் புதுமையை வரவேற்றவரல்லர், இந்திய பண்பாட்டுச் சூழல், இந்திய மரபு, தமிழ்ப் பண்பாட்டுச் சூழல், தமிழ் மரபு ஆகியவற்றைக் தளமாகக் கொண்டே புதுமையைக் காண விரும்பினார். இந்தப் பண்பாட்டுப் பேணுகையின் ஒரு வகை அமைப்பாக அமைவது அவரது விநாயகர் நான்மணிமாலை எனலாம்.
நான்மணிமாலை என்பது நான்கு மணிகள் சேர்ந்த மாலை எனப் பொருள்படும். நான்கு பாவினங்கள் விரவிவர நாற்பது பாடல்கள் அமையப் பர்டுவது "நான்மணிமாலை” என இலக்கிய உலகில் இது அறியப்பட்டது.
“வெண்பா, கலித்துறை, அகவல், விருத்தம் ஆகியவை அந்தாதித் தொடையாய் அமைவது” எனப் பன்னிரு பாட்டியலும் (257, 259), இலக்கணப் பாட்டியலும் (61) இலக்கணங்கள் கூறுகின்றன. இதில் அடங்கும் பாவினங்களான வெண்பாவும், அகவலும், விருத்தமும், கலித்துறையும், அந்தாதியும் தமிழ் இலக்கியத்தில் நீண்டகாலமாகப் பயின்று வந்த பாவினங்களாகும். இவற்றைச் சேர்த்து நான்மணிமாலை எனப்படும் பிரபந்தம் செய்யும் மரபு நீண்டகாலமாக இருந்து வந்துள்ளது. எனினும் இது விஜய நகர நாயக்கர் காலத்தில் பெரு வழக்காக விளங்கியது. ஏதோவொரு சூழலில் பாரதியார் இவ்வடிவத்தைக் கையாண்ட போதும், பாரதியாரின் உள்நின்று இயக்கும் புதுமைக் கவிஞனை இதனூடாகவும் இனங்காண முடிகின்றது. இதுவே பாரதியாரின் கவிதைகளுக்குரிய தனித்துவம்.
இந்த நான்மணிமாலை புதுவையில் உள்ள மணக்குளம் என்ற இடத்தில் கோயில் கொண்ட விநாயகர் மீது பாடப்பட்டது. வாழ்க புதுவை மணக்குளத்தில் வள்ளல் பாதமலரே (35) 'மணக்குளப்பிள்ளை (16) முதலிய அடிகள் மூலம் இதை அறியலாம். பாரதியார் புதுவையில் வாழ்ந்த பத்தாண்டுக் காலத்துள் (1908-1918) பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு, கண்ணன் பாட்டு
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 167

Page 95
ஆகியவற்றைப் படைத்தார். அத்துடன் பகவத்கீதையையும் தமிழில் மொழி பெயர்த்தார். இந்த ஒரு தசாப்தத்தில் பாரதியாருக்கு அரசியல், பொருளாதார நிலைகளில் கடுமையான சோதனைக் காலமாக விளங்கியது. எனவே தனது மனதில் ஏற்பட்ட சஞ்சலம், சலிப்பு, துன்பம் முதலியவை நீங்க மணக்குள விநாயகர் மீது அவர் மனம் ஆற்றுப்படுத்தப்பட்டு, இந்த இலக்கிய வடிவத்தை எழுதியிருக்க வேண்டும். பாரதியாரது தனிப்பட்ட வாழ்க்கை இன்னலுக்குள்ளான போதும் அவரது கவிதா சாமர்த்தியமும், அவரது தொனிப் பொருளும் சற்றும் மாறுபடாமல், மேலும் வீரியம் கொண்டுள்ளதை இவ்வடிவத்தினூடாகக் காணலாம். ஏனெனில் இடர்வரும் போது சுயதேவைப் பூர்த்தியே எந்த மனிதனது சிந்தனையிலும் முதல் எழும். ஆயின் பாரதியாரது சிந்தனை அவ்வாறிருக்கவில்லை.
'பூமண்டலத்தில் அன்பும் பொறையும் விளங்குக. துன்பமும், மிடிமையும், நோவும் சாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிரெல்லாம் இன்புற்று வாழ்க’ என்பேன் இதனை நீ திருச் செவிக் கொண்டு திருவுளம் இரங்கி அங்ங்னே யாகுக என்பாய் ஐயனே. (32)
என்பது தான் அவரது வேண்டுதலாக இருந்தது. இதற்கும் ஒரு படிமேலே போய் - விநாயகரின் அருளுடன்,
மொய்க்குங் கவலை பகை போக்கி
முன்னோன் அருளைத் துணையாக்கி, எய்க்கும் நெஞ்சை வலியுறுத்தி
உடலை இரும்புக் கிணையாக்கிப் பொய்க்குங் கலியை நான் கொன்று
பூலோகத்தார் கண்முன்னே மொய்க்குங் கிருத யுகத்தினையே
கொணர்வேன் தெய்வ விதியிதுவே
என்று சபதம் செய்கின்றார். இந்த நான்மணிமாலையில் ஒரு ஒழுங்குமுறை பின்பற்றப்பட்டுள்ளது. வெண்பாக்களில் பெரும்பாலும் விநாயகரிடம் அபயம் கேட்கும் முறைமை காணப்படுகின்றது. கலித்துறைகளில் விநாயகர் புகழ் பெரும்பாலும் பேசப்படுகின்றது. விநாயகரை வாழ்த்துதல், வரங்கேட்டல், அவன் அருளில் திளைத்தல் ஆகிய அம்சங்கள் விருத்தங்களிற் காணப்படுகின்றன.
168 நடராஜ தரிசனம்
 

அகவற்பாக்களிலே, விநாயகரின் தனித்துவம், அவனை அடைதலால் ஏற்படும் பயன்கள், அவனது ஏகத்தன்மை அல்லது சகல மதங்களையும் தன்னுள் அடக்கித் தனித்து நிற்கும் தன்மை, அவனிடம் கவிஞர் வேண்டுவன எனப் பலவாறு விடயங்கள் விரிந்து காணப்படுகின்றன.
மேற்கூறப்பட்ட அமைப்பியலை அடிப்படையாகக் கொண்டு, அவர் விநாயகரிடம் வேண்டுவன, பாரதியாரது கவிதை மதம், பாரதியார் விநாயகரைக் காணும் முறைமை, பாரதியாரது ஆத்மீகச் சிந்தனைகளின் வெளிப்பாடு, பக்தி என்பது அவரது ஆன்மீக விடுதலைக்கும் மேலாக அவரது ஆளுமை விருத்திக்கும், சமூக விடுதலைக்கும் எவ்வாறு பயன்பட்டுள்ளது முதலிய அம்சங்களை நோக்குவது அவசியமானதாகும்.
பாரதியாருடைய கவிதைகளை ஆழ்ந்து நோக்குபவர்கள் அவருடைய ஆத்மீகத் தேடலைச் சரியான வகையில் இனங்காண்பர். புறவயமாகப் பாரதியார் இந்து மதத்தைக் குறிப்பாகச் சாக்தத்தை ஏற்றுக் கொண்டவர். தத்துவரீதியாக வேதாந்தத்தைப் போற்றியவர். அதேவேளை சனநாயகத்தில் (தனிமனித முக்கியத்துவத்தில்) நம்பிக்கை கொண்டிருந்தவர். இவரது பாடல்களில் இக் கருத்துநிலை பாலில் வெண்ணெய் போல் நிற்கும். பாரதியாரிடத்து ஆழமான ஏக ஆன்மீக உணர்வு காணப்பட்டது. சகலவற்றிலும் தெய்வத்தைக் காண்பது என்பது அது. குறிப்பாக அழகானவற்றில், விரும்பப்படுவனவற்றில் தெய்வத் தன்மையைக் காண்பது இவர் பண்பு. இதனாலேயே அவர் கண்ணனைக் குழந்தையாகக், காதலியாகக் காண முடிந்தது. (கா. சிவத்தம்பி: 1995) இந்த அடிப்படையில் நோக்கும் போது முதலில் சகல தெய்வங்களையும் உள்ளடக்கும் ஏக தெய்வமாக விநாயகரைக் காணும் முறை புலனாகும்.
இந்திய சமய மரபிற் பேசப்பட்ட உறவும் முறையும் கொண்ட சகல தெய்வங்களின் கூட்டிணைவாக விநாயகரை இவர் காண்கின்றார்.
ஆதிமூலமே! அனைத்தையும் காக்கும் தேவ தேவா! சிவனே! கண்ணா! வேலா! சாத்தா விநாயகா மாடா! இருளா! சூரியா! இந்துவே சக்தியே! வானி காளி மாமகளோயோ! ஆணாய் பெண்ணாய் அலியாய், உள்ளது யாதுமாய் விளங்கும் இயற்கைத் தெய்வமே! வேதச் சுடரே! மெய்யாங் கடவுளே! (20)
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 169

Page 96
எனப் பலவாறு பேசுவதனை அவதானிக்கலாம். விநாயகனை ஏகனாகக் காணும் முறையை அல்லது சகலதும் அவனுக்குட்பட்ட பொது நிலையை இவ்விடத்தில் எடுத்துரைக்கின்றார். இந்து மதத்திற் பேசப்படும் பெருந் தெய்வங்கள் மாத்திரமன்றிச் சிறு தெய்வங்களான சாத்தன், மாடன், இருளன் ஆகியவற்றையும் இணைத்துக் காணும் முறைமையும் இங்கு அவதானிக்கத் தக்கது. இதற்கும் ஒரு படி மேலே சென்று விநாயகருக்கான சர்வமத ஒருமைப் பாட்டையும் பாரதி வழங்குகின்றார்.
'பிறநாட்டிருப்போர் பெயர் பலகூறி அல்லா யேஹொவா! எனத் தொழுதின்புறும் தேவருந் தானாய், திருமகள், பாரதி.
உலகெலாங்காக்கும் ஒருவனைப் போற்றுதல் இந்நான்கே இப் பூமியில் எவர்க்கும் கடமை எனப்படும்.” (8)
எனக் கூறுகின்றார். சகல எல்லைகளையும் கடந்த ஒருமைப் பொருளாக, ஏக பொருளாக விநாயகரை அவர் காணும் முறைமையில் அவர் விநாயகர் மீது கொண்ட பற்றும், விநாயகர் மூலம் சகல கடவுளரையும் இனங்காணச் செய்யும் திறமும் வெளிப்பட்டு நிற்கின்றன. இவ்வாறான பொதுமை நோக்கு நிலை பாரதி போன்ற கவிஞர்களுக்கே கைவரப் பெற்றது.
விநாயகர் நான்மணிமாலையினூடாக பாரதியாரது இன்னோர் பரிமாணமும் புலனாகின்றது. பாரதியார் தமிழ் நாட்டுச் சித்தர் தத்துவத்தில் ஈடுபாடு கொண்டவர். தனது சுயசரிதையின் முன்னுரையாகச் சித்தர்களுள் ஒருவரான பட்டினத்துப் பிள்ளையினை உதாரணங் காட்டுவதும், பாரதி அறுபத்தாறில்,
“எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா
யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்”
என்று எழுதுவதும் அதனை மெய்ப்பிக்கும். சித்தர்களுடைய ஆத்மஞானத் தேடலும், ஒங்குணர்வின் உள்ளொடுங்கி உள்ளத்துள் இன்பொடுங்க நிற்பதும், அட்டமா சித்திகள் கைவரப்பெறுவதற்கான சாதனைகளும் இப்பாடல்களில் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன.
குணமதிற் பலவாம் கூறக் கேட்பீர். உட்செவி திறக்கும், அகக்கண் ஒளிதரும் அக்கினி தோன்றும், ஆண்மை வலியுறும்,
170 நடராஜ தரிசனம்
 

திக்கெலாம் வென்று ஜெயக்கொடி நாட்டலாம், கட்செவி தன்னைக் கையில் எடுக்கலாம், விடத்தையும் நோவையும் வெம்பகை யதனையும் துச்சமென்றெண்ணித் துயரிலாதிங்கு நித்தமும் வாழ்ந்து நிலைபெற்றிருக்கலாம் அச்சந் தீரும் அமுதம் விளையும்.
எனப்பலவாறு சித்திகள் பற்றியும் பேசுகின்றார். தன்னைக் கட்டுதலே, கடமை என்கின்றார். "சும்மாயிருத்தல்' என்ற சித்தர்களின் கருத்துக்கு நிகரான சொல்லே "தன்னைக்கட்டுதல்” என்பதாகும். இந்த நான்மணிமாலையில் தனது நெஞ்சிற்குக் கூறுவனவாக அமைந்த அகவல்கள் பலவற்றில் இத்தன்மைகளை நோக்கலாம்.
இனி, பாரதியார் விநாயகரிடம் வேண்டுவன தொடர்பாகப் பெரும் பட்டியல் ஒன்றை வரையலாம். எனினும் அதில் தொக்கு நிற்கும் தொனிப் பொருள் தனிப்பட்ட விருப்பும், பொது நோக்கும் என வெளிப்படையாகக் கூறலாம். ஆனால் அவரது தனிப்பட்ட விருப்புகள் கூட ஏற்கனவே குறிப்பிட்டது போலச் சுயதேவைப் பூர்த்தி என்ற நிலையினின்றும் மாறுபட்டு, மானிடத்தைப் பயனுற வாழவைப்பதற்கான வல்லமை கேட்டலாகிய பொது நோக்கையே கொண்டிருப்பதனை அறியலாம். யார்க்கும் எளியராய், யார்க்கும் வலியனாய், யார்க்கும் அன்பனாய் வாழ்தல், மனத்தில் சலனமில்லாமல் மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது மெளன நிலை பெறல், அறம், பொருள், இன்பம், வீடு இவற்றை ஆளும் சமத்து முதலியனவும், நோவு இல்லாத நூற்றாண்டு வாழ்வும், அச்சம் இல்லாத அமைதியும், பாவம் அன்றிப் பல்சுவையும், இழிவன்றி இன்பமும், களவு இன்றிக் காதலும் அவர் வேண்டுகின்றார். வேண்டுபவை யாவற்றிலும் ஒர் இலட்சியமும், தெளிவும், பொது நோக்கும் விரவி இருப்பதனை அவதானிக்கலாம். இதற்கும் மேலே அவரது பொது நோக்கம் புலப்படுகின்றது.
நாட்டினைத் துயரின்றி நன்கமைத்திடுவதும் உள்ளமெனும் நாட்டை ஒரு பிழையின்றி ஆள்வதும், பேரொளி ஞாயிறே அனைய சுடர் தருமதியொடு துயரின்றி வாழ்தலும் நோக்கமாகக் கொண்ட நின்னடியை நோக்கினேன்.
என்று கூறுகின்றார். இந்த நோக்கின் இறுதி வடிவமாகவே,
மெய்க்குங் கிருத யுகத்தினைக் கொணர்வது
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 171

Page 97
என்ற இலட்சியம் பெருவிருட்சமாக வியாபித்து நிற்பதனை அவதானிக்கலாம்.
இந்த இலக்கிய வடிவத்தினூடே பாரதியார் தமது கவிதை மதத்தினையும் ஆங்காங்கே உரைத்துச் செல்வதனையும் அவதானிக்கலாம். முதலில்
“நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல்
இமைப் போதும் சோராதிருத்தல்” என்று தம்மைச் சோர்வில்லாத கவிஞனாக, முழுநேரக் கவிஞனாக, பாட்டுத்திறத்தாலே இவ்வை யத்தைப் பாலித்திடும் கவிஞனாகச் சுயபிரகடனம் செய்கின்றார். தனது கவிதைப் பிரவாகம் - பராசக் தியாலும், வாணியின் அருளினாலும் ஏற்பட்டது என்றும் கூறுகின்றார்.
“செய்யுங்கவிதை பராசக்தியாலே செய்யப்படுங் காண்” என்றும்,
"புகழ்சேர் வாணியும் என்
என்றும் குறிப்பிடுகின்றார். கவிதையைப் பற்றிக் கூறும்போது
"தீயே நிகர்த்தொளி வீசுஞ் தமிழ்க் கவி செய்குவனே’
எனக் குறிப்பிடுகின்றார். பாரதியாரது மனவோடையில் உருவாகிய அனைத்துக் கவிதைகளுக்கும் இந்த வரைவிலக்கணம் பொருந்தும், அதனால் அவரது கவிதைகள் இன்றும் அக்கினிக் குஞ்சுகளாகி, பொய்மையும், ஏமாற்றும் கொண்ட உலகை வெந்து தணியச் செய்தது மட்டுமன்றித் தாமும் நிலைத்து நிற்கின்றன. மேற்கூறிய கவிகள் மானிடத்தேவைகளுக்கான கோசங்களாக, வேண்டுகோள்களாக மட்டும் முன்வைக்கத் தக்கவை மட்டுமல்ல. அவை மனித மனங்களைக் களிக்கச் செய்கின்ற சாதனங்களாகவும் உள்ளன என்பது தான் பாரதியினது கருத்து.
தின்னப் பொருளும், சேர்ந்திடப் பெண்டும்
கேட்கப் பாட்டும், காணநல்லுலகும்
களித்துரை செய்யக் கணபதி பெயரும்
என்று மிங்குளவாம். எனவும் குறிப்பிடுகின்றார். பாட்டு இன்பம் சேர்க்கும் ஊடகமாகவும் உள்ளது என்பது தான் பாரதியின் கருத்து காணி நிலம் வேண்டும் என்ற பாடலில்,
எங்கள் கூட்டுக் களியமுதில்
கவிதைகள் பொங்கிவர வேண்டும்.
172 நடராஜ தரிசனம்

பாட்டுத் திறத்தாலே இந்த வையத்தைப்
பாலித்திட வேண்டும்.
எனக் குறிப்பிடும் போது கவிதையே பாட்டாக கூட்டுக்களிய முதத்தின் சாரமாகவும், நாட்டைக் கேடின்றி நிறுத்தும் சாதனமாகவும் குறிப்பிடுவதை அவதானிக்கலாம். ஆக விநாயகர் நான்மணி மாலையில் பாரதியார் கவிதை மீது கொண்ட தனது மனப் பதிவுகளையும் ஆங்காங்கே குறித்துச் செல்வதை அவதானிக்கலாம்.
நிறைவாக, பாரதியினுடைய கவிதைகளை ஆராய்வோர் அவரது கவிதைகளுக்கான சந்தர்ப்ப சூழ்நிலை, அவரது நாட்டபிமானம், தமிழ்ச்சூழல் எனும் தளத்தில் நின்றும் வெளிப்படுந்திறன், அவரது பாடல்களின் நேரடித் தன்மையும், உடனடித் தன்மையும், அவரது சமயச்சார்பு அல்லது தத்துவச் சார்பு ஆகிய பல விடயங்களையும் மனதிற்கொண்டே ஆராய வேண்டும். அவ்வாறான ஒரு ஆழ்ந்த அகலித்த தளத்தில் நின்று விநாயகர் நான்மணிமாலை நோக்கப்படும் போது பாரதியார் மேலும் விளக்கம் பெறுவார்.
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 173

Page 98
ஈழத்துப் புகலிட இலக்கிய வளர்ச்சி ஒரு நோக்கு
கலாநிதி செ. யோகராசா கிழக்குப்பல்கலைக்கழகம்
“யாழ் நகரில் என்பையன் கொழும்பில் என் பெண்டாட்டி வன்னியில் என் தந்தை
தள்ளாத வயதினில்
தமிழ்நாட்டில் என் அம்மா
சுற்றம் பிராங்போட்டில் ஒரு சகோதரியோ பிரான்ஸ் நாட்டில்
நானோ வழி தவறி அலாஸ்கா வந்துவிட்ட ஒட்டகம்போல் ஒஸ்லோவில்.
- வ.ஐ.ச. ஜெயபாலன்.
FFழத்துக் கவிஞரின் மேற்கூறிய குரல் எண்பதுகளுக்கு (1980) முன்னர் கேட்கவியலாதது; ஆழ்ந்த சிந்தனைக்குரியது. ஏனெனில், கரவெட்டியையும் களுவாஞ்சிக்குடியையும் விட்டு வெளியேறாது வாழ்ந்து, இன்று பாரீஸிலும் பிராங்போட்டிலும் (ரொறன்றோவிலும் மெல்போனிலும்) வாழவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகிவிட்ட ஈழத்தமிழர்கள் - படைப்பாளிகள் பெறுகின்ற அநுபவங்கள், அடைகின்ற உணர்வுகள், சந்திக்கின்ற பிரச்சினைகள் முற்றிலும் புதியவை. இவையே புகலிட இலக்கியங்களாகப் பரிணமித்து ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சியை இன்னொரு தடத்திற்கு - எல்லைக்கு - இட்டுச்செல்பவை. இவ்விதத்தில் எமது அவதானத்தை அவாவி நிற்பவை.
மேற்கூறியவாறு எண்பதுகளிலே புகலிட நாடுகளுக்குச் சென்றோர் முன்னர் சென்றவர் போன்று விருப்பத்துடன், உயர் தொழில் தேடிச் சென்றவரல்லர். மாறாக பேரினவாத ஒடுக்குமுறையின் உச்ச விளைவுகள் காரணமாக தவிர்க்கவியலாத சூழ்நிலையில் - தஞ்சங்கோரிச் சென்றவர்கள். ஆதலின் இவர்கள் அனைவரிடமும் - அனைத்துப் படைப்புகளிலும் - ஏக்கம்பிரிவுத் துயரம் (குடும்பம், ஊர், நட்பு, காதல்) அடிநாதமாக விளங்குவது தவிர்க்க இயலாததே. இத்துயரினை அழகாக வெளிப்படுத்துகிறார் கவிஞரொருவர்.
174. நடராஜ தரிசனம்

“கண்டறியாத் தேசத்தில் இயந்திரப் பற்களுக்குள் கனவுருகி - வாழ்வுருகி உன்னப்பன் நானிருக்க உன் காதுள் பஞ்சடைத்து தன்னுக்குள் உனைப்போர்த்து உன் அன்னை காத்திருப்பாள் மெல்ல நீ கண்ணுறங்கு கண்ணுறங்கு கண்மணியே”
(கி.பி.அரவிந்தன்)
(சிறுகதைத்தொகுதிஒன்றின் பெயரே'மண்ணைத்தேடும்மனங்கள் என்பது) புகலிடநாட்டுத் தமிழரது வாழ்க்கையோடு, தமிழுலகில் அகதி என்றொரு சொல் இடம்பெறத் தொடங்கியது இவ் அகதி நிலை வாழ்க்கைபற்றிய ஈழத்திலிருந்து வெளியேறுவது தொடக்கம் அகதிமுகாமில் வாழ்வதுவரை அவர்களது அவலங்கள் பலராலும் உருக்கமான முறையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அகதி உருவாகும் நேரம்(பொ.கருணாகரமூர்த்தி) வாழ்வுவசப்படும்(பொ.கருணாகரமூர்த்தி) கனவை மிதித்தவன்(பார்த்திபன்)முதலான நாவல்களும் அகதி(கெளரி),நெடுங்கவிதையும் இவ்விதத்தில் குறிப்பிடத்தக்கவை. ஈழத்து அகதியையும், வியட்னாம் அகதியையும் சந்திக்கச் செய்கிறது.புதர்க்காடுகளில்? (லெ. முருகபூபதி) என்ற சிறுகதை அகதி முகாம் வாழ்வின் அந்நியத்தன்மை கவிதை ஒன்றிலே இவ்வாறு வெளிப்படுகிறது:
பெயர் தெரியாத சிறகுகள் முளைக்காத சின்னக்குருவி என் சின்ன அறையில். சின்னஞ்சிறு குருவிக்கிருக்கும் கூடுகட்டும் தகைமை கூட எனக்கு
இல்லை.
சின்னக்குஞ்சு என்னதான் தின்னுமாக்கும்? என் அறிவுக்கு எட்டவில்லை. நேற்றுவரை தாயின் கூட்டில்! இன்று அந்நியமாகி
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர்
போன என்னுடன்
பசியால் கத்தும். சின்னக்குருவிக்கு தின்னக்கொடுக்க என்ன உண்டு என்னிடம்? பழஞ்சோற்றுப்பருக்கைகளை எட்டிப்பார்த்தேன். பழக்கமில்லாத குருவி துப்பிவிட்டது.
அந்நியமாக போன என்னுடன்
என்ன சின்ன அறையில் என்னுடன்’
175

Page 99
(மேற்கூறிய கவிதையின் தலைப்பு அந்நியம் என்பதும் எழுதியவர் பெயர் நாடோடி என்பதும் கவனத்துக்குரியன)
புகலிடத்து இளைஞர் பலர் தொடர்ந்து ஈழத்தில் வாழ்கின்ற குடும்ப அங்கத்தவர்களால் - அவர்களது பொருளாதார எதிர்பார்ப்புகளால் கடின வேலை செய்தும் கடன்பட்டும் அடைகின்ற உடல், உள உளைச்சலும் அதன் விளைவுகளும் பாரதூரமானவை. செக்கு மாடு (வ.ஐ.ச. ஜெயபாலன்) சிறுகதையும், அழிவின் அழைப்பிதழ் (தியாகலிங்கம்) நாவலும் உருக்கமான விதத்தில் இவற்றை வெளிப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
புகலிட நாட்டுப் பண்பாட்டு மாற்றமும் தமிழ்க் குடும்ப வாழ்க்கை முறையும் குடும்பத்தில் குறிப்பாகச் சிறுவர், முதியோர், பெண்கள் மத்தியில் பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கி வந்துள்ளன.
சிறுவர்களைப் பொறுத்தவரையில் தமக்கான அடிப்படை உரிமைகள் பற்றி அவர்கள் அறிய நேரிடுகிறது. விளைவாகக், அவற்றைத் தமது வீட்டிலேயே பயன்படுத்த முனைகின்றனர். இவை பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கும் என்பதில் தவறில்லை. புதிய தலைமுறை (கோவிலூர் செல்வராசன்) என்ற சிறுகதை இவ்வாறு முடிகிறது:
"(தகப்பனான ஜோன்பாபு) இப்போது கோப்பி குடிக்கும்போது போலிஸார் வந்துவிட்டனர்.
ஸ்டெல்லாவின் (மகள்) அறைக்குள் சென்ற போலீஸார் திரும்பினார்கள்.
அவர்களிடமிருந்து முறைப்பாட்டினை எழுதி வாங்கியிருக்கவேண்டும்.
“யே பாத நோ கான் விட்ரா தில் பொலித்தி ஸ்டசூன்” என்றான் ஒருவன். தான் வேலைக்குச் செல்லவேண்டும். அன்றேல் வரமுடியாது என்று அறிவிக்கவேண்டும் என்று பாபு தயங்கினான். அதனை ஸ்டேஷனிலேயே ஒழுங்கு செய்யமுடியுமென்று அவர்கள் நாகரிகமாகச் சொன்னார்கள்.
ரஞ்சியால் (தாய்) எதுவும் பேச முடியவில்லை. “ஸ் கால் வீ” என்று போலீஸார் இயந்திர இயக்கத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தான் பாபு.”
சிறுவர்களுக்கு பெற்றோரது அரவணைப்புக் கிடைக்காத நிலை புகலிட நாடுகளில் உண்டு. இத்தகைய ஆரோக்கியமற்ற நிலைமை அவர்களைத் தவறான பாதைக்கு இட்டுச்செல்கின்றமை வெளிப்படை சருகாகும் பூக்கள் (லதா உதயன்) சிறுகதையின் முடிவு இவ்விடத்தில் எடுத்தாழத்தக்கது. அது பின்வரருமாறு :
“வின்டர் லீவு தொடங்கிவிட்டது. தாய்க்கும் தகப்பனுக்கும் லிவு இல்லாதபடியால் எங்கும் போகமுடியாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தான் பிரதீபன். தங்கை நாள் முழுக்க டி. வி. யில் ஏதாவது
176 நடராஜ தரிசனம்

பார்த்துக்கொண்டே இருப்பாள். அவள் பிறந்ததிலிருந்து அவளின் முழுநேரப் பொழுதுபோக்கு, விளையாட்டு எல்லாம் டி. வி. தான். எதையும் புரிந்து கொள்ளும் வயது அவளுக்கு இல்லாவிட்டாலும் தன் வாழ்க்கை இப்படித்தான் என்று அதனோடு வாழப்பழகி விட்டாள். பிரதீபனும் இங்கு பிறந்திருந்தால் இப்படித்தான் இருந்திருப்பானோ என்று அவனுக்குத் தெளிவாக யோசிக்கத் தெரியவில்லை. பின்னேரம் ஐந்து மணிகூடவராது. வெளியே இருட்டு கும்மென்று பரவிக்கொண்டு வந்தது.
தங்கை படுத்திருந்த அறைக்கதவைச் சாத்திவிட்டு டி.வி.யில் தன் வயதுக்கு மீறிய பாடல்களை நல்ல சத்தம் கூட்டிவைத்துப் பார்க்கத் தொடங்கினான். அவன் மனதிலே படிந்த தனிமையான ஏக்கங்கள் அதிரடிச் சத்தங்களிலும், ஆர்ப்பாட்ட அசைவுகளிலும் கரைந்து காணாமல் போய்க் கொண்டிருந்தன”. முதியோர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் தமது பிள்ளைகளால் போதிய கவனிப்பிற்குள்ளாக்கப்படாத நிலைமையுமுண்டு: இதனால் ADIEU (எஸ். பொ.) சிறுகதையிலே வரும் பரநிருபசிங்கம் நாட்டைவிட்டு வெளியேறுகின்றார்:
"1Sincerely tell you, பாலா! புதிய பறங்கிக் குட்டிகளுக்குத் தாத்தா என்று சொல்லிக்கொண்டு வாழ்வதிலும் பார்க்க பிறந்த மண்ணிலே தமிழனாகச் சாவது கெளரவமானது.”
கன்னிகாதானங்கள் (அருண் விஜயராணி) சிறுகதையில் வரும் இராமநாதன் நாட்டிற்குத் திரும்பவில்லை. மாறாக
“கலியாணத்திற்கு வந்திருந்தவர்களின் கிசுகிசுக்கள். N.K. பத்மநாதனின் இனிய நாதஸ்வர இசை. எதையுமே இலட்சியம் பண்ணாமல் கன்னிகழிந்த தன்மகள், மீண்டும் ஒருமுறை கன்னிகாதானம் செய்யப்படுவதை, கண்கலங்கப் பார்த்துக்கொண்டிருந்தார்.
மேற்கூறிய இரு சாராரையும் விடப் புகலிட நாட்டுப்பெண்களது நிலைபிரச்சினைகள் - மிகமுக்கியம் பெறுகின்றன! நுணுகி நோக்கும்போது அவை இருவகைப்படுகின்றன. புகலிடச் சூழலுக்கு ஏற்பத் தொடரும் ஆண்களது கணவனது ஆணாதிக்கம், இவற்றுள் ஒன்று. தொலைபேசியிலே வாய்ச்சேட்டை செய்வது தொடக்கம், படுக்கை அறையிலே துன்புறுத்துவது வரை ஆணாதிக்க கொடுமைகளைப் பல படைப்புகள் வெளிப்படுத்தி நிற்கின்றன.
தமிழ் இளைஞர்கள் பலரால் தமிழ்ப் பெண்ணொருத்தி நடுத்தெருவிலே மானபங்கப் படுத்தப்படுவதை, நாடக உத்திமுறையிலே சித்தரிக்கும் நாடகங்கள் தொடரும் (இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்) சிறுகதை கவனத்தை ஈர்க்கின்ற படைப்பாகின்றது. இவ்வாறு அது முடிகின்றது:
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 177

Page 100
“போலீஸ் வானின் சத்தம் கேட்டது. நடுச்சந்தியிலே "நியாயம் வழங்கிய தமிழர்கள் மூலைக்கொருவராய் ஓடிவிட்டார்கள். அவிழ்ந்த தலைமயிரையும் வழிந்த கண்ணிரையும் சரிசெய்துவிட்டு அந்தப் பெண் திரும்பினாள். ஒரு வெள்ளக்காரப் பெண்ணும், ஆணும் அவளுக்குக் கை கொடுத்தார்கள். பொலிஸ்காரர்கள் வந்தார்கள். இன்னும் சில நாட்களில் இப்படியொரு நாடகம் இந்த அழகிய பட்டணத்தின் இன்னொரு சந்தியில் நடக்கலாம். இன்னொரு பெண்ணுக்கு நியாயம் வழங்கப்படலாம். இலங்கையில் செய்ததை இப்போது International (இன்ரநாஷனல்) ஆகச் செய்கின்றோம்”
மறுபுறம், மேலைத்தேய நாடுகளின் ஆண்/பெண் சமத்துவ நிலையும் பெண்கள் மத்தியிலான சமூக விழிப்புணர்ச்சியும் பெண்ணிலைவாதச் சிந்தனைப் பரம்பலும் புதிய தமிழ்ப் பெண்படைப்பாளிகள் பலரை உருவாக்கி வந்துள்ளது.
பெண்கள் சந்திப்புக்கள், பெண்கள் 'சந்திப்புமலர்கள் தொடக்கம் பெண் எழுத்தாளர்களது நூல் வெளியீடுகள் வரை பெருமளவு முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. மறையாத மறுபாதி’ என்ற புகலிடத் தமிழ்ப் பெண்களது கவிதைத் தொகுப்புப் பற்றி இலக்கிய ஆர்வலர்கள் அறிந்திருப்பர். தமிழ்ப் பண்பாட்டுத் தழைகளுக்கும் ஆணாதிக்கத்திற்கும் எதிராக அவர்களது எதிர்ப்புக்குரல் உரத்தொலிக்கின்றமை விதந்துரைக்கப்பட வேண்டியதே. இவ்வேளை நாளைக்கு இன்னொருத்தன்', ‘கற்புடைய விபச்சாரி' என்றவாறான சிறுகதைத் தலைப்புகள்கூட கவனத்தைக் கவர்கின்றன. இவ்வழி, மூத்த எழுத்தாளருள் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியமும் இளையவர்களுள் லதா உதயனும் (தொகுப்பு: நதியின் தேடல்) குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள் ஆகின்றனர்.
இனி, புகலிடத் தமிழர்களது தொழிற்கள அநுபவங்கள் புதுமையானவை. இத்தகைய அநுபவங்களுளொன்று இவ்வாறு அமைகின்றது :
"நானூறு பாகை நரகக்கொதி நிலையில் தானூறு வருகின்ற பீங்கானும் கோப்பைகளும் முக்காலும் தானுணர்ந்த முனிவர்கள்தாம் வளர்க்கும் அக்கினியின் கர்ப்பத்தில் அவை சுத்தமாகிவர கையாற் தொடமுடியாக் கருமம் பிடிச்ச கொதி. மெய்யாலும் சூடேறி மெலிகின்ற நேரத்தே குளிர்ப்பதன அறையினில் குதூகலம்தான் பழவகைகள் தளிரிலைகள் தின்று தாகம் தணித்திடலாம்
178 நடராஜ தரிசனம்

குக்கரின் பேயறுவை குறிப்பறிந்து சிரித்தாலோ அற்புதமாய் ஒருணவு அன்பளிப்பாய் வீற்றிருக்கும் சற்றே இளைப்பாறி சலாட்டை ஒர் கைபார்த்து மீண்டும் உயிர் பெற்று மெசினருகே போனாலோ கோப்பை நிறைந்து குவிந்து வழிந்திருக்கும் சாப்பிட்ட யாவுமே சடுதியில் மறைந்துவிட தட்டிற் கிடப்பதைத் தட்டிவிடும்போதெல்லாம் பட்டப்படிப்பின் சான்றிதழ்களாய்த் தெரியும்”
(ஆனந்த பிரசாத்)
பெரும்பாலும் தனிமையாகவும் சில சந்தர்ப்பங்களிலே குடும்பமாகவும் வாழ்கின்ற தமிழ் ஆண்களது (மேலைத்தேய பெண்களுடனான) பாலுறவுத் தொடர்பு விவகாரமும் அது பற்றிய படைப்புகளும் முக்கிய கவனிப்புக்குரியவை. பாரம்பரியத் தமிழ்ப் பண்பாட்டில் மூழ்கியுள்ளோர் மத்தியிலே அவை அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்துபவை. கலாமோகனின் சிறுகதைகள் பலவும் இவ்விதத்தில் முக்கியம் பெறுகின்றன. பாலுறவுத் தொடர்பு காரணமாக தமிழ் இளைஞன் ஒருவன் எயிட்ஸ் நோய்க்குள்ளாவதை (அத்துடன் அவனை விரும்பிய தமிழ்ப் பெண்ணும்) யதார்த்த பூர்வமாக - உணர்ச்சி பூர்வமாகசித்தரிக்கின்றன அழிவின் அழைப்பிதழ் நாவல் ஈழத்தமிழிலக்கியச் சூழலில் கவனத்திற்குரியதொன்று. (மட்டக்களப்பில் இயங்கிவந்த 'உதயம் பிரசுராலயம் ஈழத்தில் இப்படைப்பு மறுபதிப்புக்குள்ளாவதை இதன் உள்ளடக்கம் காரணமாக விரும்பவில்லை) புகலிடத் தமிழர் எதிர்நோக்கும் முக்கியமான பிறிதொரு பிரச்சினை நிறவாதத்திற்கு முகங்கொடுக்கவேண்டிய நிலைமையாகும். இதுபற்றி உதிரிப்படைப்புகள் வெளிவந்துள்ளமை ஒருபுறமிருக்க, இத்தகைய நிறவாதத்தின் உக்கிரமான பின்னணியிலேயே உருவாகி வருகின்ற நீயூ நாஸிகள் இயக்கம் பற்றிய நாளை (தியாகலிங்கம்) என்ற நாவலும் எமது கவனத்தை அவாவி நிற்கின்றதொன்றாகும்.
புகலிடத் தமிழ்ப் படைப்பாளிகளுள் சிலர் குறிப்பாக இருவர் தமது தொழில் நிலைமை காரணமாக உலகின் வேறுநாடுகள் பலவற்றிற்கும் சென்று அவ்வழி தாம் பெற்றுவருகின்ற அநுபவங்கள் பொருள் மிகப் புதிது என்னும் விதமாகத் தருகின்றமை பற்றிய பலரும் அறியாதிருக்கக்கூடும். மேற்கூறிய எழுத்தாளரான அ. முத்துலிங்கம். இவரது பல தொகுப்புகளும் (குறிப்பாக வம்சவிருத்தி) ஆய்வாளர், அவாவியுள்ளன. உதாரணமாக மாலன் கூறுவதுபோன்று “தாழ்வுற்று வறுமை மிஞ்சிய சியராலியோனை வாழ்விக்க வந்த இத்தாலியனைப் பற்றி, மீந்த பழங்களை நடுச்சாமத்தில் நீரில் அலம்பித்தின்னும்
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 179

Page 101
ரக்கூன் என்ற மிருகத்தைப்பற்றி, இடருற்ற உயிரினம் என்று அறிவிக்கப்பட்டுவிட்ட மலை ஆட்டைப் பிடிக்கப் பாகிஸ்தானின் வடக்கு மலைபிராந்தியத்தில் அலைகின்றவனின் வம்சவிருத்தி பற்றி தமிழில் எத்தனை கதைகள் வந்திருக்கும்?”
மற்றொருவரான பொ. கருணாகரமூர்த்தி மேற்கூறியவாறு அதிக மெழுதாவிடினும் சிறப்பான சில படைப்புகளை வழங்கியுள்ளார். தாய்லாந்து பெண்ணொருத்தியுடனான நட்புறவு பற்றிய வண்ணாத்துப் பூச்சியுடன் வாழ முற்படுதல் என்பது அத்தகையவற்றுள் முதலில் குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில், தமது புகலிட அநுபவங்களை, பிரெஞ்சு மொழியூடாக வெளிப்படுத்திவருகின்ற கலாமோகனும் இன்னொரு தளத்தில் முதன்மைபெறும் எழுத்தாளராக உள்ளார்.
இதுவரை அவதானித்தவை புகலிடப் படைப்புகளின் உள்ளடக்கம் சார்ந்தவை; இனி இவற்றின் வெளிப்பாட்டு முறைபற்றிச் சுருக்கமாக நோக்குவதும் அவசியமாகிறது.
புகவிடத் தமிழ்க் கவிதையைப் பொறுத்தவரையில் கவிதையின் புதிய மொழியாட்சி, படிமம், குறியீடு, உவமை முதலானவை முதலில் கவனத்திற்குரியனவாகின்றன. (துருவச் சுவடுகள்), கட்டிடக் காட்டுக்குள், பனிவயல் உளவு முதலான கலிதைத் தொகுப்புகளின் தலைப்புகளும் எமது கவனத்தை ஈர்த்துள்ளன. இவ்விதத்தில், பின்வரும் கவிதைப் பகுதி ஆழ்ந்த அவதானிப்புக்குரியது :
“இன்பக் கனவுபோல் தோன்றி மறைந்தது கோடை காற்றுக் குதிரைகளில் குளிர் சாட்டை சொடுக்குவரும் வெயிற்சுகம் தேடி வடதுருவப் பறவைகளும் என்தாய்நாட்டின் திசைநோக்கி தங்களது இறகசைக்கும். வான்நோக்கி கையுயர்த்தி தொழுகின்ற கறுப்பர்களைப் போல இலையுதிர்த்தி நிற்கும் ஒக் மரங்களின் கீழே
18O நடராஜ தரிசனம்

