கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஒடுக்கப்பட்டவர்கள்

Page 1


Page 2


Page 3

é21 27// ܥܠܰ/ ' ܠ
حصل / أصيات S2 { ഗ്രി) - 1
Ulla. 6.
ஒடுக்கப்பட்டவர்கள்

Page 4
Title : ODUKKAPADDAWARKAL (Short Stories)
Author : Theniyaan
Copy Right to : Kanthaiah Nadesu
First Edition : May 2010
Publisher : Poobalisingam Book Depot 202, Sea Street, Colo... o 11 Tel 012422321
Printer : Page Gò Image 202/2B, Royal Pearl Garden Wattala ranjakumarGgmail.com
Price: RS. 400f=
ISBN: 978-955-9396-43-7

பதிப்புரை
நண்பர் தெணியான் அவர்கள் எமது நிறுவனத்தின் நீண்ட நாள் நண்பரும் நலன் விரும்பியும் ஆவார். எமது நீளத்தின் ஸ்தாபகரான எமது தந்தையாரின் காலத்திலிருந்து எம்முடன் தொடர்புகளை இறுக்கமாகப் பேணி வருபவர்.
நண்பர் தெணியான் அவர்களை விடுத்து ஈழத்து தமிழ் இலக்கிய வரலாற்றை எவராலும் எழுத முடியாது. அவர் தொடர்ச்சியாக சலிப்பின்றி எழுதி வருபவர். சாதியம் குறித்த போர்க்குணம் மிக்க கறாரான பார்வை அவரது எழுத்துக்களின் ஆதார சுருதி
இருபத்தைந்து சிறுகதைகள் அடங்கிய ஒடுக்கப்பட்டவர்கள்’ என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ள இந்தச் சிறுகதை நூலின் அனைத்துக் கதைகளுமே சாதியம் பற்றி பேசுகின்றன. கால ஓட்டத்துடன் சாதியம் எவ்வாறு யாழ்ப்பாணத் தமிழ்ச் சமூகத்தில் தொழிற்பட்டு வந்துள்ளது என்பதை இக்கதைகள் படம் பிடித்துக் காட்ட முயல்கின்றன.
இந்தக் கதைகளில் சில முன்னரே சில தொகுப்புக்கிளில் உள்ளடக்கப் பட்டிருக்கின்றன. ஏனைய கதைகள் சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்தவை. ஆயினும் இந்த எல்லாச் சிறுகதைகளையும் ஒருங்கு சேரப் படிக்கும் போது சாதியம் பற்றிய வாசகர்களின் புரிதல் மேலும் கூர்மை யடையும் என்பது எமது எதிர்பார்ப்பு
எமது நூல் வெளியீடுகள் பன்முகத் தன்மை வாய்ந்தனவாய் அமைய வேண்டும் என்பது எமது அவா. அந்த அவாவை பூர்த்தி செய்யும் தன்மையை நண்பர் தெணியான் அவர்களுடைய ஒடுக்கப்பட்டவர்கள் கொண்டிருப்பது எமக்கு மகிழ்வைத் தருகிறது. இந்த நூலைப் பதிப்பிப் பதில் எம்முடன் பூரணமாக ஒத்துழைத்த நண்பர் தெணியானுக்கும். இந்த நூலை அழகுற அச்சமைப்புச் செய்து தந்த நண்பர் எஸ். ரஞ்சகுமாருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
202, செட்டியார் தெரு. அன்புடன்
கொழும்பு - 13. ஆர்.பி. யூரீதரசிங்

Page 5
என்னுரை
மிழ் இலக்கிய உலகத்துக் ற்றிலும் புதிய வரவாக ஒஃபட்வர்கள் ಸೆ? ஃதுே சாதியீ” கொடுமை களைக் கருப்பொருளாகக் கொண்ட சிறுகதைகள் மாத்திரம் ஒரு தொகுப்பாகத் தொகுக்கப் பெற்ற நூல்கள் சில முன்னரே வெளி வந்திருக்கின்றன. ஈழத்துப் படைப்பாளிகள் பதினொருவரின் படைப்புக் களைத் தாங்கி, நிச்சாமம் வெளியீடாகப் பிரான்ஸிலிருந்து தீண்டத் தகாதவன்’ (2007) தொகுதி வெளிவந்திருக்கின்றது. அத்தொகுதியில் எனது இரண்டு சிறுகதைகள் ಜಿ?:? தீண்டத்தகாதவன்’ என்னும் எனது சிறுகதையே தொகுதியின் பெயராகவும் சூட்டப்பட்டுள்ளது. அத் தொகுப்பைப் போல தமிழ் நாட்டிலிருந்தும் தொகுப்பு வெளி வந்திருப்பதாக அறிய முடிகின்றது.
ஆனால் குறிப்பிட்ட ஒரு படைப்பாளியின் சாதியம் பற்றிய சிறுகதைகள் மாத்திரம் ஒரு நூலாகத் orಳ್ತೀ? சிறுகதைத் தொகுப்பு இது என்றே கூறலாம். உலக மக்கள் மத்தியில் வெகு வேகமான மாற்றமொன்று இன்று நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. தமிழ் மக்களும் இந்த மாற்றத்துக்கு உள்ளாகாமல் இருக்க முடியாது. ஒடுக்கப்பட்ட மக்களை இந்த மாற்றங்கள் பாதிக்காமல் இல்லை. ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு எதிரான ஒடுக்குதல்கள் பற்றி இன்று சிந்திக்கின்றார்கள்; பேசுகிறார்கள்; எழுது கிறார்கள்; செயற்படுகிறார்கள். இந்த மக்கள் மத்தியில் தோன்றி இருக்கும் மாற்றங்களின் வெளிப்பாடாகவே குறிப்பிட்ட செயற்பாடுகள் இடம் பெறுகின்றன. கால மாற்றத்துக்கு தகுந்தாற்போல தமிழ் மக்கள் மாறிக் கொண்டிருப்பதைப்போல, சாதியமும் தவிர்க்க யலாதவாறு மாறிக் கொண்டு வருகின்றது. ஆனால் அடிப்படையில் அது இன்னும் அழிந்து போய் விடவில்லை.
இந்தத் தொகுப்பில் மொத்தம் இருபத்தைந்து சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. முதற் சிறுகதை 1967ம் ஆண்டு எழுதப்பெற்றது. இறுதியாக இடம்பெற்றுள்ள கதை 2006 இல் வெளிவந்தது. 蘇 இரண்டு கேதை களும் வெளிவருவதற்கு இடைப்பட்ட காலம் நாற்பது ஆண்டுகள். இந்த நாற்பது ஆண்டு காலத்தில் சாதியத்தில் படிப்படியாக ஏற்பட்டு வந்திருக்கும் மாற்றங்களைத் தொகுதியில் இடம்பெற்றுள்ள சிறுகதைகளுக்கூடாகக்

கண்டு கொள்ளலாம். அந்த வகையில் இந்தத் தொகுதி தமிழ் மக்களின் நாற்பதாண்டு கால வரலாற்றின் ஒரு பகுதியை வளிக்கொண்டு வருகின்றது. இலக்கிய ஆவணமாகப் பதிவு செய்திருக்கின்றது. தமிழ் மக்களின் வரலாற்றில், ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாறு இருட்டடிப்பு செய்யப்படுமாயின் அது உண்மையானதும் முழுமையானதுமான வரலாறு ஆகாது. சாதியத்தின் வரலாற்றுப் போக்கினை விளங்கிக் கொள்ளத் தகுந்த வண்ணம், தொகுப்பில் 醬 ம் சிறுகதைகள் அவை வெளிவந்த கால ஒழுங்கு தவறாமல் நூலில் இடம்பெற்றுள்ளன.
சாதிய ஒடுக்குமுறைகள், அவமதிப்புக்கள், தடைகள், நிராகரிப்புகள் என்பன தீரும்வரை, சாதியத்துக்கு எதிரான இலக்கியங்கள் படைக்கப்பட வேண்டும். மேற்பூச்சு நாகரிகத்தினால் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்
ரல் நசுக்கப்படக் கூடாது. ஊசி மூலம் இரகசியமாக நஞ்சினை உடலில் துேவது போல, இன்று சமுதாயத்தில் சாதியத்தை வளர்ப்பவர்களை இனங்கண்டு வெளிப்படுத்த வேண்டும். ஈழத்தின் கடந்த கால அரசியல்
ழ்நிலைகள், தமிழ் மக்கள் மத்தியில் இருந்து வந்த சாதியப் பிரச்சினைகள் தீ விட்டன என்று வாய்ப்பாடாகச் சொல்லிக் கொண்டிருப்பதற்கு வாய்ப்பாக அமைந்து விட்டன. தமிழ் மக்களின் எந்தப் பிரச்சினையும் தீரவில்லை எனச் சொல்லிக் கொண்டிருப்பவர்கள் சாதியம் மட்டும் அழிந்து விட்டதாகக் கூறுவது ஒரு வேடிக்கைதான்! இந்தப் பொய்மைக்கு எதிராக வர்க்க, முற்போக்குச் சிந்தனையுள்ள அனைவரும் தங்கள் பேனாக்களைப் பயன்படுத்த வேண்டும்.
பொதுவாகச் சிறுகதைத் தொகுப்புக்களை வெளியிடுகின்றவர்கள் அந்தத் தொகுப்பிலுள்ள ஒரு ே தலைப்பினையே நூலின் பெயராகச் சூட்டிக் கொள்வதே வழக்கம். இந்தத் தொகுப்பின் அடிநாதமான ਨੋ கருத்தில் கொண்டு ஒடுக்கப்பட்டவர்கள் எனத் தொகுதிக்குப் பெயர் சூட்டி யுள்ளேன்.
ஈழத்தில் சாதியத்துக்கு எதிராகத் தொகையில் அதிக கதைகளை எழுஃபேவன் நான். இப்படி ஒரு தொகுப்பினை வெளியிட வேண்டும் என்ற எண்ணம் நீண்ட காலமாக எனது மனதில் இருந்து வந்திருக்கின்றது. எனது மன எண்ணத்தை ஒரு சமயம் எனது அன்புக்குரிய பூபாலசிங்கம் பூரீதரிசிங் அவர்களிடம் தெரிவித்தேன். “நிச்சயம் வித்தியாசமான" ஒரு நூலாக இருக்குமென' அன்று அவர் கருத்துச் சொன்னார். இந்த நூலை பூபாலசிங்கம் வெளியீடாக அவரே வெளியிட்டு வைக்கின்றார். நண்பர் ரஞ்சகுமார் நூலை நேர்த்தியாக அழகுற உருவாக்கித் தந்துள்ளார். இவர்களுக்கும், தொகுப்பில் இடம்பெறும் சிறுகதைகளை முன்னர் பிரசுரித்த சஞ்சிகைகள், பத்திரிகைகள் ஆகியவற்றின் ஆசிரியர்களுக்கும் எனது நன்றிகள்.
கலையருவி, அன்புடன் கரணவாய் வடக்கு தெணியான் வல்வெட்டித்துறை
2010 - 05 - 06

Page 6
ஒடுக்குதல்கள்
குடிமை 9 1 இப்படியும் ஒரு தர்மம் 9 7 சமூகங்கள் மாறும்போது 0 14 உள் அழுகல் 9 21 மூன்று தலைமுறைகள் e 32 காமாளை  ை41 எப்படியும் பெரியவன்தான்  ை46 மாத்து வேட்டி e 54 காது குத்து e 62 கரையை நோக்கி e 67 அவர்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள் e 78 எல்லைக்கோடுகள் e 84 சன்மானம் e 92 தொழும்பு e 98 வாத்தியார்தான் செத்துப்போனார் 6 108 பொருந்தாத தீர்மானங்கள் 114 காலத்தால் சாகாதது 6 120 காவல் அரண்கள் 6 126 இன்னுமா? e 135 மாற்றம் வந்துவிட்டது 9 145 அசல் யாழ்ப்பாணத்து மனிதன் ம 154 இவன் மிச்சம் நல்லவன் 9 160 வரப்புகள் உயரா e 169 உயர்மானம் e 178 வெளியில் எல்லாம் பேசலாம்  ை185

(35l q60)LD
நேர ஒழுங்கை வழுவவிட்டு ஓடும் யாழ்ப்பாணம் பருத்தித்துறை பஸ் தவறுதலாகச் சரியான நேரத்தில் புறப்படத் தயாராக நிற்கிறது. சுவாலை விடும் பங்குனி மாத உஷ்ணத்தில் பஸ் நிலையமும் நகர வீதிகளும் உருகி, தமிழ்ச் சினிமா நடிகையின் போலிக் கவர்ச்சி போலத் தகதகவெனக் குளிர்ச்சி மயக்கைக் கொடுக்கின்றன. அவசரக் குடுக்கை களான பிரயாணிகள் பஸ் நிலையத்திற்கும் வான் காலைக்கும் பாதங்கள் தரையில் படாத வண்ணம் காவடி தூக்கின ஒட்டம் ஒடுகின்றனர்.
“பாம். பாம். பாம். பா.ஊ.பாம்.”
“இப்ப போறம். வாருங்க. வாருங்க. வந்தேறுங்க. இண்டு முழுவதும் ஒரு வஸ்ஸ"மில்லை. இனிமேல் நாங்கள் நிக்கமாட்டம்.
கதியாப் போகப் போறம். ஏறுங்கோ.”
சொந்த ஊருக்கு மாற்றம் பெறுவதற்காக எம்.பீக்களின் திருவருள் வேண்டிப் போகும் வெளியூர்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு எம்.பீக்களின் திருவாய் மலர்ந்தருளும் உறுதிமொழிகள் போன்ற பல்லவிகளைப்பாடி, வானை நிறைந்து விட்டான் கொண்டக்ரர்.
“பிறகேன் நிக்கிறியள்? இன்னும் இதுக்கிளை சனமடையப் போகிறியளோ?. கோதாரியிலைபோன வானுக்கை ஏறி அவிஞ்சு சாகிறன்” கிழவி ஒருத்தியின் குரல் நைந்து போன பழஞ்சீலையாகக் கிழிகிறது.

Page 7
2 தெணியான்
“எடு மச்சான். இனிப் போவம், வஸ் வெளிக்கிடுகிது” சொல்லிக் கொண்டு வானை ஒருமுறை வலம் வந்து, பிரயாணிகளை இன்னும் கொத்தலாமா? என்று கழுகுக் கண்களால் பார்க்கின்றான் கொண்டக்ரர்.
வான் புறப்படுகிறது, கொண்டக்ரர் மிதிபலகையில் தொத்திக் கொண்டு “றைற்' என்கிறான்.
"பாம். பாம்.” எனக் குரல் கொடுத்து கடகடத்த உதறலோடு உறுமிக் கொண்டு வான் ஒடுகிறது.
வியர்த்து ஒழுகிக் கொண்டிருந்த பிரயாணிகள் காற்றோட்டத்தில் சுகானுபவம் பெற்று இன்பத்தில் திளைக்கின்றனர்.
வான் காஸ்தூரியார் வீதியில் நுழைந்து வின்ஸர் தியேட்டர்ச் சந்தியில் கிழக்கு நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கிறது. தியேட்டர் ஒரமாக கக்கத்துள் குடையை இடுக்கிய வண்ணம் மடியை அவிழ்த்து வெற்றிலையை வாய்க்குட் தள்ளிக் குதப்பிக் கொண்டு நிற்கும் குடுமிக் காரர், வெற்றிலைக் கடதாசியை அவசரமாக மடிக்குள் திணித்துக் கொண்டு வீதிக்கு முன்னேறி வானுக்கு கையைக் காட்டுகிறார்.
வானின் வேகம் சற்றுத் தணிகிறது. "இதுக்குள்ளை எங்கே ஏத்தப் போறியள், வானுக்கு மேலை இருத்தி. கயித்தாலை கட்டுங்கோவன்” வான் மெல்லத் தரிப்பதைக் கண்டு கிழம் ஒன்று முணுமுணுக்கின்றது. “எவடம்?” கொண்டக்ரரின் கேள்வி "இருவாலை" சொல்லிக் கொண்டே ஓடி வந்து மிதிபலகையில் கால் வைத்து ஏறுவதற்கு எத்தனிக்கிறார் குடுமிக்காரர்.
"இறங்கிறங்கு. பின்னுக்கு வஸ் வருகிறது” கொண்டக்ரர் சொல்லி முடிப்பதற்குள் வான் கிளம்பிப் போய்க் கொண்டு இருக்கிறது.
வான் புகைப்பட ஸ்ரூடியோவைத் தாண்டிக் கொண்டு இருக்கிறது. ஸ்ரூடியோவுக்குள்ளே இருந்து இருபது வயது மதிக்கக் கூடிய இள மங்கை ஒருத்தி விரைந்து வந்து வானை மறிக்கிறாள். வந்த வேகத்தில் அவளைக் கடந்து பல யார்களுக்கப்பால் 'கிரீச்” என்ற சத்தத்துடன் வான் நிற்கிறது. அலங்காரம் கலையாத வண்ணம் நளினமாக மெல்ல மெல்ல வானை நோக்கி அவள் நடக்கிறாள். அவளை நோக்கிச் சில யார் தூரம் ரிவேளில் வந்து அவளருகில் தரித்து நிற்கிறது வான்.
“எவடம்?” கொண்டக்ரரின் வழக்கமான கேள்வி “முத்திரைச்சந்தை” “சரி, ஏறுங்கோ” அழகுப் பையையும் குடையையும் செவ்வையாகப் பிடித்த வண்ணம் ஜெக்கெட்டுக்குள் மறைத்து விட்டிருக்கும் தாலியை மறு

ஒடுக்கப்பட்டவர்கள் 3
கையால் உள்ளே தள்ளிவிட்டுக் கொண்டு மிதிபலகையிற் கால் வைத்து ஏறுகிறாள். பாதி உடல் வானுக்குள்ளும், மீதி வெளியிலுமாகத் தொங்கிக் கொண்டு நிற்கும் அவளை அணையாமல் அணைத்த வண்ணம் மிதி பலகையிற் தூங்குகிறான் கொண்டக்ரர்.
வான் முத்திரைச் சந்தையில் வந்து நிற்கிறது. அவள் கீழே இறங்கிக் கொண்டக்ரரிடம் காசைக் கொடுத்த வண்ணம் அவனை ஓரக் கண்ணால் நோக்குகின்றாள். அவன் அவளைப் பார்த்து ஒர் அசட்டுச் சிரிப்பைச் சிந்த, பதிலுக்கு அவளும் ஒரு நமட்டுச் சிரிப்புச் சிரித்தபடி குடையை விரித்துக் கொண்டு நடக்கின்றாள்.
“என்ன மச்சான்.” றைவர் வினவுகிறான். “சரி. எடு. வஸ் வருகிது போலை கிடக்குது” கொண்டக்ரர் உற்சாகம் இழந்து சோர்வுடன் சொல்கிறான்.
வான் கிளம்பிக் கொண்டிருக்க வாலிபர் ஒருவர் இரைக்க இரைக்க ஓடி வந்து "அச்சுவேலி” சொல்லிக் கொண்டு ஏற முயற்சிக்கிறார்.
“இறங்கிறங்கு. இதுக்குள்ளை எங்கெ நிற்கப் போறிர்? வஸ் பின்னுக்கு வருகிது”
"நான் வெளியிலை நிண்டு வாறன். அவசரமாகப் போக வேணும்” வாலிபர் வேண்டிக் கொள்கிறார்.
“இஞ்சை நிக்கவுமிடமில்லை. றைற்.” வான் கள்ளியங்காட்டுச் சந்திக்கு வந்துவிட்டது. சந்தையில் மீன் விற்றுவிட்டு வந்து நிற்கும் மீன்காரிகள் மூவர் கை நீட்டி வானை மறிக்கிறார்கள். அவர்களைக் கடந்து சற்றுத் தூரம் வந்து வான் தரித்து நிற்கிறது.
கொண்டக்ரர் கீழே இறங்குகிறான். “கெதியா வாங்கெடி’ மீன் கடகத்தைத் தலைகளிற் தூக்கி வைத்துக்கொண்டு வானை நோக்கி ஓடி வருகிறார்கள் அவர்கள்.
“பெட்டியைப் பின்னுக்கு வைச்சிட்டு ஏறுங்கெடி பின்னாலே. பெட்டிக்கு ஒவ்வொரு ரூவாத் தர வேணும்”
"ஏன் நயினார், வெள்ளென வரயிக்கெயும் ஒரு பெட்டிக்கு ஐஞ்சுறுவா நயினார் எடுத்துப் போட்டுது”
"ஏன்ரி சின்னன், ஒருருவா கூடிப் போய்ச்சே, ஒரு பெட்டிக்கை கொண்டு போறது நூறு. இருநூறு என்டெல்லே வித்துப்போட்டு வாறியள். இப்ப உங்களிட்டைத்தானே காசு பிளங்கிது. இப்பவே சொல்லிப் போட்டன், பேந்து வேறெ கதை கதைக்கக் கூடாது. ஒவரு ரூபாத் தர வேணும். சரி. சரி. பின்னுக்கு போய் ஏறுங்கெடி"

Page 8
4 தெணியான்
“இந்தக் கோதரியிலை போவாளுகள் இதுக்குள்ளே எங்கெ வாறாளுகள். சி. எளியதுகள். இதுக்குத்தான் இந்த வானிலை வஸ?விலை நான் போறதில்லை.” கிழவி ஒருத்தி வாய் விட்டுச் சலித்துக் கொள்ளு கிறாள்.
மீன்காரிகள் மீன் கடகங்களை வான் சங்கிலியில் தொங்கும் பலகையில் வைக்கிறார்கள்.
பின் வரிசையில் இருக்கும் இருவர் அருவருப்போடு எழுந்து சென்று, குனிந்து கொண்டு நிற்கிறார்கள்.
பிரயாணிகளில் சிலர் முகத்தைச் சுழித்துக் கொண்டு மூக்கைப் பிடித்துக் கொள்ளுகிறார்கள்.
மீன்காரிகள் ஒருவர் பின் ஒருவராக ஏறி உள்ளே வந்து, எழுந்து போய் நிற்கும் இருவரின் ஆசனத்திலும் நெருங்கிக்கொண்டு உட்காரு கின்றார்கள்.
வான் ஒரு உலுப்பு உலுப்பிவிட்டு கிளம்பி ஓடுகிறது. முன் ஆசனத் தில் அமர்ந்திருந்த காற்சட்டைக்காரரை இருபாலையில் இறக்கிவிட்டு மீண்டும் ஒடுகிறது.
வீதி நெடுகிலும் பிரயாணிகளை ஏற்றுவதும் இறக்குவதுமாக வேகமாக ஒடிக்கொண்டிருக்கிறது.
"ஏய், நீ ஒரு நாளும் வானிலை ஏறவில்லையா? பின்னாலை வஸ்ஸெல்லே வருகிது. நீ இப்பதான் ஏறி இறங்கிப் பழகிறாய்” பஸ்ஸுக்கு முந்திப் போக வேண்டும் என்ற வேகத்தில் மெல்ல இறங்கும் சேட் அணியாத ஒரு பிரயாணியைப் பார்த்து மிரட்டுகிறான் றைவர்.
வான் நீர்வேலியின் வாழைத்தோட்டங்களை இரு கூறாகப் பிரித்து வளைந்து வளைந்து நீண்டு கிடக்கும் வீதியில் தடமடித்துக் கொண்டு ஒடுகிறது.
பஸ் வண்டி இரைந்து கொண்டு வானை நெருங்கிக் கொண்டு இருக்கிறது.
வானின் வேகத்தில் சூடேறுகின்றது. சரிந்து விழுவதைப்போல ஒரு முடக்கில் வான் மடக்கித் திரும்பு கிறது.
அச்சத்தினால் பெண்கள் ஆளை ஆள் பார்க்கின்றார்கள். “எட மோனை கொஞ்சம் மெதுவாகப் போவன்ரா” கிழவி பதறிக் கொண்டு சொல்கிறாள்.
அடுத்து வந்த இன்னொரு முடக்கில் வான் வேகமாகத் திரும்பு கின்றது.
"ஐயோ. ஐயோ. பாவம். பாவம்' எல்லோரும் ஏகோபித்து வேதனையோடு குரல் எழுப்புகிறார்கள்.

ஒடுக்கப்பட்டவர்கள் 5
றைவர் பெருஞ்சிரமத்துடன் பிறேக்கை அழுத்திப் பிடித்து வானை நிறுத்தப் பார்க்கிறான். வான் கிரீச்” என்ற பெருஞ்சத்தத்தோடு சிறிது தூரம் ஓடி, பின் தரித்து நிற்கிறது. கொண்டக்ரர் பிரயாணிகளில் வாலிபர்கள் சிலர் குதித்து இறங்கி ஒடுகிறார்கள்.
“உழைப்புக் கெட்டால் கெடட்டும், இந்த கொடுமையைப் பாத்துப் போட்டு என்னண்டு விட்டிட்டுப்போறது” சொல்லிக் கொண்டு றைவரும் இறங்கி ஓடுகின்றான்.
பஸ் வண்டி வானை முந்திப் போய்க் கொண்டிருக்கிறது. வானுக்குள் இருக்கும் பெண்களின் விழிகளில் நீர் முட்டுகிறது. பலர் வாய்க்கு வந்தபடி திட்டுகிறார்கள்.
"கட்டையில போவான். முனியடிப்பான், உவன்ரை பிள்ளை குட்டி
“உவனுக்குப் பெத்த தேப்பன் போலையெல்லலோ! கை நீட்டவும் மனம் வருமே!’
"ஆ. பாவம்! ஐயோ, அது துடிக்கிற துடிப்பைப் பாருங்கவன்", "அவனுக்கு வெறி பிடிச்சிட்டுது போலை. அவன் விடுகிறதாத் தெரியவில்லை”
“ஆ. மண்டை உடைஞ்சு இரத்தம் வடியுதே! மூக்கும் உடைஞ்சு போச்சு.”
"ஐயோ, சிவபெருமானே. அது கை எடுத்துக் கும்பிட்டுக் கொண்டு அழுகிறதைப் பாத்தாவது அவனுக்கு மனமிரங்குதில்லையே!” “சிவ. சிவா. சிவ. சிவா பேந்தும் பேந்தும் அந்தக் கல்லுக் கும்பிக்கு மேலைதானே தள்ளித்தள்ளி விழுத்துகிறான்”
"ஆ. கடவுளே, காலாலையும் போட்டு மிதிக்கிறானே” “வயித்தாலையும் போயிட்டுபோலை கிடக்கு” வானில் இருந்து இறங்கி ஓடிப் போனவர்கள் ஏதோ பேசிக் கொண்டு வானுக்குத் திருப்பி வருகின்றார்கள்.
“ச்ச. வஸ் போவிட்டு, இனிமேல் பின்னாலை போயுமென்ன! சனம் முழுவதையும் அவன் கொண்டு போவிடுவான், வீணாக நிண்டு ஒரு ஒட்டத்தைக் கெடுத்துப் போட்டம்” அலுத்துக் கொண்டே வானில் வந்து ஏறுகின்றான் றைவர்.
வான் உறுமிக் கொண்டு புறப்படுகிறது. வானுக்குள்ளே இதுவரை இருந்தவர்களுக்கு ஒன்றுமே விளங்க வில்லை.
“என்ன நயினார். ஒடிப்போனியள்? இடிமாடுபோல நிக்கிற அந்தத் தடியன், அந்தக் கிழவனைப் போட்டு அடிச்சுக் கொல்லுறான்.

Page 9
6 தெணியான்
நயினாரவை பிடிச்சுக்கூட விடாமல் வாறியள்! பொங்கெ. இப்பவும் போட்டு அடிக் கிறான்” மீன்காரச் சின்னன் மனம் பொறுக்காமல் கேட்கிறாள்.
"அந்தக் கிழவன் அவற்றை குடிமேனாம். பெண்சாதியின்ரை தீட்டுச் சீலையைக் கொண்டு போய் இன்னும் வெளுத்துக் கொண்டு வந்து குடுக்கேல்லையாம், அதுதான் அடிக்கிறார். அவர் தன்ரை குடிமேனுக்கு அடிக்கிறதுக்கு நாங்கள் என்ன செய்கிறது?” சொல்லிக் கொண்டு முந்திச் சென்று விட்ட பஸ்ஸைப் பிடித்துவிட வேண்டும் என்ற ஆக்கிரோசத்துடன் வானை வேகமாக ஒட்டுகிறான் றைவர்.
- LD6365603,
ஜனவரி 1967

இப்படியும் ஒரு தர்மம்
“பொழுதெங்க..! எட, அறுவான்ரை பொழுது தரதரண்டு போவிட்டுது. அதுக்கென்ன. பசியோ! களையோ! நான் கோதாரியிலெ போவாள் இழுத்திழுத்து எங்கெ போய்ச் சேரப் போறன்! நான் தேர் இழுத்துக் கொண்டு போறதுக்கிடையிலை பூசை குடுத்து முடிஞ்சுபோம். ஹ".ம் எண்டாலும் அறிஞ்ச ஒரு நயினார் நிக்க மாட்டாரே! இந்தக் கிழட்டுத் தோறை பாவமென்டு ஒரு பிடி சோறு போடாமல் விட்டு விடுவரே!.
முதுகு வளைந்து கால்கள் குறண்டி முழந்தாள்களும் நாடியும் ஒட்டி உறவாடி, புழுப்போல மடிந்து சுருண்டு கிடக்கும் வள்ளிக்கிழவி, எழுந்து நடப்பதற்கு இன்னொரு காலாக உதவும் கைத்தடியை நடுக்குங் கரத்தினால் பற்றி மெல்ல எடுக்கின்றாள்.
அவளுக்குப் பின்பிறமிருந்து “கறக். கறக்” சத்தம் எழுகின்றது. தொடர்ந்து சாம்பல் புகை மண்டலம் கிளம்புகிறது.
நாய் வந்து அடுப்புக்குள் படுத்துக் கிடக்கிறது. அவள் மறுபுறம் திரும்பி நாயை விரட்டி விடுவதற்கு விரும்புகின் றாள். அது தன்னால் முடியாத காரியம் என்று நினைத்துக் கொள்ளு கின்றாள். தடியைக் கையில் எடுத்து பின்புறமாக அதை நீட்டி, அப்படியும் இப்படியும் ஆட்டி, "டீக். டீக்” என்று குரல் கொடுக்கிறாள்.

Page 10
8 தெணியான்
“எடே பொலிசு உனக்குச் சும்மா கிடக்கேலாதே! ஏன் சாம்பலைப் போட்டுக் கிண்டுறாய். ஹாம். நீ வேற என்ன செய்வாய்? நான் செய்த பாவத்துக்குக் கிடந்து சாகிறன். நீ என்னோட சேந்த பாவத்துக்கு கிட, என்னைப் பிடிச்ச சனி உன்னையும் பிடிச்சுப் போட்டுது என்ரை தலையிலே கொக்காரைக் காம்பாலை பிடரி மட்டும் எழுதிப் போட்டான் கடவுள். இல்லையென்டால் என்ன தேள்வைவிழ நான் சாகாமல் கிடக்கிறன்”
நாய் பிராண்டும் சத்தம் அடங்கி, சாம்பல் காற்றில் எழுந்து பறப்பது தணிகிறது. அவள் தடியை நிலத்தில் ஊன்றி தட்டுத் தடுமாறி மெல்ல எழுவதற்கு எத்தனிக்கின்றாள். கைத்தடியின் உதவியில் கால்கள் மெல்ல மெல்ல நிமிருகின்றன. ஆனால் முதுகு ‘ட’ னாவாக முன்போல வளைந்து கிடக்கின்றது. அது இப்படி வளைந்து ஆண்டுகள் சில கடந்து விட்டன. உடல் வாழை நாராகக் காய்ந்து கிடக்கிறது. இப்போது அவள் தசைப்பற்று வரண்டுபோன வெறும் எலும்புக்கூடு.
அவள் வாயில் பற்கள் உதிர்ந்து தாடை எலும்பு முன்னே நீண்டு கிடக்கின்றது. அவள் கூந்தல் மாத்திரம் இளமை குன்றாது கரு கரு என்று தோன்றுகிறது. மொத்தத்தில் தேய்ந்து பழுதடைந்து போன ஒரு மனித இயந்திரந்தான் அவள்.
அவளுக்கு இப்பொழுதுள்ள பெரும் கவலை தனக்கு இன்னும் சாவு வந்து சேரவில்லையே என்பதுதான். சாவு அவளுக்கொரு சுகம், மரண சுகம். அந்தச் சுகத்தைப் பெற்றுவிட அவள் ஆவலோடு காத்திருக் கின்றாள். ஆனால் அது வரவேண்டுமே.
மரணம் இவளோடு கண்ணாம்பூச்சி விளையாடி ஒடி ஒளிக்கிறது என்பதால், அவள் வயிறு அலட்டாமல் சும்மா இருந்து விடுமா! இந்த வயிறு பசிக்காத நல்ல வயிறாக இருந்தால்..? அப்படியும் இல்லை. வயிற்றின் கொடுமை. பசி. அவளை மரணத்தில் மேல் அடங்காத மோகம் கொள்ளச் செய்கிறது.
பசி. மூன்று நாட்கள் எந்தவொரு உணவுத் துணிக்கையும் கிடைக்காத கொடும் பசி
அவளுக்குக் கண்கள் இருண்டு கொண்டு வருகின்றன. அவளைச் சுற்றியுள்ள யாவும் சுழல்வது போலத் தோன்றுகின்றன. தட்டுத் தடுமாறி கீழே விழுந்து விடப் போன அவள் கைத்தடியை உறுதியாக நிலத்தில் ஊன்றி சற்று நேரம் நின்று, தன்னை நிலைப்படுத்திச் சமாளித்துக் கொள்ளுகின்றாள்.
அவள் மெல்ல மெல்ல நகர்ந்து அந்தக் குடிலைச் சுற்றி மூடிச் சார்த்தி இருக்கும் காவோலை ஒன்றில் இடுக்கி வைத்திருக்கும் குஞ்சுப் பெட்டியைக் கையில் ஏடுத்துக்கொண்டு வாசலை மூடிக் கிடக்கும் காவோலையை விலக்கி விட்டுக் கொண்டு மெதுமெதுவாக ஆடி அசைந்த வண்ணம் வெளியே வருகின்றாள்.

ஒடுக்கப்பட்டவர்கள் 9
சூரியன் மதியத்துக்கு வந்து மேலும் நாற்பத்தைந்து பாகை சரிந்து விட்டான். ஆனால் யாழ்ப்பாணத்து சித்திரை மாதச் சூரியனின் சீற்றம் சுவாலை விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.
அவள் சேலைத் தலைப்பை மெல்ல இழுத்து தலையை மூடி முக்காடு இட்டுக்கொண்டு மெல்ல மெல்ல நகர ஆரம்பிக்கின்றாள்.
நிலம் பாதத்தில் தணலாகச் சுடுகிறது. நிலத்தின் சூடு, என்ன சூடு! வயிற்றின் சூடு, அதைவிடப் பெரிது, வயிற்றுச் சூட்டின் தகிப்பில் தரையில் நடப்பதாகத் தடியை ஊன்றி ஊன்றி தவழ்ந்து போய்க் கொண்டிருக்கின்றாள்.
அந்தக் கிராமத்தின் தெற்குத் திசையில் ஒதுக்குப் புறமாக தோட்ட நிலங்களுக்கருகே ஒரு பிள்ளையார் கோவில். மூலஸ்தானமும் அதனோடு சேர்ந்த ஒரு மண்டமும் மட்டுமுள்ள சிறிய ஒரு கோவில். நித்திய, நைமித்திய பூசைகள் நடைபெறும் கோவிலல்ல அது அதனால் ஆலயப் பிரவேசப் போராட்டம், கதவடைப்பு, கம்பிவேலி என்று எதுவும் அங்கில்லை.
ஆனால் ஆண்டுக்கு ஒரு தடவை அல்லது இரண்டு தடவைகள் அந்தக் கிராமத்துத் தனவந்தர்கள் யாராவது மனம் வைத்து, பிள்ளை யாரை நினைவு கூர்ந்து அன்னதானம் வழங்குவது வழக்கம்.
இன்று கம்பளை முதலாளி கந்தவனம்பிள்ளை ஒரு மூடை அரிசி அவித்து அன்னதானம் கொடுக்கின்றார்.
இந்த அன்னதானம் வயிற்றுக்கு இல்லாத ஏழை எளியதுகளுக்கு, வயோதிபர்களுக்கு, நோயாளர்களுக்கு, அங்கவீனர்களுக்கு வழங்கப் படுவதாகக் கருதிவிடக் கூடாது. கந்தவனம்பிள்ளை தனது இனத்தவர் கள். உறவினர்கள், நண்பர்களுக்கு மாத்திரம் அழைப்பு விடுத்திருக் கின்றார்கள்.
ஆனால் வயிற்றுக்கில்லாத ஏழை எளியதுகள் காகங்கள் போலத் தான். எப்படியோ அறிந்து, ஒன்றாக வந்து கூடி விடுவார்கள்.
கந்தவனம்பிள்ளைக்குத் தெரியும், அதுகள் அறிந்து, அங்கு வந்து சேருவார்கள் என்று.
அந்தக் கோயிலை நோக்கி வள்ளிக்கிழவி தன்னால் இயன்றவரை இளைத்து இளைத்து அடி இழுத்து வைக்கின்றாள். பின்னர் இருக் கின்றாள். பின்பு எழுந்து அடி இழுக்கிறாள். பிறகு இருக்கின்றாள். எழுந்து அடி இழுத்து.
பனங்காணிகள், வடலிக்கூடல்களை எல்லாம் அவள் ஊடறுத்து ஒற்றையடிப் பாதையில் போய்க்கொண்டிருக்கிறாள். காரை முள்ளும் நாகதாளியும் அந்த ஒற்றையடிப்பாதையின் இருமருங்கும் செறிந்து வளர்ந்து நிற்கிறது. தான் ஒடிக்கொண்டிருப்பதான வேகம் அவளுக்கு,

Page 11
10 தெணியான்
அந்த வேகத்தில் தடுமாறி நிலை குலைந்து காரை முட்பற்றையின் மேல் விழுகின்றாள்.
பின்னர் தடியை நிலத்தில் ஊன்றி மெல்ல எழுகின்றாள். முகம், கை, கால்களில் முட்கள் குற்றி இரத்தம் கசிகின்றது. உடல் வலிக்கின்றது. முட்களைப் பிடுங்கி எறிவதற்கு ஒற்றை அடிப்பாதையில் கீழே குந்தி இருக்கவும் முடியவில்லை. 'கோ' என்று கதறி அழ வேண்டும் போல அவளுக்குத் தோன்றுகிறது. ஆனால் அழுவதற்குத் தானும் அவள் உடலில் வலுவில்லை. அழுது பயனுமில்லை. ஆதரிக்க ஆளில்லாத அழுகைக்கு என்ன பயன் இருக்கப் போகிறது?
தலையைத் தூக்கி வானத்தை நிமிர்ந்து நோக்குகின்றாள். பொழுது நன்றாகச் சரிந்து விட்டது. இப்பொழுது அழுவதற்கும் அவளுக்கு நேரமில்லை. வயிறு அழுது கொண்டிருக்கிறது. அதன் அழுகை தீர்ந்தால் போதும். தொடுவானத்துக்குள்ளே பொழுது விழுந்துவிட்டால் இருட்டு கட்டிக் கொண்டு வந்துவிடும். இன்றும் ஒரு பிடி சோறு கிடைக்காமல் போய் விடும். அதற்குள் போய்ச் சேர வேண்டும்.
"அப்பனே பிள்ளையாரே, உன்ரை பேரினாலே இண்டைக்காவது இந்த வயிறு குளுந்து வரவேணும்” அவள் பிள்ளையாரை வேண்டிக் கொள்ளுகின்றாள்.
பின்னால் யாரோ வந்து கொண்டிருக்கும் அசுமாத்தம் காதில் விழுகிறது. அவள் திரும்பிப் பார்க்கின்றாள்.
நாய், அவளுக்குச் சொந்த பந்தம், உறவு எல்லாமான அந்த நாய் வந்து கொண்டிருக்கிறது.
“எடே பொலிசு! நீயும் வாறியே! வா. வா. ஊர் நாயளிட்டை கடி வாங்கப் போறாய். நீ வீட்டோடை கிடந்தால் உனக்கொரு கவளம் கொண்டு வந்து வைக்க மாட்டனே! உனக்குத் தராமல் தின்னுற சாதியில்லை நான்”
அவள் சொல்லிக்கொண்டு நடக்கிறாள். அவளைப் பின்தொடர்ந்து நாய் வந்து கொண்டிருக்கிறது.
அவள் கோயிலை நெருங்கி வந்து விட்டாள். கோயிலுக்கு வெளியே ஒதுக்குப்புறமாக எச்சில் இலைகள் குவிந்து கிடக்கின்றன.
நாய்கள் பாய்ந்து வந்து அந்த இலைகளின் மேல் விழுந்து புரண்டு தங்கள் வயிறுகளுக்காகப் போராடிக்கொண்டு நிற்கின்றன.
வள்ளிக் கிழவியின் பொலிசு அந்த நாய்களுக்கு மத்தியில் பாய்ந்து குதிக்கிறது. நக்கிக் கொண்டு நிற்கும் நாய்களுடன் போராடுகின்றது. பின்வாங்காத அதன் போராட்டத்தில் காய்ந்த வயிறு நனைந்து கொண்டிருக்கிறது.

ஒடுக்கப்பட்டவர்கள்
வள்ளிக்கிழவி தான் வெற்றிக் கம்பத்தை எட்டிவிட்ட பூரிப்போடு கோயிலை நோக்கி முன்னேறுகிறள்.
அவள் ஆலயத்தை நெருங்க நெருங்க அன்னதானம் கொடுத்து முடிந்துவிட்டதை கண்டு திகைக்கின்றாள்.
ஆலய மண்டபத்துக்குள் வைக்கும் பந்தி எல்லாம் நடந்து முடிந்த பிறகு, ஆலயத்துக்கு வெளியே ஒதுக்குப்புறமாக ஓலைப்பெட்டிகளுடன் காத்து நின்றவர்களை வரிசையாக இருத்தி பெட்டிகளுக்குச் சோறு போட்டு முடிந்துவிட்டது.
அவள் அந்த வரிசைக்கு வந்து சேர முடியவில்லை. ஆனால் அவளுக்கு மனதிலுள்ள நம்பிக்கை தளரவில்லை. ஒரு பிடி சோறு எப்படியும் வாங்கிப்போடுவேன் என்ற மனத்திடத்துடன் கோயிலை நோக்கி வேகமாக நகருகின்றாள்.
கோயில் முன் இறைந்து கிடக்கும் நெருஞ்சி முட்கள் அவள் பாதங்களை நெருடுகின்றன. அந்த முட்களைப் பிடுங்கிப் போடுவதற்கும் அவகாசமின்றி அவள் சென்று கொண்டிருக்கின்றாள்.
அவள் கோயில் வாசலை எப்படியோ வந்து அடைந்து விட்டாள். வாசலில் நெருங்கி அடித்துக் கொண்டு நிற்கிறது ஒரு கூட்டம், "ஐயா, இதுக்கெ! நயினார் இதுக்கெ கொஞ்சம் நயினார் நயினார் இதுக்கெ” குரல் கொடுத்த வண்ணம் ஒலைப்பெட்டிகளை நீட்டுகிறது அந்தக் கூட்டம்.
“எடியேய் அங்கெ தள்ளி நில்! டேய், ஏன்ரா அவளை இடிக் கிறாய்! ஒழுங்கா நிண்டு வாங்க வேணும் இல்லையெண்டால் அடிச்சுக் கலைச்சுப் போடுவன்!” கோயில் மண்டபத்துக்குள் இருந்து ஒரு அதட்டல் குரல் எழுகிறது.
சோற்றுக்காக அம்புலோதிப்படும் அவர்களின் அமளிதுமளி கண்டு வள்ளிக்கிழவி ஒரு கணம் திகைக்கின்றாள். “இந்த இடிபாட்டுக்கெ நான் எங்கே சோறு வாங்கப் போறன்?” என்று எண்ணி ஏங்குகின்றாள். பெட்டியை யாரிடத்திலாவது கொடுத்து சோறு வாங்க லாம். அப்படி அவளுக்கு யார்தான் வாங்கிக் கொடுக்கப்போகிறார்கள்? ஒவ்வொருவருக்கும் தனது பெட்டியில் சோறு விழ வேண்டும் என்ற ஏக்கம். அவளை யார் கவனிக்கப் போகின்றார்கள்?
அவள் மனதைத் திடப்படுத்திக்கொண்டு வெளியில் நிற்கும் கூட்டத்தை நெருங்குகின்றாள்.
“போங்கடி. போங்கடி.” உள்ளே நிற்கின்றவர்கள் வாசலில் கூடி நிற்கின்றவர்களை விரட்டுகிறார்கள் வெளியே நிற்கும் கூட்டம் கும்பலாகத் தள்ளப்பட்டு வந்து, அவளை மோதித் தள்ளுகிறது. “பிள்ளையாரே. பிள்ளையாரே..” என்று சத்தமிட்ட வண்ணம் அவள்
சரிந்து கீழே விழுகின்றாள்.

Page 12
12 தெணியான்
"சோறு. சோறு ஒரு பிடி சோறு.” என்று வாய்விட்டுச் சொல்லிக் கொண்டு, அவள் கைத்தடியை நிலத்தில் ஊன்றி நடுநடுங்கி மெல்ல எழுந்து, அந்தக் கூட்டத்துக்குள்ளே நுழைந்து அரக்கி அரக்கி ஒருவாறு முன்னேறுகின்றாள்.
முன்னும் பின்னும் நகர்ந்து கொண்டிருக்கும் சனக்கூட்டத்துக்குள் நெரிந்து, உந்தித் தள்ளப்பட்டு எல்லோருக்கும் முன்னே வந்து சேருகின்றாள்.
"ஐயா. ஐயா. நயினார். நயினார்.” என்று கையிலுள்ள பெட்டி களை நீட்டி நீட்டி வெளியே நின்று குரல் கொடுக்கிறார்கள்.
அவளுக்கு அவர்களைப்போலக் குரல் கொடுக்க இயலவில்லை. அவள் ஆவலுடன் பெட்டியைப் பெட்டியை நீட்டுகின்றாள்.
“எடியேய். போங்கடி போங்கடா எல்லாரும்! எளியதுகளுக்கு எப்பிடிக் கொடுத்தாலும் அதுகளுக்கு அடங்காது. தின்னாமல் கிடக்கிறது. ஆராவது அவிச்சுப் போட்டால் கிடந்த செடிவுக்குச் சப்ப வேணும். அதுக்கிஞ்சை ஆரிட்டைக் கிடக்கு? தாறைைத ஒழுங்கா நிண்டு வாங்கவும் தெரியாது. வரிசையாக இருத்தி தந்து முடிஞ்சுடுதல்லே! பிறகென்னத்துக்கு நிண்டு தூங்கிறியள். போங்க. போங்க.” வாய்க்கு வந்தவாறு ஏசிவிட்டு, சோற்றுக் கிடாரத்தை உள்ளே தூக்கிக் கொண்டு போகின்றார்கள்.
அவளுக்கு வயிறு கொதிக்கிறது. தான் இதுவரை பட்ட கஷ்டங் கள் எல்லாம் வீணாகப் போனது கண்டு பதறுகின்றாள். அவளுக்குச் சோற்றைத் தவிர எல்லாம் மறந்து போகிறது. "ஐயா. ஐயா.” என்று கூவிக் கொண்டு தன்னை மறந்து கோயில் மண்டபத்துக்குள் ஒரு அடி எடுத்து வைக்கின்றாள்
கம்பளை முதலாளி கந்தவனம்பிள்ளை கண்களில் பட்டு விடுகிறது. அவர் சங்கார மூர்த்தியாக உருக்கொண்டு பாய்ந்து ஓடி வந்து அவளைப் பிடித்து வெளியே தள்ளுகின்றார்.
அவள் கோயில் கற்பூரக் கல்லின் மேல் தலை அடிபட தடாரென்று வந்து விழுகின்றாள்.
சோற்றுக்காக கையேந்தி நின்ற கூட்டம் திகைத்து விலகி ஒதுங்கி நிற்கிறது.
கோயிலுக்குள்ளே நிற்கின்றவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கின்றார்கள்.
"அவள் போய் ஏன் கல்லிலே விழுந்தவள்?” முதலாளி சீறுகின்றார்.
அவள் தலையில் இருந்து வடிந்து கொண்டிருக்கும் இரத்தம் கற்பூரக் கல்லை அபிசேகிக்கிறது.

ஒடுக்கப்பட்டவர்கள் 13
எச்சில் இலைகளை கிளறிக் கொண்டு நின்ற பொலிசு பாய்ந்தோடி வருகிறது. அவளை முகர்ந்து முகர்ந்து சுற்றிச் சுற்றி வருகிறது.
அவள் உணவில்லாது மயக்கமுற்று நிலத்தில் வீழ்ந்து பல தடவைகள் இப்படிக் கிடந்திருக்கின்றாள். பின்னர் மயக்கம் தெளிந்து மெல்ல எழுந்திருக்கும், கடந்த கால அனுபவத்தால் அவளை வளைய வந்து கொண்டிருக்கிறது, அவள் வளர்த்த பொலிசு,
பாவம்! அவள் இனிமேல் எழுந்திருக்க மாட்டாள் என்பது, அதுக்கெங்கே தெரியப் போகிறது?
- சிந்தாமணி
3O-12-1969

Page 13
சமூகங்கள் மாறும்போது . . .
கிழங்குப் பாத்தியின் ஒரத்தை மண்வெட்டி கொண்டு வெட்டிப் பிளந்து ஊடறுத்துச் செல்லும் சத்தம், நல்லான் செவிகளில் விழுந்து அந்தப் பாத்தியில் ஓங்கி இடிக்கும் அலவாங்காக இதயத்தில் பாய்ந்து குத்திக் கிழிக்கிறது.
சென்ற ஆண்டு இதே மாதத்தில் ஒரு நாள், உதயக் கதிர்கள் வானக் கருமை அழிக்காத வைகறைப் பொழுதில், பசுச் சாணத்தில் பிள்ளையார் பிடித்து, வேலி முட்கிளுவையில் மூன்று இலை உருவி சாணப் பிள்ளையாரில் அதைக் குத்தி, பாத்தியின் வடகிழக்கு மூலையில் விக்கின விநாயகனைப் பிரதிஷ்டை செய்து, கிழங்கு கிண்டி முடியும் வரை விக்கினமின்றி விநாயகன் பாதுகாக்க வேண்டுமென வேண்டி, தேங்காய் நோக்கினவன் அவன். பின்னர் பிரண்டைத் தண்டு, பனம் மட்டைக் கருக்கு, நறுக்கி எடுத்து, ஊமல் பறித்த பாத்தியின் மேற்பரப்பில் “பொலியோ பொலியோ..” என்று தூவியவனும் அவன் தான். பிறகு பயபக்தியோடு மண்வெட்டியைக் கையில் எடுத்து கிழக்கு முகமாகத் திரும்பி நின்று தான் வழிபடும் வயிரவக் கடவுளை மனதில் தியானித்து பாத்தியின் முதல் மண்ணை வெட்டி எடுத்து, பின்னர் கிழங்குகள் குறுக்காக அறுந்து போகாத வண்ணம் ஆழமாக அதர் எடுத்து, முதற் கிண்டி எடுத்த கிழங்குகளைக் கட்டுக் கட்டாக நான்கு கட்டுகள் கட்டி, அவைகளைப் பாத்தியில் மூலைக்கொன்றாக வைத்து காவல் பண்ணியவனும் அவன்தான்.

ஒடுக்கப்பட்டவர்கள் 5
பொழுது நன்றாக விடிவதற்கு முன் அரைப்பாத்தி அறுந்து கிழங்குகள் வெளியே வந்து குவிந்து விட்டன. அப்போது கண்களைத் துடைத்து விட்டுக் கொண்டு பாத்தியடிக்கு வந்து சேர்ந்தார் சிதம்பரப் பிள்ளையர். அவர் எதிர்பார்த்தது போல நல்லான் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்தான். அவன் தனியொருவனாக நின்று அலவாங்கி னால் பாத்தியை இடிப்பதும் பின்னர் மண்வெட்டியைக் கையில் எடுத்து மண்ணை நிதானமாக வெட்டி கிழங்குகளை வெளியே எடுத்துப் போடுவதுமாக, இரண்டு பேர் சேர்ந்து செய்ய வேண்டிய வேலைகளைச் செய்து கொண்டிருந்தான்.
சிதம்பரப்பிள்ளையருக்கு அவன் செய்யும் வேலைகளிலும், அவனிடம் காணப்படும் கண்ணியத்திலும் தனியான ஒரு நம்பிக்கை, பரம்பரை பரம்பரையாக நல்லானும் அவனுக்கு முன்னிருந்து அவன் குடும்பத்தவர்களும் சிதம்பரப்பிள்ளையர் குடும்பத்துக்கு மனதில் கல்மிச மின்றி உழைத்து வருகிறார்கள். நல்லான் சிறுபிள்ளையாக இருந்த காலத்தில் அவன் தந்தை சித்தனோடு சேர்ந்து இந்த இடத்தில் பனங் கிழங்குப் பாத்திகளைக் கிண்டி இருக்கின்றான். தகப்பன் சித்தன் இறந்த பின்னர் முழுப் பொறுப்பும் நல்லானிடம் வந்து சேர்ந்து விட்டது.
நல்லான் செய்யும் வேலைக்கு ஏதோ கூலி கிடைக்கும். ஆனால் அவன் சிதம்பரப்பிள்ளையர் வீட்டு வேலைகளை தான் கூலிக்காகச் செய்யும் வேலைகளாகக் கருதிச் செய்வதில்லை. தன் சொந்த வேலை போலக் கருதி கருத்துடன் செய்வான். சிதம்பரப்பிள்ளையர் வீட்டு வேலையைச் செய்து முடிக்காது விட்டு வைத்திருக்கும் வரை, தான் நிறைவேற்ற வேண்டிய தனது கடமை ஒன்று இன்னும் பூர்த்தியாகாத மனப் பாரம் நல்லான் நெஞ்சை போட்டு அழுத்திக் கொண்டிருக்கும்.
நித்திரை விட்டு எழுந்தும் உடல் அலுப்பு இன்னும் நீங்கத சிதம்பரப்பிள்ளையர், தன் பூசினிப் பழ உடலைத் துவாய் ஒன்றினால் போர்த்த வண்ணம் வந்து பாத்திக்கருகில் குந்தினார். வாயை 'ஆ'வெனத் திறந்து கொட்டாவி விட்டார். விரல்களைக் கோத்து, கைகளைத் தலைக்குமேலே உயர்த்தி பட்பட்’ எனக் சொடுக்கி நெட்டி முறித்துச் சோம்பலை ஒட்டப் பிரயத்தனம் செய்தார். அந்த அதிகாலை வேளையிலும் நல்லான் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டு நிற்பதும், அவன் உடலில் இருந்து வியர்வை வாய்க்காலாய் பாய்வதும் அவர் முன்னர் காணாத ஒரு காட்சியல்ல என்றாலும், இன்றும் பார்க்கப் பார்க்க அவருக்கு அதிசயமாகத் தான் இருக்கிறது.
சிதம்பரப்பிள்ளையர் படுக்கையில் இருந்து அப்பொழுதுதான் எழுந்து அங்கு வருவதைக் கண்டு மரியாதையும் வரவேற்புமாக ஐயா எழும்பி விட்டுதோ!' என்று மாத்திரம் கேட்டுவிட்டு தன் வேலையில் மூழ்கிப் போனான் நல்லான். அது அவன் சுபாவம், தேவையற்று எவரோடும் அதிகம் பேச மாட்டான். அவன் வேலை செய்ய ஆரம்பித்து

Page 14
16 தெணியான்
விட்டால், செய்யும் வேலைக்கு இடைஞ்சலாகப் பேசிக் கொண்டிருப் பதில் அவனுக்கு முழு வெறுப்பு வேலையில் மட்டும் அவன் கருத்தாக இருப்பான்.
“கேட்டியோ நல்லான்! நீ விடியப்புறம் நேரத்தோடை வந்திட்டாய் போல கிடக்கு.” சிதம்பரப்பிள்ளையர் தன்னை உசார்படுத்திக்கொண்டு அவன்மேல் அக்கறையுடன் விசாரிப்பது போல நல்லானைக் கேட்கின்றார்.
"ஒமாக்கும்” சொல்லிக்கொண்டு மண்வெட்டியால் பாத்தியில் ஓங்கி வெட்டி, மண்ணோடு சேர்த்துக் கிழங்குகளை வெளியே எடுத்து மண்ணை நீக்கிக் கிழங்குகளை தெரிந்தெடுத்து முன்னால் உள்ள கிழங்குக் குவியல் மேல் வீசுகின்றான் நல்லான்.
"ஆச்சி எங்கே? தேத்தண்ணி கீத்தண்ணி வைச்சுத் தந்தவவே!” மனைவி பற்றி சூசகமாக விசாரணையில் இறங்குகின்றார்.
“செல்லமுத்தாச்சி தேத்தண்ணி வைச்சு கொண்டு வாறனென்டு தான் சொல்லிப்போட்டுப் போய்ச்சுது”
"ஆச்சி உன்னிலை வலு கவனம், கேட்டியோ! சரி. சரி. நீ கிண்டு. நான் போய்க் கெதியாகத் தேத்தண்ணி அனுப்புகிறன்” அவன் மீது கரிசனை உள்ளவர் போலச் சொல்லிக் கொண்டு இடுப்பில் கை கொடுத்து தட்டுத் தடுமாறி மெல்ல எழுந்து வீடு நோக்கி நடக்கின்றார்.
நல்லான் மனத்தில் இவைகளை எல்லாம் நினைக்க நினைக்க உடல் புல்லரிக்கிறது. தான் எதனையோ இழந்து போய்விட்டது போல உள்ளம் பேதலித்து உடல் உளைகிறது. உழைப்பு - அது தான் அவன் தெய்வம். அவன் சக்தி; அவன் மூச்சு; அவன் பத்து நாட்கள் உணவு எதுவும் இல்லாது பட்டினி கிடக்க வேண்டும் என்றால் அதற்குட் தயார். ஆனால் ஒரு நாள் தானும் உடல் உழைப்பின்றி சோம்பி வாழ்வதற்கு அவனால் இயலாது. அப்படி உழைத்துப் பழக்கப்பட்ட உடல், அவன் உழைத்த மண்ணில் இன்னொருவன் கால் வைப்பதை கண்டு சகித்துக் கொள்ள அவனுக்கு இயலாது.
இன்று சிதம்பரப்பிள்ளையர் வீட்டுப் பாத்தியில் விழுந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு மண்வெட்டியும் அவன் இதயத்தில் வந்து விழுந்து வெட்டிப் பிளக்கிறது.
நேரம் ஏழு மணி கடந்தும் அவனால் படுக்கை விட்டு எழுந்திருக்க முடியவில்லை. உழைத்து உழைத்து உரமேறிப்போன அவன் உடல் படுக்கையில் கிடந்து முறுக்கெடுக்கிறது. படுக்கைவிட்டு எழுந்திருக்க அவனுக்கு இயலவில்லை. கடந்த இரவெல்லாம் நித்திரை இன்றித் தவித்துக் கிடந்தான். அந்தத் தவிப்பு இன்னும் அடங்கவில்லை.
நல்லான் வீட்டுக்கும், சிதம்பரப்பிள்ளையர் வளவுக்கும் சுமார் நூறு யார் துரந்தான் இடைவெளி, முள்ளுக்கம்பி வேலி போட்ட ஒரு

ஒடுக்கப்பட்டவர்கள் 17
காணித் துண்டு இரண்டு வீடுகளுக்கும் இடையில் குறுக்கே நின்று பிரித்து வைத்திருக்கிறது. நல்லான் வீட்டு முற்றத்தில் நின்றால் சிதம்பரப் பிள்ளையர் வளவுக்குள் நடப்பவைகள் யாவும் தெளிவாகத் தெரிய வரும்.
நேற்று மாலை சிதம்பரப்பிள்ளையர் பாத்தியில் ஊமல் பறிப்பதை நல்லான் கண்டான். அதன்பிறகு அவனால் அமைதியாக இருப்பதற்கு முடியவில்லை. தான் எதையோ பறிகொடுத்து விட்டதுபோல அவன் உள்ளம் ஏங்கத் தொடங்கியது.
சிதம்பரப்பிள்ளையர் ஊமல்கள் பறித்து கிழங்குகளைக் கிண்டி எடுக்கப்போகும் அந்தப் பாத்தியைப் போட்டுக் கொடுத்தவன் நல்லான் தான்.
சிதம்பரப்பிள்ளையர் வளவுக்குள் குவித்துப்போட்டுக் கிடந்த பனங்காய்களின் (பனம்பழங்களின்) பருமிள்களைத் திருகி எடுத்து, முக்காளி, இருக்காளி, குடவன் பனங்காய்களைக் கொட்டைகளாகப் பிய்த்தெடுத்து பனையோலைக் கடகங்களில் அடுக்கி அடுக்கி மனைவி தெய்வி தலையில் தூக்கித் தூக்கிச் சுமத்தி விட்டான்.
அவன் கோலி விட்டிருந்த நிலத்தில் அவள் சுமந்து சென்று கொட்டிக் குவித்தாள். பின்னர் அவளும் அவனும் அந்தப் பனங் கொட்டைகளை ஒப்பரவாகப் பாத்தியில் அடுக்கி, கோழிகள் வந்து அதைக் கிளறாத வண்ணம் சிக்காராக மண் போட்டு மூடி விட்டார்கள்.
அந்தக் கிழங்குப் பாத்தியில் அவனுக்கு இன்று உரிமை இல்லை. அவன் உழைப்பின் விளைச்சலை கைகளால் தொட்டு அளைந்து அனுபவிப்பதில்தான் மனத்துக்கு எவ்வளவு நிறைவு!
அந்த மனநிறைவு இந்தத் தடவை தான் பெற முடியாது என்ற ஏக்கம் மிகுந்த தவிப்புடன் கடந்த இரவு அவன் படுக்கையில் போய் விழுந்தான்.
அவன் கலகலவென்று உறக்கத்தில் சிரித்தான். "ஐயா, கிழங்கு இந்தாட்டி நல்லா முத்தி இருக்கு, ஒரு கொட்டை யும் தப்பாமல் முளைச்சிருக்கு, தோகை அழுகலுமில்லை, நல்லாப் பொலியுது. ஒரு கிழங்கு வெட்டுப்பட்டிருக்கோ, பாருங்க! நயினார், நயினாராணை நானும் வலு கவனமாகத்தான் கிண்டுகிறன்."
“என்ன நயினார் என்ரை கைராசி எண்டு சொல்லுறியள்? நான் என்னத்தைச் செய்து போட்டன். நம்மாணை சொல்லுங்கோ பாப்பம்! அதேதோ. நயினாற்றை பலன் இந்தாட்டி நல்லாயிருக்கு!”
"இஞ்சார், இஞ்சார், என்ன வாயிலை வந்ததெல்லாம் சொல்லிப் புசத்துகிறாய்.” தெய்வி கேட்டுக்கொண்டு நல்லானைத் தட்டி எழுப்பினாள்.

Page 15
8 தெணியான்
அதன் பிறகு நல்லானுக்குத் தூக்கமே வரவில்லை. "சீ என்ன மணிசர்! ஆரோ இரண்டு பேருக்கை சண்டை, அதையேன் சாதிச் சண்டை ஆக்க வேணும்? நாங்கள் எங்களுக்குள்ளே, அவை தங்களுக்குள்ளே அடிபடுகிறதில்லையே! ஆரோ இரண்டு மனிசருக்கை சண்டை எண்டு விடுகிறது தானே, அதையேன் சாதிச் சண்டை ஆக்கி. கீரியும் பாம்புமாக நிற்க வேணும்? அவை அடிக்க அடிக்க நாங்கள் வாங்கலாம். எங்கடை பொடியன் கை நீட்டிப் போட்டானாம். பெரிய சாதிச் சண்டை கிளம்பி விட்டது. இந்தக் காலத்துப் பொடியள் சும்மா விடுவான்களே?
நல்லான் தனக்குள் சொல்லிக் கொண்டு தன் குடிசை வீட்டுக்குள் இருந்து வெளியே வந்து முற்றத்தில் நின்று சிதம்பரப்பிள்ளையர் வளவை நோக்குகின்றான்.
செல்லமுத்தாச்சி கையில் அலவாங்கும், சிதம்பரப்பிள்ளையர் கையில் மண்வெட்டியுமாகக் காட்சி அளிக்கிறார்கள்.
நேரம் எட்டு மணி தாண்டி இருக்கும். பாத்தியில் காற்பங்குதானும் இன்னும் கிழங்கு கிண்டி முடியவில்லை. சிதம்பரப்பிள்ளையர் தொந்தி குலுங்க மண் வெட்டி பிடித்து ஒரு வெட்டு வெட்டுவதும் உடனே நாரி நிமிர்த்துவதுமாக அவஸ்தைப்படுகிறார். செல்லமுத்தாச்சி அலவாங்கு கையில் பிடித்து மார்புகள் மேலே எழுந்து கீழே வந்து குலுங்கி விழ இடித்துக்கொடுத்துக் கொண்டு நிற்கின்றாள்.
நல்லான் தன் வீட்டு முற்றத்துக்கு வந்து தங்கள் இருவரையும் பார்த்துக் கொண்டு நிற்பதைச் செல்லமுத்தாச்சி முதலில் கண்டு கொள்ளுகிறாள். அவளுக்கு வெட்கமாக இருக்கிறது. இதுவரை காலம் அவளும் சிதம்பரப்பிள்ளையரும் செய்தறியாத வேலை, நல்லான் அங்கு நிற்பதைத் தான் கண்டுகொண்டதாக அவள் காட்டிக் கொள்ள வில்லை. சிதம்பரப்பிள்ளையருக்கு அதைச் சொல்லவுமில்லை. பாத்தியைத் தொடர்ந்து இடித்துக்கொண்டு நிற்கின்றாள்.
சிதம்பரப்பிள்ளையரால் தொடர்ந்து வெட்டிக் கொண்டு நிற்க முடியவில்லை. மூச்சிழுக்கிறது. குளித்து முடித்துவிட்டு இப்போதுதான் வந்து நிற்கின்றவர் போல உடல் முழுவதும் நனைந்து தெப்பமாகி விட்டது. கால், கை, உடலெங்கும் ஒட்டிக் கிடக்கிறது செம்மண். தலையில் சுற்றிக் கட்டிக் கொண்டிருக்கும் துவாய் வியர்வை ஊறி நனைந்து போய்க் கிடக்கிறது. பாத்திக் கிடங்குக்குள் நின்று வலது காலைத் தூக்கி வெளியே வைத்து, மெல்ல எம்பி எழுந்து வெளியே வருகின்றார். தலையில் முண்டாசு கட்டி இருக்கும் துவாயை அவிழ்த்தெடுத்து முகத்தில் அரும்பி வழியும் வியர்வையை அழுந்தித் துடைக்கின்றார். பின்னர் அருகில் நிற்கும் பூவரச மரத்தின் நிழல் நோக்கிப் பாய்ந்து சென்று. உஸ். உஸ்.’ என வாயினால்

ஒடுக்கப்பட்டவர்கள் 19
வெப்பத்தைப் போக்கிய வண்ணம் கீழே விழாக்குறையாக 'டமாரெனத் தரையில் அமர்ந்து, கால்களைப் பரப்பி நீட்டி கைகளைப் பின்புறமாக நிலத்தில் ஊன்றி உடலுக்கு முண்டு கொடுத்த வண்ணம் தன்னை ஆசுவாசப்படுத்துகின்றார். அவர் வாய் திறந்து மூச்சிழுத்து விடுவதில் மார்புவரை உயர்ந்து நிற்கும் பிள்ளையார் வண்டி மேல் ஏறி கீழே இறங்கிக் கொண்டிருக்கின்றது. அவர் இப்பொழுது இருந்து கொண்டி ருக்கும் கோலம், படும் அவஸ்தை, எல்லாம் செல்ல முத்தாச்சி உள்ளத்தை ஒருபுறம் துன்புறுத்துகின்றன. மறுபுறம் வேடிக்கையாகவும் இருக்கிறது. நல்லான் யாவையும் பார்த்துக் கொண்டு நிற்கின்றான் என்பது எல்லாவற்றிலும் பார்க்கப் பெரும் வேதனையாகத் தோன்று கின்றது.
“என்ன கேட்டியோ, அந்தப் போத்திலையும் கிளாசையும் ஒருக் கால் எடுத்து வாருமப்பா" செல்லமுத்தாச்சியைப் பார்த்து ஆவலுடன் சொல்லுகிறார் சிதம்பரப்பிள்ளையர்.
வேலிக்கருகில் மறைவாக வைக்கப்பட்டிருக்கும் கள்ளுப் போத்தல் கிளாஸ் இரண்டையும் கையில் தூக்கி வந்து அவர் முன் வைக்கிறாள் செல்லமுத்தாச்சி
“எடுத்து கிளாசிலே ஊத்தப்பா. எனக்குப் பெரிய களைப்பாகக் கிடக்கு”
செல்லமுத்தாச்சி போத்தலைக் கையில் எடுத்து கிளாசை நிரப்பி அவரிடம் நீட்டுகின்றாள். அவர் கிளாசைக் கையில் வாங்கி வைத்து "மொட மொட' என்று ஒரே மூச்சில் இழுக்கின்றார். பின்னர் கிளாசை அவளை நோக்கி நீட்டிய வண்ணம் அப்பாடா' என நிம்மதியாக மூச்சு விட்டுக் கொள்ளுகின்றார். செல்லமுத்தாச்சி திரும்பவும் கிளாசை நிரப்பி மீண்டும் அவரை நோக்கி நீட்டுகின்றாள். அடுத்த கணம் அதுவும் அவர் வயிற்றுக்குள் குளிர்ந்து கொண்டு போகிறது. தலையில் கட்டிய துவாயை அவிழ்த்து வாயை ஒரு தடவை துடைத்து விட்டுக் கொள்ளுகின்றார்.
சிதம்பரப்பிள்ளையர் உடலில் இப்போது கொஞ்சம் கொஞ்சமாகச் சூடேறிக் கொண்டு வருகிறது. இதுவரை இல்லாத புதிய உற்சாகம் பிறக்கிறது. நல்லான் பற்றிய நினைவும் அத்தோடு மனதில் எழுகிறது. அவன் குடிசை இருக்கும் பக்கம் எரிச்சலுடன் திரும்பிப் பார்க்கிறார். நல்லான் முற்றத்தில் நின்று கொண்டிருப்பது அவர் கண்களில் படுகிறது. அவர் உள்ளத்தின் உன்மத்தம் ஒருவகை வெறியாகக் கிளர்ந் தெழுகிறது. அது தனிப்பட்ட நல்லான் மீது அவர் கொண்டுள்ள வெறி யல்ல. அவன் பிறந்த சாதியின்மீது அவர் மனத்தில் குடி கொண்டுள்ள ஆதிக்க வெறி
அந்த ஆதிக்க வெறியில் அவர் தன்னை மறந்து நல்லான் நின்று கொண்டிருக்கும் திசை நோக்கி பலமாகக் காறித் துப்புகின்றார்.

Page 16
20 தெணியான்
அப்பொழுது நல்லான் முகத்தில் - அவன் சாதி முகத்தில் துப்பி விட்டதான ஆனந்தம் அவர் மனதில். அத்தோடு நின்று விடாமல் நல்லானை அலட்சியம் செய்வதாக எண்ணி அங்கிருந்து விறிச் என்று கம்பீரமாக எழுந்து மண்வெட்டியைக் கையில் எடுத்துக் கொண்டு பாத்திக்குள்ளே இறங்குகின்றார்.
சிதம்பரப்பிள்ளையர் காறித் துப்பியது கண்டு நல்லானால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை.
அவருக்கும் எனக்கும் தனிப்பட்ட முறையிலே என்ன பகை, அவர் என்ரை சாதியின்ரை முகத்திலேதான் காறித் துப்புகிறார்.’ என்று எண்ணிய போது நல்லான் உள்ளம் கொதிக்கிறது.
அவன் சிதம்பரப்பிள்ளையர் நிற்கும் திசை நோக்கி பலமாகக் காறிக் காறித் துப்பிக் கொண்டு நிற்கின்றான்.
- சிந்தாமணி
13.O.5.197O

2 1
உள் அழுகல்
அவனுக்கு அவனைப் பெற்றவர்கள் ஆசையாகச் சூட்டி மகிழ்ந்த பெயர்தான் செல்லன். ஆனால் அந்தப் பெயர் அவனுக்கின்று வழங்கவில்லை. அந்தப் பெயரைச் சொல்லி அவனை இன்று அழைப் பவர் ஒருவர் உண்டென்றால் அவர் விதானையார்தான். விதானை யாருக்கும் கொஞ்சம் குஷி பிறந்துவிட்டால் செல்லன் என்ற பெயரையும் திரித்து செல்லி என்றுதான் அவரும அழைப்பார். சில வேளைகளில் விதானை யாரும் பகிடியாக அவனை 'விதானை வீட்டுக்காரன்’ என்று செல்லுவதும் உண்டு. அந்த ஊர் மக்கள் எல்லோரும் அவனை அப்படித் தான் அழைத் தார்கள். சிலர் வட்ட விதானை' என்றும் சொல்லுவார்கள். அந்தளவுக்கு விதானையார் வீட்டோடு அவனுக்கு ஒட்டுறவு
விதானையார் வீட்டு எடுவிடி ஆள் அவன்தான். அந்த வீட்டுத் தொண்டு துரவுகளைச் செய்து முடிக்கும் பொறுப்பு அவனைச் சார்ந்தது. அவன் விதானையாருக்கு ஒரு கையாள். அதனால் அவனுக்குத் தன்னைப் பற்றி ஒரு இறுமாப்பும் பெருமையும், அந்தக் கிராமத்தில், விசேஷமாக அவன் சமூகத்து மக்கள் மத்தியில் அவனுக்குச் செல்வாக்கு இருக்கத்தான் செய்தது. விதானையாரிடம் காரியமாக வேண்டியவர்கள் அவனைத்தான் தம் கைக்குட் போட்டுக் கொள்வார் கள். அவன் மனம் வைத்தால், வைத்தது போல் இம்மியும் பிசகாமல் செய்து கொடுப்பான். அவன் எந்தக் காரியத்துக்கும் நேரடியாக

Page 17
22 தெணியான்
விதானையாரை அணுகுவதில்லை. அவர் மேல் அவனுக்கு இனம் புரியாத பக்திமயமான அச்சம். எதையும் விதானையாரின் மனைவி காதில் அவன் மெல்ல போட்டுவிடுவான். பின்னர் அவன் எண்ணம் போலக் காரியம் கைகூடி முற்றுப் பெறும். அவன் இந்த வழியைக் கையாண்டு பல காரியங்களைப் பலருக்குச் சாதித்துக் கொடுத்திருக் கிறான். அதனால் அவனுக்கு மதிப்பு, விதானையாருக்கும் லாபம். இறைச்சிக் குடலையும், சாராயப் போத்தல்களும் அவன் வழியாகத்தான் விதானையாரைப் போய் அடையும்.
ஒரு நாளைக்கு, தவறாது இரண்டு தடவை அவன் விதானையார் வீட்டுக்குப் போவது வழக்கம். விதானையார் வீடு; கடற்கரையை அடுத்துள்ள ரோட்டோரமாக இருக்கிறது. அங்கிருந்து ஒரு மைல் தூரம் கிராமத்துட் செல்ல வேண்டும் அவன் குடிசைக்கு அவன் வாழும் சுற்றாடலில் தென்னை மரங்கள் இல்லை. விதானையார் வளவுக்குள்ளும் அந்தச் சூழலிலுந்தான் கடற்சுவாத்தியத்தில் ஆரோக்கியமாகச் செழித்து வளர்ந்த தென்னைகள் மதாளித்து நிற்கின்றன. அந்தத் தென்னை மரங் களில் சிலவற்றில் தான் கள்ளிறக்குவதற்காக விதானையார் வீட்டுப் பக்கம் போக வேண்டிய கட்டாயத் தேவையும் அவனுக்கிருந்தது.
விதானையார் வளவுக்குப் போகும்போது என்றைக்கும் அடி வளவுக்குள் நுழைந்து கோடிப்பக்கமாகப் போவது அவன் வழக்கம். இது அவனாக ஏற்படுத்திக் கொண்ட வழக்கம் மட்டுமல்ல. விதானை யாரின் கட்டளையும் அதுதான். விதானையாரைத் தேடிப் பெரிய மனிதர்கள் வருவார்கள், போவார்கள். அவர்கள் கண்களில் கள்ளு முட்டியும், ‘கறமண்டித் துணியுமாக, மாதோல், காதோல் இயனக்கூடு சகிதம் சர்வ அலங்கோலனாய் அவன் கண்ணிற் படுவதை விதானையார் விரும்பாததற்கு, விதானையாரும் அவனிடம் வாடிக்கைகாரர் என்ற ஒரு அந்தரங்கமான ஒரு அச்சமும் காரணந்தான். தினமும் காலையும் மாலையும் வீட்டுக்கும் பின்னால் அடிவளவுக்குட் சடைத்து நிற்கும் முள்ளுப் பற்றைக்குள் அவன் வைக்கும் ஒவ்வொரு போத்தல் கள்ளும் விதானையாரை அபிஷேகிப்பதற்குத்தான். அதற்குப் பணம் கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் அவருக்கோ இல்லை. எப்போதாவது இருந்தாற்போல பணத்தைப்பற்றி அவர் பேச்செடுப்பார். ஆனால், அதை அவன் ஒரு சேவையாகக் கருதி அவர் பேச்சைக் குறுக்கறுப்பான். உள்ளூர விதானை யாருக்கு மகிழ்ச்சிதான். ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவனுக்கு நன்றாக நடிப்பார். அவன் வாய்விட்டுக் கேட்டாலும் அவரிடமிருந்து ஒரு செப்பால் அடித்த காசுதானும் அதற்கவன் பெற முடியாது. அவன் உண்மையாகவே பணத்தை மனத்தாலும் நினைக்க மாட்டான் என்பதும் அவருக்குத் தெரியும். அவரைப் பொறுத்த வரையில் அவர் மனநிலை.?

