கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தவறிப் போனவன் கதை

Page 1


Page 2
ܘ
 
 
 

C Kuaيع
-" οφ | 2 οι 1 ger
தவறிப் போனவன் கதை

Page 3
தெணியானின் நூல்கள்
நாவல்கள் :
விடிவை நோக்கிய வீரகேசரி வெளியீடு
கழுகுகள்- நர்மதா வெளியீடு
(தகவம் பரிசில் பெற்றது) பொற் சிறையில் வாடும் புனிதர்கள் - முரசொலி வெளியீடு
மரக்கொக்கு-நான்காவது பரிமாணம் வெளியீடு
(இலங்கை அரசு, வடக்குக் கிழக்கு மாகாண அமைச்சு, சாகித்தியப் பரிசில்கள், இலக்கியப் பேரவைப் பரிசில் பெற்றது)
காத்திருப்பு- பூபாலசிங்கம் புத்தகசாலை வெளியீடு
(வடக்குக் கிழக்கு மாகாண அமைச்சுப் பரிசில் பெற்றது)
காணவில் மான் - பூபாலசிங்கம் புத்தகசாலை வெளியீடு
(இலங்கை அரச சாகித்தியப் பரிசில், இலக்கியப் பேரவைப் பரிசில் பெற்றது) சிதைவுகள் - இரண்டு குறுநாவல்களின் தொகுதி (மீரா பதிப்பக வெளியீடு) (சிதைவுகள் தேசிது கலை இலக்கியப் பேரவை, சுபமங்களா பரிசில் பெற்றது) பனையின் நிழல்- மயூரன் நினைவு வெளியீடு
சிறுகதைத் தொகுதிகள்:
1. சொத்து- என்.சி.பி.எச் வெளியீடு 2. மாத்துவேட்டி- மல்லிகைப் பந்தல் வெளியீடு
3. 4. ஒடுக்கப்பட்டவர்கள்- பூபாலசிங்கம் புத்தகசாலை வெளியீடு
இன்னொரு புதிய கோணம்- பூமகள் வெளியீடு
1973
98.
1989
盘99懿
{19389 مa.
一諡{)@澄
90:8 2 ܡܲܣ
- 2 (O C
一 9感蕨
- 1996
- 2 Ο Ολ
- 200

தவறி போனவன் கதை
-நாவல்
தெணியானி
எஸ். கொடகே சகோதரர்கள் சர்வதேச விருதுபெற்ற புத்தக வெளியீட்டாளர் 675, பி. டி. எஸ். குலரத்ன மாவத்தை, கொழும்பு - 10.

Page 4
தவறிப் போனவன்
கதை
pTഖ്)
தெணியான்
Thavarip Ponavan Kathai
Novel
Theniyan
(LP55 Ugs ill- 2010 - First Print
LIĞ55|å56i-VIII- 152 - Pages
கணனி எழுத்தமைப்பு: 1ൺ.61ൺ.ക്രഥ[ി
அட்டை அமைப்பு (3LDLD6öI565
அச்சுப் பதிவு: சதுர அச்சகம் 69. குமாரதாஸ் பிளேஸ் வெல்லம்பிட்டி
(ിഖങിuീ(); எஸ். கொடகே சகோதரர்கள் 675 பீடீ.எஸ் குலரத்ன மாவத
கொழும்பு 10.
Type Setting S.S. Kumari
Cover Designed By: Memonkavi
Printed By: Chathura Printers 69, Kumaradasa Place, Wellempitiya.
Published By: S. Godage & Brothers
675, P.D.S. Kularatna MW, Colombo- 10.
(ISBN: 978-9s-30-2958-)
365.5/1887/5 OO

சமர்ப்பணம்
சகல காலங்களிலும் சகல வழிகளிலும் தவறிப் போன சகலருக்கும்.

Page 5

என்னுரை
படைப்புகள் யாவற்றினுள்ளும் அதனைப் படைத்த படைப்பாளி
ஏதோவொருவகையில் மறைந்திருக்கின்றான் எனச் சொல்லுவார்கள். அது ஒர் உண்மை. எனது படைப்புகள் அந்த உண்மைக்கு விதிவிலக்கானவை அல்ல. ஆனால் தவறிப் போனவன் கதை என்னும் இந்தப் படைப்பினுள் நான் மறைந்திருக்கவில்லை. எனது வாழ்வில் 1996ல் சம்பவித்த மிக நெருக்கடியான சம்பவம் ஒன்றினை மையமாகக் கொண்டே இந்த நாவல் நகருகின்றது. பொய்மையான கற்பனைகளைச் செய்து மாய உலகத்தை வாசகர் மனங்களில் வளர்த்துவிடும் படைப்புகளை நான் உருவாக்குவதில்லை. இந்தச் சமுதாயத்தில் எனது நெஞ்சைத் தொட்டு நெருடும் சத்தியங்களே எனது படைப்புகளாக வெளிவருகின்றன.
இந்த நாவலில் ஒரு பாத்திரமாக வரும் தவறிப் போனவன் நான் முகமறியாத மனிதன். அவனது பெயர், ஊர், குடும்பம் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. அந்த மனிதன் தவறிப் போகாது உயிருடன் இன்று வாழ்ந்து கொண்டிருந்தால், இந்த நாவல் எழுத வேண்டும் என்னும் ஆத்மத் துடிப்பு என்னுள் எழுந்திருக்க மாட்டாது. தவறிப் போன அந்த மனிதனே இந்தப் படைப்பின் உந்துவிசையாக இருக்கின்றான். அவன் மரணத்தினால் என் உள்ளத்தில் பெருகும் துயர வெள்ளத்துக்கு வடிகால் தேடும் எத்தனமாகவே இந்த நாவலை எழுதி இருக்கின்றேன். அவனுக்கு நான் செலுத்தும் பாதக் காணிக்கையாக இதனை கொள்ளலாம். அவன் மனிதாபிமானமும் கருணை உள்ளமும் உள்ள ஒரு மனிதனாக இல்லாத ஒரு மனிதனாக இருந்திருப்பின் இன்று எனது உயிர்வாழ்வு பொய்யாகிப் போயிருக்கும்.

Page 6
நான் மரணித்த திகதி எனது உறவுகள் குறித் து வைத்திருப்பார்கள். திதி பார்த்து ஆண்டு தோறும் திவஷம் கொடுத்துக் கொண்டிருந்திருப்பார்கள்.
எனது உயிரைக் காத்து எனக்கு வாழ்வு தந்திருக்கும் அந்த மனிதனை, இந்த நாவலைப் படைத்து நான் வாழ வைத்திருக்கின் றேன். தவறிப் போன அந்த மனிதன், தவறான வழியில் தான் போனானா? அவன் பற்றிய உண்மை, அவன் போல மரணித்துப் போன பலரின் வாழ்வின் பின்னாலுள்ள உண்மைகள் வெளிவராமல் மறைந்து போய்க் கிடக்கின்றன. தவறிப் போனவன் கதை மூலம் வகை மாதிரியாகச் சில உண்மைகள் வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்படுகின்றன.
நான் கடுமையான நோய்க்கு ஆளாகி, மரணித்துப் போய் விட்டதான பரபரப்பான செய்தி பரவிய காலத்திலும், தவறிப் போனவன் இறந்து போன சமயத்திலும், பின்னர் ஒன்பது ஆண்டுகள் கழிந்து இந்த நாவலை நான் எழுதிய கால கட்டத்திலும் சாதாரண பொது மக்கள் வாழ்வில் அநுபவித்த அவலங்கள், துன்பங்கள், துயரங்கள் நிறைந்த கண்ணிர்க் கதைகளைத் தெளிவாக எடுத்துச் சொல்லத் தகுந்த சூழ்நிலைகள் இருந்து வரவில்லை. ஆனால் கத்தி முனையில் நடப்பது போல மிகுந்த நிதானத்துடன் சிலவற்றை எழுத்தில் சொல்லி இருக்கின்றேன்.
தினகரன் ஆசிரியர் சிவா சுப்பிரமணியம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி இந்த நாவலை எழுதிக் கொடுத்தேன். தினகரன் ஞாயிறு வாரமஞ்சரியில் ஆறுமாத காலம் (24.04.2005-02.10.2005) இந்த நாவல் தொடர்ந்து வெளிவந்திருக்கின்றது. இன்று தமிழ்ப் படைப்பாளிகள், படைப்புகள் பக்கம் தமது பார்வையை அக்கறை யுடன் திரும்பியுள்ள கொடகே நிறுவனம் இந்த நாவலை நூலாக வெளியிடுவதற்கு முன் வந்திருக்கின்றது. இதற்கான ஏற்பாடுகளை ஈடுபாட்டுடன் முன்வந்து செய்கின்றார் நண்பர் மேமன்கவி. அசசுப் பிழைகள் திருத்திய திக்குவல்லை கமாலுக்கும் மற்றும் இந்த நாவலுடன் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்.
கலையருவி தெணியான் கரணவாய் வடக்கு 22.10.20 O வல்வெட்டித்துறை
தொ.பே. 021 3006524

வீட்டிலிருந்து அவசரமாகப் புறப்பட்டு آن 5116}{2گ வேகமாகச் சயிக்கிளை உருட்டிக் கொண்டு வீதிக்கு வந்து சேருகின்றான். வந்த வேகதில் சயிக்கிள் பெடஸில் காலைத் தூக்கி வைத்து சயிக்கிள் மீது ஏறி அமருவதற்குத் தயாராகிய சமயம், "இஞ்சாருங்கோ எனத் தயக்கத்துடன் குரல் கொடுத்துக் கொண்டு கையில் குடை ஒன்றைத் தூக்கிய வண்ணம் மனைவி பொன்மணி வேகமாக ஓடி வருகின்றாள்.
அவன் அப்படியே தரித்துத் தலையைத் திருப்பி அதிருப்தியுடன் அவள் முகத்தைக் குறிப்பாக நோக்குகின்றான். அந்தப் பார்வையில் "என்ன? என அவளிடம் விழிகள் வினவுகின்றன. அவன் வீட்டிலிருந்து புறப்பட்டுப் போகும் சமயம் அவன் பின்னால் ஓடி வந்த அவனை இப்படி அவள் அழைப்பதில்லை. பின்னால் அழைப்பது அபசகுனம் என்பது அவள் எண்ணம் அவனுக்கு அப்படி எந்த எண்ணமு மில்லை. ஆனால், அவசரமாகப் புறப்பட்டுச் செல்லும் போது அவன் மனதுக்கும் அது பிடிக்காது. ஆனால் இன்று அப்படி நடந்துவிட்டது.
அவன் புறப்பட்டு வெளியே போவதற்கு முன்னர் அவனிடம் சொல்லி அனுப்ப வேண்டும் என்று அவள் மனதில் நினைத் திருந்தாள். காலை நேரம் அவனும் பிள்ளைகளும் கல்லூரிக்குப் புறப்பட்டுச் செல்லும் வேளை, அவர்களுக்கான காரியங்களைப் பார்த்து அவர்களை அனுப்பி வைப்பதற்கு அவள் பம்பரமாகச் சுழன்று கொண்டிருப்பாள்.

Page 7
O தெணியான்
அந்தச் சுழற்சியில் அவளுக்கு எல்லாம் அப்பொழுது மறந்து போகும். பின்னர் தான் அது ஒவ்வொன்றாக நினைவுக்கு வரும்.
இன்றும் அப்படித்தான்.
போகவிட்டு அவனை அழைக்க வேண்டாம் என்று ஒரு கணம் அவள் நினைத்தாள். ஆனால் அவனுக்கு நினைவுபடுத்தாமல் விட்டுவிட முடியவில்லை.
"சோட் லீவு போட்டிட்டு டொக்டரிட்டைப் போங்கோ" சொல்லிக் கொண்டு, கையில் எடுத்து வந்த குடையை அவனிடம் நீட்டுகின்றாள்.
அவன் வாய் திறக்கவில்லை. திரும்பவும் அவள் முகத்தைக் குறிப்பாகப் பார்க்கின்றான். அவள் முகம் வாடிப் போய்க் கிடக்கிறது. கடந்த இரவு திரும்பத் திரும்ப இதையே அவள் சொல்லிக் கொண் டிருந்தாள் என்பது இப்பொழுது அவன் நினைவுக்கு வருகிறது.
அவனுக்கு மறதி இப்பொழுது அதிகந்தான். அவள் மீண்டும் ஓடிவந்து ஞாபகப்படுத்துகின்றாள்.
"என்ன பேசாமல் நிற்கிறியள். இஞ்சை பாருங்கோ முகம் இப்பவும் வேர்க்கிறது. லீவு போட்டிட்டு."
"சரி. சரி. போவிட்டு வாறன்" கையை நீட்டி அவளிடம் குடையை வாங்கிக் கொண்டு அவன் புறப்பட்டுப் போகின்றான்.
அவர் வழக்கமாகச் சொல்லுறது போல சொல்லிக் கொண்டு போகிறார். டொக்டரிடம் போய் வருவதாகச் சொல்லவில்லை. அங்கு போகாமல் விட்டு விடக் கூடும் இல்லை, குடையைக் கையில் வாங்கிக் கொண்டு போறார். அதனாலே போய் வரத்தான் போறார் என அவள் நினைந்து, கண்களில் இருந்து அவன் உருவம் மறையும் வரை அவனையே பார்த்து நின்றுவிட்டு, பெருமூச்சோடு உள்ளே மெல்லத் திரும்புகின்றாள்.
கல்லூரிக் காரியாலயம் திறந்து கிடக்கிறது. பியோன் வந்துவிட்டார். மாணவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். மாணவர் சிலர் முன் கூட்டியே வந்து சேர்ந்து விட்டார்கள்.
ஆசிரியர்கள் யாரும் இதுவரை அங்கு வந்து சேரவில்லை. மேசை மீது தினவரவுப் பதிவேடு கிடக்கிறது. அதை விரித்து அன்றைய திகதியை அதில் குறித்து முதல் ஆளாக அவன் கையொப்பம் இடுகின்றான்.

தவறிப் போனவன் கதை 11
பின்னர் தனது மேசைக்குப் போய் மேசை, கதிரையில் படிந்து கிடக்கும் புழுதியைத் துணியொன்றினால் தட்டித் துடைத்துவிட்டுக் கொண்டு பக்கத்து யன்னல்களைத் திறந்து விடுகின்றான்.
மெல்லிய காற்று உள்ளே வந்து சுகமாக வீசுகின்றது. 'ஆ என்ன சுகம் எனத் தனக்குள் சொல்லிக் கொண்டு தனது கதிரையில் வசதியாக அமர்ந்து கொள்கின்றான்.
வீட்டில் இருந்து புறப்பட்ட சமயம் மனைவி சொன்னாள் "இஞ்சை பாருங்கோ, முகம் இப்பவும் வேர்க்கிறது."
அவனுக்கு அது இப்பொழுது நினைவுக்கு வருகிறது. வியர்வை இன்னும் அடங்கவில்லை. உடல் எங்கும் வியர்த்துக் கொட்டுகிறது. நடுப்பகல் வெயிலில் நின்று பாடுபட்டு உழைக்கும் தொழிலாளிக்கு வடிவது போல வியர்வை வடிந்து கொண்டிருக்கிறது.
வீட்டில் குளிர்ந்த நீரில் கிணற்றுக் குளிப்பு மீண்டும் இங்கொரு வியர்வைக் குளிப்பு. இந்தக் காலை வேளையில் இப்படியா வியர்த்து ஊற்றும்!
அவன் அணிந்து கொண்டிருக்கும் வெள்ளை சேட் ஆங்காங்கே நனைந்து போய்க் கிடக்கிறது. பெனியன், உள்ளாடை உள்ளே ஈர லித்துப் போயின. முகம், கழுத்து, பிடரி, கைகால்கள் எங்கும் தொடர் ந்து துளிர்த்துக் கொண்டிருக்கிறது. அணிந்திருக்கும் சேட்டின் உள்ளே அக்குளில் இருந்து சொட்டுவது போல உணருகின்றான்.
அவன் நண்பன் தங்கராசனுக்கு அந்த நாளில் உள்ளங்கையும் ஊறும். அந்த நண்பன் அணிந்து கொண்டிருக்கும் சேட்டின் அக்குள் பகுதி எப்பொழுதும் எண்ணெய் மண்டியாகக் கறுத்துப் பிசுபிசுத்துக் கொண்டு கிடக்கும். உடலில் ஒரு வகையான கெந்தக நெடி, உட லில் இருந்து ஊறும் வியர்வை அந்த நண்பனைப் போல எல்லோ ருக்குமா நாறும்? பெண்களின் வியர்வையும் அப்படியா நாறும்?
பெண்களின் வியர்வை பன்னீர், சந்தனம், ரோஜாப்பூ என்றெல்லாம் சொல்லி வைத்திருக்கிறார்களே! அது 'கூந்தல் மணம் தேடின கதைதான். காமம் கலந்த மனம், காமம் அடங்கிய வியர்வை, நாறும்.
தனக்கு என்ன பன்னீரா கொட்டிக் கொண்டிருக்கின்றது. என
நினைவு எழுகிறது. அவன் கைக்குட்டையை எடுத்து அழுத்தி அழு த்தி துடைத்து விட்டுக் கொண்டிருக்கின்றான். அவன் துடைக்கத்

Page 8
12 தெணியான்
துடைக்க வியர்வை ஊறிக் கொண்டிருக்கின்றது. கைக்குட்டை நீரில் அமுக்கி எடுத்தது போல அது சொட்டிக் கொண்டிருக்கிறது.
அவனைக் கண்டு கைக்குட்டைக்கும் வியர்க்கிறதோ! முன்னர் இப்படி எல்லாம் அவனுக்கு உடல் வியர்த்து ஒழுகுவதில்லை. காலை நேரங்களில் வியர்வை அரும்புவதே இல்லை.
அண்மைக் காலமாக இப்படிப் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக் கிறது. வியர்வை பெருகுவதற்கென்று ஒரு நேரமில்லை. காலை, மாலை எப்பொழுதும் பெருகிக் கொண்டிருக்கிறது. இரவு நேரம் படுக்கையில் போய்ச் சரிந்தால் கழுத்தில் இருந்து வடிகிறது.
அரச உத்தியோகம் வியர்வை சிந்தாத தொழில் என்று சொல்வார்கள். தனது கடமையைச் செய்யாது கதிரையில் போய் அமர்ந்து சும்மா இருந்து சுகமாகத் தூங்கினால் வியர்வை எப்படிச் சிந்தும்? காலை நேரம் கல்லூரிப் பொறுப்புகள் அதிகம் என்பதால், கல்லூரி ஆரம்பமாகி முதல் பாடவேளை முடிகின்ற வரை அவன் ஒய்ந்திருக்க இயலாது. மாணவர்கள் கல்லூரி ஆரம்பமாவதற்கு முன்னர் அங்கு வந்து சேர்ந்துவிட வேண்டும். ஒவ்வொரு வகுப்பறை யும் அந்தந்த வகுப்பு மாணர்வகளால் கூட்டிச் சுத்தம் செய்யப்பட வேண்டும். கல்லூரி முற்றம் சுற்றுச்சூழல் எங்கும் குப்பை கூளங்க ளின்றிச் சுத்தப்படுத்தல் வேண்டும்.
கல்லூரி ஆரம்பித்து வகுப்புகள் தொடங்கும் வேளை வேலைகள் அனைத்தும் நடந்து முடிந்து, காலை நேரக் கல்லுTரி புதுப்பொலி வுடன் தோன்றும் மாணவ தலைவர்கள் அங்கு வந்து நின்று தங்களுக்குரிய கடமைகளைச் செய்து கொண்டிருப்பார்கள்.
அவர்கள் இளம் கங்காணிமாராக அதிகாரத்துடன் தங்களுக்கு இளைய மாணவர்களை ஏவிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கும் இளைய மாணவர்களுக்குமிடையே சில சமயங்களில் முரண்பாடு தோன்றி முறுகல் நிலை உருவாகும்.
மாணவ தலைவர்கள் அதிகாரம் செலுத்துவதில் முனைப்புடன் நிற்பார்கள்.
இளைய மாணவர்கள் அலட்சியஞ் செய்து அவர்களை நிராகரிப்பார்கள். அவன் அப்பொழுது அங்கு பிரசன்னமாவான். பிரச்சினை தானாக விடுபட்டுப் போகும். சில சமயம் விசாரணை செய்து, சுமுகமாக சமாதானம் செய்து வைப்பான்.

தவறிப் போனவன் கதை 13
அவனுக்கு இப்பொழுதும் வியர்த்துக் கொட்டிக் கொண்டிருக்கி றது. கைக்குட்டையினால் அழுத்தி அழுத்தித் துடைத்து விட்டுக் கொண்டிருக்கின்றான். மேசையின் மீது கிடக்கும் சிறிய தடியைக் கை யில் எடுக்கிறான். அவனுக்கு என்றும் போல உள்ளுக்குள் ஒரு நெருடல், கையில் தூக்கிக் கொண்டு செல்லும் இந்தத் தடிதான் எனது பலமா! அப்பாவிப் பொதுமக்களை அச்சுறுத்தும் துப்பாக்கி போன்ற துதான் இந்தத் தடி
கையில் தடியில்லாத தன்னைக் கண்டு மாணவர்கள் மதிக்க மாட்டார்களா அதிகாரத்தின் அடையாளம் எப்பொழுதும் ஆயுதமா கவே இருக்க வேண்டுமா!
அவன் கையில் தூக்கிய தடியை மேசை மீது விட்டெறிந்து விட்டு, காரியாலயத்தில் இருந்து வெளியே வருகின்றான்.
வகுப்பறைகள் உள்ள விறாந்தைகளில் மெல்ல நடந்து சென்று ஒவ்வொரு வகுப்பறையாக நோட்டமிட்டுக் கொண்டு வருகின்றான். இனி, மாடிப் படிகளில் ஏறிச்சென்று பார்வையிட வேண்டும். மாடிப்படிகளில் முன்போல ஏறி, இறங்க அவனுக்கு இயலவில்லை.
இரண்டு படிகள் மேலே ஏறினால் பெரிதாக மூச்சிழுக்க ஆரம்பித்து விடுகிறது.
இனி என்ன ஓய்வு பெறும் காலம் நெருங்கி வந்து விட்டது. வயது நரைத்துக் கொண்டு வந்துவிட்டது.
மனம் மெல்லச் சமாதானம் சொல்லிக் கொள்ளுகிறது.
இன்று மாடிகளுக்கு ஏறிப் போய்ப் பார்ப்பதற்கு முடியாது என்பதால் அவன் அதைத் தவிர்த்து விட்டு வழமையான முதற் சுற்றை முடித்து விட்டு மீண்டும் வந்து, தனது கதிரையில் அமர்ந்து கொள்ளுகின்றான்.
இப்பொழுதும் அவனுக்கு வியர்த்துக் கொட்டிக் கொண்டிருக்கிறது.

Page 9
அதிபர் அப்பொழுதுதான் ஆத்துப் பறந்து
ஓடிவந்து கல்லூரிக்குள் நுழைகின்றார். அவர் பாவம், மனைவி ஒரு நிரந்தர நோயாளி.
கல்லூரி முதல் மணி ஒலிக்கிறது. பிரார்த்தனை ஆரம்பமாகப் போகின்றது என்பதை அறிவிக்கும் மணி, கல்லூரி ஆரம்பமாவதை அறிவிக்கும் மணியும் அதுதான். மாணவர்கள் வகுப்பறைகளை விட்டு வரிசையாக வெளியே வந்து கட்டடங்களுக்கு மத்தியிலுள்ள முற்றத்தில் கூடுகிறார்கள்.
கையில் பிரம்புடன் அதிபர் காரியாலயத்தில் இருந்து புறப்பட்டு பிரார்த் தனை நடைபெறும் இடம் நோக்கிப் போய் க் கொண்டிருக்கின்றார். ஆசிரியர்கள் ஒருவர் பின் ஒருவராக ஓடோடி வந்து கொண் டிருக்கின்றார்கள். அவன் காரியாலயத்தில் தனது மேசை அருகே இப்பொழுதும் அமர்ந்திருக்கின்றான்.
அவனுக்கு வியர்த்துக் கொட்டிக் கொண்டிருக்கின்றது. காலை நேரம் வகுப்புக்கள் ஆரம்பிப்பதற்கு முன்னர் இன்னும் இரண்டு தடவைகள் அவன் வகுப்பறைகளைச் சுற்றிப் பார்த்து வரவேண்டும். பிரார்த்தனைக்கு முன் சுற்றிப் பார்த்து, வகுப்பறை களில் தங்கி நிற்கும் மாணவர்களை விசாரித்து அவர்களைப் பிரார்த்தனைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இன்று அவனுக்குக் களைப்பாக இருக்கின்றது. அவனால் எழுந்து சென்று பார்வையிட முடியவில்லை. அதைத் தவிர்த்துவிட்டு

தவறிப் போனவன் கதை 15
தொடர்ந்து உட்கார்ந்திருக்கின்றான். சற்று நேரத்தின் பின்னர் இரண்டாவது மணி ஒலிக்கிறது. பிரார்த்தனை முடிந்து மாணவர்கள் கலைந்து வகுப்புக்களை நோக்கி வரிசையாகப் போய்க் கொண்டிருக்கின்றார்கள்.
ஐந்து நிமிட நேரம் கழிந்து மீண்டும் மணி ஒலிக்கிறது.
அது பாடங்கள் தொடங்குவதற்கான அறிவித்தல். இந்த மணியோ எத்தனை எத்தனை செய்திகள் சொல்லுகிறது! ஐந்து நிமிட நேரம் மேலும் கழிந்து போகின்றது.
ஆசிரியர்கள் தங்கள் வகுப் பறைகளுக்குப் போய் ச் சேருவதற காக, அந்த அவகாசம். அவனுக்கு இப்பொழுதும் வியர்த்துக் கொண்டிருக்கிறது. அவன் வியர்வையைத் துடைத்து விட்டுக் கொண்டு கதிரையை விட்டு மெல்ல எழுகின்றான்.
மாணவர்கள் தங்கள் வகுப்புக்களில் ஒழுங்காக அமைதியாக அமர்ந்திருக்கிறார்களா? ஆசிரியர்கள் தங்கள் வகுப்புக்களுக்குச் சென்று பாடங்களை ஆரம்பித்து விட்டார்களா? மாணவர்களைப் பார்வையிடும் சாக்கில் ஆசிரியர் ஒவ்வொரு வகுப்பறையிலும் இருக்கின்றாரா? என்று நோட்டமிட்டு வருவது இப்பொழுது அவன் சுற்றிப் போவதன் நோக்கம்.
கல்லூரிக்கு வந்து சேர்ந்துவிட்டால் ஆசிரியர்களில் சிலர் தங்கள் வகுப்பறைகளுக்கு நேரே போகும் வழக்கமில்லை. ஆரம்ப வகுப்புக்களின் வகுப்பாசிரியர்கள் தங்கள் வகுப்பறைகள் நோக்கிப் பெரும்பாலும் போய்விடுவார்கள். மேல் வகுப்புக்களுக்குப் பொறுப்பாக இருக்கின்ற ஆசிரியர்களில் அநேகர் ஆசிரியர்கள் ஒய்வறைக்குப் போய்ச் சேர்ந்துவிடுவார்கள். பாடம் ஆரம்பித்து விட்டாலும் அவர்களுக்குக் கதை முடிவதில்லை.
இரண்டு ஆசிரியைகள் வகுப்புக்களுக்குச் சென்று கொண்டிருக் கும் போது இடையில் சந்தித்துக் கொண்டுவிட்டால் போதும், அவர்களைப் பிரித்தெடுக்க முடியாது. இருவரும் ஒட்டிக் கொண்டு விடுவார்கள்.

Page 10
– 6 தெணியான்
அவன் வந்து கொண்டிருப்பது கண்டு கொண்டால் பலர் தங்கள் கதைகளை முறித்துக் கொண்டு வகுப்புக்களை நோக்கிச் சென்றுவிடுவது வழக்கம், இரண்டொருவர் அவனைக் கண்டும் காணாதவர்கள் போல இருப்பதை அவன் அவதானித்து வைத்திருக்கிறான்.
அரசன் வீட்டு முட்டை அம்மியையும் உடைக்குமல்லவா! அவர் கள் அதிபரோடு வெகு நெருக்கம். அதிபருக்கு அடுத்த கதிரையில் கண் வைத்துக் கொண்டு இருக்கின்றவர்கள். அடுத்த கதிரையில் கண் இருக்குமானால், அதிகாரக் கதிரையுடன் நெருக்கமாக இருக்கத்தானே வேண்டும்!
அவன் வகுப்பறைக்குச் சென்றால் அங்கு சிலசமயம் ஆசிரியர் இருக்கமாட்டார். அவனுக்கு சினம் பற்றிக் கொண்டு வரும். அந்த வகுப்பு மொனிற்றரை அழைத்து ஓய்வறையில் இருந்து பேசிக் கொண்டிருக்கும் ஆசிரியரை அழைத்துக் கொண்டு வருமாறு அனுப்புவான். ஆசிரியர் லீவில் நிற்கின்றார் என்றால், அந்த வகுப்பு நடைபெறுவதற்கு மற்றொழுங்கு செய்து வைப்பான்.
ஒவ்வொரு மனிதனும் தனது கடமையை உணர்ந்து செவ்வனே காரியமாற்றினால் அனைத்தும் குறைவின்றி நடந்தேறும், அடுத்தவனுக்கு வீண் சிரமங்கள் வந்து சேராது. ஆனால் தங்கள் கடமை உணர்ந்து நடக்கின்றவர்கள் எத்தனை பேர் கல்லூரிக்கு வந்து, தான் இப்படி ஏன் சுழன்று திரிய வேண்டும்.
அவன் தனக்குக்குக் கற்பித்த ஆசிரியர்களை நினைத்துப் பார்க்கின்றான். அவர்கள்ை போய் இப்படி யாரும் மேய்க்கவில்லை. அவர்களை மேய்க்க முடியாது. அவர்கள் தங்கள் வகுப்பறைக ளைத் தாங்களே சில சமயம் கூட்டிச் சுத்தம் செய்தார்கள். தாங்கள் முன் னின்று மாணவர்களை வழிநடத்தினார்கள். தலைமை ஆசிரியருக்கு அவர்கள் ஒரு வேலையும் வைப்பதில்லை. அவர்கள் தங்கள் கடமைகளைத் தாங்கள் உணர்ந்தவர்கள். கடமையை அறிந்து கொண்டால் பொறுப்பு தானாகவே வந்து சேர்ந்து கொள்ளும்
தனது சொந்தப் பிள்ளை ஒரு வகுப்பில் இருந்து படித்தால், எப்படி இந்த ஆசிரியர்களுக்குப் பொறுப்புணர்வு வந்து விடுகின்றது. அந்த வகுப்பிலுள்ள மற்றைய மாணவர்களுக்கு ஒரு அதிஷ்டந்தான். நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் பொசியுமல்லவா!