தனித்தலையும் மக்பை பறவையொன்று இழிவாக எனை நோக்கும்.
வானில் ஒரு பரதேசிபோல குளிர்ந்து போன சூரியனின் பரிதாபம் மண்ணில் மஞ்சளாய் தலை நரைத்த மரங்களின் கீழ் பொன்னாய் இறகசைத்து வண்ணத்திப் பூச்சியாய் பகட்டி பேர்ச் இலைப்பழுத்தலொன்று புல்லில் தரையிறங்கும் ஒரு புது அகதி வந்ததுபோல்.
(பிற்குறிப்பு : மக்பை ஒருபோதுமே இடம்பெயராத பறவை இங்கு குறியீடாக வருகிறது)
கவிதைகளிலும், சிறுகதைகளிலும் ஜேர்மன், டேனிஷ், சுவீடிஷ் முதலான மொழிச்சொற்கள் அண்மைக்காலமாக பெருமளவு இடம்பெற்று வருகின்றன. அன்னியமான - அபத்தமான - வாழ்வுச்சூழலில் சாறியலிசப் பாணியிலான கவிதைகளும் மொழிநடையும் அவ்வப்போது தலைநீட்டுகின்றன. (எ-டு: திசோவின் கவிதை)
மிக அண்மைத்தொகுப்பான கண்ணில் தெரியுது வானம் (புகலிடப் படைப்புகளின் தொகுப்பு) தந்துள்ள சில சிறுகதைகள் புதிய எழுத்து அநுபவங்களையும், (சித்தார்த்த சேகுவேராவின் சிகை சிதைப்பு பூரீதரனின் அம்பலத்துடன் ஆறுநாட்கள்) புதிய மொழிநடையினையும்,(பார்த்தீபனின் தீவு மனிதன்' தாண்யாவின் இன்றில் பழத் தேவதைகள் - தூசி படிந்த வீணைகொஞ்சம் நினைவுகள்) இனங்காட்டி உள்ளன.
புகலிட எழுத்தாளர்களது படைப்புகளுள் கணிசமானவை மேற் கூறியவாறு உள்ளடக்க ரீதியிலும், வெளிபாட்டு ரீதியிலும், புதியனவற்றின் ஆரம்பமாக புதிய தடங்களின் பதிவுகளாக அமைகின்ற அதேவேளையில், சில படைப்புகள் ஈழத்து இலக்கியத்தின் தொடர்ச்சியாக (இன்னொரு விதமாகக் கூறின் மறைமுகமாக ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் செல்வாக்கு செலுத்துவதாக) அமைந்துள்ளமை நுணுகி நோக்கும்போது புலப்படுகிறது. இவற்றை இவ்வாறு விளக்கலாம்:
(அ) புகலிட இலக்கியச் சூழல்பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிரான படைப்புகள் வெளிவர வாய்ப்பளித்துள்ளது (எ-டு:'ஒரு பூ, சுயம்வரம், மண்ணும் மல்லிகையும், ஒரு கோடை விடுமுறை முதலான நாவல்கள்)
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 181

Page 102
(ஆ). மேற்கூறியவற்றைவிட முக்கியமாக, ஈழ விடுதலைப்போராட்டம், விடு தலை இயக்கங்களின் செயற்பாடுகள் தொடர்பான மாற்று விமர்சன எழுத்துக்கள், பதிவுகள் என்பன பெருமளவு வெளிவர புகலிடச் சூழல் இடமளித் துள்ளது. (கொரில்லா, ஒரு மனிதனின் நாட் குறிப்பிலிருந்துமு த லா ன நாவல்கள், யுத்தத்தின் இரண்டாம் பாகம் முதலான சிறுகதைத்தொகுப்புகள், யுத்தத்தை தின்போம் முதலான கவிதைத்தொகுப்புகள்)
(இ). மேலும், புகலிடச் சூழல், (ஈழச்சூழலில் நிலவும்) சீதனப்பிரச்சினை(ஆண்கள் விற்பனைக்கு - நாவல்), சாதிப்பிரச்சினை (வித்தியாசப்படும் வித்தியாசங்கள் - நாவல்), முதலான சமூக நாவல்களும் தில்லையாற்றங்கரை முதலான பிரதேச நாவல்களும் வெளிவர வழிகோலியுள்ளது.
இதுவரை கூறியவற்றை தொகுத்து நோக்கும்போது ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சிப்போக்கிலே புகலிட இலக்கிய வரவுகள் ஏற்படுத்திய பாதிப்புப் பற்றி சுருக்கமாக பின்வரும் முடிவுகளுக்கு வரமுடியும்.
1. ஈழத்து நவீன இலக்கியப் பொருட் பரப்பு விரிவு பெற்றுள்ளது; புதுமைகள்
பலவற்றைக் கண்டுள்ளது. 2. வெளிப்பாட்டு முறையிலும் சில மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன.
படைப்புகள் வெளியாகின்றன. 3. ஈழத்தில் வெளிவராத, வெளிவரமுடியாத ஈழத்தைக் களமாகக் கொண்ட
படைப்புகள் வெளியாகின்றன. 4. புகலிட எழுத்தாளர் சிலரது படைப்புகள் முக்கியமான தமிழ்நாட்டு விமர்ச கர்கள் சிலரது விமர்சன ரீதியிலான பாராட்டுக்களைப் பெற்றுள்ளன: "... படித்துத் தள்ளிய நூல்களில் உமா வரதராசன், ரஞ்சகுமார், சட்டநாதன் முதலியோர் விதிவிலக்குகளாகவே பட்டனர்.இப்போது கருணாகர மூர்த்தியும்” - ஜெயமோகன்.
“இந்தத் தொகுதியில் (அ. முத்துலிங்கத்தின் வம்சவிருத்தி) உள்ள கதைகள் தமிழுக்குப் புதிது. தமிழனுக்குப் புதிய அனுபவம் தருபவை. ஒரு பிரமிப்போடு இந்தப் புத்தகத்தைப் படித்தேன்." - மாலன். 5. ஈழத்துப் புகலிடத் தமிழ் எழுத்தாளர்களின் அனுபவங்களின் வெளிப்பாடு பல சந்தர்ப்பங்களில் இவர்கள் போல் புலம்பெயர்ந்துள்ள ஏனைய மூன்றாம் உலக நாட்டவரது அனுபவங்களுடன் ஒத்துள்ளன. இவ்விதத்தில் ஈழத்து எழுத்துகள் மூன்றாம் உலக நாட்டு எழுத்துகளுக்குச் சமமாக உள்ளன.
இத்தொடர்பில் பொருத்தமானதொரு கவிதைப் பகுதியை எடுத்தாழ்வதுடன் இக்கட்டுரையை நிறைவு பொருத்தமானதொரு கவிதைப் பகுதியை எடுத்தாழ்வதுடன் இக்கட்டுரையை நிறைவு செய்வது பொருத்தமானது:
182 நடராஜ தரிசனம்

“எனது மகள் வளர்ந்தவளானாள்! வினாக்களை வரிசையாக அடுக்கினாள் :
அம்மா
நாங்கள் ஏன் அகதிகளானோம்? என் தாய்நாடு எங்கே? என் தாய்மொழி எது? நாங்கள் ஏன் கறுப்பர்களாயிருக்கிறோம்? அவர்களால் ஏன் ஒதுக்கப்படுகிறோம்? துருக்கித்தோழி
92 ஏன் எரிக்கப்பட்டாள்" - நிருபா,
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர்
183

Page 103
கம்பனிஆளுகையும் அதன் போக்குகளும்
பூ. சோதிநாதன்
விரிவுரையாளர் முகாமைக் கல்வித்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்
01- அறிமுகம்
வணிகம் தொடர்பாக வாதிக்கப்படுகின்ற விடயங்கள் சிலவற்றுள் கம்பனி ஆளுகையும் ஒன்றாகும். கம்பனி ஒரு வியாபார நிறுவன அமைப்பாகும். நிறுவனம் ஒன்று சில நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகவே உருவாக்கப்படுகின்றது. கம்பனி என்றதும் அதன் அங்கத்தவர்களின் பொறுப்பு அவர்களது பங்குகளின் அளவால் வரையறுக்கப்பட்ட பொதுக்கம்பனிகளையே சிறப்பாகக் குறிக்கும். எனவே அவ்வகையான கம்பனிகளின் ஆளுகையையும் அதன் போக்குகளையும் பற்றியே இக்கட்டுரையில் கவனம் செலுத்தப்படுகிறது.
கம்பனி ஆளுகையை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் போது பின்வரும் விடயங்களை முக்கியமானவையாகக் கொண்டே அதனை மேற்கொள்ள வேண்டும்.
அ) யாருடைய நோக்கங்களை அல்லது நலன்களைக் கவனத்தில்
கொண்டு கம்பனி ஆளப்படவேண்டும்?
ஆ) அவர்களில் யாருடைய நோக்கங்கள் அல்லது நலன்களுக்கு முதன்மை கொடுத்துக் கம்பனி ஆளப்பட வேண்டும்?
இ) கம்பனி ஆளுகை ஏன் பிரச்சனையான ஒரு விடயமாக
மாறியிருக்கின்றது?
FF) கம்பனி ஆளுகைப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு இதுவரை
எவ்வழி முறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உ) அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகளின் பலங்களும்,
பலவீனங்களும் எவை?
184 நடராஜ தரிசனம்

02. அக்கறையுடைய திறத்தவரும் ஆளுகையும்
கம்பனி ஒன்றில் சில உரிமைகளைப் பெறக்கூடிய தனிப்பட்டவர்கள் அல்லது குழுக்களை அக்கறையுடைய திறத்தவர்கள் (ஸ்ரேக் கோல்மேடர்ஸ்) என அழைக்கப்படும். அத்தனிப்பட்டவர்கள் அல்லது குழுக்கள் எல்லோரையும் இரண்டாக வகுத்து நோக்கலாம். ஒரு பகுதியினர் நிறுவனத்தில் இருந்துகொண்டே அவ்வாறான உரிமைகளைப் பெறக்கூடியவர்கள் மற்றைய பகுதியினர் வெளியிலிருந்து அவ்வாறான உரிமைகளைப் பெறக்கூடியவர்களாவர். நிர்வாக உத்தியோகத்தர்கள், பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள், தொழிலாளகள், பங்குதாரர்கள் முதலானோர் நிறுவனத்தில் இருந்து கொண்டே உரிமைகளைப் பெறக்கூடியவராவர். கம்பனியின் நடவடிக்கைகளுக்கு ஆட்படுகின்ற மற்றைய எல்லாத்தனிப்பட்டவர்களும், குழுக்களும் வெளியில் இருந்து கொண்டு கம்பனியில் உரிமைகளைப் பெறக்கூடியவர்களாவர். வாடிக்கையாளர், நிரம்பலாளர், அரசாங்கம், தொழிற்சங்கங்கள், போட்டியாளர்கள், கம்பனியைச் சூழவுள்ள சமூகத்தவர்கள், பொதுமக்கள் முதலானோர் வெளியில் இருந்து கொண்டு கம்பனியில் உரிமைகளைப் பெறக்கூடியவர்களாவர். இந்த அக்கறையுடைய திறத்தவர் எல்லோரது உரிமைகளையும், அவர்களுக்குத்திறம்பட வழங்கக்கூடிய வகையில் கம்பனி தனது நோக்கங்களை அமைத்து, அவற்றை நடைமுறைப்படுத்துவது கம்பனி ஆளுகை எனப்படும்.
அக்கறையுள்ள திறத்தவரில் ஒவ்வொருவருக்கும் தத்தமது குறிப்பிட்ட தேவைகளைத் திருப்தி செய்யக் கம்பனி நியாயமான முறையில் முயற்சி எடுக்குமென எதிர்பார்ப்பார்கள். பங்குதாரர் கம்பனிக்கு மூலதனத்தை வழங்கி, அதற்குப்பிரதியுபகாரமாகத் தமது முதலீட்டுக்கு ஒரு பொருத்தமான திரும்பலை எதிர்பார்ப்பார்கள். தொழிலாளர்கள் தமது உழைப்பையும், தேர்ச்சிகளையும், நிறுவனத்திற்கு வழங்கி அவற்றுக்குப்பதிலாகக் கூலியையும், திருப்திகரமான வேலையையும் எதிர்பார்ப்பார்கள். வாடிக்கையாளர்கள் தாம் கொடுக்கும் பணத்திற்குப் பிரதியுபகாரமாகப் பொருட்கள் சேவைகளின் பெறுமதியை எதிர்பார்க்கின்றார்கள். நிரம்பலாளர்கள் அக்கம்பனி தமக்கு நம்பகரமான ஒரு கொள்வோனாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள். அரசாங்கம் அக்கம்பனி சட்டவிதிகளுக்கு இணங்க நடந்து கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கின்றது. தொழிற்சங்கங்கள் கம்பனிக்குத் தாம் செய்யும் பங்களிப்புக்கு நிகராகத் தமது அங்கத்தவர்களுக்கு நன்மைகள் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. போட்டி நிறுவனங்கள் அக்கம்பனி போட்டி நியமங்களை மீறாது நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. கம்பனியைச் சூழவுள்ள சமூகம், கம்பனி பொறுப்புள்ள
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 185

Page 104
நிறுவனமாக நடந்துகொள்ளவேண்டும் என எதிர்பார்க்கின்றது. கம்பனி செயற்படுவதன் விளைவாகப் பொதுமக்கள் தமது வாழ்க்கைத்தரம் உயர்த்தரப்பட வேண்டும் என எதிர்பார்ப்பார்கள்.
03. உபாயமும் ஆளுகையும்
கம்பனி ஒன்று பின்பற்றும் உபாயமே அதன் ஆளுகையின் பிரதான அடிப்படையாகும். கம்பனி ஒன்று உபாயங்களை உருவாக்கும் போது மேற்குறிப்பிட்ட அக்கறையுடைய திறத்தவர்களின் உரிமைகளைக் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு அவற்றைக் கருத்தில் எடுத்துக்கொள்ளாவிட்டால் அவர்கள் கம்பனிக்கு வழங்கும் ஆதரவை நிறுத்திக்கொள்வார்கள். பங்குதாரர்கள் தமது பங்குகளை வேறு யாருக்கேனும் விற்றுவிட்டுக் கம்பனியிலிருந்து விலகிக் கொள்ள விரும்புவார்கள். வாடிக்கையாளர் தமக்குத் தேவையான பொருட்கள், சேவைகளை வாங்குவதற்கு வேறு கம்பனிகளை நாடுவார்கள். நிரம்பலாளர்கள் அக்கம்பனியை விடுத்து மிகவும் நம்பகரமான வேறு கொள்வோனை நாடுவார்கள். கம்பனிச் சட்டங்களையும், விதிகளையும் மீறினால் அரசாங்கம் அதன் மீது வழக்குத்தொடுக்கும். தொழிற்சங்கங்கள் கம்பனிக்குப் பாதகமான முறையில் தமது நடவடிக்கைகளை மேற்கொள்வர். போட்டியாளர்கள் அக்கம்பனிக்கு எதிராகத்தாமும் நியாயமற்ற முறையில் பதில் நடவடிக்கைகளை எடுப்பர். கம்பனியைச் சூழவுள்ள சமூகம் தமது பகுதியில் அக்கம்பனி தனது கடவடிக்கைகளை மேற்பொள்வதையும், அவற்றை விஸ்தரித்துக் கொள்வதையும் எதிர்க்க முயற்சிக்கும். பொது மக்கள் தமது வாழ்க்கைத்தரத்தைக் குறைக்கக்கூடிய கம்பனியின் நடவடிக்கைகளுக்கு எதிராக அழுத்தங்களைக் கொடுக்கக்கூடிய குழுவினர்களை உருவாக்கி அக்கம்பனிக்குப் பல வகையிலும் பிரச்சினைகளைக் கொடுப்பார்கள். இவற்றில் ஏதாவது ஒரு சம்பவமோ, சில சம்பவங்களோ, அல்லது எல்லாச்சம்பவங்களுமோ நிகழுமாயின் அது கம்பனியின் வீழ்ச்சிக்கும், அழிவுக்கும் காரணமாக அமையும். எனவே அவற்றைத் தவிர்ப்பதற்கு அக்கம்பனி அக்கறையுடைய திறத்தவர் ஒவ்வொருவரது உரிமையையும் நியாயமான முறையில் வழங்கக்கூடிய வகையில் கம்பனி ஆளுகையை அமைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
04. பெருநோக்கக்கூற்றும் ஆளுகையும்:-
கம்பனி ஒன்றின் பெருநோக்கக் கூற்று அக்கம்பனி தனது உபாயத்தீர்மானத்திற்குள், எல்லாஅக்கறையுடைய திறத்தவரின் உரிமைகளையும் சேர்த்துக் கொள்ள வசதியளித்து அவர்களது ஆதரவை இழக்கும் இடரை அதன் முலம் குறைத்துக்கொள்ள உதவுகின்றது. எனவே
186 நடராஜ தரிசனம்

பெருநோக்கக்கூற்று அக்கறையுடைய திறத்தவர்களின் உரிமைகளை நிறைவேற்றுவதற்குக் கம்பனியின் முறையான ஒரு சங்கற்பமாக
அமைகின்றது. அக்கூற்று அக்கறையுடைய திறத்தவரின் உரிமைகளை
மனத்துட் கொண்டே கம்பனி ஒன்று தனது உபாயங்களை உருவாக்க வேண்டும் என்பதைத்தெரிவிக்கின்றது. கம்பனி தனது நீண்டகாலக் குறிக்கோளை, இலாபத்தன்மையை உச்சப்படுத்துவதென அமைத்துப் பெருநோக்கக்கூற்றுக்குள் எல்லா அக்கறையுள்ள திறத்தவரின் உரிமைகளையும் சேர்த்துக்கொள்ள முடியும். இந்த வகையில் கம்பனி உருவாக்கும் எந்த உபாயங்களும் இபபிரதான குறிக்கோளைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். இதே போல பெருநோக்கக்கூற்றுத் தனது இரண்டாந்தரக் குறிக்கோள்களிலும் அக்கம்பனி பின்பற்றும் தத்துவங்களிலும் அக்கறையுடைய திறத்தவரின் மேலதிக உரிமைகளை ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும்.
05-கம்பனி ஆளுகையும் அதன் பிரச்சனையும்
கம்பனி ஒன்று எல்லா அக்கறையுடைய திறத்தவரின் உரிமைகளையும் எப்பொழுதும் திருப்தி செய்யலாம் என்று எவராலும் எதிர்பார்க்க முடியாது. இதுவே கம்பனி ஆளுகையைப் பிரச்சினையான ஒரு விடயமாக ஆக்கியிருக்கின்றது எனலாம். அவ்வாறு திருப்தி செய்ய முடியாமைக்கான காரணம் கம்பனி ஒன்றின் வெவ்வேறு அக்கறையுடைய திறத்தவரின் கோரிக்கைகள் பெரும்பாலும் பிணக்குடையனவாய் இருப்பதேயாகும். மேலும் மிகச்சில கம்பனிகளே நடைமுறையில் எல்லா அக்கறையுள்ள திறத்தவரின் கோரிக்கைகளையும் திருப்தி செய்யக்கூடிய வளங்களை உடையனவாய் இருக்கின்றன. உதாரணமாக நியாயமான விலைகளுக்கான நுகர்வோரது கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு திரும்பலுக்கான பங்குதாரரது கோரிக்கையும் உயர் கூலிகளுக்கான தொழிற்சங்கக் கோரிக்கையும் ஒன்றையொன்று பிணங்கிக்கொள்ளக்கூடியன. இதனோல் கம்பனி பெரும்பாலும் அக்கறையுள்ள திறத்தவரது கோரிக்கைகளுக்கிடையே ஒரு தெரிவைச் செய்ய வேண்டிய நிலையில் இருக்கும். அவ்வாறு ஒரு தெரிவைச்செய்வதற்கு அக்கம்பனி மிக முக்கியமான அக்கறையுடைய திறத்தவர்களை இனம் காணவேண்டியிருக்கும். அவ்வாறு இனங்கண்ட பின் அவர்களது தேவைகளைத் திருப்தி செய்யக்கூடிய உபாயங்களை மேற்கொண்டு அவற்றுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
06. கம்பனியில் அக்கறையுள்ள திறத்தவரின் தாக்கம்
அக்கறையுடைய திறத்தவர்களை முக்கியத்துவத்தின் அடிப்படையில் அடுக்கமைப்பில் ஒழுங்குபடுத்துவதற்கான சிறந்த வழி கம்பனி ஒன்றில்
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 187

Page 105
அவர்களின் தாக்கம் பற்றிய பகுப்பாய்வாகும். கம்பனி ஒன்றில் அக்கறையுடையவர்களின் தாக்கத்தைப் பகுப்பாய்வு செய்வதற்குப் பின்வரும் வழி முறைகளை மேற்கொள்ளலாம்.
அ) அக்கறையுள்ள திறத்தவரை இனங்காண்பது.
ஆ) அவர்களது தேவைகளை இனங்காண்பது.
இ) கம்பனியில் அவர்கள் ஒவ்வொருவரும் பெற எதிபார்க்கும்
கோரிக்கைகள் எவை என இனங்காண்பது.
FF) நிறுவனத்தின் நோக்கத்திற்கு இணங்க மிக முக்கியமான
அக்கறையுடைய திறத்தவர்கள் யார் யார்? என இனங்காணுவது.
உ) அவர்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் எவ்வாறான
உபாயங்களை மேற்கொள்ள வேண்டும் என்று இனங்காண்பது.
இவ்வாறான ஒரு பகுப்பாய்வு கம்பனி ஒன்று தான் தொடர்ந்தும் சமூகத்தில் இருப்பதற்கு வேண்டிய மிக முக்கிய அக்கறையுடைய சிறந்தவர்களை இனங்கண்டுகொள்ள வசதியளிக்கும். பெருநோக்கக் கூற்றிலிருந்து அக்கறையுடைய திறத்தவரின் கோரிக்கைகள் உபாய உருவாக்க வேளையில் மேலும் மேற்கொள்ள வேண்டிய அலுவல்களுக்குத் தேவையான விடயங்களை வழங்கும். உதாரணமாக அக்கறையுள்ள திறத்தவரின் முக்கிய கோரிக்கையாகச் சூழவுள்ள சமூகத்தின் பங்குபற்றல் இனங்காணப்படின் அது பெருநோக்கக்கூற்றில் இடம்பெறவேண்டும். எனவே அதனோடு பிணங்கக்கூடிய எந்த உபாயங்களும் நிராகரிக்கப்படவேண்டும்.
07. பங்குதாரர்களின் முதன்மை
கம்பனிப் பெருநோக்கக் கூற்றுக்கள் பொதுவாக அக்கறையுள்ள திறத்தவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குப் பெருமளவு கவனம் செலுத்துகின்றன. கம்பனிக்கு மூலதனத்தை வழங்குபவர்களாகவும், அதன் சட்ட ரீதியான சொந்தக்காரர்களாகவும், இருப்பதனால் பங்குதாரர் அதில் ஈட்டிணையற்ற ஒரு பாத்திரத்தை வகிக்கின்றார்கள். கம்பனி ஒன்றின் பிரதான குறிக்கோள்களுள் ஒன்று பங்குதாரர்களுக்கு அவர்களின் முதலீட்டுக்கு ஏற்ற சிறந்த ஒரு திரும்பல் வீதத்தை வழங்குவதாகும். பொதுக்கம்பனிகளைப் பொறுத்தவரையில் கம்பனியைக் கட்டுப்படுத்தி உபாயங்களை நிர்ணயிக்கும் பணியைப் பங்குதாரர்கள் முகாமையாளர்களிடம் கையளிக்கின்றனர். இதனால் முகாமையாளர்கள் பங்குதாரர்களின் முகவர்களாகக் கடமையாற்றவேண்டிய பொறுப்புடையவர்களாவர். அதற்கிணங்க, அவர்கள் பங்குதாரர்களின் மிகச்சிறந்த நலன்களுக்கு
188 நடராஜ தரிசனம்

ஏற்றவகையில் உபாயங்களைப் பின்பற்ற வேண்டியவர்களாகவும், அவர்களது செல்வத்தை உச்சப்படுத்த வேண்டியவர்களாகவும், இருக்கின்றார்கள். எனவே கம்பனி ஆளுகையில் முதற் பிரதானமான விடயம் பங்குதாரரின் செல்வத்தை உச்சப்படுத்தக்கூடிய உபாயங்களைப்பின்பற்றி முகாமையாளர்கள் கம்பனியை நடாத்த வேண்டியமையாகும். ஆனால் பல முகாமையாளர்கள் கம்பனியை அவ்வாறு நடாத்தத்தவறியமை கம்பனி ஆளுகையைப் பிரச்சனைக்குரிய ஒரு விடயமாக மாற்றியுள்ளது.
08. முகாமையும் வேலையின்போது செய்யும் நுகர்வும்.
பங்குதாரர்களின் செல்வத்தை உச்சப்படுத்துவதோடு ஒத்துப்போகாத ஏனைய உபாயங்களை முகாமையாளர்கள் ஏன் பின்பற்ற விரும்புகிறார்கள் என்பதை ஒருவர் சிந்தித்துப்பார்க்க வேண்டும். உண்மையில் ஏன் அவர்கள் அவ்வாறு நடந்து கொள்கின்றார்கள் என்பதற்கான பதில் அவர்களது தனிப்பட்ட சொந்தக் குறிக்கோள்களிலேயே தங்கியிருக்கின்றது. கம்பனி முகாமையாளர்கள் அந்தஸ்து, பதவி, அதிகாரம், புகழ், வேலைப்பாதுகாப்பு, வருமானம் முதலான சொந்த ஆசைகளினால் தூண்டப்படுகிறார்கள் எனப்பல எழுத்தாளர்கள் வாதித்துள்ளனர். கம்பனிகளிலுள்ள அதிகாரம், பதவி முதலானவற்றில் பிரதான நிருவாக உத்தியோகத்தர் முதலாகச் சில முகாமையாளர்கள் அவ்வாறான ஆசைகளைத் திருப்தி செய்யக்கூடியவாறு, தமது அதிகாரத்தைப் பயன்டுத்தக்கூடியவர்களாகவும், கம்பனியின் நிதிகளைக் கட்டுப்படுத்தக்கூடியவர்களாகவும், இருக்கின்றார்கள் உதாரணமாகப்பிரதான நிருவாக உத்தியோகத்தர்கள் தமது அந்தஸ்தைக் கூட்டக்கூடிய வகையில், வாகனங்கள், காரியாலயத்தில் அளவுக்கு மிஞ்சிய வசதிகள், பிரயாண வசதிகள் முதலானவற்றை அதிகரித்துக்கொள்ளக் கூடியவாறு கம்பனி நிதிகளைப்பயன்படுத்திப் பங்குதாரரது செல்வங்களை அதிகரிக்காத உபாயங்களை மேற்கொள்ளக்கூடும். பொருளியலாளர் முகாமையாளரின் அவ்வாறான நடத்தையை வேலையின் போது செய்யும் நுகர்வு என அழைக்கின்றனர்.
09. முகாமையாளர்களின் சம்பள உயர்வு
வேலையின் போது செய்யும் நுகர்வுக்கு மேலாகப்பிரதான நிருவாக உத்தியோத்தர்கள் தமக்கும் ஏனைய உயர்மட்ட முகாமையாளர்களுக் கும், உயர்ந்த சம்பளங்களை வழங்குவதன் மூலம் வருமானத்திற்கான ஆசையைப் பெருமளவில் திருப்தி செய்து கொள்ளலாம். அமெரிக்கக் கைத்தொழில்களை விமர்சிப்பவர்களில் பலர் அமெரிக்கக் கம்பனிகளில் இவ்வாறான நிலைமை பெருமளவில் இருக்கின்றது எனக் கூறுகின்றனர். அவர்கள் பிரதான நிருவாக
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 189

Page 106
உத்தியோகத்தரின் சம்பளங்கள் அண்மைக் காலங்களில் சராசரி அமெரிக்கப்பிரஜைகளின் சம்பளங்களை விட வேகமாகவும், அதிகமாகவும், அதிகரித்திருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும் அவர்கள் சில பிரதான நிர்வாக உத்தியோகத்தர்களின் சம்பள அளவுகளுக்கும், அவர்கள் தமது கம்பனிகளில் செய்த சாதனை அளவுகளுக்கும் இடையே எதுவித தொடர்பும் கிடையாதென்பதையும், சுட்டிக்காட்டுகின்றனர்.
10. பங்குதாரர் கூட்டங்கள்
கம்பனியின் ஆளுமையை முகாமையாளர் தமது நலன்களுக்கு வசதியாக மேற்கூறியவாறு நடாத்துவதைத் தடுக்கக்கூடிய வகையில் கம்பனிச்சட்டமும், அச்சட்ட நடைமுறைகளும், சில வழிகளை வகுத்து வைத்திருக்கின்றன. இனி அவ்வழிகள் எவை என்றும், அவற்றின் பலங்கள், பலவீனங்கள் எவை என்றும் அவதானிக்கலாம். -
கம்பனிச்சட்டத்தின்படி குறிப்பாகப் பங்குகளினால், வரையறுக்கப்பட்ட பொதுக்கம்பனிகள், குறைந்த பட்சம் ஆண்டுக்கு ஒரு தடவையாவது பங்குதாரரது கூட்டங்களை நடாத்த வேண்டும். இக்கூட்டங்களிற் பங்குதாரர் தமது முகவர்களான முகாமையாளர்களை ஏற்றுக்கொள்கிறார்களா? நிராகரிக்கிறார்களா? என்று தெரிவிக்கக்கூடிய வாய்ப்புண்டு. கோட்பாட்டு ரீதியாக அவ்வாறான கூட்டங்களில் பங்குதாரர் பெரும்பான்மையான அங்கத்தவர்களது வாக்குகளைப்பெற முடியுமாயின் முகாமைக் கொள்கையை மாற்றி அமைக்கவும், முகாமை பின்பற்றும் உபாயங்களை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும், பிரதான முகாமையாளர்களை விலக்கவும், அவர்களுக்காகப் புதியவர்களை நியமிக்கவும் முடியும்.
நடைமுறையில் பங்குதாரரது கூட்டங்கள் பெரும்பாலும, முகாமைத் தீர்மானங்களை அப்படியே ஆமோதித்து ஏற்றுக்கொள்ளும் ஒர் அமைப்பாகவே இருந்து வருகிறது. பங்குதாரர் கம்பனி தொடர்பான தமது பிரச்சனைகளைச் சொந்தப்பாதுகாப்புடனேயே எதிர்கொள்ள வேண்டியவர்கள்களாக இருக்கின்றனர். பல சந்தர்ப்பங்களில் அவர்கள் அக்கூட்டங்களில் தாம் பெற்றுக் கொள்ளக்கூடிய வாக்குகளை சில கடினமான விதிகளுக்கு இனங்கவே பெற முடிகிறது. எனவே அக்கூட்டங்களைப்பயன்படுத்தி முகாமைக்கு எதிராகப் பிரேரிக்கப்படும் தீர்மானங்கள் பொதுவாகப்பயனுள்ள வையாக வருவது கடினமாகவும், செலவு மிகுந்ததாகவும் கருதப்படுகின்றன.
11. நிறுவன ரீதியான முதலீட்டாளர்கள்
வளர்ச்சியடைந்த நாடுகளில் பிரதான பங்குதாரராகப் பலமுள்ள நிறுவனரீதியான முதலீட்டாளர்கள் தோன்றியுள்ளமை, அண்மைக்காலங் களில் மேலே குறிப்பிட்ட நிலைமைகளுக்கு மாறாகப்பல மாற்றங்களை
190 நடராஜ தரிசனம்

உருவாக்கியிருக்கின்றது. சில நாடுகளில் தனிப்பட்ட முதலீட்டாளர்களை விட ஓய்வூதிய நிதி நிறுவனங்கள், காப்புறுத்திக்கம்பனிகள், வங்கிகள், தரகர் நிறுவனங்கள், முதலானவற்றின் பங்கு, பங்குச்சந்தையில் அதிகரித்து வருகின்றது. அந்நிறுவனங்கள் பெருந்தொகையான பங்குகளை விற்றே தமது கம்பனி மீதான அதிருப்தியைக் காட்டவேண்டியிருப்பதால், பொருளாதார விதிப்படி நிரம்பல் கூடி விலை வீழ்ச்சியடைவதைத் தடுக்கமுடியாது. எனவே, அவை பங்குகளை விற்பதால் நட்டமடைய நோரிடுமாகையால் அதனைச் செய்ய முன்வரமாட்டா.
நிறுவன ரீதியான முதலிட்டாளர்களுக்கு முகாமையின் மீதுள்ளஅதிருப்தி யைக் காட்டப் பங்குகளை விற்பது பொருத்தமில்லாதிருப்பதால் அவர்கள் அதற்கு வேறு வழியைக் கையாளுகின்றனர். முகாமை கொண்டுவரும் சில பிரேரணைகளுக்கு எதிராக வாக்களித்தும், முகாமைக்குத் தொல்லை கொடுக்கும் பிரேரணைகளுக்கு எதிராக வாக்களித்தும் அவர்கள் தமது எதிர்பார்பைக்காட்டுகின்றனர். எனவே முகாமை தனது ஆற்றலை இழந்து தகுதியாக நடக்காத போதும், பங்குதாரரின் நீண்டகால இலாபங்களை உச்சப்படுத்தாத உபாயங்களைப்பின்பற்றும் போதும், முகாமைக்கு எதிராக நிறுவன ரீதியான பங்குதாரர்கள் ஒன்று திரண்டு செயற்பட்டு வருகின்றனர்.
12. பனிப்பாளர் சபை
கம்பனி ஒன்றிலே பங்குதாரர்களின் நலன்களில் அக்கறை கொண்டு, அவற்றைக்கவனித்து வரும் பொறுப்பு பணிப்பாளர் சபையைச் சார்ந்ததாகும். பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள் நேரடியாகப் பங்குதாரர்களினால், தெரிவு செய்யப்படுகின்றனர். இதனாலேயே கம்பனிச்சட்டப்படி கம்பனியில் பங்குதாரர்களின் நலன்களைப்பாதுகாக்கப் பிரதிநிதியாகச் செயற்படும், பொறுப்பு பணிப்பாளர் சபையினதாகும். எனவே பணிப்பாளர் சபை கம்பனியின் நடவடிக்கைகளுக்குச் சட்டரீதியாகக் கணக்களி தகமையுடையதாக இருக்க வேண்டும். கம்பனியின் தீர்மானம் எடுக்கும் அமைப்பில் மிக உயந்த மட்டத்தில் பணிப்பாளர் சபை இருப்பதனால், அது உபாயத்தீர்மானங்களைக் கண்காணித்து, அவை பங்குதாரர்களின் நலன்களுக்கு ஏற்ப அமைவதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். கம்பனியின் உபாயங்கள் பங்குதாரர்களின் நலன்களுக்கு எதிராக இருப்பின், பணிப்பாளர் சபைக்கு முகாமையாளர் நியமனங்களைத் தெரிவிக்கும் சமயங்களில் அந்நியமங்களுக்கு எதிராக வாக்களித்து வேறு நியமனங்களைச் சிபார்சு செய்ய முடியும். மேலும் மிக முக்கியமான பிரதான நிருவாக உத்தியோகத்தர் உட்படக் கம்பனியின் எந்த ஒரு தொழிலாளியையும், வேலையிற் சேர்த்தக் கொள்ளவும், விலக்கவும்
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 191

Page 107
பணிப்பாளர் சபைக்குச் சட்டரீதியான அதிகாரம் உண்டு.
பொதுவாகக் கம்பனியின் பணிப்பாளர் சபையில் இருவகையானவர்களை அவதானிக்க முடியும். ஒரு பகுதியினர் நிறுவனத்திற்கு உள்ளே உள்ளவர்கள் மற்றைய பகுதியினர் நிறுவனத்திற்கு வெளியிலே இருந்து வருபவர்களாவர். கம்பனியின் நடவடிக்கைகள் தொடர்பாகப் பெறுமதி மிக்க தகவல்களைத் தரக்கூடிய நிலையில் இருப்பதனால், பணிப்பாளர் சபைக்கு நிறுவனத்திற்கு உள்ளேயிருந்தும், அங்கத்தவர்களைப் பெறவேண்டிய தேவை இருக்கின்றது. அவ்வாறான தகவல்கள் இல்லை எனின் சபை தனது கண்காணிப்புத் தொழிற்பாட்டைப் போதியளவில் நிறைவேற்ற முடியாது போய்விடும். நிறுவனத்திற்கு உள்ளேயுள்ளவர்கள் கம்பனியின் முழுநேர ஊழியராதலால், அவர்களது நலன்கள் பெரும்பாலும் முகாமையின் நலன்களோடு ஒத்துப்போகக்கூடியனவாகவே இருக்கும். எனவே வெளியிலிருந்து பணிப்பாளர் சபைக்கு அங்கத்தவர்களைக் கொண்டுவருவதால் மட்டுமே முகாமையாளர்களின் நடவடிக்கைகளைப் புறவயமாக மதிப்பிடவும், அவற்றைக் கண்காணிக்கவும் முடியும். பணிப்பாளர் சபைக்கு வெளியிலிருந்து வரும் அங்கத்தவர்கள் ஒரு கம்பனியின் முழுநேர ஊழியர்கள் அல்லர். எனினும் பணிப்பாளர்கள் தமது முழுநேர வேலையாகப் பணிப்பாளர்களின் கடமைகளையே வெவ்வேறு நிறுவனங்களில் செய்து வருபவர்களாவர். அதாவது அவர்கள் பல கம்பனிகளின் பணிப்பாளர் சபைகளில் பதவி வகிப்பவர்கள் ஆவர். தகுதி வாய்ந்த வெளிவாரியான பணிப்பாளர்கள் என்னும் புகழ் அந்நிறுவனங்களில் அவர்கள் வேலை செய்வதற்கு என்றும் தேவையான ஒரு பண்பாகும். அப்புகழைப் பாதுகாப்பதற்காக வெளிவாரியான பணிப்பாளர்கள் எப்போதும் தம்மாலியன்றளவு புறவயமாகவும், செயற்றிறனாக வும் தமது கடமைகளைச் செய்வர்.
வெளிவாரியான பணிப்பாளர்கள் மீது உள்வாரியான பணிப்பாளர்கள் ஆதிக்கம் செலுத்தக்கூடிய வாய்ப்புக்கள் உண்டு என்றும் சில விமர்சகர்கள் கருதுகின்றார்கள். பணிப்பாளர் சபை பெறும் கம்பணித் தகவல்களின் உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு முகாமை அடுக்கமைப்பில் உள்வாரிப்பணிப்பாளர்கள் இருக்கின்றனர். எனவே அதன் மூலமாக முகாமைக்குச்சாதகமான வழியில் சபை தீர்மானங்களை எடுக்கக்கூடிய வகையில் தகவல்களை வழங்க முடியும். அது மட்டுமன்றி, உள்வாரிப் பணிப்பாளர்களே கம்பனியின் நடவடிக்கைகள் பற்றிய நெருக்கமான அறிவைப் பெற்றிருக்கும் வாய்ப்பையும் கொண்டிருக்கின்றனர். மேலான அறிவும் தகவல்களைக்கட்டுப்படுத்தும் ஆற்றலும், வலுவின் மூலகங்களாக இருப்பதனால் வெளிவாரிப்பணிப்பாளர்களைக் காட்டிலும் உள்வாரிப்பணிப்பாளர்கள்
192 நடராஜ தரிசனம்

தீர்மனங்களை எடுக்கும் போது அதிக செல்வாக்குச் செலுத்தக்கூடிய நிலையில் இருக்கின்றார்கள். இதனால் பங்குதாரர்களின் நலன்களுக்கு அன்றி முகாமையின் நலன்களுக்கு ஏற்பவே உள்வாரிப்பணிப்பாளர் ஆதிக்கம் செலுத்தக்கூடிய சபை ஒன்று உருவாகச் சாத்தியம் உண்டு. எனவே இதனால் கம்பனியின் உபாயங்களும் முகாமைக்கே வாய்ப்பாகலாம்.
13. பிரதான நிருவாகியின் ஆதிக்கம்
முகாமையாளர்களிலும் கம்பனி ஒன்றின் பிரதான நிருவாகியே பணிப்பாளர் சபையில் பிரதான ஆதிக்கம் செலுத்தக்கூடியவராவர். பெரும்பாலான உள்வாரிப்பணிப்பாளராயினும் சரி, வெளிவாரிப்பணிப்பாளராயினும் சரி பிரதான நிருவாகியே தனிப்பட்ட முறையில் பிரேரிக்கப்படுவதைக் காணலாம். கம்பனி அடுக்கமைப்பில் உள்வாரிப் பணிப்பாளர்கள் யாவரும் பிரதான நிருவாகிக்குக் கீழே பணியாற்ற வேண்டி இருப்பதனால் அவர்களால் அவரை விமர்சிக்க முடியாத நிலைமையே இருக்கும் எனக்கூறலாம். பல சந்தர்ப்பங்களில் வெளிவாரிப்பணிப்பாளர்களும் பிரதான நிருவாகியினாற் பிரேரிக்கப்படுவதனால் அவர்களும் அந்நடவடிக்கைகளைப் புறவயமாக மதிப்பிடமாட்டார்கள் என்றே கூறலாம். எனவே பணிப்பாளர் சபையினது விசுவாசம் பங்குதாரர்களுக் கன்றிப் பிரதான நிருவாகிக்கே சார்பானதாக இருக்கும் இதனாலேயே பல முகாமை ஆசிரியர்கள் பணிப்பாளர் சபைகள் பேரளவில் இருக்கின்றனவே தவிரத் தொழிற்படுவதில்லை என்று கூறுகின்றனர்.
மிக அண்மைக்காலங்களில் சில பங்குதாரர்கள் பணிப்பாளர் சபைகளுக்கு எதிராகவும் வழக்குகளைத் தொடுத்திருக்கின்றார்கள். இதனாற் பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள் மத்தியில் கம்பனி முகாமைக்கும், பிரதான நிருவாகிக்கும் தலை வணங்காது புறவயமாகக் கம்பனி நடவடிக்கைகளை மதிப்பிடவேண்டிய நிலை உருவாகியுள்ளது.
14. முகாமையாளர்களுக்கான வெகுமத்திடட்டங்கள்
பணிப்பாளர் சபை முகாமையின் கைப்பொம்மையாக இயங்குவதைத் தடுப்பதற்குப் பங்குதாரர்கள் உயர்மட்ட முகாமையாளர்களுக்கு பங்குகளை அடிப்படையாகக் கொண்ட வெகுமதித்திட்டங்களை நடைமுறைப்படுத்த விரும்புகின்றனர். இத்திட்டங்களின் மூலம் முகாமையாளர்களின் நலன்களையும், பங்குதாரர்களின் நலன்களையும் இணைக்க விரும்புகின்றனர். உயர்மட்ட முகாமையாளர்கள் வழமையான சம்பளங்களுக்கு மேலாகத்தமது கம்பனிகளில் தமது விருப்பின்படி பங்குகளைப் பெறவாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதாவது சந்தையில் நிலவும் விலையை விடக் குறைவானதும், முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டதுமான விலையில் முகாமையாளர்கள் கம்பனியின்
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 193

