கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிறுவர் கவிச்சரம்

Page 1


Page 2

றுேவர் கவிச்சரி
காசிப்பிள்ளை வேலாயுதம் ്@ഞ്ചു ലൈരിu് காந்தன் இன்ம்ை, தேவரையானி, அன்வார் மேற்கு, அன்வாய்.
622-6242-267622.

Page 3
நூலின் பெயர் :- சிறுவர் கவிச்சரம்
நூல் வகை சிறுவர் பாடல்
நூலாசிரியர் - வதிரி கண-எதிர்வீரசிங்கம்
03-04-2009
பதிப்பு
வெளியீட்டாளர்: வே.புஸ்பமோகன் “கந்தன் இல்லம”
தேவரையாளி அல்வாய் மேற்கு.
அட்டைப்படம் - இன்பமலை நிசாந்
அச்சிட்டோர்
சிவேன் கணினிபதிப்பகம்
தேவரையாளி தொ.இல.0778331202
 

சிறுவர் பாடல் எழுதுதல் எளிதான பணியன்று. சிறுவரின் உளவிருத்திப் பருவம் நோக்கி, பொருத்தமான சொல் தேர்ந்து, ஓசை நயத்துடன் சந்த நடையில் சிறுவர் பாடல்கள் எழுதப்பட வேண்டும். சிறுவர்களின் வாழிடச்சூழலில், அவர்கள் ஊடாடும் பொருள்கள், குடும்ப உறவினர் , பிராணிகள் , விளையாட்டுகள் , விருப்பத்திற்குரியவை என பல்வேறு அம்சங்களும் பாடுபொருள்களாய் அமையலாம். வகுப்பறைகளிலும், பிள்ளைகள் கூடும் இடங்களிலும் பாடி மகிழத்தக்கனவாக சிறுவர் பாடல்கள் அமையின், அப்பாடல்களைப் பாடி, ஆடி மகிழ்தல் சிறாரின் நாளாந்த வாழ்வின் ஓர் அங்கமாகும். சிறுவர் கதைப் பாடல்களோவெனின், பாடல், ஆடல் என்ற நிலைகளைக் கடந்து, நடித்தல் எனும் பரிமாணமாகவும் விரியும்.
உளநூல் கூறும் நெறி ஓர்ந்து, எளிய நடையில், அழகு தமிழ் ப் பாடல்கள் தருவோர் சிறுவர் இலக்கியத்துக்குப் பங்காற்றியோர் ஆவர். இலங்கையில் இன்று சிறுவர் இலக்கியம் படைப்போர் விரல் விட்டு எண்ணப்படக் கூடிய சிறு தொகையினரே. ஆனால், வாழ்ந்து மறைந்த கவிஞர்கள் சிலர் விட்டுச் சென்ற சிறுவர் பாடல்கள் சில, சிரஞ்சீவியாய் சாகாவரம் பெற்று இன்றும் எம் நெஞ்சில் சித்திரமாய் நிழலாடும். வித்துவான் வேந்தனாரின் காலைத் தூக்கிக் கண்ணில் ஒற்றிக் கட்டிக் கொஞ்சும் அம்மா’ என்ற பாடலும், "சும்மா இருந்த சந்திரனைத் துண்டாயப் வெட்டினதாரம்மா” என்ற கவிஞர் மு.செல்லையாவின் பாடல் அடிகளும், “சிங்கத்தின் வீட்டில் கொண்டாட்டம் சிறுத்தைகள்

