கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செம்புலம்

Page 1
■见
ଗ3f6;
Ø/
 
 

bலத்துரை சுதர்சன்

Page 2

செம்புலம்
கலை, இலக்கியக் கட்டுரைகள்
செல்லத்துரைசுதர்சன்
(தமிழ்த் துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்)
2OO6

Page 3
“Sempulam” (Essays on Art & Literature)
Author
Sellathurai Sutharsan°
Dept. of Tamil, University of Peradeniya. E-mail : suda3379 Gyahoo.com
ISBN : 955-544-0-4
Edition
December 2006
Layout & Printing Kribs Printers Pvt Ltd.
“செம்புலம்’ (கலை, இலக்கியக் கட்டுரைகள்)
நூலாசிரியர் செல்லத்துரை சுதர்சன்° தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்.
ISBN : 955-544-0-4
பதிப்பு
டிசெம்பர் 2006
அச்சிட்டோர் "கிறிப்ஸ் பிறின்டேஸ்

அம்மாவுக்கு.

Page 4
5 人 大。历. 8 人 5,让召,G
85 s ob SƯ

அறிமுகக் குறிப்பு
பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் 1972 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து இற்றைவரை பல்கலைக்கழக ஆசிரியனாகப் பணிபுரிந்து கொண்டிருக்கிறேன். பல நூற்றுக் ணக்கான மாணவர்கள் எம்மிடம் கற்றுள்ளனர். அவர்களுட் பலர் இன்று உயர் பதவிகளை வகித்துக் கொண்டிருக்கின்றனர்; பல்கலைக்கழக விரிவுரையாளர்களாக விளங்குகின்றனர். இந் ண்ட காலப் பகுதியில் நாம் கண்ட ஆற்றல் மிக்க மாணவர் ளுள் இந் நூலாசிரியர் செ. சுதர்சனும் ஒருவராவார். பட்டப் படிப்பு மாணவனாக எம்மிடம் நான்கு வருடங்கள் கற்று முதல் ரச் சித்தி பெற்று இன்று உதவி விரிவுரையாளராகக் கடமை ாற்றிக்கொண்டு தொடர்ந்தும் எம்மிடமே முதுதத்துவ )ாணிப் பட்டத்திற்கான கற்கை நெறியையும் மேற்கொண்டு பருகிறார்.
சுமார் முப்பத்து நான்கு வருட கால ஆசிரிய அனுபவங் ளுள் நான் கண்ட ஓர் உண்மை வருமாறு; நாம் விரிவுரை ாற்றிக் கொண்டிருக்கும்போது எல்லா மாணவர்களும் அவசர வசரமாகக் குறிப்புகளை எழுதிக் கொண்டிருப்பர்.
குறிப்பிட்ட விடயம் தொடர்பாக நீங்கள் வாசிக்க வேண்டிய
5 / செம்புலம்

Page 5
நூல்கள் எவை எனக் கூறும்போது, அவற்றையும் அவர்கள் மிகக் கவனமாகக் கேட்டு எழுதிக்கொள்வர். பரீட்சையின் பின்னர் நாம் விடைத் தாள்களைத் திருத்தும்போதும், ஒப்படை களை மதிப்பிடும்போதும் மூன்று வகையான மாணவர்களை இனங்காண முடிகிறது.
1. முதலாவது பிரிவினர் நாம் விரிவுரையாற்றிக் கொண்டிருக்கும்போது அவசர அவசரமாக எழுதிக் கொள்ளும் குறிப்புகளுடன் மட்டும் சமாளிக்க முயன் றுள்ளனர். 2. மேற்கண்ட வகையினரிலும் பார்க்கச் சிறிது வித்தியாசப்பட்டு நாம் வாசிக்கும்படி சிபார்சு செய்த நூல்களுள் ஒரு சிலவற்றையாவது கவனத்தில் கொள் கின்றனர். 3. மேற்கண்ட வகையினரிலும் சற்று வேறுபட்டு நாம் சிபார்சு செய்த நூல்களை அரும்பாடுபட்டுத் தேடி அவற்றைக் கவனத்தில் கொள்கின்றனர். இம் மூவகையினரில் இருந்து கணிசமான அளவு வேறு பட்ட நான்காவது பிரிவினரையும் இனங்கண்டுள்ளேன். இவர்கள் நாம் சிபார்சு செய்யும் நூல்களை மட்டுமல்லாமல் மேலதிகமாகவும் பல நூல்களைத் தேடிக் கண்டுபிடித்து வாசித்து, தமது அறிவைப் பெருக்கிக் கொள்பவர்கள். பரீட்சைத் தேவைகளை மட்டும் மனங்கொள்ளாமல் அறிவைப் பெருக்கிக் கொள்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பவர்கள். முப்பத்து நான்கு வருட காலத்தில் நான் கண்ட இத்தகைய தலைசிறந்த மாணவர்களை விரல்விட்டு எண்ண லாம். இத்தகைய ஒரு சிலருள் இந்நூலாசிரியரும் ஒருவர் ஆவார்.
6 / செ. சுதர்சன்

இவர் பல்கலைக்கழகத்தில் பல பரிசில்களைப் பெற்றுக் கொண்டதோடு ‘மாணவ சாகித்திய விருது முதலிய விருது களையும் பெற்றுக்கொண்டார். மிக்க இளம் வயதிலேயே தமது திறமை காரணமாக 'இரத்தின தீபம்’ முதலிய உயர் விருதுகளையும் பெற்றுக்கொண்டார். பல நூல்களின் பதிப்பாசிரியராகவும் தொகுப்பாசிரியராகவும் விளங்கும் இவர், ஈழத்தில் உள்ள இளம் தலைமுறைக் கவிஞர்களுள் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவராகவும் விளங்குகிறார். பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் சுமார் பதினைந்து வருட காலமாக எழுதிய கவிதைகளைத் தனி ஒருவராக நின்று தேடித் தொகுத்து 'என் தேசத்தில் நான்' என்ற நூலாக வெளிக் கொணர்ந்துள்ளார். அத்துடன் 'மற்றுமொரு மாலை' என்ற கவிதைநூலின் ஆசிரியராகவும் விளங்குகிறார். ஆய்வாளனாகத் திகழ்ந்து ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். தமிழ்த்துறை மாணவர்களின் 'சங்கப் பந்தல்’ எனும் மாதாந்த இலக்கியக் கருத்தரங்கின் பொறுப்பு விரிவுரையாளராகவும் விளங்குகிறார்.
இவர் ஆய்வுத்துறையிலே தீவிர கவனம் செலுத்தி வருபவர். தரமான ஆய்வு நூல்களையும் கருத்தூன்றிப் படிப் பவர். ஆய்வாளர் கூறும் கருத்துக்களை அப்படியே ஒப்புக் கொள்ளாமல் திறனாய்வு செய்து தனது கருத்துக்களைத் தர்க்க ரீதியாகத் தெளிவுபடுத்தி வெளியிடுபவர். அந்த வகையில் இவர் ஈழத்தில் உள்ள இளம் விமர்சகர்களுள் ஒருவராகவும் விளங்குகிறார்.
இத்தகைய சிறப்புக்களுடைய இவர், தாம் எழுதிய பல கட்டுரைகளிலிருந்து ஐந்து கட்டுரைகளைத் தொகுத்து
7 / செம்புலம்

Page 6
“செம்புலம்’ (கலை இலக்கியக் கட்டுரைகள்) என்ற பெயரில் இந்நூலைத் தந்துள்ளார்.
'. செம்புலப்பெயல் நீர் போல் அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே எனும் குறுந்தொகைப் பாடல் அடிகள் தமிழ் இலக்கிய உலகில் மிகப் பிரசித்தமானவை. ஆனாலும், இதற்கு இன்றுவரை கூறப்பட்டு வரும் பொருள்பற்றியும், சிறப்புப் பற்றியும், அவற்றின் பொருத்தப்பாடு பற்றியும் எவரும் அதிக கவனம் செலுத்தவில்லை. நூலாசிரியர் "செம்புலம் - மறுவாசிப்பு' எனும் தலைப்பில் எழுதிய இந்நூலில் உள்ள முதலாவது கட்டுரை எம்மை ஆழமாகச் சிந்திக்க வைக்கிறது. செம்புலம் எனும் சொல்லுக்கு உ.வே. சாமிநாதையர் முதல் சரளா இராசகோபாலன் வரை அறிஞர்கள் பலரும் கொடுத் துள்ள விளக்கங்களைச் சுட்டிக்காட்டி அவற்றின் பொருத்தப் பாடின்மையையும் தெளிவுபடுத்தியுள்ளார். அத்துடன் இக் கட்டுரையின் இறுதியில் தனது கருத்தினை ஆணித்தரமாக நிறுவியுள்ளார். தக்க ஆதாரங்களையும் தர்க்கரீதியான அமைப்பினையும் கொண்டு கட்டுரையை அவர் எழுதி யுள்ளமை பாராட்டத்தக்கதாகும். அவரது புதிய கருத்து அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இரண்டாவது கட்டுரையான 'பக்திக் கவிதை : மொழி - அழகியல் மொழி - தத்துவமொழி" என்பதில் பக்திக் கவிதை யினைக் கவிதை என்ற அடிப்படையில், முதலில் அதனை அழகியல் ரீதியாகவும், பின்னர் தத்துவ ரீதியாகவும் எவ்வாறு புரிந்து கொள்ளலாம் என்பதனை விளக்குகிறார். இதற்கு இந் நூலாசிரியர் மாணிக்கவாசகரது கவிதை ஒன்றினை ஒரு பதச்
8 / செ. சுதர்சன்

சோறாக்கி உவமைக் கட்டமைப்பினையுடைய அக்கவிதைக்கு பின்னால் மறைந்திருக்கும் உருவகத் தன்மையைச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.
யுகப்பெருங் கவிஞனான பாரதியார் நவீன தமிழ்க் கவிதை யின் தந்தையாக விளங்குகிறார். அவரது கவிதைகள் எளிமையும் தெளிவும் மிக்கவை. அவற்றுக்குப் புறநடையா கவும் அவரது சில கவிதைகள் காணப்படுகின்றன. அத்தகைய வற்றுள் அக்கினிக்குஞ்சு எனும் தலைப்பில் உள்ள சிறிய கவிதையும் ஒன்றாகும். இது இன்றுவரை பலரையும் திக்கு முக்காட வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்நூலா சிரியர் 'பாரதியின் அக்கினிக்குஞ்சு ஒரு சமூகவியற் பார்வை' எனும் தலைப்பில் எழுதிய கட்டுரை எமது மிகுதியான கவனத்திற்குரியது. பல்வேறு வகையான விளக்கங்களுடன் இச்சிறிய பாடலில் பொதிந்துள்ள கருத்தினைப் புதிய பார்வை யுடன் வெளிப்படுத்தியுள்ளமை பாராட்டுக்குரியதாகும்.
'மறுமலர்ச்சி இதழும் மஹாகவியின் படைப்புகளும்’ என்ற நான்காவது கட்டுரை மறுமலர்ச்சி இதழில் வெளியாகிய மஹாகவியின் படைப்புக்களை அக்காலப் பின்னணியில் வைத்து ஆராய்வதாக அமைந்துள்ளது. இந்நூலாசிரியர் தனது கலை இளமாணிப் பட்டப் பரீட்சையின் ஒரு பகுதித் தேவை யினைப் பூர்த்தி செய்யும் பொருட்டுப் பேராசிரியர் எம்.ஏ. நுஃமானின் மேற்பார்வையின் கீழ் இலக்கியமும் கருத்து நிலையும் : ஈழத்தில் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிச் சங்கத்தி னால் வெளியிடப்பட்ட மறுமலர்ச்சி இதழ்களை அடிப்படை யாகக் கொண்ட ஓர் ஆய்வு எனும் தலைப்பில் ஆய்வு செய்து சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரைதமிழ்த்துறையில் கடமை புரியும்
9 / செம்புலம்

Page 7
பலராலும் சிலாகித்துப் பேசப்பட்ட ஒன்றாகும். அந்த வகையில், அவர் தாம் ஆய்வு செய்த மறுமலர்ச்சி இதழ்களில் வெளிவந்த மஹாகவியின் படைப்புக்களை அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரையை எழுதி யுள்ளார்.
இந்நூலின் இறுதிக்கட்டுரை 'காமன் கூத்தின் கலைப் பயணம்" என்பதாகும். இக்கட்டுரையில் நாடகவியல் பின்னணி யில் காமன் கூத்தை நூலாசிரியர் விளக்கும் முறை புதுமை யானதாகும். காமன்கூத்தினை ஒருசாரார் கூத்து என்றும், இன்னொரு சாரார் சடங்கு என்றும் கூறும் கருத்துக்களைச் சரியான முறையில் விளக்கி, காமன் கூத்தினைச் சடங்கி லிருந்து கலை நோக்கிப் பயணிக்கும் ஓர் இடைமாறுகட்ட வடிவமாக இவர் பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன், சடங்கு கலை என்பவற்றுக்கிடையிலான உறவு முறைகளையும் காமன்கூத்தினை அடிப்படையாகக் கொண்டு இக் கட்டுரையில் விளக்கியுள்ளதுடன், உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் சடங்கு நடனங்களுடன் இணைத்துக் காமன் கூத்தினை நோக்கியுள்ளமை சிறப்புக்குரியதாகும்.
இந் நூலில் நூலாசிரியரின் பரந்த வாசிப்புத் திறனையும், நுணுக்கமான முறையில் ஒரு விடயத்தை ஆய்வு செய்கின்ற தன்மையையும், தர்க்கரீதியாகத் தனது கருத்துக்களைக் கூறும் அம்சத்தையும் காணமுடிகிறது. பாடசாலையிலிருந்து பல்கலைக்கழகம் வரை தமிழைப் பயில்வோர்க்கும் தமிழ் ஆர்வலருக்கும் இந்நூலில் உள்ள கட்டுரைகள் பயன்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆய்வு நுணுக்கமும் ஆழமான பார்வையும் கொண்ட இந்நூலில் உள்ள கட்டுரைகள் ஒவ்வொன்றும் புதிய பார்வையைக் கொண்டுள்ளமை
10 / செ. சுதர்சன்

குறிப்பிடத்தக்கதாகும். தமிழில் தோன்றிய இலக்கியங்களைப் புதிய பார்வையில் தருகின்ற ஓர் இளம் ஆய்வாளராக விளங்கும் இவர் எதிர்காலத்தில் தமிழியல் ஆய்வுக்குப் பெரும் பங்காற்று வார் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. அவரது பணிகள் சிறக்க எனது வாழ்த்துக்கள்.
பேராசிரியர் க. அருணாசலம் தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம், பேராதனை.
05. 19, 2006
11 / செம்புலம்

Page 8

என் குறிப்பு
செம்புலம் என்ற பெயரில் வெளிவரும் எனது இந்நூல் ஐந்து கட்டுரைகளை உள்ளடக்கியது. இக்கட்டுரைகள் கலை, இலக்கியம் சார்ந்தவை. பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ் விசேட துறை மாணவனாக இருந்த காலத்திலும் அதற்குப் பின்னரும் நான் எழுதிய கட்டுரைகளிலிருந்து தெரிவுசெய்யப் பட்ட ஐந்து கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
இந்நூலில் செம்புலம் - மறுவாசிப்பு, பக்திக் கவிதை : மொழி - அழகியல் மொழி - தத்துவ மொழி, பாரதியின் அக்கினிக்குஞ்சு - ஒரு சமூகவியற் பார்வை, மறுமலர்ச்சி இதழும் மஹாகவியின் படைப்புகளும், காமன்கூத்தின் கலைப் பயணம் ஆகிய ஐந்து கட்டுரைகள் அமைந்துள்ளன.
இந்நூலுக்கு அறிமுகக்குறிப்பினைத் தந்து என்னை உற்சாகப்படுத்தி அறிவுரை வழங்கிய எனது ஆசான் பேராசிரியர் க. அருணாசலம் அவர்களுக்கும் கலாநிதி துரை மனோகரன், கலாநிதி வ. மகேஸ்வரன், விரிவுரையாளர் திரு. பூ. சோதிநாதன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.
இக்கட்டுரைகளைப் பிரசுரித்த இளங்கதிர், இந்து தருமம், ஏகலைவன், மல்லிகை, மத்திய மாகாண சாஹித்திய விழா மலர் ஆகியவற்றின் ஆசிரியர்களுக்கு எனது நன்றிகள்.
13 / செம்புலம்

Page 9
ஞானரஞ்சன், பார்த்தீபன், ஜெகன், சரவணகுமார், இராஜேஷ்கண்ணா, சுரேஷன், கார்த்திகா, பவானி ஆகியோ ருக்கும் அம்மா, சகோதரிகளுக்கும் பொ. சுரேஸ்குமாருக்கும் என் நன்றிகள். இந்நூலை அச்சுக்கலையால் அழகுபடுத்திய “கிறிப்ஸ் நிறுவனத்தினருக்கு என்றும் நன்றிகள் உரித்து.
செ. சுதர்சன்
தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம், பேராதனை.
05. 12, 2006
14 / செ. சுதர்சன்

பொருளடக்கம்
அறிமுகக் குறிப்பு
என்குறிப்பு
1. செம்புலம் - மறு வாசிப்பு / 17
2. பக்திக் கவிதை / 31
3. பாரதியின் 'அக்கினிக் குஞ்சு/47
4. மறுமலர்ச்சி இதழும் மஹாகவியின் படைப்புகளும் /59
5. காமன் கூத்தின் கலைப் பயணம் / 71
15 / செம்புலம்

Page 10

1.
செம்புலம்-மறுவாசிப்பு
இக்கட்டுரை சங்ககால அகத்திணை இலக்கியங்களில் ஒன்றாகிய குறுந்தொகையில் “யாயும் ஞாயும்' என்று ஆரம்பிக்கும் நாற்பதாவது கவிதை பற்றியது. இக்கவிதை தமிழ் இலக்கிய உலகில் எல்லா மட்டங்களிலும் பரவலாக அறியப்பட்டது. அத்துடன் மிக அதிகமான தடவைகள் எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தப்பட்டுள்ள சங்கக்கவிதை என்ற பெருமையும் இதற்கு உண்டு. இக்கவிதையின் சிறப்பு யாதெனில் காதலனும் காதலியும் அன்பினால் உள்ளம் ஒன்றிக் கலந்த செய்தியைப் புலப்படுத்தும் “செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே” என்ற உவமைத் தொடரைக் கொண்டிருப்பதே ஆகும். இந்த உவமையைக் கையாண்டமையாலேயே இக்கவிதையின் ஆசிரியர் “செம்புலப் பெயல் நீரார்” என அழைக்கப்படுகிறார். இக்கவிதையில் வரும் “செம்புலப் பெயல்நீர் போல” என்ற உவமைத்தொடருக்கு இலக்கிய உலகு இதுவரை காலமும் கூறிவந்திருக்கும் பொருள் விளக்கத்தின் பொருத்தப்பாடு பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
17 / செம்புலம்

