கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நினைவுள் மீள்தல்

Page 1


Page 2

SK
པ། ゞー*へ2&c〜こ。そム
*/- 1.

Page 3


Page 4

Og | 莺 - الم
நினைவுள் மீள்தல்
தானா விஷ்ணு
மீளுகை 2

Page 5
நினைவுள் மீள்தல் தானா விஷ்ணுவின் கவிதைகள்
முதற்பதிப்பு
டிசம்பர், 2003
பதிப்புரிமை
தானா. விஷ்ணு
வெளியீடு
ississos 2 இமையாணன் கிழக்கு, உடுப்பிட்டி
அச்சுப் பதிப்பு அந்திவானம் பதிப்பகம், புதுக்குடியிருப்பு முகப்பு ஒளிப்படம் தி.தவபாலன் (சுடுமண் சிற்பம் - ஆனைவிழுந்தான்) வடிவமைப்பு
கருணாகரன்
ஓவியங்கள்
சித்தாந்தன் ஒளிப்படங்கள்(தானா. விஷ்ணு) அமரதாஸ்
விலை esuit.75.00

யுத்தத்தின் கொடூரத்தால் சாகடிக்கப்பட்ட
குழந்தைகளுக்கு

Page 6

பன்முகவெளியில் தானா. விஷ்ணுவின் கவிதைகள்
தானாவிஷ்ணுவின் கவிதைகள் ஒரு மையப்படுத்தப்பட்ட கட்டுக்குள் நின்று இயங்கவில்லை, கவிஞன் தன்னது அனுபவங்களையோ அல்லது இன்னொரு அனுபவத்தை உள்வாங்கியோ கவிதை எழுதும் போது அவனது இயங்கு தலானது பன்முகப்படுத்தப்பட்டதாக அமைய வேண்டும். ஒரு படைப்பின் தார்மீகம் என்பது அப்படைப்பினுடைய மனச்சாட்சி சார்ந்ததாகும். ஒரு படைப்பில் படைப்பாளியினுடைய மனச்சாட்சி வெளிப்பட்டேயாகும்.
தமிழ் கவிதைப் பரப்பு பரந்த தன்மையானது. அது ஒவ்வொரு காலகட்டத்திலும் தனக்கான இயங்குதலில் சரியாகவே செயற்பட்டுள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும் அதனது இயக்கம் தீவிரமாக நிகழ்ந்திருக்கிறது. சங்க காலம் தொடக்கம் பல்லவர், சோழர் எனத் தொடர்ந்த காலங்களில் அவற்றின் இலக்கிய வளர்ச்சி இயக்கங்களாக அக் காலப் புலவர்களாலும் நாயன்மார்களாலும் வளர்த்தெடுக்கப்பட்டி ருக்கறது. எங்களுடைய சமகாலத்தரில் இதற்கான

Page 7
08 தானாவிஷ்ணு
எந்தவிதமான சாத்தரியப் பாடுகளும் நகழிந்ததாகத் தெரியவில்லை. கவிஞர்கள், எழுத்தாளர்கள் தனித்தனிக் கூறுகளாக அல்லது ஒரு சஞ்சிகையை அல்லது பத்தரிரிகையைச் சார்ந்த குழுக்களாகவோ தானி செயற்படுகணிறார்கள், LJ6) கவிஞர்களுக்கோ படைப்பாளிகளுக்கோ சமகாலத்தில் யார் யார் எழுதுகிறார்கள் எனபதோ அவர்களுடனான அறிமுகமோ இல்லை. இந்நிலையில் கலை இலக் கரிய செயற்பாடுகளை சமுகத்தினுடைய தேவை சார்ந்தும் அக்கறை கருதியும் ஒரு இயக்கமாக செயற்பட்டு முன்னெடுத்துச் செல்வது என்பது எப்படிச் சாத்தியமாகும்!
இந்த இடத்தில் எமது படைப்பாளிகளில் பலர் அடிக்கடி கூறிக்கொள்ளும் ஒரு சாட்டினை நினைவுறுத்துகின்றேன். படைப்பாளிகள் கொள்கை, கோட்பாட்டு ரீதியில் மாறுபட்ட கருத்து நிலையுடையவர்கள். இதனை எவரும் மறுப்பதற்கு இல்லை. ஆனால் சமுகத்திற்குத் தேவையான சமுகத்தின் மேம்பாட்டுக்குதவுகின்ற ஒரு பொதுவான தேவைக்காக ஒன்று சேர்ந்து இயங்கவேண்டும் என்பதனை படைப்பாளிகள் புரிந்து கொண்டு செயற்படவேண்டும்.
தானா,விஷர்ணுவினுடைய “நினைவுள் மீள்தல்' எனும் கவிதைத் தொகுதியினை முன்வைத்து சில கருத்துக்களை தமிழ்க் கவிதையின் கருத்து நிலை சார்ந்து விட்டுச் செல்ல விரும்புகறேன். தமிழ்க் கவிதையின் கருத்து நிலையான மாற்றத்தை கவிஞர்கள் உள்வாங்க வேண்டியது

நினைவுள் மீள்தல் 0ழ
மிகவும் அவசியமானது ஒரு நீண்ட தொடரில் எமது விமர்சகர்கள் கருத்தில் எடுக்க வேண்டிய விடயங்கள் நிறைய இருக் கணிறன, எமது விமர்சகர்களில் பெரும்பாலானவர்கள் ஒரு பட்டியற் படுத்தப்பட்ட பெயர்களையே மீணடும் மீணடும் கவரிதையின் அடையாளங்களாக ஒப்புவித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் இங்கு சொல்ல விளைவது காலத்தினுடைய பொருத்தம் கருதி அக்காலத்தில் எழுகின்ற படைப்புகளை எமது கவிஞர்களுடன் விமர்சகர்களும் சேர்ந்து மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டியது முக்கியமான பங்காகும். கலிதையோ அல்லது ஏனைய படைப்புக்களோ மக்களுக்கானது, மக்களுடைய பிரச்சினைகளை மக்களுக்கான மொழியில் மக்களுடைய குரலாக முனி வைக்க வேண்டிய தேவை படைப்பாளிகளுக்கு இருக்களினிறது. மாபெருமி அழிவுகளையும் இடப்பெயர்வுகளையும் சந்தித்த எங்களுடைய நிகழ்கால வாழ்வில், அவற்றை கவிதைகள், படைப்புக்கள் எந்தளவிற்கு வெளிக்காட்டியிருக்கின்றன. யுத்தம் அழித்த கட்டடங்களை மீளக்கட்டியமைப்பது போன்று யுத்தத்தால் உருக்குலைந்து போன மக்களுடைய மன நிலையை கட்டியெழுப்ப முடியாது. ஒரு யுத்தத் தனி போது அழிக்கப்படுகின்றமை வெறும் உயிர்களோ உடைமைகளோ அல்ல. ஒரு இனக்குழுமத்தின் பண்பாடு, அதனது பூர்வீக வேர்களும்தான். ஆதலினால் தமிழ்க்கவிதை மரபினுடைய தொடர்ச்சியான போக்கினை அவதானிக்கின்றவர்கள் அது அந்தந்தக் காலத்துக்குரிய பிரச்சினைகளை இனங்கண்டு

