கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஒளவை அமுது: அமரர் சற்குணதேவி செல்லத்துரை நினைவு வெளியீடு 2011

Page 1

(ജൂല്പും ബ്ലെ)
ஹீலg உஇர
அமரர் சற்குணதேவி செல்லத்துரை நினைவு வெளியீடு
04。04。20重1

Page 2


Page 3

83 அமரர் சற்குணதேவி செல்லத்துரை நினைவு வெளியீடு
0.04.2011.

Page 4
நூல் விபரம்
நூல்
ஒளவை அமுது
6) јб0)5
இலக்கியம்
பதிப்பாசிரியர் செல்லத்துரை சுதர்சன்
பக்கம்
36--
வெளியீடு அமரர் சற்குணதேவி செல்லத்துரை நினைவு வெளியீடு
முகவரி
கிரிச்சியால், துவாளி வீதி, இமையாணன் மேற்கு, 2-GÚLiliig.


Page 5

6.
யாழ்ப்பாணத்து வடமராட்சிப் பகுதி
கிரிக்கியால், இமையானன் மேற்கு உடுப்பிட்டியைத் தேர்ந்தவரும் உயர் சைவ மரபினருமான
尊計 “BilpЈД.

Page 6

அமரர் திருமதி. சற்குணதேவி செல்லத்துரை - வாழ்க்கைக் குறிப்பு -
“தாய் எங்கேயிருக்கிறாளோ அந்த இடம் சொர்க்கம். குழந்தைகளின் இதயமும் வாயும் உச்சரிக்கும் தெய்வத்தின் பெயர் தாய்”
- மகாகவி இரவீந்திரநாத் தாகூர்.
சூரியன் இப் பூமியின் தாய். ஒளியும் வெப்பமும் தருவது அது. பூமியை உயிரூட்டுவதும் அதுவே. பூக்களின் முகம் மலர்த்தி, கடலலைகளால் பூமியைத் தாலாட்டி, வெள்ளிய அருவிகளில் மெல்லிய ஓசை பரப்பி, பறவைகளின் சுதந்திரப் பண் பாடி, இருளை ஒட்டும் இனிய தாய் சூரியனே. எனினும் சூரியனை விடவும் மானுடத்தாய் பன்மடங்கு மகத்துவம் உடையவள். உயர்ந்தவள். உன்னதமானவள். நிகரற்றவள். இறைவனைத் தாயுடன் ஒப்பிட்டுக் கூறுவதையே ஞானக் கவிஞர்கள் பலரும் விரும்பினர். “தாயேயாகி வளர்த்தனை போற்றி” என்று திருவாசகம் தந்த மணிவாசகர் சிவனைக் குறிக்கிறார். எந்த உயிரும் அழைக்காமலே வந்து அன்பு செய்யும் விந்தை தந்தைக்கும் ஒரு படி மேலாகத் தாய்க்கே உரியது. முற்றுந் துறந்த துறவிகளும் கூடத் தாயன்பைத் துறக்கத் துணியார். பட்டினத்தடிகளின் வாழ்வு இதற்கு ஒரு பதச்சோறு. தாயின் பெருமையை எப்படி எழுதலாம்? கோடுகள் சேர்ந்து எழுத்து. எழுத்துக்கள் சேர்ந்து சொல். சொற்கள் சேர்ந்து தொடர், தொடர்கள் சேர்ந்து புத்தகம். எழுத்தில் இல்லை, சொல்லில் இல்லை, தொடரில் இல்லை. புத்தகத்தில் இல்லை தாயின் பெருமை. அது சொற்பதம் கடந்ததொரு தனிச்சோதி. முதலும் முடிவுமற்றுத் தொடரும் பெருமை உடைய பொருள் பொதிந்த சொல்லைத் தமிழ்மொழி தாய்க்கு மட்டுமே வழங்கிக் கெளரவித்துள்ளது. எனினும் அச் சொல்லின் ஆழமும் அகலமும் சிந்தையும் மொழியும் செல்லா நிலையுடையன. இறைவனைக்கூட உவமை காட்டிப் பேசும் தமிழ் இலக்கியமரபு தாய்க்கு உவமைகூறத் தயங்கிப் பின்வாங்குகிறது. முதுபெருங் குரவருள் முதற்குரவராம் தாய். எமக்கு மூச்சுத் தந்து எம் மூச்சாகி நின்ற முதல் தெய்வம்.
அமரர் திருமதிசற்குணதேவி செல்லத்துரை அவர்களும் இத் தாய்மையின் உயர் பண்பிற்கு உரித்துடையவர்தாம். தமிழ் கூறும்
ஒளவை அமுதம் - அமரர் சற்குணதேவி செல்லத்துரை நினைவு வெளியீடு (1)

Page 7
நல்லுலகத்தின் வரலாற்றில் பதிவாகியது “உடுப்பிட்டி’ எனும் ஊர். அதற்கு காரணம் ‘உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர்” என்னும் சான்றோனின் புலமை திறனே.
“உத்தமர்கள் வாழும்ஊர் ஓயா வுழைப்புளவுர் முத்தமிழு மோங்கு முதன்மையூர் - சக்தியூர் வீறுதிறல் விஞ்ஞான மேதையரைத் தந்தவூர் கூறுமுடுப்பிட்டியூர் கொல்”
என்று புலவர்மணி கா. நீலகண்டன் உடுப்பிட்டியின் பெருமையை வெண்பாவில் சொல்லோவியமாக்கியுள்ளார். இத்தகைய சிறப்புமிகு ஊே அமரர் சற்குணதேவி அவதரித்த ஊர்.
கடலலை தாலாட்டும் இலங்கையின் மூளையாக விளங்குவது யாழ்ப்பாணம். விருந்தோம்பலும் அறிவோம்பலும் ஒருங்கே நடைபெறுவது வீரம் விளைந்த மண்ணுமாக மிளிர்வதும் வடமராட்சி. வட மறவர் ஆட்சியே வடமராட்சி. மரபுத் தமிழ்க் கல்வியும் கலைகளும் நவீன முயற்சிகளு செழுமை பெற்ற வடமராட்சியின் ஊர்களில் ஒன்றே உடுப்பிட்டி கற்றோ நிறைந்த ஊர் மட்டுமல்லாது ‘ஆடுதல், பாடுதல், கவி ஆதி இனை தொழில்களும் உழவுடன் பல உன்னத தொழில்களும் நிறைந்த ஊ உடுப்பிட்டி இவ் ஊரில் இமையாணன் மேற்கில் உயர்சைவ மரபி: உதித்தவரே அமரர் சற்குணதேவி. செல்லையா பூமணி அவர்களில் புதல் வியாக 12.03.1944 இல் அவதரித்த சற் குணதேவி சக நற்குணங்களுக்கும் தேவியாக விளங்கி, “பாண்டியன் நீதி சாய்த்து பதியுயி குடித்த ஞான்று, மூண்டெழு ஊழித்தீபோல் மதுரையை எரித்ததேவி தாண்டவம் புரிசிவத்தின் சக்தி” ஆகிய கண்ணகியைத் தன் மன மொ மெய்களால் வழிபட்டுயர்ந்தார்.
தனது கல்வியைப் புகழ்பூத்த யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரியி பெற்றுக்கொண்டார். அன்பால் பண்பால் உறவினரையும் சுற்றத்தாரைய அனைத்து வாழ்ந்த இவர் தன்னுரைச் சேர்ந்தவரும் சுப்பர் சின்னம் தம்பதிகளின் மகனும் உடுப்பிடடி அமெரிக்கன் மிஷன் கல்லூரியி முன்னாள் எழுதுவினைஞருமான செல்லத்துரை என்பவரைத் திருமண செய்து இல்லறத்தை நல்லறமாக்கினார்.
ஒளவை அமுதம் - அமரர் சற்குணதேவி செல்லத்துரை நினைவு வெளியீடு
 

2
"தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்”
என்ற வள்ளுவர் வாய்மொழிக்கொப்ப வாழ்க்கை நடத்தினார். தென்புலத்தார், தெய்வம், விருந்தினர், ஒக்கல், தான் என்ற ஐம்புலத்தாரையும் ஒம்பி ஒழுகினார்.
இல்லற வாழ்வின் நல்லறப் பயனாய் சுதர்சன், கோபிநாத், வசீகரன், ஜினேந்ததாஸ்(இந்திரன்) ஆகிய மைந்தர்கள் நால்வரையும் மகிழ்வுடன் பெற்றார். அன்பால் அறிவால் மைந்தரை உயர்த்தி மகிழ்வும் கண்டார். தர்சினி, நவீனா, துஷிதா ஆகிய மருமக்கள் மூவருடன் அன்புடன் பழகி நன்னெறிகாட்டினார். ஷர்மிலன், ப்ரீத்தி, நிலக்ஷன், விசாலி, கிருஷானி, அபிஷானி ஆகிய பேரர்களின் மழலைச் சொல்லில் மகிழ்ந்து வாழ்வின் நிறைவாம் ஆனந்தம் கொண்டார்.
இல்லற வாழ்வில் இனிது வாழ்ந்தாலும் அவர்தம் இனிய உடன்பிறப்புக்களை மறக்கவில்லை. சேனாதிராஜா, சற்குணராஜா, துரைராஜா, செல்வமணி, கமலாதேவி, ரஞ்சிதமணி ஆகியோருக்கு பாசத்தைப் பொழிந்து அன்பின் நிழலில் அரவணைத்தார். அமரர்களான சதாசிவம், செல்வராஜா ஆகியோரின் ஆத்மசாந்திக்கு ஆவன செய்தார்.
தன் வாழ்நாளில் துவாளி வீரகத்திப் பிள்ளையாரையும், துவாளிக் கண்ணகை அம்மனையும், செல்வச் சந்நிதிக் கந்தனையும், பூரீ வல்லிபுர ஆழ்வாரையும், பல்லசிட்டி ஞானவைரவரையும் மறவாத சிந்தையராக விளங்கினார். ஆலயத் தொண்டுக்கு ஆவன செய்தார். ஏழைகளுக்கு ஏற்றன செய்தார்.
காலம் அவரைக் கையில் எடுத்தது. வாழ்வில் நிறைவாய் வாழ்ந்த அவரை நோய் என்ற பெயரில் காலதேவன் அணுகினான். “மூலம் வந்து உதவிய மூவர்க்கு ஆயினும் காலம் என்று ஒரு வலை கடக்கலாகுமோ?” என்றான் கம்பன். சிவன், பிரம்மா, விஷ்ணு இவர்களும் காலத்தின் நியதியை மீறமுடியாதாயின் மனிதர் எம் மாத்திரம்? அனைவரும் காலத்தின் வாய்க்குக் கவளமாகத்தான் வேண்டும். 05.03.2011 அன்று காலை 3.15 மணியளவில் சற்குணதேவி அமரநிலை அடைந்தார். அமரர் சற்குணதேவி ஆனார். அமரர்
ஒளவை அமுதம் - அமரர் சற்குணதேவி செல்லத்துரை நினைவு வெளியீடு (3)