ஒடுக்கப்பட்டவர்கள் 23
விதானையார் வீட்டு மாடுகள் அவனை நம்பித்தான் வளர்ந்தன. அவனுக்கு என்ன வேலைகள் இருந்தாலும் தினமும் மாலை வேளையில் பனையில் ஏறி மாடுகளுக்கு ஒலை வெட்ட வேண்டும். மாட்டுத் தொழுவத்துட் புகுந்து சாணத்தையும் சலத்தையும் வழித்துத் துப்புரவு செய்ய வேண்டும். இவை அவனது நித்திய கடமைகள். சில தினங்களில் ஒலைகளை மூரியிலிருந்து சட்டஞ் சட்டமாகக் கிழத்து, பின்னர் தும்பாக்கி மாடுகளுக்கு உணவாகப் போட்டுவிடும் வரையுள்ள பொறுப்பும் அவன் தலையில் வந்து விழும். அவன் விதானையார் வீட்டில் நிற்கும்போது விதானையாரின் குழந்தைகள் வீட்டுக்கு வெளியே முற்றத்தில் மலங் கழித்து விட்டால், அதை மண்வெட்டிகொண்டு அள்ளி யும் எறிவான். அவன் விதானையாருக்காக எதைச் செய்வதற்கும் பின்னடிப்பதில்லை. அவன் செய்ய வேண்டிய தொண்டுகள் எல்லா வற்றையும் முடித்துக் கொண்டுதான், வீட்டுக்குப் புறப்படுவான். நாளைக்கென்று எதையுமே வைப்பதில்லை.
தினமும் அவன் நேரத்தில் பெரும் பகுதி விதானையார் வீட்டோடு கழிந்த போதிலும், அனேகமான நாட்களில் அவன் விதானையாரைச் சந்திப்பதே இல்லை. அவன் வேலைகள் யாவும் அடிவளவோடும், கோடிப்புறத்தோடும் தீர்ந்துவிடும். அவன் தொடர்புகள் எல்லாம் தானையார் மனைவியோடுதான். தினமும் அவளை மட்டும் அவன் சந்திப்பான். விதானையாருக்கு ஏதாவது தகவல்கள் இருந்தால் அதை அவர் மனைவியிடமே தெரிவித்துவிட்டுச் சென்று விடுவான். முக்கிய மான விடயமாக இருந்தால் மட்டும் விதானையார் மனைவியின் அநுசரணையுடன் அவன் விதானையார் முன் ஆசராவான்.
இன்று பின்னேரம் மரங்களில் ஏறிச் சீவலை முடித்துக் கள்ளிறக்கிய பின்னர் அடி வளவோடு திரும்பிப் போய்விடாது, விதானையார் வீட்டு முற்றத்துக்கு வந்து வேலி ஓரமாக ஒதுக்குப்புறமாக ஒதுங்கி நின்றான்.
விதானையார் முன் மண்டபத்தில் எதையோ உன்னிப்பாக கவனித்து எழுதிக் கொண்டிருந்தார். அவன் அங்கு வந்து நிற்பதை அவர் கவனித் தார். கவனித்தும் அவனைக் காணாதவர் போலத் தம் வேலையில் மூழ்கி இருந்தார். இது அவர் சுபாவம் மட்டுமல்ல, அவர் வர்க்கத்தின் சுபாவமுந்தான். பிரபுத்துவத்தின் மிச்ச சொச்சங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கிராமத் தலைமைக்காரன் என்னும் விதானை முறை ஒழித்துக் கட்டப்பட்டு, மக்களுக்குச் சேவை செய்வதற்கெனக் கிராம சேவகர் முறை, நடைமுறைக்கு வருவதற்கு முன்பே அவர் விதானையாராக வீற்றிருந்து ஆட்சி செலுத்தியவர். அவர் மட்டுமல்ல அவர் தகப்பனாரும் பாட்டனாருங்கூட விதானைமார்கள்தான். இந்தப் பதவியும் மதிப்பு மரியாதைகளும் அவருக்குப் புதியவைகளல்ல. அவரைப் பொறுத்த வரையில் அவர் பழைய விதானையாரேதான். அவராவது. கிராம சேவகராவது. அது நடக்கக்கூடிய காரியமல்ல.

Page 18
24 தெணியான்
மண்டபத்தில் விதானையாருக்குப் பின்னாலுள்ள வீட்டுக் கதவைத் திறந்துகொண்டு அவர் மனைவி வெளியே வருகிறாள். விதானையார் எதையும் கவனிக்க முடியாதவர் போல தன் தன் வேலையும் கையுமாக இருக்கிறார். அவள் அவர் அருகே சென்று மேசையை முட்டினாற்போல நிற்கிறாள். மின்னி மின்னி எரியும் லாம்பு வெளிச்சத்தில் வெளியே எட்டிப் பார்த்துவிட்டு, அப்போதுதான் செல்லன் அங்கு நிற்பதைத் தெரிந்து கொண்டவள்போல, “என்ன செல்லன் பொங்க நிக்கிறான். என்னத்துக்கு.” என்று அவரைப் பார்த்துக் கேட்கிறாள். அவரும் அவன் இங்கு நிற்பதை அவள் சொல்லித்தான் தெரிந்தவர் போலத் தலையை நிமிர்த்தி, கையைத் தூக்கி முகத்துக்கு நேரே பிடித்து லாம்பு ஒளிக் கண்ணில் படாத வண்ணம் மறைத்துக்கொண்டு “எங்கே நிற்கிறான்.?” என்று கேட்கிறார்.
செல்லன் நெஞ்சில் தொங்கிக் கொண்டிருந்த மாதோலை எடுத்து முதுகுப்புறமாகப் போட்டுக்கொண்டு, இடுப்பில் பின்புறமாகக் கட்டி இருந்த இயனக்கூட்டை ஒரு கையால் பிடித்த வண்ணம் “ஒமையா.” என்று குரல் கொடுத்து முன்னுக்கு வந்து வீட்டு வாயில் ஒரமாக படிகளுக்குக் கீழ் நிற்கிறான். அவன் முகம் வாடிச் சோகமயமாகப் பிரேதக்களை பரவித் தோன்றுகிறது.
“என்ன செல்லன் ஒலை வெட்டிக் கிழிச்சுப் போட்டியே.?” "ஒமாக்கும்.” "அப்ப. வேறை. என்ன சங்கதி.?” "ஒண்டுமில்லை ஐயா. என்ரை கள்ளு மரங்களையாக்கும் ராத்திரிக் கள்ளரெல்லே ஏறிக்கொண்டு போவிட்டாங்கள்.”
“ஆ. அப்படியே சங்கதி. ஒ. ராத்திரி நல்ல திருவிழாப் பைம்பல். முசுப்பாத்தியா, நித்திரை முழிக்கிறதுக்கு உன்ரை மரங்களில் ஏறிக் கள்ளை எடுத்துக்கொண்டு போய்விட்டாங்கள் போல. வேறை ஆர்.? உன்ரை ஆக்கள் தானே மரத்திலை ஏறுவாங்கள்.”
செல்லன் மெளனமாக நிற்கிறான். “என்ன செல்லன் முட்டிகளையும் கழட்டிக்கொண்டு போவிட்டாங் களோ? கொண்டு போனால் தங்கடை மரங்களுக்குக் கட்டலா மெல்லே.!” விதானையார் மனைவி இடையில் புகுந்து செல்லனிடம் கேட்கிறான்.
“இல்லையாச்சி. ஒவரு மரத்திலையும் ஒவரு முட்டியைத்தான் கழட்டி எடுத்துக்கொண்டு போவிட்டாங்கள். அது ஒவரு மரத்தாலையும் கள்ளுக் கொண்டு இறங்கிற முட்டியள்தான்.”
"அப்ப செல்லனுக்கு முட்டியளால நட்டமில்லை. ஆகக் கள்ளு தானே.” விதானையார் சொன்னது அவர் மனைவிக்குப் பிடிக்கவில்லை. செல்லனுக்கும் மனதுக்கு வேதனையாக இருந்தது. விதானையாரின்

ஒடுக்கப்பட்டவர்கள் 25
பகிடி அவர் மனைவியிடத்தில் எடுபடவில்லை என்பதை அவர் உணர்ந்து கொண்டு போலித்தனமான அக்கறையோடு பேசத் தொடங்கினார்.
"உன்னிலை கோவதாவம் உள்ளவங்கள் ஆராவது செய்திருப் பாங்களெண்டால் சொல்லு. உடனே ஆளைப் பிடிச்சு இரண்டு வாட்டு வாட்டி விடுறன். உன்ரை ஆக்களாலைதான் எனக்கு அடியன் விதானை' எண்டு பேர் வந்ததெண்டு இன்னும் அவங்களுக்கு விளங்கேல்லை.”
"அப்படி ஒருதரிலையும் எனக்குச் சமுசியமில்லை. கோவ தாவத்தில செய்யிறதெண்டால் கள்ளுப் பாளையளையும் முறிச்சிருப் பாங்கள், அல்லது வெட்டி இருப்பங்கள்.” . "அப்ப. நீ சொல்லுறதைப் பார்த்தால் கள்ளக் கள்ளுக் குடிக்கத் தான் ஏறி இருக்கிறாங்கள். அப்படித்தானே..! அவங்களுக்கு ஒரு முட்டீக்க கொஞ்சம் பொல்டோல் ஊத்தி வையாதன்.”
“எனக்கேன் ஐயா அந்தப் பாவத்தை.” “இப்படிச் செய்யிறவங்களுக்கு என்ன பாவமும் புண்ணியமும்.? அது சரி. இவன் பெரிய பாவமெல்லே! பிள்ளைக்குட்டிகாரன். இவன்ரை வயித்திலை ஏன் அடிக்கிறாங்கள். அநியாயமாப் போவார்.” விதானையார் மனைவி செல்லனுக்காக மனம் நெகிழ்ந்து கூறுகிறார்.
விதானையார் மனைவியைப் பார்த்து, "நீர் திட்டியென்ன. விட்டென்ன” என்று சொல்லிக் கொண்டு செல்லனிடம் திரும்பி,
"ஆ. இதுக்கிப்பென்ன செய்யிறது செல்லன். நீ சொல்லு.!” கேட்கிறார்.
"அந்தக் கள்ளங்களை எப்படியும் பிடிக்கேணுமையா.” "பிடிக்க வேணுமோ. கள்ளிறக்கிற கள்ளன்களை எப்பிடிப் பிடிக்கிறது.? வலை போடுகிறதே.!”
“மரத்தடியில் இரவு காவலிருந்தால் பிடிச்சுப் போடலாமாக்கும்.” “பிடிக்கலாமெண்டால் அப்படிச் செய்யன்.” "நான் போய்த்தனிய இருந்தால் முடியுமேயாக்கும்.?” “உன்னை ஆர் தனியப் போகச் சொன்னது உன்ரை மச்சான் இரண்டு பேரைக் கூட்டிக்கொண்டு போவன்.”
"நாங்கள் காத்திருந்து பிடிச்சாலும் எங்களைப் பாத்துப் போட்டு அடிச்சுப் போட்டல்லவோ போவினம்.”
"கள்ளனையும் பிடிக்க வேணுமெண்ணுறாய், பிடிக்கவும் பயப் பிடுகிறாய். வேறை என்னத்தைச் செய்யப் போறாய்?”

Page 19
26 தெணியான்
“ஐயா..!” மிகுதியைச் சொல்ல முடியாது செல்லன் தடுமாறுகிறான்.
“என்ன..?” விதானையார் உரப்பிக் கேட்கிறார். "ஐயாவும் வந்தால்.” "ஐயாவும் வந்தாலோ..? நல்ல கதை கதைக்கிறாயடா செல்லன். கள்ளு மரத்துக்குக் காவல் கிடக்க என்னை வரச் சொல்லுறாயென்ன! சும்மா விசர்கதை கதையாமல் உன்ரை பாட்டில போ. என்ன கேக்க வேணும், என்ன கேக்கக்குடாதெண்டு தெரியாது உனக்கு.” சினந்து எடுத்தெறிந்து பேசுகிறார் விதானையார்.
செல்லன் பாடு திண்டாட்டமாய்ப் போய்விட்டது. விதானையார் மனைவியைக் குழைவோடு நோக்குகிறான்.
“அவன் கேட்கிறான் ஒருக்கால் போவிட்டு வாருங்கவன் நீங்களும்.” விதானையார் மனைவி ஆதரவோடு விதானையாரைப் பார்த்துச் சொல்லுகிறாள்.
“சும்மா போப்பா. பேத்தனமாப் பேசிறீர். கள்ளு மரத்துக்கு என்னைப் போய்க் காவல் கிடக்கச் சொல்லுறீர். நாளைக்கு நாலு பேர் அறிஞ்சால் என்னை என்ன நினைப்பங்கள்.” மனைவியின் வார்த்தை களையும் விதானையார் தட்டிக் கழித்தார்.
"கள்ளு மரத்துக்கென்ன. பிணத்துக்குந்தான் காவல் கிடக்க வேணும்; உங்கடை கிராமத்தில அதுகிம் உங்கடை வீட்டில நிக்கிறவனு க்கு இப்படி நடந்தால் நீங்கள் கிராமத் தலைமைக்காரன் எண்டு இருந்த திலை என்ன பலன்? உங்களிலை இந்த ஊரிலை உள்ளவங்களுக்கு பயபத்தி உண்டோ? சொல்லுங்க பாப்பம்.!” விதானையாரின் கெளரவத் தைக் குத்திக் காட்டும் வகையில் அவர் மனைவி சொல்லுகிறாள்.
இந்த வார்த்தைகளைக் கேட்டதும் விதானையார் கீழே இறங்கி வருகிறார். “அது சரியப்பா. கள்ளர் எப்ப வருவாங்கள் எண்டு எப்படித் தெரியும்? ஒவ்வொரு நாளும் போய் என்னைக் கள்ளு மரத்துக்குக் காவல் இருக்கச் சொல்லுறீரோ?”
விதானையார் அவர் மனைவியின் பேச்சில் சற்று மசிந்து விட்டார்
என்பதைக் கண்டுகொண்டு, “இண்டைக்குக் கட்டாயம் வருவங் களையா.” என்கிறான் செல்லன்.
"சும்மா போடாப்பா. நேத்து வந்தவங்கள் இண்டைக்கும்
வருவங்களெண்டு நீ என்ன சாத்திரமே பாத்தனி. அல்லது உனக்குச் சொல்லிப் போட்டுத்தான் வாறாங்களோ..!"
செல்லனின் மனம் விழுந்துவிட்டது. தளர்ந்துபோன சன்னமான குரலில், "இண்டைக்கும் நல்ல திருவிழா. அதுதான் கட்டாயம் இண்டைக்கும்.” எனச் சொற்கள் அவன் தொண்டைக் குழிக்குள் இடறுப் படுகின்றன.

ஒடுக்கப்பட்டவர்கள் 27
“ஒகோ. எனக்கிப்பத்தான் நினைவுக்கு வருகிது. இண்டைக்குத் திருவிழாவுக்குப் போகவேணுமெண்டெல்லே சொன்னீர்.” கதையைத் திசை திருப்பும் நோக்கத்தோடு விதானையார் மனைவியிடம் ஆதரவாக வினவுகிறார்.
"ஒமோம். போகத்தான் வேணும்.” “பிறகெங்கே இண்டைக்கு அங்கெ இங்கே போறது. செல்லன்.! சரி, சரி இண்டைக்குப் போ. வேறை ஒரு நாளைக்குப் பாப்பம்.”
செல்லனுக்கு நாடி விழுந்துவிட்டது. விதானையார் ஒரு முடிவுக்கு வந்து விட்டார் போல அவனுக்குத் தெரிகிறது. இனிமேல் விதானையார் மனைவி வாய் திறந்தால்தான் என்ற முடிவோடு ஏமாற்றம் பிரதிபலிக்க அவளைப் பார்த்தான். அவன் நம்பிக்கை பிழை போகவில்லை. அவள் விதானையாருக்குச் சொன்னாள்:
"நீங்களும் நானும் திருவிழாப் பாத்த காலம் போச்சு, ஆரினி நித்திரை முழிக்கிறது; எனக்கெண்டால் கொஞ்சமும் விருப்பமில்லை. பிள்ளையஸ்தான் விடுகிதுகளில்லை. நீங்கள் மணற்சூட்டில் இருந்து ரா முழுதும் நித்திரை முழிக்கிறது உங்கடை மூலச்சூட்டு நோய்க்குங் கூடாது. நான் பிள்ளையளைக் கூட்டிக்கொண்டு போவிட்டு வாறன். அவன் பாவமெல்லலே. மண்டாடுறான். நீங்கள் அவனுக்கு உதவி செய்யாவிட்டால் அது கடவுளுக்குப் பிழை.”
“சரி. சரி. என்னை நீங்கள் விடாயஸ் நான் உன்னோட வாறன் செல்லன். இண்டைக்கு அந்த எழிய வடுவாக்களைப் பிடிச்சுத் தோலுரிச்சுப் போட்டுத்தான் விடுறது. உன்ரை அண்ணன் தம்பி எண்டாலும் பாரன். கண்மண் தெரியாமல்தான் வெளுப்பன். பிறகு நீ நிண்டு கொண்டு ஐயா பையா எண்ணக்குடாது. என்ன!”
செல்லன் கண்களில் நன்றிப் பெருக்கோடு விதானையார் மனைவி யைப் பார்க்கிறான். அவள் செல்லனுக்குக் கண்ணைக் காட்டிவிட்டு, வெற்றிப் பெருமிதத்தோடு நிற்கிறாள்.
"நான் செல்லனோடை போவிட்டு வந்து நேர காலத்துக்குப் படுக்கிறன். நீ பிள்ளை குட்டியளோடை தனியப் போக வேண்டாம். தம்பி பரமேஸ்வரனைக் கூட்டிக்கொண்டு போம்.”
"பரமேஸ்வரன் மத்தியானம் போனவன். இன்னும் வீட்டுக்கு வரவில்லை.”
“என்ன. மத்தியானச் சாப்பாட்டுக்கும் வரேல்லயே..!" “இல்லை.” "தறுதலை.” வார்த்தைகள் மேலும் வெளிவராமல் நாக்கைக் கடித்துக் கொண்டார் விதானையார் செல்லனுக்கு முன்னால் அவர் தம்பியை அப்படிச் சொல்வது தவறு என்பது அவர் எண்ணம்.

Page 20
28 தெணியான்
“கையிலை காசு களஞ்சேதும் கொண்டு போனானே.?” “காசில்லை எண்டு நேற்று என்னட்டை அம்பேசம் வாங்கினான். இண்டைக்கென்னடா வெண்டால் தாள்தாளா வைச்சிருந்ததைக் காலமை கண்டன்.”
"அவனுக்கெங்காலன் காசு.” “எங்கினை எங்கினை. எப்பிடி எப்பிடியோ..!" “ஆரும் சிநேகிதன்மாரிட்டை கைமாத்தா வாங்கி இருப்பான்” என்று மழுப்பிக்கொண்டு, செல்லனை அப்போது அங்கே வைத்துக் கொண்டிருக்க விரும்பாமல், உடனடியாக அந்த இடத்தை விட்டு அனுப்பும் நோக்கத்தோடு, "அப்ப. செல்லன் நீ பதினொரு மணிபோல வாவன்.” என்று செல்லனைப் பார்த்துச் சொல்லுகிறார்.
“சரியாக்கும். இண்டைக்கு நமக்கு ரண்டு வைச்சுக் கிடக்கு. நாமேன் பத்தைக்க போவான்! நான் ஆச்சியிட்டை எடுத்துக் குடுத்திட்டுப் போறேன்.”
“ஆ. சரி” "அப்ப வாறனாக்கும். ஆச்சி வாறன்.” விதானையாருக்கும் அவர் மனைவிக்கும் சொல்லிக்கொண்டு அடிவளவை நோக்கிச் செல்கிறான் செல்லன்.
நேராக அடிவளவுக்குச் சென்று விதானையாருக்கென வைத்த இரண்டு போத்தல் கள்ளையும் எடுத்துக்கொண்டு அடுக்களைப் பக்கம் செல்லன் வரவும் விதானையார் மனைவியும் அங்கு வந்து சேருகிறாள். அவள் கையில் இரண்டு போத்தல்களையும் கொடுத்துவிட்டு அவன் ஆகாயத்தை நிமிர்ந்து பார்க்கிறான்.
“என்ன செல்லன் மேலை பாக்கிறாய்..?” "ஒண்டுமில்லையாச்சி. நல்ல இருட்டாகக் கிடக்கு..!" “ஓம் நல்ல இருட்டுத்தான். அம்மாசை வந்து மூண்டு நாள் தானே..! இந்த இருட்டில என்னெண்டு வீட்டுக்குப் போய் வரப் போறாய்.”
"அதுதான் ஆச்சி நானும் யோசிக்கிறன்.” “ஆ. இனி எங்கே வீட்டுக்குப் போகப் போறாய். உன்ரை தட்டுவத்தை எடுத்து வா. சோறு தாறன், திண்டிட்டு ஐயாவின்ரை கண்ணிலை படாமல் அடிவளவுக்கெ போய் இரு நாங்கள் திருவிழா வுக்குப் போறம். நீ ஐயா சொன்ன நேரத்துக்கு வந்து ஐயாவைக் கூட்டிக்கொண்டு போ.”
“சரியாச்சி. அதுதான் சரி.” என்று சொல்லிக்கொண்டு, அடுக்களையின் பின்புற வேலியில் சொருகி இருந்த பனையோலைத் தட்டுவத்தை எடுத்து வந்து கைகளால் துடைத்து விட்டுக்கொண்டு

ஒடுக்கப்பட்டவர்கள் 29
அடுக்களை விறாந்தையோடு ஒட்டினாற்போல கையில் தட்டுவத்தை ஏந்திய வண்ணம் நிற்கிறான். விதானையார் மனைவி சோறு, கறி ஒவ்வொன்றாகக் கொண்டு வந்து தட்டுவத்துட் போடுகிறான்.
செல்லன் தடடுவத்தைத் தூக்கிச் சென்று வேலி ஓரமாக நிலத்தில் குந்தியிருந்து சோற்றைத் தின்று முடிக்கிறான். விதானையார் மனைவி செம்பிலே தண்ணீர் கொண்டு வந்து வார்க்கிறாள். அவன் தட்டுவத்தை யும் வாயையும் கழுவிக்கொண்டு, கைமண்டையில் அவள் தண்ணிர் வார்க்க மொடுக்மொடிக்கென்று குடிக்கிறான். பழையபடி தட்டுவத்தை வேலியில் சொருகிவிட்டு, அவளுக்குச் சொல்லிக்கொண்டு அடிவளவை நோக்கி நடக்கிறான்.
செல்லனுக்கு உண்ட களை நாரி வெடுவெடென்று உளைகிறது. கொஞ்ச நேரம் படுத்து நாரியை நிமிர்த்த வேண்டும் போலத் தோன்றவே, இடுப்பில் இருந்த இயனக்கூட்டைக் கழற்றி ஒருபுறம் வைத்துவிட்டு, சுருக்கிக் கட்டிய கொடுக்கைக்கூட அவிழ்க்காது, தென்னோலைக் கிடுகொன்றை எடுத்துப்போட்டு விழுந்து படுக்கிறான். மனம் வருந்தி அமைதியின்றி உளைகிறது.
“எவளவு நட்டம்! எவளவு கசித்தி ஒரு மரத்துக்கு மரக்காறர் மட்டும் வாங்குகினம் நாப்பதுறுவா, கவுண்மேந்துக்குப் பத்துறுவா, நம்பர்காரர் மரத்துக்கு நம்பரடிக்க வரேக்கை ஒரு மரத்துக்கு ஒருறுவா வீதம் அவைக்கும் கையிக்க வைக்கேணும். முட்டிக்குக் காசு, நாருக்குக் காசு வேற. அவரிவருக்கெண்டு பிறியிலெ கள்ளுக் குடுத்துத் துலைக் கோணும். நான் இந்த உடம்பைக் கசக்கிக் காலமையும் பின்னேரமும் கையைக் காலை கட்டி ஏறியிறங்கிற கசித்தி வேற. அப்ப நாங்கள் என்னெண்டு வயிறு கழுவிறது! எங்கடை பிள்ளைகுட்டியளை எப்பிடிக் காப்பாத்திறது!” இப்படியே சுழன்றது செல்லனின் சிந்தனை. அவன் எண்ணங்கள் அலை அலையாகத் தொடர்ந்து வந்து போயின. நேரம் போனதே அவனுக்குத் தெரியவில்லை.
படுத்த படிக்கையாகக் கிடந்தவாறே வானத்தை அவதானித்துப் பார்க்கிறான். ஒன்று இரண்டு நட்சத்திரங்கள் கண் சிமிட்டுகின்றன. விதானையார் வீட்டை அவதானிக்கிறான். வீடு அமைதியாகக் கிடக்கிறது. விதானையார் மனைவியும் பிள்ளைகளும் திருவிழாவுக்குப் போய் விட்டார்கள் என்பதை உணருகிறான். விதானையார் குறிப்பிட்ட நேரம் வந்து விட்டதென்பதை நட்சத்திரங்களைக் கொண்டே கணித்துக் கொண்டு, எழுந்து கால், கையை உதறிச் சோம்பலைப் போக்கிக் கொண்டு விதானையார் வீட்டை நோக்கி நடக்கிறான்.
விதானையார் முன் மண்டபத்தில் 'கன்வேஸ்' கட்டிலின் மேல் காலை நீட்டிப் படுத்த வண்ணம் சுருட்டு புகைக்கிறார்.

Page 21
30 தெணியான்
செல்லன் வீட்டு வாயிலில் வந்து நின்று "ஐயா.” என்று மெல்லக் குரல் கொடுக்கிறான்.
“செல்லன் வந்திட்டியே.” என்று கேட்டுக்கொண்டு வாயிலிருந்த சுருட்டை எடுத்து எறிந்துவிட்டு, புகையிலையை எடுத்து இன்னுமொரு சுருட்டைச் சுற்றுகிறார் விதானையார் சுற்றி முடித்ததும் நுனிச் சுருட்டை வாயில் வைத்துக் கடித்துத் துப்பிக் கொண்டு, “சரி போவம்.” என்று சொல்லுகிறார். அதன்பின் நெருப்புப் பெட்டியைக் கையில் எடுத்து, சுருட்டைப் பற்ற வைத்துக்கொண்டு கட்டிலில் இருந்து எழும்புகிறார். பல ஆண்டுகளுக்கு முன் வாங்கிய சப்பாத்தைப் பாதுகாப்பாகக் காலில் மாட்டிக்கொண்டு, ஒரு கையில் வெள்ளிப்பூண் போட்ட கம்பும், மறு கையில், "ரோச்லைற்றுமாக அவர் முன் செல்ல, அடக்க ஒடுக்கமாகச் செல்லன் அவரைப் பின் தொடர்கிறான்.
விதானையார் வீட்டில் இருந்து ஐம்பது யார் தூரத்தில் செல்லன் கள்ளிறக்கும் தென்னை மரங்கள் மூன்று நிற்கின்றன. விதானையாரும் செல்லனுமாக அந்த மரங்களில் ஒன்றுக்கு அருகே உள்ள பற்றைக்குள் மெல்ல வந்து மறைந்து கொள்ளுகின்றனர்.
கும்மிருட்டு, இருவருக்கும் ஆளையாள் தெரியவில்லை. விதானையாருக்கும் அந்த இருட்டில் பதுங்கி இருப்பது வெறுப்பாக இருக்கிறது. கள்வர்கள் வருவதாகவும் தெரியவில்லை. விதானையார் பொறுமையை இழந்து போவோம்’ என்று புறப்படுமுன்னர் அவர்கள் வந்திட வேண்டுமே, என்ற தவிப்பு செல்லனுக்கு, பற்றைக்குட் சில்லிடுவான் பூச்சிகளின் 'கிரீச் சத்தம் வெள்ளெலிகளின் குடுகுடு ஒட்டம் விதானையாருக்கு அதிருப்தி வளர்ந்து கொண்டு இருக்கிறது. செல்லன் உள்ளத்தை ஏக்கம் துளைக்கிறது. தெய்வங்களுக்கு நேர்த்தி செய்கிறான்.
அவர்கள் இருந்த இடத்துக்குச் சற்று தூரத்தில் நின்ற மரத்தில் யாரோ ஏறும் சத்தம் இருந்தாற் போலக் கேட்கிறது. இருவரும் உசாரா கிறார்கள். செல்லனின் நெஞ்சு திக்குத்திக்கென்று அடித்துக் கொள்கிறது.
"ஐயா. கள்ளன் வந்திட்டான்” என்று விதானையார் காதில் மெல்லச் சொல்லுகிறான். விதானையார் 'ம்.’ என்று உறுமுகிறார்.
"ஐயா இந்த மரத்திலையும் ஏறி, இறங்கெயிக்க நான் பிடிச்சுப் போடுறன்” செல்லன் தன் எண்ணத்தை விதானையாருக்குச் சொல்லு கிறான்.
“சரி. முதல்ல ஆளைப் பிடி இண்டைக்கவனை. அதைப் பிறகு பாப்பம்” விதானையார் பல்லை நெருடிக் கொள்ளுகிறார்.
கள்வன் முதலில் ஏறிய மரத்தில் இருந்து கள்ளை எடுத்துக் கொண்டு இறங்கிவந்து, அடுத்த மரத்தில் ஏறுகிறான். செல்லன் பாய்ந்து

ஒடுக்கப்பட்டவர்கள் 31
பிடிப்பதற்கு வழமாகக் கால் எடுத்து வைத்துக் குந்தி இருந்து கொள்கிறான்.
கள்வன் கள்ளை எடுத்துக்கொண்டு வேகமாக இறங்கி வருவதைக் காலிற் பூட்டிய தளநார் உரோஞ்சிச் சத்தமெழுப்பிக் காட்டுகிறது.
செல்லனின் கைகால்கள் பதறுகின்றன. விதானையாரும் விழித்துக் கொண்டு உக்கிரமாகி விட்டார்.
கள்வன் அடி மரத்தை வந்தடைந்து நிலத்தில் கால் வைக்கிறான். காலில் பூட்டிய தளநாரை இன்னும் கழற்றவில்லை. அதற்குள் செல்லன் 'லபக்கென பாய்ந்து இரு கரங்களாலும் இறுகக் கட்டிப் பிடித்துக் கொள்கிறான்.
விதானையார் கோபாவேசத்துடன் துள்ளி எழுந்து, “எடேய். கள்ள ராஸ்க்கல்.” என்று உரப்பிக்கொண்டு, வலது கையில் இருந்த கம்பைக் கள்வனை நோக்கி வீசிய வண்ணம் மறுகரத்தில் வைத்திருந்த “ரோச் லைற்ரால்” அவன் முகத்தில் ஒளியைப் பாய்ச்சுகிறார்.
மறுகணம், ஓங்கிய கம்பு ஆகாயத்தை நோக்கி நிமிர்ந்த வண்ணம் அப்படியே நிற்கிறது. அவரும் அந்தக் கம்பு போலவே விறைத்து மரமாக நிற்கிறார்.
விதானையாரின் தம்பி பரமேஸ்வரன் செல்லனின் இரும்புக் கரங்களுக்குட் சிக்கி விடுபட இயலாது திக்கித் திணறிக் கொண்டு நிற்கிறான்.
-தாமரை 6hafLLubus 197O

Page 22
32
மூன்று தலைமுறைகள்
வீட்டின் வெளிப்புற விறாந்தையில் கட்டிலோடு கட்டிலாகக் கிடக்கும் கந்தவனம் உடையார், அந்த வீடு ஒரு காலத்தில் நிலபாவாடை யில் நடந்த சீரையும் சிறப்பையும் வரலாறாகச் சொல்லும் தடயங்களாக இன்று விளங்கும் மிச்ச சொச்சங்களில் அவரும் ஒருவர்.
அவர் அதிகாரத்தோடு வாழ்ந்த காலத்திலும் அதற்கு முற்பட்ட காலத்திலும் அந்தப் பகுதி மக்களை அடக்கி ஆண்டு வந்திருக்கும் செல்வாக்குகள் சிதைந்து இன்று பழம் பெருமையை எண்ணிக் குமுறிக் கொண்டிருக்கிறது அந்த வீடு என்பதை அதன் தோற்றமே துலாம்பரமாக விளக்கும். வீட்டின் வெளிப்புற வாசலில் பக்கத்துக்கொன்றாக நிமிர்ந்து நின்ற தனிக்கல்லாலான முதுதூண்களில் ஒன்று உட்பக்கமாகச் சரிந்து வீழ்ந்து கிடக்கிறது. மறுபக்கத் தூண் அதற்கு எதிர்த்திசையில் சரிந்து கூர்கோணம் அமைந்து அந்தரத்தியானம் பண்ணுகிறது.
அந்த வீட்டின் பொற்காலம் பற்றி பெருமைமிக்க செய்திகள் பல இன்றும் அந்தப் பகுதியில் கர்ணபரம்பரைக் கதைகள் போலப் பேசப்பட்டு வருகின்றன. அந்தக் காலத்தில் ஒட்டு வீடு' என்றால் அந்த வீடு தான். அப்போது கொட்டில்களாகவும் குடிசைகளாகவும் இருந்த வீடுகள் இன்று நவீன குட்டி மாளிகைகளாக முளைத்தபோதும் அந்த வீட்டின் பாரம்பரியமான பெருமைகள் அவற்றுக்கு இருக்க முடியுமா?
அந்த வீட்டின் விசாலமான வளவின் பின்பகுதிக் கட்டடங்கள் இன்று தேடுவாரற்றுக் கூரை இழந்து, வெறுமைக்கும் வறுமைக்கும்

ஒடுக்கப்பட்டவர்கள் 33
சாட்சியாகத் தலை இழந்த முண்டங்களாக நிமிர்ந்து நிற்கின்றன. அந்தக் குடும்பத்தினர் உலா வந்த குதிரை வண்டிகள் சக்கரங்கள் கழன்று அக்குவேறு ஆணிவேறாகச் சிதறிக் கிடக்கின்றன.
வீட்டு வாசலுக்கருகே மேற்குப்புறச் சுவர் ஒரமாக அவர்களின் குலப்பெருமையைப் பறைசாற்றுவது போல பல்லக்கின் முறிந்து கழன்று போன பாகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அந்தப் பல்லக்குக்கும் அதன் இறுதி வாரிசான கந்தவனம் உடையாருக்கும் இப்போது அந்தஸ்தில் அதிக வித்தியாசம் இல்லை.
உடையார் இன்னுமொரு தசாப்தம் உயிரைப் பற்றிப் பிடித்துக் கொண்டு இருந்துவிட்டால் ஒரு நூற்றாண்டு காலத்தைக் கண்டுவிட்ட பெருமைக்குரியவராவார். ஆனால் அவர், மண்ணுலகத்தினில் பிறவி மாசறப் பரமபதம் அடையாது இன்னும் தான் வாழ்ந்து கொண்டிருப்பது அவருக்கு மாத்திரமல்ல, அவருடைய பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளை களுக்குங்கூடப் பெருஞ் சுமையாகத்தான் இருக்கிறார். பெயரளவில் இன்றும் அவர் உடையார். அவரிடத்திலோ அல்லது அந்தக் குடும்பத் திலோ இன்று உடையார் குடும்பம் என்ற பழம் பெருமையைத் தவிர அப்படி ஒரு உடைமையும் இல்லை, அந்த வீட்டை “உடையா வளவு” என்றும் “நீதவான் வளவு” என்ற சொல்லின் மருவு வடிவமாக "நீத்துவான்’ என்றும் அந்தப் பகுதி மக்கள் பயபக்தியோடு ஒரு காலத்தில் சொல்லிக் கொண்டார்கள். அந்தக் காலத்தில் அப்பகுதி மக்களுக்கிடையே ஏற்படும் சண்டை சச்சரவுகளை விசாரித்துத் தீர்ப்பு வழங்கியவர்கள் அந்தக் குடும்பத்தவர்கள் தான்.
அவர்களுக்குக் காசு என்பது ஒரு விளையாட்டுப் பொருளாகவே அப்போது இருந்து வந்திருக்கிறது. அவர்கள் காக வைத்து எடுத்துப் புழங்கிய முறையே ஒரு புதிய தினுசுதான். வீட்டின் நடுப்பகுதியில் காசு அறை' என்று ஒரு தனி அறையைக் கட்டி இருந்தார்கள். அந்த அறையின் மரக்கதவில் சிறிய ஒரு பொத்தல் வைக்கப்பட்டிருந்தது. பொத்தலுக்கூடாகவே நாணயங்களை உள்ளே தள்ளி விடுவது அங்குள்ள வழங்கம். பணம் தேவைப்படும் போது அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர் எவரும் கதவைத் திறந்து வேண்டிய அளவு அள்ளி எடுத்துக் கொண்டு போவார்கள்.
இன்று அந்த அறையும் அதோடு சேர்ந்த பகுதிகளும் அந்த வீட்டோடு தொடுத்த பிற்பகுதியில் பாழடைந்து போன நிலையில் இருள் மண்டி வெளவால்கள் குடியிருக்கின்றன.
கந்தவனம் உடையார் கடந்த காலத்தை உள்வாங்கிப் பார்க்கும் போது அந்த ஊரை எல்லாம் தீ வைத்துக் கொளுத்த வேண்டுமென்ற ஆவேசம் அவர் உள்ளத்திலே தோன்றுகிறது. ஆனால் இன்று அவரால் அது செய்யக்கூடிய ஒரு காரியமா என்று எண்ணும் போதுதான்?

Page 23
34 தெணியான்
அவர் கட்டிலுக்கருகே பித்தளையினாலான ஒரு துப்பல் பணிக்கம், கட்டிலுக்கு முன்புறமாகப் பாதங்களுக்குக் கீழே குமிழ் மிதியடி, கட்டிலின் வலதுபுறச் சட்டத்தில் சார்த்தியபடி வெள்ளிப் பூண் போட்ட கைத்தடி, நெற்றியிலும் உடலிலும் திரிபுண்டரமாகத் தரித்த வெண்ணிறு, முதுமையின் தளர்ச்சியால் நரம்புகள் தொய்ந்து தலையும் கைகளும் வெடவெடத்து நடுங்குகின்றன. அந்த நடுக்கம் அதிகமாக இருப்பதற்கு இன்னுமொரு விசேஷ காரணமும் உண்டு. பெற்றோருக்கு அவர் ஏகபுத்திரன்; குஞ்சரக் கன்று, அத்தோடு பெரிய குடும்பம்: செல்வச் செழிப்பு, இத்தனையும் இருந்த அவர் வாலிபப் பருவத்தில் இன்பத்தை அநுபவிப்ப்திலும் குறையேதும் விடவில்லை.
அவர் முன்னே, 'றேஸிங் சைக்கிளில் வேகமாக ஓடி வந்து, கிறீச்” என்ற ஒசையோடு பிறேக்” போட்டுக் கம்பீரமாக இறங்கி நின்றான், குணம் என்று நண்பர்களால் வாஞ்சையோடு அழைக்கப்படும் குணராஜா. அவன் வளவுக்குள்ளே சைக்கிளில் ஓடி வந்ததும், வாசலில் கட்டிலோடு கட்டிலாகக் கிடக்கும் அவரைப் பொருட்படுத்தாமல், வெளியே நின்ற வண்ணம் பார்வையை வீட்டுக்குள்ளே செலுத்தி துழாவுவதும் அவருக்குக் கொஞ்சமும் பொறுத்துக் கொள்ள முடிய வில்லை.
பொம்பிளைப் பிள்ளையஸ் உள்ள வீட்டிலே. அதுவும் உடையா வளவுக்குள்ளே. நான். நான். கந்தவனம் உடையார் பாத்துக் கொண்டி ருக்க. ஆரோ ஒருதன் துரை மாதிரி வந்து நிண்டுகொண்டு வீட்டுக் குள்ளே. வீட்டுக்குள்ளே பார்க்கவோ..?”
உடையார் மனம் கொக்கரிக்கிறது. அவனைச் சும்மா விடக்கூடாது என்ற எண்ணம் கொதித்தெழுகிறது.
KK s - 9y
gpu u
அவரும் அவர் பரம்பரையும் மற்றவர்களை விளிக்கும் முறையே இதுதான்.
அவர் குரல் அவன் செவிகளில் விழுந்ததாகத் தெரியவில்லை. திரும்பவும், "ஒய்” என்று ஒரு தடவை அழைக்கிறார்; பயனில்லை. அவனை அப்படியே விட்டுவிட அவர் தயாராக இல்லை. தட்டுத் தடுமாறிப் பேச முற்படுகிறார்.
“என்ன. பாக்கிறாய்..?”
அவன் அவரைத் திரும்பிப் பார்க்கிறான். அந்த உருவத்தை அதிசயமாகப் பார்த்துக் கொண்டு சாவதானமாகச் சொல்லுகிறான்:
"வைத்தியிட்டை.?”
"ஆர் இஞ்சை வைத்தி.?”
“வைத்தீஸ்வரன்.?”

ஒடுக்கப்பட்டவர்கள் 35
"நீ. எங்கே. இருக்கிறனி?”
“இஞ்சைதான்.”
"இஞ்சை எண்டு.”
“இந்த ஊரிலே தான்.”
"இந்த. ஊரிலே. எவடம்?”
“பள்ளன் சுடுகாடு.”
“ஆ.ஆ. அப்பிடியெண்டால்.நீ,”
அவன் பேச்சுக் குரல்கேட்டு உடையாரின் பேரன் வைத்தீஸ்வரன் குதித்தோடி வந்து, "ஹலோ மச்சான் குணம், வாடா வா” என்று வரவேற்று கட்டித் தழுவிக் கொண்டு வீட்டுக்குள்ளே அழைத்துச் செல்கிறான்.
அவருக்கு இந்தக் காட்சியைக் கண்டு சகிக்கவே முடியவில்லை. உள்ளம் உடைந்து வெதும்பிக் குமுறுகிறது.
“பள்ளன் சுடுகாட்டிலே இருக்கிறவனெண்டு சொல்லுறான். அங்கே வெள்ளாளர் ஆர் இருக்கினம்! வீட்டுக்குள்ளே. அதுவும் உடையா வீட்டுக்குள்ளே வரக்கூடியவை ஆர்? பள்ளன் சுடுகாட்டிலே இருக்கிறதெல்லாம் பள்க்குடிதானே! இவனும் அப்பிடியெண்டால் பள்ள னாகத்தான் இருக்க வேணும்! அப்ப இவனை எப்பிடி வீட்டுக்குள்ளே கூட்டிக் கொண்டு போறான் இந்தத் தறுதலை? மச்சான் எண்ணுகிறான். கட்டிப் பிடிக்கிறான். ஆ. எங்கடை குலமென்ன! கோத்திரமென்ன! இவனுக்குத் தான் கந்தவனம் உடையாற்ரை பேரன் எண்ட எண்ணம் இருக்க வேண்டாமோ!”
இப்படி எண்ணி எண்ணிச் சஞ்சலமும் ஆத்திரமும் அடைந்தார், எழுந்து சென்று உள்ளே என்ன நடக்கிறது என்பதைப் பார்த்து, அவனை விசாரித்து அடித்து வெளியே விரட்ட வேண்டுமென மனம் துடிக்கிறது. அவர் பழைய உடையாராக இருந்தால் அப்படித்தான் செய்திருப்பார். பாவம்! இன்று அவரால் எழும்பவும் இயலாது. அவர் பேரன் அவருடைய பேச்சுக்கு மதிப்பளிப்பதுமில்லை.
அவனை அழைத்துச் சென்ற வைத்தீஸ்வரன் ஒரு கதிரையில் இருக்க வைத்து, தானும் அவன் அருகில் அமர்ந்த வண்ணம் தாயையும் சகோதரிகளையும் அழைத்தான்.
"அம்மா இவன் தான் குணம். நான் அடிக்கடி சொல்லுவேனே. அவன் தான் இவன், எங்கடை கொலிச் புட்போல் ரீம் கப்டன். விளையாட்டிலே பெரிய கெட்டிக்காறன், படிப்பிலேயும் அப்பிடித்தான், எனக்கெண்டால் விளையாட்டுப் போகும். படிப்பெண்டால். அம்மா நீதான் அடிக்கடி சொல்லுவியே..!”

Page 24
36 தெணியான்
சகோதரிகளின் பக்கம் திரும்பி, "இவ்வளவு மட்டுமல்ல, பாட்டுப் பாடுவான் எண்டால். அப்பப்பா. கேக்கிறவை அப்படியே சொக்கிப் போய் விடுவினம். கேக்கிறதுக்குக் குடுத்து வைக்க வேணும், பெரிய ஆட்டிஸ்ற், ஒரு ஆளைப் பார்த்தால் அப்படியே படமாகக் கீறிப் போடுவான்.”
குணராஜாவின் பக்கம் திரும்பி, "ஏன்ரா. பேசாமல் ஊமை மாதிரி இருக்கிறாய்! ஏதும் கதையன்! எத்தனை நாள் சொல்லிச் சொல்லி இண்டைக்குத்தானே வந்திருக்கிறாய்!” என்று தலைகால் தெரியாமல் மகிழ்ச்சியால் குதித்தான்.
குணராஜா வைத்தீஸ்வரனின் தாயின் பக்கம் திரும்பி "வணக்கம் அம்மா’ என்று அடக்க ஒடுக்கமாகக் கூறினான்.
அவளும் பதிலுக்கு மொட்டையாகவே "வணக்கம்” என்றாள். அதற்குள் வைத்தீஸ்வரன் அவன் கையைப் பிடித்துக் கொண்டு, “டேய், டேய் ஒரு பாட்டுப் பாடன்ரா! உன்ரை பாட்டை என்ரை அக்கா அவை கேக்கட்டும். அப்பதான் என்ரை பிறன்ரைப் பற்றி இவை யளுக்கும் தெரியும்!” என்று மன்றாட்டமாக வேண்டுகோள் விடுத்தான்.
"வைத்தி. கொஞ்சம் சும்மா இரடா” அவன் வைத்தீஸ்வரனைச் சற்று அடக்கினான்.
வைத்தீஸ்வரனின் தாய்க்கு அவன் தன் மகனைப் பார்த்து “வைத்தி” என்று அழைப்பதும் "டா” போட்டுக் கதைப்பதும் நெஞ்சில் முள்ளாக உறுத்துகிறது. ஆனால் வெளியில் காட்டிக்கொள்ளாதவாறு முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளுகிறாள்.
வைத்தீஸ்வரன் கடைக்குட்டி மாத்திரமல்ல, நான்கு பெண் களுக்குப் பின்னால் அருமை பெருமையாகப் பிறந்திருக்கும் ஆண் பிள்ளை. அதனால் அவனுக்கு அதிக செல்லங் கொடுத்தே வளர்த்து விட்டார்கள். அவன் வளர்ந்த விதமோ என்னவோ, மற்றவர்கள் சொல்லு அவன் செவிகளில் ஏறாது; அவனுக்குச் சரியென்று எது படுகிறதோ, அந்த எண்ணத்தின்படியேதான் நடப்பான். அவன் முகம் கோணும் படியாக அந்த வீட்டிலே யாரும் நடப்பதில்லை. அவனைக் கட்டுப் படுத்துவதற்கு அவன் தந்தையும் இன்று உயிரோடு இல்லை. அவனைத் திருப்திப் பண்ணுவதற்காகவே அவனுடைய தாய் மரியாதை பிசகாமல் நடந்து கொண்டாள்.
"தம்பி, நீர் தான் இவனுக்குப் புத்தி சொல்ல வேணும்.” அவள் சொல்லி வாய் மூடுவதற்குள் அவள் மகன் வைத்தீஸ்வரன் அவளைப் பார்த்துக் கேட்டான்:
“இவன் என்ன எனக்குப் புத்தி சொல்லுறது! இவனுக்கு நான் சொல்லிக் குடுப்பன்."

ஒடுக்கப்பட்டவர்கள் 37
"நீ தானே உன்ரை சினேகிதன் பெரிய கெட்டிக்காரன் எண்டு எப்போதும் புளுகிறாய்! பிறகு இப்பென்னெண்டால் நீ புத்தி சொல்லிக் குடுப்பன் எண்ணுகிறியே!”
வைத்தீஸ்வரனின் மூத்த சகோதரி அவனைப் பார்த்துக் கேட்கிறாள்.
"படிப்பிலேதானே கெட்டிக்காரன். உலக விஷயம் இவனுக்கு ஒண்டும் தெரியாது. இவனைவிட நான் அதிலே விண்ணன், இவனுக்கு அநுபவமில்லை. ஏன்ரா. குணம்! எல்லாத்துக்கும் வாயைத் திறக்காமல் இருக்கிறாய்?”
"நான் பேசுகிறதுக்கு என்ன இருக்குது? எனக்க சேர்த்தத்தானே நீ பேசிக் கொண்டிருக்கிறாய்” என்று கூறிக்கொண்டு தாயையும் மகனை யும் மாறி மாறிப் பார்த்துச் சிரித்துக் கொள்ளுகிறான் குணராஜா,
வைத்தீஸ்வரன் நண்பனைக் கண்ட அமர்க்களத்தில் எல்லாவற்றை யும் மறந்துபோய், திடீரென ஞாபகத்துக்கு வந்தவனாக, “எடே. எடே. உனக்கொண்டும் தராமல் நான் வெறும் வாயடிச்சுக் கொண்டிருக்கிறன். எடே மச்சான் உனக்கென்ன ரீயோ. கோப்பியோ.” அவனைப் பார்த்து அவசரமாகக் கேட்டான்.
“எனக்கு ஒண்டும் வேண்டாம். ஆளை விட்டால் போதும்.” அவன் பதில் வைத்தீஸ்வரனின் தாயை உள்ளூர மகிழ்விக்கிறது. ஆனால் வைத்தீஸ்வரன் விடுவதாக இல்லை. அவன் சகோதரி களின் பக்கம் திரும்பி, இவன் நெடுக இப்பிடித்தான்; எல்லாத்துக்கும் வெட்கப்படுவன், ஆனால் கோப்பி எண்டால் உயிர். ஒராள் போய்க் கோப்பி போட்டுக் கொண்டு வாருங்கோ! ஆள் பெரியடஆசாரக்காறன், நீற்ராக் கொண்டு வாருங்கோ” என்று கூறுகிறான்.
அவனுடைய தாய் அதற்குள் முந்திக் கொள்ளுகிறான். "இப்ப சாதுவான வெய்யிலும், இந்த வெய்யிலுக்கே ஏன் கோப்பி இளனியைக் குடுங்கோ!”
"அம்மாவின்ரை ஐடியாதான் சரி என்ன மச்சான் இளனி குடிப்பம்! சரி இளனியைக் கொண்டு வாருங்கோ!”
"இளனி புடுங்க வேணும். நீ மரத்திலே ஏறிப் புடுங்கன்” மகனுக்குச் சொல்லிக் கொண்டே குணராஜாவைப் பார்க்கிறாள் வைத்தீஸ்வரனின் தாய்.
எல்லோரும் சிரிக்கிறார்கள். குணராஜாவும் சேர்ந்து சிரித்துக் கொள்ளுகிறான்.
"நான் ஏற வேண்டுமெண்டால் ஏறுவன். அண்டைக்கும் அந்த வத்தாவிக் கண்டிலே ஏறி ஒரு இளனி புடுங்கிக் குடிச்சனான், இளனி ஐடியாவைச் சொன்னது அம்மாதான், இப்ப இளனியையம் அம்மாதான்

Page 25
38 தெணியான்
புடுங்க வேணும். என்ரை அம்மா வெல்லே. அந்தக் கொக்கைத் தடியாலே செவ்விளணிக் கண்டிலே இரண்டு இளனி புடுங்கி வாருங்கோ. போங்கோ. போங்கோ.”
வைத்தீஸ்வரன் தாயை விரட்டினான். அவள் வீட்டு மரங்களில் தேங்காய்களைப் பறித்து வந்து, வீட்டின் பின்புறத்தில் அள்ளி வந்து குவித்தவனுடைய மகனுக்காக இன்று அவள் இளநீர் பறிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டபோது அவள் அதைத் திருப்தியோடா செய்வாள்! ஆனால் வேதனையோடு இரண்டு இளநீரைப் பறித்து வந்து கொடுத்தாள்.
கந்தவனம் உடையார் வாசலில் கிடந்து பல தடவைகள் நெஞ்சு யர்த்திச் செருமி விட்டார். அந்தச் செருமலின் அர்த்தம் அவர் மகளுக்கு நன்கு விளங்கும். அவளை அவர் அழைக்கின்றார் என்பதை அறிந்து அவரைக் கவனிக்கப் புறப்படும்போது மகனைப் பார்த்து,
“சரி இளனியைக் குடிங்கோ வாறன். நீ இந்தத் தம்பிக்குக் குடுக்க வேணுமெண்டு வைச்சிருக்கிற பாசலையும் மறந்து போகாமல் குடுத்து விடு” என்று சொல்லிக் கொண்டு தகப்பனுக்கு முன் போய் நின்றாள்.
அவர் சில கணங்கள் மெளனமாகவே இடுங்கிப் போன கண்களால் அவளைக் குறிப்பாக பார்த்துவிட்டு, “ஆர் பிள்ளை உங்கே வந்திருக்கிறது?” என்று கேட்டார்.
அவள் எதிர்பார்த்த கேள்விதான். அதிக அக்கறை காட்டிக் கொள்ளாமலே பதில் சொன்னாள்:
"அது ஆரோ தம்பியின்ரை சிநேகிதனாம்.” “எங்கே இருக்கிறவன்?” “உங்கினை தான் எங்கேயோ இருக்கிறவன்.” “உங்கினை எண்டால் எங்கே?” பள்ளன் சுடுகாட்டிலே இருக்கிறவனாம்.” “அங்கே ஆரும் எங்கடை ஆக்கள் இப்ப போய்ப் புதிசாக் குடியேறி இருக்கினமே?”
"அங்கே ஆர் இருக்கினம்.” "அப்ப இவனும் பள்ளன்தான்.” "ஒமாக்கும்.” “என்ன ஒமாக்குமெண்ணுறாய். இவன் ஆற்ரை மேன்?” "ஆழ்வான்ரை.” “எந்த. வாரியின்ரை ஆழ்வான்ரை மேனோ?”
"ஒ. அவன்ரைதான்.”

ஒடுக்கப்பட்டவர்கள் 39
“என்ன அவனையும் வீட்டுக்குள்ளே விட்டுப் பிளங்கத் துடங்கி விட்டியளே! அந்தப் பள்வாரி எங்கே. அதிலே கிடக்கிற பல்லக்கிலே என்னையும் அப்புவையும் வைச்சுச் சுமந்தவன். அவன்கள் எங்கடை அடிமைக் குடிமையள், அவன்ரை மேன் ஆழ்வான். உவன்ரை தேப்பன், அப்பு செத்தபோதும், உன்ரை கொம்மா செத்தபோதும் குடிமையைக் கைவிடக் கூடாதெண்டு சுடலைக்குக் கட்டை குத்தி சுமந்தவன், இண்டைக்கெல்லாம் விட்டுவிட்டான்கள்தான், ஆனாலும் எங்கடை சிறைக்குட்டி ஒருதன் இந்த வீட்டுக்குள்ளே கால் எடுத்து வைக்கலாமோ. எழிய பொறுக்கிப் பயல்’
“தம்பி வரச் சொன்னால் அவன் வருவன் தானே!” "தம்பி என்ன. பெரிய தம்பி; நான் அப்பவே சொன்னனான். அவனை வேதற்காறங்களின்ரை பள்ளிக்கூடத்துக்கு விடாதே எண்டேன், கேட்டியே. கண்ட சாதியும் போகுமங்கே. வேதக்காரன்களாலே எழிய சாதியும் இரண்டெழுத்துப் படிச்சவுடனே, வீட்டுக்குள்ளே வந்து விட்டான். உடையார் வீட்டுக்குள்ளே. இப்ப சண்டாளப் பிராயச்சித்தமல்லோ செய்ய வேணும்!”
“உங்கடை பேரனுக்கு உதைச் சொல்லுங்கோ!” “அவனுக்கென்ன சொல்லுறது; அவன் என்ரை கதையைக் கேட்பனே! நான் செத்தாலும் அவன் கொள்ளி வைக்கவும் கூடாது. என்ரை மேலிலே தொடவும் கூடாது.”
“என்னத்தைச் சொல்லி என்ன! எங்களிட்டை என்ன கிடக்குது இப்ப, பழம் பெருமை மட்டும் பேசிக் கொண்டிருக்கிறம்.”
“ஒலன்டுமில்லைதான், ஆனால் குலப்பெருமை குறைஞ்சு போகாது, அதை உன்ரை மேனுக்குச் சொல்லு கெட்டாலும் செட்டி, கிழிஞ்சாலும் பட்டுதான்.”
அவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும்போது குணராஜாவும் வைத்தீஸ்வரனும் வெளியே வருகிறார்கள். வைத்தீஸ்வரன் கை அசைத்து குணராஜாவை வழி அனுப்பிவிட்டு, வீட்டுக்குள் போகத் திரும்புகிறான்.
"ஏன் தம்பி அந்தப் பாசலை அவனிட்டைக் குடுக்கயில்லை!" தாய் அவனைப் பார்த்துக் கேட்கிறாள். "எவனிட்டை.!” என்று அழுத்தம் கொடுத்து, தன் அதிருப்தி வெளிப்படக் கேட்டுக் கொண்டு, அவளை அலடசியமாகப் பார்க்கிறான்.
"உன்ரை சினேகிதனிட்டை” “அவன் வாங்க மறுத்துப் போட்டான். அதை என்னையே வைச்சிருக்கச் சொல்லுகிறான்.”

Page 26
40 தெணியான்
“அவன் சொன்னாப் போலே. அவன் போட்ட, அவன்ரை சேட் உனக்கேன்?”
உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அவனைப் பார்த்து அதட்டுகிறாள்.
“அவன் என்ரை நண்பன். இது அவன்ரை சேட் இதிலே எனக்கு ஆசையெண்டதை அறிஞ்சு என்னட்டையே விட்டுவிட்டான். அவனுக்கு நான் செய்யக்கூடியது இந்தச் சேட்டின்ரை பெறுமதிக்கு வேறை ஒரு சேட் வாங்கிக் குடுக்கிறதுதான், இதின்ரை பெறுமதி நாப்பத்தைஞ்சு ரூபா, நாப்பத்தைஞ்சு ரூபாத் தர உங்களாலே முடியுமா! முடிஞ்சால் இதைச் செய்யுங்கோ இதுக்கேலாது, வெறும் வாய் மட்டும் காட்ட வேண்டாம்.”
நிதானமாக சொல்லிவிட்டு அவன் உள்ளே போகிறான். தாய் பதில் சொல்ல இயலாது அணைந்து போன குத்து விளக்காக உள்ளம் புகையத் தலை குனிந்து அவனைத் தொடர்ந்து உள்ளே செல்கிறாள்.
அவர் - கந்தவனம் உடையார், அவருக்கு தெரியாத அந்தக் காலத்தில் அந்த வீட்டைக் கட்டுவதற்காக மூட்டி எரிக்கப்பட்ட சுண்ணாம்புக் காளவாய் போல அவர் உள்ளம் பற்றி எரிகிறது, இவற்றை எல்லாம் கண்டும் கேட்டும் இன்னும் அவர் உயிர் தரித்திருப்பதை எண்ணிப் பிராண அவஸ்தைப்படுகிறார்.
அது வெறும் அவஸ்தைதான், பாவம்! அவர் உயிர் இன்னும் உடலை விட்டுப் பிரியவில்லை.
ஆமாம். அவர் இன்னும் இறக்கவில்லை.
- மல்லிகை Iggubuј 1970.

do TLD GOGoT
நாளை விடிந்தால் திருமணம் குஷியாகக் குடித்துக் கொண்டி ருந்தார்கள் மாப்பிள்ளை நந்தசேனாவும், கல்யாணத் தரகரும், அவன் நண்பன் முருகேசம் பிள்ளையும்.
முருகேசம் பிள்ளை ஒருவர்தான் அந்தக் கிராமத்தில் வாழும் ஒரே ஒரு தமிழர். அது ஒரு தனிச் சிங்களக் கிராமம். கொழும்பில் இருந்து தெற்கே நூற்று ஐம்பத்து இரண்டு மைல் தூரம். இலங்கையின் பிரபல அரசியல் தலைவர்கள் பலரின் பிறந்த மண் அதுதான். ஆனால் எநதத் தலைவனும் இன்று அந்தக் கிராமத்தில் தங்கி இருக்கவில்லை. பழமை யைப் பேணுவதில் அந்தக் கிராமவாசிகள் முதன்மையானவர்கள். இன்றும் அந்தக் கிராமவாசிகளில் பலர் குடுமி வைத்துக் கொண்டிருக் கிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் கிராமத்தை விட்டு வெகுதூரம் போகாத்வர்கள். இதனால் மற்றச் சமூகத்தவர்களோடு பழகும் வாய்ப் பில்லாதவர்கள்; பழகவும் விரும்பாதவர்கள்.
அந்தக் கிராமத்து மக்களுக்குத் தமிழர்கள் என்றால் பெரும்பாலும் வெறுப்பு, கடந்த காலத்தில் இருந்த அரசாங்கமும், பத்திரிகைகளும் நாட்டு நலனைப் பொருட்படுத்தாது, சுயநலத்தோடு செய்த பிரசாரங்கள் தான் இந்த வெறுப்பைச் சிறிது சிறிதாக வளர்த்தன. அந்தக் கிராமத்துக்கு வரும் முருகேசம் பிள்ளை போன்ற உத்தியோகத்தர்களும் ஒரு சில மத்தியதர மக்களோடுதான் தங்கள் உறவுகளை வைத்துக் கொண்டார்கள். இதனால் கிராமவாசிகள் தமிழரைப் பற்றி அறியவும் தேசிய உணர்வோடு சகோதரத்துவ பாவத்தில் நடந்து கொள்ளவும் வாய்ப்பில்லாது போய் விட்டது.

Page 27
42 தெணியான்
முருகேசம் பிள்ளையின் மரபு தமிழ் மக்களின் சாமானிய பரம்பரையல்ல. யாழ்ப்பாணத்து மானிப்பாயில், மஞவராயர் குலத் தோன்றல்தான் அவர் மிகவும் ஆசாரமான குடும்பம். அவர் தந்தை உதயத்தில் நீராடி, சூரிய நமஸ்காரம் செய்து, தீட்சை வைத்துக் கொள்ளாமல் பச்சைத் தண்ணி தானும் வாயில் குத்த மாட்டார். தாழ்த்தப்பட்டவர்களின் கண்ணில் படும்படியாகச் சாப்பிடுவதே பாவம் என்று கருதுபவர் - நோய் வந்தாலும் வைத்தியசாலைக்கும் போக
ரும்பாதவர் - கண்ட சாதியும் வருமென்ற காரணத்தால்.
அவர் மகன் முருகேசம் பிள்ளையைப் படிக்க வைத்தபோது உத்தியோகம் பார்க்க விடும் நோக்கம் இருக்கவில்லை, ஆனால் யாழ்ப்பாணத்து மக்களின் மனோபாவமும் அவர் குடும்ப நிலையும்தான் மகனை உத்தியோகத்துக்கனுப்பச் சம்மதித்தது. எவ்வளவு படித்திருந்தும் ஒரு உத்தியோகம் பார்க்காது விட்டால் யாழ்ப்பாணத்தார் மதிப்ப தில்லை. கல்வி அறிவைவிட கல்வி தரும் காசைத்தான் மதிப்பவர்கள். அத்தோடு கல்யாண மார்கெட்டிலும் மாப்பிள்ளைகளை வாங்க முன் வருவார்கள்.
முருகேசம் பிள்ளையார் உத்தியோம் கிடைத்துக் கொழும்புக்கு வந்தபோது குடுமி அறுத்த பிராமணன்' போலத்தான் இருந்தார். கொழும்பு நகர வாழ்க்கையில் யாழ்ப்பாணத்து மண்ணோடு ஒட்டிக் கொண்டு வந்த ஆசார சீலங்களைக் கடைபிடிக்க இயலாது அவஸ்தைப் பட்டார். வெற்றிலை போடுவது, புகை பிடிப்பது, ஏன் பெண்களோடு பேசுவது தானும் ஒழுக்கத்துக்குப் பிசகானது என்பது அவர் பிறந்த குடும்பத்தின் கொள்கை.
நகர வாழ்க்கையிலும் கடும் ஆசாரங்களைக் கவசமாகக் கொண்டு அவர் போராடிக்கொண்டிருப்பதைக் கண்டு நண்பர்கள் கேலி செய்வார் கள். நாளுக்கு நாள் நண்பர்களின் தொல்லை அதிகரித்து வந்தது.
அவரின் நண்பர்கள் கூட்டமும் பழக்கமும் சிறிது சிறிதாக விரிவு பட்டுக்கொண்டு வர, அவர் நத்தைபோலப் பதுங்கிக்கொண்டிருந்த கவசங்களும் ஒவ்வொன்றாகக் கழரத் தொடங்கி விட்டன.
கொழும்பு வாழ்க்கையை வாய்ப்பாக்கி வெகு வேகமாகச் சிங்களத்தையும் கற்றுத் தேறினார். பின்னர் கண்டி, பதுளை, அநுராத புரம் என்று ஒவ்வொரிடமாக மாற்றலாகிச் சென்று இன்று இந்தக் கிராமத்தில் வாழ வேண்டிய கட்டாயம் அவருக்கு.
இங்குள்ள "கோர்ட்டில் அவர் ஒரு கிளார்க் காலி, மாத்தறைக் கோட்களும் வாரத்தில் ஒரு முறை கூடும். அங்கு சில வழக்குகளை விளங்குவதற்கு மொழிபெயர்ப்பாளராக ஒரு தமிழர் தேவைப்படுவதால் இவரை அங்கு மாற்றினார்கள். காலிக் கோட்டில் தமிழ் வழக்குகள் விசாரணைக்கெடுக்கும் போது இவரும் அங்கே பிரசன்னமாவார். தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மூன்று மொழிகளும் தெரிந்தவர் இவர்.

ஒடுக்கப்பட்டவர்கள் 43
இவர் மாற்றலாகி முதன் முதலாக இந்தக் கிராமத்துக்குக் குடும்பத்தோடு வந்தபோது, பல புதிய அனுபவங்களைப் பெற்றுக் கொண்டார். தமிழரான இவர் தங்குவதற்கு இந்தக் கிராமத்தில் வீடு கொடுப்பதற்கு ஒருவரும் சம்மதிக்கவில்லை. இந்த அவமானத்தை இவரால் சகித்துக் கொள்ள இயலாது போனாலும், என்ன செய்வதென்று பொறுத்துக் கொண்டார். யாழ்ப்பாணத்தில் ஒதுக்கப்படுகின்ற தாழ்த்தப் பட்ட மக்களை விடத் தாழ்ந்துபோன உணர்வு இவர் உள்ளத்தில் துளிர்த்து உறுத்தியது, ஒரு காலத்தில் சிங்களப் பையன்கள் யாழ்ப் பாணத்து வீடுகளில் வேலைக்காரன்களாக இருந்த பொற்காலத்தின் பசுமையான உணர்வுகளில் மிதந்து, உள்ளம் இடிந்து பொருமினார். ஆனால் வெளியில் காட்டிக் கொள்ள இயலுமா! ஆயிரத்தித் தொள்ளா யிரத்து ஐம்பத்தாறாம் ஆண்டு இந்த நாட்டில் ஏற்பட்ட மறுமலர்ச்சியை ஒரு தடவை நெஞ்சில் நிறுத்தி முகத்தைச் சுழித்துக் கொண்டார். அதற்கு முற்பட்ட காலத்தில் “யாழ்ப்பாணத்து மாத்தயா எண்டால் மாத்தயாதான்” யாழ்ப்பாணத்துக் கீழ்சாதிகளுக்குத்தான் இன்றும் எஜமானர். தென் னிலங்கையில்.மூச்சு!
வீட்டுப் பிரச்சினையை விடுவிப்பதற்கு உதவியாக இருந்தவன் நந்தசேனாதான். நந்தசேனாவும் இவரோடு ஒன்றாகவே உத்தியோகம் பார்க்கிறான். அவன் அந்த ஊர்க்காரன். அவன் காலை இவர் கெட்டி யாகப் பிடித்துக் கொண்டார்.
நந்தசேனாவுக்கும் இவரைப் பிடித்துக்கொண்டு விட்டது. செக்கச் சிவந்த இவர் நிறமும் உருண்டு திரண்ட உருவமும் அவன் மனத்தைக் கவர்ந்தன. எல்லாவற்றையும்விடச் சிங்களவர்கள் போலவே இவர் சிங்களம் பேசுவதில் அவனுக்கு அளவு கடந்த வாஞ்சை யாழ்ப்பாணத் தமிழனுக்கே தனிக்குணமான லாப நட்டம் பார்த்துச் செலவு செய்யும் குணமில்லாது, தாராளமாகச் செய்து, மனம் விட்டுப் பழகியதால் முற்று முழுதாக அவனை இவர் கவர்ந்து கொண்டார்.
அவனும் தன் உள்ளத்தைத் திறந்தே இவரோடு பேசினான். “நண்பரே. எனக்குத் தமிழர் என்றால் கொஞ்சமும் பிடிக்காது. ஆனால் உம்மை நான் விரும்புகிறேன். அதனால் உமக்கொரு வீடு ஒழுங்கு செய்து தருகிறேன்"
நந்தசேனாவின் வீட்டுக்கருகில் தான் அவன் தமையனின் வீடும் இருக்கிறது. அவன் தமையன் குடும்பத்தோடு கொழும்பில் வசிப்பதால் அந்த வீடு காலியாகவே இருந்தது. அந்த வீட்டை வாடகைக்கு ஒழுங்கு செய்த கொடுத்தான் நந்தசேனா
முருகேசம் பிள்ளை குடும்பத்தோடு அங்கு வந்து குடியேறினார். அன்று முதல் நந்தசேனாவின் குடும்பமும் இவர் குடும்பமும் உறவினர்கள் போல ஒன்று சேர்ந்து பழகினர். இவர் மனைவியும் குழந்தைகளும் நந்தசேனா வீட்டுக்குப் போவார்கள். அவன் தாயும் சகோதரர்களும் இவர் வீட்டுக்கு வருவார்கள். விசேஷ உணவுகள்

Page 28
44 தெணியான்
தயாரிக்கின்றபோது ஒரு வீட்டிலிருந்து மற்ற வீட்டுக்கு பரிமாறி உண்பார்கள். சினிமாவுக்குப் போகும்போதும், வெளியே உலாவச் செல்லும்போதும் இரு குடும்பங்களும் ஒன்றாகவே போய் வந்தன. நந்தசேனாவும், முருகேசம் பிள்ளையும் இணை பிரியாத நண்பர்கள். எங்கு சென்றாலும் இருவரையும் ஒன்றாகக் காணலாம். சில சந்தர்ப்பங் களில் ஒருவர் தோளில் ஒருவர் கை போட்டுத் தள்ளாடி நடக்கும் அழகே தனி இதைப் பார்த்து அந்தக் கிராமத்து பழைய சிங்களவர் சிலர் முகத்தைத் திருப்புவதுண்டு. ஆனால் இவர்கள் பொருட்படுத்து வதில்லை. அவ்வளவு நெருக்கம்; இறுக்கம்.
நந்தசேனாவுக்குத் திருமணம் என்றதும் எல்லோரையும்விட மகிழ்ச்சியில் குதித்தவர் முருகேசம் பிள்ளைதான். ஒரு வாரத்துக்கு முன்பே மணமக்களுக்கு அன்பளிப்புச் செய்வதற்குரிய உடுப்புகளை கொழும்புக்குச் சென்று வாங்கி 'வந்துவிட்டார். மாப்பிள்ளைக்கு மிக உயர்ந்த சூட்” ஒன்றும் பெண்ணுக்கு அதற்குப் பொருத்தமான சேலையும் வாங்கிக் கொண்டார். திருமணத்தின் போது சமேதராய்ப் போவதற்குக் காருக்கும் ஒழுங்கு செய்து கொண்டார்.
பெண் வீடு அங்கிருந்து நாற்பது மைல் தூரத்துக்கப்பால் மாத்தறையில், பெண் வீட்டுக்கு முருகேசம் பிள்ளையையும் வருமாறு நந்தசேனா அழைக்கவில்லை. அதை முருகேசம் பிள்ளையும் பெரிதாகக் கருத்தில் கொள்ளவில்லை. உயிர் நண்பர்களுக்கிடையே என்ன சம்பிர தாயங்கள்! நந்தசேனா அழைப்பு விடுக்க வேண்டுமென எதிர்பார்ப்பது உண்மை நட்புக்குக் களங்கம் என்பது பிள்ளை அவர்களின் எண்ணம். அவர் எல்லாவற்றுக்கும் இப்போதே தயார். வீட்டில் மனைவியையும் உஷார் படுத்தி விட்டார்.
நாளைய கொண்டாட்டத்தை நேர காலத்தோடு இன்றே ஆரம்பித்து விட்டார்கள். நந்தசேனாவும், முருகேசம் பிள்ளையும்: தரகரும். முருகேசம் பிள்ளை இதற்காகவென்றே லிவு போட்டு விட்டார். கல்யாண ஏற்பாடுகளில் முக்கிய பங்கெடுத்துக் கொள்ளாது விலகி இருப்பது பிழை என்பது அவர் தீர்மானம்.
மூவருக்கும் மத்தியில் வட்ட மேசை. அதன் நடுவில் ஒரு சாராயப் போத்தலும், பொரித்த மாட்டிறைச்சியும், மூவர் கையிலும் ஒவ்வொரு கிளாஸ், மறு கையில் சிகரெட் புகைந்து கொண்டிருக்கிறது. மூவருமாக மூன்று போத்தல்களைக் காலி செய்து விட்டார்கள். நாலாவது போத்தல் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கிக் கொண்டிருக்கிறது.
சிங்கள மக்களின் விருந்துகளில் சாராயம். இல்லாமல் விருந்து நடைபெறாது. பிள்ளையவர்கள் கொழும்புக்கு வந்த காலத்தில் இந்த முறை கட்டோடு அவருக்குப் பிடிக்காது. ஆனால் இப்போது இந்த விருந்தை முழுமையாகச் சுவைப்பவர் அவர்தான். போதை தலைக்கேறி விட்டால் சிங்கள மக்களின் இந்த வழக்கத்தைச் சிலாகித்துப் பேசத் தொடங்கி விடுவார். அவர் வாழும் சூழலிலும் இந்தப் பேச்சு நன்றாக எடுபடும்.