Page 11
கவிதையும் பொருளும்
இக்கவிதையும் இதற்கு இதுவரை காலமும் கூறப்பட்டுவந்த பொருளும் வருமாறு.
கவிதை:
யாயும் ஞாயும் யார் ஆகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் யானும் நீயும் எவ்வழி அறிதும் செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே'
(யாய் - என்னுடைய தாய், ஞாய் - உன்னுடைய தாய், எந்தை - என்னுடைய தந்தை, நுந்தை - உன்னுடைய தந்தை, கேளிர் - உறவினர், பெயல் நீர் - மழை நீர்)
பொருள்:
என்னுடைய தாயும் உன்னுடைய தாயும் ஒருவருக்கொருவர் என்ன உறவுடையவர் ஆவர்? என்னுடைய தந்தையும் உன்னுடைய தந்தையும் எந்த முறையுடைய உறவினர் ஆவர்? நானும் நீயும் இப்போது அறிந்தோமே அல்லாது முன்பு எவ்வகையால் ஒருவரை ஒருவர் அறிந்துள்ளோம்? செம்மையான நிலத்தில் பெய்த மழைநீர் அந்நிலத்துடன் ஒன்றாகக் கலந்தது போல அன்புடைய எமது நெஞ்சங்களும் தாமாகவே கலந்து ஒன்றுபட்டன.
கவிதைக்குப் பொருள் கூறுவது கவிதையை புரிந்து கொள்வ தாகாது. அக்கவிதை தருகின்ற அநுபவமே முக்கியமானதாகும். ஆகவே, இக்கவிதை தரும் அநுபவத்தை நோக்குவதற்கு முன்னர்,
"செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே"
18 / செ. சுதர்சன்

என்ற உவமைத்தொடரிலுள்ள “செம்புலம்” என்ற சொல்லுக்கான பொருள் பற்றி ஆராய்வது அவசியமானதாகும்.
உவமைத்தொடரும் கூறப்பட்டுள்ள பொருள் விளக்கங்களும்
உள்ளம் ஒன்றிக்கலந்த செய்தி "செம்புலப் பெயல் நீர் போல என்று உவமையாக்கி உரைக்கப்படுகிறது. இவ் உவமைத் தொடருக்கு உ. வே. சாமிநாதையர், இராகவையங்கார், பொ. வே. சோமசுந்தரனார், மு. வரதராசன், மு. கோவிந்தராசன், இரா. பிரேமா, செளரிப் பெருமாள்.அரங்கன், வி. நாகராசன், சரளா இராச கோபாலன் முதலிய பலரும் பல்வேறு பொருள் விளக்கங்களை வழங்கியுள்ளனர். இவர்களில் பலரும் உ.வே.சாமிநாதையர் கூறிய பொருள் விளக்கத்தை அடிப்படையாகக்கொண்டே தமது விளக்கங்களைக் கூறியுள்ளனர்.
உ. வே. சாமிநாதையரும் பிறரும் இவ்உவமைத் தொடருக்கு வழங்கிய விளக்கங்கள் வருமாறு உ. வே. சாமிநாதையர் 'செம்மண்நிலத்தின்கண்ணே பெய்த மழைநீர் அம்மண்ணோடு கலந்து அத்தன்மையை அடைதல் போல”
இராகவையங்கார் ‘செந்நிலத்திற் பெய்த மழைநீரைப்
(3urgo'
பொ. வே. சோமசுந்தரனார் : 'செந்நிலத்தே பெய்யப்பட்ட மழை அந்நிலத்தியல்போடே ஒன்றுறக் கலந்தாற் போன்று'
மு. வரதராசன் 'செம்புலத்தில் பெய்த நீர் பிரிவிற்கு இடமில்லாமல் கலந்து விடுதல் போல்”*
19 / செம்புலம்

Page 12
மு. கோவிந்தராசன்
gSQUIT. LSG3Juront
செளரிப்பெருமாள்.அரங்கன்
வி. நாகராசன்
சரளா இராசகோபாலன்
‘செந்நிலத்தே பெய்யப்பெற்ற மழை
அந்நிலத்து இயல்போடே ஒன்றுறக் கலந்தது போன்று'
'செம்மண்நிலத்தின்கண்ணே பெய்த
மழைநீர் அம்மண்ணோடு கலந்து அத்தன்மையாதல் போல'
செய்யப்புலத்தில் பெய்த நீர்போல’
'செம்மண் நிலத்தில் பெய்யும் மழை
நீரைப்போல "
'செம்மண் நிலத்தில் பெய்த மழை
யைப் போல "
இவ்வாறு “செம்புலப் பெயல் நீர் போல” என்ற உவமைத் தொடருக்குப் பல்வேறு பொருள் விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் “செம்புலம்’ என்ற சொல்லிற்கான பொருள் விளக்கம் நான்கு வகையாகக் கூறப்பட்டுள்ளது.
1. செம்மண் நிலம்
உ.வே.சாமிநாதையர், இரா. பிரேமா, வி. நாகராசன், சரளா இராசகோபாலன் ஆகியோர் இவ்வாறு கூறியுள்ளனர்.
2. செந்நிலம்
இராகவையங்கார், பொ. வே. சோமசுந்தரனார், மு. கோவிந்த ராசன் ஆகியோர் இவ்வாறு கூறியுள்ளனர்.
3. செய்யபுலம்
செளரிப்பெருமாள்.அரங்கன் இவ்வாறு கூறியுள்ளார்.
4. செம்புலம்
மு. வரதராசன் இவ்வாறு கூறியுள்ளார்.
20 / செ. சுதர்சன்

உ.வே. சாமிநாதையர் தனது பதிப்பில் வெளிவரும் எந்த ஒரு படைப்பிற்கும் பதவுரை, விளக்கவுரை, மேற்கோளாட்சி, ஒப்புமைப் பகுதி முதலியவற்றை அரும்பாடுபட்டு எழுதுவது வழக்கம். அது போல இக்கவிதைக்கும் எழுதியுள்ளமை பாராட்டுக்குரியது. எனினும், அவர் இக்கவிதையில் வரும் செம்புலம் என்ற சொல்லுக் குக் கூறிய பொருள் எவ்வளவு தூரம் அதிக பொருத்தமும் சிறப்பும் உடையது என்பது கேள்விக்குரியது. இவர் “செம்புலம்’ என்பதற்கு “செம்மண் நிலம்” என்று கூறி
“செம்மண் நிலத்துப் பெய்த நீரானது அம்மண்ணோடு கலந்து அதன் நிறத்தையும் சுவையையும் பெற்று ஒன்று படுவது போல நம் நெஞ்சம் ஒன்றோடு ஒன்று கலந்து தன்மைகள் ஒன்றுப்பட்டன என்று உவமையை விரித்துக்
கொள்க'
என்று கூறுகிறார். இவரது இக்கருத்தை ஏற்று இவருக்குப் பின்வந்த பலரும் விளக்கங்களை வழங்கியுள்ளனர். அவர்களில் சிலர் செந்நிலம், செய்யப்புலம் என்ற சொற்களைச் சிவந்த நிலம் என்ற அடிப்படையில் பயன்படுத்தி உள்ளனர். மு. வரதராசன் செம்புலம் என்ற சொல்லைச் செம்புலம் என்றே பயன்படுத்தி இப் பிரச்சினை யிலிருந்து தப்பித்துக்கொள்கிறார்.
ஈழத்தில் யாழ்ப்பாணம் போன்ற விவசாயத்திற்குச் சிறந்த இடங்களைச் சேர்ந்த தமிழ் ஆசிரியர்கள் இக்கவிதையில் வரும் செம்புலம் என்ற சொல்லிற்கு 'செம்பாட்டு மண்’ என்று விளக்கம் கூறுவதும் சுவையான ஒரு விடயம் ஆகும். இவர்கள் எல்லோரும் தாம் சங்ககாலக் கவிதை ஒன்றிற்குப் பொருள் விளக்கம்
செய்கிறோம் என்பதைக் கவனதில் எடுக்கவில்லை.
21 / செம்புலம்

Page 13
சங்ககாலத்தில் நிலமானது குறிஞ்சி முதலிய அடிப்படையில் பெயரிடப்பட்டதே அன்றிச் செம்மண் என்றெல்லாம் பெயரிடப் படவில்லை. அத்துடன், சங்க இலக்கியங்களைத் திணை அடிப்படை யில் பாகுபாடு செய்யும்போது குறிஞ்சி முதலிய பெயர்களே வைக்கப்பட்டன. எனவே, செம்புலம் என்ற சொல்லிற்கு செம்மண், செந்நிலம் என்றெல்லாம் பொருள்கொள்வது பொருத்தமற்ற தாகும். இதனால் செம்புலம் என்ற சொல் குறிக்கும் பொருள் யாது? என்ற தேடல் அவசியமாகிறது.
செம்புலம் என்பது யாது?
"சங்க இலக்கியப் பொருட் களஞ்சியம்” செம்புலம் என்பதற்கு
இரு வேறுபொருள்களைக் கூறுகிறது. அவை வருமாறு:
1. செம்மண் நிலம்
2. சிவந்த நிலம்
சங்க இலக்கியப் பொருட் களஞ்சியத்தில் செம்மண் நிலம் என்பதற்கு உள்ள பொருள் விளக்கம் மேற்படி குறுந்தொகைக் கவிதைக்கு உ.வே.சாமிநாதையர் கூறிய பொருள் விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டமைந்தது என ஊகிக்க முடிகிறது. அந்த வகையில் சங்க இலக்கியப் பொருட் களஞ்சியமும் இச் சொல்லிற் கான சரியான பொருளைத் தரவில்லை.
சங்க இலக்கியப் பொருட் களஞ்சியம், சிவந்த நிலம் என்பதைப் போர்க்களம் என்ற கருத்துப்பட விளக்குவது குறிப்பிடத்தக்கது. சங்க இலக்கியங்களில் ஒன்றான அக நானூற்றில் பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுத்தித் தோழிக்குச் சொல்லுவதாய் அமைந்த துறையினையுடைய, நக்கீரனார் பாடிய, பாலைத்திணைக்குரிய ஒரு பாடல் வருகிறது. அதில்,
22 / செ. சுதர்சன்

செம்புலம் மருங்கில் தன்கால் வாங்கி" என்ற ஒரு தொடர் வருகிறது. இங்கு குருதியால் சிவந்த போர்க்களம் என்ற பொருளில் செம்புலம் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இதனால், செம்புலம் குறிக்கும் ஒரு பொருள் போர்க்களம் எனக் கூறமுடியும். ஆனால், இதே பொருளைக் குறுந்தொகைக் கவிதை யில் வரும் செம்புலம் என்ற சொல்லிற்குக் கொடுக்க முடியாது.
பிங்கல நிகண்டு செம்புலம் என்பதற்கு இரண்டு பொருளினைத் தருகிறது.
பறந்தலை பாலை நிலஞ் செம்புலமே' என்று அது கூறுகிறது.
எனவே செம்புலம் என்பது
1. பறந்தலை (போர்க்களம்)
2. பாலை நிலம்
என்ற இருவேறு பொருள்களைக் குறித்து நிற்கும் ஒரு சொல் என்பது புலப்படுகிறது. அந்தவகையில் செம்புலம் என்பது போர்க்களம் என்ற பொருளில் அகநானூற்றின் 389 ஆவது கவிதையில் பயின்று வர, பாலைநிலம் என்ற பொருளில் குறுந்தொகையின் 40 ஆவது கவிதையில் பயின்று வருகிறது எனத் துணிந்து கூறமுடியும்.
இந்த அடிப்படையில் குறுந்தொகையில் வரும் 'செம்புலப் பெயல் நீர்போல’ என்ற தொடருக்குப் 'பாலை நிலத்தில் பெய்த மழைநீர் போல’ என்று பொருள்கொள்வதே பொருத்தமானதாகும். செம்புலம் என்பதற்கு செம்மண்நிலம் என்று பொருள் கொண்டோர் தரும் கவிதை அநுபவத்தைவிடப் பாலை நிலம் என்று பொருள் கொள்ளும்போது ஏற்படும் கவிதை அநுபவம் எத்தகைய சிறப்பு மிகுதியுடையது என்பதை அடுத்து நோக்கலாம்.
23 / செம்புலம்

Page 14
கவிதை அநுபவம்
இயற்கைப் புணர்ச்சிபுணர்ந்த பின்னர் காதலன் பிரிவான் என்று காதலி அஞ்சுகிறாள். அச்சம் அவளது முகத்தில் புலப்படுகிறது. அதைக் கண்ட காதலன் காதலியிடம் கூறுவதாய் அமைந்ததே இக்கவிதை.
இருவருக்கிடையேயான உறவு என்பது மூன்று வகைகளில்
ஏற்படலாம் ஒன்று தாய் மரபினூடாக ஏற்படுவது. இரண்டு தந்தை மரபினூடாக ஏற்படுவது, மூன்று நட்புக் காரணமாக ஏற்படுவது. காதலன் காதலியை நோக்கி தாய், தந்தை மரபுகளினூடாக ஏற்படும் உறவுமுறைகூட எமக்கிடையே இருந்ததில்லையே என்னும் கருத்துப்பட
'யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்”
என்று கூறுகிறான். பின்னர் நட்பின் காரணமாக ஏற்படும்
உறவுகூட எமக்கிடையே இருந்ததில்லையே என்பது புலப்பட
“யானும் நீயும் எவ்வழி அறிதும்" என்று கூறுகிறான். ஒருவர் இன்னொருவருடன் நட்புக் கொள் வதற்கு அவரைக் கண்டறிந்திருக்க வேண்டும், அல்லது கேட்டறிந் திருக்க வேண்டும். ஆனால் இவ் இரண்டு வழிகளாலும் நானும் நீயும் இதற்கு முன்னர் ஒருவரையொருவர் அறியவில்லை என்று கூறுகிறான், காதலன். எனவே பிறப்பு முறைபற்றி வரும் தொடர்பும் நட்புமுறை பற்றி வரும் தொடரும் எமக்கிடையில் இல்லை என்பதைத் தெளிவாகக் கூறி முன்பு ஒருவரையொருவர் ஒரு வகையாலும் அறிந்திராத நாம் இருவரும் இன்று ஒருவரில் ஒருவர் அன்புடையவராக, நமது உள்ளங்களும் "செம்புலப் பெயல் நீர் போல ஒன்றிக் கலந்துவிட்டன என்று கூறுகின்றான். இங்கேதான்
24 / செ. சுதர்சன்

செம்புலம் என்ற சொல்லின் பொருள் பற்றிய பிரச்சினை ஆரம்ப மாகிறது.
செம்புலம் என்பதற்கு இதுவரை காலமும் செம்மண் என்று பொருள் கூறியவர்கள் செம்மண்ணின் நிறம், சுவை முதலியவற்றை மழை நீர் ஏற்றும், நீரின் நெகிழ்ச்சித் தன்மையைச் செம்மண் ஏற்றும் ஒன்றின் பண்பு பிரிக்க முடியாதவாறு இன்னொன்றோடு இரண்டறக் கலந்துவிட்டது என்றும் அதே போலக் காதலன், காதலி ஆகிய இருவரும் உள்ளத்தால் பிரிக்கமுடியாதவாறு ஒன்றிக்கலந்தனர் என்றும் கூறியுள்ளனர். இது பண்பு நிலைகளைப் பரிமாறிய செய்தியை உணர்த்திநிற்கிறது. மழை செம்மண் நிலத்தில் பெய்தால் மட்டும் அந்நிலத்தோடு இரண்டறக்கலக்கும் என்று கூறமுடியாது. அது பாலைநிலத்திற் பெய்தாலும் இரண்டறத்தான் கலக்கும். அங்கும் நீரின் இயல்பை நிலமும், நிலத்தின் இயல்பை நீரும் பெற்றுப் பண்பு நிலைப் பரிமாற்றம் ஏற்பட்டு இரண்டும் ஒன்றாகும். இன்னும் மேகம் வானிலும் செம்மண் தரையிலும் என வெவ்வேறு இடங்களில் இருப்பினும் உரியகாலம் வரும்போது எவரது உதவியும் இல்லாமல் கலந்துவிடுவது போல முன்னர் ஒருவரை ஒருவர் கண்டிராத இருவர் காண்பதும், கண்டு காதல் கொள்வதும், உள்ளத் தால் ஒன்றிக் கலத்தலும் அமைகிறது. இத்தன்மை செம்மண் நிலத்திற்கு மட்டுமல்லாது பாலை நிலத்திற்கும் பொருந்தக்கூடியது. எனவே இந்த உவமைத்தொடருக்கு இவ்வாறு பொருள் கொள்வதை விடச் செம்புலம் என்ற சொல்லிற்குப் பாலை நிலம் என்று பொருள் கொண்டு அந்தப் பொருளைக் கவிதையின் ஒட்டுமொத்தமான அமைப்போடு வைத்து நோக்குவதே பொருத்தமானதாகும்.
பாலைநிலத்தில் மழைபெய்வது அரிது. அரிதான ஒன்று நிகழ்வது அதிசயமானது. பாலைநிலத்தில் மழைபெய்வதும்
25 / செம்புலம்

Page 15
அதிசயமானதுதான். மனித மனங்களில் காதல் மலர்வதும் இவ்வாறான ஒன்றுதான். முன் பின் அறிந்திராத இருவர் ஒருவரை ஒருவர் கண்டவுடன் உள்ளத்து அன்பினால் ஒன்றிக்கலத்தல் ஓர் இயற்கை நிகழ்வே ஆகும். அந்த வகையில் இந் நிகழ்வு அதிசயமான ஒன்றாகும். குறுந்தொகைக் கவிதையிலும் தாய் மரபு, தந்தை மரபு, நட்பு என்ற மூன்றினாலும் முன்னொருபோதும் தொடர்பில்லாத காதலர் இருவர் அன்பு உள்ளத்தினால் ஒன்றுப்பட்டுக் கலந்தது ஒர் அதிசயமே. அதாவது உறவுத் தொடர்பும் நட்பு தொடர்பும் அற்ற இரு உள்ளங்கள் கலப்பதுவும் ஒர் அதிசயமல்லவா! இந்த அதிசயத் தொனி கவிதையின் முதல் மூன்று அடிகளிலும் வரும் “யார் ஆகியரோ”, “எம்முறைக் கேளிர்”, “எவ்வழி அறிதும்” என்ற வினாக் களின் மூலம் வெளிப்படுகிறது. இன்னும், அன்பு உள்ளத்தால் ஒன்றிக் கலந்த காதலர்களின் உள்ளக்கலப்பு அதிசயத்தோடு மட்டுமல்லாது பிரிக்க முடியாததாகவும் அமைந்திருப்பதையே குறுந்தொகைக் காதலனின்
“செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே"
என்ற கூற்றுப் புலப்படுத்துகின்றது. காதலனின் பிரிவிற்கு அஞ்சிய காதலியை நோக்கிக் காதலன், எமக்குப் பிரிவில்லை, எம்மைப் பிரிக்கவும் முடியாது என்பதை நேரடியாகக் கூறாது “செம்புலப் பெயல் நீர் போல” ஒன்றிக் கலந்த, பிரிய முடியாத, பிரிக்க முடியாத தன்மையை உணர்த்திவிடுகிறான்.
இக்கட்டுரையை நிறைவுசெய்வதற்கு முன்னர் சங்ககாலக் காதல் பற்றிய இரண்டு அம்சங்களை இக்கவிதையை அடிப்படை யாகக் கொண்டு குறிப்பிடலாம்.
1. குல மரபுகளை மீறிய காதல் 2. நில எல்லைகளைத் தாண்டிய காதல்
26 / செ. சுதர்சன்