Page 8
10 தானாவிஷ்ணு
தெளிவாக முனி வைத் தருப்பதனை காணக் கூடியதாக இருக்கும். இந்தக் கருத்து நிலையான மாற்றத்துடன் இணைந்ததாகவே FLO as Ta) a கவிதைகளையும் கவிஞர்களுடைய அடையாளங்களையும் முனி வைக்க வேண்டும்.
தானாவிஷர்ணு இனிறைய இளம் தலைமுறையினது
இன்னொரு அடையாளமீ. போரின் மூலமாக போருக்குள் இருந்து முகிழ்ந்த கவிஞன், போரே வாழ்வாகவும் வாழ்வே போராகவும் இருந்த காலத்திலும் தனது கவிதையை போர்க்கால மனச்சாட்சியுடனும் கவிஞனின் கடப்பாட்டுடனும் எழுதிய கவிஞன். அலங்கரிக்கப்பட்ட வார்த்தைகளிலிருந்து விலகி யதார்த்தமான மொழியுடன் அவனது கவிதைகள் இயங்குகின்றன,
யுத்தத்தை வெறும் அழிவாகவோ சிதரிலங்களாகவோ காணாது அதனைப் பற்றிய ஆழமான தீர்க்கம் நோக்கிய பார்வை இவரது கவிதைகளில் உண்டு,
கவிதை துயர் சார்ந்த மொழியினோடு நிகழ்ந்தாலும் அதன்பின் நிகழும் நம்பிக்கை என்பது துயர் சார்ந்ததல்ல. தன்னுடைய அடையாளங்கள் மறுக்கப்படுகின்ற போதும் இருமி பின் மீது தீயிடப்படுகின்றபோதுமி எழுகின்ற நரியாயமான கோபக் குரலை அவனது கவிதைகளில் காணமுடியும். இது கவிஞனின் மனம் சார்ந்த தன்னுணர்வு

நினைவுள் மீள்தல் 11
எனக்கூறி பின் தள்ளிவிடமுடியாது. சம காலத்தில் எல்லா மனிதர்களும் சந்தித்த சந்திக்கின்ற உணர்வுகள்தான் இவை,
விஷ்ணு களினி தொடக்கத்தில் தனது இடப்பெயர்வு வாழ்க்கையை ஆரம்பித்தவர். இன்றுவரையும் (சமாதானம் பற்றி பேசப்படும் இக்காலத்திலும்) தனது சொந்த ஊரான பலாலிக்கு இன்னும் திரும்ப முடியவில்லை. யுத்த காலத்தைப் போலவே இந்தச் சமாதான காலமும் நம்பிக்கையைத் தராத இந்தச் சூழலில் கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் அலக்கழிந்த வாழ்க்கையின் அனுபவம் இந்த கவிதைகளிலுண்டு. அவரது மொழியில் சொல்வது என்றால் பட்டாம்பூச்சி பிடிக்கும் காலம் முதல் அவரது இன்றைய பல்கலைக்கழகம் வரையான அனுபவங்கள் இந்தக் கவிதைகளிலுண்டு.
விவர்ணுவினி கவிதைகளில் அவரது அனுபவங்கள் அறிவுசார்ந்த மொழியோடு அரைக் காற்சட்டையுடனும் புத்தகப் பையுடனும் ஊரை விட்டு துயரோடு வெளியேறிய விஷ்ணு இயங்குவது பெரும் பலமாக உள்ளது. கவிதை மொழி அனுபவம் சார்ந்ததா? அல்லது அறிவு சார்ந்ததா என்ற கேள்வி சிலரிடமீ உணர்டு, கவிதை இவை இரண்டையும் உள்ளடக்கிய உணர்வின் மொழி, அறிவையும் அனுபவத்தையும் இரண்டு வேறுபட்ட கூறுகளாகக் காண முடியாது. ஏனெனில் அறிவு என்பது ஒருவிதம் அனுபவம் சார்ந்து பெறப்படுவதே இதனால்தானி இரணடையும் கூறுபோட்டுப்பார்க்க முடியாது என்கின்றேன். வாசகர்கள்

Page 9
12 தானாவிஷ்ணு
விஷ்ணுவின் கவிதைகளுடன் பயணிக்கும் போது இந்த அறிவு அநுபவம் எனும் இரண்டும் உள்ளடங்கிய உணர்வின் மொழியினைக் காணமுடியும்,
நினைவுள் மீள்தல் விஷ்ணுவினுடைய முதலாவது கவிதைத் தொகுதி, 2001 முதல் 2003 வரையான காலப்பகுதியில் எழுதிய கவிதைகள் இவை எழுதப்பட்ட காலத்திலேயே தொகுப்பாக வருவதையிட்டு விஷ்ணுவுடன் சேர்ந்து நாமும் மகிழ்ச்சியுற வேண்டும்.
நினைவுள் மீள்தல், மீளுகை வெளியீட்டகத்தினுடைய இரண்டாவது வெளியீடாகும், முதல் வெளியீடு யு.ஜேம்ஸ் றெஜீவனின் நிறங்களாலாகிய நிழலினி குரல்’ எனும் கவிதைத் தொகுதி 2001ம் ஆண்டு வெளியிடப்பட்டது. நணி பர்கள் சிலரது கூட்டு முயற்சி காரணமாக இத் தொகுதகள் சாத்தரியமாகயிருக்களின்றன. இளந் தலைமுறைப் படைப்பாளிகளினி படைப்புகளை தொகுப்பாக்கும் முயற்சியில் இன்னும் தொடர்ந்தும் ஈடுபடும் எண்பதனை மீளுகை வெளியீட்டகம் வாசகர்களுக்கு கூறிவைக்கிறது.
சித்தாந்தனி,
யாழ்ப்பாணம்,
14-12-2003,

நினைவுள் மீள்தல் 13
அகதி வாழ்வும் என் கவிதைகளும்
இந்தப் போர் நாட்களில் எண் கண்முன்னே விரிந்து கடந்த கோர நிகழ்வுகள், 90களில் ஆரம்பித்து இன்றுவரை எனக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அகதிவாழ்வும் அன்றிலிருந்து நான் அனுபவித்துவரும் துயரச் சுமைகளும் மனதுள் ஒரு போராட்டத்தை நிகழித்தன. ஈற்றிலி என அமைதக் காகவும் இவற்றையெல்லாம் எதிலாவது சொல்ல வேண்டும் எனிற தவிப்பாலுமி நாண் கவிதை எழுதத் தொடங்கியதாக நம்புகின்றேன்.
“நினைவுள் மீள்தல்'தொகுப்பானது பல ஆண்டுகால முயற்சியாக இருந்து வந்திருக்கிறது. 1994ம் ஆண்டில் ஒருசில கவிதை எழுதியதாக எனக்கு ஞாபகம் உண்டு. 13ம் ஆண்டு இடப்பெயர்வின் பின் புதுக்குடியிருப்பில் வசித்துவந்த காலப்பகுதியில் எண் கவிதைகளுக்கு களம் தந்த ‘ஈழநாடு' வாரமலரினை நாண் என்றும் மறக்க முடியாதவனாகவே இருக்கின்றேன். அந்தக் காலப்பகுதியில் வெளியான கவிதைகள் யாவும் ஒடுங்கிய நிலைகொண்டு அமைந்த காரணத்தினால் பின் வந்த நாட்களில் நாணி அவற்றை நிராகரிக்க வேண்டியதாயிற்று.