Page 108
பங்குகளைக் கொள்வனவு செய்யும் உரிமை வழங்கப்படுகிறது. இங்ங்ணம் ஊக்கம் பெற்றுப் பங்குகளை முகாமை செய்யும் முகாமையாளர்கள் கம்பனியின் பங்குகளது விலையை உயர்த்தும் உபாயங்களை மேற்கொள்வார்கள். முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட விலையில் அவர்கள் பங்குகளைப் பெறும் உரிமை உடையவர் ஆதலால் தமது பங்கின் பெறுமதியை உயர்த்த சிறந்த உபாயங்களையே மேற்கொள்வர்.
கம்பனியின் பங்குகளை மலிவாகக் கொள்வனவு செய்யும் இச்சிறப்புரிமை உண்மையான பங்குதாரர்களின் நலனைக் குறைத்து முகாமையாளரின் நலனை ஒருவகையிலே பாதுகாக்கக்கூடும் எனச்சிலர் வாதிக்கின்றனர். மேலும் பங்கு விலை உயர்வு,முகாமை நடவடிக்கையினால் மட்டுமன்றி அரசியல், பொருளாதாரக் காரணங்களிகாலேயே பெருமளவில் நிர்ணயிக்கப்படுகின்றது. அந்த விலை உயர்வால் ஏற்படும் நன்மை முகாமையாளர்களுக்கன்றிப் பங்குதாரர்களுக்கே சேரவேண்டியது நியாயமாகும். எனவே அதில் முகாமை நன்மை பெறுவதை நியாயப்படுத்துவது எளிதன்று இத்திட்டங்கள் விலை உயர்வுக்காலங்களில் மட்டுமன்றி விலை வீழ்ச்சியடையும் காலங்களிலும் பங்குதாரர்களுக்குப் பயனளிக்கா, கம்பனிக்கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட காரணிகளால் பங்குவிலை வேகமாக வீழ்ச்சியடையும் போது முகாமையாளர் அத்திட்டத்தின் கீழ்ப்பங்குகளை வாங்கி நன்மை பெற முடியாது. ஆகையால் அவர்கள் பங்குதாரர்களின் நலனில் அக்கறை செலுத்த மாட்டார்கள் எனலாம். எனவே முன் கூட்டியே குறைந்த விலையில் பங்குகளைக் கொள்வனவு செய்யும் உரிமையை வழங்குவதால் பங்குதாரரின் நலனை உறுதிப்படுத்தக்கூடிய கம்பனி ஆளுகையை அவர்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாது.
15. பங்குதாரர்களின் இறுதி அதிகாரம்
பணிப்பாளர் சபை பங்குதாரர்களை விட முகாமையாளர்களுக்கு விசுவாசமாக இருக்குமிடத்தும், கம்பனி முகாமையாளர்களுக்கும் பங்குகளைக் கொள்வனவு செய்யும் சிறப்புரிமை வழங்கப்படாத இடத்தும், முகாமையாளர்கள் பங்குதாரர்களது செல்வத்தை உச்சப்படுத்தாத உபாயங்களையும், செயற்பாடு களையும், மேற்கொள்ள வாய்ப்புண்டு. ஆனால் அந்நிலைமையிற்கூடப் பங்குதாரர்களிடம் ஓர் இறுதி அதிகாரம் உண்டு என்பதை மறுக்க முடியாது. அவர்கள் தமது பங்குகளை எப்பொழுதும் விற்று விடக்கூடிய அதிகாரம் உடையவர்களாவர். அவர்கள் அங்ங்ணம் பெருந்தொகையான பங்குகளை விற்பார்களாயின் பங்குகளின் விலை வீழ்ச்சியடையும். பங்குகளின் விலை, வீழ்ச்சி அடைந்தால் அக்கம்பனியின் சொத்துக்களின் சந்தைப்பெறுமதி, புத்தகப்பெறுமதியை விடக் குறைந்து நிதியியல் நோக்கில் கம்பனியின் பெறுமதியும் சந்தேகத்தோடேயே நோக்கப்படும். அவ்வாறு ஒரு நிலை தோன்றுமாயின் உடனே வேறு கம்பனிகள் அதனைக் கொள்வனவு செய்ய
194 நடராஜ தரிசனம்
 

அது இலக்காகி விடும். இதனால் பங்குதாரர்களின் நலனை விட முகாமையாளர்கள் தமது நலன்களின் அடிப்படையில் உபாயங்களையும், நடவடிக்கைகளையும், மேற்கொள்ளும் போது பங்குதாரர் அக்கம்பனியைப் பிறர் கொள்வனவு செய்ய இலக்கு வைக்கும் நிலையை உருவாக்கி முகாமையாளர்களின் ஆட்சிக்கு எதிராக இயங்க முடியும். முகாமையாளர்கள் பங்குதாரர்களின் நலனைப் புறக்கணித்து, பிறர் அக்கம்பனியைக் கொள்வனவு செய்தால், உயர்மட்ட முகாமையாளர்கள் தமது சுதந்திரத்தை, சில சமயம் தமது பதவியையே இழக்க நேரிடும். எனவே பங்குதாரர் கம்பனியைப் பிறர் கொள்வனவு செய்யும் நிலைக்கு ஆளாகக்கூடும் என்ற பயத்தினால் முகாமையாளர்அதனை அவர்களது நலனுக்குப் பாதகமேற்படாது முகாமை செய்ய முயற்சிப்பர்.
16. பெருந்தொகைப் பங்குகளைத் திடீரெனக் கொள்வனவு செய்யும்
முறை எனினும் அண்மைக்காலங்களில் வேறொரு முறையும் பங்குதாரரின் நலனைக்கவனிக்கப் பயன்படுத்தப்படுகிறது. சில தனிப்பட்டவர்கள் அல்லது நிறுவனங்கள் ஒரு கம்பனியின் முகாமை பங்குதாரர்களின் நலனுக்கு எதிராக உபாயங்களையும், நடவடிக்கைகளையும், மேற்கொள்வதாகக் கண்டால் அக்கம்பனியின் பங்குகளில் பெருந்தொகையைத் திடீரெனப் பங்குச்சந்தையில் கொள்வனவு செய்வர். இவ்வாறு கொள்வனவு செய்து, கம்பனியில் பெரும்பான்மை அதிகாரத்தைப் பெற்று உயர்மட்ட முகாமையில் மாற்றத்தை ஏற்படுத்திப் பங்குதாரர்களின் நலனை உச்சப்படுத்தும் வழிகளை மேற்கொள்வர். ஆனால் இவ்வாறு ஒரு கம்பனியில் திடீரெனப் பெருந்தொகைப் பங்குகளைக் கொள்வனவு செய்வோர் ஏனைய பழைய பங்குதாரர்களின் நலனை விட தமது நலனில் அக்கறை செலுத்தவும் கூடும். அவர்கள் தமது பங்குக் கொள்வனவு முயற்சி நோக்கில் வெற்றி பெற்றால் தாம் உட்பட எல்லாப் பங்குதாரர்களுக்கும், நன்மை தரக்கூடிய உபாயங்களை மேற்கொள்ள வழி வகுப்பர், என்றே எதிர்பார்க்கலாம். அவர்கள் கம்பனியைக் கொள்வனவு செய்ய முடியாவிட்டாலும் தாம் பெறும் பங்குகளுக்குச் சிறந்த ஆதாயத்தைத் தமக்குப் பின்னால் பாதுகாப்பாக இருந்து ஊக்கப்படுத்திய கம்பனியிடமிருந்து பெறக்கூடியதாக இருக்கும்.
17. பங்குக் கொள்வனவைத் தடுக்கும் முறை
கம்பனியைக் கொள்வனவு செய்வதாகப் பயமுறுத்துவதற்கு எதிராக
கம்பனியின் முகாமையாளர்கள் எடுக்கக்கூடிய வேறொரு வழி அவ்வாறு
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 195

Page 109
பங்குகளைக் கொள்வனவு செய்ய முடியாத நிலமை ஒன்றைத் திட்டமிட்டு உருவாக்குவதாகும். அங்ங்ணம் தடுப்பு நடவடிக்கையை உருவாக்குவதன் நோக்கம் கம்பனியைக் கொள்வனவு செய்ய முற்படுபவர்களுக்கு அச்செயலைக் கடினமாக ஆக்குவதாகும். பங்குக் கொள்வனவைக்கடின மாக்கிப் பங்குகளை விற்காமற் செய்யும் முறைக்கு எதிராக வழக்குகளும், தொடுக்கப்பட்டிருக்கின்றன. அது மட்டுமன்றிப் பங்குதாரர் கூட்டங்களிலும் கூடப் பங்குக் கொள்வன வைக் கடினமாக்கும் முறைக்கு எதிராகத் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.
18. ஒப்பந்த முறை
கம்பனிக் கொள்வனவுப் பயமுறுத்தலுக்கு எதிராக ஒருவகை ஒப்பந்தத்தைப் பயன்படுத்த அண்மை ஆண்டுகளில் ஆரம்பித்திருக்கின்றனர். கம்பனியைக் கொள்வனவு செய்தால் உயர்மட்ட முகாமையாளர்களுக்கு நியாயமான நட்டஈடு வழங்குவதற்கு அவ்வொப்பந்தம் ஏற்பாடு செய்கின்றது. நீண்டகால முதலீடுகளைச் செய்து, சிறந்த உபாயங்களை மேற்கொண்டோ கம்பனிக் கொள்வனவைச் செய்தோ இலாபங்களை அதிகரிக்கலாம். எனவே இதன் மூலம் குறுங்கால இலாபங்களை அதிகரித்துச்சந்தையில் பங்கு விலையைக் கூட்டும் உபாயங்களை மேற்கொள்ளலாம்.
இதனால் இலாப வாய்ப்பு மிகுந்த முதலீடுகளில், முதலீடு செய்வதற்கு கம்பனிக் கொள்வனவு மிரட்டலைக் காரணம் காட்டுவதை இவ்வொப்பந்தம் தடுக்கின்றது. எனவே இவ்வொப்பந்தத்தினால் முகாமையாளர்கள் பங்குதாரரின் செல்வத்தை உச்சப்படுத்தக்கூடிய உபாயங்களை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் இவ்வொப்பந்தம் தகுதியற்ற முகாமைக்குப் பாதுகாப்பு வழங்குவதாகவும், தோல்வியடையும், முகாமையாளர்களுக்கு வெகுமதி வழங்குவதாகவும் இருக்கின்றது எனச்சிலர் வாதிடுகின்றனர். இதனால் இவர்கள் கம்பனி கொள்வனவு செய்யப்படும் சமயங்களில் பங்குதாரர்கள் பெறும் நன்மையோடு பொருத்தி இவ்வொப்பந்தத்தை அமைத்தால் நன்றாயிருக்கும் எனக்கருத்துத் தெரிவிக்கின்றனர்.
19. கம்பனியைப் பொறுப்பேற்கும் விசேடமுறை
கம்பனியைப் பொறுப்பேற்கும் ஒரு விசேட முறை மிக அண்மையில் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாகக் கம்பனியைத் தமது கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டு வரவே பொறுப்பேற்கத் தீர்மானிக்கின்றவர்கள் திடீரெனப் போதிய பங்குகளைக் கொள்வனவு செய்கின்றார்கள். ஆனால் இவ்விசேட பொறுப்பேற்கும் முறையில் கம்பனிக் கொள்வோருள் முகாமையாளரும் அடங்குவர். இக்கொள்வனவை மேற்கொள்ளும் முகாமை, சந்தையில் கடன்
196 நடராஜ தரிசனம்

பத்திரங்களை விநியோகித்து நிதியைத்திரட்டி இப்பங்குகளைக் கொள்வனவு செய்கிறது. இதனால் அப்பங்குதாரர் இருந்த இடத்தில் கடன்காரர் வந்து விடுகின்றார்கள். அவர்களுக்குச்சட்டப்படி முகாமை வட்டி வழங்க வேண்டும். இதற்காக முகாமை, கம்பனியை நன்றாக ஆளவேண்டி நிர்ப்பந்திக்கப்படுகின்றது. தகுதியற்ற கம்பனி ஆளுகையிலுள்ள பலகுறைபாடுகளை இவ்விசேட பொறுப்பேற்றல் முறை தீர்க்கின்றது எனப்பல அறிஞர்கள் கருதுகின்றனர்.
20. முடிவுரை
கம்பனி ஆளுகை தொடர்பாகப் பங்குதாரர்கள் குறித்தே இக்கட்டுரையில் விசேட கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றது. கம்பனி ஒன்றில் ஏனைய அக்கறையுடைய திறத்தவரின் நோக்குகளிலும், கம்பனி ஆளுகையை அவதானிக்க முடியும். அது மட்டுமன்றி சாள்ஸ் ஹன்டி என்னும் முகாமை மேதை பங்குதாரர்களுக்கன்றி முகாமையாளர்களுக்கே கம்பனியில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனப் பல வாதங்களை முன்வைத்திருப்பதையும் இங்கு குறிப்பிடலாம்.
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 197

Page 110
குழந்தை ம. சண்முகலிங்கத்தின் நாடகங்களில் ஈழத்துத் தமிழ் அரங்கின் தோற்றம்
கதிரேசு ரதீதரன்
விரிவுரையாளர் நுண்கலைத்துறை, யாழ் பல்கலைக்கழகம்
குழந்தை ம. சண்முகலிங்கம் யார்?
1950 இல் இருந்து அரங்க முயற்சிகளில் ஈடுபட்டு வருபவர். ஈழத்து நாடக வரலாற்றில் 'சண்முகலிங்கத்தின் அரங்கு என்ற ஒன்றால் நிலை நிறுத்தப் பெற்றவர். 'மைய அரங்கின் முக்கியஸ்தர்களுள் ஒருவர். கிட்டத்தட்ட 85 நாடகங்கள் வரை எழுதியவர். க. பொ. த. (உயர்தரம்) நாடகமும் அரங்கியலும் கற்கை நெறிக்கான அநேக பாடவிதானக்குறிப்புக்களைத் தயாரித்தவர். மேலும் பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கக்கலைகளும் பாடவிதானத்திற்கான அநேக குறிப்புக்களைத் தயாரித்தவர். சில நாடக இலக்கியங்களை மொழிபெயர்த்தவர். ஈழத்தின் இதயத்தை நாடக ஒவியங்களாக வரைந்தவர் தகுதிக்கு ஏற்ற அந்தஸ்தும், தரத்திற்கு ஏற்ற பட்டமும், விருதும் பெறப்படாது, நடைமுறைச் செயல்முனைப்புக்களுடன் ஓரங்கட்டப்பட்டவர். இன்றும் இப்போதும் இயங்குபவர். பல நாடகக்காரர்கள் உருவாகக் காலாய் இருந்தவர். நான் அவரது அரங்க அறிவாலும் ஈர்க்கப் பெற்று உருவாக்கப்பட்டவன் என்பதை இங்கு கூறிப் பணிவோடு பெருமைப் படுகின்றேன். (1985 ஆம் ஆண்டு யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் மண்சுமந்த மேனியர் நாடகம் நடந்து கொண்டிருந்த போது என்னை ஒருவர் கூட்டிவந்து மேடையைக் காட்டினார். ஒரு மரத்தைப் பலர் சேர்ந்து கயிற்றால் இழுப்பதாய் ஊமத்தில் நிகழ்த்தியதையும் அதனோடு ஒட்டிய சில வசனங்களையும் கண்டேன் / கேட்டேன். என்னைக்கூட்டி வந்தவர் என்னை வெளியே இழுத்துச் சென்று விட்டார். ஆனால் அன்று கண்ணுற்ற சொற்ப காட்சியில் நான் புதிய தரிசனம் பெற்றேன்).
குழந்தை. ம. சண்முகலிங்கத்தின் நாடக பாடங்களினது பின்னல் முறைமைகளில் வெளிப்படுபவை: 41 வருட கால எழுத்துருவாக்க முறைமைகளில், கால ஒட்ட அடிப்படையில் மூன்று கால கட்டங்களை வகுக்க
முடியும்.
198 நடராஜ தரிசனம்

1. 1957 -1977 - ஆரம்பகாலம்.
இக் காலத்தில் ஏற்கனவே நிலவிய அரங்க முறைப்பாங்குசெல்வாக்குச் செலுத்தியது அதாவது எழுத்துநடையின் அடிப்படையில் அண்ணாத்துரை முறைமை காணப்பட்டது.
2. 1977-1990 - இடைக்காலம்.
பட்டப்பின் படிப்பு கற்கைநெறியும், அரங்கு பற்றிய புதிய அநுபவங்களும் எழுத்துருவாக்க உருவ, உள்ளடக்கங்களை மாற்றியது.
3. 1990 பின் - தற்காலம்
இக்காலகட்டத்தில் அரங்கின் பலபரிமாணத் தேடல்காரணமாகப் புதிய ஆக்கங்கள் வெளிவந்தன. குறிப்பாய் 41 வருட தேடலில் 'வேள்வித் தீ எனும் நாடக பாடம் உருப்பெற்றது. தமிழ் அரங்கிற்கான அநேக பண்புகள் இந்நாடகத்தில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது.
இவர் தனது நாடகங்களைப் பல்வேறு தயாரிப்பு நிறுவனங்களிற்காகப் படைப்பாக்கம் செய்துள்ளார். பாடசாலை / பல்கலைக்கழகம் / மன்றங்கள் (T V. M. H. A) இலக்கிய நிறுவனங்கள் (கம்பன்கழகம்) - போன்றவற்றை உதாரணங்களாகக் குறிப்பிடலாம் 'எந்தையும் தாயும் என்ற நாடகம் வெளிநாட்டில் வசிக்கும் தனது மகனின் வேண்டுதலின் பேரிலேயே முதலில் எழுதப்பட்டது)
அத்தோடு நாடக பாடங்களை எழுதும் முறையிலும் இவரிடம் மூன்று வகையான தன்மைகள் காணப்படுகின்றன.
1. தனியே எழுதுதல் - வையத்துள் தெய்வம்'(நாடகம்)
2. இருவர் கலந்துரையாடித்தான் எழுதுதல் - வைத்திய கலாநி சா. சிவயோகனுடன் கலந்துரையாடி “காட்டாதன எல்லாம் காட்டி” என்ற ஒரங்க நாடகத்தை
எழுதினார்.
3. குழு கலந்துரையாடலின் பின் தான் எழுதுதல் - இங்கு ஒரு வகை Forumtheatre (விவாத கள அரங்கு) முறை கையாளப்படும் எனலாம். பல்கலைக்கழகத்தில் சமூகவியல் மாணவர்களுடன் கலந்துரையாடி முதியோர் பிரச்சினைகளை "நீ செய்த நாடகமே " என்ற நாடகமாக வடிவமைத்தார். அதே போல் அண்மையில் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடி “உள்நின்று ஒளிரும் சக்தி” என்ற நாடகத்தை வடிவமைத்தார்.
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 199

Page 111
கு. ம. சண்முகலிங்கத்தின் நாடக பாடங்களில் ஒவ்வொன்றினதும்
பிரத்தியேக தன்மைகளின் அடிப்படையில் கீழ்வருமாறு வகைப்படுத்தலிற்குட்ப டுத்தி நோக்க முடியும். குறிப்பாக ஒரு 10 பிரிவுகளாக அவதானிக்கலாம்.
1.
2OO
அண்ணாத்துரை வடிவம் சார் நாடகம்: (தமிழ் நாட்டு தி. மு. க. வின் பாணி இதில் செல்வாக்குச் செலுத்துவதைஅதன் மொழி நடையூடாக அவதானிக்கலாம். "அருமை நண்பன்’ (1957) என்ற நாடகத்தில் வரும் உரையாடல். 'ஆனந்தன் நான் யார் உன்னை ஏற்பதற்கு நீ எனக்கு ஒரு குற்றமும் செய்யவில்லை. ஆனால் உன்தந்தைக்கு மாபெரும் குற்றம் செய்து விட்டாய். ரவி. சிந்தித்துப்பார். உன் வாழ்க்கையின் ஏடுகளைப்புரட்டிப்பார். சின்னஞ் சிறுவயது தொடக்கம் செல்லம் தந்து வளர்த்த உன் தந்தையைப் பார்” இம்மொழி நடையில் அண்ணாத்துரையின் பங்குண்டு.
வரலாற்று வடிவ நாடகம்:
அரச நாடகங்களில் கையாளப்படும் செந்தமிழ் மொழி இங்குகையாளப்பட்டிருக்கும். திருவள்ளுவரை மையமாகக் கொண்டு எழுதப்பெற்ற'வையத்துள் தெய்வம்”(96) என்றநாடகத்தை குறிப்பிடலாம்
கதையோட்ட நாடகம்: இங்கு கதை படிப்படியாக நகர்ந்து சற்று உச்சம் எய்தி முடிவுறும் - "உறவுகள் (982) "உறவுகள்’ நாடகத்தின் இறுதி மேடைக்குறிப்பு வருமாறு--கெளரி தன்வீடு நோக்கி நிதானமாகச்செல்கிறாள். வேலுப்பிள்ளை திடிரென எழுந்து நின்று அவள் செல்லும் திசையைப் பெருமையோடு பார்த்து நிற்கிறார்-”
உரைஞர் முறை நாடகம்: இதில் அநேகம் உரைஞரது முதன்மையே மேலோங்கி இருக்கும். அதாவது நாடகத்தின் நகர்வு உரைஞர்களது கருத்துரைப்புக்களோடே அசையும். இவர் எழுதிய நாடகங்களில் அநேகமானவை உரைஞரை முதன்மைப் படுத்தியதாக இருக்கும்.-“நெடும்பயணம்”-1979 மண்சுமந்தமேனியர்' - 1985 - என்பவை உதாரணங்களாகும்.
குறியீட்டுநாடகம்: குறியீடு என்பது ஒன்றை இன்னொன்றாக ஆக்கும் முறைமையாகும் இவரது நாடகங்களில் குறியீட்டுக் கையாட்சி மிக அதிகம். எனினும் முழுப்பெறுமானமும் குறியீடாக இருக்கும் நாடகங்களையே இதனுள் அடக்கிக் கொள்ள முடியும்.
நடராஜ தரிசனம்

"வாற் பேத்தைகள்' - 1996 “தாயுமாய் நாயுமானார்”-1986 போன்ற நாடகங்கள் இதற்கு உதாரணங் களாகக்கொள்ளலாம் 'தாயுமாய் நாயுமானார்’நாடகத்தில் ஒரு பெண்ணை பாறை போல் புரட்டல், நாய்க்குட்டி பற்றிய உரையாடல், முட்கம்பி வேலி என்பன குறியீட்டை வெளிப்படுத்தி நிற்கின்றன.
6. பாத்திரவுருவாக்க நாடகம்:
குறிப்பாக ஒவ்வோர்பாத்திரங்களும் வெவ்வேறான குணாம்சங்களைப்படிப்படி யாக வெளிப்படுத்தி நிற்கும் தன்மை இதனைக்காட்டும். இடைக்காலப்பகுதியில் இவரிடம் அதிகம் செல்வாக்குச் செலுத்திய துண்டுதுண்டான சம்பவங்களின் இணைப்பு மூலம் உருவான நாடகமுறை மாறி கதையையும் அதனுடன் கூடிய பாத்திர உருவாக்கத்தையும் கொண்டுள்ள நாடகங்கள் குறித்த காலத்தின் பின் தோன்றியது.
அவ்வகையில், “எந்தையும் தாயும்' - 1992 “உள்ளக் கமலமடி” - 1992
"ஆரொடு நோகேன் - 1993 "நீ செய்த நாடகமே - 1994 - போன்றவற்றைக் குறிப்பிடலாம். 'எந்தையும் தாயும் நாடகத்தில் வரும் பெரியையா பாத்திரமும், ஆரொடு நோகேன் என்பதில் வரும் பல்வகைக்குணம் கொண்ட பிள்ளைகளும் பெற்றோரும், நீ செய்த நாடகமே யில் வரும் வெவ்வேறு பண்புகள் கொண்ட பல விதமான முதியோரும்-பாத்திரம் பற்றிய பிரக்ஞை பூர்வமான ஒரு வெளிப்பாடு தோன்றி இருந்ததைக் காட்டும்.
7. உளச்சிகிச்சை நாடகம்:
நாடகம், மனிதர்களது மனோவியலில் ஏற்படும் உணர்ச்சிகளின் இடர்ப்பாடுகளை வெளிப்படுத்த அல்லது இனங்காண உதவுகிறது. இதற்கான ஆரம்பக்களம் அரிஸ்ரோற்றில் குறிப்பிடும் கதாசிஸ் (Cathasis) மூலமே கால் வைத்து விரிய ஆரம்பித்தது எனலாம். அதேபோற் பரதரின் நாட்டிய சாஸ்திரம் கூறும் ரசம் என்பதும் கதாசிஸ் போன்றதொன்றோ எவ்வாறாயி னும் காரணம் புரியாது உள்ளடங்கிப்போய் இருக்கும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஒரு உத்திமுறையாகவே “அன்னை இட்ட தீ’ (1991) என்ற நாடகம் ஆக்கப்பட்டது. யுத்த விளைவுகட்குட்பட்ட மக்களின் உள்ளத்தை அந்த நாடகம் காட்டியது. தங்களுடைய தாக்கங்களைத் தாங்களே இனங்கண்டனர். இது உடனடியான உளவளச் சிகிச்சையாகவும் அமைந்து விடுகிறது.
8. சிறுவர் நாடகங்கள்:
இதில் மூன்று வகையான பண்புகள் இவரது நாடகங்களில் காணப்படுகின்றன. 11 சிறியோர்க்காக பெரியோர் நடித்தல் - “கூடி
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 201

Page 112
10.
2O2
விளையாடு பாப்பா’ (1978) 12 சிறியோர்க்காக சிறியோர் நடித்தல் - “முயலார் முயலுகிறார்” ! 3. சிறியோர்க்கு - ஆக சிறியோரும் பெரியோரும் கலந்து நடித்தல் -
'இடுக்கண் வருங்கால்' - 1998 இவரது சிறுவர் நாடகங்கள் சிறுவர்க்கான நிறைந்த பொழிப்புக்களை தரவல்லன. சிறுவர் நாடகங்களில் - ஒரு சிறுவர் கதை/பாடல் / ஆடல் / மிருகங்களும்மனிதரும் / பகிடிகள் | சிறுவர் மனதில் ஆழமாக வேண்டிய சிந்தனைகள் ! ஒன்றுபடுவதான முடிவு - போன்ற விடயங்கள் பொதிந்து காணப்படும் சிறுவருக்கு ஏற்றளவான உளவியற் பண்பைக் கவனத்தில் எடுத்து, சிறுவர் நாடகத்திற்கான சரியான வடிவத்தை ஈழத்துத் தமிழ் நாடக மரபிற்கு வழங்கியமையும்முக்கியமானதொரு குறிப்பாகும்.
மொழிபெயர்ப்பு நாடகம்: இவரது மொழிபெயர்ப்பில் இருக்கும் சிறப்பு யாதெனில் ஆங்கிலம் அச்சொட் டான தமிழ் வடிவமாதலாகும். இதனால் ஆங்கில நாடக இலக்கிய நுகர்ச்சியில் ஏற்படும் அதே உணர்வு நிலை, தமிழிலும் வாசிக்கும் போது ஏற்படுவது கவனத்திற் கொள்ளத்தகுந்தது. அதே வேளை ஆற்றுகையிற் சில நடைமுறை இடர்களை எதிர்நோக்க வேண்டி இருந்தது. ‘வேதாளம்’-1987 “மன்னன் ஈடிப்பஸ்”-1996 “ஒரு பார்வையின் வீடு' - 1997 - போன்றன மொழி பெயர்ப்பு நாடகங்களுக்கு உதாரணங்களாகும். “மன்னன் ஈடிப்பஸ்”, “ஒரு பார்வையின் வீடு' என்பன க. பொ.த. (உயர்தரம்) மாணவர்களுக்குப் பாடநூல் என்பதும் குறிப்பிடத் தகுந்தது. அதேவேளை இவ்விரு மொழி பெயர்ப்பு படைப்புகளும் மேடையில் ஆற்றுகையாகப் பரிணாமம் பெற்றதும் கவனத்திற் கொள்ளத்தகுந்ததாகும்.
40 வருட அரங்க அனுபவத்தின் பெறுபேறாய் அமைந்த ஈழத்துத் தமிழ் நாடகத்திற்கான மாதிரி வடிவத்தின் வருகை “வேள்வித்தீ’ - 1994 இவரது படைப்புகள் யாவற்றிலும் 'வேள்வித்தீநாடகத்திற்கு ஒரு தனிச்சிறப் புண்டு. அது இன்னமும் மேடையேறாது விட்டாலும் எழுத்துரு நிலையிலேயே அதன் பல்வகைத் தன்மையைப் புரிந்து கொள்ள முடிகிறது. இவர் முன்பு எழுதி ஆற்றுகை செய்த நாடகங்களின் உத்திகளினதும் நுட்பங்களினதும் கூட்டுச்சேர்வாக இது அமைந்துள்ளது. இக்கூட்டுச்சேர்விற்கான நாடக நீட்சிகள் சிலவற்றைக் கீழே குறிப்பிட முடியும்.
நடராஜ தரிசனம்

அருமை நண்பன்
வையத்துள் தெய்வம்
முன் し 1977 - Î
பின்
ஒட்டாண்டிகள்
し +
உறவுகள
நெஞ்சு பொறுக்குதில்லையே
--
மண்சுமந்த மேனியர் -> சமூகம்
-- அன்னை இட்ட தீ 一> உளவியல்
し + எந்தையும் தாயும் 一> தனிமனிதன்
い + உள்ளக்கமலமடி -> தனிக்குடும்பம்/ தனிக்கதை
காட்டாதன எல்லாம் காட்டி 一> தனிமனிதனுள்ளம்
வேள்வித் தீ அ
செய்து காட்டல், கதை கூறல், கதையோட்டம், பண்பாட்டுத் தன்மைகள், குறியீட்டுக் கையாட்சி, உரைஞர் பயன்பாடு பாத்திரவுருவாக்கம், நடனம், தீர்வை விடப் பிரச்சினையைப் போடுதல் - போன்ற பண்புகள் இருப்பதனாலேயே புதிய தமிழ் நாடகத்தின் தோற்றுவாயாக இதனைக்கொள்ள முடிகிறது.
மேற்படி குறிப்புகள் குழந்தை, ம. சண்முகலிங்கத்தின் நாடகப் பாடங்களின் வாயிலாக நோக்கப்பட்டவையாகும். எனவே ஈழத்துத் தமிழ் அரங்கின் தோற்றுவாய்க்கான அடித்தளத்தை உறுதிப்படுத்தியவராய் இவரைக்கொள்ள முடியும்.
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர்' 2O3

Page 113
உள்நாட்டில் இடம்பெயர்ந்து வாழ்வோர் :- யார் இவர்கள்?
ச. பாஸ்கரன் அரசறிவியற்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்,
மூன்று தசாப்தங்களுக்கு முன்பு பொருளாதாரத்திலும் சமூக அபிவிருத்தியிலும் தென்கிழக்காசிய நாடுகளுக்கு சவாலாக விளங்கிய நாடு இலங்கை, 20 வருடங்களாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தங்களால் இன்று தோய்ந்து சிதறுண்டு போய் இருக்கின்றது. இதனால் ஏற்பட்ட விளைவுகளோ பாரதூரமானவை. இவற்றுள் நம்மை உறுத்திக் கொண்டிருக்கின்ற முக்கியமான சிலவற்றுள் குறிப்பிடக்கூடியது உள்நாட்டில் இடம்பெயர்ந்து வாழும் மக்களுடைய பிரச்சனையாகும்.
மோதல்களின் காரணமாகவும் அதன் விளைவாக ஏற்பட்ட மனித உரிமை மீறல்களின் காரணமாகவும் ஏற்பட்ட அபாயகரமான சூழ்நிலைகளினால் தமது சொந்த வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களே உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள். இவர்கள் இவ்வாறு வெளியேற்றப்பட்ட போதும் சர்வதேச எல்லையைக் கடக்காமல் உள்நாட்டிலேயே வசிப்பவர்கள். எனினும் அகதிகளும் உள்நாட்டில் இடம்பெயர்ந்து வாழ்வோரும் ஒருவரல்லர். அகதிகளும், உள்நாட்டில் இடம்பெயர்ந்து வாழ்வோரும் வேறுவேறானவர்கள். அகதிகள் சர்வதேச எல்லையைக் கடந்து வேறு நாட்டில் சென்று வசிப்பவர்கள்.
இடம்பெயர்தல் மக்களுடைய பெளதீகப் பாதுகாப்புக்களையும், வாழ்க்கைத் தரத்தையும், உடல் மற்றும் உள வளர்ச்சிக்கான ஆற்றலையும் பாதித்திருக்கின்றது. தனிப்பட்ட சுதந்திரத்திற்கான அச்சுறுத்தல்களும் சமூக பொருளாதார உரிமைகளை அனுபவத்தில் தடைகளும் பூரண உள்ளார்ந்த ஆற்றல்களை விருத்தி செய்வதில் இயலாமையும் அவர்களுக்கு ஏற்பட்டன. அவர்களுக்கும் அவர்களுடைய பிள்ளைகளுக்கும் எதிர்காலம் நிச்சயமற்றதாகவிருந்தது. இடம்பெயர்ந்தோர் வாழ்ந்த நிலைமைகள் அவர்களுடைய வேலைகள், மனித கெளரவத்திற்கு இழுக்காக இருந்தன. குறிப்பாக பெண்களும் பிள்ளைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இன்று உலகளாவிய ரீதியில் 25 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்திருக்கின்றனர். 2001ம் ஆண்டின் இறுதியில் மட்டும் இலங்கையில் முரண்பாடுகள் காரணமாக ஏறக்குறைய 730,000ம் பேர் இடம்பெயர்ந்திருந்தனர் என UNHCR மதிப்பீடு குறிப்பிடுகின்றது. இவர்கள்
204 நடராஜ தரிசனம்

இடம்பெயரும்போது மனித உரிமை மீறல்களுக்கும் வன்முறைகளுக்கும் உள்ளாகின்றனர். அத்துடன் உணவு, தொழில்கிடைப்பனவு, கல்வி, சுகாதாரம் போன்றவற்றில் வரையறுக்கப்பட்ட உரிமைகளையே அனுபவிக்கின்றனர்.
உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பான ஐக்கியநாடுகள் சபையின் நெறிமுறை விதிகள் “உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் பற்றிப் பின்வருமாறு வரையறை செய்கின்றது. “உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் எனப்படுவோர் ஆயுதப் பிணக்குகள், பொதுப்படையான வன்செயல் நிலைமைகள், மனித உரிமைகள் மீறப்படல் அல்லது மனிதனால் ஏற்பட்ட அனர்த்தங்கள் ஆகியவற்றில் இருந்து தப்பிப் பிழைக்கும் பொருட்டு தம் குடிமனைகள் அல்லது வழக்கமான இருப்பிடங்கள் முதலியவற்றை விட்டு விட்டு இடம்பெயர்ந்து ஒட வேண்டிய நிர்ப்பந்தம் அல்லது நிலைமைக்கு உள்ளான போதிலும் சர்வதேசவாரியாக அங்கீகரிக்கப் பெற்ற தேச எல்லையைக் கடந்து செல்லாதிருப்பவர்களாவர்”
உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்கான ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் பகுப்பாய்வு அறிக்கை "உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள்’ பற்றிப் பின்வருமாறு வரையறை செய்கின்றது.
“பெருமளவில் ஆட்கள் சடுதியாக அல்லது எதிர்பாராத வகையில் உண்டாகும் ஆயுதமேந்திய முரண்பாடுகளால், உள்நாட்டுச் சச்சரவுகளால், திட்டமிட்ட மனித உரிமை மீறல்களால், இயற்கை அல்லது மனிதன் உருவாக்கிய அழிவுகளால் வீட்டை விட்டு வெளியேறுமாறு கட்டாயப்படுத்தப்படும் போது அவர்கள் அவ்விடங்களை விட்டு வெளியேறித் தமது நாட்டு எல்லைக்குள் வசித்தல்”
ஆயினும இவை சட்ட ரீதியான அந்தஸ்த்து பெற்ற வரையறைகள் அல்ல. இவை பொதுவான வரையறைகளே. உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் சட்டரீதியான அந்தஸ்த்து தொடர்பாக Walter Kalin பின்வருமாறு விளக்கமளிக்கின்றார்.
“தமது சொந்த நாட்டினுள் பாதுகாப்பை இழந்து சொந்த நாட்டை விட்டு வெளியேறியோரே அகதிகள். எனவே அவர்களைப் பாதுகாக்கும் பொறுப்புமிக்கவர்கள் யாருமின்மையால் சர்வதேச சட்டத்தின் கீழ் சட்ட ரீதியான அந்தஸ்து அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் அவ்வாறல்ல. உள்நாட்டில் இடம்பெயர்ந்தோரைப் பாதுகாக்கும் முதல் பொறுப்பு தேசிய அரசாங்கங்களினதும் உள்ளூர் அதிகாரிகளினதும் கையில் காணப்படுகின்றது. ஆகவே இவர்களுக்கு இவ்வாறான சட்ட அந்தஸ்து
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 2O5

Page 114
தேவையில்லை. ஆயினும் உள்நாட்டில் பிணக்குகள் நெருக்கடிகள் ஏற்படும் நிலைமைகளில் அவ்விடங்களில் இருந்து இடம்பெயரும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் சர்வதேச சமூகம் அக்கறை கொண்டுள்ளது.”
அதேசமயம் தேசிய அடிப்படையில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் உரிமைகளைப் பேணுவதற்காக தேசிய ரீதியிலான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இலங்கை அரசியலமைப்பின் மூன்றாவது அத்தியாயத்தின் பிரகாரம் உத்தரவாதம் அளிக்கப்படும் அடிப்படை உரிமைகளுக்கும், நாட்டில் வழங்கப்படும் ஏனைய அடிப்படை வசதிகளை அனுபவிக்கவும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் உரித்துடையோராவர். இலங்கை அரசியலமைப்பின் உறுப்புரை 14(1) ன் படி சகல பிரஜைகளுக்கும் இடம்பெயரவும் அவர்களுடைய வதிவிடங்களைத் தெரிவு செய்யவும் உரிமையுண்டு. இவ்வுரிமையானது சில சமயங்களில் தேசிய பொருளாதாரத்தின் அடிப்படையில் கட்டுப்படுத்தக் கூடியது.
இவ்வாறு உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் வரையறுக்கப்பட்டு வரைவிலக்கணப்படுத்தப்பட்ட போதும் அவர்களைப் பாதுகாப்பதற்கான சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஒர் உடன்படிக்கையோ சாசனமோ இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. 1951 ன் ஐ. நா. அகதிகள் சாசனம் 1967ன் அகதிகளுக்கான உடன்படிக்கை என்பன காணப்பட்டபோதும் இவை அகதிகளைப் பாதுகாக்கின்றனவே அன்றி உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. இவ் வெற்றிடத்தைக் கருத்திற் கொண்டு ஐக்கிய நாடுகள் தாபனமானது ஒர் ஆய்வை மேற்கொண்டு 1998ல் “உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கான நெறிமுறை விதிகளை உருவாக்கியது.
இவ் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கான நெறிமுறை விதிகள் இடம்பெயர்ந்தோரின் உரிமைகளைப் பற்றியும், அரசாங்கமும், அதிகாரம் மிக்க அமைப்புக்களும் அவர்கள் மீது கொண்டுள்ள பொறுப்புக்கள் பற்றிக் குறிப்பிடுகின்றது. உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட முதலாவது அதிகாரபூர்வமான அம்சமாக இவ்விதிகள் அமைந்திருக்கின்றன. இவை உண்மையில் சட்ட வரம்புக்குள் உள்ளடக்கப்பட்டிருக்காவிடினும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள சர்வதேச மனித உரிமைகள் சட்டம், மனித நேயச் சட்டம், அதற்கமைவான அகதிகள் சட்டம் என்பவற்றைத் தழுவி அமைக்கப்பட்டதாக காணப்படுகின்றது.
2O6 நடராஜ தரிசனம்

உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பான நெறிமுறை விதிகள் பின்வரும் அம்சங்களைக் கொண்டிருக்கின்றன.
1. உள்நாட்டில் இடம்பெயர்வோர் இடம்பெயரும் ஒவ்வொரு கட்டத்திலும் தம்பாதுகாப்பு விடயத்தில் என்னென்ன உரிமைகளையும் உத்தரவாதங்களையும் பெறலாம் என்பதை தெளிவுபடுத்துகின்றன.
2. எதேச்சாதிகாரமாக விரட்டப்படுவதில் இருந்து பாதுகாப்பளிக்
கின்றன.
3. இடம்பெயரும் வேளையில் பாதுகாப்பு ஒத்தாசை ஆகியவற்றை
அளிப்பதற்கான வரைமுறையை வழங்குகின்றன.
4. பாதுகாப்பாகத் திரும்பிச் சென்று மீளக்குடியேறி சமுதாயத்தில் மீளவும் இணைவதற்கான உத்தரவாதங்களையும் முன்வைக்கின்றன.
ஆயினும் நடைமுறையில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாகவே காணப்படுகின்றது. இடம்பெயர்கின்றபோதும், இடம்பெயர்ந்து வேறிடங்களில் அல்லது நலன்புரி நிலையங்களில் வாழ்கின்ற போதும் இவர்கள் அனுபவிக்கின்ற இன்னல்கள் சொல்லில் அடங்காதவை. அத்துடன் இவர்கள் தமது சொந்த இடங்களுக்கு சென்று மீளக்குடியேறுவதற்கான வசதி வாய்ப்புகளும் மேற்கொள்ளப்பட்டிருக்க வில்லை. ஆயினும் சொந்த இடங்களுக்கு மீளவும் சென்றாலும் அங்கும் இவர்களுக்கு அவசியமான எல்லாவிதமான தேவைகளையும் பெற்றுவிடும் நிலையும் காணப்படவில்லை. இவ்வாறு பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுத்து இவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
உலகளாவிய ரீதியில் 52 க்கும் மேற்பட்ட நாடுகளில் 25 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்திருக்கின்றார்கள். இத் தொகை அகதிகளை விட இரண்டு மடங்குக்கும் அதிகமானது. ஆயினும் சர்வதேச சமூகம் அகதிகளைக் கவனத்தில் எடுக்கும் அளவுக்கு உள்நாட்டில் இடம் பெயர்ந்தோரைக் கவனத்தில் எடுப்பதில்லை. எனினும் அண்மைக்காலமாக சர்வதேச சமூகத்தின் கவனம் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் தொடர்பாக திரும்பியிருக்கின்ற போதும் திருப்திகரமான நிலைமை இன்னும் ஏற்படவில்லை. உலக நாடுகளுள் சூடான், கொங்கோ குடியரசு, கொலம்பியா, உகண்டா, ஈராக், பர்மா, இலங்கை போன்ற நாடுகள் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோரைக் அதிகமாகக் கொண்டுள்ள நாடுகளாக காணப்படுகின்றன. இந் நாடுகள் அனைத்தும் உள்நாட்டுப் போரால்
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 2O7