Page 8
என்பதன் பொருள் இறவா நில்ை உடையவர்’ என்பதாகும். இறந்தாலு அவரது சந்ததியும் சுற்றமும் என்றும் நினைக்கும் இறவாப் புகழ் கொண்டா அமரர் சற்குணதேவி. கடோ உபநிடதம் இறந்தவரை “நெருப்பு வீட்டில் நுழைந்தவர்’ எனப் பெருழைப்படுத்துகிறது. -
“இன்றுளார் நாளை மாழ்வார் புகழுக்கும் இறுதி உண்டோ’
என்ற கம்பகாவிய அடிகளை நினைந்து அமரரின் நிலையா6 புகழ் நின்று மென்மேலும் நிலைக்கப் பிரார்த்திப்பதோடு சமூக முன்னேற்ற பணிகளில் ஈடுபடவும் அமரரின் ஆசியை வேண்டிநிற்போம்.
எம் அன்னை பெயரில் ஒளவை அமுது என்ற நூலை எமக்கா ஆக்கித்தந்த தமிழ் ஆசிரியரும் குடும்ப நண்பருமான திரு.செ.சுதர்ச6 அவர்களுக்கும், எமது அன்னையின் மரணச் செய்தி கேட்டதிலிருந்து இற்றைவரை எமக்குப் பலவழிகளிலும் உதவி வரும் அனைவருக்கு எமது மேலான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி,
மக்கள், மருமக்கள் பேரப்பிள்ளைகள்
ஒளவை அமுதம் - அமரர் சற்குணதேவி செல்லத்துரை நினைவு வெளியீடு (
 

ஆத்திசூடி கொன்றை வேந்தன் (p60(Uplb
ரீலறி ஆறுமுகநாவலர் உரையும்
பதிப்பாசிரியர்
செல்லத்துரை சுதர்சன்

Page 9
“ஒளவை அமுது”
அறிற்தினும் இனிய சொற்கிழவியின் சொற்கள் பற்றிச் சில சொற்கள்.
'கிழவி' என்பதன் பொருள் ‘உரிமை உடையவள்’ என்பதாகு அனுபவ முதிர்ச்சியும் அறிவு முதிர்ச்சியும் உடைய பெண்பாற் பெய கிழவி தம் அனுபவத்தாலும் அறிவாலும் அறத்தினைச் சொல்லவும், சொல் ஆற்றுப்படுத்தவும் இயல்பாகவே காலம் அவளுக்கு உரிமைை வழங்கியிருக்கிறது. இவ் உரிமையைக் கையில் எடுத்துக்கொண்டு அறத்ை அன்பு கலந்த கட்டளையாக நெஞ்சைத் தொடும் வகையில் சொல்லி தமிழ்க் கிழவியே ஒளவை. தமிழுக்குச் சிறப்பாகவும் தமிழர் எல்லோருக்கு பொதுவாகவும் இருக்கும் பாட்டி ஒளவைப்பாட்டிதான்.
“ஒளவைக் கிழவி நம் கிழவி அமிழ்தின் இனிய சொற்கிழவி செவ்வை நெறிகள் பற்பலவும் தெரியக் காட்டும் தமிழ்க்கிழவி'
என்று சிறுவர்கள் தாம் நேரிற் காணாத ஒளவையை அவர் நூலினு கண்டு இன்புறுவர். தமிழ் மூதாட்டி ஒளவை தமிழுக்கு வழங்கிய நன்கொன ஆத்திசூடி, கொன்றைவேந்தன், வாக்குண்டாம், நல்வழி என விரிந்து செல்லு நூலின் எண்ணிக்கை மட்டுமல்ல நூற்பொருளும் விரிந்து செல்லும்,
இனியதையும், இன்னாததையும் விதிவகுத்து எல்லாக் காலத்திலு பெருகிக் கொண்டிருக்கும் தனது தமிழ்ப் பேரர்களுக்குச் சொல்லிவைத் இப் பாட்டியின் இரு நூல்களாம் ஆத்திசூடி, கொன்றைவேந்தன் ஆகியனே “ஒளவை அமுது” எனும் பெயரில் இங்கு நூலுருப் பெறுகிறது.
'அமுது’ என்பது இறவா நிலையைத் தருவது. பிறவிப் பெருநே நீக்குவது. நோய் நீக்குவது மருந்து என்றால் 'ஒளவை மருந்து' என் அமைத்திருக்கலாமே என்று உங்களுக்குள் வினா எழுகின்றதல்லவி சங்கமருவிய காலத்தில் அறக் கருத்துக்களைக் கூற ஏலாதி, சிறுபஞ்சமூ6 முதலிய மருந்துகளின் பெயர்களில் நூல்களே அமைந்திருந்த
ஒளவை அமுதம் - அமரர் சற்குணதேவி செல்லத்துரை நினைவு வெளியீடு
 

அப்படியாயின் மருந்து என்று கூறாததற்குக் காரணம்? காரணம் வேறொன்றுமில்லை. மருந்து கசக்கும் என்று பேரர்கள் உண்ணார் என்பதால் 'அமுது என்று பெயர் வைத்தோம். பாட்டி பண்ணிய இவ்விரு நூல்களும் அமுது. பேரர்களுக்குத் தமிழ்ச் சொல்லில் அற அமுது படைக்கிறாள் ஒளவைப்பாட்டி
ஒளவைப்பாட்டியின் இவ் அமுத மொழிகள் பாடசாலைகளில் ஆரம்பக்கல்வி பயிலும் தமிழ் மாணவருக்கு முதலில் அறிமுகமாகும் மொழிகள். பாடசாலை செல்வதற்கு முன்பே வீட்டில் உள்ள பாட்டிமார்கள் இவ் அமுத மொழிகளைப் பாடிப்பாடித் தம் பேரர்களுக்கு ஊட்டிவிடுகின்றனர். செவியினை வாயாகவும் மனத்தினை இரைப்பையாகவும் கொண்டு அந்த அமுதத்தைப் பேரர் பெறுகின்றனர். பெரும்பேறு அடைகின்றனர்.
"ஆத்திசூடி’ என்பது சிவனது நாமங்களுன் ஒன்று. திருவாத்திப் பூமாலையைத் தரிப்பதால் இப் பெயரைப் பாட்டி சிவனுக்குச் சூட்டி அப் பெயரில் 108 சூத்திரங்களில் அற அமுது சமைத்துள்ளாள்.
"கொன்றை வேந்தன்' என்பது கொன்றைப் பூமாலையைச் சூடியதால் சிவனுக்குப் பாட்டி கொடுத்த மற்றொரு நாமம். இந்நூல் 91 சூத்திரங்களைக் கொண்டது.
இவ்விரு நூல்களும் பெரும்பாலும் அரிச்சுவடி முறையில் பேரர்கள் விரும்பிப் படிக்கும் முறையில் எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு சூத்திரத்தின் முதல் எழுத்தையும் தமிழ் அரிச்சுவடியின் ஒழுங்கினை அடிப்படையாகக் கொண்டே பாட்டி அமைத்திருப்பது நினைந்து நினைந்து இன்புறத்தக்கது. இதனைச் சிறுவர்கள் கற்றால் சொல்வளம் பெருகும். பொருள் வளம் மிகும். அற ஒழுக்கம் வாய்க்கும். இறைஞானம் கைகூடும்.
ஒளவையின் இவ் அமுத நூல்களுக்கு எழுதிய உரைகளுள் உயர்வுச் சிறப்பு மிக்கது யாழ்ப்பாணத்து நல்லூர் பூரீலழரீ ஆறுமுகநாவலர்தம் உரையே. திருத்தியும் புதுக்கியும் அவர் செய்த உரை கற்றோர் விரும்பும் பெற்றியது. புதுமையானது. எனவே அவர்தம் உரையுடன் கூடிய ஆத்திசூடியும் கொன்றை வேந்தனுமே உங்கள் கரங்களில் இப்போது ஒளவை அமுதாகி நிற்கிறது.
ஒளவை அமுதம் - அமரர் சற்குணதேவி செல்லத்துரை நினைவு வெளியீடு (7)

Page 10
சிந்தை ஒருமித்து ஆத்திசூடியையும் கொன்றைவேந்தனையும் கற்றால் புகழைச் சூடி என்றும் வேந்தனாகலாம். இது உறுதி.
இந் நூல் ஒவ்வொரு இல்லங்களிலும் இருக்கவேண்டிய முதுசம் “ஒளவைப் பிராட்டியின் நூல்களை இழக்க ஒருபோதும் சம்மதிக்கமாட்டோம் அது மீண்டும் சமைத்துக் கொள்ள முடியாத தனிப்பெருஞ் செல்வம் என்ற மகாகவி பாரதியாரின் கூற்று இங்கு நோக்கத்தக்கது.
திரு.செ.வசீகரன், பாடசாலைக் காலத்திலிருந்தே எனது நண்பர் வகுப்பறைத் தோழர்களில் ஒருவர். அவர் தனது தாயார் அமரர் சற்குணதேவி செல்லத்துரை அவர்களது நினைவாகச் சமூகப் பயன்மிக்க வெளியீ( ஒன்றை ஆக்கி வெளியிடவேண்டும் என்று விரும்பினார். அவரது உயர்ந்த நோக்கம் கல்வி உலகிற்குப் பயன்தரும் நல்லதொரு நூலாக ஆகியுள்ளது அவருக்கும் நூலை ஆக்குவதில் உதவிய அனைவருக்கும் நன்றிகள்.
வாழ்க தமிழ்!
- செல்லத்துரை சுதர்சன்
பேராதனை
ஒளவை அமுதம் - அமரர் சற்குணதேவி செல்லத்துரை நினைவு வெளியீடு (