தவறிப் போனவன் கதை 17
பிறர் பிள்ளை தலை தடவினால் தன்பிள்ளை தானே வளரும் என்பதெல்லாம் இன்று முழுப் பொய். தன்பிள்ளை தலை தடவினால் சில சமயம் பிறர் பிள்ளை தானே வளரக் கூடும் என்பதுதான் இன்றைய யதார்த்தம்.
ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழைகின்றார். அங்கு எல்லாம் தயாராக இருக்க வேண்டும். உரிய நேரம் அங்கு அவர் வரவேண்டுமென்று இல்லை. சற்று நேரம் தாமதமாக வந்தால், அது குற்றமல்ல. பாட வேளை முடிந்துவிட்டால் கடமை முடிந்தது. உடனே வகுப்பறையில் இருந்து அவர் வெளியேறிவிடுவார்.
உப அதிபர் கதிரை இரண்டும் கெட்டான் நிலையிலுள்ள போலி ஆசனம் கேலியாகப் பேசப்படும். பார்க்கப்படும்.
சம்பளமில்லாத வேலை வேலைப் பளு உள்ள கதிரை, அவனுக்கு மனம் சில சமயம் சலித்து வெறுப்புக் கொள்ளும்.
ஆர்வமாக வகுப்பறைக்குச் சென்று முன்னர் போலக் கல்வி கற்பிப்பதற்கு அவனுக்கு இப்பொழுது இயலாது. வெறும் பேருக்கு அமர்ந்து இருக்கும் உப அதிபர் கதிரையினால் ஒரு ஆதாயம். நிர்வாகக் கடமைகளைக் கவனிக்க வேண்டி இருப்பதால், வகுப்ப றைக் கற்பித்தல் வேலைகள் வெகுவாகக் குறைந்து போயின.
அவன் வந்து கொண்டிருக்கின்றான். ஆரம்ப வகுப்புக்களுக்குச் சென்று முதலில் அந்த வகுப்புக்களைப் பார்வையிடுவதுதான் தினசரி வழக்கம், எதிரில் உள்ள மாடிக்கட்டடம் ஒன்றைத் தாண்டி அவன் போக வேண்டும்.
உயர் வகுப்பு மாணவன் ஒருவன் அவனது வகுப்பறைக்கு வெளியே, மாடிப்படிகளுக்கு கீழே ஆரம் வகுப்பு மாணவன் ஒருவனு டன் பேசிக் கொண்டு நிற்கின்றான். அவன் எல்லாரும் வகுப்புக்குப் போங்கோ' என அவர்களைப் பார்த்துக் கூறிவிட்டு மாடியைக் கடந்து போய்க் கொண்டிருக்கின்றான்.
அந்தப் பெரிய மாணவன் அவன் குரல் கேட்டு, தலையைப் பின்புற மாகத் திருப்பி, அவனை ஒரு தடவை பார்த்து விட்டு மீண்டும் ஆரம்ப வகுப்பு மாணவனுடன் பேசுகின்றான். சின்னவன் அங்கிருந்து மெல்ல நகர எத்தனிக்கின்றான். அவன் அவர்கள் இருவரையும் நன்றாக அவதா னித்துக் கொண்டு போய்க் கொண்டிருக்கின்றான்.

Page 11
9. வண் ஒவ்வொரு வகுப் பறையாகக் கண்காணித்துக் கொண்டு வருகின்றான். நான்காம்
வகுப்புக்கு வந்ததும் அதன் வாசல் எதிரில் விறாந்தையில் அவன் தரித்து நிற்கின்றான்.
ஆசிரியர் அந்த வகுப்பில் இல்லை. அந்த வகுப்பு ஆசிரியை தினமும் காலதாமதமாகக் கல்லூரி வந்து சேருவது அவள் வழக்கம்
அவனைக் கண்டு மாணவர்கள் அனைவரும் சட்டென்று எழுந்து நிற்கின்றார்கள்.
"இருங்கோ. வகுப்புக்குள்ளே யாரும் வந்தால் நீங்கள் எழுந்து நிற்க வேண்டும் வெளியே விறாந்தையில் நிற்கும்போது நீங்கள் எழுந்து நிற்க வேண்டுமில்லை" அவன் கூறியதும் மாணவர்கள் பட்டென்று அமருகின்றார்கள்.
"ரீச்சர் எங்கே? அறிந்து கொண்டு அவன் கேட்கின்றான். மாணவர் கள் என்ன பதில் சொல்லுவார்கள்! ஒருவர் முகத்தை ஒருவர் மெளன மாகப் பார்த்து விழிக்கிறார்கள். அப்பொழுது ஆசிரியை காரியால யத்தில் கைச்சாத்திட்டு விட்டு வேகமாக வந்து கொண்டிருக்கின்றாள். அவள் வருகையை அறியாதவன் போல மாணவர்களுடன் தொடர்ந்து பேசிக் கொண்டு நிற்கின்றான்.
இன்று மாத்திரம் காலதாமதமாகி அவனைக் கண்டு பதறிக் கொண்டு வருகின்ற பாவனையில் நடையில் வேகத்தைக் கூட்டி, எட்டி அடி

தவறிப் போனவன் கதை 19
வைத்து வருகின்றாள். அவன் அங்கு நிற்பதை அவள் கண்டு 6LT6.
கண்டவள் சும்மாவா இருப்பாள்? அவனுக்கு தான் செலுத்தும்
மதிப்பை அவன் கண்டு கொள்ள வேண்டாமா? அவள் இப்போது நடந்து வருகின்றாளா? அல்லது பாய்ந்து கொண்டு வருகின்றாளா?
அவளைக் கண்டு அவன் மனம் உள்ளுக்குள் மெல்ல நகைத்துக் கொள்ளுகின்றது. அவன் மனதுக்குப் பழைய நினைவொன்று பட்டென்று மேலெழுந்து வருகின்றது.
அவன் அப்பொழுது பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பில் படித்துக் கொண்டிருந்த காலம் வாரத்தில் செவ்வாய், வியாழன் இரு தினங்கள் உடற்பயிற்சிப் பாடவேளை மாணவர்கள் ஒருவர் தவறாது அனைவரும் அந்தநேரம் விளையாட்டு மைதானம் வந்து சேர்ந்து விடுவார்கள்.
அந்தப் பாட ஆசிரியர் மாத்திரம் அங்கு வரமாட்டார். வளர்ந்த மாணவர்களைக் கட்டி மேய்க்கும் வல்லமை அவருக்கில்லை.
மாணவர்கள் சுதந்திரமாக் கூடிக் கூடிப் பேசிக் கொண்டு நிற்பார்கள்.
அப்பொழுது மைதானத்தின் மேற்குப் புறத்தில் கல்லூரியின் ஆங்கில ஆசிரியை மெல்ல உதயமாவார். மைதானத்தின் கிழக்கு எல்லையிலுள்ள வகுப்பறைகளை நோக்கி மைதானத்துக்கு ஊடாக நடக்க ஆரம்பிப்பார். ஆசிரியை மைதானத்தைத் தாண்டிப் போய்ச் சேருவதற்கு இடையில் அந்தப் பாடவேளை முடிந்து போய் விடும்.
ஒரு வேளை அடுத்த பாடத்துக்காகத்தான் அப்பொழுது மைதானத்தை கடந்து போய்க் கொண்டிருக்க வேண்டும்.
அந்த நடையில் அப்படி ஒரு அசைவு அப்படி ஒரு மென்மை அப்படி ஒரு நளினம் மாணவர்களுக்கு நேரில் அவரைப் பார்ப்பதற்கு அச்சம். என்ன சொன்னாலும் அந்தக் கல்லூரி ஆசிரியை, அவர் நடையை மாணவர்கள் பார்த்து ரசிக்கலாமா? ஆனால் பார்க்காமல் இருப்பதற்கும் முடிவதில்லை.
ஒருவர் அறியாது மற்றையவர் அந்தரங்கமாகப் பார்ப்பதாக எண்ணி, எல்லோரும் தவறாமல் பார்ப்பார்கள். எல்லோருக்கும் அது தெரிந்திரு ந்தது.
ஆனால் வாய் திறந்து மாத்திரம் பேசிக் கொள்ள மாட்டார்கள். அவள் நடை. அது என்ன நடை! எழுத்தாளர் அழகிரிசாமி, "சீதை நடப்பது

Page 12
2O தெணியான்
அழகாக இருக்கும் எனச் சொல்லியிருக்கிறார். சீதை நடையை அவர் காவியத்தில் கண்டிருப்பார். அந்த ஆசிரியை நடப் பதை அவர் கண்டிருந்தால் அப்படிச் சொல்லியிருப்பாரோ என்னவோ?
அல்லது புதிய உவமை ஒன்று தேடித் தேடித் தவித்திருப்பார். அந்த ஆங்கில ஆசிரியை சீதையாக இருக்கட்டும். காலையில் கல்லூரிக்கு வரும் பொழுது செய்து கொண்ட அலங்காரங்கள் கலை யாது, பசுமை காயாது, அலுங்காமல் குலுங்காமல் மாலையில் அவர் வீடு திரும்பிப் போவார்.
அழகுக் கலை அந்த ஆசிரியைக்கு கைவந்த கலை. இப்பொழுது நடை என்ற பெயரில் பாய்ந்து பாய்ந்து வந்து கொண்டிருக்கும் ஆசிரியையை யாருடன் ஒப்பிடுவது?
அடுத்துள்ள மூன்றாவது வகுப்பு ஆசிரியை மெதுவாக வந்து எட்டிப் பார்க்கின்றாள்.
அவன் நான்காம் வகுப்பு முன்னால் நின்று கொண்டிருப்பதும், அந்த வகுப்பாசிரியை ஒடி வந்து கொண்டிருப்பதும் அறிந்து கொண்டு அவள் எட்டிப் பார்த்து விட்டுப் பூனை போல உள்ளே பதுங்குகின்றாள்.
அவள் செவிகள் பாம்புச் செவிகள். அவன் என்ன கேட்கின்றான். அவள் அதற்குச் சொல்லும் பதில் என்ன? என்பதை இரகசியமாக அறிந்து கொள்ளுவாள். பின்னர் தான் அறிந்தவைகளுக்கு மூக்கும் முழியும் வைத்து சுவையான ஒரு கதையாக ஓய்வு நேரம் ஆசிரியைகள் மத்தியில் அவிழ்த்து விடுவாள்.
ஆசிரியர் இல்லாத வகுப்புக்குச் சென்று சிலசமயம் அவன் அமர்ந்து விடுவான். அதன் பிறகாவது பிந்தாமல் ஆசிரியர் வகுப்புக்கு வந்து சேர வேண்டும் என்னும் அறிவுறுத்தலாக அதை அவன் மேற் கொள்வான். அவன் எதிர்பார்ப்பது போல ஒன்றும் நடப்பதில்லை.
அவள் மனதுக்கு உறுத்தலாக இருக்கட்டும் என்றே அவன் இப்பொழுதும் அங்கு நின்று கொண்டிருக்கின்றான்.
காலை வேளையில் கல்லூரிக்கு வந்திருக்கும் அவள் மனம் நோக ஒரு வார்த்தை சொல்லக் கூடாது. அன்று ஆரம்பத்தில் அவள் மனம் நொந்து போனால் அன்று முழுவதும் அவள் ஒழுங்காக வேலை செய்ய மாட்டாள். அவளுக்கு மன வேதனை. மாணவர்களுக்கு அது நட்டம்.
அவளைக் கோபித்து ஒரு வார்த்தை சொல்ல இயலாது. சொன் னால், அவள் அதையெல்லாம் கண்டு கொள்ளமாட்டாள். மகா காரி

தவறிப் போனவன் கதை 21
யக்காரி. கோபம் தனக்கு வருவதில்லையெனச் சொல்லிக் கொண்டு சிரித்துக் காரியம் பார்த்துக் கொண்டு போய்விடுவாள்.
அவள் போட்டுக் கொள்ளும் நறுமணங்கள் அவள் வருகைக்கு கட்டியம் கூறும். அந்த ஆங்கில ஆசிரியை போல அவள் ஒரு அலங்காரப் பிரியை.
அவள் நெருங்கி வந்து கொண்டிருக்கின்றாள். நறுமணம் காற்றில் பரவி வந்து அவன் நாசியைத் தொடுகிறது. சோப், முகப் பவுடர், கிறீம், கொலோன் என எல்லாம் கலந்த ஒரு சுகம், இந்த அலங்காரங்கள் செய்து முடிப்பதற்குள் கல்லூரி ஆரம்பிக்கும் நேரம் கழிந்து தான் போகும். "குட்மோனிங் ஸேர்" எதுவும் நடக்காது போன்ற ஒரு பாவனை.
"குட்மோனிங்" அவளை இப்பொழுதுதான் கண்டு கொண்டதான இன்னொரு பாவனை.
அர்த்தங்கள் வேறானாலும் பாவனைகள் ஒன்றுதான்.
"பிள்ளையஸ் ரீச்சர் வந்துவிட்டா இனிப் படியுங்கோ' மாணவர்க ளைப் பார்த்துக் கூறிக் கொண்டு அவன் அங்கிருந்து நகருகின்றான்.
அவள் உதட்டில் வெற்றிப் புன்னகை மலர வகுப்பறைக்குள் நுழைகின்றாள்.
அவன் தொடர்ந்து சுற்றிப் பார்த்துக் கொண்டு, மாடிக்குக் கீழேயுள்ள வகுப்புக்களை நோக்கி வருகின்றான்.
அந்த உயர்வகுப்பு மாணவன் சின்னவனை இழுத்து வைத்து அப்பொழுதும் பேசிக் கொண்டு நிற்கின்றான்.
அவன் வந்து கொண்டிருப்பது கண்டு சின்னவன் விறாந்தை நீளத்துக்கு மெல்ல ஒடிச் சென்று மறைகின்றான்.
அவன் ஓடத் தொடங்கியதும், உயர் வகுப்பு மாணவன் வெறுப்புடன் பின்புறம் தலையைத் திருப்பி முன்னர் போல அவனைப் பார்க்கின்றான். அந்த மாணவன் சட்டென்று பின்னே திரும்பிப் பார்த்த அந்தப் பார்வை. தலை திருப்புதல். அவனது அசைவுகள். 6T6)6) Tib அலட்சியமாக. அவன் இதயத்தில் பாய்ந்து குத்துகின்றது.
அவன் உள்ளே சினம் மூண்டு, அவன் வெகுண்டெழுகின்றான். பொறுமையை இழந்து போகின்றான். அந்த மாணவனை நோக்கி வன்மத்துடன் வருகின்றான்.

Page 13
22 தெணியான்
"வகுப்பு நடக்குது. நீ அங்கே என்ன செய்து கொண்டு நிற்கின் றாய்! வா இங்கே!”
அவன் கட்டளைக்கு மாணவன் பணிந்ததாகத் தெரியவில்லை.
அந்த உயர் வகுப்பு மாணவன் அசையாது நிமிர்ந்து நிற்கின்றான். அவன் கொதிப்புடன் இரண்டு அடி எடுத்து வைத்து எதிரில் நிமிர்ந்து நிற்கும் அந்த மாணவன் கன்னத்தில் 'பளார் என கையினால் ஓங்கி, அறைகின்றான்.
மாணவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அவன் திகைத்து உறைந்து போகின்றான். கண்கள் சிவந்து கலங்குகின்றன.
"டோ வகுப்புக்கு." வகுப்பறை நோக்கி அவன் கை நீளுகின்றது.
மாணவன் தலை குனிந்து போய்க் கொண்டிருக்கின்றான். சினம் முற்றாக அவனுக்கு இன்னும் அடங்கவில்லை, உடல் படபடக்கிறது. சுவாசம் பெரிதாக மூசி இழுக்கிறது. வியர்வை தொடர் ந்து பெருகி வடிகிறது. தலையில் பெரிய பாரமாக இருக்கிறது. அவன் அங்கிருந்து நகர்ந்து போய்க் கொண்டிருக்கின்றான். காரியாலயம் திரும்பி தனது கதிரையில் வந்து அமருகின்றான். அவன் நெஞ்சக் கொதிப்பு அடங்க, பின்னர் நிதானமாகச் சிந்திக்கின்றான்.
வயதுக்கு வந்த மாணவனுக்கு கன்னத்தில் அறைந்து விட்டேன். வளர்ந்தவன் அவமானப்பட்டுப் போனான். அவனை அழைத்து விசாரித்திருக்கலாம். அதன் பிறகு தண்டனை பற்றி முடிவு செய்தி ருக்கலாம். கீழ் வகுப்பு மாணவனைக் கூப்பிட்டு கேட்டறிந்திருக் கலாம். இப்பொழுதும் காரியம் கெட்டுப் போய்விடவில்லை. அவனிடம் விசாரித்துப் பார்க்கலாம்.
இனி, விசாரிக்கப் போய் நடந்து முடிந்ததைக் கிளற வேண்டி வரும் அந்த மாணவன் அப்படி அலட்சியப் பண்ணி இருக்கக் கூடாது. சிலசமயம் மாணவன் பக்கத்திலும் நியாயம் இருக்கலாம்.
இனி, என்ன செய்வது? தண்டனை வழங்கிய பிறகென்ன நியாய விசாரணை? இந்த விசாரணையில் நியாயம் இருக்காது; சத்தியம் இருக்காது. வெறும் நியாயப்படுத்தல் தான் மிஞ்சும் அதுதான் இப்பொ ழுது சமூகத்திலும் நடக்கின்றது.
அவன் ஊறும் வியர்வையைத் துடைத்து விட்டுக் கொள்ளுகின்றான்.

46
ஸேருக்குச சுகமில்லைப் போலே!"
குரல் கேட்ட பின்னரே காரியாலயத்துக்குள் அவள் வந்து நிற்பதை அவன் கண்டு கொள்கி ன்றான்.
அவள் வகுப்பை விட்டு அவன், திரும்பி வரும் வேளை அவளு டன் சுமுகமாக எதுவும் பேசாது வந்துவிட்டான்.
அவன் தன் மீது வெறுப்புற்றிருந்தால் அந்த வெறுப்பைத் தீர்த்து வைக்க வேண்டுமல்லவா? அவனைத் தேடி வந்து வலிந்து பேசி சமாதானப்படுத்த எண்ணுகிறாளா
வீட்டில் இருந்து புறப்படும் வேளை கையில் குடையைத் தந்து, மனைவி அவனுக்குச் சொல்லி அனுப்பியது இப்பொழுது அவன் நினைவுக்கு வருகின்ற.
"நோய் மற்றவையஞக்கு வந்தால் அதுக்கு வைத்தியஞ் செய்கிற துக்கு துடிச்சுப் பதைச்சுக் கொண்டு நிற்பியள். உங்களை நீங்கள் கவ னிக்கிறதில்லை" என கடந்த இரவு அவள் குறைபட்டுக் கொண்டாள். பார்வைக்கு நோயாளியாகத் தோன்றுகின்றேனா எதற்கும் ஒரு தடவை டொக்டரைப் போய்ப் பார்ப்போம் என அவன் தீர்மானித்துக் கொள்கின்றான்.
முதற்பாடம் தொடங்கி முடிந்துவிட்டால், நடுப்பக்கம் ஓய்வு நேரம் வரும் வரை வகுப்புக்கள் குழப்பமின்றிச் சுமுகமாக நடந்து கொண்டிருக்கும்.

Page 14
24 தெணியான்
அவனும் சற்று ஒய்வாக இருக்கலாம். அவன் டொக்டரிடம் போய் வருவதற்குப் புறப்படுகின்றான். “ஸேர் வாருங்கோ மோட்டபயிக்கிளை கொண்டு போகிறன்" "வேண்டாம். நான் சயிக்கிளிலே போய் வாறன்’ அதிபர் வேண்டுகோளை நிராகரித்து விட்டு அவன் புறப்படுகின்றான்.
'அதிபர் என்றும் இப்படிக் கேட்டதில்லை. இன்றைக்கேன் ஏற்றிக் கொண்டு போகின்றேன் என்கின்றார். அவருக்கும் என்னைப் பார்க்க. அவன் குடையைக் கையில் எடுத்துக் கொண்டு சயிக்கிளை உருட்டிய வண்ணம் புறப்படுகின்றான்.
பருத்தித்துறைக்குப் போயாக வேண்டும். மூன்று கிலோ மீற்றர் தூரம் போய் வரவேண்டும். தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் யுத்தக்கெடுபிடியினால் வைத்தியர்கள் இந்த மண்ணில் இருந்து வெளியேறிவிட்டார்கள்.
அரசினர் வைத்தியசாலைகள் வெறும் பெயருக்கு இயங்கிக்
கொண்டிருக்கின்றன. நோயாளர்களுக்குத் தகுந்த வைத்தியம் செய்வதற்கு அங்கு யாருமில்லை.
தனியார் வைத்தியர்களும் இல்லாமலே போய்விட்டார்கள். பருத் தித்துறையில் மாத்திரம் தகுதி வாய்ந்த ஒரு டொக்ரர் இருக்கின்றார்.
பருத்தித்துறை எப்பொழுதும் வைத்தியர்களுக்குப் பேர் பெற்ற பட்டினம்
வடமராட்சியின் தலைநகரமாக இருந்து வந்ததும் பருத்தித் துறை தான். துறைமுகம் அங்கு இருப்பது அதன் வளர்ச்சிக்கான காரணம். உதவி அரசாங்க அதிபர் அலுவலகம், நீதிமன்றங்கள், வங்கிகள், நகைக் கடைகள், சேலைக்கடைகள், பெரிய சந்தை, சினிமாத் தியேட்டர் எனச் சிறப்பாக இருந்த இடம் வடமராட்சியில் இருந்து புறப்பட்டுச் செல்லும் பஸ் வண்டிகள் அனைத்தும் அங்கிருந்துதான் பயணத்தை ஆரம்பிக்கின்றன.
யுத்த அனர்த்தத்தினால் இப்பொழுது சிதைந்து போன கடற்கரைப் பட்டினம் பருத்தித்துறை.
சிறந்த வைத்தியர்கள் எந்தக்காலத்திலும் பருத்தித்துறையில் இருந்து வந்திருக்கின்றார்கள்.
செல்லப்பா என்ற ஒரு டொக்ரர் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் பருத்தித்துறையில் இருந்தார்.

தவறிப் போனவன் கதை 25
நோயாளிக்குக் கலவை மருந்தைக் கொடுத்து நன்றாகக் கலக்கிக் குடிக்குமாறு சொல்லி அனுப்பிய காலம் அது.
காங்கேசன்துறையில் இருந்து கடற்கரையோரமாகக் கிழக்கு நோக்கி வரும் வீதி, பருத்தித்துறை துறைமுகம் வரை வந்து தெற் குத் திசையாகத் திரும்பி பட்டினத்துக்குள் பிரவேசிக்கும் இடத்தில், கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி மூக்கத்தில் இருந்து வரும் வீதி ஒன்று வந்து சந்திக்கின்றது. அந்த இரண்டு வீதிகளும் சந்திக்கும் மூலையில் டொக்ரர் செல்லப்பாவின் வைத்தியசாலை இருந்தது.
டொக்ரர் செல்லப்பா எங்களுக்குக் குடும்ப வைத்தியர்.
சின்னச் சின்ன நோய்களுக்கு ஊர்த் தமிழ் வைத்தியர்களுக்குக் காட்டி மருந்து வாங்கிக் கொடுப்பார்கள்.
தமிழ் வைத்தியர்கள் தரும் மருந்தினால் நோய் தீரவில்லை என்றால் செல்லப்பா டொக்டரிடந்தான் அழைத்துப் போவார்கள்.
அவர் அந்த நாளில் வடமராட்சிப் பகுதியில் மிகப் பிரபலமான ஒரு டொக்ரர்.
அவனுக்கு நீண்டகாலமாக வயிற்றில் ஒரு குத்து இருந்து வந்தது.
அதனால் அவன் இடையிடையே அவஸ்தைப்பட்டான். உணவை அவனால் விரும்பி உண்ண முடியவில்லை.
ஊரில் இருந்த தமிழ் வைத்தியர் ஒருவரிடம் அவனைக் காட்டினார்கள்.
"பேதி குடிச்சால் எல்லாம் சரி வந்துவிடும்" என்று சொல்லி, செம்மஞ்சள் நிறத்தில் ஒரு குளம்பைக் குளிகையாக உருட்டி, வாழைப்பழத்துள் வைத்து விழுங்குமாறு சொல்லிக் கொடுத்தார்.
அவனுக்குப் பேதி போனதிலும் பார்க்க, வாயினால் சத்தி போனதுதான் அதிகம்.
வயிற்றுக் குததினால் உண்டான அவஸ்தை பெரிதல்ல. அந்த
மருந்தினால் அவன் பட்ட அவஸ்தை அப்பப்பா! சொல்லுந்தரமன்று.
அன்று அவன் தீர்மானித்தான், அந்த மருந்து இனிமேல் எந்தச் சந்தர்ப்பத்திலும் தான் உண்ணப் போவதில்லை என
மருந்தின் பிறகு சில தினங்கள் அவன் சுகமாக இருந்தான்.

Page 15
26. தெணியான்
அந்தச் சுகம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. மீண்டும் குற்ற ஆரம்பி த்து விட்டது.
இனிவேறு ஆளில்லை. டொக்ரர் செல்லப்பா இடம் அவனை அழைத்துச் சென்று காண்பிப்பதற்கு அவன் தகப்பன் தீர்மானித்தார்.
ஒரு நாள் காலை அவனையும் அழைத்தக் கொண்டு பஸ் வண்டி யில் ஏறிச் சென்று செல்லப்பா டொக்ரரிடம் போனார்.
டொக்ரர் அவன் வயிற்றை ஊன்றி ஊன்றி நீண்ட நேரம் பரிசோ தித்துப் பார்த்தார். பின்பு "வயிற்றில் பூச்சி” எனத் தீர்ப்புக் கூறினார்.
அவர் சொன்னது அப்பொழுது அவனுக்கு விளங்கவில்லை. வயிற்றுக்குள்ளே பூச்சி எப்படிப் போகும்? பாம்புதானே வயிற்றுக்குள்ளே இருக்கிறது.
டொக்ரர் விளங்காமல் சொல்லுகின்றாரென அவன் நினைத்துக் கொண்டான்.
பாம்பு எல்லோரது வயிற்றுக்குள்ளும் இருக்கின்றது.
பாடசாலையில் அவனும் நண்பர்களும் கூடி இருந்து ஒருநாள் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுத அவர்கள் மத்தியில் இருந்தாற் போல ஒரு ஆராய்ச்சி.
"நாங்கள் சாப்பிடுற சாப்பாடெல்லாம் எங்கே போகுது?"
"வயிற்றுக்குள்ளே கிடக்கிறது"
"அப்பேன் வயிறு வத்திது! பிறகு சாப்பிடுகிறம்"
"மலமாக் கழியுது"
"கணக்கச் சாப்பிடுகிறம் கொஞ்சந்தான் மலம் கழியுது மிச்சச் சாப்பாடெல்லாம் எங்கே?"
"அதுகும் சரிதான்"
"அப்ப சாப்பாடுகள் எங்கே போகிது?"
"உங்களுக்கு ஒண்டும் தெரியாது. மொக்குகள்." ஒரு மாணவன் சொன்னான்.
"நீ சொல்லடா பாப்பம்"

தவறிப் போனவன் கதை 27
"சொல்லன்ரா?”
"டேய் நீங்கள் எல்லாரும் பேய்க் குஞ்சுகளடா! எங்கடை வயிற் றுக்குள்ளே ஒரு பாம்பு இருக்கிது. அந்தப் பாம்பு நாங்கள் சாப்பி டுகிறதுகளை தான் சாப்பிட்டு முடிக்கிது"
"என்ரை வயிற்றுக்குள்ளையுமோ!" "எல்லாற்றை வயிற்றுக்குள்ளையுந்தான்" அந்த மாணவன் சொல்வது உண்மை என்று எல்லாரும் நம்பினார் கள். அந்த நம்பிக்கை அவன் மனதிலும் இருந்து வந்தது.
"வயிற்றில் பூச்சி" என்று டொக்ரர் சொன்னதை அவன் மனது நம்ப மறுத்தது.
டொக்ரர் நல்லா ஏமாத்துகிறார் என அவன் நினைத்துக் கொண்
டான். டொக்ரர் கொடுத்த மருந்து குடிப்பதற்கும் அவனுக்குக் கொஞ்ச மும் விருப்பமில்லை.
வீட்டில் அம்மாவின் ஆக்கினைக்கு, முகத்தைச் சுழித்துக் கொண்டு மருந்தைக் குடித்தான்.
ஒரு நாள் நடுப்பகல் அவன் மலம் கழிக்கப் போனான். அப்பொ ழுது ஒரு பாம்பின் வால் மலத்தோடு சேர்ந்து வெளியே நீண்டு கொண்டு வருவதை அவன் தற்செயலாகப் பார்த்து விட்டான்.
"ஐயோ பாம்பு. பாம்பு" அவன் வாய்விட்டுக் கதறினான்.
அவன் கதறி அழும் சத்தம் யார் காதிலும் விழுந்ததாகத் தெரியவில்லை.
எழுந்து ஓடிவிடலாமா என்றால் எப்படி ஒட முடியும்? பாம்பு வால் நீண்டு தொங்குகிறதே! தொடர்ந்து குந்தி இருப்பதற்கும் அச்சமாக இருக்கின்றது. பயத்தினால் உடல் வியர்க்க ஆரம்பித்து விட்டது. என்ன செய்வதென்று அறியாது பயந்து நடுங்குகின்றான்.
இறுதியில் மனதைத் திடப்படுத்திக் கொண்டு மூச்சுப் பிடித்து முக்குகின்றான். திரும்பத் திரும்ப முக்குகின்றான்.

Page 16
28 தெணியான்
நீண்ட நேரத்தின் பிறகு தொப்பென்று வந்து விழுகிறது ஒரு பாம்பு, ஒரு சாண் நீளம்
"ஐயோ! வயித்திலை இருந்த பாம்பு வெளியே வந்து விழுந்து போய்ச்சுது, இனி, நான் தின்னுற சாப்பாடுகள் செமிக்கமாட்டாது. நான் எப்படிச் சாப்பிடுறது. சாப்பிடாமல் எப்படி உயிரோடை இருக்கிறது. நான் சாகப் போறன். நான் சாகப் போறன்." அடித்துக் கொண்டு
அம்மாவைத் தேடி ஓடுகின்றான்.
"gogi DDIF....! (gol DLIDIT....!"
"என்ன மேனை . ஏன் பதகளிக்கிறாய்?"
"பாம்பு அம்மா. பாம்பு"
"எங்கே. எங்கே. என்ன நடந்தது?"
அம்மா பதற்றத்துடன் ஓடி வருகின்றாள்.
"கக்கூசுக்குப் போகேக்க. பாம்பு விழுந்ததம்மா"
"ஹ. ஹ. அதே சங்கதி. அதுக்கேன் பயப்படுகிறாய்!”
"பாம்பெல்லே அம்மா விழுந்து போச்சு”
"விழட்டன். அதுக்குத்தானே டாக்குத்தர் மருந்து தந்தவர். இனி
வயித்திலை குத்தாது”
"666T60TLDLDIT...?
"ஒமோம். வயித்திலை இருந்து கீரைப் பாம்ப விழுந்து போச்சு"
“aỂ6ODJŮJ LI JITLD(3L JT...!”
"ஒமோம்."
"அப்பிடியெண்டால்.”
9.
"அப்பிடியெண்டால்." அம்மா யோசித்துப் பார்க்கின்றாள் என்ன விளக்கம் சொல்வதென்று அவளுக்கும் விளங்கவில்லை. பின்னர், "வயித்துக்கெ குத்துற பாம்பு கீரைப் பாம்பு" என்றாள்.
அம்மா சொன்ன விளக்கம் அவனுக்குத் திருப்தியாக இல்லை.
அவன் அஞ்சிக் கொண்டிருந்தான். தான் செத்துப் போய்விடுவேன் ଶt ଖାଁ [0].