Page 115
பாதிக்கப்பட்டவை. கெடுபிடியுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதி உள்நாட்டு யுத்தங்கள் இடம்பெறும் காலப்பகுதியாக அடையாளங் காணப்படுகின்ற போது அதனோடு இணைந்த வகையில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் பிரச்சினையும் முக்கிய பிரச்சனையாக உருவாகியுள்ளதைப் பார்க்கலாம். இவ் உள்நாட்டு யுத்தங்கள் எப்போது சமாதானமாக தீர்க்கப்படுகின்றதோ அப்போதே உள்நாட்டில் இடம் பெயர்ந்தோர் பிரச்சனையும் முற்றாக தீர்க்கப்படும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.
உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்கான ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் விஷேட பிரதிநிதி Francis Deng தனது இலங்கை பற்றிய அறிக்கையின் முடிவுரையில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களைப் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
“முரண்பாடுகளுக்கு ஒர் அரசியற் தீர்வு வந்தாலன்றி இம் முரண்பாடுகள் நீங்கும் என்பதோ, உள்ளூரில் இடம்பெயரும் பிரச்சனை தீரும் என்பதோ நம்பிக்கை தருவதாக இல்லை”
இலங்கை அனுபவத்தை எடுத்து நோக்குகின்றபோது 1984, 1989, 1994 என பல்வேறு தடவைகள் சமாதானத்திற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளது. எனினும் 2002 பெப்பிரவரியில் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு பின்பு நிரந்தர சமாதானத்திற்கான நம்பிக்கை ஏற்படத் தொடங்கியிருக்கிறது. இதன் பின்னர் 2003ம் ஆண்டின் இறுதியில் ஏறக்குறைய 3,45,000 பேர் வரையில் சொந்த இடங்களுக்கு மீளச் சென்றிருக்கின்றனர். எனினும் பெருமளவிலான உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி செல்ல முடியாத நிலையிலேயே உள்ளனர். 2003ம் ஆண்டின் இறுதியில் ஏறக்குறைய 3,80,000 பேர் வரையில் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்லாமல் இருக்கின்றனர் எனவும் 90,000 பேர் வரையில் இன்னும் அரசாங்க நலன்புரி நிலையங்களிலேயே தங்கியிருக்கின்றனர் எனவும் புனர்வாழ்வு மற்றும் புனர்நிர்மாண அமைச்சின் கள ஆய்வு தெரிவிக்கின்றது.
புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்ட பின்னரும், யுத்த நிறுத்தம் ஒன்று ஏற்பட்டு சமாதானத்திற்கான பாதைகள் திறந்திருக்கின்ற இச் சந்தர்ப்பத்திலும் ஏன் இன்னும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்லாமல் இருக்கின்றனர் என்ற கேள்வி பலர் மத்தியிலும் எழுந்துள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டு யுத்த நிறுத்தம் ஒன்று ஏற்பட்ட போதும் மீண்டும் யுத்தம்
208 நடராஜ தரிசனம்
 

ஒன்று ஏற்படுமோ என மக்கள் மத்தியில் காணப்படும் அச்சமும், பேச்சுவார்த்தைகள் தடைப்பட்டமையும், இடையிடையே இடம்பெறுகின்ற கலவரங்களும், கொலைகளும் இவர்களுக்கு சமாதானம் தொடர்பான ஒர் நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தியிருப்பதால் இவர்கள் சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்வதில் தயக்கம் காட்டுகின்றனர். இது மட்டுமல்லாமல் உயர் பாதுகாப்பு வலயங்களின் தொடர்ச்சியான இருப்பும், யுத்தம் இடம்பெற்ற பகுதிகள் இன்னும் பூரணமாக புனரமைக்கப்படாமையும், நிலப் பற்றாக்குறைப் பிரச்சனைகளும், வருமானம் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பின்மைகளும், சொத்துக்கள் தொடர்பாக காணப்படுகின்ற தீர்க்கப்படாத பிரச்சனைகளும், நிலக்கண்ணிவெடிகள் போன்றவற்றினால் தோன்றியுள்ள பாதுகாப்பு பிரச்சனைகளும், தேசிய, சர்வதேசிய ரீதியிலான போதிய பொறுப்பின்மையும் இவர்களை சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்வதை தடைசெய்யும் காரணிகளாக குறிப்பிடப்படுகின்றன.
எனவே Francis Deng குறிப்பிட்டது போல நிரந்தர அரசியற் தீர்வின்றி
உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது மிகவும் கடினமானது. ஆயினும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் எதிர்நோக்கும்
சவால்களை ஒரளவுக்காவது தீர்ப்பதற்கு அரசும், அரச சார்பற்ற நிறுவனங்களும் முயற்சி செய்ய வேண்டியது அவசியமானது. இதற்காக நிகழ்ச்சித் திட்டங்களையும் கொள்கைத் திட்டங்களையும் தயாரித்து இவர்களது பிரச்சனைக்கு தீர்வு காண முயல்வது நம் அனைவரதும் பொறுப்பாகும்.
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 209

Page 116
உலகின் தீவிர சூழற் பிரச்சினையாக மாறிவிட்ட அமில மழை
அருளரசி அருளானந்தன்
புவியியல் துறை பேராதனைப்பல்கலைக்கழகம்
உயிரினங்களை வாழ வைக்கின்ற தூயநீரினைப் பொழிகின்ற வானத்தினை ‘தேன் சிந்துதே வானம்’ என புலவர்கள் புகழ்ந்து பாடிய காலம் மலையேறிவிட்டது. இன்று அவ்வானம் விஷ நீரினைப் பொழிய ஆரம்பித்துவிட்டது. முதன் முதலாக அமில மழை எனும் பதமானது 1890ம் ஆண்டு பிரித்தானியாவிலேயே அறிமுகமாகியது. 1870 களில் கைத்தொழிற்சாலைகள், சுரங்கத் தொழிற்சாலைகளில் இருந்து வெளிவிடப்பட்ட அமிலக்கழிவுகளின் வெளியீட்டுடன் அமிலமழை ஆரம்பித்து விட்டதாகக் கூறப்படுகின்றது. 1872 இல் பிரித்தானியாவின் இரசாயனவியலாளரான றொபேட் அங்குஸ் (Robert Angus) என்பவர் லண்டன், கிளாஸ்கோ, லிவப்பூல் பகுதிகளில் மழை தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தார். அப்போது மழைநீரில் அமிலத்தன்மை இருப்பதை அவர் கண்டறிந்தார். 1950 களில் ஜேர்மனியில் தான் அமில மழையின் தாக்கம் உணரப்பட்டு ஒர் உலகப்பிரச்சினையாக எடுத்துக் காட்டப்பட்டது. 1980ம் ஆண்டின் பின்னர் சூழலை அதிக அச்சுறுத்தலுக்கு உட்படுத்தும் தீவிர உலகப் பிரச்சினையாக அமிலமழைப் பொழிவு மாறிவிட்டது.
அமிலமழை என்றால் என்ன?
சாதாரண மழை நீரிலும் அமிலத்தன்மை காணப்படுகின்றது. சாதாரண மழைநீரின் PH பெறுமானம் 5.6 ஆகும். உச்ச அமிலத்தன்மை மழைநீரில் காணப்படின் PH பெறுமானம் 0 ஆகவும், முற்றாக நீரில் அமிலத்தன்மை இல்லை எனில் PH பெறுமானம் 14 ஆகவும் காணப்படும். PH பெறுமானம் 7 எனில் நடுநிலமையாகக் காணப்படும்.
'மழை நீரானது அதிக அமிலத்தன்மை உடையதாகக் காணப்படுகின்ற போது அமிலமழை எனப்படுகின்றது. ”
- Hidore, J.J. & Oliver, J.E -
1975ம் ஆண்டு கிழக்கு அமெரிக்காவில் பெறப்பட்ட மழை நீரின் PH
ஆனது 2.1 இற்கும் குறைவாக அதிக அமிலத் தன்மை உடையதாகக் காணப்பட்டமை அவதானிக்கப்பட்டு உள்ளது. இதன் பின்னர்
210 நடராஜ தரிசனம்

மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி பொஸ்ரன், நியூயோர்க், சிக்காக்கோ, லொஸ்ஏஞ்சலஸ், சான்பிரான்சிஸ்கோ போன்ற கைத்தொழில் நகரங்களில் மழைநீரின் PH பெறுமானம் 4 இற்கும் குறைவாகக் காணப்பட்டுள்ளது.
அதே போன்று கிழக்கு அமெரிக்க, மேற்கு ஐரோப்பிய, கிழக்குச் சீனப் பகுதிகளில் பெறப்பட்ட மழை நீரின் PH பெறுமானம் 4.5 - 5.0 வரை காணப்பட்டது. மேற்கு ஜேர்மனி, செக்கோஸ்லவாக்கியா, நோர்வே பகுதிகளில் மழை நீரின் PH பெறுமானம் 5 இற்கும் குறைவாகக் காணப்பட்டது. லொஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் உறைபனி ஏற்பட்ட போது அமிலத்தன்மை 3 ஆக இருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.
அமிலமழையினால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் எவை? உலகில் NO, SO என்பனவற்றினை அதிகளவில் சேர்த்து வருகின்ற அமெரிக்காவின் கிழக்குப் பகுதி, ஐரோப்பாவின் மேற்குப்பகுதி, தாய்வான் - கொங்கொங் பிரதேசங்கள் என்பன அமில மழையின் தாக்கத்தினால் உச்ச அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
கலிபோர்ணியா, வெனிசுவெலா, ஆஜென்ரீனா, கொலம்பியா, ரஷ்யா, சீனா, வடகிழக்கு இந்தியா, கோயம்புத்தூர், தென் ஆபிரிக்கப்பகுதிகள் என்பனவும் ஒரளவு அமில மழையினால் பாதிக்கப்பட்டு உள்ளன.
* லொஸ்ஏஞ்சல்ஸ் * மும்பாய் * பீஜிங் * சந்தியாகோ * டெல்லி # ៩(BILITឆ្នាំ * சாயோபோலோ * கல்கத்தா * பக்தாத் * பாங்கொக் * சிட்னி * தெகிரான் * சங்காய் * சிங்கப்பூர்
மேற்படி நகரங்களில் இருந்து கணிசமான அளவு SO, வும் NO, வும் தினமும் வளியில் சேர்க்கப்பட்டு வருகின்றன. இதனால் மேற்படி நகரங்களும் அமிலமழையினால் பாதிக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் கொழும்பு - கண்டி போக்குவரத்துப் பாதையில் அமைந்துள்ள வறக்காப்பொலப் பகுதியில் அதிகரித்த போக்குவரத்துக் களினால் அமில மழையின் சாயல்கள் அவதானிக்கப்பட்டுள்ளது. புத்தளம் பகுதியிலும் அமிலமழையின் தன்மைகள் அவதானிக்கப்பட்டுள்ளது. தென் இந்தியத் தொழிற்சாலைகளின் அமில வாயுக்களினால் நுவரெலியக் குன்றுகளில் அமிலமழை ஏற்படலாம் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் O. E. இளப்பெருமா தெரிவித்துள்ளார்.
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 21

Page 117
அமில மழைக்கான மூலங்கள் எவை?
வளிமண்டலத்திலுள்ள அமிலப்படிவுகளும் துகள்களும் படிவு வீழ்ச்சி வடிவங்களுடன் இணைந்து புவி மேற்பரப்பினை வந்தடைந்து ஈரத்தன்மையான வண்டல்களாகப் படிகின்றன. வளிமண்டலத்தில் கூடுதலாகச் சேர்கின்ற கந்தகமும் (S) நைதரசனும் (N) அமிலமழையின் உருவாக்கத்திற்கான பிரதான காரணங்களாகின்றன. கந்தகவிரொட் சைட்டும் (SO), நைதரசன் ஒட்சைட்டும் (NO) வளிமண்டலத்தில் சேர்வதுடன் அங்குள்ள நீராவி மற்றும் ஒட்சிசனுடன் கலந்து அமிலத்தன்மையை (HSO, HNO) உருவாக்குகின்றன. இவ் அமிலத்தன்மையான துணிக்கைகள் படிவு வீழ்ச்சி வடிவங்களுடன் (மழை, மழைப்பனி, பனிகலந்த மழை, உறைபனி) புவிமேற்பரப்பினை வந்தடைகின்றன. பெறப்படுகின்ற படிவுவீழ்ச்சி அதிகளவில் சல்பூரிக் அமிலத்தினையும், சல்பேற்று அயன்களையும் கொண்டு காணப்படுகின்றபோது அமிலமழை எனப்படுகின்றது. இவ் அமிலத்தன்மையினை ஏற்படுத்துவதில் சல்பைட் ஒட்சைட்டும் (SO) நைற்ரைட் ஒட்சைட்டும் (NO) காணப்படுகின்றன. இவ் அமிலத் தன்மையான அசுத்தமாக்கிகள் மண்மேற்பரப்பு, தாவரங்கள், ஓடைகள், நீர்நிலைகள், கட்டிடங்கள் என்பனவற்றின் மீது படிவு செய்யப்படுமாயின் அமிலப்படிவுகள் எனப்படுகின்றன.
அமில மழையினை உருவாக்குகின்ற மானிட நடவடிக்கைள் * புகைகளை அதிகளவில் கக்குகின்ற தொழிற்சாலைகளினால் SO, NO,
என்பன வெளியேற்றப்படுகின்றன. * உயிர்ச்சுவட்டு எரிபொருட்களின் பயன்பாடு
பல்வேறு மானிட தேவைகளுக்காக நிலக்கரி, பெற்றோல் என்பன எரிக்கப்படுகின்றன. * அனல் மின் உற்பத்தி நடவடிக்கைகள்
நிலக்கரியுடன் ஏனைய உயிர்ச்சுவட்டு எரிபொருட்கள் அதிகளவில் எரியூட்டப்படுகின்றன. * மின் உற்பத்தி நடவடிக்கைகளினால் 70% மான SO, வும் NO, வும்
வளிமண்டலத்தில் சேருகின்றன * 400 இறாத்தல் நிலக்கரி எரியூட்டப்படுகின்ற போது 12 இறாத்தல் CO,
வும் NO,வும் வளியில் சேருகின்றது எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. * மோட்டார் வாகனங்களின் அதிகரித்த பயன்பாடு வாகனங்கள் நாளாந்தம் கக்குகின்ற பெற்றோலிய எரிபொருட் புகை 40% மான NO, வினை வளியில் சேர்த்து வருகின்றது.
212 நடராஜ தரிசனம்

طالبر
விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகின்ற நைதரசன் உரவகைகள் விவசாய உரவகைகளின் பயன்பாடுகள் வருடா வருடம் 0.25% மான நைதரசன் ஒட்சைட்டினை வளியில் சேர்ப்பதாகக் கணிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி மானிட நடவடிக்கைகள் மட்டுமன்றி வளியில் இயற்கையாகவே
எரிமலைக் கக்குகைகளின் மூலமும் மின்னலின் மூலமும் கந்தகவிரொட்சைட் தோற்றுவிக்கப்படுகின்றது. உலகில் SO வெளியீட்டில் சீனா 3வது இடத்தினை வகிக்கின்றது. இதனால் அமிலமழை அச்சுறுத்தலினை சீனா அதிக அளவில் எதிர் கொள்ள வேண்டி உள்ளது.
SO வினை உருவாக்கும் மூலங்கள்
9% வீட்டுப் பாவனை
- ஏனைய நடவடிக்கைகள் 13%
கைத்தொழிற்சாலைகள் 18%
அமிலமழையினால் ஏற்படுகின்ற பாதிப்புக்கள்
1. தாவரங்கள் அழிவடைதல்
அமில மழையினால் பெறுமதிமிக்க தாவரங்கள் பாரிய அளவில் அழிவிற்கு உட்பட்டு வருகின்றன. மேற்கு ஜேர்மனியில் உள்ள காஸ் (Harz) மலைத் தொடரில் காணப்பட்ட கறுப்புக்காடுகள் (Black forest) அமில மழையின் தாக்கத்தினால் முற்றாக அழிவடைந்துள்ளன. மேற்கு ஜேர்மனியின் மொத்தக் காடுகளில் 1/3 பகுதிக் காடுகள் அமில மழையினால் பாதிப்பிற்கு உட்பட்டுள்ளதாக 1983ம் ஆண்டின் தரவொன்று கூறுகின்றது. கிழக்கு ஐக்கிய அமெரிக்காவிலுள்ள பைன், சைப்ரஸ் காடுகள் அமிலமழையின் தாக்கத்திற்கு உள்ளாகி இருப்பதைக் காணலாம். இதனால் 1990 களின் ஆரம்பத்தில் இருந்து ஐக்கிய அமெரிக்காவின் மர உற்பத்திக் கைத்தொழில் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 213

Page 118
யப்பானில் தான்போ, ஒருனிக்கோ போன்ற மலைத் தொடர்களில் காணப்பட்ட தாவரங்கள் அனைத்தும் அழிவடைந்து இன்று தரிசு நிலங்களாகக் காட்சி தருகின்றன. கனடாவின் கிழக்குப்பகுதி ஊசிலைக்காடுகள் அமில மழையினால் பாதிக்கப்பட்டுள்ளன. மேற்கு வேர்ஜினியாவில் அடிறொன்டக்மலை (Adiron dack Mountain) யில் காணப்படுகின்ற தாவரங்களும் அமிலமழையினால் தீவிரமான அளவில் பாதிக்கப்பட்டு உள்ளன. செக்கோசிலவாக்கியாவின் பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள காடுகளில் 1/2 வாசிக்கு மேற்பட்டவை பாதிக்கப்பட்டு உள்ளன. இது சுமார் 1000 ha எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. சீனாவின் சிலபகுதிகளில் பயிர்கள் எரிந்து நிலங்கள் பாழடைந்து வருகின்றன. தாஜ்மஹாலைச் சூழவுள்ள செடிகொடிகள் அழிந்து பல பகுதிகள் பாலைநிலங்களாக மாறிவருகின்றன.
தரைக்கீழ்நீர் பாதிப்படைதல்
அமிலப்படிவுகளினால் தரைக்கீழ்நீரும் அமிலத்தன்மையாதலுக்கு உட்படுகின்றது. குறிப்பாக ஐக்கிய அமெரிக்காவின் கிழக்குப் பகுதி, வடமேற்கு பசுவிக் மற்றும் மேற்கு மாநிலத்தின் சில உயர்மலைப் பிரதேசங்களில் தரைக் கீழ் நீர் பாதிக்கப்பட்டு உள்ளமையினைக் காணமுடிகின்றது. அமிலமழையினால் மண்ணிலுள்ள இரும்பு, அலுமினியம், கல்சியம், மக்னீசியம் போன்ற சில கனியங்கள் கரைவதனால் தரைக்கீழ் நீர் பாதிக்கப்படுகின்றது.
3. மனித உடலியல் ரீதியான பாதிப்புக்கள்
214
யப்பானில் “காண்டோ’ எனும் பிரதேசத்தில் பெய்த அமில மழையினால் உடலியல் ரீதியாகப் பலரும் பாதிக்கப்பட்டதுடன் ஆஸ்துமா போன்ற நோய்களுக்கும் உட்பட்டனர். சீனாவில் வளிமாசடைதலாலும் அதனால் உருவாகின்ற அமில மழையினாலும் இதுவரை 6000 பேர் மரணமடைந்து உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. நீலக் குழந்தை பிறத்தல் (Blue Baby), கருச்சிதைவு, கருவளம் குறைவடைதல் என்பவற்றுக்கும் அமிலப்படிவுகள் காரணமாகின்றன.
நடராஜ தரிசனம்

4. உயிரினங்கள் அழிவடைதல்
அமில மழையினால் தாவரங்கள் உட்பட ஆறுகள், ஓடைகள், ஏரிகள் என்பனவற்றில் வாழுகின்ற உயிரினங்களும் பாதிப்படைகின்றன. வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உயிர்ச் சூழற் தொகுதியானது தீவிரமான முறையில் பாதிக்கப்பட்டுள்ளமை ஆய்வுகள் மூலம் அறியப்படுகின்றது. நோர்வேயில் அதிகமான ஏரிகளில் காணப்படுகின்ற சல்மோன்' எனும் ஒரு வகை மீனினத்தின் இனப்பெருக்கமானது இவ்வகை அமிலப்படிவுகளினால் பாதிக்கப்பட்டு உள்ளது. 1980ம் ஆண்டு வெளியிடப்பட்ட கனேடிய சூழல் அபிவிருத்தி திணைக்களத்தின் அறிக்கை ஒன்றின்படி அமிலப்படிவுகளினால் ஒண்டாரியோவிலுள்ள 140 இற்கும் மேற்பட்ட ஏரிகளிலுள்ள மீனினங்கள் முற்றாக அழிவடைந்து விட்டதாகவும், ஏனைய ஆயிரக் கணக்கான ஏரிகளிலும் இந்நிலமை காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்க விஞ்ஞானிகளின் ஆய்வொன்று மத்திய அத்திலாந்திக் பிரதேசத்திலுள்ள 12 - 14 % மான ஏரிகளில் அமிலத் தன்மையான படிவுகள் காணப்படுவதாக குறிப்பிடுகின்றது. அடிறொன்டக் (Adiron dack) மலைப்பகுதி ஏரிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி 214 மலைப்பகுதி ஏரிகளில் 1/3 பகுதி அமிலத்தன்மை உடையனவாக எந்தவித மீன்களும் அற்றநிலையில் காணப்பட்டமை அவதானிக்கப்பட்டுள்ளது. கனடாவின் நோவா ஸ்கொடியா (Nova Scotia) பகுதியில் உள்ள ஆறுகளிலும் அமிலத்தன்மை காரணமாக சல்மோன் மீன் இனங்கள் அழிந்துள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.
மண்மேற்பரப்பு மற்றும் நீர் நிலைகளில் அமிலத்தன்மை அதிகரிப்பதனால்
பிளாங்ரன், பக்ரீறியா, பூச்சியினங்கள், பங்கசுக்கள் இறக்கின்றன. இதனால்
இவற்றை நம்பி வாழுகின்ற மீன் இனங்களும், ஏனைய சில கடல்வாழ் உயிரினங்களும் உணவின்றி இறப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
5. வரலாற்றுச் சின்னங்கள் சிதைக்கப்படுதல்
வரலாற்றுப் புகழ்பெற்ற கட்டிடங்கள், சிற்பங்கள், சிலைகள் என்பன அமிலமழையினால் பாதிக்கப்படுகின்றன. சலவைக் கற்கள், சுண்ணாம்புக் கற்களினால் கட்டப்பட்டுள்ள சின்னங்கள் உரிவுக்கு உட்படுகின்றன. மைக்கல் அஞ்சலோவின் சிலை உட்பட மாபிளினால் செய்யப்பட்டுள்ள சிலைகள் பல அமிலமழையினால் இத்தாலியில் பாதிக்கப்பட்டுள்ளன.
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 215

Page 119
பவுல் சுவாமிகளின் (Paul revere) சமாதியும் நீண்ட காலம் நிலைக்க முடியாத அளவிற்கு அமில மழையினால் பாதிக்கப்பட்டுள்ளது. வெண்கலச் சிலைகளும், உலோகப் பொருட்களினால் ஆக்கப்பட்டுள்ள வரலாற்றுச் சின்னங்களும் அமிலமழையின் தாக்கத்தினால் பாதிக்கப் பட்டுள்ளன. இந்தியாவிலுள்ள உலக அதிசயங்களில் ஒன்றான வெள்ளை வெளிரென பளிச்சிடும் மாபிள்களினால் அமைக்கப்பட்டுள்ள தாஜ்மஹால் மங்கி வருவதுடன் அமிலத்தாக்கத்தினால் ஆங்காங்கு அரிப்புக்களுக்கும் உட்பட்டு வருகின்றது. கிறீசில் உள்ள பார்தினொன்(Parthenon), யுகாறன் வளைகுடாப் பகுதியிலுள்ள மயன் ருயின் (Mayanruins) போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அம்சங்கள் பலவும் அமில மழையினால் பாதிக்கப்பட்டுள்ளன.
6. பாறைகளும் மண்வளமும் பாதிக்கப்படுதல்
216
பாறைகள், உலோகங்கள், சீமேந்துக் கட்டிடங்களை அமிலமழையானது அரித்துவிடுகின்றது. இதனால் பாறைகள் பலமற்ற நிலையினை அடைந்து சிதைவடைகின்றன. மண்ணில் CA++ அயன்கள் அமில மழையினால் அகற்றப்பட்டு விடுகின்றது. அமில மழையானது A (அலுமினியம்) போன்ற சில உலோகங்களையும் மண்ணில் சேர்க்கின்றது. இது தாவரங்களின் வேர்த்தொகுதிக்கு தீங்கு விளைவிப்பதுடன், அவற்றின் கனியுப்புக்களை உறிஞ்சும் ஆற்றலைக் குறைக்கின்றது. மண்ணிலுள்ள Fe, A, Ca, Mg போன்ற கனியங்கள் அமிலப்படிவுகளின் தாக்கத்தினால் அற்றுப் போகின்றன. இதனால் மண்ணின் வளம் இழக்கப்படுகின்றது. குபேற்றே நகரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் மண்மாதிரிகளில் அமிலத்தன்மை உயர்வாக இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார ரீதியான பாதிப்புக்கள்
பயிர்ச்செய்கை நிலங்கள் பல கைவிடப்பட்டுள்ளன அல்லது அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இது பொருளாதாரத்தில் பாதிப்பினை ஏற்படுத்தும். ஏரிகள், நதிகள், குளங்களில் மீனினங்கள் அருகி வருகின்றன. இதனால் உள்நாட்டு மீன்பிடிக் கைத்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. காடுகள் அமிலமழையின் தாக்கத்திற்கு உட்படுவதனால் வெட்டுமரக் கைத்தொழில் பாதிக்கப்படுகின்றது.
நடராஜ தரிசனம்

கிழக்கு ஐக்கிய அமெரிக்காவில் பைன், சைப்பரஸ் காடுகள் அமிலமழை தாக்கத்திற்கு உட்பட்டமையினால் 1990 களில் இருந்து வெட்டுமரக் கைத்தொழில் கணிசமான சவால்களை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.
சீனாவில் மட்டும் அமிலமழையினால் வருடாந்தம் 4900 மில்லியன் டொலர் பொருளாதார நஷ்டம் ஏற்படுவதாக அறிக்கைகள் கூறுகின்றன.
அமில மழையின் தாக்கத்தினைக் குறைக்க முடியுமா?
ஐக்கிய அமெரிக்கா, யப்பான், ஐரோப்பா ஆகிய நாடுகள் அமில
மழையினைக் கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு முயற்சிகளை எடுத்து
வருகின்றன.
ஐக்கிய அமெரிக்கா
1980 இல் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜிம்மி காட்டர் என்பவரினால் “தேசிய அமிலப் படிவு வீழ்ச்சி மதிப்பீட்டுத் திட்டம்' - NAPAP அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் 1970 களில் இருந்த நிலைமையினை விட 1980 களின் பின்பு SO, வெளியேற்றம் 30% ஆலும் NO வெளியேற்றம் 8% ஆலும் குறைக்கப்பட்டது. 1985ம் ஆண்டு கியூபெக் மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி தலைமையில் அமில மழையை குறைப்பது பற்றி ஆராயப்பட்டது. பின்னர் தேசிய விஞ்ஞான கழகம் இது சம்பந்தமான நடவடிக்கைகளை முன்னெடுத்தது. 1990 இல் அமெரிக்காவின் மத்திய அத்திலாந்திக் மாநிலத்தில் சுத்தமான வளிச் சட்டம் (Clean Air Act) கொண்டுவரப்பட்டு அதன் மூலம் SO, அளவைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இன்று வரை அமில மழையினைக் கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்கா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
பப்பான்
யப்பானில் 1967 இல் அமில மழையைக் கட்டுப்படுத்துவதற்கான தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் S, N, CO, NO, SO வை புகையாக வெளிவிடும் வாகனங்கள் கட்டுப்படுத்தப்பட்டன. ரோக்கியோவில் டீசலில் இயங்கும் வாகனங்கள் கட்டுப்படுத்தப்பட்டன. 1977 - 1986 காலப்பகுதியில் கோடிக்கணக்கான தொன் NO, பாவனை குறைக்கப்பட்டது.
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 217

Page 120
அ நாடு பூராகவும் 47 அமிலமழை அவதானிப்பு நிலையங்கள் அமில மழையையும் அதன் பாதிப்புக்களையும் இனங் காண்பதற்காக நிறுவப்பட்டன.
9 அனல் மின் நிலையங்களிலிருந்து வெளியேறும் அமில வாயுக்களை அகற்றிய பின்பு வாயுக்களை வளிமண்டலத்தில் சேர்க்கும் தொழில் நுட்பம் 1960 இல் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது சுமார் 2000 தொழிற்சாலைகளில் அமில வாயுக்களை அகற்றும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.
6 வாயுக்களின் வெளியேற்றத்தினை கட்டுப்படுத்தக்கூடிய புதிய புதிய தொழில்நுட்பங்கள் வாகன உற்பத்தியின் போது கையாளப்பட்டு வருகின்றது. இவ்வாறாக கைத்தொழில் துறையின் மூலம் வாயுக்களை வெளியேற்றுவதுடன் அவற்றை கட்டுப்படுத்துவதற்கு பெருமளவு நிதியினை ஒதுக்க வேண்டிய நிலைக்கு யப்பான் தள்ளப்பட்டது.
வளிமண்டலத்தினைப் பொறுத்தவரை நாட்டின் எல்லைகள் மறைந்து போயுள்ளன. இதனால் ஒரு நாட்டின் நடவடிக்கைகள் பலமைல் தூரங்களுக்கு அப்பாலுள்ள இன்னுமொரு நாட்டினை பாதிக்கக் கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன. o இந்தோனேஷியாவின் காட்டுத்தீ பல மைல்களுக்கு அப்பால் இருந்த
நாடுகளில் அமில மழையினை உருவாக்கியமை அறிந்ததே. உ சீன, கொரிய நாடுகளின் கைத்தொழிற்சாலை அமில வாயுக்கள் யப்பானைச் சென்றடைகின்றன. இதனால் யப்பான் அமிலமழைத் தாக்கத்திற்கு உட்படுகின்றது. e ஐக்கிய அமெரிக்காவின் கைத்தொழில் வலயத்தில் வெளிவிடப்படுகின்ற அமில வாயுக்கள் கனடாவில் அமிலமழைப் பொழிவிற்கு காரணமாகின்றன.
எனவே அமிலமழை என்பது ஒரு நாட்டிற்கு மட்டுமே உரிய பிரச்சனையாக மட்டு மன்றி உலகின் தீவிர சூழற் பிரச்சினையாக மாறிவிட்டது எனலாம். அபிவிருத்தி அடைந்த நாடுகள் அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடுகளை நோக்கி நிலக்கரியை அதிகளவில் பயன்படுத்துவது தான் இதற்கு முக்கியகாரணம் எனக் குற்றம் சாட்டுவதும், அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடுகள் கைத்தொழில் நாடுகளை நோக்கி உங்களது கைத்தொழிற்சாலை மாசுக்கள் தான் இப்பிரச்சினைக்கான முக்கிய காரணம் எனக் கூறுவதும் நியாயமற்றது. உலகநாடுகள் அனைத்தும் இதற்கான பொறுப்புதாரர்களே.
218 நடராஜ தரிசனம்

மனிதனின் ஆதார நிலை
கலாநிதி சிவக்கொழுந்து பூணுரீசற்குணராசா தலைவர் கணித புள்ளிவிபரவியற்துறை, யாழ் பல்கலைக்கழகம்
பூநீல பிரபுபாதா (1896 - 1977) சம்பிரதாய விளக்கங்கட்கு அப்பாற்பட்டவர். வெவ்வேறு சமயங்களில் அவரை அறிஞர் தத்துவஞானி கலாச்சாரத்தூதர் நூலாசிரியர், ஆன்மீகக்குரு சமுதாய விமர்சகர் என்றெல்லாம் அழைத்திருக்கிறார்கள். இவர் பிரம்கெளடீய சம்பிரதாய (கிருஸ்ணா, பிரம்மா, நாரதர், வியாசர், சுகர். பூரீசைதன்யர்.) வரிசையில் வந்த ஆச்சாரியர். அத்துடன் உலகப் புகழ்பெற்ற “ஹரே கிருஸ்ண இயக்கம் என்றழைக்கப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் நிறுவன ஆச்சாரியாரும் ஆவர்.
கோடிக்கணக்கான ஆண்டுகளாக மாபெரும் ஆத்ம ஞானிகளான மற்ற ஆச்சாரியர்கள் வழங்கி வந்துள்ள அதே அறிவை வெளிநாட்டவர்க்கு நம்பிக்கையூட்டும் வண்ணம் வியக்கத்தக்க தெளிவுடன் தனது சொற்பொழிவுகளில் வெளிப்படுத்தியிருந்தார். அப்படியான அவரது உரைகளின் தொகுப்பு ஒன்று. 'தன்னை அறியும் விஞ்ஞானம்’ என்னும் புத்தகமாக ஹரேகிருஷ்ண இயக்கத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது. இதன் சில அம்சங்களை, போற்றுதற்குரிய எமது அதிபர் திரு. கி. நடராசாவின் மணிவிழா மலரில் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகிறேன். கடவுளோடான நம் உறவை உணர்வது வாழ்வின் பரிபக்குவ நிலை. ஆத்மஞானிகளால் வேத அறிவிற்கெல்லாம் அடிப்படையானதென்று ஒப்புக்கொள்ளப்படும். பகவத்கீதையில் இருந்து மனிதர்கள் மட்டுமன்றி எல்லா உயிர்வாழிகளும் இறைவனின் இணைபிரியா அங்கங்கள் என்பது நமக்குத் தெரிகின்றது. அங்கங்கள் முழுமைக்குச் சேவை செய்வதற்காக ஏற்பட்டவை. கால்கள், கைகள், விரல்கள், காதுகள் எல்லாம் முழு உடலுக்கும் சேவை செய்வதற்காக ஏற்பட்டவை. உயிர்வாழிகளான நாம் இறைவனின் இணைபிரியா அங்கங்களாகையால் அவருக்கு சேவை செய்யக் கடமைப்பட்டிருக்கிறோம்.
உண்மையில் நாம் எப்போதும் யாருக்காவது குடும்பம் நாடு சமூகம் என்று யாருக்காவது சேவைசெய்து கொண்டிருக்கின்றோம். நமது சேவையைப் பெறுவதற்கு வேறுயாரும் இல்லாவிடில் ஒரு நாயையோ பூனையையோ வளர்த்துக் கொண்டு அதற்கு சேவை செய்கின்றோம். இதெல்லாம் நம் அமைப்பின் இயல்பில் நாம் பிறருக்கு சேவை செய்வதற்காக ஏற்பட்டவர்கள் என்பதை நிரூபிக்கின்றது. என்றாலும் நம் திறமை முழுவதையும் பயன்படுத்தி
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 蟾 219

Page 121
சேவை செய்யும் போதும் கூட நமக்குத் திருப்தி ஏற்படுவதில்லை நம் சேவையைப் பெறுபவர்களும் திருப்தியடைவதில்லை. பெளதீகத் தளத்தில் எல்லோரும் திருப்தியற்றவர்களாகவே காணப்படுகின்றோம். நம் சேவை சரியான இலக்கை நோக்கிச் செலுத்தப்படவில்லை என்பதே இதற்குக் காரணமாகும். ஒரு மரத்தின் வேருக்கு நீரூற்றினால், அதன் கிளைகள் இலைகள், கொம்புகள் பயன் அடைகின்றன. முழுமுதற் கடவுளுக்கு சேவை செய்வதால் மற்ற அங்கங்களெல்லாம் தானாகவே திருப்தி பெறுகின்றன. ஆகவே, எல்லா நல்வாழ்வுத்திட்டங்களும் சமூகம், குடும்பம், நாடு ஆகியவற்றின் சேவைகளும் புருஷோத்மனான இறைவனிற்கு சேவை செய்வதன் மூலம் தாமாகவே நிறைவேற்றப்படுகின்றன.
மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் கடவுளுடனான தன் உண்மையான ஆதார நிலை என்னவென்பதை உணர்ந்து அதன்படி நடக்கக் கடமைபட்டிருக்கின்றார்கள். இது சாத்தியமானால் நம் வாழ்வு வெற்றியுள்ளதாக அமையும். ஆனால் சிலவேளைகளில் 'கடவுள் இல்லை நானே கடவுள் நான் கடவுளைப் பற்றி கவலைப்படவில்லை என்றெல்லாம் சவால்விடுவதெல்லாம் நம்மைக் காப்பாற்றாது. கடவுள் இருக்கவே செய்கிறார். அவரை நாம் ஒவ்வொரு கணமும் காணலாம். நம் வாழ்வில் நாம் கடவுளைக் காண மறுத்தால் அவர் கொடிய மரணமாக நம் முன் தோன்றுவார். நாம் ஒரு அம்சத்தில் அவரைக் காணாவிட்டால் வேறொரு அம்சத்தில் அவரைக் காண்போம் பிரபஞ்சத் தோற்றத்திற்கு மூலவேர் இறைவன் ஆகையால் அவரை பல அம்சங்களில் காணலாம் ஒரு வகையில் அவரிடமிருந்து நாம் தப்பிக்கவே
முடியாது.
சில பிரத்தியேக அம்சங்களைக் கொண்ட இந்த மனிதப் பிறவி இலட்சக்கணக்கான ஆண்டுகளாக ஆத்மா பரிணாமச் சுழற்சியில் ஈடுபடுவதன் பின் ஏற்பட்டதொன்று என்பதை நாம் எப்போதும் நினைவிற் கொள்ள வேண்டும். மனிதப் பிறவியை அடைந்தவன் தன் பொருளாதார மற்றும் வாழ்க்கைப் பிரச்சினைகளை கீழ்நிலை உயிரினங்களை விட மிக எளிதாகத் தீர்த்துக் கொள்கின்றான். பண்போடு வசதியாக வாழ்வதற்குத் தேவையான எல்லாத் திறமைகளையும் மனிதனுக்கு இயற்கை வழங்கியுள்ளது. பன்றிகளையும் மற்ற மிருகங்களையும் விடச் சிறப்பாக வாழக்கூடிய தகுதி மனிதனுக்கு மட்டும் ஏன் வழங்கப்பட்டுள்ளது? உயர்பதவியிலுள்ள அதிகாரிக்கு சாதாரண உத்தியோகத்தரை விட ஏன் அதிகமான வாழ்க்கை வசதிகள் தரப்பட்டுள்ளன? இதற்கு மிக எளிதில் விடை கூறலாம் உயர் நிலையிலுள்ள அதிகாரி அதிகமான பொறுப்புள்ள கடமைகளை நிறைவேற்ற வேண்டியவராய் இருக்கிறார். அதுபோலவே எப்போதும் வயிற்றுப்பசிக்காக
220 நடராஜ தரிசனம்

இரை தேடுவதிலேயே கருத்தைச்செலுத்தும் மிருகங்களை விட மனிதன் மிக உயர்ந்த கடமைகளை நிறைவேற்ற வேண்டியவனாகின்றான். ஆனால் இன்றைய நாகரிகம் மிருக வாழ்வின் தரத்தையொட்டியிருப்பதால் இயற்கையின் விதிகளின்படி வயிற்றை நிரப்பும் பிரச்சினை மேலும் தீவிரமாகியுள்ளது.
இந்த மனித வாழ்வு உயர்நிலையை உயர்ந்த பக்குவத்தை எய்துவதற்காக நமக்குத் தரப்பட்டுள்ளது. பன்றிகளையும் நாய்களையும் போல் கடினமாக உழைப்பதற்காக அல்ல. ஒருவன் தான் மனிதனாகப் பிறந்ததால் ஏற்பட்டுள்ள கடமையை நிறைவேற்றத் தவறினால் அவன் இயற்கை விதிகளின்படி கீழ்நிலை உயிர்வடிவை ஏற்கும் நிர்ப்பந்தத்திற்குள்ளாகின்றான். பெளதீக உலகில் ஜட இன்பங்களை அனுபவிப்பதாக இயற்கையின் விதிகளின்படி ஆத்மா எவ்வாறு அதற்குத் தகுதியான உடலையும் புலனுறுப்புக்களையும் பெறுகின்றது என்பதை பகவத்கீதை (அத். 15 சுலோ 9 10 அத் 8 சுலோ 6) தெளிவாக விளக்குகிறது. ஆன்மீக இயக்கம் இல்லாத நாகரிகம் தேக்கம் கண்டுவிடும். நித்திய வாழ்வென்னும் இலக்கைச் சென்றடைவதற்கான சிறந்த வாகனம் இந்த மனித உடல். இது ஜட வாழ்வென்னும் அறியாமையாகிய கடலைக் கடப்பதற்குதவும் மிகமுக்கியமான அரிய தோணியாகும். இதை திறம்பட நடத்திச் செல்லும் மாலுமியே ஆன்மீகக்குரு. தெய்வீக அருளின் உதவியால் இத் தோணி சாதகமான காற்றால் உந்தப்பட்டு நீரில் மிதந்து செல்கின்றது. இந்த அனுகூலமான சூழ்நிலைகளைப் பயன்படுத்திக்கொண்டு அறியாமையெனும் கடலைக் கடப்பதற்கான வாய்ப்பை யார் தான் பயன்படுத்திக் கொள்ளமாட்டார்கள். இந்த நல்ல வாய்ப்பை உதாசீனம் செய்பவன் தன்னைத்தானே அழித்துக் கொள்பவனாகின்றான் என்பதை உணரவேண்டும்.
ரயில் வண்டியின் முதல் வகுப்புப் பெட்டி வசதிகள் மிகுந்தது என்பது உண்மை. ஆனால் ரயில் தான் போக வேண்டிய இடத்தை நோக்கி நகராமலிருந்தால் குளிர்பதனம் செய்யப்பட்ட ரயில் பெட்டியில் அமர்ந்திருந்து என்ன பயன்? தற்கால நாகரீகம் ஜடவுடலை வசதியாக வைத்திருக்கப் பெரும் முயற்சியெடுத்து வருகின்றது. ஆனால் வாழ்வின் உண்மையான இலக்கு இறைநிலையை மீண்டும் சென்றடைவதாகும் என்பதை - அறியார் வசதியான இருக்கையில் உட்கார்ந்திருப்பதால் மட்டும் பயனில்லை, உண்மையான இலக்கை நோக்கி நம் வாகனம் சென்று கொண்டிருக்கின்றதா என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். வாழ்வின் முக்கிய நோக்கத்தை மறந்துவிட்டு ஜடவுலகில் சுகத்தைப் பேணுவதில் நிலையான நலன் ஏதுமில்லை. வாழ்வின் இறுதி நோக்கம் நாம் இழந்து நிற்கும் நம் உண்மை ஆதார நிலையை
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 221