குல மரபுகளை மீறியும் காதல் இருந்ததைச் சங்க இலக்கியங்கள் புலப்படுத்துகின்றன. அதற்கு இக் குறுந்தொகைக் கவிதையையும் உதாரணம் காட்டலாம். ஒருகுலத்திற் பிறந்திருந் தால் தாய் மரபு, தந்தை மரபு ஆகியவற்றின் அடிப்படையில் வரும் உறவின்மை பற்றிய கேள்விகளைக் காதலன் எழுப்பத் தேவை யில்லை. சிலம்பு நா.செல்வராசு “குருதிப் பூவின் குலைக் காந்தட்டே - பண்பாட்டு மெய்ப்பாட்டியல் ஆய்வு” என்ற தனது கட்டுரையிற் குறிப்பிடும் கூற்று இவ்விடத்தில் நோக்கத்தக்கது.
‘சங்க இலக்கியங்களும் வேறு வேறு குலத்தைச் சேர்ந்தோர் காதல் புரிவதை மணம் செய்து கொள்வதை ஆங்காங்கே சுட்டிச் செல்வதை அறிய முடிகின்றது. யாயும் ஞாயும். (குறு. 40) என்ற பாடல் வேறு வேறு குலத்தைச் சேர்ந்தோர் மணம் செய்து கொண்டதை விவரிக்கும். தமது தாயரைப் பற்றியும் தந்தையரைப் பற்றியும் முன்பின் அறிந்திராத இருவர் மணம் செய்து கொண்டது தெரிய வருகின்றது. ஒரே குலத்தைச் சேர்ந்த வராக இருப்பின் இப்பாடல் எழுப்பும் வினாக்களுக்கு
வாய்ப்பில்லை"
தொடர்ந்து நில எல்லைகளைத் தாண்டிய காதல் இக் கவிதையில் புலப்படுமாற்றை நோக்கலாம். "அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே” என்ற தொடரின் மூலம் குறிஞ்சி நிலத்துப் புணர்ச்சியும் “செம்புலம்’ என்பதனூடாகப் பாலை நிலமும் கூறப்படுகிறது. எனவே காதலி குறிஞ்சி நிலத்துக்குரியவள் என்றும், காதலன் பாலை நிலத்துக்குரியன் என்றும் கொள்ளமுடிகிறது. காதலனின் மொழியிலிருந்து அதாவது “செம்புலப் பெயல் நீர் போல” என்ற அவனது கூற்றிலிருந்து அவன் பாலை நிலத்துக்கு
27 / செம்புலம்

Page 16
உரியவன், தேவையின் நிமித்தமாகக் குறிஞ்சிக்கு வந்தவன், அங்கு இயற்கை புணர்ச்சி புணர்ந்த பின் காதலியைப் பிரிந்து தன் நிலத்திற்குச் செல்ல நேர்கையில் காதலியின் முகத்தில் அச்சக் குறிப்பு தோன்ற அவளுக்கு கூறுவதாக அமைந்ததே இக் கவிதை எனலாம். இதன் மூலம் சங்க காலத்தில் நில எல்லைகளை மீறியும் ஆண், பெண் என்ற இருசாராரும் காதல் உள்ளத்தால் கலந்த தன்மையை அறியமுடிகிறது.
28 / செ. சுதர்சன்

அழக்குறிப்புகள்
l.
2.
10.
11.
12.
குறு. 40.
குறுந்தொகை - மூலமும் உரையும், உ.வே.சாமிநாதையர் பதிப்பு, (1937) சென்னை: கேஸரி அச்சுக்கூடம். ப. 118.
இராகவையங்கார், (1958) குறுந்தொகை விளக்கம், அண்ணா மலைப்பல்கலைக்கழகம். ப. 74.
குறுந்தொகை, பொ, வே. சோமசுந்தரனார் உரை. சென்னை: கழக வெளியீடு. ப.60.
வரதராசன், மு., (1956) குறுந்தொகை விருந்து, சென்னை: பாரிநிலையம். ப. 15.
கோவிந்தராசன், மு., (2001) குறுந்தொகை ஒரு பார்வை, சென்னை: அமராவதி பதிப்பகம். ப.50.
குறுந்தொகை மூலமும் உரையும், இரா. பிரேமா (உரை ஆ–ர்), (1999) சென்னை: வர்த்தமானன் பதிப்பகம். ப.58,
குறுந்தொகை மூலமும் உரையும், முதல் உரை நூல், செளரிப் பெருமாள் அரங்கன் (உரை ஆ–ர்) (2000) சென்னை: முல்லை நிலையம். ப.67.
குறுந்தொகை மூலமும் உரையும், வி.நாகராசன் (உரை ஆ–ர்) (2004) சென்னை: நியு செஞ்சுரி புக் ஹவுஸ். ப. 119. இராசகோபாலன், சரளா, (1991) குறுந்தொகை ஓவியங்கள், சென்னை: ஒளிப்பதிப்பகம். ப.50.
குறுந்தொகை - மூலமும் உரையும், உ.வே.சாமிநாதையர் பதிப்பு. மேலது. ப. 119.
சங்க இலக்கியப் பொருட் களஞ்சியம் - தொகுதி 3 (1988) தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்கழகம், ப.140.
29 / செம்புலம்

Page 17
13. அகம், 389. 14. பிங்கல நிகண்டு. 3569.
15. மருதநாயகம், ப. செல்வராசு, சிலம்பு நா., (பதிப்பு ஆ–ர்) (2004) குறுந்தொகை முதற்பாடல் பன்முக ஆய்வுகள், தஞ்சாவூர்: அன்னம். ப.56,
30 / செ. சுதர்சன்

2
பக்திக்கவிதை மொழி - அழகியல் மொழி - தத்துவ மொழி
பக்திக் கவிதை என்பது எந்த ஒரு மதத்தினதும் மொழி ரீதியிலான அனுபவ அழகியல் வெளிப்பாடு ஆகும். அதுதான்சார்ந்த மதத்தின் அனைத்துப் பொருண்மைகளையும் வெளிப்படுத்தும். அந்த வெளிப் பாடு அழகியல் சார்ந்ததாக இருக்கும். மதம் சார் பொருண்மைக் கூறுகளில் தத்துவம் முதன்மையானது. எந்த ஒரு மதத்தினதும் இருப்பு என்பது அம்மதம் கொண்ட தத்துவத்தளம் சார்ந்தது. மதத்தின் தத்துவம் தவிர்ந்த ஏனைய பொருண்மைக் கூறுகள் பக்திக் கவிதையுள் வரும்போது ஏற்படாத வலிமையும் ஏற்படுத்தாத உணர்வு நிலையும் தத்துவம் பக்திக் கவிதையின் பிரதான பொருண்மைக் கூறாக வரும்போது ஏற்படுகிறது. பக்திக்கவிதை தத்துவத்தை வெளிப்படையான தர்க்கக் கட்டுமானங்களாகவும் அளவைகளாகவும் வெளிப்படுத்தாது அழகியலுள் அரூபமாய் அவற்றைக் கொண்டிருக்கும். அழகியல் மொழியில் தோய்ந்த தர்க்கங்களையும் அளவைகளையும் கொண்ட தத்துவத்தின்
வெளிப்பாடு பக்திக் கவிதையுள் இருக்கும்.
31 / செம்புலம்

Page 18
கவிதை என்பது “மொழியினால் ஆகிய ஒரு தனிமொழி” அந்தத் தனிமொழி பக்திக் கவிதையாயின், அதற்குள்ளும் இன்னொரு மொழி அமைந்திருக்கும். அது தத்துவத்தின் மொழி. பக்திக்கவிதை முதலில் அது கொண்டுள்ள அழகியல் அம்சங்க ளூடாக ஓர் அழகியல் அனுபவத்தை ஏற்படுத்தும். அடுத்த கட்டத்தில் அந்த பக்திக்கவிதை தான் கொண்டுள்ள மொழிப் படிமத்தினூடு பயணம் செய்யவைத்து அக்கவிதைசார் மதத்தின் தத்துவத்தளத்தை உணரவைக்கும். இந்த உணர்தற் செயற்பாட்டில் பக்திக் கவிதையுள் வரும் சொற்கள், தொடர்கள், அணிப் பிரயோகங்கள் முதலானவை மதம்சார் தத்துவக் கருத்தியலின் குறியீட்டு நியமங்களாகச் செயற் படும். இவ்வாறு குறியீட்டு நியமங்களாகும் சொற்கள் முதலானவை பல்வேறு பொருள் விரிவை உண்டாக்குவன. இன்னும், இயில் பாகவே மதங்கள் தம்மகத்தே கொண்ட குறியீட்டு நியமங்களும் இங்கு இணைத்து நோக்கப்படும். இவ்வாறு மொழி - மொழியால் ஆகிய தனிமொழி (அழகியல் மொழி) - மொழியால் ஆகிய தனிமொழிக்குள் அமைந்த இன்னொரு மொழி (தத்துவ மொழி) என்ற நிலைகளில் பக்திக்கவிதை வாசிப்புத் தளத்தில் இயங்குகிறது. சாதாரண மொழியில் இருந்து அழகியல் மொழி உருப்பெறுகிறது. அழகியல் மொழியின் முடிச்சுகள் அர்த்தங்களால் அவிழ்க்கப்படும் போது தத்துவத்தின் மொழி பிறக்கிறது.
தமிழ்ச் சூழலில் பக்திக் கவிதையைத் தனியே அழகியல் மொழியாகவோ அல்லது தத்துவத்தின் மொழியாகவோ நோக்குவதைவிட அழகியல், தத்துவம் என்ற இரண்டும் இணைந்த ஒன்றாக பார்ப்பதே பொருத்தமானது. அப்போதுதான் பக்திக் கவிதை ஆழமும் விரிவும் தேடி நகர்வதாகவும் அழகியல் பகிர்வோடு தத்துவப் பகிர்வை ஏற்படுத்துவதாகவும் இருக்கும்.
32 / செ. சுதர்சன்

இலக்கணவரம்புக்கு உட்படாத பழங்கவிதை மரபிலிருந்து சங்கக்கவிதை மரபூடாகப் பின்னர் காலந்தோறும் மாறிப் பயின்று இன்று இருக்கும் நவீன கவிதைவரை தமிழ்க்கவிதை மரபைப் பார்க்கும்போது பல்லவர்காலப் பக்திக் கவிதைகள் எளிமையும் இனிமையும் கலந்த மொழியினூடு மதத்தின் அனுபவ அழகியலை லாவகமாக வெளிப்படுத்தியுள்ளன (நவீன கவிதையில் பாரதி இதனைச் செய்கிறான்). அத்துடனமையாது அக்கவிதைகள் தாம் சார்ந்த மதத்தின் (சைவம்/வைணவம்) தத்துவ அடிப்படைகளையும் (சைவம் - சைவசித்தாந்தம்/ வைணவம் - விஷிட்டாத்வைதம்) கொண் டுள்ளன. பல்லவர் காலத்தில் நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடிய பக்திக் கவிதைகள் பெரும்பாலும் இத்தகைய தன்மை கொண்டவையே. கணங்களின் நுட்பமான உணர்ச்சி வேகத்தை மொழிக்குள் சிறைப்பிடிக்க முயன்று வெற்றிபெற்ற பல்லவர்காலப் பக்திக் கவிஞர்களுள் மாணிக்கவாசகர் முதன்மையானவர். கவிதை அரூபத்தளத்தில் இயங்கும்போது எற்படும் அநுபவ அழகியலையும், தத்துவ அடிப்படையையும் அவர் கவிதையில் கண்டு களிக்கலாம். எனவே, அவரது கவிதை ஒன்றையே அடிப்படையாகக் கொண்டு அழகியல், தத்துவம் ஆகியவற்றை விளக்குவது பொருத்தமானது. எல்லோருக்கும் நன்கு அறிமுகமான அவரது கவிதை ஒன்றையே எடுத்துக்கொள்ளலாம்.
முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந்துடயாள்
என்னத் திகழ்ந்தெம்மையாளுடையாளிட்டிடையின் மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நம்தம்மை யாளுடையா தன்னிற் பிரிவிலா எங்கோமா னன்பர்க்கு
முன்னி யவனமக்கு முன்சுரக்கு மின்னருளே
என்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய்'
33 / செம்புலம்

Page 19
இக்கவிதை வாசிப்பவர்க்கு இலகுவாக விளங்குகிறது. எனினும் புணர்ச்சிகளை நீக்கி இன்னும் இலகுவாக்கலாம்.
முன் இக் கடலைச் சுருக்கி எழுந்து உடையாள்
என்னத் திகழ்ந்து; எம்மை ஆளுடையாள் இட்டு இடையின் மின்னிப் பொலிந்து; எம்பிராட்டி திருவடிமேல்
பொன் அம்; சிலம்பில் சிலம்பித்; திருப்புருவம் என்னச் சிலைகுலவி; நம்தம்மை ஆள் உடையாள்
தன்னில் பிரிவு இலா எம்கோமான் அன்பர்க்கும், முன்னி அவள் நமக்கும் , முன்சுரக்கும் இன் அருளே
என்னப் பொழியாய் மழை ஏல் ஒர் எம்பாவாய்' இக்கவிதையின் பொருள் மிகச் சுருக்கமாக இங்கே தரப் படுகிறது.
'மழை மேகமே! நீ முதலில் இந்தப் புவியிலே உள்ள கடல்
நீரை உட்கொண்டு, மேலே எழுந்து, எம்மை உடையவளாகிய சக்தியின் நீலநிறத் திருமேனி போல நீல நிறத்துடன் விளங்கி, எம்மை அடிமையாகக் கொண்ட அவளது சிற்றிடைபோல் மின்னி, எம்பிராட்டியாகிய சக்தி தமது திருவடிமேல் அணிந்த பொன்னினால் செய்யப்பட்ட அழகிய சிலம்புபோல ஒலித்து, அவளது அழகிய நெற்றிபோல வானவில்லைவிட்டு, நம்மை அடிமையாக உடைய அச்சக்தியினின்றும் பிரிதல் இல்லாத எங்கள் தலைவனாகிய இறைவனது அடியவர்களுக்கும் நமக்கும் அவள் திருவுளம் கொண்டு முன்பு சுரக்கின்ற இன்னருளைப் போல மழையைப் பொழிவாயாக!
இக்கவிதையின் அழகியல், தத்துவ அம்சங்களைத் தனித் தனியே நோக்கலாம்.
34 / செ. சுதர்சன்

பக்திக்கவிதை: அழகியல் மொழி
இக்கவிதை திருவாசகத்தின் திருஎம்பாவைப் பகுதியில் இடம்பெறுவது. “திருஎம்பாவை' பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் நிலவிய மார்கழி நீராடல் முதலிய சமூக வழக்கங்களினின்றும் உருவாகிய ஓர் இலக்கிய வடிவம். பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் வாழ்ந்த பெண்கள் மழைவளம் வேண்டியும், சிறந்த கணவர் கிடைக்க வேண்டியும் நீராடிப் பாடிப் பரவிய பண்டைய மரபினைப் பல்லவர்காலப் பக்திக் கவிஞர்கள் தத்தமது சமய உண்மை களையும் அநுபவ நிலைகளையும் வெளியிடப் பயன்படுத்தினர். இத்தகைய பயன்படுத்தலின் விளைவே மாணிக்கவாசகரின் திருஎம்பாவையும் ஆண்டாளின் திருப்பாவையும் ஆகும்.
மாணிக்கவாசகர் 'ஆயிடை வானப்பேரியாற்று அகவயின் பாய்ந்து எழுந்து இன்பப் பெருஞ்சுழி கொழித்து சுழித்து", தன்னுள் "கருணை வான் தேன்” கலந்த செய்தியைப் பிறருக்கும் வழங்க வேண்டும் என்ற நோக்கத்திலும், பிறர் அதனை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலும் பாவை வடிவத்தைக் கையேற்று திருஎம்பாவை’ ஆக்கினார். பல்லவர்காலப் பக்திக்கவிதை நாட்டார் மரபினைக் கையேற்ற முக்கிய அம்சம் இவ்விடத்தில் நினைக்கத் தக்கது. இதன்போது பக்திக்கவிதை இயல்பாகவே வெகுஜனத் தன்மையைப் பெற்றுவிடுகிறது. பாவை பாடும் வாய்மொழி இசைமரபைக் கையேற்கும்தன்மை பல்லவர்காலத்தில் நிகழ்கலை களுடன் கவிதைக்கிருந்த பிணைப்பைக் காட்டுகிறது.
மேற்படி கவிதையில் பெண்ணாகத் தன்னைப் பாவனை செய்துபாடும் ஒரு பக்தனையும், பக்தன் என்ற நிலையிலிருந்து வளரும் ஒரு பெருங்கவிஞனையும் கண்டுகொள்ள முடிகிறது. கொச்சகக் கலிப்பாவில் அமைந்த இக்கவிதை மிகச் சிறந்த ஓர்
35 / செம்புலம்

Page 20
உவமைக் கட்டமைப்பினை உடையது. நீராடச்சென்ற மகளிர் பொதுப்பயனாகிய மழையை வேண்டிப்பாடுவதாய் அமைந்து, அதன் மூலம் இறைவன் சக்தி மூலமாக அடியார்களுக்கு அருள் வழங்கும் தன்மையை வெளிப்படுத்துவது. மழைமேகத்தை விளித்து ஆரம்பமாகும் இக்கவிதை மழையைப்போல அருள் வேண்டும் என்று கூறாது அருளைப் போல மழைவேண்டும் என்று கூறுகிறது. பாவைப் பாடலின் பொதுப்பயன் மழைவளம் வேண்டிப் பாடுவ தாகும். அந்தவகையில் இந்தப்பாடலும் அவ்வாறே அமைந்துள்ளது. பொதுப்பயனுக்காக மழையை வேண்டுவதோடு அருளின் வளத்தையும் கவிஞரது அநுபவ நிலையையும் பொதுமைப்படுத்திக் கூறுகிறது. மழையைப்போல அருளும் பொதுவானதாக, வேறுபாடற்றதாக வந்தமைய வேண்டும் என்ற விதத்தில் கவிதை அமைந்துள்ளது. இதனால்த்தான் “எங்கோமான் அன்பர்க்கும் “நமக்கும்” வேறுபாடற்று, பொதுவாக வழங்கும் அருள் போல மழை பெய்யவேண்டும் என்ற செய்தியைக் கவிதை தருகிறது. இத்தன்மை பக்திக்கவிதை தான் சார்ந்த பொருண்மைத் தளத்தை எவ்வாறு சிறப்புறச் செய்கிறது என்பதை விளக்கி நிற்கிறது.
இக்கவிதையில்
(அ) மழைமேகம்
(ஆ) மின்னல்
(இ) இடி
(ஈ) வானவில்
(உ) மழைப்பொழிவு ஆகிய ஐந்து அம்சங்களும் முறையே சக்தியின் பின்வரும் அம்சங்களுக்கு உவமையாக்கப்படுகின்றன.
36 / செ. சுதர்சன்