ஒடுக்கப்பட்டவர்கள் 45
இன்று அவர்களின் பேச்சு வேறு திசையில் திரும்பி இருந்தது. நந்தசேனாவைக் கேலி செய்வதில் தரகரும், பிள்ளையும் ஈடுபட்டிருந் தார்கள். நேரம் ஏற ஏறப் பகிடிகளில் சலிப்படைந்து நாளைய கல்யாண நடைமுறைகளைப்பற்றிய பேச்சுக்கள் தலைகாட்டின. யார் யாரை மாத்தறைக்கு பெண் வீட்டுக்கு அழைத்துச் செல்வதென்று யோசித்தார்கள்.
அப்போது தரகர் சேனாவை பார்த்துச் சொன்னார். "தம்பி. பெண் வீட்டுக்குப் போகும்போது இந்த யாழ்ப்பாணத்து மாத்தயாவையும் கொண்டு போவோம்.”
நந்தசேனா மது மயக்கத்திலிருந்து தெளிவு பெற்றவன் போல் துடித்துப் பதைத்து, தரகரைப் பார்த்துச் சொன்னான்.
“சீச். சீச். சீ. அது வேண்டாம். பெண் வீட்டை தமிழரைக் கொண்டு போனால் எங்களைக் குறைவாக நினைப்பார்கள். பெண் வீட்டுக்கு வேண்டாம். நாளைக்கு மத்தியானம் சாப்பாட்டுக்கு இங்கே கூப்பிடுவோம்.”
திருவாளர் முருகேசம் பிள்ளை அவர்களுக்கு அவர் காது களையே நம்ப முடியவில்லை. உலகமே சுழல்வது போலத் தோன்றியது. உள்ளம் இருண்டு அழுது வடித்தது. அவர் மனக்குதிரை யாழ்ப்பாணத் துக்குத் தாவியது.
அங்கே. அவர்களால் ஒதுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் உருவங்கள் அவர் கண்களில் தோன்றின. இன்று அவர்களின் கூட்டத்துள் தானும் நிற்பது போன்ற பிரமை!
நாம் செய்த. செய்கின்ற பாவங்களின் பலனை அனுபவிக்கும் காலம் வந்துவிட்டது. தின்ற மண்ணுக்கு வைக்கின்ற காமாளை இது. அனுபவித்துத்தான் ஆக வேண்டும். சிங்கள மக்கள் உள்ளத்தில் அரும்பும் இந்த எண்ணம் மாற வேண்டுமானால் - இருள் துடைக்கப்பட வேண்டுமானால் - இவற்றை விதைத்த அரசியல்வாதிகளால்தான் இயலும். இதை செய்வார்களா?
இப்படி அவர் மனம் வெந்து அரற்றியது, ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளாது சிறிது நேரம் தாமதித்திருந்து பின்னர் எழுந்து வீட்டுக்குச் சென்றார். மறுநாள் நந்தசேனா வீட்டில் நடந்த விருந்தில் கலந்து கொண்டாரோ என்னவோ! என்ற சந்தேகத்துக்கிடமின்றி உற்சாக மில்லாது போய் வந்தார்.
அவர் இருக்கும் நிலைமைக்கு அவர் செய்யக்கூடியது அதுதான்!.
-தாமரை LDাj& 1971

Page 29
எப்படியும் பெரியவன்தான்
கலாசாலையின் வெளிப்புறக் கேற்ரையும் தாண்டி வெறுப்போடு ஒடிக் கொண்டிருக்கிறான் காசிநாதன். 'கேற்றைத் தாண்டும் போது ஒரு தடவை திரும்பி, கலாசாலையை நோக்கிக் காறித் துப்ப வேண்டுமென அவனுள் அசூயையான ஒரு உத்வேகம். அவனுக் கிருக்கும் மனக்கொதிப்பும் பதற்றமும் அதனைக்கூடச் செய்யவிடாது உலுப்ப, திரும்பிப் பார்க்காது அருவருத்து ஓடிக்கொண்டிருக்கிறான்.
ஆனால் இந்தக் கலாசாலைக்குள் அடி எடுத்து வைத்தபோது அவன் அடைந்த ஆனந்தத்துக்கு அவளவே இல்லை. ஒன்றா? இரண்டா? பதினைந்து ஆண்டுகள் ஆக்கிரமித்து அவன் இந்தக் கோட்டையைக் கைப்பற்றினான். கோட்டைக்குட் புகுந்த போது அரச கம்பீரத்தோடு, தர்ப்பார் நடை நடந்து பவனி வந்து குதூகலித்தவன் தான் அவன். வேறு எவருமே சாதிக்க முடியாததைச் சாதித்த பெரிய சூரன் என்று தன்னையே தான் எண்ணி இறுமாந்தான்.
பல ஆண்டுகளாக அவன் உள்ளத்தை அரித்துக்கொண்டிருந்த ஏக்கம் அழிந்து இறுமாப்பு ஓங்கியபோது அவன் மனத்திரையில் அற்ப புழுவாக நெளிந்தவன் துரைசிங்கம்.
துரைசிங்கம் அவன் வீட்டுக்கு நான்கைந்து வீடுகளுக்கப்பால் குடியிருக்கும் தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவன். அவன் ஆசிரிய னாகி இரண்டு ஆண்டுகளுக்குப் பின் துரைசிங்கத்துக்கும் ஆசிரிய உத்தியோகம் கிடைத்து விட்டது.

ஒடுக்கப்பட்டவர்கள் 47
இருவரும் ஒரே காலத்தில் ஆசிரிய கலாசாலையில் சாதாரண பயிற்சி பெறுவதற்கான பிரவேசப் பரீட்சை எழுதினார்கள். முதல் தடவை யிலேயே பயிற்சி பெறுவதற்காகத் துரைசிங்கம் தெரிவு செய்யப்பட்டு விட்டான். இந்தத் தோல்வியை அவனால் தாங்கிக் கொள்ள இயலாது புழுவாய்த் துடித்துக் கொண்டிருந்தபோது, அவன் வீட்டுப் பனையில் கள்ளிறக்க வந்த துரைசிங்கத்தின் தகப்பன் கேட்டான்.
தம்பி றெயினிங் கொலிச்சுக்கு எடுபடல்லியே..!” “ஓம். இன்னும் எனக்கு மறுமொழி வரயில்லே.” “என்ரை மேனைக் கூப்பிட்டிருக்கினம். நேர்முகப் பரீட்சையும் முடிஞ்சு போச்சு.”
"அப்படியே. நல்லது தான்.' “எல்லாரையும் எடுத்தாச்சாம். இனிமேல் இந்த வரியம் ஒருதரையும் எடுக்காயினமெண்டு என்ரை பொடியன் சொன்னான்.”
"நான் உந்த ரெயினிங்குக்குப் போற எண்ணமில்லே. அதனால் தான் அவளவு கவனமாச் சோதினை எழுதயில்லே.”
"வேறெயும் ஒரு றெயினிங்கு இருக்கே தம்பி.?” "ஒமோம் விசேட பயிற்சி எண்டு ஒண்டிருக்கு. அதுக்குப் போனால் உன்ரை மேன் சிங்கனுக்குக் கிடைக்கப் போறதை விட ஒரு மடங்கு சம்பளம் கூட. நான் அதுக்குத்தான் போகப் போறன். உன்ரை மேனுக்கு அதுக்குப் போக ஏலாது.”
“ஏன் தம்பி அவனும், தம்பி சொல்லுற றெயினிங்குக்குப் போயிருக்கலாமெல்லே. சம்பளம் கணக்க வரும்.”
"உன்ரை மேன் சிங்கனுக்கு என்னைப் போலெ இங்கிலீசு தெரியாது. நல்லா இங்கிலிசு தெரிஞ்சவைதான் அங்கே போகலாம்.”
இப்படிச் சொன்னபோதே உள்ளத்திலும் திடசங்கற்பம் செய்து கொண்டான் அவன். இந்த உறுதியின் ஊன்றுகோலில் பல ஆண்டுகள் முயன்று ஆங்கிலம் படித்தும், எஸ். எஸ். ஸி தராதரத்தில் தானும் ஆங்கிலத்தில் விசேஷ பயிற்சி பெற்ற ஆசிரியனாக வேண்டுமென்ற அவா வெறும் கனவு என்பதை உணர்ந்தபோது, வர்த்தக பாடத்தைப் படிக்கத் தொடங்கினான். கடும் முயற்சியின் பின்னர் பலாலி ஆசிரிய கலாசாலைக்குட் புகுந்தபோது உள்ளமெல்லாம் நிறைந்து கிறங்கிக் கிடந்தவன் துரைசிங்கத்தையும் நினைத்துக் கொண்டான்.
"துரைசிங்கம். சிங்கன். அவனைவிட எண்டைக்கும் நான் பெரியவன்தான். அவர் ரெயினிங் முடிச்சுப் பதினைஞ்சு வரியமெண்டால் எனக்கென்ன? நான் இரண்டு வரியத்திலை வெளிக்கிட்டவுடனே அவனைவிட எனக்குச் சம்பளம் கூட அவன் பதினைஞ்சு வரியம் 'சேவிசு’ போட்டாலும் எனக்குக் கிட்ட நிக்கேலாது. றெயினிங் முடிஞ்சு அடுத்த தையிலெயே நான் கலியாணம் செய்து போடவேணும், எனக்கென்ன

Page 30
48 தெணியான்
வயது அவளவு பெரிய கணக்கவே. இரண்டு வரியமும் கழிய முப்பத் தேழாகும். படிச்சவை கலியாணம் செய்யிறது அப்பிடித்தானே.! தலையிலெதான் இடைக்கிடை நரைச்சுப் போச்சு. அதுக்கென்ன செய்யிறது. இந்தக் காலத்திலெ பத்து வயதுப் பொடியளுக்குந்தானே நரைக்கிது. என்னை ஒரு 'ஸ்பெஸல் றெயின்'ரை கட்டிறதுக்கு எத்தினை பேர் நான் முந்தி நீ முந்தி எண்டு நிப்பினம். சும்மாயல்ல முறையான சீதனமும் வாங்கிக் கொண்டுதான். இப்ப அவன் சிங்கன் என்னைப் பாத்து”
பாதி விழி மூடி நினைவுச் சுகத்தில் மிதந்து கொண்டிருந்தவனை, “ஹலோ மாஸ்டர்.” என்ற பல குரல்கள் விழித்தெழச் செய்தன. அவனை நோக்கி நீண்ட கரங்களில் ஒன்றை அவனும் பற்றிக் குலுக்கி னான். அதன் பின்னர் ஒவ்வொருவராகப் பலர் அவன் கையைப் பிடித்துக் குலுக்கினார்கள். புதியவர்களுக்குக் கிடைக்கவிருக்கும் வரவேற்பின் ஆரம்பந்தான் அது.
"மிஸ்டர் உங்களுக்குப் பேர் காசிநாதன் தானே.” முதலில் அவனோடு கை குலுக்கியவன் தான் அவனைப் பார்த்துக் கேட்டான்.
"ஒமோம் அதெப்பிடி. தெரியும். வினாவையே விடையாக்கிக் கொண்டு இதுவரை கவனிக்காத அந்த முகத்தை உற்று நோக்கினான்.
“ஆ. துரைசிங்கனா. இல்லை. இல்லை. அவன்ரை மூண்டாவது தம்பி. துரையன். துரைரத்தினம். இவனா என்ரை
என்ரை கையிலெ தொட எவளவு துணிவு வேணும்.?”
இதுவரை மனத்திலிருந்த ஆனந்த வெள்ளம் வடிந்த வழி தெரியாமல் உள்ளத்துள் உறுமினான். இருந்தாலும் காட்டிக் கொள்ளாது அவன் முகத்தை வெறுப்போடு நோக்கினான்.
"இதென்ன மாஸ்டர். உங்களை எனக்குத் தெரியாதா! ஒரே ஊரிலை இருந்துகொண்டு.”
துரைரத்தினம் அவனைப் பார்த்துச் சாதாரணமாகக் கூறினான். “ஒகோ. என்னைப் பாத்து ஹலோ எண்டு கூப்பிட்டதிலெ இவரும் ஒராள். எவளவு திமிர். இவருக்கு நான் ஹலோவாப் போனன்.” என்று நினைத்துக் கொண்டு,
"அப்ப நீ. துரைசிங்கன்ரை." அவன் முடிக்கவில்லை. "ஒமோம். துரைசிங்கம் மாஸ்டரின்ரை தம்பி, நான் சின்னண்ண ரோடை கொழும்பிலெ இருந்தனான். அதுதான் உனக்குத் தெரியயில்லெ, நீ எங்கடை வீட்டுக்குக் கிட்டத்தானே இருந்தனி”

ஒடுக்கப்பட்டவர்கள் 49
“என்ன. என்ன. இவன் என்னை மாஸ்டர், நீங்கள் எண்டு கதைச்ச வன் நீ எண்ணுறானே. சரி சரி மரியாதை கெடாமல் இப்ப பாத்துக் கொள்ளுவம்.” என்று கருத்தில் கொண்டு, “தம்பி கொழும்பிலெ கன காலம் இருந்தபடியால்தான் எனக்குத் தெரியயில்லே. இப்ப தெரியிது.”
"மாஸ்டர் எந்தக் கோஸ்.”
“கொமேஸ் தம்பி.”
"கூப்பன் கோஸ் தான்.”
பக்கத்தில் இருந்தவன் ஒருவன் சொன்னான்.
எல்லோரும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்கள்.
அவனும் “ஹி. ஹி..” என்று வாயைத் திறந்து சமாளித்துக் கொள்வதாகத் திருப்திப்பட்டான்.
"தம்பி எந்தக் கோஸ்.” துரைரத்தினத்தைப் பார்த்துக் கேட்டான் 96) 1607.
“இங்கிலீஸ்.” நெஞ்சம் துணுக்குற்றுப் பொறாமையால் வெந்தது. “இரண்டாம் வரியமே.” “இல்லை முதலாம் வருஷந்தான். மாஸ்டர் ஏன் இவ்வளவு பிந்தி "பாவம். மாஸ்டர் வயது போன காலத்திலெ "செக்கன்ட் லிஸ்ற் ரிலை தான் வர முடிஞ்சுது.”
அருகில் இருந்த இன்னொருவன் மெல்லச் சீண்டினான்.
அவனுக்கு மூண்டு விட்ட உள்ளம் பற்றி எரியத் தொடங்கியது. எப்போது அவர்கள் அந்த இடத்தை விட்டுத் துலைவார்கள் என்று எண்ணினான். ஆனால் எழுந்து போகும் நோக்கம் அவர்களுக்கில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கேள்வியை அடுககினார்கள்.
''
"மாஸ்டருக்கு எத்தினை பிள்ளைகள்.”
"நான் இன்னும் கலியாணம் செய்யவில்லெ.”
“பொய் சொல்லாதையுங்கோ. குறைஞ்சது ஐஞ்சு பிள்ளை யாவது இருக்கும்.”
“சத்தியமாச் சொல்லுறன் இன்னுஞ் செய்யேல்லெ.”
“இவ்வளவு காலமும் கலியாணம் செய்யாமல் என்ன செய்த நீங்கள்.”
“எத்தினை வரியம் சேவிசு.”
"பதினேழு வரியம்.”

Page 31
50 தெணியான்
"இவ்வளவு காலமாக இஞ்ச வாரதுக்குத் தவஞ் செய்து கொண்டு இருந்தநீங்களே.”
"அது சரி மாஸ்டர், நீங்கள் இந்தக் கூப்பன் கோசுக்கு வந்த நேரம் கோழிக் கோசுக்குப் போயிருக்கலாமே”
"அதென்ன தம்பி கோழிக் கோசு.” "இஞ்சை மாஸ்டர். கூப்பன் கோசு, கோழிக் கோசு, ஆணி அடிச்சான் கோசு, குசினிக் கோசு என்டெல்லாம் கன கோசுகள் கிடக்கு, இண்டைக்குத்தானே நீங்கள் வந்திருக்கிறியள். இனிமேல் கொஞ்சங் கொஞ்சமாக விளங்கும்.”
அவர்கள் வந்து போன பின்னர் அவன் உள்ளத்தில் குடி கொண்டிருந்த இன்பம், இருந்த இடம் தெரியாது பறந்தது. இரவெல்லாம் தூக்கமின்றி வேதனைப்பட்டுத் துடித்தான்.
“சிங்கன் போனால் அவன் தம்பி துரையன். சரி சரி எப்பிடியும் நான் இவன்களை விடப் பெரியவன் எண்டு நிலை நாட்டத்தான் போறன்” என்று முடிவு செய்து கொண்டான்.
அடுத்த நாள் இரவு சாப்பாட்டு மண்டபத்தில் நடந்த சம்பவம் அவன் ஆத்திரத்தை மேலும் கிளறியது.
புதிதாகக் கலாசாலைக்கு வந்தவர்கள் தமது சாப்பாட்டுக் கோப்பைகளைத் தலைக்கு மேல் தூக்கிப் பிடித்த வண்ணம், தலை வணங்கி ஒவ்வொருவராக மண்டபத்துள் நுழைய வேண்டுமெனப் பழைய மாணவர்கள் கட்டளையிட்டார்கள். அவர்களோடு துரைரத்தின மும் நின்றான்.
புதிய மாணவர்கள் எவ்வளவு மறுத்து நின்றும் அவர்களை எதிர்க்க முடியவில்லை. இறுதியில் அவர்கள் கட்டளைக்கு பணிந்து போன்ார்கள். அப்போது காசிநாதன் மண்டபத்துள் நுழையும் வேளை, ஒருவன் முன்னே வந்து “நெத்தியிலெ கிடக்கிற திருநீத்தை அழியும்” என்று கட்டளை இட்டான்.
காசிநாதன் அவனை முறைத்துப் பார்த்து "முடியாது” என்று அகங்காரத்தோடு மறுத்தான்.
"அழி அல்லது நெத்தியில் திருநீத்தைத் தொட்டுத் திண்டிட்டுப் போ” என்று உறுமினான் இன்னொருவன்.
அப்போதும் அவன் "முடியாது” என்றுதான் துணிந்து நின்றான். ஏக காலத்தில் பலர் சூழ்ந்து கொண்டார்கள். அவனால் பணிந்து போவதைத் தவிர ஒன்றும் செய்ய இயல வில்லை.

ஒடுக்கப்பட்டவர்கள் 51
இப்படிச் சூழ்ந்து வந்தவர்களில் துரைரத்தினமும் ஒருவ னென்பதை அவனால் பொறுக்க முடியவில்லை. அதன் பின் அவனைச் சந்திக்கின்ற ஒவ்வொரு மாணவனிடமும் துரைத்தினத்தைப் பற்றிச் சொல்லத் தொடங்கினான்.
“பெரிய துரை மாதிரிக் கோட்டும் சூட்டுமாகத் திரியிறானே துரைரத்தினம் அவன் ஆரெண்டு தெரியுமே. அங்கே நாங்கள் கிட்டவும் விடம், உவன்ரை தேப்பனுந் தாயுந் தான் எங்கடை வீட்டுத் தொண்டு துரவுகள் செய்யிறது. அங்கே உவை எங்களைக் கண்டால் காலில் செருப்புக் கழட்டிப் போடுவினம். தேப்பன் தோளிலை சால்வை போடான்.”
இரவு படுக்கைக்குப் போகுமுன்னர் ஒவ்வொரு கட்டிலாக மெல்லச் சென்று பிரசாரஞ் செய்வதே அவன் தொழிலாகப் போய் விட்டது. முதலாம் வருட மாணவர்கள் மத்தியில் ஒருவார காலத்துக்குள் தன் தொண்டைச் செவ்வனே செய்து முடித்துக்கொண்டு இரண்டாம் வருடத்தவர்களை அணுக எத்தனித்தான்.
ஒரு நாள் இரவு இரண்டாம் வருடத்தவர்களின் விடுதிக்குட் கால் எடுத்து வைக்கப் போன போது, “ஆரவன் முதலாம் வரியம் உள்ளுக்கு வராதே." என்று குரல் கேட்டுத் திடுக்கிட்டான்.
“என்ன கொடுமை. நாங்கள் உந்த எழிய சாதியளைக் கோயிலுக்கை விடாமல் தடுக்கிற மாதிரி என்னை ஹொஸ்டலுக்கெ வராதை எண்ணுகிறானே.!” என்று மனம் பொருமிக்கொண்டு உள்ளே போகத் தயங்கி நின்றான்.
"ஆர் கூப்பன் கோசுத் திருநீறே போ போ. உனக்கிஞ்சை என்ன வேலை.”
மறுபடியும் அதே குரல் அவனை விரட்டியது. அதே நேரம் அந்த மண்டபத்துள் இருந்த துரைரத்தினம் கலகல” என்று சிரித்தான். துரைரத்தினத்தைக் கண்ட பின்னரும் அவனால் தயங்கி நிற்க முடியவில்லை.
"அவர் துரைரத்தினம் எண்டவரும் முதலாம் வரியந்தானே அவர் உள்ளுக்குப் போகலாம். நான் போகக் கூடாது. நான் என்ன அவனைப் போல உள்ளுக்குப் போகாத சாதியே! அவனை விடுகிறாங்கள். நான் தான் போகக்கூடாது. அவன் தேவடியாள் மாதிரி எல்லாரையும் வளைச்சுப் போடுறான். நான் என்ன கண்டவனுக்கும் பல்லைக் காட்டுறவனே! எல்லாப் பொடிச்சியளோடையும் அவருக்குப் பழக்கம். எங்கடை கோசிலெ இருக்கிற பெட்டையளோடை கூடக் கதைக்கிறான். அவள் அந்தக் கறுப்பி. ஒரு மாதிரி நடப்பாள். அவளோடை கூட அவன் கதைக்கிறான். தம்பியை நான் சரியான இடத்திலே இறக்கி வைச்சாத் தான் நான் ஆரெண்டு தெரியும். எண்டாலும் நான் அவனை விட.” என்று

Page 32
52 தெணியான்
தனக்குத் தானே சொல்லிக்கொண்டிருந்தான். அவமானத்தோடு திரும்பி நடந்தான். அப்போதுதான் திடீரென்று ஒரு எண்ணம் அவன் ஞாபகத்துக்கு வந்தது.
விடுதிக்கு வந்து சேர்ந்ததும் தன்னோடு ஒத்துழைக்கக்கூடிய யாழ்ப்பாணத்து நண்பர்கள் சிலரை அழைத்துப் பேசினான்.
“முதலாம் வரிய மாணவர்களுக்கெண்டு மாணவ தலைவன் ஒருதரைத் தெரியப் போகினமாமே...!"
"ஒமோம். இன்னும் ஒரு கிழமையிலே நடக்கப் போகுது. அப்பிடித் தெரிவு செய்யப்படுகிறவன்தான் வாற வரியம் முழுக் கலா சாலைக்கும் மாணவத் தலைவன்.”
"அப்ப ஆரையாம் தெரியப் போகினம்.?” "துரைரத்தினத்தை எண்டு சொல்லுகினம்.” "ஆர்? துரைரத்தினமோ.சீ என்ன பேய்க்கதை கதைக்கிறாய்..?” "ஓமோம் அப்பிடித்தான் கதை அடிபடுகிறது. அவன்தான் தகுதி uusTib...”
"சும்மா விளல் ஞாயம் கதையாதையுங்கோ. எங்களுக்குள்ளெ ஒரு தகுதியானவன் கிடையாதே?”
"அது சரி. அப்பிடி எண்டால் அவனை எதிர்த்துக் கேக்கிறது ஆர்.?”
"தம்பி வைத்திலிங்கம் நீ கேள். மற்றதெல்லாம் நாங்கள் பாத்துக் கொள்ளுறம்.”
“எனக்கு இங்கிலீசு தெரியாதண்ணை.” "அப்ப காசிநாதண்ணை நீங்கள் இங்கிலிசும் படிச்சதெண்ணுறியள் நீங்கள் போட்டிக்கு நில்லுங்கவன்.”
"இலலை நான் கொஞ்சம் வெளியாலெ நிண்டால் தான் வேலை செய்வன்.”
"அதுக்கென்ன செய்யறது.! நீங்கள் தான் தகுதியான ஆள் நாங்கள் முழுமூச்சாக வேலை செய்யிறம்.”
"அவன் ஆரெண்டு நாங்கள் சரியாகச் சொன்னால் அவங்களும் எங்களுக்குத்தான்.”
இந்தக் குசுகுசு ஆலோசனையின் முடிவில் அவன் துரை ரத்தினத்தோடு போட்டியிட முன்வந்தான். இரகசியமாக இரண்டு பேரையும் சேர்ந்தவர்கள் வாக்குச் சேர்க்கத் தொடங்கினார்கள். அப்போது அவன் உள்ளத்தில் கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது அவனுடைய தொகுதியில் இரகசியமாக விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரம் ஞாபகத்துக்கு வந்தது.

ஒடுக்கப்பட்டவர்கள் 53
சாதி அடிப்படையில் அவனும் அவன் சகாக்களும் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தினார்கள். எல்லோரும் அவன் கருத்தை ஆமோதித்தனர்.
இன்று தான் தேர்தல் நாள். இரகசியமாக வாக்கெடுப்பு நடந்து முடிந்தது. வெற்றி தனக்கே என்று அவன் எக்களித்துக்கொண்டிருந்தான்.
வாக்குகள் முழுவதுமே எண்ணி முடிக்க முன்னர் துரை ரத்தினத்தை அவன் தோழர்கள் தோள்மேல் தூக்கி விட்டார்கள்.
இருநூறு வாக்குகளில் நூறு வாக்குகள் பெரும்பான்மையால் துரைரத்தினம் மாணவ தலைவனாகத் தெரிந்தெடுக்கப்பட்டுவிட்டான்.
இந்தத் தோல்வியைக் காசிநாதனால் தாங்கிக் கொள்ள இயல
ல்லை.
“எப்பிடி என்றாலும் நான் அவனை விடத் தகுதி கூடினவன், நான் பெரிய சாதிக்காறன். இவன் என்னை விடத் தகுதியில் உயர்ந்துவிட முடியாது. இது என்ன றெயினிங் நான் பட்டப் படிப்பே படிக்கிறேன்.”
தன் சகாக்களிடம் சொல்லிவிட்டு ஒடிக்கொண்டிருக்கிறான்
காசிநாதன்.
- அஞ்சலி ജൂണ് 1971

Page 33
மாத்து வேட்டி
அந்த வீட்டின் படலைக்கெதிரே தெருவின் அரைப் பகுதி வரை அத்துமீறிச் சுவீகரித்து எல்லையாக இறுமாந்து படுத்துக் கிடக்கும் பனங்குற்றி மேல் வந்து அமர்ந்து கொண்டார் சீவில் வேலு. மாலை வேளைகளில் இப்படி ‘ஹாயாக’ அமர்ந்து கொள்வது அவர் வழக்கம். பொதுத் தெருவை ஒழுங்குக்கு மாறாகப் பிடித்து வைத்துக் கொண்டிருக் கும் அவரைத் தட்டிக் கேட்கும் துணிவு எவருக்காவது உண்டா? என்று சவால் விடும் தன்னகங்காரத் தொனி அவர் பார்வையில் மின்னும். அந்தத் தெருவில் குடியிருப்பவர்களோ, போவோர் வருவோரோ இது பற்றிக் கேட்கட்டும் என்றுதான் அவர் காத்திருக்கிறார்.
கால் மேல் கால் போட்டு அட்டணக்காலில் அவர் வீற்றிருக்கும் அழகே தனி அவர் உடல்வாகில் ராஜகெம்பீரம் எதுவும் இல்லாத போதும் பாவனையில் செயற்கையான அப்படி ஒரு கொலு அவர் உடலில் ஒடும் இரத்தம் ராஜ பரம்பரையைச் சேர்ந்ததென்பது அவர் எண்ணம். அவர் பார்த்த காணித் தோம்பில் பதினேழாந் தோம்பை இதற்குச் சான்றாகப் பலரும் சொல்லுவார்கள். யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த குறுநில மன்னன் ஒருவன் தன் மூதாதை என்று உறவு கொண்டாடுவார். அதனால் தானே என்னவோ முடிமன்னர்களைப் போலவே மண் பிடிக்கும் பேராசையும் அவரைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கிறது.

ஒடுக்கப்பட்டவர்கள் 55
மன்னன் ஆண்ட காலத்தில் நிலம் முழுவதும் அரசனுக்கே சொந்தம். அதனால் அப்பகுதியிலுள்ள நிலங்கள் முழுவதிலும் அரச பரம்பரையில் தோன்றிய அவருக்கும் சோந்தை” இருப்பதாகத் திடமான நம்பிக்கை. சொந்தம் இருக்கிறதோ இல்லையோ! அதனால் எல்லாக் காணிகளிலும் அவருக்குப் பங்கிருக்கிறதென்பதற்குச் சான்றாக ஒவ்வோர் உறுதியை வைத்துக் கொண்டிருக்கிறார்.
அப்பகுதியில் எவராவது காணி விற்க இருப்பதாக அறிந்தால், முதல் வேலையாகச் சென்று தடை கொடுப்பார் அவர்.
“இவ்வளவு காலமாகப் புரோசனத்தை எடுத்துக் கொண்டிருக்க விட்டன். ஆனால் இனிமேல் வித்துக் காசெடுத்துக் கொண்டு போக மட்டும் விடமாட்டன். இந்தக் காணியிலை எனக்கும் பங்கிருக்கு. எல்லாம் தோம்போடை என்னட்ட கிடக்கு” என்று சொல்லிக் குறுக்கே விழுந்து வாதாடுவார். காணியை விற்று அவருக்கும் ஒரு தொகையைக் கொடுத்து விட்டால் சமாதானமாகி விடுவார். அவர் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாது உதாசீனம் செய்தால், நிச்சயமாகக் காணி வழக்கொன்று ஆடித்தான் தீர வேண்டும். வெற்றியோ தோல்வியோ! அது பற்றி யோசிக்க மாட்டார். ‘வெல்லுவேன்’ என்ற கோஷத்தோடு வழக்கில் இறங்கி விடுவார். அவர் மட்டுமல்ல, அவருக்கு அறிந்தவர் களையும் கூடத் தூண்டி விடுவது தான் அவர் தொழில் காணி வழக்கு அடுக்கில் மகாபுலி அதனால் தான் வேலுப்பிள்ளை என்ற அவர் பெயர் மறைந்து, 'ஊரப்புக்காத்து' என்றும் 'சீவில் வேலு என்றும் அழைக்கப்படுகிறார்.
இன்று அவர் உள்ளத்தில் அவருக்கே உரித்தான படி இறங்காப் பண்பாட்டில் ஒரு வகைக் கலவரம் தென்படுகிறது. பொழுது இறங்கிக் கொண்டு போக, பரபரப்பு அதிகரித்து அடிக்கொரு தடவை கிழக்குத் திசையாகத் திரும்பித் தெருவை நோக்குகிறார்.
ஏமாற்றம் கண்கள் அந்தி வானம் ஆகின்றன. பல்லை நெருடிக் கையை நொடிக்கிறார்.
"அவனைக் காணவில்லை இன்னும் நயினாரானை மைமலுக்கு முன்னம் கொண்டந்திடுறன். எண்டான். அவங்கள் இப்பென்ன பழைய ஆக்களே. சும்மா கண்ணுக்கு முன்னாலையல்லோ போசக்கைக்கு நயினாரும் நாச்சியாரும் போடுறாங்கள். சும்மா எண்டாலும் அப்பிடிச் சொல்ல அவை படுற பாடு. சில நேரம் சொட்டை பண்ணுற மாதிரியு மெல்லே சொல்லப் பாக்கினம். இப்ப அவையஞம் அவளின்ரை சயிக்கிளுகளும். லோன்றிகளும். எப்படி மதிப்பங்கள்! சரி சரி பாப்பம், இண்டைக் கென்ன நடக்குதெண்டு அவன் குடியிருக்கிற காணிக்கை கூட எனக்குப் பங்கு கிடக்குது. ஏதோ குடிமகன் எண்டிட்டெல்லோ பேசாமல் இருக்கிறன். இல்லையென்டா. ம்.”
பலமாக உறுமிக்கொண்டு தலையை ஒரு தடவை தடவினார்.

Page 34
56 தெணியான்
அவர் இன்னும் பழைய வழக்கங்களை அணுவளவும் பிசகாமல் கடைப்பிடிக்க வேண்டுமென்ற எண்ணமுள்ள பிரகிருதி காலத்தோடை ஒத்துப் போக வேணும்' என்று யாராவது சொன்னால் அதனையும் ஆட்சேபிக்காது சரிதான்’ என்பார், ஆனால் நான் எவனிட்டையாவது போறனா? என்னத்துக்கு நான் இசகுப் பிசகா நடக்க வேணும்' என்று கேட்டு வைப்பார். அவர் இப்படி இருப்பதில் பல வகையிலும் அவருக்கு இலாபம். குடிமக்கள் வழக்கம் என்ற நடைமுறையினால் மற்றவர்களைப் போலக் கைக்காசை இழக்காது தன்னைக் காத்துக் கொண்டிருக்கிறார்.
திரும்பவும் தலையைத் தடவி விட்டுக் கொண்டார். "இவன். சின்னவன் பயபக்தி உள்ளவன். எப்படியோ பழைய கட்டயல்லே! என்னை விட மூத்தவன். இருந்தாலும் அவன்ரை மட்டு மரியாதை என்ன..! இந்தக் காலத்துத் துரும்புகளென்ன! நான் சொல்லி அனுப்பினது போல நாலு மணிக்கே வந்து வழிச்சுப் போட்டுப் போவிட்டான். இந்த வரியம் அவனுக்கு ஐம்பது பனங்கொட்டை கூடக் குடுக்க வேணும்.”
தன்னிச்சை இன்றி மறுபடியும் தலையைத் தடவிக் கொண்டார். “ஒரு கட்டை கூட விடாமல் நல்லா எடுத்திருக்கிறான். எனக்கு வழிக்கிறதெண்டால் எத்தினை தரம் கத்தியைத் தீட்டுவன். நயினார். நோகுதோ எண்டு கேட்டுக் கொண்டு வெட்டயிக்கை என்ன அடக்க ஒடுக்கம். இதம்.”
தலையைத் தொட்டுப் பார்த்துப் பார்த்துப் புளங்காகிதப்பட்டார். அவர் தலை அலங்காரமே ஒரு வகையில் விஷேசமானது தான். பின் தலையை மையமாகக் கொண்டு கவராயத்தால் வட்டமிட்டது போல மத்தியில் மயிரை வைத்துக் கொண்டு முன்னும் பின்னும் சுற்றி வர மழுங்க வழித்து, நடுமயிரைப் பிடித்துச் சிறுகுடுமி போட்டுக் கொள்வார். ஒரு பார்வைக்கு ஒலைக்குடில் ஒன்றைத் தலையில் கவிழ்த்திருப்பது போலத் தோன்றும் அவர் தலைக்கோலம்.
பொழுது மங்கி நன்றாக இருண்டு விட்டது. ஆள்நடமாட்டம் அவர் புகைந்த கண்களுக்குத் தெரியவில்லை. சினமும் தவிப்பும் அவரைப் பிடித்து உலுப்பி வதைக்கிறது.
அவன் வரவில்லை. “ஹம்ம். அவன்ரை தேப்பன் வாரி எண்டால் சின்னவனைப் போல சொன்னது சொன்னபடி செய்வான். ஆனால் இந்தப் புளுக்கை யன். சரி சரி தம்பிக்கு ஏதோ கெட்ட காலம். காலமைக்கு வெள்ளணக் கோட்டடிக்குப் போக வேணுமெண்டு எவ்வளவு வற்புறுத்தியாச் சொன்னான். ஒரு வேளை இனிமேல் வந்தாலும் வருவன்.”
எழுந்து படலையைத் திறந்து கொண்டு வளவுக்குட் செல்கிறார். உறுதிக் கட்டுக்களைத் தூக்கி வந்து குப்பி விளக்கின் முன் அமர்கிறார்.

ஒடுக்கப்பட்டவர்கள் 57
மனம் அமைதியாக ஒருமைப்படவில்லை. “சீ. இந்த ஊத்தை வேட்டியோடை நாளைக்குக் கோட்டுக்குப் போறதே! மாத்துக் கொண்டாறனெண்டு ஏமாத்திப் போட்டான். கட்டக் கூடியதாகப் பழம் வேட்டி ஒண்டு கூட இல்லை. கிடந்ததுகளையும் பொடிச்சியின்ரை பிள்ளைப் பெத்துக்கு எடுத்துக் குடுத்துப் போட்டன். உள்ள ஒரு சோடி வேட்டியையும் முந்தநாள்தானே அவனிட்டை குடுத்தன். இந்தச் சீவில் வேலு இந்த ஊத்தை வேட்டியோடை நீதவானுக்கு முன்னாலை போறதென்ணடால் உந்த மோட்டுப் பிறக்கிறாசி, அப்புக்காத்துமார் என்னைப் பற்றி என்ன நினைப்பாங்கள்.” மனம் வழக்குச் சம்பந்தமான உறுதிகளிற் படியாது வேட்டிப் பிரச்சினையில் சிக்கி உளைகிறது. பலவந்தமாக மனத்தைக் கட்டுப் படுத்தி உறுதிகளை மேய முயற்சிக்கிறார்.
அவருக்குப் பலரோடு பல வழக்குகள். தங்கையின் கணவரோடும் ஐந்து வழக்குகள். அதில் ஒன்றுதான் நாளை விசாரணைக்கெடுக்கப் படுகிறது. அவருக்குச் சொந்தமான நிலத்தில் அரை அடியைக் கூட்டிப் பிடித்து வேலியைப் போட்டுவிட்டாரென்பதால் ஏற்பட்ட பாட்டிஸன்’ வழக்கு.
இந்த வழக்குகள் தொடருவதற்கு முன்னர் அவர் குடும்பமும் சகோதரி குடும்பமும் நல்ல நெருக்கமாகத் தேனும் பாலுமாகத்தான் வாழ்ந்து வந்தார்கள். இப்போது இரு குடும்பத்தினருக்கும் ஆளை ஆள் பிடித்துத் தின்றாலென்ன என்ற வெறி
மைத்துனர் கந்தப்பு சமாதானமாக நிலத்தை விட்டு வேலியை வெட்டிப் போட்டிருக்க வேணும் என்பது அவர் வாதம். அவர் மிரட்டலுக்கு அடங்கிப் போகக் கூடாது. தன் மேல் பிழையேதுமில்லை என்பது கந்தப்புவின் நினைப்பு.
“சிவில்வேலுவை அசைக்க ஒருதனாலும் முடியாது. மச்சா னெண்டா லென்ன. மாமன் எண்டாலென்ன. ஒரு கை பாத்துப் போடுறன்” என்று சவால் விட்டார் அவர்.
“அவன் என்னட்டைத்தான் முறையாகப் படிக்கப் போறான். அவன் போட்டு வைச்சிருக்கிற பொய் உறுதியளைப் பற்றி எனக்கெல்லோ தெரியும். ஆளைத் தெரியாமல் உங்கினை உள்ள சொடுகளுக்கு விடுகிற விடுகையை என்னட்டை விட வந்திருக்கிறான். நல்ல இடத்திலை தான் கொளுவி இருக்கிறான். ஒரு கை பாத்துப் போடுறன்.” என்று பதிலடி கொடுத்தார் மைத்துனர் கந்தப்பு
“ஒரு குடும்பத்துக்குள்ளே இப்படி நீங்கள் வழக்காடக் கூடாது” என்று சிலர் இருவரையும் சமாதானம் செய்ய முற்பட்டார்கள். அவர்களுக்கெல்லாம் வேலு சொன்ன பதில் இதுதான்.
“மச்சான் மாமன் இண்டைக்குக் கோவிக்கலாம்; நாளைக்கு ஒற்றுமைப்படலாம். கோவிச்சால் சொந்தக்காரற்றை கோவம் நெடுகவே!

Page 35
58 தெணியான்
உதுகளைப் பாத்துக் காணி பூமியைக் கைவிட்டால் எந்தக் காலத்திலை திரும்பக் கிடைக்கும் இந்த விசயத்திலை பெண்டில் பிள்ளை எண்டு கூடப் பாக்கக் கூடாது. அப்பிடி இருக்கேல்லை உவன் கந்தப்பனே. என்னோடை போட்டி போடுறது.”
இதற்குமேல் அவர் எவரையும் பேச விட மாட்டார். காணி காணி என்று பிசாசாக அலையுமவர், வீடு வாசலுக்கோ, துணிமணிக்கோ ஒரு சதந்தானும் செலவு செய்வதை வேம்பாக வெறுப்பார்.
என்னதான் முயன்றபோதும் மனம் இன்று வழக்கு விவகாரத்தில் நனையாது உதறிக்கொண்டு ஓடுகிறது.
. இதையெல்லாம் நான் படிச்சுப் பாத்துத்தான் தெரிய வேணுமே! இதுவரை பதினைஞ்சு பாட்டிசன் வழக்காடி இருக்கிறன். எல்லாமே ஐம்பத்தி மூணு காணி வழக்காடி இருக்கிறன் ஆறு வழக்குச் சீமை அப்பில் எடுத்து வெண்டிருக்கிறன். இவன் கந்தப்பன், அவர் வைச்சிருக்கிற பிறக்காசி. சில பல தோம்பு விசயங்கள் என்னட்டைக் கேக்கிறவர். அவரே இந்த வழக்கு வெல்லப் போறார், பாப்பம்!”
உறுதிக் கட்டுகளைக் கட்டிப் பக்குவமாகப் பெட்டியில் வைத்துப் பூட்டிவிட்டுச் சாப்பிடவும் மனமின்றிப் படுத்துக் கொண்டார்.
உறக்கம் வரவில்லை. நெஞ்சை ஏதோ அரித்தது. உள்ளத்தை உறுத்தியது ஒரு முள் - நாளைக் காலையில் கோட்டுக்குப் போக வேட்டி சால்வை வேண்டுமே.!
“வழக்கைப் பேசிப் பாக்கலாம். ஆக மிஞ்சினால் அப்பில், ஆனால் நாளைக்கு வேட்டி சால்வை! உவங்களை நம்பி இராமல் இனிமேல் நான் தான் எடுத்து வைச்சிருக்க வேணும். அந்த நாளையிலை தான் எங்களுக்கு உந்தக் கவலையில்லை. நினைச்ச நேரம் நினைச்ச மாதிரி வேட்டி சால்வை கொண்டு வந்து தருவங்கள் மாத்து. இப்ப என்னடா எண்டால். சரி. சரி. பாப்பம். வேட்டி சால்வை தாறானோ இல்லையோ எண்டு. தராட்டால் தம்பியும் ஏதோ குடி எழும்ப ஆயித்தம் போலைதான் கிடக்கு. அவன் கதிரன்ரை மோன் படுகிற பாட்டை இண்டைக்கப் பாக்கல்லையே! ஒழுங்காக இருந்து கள்ளுக் கருப்பணி ஏறித் தந்து சீவிச்சவருக்கு ஒரு திமிர். ஒரு நாளும் இல்லாத புது வழப்பங்களை அவர் தான் இந்த ஊருக்கே பேச வெளிக்கிட்டார். அவரை மட்டந்தட்ட ஒருதன் முன்னுக்கு வெளிக்கிடேல்லை. எல்லாரும் என்னைத்தான் நுள்ளி விட்டடினம். நான் போய் வெளிக்கிடடா காணிக் குள்ளாலை எண்டன். குடி இருக்கிறவனை எழுப்பேலாது எண்டு நாயம் பேசினார். போட்டன் வழக்கு பொய் உறுதிதான்; தீந்திது எனக்கு. அப்பவும் எழும்ப முடியாதெண்டார். உடையாரையும் பொலிசையும் கொண்டு போனன். வீடு வாசலைப் புடுங்கி எறிஞ்சுபோட்டு ஆட்சி ஒப்பம் எடுத்தன். அதுதான் நடக்கும் இவருக்கும் - எனக்கு வேட்டி சால்வை காலமைக்கு கிடைக்கேல்லை எண்டால்.”
éé

ஒடுக்கப்பட்டவர்கள் 59
“வழக்கென்ன வழக்கிது சும்மா கிடந்த காணியளுக்கெல்லாம் பொய் உறுதி போட்டு முதிசொமும் ஆட்சியுமான காணி எண்டு சொல்லி ஆட்சியும் எடுத்து வேலி அடைச்சுச் சொந்தமாக்கயில்லையோ நான்! ஆயிரத்தித் தொள்ளாயிரத்தி நாப்பத்தி ரண்டிலை எண்டு நினைக்கிறன். பதின்மூண்டு, ஒண்டு, பதின்மூண்டு இலக்க வழக்கிலை. என்ரை கிழவி துறைக் காணிக்கு நடந்த வழக்கிலை. அப்ப இருந்த நீதவான் கேட்ட கேள்வி ஒண்டுக்கு நான் பதின்மூண்டு தோம்பில்ை இருந்து சோந்தை காட்டி வந்தன். நீதவானே ஆச்சரியப்பட்டுப் போனார். பிறகு அவர் என்ரை அப்புக்காத்துக்குச் சொன்னாராம், “அவருக்கு பிறக்கிறாசிமாரை விடக் கூடத்தெரியுமெண்டு” அப்படிப்பட்ட எனக்கு இது ஒரு பெரிய வழக்கே”
நினைவு அைைலகளில் மிதந்து மனம் அலட்டிக் கொண்டு கிடந்த அவர் ஒருவாறு கண் அயர்ந்து போனார்.
நீண்ட நேரமாக ஆழ்ந்த உறக்கமில்லாது கோழித் தூக்கம். திரும்பித் திரும்பிப் படுத்தார். அவர் வீட்டுக் கூரையின் மேல் இருந்த கோழி எழுப்பிய கூக்குரல் கேட்டுத் துடித்தெழுந்தார்.
வெள்ளை வேட்டி கிடைத்து விட்டதாக மகிழ்ந்திருந்தது கனவில் தான் என்ற தெளிவு அப்போது தான் பிறந்தது. திரும்பவும் பிரச்சினை தலை தூக்குகிறது.
"விடியப்போகுது. நேரகாலத்தோடை கோட்டிற்கு போனால்தான் பிறக்கிறாசியைக் கண்டு அடுக்குப் பண்ணலாம். இப்ப வேட்டிக்கென்ன செய்யிறது.! அவன் என்னை ஏமாத்தித்தான் போட்டான்.”
பரபரப்போடு எழுந்து வெளிப்படலையை அவிழ்த்துக் கொண்டு கிழக்குத் திக்கை நோக்கி நடந்தார்.
அவர் போய்ச் சேர நன்றாக விடிந்து விட்டது. படலை இல்லாத வெளிவேலியில் நின்று அவர் கூப்பிடுகிறார்.
“பரமன். பரமன். பரமன்.” நாய் வள் வள் என்று விழுகிறது. "பரமன். பரமன். ஏ பரமன்.'
“எட தம்பி பரமு. பரமு. தம்பி.”
“ஆரது..?”
கேட்டுக் கொண்டு எழுந்து வெளியே வருகிறான் பரமன். அவர் அங்கு நிற்பதைக் கண்டு கொண்டதும்.
"ஐயாவே. நீங்கள் கோவிக்கக் கூடாது. நான் நேற்றுப் பின்னேரத்துக்குள்ளை வந்திடுவன் எண்டு நினைச்சுத் தான் என்ரை

Page 36
60 தெணியான்
மச்சானுக்காக தாவடிக்கு ஒரு வெள்ளை கட்டுக்குப் போனன். வர பன்னிரண்டு மணியாப் போச்சு. அந்த நேரம் எப்படி உங்கடை வீட்டுக்கு வரலாமே! மனிசிட்டை குடுத்தனுப்பிப் போட்டுப் போயிருப்பன். அவ நித்த வருத்தக்காறி விடியுது விடியுதெண்ண நான் கொண்டு வாறதுக் கிறருக்கிறன். அதுக்கிடையிலை ஐயா வந்திட்டியள்.”
அவன் சொன்ன சமாதானத்தில் அவர் மனமாறி விடவில்லை. ஆனால் அவனைக் கண்டிக்க இதுவல்ல நேரம் என்று கருதி கல்மிசமில்லாதவர் போலப் பொறுத்துப் போனார்.
“சரி. சரி. வேட்டி சால்வையைக் கொண்டா.” “வாறன் கொஞ்சம் நில்லுங்கோ.” அவன் வீட்டுக்குட் சென்று ஒரு சோடி வேட்டி சால்வையை எடுத்து வந்து அவரிடம் கொடுக்கிறான்.
அவர் உடுத்தியிருந்த புழுதியேறிய வேட்டியைக் கழற்றி அவன் கையில் கொடுத்துவிட்டு மாத்தாகக் கிடைத்த வேட்டியைக் குலைத்துச் சுற்றி உடுக்கிறார்.
அவர் போட்ட அழுக்கு வேட்டியை எடுத்துச் சென்று வீட்டுக்குட் போடப் போன போதுதான் அவனுக்குத் தான் செய்த ஒரு இமாலயத் தவறு பிடிபடுகிறது. உடனே அவரிடம் ஓடோடி வருகிறான்.
"ஐயா. ஐயா. இது உங்கடை மச்சான் கந்தப்பு ஐயாவின்ரை வேட்டி சால்வை. மாறித் தெரியாத்தனமாக உங்களிட்டை தந்திட்டன்.
அவர் தீயை உடுத்திருப்பவர் போலத் துடிதுடித்துக் கொண்டு வேட்டியை உரிந்தெறிகிறார்.
இப்பொழுது அவர் கெளரவத்தையும் மானத்தையும் காத்துக் கொள்ள உதவி நிற்பது செம்மை படர்ந்த கெளசனந்தான்.
எதிர்பாராத நிகழ்ச்சியால் செய்வதென்னவென அறியாது திகைத்துப்போன பரமன், அவசர அவசரமாக வேட்டியை எடுத்து மடித்துக் கொண்டு நிற்கிறான்.
"பரமன்.” வெளியே இருந்து ஒரு குரல் எழுகிறது. குரல் வந்த திக்கில் இருவரும் திரும்பிப் பார்க்கிறார்கள். வேறு யாருமல்ல; சீவில் வேலுவின் மைத்துனர் கந்தப்பு பரமனைத் தேடி வந்து கொண்டிருக்கிறார்.
- be 656035 நவம்பர் 1971

காது குத்து
"ஐயா. ஐயா..!" மாணிக்கன் 'கேற்ரில் நின்ற வணணம் நம்பிக்கை வரட்சியோடு தான் அழைத்தான். இதற்கு முன்னர் மதியவேளை ஒரு தடவை வந்து பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பிப் போனவன்தான் அவன். இந்த வாரத்தில் இன்றோடு மூன்று தினங்கள் அவன் வந்து வந்து போயிருக் கின்றான். அவன் மனைவி ஒரு நாள் வந்திருக்கின்றாள். இதுவரை அவனோ, அவன் மனைவியோ ஐயாவைச் சந்திக்கவில்லை.
முதல் நாள் அவன் வந்தபோது ஐயா மனைவி ஆதரவுடன் அவன் வந்திருக்கும் நோக்கத்தை விசாரித்து 'ஐயா அப்போது வீட்டில் இல்லாத காரணத்தால் பின்னர் வருமாறு சொல்லி அனுப்பினாள். அதன் பின்னர் அவன் நிழலையோ அவன் மனைவியின் தலைக்கறுப்போ கண்ட வேளைகளில் எல்லாம் ஐயாவின் பிள்ளைகள் தான் ஓடி வந்து ஐயா இல்லைப் பிறகு வா’ என்று மொட்டையாகப் பதில் சொல்லி அவர்களைத் திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.
இப்போது 'கேற்றை நோக்கி நடந்து கொண்டிருக்கும் அவன் "ஐயா, நிக்க மாட்டாரா” “கேற்ருக்குள்ளே போக மாட்டேனா!” என்ற தவிப்போடு மீண்டும் குரல் கொடுத்தான்.
2.
"ஐயா. ஐயா.
"வள்வள்வள். வள். வள்வள்.”
ஐயா வீட்டு நாய் பாய்ந்தோடி வந்து 'கேற்ருக்குள்ளே நின்று, அவனை நோக்கித் தாவித் தாவி எச்சரிக்கிறது.

Page 37
62 தெணியான்
சென்ற தடவைகளைவிட இது அவனுக்குப் பெரிய சோதனை. ஐயாவின் பிள்ளைகளுக்குப் பதிலாக ஐயாவின் நாய்தான் வந்து நின்று பதில் சொல்கிறதோ! என்று ஐயம் அவனுடைய எண்ணக் கோடியில் மின்னி மறைந்தது. ஐயா வீட்டு நாய்க்கு வாய்த்த சொகுசான வாழ்வின் காற்பகுதியைத்தானும் அடைய முடியாத அனுதாபத்துக்குரிய ஏழை யாக இருந்தபோதிலும், அவன் மனிதன். அவனால் நாயின் மொழியைப் புரிந்து கொள்ளவும் அல்லது புரிந்து கொண்டு விட்டதாக நடித்து கொஞ்சி விளையாடவும் அவனுக்குத் தெரியாது.
நாய்க்குப் பதிலாக ஒரு மனிதக் குரலை அவன் எதிர்பார்த்தான். நாயின் பலத்த அட்டகாசத்துக்குப் பின்னரும் யாருமே வெளியே வராதது கண்டு பழைய கதைதான் தொடரப் போகின்றது என்ற எண்ணம் அவனைக் கப்பிக் கொண்டு வாட்டியது. எப்படியும் உள்ளே இருந்து ஒரு மனிதத்தலையை வெளியே எடுக்க வேண்டுமென்ற திடமான முடிவோடு நாயின் குரலை அமுக்கி ஒலிக்கத் தகுந்ததாக தொண்டையைத் திறந்து சத்தமிட்டான்.
இரண்டு நிமிடங்கள் கழிந்திருக்கும் 'கேற்ருக்குமேல் தலையைத் தூக்கி ஐயா வளவுக்குள் உற்று உற்றுப் பார்த்தான்.
"ஆரப்பா. அது!” அலட்சியமாக ஒரு குரல் கேட்டது. அதைத் தொடர்ந்து மெதுவாக ஐயா’ பிரசன்னமானார்.
ஐயாவைப் பார்த்ததும் அவன் மனம் ஓடிக் குளிர்ந்தது. அந்த ஒரு கணப்பொழுதில் ஐயாவின் முகம் மறைந்து, அந்த இடத்தில் அவன் மகள் ரசவாதம் செய்து தோன்றி, அவள் காதுகளிலே ஒளி காந்தும் வெள்ளைக் கற்கள் பதித்த அழகான தங்கத் தோடுகள் மின்னு கின்றன. காதுத் துவாரத்தில் தோடு இருக்க வேண்டிய இடத்தில் தடிக் குச்சிகளைச் சொருகி வெறும் மூழியாகத் தோன்றும் அவன் மகள் தங்கத் தோடு அணிந்து ஜொலிக்கிறாள். அடுத்த கணம் அந்தக் காட்சி மறைந்து போகிறது, நிதர்சன வாழ்வின் அந்த இன்பத்தைப் பெறும் வேட்கையோடு அவன் முயன்று கொண்டிருக்கும் ஆண்டுகள்தான் எத்தனை? ஒன்றா? இரண்டா? அப்பப்பா..!
வாழ்வில் பொருட்செல்வம் நிறைந்து அவன் வாயை வயிற்றை நிரப்பாத போதும், குழந்தைச் செல்வங்களுக்குக் குறைவே இல்லை. ஏழு பிள்ளைகள் அவன் நெஞ்சை நிறைத்தார்கள். மூத்தவள் பெண் குழந்தை ஒன்றரை வயதாக இருக்கும்போதே தொண்டமானாறு செல்வச் சன்னிதி முருகன் ஆலயத்துக்குக் குடும்பமாகப் போய் அவளுக்குக் காது குத்தி ஒற்றைக் கல்லுக் குச்சித் தோட்டைப் போட்டு விட்டான். பிள்ளை கொஞ்சம் வளரட்டும், குச்சித் தோட்டை மாத்தி கலாவரைத் தோடு போடுவம்’ என்ற மனைவிக்கு மனம் விட்டு

ஒடுக்கப்பட்டவர்கள் 63
அப்போது சொல்லிக் கொண்டான். ஆனால் பிள்ளை பதின்மூன்று வயது அடைந்து பருவ மெய்திய பிறகும், அவனால் அந்தக் குச்சித் தோட்டை மாற்றிப் புதிய தோடு போடுவதற்கு இயலவில்லை.
பருவமடைந்து சில காலத்தின்பின் அவன் மகள் அவளாகவே அந்தத் தோட்டைக் கழற்றி எடுத்து தங்கையின் காதில் போட்டு விட்டாள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் குமர்ப்பிள்ளை வெறும் குச்சித் தோட்டோடு திரிவது கண்டு செய்த ஏளனம், பழிப்பு அவளால் தாங்கிக் கொள்ள இயலவில்லை.
அவன் தன் மகளுக்கு நல்ல காதணி ஒன்று விரைவில் வாங்கித் தருவதாக அன்றே வாக்களித்தான்.
இயல்பாகவே பொன்னும் பட்டாடையும் இச்சித்திருக்கும் அவள் பெண்ணுள்ளம் இன்று எப்படியும் நவீன நாகரிகத்துக்கு ஏற்ற ஒரு 'ஜிப்சி வாங்கி அணிந்து கொள்ளும் ஆசையில் தவித்தது. அவள் வயது பதினெட்டை இன்று எட்டிவிட்டாள். அவள் கனவுகள் குச்சித் தோட்டில் இருந்து கலாவரைத் தோடு, சில்லுத் தோடு, குண்டுத் தோடு என்று படிப்படியாக வளர்ந்து வந்தனவே தவிர இன்றுவரை அவை ஈடேறவில்லை.
மகளை பார்த்துப் பார்த்து தினமும் நச்சரித்துக் கொண்டிருந்தாள் அவன் மனைவி. “வயதுக்கு வந்த குமர்ப்பிள்ளையின் காதில் ஒரு தோடுதானும் இல்லாமல் வைத்துக் கொண்டிருப்பது முறையல்ல" என்ற மனைவியின் நச்சரிப்புத் தாங்க இயலாமல் எப்படியும் ஒரு தோடு வாங்கிக் கொடுக்க வேண்டுமென்ற முடிவுக்கு அவன் வந்தான்.
முடிவு செய்வது அவனுக்குச் சுலபமாக இருந்தது. ஆனால் அதை செய்து முடிப்பதற்கு என்ன வழி என்று அவன் தவித்துக் கொண்டிருந் தன். அப்போதுதான் மூன்று வருடங்களுக்கு முன்புரவாயை வயிற்றைக் கட்டி ஐயாவின் மனைவியோடு பிடித்த சீட்டுக்காசு நூற்றைம்பது ரூபாவை அவன் மனைவி ஞாபகப்படுத்தினாள்.
சீட்டு முடிந்து தங்களுக்குச் சேரவேண்டிய பணத்தைப் பெற்றுக் கொள்ள அவன் மனைவி 'ஐயா வீடு சென்ற சமயம் ஐயாவின் மனைவி நீங்கள் என்றால் காசு கையில் வைச்சிருக்க மாட்டியள். இந்தக் காசையும் வீணாகச் சிலவழிச்சுப் போடுவியள். பிள்ளை குட்டிகாரர். நோய் நொடி வந்தால் சிலவழிக்கிறதுக்கு என்றாலும் கையிலை இரண்டு காசு வேண்டுமே. இதை : குடுத்து வைக்கிறன். தேவைப் படக்கை வந்து வாங்குங்கோவேன” என்றாள். அந்த ஆலோசனை அவளுக்கும் சரியாகப் பட்டது. ஐயாவின் மனைவி சொன்னதை ஆமோதித்துக் கொண்டு வெறுங்கையோடு அவன் மனைவி அன்று வீடு திரும்பினாள்.
வேறு வழி இல்லாமல் அந்தப் பணத்தையாவது வாங்கிக் குமர்ப் பிள்ளையின் காதில் தோடு வாங்கிப் போடுவோமே" என்று அலைந்து

Page 38
64 தெணியான்
கொண்டிருக்கும் அவன் கண்கள் ஐயாவைக் கண்டதும் உள்ளத்தில் உண்டான ஆனந்தத்தில் குரல் தளதளக்க.
"ஐயா. அது நானாக்கும்.” எனக் குரல் கொடுத்தான். “அட மாணிக்கனே! டீ. போ உள்ளுக்கு..!” நாயை வீட்டுக் குள்ளே விரட்டுகின்றார்.
அது வாலை ஆட்டி அவனைப் பார்த்துக் குரைத்த வண்ணம் உள்ளே ஒடுகிறது.
'நீ வந்து விசாரிச்சதாகச் சொன்னவ, என்ன விசயம்?” மாணிக்கன் கேற்றைத் திறந்து, அடக்க ஒடுக்கமாக முற்றத்தைத் தாண்டி வந்து தாழ்வாரத்தோடு ஒன்றி நிற்கிறான்.
ஐயா வீட்டு நாய் வீட்டுக்குள்ளே போய் குந்தி இருந்த வண்ணம் அவனைப் பார்த்து மெல்ல உறுமுகிறது.
“உம். என்ன விசயம்? கெதியாச் சொல்லலு! எனக்கு வெளி யிலை போற வேலையள் கணக்கக் கிடக்கு”
"அந்த. காசு கொஞ்சம் தேவையாக் கிடக்கையா.” “எந்தக் காசு” "அந்தச். சீட்டுக் காசு” “ஆ.ஆ. அதே. அதுக்கு கணக்க வழக்குப் பாக்க வேணும். நீயும் உன்ரை பெண்டிலும் இடைக்கிடை வந்து வாங்கி இருக்கிறியள்”
"ஒமாக்கும். அதுக்கென்ன கணக்கைப் பாத்துத் தாருங்கோவன்” “சரி நில் வாறன்” "ஐயா உள்ளே சென்று தடித்த முழு நீளக் கொப்பியும் பென்சிலு மிாகத் திரும்பி வருகின்றார். கதிரை ஒன்றை விறாந்தையில் போட்டுக் கொண்டு அதில் அமர்ந்த வண்ணம் கொப்பியை விரித்து தடைகளைத் தட்டுகின்றார்.
வீட்டுக்கு வெளியே விறாந்தை ஒரமாக அவன் பணிவுடன் நிற்கின்றான்.
ஐயாவின் பார்வை கொப்பியின் ஒரு பக்கத்தில் நிலை குத்தி நிற்கிறது.
“ஒரு தடவை பத்து, இது பிள்ளைக்குச் சுகமில்லையெண்டு சொல்லி வாங்கின ஞாபகம். பிறகொருக்கால் பதினைஞ்சு, பிள்ளை பெத்துக்குச் சாராயம் வாங்கவெண்டு கேட்டணி. சரியே.”
“சரிதானாக்கும்” "உன்ரை பெண்டில் ஒரு பத்து” “சரி” ஐயாவிடம் இதற்குமேல் பணம் வாங்கவில்லை எனற் திடமான எண்ணத்தில் அழுத்தங்கொடுத்து முடிவாகச் சொல்லுகின்றான்.

ஒடுக்கப்பட்டவர்கள் 65
“என்ன சரியெண்டு முடிக்கிறாய் போலை கிடக்கு மாணிக்கன். இன்னும் இருக்கு, அவள் பிறகு ஒரு அஞ்சு, பேந்தொரு பத்து. தெரிஞ்சுதோ,
“என்ன வாய் திறவாமல் நிக்கிறாய்?” “இல்லை ஐயா. அப்பிடி அவள் வாங்கினதாக.” “வாங்கினதாக. வாங்கினதா. சொல்லன் வாய் திறந்து அவள் சொல்லேல்லையே? ஆள்மாறி ஆள் வந்து வாங்கிறது பிறகெண்டால். அப்ப நானே பொய் சொல்லுறன். ஏதோ. ஏழை எளியதுகள் எண்டு வைச்சுப் பாதுகாத்துக் குடுக்கிறதும் போதாதெண்டு.”
“இல்லை ஐயா. இல்லை. நாம் கோவிக்க வேண்டாம். கணக்கை சொல்ல.”
“சரி கேள், உன்ரை அஞ்நூறு ரூபாக் கடனிலை வட்டிக் காசு இன்னும் வரவேணும்”
"ஐயா. முதலைவிட கூடுதலாக நான் வட்டி கட்டி இருக்கிறன்.” "அதுக்கு நான் என்ன செய்ய! உன்னைப்போலை வைக்கத் தந்தவையளின்ரை காசுதானே அது நான் அவையஞக்கு வட்டியும் முதலுமாக முழுக்கக் கட்டிப் போட்டன். நீ இன்னும் தர வேண்டிக் கிடக்கு ஐம்பது ரூபா வட்டியாக. அதுக்கும் வேறை ஒராளின்ரை காசிலை எடுத்துத்தான் கட்டி இருக்கிறன். அந்த ஐம்பதும் நீ வட்டி யோடை தர வேண்டிக் கிடக்கு”
“போன கிழமைக்கு முந்தின கிழமை மாணிக்கன் பெண்டில் வந்து என்னட்டை நாலுறுவா கைமாத்தா வாங்கினவள்”
அடுக்களைக்குள் இருந்து ஐயாவின் மனைவி கவனமாகத் தன் பங்கையும் சேர்க்கிறாள்.
"அப்படியே. ஆ. சரி அதையும் சேத்தால் மொத்தம் நூற்றி இருபது போக. உன்ரை நூற்றைம்பதிலே மிச்சம் முப்பது ரூபா, நில் வாறன்’
ஐயா எழுந்து வீட்டுக்குள்ளே செல்கிறார். மாணிக்கனுக்குத் தலை சுற்றிக் கொண்டு வருகிறது. ஐயா வருவதற்கு முன்னர் திரும்பிப் போய் விடுவோமா? என்று ஒரு தடவை நினைத்துப் பார்த்தான் அப்படிச் செய்தால் தன்னை அவமதித்து விட்டதாக அவர் கருதி, அதன் விளைவு பயங்கரமானதாகி. அவன் எண்ணி எண்ணித் தயங்கிக் கொண்டு நிற்கின்றான்.
அவன் வீடடிலிருந்து புறப்படும்போது மனைவி சொன்ன வார்த்தைகள் இப்போது நெஞ்சில் முகம் காட்டி அனைக் கேலி செய்கின்றன.

Page 39
66 தெணியான்
“முத்தவளின்ரை காதுக்கு வாங்கப் போகிறியள், இளையதுக்கு இன்னும் காது குத்தயில்லையெல்லே, அதையும் ஒருக்கால் குத்த வேணும். காது முத்தினால் குத்த நோகும். அதுக்கொரு குச்சித்தோடு போதும்
“எடியே. சிவப்பி ஏழைக் குடும்பங்களிலே பிறக்கிற பெண்டு களுக்கு மட்டுந்தான் காது குத்திறகில்லையடி சுரண்டிக் கொழுக்கும் பணக்காரக் கும்பல் ஆண்களுக்கும் காது குத்தி விடுகிது. இஞ்சை இண்டைக்கு எனக்குக் குத்துகிறான், ஆனால் தோடுதான் போட வில்லை”
அவன் மனதுக்குள்ளே கறுவிக் கொண்டு நிற்கின்றான்.
ஐயா திரும்பி வருகின்றார்.
அவன் கைக்குள் பத்து ரூபா நோட்டுக்கள் இரண்டைத் திணித்து விட்டு “மாத்தின காசில்லே நாளைக்கு வா? மிச்சம் பத்து ரூபா தாறன்" என்று சொல்லிக் கொண்டு அவனைத் திரும்பியும் பார்க்காது உள்ளே போகின்றார்.
அவன் கைக்குள் கசங்கிக் கிடக்கும் நோட்டுக்கள், விக்கித்து நிற்கும் அவனைக் கண்டு சிரிக்கின்றன.
- புதுயுகம்
27.11.1971

கரையை நோக்கி.
"மீன். மீன். மீன்.
மாலு. மாலு. மாலு.” அந்தப் பகுதித் தெருக்களில் காலை சுமார் ஒன்பது மணியளவில் தினமும் இந்தக் குரல் கேட்கும். குரல் எழுவதுதான் தாமதம், இந்தக் குரலை எதிர்பார்த்துக் கொண்டே இருக்கும் பெண்கள் அவசர அவசர மாகத் தெருவுக்கோடிப் போவார்கள். அவர்கள் சொற்ப நேரம் சுணங்கி னாலும் போதும், குரல் எழுந்த வேகத்தில் காற்றாகப் பறந்து சென்று, தெருவின் மறுமுலையில் வேகமாகத் திருமபி மறைந்து விடுவார்ா சிதம்பரப்பிள்ளை மெம்பர்.
இயல்பாகவே அவர் நடையில் அவ்வளவு வேகம். அந்த வேகத்தையும் கடுகதிப்படுத்துவதற்கென்று தெருமுனையில் இன்று அவர் கண்களுக்கு தட்டுப்பட்டான் கந்தசாமி அவன் முன்னிலையில் இந்தக் கோலத்தில் தோன்றுவதை விட உயிரை விட்டு விடலாமென எண்ணிக் கொண்டு நடப்பதாக நினைத்து ஓடினார், அவர்.
அவர் வேகத்துக்கு ஏற்றாற் போல அவர் கால்களும் மிகவும் நீளமானவை. அந்தக் கால்களின் நீளத்தை அரையில் சுருக்கிக் கட்டிய சாறம் மேலும் நீட்டிக் காட்டுவதற்குத்தான் உதவுகிறது. இன்னும் இரண்டு அங்குலம் உயர்ந்தால் அது அரையில் கிடப்பதிலும் பயனில்லாது போய்விடும். அவர் நிர்வாணமாக இல்லையென்பதற்குச் சாட்சியாக அரையில் சுற்றிக் கிடக்கும் அந்தச் சாறம், இருந்து - குனிந்து - நிமிரு கின்ற வேளைகளில் அவரைக் காப்பதற்குச் சக்தியற்றுத் தவிக்கிறது,

Page 40
68 தெணியான்
அந்தச் சமயங்களில் அவரைக் காப்பாற்றுவதற்கென்றே எப்போதும் தயாராக இருப்பது அவர் கடடியிருக்கும் கெளசணம் ஒன்றதான்.
கடற்கரைக் காற்றின் கூதல் கொடுகலுக்குத் தாக்குப் பிடிப்பதற் கென்று கைகள் கழன்ற காக்கிச் சட்டை, தலையிற் சுற்றிக் கட்டிய ஊத்தைத் துண்டு. மீன் நிறைத்த சாக்குப் பொதி, கை எங்கும் ஒட்டிக் கிடக்கும் மீன் செதில்கள், இத்தியாதிக் கோலத்தில் அவரைக் காணும் போது, இரவு கடல் மேல் சென்று மீன் பிடித்துக் கொண்டு திரும்பி வரும் கடற்றொழிலாளி என்று கருதினால், அதைத் தப்பென்று சொல்ல முடியாது. ஆனால் சிதம்பரப்பிள்ளை மெம்பர் ஒரு கடற்றொழிலாளி யல்ல. அது அவரது சாதித் தொழிலுமல்ல. இதனால் தான் தன் சாதிக் காரர்கள் வாழும் பகுதிகளுக்கு அவர் மீன் விற்பதற்குப் போவதில்லை. இதற்கும் ஒரு காரணத்தைக் கற்பித்துச் சொல்லிக் கொள்ள அவர் தவறவில்லை.
"நீங்கள் வீட்டுக்கே இருக்க உங்களுக்கு மட்டும் நான் வீடு தேடி மீன் கொண்டு வந்து தாறது என்னத்துக்கு தெரியுமே!”
"உண்மையாகத் தெரியாதாக்கும், சொல்லவன்.” “ச்ச. நான் வேறை வேலையில்லாமல் இதைச் செய்யிறனெண்டு தான் போலே உங்கடை எண்ணம்.”
“நம்மாணை நாங்கள் அப்பிடி நினைக்கேயில்லை. ஏனெண்டுதான் சொல்லவனாக்கும்.”
"இந்த வட்டார மெம்பராக வந்து உங்களுக்குச் சேவை செய்ய வேணுமெண்டுதான் நான் நினைச்சேன். அவன் உங்களுடையாள் வெண்டு போட்டான், எண்டாலும் என்ரை சேவையை விடுகிறதே!”
"ஐயா நினைக்கிறது சரிதான், நம்மாணை ஐயா. நாங்கள் எல்லாரும் நமக்குத்தளன் துண்டு போட்டனாங்கள்.”
“உங்கடை சாதியின்ரை குணமுதுதானே! எல்லாருக்கும் ஐயா, நமக்குத்தான் நமக்குத்தானெண்டு சொல்லுறது. எண்டாலும் உண்மை யிலே எனக்குத்தான் போட்டனிங்கள், அது எனக்குத் தெரியும். என்னை விழுத்தினது என்ரை சாதியான்தான், எண்டாலும் விடப் போறனே! அடுத்த முறையும்.ம் ஆ. நீ காசை எடு!”
"எவ்வளவையா. எழுவத்தைஞ்சி சதம் தானே!" “சீச்சி. மீனைப் போடு. ஒரு உறுவாவுக்கு ஒருசதம் குறைஞ்சாலும் தர மாட்டன்.”
“என்னையா இதுக்குள்ளே பல சாதி மீனும் கிடைக்குது. எல்லாம் இத்தினை இத்தினை பொடுகுகள்.”
“இப்பிடிப் பல சாதி மீனையும் ஒரு நாளிலே தின்ன உங்களுக்குக் கிடைக்குமே! என்ன பேய்க்கதை கதைக்கிறாய்? உனக்கு வேண்டா
மென்டால் விடு. எனக்கு நேரம் போகுது.”