Page 122
அடையாளம் கண்டு மீண்டும் பெறுவதாகும். மனித வாழ்வென்னும் தோணி ஆன்மீகமான இலக்கை நோக்கிச் செல்வதற்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. துரதிஷ்டவசமாக இந்த உடலென்னும் தோணி ஐந்து வலுவான சங்கிலிகளால் ஜடவுணர்வென்னும் நங்கூரத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது அவையாவன.
1. ஆன்மீக உண்மைகளை அறியாத காரணத்தால் ஜடவுலகில் பற்றுதல்
கொண்டிருத்தல். 2. உடல் ரீதியான உறவுகளின் காரணமாக உறவினரிடம் பற்றுதல் வைத்தல். 3. பிறந்த நாட்டிலும் இவ்வுலக உடமைகளான வீடு, சொத்து, நிலம்,
வியாபாரம் போன்றவற்றிலும் பற்றுக்கொள்ளல். 4. எப்போதும் பூடகமாக தோன்றும் பெளதீக விஞ்ஞானத்தில் பற்றுதல்
கொள்ளல். 5. மதங்களிடமும் புனிதச் சடங்குகளிலும் (கிரியைகளிலும்) அவற்றிற்குப் புனிதமளிக்கும் முழுமுதற் கடவுள் பற்றிய அறிவும் அன்பும் இன்றி வெறும் பற்றுதல் மட்டும் கொண்டிருத்தல்.
மனித உடலென்னும் தோணியைக் கரைசேரவிடாமல் நிறுத்தி வைத்திருக்கும் இப்பற்றுதல்கள் பகவத்கீதையில் பதினைந்தாவது அத்தியாயத்தில் விபரமாக விளக்கப்பட்டுள்ளன. அவை ஆழமாக வேரூன்றியுள்ள ஆலமரம் பூமியின் மேலான தன் பிடியை அழுத்தமாக பிடித்துக் கொண்டிருப்பதற்கு ஒப்பாகக் கூறப்பட்டுள்ளன. அவ்வளவு பலம் வாய்ந்த ஆலமரத்தை வீழ்த்துவது மிகக் கடினமான காரியம். ஆனால் பகவான் அதற்கொரு வழி சொல்கிறார். “இந்த மரத்தின் உண்மை உருவம் இவ்வுலகில் காணக்கூடியதல்ல இது எங்கே முடிவு பெறுகின்றது எங்கே தொடங்குகின்றது அல்லது இதன் அஸ்திவாரம் எங்கே உள்ளது என்பதை எவரும் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் பற்றின்மையெனும் ஆயுதத்தால் இந்த மரத்தை ஒருவன் உறுதியோடிருந்து வெட்டி வீழ்த்த வேண்டும். இவ்வாறு செய்து எங்கு செல்வதால் ஒருவன் மீண்டும் திரும்பி வருவதில்லையோ பிறப்பதில்லையோ அந்த இடத்தை நாடி யாரிடமிருந்து எல்லாம் தொடங்குகின்றதோ யாரில் சிந்தனைக் கெட்டாத காலம் முதல் எல்லாம் தங்கியிருக்கிறதோ அந்த முழுமுதற் கடவுளிடம் சரணடைய வேண்டும். (அத் 15 சுலோ 3.4)
விஞ்ஞானிகளும் யூகத்தில் ஈடுபடும் தத்துவ ஞானிகளும் பிரபஞ்சத்தின் நிலைபற்றி சில கொள்கைகளை முன்வைத்திருக்கிறார்கள். புவியீர்ப்பு விதி போன்ற சில விதிகளை அவர்கள் கொள்கையளவில் வைத்திருக்கிறார்கள். ஆனால் இந்த விதிகளை அவர்கள் கொள்கையளவில் வைத்திருக்கிறார்கள்.
222 நடராஜ தரிசனம்

ஆனால் இந்த விதிகளை இந்த ஜடவுலகம் துயரங்கள் நிறைந்தது. அவைபற்றிக் கொள்கைகளைப் பரப்புவதன் மூலம் அவற்றை நீக்க முடியாது. தமது படைப்புப் பற்றிய எல்லா விபரங்களையும் அறிந்திருக்கும் முழுமுதற் கடவுள் துயரங்கள் மிக்க ஜட வாழ்விலிருந்து விடுதலை பெறுவது நமக்கு நல்லதென்று உபதேசிக்கிறார்.
நமது தற்போதைய பெளதீக வாழ்வின் தொடக்கத்தை கண்டறியவியலாது. நாம் எப்படி இந்த பெளதீக வாழ்வில் அகப்பட்டோம் என்பதைக் கண்டறிவது நமக்குத் தேவையில்லை. காலங்காலமாக இந்த ஜட நிலை ஏற்பட்டு வந்துள்ளது என்பதை நாம் அறிந்திருப்பது போதுமானது காரணங்களுக்கெல்லாம் காரணமான உன்னத புருஷனனிடம் சரணடைவது மட்டுமே நமது தற்போதைய கடமையென்று நாம் உணரவேண்டும். இறைநிலையை மீண்டும் சென்றடைவதற்கான அடிப்படைத் தகுதி பகவத்கீதையில் (அத் 15 சுலோ 5) குறிப்பிடப்பட்டுள்ளது.
“மாயை பொய்க் கெளரவம் பொய் உறவு இவற்றின்றும் விடுபட்டு நித்தியத்தைப் புரிந்து கொண்டு ஜட இச்சைகளின்று அறவே விலகி இன்பதுன்பங்களினின்றும் விடுபட்டு பரமபுருஷனுக்கு சரணடைவது எவ்வாறென்பதை அறிந்து கொண்ட ஒருவன் அந்த நித்தியமான ராஜ்யத்தை அடைகின்றான்’ மீண்டும் இறைநிலையை சென்றடைய நம் உணர்வைப் புருஷோத்தமனான முழுமுதற் கடவுளின் பாதாரவிந்தங்களில் செலுத்துவோமாக.
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 223

Page 123
சேதுசமுத்திரதிட்டம் இலங்கைக்கு
வைக்கப்பட்ட பொறியா? கு. சசிகுமார்
புவியியல் சிறப்புக்கலை 2ஆம் வருடம் பேராதனைப்பல்கலைக்கழகம்
1. சேதுசமுத்திரத்திட்டத்தின் வரலாறு
1860ஆம் ஆண்டு இந்தியக் கடற்பகுதியைச் சேர்ந்த பிரிட்டிஷ் தளபதியான A, D. டெயிலர் என்பவரின் எண்ணத்தில் உதித்தது தான் இச் சேது சமுத்திரத்திட்டமாகும். அக்காலப்பகுதியில் இலங்கையைச் சுற்றிப் பயணிக்கும் கப்பல்களை நேரடியாக இந்தியத்துறைமுகங்களின் பக்கம் திசை திருப்புவதே அவரின் திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. இதை அடுத்து 1952ஆம் ஆண்டு இராமசாமி முதலியாரால் இத்திட்டம் தொடர்பில் முதல் தகவல் அறிக்கை இந்திய அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது. அன்று முதல் இன்றுவரையான 53 ஆண்டுகளாகப் பதவிக்கு வந்த அரசால் இத் திட்டத்தை நடைமுறைப்படுத்தமுடியவில்லை. இத்திட்டத்தைக் கடந்த காலங்களில் அமுல் செய்ய முடியாமல் போனதற்குக் காரணம் இந்திய மத்திய அரசில் நிலவி வந்த அதிகாரக் குழப்பங்களும், இழுபறிநிலையும் தான் எனக்
224 நடராஜ தரிசனம்
 

கூறப்பட்டாலும், சுற்றுச் சூழலியல்ப்பாதுகாப்பு அமைப்புக்களால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்புக்களே இத்திட்டத்தை பின் போட வேண்டி ஏற்பட்டது.
எனினும் இன்று நிலைமை மாறி இந்தியா தன்னை உலக அரங்கில் ஒருவல்லரசாக நிலைநிறுத்த இத்திட்டம் மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. இதன் காரணமாக இந்திய மத்திய அமைச்சரவையின் அனுமதி யோடு மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய மத்திய அரசு சேது சமுத்திரத்திட்டப் பணிக்கு அனுமதி அளித்ததுடன் இத்திட்டத்திற்கான அடிக் கல்லும் நாட்டி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினால் இலங்கை பெரியளவில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவதுடன் தமிழர் தாயகக் கரையோரங்கள் பாரிய கடல் அரிப்புக்கு உள்ளாகி கரையோர வளங்கள் பாதிக்கப்படும் எனக் கூறப்படுகின்றது. எனினும், ஆரம்பகாலங்களில் இலங்கை எதிர்த்து வந்தாலும் இன்று எதுவித எதிர்ப்புக்களும் காட்டாது இத் திட்டத்திற்கு சம்மதம் அளித்துவிட்டது.
2. சேது சமுத்திரத்திட்டம் என்றால் என்ன?
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் என்பது “இந்தியாவிற்கும் - இலங்கைக்கும் இடையில் உள்ள கடற் பகுதியினை ஆழமாக்கி பெரிய கால்வாய் ஒன்றினை உருவாக்கி பெரிய கப்பல்கள் போய்வருவதற்கான வழிவகையினைச் செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும். மன்னார் வளை குடாவையும் பாக்குநீரிணையை இணைக்கும் சேது சமுத்திரக் கால்வாய் மொத்தம் 167Km நீளம் கொண்டது. இங்கு 167Km நீளம் என்பது இந்தியாவின் தெற்குத் துறைமுகமான தூத்துக்குடியில் இருந்து மன்னாரின் அடம்பன் பாலம் வரையும், அங்கிருந்து வடக்குப் பக்கமாக வங்காளவிரிகுடா நோக்கிச் செல்வது வரையாகும். வங்காளவிரிகுடாப் பகுதியில் போதுமான ஆழம் இருப்பதனால் அங்கு 78Km நீளத்திற்கு ஆழப்படுத்த வேண்டி ஏற்படாது. ஆதாம் பாலம் அருகே 35Km நீளத்திற்கும் பாக்குநீரிணைப் பகுதியில் 54Km நீளத்திற்கும் ஆழப்படுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்தின் போது சேது கால்வாய் 12m (மீற்றர்) ஆழம் கொண்டதாக அமையும். அகலம் 300 மீற்றராக இருக்கும் 10மீற்றர் மிதவை ஆழம் கொண்ட கப்பல்கள் இக்கால்வாயினூடாக பயணிக்க முடியும். அத்துடன் இருவழிப் பாதையாகவும் இது செயற்படும்.
3. சேது சமுத்திரத்திட்டத்தின் நோக்கம்
இந்தியா இச் சேது சமுத்திரத்திட்டத்தினை மேற்கொள்வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றை நோக்கின் * இந்தியா தனது கடல்பரப்பில் ஒரு தொடர்ச்சியான கடற்பாதையைக்
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 225

Page 124
226
கொண்டிருக்கவில்லை. இப்போது கொல்கத்தாவில் இருந்து தூத்துக் குடிக்குச் செல்ல வேண்டுமாயின் இலங்கையைச் சுற்றியே செல்ல வேண்டி உள்ளது. சேது சமுத்திரத்திட்டம் அமுல் செய்யப்படின் இலங்கையைச் சுற்ற வேண்டிய தேவை இந்தியக் கப்பல்களுக்கு ஏற்படாது. இத்திட்டம் பூர்த்தியானதும் இதுவரை கொழும்புத் துறை முகத்தினூடாக பயணம் செய்த வெளிநாட்டுக்கப்பல்களின் பயணத் தூரம் சுமார் 400 மைல்களால் குறைவதுடன் பயண நேரம் 36 மணித்தியாலங்களால் குறைக்கப்படும். எனவே 400மைல்கள் கடப்பதற்குத் தேவையான எரிபொருட்ச் செலவும், நேரமும் மீதப்படுத்தப்படுவதனால் கப்பல்கள் வேறு பொருட்களை ஏனைய இடங்களுக்குக் கொண்டு செல்ல இவ் எரிபொருளையும், நேரத்தையும் பயன்படுத்தலாம். இது தான் இந்தியாவின் நோக்கம். இந்தியக் கப்பல்கள் இலங்கைத் துறைமுகத்தினூடாகச் செல்லும் போது துறைமுகக்கட்டணமான "டோல்” கட்டணத்தையும் எரிபொருள் செலவினையும் இலங்கைக்குச் செலுத்த வேண்டி உள்ளது. இதனால் இந்தியாவின் அந்நியச் செலவாணி இலங்கையைச் சென்றடைகின்றது. எனவே இத் திட்டத்தினை அமுல் செய்தால் இலங்கைத் துறைமுகத்திற்கு செலுத்தும் கட்டணத்தை மீதப்படுத்துவதுடன் ஏனைய நாட்டுக்கப்பல் களையும் சேது சமுத்திரக் கால்வாயினூடாக வரவைப்பதன் மூலம் இதுவரை இலங்கைத்துறைமுகம் பெற்ற அந்நியச் செலாவணியை இந்தியத்துறை முகங்கள் பெறுவதனால் அவற்றின் வளர்ச்சியும் துரிதமாக வளர்ச்சியடையும். அத்துடன் இலங்கைத் துறைமுக “டோல்க்” கட்டணத்தைவிட இந்தியத் துறைமுகங்களில் டோல்க்கட்டணம் குறைக்கப்படுவதனால் ஏனைய நாட்டுக் கப்பல்கள் சேது கால்வாயினூடா கவே செல்லும். காலப் போக்கில் பிரசித்திபெற்ற கடல்ப் போக்கு வரத்துப் பாதையாக சேதுகால்வாய் அமைவதினால் தூத்துக்குடி முக்கிய துறைமுகமாக விளங்குவதுடன், ராமேஸ்வரம், கன்னியா குமாரி, தூத்துக்குடி ஆகிய தென் கரையோரங்கள் வெளிநாட்டு அந்நியச் செல வாணியின் ஊடாக பொருளாதார வளர்ச்சி அடைவதுடன் இந்தியாவின் பொருளாதாரம் மேலும் வலுப்பெறும். இந்தியா எதிர்காலத்தில் உலக வல்லரசு எனும் நிலையை நோக்கிச் செல்கின்றது அல்லது அதற்கான முன்னேற்பாடுகளை முனைப்புடன் செய்கின்றது. அதற்கு முன்னோடியாக இந்தியா தனது பொருளாதாரத் தினை கட்டியெழுப்ப வேண்டிய தேவை உள்ளது. இதன் காரணமாகவும் இச் சேதுக்கால்வாய் அவசியமானதாகும். மத்தியகிழக்கு, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் நிலைகொண்டி
நடராஜ தரிசனம்

ருக்கும் அமெரிக்கப்படைகள் இந்து சமுத்திரப் பகுதியினைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது. இந்து சமுத்திரப்பகுதியினை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம் மத்தியகிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கப் படைகளுக்குத் தேவையான இராணுவ உபகரணத்தைக் கொண்டு செல்லவும், ஆசியநாடுகளை தனது கண்காணிப்பின் கீழ் கொண்டுவந்து அந்நாடுகளின் நடவடிக்கையை கட்டுப்படுத்த அமெரிக்கா முயல்கிறது. இதன் முன்னோடி நிகழ்வாகவே அமெரிக்கா இலங்கையிலும், இந்தோனேசியாவிலும் சுனாமி ஏற்பட்ட போது உடனடியாகவே அந் நாடுகளுக்கு தனது படைகளை அனுப்பியது. எனவே, வேறு ஒரு பகுதியில் இருக்கும் அமெரிக்கா இந்து சமுத்திரத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர ஆசை வந்தால், இந்து சமுத்திரத்தின் வல்லரசான இந்தியாவிற்கு இந்துசமுத்திரத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர ஆசைப்படாத இவ்வாறு ஆசை வந்ததன் விளைவாகத்தான் இந்தியா சேதுசமுத்திரத்திட்டத்தை உருவாக்கியது. * எதிர் காலத்தில் இராணுவரீதியாக அமெரிக்காவிற்கு மறைமுகமாக அழுத்தத்தை ஏற்படுத்தவும் இத்திட்டம் இந்தியாவிற்கு அவசியம். அதாவது சேது கால்வாய் அமைப்பதன் ஊடாக அமெரிக்கப்படைகள் தெற்குக் கடல்பகுதிக்குவர வேண்டுமாயின் இந்தியாவின் அனுமதி தேவை. * இந்தியாவின் மேற்கு, கிழக்கு கடல் பகுதிகள் ஆழம் கூடியவை. தெற்குப் பக்கம் உள்ள கடல் பகுதிதான் ஆழம் குறைந்த பகுதி. எனவே இந்தியாவின் மேற்குப் பகுதியில் உள்ள கப்பல் ஒன்றை கிழக்குக் கடல் பகுதிக்கு கொண்டு போக வேண்டுமாயின் இலங்கையின் கடல்வழியாக கொண்டு செல்ல வேண்டி உள்ளது. எதிர்காலத்தில் அமெரிக்கா இலங்கையின் செல்வாக்கு நிறைந்த ஒரு நாடாக இருக்குமாயின் இந்தியாவிற்கு அது தடையாக இருக்கும். அதன் காரணமாகத்தான் சேதுசமுத்திரத்திட்டம் இந்தியாவிற்கு பெரிதும் உதவும். இதன் காரணமாகவே இந்தியா விழிப்படைந்து காரியத்தில் இறங்கி உடனடியாக சேதுகால்வாய்திட்டத்தை அமுல் செய்தது. இதன் விளைவாக இந்தியா தனது தெற்குப் புறக்கடல் ஆழமாக இருக்க வேண்டும் என உணர்ந்து கொண்டது.
4. சேது சமுத்திரத்திட்டம் - கரையோரங்களில் ஏற்படுத்தும் பாதிப்பு
4.1 இலங்கையின் கரையோரங்கள் அரிப்பிற்கு உட்படும்
மன்னார் வளைகுடாவிற்கும் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கரையோரங்
களுக்கும் அதனை சூழ உள்ள சூழல் தொகுதிகளுக்கும், பல்வேறு சூழல்
மாற்றங்களையும், சவால்களையும் கொண்டு வரும். மன்னார் வளை
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் - 227

Page 125
குடாவானது ஆழம் குறைந்த மணல்திட்டுக்களைக் கொண்டமைந்து காணப்படுவதனால் இயற்கை நீரோட்டங்கள் இவ் ஆழம் குறைந்த மணல் திட்டுக்களினால் தடுத்து நிறுத்தப்படுகின்றன. இதனால் நேரடியாக நீரோட்டங்கள் கரையை அடைவது தடுக்கப்படுகின்றது. ஆனால் சேது கால்வாய் அகழ்வானது இத்தகைய மணல்திட்டுக்கள் அகழப்படுவதனால் நீரோட்டங்கள் நேரடியாக கடற்கரையை அடைவதுடன் பெரும் அலைகளையும் உருவாக்கி கடற்கரையோரத்தை அரித்து விடும்.
4.2 தீவுக் கூட்டங்கள் பல அழியும் நிலை
கடலரிப்பினால் பெரியளவில் பாதிப்பது தீவுக் கூட்டங்களேயாகும். தீவுக் கூட்டங்கள் பலவற்றில் குடியிருப்புக்கள் காணப்படாத போதும் அவை சூழலியல் ரீதியில் பயன் தரக் கூடியன. உயரலை, நீரோட்டங்கள் என்பவற்றை நிர்ணயித்தல், நீரின் அமிலத்தன்மையை கட்டுப்படுத்தல், வெளிநாட்டுப் பறவைகளுக்கான புகலிடமாக இருத்தல், உணவு பெறும் இடமாக இருத்தல், இனப் பெருக்கம் செய்யும் இடமாக இருத்தல், என்ற வகையில் பயனளித்து வருகிறது. சேதுகால்வாய் அமைக்கப்பட்டால் இது கேள்விக்குறியாகும்.
4.3 உயிரினப்பல்வகைமை அழிக்கப்படல்
சேது கால்வாய் அகழப்பட இருக்கும் பகுதியை அண்மித்த பகுதிகளில் 48 இனங்களைச் சேர்ந்த 100க்கும் அதிகமான வகை முருகைக்கற்கள் காணப்படுகின்றன. 500க்கும் அதிகமான மிக அரிதான மீன் இனங்கள் காணப்படுகின்றன. இவற்றை விட கடல்பன்றி, ஆமைகள், டொல்பின், கடல் நண்டுகள், கடல் பசு (டுகொங்கின்) என்பன உட்பட பலவகையான அரிதான உயிரினங்கள் காணப்படுகின்றன. இவை சேதுதிட்டம் அமுல் செய்வதன் ஊடாக கப்பல்களின் மூலம் வெளிவிடப்படும் எண்ணைக்கழிவுகள், பிளாஸ்ரிக் பொருட்கள் கப்பல்களில் இருந்து வெளியேறும் சூடானநீர் என்பன உயிரினப் பல்வகைமையை அழிவடையச் செய்துவிடும். அத்துடன் கப்பல் போக்குவரத்துக்கு உட்பட்ட பகுதியில் வாழும் உயிரினங்கள் இடம் பெயர்ந்து கரையோரத்தை நோக்கிவருவதனால் நன்மை தரும் உயிரினங்களை அந்நிய உயிரினங்கள் அழித்துவிடும். கால்வாய் அகழ்வின் மூலம் வெளியேற்றப்படும் மண்கழிவுகள் கரையோரங்களைச் சென்றடைவதனால் கரையோரச்சூழலில் உள்ள கடல்தாழை, கண்டல் தாவரங்கள் என்பவற்றின் இருப்புக்கு தடையாக அமைவதுடன், தொற்று நோய்கள், நோய்க்கிருமிகளின் உற்பத்தி இடமாக மாறி மனித வாழ்க்கைக்கு ஒவ்வாத இடமாக கரையோரம் அமையும்.
4.4 வரலாற்றுச் சின்னங்கள் பல அழிவடையும்
வரலாற்று ரீதியாக இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான
228 நடராஜ தரிசனம்

தொடர்பினை உறுதிப்படுத்தக் கூடிய வகையில் உள்ள ஆதாமின் பாலம், இராமர் அணை, உட்பட வரலாற்றுச் சின்னங்கள் பல அழிந்து போவதுடன், சமூக கலாச்சார மற்றும் தொன்மைவாய்ந்த பெறுமதி மிக்க பல்வேறு அம்சங்களையும் நாம் இழக்க வேண்டி ஏற்படும்.
அத்துடன் சேது திட்டம் முன்னெடுக்கும் பகுதியில் முருகைக் கற் பாறைகள் காணப்படுகின்றன. இவை கடல் சூழலில் தீங்கு விளைவிக்கும் சில பொருட்களை வடிகட்டும் இயல்புடையது. மற்றும் அவற்றில் இருத்தான தீய கூறுகளை அகற்றும் பாதுகாவலராக செயற்படுவதுடன் உல்லாசப் பிரயாணிகளைக் கவரும் ஒன்றாகவும் உள்ளது. எனவே சேது திட்டம் அமுல் செய்வதினால் இவ் பவளப்பாறைகள் அழிவடையும்.
5. சேது சமுத்திரத் திட்டம் - பொருளாதார ரீதியில் ஏற்படுத்தும் பாதிப்புக்கள்
5.1 மீன்பிடித்துறை வீழ்ச்சியடைதல்
இலங்கையில் மீன்வளம் அதிகம் உள்ள பகுதிகளாக பேதுரு கண்ட மேடையும், மன்னார் வளைகுடாப் பகுதியும் காணப்படுகின்றன. இவை ஆழம் குறைந்த கண்ட மேடைகளாக இருப்பதுடன், பிளாந்தன் எனும் மீன் உணவினையும் கொண்டமைந்த பகுதியாக உள்ளது. சேதுகால்வாய்த்திட்டம் இக்கண்ட மேடைக்கு அண்மையில் இருப்பதனால் வெளியிடப்படும் நச்சுக் கழிவுகள், எண்ணைக்கழிவுகள், பிளாஸ்ரிக் பொருட்கள் என்பன மீன்களின் வாழ்விடங்களான முருகைக்கல், பவளப்பாறைகள் என்பனவற்றை அழித்து விடும் நிலை (சேதுகால்வாய்த்திட்டத்தால்) உருவாகும். இதனால் பல லட்சம் மீனவத் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதுடன், மீன் பிடியை மையமாக கொண்ட கப்பல் கட்டுதல், வலைபின்னுதல், மீனைத் தகரத்தில் அடைத்தல் என்பன பாதிப்படையும். அத்துடன் ஆழம் குறைந்த மணல்திட்டுக்கள் அகழ்ந்தெடுப்பதனால் நீரோட்டங்களின் ஒட்டங்கள் மாற்றமடைவதனாலும், அகழ்ந்தெடுக்கப்படும் மணலைக் கடலினுள்ளே கொட்டி விடுவதனாலும், மீன்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலும், காலநிலையும் சேதுதிட்டத்தினால் பாதிப்படையும்.
52 கப்பல் போக்குவரத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் இல்லாது போகும்
இதுவரைகாலமும் இந்தியக்கப்பல்களாகவோ அல்லது வெளிநாட்டுக் கப்பல்களாக இருந்தாலும் சரி இலங்கைத் துறைமுகத்தினூடாகவே சென்றுவந்தன. இதன் மூலம் இலங்கைத்துறைமுகம் டோல்கட்டணத்தையும், எரிபொருட்களினை நிரப்புவதன் மூலம் கிடைத்த வருமானத்தையும் பெற்றது. இதனால் இலங்கைத் துறைமுகங்கள் கணிசமான வளர்ச்சியைக் கண்டிருந்த
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 229

Page 126
துடன், இலங்கையின் பொருளாதார வளர்ச்சியிலும் குறிப்பிடத்தக்க பங்கினையும் இவ் வருமானம் ஈட்டிக்கொடுத்தது. ஆனால் சேதுக்கால்வாய் அமுல் செய்யப்பட்டால் இந்திய, வெளிநாட்டுக்கப்பல்கள் இலங்கைக்கு வராது இந்தியத் துறைமுகங்களின் ஊடாக செல்லக் கூடிய வாய்ப்பே அதிகம் உள்ளது. இதற்கு காரணம் பயணத்தூரம் குறைவடையும், நேரம் குறைக்கப்படும், மற்றும் இந்தியத்துறைமுக டோல்க்கட்டணம் குறைக்கப்படும், போக்குவரத்து இலகுவாக இருக்கும், போன்ற காரணங்களால் வெளிநாட்டுக் கப்பல்கள் இந்தியத் துறைமுகங்களின் ஊடாக செல்லப் போகின்றன. இதனால் கொழும்புத் துறைமுகம் இதுவரைகாலமும் பெற்ற வருமானம் இனிவரும் காலங்களில் கிடைக்காமல் போகும் நிலை உருவாகும்.
5.3 உல்லாசதுறை வீழ்ச்சியடைதல்
இலங்கையில் வெளிநாட்டவரைக்கவரும் இடங்களாக கரையோரங்களும், முருகைக்கற்களும், பவளப்பாறைகளும் உள்ளன. இத்தகைய அரிதான வளங்கள் சேதுகால்வாய்த்திட்டத்தினால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படப் போகின்றது. கரையோரங்கள் தொடர்ச்சியான அரிப்பிற்கு உட்படப் போவதனால் கரையோரங்கள் மாசடைதலின் ஊடாக மனிதவாழ்க் கைக்கு ஒவ்வாத நிலை உருவாவதனால் வெளிநாட்டவரின் வருகை இலங்கையில் குறைவடையும் இதனால் இலங்கைக்குகிடைக்கும் வருமானம் குறைவடையும்.
5.4 விவசாய உற்பத்தி பாதிப்படைதல்
இலங்கையில் விவசாய உற்பத்தியின் மூலம் தேவையான உணவுற்பத்தியை ஒரளவு பெறக் கூடியதாக உள்ளதுடன், இலங்கையின் ஏற்றுமதியிலும் கணிசமான பங்கினை வகிக்கின்றது. இத்தகைய உற்பத்தியானது இலட்சக் கணக்கான மக்களின் வருமான வழியினையும் பாதுகாக்கின்றது. ஆனால் சேது திட்டத்தினால் உருவாகும் காலநிலை மாற்றத்தினால் தரைப் பிரதேசத்திற்கு கிடைக்க வேண்டிய மழை கிடைக்காமல் போகலாம். இதனால் விவசாய உற்பத்தி பாதிப்படையும். அத்துடன் சேதுகால்வாய் அகழ்வின் மூலம் யாழ் குடா நாட்டு தரைக்கீழ் நீர் உவரடைதல், மாசடைதல் என்பனவற்றிற்கு உட்படுவதனால் யாழ்குடா நாட்டு விவசாயம் பாதிப்படையும்.
5.5 வேலையில்லா பிரச்சனை உருவாதல்
குறிப்பாக மீன்பிடித்துறை பாதிப்படைவதனால் இலங்கையின் மேற்கு, வடக்கு, கிழக்குக் கடற்கரையோரங்களில் உள்ள மீனவர்கள் வேலையில்லாமல் போவர். மீன்பிடியை மையமாக கொண்ட ஏனைய தொழில்களும் பாதிப்படை வதனால் அவர்களுக்கும் வேலையில்லாப் பிரச்சனை உருவாகும். இலங்கைத்
230 நடராஜ தரிசனம்

துறைமுகங்களில் தொழில்புரிந்த பல்லாயிரக்கணக்கானோர் வேலையில்லாமல் போவர். இதன் விளைவுகளாக இலங்கையில் களவு, கொலை, போதைவஸ்துக் கடத்தல், குழுமோதல், பாதாள உலக கோஷ்டியினரின் செயற்பாடு என்பன் அதிகரிக்கும்.
6. சேது சமுத்திரத்திட்டம் - அரசியல் ரீதியான மாற்றம்.
6.1 விடுதலைப்புலிகளின் நடமாட்டத்தைக் கட்டுப் படுத்தல்
இலங்கையின் இறைமையினைப் பற்றி அதிகமாக அலட்டிக் கொள்ளும் பேரினவாதிகளும், கட்சிகளும் இச் சேதுகால்வாய் அமைப்பதைத் தடுப்பதில் இருந்து ஒதுங்கிவிட்டதைப் பார்க்கின்ற போது தமிழ்பேசும் மக்களை ஒருகணம் சிந்திக்கத் தூண்டுகின்றது. சேதுகால்வாய்த்திட்டத்தின் மூலம் நேரடியாக பாதிக்கப்படப் போவது தமிழர் தாயகப்பிரதேசங்களே என்பது வெளிப்படையான உண்மை. அத்துடன் சேது திட்டம் அமுலுக்கு கொண்டுவரப்பட்டால் இந்துசமுத்திரப் பகுதி இந்திய கடற்படையின் ஆளுகைக்கு கீழ் கொண்டுவரப்ளபடும். அப்படியாயின் கடற்புலிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த இது சிறந்தவழி என இலங்கை அரசு கருதுகின்றது. இது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பதை இருந்துதான் பார்க்க வேண்டும். இதன் காரணமாகவே இலங்கை அரசு எவ்வித எதிர்ப்பும் இன்றி இத்திட்டத்தை ஆதரித்துவிட்டது என சிந்திக்கத் தோன்றுகின்றது. இத்தகைய இலங்கை அரசின் அனுமதியானது போத்துக்கேயரை விரட்ட ஒல்லாந்தரை வரவழைத்ததும், ஒல்லாந்தரை விரட்ட பிரித்தானியரை வரவழைத்ததும், கண்டி இராஜ்யத்தை விரட்ட பிரித்தானியருக்கு உதவியதுமான செயலாக எதிர்காலத்தில் அமையக் கூடும். ஏனெனில் இந்தியா இலங்கையை தனது கீழ் உள்ள ஒர் மாநிலமாக ஆக்கக் கூடிய நிலை ஒன்று உருவாகும்.
6.2 அமெரிக்கப்படைகளுக்கு மறைமுகமான இராணுவ அழுத்தம்
எதிர்காலத்தில் சேதுதிட்டம் அமுல் செய்தபின் இந்தியப்படைகள் இந்துசமுத்திரத்திற்குள் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டியபின், மத்திய கிழக்கில் இருந்து ஆசியநாடுகளுக்கு அமெரிக்கப்படைகள் சுற்றித் திரிவது கட்டுப்படுத்தப்படும். இந்தியாவின் அனுமதியின்றி அமெரிக்கப் படைகள் சேதுகால்வாயை கடக்க முடியாத நிலை உருவாகும். இது வல்லாதிக்க நாடுகளான அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்குமிடையே எதிர்காலத்தில் முறுகல் நிலையை உண்டு பண்ணக் கூடும்.
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 231

Page 127
6.3 இந்திய - இலங்கை கடற்பரப்பில் ஊடுருவல் அதிகரிக்கும்
இன்று இந்தியாவில் இருந்து பெருமளவிலான போதைப் பொருட்கள் மன்னார் வளைகுடாப் பகுதியினூடாக இலங்கையை வந்தடைகின்றது. இது சேதுதிட்டம் அமுல் செய்தபின் இலகுவாக கடத்த மேலும் அதிகரிக்க வாய்ப்புண்டு. அத்துடன் சட்டவிரோதமான ஆயுதக் கடத்தல்களும் இப் பகுதியினூடாக மேற்கொள்ளக் கூடியதாக எதிர்காலத்தில் அமையும்.
7. சேதுசமுத்திரத்திட்டம் - காலநிலையில் ஏற்படுத்தும் மாற்றம்
7.1 நீரோட்டங்களின் பெயர்வு மாற்றமடைதல்
சேதுகால்வாய் அகழ்வானது இலங்கை - இந்திய கடல் பகுதியில் உள்ள ஆழம்குறைந்த பகுதியினை ஆழமாக்குவதாகும். இதனால் முன்னர் நீரோட்டங்கள் மணல் திட்டுக்களால் தடுக்கப்பட்டது. ஆனால் அமுல் செய்தபின் நீரோட்டங்களின் பெயர்வு நேரடியாக கரையோரங்களைச் சென்றடைவதினால் கரையோரச் சூழலில் காலநிலை மாற்றம் உருவாகும்.
7.2 சமுத்திரப்பகுதியில் புவிநடுக்கம் ஏற்படவாய்ப்புண்டு
சேதுகால்வாய்த்திட்டம் 10500 சதுரkm வாைபரந்து காணப்படுவதனால் இப்பகுதியை அண்டிய பகுதியில் இருமுறை புவிநடுக்கம் ஏற்பட்டுள்ளது (1933, 1938) இச் செய்திகள் அண்மையில் வெளியாகின. மற்றும் இப்பகுதியில் இதுவரைகாலமும் செயற்படாத எரிமலைகள் இருப்பதாகவும் கூறப்படு கின்றது. எதிர்காலத்தில் சேதுகால்வாய் அகழ்வு எரிமலைச் செயற்பாட்டை உருவாக்கலாம்.
7.3 மழைவீழ்ச்சி, காற்றின் திசை என்பன மாற்றமடையலாம்
காலநிலையினால் ஏற்படும் மாற்றத்தினால் மழைவீழ்ச்சி குறைவடையக் கூடும் அத்துடன் காற்றுக்களின் திசைகளும் மாற்றமடையலாம். பொதுவாக வடகிழக்குப் பகுதிக்கு கிடைக்கக்கூடிய பருவமழை குறைந்து போகும் நிலை உருவாகும். வங்காள விரிகுடாப் பகுதியில் அயனக் குழப்பங்களும் பலமான காற்றுக்களும் வீசலாம்.
8. சேதுசமுத்திரத்திட்டம் - இலங்கைக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் பொதுவாக இலங்கை எனும் போது வடகிழக்கில் உள்ள துறைமுகங்களை ஏடுத்துக் கொண்டால் (காங்கேசன்துறை) சேதுதிட்டம் அமுல் செய்யப்பட்டால் சேதுகால்வாயினூடாக பயணிக்கும் போது வடக்கு கிழக்கில் உள்ள துறைமுகங்களிற்கு சென்று தங்கிவிட்டும் செல்லக் கூடியநிலை உள்ளது எனக் கூறப்படுகின்றது. இதனால் செயல் இழந்துகிடக்கும் துறைமுகங்களை வளப்படுத்தக் கூடியதாக இருக்கும் எனக் கூறுகின்றனர்.
232 நடாாஜ தரிசனம்

இதைவிட வடகிழக்குகரையோரங்கள் மீன்பிடித் தொழிலினைவிட கப்பல் கட்டுதல், கப்பல் பழுது பார்த்தல் போன்ற தொழில்களை மேற்கொள்ளக்கூடிய தாக எதிர்காலத்தில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஏனெனில் பழுதடையும் வெளிநாட்டு கப்பல்களை வடகிழக்கில் உள்ள துறைமுகங்களுக்கு கொண்டு வந்து பழுது பார்க்கக் கூடியதாக இருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனினும் இலங்கையின் கரையோரங்கள் மிக மோசமான முறையில் பாதிக்கப்படும் போது எத்தகைய தொழில்களும் வளர்ச்சியடையவும் நிலைத்து நிற்கவும் முடியாது என்பதே உண்மை.
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 233

Page 128
கல்வியும் சமூகமும்; அன்றும் 6 O
கதிர். தணிகாசலம்
கணியன் பூங்குன்றனாரின் நிறைமொழியாகிய “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பது எல்லா நூற்றாண்டுகளுக்கும் பொருந்தியதாயிருப்பதனால் இன்று உலகத் தமிழாராய்ச்சிக் கழகத்தின் கோட்பாடாகவும் மிளிர்கிறது.
திருவள்ளுவர் தந்த குறளமுதத்தில் ஒன்று
யாதானும் நாடா மால் ஊராமால் என்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு முன்னாளிலும் பார்க்க இக்காலத்துக்கும் மிகவும் பொருத்தமான அறிவுரையாகத் திகழ்கின்றது. -
நாடுகள் பல மக்கள் சமூகம் பலப் பல. பிறநாடுகளின் மக்களையும் அவர் மதிக்கும் கோட்பாடுகளையும் பண்புகளையும், மொழி இலக்கியங்களையும் நாம் அறிய விரும்பினால் அதற்கு எமது வாழ்நாள் போதாதாகையால், உயிருடன் நாமிருக்கும் வரை அவற்றைக் கற்றுக் கொண்டேயிருத்தல் வேண்டும் என்பதே இக்குறளின் உள்ளடக்கம்.
கற்றோர்க்கு எங்கு சென்றாலும் வரவேற்பு உண்டென்பதும், அவர்கள் பல நாடுகளுக்கும் சென்று வந்தனர் என்றும், அந்த நாடுகளையும் தமது நாடு போலவே கருதினர் என்பதும் அழகான பழமொழி நானூறு மூலம் தெரிய வருகின்றது.
ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையர் நாற்றிசையும் செல்லாத நாடில்லை - அந்நாடு வேற்று நாடாகா யாம் - ஆயினால் ஆற்றுணா வேண்டுவதில்
இக்கூற்றுக்கள் காட்டும் பரந்த கொள்கைகளையும், ஆளுமையையும் மனித நேயக் கருத்துக்களையும் நாம் சிரித்துச் சிந்தித்து மகிழலாம்.
ஆகவே, மனிதன் என்றும் விரிந்து கொண்டு வரும் ஈடுபாடுகளை, கல்வியின் கூறுகளை வளர்ப்பவனாகவே இருத்தல் வேண்டும். பிறருடைய நலத்திற்கும் இன்பத்திற்கும், அவன் எவ்வளவிற்குப் பாடுபடுகிறானோ, அவ்வளவிற்கு அவனுடைய கல்விதான் அவனுக்கு உதவுகிறது. அடுத்தாக,
234 நடராஜ தரிசனம்

பிறர் தன்னை எவ்வளவு கணிக்கிறார்களோ, அவ்வாறு தன்னை அறிந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவனாக தன்னை உயர்த்திக் கொள்ளவும் வேண்டும்.
இலட்சியங்களையும், குறிக்கோள்களையும் மேற்கூறிய நல்ல எண்ணங் களோடு கற்றும் கற்பித்தும் வந்தால் சமூகம் முன்னேற்றமடைந்து மக்களுக்கு வேண்டிய ஒழுக்க சீலங்களையும் இன்பத்தையும் நல்க முடியும். அதுமட்டு மல்லாமல், தனது வாழக்கைக்கு ஏற்ற நிறைவினைத் தரும் வாழ்க்கை முறையினை (தத்துவத்தை)க் கடைப்பிடித்து ஒழுகுதலும் வேண்டும்.
குறிக்கோள்கள் அற்ற ஒரு சமூகம் பாழாகிப் போகும் என்ற உண்மையை பண்டைக்காலத் தமிழரும் நன்றே உணர்ந்திருந்தனர்.
ஒரு சமூகம், இந்த உண்மையை மறந்தால், பயனில்லாத ஒன்றாகி விடும். பூட்கை யில்லோன் யாக்கை போல’ என்னும் முதுமொழியை அக்காலப் புலவரில் ஒருவரான ஆலத்தூர் கிழார் புறநானூற்றில் தந்துள்ளார்.
விரிவாகும் இத்தகு ஆளுமையை வளர்த்தெடுத்து உருவாக்கும் ஒன்று தான் உயர்கல்வியின் நோக்கமாதல் வேண்டும். மனித சமுதாயத்தை உயர்த்தும் பணி இதுவேயாகும். கல்வி கேள்விகளில் மேம்பட்டு மனித நேய ஆளுமைக்கு உட்பட்டு, சேவையிலும் தொண்டிலும் அறநெறி ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்கும் ஒருவரையே நாம் சான்றோன்' என்கிறோம். இச் சொல்லுக்கு விரிவிளக்கம் இன்னும் அதிகம் எனினும், இந்த விளக்கம் போதுமானதாகும். வேறு வரைவிலக்கணம் வேண்டுவதில்லை.
கற்பிப்போருக்கு, சங்க காலத்தில் ஆசிரியர் என்ற சொல் புழக்கத்தில் இருந்துள்ளது. ஆசிரியர் என்றால் ‘உபாத்தியாயர் கற்பிப்போர் என்று பொருள் இச்சொல்லே பின்னர் வாத்தியார் என மரூஉ ஆயிற்று. சங்கப் புலவர் தம் பெயருக்குப் பின்னால் ஆசிரியர் என்ற சிறப்புப் பெயரை தம் இயற் பெயருக்குப் பின்னால் இணைப்பதிற் பெருமை கொண்டனர் என்று தெரிகிறது. ஆசிரியர் பெருங் கண்ணனார் என்பவர் சங்க காலப் பெரும்புலவருள் ஒருவர் ஆசான்' என்ற சிறப்புப் பெயர் மிகத் தகுதியான தமிழ் வடிவம் வாய்ந்த சொல் முக்கல் ஆசான் நல்வெள்ளையார், மதுரை வேள் ஆசான்' என்ற சங்கப் புலவர் பெயர்களில் ஆசான்' என்ற சிறப்புப் பெயரைக் காண்கிறோம். வேறும் பல பெயர்களும் காணப்படுகின்றன. மதுரைப் பாலாசிரியர், சேந்தங் கொத்தனார், மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார், மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார் என்பன சில.
பாலாசிரியர், இனம்பாலாசிரியர் என்பன உண்மையில் சிறுவர் அல்லது பாலர்களின் ஆசிரியர்களே என்று தெரிகிறது. இப்பெயர்களில் தமது தந்தையின் பெயரை முன்சொல்லி தமது பெயரைப் பின் வைத்து இப்பெயர்கள்
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 235