Page 10
14 தானாவிஷ்ணு
2001ம் ஆண்டு மீண்டும் என் கவிதைப் பிரவேசம் ஆரம்பமானது எனக்குள் இருந்த உணர்வு அலைகளை அது வெளிக்கொணிடுவருவதாக அமைந்தது. 1994ம் ஆண்டு தொகுதி கொண்டுவருதல் பற்றியதான அவா 13ம் ஆண்டு எனது 'நினைவுள் மீள்தல் தொகுப்பு வெளிவருவதலி தருப்த அடைவதாக நாணி கருதுகினிறேன். இதில் வெளிவருமி கவிதைகள் அனைத்தும் 2001ம் ஆண்டுக்கு பிற்பட்ட காலத்தில் சஞ சிகைகளில் வெளியானவையுமீ பிறவுமீ அடங்கியவையே எழுதிய மூன்று வருட காலத்தில் தொகுப்பாக வருவதனை நினைக்கும் போதலி மகிழ்ச்சியே.
இந்த தொகுப்பு வெளிவரும் இக் கட்டத்தில் எண் ஒவ்வொரு உயர்வுக்கும், மகிழ்வுக்கும் எப்போதும் ஏணியாக இருந்து வந்த இருந்துவருமி எனி அம்மாவையும், எனி அணிணனையும் எனி மனதுள் நிறுத்தாமல் விடுதல் முடியாது. எனது தொகுப்பு வெளிவருவதல் GT Gorf 60) 607 6s2L ஆர்வமி காட்டியவர்களையும், செயல்பட்டவர்களையும் நாணி நினைக்க வேண்டியவனாக இருக்கின்றேனி,
கவிதை மீது எனக்கிருந்த ஆர்வத்தை மேலும் ஊக்கி, staf saflangusaf (!pgð Missálusar Firskál, stefsogså தட்டிக் கொடுத்து, இறுதிவரை கவிதை பற்றி விவாதத்து L pass of 6 g. 6). DLOLLIGO) of

நினைவுள் மீள்தல் 15
மெருகூட்டித்தந்த நண்பர் கருணாகரன், எப்போதும் தோழமையுடன் கவிதை பற்றியும் மீளுகை பற்றியும் LL LLLL L0 0SS S tTuLLuT T STL tLTS TTTTTTT LLL LL முன்னுரையையும் எழுதித் தந்த நண்பர் சித்தாந்தன், மற்றும் எண் கவிதை வருவதல் ஆர்வம் கொண்டவர்களும் இறுதிவரை எனக்கு ஒத்தாசை புரிந்தவர்களும் மீளுகை பதிப்பகத்தில் எனினுடன் சேர்ந்தியங்கும் நண்பர்களான சித்தாந்தன், யாத்திரீகன், ஞாபகனி யுக சேனனி, ஆத்மரிஷி இனினும் எண் நணி பர்களான தயா, கோபு தொகுப்புக்கான அட்டைப்படத்தைத் தந்துதவிய நண்பர் தவபாலனி மற்றும் என்னை அழகாகப் படம் பிடித்துத் தந்த நண்பன் அமரதாஸ், அந்திவானம் பதிப்பகப் பணிப்பாளர் நண்பர் அறிவுக்கரசன் மற்றும் பதிப்பகத்தின் கணினிப் பிரிவு கி. சங்கீதன், செல்வி, நா. சுபாஆகியோருடன் ஏனைய ஊழியர்கள் இவர்கள் எல்லோரையும் என்றும் மறக்க (Lp Lq LITT 5 6J 6GT AT 5 இருப்பதெனி பது உண்மையானதொனிறே.
அன்புடன், தானா விஷர்ணு, இமையாணன் கிழக்கு இமையாணனி,
உடுப்பிட்டி,

Page 11
16|தானாவிஷ்ணு
கவிதைகள்
01.
02.
03.
04.
05.
06.
07.
08.
09.
10.
11.
12.
13.
சாபங்களின் இருள்வலி 15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
முன்னுரை
என்னுரை
அசுரத்தனம் விரும்பா நட்பு, விலக்க முடியா ஞாபகம் ஒரு பட்டாம்பூச்சிக் காலம் பற்றிய மீள் நினைவு கோழைகளின் கத்தி அல்லது வீரச்செயல்
ஓர் ஜீவனின் பாடல் விலங்குகளால் பறிக்கப்பட்டதும் தரப்பட்டதும் நினைவுள் மீள்தல் என் சுயங்களில் வீழ்ந்து கிடக்கும் கரிய நிழல் குருதிக்கறைபடிந்த நிலவின் குறிப்பேடு கத்திகள் இல்லாத சொற்களின் கீதம் வண்ணத்துப்பூச்சிகளின் வலியுணர்கிறேன் ஒளிரும் காலம் பற்றிய பயம் சூனியத்தில் மறைக்கப்படும் சூரியன்
தீக்காற்றின் ஞாபகம்
பகலின் ஒளியை மீட்டும் இரவுகளின் பாடகன் இருளின் தனிமை வெளி மீட்கப்பட்டுக் கொண்டேயிருக்கும் அந்த அவல நாட்கள் அடையாளப்படுத்தல் இன்னும் உறையில் இடப்படவில்லை வாள் பலியிடல் அல்லது பலி ஆடுகள்
கால வேகம்
கால்களின் கீழ் நெளியும் நகரம் நினைவுகளில் அழியும் நிரந்தரம் நிறங்கள் பெயர்க்கப்பட்ட வண்ணத்துப்பூச்சிகள்
07
13
7
18
20
22
23
25
27
28
29
3.
33
35
37
39
40
41
43
50
52
54
57

அசுரத்தனம்
என் வேர்களை அசைக்க முடியாமல் கிளைகளோடு மட்டும் தனது அசுரத்தனத்தினை காட்டி விட்டுப் போகிறது காற்று
Xo
19-10-2001
நினைவுள் மீள்தல் 17

Page 12
ஐ தானாவிஷ்ணு
விரும்பா நட்பு விலக்க முடியா நாபகம்
இடிந்து போன எனது வீட்டுச் சுவரில் உன் நினைவாக ஒரு பல்லி ஒட்டிக் கொண்டிருக்கிறது.
ஊனமாகிப் போன என் வாழ்வுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் சோகத்திலும் உன் ஞாப்கம் ஊறிக் கொண்டே இருக்கிறது.
யதார்த்தம் அறுந்து போன ஒரு கேள்வியுடன் நீ என் முன் முகம் நீட்டுகிறாய். உன் முகப்புள்ளியில் இருந்து விலகி உன்னில் இருந்து தொடர்பு அறுத்துப் போய் விழுகிறேன் ஒரு வெளிச்சம் அற்றுப் போன புள்ளியின் மேல்.
சொல் நீ என் விம்பத்தை அறுத்து இரு கூறாக்கி எதற்காய் ஒரு பூச்சிய வெளியில் தொங்க வைத்திருக்கிறாய்.