(அ) சக்தி திருமேனியின் நீலநிறம் (ஆ) சக்தியின் சிற்றிடை (இ) சக்தியின் பாதத்தில் அணியப்பட்ட சிலம்பின் ஒலி (ஈ) சக்தியின் வளைந்த புருவம்
(உ) அருள் வழங்கும் தன்மை
இவ் உவமைகளைத் தனித்தனியே சுருக்கமாக நோக்குவோம்.
(அ) சக்தி திருமேனியின் நீலநிறம்
கவிதையில் மழைமேகத்தின் நிறம் கூறப்படுவதற்கு முன்பு “முன்இக் கடலைச் சுருக்கி” என்று கடல்நீர் ஆவியாகி மழை மேகமாகும் செய்தி கூறப்படுகிறது. அதாவது நீரியல் வட்டம் அறிவியலுக்குப் பொருந்த அறிமுகப்படுத்தப்படுகிறது. இதனையே திருப்பாவையும் "ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேறி” என்று கூறுகிறது. மாணிக்கவாசகர் கவிதையில் வரும் “சுருக்கி” என்ற சொல் 'கடல் குறைவுபடுமாறு நீரை முகத்தல்' என்ற பொருளைப் பொதிந்து வைத்துள்ளது. பின்னர் அவ்வாறு மேலெழுந்த மழை மேகத்தின் நிறத்திற்கு சக்தியின் திருமேனி உவமையாக்கப்படு கிறது. முன் இக் கடலைச் சுருக்கி எழுந்து உடையாள் என்னத் திகழ்ந்து' என்பதில் சக்தி திருமேனியின் நீலநிறம் வெளிப்படை யாகப் பேசப்படவில்லை. எனினும் மழைமேகத்தின் தன்மை நோக்கி அவ்வாறு கூறப்பட்டதாகக் கொள்வது பொருந்தும். இன்னும் சக்தி நீலநிறமுடையவள் என்று இலக்கியங்கள் கூறும் செய்திகளையும் இவ்விடத்தில் இணைத்துப்பார்ப்பது பொருத்தமானது.
நாவுக்கரசர் பதிகம் ஒன்று மைம்மலர் நீல நிறங் கருங் கண்ணியோர் பால் மகிழ்ந்தான்’ என்று கூறுகிறது. இவை முதலாய
37 / செம்புலம்

Page 21
செய்திகளையும் இணைத்துச் சக்தியின் நிறம் நீலநிறம் என்று கொள்ள வாய்ப்பு உள்ளது. எனவே, ‘மழைமேகமே!” என்று விளித்து “கடல்நீரை முகந்து கொண்டு மேல் எழுந்து சக்தியின் நீல நிறத் திருமேனிபோல விளங்குக” என்று கூறப்படுகிறது.
(ஆ) சக்தியின் சிற்றிடை
மழைமேகத்தின் நீலநிறத்தின் பின்னர் மின்னல் கூறப் படுகிறது. மின்னலைச் சக்தியின் சிறிய இடைக்கு உவமையாக்கு கிறார். ‘.எம்மை ஆளுடையாள் இட்டு இடையின் மின்னி. என்ற வரி இதனைக் காட்டுகிறது. திருப்பாவை கண்ணனது சக்கரத்தினை
554
மின்னலுக்கு உவமையாக்கும். அது “ஆழிபோல் மின்னி" எனக் கூறும். மாணிக்கவாசகர் மின்னலைச் சக்திக்கு உவமையாக்குவது இலக்கியமரபு சார்ந்தது. ‘மின்னிலங்கு நுண்ணிடையாள் பாகத் தாரும்” என்று திருநாவுக்கரசர் பதிகம் கூறுகிறது. எனவே, மாணிக்க வாசகர் கவிதையிலும் “சக்தியின் சிறிய இடைபோல மின்னல் மின்னுக” என்று கூறப்படுகிறது.
(இ) சக்தியின் பாதத்தில் அணியப்பட்ட சிலம்பின் ஒலி
மின்னல் மின்னிய பின் இடி கேட்கும். எனவே கவிதை ‘. எம்பிராட்டி திருவடிமேல் பொன் அம் சிலம்பில் சிலம்பி. என்று தொடர்கிறது. ஆண்டாளின் திருபாவை இடியினை “வலம்புரி போல் நின்றதிர்ந்து” என்று கூறும். மாணிக்கவாசகரின் கவிதை “எம்பிராட்டியாகிய சக்தி தமது அழகிய பாதத்தில் அணிந்த பொன்னால் செய்யப்பட்ட அழகிய சிலம்பு போல ஒலிக்குக” என்று மழை மேகத்தை வேண்டுவதாய் அமைந்துள்ளது. மேகத்தின் இடி முழக்கம் சக்தியின் திருவடியில் உள்ள சிலம்பின் ஒலிக்கு உவமிக்கப்படுகிறது. சக்தியின் காலில் சிலம்பு உள்ளது என்பதும் சமய இலக்கிய மரபு சார்ந்தது.
38 / செ. சுதர்சன்

(ஈ) சக்தியின் வளைந்த புருவம்
மழைமேகம் மின்னலையும் இடியையும் மட்டுமல்லாது அதன் தொடர்ச்சியாக வானவில்லையும் விரிக்கும் தன்மையுடையது. வானவில் கவிதையில் 'திருப்புருவம் என்னச் சிலைகுலவி என்ற வரியின் மூலம் சக்தியின் புருவத்துக்கு உவமையாக்கப்படுகிறது. (சிலை - வில், குலவி - வளைத்து) திருப்புருவம் என்னச் சிலை குலவி என்பதில் சக்தியின் புருவம்போல வானவில்லை வளைக்குக என்று கூறப்படுகிறது.
(உ) அருள் வழங்கும் தன்மை
முன்பு குறிப்பிட்ட நான்கு உவமைகளும் செயல் நிகழ்வின் ஒழுங்குக்கு அமைவாக வைக்கப்பட்டு இறுதி உவமை மூலம் மழைப்பொழிவின் தன்மை கூறப்படுகிறது. அருள் மழைபோலப் புவியில் மழைபொழிய வேண்டும் என்ற இந்த உவமை கவிதை முழுவதும் வியாபித்து நிற்கிறது. கவிதைகூறும் முக்கியமான உவமையும், முதன்மைச் செய்தியும் இதுவே எனலாம்.
.நம் தம்மை ஆளுடையாள்
தன்னில் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கும் முன்னி அவள் நமக்கும் முன் சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழை . இப்பகுதியில் வரும் உவமை கவிதையின் சாரத்தைக் கொண்ட மைந்தது. இந்த உவமையும் அதற்குரிய உவமிக்கப்படுகின்ற பொருளையும் கூறுவதற்குக் கவிதையின் ஆரம்பத்திலிருந்து பொருட்தொடர்ச்சிக்கு இயைபாக நான்கு உவமைகள் அமைக்கப் பட்டுக் கவிதை வளர்க்கப்பட்டுள்ளது. நான்கு செயல்களின் பின்னர் வரும் ஐந்தாவது செயலும் (மழைப் பொழிவு), நான்கு
39 / செம்புலம்

Page 22
உவமைகளின் பின்னர் வரும் ஐந்தாவது உவமையும் (அருள் வழங்கும் தன்மை) கவிதையில் உயிர்த்துவத்தைப் பேணுகின்றன. இது நன்கு தேர்ந்த கவிஞன் ஒருவனின் படைப்பாளுமையையும் காட்டிநிற்கிறது.
நம்மை அடிமையாக உள்ள அச்சக்தியினின்றும் பிரிதல் இல்லாத எங்கள் தலைவனாகிய இறைவனது அடியவர்களுக்கும் பெண்களாகிய எமக்கும் அவள் திருவுளம் கொண்டு முந்திச் சுரக்கின்ற இன்னருளைப்போல மழையைப் பொழிவாயாக’ என்று கூறப்படுகிறது. “தன்னிற் பிரிவிலா எங்கோமான்” என்பது சக்தி யினின்றும் பிரியாத இறைவனை மட்டுமல்லாது இறைவனை விட்டுப் பிரியாத சக்தியையும் காட்டுகிறது. இக்கவிஞரின் பிறிதொரு கவிதையில் வரும்,
'உடையாள் உன்தன் நடு இருக்கும்
உடையாள் நடுவுன் நீ இருத்தி'
என்ற தொடர் இவ்விடத்தில் ஒப்பிடத்தக்கது.
கவிஞர் பெண்ணாகத் தம்மைப் பாவனை செய்து பாடும் இக்கவிதையில் “நமக்கும்” என்பது “பெண்களாகிய நமக்கும்” என்ற பொருளில் வருகிறது. "ஆள் உடையாள்” என்பதில் உள்ள "ஆள்" என்பது பல்லவர் காலத்தில் அடிமையைக் குறிக்கும் சொல்லாக இருந்தது. எனவே, பக்தி நிலையில் இறைவிக்கு ஆன்மா அடிமை யாகிய நிலையையும் அந்தப் பக்திசெய் அடிமையைத் தம் உடைமை யாகக் கொண்ட சக்தியின் நிலையையும் அறியமுடிகிறது. “சக்தியின் இன்னருள் உயிருக்கு உய்தி அருளுவது போல மழை மேகமே நீ மழையினைப் பொழிந்து உலகைப் பாதுகாப்பாயாக’ என்ற தொனி
யோடு கவிதை முடிகிறது. அருள் அனுபவத்தைப்போல மழையினை
40 / செ. சுதர்சன்

நாடும் இயல்பையும், சக்தி திருவுளங்கொண்டு சுரக்கின்ற அருள் போல மழையும் தானே திருவுளங்கொண்டு பொழிய வேண்டும் என்ற தன்மையையும் கவிதை காட்டிநிற்கிறது.
இக்கவிதையில் சக்தி கூறப்படாது சக்தியின் கூறுகளான நீல நிறம், சிற்றிடை, பாதச் சிலம்பின் ஒலி, வளைந்தபுருவம், அருள் வழங்கும் தன்மை என்பவை மட்டுமே உவமையாக்கப் பட்டுள்ளன. சக்தியின் கூறுகளை உவமையாக்குவது சக்தியை உவமையாக்கு வதற்கு ஒப்பானது என்று கூறமுடியும். எனினும், இக்கவிதை ஓர் உவமைக் கட்டமைப்பினை உடையது என்ற வகையில் அவ்வாறு அமைதி காணமுடியாது. இதுபோலவே “மழை” என்ற அம்சத்தின் கூறுகள் கூறப்படுகின்றனவே அன்றி, மழை என்பது கவிதையில் பொதுவான அர்த்தத்தில் பயன்படுத்தப்படவில்லை. அதாவது, மழைமேகம், மின்னல், இடி, வானவில், மழைப்பொழிவு என்ற ஐந்தும் கூறப்படுகின்றன. மழை என்று பொாதுவாக கருதும் போது அதனுள் இவை ஐந்தும் அடங்கும் என்பது யாவரும் அறிந்ததே. எனவே, ஐந்து உவமைகளின் பிணைப்பின் மூலமாகவும், ஐந்து செயல்கனின் பிணைப்பின் முலமாகவும் வேறொரு அணியினை அரூபமாகக் கவிதை விரித்து வைக்கிறது. அவ் அணி உருவக அணி ஆகும். தண்டியலங்காரம்
"உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அஃது உருவகம் ஆகும்"
என்று கூறுகிறது.
இக்கவிதையில் உவமையாகிய பொருளையும், உவமிக்கப் படும் பொருளையும் தனித்தனியே வளர்த்துவந்து கவிதை முடிவுற்ற பின்னர் உவமையாகிய பொருளையும், உவமிக்கப்படும் பொருளை
யும் வேறுபாடு இல்லாது இரண்டும் ஒன்றே என்று தோன்றுமாறு
41 / செம்புலம்

Page 23
கருத வைக்கிற உருவக அணி அரூபமாக அமைந்திருப்பதை அறிந்துகொள்ள முடிகிறது. உவமையே உவமிக்கப்படு பொரு ளாகிய தன்மை, சக்தியே மழையாகிய தன்மையை உணர்த்தி நிற்கிறது. இது கவிதை அரூபத்தளத்தில் இயங்கும்போது ஏற்படும் அநுபவ அழகியல் சார்ந்ததாகும்.
இதுவரை இக்கவிதையின் அழகியல் அம்சங்களே நோக்கப் பட்டன. தொடர்ந்து இக்கவிதையின் தத்துவம்சார் அம்சங்களைச் சிறிது ஆராயலாம்.
பக்திக்கவிதை: தத்துவ மொழி
மாணிக்கவாசகர் சைவசித்தாந்த தத்துவத்தளத்தில் நின்றவர். அந்த வகையில் இக் கவிதையைச் சைவசித்தாந்த அடிப்படையில் நோக்குவதே பொருத்தமானது. இருப்பினும் சித்பவானந்தர் முதலியோர் வேதாந்த அடிப்படையிலும், சுந்தர மாணிக்கேஸ்வரர் முதலியோர் யோகக் கருத்தியலின் அடிப்படையிலும் இக்கவிதைக்கு விளக்கம் கொடுத்துள்ளனர். பல்வகை விளக்கங்களுக்குமேற்ப இக்கவிதை அமைந்திருப்பதே சிறப்பிற்குரியது. சைவசித்தாந்த அடிப்படையில் இக்கவிதையை நோக்கியவர்களுள் மு.கதிரேசுச் செட்டியார் குறிப்பிடத்தக்கவர். அவரது கருத்தைப் பெரிதும் பின்பற்றி இப்பகுதி அமைக்கப்படுகிறது.
இக்கட்டுரையிலும் சைவசித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டே நோக்கப்படுகிறது. இன்னும், இக்கவிதை பசுவாகிய உயிர் ஒன்றின் ஆன்ம அனுபவ வெளிப்பாடு என்ற வகையில் சைவசித்தாந்தம் பேசும் உயிரின் நிலைகள் பற்றி மட்டுமே இக் கட்டுரையில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இந்த உயிர் நிலைகளுக்கேற்ப அமையும் சக்தியின் வெவ்வேறு நிலைகளும் கட்டுரையில் குறிப்பிடப்படும்.
42 / செ. சுதர்சன்

சைவசித்தாந்தம் உயிரின்நிலைகளை
(9) C3566)lf
(ஆ) சகலம்
(இ) சுத்தம்
என மூவகைப்படுத்தும். இம் மூன்று நிலைகளையும் இக் கவிதையில் எவ்வாறு காணமுடியும் என்பதை தனித்தனியே நோக்கலாம்.
(அ) கேவலம்
கேவலநிலை என்பது உயிர் ஆணவத்தோடு மட்டும் கூடிய நிலை. இந்நிலையில் உள்ள ஆன்மாவுக்கு உடம்பு இல்லை. உயிர் தனது படைப்புக் காலம் வரும்வரையும் மாயாகாரணத்திலே ஒடுங்கி ஆணவ மலத்தாலே மறைக்கப்பட்டு ஒன்றுமே அறியாதபடி இருக்கும் நிலையே இது. கேவலநிலையில் இருக்கும் உயிர்த் தொகுதிகளைத் தமக்கு உடைமையாகச் சக்தி கொண்டிருப்பதால் கவிதையின் முதல் வரியில் 'உடையாள்' என்று குறிப்பிடப் படுகிறாள்.
(ஆ) சகலம்
சகலநிலை என்பது படைக்கப்பட்டது முதல் உயிரானது உடல், கரணம் முதலியவற்றைப் பெற்றுப் பிறந்து உழலும் நிலையாகும். ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களுடன் கூடிய நிலையே இது. கேவல நிலையில் வினை சூக்கும வடிவில் இருக்க, இந்நிலையில் வினை அநுபவிக்கும் நிலையில் இருக்கும். இந் நிலை யில் உள்ள உயிர்களுக்குத் தனு, கரண, புவன, போகங்களைத் தந்து சிறிது அறிவு விளங்கச்செய்து அவ்உயிர்களை ஆட்கொள்ளு வதற்குரிய தகுதியை ஏற்படுத்துவதால் சக்தி கவிதையின்
43 / செம்புலம்

Page 24
இரண்டாவது வரியில் “எம்மை ஆளுடையாள்" என்று குறிப்பிடப் படுகிறாள்.
(இ) சுத்தம்
சுத்தநிலை என்பது உயிர் திருவருளாலே இருவினையொப்பு, மலபரிபாகம் முதலானவை ஏற்பட்டு சத்திநிபாதநிலையை அடைந்து வினைநீங்கிய நிலையில் இறைவன் திருவருளோடு கூடிப் பேரின்புறும் நிலையாகும். சக்தியானவள் உயிர் சிவத்தோடு கூடி இன்புறுவதற்கு உதவி புரியும் தன்மையினால் எம்பிரானாகிய சிவனுக்கு இணையாக்கப்பட்டு “எம்பிராட்டி’ என்று மூன்றாவது வரியில் தலைவியாக்கப்படுகிறாள். சுத்தநிலை ஆன்மா உடலோடு உள்ளபோது, மாணிக்கவாசகருக்குக் கைகூடியது என்பது சமய வரலாற்றுச் செய்தி. இந்நிலை உடல் அற்றுப்போன பின்னரும் ஏற்படலாம்.
இவ்வாறு முதல் வரியில் 'உடையாள்’ என்பதன் மூலம் உயிரின் கேவலநிலையும், இரண்டாவது வரியில் 'எம்மை ஆளுடையாள்” என்பதன் மூலம் உயிரின் சகலநிலையும், மூன்றா வது வரியில் “எம்பிராட்டி” என்பதன் மூலம் உயிரின் சுத்த நிலையும் ஒழுங்குமுறையாகக் குறிப்பிடப்படுகின்றன. அத்துடன் அந்நிலை களில் சக்தியின் செயற்பாட்டினையும் அறிந்துக்கொள்ள முடிகிறது.
இவற்றைவிட இக்கவிதையில் வரும் ஒவ்வொரு அம்சங்களை யும் சைவசித்தாந்த நிலைப்படுத்தி விளக்கமுடியும். உதாரணமாக, “முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்து" என்பது சக்தியின் அருள் சூல் கொண்ட நிலையையும், "இட்டிடையின் மின்னி" என்பது ஒளியாகிய விந்துத் தத்துவத்தையும், "திருவடிமேற் பொன்னஞ் சிலம்பிற் சிலம்பி” என்பது ஒலியாகியநாத தத்துவத்தையும் குறித்து நிற்பதைக்
44 / செ. சுதர்சன்