ஒடுக்கப்பட்டவர்கள் 69
"நான் ஒரு உறுவாத் தாறன். மீனை எனக்குத் தாவன்.” இந்தக் குரல் திடீரென்று காதில் விழுந்ததும் சிதம்பரப்பிள்ளை மெம்பர் திடுக்கிட்டுப் போனார். யாரைக் கண்டு அவர் வேகமாக ஓடினாரோ அந்தக் கந்தசாமியே அவரிடம் மீன் கேட்கிறான். அவன் கேட்கிறானே ஒழிய, அவன் குரல் தன் காதில் விழுந்ததாக அவர் காட்டிக் கொள்ள வில்லை.
“என்ன மெம்பர், நான் கேக்கிறன் நீ பேசாமல் உன்ரை பாட்டிலே இருக்கிறாய்.”
அவன் அங்க நிற்பதை இப்போதுதான் அறிந்து கொண்டவர் போல, தலையை தூக்காது புருவத்தை மட்டும் நெறித்து விழிகளை உயர்த்தி ஒரு தடவை பார்த்துக் கொண்டு திரும்பவும் பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுகிறார்.
“மெம்பர் தன்ரை சாதிக்காரனுக்கு மீன் விக்கிறதில்லைப் போலே. இஞ்சினை இதுகளுக்கேதான் யாவாரமாக்கும்.”
இதன் மேலும் சிதம்பரப்பிள்ளை மெம்பரால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. வாலைச் சுருட்டிய அவர் தன்மான உணர்வு திமிர்த்துக் கிளர்ந்தெழுகிறது.
“என்ன ஒரு மாதிரிக் கதைக்கிறீர். மெம்பர் எண்டு சொட்டை விடுகிறீரோ! எலச்சனுக்கே நீருந்தான் என்னட்டைச் சாராயம் வாங்கிக் குடிச்சனீர்! அதை மறந்து விட்டீராக்கும்.”
எனக்கு மட்டுமே தந்தனிர்! எல்லாருக்குந்தான் குடுத்தீர். நானும் வாங்கிக் குடிச்சனான் தான், அதுக்கிப்ப என்ன வந்தது? இப்ப மீனல்லலோ கேக்கிறன்!”
"உனக்கு மீனில்லைப் போ. மீன் கேக்கிறார். மீன்.” "ஏன். என்ன சங்கதி! என்ரை காசு செல்லாதோ!" "இஞ்சார் ஒரு மாதிரிப் பேய்க்கதை கதையாதே. நீ ஆர்? நான் ஆர்? எல்லாத்தையும் மறந்து பேசாதே!”
“என்னத்தை மறந்து பேசிறனெண்டு ஒருக்காச் சொல்லும் பாப்பம்.”
“என்ன தம்பி புதிசாச் சொல்லக் கிடக்குது. நான் ஆர்? கேகாலை முதலாளி சிதம்பரப்பிள்ளை. நீ என்ரை கடையிலே கை கட்டி நிண்டு கூலிக்கு வேலை செய்ததை மறந்து கதையாதே"
“ஹி..ஹி..ஹி. ஆர். ஆர். கேகாலை முதலாளியோ! இப்பவும் நீ கேகாலை முதலாளியே?”
“வேறை ஆர்? முதலாளி சிதம்பரப்பிள்ளைதான். இண்டைக்கு மெம்பராக இல்லாவிட்டாலும் மெம்பர் சிதம்பரப்பிள்ளை எண்ட

Page 41
70 தெணியான்
பேரோடை இருக்கிறன். நான் பஞ்சத்தாண்டி உன்னைப் போல பரம்பரை ஆண்டியில்லை.”
"இஞ்சாரும் வீண்கதை கதையாதையும். நீரும் ஒரு மனிசனெண்டு அரையிலே சீலையும் கட்டிக்கொண்டு திரியிறீரே! உன்னாலே நாங்கள் வெள்ளாளரெண்டு மானம் மரியாதையாக வெளியிலே தலை காட்ட முடியாமல் கிடக்குது. சாதியை வித்து வலை, கயிறு தூக்கி வயிறு கழுவப் போவிட்டீர் உன்னைப் போலே சாதியின்ரை மானத்தைக் கை விட்ட கடை கெட்டவனில்லை நான். மழைக்கால இருட்டெண்டாலும் மந்தி கொப்பிழக்கப் பாயாது. அதுக்குள்ளே நீயுமொராளெண்டு பெரிய கதை கதைக்கிறாய். கடகப் பெட்டியளவு.”
"நான் சாதியிலே குறுைஞ்சுபோக, நானென்ன மீன் பிடிக்கப் போவிட்டனே! நான் கெட்டாலும் செட்டி, கிழிஞ்சாலும் பட்டுத்தான். நீ என்னட்டை பொறுக்கித் திண்டவன்ரா. உனக்கிப்பை கண்கடை தெரியு தில்லை. நான் கேகாலை முதலாளி சிதம்பரப்பிள்ளை. பதினேழாம் வட்டாரம் கொத்தியாவத்தை மெம்பர்.”
"ஒய் வாயை மூடுங் காணும். உன்ரை நாத்தல் வாயைக் கண்டபடி திறந்தியோ பல்லுக் கொட்டிப் போடுவன். எடே பிடே எண்டு கதைக்கிறீர். பெரிய முதலாளியாம்; மெம்பராம். நீ ஆரடா என்னைப் பார்த்து எடே எண்டு சொல்ல! நீ. நீ. எழிய மீன் விக்கிறவன். சீ. தூக். சாதியை வித்த நாய்ப்பயல்!”
கந்தசாமி கைகளை உயர்த்திக் கொண்டு அவரை நெருங்கி அடிப்பதற்குப் போகிறான். இடையில் நின்ற பெண்கள், "ஐயா.ஐயா. நம்மாணைவிட. நம்மாணைவிட.” என்று கெஞ்சி மன்றாடி அவனைத் தடுத்து விடுகிறார்கள்.
அவன் அடிக்கக் கிளம்பியதொன்றும் அவருக்குப் பெரிதாகத் தோன்றவில்லை. அவரைத் தாழ்த்தி, அதுவும் அந்தச் சனங்களுக்கு மத்தியில் அவன் வாயிலிருந்து பிறந்த வார்த்தைகள். அவர் இதயத்தைக் குடைந்தன. அவரால் அங்கு தலை நிமிர்ந்து வாய் திறக்க முடியவில்லை. அவர்தான் இருந்து கொண்டிருக்கும் சூழலையும் மறந்து, முழங்கால்களுக்கிடையே தலையை புதைத்துக்கொண்டு விக்கி விக்கி அழுதார். ஒரு காலத்தில் தான் வாழ்ந்த வாழ்வையும், இன்று அவன் கேட்ட வடுச் சொல்லையும் நினைத்து உருகி உருகி அழுதார்.
சிதம்பரப்பிள்ளை மெம்பர் ஒரு காலத்தில் கேகாலைச் சிதம்பரப் பிள்ளையாகச் சீரும் சிறப்புமாய்க் கொடி கட்டிப் பறந்தவர்தான். அந்தக் காலத்தில் கேகாலை முதலாளி என்றால், அந்தப் பெயருக்கே பணிந்து நின்று சலாம் போடுவார்கள் இந்தப் பகுதி மக்கள். அந்த அளவுக்கு அவருக்குச் செல்வாக்கிருந்தது. கேகாலையிலும் அவருக்கிருந்த செல்வாக்கை அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள்வரை அறியாதவர் களில்லை. அவர் நினைத்ததைச் சாதிக்கக்கூடிய சக்தி அவருக்கு

ஒடுக்கப்பட்டவர்கள் 7
இருந்து வந்தது. கேகாலைத் தொகுதியின் பாராளுமன்றத் தேர்தல்கள் நெருங்கி வருகின்ற சமயங்களில் எல்லாம், அபேட்சகர்களாக நிற்க விரும்புகின்ற வர்கள் - எந்தக் கட்சியை சார்ந்தவர்களாயினும் முதலில் அவரிடந்தான் ஆதரவு தேடி வருவார்கள். கேகாலைப் பட்டினசபையின் தலைவராக அவர் விரும்பிய ஒருவர்தான் வர முடியும். அவர் எண்ணத்துக்கு மாறாக, அவருடைய சக்தியை மீறிக்கொண்டு தேர்தலில் வெற்றி பெறுவதென்பது எவருக்கும் இயலாத காரியம். அந்தப் பகுதிக்கு விஜயம் செய்யும் மந்திரிமார், ஒரு நாளேனும் அவருடைய விருந்தினராகத் தங்காமல் போனதில்லை. சிங்களவர், தமிழர் என்ற இன பேதமின்றி எல்லோராலும் அவர் மதிக்கப்பட்டார்
இருந்தாற்போல் இருந்து வந்ததுதான் வந்தது, ஐம்பத்தெட்டு கலவரம், இந்த நாட்டின் இன ஒற்றுமையை எப்படிச் சூறையாடிச் சென்றதோ, அதேபோலக் கேகாலை முதலாளியையும் கபளிகரம் செய்து இருந்த இடம் தெரியாமல் சுருட்டிக் கொண்டு போய்விட்டது.
நல்ல காலம்; அந்த நேரத்தில் அவர் மட்டும் ஊரோடு நின்று விட்டார். அல்லது அவர் உயிருக்கே ஆபத்து நேர்ந்திருக்கலாம். பொருள் போனால் போகிறது. பொருள்போன இடம் புண்ணியந்தானே! உயிர் தப்பினது மட்டும் பெரிய காரியம் என்று மனம் தேறினார், ஆனால் இனிமேல் கேகாலை முதலாளியாக அந்தப் பகுதியில் நடப்போடு வாழ்வதென்பது முடியாத காரியமென்பதை உணர்ந்து கொண்டார். பல்லுக் கழற்றிய பாம்பாக பழையபடியும் அப்பகுதியில் போய் வாழ்வதற்கு அவருடைய தன்மானம் இடங் கொடுக்கவில்லை. கலவர நிலைமைகள் அடங்கி, கப்பலில் தப்பினோம் பிழைத்தோம் என்று ஓடி வந்தவர்கள் மறுபடியும் திரும்பிப் போக ஆரம்பித்த பின்னர், இரகசிய மாக ஒரு தடவை கேகாலைக்குச் சென்று கடையைப் பார்த்துவிட்டு வெறுங் கையோடு ஊருக்கு வந்து சேர்ந்தவர்தான். அதன் பின்னர் இன்று வரை ரயில் ஏறவேயில்லை.
கலவர காலத்தில் கந்தசாமி அவர் கடையில்தான் சிப்பந்தியாக வேலை செய்து கொண்டிருந்தான். கலவரம் ஆரம்பித்துத் தமிழர்கள் யாழ்ப்பாணத்துக்கு ஓடி வந்த வேளையில், அவன் மட்டும் ஒரு சிங்கள நண்பனின் வீட்டில் பாதுகாப்பாகத் தங்கி இருந்தான். கூலிக்கு வேலை செய்து கொண்டிருந்த அவனிடத்தில் அநுதாபங் காட்டுவதைத் தவிர, துவேஷம் கொள்வதற்கு ஒன்றுமிருக்கவில்லை. வறிய தொழிலாளியான அவனுடைய சிங்கள நண்பன் தன்னை ஒத்த அவனுக்கு ஆதரவு கொடுத்தான். நாட்டு நிலைமை சீர்திருந்திய பின்னர், அவன் கேகாலை யிலிருந்து கண்டிக்கு வந்து பழையபடி ஒரு கடையில் சிப்பந்தியாகச் சேர்ந்து கொண்டான்.
கந்தசாமியைப் போலச் சிதம்பரப்பிள்ளை முதலாளியால் திரும்ப வும் எப்படித் தென்னிலங்கைக்குப் போக முடியும்? அவன் தொழிலாளி

Page 42
72 தெணியான்
முதலாளியாக வாழத் தகுந்த நிலையில் இப்போது அவர் இல்லை. ஆயினும் கேகாலை முதலாளியாக வாழ்ந்த மணம் முற்றாக அவரை விட்டு நீங்கிப் போய் விடுமா? அந்த மணத்தையும் பழைய பெயரையும் பெருமையையும் மூலதனமாக வைத்துக் கொண்டு எப்படியும் முன்னேற வேண்டுமென்று சிந்தித்தார். ஆனால் ஊருக்கு வெளியே போவதற்கு மட்டும் மனத்துக்குக் கூச்சமாக இருந்தது. ஊரோடு வாழ்ந்து கொண்டு வருவாயைப் பெருக்குவதற்கு வழியென்ன என்று பரக்கச் சிந்தித்துக் கொண்டிருந்த போது தான் கிராமச்சங்கத் தேர்தல் வந்து சேர்ந்தது.
அந்தத் தேர்தல் ஆரம்பத்தில் அவர் கவனத்தைப் பெரிதாக ஈர்க்கவில்லை. அவருடைய சாதிக்காரர்கள் வந்து விடாப்பிடியாக அவரைப் பிடித்துக் கொண்ட போது, அவர் கவனமும் தேர்தல்மேல் மெல்லத் திசை திரும்பியது. அவருக்கிருக்கும் கேகாலை முதலாளி என்ற பெயர் ஒன்றே தமது வெற்றிக்குப் போதுமான கேடயமெனக் கணக்குப் போட்டுக் கொண்டார். கிராமச் சங்க உறுப்பினராகி விட்டால், தலைவர் தெரிவின்போது ஆதரவு தேடி வருகின்றவர்களிடம் சில ஆயிரங்களைச் சுருட்டலாம். வீதிகளுக்கு றோட்டுப் போடுவதாக மக்கள் கண்ணில் மண்ணைப் போட்டு தனது மடியில் பணத்தைக் கட்டலாமென வருவாயைக் குறுக்குவழியில் பெருக்கத் திட்டமிட்டார்.
அவர் ஊரோடு வந்த பின்னரும், அவர்கள் வட்டாரத்துக்குத் தாழ்த்தப்பட்டவன் ஒருவன் கிராமச்சங்க உறுப்பினனாக, கடந்த காலம் போல இனிமேலும் வருவதென்பது தன் சொந்தக் கெளரவத்துக்கே ஒரு சோதனைதான் என்று சொல்லிக் கொள்ளத் தலைப்பட்டார். தன் சாதிக் காரருக்கு நேர்ந்து விட்ட அவமானத்தைத் துடைத்தெறிவது தனது கடமை என்றும், இந்தத் தொண்டு தன்னால் மாத்திரந்தான் செய்யக் கூடியதென்றும் பலருக்குச் சொல்லிக் கொணடார்.
யாழ்ப்பாணத்து சராசரி உயர்சாதித் தமிழனின் சிந்தனைக்கு அணுவும் பிசகாமல் சிந்தித்ததனால் துணிந்து தேர்தலில் குதித்தார்.
அவரையும் அவர் சாதிக்காரர்களையும் பொறுத்தவரை கிராமச் சங்கத் தேர்தல் ஒரு மானப் பிரச்சினை. தங்கள் சாதியின் மானத்தைப் பாதுகாப்பதற்காக வேண்டி, வேறு எதனை எல்லாம் இழக்க நேர்ந்தாலும் அதனை இழக்கத் தயாராக இருந்தனர்.
இந்தச் சமயத்தில்தான் கந்தசாமியும் கண்டியை விட்டு ஊரோடு வந்து சேர வேண்டிய சந்தர்ப்பம் அவனுக்கு வந்தது. கடந்த காலத்தில் அவன் குடும்பத்துக்கு உறுதுணையாக இருந்து வந்த அவன் தந்தை இருந்தாற்போலத் திடீரெனக் காலமானார். ஒரு ஆண் துணையின்றி மனைவி மக்களை ஊரோடு விட்டு அவன் கண்டிக்குப் போக இயல வில்லை, எனவே ஊரில் தங்கி விட்டான்.
தேர்தல் நேரத்தில் அவனும் ஊரோடு வந்து சேர்ந்தது சிதம்பரப் பிள்ளை முதலாளிக்கு நல்ல வாய்ப்பாகப் பட்டது. அவனைத் தேர்தல்

ஒடுக்கப்பட்டவர்கள் 73
வேலைகளில் தீவிரமாக ஈடுபடுத்தினார். அவனும் அவடைய வெற்றிக் காக அயராது உழைத்தான்.
அந்த வர்க்கத்துக்குரிய குணம் பணத்தைக் கொண்டு மனிதரை வாங்கிவிடலாமென்று எண்ணுவது, இன்று தமது மனித உரிமைகளின் மேல் வேட்கை கொண்ட மக்களின் நாடியைப் பிடித்துப் பார்க்க அறியாது கண்களை மூடிக்கொண்டு, நல்லதொரு முதலீடு செய்கிறேன் என்ற நினைப்பில் பணத்தை அள்ளி இறைத்தார் முதலாளி பணமாகவும் கள்ளு, சாராயமாகவும் பெருகி ஒடி அந்த வட்டார மக்களைக் குளிர வைத்தது.
அந்தச் செலவுகள் யாவும் அவரோடு போட்டியிட்டவனுக்குத் திகைப்பை ஊட்டுவதற்குப் பதிலாக ஆனந்தத்தைத்தான் கொடுத்தன. அவன் தன் சமூகத்து மக்களைப் பார்த்து, “காசு மரத்தை நான் உலுப்பு கிறேன், கீழே விழுவதை நீங்கள் தவறாமல் பொறுக்கிக் கொள்ளுங்கள். வாக்குச் சீட்டுக்களை மாத்திரம் எனக்குப் போடுங்கள்” என்று காலித் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி தகநாயக்க ஒரு தடவை சொன்ன வாக்கியங்களை சொல்லி மகிழ்ந்தான்.
தேர்தல் முடிந்தது. அவர் தோற்றுப் போய் விட்டார். ஆனால் தேர்தலால் நேர்ந்த அவமானம் அவர் உள்ளத்தில் வெறியாகக் குடி கொண்டு விட்டது. அடுத்த தேர்தலுக்காக நான்கு ஆண்டுகள் காத்திருந் தார், திரும்பவும் தேர்தல் களத்தில் குதித்தார். அவர் ஆசைகள் வெறும் ஆகாயக் கோட்டையாகத் தகர்ந்தது.
இரண்டு தேர்தல்களும் அவற்றுக்கிடைப்பட்ட வருமானம் இல்லாத வாழ்க்கையும் கேகாலை முதலாளியாக இருந்த கொஞ்ச நஞ்சத் தேக்கத்தையும் நன்றாக வழித்துத் துடைத்துக் கொண்டு ாேய்விட்டன. வயிற்றுப் பாட்டுக்கே திண்டாடும் நிலை, அவர் மானத்தையும் அவர் சாதியின் மானத்தையும் காத்துக் கடைத்தேறப் போராடியவரின் மானம் வீட்டுக்குள்ளேயே சாயம் வெளுக்க ஆரம்பித்தது. மனிதனல்ல - பொருள் தான் மனிதனைக் கணிக்கும் அளவுகோல் எனக் கருதும் இந்தச் சமூகத்தின் தத்துவம் பற்றிய ஞானம் அடுக்களைக்குள்ளேயே புரிந்து கொள்ள வேண்டியதாயிற்று. புரிந்துமென்ன! அவரைப் பொறுத்தவரையில் அது சுடலை ஞானந்தான்!
கோபுரத்தில் வாழ்ந்தவர் குப்பை மேட்டுக்கு வந்த பின்னர் கெளரவம், சாதி, சமயம், மானம் என்கின்ற வானளாவிய எண்ணங்களைத் தூக்கி வீசி விட்டு, வயிற்றுப் பசியைப் போக்கிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள்ளானார். அவர் சாதிக்குரிய அற்ப சொற்ப முனைப்பையும் உணர்வையும் மனதில் பதுக்கி வைத்துக் கொண்டிருக்கும் வரை, வயிறு வெறுமையாகவே இருக்க நேரும் போலத் தோன்றியது, என்ன செய்யலாம் என்று எண்ணி எண்ணிக் குழம்பிக் கொண்டிருந்த போதுதான், தெற்றென ஒரு நவீன பாதை தெளிவாகத் தோன்றியது.

Page 43
74 தெணியான்
ஒரு நாள் வைகறையில் யாருக்கும் சொல்லாமற் கொள்ளாமல் கடற்கரையை நோக்கிப் புறப்பட்டார். கடல்மேல் சென்ற மீனவர்களின் கட்டுமரங்கள் கரைக்கும் வந்ததும், இடுப்பளவு தண்ணீரில் ஒடிச் சென்று மீன் பறிகளைத தூக்கி வருவது, வலை கயிறுகளைக் கரையில் எடுத்துப் போடுவது, கட்டு மரங்களை இயக்கும் இயந்திரங்களை இறக்கிச் சுமந்து கொடுப்பது, பிணைத்த மரங்களை அவிழ்த்துத் தனித்தனியே நீருக்கு வெளியே மணல் மேல் இழுத்துப் போடுவதற்கு உதவுவது என்று ஒரே மூச்சில் எல்லாக் காரியங்களையும் செய்யத் தொடங்கினார். இந்த உதவிகளுக்குச் சன்மானமாக மீனவர்கள் சில மீன்களை எடுத்துக் கொடுப்பார்கள். அவராகவே முன்வந்து தொட்டாட்டி வேலைகளைச் செய்து, கிடைத்த மீன்களைக் கொண்டு வந்து உள்ளுருக்குள் விற்று வயிற்றைக் கழுவுவதற்கு ஒரு வழியைக் கண்டு
காண்டார்.
அவர் கடையில் சிப்பந்தியாக இருந்த கந்தசாமி ஊரோடு வந்த பின்னர் வாழ்வுக்கு வழியறியாமல் திகைத்தான். தோட்டந்துரவு செய்வ தற்கு நிலபுலங்கள் ஏதுமில்லை. குடும்பத்தை வறுமை வாட்டத் தொடங் கியது. செய்வது என்னவென்று அறியாது குழம்பிக் கொண்டிருந்த கட்டத்தில் சிறு வயது முதல் அவனிடம் வளர்ந்து வந்த வியாபார மூளை கை கொடுத்தது. தரகு வேலை செய்ய ஆரம்பித்தான். ஆடு, மாடு, புகையிலை, வெங்காயம் என்று எல்லா வகையான தரகுகளையும் பார்க்கத் தொடங்கினான். ஆனால் பழைய தரகர்களோடு போட்டி போட்டுக் கொண்டு அவனுக்கு நின்று பிடிக்க இயலவில்லை. அவன் குடும்பம் பல தினங்கள் பட்டினி கிடக்க வேண்டியதாயிற்று.
சிதம்பரப்பிள்ளை மெம்பரின் தொழிலால் அவர் குடும்பம் வாழ்ந்த தாகவும் சொல்வதற்கில்லை. தன் சாதிக்குரிய கெளரவத்தைக் கை விட்டு, சாதிக்குக் குறைவான தொழில் செய்வதற்கு ஆரம்பித்ததும் குடும்பத்தில் இருந்து அவரை ஒதுக்கி வைத்து விட்டார்கள். அவருக்குச் சித்தப்பிரமை பிடித்து விட்டதாகவும் கதை கட்டி விட்டனர். அவர் நடத்தையும் உண்மையில் அப்படித்தான் இருந்தது. சில சமயங்களில் அவர் நடத்தை வெறும் நடிப்பென்று சொல்லத் தகுந்ததாகவும் இருந்தது.
அவராகவே தன்னை மெம்பர் என்று சொல்லிக் கொள்ளத் தொடங்கினார். அதன் பிறகு பழைய பெயர்கள் மறைந்து சிதம்பரப் பிள்ளை மெம்பர் என்று அழைக்கும் வழக்கம் உண்டானது.
மீன் விற்றுக் கிடைக்கும் வருமானத்தில் மூக்கு முட்டக் கள்ளைக் குடிப்பார். எப்போதாவது விரும்பிய வேளைகளில் மட்டும் வீட்டுக்குப் போவார். பெரும்பாலும் வசதிப்பட்ட இடத்தில் படுத்தெழும்புவது தான் இப்போது அவர் வாழ்க்கையாக மாறியது. ஆனால் அதிகாலையில் கடற்கரைக்குச் செல்வதற்கு மாத்திரம் தவற மாட்டார். அது இப்போது அவர் ஜீவனோபாயமல்லவா!

ஒடுக்கப்பட்டவர்கள் 75
சிதம்பரப்பிள்ளை மெம்பர் தினமும் கடற்கரையை நோக்கி ஒடுவது போல கந்தசாமியும் அந்தப் பக்கத்தை நாடினான். ஆனால் அவரைப் போலத் தொழில் செய்பவனல்ல அவன், கடற்கரையை அண்டினாற்போல உள்ள பிரதான வீதியின் ஒரத்தில் இருக்கும் மடத்துக்குச் சென்று படுத்துக் கொள்வது அவன் வழக்கம். மனைவி மக்கள் என்ற தொல்லைகளிலிருந்து விலகி இருப்பதற்கு அந்த மடம் வசதியாக இருந்தது, பெரும்பாலும் பகற் பொழுதை அங்கேயே போக்கிவிட்டு, மாலைப்பட்டதும் துண்டை உதறித் தோள்மேற் போட்டுக்கொண்டு ஆடியாடி வீட்டை நோக்கி நடப்பான்.
தொழில் முடித்துக் கொண்டு ஓய்வாக அந்த மடத்தில் வந்து படுத்துக் கொள்ளும் மீனர்வர்கள் நாளடைவில் அவனுக்கு நண்பர் களானார்கள், அவர்களில் சவரிமுத்தன் அவனோடு மிக நெருங்கி உறவாடினான். தன் குடும்பக் கஷ்டங்களை மனந் திறந்து சில சமயங் களில் சவரிமுத்தனுக்கு அவன் சொல்வதுண்டு. சவரிமுத்தன் இயல்பாகவே இளகிய மனம் படைத்தவன். கந்தசாமியின் குடும்பக் கஷ்டங்களை அறிந்து சிற்சில சமயங்களில் அவனுக்கு பணம் கொடுத்து உதவினான். அவனுக்கும் சவரிமுத்தனுக்கும் பிறப்பால் அமைந்த இடைவெளி காலகதியில் குறுகிக் கொண்டே வந்தது. எப்படியும் அவன் வாழ்வை வளம்படுத்த வேண்டுமெனச் சவரிமுத்தன் துடித்தான்.
அவனும் தன் நிலைமையை எண்ணி எண்ணிச் சதா சிந்தித்தான். இறுதியில் சவரிமுத்தன் ஊட்டிய நம்பிக்கை அவனை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தது. வறுமைக் கடலில் மூழ்கி குடும்பம் அழிந்து போகாத வண்ணம் எப்படியும் கரையேற வேண்டுமென்ற தீர்மானத்துக்கு திடமாக வந்தபோதுதான்.
O O. O.
சிதம்பரப்பிள்ளை மெம்பர் வழமைக்கு முன்னதாகவே இன்று கடற்கரைக்கு வந்து சேர்ந்து விட்டார். இருள் இன்னும் கரைய ஆரம்பிக்கவில்லை. ஆழ்ந்து உறங்கிக் கொண்டு கிடக்கும் கடலின் குறட்டை ஒலி, அலைகளின் சலசலப்பாக அங்கு உறைந்து கிடக்கும் பயங்கர அமைதியைக் குலைத்துக் கொண்டிருக்கிறது. கடல்மேல் சென்றிருக்கும் கணவன்மாரின் வரவை எதிர்பார்த்து தினமும் ஏக்கத் தோடு வந்து கூடும் மீனவப் பெண்கள் வந்து சேருவதற்கு இன்னும் நேரமிருக்கிறது.
அதிக நேரத்தோடு தான் வந்து சேர்ந்து விட்டதை இப்போதுதான் அவர் உணர்ந்தார். உலகத்தின் எல்லாவித நெருக்கடிகளில் இருந்தும் விடுபட்டு சிறிது நேரம் அமைதியாக இருக்கச் சந்தர்ப்பம் வாய்த்த தென்ற உணர்வில், கூதலையும் பொருட்படுத்தாமல் கடலை நோக்கிக்

Page 44
கால்களை நீட்டிய வண்ணம் கைகளைப் பின்புறமாக முண்டுகொடுத்து மணல்மேல் சரிந்தமர்ந்தார்.
கட்டுமரங்களின் விளக்குகள் மின்மினிகள் போலக் கடலின்மேல் வரிசையாகத் தோன்றுகின்றன. கடல் மேற் கிடக்கும் வானத்துக் கூரையில் விழுந்த ஓட்டைகளாக நட்சத்திரங்கள் மினுங்குகின்றன. கடல் அலைகள் தகரப் பீப்பாக்கள் போல உருண்டுருண்டு கரையை நோக்கி வருகின்றன.
இந்தக் காட்சிகளை ஆறுதலாக இரசிக்கக் கிடைத்த சந்தர்ப்பத் தில் தன்னை மறந்திருந்த சிதம்பரப்பிள்ளை மெம்பரின் நினைவலைகள் அவரை உணராமலே அவர் உள்ளத்தில் ஆழப் பதிந்து உறுத்திக் கொண்டிருக்கும் அந்தச் சம்பவத்தை ஒடித் தொட்டன.
"நீ எழிய. மீன் விக்கிறவன். சீ. தூக்! சாதியை வித்த நாய்ப் Liu Jal).'
கந்தசாமி அன்று சொன்ன இந்த வார்த்தைகள், இன்னும் அவர் உள்ளத்து உலையில் கொதியைக் கிளப்பின. அன்று அழுதது போல இன்னும் ஒரு தடவை அழுது தீர்த்தால் என்ன என்ற உணர்வு திடீரென்று அவருக்குத் தோன்றுகிறது. ஆனால் அவர் அழவில்லை, அழுவதற்கு மறந்து உன்மத்தம் பிடித்து, அப்படியே சமைந்து போனார்.
தோணிகள் நீரைப் பிளந்துகொண்டு ஒவ்வொன்றாக வரத் தொடங்கிய பின்னரே சிதம்பரப்பிள்ளை மெம்பரின் துன்ப யோகம் கலைந்து தொழிலைக் கவனிக்கத் துரிதமானார். குறிப்பிட்ட சிலரின் தோணிகள் கரைக்கு வரும்போது அவர் குதூகலம் அதிகரிக்கும். அவருடைய விஷயத்தில் தாராளமாக நடந்து கொள்ளுகின்றவர்களின் தோணிகளைக் கண்டால் ஆரவாரத்தோடு வரவேற்பார். சவரிமுத்தன் என்றும் அவர் மனங் கோணாமல் நடந்து கொள்பவன். அவனைப் போல நல்ல மனம் படைத்தவர்கள் அந்தக் கடற்கரை வட்டாரத்தில் இல்லை என்பது அவர் கண்ட உண்மை.
வானம் இன்னும் தெளிவாக வெளிக்கவில்லை, மைமல் இருட்டு இன்னும் முழுமையாகக் கழுவப்படவில்லை. முருகைக் கட்டைத் தாண்டி ஒரு தோணி வந்து கொண்டிருக்கிறது. மெம்பர் கூறு குறிப்பாக அந்தத் தோணியை நோக்குகிறார். தோணியில் இருவர் நிற்கிறார்கள். நடுவே ஒருவன் இருக்கிறான். சவரிமுத்தனின் தோணியில் அவனும் அவன் மைத்துனனுந்தான் செல்வது வழக்கம். ஆகவே இது வேறு தோணியாக இருக்கவேண்டுமெனச் சமுசயப்படுகிறார்.
நீரைக் கிழித்துக் கொண்டு உறுமிய வண்ணம் தோணி கரையை நெருங்குகிறது. தோணியின் முன்புறத்தில் சவரிமுத்தனின் ஆஜானு பாகுவான தோற்றத்தை அவர் கண்கள் கண்டு தெளிகின்றன. இடுப்பளவு தண்ணிரில் பாய்ந்து சென்று தோணியின் கயிற்றைப் பற்றுகிறார்.

ஒடுக்கப்பட்டவர்கள் 77
சவரிமுத்தனுக்கும் அவன் மைத்துனனுக்கும் இடையில் சோர்ந்து போய் இருக்கும் அந்த உருவத்தை உற்று நோக்குகிறார்.
உடல் சில்லிடும் அந்த உப்பு நீரினுள்ளும் நெருப்பில் கால் வைத்து விட்டவர்போலத் திகைத்து. துடித்து. ஓர் அடி பின்னுக்கு வைக்கிறார்.
தான் காண்பது கனவோ என்ற மயக்கம் ஒரு கணம்
“ஆ. நீயா கந்தசாமி!”
அவரை அறியாமலே இந்த வார்த்தைகள் அவர் வாயிலிருந்து வெளிவந்து விழுகின்றன.
கந்தசாமி தோணியிலிருந்து மெல்ல நீரினுள் இறங்கி சவரி
கொண்டு குனிந்த தலை நிமிராமல் கொந்தளிக்கும் கடலிலிருந்து கரையை நோக்கி நடக்கிறான்.
- மல்லிகை ஆண்டு மலர். ஆகஸ்ட் 1972

Page 45
அவர்கள் விழித்துக் கொண்டுவிட்டார்கள்
சுந்தரலிங்கத்துக்கு ஆங்கில ஆசிரியர் நியமனம் கிடைத்த போது அந்தப் பாடசாலைக்குத்தான் அனுப்பி வைக்கப்பட்டார். ஆண்டுகள் பலவாக உத்தியோகமில்லாமல் தவியாய்த் தவித்த அவரை வராமல் வந்த அந்த நியமனம் மகிழ்ச்சி வெள்ளத்தில் குளிப்பாட்டி இருக்க வேண்டும். ஆனால் அவருடைய நிலையோ..?
ஆசிரியராகச் சுந்தரலிங்கம் வந்திருக்கிறாரென்பதை அங்கு படித்துக் கொண்டிருக்கும் பிள்ளைகள் அறிந்தபோது அவர்களுக்கு ஒரே குதூகலம். அவர்களுக்குப் புதியவரல்ல அவர் ஆதரவான பேச்சையும், அன்பான நடத்தையையும் அவரிடத்தில் முன்னமே அனு பவித்த அவர்களுக்கு - புதிய ஆசிரியர்களென்றால் மாணவர்களுக்கு இயல்பாகத் தோன்றுகின்றது பீதி உண்டாக நியாயமில்லை. பெற்றோரும் பிள்ளைகளைப் போலத்தான் அவர் வருகையை அறிந்து மகிழ்ந்து புகழ்ந்தனர்.
“சுந்தரலிங்கம் ஐயா பத்துப் பன்னிரண்டு வரியங்களுக்கு முந்தி இங்கிலிசு படித்தவர். அப்போதைய இங்கிலீசு திறம் இங்கிலீசு, இப்போதையில் பொடியள் சும்மா பேருக்குப் படிக்கிறதுதான். ஒரு இங்கிலிசுத் தூளுந் தெரியாது. அதோடை ஐயா இஞ்சினைக்கை கடை போட்டாப்போல எங்களோடை சகோதரம் மாதிரிப் பிளங்கிறவர். எங்கடை பிள்ளையஞக்கு மனம் வைச்சு நல்லாப் படிப்பிப்பர். எங்கடை பொடியளும் தூள் பறக்கப் பேசுவங்கள் பாருங்கோவன்.”

ஒடுக்கப்பட்டவர்கள் 79
அந்தப் பாடசாலை அண்மைக் காலத்தில்தான் அந்தப் பகுதித் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அரசாங்கத்தால் ஸ்தாபிக்கப்பட்டது. அந்தப் பகுதியைச் சுற்றிப் பல கல்லூரிகள். அந்தக் கல்லூரிகளுக்குச் செல்வதில் அந்தக் கிராமத்துத் தாழ்த்தப்பட்ட ஏழைப் பிள்ளைகளுக்கு பல்வேறு கஷ்டங்கள். வேண்டுமானால் மேல் வகுப்புக்களில் படிப்ப தற்கு இடமெடுக்க விளையாட்டுக்கள் - உதைபந்தாட்டம் போன்றவற்றில் வீரனாக விளங்கினால் முகம் சுழிக்காமல் ஏற்றுக் கொள்வார்கள். கல்வியை அவர்கள் எத்தனை பேரால் உயர் வகுப்புக்கள் வரை தொடர்ந்து பெற முடிகிறது! வசதி வாய்ப்புக்கள் குறைந்த அந்த ஏழைச் சிறாருக்கு ஆரம்பக் கல்வியைத்தானும் ஒழுங்காகப் பெற்றுக் கொள்ளச் சந்தர்ப்பமில்லை. அவர்களின் குறையைக் களைவதற்காகவென்று - சிலர் செய்த முயற்சியின் பேறாகத் தோற்றுவிக்கப்பட்டதுதான் அந்தப்
TL9760)6).
பிள்ளைகளுக்குப் பாடசாலை கிடைத்துவிட்டதேதோ உண்மை தான். ஆனால் அனைத்தும் எடுத்த எடுப்பிலேயே பூர்த்தியாக்கப்படுமா என்றால். அதுதான் இல்லை. அந்தப் பாடசாலையில் ஆங்கிலம் கற்பிக்க ஆசிரியர் ஒருவர் இல்லாதிருப்பது பெரிய குறை. தங்கள் பிள்ளைகள் இங்கிலீசு படிக்க முடியவில்லையே என்ற பெற்றோருக்கு மனவருத்தம். கல்விப் பகுதியினருக்குப் பலதடவை முறையிட்டார்கள். அதன் பேறுதான் சுந்தரலிங்கத்தை அங்கே இழுத்து வந்து நிறுத்தி இருக்கிறது.
சுந்தரலிங்கமும் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மனிதர்தான். தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் சூழலிலிருந்து சற்று விலகி, கூப்பிடு துலையில்தான் அவர் குடியிருந்தார். கல்லூரிப் படிப்பு முடிந்த பின்னர் முப்பத்திரண்டு வயதுவரை அப்பர் சுவாமிகள் கைலாயக் காட்சி காணப் புறப்பட்ட கோலமாக நடந்து - தவழ்ந்து - உருண்டு - புரண்டு - உத்தியோகம் தேடுபடலத்தில் காலத்தைக் கரைத்தவர், உத்தியோகந் தான் என்னவோ கிடைக்கவில்லை. உணர்வுகளும் சன்னியாசம் கொள்ளுமா? அயல் வீட்டுக் கன்னிக்கும் அவருக்கும் வேலையில்லாத வேலையாகக் காதல் அரும்பியது. காதல் கல்யாணத்தில் தான் முடியவேண்டுமென்ற புனிதம் அவர் நெஞ்சறையில் ஒட்டிக்கொண்டு கிடக்கவில்லை. காதலில் அரும்பியது கல்யாணத்தில் மலர வேண்டிய நிர்ப்பந்தம் நேர்ந்துவிட்டதன் அவசியம் கல்யாணத்தின் பின் ஏழு மாதங்களில் கனிந்த பிறந்த பெண் குழந்தையால் நிச்சயமானது. அதைத் தொடர்ந்து இரண்டு குழந்தைகள். ஆனால் உத்தியோகம்.?
சுந்தரலிங்கம் உத்தியோகமில்லாது வாழ்ந்து கொண்டிருந்த போதிலும், இருக்கக் குடிநிலமில்லாத பரம ஏழையல்ல. பரம்பரைச் சொத்தான நிலபுலன்கள் கொஞ்சம் அவருக்குண்டு. அவற்றால் கிடைக்கக் கூடிய வருமானத்தை நம்பி வாழ்வதனால், ஒரு கமக்காரனின் வாழ்வுதான் அவருக்கும் வாழ முடிந்தது.

Page 46
80 தெணியான்
யாழ்ப்பாணத்துக் கமக்காரன்’ என்ற பரம்பரையான சமூக அந்தஸ்தை இம்மியும் இழக்கத் தயாராக இல்லாதபோதும் கமக்கார வாழ்வு வாழ்வதற்காகவா அவர் இந்தக் கல்வியைப் பெற்றார்? அவருக்கோ, நாகரிக மோகம் கொண்ட அவர் மனைவிக்கோ இந்த வாழ்க்கையில் உடன்பாடில்லை. காலத்துக்குத் தகுந்த வண்ணம் பவுசும் பகட்டுமான வாழ்க்கையும் நடத்துவதற்கு வழி என்ன? எப்படிப் பணத்தைச் சம்பாதிக்கலாம்? சிந்தித்தார். உரக்கச் சிந்தித்தார். முடிவு கடையொன்றை ஆரம்பித்து வியாபாரம் செய்வதைத் தவிர வேறு வழியில்லையென்று கண்டு கொண்டார்.
வியாபாரம் இலாபகரமாக நடைபெறுவதற்குத் தகுந்த இட மொன்றை ஆராய்ந்தபோது பட்டென்று மனதில் பட்டதுதான் அந்தப் பாடசாலையைச் சுற்றியுள்ள சூழல். அந்த மக்கள் தமது தேவையைப் பூர்த்தி செய்யத் தகுந்த ஒரு கடை அவர்கள் மத்தியிலில்லை. சிறிய தேவைக்கும் அருகேயுள்ள பட்டினத்துக்குத் தான் அவர்கள் போய் வந்து கொண்டிருந்தார்கள்.
அந்தப் பாடசாலையை ஒட்டினால்போலச் செல்லும் பாதை அருகே வசதியாக அவருக்கொரு காணியும் இருந்தது. கடையை ஆரம்பிப்பதற்கு முன்னர் அந்தப் பகுதி மக்களின் ஆதரவைச் சம்பாதித் துக் கொள்ள வேண்டுமென எண்ணி, தன் விருப்பத்தை அவர்களில் பலருக்கு அன்பொழுகச் சென்னார். நயினாரின் கருணையைக் கண்டு ஆமோதித்தது மட்டுமல்லாமல் அவருக்கு உதவி செய்யவும் முன் வந்தார்கள் அவர்கள். கடைக்கான கட்டிட வேலைகள் ஆரம்பமான போது, கல் சுமந்து - மண் சுமந்து - நீர் அள்ளி ஊற்றி சிரமதான வேலைகளும் செய்து கொடுத்தனர். இவ்வளவு உதவிகளுக்கும் அவர் பிரதி உபகாரமாகப் பொடியள். பொடியள். எனத் தன்னைவிட வயதில் முதிர்ந்தவர்களையும் அழைத்ததுதான் பெரும் பேறு போதாதா அவர்களுக்கு. நயினாரின் வாயிலிருந்து இப்படியான ஒரு வார்த்தை!
காணி ஈடு வைத்து அந்தப் பணத்தில் ஆரம்பிக்கப்பட்ட அந்தக் கடை ஒருநாள் திறப்புவிழா'க் கொண்டாடியது. அவர் வாழ்வில் கவிந் திருந்த இருள் அதன் பின்னர் சிறிது சிறிதாக விலக ஆரம்பித்தது. வசதியான வாழ்வு விரைவில் அவர் குடும்பத்தை வந்தடைந்தது.
இயல்பாகவே சுந்தரலிங்கம் சாதி விஷயத்தில் இறுக்கமான பேர் வழி கொஞ்சமும் விட்டுக் கொடுக்காத சுபாவம். கடையை ஆரம்பித்த தும் இதுவரை பின்பற்றி வந்த போக்கை மாற்றிக் கொண்டுவிட்டார். திடீரென ஞானம் பெற்று சமூகச் சீர்திருத்தம் பேச ஆரம்பித்து விட்டாரென்றால். அவர் அந்தரங்கத்தைச் சொல்லவா வேண்டும்?
சீறிச் சினக்காமல் அன்பாதரவாகப் பேசி அப்பகுதி மக்களை வசீகரித்தார். அவர்களின் இன்ப துன்பங்ளை அக்கறையோடு விசாரித்தார். வியாபாரத்தை ஆரம்பித்ததுதம் அவர் புதிய பிறவியாக அவதாரமெடுத்து விட்டார்.

ஒடுக்கப்பட்டவர்கள் 81
அவர் செலவு செய்ததோ அன்பான வார்த்தைகளை, ஆனால் அப்பகுதி மக்கள் அநியாயமாக இழந்தது தங்கள் உழைப்பின் பெரும் பகுதியை,
வியாபாரிகளே இப்படித்தான்! அவர்கள் வார்த்தைகள் இதயத்தி லிருந்தல்ல - நாவிலிருந்துதான் கனிந்து விழுகின்றன.
சுந்தரலிங்கம் வாழ்க்கைப் படகு அலையில்லாத ஆற்றில் உல்லாசப் பயணம் போவது போல ஆனந்தமாக ஓடிக் கொண்டிருந்த போதும் அவரைப் பிடித்த உத்தியோகச் சூறாவளி விட்டு விலகி விட வில்லை. விண்ணப்பங்கள் - நேர்முகப் பரீட்சைகள் - என முயற்சியில் தீவிரமாகக் குதித்தார். உத்தியோகப் பிரயத்தனத்தில் தாராளமாக அள்ளி இறைப்பதற்கு வியாபாரத்தால் ஊறி வந்த பணம் கை கொடுத்தது.
அரசியல் செல்வாக்குள்ள பெரும் புள்ளிகளைச் சந்திக்க தன் னிடத்தில் வக்கில்லையே’ எனப் பெருமூச்சு விட்டவர், மடியில் கனத் தோடு புறப்பட்டார். முயற்சி பொய்த்துப் போய்விடாமல் தித்திக்கத்தான் செய்தது.
இந்த வசதி அவரிடம் முன்பே இருந்திருந்தால் என்றோ இந்தச் சாதனையைச் செய்திருப்பார். என்ன செய்வது? கடையை ஆரம்பித்த குயுக்தி இப்போதுதானே அவர் மூளையில் உதித்தது.
நேர்முகப் பரீட்சைக்காக அழைக்கப்பட்டபோது பூவுலக சொர்க்க போகம் கிட்டிவிட்டதான பரவசம் அவருக்கு. இந்த நல்ல செய்தியைக் கடைக்கு வருவோர் போவோரிடமெல்லாம் வாய் கொள்ளாமல் சொல்லி மகிழ்ந்தார்.
நேர்முகப் பரீட்சை முடிந்து இடம் கிடைத்தபோதுதான் அந்த மகிழ்ச்சியில் ஒரு விரிசல், நியமனம் கடிதம் கையில் கிடைத்துவிட்டது. ஆனால் அந்தப் பாடசாலைக்குப் போகும் வண்ணம் பணித்தபோது.
ச. எங்கடை பள்ளிக்கூடங்கள் எத்தனையோ கிடக்க இந்த நளவற்ரை பள்ளிக்கூடத்துக்குத்தான் போக வேணுமோ? அவங்க ளோடை இருந்து பிளங்கி, அந்தப் பிள்ளையளை. சீ. அதுகள் பிள்ளையளே. நினைக்க வெக்கமா கிடக்கு. அதுக்குள்ளை போற தெண்ண கால் கூசுது என்னைச் சொட்டை பண்ணப் போறாங்கள் எங்கடை ஆக்கள்
மறுத்துப் பார்த்தார். மன்றாடிப் பார்த்தார் சுந்தரலிங்கம். வசதியாக இப்போது வேறு பாடசாலையில் இடமில்லை. அதனால் அந்தப் பாடசாலைக்குத்தான் போகவேண்டுமென்று கூறி விட்டார்கள்.
வருந்திப் பிடித்த சீதேவியைக் காலால் உதைத்தால் பொறித்து வீழ்த்திவிட்டுக் கைக்கெட்டாமல் மறுபடியும் ஓடி விடலாமென்ற அச்சத்

Page 47
82 தெணியான்
தால் நியமனத்தை ஏற்றுக் கொண்டார். 'சரி பாப்பம்' என்ற உறுதியான சங்கற்பத்தை மட்டும் அவர் மனம் எடுக்கத் தவறவில்லை.
எப்படியும் ஒரு மாதச் சம்பளந்தான் அந்தப் பாடசாலையில் இருந்து எடுப்பேன்’ என்று முடிவு செய்தவர் சும்மா இருப்பாரா?
நியமனம் கிடைத்த தினத்திலிருந்து மாற்றம் பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார்.
மனைவியின் சகோதரன் கடைக்குப் பொறுப்பாக இருந்து வியாபாரத்தை நடத்தினான். ஒய்வான நேரங்களில் மாத்திரம் அவர் அங்கு சென்று ஒத்தாசை புரிந்தார். கடைக்குப் போவதை நிறுத்திக் கொள்ளவோ - கடையை மூடிவிடவோ அவர் கனவிலும் எண்ணவில்ல. அப்படிச் சிந்திக்க அவருக்கென்ன பைத்தியமா?
ஆனால் அந்தப் பாடசாலையில் படிப்பிப்பது மட்டுந்தான்.? அவருக்கு நியமனம் கிடைப்பத்ற்கு வழிவாய்க்கால் திறந்து வைத்த பெரும் புள்ளியைப் பசையோடு திரும்பவும் போய்க் கண்டார். ஒரு மாதங்கூடச் சரியாகக் கழியவில்லை. இருபத்தைந்தாம் நாள் மனம் போல மாற்றக் கடிதத்தைக் கையில் எடுத்துக் கொண்டார்.
அவருக்குக் கிடைத்த மாற்றம் - அந்தப் பாடசாலையைப் பொறுத்த வரையில் - வாய்க்குள் வரும்போது தட்டிப் பறித்த கதைதான். 'எனக்கு இஞ்சை படிப்பிக்கிறதுதான் நல்ல விருப்பம் பக்கத் திலை கடையையும் பாத்துக்கொள்ள வசதியான் இடம். இந்த டிப்பாட்மென்டே இப்பிடித்தான். ஒரு நாளைக்கு இரண்டு பள்ளிக் கூடத்துக்கு மாத்துவான்கள். என்னை இஞ்சை போகச் சொன்ன உடனே நான் எவ்வளவு சந்தோசமாக வந்தனான். படிப்பிச்சால் இந்தப் பிள்ளை யளுக்கல்லலோ படிப்பிக்க வேணும். என்ரை ஆசைக்குப் படிப்பிக்கக் கூட இஞ்சை அவர்கள் விடவில்லை’
அவர் வாய் திறந்து சொன்ன வார்த்தைகளை முற்று முழுதாக நம்பினார்கள் அந்தப் பகுதி மக்கள்.
பெற்றார் ஆசிரிய சங்கப் பிரதிநிதிகளையும் அழைத்துக் கொண்டு ஓடினார் தலைமையாசிரியர்.
“உங்கடை பள்ளிக்கூடத்திலை இருந்து படிப்பிக்கிறதுக்கு அந்த ஆசிரியருக்கு விருப்பமில்லை. அதனாலைதான் அவரை மாற்றி இருக்கி றோம், வசதியான ஆள் கிடைத்ததும் முதல் உங்களுக்குத்தான் போட்டுத் தருவோம்”
தூது சென்றவர்களுக்குத் தங்கள் காதுகளையே நம்ப முடிய வில்லை. ஆச்சரியத்தோடு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அதிகாரிகள்தான் பொய் சொல்லுகிறார்கள் என்ன நினைப்பு அவர்களுக்கு.

ஒடுக்கப்பட்டவர்கள் 83
சுந்தரலிங்கம் கைப்பட எழுதிக் கொடுத்த கடிதத்தை காட்டிய பின்னர்தான் அவர்களால் உண்மையை நம்ப முடிந்தது.
பெற்றார் ஆசிரிய சங்கப் பிரதிநிதிகளின் கண்கள் சிவந்தன.
காலம் காலமாகக் கரடி விட்டுக்கொண்டிருக்கும் சமூகத்தின் பிரதி நிதியான சுந்தரலிங்கம் தங்கள் மத்தியிலிருந்து பிழைப்பு நடத்துவதற் காக நன்றாக நடித்திருக்கிறார் என்பதை உணர்ந்தார்கள். அவரை மதித்ததும், அனுசரித்து தடந்ததும், அவர் வாய்ச் சொல்லை நம்பியதும் இதுவரை தாங்கள் செய்த மகா தவறு என்பதை அறிந்து மனம் கொதித்தார்கள்.
அதன் பலன்.
மறுநாள் முதல் திறக்கப்படாமல் மூடிக் கிடக்கும் சுந்தரலிங்கத்தின் கடைக் கதவுகளில் தெளிவாகச் சிவப்பு மையால் எழுதப்பட்டிருந்தது.
துரோகி இனிமேலும் எங்கள் மத்தியிலிருந்து எங்களை ஏமாற்றி,
சுரண்டி வாழ விட மாட்டோம்'
- மல்லிகை
ജങ്ങഖ്വി 1974

Page 48
எல்லைக் கோடுகள்
பறை முழங்குகிறது. பிரேதம் தூக்கும் குடிமக்கள் காலந் தாழ்த்தி வருவது தான் வழக்கம். அவர்களும் இன்று நேரத்துக்கு முந்தியே வந்து சேர்ந்து விட்டார்கள்.
வெள்ளை கட்டி முடித்துக் கொண்டு வீட்டுக்குப் போய், பிறகு சவம் எடுப்பதற்குச் சற்று முன்னதாகவே திரும்பி வந்து சேரும் சலவைத் தொழிலாளியும் இன்று வீட்டுக்குச் செல்லாமல் அங்கேயே தங்கி நிற்கிறான்.
சவரத் தொழிலாளி அவன் குடிமையை ஆரம்பிப்பதற்கு முன்ன தாகவே நெருப்புக் கயிற்றை எடுத்து அங்கு வந்திருப்பவர்களுக்குச் சுருட்டு மூட்டிக் கொண்டிருக்கின்றான்.
இராமன் இரவோடிரவாகப் பனைகளில் ஏறிக் கள்ளை இறக்கி வைத்துவிட்டு, அவசர அவசரமாகப் புறப்பட்டு வந்து ஒரு புறத்தில் ஒதுங்கிக் கை கட்டி நிற்கிறான்.
மரணம் சம்பவித்திருப்பதென்ன சாதாரண இடமா? அந்தப் பகுதி மக்களின் எசமான் என்று சொல்லத் தகுந்த சிவபாத சுந்தரம் நயினாரின் மனைவியல்லவா சிவபதமடைந்துவிட்டார்.
ஊர் மக்கள் செய்தி அறிந்ததும் அதிகாலையிலேயே வந்து கூடி விட்டார்கள். அயற் கிராமங்களில் இருந்தும் கூட்டங் கூட்டமாக இன சனங்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒடுக்கப்பட்டவர்கள் 85
அந்த வீட்டு முற்றத்தில் புதிதாக வளர்ந்திருக்கும் வேலி, சிவபாத சுந்தரத்தின் மனைவிக்கும் அவள் சகோதரிக்கும் பெற்றோரால் முதிச மாகக் கொடுக்கப் பெற்ற வீடு வளவு சில வருடங்களுக்கு முன்பு பாகப் பிரிவினைக்குள்ளாகியபோது முளைத்த ஒன்றுதான். அங்கு வந்திருக் கும் சனக்கூட்டத்தை உள்ளடக்க அது தடையாக இருப்பதால், படலைக்கு வெளியே தெருவைச் சனம் நிறைத்துக் கொண்டிருக்கிறது.
குடிமக்கள் அனைவரும் உள்ளுர அச்சத்தோடு மிக எச்சரிக்கை யாகவே தங்கள் குடிமைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இராமனுக்கு மட்டும் இன்னும் கட்டளை இடப்படவில்லை, அவன் தனக் குத் துணையாக வருமாறு அழைத்தவர்கள்கூட அங்கு வந்து காத்திருக் கிறார்கள். அவன் நயினார்மாரின் கட்டளையை எதிர்பார்த்து நீண்ட நேரமாகக் கைகட்டி நிற்கிறான்.
பொழுது கொஞ்சங் கொஞ்சமாகப் பனைக்கு மேலே ஏறிக் கொண்டிருக்கின்றது.
கூட்டங் கூட்டமாகப் பெருகி வந்து கொண்டிருக்கும் நாச்சி, நயினாக்களை வரவேற்கும் பறை முழக்கம் விட்டு விட்டு ஓங்கி எழுந்து செவிப்பறையைக் கிழிக்கிறது.
சிவபாத சுந்தரம் அந்தப் பகுதி மக்கள் மத்தியிலே மிகப் பிரபல மான ஒரு சைவப் பெரியார். அவருக்குக் கல்வி போதித்த ஆசிரிய பரம்பரையின் தொடர்ச்சியிலே அவர் நாவலர் வழி வந்த இறுக்கமான மரபுக்காரர். அந்த மரபுக்கே சொந்தமான ஆசார அனுட்டானங்களில் அணுவும் பிசகாதவர் என்பதற்கு இன்றைக்கும் அவர் பிடரியிலே தலை நீட்டிக் கொண்டிருக்கும் நான்கு நரைமயிர்களைப் பிடித்து முடிச்சுப் போட்டுத் தொங்கவிடப்பட்டிருக்கும் குடுமியைத் தவிர வேறு சாட்சியம் வேண்டியதில்லை. கருமை அழிந்து நெற்றியில் துலங்கும் வெண்ணிறாக முடி நரைத்து, உடல் தளர்ந்த போதும் மரபு பேணுவதில் மாத்திரம் அவர் என்றும் தளராத, தடுமாறாத பிடிவாதக்காரர்.
பொழுது மேலே மேலே ஏறிக்கொண்டிருக்கிறது. இராமனின் உள்ளத்திலும் ஒரே பரபரப்பு: அவசரம் வெயிலில் தன் குடிமையைச் செய்து முடிப்பது பெருங்கஷடமே என்ற தவிப்பு அவனுக்கு.
வேறு இடமாக இருந்தால் இராமன் இதுவரை தானாகவே முன் வந்து தனக்குரிய வேலைகளைத் தொடங்கலாமே என்று விசாரிப்பதற்கு ஆரம்பித்து விடுவான்.
இங்கே. அவனுக்கும் தெரியும் தெருவோர நிழல்களிற் சிறு சிறு கூட்டமாகக் கூடி இருப்பவர்கள் கூருட்டை நசித்து நசித்துப் புகை விட்டுக் கொண்டும், வெற்றிலையைச் சப்பி மணலைக் கிளறித் துப்பிக் கொண்டும் தமக்குள் இரகசியமாக ஆலோசித்துத் தர்க்கித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Page 49
86 தெணியான்
இவர்களுடைய ஆலோசனைகள் எப்போது முடியப் போகின்றன? இராமன் தன் வேலையைத் தொடங்க வேண்டுமே!
சிவபாதசுந்தரம் இவர்களுடைய ஆலோசனைகளிலெல்லாம் கலந்து கொள்ளாமல், வீட்டு விறாந்தையில் சால்வையை விரித்து, அதன் மேல் தனது எலும்புக்கூட்டு உடலை ஒடுக்கிக் கொண்டு கிடக்கிறார்.
கடந்த இரவு அவர் மனைவி காலமான நேரம் முதல் அவருடைய உள்ளம் அமைதி இழந்து குழம்பிக் கிடக்கிறது. மனைவி இறந்து போய் விட்டாளே என்ற துயரம் ஒரு புறம். அதற்கு மேல், "இப்படியும் ஒரு அவமானமும் நெருக்கடியும் எனக்கு நேருவதற்கு முன், இவளுக்கு முந்தி நான் செத்திருக்கலாம். கடைசி நேரத்தில் இவள் எனக்கு.” என்று எண்ணி மனம் உளைந்தார். “ஒரு பிள்ளையாவது இருந்திருந்தால் என் சபதத்தை நிறைவேற்றி இருக்கலாம். இப்போது என்ன செய்வது!” என்று உள்ளூர ஏங்கினார்.
“இப்படியே நான் கிடந்தால் இன்றைக்கு என்ன நடக்கப் போகிறது? இவளைக் கொண்டுபோய் தகனஞ் செய்கிறதில்லையா? நான் யார் பேச்சையும் கேட்டு நடக்காத பிடிவாதக்காரன் என்பதால் இந்த விஷயத்திலும் எல்லோரும் ஒதுங்கி இருக்கிறார்களோ! என்னை 'நெருப்பன்' என்று சொல்லிக் கொண்டு நெருங்குவதற்கு அஞ்சுகிறார் களே! நானாகப் படியிறங்கிப் போய். சீ.
சிவபாதசுந்தரம் எண்ணச் சுழிகளிலே சிக்குண்டு திசை காண முடியாமல் மூச்சுத் திணறித் திக்குமுக்காடிக் கொண்டு கிடந்தார்.
அவர் இதுவரை காலமாகத் தமிழினத்தின் சாதி எல்லைகளைப் பேணிப் பாதுகாப்பதில் ஏகத் தலைவனாகத் திகழ்ந்து கொண்டிருப்பவர். சாதி வரம்புகளை உடைத்துக் கொண்டு சாதி நிலைப்பாட்டில் மாற்றத் தைத் தோற்றுவிக்க யாராவது அந்தக் கிராமத்திலே முற்பட்டால் அவர் களைத் தனது ஜன்ம விரோதிகளாகக் கண்டு போராடவும் அழித் தொழிக்கவும் தயங்காதவர், "அவனவன் முற்பிறப்பிலே செய்த வினை யின் காரணமாகவே அந்தந்தச் சாதியிலே பிறக்கிறான். சாதி என்பது ஒவ்வொருவனும் தானாகவே தேடிக்கொள்வது தான். அவன் தேடிக் கொண்டதையே இறைவன் அவனுக்குக் கொடுத்து இந்தப் பூமியிலே குறித்த சாதியில் பிறவி எடுக்கச் செய்கிறான். சாதி வரம்புகளை மீறுவது தேவநிந்தை” என்று கூறி, தனது வெறியை நியாயப்படுத்துவார். காலத்துக்கேற்பப் பிடிப்புகளைக் கொஞ்சந் தளர்த்தினால் பரவாயில்லை என்று எண்ணும் மிதவாதிகள் கூட அவரை நெருங்க முடியாத நெருப்பு அவர்.
நான்கு ஆண்டுகளுக்கு முன் அந்தப் பகுதியில் வாழும் தாழ்த்தப் பட்ட மக்கள் மத்தியில் தோன்றிய எழுச்சி அவர் மனத்திலே அடங்காத கொதிப்பை மூட்டியது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள ஆலயங்கள் சிலவற்றுக்குள்ளே தாழ்த்தப்பட்ட மக்கள்

ஒடுக்கப்பட்டவர்கள் 87
அனுமதிக்கப்பட்டபோது அந்தச் சம்பவம் அந்த ஊரில் எந்த ஒரு காலத்திலும் நடைபெற விடமாட்டேன் என்று திடசங்கற்பம் பூண்டு கொண்டிருக்கும் அவருக்கு அது ஒரு சோதனையாக வந்து சேர்ந்தது. அந்தவுர்க் கந்தசாமி கோவிலுக்குள்ளே தாழ்த்தப்பட்டவர்கள் ஆலயப் பிரவேசம் செய்வதற்கு எத்தனித்தார்கள். அவர்களின் முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்று ஆக்கிரோசமாகக் கிளர்ந்தெழுந்த உயர் சாதிக்காரருக்குத் தலைமை தாங்கி முன்நின்றார் சிவபாத சுந்தரத்தார். தாங்கள் காட்டும் எதிர்ப்பு இன்று வெற்றி அளிக்க மாட்டாது என்பதை உணர்ந்த சிலர் கூறிய சமரச ஆலோசனைகளை எல்லாம் அவர் தூக்கி எறிந்துவிட்டு எதிர்த்து நின்றார். இறுதியில் கரவெட்டியிலுள்ள ஆலய மொன்றில் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுபோல சாதி வேறுபாடின்றி எல்லோருமே ஆலயத்துக்கு வெளியே நின்று வணங்குவோம் என்ற அவர் தெரிவித்த ஆலோசனையின் தந்திரோபாயத்தை உணர்ந்து கொண்ட தாழ்த்தப்பட்ட மக்கள் அதை ஓங்கி நிராகரித்தார்கள். அவர் கையாண்ட குயுக்திகள் எல்லாம் பலிக்காமற் போகவே, தோல்வியை ஒப்புக் கொள்வதற்கும் மனமில்லாமல் ஆலயத்துக்குள்ளே முன் மண்டபங்கள் இரண்டைத் தவிர்த்து ஏனைய மண்டபங்களுக்குள் எவரும் உட்பிரவேசிக்காத வண்ணம் இரும்புக் கேடர்களைப் பொருத் எல்லைக்கோடு வகுத்ததன் மூலம் அவர் மன ஆறுதல் கண்டார்.
அது மாத்திரமா? அந்தக் கிராமத்தின் கல்லு றோட்டுக்கள் உயர்சாதிக்காரர்களின் குடியிருப்புக்களுடன் முடிவடைவதும், அண்மையில் கிராமந் தோறும் வழங்கப்பட்ட மின்சாரம் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கிடைக்காமற் போனதும் அவர் வகுத்துக் கொடுத்த எல்லைகள்தான்.
இந்த தாழ்த்தப்பட்ட மக்கள் இருக்கிறார்களே - அவர்களுக்குச் சொந்த நிலபுலன்கள் இல்லாதிருந்ததால், உயர்ந்த சாதிக்காரர்களை அண்டியே வாழ வேண்டிய நிர்ப்பந்தம் இருந்து வந்தமையால் கடந்த காலத்தில் அவர்கள் இவருக்கொரு பிரச்சினையல்ல, ஆனால் கரையாரச் சாதி அன்றும், இன்றும் அவருக்கொரு சவாலாகவே இருந்து வருகிறது.
கரையார்மேல் சிறுபராயம்முதல் அவர் உள்ளத்தில் ஒரு வகை யான ஊமைக் கொதிப்பு நிரந்தரமாகவே உண்டு. ஆலயங்களிலும் பொது இடங்களிலும் அவர்கள் சமத்துவமான உரிமையை அநுபவித்த போதிலும் தங்களைவிடத் தாழ்ந்தவர்கள் என்பதுதான் அவர் மனதில் இருந்து கொண்டிருக்கும் கணிப்பு அந்தவுர்க் கோயிலில் சப்பரமிழுக்க வும் தேர் இழுக்கவும் சூரனாட்டவும் உடல் வலிமையுள்ள அவர்களின் உதவி தேவைப்படுகிறதுதான். ஆனால் அவர்கள் சுவாமி தூக்கும் தொண்டைச் செய்யவிடாமல் நீண்ட காலமாகத் தடுத்து வந்திருக் கிறார்கள். அந்தத் தடையை மீறிக் கொண்டு பலவந்தமாக அவர்கள்

Page 50
88 தெணியான்
சுவாமியைத் தூக்கிய போது, அந்தக் கொடுமையைக் கண்டும் அதைத் தடுக்க முடியாமல் சிறுபராயத்தில் சிவபாதசுந்தரம் மனம் வெதுப்பி இருக்கிறார்.
“என்ன சொன்னாலும் கரையார், கரையார்தான். வெள்ளாளராகி விட முடியுமா?"
கரையாரைத் தங்களிலிருந்து பிரித்து ஒதுக்கி, தாங்கள் அவர் களைவிட உயர்ந்தவர்கள்தான் என்பதை நிலைநாட்டிக் கொள்வதற்கு உரிய ஒரே ஒரு இடமாக இன்று வரை அவர்கள் பாதுகாத்து வருவது சுடலை ஒன்றுதான்.
அந்தச் சுடலைதான் இன்று அவருக்குள்ள ஒரே பிரச்சினை! பொழுது பனை உச்சிக்கு வந்துவிட்டது. பிரேதம் எடுப்பதற்கான அறிகுறிகள் எதுவுமே இன்னுமில்லை. ஓங்கியோங்கிப் பறை முழங்கி யவர்களும் களைத்துப் போய் விட்டார்கள். அங்கு வந்திருக்கும் சனக் கூட்டமும் சும்மா குந்தியிருந்ததில் மனம் சலித்துவிட்டது.
இராமன் உள்ளஞ் சோர்ந்து அதிருப்தியோடு வேலியோரமாகக் குந்தி விட்டான்.
நீண்ட நேரமாகக் கூடிக்கூடி ஆலோசித்த உள்ளூர்ப் பிரமுகர்கள், காலங் கடந்து கொண்டே செல்லும் நெருக்கடியினால் இறுதியில் ஒரு முடிவுக்கு வரவேண்டியவர்களானார்கள்.
“வேறையெங்கே, அந்தச் சுடலைக்குத்தான் போக வேணும்!” "அந்தச் சுடலைக்குப் போவதற்குச் சிவபாதசுந்தரம் சம்மதிப்பாரா? அவர் குரங்குப்பிடி பிடிக்கும் பிடிவாதக்காரராச்சே!” என்ற சந்தேகம் அவர்கள் உள்ளங்களில் எழாமலில்லை.
அந்தச் சுடலை சிவபாதசுந்தரம் வீட்டிலிருந்து சிறிது தூரம் வடக்கு நோக்கிச் சென்று கிழக்கு மேற்காகக் கடற்கரையோரம் நீண்டு செல்லும் பிரதான றோட்டில் மிதந்து மேற்குத் திசையாகக் கால்மைல் தூரம் சென்றதும் றோட்டுக்கும் கடலுக்குமிடையே மணற்பரப்பில் அமைந்து கிடக்கிறது. சிவபாத சுந்தரத்தின் மூதாதையர் அந்தக் காலத்தில் தங்கள் குடியிருப்புப் பகுதியிலிருந்து சுடுகாட்டைத் தூரத்தில் வைத்துக் கொள்ள வேண்டுமென்ற அந்தரங்க நோக்கத்தினால்தான் அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். அந்தச் சுடலைக்கு மத்தியில் றோட்டோரமாகப் பெரியதொரு மதகு. அந்த மதகுக்கூடாக மழை காலத்திலே கடலுக்குச் செல்லும் வெள்ளம் பாய்ந்தோடும் வாய்க்கால் பெரியதொரு கிடங்காக நீண்டு கிடக்கிறது. அந்த வாய்க்காற் கிடங்கு தான் அந்தச் சுடலையை இரண்டாகப் பிரித்து வைத்துக் கொண்டிருக் கும் ஒரு எல்லைக்கோடு. எல்லையாகக் கிடக்கும் வாய்க்காலுக்கு மேற்புரமாகவுள்ள மணற்பரப்பில் ஒர் இரவாடி மரம். மரத்துக்குக் கிழக்குப் பக்கமாக உள்ள சிறு நிலப்பரப்பிலேயே சிவபாத சுந்தரத் தாரின் சாதிக்காரர் தங்கள் பிணங்களைச் சுடுகிறார்கள்.

ஒடுக்கப்பட்டவர்கள் 89
எல்லைக் கோட்டுக்குக் கிழக்குத் திக்கில் படர்ந்து நிற்கும் பூவரச மரங்களுக்கருகே கரையாரப் பிணங்கள் சுடப்படுகின்றன.
இந்த இரண்டு சாதிக்காரர்களும் தங்களுக்கென்றுரிய குறித்த இடத்தை விட்டு, இடம் மாறிச் சுடவேண்டுமென்று முன்னர் ஒரு காலத் திலும் நினைத்துப் பார்த்ததில்லை. தங்கள் முன்னோர்கள் விழுந்து, பொடி சாம்பலான மண்ணிலே பாரம்பரியமாகத் தொடர்ந்தும் பிணங் களைச் சுடவேண்டும் என்ற உணர்வினால் தடந் தப்பாமற் போய்க் கொண்டிருந்தார்கள்.
பத்து வருடங்களுக்கு முன்பு கரையார் தங்கள் பகுதிச் சுடலை யைச் சுற்றிப் பதினைந்தடி உயரத்தில் ஒரு மதிலைக் கட்டி எழுப்பினார் கள். றோட்டிலே செல்லுகின்றவர்களைப் புகையும், துர்நாற்றமும் நேரடி யாக வந்து தாக்காமலும், அரைகுறையாக எரிந்து கொண்டிருக்கும் பிணங்கள் கண்ணில் படாமலும் பாதுகாத்து கரையாரின் கெளரவத்துக்கு அது ஒரு அரணாக அமைந்தது.
சிவபாத சுந்தரத்தின் கண்ணிலே அந்த மதில் பட்டபோது எல்லோரையும் போல அவரால் சும்மா இருக்க முடியுமா? கரையார் வெள்ளாளரான தங்களிலும் பார்க்கப் பதினைந்தடி மேலே உயர்ந்து விட்டதாகவே அவர் மனத்துக்குத் தோன்றியது.
அடுத்த வாரமே மேற்குப் புறமாகவுள்ள வெள்ளாளச் சுடலை யைச் சுற்றி மதில் கட்டும் வேலைகள் துரிதமாக ஆரம்பித்துவிட்டன. அத்திவாரம் கட்டி முடியும் வரையிலான வேலைகள் அனைத்தும் வேகமாக நடந்தேறி வந்தன. அத்திவாரத்தின் மேல் சில வரி கற்களை அடுக்கிக் கட்டி விட்டார்கள். மறுநாள் காலை வேலையை ஆரம்பிப்பதற்கு வந்து பார்த்தபோது முதல் நாள் அடுக்கிய கற்கள் நிலத்திலே விழுந்து சிதறிக் கிடந்தன. திரும்பவும் பழையபடி கற்களை அடுக்கினார்கள். அடுத்த நாள் வந்து பார்த்தபோது பழைய கதைதான். இப்படிச் சில தினங்களாக வேதாளம் சொன்ன கதையாக மதில் கட்டுதல் தொடர்ந்து கொண்டிருந்தபோது சிவபாத சுந்தரம் செய்வது இன்னதென்றறியாமல் திகைத்தார்.
கரையார் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழல் அது அவர்களை எதிர்த்து நின்று ஒன்றுமே சாதிக்க முடியாது என்பதை உணர்ந்து காண்டு சமரசப் பேச்சுவார்த்தைகள் என்னும் சாணக்கியத்தில் சிவபாத சுந்தரம் இறங்கினார்.
"குடிசனப் பெருக்கம் அதிகரித்து கடலைக்கருகிலேயே இப்போது பலர் குடியிருக்க வந்துவிட்டார்கள். அதனாலே ஒரே இடத்திலேயே இரண்டு சுடலை கட்டுவது வீண் வேலை. எல்லோரும் இப்போது மதில் கட்டப்பட்டிருக்கும் சுடலையிலேயே சுடலாம்” என்று கூறி மறுத்து விட்டார்கள்.

Page 51
90 தெணியான்
சாதி வெறியின் சரித்திரச் சான்றாக அந்த மதில் அத்திவாரத் தோடு மேலெழும்ப முடியாமல் அன்றுடன் நின்று போய்விட்டது.
சிவபாத சுந்தரம் அன்றைக்கெடுத்த பிரதிக்கினைதான், "இனிமேல் இந்தச் சுடலையில் நான் கால் வைப்பதில்லை” என்பது இன்றுவரை அவர் தன் சபதத்தைக் காப்பாற்றிக் கொண்டுதான் வருகின்றார். ஆனால் இன்று.?
சிவபாத சுந்தரம் தங்கள் முடிவுக்கு இணங்கி வருவதைத் தவிர வேறு மார்க்கமில்லை என்று உள்ளூர்ப் பிரமுகர்கள் கருதினார்கள் அவரை அணுகி தங்கள் கருத்தைச் சொல்லி அதற்கு இணங்கச் செய்வது யார் என்ற கேள்வி எழுந்தபோது, தனித்துச் சென்று அவரை அணுகு வதற்கு யாரும் முன் வராததால், எல்லோருமே போவோம் என்று எழுந்தார்கள்.
அவர்கள் அவரைத் தேடிச் செல்வதை இராமன் அவதானித்துக் கொண்டிருந்தான்.
சிவபாத சுந்தரம் அவர்களைக் கண்டு மெல்ல எழுந்து உட்கார்ந் திருக்கிறார்.
பிரமுகர்கள் தங்கள் கருத்தை எடுத்த எடுப்பில் அவருக்குத் தெரிவிப்பதற்குத் தயங்கிச் சற்று நேரம் மெளனமாகச் சூழ்ந்திருக்கிறார் கள். ஒவ்வொருவரும் மற்றவர் சொல்லட்டும் என்று எதிர்பார்த்து ஏமாந்து, ஒருவருக்கொருவர் கண்சாடை மூலம் தூண்டுகிறார்கள். இறுதியில் ஒருவர் வாய் திறந்தார்.
“என்ன பேசாமல் இருக்கிறியள்?” "ஏன் என்ன விஷயம்?” ஒன்றுமறியாதவர் போல சிவபாத சுந்தரம் கேட்கிறார். “இராமன் காத்துக் கொண்டிருக்கிறான்.” “இன்னும் அவனை நீங்கள் அனுப்பவில்லையா?” "எங்கே அனுப்புகிறது?” "திக்கம் சுடலைக்கு.” "இஞ்சை இருந்து மூண்டு மைல் தூரம்.” “அதுக்கென்ன, உந்தச் சுடலைக்குள்ளே நான் கால் வைக்க LDrt L–6öt.”
“பக்கத்திலே உள்ள பரம்பரையான சுடலையை விட்டுப்போட்டு.” “சீ. உந்தச் சுடலையிலே சுடுகிறது போல அவமானம் வேறை ஒண்டுமில்லை. உலகம் எங்களைப் பார்த்துச் சிரிக்கும்.”
"திக்கம் சுடலைக்கெண்டால் இந்த வெயிலிலே சனம் வராது, இடையிலே திரும்பிப் போய்விடும். ஆக நாலு பேரோடை பிரேதத்தைக்

ஒடுக்கப்பட்டவர்கள் 91
கொண்டு போறது உங்களுக்குப் பெரிய மரியாதைக்கேடு. நீங்கள் கொஞ்சம் பொறுத்திருங்கோ, நாங்கள் பாக்கிறம்.”
சிவபாத சுந்தரம் மேலும் பேசாதவண்ணம் முடிவு கட்டிவிட்டு வெளியே வந்து இராமனைக் கூப்பிட்டார்கள்.
“இராமா நீ விறகுகளைக் கொண்டு போய் அடுக்கு.” “எந்தச் சுடலையிலேயாக்கும்.?” “வேறை எங்கெயெடா. புதிசாக் கேள்வி கேட்கிறாய்! போடா போ. கெதியாப் போ.”
பொழுது பனை உச்சியிலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருக் கிறது. பறைகள் ஓங்காரித்து முழங்குகின்றன. சவரத் தொழிலாளி கொள்ளிக் குடத்தைத் தூக்கிக் கொண்டு நடக்கிறான். சலவைத் தொழி லாளர் இருவர் நிலபாவாடை விரிக்கிறார்கள். பிரேதந் தூக்குகின்றவர் களைச் சேர்ந்த ஒருவன் பொரி அரிசி எறிந்து கொண்டு செல்லுகிறான். இருவர் மேலாப்புப் பிடிக்கிறார்கள். அந்த மேலாப்புக்குக் கீழே பிரேதத் துக்கு முன் கொள்ளிச்சட்டியைத் தூக்கிக் கொண்டு தலை குனிந்து நடக்கிறார் சிவபாத சுந்தரம்.
பிரேத ஊர்வலம் பிரதான வீதியிலே வந்து மிதக்கிறது. சந்தியிலே திசைகாட்டி நிற்கும் கல்லின் மேல் காங்கேசன்துறை என்று சிங்களத்தில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்கள் சில வருடங்களுக்கு முன்பே தார் பூசி அழிக்கப்பட்டிருப்பது கண்டு அந்த இடத்துக்கு வருகின்ற சமயங் களிலெல்லாம் பெருமையோடு நோக்கிக் கொள்ளும் சிவபாதசுந்தரத்தின் கண்களிலும் அந்தக் கூட்டத்தின் பார்வையிலும் இன்று தமிழ் எழுத்துக் களும் தார் பூசி அழிக்கப்பட்டிருப்பது தென்படுகிறது.
அவருக்கும் - அவர்களுக்கும் ஒரே கொதிப்பு தமிழ் - தமிழர்கள் என்ற கொதிப்பு. திறந்த வெளியில் இராவாடி மரத்துக்கருகில், அநாதைப் பிணம் போல அவர் மனைவியும் இன்று. என்ற கொதிப்பு
சிவபாத சுந்தரம் குனிந்த தலை நிமிராமல் போய்க் கொண்டிருக் கிறார்.
பிரேத ஊர்வலம் மெல்ல ஊர்ந்து செல்கிறது - சாதிமான்கள் அநாகரிகமாக அம்பலத்தில் வைத்துப் பிணஞ் சுடும் அந்தச் சுடலையை நோக்கி
- மல்லிகை நவம்பர் 1978

Page 52
சன்மானம்
"சும்மா சத்தம் போடாதையுங்கோ! இதென்ன கந்தோரோ சந்தையோ!”
விறாந்தைக்கு வந்து பெரிதாகச் சத்தம் போட்டு அதிகாரம் பண்ணுகிறான் பியோன் கைலாயநாதன்.
அவன் அடக்குமொழிகளைக் கேட்டு 'கிளாக்கர்'மாரும் இன்னொரு பியோன் வேலாயுதமும் ஏ.ஜி.ஏ. வந்துவிட்டார்’ என்று தமக்குட் சொல்லி நமட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொள்ளுகிறார்கள்.
சுமார் பதினொரு மணிக்குமேல் ஆகியிருக்கும். உதவி அரசாங்க அதிபரின் கார் காரியாலய வளவுக்குள் வந்து தரிக்கிறது. காரிலிருந்து இறங்கி, அந்தக் கந்தோரின் இருதயமாக விளங்கும் தமது அறையை நோக்கி நடக்கிறார் உதவி அரசாங்க அதிபர். அவரோடு சேர்ந்து வந்திருக்கும் மூவரும் அவரைத் தொடர்ந்து அவர் பின்னால் செல்கிறார் கள். அவர்களுள் இருவர் உள்ளூர்க்காரர்கள். ஒருவன் நெதர்லாந்தி லிருந்து வந்திருப்பவன். அவனுடைய தோளிலே கமெரா ஒன்று பட்டி போட்டுத் தொங்கிக்கொண்டிருக்கிறது.
படம் எடுக்கப் போகினமோ!' ‘எங்கடை பொழுது இண்டைக்கு இஞ்சைதான்' “எடியாத்தே, உந்த வெள்ளைக்காரன்ரை உசரத்தைப் பாருங்கோ!”