5 (Uதுமை வந்தால் மரண பயமும் வருமென்று
சொல்லுவார்கள். எட்டு வயதில் அவனுக்கு அந் தப் பயம் வந்துவிட்டது. மரணத்துக்கு வயதி ல்லை, பருவமில்லை, நேரமில்லை, காலமி ல்லை. எப்பொழுதும், எவரையும் சந்திக்க ஆயு
தம் எதுவுமின்றி அது தயாராகத் தேடி வருகின்றது. மனிதன் மரணத் தைச் சந்திப்பதற்கு எக்காலத்திலும் தயாராக இருப்பதில்லை. மரணப்பயம் வந்தால் அவர்களுக்கு அபயம் அளிப்பவர்கள் வைத்தி யர்கள். அவர்கள் நோய்க்கு மருந்தளிப்பர் மரணத்துக்கு அவர்களிடம் என்ன மருந்து?
பருத்தித்துறையில் செல்லப்பா டொக்ரர் இருந்தார். அவனுக்கு அபயம் அளித்தவர் அவர்தான். அவன் பின்னர் அதனைப் புரிந்து கொண்டான். செல்லப்பா டொக்டருக்குப் பிறகு டொக்ரர் விசுவலிங் கம் பருத்தித்துறைச் சிவன் கோவில் வீதியில் இருந்தார். அவரின் பின்னர் அவரது மருமகன் டொக்ரர் தம்பிப்பிள்ளை. அதே இடத்தில் டொக்ரர் சின்னப் பத்மநாதன். அங்கிருந்து சற்றுத் தூரத்தில் பெரிய பத்மநாதன். டொக்ரர் பாலகிருஷ்ணன். இப்படி காலத்துக்குக் காலம் பருத்தித்துறையில் பிரபல்யமான டொக்ரர்கள் இருந்து வந்தார்கள்.
இன்று அந்தப் பெருமை பருத்தித்துறைக்கு இல்லாமல் போயிற்று. பஸ் டிப்போவுக்கு அண்மையில், மருதடி விநாயகருக்கு எதிரில் இன்று டொக்ரர் ஆனந்தன் வைத்தியசாலை, அவன் வீட்டில் இருந்து வைத்திய சாலையின் தூரம் சற்று அதிகந்தான்.

Page 17
30 தெணியான்
காய்ச்சல், தலையிடி என்று சின்னச் சின்ன நோய்களுக்கு எல்லாம் அவரிடம் ஓடிப் போக முடிவதில்லை. அந்த நோய்களுக் கென்று உள் ளூரில் இருக்கிறார்கள் ஆயுர்வேத வைத்தியர்கள். அவர்களுக்குக் கட்டுப்படாத நோய்கள் டொக்ரர் ஆனந்தனிடம் அவனை, அவன் குடும்பத்தவர்களைக் கொண்டு வரும்.
டொக்ரர் ஆனந்தன் கைராசிக்காரர் என்று பேர் பெற்றவர். நோயாளியை அவர் இனங்கண்டு, அன்பாகப் பேசி ஆதரவாக நடத்துவதில் பாதி நோய் மருந்தில்லாமல் தீர்ந்து போய்விடும்.
மீதி நோய்களுக்குத்தான் அவர் கொடுக்கும் மருந்து அவர் ஒரு இலக்கிய ரசிகர் என்பதும் அவன் அறிந்து வைத்திருக்கின்றான். அவருக்கும் அவனை விளங்கிக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் வாய்த் திருக்கின்றன. பரீட்சை எழுதுவதற்காகப் படித்த பாடப் புத்தகங்களு க்குப் பிறகு மாணவர்களின் புத்தகங்களை மாத்திரம் வகுப்பறையில் நின்று வாசிக்கும் ஓர் ஆசிரியனல்ல அவன் என்ற உண்மை அவருக்குத் தெரியும். நோயாளர்கள் அதிகம் இல்லாத சமயங்களில் அவனிடம் அவர் மனம் திறந்து பேசுவார்.
"அண்மையிலே என்ன புத்தகம் வாசிச்சீங்க?"
"பவரின்ரை மலையாள நாவல் மொழி பெயர்ப்பு இருக்கு. தரட்டுமா?."
"ஆனந்த மூர்த்தி உங்களிட்டை இருக்கா? இருந்தால் பிறகு வரும்போதும் கொண்டு வாருங்கோ"
“என்ன டொக்ரர். நோயாளியாகித் திரும்ப உங்களிட்டை வரச் சொல்லுறியளா?”
"இல்லை. இல்லை. இந்தப் பக்கம் வரும் போது கொண்டு வாருங்கோ!"
"டொக்ரர் உங்களிட்டை ஒன்று கேட்கலாமா?"
"கேளுங்கோ.”
"இது இலக்கியமில்லை. உங்கடை தொழில் சம்பந்தப்பட்டது" "அதையும் நான் அறியத்தானே வேணும்!"
"இல்லை டொக்ரர். நீங்கள் குறைபட்டுக் கொள்ளுவியளோ. எண்டுதான்."

தவறிப் போனவன் கதை 31
"அப்பிடி என்ன குறைபட்டுக் கொள்ளப் போகிறேன்!"
"சரி டொக்ரர், நோயாளர் சாகிறதுக்கு முந்தியும் மருந்து கொடு த்து, சாகிறதுக்குப் பிந்தியும் மருந்து குடுக்கிறியளே. சாகிறது க்குப் பிந்தி அவர்கள் எப்படி அந்த மருந்தைச் சாப்பிடுவார்கள்"
"என்ன சொல்லுறியள்?"
"நீங்கள் தருகிற மருந்துச் சரையிலே 'சா பின் 'சா முன் என்றல் லவா எழுதி இருக்கிறியள்!"
"ഖ]. ஹ. இது நல்ல பகிடி. சாப்பாட்டுக்கு முன். சாப்பாட் டுக்குப் பின் என்பதைச் சுருக்கமாக எழுதுகிறார்கள். இனி அதை மாற்றச் சொல்லுகிறேன்"
இலக்கியம் அவரோட அவனை வெகு நெருக்கமாகப் பிணைத்து வைத்திருக்கின்றது.
ஆனந்தன் வைத்தியசாலைக்கு வந்து கூடுகின்றவர்கள் நோயா ளர்கள் மட்டுமல்ல, இலக்கிய இரசிகர்களும் அங்கு வந்து சேருவார்கள்!
இலக்கியத் தென்றல் எப்பொழுதும் அங்கு மெல்ல வீசிக் கொண்டிருக்கும்.
பருத்தித்துறையில் இருந்து நெல்லியடி ஊடாக யாழ்ப்பாணம் செல்லும் பிரதான வீதி ஓரத்தில் ஆனந்தன் வைத்தியசாலை. அந்த வைத்தியசாலையை ஒட்டி அதன் பின்புறத்தில் அவர் குடும்பத்துடன் வாழும் வீடு வைத்தியசாலை பிரதான வாசலை அண்டி கிழக்கிலும் தெற்கிலும் விறாந்தைகள். தெற்கு விறாந்தை அந்தத்தில் உள்ள அறையில் ஒரு புத்தகசாலை. புத்தகசாலைக்கு எதிரில் இரு விறாந்தைகளும் சந்திக்கும் மூலையில் ஒரு மேசை போட்டு அன்றைய தினசரிப் பத்திரிகை களை ஒழுங்காக அடுக்கி, சிலவற்றைத் தொங்கவிட்டு அமர்ந்திருப் பார் தவலிங்கம்
அவர் ஒரு இலக்கியச் சுவைஞர். சிறந்த இலக்கிய நூல்கள் பலவற்றைத் தேடித் தேடிப் பணம் கொடுத்து வாங்கிப் படித்து, வீட்டு அலுமாரிகளில் அடுக்கி வைத்துக் கொண்டிருப்பவர். பிறவி எடுத்ததன் நோக்கம், நல்ல இலக்கியங்களைப் படித்துச் சுவை பார்ப்பது, அறிவைப் பெருக்குவது என்பது அவர் கொள்கை. தனது சம்பாத்தியம் முழுவதையும் புத்தகங்கள் வாங்குவதற்காகச் செலவு செய்கின்ற வித்தியாசமான மனிதர்.

Page 18
32 தெணியான்
உண்மையில் அவர் ஒரு தகவல் களஞ்சியம்.
புத்தகங்கள் இரவலாக அவரிடம் பெற்று அவன் வாசிக்கும் பழக்கமுள்ளவன். அவனைக் கண்டு கொண்டால், “வாங்க மாஸ்ரர்" என உற்சாகமாக அவர் வரவேற்பார். அவனுக்கும் அந்தச் சமயம் தனது நோய்களெல்லாம் மறந்து போகும். நோயுடன் வந்திருப்பது மறந்து அவரோடு மகிழ்ச்சியாக உரையாடிக் கொண்டிருப்பான். இலக்கியம் அதனை அனுபவிக்க அறிந்த மனதுக்கு அரு மருந்து. ஆனந்தன் வைத்தியசாலைக்குப் போகும் வேளைகளில் அவன் மனதும் ஆனந்தம் கொள்ளும்,
எப்பொழுது சென்றாலும் அந்த வைத்தியசாலை நோயாளர்களால் நிறைந்திருக்கும். அரசினர் வைத்தியசாலையில் இன்று வைத் தியர்கள் இல்லை. தனியார் வைத்தியர்களும் யுத்த பூமியை விட்டு வெளியேறி விட்டார்கள். டொக்ரர் ஆனந்தனுக்கு நோயைக் காட்டி, மருந்தும் பெற்றுக் கொண்டு திரும்பிச் செல்வதற்குச் சில மணி நேரம் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். விடுமுறை நாட்கள் என்றால் அவனுக்கு அந்த நேரம் மகிழ்ச்சியானதாக இருக்கும்.
ஆனால் விடுமுறை பார்த்தா நோய் வருகின்றது! மனைவி இன்று வற்புறுத்திச் சொல்லாமல் இருந்திருந்தால் இப்பொழுதும் அவன் வருவதைத் தவிர்த்திருப்பான்.
"கடும் வெய்யில்லே வாறியள்." ஆர்வத்துடன் வரவேற்கின்றார்.
"நோய் வந்தால் வரத்தானே வேணும் சொல்லிக் கொண்டு சைக்கிளை ஸ்ராண்டில் நிறுத்திவிட்டு, குடையை மடக்கிய வண்ணம், "இருங்கோ வாறன்." என்று அவருக்குச் சொல்லிக் கொண்டு விறாந்தையைத் தாண்டி உள்ளே போகின்றாள்.
தவலிங்கம் அவனை
டொக்ரரின் அறைக்கு வெளியே அமர்ந்து பெயர்கள் பதிந்து இலக்கத்துண்டு கொடுக்கும் றோஜா வண்ணக் கவுண் அணிந்த இளம் பெண்ணிடம் வருகின்றான்.
"ஐயா. உங்களுக்கா காட்டப் போறியள்?"
"ஒமோம்." "வாறன் பயில் எடுத்துக் கொண்டு எழுந்து உள்ளே போகின்றாள்.
வழமையாகத் தன்னிடம் வந்து வைத்தியம் பார்க்கின்றவர்களுக்கு

தவறிப் போனவன் கதை - 33
ஆனந்தன் தனித்தனி பயில்கள் வைத்திருக்கின்றார். குறிப்பிட்ட நோயாளியின் நோய் பற்றிய வரலாற்றை அந்தப் பயில் எப்பொழுதும் சொல்லும்.
உள்ளே போன அந்த இளம் பெண் மெல்லிய நீல நிறப் பயில் ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு திரும்பி வருகின்றாள்.
"மிஸ், நீங்கள் என்ரை பெயரைக் கேட்கயில்லை. பயிலை எடுத்துக் கொண்டு வாறியள்"
"பெயர் தெரியும் ஐயா, இஞ்சை பாருங்கோ." அதில் தணிகாசலம் எனப் பெயர் குறிக்கப்பட்டிருப்பதை அவனுக்குக் காட்டுகின்றாள்.
மேசை மீது அடுக்கி வைத்துக் கொண்டிருக்கும் துண்டுக் காகி தம் ஒன்றை எடுத்து, அதில் திகதி இட்டு அவன் பெயகை குறித்து, அதனைப் பயிலுக்குள் வைத்துவிட்டு இலக்கத் துண்டொன்றை எடுத்து அவனிடம் கொடுக்கின்றாள்.
அவன் அந்தத் துண்டைக் கையில் வாங்கி தனது இலக்கத்தைப் பார்க்கின்றான்.
"எழுபத்தைந்து" என வாய்விட்டு ஒரு தடவை மெல்லச் சொல்லிக் கொண்டு, "பள்ளிக்கூடத்திலே இருந்து வந்திருக்கின்றன் மிஸ்" என்கின்றான்.
"நான் என்ன செய்கிறது ஐயா! பாருங்கோ. ജൂബ്ബണ് ഖു சனத்தையும், முந்திப் பிந்தி ஆரையும் விட்டால் சத்தம் போடுங்கள்" "அது நியாயந்தானே! சுகவீனத்தோடை காத்திருக்கிறவர்களுக்கு கோபம் வரும்"
"டொக்ரர் உங்களுக்குப் பழக்கந்தானே வேறை அலுவலாகப் போறது போலே. உள்ளே போய்க் காட்டுங்கோ!"
"அது சரியில்லை. கொஞ்ச நேரம் இருக்கிறேன்." அவன் தவலிங்கத்தைத் தேடி விறாந்தைக்கு வருகின்றான்.
"வாருங்கோ. வாருங்கோ. இருங்கோ." அவர் மீண்டும் அதே உற்சாகத்துடன் வரவேற்கின்றார். அவர் மேசைக்கு எதிரிலுள்ள முக்காலியில் மெல்ல வந்து அவன் அமருகின்றான்.
அப்பொழுது தான் அவன் கவனத்துக்கு வருகின்றான். டொக்ரரின் அறைக்கு வெளியில், கிழக்குப் புற வெளி விறாந்தையில் போட்டுக்

Page 19
34. தெணியான்
கிடக்கும் ஆசனங்களில் நோயாளர்கள் நெருக்கி அடித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கின்றார்கள்.
"இண்டைக்கு நிறையச் சனம்" "ஒமோம். வெள்ளிக்கிழமை, அமாவாசை, அட்டமி நவமி. ஒண் டும் இண்டைக்கு இல்லை என தவலிங்கம் கலகல என்று சிரிக்கின்றார்.
"நோயும் நாள் பார்த்துத்தான் வருமோ” "நோய் எப்ப வந்தாலும், நாங்கள் நாள் பார்த்துத்தான் வெளிக்கிடு வம்" மீண்டும் அவர் பலமாகச் சிரிக்கின்றார். அவனுக்கு வியர்த்து ஒழு கிக் கொண்டிருக்கிறது. அவன் கைக்குட்டை எடுத்து துடைக்கின்றான்.
"உங்களுக்கென்ன சுகயினம் மாஸ்ரர்?"
"என்னமோ தெரியவில்லை, உடம்பு வேர்க்கிது. தலை பாரமாக இருக்கு"
"முகமும் சரியில்லை. பள்ளிக்கூடத்திலே இருந்து தான் வாறியளோ!"
"நிறையச் சனம் இருக்கு நல்லா நேரம் எடுக்கப் போகிது. இருங்கோ வாறன்." சொல்லிக் கொண்டு அவர் எழுகின்றார்.
"அது ஒண்டும் வேண்டாம். நீங்கள் இருங்கோ" அவன் தடுக்கின் றான்.
அவன் தடுப்பதையும் கேட்காமல் "இல்லை வாறன்" எனச் சொல் லிக் கொண்டு போகின்றார்.

bண்பர் தவலிங்கம் முகம் சரியில்லை என்கிறார்.
வீட்டில் மனைவி, கல்லூரியில் ஆசிரியை, அதிபர், இங்கு வந்தால் நண்பர் தவலிங்கம். எல்லோரது பார்வைக்கும் என்மீது ஏதோ ஒரு மாறுதல் தோன்றுகிறது. எதுக்கும் டொக்டருக்குக் காட்டுவமே' என எண்ணி கொண்டு மேசை மீது கிடக்கும் பத்திரிகை ஒன்றை எடுத்து அவன் புரட்டுகிறான்.
அப்பொழுது கையில் காகிதப் பொட்டலத்துடன் தனது பருத்த உடலை தூக்கிக் கொண்டு நண்பர் தவலிங்கம் திரும்பி வருகின்றார். "ஆ. இதை சாப்பிடுங்கோ ரீக்குச் சொல்லி இருக்கி றேன். ரீ வரும்" சொல்லிக் கொண்டு அவனுக்கு முன் மேசை மீது பொட்டலத்தை வைக்கின்றார்.
"ஏன் இதெல்லாம்."
ਤ. சரி. எடுங்கோ” சொல்லிக் கொண்டு தவலிங்கம் தான் ஒரு வடையைக் கையில் எடுத்துக் கொள்ளுகின்றார்.
இருவரும் வடையைத் தின்று கொண்டிருக்கின்றார்கள். தேநீர்க் கடைப் பையன் இரண்டு கப் தேநீரைக் கொண்டு வந்து அடக்கமாக மேசையில் வைத்து விட்டுத் திரும்புகின்றான். "கூலாகக் குடிக்கிற துக்கு ஒண்டுமே இல்லை. ஒரு சோடா வாங்கேலாது, எங்கடை
יין
நிலைமை இப்படி.

Page 20
36 தெணியான்
"இந்த வெய்யிலுக்கு ரீ குடிக்கேலாது. மோர் கிடைச்சாலும் பறவாயில்லை”
"மோருக்கு எங்கே போகிறது! பருத்தித்துறைச் சந்தையிலே குடங்குடமாக மோர் கொண்டு வந்து அந்த நாளையிலே விற்றார்கள். பேராசிரியர் கணபதிப்பிள்ளை காதலி ஆற்றுப்படையிலே மோர்க் காரி பற்றி சொல்லி இருக்கிறார்"
"ஒமோம். ஒமோம். பருத்தித்துறை வடை பற்றிச் சொல்லியி ருக்கிறார். பனங்கள்ளுப் பற்றியும் சொல்லி இருக்கிறார்"
"சுவை தெரிஞ்ச மனிஷன், மகா ரசிகன், நாங்கள் பேசிக் கொண்டி ருந்தால் இண்டைக்கு பள்ளிக்கூடம் திரும்பி நீங்கள் போனபாடி ல்லை. பொறுங்கோ வாறன்!” எழுந்து டொக்ரர் அறைவாசலில் உட்கார்ந்து துண்டு பதிந்து இலக்கம் கொடுத்துக் கொண்டிருக்கும் இளம் பெண்ணிடம் போகின்றார். அவளிடம் மெல்ல எதையோ சொல்லிவிட்டு மீண்டும் வந்து அமருகின்றார்.
டொக்ரரின் அறையிலுள்ளே இருந்த நோயாளி வெளியே வருகின்றார்.
அவள் பட்டென்று எழுந்து டொக்ரரின் அறைக்குள் நுழைந்து போன வேகத்தில் திரும்பி வெளியே வந்து "ஐயா டொக்ரர் உங்களை வரட்டுமாம்" என அவனுக்குத் தெரிவிக்கின்றாள்.
இது நண்பர் தவலிங்கத்தின் வேலை என்பதைப் புரிந்து கொண்டு மெல்லச் சிரித்து அவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு அவன் எழுந்து டொக்ரரின் அறைக்குள் நுழைகின்றான்.
"வாங்க மாஸ்ரர் இருங்கோ"
அவன் மெல்லச் சிரித்துக் கொண்டு அவர் எதிரில் கதிரையில் அமருகின்றான்.
"ஆ. சொல்லுங்கோ!"
"பெரிசாக ஒண்டுமில்லை டொக்ரர். உடம்பு வேர்த்துக் கொண் டிருககு
அப்படியா' சொல்லிக் கொண்டு அவனைப் பரிசோதிக்க ...... وي ஆரம்பிக்கின்றார்.
நெஞ்சிலும் முதுகிலுமாக வைத்து வைத்து இதயத் துடிப்பைக்

தவறிப் போனவன் கதை 37
கவனிக்கின்றார். பின்னர் பிறஸர் பெட்டியை எடுத்து இரத்த அழுத்தத்தைத் திரும்பத் திரும்ப அவதானிக்கின்றார்.
பிறலர் பரிசோதனை முடிந்ததும் அவனின் நோயைத் தீர்மானித்துவிட்டார் போலத் தோன்றுகின்றது.
"மாஸ்ரர் என்னத்திலே வந்த நீங்கள்?"
"தனிச்சோ?”
"ஒமோம்"
"பிறஸர் கொஞ்சங் கூட இருக்கு"
"அப்படியா டொக்ரர்"
"பிரச்சினை ஒன்னுமில்லை. மருந்தை எடுத்துப் போட்டு, கொஞ் சம் றெஸ்ட் எடுங்கோ!"
"சரி டொக்ரர்" சொல்லிக் கொண்டு அவன் எழுகின்றான்.
ஒரு நோயாளியின் நோய் பற்றி டொக்ரர் வெளியில் காட்டிக் கொள்ளமாட்டார். நோயாளி மனதில் திகில் உண்டாக்கக் கூடாது என்பதை அறியாதவார அவர்? ஆனால் என்றும் அவனிடம் கேட்காத ஒரு கேள்விகளை இன்று அவர் கேட்கின்றார்.
பெரிதாக அப்படி என்ன நோய் இருக்கப் போகிறது? உடல் வியர்த்துக் கொண்டிருக்கிறது. தலையில் இலேசாக ஒரு பாரம். அவ்வளவுதான்.
நண்பர் தவலிங்கம் எதிரில் மீண்டும் போய் அவன் அமர்ந்து கொள்ளுகின்றான்.
"டொக்ரர் என்னவாம்?"
"பிறஸர் கொஞ்சம் கூட இருக்காம்"
“உங்களுக்கு முந்தியும் பிறஸர் இருந்ததா?”
"இல்லை. இல்லை."
"சில நேரம் ஏதும் ரென்சன் ஏற்பட்டால் பிறஸர் அதிகமாகும். பிறகு நோமலுக்கு வந்து விடும். இந்த மண்ணில் வாழும் சிந்திக்கத் தெரிந்தவன் ஆருக்கு பிறஸர் வராமல் இருக்கும்"

Page 21
38 தெணியான்
"உண்மை. உண்மை. சோதிச்சுப் பார்த்தால் எல்லோருக்கும் இரத்த அழுத்தம் கூடித்தான் இருக்கும். எனக்கும் கொஞ்ச நாள் இருந்தது. பிறகு நோமலுக்கு வந்திட்டுது"
"எனக்கு இது புதிசு"
“பிரச்சினை இல்லை மாஸ்ரர். அது இறங்கிவிடும். நீங்கள் இந்த வெய்யில்லேயா போகப் போகிறியள்? வாருங்கா வீட்டை போவம் இந்தியாவில இருந்து வந்த புதுப் புத்தகங்கள் சிலது கிடக்கு அதைப் பார்த்திட்டு சாப்பிட்டிட்டு. வெய்யில் ஆறப் போங்கோ!"
"நான் பள்ளிக்கூடத்துக்குப போகவேனும்"
"போகாமல் விட்டால், அரை நாள் லீவு. அவ்வளவுதானே!"
"டொக்ரருக்குக் காட்டுகிறதுக்கு வந்தனான். Ljaji Grfdda Lib திரும்பிப் போகவில்லை எண்டால் யோசிப்பார்கள்"
"அதுவும் சரிதான்"
"வாறன் மருந்தெடுத்துக் கொண்டு சொல்லிக் கொண்டு அவன் எழுந்து போகின்றான்.
மருந்தை வாங்கிக் கொண்டு வந்து குடையைக் கையில் எடுத்த வண்ணம் "வாறன்’ என நண்பரிடம் சொல்லிக் கொண்டு அவன் புறப்படுகின்றான்.
வீதிக்கு வந்த பிறகே வெயிலின் உக்கிரம் அவனுக்கு விளங்கு கின்றது.
குடையைச் சட்டென்று விரித்து தலைக்கு மேல் பிடித்துக் கொண்டு, சயிக்கிளில் மெதுவாக ஏறி அதனை ஓட்டத் தொடங்கு கின்றான்.
வெயில் கடுமையாகத் தாக்குகின்றது.
வேகமாக ஓடிப் போய்விடலாம் என்றால் குடையைப் பிடித்துக் கொண்டு அப்படி சயிக்கிளில் போக முடியாது. உடல் மீது குடம் குடமாகச் சரிந்தது போல வியர் வை வேறு வடிந்து கொண்டிருக்கின் றது. வீதிகளில் போய் வருவதில் இப்பொழுது ஒரு வசதி. வாகனப் போக்குவரத்து மிகக் குறைவு.
காருக்குப் பெற்றோல் இல்லை. ஓயாமல் ஒடித் திரிந்த கார்கள் வீடுகள், கராஜ்களில் உறங்கிக் கிடக்கின்றன. பெற்றோலும்

தவறிப் போனவன் கதை 39
லாம் பெண்ணையும் கலந்து புக்குப்புக்கென்று புகை கக்கிக் கொண்டு அருந்தலாக சில கார்கள் அந்தரத்துக்கு ஓடுகின்றன.
தேசிய வாகனம் சயிக்கிள்தான்.
நல்ல காலம் பெண்களும் இப்போது சயிக்கிள் ஒட்டக் கற்றுக் கொண்டுவிட்டார்கள். அல்லது முதியவர்கள் போலக் கால் நடை யாகத்தான் அவர்களும் நடந்து திரிய வேண்டும்.
கடுமையான நோயாளிகளை அவசரமாக வைத்தியசாலைகளுக் குக் கொண்டு செல்வதற்கும் கார் வசதி இல்லாத காலம். அடுத்த கிராமத்தில் அண்மையில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று அவன் நினைவில் வந்து மனதை நெருடுகின்றது. திருமணமாகி ஒரு ஆண்டுதான் கழிந் திருக்கும். இளம்பெண் அவள். அவனிடம் படித்த மாணவி. அவள் கணவன், அவனிடம் கற்ற விசுவாசமுள்ள நல்ல மாணவன்.
திருமண அழைப்பிதழைக் கையில் எடுத்துக் கொண்டு அந்த மாணவன் அவனிடம் நேரிலேயே வந்து விட்டான். “ஸேர்" எனப் பணிவாக அழைத்து, அந்த அழைப்பிதழை அவன் கையில் கொடு த்து அடக்கமாகத் தலைகுனிந்து நின்றான்.
அவன் முகத்தில் அப்பொழுது கண்ணாடி இல்லை. அழைப்பி தழை விரித்துப் படிப்பதற்குக் கண்ணாடி வேண்டும். அதனால் அந்த மாணவனிடமே கேட்டான்.
"ஆருக்குக் கல்யாணம்?"
மாணவனுக்குக் கூச்சமாக இருக்கிறது. பதில் கூறாமல் மெல்லச் சிரித்த வண்ணம் தலைகுனிந்து நிற்கின்றான்.
"என்ன கடுமையாக வெட்கப்படுகின்றாய்! உனக்கா கலியா ணம்” மீண்டும் அவன் வினவுகின்றான்.
"ஓம் ஸேர்" அவனுக்குத் தன் காதுகளை நம்ப முடியவில்லை. "ஸேர், வந்து நின்று செய்து வைக்க வேணும்" பணிவாக வேண்டி நிற்கின்றான்.
ஆசிரியனைக் கண்டால் அச்சத்துடன் ஒதுங்கி ஓடும் மாணவர்கள் அல்ல இவர்கள். ஆசிரியன் வந்து நின்று தனது திருமணத்தைச் செய்து வைக்க வேண்டும் என்று கோரும் புதிய சமுதாயம் இது. மாணவன் என்றால் தனது சொந்தப்பிள்ளை போன்றவன். அவனை மனமார வாழ்த்தி ஆசீர்வதிக்க வேண்டியது ஆசிரியன் கடமை,

Page 22
4) தெணியான்
“சரி தம்பி தவறாமல் வருவேன்"
அவனுக்குக் கொடுத்த வாக்குறுதி தவறாமல் அவர்கள் திருமண வைபவத்துக்கு மனைவியையும், அழைத்துக் கொண்டு சென்று மனம் நிறைய வாழ்த்தி ஆசீர்வதித்துவிட்டு வந்தான்.
பின்னர் ஆறு அல்லது ஏழு மாதங்களுக்கு முன்னர் கடந்த பிறகு தனது மாணவி கர்ப்பமுற்று வயிற்றில் குழந்தையோடு இருப்பது அறிந்து உள்ளம் பூரித்தான்.
அந்தப் பெண்ணுக்கு ஒரு நாள் இரவு திடீரென வயிற்றில் வலி உண்டானது.
வைத்தியர்கள் குறிப்பிட்டிருந்த பிரசவத் திகதிக்கு இன்னும் ஒரு மாதம் இருக்கிறது. பிரசவத்துக்கு இன்னும் காலம் இருக்கிறதென்ற எண்ணத்தில் அந்தப் பெண், அவள் குடும்பத்தவர்கள் பிரசவத் துக்கு வேண்டிய ஆயத்தங்களைத்தானும் முழுமையாக செய்து முடிக்கவில்லை.
மாலை ஆறு மணி முதல் ஊரடங்கு.
அவளுக்கு வலி வரவர அதிகரித்துக் கொண்டு வருகிறது. மருத் துவ மாதை அழைத்து வரலாம் என்றால் அவரும் அண்மையில் இல்லை.
வைத்தியசாலைக்குக் கொண்டு போவதைத் தவிர, அவர்களுக்கு வேறு மார்க்கமில்லை.
அவள் கணவனும் குடும்பத்தவர்களும் கார் ஒன்றுக்கு ஏற்பாடு செய்து அவளை, வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்காக ஓடித்திரிகின்றார்கள். ஆனால், காருக்கு எங்கே போவது!
இறுதியில் மாட்டு வண்டியில் ஏற்றிப் போவதைத் தவிர, அவர்களு க்கு மாற்று வழி ஏதுமில்லை. மாட்டு வண்டி ஏற்பாடு செய்வதும் அவ்வளவு இலகுவான காரியமாக இல்லை. ஊரடங்கு நேரத்தில் தனது உயிருக்கு அஞ்சாமல் யார் புறப்பட்டு வண்டியைக் கொண்டு

தவறிப் போனவன் கதை 41
வருவார்கள்? ஒரு இளம் பெண் உயிருக்குப் போராடிக் கொண்டி ருப்பது அறிந்து மனமிரங்கி ஒரு வண்டிக்காரன் இறுதியில் சம்மதி த்து வந்தான். அப்பொழுது வைகறை நெருங்கும் நேரம், சேவல் கூவ ஆரம்பித்துவிட்டது.
வண்டிக்குள் ஒரு பாயைவிரித்து அதன் மீது படுக்கைச் சேலை விரித்துப் போட்டு, தலையணை வைத்து, பரபரப்புடன் அவளைத் தூக்கி வந்து வண்டியில் ஏற்றினார்கள்.
வண்டி நகர்ந்து நூறு மீற்றர் தூரம் போயிருக்க மாட்டாது. அந்த வண்டிக்குள்ளே அவள் உயிர் பிரிந்தது.
அவளை, அவள் குழந்தையைக் காப்பாற்ற அவர்களுக்கு முடி யாமல் போயிற்று. அவள் மரணத்துக்கு யார் பொறுப்பு?
வாகன வசதி இல்லாத காரணத்தினால் யாழ்ப்பாணப் பல் கலைக் கழத் துணைவேந்தர் வடமராட்சியில் இருந்து இருபது கிலோமீற்றர் தூரம் தினமும் சயிக்கிளில் போய் வருகின்றார் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. ஆனால் அந்தப் பிரசவத்தாயின் மரணம் பற்றி யாருக்கு வெளியே தெரியும்?
அவளுக்கு நேர்ந்த மரணம் போல எத்தனை மரணங்கள்!
அந்த மரணங்கள் எல்லாம் யார் அறிவார்?
அப்படி நாளை இன்னும் யார், யாரோ?
எண் ணிக கொண் டு (O) LD 6ð 6AO LÙ (8 L J FT ulli aš آ60 1{6}{6 கொண்டிருக்கி ன்றான்.