Page 129
காணப்படுவதையும் அவதானிக்கலாம். ஆகவே, இளம் பாலாசிரியர், பாலாசிரியர், ஆசான், ஆசிரியர், பேராசிரியர் என இவை அமைவதால் அவரவர் தகுதிக்கேற்ப இப்பெயர்கள் இடப்பட்டு புழக்கத்தில் இருந்து வந்துள்ளன என்பதை அறியலாகும்.
வேத காலத்தில் இருந்து வந்த வடவர் கல்வி முறையினால் (குரு சிஷ்ய முறை) பார்ப்பனர் அல்லாதோரைப் பற்றி கவனத்தில் எடுக்கப்படவில்லை. ஆரிய சமுதாயம் தமது குல ஒழுக்கங்களை மேம்படுத்தி ஏனையோரைக் கீழிருத்தி ஆண்டான் அடிமை வாழ்வையும், வருணாசிரம கோட்பாடுகளையும் திணித்து தென்னாட்டு திராவிட அல்லது தமிழர் சமுதாயத்திற் பாயவிட்டது. குருகுலக் கல்வி முறையினால் ஏற்றத் தாழ்வுகளும், பார்ப்பணியமும் வளர்ச்சி பெற்றன எனவும் கூறலாம். இந்தச் சூழ் நிலையில் தென்னாட்டிற் புகுந்த அனைவரையும் வரவழைத்து தமது கலாசாரத்தில் பிற கலாசாரத்தையும் புகுவதற்கு வழிசமைத்து, தமது மொழியின் பரப்பையும் விற்று, தமக்கு வேண்டாத மாற்றங்களையும் வரவழிசெய்தனர். தென்னாட்டு மக்கள் எனக் கூறுவதில் தவறேதுமில்லை. செல்வம் ஒன்றையே மேலாகக் கருதினர் பெரும்பாலானோர். திரை கடலோடியும் திரவியந் தேடு' என்ற முதுமொழி இதன் விளைவே.
வடநாடு, தென்னாடு என்று கூறும் பொழுது இருபாலாரும் கொண்டும் கொடுத்தும் வந்துள்ளனர் எனினும் வடக்கு வளரவும் தெற்கு தேயவும் இந்நிலை வழிவகுத்தது. நமது நாட்டைப் பொறுத்தவரை (தெற்கு வாழவும், வடக்கு தேயவும் என்று கூறலாமா?) சொல்லப்போனால் தெற்கத்திய தமிழ் சமுதாயம் படிப்படியாகத் தன்னை இழந்து கொண்டு வந்தது. வருகிறது என்பது கண்கூடு. தமிழும் அதன் பண்பாடும் அதன் ஆளுமையும் தேய்ந்து கொண்டே போகின்றன.
கணனிக்கல்வி படுவேகத்தில் வளர்ந்து வரும் இந்நாளில் இனம், மொழி, கலாசாரம் யாவும் அமிழ்ந்து போய்க் கொண்டிருக்கின்றன. எனினும் அடிப்படைகளை நாம் மறந்து விடமுடியாது. செல்வம் ஒன்றே நமது குறிக்கோளாகி விடுதல் நன்றன்று.
கல்வி' என்பதற்கு வரைவிலக்கணம் கூறுவதாயின் ஒருவரின் திறமைகளை விருத்தி செய்து மனத்தைச் (சிந்தனையை) செப்பமிட்டு உருவாக்கி, ஆளுமையை ஏற்படுத்தப் பயிற்றுவித்தல்; அறிவு புகட்டுதல்; சீலத்தையும் ஒழுக்கத்தையும் பேணும் வண்ணம் அறிவு புகட்டுதல்; என்பனவாகும்.
(To educate in order to develop faculties to shape mind & character training that goes to cultivate mental powers to for character)
உடையார் முன் இல்லார் போல் எக்கற்றும் கற்றார் கடையரே கல்லா தவர்.
236 நடராஜ தரிசனம்

(செல்வர் முன் வறியவர் நிற்பது போல், கற்றார் முன் ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்வி கற்றவரே உயர்ந்தவர், கல்லாதவர் இழிந்தவரே) நிற்க, வெறும் ஏட்டுக் கல்வியையும், தொழில் சார் கல்வியை மட்டும் ஒருவருக்குக் கற்பித்தால் போதாது என்பதையும், பலவிதமான சமூகத் தொண்டுகளிலும் மாணவரை ஈடுபடுத்துவதும் மிகவும் வேண்டியதாகிறது, என்பதை பெற்றோரும் ஆசிரியரும், கல்வித் திட்டங்களை உருவாக்குவோரும் உணர்தல் அவசியம்.
பொருட் செல்வத்தை மட்டும் தேடி சுகபோகங்களை நுகர்தல் கல்வியின் நோக்கமாகாது.
ஒடுக்கு முறைகளையும் அடக்கு முறைகளையும் கல்விப் பாரம்பரியமாகக் காட்டி நாட்டைக் கெடுப்பதில் முனைப்பாக உள்ளனர். இவர்கள் கற்றது கல்வியல்ல. பலர் கற்கும் சூழலில் இத் தீய சிந்தனைகளையும் தம்மை யறியாமலே ஏற்றுக் கொண்டு விடுகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கா னோரின் வாழ்வு பாழாகி நாடு முன்னேற்றமடையாமல் பின் தங்குகிறது.
இலங்கை சுதந்திரம் பெற்ற சில ஆண்டுகளில் CWW. கன்னங்கரா என்ற கல்வியமைச்சர் எவ்வளவு தூரநோக்கோடு இலவசக் கல்வித் திட்டத்தை இலங்கையிற் செயற்பட வைத்தாரோ இன்று அந்தக் கண்ணியவானை எல்லோரும் போற்றுகிறோம். கோடிக் கணக்கான மக்களின் நன்றியும் பாராட்டும் அந்த ஒரு மனிதனின் ஆன்ம ஈடேற்றத்திற்கு வழி சமைப்பனவாகும். இறுதியாக நாம் மனங் கொள்ள வேண்டிய முக்கியமான கருத்தை கல்வியிற் சிறந்த பெரும் பேராசானான கே. ஜி. செய்யத்தெயின் என்பார் இவ்வாறு கூறுவார்.
கல்வியே மனத்துடன் மனத்தை அணையச் செய்வதும், ஆன்மாவுடன் ஆன்மாவைத் தொடர்பு கொள்ள வைப்பதுமாகும். ஒர் உயர்ந்த மனமும் ஓர் உயர்வடைந்த ஆன்மாவும் ஏனையோருக்கு வெளிச்சத்தைக் காட்ட வல்லவையாகும் என்ற உண்மையை உணர்வதேயாகும். இங்கே தான் கல்வியின் மேன்மை துலங்குகிறது.
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 237

Page 130
உடுப்பிட்டி சிவசம்புப் புலவர்
(1829 - 19 O
க. சி. குலரத்தினம்
ஆறுமுக நாவலர் அவர்கள் தம்மிலும் பார்க்க இளையவராய ஒருவரைப் புலவரே! வாரும் என வரவேற்றாராயின். அப் பெருமைக்குரிய பெரியவர் உடுப்பிட்டியூர் சிவசம்புப் புலவரேயாவார் உடுப்பிட்டியில் அம்பலவாணர் அருளம்பலம் என்பவர் பாரம்பரியமாகப் புகழ் பெற்றிருந்தார். அவரின் சமகாலத்தவரான குமாரசாமி முதலியார் வைமன் கதிரவேற்பிள்ளை அவர்களின் தந்தையார் குமாரசுவாமி முதலியார் புலமைவுள்ளம் பெற்றிருந்தார். அவர் பாடிய பிரபந்தங்களிலொன்று அருளம்பலக் கோவை என்பதாகும். -
புலவர் பாடும் பெருஞ் சிறப்பு வாய்ந்த அருளம்பலம் அவர்களின் மற்றொரு தாரத்து மைந்தனாய சிவசம்புப் புலவர், கதிராசிப்பிள்ளை என்பார் வயிற்றில், இமயானன் என்னும் குறிச்சியில் 1829 ஆம் ஆண்டில் தோன்றியவர். பிள்ளையின் சாதகத்தைக் கணித்த சோதிடர்கள், இவன் பெரும் புலவனாய்த் தமிழ் கூறும் உலகெலாம் நல்ல பெயரெடுப்பான் எனக் கூறினர். இவற்றைக் கேட்டு மகிழ்ந்த அருளம்பலம் அவர்கள், தம் மைந்தனை பெரிய புலவர்களிடம் ஒப்படைத்து உருவாக்கத் திட்டமிட்டுப் பிள்ளையையும் தாயையும் இருபாலையில் தமது வளவில் குடியிருத்தினார். இளைஞன் சிவசம்பு நல்லூர் சரவணமுத்துப் புலவரிடத்தும், பின் அவர் மாணாக்கர் சம்பந்தப் புலவரிடத்தும் முறையாகக் கற்று வந்தார்.
நாவலர் பாராட்டியமை
சிவசம்புப் புலவரைப் பேரும் புகழும் படைத்த பெரும் புலவர் என்பர். தமிழ் நாட்டில் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களைப் போல ஆயிரக்கணக்கான பாடல்கள் அசையாமல் பாடிக்குவித்தவர் எனப் போற்றுவர். பிறநாட்டு நாகரிகமும் மிலேச்சரின் போக்கும் மிகுந்திருந்த காலத்திலே சுதேச மொழியாய தமிழை விரும்பிக் கற்றுப் புலமை பெற்றிருந்தவர் என்பர்.
தாம் கல்வி கற்ற பாரம்பரியத்தில் நாவலர் அவர்களை நன்கறிந்த சிவசம்பர் நாவலர் சைவப் பிரசங்கஞ் செய்யுமிடங்கள் எங்கும் பின் தொடர்ந்து கேட்டு வந்தார் என்பர். அக்காலத்து வழக்கப்படி நாவலர் பிரசங்கம் நிறைவேறியதும் சிவசம்பர் அதன் சாரத்தைச் சபையோருக்குப் படித்துக் கூறுவாராம். ஒருநாள் பிரசங்கத்தின்போது, வெளியில் மழை பெய்ததாகவும்,
238 நடராஜ தரிசனம்

சிவசம்பர் தாமெடுத்த பிரசங்கத்தின் குறிப்போடு மழை பெய்ததையும் குறிப்பிட்டு, அன்றைய சுருக்கத்தைப் பாட்டாகவே பாடினாராம். அது கேட்டு மகிழ்ந்த நாவலர் அவர்கள், “கம்பனுக்குப் பின் ஒரு சம்பனல்லவோ’ என்று பாடினாராம். சம்பர் பாடிய பாட்டு பலவித மழைகளைக் குறிக்கிறது.
"அன்பர்கன் னிர்மழை யும் சிவ
னார்மெய் யருள் மழையும் மன்பிரபந்த மழையும்
பிரசங்க மாமழையும் கொன்புனை நீலப் பயலின்
மழையும் கொடைமழையும் இன்பொடு மல்கப் புலோலிமெய்
வாழ்வினி லேறியதே ”
இந்தப் பாட்டைக் கேட்டுருகிய நாவலர் அவர்கள் இவரைப் புலவரே என அழைப்பர், எல்லோரும் இவ்வாறே கொண்டாடி வழங்கி வந்தனர் என்பர். புலவர் அவர்கள் எட்டிகுடி என்னும் தலத்திற்கு யாத்திரை செய்தபோது, அங்கே எட்டிகுடிப் பிரபந்தம் பாடிக் கவியரங்கேறிய புலவராயினார் என்பது வரலாறு.
நாவலர் அவர்கள்மீது பேரன்பு பூண்டிருந்த புலவர், அவர் மறைந்தபோது மனம் நொந்து பாடிய பாடல் தமிழ்ப் பெரியார் தாமோதரம்பிள்ளை அவர்களை வெகுவாக உருக்கியதாம் என்பர். இவர் பாடிய அஞ்சலிப் பாடலையும் அவர் பாடிய பாராட்டுப் பாடலையும் படித்தறியலாம்.
அன்று கந்தமடம் அம்மன் வீதியில் வாழ்ந்த மூ. ம. சின்னத்தம்பி என்பார் தாம் நடத்திய இலங்கை நேசன் பத்திரிகையில் 1880 ஆம் ஆண்டில் வெளியிட்ட செய்தியொன்றில் புலவரிருவரின் நேயத்தை வியந்து, இத்தகைய நட்பு மற்றும் புலவர்களிடையே நிலவுதல் வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அன்று 1879 ஆம் ஆண்டில் ஆறுமுகநாவலர் அவர்கள் மறைந்தமை குறித்துப் புலவர்கள் பலரும் அவர்தம் பிரிவாற்றாமை குறித்துப் பாடியிருந்தனர். உடுப்பிட்டி சிவசம்புப் புலவரும் பல பாடல்கள் பாடியிருந்தார். அப்பாடல்களுள் ஒன்றை அறியலாம்.
"ஆரூர னில்லை புகலியர் கோனைல்லை யப்பனில்லை சீரூரு மாணிக்க வாசக னரில்லை திசையளந்த மேரூரு மாறு முகநாவலனில்லை பின்னிங்கியார் நீரூரும் வேணியன் மார்க்கத்தைப் போதிக்கும் நீர்மையரே'
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 239

Page 131
இப்பாடல் சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களை வெகுவாக உருக்கிவிடவே,
அவர் உடனடியாக இதனை நயந்து, சிவசம்புப்புலவருக்குத்தாமுமொரு நயப்புப்பாடல் பாடியனுப்பினார்.
ஆரூர னில்லையென் காரிகை யாரிவ் வவனிதொழப் பேரூறு மாறுமுகநாவலர்பெரு மான் பெருமை சீரூரு மாறு தெரித்தாய் சிவசம்பு தேசிகநிற் காரூரி னேரின்றன் றேநின் சொல் வன்மை அறிந்தனனே.
இவ்வாறு தாமோதரம்பிள்ளை அவர்களின் பாராட்டுப் பாவைப் படித்த சிவசம்புப்புலவர் உணர்ச்சி வயப்பட்டுத் தாமும் தாமோதரம்பிள்ளை அவர்களைப் பல பாடல்கள் கொண்டு பாடி அவர்தம் பண்பினைப் பாராட்டிப் புகழ்ந்தார்
கற்றாரைக் கற்றவர் காமுறுவாரெனக் கண்ட மொழிக்
குற்றாயிலக்கியமாக வெண்பாவையு வந்து கவி சொற்றாய தென்றலைக் கண்னதென்னுன்னன்பு தொடர்ந்து கண்டேன்
மற்றா ரெனக்கினை தாமோதரம்பிள்ளை மாணிக்கமே மன்னருத்யோகமும் வான்கலையாய்வும் பொன் மன்றுடையான்
பொன்னடிப் பூசையு நிதியு மெய்யும் புகழு முத லின்னவெல்லாங் கொண்ட தாமோதரம்பிள்ளை யென்னும் வள்ளால்
நென்னலி லெய்திக் கண்டேனின்றிருமுக நேசத்தினே.
அன்று நாவலர் அவர்கள் மறைந்தபோது சிவசம்புப் புலவர் அவர்கள் வருந்தியமைக்குக் காரணம் முன்னர் சமயகுரவர் நால்வரும் மறைய அவர்கள் வழியில் நாவலர் அவர்கள் சைவம் வளர்த்தவர். நாவலர் மறைந்தபின் இனியார் சிவபிரானின் சைவத்தைப் போதிக்கும் திறமையுள்ளவர் எனக் கலங்கியமையாகும்.
சிவசம்புப் புலவர் அறுபதுக்கு மேற்பட்ட பிரபந்தங்களில் மூவாயிரத்திற்கும் அதிகமான செந்தமிழ்ப் பாடல்களைப் பாடிக்குவித்தவர். இவர் ஈழத் திருநாட்டிலேயன்றிச் சங்கம் நிலவிய தமிழ் நாட்டிலையும் இணையற்ற புலவரெனப் பெயரெடுத்தவர். அங்கே இவர் எத்திசையும் புகழ் மணக்க, இராமநாதபுரம் பாஸ்கரசேதுபதி அவர்கள் மீதும் கவிபாடிப் பொன்னும் பொருளும் இன்னும் பலவும் பரிசாகப் பெற்றுப் பெருமையடைந்தவர்.
இவர் பாஸ்கரசேதுபதிமீது கல்லாடக் கலித்துறை, நான் மணிமாலை, இரட்டை மணிமாலை என்னும் பிரபந்தங்கள் பாடியவர். கல்லாடம் கற்றவனோடு சொல்லாடாதே என்பது பழ மொழியாகவும், இவர் கல்லாட யாப்பில் உத்தர கல்லாடம் செய்த தனிச் சிறப்புப் பெற்றவர். கல்லாடக்
240 நடராஜ தரிசனம்
 

கவிபாடுவதற்கு வேறெவரும் துணியாத காலத்தில் இவர் அந்த யாப்பைக் கையாண்டமை இவருக்குப் பெரும் பெருமையளித்தது.
சிவசம்புப் புலவர் உரையாசிரியர் வரிசையையும் அலங்கரித்துப் பெருமை பெற்றவர். மறைசையந்தாதி, திருவேரகயமகவந்தாதி, திருச்செந்தில் யமகவந்தாதி, திருச்செந்தில் திருக்கந்தாதி முதலிய அந்தாதி இலக்கியங்களுக்கும், தஞ்சைவாணன் கோவைக்கும், வள்ளியம்மை திருமணப்படலம், சேது புராணம் முதலிய புராணங்களுக்கும், நன்னூல் விருத்தி, நேமிநாதம், சிதம்பரப் பாட்டியல், யாப்பருங் கலக்காரிகை, முதலாய இலக்கண நூல்களுக்கும் இவர் அமைவான உரை எழுதிப் புகழ் பெற்றிருந்தார். மறைசையந்தாதிக்கு இவர் எழுதிய மகத்தான உரை தமிழ் நாட்டவராலும் பெருமளவில் மதிக்கப் பெற்று வந்தது.
பிறப்பிலேயே புலமை பெறாதவர் தம் முயற்சியால் புலமை பெறுவதற்கு யாப்பருங் கலக்காரிகை கற்றுக் கவிபாடுவதிலும் பேரிகை கொட்டிப் பிழைப்பது நன்றே" என்னும் பழமொழி எழுந்தது. அஃது அவ்வாறிருப்பப் புலவர் அந்நூலுக்கு உரையெழுதிப் பெயர் பெற்றார் என்றால் இவர் புலமையை என் சொல்வது. இவருடைய உரை தமிழ்நாட்டுப் புலவர் பெருமக்களிடையே பெரிய பரபரப்பை உண்டாக்கியும் நிலவியது.
யாழ்ப்பாணத்திற் பொதுவாகவும், வடமராட்சிப் பிரிவில் சிறப்பாகவும் செந்தமிழ்ப் புலவர் பரம்பரைகள் உருவாவதற்கு உழைத்தவர்களுள் புலவர் அவர்களும் ஒருவர். ஒரு காலத்தில் ஆண்களேயன்றிப் பெண்களும் புலமை பெற்றிருந்த பெருமைக்குரியது வடமராட்சி. அங்கெல்லாம் சிவசம்புப் புலவர் அமைத்த நாற்று மேடைகள் நற்றமிழ்வல்ல புலவர்களை உருவாக்கி வந்தன.
புலவர் அவர்களிடம் முறையாகக் கற்ற மாணாக்கர் வரிசைபெரிது. இவர்களின் வேறாய் இடையிடை சந்தேகங்கள் கேட்டுத் தெளிந்தவர்களும் இருந்தார்கள். இவரின் மாணவர்கள் என வந்தவர்கள் வல்வை இயற்றமிழ்ப் போதகாசிரியர் வைத்திலிங்கம், இலக்கணப் புலி சுன்னாகம் முருகேச பண்டிதர், ஆவரங்கால் நமசிவாயபிள்ளை, புலோலி வடமொழிப் புலவர் கணபதிப்பிள்ளை, இலக்கணக் கொட்டர் குமாரசுவாமிப் புலவர், புலோலி தில்லைநாதப் புலவர், தும்பளை முத்துக்குமாரசுவாமிக் குருக்கள், பருத்தித்துறை வேல்மயில்வாகனச் செட்டியார், வல்வை அருணாசலம், கரணவாய் ஞானப்பிரகாச தேசிகர், திருஞானசம்பந்ததேசிகர், நமசிவாய தேசிகர், நொத்தாரிசு ஆறுமுகம்பிள்ளை, மந்துவில் வைத்திலிங்கச் செட்டியார், கந்தமடம் வை. சி. சிவகுருநாதன், கதிர்வேலு சின்னையா, சின்னத்தம்பி சுவாமிநாத பண்டிதர் முதலானோராவர்.
இனி ஈழநாட்டையும், தமிழ்நாட்டையும் அண்மைக் காலத்திலே இணைத்திருந்த உயிர்ப் பாலங்களுள் சிவசம்புப் புலவர் அவர்களும் ஒருவர்.
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 241

Page 132
இவருடைய உயிர்ப்பான உபகரிப்புகள் தமிழ்நாட்டிலே அரசர் பெருமக்களை அன்றி, மடாதிபதிகள், நாட்டார் என வழங்கும் வணிகப் பெருமக்கள், வள்ளன்மைமிக்க புரவலர்கள் என்றித்திறத்தாரெல்லோரையும், வெகுவாகக் கவர்ந்திருந்தன. பாஸ்கர சேதுபதி அவர்கள் கொடுத்த பொன்னாடையும் பொற்காசுகளும் ஒருபுறமாக, எட்டி குடியாதீனத்தார் இவரை வெகுவாகக் கெளரவித்து உபகரித்தமையும், நாட்டார் முதலானோர் அதிகமாக நல்கியமையும் அதிகமாகும். முன்னர் நாவலர் அவர்கள் வழங்கிய புலவர் பட்டத்தை, எட்டிகுடியாதீனத்தார் அங்கே வழிமொழிந்து அங்கெல்லாம் வழங்கச் செய்து சிறப்பித்தார்கள்.
புலவரவர்கள் வடமொழியறிவும் நிரம்பியவர் என்பது, இவர் தம் பாடல்களில் விரவி வரும் அர்த்தபுஷ்டி நிறைந்த பதங்களாலறியப்படும். அன்றி இவர் ஓரளவு இசை நுணுக்கங்களையும் அறிந்தவரென்றும் கூறுவர். தஞ்சாவூர் நாகப்பா என்னும் இசைவல்லாரிடம் இவர் இத்துறையைக் கற்றறிந்தார் என்பது இவரியற்றிய கீர்த்தனங்களிலிருந்து அறியக் கிடக்கிறது.
சைவ சமயத்தில் நிரம்பிய பற்றுள்ளங் கொண்டவர் என்பது இவரியற்றிய பக்திப் பிரபந்தங்களால் அறியக் கிடக்கிறது. இவர் தமது அயலூரிற் கோயில் கொண்டருளிய முருகன் மீது கந்தவனநாதர் பதிகமும், அயலில் உள்ள வல்லிபுரத்தான் மீது ஒரு பதிகமும், செந்தில் மேய முருகன் மீது யமகவந்தாதியும், திருவேரகப் பெருமான் மீது இன்னொரு யமகவந்தாதியும், இன்னும் எட்டிகுடிப் பிரபந்தம், புலோலி நான்மணிமாலை என்பனவும் பிறவும் பாடியுள்ளார். இவர் முருகப் பெருமானை உபாசனர் மூர்த்தியாக கொண்டிருந்தார் என்பது இவரியற்றிய பிரபந்தங்கள் வாயிலாக அறியவுள்ளது. "இவர் சொல்லும் பொருளும் தொடை வகைகளும் சிறப்பு வைத்துக் கவியமைக்கும் புலமையிற் சிறந்தவர்” என்பது சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரவர்களின் கணிப்பு இவர் சேனாதிராய முதலியாருக்கு அடுத்தபடியில் புலமைப் பெருக்கமுள்ளவர் என்பது பண்டிதமணி அவர்கள் கொண்ட கருத்து தமிழ்நாட்டவர் இவர் மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களுக்கு அடுத்தவர் எனக் கொண்டாடியதும் உண்டு. இவ்வாறு பல்வேறு பெரும் புலவர்கள் இவரைப் பல்வேறு துறைகளில் வைத்துப் போற்றியமை ஈழநாட்டுப் புலவர் வரிசைக்கோர் ஏற்றமளித்த மையாகும்.
புலவர் அவர்கள் தமிழ்நாட்டிலே தம் கவிதைகளுள் ஒருசிலவற்றை அரங்கேற்றிய அரசோலக்கத்திலே செந்தமிழ்ச் சிங்கம் எனப் புகழ் பெற்ற ரா. இராகவையங்காரும் ஒருவராயிருந்து இவர் புலமையை வெகுவாக மெச்சினார் என்பர். அப்பால் புலவர் அவர்கள் தம் புலமை பெருக்கெடுத்துப் பாய்ந்த போது, அடுத்துப் பாடிய பெரியவர், பொன்னுச்சாமி தேவர் என்னும் பெரியாரின் மைந்தன் பாண்டித்துரைதேவராவர். பாண்டித்துரை தேவர் அவர்களே தக்க புலவர்களை அரவணைத்து மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தை
242 நடராஜ தரிசனம்

நிறுவியவராவார். புலவரவர்கள் பாண்டித்துரை தேவரைப் புகழ்ந்து இன்னொரு நான்மணிமாலை பாடியுள்ளார்.
புலவரவர்கள் தம் தந்தையாரின் முதல் தாரத்து மைந்தனாய அம்பலவாணர் என்பார் மீதும், அவர் மைந்தர் மயில்வாகனம் என்பார் மீதும் கொண்ட ஆசை நேசங் காரணமாக அவர்கள் பரம்பரைச் சிறப்பைப் புகழ்ந்து, மயில்வாகன வம்ச வைபவம் என்னும் பிரபந்தம் பாடியதும் உண்டு. ஐம்பத்தொன்பது நெடிய விருத்துப்பாக்களாலான இப்பிரபந்தம், பாட்டுடைத் தலைவர்களின் பாரம்பரியத்தையும், அவர்கள் செந்தமிழ் வளர்த்த செம்மையையும், சைவம் வளர்த்த சால்பையும் போற்றுவதாகும்.
புலவரவர்கள் தமது இளமைக் காலத்தில் சரவணமுத்துப் பண்டிதர், சம்பந்தப்புலவர் ஆகிய பெரியவர்களிடம் படிப்பதற்கு ஒப்படைக்கப்பெற்ற நிகழ்ச்சியையும் இப்பிரபந்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அந்தியாகா லத்திற்றமிழ்க் ககத்தி யன்போ
லமர்ந்த சர வனமுத்துப் பண்டி தன்சீர் முந்துகுணச் சம்பந்தப் புலவன் றன்னை
முற்றொடரன் பினிலழைத்து முகமன் பேசிச் சிந்தையுறும் பெருங்களியா லிவனை யோங்குஞ்
செந்தமிழா சிரியயெனத் திருத்தி வைம்மின் சந்ததமு முமைமறவா னென்றன் றோர்கைத்
தலத்திலெனை அடைக்கலமாத் தகவி லிந்தோன் அக்காலத்து இல்லறமாய நல்லறமேற்ற சைவத் தமிழ்ப் பெண்ணின் பெருமையை ஒரிடத்தில் அன்னை அன்னையென விரவிவரப் பாடிய பாடலொன்றை இன்றைய நங்கையர் நன்கறிந்திருத்தல் நன்மை பயக்குமாதலால் அதனை அறிந்து கொள்ளலாம்.
எம்மையெலாந் தலையளியின் வளர்த்த வன்னை இருமரபுந் தூயவன்னை இரந்து நேர்வார் தம்மையெல்லாம் புரந்தவன்னை தரும தான
தவம் வளர்த்த வன்னைதன் னளிக்கோ ரன்னை மெய்ம்மையெலாந் திகழ்விரதம் விழைந்தோம் பன்னை
விமலசிவ புராணங்கள் வினாய வன்னை செம்மையெலாந்தம்வழிபோற் றிருத்தி நின்ற
சிதம்பரநா யகித்திருவை திமுன் வேட்டான்.
மயில்வாகனம் என்பார் புலவர் வாழ்ந்த புரவலர் என்பதோடு, அவர் தமக்குப் பலவூர்களிலும் வாய்த்த பெருநிலமெங்கும் குடியேறி வாழ்ந்த மக்கள்
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 243

Page 133
குற்றஞ் செய்தாலும் அவற்றைப் பொறுத்து அம்மக்களுக்கு வேண்டியவுத விகள் செய்ததோடு, குடிக் கூலியாக அவர்கள் கொடுத்த குத்தகைப் பணத்தையும் குறைவு எனப் பாராது தாராளமான மனத்தோடு ஏற்றவர் என்று சிவசம்புப் புலவர் பாடுவார்.
உன்னிருஞ்சீ ரிருவாலை கோப்பாய் கந்த
ரோடைதன்னை யுருவி லுடுப்பிட்டி யூரின் மன்னியதன் காணிகளில் வைகு மாக்கள்
வழுக்களியற் றிடினுமதி கொளுத்தி மாற்றி பின்னலுற வவரையெழுப் பாம லெவ்வெவ்
விடர்ப்பிணியுற் றாலுமவர்க் கியல வாற்றி அன்னவர்க ளினங்கியிறை யீப வற்றை
யலமலமென் றேறகுமரு எ7ாழி யன்னான்.
அண்மையில் வாழ்ந்த பெரும் பண்டிதராய செவ்வந்திநாத தேசிகர் அவர்கள். சிவசம்புப் புலவர் அவர்களின் பிரபந்தத் திரட்டு என்னும் ஒரு தொகுப்பை வெளியிட்டுள்ளார். அதில் முதற் பாகம் எனவே குறிப்பிட்டுள்ளார். இரண்டாம் பாகம் வெளிவந்ததாகத் தெரியவில்லை.
பண்டிதர் அவர்கள் தமது தந்தையாரும், சிறிய தந்தையாரும் புலவரிடத்து முறையாகக் கற்றவர்கள் என்பர். பண்டிதர் அவர்கள் தொகுப்பிற்குப் புலவரின் மருகரும், மாணாக்கருமாய ஆறுமுக உபாத்தியாயர் உதவி புரிந்தார் என்பர். இவ்வரிய தொகுப்பு ஈழகேசரி பொன்னையா அவர்களால் பிரசுரிக்கப்பெற்றுள்ளமை இதற்கு வாய்த்த மற்றொரு பெருமையாகும்.
புலவர் அவர்கள் காலத்திலே தான் வண்ணை அப்புக்காத்தர் நாகலிங்கம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியை ஆரம்பித்திருந்தார். நாகலிங்கம் அவர்களுடைய பெருமையைப் புலவர் அவர்கள் பல பாடல்களிற் பாடியுள்ளவற்றுள் ஒன்றையாவது படித்தின்புறலாம்.
“மன்னொத்த செல்வப் பெரு வாழ்வி
னிரென்றும் வாழ்ந்திருக்க வென்னொத்த பாவலர்க் கெய்திரு
மோதுய ரின்பவன்னைத் தன்னொத்த சீர்ச்சின்னத் தம்பி மகீபன் தவத்துதித்த பொன்னொத்த மேனிப் புகழ்நாகை
லிங்க புரந்தரனே'
244 நடராஜ தரிசனம்

புலவர் அவர்கள் வாழ்வில் நாமகள் கடாட்சத்தால் புலமை அதிகரித்து வந்தபோது, திருமகள் புறக்கணிப்பாற் போலும் வறுமை விட்டு நீங்காமலே தொடர்ந்தது. இன்னும் புலவர் அவர்கள் ஆறடிக்கு மேற்பட்ட உயரத்தவராய்க் கவர்ச்சிகரமான தோற்றத்தவராய்த் தலையில் தலைப்பாகையும், நெற்றியில் நீறும் சந்தனமும் பூசிக் காதில் கடுக்கனிட்டுக் கம்பீரமாக நடப்பவராம். தினமும் நல்ல உணவையே உண்பவராதலால் நல்ல திடகாத்திரராயிருந்தாராம். அவர் சபைகளிற் புகுந்தால் ஆனைக்குட்டிப் புலவர் வருகிறார் என்று சிலர் நகைச்சுவையாகக் குறிப்பிடுவதும் வழக்கமாம்.
புலவர் அவர்கள் தமக்குக் கிடைத்த பொன்னையும் பொருளையும் பின்னர் தேவையெனப் பொத்தி வைக்காமல் ஏழைகளுக்கு வரையாது கொடுத்துதவும் வள்ளல் குணமும் உடையவராயிருந்தாராம். இந்த வகையில் இவருக்கு எந்த நேரமும் பணத் தட்டுப்பாடிருக்கவே, புரவலர்களைத் தேடித் தம் புலமையைக் காட்டிப் பொருள் பெறுபவராயிருந்தாராம். இவர் இராமேஸ்வரத்தில் வாழ்ந்த பெருந்தன்மை வாய்ந்த இபுறாகிம் சாகிப் என்னும் பிரபுவையும் புகழ்ந்து பாடிச் சன்மானம் பெற்றிருந்தார் என்பர்.
ஆசிரியவிருத்தம்
சீர்பூத்த புனிதரா மேச்சுமெனப்படுந்
தெய்வ ஸ்தலத்து வாசன் செல்வமி ராலெவ்வை முன்னா ளியற்றிய
திருத்தவத் துற்ற குமரன் செயமுகம் மதுநபி பெரும்புகழ் மறந்திடாச் செயவிரத நிலையினிற்போன் சேதுபதி பாஸ்கா சுவாமிமா ராஜனொரு
திரிபிலா துற்றநேசன்
வாாபூத்த நதிகுல மூதித்தசின் னத்தம்பி
வள்ளலரு னாகைலிங்க மகியனொடு பிரியாத நண்பினான் சிட்டர்சக
வாசனம் புவிவாசவன் வங்கவள மன்னிய கிராமவள மின்பமனை
வாழ்க்கைவள முற்றெப்தினோன் வரமுறுஞ் சித்தாந்த வேதாந்த காவிய மதித்திறத் தினிதுனர்ந் தோன்
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 245

Page 134
நீர்பூத்த சேதுக் கரைக்கன்யாழ்ப் பானத்தர்
நிருமித்த சத்திரத்தை நிலைமைகுலை யாவண்ண முதலியா யூக்கமொடு
நின்றுநிறை வேற்றிவைத்தோ னிமலரா மேச்சுரத் துற்றமுத லாளியென
நிலவுமோர் சிறப்பு முடையோன் நெஞ்சமுற யாத்திரைக் கெய்திடு பவர்க்கேற்ற
நெறிகுலவ வசதிதருவோன்
நார்பூந்த வேனியர னாலயப் பணிவகையு
மன்பனாய்ச் செய்விப்பவன அதிபர்போற் பிரசைதங் குறைதெரிந்தியனtதி
யாம்வகை நிறுத்துமுரவோன் ஆருள மெலிந்து வந்தாமற் றன்னவரை
அன்னைபோ லப்பேறுவோன் அரியகுண விபுறாம்சிப் சாகிபு வெனத்தினமும் அளைவரு மதித்த துரையே’
இன்னும் தொடர்ந்து வரும் கலித்துறைப் பாடல்களில் அவரைக் கற்றார்கள் தாரு மதிகாண் உளத்தன், உதவி சந்ததஞ் செய்யும் இபுறாம்கிப் சாகிபு என்றெல்லாம் பாடுவர். சாகிப் அவர்கள் புறமதத்தவராயிருந்தும் தமிழ் வளர்த்த செம்மல்களை ஆதரித்த சமரசஞானியாகவே வாழ்ந்தவர் என்பர்.
வடமாநிலத்திலே வடமராட்சியிலேயுள்ள வல்லிபுரத்தாழ்வார் திருக்கோயிலிலே எழுந்தருளியுள்ள சக்கரத் தாழ்வாரைத் தங்கத் தகட்டினில் செய்து வைத்த சிதம்பரப்பிள்ளை என்னும் சீமான் புகழையும் புலவர் அவர்கள் பாடியுள்ளார்.
“திருந்து மெழில் வல்லிபுரழ்வாழ் சீதரன் திகிரியைத் தங்கத்தகட்டினால் செய்வித்த பத்தியாள” என்றும், "பேரேறு தரும தானங்களைச் சந்ததம் பீடுற நடத்தும் அன்ப" என்றும், “பசியில் நொந்தவரை அன்னை போற்பேணி அன முதவு செல்வ” என்றும், “கோணாமல் ஏற்பவர்க்கு ஈயும் குலப்புகழ்மை குவல யத்துள்ளவர்” என்றும் ஆசிரிய விருத்தத்திற்பாடி, அப்பால் கலித்துறையிலும் அருமையாகத் தொடர்ந்து பாடி வாழ்த்துவர்.
"சங்கக்கை யானமர் வல்லி
புரத்தினிற் சக்கரத்தைத் தங்கத் தகட்டின் முழுது
மமைத்துத் தழைத்த பத்தித்
246 நடராஜ தரிசனம்

துங்கச் சிதம்பரப் பிள்ளாய் நின்
மேதகை தொல்லை விண்ணோர்
சங்கத்து முற்றது நின்பிறப்
பேதவச் சால்பினதே. ”
சென்ற நூற்றாண்டில் மட்டக்களப்பு வைத்தியலிங்கம் என்று பெயர் பெற்ற வர்த்தகர் வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர். கப்பலோட்டி நெல் வியாபாரஞ் செய்து ஈட்டிய பொருள் பெரும்பாலும் தருமப் பணிக்கே செலவானது, மனங்கோணாது ஈயும் மார்க்கண்டு முதலாளியும் அந்த வள்ளல் பரம்பரையினரேயாவர். வைத்திலிங்க வள்ளலைப் பாடத் தொடங்கிய புலவர் கலித்துறை யாப்பைக் கையாண்டு பதினொரு பாடல்கள் பாடியுள்ளார். பதிகம் போலமைந்த புகழ்மாலை முழுதும் தமிழ் மணங் கமழும் பூக்களாய சொற்களாலாயது.
'திருவாழும் வட்டு நகர்சித்தங்
கேணி செறிந் திருந்தே மருவார் பொழிற்சங்கு வேலியி
லோங்கிடும் வாழ்வில வைகும் பொருவா ரிலாத வைத்திய லிங்க புரந்தர மெய்க் குருவான கந்த பினருளால் வந்
தேனுன் குலமனைக்கே ’
இவ்வாறு பாடிக் கொண்டே புலவரவர்கள் புரவலர் மனையுட் புகுந்தார். புகுந்தவர் வீட்டுக்கு விளக்காகிய கற்புடை இல்லத்த்ரசியை வியந்து பாராட்டி, “செய்யாள் கற்புக்கு வட மீன், வறிஞர்க்குச் சேம வைப்பு” என்றெல்லாம் வாழ்த்துவர் பின் வைத்திலிங்க வள்ளலை வியந்து பாடுவர்.
'மானுட யாக்கைக்குஞ் சைவமெய்ப்
பத்திக்கும் வான்புவிக்கு மாநிதி கட்கும் வயித்திய லிங்க வரோதய நே ரானவில் வாழ்வுக்குந் தான
தருமங்க ளாற்றுதற்கு மேனனி நீசெய்த மாதவம்
வேறெவர் மேவினரே. 夕外
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 247

Page 135
வாணிக வாரியு மூர்தொறு மேவிய மட்டகன்ற காணியின் வாரியுங் குன்றென
"இந்திரச் செல்வ மடைந்தும் வைத்திய லிங்க வள்ளல் சிந்தனை சற்றும் பிறிது
படாது செருக்க கன்று சந்ததம் யார்க்கும் இதமே
புரிந்து தழைத்திட லால் உந்தை உனைப்பெறச் செய்த
தவத்தினி லூங்கெதுவே. ”
புலவர் அவர்கள் புரவலர்களைப் பாடி வாழ்த்தும் வரன் முறையில் சைவப் பண்பாடு தவறுவதில்லை. “தீர்க்காயுளோ நினக்கீவன் சர்வாபீஷ்ட சித்தியுமே” என்பது இவரின் வாழ்த்து.
வடமராட்சியில் வல்வெட்டித்துறையின் மகத்தான பெருமைகளைக் கூறுமுகத்தால் சிவசம்புப் புலவர் அவர்கள் வல்வைக் கலித்துறை என்னும் நூலைப் பாடியுள்ளார். வீரர்கள், தீரர்கள், வள்ளல்கள் வாழ்ந்த அந்தவூர் என்றுமே பெருமைக்குரியதாயிருந்தது அங்கும் அயலிலும் பழைய வீரர்களின் நினைவாகப் பல ஊர்கள் உருவாகியுள்ளன. சமரபாகுதேவன், வென்றிபாகு தேவன், கல்லிடைத் தேவன் முதலானோர் பழைய வீரர்கள்.
வீரர்கள் ஒரு புறமாக அங்கே பாரம்பரியத்தில் வந்த வள்ளல்களும் இருந்தார்கள். ஆண்களேயன்றி, அவர்கள் வழியொழுகிய பெண்களும் கொடையிற் சிறந்தவர்களாய், கணவன் கொடுப்பதைத் தாம் தடாத பிராட்டியராய் இருந்தார்கள்.
புலவர் காலத்தில் கந்தசாமி என்னும் வர்த்தகர் மட்டக்களப்பில் மர வியாபாரஞ் செய்தவர், ஒரு சமயம் தம்மூர்க்கு வந்திருந்தார். புலவர் அவரிடம் சென்று உரையாடிய போது, கந்தசாமி உடனடியாகச் சிறுதொகை கொடுத்துதவியதோடு, மட்டக்களப்புக்கு வந்தால் ஆயிரம் ரூபா தருவதாக வாக்களித்தார்.
அந்த நாளில் ஆயிரம் ரூபா என்றால் யார் தாம் விடுவார். புலவர் அவர்கள் சிரமத்தைப் பாராமல் அங்கே சென்றபோது, கந்தசாமியாரின் இல்லத்தரசி புலவரை வரவேற்று உபசரித்தவாறே கணவன் காட்டுக்குப் போயிருந்தார் என்று கூறினார். புலவரும் தாம் வந்த காரணத்தைக் கூறியதும், இல்லத்தரசி
248 நடராஜ தரிசனம்
 