ஒடுக்கப்பட்டவர்கள் 93
அங்கே கூடியிருக்கும் கிராமத்துப் பெண்கள் தமக்குள்ளே பேசிக் கொள்ளுகிறார்கள்.
காரியாலய விறாந்தைச் சுவர்களிலும், வாங்குளிலும், வாசல் மாமரத்துக்குக் கீழும் சனங்கள் நிறைந்து, கனத்த எதிர்பார்ப்பின் பிறகு திடீரென உதவி அரசாங்க அதிபரின் வருகையால் உற்சாகித்து, நெதர் லாந்து வெள்ளைக்காரன் கூடவே வந்திருப்பது கண்டு ஏமாற்றமடை கிறார்கள்.
ஐயாவைக் கந்தோருக்குள்ளே வெச்சுத்தான் படம் எடுக்கப் போகினமாக்கும்
'கோதாரியிலே போவான் விதானை எங்களுக்கு முத்திரை இல்லாமற் செய்து போட்டான்'
ஏச்சண்டு ஐயா நல்லவராம். ஏழை எளியதுகளைப் பாத்து உதவி செய்யிற மனிசனாம்
இண்டைக்கும் ஐயாவைக் காணாவிட்டால், இந்த மாசமும் அரிசி, மா, சீனி ஒண்டுமில்லை’
'வந்திருப்பவன் வெள்ளைக்காரன். அப்பிடி என்றால், விஷயம் ஏதோ முக்கியமானதாகத்தான் இருக்கும்’ என்று நினைத்துக் கொண்டு, என்றைக்கும் பாமர சனங்களை முந்திக் கொண்டு காரியாலயங்களுக் குள்ளே விட்டார்த்தியாகப் புகுந்து காரியம் பார்த்துக் கொண்டு போகும் பெரிய மனிதர்களும் இன்று தயங்கி நிற்கிறார்கள்.
"இஞ்சாருங்கோ, ஐயா ஒரு முக்கியமான விஷயமாகப் பேசிக் கொண்டிருக்கின்றார். கொஞ்சம் ஆறுதலாக சத்தம் போடாமல் இருங்கோ”
கைலாயநாதன் திரும்பவும் வெளியே வந்து எச்சரிக்கிறான். அவன் வேலையில் வந்து சேர்ந்து இரண்டு மாதங்கள் தான் ஆகின்றன. ஆனால் புதிதாக வேலைக்கு வந்திருக்கும் ஒருவனிடம் இருக்கும் தயக்கங்கள் எதுவுமே அவனிடம் இல்லாமற் போனதற்கு அவன் அந்த ஊர்க்காரனாக இருப்பது மாத்திரம் காரணமல்ல.
அவன் பல வருடங்களாக வேலை இல்லாமற் கஷ்டப்பட்ட போதும் இந்தப் பியோன் வேலை தன்னுடைய கெளரவத்துக்கு ஏற்றதல்ல என்பதே அவனுடைய தீர்மானமான நினைப்பாக மனத்தில் நிலை கொண்டிருந்தது.
பியோன் வேலை கீழ்சாதியள் செய்யிற வேலை. அவன் களுக்குத் தான் கைகட்டி நிண்டு தொண்டு துரவுகள் செய்து பழக்கம். இப்ப படிச்சாப்போலே என்ன? அவன்கள்தான் கந்தோருகளிலே நிண்டு மற்றவைக்குக் கீழே கைகட்டிச் சேவகம் செய்ய வேணும். எனக்கது சரி வராது

Page 53
94 தெணியான்
அவன் சொல்லும் நியாயத்தை அவனுடைய நண்பர்கள் ஏற்றுக் கொண்ட போதும், அவன் இன்றைக்கிருக்கும் நிலைமை உணர்ந்து அவனை உற்சாகப்படுத்தி இந்த வேலைக்கு அனுப்பி வைத்தார்கள்.
"அப்பிடி நினையாதே கையிலை முதல் நீ வேலையிலே போய்க் கொளுவு, பிறகு அந்தக் கந்தோரிலேயே ஒரு கிளாக்காக வரலாம் உன்ரை திறமைக்கு. நீ கிளாக்காக வந்தால் பிற்காலத்திலே ஏ.ஜி.ஏ. ஆகவும் வந்து விடுவாய். உனக்கு வயதுமென்ன முப்பதாகுதெல்லே!”
உதவி அரசாங்க அதிபரின் மேசை மணி கிணுகினுக்கிறது. வேலாயுதத்தை முந்திக் கொண்டு கைலாயநாதன் உள்ளே தாவு கிறான்.
அந்தக் கந்தோரில் அதிபரின் அறைக்குள்ளே பிரவேசிக்கும் தகுதி, தனக்கு மாத்திரமே உண்டென்பது அவன் எண்ணம். ஆனால் இதுவரை கந்தோர் வேலைகள் என்று எதுவுமே அவனிடம் பணிக்கப் படவில்லை. சாதாரண வீட்டு வேலைக்காரன் செய்யும் எடுபிடி வேலை களுக்கே அவனை ஏவிக்கொண்டிருக்கிறார்கள் என்ற வேதனை அவன் மனத்தைப் போட்டு நெருடிக் கொண்டிருக்கிறது.
அவன் சோடாப்போத்தல் ஒன்றைக் கையிலே எடுத்துக் கொண்டு கந்தோருக்கு வெளியே உள்ள தேநீர்க்கடையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறான்.
வேலைக்கு வந்த முதல் நாளே என்னைக் கூப்பிட்டுத் தேத் தண்ணிக்கு விட்டவர். இவருக்கு நானே தேத்தண்ணி எடுத்து வர வேணும்? இவர் பெரிய ஏ.ஜி.ஏ. எண்டாலும் என்னைவிட. சரி, சரி எல்லாம் பாப்பம்.’
அவன் திரும்பி வந்து இரண்டு 'கிளாஸ்களை கழுவி ட்ரேயிலே வைக்கிறான்.
அதிபர் அவரோடு வந்திருக்கும் நெதர்லாந்துக்காரனுக்காகத்தான் இப்போது தேநீர் தருவித்திருக்கிறார். அவனுடைய நாட்டுப் பொது தாபனம் ஒன்று வழங்கும் பலகோடி ரூபாவில் கிராமங்கள் தோறும் குழாய் மூலமாகக் குடிநீர் விநியோகிப்பதற்காகவே அதிபரோடு சேர்ந்து இடங்களைப் பார்வையிட்டுக் கொண்டு வந்திருக்கிறான். அவர்களோடு ஒன்றாக வந்து இறங்கிய இருவரும் அந்தப் பகுதியில் இயங்கும் பல கிராம அபிவிருத்திச் சங்கங்களில் சிறப்பாகச் செயற்படும் இரண்டு சங்கங்களின் செயலாளர்கள்.
"ஐயா, ஏச்சண்டையாவைப் போய்க் காணலாமே!” காத்திருந்ததில் பொறுமை இழந்துபோன கிழவி ஒருத்தி அவனிடம் வந்து, தயங்கிக் கேட்கிறாள்.
“சும்மா போ. வந்தது வரக்கு முன்னம் அவரசப்படுகிறாய்”

ஒடுக்கப்பட்டவர்கள் 95
"என்னப்பா, கிழவியிலே எரிஞ்சு விழுகிறாய், பாவமெல்லே” வேலாயுதம் கிழவிக்குப் பரிந்து கொண்டு பேசுகிறான்.
"உனக்குத் தெரியாது இந்த ஊர்ச் சனங்களைப் பற்றி நீ எங்கேயோ இருந்து வாறனி கொஞ்சம் விட்டுக் குடுத்தா தலைக்குமேலே ஏறி விடுவினம்.'
“அது சரி, நாலுபேர் உள்ளுக்கிருக்கினம். நீ இரண்டு கிளாஸ் கொண்டு வந்து வைச்சிருக்கிறாய்?”
"ஐயாவுக்கும் அந்த வெள்ளைக்காரனுக்கும் குடுத்தால் போதாதே!”
“சீ அது சரியில்லை. ஐயா ஏசுவார்” "அப்ப பொறு வாறன்’ என்று சொல்லிக் கொண்டு சென்றவன் மேலும் ஒரு கிளாஸை எடுத்து வந்து மூன்று கிளாஸ்களுக்கும் பங்கிட்டுத் தேநீரை ஊற்றிக் கொண்டு, “இப்ப சரி, இனிக் கொண்டு போய்க் குடு” என்று வேலாயுதத்தை ஏவுகிறான்.
"நீதான் கொண்டு போ. நாலுபேர் இருக்கினம், மூண்டு கிளாஸ் வைச்சிருக்கிறாய்?”
“இரண்டு ரீதானே வாங்கினனான். மூண்டுக்குத்தான் ஒரு மாதிரிச் சரிக்கட்டலாம்”
“இன்னுமொண்டு வாங்கிறதுதானே!” "அதுக்கு இப்ப என்ன செய்யிறது இரண்டை வாங்கி வந்திட்டன். இன்னுமொண்டு வாங்கிக் கொண்டு வாறதுக்கிடையிலே இது ஆறிப் போய்விடும். அப்பிடியெண்டால் திரும்பவும் மூண்டு ரீ வாங்கிக் கொண்டு வரவேணும். வாங்கி வந்தாலும் இந்த இரண்டுக்கும் ஆர் காசு குடுக்கிறது. நானே! இதைக் குடுத்து ஒரு மாதிரிச் சமாளிப்பம்”
“என்னவாயினும் செய்” “சரி, பாப்பம், நான் எப்படியும் குடுத்துச் சமாளிக்கிறனோ, இல்லையோ எண்டு பார்” சொல்லிக்கொண்டு அதிபரின் அறைவாசலுக் குச் சென்று உள்ளே எட்டிப் பார்த்த வண்ணம் அப்படியும் இப்படியுமாக இரண்டு தடவைகள் மெல்ல நடக்கிறான். பின்னர் ஏமாற்றத்தோடு சற்று நேரம் ஒதுங்கி நின்று, திரும்பவும் வாசலில் வட்டமிடுகிறான். அப்போதும் அவன் தன் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பை அங்கு உருவாக்க முடியவில்லை. மறுபடியும் வாசலுக்குச் சென்று அதிபர் உடனடியாக அவனையே தேநீரைக் கொண்டு வருமாறு சொல்லி விடுவாரோ என்ற தயக்கத்துடன் கால் தரித்து நின்று, உன்னிப்பாக உள்ளே நோக்குகிறான். சில கணத் தேய்வின் பின்னர் உள்ளே இருக் கின்றவர்களுள் யாரோ ஒருவரைக் குறிப்பாகப் பார்த்து இங்கே வா’ என்று மெல்லத் தலையசைப்பினால் அழைக்கிறான்.

Page 54
96 தெணியான்
அதிபரோடு வந்தவர்களுள் இளைஞனாக இருப்பவன் எழுந்து வெளியே வந்து “என்ன?” என்று அவனிடம் வினவுகிறான்.
“நீர் இவையளோடை தானே வந்தனீர்?" "ஓம்” "அப்ப, இந்த ரீயைக் கொண்டு போய்க் குடும்” “சீ. நீர் கொண்டு வாரும்” “இல்லை. இல்லை. நீர்தான் கொண்டு போம்” என்று சொல்லிக் கொண்டே ட்ரே'யோடு தூக்கி அவனுடைய கைகளிலே பலவந்தமாகத் திணிக்கிறான், பியோன்'
இளைஞனுக்கும் என்ன செய்வதென்று தெரியாத சங்கடமான நிலை. முகத்தைச் சுழித்துக் கொண்டு, வேண்டா வெறுப்பாகத் தேநீரை சுமந்த வண்ணம் அவன் உள்ளே நடக்கிறான்.
கைலாயநாதனுக்கு ஒரே வெற்றிப் பெருமிதம். பொங்கி வந்த ஆனந்தச் சிரிப்பை அவனால் அடக்க முடியவில்லை. வேலாயுதத்தைப் பார்த்து மெல்லக் குதித்துக் கொண்டு வயிறு வெடிக்கச் சிரித்தும், அந்த வெற்றியின் எக்களிப்பு அடங்காமல் அவனுடைய கையைப் பற்றி இழுத்துக்கொண்டு விறாந்தைக்கு வருகிறான்.
“எப்பிடி என்ரை வேலை? இரண்டு ரீ வாங்கி நாலு பேருக்குக் குடுத்திருக்கிறன். ரீ குடிக்க வேண்டியவையிலே ஒருதனையே பிடிச்சு என்ரை வேலையைச் செய்விச்சுப் போட்டன். இதுக்கெல்லாம் மூளை வேணும். உன்னால் இப்பிடிச் செய்ய முடியுமா? என்று சொல்லிப் பெருமிதத்தோடு நெஞ்சு நிமிர்த்துகிறான்.
"நீ கெட்டிக்காரன்தான்” ー」 "உனக்கொண்டு தெரியுமா? நான் வேணுமெண்டுதான் இரண்டு ரீ வாங்கி வந்தனான்’
“கந்தோர்க் காசு வீணாகச் சிலவழியக் கூடாதெண்டு மிச்சம் பிடிக்கிறாயாக்கும்!”
“உனக்கொண்டும் தெரியாது. இப்ப நான் கூப்பிட்டு ரீ குடுத் தனுப்பின ஆள் ஆரண்டு தெரியுமே?”
"ஆரப்பா அந்த அப்பாவி?” "அவரும் பெரிய ஆள்மாதிரி வந்து குந்திக் கொண்டிருக்க, நான் அவருக்கு ரீதூக்கிக் கொண்டு போய் குடுக்க வேணும்”
"ஆளை உனக்குத் தெரியும் போலே!” “அவன் என்ரை பக்கத்து ஊரவன்தான்’ "அவருக்கு உன்னைத் தெரியுமே?”

ஒடுக்கப்பட்டவர்கள் 97
“அவருக்கு என்னைத் தெரிஞ்சிருக்காது எண்டுதான் நினைக்கிறன். எனக்கு அவனை நல்லாத் தெரியும்”
"உன்னை தெரியாத அவருக்கும், உனக்கும் என்ன கோபதாபம்!”
“சீ. அப்பிடி ஒண்டுமில்லை.”
“பின்னை.?”
“அவன். அவன் நளவன், அவனுக்கு நானே ரீ கொண்டு போய்க் குடுக்கிற ஆள்”
அவன் சொல்லி வாய் மூடுவதற்கு முன், அவனுடைய வார்த்தை கள் என்ற மின்சாரத்தால் தாக்குண்ட வேலாயுதத்தின் முகம் கறுத்து, இறுகி, கண்கள் சிவந்து, சினமேறி முறுக்கெடுக்கும் கரங்களில் ஒன்று திடீரென்று அவன் சேட்டைப் பற்றி இழுக்க, வலது கரம் சிறிக் கொண்டு அவன் முகத்தில் மாறி மாறி விழுந்து தணிகிறது.
- மல்லிகை
ஜனவரி - பிப்பிரவரி 1981

Page 55
தொழும்பு
இன்னும் விடியாத கறை படிந்த கூரிருளைக் கலக்கிக் கொண்டு எழுந்த பறையொலி செவிகளில் வந்து விழுந்தபோது, சிவலையன் மனைவிக்கு நெஞ்சம் அதிர்கிறது. ஆரோ பாழ்படுவான் போய் விட்டான், இண்டைக்கும் எங்கடை குடல் சுறுளப் போகுது'
மனம் பொறுக்காது வாய் விட்டுப் புறுபுறுத்துக் கொண்டு படுக்கை யிலிருந்து எழுந்தவள், குடிசைத் தாழ்வாரத்தில் படுத்து உறங்கும் அவனைப் பார்க்கிறாள்.
சிவலையன் அங்கில்லை. அவன் எழுந்து வெளியே போய் விட்டான்.
அவருக்குப் பெரிய உத்தியோகம்.’ என்று நெஞ்சம் பொருமி, அவளைச் சூழ்ந்து குறண்டிக் கிடக்கும் அவள் பெற்றெடுத்த எட்டுப் பரட்டைகளையும் பார்த்துக் கண் கலங்குகின்றாள்.
வரப் போகின்ற இன்றைய இரவு அவள் நினைவுக்கு வந்து உடல் பதைபதைத்து துடியாகத் துடிக்கிறது.
எத்தினை அடியள்? எத்தினை உதையள்? எவ்வளவு காலத்துக் கெண்டு நான் படுகிறது! இண்டைக்கும் ஆரோ. நரகத்துக்குப் போவான், ஏன் செத்தானோ! இந்தப் பிள்ளையஞம் நானும் படுகிற ஆறணியம். நாச்சிமாராத்தை, உனக்கும் கண்ணவிஞ்சு போச்சோ!'
அவள் நெஞ்சம் நினைந்து நினைந்து நோகிறது.

ஒடுக்கப்பட்டவர்கள் 99
பகற் பொழுது மெல்ல மெல்லப் பதுங்கிப் பதுங்கி அச்சத்துடனும் ஏக்கத்துடனும் நகர்ந்து போய்விட, இரவு எட்டு மணியாயிற்று. சிவலையன் இன்னும் தன் குடிசைக்குத் திரும்பவில்லை.
பகலெல்லாம் பிள்ளைகள் அவளைப் போட்டுப் பிடுங்கித் தின்று கொண்டிருந்தார்கள்.
அம்மா பசிக்குது, பசிக்குது, பசிக்துதெணை "கொஞ்சம் பொறுங்கோணே! என்ரை குஞ்சுகளெல்லே! ஐயா இப்ப வந்திடுவர், வந்தோடனை சோறு காச்சித் தருவன்'
அவன் இன்று வெறுங்கையோடுதான் வருவான் என்பதைத் தெரிந்து கொண்டும், மணமறியப் பிள்ளைகளுக்குப் பொய் சொன்னாள்.
அவளுடைய சமாதான வார்த்தைகளால் அவர்களுடைய வயிறு நிரம்பவா போகின்றது? அவர்களுக்குப் பசிக் களைப்பு அழுதழுது சுருண்டு படுத்தவர்கள் எப்படியோ உறங்கிப் போய்விட்டார்கள்.
அவள் உயிரைக் கையில் பிடித்த வண்ணம் செவிகளைக் கூர்மை யாக்கிக் கொண்டு விழி பிதுங்கிக் கண்ணிர் வடித்துக் கிடக்கிறாள்.
குடிசைக்குள்ளே ஒரு மூலையில் ஏற்றி வைத்த குப்பிவிளக்கு பக்கு பக்கென்ற அடித்து இறுதி மூச்சை விட்டுச் செத்துக் கிடக்கிறது.
மேற்குப் புறத்திலிருந்து வழமையாக எழும் அவனுடைய குரலின் அசுமாத்தத்தை இன்னும் காணவில்லை.
நாய்கள் குரைக்கும். அதனைத் தொடர்ந்து அந்தக் கிராமமே கிடுகிடுக்கப் பாட்டொலி எழும்.
“ஆரடி கள்ளி நீ அர்த்த ராத்திரியில் புகுந்து.” "ஆதியிலும் புலையனல்ல சாதியிலும் புலையனல்ல.” என்ற அடிகள் ஒழுங்கின்றி வாய்க்கு வந்தவாறு இருளைக் கிழித்துக் கொண்டு கம்பீரமாக எழுந்து வானத்தைப் போய் மோதும். அதன் முடிவில். 'எடியேய் தெய்வி, என்னடி கண்டறியாத நித்திரையோடி உனக்கு? என்று உலுப்பிக் கொண்டு, அச்சத்தினால் உறங்காமல் கிடந்து பதுங்கும் அவளை இழுத்துப் போட்டு அடிப்பான்.
“எடியே. நான் ஆர் தெரியுமோ? உத்தியோகத்தனடி கவுண் மேந்து உத்தியாகத்தன். உங்கினை உள்ள தரவளியளெண்டு நினைச்சுப்
பாட்டாய்!”
அவள் "குய்யோ முறையோ” என்று குழறுவான். அயலில் குடி இருக்கின்றவர்கள் எவரும் அந்தக் குரல் கேட்டு ஓடி வருவதில்லை. உத்தியோகத்தன் இப்பதான் கந்தோராலை வந்திருக்கிறார்’ என்று சிரித்துக் கொண்டு திரும்பிப் படுத்து விடுவார்கள்.
அவன் ஆதாளி போட்டுத் துள்ளிக் குதித்த வண்ணம் தன் வெறி அடங்கும்வரை அவளுக்குப் போட்டு அடித்து ஓய்ந்த பின்னர் விழுந்து படுத்து விடுவான்.

Page 56
100 தெணியான்
அவனுடைய உத்தியோகத்துக்காக அன்று கிடைத்த சம்பளம் பத்து ரூபா, கள்ளோ, சாராயமாகவோ மாறி அவன் வயிற்றில் அடைக்கலம் புகுந்திருக்கும்.
அவள் வயிறும், பிள்ளைகள் வயிறும் வாய்வு நிறைந்து உருண்டு புரளும்.
அவர்கள் வயிறு என்றுமே முழுப் பட்டினியை மறந்ததில்லை. என்றாவது கால் அரை என்று விகிதாசார மறப்புத்தான் அந்த வயிறு களுக்கு வந்ததுண்டு. அத்தகைய மறப்புக்கூட அந்த வயிறுகளுக்கு வரக் கூடாது என்பதற்காகத்தான் சிவலையனுக்கு இந்த உத்தியோகப் பதவியை வழங்கிக் கெளரவித்திருக்கிறார்கள்.
இந்தப் பதவி அவனுக்கின்று கிடைத்திருப்பதே ஒரு பெரிய கதை.
O O. O.
அந்தக் கிராமம் வடமராட்சிப் பகுதியிலுள்ள மிகப் பரந்த பெரியதொரு கிராமம். யாழ்ப்பாணத்துச் சாதிகள் பல அந்தக் கிராமத் துக்குள்ளே தமக்குத் தமக்கென்றிருக்கும் பகுதிகளுக்குள் கன்னை பிரிந்து குடியிருக்கின்றன. அந்தக் கன்னைகளுக்கென சாதிக்கொரு சனசமூக நிலையம்.
மூன்று வருடங்களுக்கு முன்னர் சிவலையன் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஒருநாள் மாலை தங்கள் சனசமூக நிலையத்தில் கூடி இருந்தார்கள். அன்று அவர்களுடைய மாதாந்தக் கூட்டம். கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர் உலக நடப்புகள் பற்றி தமக்குள்ளே பேசிக் கொண்டிருந்த சமயம் அந்த நிலையத்தின் செயலாளராக இருக்கும் இளைஞன் சொன்னான்.
"எவ்வளவு கொடுமைகளெல்லாம் சாதியின் பெயரால் யாழ்ப் பாணத்து மண்ணிலே நடக்குது. நாங்கள் கைகட்டிக் கொண்டு பார்த்திருக்கிறம்”
இதென்ன புதிசே! காலங்காலமாகத்தானே நடக்குது'
“இப்ப வரவரக் கூர்மைப் படுகுது. இதை உணராமல் சாதிக் கொடுமை ஒழிஞ்சு கொண்டு போகுதெண்டு வெறும் பேய்க்கதை கதைக்கிற வெள்ளை வேட்டிக்காரர் எங்களுக்குள்ளேயும் இருக்கினம். நயினார்மாரிலேயும் இருக்கினம்.”
“எங்கே ஒழியுது? மந்துவிலிலே தென்னை மரத்திலே ஏறி இருந்த வனை மரத்தோடை தறிச்சு விழுத்திப்போட்டு, அந்தக் கோடாலியாலே வெடடிக் கொண்டாங்கள். எழுதுமட்டுவாளிலே கொலை செய்தான்கள். வீடுகளுக்கு நெருப்பு வைச்சான்கள், பள்ளிக்கூடத்துக்குப் போன

ஒடுக்கப்பட்டவர்கள் 101
பிள்ளையளின்ரை புத்தகங்களைப் பறிச்சு றோட்டிலே போட்டு நெருப்பு வைச்சான்கள். ஏன், உந்த உடுப்பிட்டியிலே என்ன நடந்தது? எங்கடை சாதியை நிருவாணமா அங்கை பொலிஸ் ஸ்ரேசனுக்கு கொண்டு போனான்களே.”
“இதுகளுக்கு நாங்கள் என்ன செய்யலாம்?” "இந்தக் கொடுமைகளை எதிர்த்து நாங்களும் சேர்ந்து நிண்டு போராட வேணும்”
“உட்சுவர் தீத்தித்தான் புறச்சுவர் தீத்த வேணும். முதல் எங்கடை கிராமத்திலே என்ன செய்வம்?”
“முதல் வேலையாக இதை ஆரம்பிப்பம். இப்ப கட்டை குத்தி சுமந்து கொண்டு போற வேலை செய்யாவிட்டாலும், வண்டிலே ஏத்திக் கொண்டு போய் பிரேதம் சுடுகிற வேலையைச் செய்யினம். அதை நிப்பாட்ட வேணும்”
“ஆர், நாலுமூண்டு கிழடுகட்டையள் தானே செய்யிதுகள். அதுகளும் போக, காலப்போக்கிலே.”
“உது பிழை. அதுகள் போக, ஆரோ பின்னாலே தொடரத்தான் போறான். இது காலத்தாலே சாகாது!”
"கட்டாயம் செய்ய வேணும். எங்கடை ஆள் எம்.பி ஆகி பாராளு மன்றத்துக்கும் போய் விட்டார். நாங்கள் இப்பவும் கட்டை குத்தி ஏத்துறதும், பிரேதம் சுடுகிறம் சரியில்லை”
பொழுது போக்காக ஆரம்பித்த உரையாடலை மிக உறுதியான ஒரு தீர்மானமாகக் கொண்டு வந்தான் அந்த நிலையச் செயலாளரான
ளைஞன்.
மறுதினம் தங்கள் சாதியைச் சேர்ந்த பிரேதம் சுடப் போகும் முதியவர்களைக் கண்டு பேசினார்கள்.
"தம்பியவை இதாலே பெரிய கரைச்சல் வரும். அவையள் சும்மா விடாயினம். நாங்கள் இன்னும் எத்தினை காலத்துக்கு இருக்கப் போறம். எங்களுக்குப் பிறகு இல்லாமல் போகும்” என்றார்கள் அந்த முதியவர்கள்.
"வாற கரைச்சலுகள் வரட்டுக்கும் பாப்பம்! இப்ப உடனே இதை நிப்பாட்டத்தான் வேணும்” என்றார்கள் இளைஞர்கள்.
“எல்லாக் குடிமக்களும் போறாங்கள், நாங்கள் எங்கடை தொண்டைக் கைவிட்டால்..?”
"நாங்கள் முதல் இந்த அடிமை வேலையைக் கைவிடுவம். பிறகு அவையளையும் விடச் செய்வம். அவையும் கைவிடுவினம்”
"நாங்கள் எல்லாச் சாதியும் எவளவு ஒற்றுமையாக இருக்கிறம் இந்த ஊரிலே. நீங்கள் சண்டையைக் கிளப்பப் போறியள் தம்பியவை!"

Page 57
102 தெணியான்
"நாங்கள் ஒற்றுமையாக இல்லை, அடிமை குடிமையாக அடங்கி ஒடுங்கி இருக்கிறம். ஒற்றுமையாக இருக்கிறதெண்டால் எங்கடை சாதியும் அவையளைப் போல சமத்துவமாக இருக்க வேணும். உங்களுக்கென்ன சம்பளமே தருகினம்?”
"இதென்ன தம்பியவையின்ரை கதை. நாங்கள் எல்லாச் சாதி யின்ரை பிரேதமும் சுடப் போறதே!”
"அதுதான் சொல்லுறம் ஒரு சாதியின்ரை பிரேதமும் சுடப் போகக் கூடாது போகவும் விட மாட்டம்”
இளைஞர்களின் கண்டிப்பான வற்புறுத்தலுக்கு அடங்கி முதியவர் கள் பிரேதம் சுடுவதற்கு இனிமேல் போவதில்லை என்று தீர்மானித்த சமயத்தில், பெரிய உடையா வளவு சிதம்பரப்பிள்ளையற்ரை தாய் தங்கமணி நாச்சியார் காலமானார்.
சிதம்பரப்பிள்ளையர் கட்டை குத்தி ஏற்றிக் கொண்டுபோய் பிரேதம் சுடுகின்றவர்களுக்குக் காலையிலேயே ஆளனுப்பினார்.
இளைஞர்கள் மிக விழிப்பாகச் செயற்பட்டார்கள். குடிமைத் தொண்டு செய்வதற்கு மட்டுமல்ல, செத்த வீட்டுக்குப் போவதற்கும் முதியவர்களை விடாது தடுத்துவிட்டனர்.
கட்டை குற்றிகள் ரக்டரில் சுடலைக்கு ஏற்றி இறக்கப்பட்டன. சமூகச் சீர்சிறப்புக்ளுடன் தங்கமணி நாச்சியாரின் பிரேதம் சுடலைக்கு வந்து கட்டையிலும் ஏறிவிட்டது. ‘இனிமேல் சுடலையிலே நிண்டு பிரேதத்தைச் சுடுகிறது ஆர்? என்ற கேள்வி உறுத்தியபோது, ஆண்ட பரம்பரையினரின் உள்ளம் கொதித்தது.
"எழிய சாதியள். அவன்களுக்கு இப்ப திமிர். பாப்பம், பாப்பம். இப்பென்ன செய்யிறது!”
"அப்ப, பறையடிச்சுக் கொண்டு வந்த பொடியனைக் கேட்பம்” "மோனை கறுத்தான் இஞ்சை வா, மாணிக்கனுக்கும் மயிலனுக் கும் ஏதோ சுகமில்லையாம். அவன்கள் வரவில்லை. நீங்கள் நிண்டு இந்தப் பிரேதத்தைச் சுட்டுப் போட்டுப் போங்கோவன். பிரேதம் சுடுகிறது முந்தி உங்கடை வேலைதானே!”
"நம்மாணை ஏலாது. இந்த வெய்யிலிலே மேளம் அடிச்சுக் கொண்டு வந்ததிலே நல்லாக் களைச்சுப் போனம் எங்களுக்கு உதிப்ப சுடுகிறது எப்படியெண்டும் தெரியாது. அரிச்சந்திர மகாராசா சுட வெளிக்கிட்டாப்போல நாங்கள் கைவிட்டிட்டம்”
'தம்பி கிட்டிணர், இஞ்சை வா தம்பி இண்டைக்கு அவையள் வரயில்லை, போகட்டும். இண்டையிற் காரியம் முடியட்டும், அவன் களைப் பாப்பம். இது நீங்கள் தூக்கிக் கொண்டு வந்த பிரேதம். நீங்கள் நாங்களும் வேறையே, நாங்களும் நிக்கிறம். நீங்களும் நில்லுங்கோ இதைச் சுட்டுப்போட்டுப் போவம்”

ஒடுக்கப்பட்டவர்கள் O3
"நாங்களும் நீங்களும் வேறையே” என்ற வார்த்தைகளில் கிட்டிணனும் அவனைச் சேர்ந்தவர்களும் குளிர்ந்து போனார்கள். அந்தக் குளிர்ச்சியில் திளைத்துப் போன அவர்களிடம் பிரேதத்தைச் சுடுகிற பொறுப்பை ஒப்படைத்துவிட்டு மெல்ல நழுவிப் போய்விட்டார்கள்.
தங்கமணி நாச்சியாரின் சடலம் எரிந்து சாம்பலாகாமல் போய் விடவில்லை. அந்தத் தீ அணைந்து போய்விட்ட போதும், சிதம்பரப் பிள்ளையரின் உள்ளம் பற்றி எரிந்து கொண்டுதான் இருந்தது.
"இந்தப் பயல்களை இந்தக் காலத்திலே மோட்டுத்தனமாக நேருக்கு நேரே எதிர்க்கக் கூடாது. நான் இங்கிலீசுக்காறனிட்டைப் படிச்சவன். உத்தியோகம் பார்த்தவன். இவன்களே என்னை மிஞ்சகிறது! அடிமைத் தொழில் செய்விக்கிறனோ, இல்லையோ பாப்பம்!” என்று கறுவிக்கொண்டு பலமாகச் சிந்தித்தவர், அவரைச் சேர்ந்த சிலரையும் கூட்டி ஆலோசித்து இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தார்.
அந்த முடிவின் பெறுபேறாக மறுநாள் அந்தக் கிராமத்தின் பிரதான இடங்களில் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவராகிய அவருடைய கைச்சாத்துடன் ஓர் அறிவித்தல் ஒட்டப்பட்டது.
‘ஆலங்குளம் சுடலைக் காவற்காரனுக்கான பதவி வெற்றிடம் - விண்ணப்பம் கோருதல்.’
இதுவரை காலமும் இல்லாத புதுமையான ஒரு பதவி புதுமை யான விண்ணப்பம் கோருதல்.
இந்த அறிவித்தலைக் கண்டு எவராவது விண்ணப்பிப்பார் களென்று சிதம்பரப்பிள்ளையர் எதிர்பார்த்திருக்கவில்லை. தனது திட்டத்தை நிறை வேற்றுவதற்குப் பொருத்தமானவன் யாரென்றுதான் இரண்டொரு தினங்கள் சிந்தித்தார்.
இறுதியில் சிவலையினுடைய நினைவு வந்தது. அவன் ஆத்திரம் அந்தரத்துக்கு அவரிடந்தான் வந்து, ஐஞ்சு பத்துக் கைமாற்றாக வாங்கும் வழக்கமுள்ளவன். அவனுக்கு நல்ல திடகாத்திரமான உடல் தன்னுடைய பகுதியாரை எதிர்த்து நிற்கக்கூடிய துணிச்சலுள்ளவன்.
ஒரு தினம் ஆள் அனுப்பி அவனைக் கூப்பிட்டார். “சிவலை. ஊருக்குள்ளே ஒட்டியிருக்கிற அறிவித்தலை நீ பாக்க வில்லையே?”
“என்ன அறிவித்தலாக்கும்?” “உத்தியோக அறிவித்தல். சுடலைக்குக் காவல்காரன் தேவை யாம். அரசாங்கம் எங்கடை சங்கத்துக்கு சம்பளம் அனுப்பும். நாங்கள் அதைக் குடுப்பம்”
“எந்தநாளும் போய்க் காவல் இருக்க வேணுமே நயினார்?” "இதென்ன கதை? வெறும் சுடலைக்கு ஏன் காவல்? பிரேதம் வாற நேரம் அதிலே போய் நிண்டு பாக்கிறதைப் பாத்தால் போதும். மற்ற

Page 58
104 தெணியான்
நாட்களிலே தன்ரை தொழிலைச் செய்யலாம். தன்ரை தொழிலும் தொழிலாச்சு அரசாங்கச் சம்பளமும் ஒரு பக்கத்தாலே வரும். இஞ்சை கன விண்ணப்பங்கள் என்கு வந்திருக்குது. நீ கஷ்டப்படுகிறனி உனக்கும் கூப்பிட்டு ஒரு சொல்லுச் சொல்ல வேணுமெண்டுதான் கூப்பிட்டனான்’
"அப்ப என்ரை பேரையும் பதியுங்கோவன் நயினார் "சரி. சரி. இந்தா விண்ணப்பம். இதிலே ஒரு கையெழுத்து வை. எட. நீ கையழுத்துப் போட மாட்டியே! இந்தா பெருவிரலிலே மை பூசி இதிலே கை அடையாளம் வை” என்று கூறி அவனிடம் கை அடையாளத்தைப் பெற்றுக் கொண்டு, குறித்த ஒரு தினத்தில் கிராம அபிவிருத்திச் சங்கத்துக்கு அவனை வருமாறு சொல்லி அனுப்பினார்.
அந்தத் தினத்தில் சிவலையன் கிராம அபிவிருத்திச் சங்க நிலையத்துக்குப் போனான். சிதம்பரப்பிள்ளையரும் அவரைச் சார்ந்த இன்னும் நான்கு பேர்களும் அங்கு கூடி இருந்தார்கள். அவர்கள் எல்லோரும் அந்தப் பகுதியின் பெரிய தலைகள்.
"வா சிவலை வா, ஒவ்வொரு ஒவ்வொருத்தராக வந்து போய் விட்டினம், கடைசியாக உன்னைத்தான் காத்திருக்கிறம். உங்கடை மயிலன், மாணிக்கன், பொன்னன் வந்துவிட்டுப் போய் விட்டான்கள். நாங்கள் அவை இவை எண்டு பாக்கேலாது. தகுதியான ஆளுக்குத்தான் குடுக்க வேணும்”
‘எங்களுக்கு நீதான் சரியான ஆளாகப் படுகுது. சும்மாவே, அரசாங்கச் சம்பளத்தைக் கண்ணை மூடிக்கொண்டு குடுக்கலாமே!’
"இந்த உத்தியோகத்துக்குப் பென்சன் இல்லை” "பென்சன் இல்லையெண்டால் நயினார்” "பென்சன்தான் இல்லை. பிறவுடன் பண்ட் எண்டு ஒரு காசிருக்கு. உனக்கு அறுபத்தைஞ்சு வயதானதும் அந்தக் காசு கிடைக்கும். மொத்த மாக ஒரு பதினையாயிரம் வரும், சரிதானே"
!'
“சரியாக்கும்” "உங்கடை பகுதிப் பொடியள் ஏதும் பொறாமையிலே கதைப் பாங்கள். உன்னையும் குழப்பிவிடப் பாப்பாங்கள்”
“அவை என்னை மயிர் புடுங்கேலாது” "அதுதானே. நீ இதிலே ஒரு கை அடையாளம் வைச்சுவிட்டுப் போ”
சிவலையன் பெருமிதத்துடன் திரும்பி தலை நிமிர்ந்து நடந்தான். தெய்வானைக்கு உந்த உத்தியோகத்தில் அவ்வளவாக நம்பிக்கையில்லை. அவர்களுடைய இளைஞர்கள் பலர் சிவலையனை யும் அவளையும் கண்டு, அவன் ஏமாற்றப்படுவதைப் பலதடவைகள்

ஒடுக்கப்பட்டவர்கள் 105
எடுத்துச் சொல்லி விட்டார்கள். அவர்கள் வார்த்தைகளை எல்லாம் சிவலையன் நம்பவில்லை.
சுடலைக்குப் பிரேதம் வருகிறது என்றால் சிவலையன் தன் உத்தி யோகத்தைக் கவனிக்கத் தயாராக நிற்பான். கட்டை குற்றிகளை ஒழுங் காக அடுக்கி வைத்து, கொள்ளி வைத்துவிட்டு, வந்தவர்கள் திரும்பிச் சென்ற பின்னர், அவர்கள் வாங்கிக் கொடுத்து விட்டுப் போகும் ஒரு குடம் கள்ளையும் குடித்து, பிணத்தையும் சுட்டு முடிப்பான். அன்றைய கூலி பத்து ரூபாவை சிதம்பரப்பிள்ளையர் பிரேதத்துக்கு உரியவர் களிடம் இரகசியமாக வாங்கி அவன் கையில் கொடுத்து விட்டுப் போவார். மறுநாள் காலையில் அவர் வீட்டுக்குச் சென்று அவர் காட்டுகின்ற இடத்தில் அவன் கை அடையாளம் இடவேண்டும்.
ஒருநாள் உயர்சாதி அல்லாதவர் பகுதியிலிருந்து பிரேதம் ஒன்று வந்தபோது சிவலையன் தன் உத்தியோகப் பதவியை வகிப்பதற்குத் தயாராக நின்றான்.
அதனை அவதானித்த சிதம்பரப்பிள்ளையர், கண்ணால் சாடை காட்டி அவனை அங்கிருந்து அனுப்பி விட்டார். அன்று மாலை அவரைத் தேடிக் கொண்டு அவன் போன சமயம், அவர் அவனைப் பார்த்துக் கூறினார்.
'சிவலை. நீ பாக்கிறது உத்தியோகந்தான். எண்டாலும் கண்டவன் நின்டவன்ரை பிரேதம் எரியையிக்கே நீ அதிலை நிக்கிறது உனக்கு மதிப்பில்லை’
அதன் பிறகு உயர் சாதிப் பகுதியிலிருந்து பிரேதம் வந்தால் மாத்திரம் அவன் சுடலைக்குப் போவான். அவனுக்கென்ன உத் யோகம்! பதினையாயிரம் கிடைத்தால் போதும்.
இன்று இன்னும் அவன் வீட்டுக்குத் திரும்பி வரவில்லை. காலை யில் அவன் எழுந்து போனதுகூட அவளுக்குத் தெரியாது. அவனுடைய நிந்தாட்சணைகளுக்குப் பயந்து நடுங்கிக் கொண்டு கிடந்த அவள், இப்போது அவனைக் காணவில்லையே என்று ஏங்கித் துடிக்க ஆரம்பித்து விட்டாள்.
பாவம். வெறி கொஞ்சங் கூடினால்தான் இந்த அட்டாதுப்டியள் எல்லாம். எப்போதும் போலே கூலித் தொழிலுக்குப் போய் வந்தால், ஒரு போத்தில் கள்ளுக்கு மட்டும் எடுத்துக் கொண்டு மிச்சக் காசை என்ரை கையிலே தந்துவிடும். பிள்ளைகள் பட்டினி கிடக்கிறதெண்டால் தாங்க மாட்டுது. இந்த உத்தியோகத்துக்குப் போய் அவன்கள் வாத்து விடுகிற கள்ளைக் குடிச்சதெண்டா. என்று அவள் எண்ணிக் கொண்டி ருக்கிற சமயம் "தெய்வானை, தெய்வானை” என்ற இதமான மெலிந்த குரல் எழுகிறது.
அவளுக்குத் தன் காதுகளை நம்ப முடியவில்லை. பரபரப்போடு

Page 59
106 தெணியான்
எழுந்து நெருப்புப் பெட்டியைக் கையில் எடுத்து விளக்கைத் திரும்பவும் ஏற்றுகிறாள்.
சிவலையன் அரையில் கட்டி இருக்கும் ஈர வேட்டியை அவிழ்த்து அவள் கையிலே கொடுத்துக் கொண்டு, "அந்தச் சாரத்தை எடுத்துத் தா” என்கிறான்.
அவன் உடுப்பு மாற்றி முடிப்பதற்கு முன் திரும்பவும் விளக்கு அணைந்து விட்டது.
“பிள்ளையஸ் ஏதும் திண்டுதுகளே?”
“இல்லை”
"உதிலே ஒருக்கால் போட்டு வாறன். நீ அடுப்பை மூட்டு”
சிவலையன் சிதம்பரப்பிள்ளையர் வீட்டுக்கு விரைவாக நடந்து வந்து, அவர் வீட்டுப் படலையில் நின்று உள்ளே பார்த்து மெல்ல
éé
ஐயா. ஐயா.” “ஆரது” அதிகாரமான குரல் உள்ளே இருந்து எழுகிறது "அது நான் நயினார்” "நீதான் நயினார், ஆரெண்டு சொல்லு" உள்ளே இருந்து வருகின்ற குரலில் சினம் சற்றுத் தடிக்கிறது.
"அது நான், சிவலையனாக்கும்” “அட நீயே! வா. வா. என்ன சங்கதி இந்த நேரத்திலே?” சிவலையன் படலையைத் திறந்து கொண்டு முற்றத்துக்கு வரு கிறான்.
"ஐயாவை இண்டைக்குச் சுடலைப் பக்கம் காணயிலலை?” "ஆர் நானோ, அவன் வீட்டு முத்தம் மிதிப்பனே! செத்த வீட்டுக்கு வருவனே! அவன்ரை வாழ்வும் வேண்டாம் தாழ்வும் வேண்டாம். அவன் கள் உன்னையும் இண்டைக்குக் கவனிக்கையில்லை போல கிடக்குது. அதுதான் நீ இண்டைக்கு குறாவிப் போய் நிக்கிறாய். இல்லையெண் டால். அது போகட்டும் நீ ஏன் இப்ப வந்தனி?”
“என்ரை சம்பளம்?” “என்ன சம்பளம்” “இண்டைக்குரிய சுடலைக் காவல் சம்பளம்?” "அது அவன்களெல்லோ தர வேணும். அவன் வீட்டுப் பிணத்தைச் சுட்டுப்போட்டு என்னட்டை வந்து காசுக்கு நிக்கிறாய்!”
அவர் உள்ளத்தில் குமுறிக் கொண்டிருந்த பகைமைச் சினத் தினால் எதைப் பேசுகின்றேன் என்பதை உணராமல் வாய்க்கு வந்தவாறு பொரிந்து தள்ளினார்.

ஒடுக்கப்பட்டவர்கள் O7
அந்த வார்த்தைகள் அவன் செவியில் விழுந்து சிந்தையில் உறைத்த போது அவன் திகைத்தான். சில கணங்க்ள் உறைந்து போய் மரமாக நின்றவன், கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையுமே புரிந்து கொண்டான்.
“என்னை ஏமாத்திப் போட்டான்கள். பிறவுடண் பண்டு எண்டு சொன்னான்கள். பதினையாயிரம் எண்டான்கள். உத்தியோகம் எண்டான் கள். எல்லாம் சுத்தப் பொய்”
அவன் தனக்குள்ளே ஒரு முடிவுக்கு வந்தவனாக, "சரி நான் வாறன்” என்று வெளியே போவதற்குத் திரும்பினான்.
திடீரென்று அவனுடைய மாற்றத்தை அவதானித்தபோதுதான், சிதம்பரப் பிள்ளையர் தான் செய்த தவறை உணர்ந்தார். “என்ன சிவலையன் பேசாமல் போறாய்?” “இனிமேல் என்ன கதை?” “என்ன ஒரு மாதிரிக் கதைக்கிறாய்?” “என்ன மாதிரித் தெரியுது? இவ்வளவு காலமாக என்னை ஏமாத்தினது போதும், இனிமேலும் நான் ஏமாற மாட்டன்’
“என்னடா கனக்கக் கதைக்கிறாய்” "ஓய். கொஞ்சம் அளந்து பேசும்” “என்னடா சொன்னனி” என்று துள்ளி எழும்பினார் சிதம்பரப் பிள்ளையர்.
அவருடைய குரல் கேட்டு உள்ளே இருந்தவர்கள் எல்லோரும் முற்றத்துக்கு ஓடி வந்தனர். சிதம்பரப்பிள்ளையர் வீட்டுக்குப் பின்புறமாக ஒடிச் சென்று உலக்கை ஒன்றைக் கையிலே தூக்கிக் கொண்டுபஅவனை நோக்கிப் பாய்ந்து வந்தார்.
சிவலையன் நிதானமாக மடிக்குள்ளே கையை வைத்து கத்தியை வெளியே எடுத்து விரித்தான்.
"எவனாவது கிட்ட நெருங்கினால் குடல் எடுத்துப் போடுவன். எங்களிலே வண்டில் விடுகிறியள். ஏமாத்துறியள். நான் இவ்வளவு காலமும் உங்களாலே தனியன். இனிமேல் தனிச்சவனில்லை. எங்கடை பொடியளோடை சேர்ந்து நிக்கப் போறன். மயிரைப் புடுங்குகில் புடுங்கிப் பாருங்கடா” என்று சவால் விட்டுக் கொண்டு நெஞ்சு நிமிர்த்திய வண்ணம் அவன் வெளியே நடந்தான்.
- மல்லிகை ஆண்டு மலர் ஆகஸ்ட் 1982

Page 60
வாத்தியார்தான் செத்துப்போனார்
SQLDITம் அவர் செத்துப்போனார். எல்லோரையும் போலத் தானும் என்றோவொரு நாள் செத்துப் போவேன் என்றெண்ணி வாத்தியார் வாழ்ந்த காலத்தில் ஒரு போதும் பேசிக்கொண்டதில்லை. யாராவது நாலு பேர் கிடைத்துவிட்டால் போதும். நான் சாக மாட்டேன்’ என்றுதான் மது மயக்கத்தோடு அவர் தன் பிரசங்கத்துக்கு முத்தாய்ப்பு வைப்பது வழக்கம்.
தான் ஒரு புரட்சி வீரன் என்ற எண்ணம் ஒன்றே எப்போதும் அவர் மனத்தல் இருந்து வந்த ஒரு நினைப்பு அந்தப் புரட்சியின் துருவ நட்சத்திரமாக மகாகவி பாரதியைத் தன் மனத்தில் பிரேமித்து வரிந்து கொண்டார். ஐயோ, எனக்கும் ஒரு பூணுால் இல்லாமற் போச்சே! பாரதி யைப் போலே அறுத்தெறிஞ்சு காட்டி இருப்பன், இந்த உலகத்துக்கு என்று சமயம் வாய்த்த போதெல்லாம் அவர் நினைத்து மனம் உளைந்த துண்டு.
பாரதி இன்னும் வாழ்வது போல இந்த உலகமுள்ளவரை தானும் வாழ்வேன் என்ற உறுதியான நினைப்பில், பல வேடிக்கை மனிதர்கள் போலே, நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? எனப் பாரதியின் கவிதை வரிகளைத் தனது இலட்சியக் கனவாக அவர் அடிக்கடி சொல்லிக் கொள்ளும்போது நான்’ என்ற வார்த்தைக்கு விசேஷ அழுத்தங் கொடுக்கத் தவற மாட்டார்.
பாரதியைத் தன்னோடு இணைத்து தான் ஒரு புரட்சிகரமான மனிதன் என்ற அவர் சொல்லிக் கொள்வதற்கான காரணம் ஒன்று அவருக்கு இல்லாமற் போய்விடவில்லை.

ஒடுக்கப்பட்டவர்கள் 109
வாத்தியாரும் அவருடைய வாலிபப் பருவத்தில் அவர் உள்ளத் தைக் கவர்ந்த கன்னியொருத்தியின் காதலிற் கட்டுண்டு கிடந்தார். கருங்காலியிற் கடைந்தெடுத்தது போன்ற அவளுடைய கட்டுடலில் மயங்கி தன்னை இழந்து, அவளை எப்படியும் அடைந்துவிட வேண்டு மென்ற வெறியுடன் அவள் பின்னே அலைந்து திரிந்தார். அவளுடைய கடைக்கண் மின்னல் வெட்டுக்காக ஏங்கி, அவள் குடியிருந்த குச் சொழுங்கைக்குள் சயிக்கிள் விட்டுத் திரிந்தார். இறுதியில் அவளை ஒருவாறு வசக்கி, அவர் தன் எண்ணத்தை வெளியிட்ட போது, அவள் அதைக் கேட்டுத் திகைத்துப் போனாள்,
"ஐயோ! ஐயா, இதென்ன கதை நீங்களார்?நானார்?”
“அஞ்சுகம். உதெல்லாம் அந்தக் காலம், இப்ப எல்லாரும் ஒண்டுதான்”
"ஐயா, எங்களைக் குடியிருக்கவும் விடாயினம்”
“அஞ்சுகம் என்னை ஒருதரும் அசைக்கேலாது! நான் அடைந்தால் உன்னைத்தான் அடைவன். இல்லையெண்டால்.”
“எனக்கேதோ பயமாக் கிடக்கு.”
"நீ ஒண்டுக்கும் பயப்பிடாதே! என்ன!”
வாத்தியாரின் காதல் கிணற்றடியிலும், தெருவிலும், படலை யிலும், வளர்ந்து வந்து, பல மாதங்கள் கழிந்த பிறகும் இப்படியே நினைவுச் சுகத்தை அனுபவித்துக்கொண்டு சதா அவள் எண்ணத்தைச் சுமந்த வண்ணம் திரிந்தால் இதயமே வெடித்துவிடும் போல அவருக்குத் தோன்ற ஆரம்பித்தது. அந்தச் சுமையை எப்படியும் இறக்கிவிட வேண்டு மென்ற அவதியான அந்தரிப்பில் அவளிடம் வந்து ஒரு தினம் தன் அவாவைத் தயங்கித் தயங்கி மெல்ல வெளியிட்டார்.
“அஞ்சுகம்.”
“சொல்லுங்கோ!”
“அஞ்சுகம். இரவைக்கு வரட்டே?”
“என்ன, அஞ்சுகம் பேசிறாயில்லை!" “என்ன பேசிறது! நீங்க கேக்கிறது சரியே!”
“இதுக்காகத்தான் நீங்கள்?” “அஞ்சுகம் அழாதே! நீ அப்பிடி என்னைப் பிழையா நினையாதே! என்ரை உயிராக உன்னை நினக்கிறன்”
“என்னை உங்களோடை கூட்டிட்டுப் போங்கோ அதுக்குப் பிறகு தான் எல்லாம்”

Page 61
110 தெணியான்
வாத்தியாருக்கு அவர் ஆவல் நிறைவேறாதது பெருத்த ஏமாற்ற மாக இருந்த போதிலும் அவளைப் பற்றி மிகவுயர்வான எண்ணமே நெஞ்சில் நிலைத்தது. ஆனால் அநுபவிக்க வேண்டுமென்னும் இச்சை நிறைவேறாமல் அது உள்ளத்தில் மூண்டெரியும் தீயாகி அவரைப் பொசுக்கிக் கொண்டிருந்தது.
அந்தத் தீயைத் தணிப்பதற்கு ஒரே வழி, அவளைத் தன்னோடு இணைத்துக் கொள்வதுதான் என்ற தீர்மானத்துக்கு அவர் வந்தார். அதன் பிறகு தன் மனத்தில் இருக்கும் எண்ணத்தை நண்பர்களுக் கெல்லாம் சீர்திருத்த மனப்பாங்கில் சொல்லிக் கொள்ள ஆரம்பித்தார்.
அந்தச் செய்தி வன்செயல் வதந்திகள் போல அந்தக் கிராம மெங்கும் பரவி அவர் தந்தையின் செவிக்கும் நஞ்சாக எட்டியது.
அவர் தந்தை, அவருடைய பருவ வேட்டையை ஏலவே அறிந்து தான் இருந்தார். "அந்தச் சாதிக்குள்ளே நாங்கள் வைப்பாட்டியை வைச்சிருக்கின்றது ஒண்டும் புதிசில்லை. கிளி போலே பெண்டாட்டி இருந்தாலும் குரங்கு போலாவது ஒரு வைப்பாடிச்சியை வைச்சிருக்கத் தான் வேணும்” என்று தனக்குத்தானே சமாதானம் பண்ணிக் கொண்டு கண்டுங் காணாமல் இதுவரை இருந்து வந்தார்.
வாத்தியார் அவளைத் தன் மனைவி ஆக்கிக் கொள்ளப் போகி றேன் என்று சொல்ல ஆரம்பித்த பிறகு அவர் தன் கண்களை மூடிப் பொறுத்துக் கொண்டிருப்பாரா?
“மோனை அந்த எண்ணத்தை விட்டுவிடு” "நான் அவளைத்தான் கட்டுவன்’ “உதென்ன கதை! நீ ஆர்? அவள் ஆர்?” “இந்தக் காலத்திலும்.” "என்னடா இந்தக் காலமெண்டு புசிசா இழுக்கிறாய்? மாப்பாண முதலி பரம்பரையிலே வந்தவன்ரா நீ நான் நாளைக்கு விழுந்து செத்தால் கித்தால் என்ரை பிரேதத்தைத் தூக்கிற சிறைக்குட்டி சின்னட்டி யன்ரை மோளே எனக்கு மருமோள் குடியிருக்க ஒரு குளி நிலம் இல்லாத சாதி அவன் குடியிருக்கிற நிலம் ஆற்றை எண்டு நினைக்கிறாய் என்ரையடா!”
“உங்கடை மருமேஸ் சுன்னாகத்திலே ஆரைக் கட்டியிருக்கிறாள்?” "அது வேறை சங்கதி. அவன் பொடியன் இடியாறோவா இருக்கிறான்”
"உத்தியோகம் வந்திட்டால் சாதி எல்லாம் மறைஞ்சு போகு LDIT digilb"
“எடே. இது ஊரிலே உலகத்திலே நடவாத சங்கதியில்லை. சேத்தைக் கண்டடத்த மிதிச்சு, தண்ணி கண்டடத்திலே கழுவிப் போட்டுப்

ஒடுக்கப்பட்டவர்கள் 111
போறதுதான்ரா ஆம்பிளையின்ரை குணம். நீ அவளைக் கைவிட வேணு மெண்டு நான் சொல்லையில்லை, ஆனால் அவளைக் கட்டப் போறன் எண்ட கதை மட்டும் கதையாதே! முன்பின் யோசியாமல் நடந்தியோ ஒரு குளி நிலங்கூட உனக்குத் தர மாட்டன். எல்லாம் கோயிலுக்குத் தரும சாதனம் எழுதிப் போடுவன். சின்னட்டியான்ரை குடும்பத்தை வீட்டோடை நெருப்பு வைச்சுக் கொளுத்துவன்”
மகனை எச்சரித்ததுடன் அவர் சமாதானப்பட்டு இருந்து விட வில்லை. ஒரு தினம் சிறைக்குட்டி சின்னட்டியன் மகள் அஞ்சுகத்தைத் தேடிக் கொண்டு போனார்.
“எடியே. இஞ்சை வா”
“என்னவாக்கும்.!”
"நீதானே சின்னட்டியன்ரை மோள்?”
"ஒமாக்கும்”
“நீ நல்ல வடிவாத்தான்ரி இருக்கிறாய். நீ என்ரை மோனைப் பிடிச்சுப் போட்டாய் எண்டு கேள்வி என்னவாயினும் செய்யுங்கோ. ஆனால் அவனைக் கட்டிற எண்ணத்தை மட்டும் விட்டிடு. அப்படியேதும் நடந்துதோ உன்ரை குடும்பத்தையே சாம்பலாக்கிப் போடுவன், விளங்குதோ..?”
"ஒமாக்கும்.”
“என்னடி நடுங்கிறாய்! உன்னோடை தனியக் கதைக்க வேணு மென்டதுக் காகத்தான் பொதுவிலே வைத்துச் சொல்லுறன். கொப்பன் சின்னட்டியனையும் கண்டு சொல்ல வேணுமோ?”
“வேண்டாமாக்கும்”
"நான் உன்னைக் கண்டு பேசினனான் எண்டு மாத்திரம் என்ரை பொடியனிட்டைச் சொல்லக் கூடாது. அவனோடை நீ ஏன் கோவிக் கிறாய். ஒரு மாதிரி ஒத்துப் போ, விளங்குதே! கனக்கேன் சொல்லுவான், கடலிலே எத்தினையோ கப்பலெல்லாம் போகுது, போன பாதை யெல்லாம் தெரியுதே!”
“என்ன புதுப் பொம்பிளை மாதிரித் தலையைக் குனியிறாய்! நாங்கள் கிள்ளிப் போட்ட எஞ்சிலைத் திண்டு வாழுற சாதி, எங்களோடை சம்பந்தம் வைக்கத் துணிஞ்சிட்டியள், எல்லாம் கலிகாலம். அவன்ரை உடம்பிலே ஒடுறது மாப்பாண முதலி பரம்பரையிலே வந்த இரத்தம்.”
அவளைக் கண்டித்து வைத்துவிட்டுப் புறப்பட்டுப் போன அவர், சிறைக் குட்டி சின்னட்டியனையும் பிறகு காணத் தவறவில்லை.

Page 62
112 தெணியான்
அவர் கொடுத்த ஆலோசனையும் ஒத்தாசையுந்தான் கிட்டிணனை ஒரு மாத காலத்தில் அஞ்சுக்தின் கணவனாகக் கொண்டு வந்து சேர்த்தது.
வாத்தியார் அதன் பிறகு தான் "சாதி என்ன. சமயமென்ன.” என்று பேச ஆரம்பித்தார். அவருடைய அந்தக் குரலுக்கு ஒரு வரவேற்பு இருப்பது கண்டு, அந்தக் குரல் மேலும் தீவிரமாக ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது.
"நான் அவளைத்தான் கட்டியிருப்பேன். அவளுடைய குடும்பத்தைச் சாதி வெறி பிடித்த இந்தக் கொடியவர்கள் அழித்துப் போடுவார்கள் என்ற காரணத்தால்தான் நான் அதைச் செய்யாமல் விட்டேன்” என்று ஆரம்ப காலத்தில் அவர் வசனம் பேசிக் கொண்டு திரிந்தார்.
“அவளின் பிரிவுத் துயரை மறப்பதற்காகவே நான் மதுவின் மடியில் புரளுகின்றேன்” என்று சொல்லிக் கொண்டு குடிப்பதற்கு ஆரம்பித்தவர், கள்ளுக் குடிக்கப் போகும் வீடுகளில் எல்லாம், கள்ளுக்கு இதமாகக் கறியும் வாங்கிச் சுவைக்கலானார்.
மதுவின் போதை மண்டையைப் போட்டுக் குடைய ஆரம்பித்துவிட்டால், கட்டிய மனைவியிடமே அஞ்சுகத்தின் அழகலங்காரங்களை எல்லாம் வார்த்தைக்கு வார்த்தை வர்ணிக்கத் தொடங்கி விடுவார்.
“அவளா. ஆ. ஆ. தெய்வச் சிலை அம்மன் சிலை. சிற்பி செதுக்காத பொற்சிலை! அகன்று நீண்ட அந்த கண்கள் என் நெஞ்சை இரண்டாக வெட்டிப் பிளக்கிறதே!”
வாத்தியாரின் இந்த வர்ணனைகளால் அவருக்கும் அவர் மனைவிக்கும் இடையிடையே சச்சரவுகள் தோன்றி, மது மயக்கம் தீர்ந்ததும் தானாக அது ஒய்ந்து போவதுண்டு.
வாத்தியார் எப்படியோ தன் வார்த்தை ஜாலங்களால் அந்தக் கிராமத்தில் ஒரு புரட்சிக்காரன் என்ற நல்ல பெயரைச் சம்பாதித்துக் கொண்டார். அதனால் தான் "நான் சாக மாட்டேன்” என்று எப்பொழுதும் அவர் பெருமையாகச் சொல்லிக் கொண்டே வாழ்ந்தார்.
அவர்தான் இன்று செத்துப்போனார். அவருடைய சாவு, அந்தக் கிராமத்தில் இதுவரை சம்பவித்தவை போன்ற சாதாரணச் சாவா? அந்தக் கிராமமே அவரது மரணச் சடங்கில் ஒன்று கூடி, துக்கம் கொண்டாடி அழுது வடித்துக் கொண்டிருக்கிறது.
அவருடைய அடிமை குடிமைகளென்ற சிறைக்குட்டிகள் எல்லோரும் அங்கு வந்து நின்று, அவர்கள் அவர்களுக்குரிய வரிசை தவறாமல், தங்கள் தங்கள் குடிமைக்குரிய பணிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஒடுக்கப்பட்டவர்கள் 3
குருக்கள் வந்து வாத்தியாருக்குச் செய்ய வேண்டிய மரணக் கிரிகை களை முடித்துக் கொண்டு, தனது மேலாண்மைக் குடிமையை நிலை நாட்டிய வண்ணம் புறப்பட்டுச் செல்கிறார்.
இனிமேல் வாத்தியாரைப் பாடையில் தூக்கி வைக்க வேண்டிய நேரம், தூக்க வேண்டிய குடிமக்கள் தூக்குவதற்குத் தயாராகி விட்டனர்.
வாத்தியாரின் மூத்த மகன் புதுவேட்டி கட்டி, பூணுால் அணிந்து, கையிலே கொள்ளிச் சட்டியைத் தூக்கிய வண்ணம் கால்மாட்டில் நின்று விம்முகிறான்.
அவர் மனைவியும் நான்கு பிள்ளைகளும் நெருக்கமாகச் சூழ நின்று குமுறுகிறார்கள்.
அதுவரை அங்கு வந்திருக்கும் பெண்களை வெற்றிலை பாக்கு வைத்து உபசரித்துக் கொண்டு நின்ற கிழவி ஒருத்தி, அல்மீனியப் பாத்திரமொன்றில் தண்ணீரை எடுத்து வந்து, ஒப்புச் சொல்லி அழும் பாங்கில் தலையை அப்படியும் இப்படியும் அசைத்த வண்ணம் அவர் கால்களைக் கழுவி, தன் குடிமையைச் செய்கிறாள்.
"ஐயோ, மாமி என்ரை கால்களைக் கழுவாதையணை” அஞ்சுகத்தின் தாயான அந்தக் கிழவியைப் பார்த்து இப்படிச் சொல்லிக் கொண்டு தன் கால்களை இழுத்து மடக்குவதற்கு வாத்தியார்தான் செத்துப் போனாரே!
ஆமாம், அவர் மட்டுந்தான் செத்துப்போனார்!
- மல்லிகை பொங்கல் மலர் ஜனவரி 1984

Page 63
பொருந்தாத தீர்மானங்கள்
அவன் கொஞ்சமும் எதிர்பாராத விதமாகத் தனது மாணவன் மார்க்கண்டனைப் பல்கலைக்கழகத்திற் சந்திக்க நேர்ந்த போது, அவனுக் குண்டான மகிழ்ச்சிக்கும் ஃபுக்குே அளவேயில்லை.
மார்க்கண்டனை அவன் சந்தித்து நான்கு வருடங்களுக்கு மேலிருக்கும்.
அவன் பலாலி ஆசிரிய கலாசாலையில் தனது படிப்பை முடித்துக் கொண்டு கல்முனை சாஹிராக கல்லூரியில் விஞ்ஞானம் கற்பிக்கும் ஆசிரியராகப் போய்ச் சேர்ந்தபோது, பத்தாம் வகுப்பில் மார்க்கண்டன் அங்கு கல்வி கற்றுக் கொண்டிருந்தான்.
மார்க்கண்டன் அந்த வகுப்பில் படித்த ஏனைய மாணவர்களை விடவும் வித்தியாசமான ஒருவனாகவே அப்பொழுது விளங்கினான். படிப்பில் மிகவும் கெட்டிக்காரன். முதல் மாணவன். திறமைசாலியான மாணவர்களிடம் இயல்பான சுட்டித்தனங்களுக்கும் பஞ்சம் இருப்பதில்லை. ஆனால் மார்க்கண்டன் அப்படியல்ல. அடக்கமான ஒரு மாணவனாகவே இருந்தான். முதல் மாணவனுக்குரிய தலைமைத்துவம் அந்த வகுப்பில் அவனுக்கு இருந்ததாகவும் தெரியவில்லை. அவன் மற்றைய மாணவர் களில் இருந்து விலகி தனிமைப்பட்டு இருப்பதாகவே அவனுக்குத் தோன்றியது.
எப்போது பார்த்தாலும் இனம் புரியாத ஏக்கமும் தயக்கமும் அவனை ஆண்டு கொண்டிருப்பதை அப்பொழுது அவன் அவதானித்து இருக்கிறான்.

ஒடுக்கப்பட்டவர்கள் 115
ஆனால், என்று பார்த்தாலும் மடிப்புக் குலையாத அழுக்கற்ற ஆடைகளை அணிந்து, மினுக்கி விட்டது போல நேர்த்தியாகவே வகுப்பு க்கு வந்து போய்க் கொண்டிருந்தான்.
ஒரு நாள் அவன் வகுப்புக்குப் போன சமயம் மார்க்கண்டன் சின்னக்குழந்தை போல விம்மி விம்மி அழுது கொண்டிருந்தான்.
அவனுக்கு ஒரே வியப்பு பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக் கும் ஒருவன் பச்சைக் குழந்தை போலப் பொருமிப் பொருமிக் கண்ணீர் வடிக்கிறானே!
அந்தக் கண்ணிருக்கான காரணத்தைக் கண்டறிவதற்கு அவன் பெருஞ்சிரமப் பட வேண்டியதாக இருந்தது.
“மார்க்கண்டு இஞ்சை வா!” அவன் விம்மிக் கொண்டே ஆசிரியருடைய மேசைக்கருகே வந்து நிற்கிறான்.
"ஏன் அழுகிறாய்?” கேள்விக்குப் பதில் இல்லை. விம்மல் தொடர்ந்து கொண்டிருக் கிறது.
"நீ இப்படி அழுது கொண்டு நிண்டால் போதுமா! என்ன நடந்தது சொல்லு?”
அப்பொழுதும் விடை வெளிவரவில்லை. ஆனால் விம்மல் வெடித்து பெருங்குரல் எடுத்து அழுவதற்கு ஆரம்பித்து விட்டான்.
“எட விசரா! நீ இப்படி அழுது கொண்டு நிண்டால். என்ன நடந்ததெண்டு எனக்கு எப்படித் தெரியும்? வாயைத் திறந்து சொல்லன்!”
அவன் பொறுமை இழந்து சினந்து சிறிதும், அதுவரை கலகலப் பாக இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அந்த வகுப்பு, திடீரென்று மூச்சடங்கி மெளனிக்கிறது.
மார்க்கண்டன் உள்ளம் அதிர்ந்து, இரண்டடி பின்னுக்கு நகர்ந்து கை கட்டித் தலைகுனிந்து நிற்கின்றான்.
"அவன் ஊமையன், வாய் திறவான் போலே கிடக்கு, நீங்கள் சொல்லுங்கோ. .என்ன நடந்தது?"
வகுப்பை நோக்கி, மனதில் எழுந்த சினம் கொஞ்சமும் தணியாத நிலையில் எரிச்சலுடன் கூறுகிறான்.அவன்.
அப்பொழுது மாணவன் ஒருவன் தயங்கித் தயங்கி மெல்ல மெல்ல எழுந்து நின்று, “மார்க்கண்டு எந்த நாளும் அயன் பண்ணின உடுப்புப் போட்டுக்கொண்டு வாறான் ஸேர்.” என்று சொல்லிக் கொண்டு மேலும் சொல்வதற்கு இயலாமல் தடுமாறுவது கண்டு,
அதுக்கிப்ப என்ன?” எனக் கேட்கின்றான் அவன்.

Page 64
16 தெணியான்
“அதுதான் ஸேர்.” என மேலும் இழுக்கிறான் அந்த மாணவன். “அதுதான் என்ன..? சொல்லித் துலையன்” “அவர் டோபி ஸேர்” “ஓகோ. அப்பிடியா? அதுக்கு.?” "அதுதான் ஸேர். எந்த நாளும் அயன் பண்ணின உடுப்புப் போட்டுக் கொண்டு வாறாராம். வேறை ஆற்ரையேனும் உடுப்புகளைத் தான் போடுறாராம்”
அந்த மாணவன் ஒரு மாதிரிச் சொல்லி முடித்து விட்டான். அவன் உள்ளத்தில் மூண்ட சினம் இதைக்கேட்டு அடங்கிப் போய் விடவில்லை. உள்ளத்தில் அது கொழுந்து விட்டு பற்றி எரியத் தொடங்கியது.
“ஆரடா அப்பிடிச் சொன்னவன்?” “யாழ்ப்பாணம் ஸ்ரோஸ்." “முதலாளியோ..? இஞ்சை ஆரும் முதலாளியுமில்லை. முதலாளி யின்ரை மகனுமில்லை. எல்லாரும் மாணவர்கள், சமமானவர்கள். ஆளைச் சொல்லுங்கோ. ஆர் அந்த முதலாளி? வகுப்பிலே வந்து குந்தி இருக்கிறான்”
“தவராசா. ஸேர்” “தவராசா வா இஞ்சை” அவன் குரல் கடுமையாக ஒலிக்கிறது. தவராசா மெல்ல எழுந்து கூனிக் குறுகிய வண்ணம் பதுங்கிப் பதுங்கி வந்து அவன் மேசை அருகே நிற்கின்றான். அவன் மேசை மீது இருந்த பிரம்பைக் கையில் எடுத்துக் கொண்டு, “நீட்டு கையை” எனக் கட்டளை இடுகிறான்.
"இனிமேல் இப்படியான குரங்குச் சேட்டையள் விடாதே" என்று கூறிய வண்ணம் பிரம்பினால் இரண்டு அடி கொடுத்து அவனை எச்சரிக்கை செய்து அனுப்புகின்றான்.
“சரி. மார்க்கண்டு நீயும் போய் இரு. இதுக்கெல்லாம் குழந்தைப் பிள்ளை மாதிரி அழாதே!” என ஆதரவாக சொல்லி அனுப்பினான்.
அந்த வருட இறுதியில் நடைபெற்ற அரசினர் பகிரங்கப் பரீட்சை யில் மார்க்கண்டன் சிறப்பாகச் சித்தி அடைந்தான். ஆனால் அந்த ஆண்டோடு, அந்தக் கல்லூரியை விட்டு விலகிப் போய் விட்டான்.
அதன் பிறகு மார்க்கண்டனை இப்பொழுது தான் பல்கலைக் கழகத்தில் அவன் சந்திக்க நேர்ந்தது.
“தம்பி நீ படிப்பைக் கைவிட்டு விட்டாயெண்டுதான் நான் நினைச்சிருந்தன்'

ஒடுக்கப்பட்டவர்கள் 17
“இல்லை ஸேர்” "அப்ப சாஹிராவிலை இருந்து போய் எங்கே படிச்சனீர்?" "மட்டக்களப்பிலே ஸேர்” "நல்லது. நீர் இந்த நிலைக்கு உயர்ந்து வந்திருக்கிறதைக் காண எனக்குப் பெருமையாக இருக்குது. இப்ப நீர் எனக்கொரு உதவி செய்ய வேணும்”
“சொல்லுங்கோ, ஸேர், என்ன செய்ய வேணும்?” “முதல்லே ஸேர். ஸேர். எண்டு சொல்லுறதை விட வேணும். நாங்கள் இரண்டுபேரும் இப்போ ஒன்றாகப் படிக்கிறவர்கள்”
"என்னை மன்னிக்க வேணும் ஸேர், எனக்கு அப்பிடிக் கூப்பிட வும், உங்களோடை சமமாகப் பழகவும் முடியாது. எப்பவும் நான் உங்கடை மாணவன் தான்”
“நீர் அப்படி நடந்து கொள்ளுகிறதாலே எனக்குத்தான் சிரமம் எண்டு நான் நினைக்கிறேன்”
“மன்னிக்க வேணும் எனக்கது முடியாது ஸேர்" “சரி, எனக்கு இன்னொரு உதவி செய்ய வேணும். நான் லஞ் ரைமிலே பெரும்பாலும் இஞ்சை நிற்க மாட்டேன்”
"ஏன் ஸேர்.?” “எனக்கு இன்னும் ஸ்ரடி லீவ் கிடைக்கவில்லை. சாஹிராவிலே இருந்து பேராதனைக்கு மாற்றம் எடுத்துக்கொண்டு வந்திருக்கிறேன். லிவு கிடைக்கிறவரையும் இஞ்சை லெக்சருக்கு வந்து விட்டு, படிப்பிக் கிறதுக்குப் பள்ளிக்கூடம் போக வேணும். அதற்குத் தகுந்தாற் போல பள்ளிக்கூடத்திலே ரைம்ரேபிள் தந்து உதவி செய்திருக்கிறார்கள். மத்தியானம் நீர் என்ரை சாப்பாட்டை எடுத்து வைக்க வேணும்!”
“சரி ஸேர். எடுத்து ரூமிலே வைக்கிறன்” என்று முன்பின் எதனையும் யோசிக்காமல் எடுத்த எடுப்பில் சம்மதம் தெரிவித்துவிட்டான். மதிய உணவு வேலைகளில் அவன் அங்கு இல்லாத சமயங்களை மிக நிதானமாகக் கவனித்து, அவனுடைய உணவைப் பாதுகாப்பாக எடுத்து வைத்து உதவி வந்தான் மார்க்கண்டன்.
ஒரு மாத காலம் இப்படிக் கழிந்திருக்கும், இந்த நிலைமை நீடிக்கக் கூடாது, எப்படியும் சொல்லித்தான் ஆகவேண்டுமெனத் தீவிர மாகத் தினமும் மார்க்கண்டன் எண்ணினான். இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தவனாக, தன் மனதைத் திடப்படுத்திக் கொண்டு அன்று மாலை வேளை அவனைத் தேடிக்கொண்டு அறைக்கு வந்தான்.
மார்க்கண்டன் வந்த சமயம் அவன் கட்டிலின்மேல் படுத்து புத்தகம் ஒன்றைப் படித்துக் கொண்டு கிடந்தான்.