8)
ஒளவையார் அருளிய
ஆத்திசூடி
மூலமும்
பூரீலழரீ ஆறுமுகநாவலர் உரையும்

Page 11
ஒளவையார் அருளிச் செய்த ஆத்திசூடி
மூலமும் உரையும்
காப்பு ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.
பதவுரை : ஆத்தி - திருவாத்திப் பூமாலையை, சூடி - தரிப்பவராக சிவபெருமான், அமர்ந்த - விரும்பிய, தேவனை - பிள்ளையாக விநாயகக் கடவுளை, ஏத்தி ஏத்தி - துதித்துத் துதித்து, தொழுவே - வணங்குவோம், யாம் - நாங்கள் என்றவாறு.
தேவன் - பிள்ளை, ஏ - ஈற்றிசை,
சூத்திரம்
1. அறஞ் செய விரும்பு. பதவுரை : அறம் - தருமத்தை, செய - செய்வதற்கு, விரும்பு -
ஆசைகொள்ளு.
2. ஆறுவது சினம். பதவுரை ஆறுவது - (உன்னுள்ளே) தணிய வேண்டுவது, சினம்
கோபமே ஆம்.
3. இயல்வது கரவேல்.
பதவுரை : இயல்வது - (கொடுப்பதற்கு) இசைவதை, கரவேல்
வறுமையினாலே இரப்பவர்களுக்கு) ஒளியாதே.
4. ஈவது விலக்கேல்.
பதவுரை ஈவது - (தருமத்தைக் குறித்து ஒருவருக்கு ஒரு
கொடுப்பதை, விலக்கேல் - நீ தடுக்காதே.
5. உடையது விளம்பேல்.
பதவுரை உடையது - (உனக்கு) உள்ள பொருளை, விளம்பேல் -
பிறர் அறியும்படி) சொல்லாதே.
ஒளவை அமுதம் - அமரர் சற்குணதேவி செல்லத்துரை நினைவு வெளியீடு

ய
TLD
(நீ
வர்)
(நீர்
10)
6. ஊக்கமது கைவிடேல். பதவுரை ஊக்கமது - (செய்தொழிலில்) மனஞ் சோராமையை, கைவிடேல்
- நீ கைவிடாதே.
7. எண் எழுத்து இகழேல்.
பதவுரை : எண் - கணித நூலையும், எழுத்து - இலக்கண நூலையும், இகழேல் - நீ இகழ்ந்து தள்ளாதே. (புகழ்ந்து கல் என்பது கருத்து)
8. ஏற்பது இகழ்ச்சி. பதவுரை ஏற்பது - (ஒருவரிடத்திலே போய்) இரப்பது, இகழ்ச்சி -
பழிப்பாகும்.
9. ஐயம் இட்டு உண்.
பதவுரை : ஐயம் - பிச்சையை, இட்டு - (இரப்பவர்களுக்குக்) கொடுத்து,
உண் - நீயும் உண்ணு.
10. ஒப்புரவு ஒழுகு. பதவுரை ஒப்புரவு - உலக நடையை அறிந்து, ஒழுகு - (நீ அந்த
வழியிலே) நட
11. ஓதுவது ஒழியேல், பதவுரை ஒதுவது - (அறிவு நூல்களை) வாசிப்பதை, ஒழியேல் - (நீ
மரண பரியந்தம்) விடாதே.
12. ஒளவியம் பேசேல். பதவுரை : ஒளவியம் - பொறாமை வார்த்தைகளை, பேசேல் - நீ பேசாதே.
13. அ.கம் சுருக்கேல். பதவுரை : அ.கம் - தானியவிலையை (தானிய அளவை), சுருக்கேல் -
(நீ அதிக இலாபத்துக்காகக்) குறையாதே.
14. கண்டொன்று சொல்லேல். பதவுரை கண்டு - (ஒன்றைக்) கண்டு, ஒன்று - வேறொன்றை, சொல்லேல் (நீ சாஷியாகும் போது) சொல் லாதே. (கண்டபடியே சொல்லென்பது கருத்து)
ஒளவை அமுதம் - அமரர் சற்குணதேவி செல்லத்துரை நினைவு வெளியீடு (11)

Page 12
15. நுப்போல் வளை.
பதவுரை : ங்ப்போல் - ங்கரம் (தான் பிரயோசனமுள்ளதாய் இருந்து த6 வருக் கத் தைத் தழுவுதல்) போல, வளை - ( பிரயோசனமுள்ளவனாய் இருந்து உன் இனத்தைத்) தழுவு.
நுகரமானது அங்ங்னம், இங்ங்னம், உங்ங்ணம் என் சொல்லுக்குக் காரணமாய் வரும். அதன் வருக்கங்களாகிய ந B B நு நு நுெ நுே நுை நொ நோ துெள என்கின்ற பதினொன்று சொல்லுக்குக் காரணமாதல் இல்லை. ஆயினும், ங்கரத்தி: பொருட்டு இவைகளையும் நெடுங்கணக்கிலே வழங்குவார்கள். அ{ போலவே, நீ கல்விச் செல்வங்களினாலே பிறருக்கு உத6 செய்வாயாயின், அவர் உன்னைத் தழுவுவதன்றி உன்பொருட் உன் இனத்தாரையும் தழுவுவர் என்பதாகும்.
16. சனி நீராடு. பதவுரை : சனி - சனிக்கிழமை தோறும், நீர் ஆடு - (எண்ணெ
இட்டுக்கொண்டு) நீரிலே தலை முழுகு. புதன் கிழமையிலும் முழுகலாம்.
17. (65u JLibLJL- 9 -60)J. பதவுரை : ஞயம்பட - (பேசுஞ் சொல்லிலே) இன்பம் விளையும்ப உரை - நீ பேசு. நயம் என்பது ஞயம் எனப் போலியாயிற்று
18. இடம்பட வீடு எடேல். - பதவுரை இடம் - இடமானது, பட - (அளவுக்கு மேற்பட்டு வெறுமையாய் கிடக்கும்படி, வீடு - வீட்டை, எடேல் - (நீ பெரிதாகக்) கட்டாே
19. இணக்கம் அறிந்து இணங்கு.
பதவுரை : இணக்கம் - (சினேகத்துக்கு ஏதுவாகிய) நற்கு 6
- நற்செயல்களை, அறிந்து - தெளிந்து, இணங்கு - (பி
ஒருவனோடு ) சினேகஞ் செய்.
20. தந்தை தாய் பேண்.
பதவுரை தந்தை - (நீ உன்) பிதாவையும், தாய் மாதாவையும், பே
- (எப்போதும் பூசித்துக் ) காப்பாற்று.
ஒளவை அமுதம் - அமரர் சற்குணதேவி செல்லத்துரை நினைவு வெளியீடு (1

9,
Б)
2
21. நன்றி மறவேல். பதவுரை நன்றி - (ஒருவர் உனக்குச் செய்த) உபகாரத்தை, மறவேல்
- (நீ ஒரு போதும்) மறவாதே.
22. பருவத்தே பயிர் செய்.
பதவுரை : பயிர் - பயிர்களை, பருவத்தே - (அது அது விளையும் பக்குவ காலத்திலே, செய் - (வேண்டும் முயற்சியிலே வழுவாமல்) இடு.
பயிருக்கு வேண்டும் முயற்சிகளாவன : உழுதல், எரு இடுதல், களை
பிடுங்குதல், நீர் பாய்ச்சல், காத்தல் என்கின்ற ஐந்தும் ஆம்.
23. மன்று பறித்து உண்ணேல்.
பதவுரை : மன்று - தரும சபையிலே இருந்து கொண்டு, பறித்து - (வழக்குத் தீர்ப்புக்கு வரும் குடிகளுடைய பொருளைக்) கவர்ந்து, உண்ணேல் - நீ சீவனம் பண்ணாதே.
24. இயல்பு அலாதன செயேல். பதவுரை : இயல் பு அலாதன - (தரும நூலுக் குப்)
பொருத்தமல்லாதவைகளை, செயேல் - நீ செய்யாதே.
25. அரவம் ஆட்டேல். பதவுரை : அரவம் - (நஞ்சுடைய) பாம்புகளை, ஆட்டேல் - (நீ பிடித்து)
ஆட்டாதே.
26. இலவம் பஞ்சில் துயில். பதவுரை : இலவம் பஞ்சில் - இலவம் பஞ்சு மெத்தையிலே, துயில் - நீ
நித்திரை செய்.
27. வஞ்சகம் பேசேல். பதவுரை வஞ்சகம் - கபட வார்த்தைகளை, பேசேல் - நீ பேசாதே.
28. அழகு அலாதன செயேல். பதவுரை : அழகு அலாதன - (நீ துன்பப்பட வந்த காலத்தும்) இழிவுள்ள
செயல்களை, செயேல் - செய்யாதே.
29. இளமையிற் கல்.
பதவுரை : இளமையில் - இளமைப் பிராயத்திலே, கல் - (நீ வித்தையைக்)
கற்றுக்கொள்.
ஒளவை அமுதம் - அமரர் சற்குணதேவி செல்லத்துரை நினைவு வெளியீடு (13)