நினைவுள் மீள்தல் 19
நிஜங்கள் இல்லாது போன உன் மனக் குறிப்பை எதற்காக என்முன் அடிக்கடி அவிழ்த்துப் போடுகிறாய் போ, தூரம் போ
என்னில் இருந்து உன்னை விலக்கி இடிந்து போய்க் கிடக்கும் என் வீட்டுச் சுவரில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு பல்லி உன்னை ஞாபகமூட்டுவது எனக்குப் போதுமானது.
*్మe
17-05-2002,

Page 13
20 தானாவிஷ்ணு
ஒரு பட்டாம் பூச்சிக் காலம் பற்றிய மீள் நினைவு
பட்டாம் பூச்சி பிடித்துத் திரிந்த காலத்தில் உன் மீது எனக்கு காதல் வந்தது.
இரவுச் சிறகுகளில் உன் உருவம் ஒடுங்கிப் பின் வளரும் என்னுள் ஒரு கனவாய்.
ஒளிப் பிளம்பு உதிர்த்திப் போன உன் பார்வைகளில் சிக்குண்டு போன எனது காலம் மீட்சி பெற்றெழுந்தது ஒரு கவிதையாய்.
இப்போது நீ ஒரு பருவமடைந்த தென்றலாய் பட்டாம் பூச்சிக் காலத்தை உன் நிகழ் காலத்தில் இருந்து உதிர்த்தி விட்டிருக்கிறாய்.
 

நினைவுள் மீள்தல் 21
நான் நீ முன்பு உதிர்த்திப் போன பார்வைகளால் என்னுள் துளிர்த்துக் கொண்ட இலைகள் பற்றிய வர்ணனைகளை புனைந்து கொண்டே இருக்கிறேன் உயிர்ப்புறும் எனது கவிதைகளில் என் இரவுச் சிறகுகளில் உன் உருவம் ஒடுங்கிப் பின் வளரும் என்னுள் அது ஒரு நீண்ட கனவாய்.
●
oKo
13-02-2003

Page 14
22 தானாவிஷ்ணு
கோழைகளின் கத்தி அல்லது வீரச் செயல்
அவனை வெட்டு - அதோ அவனைக் கொல்லு அவளது கையில் பச்சைக் குழந்தை அதனால் என்ன கழுத்தை நெரி அவன் நாளை உனக்கு எதிரியாகி நிமிரக் கூடும் அதோ வருகிறான் அவன் மூளையில் சுகமில்லாதவன் ஆனாலும் அவன் பயங்கரவாதி அதனால் சுட்டுத் தள்ளு
இன்னமும் என்ன
குருடோ, செவிடோ வெட்டிச் சாய்த்துவிடு எல்லோரையும் இதோ இரத்தச் சகதியுள் யாரோ முனகுகிறான் விட்டு விடாதே பெற்றோல் ஊற்றிக் கொழுத்து முடிந்தாயிற்றா உன் வீரச் செயல் இப்போதேனும் கொஞ்சம் அமைதி கொள் நாளை ஐக்கிய நாடுகள் கண்டனக் குரலோடு காரணம் கேட்கும் நீ துணிந்து சொல் "இறந்தவர்கள் எல்லோரும் பயங்கரவாதிகள் ” என்று
17-05-2001
 

நினைவுள் மீள்தல் ஐ
ஓர் ஜீவனின் பாடல்
என்னையும் மீறி உனக்குள் அடங்கித் துளிர்ப்பெய்கிறது எந்தனது காதல்
உயிர் உறையும் அடியாழத்தில் உச்சரிக்கப்படும் உனது பெயர் வேனில் காலத்தை ஞாபகப்படுத்தும்
கடல் கரைப் பரப்பில் கால் தடம் அழிக்கும் அலை இதழ் முத்தமிடக் கேட்ட உனது பாதம் மூன்றாம் பிறையை நினைவுக்கிழுக்கும் உனது புன்னகை தென்றல் தட்ட மொட்டு விரிப்பது போன்ற உந்தன் பேச்சொலி
இவை எல்லாம் எனது காலத்திலிருந்து விலகிப் போயின
உயிர் மூச்சுக் கனன்றபடி வெளிப்படுகிறது என் சுவாசம் உன் நினைவலையில் பெருக்கெடுக்கிறது விழியாறு நான் தனிமை வெளியில் தள்ளப்பட்டு உடைந்து போன முட்டைக் கோதின் துணைக்கு அமர்கிறேன்

Page 15
24 தானாவிஷ்ணு
எந்தன் இதயப் பாறை மீது உந்தன் நினைவு வரிகளை ஊன்றி ஊன்றிப் பதித்தாலும் இனி எதுவுமே சாத்தியமில்லை
தோற்றுப் போய் பீரங்கிகளை பின் தள்ளிய நகங்கள் கிளறித் தாட்ட மண்வெளி தாண்டி நீ மீண்டு வருதல் எப்போதுமே சாத்தியமில்லை.
●

நினைவுள் மீள்தல் 25
விலங்குகளால் பறிக்கப்பட்டதும் தரப்பட்டதும்
என்னிடம் இருந்து யாவும் உன்னால் பறித்தாயிற்று எந்தன் உயிரைத் தவிர எனது அன்னை நிலம் எனது சுதந்திரம் எனதின் உரிமைகள் எனது உடைமைகள் இப்படி எல்லாம் என்னிடம் இருந்து உன்னால் பறிக்கப்பட்டாயிற்று மனிதனுக்கு தேவையற்ற எல்லாமே உன்னால் தரப்பட்டது எனக்கு எனக்கான வறுமை எனக்கான துன்பம் அகதி என்ற பட்டம் இப்படி எல்லாமே உன்னால் தரப்பட்டாயிற்று இன்னமும் என்னிடம் எதைப் பறிக்க எதனைத் திணிக்க இப்படியெல்லாம் கொடுரமாய் முயற்சி செய்கிறாய் நீ எப்படியோ மீதமிருக்கும் உயிரைப் பறிப்பதற்கு முன்னமேனும் நான் விழத்துக் கொண்டு விட்டேன்.
●
*్మ*

Page 16
ஒg|தானாவிஷ்ணு
 

நினைவுள் மீள்தல் 27
நினைவுள் மீள்தல்
எப்போதுமே வந்து கொண்டிருக்கிறது உன்னைப் பற்றிய கனவு யாருமே வந்து போகாத பெரு வெளி ஒன்றில் இருந்து
தூறல் நின்று போன மழை இடைவெளி நேரம் ஒன்றில் மீந்து வந்து கொண்டிருக்கும் பாடல் ஒசையில் எப்போதும் இல்லாதது போல் உந்தன் நினைவு வரிகள்
நானும், நீயும் அடிக்கடி சந்தித்துப் பேசிய புளிய மரத்தடி வேர்களைப் பற்றியபடி தொடர்ந்தும் என் இருத்தலை நிலைப்படுத்திக் கொண்டிருக்கிறேன் என்னில் இருந்து மரணித்துப் போன காலங்களை அசை போட்டுக் கொண்டு எதில் இருந்துமே பிரிக்க முடியாத ஒரு பூச்சிய வளைவுள் அமிழ்ந்து போகிறேன்.
காரணங்கள் மறந்து போன இந்த காயங்களுக்கு குறைந்த பட்சம் ஒரு காரணத்தினையேனும் நினைவுபடுத்தும் முயற்சியோடு
● 0.
19-06-2002

Page 17
28 தானாவிஷ்ணு
எண் சுயங்களில் வீழ்ந்து கிடக்கும் கரிய நிழல்
ஒரு குருட்டுப் பூனை என் தோள்பட்டையைப் பற்றிப் பிடித்தபடி
அறையின் நடுவே இருக்கும் கதிரையில் அமைதியாக நானும் அந்தக் குருட்டுப் பூனையும்
எந்த உடன்படுதல்களுமின்றி நீண்ட நேரம் இருந்து விட்டோம் அந்தக் கதிரையில் அந்தப் பூனை விலகுவதற்கான சாத்தியம் எதுவும் அற்று என்னையும் விலக விடாது தோள்ப்பட்டைகளை இன்னமும் அழுத்தியபடி
அவசரமான கதவு திறக்கும் சத்தங்களில் எந்த தடயமும் அற்று எந்த ஓசையும் அற்று மறைந்து போயிற்று பூனை இருந்தும் நான் அசையாது இருக்கிறேன் மனதுள் இன்னொரு குருட்டுப் பூனை இறங்கி இருக்கிறது இப்போது
0.
02-03-2003.
 