Page 65
118 தெணியான்
மார்க்கண்டன் வந்து அவன் எதிரிலுள்ள கட்டிலின் மீது மெல்ல அமர்ந்து கொண்டதும், அதுவரை மனதில் உறுதியாக இருந்த துணிச்சல் யாவும் பஞ்சாகப் பறந்தன்.
“என்ன. தம்பி, மனம் சரியில்லையா? ஒரு மாதிரி இருக்கிறீர்!” “இல்லை ஸேர். அப்பிடி ஒண்டுமில்லை” “இல்லைத் தம்பி, ஏதோ மறைக்கிறீர். நான் அறிய வேண்டிய அவசியம் இல்லை எண்டு நீர் கருதினால். சொல்ல வேண்டியதில்லை”
“உங்களுக்குத் தெரியாமல் நான் மறைக்கிறதுக்கு ஒண்டுமில்லை ണj'
"அப்படியென்டால் சொல்லும். உமக்கு என்னால் உதவ முடியு மானால் அதைச் செய்யலாம்”
“ஸேர் நீங்கள் என்னைத் தவறாக நினைக்கக் கூடாது” "ஏன் தம்பி தயங்கிறீர்! நீர் அப்படி என்ன தவறு செய்து போட்டீர்?"
"இல்லை ஸேர். நான் உங்களுக்குச் சாப்பாடு எடுத்து வைக்கிறது.”
“கஷ்டமாக இருக்கா? இது ஒரு சின்ன விஷயம். இதுக்கு மாற்று வழியொண்டைச் செய்வம். இதுக்காக நீர் ஏன் குழப்பம் அடைகிறீர்!”
"ஐயோ. நீங்கள் என்னைத் தவறாக நினைக்கிறியள் ஸேர்! உங்களுக்குச் சாப்பாடு எடுத்து வைக்கிறதுக்கு எனக்கெந்தக் கஷ்டமு மில்லை ஸேர்!”
"அப்ப.?” "நான் ஆரண்டு ஸேருக்குத் தெரியுமா?” "இதென்ன கேள்வி தம்பி! நீர் என்னட்டைப் படிச்சனிர். பிறகு இப்படி ஒரு கேள்வி கேட்கிறீரே!”
“இல்லை ஸேர். நீங்கள் யாழ்ப்பாணம்.” “ஒகோ. கோ. அதுவா சங்கதி நீர் யாழ்ப்பாணம் வந்திருக்கிறீரா தம்பி?” “இல்லை ஸேர்” “யாழ்ப்பாணத்தாரைப் பற்றி நிறையக் கேள்விப் பட்டிருக்கிறீர், அப்படித்தானே!”
“ஓம் ஸேர் உங்களைப் பார்த்தால் உயர்ந்த சாதியில் பிறந்தவர் போலே தெரியுது.”
"உண்மைதான். என்ரை குடும்பம் ஒழுங்கான ஒரு குடும்பம். என்ரை பெற்றார் எங்களை ஒழுங்காகத்தான் வளர்த்தார்கள். அந்த

ஒடுக்கப்பட்டவர்கள் 119
வகையில் நான் உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவன் தான். யாழ்ப்பாணத்தாரைப் பற்றி நீர் என்ன அறிந்து வைச்சிருக்கிறீர்?"
“சாதி வேறுபாடு கடுமையாகப் பாக்கிறவை எண்டு.” "உண்மைதான், வேறை.?” "தாழ்த்தப்பட்டவர்கள், படிப்பில்லாதவர்கள். முரடர்கள். பண்பி ல்லாதவர்கள். நாகரிகமில்லாதவர்கள். ஏழைகள்."
"படித்தவர்கள். பண்பாடுள்ளவர்கள். நாகரிகமுள்ளவர்கள். எல்லாருமே உயர்ந்த சாதிக்காரர்கள். அப்பிடித்தானே!”
"அப்பிடித்தான் ஸேர், நான் அறிஞ்சிருக்கிறன்” "அப்ப தம்பி, எனக்கு என்ன சொல்ல நினைக்கிறீர்?” "நான் உங்களுக்கு சாப்பாடு எடுத்து வைக்கிறது.” "அதுக்கிப்ப என்ன வந்தது?” “இல்லை ஸேர். நான் உங்களுக்குச் சாப்பாடு எடுத்து வைக்கி றேன். பிறகு உண்மை தெரிய வரேக்கே வீணாக மனஸ்தாபங்கள் வரும்”
மார்க்கண்டன் சொன்னது கேட்டு, அவன் வாய் திறந்து பெரிதாகச் சிரிக்கிறான்.
"ஏன் ஸேர் சிரிக்கிறீர்கள்” "தம்பி, என்னைப் பார்க்க என்ன சாதிக்காரனாக உமக்குத் தெரியுது?”
"இதென்ன கேள்வி ஸேர்! நான் முதலிலே-ே சொன்னேன். நீங்கள் ஒரு உயர்ந்த சாதிக்காரன் தான்”
“இந்த இடத்திலே தான் நீர் பிழை விடுகிறீர். தாழ்த்தப்பட்டவர்கள் பற்றி உம்முடைய மனத்திலே தவறான ஒரு படத்தை விழுத்தி இருக் கிறார்கள்”
"அப்ப. என்ன ஸேர் சொல்லுறியள்?” “யாழ்ப்பாணத்துச் சாதி வரிசையிலே நான் பின்னுக்குள்ளவன்” "உண்மையாகவா ஸேர்?” "உண்மை. நான் பனை ஏறினவற்றை பிள்ளை. யாழ்ப்பாணத்துப் பள்ளன்!’
மார்க்கண்டனுக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை. அவனை வைத்த கண் வாங்காமல் அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
- HլքՓIյծ:
19.02.1984.

Page 66
காலத்தால் சாகாதது
“சச்சே.இதுகுமொரு கதையா? இப்பவும் இப்பிடி எங்கே நடக்குது? உந்த நிலைமை எல்லாம் இப்ப மாறிப் போச்சு” என்று சொல்லும் மேற்பூச்சுக்காரர் வடமராட்சிக்கு வாருங்கள். நெல்லியடிச் சந்திக்கு வந்து கொடிகாமம் செல்லும் பாதையில் திரும்பி, சாமியன் அரசடி தூண்டி, கோயிற்கடவையையும் கடந்து, கலிகைச் சந்திக்கு வந்து, அங்கிருந்து வடக்கு நோக்கி துன்னாலையை ஊடறுத்துச் செல்லும் பிரதான வீதியில் போனால் சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்துக் குள்ளே காசியர் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்து விடலாம். பிரதான வீதியில் இருந்து மேற்குப் புறமாகத் தாமரைக் குளத்துக்கு அருகாகச் செல்லும் குச்சொழுங்கையில் திரும்பி நடந்து சென்றால் அரைக் கிலோமீற்றர் தூரம் வரை நீண்டு கொண்டு போய் அது முடிகிறது. அந்தக் குச்சொழுங்கையின் இருமருங்கிலும் இன்று குடியிருக்கும் பத்துக் குடும்பங்களுக்கும் காசியர்தான் தலைமகன். அல்வாய் வடக்கிலிருந்து தொழில் வளத்தை மனத்தில் கொண்டு அங்கு வந்து, தன்னந்தனியாக முதலில் குடியேறியவர் காசியர். அவர் குடியேறிய அந்தக் காலத்தில் வெறும் பொட்டல் வெளியாக இருந்த அந்த நிலம் இன்று தென்னை மரங்களால் பூரித்துக் கோலோச்சுகிறது. அத்தனையும் அவர் உழைப்புத் தான். அவர் வளர்த்த தென்னை மரங்களில் சில நீண்டு வளர்ந்து

ஒடுக்கப்பட்டவர்கள் 121
சோடையடித்துப் போய் சோகை பிடித்த நோயாளியாகச் சோம்பி நிற்கின்றன. தென்றல் போல் வீசும் மெல்லிய காற்றுக்கும் தலைமை ஆட்டி ஆட்டி அவர் வீட்டின் மேல் விழுந்து விடுவோம் என்று எச்சரிக்கை செய்கின்றன. அவற்றைத் தறித்து விழுத்தி விடுமாறு சிலர் அவருக்கு ஆலோசனை சொல்லிவிட்டார்கள்.
"மரங்களா இல்லை, இதுகள் என்ரை பிள்ளையஸ், என்ரை உடம்பிலே ஓடுகிற இரத்தந்தான் இதுகளிலையும் ஒடுகுது, உயிர் போனாலும் நான் தறிக்கப் போறதில்லை” என்று மறுத்து விட்டார்.
அவர் அங்கே வந்து குடியேறிய அந்தக் காலத்தில் பங்குனி வெயிலில் பனை மரங்களில் ஏறி, இறங்கி களைத்துச் சோர்ந்த நிலையில் வீடு வந்து சேரும் போது, தாகத்துக்குக் குடிக்கலாமென்று தவியாய்த் தவித்தாலும் வீட்டிற் சில சமயம் தண்ணிர் கிடைப்பதில்லை. தண்ணீர் எடுத்து வருவதற்காகக் குடத்தைத் தூக்கிக்கொண்டு வெளியே செல்லும் அவர் மனைவி யாராவது கிணற்றில் இருந்து அள்ளி ஊற்றி விடுவார்களோ! என்ற காத்திருந்து விட்டு ஏமாற்றத்துடன் வீடு திரும்புவாள். சில சமயங்களில் தாகவிடாய் தாங்க இயலாது துடித்துப் போன அவர் பனையிலிருந்து இறக்கி வந்த கருப்பநீரை வார்த்துக் குடித்திருக்கிறார்.
குடிநீர்த் தேவையைப் போக்கிக் கொள்வதற்கே இப்படி அந்தரித்த க்ாசியாருக்கு யாராவது தென்னை மரம் வளர்ப்பதற்குக் கிணற்றிலிருந்து நீர் அள்ளி ஊற்றுவார்களா?
காசியர் வீட்டுக்குத் தென்புறமாக உள்ள தாமரைக்குளம் இப்போது போலல்ல, அந்தக் காலத்தில் எப்போதும் நீர் ததும்பும். அந்தக் கிராமத்து இளவட்டங்கள் நீச்சலடித்துக் குளித்து முழுகி விளை யாடுவதற்கும், சிறுவர் முதியவர் என்ற வேறுபாடடின்றி குளத்தைச் சுற்றி வரவுள்ள பனங்காணிப் பற்றைக்குள்ளே மறைந்து ‘வெளிக்கிருந்து விட்டு வந்து அடிக்கழுவுவதற்குமே அந்தக் குளத்து நீர் பயன்பட்டது. இந்த எழுபது வயதிற்கூட அந்த நீரில் கால் நனைக்கும் உரிமைதானும் காசியருக்கு இல்லையென்றால், அப்போதிருந்த நிலைமையைச் சொல்லவா வேண்டும்?
அதிகாலையில், இருள் முற்றாகக் கழுவிக் கரைவதற்கு முன்பு காசியர் நித்திரை முறிந்து எழுந்து விடுவார். பாளை சீவும் கத்தியைக் தீட்டிக் கூராக்கும் 'கத்திரக்கொட்டனைத் தோளில் வைத்துப் பதநீர் குட்டான்களை கழுந்துகளிற் கொளுவித் தொங்கவிட்டுக் கொண்டு குளத்தடிக்குப் போவார். பனந்தோப்புக்குள்ளிருந்து அடிக்கழுவப் வருகின்றவர்கள் காசியர் அங்கு கருப்பணிக் குட்டான்களை வாங்கி, குளத்து நீரிலே முங்கி எடுத்து நீரை நிறைத்துக் கொடுப்பார்கள்

Page 67
122 தெணியான்
நன்றாகப் பொழுது புலர்வதற்கு முன்னர் இப்படிப் பல தடவைகள் நீர் எடுத்து வந்து அவர் நட்ட தென்னம் பிள்ளைகளுக்கு வார்த்து முடிப்பார். அதன் பிறகே காசியர் தொழிலுக்குத் தினமும் புறப்படுவது வழக்கம்.
காசியருக்கு அந்தக் காலத்திலிருந்தே அந்தப் பகுதி மக்கள் மத்தியில் ஒரு கணிப்பிருந்து வந்தது. அவருடைய நெற்றியில் எந்தச் சமயத்திலும் திருநீறு பளிச்சென்று துலங்கும். வாய் தேவார திருவாசகங் களை இடையறாது முணுமுணுக்கும். எவரோடும் முரண்பட்டுக் கொள்ளாது தன்னுடைய காரியங்களில் எப்போதும் கவனமிருக்கும்.
இந்தக் காசியரால் தனக்கென்று தென்னைகளை நட்டு வளர்க்க முடிந்தது போல, பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பதற்கு முடியாமற் போனது. தன்னையும் மனைவியையும் பேணிப் பாதுகாப்பதற்கென்று ஒரு வாரிசு இல்லாமற் போனதால், கடைசிக் காலத்தில் நாலு காசாவது கையில் வைத்திருக்க வேண்டுமென்றெண்ணி சிறுகச் சிறுகக் கொஞ்சம் பணம் சேர்த்துக் கொண்டார். உடல் வருந்திச் சேமித்த பணமாக இருந்த போதும் கோயில் குளங்களுக்குச் செலவு செய்வதில் ஒரு போதும் அவர் பின்நிற்பதில்லை. ஆத்திரமந்தரத்துக்கு மற்றைவர்களுக்குக் கொடுத்து உதவுவதிலும் என்றும் அவர் தாராளம். அதனால் அவர்
ப்போது பழைய காசியனல்ல. காசியராக மாறிப் போனார்.
காசியர் வீடு புதுக்குடிகாரர்களுக்கும் அட்டமருகில் இருக்கும் தள்ளாத முதியவர்களுக்கம் 'கள்ளடிப்பதற்கு மிக வசதியான ஒரு இடம். ஒளிச்சுப் பதுங்கி குடிக்கும் புதிசுகளும், நடை தளர்ந்து போன கிழடுகளும், பலரும் வந்து போகும் கோப்பறேஸனுக்குப் போக விரும்பாது காசியர் வீட்டுக்கே வருவர். அந்த வீட்டின் பின்புறத்திலுள்ள தென்னை மரச் சோலையில் ஆறுதலாகக் குந்தி இருந்து கள் அருந்து வதே ஒரு இதமான காரியந்தான்.
சாமியார் காசியரின் நிரந்தர வாடிக்கைக்காரர்களுள் ஒருவர். சாமியாருக்குக் காசியரின் கள் இல்லையென்றால் வேறொருவரின் கள்ளைத் தொட்டும் பார்க்க மாட்டேன் என்று சபதமெடுத்தவர் போல இன்னொரு இடத்தை நாடிப் போக மாட்டார். 'கோப்பறேஸன்காரர்கள் வீடுகளில் தனியார் கள்ளு விற்கக் கூடாதென்று கடுமையாக நின்ற காலத்திலும் சாமியார் காசியர் இறக்கிய கள்ளை அவர் வீட்டிற் குடித்துக் கொண்டே இருந்தார்.
இந்தச் சாமியார் இருக்கிறாரே, அவர் சாமியார் என்றானதே ஒரு தனிக் கதை.
சாமியார் இயல்பிலே அப்படியொன்றும் பெரிய தெய்வ பக்தனல்லர். அவர் திருமணமாகி ஆறு மாதங்கள் கூட தன் மனைவி யோடு அமைதியான ஒரு வாழ்வை மகிழ்ச்சியாகக் கழிக்க முடியாது போன துரதிஷ்டசாலி அடிக்கடி சாமியாருக்கும் அவர் மனைவிக்கும்

ஒடுக்கப்பட்டவர்கள் 123
சச்சரவுகள் வர ஆரம்பித்ததுதம், சாமியாரின் கவனம் ஆலயங்களின் பக்கமாகத் திரும்ப ஆரம்பித்தது. சில தினங்களில் நட்ட நடு இரவில் சாமியார் நெஞ்சப் பொருமலுடன் வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டு விடுவார். சில தினங்களில் திரும்பி வருவார்! பின்னர் மீண்டும் பழைய கதை தொடரும். சாமியார் வீட்டுக்கு வருவதும் திரும்பிப் போவதும் பற்றி அவர் மனைவிக்குக் கொஞ்சமும் அக்கறையில்லை. சாமியார் பேரில் மூன்று குழந்தைகள் பிறந்த போது மாத்திரம், எங்கோ தேடிப் பிடித்து வீட்டுக்கு அவரைக் கொண்டு வந்து விட்டார்கள்.
சாமியாருக்கு இப்போது தன் சொந்தப் பெயரே மறந்து போய் விட்டது.
சாமியாரின் மூன்று புதல்வர்களும் வளர்ந்து சம்பாதிக்கத் தொடங் கிய பிறகு, அவர் தெருத் தெருவாக அலைந்து திரிவது தங்களுக்கு மதிப்புக் குறைவென்று கருதி அவரை அழைத்து வந்து வீட்டோடு தங்க வைத்து விட்டார்கள். சாமியாரின் செலவுக்கென்று தினமும் பத்து ரூபா காசு அவர்கள் கொடுத்து விடுவது வழக்கம்.
சாமியாருக்குக் கள்ளைத் தவிர வேறு என்ன விசேஷ செலவு இருக்கிறது? அதனால் எப்போதும் அவர் நாணயமான குடிகாரனாகவே காசியருடன் நடந்து கொண்டார்.
சாமியார் இயல்பிலேயே ஒரு அப்பாவி மனிதன். எப்போதும் சோலி சுறட்டென்றால் ஒதுங்கிப் போய் விடுகின்ற பிறவி தானுண்டு தன்பாடுண்டு என்று வாழ்வதே தன் வாழ்வாக்கிக் கொண்டவர்.
ஆனால் இந்தச் சாமியாருக்கும் மதுவின் போதை சிரசிலே ஏறி விட்டதென்றால் சில சமயங்களில் நிதானம் தப்பிவிடும். அப்படியான சந்தர்ப்பங்களில் அவர் வாயில் காசியர் மறைந்து போவார். “காசியன்” என்றே அதிகாரமாக அழைப்பார். காசியரின் மனைவிக் கிழவியைப் பாத்து “எடி பொடிச்சி” என்றே கூப்பிடுவார்.
"நான் ஆர் தெரியுமா? உங்கினை உள்ள சொடுகன்கள் எண்டு நினைச்சுப் போடக் கூடாது. அதி உத்தம சைவ சுத்த போசன உயர் வேளாண் குலதிலகரும் குலசேகர முதலியார் வழித் தோன்றலுமாகிய இராமநாதன் சாமியார்” என்று அவர் நெஞ்சை நிமிர்த்தும் போது காசியர் அவரைப் பார்த்துக் கொடுப்புக்குள் சிரித்துக் கொள்வார். “ஆளுக்கு இண்டைக்கு கொஞ்சம் கூடிப் போச்சு” என்று மனைவியைப் பார்த்துக் காசியர் சாடை காட்டுவார்.
“காசியன் நீயேன் குடிக்கிறதில்லை?” "நான் இதைப் பழகயில்லை” "ஏன் பழகயில்லை” "அதுதானே பசுமாடு வளக்கிறன்”

Page 68
124 தெணியான்
“ஒ. ஓ. பசுப் பால் குடிக்கிறாய், என்ன! நீ இறக்கிற கள்ளை நீயே குடிக்கத் துடங்கினால் காசு சம்பாரிக்க ஏலாது, அப்பிடித்தானே! நீ சரியான கசவஞ்சி!”
இப்படிப் பல தடவைகள் சாமியார், காசியரைப் பார்த்துச் சொல்லி முடித்து விட்டார். ஆனால் காசியர் கள்ளுக் குடிக்காமல் இருப்பதற்கான உண்மையான காரணம் இன்னும் அவர் மனதுக்கு பிடி படாமலே இருந்து வருகிறது.
“இந்தக் காசியருக்குக் கள்ளைவிட, பசுப்பாலிலே என்ன விசேச மிருக்கு?” என்று சாமியார் பல சந்தர்ப்பங்களிலே நினைத்துப் பார்த்த துண்டு.
காசியர் வீட்டில் பசுமாடொன்று கன்று போட்டு நிற்கிறது. எப்போது பசு கன்று போட்டாலும், பதினொரு தினங்கள் காத்திருந்து ஆசௌசம் நீங்கியதும், தில்லையம்பலம் பிள்ளையாருக்கு அந்தப் பசுவின் பாலைக் கொண்டு போய் கொடுத்து, அபிஷேகம் செய்து முடித்த பின்னரே காசியர் வாயில் விடுவார். இப்பொழுது தவழ்ந்து தவழ்ந்து மரமேறி முடித்த பின்னர் தில்லையம்பலத்துக்குப் போய் வருவது அவருக்குப் பெருஞ்சிரமமாகத் தோன்றியது. அந்தப் பொறுப்பைச் சாமியாரிடம் ஒப்படைத்து விட்டால், நன்றிக் கடனாக இரண்டு போத்தல் கள்ளையும் கொடுத்து விடலாமென்று தீர்மானித்தார்.
"சாமியார், இப்ப வர வர எனக்கு உடம்பும் ஏலுதில்லை. நீங்கள் தான் எனக்கொரு உதவி செய்ய வேணும்!”
“என்ன செய்ய வேணும் சொல்லு காசியர்!” “பசுவெல்லே கண்டு போட்டு நிக்குது” “ஒ. ஒ. துடக்குப் போவிட்டதே! நீ கோயிலுக்குக் குடாமல் வாயிலை குத்த மாட்டாய்”
"அதுதான் சாமியார் நாளைக் கொருக்கால் கோயிலுக்குப் போவிட்டு வாருங்கோவன்”
"அதுக்கென்ன. காலமை வெள்ளன வாறன்.” மறுநாள் காலையில் காசியர் பாலைக் கறந்து நன்றாக மினுக்கி எடுத்த செம்பொன்றிலே அதனைவிட்டு, சாமியாரின் வருகைக்காக காத்திருந்தார்.
சாமியாரும் காசியருக்குக் கொடுத்த வாக்குறுதியை மறந்து போய்விடவில்லை. காலையில் எழுந்து நீராடி முடித்து விட்டு ஆசார சீலராகக் காசியர் வீட்டுப் படலை வரை வந்து சேர்ந்தார்.
“காசியர். காசியர்.?” வீட்டுப் படலையில் சாமியாரின் குரல் கேட்டு, ஆச்சரியத்துடன் எழுந்து வெளியே வந்த காசியர், “வாருங்கோ சாமியார் பால் கறந்து

ஒடுக்கப்பட்டவர்கள் 25
தயாராக வைச்சிருக்கிறன்; கொண்டு போங்கோ” என்று உள்ளே அவரை வரவேற்றார்.
“இல்லை காசியர், நான் தோஞ்சு குளிச்சிட்டன், சாமிக்குப் பால் கொண்டு போற நான் உங்கடை வீடுகளுக்குள்ளை வரக் கூடாது. பாலை இஞ்சை கொண்டு வா."
காசியர் வாய் திறக்கவில்லை. உள்ளே சென்ற பாலை எடுத்து வந்து செம்புடன் அவர் கையிற் கொடுத்தார்.
நடுப் பகல் ஆகிவிட்டது. காசியர் அவசர அவசரமாகத் தொழிலை முடித்து விட்டு வீட்டுப் படலையைப் பார்த்த வண்ணம் தென்னை மர நிழலிற் குந்தி இருக்கிறார். தில்லையம்பலம் போன சாமியார் நாவரட்சியுடன் திரும்பி வருவாரல்லவா?
படலை திறக்கும் சத்தம் கேட்கிறது. "சாமியார். சாமியார். அங்கே நில்லுங்கோ. அங்கே நில்லுங்கோ.” என்று பலமாகக் கூவிக் கொண்டு, இரண்டு போத்தல் களில் முன்னமே தயாராக விட்டு வைத்திருந்த கள்ளை இரு கரங்களிலும் தூக்கிக் கொண்டு வேகமாக வெளியே வருகிறார் காசியர்.
“சாமிக்கு நான் தாற பாலை என்ரை வளவுக்குள்ளே இருந்து சாமியார் குடிக்கிறது சரியில்லை. இந்தாருங்கோ, உதிலை இருந்து குடியுங்கோ’
சொல்லிக் கொண்டு கள்ளுப் போத்தல் இரண்டையும் சாமி யாருக்கு முன் வைத்து விட்டு படலையை மூடிக் கொண்டு உள்ளே திரும்பி வேகமாக நடக்கின்றார்.
சாமியார் கள்ளுப் படையலுக்கு முன் திகைத்துப் போய் நிற்கின்றார்.
- HքdpUծ:
23.06.1985

Page 69
காவல் அரண்கள்
சிலருக்கு அமாவாசை, அட்டமி, நவமி என்றால் பித்தக்கொதி அதிகரிக்குமென்று சொல்லுவார்கள்.
கோயில் மணியம் சிதம்பரத்துக்கும் அப்படித்தான், கொதி கூடும். ஆனால் அவர் நல்ல சித்த சுவாதீனமுள்ளவர். இயல்பிலே முன்கோபி, சில சமயங்களில் அந்தப் பொல்லாத கோபம் சிரசு முட்ட ஏறிவிட்ட தென்றால். அதுவும் பித்தக் கொதி போலவே தோன்றும்.
இப்பொழுது சிலகாலமாக அந்தக் கொதி அவருக்கு அடிக்கடி வந்து கொண்டிருக்கிறது. அது அமாவாசை, அட்டமி, நவமிகளிலல்ல.
முன்னர் ஒரு காலத்தில் வெறும் கொதியுடன் மாத்திரம் அவர் அடங்கிப் போய்விடுகின்றவர் அல்லர். அடாவடித்தனமான காரியங்கள் பலவற்றைச் செய்து முடித்த பிறகே, அவர் கொதி குமுறி அடங்கும்.
அவரை மணியகாரனாக ஆக்கியதற்குரிய முக்கியமான தகுதி களுள் ஒன்று, அவரிடம் இயல்பாகவே இருந்துவரும் அந்தக் கொதி யோடு கூடிய நாட்டாண்மைக் குணந்தான்.
மணியகாரன் அந்தஸ்தை அவர் அடைந்திருப்பதும், பாண்டு புத்திரர்கள் இராச்சிய பாரம் தாங்குவதற்கான உரிமையை எய்தியது போலத்தான்.
சிதம்பரம் மணியகாரனின் பெரிய தந்தையாரே, இவருக்கு முன்னர் கோயில் மணியகாரனாக இருந்து நிருவாகம் நடத்தி வந்தவர். அவர் பிள்ளைகள் பெரிய கல்லூரிகளில் சேர்ந்து ஒழுங்காகக்

ஒடுக்கப்பட்டவர்கள் 27
கல்வியைப் பெற்று, அவருக்கிருந்து வந்த செல்வாக்கின் பலத்தினால் அரசாங்கத்தில் உயர் பதவிகளைத் தட்டிக் கொண்டார்கள். தந்தைக்குப் பின்னர் கோயில் நிருவாகத்தைக் கையேற்று ஆட்சி செலுத்துவ தென்பது அவர்களுக்கு இயலாது போயிற்று.
சிதம்பரம் பெரிய தந்தையினால் அவருக்குப் பின்னர் மணிய காரனாக முடிசூட்டப் பெற்றார்.
மணியகாரன் குடும்பமே அந்தக் கிராமத்தில் தலைமைக்குரிய குடும்பம், யாழ்ப்பாணத்துக் கிராமங்கள் தோறும் சமூக வரன்முறைகள் சிதையாத வண்ணம் பேணிப் பாதுகாத்து வரும் இரும்புக் கோட்டைகள் இந்தக் கோயில்கள். அந்தக் கோட்டை ஒன்றின் முடிசூடா மன்னனாக இன்று விளங்குகின்றவர் சிதம்பரம் மணியகாரன்.
சிதம்பரத்தின் பெரிய தந்தையார் கோயில் மணியகாரன் மாத்திர மல்லர். அடிமை குடிமைகளை வைத்து ஆண்டு அனுபவித்து வந்த நிலக்கிழாராகவும் இருந்தவர். அந்த அதிகாரங்கள் யாவும் கைநழுவிப் போய்விடக் கூடாதென்பதற்காக, சிதம்பரத்தின் சகோதரி கணவனை அந்தக் கிராமத்தின் விதானையார் ஆக்கி வைத்தவரும் அவர்தான்.
சிதம்பரம் கோயில் மணியகாரன் ஆன பின்னர் முன்னர் போலத் தெருச் சண்டியனாக எப்படி இருக்க முடியும்?
ஆனால் அவருக்கே இயல்பான நாட்டாண்மைக் குணங்கள் அவரை விட்டுப் போய்விடவில்லை. வயது ஏற ஏற அதன் உக்கிரம் சற்றுத் தணிந்து கொண்டு வந்திருக்கிறதே ஒழிய, அவர் அவர்தான்.
இன்றும் அவருக்கு அந்த நாட்டாண்மையான கொதிக்குணம் வருமென்பது குருக்கள் சோமசுந்தரருக்கு முன்னரே தெரியும். அவர் இன்று நீதிமன்றம் செல்லவேண்டிய தினம். குருக்கள் ஆலயத்துக்குள்ளே வந்து, உதய காலப்பூசைக்கு வேண்டிய கிருத்தியங்களைச் செய்யத் தொடங்குவதற்கு முன்னரே, மணியகாரன் அதிகாரத்துடன் அவசரப்படுத்தத் தொடங்கி விட்டார்.
"ஐயா, பூசையைக் கெதி பண்ணி முடியும்” "ஏன் அப்படிச் செய்ய வேணும்? இண்டைக்கு வெள்ளிக்கிழமை, வழிபடுகிறவர்கள் கூட்டம் அதிகம் வரும். உமக்கு அவசரமெண்டால் போக வேண்டிய இடத்துக்குப் போம். உம்முடைய அவசரத்துக்குத் தெய்வ கைங்கரியம் அரையும் குறையுமாகச் செய்யக் கூடியதல்ல" என்று குருக்கள் வெளியே சொல்லவில்லை, அவர் மனம் அப்படிப் பேசியது.
சோமசுந்தரர் மணியகாரன் பேச்சைக் காதில் வாங்கிக் கொண்ட தாகக் காட்டிக் கொள்ளவில்லை. அவர் கர்ப்பக் கிருகத்தை நோக்கித் தன்பாட்டில் போய்க் கொண்டிருந்தார்.

Page 70
128 தெணியான்
குருக்களின் செவிட்டுத்தனம் கண்டு, மணியகாரனுக்கு உள்ளுரப் பற்றிக் கொண்டு வந்தது.
"ஐயாவுக்குக் காது கேக்கயில்லையோ?”
கொடிக்கம்பத்தைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்த குருக்கள் சட்டென்று நின்றார். மெல்லத் திரும்பி பார்வையில் நிர்ச்சலனமாக மணியகாரனை நோக்கினார்.
''
“பூசையைக் கெதி பண்ணி முடியும்!” மீண்டும் மணியகாரன். “என்ன அவசரம்?” என்கிறார் குருக்கள். “நான் போக வேணும்.”
“போறது தானே. “அவன்களுக்கு விபூதி குடுக்கிறது ஆர்?” “ஏன்? “என்ன பேய்க் கேள்வி, எத்தினை நாள் சொல்லுறது? உங்கடை கையாலேயே.?”
“உள்ளுக்கு விட்டிட்டியள். பிறகு.” "ஒய் என்ன ஐயா நீ.!” மணியகாரன் கதையை மேலும் வளர்த்துக் கொண்டு போகாமல் பட்டென்று சினந்து கூறிய சுடுசொற்கள், நெஞ்சில் சுருக்கென்று குத்திய போது சோமசுந்தரக் குருக்கள் ஆடிப் போனார்கள்.
“இப்படித்தான். மணியகாரன் எப்பவும் இப்படித்தான்.” என்று மனதுக்கு என்றும்போல இன்றும் சமாதானம் சொல்லிக் கொள்வதற்கு அவருக்கு முடியவில்லை.
அந்தப் பார்வை. மணியகாரனின் அந்தப் பார்வை. நக்கீரனைச் சுட்டெரித்த திரிசடைக் கடவுளின் நெற்றிக்கண் பார்வை என்பார்களே. அந்தப் பார்வை. வெறித்த அலட்சியமான அந்தப் பார்வையின் வெப்பத்தில் வெந்து ஒடிசலான உள்வளைந்த அவர் சரீரம் படபடத்தது. வார்த்தைகள் வெளிவராமல் நா வரண்டு தொண்டை கட்டிக் கொண்டது.
ஆனால் அவர் உள்ளத்தில் கற்பூரத்தில் தீ பற்றிக் கொண்டது போல சினம்.
“எனக்கும் இண்டைக்கேன் கோபம் வருகுது” தனக்குள் கேட்டுக் கொண்டு குருக்கள் திரும்பி நடந்தார்.
மனம் அவர் செய்யும் கிரியைகளில் ஒன்றி நிற்க மறுக்கிறது. அது கட்டறுத்துக் கொண்டு தன்னிச்சையாக ஓடுகிறது. “எனக்குத் தெரியும் இண்டைக்கு ஏன் அவசரப்படுத்துகிறான் எண்டு, இவன் எப்பவும் இப்படித்தான். சுயநலம் பிடிச்சவன். கோடேறி தனக்காக நான் சாட்சி சொல்லயில்லை எண்டதும் இவன் மனத்திலே

ஒடுக்கப்பட்டவர்கள் 129
இப்பவுள்ள ஆத்திரம், என்னை நெடுக நெடுகக் காயாக உறுட்டுகிறது தான் இவனுக்கு நோக்கம்” என நினைத்துக் கொண்ட குருக்களின் மனம் பழைய சம்பவங்களை அசை போட ஆரம்பித்தது.
ஒடுக்கப்பட்டவர்களின் ஆலயப் பிரவேசத்தைத் தடுத்து, சமூக அதிகாரம் சிதையாமல் பாதுகாப்பதற்குத் தங்களாலான தந்திரோபாயங் களை எல்லாம் கையாண்டு பார்த்து அவை பயனற்றுப் போகவே, இறுதியில் கடைசித் துரும்பாக அவர்களுக்கு அகப்பட்டார் குருக்கள்.
“எட பொடியள். எங்களுக்கெல்லாம் உண்மையிலே நல்ல விருப்பம். உங்களைக் கோயிலுக்குள்ளே விட்டால் என்ன! நீங்கள் எங்கடை பிள்ளையஸ்தானே! ஆனால் நாங்கள் மறுத்து நிக்கிற இரகசியம் உங்களுக்குத் தெரியாது. அதை சொல்லாமலும் விட ஏலாது. குருக்கள் எல்லோ விரும்புகிறாரில்லை. தான் பூசை பண்ண மாட்டன் எண்டு சொல்லுறார்”
மறுபக்கம் திரும்பி, குருக்களுக்குச் சொன்னார்கள். "ஐயா, நீங்கள் கண்டிப்பாகச் சொல்லிப் போட வேணும். கண்ட நிண்ட சாதியைக் கோயிலுக்குள்ளே விட்டால் நான் பூசை பண்ண மாட்டெனெண்டு”
அவர்கள் இட்ட கட்டளைக் கேட்டு அவர் நெஞ்சு துணுக்குற்றது. “எனக்கேன் இந்த வம்பு?” என்று தனக்குள்ளே மனம் உளைந்தார்.
"அப்பிடி நான் சொல்ல முடியாது. உங்களின்ரை. அதிகாரரும், உங்கடை எல்லாம். நீங்கள் என்னவாவது செய்து கொள்ளுங்கோ!” என்று சொல்ல வேண்டுமெனப் பல தடவைகள் மனதில் உன்னி இருக்கிறார்.
ஆனால் அப்படி அவரால் சொல்வதற்கு முடியவில்லை. சொல்லத் தகுந்த துணிச்சல் அவருக்கு இருக்கவில்லை. ஏதோ அசட்டுத் துணிச்சலில் அவ்வாறு சொல்லி விட்டால். மறுகணமே அந்த ஆலயத்தை விட்டு வெளியேற வேண்டி நேரும்.
“மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ. என்னை விரைந் தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ?” என கல்வியில் பெரியவனான கம்பனும் இன்று விறாப்புப் பேசிக் கொண்டு புறப்பட்டுச் சென்று விட முடியாத நிலையில், பாவம் குருக்கள்! என்னதான் செய்வார்?
இந்த ஆலயத்தைவிட்டு வெளியேறினால, ஊர்ப் புரோகிதமும் கை நழுவிப் போய் விடும். ஆலயத்தில் கிடைக்கும் சொற்ப வருமானம், ஊர்ப் புரோகிதம் இரண்டுமே குடும்பத்தை ஒட்டுவதற்குப் போதுமான தாக இல்லை. அந்த இரண்டு வருமானத்தையும் இழந்து போனால் சோம சுந்தரக் குருக்கள் குடும்பம் நடுத்தெருவில்தான்.
தாழ்த்தப்பட்டவர்களுக்குள் சிலர் தங்களுக்கெண்டு புறம்பாகப் புதுப் புதுக் கோயில்கள் கட்ட ஆரம்பிச்சு விட்டார்கள். அதனாலேயும்

Page 71
130 தெணியான்
வருமானம் குறைஞ்சு போச்சு. எப்பிடி எல்லாத்தையும் வெளியிலே சொல்லுகிறது?
“சமூகத்தில் மிகவும் உயர்ந்தவர்களாகப் பாவனை பண்ணப் படுகிறவர்கள் நாங்கள். சமூக அதிகாரம் உள்ளவர்கள் எங்களுக்கும் பொன் விலங்கு பூட்டி வைத்திருக்கிறார்கள். எங்கடை விலங்கும் ஒரு நாளைக்கு உடைக்கப்படத்தான் வேணும். எங்களுக்குத் தரப்படுவ தெல்லாம் போலிக் கெளரவங்கள். போலி அந்தஸ்துகள். நாங்களும் கொடுக்கிறவன் இட்ட கட்டளைக்குத் தலை குனிந்து நடக்க வேணும். குடிமக்கள் போல”
குருக்கள் நினைத்து நினைத்து உள்ளம் குமுறினார்.
மணியகாரனும் அவரைச் சார்ந்தவர்களும், அவரை அரச அதிகாரிகள், பொலிஸ் அதிகாரி முன் இழுத்துச் சென்று நிறுத்தி னார்கள். 'எனக்குச் சம்மதமில்லை. நான் பூசை செய்ய மாட்டேன்” என்று தயங்கித் தயங்கிச் சொல்ல வைத்தார்கள்.
இறுதியில் குருக்கள் சொன்ன எதிர்வாக்கு மூலத்தையும் பயனற்ற தாக்கிவிட்டு, ஆலயப் பிரவேசம் செய்து முடிந்தது. ஆனால் அதன் பின்னரும் குருக்களின் மனம் தேறவில்லை.
"கடைசியில் இந்தச் சனங்களுக்கு என்னை மாத்திரம் விரோதி யாகக் காட்டிப் போட்டார்களே” என்று அவர் மனம் பொருமினார்.
அந்த மனநெருடல் இப்பொழுதும் அவர் உள்ளத்தை உறுத்திக் கொண்டு இருக்கிறது.
அதனால் மணியகாரனுக்கு நீதிமன்றம் ஏறிச் சாட்சி சொல்வதற்கு இப்போது உறுதியாக அவர் மறுத்து விட்டார்.
"ஐயா, நீங்கள்தான் சாட்சி சொல்ல வேணும்”
“என்னெண்டு?”
“எனக்கு, அடிச்சவன்களெண்டு”
"அதெப்படி?”
"நீங்கள் சொன்னால், நீதவான் நம்புவார்”
"அந்த நம்பிக்கை உண்மையாக இருக்க வேணும்”
"நீதவான் நம்பினால் சரி”
"நான் பூசை பண்ணுகிற இந்தத் தெய்வத்தின்மேல் சத்தியம் செய்யச் சொல்லிக் கேட்டால்..?”
"செய்யிறது தான்”
“செய்யிறதோ?”
"ஒமோம். செய்ய வேண்டியதுதான். பூசை என்ன. பூசை. உங்களுக்குத் தொழில்தானே!"

ஒடுக்கப்பட்டவர்கள் 3.
"முடியாது. பொய்யாகச் சத்தியம் செய்ய முடியாது. ஒரு போதும் அப்பிடி நான் சத்தியம் செய்ய மாட்டேன். பூசை பண்ணுகிறது. எனக்கு வெறும் தொழிலல்ல. தெய்வத்தை நம்புகிறவன் நான். தெய்வத்தைப் பூசிக்கிறவன். அந்த நம்பிக்கையோடு பூசை செய்கிறவன். தெய்வந்தான் எனக்கு உண்மை. சத்தியம். எல்லாம்.”
"அப்படியோ..?”
"உண்மையைச் சொல்லுகிறதெண்டால்.”
“என்ன உண்மை?”
“மணியம் கோயில் உட்பிரகார மதிலோடு நின்று சிறுநீர் கழித்தார். எதிரிகள் அவரைப் பிடித்து இழுத்து வந்து கோயிலுக்கு வெளியே விட்டார்கள். என்று தான் சொல்லுவேன்” என மனதில் நினைத்துக் கொண்டார்.
“எனக்கு அந்தத் தேவை அடக்க முடியாமல் வந்து விட்டால் கோயிலில் இருந்து உடனடியாக வெளியேறி ஒதுக்குப்புறமாகச் சென்று பூணுாலை எடுத்து செவியின்மேல் போட்டுக் கொண்டு, காரியம் முடிஞ்ச பிறகு நீரினால் உடலைச் சுத்தம் செய்த பின்னரே ஆலயத்துக்குள்ளே திரும்பி வருவேன். இவர் இந்த மணியம். குருக்கள் ஏதோ விட்டால் குற்றமில்லை எண்டு சொல்லுவார்களே! அது போல, என்னவும் செய்ய லாமோ? ஆட்டத்துக்கு வந்த தேவடியாள், இளநீர்க் கோம்பைக்குள்ளே கழித்துப்போட்டு விட்டுப் போவதைக் கண்டும் காணாமல் இருக்கிறவர் கள் தானே இவர்கள்!”
குருக்கள் சாட்சி சொல்வதற்கு மறுத்துவிட்ட நாள் முதல் மணியம் அவர் மேல் மனதில் வன்மத்துடன் நடந்து கொள்ளுகிறார்.
“அவன் நிலபுலம் உள்ளவன். ஆளணி உள்ளவன். நான் கெளரவ மான ஏழை எனக்காகப் பேச ஆர் இருக்கிறார்கள்” என்று உள்ளுர அஞ்சி அஞ்சி மனம் புழுங்கிச் செத்துக் கொண்டிருக்கிறார் குருக்கள்
ஆனால் ஏனோ இன்று அவர் மனதில் என்றுமில்லாத அளவு கடந்த விரக்தி அந்த விரக்தியினால் தோன்றும் இனம் புரியாத ஒருவகைத் துணிச்சல்,
அவருக்கு சினம் மூண்டுவிட்டால் அவரை அறியாமலே அவரு டைய வாழைப் பொத்திக் குடுமியை அவிழ்த்து அவிழ்த்துக் கட்டிக் கொண்டிருப்பார்.
இன்றும் அந்தக் குடுமிக்குள் ஒரே நமைச்சல், கைகளில் ஒரு துருதுருப்பு.
ஆலயத்துக்குள்ளே நின்ற கொண்டு குடுமி மயிரைக் குலைத்துக் கட்டக்கூடாது என்ற எண்ணத்தினால் மனதைப்போல கைகளைக் கட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறார்.

Page 72
132 தெணியான்
மணியகாரன் எவ்வளவுதான் பூசையைத் துரிதப்படுத்த வேண்டு மென அதிகாரம் பண்ணினபோதும் குருக்கள் மிக ஆறுதலாக, நிதான மாகப் பூசையைச் செய்து முடிக்கிறார்.
"எப்படித்தான் சுணக்கினாலும் அவன் விட்டிட்டுப் போக மாட்டான்” என நினைத்துக் கொண்டு, ஒருகையில் விபூதித் தட்டு, மறு கையில் தீர்த்தக் கெண்டியைத் தூக்கிக் கொண்டு, வழிபாடு முடித்துக் கொண்டு அங்கு நிற்கும் பக்தர்களை நோக்கிக் குருக்கள் வருகின்றார்.
இதற்காகவே இதுவரை காத்து நிற்கும் மணியகாரன் வேகமாக உள்ளே சென்று இன்னொரு விபூதித் தட்டைக் கையில் எடுத்துக் கொண்டு விரைகின்றார்.
தாழ்த்தப்பட்டவர்கள் அந்தக் கோயிலுக்குள் பிரவேசம் செய்து ட்டார்கள் என்பதால் உயர்குடிக் கெளரவங்கள் குறையாத வண்ணம் இப்பொழுதும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு விட்டன. தாழ்த்தப்பட்டவர்கள் முதல் மூன்று மண்டபங்கள் வரைதான் உள்ளே வரலாம். அந்த மூன்று மண்டபங்களையும் தவிர்த்துவிட்டு, ஏனைய மண்டபங்கள் இரும்புக் கிராதிகளால் எல்லை போட்டுத் தடுக்கப்பட்டுவிட்டன. ஆலயப் பிரவேசம் நடந்து முடிந்த பின்னர் புதிதாக முளைத்த வேலிகள், அந்த இருப்புக் கிராதிகள். ஆலயப் பிரவேசம் நடைபெற்ற அனைத்து ஆலயங்களிலும் செய்யப் பெற்றிருக்கும் ஏற்பாடு இது.
சாதிய சமூகத்தினால் தாழ்த்தப்பட்டவர்கள் ஆலயங்களுக்குள் இன்னும் முழுமையாக அங்கீகரிக்கப்படவில்லை என்பதன் அடையாளச் சின்னந்தான் அந்த வேலி
தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் மனித உரிமையை ஓரளவு அங்கு நிலைநாட்டிக் கொண்டுவிட்டார்கள். ஆனால் அவர்களுக்குள் முதியவர் கள்ள சிலர் இன்னும் ஆலயத்துக்கு வெளியே நின்று வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
சாதிமான்கள் ஆலயத்துக்குள்ளே தங்களைப் புறம்பு படுத்திக் கொண்டு தனித்து முன்வரிசையிலே நின்று கொண்டிருக்கின்றார்கள்.
குருக்கள் அந்த முன்வரிசைக்காரர்களுக்கு மட்டுந்தான் கடந்த காலம் போல தமது கையினால் திருநீறு வழங்க வேண்டும் என்பது மணியகாரனின் கண்டிப்பான கட்டளை.
திருநீறு, சந்தனத்தைக் கிள்ளி உயரப் பிடித்த கையினால், தாழ்த்தப்பட்டவர்களின் கைகளில் போட்டுக் கொண்டு போகும் வழக்கம் மணியகாரனுக்குரியது. இன்னும் அந்தப் பகுதியாரை அவர் கைவிட்டு விடவில்லை.
அவர்களால் தடுக்க இயலாமல், தாழ்த்தப்பட்வர்களை ஆலயத் துக்குள் ஏதோ அனுமதிக்க வேண்டி நேர்ந்து விட்டது. ஆனால் சில தீர்மானங்களை அன்றே தனது மனதில் அந்தரங்கமாக மணியகாரன் எடுத்துக் கொண்டுவிட்டார்.

ஒடுக்கப்பட்டவர்கள் 133
“என்னதான் நடந்தாலும் சாமி தூக்கிறதுக்கு தேர் இழுக்கிறதுக்கு விடப் போறதில்லை. திருவிழாச் செய்யும் இடங் கொடுப்பதில், உள்ளுக்கு வந்திட்டாங்கள். ஏதோ ஒதுங்கி நிண்டிட்டுப் போகட்டும்.
மணியகாரன் வேறு எதற்குச் சம்மதித்து வந்தாலும், தாழ்த்தப் பட்டவர்களுக்கு குருக்கள் திருநீறு கொடுப்பதற்கு மாத்திரம், அவர் ஒரு காலமும் உடன்படப் போவதில்லை என்பது குருக்களுக்குத் தெளிவாகத் தெரியும். மணியகாரனின் அந்தரங்கம் குருக்கள் விளங்கிக் கொள்ளாத தல்ல. அவர் நோக்கம் குருக்களுக்கு எரிச்சலை மூட்டுகிறது.
குருக்கள் தீர்த்தக் கெண்டியை கையில் எடுக்கின்றார். கைகளை ஒன்றன்மேல் ஒன்றாக வைத்துக் கோலிப் பிடித்து பணிவாக நீட்டிய கரங்களில் தீர்த்தத்தை ஊற்றி வருகின்றார். பின்னர் திருநீற்றுத் தட்டினைக் கையில் எடுத்து வரிசையாக் திருநீறு கிள்ளிப் போட்டுக் கொண்டு வருகின்றார். அந்தத் தட்டில் ரூபாய்க் கணக்கில் நாணயக் குற்றிகள் தட்சணையாக விழுந்து கொண்டிருக்கின்றன.
ஆலயத்துக்குள் ஒதுங்கி நிற்கின்றவர்களுக்கு மணியகாரன் திருநீறு கொடுத்துக் கொண்டு வருகிறார். அவருடைய திருநீற்றுத் தட்டிலும் நாணயங்கள் விழுந்து கொண்டிருக்கின்றன.
பின்னர் வெளியே நிற்கின்றவர்களை நோக்கி அவர் திரும்பு கின்றார்.
ஆலய உண்டியல்களில் விழும் பணம் ஆலய நிர்வாகத்தை நடத்தும் மணியகாரனைப் போய்ச் சேரும். தட்சணைக்காசு குருக்களுக்கு உரியது என்பதே அங்குள்ள நடைறை விதி
குருக்கள் விபூதி வழங்கி முடித்த பின்னர், சந்தனம் கொடுப்பது அங்கு எடுபிடி வேலைகள் செய்யும் பண்டாரத்தின் பொறுப்பு.
குருக்கள் விபூதித் தட்டைக் கையில் ஏந்திய வண்ணம் கர்ப்பக் கிருகத்தை நோக்கி உள்ளே செல்வதற்குத் திரும்புகின்றார்.
"ஐயா, எங்களுக்கும்.” வெளியே நின்றுகொண்டிருப்பவர்களுக்கு விபூதி தான் கொடுக்க வேண்டுமே என்ற அந்தரிப்பில், வேகமாகச் செயற்பட்டுக் கொண்டு நிற்கும் மணியகாரன் செவிகளில் அந்தக் குரல் வந்து விழுகிறது. அவர் திடுக்கிட்டு திரும்பிப் அவர்களைப் பார்க்கின்றார். அந்தப் பார்வையில் அவர் கண்களில் அப்போது கற்பூரம் கொளுத்தலாம்.
"நான் தாறன் பிறகென்ன..? மணியகாரன் உறுமுகின்றார். “உம்மை ஆர் கேட்டது” என அவரை அலட்சியப்பண்ணி விட்டு "ஐயா நீங்கள் தாருங்கோ!” என்று குருக்களை மீண்டும் அழைக்கின்றார் கள் ஒடுக்கப்பட்ட சமூகத்து அந்த இளைஞர்கள்.
குருக்கள் செய்வதென்ன என்று தீர்மானிக்க இயலாது ஒரு கணம் ஸ்தம்பித்து நிற்கின்றார்.

Page 73
134 தெணியான்
"ஐயா, என்ன யோசிக்கிறியள்? கொண்டு வாருங்கோ” குருக்கள் நெஞ்சு இறுகுகிறது. அது வைரம் பாய்ந்த ஒரு எழுச்சி வெறியாக உருவெடுக்கிறது. விபூதித் தட்டை உறுதியாகப் பிடித்த வண்ணம் அந்த இளைஞர்களை நோக்கி இரும்புக் கிறாதிவரை அவர் வேகமாக வருகின்றார்.
"ஒய், ஐயர்! நில்லுமங்கே, உம்மை ஆர் இவன்களுக்குக் குடுக்கச் சொன்னது?”
மணியகாரன் உருப் பற்றித் துள்ளிக் குதித்துக் கொண்டு பல்லை நெருடி பார்வையால் எரிக்கிறார்.
அலட்சியமாக ஒரு பார்வையால் அவரை ஒதுக்கித் தள்ளிவிட்டு, இரும்புக் கிறாதிக்கு அருகே வந்து நெருங்கி நிற்கும் அந்த இளைஞர் களுக்குத் தமது கரத்தினால் விபூதியை அள்ளி வழங்குகிறார் குருக்கள்.
அவரது விபூதித் தட்டில் தட்சணையாக ரூபா நாணயங்கள் விழுகின்றன.
"ஒய் நீ ஒரு பச்சை அரிசி தின்.” கொதிப்புடன் மணியகாரன் வாய் திறந்து சொல்லி முடிப்பதற்குள்.
"ஒய் வாயை மூடும், நீர் ஏன் குதிக்கிறீர் எண்டது எனக்குத் தெரியும். எப்பவும் என்ரை வயிற்றிலே அடிச்சுப்போட்டு, நீர் சுருட்டிக் கொண்டு போறதுக்காகத்தான். எல்லாம். இதுக்காகத்தான். சாதியும் சமயமும், இந்தாரும். நீரே எல்லாத்தையும் வைச்சுக் கொள்ளும்”
குருக்களின் குரலில் முன்னர் என்றும் இல்லாத ஒரு சத்திய ஆவேசம் மேலோங்கி ஒலிக்கிறது.
அவர் தமது விபூதித் தட்டில் கிடந்து ( லகத்துச் சிரிக்கும் தட்சணைக் காசு முழுவதையும் மணியகாரனின் திருநீற்றுத் தட்டில் கொட்டி விட்டு, வெற்றுத்தட்டை உறுதியாகக் கையில் பிடித்த வண்ணம் மூலமூர்த்தியை நோக்கி கைகளை வீசி வீசி நடந்து போய்க் கொண்டிருக்கின்றார்.
- ஈழமுரசு O8. O9.1985

இன்னுமா . . .?
திடீரெனப் பயங்கர வெடிச் சத்தம், இருளைக் கிழித்தபடி எல்லோரும் துடித்துப் பதைத்து எழுகின்றோம்.
"ஐயோ, என்ரை ராசா” அம்மாவின் அவலக் குரல். அம்மா எழுந்து என்னருகே ஓடி வந்து விடுகிறார். அம்மாவுக்கு உடல் பதறிக் கொண்டிருக்கிறது.
சின்னவள் அம்மாவின் அரவணைப்பிற் சுருண்டு கிடந்தவள். அவள் நல்லாப் பயந்து போனாள். விக்கி விக்கி அழுகிறாள். அம்மாவின் பின்னால் அவளும் இழுபடுகின்றாள்.
ஒரே பீதி. குழப்பம். கலக்கம். "ஏனப்பா குளறுகிறாய். விளக்கைக் கொளுத்து!” அப்பாவின் குரல் இயல்பாக இல்லை - காற்றில் ஆடும் விளக்குச் சுடர்போலப் படபடக்கின்றது.
லயிற்றைப் போடுவதற்கும் பயம். அம்மா விளக்கை ஏற்றுகின்றார்.
இப்பொழுது எல்லோரும் வந்து என்னைச் சூழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள். நான் படுக்கையை விட்டு எழுந்து அவர்களுக்கு மத்தியிற் குந்தி இருக்கின்றேன்.
அம்மாவின் உடல் இப்பொழுதும் நடுங்குகிறது. மூச்சு இரைக்கிறது!
அப்பாவின் முகத்திலும் கலவரம். குழப்பம்.

Page 74
136 தெணியான்
சின்னவளுக்கு நேரே மூத்த என் தம்பி, அப்பாவைப் பிடித்துக் கொண்டு அவருக்குள் ஒடுங்குகிறான்.
சின்னவள் அம்மாவின் மடிக்குள்ளே சுருண்டு போனாள். மூத்த தங்கைகள் இருவரும், எனக்கு மிக நெருக்கமாக இரு பக்கங்களிலும் குந்தி இருக்கிறார்கள்.
நடுவில்களாகப் பிறந்த இரு தங்கைகளும் எனக்கு முன் பருந்துக் குப் பயந்த கோழிக்குஞ்சுகளாகக் குறாவிப்போய் இருக்கிறார்கள்.
நான் இவர்களுக்கெல்லாம் எதிர்காலத் தாய்க்கோழி அப்பா அம்மாவுக்கு நம்பிக்கை நட்சத்திரம் - நிழல் தரும் விருட்சம்.
அம்மாவின் "ஐயோ!” என்ற அவலக்குரல், தன் ஊனாக உதிர மாக என்னைச் சுமந்து பெற்ற ஒரு அன்னையின் குரலாக மாத்திரம் இல்லை. இந்த மண்ணின் அம்மாக்களின் இதயங்களிலிருந்து எழும் உயிரின் குரல். இப்பொழுது எத்தனை வீடுகளில் இந்தப் பதற்றம். கலக்கம். ஏக்கம்!
சூட்டுச் சத்தங்கள் மேற்குத் திசையில் தொடர்ந்து கேட்கின்றன. நேற்று மாலையில் மனசு சொல்லியது. இரவு வந்து படுக்கையில் விழுந்து. துயிற் போர்வையால் மூடி உறங்குவதற்குப் பிரயத்தனித்தபோது. போர்வையை உதறித் தள்ளிக் கொண்டு மனசு சொல்லியது.
"நான்ள என்னவோ நடக்கப் போகிறது.” அம்மாவின் விழிகள் அந்தியிலேயே பிதுங்க ஆரம்பித்து விட்டன. அப்பா முகம், கறுத்து இறுகிப் போனது. வீட்டிலிருந்து ஒரு கிலோ மீற்றர் தொலைவும் இருக்காது. பொழுது கருகும் வேளை. ட்றக் வண்டி ஒன்று கண்ணி வெடியிற் சிக்கிச் சிதறிப் போனபோது. அப்பாவும் அம்மாவும் இப்படி ஆனார்கள்.
அப்பொழுதே. அநுபவப்பட்ட மனசு சொல்லியது. "நாளைக்கு என்னவோ நடக்கப் போகிறது.” இன்னும் ஒரு மணி நேரத்துக்கு மேல் காத்திருக்க வேணும், கிழக்கு வெளிப்பதற்கு அம்மாவால் அதுவரை பொறுமையாகக் காத்திருக்க முடியவில்லை. அவசரப்படுகிறார். இருளில் எப்படி வெளியே போவது? கொலைகாரர்கள் எங்கே பதுங்கியிருக்கிறார்களோ!
"ஐயோ, இப்ப என்ன செய்யிறது!” அம்மா மனசு அந்தரிக்கின்றது. எப்படியும் என்னைக் காப்பாற்ற வேணுமென்று மனசு துடிக்கிறது. கண்கள் கசிந்து வடிக்கின்றன.
"நேத்தைக்கே என்ரை ராசாவைத் தூரக் கொண்டுபோய் விட்டி ருக்க வேணும்.”

ஒடுக்கப்பட்டவர்கள் 137
“பொழுது பட்டாப் போலை எங்கே போகிறது கொண்ணருந் தானே வந்திட்டுப் போனவர்.”
அப்பா பெருமூச்சு விடுகிறார். என்றுமில்லாத புதுமை அம்மாவை எதிர்பார்க்காமல் அப்பா எழுந்து அடுக்களைக்குட் போகின்றார்.
தொடர்ந்து சூடு. இடைக்கிடையே ஷெல். அரை மணி நேரத்துக்கு மேலாகச் சத்தங்கள் எழுகின்றன.
எங்கள் தலைகளில் ஷெல் வந்து விழுந்து விடுமோ. என்ற உயிரச்சம் மனசுக்குள்.
சூரியனைச் சூழ்ந்து நிற்கும் கோள்கள் போல. அம்மாவும் என் உடன் பிறப்புகளும் என்னைச் சுற்றி, அவர்களின் ஏங்கும் விழிகள் என்னை மொய்த்துக் கிடக்கின்றன.
இன்னும் ஒரு ஆண்டு கழித்து போனால், நான் பல்கலைக்கழகம் போய் விடுவேன் என்பது அப்பா, அம்மா, மாமா இவர்களின் எதிர் பார்ப்பு. ஒருவேளை அப்படி நடக்கவும் கூடும்.
ஆனால், பல்கலைக்கழகமும் இந்த மண்ணில்தானே இருக்கிறது! அங்கு போய்விட்டால் எப்படி என்னைப் பாதுகாக்க முடியும்? "இளந்தாரிப் பிள்ளையின்ரை இரத்தம் குடிக்கத் திரியிறான்கள்” என்று என்னை நினைத்து நிதமும் அம்மா சிந்தும் கண்ணிர் எப்படி ஆறும்?
அப்பா கோப்பி போட்டு வந்து எனக்குத் தருகிறார். எனக்குக் கூச்சமாக இருக்கிறது. "நீங்களும் குடியுங்கோவன்!” அம்மா சொல்கிறார். “வேண்டாம்” அப்பா மறுத்து விடுகிறார். நான் எழுந்து வாய் அலம்பி, தயக்கத்துடன் கோப்பியை எடுத்துக் குடிக்கிறேன்.
அம்மாவின் விழிகள் குளமாகின்றன. இந்தக் கோப்பியின் பிறகு, இன்னொரு கோப்பி குடிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்காமலும் போகலாம். என்று அம்மா மனசு எண்ணி இருக்கக்கூடும். w
தொடர்ந்து சூடு. ஷெல் வெடித்துச் சிதறும் மரண ஓசைகள் எந்தெந்த உயிர்களை இவைகள் இப்போது குடித்துக் கொண்டி ருக்கின்றனவோ! மனசுக்குள் கோரக் காட்சிகள் அங்கமங்கமாகச் சிதறிப் போகின்றன.
இன்னும் காகங்கள் கரையவில்லை. சேவல்கள் கூவவில்லை. யமதூதர்களின் மனித வேட்டையினால் எழும் மரண ஒலங்களில்

Page 75
138 தெணியான்
எல்லாமே மூச்சடங்கிப் போய்விட்டன போலும்!
கிழக்கு வெளுக்க ஆரம்பிக்கிறது. முகம் தெரியும் வெளிப்பு. கீழ்வானில் குருதி வெள்ளம் பெருகிக் கொண்டிருக்கிறது. அப்பா சயிக்கிளை எடுக்கிறார். "வா, தம்பி” தாய்ப்பூனை குட்டியை வாயிற் கெளவிக் கொண்டோடுமே, அது போல அப்பா என்னைக் கொண்டோடப் போகின்றார்.
இது மாச்சரிய சம்பந்தம். எனக்கு இதுவும் வெட்கமாகத்தான் இருக்கிறது. இளையவர்களைப் பாதுகாப்பாக வீட்டின் உள்ளே நிறுத்திவிட்டு, அம்மா வெளியே வருகின்றார். இரு கரங்களினாலும் என் தலையைப் பிடித்துத் தாழ்த்தி, கன்னங்களில் மாறி மாறி முத்தமிடுகின்றனர். அம்மா வின் விழிகளால் இதயம் வழிகின்றது. கால்கள் நடுங்குகின்றன.
நான் மாமாபோல, அப்பாவின் தலைக்குமேல் ஓங்கி உயர்ந்த வளர்த்தி. ஆனால் அம்மா மனசில் நான் இப்போதும் பச்சைக் குழந்தை.
என் மனசுக்கும் அம்மாவின் இந்தக் கசிவு இப்போது சுகமாகத் தான் இருக்கிறது. இந்த அணைப்பு ஆறுதலைத்தான் தருகிறது.
அம்மா முற்றத்தில் நின்று இரு கரங்களையும் கூப்புகிறார். குல தெய்வங்களுக்கு வேண்டுதல் பண்ணுகிறார்.
"நேரை அண்ணா வீட்டை போங்கோ!” அப்பா பேசவில்லை. எனக்கு தெரியும் அம்மா இப்படித்தான் சொல்லுவா. அப்பா அங்கேதான் கூட்டிப் போவார்.
பதற்றமான இந்த வேளையிலும் ஒரு தடவை சிரிக்க வேண்டும் போல மனசுக்குள் ஒரு கெக்கலிப்பு.
அம்மா சில சமயங்களில் இப்பொழுதும் சொல்லுவதுண்டு. "காய்ச்சல் வந்தாலும் மாமாவைக் கூட்டிக்கொண்டு வாங்கோ எண்டுதான் மூத்தவன் சொல்லுவான், சிறிசிலை.”
அப்போது ஒரு நாள் அப்பா நினைவு படுத்தினார். "மூத்தவனைப் பெற ஆஸ்பத்திரிக்கு வெளிக்கிட்டு நிண்டு கொண்டு அண்ணாவை இன்னும் காணவில்லை. போய்க் கூட்டிக் கொண்டு வாருங்கோ. எண்டு நீயுஞ் சொன்னனி!” மாமா மீது அப்படியொரு நம்பிக்கை. அப்பா சயிக்கிளில் ஏறிக் கொள்ளுகிறார். எனக்கு மனசுக்குச் சங்கடமாக இருக்கிறது. அப்பா என்னை ஏற்றிக்கொண்டு போவதா!

ஒடுக்கப்பட்டவர்கள் 139
“சுத்தி வளைச்சுப் போட்டான்களாம். ஒரு இடமும் போகேலாது” சிலர் சொல்லிக்கொண்டு ஒடுகிறார்கள். மாமா வீடு அதிக தூரமில்லை. ஐந்நூறு மீற்றர் தூரத்துக்குக் குறைவாகவே இருக்கும்.
நாங்கள் போய்ச் சேரும்போது. நிலம் வெளிக்கும் வரை காத்திருந்த மாமா புறப்பட்டுவிட்டார், என்னைத் தேடிக்கொண்டு வருவதற்கு.
நாங்கள் வீட்டுக்குள் நுழைகின்றோம். மாமா கூடத்து வெளிக்கதவை மூடியும் மூடாத நிலையில், தூக்கக் கலக்கம் நிறைந்த வழிபோல விட்டு வைத்து உள்ளே வந்து உட்காரு கின்றார்.
“சுத்தி வளைச்சிருக்கிறான்களாம்.” அப்பா சொன்னபோது, மாமாவின் தலை அசைகிறது. மாமாவுக்கு முன்கூட்டியே அது தெரிந்திருக்க வேணும். மாமா முகத்திலும் வழமையான அந்த ஒளி இல்லை; தெளி வில்லை. மாமாவும் குழம்பித்தான் போனார்.
சற்று நேர மெளனத்தின் பின் மாமா சொல்லுகிறார்; "நீங்கள் போங்கோ பிள்ளையஸ் தனிய. தம்பியை நான் பார்த்துக் கொள்ளுகிறன். தம்பியை அவன்கள் கூட்டிக்கொண்டு போறதெண்டால். என்னையும் சேர்த்துக்கொண்டு போகட்டும்.”
இதுதான் மாமா எனக்கு மெய் சிலிர்க்கிறது. மாமா முகத்தை நிமிர்ந்து நோக்க முடியவில்லை. மனசு உள்ளே கசிகிறது.
அப்பாவுக்கும் என்னை விட்டுப் போக மனசில்லை. அப்பா வழமை போல மெளனமாக இருக்கின்றார்.
மாமா தருணம் வாய்க்கும் போதிலெல்லாம் எனக்குச் சொல்லுவார்.
“தம்பி குடும்பத்திலை மூத்தவன் நீ அடுத்த தலைமுறையின் முதல் வாரிசு. எங்கடை குடும்பங்களுக்குத் தலைவன் நீ உன்னாலை தான் எங்கடை குடும்பம் தழைக்க வேணும். இதுகளை யோசிச்சு நட.!”
இந்த மாமா தான் சிறு பராயத்தில் எனக்குச் சொல்லித் தந்திருக் கிறார்.
“அச்சம் தவிர் ஆண்மை தவறேல்” பாரதியின் புதிய ஆத்திசூடி
இப்பொழுது என்னைப் பாதுகாப்பதற்காக, தன்னையே பணயம்

Page 76
140 தெணியான்
வைக்கிறேன் என்கிறார் இது மாமாவின் வீரமென்றால். மாமா எனக்குச் சொல்லி என் உதிரத்தில் ஊறிப்போன புதிய ஆத்திசூடி.?
நான் எதற்காக அஞ்ச வேண்டும்? எங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறான் கொலை வெறி பிடித்த எதிரி அவன் கையில் ஆயுதம் இருக்கிறது. என் கை வெறுங் கை. என்னுடைய கையிலும் ஆயுதம் இருந்தால்.?
மாமா வலைக்குள் பந்தொன்றைப் போட்டு முற்றத்து மாமரக் கிளையில் அதைத் தொங்க விடுவார். கிறிக்கெட் மட்டையை என் கையில் தந்து மெல்ல மெல்ல அந்தப் பந்தை அடிக்கப் பழக்குவார். மாமாவைப் போல கிறிக்கெட் மட்டை பிடித்த கரந்தான் இது. ஆனால், நான் இந்தச் சமயத்திலும் கிறிக்கெட் மட்டையைப் பிடித்துக் கொண்டு நிற்க முடியுமா?
சன நடமாட்டம் முற்றாக இப்பொழுது நின்று போனது. மக்கள் வாழுமிடமாக இல்லாது மூச்சடங்கிப் போன சூனியப் பிரதேசம் போல.
ஆரம்பத்தில் மேற்குத் திக்கிலிருந்து எழுந்த சூட்டுச் சத்தம் இப்போது சுற்றி வளைத்து நான்கு திசைகளிலும் கேட்கிறது. குரல் வளையைக் கரங்களினால் நெரிப்பதுபோல, அது நெருங்கி நெருங்கி வந்து கொண்டிருக்கிறது.
உளுந்து மாவில் தேங்காய்த் துருவலும் சீனியும் சேர்த்து காலை உணவு மாமி தயாரித்து விட்டார். எனக்கு மிகப் பிரியமான உணவு ஆனால், இப்போது உணவு உண்ணும் நிலையிலா இருக்கிறோம்! மாமி என்னை வற்புறுத்துகிறார். மாமாவும் சொல்லுகிறார். நான் சாப்பிட்ட தாகப் பேர் பண்ணிக்கொண்டு எழுந்து விடுகிறேன். மாமாவின் பிள்ளை கள் சின்னவன்கள். ஆரம்பத்தில் அவன்களுக்கிருந்த அச்சம் இப்போது குறைந்து போனது. அவன்கள் அத்தான். அத்தான்’ என்று என்னோடு ஒட்டிக் கொள்ளுகிறார்கள். பள்ளிப் புத்தகங்களைக் கையில் எடுத்து "படம் வருமோ. வராதோ?” விளையாட ஆரம்பிக்கின்றார்கள். இடை யிடையே என்னையும் தங்கள் விளையாட்டுக்கு இழுக்கின்றார்கள்.
மாமா, அப்பா இருவரும் வெறும் கோப்பி மாத்திரந்தான். மாமா ஓயாது அப்பாவோடு பேசிக் கொண்டிருக்கிறார். மனசில் கலக்கமில்லாது இருப்பது போல அவர் காட்டிக் கொள்ள எத்தனிக்கிறார்.
ஆனால் இருவர் முகங்களும் காய்ந்து போய்க் கிடக்கின்றன. மாமா கொஞ்சம் வித்தியாசமான மனிதர். அடிமைத்தனம் எந்த உருவத்தில் வந்தாலும் அதனை மூர்க்கமாக எதிர்க்கின்றவர். மனித நேயம் மாமாவின் உயிர் மூச்சு. வெளிப்பார்வைக்கு இறுக்கமான மனிதர் போலத் தோன்றும், இளகிய நெஞ்சம் மாமாவுக்கு. அநீதியைக் கண்டால்

ஒடுக்கப்பட்டவர்கள் 14
ஆக்குரோசம் கொள்ளுவார். ஆண்மையில்லாதவனுக்கு சினம் எப்படி வரும்? என்று கேட்டுக் கேலியாகச் சிரிப்பார்.
மாமா துடிப்புள்ள இளைஞனாக இருந்த காலத்தில், மூடக் கொள்கைகளை எதிர்க்கும் தமிழ்நாட்டுக் கழகமொன்றின் சீர்திருத்தக் கருத்துக்களைப் பின்பற்றினாராம். அதை இப்போது சொல்லிச் சொல்லி மாமா சிரிப்பார். தமிழ்நாட்டுத் தலைவர்கள் இப்போது கோயில் கும்பிடப் போய்க் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மாமா பழைய வாசனையோ என்னவோ, இன்னும் கோயில்களுக்குப் போவதில்லை.
இந்த மாமாதான் சில தருணங்களில் என்னை ஒரு அர்ச்சுன னாக்கி, அவனுக்கு வில்வித்தை பயிற்றும் துரோணாச்சாரியராகத் தான் மாறி விடுகின்றார்.
“அர்ச்சுனா, பூ தெரிகிறதா?”
“தெரிகிறது”
“பிஞ்சு.?”
“தெரிகிறது”
“g5Tuu.......?”
“தெரிகிறது”
“கனி.?”
“தெரிகிறது”
“கிளை.?”
“தெரிகிறது”
“வேறு என்ன தெரிகிறது.?”
"மரமே தெரிகிறது சுவாமி”
“அர்ச்சுனனா, நீதான் வீரன். வில்லுக்கு விஜயன் என்ற சொல் உனக்குப் பொருந்தப் போகிறது.”
மாமா மனசு நிறைந்து விடுகின்றது.
எங்கள் குடும்பம் என்னும் மரம் அதன் கிளைகள். பூக்கள். பிஞ்சுகள். எல்லாம் என் கண்களுக்குத் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். குடும்பமே எனக்கு இலக்காக இருக்க வேண்டும். இதுதான் மாமா மனசின் ஆதங்கம்.
மாமாவிடம் அறிவுத்திறன் உண்டு. நியாயப்படுத்தும் சாதுரியங் களும் நிறைய உண்டு. ஆனால், இவைகளெல்லாம் இன்று சாதனை
565.
எங்கள் எதிரி வந்து கொண்டிருக்கிறான், இரத்தவெறி கொண்டு. அந்தப் பிசாசிடம் மாமாவின் திறமைகள் அனைத்தும் ஒரு கணத்தில் மரணித்துப் போய்விடும்.