Page 13
30. அறனை மறவேல். பதவுரை : அறனை - தருமத்தை, மறவேல் - (நீ ஒரு போதும்) மறவாே
31. அனந்தல் ஆடேல். பதவுரை : அனந்தல் - நித்திரையை, ஆடேல் - (நீ அதிகமாகக்) செய்யா
32. கடிவது மற.
பதவுரை : கடிவது - (ஒருவரைச்) சினந்து பேசுவதை, மற - நீ மற
விடு.
33. காப்பது விரதம். பதவுரை : காப்பது - (உயிர்களுக்குத் தீங்கு செய்யாமல் அவைகளை
காப்பாற்றுவதே, விரதம் - விரதமாம்.
34. கிழமைப் பட வாழ். பதவுரை : கிழமைப்பட - (உன்னிடத்தில் உள்ள பொருள் பிறருக்கு
உரிமைப்படும்படி, வாழ் - நீ வாழு.
35. கீழ்மை அகற்று. பதவுரை : கீழ்மை - கீழ்மையாகிய குணத்தை, அகற்று - நீ நீக்கு
36. குணமது கைவிடேல். பதவுரை : குணமது - (மேலாகிய) குணத்தை, கைவிடேல் - நீ கைவிடா
37. கூடிப் பிரியேல். பதவுரை : கூடி - (நல்லவரோடு) சிநேகித்து, பிரியேல் - (நீ பின் அவ
விட்டு) நீங்காதே.
38. கெடுப்பது ஒழி. பதவுரை கெடுப்பது - பிறருக்குக் கேடு செய்வதை, ஒழி - நீ வி
விடு.
39. கேள்வி முயல்,
பதவுரை கேள்வி - (கற்றவர் சொல்லும், நூற்பொருளைக்) கேட்பத
முயல் - நீ முயற்சி செய்.
ஒளவை அமுதம் - அமரர் சற்குணதேவி செல்லத்துரை நினைவு வெளியீடு
 

க்)
lb)
தே.
|ரை
ட்டு
ற்கு,
(14)
40. கைவினை கரவேல். பதவுரை கைவினை - (உனக்குத் தெரிந்த) கைத்தொழிலை, கரவேல்
- நீ (சமயத்திலே) ஒளியாதே.
41. கொள்ளை விரும்பேல். பதவுரை கொள்ளை - (பிறருடைய பொருளைக்) கொள்ளையிடுவதற்கு,
விரும்பேல் - நீ ஆசைப்படாதே.
42. கோதாட்டு ஒழி. பதவுரை : கோது - குற்றம் பொருந்திய, ஆட்டு - விளையாட்டை, ஒழி
- நீ நீக்கு.
43. சக்கர நெறி நில்.
பதவுரை சக்கர நெறி - (அரசனுடைய ஆஞ்ஞையாகிய) சக்கரம்
செல்லும் வழியிலே, நில் - (நீ அடங்கி) நில் (அரசனுடைய கட்டளைக்கு அமைந்து நட என்பது கருத்து)
44. சான்றோர் இனத்து இரு. பதவுரை : சான்றோர் - அறிவினாலே நிறைந்தவர்களுடைய, இனத்து -
கூட்டத்திலே, இரு - (நீ எந்நாளும் சேர்ந்து) இரு.
45. சித்திரம் பேசேல். பதவுரை : சித்திரம் - மெய்போலத் தோன்றும் பொய் மொழிகளை,
பேசேல் - நீ பேசாதே.
46. சீர்மை மறவேல். பதவுரை : சீர்மை - புகழுக்கு ஏதுவாகிய குணத்தை, மறவேல் - நீ
மறந்து விடாதே.
47. சுளிக்கச் சொல்லேல். பதவுரை : சுளிக்க - (கேட்பவர்) கோபிக்கும்படியாக சொல்லேல் - (நீ
ஒன்றையும்) பேசாதே.
48. சூது விரும்பேல். பதவுரை : சூது – சூதாடலை, விரும்பேல் - (நீ ஒரு போதும்) விரும்பாதே.
ஒளவை அமுதம் - அமரர் சற்குணதேவி செல்லத்துரை நினைவு வெளியீடு (15)

Page 14
49. செய்வன திருந்தச் செய். பதவுரை செய்வன - செய்யுங் காரியங்களை, திருந்த - செவ்வையா
செய் - நீ செய்.
50. சேரிடம் அறிந்து சேர். பதவுரை : சேர் இடம் - அடையத்தகும் (நன்மையாகிய) இடத்ை
அறிந்து - தெரிந்து, சேர் - நீ அடை
51. சை எனத் திரியேல். பதவுரை : சை என - (பெரியோர் உன்னைச் ) சீ என்று அருவருக்கு
படி, திரியேல் - (நீ துட்டனாய்த்) திரியாதே.
52. சொற்சோர்வு படேல்.
பதவுரை : சொல் - (நீ பிறரோடு பேசும்) சொற்களிலே, சோர்வு படேல் மறதிபடப் பேசாதே. (சொல்ல வேண்டுவதை மறவாமற் செ என்பது கருத்து)
53. சோம்பித் திரியேல். பதவுரை : சோம்பி - (நீ செய்யவேண்டும் முயற்சியைச் செய்யாம
சோம்பல் கொண்டு, திரியேல் - (வீணாகத் திரியாதே)
54. தக்கோன் எனத் திரி. பதவுரை : தக்கோன் என - (உன்னைப் பெரியோர்கள்) யோக்கிய
என்று புகழும் படி, திரி - நீ திரி.
55. தானமது விரும்பு. பதவுரை தானமது - (சற்பாத்திரங்களிலே) தானம் செய்தலை, விரு
- நீ விரும்பு.
56. திருமாலுக்கு அடிமை செய். பதவுரை : திருமாலுக்கு - விஷ்ணுவுக்கு, அடிமை செய் - நீ தொ6
பண்ணு. -
57. தீவினை அகற்று.
பதவுரை : தீவினை - பாவச் செயல்களை, அகற்று - (நீ செய்யாட
நீக்கு.
ஒளவை அமுதம் - அமரர் சற்குணதேவி செல்லத்துரை நினைவு வெளியீடு
 

நம்
ால்
ல்)
Li6ö
ண்டு
(טD6
16)
58. துன்பத்திற்கு இடம் கொடேல். பதவுரை துன்பத்திற்கு - (தொழில் செய்யும் போது ) முயற்சியினாலே வரும் சரீரப் பிரயாசத்தால் ஆகிய துன்பத்திற்கு, இடம்கொடேல் (நீ சிறிதாயினும்) இடங்கொடாதே. (அத் துன்ப்த்தை இன்பமென்று கொண்டு முயற்சியை விடாது செய் என்பது கருத்து)
59. தூக்கி வினை செய். பதவுரை : தூக்கி - (முடிக்கும் உபாயத்தை) ஆராய்ந்து, வினை - ஒரு
தொழிலை, செய் - (நீ அதன் பின்பு) செய்.
60. தெய்வம் இகழேல் பதவுரை : தெய்வம் - கடவுளை, இகழேல் - (நீ மறந்தாயினும்) இகழாதே.
61. தேசத்தோடு ஒத்து வாழ். பதவுரை : தேசத்தோடு - நீ வசிக்கும் தேசத்திலுள்ளவர்களுடனே,
ஒத்து - (பகையில்லாமல்) ஒத்து, வாழ் - வாழு.
62. தையல் சொற் கேளேல். பதவுரை தையல் - (உன்) மனைவியினுடைய, சொல் - சொல்லை,
கேளேல் - நீ கேட்டு நடவாதே.
63. தொன்மை மறவேல். பதவுரை : தொன்மை - பழமையாகிய சிநேகத்தை, மறவேல் - நீ
மறந்து விடாதே.
64. தோற்பன தொடரேல், பதவுரை : தோற்பன - தோல்வியடையக்கூடிய வழக்குகளிலே, தொடரேல்
- நீ சம்பந்தப்படாதே.
65. நன்மை கடைப்பிடி. பதவுரை நன்மை - புண்ணியத்தையே, கடைப்பிடி - (நீ விடாமல்)
உறுதியாகப் பிடி
66. நாடு ஒப்பன செய்.
பதவுரை : நாடு - உன் நாட்டில் உள்ளோர் பலரும், ஒப்பன - ஒத்துக்
கொள்ளத்தக்க நல்ல காரியங்களை, செய் - நீ செய்.
ஒளவை அமுதம் - அமரர் சற்குணதேவி செல்லத்துரை நினைவு வெளியீடு (17)

Page 15
67. நிலையிற் பிரியேல். பதவுரை நிலையில் - (நீ நிற்கின்ற உயர்ந்த) நிலையிலே நின்
பிரியேல் - (ஒருபோதும்) நீங்காதே.
68. நீர் விளையாடேல். பதவுரை : நீர் - (ஆழம் உள்ள) நீரிலே, விளையாடேல் - நீ (நீர்
விளையாடாதே.
69. நுண்மை நுகரேல். பதவுரை : நுண்மை - (நோயைத் தருகிற) சிற்றுண்டிகளை, நுகரே6
நீ உண்ணாதே.
70. நூல் பல கல். பதவுரை : நூல் பல - (அறிவை வளர்க்கிற) நூல்கள் பலவற்றை
கல் - நீ கற்றுக்கொள்.
71. நெற்பயிர் விளை. பதவுரை : நெற்பயிர் - நெல்லுப்பயிரை, விளை - (நீ வேண்டிய முய
செய்து ) விளைவி.
72. நேர்பட ஒழுகு. பதவுரை நேர்பட - (உன் ஒழுக்கம் கோணாமல்) செவ்வைப்பட, ஒ
- நீ நட.
73. நைவினை நணுகேல். பதவுரை : நை - (பிறர்) கெடத்தக்க, வினை - (தி) வினைகள்
நணுகேல் - (நீ ஒரு போதும்) சாராதே.
74. நொய்ய உரையேல். பதவுரை : நொய்ய - (பயன் இல்லாத) அற்ப வார்த்தைகளை, உரை
- (நீ ஒரு போதும்) சொல்லாதே.
75. நோய்க்கு இடங் கொடேல்.
பதவுரை : நோய்க்கு - வியாதிகளுக்கு, இடங்கொடேல் - (அவபத்தி முதலானவைகளைச் செய்து) இடங்கொடாதே.
ஒளவை அமுதம் - அமரர் சற்குணதேவி செல்லத்துரை நினைவு வெளியீடு
 