நினைவுள் மீள்தல் 129
குருதிக் கறைபழந்த நிலவின் குறிப்பேடு
வன்மமாய் வீசும் காற்றிலும் சாவு சொல்லும் ஆட்காட்டி இலகுவாய் பறந்து செல்கிறது பெரு வெளியின் ஒரு சிறு புள்ளியில்
நேற்றும், இன்றும், நாளையும் நாம் நினைக்கா விதமாய் நடந்தது, நடக்கிறது, நடக்கும் இப்படியேதான் எம் வசித்தல் நிகழ்கிறது.
வன்மம் நிறைந்த காற்று எல்லோரையும் அச்சுறுத்தும் ஆட்காட்டியோ அவசர அவசரமாய் சாவு சொல்லும்
எமது ஒவ்வொரு பெரு வெளியிலும் மர்மங்கள் விரைந்து கிடக்கிறது வன்மம் முற்றிய காற்றும் சாவு சொல்லும் ஆட்காட்டியும் இல்லாமல் இங்கு எந்தப் பெரு வெளியும் இல்லை அழகு ஒளிர்ந்த எங்கள் பெரு வெளியில் வன்மக் காற்று சிதைத்துக் கருக்கிய மலர்களை ஆட்காட்டியும் அறியும், வான் நிலவும் அறியும்

Page 18
ஐ தானாவிஷ்ணு
நிலவின் குறிப்பேட்டில் உண்மைகள் உறைந்து போய்க்கிடக்கிறது இரவின் இரகசியங்களை அதனிடமின்றி வேறு எதனிடமும் துல்லியமாய் பெற முடியாது (ஆனால் மறைத்து வைத்துள்ளது)
நிலவு குளிர்மையானது போலிருந்தாலும் வன்மக் காற்றுடனும் ஆட்காட்டிகளுடனும் சேர்ந்து பிணம் தின்கிறது
இரகசியமாய்
சூரியக்கதிர்கள் பெருவெளியெங்கனும் ஒளிபரப்ப எமது வாழ்வியக்கம் சுபீட்சமாய் நிகழ்ந்தேறும்
நிலவு மீண்டும் வந்தால் வன்மம் முற்றிய காற்றும் ஆட்காட்டியும் கூடவே வரும் சூரியக் கதிரில் வெம்மை தகிப்பது போலிருந்தாலும் ஆட்காட்டிகளோ, வன்மக் காற்றோ அதனுடன் இல்லை.
17-05-2002
 

நினைவுள் மீள்தல் 31
கத்திகள் இல்லாத சொற்களின் கீதம்
ஒரு பிரத்தியேகமான பாடல்களிலிருந்து தெறிக்கும் என் நரம்பின் வேதனைகளை எப்போதாவது உனக்கு நான் சொல்லுதல் கூடும்
அது வரையில்
நீ எனக்கு
எதிரியாகவல்ல ஒரு துரோகியாக இருந்தால் கூட நான் ஆட்சேபிக்கப் போவதற்கில்லை என் உத்தியோகபூர்வமான பாடல் வரிகள் எதிலும்

Page 19
ஐ தானாவிஷ்ணு
 

நினைவுள் மீள்தல் 3
வண்ணத்துப் பூச்சிகளின் வலியுணர்கிறேன்
வண்ணத்துப் பூச்சிகளின் சிறகுகளைப் பிடுங்கி அதன் துடி துடிப்பை பார்த்து ரசித்த பருவம் எனககும வநதது
அப்போது அதன் விழிகளுக்குள் படபடத்த கனவுகள் பற்றி எனக்குத் தெரிந்ததே இல்லை அது வலிபட்டு துடிதுடித்து இறந்து போகையில் என் கரம் தட்டி துள்ளிக் குதித்திருந்தேன் அதன் மனதுள் ஒரு கவிதை நொருங்கிப் போவதனை நான் அறிந்ததே இல்லை
இப்போது என் இறகுகளை ஒடித்து இருட்டு அறைக்குள் அதிகாரப் பேய்களின்
சம்மட்டிகளால்
என் என்புகள் உடைந்து கொண்டிருக்கையில் எனது வண்ணத்துப் பூச்சிக் காலங்கள் வரிசையாய் நினைவுக்குள் வந்து கொண்டே இருக்கும்

Page 20
34|தானா.விஷ்ணு
வண்ணத்துப் புச்சிகள் உயிரில் பொருத்தி வைத்த கனவுகள் குமிழி குமிழியாகி பின் சிதைந்து போக அதன் கடைசி மூச்சும் நின்று போகுமே அப்படித்தான் என் உயிரும் அது சுமந்திருக்கும் கனவுகளும் அதிகாரப் பேய்களின் சந்தேகப் பார்வைகளால் நீரின் குமிழிக் கோலங்கள் போல் அழிந்து போய் விடுமோ
ஐயகோயூ
அப்போதைய வண்ணத்துப் புச்சிகளே இப்போது என்னை மன்னித்து விடுங்கள்
0.
 

நினைவுள் மீள்தல் 35
iarfili) dTalli. LIi|Iiul LIIIli
இழந்து போன எந்தனது வேனில் கால ஞாபகங்களில் இருந்து இன்னமும் நான் மீட்சி கொள்ளவில்லை என்னைக் கடந்து போன
எந்தனது நாட்களில்
வேனில் கால தேவதையை அதிகபடியாக நினைவுக்குள் கொண்டு வந்திருக்கிறேன்
பழமையாய்ப் போன எனது காலத்தில் கிளிகளும், முயல்களும் எந்தன் உறவுகளாய் இருந்தன எனது முற்றத்து மரத்தில் கூடு கட்டி இருந்த தூக்கணாங்குருவி என் அதிகபட்ச சிநேகத்தை வேண்டி நின்றது இப்போது அவை எதுவும் என்னுடன் இல்லை
வெளவால் தொங்கும் இருண்ட மண்டபத்துள் பாம்பு நெளியும் மெத்தைவிரிப்பின் மேல் இப்போதைய என் வசித்தல் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது கிளிகளும், முயல்களும் தூக்கணாங்குருவிகளும், நானும் இந்த இருண்டகாலத்துள் அகப்பட்டுப் போயினோம்