Page 23
ЗБgögvпј முடிந்து வீட்டுக்கு வந்து உணவை
முடித்துக் கொண்டு படுத்தவன், அப்படியே உறங்கிப் போனான்.
பகல் நேரத்தில் படுத்துறங்கும் பழக்கம் இல் லாதவன் அவன் அது அவனுக்குக
கொஞ்சமும் பிடிக்காத ஒரு பழக்கம்
ஆனால் அண்மைக் காலமாகத்தான் இந்தப் புதிய பழக்கம். இப்பொழுதெல்லாம் மிக விரைவில் அவன் களைத்துப் போய்விடு கின்றான். அதனால் சரிந்து படுத்ததும், தாமதமின்றி அவனுக்கு உறக்கம் வந்து விடுகின்றது.
அவன் உறக்கத்தைக் குழப்பிவிடும் குடும்பச் சூழல் எதுவும் இப்பொழுது அவனுக்கில்லை. அவன் பிள்ளைகள் எல்லோரும் வயதுக்கு வந்தவர்களாக வளர்ந்து விட்டார்கள். கடைசிமகன் க.பொ.த.(சாத) வகுப்பில் படித்துக் கெண்டிருக்கிறான்.
மாலையில் சற்று நேரம் படுத்து உறங்கி எழுந்தால், பின்னர் இரவு நீண்ட நேரம் வழமை போல விழித்திருந்து வாசிக்க முடிகின்றது.
இரவு நேரத்திலும் படுக்கையில் மெல்லிய காற்று வந்து அவனுக்கு வீசிக் கொண்டிருக்க வேண்டும். காற்றின் மென்மையான வருடலில் அவன் சுகமாக உறங்கிப் போவான். அப்படிக் காற்று வந்து தழுவாத போது உறக்கம் அவனை விட்டுத் தூர விலகியே நிற்கும்.

தவறிப் போனவன் கதை 43
படுக்கையில் சலிப்புடன் புரண்டு புரண்டு கிடப்பான்.
காலையில் எழுந்தால் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை சோம்பலின்றிச் செயற்பட்டு, பின்னர் இரவு நேர உணவை அளவாக உண்டு, சுண்டக் காய்ச்சிய பசும்பால் ஒரு கப் சுவைத்துப் பருகி, இதந்தரும் பூங்காற்றில் தளர்ந்து படுப்பதில் தான் என்ன இன்பம்! எத்தனை சுகம்!
அந்தச் சுகத்தினை நித்தம் அனுபவிக்க வேண்டும் என்பது அவன் விருப்பம்.
அனுபவிப்பின் சுகத்தில் உடலும் உள்ளமும் புதுமலர்ச்சி பெறும். காலையில் புத்துண்ச்சியுடன் உற்சாகமாக எழுந்து மீண்டும் செயற்படலாம். இப்பொழுது அவனுக்கு முன்போல் முடிவதில்லை.
அவன் வீட்டு முற்றத்தை அண்டி வீட்டுக்கு எதிரில் பழைய மால். மால் என்பது இந்தக் காலத்தில் வீடுகளிலுள்ள ஹோல், அல்லது வரவேற்பறை பயன்படுத்துவது போல, முன்னர் மால் பயன்பட்டு வந்தது. வீட்டுக்கு வரும் விருந்தின்களை வரவேற்று உபசரிப்பதற் கும், இரவு நேரம் ஆண்கள் படுத்துத் தூங்குவதற்கும் வசதியாகமல் இருந்தது.
மால் அரைச்சுவர் வைத்து நல்ல காற்றோட்ட வசதி உள்ளதாகப் பெரும்பாலும் அமைந்திருக்கும். அதனால் அவன் வீட்டிலுள்ள பழைமையான மாலை அழித்துவிடுவதில் அவனுக்குக் கொஞ்சம் உடன்பாடில்லை. வீட்டு மாலின் கிழக்குப் புற விறாந்தையில் பாய் விரித்துப் போட்டு குளுகுளு காற்றில் அவன் படுத்துவிடுவான்.
ஒரு மாமரம் அந்த மாலை அண்டி சடைத்து வளர்ந்த கொத்துக் கொத்தாகக் காய்த்துத் தொங்குகின்றது. மாமர நிழலும் அதன் இதழ்கள் தழுவி வரும் பணிச்ச காற்றும் தரும் சுகிப்பு ஒன்றுக்கா கவே அவன் அங்கு படுத்துக் கொள்ளுகின்றான். பொழுது கருகும் மைம்மலில் கண் விழித்து எழும் போது நற்பழம் இருக்கா? என மனைவிக்குக் குரல கொடுப்பான். பிள்ளைகள் அவன் குரல் கேட்டு மெளனமாக மெல்லச் சிரித்துக் கொள்வார்கள். அடுத்து என்ன நடக் கப் போகின்றது என அவர்கள் கூறு குறிப்பாகக் கவனிப்பார்கள்.
"எங்கே நற்பழம் கிடக்கு." என்று சொல்லிக் கொண்டு தங்கமா கப் பழுத்துக் கிடக்கும் மாம்பழங்கள் ஒன்று இரண்டு எடுத்து வந்து அவன் கையில் மனைவி கொடுப்பாள்.

Page 24
44 தெணியான்
ஒரு கரும்புள்ளி, மாசு மறு எதுவும் அந்தப் பழங்களில் தேடிப் பார்த்தாலும் காணக் கிடைக்காது.
அந்தப் பழங்களைப் பார்க்கப் பிள்ளைகளுக்குப் பெரிய அதிசய மாக இருக்கும். அந்த மரத்துப் பழங்களா இப்படிப் பழுத்துக் கிடக் கின்றன?
அவனுக்குக் கொடுக்கும் அந்த மாம்பழங்களை அவள் எங்கே மறைத்து வைக்கின்றாள் என்பது சிதம்பர இரகசியம், பிள்ளைகள் சில சமயம் அந்தப் பழங்கள் எங்கே இருக்கின்றன என்று தேடிப்பார்ப்பார்கள். அவர்களின் தேடுதல் நிபுணத்துவம் அனைத்தும் அவளிடம் தோற்றுப் போகும்.
"அம்மா எங்கடை மரத்துப் பழமா இது"
"வேறை எந்த மரத்தான்?"
"ஆய்ஞ்சு வைக்கிற பழங்களை நாங்கள் போய்ப் பார்த்தால் எல்லாம் அழுகித்தானே கிடக்கு”
"ஒமோம். அவன் சண்டாளன் கொண்டு வந்து தந்த மரம். அவ னைப் போலத்தான் அந்த மரத்துப் பழமும்” என அவள் தொடங்கி விடுவாள்.
அவளுக்குத் தூரத்து மாமனொருவன் திருநெல்வேலி விவசாயப் பண்ணையில் இருந்து சிறு கன்றாக வாங்கி வந்து கொடுத்த மரம், அந்த மரத்தைப் பற்றிச் சொல்லும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அவனைப் பற்றிப் பெருமையாக அவள் பேசிக் கொண்டிருந்தாள்.
அவள் மாமன் நீண்ட தூரத்தில் இருந்து அவளை நினைத்துக் கொண்டு வந்து கொடுத்த மாமரம் அல்லவா!
ஒரு சமயம் அவளுக்குக் கடுமையான இருமல் நோய் வந்து, தொடர்ந்து இருமிக் கொட்டிக் கொண்டிருந்தாள். மருந்துகள் கொடுத்தும் சுலபமாக இருமல் கட்டுப்படுவதாக இல்லை. அப்பொழுதுதான் ஒரு நாள் கேட்டான்!
"முந்தி உனக்கு இருமல் இருந்ததா?”
"இல்லையே!”
"(pL(5°
"அப்பிடி ஒண்டும் இருக்கல்லை"

தவறிப் போனவன் கதை 45
"சின்ன வயதில் கசக்காரி மாதிரித்தானே மெலிந்து இருந்தாய்! இப்ப உண்மையைச் சொன்னாத்தானே டொக்ரர் நோய் அறிஞ்சு வைத்தியம் செய்வார்"
"மெலிஞ்சிருக்கிறவையள் எல்லாரும் கசக்காரரே”
"வீணாக ஏன் கோபிக்கிறாய்! உனக்கு முட்டு இருந்ததாகக் கேள்விப்பட்டனான்”
"ஆர் சொன்னது?"
அவள் திடீரென இப்படிக் கேட்ட பிறகே, தான் மாட்டிக் கொண்டு விட்டதான தன் தவறை அவன் உணர்ந்து "ஆரோ." என மழுப்பி
ଜୋ0],[[ଜୋ0].
"மறைக்காதையுங்கோ! சொல்லுங்கோ"
"மறைக்கிறதுக்கு ஒண்டுமில்லை அப்பா, நான் சும்மா சொன்ன
ଜୋ0[[[ର0}.
இல்லை. பொய் சொல்லுறியள்"
"நீ இப்ப. அதை அறிகிறதிலே என்ன நன்மை"
"நீங்கள் முதலிலே சொல்லுங்கோ"
"இதென்னப்பா. பெரிய கரைச்சலாக் கிடக்கு"
அவன் பெயரைச் சொன்னேன்.
"என்ன அவரோ?”
"ஒமோம். மாங்கண்டு கொண்டு வந்து தந்த உன்ரை மாமன்"
"அவரை என்ரை மாமன் எண்டே சொல்லுறியள். அவர் தேப்பனைப் போல நரியன். எங்கடை கலியாணத்தைக் குழப்பிறத்துக்குத் தானே அந்த நரியன் உப்பிடிச் சொன்னவர்" என்று பொருமினாள்.
அன்று முதல் அவளுக்கு அந்த உறவினனைக் கட்டோடு பிடிக்காது.
அந்த மாமரத்தில் காய்த்த பழங்களில் அழுகல் விழாத பழங்க ளைக் கண்டு எடுப்பது பெரிய சாதனை. அவள் இப்பொழுது பழங்க ளைக் கையில் எடுத்துக் கொண்டு விட்டால் தவறாமல் சொல்லுவாள்.
"அந்த நரியனைப் போலதான் எல்லாம் உள்ளழுகல்"

Page 25
46 தெணியான்
அவனுக்குச் சுருக்கென்று உள்ளத்தள் குத்தும். மாமா. மாமா என வாஞ்சையுடன் பெருமையாக உறவு சொல்லிக் கொண்டிருந்த அவள் மனம், தன்னால் இப்படித் திடீரென மாறினதை உணர்ந்து அவன் வருந்துகின்றான்.
சாதாரணமாக நினைத்து அவன் சொன்ன ஒரு சின்னச் செய்தி இப்படிப் பாரதூரமாக அவள் மனதை எப்படிப் பாதித்து விட்டது! உண்மை பேசும் போதும் நிச்சயம் அதில் ஒரு நிதானம் இருக்க வேண்டும்.
'பொய்மையினால் நன்மை விளையுமானால் அந்தப் பொய்மையைப் பேசு' என வள்ளுவன் சொல்லி இருக்கின்றான் அல்லவா! மெய்மையினால் தீமை விளையுமானால் அந்தப் மெய்மையைப் பேசாதே! என்பதை அவன் இன்று உணர்ந்து கொண்டான். தீமை என்பது பொய்மையானது. யார்க்கும் தீமையற்றதாக இருப்பது (OLD.j60)LD.
அவள் சொல்லிக் கொண்டிருக்கும் உறைப்பான வார்த்தைகள், இப்பொழுது அவன் நெஞ்சை நெருடிக் கொண்டிருக்கின்றன.
மாமன் மீது காட்டமாக அவள் எதனையாவது சொல்ல ஆரம்பித் தால் இடையில் பிள்ளைகள் நுழைந்து விடுவார்கள்.
"அம்மா எங்களுக்கு நல்ல பழம் தரமாட்டா"
"ஆய்ஞ்சு வைச்சதிலே நீங்கள் தெரிஞ்சு தெரிஞ்சு எடுக்கிறியள்"
"எங்களுக்கு முன்னம் அம்மா தெரிஞ்ச எடுத்துப் போடுவ"
"அப்பா பாவம்"
"நாங்கள் பாவமில்லையா!" "உங்களைப் போல அப்பா தான் போய் தேடி எடுக்குமே" இது அம்மாவின் வாதம்
அவன் எல்லாவற்றையும் கேட்டு இரசித்துக் கொண்டு மெளனமாக மெல்லச் சிரித்த வண்ணம் இருப்பான். பிள்ளைகள் வேண்டுமென்று அம்மாவைச் சீண்டி விளையாடுவது அவனுக்குச் சுவாரசியமான பொழுது போக்கு அவன் அவர்களில் தலையிடாது சிரித்துக் கொண்டிருப்பான்.
மாலையில் வழமையாக அவன் கண்விழிக்கும் நேரம் கடந்த பிறகும் இன்று அவன் படுக்கை விட்டு எழுந்திருக்கவில்லை.

தவறிப் போனவன் கதை 47
அவன் மனைவி தனது வேலைகளுக்கு மத்தியிலும் திரும்பத் திரும் வந்து அவனைக் கவனித்துக் கொண்டிருக்கின்றாள்.
கல்லூரி விட்டு அவன் வீட்டுக்கு வந்த பிறகு, அவனுக்கு உணவு பரிமாறி முடித்துக் கொண்டு, "டொக்ரரிட்டை காட்டப் போன நீங்களே” என மெல்லக் கேட்டாள்.
"ஒமோம்" என்றதுக்கு மேல் அவன் ஒன்றுமே பேசவில்லை.
அவள் மேற்கொண்டு கேட்பதற்குத் தயங்கினாள் மனம் பொறுக்காமல் அப்படிக் கேட்டு விட்டால் வள்’ என்று பாய்ந்து விழுவான்.
"களைச்சுப் போய் வீட்டுக்கு வந்தால் அதுக்குள்ளே உனக்கு அவசரம் கொஞ்சம் பொறுந்திருந்து கேளன்” எனச் சீறிச் சினப்பான்.
அவன் சினந்தால் சினக்கட்டும் என்று நினைத்துக் கொண்டு மீண்டும் அவள் கேட்டாள்.
"டொக்டர் என்னவாம்?"
அவன் ஏற இறங்க அவளை ஒரு தடவை பார்த்து விட்டு, "ஒண்டுமில்லையாம்” எனச் சாதாரணமாகச் சொல்லுகின்றாள்.
அவள், அவன் சொல்வதை நம்புவதற்குத் தயாராக இல்லை.
அவன் இன்னும் படுக்கை விட்டு எழவில்லை. என்னும் கவலை யோடு, அவள் அவனைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கின்றாள்.

Page 26
அவன் படுக்கையில் இருந்து இன்னும்
எழுந்திருக்கவில்லை. அவன் இன்று படுத்துக் கிடப்பதைப் பார்க்க அவன் மனைவிக்கு மனதில் வேதனை பெருகுகிறது, அவள் இப்படி ஒரு மனவேதனையை இதற்கு முன் ஒருபோதும் அனுபவதித்ததில்லை. இனம் புரியாத வேதனையால் அவள் உள்ளம் சதா உளைந்து கொண்டிருக்கிறது.
இந்த மனம் ஓயாது ஏன் அலட்டிக் கொண்டிருக்கிறது என அவள் தன்னைத்தானே கேட்டுக் கொண்டிருக்கின்றாள். அவள் கேள்விக் கான விடை, அலட்டிக் கொண்டிருக்கும் அந்த மனதுக்கு எங்கே தெரியப் போகின்றது? அந்தக் கேள்வியே தன்னைத் துன்புறுத்திக் கொண்டிருப்பதாக அவள் உணருகின்றாள். அவனிடம் தெளிவாக அவள் எதனையும் கேட்டறிந்து கொள்ள முடியாது.
"டொக்ரர் ஒண்டுமில்லை என்று சொன்னார் என்று மாத்திரம் கூறிக் கொண்டு அவன் மெளனமாக இருந்து விட்டான். ஆனால் அவனைப் பார்த்தால் நல்ல சுகதேகியாக அவளுக்குத் தோன்றவில்லை.
கல்லூரியில் இருந்து வீடு வந்த பின்னர் அவன் மருந்து எதுவும் உண டதை அவள் காணவில்லை. அவனிடம் போய் இதைக் கிண்டிக் கிண்டிக் கேட்டுக் கொண்டு நின்றால் பட்டென்று சீறி விழுவான். அப்படி ஒரு முற்கோபம் அவனுக்கு, தேள் பட்டென்று கொடுக்கினால் கொட்டுவது போல எதிர்பாராதா சமயம் அவன் வார்த்தைகளால்

தவறிப் போனவன் கதை 49
கொட்டிவிடுவான்.
அண்மைக் காலத்தில் முன்னரிலும் அவனுக்குச் சினம் அதிகம். அவனால் அதைக் கட்டுப்படுத்தி வைத்துக் கொள்ள இயலவில்லை. தொட்டதுக்கும் பட்டதுக்கும் எல்லாம் சீறி விழுந்து கொண்டிருக்கி ன்றான். அவனுக்கு இப்பொழுது சினம் அதிகரித்து இருப்பதற்கு அவன் உடல் நிலை காரணமாக இருக்குமோ?
அவனுக்கு டொக்ரர் தந்த மருந்தை அவன் சாப்பிட்டானா என் பதை எப்படியும் அறிந்து விட வேண்டும் என்று அவள் தனக்குள் தீர்மானித்தாள். அவள் அறிய வேண்டியவைகளை அறிந்து கொள்வ தற்கு உதவக் கூடியவள் சின்னமகள்.
சின்னமகள் அப்பாவுடன் நல்ல நெருக்கம். பிள்ளைகள் என்றால் அவன் எல்லோர் மீதும் உயிரையே வைத்திருக்கின்றான். அவர்கள் மேலுள்ள அன்பில் அவனுக்கு ஏற்றத்தாழ்வு ஏதுமில்லை. ஆனால் சின்னமகள் போல மற்றையவர்களால் அவனை நெருங்கிப் போகத் தெரியவில்லை. சின்னமகளுக்கும் அவனுக்கும் ஒத்த இயல்புகள் நிறைய அவனை அணுக வேண்டுமானால் பெரும்பாலும் சின்னமக ளையே இடையில் அவள் வைத்துக் கொள்வாள். அவன் நிச்சயம் சம்மதிக்கமாட்டான் என்று நினைப்பவைகளை எல்லாம் அதிசயிக்கத் தகுந்த விதமாக சின்னமகள் உடன்பட வைத்து விடுவாள். இன்றும் அவளைத்தான் தகப்பனுடன் பேச வைக்க வேண்டும் என்று அவள் தீர்மானித்துக் கொண்டாள். அவன் படுக்கைவிட்டு எழும் வரை அவள் காத்திருந்தாள்.
அவள் எதிர்பார்த்தது போல சற்று நேரம் கழிந்து அவன் கண் விழித்தான். ஆனால் படுக்கையில் இருந்து உடனே அவனால் எழுந் திருக்க முடியவில்லை. உதறி நெட்டி முறித்துக் கொண்டு நீட்டி நிமிர்ந்து கிடந்தான். சிறிது நேரத்தின் பிறகு மெல்ல எழுந்து படுக் கையில் அமருகின்றான்.
இனி அவன் வழமை போலக் கேட்கப் போகின்றானா அல்லது. அவள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றாள்.
அவள் எதிர்பார்ப்பு பிசகிப் போய்விடவில்லை.
"எங்கே அம்மா? அவன் குரல் கொடுக்கின்றான். தான் எழுந்து விட்டதை இப்படித்தான் அவன் தெரியப்படுத்துவான். "ஏன்!” கேட்டுக் கொண்டு அவன் எதிரில் அவள் வந்து நிற்கின்றாள்.

Page 27
50 தெணியான்
"கொண்டு வாவன்"
“என்ன?”
"என்ன புதுக் கேள்வி கேட்கிறாய்! மாம்பழம் கிடந்தால் கொண்டுவா”
சில காலமாக மாலையில் கண் விழித்ததும் தொடர்ந்து தினமும் அவன் மாம்பழம் தின்று கொண்டிருக்கின்றான். அவன் சுகநிலை கெட்டுப் போவதற்கு அது காரணமாக இருக்குமோ என அவள் உள்ளுர அஞ்சுகிறாள். மன அச்சத்தை வெளிவிடாமல் "நல்ல பழம் ஒண்டுமில்லை" என்கின்றாள்.
அவள் வேண்டுமென்று அப்படிச் சொல்லுகின்றாள் என்பதை அவன் சட்டென்று புரிந்து கொண்டு, “எனக்கொரு வருத்தமுமில்லை. நீ கொண்டு வா" என்று திரும்பக் கேட்கின்றான்.
அவன் முகத்தைக் குறிப்பாக ஒரு தடவை அவள் நோக்கிவிட்டு, அங்கிருந்து திரும்பி அடுக்களைக்குள்ளே நுழைந்து தங்கம் போல தகதகத்துக் கொண்டிருக்கும் இரண்டு மாம்பழங்களை கையில் எடுத்து வந்து அவன் கையில் கொடுக்கின்றாள்.
அவள் மீண்டும் அடுக்களைக்குள் நுழைந்து கையில் செம்பு நீருடன் திரும்பி வருகின்றாள். செம்பு நீரில் முகம் கழுவி வாய் கொப்பளித்து விட்டு, மாம்பழங்களைத் தண்ணீரில் அவன் கழுவி எடுக்கின்றான். அவன் திரும்பி வந்து படுக்கையில் அமர, அவள் சிறிய கத்தி ஒன்றைக் கையில் கொண்டு வந்து அவனிடம் நீட்டு கின்றாள்.
"கத்தி வேண்டாம்." சொல்லிக் கொண்டு சின்னக் குழந்தை போல மாம்பழத்தை வாயில் வைத்து தோலோடு கடித்துத் தின்ன ஆரம்பிக்கின்றான். மாம்பழச்சாறு அவன் கைகளில் வடிய சின்னக் குழந்தையாக மாம்பழம் உண்ணும் அழகைக் கண்டு அவள் தனக்குள் இரசித்து மெல்லச் சிரிக்கின்றாள்.
அவனுக்கென்று சில குணங்கள். போலி நாகரிகங்கள் அவனுக் குச் சற்றும் பிடிப்பதில்லை. மனிதன் இயல்பாக இருக்க வேண்டும். அந்த வாழ்வுதான் சுவையானது. மாம்பழத்தை எடுத்து தோல் சீவி, பின்னர் துண்டந் துண்டமாக அறுத்து, அழகான சிறிய தட்டொன்றில் அடுக்கி வைத்து நாலுபேருடன் சேர்ந்திருந்து உண்பது நாகரிகந் தான். ஆனால் தோலுடன் பழத்தை சேர்த்துக் கடித்து உறிஞ்சி உறிஞ்சித் தின்னும் போது பெறும் இன்பம் இருக்கிறதே, அது அலாதியானது.

தவறிப் போனவன் கதை 51
அது ஒரு தனிச்சுவை.
அவன் சில சமயங்களில் அந்தச் சுவையை எடுத்தச் சொல்லுவது கேட்டு அவள் தனக்குள் மெல்ல நகைப்பாள். மனிதனுக்குள் மாறுபட்ட எத்தனை சுவைகள்! எத்தனை வேறுபாடுகள்!
ஒருவன் உணவு உண்ணும் முறைமையைப் பார்த்து அவன் வாழ்வின் நாகரிகத்தைத் தீர்மானிக்கலாம். அவன் உணவு உண்ப தில் ஒரு அழகு இருக்கிறது கண்டு அவள் மெளனமாகப் பார்த்து அனுபவிப்பாள். இப்போது கையில் வைத்துக் கொண்டிருக்கும் பழத்தை அவன் தின்று முடிக்கும் சமயம், "அப்போய்!” என நெருக்க மாக அழைத்த வண்ணம் வந்து அவன் அருகில் அமருகின்றாள் சின்னமகள்.
"இந்தா அம்மா”
அவன் கையில் எடுத்த பழத்தை அவளிடம் நீட்டுகின்றாள்.
"வேண்டாம் அப்பா. நான் திண்டிட்டன்" என மறுக்கின்றாள்.
“சரி, விடு" சொல்லிக் கொண்டு, "தம்பியவை எங்கே? என அவளிடம் வினவுகின்றான்.
"ரியூஷனாலே இன்னும் வரயில்லை"
"அக்கா !”
"அக்கா வீடு கூட்டுறா"
அவன் மகளோடு பேசிப் பேசி மாம்பழத்தைத் தின்று முடிக்கின் றான். பின்னர் எழுந்து சென்று தண்ணிரால் கழுவிக் கொண்டு திரும்ப வந்து உட்கார்ந்து கொண்டு கேட்கின்றான்.
"சரி. இனிச் சொல்லு"
"என்னப்பா சொல்லுகிறது?"
"நீ சும்மா வந்து இப்பிடி இருக்கமாட்டியே!”
"சும்மா போங்கப்பா! நீங்கள் இப்பிடித்தான் எல்லாத்துக்கும் சந்தேகிப்பியள்”
"நம்பிக்கைதான் வாழ்க்கை. சந்தேகந்தான் தேடல், நம்பாதவன் வாழ முடியாது. சந்தேகிக்காதவன் தேட முடியாது”
"அப்போய்! உங்கடை தத்துவங்களை விட்டிட்டு, விஷயத்துக்கு

Page 28
52 தெணியான்
வாருங்கோ! நீங்கள் இப்ப எப்பிடி இருக்கிறியள்?"
"எனக்குத் தெரியும் அம்மா, நீ என்ன கேட்கப் போகின்றாய் என்று! எனக்கு ஒண்டுமில்லை. நான் நல்லாத்தான் இருக்கிறேன். காலையிலே தொடர்ந்து வேர்த்துக் கொண்டிருந்தது. இப்ப அதுகும் நிண்டு போய்ச்சுப் பார்த்தியா!"
"டொக்ரர் என்ன சொன்னவர்?"
"விசாரணை செய்கிறதுக்கு உன்னை அனுப்பி இருக்கிற ஆளுக்கு எல்லாம் சொல்லி இருக்கிறேன்"
"அம்மாவுக்குத் தெளிவாக நீங்கள் சொல்லி இருந்தால் அம்மா ஏன் மனம் கலங்குகிறா. பேச்சில் தான் பெண்ணியம் அது வீட்டிலில்லை"
மகள் சொல்வதைக் கேட்க தாய் மனதில் மெல்லச் சினம் மூளுகிறது.
"என்னத்துக்கு அப்பாவோடை இப்பிடி எல்லாம் கதைப்பான் என அவள் நினைத்து மனம் புழுங்குகின்றாள்.
அவனுக்கு மகள் பேச்சைக் கேட்டு மனம் குளிருகிறது. அவன் சிரித்துக் கொண்டிருக்கின்றான்.
‘என்ரை மகளுக்கு இப்படி எல்லாம் கேட்கத் தெரிகிறது என அவன் உள்ளூரப் பெருமைப்பட்டுக் கொள்ளுகின்றான்.
"டொக்ரர் என்ன சொன்னவர்?" குரலில் சற்றுக் கண்டிப்பை வருவித்துக் கொண்டு மகள் கேட்கின்றாள்.
"ീന്ദ്രട്ടെj கொஞ்சம் கூடி இருக்கெண்டு சொன்னார். அவ்வளவு தான்"
"அம்மாவுக்கு சொல்லாமல் மறைச்சுப் போட்டியள்"
"சொன்னால் கொம்மா அலட்டிக் கொண்டு இருக்கும். இப்ப ஆருக் குத் தான் பிறஷர் இல்லை!"
"மருந்து தந்தவரே!”
"ஒமோம். தந்தவர்"
"ஆனால் நீங்கள் மருந்து சாப்பிடயில்லை”

தவறிப் போனவன் கதை 53
"மத்தியான மருந்து பள்ளிகூடத்திலே சாப்பிட்டுவிட்டன். இனி இரவுக்கு”
வீட்டுக்கு விளக்கேற்றும் ஆயத்தங்கள் நடந்து கொண்டிருக் கின்றன.
போர் நடக்கும் பூமியில் பீதியினால் உள்ளங்கள் இருண்டு கிடப் பது போல மின்சாரமின்றி இல்லங்களும் இருளில் மூழ்கிக் கிடக் கின்றன.
"சரி அம்மா, நான் முகம் கழுவ வேணும்" சொல்லிக் கொண்டு அவன் எழுந்து குழாய்க் கிணற்றை நோக்கிப் போகின்றான்.
குழாய்க் கிணற்றில் நீர் அடித்து வாளியில் நிரப்பி விட்டுக் கொண்டு வந்து வாளிக்கு முன் குனிந்து இரண்டு கரங்களினாலும் நீரை அள்ளிக் கழுவுகின்றான்.
நீரை அள்ளி அள்ளி பல தடவைகள் கழுவிய பின்னர் தற் செயலாக கையில் அள்ளிய நீரைக் கவனிக்கின்றான்.
அந்த நீர் செந்நீராகக் கலங்கிக் கிடக்கிறது. அவன் விரல்களி னால் மூக்கைத் தொட்டு தடவிப் பார்க்கின்றான்.
அவன் மூக்கில் இருந்து இரத்தம் கசிந்து கொண்டிருக்கின்றது.