யார் இரண்டாம் கதை பேசாமல் ஆயிரம் ரூபாவை எடுத்து வந்து கொடுத்துப் புலவரை வணங்கினாள், தெய்வநாயகி என்னும் பெயரினள்.
புலவர் தமக்கு ஆயிரம் ரூபா பாராமல் தந்த தெய்வநாயகியையும், கந்தசாமியையும் பாடிய பாடல்கள் பிரபாவப் பாமாலை எனப் பெயர் பெற்ற தொகுதியாகும். இதில் கலித்துறை, ஆசிரிய விருத்தம், விரவி வந்துள்ளன. ஈற்றில் கொச்சகம் என்றும் சில அடிகள் வந்துள்ளன.
பிரபாவப் பாமாலையில் எடுத்த எடுப்பிலே இந்திரச் செல்வம் பெற்றுயர்ந்த கந்தசாமி வள்ளலின் கொடைச் சிறப்பைக் கூறுவர் அதில் குறுந்தடி கொண்டு முழங்கும் முரசின் ஒலி ஒரு காத தூரம் கேட்கும் என்றும், அதைவிட உரத்து முழக்கும் ஒலி ஒரு யோசனை தூரம் கேட்கும் என்றும், ஒருவர் கொடுத்தார் என்னும் சொல் மூவுலகும் கேட்கும் என்று கூறும் நாலடியார் பாடலைத் தழுவிக் கந்தசாமி வள்ளலின் கொடைச் சிறப்பைப் பாடுவர்.
கலித்துறை
“எடுத்தாயிரஞ் சொல்ல வேண்டுவ
தோநினக் கென்று நல்லோர் கொடுத்தா ரெனப்படுஞ் சொன்னிமிர்ந்
தோடிக் குறைவற் நெழிஇ யடுத்தாரு மூவுல குங்கேட்கு
மென்பதறிந்து ளைகா னடுத்தாழ் விலாத புகழ்க்கந்த
சாமி நரேத்திரனே.”
அடுத்துவரும் ஆசிரிய விருத்தத்தில், கந்தசாமிப்பிள்ளையே, வல்வை நகராச கவிஞர்கள் மதித்த தருவே” என்றும், 'தேமொழியில் எவ்வெவர் மனத்தையும் உருக்கும் அன்ப" என்றும், "வடி தமிழ்க் காவிய புராண சோதிட நூல் வழாத வகை தேர்ந்த நிபுண' என்றும், “வரமுறுங் கீரிமலை அறுமுகன் கோயில்தனை மாண்புடன் அமைத்த துங்க” என்றும், “மட்டக்களப்பினிற் கடிமணச் செல்வியோடு வாழ்ந்திடும் புருஷோத்தம” என்றும் பாடுவர்.
அடுத்துவரும் கலித்துறைப் பாடல்களிலொன்றில் பிரமதேவனை நோக்கி, தேவரீர் தாங்கள் கொடுக்கத் தெரியாத புல்லர்கள் வீட்டில் குவித்து வைக்கும் செல்வத்தை, ஓயாமல் கொடுத்து மகிழும் கந்தசாமி வீட்டிலன்றோ குவித்துவிட வேண்டும் என்று குறிப்பிட்டுப் பாடுவர்,
சேயா யரியுந்தித் தாமரை வந்த திசைமுகனே
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 249

Page 136
ஈயாத புலவர் மனைதோறு
நீவைத்த வேமவெற்பை வாயார் சரத மொழிக்கந்த
சாமி மனையில் வைத்தால் ஓயாமல் யார்க்கும் மகிழ்ந்தள்ளி
அள்ளி உதவுவனே.
தொடர்ந்து வரும் கலிவெண்பாவில் யாழ்ப்பாணத்துப் புலமையையும் கொடை மகிமையையும் குறிப்பிடுவர். “ஊரெல்லாம் பண்டிதரும் ஓங்கு கொடைச் செல்வரும் வாழ்பேரெல்லாம் கொண்டு பிரிவின்றிப்- பாரெல்லாம் பன்னியிட நின்றொளிர் யாழ்ப்பாணத்தின்” என்பர். இன்னும் கந்தசாமி அவர்களின் பெருந்தன்மையையும், அவர் தம் தேவியார் தெய்வநாயகியின் மனை மங்கலத்தையும் விரித்துப் பாடுவார்.
அன்று புலவர் மட்டக்களப்பு வீட்டுக்குச் சென்றபோது, மங்கை நல்லாள் அவரை உபசரித்து, நீங்கள் உடனே பயணம் போவதாயிருந்தால் என் ஐயா வாக்களித்த தொகையைத் தந்து விடுகின்றேன்’ என்று சொன்ன வாய்ச் சொல்லை வியந்து புலவர் அவர்கள் பாடிய பாடல் கலித்துறைக்கு விருந்தாயுள்ளது.
"ஐயா வனத்துக்கு வாணிகத்
துற்றனர் அன்பரிங்கள் எய்யாதவர்வர முன்னர்ப்
பயணம் இசைவுளதேற்
பொய்யாதவர்சொன்ன பொன்னிவன்
யானென்ற பூவை வைக
மெய்யார் புகழ்க்கந்த சாமிக்கு
வான் செல்வம் வேறென்னையே’
இப்படிப்பட்ட பெண்கொடி எப்படிப்பட்டவள் தெரியுமோ என்று ஏந்திழைமாருக்குப் புலவர் பாடிக் காட்டுகிறார். ஆணாய்ப் பிறந்தவர்கள் கூட செந்தமிழ் பயிலல் வீணான செயல் என்று ஒதுக்கிவிடும் இந்நாளில், நாண் முதலாய குண மகிமை வாய்ந்த குணபுஷணியாய தெய்வநாயகி கோணாது தமிழ் கற்றுப் புலமை பெற்றுள்ளாள் என்பர்.
47கரச்சகம் ஆனாயி னேரு மரியசுவைச் செந்தமிழை வீணான தென்று வெறுத்துவிடு மிந்நாளில்
250 நடராஜ தரிசனம்

நானாதிபூண்டதெய்வநாயகிமா னன்னதையுட் கோனாது பூனக் குறித்த தெங்கள் புண்ணியமே.
இத்தகைய தெய்வநாயகி, “சாற்றுபுகழ்ழ்க் கந்தசாமிமனக் கோயிலிடை ஏற்றி வைத்த இன்ப ஒளிவிளக்கு” என்றும், இவள் “வசிட்டமுனி தேவிக்கும் புத்தியினால் கற்புரைக்கும் பூங்கிளி' என்றும் பாடுவர். இத்தகைய பூவை புலவர் அவர்களுக்குப் புருஷன் சொன்ன சொல்லைக் காப்பாற்ற புன்னகை பூத்த முகத்தோடு ஆயிரம் ரூபாவை அள்ளிக் கொடுத்தபோதிருந்த நிலையைப் புலவர் படம் பிடித்துக் காட்டினாற் போலப் பாடலிற் காட்டி மகிழ்வர்.
'நெஞ்சங் குளிர்ந்து விழிகுளிர்ந்து
இன்சொல் நிகழ்த்தி முகக் கஞ்சம் குளிர்ந்து பணிந்துஎன்
கவிக்குக் கனகம் தந்தாள்
தஞ்சஞ் செறிந்தவர்த் தாங்கிடுஞ்
சீர்க்கந்த சாமியில்லாள் வஞ்சங் கடிந்த மனத்தெய்வ நாயகி மாதரசே ”
புலவர் அவர்களின் இறுதிக் காலத்தில் இவரை விட்டு என்றுமே நீங்காத வறுமையோடு நோய்களும் தொட்டுக்கொண்டன. தம் நிலையை இவர் கந்தமடம் சுவாமிநாத பண்டிதர் அவர்களுக்கு அறிவித்தார். சுவாமிநாத பண்டிதர் அவர்கள் முன்னர் வை. சி. சிவகுருநாதருடன் வித்துவ சிரோமணி பொன்னம்பலம் பிள்ளை அவர்களிடம் படித்து வந்தவர். வித்துவ சிரோமணி தமக்கு ஆவகாசமில்லாத வேளைகளில் சிவசம்புப் புலவர் அவர்களை இங்கே பாடஞ் சொல்ல வைத்தவர். அந்த முறையிலும் பின்னர் அவரோடு நெருங்கிப் பழகிய முறையிலும் புலவர் அவர்களும் பண்டிதர் அவர்களும் மிக நெருக்கமாயிருந்தார்கள்.
புலவர் அவர்கள் தம் நிலைமையை அறிவித்ததும் சுவாமி நாத பண்டிதர் அவர்கள் அவரிடம் விரைந்து சென்றார். குருவுக்குச் செய்ய வேண்டிய உதவிகளையும், பணிவிடைகளையும் குறைவறச் செய்தார். அவர் செய்த சேவையைப் பாராட்டிய புலவர்தம் பாடல்கள் சில திருநெல்வேலி சைவசித்தாந்தக் கழகத்தார் பதித்த தனிப்பாடற்றிரட்டில் இடம் பெற்றுள்ளன.
அவற்றுள் நீண்ட ஆசிரியவிருத்தமும், அதனைத் தொடர்ந்து ஆறு கலித்துறைப் பாடல்களும் வந்துள்ளன. அச்சில் வராக்கவிகள் சில சாமிநாத பண்டிதர் அவர்களிடம் இருந்தன. அவை எங்குற்றன என்று தெரியவில்லை.
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 251

Page 137
கலித்துறை
யாரும் புரப்பவர் இன்மையின் மூப்பினில் யான்பிணியும் ஈரும் கொடிய மிடியும் அடவுள் இனைபொழுதில் சாரும் புகழப்பன் டிதன்சாமிநாத தயாநிதியைக் கூரும் கடரயில் வேலோன் திருவருள் கூட்டியதே.
எல்லாரும் கைவிடக் காணி பொருள்களை ஈனமெனப் பொல்லார் கொளத்தஞ்சம் இன்றிப் புலம்புறும் போதெதிரா நல்லார் தொழும்பன் டிதன்சாமிநாத நரேசன் இன்சொல் சொல்லாட உய்த்த குகன் அரு ளேமெய்த் துணை எனக்கே.
நன்றியைப் பேனிடும் பண்டிதன்
மெய்ச்சாமிநாதன் உளத் தொன்றிய பேரரு ளால்இடை
நேர்ந்தின் றுரைத்த இன்சொல் என்திகைப் பைச்செற்ற தின்னவன்
போல இனுஞ் சிலரைக் குன்றடும் வேலவன் சேர்த்திடு
மேலென் குறையெனக்கே
பன்னாள் இவன்கன் டி லஞ்சாமி
நாத மெய்ப் பண்டிதனை என்நாள் இனிக்காண்பம் என்றெப்க்கும்
ஏழைதன் எண்ணத்தை (உள்) உன்னாஅறுமுகன் நேர் கூட்டி னான் அவன் ஒங்கருளை
எந்நாளும் மெய்யென்ற ஆத்தர்கள் வாக்கினை என் சொல்வனே. வற்றா அருட்பண் டிதன்சாமி
நாதன் வளர்சென்னை நின்(று) உற்றான் இவன் என யாழ்ப்பானத்
தூர்முற்றும் ஒைேகதழி இ நற்றாரை வான்முகில் க்ண்ட
மயிலியல் நன்னணியிடின் பெற்றாருந் தவ்வையும் உற்ற
களிப் பெவர் பேசுவரே.
252
நடராஜ தரிசனம்

புலவரவர்களுக்கு முதுமையில் கண்ணொளி மங்கியது என்றும் அவர் கந்தவனக் கடவை ஆறுமுக சுவாமியை விடாது வேண்டிப் பாடு கிடந்து கண்ணொளிபெற்றார் என்றும் "கண்ணொளியைத்தந்தாய்மறப்பேனோ” என்னும் தொடரமைந்த பாடல் பாடினாரென்றும் கூறுப, புலவரவர்கள். 29-9-1910 ஆம் நாளில் காலமானார் என்றும், அவர் மாணாக்கர்கள் பலர் பிரிவுக்கு வருந்திப் பாடினார்கள் என்றும் கூறுப. அவர்களுள் அல்வாய் நொத்தாரிசு ஆறுமுகம் அவர்கள் பாடிய பாடல்கள் இரண்டு கிடைத்துள்ளன.
'கவிகாள மேகம் கவிச்சக் கரவர்த்தி கம்பனென்று அவியா விளக்கனை யான்புக ழேந்தியமைந்தொருங்கு புவிமீது வந்த தெனுஞ்சிவ சம்புப் புலவனைக்கை குவியாப் புலவ ரெவர்கவி பாடுங்குறிப் பறிந்தே ”
“செந்தமிழாழி கரைகண்டு சைவத் திறம் பரவிக் கந்தசுவாமி திருத்தொண்டு பூண்டு கவிமழையே சிந்துநற் தேசிக ணாருடுப் பிட்டிச் சிவசம்புவை எந்தப் பிறப்பினிற் கண்ணாரக் காண்ப திசைமிகவே.
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 253

Page 138
தமிழ் இலக்கிய விமர்சனப் போக்கு
மு. பொன்னம்பலம்
தமிழில் இலக்கிய விமர்சனம் பற்றிப்பேச முற்படும் நாங்கள், அதன் தோற்றம் மிக அண்மைக் காலத்துக்குரியதென்பதை நினைவில் கொள்ளல் வேண்டும். தமிழில் ஒழுங்கான இலக்கிய விமர்சனம் என்பது (Literary Criticism proper) நாற்பது அல்லது ஐம்பது வருடங்களுக்கு மேல் செல்லாது என்றே சொல்லலாம். தமிழ் ஆதி மொழிகளில் ஒன்றென்றும். அது பல மொழிகளின் தாயாக இருந்திருக்கிறதென்றும் அதன் பழமை பற்றிப் பேச முற்படுவதில் உள்ள கணிசமான உண்மை, அதன் விமர்சனத்துறைக்குப் பொருந்தாது என்பதை நாம் அறுதியிட்டுக் கூறலாம்.
எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள் தமிழின் இலக்கியத் தொன்மைக்கு எதிராக முன்வைத்த பிழையான தீவிர அழுத்தத்தை நாம் அதன் விமர்சனத் துறையின் தொன்மைக்கு எதிராகவே அழுத்த வேண்டும். நச்சினார்க் கினியார், பரிமேலழகர் போன்றோர் வரிசையில் உரைகளையும் நக்கீரரின் குற்றம் குற்றமே போன்ற கதைகளையும் நாம் தமிழ் இலக்கிய விமர்சனத் துறையிலிருந்து ஒதுக்கிவிட்டால் நமக்கு எஞ்சுவது எதுவுமில்லை என்றே சொல்லிவிடலாம். இந்நிலையில் வையாபுரிப்பிள்ளை தமிழ் இலக்கியத் தொன்மைக்கு எதிராக முன்வைத்த காரண அழுத்தங்கள் சரியோ, பிழையோ அந்த அழுத்தங்களில் தொனிக்கும் பற்றின்மை, விஞ்ஞான நோக்கிற்குரிய புறநிலை ஆய்வு (Objective analysis) ஆகியவற்றை தமிழ் இலக்கிய விமர்சனத் துறையின் ஆரம்பக் கருக்கூட்டல்களாகக் கொள்ளலாம். வெறும் ஆரம்பக் கருக்கூட்டல்கள் மாத்திரமே, பல தளப்பார்வை கொண்ட பெரும் விமர்சனப் பாய்ச்சல் தமிழில் ஏற்பட இன்னும் பல வருடங்கள் இருந்தன.
இச்சந்தர்ப்பத்தில் நாம் ஒன்றைத் தெளிவுபடுத்த வேண்டும். அதாவது நான் மேலே குறிப்பிட்ட பல தளப் பார்வை கொண்ட கலை இலக்கிய விமர்சனப் பார்வையும் அதன் பாய்ச்சலும் நவீன தமிழ் இலக்கியத்தில் இரண்டு கால கட்டங்களில் ஏற்பட்டன. முதலாவது அறுபதுகளிலும் இரண்டாவது எண்பதுகளிலும் இந்த மாற்றமும் பாய்ச்சலும் தமிழ் இலக்கியத்துறையில் ஏற்பட்டன. அறுபதுகளில் எற்பட்ட மாற்றம் ஈழத்து தமிழ் இலக்கியத் துறையிலும் எண்பதுகளில் ஏற்பட்ட மாற்றம் தமிழ் நாட்டு இலக்கியத் துறையிலும் காணக்கூடியவையாய் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இவை பற்றிய தரவுகளைத் தருவதற்கு முன்னர், நாம் தமிழ் இலக்கிய உலகில் நிலவிய விமர்சனப் போக்குகளை பொதுவாகப் பார்ப்பது நல்லது.
254 நடராஜ தரிசனம்

நாம் ஏலவே குறிப்பிட்டது போல் ஒழுங்கான தமிழ் இலக்கிய விமர்சனம் என்பது நாற்பதுகளிலேயே கருக்கொள்ளத் தொடங்குகிறது எனலாம். இக்கால கட்டத்தில் மூன்றுவகையான இலக்கிய விமர்சனப் போக்குகள் தம்மளவில் தனித்தனியாகத் தலையெடுத்து இயங்கத் தொடங்கியிருந்தன. முதலாவது கல்வியியல் சார்ந்தவர்களது விமர்சன முயற்சிகள். இரண்டாவது தனி இலக்கியத்தை முழு மூச்சாகக் கொண்ட இலக்கிய வாதிகளின் விமர்சன முன்வைப்புகள். இவற்றை இலக்கியவியல் சார்ந்தவை எனலாம். மூன்றாவது மார்க்சீயத்தை அடிப்படையாகக் கொண்ட விமர்சனப் போக்குகள். இவற்றை மார்க்சியவியல் விமர்சனம் எனலாம். இவை மூன்றும் ஆரம்பத்தில் தனித்தனியாகச் சுயவியக்கம் பெற்று தொழிற்பட்டு வந்தபோதும், கால அடைவில் ஒன்றோடொன்று கலந்து ஊடாட்டம் பெற்ற போக்கே, தற்காலத் தமிழ் இலக்கிய விமர்சனமாகும்.
கல்வியியல் சார்ந்த விமர்சனத் தொடர் உ. வே. சாமிநாத ஐயரில் ஆரம்பித்து எஸ். வையாபுரிப்பிள்ளை, ரா. பி. சேதுப்பிள்ளை, அ. ச. ஞான சம்பந்தன், டாக்டர் மு. வ. கி. ஆ. பெ. விசுவநாதன், வி. க. முத்துச்சிவன், பேராசிரியர் சீனிவாசகராகவன், டி. கே. சி. விபுலானந்த அடிகள், வி. செல்வ நாயகம், பண்டிதமணி கணபதிப்பிள்ளை என்று பல கல்விமான்களால் வளமூட்டப்பட்ட போதும் இவர்களில் பலரது விமர்சனம் என்பவை பழந்தமிழ் இலக்கியங்கள், திருமுறைகள், பாசுரங்கள் என்பவற்றின் உரைகளாகவும் அல்லது அவை பற்றிய காலம், பின்னணி என்பவற்றின் ஆய்வுகளாகவும் இருந்தனவேயன்றி, நவீனமேல்நாட்டு இலக்கியங்களான சிறுகதை, நாவல், புதுக்கவிதை, நாடகம் போன்றவற்றோடு சம்பந்தமுடையனவாய் இருக்கவில்லை. இவர்கள் எழுதியவையெல்லாம் சங்க காலத்தில் இறை வழிபாடு', 'சிலப்பதிகாரம் கூறும் கூத்துவகை, திருவள்ளுவர் சமணரா? என்பவை போன்ற இலக்கிய விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவையாகவும் பழைய இலக்கியப் படைப்புகளுக்கு உரையாகவும் அமைந்தனவே ஒழிய, நவீன இலக்கிய விமர்சனத்தோடு ஒட்டுறவு ஏற்படுத்திக் கொண்டவையாய் இருக்கவில்லை.
இதே காலத்தில் இவற்றோடு சமாந்தரமாக, ஆனால் ஒன்றுக்கொன்று எந்தவித தொடர்பும் இல்லாது வளர்ந்து வந்த, முழுக்க முழுக்க தன்னை இலக்கியத்திற்கு அர்ப்பணித்த இலக்கியவியல் போக்கு முக்கியமான ஒன்றாகும். இக்குழுவைச் சேர்ந்தவர்கள் மேன் நாட்டு நவீன இலக்கிய வடிவங்களான சிறுகதை, நாவல், புதுக்கவிதை என்பவற்றோடு பரிச்சயம் உடையவர்களாக இருந்ததோடு நவீன மேனாட்டு விமர்சனப் போக்குகள் பற்றியும் அறிந்திருந்தனர். இவர்களுக்கு உதாரணமாக க.நா. சுப்பிரமணியம், சி. சு. செல்லப்பா ஆகியோரைக் குறிப்பிடலாம். மேலும் படைப்பிலக்கியத்தில் அதிகமாக ஈடுபட்டுக் கொண்டே விமர்சனத் துறையிலும் அக்கறை காட்டிய,
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 255

Page 139
இவர்களுக்குச் சற்று முந்தியவர்களான புதுமைப்பித்தன், கு.ப.ரா, கு.அழகிரி சாமி, பி. எஸ். ராமையா ஆகியோரையும் இதனோடு சம்பந்தப்பட்டவர்களாகக் காட்டலாம். -
மேலே குறிப்பிட்ட இரண்டு போக்குகளும் தனித்தனியாக இயங்கிக் கொண்டிருந்த இதே காலத்தில் படிப்படியாக தமிழ் இலக்கியத்திற்கு புதுமையான, இன்னொரு போக்கின் பிரவேசம் இக்காலத்தில் ஏற்படுகிறது. இது சகலவற்றையும் ஒரு கருத்தியல் பார்வை கொண்டு வியாக்கியானப் படுத்தும் புதுப்பார்வையை தமிழ் இலக்கியத்துள் ஊடுருவச் செய்கிறது. இதையே நாம் மார்க்சியவியல் பார்வை என்கிறோம். இதன் வருகையால் கல்வியியல், இலக்கியவியல் என்று தனித்தனியாகப் பிரிவுபட்டுக் கிடந்த இலக்கிய விமர்சனப் போக்குகளிடையே ஒர் இணைப்பும் ஊடாட்டமும் ஏற்படுகிறது.
ஏற்கனவே தனியாக கல்வியியல் இலக்கிய விமர்சனக் கோட்பாடு களோடும். இலக்கியவியல் விமர்சனக் கோட்பாடுகளோடும் தம்மை ஐக்கியப் படுத்திக் கொண்டவர்கள் எல்லோரும் இப்புதிய மார்க்சீயவியல் பார்வையை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இதனால் ஒருவித பாதிப்புக்குள்ளானதைக் காணலாம். இதன் செல்வாக்கு இளந்தலைமுறையினரிடையே ஒரு கவர்ச்சியை ஏற்படுத்துகிறது. கூடவே தனித்தனியாகக் கிடந்த இலக்கிய விமர்சனப் பார்வை அனைத்துக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்துவதிலும் வெற்றியடைகிறது. இப்போக்கின் ஆரம்பகர்த்தாக்களாக திரு. வி. க. பெரியார், பா. ஜீவானந்தம், அவர் தோற்றுவித்த தாமரை சரஸ்வதி இதழ் வட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள், குறிப்பாக தி. க. சி. சிதம்பர ரகுநாதன், பின்னர் கல்வியியல் பகுதியிலிருந்து வந்து புகுந்துகொண்ட வானமாமலை ஆகியோரைக் குறிப்பிடலாம்.
எது எவ்வாறாயினும் நாம் குறிப்பிட்ட மூன்று போக்குகளில், நாற்பது களின் ஆரம்பத்திலிருந்து எழுபதுகள் வரை இலக்கியவியல் போக்கே, மிகுந்த ஆளுமையுடையதாகவும் வேகம் பெற்றதாகவும் தனித்து மேலோங்கியிருந்ததைக் காணலாம். இப்போக்கிற்குப் பல மூட்டுவதாக சி. சு. செல்லப்பா 60களில் ஆரம்பித்து வைத்த எழுத்து சஞ்சிகை, விஜயபாஸ்கரனால் ஆரம்பிக்கப்பட்ட சரஸ்வதி இதழ் ஆகியவையும் இவற்றில் எழுதிய க.நா.சு, செல்லப்பா, தருமு சிவராமு, முருகையன், ஏ. ஜே. கனகரத்தினா, எஸ். பொன்னுத்துரை, கண்க செந்திநாதன், மு. தளையசிங்கம் ஆகியவர்களின் எழுத்துக்களையும் உதாரணமாக சொல்லலாம்.
அனேகமாக தமிழில் இலக்கியவியல் விமர்சனத்தின் ஆரம்பம் என்பது பட்டியல் போடும் விவகாரமாகவே இருந்து வந்தது எனலாம். இத்தகைய பட்டியல் போடும் விமர்சனத்தை க.நா. சு. அவர்களே செய்தார். அவர் பட்டியல் போட்டுக் காட்டிய விமர்சனங்களில் இடம் பெற்ற எழுத்தாளர்கள், கவிஞர்கள்,
256 நடராஜ தரிசனம்
 

பெரிய சிருஷ்டி கர்த்தாக்களாக ஒரு காலத்தில் கணிக்கப்பட்டனர். இதையே கனக செந்திநாதனும் இலங்கையில் செய்தார். இப்போக்கை அனுசரித்து தனது ஆரம்ப காலத்தில் க. கைலாசபதியும் தினகரனில் இவ்வாறு பட்டியல் தரும் விமர்சனங்களைச் செய்தார்.
இத்தகைய பட்டியல் போடும் விவகாரத்திற்கு அப்பாற்பட்ட, மேல்நாட்டு இலக்கிய விமர்சன முறையில் ஒரு சிறுகதையையோ, நாவலையோ அல்லது கவிதையையோ தனியாக எடுத்து விமர்சிக்கும் போக்கோ அல்லது ஒரு படைப்பை பல கோணங்களில் நின்று விமர்சிக்கின்ற விமர்சன முறையோ 60களில் இடம் பெறவில்லை.
ஆனால் இத்தேக்கத்தை உடைப்பதுபோல அறுபதுகளின் நடுப்பகுதியில் சிலர் எழுதத் தொடங்கினர். ஏ. ஜே. கனகரத்தினா மெளனி வழிபாடு என்றோர் விமர்சனத்தை சரஸ்வதியில் எழுதினார். சிறுகதை எழுத்தாளர் மெளனியைச் சுற்றியிருந்த வழிபாட்டைத் தகர்ப்பதுபோல் விஞ்ஞான ரீதியான புறநிலை நின்ற முறையில் இதை அவர் மேற்கொண்டார். இவ்வாறு இதன் பின்னர் பட்டியல் தரும் விவகாரத்திலிருந்து விலகி, சில இளந் தலைமுறையினர் விமர்சனக் கட்டுரைகள் ஆக்கரீதியான முறையில் எழுதினர். எழுத்து இதழில் கவிதைகள் பற்றி விமர்சித்துக் கட்டுரைகள் தொடராக எழுதிய பேராசிரியர் கனகசபாபதி குறிப்பிடக் கூடியவராவார். மேலும் தருமு சிவராமு, சி. சு. செல்லப்பா, வெங்கட் சாமிநாதன் ஆகியோரின் எழுத்துக்களும் குறிப்பிடத்தக்கவை.
இக்கால கட்டத்தில் இன்னோர் கலப்பை தமிழ் இலக்கிய விமர்சனம் சந்திக்கிறது. அதாவது கல்வியியல் துறையில் பழந்தமிழ் இலக்கியங்கள் பற்றிய திறனாய்வு மேற்கொண்டிருந்தவர்கள், மார்க்சீய தத்துவ போதம் உற்ற நிலையில் நவீன இலக்கிய விமர்சனங்களில் அக்கறை காட்டுகின்றனர். இங்கு வெறும் கல்வியியல் நோக்கில் இயங்கிவந்த விமர்சனம் மார்க்சீய அணுகுமுறைக்குள்ளாகிறது. இவ்வாறு கல்வியியல் விமர்சனத் துறையில் இருந்து மார்க்சீய கருத்தியல் நோக்கினால் ஆற்றப்படுத்தப்பட்டு நவீன தமிழ் இலக்கிய விமர்சனத்துறைக்குள் புகுந்தவர்களாக க. கைலாசபதி, கா. சிவத்தம்பி, முருகையன், வானமாமலை ஆகியோர் நிற்கின்றனர். இவர்கள் வழியில் ஆற்றப்படுத்தப்பட்டவர்களாக இவர்களின் இளந்தலை முறையினரான கே. எஸ். சிவகுமாரன், எம். ஏ. நுஃமான், மெளனகுரு, சித்திரலேகா மெளன குரு, சிவசேகரம், யோகராசா ஆகியோர் நிற்கின்றனர்.
புதிய போக்கின் வெளிக்காட்டலாக, கைலாசபதியின் ஆற்றுப்படுத்தலில் காவலூர் ராசதுரை 'தினகரனில் எழுதிய நாவலாசிரியர் வரிசையில் மு. வரதராசனார் என்ற கட்டுரை இப்புதிய பார்வைக்கு நல்ல உதாரணமாகும். அனேகரால் நாவலாசிரியராகக் கொண்டாடப்பட்ட மு. வ, நாவலாசிரியர் என்ற நிலையிலிருந்து கீழிறக்கப்பட்டு, வெறும் கற்பனாவாத, ஒழுக்க நெறிக்
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 257

Page 140
கோட்பாடுகளுக்குரிய கதைகளை எழுதினார் என்ற உண்மை இதன் மூலம் அம்பலப்படுத்தப்படுகிறது. இவ்வாறே க. கைலாசபதி தினகரனில் ஆசிரியராக இருந்த காலத்தில் அவரால் ஏற்படுத்தப்பட்ட விமர்சன அரங்கில் மேற்கத்தைய நாவலாசிரியர்கள் பலர் அறிமுகப்படுத்தப்பட்டனர். க. கைலாசபதி நாவலாசிரியர் ஜேம்ஸ் ஜொய்சைப் பற்றி எழுதினார். கா. சிவத்தம்பி அமெரிக்க நாவலாசிரியர் எஸ்கின் கோட்வெல்லைப்பற்றி எழுதினார். கே. எஸ். சிவகுமாரன் சார்ல்ஸ் டிக்சன்சைப் பற்றி எழுதினார். நாவலாசிரியர் தகழி சிவசங்கரப்பிள்ளை பற்றி இளங்கீரன் எழுதினார். இவை மார்க்சீயப் பார்வையின் வழி வந்த விமர்சன நேர்க்கை வெளிக்காட்டாவிட்டாலும் புதிய தேவை. பார்வை ஆகியவற்றின் வருகையைப் பறை சாற்றின. இக்காலத்தி லேயே க. கைலாசபதி, மகாகவி கண்ட மகாகவி' என்று பாரதியையும் தாகூரையும் ஒப்பிட்டு ஒரு கட்டுரைத் தொடரை தினகரனில் எழுதினார்.
இவ்வாறு கல்வியியல் துறையிலிருந்து நவீன இலக்கிய விமர்சனத் துறையுள் பிரவேசித்த க. கைலாசபதி, கா. சிவத்தம்பி ஆகியோரும் அவர் வழிவந்தோரும் மார்க்சியவியல் கோட்பாடுகளால் கவரப்பட்டு, அந்நோக்கில் தம் விமர்சனங்களை இக்காலத்தில் முன் வைக்கத் தொடங்கினர். பின்னர் க. கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோர் தமது விமர்சன முயற்சிகளை நூலுருவில் கொணரத் தலைப்பட்டனர். பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும், 'நாவல் இலக்கியம், ஒப்பியல் இலக்கியம் போன்ற க. கைலாசபதியின் நூல்கள் தமிழகத்திலும் பாதிப்பை ஏற்படுத்திய மார்க்சீய அணுகுமுறையைக் கொண்ட நூல்களாகக் கொள்ளப்படுகின்றன. கா. சிவத்தம்பியின் இக்கால கட்டத்தின் முக்கிய நூலாக தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் (1966) வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. இவரது மார்க்சீயப் பார்வையுடைய நூல் என்று சொல்லத்தக்கவை எழுபதுகளின் இறுதியிலேயே வெளி வருகின்றன.
அதேவேளை மேற்குறிப்பிட்ட க. கைலாசபதியின் நூல்களும் ஏனைய அவரது ஆக்கங்களும் பூரணமான மார்க்சிய தெளிவுடைய நூல்கள் எனக்கொள்வதுபற்றி கேள்விகள் எழுப்பப்பட்டன.
கைலாசபதியின் இலக்கிய விமர்சனம்பற்றி ஆய்வு செய்த தமிழ்நாட்டு விமர்சகரான தமிழவன், படிப்புரீதியாகத் தான் பெற்ற கோட்பாட்டுப் புரிதலில் பொஸிட்டிவிஸமும், விமர்சன முடிவுகளில் லூக்காக்ஸ் வழிவந்த சில பார்வைகளும் கைலாசபதியின் மார்க்சீயப் பார்வையாய் உருவாகியிருக் கின்றன. இவற்றிடையே நிறைய முரண்பாடுகள், இசைவின்மை போன்ற இவரது பலத்தைத் தாண்டிய காரியங்களாய் இவர் எழுத்துக்களில் நீக்கமற நிறைந்துள்ளன என்று தனது 'கைலாசபதியின் மார்க்சீயமும் பாஸிட்டி விஸமும் பட்டுக்குஞ்சமும் என்ற நூலில் குறிப்பிடுகிறார். இன்னும் வெங்கட் சாமிநாதன் தனது மார்க்சின் கல்லறையிலிருந்து ஒரு குரல் என்னும் நூலில்
258 நடராஜ தரிசனம்

கைலாசபதியின் மார்க்சீய வியாக்கினயாங்களில் காணப்படும் முரண்பாடு களையும் தெளிவின்மையையும் வெளிக்கொணர்ந்து உரத்த குரலில் கண்டனஞ் செய்கிறார்.
கைலாசபதிக்கு எதிரான இவ்விமர்சனக் குரல்கள் தமிழ்நாட்டில் எழுபது களின் நடுப்பகுதியிலும் அதற்குப் பின்னருமே ஏற்பட்டன. ஆனால் இக்குரல்கள் வெளியிலிருந்து வருவதற்கு முன்னரே, இலங்கையில் அறுபதுகளின் ஆரம்பத்திலேயே, கைலாசபதிக்கும் அவர் தலைமை தாங்கிய முற்போக்கு மார்க்சீய சித்தாந்த அமைப்புக்கும் அவர்கள் மூலம் வெளிவந்த மார்க்சீய விமர்சனத்திற்கும் எதிராக சில குரல்கள் கேட்கத் தொடங்கின. இவை நாம் ஏற்கனவே குறிப்பிட்ட, முழுக்க முழுக்கத் தம்மை இலக்கியவியல் போக்கிற்கு அர்ப்பணித்த ஒப்பீட்டளவில் இளந்தலைமுறையினரைச் சேர்ந்த எழுத்தாளர்களிடமிருந்து எழுந்தன. முதலாவது அவர்கள் அமைப்பிலிருந்து பிரிந்து போன எஸ். பொன்னுத்துரையினால் முன்வைக்கப்பட்டது. ஆனால் இவரது பார்வை நற்போக்கு என்ற பெயரில் விமர்சனம் என்ற வரையறைக்குள் அடங்காத வெற்றுவார்த்தையாடல் தாக்குதல்களாகவே அமைந்தது. ஆனால் இரண்டாவது எதிர்ப்புக் குரல் மு. தளையசிங்கத்திடமிருந்து எழுந்தது. இதுவே முக்கியமானதெனக் கொள்ளலாம். இது நாம் ஏற்கனவே குறிப்பிட்ட முழுக்க முழுக்க தன்னை இலக்கியவியல் போக்கிற்கு அர்ப்பணித்த இளந்தலைமுறையைச் சேர்ந்த மு. தளையசிங்கத்திடமிருந்து எழுந்தது. ஆனால் இங்கே நாம் ஒரு முக்கியமான வித்தியாசத்தைக் கவனிக்க வேண்டும்.
மு. தளையசிங்கம் இலக்கியவியல் பிரிவிலிருந்து விமர்சனத் துறைக்குள் பிரவேசித்தவராயினும் இவர் ஏற்கனவே இப்பிரிவிலிருந்த க. நா. சு, சி. சு. செல்லப்பா, தருமு சிவராமு, வெங்கட் சாமிநாதன், கனக செந்திநாதன், எஸ். பொன்னத்துரை, ஏ. ஜே. கனகரத்தினா ஆகியோரிலிருந்து தனது கருத்தியல்ரீதியான பார்வையால் வேறுபடுகிறார். இவர் 1961ல் தினகரனில் எழுதிய மூன்றாம் பக்கம்' என்னும் கட்டுரையில், க. கைலாசபதி தலைமை தாங்கிய இலங்கை முற்போக்கு எழுத்தாளர் அமைப்புக்கும் அதற்கு எதிராக பண்டிதர் சதாசிவம் தலைமையில் இயங்கிய கல்வியில் இலக்கியவியல் விமர்சன அமைப்புக்கும் இடையே நிலவிய பகைமையை களைவதற்கான வழியாக பரஸ்பரம் இரு அமைப்புகளுக்கும் இடையே இருக்கும் நல்லவற்றைப் பேணி தீயவற்றைக் களையவேண்டும் என்று எழுதினார்.
இப்பின்னணியில் பார்க்கும்போது க. நா. சு. சி. சு. செல்லப்பா, தருமு சிவராமு, வெ. சா. கனகசெந்திநாதன், எஸ். பொ. என்பவர்களை ஒரு அணியாகவும் க. கைலாசபதி, கா. சிவத்தம்பி, முருகையன், வானமாமலை அவர்களுக்குப் பின் அவர்களை அடியொற்றிய எம். ஏ. நுஃமான், சித்திரலேகா மெளனகுரு, சிவசேகரம், கே. எஸ். சிவகுமாரன் ஆகியோரை இன்னோர்
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 259

Page 141
அணியாகவும் கொண்டால் மூன்றாவது அணியாக நிற்பவர் மு. தளயசிங்கமே, இன்றைய நவீன இயங்கியல் தத்துவார்த்தப் பாஷையில் சொல்வதனால் முதலாம் அணியை Thesis ஆகவும் இரண்டாம் அணியை Anti Thesis ஆகவும் மு. தளையசிங்கத்திற்குரிய மூன்றாம் அணியை Syn Thesis ஆகவும் கொள்ளலாம்.
இப்பார்வையின் அடிப்படையிலேயே மு. த. தனது இலக்கிய விமர்சனக் கோட்பாட்டை ஒரு தத்துவார்த்த தளத்திற்கு வளர்த்தெடுத்துச் செல்கிறார். இவர் எழுதிய முற்போக்கு இலக்கியம்', 'ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி, விமர்சக விக்கிரகங்கள் ஆகிய விமர்சனத் தொடர்கள் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் அமைப்பின் தத்துவார்த்த வறுமையையும் தெளிவின்மையையும் சுட்டிக்காட்டுவனவாக அமைந்தன. அதன் பின்னர் இவர் எழுதிய போர்ப்பறை (1968), மெய்யுள் ஆகிய நூல்கள், இன்று நடைமுறையிலுள்ள மரபுரீதியான மார்க்சீயத்தின் போதாத தன்மையைச் சுட்டிக் காட்டியதோடு அதை நிவர்த்தி செய்யும் இனிவரும் பூரண நோக்குடைய தத்துவம் மெய் முதல் வாதம் என்றும் அறிமுகம் செய்கின்றன.
இன்றுள்ள கருத்துமுதல்வாதம் 'அன்பு, அகிம்சை, கடவுள், ஜனநாயகம், சுதந்திரம்' என்று பெரிதாகப் பிரகடனப்படுத்தியபோதும் அவற்றின் பேரில் மக்களைச் சுரண்டி முதலாளித்துவத்திற்கே குற்றவேல் புரிகின்றது என்றும் அவ்வாறே இன்றைய மார்க்சீயம் சமதர்மம்', 'மக்கள் புரட்சி என்றும் கூறியபோதும் உண்மையில் மக்களின் சுதந்திர வாழ்வுக்கு எதிரான தனியொருவனின் சர்வாதி காரமாகவே மாறுகிறது என்றும், ஆகவே இனிமேல் பொருள் முதல் வாதம் முன்வைக்கும் பொதுவுடமைக்கு எதிரான முதலாளித்துவத்திற்கு குற்றவேல் புரியும் கருத்துமுதல்வாதமோ, அப்பொது வுடமையை துரிதப்படுத்தும் உந்து சக்தியான கருத்து முதல் வாதம் வழிவந்த அகப்பண்பாட்டை நிராகரிக்கும் பொருள்முதல்வாதமோ இனிமனித வளர்ச்சிக்கு உதவப் போவதில்லை. ஆகவே இவ்விரண்டு பண்புகளின் இணைப்பைக் கோரும் போக்கே இனிவரும் தத்துவப் பார்வையாக இருக்கவேண்டும் என்றும் மு. தளையசிங்கம் கூறி, இதைக் கொண்டுவரும் புதுயுகத் தத்துவமே மெய்முதல்வாதம் என்கிறார். -
இவரின் மெய்முதல்வாத நோக்கில், இதுகாலவரை இருந்து வந்த கலை இலக்கியப் போக்கு கேள்விக்குள்ளாக்கப்பட்டு, மனிதனை உண்மையான புதுயுக வளர்ச்சிக்கு ஆற்றுப்படுத்த முயலும் புதுக்கலை இலக்கிய வடிவங்கள் முன்வைக்கப்படுகின்றன. இதை மு. த. மெய்யுள் என்கிறார்.
இவர் அறுபதுகளின் நடுப்பகுதியில் முன்வைத்த இச்சிந்தனைகள், இன்றைய பின் நவீனத்துவ கலை இலக்கியச் சிந்தனைகளோடு சமாந்தர மாகச் செல்வது இன்று பலரால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இக்காலகட்டத்தில் கருத்தியல் ரீதியான ஒரு கோட்பாட்டுப் பார்வையில், கலை இலக்கியங்களை விமர்சிக்க முயலும் போக்கு தமிழ் நாட்டில் இடம்
260 நடராஜ தரிசனம்