கூறமுடியும். "எங்கோமான் அன்பர்க்கும்” என்பதில் வரும் "அன்பர்' என்பது சுத்தநிலையில் உள்ள ஆன்மாக்களையே குறித்து நிற்கிறது. மாணிக்கவாசகர் அந்நிலையினை அடைந்திருந்தாலும் அவர் எப்போதும் தன்னைத் தாழ்த்தி அந்நிலையை அடைய அருளுமாறு வேண்டுவது தன் உயிர் நிலையினைத் தானே தகுதியின்மை உடையதாகக் கருதுவதாலேயே ஆகும். "எங்கோமான் அன்பர்’ நிலையிலிருந்து உயிர் தகுதி வேறுபாடுகாட்டித் தம்மைக் குறைத்து ‘நமக்கும்" என்ற சொல்லைக் கவிதையில் பயன்படுத்துகிறார். இவ்வாறு சைவசித்தாந்தக் கருத்தியலுக்கேற்ப இக்கவிதையை விரித்துச் செல்லமுடியும்.
இவ்வாறு மாணிக்கவாசகரின் கவிதை, அநுபவத் தளத்தில் அவரைப் பக்தன் - மகா கவிஞன் - தத்துவஞானி என்ற மூன்று புள்ளி களில் இணைக்கிறது. இம்மூன்று புள்ளிகளின் சங்கமமே அவரது கவிதைகள். நா. சுப்பிரமணியன் அவர்களின் கூற்றொன்று இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.
“நமது சராசரி புலனறிவிற்கும் சிந்தனை மற்றும் உணர்வுநிலை என்பவற்றுக்கும் அப்பாற்பட்ட ஓர் உயர்ந்த உணர்வுத்தளத்தில் அவர் உலா வருகிறார். ஒரு பக்தன் என்ற வகையிலும் கவிஞன் என்ற வகையிலும் மட்டு மல்லாமல் தத்துவஞானி என்ற வகையிலும் தமிழ் இலக்கிய உலகில் சிகரத்தில் நிற்பவர் அவர்”
இவை யாவற்றையும் தொகுத்து நோக்கும்போது பொதுவாக பக்திக் கவிதை என்பது அழகியல் மொழி, தத்துவ மொழி இரண்டினையும் தன்னகத்தே கொண்டுள்ளது எனக் கூறமுடியும். இவ் இரண்டும் இணைந்த அநுபவமே பக்திக் கவிதை தரும் அநுபவம். பக்திக் கவிதை பேசா அநுபூதியை மொழியில் தருகிறது.
45 / செம்புலம்

Page 25
அழக்குறிப்புகள்
l.
2.
8.
திருவாசகம் - திருஎம்பாவை: 16.
திருப்பாவை: 4. திருநாவுக்கரசு நாயனார் - தேவாரத் திருப்பதிகங்கள் 89:5,
திருப்பாவை: 4. திருநாவுக்கரசு நாயனார் - தேவாரத் திருப்பதிகங்கள் 272:10.
திருப்பாவை: 4. திருவாசகம் - கோயில் மூத்த திருப்பதிகம்: 1.
தண்டியலங்காரம் : 35.
சுப்பிரமணியன், நா., (2006) நால்வர் வாழ்வும் வாக்கும் சென்னை : கலைஞன் பதிப்பகம். ப.172.
46 / செ. சுதர்சன்

3
பாரதியின் ‘அக்கினிக் குஞ்சு? ஒரு சமூகவியற் பார்வை
யுகப் பெருங்கவிஞன் மகாகவி பாரதி ஆன்மீகம், சமூகம் என்ற இரு தளங்களையும் நன்கறிந்து புத்தூக்க சிந்தனை கொண்டு அவை இரண்டையும் இணைத்து இந்தியச் சமூகத்தின் முன்னேற்றத் திற்காகப் பயன்படுத்தியவன். இதனால் அவனது பாடல்களிலும் சமூகம் ஆன்மிகம் என்ற இரு பரிமாணங்களைக் காண முடிகின்றது. இந்திய மக்கள் அவரைத் தேசியக் கவிஞர் என்றே அறிந்திருக் கின்றனர். அவருக்கு வழங்கப்பட்ட இந்தப் பட்டயம் அவருடைய படைப்புக்களின் அடிப்படையான உள்ளோட்டத்தை உணர்ந்தே வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
பாரதியின் ‘அக்கினிக் குஞ்சு' என்ற பாடல் ஐந்து வரிகளை மட்டுமே கொண்டது. ஆனால் பல்வேறு ஆழமான அகலமான பொருள்களைச் செப்பி நிற்பது அப்பாடலின் விந்தை. நெருப்பென்றால் தோன்றும் நெடும்பயத்தைவிட்டு புதியதொரு சொல்லை உருவாக்கித் தருகிறான், பாரதி. தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தில் அக்கினியைக் குஞ்சாகச், செல்லக்குழைவோடு,
47 / செம்புலம்

Page 26
மகிழ்ந்து வியக்கத்தக்கவகையில் புதியதொரு சொல்லை முதலில் உருவாக்கித் தருகிறான். பாரதியின் குறியீட்டுக் கவிதைகளின் மகுடமாக 'அக்கினிக் குஞ்சு' என்ற கவிதையை விமர்சகர்கள் குறிப்பிடுவர். அக்கினிக் குஞ்சு என்ற கவிதையைச் சமூகவியற் பின்னணியில் வைத்துப் பார்க்கவே இக்கட்டுரை முயலுகிறது.
இலக்கியம் பற்றிய சமூகவியற் பார்வை என்பது இலக்கிய கர்த்தாவின் சூழல், பின்னணியை வைத்துக்கொண்டு அவனது கலைப் படைப்பை ஆராயும் முறைமையாகும். பாரதி வாழ்ந்தகாலம் இந்திய விடுதலைப் போராட்டத்தின் உச்சநிலைக் காலம். கி.பி.1900 - கி.பி. 1947 வரையான காலப்பகுதியே இந்திய விடுதலைப் போராட்டத்தின் உச்சநிலைக் காலமாகக் கருதப்படுகிறது. பாரதி 1882 இல் தோன்றி 1921ல் மறைந்தவன். எனவே பாரதியின் இலக்கியப் புரட்சி இந்திய விடுதலைப் போராட்டத்தின் உச்சநிலைக் காலத்திலேயே நடைபெறுகிறது. பாரதி காலத்துப் பாரதம் ஆங்கிலேயர் வசம் இருந்தது.
பாரதியிடம் பாரதத்தின் சுதந்திரத்துக்காகப் போராட வேண்டும் என்ற சிந்தனை வேரூன்றியது. வந்தே மாதரம், அந்நியப் பொருள் பகிஷ்காரம், சுதேசி இயக்கம் ஆகிய மூன்று தாரக மந்திரங்களும் வங்காளத்திலிருந்து தமிழகத்திற்கு வந்து சேர்ந்தன. இன்னும் ரவீந்திரநாத்தாகூரின் இலக்கியத்திறனும் வ.வே.சு. ஐயர் முதலி யோரின் புரட்சித் திறமும் பாரதியை மிகவும் பாதித்தன. ஷெல்லி, பைரன் முதலிய ஆங்கிலக் கவிஞர்களின் சுதந்திர நெறியும் பாரதி யைக் கவர்ந்தது. இக்காரணிகளால் உந்தப்பட்ட பாரதியார் தேச விடுதலைக்கான தனது பங்களிப்புக்காக எழுதுகோலைத் தூக்கினார். அவரின் பாடல்களில் தேச விடுதலையே மேலோங்கி யிருந்தது. பாரதியின் பாடல்களில் மட்டுமல்ல அக்காலத்தில்
48 / செ. சுதர்சன்

நடைபெற்ற அனைத்து முயற்சிகளிலும் செயல்களிலும் தேச விடுதலையே காலூன்றி நின்றது.
அந்தணர் வளர்க்கும் செந்தழல் தன்னிலும் நாட்டபிமானம் உள்மூட்டிய சினத்தீ அன்றோ வானோர்க்கு என்றுமே உவப்பு' என்ற மனோன்மணியத்தின் வரிகள் இதை மேலும் உறுதிப்படுத்தும். இத்தகைய பின்னணியின் அடிப்படையிலேயே பாரதியின் அக்கினிக் குஞ்சு என்ற குறியீட்டுக் கவிதையை நோக்குதல் வேண்டும். பாரதியின் அக்கினிக் குஞ்சு கவிதை வருமாறு.
'அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு; -தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ? தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்."
அக்கினிக்குஞ்சு கவிதை படித்து முடித்தபின்புதான் ஆரம்பமாகிறது. நம் மனதில் அகலமான தேடல் தொடங்குகின்றது. ஆழமானதும் கூட. இப்பாடலை நேரடியாக நோக்கும்போது நமக்குக் கிடைக்கும் பொருள் யாது? சிறிய நெருப்பு ஒன்றைக் காட்டினில் உள்ள ஒரு பொந்தில் வைத்தலும் அதன்ால் காடு எரிந்து சாம்பலாவதும், காடு எரிந்ததால் ஏற்படும் மகிழ்ச்சியும், சிறிய நெருப்பின் தீவிரசக்தி பற்றிய வியப்புமே ஆகும். ஆனால், இது ஒரு குறியீட்டுக் கவிதை என்ற வகையில் அது நமக்குத் தரும் வேறு பொருள் யாது என்பதனை நோக்குவது அவசியமாகிது. 'அக்கினிக் குஞ்சு' என்ற செல்லிற்கு வெவ்வேறு பெறுமானங்களைக் கொடுக்கும்போது அப்பாட்டின் பொருள் வேறுபடுவதைக் காண
49 / செம்புலம்

Page 27
முடியும். பாரதியின் அக்கினிக்குஞ்சு கவிதை எவ்வாறு சமூகவியற் பரிமாணம் பெறுகிறது என்பதை நோக்கலாம்.
பாரதி, பாட்டின் முதல் வரியில் 'அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்’ என்று கூறுகிறான். எவனொருவன் “கண்டேன்” அல்லது “கண்டுவிட்டேன்” என்று கூறுகிறானோ அவன் ஏதோ ஒன்றைத் தேடித் திரிந்திருக்க வேண்டும் என்பது புலனாகும். இவ்வாறே பாரதியும் ஒன்றைத் தேடித்திரிந்து கண்டிருக்க வேண்டும். பாரத தேசமக்கள் “தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக்கெட்டு” நின்ற காலத்திலே தனது தேசத்தினதும், தேச மக்களினதும் சுதந்திரத்திற்கான ஆயுதத்தைத் தேடிக்கொண்டு திரிந்தவன், பாரதி. அந்தத் தேடுதலும் காணுதலும் அவசியமானதும்கூட. இந்தத் தேடுதலின் விளைவாக விடுதலைக்கான சிறந்த உயர்ந்த ஆயுதமாக ‘விடுதலை வேட்கையை அவன் கண்டெடுக்கிறான். அதை "அக்கினிக் குஞ்சு” என்று உருவகப்படுத்தி தனது கருத்தை அதன் மேல் ஏற்றி 'அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்' என்று கூறுகின்றான்.
அடுத்த வரியில் “அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்” என்கிறான். அவ்வரியில் “அதை” என்பது “அக்கினிக் குஞ்சைக்” (விடுதலை வேட்கையை) குறிக்கிறது என்பது எமக்குப் புரிகிறது. ஆனால் "அங்கொரு காடு” என்று எதைக் கூற விளை கிறான், ஏன் அப்படிக் கூறுகிறான் என்று நோக்குதல் அவசியமா கிறது. பாரதி பொதுநோக்கு உடையவன். முழு இந்தியாவையுமே தனது தாயகமாம் தமிழ்நாடாகக் கருதியவன். எனவே முழு பாரதத்தின் பிரதிநிதியாகத் தன்னை வரித்துக்கொண்டு உயர்ந்து நின்ற அவன் தனது தாய்நாடாகிய தமிழகத்தையே "அங்கொரு காடு” என்று சுட்டிக் குறிப்பிடுகிறான். ஆனால் "அங்கொரு நாடு” என்று குறிப்பிடாமல் “அங்கொரு காடு” என ஏன் குறிப்பிட்டான்
50 / செ. சுதர்சன்

என்று எண்ணத் தோன்றுகிறது. பாரதி காலத்துத் தமிழகம் இரண்டு வகையில் அடிமைப்பட்டுக் கிடந்தது. ஒன்று ஆங்கிலேயர் அடிமைப்படுத்தினர். மற்றையது, சாதி ஏற்றத்தாழ்வு, பெண்ணடிமை, பால்ய விவாகம், உடன்கட்டை ஏறுதல் என்று தமிழக மக்கள் தம்மைத்தாமே அடிமைப்படுத்தினர். (இத்தன்மை இரண்டும் பாரதம் முழுவதற்கும் பொருந்தும்) இதனால் பாரதி முதலில் தனது தமிழகத்தைச் சுட்டிக்காட்டி ‘அங்கொருகாடு” என்கிறான். “அங்கொரு காட்டில்” என்பது ‘அடிமைப்பட்ட தமிழகத்தில்” என்பதை உணர்த்தி நிற்கிறது.
பின்னர் ‘ஓர் பொந்திடை வைத்தேன்’ என்கிறான். இங்கே “ஓர்“ என்பது “ஒன்று” என்ற எண்ணிக்கைப் பொருளில் வந்தது. “ஓர்” என்ற சொல் “பொந்து” என்ற மெய்யெழுத்துடன் தொடங்கும் சொல்லின் முன் வராது. ஆனால் கவிஞர்களுக்கு அதை மாற்றிப் பயன்படுத்தும் உரிமையை இலக்கிய உலகு வழங்கியிருக்கிறது. எனவே “ஓர் பொந்து” என்பது ஒரு பொந்து, பொந்து ஒன்று எனவும் வழங்கலாம். பாரதி “பொந்து” என்று எதைச் சுட்டுகிறான்? பாரதி பாரத நாட்டின் அடிமையைத் தகர்ப்பதற்குத் தனது நாட்டில் உள்ள அடிநிலை மக்களிலிருந்து புரட்சி செய்கிறான். தமிழ்நாட்டில் மிகவும் கீழ்மைப்பட்ட அடிநிலைச் சமூகத்தையே அவன் “பொந்து” என்று கற்பித்துக் கூறுகிறான்.
மாற்றங்கள் அடிமட்டத்திலிருந்து கிளம்பும்போது தான் அவை நிரந்தரமாக இருக்கும். நன்மை தரும்’
என்ற டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி அவர்களின் கூற்று இங்கு குறிப்பிடத்தக்கது. பாரதி தமிழ்நாட்டின் அடிநிலைச் சமூகத்தைக்
குறிப்பிட்டான் எனில் எதற்காக அதைப் பொந்து எனக் கூறினான்?
51 / செம்புலம்

Page 28
பொந்தினுடைய தன்மை இருள் பொதிந்து இருத்தலாலே ஆகும். தனது கால அடிநிலைச் சமூகம் மேல்நிலைச் சமூகத்தால் சகல உரிமைகளும் மறுக்கப்பட்டநிலையில் இருட்தன்மை பெற்றிருந்த நிலையை மனங்கொண்டு அந்த இயல்பை அதே இயல்பொத்த பொந்திற்கு உருவகிக்கிறான். அடிமை நிலையில் இருப்பவர்களை உயிர் அற்றவர்களாகவும் பாரதி கருதுகிறான். எனவே “அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்” என்பதற்கு “விடுதலை வேட்கை என்ற நெருப்பை அடிமைப்பட்ட தமிழ் நாட்டிலுள்ள அடிநிலைச் சமூகம் ஒன்றில் வைத்தேன்’ என்று பொருள் கூறமுடிகின்றது.
அடுத்த வரியிலே ‘வெந்து தணிந்தது காடு' என்கிறான். இவ்விடத்தில் நாம் நோக்க வேண்டிய முக்கியமான ஒரு விடயம் உள்ளது. இதுவரை முதலிரண்டு அடிகளில் அக்கினிக்குஞ்சு ஒன்று, ஒரு காடு, ஓர் பொந்து என்று பேசிய பாரதி. இவ்வரியில் “வெந்து தணிந்தது ஒரு காடு” என்று கூறாமல் “வெந்து தணிந்தது காடு” என்றே கூறுகிறான். இது வரையும் முதலிரு வரிகளில் அவன் கூறியது, தனது தமிழ்நாட்டை மையப்படுத்தியே ஆகும். இப்பொழுது முழு இந்தியாவையுமே “காடு” என்ற சொல்லால் குறிப்பிடுகிறான். இக்கருத்து ஏற்புடைமை இல்லையென்றால் பாரதி முதலிலேயே வெந்து தணிந்தது ஓர் காடு' என்றோ ‘வெந்து தணிந்தது அக்காடு' என்றோ பாடியிருக்கலாம். ஆனால், அவன் அவ்வாறு பாடவில்லை. எனவே அவன் அதைத் திட்டமிட்டுத்தான் அமைத்திருப்பான் என எண்ணத் தோன்றுகின்றது. ஆகவே முதற் குறிப்பிடும் அங்கொருகாடு' என்பது தனது தமிழ்நாட்டையும் பின் குறிப்பிடும் “வெந்து தணிந்தது காடு" என்பது முழு இந்தியாவையும் குறித்து நிற்கிறது என்ற முடிவிற்கு வரலாம்.
52 / செ. சுதர்சன்

பாரதி பொந்தில் வைத்த தீ காட்டையே எரித்துவிட்டது என்று குறிப்பிடுவது பாடலில் தெரிகிறது. ஆனால் பாடலைப் பகுப்பாய்வு செய்யும்பொழுது அது இன்னொன்றையும் எரித்திருப்பது எமக்குப் புரிகிறது. அதுதான் “அங்கொரு காடு” என்பதாகும். இதைப் பின்வரும் உதாரணத்தின் மூலம் விளக்கலாம். சமையலறையின் அடுப்பங்கரையில் பற்றிய நெருப்பு வீட்டையே எரித்தது என்று கூறினால் அது சமையலறையையும் முற்றாகவே எரித்திருக்கும் என அனுமானிக்க முடியும். அதுபோலத் தமிழ் நாட்டின் அடிநிலைச் சமூகத்தில் ஏற்றிவைத்த விடுதலைத் தீ பாரதம் முழுவதும் பரவி அடிமைநிலையினை எரித்திருக்குமெனில் தமிழ் நாட்டின் அடிமை நிலையினையும் எரித்திருக்கும் என அனுமானிக்க முடியும். இங்கு சமையலறையில் பற்றிய நெருப்பு அழித்தல் சக்தியின் தன்மையை மட்டுமே கொண்டுள்ளது. பாரதி கூறும் நெருப்பு அழித்தல் சக்திக்கு அப்பால் நிகழும் ஆக்கல் சக்தியையும் பேசுகிறது.
வெந்து தணிந்தது என்ற சொற்களை நோக்குவோம். வெந்து என்ற சொல்லிற்கு ‘நெருப்பிலே எரிந்து எனவும் ‘எரிந்து சாம்பலாகி எனவும் அகராதிகள் விரித்துப் பொருளுரைக்கும். எனவே காடு நெருப்பில் எரிந்து சாம்பலாகியது என்ற நேரடிப் பொருள் கிடைக் கிறது. தணிந்தது என்ற சொல் ‘தணிதல்' என்பதன் இறந்தகாலச் சொல்லாகும். தணிதல்' என்பதற்குத் தாழ்தல்' என்ற பொருளும் உண்டு. தாழ்தல்' என்பதன் இறந்த காலம் தாழ்ந்தது எனலாம். எனவே தணிந்தது தாழ்ந்தது என்பன ஒரே பொருளிலும் வரும் என்பது தெளிவாகிறது. இவ் அம்சங்களைக் கருத்திற் கொண்டு வெந்து தணிந்தது என்பதற்குப் பொருள் கொண்டால் 'விடுதலை வேட்கைப் புரட்சியால் அடிமைத் தனங்கள் அழிந்து தாழ்ந்து போயின’ என்று கூற முடியும். விடுதலை வேட்கைப் புரட்சியால்
53 / செம்புலம்