Page 21
I I
36|தானாவிஷ்ணு
இருண்டகாலத்தை நசுக்கி உதயகாலம் நிமிருமுன்பு மெல்ல, மெல்ல என்னை நோக்கி நீண்டு வரும் மரணவெள்ளம் என்னை மூழ்கடித்துப் போய்விடுமோ என்பதே எனது அச்சமாக இருக்கிறது
O2-10-2001
 

நினைவுள் மீள்தல் 37
சூனியத்தில் மறைக்கப்படும் சூரியன்
என் கைகளையும் கால்களையும் இறுகப் பிணைத்து இடுப்பில் தங்கூசிக் கயிறு போட்டு தண்ணீருக்குள் முக்கி முக்கி எடுக்கிறார்கள் பாவிகள் உண்மை சொல்லும் வரைக்குமான தண்டனை இதுதானாம் நான் அகதி என்பதைத் தவிர சொல்வதற்கு வேறொன்றும் இல்லை அதனை அவசர, அவசரமாக மறுக்கிறார்கள் கொடியவர்கள்
மீண்டும்.
மீண்டும் உண்மை சொல்லும் வரையிலான தண்டனை
தரப்படுகிறது
மீண்டும்.
மீண்டும் நான் அகதி என்ற உண்மையைச் சொல்லிக் கொண்டே இருந்தேன் அவசர அவசரமாக மறுக்கிறார்கள் அவர்கள்

Page 22
38 தானாவிஷ்ணு
தாமதமாகவே உணர்கிறேன் அவர்கள் அவர்களுக்கே உரிய
பாஷையால்
பொய் சொல்லச் சொல்கிறார்கள் நான் அதை அவசர அவசரமாக மறுக்கிறேன் அவர்களில் சிலர் அவசர அவசரமாக மண்வெட்டி தூக்கி இருள் சூழ்ந்த பெருவெளி நோக்கி நடக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்
 

நினைவுள் மீள்தல் 139
சாபங்களின் இருள் வளி
எதுவும் அறியாமல் நான் வரைந்த கோடொன்று புள்ளி புள்ளியாகி சிதைந்து போனது ஒரு நிலவொளியில் முறிந்து தொங்கிய உன் ஞாபகத்தில் தொடங்கி
பிரபஞ்சத்தின் எல்லைப் புள்ளியில் முளைத்துக் கொள்கிறது என் சிந்தனை
நீண்ட காலமாக காற்றில் உறைந்து கிடந்த எனது பாடல் ஒன்று உருகி கரைந்தழிந்து போனது
நான் இராப்பொழுதின்
கடைசி விரலில் தொங்கிக் கொண்டிருந்த போது ஏதோ ஒரு தேவதை சபித்துவிட்டுப் போனாள்
எனது நீண்ட காலத்து பாடல்கள்
உடைந்து ஒழுகியதனை அவள் அறிந்திருக்கவில்லை
16-03-2003

Page 23
40 தானாவிஷ்ணு
தீக்காற்றின் ஞாபகம்
அசுரக் காற்றின் ஞாபகம் அடிக்கடி என்னை அச்சுறுத்திச் செல்கிறது
அசுரக் காற்றின் நகங்களுள் ஊறும் விசம் பட்டு
வீதி எங்கும் பிணங்கள் முளைத்துப் போயிருப்பதனைப் பார்க்கையில் அசுரக் காற்று பற்றிய அச்சம் என்னுள் ஆழமாய் பரவுகிறது
மேற்கு குழியுள் சூரியன் விழுந்த பின்பு புதிது புதிதாய் தோண்டப்படும் புதை குழிகள் பற்றிய செய்தியும் நீண்ட நாட்களின் பின் மீட்கப்பட்ட காய்ந்து போன எலும்புகள் பற்றிய செய்தியும் என்னிடம் வந்து சேர்கையில் அசுரக் காற்றின் ஞாபகம் என்னைப் பிராண்டி வதைக்கிறது அந்த அசுரக் காற்று தனது கொடூர முகத்தைக் காட்டி எல்லோர் வாழ்வையும் சிதைத்துக் கொண்டே இருக்கப் போகிறது
*
O6-1O-2OOO
 

நினைவுள் மீள்தல் 41
பகவின் ஒளியை மீட்டும் இரவுகளின் பாடகன்
இறுமாந்து போய் முன்பு வந்த எவராலும் திறம்பட மீட்ட முடியாதுபோன ஒரு அழகான வீணை
ஒருவன் கையில் எடுத்து அதன் நாதங்களை ஒன்று சேர்த்து மீட்ட முயற்சித்துக் கொள்கிறான் அதன் ஒவ்வொரு சுரங்களும் வழுக்கி வீழ்ந்து கொண்டே இருக்கிறது மிகவும் நேர்த்தியாகவும், வாஞ்சையுடனும் அதனை பலமுறை கையாள முயற்சிக்கிறான் அவனை தோற்கடித்துக் கொண்டே இருக்கிறது அந்த வீணை
அவன் வைராக்கியங்களை கோர்த்து மனதிலே இறுகக் கட்டி சலிப்புகளை அறுத்து மீண்டும், மீண்டும் முயற்சித்துக் கொண்டே இருக்கிறான்

Page 24
42| தானாவிஷ்ணு
அவன் விரல்களில் இருந்து கசியும் குருதியின் இறைகளுக்குள்ளிருந்து சொரியும் நம்பிக்கைகளை வலிந்து இழுத்துக் கொண்டே அவன் தொடர்ந்து முயற்சிக்கிறான்
யாராலும் மீட்ட முடியாத அந்த வீணையை
அவன் மீட்டி விடுவான் என்ற நம்பிக்கை எனக்குள் பரவுண்டு போய் இருக்கிறது
21-08-2002
 

நினைவுள் மீள்தல் 43
இருளின் தனிமை வெளி
தூரத்து ஒளி ஒவியத்தில் புன்னகை சிந்திக் கொண்டிருக்கும் உன் நினைவுகளுடன் இருள் மெல்ல சூழ்ந்து கொண்டிருக்கும் நான்கு சுவர்களுக்குள் அமைதி குலைந்து போயிருக்கிறேன்
மென்மையான குளிர் காற்றில் சிலிர்த்துக் கொள்ளும் மயிர்க் கண்களில் இருந்து வெளிக் கிளம்புகிறது உன் ஞாபகம்
ஒரு மழைக்கால இருளில் உன் தொடுகையில் அடங்கிப் போன கூதல் நீ இல்லாது இருக்கும் இந்த மழைக்கால இருளில் மீண்டும் தளைத்துக் கொள்கிறது

Page 25
44 தானாவிஷ்ணு
ஒளி ஒவியத்தின் ரேகைகளுள் நான் தொலைந்து கொண்டிருக்கும் இந்தப் பொழுதில் நீ தலையணைக்கடியில் உன் விழிகளை உதிர்த்து விட்டு ஒரு பிரமாண்டமான கனவுகள் புகுந்திருக்கக் கூடும் ஒரு வனாந்தரத்தின் தனிப் பாடகனாய் அலைந்து திரியும் எந்தன் மனசு குளிர் காலத்தின் ஸ்பரிசத்தில்
என்னுள் ஊடுருவும் உன் விம்பங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது
நான் அந்த இருள் படிந்த நான்கு சுவர்களின் நடுவே நனைந்து போன பூனைக்குட்டி போல் இருக்கிறேன் இப்போதும்
தனித்து
05-10-2002
 

நினைவுள் மீள்தல் 45
மீட்கப்பட்டுக் கொண்டேயிருக்கும் அந்த அவல நாட்கள்
என் நகரம் அழகை இழந்து போயுள்ளது எனது நகரத்தின் மீது கரிய புகை படிந்து போயுள்ளது
இறக்கை அசைக்காத கரிய பறவை என் நகரத்தின் மேல்
சுற்றிச் சுழன்று
தனது எச்சங்களால் என் நகரத்தினை மாசுபடுத்தியது
ஒலங்களையும் ஒப்பாரிகளையும் எனக்குப் பரிசளித்து அதிகாலையில் எமை அச்சுறுத்தி விழிக்கச் செய்யும் இந்தக் கரிய பறவை என் நகரத்தின் செழிப்பையும் எனது மக்களின் மகிழ்வினையும் எப்போதாவது அறிந்திருக்குமா?