தி)
பும்,
Աք(35
ÉluJLD
18)
76. பழிப்பன பகரேல்.
பதவுரை பழிப்பன - (அறிவுடையார்களாலே) பழிக்கப்படுவனவாகிய
இழிசொற்களை, பகரேல் - நீ பேசாதே.
இழிசொற்களாவன : பொய், குறளை, கடுஞ்சொல், பயனில்சொல் என்கின்ற
நான்குமாம்.
77. பாம்பொடு பழகேல்.
பதவுரை : பாம்பொடு - (பால் கொடுத்தவருக்கும் விசத்தைக் கொடுக்கிற) பாம்பைப்போல் பழகுபவர்களுடனே, பழகேல் - நீ சகவாசஞ் செய்யாதே.
78. பிழைபடச் சொல்லேல். பதவுரை பிழைபட - வழுக்கள் உண்டாகும்படி, சொல்லேல் - (நீ
ஒன்றையும்) பேசாதே.
79. பீடு பெற நில்.
பதவுரை : பீடு - பெருமையை, பெற - பெறும்படியாக, நில் - (நீ நல்ல
வழியிலே) நில்.
80. புகழ்ந்தாரைப் போற்றி வாழ். பதவுரை : புகழ்ந்தாரை - உன்னைத் துதி செய்து அடுத்தவரை, போற்றி
- (கைவிடாமற்)காப்பாற்றி, வாழ் - நீ வாழு.
81. பூமி திருத்தி உண். பதவுரை : பூமி - உன் விளை நிலத்தை, திருத்தி - சீர்திருத்திப் பயிர்
செய்து, உண் - நீ உண்ணு.
82. பெரியாரைத் துணைக் கொள். பதவுரை : பெரியாரை - (அறிவிலே சிறந்த) பெரியோரை, துணைக்கொள்
- உனக்குத் துணையாகப் பேணிக்கொள்.
83. பேதைமை அகற்று. பதவுரை பேதைமை - (பிறவிக்குக் காரணமாகிய ) அஞ்ஞானத்தை,
அகற்று - (நீ மெய்ஞ்ஞானத்தினாலே) போக்கு.
84. பையலோடு இனங்கேல். பதவுரை : பையலோடு - சிறுபிள்ளையோடு, இணங்கேல் - நீ கூடாதே.
ஒளவை அமுதம் - அமரர் சற்குணதேவி செல்லத்துரை நினைவு வெளியீடு (19)

Page 16
85. பொருள் தனைப் போற்றி வாழ். பதவுரை : பொருள்தனை - திரவியத்தை, போற்றி - (மேன்மேலு
உயரும்படி) காத்து, வாழ் - நீ வாழு.
86. போர்த் தொழில் புரியேல். பதவுரை : போர் - சண்டையாகிய, தொழில் - தொழிலை, புரியேல் -
செய்யாதே.
87. மனம் தடுமாறேல். பதவுரை : மனம் - மனசு, தடுமாறேல் - (யாதொரு விசயத்திலு
கலங்காதே.
88. மாற்றானுக்கு இடங் கொடேல். பதவுரை மாற்றானுக்கு - பகைவனுக்கு, இடங்கொடேல் - (உன்ன
நெருங்கிப் பின் வருத்தும்படியாக நீ ) இடங்கொடாதே.
89. மிகைபடச் சொல்லேல். பதவுரை : மிகைபட - (சொற்கள் சுருங்காமல்) அதிகப்படும்படி, சொல்லே
- நீ சொல்லாதே.
90. மீதூண் விரும்பேல். பதவுரை : மீது ஊண் - அதிக போசனத்துக்கு, விரும்பேல்
ஆசைப்படாதே.
91. முனை முகத்து நில்லேல். பதவுரை : முனை முகத்து - சண்டை முகத்திலே, நில்லேல் -
போய்) நில்லாதே.
92. மூர்க்கரோடு இணங்கேல். பதவுரை : மூர்க்கரோடு - அறிவில்லாதவர்களுடனே, இணங்கேல் -
சிநேகம் பண்ணாதே.
93. மெல்லின் நல்லாள் தோள் சேர். பதவுரை : மெல் - மெல்லிய, இல் - (உன்) மனையாட்சியாகிய, நல்ல - பெண்ணினுடைய, தோள் - தோள்களையே, சேர் - நீ பு இதனாலேயே, பிறர் மனைவியர், பரத்தையர் என்கி இவர்களுடைய தோள்களை ஒருபோதும் புணராதே என் பெறப்படும். - ஒளவை அமுதம் - அமரர் சற்குணதேவி செல்லத்துரை நினைவு வெளியீடு
 

b)
|60||
D6()
நீ
(நீ
lன்ற
(20)
94. மேன்மக்கள் சொற் கேள். பதவுரை : மேன்மக்கள் - மேன்மையாகிய மனிதருடைய, சொல்
சொல்லை, கேள் - நீ கேட்டு நட.
95. மைவிழியார் மனை அகல். பதவுரை : மை விழியார் - மை தீட்டிய கண்களையுடைய வேசிகளது,
மனை - வீட்டை, அகல் - (நீ ஒருபோதும் கிட்டாமல்) அகன்று போ,
96. மொழிவது அறமொழி. பதவுரை : மொழிவது - சொல்லப்படும் பொருளை, அற - (சந்தேகம்)
நீக்கும்படி, மொழி - நீ சொல்லு.
97. மோகத்தை முனி. பதவுரை : மோகத்தை - (நிலையாத பொருள்களின் மேலதாகிய)
ஆசையை, முனி - நீ கோபித்து விலக்கு. 98. வல்லமை பேசேல்.
பதவுரை : வல்லமை - (உன்னுடைய) சாமர்த்தியத்தை, பேசேல் - (நீ
புகழ்ந்து) பேசாதே.
99. வாது முற் கூறேல்.
பதவுரை : வாது - வாதுகளை, முன் - (பெரியோர்) முன்னே, கூறேல் -
நீ பேசாதே.
(வாது - தருக்கம்)
100. வித்தை விரும்பு. பதவுரை : வித்தை - கல்விப்பொருளையே, விரும்பு - நீ விரும்பு.
101. வீடு பெற நில்.
பதவுரை வீடு - மோஷத்தை, பெற - அடையும்படி, நில் - (அதற்குரிய
ஞான வழியிலே) நில்.
102. உத்தமனாய் இரு.
பதவுரை : உத்தமனாய் - (நற் குண நற்செய்கைகளினாலே
எல்லோரினாலும்) மேலானவனாகி, இரு - நீ இரு.
ஒளவை அமுதம் - அமரர் சற்குணதேவி செல்லத்துரை நினைவு வெளியீடு (21)

Page 17
103. ஊருடன் கூடி வாழ். பதவுரை : ஊருடன் - ஊரவர்களுடனே, கூடி - (சுபகன்மங்களிலே)
அளாவி, வாழ் - நீ வாழு.
104. வெட்டெனப் பேசேல். - பதவுரை : வெட்டு என - கத்திவெட்டைப் போல, பேசேல் - நீ (ஒருவரோடும்
கடினமாப்) பேசாதே.
105. வேண்டி வினை செயேல். பதவுரை வேண்டி - (யாதொரு பிரயோசனத்தை) விரும்பி, வினை -
தீவினையை, செயேல் - (நீ ஒருவருக்கும்) செய்யாதே.
106. வைகறைத் துயில் எழு. பதவுரை வைகறை - (நீ தினந்தோறும்) விடியற்காலத்திலே, துயில் -
நித்திரையை விட்டு, எழு - எழுந்திரு.
107. ஒன்னாரைத் தேறேல்.
பதவுரை : ஒன்னாரை - பகைவர்களை, தேறேல் - (நீ ஒருபோதும்)
நம்பாதே.
108. ஒரஞ் சொல்லேல்.
பதவுரை : ஒரம் - பஷபாதத்தை, சொல்லேல் - (நீ யாதொரு வழக்கிலும்)
பேசாதே.
ஆத்திசூடி முலமும் உரையும் முற்றிற்று.
ஒளவை அமுதம் - அமரர் சற்குணதேவி செல்லத்துரை நினைவு வெளியீடு (22)

ஒளவையார் அருளிய கொன்றை வேந்தன்
மூலமும்
பூரீலழரீ ஆறுமுகநாவலர் உரையும்

Page 18
ஒளவையார் அருளிச் செய்த
கொண்றை வேந்தன்
மூலமும் உறையும்
காப்பு
கொன்றை வேந்தன் செல்வன் அடியிணை என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.
பதவுரை : கொன்றை - கொன்றைப் பூமாலையைச் சூடிய, வேந்தன் - சிவபெருமானுக்கு, செல்வன் - குமரனாகிய விநாயகக் கடவுளுடைய, அடி இணை - பாதங்களிரண்டையும், என்றும் - எந்நாளும், ஏத்தி - துதிசெய்து, தொழுவோம் - வணங்குவோம், யாம் - நாங்கள் என்றவாறு. ஏகாரம் ஈற்றசை.
சூத்திரம் 1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். பதவுரை : அன்னையும் - தாயும், பிதாவும் - தகப்பனும், முன் - முன்னே,
அறி - காணப்பட்ட தெய்வம் - தெய்வங்களாவார்.
2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று. பதவுரை : ஆலயம் - கோயிலுக்குப்போய், தொழுவது - கடவுளை வணங்குவது, சாலவும் - மிகவும், நன்று - நல்லது.
3. இல்லறம் அல்லது நல்லறம் அன்று. பதவுரை : இல்லறம் - (மனையாளோடு கூடிச்செய்யும்) இல்லறமானது, நல் ". அறம் - எளிதிற் செய்யத்தகும் அறமாகும். அல்லது - இல்லறமல்லாத துறவறமானது, அன்று - எளிதிற் செய்யத்தகும் அறமன்றாகும்.
4. ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர். பதவுரை : ஈயார் - கொடாதவருடைய, தேட்டை - சம்பாத்தியத்தை, தியார்
- (கள்ளர் முதலாகிய) தீயவர், கொள்வர் - அபகரிப்பார்.
ஒளவை அமுதம் - அமரர் சற்குணதேவி செல்லத்துரை நினைவு வெளியீடு (24)