Page 29
அடிமைத்தனங்கள் அழிந்து தாழ்ந்து போயின என்பதால் அவை முன்னர் உயர்நிலையில் இருந்தன என்பதும் தெளிவாகிறது.
உயர்நிலையில் இருந்த ஒன்று தாழ்ந்தது எனும்போது அதற்கு
என்பது சொல்லாமலேயே புரிகின்றது. எனவே அடிமை நிலை தகர்ந்து தாழ்ந்து போக பாரத மக்கள் எல்லோரும் உயர்நிலை பெறுகின்றனர். 'எல்லோரும் இந்நாட்டு மன்னர் ஆகின்றனர்.
உண்டோ? என்று வியக்கிறார். தழல்’ என்பது நெருப்பின் வேறுபெயர். பட்டினத்தார் “எரியத் தழல் மூட்டுவேன்” என்று கூறுவது இதை மேலும் உறுதிப்படுத்தும். ஆனால் “தழல்” என்பது இப் பாடலில் “வெம்மை’ என்ற பண்புப் பொருளைத் தாங்கியே வந்திருக்க வேண்டும். “தழல்” என்ற சொல்லை “வீரத்தில்” என்ற சொல்லோடு இணைத்து நோக்கும்போது இது தெற்றெனப் புலப்படும். "வீரம்” என்பதற்கு "வலிமை” என்ற பொருள் உள்ளது. எனவே “தழல் வீரத்தில்” என்பதை “வெம்மையின் வலிமையில்” எனப் பொருள் கொண்டால் “விடுதலை வேட்கையின் சக்தியில்” என்பது அது குறிக்கும் உள்பொருளாகித் தெளிவாகிறது. “தழல் வீரத்தில்” என்பதில் “அன்னமிட்ட மணிக்கரம் ஆணையிடில் அனலையும் விழுங்குவோம்" என்ற வேகமும் செறிந்திருக்கிறது.
‘குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ” என்பதை நோக்குவோம். "மூப்பு” என்பதற்கு “தலைமை” என்ற பொருள் உண்டு. தலைமை என்பதற்குப் பெரியவர், பெரிது போன்ற பொருள்கள் உள்ளன. இவற்றின் எதிர்ச் சொற்கள் சிறியவர், சிறிது என்பனவாகும். “தழல் வீரத்தில்’ வரும் “இல்” என்ற சொல் உடைமைப் பொருளிலேயே இவ்விடத்தில் நிற்கிறது. இதனால்


Page 30

'ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோ என்று"
என்ற பாரதியின் வரிகளே இதற்குத் தக்க சான்று. “அக்கினிக் குஞ்சு” கவிதைக்கும் இந்த நிலைப்பாடு மிகவும் பொருத்த மானதாகும்.
யைப் படைத்தார். தரிசு நிலம் என்ற கவிதை ஒரே நேரத்தில் பல விதமான அனுபவங்களைத் தரக்கூடியது. அக்கவிதையில் சமயரீதி யான தரிசுநிலத்தைக் காணலாம்; ஒழுக்கரீதியான தரிசு நிலத்தைக் காணலாம்; உள்ளுணர்வு ரீதியிலான தரிசு நிலத்தைக் காணலாம்; சமகால வாழ்க்கையின் உயிர்த்துடிப்பின் மூலத்தையும் காணலாம். இவ்வாறே பாரதியின் அக்கினிக் குஞ்சு கவிதையிலும் பலவிதமான அனுபவங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
57 / செம்புலம்

Page 31
அடிக்குறிப்புகள்
1. மனோன்மணியம். 4: 136 - 138.
2. மகாகவி பாரதியார் கவிதைகள், பல்வகைப்பாடல்கள்,
அக்கினிக்குஞ்சு
3. உதயமூர்த்தி.எம்.எஸ் (1996) ஆத்ம சிந்தனை,
சென்னை கங்கை புத்தக நிலையம், மகாகவி பாரதியார் கவிதைகள்
5. மேலது சுதந்திரப்பள்ளு; பல்லவி
58 / செ. சுதர்சன்

4.
மறுமலர்ச்சி இதழும் மஹாகவியின் படைப்புகளும்
ஈழத்திலே 1943ஆம் ஆண்டில் உருவாகிய தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிச் சங்கத்தின் வெளியீடே “மறுமலர்ச்சி” (1946 - 1948) எனும் இதழ் ஆகும். மறுமலர்ச்சிக் கால எழுத்தாளர்கள் பலரும் மறுமலர்ச்சியில் எழுதினர். மறுமலர்ச்சியில் கவிதை, சிறுகதை எனும் இரண்டினையும் எழுதிய சிலரில் மஹாகவியும் ஒருவராவார். இச்சிறு கட்டுரையில் 'மறுமலர்ச்சி’ இதழில் வெளியாகிய மஹாகவியின் படைப்புகள் பற்றி மட்டுமே நோக்கப்படுகிறது.
I மறுமலர்ச்சி இதழில் வெளியாகிய மஹாகவியின் படைப்புகள் அவ் இதழில் வெளியாகிய ஏனைய படைப்பாளிகளின் படைப்பு களுடன் ஒப்பிடும் போது எண்ணிக்கையில் மிகக் குறைவானவை. அந்த வகையில் மறுமலர்ச்சியில் மஹாகவியின் நான்கு கவிதை களும், ஒரு சிறுகதையும் வெளியாகியுள்ளன. இரவு, காதலுளம், காதலியாள் ஆகிய மூன்று கவிதைகளும் குறிப்பிடத்தக்கவை.
59 / செம்புலம்

Page 32
அத்துடன் அலையெடுத்த கடலென. எனத் தொடங்கும் தலைப் பிடப்படாத அட்டைப்படக் கவிதையையும் கவனத்திற் கொள்ளல் வேண்டும். மறுமலர்ச்சியில் வெளிவந்த அவரது சிறுகதை தூக்கணாங் குருவிக் கூடு என்பதாகும். கவிதைகள் 'மஹாகவி என்ற புனைபெயரிலும், சிறுகதை து.உருத்திரமூர்த்தி என்ற பெயரிலும் வெளியாகின. இப்படைப்புகளைக் கவிதைகள், சிறுகதை என்ற
வகையில் தனித்தனியே நோக்குவோம்.
II மஹாகவியின் “இரவு” என்ற கவிதை ஆடம்பரம் மிகுந்த பட்டணம் ஒன்றின் இரவுநேர அமைதியைப் பற்றியது.
'மஹாகவியின் ஆரம்ப காலக் கவிதைகளில் நகரமும் கிராமமும் எதிர் எதிர் நிலைகளாகக் கட்டமைக்கப் பட்டுள்ளன. நகரம் மனித வாழ்வுக்கு உகந்ததன்று. பொய் நாகரிகம் மிகுந்தது. மனித மனத்தை மரத்துப்போகச் செய்வது. பதிலாக, கிராமம் மனோரம்மியமானது. அதுவே முட்டொழிந்து வாழத்தக்க இன்பபுரி என்ற வகையில் “இரவு” என்ற கவிதையும் மஹாகவியின் ஆரம்ப காலக் கவிதைகளில் ஒன்றே என்று கூறத் தோன்றுகின்றது. 19ஆம் நுாற்றாண்டிலே மேலைத்தேயக் கவிதை அரங்கில் காணப்பட் கற்பனாவாதக் கண்ணோட்டத்தின் விளைவாகவும் சாதாரண ஒரு கிராம மனிதன் நகரத்தின் இரவு நேரத்தில் அனுபவிக்கும் அமைதியின் இலக்கியப் பிரதியாகவும் மேற்படி கவிதையை வாசிக்க முடியும். கிராமம், யாழ்ப்பாணம் செல்வேன், செல்லாக் காசு என்ற மூன்று கவிதைகளும் கிராமம் பற்றிப் பாடுகின்ற கவிதைகளில் முக்கியமானவை. இம்மூன்று கவிதைகளிலிருந்து “இரவு” என்ற
60 / செ. சுதர்சன்

கவிதை கிராமத்தின் அமைதியை மறைமுகமாகப் புரியவைக்கிறது என்று கூறமுடியும். பட்டணம் ஒன்றில் வசித்துவரும் கிராமத்துவாசி ஒருவர். தனது கிராமத்தின் அமைதியை இரவு நேரத்திலேயே பட்டணத்தில் அனுபவிக்கிறார் என்ற கருத்துப்படவே கவிதையை வாசிக்கமுடிகிறது. சிறப்பாகச் சொல்லப்போனால் மஹாகவி தனது அளவெட்டிக் கிராமத்தின் அமைதியைத் தான் கொழும்பில் வேலை செய்யத்தொடங்கிய ஆரம்ப காலத்தில் இரவு நேரத்திலேயே அனுபவிக்க முடிவதைக் கவிதையாக்கினார் எனலாம். பட்டணம் ஒன்றின் தன்மை மீதான சினப்பைக் கவிதையில் காணமுடிகின்றது. 1945-1958 வரை மஹாகவி கொழும்பில் திறைசேரியில் எழுது வினைஞராகக் கடமையாற்றிய போது இக் கவிதையை எழுதியிருக்க வேண்டும். ஆரவாரமிக்க அத்தகைய நகரத்தில் அமைதியை வேண்டித் தவிக்கும், அமைதி வந்தபின்னர் அதனை அனுபவிக்கும்
காணுதல் கவிதையின் தொனி எனலாம்.
பட்டணம் சன நடமாட்டம், ரேடியோ அறிவிப்புகள், வாகன
இரைச்சல்கள் என்பன நிறைந்தது. இவை கவிஞருக்குப் பகல்நேர அமைதியைக் குலைக்கிறது. இத்தகைய பகல் நேரத்தின் மீது எரிச்சல் ஏற்படுகிறது. இவ்வாறு இருக்கையில் இரவு வருகிறது. இரவின் வரவை எண்ணிக் கவி உள்ளம் களிக்கிறது கவிதை பிறக்கிறது.
"கூச்சலிடும் "ரேடியோ'க்
கூக்குரல்கள் ஒயவும்,
கூட்டம் போடும் மாந்தர் தம்
குகைகளிலே தூங்கவும்,
61/ செம்புலம்

Page 33
ஒச்சலின்றி வண்டிகள் ஒடுகின்ற வீதியில் ஒன்றுமின்றிப் போகவும் இரவு வந்து சேர்ந்தது*
பட்டணத்தின் ஆரவாரங்களை நாடிச்செல்லும் இயல்பிலிருந்து மாறுபட்ட உள்ளத்தினை இக்கவிதையின் தொடரும் பகுதியில் காணமுடிகிறது.
"பட்டணத்திலேயுள
u6Tuen'Queosomb G86) பாலைவனம் மீதிலே பால்மழை பொழிந்த போல் நட்டநடு “ரா’ வர நல்ல நேரம் வந்தது நாலு திசை தம்மிலும் நிம்மதி பிறந்தது' அடங்கிப் போன அமைதி தனக்கு மட்டுமல்லாது நான்கு திசைகளுக்கும் நிம்மதி கொடுப்பதாகக் கூறுகிறார். இரவு நேரம் தமக்குக் கொடுக்கும் அமைதியை அனைவருக்கும் பொதுமைப் படுத்திக் கூறும் பண்பையும் காணமுடிகிறது.
இத்தகைய இரவு நேரம் புதுமையானது என்பதையும, அமைதியின்; அழகை ரசிக்கும் கவிதை உள்ளம், அமைதி, அதற்குக் கொடுக்கும் ஆறுதல் முதலியவற்றையும் கவிதையின் இறுதிப்பகுதி புலப்படுத்துகின்றது.
62 / செ. சுதர்சன்

"சன்னல்களைச் சாத்தியச் சனமெலாம் உறங்கிட சலனமற்ற ராவில் இரு &m LDLDITs6|bg|L என்ன புதுமையில் இங்(கு) எத்திசையும் மெளனியாய் எழில் சிறந்திருக்குது ஆறுதல் கொடுக்குது'
மஹாகவி கொழும்பில் வேலை செய்த காலத்தில், அப்பட்டண வாழ்வில், கிராமத்தின் அமைதியைப் பகலில் காணமுடியாது தவித்து, இரவுநேரம் தரும் அமைதியை நிம்மதியாக அனுபவித் ததையே கவிதையாக்கினார் எனக் கருதமுடிகிறது.
மஹாகவியின் காதல் உள்ளம், காதலியாள் என்ற இரு கவிதைகளும் அகத்துறை சார்ந்தவை. மறுமலர்ச்சி இதழ்கள் சமுதாயத்தில் உள்ள அனைத்து அனுபவங்களையும் வெளிப்படுத்தும் படைப்புகளைக் கொண்டுள்ளன. அந்த வகையில் ‘காதல்’ என்ற பண்பினையும் அவை பாடுபொருளாகக் கொண்டுள்ளன. மறுமலர்ச்சிக் காலத்தில் மறுமலர்ச்சி இதழில் எழுதியவர்கள் அனைவரும் இளைஞர்களாகவே விளங்கினர். இந்த வகையில் இவர்கள் தமது பருவத்திற்கேற்ப, “காதல்’ என்ற உணர்ச்சியையும் கவிதையாக்கினார் எனக் கருதமுடியும்.
மஹாகவி, வரதர், யாழ்ப்பாணன், சாரதா போன்ற இளம் கவிஞர்கள் காதலைப் பாடுபொருளாகக் கொண்டு பல கவிதைகளை மறுமலர்ச்சி இதழில் எழுதியுள்ளனர். காதலுள்ளம், காதலியாள் என்ற இரு கவிதைகளை எழுதியபோது மஹாகவிக்கு
63 / செம்புலம்

Page 34
19 அல்லது 20 வயதாக இருந்திருக்கலாம் எனக் கருதமுடியும். (மஹாகவியின் காலம் 1927 - 1971, இரு கவிதைகளும் பிரசுரமான காலம் 1946, 1947), காதலுள்ளம் என்ற கவிதை உடல் ரீதியான, புற அழகு சம்பந்தப்பட்ட கவிதையாக அல்லாது உள்ளத்தின் ஆழ்ந்த அன்பின் வெளிப்பாடாக அமைந்து காணப்படுகிறது.
"கடல் மணலைக் குவித்தாற்போ லேயிருக்கும் கன்முலைகளைச்செதுக்கும் காலச்சிற்பி உடல்சோர வருகின்ற முதுமையாலே அதுவுந்தான் அழிகிறது முழுதாய் முற்றி வடிவாகப் பழுத்தபழக் கன்னமெல்லாம் வீழ்ந்தழுகித் தான்போகும் துடியைப் போன்ற, இடையுந்தான் இப்படியே இருக்கப்போவ(து) இல்லை! காமத்திற்கும் உண்டே எல்லை!
பாற்கடலில் ஆலமாம், கண்ணின்வேல்கள் பழுதாகும், பாயுமா, பின்னும்? தென்றற் காற்றலைக்கும் கருங்கூந்தல் முகிலும்என்றும் கார்முகிலாய் இருக்கமாட் டாது வெள்ளிக் காற்சிலம்பும் கைவளையும் கதைத்துக்கொள்ள கைவீசி வருகின்றாள், காலத்திற்குத் தோற்றுவிட்டால், நடை தளர்ந்து கையிற்கோலும் ஏற்றுவிட்டால், காமத்திற்கிடம் அங்கேது?*
என்றெல்லாம் புற அழகு நலன்களை விபரித்து அவற்றின் மீது கேள்வி எழுப்புகிறார். இந்த நலன்கள் யாவும் என்றோ ஒருநாள் அழியக்கூடியது.
64 / செ. சுதர்சன்

“மாதர் முகத்தை நினக்கிணை கூறுவர் வெண்ணிலாவே - அஃது வயதிற் கவலையின் நோவிற் கெடுவது
வெண்ணிலாவே' °
என்று வெண்ணிலாவே என்ற பாடற் பகுதியில் பாரதி குறிப் படுவது இவ்விடத்தில் ஒப்பு நோக்கத்தக்கது. மஹாகவியும் கால மிகுதியினால் கலையிழந்துபோவதை வெறுத்து இல்வாழ்க்கை என்பது மிகவும் சிரமம் என்பதை உணர்ந்து எத்தகைய துன்பம் நிறைந்த இல்வாழ்க்கைப்பயணம் என்றாலும் அப்பயணத்தில் ஒன்றாக இணைந்துவாழும் காதல் உள்ளமே வேண்டும் என்கிறார்.
“முத்திருக்கும் பவளத்தின் சிமிளில் மட்டும்
மயங்கிவிட்டால், அவற்றையெல்லாம் காலக்கள்வன் எத்திவிட்ட பின், ஆசை ஒழிந்து போகும்! ஆதலால் அணங்கேயுன் எழில்களெல்லாம் பத்தாதில் வாழ்க்கையிலே பயணம் போக “பாதையெது வானாலும் கஷ்டப்பட்டும் அத்தானும் நானுமாய்ப் போகவேண்டும்"
7
என்று சொல்லும் காதலுளம் அதுவும் வேண்டும்
"அதுவும் வேண்டும்’ என்பதால் ஏனையவையும் வேண்டும் என்று மறைமுகமாகத் தெரிவிக்கின்றார். இக்கவிதையில் உடல் அழகுசார் காதலை விடுத்து உள்ளத்து விருப்பிற்கான வேண்டுதலே முனைப்புப் பெறுகிறது.
"காதலியாள்” என்ற கவிதை காற்று வாங்குவதற்காகக் காலை யில் சோலையூடு பயணித்த ஒருவன் அழகிய பெண்ணொருத்தி நீரள்ள வருவதைக்கண்டு அவள் மீது காதல் கொள்வதும் இறுதியில்
65 / செம்புலம்