Page 4
எல்லாம் பெருங்கூட்டம்” என்ற, மதுரைப் பண்டிதர் க.சச்சிதானந்தனின் கதைப்பாடலும் ‘ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை’ என்ற சோமசுந்தரப் புலவரின் பாடலும் நவில்தொறும் நயம் தருபவை.
நண்பர் வதிரி கண.எதிர்வீரசிங்கம் அவர்கள் அண்மைக் காலங்களில் கவிதையின்பால் காட்டிவரும் நாட்டம் கவனத்துக்குரியது. பூவற்கரையானின் புகழ் கூறும் அருட்பாடல்களை யாத்த இவர், தாம்வாழும் சமூகத்தின் அவலங்களையும் கவிதைகளாக, இலங்கையின் முன்னணிச் சஞ்சிகைகளில் எழுதி வருகிறார் “இன்று ‘சிறுவர் பாடல கள் மீது இவரது கவனம் குவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். அம்மா, அப்பா, குரு, தெய்வம், தாத்தா, வகுப்பறை , ஆலயம், காலைப்பொழுது, மாலைப்பொழுது, பள்ளி செலர் லலி, வfடு த7ரும் பலர், விளையாட்டு, பகிர்ந்துண்ணல், துயிலும் பொழுது என பதினான்கு தலைப்புகளில் இவர் தரும் பாடல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. சிறுவர்க்காய சொற்களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுத்த சொற்களும் பாடல்களின் துள்ளல் நடையும் பாடுபொருள்களின் பொருத்தப்பாடும் இச்சிறுநூலின் சிறப்புகள். சிறுவர் பாடல்கள் குறித்த அறிகையும் (Cognition) fig6) if p 6T6ju6b (Child Psychology) அறிவும் ஆழ வேர்கொள்ளும்போது, மேலும் சிறப்பான சிறுவர் பாடல்களை இவரிடமிருந்து எதிர்பார்க்க முடியும் என்ற நம்பிக்கையை இந்நூல் தருகிறது.
24.03.2009 கலாநிதித. கலாமணி
சிரேஷ்ட விரிவுரையாளர் கல்வியியற்றுறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

நூFாைசியளின் உள்ளத்திலிருந்து.
யாழ் மாவட்டம் வடமராட்சிப்பகுதியில் சைவமும் தமிழும் சேர்ந்து விளங்கும் இடமாக தேவரையாளி எனும் கிராமம் விளங்குகின்றது. இக்கிராமத்தின் மத்தியில் அமைந்து அறிவுப்பசியினைத் தீர்த்துக்கொண்டிருப்பவள் தேவரையாளி இந்துக்கல்லூரி ஆகும். ஆன்மீக ஈடேற்றம் வழங் கி மக் களை சீரும் சிறப் புமாக வாழ வழிசமைத்துக் கொண்டும் பாதுகாத்துக் கொண்டும் இருப்பவை தேவரையாளி நரசிம்மர் கதிர்காம ஆலயமும் கண்ணகை அம்மனும் ஆகும். இம்மண்ணில் வாழ்ந்தவரே அமரர் காசிப்பிள்ளை வேலாயுதம் ஆவார்.
மனித வாழ்வு மாண்புற இரு நம்பிக்கைகள் வேண்டும். ஒன்று இறைநம்பிக்கை. மற்றது தன்னம்பிக்கை. பூவற்கரையான் பதிகமாலையை யாத்த நான் தொடர்ந்தும் சமூகத்தில் புரையோடிக்கொண்டிருப்பவற்றை முன்னணிச் சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் வெளிக்கொணர்ந்த வண்ணம் உள்ளேன். சிறுவர் கவிச்சரம் எனும் இச்சிறு நூலினை சிறுவர்கள் பெரிதும் பயன்பெறக்கூடிய வகையில் எழுதுமாறு எனக்கு வழிகாட்டி நெறிப்படுத்தி அவ்வப்போது என்னை வளர்த்து வரும் மதிப்பிற்குரிய ஆசான் சிவகணேசனின் வேண்டுகோளினை நிறைவு செய்துள்ளேன் என்ற மனத்திருப்தியுடன் இருக்கும் இவ்வேளையில் நான்