5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு. பதவுரை உண்டி - போசனம், சுருங்குதல் - (அளவிற்) குறைதல், பெண்டிர்க்கு - பெண்களுக்கு, அழகு - அழகாகும்.
6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.
பதவுரை : ஊருடன் - (தானிருக்கும்) ஊராருடன், பகைக்கின் - (ஒருவன்) விரோதித்தால், வேருடன் - (தன்) வம்சத்துடன், கெடும் - (அவன்) கெடுவான்.
7. எண்ணும் எழுத்தும் கண் எனத்தகும். பதவுரை : எண்ணும் - கணித நூலும், எழுத்தும் - இலக்கண நூலும், கண் எனத்தகும் - (மனிதருக்கு) இரண்டு கண்களென்று சொல்லப்படும்.
8. ஏவா மக்கள் மூவா மருந்து.
பதவுரை ஏவா - (பெற்றவர் இதைச் செய் என்று) ஏவுதற்கு முன் குறிப்பறிந்து செய்கிற, மக்கள் - பிள்ளைகள், மூவா மருந்து - (அப் பெற்றவருக்கு) தேவாமிர்தம் போல்வார்.
9. ஐயம் புகினும் செய்வன செய். பதவுரை : ஐயம் புகினும் - பிச்சை எடுத்தாலும், செய்வன - செய்யத்தகுங்
கருமங்களையே, செய் - (நீ விடாது)செய்.
10. ஒருவனைப் பற்றி ஓரகத்து இரு.
பதவுரை : ஒருவனை - (நற்குணமுடைய) ஒருவனை, பற்றி - (துணையாகப்)பற்றிக்கொண்டு, ஓரகத்து - ஓரிடத்திலே தானே, இரு - (நீ எப்போதும்) வாசம்பண்ணு.
11. ஒதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம். பதவுரை : வேதியர்க்கு - பிராமணருக்கு, ஒழுக்கம் - ஆசாரமானது,
ஒதலின் - (வேதம்) ஒதலினும், நன்றே - நல்லதே.
12. ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு.
பதவுரை : ஒளவியம் - பொறாமை வார்த்தைகளை, பேசுதல் - (ஒருவன்) பேசுதல், ஆக்கத்திற்கு - (அவன்) செல்வத்திற்கு, அழிவு - கேட்டைத்தருவதாகும். -
ஒளவை அமுதம் - அமரர் சற்குணதேவி செல்லத்துரை நினைவு வெளியீடு (25)

Page 19
13. அ.கமும் காசும் சிக்கெனத் தேடு.
பதவுரை : அ.கமும் - தானியத்தையும், காசும் - திரவியத்தையும்,
சிக்கெனத்தேடு - நீ வீண்
செலவு செய்யாமல் சம்பாதி.
14. கற்பு எனப் படுவது சொல் திறம்பாமை, பதவுரை : கற்பு எனப்படுவது - (பெண்களுக்குக்) கற்பென்று சொல்லப்படுவது, சொல் - (கணவர்) சொல்லுக்கு, திறம்பாமை - தப்பி நடவாமையாம்.
15. காவல் தானே பாவையர்க்கு அழகு. பதவுரை : காவல் தானே - (கற்புக்கு அழிவு வராமல் தம்மைக் காத்துக்கொள்வது தானே, பாவையர்க்கு - பெண்களுக்கு, அழகு - அழகாகும்.
16. கிட்டாது ஆயின் வெட்டென மற. பதவுரை : கிட்டாது ஆயின் - (இச்சித்த ஒரு பொருள் ) கிடையாதானால், வெட்டென - சீக்கிரத்திலேதானே, மற - (அப்பொருளை) மறந்திடு
17. கீழோர் ஆயினும் தாழ உரை.
பதவுரை கீழோர் ஆயினும் - (கேட்பவர் உனக்குக்) கீழ்ப்பட்டவராய் இருந்தாலும், தாழ - (உன் சொல்) வணக்கமுடையதாய் இருக்கும்படி, உரை - (நீ அவருடன்) பேசு.
18. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. பதவுரை : குற்றம் - குற்றங்களை, பார்க்கின் - (ஆராய்ந்து) பார்த்தால்,
சுற்றம் - உறவாவோர், இல்லை - (ஒருவரும்) இல்லை.
19. கூர் அம்பாயினும் வீரியம் பேசேல்.
பதவுரை : கூர் அம்பு ஆயினும் - (உன் கையிலிருக்கிறது) கூர்மை பொருந்திய அம்பானாலும், வீரியம் - வீரத் தன்மையை, பேசேல் - (நீ வீணாகப்) பேசாதே.
2O. கெடுவது செய்யின் விடுவது கருமம்.
பதவுரை கெடுவது - கெடுவதை, செய்யின் - (தன் சிநேகன்) செய்தால், விடுவது - (அவன் சிநேகத்தை) விடுவதே, கருமம் - (விவேகிக்கு) நற்செய்கையாம்.
ஒளவை அமுதம் - அமரர் சற்குணதேவி செல்லத்துரை நினைவு வெளியீடு (26)

21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை.
பதவுரை : கேட்டில் - (கைப்பொருள்) இழந்த காலத்தில், உறுதி - மனந்தளராமை, உடைமை - (முன் போல அப்) பொருளுடையனாந் தன்மையை, கூட்டும் - சேர்க்கும்.
22. கைப்பொருள் தன்னின் மெய்பொருள் கல்வி.
பதவுரை கைப்பொருள் தன்னின் - கையிலிருக்கின்ற பொருளைப் பார்க்கிலும், மெய்ப்பொருள் - மெய்ப்பொருளாவது, கல்வி - கல்வியேயாம்.
23. கொற்றவன் அறிதல் உற்றிடத்து உதவி.
பதவுரை கொற்றவன் - அரசனானவன், அறிதல் - (ஒருவனை) அறிந்திருத்தல், உற்ற இடத்து - (அவனுக்கு ஆபத்து) வந்த இடத்து, உதவி - உதவியாகும்.
24. கோட்செவிக் குறளை காற்றுடன் நெருப்பு. பதவுரை : கோட்செவி - கோள் கேட்குங் குணத்தோனுடைய காதிலே,
குறளை - ( பிறர் மேல் ஒருவன் வந்து சொன்ன) கோளானது, காற்றுடன் - காற்றுடன் சேர்ந்த, நெருப்பு - நெருப்பைப் போல மூளும்.
25. கெளவை சொல்லின் எவ்வருக்கும் பகை. பதவுரை கெளவை - (பிறர் மேலே) பழிச்சொற்களைச் சொல்லின் -
(ஒருவன்) சொல்லினால், எவ்வருக்கும் - எல்லோருக்கும், பகை - (அவன்) பகையாவான்.
26. சந்ததிக்கு அழகு வந்தி செய்யாமை.
பதவுரை சந்ததிக்கு - தன் வம்சம் பெருகுவதற்கு, அழகு - அழகாவது, வந்தி - மலடியாக, செய்யாமை - செய்யாமல் (தன் மனையாளோடு) கூடி வாழ்தலாம்.
27. சான்றோர் என்கை ஈன்றோட்கு அழகு.
பதவுரை : சான்றோர் என்கை - (தன் புத்திரரைக் கல்வி அறிவால்) நிறைந்தோர் என்று (கற்றவர்) சொல்லுகிறது, ஈன்றோட்கு - பெற்றவளுக்கு, அழகு - அழகாகும். -
ஒளவை அமுதம் - அமரர் சற்குணதேவி செல்லத்துரை நினைவு வெளியீடு (27)

Page 20
28. சிவத்தைப் பேணின் தவத்திற்கு அழகு.
பதவுரை : சிவத்தை - (முதற்பொருளாகிய) பரமசிவத்தை, பேணின் - (ஒருவன் ) வழிபட்டால், தவத்திற்கு - (அவன் செய்யுந்) தவத்திற்கு, 31 p(35 - 3-p35|T(35LD.
29. சீரைத் தேடின் ஏரைத் தேடு. பதவுரை : சீரை - செளக்கியத்தை, தேடின் - (உனக்குத்) தேடுவாயானால்,
ஏரை - பயிரிடுந் தொழிலை, தேடு - நீ தேடிக்கொள்.
30. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்.
பதவுரை : சுற்றத்திற்கு - உறவினருக்கு, அழகு - அழகாவது, சூழ - (சுபாசுபங்களிலே பலரும் வந்து) சூழ, இருத்தல் - (சமீபங்களிலே) குடியிருக்கையாகும்.
31. சூதும் வாதும் வேதனை செய்யும். பதவுரை : சூதும் - சூதாடுதலும், வாதும் - தருக்கம் பேசுதலும், வேதனை
- வருத்தத்தை, செய்யும் - உண்டாகும்.
32. செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும்.
பதவுரை செய்தவம் - செய்யுந் தவத்தை, மறந்தால் - (ஒருவன்) மறந்தால், கைதவம் - பொய்யாகிய அஞ்ஞானமானது, ஆளும் - (அவனை அடிமைகொண்டு) ஆளும்,
33. சேமம் புகினும் யாமத்து உறங்கு. பதவுரை : சேமம் - காவற்கூடத்திலே, புகினும் - போய்(ஒரு வேலையும்
క్టె" இல்லாமல்) இருந்தாலும், யாமத்து - ஏழரை நாழிகைக்குப் பின்,
உறங்கு - நீ நித்திரை பண்ணு.
34. சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண். பதவுரை : சை ஒத்து இருந்தால் - பொருள் ஒத்திருந்தால், ஐயம் இட்டு
- பிச்சையிட்டு, உண் - நீயும் உண்ணு சை - பொருள்
35. சொக்கர் என்பவர் தத்தம் பெறுவர். பதவுரை சொக்கர் என்பவர் - பொன்னுடையவர் என்று சொல்லப்படுவோர், அத் தம் - (அறமும் இன் பமுமாகிய மற் றைப் ) புருடார்த்தங்களையும், பெறுவர் - பெறுவார். சொக்கு - பொன்.
ஒளவை அமுதம் - அமரர் சற்குணதேவி செல்லத்துரை நினைவு வெளியீடு (28)