Page 26
46 தானாவிஷ்ணு
 

நினைவுள் மீள்தல் 47
என் நகரத்தில் இனி எத்தனை பூஞ்சோலைகளை எத்தனை மின் கம்பங்களை எத்தனை வாகனங்களை கொண்டு வந்து நிறுத்தினாலும் கொலையாளிகளின் கூரிய வாளில் இருந்து சொட்டிய குருதியின் வெடிலும் அவர்களின் முள் பதித்த சப்பாத்துக்களின் கீழ் உயிர் பிரிந்து போன எம் குழந்தைகளின் இறுகிய அவலக் குரல்களும் எம் உணர்வலைகளில் இருந்து இல்லாமல் போய்விடக் கூடுமா?
*్మe

Page 27
48| தானாவிஷ்ணு
அடையாளப்படுத்தல்
எப்போதும் நீ ஒரு கூரிய வாள் வைத்திருப்பது நல்லது குறைந்த பட்சம் சின்னக் கத்தியேனும்
அவர்கள் அப்பிள் வெட்ட தமது பரம்பரை வாளைப்புயன்படுத்துவதாக சொல்கிறார்கள்
அவர்களின் பரம்பரை வாளில் குருதி வெடில்கள் நாறியதாக பின்னாளில் ஒரு குறிப்பு இருந்தது அதை அவர்கள் மறைத்து விட்டார்கள் ஆனால் அவர்களிடம் எப்போதும் வாள் இருக்கிறது
தாம் மற்றவர்களை
ஆசீர்வதிக்க பரம்பரை வாளை பயன்படுத்துவதாக ஒரு முறை சொன்னார்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் அங்கிருந்து மீண்டதாக பின்னாளில் எந்தக் குறிப்புகளும் இல்லை அவர்களின் வாள் எப்போதும் குருதிக் கறை படிந்தே இருந்தது
 

நினைவுள் மீள்தல் 49
நீயும் வாள் வைத்திருப்பது நல்லது அப்பிள் வெட்டவோ மற்றவரை ஆசீர்வதிப்பதற்காகவோ அல்ல உன்னை ஆசீர்வதிக்க நினைப்பவனுக்கு உன் அடையாளத்தைக் காட்டுவதற்கும் உன் அடையாளங்களைத் தறிப்பவனின் சிரம் நறுக்கவும் நீ ஒரு வாள் வைத்திருத்தல் அவசியம்
令 *్మతీ
06-05-2003

Page 28
50 | தானாவிஷ்ணு
இன்னும் உறையில் இடப்படவில்லை வாள்
இறுதி நம்பிக்கைகளுக்குள் மிளிரும் ஒரு பிரமாண்டமான ஒளியின் வருகை வேண்டி பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறார்கள் ஆதாமின் புதல்வர்கள்
இருள் துருத்திக் கொண்டிருக்கும் ஆதாமின் அழகிய சோலைக்குள் இந்தப் பிரமாண்டமான ஒளி உதயம் ஒன்றினைத் தருவிக்கும் என்ற நம்பிக்கைகளில் அவர்கள் காத்திருக்கிறார்கள்
பாசி படிந்து போன பார்வைகளுடன் தோளில் உயிர் பறிக்கும் இயந்திரம்
சுமந்து
தெருக்களில் திரியும் சாத்தானின் புதல்வர்களின் விழிக்குள் முன்பு இந்த ஒளி விலக்கப்பட்டிருந்தது இப்போது அவர்களும் அதன் வருகை வேண்டி உறவுகள் சேரும் கனவுகளுடன் காத்திருக்கிறார்கள்
பிணம் எரிந்த சாம்பல் மேட்டில் புரண்டும் எழும் வல்லாதிக்கப் பேய்கள்
 

நினைவுள் மீள்தல் 51
இருள் முடிவின் புள்ளியொன்றில் இருந்து வெளித்தெறிக்கும் அந்த ஒளியை மறைத்துவிடுதல் பற்றிய ஆயத்தங்களோடு
உருக்கொண்டாடுகின்றன.
ஆதாமின் புதல்வர்களின்
உணர்வுகளை அறுத்து
அவர்கள் முதுகுகளில்
இன்னமும் சிலுவைகளை
தூக்கி நிறுத்துவதற்காகவே
அந்தப் பிரமாண்டமான ஒளியின் பின் துளிர்க்கும் ஒரு ஒளிக் காலம் பற்றிய கனவுகளுடனும் அதில் வாழ்தல் பற்றிய அவாவுதல்களுடனும் ஆதாமின் புதல்வர்களின் முகங்கள் எதிர்பார்த்துக் களைத்துப் போகின்றன
இருள் ஒடுங்கி விரியும் அந்த ஒளியை மறைத்து விடுவதற்கான கொடூரங்களுடன் அந்தப் பேய்கள் இரத்தமுறுஞ்சத் தொடர்ந்தும் உருக் கொண்டு ஆடியபடியேதான் இருக்கின்றன இப்போதும்
o oKo

Page 29
52 தானாவிஷ்ணு
பளியிடல் அல்லது பளியாடுகள்
மீட்பனை நோக்கி நீள்கிறது வெள்ளாடுகளின் கரங்கள் சபிக்கப்பட்டுப் போன அவைகளின் காலம் புதைகுழிக்குப் போகும் பாதை வழியாகவே அவைகளிடம் வந்து சேர்ந்திருக்கிறது
எட்டுத் திசைகளுக்கும் வேதனையை படர்வித்துக் கொண்டிருக்கிறது அவைகளின் தலைகளின் மேல் அழுத்தப்பட்ட முள் கிர்டங்கள்
அவைகளின் முன்னைய பாடல்கள் சதைகள் அறுக்கப்பட்டு குருதியாலும் அதன் வெடியாலும் நிரப்பப்பட்டிருக்கிறது இப்போது அவை இரட்சிப்புப் பற்றிய புதிய பாடல்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன
கொடிய அரக்கனின் குகைக்குள் அகப்பட்டுப் போன வெள்ளாடுகள் தப்பித்துக் கொள்ளும் ஆதங்கமும் அச்ச உறுத்தலும் கொண்டு இரத்தம் பிசிறும் குகையின் சுவர்களில் முட்டி மோதுகின்றன

நினைவுள் மீள்தல் 158
அரக்கன் கொடுரச்சிரிப்புடன், கையில் கோடரியுடன் தனது இரட்சிப்புக் கடவுளை பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறான் பலியிடத் தயாராக இங்கு வெள்ளாடுகள் மீட்பனை நோக்கி கரங்களை நீட்டியபடி
10-04-2003