Page 35
அவள் அவனது காதலைத் தான் ஏற்றுக் கொண்டதாக வெளிப் படுத்துவதுமாக அமைந்துள்ளது. இக் கவிதையில் இயற்கை வருணனை, காதற் பெண் பற்றிய வருணனை என்பன சிறப்புற
அமைந்துள்ளன.
"கன இருட்டைக் கதிர் கிழிக்கக் காலையாக, கஷ்டமெல்லாம் மறந்துவிட, காற்று வாங்கும், நினைவொடு யான் சென்றிருந்தேன். சோலையூடு, நீள் நிழல்கள் நிலத்தினிலே கோலங்கீற, மனமுருகக் குயில்பாட, மயில்களாடும், மாமரங்கள் மலர்ந்து மணம் வீசுஞ்சோலை எனை மறந்து நடந்து செல, எந்தன் ஆகம் ஈர்த்தனைத்தாள் தென்றலவள். அந்த நேரம் வளைகின்ற இடையினிலே குடமொன்றேந்தி வார் குழலில் வாயவிழும் வசனம் ஏந்தி கிளிமொழியாள் என்னுடைய நெஞ்சைக் கிள்ளி
பட்சம் பொங்கக் கடைவிழியில் கருவண்டைச் செலுத்திக் காதல் கக்கவிட்டாள் காதலியாள்!
கண்டேன் இன்பம்"
என்று நிறைவுபெறுகிறது. இது முன்பு குறிப்பிட்ட காதற் கவிதையிலிருந்து வித்தியாசமானதாகத் தெரிகிறது.
'அலையெடுத்த கடலென என்று தொடங்கும் கவிதையை நோக்குகையில் இக்கவிதை பாரதியின் கவிதா விலாசம் பற்றியும், அனவது கவிதையின் செயல் வன்மை பற்றியும், பாரதிக்குத்
66 / செ. சுதர்சன்

தமிழர்கள் செய்ய வேண்டிய செய்கை பற்றியும் பேசுவதாக அமைகிறது. தமிழின் மறுமலர்ச்சியை விரும்பியவர்கள் பாரதியின் பாதையில் அதனை முன்னெடுக்க முனைந்தனர். அந்த வகையில் மறுமலர்ச்சியாளர்கள் பாரதியை அதிகம் முதன்மைப்படுத்தினர். ஈழத்து மறுமலர்ச்சிக் குழுவினரும் பாரதியை முதன்மைப் படுத்தினர். அவர்கள் பாரதியின் பாதையில் பயணித்தவர்களே
என்பதை அவர்களின் எழுத்துக்களிற் காணலாம்.
"மறுமலர்ச்சிக் கவிஞரான சுப்பிரமணிய பாரதியாரின் ஜனன தினத்தில் 'மறுமலர்ச்சி இதழைத் தமிழ் ரசிகர் களின் முன்பாகச் சமர்ப்பிக்கின்றோம். பாரதியின் நினைவு, நம்மைக் கைகொடுத்துத் தூக்கிவிடுகிறது, நிமது லகூழியப் பாதையிலே”
என்று பாரதிக்காக வெளியிட்ட இதழின் முகத்துவாரத்தில் கூறப்
படுவது அவதானிப்புக்குரியது. இந்தவகையிலேயே பாரதி பற்றி
மறுமலர்ச்சிக் கவிஞர்களும் பாடினார்கள்.
மஹாகவியும் பின்வருமாறு பாடுகிறார்.
"அலையெடுத்த கடலென் ஆற்றல் கொண்ட பாரதிக் கலைஞனின் கவிதை இக் காசினியெலாம் பெரும் ஒலிகிளர்த்த வேணும் - நாம் ஒன்றுபட்டு நின்று பல் சிலை செதுக்கி நாட்டுவோம், செந்தமிழர் நாடெல்லாம்"
67 / செம்புலம்

Page 36
இக்கவிதை அட்டைப்படத்தின் கீழ்ப் பகுதியிலே “மஹாகவி'
என்ற பெயரோடு பிரசுரமாகியது. இந்த இதழிலேதான் நாவற்குழியூர் நடராஜனும்
"கேட்டியோ! அன்றுன்னைக்
கீழ்மைப் படுத்திய
நாட்டிலே உன்கவி
நாதம் நிறைந்தது
ஈட்டிவேல் வாளெனத்
தீட்டிநீ விட்டசொற்
பாட்டினால் எம்தளைப்
பாரம் குறைந்தது. என்று எழுதியுள்ளார்.
எனவே, குறிப்பிட்டுக் காட்டிய மஹாகவியின் நான்கு கவிதை களும் நான்கு விதமாய் அமைந்துள்ளன. அத்துடன் கிராமப் பேச்சுத் தமிழையும் கவிதையோடு இணைத்து ஒருவித வாழ்வியல் அனுபவத் தைத் ஏற்படுத்துகின்றன. செய்யுள் என்பதிலிருந்து வேறுபட்டு அதாவது செய்யுள் மறைந்து கவிதை மேலோங்கி நிற்பதையும் காணமுடிகிறது.
மறுமலர்ச்சி இதழில் மஹாகவி எழுதிய சிறுகதை “தூக்கணாங் குருவிக் கூடு” என்பதாகும். மனிதனை உயர்திணை என்றும், ஏனைய உயிரினங்களை அறிணை என்றும் கூறுவது தொல்காப்பியர் வழிவரும் மரபு. உயர்திணையுடன் அஃறிணையை ஒப்பிட்டு, உயர்திணையே உயர்ந்தது என்று கூறும் இலக்கியங் களும் உள்ளன. தூக்கணாங் குருவிக் கூடு என்ற சிறுகதை ஒப்பீட்டின் அடிப்படையில் அஃறிணையே உயர்ந்தது என்று கூற முயலுகிறது.
68 / செ. சுதர்சன்

புளிய மரம் ஒன்றின் கீழ் பனையோலையால் வேயப்பட்ட சிறிய குடிசை. அதில் ஆறு பேர் கொண்ட குடும்பம். அன்று மழைநாள். குடும்பத் தலைவன் கடும்மழை பெய்யப் போவதை இயற்கையின் அறிகுறிகளால் அறிகிறான். அந்த மழைக்கு மரம் முறிந்து விழுந்து கொட்டில்கூட அழிந்து போகலாம் என்று அவன் எண்ணுகிறான். ஆனால், அதேநேரத்தில் பனையில் தொங்கிக் கொண்டிருந்த தூக்கணாங்குருவிக் கூட்டில் உள்ள குருவிகளின் நிலை பின்வரு மாறு காணப்படுகின்றது என்று ஆசிரியர் கூறுகிறார்.
‘தூக்கணாங் குருவிகள் மட்டும் சுகமாக ஒன்றின் இறகை
ஒன்று சொண்டினால் கோதிக் கொண்டிருக்கும்'
இதன் மூலம் பெய்யப் போகின்ற பெருமழைக்கு முன் அக் குருவிக்கூடும் குருவிகளும் எம் மாத்திரம்? ஆனால் மரணத்தின் விளிம்பிலும் அவை சந்தோசமாய் இருக்கின்றனவே! ஆறறிவுடைய மனிதனோ அஞ்சிஅஞ்சிச் சாகிறான் என்பதைப் புலப்படுத்த முயலுகிறார். மஹாகவிக்குக் கவிதை போலச் சிறுகதை கைவர வில்லை என்பதைப் புலப்படுத்த இச்சிறுக்கதையே போதுமானது. ஒரு சாதாரண வாசகன் கூட எழுத்தாளன் ஒருவனின் ஆரம்ப காலக் கிறுக்கலாக இக்கதை அமைந்துள்ளதை அறிந்துகொள்ள முடியும். ஆழ்ந்து வாசிப்பவர்கள் இதனைச் சிறுகதையே இல்லை என்று நிராகரித்தாலும், ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனாலும், “இன்னல், உழைப்பு, ஏழ்மை, அன்பு என்பவற்றைப் பாடுங்கள்” என்று கூறிய மஹாகவியின் உள்ளத்தை இக்கதையிலும் ஓரளவு காண முடிகிறது என்பதுவும் மறுக்க முடியாததுதான்.
என்வே, மறுமலர்ச்சி இதழில் வெளியாகிய மஹாகவியின் படைப்புகள் அவரது கனிவான மனப்பாங்கையும், கனத்த சமூகப் பார்வையையும், கனதியான இலக்கிய ஆளுமையையும் காட்டி நிற்கின்றன எனலாம்.
69 / செம்புலம்

Page 37
அழக்குறிப்புகள்
l.
2.
II.
12.
l3.
நுஃமான், எம்.ஏ., (ஜூன்-2003) ஒலை, மஹாகவியின் கிராமம், கொழும்பு:தமிழ்சங்கம். ப.15. மறுமலர்ச்சி (சித்திரை-1946) யாழ்ப்பாணம்: தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிச்சங்கம். ப.15.
மேலது
மேலது
மேலது (ஆடி-1946) ப.23. மகாகவி பாரதியார் கவிதைகள் - வெண்ணிலாவே:2. மறுமலர்ச்சி (ஆடி -1946) ப.23. மேலது (சித்திரை -1947) ப.38. மேலது (கார்த்திகை- 1948) முகத்துவாரம், ப.3.
மேலது ப.1.
மேலது ப.6.
மேலது (ஆணி -1946) ப.12.
மஹாகவி, 'பாடுங்கள் அத்தான்" 5 ; 7-8
70 / செ. சுதர்சன்

5
காமன் கூத்தின் கலைப் பயணம்
அனைத்துக் கலைகளினதும் தொட்டிலாகப் பெரும்பாலும் சமயச்சடங்குகளே அமைகின்றன. சடங்கு என்பது நம்பிக்கையின் அடிப்படையிலான செய்கைமுறையாகும். மனிதன் தனது இயல்பு ரீதியிலான சிந்தனைத் தளத்தினின்றும் மாறுபட்டு அல்லது விலகி ஓர் அதீத கற்பித ரீதியான கருத்தை உற்பத்திசெய்து கொள்கிறான். அது பெரும்பாலும் புறநிலை யதார்த்தத்திற்கு அப்பாலானதாக அல்லது அதனையே நிராகரிப்பதாக அமைந்துவிடும். இக்கற்பிதம் பாவனைப்படுத்தலின் போது சடங்காக மாறும். சடங்கு இயங்கி யலின் அடிப்படையில் கலையாக உருப்பெறுகிறது. இன்றுள்ள பல கலை வடிவங்கள் சடங்கிலிருந்து இவ்வாறான பயணத்தை மேற்கொண்டவையே.
ஈழத்தில் மலையகத்தில் ஆடப்படும் காமன்கூத்து சடங்கி லிருந்தான தனது கலைநோக்கிய பயணத்தில் எவ்விடத்தில் நிற்கின்றது என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இக்கட்டுரையானது முற்றுமுழுதாகக் காமன்கூத்துத் தொடர்பாக வெளிவந்த எழுத்துநிலை ஆதாரங்களை மட்டுமே அடிப்படையாகக்
71 / செம்புலம்

Page 38
கொள்கிறது. சடங்கிலிருந்து புறப்பட்ட காமன் கூத்தின் கலைப் பயணம் தொடர்பான ஓர் அறிமுகக் கட்டுரையாகக்கூட இது அமையலாம்.
காமன்கூத்து
காமன்கூத்துத் தொடர்பாக ஒரு சிலரே எழுதியுள்ளனர். இது வரை வெளிவந்த இக்கலை வடிவம் தொடர்பான எழுத்துக்கள் அனைத்தும் ஒட்டுமொத்தமான பண்பாட்டுப்பகிர்வை ஏற்படுத்த வல்லன. காமன் கடவுளிற்கான ஒரு வழிபாட்டு முறையாகவே காமன்கூத்து நிகழ்த்தப்படுகிறது. காமனுக்கென்று உருவங்களும் தலங்களும் இருப்பதுபோல அவனுக்கென்று வழிபாட்டு முறைகளும் உள்ளன. அந்த வழிபாட்டு முறைகளில் பிரதானமாகக் காமன்கூத்து விளங்குகிறது. காமன் ஒரு சிறு தெய்வமாகவும் காமன்கூத்து ஒரு பெரும் பண்டிகையாகவும் அவதானிக்கப் படுகிறது. காமன்கூத்தினைச் சிறு தெய்வம் ஒன்றிற்கான பெரு வழிபாட்டு முறையாகவே மலையகத்தில் பார்க்க முடிகிறது. இக் கூத்தின் பயில்நிலை அடிப்படையில் இவ்வாறு கூறுவது பொருத்த மானதாகப்படுகிறது.
சடங்கும் நாடகமும்
“காமன்கூத்து இன்று வரையும் பெரும்பாலும் பக்திசார்ந்த சடங்கு முறைகளைத் தன்னகத்தே கொண்ட கூத்து முறையாகவே பயிலப்பட்டு வந்துள்ளது. அதனால் அது இன்றும் கோயில் சார்ந்த சமயச்சடங்காகவே நடைபெற்று வருகிறது.” சடங்காக நிகழ்த்தப்பட்டு வரும் காமன்கூத்தானது எப்போது கலையாகிறது என்பதும் சடங்கில் உள்ள எவ்வெவ் அம்சங்களைக்
72 / செ. சுதர்சன்

கலை தன்னகத்தே கொண்டுள்ளது என்பதும் முக்கியமான வினாக்களாகும். அந்த வகையில் சடங்கிற்கும் நாடகத்திற்கும் இடையிலான ஊடாட்டத்தையும், அவை இரண்டும் எவ்வெவ் விடயங்களில் ஒன்றுபடுகின்றன என்பதையும் காமன் கூத்தை
அடிப்படையாகக் கொண்டு நோக்கலாம்.
நாடகம் ஒரு செய்தியினால் வடிவமைக்கப்பட்டிருப்பது போல காமன்கூத்தும் தொன்மக் கதைகளினால் கட்டமைக்கப்பட்டிருக் கிறது. தொன்மமே கலைக்கான மூல வித்து. காமன்கூத்தின் தொன்மத்தினைக் கந்த புராணத்தின் காமதகனப் படலமும் காமன் பற்றிய வாய் வழிவந்த மரபுக் கதைகளுமே கட்டமைக்கின்றன. செந்நெறி இலக்கிய மரபு, வாய்மொழி இலக்கிய மரபு என்ற இரண்டினதும் இறுக்கமான இணைப்புத் தன்மையே காமன்கூத்தின்
தொன்மம் எனக் கூறமுடியும்.
நாடகம் செய்து காட்டலின்போதே முழுமையடைகிறது. அது போலச் சடங்கின் தொன்மம் நிகழ்த்திக்காட்டுதலின்போதே முழுமையடைகிறது. காமன் கூத்தில் ரதிக்கும் காமனுக்கும் இடையிலான திருமணத்திலிருந்து பரமன் காமனை எழுப்புதல்வரை நிகழ்த்திக்காட்டப்படுகிறது. இத்தகைய நிகழ்த்திக்காட்டுதல் பெரும்பாலும் காமன் கூத்தில் பக்தி சார்ந்ததாகவே அமைகிறது. நேர்த்திக்காக இதனை நிகழ்த்தும்போது நிகழ்த்துபவர் தமது கோரிக்கையும் முழுமையடைவதாக நம்புகின்றனர்.
கலையோ சடங்கோ நம்பிக்கையின் அடிப்படையில் நிகழ்த்தப்படாதபோது அது பூரண அனுபவத்தைத் தராது. அரங்கில் நடப்பவை உண்மை என நம்புவதாலேயே அரங்கு தரும் அனுபவம் பூரணமானதாக அமைகிறது. அதுபோலவே சடங்கில் நடப்பவை
73 / செம்புலம்

Page 39
உண்மையென நம்புவதாலே சடங்கு தரும் அனுபவமும் பூரண மானதாக அமையும். காமன் கூத்தினைப் பொறுத்தவரையில் அதில் பங்குபற்றுவோருக்குரிய நம்பிக்கை என்பது பலனை அடிப்படை யாகக் கொண்டதாக அமைகிறது.
“காமன் கூத்தானது பக்திக்காகவும் நேர்த்திகளை நிறைவு செய்யும் பொருட்டும் பிள்ளைப்பேறு கருதியும் மணவாழ்வின் சிறப்பிற்காகவும் ஆடப்பட்டு வருகிறது.” என்பது நம்பிக்கையின் அடிப்படையில் அது நிகழ்த்தப் படுவதைக் காட்டி நிற்கிறது.
ஜோர்ஜ் தாம்சன் தனது ஆத்மசாரம் என்ற நூலில் உருளைக் கிழங்கு நடனம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். நியூசிலாந்திலுள்ள Maoris என்ற இனத்தவர்கள் உருளைக்கிழங்குச் செடிகளைக் கீழ்த்திசைக் காற்றிலிருந்து பாதுகாக்கவேண்டி இந்த நடனத்தை ஆடுவதாக அவர் குறிப்பிடுகிறார். இவ் உருளைக்கிழங்கு நடனத்தை இயற்கை யைக் கட்டுப்படுத்துகின்ற, இயற்கைக்குக் கட்டளையிடுகின்ற நம்பிக்கைசார் நிகழ்ச்சியாகப் பார்க்க முடியும். இதைப் போல காமன்கூத்து நிகழ்த்துகைக்கும் ஒரு காரணம் கற்பிக்கப்படுகிறது.
“ஒரு முக்கியமான காரணம் இக்கூத்துக்கு அடிப்படையாக அமைகிறது. மாசிமாதம் கடுமையான வெய்யியலில் தேயிலைச் செடிகள் வாடிக்கருகுவதுண்டு. எனவே, தொழிலாளர்கள் வேலையின்றித் திண்டாடுவர். இவ் வெய்யிலின் கொடுமையைத் தவிர்த்து மழை பெய்வதற் காகக் காமனை வழிபட்டுக் கூத்தாடுவது நெடுங்காலமாக
நடைபெற்று வரும் ஒரு செயலாகும்.
74 / செ. சுதர்சன்

இங்கும் சடங்கை நம்பிக்கையின் அடிப்படையில் நிகழ்த்தும் முறையே காணப்படுகிறது. உருளைக்கிழங்கு நடனம்போல் இவர் களும் உழைப்பு முறைக்கு நட்டம் வராதிருக்கவே காமன் கூத்தை ஆடுகின்றனர் எனக் கூறமுடியும். நடனமாடியவர்கள் இன்னும் புலனறிவு மட்டத்திலேயே இருந்ததால் யதார்த்த உலகம் தமது சித்தத்திற்கு அப்பால் சுயேச்சையான புறநிலை விதிகளுக்குக் கட்டுப்பட்டு இயங்குகிறது என்பதை அவர்கள் அறிந்திருக்க வில்லை.
இன்னும் உழைப்பு இயக்கத்தை மையமாக்கொண்டே சடங்கும் கலையும் நிகழ்த்தப்படுவதையும் இவ்விடத்தில் அறியமுடிகிறது.
நாடகத்திற்கும் சடங்கிற்கும் கற்பனை இன்றியமையாதது. நாடகத்தில் வரும் குறியீடுகளைக் கற்பனை நிறைந்த மனமே முழுமைப்படுத்துகிறது. அது போலவே சடங்கியல் அம்சங்களையும் கற்பனை நிறைந்த மனமே முழுமைப்படுத்துகிறது. காமன் கூத்திலும் அக்கூத்தினை நிகழ்த்துவோருக்கும் அதில் பங்கேற்போ ருக்கும் கற்பனை நிறைந்த மனம் அவசியமாகிறது. கம்பம் ஊன்றல் நிகழ்ச்சியில் ஊன்றப்படும் கம்பம் கூட ஒன்றின் பிரதிநிதியாகிறது. இதனைக் கற்பனை நிறைந்த மனம் முழுமைப்படுத்துவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
பாத்திரநிலைப்படுதல் பற்றிய கருத்தாடலின்போது இரு அம்சங்களை நாடகவியலாளர்கள் கூறுவர்.
1. பாத்திரத்தைச் செய்து காட்டுதல் 2. பாத்திரமாகவே மாறுதல்
நாடகத்தில் நடிகன் பாத்திரத்தை செய்து காட்டுகிறானா? அல்லது அவன் பாத்திரமாகவே மாறுகிறானா? என்ற வினாக்கள்
75 / செம்புலம்