36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர். பதவுரை : சோம்பர் என்பவர் - சோம்பலுடையவர் என்று சொல்லப்படுவோர், தேம்பி - (வறுமையினால்) வருந்தி, திரிவர் - (இரந்து) திரிவார்.
37. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
பதவுரை தந்தை - பிதாவினுடைய, சொல் - சொல்லுக்கு, மிக்க - மேற்பட்ட, மந்திரம் - (பலனைத் தரும்) மந்திரமானது, இல்லை - (ஒருவனுக்கு எந்த நூலிலும்) இல்லை.
38. தாயின் சிறந்தொரு கோயிலும் இல்லை
பதவுரை : தாயின் - மாதாவைப் பார்க்கினும், சிறந்த - சிறப்புப் பொருந்திய, ஒரு கோயிலும் - ஒரு ஆலயமும், இல்லை - (ஒருவனுக்கு எங்கும்) இல்லை.
39. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு.
பதவுரை : திரைகடல் - அலைகின்ற கடலிலே, ஒடியும் - (தோணியேறித் தூர தேசங்களிற்) போயானாலும், திரவியம் - திரவியத்தை, தேடு - நீ சம்பாதி.
40. தீராக் கோபம் போராய் முடியும். பதவுரை : தீரா - நீங்காத, கோபம் - கோபமானது, போரா - (பின்பு)
சண்டையாக, முடியும் - முடிந்துவிடும்.
41. துடியாப் பெண்டிர் மடியின் நெருப்பு.
பதவுரை துடியா - (தங் கணவருக்குத் துன்பம் வந்தபோது) மனம் பதையாத, பெண்டிர் - பெண்கள், மடியில் - (அவர்) வயிற்றில், நெருப்பு - அக்கினிக்கு ஒப்பாவார்.
42. தூற்றும் பெண்டிர் கூற்றெனத் தகும்.
பதவுரை : தூற்றும் - தங் கணவர் மேற் (குற்றஞ் சொல்லி) தூற்றுகிற, பெண்டிர் - பெண்களை, கூற்று எனத் தகும் - (அவருக்கு) இயமன் என்று எண்ணத் தகும்.
43. தெய்வம் சீறில் கைதவம் மாளும்.
பதவுரை : தெய்வம் - தெய்வமானது, சீறின் - (ஒருவனைக்) கோபித்தால், கைதவம் - (அவனுக்குக்) கைகூடியிருந்த தவமும், மாளும் - (பயன் கொடாமல்) அழியும்.
ஒளவை அமுதம் - அமரர் சற்குணதேவி செல்லத்துரை நினைவு வெளியீடு (29)

Page 21
44. தேடாது அழிக்கின் பாடா முடியும்.
பதவுரை : தேடாது - (ஒருவன் வருந்திச்) சம்பாதியாமல், அழிக்கின் -
இருக்கின்ற பொருளைச் செலவழித்தால், பாடா முடியும் (அவனுக்குப் பின்) வருத்தமாக முடியும்.
45. தையும் மாசியும் வையகத்து உறங்கு.
பதவுரை : தையும் - தை மாதத்திலும், மாசியும் - மாசி மாதத்திலும், வை அகத்து - (பனி வருத்தந் தாராத) வைக்கோல் வீட்டிலே, உறங்கு - நீ நித்திரை பண்ணு.
46. தொழுதுஊண் சுவையின் உழுதுஊண் இனிது.
பதவுரை : தொழுது - (ஒருவரைச்) சேவித்து, ஊண் - உண்ணும் உணவினது, சுவையின் - சுவையைப் பார்க்கிலும், உழுது - உழுது பயிர் செய்து, ஊண் - உண்ணும் உணவின் சுவை, இனிது இன்பந்தருவதாகும்.
47. தோழனோடும் ஏழைமை பேசேல்.
பதவுரை : தோழனோடும் - (உன்) சிநேகனோடாயினும், ஏழைமை - (உனக்கு இருக்கிற) சிறுமையை, பேசேல் - (நீ எப்படிப்பட்ட வேளையிலும்) பேசாதே.
48. நல்லிணக்கம் அல்லது அல்லல்படுத்தும். பதவுரை நல் இணக்கம் அல்லது - நல்ல சகவாசம் அல்லாதது, அல்லல்
- துன்பத்தையே, படுத்தும் - உண்டாக்கும்.
49. நாடெங்கும் வாழக் கேடு ஒன்றும் இல்லை.
பதவுரை : நாடு எங்கும் - தேசமெங்கும், வாழ - செழித்திருக்குமாயின், கேடு ஒன்றும் - (திருட்டு முதலாகிய) கேடொன்றும், இல்லை - இல்லை.
5 O. நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை,
பதவுரை நிற்க - (தன்னிடத்தே) நிலைபெறும்படி, கற்றல் - கற்றலாவது, சொல் - (தான் சொல்லும்) சொற்களிலே, திறம்பாமை - ஒருபோதும் தப்பிப்போகாமையாம்.
ஒளவை அமுதம் - அமரர் சற்குணதேவி செல்லத்துரை நினைவு வெளியீடு (30)

51. நீரகம் பொருந்திய ஊரகத்து இரு.
பதவுரை நீர் - நீர் வளமாது, அகம் - தனக்குள்ளே, பொருந்திய - (மழையில்லாத பஞ்சத்திலும்) அமைந்த, ஊரகத்து - ஊரினிடத்திலே, இரு - நீ குடியிரு.
52. நுண்ணிய கருமம் எண்ணித் துணி.
பதவுரை நுண்ணிய - சிறிய, கருமமும் - தொழிலையும், எண்ணி - (முடிக்கும் வழியை நன்றாக) ஆலோசித்து, துணி - (நீ பின்பு அதைச்) செய்யத்துணி.
53. நூன்முறை தெரிந்து சீலத்து ஒழுகு.
பதவுரை : நூல் - தரும நூலிலே சொல்லப்பட்ட, முறை - (விதிகளின்) முறையை, தெரிந்து - அறிந்து, சீலத்து - நல்லொழுக்க வழியில், ஒழுகு - நீ நட
54. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை.
பதவுரை : நெஞ்சை - (தம்முடைய) மனசுக்கு, ஒளித்த - மறைக்கப்பட்ட ஒரு வஞ்சகம் - யாதொரு வஞ்சனையும், இல்லை - (யாவரிடத்திலும்) இல்லை.
55. நேரா நோன்பு சீர் ஆகாது. பதவுரை நேரா - (மனசினால்) உடன்படாத, நோன்பு - தவமானது, சீர்
ஆகாது - சீராக முடியாது.
56. நைபவர் எனினும் நொய்ய உரையேல். பதவுரை நைபவர் எனினும் - (கேட்போர் எதிர்பேசாமல்) வருந்துவோராயினும், நொய்ய - அற்ப வார்த்தைகளை, உரையேல் - நீ சொல்லாதே.
57. நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர்.
பதவுரை : நொய்யவர் என்பவர் - (உருவத்தினாலே) சிறியவர் என்று இகழப்படுவோரும், வெய்யவர் ஆவர் - செய் காரியத்தால் யாவரும் விரும்பும் குணத்தையுடையவர் ஆவர்.
58. நோன்பு என்பதுவே கொன்று தின்னாமை.
பதவுரை நோன்பு என்பது - தவம் என்று சொல்லப்படுவது, கொன்று - (ஒரு சீவனை) வதைசெய்து, தின்னாமை - (அதன் மாமிசத்தை) தின்னாமையேயாம்.
ஒளவை அமுதம் - அமரர் சற்குணதேவி செல்லத்துரை நினைவு வெளியீடு (31)

Page 22
59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்.
பதவுரை : பண்ணிய - (ஒருவன்) செய்த, பயிரின் - பயிரின் விளைவினாலும் விளைவில்லாமையாலும், புண்ணியம் - (அவனிடத்தே) புண்ணியம் இருத்தலும் இல்லாமையும், தெரியும் - அறியப்படும்.
60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்.
பதவுரை : பாலோடு ஆயினும் - பாலோடு கூடிய அன்னத்தை உண்டாலும், காலம் அறிந்து - (உண்ணத் தகுங்) காலத்தை அறிந்து, உண் - (நீ அதை) உண்ணு.
61. பிறன்மனை புகாமை அறம் எனத் தகும்.
பதவுரை பிறன் - பிறனுடைய, மனை - மனையாளிடத்தில், புகாமை - (இச்சித்துப்) போகாமையே, அறம் எனத் தகும் - (எல்லாத் தருமங்களிலும் உயர்ந்த) தருமம் என்று சொல்லத்தகும்.
62. பீரம் பேணி பாரம் தாங்கும். பதவுரை : பீரம் பேணி - முலைப்பால் குறைவற உண்டு வளர்ந்தவன், பாரம் - பாரமான சுமையை, தாங்கும் - சுமப்பான். (அதுபோல, முன்னே காரணங்களைக் குறைவறக் கொண்டவன் பின்னே பெரிய காரியங்களையும் வருத்தமின்றி முடிப்பான்) பீர் - முலைப்பால், அம்சாரியை.
63. புலையும் கொலையும் களவும் தவிர்.
பதவுரை : புலையும் - புலால் உண்ணுதலையும், கொலையும் - சீவ வதை செய்தலையும், களவும் - பிறர் பொருளைத் திருடுதலையும், தவிர் - (நீ செய்யாது) ஒழித்துவிடு.
64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம். பதவுரை : பூரியோர்க்கு - கீழ் மக்களுக்கு, சீரிய - சிறப்பாகிய ,
ஒழுக்கம் - நடையானது, இல்லை - (உண்டாதல்) இல்லை
65. பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும்,
பதவுரை : பெற்றோர்க்கு - (மெய்ஞ்ஞானத்தை) பெற்றவருக்கு, சுற்றமும் - உறவினர் மேல் ஆசையும், சினமும் - (மற்றவர் மேல்) வெறுப்பும், இல்லை - இல்லை.
ஒளவை அமுதம் - அமரர் சற்குணதேவி செல்லத்துரை நினைவு வெளியீடு 32