பெறவில்லை. க. கைலாசபதி, கா. சிவத்தம்பி போன்றோரால் மேற்கொள்ளப் பட்ட மார்க்சீய வழிநின்ற விமர்சனப் பார்வையும், தமிழ் நாட்டில் அறுபதுகளில் காலூன்றவில்லை என்றே கூறவேண்டும். க. கைலாசபதியின் நாவல் இலக்கியம், பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபடும், அடியும் முடியும், தமிழ் வீரயுகப் பாடல்கள் போன்ற நூல்கள் தமிழ் நாட்டில் ஏற்படுத்திய தாக்கத்தின் பின்னரே, இத்தகைய விமர்சன நோக்கு அங்கே கால்கொள்கிறது. இதன்பின்னரே வானமாமலை போன்றோர் மார்க்சீய விமர்சன நோக்கை தமிழ்நாட்டில் வலுப்படுத்துகின்றனர்.
மு. த. 1973ல் மறைந்ததன் பின்னர் க. கைலாசபதி, மு. த. வின் பார்வையைக் கேள்விக்குள்ளாக்குவதுபோல் மு. த. வின் இரண்டக நிலை என்ற கட்டுரையை எழுதினார். அதில் அவர் மு. த. பற்றி முன்வைக்கும் கருத்துகளுக்கு போதிய ஆதாரம் காட்டப்படாமை சுட்டிக் காட்டப்பட்டது. அதன் பின்னர் சி. சிவசேகரம் மு. த. முன்வைத்த பார்வையை விமர்சித்து மு. தளையசிங்கமும் மார்க்சீயமும் என்ற கட்டுரையை எழுதினார். இதன் அணுகுமுறை வைதீக மார்க்சியத்தை அடியொற்றியதாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் இலக்கியத் திறனாய்வு பற்றி க. கைலாசபதியும் முருகையனும் கூட்டாக எழுதிய விமர்சனம், மேற்கத்தைய கருத்துமுதல்வாதம் வழிவந்த விமர்சனமாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.
மு. தளையசிங்கம், க. கைலாசபதி ஆகியோரின் மறைவுக்கு பின்னர், எழுபதுகளில் இலங்கையில் கலை இலக்கிய விமர்சனத் துறையில் ஒர் வெற்றிடம் ஏற்பட ஆரம்பிக்கிறது. எனினும் எண்பதை ஒட்டிய காலப்பகுதியில் எம். ஏ. நுஃமான், க. கைலாசபதியைக் காப்பாற்றும் முகமாக, வெ. சா. எழுதிய மார்க்சின் கல்லறையிலிருந்து ஒரு குரல் விமர்சனத்திற்கு பதில் அளித்தமை, இன்னும் நுஃமான், மெளனகுரு, சித்ரலேகா மெளனகுரு ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து வெளியிட்ட இருபதாம் நூற்றாண்டு ஈழத்து தமிழ் இலக்கியம் (1979) ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும். இன்னும் கே. எஸ். சிவகுமாரன் எழுதிய கலை இலக்கியத் திறனாய்வு என்னும் நூலும் மு. பொன்னம்பலம் எழுதிய யதார்த்தமும் ஆத்மார்த்தமும் எனும் நூலும் குறிப்பிடத் தக்கவை.
ஆனால் தமிழ் நாட்டிலோ இதற்கு எதிர்மாறான நிலை இக்காலகட்டத்தில் ஏற்படுகிறது. எழுபதுகளின் நடுப்பகுதியிலிருந்து தமிழ்நாட்டில் புதிய இளந்தலைமுறையினர் வீறார்ந்த கலை இலக்கிய விமர்சனங்களில் ஈடுபடத் தொடங்கினர். இவர்களது கலை இலக்கிய விமர்சனங்கள் யாவும் மார்க்சீயப் பார்வையின் வழி வந்தவையாக இருந்த போதும், இவை மரபுவழிவந்த மார்க்சீய விமர்சனக் கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தன. இந்த நிலையில் இவர்களது போக்கு க. கைலாசபதி முன் வைத்த விமர்சன அணுகுமுறை களையும் கேள்விக்குள்ளாக்குவனவாக அமைந்ததே முக்கியமானதாகும். பழம்பெரும் எழுத்தாளரான கோவை ஞானியின் எழுத்துக்கள் இவர்களுக்கு
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 261

Page 142
ஆரம்பத்தில் ஒரு தூண்டுதலாய் இருந்திருக்கலாம் என்பதில் சந்தேகம் இல்லை.
இவ்வாறான விமர்சனந் தழுவிய புதிய செல்நெறிக்கு வழிவகுத்தவையாக எஸ். வி. ராஜதுரையின் அந்நியமாதல், எஸ்ஸிஸ் டென்ஷியலிஸம், தமிழவனின் ஸ்ட்ரக்ரசிலிஸம் ஆகியவை நிற்கின்றன எனலாம். மு. த. வின் நுல்கள் எவ்வாறு புதிய இலக்கிய அணுகுமுறையை அறுபதுகளின் இறுதியில் அறிமுகப்படுத்தினவோ அவ்வாறே மேற்குறிப்பிட்ட நூல்கள் தமிழ் நாட்டில் எண்பதுக்குப் பிறகு செய்தன. இதன் தொடர்ச்சியாக மேல்நாட்டறிஞர்களான ஃபூகோ, சசூர், பார்த், கால்வினோ, டெறிடா ஆகியோரின் எழுத்துக்களின் பாதிப்புக்கள் தமிழ்நாட்டில் புதிய ஆய்வுமுறைகளைத் தோற்றுவிக்கின்றன. மொழியின் சாத்தியப்பாடுகள் பற்றிய எழுத்துக்கள், இன்னும் நாகார்ஜுனன், ராஜ்கெளதமன், பூரண சந்திரன், அ. மார்க்ஸ், பா. வெங்கடேசன், பிரேம் ரமேஷ், ரவிக்குமார் ஆகியோரின் அமைப்பியல், பின்நவீனத்துவம் சம்பந்தமான விசாரணைகள் வெளிவருகின்றன.
இவற்றையொட்டி தலித்தியம் என்னும் புதிய கருத்தியல் விமர்சனம் மேலெழுகிறது. இவற்றொடு கை கோர்த்தவாறு பெண்ணிய விமர்சனம் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துக் கொள்கிறது. அ. மங்கை, வ. கீதா, அம்பை, பாமா ஆகியோர் இதனைத் தமிழ் நாட்டிலும் செல்வி திருச்சந்திரன், சித்திரலேகா, சூரியகுமாரி, தேவகெளரி, ஒளவை, மதுபாஷினி (ஆழியாள்) ஆகியோர் ஈழத்திலும் முன்னெடுப்போராய் உள்ளனர்.
எழுபதுகளின் நடுப்பகுதியில் முளை கொள்ளத் தொடங்கி, எண்பது களில் வீறு கொள்ளத் தொடங்கிய தமிழ்நாட்டின் புதிய எழுச்சிக்கு ஈடு கொடுத்தவராக இலங்கையில் பழைய க. கைலாச பதியின் பரம்பரையைச் சேர்ந்த கா. சிவத்தம்பிதான் நிற்கிறார் என்றால் அது ஆச்சரியத்துக்குரிய விஷயமே. இதை இவரின் இரண்டாவது வருகை என்றே நான் குறிப்பிடுவேன். இவரைவிட இளைய பரம்பரையைச் சேர்ந்தவர்கள் இன்னும் வைதீக மார்க்சீய எல்லைகளுக்குள்ளேயே சூழன்றுவர, இவர் வைதீக மார்க்சீயத்தின் போதாமைகளை உணர்ந்தவராய் கிராம்சி, அல்தூஸர், றேமன்ட் வில்லியம்ஸ், ஈகல்ரீன் என்பவர்களின் நூல்கள் தொடர்பான பரந்த வாசிப்பினாலும் தனது சுயசிந்தனை வியாபிப்பினாலும் மார்க்சிய விமர்சனத்திற்கு புதிய இரத்தம் பாய்ச்சுகிறார் என்றே கூறலாம். இவர் எழுதிய இலக்கியத்தில் முற்போக்குவாதம் (1978) ‘இலக்கியமும் கருத்துநிலையும்’ (1981) இலக்கணமும் சமூக உறவுகளும் (1981) மிக முக்கியமானவை. குறிப்பாக இலக்கணமும் சமூக உறவுகளும் மிக வித்தியாசமானதாக நிற்கிறது. இது தமிழ் இலக்கணத்தின் வழி சமூகத் தோற்றப் பாடுகளை ஆய்வு செய்யும் முயற்சியாகும். இவ்வாறே இவர் 1999களில் வெளியிட்ட மதமும் கவிதையும் நூல் இது கால வரை விமர்சன நோக்கிற்கு அப்பாலாக வைக்கப்பட்டிருந்த
262 நடராஜ தரிசனம்

சமயஞ் சார்ந்த கவிதை இலக்கியத்தையும் இலக்கிய விமர்சனத்திற்கு உட்படுத்தும் பார்வையை அழுத்துகின்ற புது உடைப்பாக நிற்கிறது எனலாம்.
எழுபதுகளின் நடுப்பகுதியில் முளைகொள்ளத் தொடங்கி, எண்பதுகளில் வீறுகொள்ளத் தொடங்கிய கலை இலக்கிய விமர்சனங்களுக்கு தமிழ்நாட்டில் தலைமை தாங்கியவர்களாக தமிழவன், அ. மார்க்ஸ், ராஜ்கெளதமன், நாகார்ஜுனன் ஆகியோர் முக்கியமானவர்களாக நிற்கின்றனர்.
இவர்களது எழுத்துக்கள் மார்க்சீய கலை இலக்கியப் பார்வைக்கு புது வலுவூட்டுவனவாய் உள்ளதோடு தலித் சிந்தனை வட்டத்திலும் பல புதுப்பாய்ச்சலை ஏற்படுத்துவனவாய் உள்ளனர். இவர்களின் விமர்சனத் துறைப் பிரவேசம், பலரால் இன்றுவரை புனிதங்களாகப் போற்றப்பட்டவற்றை உடைப்பனவாக எழுந்துள்ளன.
இவை இன்றைய அகப்புற வளர்ச்சியனைத்தையும் உள் வாங்கிய நிலையில் ஆழமாகச் செல்லுமானால் தமிழ் கலை இலக்கிய விமர்சனம் நல்ல விளைவு களை அறுவடை செய்யலாம்.
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 263

Page 143
ஆனந்த குமாரஸ்வாமியின் கலையும் வாழ்வும்
- வெங்கட் சாமிநாதன்
ஆனந்த குமாரஸ்வாமி தன்னுடைய தீவிர ரசிகரும் அபிமானியுமான, துரை ராஜசிங்கத்திற்கு எழுதுகிறார்; “வாழ்க்கைச் சரிதம் எழுதும் காரியத்தில் ஒரு நாளும் புகுந்துவிடாதீர்கள். நான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய விஷயம், என்னைப் பற்றி ஒரு போதும் நினைத்துக் கொண்டிருக்கக்கூடாது. என்னை ஒரு காட்சிப்பொருளாகவும் ஆக்கிவிடக்கூடாது என்பதுதான். வாழ்க்கைச் சரித விவரங்களில் என்னைப் பற்றியவற்றில், எனக்குச் சற்றும் ஈடுபாடு கிடையாது. பிரபலமான புகழ்பெற்ற மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றி எழுதிப் பிரசுரிக்கும் இக்காலத்திய நவீன நடைமுறை ஒரு நியாயமற்ற ஆர்வத்திற்குத் தீனிபோடும் ஆபாச நடைமுறைதான். நான் மறைவாக பின்னால் இருந்து கொள்வதையே விரும்புகிறேன். என்னைப் பற்றி எழுதப்படுவதைக் கண்டு நான் நன்றிகாட்டவோ, புகழுரைகளுக்கு மயங்கவோ மாட்டேன். இந்தியா கற்றுத்தந்துள்ள ஞானம் என்ன தெரியுமா? இதெல்லாம் அஸ்வர்கியம் என்பதே.”
மேற்குலகம் முழுவதும் இந்தியக் கலை, ஓவியம், சிற்பம் எல்லாவற்றையும் உதாசீனப்படுத்திவந்த காலத்தில், தென்கிழக்கு நாடுகள் அத்தனையிலும் பிரவாஹித்த ஒவிய சிற்ப வளத்தின் அடியோட்டமான ஒருமையையும் உட்பொருளையும் அவற்றின் கலை நியாயங்களையும் உணர்த்தி ஒரு திருப்புமுனையை உருவாக்கியவர் ஆனந்த குமாரஸ்வாமி. பின்புலத்தில் மறைவாக ஒதுங்கிக்கொள்வேன் என்ற மனிதர்தான், இந்தியக் கலைப் பொருட்கள் அவற்றின் வெளித் தெரியும் வடிவ ஒழுங்கினால் மட்டும் உயிர்த்திருப்பன அல்ல; அவற்றின் பின்னிருக்கும் ஒரு நீண்ட சரிதம், வாழ்க்கை நோக்கு, நம்பிக்கைகள், புராணங்கள், சடங்குகள் இவை அத்தனையின் ஒட்டுமொத்தக் குறியீடாக அவற்றைப் பார்க்க வேண்டும் என்றவர்.
இந்தியப் பண்பாட்டில், சரித்திரப் பிரவாஹத்தில், மனிதனின் அன்றாட தேவைப் பொருட்கள் அத்தனையும் கைவினையிலான கலைப் பொருட்கள் தான். அன்றாடத் தேவை, உபயோகம், வாழ்க்கை இவற்றோடு தன் உறவை துண்டித்துக்கொண்ட காட்சிப் பொருளாக என்றுமே அவை இருந்ததில்லை என்றார் ஆனந்த குமாரஸ்வாமி. வாழ்க்கையின் எந்தக் காரியத்திலும் கலைப்பொருட்களும் கலைப் பொருட்களும் அடங்க, அவன் தன்னை
264. நடராஜ தரிசனம்

அந்நியப்படுத்திக் கொண்டவன் இல்லை. அதை உருவாக்கிய, ஆனந்தம் அவனுக்கு இருந்தது. அவன் கைப்பட்டவை அவை. அதே சமயம், அக்காலத்தில் குழுக்களாக இயங்கிச் செயல்பட்ட நடைமுறை இருந்தது. எல்லாப் பொருட்களும் ஒரு குழுவினரின் கூட்டு முயற்சியாக, படைப்பாக இருந்தன. அதன் காரணமாகவே, இந்தியக் கலைப் பொருட்கள் அவற்றை உருவாக்கியவரின் பெயர் தாங்குவதில்லை. இந்தியக் கலைகளின் படைப்பாளி அநாமதேயனாகவே இருந்திருக்கின்றான் என்றும் அவர் கூறினார். பின்னால் வந்த கலைவரலாற்றாசிரியர்கள் இதை மறுத்துள்ளனர். அந்த மறுப்பு, முகலாய, ராஜபுதன் சிற்றோவியங்களுக்குப் பின்னர் நியாயம் பெறுகிறது. அப்பொழுதிலிருந்துதான் ஒவியர்களின் பெயர்கள் நமக்குத் தெரிய ஆரம்பிக்கின்றன.
புத்தருடைய பிரதிமைக்கு மூல உத்வேகம் தந்தது அப்போலோவின் பிரதிமைதான் என்று சொல்லி வந்த மேற்கத்தியகலை விமர்சகர்களின், கூற்றுகளை உடைத்தெறிந்தவர் ஆனந்த குமாரஸ்வாமி. அவர் முதலில் ஆராயத் தொடங்கியது, சிலோனில் அவரைச் சுற்றி நிறைந்திருந்த பெளத்த சிற்பங்களையும் முத்திரைகளையும். அவற்றின் தாத்பர்யங்களை அறிய, நாட்டிய சாஸ்திரம் படித்தார். நந்திகேஸ்வரரின் அபிநய தர்ப்பணம் படித்தார். படித்தால் போதுமா, மயிலாப்பூர் கெளரி அம்மாளிடமும் இன்னொரு நர்த்தகியிடமும் (பெயர் மறந்துவிட்டது) பரதநாட்டியம் பற்றிப் பாட ஆட, அபிநயிக்கவும் கற்றுக்கொண்டு, பின் அதை Mirror of GeStures என்று மொழிபெயர்த்தும் வெளியிட்டார். அதுதான் உதயஷங்கருக்கு உத்வேகம் அளித்த, புதிய பாதைகளைத் தரிசிக்க வைத்த புத்தகமும் ஆயிற்று. புத்தரின் தியானப் பிரதிமை, காந்தரச் சிற்பங்களுக்கு முந்தியது. புத்தரின் அமர்ந்த யோகபாவம் இந்தியாவில் அதற்கு முன்னிருந்தே வழங்கிவந்த யோக சாஸ்திரங்களிலிருந்து பெற்றது. மனத்தை ஒருமைப்படுத்தி ஆழ்ந்துகொள்ள யோகபாவம் உகந்தது எனவும் இந்திய மரபுவழி ஞானம் அதன் ஊற்று எனவும் ஸ்தாபித்தார். ராஜஸ்தானி சிற்றோவியங்களின் ஒவ்வொரு சின்னச் சின்ன விவரங்களையும் அதன் பின்னிருந்த சமூக சடங்கார்த்தப் பின்னணிகளையும் ஆராயும் ஆனந்த குமாரஸ்வாமி, ராகமாலா, தொடர் ஓவியங்களைப் புரிந்துகொள்ள சங்கீதம் கற்க ஆரம்பித்தார். இதன் விளைவாக ஒரு சம்பவத்தைக் குறிப்பிட வேண்டும்.
1912 இல் ஒரு கலை இரவுக்கு ஏற்பாடு செய்தார் குமாரஸ்வாமி. இதில் பஞ்சாப், காஷ்மீர் போன்ற இடங்களில் பாடப்படும் பாடல்களை வைத்து ஒரு சங்கீதக் கச்சேரி நடந்தது. ரத்தன் தேவி என்று பெயர் மாற்றிக்கொண்ட அவரது ஆங்கிலேய மனைவி தம்பூரா வாசிக்க, ஆனந்த குமாரஸ்வாமி பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து விளக்க, அப்பாடல்கள் பஹாரி, ஜோக், சம்பா பஹாரி, பேகாக், பிருந்தாவன சாரங், தர்பாரி கானடா,
திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழா மலர் 265

Page 144
மால்கோன்ஸ் ராகங்களில் பாடப்பட்டன. இதைப்பற்றி ஜார்ஜ் பெர்னார்ட் ஷா, ரவீந்திரநாத் தாகூர், டபிள்யு. பி. யேட்ஸ் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். இதைப்பற்றி யேட்ஸ் சொன்னது மாத்திரம் இங்குத் திரும்பச் சொல்லப்படலாம். அது, அதிகமில்லாத காரணத்தால்.
“திருமதி குமாரஸ்வாமி அன்று பாடியது எனக்கு மிக்க மகிழ்ச்சி அளித்தது. வாழ்க்கையின் ஒரு கணம் சட்டெனத் தீப்பற்றியது போல, ஒர் உணர்வு தன் இயல்பில் பூரணத்துவம் பெற்றது போல. பாதையோரங்களில் மக்கள் இப்படி பாடியிருக்கிறார்கள் அல்லது வயல்வெளிகளில், அது ஒரு கலை அல்ல; அதுவே வாழ்க்கை என்று சொல்லும் அளவுக்கு, அது ஒரு பரிபூரணமான கலை என்று தோன்றுகிறது.”
அக்காலங்களில் சங்கீத விமர்சகராக, பத்திரிகைகளில் எழுதிக்கொண்டிருந்த பெர்னார்ட் ஷாவின் கருத்துக்களை, தமிழில் எழுதுவதற்கு, மேற்கத்திய சங்கீதத்துறை மொழியில் சொல்வதற்கு, எனக்குத் தகுதி கிடையாது. ரவீந்திரநாத் தாகூர் எழுதுகிறார்; “கீழைத்தேய இரவு ஒன்றின் மகத்தான அனுபவத்தில் என் மனம் ஆழ்ந்துவிட்டிருந்தது. இரவின் அந்தகாரம் தெரிகிறது. ஆனால் அதன் அளப்பரிய விஸ்தாரமும் ஆழமும் இந்தியப் பெண்மணியின் கண்களைப் போன்று உள்ளது. அதன் அமைதிக்கும் நக்ஷத்திரங்களுக்கும் இடையே நான் தனித்திருப்பதாக உணர்ந்தேன்.”
இவ்வளவு தூரப் பயணத்திற்கு, சங்கீதத்துறைப் பயணத்திற்கு, ராஜபுதன, ராகமாலிகா சிற்றோவியங்கள் ஆனந்த குமாரஸ்வாமியை மாத்திரமல்ல அவரது மனைவியையும் இழுத்துச் சென்றுள்ளன.
குமாரஸ்வாமியின் ஒரு புகழ்பெற்ற ட்டுரை, சிவ தாண்டவம், அதை விளக்கப் புகுந்தவர் திருவாசகம், உண்மை விளக்கம், சிதம்பர மும்மணி மாலை, திருமந்திரம், கோயில் புராணம், சிவபிரதோஷ ஸ்தோத்திரம், கதாசரித சாகரம் மற்றும் பலவற்றிலிருந்து மேற்கோள்கள் காட்டிச் செல்கிறார். “இதன் புராண, இலக்கிய, தாண்டவ முத்திரைப் பின்னணிகளை மாத்திரம்தான் இதில் சொல்லிச் செல்கிறேன். இதன் கலை அழகுபற்றிய விளக்கம் ஏதும் கொடுக்க முடியவில்லை” என்றும் சொல்லிக்கொள்கிறார்.
ஒவ்வொரு கலைப்பொருள் பற்றியும் இவ்வளவு விரிவாகவும் ஆழ்ந்தும் சொல்லிச் செல்பவர், தன் எழுத்துக்களே போதும் என் வாழ்க்கை விவரம் தேவை இல்லை என்று சொல்கிறார்.
அவரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளும் வாழ்க்கை விவரங்கள் வேடிக்கையும் புதிருமான விஷயங்கள்தான். அந்த மனிதரா இத்தகைய ஈடுபாடுகளில் மனதார, தன் வாழ்க்கையைச் செலவிட்டு மகத்தான செயல்பாடுகளையும் சிந்தனைகளையும் வெளிப்படுத்தியுள்ளார் என்று வியக்கத் தோன்றும்.
266 صبر நடராஜ தரிசனம்
 

లక్ష్యశస్వి.
ഗ്രിസ്തൂ
కొక్యొకణా

Page 145


Page 146
இ
ఛః
பாலைவனமாய்க் கிடந்ததைப் பதப்படுத்திய பின்னர்.
பசுமையாக்கிய விந்தை
 
 

ம் தாமரைத் தாடகமும்
சியு
6T TIL
கவின் பெற நிறுவிய கல்வித் தாயி
ġ
ர் புறோனோவுடன்
ல் GTZ ஆலோக
ட்டியி
ர் போ
ந்த மெய்வல்லுன
வருடாந்த
271

Page 147
பரிசளிப்பு விழாவில் (1999) யாழ். பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை அவர்களுடன்.
கல்லூரி அரங்கைக் கனதியாக்கும் காட்சி
272
 
 

பரிசளிப்பு விழாவில் பவனி வருகையில்.
273

Page 148
27.4
ஜேர்மன் தொழில்நுட்ப அதிகாரிகளை அழைத்து வருகையில்.
 

பேராசிரியர் அ. துரைராசா நினைவு தினத்தில் உரையாற்றும் போது.
2.75

Page 149
278
கனிஷ்ட மாணவர் தலைவர்களுடன் (2001-2002)
கல்லூரிப் போக்குவரத்துக் கண்காணிப்புப் பிரிவினருடன் (2000-2001)
 
 

கல்லூரிச் சாரணர் குழுவுடன் (2000-2001)
கல்லூரிக் கிரிக்கட் குழுவினருடன் (15 வயதுப் பிரிவு 2001-2002)
277

Page 150
கல்லூரியின் கரப்பந்தாட்ட 17 வயதுப் பிரிவினர் வலய மட்ட வெற்றிக்கிணத்தைச் சுவீகரித்தபோது (2002)
பாடசாலை அபிவிருத்திச் சங்க நிர்வாகக் குழுவுடன் (2001-2002)
278
 
 

279
珊
–1
四cm
5절통
四叫h
*Qに包 榭----仰 戀རྐོ་衢D 戀低D-脚 仰禮
颂)cm
驱旧L
历
卧旧
暗氏
•■=
卿민표
历통
仰邮
q市山
酬哪
·翻...
•)
E
கலலூ

Page 151
28 O
தனது மாணவர் ஒருவரின் நூல் அறிமுக விழாவிற்குத்
தலைமை தாங்கும் போது
 

றி ৫) M cap சம்பவத் திரட்டுப் புத்தகத்திலிருந்து.
{{ کو سعی کروڑ Sο *幻 1 وصاله لأوانين وي ഴപ്പ نمودار سال تو \ pوتے 。 = 6C22_۵۔ جr\۔o %
- ../.Uતી استنبول هفتگانه نه زیر به این سبب بهره مه) است و مها6 روم (به ۱- اگر به رنوار)
A. روم رہ:ہور ماترمیم AG{کا روبہ دسمبر ފޯހމހ () ފިޒިއلا{ ހީ ' بسیط کا مطلA@).مکالمہ ہوتدبر... ویلہ / gڑھ جامع (مثلا اگر ص>^یم ہندس JJAS SJASAi DDS SS S SSAAAA S M SSuASAAAA AS SJh t AAAA S س?iiھی انفل رکاوٹیں!GYخمی ہوتے ہیٹ 2 coھی __ یہ 1 کا گول ممبر 12 جمالخط کے
* ?ー一ーキー。
ふs e。○ リーへのイ **ー"
JSASA A SS AAAA S TTT TT A S qA S MT AiSquiye AhA
° ਰd. / تکب مجھےG,\السi{ )( '_+ండి
రE0% జీతం ఈ سھلیمj \\ہ مسeنسو آسیب
ഒ: ملہ طلسم ساحہہ لیتی شمسی ک;\ہہ' getes-** s @リ
SiuuA u AS SyyASAu AeieAehA S SSS S eA AAAA S SASASA ASL MehS MMAqA AA ySSS A AAAA A S S ASA A AS S
---- ..........داما n میکنالوجی) نے 2چھ بتر (آیت 6 نو سوویت ہےبیبیسی
" !! باطل‘‘ کا موسیڑھ مسترہ لیتے ہیں، وکی پہ ہر جوہریں
σει విగ్రgnగగ్ర -- -- -- ܓ -- -ܝ ܝܝ ;%8:محصےC .......... ---«مجہ YS SAAAAAS eeS STs S S SrA A AS MMM u S SS S JSJS c - - d ރެޕީޒް<. - - - - - - ہوتا کیڑے پہلی بیوی دیکھ01_ سید سیجی(یو. وي يوه مي د63 كا0تره ਨੇ --21-212 బి-బీదరికత 24.5%
(چنان است ...).
وہ دوسروں کی عسکری کی کہ وہ لہم A پڑی __ یہ لوح وہ
.92ة--!>ޕަލްސް 。 | 26స్క్రీఃگbیخ**.)\,,5
()
.O3 الروك وي A. کرو)nچک (r_م% ۔ ۔
يؤدى إلماموث، ܠܐ 影 ہے صیہونی نظریہ چاہیے لازیو|\......... ۔لہ، حیدر آسلاۃ - - - - —်း၏ ငိ့မ္ဟ - υ - Rica * ف - - - - - - - - - 一ーリ A. g. ینیک) {>____ لہو ں\/ :مد - بطول) كينج ب يهوه والاجN (Old KSY
భ
|-ey M t 0YS S S S MMSYYJJA SAAAAS ဇူားt့2.ကို အီး ၆၂ ့၂ 

Page 152
YJJSA AAM SSAAAS ASASqSuSuSuS eTTM TT SMMMe
പ്രേരിട്ട്? பிர, 29தேதிராகக் கி*ைஅ കെnം?-് (9-ം മറ്റ്ഷക്ക് ക്രട്ട ശത-B5 நி3) പട്ടി () <(൫-« G (Tഠ??6 MSMSTT0MMAA AA MSAJSAh uhAAe eMeA Ah hehAJS
S ATyye AA TAAS AAAAA AA AAM CMTMAhAh TTMTMT A AhhAhShS
r_(2).1e →ഴ്ച 6ഞു് 23&റഞ്ഞ میری سے سسہ بھی . ഭക്ത മക --് ദ قي يع الكميه برودة سلبيةTC2 ترx 322%? ہوگانه بودهھی؟ : 'جي ترےين ڼ په
• 2رازة (ކީ، ތު6 قیام، خ وقلبرٹ برابرഭൂഷ്യ , (برای الگوی அஆற்சிெறட.ே • - ܗܝ ܗܫܟܚܘܝܚ------------
*]'\9-9)( ).(- | تیه / لا گزاری لا ن و بیبیسی rgariلگوریتم
.ழு:':
. ༢༦.་ مجھے یہاں وجہ اول لیوپیتھکx1' ہے. یہ خوتین کی r ی بڑی وجہt': _Unمیجر و روسی _േട്ടയ്ക്കേ 3708 2/(?:
- .." :هاميتيست" - * " " " 三%ぶエヘ/wwんö . ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔
سرزمین پی (27 سچے (اگر ہمساتھ وہ روم ہوJہ پر پیر(تص>
- - .. . ܝܝ ܝܝܝܝ ܕܢܝܚ
64 4 نناUl فانی صدرا ی غایی که 4 grt لویی بر عه
19/ಜೂಲ. _థ్రెFTAT
- لىbAع < xn لمهته.. ਘ A g2,24) A) గణిణాణిత
سم2 6 يجيه " وج"&_/
ونF2 په ده چي علومېږه(التوzaque à პაჩი7°°7'' S STyyyyyySZSyyySSYYSZSYSSy STS
靈 ഗ്ഗ, ഗ്നു - -' 'ನ್ತಿ?'
。”*** N 1 δίνο, ηܙ
外AT ქAუ` , !“ ربط ھاتھ ہی { ) - ( ليكلچه
吹光ら /0 ぬ2/m 3-** 8 پيل ويل چي ده: *%*臀 48% 2一A^久°  ിj', 码氰*
1)
2ー*
282
 
 
 
 
 

2-02. NAG 5, whip, he has േ ܗ ܢ ܗ ܝ ܓ ܝ مكي)ޖ^{^/)///,/%/ "!"(?މަ1ް ,Vy, ... (Apx\/w//f/gpn_v/ysh_ f/L . .
- - - - - - - - 嵩 portáý?...7...?' واژه .Val /سوسیال Kತ್ತಿ? á n് (l
چچاہور ہو 9
%'); އ7ބޯ//, ീഴ്ക് ിrg ? 'll /(%്/rൈ () ; (/ (Czá,
all tely ടൂ, // fല്ല ന്യു . - - - - - ರಾ? m?94 リ 3.T.
'; br/ lf ) { ി. (je! ?-/, '/
So, 7ó, %
 ീഴ്ക fr' : left
7:႕ႏွံ႔ 7,"്, 4-6, /&ޕޯޒިޣަޒީ
፨\ --
○ぶ*/* 4 و برای زیر.(.
བོད་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ ) e s༽ ༨.ད། 3 : ܐܲܒ݂ܗ̇ ܠܗܸr¬wssܬܐ ܢ ܛܥܝ ܥ ܢ ܐܢ݈ܬ݁ܬ݂ܶܗ ܡ݂ܘܥ
)No.(SN 1 ↓ܘܼ\)2A[ܮ------------ܝܬU 1
283

Page 153
3 ஆண்டுகள் :ஜக்ேக உடுப்பீட்டி அமெரிக்கன் ஷேண் xல்ஜtண் ஆதி:கச் சிறப்புறப் பணியாற்றிய கிருஷ்ணபின்னை 莎鑫r禽r系是一簇 絹29線為劉羨劉 சேவையிலிருந்து ஓய்வு :ெற்றிருக்கிறார். 197 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் திகதி இக் கல்லு
ஒன்றரை ஆற்றாண்டு 8:க ஐ.டுப்பிட்டி பில் அறிவு 68ர்த்த &ன்ஐசியை மீனக் கட்டி யெழுப்பிய பெருமைக்கு உரியவராவார்.
ក្លងខ្លភិវិធៈឆ្នាតធំ, ផ្ននៃនា, ... ឱ.
பட சகல கட்டிடங்களும் கடந்த 1987 ஆம்
ఎజ్ఞ్కణr()ఖజిభఖ tఖ్యth #&# (ప్ర్రాపః ఓ.ఘf
భశఖ thభశ భశ్ర{{4భః
而
| 591 jồLLÍ QUİIGI
}థ
}}}##' ఓ ఓ .భf ## భణిభ? #f గ్రత్తీ ఇక్షణాభః
భrt. (3) భి{#####ఫ్లూ ఫః அமைக்கப்பட்ட கெட் 1.கைகளிலும், அ8 ல் ఇ*$4% భశీ జ్ఞా !# {... భౌగో
జ్ఞ#####1_{{{9} நடத்தப்பட்டு வந்தன.
இந்த நிலையில் 1997 இல் பதவியேற்ற நட
ராஜ கல்லூரிக்குப் புத்துயிர் தந்தார். ஐ.டி. இசட் (ஜேர்மன் அரச கார்பற்ற :ண்ஐ) முத yytT TmmO OT Te OeS SY eO m m m m OOO OOOO OOS கம், :டசா:ைவிருத்திக் &கம் ஆ:ே 3ற்றின் ஆதரவுடன் பு: கட்டிடங்களைக் கட்டு லித்து மீண்டும் இல்லு: பழைய #భఖణీత్ర* పశిrభh() ఖjgభఇrభ తీణిజి #భjpభ£1. ఓ. ఇశీణిథబ్దffశత్రి తీt.j్వజిబిజి அக்டோபரில் முன்னால் நீதியரசர் சி.வி. விக் ee ee ee OO S SS OOOO T Y C y கொண்டு 30 ஆவது ஆண்டு திறைவு லீழ வையும் சிறப்பாக நடத்தி வைத்தார். இன்று இக்கல்ஜrயில் ஜூ:ைகல்விதிஜ:கன் భశ? ??? భ' (శిఒస్ట్ర భథxణిఖః హౌస్లో ఓ భగ్ ఫ్రభgth &####భశhడ్సభ
វិស្វេឌា..ក្លអ៊ែនស្ទែ.
28.01.2006 வீரகேசரியில் திரு. கி. நடராசாவின் ஓய்வு குறித்து வெளியாகிய செய்தி
284
 
 
 
 
 

2012.2005 உதயன் பத்திரிகையில் வெளியாகிய சேவை நலன் பாராட்டு விழா
சிறப்பு மலர்
285

Page 154
G.S. E.g. அமெரிக்கன் 16:ன் கல்லுரி អព្ភន្តេ ថ្រានៃខែឆ្នៃ
திரு. கி. நடராசா எழுதிய கல்லூரி வரலாற்றுச் சுருக்கம் 150 ஆண்டு மலரில் வெளியாகியது. கல்லூரியைப்
x : :'ളു്' :%;};
பொறுத்தவரையில்
8Çää?ಹೆಜ್ಜಳ್ಲ: இது முக்கியமான
ஒரு வரலாற்று ஆவணம். அதன் ஒரு பகுதி
கல்லூரியின் 150ஆவது ஆண்டு මුල්දින කවරය
நிறைவையொட்டி lygisi) Birgit p. 699. First Day COVER வெளியிடப்பட்ட முத்திரையும் முதல் நாள் தபால்உறையும் இதில் திரு. கி. நடராசா அவர்களின் பங்கு அளப்பரியது.
උඩුප්සිඩී ඇමරිකානු ෂීෂන් වීදුහලේසු ZS MTS SS S S A TtmmyS eeSO OmO OyO S J OyMMtm Uduppiddy American Mission College
286
 
 
 
 
 
 
 

* திரு. கி. நடராசா அவர்களின் மணிவிழாக்காலத்தையொட்டி அவரது சேவையைக் கெளரவிக்குமுகமாக கல்லூரியின் 2007 கலைப்பிரிவு மாணவர்களால் வெளியிடப்பட்ட
கையடக்க நாட்காட்டி
சங்கத்தில் தென்பொதிகை மன்றத்தில் தவழ்ந்த தமிழ்மகளின் பெரும்புகழ் எங்கும் எழில் மணக்கச்செய்த ஏந்தலே உங்கள் காலத்தில் தான் எங்கள் கல்லூரி மாமல்லபுரப்பாறைகளாய் உயிர் பெற்றெழுந்தது.

Page 155
而
ந்து வெளியிட்ட
别名 心 團邨 隔叫 研田 隐晦 断脚 珊珊 활 환 ..내 CED 脚踝 ) 加哥 化型 历 叫 思翻 mm ·통 晒心 脚吧 翻,鄂 甄翻 邝 =* L 历L
திரு. கி
288
 
 

J/Uduppiddy American Mission College
Principals
O4.01.1852 Francis O.S. Good 1862 - 1871 J. V. Simith 1872 - 1879 P. Sickerry 1901 - 1904 Mr. P. C. Christian 1905 - 1907 Mr C. Newton
Rev. J. H. Dickson 1908 Rev. W.E. Hichcock 1911 - 1917 Mr. V. K. Sinnathamby 1917 - 1931 Not Available
1932 - 1936 Mr. S. K. Rasaiah 02.01.1936 - 31.10.1955 Mr. K.T. Jhon
O 111, 1955 - 31.12 1970
O1.01.1971 - 31.12.1971
O.O. 1972 - O 107.1972 O1.08.1972 - 31, 12.1973
O3.01.1974 - 30.04.1974
O 105.1974 - 01.06. 1974 01.07. 1974 - 30.09. 1975 O.O. 1976 - 31.12.1977
O1. O.1978 - 31, 12.978
O1.10.1979 - 24.10.1988
25.10, 1988 - 15.11, 1991
16.11.1991 - 31.01.1992
O 1 O2, 1992 - 12.05.1996
13.05.1996 - 08.06, 1997 Osob, 1997 - 19.12.2005 20. 12.2005 -
Mr. S. Sellathurai
Mr. S. Navaratnam Robert
Mr. T. Ahbiraharm Mr. R. Singaratnam Mr. K. Gunaratnam
Mr. Pon Ganeshan
Mr. K. Navaratnam Mr. R. Mayilvaganam Mr. S. Vinayagamoorthy Mr. N. Satchithanantham Mr. K. Sithamparappillai Mr. V. T. Selvaratnam Mr. N. Anantharajah Mr. S. Thillaiyampalam Mr. K. Nadarajah
Mr. K. Tharmalingam
Prepared by Mr. K. Nadarajah
289

Page 156
நன்றி
இம்மலரை இனிதாய் வெளியிட ஆதரவும் ஆலோசனையும் அளித்த கல்லூரி அதிபர் க.தர்மலிங்கம் அவர்களுக்கும் ஆசியுரை வழங்கிய சமயப்பெரியோர்களுக்கும் வாழ்த்துச் செய்திகளை வழங்கிய கல்வித்துறைசார்பெரியோர்களுக்கும், மாணவர்களுக்கும் ஆய்வுக்கட்டுரைகளை வழங்கிய பேராசிரியர்கள், கலாநிதிகள், விரிவுரையாளர்கள், எழுத்தாளர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நாடகம்- அரங்கியல், செந்தமிழ் வளர்த்த செம்மல்கள், திறனாய்வு சார்ந்த சில பார்வைகள், கலையுலகில் ஒரு சஞ்சாரம் ஆகிய நூல்களின் ஆசிரியர்களுக்கும் ஞானம், ஆற்றுகை முதலிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களுக்கும் நிதி உதவியினை வழங்கிய கல்லூரி பழைய மாணவ சங்கக் கிளைகளின் உறுப்பினர்களுக்கும், வர்த்தகப் பெருமக்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் மலராக்கத்தில் உதவிய சக விரிவுரையாளர்கள் மல்லிகாதேவி நாராயணன், அஸ்மியா பேஹம் ஆகியோருக்கும், நண்பர்கள் பஞ்சலிங்கம் பார்த்தீபன், தேவராஜா ஜெகன், சிவஞானம் ஞானரஞ்சன், ஷெரின் ஜோன்சன், பிரசன்னா நாராயணன் ஆகியோருக்கும் எனது சகோதரிகளுக்கும் மலராக்கத்தில் முழுமனதோடு எனக்கு ஒத்துழைப்பு வழங்கிய கல்லூரியின் பகுதித் தலைவர் ஆ.விமல்ராஜ் அவர்களுக்கும், மணிவிழாக் குழு உறுப்பினர்களுக்கும் இம்மலரை அச்சுக்கலையால் அழகு செய்த யுனி ஆர்ட்ஸ் நிறுவனத்திற்கும், நிறுவன அதிபர் திரு. பொன் விமலேந்திரன் அவர்களுக்கும், அலுவலகர்களுக்கும் மலராசிரியராக என்னை அமர்த்திய கல்லூரிச் சமூகத்திற்கும் இவ்விதழ் சிறப்பாக வெளிவர ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும்.
இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
LDGIDIT IT élńfluUńr செல்லத்துரை சுதர்சன் தமிழ்த்துறை பேராதனைப் பல்கலைக்கழகம்
 


Page 157
DESIGNEB & PRINTED BY UNE ARTs
 
 

(PVT) LTD COLMBO 13, TEL: 2330495.