Page 77
142 தெணியான்
என்னைப் பொத்திப் பொத்திக் காக்கும் மாமாவின் அன்பு. திக்கற்றுத் தவிக்கும் அம்மாவின் ஈர விழிகள். அப்பாவின் இறுக்கமான மெளனத்தில் ஒளிரும் பாசம்.
இவைகள்தான் குடும்பத்தின் கீழ் என்னைக் கட்டிப்போடுகின்றன. இப்போது சூட்டுச் சத்தங்களின் கோரத் தகிப்பு கொஞ்சந் தணிந்தது போலத் தோன்றுகிறது.
நேரம் நடுப்பகல் தாண்டி இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாகிப் போய்க் கொண்டிருக்கும் வேளையில்.
மாமியின் ஒடுங்கிய குரல் அஞ்சி அஞ்சி மெல்லக் கீச்சிடுகின்றது. "வாறான்கள். வாறான்கள்.” பச்சைவரிக் காக்கிச் கட்டைகளின் கீழ், கனத்த சப்பாத்துக்கள். வேலிப் பொட்டுக்குள் வரிசையாக அசைகின்றன.
நெஞ்சு படபடக்கிறது. சுவாசிப்பதற்கு காற்றே இல்லாது போனதோ! நெஞ்சில் மூச்சு முட்டுகிறது. முகம் கண்டிப் போகிறது. உதடுகள் வரண்டு போகின்றன. வயிற்றில் மல உபாதை, சிறுநீர்க் கடுப்பு, வியர்வை வழிந்தோடுகிறது.
கனத்த சப்பாத்துக்கள் தொடர்ந்து. தொடர்ந்து, வரிசை. வரிசையாகப் போய். போய் முடிகின்றன.
நல்ல காலம். அவன்கள் உள்ளுக்கு வரயில்லை. மாமி நிம்மதியாக மூச்சு விடுகின்றார். கொய்த மலர்களுக்கு நீர் தெளித்தது போல முகங்கள் மெல்ல ஈரலிக்கின்றன.
சூட்டுச் சத்தம் ஒன்று இரண்டாகி இறுதியில் அடங்கிப் போகிறது. சற்று நேர மெளன சூனியத்தின் பிறகு தெருவில் ஒரு சயிக்கிள் போகிறது. அதன் பிறகு இன்னொன்று.
நாங்கள் அஞ்சினது போல எனக்கொன்றும் நடந்துவிடவில்லை. அதனால் எல்லாமே நல்லபடியாக நடந்து முடிந்ததாக ஒரு எண்ணம். மாமா, அப்பாவுடன் என்னை அழைத்துக்கொண்டு இனி வீட்டுக்குப் போகலாம் என்கிறார். நாங்கள் வெளியே வந்து புறப்படுவதற்குத் தயாராகும் சமயம்.
பூமி அதிருகின்றது; பயங்கரமான குண்டொன்று வெடித்து. ஒரு கண இடைவெளியில் மற்றொன்று.
நாங்கள் அதிர்ந்து குலுங்கிப் போனோம். “என்ன நடந்தது? என்ன நடந்தது?” கேள்விகள் மனசில்; மீண்டும் முகங்களிற் பீதி

ஒடுக்கப்பட்டவர்கள் 143
நாங்கள் திரும்ப வந்து அமர்ந்து கொள்ளுகிறோம். பொறுமையாக அமர்ந்திருக்க இயலவில்லை. மனசு தவிக்கிறது. மாமா துடித்துக் கொண்டிருக்கிறார். "எதுவோ நடந்து விட்டது. அப்பாவிப் பொதுமக்களுக்கு எதுவோ நடந்து விட்டது.”
மாமாவுக்கு வீட்டுக்குள் இருக்க முடியவில்லை. எழுந்து மெல்ல வெளியே வருகின்றார். மாமாவைத் தொடர்ந்து அப்பா. பின்னால் நான். தெருவில் இறங்கி மாமா அங்குமிங்கும் நோட்டமிடுகிறார். மாமாவின் வீட்டிலிருந்து நான்கு வீடுகள் தள்ளி யோகலிங்கத்தின் வீடு. யோகலிங்கம் கடற்றொழிலாளி கடற்கரை ஓரமாகத்தான் இப்போது அடிக்கடி தொல்லைகள் கடற்தொழில் செய்யவும் முடிவ தில்லை.
அவர் கிராமத்துக்குள்ளே புதிதாக வந்து குடியேறி இருக்கின்றார். இப்பொழுது வெடித்த பயங்கரக் குண்டுகள் கடற்கரைப் பிரதேசத்துக் குள்ளேதான் வெடித்திருக்க வேண்டும். அவரும் தெருவுக்கு வந்து அந்தரப்பட்டுக்கொண்டு நிற்கிறார்.
மாமா வெளியே வந்து நிற்பதை அவர் கண்டு விடுகின்றார். "ஐயோ, உங்களுக்குத் தெரியுமா சங்கதி?” கேட்டுக்கொண்டு பதற்றத்துடன் ஆத்துப் பறந்து ஓடி வருகின்றார்.
“என்ன. என்ன விஷயம்?” மாமாவின் குரலும் தடுமாறுகின்றது. "ஒரு ஐம்பது அறுபது பேர் வரையிலை இருக்குமாம். எங்கடை வாசியசாலைக்குள்ளே அடைச்சு வைச்சுப் போட்டு, குண்டு வைச்சுக் கொன்று போட்டான்களாம்.”
மாமா தலையிற் கை வைத்த வண்ணம் நிலத்தில் குந்தி விடுகின்றார்.
அப்பாவின் கண்கள் என்னை நோக்கிக் கலங்குகின்றன. என் கரங்கள் இறுகுகின்றன; கிறிக்கெட் மட்டையைப் பிடிக்க அல்ல.
“ஆரார் துடிதுடிச்சுச் செத்தார்களோ!” யோகலிங்கம் குரல் வெம்புகிறது.
தான்.” மாமாவின் குரல் உடைந்து போய்விட்டது.
விபரம் ஏதுவும் தெரியவில்லை. யாரிடம் கேட்டு அறிவது? ஏங்கிக்
கொண்டு நிற்கும்போது.
தெருவில் ஒரு இளைஞன், கடற்கரைத் திக்கிலிருந்து சயிக்கிளில்

Page 78
144 தெணியான்
வேகமாக வந்து கொண்டிருக்கின்றான். அவன் யோகலிங்கத்தின் பழைய குடியிருப்புக்குக் கிட்ட உள்ளவன்.
யோகலிங்கம் அவனைக் கண்டதும் ஆவலாதிப்படுகிறார். அவன் எங்களை நெருங்கி வருகின்றான். “என்ன தம்பி, அவசரமா..?” யோகலிங்கம் கேட்க வேண்டியதை விசாரிப்பதற்கு முதல் கேட்டு வைத்த முறைமைக் கேள்வி.
சயிக்கிளின் வேகம் சற்றுத் தணிந்து மெல்ல ஊருகிறது. “ராத்திரி சாத்துப்படிக்கு மாலை கட்டப் போன சித்தப்பாவையும் தம்பியையும் இன்னும் காணன். அதுதான் தேடிப் போறன்” “அது சரி தம்பி. ஆரார் உங்கை செத்ததாம்?" "நீங்கள் கவலைப்படாதையுங்கோ அண்ணே. எங்கடை ஆக்கள் ஒருதருமில்லை. அதுTஉ. எல்லாம் சமரவாகுப் பள்ளரும் இலந்தைக் காட்டு நளவந்தருந்தானாம்.”
அவன் அலட்சியமாகச் சொல்லிக்கொண்டு சயிக்கிளை வேகமாக மிதிக்கிறான்.
மாமா பட்டென்று எழுந்து நிற்கிறார். அவர் விழிகளில் இரத்தம். எனக்கு கரங்களின் இறுக்கம் தளர்ந்து, கால்கள் சோர்ந்து போகின்றன.
- நான்காவது பரிமாணம் ജ്ഞബ് 1993

மாற்றம் வந்துவிட்டது
திருச்சிற்றம்பலம் வாத்தியார் வீட்டிலிருந்து பாடசாலைக்குப் புறப்படுகிறார்.
பாடசாலையில் முதல் பாடவேளை முடிந்து இரண்டாவது பாட வேளை ஆரம்பித்து வைப்பதற்குப் பொதுவாக அடிக்கும் மணி அடித்து ஒய்ந்து சில நிமிடங்கள் கழிந்து போயிற்று.
வாத்தியார் பாடசாலைக்கு சற்று அப்பால் பரந்து கிடக்கும் பனங் காணிக்கு வந்து சேருகின்றார்.
காணியின் மத்தியில் மனிதப் பாதங்கள் பதிந்து பதிந்து செதுக்கி விடப்பட்டிருக்கும் ஒற்றையடிப் பாதை நீண்டு வளைந்து வளைந்து செல்லுகிறது. அந்தப் பாதையில் பாடசாலை நோக்கி வாத்தியார் மெல்ல நடந்து வந்து கொண்டிருக்கிறார்.
வாத்தியார் ஒற்றையடிப் பாதையில் வந்து கொண்டிருக்கும் போது வழமையாக அந்தப் பாடசாலை மணி அடிக்கும். அல்லது ஒற்றை யடிப் பாதை கடந்து மணற்தெருவில் இறங்கி நடந்து கொண்டிருக்கும் வேளை மணியோசை காற்றில் கலந்து வரும். சில் தினங்களில் பாடசாலையின் பிரதான வாசலில் நீறு பூத்த தலையும் வெண்ணிற்று நெற்றியுமாக வெள்ளை ஆடை அணிந்து வாத்தியார் பிரசன்னமாகும் சமயம் அவ் வருகைக்கு கட்டியம் கூறுவது போல பாடசாலைக்குள் மணி ஒலித்துக் கொண்டிருக்கும்.
வாத்தியார் பாடசாலை மணி கேட்டு என்றும் பெரிதாக மனதை அலட்டிக் கொண்டதில்லை. அந்த மணி அடித்தால் என்ன! அடிக்காமல் மெளனமாக தூங்கிக் கிடந்தால் என்ன அவருக்கு எல்லாம் ஒன்றுதான்.

Page 79
146 தெணியான்
வாத்தியார் பாடசாலைக்கு வந்து சேருவதற்கு அவருக் கென்றொரு நேரம் இருக்கிறது. அந்த நேரம்தான் அவரைப் பொறுத்த வரை பாடசாலை ஆரம்பிக்கும் நேரம்.
மணியோசை என்பது வாத்தியார் மனக் கருத்தில் மிகவும் புனித மானது. ஆலய மணியோசை ஒன்றுதான் வாத்தியார் செவிகளில் புகுந்து நெஞ்சத்தை நெகிழ்விக்கும் தெய்வீகம். அவர் இருக்கும் எந்தத் திக்கிலிருந்து எந்தச் சந்தர்ப்பத்தில் ஆலய மணி ஒலிக்கட்டும், உடனே எழுந்து நின்று கண்களை மூடி நெற்றியில் ஒரு தடவை குட்டி வணங்கிக் கொண்டுதான் மீண்டும் தனது ஆசனத்தில் அமர்ந்து கொள்வார்.
காலையில் எழுந்து தினமும் வீட்டுக் கிணற்றில் குளிர்ந்த நீரை அள்ளி அள்ளித் தலையில் ஊற்றி நீராடி முடிப்பார். பின்னர் தோய்த் துலர்ந்த ஆடையுடுத்தி ஆலயத்தை நோக்கிச் சென்று விடுவார். ஆலய வழிபாட்டில் எவ்வளவு நேரம் அவர் மனம் இலயித்து அங்கு தரித்து நிற்பார் என்று சொல்வதற்கில்லை. மனம் விரும்பியது போல் காலைப் பொழுதில் பெரும் பகுதி ஆலயத்தில் கழிந்து போய்விடும். அதன் பிறகு சாவதானமாக வீடு வந்து சேர்வார். காலை ஆகாரத்தை முடித்துக் கொண்டு பாடசாலைக்கு மெல்லப் புறப்படுவார்.
திருச்சிற்றம்பலம் வாத்தியாருக்குப் பொருத்தமான சொந்தவுர்ப் பாடசாலை இந்தச் சைவப்பிரகாச வித்தியாசாலை. அவரும் இங்குதான் தனது ஆரம்பக் கல்வியைக் கற்றார். இப்போது பல வருடங்கள் தொடர்ச்சியாக அவர் இங்கு ஆசிரியராக இருந்து வருகின்றார்.
தனது வலுவான வேர் இந்தப் பாடசாலை மண்ணுக்குள் ஆழமாகப் பதிந்து கிடப்பதாக அவருக்குள்ளே ஒரு நினைப்பு.
வாத்தியார் பாடசாலை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். பாடசாலைக்கும் அவருக்கும் உள்ள இடைவெளி குறுகிக் கொண்டு வருகின்றது. பாடசாலை நெருங்க நெருங்க வாத்தியார் நெஞ்சில் ஒரு சந்தேகம்.
பாடசாலையில் ஒரு அசுமாத்தமும் இல்லை. பாடசாலை மாணவர்கள் அங்கு இருப்பதாகத் தெரியவில்லை. பாடசாலை நடந்து கொண்டிருப்பதாகவும் தோன்றவில்லை.
என்ன நிகழ்ந்திருக்கும்? நாடு முழுவதும் பாடசாலைகளை மூடும் சூழ்நிலை திடீரென்று உருவாகியிருக்கலாம்.
இந்தத் தேசத்தில் என்னதான் நடக்காது! வாத்தியார் பாடசாலையின் பிரதான வாசலை அண்மிக்கின்றார். பாடசாலை பிரதான வாசலில் நீறுபூத்த தலையும் வெண்ணிற்று நெற்றி யுமாக வெள்ளை உடை அணிந்து திருச்சிற்றம்பலம் வாத்தியார் பிரசன்னமாகின்றார்.

ஒடுக்கப்பட்டவர்கள் 147
வாத்தியார் வருகைக்குக் கட்டியம் கூறும் மணி இன்று ஒலிக்க வில்லை.
ஆனால் என்ன ஆச்சரியம்! அவர் கண்களை அவரால் நம்பாமல் இருக்க முடியவில்லை. பாடசாலையில் வகுப்புக்கள் எல்லாம் ஒழுங்காக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
ஆசிரியர்கள் எல்லா வகுப்புகளிலும் மிக அக்கறையோடு பாடம் கற்பித்துக் கொண்டு நிற்கின்றார்கள்.
திருச்சிற்றம்பலம் வாத்தியார் வகுப்பில் மாத்திரம் ஆசிரியர் இல்லை. ஆனால் வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அந்த வகுப்பு மாணவர்கள் அமைதியாக எதையோ எழுதிக்கொண்டிருக்கின் றார்கள்.
அடுத்த வகுப்பிலிருக்கும் ஆசிரியை அவர்களுக்கு வேலை கொடுத்திருக்க வேண்டும்.
சாதாரண காலங்களில் என்றால் திருச்சிற்றம்பலம் வாத்தியாரின் வகுப்புக்குள் யாரும் நுழைய மாட்டார்கள். அதிபர் தானும் அந்த வகுப்புக்குள்ளே போவதற்குச் சற்றுத் தயங்குவார்.
தனது வகுப்பில் மற்றவர்கள் வந்து தலையிடுவது திருச் சிற்றம்பலம் வாத்தியாருக்குக் கட்டோடு பிடிக்காது. அப்படித் தலையிடு வதால் தனது கடமையைச் சரிவரத் தான் செய்யவில்லை என்று சுட்டிக் காட்டுவதாக வாத்தியார் கருதுவார்.
வாத்தியார் வியப்புடன் இன்று பாடசாலைக்குள்ளே பார்வையைச் செலுத்தி நோட்டமிடுகின்றார்.
அதிபரின் அலுவலகத்துக்கு முன்னே நிழல் பரப்பி நிற்கும் வேப்பமரத்தின் கீழே மோட்டார் சைக்கிள் ஒன்று நிற்கிறது.
வாத்தியார் மனதில் தெளிவாக இப்பொழுது எல்லாம் விளங்கிக் கொண்டு விடுகின்றது.
அலட்சியமாக உதட்டுக்குள் அவர் நகைத்த வண்ணம் அலுவல கத்தை நோக்கி அடியெடுத்து வைக்கின்றார்.
அதிபர் அலுவலகத்தின் வாசலை நோக்கி அவருக்குரிய கதிரை யில் அமர்ந்திருக்கின்றார். அதிபருக்கெதிரே அர் முகம் நோக்கி பிரதிக் கல்விப் பணிப்பாளர் உட்கார்ந்திருக்கின்றார். அவர்கள் இருவரும் பாடசாலை பற்றித் தமக்குள்ளே பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.
அவர்களுக்கு மத்தியில் மேசையின் மீது ஆசிரியர்கள் தினமும் கைச்சாத்திட்டு வரவு பதிவு செய்து கொள்ளும் பெரிய கொப்பி கிடக் கிறது. அலுவலக வாசலில் வாத்தியார் நிதானமாக முதல் அடி எடுத்து வைக்கின்றார்.
வாசலில் அவர் நிழல் தட்டுப்பட்டதும் அதிபர் முகத்தில் கலவரம் படருகிறது.

Page 80
148 தெணியான்
வாத்தியார் இன்று பாடசாலைக்கு வராமல் நின்றிருக்கலாம். அல்லது கல்விப் பணிப்பாளர் இருக்கின்றார் என்பதைக் கண்டு கொண்டதும் திரும்பி வீட்டுக்குச் சென்றிருக்கலாம். இவ்வளவு நேரம் தாமதமாகி வந்து தன்னைப் பிடித்துக் கொடுக்கப் போகின்றார். என்ன சமாதானம் சொல்லித் தப்பித்துக் கொள்ளலாம் என்று அறியாமல் அதிபர் தடுமாறிக் கொண்டிருக்கின்றார்.
அதிபருக்கு இருந்தாற்போல் உண்டான குழப்பத்தையும் தடு மாற்றத்தையும் வாத்தியார் அவர் முகத்தில் கண்டு கொள்கின்றார். வாத்தியார் எதனையும் விளங்கிக் கொண்டதாக காட்டிக்கொள்ளமால் அலுவலகத்துக்குள்ளே நுழைகின்றார்.
தமக்குள்ளே பேசிக்கொண்டிருக்கும் அவர்களின் உரையாடல் வாத்தியாரின் வருகையால் தடைபட்டு, திடீர் மெளனம் வந்து இருளாக அங்கு கவிகிறது.
வாத்தியார் எந்த விதப் பதற்றமும் இன்றி அடியெடுத்து வைத்து அதிபரின் மேசையருகே வருகின்றார்.
தன்னைத் தவிர அவர்கள் இருவர் அந்த அறையில் இருப்பதாக அவர் காட்டிக் கொள்ளாது பேனாவைக் கையிலெடுத்து மேசைமீது கிடக்கும் கொப்பியை அருகே இழுத்து அதில் கைச்சாத்திட்டு மூடிய பின் பேனாவைச் சட்டைப்பையில் செருகிக் கொண்டு அங்கிருந்து திரும்பு கின்றார்.
"மாஸ்ரர்?” பிரதிக் கல்விப் பணிப்பாளரின் குரல் சற்றுச் சூடாக எழுகின்றது.
வாத்தியார் நடை தடைப்படுகின்றது. அவர் மெல்ல நின்று, அதிபரின் மேசைப் பக்கம் உணர்ச்சியை வெளிக்காட் 1ாது வெறுமனே திரும்புகின்றார்.
“என்ன நேரம்?” கல்விப் பணிப்பாளரின் சூடு தணியாத கேள்வி "நேரம் பார்க்க உங்களுக்குத் தெரியாதா” கேட்க வேண்டும் போல வாத்தியார் உள்ளத்தில் ஓர் உந்தல். ஆனால் நா காத்து மெளனமாக அவர் நின்று கொண்டிருக்கிறார்.
"ஒரு மணித்தியாலத்திற்கு மேலே லேற்” வாத்தியார் பக்கமாகக் கதிரையைச் சற்றுத் திரும்பி அவரைப் பார்த்து பணிப்பாளர் சீறுகின்றார். பலமான அடியொன்று நெஞ்சில் வந்து விழுந்தது போல ஒர் உணர்வு வாத்தியாருக்கு மெல்லத் தலை தூக்குகின்றது. இனி என்ன நா காப்பு!
"நான் பிந்தி வரவில்லை” பணிப்பாளர் முகத்தில் வாத்தியார் வார்த்தைகளால் எத்தி விடுகின்றார்.

ஒடுக்கப்பட்டவர்கள் 49
“என்ன?” பணிப்பாளருக்கு விழிகள் சிவந்து கொண்டு வருகின்றன.
“இதுதான் எனக்கு வழமையான நேரம்” அலட்சியமும் கலந்து மீண்டும் அவர் முகத்தில் சகதியாகப் போய் விழுகிறது.
"அப்படியா?” பட்டென்று திரும்பி அதிபரின் முகம் நோக்கிச் சினக்கிறார் பிரதிக் கல்விப் பணிப்பாளர்.
அதிபருக்குச் சட்டென்று முகம் கறுத்து தலைகுனிந்து போகின்றது.
“பாடசாலை தொடங்குவதற்கு பொதுவான ஒரு நேரமில்லை? உங்களுக்கென்று பிரத்தியேகமான ஒரு நேரம். இதெல்லாம் சொந்த ஊர்ப் பாடசாலையிலே படிப்பிக்கிறதனாலேதான். சரி. சரி. பாடத் திட்டம். பாடக்குறிப்பு தாருங்கோ பார்ப்பம்!"
"நான் அதெல்லாம் எழுதுகிறதில்லை” "ஏன்? “இத்தனை வருஷமாகப் படிப்பிக்கிறேன், பிறகு இதெல்லாம் என்னத்துக்கு?”
"மாஸ்ரர், எத்தனை வருஷ அனுபவமும் இருக்கலாம். ஆனால் வகுப்பறைக்குள்ளே போகும்போது தினமும் அந்தப் பாடத்தை ஆயத்தம் பண்ணிக்கொண்டுதான் போக வேண்டும்.
"நான் எப்போதும் ஆயத்தமாகத்தான் இருக்கிறேன்" "மாஸ்ரர் சும்மா தேவையில்லாத கதைகள் கதைச்சுக் கொண்டு நிற்கிறியள். கண்டிப்பாக உங்களுக்கொன்று சொல்லுகிறேன். காலை எட்டரைக்கு முதல் பாடசாலைக்கு வந்து விட வேண்டும். வருஷ ஆரம்பத்திலேயே பாடத்திட்டம் முழுவதும் எழுதி வைத்திருக்க வெண் டும். ஒவ்வொரு கிழமைக்குமுரிய பாடக்குறிப்பு எழுதி அதிபரிடம் திங்கட்கிழமை கையெழுத்து வாங்கிப் போட வேண்டும். இல்லை யென்றால் இங்கே இருந்து தூர இடத்துக்கு மாறிப் போக வேண்டி வரும். சரி, போய் படிப்பியுங்கோ'
அதிபர் முகத்தையும் கல்விப் பணிப்பாளர் முகத்தையும் ஒரு தடவை குறிப்பாக வெறித்துப் பார்த்து விட்டு அலுவலக அறையை விட்டு வாத்தியார் வெளியே வருகின்றார்.
இரண்டு வாரங்கள் விரைந்து கழிந்து போயிற்று. அன்று ஒரு திங்கட்கிழமை. பாடசாலையின் பிரதான வாசலில் நீறு பூத்த தலையும் வெண் ணிற்று நெற்றியுமாக வெள்ளை உடை அணிந்து வாத்தியார் பிரசன்ன மாகும் சமயம் அவர் வருகைக்குக் கட்டியம் கூறுவதுபோல, பாடசாலை யின் முதல் பாடவேளை முடிந்து இரண்டாவது பாடவேளை ஆரம்பித்து வைப்பதற்கு பொதுவாக அடிக்கும் மணி ஒலித்துக் கொண்டிருக்கிறது.

Page 81
150 தெணியான்
வாத்தியார் பிரதான வாசல் கடந்து பாடசாலை வளவுக்குள் வருகின்றார்.
அலுவலகத்துக்கு முன் வேப்பமரத்தின் கீழே மோட்டார் சைக்கிள் நிற்கின்றது.
வாத்தியாருக்கு நிலைமை புரிந்து விடுகின்றது. இன்று மோதல் ஒன்று காத்திருக்கிறது. எதற்கும் அவர் தன்னை தயார்படுத்திக் கொண்டு அதிபரின் அலுவலகத்தினுள்ளே விறைப்பாக நுழைகிறார்.
அதிபருக்கு எதிரில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் அமர்ந்திருக் கின்றார்.
வாத்தியார் அதிபரின் மேசைமேல் கிடக்கும் கொப்பியை எடுத்து விரித்து கைச்சாத்திட்டுவிட்டுத் திரும்புகின்றார்.
யாரும் எதுவுமே பேசவில்லை. வாத்தியாருக்கு அதிசயமாக இருக்கிறது. இந்த மெளனம் நல்லதுக்கல்ல என்று தோன்றுகின்றது. பயங்கரமான வெடிகுண்டொன்று வெடிப்பதற்கு முன் சூசகமான சமிக்ஞை இது என்று வாத்தியார் மனம் சொல்லுகிறது.
“பெரிய கல்லூரிகளுக்குச் சென்று நொட்ட மாட்டினம். இப்படி ஐந்தாம் ஆண்டு வரையுள்ள சின்னப் பள்ளிக்கூடங்களுக்கு வந்தால் கணக்கப் பிடுங்கி அடுக்குவினம்.”
அதிபர் ஒரு கும்பிடு கள்ளன். எப்போதும் தனது சொந்தக் காரியத்தில் வெகு கவனமாக இருப்பார்.
என்ன செய்வார்கள்! இங்கிருந்து இன்னொரு பாடசாலைக்கு மாற்றுவார்கள். அப்படி அனுப்புவது என்பது இலகுவாக நடக்கக் கூடிய காரியமல்ல. என்ன நடக்கின்றது. என்று பார்த்து விடுவோம்!
திருச்சிற்றம்பலம் வாத்தியார் தனது வகுப்பு நோக்கி போய்க் கொண்டிருக்கின்றார்.
அடுத்து வந்த இரண்டு தினங்கள் வழமைபோல் பாடசாலையில் மணியடித்து மணியடித்து மறைந்து போயிற்று.
வாத்தியார் சந்தேகித்தது போல மூன்றாவது நாள் கல்விப் பணிப்பாளரிடமிருந்து மாற்றக் கட்டளை அவர் கையில் வந்து சேரு கின்றது.
வாத்தியார் நேரடியாக ஊருக்குள் இறங்குகின்றார். தனக்கு அங்கிருந்து மாற்றம் வந்துவிட்டதென்ற செய்தியை எங்கும் பரப்புகின்றார்.
ஊரில் பெரிய கொந்தளிப்பொன்று உருவாகப் போகின்றது. ஊர் முழுவதும் ஒன்று திரண்டு நின்று தனது இடமாற்றத்தை எதிர்த்துப் போராடப் போகின்றது என்று அவர் எதிர்பார்க்கின்றார்.

ஒடுக்கப்பட்டவர்கள் 151
வாரம் ஒன்று மெல்லக் கழிந்துபோனது. அவர் எதிர்பார்த்தது போல் அப்படி ஒன்றும் நடைபெறவில்லை. வாத்தியார் விடயத்தில் ஊர் மக்கள் முன்னர் கண்டும் காணாதவர்களாக எப்படி இருந்தார்களோ, அப்படி இப்பொழுதும் இருந்து விட்டார்கள்.
அவர் இப்படி ஒரு ஏமாற்றம் தனக்கு வரும் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தை அணுகலாம். அதுவும் அதிபரின் கரங்களுக்குள் முடங்கிக் கிடக்கின்றது என்பது அவர் அறியாததல்ல.
வலயக் கல்விப் பணிப்பாளரிடம் ஓடிச் சென்று முறைப்பாடு செய்கின்றார். "அப்படியா! கோட்டக் கல்விப் பணிப்பாளருக்குச் சொல்லுகிறேன், போங்கோ!” என்று சமாதானம் பண்ணி அனுப்பி வைத்து விட்டார். அவருடைய வாக்குறுதி அவ்வளவுதான்.
இறுதியாக ஆசிரிய சங்கத்தை நாடினார். அவர்களும் வெறும் பேச்சளவு தான். மாற்றத்தை இரத்துச் செய்யும் முயற்சியில் ஒரு மாத காலம் மெல்ல மெல்லக் கரைந்து போயிற்று. அந்த மாதச் சம்பளமும் அவருக்குக் கிடைக்கவில்லை.
அவர் வீட்டிலிருந்து ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்குச் சற்றுக் கூடுதலாக இருக்கும் புதிய பாடசாலை. அது ஒர் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை.
முத்தன் மகன் அந்தப் பாடசாலையின் அதிபராக இருக்கின்றான். முத்தனுக்கும் வாத்தியாருக்கும் ஒரு காலத்தில் நல்ல ஒட்டுறவு முத்தன் றக்கிக் கொடுத்த பனங்கள்ளை வாலிபப் பருவத்தில் வாத்தியார் இரகசியமாக இரசித்துக் குடித்திருக்கின்றார். முத்தனுடைய சமூகத்துப் பிள்ளைகள் மாத்தி,ம் அந்தப் பாடசாலையில் படித்துக் கொண்டிருக் கிறார்கள். திருச்சிற்றம்பலம் வாத்தியார் இப்போது அந்தப் பாடசாலை க்குப் போவதைத் தவிர அவருக்கு வேறு மார்க்கம் ஒன்றுமில்லை. வாத்தியார் புதிய பாடசாலைக்குப் புறப்பட்டு விட்டார். ஒருமாத கால சேவையை புதிய பாடசாலையில் வாத்தியார் எப்படியோ பூர்த்தி செய்து விட்டார். அவர் லீவில் நின்ற காலத்துக்கும் சேர்த்து இரண்டு மாத வேதனம் அவருக்கு கிடைத்து விட்டது.
வாத்தியார் பாடசாலைக்குப் புறப்படும் சமயங்களிலெல்லாம் இப்பொழுது அவர் மனைவி நச்சரித்துக் கொண்டிருக்கிறாள்.
"சளி பிடிச்சு இருமிக்கொண்டு திரியிறியள். கோட்டக் கல்விப் பணிப்பாளரிட்டை போங்கோ. போங்கோ எண்டால் கேக்கிறியள் இல்லை. அவர் வேறை ஆளே! எங்கட ஆள்தானே! நீங்கள் போய்ச் சொன்னால் அவர் உடனே மாத்தம் தருவார்.”
பிரதிக் கல்விப் பணிப்பாளர் மனம் வைக்காமல் எதுவும் நடக்கப் போவதில்லை. வேறென்ன செய்வது?

Page 82
152 தெணியான்
பாடசாலை நோக்கிப் புறப்பட வாத்தியார் கோட்டக் கல்விப் பணிமனை நோக்கி சைக்கிளைத் திருப்புகின்றார்.
பிரதிக் கல்விப் பணிப்பாளரின் அலுவலக அறைவாசலில் வந்து நின்று தயக்கத்துடன் அவர் உள்ளே எட்டிப் பார்க்கின்றார். பிரதிக் கல்விப் பணிப்பாளர் கண்களில் வாத்தியார் அங்கு வந்து நிற்பது பட்டு விடுகிறது.
“வாங்கோ மாஸ்ரர். வாங்கோ.” பழைய குரோதம் எதுவு மில்லை. சுமுகமான குரலில் ஆதரவாக உள்ளே அழைக்கின்றார்.
அவர் காட்டும் ஆதரவில் வாத்தியார் மனதில் இருந்த தயக்கம் மறைந்து போய் விடுகின்றது.
வாத்தியார் வெகு உற்சாகமாக உள்ளே நுழைகின்றார். "அதிலே இருங்கோ” பணிப்பாளருக்கு முன்னுள்ள கதிரையில் வாத்தியார் அடக்கமாக அமருகின்றார்.
“ஆ. சொல்லுங்கோ” வழமைபோலக் கேட்டு பணிப்பாளர் வாத்தியார் முகத்தைப் பார்க்கின்றார்.
வாத்தியார் வாய் திறந்து பேசுவதற்கு முன்பு இருமல் அவரை முந்திக் கொண்டு விடுகிறது.
ஒருநிமிட நேரம் 'லொக்கு லொக்கென்று அவர் இருமுகின்றார். அதன் தாக்கத்தில் கண்களும் சிவந்து கலங்குகின்றன. வாத்தியார் தலை குனிந்து வேட்டித் தலைப்பைப் பிடித்து கண்களைத் துடைத்து விட்டுக்கொண்டு பணிப்பாளரை நோக்கி நிமிருகின்றார்.
“என்ன மாஸ்ரர் கடுமையாக இருமுகிறியள். சளி புடிச்சு விட்டது.” பணிப்பாளர் உரிமையோடு நெருக்கமாக விசாரிக்கின்றார்.
"சளி பிடிக்காமல் என்ன செய்யும்?”
2
"ஏன் மாஸ்ரர்?”
"நான் காலையிலே தினமும் தலையிலே ஊற்றித் தோய்ந்து குளித்துக் கோயிலுக்குப் போய்வந்து பாடசாலைக்கு வருவது எல் லோருக்கும் தெரியும். இப்ப அந்தப் பாடசாலைக்கு என்னை மாத்தி விட்டியள். பின்னேரம் பாடசாலையாலே திரும்பி வந்ததும் தலையிலே அள்ளி ஊற்றி இரண்டாம் முறை தோய்ந்த பிறகுதான் வீட்டுக்குள்ளே போகிறேன்”
“என்ன மாஸ்ரர்!’ எதிர்பாராமல் வந்து ஷெல் ஒன்று முன்னால் விழுந்து வெடித்துச் சிதறியது போலப் பணிப்பாளர் அதிர்ந்து போகின்றார். மாபெரும் தவறு ஒன்றைத் தாம் செய்துவிட்டதான பதற்றத் துடன் வாத்தியாரை நோக்கிப் பணிந்து கூறுகின்றார்.

ஒடுக்கப்பட்டவர்கள் 153
“மன்னிக்க வேணும் மாஸ்ரர். மன்னிக்க வேணும். அந்தப் பாடசாலையிலே ஒரு இடம் இருந்ததனாலேதான் உங்களை அங்கே மாற்றி விட்டேன். அப்படிச் செய்ததற்கு நீங்கள் என்னை மன்னிக்க வேணும். இனி, அங்கே நீங்கள் போக வேண்டாம். இப்ப கொஞ்சம் நில்லுங்கோ. மாற்றக் கடிதம் கையிலேயே தந்து விடுகிறேன்.”
மறுநாள் காலையில்.
சைவப்பிரகாச வித்தியாசாலையின் பிரதான வாசலில் நீறு பூத்த தலையும் வெண்ணிற்று நெற்றியுமாக வெள்ளை உடை அணிந்து கம்பீரமாகத் தலை நிமிர்ந்து திருச்சிற்றம்பலம் வாத்தியார் பிரசன்ன மாகும் சமயம் அவர் வருகைக்குக் கட்டியம் கூறுவது போல பாடசாலையில் முதல் பாடவேளை முடிந்து இரண்டாவது பாடவேளை ஆரம்பித்து வைப்பதற்கு பொதுவாக அடிக்கும் மணி ஒலித்துக் கொண்டிருக்கின்றது.
- மல்லிகை
அக்டோபர் 1998

Page 83
அசல் யாழ்ப்பாணத்து மனிதன்
வீதியில் விரைந்து வந்துகொண்டிருக்கின்றேன். இந்த விரைவு ஒட்டமா? அல்லது வேகநடையா? எதுவென்று சொல்வதற்கு இயலாத கடுகதிப் பாய்ச்சல். மனோவேகம் என்பார்களே அத்தகைய பறப்பு ஏழு மணியாவதற்கு முன்னர் கொழும்பு போய்ச் சேர்ந்து, குடும்பத்துடன் கொட்டாஞ்சேனையில் வாழும் நண்பன் வீட்டை அடைந்தாக வேண்டும். இரவு ஏழு மணிக்கு முன் வீட வந்து சேரவேண்டும் என்னும் நிபந்தனை யுடன் தான் அங்கு தங்குவதற்கு அவன் இடந் தந்தான். அவன் நிபந்தனை விதித்தான் என்று சொல்வதெல்லாம் போலியாக என் கெளரவத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்கான பேச்சு, அவன் எனக்கிட்டது உண்மையில் ஒரு கட்டளை.
அவனைச் சொல்லிக் குற்றமில்லை. நடுஇரவு வேளையில் வீடு புகுந்து சோதனை செய்வது, கைது செய்து போவது, தடுத்து வைப்பது என்று ஒரே கெடுபிடியாக இருக்கும்போது அவனுந்தான் என்ன செய்வான்! முதலில் என்னை அழைத்துச் சென்று பொலிஸில் பதிவு செய்து வைத்தான். அவனுக்கும் என்னைத் தவிர்த்து விடுவதற்கு இயல வில்லை. அவன் உத்தியோகமாகிக் கொழும்பு வந்த புதிதில் என்னுடைய அறையில் தங்குவதற்கு நான் இடங் கொடுத்தேன். இரண்டு ஆண்டுகள் ஒன்றாகவே வாழ்ந்தான். இப்போது எனக்கு உதவி செய்வது அவனுக்குரிய சந்தர்ப்பம்.
எனக்கு மாத்திரந்தானா இங்கு அவசரம்? இப்போது யாருக்கு அவசரமில்லை. வீதியில் பார்த்தால் தெரிகிறது எல்லோருடைய

ஒடுக்கப்பட்டவர்கள் 155
அவசரமும் விமான நிலையம் சென்று பகலவனை விமானத்தில் ஏற்றி, நீண்ட பயணம் அனுப்பி விட்டு பிரிவுத் துயரத்துடன் வீடு நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றவர்கள் போல எல்லோருக்கும் ஒரு வேகம். எனக்கு இலக்கு பஸ் நிலையம். கொழும்பு பஸ்ஸைப் பிடித்தாக வேண்டும். என் பின்னால் வந்துகொண்டிருக்கும் ஒருவர்தானும் இதுவரை என்னை முந்திப் போவதற்கு முடியவில்லை. அப்படியொரு மின்னல் வேகம்.
எதிரில் வந்துகொண்டிருக்கும் எவர் மீதும் முட்டி மோதி விடாது நிதானமாக விலகி விலகி முன்னேறிக்கொண்டிருக்கிறேன். இன்னம் சில மீற்றர்கள் தூரம், பஸ் நிலையம் நெருங்க நெருங்க போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துக்கொண்டு வருகிறது. என்னுடைய அசுர வேகம் எனக்கெதிரில் வருகின்றவர்களையும் மெல்ல விலகிப் போகச் செய் கின்றது.
போக வேண்டும். நான் அஞ்சுவதாக இவன் கண்டு கொண்டால் ஆளை விழுங்கிவிட்டுப் போய்விடுவான். பதினைந்து ஆண்டுகள் முன்னர் கொழும்பில் வாழ்ந்த அனுபவம். இந்தத் தெருப்பொறுக்கிகள் பற்றி நன்றாக தெரியும். என்னைச் சுதாகரித்துக் கொள்கிறேன். அவனைப் பொருட்படுத்தாமல் விலகிச் செல்ல எத்தனிக்கிறேன். அவன் என்னை விடுவதாக இல்லை. மீண்டும் குறுக்கே வந்து தடுத்து நிற்கின்றான்.
“என்னையா ஒடுகிறியள்?”அவன்தான் கேட்கின்றான். “சும்மா போ.”முறைத்துக்கொண்டு முன்னேறப் பார்க்கின்றேன். "ஐயா, நீங்க யேசுநாயகம் தானே!” அவன் சாதாரணமாக மீண்டும் கேட்கிறான்.
எனக்கு அதிசயமாக இருக்கிறது. அதிகரித்த இதயத்துடிப்பு சற்றுத் தணிகிறது. எனக்குள்ள வேகமும் கொஞ்சம் அடங்குகிறது. ஒரு விநாடி தரிக்கின்றேன். எதிரில் நிற்கும் அவனை ஏறிட்டுப் பார்க்கின் றேன். பல நாட்கள் சிரைக்கப்படாத மயிர் அடர்ந்த முகம். அக்கறை யாகச் சீவி விடப்படாது கலைந்து கிடக்கும் கேசம். அழுக்கடைந்து கசங்கிக் கிடக்கும் வெள்ளை நிற அரைக்கைச் சட்டை கட்டம் போட்ட சாரம். சோகம் சுமந்த விழிகளுடன் தோன்றும் இளைத்துப்போன ஒரு மனிதன் செழித்த மரம் ஒன்று ஷெல் விழுந்து கருகிச் சிதைந்து போனதுபோல என் எதிரில் நிற்கின்றான்.
இவன் யாராக இருக்கக் கூடும்? இந்த நீர்கொழும்பு வீதியில் என்னைப் பெயர் சொல்லித் தடுத்து நிறுத்தி விசாரிக்கின்றான். என் பழைய நண்பர்களுள் ஒருவனாக இருக்குமோ? அப்படி ஒருவனாகத் தெரியவில்லை. நீர்கொழும்பு இப்பொழுது குட்டி யாழ்ப்பாணம். இவன் யாழ்ப்பாணத்து மனிதனாகவும் தோன்றவில்லை. அப்ப யாராக

Page 84
156 தெணியான்
இருக்கும்? எனக்கு நினைவுகூர இயலவில்லை. முன்னர் நினைவில் இருந்திருந்தால் அல்லவா பின்னர் நினைவு கூற இயலும். குழம்பிக் கொண்டே வீதியோரமாக நகருகிறேன். இவனும் ஒரு அடி நகர்ந்து எதிரில் நிற்கிறான். உரிமையுடன் என்னை நோக்கி மெல்லச் சிரிக்கிறான்.
“இன்னுமா தெரியேல்ல?” முகம் நோக்கிக் குழம்பித் தெளிவற்று நான் நிற்கிறேன். "பத்து வருசமாகிப் போச்சு. எங்களையெல்லாம் மறந்து போனிங்க”
என்ன கணக்குச் சொல்லுகிறான். பத்து வருசம் என்கிறான். நான் மேலும் குழம்புகிறேன்.
"ஐயாவுக்கு உண்மையில் என்னைத் தெரியவில்லைதான்” மெளனமாக அவன் முகத்தை உற்று உற்றுப் பார்க்கின்றேன். "காதர்.” எந்தக் காதர்? எனக்குள்ளே தோண்டித் தோண்டித் தேடுகின்றேன். “சின்னக்கடையில் இறைச்சிக்கடை வைச்சிருந்த காதர்”
“ஒ. காதரா.?”
அவன் கரங்களை அவக்கென்று வாஞ்சையுடன் பற்றிக் கொள் கின்றேன்.
யாழ்ப்பாணம் சின்னக்கடை எனக்குள் விரிகிறது. சிவப்பு வண்ணம் பூசிய கடைகள் வரிசையாகத் தோன்றுகின்றன. ஆட்டிறைச்சிக் கடைகள் மூன்று ஒருபுறம். மறுபுறம் மாட்டிறைச்சிக் கடைகளுள் நட்ட நடுவே உள்ள கடையின் உள்ளே காதர் நின்று கொண்டிருக்கின்றான, உரித்த மாட்டுத் தொடைகள் கடையினுள்ளே இரு ஓரங்களிலும் தொங்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றிற்கு மத்தியில் சிறிய ஒரு மேசை அந்த மேசையின் மீது ஒரு மரக்குற்றி மரக்குற்றியில் வைத்து இறைச்சி வெட்டிக்கொண்டு நிற்கின்றான் காதர். மரக்குற்றியிலும் மேசையிலும் இரத்தமும் தசையும் சிதறிக் கிடக்கின்றன. காதர் சிரித்துச் சிரித்து இறைச்சியை வெட்டி வெட்டி தராசில் போட்டு நிறுக்கின்றான். தசை நார்கள் உருண்டு திரண்டு கிடக்கும் கட்டுடல். அவன் வெற்றிலை போட்டு சிவந்த உதடுகள் எப்பொழுதும் சிரித்துக் கிடக்கும் செந்தளிப் பான முகம். வாடிக்கையாளர் கூட்டம் என்றும் அங்கு நிறைந்து நிற்கும். அவன் உபசரிப்பு ஒரு தனி ரகம். யார் யாரை எப்படி உபசரிக்க வேண்டும் என்று நாடி பிடித்து நடக்கத் தெரிந்தவன் அவன். அவனுடைய வாடிக்கையாளர் ஒவ்வொருவரும் அவன் தன்னைத்தான் மிகுந்த அக்கறையுடன் கவனிக்கின்றான் என்று எண்ணத் தகுந்த வண்ணம் நடந்து கொள்வது எப்படி என்று அறிந்தவன்.

ஒடுக்கப்பட்டவர்கள் 157
அவனா இவன்! சிரித்த அவன் வதனத்தை எங்கோ தொலைத்து விட்டு வந்து நிற்கின்றான். முறுக்கேறிக் கிடந்த அவன் கட்டுடல். எங்கே? நம்ப முடியவில்லை. முற்றாக அவன் மாறித்தான் போனான்.
இவன் கரங்களைப் பற்றிய வண்ணம் தலைகுனிந்து மெளனமாக நின்று கொண்டிருக்கின்றேன். நான் தலை நிமிர்ந்து எப்படி இவனைப் பார்க்க முடியும்? இவனை இனங் காண முடியாமல் போனவன் நான். பேசுவதற்கு எனக்கு நா எழவில்லை. இவனும் மெளனமாகக் கண் கலங்கி நிற்கின்றான்.
உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் இருவரும் மெளனித்துப் போகின்றோம். கணங்கள் நீளுகின்றன. உணர்ச்சிகள் வடிகால் தேடுகின்றன. வடிகாலில் வடிந்து போவதற்கும் எனக்கு முடியவில்லை. மனித மனங்களை நாடி பிடித்துப் பார்ப்பதில் வல்லவனல்லவா அவன். சங்கடமான என் நிலையை அவன் புரிந்து கொண்டிருக்க வேண்டும். இருவருக்குமிடையே இறுகிப்போன மெளனத்தை அவன் மெல்லக் கலைக்கிறான்.
“எப்படி ஐயா இருக்கிறியள்?”
என்ன சொல்லலாம். இவனுக்கு நான் என்ன சொல்லலாம்? சுகமாக இருக்கிறேன் என்று சும்மாவேனும் சொல்ல முடியவில்லை.
“ஏதோ இருக்கிறம்” மொட்டையாக சொல்லிக் கொள்கிறேன்.
"குடும்பம்.?”
“ஒரு மாதிரி இருக்கினம்”
"நீங்களும் வன்னிக்குப் போனிங்களா?”
"தென்மராட்சி வரைக்கும். ஆறுமாதம் நல்லாக் கஷ்டப்பட்டு விட்டம்.”
"நாங்கள் பத்து வருஷம்.”
"நீங்கள் இப்ப எங்கே இருக்கிறியள்?”நான் கேட்கிறேன்.
“புத்தளம் அகதி முகாமில”
"குடும்பமெல்லாம் எப்படி?”
"அதை ஏனையா கேக்கிறியள். மூத்தது மூண்டும் குமராக இருக்கு. அதுகளுக்குக் கீழே ஆணும் பெண்ணுமாக நாலு அவங்க உம்மாவும் மவுத்தாப் போச்சு. எனக்கு தொழில் இல்ல. அதுசரி. நீங்கள் இஞ்சை எங்கே?”
"கொழும்புக்கு கந்தோர் அலுவல். நாளைக்குப் புறப்படுகிறன். மச்சான் குடும்பம் இஞ்சை இருக்கு பாத்திட்டு வாறன்’
“சிவன் சுகமா இருக்கிறாரா?”
"ஆர் அருளா?”

Page 85
158 தெணியான்
“ஒமோம் உங்கட அருள்.” "அவர் சுகமாத்தான் இருக்கிறார். அவரை இன்னும் மறக்க யில்லை”
"அவரை மறக்கேலாது” காதர் சிரிக்கிறான். எனக்கும் அடக்க முடியவில்லை. மன இறுக்கம் சற்றுத் தளர்ந்து நானும் மனம் விட்டுச் சிரிக்கிறேன்.
சிவனும் நானும் ஒரே கந்தோரில் வேலை செய்கின்றோம். சிவனருள் பெயருக்கேற்றாற்போல் சிவப்பழம். அவர் நெற்றியில் எப்பொழுதும் நீறும், நடுவே சந்தனத் திலகமுமாகத் தோன்றுவார். சனிக்கிழமை பிறந்து விட்டால் 'சனி நீராடு' என்று சொல்லிக்கொண்டு சொட்டச் சொட்டத் தலையில் எண்ணைய் தேய்த்துக் கொள்வார். அதன்பின் என்னைத் தேடி நல்லூரிலிருந்து கொழும்புத்துறை வந்து சேருவார். அவர் எங்கள் வீட்டில் தங்கியிருக்க நான் அவருடைய பங்குக்கும் இறைச்சி வாங்கி வருவேன். "வீட்டு நாய்க்குத்தான் இந்த இறைச்சி” என்று சொல்லிக்கொண்டு போவார். ஒவ்வொரு வாரமும் அவர் இப்படிச் சொல்லிக்கொண்டு போவது எங்களுக்கு ஒரு வேடிக்கை. சில காலம் செல்ல, தான் மட்டும் சாப்பிடுவதாகச் சொல்லிக் கொண்டார். பிறகு குடும்பத்தில் எல்லோரும் விரும்பி உண்பதாக உண்மையை ஒளிக்காமல் ஒப்புவித்து விட்டார்.
பின்னர் வீட்டில் தங்கியிருப்பதை விட்டு என்னுடன் சேர்ந்து வருவதற்கு ஆரம்பித்தார். சின்னக்கடைவரை வந்து தூர நின்று கொள்வார். சில காலம் செல்ல காதர் கடைக்கு நேரில் வரத் தொடங்கினார். காலப்போக்கில் நான் அவருக்குத் தேவைப்படாமல் போனேன். ஈரல்கறி என்றால் அபருக்கு உயிர். “ஈரல்கறி தின்னாதவன் மனிதப்பிறவி எடுத்து என்ன பயன்?” என்று இப்பொழுதெல்லாம் வாய் ஊறிச் சொல்லிக்கொண்டிருக்கின்றார். -
அவருடைய இயல்புகளைக் காதர் சரியாகக் கணக்கிட்டு வைத்திருக்கின்றான். அவரைக் கண்டுவிட்டால் காதருக்குக் குஷி பிறந்து விடும். அவரை வரவேற்கும் போது காதரின் ஆரவாரம் வெளிப்படும். அவர் வெகு ஆசாரம் என்பதும் காதர் அறிவான். அதற்குத் தகுந்த விதமாக வெகு பக்குவமாக இறைச்சி வெட்டி நிறுத்து ஒழுங்காக அவர் கையில் கொடுத்து அனுப்புவான்.
நாங்கள் எல்லோரும் அவரை அருள் என்றுதான் அழைப்போம். ஆனால் காதர் மாத்திரம் சிவன் என்று சொல்லுவான். அவன் ஏன் அப்படி அழைக்கின்றான் என்று நான் ஒருதினம் காதரிடம் கேட்டேன்.
“சிவனுக்கு எருது மாடு. நாம்பன் மாடு என்றால் ரொம்பப் பிரியம் தானே!” என்று சொல்லி ஆர்ப்பாட்டமாகக் காதர் சிரித்தான்.
அவரை மறக்காமல் காதர் இப்பொழுது விசாரிக்கிறான்.

ஒடுக்கப்பட்டவர்கள் 159
“அவர் சுகமாக இருக்கிறார். காதர்.” “சின்னக்கடைப் பக்கம் போறதில்லையா?” “விடுவாரா. சனியும் புதனும் தவறாமல் போகிறார்.” “காதர் சந்திச்சது சந்தோசம். நான் இப்பிடிச் சந்திப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. வேறை என்ன.”
“வேறை என்னையா.” காதருக்கு நான் என்ன செய்யலாம். ஒருநூறு இருநூறு என்று ஏதாவது கையில் கொடுத்துவிட்டுப் போகலாம். நான் கொடுத்தாலும் அவன் வாங்கிக்கொள்ள வேண்டுமல்லவா? தன்னை அவமதிப்பதாக அவன் கருத மாட்டானா? அவனுக்கு இப்பொழுதுள்ள தேவை என்ன? அவன் தேவைகளை என்னால் எப்படித் தீர்த்து வைக்க இயலும்? நான் முழுவதும் குழம்பித் தடுமாறிக்கொண்டு நிற்கின்றேன்.
"ஐயாவுக்கு அவசரம். பஸ்ஸைப் பிடிக்க வேணும்” “ஓம் காதர்” "அதுசரி ஐயா. நீங்கள் எங்களைக் கலைச்சுப்போட்டு இப்ப யாழ்ப்பாணத்து எளிய சாதியள். பறையர். நளவர் அடிச்சுத் தாற இறைச்சியைத்தானே வாங்கித் தின்னுறியள்”
எனக்கிருக்கும் வேகம் அவசரம் எல்லாம் அடங்கிப் போக அவன் முகத்ததைக் கூர்ந்து நோக்கிய வண்ணம் நான் மெளனித்து நிற்கின்றேன்.
- மல்லிகை ஆண்டுமலர். goorslf - 2000

Page 86
இவன் மிச்சம் நல்லவன்
இப்ப போல இருக்கிறது
இவன் இங்கு வந்தது.
ஓ. இதற்குள் ஒரு வருஷம் கழிந்தா போச்சு!
அந்த நாள். இவன் வருகை. அழியாத ஓவியமாக இன்னும் என் நெஞ்சில் பதிந்து கிடக்கிறது.
அன்றைய தினம்.
முதற் பாட வேளை வகுப்புக்கள் ஆரம்பித்துச் சற்று நேரம், கல்லூரிக் காரியாலயத்தில் அதிபருக்கெதிரே நான் அமர்ந்திருந்து, இருவரும் ஆலோசித்துக் கொண்டிருக்கின்றோம்.
“இப்ப என்ன செய்கிறது! சற்(Z) புள்ளித் திட்டம் நடைமுறைக்கு வந்திருக்கிறதாலே இங்கே படிக்கின்ற மாணவர்கள் பாதிக்கப் படுகிறார்கள். ஒரு மாணவன் கூட கடந்த முறை பல்கலைக்கழகத்திற்கு போகவில்லை”
"இதுக்கென்ன செய்யலாம்?”
“பாடம் மாத்த வேணும். புதிய புள்ளித் திட்டத்துக்கு வாய்ப்பான பாடங்களைப் படிப்பிக்க வேணும்”
"எதை மாத்தப் போறியள்?”
“ஸேர், குறை நினைக்கக் கூடாது. இந்து நாகரிகம், இந்து சமயம் இரண்டு பாடங்களையும் படித்து அதிக புள்ளிகள் பெற்ற ஒருவன் பல்கலைக் கழகம் போவதில் நியாயமில்லைத் தானே!"
“இரண்டும் இலகுவான பாடங்கள் எண்டு சொல்லுறியள்! அப்ப இரண்டையும் பரீட்சை எழுத அனுமதித்திருக்கக் கூடாதல்லவா?”

ஒடுக்கப்பட்டவர்கள் 16
“ஸேர், கோபிக்கக் கூடாது. நீங்கள் கஷ்டப்பட்டு அந்த இரண்டு பாடங்களும் படிப்பித்ததாலே தான் கடந்த காலங்களில் எங்களுடைய மாணவர்கள் பலர் பல்கலைக்கழகம் போனார்கள். அதை நான் மறக்க வில்லை. ஆனால் புதிய புள்ளித் திட்டம் நடைமுறைக்கு வந்ததும் எல்லாம் தலைகீழாக மாறிப்போச்சு”
“புதிசா என்ன பாடம் அறிமுகப்படுத்தலாம்?” “வேறையென்ன ஸேர்! பொருளியல், புவியியல், வரலாறு. இப்பிடிப் பாடங்கள் தான்!”
“இந்தப் பாடங்கள் படிப்பிக்க ஆள் வேணுமே!’ "அதுதான் இப்பவுள்ள பிரச்சினை, ஸேர். நீங்கள் எக்கணமிக் செய்யேலுந்தானே!"
"செய்யலாந்தான். ஆனால். நான் அதைப் படிச்சு, மறந்து எவ்வளவு காலம்!”
“ஒரு மாதிரி சமாளியுங்கோ ஸேர் பிள்ளையஸ் ரியூட்டரியிலே படிப்பாங்கள்,”
်............ ”நான் அதிபரைப் பார்த்த வண்ணம் மெளனிக்கிறேன். “என்ன ஸேர், சொல்லுங்கோ!” எனது மெளனம் கலையவில்லை.
“எக்ஸ்கியூஸ் மீஸேர்”
குரல் வந்த திக்கில் ஒரே சமயம் இருவரும் திரும்பிப் பார்க்கின் றோம். காரியாலய வாசலில் அடக்க ஒடுக்கமாக இவன் நின்று கொண்டிருக்கின்றான்.
நெற்றியில் அழுந்தப் பூசி பளிச்சிடும் திரிண்டரத் திருநீற்றுப் பூச்சு. அதன் நடுவே சிறிய அழகான சந்தனத் திலகம். கறுப்பு பிரேமில் தடித்த லென்ஸ் பொருத்திய கண்ணாடி எதிரில் நின்று பார்க்கும் போது கண்ணாடிக்குள் உருண்டு புரண்டு கொண்டிருப்பது போலத் தோன்றும் பெரிய விழிகள், வளர்ந்து நெடுத்த தோற்றம். சிவந்த மேனி தோற்றத்தில் ஒரு ஆங்கிலக் கனவான். அதே சமயம் ஒரு சைவப் பழம். கையில் ஒரு பயிலுடன் இவன் நின்று கொண்டிருக்கிறான்.
சில விநாடிகள் இவனை உற்று நோக்குகின்றேன். காரியாலய விறாந்தையில் இவன் நடந்து வந்த சத்தம் தானும் எங்கள் செவிகளில் வந்து விழாத மென்மை,
வெளித் தோற்றத்துக் கம்பீரத்துக்குள்ளே வளர்த்த நாயின் குழைவு, வாலை ஆட்டி மடிக்கும் பணிவு,
பூனைப் பதுங்கல்
இவைகள் யாருக்குரியவைகள்?
எனக்குச் சட்டென்று எல்லாம் புரிந்து போய் விடுகிறது. இவனை விளங்கிக் கொண்டு உதட்டுக்குள் நகைக்கிறேன்.

Page 87
162 தெணியான்
“யெஸ், வாங்கோ!” அதிபர் அழைக்கின்றார். இவன் நாகரிகமாக, பணிந்து, மெல்ல அடி எடுத்து வைத்து உள்ளே வருகின்றான். அதிபர் எதிரில் வந்து நின்ற வண்ணம் கையில் வைத்துக் கொண்டிருக்கும் பயிலை மெல்லத் திறக்கின்றான். பயிலி லிருந்து நோகாமல் இரண்டு கடிதங்களை கையில் எடுத்து, சற்றுத் தலை குனிந்து பணிவோடு அதிபரிடம் கொடுக்கின்றான்.
அதிபருக்கு முன், எனக்கருகே இன்னொரு கதிரை வெறுமை யாகக் கிடக்கிறது.
இவனை அமரும்படி அதிபர் சொல்லவில்லை. இவனும் அமர்ந்து கொள்ளவில்லை. நான் மீண்டும் இவனை உறுதிப்படுத்திக் கொள்ளுகின்றேன். அதிபர் இரண்டு கடிதங்களையும் படித்துப் பார்க்கின்றார். பின்னர், அதிபருக்குரிய கடிதத்தை என்னிடம் அதிபர் தருகின்றார். அவனுக்குரிய கடிதத்தை இவனிடம் கொடுக்கின்றார்.
நான் கடிதத்தைப் படித்து முடித்து விட்டுத் தலை நிமிருகின்றேன். அதிபர் முகம் நோக்கி ஆவலுடன் இவன் ஏங்கி நிற்கின்றான்.
அதிபர் முகத்தில் தெளிவில்லாத ஒரு குழப்பம். கலவரம் படரு கிறது. விழிகளில் எழும் வினாக்களுடன் அவர் என் முகம் நோக்கு கின்றார்.
நான் இவன் பக்கம் திரும்புகின்றேன். “வெளியிலே கொஞ்ச நேரம் இருந்து கொள்ளும்”
இவன் முகத்தில் இப்பொழுது திடீரெனக் குழப்பம் தயக்கத்துடன் திரும்பி மெல்ல நடந்து வெளியே போகின்றான்.
"இதென்ன ஸேர் கூத்தாயிருக்கு உடனடியாக ஆளை மாத்தி இங்கே அனுப்பி இருக்கிறார்கள்”
"ஏஎல் படிப்பிக்க ஆள் வேணுமெண்டு கேட்டியள். அனுப்பி இருக்கிறார்கள்.”
"ஆள் எப்படியோ?” “நல்ல பிள்ளை” "எப்படிச் சொல்லுறது! சொந்த வலயத்துக்குள்ள இடம் கொடுக்காமல் இங்கே அனுப்பி இருக்கினம். குழப்படியா இருக்குமோ!" "வடமராட்சியான் நுணுக்கமானவன். விவரந் தெரிஞ்சவன். எதிர் காலத்தில் வரக்கூடிய சிக்கலை இப்ப நினைச்சு ஆளைக் காய் வெட்டி அனுப்பி இருக்கிறான்கள். சும்மாவே, இவன் எம்.ஏ. பாஸ் பண்ணிப் போட்டானெல்லே! பதவி உயர்வு அது இதென்று வந்தால்.”
"அப்ப. இவர்?” “வேறை என்ன!”

ஒடுக்கப்பட்டவர்கள் 163
“சச். ஆளைப் பார்க்க அப்படித் தெரியவில்லை” "சமய ஆசாரத்தினாலே தங்களை மேன்மைப்படுத்திப் போடலா மெண்டு நினைக்கிற ஆக்களைச் சேர்ந்தவன். எதுக்கும் ஆளைக் கூப்பிடுங்கோவன் எல்லாம் விளங்கும்’
அதிபர் மேசை மீதுள்ள பெல்லை’ ஒரு தடவை அழுத்துகின்றார். காரியாலயப் பியூன் வந்து எதிரில் நிற்கின்றான். “வெளியிலே இருக்கிறவரை வரச் சொல்லு” அவன் வெளியே போகின்றான். அடுத்த கணம், பவ்வியமாக இவன் மெல்ல நடந்து உள்ளே வருகின்றான்.
என் அருகே வெறுமையாகக் கிடக்கும் அந்தக் கதிரையைத் தொட்டும் தொடாமலும் இவன் நின்று கொண்டிருக்கின்றான்.
“நீர் ஏ/எலுக்குப் பாடம் எடுப்பீரா?” “எடுப்பன்’ “என்ன பாடம்?” "தமிழ், பொருளியல், புவியியல்” அதிபர் விழிகள் மலர என்னை நோக்கி மகிழ்ச்சியுடன் திரும்பு கின்றார்.
“அதுசரி, வடமராட்சி கிழக்கில் இருந்து இங்கே என்னத்துக்காக மாத்தி விட்டிருக்கினம். வடமராட்சியிலே நல்ல ஒரு கல்லூரி தந்திருக்க லாமே!”
"நான் விரும்பிக் கேட்டுத்தான் இங்கே வந்திருக்கிறேன் ஸேர், பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியராக பயிற்சி முடிந்ததும் வடமராட்சி கிழக்கு கஷ்டப் பிரதேசத்துக்கு அனுப்பினார்கள். இப்ப எம்.ஏ. முடிச்சிட்டன். பட்டதாரிச் சம்பளம் எடுக்க வேணும். ஏஎல் வகுப்புக்குப் படிப்பிக்க வேணும். கேட்டால் தட்டிக் கழிக்கிறார்கள். அதனாலே நானாக விரும்பி வலயம் மாறி வந்திருக்கிறேன்.”
“நீர் தேவரையாளிச் சூரன்ரை பள்ளிக் கூடத்திலேயே படிச்சனீர்?" நான் இவனைப் பார்த்துக் கேட்கின்றேன்.
“ஒமோம். தேவரையாளி இந்துக் கல்லூரியிலே.” “உம்மைப் பார்த்த உடனே எனக்கு விளங்கி விட்டது. இந்த ஆசாரம் வேறை ஆருக்கு வரும்?” சொல்லிக் கொண்டு அதிபரைப் பார்த்து மெல்லக் கண் சிமிட்டுகின்றேன்.
அதிபருக்கும் விளங்கிப் போய் விட்டது. இவன் சற்று நிமிர்ந்து முகத்தில் பெருமை பொங்க நின்று கொண்டிருக்கின்றான்.

Page 88
164 தெணியான்
அதிபர் கள்ளச் சிரிப்புடன் குறிப்பாக என்னை ஒரு தடவை நோக்குகின்றார், ஸேர் நீங்கள் திறமைசாலிதான்’ எனச் சொல்லாமல் சொல்கிறது அதிபரின் அந்தப் பார்வையும் சிரிப்பும்.
“ஏஎல் வகுப்புக்கு பொருளியல், புவியியல் இரண்டு பாடங்களும் உம்மை நம்பித்தான் தொடங்கப் போகின்றேன். ஒ/எல் வகுப்புக்கு விஞ்ஞானம் படிப்பிக்க வேணும்”
“சரி ஸேர்” “ஸேரோடை போம். ஏஎல் விஷயங்கள் ஸேர் சொல்லுவார்! கடமை ஏற்றுக் கொண்டதுக்கான கடிதம் எழுதிக் கொண்டு வாரும்”
“சரி வாரும்”நான் எழுந்து போகின்றேன் வளர்த்த நாய்க்குட்டியாக என்னைத் தொடர்ந்து எனக்குப் பின்னால் இவன் வந்து கொண்டிருக்கின்றான்.
அந்த நாள் இப்பவும் எனக்கு மறந்து போனதாக இல்லை. அன்று ஆசிரியர் கூட்டம், பத்து மணிபோல அதிபர் கூட்டுகின்றார். அந்தக் கூட்டத்தில் என்னருகில் வந்து அமருகிறான். இன்றும் என்னருகில் தான். ஆசிரியர் கூட்டம் மாத்திரமல்ல. என்ன விழா, என்ன கொண்டாட் டம் நடக்கட்டும். இவன் என்னருகே இருப்பான்.
முதல் நாள் பார்த்த இவன் இன்றும் அப்படியேதான். எந்த மாற்றமுமில்லை.
முதற் பார்வை என்றும் அழியாது நெஞ்சில் பதிந்து விடுகின்றது எனபாரகள.
அது காலதர்களுக்கு மாத்திரமல்ல. முதற் பார்வையில் ஒருவனைச் சரியாகக் கணிக்கும் ஆற்றலுள்ள என் போன்றவர்களுக்கும் பொருந்தும்.
நான் கல்லூரியில் பகுதித் தலைவர். எனக்கென்று தனியான ஒரு மேசை "ஸ்ராவ் ரூமுக்குப் பெரும்பாலும் போகின்ற வழக்கம் எனக்கில்லை.
இவனும் அநேகமாக அங்கு போவதில்லை. என்னைத் தேடிக் கொண்ட என்ரை மேசைக்கு வந்து விடுகின் றான். கல்லூரி இடைவேளைகளில் தினமும் தவறாது என்னிடம் வருகின் றான.
“சரி வாரும்” என்று அழைத்துக் கொண்டு கன்ரீனுக்கு தேநீர் பருகுவதற்கு இருவரும் புறப்பட்டுப் போவோம்.
அங்கு போன பிறகு தான் இவன் சொல்லுவான். “ஸேர், குடியுங்கோ! நான் இண்டைக்குப் பிரதோஷ விரதம்” இன்னொரு நாள்.

ஒடுக்கப்பட்டவர்கள் 165
"விநாயக சதுரத்தி” வேறொரு நாள், “கார்த்திகைத் திருநாள், நவராத்திரி, கந்த சஷ்டி, பிள்ளையார் கதை, திருவெம்பாவை."
எனக்கு உள்ளுர வியப்புத்தான். ஆனால் அவன் பொய் பேசவில்லை என்பது எனக்குத் தெரியும். விரதமெதுவுமில்லாத நாட்களில் மாத்திரம் என்னோடு சேர்ந்து தேநீர் பருகுவான்.
என்றாவதொரு தினம் கையிலொரு உணவுப் பார்சல் தந்தனுப்பு வாள் என் மனைவி அன்றைய தினம் மாத்திரம் இவனோடு சேர்ந்து நான் கன்ரீனுக்குப் போவதில்லை.
ஒரு தினம் இருவரும் கன்ரீனுக்குப் போய் திரும்பி வந்து கொண்டிருக்கையில் நான் கேட்கின்றேன்.
"ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பத்தாறெண்டு நினைக்கிறேன். யாழ்ப்பாணத்திலே முதல் முறையாக ஆலயப் பிரவேசம் நடைபெற்றது. ஆசார சீலராக இருந்த உங்களின்ரை ஆக்களைத்தான் நல்லூர் முருகன், வண்ணார்பண்ணைச் சிவன். கோயிலுக்குள்ளே விட்டவை.”
“ஓம் ஸேர், நான் அப்ப பிறக்கவில்லை. உள்ளுக்குப் போன ஐந்தாறு பேரிலை என்ர பேரனும் ஒராள். அப்பாவின்ரை தகப்பன்.”
“உம்மைப் பார்த்ததும் முதல் பார்வையிலேயே எனக்கெல்லாம் விளங்கி விட்டுது. அதிபர் ஒருமாதிரிப் பின்னடிக்க பார்த்தார். நான்தான் உம்மை இங்கே எடுக்க வேணும் எண்டு விடாப் பிடியாக நிண்டு கொண்டேன்.
“எனக்கது தெரியும் ஸேர்" இவனிங்கே வந்தது எவ்வளவு நல்லதாப் போச்சு. அர்ப்பணிப் போடு வேலை செய்கின்றான். என்ர வேலைகளிலே முக்கால் பங்கும் இவன் செய்து தாறான். வகுப்பறைக் கணிப்பீட்டு வேலைகள், எனக்குரிய வினாப்பத்திரங்கள் தயாரித்தல். விடைப்பத்திரங்களைத் திருத்திறது. ஏஎல் இந்து நாகரிகம் வினாப்பத்திரங்களையும் ரகசியமாக இவன் தான் பார்வையிட்டுப் புள்ளியிட்டு தாறான்.
இவன் தோத்திரப் பாடல்கள் பாடினால் கண்களை மூடிக்கொண்டு மெய்மறந்து கேட்டுக் கொண்டு நிற்கலாம். அப்படி ஒரு லயிப்பு! அப்படி யொரு இன்ப அனுபவம் நாயன்மார்கள் தாளம் போட்டு பண்ணோடு தோத்திரங்கள் ஏன் பாடினார்கள் என்பது, இவன் வாயினால் பாடல் களைக் கேட்ட பிறகு தான் எனக்குப் புரிந்தது.
எங்கள் கல்லூரி மாணவர்கள் காலையிலும் மாலையிலும் போட்டி போட்டுக் கொண்டு முன்னுக்கு வந்து இப்போது தேவாரம் பாடுகிறார்கள். ஒழுங்காக நெற்றியில் திருநீறு பூசிக் கொள்ளுகிறார்கள். எல்லாம் இவன்ரை வேலை.

Page 89
166 தெணியான்
சங்கீத ஆசிரியைக்கு இவன் மீது உள்ளூரக் கொஞ்சம் பொறாமை தான்.
நானும் இவனும் நல்ல ஒட்டு.
ஆசிரியர்கள் சிலருக்கு எங்களின்ரை நெருக்கத்தைக் கண்டு பொல்லாத வயித்தெரிச்சல், “எஞ்சினும் பெட்டியும் என்று ரகசியமாக சொட்டை பண்ணுகிறார்கள். நான் எஞ்சினாம், இவன் பெட்டியாம். மனம் பொறுக்காதவன் எதுவும் சொல்லி கேலி பண்ணுவான்.
ஒரு நாள் என்னுடைய மேசையில் பேசிக் கொண்டிருந்த சமயம் இவன் சொல்கிறான்.
"நான் ஒரு நாளைக்கு ஸேர் வீட்டுக்கு வரவேணும்”
“வந்தால் போகுது. சொல்லிப் போட்டு வாரும். அது சரி உமக்கு சின்னவனைத் தெரியுமோ?”
"ஆர் ஸேர்”
“சின்னவன். சின்னப் பிள்ளை. உங்கட பக்கத்திலே தான் படிப் பிச்சவன்.”
"சின்னப் பிள்ளை ஸேர். அவரிட்டைப் படிச்சநான்.”
"அவனொரு நல்ல பிள்ளை."
“ஸேருக்கு அவரை நல்லாத் தெரியும் போல”
“நல்லாத் தெரியுமென்ன! என்ரை அயலூர் தானே! இந்தியாவிலே கிறிஸ்டியன் கொலேஜ்ஜிலே இரண்டு பேரும் ஒண்டாத்தான் படிச்ச நாங்கள். எங்களுக்கு அங்கே பெரிய மதிப்பு"
"அப்படியா ஸேர்!”
“என்ன மதிப்பெண்டு கேக்கவில்லை!”
"இந்தியாவிலேயே பெயரைக் கொண்டு சாதியைச் சுலபமாகக் கண்டு பிடிச்சிடலாம். நாடார், சாஸ்திரி, செட்டியார். எண்டெல்லாம் பெயரோடை சாதிப் பெயரும் ஒட்டி வரும். உதாரணத்துக்குச் சொல்லப் போனால் காமராஜர் நாடார் எண்டு தானே பெயர். இந்தச் சாதிகளுக்கே பிள்ளைமார் தான் பெரிய சாதி, இஞ்சை எங்களைப் போல. வெள்ளாளர் போல. நான் கதிரவேற் பிள்ளை அவன் சின்னப் பிள்ளை பிறகென்ன சொல்லவே வேணும்! எங்களுக்கிருந்த மதிப்பை சின்னவன் ஒரு மாதிரி மசிந்துவன். உதெல்லாம் இஞ்சை காட்டிக் கொள்ளக் கூடாது எண்டு நான் சொல்லிப்போட்டன்
அவன் என்னைக் கதிர் எண்டு கூப்பிடுகிறவன். நான் சுருக்கமாகச் 'சின்னவன் எண்டு சொல்லுவன். என்ன சொன்னாலும் நான் இருக்கிற கட்டிலே வந்து சமமாக ஒரு நாளும் இரான். எங்களோடை கூட இருக் கிறவர்களுக்குப் பிடி குடாமல் ஒரு மாதிரி மசிந்திக் கிசிந்தி நிண்டிட்டு, மெல்ல நழுவிப் போய்விடுவான். அவன் ஆள் நல்லவன்”

ஒடுக்கப்பட்டவர்கள் 167
“ஸேர், ஆரும் நோகும் படியாக நடக்க மாட்டார்.” நவராத்திரி விழா வந்தது. கல்லூரியில் அதற்கு நான் தான் பொறுப்பு. இவனைக் கூப்பிட்டுச் சொன்னேன்.
"வாணி விழா இந்த முறை சிறப்பாக நடக்க வேணும்" “நல்லாச் செய்வம் ஸேர்” பூசை, அவியல் பாகம் எல்லாம் எனது பொறுப்பில் வைத்துக் கொண்டு, சோடனை முதல், போட்டிகள் நிகழ்ச்சிகள் எல்லாம் இவன் பொறுப்பில் விட்டு விட்டேன்.
“தேவாரம் நீர் பாட வேண்டாம், எல்லாம் மணவர் நிகழ்ச்சியாக இருக்கட்டும்”
பொறுப்புக்களை இவனிடம் கொடுத்தது ஆசிரியர்கள் சிலர் மனதுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை.
அதிபரிடம் போய் அந்தரங்கமாகச் சொல்லி முறைப்பாடு செய்தார்கள்.
"வாணி விழாவுக்குப் பொறுப்பு கதிரவேற்பிள்ளை ஸேர். அவர் தனக்கு உதவியாக ஆரையும் வைச்சிருக்கலாம்” அதிபர் சொல்லி அனுப்பி விட்டார்.
வாணி விழாவை அன்று பார்க்க வேணும் விழா நடைபெற்ற மண்டப அலங்காரம் என்ன சகலகலாவல்லி மாலை ஒதுதல், பாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டி, பட்டி மன்றம், நாடகம். அப்பப்பா. எல்லாம் உச்சமாக இருந்தது. எல்லோருமே மூக்கிலே விரல் வைத்துக் கொண்டு பார்த்தார்கள். இவன் மேல் எனக்கிருக்கும் நம்பிக்கை வீண் போக வில்லை. நான் நேரிலும் இவனைப் பாராட்டினேன்.
கல்லூரியில் மூன்றாந் தவணைப் பரீட்சை ஆரம்பித்து விட்டது. நானும் இவனும் ஏஎல், பாடங்கள் அதிகம் எடுப்பதால் இந்தச் சமயம் அதிக வேலை எங்களுக்கில்லை. எனது மேசைக்கு இவன் தேடிக் கொண்டு வந்து விட்டான். இருவரும் அமர்ந்திருந்து சாவகாசமாகப் பேசுகின்றோம். இவன் சொல்லுகின்றான்.
"வாழ்க்கையில் சில மனிதர்களை நாங்கள் சந்திக்காது போயிருந் தால் அது எங்களுக்கொரு இழப்பு”
"இப்படி ஏன் சொல்லுறீர்?” “ஸேரை நான் சந்திக்கத் தவறியிருந்தால்.” “ஹா. ஹா.”நான் சிரிக்கிறேன். “ஸேரின்ரை ரீச்சர் றெயின்ட் தானே” "ஒமோம். அவ றெயின்ட் தான்” “என்ன பாடம்?"
“கிறிஸ்தவம்’

Page 90
168 தெணியான்
இவன் வாயடைத்துப் போய் எனது முகத்தில் எதையோ தேடு கிறான்.
“என்ன, ஆச்சரியமாக இருக்கா!”
“லவ் மரீச்சா ஸேர்?”
“ஓம் அப்பிடித்தான். இப்ப அவ சைவம்"
"கம்பஸ் இப்ப வக்கேசன்!”
"ஒமோம். பிள்ளையஸ் வந்து நிக்கினம்”
“ஸேரோடை நெருக்கமாகப் பழகத் தொடங்கி ஒரு வருஷமாகுது. ஸேரின்ரை குடும்பத்தில் ஒருத்தரையும் எனக்குத் தெரியாது. வாற ஞாயிறு காலையில் வல்லிபுரக் கோயிலுக்கு போய்விட்டு அப்பிடியே ஸேர் வீட்டுக்கு வரப் போறன்”
“வந்தாப் போச்சு. இப்ப வாரும் ரீ குடிக்கப் போவம்”
இருவரும் கன்ரீனுக்குப் போறோம். ரீ குடித்துவிட்டு மீண்டும் திரும்பி வந்து முன் போல அமர்ந்து கொள்ளுகிறோம்.
“சின்னவனிட்டை நீர் படிச்சனிர் எல்லே!”
“ஓம் ஸேர்”
“அவன் நல்லவன். படிக்கிற காலத்தில் எப்போதாவது சில சமயம் என்னைத் தேடிக் கொண்டு எங்கடை வீட்டுக்கு வருவான். எவ்வளவு தெண்டிச்சாலும் அவன் வீட்டு வாசலோடை நின்று விடுவான். உள்ளுக்கு வாடா எண்டு விடாப்பிடியாகக் கேட்டால் இஞ்சை வராமல் விட்டு விடுவனி எண்டு சொல்லுவான். வாசலிலே நிண்டு பேசி முடிச்சுக் கொண்டு திரும்பிப் போய்விடுவான். அவன் நல்லவன்”
“எனக்குத் தெரியும் ஸேர் அவர் நல்லவர் தான்!”
அடுத்த வாரம் முதல் நாள் திங்கட் கிழமை. நான் கல்லூரிக்கு வந்து காரியாலயத்தில் கைச்சாத்து இட்டு விட்டு எனது மேசைக்கு வந்து உட்காருகிறேன்.
"குட்மோனிங் ஸேர்” சிரித்த வண்ணம் என்றும் போல இவன் என்னை நோக்கி வந்து கொண்டிருக்கின்றான்.
"குட்மோனிங். குட்மோனிங். வாரும்” நான் இவனை வழமை போல வரவேற்கிறேன்.
சின்னவன் நல்லவன்.
சின்னவனிலும் பார்க்க இவன் மிச்சம் நல்லவன்.
- மல்லிகை ஆண்டுமலர். ஜனவரி - 2OO3

வரப்புகள் உயரா
வடமராட்சியில் இருந்து வெள்ளவத்தைக்குக் குடிபெயர்ந்து வந்த பின்னர் இப்படி ஒரு இரவை இதுவரை அவர் கழித்ததில்லை. மனமகிழ்வும் மனவேதனையும் மனிதனுக்கு ஒன்று போலத்தான். இரண்டும் தூக்கத்தைத் தொலைத்து விடுகின்றன. போதையில் கரைந்து கிறங்க வைக்கின்றன. மூன்று பெட்டி சிகரெற் புகையில் இதுவரை பிள்ளை அவர்கள் மிதந்து திளைத்து விட்டார். இன்னும் இன்னும் புகைக்க வேண்டுமென்று அவருக்குள் ஒரு வெறி. அது ஆனந்த வெறி இதுகால வரை தான் கண்ட கனவு, தனது இலட்சியம், நிறைவேறி விட்டதான பேரானந்த வெறி கொள்கையில் வெற்றி கண்ட போதை ଔଶjy).
பிள்ளை அவர்கள் இன்று வெறும் முருகுப்பிள்ளை அல்லர். முன்னொரு காலத்தில் மதிப்புக் குறைவாக 'முருகு' என்று அழைக்கப் பெற்ற அந்த மனிதனுமல்லர். இன்று, இப்போது 'பிள்ளைவாள்' என்று தான் அவரை எல்லோரும் கனம்.பண்ணி அழைக்கின்றார்கள்.
இந்தவேளையிலும் கெளரவமான அந்த அழைப்பு அவர் செவி களில் வந்து விழுந்து தேனாக இனிக்கிறது. அந்த இனிய நாதம் மீண்டும் எழுகின்றதா எனச் செவிகளை மிகக் கூர்ந்து உன்னிக்கின்றார். மனைவி சரசுவதி அடுத்துள்ள கட்டிலில் படுத்துக் கிடந்து குறட்டை விடுகின்றாள். அவள் படுத்தால் எருமை மாடு சேற்றில் கிடப்பது போலத்தான். அவளுக்கு இம்மை மறுமை தெரியாத உறக்கம். ஒரு அறையில்

Page 91
170 தெணியான்
அவரோடு வந்து ஒன்றாகப் படுப்பதற்கும் ஆரம்பத்தில் இங்கு அவள் மறுத்தாள். “வளர்ந்த பிள்ளையஸ் இருக்கேக்க.” என்று மறுகினாள். வடமராட்சி போல வீட்டு விறாந்தையிலே பாய் விரிச்சுப் படுக்க இயலுமா? இந்த வெள்ளவத்தையில், அவள் வந்து கட்டில் மேல் சரிந்தால் போதும். மறுகணம் குறட்டை ஒலி கேட்கும்.
அவள் இன்றைக்குமல்லவா அப்படி உறங்கிக் கிடக்கிளாள்! அவளுக்கு மனதில் மகிழ்ச்சி என்பது இல்லையா? என்ன மனிஷி இவள்! அவள் மற்றவர்கள் போலச் சொல்ல வேண்டாம்! “பிள்ளைவாள்” என்று அவர் அழைக்கப்படுவதில் தனக்குள்ள பெருமையைக் காட்டிக் கொள்வதற்குப் பகிடியாகவேணும் ஒருநாள் பார்த்து அப்படி அழைத் திருப்பாளா? இல்லையே! இப்போது மாத்திரம் எங்கே அவள் அழைக்கப் போகிறாள்! அந்தக் குரல் அவள் குரலாக.அப்படி ஒன்றுமில்லை. அரும்பும் அவர் புன்னகையில் உதடுகள் கூம்புகின்றன. அவருக்கு இது ஒன்றும் புதிய அநுபவமல்ல. எப்பொழுதும் யாரோ அவரைப் பார்த்து “பிள்ளைவாள்” என்று அழைப்பது போன்று ஒரு குரல் இடையிடையே அவருக்குள் ஒலித்துக் கொண்டிருக்கின்றது.
வீதியில் இறங்கி அவர் சென்று கொண்டிருக்கையில், வீதி யோரத்தில் பேசிக்கொண்டு நின்றவர்கள் "இவர்தான் பிள்ளைவாள்” என மதிப்புடன் சுட்டிக்காட்டி தமக்குள் பேசிக்கொள்வதாக அவருக்குத் தோன்றும். அவரைக் கடந்து போய்க் கொண்டிருப்பவர்கள். “பிள்ளை வாள் போகின்றார்” எனப் பெருமையாகச் சொல்லிக் கொண்டு செல்வதாக அவர் உணருவார். பொதுக்கூட்டம். ஒன்றில் பார்வையாள னாகப் போய் எங்காவது அவர் சபையில் அமர்ந்திருந்தால் மேடையில் நிற்கும் பேச்சாளன். “பிள்ளைவாள் அவர்களே!” என கெளரவமாக விளிப்பதாகச் செவிகள் சொல்லும்.
ஆரம்ப காலத்தில் இரண்டொரு நண்பர்கள் முருகுப்பிள்ளை என்ற பெயரைச் சுருக்கி, பகிடியாகப் "பிள்ளைவாள்” என அழைக்கத் தொடங்கினார்கள். ஆனால் இப்பொழுது கெளரவமாக அவரைக் குறிப்பிட்டு அழைக்கும் பெயராக அது உயர்ந்து நிற்கிறது.
“பிள்ளைவாள்” என்னும் பெயரால் இன்று அவர் கனவானாகக் கனம் பண்ணப்படுகின்றார்.
காலிமுகக் கடற்கரையில் மாலை வேலைகளில் அவர் சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கும் நண்பர்கள் சாமானியமானவர்கள் அல்லர். ஒய்வு பெற்ற நீதிபதி, ஒய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர், ஒய்வு பெற்ற கணக்காளர், இத்தியாதிக் கனவான்கள்தான். அவர்கள் மத்தியில் ஒய்வு பெற்ற எழுதுவினைஞரான பிள்ளைவாளும் இருப்பார். அவர்கள் எல்லோரும் தாங்கள் வகித்து வந்த பதவியினாலேதான் கனவான்கள் ஆனார்கள். அவர் தான் கொண்ட கொள்கையினால் இலட்சியத்தினால் மதிக்கப்படுகின்றவர் என்பதில் அசையாத நம்பிக்கை அவருக்கு உண்டு.