Page 29
616ji இரு கரங்களினாலும் குளிர்ந்த நீரைإ29گى அள்ளி அள்ளி முகத்தில் வீசுகின்றான். சற்றுப் பொறுமையா நீண்ட நேரம் எடுத்து குளிர்ந்த நீரை முகத்தில் விசிறிக் கொண்டு நிற்கின்றான். பின்னர் நிமிர்நது நின்று மூக்கை விரலால் தொட்டுத் தடவி அந்த கைவிரலைக் கண்ணெதிரில் பிடித்து அவதானித்துப் பார்க்கின்றான். இரத்தக் கசிவு தடைப்பட்டு நின்று போய்விட்டது. மனைவி, பிள்ளைகளுக்கு இப்படி நடந்ததைச் சொல்லக் கூடா தென்று மனதில் தீர்மானித்துக் கொள்ளுகின்றான். திரும்பிச் சென்று வழமை போல ஒரு துவாயை எடுத்து ஈரத்தை நன்றாகத் துடைத்துப் போட்டுவிட்டு, வீட்டுக்குள் போய் தலைசீவி, முகத்தில லேசாகப் பவுடரும் தடவிக் கொண்டு வந்து கதிரையில் அமருகின்றான்.
ரியூட்டரிக்குப் படிக்கப் போன மகன் அப்போது சயிக்கிளை உருட் டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.
"தம்பி எங்கே அப்பு'
"வாறான்"
"போறடம் வாறடம் எல்லாம் வழியிலே தெருவிலே மறிக்கிறான் கள். அவனைக் கூட்டிக் கொண்டு வரலாந்தானே!"
"அவன் வரான் அப்பா, அண்ணா போ. வாறன் எண்டு சொல்லுறான்.

தவறிப் போனவன் கதை 55
"நிண்டு என்ன செய்யிறான்?"
"தன்ரை பிறன்சோடை வாறானாம்" "அவருக்கு நாட்டு நிலைமைகள் தெரியாது. வரட்டுக்கு இண்டைக்கு"
"அவனைப் பேசாதையுங்கோ" அம்மா அவனுக்காகப் பரிந்து கொண்டு வருகின்றாள்.
அவன் எப்போதும் அம்மாவின் செட்டைக்குள்ளேதான்.
"அப்பா. இப்பிடியே விட்டால்.”
"அவன் என்ன செய்து போட்டான். தன்ரை பிறன்சோடை வாறான் அப்பா! அவனைப் பேசாதையுங்கோ" சின்னமகள் தம்பியின் பக்கம் சார்ந்து நியாயப்படுத்துகின்றாள்.
"அப்பா சொல்லுறதும் சரிதானே! இருளுது. இவளவு நேரமும் அவர்.” தம்பியை இன்னும் காணவில்லையே என்ற ஆதங்கத்தில் மூத்த மகளின் கண்டிப்பு
"சயிக்கிள் சத்தம் கேட்கிது. வாறான்” சின்னவள்.
"அவனை ஒண்டும் கேட்க வேண்டாம். பேந்தவன் சாப்பிடான்" அம்மா மீண்டும் அவனைப் பாதுகாக்க முந்துகின்றாள். அவன் சயிக் கிளை உருட்டி வந்து முற்றத்தில் நிறுத்திவிட்டு உள்ளே வருகின் றான்.
"இவ்வளவு நேரமும் ஏன் நிண்ட நீ தம்பி" அவன் கேட்கின்றான்.
"இப்பதான் வகுப்பு முடிஞ்சது அப்பா!"
"சரி. சரி. புத்தகங்களை வைச்சிட்டு போய் மேலைக் காலைக் கழுவு நேரத்துக்கு இனி வீட்டுக்கு வந்து சேர்ந்திட வேணும்"
அவன் சொல்லிக் கொண்டிருக்க, மனைவி தேநீரைக் கொண்டு
வந்து அவன் கையில் கொடுத்துக் கொண்டு, "இப்ப. பின்நேர மருந்தொண்டும் இல்லையே!” எனக் கேட்கின்றாள்.
தேநீர்க் கப்பைக் கையில் ஏந்தி, தேநீர் பருகுவதற்காகத் தலை யைச் சற்றுத் தாழ்த்தியவன், பருகுவதை நிறுத்திவிட்டு தலை நிமிர் ந்து அவளை நோக்குகின்றான்.
இப்படி ஏன் அவள் கேட்கின்றாள்? தன்னைப் பார்க்க அவள் பார்வைக்கு என்ன தெரிகிறது! நோயாளியாகத் தெரிகின்றேனோ!

Page 30
56 தெணியான்
என மனதில் நினைத்துக் கொண்டு "இப்ப இல்லை. இனி இரவுச் சாப்பாட்டுக்குப் பிறகுதான்" என்கிறான் அமைதியாக
"இரவு என்ன சாப்பிடப் போகிறியள்!"
தன்னை நோயாளியாக நினைத்து அவள் தன்னிடம் இப்படிக் கேட்கின்றாள் என்று அவன் மனதுக்கு இன்று தோன்றுகின்றது. இன்று மாத்திரமன்றி முன்னரும் பல சமயங்களில் தன்னிடம் இப்படிக் கேட்டு அதைச் செய்து தந்திருக்கின்றாள் எனத் தன்னைச் சமாதானப்படு த்திக் கொண்டு, "விருப்பம் போல செய்யுங்கோ" என்கின்றாள்.
அவள் அப்பொழுதும் அவனை விட்டுவிடுவதாக இல்லை. "இல்லைச் சொல்லுங்கோ" என வற்புறுத்துகின்றாள்.
"பிள்ளையளைக் கேட்டுச் செய்யுங்கோ!"
இனி அவனோடு பேசுவதில் பயனில்லை. சிலவேளை கோபித்து சூடாகச் சொல்லவுங் கூடும். அவள் நினைத்துக் கொண்டு அடுக்களை நோக்கிப் போகின்றாள்.
வீட்டு விறாந்தையில் போர்க்காலச் சிக்கன விளக்கு, பிள்ளைகள் படிக்கும் மேசையில் ஹரிக்கேன் லாம்பு அடுக்களைக்குள் சிக்கன விளக்கு விளக்குகள் எல்லாம் மங்கி மங்கி புக்குப்புக்கென புகை கக்கிக் கொண்டிருக்கின்றன.
அவன் வீட்டைச் சூழவுள்ள அயல், இரவு பத்துமணியானால் ஒரு அசுமாத்தமும் இல்லாது படுத்து உறங்கிவிடும்.
அடுத்த வீட்டிலுள்ள சினிமா இரசிகர் மாத்திரம் அவர் காலத்துப் பழைய பாடல்கள் எந்த வானொலி நிலையத்தில் ஒலிபரப்பாகின்றன எனத் தேடித் தேடி மீற்றரை மாற்றி மாற்றி உருட்டிக் கொண்டிருப்பார். அவருக்கு இரவு நேரத்திலும் இலகுவில் உறக்கம் பிடிப்பதில்லை. காறித் துப்பித் துப்பி நீண்ட நேரம் கண்விழித்துக் கிடப்பார்.
அவருக்கு உடலில் நோய் உயர் இரத்த அழுத்தம் தனக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பதாகச் சொல்லிக் கொள்வதில் அவருக்கு ஒரு பெருமை. இரத்த அழுத்தம் குறைந்து இருப்பது உண்பதற்கு உணவு இல்லாத ஏழைகளுக்கு என்பது அவர் கருத்து.
அவர் தான் வசதியானவராகக் காட்டிக் கொள்வதில் மகா அக்க றையான மனிதன். நன்றாக அறிமுகம் இல்லாதவர்களுக்கும் "என

தவறிப் போனவன் கதை 57
க்கு இரத்தம் கூடிப் போச்சு. பிறஷர்" எனப் பெருமையாகச் சொல் லிக் கொண்டிருப்பார். பிறஷர் பணக்கார வருத்தம் என்பது அவர் நினைப்பு அவர் எழுந்து நடப்பதற்கும் சிரமப்படுகின்றவர். அப்படிப் பருத்த ஒரு உடல், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கு தினமும் தவறாமல் மருந்து உண்ணுகின்றார்.
ஆனால் இறைச்சி, மீன், சாராயம், கள்ளு என நேரந் தவறாமல் ஒழுங்காக உண்டு மகிழ்வது இன்று அவருக்குப் பழகிப் போனது.
பிறஷர்காரன் இதெல்லாம் சாப்பிடலாமா? என்று யாராவது கேட்டு
வைத்தால் போதும். அதுக்குத்தானே ஒழுங்காக மருந்து சாப்பிடுகி
றேன் என அவரிடம் இருந்து பதில் வரும்.
அவருக்கு இரத்தக் கசிவு உண்டானதாகத் தெரியவில்லை. அவர் உறக்கிமின்றி இரவெல்லாம் கிடந்து தவிக்கின்றார். ஆனால், அவன் நன்றாக உறங்குகின்றான். சில சமயம் பொய்மூக்கு உடைந்து மூக் கில் இரத்தம் வடியுமென்று சொல்லுவார்கள். தனக்கும் அப்படித்தான் இரத்தம் பொசிந்திருக்க வேண்டும்.
"இரவு மருந்து எடுக்க காலையில் எல்லாம் சரியாகிப் போய் விடும்" என அவன் நினைத்துச் சமாதானப்பட்டுக் கொள்ளுகின்றான்.
மகன்மார் இருவரும் மேசை முன் அமர்ந்து லாம்பு வெளிச்சத்தில் படித்துக் கொண்டிருக்கின்றார்கள். சின்னமகள் படிப்பதை நிறுத்தி விட்டு அடுக்களைக்குள்ளே போய் அம்மாவுக்கு உதவி செய்கின்றாள். பெரிய மகள் பள்ளிக்கூடம் போய் வந்து கொண்டிருக்கும் ஆசிரியை. மின்சாரம் இல்லாததால் உடுப்புக்களை மினுக்குவதற்கு, சிரட்டைக்கரி போட்டு எரித்துத் தயார் பண்ணிக் கொண்டு நிற்கின்றாள்.
அவன் ஒருபோதும் அந்த வேலைக்குள் தலையிடுவதில்லை. புத்தகமும் கையுமாக பெரும்பாலும் அவன் இருந்துவிடுவான். இன்று வழமைபோல புத்தகம் வாசிப்பதில் அவனுக்கு அவ்வளவு நாட்டமில்லை. மகள் உடுப்பு மினுக்க ஆயத்தமாவது கண்டு "இஞ்சை விடம்மா. நா செய்து தாறன்" என உடுப்புகளை மினுக்கத் தொடங்கு கின்றான். பெரியமகளின் உடுப்புகளை மினுக்கிக் கொடுத்துவிட்டு, "சின்னவள் உன்ரை உடுப்புகளைக் கொண்டுவா! தம்பியவை கொண்டு வாருங்கோ. அம்மாவைக் கொண்டு வரச் சொல்லுங்கோ. அவன் கேட்டுக் கேட்டு உடுப்புகளை வாங்கி மினுக்கிக் கொண்டு நிற்கின்றான்.

Page 31
58 தெணியான்
அவள் வார்த்தையை அவன் கேட்பதாக இல்லை. அவன் குடும்ப த்திலுள்ள எல்லாரது உடுப்புகளை மினுக்கி முடிக்கின்றான். அதைச் செய்து முடிக்க வேண்டும் என்று இன்று அவனுக்குள் ஒரு வேகம்.
அதன்பிறகு மெல்லிய களைப்பாக இருப்பதை அவன் உணரு கின்றான். இரவு உணவை முடித்துக் கொண்டு பிள்ளைகள் படுக் கைக்குப் போய்விடுகிறார்கள். மூத்தமகன் மேசையில் இருந்து படித் துக் கொண்டிருக்கின்றான். அவன் கன்வேஸ் கட்டிலில் சரிந்து படுத்த வண்ணம் கண்களை மூடிக் கிடக்கின்றான்.
அவனுக்கு மகனை நினைக்க பெரிய பரிதாபமாகத் தோன்றுகி றது. வளர்ந்து வரும் இளம் பிள்ளைகளை இந்தப் பரீட்சைகள் எப்படி எல்லாம் போட்டு வாட்டி வதைக்கின்றன. மறுபுறம், இன்று கஷ்டங்களை அனுபவித்தால் நாளை மகிழ்ச்சியாக இருக்கலாம் என மனதைத் தேற்றுகின்றான். மாலையில் மையிருள் கவிந்து, காலம் கழிந்து போய்க்கொண்டிருக்கிறது.
வீட்டுப் பெண்களுக்கு அடுக்களை வேலைகள் ஒருபோதும் ஒய்வ தில்லை. அடுக்களைக்குள் நிற்கும் அவளுக்குத் திடீரென நினைவு வந்து வெளியே வந்து, "மருந்து போட்டு விட்டியளே!" என வினவுகிறாள். "ஒ. ஒ. மறந்து போனன். தண்ணி கொண்டு வாருங்கோ." எனச் சொல்லிக் கொண்டு வீட்டுக்குள் சென்று மருந்துக் குளிகை களை கையில் எடுத்து வந்து வாயில்போட்டு, அவள் கொடுத்த தண்ணீரை மேலே பருகுகின்றான்.
இருந்தாற் போல வீதியில் நாய்கள் குரைக்க ஆரம்பிக்கின்றன. இப்பொழுது ஊரடங்கு நேரம் என்பதும் நாய்களுக்கு எப்படித் தெரியும்! அடுக்களைக்குள் நிற்கும் அவன் மனைவி பக்கென்று விளக்கை அணைத்துவிட்டு அடுக்களைக் கதவைப் பூட்டிக் கொண்டு அவசரமாக வீட்டுக்குள் வருகின்றாள்.
"வீட்டு வளவுக்குள்ளே இவ்வளவு பயமா? கேட்கிறான். "ஏன் வீண் கரைச்சல்! நீங்களும் போய்ப்படுங்கோ'
"அம்மா எனக்கும் அலுப்பாகக் கிடக்கு படுக்கப் போகிறேன்"

தவறிப் போனவன் கதை 59
படித்துக் கொண்டிருந்த மகன் மேசையை விட்டு எழுந்து வருகின்றான்.
"நீங்கள் ஏன் இருக்கிறியள்? போய்ப் படுங்கோ" அவள் வற்புறுத்துகின்றாள்.
அவன் எழுந்து போய்ப் படுக்கையில் சரிகின்றான். அடுத்த கணம் மூக்கின் கீழே உதட்டில் நீர் வழிவது போல ஒரு உணர்வு.
அவன் கையைத் தூக்கி விரலினால் மூக்கில் தொட்டுப் பார்க்கின்றான். கைவிரல் நனைந்து பிசுபிசுக்கிறது. இரத்தம். முன்னை விடக் கொஞ்சம் அதிகம்.
அவன் எழுந்து முற்றத்துக்கு வருகின்றான். இப்பொழுது படுத்தவன் உடனே எழுந்து வெளியே செல்வதை அவதானித்த அவன் மனைவி சட்டென்று எழுந்து பரபரப்புடன் அவளும் முற்றத்துக்கு வருகின்றாள்.
"என்ன படுத்தியள். உடனே எழும்பிவிட்டியள்?"
"ஒண்டுமில்லை"
"மறைக்காதையுங்கோ சொல்லுங்கோ!"
"மூக்காலே கொஞ்சம் இரத்தம் வந்தது போல."
"ஐயோ கடவுளே."
"சும்மா சத்தம் போடாதையப்பா! பொய் மூக்கு உடைஞ்சிரு க்கும்"
"படுக்கையிலே கிடக்க எப்படி பொய்மூக்கு உடையும்?"
"கொஞ்சம் தண்ணி கொண்ட வாருங்கோ"
அவன் தண்ணிரினால் மூக்கை நன்றாகக் கழுவுகின்றான். முன்னர் போல இரத்தப் பெருக்கு நின்றுவிடுகின்றது.
"இப்ப. என்ன செய்யிது சொல்லுங்கோ!"
"உண்மையைச் சொல்லுறன். எனக்கு ஒண்டுமே செய்யவில்லை. நீ போய்ப்படு”
அவன் சொல்லிக் கொண்டு மீண்டும் போய்ப்படுக்கையில் படுத்துக் கொள்ளுகின்றான்.

Page 32
அவளுக்கு உறக்கம் பிடிக்கவில்லை. எப்படி
- அவளுக்கு உறக்கம் வரும்?
'நீ போய்ப்படு' என அவன் சொல்ல அவள் அறைக்குள் போய்விட்டாள். போனவள் படுக்கையில் சரிந்து படுக்க இயலவில்லை. படுக்கைமீது அமர்ந்திருந்த அவள் மனதில் எழுந்தவைகள் எல்லாம் அவனைச் சுற்றிச் சுற்றி வருகின்றன.
இந்த மனதுக்கு நல்லவைகள் ஒருபோதும் இசைந்து வருவதி ல்லை. துன்பங்கள் ஓயாத எண்ணப் புயல்களாகச் சுழன்று சுழன்று வருகின்றன. மனம் அஞ்சி அஞ்சி நடுங்குகிறது.
நேராத தீமைகளை நினைந்து நினைந்து. இப்படி நடந்தால். அப்படி நடந்தால். எனக் கற்பனை பண்ணி ஏங்குகிறது. அவள் மனதில் எழும் துன்ப உணர்வுகளில் இருந்து அவளால் முற்றாக விடுபட முடியவில்லை.
அவருக்கேதும் நடந்துவிட்டால். நானும் பிள்ளைகளும் என்ன செய்வோம்! நடுத் தெருவிலே தான். சொந்தமென்று இருக்கின்றவர்கள் ஆர் எங்களை ஆதரிக்கப் போகினம்? பணம் இல்லாத எங்க ளைச் சொந்தம் கொண்டாட மாட்டுதுகள், கடவுளே! அவருக்கொரு கஷ்டமும் வந்துவிடக் கூடாது. அவள் நினைத்துக் கொண்டு படுக்கையில் மெல்லச் சரிகின்றாள்.

தவறிப் போனவன் கதை 61
வீட்டு முகட்டில் பல்லி ஒன்று சொல்லுகிறது.
6365 சொல்லுது. அது நல்ல பல்லி அவள் தனக்குள் சமாதானம் ஆகிறாள்.
'விறாந்தையியே தனியக் கிடக்கிறார். அறைக்குள்ளே போய்ப் படுங்கோ என்றால் கேட்கிற ஆளில்லை
அறைக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வருவதற்கு அவளுக்கு அச்சமாக இருக்கிறது.
அவன் தனித்துக் கிடக்கிறான். அவனுக்கு உடல் நிலை சரியாக இல்லை. அவன் எப்படி இருக்கின்றான் என்பதைப் பார்க்க வேண்டும் போல அவளுக்குத் தோன்றுகின்றது. அவள் மெல்ல எழுந்து ஒசைப் படாமல் கதவைத் திறந்து விறாந்தைக்கு வருகின்றாள்.
முழு இருளில் படுத்து உறங்க அவன் ஒருபோதும் விரும்புவ தில்லை. உறங்கும் வேளையிலும் அங்கு சிறிது வெளிச்சம் அவனுக் குப் பரவி இருக்க வேண்டும். புதிதாக ஜாம்போத்தலில் உருவாக் கப்பட்ட போர்க்கால விளக்கொன்றை ஏற்றி அவன் கண்களில் ஒளி படாத வண்ணம் அவள் மறைத்து வைப்பாள்.
தான் நடந்து செல்லும் காலடி ஓசைகூட எழாத வண்ணம், அவள் மெல்ல நகர்ந்து அந்த விளக்கைக் கையில் எடுத்து வந்து அவன் முகத்தில் ஒளிவிழுமாறு அதைத் தூக்கிப் பிடித்துக் கவனித்துப் பார்க்கின்றாள்.
அவன் கால், கைகளை மடக்கி நமிர்த்தி நெட்டி முறிக்கும் சத்தம் எழும். நல்ல விழிப்புத் தட்டினநேரம் சரிந்து படுக்கும் போது 'அம்மா! என்று வாய்விட்டுச் சொல்லிக் கொள்ளுவான்.
அவனிடத்தில் யாராவது அது பற்றிக் கேட்டுவிட்டால் நான் என்னை மறந்து துங்கும் வேளையிலும் அம்மா எனக்குத் துணையாக இருக்கிறா! அதனாலே அம்மாவை எப்போதும் அழைப்பேன் எனப் பெருமையாகச் சொல்லிக் கொள்ளுவான்.
அவன் உணர்வுகள் மிகத் துல்லியமானவை. சின்னஞ்சிறிய உறுத்தலையும் அவன் சகித்துக் கொள்ளமாட்டான். அவன் படுக்கைத் துணிகளை அடிக்கடி வெந்நீரில் போட்டு அழுக்கில்லாது புனிதமாகச் சுத்தப்படுத்திக் கொடுக்க வேண்டும்.

Page 33
62 தெணியான்
ஒரு நாள் தாமதித்துவிட்டால் போதும் "என்ன போர்வைச் சீலை கடிக்குது" என்று சொல்லிக் கொண்டு தூக்கித் தூரப் போட்டு விடுவான். 'உங்கடை உடம்பு பூப்போல. என்று அந்தச் சமயங்களில் எல் லாம் அவள் சொல்வதுண்டு. இன்று ஒரு உறுத்தலுமில்லை. ஒரு நூலளவு கூட படுக்கையில் அவன் அசைந்து படுக்கவில்லை.
அவளுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. கையில் தூக்கிய சிக்கன விளக்கைக் கீழே வைத்துவிட்டு அவன் அருகில் மெல்ல அமரு கின்றாள்.
நெற்றியில் கை வைத்து தொட்டுப் பார்க்கின்றாள். ஊ.ஹ"ம். அவன் அசையவே இல்லை. நெஞ்சில் கை வைத்துப் பார்க்கின்றாள். அவன் உடல் குளிர்ந்து கிடக்கிறது. அவன் கழுத்தில் இருந்து மெல்லிய வியர்வை துளிர்த்து வடிகிறது. பயந்து, தயங்கிய வண்ணம் அவன் மூக்கின்மேல் கைவைத்துத் தொட்டுப் பார்க்கின்றாள். அவள் பயந்தது போல எதுவும் நடக்க வில்லை. அவனுக்கு இரத்தக் கசிவு முற்றாகத் தடைப்பட்டு விட்டது. உடலில் சிறிய துரும்பு விழுந்தாலும் சட்டென்று கண் விழிக்கும் அவன், இன்னமும் உறங்கிக் கொண்டு கிடப்பது அவளுக்கு ஆச்சரி யமாக இருக்கிறது.
தூக்கி வந்த சிக்கன விளக்கை முன்னர் கிடந்த இடத்தில் மீண்டும் வைத்து விட்டு திரும்ப அவன் அருகில் வந்து நின்று அவனைப் பார்க்கின்றாள்.
அவள் தனது படுக்கையை அறைக்குள் இருந்து வெளியே தூக்கி வந்து விறாந்தையில் போட்டுக் கொண்டு அவன் அருகில் படுத்தாலென்ன என ஒரு கணம் எண்ணுகின்றாள்.
அவளுக்கு உள்ளூரப் பயமாக இருக்கிறது.
விறாந்தையில் நின்றுகொண்டு அங்கும் இங்கும் திரும்பித் திரும்பி இருளைத் துழாவித் துழாவிப் பார்வையைச் செலுத்துகின்றாள். இருள் தன்னை தவிர வேறு எதனையும் அவள் விழிகளுக்குப் புலப்ப டுத்துவதாக இல்லை.

தவறிப் போனவன் கதை 63
அவள் மனதில் இதுவரை இருந்த கொஞ்ச நஞ்ச துணிச்சலும் முற்றாகக் கரைந்து போக, அச்சதுடன் மெல்லக் கதவைத் திறந்து ஒசைப்படாமல் அதனைப் பூட்டிவிட்டு படுக்கையில் போய், சரிகின்றாள். அவளுக்குத் தூக்கம் வருவதாக இல்லை. படுக்கையில் புரண்டும் புரண்டு கிடக்கின்றாள். கண்கள் எரிகின்றன. தலை சுமையாகக் கனக்கிறது. அடுக்களைக்குள் நின்று ஓயாது வேலைகள் செய்ததில் உடல் களைத்துச் சோருகிறது. ஆனால் தூக்கம் மாத்திரம் வருவதாக ജൂൺങ്ങാണു.
செவிகளைக் கூர்மையாக வைத்துக் கொண்டு கிடக்கின்றாள். விறாந்தையில் படுத்துக் கிடக்கும் அவன் புரண்டு படுக்கும் போது 'அம்மா என எழுப்பும் குரல் கேட்கின்றதா என ஆவலுடன் எதிர்பார்க் கின்றாள். அந்தக் குரல் செவிகளில் வந்து விழாமல் இருப்பது அவளுக்குக் கவலை அளிக்கிறது.
அவன் உறுமல் கேட்டு "நாகம்மான் போல. பேரனைப் போல” என அவள் தாய் வாழ்ந்த காலத்தில் சொல்லிக் கொண்டிருந்தாள். இன்று அந்த உறுமலேனும் அவள் செவியில் வந்து விழவில்லை.
"பேச்சு மூச்சில்லாமல் ஏன் இப்படி நீட்டி நிமிர்ந்து கிடக்கிறார். ஒரு நாளும் அவர் இப்பிடிக் கிடக்கிறாளில்லை" அவளுக்கு நினைக்க நினைக்க அச்சமாக இருக்கின்றது. இப்படி அஞ்சி அஞ்சிக் கிடந்தவள் தன்னை மறந்து ஒருசமயம் அசந்து தூங்கிப் போனாள்.
எங்கோ வெகுதூரத்தில் சேவல் ஒன்று பெருங்குரல் எடுத்து அழுகிறது. அந்தச் சேவலைத் தொடர்ந்து ஊரெல்லாம் ஆங்காங்கே அழுகுரல். சேவல்கள் குரல் கேட்டு அவள் திடுக்கிட்டுக் கண் விழிக்கின்றாள்.
மரண வீட்டில் பெண்கள் பலர் ஒன்று கூடி இருந்து ஒப்புச் சொல்லி அழுவது போல சேவல்களின் குரல் அவள் செவிகளில் வந்து குத்துகிறது. நெஞ்சு படபடக்க கதவைத் திறந்து கொண்டு விறாந்தைக்கு வருகின்றாள்.
அவன் இன்னும் கண் விழிக்கவில்லை. முன்போலத் தூங்குகின் றான். அவளுக்கு ஒழுங்கான உறக்கமில்லை, உடல் சோர்வாக இருக்கிறது. கண்கள் கனத்து எரிகின்றன. தலை சுமையாகி
வலிக்கிறது.

Page 34
64. தெணியான்
அவள் படுக்கையில் இருந்து அதிகாலையில் எழுவதற்கு கோயில் மணியோசையை முன்னரெல்லாம் எதிர்பார்த்துக் கிடப்பாள். குறித்த நேரம் கொஞ்சமும் பிசகாமல் அதிகாலை ஐந்து மணிக்குக் கோயில் மணி ஒலிக்கும். கண் விழிக்கும் வேளையில் கோயில் மணி யோசை செவிகளில் வந்து விழுந்து அவள் மனதை நிறைக்கும். அவள் தங்கள் குல தெய்வங்களை நெஞ்சில் நிறுத்தி பிரார்த்தித்த வண்ணம் எழுந்து தனது வேலைகளைச் செய்ய ஆரம்பித்து விடுவாள்.
மனதுக்கு மகிழ்ச்சி வரும் அந்தக் கோயில் மணியோசையை ஐந்துமணிக்கு இப்பொழுது கேட்க முடிவதில்லை. ஊரடங்கு அமுலில் இருக்கும் வேளையில் வீட்டில் இருந்து வெளியே வந்து கோயில் மணியை அடிப்பதற்கு யாருக்கு முடியும்?
சேவல்களைக் காத்துக் கிடக்க வேண்டி இருக்கிறது. சேவல்கள் காலையில் கூவும் குறித்த நேரம் பிசகாமல் நேரம் கணித்தா சேவல்கள் தினமும் கூவிக் கொண்டிருக்கின்றன!
சேவல் கூவுவதை தவறவிட்டால் அவளுக்குப் படுக்கையில் இருந்து இப்பொழுது கண்விழிக்க இயலாது.
இன்று தூக்கம் கலைந்துவிட்ட அவள் இனி படுக்கையில் கிடக்க இயலாது. காலை நேர உணவு தயாரிக்க வேண்டும். அவனும் பிள்ளைகளும் பள்ளிக்கூடம் புறப்படுவதற்கு முன்னர் அவர்களுக்கு உணவு கொடுத்து அனுப்ப வேண்டும்.
பிள்ளைகள் பள்ளிகூடங்களுக்கு காலையில் ஒடிப் போகிறார்கள். ஆனால் படித்த நாள் பாதி படிக்காத நாள் பாதியாக இடை நடுவில் அவசரமாக வீட்டுக்கு திரும்பி ஓடி வந்து விடுகிறார்கள்.
இருள் இன்னும் முற்றாகக் கலையாத நிலையில் வளவுக்குள்ளே கிணற்றுக்குச் சென்று முகம் கழுவிக் கொள்ள அவளுக்குத் தயக்கமாக இருக்கிறது. அடுக்களைக்குள் நுழைந்து விளக்கை ஏற்றிவிட்டு அங்கே எடுத்து வைத்த தண்ணிரில் நன்றாக முகம் கழுவிக் கொண்டு அடுப்பு மூட்டுகின்றாள். நிலம் நன்றாக வெளுத்து வருகிறது. வீதியில் சயிக்கிள்கள் போய்வர ஆரம்பித்து விட்டன.
பிள்ளைகள் எழுந்து அவள் கொடுத்த தேநீரைப் பருகிவிட்டு பாடசாலைகளுக்குப் புறப்பட்டுச் செல்வதற்குத் தயாராகிறார்கள். பிள்ளைகள் எழுவதற்கு முன்னர் படுக்கைவிட்டு காலையில் எழுந்து விடுவது அவன் வழக்கம்.