Page 40
நீண்ட வாதப்பிரதிவாதங்களுக்கு நம்மை இட்டுச்செல்லும். இவ்விரு தன்மைகளும் பொதுவாகவே நாடகங்களுக்கு மட்டுமே உரியது. நடிப்பைப் பொறுத்தவரையில் நடிகனின் ஆளுமைக்குப் பங்கம் ஏற்படாத ‘பாத்திரத்தைச் செய்துக்காட்டுதல்’ ஆகும். நாடகம் என்பது போலச் செய்தலை அடிப்படையாகக் கொண்டது என்ற வகையில் ஒருவர் இன்னொன்றாக மாறுகிறார் என்பதைவிட ஒருவர் இன்னொன்றைச் செய்துகாட்டினார் என்பது அவர் தன்னில் இன்னொன்றைப் படைத்தார் என்ற கருத்துக்கு வலுச்சேர்ப்பதாக இருக்கும். எனவே பாத்திரமாக மாறுதல்’ என்பதைப் பூரணமான பொருளுடன் சடங்கிற்குக் கையளித்துவிடலாம். நாடகத்தை நிகழ்த்துவோர் ‘செய்து காட்டுகிறோம்' என்ற அடிப்படையில் நாம் இதனைச் செய்கிறோம் என்ற அடிப்படையில் தமது உணர்ச்சியை அறிவால் வழி நடத்தும் தன்மையைப் பெற்றிருப்பர். மாறாகச் சடங்கினை நிகழ்த்துவோர் உணர்ச்சியின் உச்சத்தில் தம்மையும் அறியாமல் சஞ்சரிப்பர். காமன் கூத்தில் இந்தநிலையை அவதானிக்க முடியும். இங்குதான் கண்ணாடி என்ற பொருள் தன்னுணர்வை ஏற்படுத்தப் பயன்படுகிறது.
“கூத்தில் பங்கு பெறுகின்ற பாத்திரங்கள் ஆடிக்கொண்டே போகும்போது பக்தியுணர்வும் அதிகரித்துக் கொண்டே செல்வதுண்டு. அதனால் ஆடுபவர்கள் சுய உணர்வை இழக்கின்றனர். எனவே, வெட்டப்போகும் ஆட்டைப்போல தலையசைத்துக் கொண்டு வேகமாகக் குதிக்கத் தொடங்கி விடுகின்றனர். பலபேர் அவரை மன்றாடிப்பிடித்தாலும் ஆடுபவர்கள் தமது நிலைக்குத் திரும்புவதில்லை. இவ்வாறான சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட அவர்களின்
76 / செ. சுதர்சன்

பழைய நிலைமையை நினைவுகூர்ந்து மருளை நீக்கவே கண்ணாடி பயன்படுத்தப்படுகிறது. “இது நான்” என்ற உணர்வைப் பெற்று பழைய நிலைக்குத்திரும்புவர். எங்கேயோ இருக்கும் நிலாவைக் கண்ணாடியில் பிடித்துக் கொள்வதுபோல எங்கேயோ பக்தியுணர்வால் சஞ்சரித்துக் கொண்டிருப்பவரை அந்நிலையில் இருந்து மாற்றிக் கண்ணாடி மூலமாகத் தம்நிலையை உணர்ந்து கொள்வதற்கு இது வழிவகுக்கும்" இக்கூற்று காமன்கூத்தில் பாத்திரநிலைப்படுதலின் உச்சத் தன்மையை விளக்கப்போதுமானது.
நாடகத்தில் இறந்தகால விடயம் ஒன்று நிகழ்காலத்தில் திரும்பத்திரும்ப நிகழ்த்திக் காட்டப்படுவது போலச் சடங்கிலும் முன்பு நடந்தவையே இப்போதும் செய்துகாட்டப்படுகிறது. காமன் கூத்தில் காமன் பற்றிய இறந்தகாலக் கதையே நிகழ் காலத்தில் திரும்பத்திரும்ப நிகழ்த்தப்படுகிறது.
ஆற்றுவோருக்கும் நுகர்வோருக்கும் இடையில் இருக்கின்ற கவர்ச்சி விசை சடங்கிலும் அரங்கிலும் முதன்மையானது. நாடகத்தில் இசை, ஒளி, ஒலி முதலிய அரங்கியல்சார் அம்சங்கள் அனைத்தும் பார்வையாளர், ஆற்றுவோர் ஆகிய இருவருக்கும் இடையிலான உறவை வலிமையாக்குவதாக அமைந்திருக்கும். அது போலவே காமன் கூத்திலும் அலங்காரங்கள் காமன், ரதி முதலியோரின் ஆட்டங்கள், பாடல்கள், வாத்திய இசைகள் முதலியன இதில் பங்குபற்றுவோரின் ஆர்வத்தைக் குறையாமல் வளர்க்கிறது. இதன் மூலம் இச்சடங்கில் அவர்கள்(பங்கு பற்றுவோர்) கரைந்து விடுகின்றனர்.
77 / செம்புலம்

Page 41
நாடகம் ஆரம்பம், உச்சம், முரண், முடிவு கொண்டமைந்த ஒரு கதையைத் தன்னகத்தே கொண்டிருக்கும். அதுபோலவே சடங்கும் காணப்படுகிறது. காமன் கூத்தைப் பொறுத்தவரையில் காப்புக்கட்டி கம்பம் ஊன்றுதலோடு ஆரம்பமாகி, ரதிக்கும் காமனுக்குமான தர்க்கத்தில் முரண்பெற்று, காமதகனத்தில் உச்சம் பெற்று, தோழிகள் சொல்லுதல், மகாவிஷ்ணு புலம்பல் என்பவற்றிலிருந்து இறக்கம்பெற்று வந்து, பரமன் காமனை எழுப்புதலோடு முடிவடைகிறது.
காமன் கூத்தா? காமன் சடங்கா?
காமன் கூத்து, காமன் சடங்கு என்ற சொல்லாடல்கள் இன்று வழக்கத்தில் உள்ளன. இன்று ஆய்வாளர்களில் ஒரு சாரார் காமன் கூத்து என்று சொல்வதே பொருத்தமானது என்பர். இன்னொரு சாரார் காமன் சடங்கு என்று சொல்வதே பொருத்தமானது என்பர். காமன் சடங்கு, காமன் கூத்து என்ற சொல்லாடல்களின் பின்புலத்தை அறியும்போது அக்கலைக்குரிய சரியான தளத்தை நிர்ணயிக்க முடியும்.
சடங்கு என்ற பேச்சின்போது செய்பவர், பங்குபற்றுபவர், நம்பிக்கை என்ற மூன்று அம்சங்களும் அவதானிப்புக்குரியவை. சமயச்சடங்குகளின் செயல்முறைகளுக்கு அடிப்படை இதிகாச புராண கர்ண பரம்பரைக்கதைகள் என்பதை முன்னர் நோக்கி னோம். மனித சிந்தனையில் ஏற்பட்ட மாற்றம், புதிய கண்டு பிடிப்புக்கள், தொழில்நுட்ப விருத்தி, பிறபண்பாட்டுத் தொடர்புகள் போன்ற இன்னோரன்ன காரணங்களால் ஒரு சமூகம் சடங்கில் கொண்டிருந்த நம்பிக்கைத்தன்மையை இழக்கிறது. இந்த நம்பிக்கைப் பிறழ்வின்போது சடங்கிலிருந்து நாடகம் மேற்
78 / செ. சுதர்சன்

கிளம்புகிறது. இது பொது நியதியாகும். இந்த இயங்கியல் நிகழ்வை எவரும் மறுக்கமுடியாது. இதன்போது சடங்கினைச் செய்பவர், அதில் பங்குபற்றுபவர், அதன் மீதான நம்பிக்கை என்ற கருத்துருவங்கள் உடைந்து நடிகர்கள்’, 'பார்வையாளர்கள்’, நாடகம்' என்பன உருப்பெறுகின்றன. சமூக இயங்கியலே கலை களின் இயங்கியலைத் தீர்மானிப்பதை இவ்விடத்தில் பொருத்திப் பார்க்க முடியும். இயங்கியல் தன்மையின் அடிப்படையில் சடங்கு கலையாகிறது என்று ஜோர்ஜ் தாம்ஸன் கூறிய பின்வரும் கூற்றும் இவ்விடத்தில் நோக்கத்தக்கது.
“சடங்கிலிருந்தே கலை வளர்கிறது. உணர்வு விழிப்புடைய கலைஞன் சடங்கு வடிவத்தை எடுத்து அதை வளர்க்கும் போது அது கலை வடிவமாகிறது. கலை இயங்கியல் தன்மையைக் கொண்டிருக்காவிட்டால் அது கலையாகவே
இருக்காது.”
இந்த வகையில் சடங்கு இயங்கியலின் அடிப்படையில் கலை வடிவமாக மாறுகிறது எனக் கூறமுடியும். இதன் போது Ritual என்பது Performing ஆக மாற்றமடைகிறது. சடங்கு ஆற்றுகைக் கலையாக, நாடகமாக மாறுகிறது.
இவ்வாறு சடங்கிலிருந்து நாடகம் மேற்கிளம்பும் போது ஓர் இடைமாறுகட்ட வடிவம் ஏற்படுகிறது. இந்த இடைமாறுகட்ட வடிவத்தை முழுமையாகச் சடங்காகவோ அல்லது முற்றுமுழுதாக நாடகமாகவோ கொள்ளமுடியாத நிலை ஏற்படுகிறது.
சடங்கு, நாடகம் என்ற இரண்டினதும் தன்மைகள் இந்த இடைமாறுகட்ட வடிவத்தில் காணப்படும். இந்த நிலையில்தான் அது கூத்து, சடங்கு என்ற இரு சொற்களாற் சுட்டப்படுகிறது.
79 / செம்புலம்

Page 42
காமன் தொடர்பான நிகழ்த்துகையினையும்; இந்தப் பின்னணியிலேயே நோக்கவேண்டும். இது முற்று முழுதாகச் சடங்கோ அல்லது முற்று முழுதாக நாடகமோ அல்ல. இது ஒரு இடைமாறுகட்ட வடிவம், சடங்கிலிருந்து நாடகம் நோக்கிப் பயணிக்கின்ற கலைவடிவம். இந்த நிலையில் உள்ள கலை வடிவத்தில் சடங்கின் தன்மைகளே அதிகம் காணப்படும் இத்தகைய நிலையிலேயே இது காமன்கூத்து, காமன்சடங்கு என்ற இரு பெயர் களாலும் சுட்டப்படுகிறது.
எனவே சடங்கிலிருந்து நாடகம் நோக்கிப் பயணிக்கின்ற, ஒரு இடைமாறுகட்ட நிலையில் உள்ள கலை வடிவமாகக் காமன் கூத்து முதன்மை பெறுகிறது. ஆதிச் சமூகத்தில் தொன்மமாக, அதீத கற்பனை சார்ந்ததாக இருந்த ஒன்று வர்க்கச் சமூகத்தில் கலையாக மாறிவருவதைக் காமன் கூத்தினை அவதானிக்கும்போதும் புலனாகிறது.
நாடகம் சார் சமயக்காரணம்
சி. மெளனகுரு நாடக வளர்ச்சியில் 3 படி நிலைகளைக் குறிப்பிடுவார்."
1. நாடகம் சார்ந்த சமயக் கரணங்கள் 2. சமயக் கரணங்கள் சார்ந்த நாடகங்கள் 3. சமயக் கரணங்கள் சாராத நாடகங்கள் இவற்றில் நாடகம் சார்ந்த சமயச்சடங்குகளை அவர் நான்கு வகைப்படுத்துவார். 1. மதகுருவே தெய்வமாக அபிநயத்து ஆடுகின்ற சமயச் சடங்கு
11. மதகுரு இயக்க இன்னொருவர் தெய்வமாக அபிநயத்து
ஆடுகின்ற சமயச் சடங்கு
80 / செ. சுதர்சன்

I, ஐதிகக் கதைகளை உள்ளடக்கிய சமயச் சடங்கு IV. நாடக நிகழ்ச்சிகள் தனியாகப் பிரியத் தொடங்கிய சமயச்
சடங்கு
இவற்றில் அவர் பாண்டிருப்பில் உள்ள திரெளபதை அம்மன் கோயிற் சடங்கையும், மலையகத்தில் நடைபெறும் காமன் கூத்தை யும் நான்காவது வகையினுள் அடக்குவார். திரெளபதை அம்மன் கோயிற் சடங்கினை இதற்குள் அடக்குவது பொருத்தமற்றது. அதனை ஐதீகக் கதைகளை உள்ளடக்கிய சமயச்சடங்கிற்குள் அடக்குவதே பொருத்தமானது. ஏனெனில் காமன்கூத்து ஓரிரு தடவைகளாவது; மேடையேற்றப்பட்டுள்ளது. வீ. எச். வேலு காமன் கூத்தை ஒரு மேடை நாடகமாகக்கூட எழுதியுள்ளார். திரெளபதை அம்மன் கோயிற் சடங்கு கலை என்ற நிலைக்கு ஓரளவு வந்து விட்டதா? என்பதும் இங்கு கேள்விக்குரியது.
திரெளபதை அம்மன் சடங்கில் கொடியேற்றச்சடங்கு, சமயம் எடுத்தல், சுவாமி எழுந்தருளப் பண்ணும் சடங்கு, நாற்கால் வெட்டும் சடங்கு, கல்யாணக்கால் வெட்டும் சடங்கு, வனவாசம் போகும் சடங்கு, தவநிலைச் சடங்கு, தீ மிதிப்புச் சடங்கு, பாற் பள்ளயச் சடங்கு முதலியன நிகழ்த்தப்படுகின்றன. காமன் கூத்தில் காப்புக்கட்டுதல், கம்பம் ஊன்றுதல், விநாயகர் துதி, ரதி-காமன் திருமணம், பெண்கள் காமனுக்குத் தம் நேர்த்தியை நிறைவு செய்தல், காமன் பொட்டலில் காமன்-ரதி ஆட்டம், காமன் -ரதி கல்யாண ஊர்வலம் வருதல், சிவனும் தவச்சாலையும், காமனைக் காண தூதன் வருதல், காமன் சிவனின் தவத்தை அழிக்க ஒப்புக்கொண்டமையை ரதிக்குக் கூறல், ரதி காணுதல், காமன் தூதனைச் சந்தித்துப் பெற்ற செய்தியைக் கூறுதல், ரதியின்
81 / செம்புலம்

Page 43
மறுமொழி, ரதி தேவிக்கும் காமனுக்கும் தர்க்கம், காமன் வசந்தனை அழைத்தல், காமன் கோணேசர் பூசை செய்தல், தோழிகள் சொல்லுதல், மகாவிஷ்ணு புலம்பல், பரமன் விருத்தம், பரமன் காமனை எழுப்புதல் முதலியன நிகழ்த்திக் காட்டப் படுகின்றன. ஆனால் காமன்கூத்து நாடகமாகவும், சடங்காகவும் மேடையேற்றப்பட்டும் நிகழ்த்தப்பட்டும் வருகிறது. திரெளபதை அம்மன் சடங்கு தனியே சடங்காக மட்டுமே நிகழ்த்தப்பட்டு வருகிறது. இதற்குப் பல சமூக பொருளாதார அரசியற் காரணங்கள் உள்ளன. ஆகவுே திரெளபதை அம்மன் சடங்கை நாடக நிகழ்ச்சிகள் தனியாகப் பிரியத் தொடங்கிய சமயச் சடங்கு என்ற வகைப்
பாட்டுக்குள் அடக்குவது பொருத்தமற்றது எனலாம்
எனவே காமன் கூத்து நாடகம் சார்ந்த சமயக்காரணங்களைக் கொண்டு நாடக நிகழ்ச்சிகள் தனியாகப் பிரியத் தொடங்கிய சமயச்சடங்காக விளங்குகின்றது. எனவே இடைமாறுகட்ட நிலையில் உள்ள கலைவடிவமாக விளங்குவதை இங்கு அதானிக்க முடிகிறது. சி.மெளனகுரு காமன்கூத்துப் பற்றிக் குறிப்பிடும்போது
இங்கு நாடகமானது சமயச் சடங்குடன் பின்னிப்பிணையாமல் மெல்லப் பிரிவதனை அவதானிக்கலாம்.” என்று கூறுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
yDipରଦ0DI
மலையகத்துக்கே உரிய தனித்துவமான கலை வடிவமாகிய காமன்கூத்து இன்று இலங்கையில் உள்ள தமிழர் கலை வடிவங் களில் இடைமாறுகட்ட நிலையில் உள்ள கலை வடிவமாகவும் மலையகச் சிறுதெய்வங்களில் ஒன்றாகிய காமன் தெய்வத்திற்கான
82 / செ. சுதர்சன்

பெருவழிபாட்டு முறையாகவும், சடங்கிலிருந்து கலை நோக்கியப் பயணிக்கும் சிறப்பு நிலையிலுள்ள வடிவமாகவும் காணப்படுகிறது. இது காமன் கூத்தின் சிறப்பினையும் அதனை நிகழ்த்தும் மலையகச் சமூகத்தின் பெருமையையுமே காட்டி நிற்கிறது.
83 / செம்புலம்

Page 44
அடிக்குறிப்புகள்
l.
ரவீந்திரன், சோதிமலர், (2004) காமன் கூத்தும் மலையகப் பாரம்பரியமும், கண்டி. மனோகரன்,துரை, (முன்னுரை) ப.
III.
மேலது. ப. IX.
மேலது. ப. 74.
ரவீந்திரன், சோதிமலர், மேலது. ப.123.
தாம்ஸன் ஜோர்ச், (2005) ஆத்மசாரம் அறிவியல், கலை ஆகியவற்றின் தோற்றுவாய்கள், கோயம்பத்தூர்: விடியல் பதிப்பகம். ப. 151.
மெளனகுரு, சி., (1993) ஈழத்து தமிழ் நாடக அரங்கு, யாழ்ப் பாணம்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், ப.8.
மேலது. ப.20.
84 / செ. சுதர்சன்


Page 45
பாடசாலையிலிருந்து பல்கை வரை தமிழைப் பயில்வோர். ୬, it iରା ରd (@, ଏ, ଓ, uid (@,
உள்ள கட்டுரைகள் ப
என்பதில் எவ்வித ஐயமு ஆய்வு நுணுக்கமும் ஆழமான கொண்ட இந் நூலில் உள்ள ஒவ்வொன்றும் புதியபா கொண்டுள்ளமை குறிப்பிடத்
பேராசிரியர் க. அருணாசல
ISBN 955-544-0-4
78 9555'OO 44 O 4
ിഭാi 20:00,
 
 
 
 
 
 
 

லக்கழகம் கும் தமிழ் நூ லி ல் ன் படும் இல்லை. பார்வையும்
பட்டுரைகள்
SS-OL i
தக்கதாகும்.
NA I 3 KB )