Page 5
1MV
எழுதும் கவிதைகளை பெருமனது கொண்டு ஏற்று அவற்றினை தென்னிலங்கை சஞ்சிகையிலும் ஊடகங்களிலும் வெளியிட்டும் தொலைக்காட்சி இலங்கை
ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனம் ஆகியவற்றில் அறிமுகம் செய்தும் உதவிகள் புரிந்து கொண்டிருக்கும் வதிரி சி.ரவி அவர்களையும் நெஞ்சிலிருத்தி எம் மத்தியில் பல் துறைகளிலும் விற்பன்னராக திகழ்ந்துவரும் பேராசான் கலாநிதி த. கலாமணி அவர்கள் அணிந்துரை வழங்கியுள்ளமை என்கவிதை ஆக்கத்திற்கு உந்துசக்தியாகவுள்ளதாக நினைவிலிருத்தி இதனை வெளியீடு செய்கின்ற அமரரது மகன் வே. புஸ்பமோகன் அட்டை படத்தினை அழகுற அமைத்துதவிய இன்பமலை நிசாந்த் கையடக்க வடிவத்தில் மிகவும் நேர்த்தியான முறையில அழகுற வடிவமைத்த சிவேன் கணனிப்பதிப்பகத்தினர்களுக்கும் எனது நன்றிகள்.
கண.எதிர்வீரசிங்கம்

நரசிம்ம - கதிர்காம நற்பதியாம் தேவரையாளி தரம் குன்றாச் சைவத்தமிழ் திகழிடமே - சரம்வதாடுத்து சரவணனே பாடல்களை சிறுவருக்காய் நானெழுத வரம்வேண்டித் துதிக்கின்றேன் வா!

Page 6
மணவமல்லாம் நிறைந்து வபாங்குதே! கனிவான வாழ்வை வேண்டியே - நாம் தினமும் ஆலயம் செல்வோமே
ஆலயம் தினமும் செல்வோமே - இரு கரங்கூப்பி அங்கு தொழுவோமே! வேதனைகள் சோதனைகள் சொல்வோமே - விபரு வழிலபற்று வாழ்வில் உய்வோமே!
பூசைகள் கருமங்கள் காண்போமே - விபயரில் நாம் அர்ச்சனை செய்வோமே விபூதி சந்தணம் குங்குமமும் - இரு கைநீட்டிவாங்கியே பூசுவோமே!
அந்தணரை வணங்கி பணிவோமே - என்றும் அவர்தம் ஆசிகள் விபறுவோமே! பக்தியுடன் அனைவரும் கூடுவோமே - ஒன்றாய் பாசுரமும் பாமாலையும் சூடுவோமே!
 
 

GübIDII
அம்மா எங்கள் செல்வம் அவளே அழியாச் செல்வம் எம்மை காவல் செய்வாள்
அன்பை மழைலியனப் பொழிவாள்!
கருவில் எம்மைச் சுமப்பாள் உருவில் அழகை தருவாள் உயிரில் கலந்தே நிற்பாள் உத்தமியே! அவள் திருமகள்
நோய்பிணி வந்தால் மருந்தாவாள் பால்தனை சுரந்தே விருந்தாவாள் காய்கனி தந்தே மகிழ்ந்திடுவாள் கற்பக தருவாய் வாழ்ந்திடுவாள்!

Page 7
உள்ளந் தன்னில் எமையிருத்தி உள்ளே அடைவார் மனத்திருப்தி வெள்ளம் வருமுன் அணைகட்டி வருமிடர் நீக்குவார் வழிகாட்டி
புத்தகம் கொப்பிகள் தந்திடுவார் புத்தாடை சப்பாத்தும் அளித்திடுவார் நித்திரை வேளையில் கொஞ்சிடுவார் நித்தமும் துணையாய் நின்றிடுவார்
களைப்பின்றி எமக்காய் உழைத்திடுவார் கைகளில் பணத்தை சேர்த்திடுவார் உழைப்பினை தெய்வமாய் மதித்திடுவார் உதவிகள் செய்தே மகிழ்ந்திடுவார்
 