தவறிப் போனவன் கதை 65
இன்று அவன் இன்னும் எழுந்திருக்கவில்லை. சின்னமகள் தனது வேலைகளுக்கு மத்தியிலும் அவன் படுத்துக் கிடப்பதை கவனிக்கின்றாள்.
"அம்மா, அப்பா ஏன் கிடக்கிது? பள்ளிக்கூடம் போக வேணு (ിഥേ'
"இல்லைப் பிள்ளை. அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லை. லீவு போட்டிட்டு இருக்கட்டும்"
அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்வது கேட்டு அவன் கண் விழிக்கின்றான்.
"அடடா. நேரம் போய்ச்சு” சொல்லிக் கொண்டு எழுந்திருக்கின் றாள். நீர் நிறைந்த மண்குடத்தில் விழுந்த துவாரத்தில் இருந்து வடிவது போல நாசித்துவாரங்களில் இருந்து இரத்தம் பட்டென்று வடிகிறது.
"ஐயோ. கடவுளே. கடவுளே!” குழறி அழுத வண்ணம் அடுக்களைக்குள் இருந்து மனைவி ஓடி வருகின்றாள்.
9ፃ
"அப்பா. அப்பா. எனக் குழறிக் கொண்டு பிள்ளைகள் ஓடி வந்து அவனை அனைத்துக் கொள்ளுகிறார்கள்.
"அழாதையுங்கோ. எனக்கு ஒண்டுமில்லை" பிள்ளைகளை அவன் தேற்றுகின்றான்.
"தம்பி பெரியப்பாவைக் கூட்டிக் கொண்டு ஓடிவா" சொல்லிக் கொண்டு மனைவி விம்முகின்றாள்.
"பெரியப்பா." கூவிக் கொண்டு மகன் வெளியே ஒடிப் போகின்றான்.

Page 35
- - LDகன் போன வேகத்தில் குமுறிக் குமுறி
திரும்பி ஓடி வருகின்றான்.
மகன் பின்னால் அவன் தமையன் வேகமாக வந்து சேருகின்றார்.
அயலவர்களுக்குக் காற்றாகச் செய்தி பரவிவிடுகின்றது. எல்லோரும் ஓடி வருகின்றார்கள்.
வந்தவர்கள் அவனைக் கண்டு திகைத்துப் போய் நிற்கின்றார்கள்.
இப்படி ஒரு நோயாளியை அவர்கள் இதற்கு முன்னர் பார்த்த
தில்லை.
இப்படியே போய்க் கொண்டிருந்தால் இரத்தம் முழுவதும் வெளி யேறி. கடைசியிலே என்ன நடக்கும்? அவர்கள் மனக்கலக்க த்துடன் தங்களுக்குள் பேசிக் கொள்ளுகிறார்கள்.
அவன் மனைவி கண்ணிர் வடித்த வண்ணம், அவன் முகத்திலும் நெஞ்சிலும் வடிந்து கொண்டிருக்கும் இரத்தத்தைத் துடைத்து விட்டுக் கொண்டிருக்கின்றாள்.
ஆனால் இரத்தம் கண்டு பெரிதாக அவன் கலங்கிப் போய் விட வில்லை. என்றும் போல அவன் சாதாரணமாக இருக்கின்றான்.
தமையன் அவனை நெருங்கி வருகின்றார்.

தவறிப் போனவன் கதை 67
"தம்பி என்ன செய்யுது"
“எனக்கு வேறை ஒண்டும் செய்யவில்லை"
“சரி, கார் ஒண்டைப் பிடிச்சுக் கொண்டு வாருங்கோ' மூத்தவன் அவசரமாக ஓடிப் போய்ச் சயிக்கிளை எடுக்கின்றான்.
சிறிது நேரத்தின் பின்னர் இரத்தம் வடிவது கொஞ்சம் கொஞ்ச மாகக் குறைகிறது.
அங்கே கூடி நிற்கின்றவர்கள் மேற்கொண்டு என்ன செய்வ தென்று அறியாமல் குழம்பிக் கொண்டு நிற்கின்றார்கள்.
இரத்தம் வடிவது முற்றாகத் தடைப்படும் வரை அவன் பொறுமை காத்து இருக்கின்றான்.
சற்று நேரம் கழிகிறது. அவன் எதிர்பார்த்தது போல இரத்தம் வடிவது முற்றாக நின்றுவிடுகிறது.
கொண்டு மெதுவாக எழுந்து "தண்ணி கொண்டு வாருங்கோ என மனைவியைப் பார்க்கின்றான்.
விறாந்தையில் இருந்து கீழே இறங்கி வந்து, மனைவி கொண்டு வந்து வைத்திருக்கும் குளிர்ந்த நீரினால் நன்றாகக் கழுவுகின்றான். மகள் கொடுத்த துவாயினால் முகம், நெஞ்சு, கைகால்களைத் துடைத்து விட்டுக் கொண்டு மீண்டும் வீட்டு விறாந்தைக்கு வருகின்றான்.
"அந்தரம் அவசரத்துக்கு ஒரு கார் பிடிக்கேலாது அங்கு நிற்பவர் கள் வாய்விட்டுக் குறைபட்டுக் கொள்ளுகின்றார்கள்.
கார் இன்னும் வந்து சேரவில்லை.
அவனும், அவர்களும் காத்திருக்கின்றார்கள்.
"நான் பாத்துக் கொண்டு வாறன்" மகன் பரபரப்புடன் புறப்படு கின்றான்.
"நீ எங்கே போய்த் தேடப் போகிறாய்? கார் வரும் நீ இரு மகன் வெளியில் போகாதபடி அவன் தடுக்கின்றான்.

Page 36
68 தெணியான்
அப்போது வீட்டுப் படலையில் கார் ஒன்று வந்து நிற்கின்றது.
காரைத் தொடர்ந்து காருக்காகப் போன இளைஞனும் வியர்க்க விறுவிறுக்க சயிக்கிளில் வந்து சேருகின்றான்.
"போவம் வா..!" தமையன் முன்னே நடக்கின்றார். அவரைத் தொடர்ந்து வந்து அவன் காரில் உட்காருகின்றான்.
அவன் மனைவி காரில் ஏறி அவனுடன் செல்வதற்கு விரும்பு கின்றாள்.
"வேண்டாம் அம்மா, நான் போகிறேன் மகன் துணையாகச் செல்வதற்கு முன்வருகின்றான்.
"தம்பி நீ நில். நீ வந்தால் சென்ரியிலே வைச்சு மினைக்கெடுத்து வான்கள்”
"நான் போகிறன். பிறகென்னத்துக்கு" என்கிறார் தமையன்
"நானும் வாறன்" சொல்லிக் கொண்டு அவன் மனைவி காரி ஏறிக் கொள்ளுகின்றாள்.
அவளை யார் தடுத்தாலும் அவள் தங்கி நிற்கத் தயாராக இல்லை. அயல் வீட்டுக்காரர் ஒருவரும் அவர்களுடன் துணையாகக் காரில் தொற்றிக் கொள்ளுகின்றார்.
கார் புறப்பட்டுப் போய்க் கொண்டிருக்கிறது.
"இப்ப எங்கே போகிறது? தனக்குள் சொல்லிக் கொள்வது போல, அவனைக் கேட்கின்றார் அவன் தமையன்.
"டொக்ரர் ஆனந்தனிட்டை போவம்" கார்ச் சாரதிக்குச் சொல்வது போல அவன் கூறுகின்றான்.
ஆனந்தன் வைத்திய நிலையம் காலையில் இயங்குவதற்கு இன் னும் திறக்கப்படவில்லை. காலை எட்டு மணிக்கு வழமையாகத் திறப்பார்கள். இன்னும் ஒரு மணி நேரத்துக்கு மேல் அங்கே காத்திருக்க வேண்டும்.
வைத்தியர் பார்வையிடாமல் நீண்ட நேரம் அவனை வைத்திருக் கக் கூடாது. தாமதம் செய்யாமல் உடனே காட்டி ஆக வேண்டும். தாமதித்தால் அவனுக்கு மீண்டும் இரத்தம் வடியக் கூடும். கார்ச் சாரதிக்கு அருகில் அமர்ந்திருக்கும் அவன் தமையன், காரை விட்டுக்
 

தவறிப் போனவன் கதை 69
கீழே இறங்குகின்றார். அவன் மனைவி, அயல் வீட்டு உறவினர் காரின் பின் ஆசனத்தில் உட்கார்ந்து இருக்கின்றார்கள்.
அவன் தமையன் தற்போது செய்வது என்னவென்று அறியாது தயங்கிக் கொண்டு நிற்கின்றார்.
வைத்திய நிலையத்துடன் இணைந்து அதன் பின்புறமாக இருக் கிறது டொக்ரர் வாழும் வீடு. அவருடன் அறிமுகமில்லாதவர்கள் வீட்டுக்குள் எப்படித் திடீரெனப் போகலாம்?
அவன் தமையன் மனம் குழம்பிக் கொண்டு நிற்கின்றார். அவன் காருக்குள் இருந்து தலையை மெல்ல வெளியே நீட்டி "கேற் றைத் திறந்து உள்ளே போங்கோ தணிகாசலம் மாஸ்ரரைக் கொண்டு வந்திருக்கிறேன் எண்டு சொல்லுங்கோ" என்கின்றான். அவன் சொன் னது போல உள்ளே சென்று தகவல் கொடுத்து விட்டுக் காருக்குத் திரும்பி வந்து "இறங்கி வா" என அவனை அழைக்கின்றார்.
அவன் காரில் இருந்து இறங்கி வைத்திய நிலையம் நோக்கி அடி எடுத்து வைக்க, அவன் மனைவி நெருங்கி வந்து அவன் தோளில் மெதுவாகப் பிடித்துக் கொண்டு நடக்கின்றாள்.
"வேண்டாம் விடுங்கோ! நான் நடந்து போவேன்' அவளைத் தடுத் துவிட்டு, அவன் வைத்தியசாலைக்குள் நுழைய, டொக்ரர் ஆனந் தன் நோயாளர்களைப் பார்வையிடும் அறைக் கதவு திறக்கிறது.
அவன் டொக்ரர் அறைக்குள் வருகின்றான். டொக்ரர் அவரது ஆசனத்தில் உட்கார்ந்திருக்கின்றார். "வாங்க மாஸ்ரர்" வழமை போல அவனை வரவேற்கின்றார்.
அவன் அவர் அருகிலுள்ள முக்காலியில் அமர்ந்ததும், "என்ன நடந்தது?" கேட்கின்றார். அவன் சொல்வதற்கு முன்னர் அவன் மனைவி முந்திக் கொண்டு சொல்லுகின்றாள். நேற்று முதல் இன்று காலைவரை நடந்தது அனைத்தையும் ஒன்றுவிடாமல் தெளிவாக விவரிக்கின்றாள். அவன் சொல்வதாக இருந்தால் இப்படி எல்லாவற்றையும் சொல்லப் போவதில்லை என்பது அவளுக்குத் தெரியும் அவள் முந்திக் கொண்டு பேசுவதற்கான காரணத்தை டொக்ரர் விளங்கிக் கொள்கின்றார். அவனும் அவளைப் புரிந்து கொண்டு மெளனமாக இருக்கின்றான்.
அவன் தமையன் எல்லாவற்றையும் அருகில் நின்று அவதா னிக்கின்றார்.

Page 37
70 தெணியான்
டொக்ரர் நீண்ட நேரம் எடுத்து அவனைப் பரிசோதித்துப் பார்க்கின்றார். இரத்த அழுத்தத்தின் அளவினை மீண்டும் மீண்டும் கணித்துப் பார்க்கின்றார். பின்னர் மேசையின் மீது அவர் எடுத்து வைத்துக் கொண்டிருக்கும் அவனது வைத்தியக் குறிப்புகள் அடங்கிய பயிலினைப் புரட்டி நோக்குகின்றார்.
அவர் என்ன சொல்லப் போகின்றார்? அவர்கள் இதயங்கள் வேகமாக அடிக்கின்றன. நீதிபதியின் தீர்ப்பை எதிர்பார்த்து நிற்கும் கொலைக் குற்றஞ் சாட்டப்பட்டவன் போல அந்தக் கணம் டொக்ரர் முன் எல்லோரும் நிற்கின்றார்கள்.
டொக்ரர் பொறுமையாகப் பயிலைப் புரட்டிப் பார்த்த பின் மெல்லச் சொல்லுகின்றார்.
"நீங்கள் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போறதுதான் நல்லது"
அவன் மனைவியின் மனம் திக்கிடுகின்றது.
அவன் அதை எதிர்பார்த்துத்தான் இருந்தான். ஒரு நோயாளியை அரசினர் வைத்தியசாலைக்குக் கொண்டு போங்கள் என்று ஒரு வைத்தியர் அனுப்பி வைத்தால். அந்த நோயாளி கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது வைத்திய சாலையில் தங்க வைத்து வைத்தியர்கள் அடிக்கடி பரிசோதித்து சிகிச்சை அளிக்க வேண்டியவராக இருக்க வேண்டும். அல்லது தனியார் வைத்திய நிலையங்ளில் பெற்றுக் கொள்ள இயலாத வைத்திய வசதிகள் பெற வேண்டியவராக இருக்க வேண்டும்.
இவைகளில் தனது நிலைமை எது? அவன் தனக்குள் எண்ணிப் பார்க்கின்றான்.
"டொக்ரர் ஏலாதெண்டு சொல்லிப் போட்டார்" அவன் மனைவி நினைத்து நினைத்து உள்ளே வெம்பிக் கொண்டு நிற்கின்றாள்.
“பிரச்சினை ஒண்டுமில்லை. பெட்டிலே இருக்கிறது நல்லது" டொக்ரர் சொல்கிறார்.
"LD([5Jibğ5I.....?"
"இப்ப தேவையில்லை"

தவறிப் போனவன் கதை 71
"அப்ப. வாறன் டொக்ரர்" அவன் ஆசனத்தில் இருந்து
“வாங்க மாஸ்ரர்" அவனை அனுப்பி வைத்துவிட்டு டொக்ரர் வீட்டுக்குள்ளே திரும்புகின்றார்.
அவர்கள் எல்லாருக்கும் முகம் வாடிப் போயிற்று. தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு வந்து எல்லோரும் காரில் ஏறிக் கொள்ளுகின்றார்கள்.
ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கத் தயங்குகின்றார்கள்.
வாய் திறந்து பேச இயலாதவர்களாக அவர்கள் மெளனித்திருக் கின்றார்கள். கார் ஓடிக் கொண்டிருக்கின்றது.
பருத்திதுறை அரசினர் வைத்தியசாலை எதிரில் வந்து கொண்டி ருக்கின்றது. அரசினர் வைத்தியசாலை தண்டிச் சென்று வீடு போய்ச் சேர வேண்டும் வைத்தியசாலை அண்மித்தக் கொண்டிருக்கும் போது, "ஆஸ்பத்திரிக்கு விடுங்கோ" என்கிறார் அவன் தமையன்.
"வேண்டாம் அண்ணா. இந்தக் கோலத்திலே ஆஸ்பத்திரிக்குப் போகேலாது. வீட்டுக்குப் போய். திரும்பி வருவோம்" கார் அவர்களைச் சமந்து கொண்டு அரசினர் வைத்தியசாலை தாண்டி அவன் வீடு நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
அவன் அரசினர் வைத்தியசாலைக்குச் சென்று அங்கே கட்டிலில் படுத்துக்கிடக்க விரும்பவில்லை என்பதை வெளியே சொல்லிக் கொள்ள இயலாமல், வீடு திரும்பி வந்து கொண்டிருக்கின்றான்.

Page 38
. . ஒரு வைத்தியசாலைக்குப் போய் அங்கே நோயாளியாகப் படுத்துக் கிடந்து சிகிச்சை பெறுவதை யார் தான் விரும்புவார்கள்!
அதுவும் அரசினர் வைத்தியசாலை என்றால் அவனுக்கு அலேர்ஜி. ஏனெனில் அவன் ஒரு சொகுசுப் பேர்வழி வெகு சுத்தமாகத் தன்னை எப்பொழுதும் வைத்துக் கொள்வதில் ஆர்வமுள்ள ஒருவன். அவன் விரும்பும் சுத்தமும் சொகுசும் அரசினர் பொது வைத்தியசாலையில் அவனுக்குக் கிடைக்காத ல்லவா!
வயது ஐம்பத்தைந்தைத் தாண்டிவிட்ட போதும் அரசினர் வைத்தியசாலை ஒன்றில் தங்கி இருந்து சிகிச்சை பெற்ற அனுபவம் இதுவரை அவனுக்கில்லை.
நோய் என்று இதுவரை பெரிதாக வந்து அவன் படுத்துக் கொண்ட தில்லை. காய்ச்சல் கறுப்பென்று வந்துவிட்டால் இரண்டொரு நாள் மருந்துடன் அது சுகப்பட்டுவிடும்.
முன்னர் ஒரு தடவை மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் அவன் தங்கி இருந்து நோய்க்குச் சிகிச்சை பெற்றுக் கொண்ட அனுபவம் மாத்திரம் அவனுக்கிருக்கிறது.
முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் அது நடந்த கதை.
அவன் ஆசிரியராக நியமனம் பெற்ற காலம்

தவறிப் போனவன் கதை 73
இருபது வயதைத்தானும் அடையாத இளம் வாலிபக் குருத்து.
அப்பொழுது அவனது இடதுபுற கழுத்து நரம்பில் வலியோடு கூடிய ஒரு உளைவு. அந்த வலியும் உளைவும் அவனைத் தொட ர்ந்து வேதனைப்படுத்திக் கொண்டிருந்தன. அவன் படிப்பதற்கும் பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக்குப் படிப்பிப்பதற்கும் இயலாது துடித்துக் கொண்டிருந்தான வடமராட்சிப் பகுதியில் இருந்த பிரசித்தி பெற்ற வைத்தியர்களிடம் எல்லாம் சென்று சிகிச்சை பெற்றும், அதனால் அவன் நோய் சுகப்படவில்லை.
அந்தக் காலத்தில் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் சம்பந் தன் என்று ஒரு டொக்ரர் இருந்தார். அப்பொழுது வடபிரதேசத்தில் மிகப் பிரபலமான வைத்தியர் அவர்.
ஓரளவு வசதியானவர்கள் பலரும் டொக்ரர் சம்பந்தனை நாடி மூளாய் வைத்தியசாலைக்குப் போனார்கள்.
தங்கள் சொந்த வீட்டில் இருந்து வைத்தியம் பார்ப்பது போல குடும்ப உறவினர்களுடன் தங்கி இருந்து சிகிச்சை பெற முடிந்ததும் அந்த வைத்தியசாலையில் கிடைத்த ஒரு வசதி. அந்த வசதிகள் எல்லாம் அரசினர் வைத்தியசாலையில் கிடைக்காது.
மூளாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவது ஒரு கெளரவம் என அக்காலத்தில் சமூகத்தில் சிலர் கருதினர்.
அரசினர் வைத்தியசாலையை தருமாசுப்பத்திரி என்று அக் காலத்தில் இகழ்ச்சியாக அழைத்தார்கள். பாண் உண்பது கெளரவக் குறைவானது. பண வசத இல்லாது ஏழை பாளைகளின் உணவு எனக் கொள்ளப்பட்டது போல தருமாசுப்பத்திரி யையும் நோக்கினார்கள்.
அவன் டொக்டர் சம்பந்தனிடம் நல்ல சிகிச்சை பெற்று விரைவில் நோயைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்று விரும்பினான். செளகரியமாக இருந்து சிகிச்சை பெற வேண்டும் என்பதும் அவன் நோக்கம். ஒரு நாள் அவன் அம்மாவையும் அவனையும் காரில் ஏற்றிச் சென்று மூளாய் வைத்தியசாலையில் அவனை அனுமதித் தார்கள்.
அம்மா அவனுடன் வைத்தியசாலையில் தங்கி இருந்தார். அவன் உறவினர்கள் இடையிடையே வந்து அவனைப் பார்வையிட்டுத் திரும்பினார்கள். அந்த வைத்தியசாலையின் பிரதான வாசலைத் தாண்டி சற்றுத் தூரம் உள்ளே சென்றால் வாசலுக்கு நேர் எதிரில் சற் சதுர வடிவில் அமைந்த ஒரு கட்டடம் இருக்கிறது. அந்தக் கட்டிடத்தில்

Page 39
74 தெணியான்
பக்கத்து இரண்டாக நான்கு பக்கங்களிலும் மொத்தம் எட்டு அறைகள் அந்த அறைகளைச் சுற்றிவர மிக உயர்ந்த அகலமான விறாந்தைகள், அது ஒரு தனி வாட் அந்த வாட்டில் மேற்குப் புறமாக தெற்கு மூலையிலுள்ள அறையில் அவன் தங்கி இருந்தான். பிரதான வாசலில் இருந்து தெற்கு நோக்கி வைத்தியசாலைக்குள் செல்லும் பாதை ஒரமாக அவன் அறை. அந்தப் பாதையைத் தாண்டி அவன் அறைக்கு நேரெதிரில் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட ஒடுங்கிய சமையல் அறை.
செலவு அதிகமானாலும் மிக வசதியான நோயாளி வாழ்க்கை. அவன் அம்மா அவனுடன் தங்கி இருந்து, அந்த அடுக்களையில் அவனுக்கென விசேஷமாக உணவு சமைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
வேளா வேளைக்கு மருந்துண்பதும், கட்டிலில் படுத்துக் கிடந்து புத்தகம் படிப்பதும், அறையைவிட்டு வெளியே வந்து காற்றாட விறாந்தையில் நிற்பதுமாக, அவன் காலம் செளகரியமாகக் கழிந்து கொண்டிருந்தது. மற்றவர்கள் பார்வைக்கு அவன் ஒரு நோயாளியா கத் தோன்றவில்லை.
அந்த வாட்டுக்குப் பொறுப்பாக ஒரு நர்ஸ் இருந்தாள். காலையில் ஏழு மணிக்கெல்லாம் அவன் தங்கி இருக்கும் வாட்டுக்கு வந்து விடுவாள். அறைகளைக் கூட்டிச் சுத்தப்படுத்துவாள். அவன் படுக் கையைத் தட்டிப் போட்டு ஒழுங்குபடுத்துவாள். பின்னர் மருந்துகளைக் கையில் கொடுத்து அவைகளை வாயில போட்டு விழுங்கு வதற்குத் தண்ணிரும் எடுத்துத் தருவாள். நடுப்பகல் வேளை திரும்பி வந்து மருந்து தந்துவிட்டுப் போவாள். மாலையில் மீண்டும் வந்து அறையைக் கூட்டிச் சுத்தப்படுத்தி மின்சார விளக்குகளை ஒளிர வைத்துப் போய்விடுவாள்.
இரவு நேர மருந்து தருவதற்கும் அவள் தவறாமல் வந்துவிடு வாள். வைத்தியசாலையில் பணிபுரியும் ஒரு நர்ஸ் தனது கடமைகளை ஒழுங்காகச் செய்து கொண்டிருக்கிறாள் என்று ஆரம்பத்தில் அவன் எண்ணினான்.
நாட்கள் கடந்து கடந்து போகப் போக அவள் நடத்தையிலும்
அவனுக்கொரு மாற்றம் தென்பட ஆரம்பித்தது. அவள் தன்மீது அதீத அக்கறை காட்டுவதாக அவன் உணர ஆரம்பித்தான்.

தவறிப் போனவன் கதை 75
அதன் பிறகு வெகுகவனமாக அவள் நடவடிக்கைகளை அவன் கவனித்து வந்தான். அவள் பெரிய அழகி என்று சொல்ல முடியாது. ஆனால் கண்டவர்களைத் தன்பால் ஈர்க்கும் ஒரு கவர்ச்சி அவளிடம் இருந்தது.
அந்தக் கவர்ச்சி இளமை பூக்கும் குமரி அழகாக இருக்கலாம். பசுமையான மாந்தளிர் போன்ற கருமை என்று சொல்ல இயலாத நிறம் மெலிதாக உள்வளைந்த நெடிய உருவம், அந்த உருவத்துக்கேற்ற நீண்ட கூந்தல், தடித்து கீழ் மடிந்த உதடுகள். குமர்ப் பருக்களின் வடுக்களில் சிறு சிறு புள்ளித் துவாரங்களோடு தோன்றும் கன்னங்கள். நீண்டு நுனி சற்றுக் கொழுத்த மூக்கு அகன்று நீண்டு விரிந்த பெரிய கண்கள்.
அவள் அழகின் உன்னதம், கதை பேசும் அந்தக் கண்கள்தான். இளமையின் இனிய காவியங்கள் பனிப்புடன் அங்கு மலர்ந்து கிடக்கும். ஆனால் அந்த விழிகளில் எப்பொழுதும் இனம்புரியாத ஒரு மெளன சோகம் திரையிட்டு நிற்கும். அவள் இரண்டொரு ஆண்டுகள் அவனிலும் வயதில் மூத்தவளாக இருக்கலாம். அவன் தங்கி இருக்கும் அறைக்குள் அவள் வந்துவிட்டால் இப்பொழுது அவன் இதயம் படபட என அடிக்கத் தொடங்கிவிடுகிறது. அவன் கட்டில் மீது சாய்ந்து படுத்த வண்ணம் அவளைக் கண் கொட்டாமல் பார்த்திருப்பான். அவள் அவனைக் கண்டு கொள்ளாதவள் போலக் கண்டு, உதடு மலரக் குறு நகையுடன் தன் பணிகளைச் செய்து கொண்டிருப்பாள். அவள் அங்கு வந்து தனது வேலைகளைச் செய்வதில் முன்னர் இருந்த வேகம் இப்பொழுது தணிந்து போனது போல அவனுக்குத் தோன்றுகின்றது.
அவள் அவனது அறையைவிட்டு வெளியேறிப் போவதற்கு மனமின்றி, வேண்டுமென்றே காலம் கடத்திக் கொண்டு நிற்பதாக அவன் மனம் அவனுக்குச் சொல்லும்.
அவள் அங்கிருந்து சென்றுவிடக் கூடாது என் அவன் மனம் ஏங்கிக் கிடக்கும். அவள் போய்விட்டால், போனவள் மீண்டும் எப்பொழுது திரும்பி வருவாள் என எதிர்பார்த்து மனம் குமையும் சில சமயம் அவள் வந்து, அவன் கட்டில் அருகிலுள்ள ஸ்ரூலின் மேல் கிடக்கும் அவன் புத்தகங்களைக் கையில் எடுத்துத் தட்டிப் பார்த்து நிற்பாள்.
அந்த நூல் பற்றி அவள் தன்னிடம் விசாரிக்கமாட்டாளா! என்ற எதிர்பார்ப்பு அவன் நெஞ்சில் கிடந்து உருட்டும். ஒரு நாகரிகத்துக் கேனும் அனுமதி கேட்காமல் அவன் புத்தகத்தைப் புரட்டிக் கொண்டு

Page 40
76 தெணியான்
நிற்கின்றாள். அப்படி ஒரு தனி உரிமை தனக்கு உண்டென்று அவனுக்கு உணர்த்த விரும்புகின்றாளா? புத்தகத்தை மூடி வைத்துவிட்டு மெளனமாக அங்கிருந்து போகின்றாளே!
அவன் மன அரங்கில் அவள் காட்சிப்படுத்தும் மெளன நாடகங் கள் அவனது ஆத்மாவை அரித்துத் தின்று கொண்டிருக்கின்றன. அவள் வாய் திறந்து ஒரு வார்த்தை பேசுவாள் என தினமும் அவன் எதிர்பார்த்து, எதிர்பார்த்து ஏமாந்து கிடக்கின்றான். நொந்தது போதும் இனி, தாங்க இயலாது. இதயம் வெடித்து விடும் போலத் தோன்றுகிறது.
அன்று இரவெல்லாம் படுக்கையில் கிடந்து உறக்கமின்றித் தவித்தான்.
"நாளை எப்படியும் அவளோடு பேச வேண்டும்" என்று தீர்மானித் தான். அதன் பிறகுதான் தூங்காத் துயர் அவனை விட்டு விலகிப் போனது. அவன் கண்விழித்த போது அறைக்குள் தும்புத்தடி கொண்டு அவள் கூட்டிக் கொண்டு நிற்கின்றாள்.
காலையில் அவள் முகத்தில் இன்று கண் விழிக்கின்றேன்! என்ற நினைப்பு மனதில் இனிக்கிறது. அவள் முகத்தில் விழித்த இன்று மகிழ்ச்சியான நல்ல நாளாக இருக்கும்.
இந்த நாளைத் தவறவிடக் கூடாது என்று மனதில் தீர்மானித்துக் கொண்டு "பெயரென்ன?" எனக் குரல் தளதளக்க அவளைப் பார்த்துக் கேட்கின்றான்.
அவன் தன்னுடன் பேசவேண்டுமென எதிர்பார்த்துக் கொண்டு நின்றவள் போல, கூட்டுவதைச் சட்டென்று நிறுத்தி, நிமிர்ந்து அவன் முகத்தைக் கூர்மையாகப் பார்த்து, "நிர்மலா” எனச் சொல்லிக் கொண்டு, திரும்பவும் தலை குனிந்து அறையைக் கூட்டுகின்றாள். அவனுக்குள் ஒரு எதிர்பார்ப்பு இருவருக்கும் இடையில் விழுந்து கிடந்த மெளனத்திரையைக் கிழித்றிெந்தவன் அவன். இனி, என்ன! அவள் தன்னுடன் பேசுவாள் என எதிர்பார்க்கின்றான்.ஆனால் குனிந்த தலை நிமிராது அவள் தொடர்ந்து கூட்டிக் கொண்டு நிற்கின்றாள்.
அவனுக்கும் இயலவில்லை. அவளிடம் தொடர்ந்து பேசுவதற்கு.
அவன் அம்மா அந்தச் சமயம் அடுக்களையில் இருந்து அங்கு வந்து சேருகின்றாள்.

தவறிப் போனவன் கதை 77
அவள் அங்கு நிற்பது கண்டு "தம்பிக்கு இரவு முழுக்க நித்திரை இல்லை" என வைத்தியரிடம் முறையிடுவது போலக் கூறுகின்றாள். அவள் கூட்டுவதை நிறுத்திவிட்டு அவன் முகத்தைக் கவலையுடன் நோக்கி, பின்னர் அம்மா பக்கம் திரும்பி "இரவு பகலாக புத்தகம் படித்துக் கொண்டிருக்கக் கூடாது" என்கின்றாள்.
"இப்ப. புத்தகம் படிக்கிறதுமில்லை. ஏதோ யோசிச்சுக் குழம்பிப் போய் இருக்கிறார்" அவன் அம்மா.
அவள் அந்தரங்கமாக மெல்லச் சிரிக்கின்றாள். அவள் கள்ளச் சிரிப்பு அவனுக்குப் பொய்க் கோபத்தை மூட்டுகிறது.
அவள் தன்னைக் கேலி செய்கின்றாளா? என மனதுக்குள் அவனுக்கு ஒரு சந்தேகம் அவன் அம்மாவுடன் வெகு விரைவில் அவள் ஒட்டிக் கொண்டு விட்டாள். ஓய்வான நேரங்களில் அவன் அறைக்கு வந்து அம்மாவோடு பேசிக் கொண்டிருக்கின்றாள்.
அவன் அம்மா தோடம்பழத்தை கையில் எடுத்து அதன் தோலை உரிக்க ஆரம்பித்தால், அவள் தான் அதை வாங்கி தோலுரித்து சுளைகளை ஒவ்வொன்றாக பிரித்தெடுத்து அவன் கையில் வைக்கின்றாள்.
முந்திரிகைப் பழங்களை எடுத்துத் தண்ணிரில் நன்றாகக் கழுவி அவன் கையில் கொடுத்துவிட்டு மெளனமாகப் பார்த்துக் கொண்டி ருக்கின்றாள். அவன் அம்மாவிடம் அவள் நல்ல பெயர் வாங்கிக் கொண்டு விட்டாள். அம்மா ஒரு தினம் அவனிடம் "நேர்ஸ் நல்ல பிள்ளை” என்று சொன்னாள்.
அவன் வைத்தியசாலைக்கு வந்து சேர்ந்து இருபது தினங்களு க்கு மேலாகிப் போனது. கழுத்து நரம்புளைவு கொஞ்சமும் குறை வதாக இல்லை. டொக்ரர் எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்கலாம் என்று எண்ணினார். ஆனால் எக்ஸ்-ரே எடுக்கக் கூடிய வசதி அங்கே ജൂൺങ്ങേ
அவனுக்கு டொக்ரர், எழுதிக் கொடுத்த துண்டை வாங்கிக் கொண்டு ஒரு நாள் காலை பஸ் ஏறி யாழ்ப்பாணம் நகரத்துக்குச் சென்றான். அன்று எக்ஸ்-ரே படம் எடுத்து முடித்துக் கொண்டு அவன் திரும்பி வந்து சேர நடுப்பகல் தாண்டி பிற்பகல் மூன்று மணியாகிறது.