Page 30
34 தானாவிஷ்ணு
BEGITIGD BGEGLi)
என் கூரைக்கு மேல் எப்போதும் வந்து போகும் நிலவு ஒளி வற்றிப் போயிருக்கிறது நீ பிரிந்து போயிருக்கும் காலம் நிலவின் ஒளியை அறுத்து என் மன மலையின் அடியில் புதைத்து விட்டது
என் அகதி நாட்களிலிருந்து உனக்கும் எனக்குமான இடைவெளி நீண்டு செல்கிறது
என் கண்களுக்குள் மீதமிருந்த எல்லா விம்பங்களையும் நிராகரித்து விட்டு உன்னை மட்டும் நான் அகதியாகித் திரிந்த ஒவ்வொரு நிலங்களிலும் ஊன்றிச் சென்றிருக்கிறேன்
நீ என் கனவின் இடைவெளிகளை நிரப்பிக் கொண்டிருப்பது உனக்குத் தெரியாததாய் இருக்கலாம் அல்லது உன் கனவின் இடைவெளிகளை நான் நிரப்புவதாக நீயும் புலம்பிக் கொள்கிறாயோ, என்னவோ
 

எத்தனையோ முகங்கள் எதிர்பார்க்காது சந்திக்க நேர்கிறது அவை என்னுடன் உரையாடுகின்றன ஒவ்வொரு முகங்களினுள்ளும் உன் இறந்த காலத்து முகத்தைத் தேடுகின்றேன் எந்த முகங்களுக்குள்ளும் நீயில்லை
இறுகிய மண்ணுள் உன் முகத்தைப் புதைத்து விட்டு வெறும் நினைவாக என் இருத்தலைச் சூழ்ந்து கொள்கிறாயா?
வாசல், தெரு, ஊர், நகர் எங்கும் துப்பாக்கி சுமந்து இரத்தப் பேய்கள் உலவும் இந்த நாட்களில் அதுவும் சாத்தியமாயிருத்தல் கூடும்
நான் உன் முகத்தையும், முகவரியையும் உன் வாழ்தலுக்கான அடையாளங்களையும் தேடி அலைகிறேன்
என் எதிர்பார்ப்புக்களை நிராகரித்து எந்தப் பிரதிபலிப்புக்களுமற்று நாட்கள் நகர்கிறது மிகவும் வேகமாக
*్మe
10-07-2003
நினைவுள் மீள்தல் 5

Page 31
56|தானாவிஷ்ணு
கால்களின் கீழ் நெளியும் நகரம்
அவர்கள் இரத்த நதிகளின் ஆழங்களிலிருந்து விறைத்துப் போன ஆண்குறிகளுடன் நகரங்களை நோக்கி வருகிறார்கள்
அவர்களின் வருகை
விச மனிதர்களின்
குதுகளிப்புகளாய் நிறைந்தன அந்த குதுகளிப்புகளில் மிதந்தவர்களாய் விச மனிதர்கள் அவர்களுக்கு கிண்ணம் நிரம்பிய குருதிகளைப் பரிமாறினார்கள் குருதி போதை கொடுத்தது அவர்கள் தமது பாதங்களின் கீழ் சுருண்டு கிடந்த பாம்புகளுக்கு உயிர் கொடுத்தார்கள்
அவர்களின் உயிர் கொடுப்பில்
நெளிந்த பாம்புகள்
விசங்களைக் கக்கியபடி
ஊரத் தொடங்கின
விசம் நதியாக நீண்டு
எல்லாக் குழந்தைகளையும் மூழ்கடித்துச் செல்கிறது
*్మe
O5 - O9-2003

நினைவுள் மீள்தல் 57
நினைவுகளில் அழியும் நிரந்தரம்
அழகற்றுப் போயிருக்கிறது இன்றைய நிலவு அதை நேற்றைய நிலவுடன் ஒப்பிட முடியாது இருக்கிறேன் நேற்றிருந்த நிலவு என் ஞாபகத்தில் இல்லை
GTGór LD56ir என்னிடம் கேட்டாள் “முந்தைய நாள் நிலவு அழகாய் இருந்தது இல்லையப்பா' நான் ஆமெனத் தலையசைத்தபடி நேற்றிருந்த நிலாவை ஞாபகப்படுத்த முயல்கிறேன்.
*్మe
12-11-2003,

Page 32
58|தானாவிஷ்ணு
நிறங்கள் பெயர்க்கப்பட்ட வண்ணத்துப் பூச்சிகள்
உன் இறுகிய விழிகளுள் நுரைத் தெழுந்த கண்ணிரில் ஒரு துளி கண்ணீர் உனக்குள் உம்பித் தெறிக்கும் வலி அடர்ந்த துயர்களைக்காட்டிற்று
ஒரு வசந்த காலத்தில் எல்லா மரங்களும் பச்சை பீய்ச்ச நீ மட்டும் கருகிக் கொண்டிருப்பதாய் கண்டேன் நெடிய மரத்தின் கீழ் கற்களால் செய்யப்பட்ட இருக்கையில் தனித்திருந்தாய், என் தோழி
நட்பின் நிறங்களறியா மனிதர்கள் வளாகத்து நெடியசுவரில் உனதும், எனதும் பெயர்களை அப்பியபின் வளாக முடுக்கெல்லாம் மலிந்து போனோம் நானும் நீயும்
என் கைப்பிடி இதயத்திலிருந்து உனக்குத் தரமுடிந்த தெல்லாம்

நினைவுள் மீள்தல் 59
நட்பின் வயிரங்கள் மட்டுமேதானென அவர்கள் அறிந்திருக்கவில்லை அறிந்திருந்த சில கண்களும் அனல் கக்கி வலிய நட்பை சாம்பலாய் சபிக்க முனைந்தன.
அந்த அனலில் வெந்து போய் இன்னும் இவ்வெளியின் மென்னிசையில் இதயம் பரப்பி நட்பாயிருக்க விதியில்லையென்று அழுது, துடித்துப் போனாய் நீ
அது தவிர்த்து காரணம் ஏதுமற்று எனது நட்பின் வயிரம் முறித்து விலகிச் சென்றாய்.
நான், எப்போதும் நாமிருக்கும் ஆலமரத்தின் விழுதுகள் உரசும் அந்தக் கல்லிருக்கையை வலியடைக்க „s“, வெறித்துப் பார்க்கிறேன் }
காலங்கள் இத்தனையும் நீயும் நானும் விட்டெறிந்த இறுகிய நட்பின் வார்த்தைகள் அமர்ந்திருந்தன ஒருவரை ஒருவர் பார்த்தபடி எனதன்பே,

Page 33
60 தானாவிஷ்ணு
நன்றி
வெளிச்சம் மூன்றாவது மனிதன் அம்பலம் வான்முழக்கம் எரிமலை
தெரிதல் ஆகிய இதழ்களுக்கும் ஈழநாதம்
ஈழநாடு
என்ற பத்திரிகைகளுக்கும்.
தானா , விஷ்ணு இமையாணன் கிழக்கு, இமையாணன் உடுப்பிட்டி
 

| _ | _|-- →---

Page 34


Page 35
வாசனையாகத்திர . ¬s 60]60 கவிதைகள் కీ