(5Փ5
ஏட்டில் எழுத்தைக் காட்டியவர் எண்களை அறிந்திட செய்திட்டவர் பாட்டில் பொருள்களும் உண்வடன்றுணர்த்தி பாடியே கல்வியை ஊட்டியவர்
எங்களின் மனத்தினை அறிந்தவர் என்றுமே அதன்வழி நடப்பவர் அன்பினை தந்துமே நிற்பவர் உறவினில் வநருக்கமாய் வருபவர்
வாடிடும் வதனம் கண்டிலோ வாட்டுவமம் பசிதனை போக்கிடுவார் தேடியே பட்சணம் தந்திடுவார் தாலியன மணங்களில் நிறைந்திடுவார்

Page 8
O O தெயவம
உலகின் சக்தியே தெய்வம் ܚܠ உண்மையின் வடிவமே தெய்வம் ~7 நலமுடன் வாழவழி செய்யும் நமக்கெலாம் மேலானது தெய்வம்
சிலைவியன இருப்பது தெய்வம் சீற்றம் தவிர்ப்பது தெய்வம் நிலையாக காண்பது தெய்வம் நீங்காது நிற்பதும் தெய்வம்
குழந்தையின் மனமே தெய்வம் கூரிய பார்வையே தெய்வம் குளத்தடி மரத்தடி அமர்ந்து கும்பிட அருள்தரும் தெய்வம்
 

காலைப்பொழுது
அதிகாலை அம்மா என்னை அன்பாய் துயில் எழுப்பிடுவாள் துதிப்பேனே நிதமும் அவள்பாதம் தூக்கியே முத்தம் தந்திடுவாள்!
காலைக் கடன்களை முடிப்பேனே பற்கள் துலக்கி குளிப்பேனே கடவுளை மனதால் துதிப்பேனே காலை உணவு உண்பேனே!
வீட்டுப் பாடங்கள் முடிந்தனவா என்றுசரி பார்த்து கொள்வேனே மீட்டும் திறனை மனதினிலே பதிய வைத்தும் செல்வேனே!

Page 9
பள்ளி செல்லல்
தலைவாரி சீருடை சப்பாத்தும் அணிவித்து ரசித்திடும் அம்மா! | கலையாத கனவுடன் கல்விக்காய்
பள்ளிக்கு அனுப்பிடும் அம்மா!
புத்தகம் பையுமோ தோள்களிலே புசித்திட உணவும் அதனுள்ளே கையினில் காசும் தந்தனுப்பி வமய்யான பாசம் காட்டிடுவாள்!
கட்டித் தழுவி கைகாட்டி கதவடி வரைக்கும் வந்திடுவாள் கெட்டிக்காரனாய் நான் வரவே கடவுளை வேண்டியே நின்றிடுவாள்!
 
 

தாத்தா
சாரம் தொப்பி சேட்டுடனே செருப்பும் அணியும் தாத்தா நேரம் கடமை தவறாது நாளும் நடக்கும் தாத்தா
சயிக்கிள் “கரியரில்” எனையிருத்தி
சிறுகதை சொல்லியே ஓடிடுவார் குலுங்கிக் கீழே வீழாதிருக்க கட்டிப் பிடிக்கவும் சொல்லிடுவார்
எதிரில் வாகனம் வரும்போது என்னை கவனமாய் பார்த்திடுவார் எதிலும் பக்குவம் பேணிடுவார் என்னை பள்ளியில் சேர்த்திடுவார்

Page 10
... 10
வகுப்பறை
வகுப்பறை உள்ளே செல்வேனே விருப்புடன் கூட்டித் துடைப்பேனே வாங்கில் அமர்ந்து கொள்வேனே வகுப்பிலில் ஒழுக்கத்தை காட்டுவேனே
இறைவழி பாட்டினை - தேவாரம் இசைத்துமே பாடல்கள் தொடங்குவோமே நிறையருள் மனதினில் பெற்றிங்கு நன்மைகள் செய்துமே படிப்போமே!
ஆசிரியர் வருவதை கண்டதுமே அன்புடன் எழுந்து நிற்போமே அனைவரும் ஒன்றாய் சேர்ந்துநின்று அவரை வணங்கி பணிவோமே!
கணிதம் தமிழுடன் சமயமதை கனிவாய் நாங்கள் கற்போமே அணிகள் நான்காய் வகுத்துக்கொண்டு அழகாய் பாடியும் மகிழ்வோமே!
 