Page 41
78 தெணியான்
என்ன அதிசயம்! அந்த நேரம் அவன் அம்மா அருகில் அமர்ந்து அவள் பேசிக் கொண்டிருக்கின்றாள்.
"நல்லாச் சுணங்கிப் போச்சு? அம்மா கேட்கின்றாள்.
ஓமம்மா. பஸ் கிடைக்கயில்லை"
*a9 TIL JT (B......?”
"சாப்பிட்டுவிட்டன்”
"இஞ்சை. இந்தப் பிள்ளை சாப்பிடாமல் உனக்காகக் காத்திருக்குது"
"ஏன்?"
"சாப்பாட்டுக்குப் பிறகு. மத்தியான மருந்து தரவேணும்" என்ற வள், மருந்தை எடுத்து அவன் கையில் கொடுத்து கிளாசில் தண்ணி ரும் ஊற்றி வைத்துவிட்டு வெளியேறுகின்றாள்.
அன்று எடுத்த எக்ஸ்-ரே படத்தினைப் பெற்று வருவதற்கு இரண்டு தினங்களின் பின்பு மீண்டும் அவன் யாழ்ப்பாணம் போனான். அவன் திரும்பி வருவதற்கு அன்றைய தினமும் நடுப் பகலுக்கு மேலாகிவிட்டது. அவன் தனது அறைக்கு வந்து சேர்ந்த நேரம் அவள் மாத்திரம் அங்கே இருந்தாள். அடுக்களைப் பக்கம் திரும்பிப் பார்க்கின்றான். அம்மா அங்குமில்லை.
"அம்மா எங்கே? அவளிடம் கேட்கின்றான்.
"அம்மா குளிக்கப் போவிட்டா நீங்கள் சாப்பிட்டு விட்டியளா?”
"ஓம்"
அவள் மருந்தை எடுத்து அவனிடம் கொடுத்து தண்ணிரைக் கிளாஸில் ஊற்றி வைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறுகின்றாள். மெளனமாகப் போய்க் கொண்டிருக்கும் அவளையே அவன் பார்த்து நிற்கின்றாள்.
அவன் வாயடைத்து மெளனியாகி நிற்கின்றான். அவள் மெளனம் பேசுகிறது. ஒலியும் வரியுமற்ற மெளன மொழியில் தான் எத்தனை அர்த்தங்கள்! புதிது புதிதாகப் பொருள் தரும் நயம் மிக்க நல்ல கவிதைகளா இந்த மெளனங்கள்!

தவறிப் போனவன் கதை 79
அவளின் மெளன மொழியைப் படித்தறிய அவன் மனம் துடியாகத் துடிக்கிறது.
மறுநாள் காலை வேளை வழமை போல டொக்ரர் அவன் அறைக்குள் வருகின்றார். அவர் பின்னால் அவளும் வந்து நிற்கின்றாள். அவன் எடுத்து வந்திருக்கும் எக்ஸ்-ரே யை வாங்கி மேலே தூக்கி ஒளியில் பிடித்துப் பார்க்கின்றார். நீண்ட நேரம் பரிசோதித்துப் பார்த்த பிறகு, "ஒரு நோயும் இதில் தெரியவில்லை. இனி கழுத்தைக் கொத்தித்தான் பார்க்க வேண்டும்" என பகிடி போலக் கூறுகின்றார்.
அவனுக்கு எல்லாம் குழப்பமாக இருக்கிறது.
“கழுத்தைக் கொத்திப் பார்க்க வேண்டும்" என்று டொக்ரர் சொன்ன வார்த்தைகள் அவன் அம்மா மனதில் குத்துகிறது. அவள் மனதைப் போட்டு வருத்திப் பிழிகிறது.
மறுநாள் காலையில் அவன் தந்தை காரில் வந்து அங்கே இறங்குகின்றார். உடனடியாக அவருக்குத் தகவல் போய்ச் சேர்ந்துவிட்டதை அப்பொழுதுதான் அவன் உணர்ந்தான். "இஞ்சை இருக்கிறதிலே இனி ஒரு பயனுமில்லை" எனச் சொல்லிக் கொண்டு வைத்தியசாலைக்குச் செலுத்த வேண்டிய பணத்தைச் செலுத்தி, அவனையும் அம்மாவையும் அழைத்துக் கொண்டு புறப்படுகின்றார். அவன் இருபத்தேழு தினங்கள் தங்கி இருந்த அந்த அறை. அதைவிட்டு இன்று வீடு திரும்பத் தயாராகின்றான்.
இப்படி அங்கிருந்து புறப்பட்டுச் செல்லாமல் அங்கேயே தங்கி இருக்க முடியுமானால்.
அது நடக்கக் கூடிய காரியமா! ஆனால் அவள். Élj LD6)T. அவளைக் கண்டு கொண்டு போக வேணும். அவளுக்குச் சொல்லி அவளிடம் விடைபெற்றுக் கொள்ளாமல் எப்படிப் புறப்பட்டுப் போகலாம்? அது நாகரிகமா? அவள் என்ன நினைப்பாள்?
ஆனால் அவள் எங்கே? நிர்மலா எங்கே?
கார் புறப்பட்டுவிட்டது. அவள் மட்டும் அவன் கண்களுக்குத் தென்படவே இல்லை. வைத்தியசாலைக்கு வரும் பொழுது கழுத்து வலியுடன் வந்த அவன், அங்கிருந்து திரும்பிச் செல்லும் பொழுது இதய வலியையும் சுமந்து போயக் கொண்டிருக்கின்றான்.

Page 42
(ழிளாய் வைத்தியசாலை அனுபவத்தின் பிறகு எந்த ஒரு வைத்தியசாலையிலும் அவன் போய்த் தங்கி இருந்ததில்லை. இப்பொழுது அரசினர் வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டி இருப்பதை நினைக்க அவனுக்குப் பெரிய அரிகண்டமாக இருக்கிறது. நோய் வந்த பின்னர் அங்கே போகாமல்
இருக்கவும் இயலாது. அவன் தமையன் இன்னும் தனது வீட்டுக்குப் போகவில்லை. அவன் வீட்டு விறாந்தையில் ஒரு கதிரை மீது உட்கார்ந்து இருக்கின்றார்.
"குளிச்சிட்டு. கெதியா வெளிக்கிடு" அவனை அவசரப்படுத்து கின்றார். அவன் மனம் குழம்பித் தடுமாறிக் கொண்டு நிற்கின்றான். இனித் தவிர்க்க முடியாது எனத் தனக்குள் தீர்மானித்துக் கொண்டு புறப்படுவதற்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினான்.
குளித்து 'சேவ் எடுப்பதற்கு முன்னர் வாளியில் தண்ணீர் எடுத்துக் கொண்டு, வளவுக்குள்ளே ஒதுக் குப் புறமாகக் கிடக் கும் மலசலகூடத்துக்குள் நுழைகின்றான். சில நிமிட நேரத்தின் பின்னர் கதவைத் திறந்து கொண்டு அவன் வெளியே வருகின்றான். அவனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வீட்டிலுள்ள அனைவரின் கண்களும் அவன் மீது பட்டென்று மொய்க்கின்றன.
இரத்தம் அவனைக் குளிப்பாட்டி நிலத்தில் துளித் துளியாகச் சொட்டிக் கொண்டிருக்கிறது. "கடவுளே. கடவுளே." அவன் மனைவி

தவறிப் போனவன் கதை 81
அவனை நோக்கி ஓடுகின்றாள். பிள்ளைகள், தமையன், அப்பொழுது வந்து சேர்ந்த தங்கைகள், மைத்துனர்கள், உறவினரகள், அயலவர்கள் என்று ஒரு கூட்டம் அவனைச் சூழ்ந்து கொள் (ளுகிறது.
அவன் மகள்மார் இருவரும் அழுது கண்ணிர் சிந்திய வண்ணம் அவனை அனைத்து வீட்டுக்குள் அழைத்து வருகின்றார்கள்.
"சொன்னால் கேட்கமாட்டாய். எல்லாம் நீ நினைச்சபடிதான். வீட்டு க்கு வராமல் நேரே ஆஸ்பத்திரிக்குப் போயிருக்கலாம். சரி வெளிக் கிடு" அவன் தமையன் மனதிலுள்ளது சற்றுச் சூடாக வெளிப்படுகிறது.
மனைவி கொண்டு வந்த தண்ணீரை அள்ளி முன்னர் போல் நன்றாகக் கழுவிக் கொள்ளுகின்றான். பின்னர் வேட்டியை எடுத்துக் கட்டிக் கொண்டு முன்னர் அணிந்த பற்றிக் சேட்டை மீண்டும் அணிந்து கொண்டு புறப்படுவதற்குத் தயாரானான். அப்பொழுது திடீரென இரத்தம் திரும்ப நாசியில் இருந்து வடிகிறது.
கண்ணிர் சிந்திக் கொண்டு நிற்கும் அவன் மனைவி அவசர அவசரமாக அறைக்குள் புகுந்து பழைய வெள்ளைத்துணி ஒன்றைக் கிழித்தெடுத்து வந்து வடிந்து கொண்டிருக்கும் இரத்தத்தைத் துடைத்து விடுகின்றாள்.
அவன் பிள்ளைகள் தேம்பித் தேம்பி அழுகின்றார்கள். அவன் சகோதரிகள் அவன் தலையைத் தடவி, முதுகைத் தடவி அணைத் துக் கண்ணிர் விடுகின்றார்கள்.
அவன் தமையன் கண்களும் கலங்குகின்றன. அங்கே கூடி நிற்கும் எல்லோரும் அவனைப் பார்த்து கலங்குகின்றார்கள்.
இதுவரை இப்படி ஒரு நோயாளியை அவர்கள் கண்டதில்லை.
மாரடைப்பு நோயினால் வாயிலிருந்து இரத்தம் கக்கி இறந்து போனவர்கள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றார்கள். ஆனால் இப்படி மூக்கிலிருந்து இரத்தம் போய்ககொண்டிருப்பதை அவர்கள் கேள்விப்பட்டதுமில்லை. அவனை எண்ணி மனதில் எல்லோரும் அஞ்சிக் கொண்டு நிற்கின்றார்கள். ஆனால் அவன். தனக்கு இரத்தம் போய்க் கொண்டிருக்கிறது. அதுதான் நோய். அது தவிர வேறு நோய் இருப்பதாக அவன் எண்ணவில்லை.
கார் ஒன்று வேகமாக வந்து வீட்டுக்கு வெளியே நிற்கிறது.

Page 43
82 - தெணியான்
"நல்ல காலம். கார் கிடைச்சிட்டுது” யாரோ சொல்லுகின்றார்.
அவனை அழைத்து வந்து அந்தக் காரில் ஏறிக் கொண்டதும், கார் வேகமாகப் புறப்படுகின்றது. கார் மந்திகையிலுள்ள பருத்தித்துறை அரசினர் வைத்தியசாலை நோக்கி வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறது. மாலி சந்தி நெருங்கிக் கொண்டிருக்கிறது. "தம்பி கொஞ்சம் ஸ்லோவாப் போ. இந்த வேகத்திலே போனால் சென்றியிலே மறிச்சுப் போடுவான்.” தமையன் கார் சாரதியிடம் கூறி, காரின் வேகத்தைத் தணிக்கச் செய்கின்றார்.
கார் மெல்ல ஊர்ந்து சென்று அங்கிருந்து நூறு மீற்றர் தூரத்தில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு முன்னுள்ள சென்றியைத் தாண்டி, அதனை அடுத்து தெருமூடி மடத்தடிச் சென்ரி தாண்டி, வைத்திய சாலையின் எல்லைச் சென்றியையும் கண்டு கொண்டு வைத்திய சாலைக்குள் நுழைந்து வெளிநோயாளர் பகுதி வாசலில் தரிக்கிறது.
காரி இருந்து அவசரமாக எல்லோரும் இறங்குகின்றார்கள். இறுதியாக அவன் மெல்லக் கீழே இறங்குகின்றான். அவன் மனைவி நெருங்கி வந்து அவன் தோளில் பட்டும்படாமலும் பிடித்துக் கொள்ளுகின்றாள்.
"விடுங்கோ. நான் நடப்பன்' அவளை விலக்கிவிட்டு, அவன் வெளிநோயாளர் பகுதிக்குள் கால் எடுத்து வைக்கின்றான். அங்கே நின்று கொண்டிருக்கும் அனைவரது கவனமும் அவன் பக்கம் திரும்புகின்றது.
அவனை வந்து பலர் சூழ்ந்து கொள்ளுகின்றார்கள்.
"என்ன நடந்தது.? என்ன நடந்தது.? என்ன? புதினம் அறியும் ஆவலில் ஆளை ஆள் பரபரப்பாக விசாரிக்கிறார்கள்.
இப்படி இரத்தம் வடிவதானால் விபத்து நடந்திருக்க வேண்டும். அல்லது சண்டை ஏற்பட்டிருக்க வேண்டும். இது என்ன நடந்தது? இது விபத்தாகத் தெரியவில்லை. ஆள் எழுந்து நடந்து வாறார். இது சண்டையாகத்தான் இருக்க வேணும்!
பலர் மனங்களில் எண்ணம் சுழித்தோடுகிறது. அவனை அறிந்த வர்கள் சிலர் அவனிடம் நெருங்கி வந்து "என்ன நடந்தது மாஸ்ரர்" கேட்கின்றார்கள்.

தவறிப் போனவன் கதை 83
"மூக்காலே இரத்தம் போகுது"
“வேறை.?
"வேறை ஒண்டுமில்லை" அவன் நோயை மறந்து மெல்லச் சிரித்துக்
கொள்ளுகின்றான்.
அவனைக் கண்டு சிலருக்கு அவன் மீது அனுதாபம் பிறக்கிறது.
அவர்களை அவதானித்த அவன் நெஞ்சில் வேதனை உறு
கின்றான்.
பிறருடைய அனுதாபத்துக்கு ஆளாக விரும்பாதவன் அவன்.
ஆனால் மனிதன் நினைப்பது போலவா எல்லாம் நடக்கிறது!
அவன் எண்ணத்துக்கு மாறாக இன்று அவனை எல்லோரு
அனுதாபத்துடன் நோக்குகின்றார்கள்.
அவன் தனது நோயைப் பெரிதாக நினைக்கவில்லை. பலருடைய அனுதாபத்துக்கு ஆளாகிவிட்டேனே! என்ற எண்ணம் அவனைப் போட்டு வருத்துகிறது. வைத்தியசாலைப் பணியாளன் ஒருவன் சக்கர நாற்காலியைத் தள்ளி வந்து அவன் முன் நிறுத்துகின்றான். அவன் அதில் ஏறி அமர்ந்து கொள்ள, அதனைத் தள்ளிச் சென்று வெளிநோயாள்களைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கும் வைத்தியரின் அறைக்குள், அவர் முன் கொண்டுபோய் நிறுத்து கின்றான்.
டொக்ரருக்கு அவன் முன்னமே அறிமுகமானவன். இன்று குருதி வடிய அவன் வந்திருப்பது கண்டு அவர் அதிசயிக்கிறார்.
"என்ன நடந்தது மாஸ்ரர்?"
"ஒன்றுமில்லை டொக்ரர். நாசியாலே இரத்தம் போய்க் கொண்டிருக்கு"
"எப்ப தொடக்கம்?"
"நேற்று மாலையில் கொஞ்சம். இண்டைக்குக் காலையிலே தொடங்கி கொஞ்சம் அதிகமாகப் போகுது"
"வேறு.?

Page 44
84 தெணியான்
"வேறு ஒன்றுமில்லை டொக்ரர். நான் நோமலாக இருக்கிறேன்"
டொக்ரர் அவன் பிறவடிரைக் கவனிக்கின்றார்.
"நீங்கள் வோட்டுக்குப் போங்க. நான் வாறன். ஆர்கூட வந்தது?"
"ஆக்கள் நிற்கினம்." சொல்லிக் கொண்டு அவன் திரும்பி பார்க்கின்றான். அவன் தமையன், மைத்துனன் இருவரும் அவன் பின்னால் நின்று கொண்டிருக்கின்றார்கள். சக்கர நாற்காலி அவனைச் சுமந்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டு நீண்டு வளைந்து செல்லும் விறாந்தைகளில் ஓடிப் போய் வாட்டுக்குள் நுழைகிறது. அந்த வாட்டில் கடமையாக இருக்கும் நர்ஸ் வெறுமையாகக் கிடக்கும் ஒரு கட்டிலை விரைவாகத் தயார் பண்ணி, அவனை அதில் தங்க வைக்கின்றாள்.
ንን
"கட்டிலிலே படுக்க வேண்டாம்." என்றவள் தலையணை எடுத்து கட்டில் தலைமாட்டில் உயர்ந்து நிற்கும் கம்பி வளையச் சட்டத்தில் அதைச் சார்த்தி வைத்து, அதன் மீது முதுகை வைத்து சாய்ந்திருக்கச் செய்கிறாள். பின்னர் விரைவாகச் சென்று சிறிது பஞ்சை எடுத்து வந்து நீரில் நனைத்து அவன் மூக்கில் வைத்து சற்று நேரம் பிடித்துக் கொண்டு நிற்கின்றாள்.
வெளிநோயாளர் பகுதியில் இருந்து டொக்ரர் அவசரமாக வாட் டுக்கு வருகின்றார். இருபத்தைந்து டொக்ரர்கள் அங்கிருந்து பணி புரிந்த வைத்தியசாலை, இப்பொழுது மூவருடன் இயங்கிக் கொண் டிருக்கிறது. ஒய்வு பெற்ற ஒரு டொக்ரர் மாவட்ட வைத்திய அதிகாரி யாகச் சேவை செய்கின்றார். அவருடன் உதவி வைத்தியர் இருவர்.
அவர்கள் மூவரும் பல அவதாரங்கள் எடுத்து வைத்தியசாலை யின் சகல பகுதிகளிலும் ஒரே நேரத்தில் சேவை புரிந்து கொண்டி ருக்கின்றார்கள். அவர்கள் ஓட்டமும் நடையுமாக ஓய்வு ஒழிச்சல் இன்றி வைத்தியசாலைக்குள் திரிய வேண்டிய நிர்ப்பந்தம் டொக்ரர் அங்கு வந்து ஊசியில் மருந்து இழுத்து அவனது தோள்மூட்டுக்குக் கீழே மெல்ல மெல்ல மருந்தை ஏற்றுகின்றார்.
"பஞ்சை தண்ணியிலே நனைச்சு மூக்கிலே வைச்சுக் கொள்ளு ங்கோ. ஐஸ் கட்டி எண்டால் நல்லது. அதுக்கு இப்ப எங்கே போகிறது?" டொக்ரர் சொல்லிக் கொண்டு, நர்ஸிடமும் ஏதோ தெரி வித்துவிட்டு வெளிநோயாளர் பகுதியை நோக்கி மீண்டும் போகின்றார்.

தவறிப் போனவன் கதை 85
நர்ஸ் சில குளிகைகளைக் கொண்டு வந்து அவன் வாயில் போட்டு தண்ணீரும் கொடுக்கின்றாள்.
மூக்கின் மீது நனைந்த பஞ்சை வைத்து அவன் மனைவி பிடித்துக் கொண்டு நிற்கின்றாள்.
"விடுங்கோ. நான் பிடிக்கிறேன்" அவளை விடுவித்துக் கொண்டு அவன் தனது கையினால் பஞ்சைப் பிடித்துக் கொள்ளுகின்றான். இரத்தம் வடிவது சிறிது சிறிதாகக் குறைந்து, இறுதியில் முற்றாக நின்று விடுகிறது.
"இனி நீங்கள் போங்கோ. அவன் அவர்களுக்குக் கூறுகின்றான்.
அவன் மனைவி அங்கிருந்து புறப்பட்டுச் செல்வதற்குத் தயங்கிக் கொண்டு நிற்கின்றாள்.
"எல்லோரும் காரிலே போங்கோ. நான் நிற்கிறன்" அவன் தமையன் சொன்ன பின்னர் அவள் அங்கிருந்து புறப்படுகின்றாள். அவன் கட்டிலின் மீது சரிந்து நீட்டி நிமிர்ந்து படுத்துக் கொள்வதற்கு @ UL GO FT LID 6ð தலையணையில் &F FT uì [B 35 6)] 600Ť 600 LĎ உடகார்ந்திருக் கின்றான்.

Page 45
இரத்தம் வடிந்து கொண்டிருப்பது தவிர
அவனுக்கு உடலில் வேறெந்ததொரு வேதனையு
மில்லை. இரத்தம் வடிந்து கொண்டிருப்பதும் அவ னுக்கு உபத்திரவம் கொடுப்பதாக இல்லை. இயல் புக்கு மாறாக இரத்தம் போய்க் கொண்டிருக்கிறது.
அவ்வளவுதான், தனது நோய் என அவன் கருதிக் கொண்டான்.
இப்பொழுது முற்றாகத் தடைப்பட்டுப் போன இரத்தம் குழந்தைக ளுக்கு மூக்கில் இருந்து சளி வடிவது போல இடையி டையே மெல்லத் தலை காட்டிக் கொண்டிருக்கின்றது.
நடுப்பகல் பார்வையாளர் நேரம்,
நோயாளர்களைப் பார்வையிட்டுப் போக, மதிய உணவு கொடுத்து போக உறவினர்கள், நண்பர்கள் அந்த வாட்டுக்குள் வந்து கூடுகின்றார்கள். அவனுக்கு எதிர்வரிசையில் பல கட்டில்கள் தாண்டி, ஒரு மூலையை அண்டி ஒய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் இப்பவோ பின்னையோ என்று இழுத்துக் கொண்டு கிடக்கின்றார்.
அவர் முடிவு நெருங்கிக் கொண்டிருக்கிறது என அவரது உறவினர்கள், நண்பர்கள் தீர்மானித்துவிட்டார்கள் போலத் தோன்றுகிறது.
அவர் உணர்வு தப்புவதற்கிடையில் தாங்கள் வந்து அவரைப் பார்வையிட வேண்டும். அவர் தங்களைக் கண்டு கொள்ள வேண்டும்.

தவறிப் போனவன் கதை 87
கடைசி நேரத்தில் அவருடன் இரண்டு வார்த்தைகள் பேச வேண்டும். இப்படி எல்லாம் அவருக்கு நெருக்கமான பலர் எண்ணிக் கொண்டு அங்கு வந்து கூடுகின்றார்கள். உறவுகளைப் பலப்படுத்த, அறுந்த உறவுகளைப் புதுப்பிக்க, இந்தச் சந்தர்ப்பங்கள் வாய்ப்பாக அமைந்து விடுகின்றன.
அவனை முன்னரே அறிந்து வைத்திருக்கின்றவர்கள் அவன் அந்த வாட்டில் இருப்பது கண்டு அவனிடம் வந்து சுகம் விசாரித்துப் போகின்றார்கள்.
அவனுக்கென்றொரு சுபாவம்.
கடுமையாக நோய்வாய்ப்பட்டிருக்கும் ஒரு நோயாளியை போய்ப் பார்ப்பது, அந்த நோயாளிக்கு மன ஆறுதல் அளிக்கும் என்று கண்டால் மாத்திரம் அவன் பார்க்கப் போவான். சின்னச் சின்ன நோய்களுக்கு எல்லாம் ஒடிச் சென்று பார்க்கும் பழக்கம் அவனுக்கில்லை. அமைதியாக இருக்க வேண்டியவர்களைக் குழப்பாது பூரண ஒய்வெடுக்க விட்டுவிட வேண்டும் என்பது அவன் எண்ணம்.
வைத்தியசாலையில் அவன் திடீரென அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி அவனை வேண்டியவர்களுக்கு பூரணமாக இன்னும் போய்ச் சேரவில்லை. நேற்றைய தினம் கல்லூரிக்குச் சயிக்கிளில் போய் வந்த வனல்லவா அவன்! அதற்கிடையில் அப்படி என்ன பெரிய நோய்! நேற்று அவனைக் கண்டவர்கள் இன்றைய தினம் அறிந்து அதிசயிப்பார்கள்.
மதிய வேளை அவனைப் பார்ப்பதற்கென்று ஒரு சிலர் வந்து போனார்கள். மதியவேளை பார்வையாளர் நேரம் முடிந்த பிறகே அவன் மனைவியும் மகனும் அவசரமாக அங்கு ஓடோடி வந்து சேருகின்றனர். அவனை வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் வீட்டுக்குத் திரும்பிச் சென்று மதிய உணவு சமைத்து முடித்து அதனை எடுத்துக் கொண்டு ஓடி வருகிறாள்.
"இண்டைக்கு சாப்பாடு கடையிலே எடுத்திருக்கலாம்" என்கிறாள்
.]60[{6}9تى
"உங்களுக்குக் கடைச்சாப்பாடு பிடிக்காது"
"அதுக்காக."
"இப்ப என்ன வந்தது! சட்டுப்புடெண்டு முடிச்சுக் கொண்டு வந்திருக்கிறன். சாப்பிடுங்கோவன்.” மனைவி கேட்கின்றாள்.

Page 46
88 தெணியான்
"3"|TsjLiCB6)Jub. அண்ணைக்கு?"
"கொண்டந்திருக்கிறன். தம்பி. பெரியப்பாவிற்கு எடுத்துக்குடு" என்கின்றாள் மகனைப் பார்த்து.
"பெரியப்பா சாப்பிடுங்கோவன்."
"நான் பிறகு சாப்பிடுகிறன். முதல் கொப்பாவிற்கு குடுங்கோ"
"தண்ணி.? அவன் கேட்கின்றான்.
அவளுக்கு உள்ளே சிரிப்பு வருகிறது. நோய் வந்து படுக்கை யிலே படுத்தாலும் இயல்பான குணம் போகாது என்று தனக்குள்ளே சிரித்துக் கொண்டு "கொண்டு வந்திருக்கிறன்" என்கிறாள்.
அவன் உணவு உண்டு முடிந்த பிறகு, பாத்திரங்களைக் கையில் எடுத்துக் கொண்டு வாட்டுக்கு வெளியே போய் அவைகளைக் கழுவி எடுத்து வருவதற்கு அவள் தயார் ஆகின்றாள்.
"வீட்டிலே கழுவலாம்" மகன் தடுக்கின்றான்.
"கழுவாமல் இப்பிடியே கொண்டு போகிறதே?”
"விடு. கொம்மாவின்ரை குணம் தெரியுந்தானே! பாத்திரங்கள் மினுக்கிறதிலேதானே பாதிநேரம் போகுது"
"அது அம்மாவின்ரை பழக்கம்” சொல்லிக் கொண்டு அவன் முகத்தை மகன் குறிப்பாகப் பார்க்கின்றான். அப்பாவின் பழக்கத்தை அவன் வெளியே சொல்லமாட்டான் என மனதில் நினைத்து அவன் மெல்லச் சிரிக்கின்றான்.
"சரி, நாங்கள் வாறம்" சொல்லிக் கொண்டு அவள் புறப்படுகின்ற சமயம், அவன் மகனை அருகில் வருமாறு அழைக்கின்றான்.
"அப்பு, வெளியிலே திரிய வேண்டாம். படிக்கிற பிள்ளையன் எண்டு பாராமல் பிடிச்சுக் கொண்டு போகிறான்கள். சின்னவையும் வெளியிலே விடாதையுங்கோ." சொல்லி அவர்களை அனுப்பி வைக்கின்றான்.
அவன் தமையன் வெளியே விறாந்தையில் யாருடனோ பேசிக் கொண்டிருக்கின்றார். அவனால் கட்டிலில் சரிந்து படுப்பதற்கும் இயல வில்லை. அதிகம் வாய் திறந்து பேச வேண்டாம் என்றும் டொக்ரர் சொல்லி இருக்கின்றார். தலையணையை முதுக்கு வைத்து கட்டி லில் சாய்ந்திருக்கின்றான். நோயினால் அவனுக்கு வேதனை இல்லை.