ஒடுக்கப்பட்டவர்கள் 7
அந்தக் கனவான்களும் தாங்கள் அவருக்குக் கொடுக்கும் கெளரவம் கொஞ்சமும் குறையாமல் “பிள்ளைவாள்” என்று அழைப்பார்கள். அவர் பேசும் ஆங்கிலம் அவர்களுக்கு அலாதியான பிரியம். கேரளத்து அச்சுதம் பிள்ளையிடம் கற்றுக் கொண்ட ஆங்கிலமல்லவா அது!
இவையெல்லாம் எங்கே சரசுவதிக்குத் தெரியப் போகிறது! மகன் டொக்டரினால்தான் அவருக்கு இந்தப் பெருமை எல்லாம் வந்தது என்று ஒரு சமயம் மனைவி சரசுவதி சொல்லப் போய், அப்போது அவருக்குப் பற்றிக்கொண்டு வந்ததே சினம்! தன்னை மறந்து சன்னதங் கொண்டார்.
தன்னை அவள் அவமதித்து விட்டதாக அவர் உணர்ந்தார். அறிவீனத்துடன் அவள் பேசுவதாக அவளைப் போட்டுச் சாடினார். வடமராட்சியில் அவர் வாழ்ந்த கிராமத்தை அண்டியுள்ள பகுதிகளில் குடியிருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் அவரை விளங்கிக் கொண்டுள்ள அளவுக்கு, அவரோடு சேர்ந்து ஒன்றாக வாழும் மனைவிக்கு அவரைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் “பிள்ளைவாள்” என்றுகூட ஒருநாளேனும், ஒருவர் தானும் அழைத்ததில்லை. எப்பொழுதும் அவர் களுக்கு அவர் "ஐயா’தான். “முருகுப்பிள்ளை” ஐயாதான். அவர்களது சனசமூக நிலையக் கூட்டங்கள். கோயில் விழாக்கள் எதுவாக இருந்தாலும் பிள்ளை அவர்கள் இல்லாமல் அவை நடைபெறுவதில்லை. அந்தக் கூட்டங்கள், விழாக்களில் பிள்ளை அவர்களே பிரதான பேச்சாள ராக விளங்குவார். "கல்வி வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் என்பன சாதிக் கொடுமைகளை முற்றாகத் தீர்த்துவிட மாட்டாது. கலப்புத் திருமணம் ஒன்றே சாதி வேறுபாட்டை ஒழித்துக் கட்டுவதற்குள்ள ஒரே மாரக்கம்” எனப் பிள்ளை அவர்கள் முழங்குவார். அந்த மக்கள் மத்தியில் ஒரே கை தட்டலும் வரவேற்புமாக இருக்கும்.
கொழும்புக்கு வந்த பிறகும் பிள்ளை அவர்களுக்குப் பேச்சு மேடைகள் கிடைப்பதில் குறைவில்லை. ஆனால், பிள்ளை அவர்கள் முன்போல சாதி விஷயத்துக்கு அழுத்தம் கொடுத்துப் பேசுவதில்லை. ஆயினும் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம். சாடைமாடையாகச் சொல்லிக் கொண்டு தான் வருகின்றார்.
அவரது கொள்கைப் பிடிப்பும், அறிவாற்றலும் அவரைப் 'பிள்ளைவாள்' என எல்லோரும் கனம் பண்ணும்படி அவரை உயர்த்தி வைத்திருக்கின்றன.
மனைவி சரசுவதிக்கு இவைகளை விளங்கிக் கொள்ளும் அறிவுத் திறன் இல்லை என்பது பிள்ளை அவர்களின் முடிவு
மகன் கந்தவேள் இந்த நாட்டில் இருக்கக் கூடிய தலை சிறந்த இருதயநோய் நிபுணர்களுள் ஒருவன். கொழும்புப் பல்கலைக்கழகம்,

Page 92
172 தெணியான்
கொழும்பு அரசினர் வைத்தியசாலையில் பணிபுரிந்து கொண்டிருக் கின்றான். இவைகளோடு தனியார் வைத்தியசாலைகளுக்கும் போய் வந்து கொண்டிருக்கின்றான். மகனுக்கு வயது அதிகமில்லை முப்பத் தைந்துதான். இளம் வயதில் மிக உயர்ந்த நிலைக்கு மகன் வந்து விட்டதில் பிள்ளைக்கு மகிழ்ச்சிதான். தனது மூளைதான் மகன் கந்தவேளிடமும் இருப்பதாகப் பிள்ளை அவர்கள் மனைவி சரசுவதியிடம் இடையிடையே சொல்லிக் கொள்ளுவார். மூத்த மகள் சாதாரண கல்வித் தராதரப் பத்திர வகுப்புத் தாண்டவில்லை. அவளுடைய தலையில் மனைவியின் மூளை இருப்பதாக மனைவி சரசுவதியைக் கிண்டல் பண்ணுவார். ஒரு தபாற்காரனைப் பிடித்து மூத்த மகளுக்கு ஊரில் திருமணம் செய்து வைத்துவிட்டார் பிள்ளை அவர்கள். தபாற்காரனுக்கு மேல் ஒரு மணமகனை மகளுக்குத் தேடிக் கொடுக்க அவருக்கு இயலாது போயிற்று. அது அவருடைய சக்திக்கு மேற்பட்ட ஒரு காரியம். தபாற்காரனுக்கும் ஐந்து இலட்சம் சீதனம் கொடுக்க வேண்டி நேர்ந்தது. மகளின் திருமணத்திற்குப் பட்ட கடன், மகனின் படிப்புச் செலவு எல்லாம் பிள்ளை அவர்களுக்கு இப்போதுமுள்ள கடன்கள்தான். அவைகள் யாவும் இனிமேல் தீர்ந்து போய் விடும். மகனுக்கு கொழுத்த சீதனம் வாங்க வேண்டுமென மனைவியிடம் பிள்ளை அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்.
கொழும்பு வந்து தன்னோடு தங்கி இருக்குமாறு தாயைத்தான் மகன் அழைத்தான். பிள்ளை அவர்களை ஊரில் தங்கி இருக்கவிட்டு, தான் மாத்திரம் கொழும்புக்கு வருவதற்கு தாய் மறுத்து விட்டாள். அவன் எப்பொழுதும் தாயுடன் நெருக்கந்தான். தன்மீது தகப்பனுக்கு மரியாதை ஒரு விலகல் என்று பிள்ளை அவர்கள் நினைத்து மனச் சமாதானம் செய்து கொள்வார். ஆயினும் தன்னை ஒதுக்கிவிட்டு தாயை மாத்திரம் அவன் கொழும்புக்கு அழைத்ததை நினைத்து பிள்ளை அவர்கள் உள்ளூரக் கொதித்துக் கொண்டிருக்கிறார். அந்தக் கொதிப்பை வெளியில் காட்டிக் கொள்வதில்லை. தன்னையும் மனைவியையும் மகன்தான் கொழும்புக்கு விரும்பி அழைத்தான் என்று பிள்ளை அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றார்.
கொழும்பு வந்து இரண்டாண்டு காலத்துக்குள் பிள்ளை அவர்கள் மிகப் பிரபலமாகிவிட்டார். “பிள்ளைவாள்” என எல்லோராலும் பெரிதும் மதிக்கப்படுகின்றார். இந்த மதிப்பு மரியாதைகளுக்கு மேலாக, இன்று கதிர்காமத்தம்பி வீடு தேடி வந்து கேட்டுப் போனதில் பிள்ளை அவர்கள் மகிழ்ந்து உறைந்து போனார்.
கதிர்காமத்தம்பியைக் கண்டு இப்படியொரு திவ்வியமான செய்தியை அவன் சுமந்து வந்திருப்பான் என்று பிள்ளை அவர்கள்

ஒடுக்கப்பட்டவர்கள் 173
அணுவளவேனும் எதிர்பார்க்கவில்லை. அவனைக் கண்டதும் தனது இதயத்தில் அவன் ஆழமாகக் குத்தி ஆறாத புண்ணை உண்டாக்கினான் என்பது அவர் நினைவுக்கு வந்தது. அந்த வடு இன்றும் அவரை உறுத்திக் கொண்டிருக்கின்றது. நெஞ்சு வலிக்கிறது.
முருகுப்பிள்ளையும் கதிர்காமத்தம்பியும் ஒன்றாக ஒரே வகுப்பில் படித்தவர்கள். அந்தக் காலத்தில் பிள்ளை அவர்களை முருகு' என்ற தான் பள்ளிக்கூடத்தில் அனைவரும் அழைப்பார்கள். சின்னையா வாத்தியார்தான் அவர்களுடைய வகுப்பு வாத்தியார். அவர் வகுப்பறை ல் வைத்து “என்னடா உணக்கெல்லாம் ஒரு பிள்ளை, சொல்லடா முருகு!” என்று சொன்னார். அன்று முதல் பிள்ளை அவர்கள் முருகு' ஆகிப்போனார்.
ஒரு தினம் மற்றைய மாணவர்களுடன் விளையாட்டு மைதானத்தில் முருகு நின்று கொண்டிருந்தான். அப்பொழுது இந்தக் கதிர்காமத்தம்பி ஓடி வந்து முருகு தோளில் பாய்ந்தேறி உட்கார்ந்து காண்டான். “இறங்கிறங்கு” என்று முருகு சத்தமிட்டபோதும், அவன் முருகுவின் தலைமயிரை இறுகப் பற்றிப் பிடித்த வண்ணம் "செத்த பிறகோ, உயிரோரைடயா பாரம் அதிகம்.? சொல்லு பாப்பம்!” என்று கிண்டலாகக் கேட்டான். அங்கு கூடி நின்ற மாணவர்களுள் ஒருவன், “டேய் அவனுக்குச் செத்த பிறகுதானே தூக்கிப் பழக்கம்” என்றான். சுற்றி நின்ற மாணவர்கள் எல்லோரும் முருகுவைப் பார்த்து கைகொட்டிச் சிரித்தார்கள். திரும்ப, கதிர்காமத்தம்பி கேட்டான். நான் உயிரோடை தானே இருக்கிறன். இப்ப ஒப்பிட்டுச் சொல்லு பாப்பம்!” மீண்டும் உடன் மாணவர்களின் ஆரவாரித்த கேலிச் சிரிப்பு முருகு மூக்குச் சீறி, கண்ணீர் சிந்தி அழு, வண்ணம் சின்னையா வாத்தியாரைத் தேடிச் சென்றான்.
நெற்றி, உடலெங்கும் திரபுண்டரந் தரித்து சால்வையினால் உடலை மூடிக்கொண்டிருந்த சின்னையா வாத்தியார், அழுத வண்ணம் வந்து, முருகு செய்த முறைபாட்டைக் கவனமாகக் கேட்டு விட்டு பலமாகச் சிரித்தார். பிறகு முருகுவைப் பார்த்துச் சொன்னார் “இதற்கேன் நீ அழுகின்றாய்! அவன் சொன்னது உண்மைதானே!”
அந்தக் கதிர்காமத்தப்பி இன்று “பிள்ளைவாள்” என மரியாதை யுடன் அழைத்த வண்ணம் வீட்டுக்குள்ளே வந்து பவ்வியமாக அவர் எதிரில் அமர்ந்து கொண்டான்.
இது எல்லாம் வெறும் நடிப்பு என்றுதான் பிள்ளை அவர்களுக்கு முதலில் தோன்றுகிறது. தேவையான தங்கள் காரியங்களைப் பார்த்துக் கொண்டு போவதற்கு இந்தக் காலத்தில், யார் யாரோ எப்படி எல்லாம் நடிக்கிறார்கள். அந்த வகையான ஒரு நடிப்புத்தான் என்று பிள்ளை அவர்கள் எண்ணிக் கொண்டார்கள். பிள்ளை அவர்களை வந்து பிடித்து மகனிடம் காரியம் பார்க்க வந்திருக்கிறான் என்றே அவர்கள் ஊகித்தார்கள்.

Page 93
174 தெணியான்
பிள்ளை அவர்கள் வழமையாக வாயைச் சும்மா வைத்துக் கொண்டிருக்க மாட்டார். இன்ற அதற்கு மாறாக வந்திருக்கின்றவர் சொல்லட்டும் என்று மெளனமாக அவன் முகம் பார்த்திருக்கின்றார் பிள்ளை அவர்கள். அப்பொழுது கதிர்காமத்தம்பி வாய் திறந்தான்.
"பிள்ளைவாள் நான் ஒரு நல்ல காரியமாகத்தான் வந்திருக் கின்றேன். நீங்கள் மறுக்கக் கூடாது.”
"சொல்லுங்கோ” “உங்கடை மகனுக்கு ஒரு சம்பந்தம் பேசி வந்திருக்கிறேன்” "நானும் அந்த எண்ணத்தோடைதான் இருக்கிறேன். எல்லாம் தோதா வந்தால் செய்யலாம்”
“சீதனமென்றால்.” அவன் மெல்ல இழுக்கிறான். “ஒன்றுக்கு மேலே. ஒரு கோடி கேட்டாய்ச்சு” “பிள்ளைவாள் உங்களுடைய மகனுக்கு இதைவிட கூடவும் வாங்கலாம். அது எங்களுக்குத் தெரியும். என்னை இப்ப அனுப்பி இருக்கிற பகுதியிட்டைச் சீதனம் என்று பெரிதாக எதிர்பார்ப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால் பெரிய இடம்.”
"ஓ! அப்படியே! சொல்லுங்கோ எந்தப் பகுதி!” “மணியக்காரன்ரை பேத்தியின்ரை மகள். எனக்கும் சொந்தம் என்றது உங்களுக்கும் தெரியுந்தானே. அதனாலேதான் என்னை பிடிச்சு அனுப்பி இருக்கினம்.”
பிள்ளை அவர்களுக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. பேச்சு மூச்செல்லாம் மெல்ல அடங்கிப் போயிற்று தான் கனவு கண்டு கொண்டு இருப்பதான ஒரு உணர்வு அவருக்குள் மேலெழுகிறது. தன்னைத்தானே ஒரு தடவை கிள்ளிப் பார்க்க வேண்டும் போல் அவருக் குத் தோன்றுகிறது.
பிள்ளை அவர்களின் திடீர் மெளனம் சம்மதம் என்று அவன் கருதவில்லை. பிள்ளை அவர்களிடம் ஒரு கலக்கம் இருப்பதாக அவன் உணருகிறான். பின்னை இருக்காதா! அந்தத் தயக்கத்தை முதலில் போக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு பிள்ளை அவர்களைப் பார்த்து பணிவாகச் சொல்லுகிறான்.
"நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம் காலம் மாறிப் போச்சு. படிநிலையிலே கிட்டவுள்ள பகுதிகள் இந்தக் காலத்திலே ஒன்று சேரு வதிலை ஒரு தவறுமில்லை. நாங்கள் பூரண மன விருப்பத்தோடுதான் வந்திருக்கிறோம். நீங்கள் எதற்கும் மகனோடு யோசித்து நல்ல மறுமொழி சொல்ல வேண்டும். நான் ஒரு வாரத்துக்குப் பிறகு திரும்ப வருவேன்”

ஒடுக்கப்பட்டவர்கள் 175
அவன் சொல்லிக் கொண்டு எழுந்து விட்டான். பிள்ளை அவர்களுக்கு வாய் திறக்க இயலவில்லை. மெளனமாக, அவன் பின்னே சென்று அவனை வழியனுப்பி விட்டுத் திரும்பிய பிறகுதான் பிள்ளை அவர்கள் திகைப்பில் இருந்து விடுபடுகிறார். உடனே உள்ளே பார்த்து, “சரசு. சரசு.” என்று அழைத்துக் கொண்டு விரைந்தோடுகிறார்.
பிள்ளை அவர்கள் மனம் குழைந்து மனைவியை அழைக்கும் போதெல்லாம் “சரசு. சரசு.” என்று அழைப்பது அவர் வழக்கம். இன்றும் ஆனந்தத்தின் எல்லையில் தன்னை மறந்து, துள்ளிக் குதித்து, வளைந்து குழைந்து, வார்த்தைக்கு வார்த்தை சரசு' போட்டு மனைவி யிடம் நெருங்கி வந்து தகவல் சொன்னார்.
அந்தச் செய்தியை மகனிடம் சொல்லி, அவனுடைய ஒப்புதலைப் பெற்றுத் தன்னிடம் தெரிவிக்குமாறு பிள்ளை அவர்கள் மனைவியைக் கேட்டுக் கொள்ளகிறார்.
அந்தப் பிள்ளை அவர்களுக்கு இப்பொழுது எப்படி உறக்கம் வரும்! ஆனால் அவள். மனைவி சரசுவதி மனதில் ஒரு சலனமும் இல்லாமல் ஆழ்ந்து உறங்குகின்றாளே! பாவம் அவள்! அவளுக்கென்று என்ன இலட்சியம் இருந்தது என்ன கொள்கை இருந்தது.
சில தினங்கள் ஒயாது சிகரெற் புகையில் திளைத்து மிதந்து கொண்டிருக்கிறார் பிள்ளை அவர்கள்.
மகன் இரவு வீடு வந்து காலையில் வீட்டை விட்டுக் கிளம்பிச் சென்றதும் மனைவியிடம் ஒடிச் சென்று விசாரிக்கிறார். "தம்பி என்ன சொன்னது? தம்பி என்ன சொன்னது?”
அவள் சரியான பதில் அவருக்கு இதுவரை சொல்லவிலலை. அவர் ஆவலுடன் கேட்ட போதெல்லாம், “தம்பி ஒண்டும் சொல்ல யில்லை. தம்பி ஒண்டும் சொல்லயில்லை.” என்று சொல்லிக் கொண்டி ருக்கிறாள்.
ஒருநாள் அவர் நச்சரிப்புத் தாங்காமல் பொறுமையிழந்து அவரிடம் அவள் கேடாள்.
“சீதனம் எவ்வளவு குடுக்கினமாம்” “சீதனம் என்ன. சீதனம்.” அவர் தட்டிக் கழித்து அலட்சியமாகப் பதில் சொல்கிறார.
"வீடு வாசல் குடுக்கினமோ?” 'தம்பி தன்ரை வருமானத்திலே கொழும்பிலே ஒரு வீடு கட்ட மாட்டானே! ஆரும் கொடுக்கிற வீடு அவனுக்கு என்னத்துக்கு! அதுசரி உதெல்லாம் தம்பி கேட்கச் சொன்னவனே!”
"இல்லை. இல்லை. நான் சும்மா கேட்டனான்”

Page 94
176 தெணியான்
"நீ ஒரு அமசடக்கி உன்னட்டைச் சொல்லி ஒன்றும் நடக்காது. தம்பி வரட்டும் நான் கேட்கிறேன்” பிள்ளை அவர்கள் ஒரு முடிவுக்கு வந்து விட்டார்.
இரவு ஏழு மணியளவில் மகன் கந்தவேள் வீடு வந்து சேருகின்றான்.
அரை மணி நேரம் கழித்து அவன் தனது அறைக்குள் நுழைந்து எதனையோ படித்துக் கொண்டிருக்கின்றான்.
அவன் அறைவாசலில் போய் நின்று பிள்ளை அவர்கள் அடித் தொண்டையால் மெல்ல ஒருதடவை செருமுகின்றார்.
அவன் படிப்பதை நிறுத்திவிட்டு தலை நிமிர்ந்து அவரை நோக்குகின்றான்.
'தம்பி, உன்னோடு முக்கியமான ஒரு விஷயம் பேச வேண்டி இருக்கு" வாஞ்சையுடன் தந்தை என்ற மிடுக்கும் இழையோடச் சொல்லிக் கொண்டு ஹோலுக்குத் திரும்புகின்றார்.
அவரைத் தொடர்ந்து அவனும் அங்கு வந்து அமர்ந்து கொள்ளு கின்றான். அந்தச் சமயம் தாய் சரசுவதியும் வந்து அவன் அருகே அமருகின்றாள்.
"தம்பி, அம்மா உனக்கு எல்லாம் சொல்லி இருப்பா!” "ஒமோம் சொன்னவ” “இப்படி ஒரு இடம் எங்களுக்கு ஒருகாலமும் வந்து வாய்க்காது” அவன் வாய் திறக்காது மெல்லச் சிரிக்கின்றான். அந்தச் சிரிப்பின் பொருள் என்ன என்று உண்மையல் பிள்ளை அவர்கள் விளங்கிக் கொள்ள இயலவில்லை. பிள்ளை அவர்கள் தனது கொள்கையின் வெற்றியை இந்தச் சமயம் பெருமையோடு மகனுக்கு உணர்த்திவிட வேண்டும் என்று மனம் கொள்ளுகிறார்.
“தம்பி சாதி ஒழிய வேண்டும் என்று பிரசாரம் செய்து வந்தவன் நான். கலப்புத் திருமணங்களின் மூலந்தான் சாதி வேறுபாடு இல்லாது போகும் என்பது என் கொள்கை”
"நானும் அதை நம்புகிறன்” “சபாஷ். சபாஷ். நீ என்னுடைய பிள்ளை இனி என்ன. உன்னை மாப்பிள்ளை கேட்டு வந்திருக்கிற மணியகாரன் பகுதிக்கு. சம்மதம் என்று சொல்லி விடுகிறேன்.”
“அது வேண்டாம்” அவன் அமைதியாகச் சொல்கிறான். "ஏன்?” பிள்ளை அவர்கள் உடல் பதற, அதிகாரமாக முகம் சிவந்து கேட்கிறார்.

ஒடுக்கப்பட்டவர்கள் 177
“சாதியை ஒழிக்க வேண்டுமெண்டு சொல்லிக்கொண்டு கலப்புத் திருமணம் செய்தவர்கள் எல்லாரும் தனக்கு மேலே உள்ள சாதியிலே தான் பெண் எடுத்திருக்கிறார்கள். அது பெரிய போலித்தனம். ஏமாற்று. எனக்கு எங்களிலும் கீழேயுள்ள சாதியிலே. நல்ல குடும்பத்திலே. படித்த ஒரு பெண்ணாகப் பார்த்து திருமணத்துக்கு ஒழுங்கு செய் யுங்கோ! கலப்புத் திருமணத்தின் மூலம் சாதிக் கொடுமைகளை ஒழிப்பதற் குச் சிறிய பங்களிப்பைச் செய்தவனாக நான் இருப்பேன்" அவன் ஆர்ப்பாட்டமில்லாது அதிையாகச் சொல்லிக் கொண்டு, அங்கிருந்து எழுந்து சென்று தனது அறைக்குள் நுழைகின்றான்.
அவனைத் தொடர்ந்து அவன் தாயும் அங்கிருந்து எழுந்து போகிறாள். பிள்ளைவாள் அவர்கள் முகம் வாடி, தலை குனிந்து, தரையைப் பார்த்த வண்ணம் அங்கே அமர்ந்திருக்கின்றார்.
- மல்லிகை ஆண்டுமலர் ஜனவரி - 2004

Page 95
உயர் மானம்
“பிள்ளை நீ சாப்பிடு, எங்களைக் காத்திராதே" தேநீரை அல்மீனியக் கேத்தலில் ஊற்றி கையில் தூக்கிக்கொண்டு வெளியே போகும் போது அம்மா சொல்லிக்கொண்டு போனாள்.
அம்மா போய்ச் சற்று நேரத்துக்கெல்லாம் வேலைகள் அனைத்தும் முடிந்து அடுக்களைக்குள் இருந்து அவள் வெளியே வந்து விட்டாள்.
உடம்பு வியர்வையில் பிசுபிசுக்கிறது. சவர்க்காரப் பெட்டியைக் கையில் எடுத்துக்கொண்டு கிணறு நோக்கி மெல்ல நடக்கின்றாள்.
கொட்டிலுக்குள் கட்டையில் கட்டி நிற்கும் கன்னி மறி அவள் கண்ணில் படுகிறது.
இரவு பகலாக ஓயாமல் அது அழுகிறது. ஈத்து வடித்து, வாலை ஆட்டி ஆட்டி, பின்னங்கால்களை அசைத்து மெல்லத் துள்ளி தொடர்ந்து அழுதுகொண்டு நிற்கிறது.
நான்கு மறிகளும் இரண்டு குட்டிகளுமாக பெரிய குடும்பத்து கன்னி மறி இன்று தனித்துப் போய்விட்டது.
காலையில் கட்டையை விட்டுப்போனால் நடுப்பகல் தாண்டி எல்லாம் படலைக்கு வந்து நின்ற குரல் கொடுக்கும். பிண்ணாக்குத் தண்ணிக்குள்ளே வடித்த கஞ்சியைக் கலந்து வைக்க சுவைத்துக் குடித்துவிட்டுத் திரும்பிப் போய்விடும்.

ஒடுக்கப்பட்டவர்கள் 79
செக்கலுக்குள்ளே மீண்டும் கட்டைக்கு வந்து சேரும். “கமக்காரன் வீட்டில் பசு நிற்கவேணும்” அப்பா சொல்லுவார். செல்லுப்போல இரண்டு பசு வளர்க்கிறார்.
பசுவுக்கு பனையோலை வெட்டிப்போட வரும் முத்தனுக்கு கன்னி மறியிலே ஒருகண்.
அப்பாவை மெல்லத் தட்டிப் பார்த்தான். “முத்தன், எதைக் கேட்டாலுந் தருவன். கன்னி மறியைப் பற்றி மட்டும் கதையாதே" அப்பா முடிவாக மறுத்துவிட்டார்.
இந்தக் கன்னி மறி பெரும் குரல் கொடுத்து அழுதுகொண்டு நிற்கிறது. அப்பா அதை அவிழ்த்து விட வேண்டாமென்று சொல்லி இருக்கின்றார்.
நேற்று இரவு அம்மா சொன்னாள்: “அவன் முத்தன்ரை கண்பட்டுப் போச்சு. ஆடு அழுகுது” “சீ..! அவனிலே ஏன் பழி போடுகிறாய்!” "அப்ப. தீன் போதாதாக்கும்!” "இரவு பகலா அழுகுது. தீனுக்கே?” “பின்னை என்னத்துக்கு?” "உன்க்கொண்டும் விளங்காது. விசரி அது கிடாயைத் தேடுது.”
அதுக்கு. கட்டையிலே கட்டி வைச்சால்..?” “அவிட்டு விட்டால் ஆற்ரையும் கிடாயைத் தேடிப் போய் விடும். இப்ப வெங்காயம் கிண்டி, வீட்டுக்கு வருமட்டும், எனக்கு நேரமில்லை.”
“உங்கடை நேர காலத்துக்கு எல்லாம் தோதுப்படும் எண்டது தான் உங்களுக்கு எண்ணம்.”
“என்னப்பா சொல்லுகிறாய்!”
ஒ. அப்பமெண்டால் உங்களுக்குப் புட்டுக் காட்ட வேணும். பிள்ளைக்கும் முப்பது வயதாகுது”
&&
3)faO°LfD............... பாப்பம்.” அப்பாவின் வழமையான பெருமூச்சு. அவர் மனக்கஷடம் அம்மாவுக்கும் தெரியும். தெரிந்தும், பேசாமல் எப்படி அவள் இருக்க முடியும்?
அந்த நாளையில் மகள் பெயர் சொன்னால் அப்பா தலை நிமிர்ந்து நிற்பார்.
“என்ரை பிள்ளையின்ரை ஒரு விரல் மடிக்கேலாது.” “என்ரை பிள்ளைபோலத்தான் தங்கடை பிள்ளையளை வளக்க
வேணுமெண்டு ஆசைப்படுகிறான்கள்”

Page 96
180 தெணியான்
அப்பா அவளைக் கண்ணும் கருத்துமாகத்தான் வளர்த்தார். அப்பா நெற்றியில் திரிபுண்டரமாக எப்பொழுதும் திருநீறு இருக்கும்.
அவள் பிறை நெற்றியில் ஒற்றைக் கீற்று நீறு எப்பொழுதும் அவளுக்கு எழிலூட்டும்.
அப்பா சும்மா ஆளா! புராணத்துக்குப் பயன் சொல்லுகிற பேர்வளி அப்பாவுக்கு உயிராக ஒரு அருமைத் தங்கச்சி, தங்கச்சி என்றால் அப்பா மாய்ந்து போவார்.
அந்தத் தங்கச்சிக்கு குலக்கொழுந்தாக, அருமை பெருமையான ஒரு மகன்.
பிறகு அப்பாவைச் சொல்லவா வேணும்! அந்த மருமகன் தான் அப்பாவுக்கு எல்லாம்.
அவன் கடும் செல்லம். அவனுக்குச் சுட்டுப் போட்டாலும் பள்ளிப் படிப்பு வராது என்று வாத்திமார் சொல்லிப் போட்டார்கள். ஆனால் அவள் க.பொ.த. சாதாரணம் நல்லாத்தான் சித்தி அடைந்தாள்.
தங்கச்சி அப்ப சொன்னாள்: “அண்ணை பிள்ளைக்கு இவ்வளவு படிப்பும் போதும். உன்னைப் போல கந்தபுராணத்துக்குப் பயன் சொல்லவே போறாள்!”
தங்கச்சி சொன்னால் பிறகென்ன மறு பேச்சு! தங்கச்சி வீட்டுக்குப் போகிற மருமகள் தானே! அவள் வீட்டோடு தங்கி விட நேர்ந்தது.
அவளின் நல்ல குணம் அறிந்து அப்பாவிடம் சாடைமாடையா: சிலர் தட்டிப் பார்த்திருக்கின்றார்கள்.
அப்பொழுதெல்லாம் அப்பாவுக்கு சினந்தான் முன்னுக்கு வரும். "இதென்ன கதை என்ரை மருமேனுக்கெண்டுதானே அவள் பிறந்திருக்கிறாள்” என்பார்.
சுவிஸ் போன மருமகன் மூன்று ஆண்டுகளுக்கு முன்னம் ஊருக்கு வந்திறங்கினான். பல்கலைக்கழகத்தில் படித்தவன் பெயருக்குப் பின்னே பட்டம் இருப்பதுபோல அவன் பெயருக்கு பின்னே சுவிஸ் இருந்தது.
அப்பா சீதனம் வாங்காமல் அம்மாவை விரும்பி முடித்தவர். அப்பா, அம்மாவுக்கு அப்ப சின்ன வயது. இப்பத்தான் என்ன அப்பா ஐம்பத்தைந்து தாண்டவில்லை; அம்மா ஐம்பதைத் தொடவில்லை.
பெயருக்குப் பின்னால் ஒரு பட்டம் இருந்தால் கல்யாணச் சந்தை
யில் விலை மிக அதிகம்.

ஒடுக்கப்பட்டவர்கள் 181
தங்கச்சி மகன் பெயருக்குப் பின்னால் சுவிஸ் என்ற பட்டம் இருந்தது. சந்தையில் நல்ல விலைக்கு தங்கச்சி விற்று விட்டாள்.
எல்லாம் முடிந்த பிறகு அப்பாவில் அனுதாபமுள்ளவை தங்கச்சி யோடை பேசினார்கள்.
“என்ன அண்ணன்ை கைவிட்டு விட்டியள்?” “நான் இல்லை எண்டு சொல்லயில்லை.” "அப்படி எண்டால். அவற்றை பிள்ளைக்குச் செய்திருக்கலாந் தானே!”
“என்ரை ஆம்பிளைப் பிள்ளைக்கு ஒரு மதிப்பு மரியாதை வேண்டாம்?”
"மேட்டிமை காட்டுகிற அளவுக்கு அவரிட்டை என்ன சீதனம் கிடக்கு!”
“சீ. நான் சீதனத்தைச் சொல்லயில்லை. அவனிட்டை இல்லாத பெரிய சீதனமே!”
"அப்ப என்ன வேணும்?” “ஒரு மாப்பிள்ளையைத் தன்ரை பிள்ளைக்குச் செய்ய விரும்பி னால் அவனை மாப்பிள்ளை கேட்டு வர வேணும். அப்பதானே அந்த மாப்பிள்ளைக்கு ஒரு மதிப்பு”
"அண்ணா வந்து மருமேனைத் தரச் சொல்லிக் கேட்கவில்லை? “இல்லை, கேட்டிருந்தால் குடுத்திருப்பேன்’ தங்கச்சிமார் எப்போதும் காரியக் கெட்டிக்காரிகள்தான். அப்பா அதன் பிறகு ஆடிப் போனார். அம்மா மகளின் கதை எடுத்தால் இப்படித்தான் மெளனமும் பெருமூச்சும்.
“பிள்ளை கேட்டுக்கொண்டு கிடக்கப் போகிறாள்” “அவள் நித்திரையாகி இருப்பாள்” இருவரும் தணிந்த குரலில் மெல்லப் பேசிக்கொள்ளுகிறார்கள். அவள் படுக்கையில் மறுபக்கம் திருப்பிப் படுக்கின்றாள். கன்னி மறி அழுதுகொண்டு நிற்கிறது. அவள் ஆட்டுக் கொட்டில் தாண்டி கிணற்றடிக்கு வருகின்றாள். தொட்டியில் நீர் தளும்பி வழிகிறது. மேல்கால் கழுவிப் போக வந்தவள் அதை மறந்து, நீரை மொண்டு தலையில் ஊற்ற ஆரம்பிக்கின்றாள்.

Page 97
182 தெணியான்
ஆசை தீர, குளிர்ந்த நீரை அள்ளி வார்த்துக்கொண்டு திரும்பி வந்து உடைகளை மாற்றி, கூந்தலை ஈரம் போக உலர்த்துகிறாள். பின்னர் இலேசாக முகத்தில் பவுடர் தடவிக்கொண்டு கூந்தலை விரித்து விட்ட வண்ணம் வீட்டு விறாந்தையில் வந்து அமருகின்றாள்.
அம்மா சொல்லிப் போனது அவள் நினைவுக்கு வருகிறது. ஆனால் அவளுக்கு வயிற்றில் பசி எடுக்கவில்லை.
அவள் உடலை ஏதோ செய்கிறது. கைகளை மேலே உயர்த்தி உடலை முறிப்பது போல முறுக்கி, நெட்டி முறிக்கிறாள்.
அப்பொழுது அவள் வீட்டு படலையில் லான்ட்மாஸ்ரர் ஒன்று வந்து நிற்கிறது.
அவள் பட்டென்று எழுந்து போகின்றாள். முத்தன் மகன் சின்னராசன். பிடிபிடியாகக் கட்டின வெங்காயம் மலையாக லான்ட்மாஸ்ரரில் குவித்துக் கிடக்கிறது.
லான்ட் மாஸ்ரரில் சுமை ஏற்றி இறக்குவதுதான் சின்னராசனுக்கு இப்ப தொழில்.
அவளுக்கு இரண்டு மூன்று வயது இளையவன். சிறிசில் தகப்பனோடு இங்கு வந்து போனவன்.
“பெரிய தட்டிப்படலையைத் திறந்து விடுங்கோ. உள்ளுக்குக் கொண்டு வாறன்’ என்கிறான் அவன்.
அவள் தட்டியை அவிழ்த்தெடுக்கிறாள். லான்ட் மாஸ்ரர் உள்ளே வந்து வீட்டுக்கு பின்புறம் வீட்டோடு இணைத்து இறக்கி விடப்பட்டுள்ள சார்ப்புக்கு முன்பு தரித்து நிற்கிறது.
சின்னராசன் ஈர்க்கில் பிடித்து இரண்டு கைகளிலும் வெங்காயப் பிடிகளைத் தூக்கிக் கொடுக்க அவள் உள்ளே கொண்டு போய் வைக்கின்றாள்.
சற்று நேரத்தில் அவள் உள்ளே கொண்டு போய் வைத்துத் திரும்பும் வேகம் மெல்லக் குறைந்து போகின்றது.
அவன் வெங்காயப் பிடிகளைக் கையில் தூக்கிக் கொண்டு அவள் வந்து கையில் வாங்கும் வரை காத்திருக்க வேண்டி இருக்கிறது.
"ஏன், தூக்கி வைத்துக்கொண்டு நிற்கிறியள். உள்ளுக்குக் கொண்டு வந்து வையுங்கோ!” என்கிறாள் அவள்.
இருவரும் தூக்கித் தூக்கிக் கொண்டு போய் உள்ளே வைக்கின் றாரகள.

ஒடுக்கப்பட்டவர்கள் 83
வேகமாக வேலை நடக்கிறது. இன்னும் இரண்டு தடவைகள் அவன் வெங்காயம் ஏற்றிக் கொண்டு வரவேண்டும்.
இறுதியாக இரண்டு பிடிகளைக் கைகளில் தூக்கிச் சென்று கீழே வைத்துவிட்டு அவன் நிமிருகின்றான்.
அவன் எதிரில் நெருங்கி வந்து நிற்கும் அவள் தனது கரங் களினால் அவன் கழுத்தைச் சுற்றி அணைத்து அவன் கன்னங்களில் முத்தமிடுகின்றாள்.
அவன் பட்டென்று அவளைத் தன்னோடு இறுக அணைத்துக் கொண்டு நொருங்க இறுக்குகின்றான்.
தோட்டத்தில் வெங்காயம் கிண்டும் பெண்களுக்கு கூலி கொடுக்க வேண்டும்.
அப்பா கூலிக்காசை எடுத்துப் போக மறந்து போனார். சயிக்கிளை எடுத்துக் கொண்டு வேகமாக வீட்டுக்கு ஓடி வருகின்றார்.
வீட்டில் யாரும் இல்லை. லான்ட் மாஸ்ரர் வெறுமையாக நிற்கின்றது. அப்பா சார்ப்பு நோக்கி வருகின்றார். அவள் உடைகளைச் சரி செய்துவிட்டுக் கொண்டு கூந்தலை அள்ளி முடித்த வண்ணம் வெளியே வருகின்றாள்.
அவள் பின்னால் சின்னராசன். அப்பா அதிர்ந்து போகின்றார். பொங்கி எழும் சினத்தில் கை, கால்கள் பதறுகின்றன. இருவரையும் கொலை செய்து போடும் வெறி அவருக்குள் எழுகிறது.
அவள் தலை குனிந்து நடுங்கி நிற்கின்றாள். அவன் பேந்தப் பேந்த விழிக்கின்றான். அப்பா ஒரு கணத்தில் தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு சட்டென்று திரும்பி வீட்டுக்குள்ளே போகின்றார்.
லான்ட் மாஸ்டர் புறப்பட்டுப் போகின்றது. அவள் என்ன நடக்கப் போகின்றது என்று அறியாமல் ஏங்கி நிற்கின்றாள்.
"குற்றம் என்னிலேதான். காலாகாலத்திலே செய்து குடுத்திருந்தால் இப்படி எல்லாம் நடந்திருக்காது.
இது உலகத்திலே நடக்காத சங்கதி அல்ல. வெளியிலே விட்டால். மானம், மரியாதை எல்லாம் போச்சு, பிறகு ஒருதன்ரை

Page 98
184 தெணியான்
கையிலே பிடிச்சுக் குடுக்கேலாது. ஆனால். ஆனால். இவள் இப்படி. 季。”
அப்பா தன்னைச் சமாதானம் பண்ணிக் கொண்டு கையில் காசை எடுத்தவாறு வெளியே வருகின்றார்.
அவள் நின்ற இடத்திலிருந்து அசையாது முன்னர் போலத் தலை கனிந்த வண்ணம் நிற்கின்றாள்.
அப்பா விடுவிடென்று அவள் எதிரில் வந்து நின்று, தலையில் இருந்து கால்வரை ஒரு தடவை பார்த்து விட்டு, “சீ. உனக்கு எங்கடை ஒராள் கிடைக்கவில்லையா?” எனக் காறித் துப்பிக் கொண்டு, திரும்பி வேகமாக நடக்கின்றார்.
அதிர்ந்து போன அவள் போய்க்கொண்டிருக்கும் அப்பாவை அதிசயமாக நிமிர்ந்து பார்க்கின்றாள்.
- test80TLD ஒக்டோபர் 2005

வெளியில் எல்லாம் பேசலாம்
வீட்டில் இருந்து புறப்படும்போது மனதில் ஒரு திருப்தி இருக்க வில்லை. ஏன் அந்த அதிருப்தி என்றும் விளங்கவில்லை. சில சமயங் களில் இப்படி நேர்ந்து விடுகிறது. அடி மனதில் உறைந்துபோன வாழ்வு அனுபவங்களின் வெளிப்பாடாக இருக்கலாம். மனதில் திருப்தி யீனத்துடன் வெளியே செல்வதற்கு விருப்பமில்லை. அப்படிச் செல்லாமல் இருப்பதற்கும் இயலவில்லை. மிக முக்கியமான காரியம். அதனை எப்படித் தவிர்த்துவிட இயலும்? தவிர்த்து விட்டுப் பின்னர் அதற்கென்ன நியாயம் சொல்லிக் கொள்ளலாம்!
அவன் மனம் அவனுக்குப் புரியவில்லை. மனதின் விந்தை விளையாட்டு இதுதான். இதனை விளையாட்டென்று சொல்ல இயலாது. மனதின் எச்சரிக்கையாகவும் அது இருக்கக்கூடும். அந்தச் சமிக்ஞை, முன்னெச்சரிக்கை என்ன என்று உணராது, மீறி நடந்து, ஆபத்தில் போய் வீழ்ந்துவிடவும் நேரலாம். மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம் என்பது வாழ்வு அனுபவந்தான். ஆனால், எங்கும் அது பொருந்திவரத் தகுந்ததல்ல. வெளியே போகும்படி ஏவிக்கொண்டிருப் பதும் இந்த மனந்தான். அதேசமயம் புறப்படுவதில் அதிருப்திப்பட்டுச் சலித்துக் கொள்வதும் இந்த மனந்தான். இந்த மனதுக்கு எத்தனை முகங்கள்! எந்த முகம் உண்மையான முகம்! எது சத்தியத்தின் முகம்!
ஒன்றும் புரியவில்லை! எல்லாம் புரியாத குழப்பமாகத் தோன்றி யது. புரியவில்லை என்பதால் புறப்படாமல் இருந்துவிட முடியவில்லை.

Page 99
186 தெணியான்
மோட்டார் சயிக்கிளை எடுத்துக் கொண்டு வெளியே செல்லத் தயாராகின்றான். வீட்டில் இருந்து வெளிக் கேற் வரை வளுவளுப்பான சிவந்த சிமெந்துத் தரை. அதன் இரண்டு பக்கங்களிலும் செழித்துப் பூத்துக் குலுங்கும் பூஞ்செடிகள், குளுகுளுத்து நிற்கும் வண்ண வண்ணக் குறோட்டன்கள். அவைகள் எல்லாம் அவன் கவனிப்பின் பூரிப்புகள். மலர்ச்சிப் புன்னகைகள். நித்தமும் மாலை நேரம், விடுமுறை நாட்கள் அவன் அவைகளுடன் கழிப்பான். அவைகள், அவனுக்கு, அவன் செல்லக் குழந்தைகள் போல. அவன் புறப்பட்டு வெளியே போகும் சமயங்களில் மெல்ல மெல்ல நகர்ந்து நகர்ந்து அந்தப் புஷ்ப எழிலை ஆவலுடன் கண்டு களித்த வண்ணம் செல்வான்.
வீடு விட்டுப் புறப்படுகையில் மனம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். மனம் நிறைந்திருக்க வேண்டும். அதுதான் அவன் மனதின் நாட்டம். அந்த மகிழ்வு, நிறைவுகளை அவன் வளர்க்கும் அந்தப் பூஞ் செடிகள் அவனுக்குத் தரும். அதற்கு அப்பாலும் அவன் மனம் நாடுவது இன்னொன்றை. மனதின் அந்தரங்கம் அது மனைவி வெளியே வர வேண்டும். அவள் கேற்றைத் திறந்து, மலர்ந்து நின்று வழியனுப்பி வைக்க வேண்டும். அவள்தான் மனதின் முழு நிறைவு மனதுக்கு நிறைவு பூஞ்செடிகளா? அல்லது அவளா? அவளாகத்தான் இருக்க வேண்டும்.
அவன் மோட்டார் சயிக்கிள் மெதுமெதுவாக ஏன் நகர்ந்து கொண்டிருக்கின்றது? வேலையும் கையுமாக உள்ளே இருக்கும் அவள் வந்து சேர வேண்டுமல்லவா! மலர்களை, செடிகளை இரசிப்பதாக உண்மையில் அவளை மனம் தேடுகின்றது. அவள் மலர்ந்து மனதில் மணம் பரப்பும் பூஞ்செடியா? அல்லது பூங்கொடியா?
"அவள் இன்னும் வந்து சேரவில்லை. அவள் வருகையை எதிர் பார்த்து மலர்களை அனுபவிப்பதாக எவ்வளவு நேரம் பாவனை பண்ணிக் கொண்டு நிற்கலாம்? சில சமயங்களில் அவள் அப்படித்தான். அவனோடு பிணக்கு என்றால் அவள் வீட்டுக்கு வெளியே வராமல் இருந்து அவனைப் பழி வாங்குவாள். அந்த நாள் அவன் முற்றாகக் குழம்பிப் போவான். அது கரிநாள். அவனுக்கு அப்படியொரு மனம்.
அவள் வந்து கேற்றைத் திறந்து விடுகின்றாள். அவள் முகத்தில் வழமையான மலர்ச்சி இல்லை. அதிகாலை புலர்ந்து பனித்துளியில் நனைந்து சொட்டும் புஷ்பமாக அவள் வதனமில்லை. கொட்டும் வெயில் காங்கை தாங்காது. ஈரம் உலர்ந்த பூவாக அவள் தோன்றுகின்றாள். அவன் குறிப்பாக அவள் முகம் நோக்குகின்றான். அவள் உதடுகள் லேசாகப் பிரிகின்றன. அது மகிழ்ச்சியின் மலர்வல்ல. அவள் உதடுகளில் செத்துக் கிடந்தது அந்தச் சிரிப்பு அவளுக்கு மனம் மலரா முகம்.
சத்துப் போன புன்னகைதான் அவள்.
விடுமுறை தினம் என்றால் அவளுக்கு ஒரே குஷி, மோட்டார் சயிக்கிளில் அவன் பின்னால் அவள் ஏறி அமர்ந்திருக்க வேண்டும்.

ஒடுக்கப்பட்டவர்கள் 187
நகைக்கடை, சேலைக்கடை, மரக்கறிச் சந்தை, மீன் சந்தை, இறைச்சிக் கடை, கருவாட்டுக்கடை. இடையிடையே கோவில்கள் ஏற்றிச் செல்ல வேண்டும். அதில் அவளுக்கொரு உல்லாசம், ஆனந்தம். சமையல் சாப்பாடு என்று முடங்கிக் கிடக்கும் பெண்ணுக்கு இவையெல்லாம் வேண்டும் தேவைகள்தான். கணவனுடன் இணைந்து ஒன்றாக வெளியில் செல்வதில் மனதுக்கு எவ்வளவு மகிழ்ச்சி! அவன் சில சமயம் சோம்பல் பட்டால் அவள் விட்டு வைக்க மாட்டாள். அவளை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காகவே அவன் சலிக்காமல் புறப்படுவான்.
அந்த மகிழ்ச்சி இன்று தனக்கில்லை என்பதனாலா அவள் முகம் சற்று வாடிப்போனது? அல்லது அவள் மனதில் வேறென்ன தான் இருக்கிறது? ஒரு மனதின் சாகசங்களை எல்லாம் எப்படி இன்னொரு மனது ஊகித்து உணர்ந்து கொள்ளலாம்?
எதற்கும் ஒரு வார்த்தை அவளிடமே கேட்டு வைக்கலாம். ஆனால், அவள் உள்ளத்தைச் சீண்டி அவளுக்குள் இருப்பதை வெளிக்கொண்டு வருவதில் என்ன இலாபம்? வலிந்து போய் வீண் தொல்லைகளைத் தேடிக் கொள்ளக் கூடாதென மனம் எச்சரிக்கிறது. அவன் எப்பொழுதும் அப்படித்தான், பிரச்சினை கண்டு விலகிக் கொண்டு விடுவான். இப்பொழுது மனமகிழ்ச்சியுடன் வீட்டில் இருந்து போக வேண்டும். அதற்கு அவளை மகிழ்விக்க வேண்டும். அவளை நோக்கி உயிர்ப்புடன் ஒரு புன்னகை அவளுக்குக் கொடுத்துவிட்டு, கேற்ரைத் தாண்டி அவன் வெளியே வருகின்றான்.
அவன் பிறந்த வீடு நோக்கி மோட்டார் சயிக்கிள் ஓடிக் கொண்டிருக்கின்றது. ஆனால் அவன் மனம் அவனைப் பின் தள்ளிவிட்டு அவளது காய்ந்த முகம். செத்த சிரிப்பு என நினைவுச் சூழலில் அலைகிறது.
அவன் சகோதரி குடும்பத்துடன் வாழுவதற்குப் போதுமான குடிநிலம் வேண்டும். அவர்கள் வீட்டோடு சேர்ந்த நான்கு பரப்பு நிலம் பணம் கொடுத்து வாங்க வேண்டும். அந்த நிலத்தில் வசதியாக அவளுக்கு வீடொன்று கட்டிக் கொடுக்க வேண்டும். சுவிசில் இருந்து வந்து வீட்டில் தங்கி நிற்கும் அண்ணா அதற்கான செலவுகளைச் செய்யத் தயாராக இருக்கின்றார்.
இந்த நிலத்தின் உடைமையாளனை முதலில் போய்ச் சந்திக்க வேண்டும். விலைவாசி பேச வேண்டும். அண்ணா அதற்காக அவனை வரச் சொல்லி இருக்கின்றார். அவளுக்கும் அது தெரியாமலில்லை. ஆனால், அதுதான் அவள் முக்வாட்டத்துக்குக் காரணமோ! அந்தச் செலவுகளில் ஒரு பகுதி அவன் தலையில் வந்து விழுந்து விடக் கூடு மென அவள் மனம் அஞ்சி இருக்கக் கூடும். அவள் மன அச்சம் நியாயமானது. மூன்றும் ஒன்றுமாக நான்கு வாரிசுகளுடன் வாழுகின்றவள். மூன்று பெண்களைக் கரை சேர்க்க வேண்டுமென்ற கவலை இருக்காதா அவளுக்கு!

Page 100
188 தெணியான்
ஒ. வல்லை வெளி வந்து விட்டது. இளம் பருவ வாலிப வனப்பில் நண்பர்களுடன் சேர்ந்து வல்லைப் பாலத்தின் மேல் நின்று தூண்டில் போட்டு மீன் பிடித்ததும், தென்னந்தோப்பில் களவாக இளநீர் பறித்துக் குடித்ததும், உப்பு விளையும் காலத்தில் உப்பள்ளிச் சேர்த்ததும். என உல்லாசமாகத் திரிந்த இடம். தொண்டமான் உப்பாறு ஊடறுத்து நீண்டு கிடக்கும் பரந்து விரிந்த பொட்டல் வெளி இந்த வெளிக்குள்ளும் இத்தனை உல்லாசங்கள் கொட்டிக் கிடந்தனவா? அவை யாவும் இப் பொழுது எங்கே தொலைந்து போயின? வாலிப வனப்புடன் அவைகளும் மறைந்து மங்கிப் போய்விட்டனவா? வாலிபம் அழிந்துபோன இடைக் காலத்தில் இந்த வெளியில் எத்தனை பயங்கரங்கள். எப்பொழுதும் உயிர் அச்சம் யுத்தக் கெடுபிடியில் மடிந்துபோன மனித உயிர்கள்.
இப்பதான் என்ன! வாகனங்கள். வாகனங்கள் எனப் போக்கு வரத்து நெரிசல். கரணந் தப்ப வேண்டாம். கவனம் தப்பினால் போதும் நிச்சயம் அது மரணம். சோதனை இல்லாத காவலரண்கள் மீது வெறுப்பில்லை. மானமாக, மரியாதையாக மனிதன் போய் வரலாம். புதிய வல்லைப் பாலத்தின் மேலே மோட்டார் சயிக்கிளில் ஏறி சிலுசிலு என ஒடிச் செல்வதில் புதுமையான ஓர் இதம்.
அண்ணா அவனை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றார். அவன் படலை திறந்து மோட்டார் சயிக்கிளை உள்ளே கொண்டு செல்ல இயலவில்லை. வளவுக்குள் போவதற்கு இயலாத இட்டுமுட்டு. கையளவு நிலத்தில் ஒரு வீடு எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்த இடம். அவர்கள் பிறந்த வளர்ந்த மண் அண்ணா சுவிசில் இருந்து வந்து ஒருவார காலமாக அங்கு தங்கி இருக்கின்றார். அவர் குடும்பத்தை அங்கு அழைத்துக் கொண்டு விட்டார். இப்ப தன் உறவுகளைப் பார்த்துப் போக, சகோதரிக்கொரு வீடு கட்டிக் கொடுக்க இங்கே வந்திருக்கின்றார்.
மோட்டார் சயிக்களைப் படலைக்கு வெளியில் தெரு ஓரத்தில் நிறத்திவிட்டு அவன் உள்ளே போகின்றான். அந்த ஒலைக் குடிசைக்குள் அண்ணா மலர்ந்த முகத்துடன் மகிழ்ச்சியாக இருக்கின்றார். அவருக்கு எந்த அசெளகரியமும் இருப்பதாகத் தெரியவில்லை. பிறந்த மண்ணில். சொந்த வீட்டில். வாழ்வதில்தான் என்ன சுகம்! அந்த இன்பம் அவர் அனுபவித்துக் கொண்டிருப்பது அவரது முகம் சொல்லாமல் சொல்கிறது.
அவனைக் கண்டு "போவமா?” எனப் புறப்படுகின்றார். காலை ஒன்பது மணி பிந்தாமல் நிலச் சொந்தக்காரனைப் போய்ச் சந்திக்க வேண்டும் ஒன்பது பிந்தினால் அடிவளவுக் கள்ளில் கொஞ்சம் கொஞ்சமாக அவர் மூழ்க ஆரம்பித்து விடுவார். அதன் பிறகு அவரைக் கண்டு பேசப் போனால் அவர் குலப் பெருமை. குடும்பப் பெருமை.

ஒடுக்கப்பட்டவர்கள் 189
அரச உத்தியோகம் துறந்த தமிழ்ப் பெருமை எல்லாம் அவர் வாயினால் சொல்லச் சொல்லப் பொறுமையாகக் கேட்க வேண்டும். கள்ளுக்கு இசைவு கதை என்பார்கள். அந்த உண்மையை அவர் சொல்லிச் சொல்லி நிரூபித்துக் கொண்டிருப்பார். அந்தக் கதைகள் எல்லாம் அவர்கள் ஏன் கேட்க வேண்டும்?
அவன் மோட்டார் சயிக்கிளை எடுக்கின்றான். அவன் பின்னால் வந்து அண்ணா அதில் ஏறிக்கொள்கின்றார். அவர்கள் வீட்டு ஒழுங்கைப் புழுதி, கல், மேடு பள்ளம் எல்லாம் தாண்டி ஒடிச்சென்று சற்று நேரம் கழித்து நேர்த்தியான தார் போட்ட தெருவில் அந்த வீட்டுப் படலையில் வந்து தரித்து நிற்கிறது. அந்தப் படலை கோயில் கதவுபோல வைரம் பாய்ந்த மரத்தினால் செய்யப் பெற்ற பழைய காலச் சங்கடப் படலை. சராசரியான ஒரு மனிதனால் இழுத்து திறக்க இயலாத கனதியான படலை. படலையின் இரு பக்கங்களிலும் கறுத்துப் பாசி படர்ந்த தெரு ஒரக் கற்சுவர்கள். அந்தச் சுவர்களுக்குப் பின்னே பரந்த வளவு அந்த நிலப்பரப்பின் மத்தியில் அந்தத் தெருவோரச் சுவர் போலப் பழைய ஒரு வீடு. அந்த வீட்டுக்கும் வெளிமதிலுக்கும் இடையே பரந்த முற்றம். முற்றத்தில் இரண்டு மாமரங்கள், ஒரு பலாமரம். வீட்டுக்குப் ன்டபுறமான அடிவளவில் மா, பலா, கொய்யா, தென்னை, பனை எனச் செறிந்து வளர்ந்த பயன்தரு தாவரங்கள். இவைகள் மத்தியில் அந்த வீடு பழைய காலக் கோட்டை போலக் காட்சி அளிக்கிறது.
வீட்டுச் சங்கடப் படலைக்கு வெளியே தெருவில் சற்று நேரம் இருவரும் தாமதித்து நிற்கின்றார்கள். மோட்டார் சயிக்கிள் வந்து தரித்து நிற்கும் சத்தம் கேட்டு வீட்டு முற்றத்தில் நின்று நாய் ஒன்று குரைக்க ஆரம்பிக்கின்றது. நாயின் குரைப்பொலி கேட்டு வீட்டுக்குள் இருந்து யாரும் வெளியே வருவதாகத் தெரியவில்லை. அவர்கள் இருவரும் தொடர்ந்து தெருவில் நின்று கொண்டிருக்கின்றார்கள். நாய் ஓயாமல் குரைத்துக் கொண்டு நிற்கிறது. இப்ப என்ன செய்யலாம்? தெருவில் நின்று கொண்டிருக்க இயலாது. உள்ளே பார்த்துக் குரல் கொடுக்க வேண்டியதுதான். எப்படி அழைப்பது? ஸேர்' என்று ஆங்கிலத்தில் யாரையும் அழைக்கலாம். ஆனால் 'ஐயா என்பதன் பரிமாணங்கள் பல! யாழ்ப்பாணத்து 'ஐயா சாமானியமானவரல்ல. பாரம்பரியமான ஐயாவைச் சொல்லி அழைப்பதற்குத் தயக்கமாக இருக்கிறது. இப்ப உள்ளே பார்த்துக் குரல் கொடுப்பது யார்? இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துச் சுணங்கி நிற்கின்றார்கள். இனி வேறு வழியில்லை என்ற நிலை. அண்ணா குரல் கொடுக்கின்றார். "ஐயா. ஐயா. ஐயா.” ஒர் அசுகையுமில்லை. சற்றுப் பலமாக மீண்டும் குரல் கொடுக்கின்றார். நாய் ஆதாளி போடுகிறது. அங்கு இங்கும் பாய்ந்து ஓடுகிறது. என்ன செய்வது! காரியமாக வேண்டுமே. "வா. உள்ளே போவம்” அண்ணா சங்கடப்படலையைப் பிடித்து மெல்ல இழுக்கின்றார்.

Page 101
190 தெணியான்
"ஆரது.? அங்கே. வெளியிலேய நில்லுங்கோ வாறன்!” வீட்டுக் கதவைத் திறந்த வண்ணம் மிடுக்கான அவர் குரல் உள்ளே இருந்து ஒலிக்கிறது. “டேய் போ உள்ளுக்கு!” நாயை அதட்டுகின்றார். அது வாலை மடக்கிக் கொண்டு திறந்து கிடக்கும் கதவுக் கூடாக வீட்டுக் குள்ளே ஓடுகிறது. அவர் விறுவிறுவென்று நடந்து வந்து சங்கடப் படலையை இழுத்துத் திறந்து கொண்டு தெருவுக்கு வருகின்றார். அவர் அரையில் கறுத்த கரையிட்ட நான்கு முழ வேட்டி, தோள் மீது பச்சை வண்ணக் கைத்தறிச் சால்வை, நெற்றியில் அழுந்திப் பூசிய திருநீறு என்பவற்றோடு முகத்தில் விழுந்த சுருக்கங்களுமாய்த் தோன்றுகின்றார்.
தெரு ஓரத்தில் இருவரும் நின்று கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் இருவரையும் விழிகளை அகலத் திறந்து அதிசயமாக அவர் பார்க்கின்றார். கைமுட்டச் சட்டை, கால்முட்டக் களிசான், காலில் சப்பாத்து, மடிப்புக் கலையாத உடுப்பு, ஒழுங்காக வாரிவிடப்பட்ட கேசம். படித்தவர்கள், பதவிகளில் இருப்பவர்கள், பணவசதி படைத்தவர் கள், பெரிய குடும்பத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டுமென முதல் பார்வையில் அவர் தீர்மானித்து விடுகின்றார். அவர்களை இப்படித் தெருவில் நிறுத்தி இருக்கக் கூடாதென அவர் உள்ளம் குறுகுறுக்கிறது. ஆனாலும் ஆரென்று அறியாமல்.’ என எண்ணிக்கொண்டு கண்களைக் கூசி, உதட்டைப் பிதுக்கி, நெற்றியைச் சுருக்கி, மேலும் கீழும் பார்த்து இருவரையும் நோட்டமிட்ட வண்ணம் அவர்கள் இருவரையும் படலைக்கு வெளியே தெருவில் நிறுத்தி வைத்துப் பேசுவது தவறாக இருக்குமோ? என ஒருகணம் மனம் விசனப்படுகிறது. இப்ப என்ன வந்துவிட்டது? பிறகு உள்ளே அழைத்துக் கொண்டு போகலாம் என மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டு "தம்பியவை நீங்கள் ஆரைத் தேடுகிறியள்?”
“உங்களைத்தான் தேடி வந்தனாங்கள்”
“என்னையோ?” அவருக்கு அதிசயமாக இருக்கிறது. தெளிவாக ஒன்றும் விளங்காமல் அந்தரப்படுகின்றார். “தம்பியவை எங்கே இருக்கிற னிங்கள்?” மிக மரியாதையாக அவர்களை நெருங்கி வந்து நின்று கேட்கின்றார்.
"இந்த ஊரிலே தான்”
"இநத ஊரிலேயோ..? புத்தூரிலேயோ. இதென்ன எனக்குத் தெரியாதா..?” அவர் தன்னை மறந்து அதிசயத்தில் வாயைத் திறந்து கொண்டு நிற்கிறார்.
"நான் முந்தி விதானையாராக இருந்தனான்"
“எங்கே?”
"இந்தப் பகுதிக்கு”
“எனக்கு ஒண்டுமாத் தெரியேல்லைத் தம்பி வரவர மறதி கூடிப் போச்சு” அவர் மேலும் குறுகிப் போகிறார்.

ஒடுக்கப்பட்டவர்கள் 191
“சின்னட்டியின்ரை” "அட. அட. இவன் கள்ளுக்காற சின்னட்டியின்ரை மோனே நீ?” சட்டென்று அவர் தலை நிமிருகின்றார். இதைச் சொல்லுறதுக்கு ஏன் சுத்தி வளைக்கிறாய்?நீ எங்கே விதானையாக இருந்தனி? கிராம சேவகர் வேலை பாத்தனி சேவகர் வேறை, விதானை எண்டது வேறை. என்ரை பேரன், தாய்மாமன் எல்லாரும் விதானைமார். தகப்பன் வழிப் பேரன் மணியகாரன். அதெல்லாம் உங்களுக்குத் தெரியாமல் இருக்காது. அது சரி. உன்னைக் கன காலம் கண்ணில் காணயில்லை?”
அவர் பேசப் பேச அவர்கள் இருவர் முகமும் பட்டென்று கறுத்துச் சோர்ந்து போகிறது. அண்ணா தன் மனதில் உண்டான உளைச்சலை வெளியே காட்டிக் கொள்ளாமல் “சுவிசுக்குப் போயிருந்தனான்” என மெல்லிடுகிறார்.
“இதார்? உங்கடை ஆக்கள் மாதிரித் தெரியயில்லை “என்ரை தம்பி” "தம்பியோ..? இவன் பொடியனை நான் ஒரு நாளும் காணயில்லை. என்ன செய்யிறான்.?”
"பாங்க் மனேஜர் வடமராட்சியில் கலியாணம் செய்திருக்கிறார்.” “உதென்ன உத்தியோகம்? நானுந்தான் உத்தியோக் பார்த்தனான். அதை உதறி எறிஞ்சு போட்டு வந்தனான். அது போகட்டும். இப்ப என்னத்துக்கு வந்தனிங்கள்?"
"எங்கடை வீட்டோடை சேர்ந்த நிலம்.” “எடேய் தம்பியவை, நான் வித்துத் தின்ற சாதியில்லைக் கண்டியளோ”
"நாங்கள் குடியிருக்கிறதுக்கு வசதியில்லை.” "ஒமோம். நீங்களும் இப்ப வசதி பாத்திருக்கத் துடங்கி விட்டியள். அதிலே எங்களுக்கு அஞ்சு பரப்பு நிலம். கொப்பன் பாவமெண்டு ஒரு பரப்பு நிலம் மலிவான விலைக்கு என்ரை தகப்பன் குடுத்தவர். அது போகட்டும், நீங்களும் வந்து நிற்கிறியள். நான் இப்ப என்ன செய்ய வேணும்?”
"வீட்டோடை சேர்ந்த நாலு பரப்பையும் தந்தால்.” "அதுதான் சரி. நீங்கள் எங்கடை பிள்ளையஸ். அந்தக் காணியை உங்களுக்குத்தான் தர வேணும். வேறை பக்கத்தாலேயும் கேள்வி வந்தது. குடி இருக்கிற உங்களை ஒரு சொல்லுக் கேட்க வேணுமெண்டு தான் நினைச்சிருந்தனான். அதுசரி விலை தலை என்ன மாதிரி?”
"நீங்கள் ஒருமாதிரிப் பாத்துச் செய்யுங்கோ!” “ஊர் உலகத்திலே போற விலையைத் தந்தால் சரி” “உள்ளூருக்கே நாப்பது நாப்பத்தைஞ்சுசெண்டு போகுது”
''

Page 102
192 தெணியான்
"உதென்ன சூடை விலை பேசுகிறாய்?”
"நாங்கள் ஒரு ஐம்பது தரலாம்” “ஒ. அப்பிடியா?” "ஒம் ஐயா’ "ஒரு பரப்பு மூன்று லெட்சப்படி எண்டால் தருவன். வாங்கினால் நாலு பரப்பும் வாங்க வேணும். வேறை கதைக்கு இடமில்லை" அவர் அறுதியாகச் சொல்லி முடிக்கின்றார்.
அண்ணாவும் அவரும் பேசப் பேச அவன் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு நிற்கின்றான். அவன் மெளனமாக அப்படி நின்று கொண்டிருப்பது அவர் மனதில் எரிச்சலை மூட்டுகிறது. "நீ என்ன பேசாமல் நிற்கிறாய்?" அவனைப் பார்த்து அலட்சியமாக முகத்துக்கு நேரே கேட்கின்றார். அவரை விழித்துப் பார்த்த வண்ணம் அவன் வாய் திறக்காமல் நிற்கின்றான்.
அவன் வீட்டில் இருந்து புறப்பட்ட சமயம் அவன் மனதில் தோன்றிய அந்த அதிருப்தி இப்பொழுது பெருகிக் கொண்டிருக்கிறது. அவன் வாய் திறந்து ஏறுமாறாக எதனையாவது சொல்லி விடக்கூடா தென்னும் எச்சரிக்கை உணர்வு மனதில் எழ, "நான் மூத்தவன் தானே கதைக்க வேணும்" என அண்ணா முந்திக் கொள்ளுகின்றார்.
"சரி. சரி. வீட்டுக்குப் போய் யோசிச்சுக் கொண்டு வாருங்கோ! எல்லாம் பேசலாம்” முடிவாக அவர் சொல்லிக் கொண்டு அந்தச் சங்கடப் படலையைப் பிடித்திழுத்து உள்ளே புகப் போனவர், திடீரென்று அது நினைவுக்கு வர, படலையைக் கைவிட்டு விட்டு, மீண்டும் அவர்கள் பக்கம் திரும்பி, "நீங்கள் வந்து படலையிலே நிண்டு கூப்பிடுங்கோ, நான் வருவன்’ எனக் கண்டிப்பாகச் சொல்லி வைத்து விட்டு அந்தப் படலையைப் பலவந்தமாகப் பிடித்து இழுத்துத் திறந்துகொண்டு உள்ளே போகின்றார்.
அவர்கள் இருவர் பாதங்களுக்குக் கீழுள்ள நிலம் மெல்ல மெல்ல நழுவிப் போய்க் கொண்டிருப்பது போல அவர்கள் உணருகின்றார்கள்.
- மல்லிகை ஆண்டுமலர் ஜனவரி 2006


Page 103


Page 104
ଶ୍ନ',
தது, ! 55 TLLL
களையு L60060TUL, நேர் எடுத்து billi(g)
சமூக நிலையிலும் பண்பாட்டு உறைந்து ஒடுங்கி, னால்
உள்ளுறை பொருளாகி நிற்கு நெருடல்களை தமது புனைகதை தெணியானுடைய கையாளுகை அக்கினி போன்ற சுவாலையும் ெ
இன்றைய நவீன திறனாய்வு வ ಙ್ಗತ: அழகியல் பழ வாரால் பேசப்பட்டு வந்த
பார்வையையும் தகர்த்தெறிந்து கட்டுமானங்களின் மேலோட்டங்
தெணியான்.
பிரதானமான சமூக ஊடாட்டங்க உணர்வு மிக்க குரூரமான தனி மிடுதலும், கொடுமை மிக்க சமூ புலக்காட்சிகளால் அங்கீகரித்தலு பேசப்பட்ட வேளை - ஆழமா கலையாற்றலுடனும் நின்று நிதா மேற்கொண்டவர் அன்புக்குரிய ே
அவரிடத்துப் பொதிந்துள்ள க மனிதாபிமானமும், நீடித்து ே நினைவுப் பதிவுகள்
பேராசிரியர் சபா ஜெயராசா
ISBN 978-955-9396-43-7
 

நவீன தமிழ் இலக்கிய வரலாறு ான் இன்றிப் பேசப்பட முடியா பிற எழுத்தாளர்களால் இனங் படாத காட்சிகளையும் தரிசனங் ம், பேசாப் பொருள்களையும், ாத சிதைவுகளையும் நிதானமாக ன்று, சத்திய தரிசனத்துடன் க் காட்டுபவர் அன்புக்கும் முரிய தெணியான்.
நிலையில் ஆழ்ந்து மெளனமாகி, பெரும் பெருக்க விசையுடன் தம் வடமராட்சிப் பண்பாட்டின் வீச்சுக்குள் அடக்கிய எழுத்தாளர் அருவி போன்ற தொடர்ச்சியும், காண்டது.
ளர்ச்சியில் விதந்து பேசப்படுவது ற்றிய கருத்துக்களாகும். ஒடுக்கு உள்ளடக்கங்களையும், கலைப் து போலி நிலை அழகியற் களை எடுத்துக் காட்டி வருபவர்
ளைப் புறக்கணித்தலும், போட்டி மனித உணர்ச்சிகளுக்குத் தூய கத் தோற்றப்பாடுகளை குறுகிய ம், அழகென்றும் நியதியென்றும் கவும், நிதானமாகவும், அயராத னித்துக் கலைப் படைப்புக்களை தெணியான ஆவார்.
லையுள்ளமும், நிறைந்து சிறந்த வர் பதித்த நட்பும், அழியாத
& pbd S |
1 1002ዐ0000 മ
oDUKKAPPADDAWARGA.
9.'s Si2C) ()