66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்.
பதவுரை : பேதைமை என்பது - அறியாமை என்று சொல்லப்படும் குணமானது, மாதர்க்கு - பெண்களுக்கு, அணிகலம் - ஆபரணமாகும்.
67. பையச் சென்றால் வையம் தாங்கும்.
பதவுரை : பைய - மெள்ள, சென்றால் - (ஒருவன் தகுதியான வழியிலே) நடந்தால், வையம் - பூமியிலுள்ளோர், தாங்கும் (அவனை) மேலாகக்
கொள்வார்.
68. பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர். பதவுரை : பொலி லாங் கு என்பவை - தங்குகளென்று
சொல்லப்பட்டவைகளாகிய, எல்லாம் - எல்லாவற்றையும், தவிர் - (நீ செய்யாது) ஒழித்துவிடு.
69. போனகம் என்பது தான் உழந்து உண்டல்.
பதவுரை போனகம் என்பது - போசனமென்று சொல்லப்படுவது, தான் உழந்து - தான் பிரயாசப்பட்டுச் சம்பாதித்து, உண்டல் - உண்ணுதலாம்.
70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண்.
பதவுரை : மருந்தே ஆயினும் - (உண்ணப்படுவது கிடைத்தற்கு அரிய) தேவாமிர்தமேயானாலும், விருந்தோடு (வந்த) விருந்தாளிகளோடு கூடி, உண் - நீ உண்ணு.
71. மாரி அல்லது காரியம் இல்லை. பதவுரை : மாரி அல்லது - மழையினால் அல்லாமல், காரியம் - யாதொரு
காரியமும், இல்லை - (யாருக்கும் நடப்பது) இல்லை.
72. மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை.
பதவுரை : மின்னுக்கும் எல்லாம் - (வானத்திலே காணப்பட்ட) மின்னலுக்கு எல்லாம், பின்னுக்கு மழை - (அப்போது மழையில்லையாயினும்) பின்னே மழையுண்டாகும். (அதுபோல ஒருவனிடத்தில் காணப்பட்ட நல்ல முயற்சிகளுக்கெல்லாம் அப்போது பயன் இல்லையாயினும் பின்னே பயன் உண்டாகும்.) -
ஒளவை அமுதம் - அமரர் சற்குணதேவி செல்லத்துரை நினைவு வெளியீடு (33)

Page 23
73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது.
பதவுரை : மீகாமன் - (தன்னை ஓட்டத்தக்க) மாலுமி, இல்லா - இல்லாத, மரக்கலம் - தோணியானது, ஓடாது - (கடலிலே செவ்வையாக) ஓடாது. (அதுபோலத் தன்னை முடிக்கத் தக்கவன் இல்லாத யாதொரு கருமமும் செவ்வையாக முடியாது.)
74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
பதவுரை : முற்பகல் - ஒரு முகூர்த்த காலத்தில் முன் பங்கிலே, செய்யின் - (பிறருக்குத் தீங்கு) செய்தால், பிற்பகல் - அதன் பின் பங்கிலே, விளையும் - (செய்தவனுக்கு) அத் தீங்கு தானே உண்டாகும்.
75. மூத்தோர் சொன்ன வார்த்தை அமிர்தம்.
பதவுரை : மூத்தோர் - (கல்வியறிவினாலே) முதிர்ந்தவர், சொன்ன -
சொல்லிய, வார்த்தை - வார்த்தையானது, அமிர்தம் தேவாமிர்தத்தைப் போலும்.
76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு. பதவுரை : மெத்தையில் - பஞ்சணையிலே, படுத்தல் - படுத்தலானது, நித்திரைக்கு - (ஒருவன் செய்கிற) நித்திரைக்கு.அழகு - அழகாகும்.
77. மேழிச் செல்வம் கோழை படாது.
பதவுரை : மேழி - கலப்பை (பிடித்து உழுது பயிர் செய்தலால் உண்டாகின்ற), செல்வம் - செல்வமானது, கோழைபடாது - (ஒருபோதும்) குறைவை அடையாது.
78. மை விழியார்தம் மனை அகன்று ஒழுகு. பதவுரை : மை விழியார்தம் - மை தீட்டிய கண்ணையுடைய வேசிகளது. மனை - வீடுகளை, அகன்று ஒழுகு - நீ அணுகாமலே விலகிப்போ,
79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம்.
பதவுரை : மொழிவது - (கற்றோர்) சொல்லுகின்ற உபாயத்தை, மறுக்கின் - கேளாமற் செய்தால், கருமம் - ஒருவன் செய்யுந் தொழில், அழிவது - கெடுவதாகும்.
80. மோனம் என்பது ஞான வரம்பு. பதவுரை மோனம் என்பது - மெளன நிலை என்பது, ஞானம்
மெய்ஞ்ஞானத்துக்கு, வரம்பு - எல்லையாகும்.
ஒளவை அமுதம் - அமரர் சற்குணதேவி செல்லத்துரை நினைவு வெளியீடு (34)

81. வளவன் ஆயினும் அளவறிந்து அழித்து உண்.
பதவுரை வளவன் ஆயினும் - (சம்பத்திலே) சோழனுக்கு ஒப்பானவனாய் இருந்தாயானாலும், அளவு - பொருள் (வரவின்) அளவை, அறிந்து - தெரிந்து, அழித்து - செலவழித்து, உண் - நீ அனுபவி.
82. வானம் சுருங்கில் தானம் சுருங்கும்.
பதவுரை : வானம் - மழையானது, சுருங்கின் - பெய்தல் குறையுமாயின், தானம் - (சற்பாத்திரங்களுக்குக் கொடுக்கிற) கொடையும், சுருங்கும் - குறைவுபடும்.
83. விருந்து இலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்.
பதவுரை விருந்து இலோர்க்கு - விருந்தினரை உபசரித்தல் இல்லாதவருக்கு, பொருந்திய - தாம் பொருந்திய , ஒழுக்கம் - இல்லறம், இல்லை (இருந்ததாயினும்) இல்லாததற்குச் சமானமாகும்.
84. வீரன் கேண்மை கூர் அம்பாகும்.
பதவுரை வீரன் - வீரனுடைய, கேண்மை - சினேகம் (ஒருவனுக்கு இருந்தால்), கூர் அம்பு ஆகும் - (அவனுக்கு அதுவே தன் பகையை வெல்லுவதற்குக்) கூர்மை பொருந்திய அம்பாகும்.
85. உரவோர் என்கை இரவாது இருத்தல்.
பதவுரை உரவோர் என்கை - வல்லவரென்று சொல்லப்படுதல், இரவாது (தமக்குச் சிறுமை வந்த காலத்திலும் பிறரை) இரவாமல், இருத்தல் - இருக்கையாம்.
86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு.
பதவுரை ஊக்கம் - (செய்தொழிலிலே) மனந்தளராமையை, உடைமை - (ஒருவன்) உடையனாதல், ஆக்கத்திற்கு - (அவன்) செல்வத்திற்கு, அழகு - அழகாகும்.
87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை. பதவுரை : வெள்ளைக்கு - களங்கமில்லாத பரிசுத்த குணமுடையவனிடத்து, கள்ளம் - வஞ்சனை பொருந்திய, சிந்தை - நினைப்பானது,
இல்லை - இல்லை.
ஒளவை அமுதம் - அமரர் சற்குணதேவி செல்லத்துரை நினைவு வெளியீடு (35)

Page 24
88. வேந்தன் சீறின் ஆம் துணை இல்லை.
பதவுரை வேந்தன் - அரசனானவன், சீறின் - ஒருவனைக் கோபித்தால், ஆம் - (அப்போது அவனுக்கு உபயோகம்) ஆகின்ற, துணை - துணை, இல்லை - (ஒருவரும்) இல்லை.
89. வையம் தோறும் தெய்வம் தொழு. பதவுரை வையம் தோறும் - பூமியிலுள்ள தலந்தோறும் (போய்), தெய்வம்
- கடவுனை, தொழு - (நீ தரிசித்து) வணங்கு.
90. ஒத்த இடத்து நித்திரை கொள். பதவுரை : ஒத்த விடத்து - (மேடுபள்ளம் இல்லாமற்) சமமான இடத்திலே,
நித்திரை கொள் - (நீ படுத்து) நித்திரை பண்ணு.
91. ஒதாதார்க்கு இல்லை உணர்வொடும் ஒழுக்கம்.
பதவுரை ஒதாதார்க்கு - (அறிவு நூல்களைப்) படியாதவருக்கு உணர்வொடும் - அறிவுடனே, ஒழுக்கம் - நல்ல நடையும், இல்லை - (உண்டாதல்) இல்லை.
கொன்றைவேந்தன் மூலமும் உரையும் முற்றிற்று.
ஒளவை அமுதம் - அமரர் சற்குணதேவி செல்லத்துரை நினைவு வெளியீடு (36)
வ, .


Page 25
சுப்பர் + சின்னம்மா
い し い # முத்தாச்சி # பொன்னம்மா # அன்னம்மா சின்னமணி # செல்லத்துரை # தங்கம்
# சதாசிவம் சேனாதிராஜா # செல்வராஜா ச
(கொழும்பு)
சுதர்சன் கோபிநாத் வசீகரன்
-- -H 十 தர்சினி நவீனா துஷிதா
சர்மிலன் நிலக்ஷன் கிருஷானி ப்ரீத்தி விசாலி அபிஷானி
(சுவிஸ்) (அவுஸ்ரேலியா)

செல்லையா + பூமணி
DT
ற்குணராஜா சற்குணதேவி சின்னராஜா செல்வமணி கமலாதேவி இரஞ்சிதமணி (சுவிஸ்) (கனடா) (அவுஸ்ரேலியா) (கொழும்பு) (லண்டன்)
ஜினேந்ததாஸ் (இந்திரன்)

Page 26


Page 27
ஒளவை மூதாட்டி நம் தாய் செம்மொழியாம் தமிழைச் செகத்தி தந்த முதுசம் ஆத்திசூடி கொன்ை என விரியும் அமிழ்தினினும் இனிய மனங்களில் அழியா ஒவியமாய்த் கொன்றை வேந்தன் ஆகியவற்றை கொண்டமைந்தது. இந்நூல். தமிழ் அமுதுக்கு யாழ்ப்பாணத்து நல்லூர் உயர்வுச் சிறப்பு மிக்கது. தாயிற்
ஒளவை மூதாட்டியின் அமுதமொ
அமரர் திருமதி சற்குணதேவி செல் கரங்களில் தருகிறோம். ݂ ݂
 

டி கொன்றைவேந்தன்
மாழியாம் தமிழ் வளர்த்த மூதாட்டி லே உயர்த்தி வைத்த இம் மூதாட்டி வேந்தன் வாக்குண்டாம் நல்வழி சொற்கொண்டு அறத்தைக் குழந்தை ட்டும் அம்மூதாட்டியின் ஆத்திசூடி ஒளவை அமுது எனும் மகுடத்தில்
ബി ബന്ദ്ര ഉബ ரீலறு ஆறுமுக நாவலர் உரையே சிறந்தொரு கோயிலில்லை எனும் யை மனதில் நினைந்து அன்னை
லத்துரை அவர்களின் நினைவாய்க்