 

11
பகிர்ந்துண்ணல்
அம்மா தந்த உணவை ஒன்றாய் பகிர்ந்து உண்போமே எம்மில் ஒற்றுமை உண்வடன்று
எல்லோரும் அறியச் செய்வோமே!
பிட்டு இடியப்பம் தோசையுடன் பாற்சோறு கொழுக்கட்டை திரிபோகூழா நாட்டரிசி சுவை ததும்ப நன்றாய் மகிழ்ந்து உண்போமே!
ஏழை பணக் காரனென்ற
ஏற்றத் தாழ்வுகள் மறப்போமே கூழை குடிப்பினும் பகிர்திங்கே கொடுத்து வாங்கி குழப்போமே!

Page 11
12
விளையாட்டு
உடைமாற்றி மைதானம் போவோமே தடையேதும் இல்லாமல் மகிழ்வோடு * ༩༦ན་ལ། தாவிப் பாய்ந்து விளையாடுவோமே! (། ཡོད་
காற்பந்து கரப்பந்து கிரிக்கட்போடு 6, கிளித்தட்டு கிட்டிப் புள்ளுமவை گمهر நால்வகைப் பயிற்சியை தந்திடவே நல்வழி மனங்கள் சென்றிடுமே
ஆண்கள் வயண்கள் எல்லோரும் அன்பாய் கூடும் மைதானம் காண்பதே எங்கள் உடலினிலே கட்டான வளர்ச்சி படியாகும்.
 
 

13
வீடு திரும்பல்
கற்றவை யாவும் பதிந்தனவே கருத்தினை அறிய வைத்தனவே பற்பல புத்தக பாடங்கள் பயிற்சியாய் முடித்து விட்டோமே
கல்லூரி வெளியே தாத்தாவும் காத்திருக் கின்றார் எனக்காக அள்ளியே முத்தம் தந்துமே அழைத்துச் செல்வார் கவனமாக
வாசலில் அம்மா காத்திருப்பாள் வாவென்று என்னை அழைத்திடுவாள் ஆசையாய் கட்டித் தழுவியுமே அழைத்துச் செல்வாள் அன்பாக

Page 12
14
மாலைப்பொழுது
மாலை நேரச் சூரியனும் மறைந்து கீழே போகின்றான் வேலை முடிந்து உழவரெல்லாம் வீடு திரும்பிச் செல்கின்றார்
நண்பர்கள் ஒன்றாய் சேர்ந்திருந்து நல்ல கதைகள் சொல்வோமே பாடிப் பொழுதை கழித்தபின்னே வீடு நோக்கிப் போவேமே
கைகால் முகமும் கழுவியபின் கடவுளை வணங்கிப் படிப்போமே செய்திகள் அறிந்திட அன்றாடம் சுட்டி ரீவியும் பார்ப்போமே!
 

15
துயிலும்பொழுது
கால்நீட்டி சுவரோடு சாய்ந்திருந்து கைகளால் என்னையும் தாங்கிடுவாள் நன்னெறி கதைகளும் சொல்லிநிற்பாள் நானுறங்க தாலாட்டும் பாடிடுவாள்!
வெண்ணிலவை அழைத்து என்னருகில் வந்தமரச் சொல்லியே பாடிடுவாள் வெண்டாமரை மலரை தென்றலிலன வீசிடவே தூதும் அனுப்பிடுவாள்!
தானுறக்கம் செய்யாது நானுறங்க தன்னையே வமத்தை ஆக்கிடுவாள் வானகத்தில் மலர்தூவும் வெள்ளிதனை வெளிச்சம் கேட்டுமே மகிழ்ந்திடுவாள்!

Page 13


Page 14
சிலுேத் கணனிப்பதிப்பது
 
 

* தேவரையானி,