தவறிப் போனவன் கதை 89
படுக்கையில் சரிந்து படுக்காது தொடர்ந்து குந்தி இருப்பதுதான் அவனுக்கு வேதனையைக் கொடுக்கிறது. அவன் இப்படி அமர்ந்தி ருப்பது பெரிய ஒரு தண்டனையை அனுபவிப்பது போல அவனுக்குத் தோன்றுகின்றது. அங்கு வரும்பொழுது கையில் புத்தகம் ஒன்று தானும் அவன் எடுத்துவரவிலலை. அப்படிக் கொண்டு வந்திருந்தாலும் வாசிப்பதற்கு ஏற்ற சூழலாக வைத்தியசாலை இல்லை.
தான் இப்பொழுது செய்யக் கூடியது என்ன என்று அறியாமல் அங்குமிங்கும் திரும்பித் திரும்பிப் பார்த்து விழிக்கின்றான். அவன் ஏலவே அறிந்த சில முகங்கள் சில கட்டில்களில் இருப்பதைக் கண்டு கொள்கின்றான். மூலையிலுள்ள கட்டில் கேட்டின் துணியினால் இழுத்து மூடிவிடப்பட்டுள்ளது. ஒய்வு பெற்ற ஆசிரியர் உணர்வு நினைவின்றி அந்தக் கட்டிலில் கிடக்கின்றார்.
அவனுக்கு இடதுபுறத்தில் அவன் கட்டிலை அடுத்துள்ள கட்டி லில் இருக்கும் நோயாளி அவன் கவனத்துக்கு வருகின்றான். அந்த நோயாளி முன்னரே அவனுக்குத் தெரிந்த ஒருவன்தான். இலங்கைப் போக்குவரத்துச் சபையில் பஸ் சாரதியாக பணியாற்றினான் என்பது அவனுக்கு ஞாபகம் இருக்கிறது. பஸ் கம்பனிகள் தனிப்பட்ட முதலாளிகளின் ஏக போகச் சொத்துக்களாக இருந்த காலத்தில், அந்த முதலாளிமாரின் உறவினர்களும், மிக நெருக்கமான வர்களுமே பஸ் சாரதிகள், நடத்துநர்களாக இருந்தார்கள்.
அவர்களில் பலர் முதலாளிகளின் பிரதிநிதிகளாக பயணிகள் மீது அதிகாரம் செலுத்திக் கொண்டிருந்த காலம் அது. முதலாளிகள் தங்கள் பஸ் வண்டிகளைப் பாதுகாப்பதற்காக, காடையர்கள் சிலரை அக்காலத்தில் பஸ் சாரதிகளாக நியமித்திருந்தார்கள். அந்தக் காலத்து பஸ் சாரதிகள், நடத்துநர்களின் நடைஉடைகளைப் பார்த்து அவர்கள் செய்யும் தொழிலை நிச்சயமாகச் சொல்லி விடலாம்.
வெள்ளை நிறச்சாரம் அல்லது நான்கு முழ வேட்டி உடுத்து, அதற்கு மேல் அரையில் ஒரு பெல்ட் கட்டி இருப்பார்கள். மேல் உடம்பில் ஒரு சேட் நடத்துநர் என்றால் கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு துவாய். சாரதியினால் சாரதி ஆசனத்தில் முதுகுப் புறமாக அந்தத் துவாய் விரித்துப் போடப்பட்டிருக்கும்.
சாரதியும் நடந்துநரும் இடையிடையே தங்கள் முகம் கழுத்து கைகளை அந்தத் துவாயினால் துடைத்து விட்டுக் கொண்டிருப்பார் கள். நெற்றியில் பட்டும் படாமலும் லேசாகத் திருநீறு பூசி நடுவில்

Page 47
90 தெணியான்
இலைக் காம்பினால் இட்ட சிறிய சந்தனத் திலகம் சிலர் அதன் மேல் மெல்லிய குங்குமம் தொட்டு வைப்பதற்கும் தவறுவதில்லை. காதுக ளில் பூ வைத்துக் கொள்ளுகின்றவர்களும் அவர்களுக்குள் இருந்தார் கள். தலையில் எண்ணெய் தேய்த்துப் படிய இழுத்திருப் பார்கள்.
சாரதிகளாக இருந்தவர்கள் பெரும்பாலும் தடித்த மீசை வைத்த பருத்த ஆகுதி உள்ளவர்களாக விளங்கினார்கள். ஒடும் பஸ் வண்டிகளினால் விபத்துக்கள் நேராத வண்ணம் கண்ணாடிகள் சாரதிக்கு முன்னே பொருத்தி வைக்கப்பட்டிருக்கின்றன என்று யாரா வது கருதினால் அது தப்பு அந்தக் காலத்தில் பஸ் சாரதிகளுக்கு முன் தலைக்கு மேலே பொருத்தி வைக்கப் பெற்ற கண்ணாடியில் சாரதியின் பார்வை அடிக்கடி சென்று பதியும் இன்று பஸ் வண்டிகளில் பொழுது போக்காக சினிமாப் பாடல்கள் ஒலிபரப்பப்படுவது போல அந்தக் காலத்துச் சாரதிகளின் இரசனைக்கு ஒன்றுமில்லை. அதனால் பஸ் வண்டியில் பயணம் செய்யும் அழகான பெண்களை அந்தக் கண்ணாடியில் பார்த்து இரசித்த வண்ணம் பஸ்ஸை ஒட்டுவார்கள்.
அவர்கள் லீலா விநோதங்கள் புரிவதில் அந்தக் காலத்தின் மன்மதராசாக்கள். யாராவது ஒரு அபலைப் பெண் இரவு நேரம் தன்னந்தனியாக பஸ்ஸில் பிரயாணஞ் செய்து அவர்களிடம் மாட்டிக் கொண்டு விட்டால் போதும். அவள் அந்த ஓநாய்களிடம் இருந்து இலகுவில் தப்பிப் போக முடியாது.
அந்த மன்மதராசாக்களில் கொட்டம் எல்லாம் பஸ் கம்பனிகள் அரசுடைமை ஆக்கப் பெற்றதுடன் மெல்ல அடங்கிப் போயிற்று. அவனுக்குப் பக்கத்துக் கட்டிலில் இருக்கும் இ.போ.ச. சாரதி அந்தக் காலத்து மன்மதராசாக்கள் போலத்தான். அவன் தலையில் கருமையும் வெண்மையுமாகச் சாம்பல் பூத்துக் கிடக்கும் சுருள் சுருளான கேசம் அதே போன்று தடித்த மீசை அவன் முகம் பார்க்கும் கண்ணாடியைக் கையில் தூக்கி வைத்துக் கொண்டு இடையிடையே தலையைச் சீவிவிட்டுக் கொள்ளுகின்றான்.
சவர்க்காரப் பெட்டியைக் கையில் எடுத்துக் கொண்டு வாட்டுக்கு வெளியில் சென்று முகத்தை நன்றாகத் தேய்த்துக் கழுவி விட்டுக் கொண்டு வருகின்றான். பின்னர் துவாயினால் அழுத்தித் துடைத்து விட்டுக் கொண்டு கமகமக்கும் முகப்பவுடரைக் கையில் கொட்டி முகத்தில் தடவிக் கொள்கின்றான். அவன் தலையணைக்குக் கீழ் புத்தகம் ஒன்றை வைத்துக் கொண்டிருக்கின்றான்.

தவறிப் போனவன் கதை 9.
தமிழ்நாட்டு எழுத்தாளர் ஒருவரின் எங்கும் கிடைக்கக் கூடிய மூன்றாந்தர நாவல் அது.
அந்த நூலைக் கையில் எடுத்து அதனை ஆழ்ந்து படிப்பதாகப் பாவனை பண்ணுவதும், படித்த பின்னர் அது பற்றி உரக்கச் சிந்திப்பது போல விழிகளை அகலத் திறந்து வைத்துக் கொண்டு இருப்பதும், அதன் பிறகு மூடி வைப்பதும், மீண்டும் நூலை எடுத்து விரிப்பதுமாக ஒரு நாடகம் நடந்து கொண்டிருக்கிறது.
யாருக்காக இப்படி ஒரு நாடகம்!
அவன் தன்னை ஆசிரியர் தணிகாசலத்துக்கு ஒரு ஞானவானாக வலிந்து காட்ட எத்தனிக்கின்றான். தன்னைத் தானாகக் காட்டுவ தைத் தவிர்த்து, தன்னைக் கற்றறிந்த ஆசிரியனாகக் காட்டுவதற்காகவா துடிக்கின்றான்!
தணிகாசலத்துக்கு அவனைப் பார்க்க அருவருப்பாக இருக்கி றது. அவன் மாத்திரமா! சமூகத்தில் தங்களைப் பெரிய மனிதர்க ளாகக் காட்டிக் கொள்ள எண்ணும் பலர் இப்படித்தான் இருக்கின் றார்கள். வைத்தியசாலைக் கட்டிலில் வந்து தங்கி இருக்கும் அவன் ஒரு நோயாளியாகத் தோன்றவில்லை.
வைத்தியச் சான்றிதழ் பெறும் தேவைக்காக, வைத்தியசா லைகளுக்கு வந்து போலி நோயாளிகளாகப் படுத்துக் கொள்ளும் அரச உத்தியோகத்தர்கள் போல் அவன் இருக்கின்றான். மதிய வேளை அவனை வந்து பார்வையிடுவதற்கு உறவினர் யாரும் அங்கு வந்ததாக இல்லை. குடும்பத்துக்கு உதவாத அவனை அவன் மனைவி பிள்ளைகள் குடும்பத்தை விட்டே வெளியேற்றி விட்டார்கள்.
அவன் இப்பொழுது எங்கே இருந்தால் தான் என்ன? வைத்திய சாலைக் கட்டிலும், அங்கே கிடைக்கும் உணவுகளும் போதுமா னவை.
அவன் இப்படிக் புளுகிக் கொண்டு இருப்பது அவன் இயல்பான குணம். அவனை மற்றவர்கள் கண்டு கொள்ளாமல் போனால் அவன் புளுகு நாடகம் அரங்கேற வழி இல்லாது போய்விடும். அவனின் பார்வையாளனாக இன்று தான் இருந்து கொண்டிருப்பது தணிகாச லத்துக்கு மனதில் சினம் மூட்டுகிறது.

Page 48
- LDTலை ஐந்து மணி அது பார்வையாளர் நேரம் 5 உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் என ஆண்களும் பெண்களுமாக அவனைச் சுற்றி ஒரு கூட்டம் அவன் மனைவி பிள்ளைகளும் வந்திருக் கின்றார்கள். இப்பொழுது ஊரடங்கு இரவு ஏழு மணிக்கு அமுலுக்கு வந்து விடும். மாலை ஆறு மணிக்கே அவசரமாக எல்லோரும் வீடுகளில் போய் அடைந்து விடுவார்கள். அவனைச் சுற்றி நிற்கும் அவர்கள் முகங்களில் நெருங்கி வரும் மாலை இருள் கவிந்து கிடக்கிறது. இதுவரை தனித்துவிடப்பட்டவன் போல உட்கார்ந்து இருந்த அவனுக்கு அவர்களைக் கண்டு உள்ளத்தில் உற்சாகம் பிறக்கின்றது.
அவனுடன் நன்றாக நெருங்கிப் பழகுகின்றவர்களுடன் மனம் விட் டுப் பேசுவது அவன் சுபாவம். அவனுக்கு மிக நெருக்கமானர்கள் முகங்கள் இப்பொழுது கவலையினால் வாடிக் கிடக்கின்றன. அவன் வழமையான கலகலப்போடு அவர்களுடன் பேச விரும்புகின்றான். அவன் உள்ளத்தில் இருக்கும் இந்த விருப்பத்துக்கு ஒரு சமயம் அவன் பட்ட மனக்காயம் இன்னொரு காரணம். அந்த வைத்திய சாலைக்குள் அவன் நுழைகின்ற சமயங்களில் எல்லாம் ஆறாத அந்த மனக்காயத்தினால் அவனுக்கு நெஞ்சில் வலி எடுக்கிறது.
சுகவீனமாக அவனது குழந்தையை அந்த வைத்தியசாலையில் அப்பொழுது அனுமதித்திருந்தார்கள். அவன் காலை மாலை

தவறிப் போனவன் கதை 93
இருவேளைகளிலும் குழந்தையைப் பார்ப்பதற்காக அங்கு வந்து போய்க் கொண்டிருந்தான்.
விடுமுறை நாளில் மதியவேளை வந்து குழந்தையைப் பார்த்து வருவதற்கும் அவன் தவறுவதில்லை. ஒரு தினம் மாலை நேரம் வைத்தியசாலைப் பிரதான வாசலுக்குள் அவன் நுழைகின்றான். அப்பொழுது அவனுக்கு அறிமுகமான ஒருவர் அவன் எதிரில் 6(p56BT.
"என்ன தம்பி ஆருக்குச் சுகமில்லை!" அவர் வினவுகின்றார்.
"பிள்ளைக்கு”
“என்ன வருத்தம்?"
Suਰੰ6. ਤ6
"தாயே வைச்சிருக்கிறா?”
"ஒமோம்”
"நான். தம்பி. மணிமேகலையைப் பார்த்துக் கொண்டு வாறன்" என மணிமேகலையை அழுத்தமாகச் சொல்லிக் கொண்டு அவன் முகத்தைக் குறிப்பாகப் பார்க்கின்றார். அவர் குறிப்பிட்டுச் சொல்லும் மணிமேகலை யார் என்று அவன் சட்டெனப் புரிந்து கொள் கின்றான். ஆனால் அதை வெளியில் காட்டிக் கொள்ளாது "அப்ப டியா?" என்று பொதுவாகக் கேட்டு வைக்கின்றான்.
"எட்டாம் வாட்டிலே இருக்கிறா" தொடர்ந்து அவர் விபரம் சொல் லுகின்றார். அவன் மெளனமாக நிற்கின்றான். அவன் அறிய வேண் டிய முக்கியமான தகவல் ஒன்றை அவனிடம் தெரிவித்துவிட்ட திருப தியுடன் "அப்ப. வாறன் தம்பி" என விடை பெற்றுக் கொள்ளுகின்றார்.
அவன் வந்த வேகத்தில் தனது குழந்தையைப் பார்ப்பதற்காக குழந்தை வாட் நோக்கி விரைவாகப் போகின்றான். குழந்தைக்குக்

Page 49
94 தெணியான்
காய்ச்சல் இப்பொழுது தணிந்து குழந்தை சுகமாக இருக்கிறது. நெஞ்சுச் சளி மட்டும் முற்றாகக் குறையவில்லை. அவனைக் கண்டு முன்போல சோர்ந்து படுத்துக் கொள்ளாமல் கலகல என்று குழந்தை சிரிக்கின்றது.
"இரண்டு நாளிலே வீட்டுக்குப் போகலாம் எண்டு டொக்ரர் சொன்னவர்" எனத் தகவல் தெரிவிக்கின்றாள் மனைவி. அவன் குழந்தைக்கும் மனைவிக்கும் தேவையான பொருட்கள் வெந்நீர் என்பவற்றை வாங்கி வந்து கொடுத்துவிட்டு, அவர்களிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு வெளியே வருகின்றான்.
வைத்தியசாலை வாசல்வரை வந்தபிறகு மணிமேகலை நினைவு மறுபடி மனதில் எழுகின்றது. மணிமேகலை பற்றிய தகவலைத் தவறாமல் அவனுக்குச் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்ததை அவன் இப்பொழுது எண்ணிப் பார்க்கின்றான். மணிமேகலையின் நினைவுகள் இன்னும் முற்றாகத் தன் நெஞ்சை விட்டு அகலவில்லை என்னும் எண்ணம் அவன் மனதில் எழுகின்றது.
அவர்கள் இருவரும் பள்ளியில் படித்த காலத்தில் அவர்களை இணைத்து அந்தக் காலத்தில் கதைகள் பல அடிபட்டன. பள்ளிச் சுவர்களில் எல்லாம் இருவர் பெயர்களையும் சேர்த்து அப்போது எழுதினார்கள். மணிமேகலை அவனிலும் இரண்டு வயது இளையவள். அவன் எட்டாவது வகுப்பில் இருந்த சமயம் அவள் ஆறாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்தாள். அவள் அந்தக்காலத்தில் இசையினால் அந்தப் பள்ளியைத் தன் வசப்படுத்தி வைத்திருந்த இசை அரசி. அவன் மேடைப் பேச்சினால் எல்லோரையும் கவர்ந்த நல்லதொரு பேச்சாளன்.
அவளின் மெலிந்த, நெடிய, எழில் கொஞ்சும் உருவம் தேன் சிந்தும் இனிய குரலும் அவன் பிஞ்சு மனதை கிறுங்க வைத்தன. அவன் அழகுத் தோற்றம் சுண்டி இழுக்கும் கம்பீரமான மேடைப் பேச்சு என்பன அவள் உள்ளத்தைக் கவர்ந்தன. இருவருக்கும் விருத்தெரியா விளையாட்டுப் பருவம்,
அன்பு ஒன்றைப் பரிமாறிக் கொள்வதைத் தவிர வேறெதுவும் அறியாட் பாலியப் பருவம் அவர்கள் இருவருக்கும் இடையே வளர்ந்து வந்த அந்த உறவுக்கு என்ன பெயர்? சரத்சந்தரின் தேவதாஸ்-பார்வதி

தவறிப் போனவன் கதை 95
உறவு சின்னஞ் சிறிசுகளின் பள்ளிப் பருவத்து பாலிய நட்பு அந்தப் பிஞ்சு மனங்களின் வெள்ளை நட்பு வளர்ந்து வாலிபத்தில் மயங்கும் காதலாகி இறுதியில் காவியமாக நிறைந்து போகிறது.
அவனும் அவளும் கொண்ட நட்பு அப்படியானதா?
அவர்கள் பிஞ்சுமனங்களில் மலர்ந்த அந்த அன்புக்கு காதல் என்று (Ola T66)6)TLDIT?
அவள் தனிமையில் அவனைச் சந்திக்கும் சமயங்களில் எல்லாம் அந்தரங்கமாக அவனுக்குச் சொல்லிக் கொண்டிருந்தாள்.
"நான் உங்களைத்தான் கட்டுவேன்"
அப்பொழுது "எனக்கும் அதுதான் விருப்பம்" என்பான் அவன்.
அப்படி அவனுக்குச் சொல்லிக் கொண்டிருந்த அவள் படிப்பு ஏழாவது வகுப்புக்கு மேல் தாண்டிப் போகவில்லை. சொல்லாமல் கொள்ளாமல் பள்ளிப் படிப்பை திடீரென்று அவள் நிறுத்திக் கொண்டுவிட்டாள்.
அவள் வருவாள் வருவாள் என எதிர்பார்த்து, பல காலம் அவன் உள்ளம் ஏங்கிக் கொண்டிருந்தது. இறுதியில் அவளை இழந்து போன துயர உணர்வோடு அவன் அலைந்து கொண்டிருந்தான்.
அவன் நெஞ்சில் அவள் நினைவுகளின் கனத்தை, அவள் பிரிவுத் துயரத்தை யாருக்குச் சொல்லி மனதை ஆற்ற முடியும்?
அவன் யாரிடத்திலாவது போய்த் தட்டித்தவறி தன் மனப்பாரத்தை இறக்கப் போனால், "படிக்கிற வயதில் அவருக்கொரு காதல்" எனக் கேலிப்பேச்சு கேட்க வேண்டி வரும்.
அந்தரங்கமான அவள் நினைவை மனதில் பெளத்திரமாகச் சுமந்த வண்ணம் அவன் வாய் திறக்காமல் மெளனமாக இருந்து விட்டான்.
அவள் எங்கே போனாள்? அவள் என்ன ஆனாள்? பள்ளிப்படிப்பை ஏன் அவள் நிறுத்திக் கொண்டாள்? எதுவுமே அவனுக்குத் தெரிய வராது.

Page 50
96 தெணியான்
ஆனால் தேனாக இனிக்கும் அவளது கன்னல் மொழி. அவனை மயக்கும் அவளது மோகனப் பாடல்கள். அவன் இதயத்தில் இளந் தென்றலாக எப்பொழுதும் எழுந்து அவனை மெல்ல வருடிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.
அதனால் அப்பொழுது அவன் உள்ளத்தில் ஒரு தீர்மானம் கொண்டிருந்தான். ஏமாற்றத்தில் விளைந்த தீர்மானம் அது.
எதிர்காலத்தில் தனது மனைவியாக வரப் போகும் பெண் இன்பந் தரும் இனிய குரலினால் நெஞ்சை அள்ளும் பலாச் சுவைப் பாடல்களைப் பாட வல்லவராக இருக்க வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்மானம் இழந்து போன அவளை மனைவி உருவத்தில் அவன் ஈடு செய்ய எண்ணினான். அவன் மனைவி பொன்மணி இனிமையாகப் பாட வல்லவள். பாட்டொன்று பாடுமாறு அவளிடம் இதுவரை அவன் ஒரு நாள் தானும் கேட்டுக் கொண்டதில்லை. அவள் தானாக வலிந்து வந்து அவன் முன் நின்று ஒரு பாட்டுப் பாடியதுமில்லை. அவள் தனது வீட்டு வேலைகளுக்கு மத்தியில் சில சந்தர்ப்பங்களில் தன்னை மறந்து முணுமுணுக்கும் பாடல்கள் சில சமயங்களில் அவன் செவிகளில் வந்து விழும்.
அவன் தன்னைக் கவனிக்கின்றான் என்று அவள் கண்டால் பாடுவதைச் சட்டென்று நிறுத்திக் கொண்டு விடுவாள். கணவன் முன் நின்று பாட்டுப் பாடுவது அவனுக்குத் தான் கொடுக்கும் மரியா தையல்ல என்பது அவள் கருத்து. வாழ்வு கற்பனையாக இருக்கும் போது அது எத்தனை இன்பம் தருகிறது! அது நிஜமாகும் போது வெறுங் கனவாகிப் போகிறது.
மனிதன் கற்பனையாக வாழ்ந்து வாழ்வைச் சுவைத்து அதில் இன்பம் பெறும் ஆற்றல் படைத்தவனாக இருக்கும் போது, அதனை விடுத்து ஏன்தான் துன்பத்தில் கிடந்து உழலுகின்றான்!
மணிமேகலை வாழ்வின் கற்பனை என்னும் முடிவுக்கு அவன் வந்து, கால ஓட்டத்தில் அவளை மறந்து போனான். ஒரு தினம் நல் லூர்க் கந்தன் ஆலயப் பூங்காவனத் திருவிழாவுக்கு நண்பர்கள் சில ருடன் அவன் போயிருந்தான். நல்லூரில் திருவிழா ஆரம்பமாகி விட் டால்,

தவறிப் போனவன் கதை 97
ஆலயத்தை அண்டியுள்ள வீதியில் வாகனப் போக்குவரத்துத் தடைப்பட்டுவிடும். ஆலயத்துக்குக் கிழக்கே பருத்திதுறையில் இரு ந்து யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லும் பிரதான வீதியில், அந்த வீதிக் குக் குறுக்கே பெரிய பெரிய பந்தல்கள் போடப்பட்டு விடும். அவன் அப்போது வாலிபக் கனவுகளில் மிதந்து கொண்டிருந்த
56). D.
மின்சார தீபத்தில் பகலாக ஒளிர்ந்து கொண்டிருக்கும் ஆலயச் சூழலில் அவனும் நண்பர்களும் அலைந்து திரிந்த பின்னர் வீதிக்குக் குறுக்கே போடப்பட்டிருக்கும் பந்தல் ஒன்றின் கீழ் வந்து அமர்ந்து கொள்ளுகின்றார்கள். அவன் நண்பன் ஒருவன் சென்று கச்சான், கடலை என்பன வாங்கி வருகின்றான். அவர்கள் அமர்ந்திருந்து பேசிக் கொண்டிருக்கும் பந்தலை ஊடறுத்துச் செல்லும் வீதியில், ஆலயத்தை நோக்கிச் செல்லுகின்றவர்களும் ஆலயத்தில் இருந்து திரும்பி வருகின்றவர்களுமாக சனவெள்ளம் பெருகி வழிந்து கொண்டி ருக்கின்றது.
அவனும் நண்பர்களும் கடலை கொறித்த வண்ணம் தங்களுக் குள் பேசிச் சிரித்து வீதியில் போவோர் வருவோரை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அவன் தன் நண்பர்களுக்கு எதனையோ சொல்லிப் பலமாகச் சிரிக்கின்றான். அப்பொழுது வீதியில் ஆலயம் நோக்கிப் போய்க் கொண்டிருந்த பெண் ஒருத்தி அவன் சிரிப்பொலி கேட்டுச் சட்டென்று திரும்பி அவனைக் கூர்ந்து பார்க்கிறாள்.
அப்படிப் பார்த்த அவள் தொடர்ந்து போய்க் கொண்டிருப்பதை அவன் அவதானிக்கின்றான்.
ളൂ. ജൂഖണ്. ഥങ്ങി(്ഥകങ്ങബ!
அவன் குரலொலி இன்றும் அவள் இதயத்தில் ஒலித்துக் கொண்டிருக்கின்றதா?
அவன் குரலின் கம்பீரம் இன்றும் அவள் இதயத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அவனுக்கத் தன் கண்களையே நம்ப

Page 51
98 தெணியான்
முடியவில்லை. அவளா இவள்? இப்படியா அவள் இன்று வளர்ந்து நிற்கின்றாள்! சரசரக்கும் கூறை உடுத்தி கைப்பிடித்தவன் கரம்பற்றி நடந்து, அவனோடு இணைந்து அவள் போய்க் கொண்டிருக்கிறாள். அவள் சற்றுத் தூரம் நடந்து சென்று மெல்ல பின்புறம் திருமபி ஒருதடவை ஆவலுடன் பார்த்துக் கொண்டு போகின்றாள்.
இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் அவள் விழிகள் பேசுகின் றன. பேசும் அந்த விழிகளின் மெளன சோகம் அவன் நெஞ்சைத் தொடுகிறது. அவள் வாழ்வில் வெறும் கற்பனை அல்ல. இன்றும் அவன் இதயத்தில் இனிய சுருதி மீட்டும் வாழ்வின் நிஜம். இப்பொழுது அவள் எப்படி இருக்கின்றாள்?
ஒரு தடவை அவளைப் போய் பார்த்தால் என்ன? சில நிமிடங்கள் அவன் மனம் குழம்புகின்றான். பின்னர் நிதானமாகச் சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்து, வைத்தியசாலைக்குள் மீண்டும் திரும்பிப் போகின்றான். அவள் தங்கி இருக்கும் அந்த வாட்டுக்குள் நுழைந்து, அவள் கட்டிலைத் தேடி, இறுதியாக ஒரு யன்னல் அருகில் கட்டிலின் மேல் தனித்துக் கிடக்கும் அவள் முன்போய் நிற்கின்றான்.
96).j6it....... அந்த மணிமேகலையா இவள்?
வறுமை என்னும் புயலில் அடிபட்டு வாடிக் காய்ந்து சருகாகிப் போன றோஜா மலராக அவள். அது அவளுக்கு இரண்டாவது அல்லது மூன்றாவது பிரசவமாக இருக்கலாம். அல்லது அதற்கு அடுத்ததாகவும் இருக்கலாம். ஒருவன் அங்கு வந்து தன் முன்னால் இப்பொழுது நின்று கொண்டிருக்கின்றான் என்பதை அவள் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. அவள் படுத்துக் கிடக்கும் படுக்கையில் இருந்து அவனைக் கண்டு எழுந்திருக்கவும் இல்லை. அவளுக்கு எதிரிலுள்ள அந்த யன்னலுக் கூடாகத் தோன்றும் தீப்பட்டுக் கருகிக் கொண்டிருக்கும் அந்தியகால அடிவானத்துக்குள் விழிகளால் அவள் எதனையோ தேடிக் கொண்டு கிடக்கின்றாள்.
ஒ. பாலிய பருவத்து வசந்த நினைவுகளையா அவள் இப்பொழுது தேடுகின்றாள்?
சின்னஞ்சிறு சிட்டுக்களாகப் பாடிப் பறந்த பருவகால இளமை

தவறிப் போனவன் கதை 99
நினைவுகள் தீப்பற்றி எரியும் அடிவானத்துக்குள் எரிந்து கொண்டி ருப்பதை அவள் பார்க்கின்றாளா? அவள் தன் குழந்தையை மாத்தி ரமா இப்பொழுது வயிற்றில் சுமந்து கிடக்கின்றாள்? பாவம் சோகம் சுமந்து கிடக்கும் ஏழைப் பெண்ணாக அல்லவா அவள் இப்பொழுது அங்கே கிடக்கின்றாள்.
அவள் அவளாக வாய் திறந்து பேசட்டும் என எதிர்பார்த்த வண்ணம் அவன் மெளனமாக அவள் முன் நிற்கின்றான். அவளது இமையா விழிகள் தொடர்ந்து அடிவானத்தைத் துழாவிக் கொண்டு இருக்கின்றன. அவள் அவளாக வாய் திறந்து பேசப் போவதில்லை என்பதை அவன் உணந்த பிறகு “எப்படி இருக்கிறாய்?" என அடித் தொண்டையில் இருந்து குரல் தளதளக்க அவளிடம் மெல்லக் கேட்கின்றான்.
அவள் செவிகளில் அவன் குரல் கேட்கவில்லை. அவள் உணர்வு கள் மரணித்துக் கல்லாகக் கிடக்கின்றாள். அகலிகை இப்படித்தான் கருங்கல்லாகக் கிடந்திருப்பாளோ!
சாதாரண மனித நாகரிகந்தானும் அறியாத ஒருத்தி போல அல்லவா அவள் கிடக்கின்றாள்! முகமனுக்கேனும் ஒரு வார்த்தை பேசி இருக்கலாம் அல்லவா! மெளனமாகக் கிடக்கும் அவள் முன்னால் தொடர்ந்து நிற்பது அவனுக்கு அவமானமாகத் தோன்றுகிறது.
அவள் பேசப் போவதில்லை. அவள் பதிலை எதிர்பார்க்காது, "வாறன்" என்று மாத்திரம் அவன் சொல்லிக் கொண்டு சட்டென்று அங்கிருந்து வெளியேறுகின்றான். அன்று அவள் பேசாதிருந்த போது அவன் பட்ட மனக்காயம் போல மற்றவர்களுக்கு ஒரு போதும் இனி வரவேண்டாம் என எண்ணி எல்லோருடனும் இன்று பேசுவதற்கு விரும்புகின்றான்.

Page 52
0ெ)த்ெதியர்கள் அவனைத் தடுத்த போதும் s அவனால் பேசாமல் மெளனமாக இருப்பதற்கு இயலவில்லை. அவன் தனக்கு நெருக்கமானவர்
களுடன் என்றும் சரளமாக உரையாடும் இயல்பு ள்ளவன்.
அவன் நலம் விசாரிக்க, அவனைத் தேடி வந்திருக்கின்றவர்க ளுடன் மனந் திறந்து இரண்டு வார்த்தைகள் பேசாமல் எப்படி இருக்க முடியும்? அப்படிப் பேசாமல் இருப்பது அவர்கள் மனதைப் புண்படுத்தி விடுமல்லவா? அவன் தன்னைப் பார்த்துப் போக வந்திருக்கும் எல்லோருடனும் முகம் மலர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றான். விலகி நிற்கின்றவர்களையும் அருகே அழைத்து அவர்களுடன் எல்லாம் பேசுகின்றான்.
அவனைப் பார்க்க வந்திருக்கின்றவர்கள் மத்தியில் அவனது மாணவர்களுள் ஒருவன் மாத்திரம் இன்று வந்து நிற்கின்றான். அந்த மாணவன் சற்று விலகி கைகட்டி, தலை குனிந்து நின்று கொண்டி ருக்கின்றான். அந்த மாணவன் அவனைப் பார்ப்பதற்காக அங்கு வந்து நிற்பது கண்டு, அவன் உள்ளம் அதிருகின்றது. அந்த மாணவன் வேறு யாருமல்ல. முதல் நாள் கல்லூரியில் வைத்து கன்னத்தில் ஓங்கி அறைந்தானே, அந்த உயர் வகுப்பு மாணவன்தான். அவன் மனம் மாணவனைக் கண்டு கலங்குகிறது. அந்த ஒரு நொடியில் மன அமைதியை அவன் இழந்து போகின்றான். அந்த மாணவனை அருகே

தவறிப் போனவன் கதை Ol
வருமாறு மெல்ல அழைக்கின்றான். மாணவன் அவன் முன்னே வந்து, முன்னர் போல கைகட்டி, தலைகுனிந்த வண்ணம் பணிந்து நிற்கின்றான்.
மாணவன் தோளைத் தொட்டுத் தடவி பின்னர் இரு கன்னங்க ளையும் மாறி மாறித் தடவிக் கொடுக்கும் அவன் கண்கள் கலங்கு கின்றன. அவன் ஸ்பரிசத்தில் சிலிர்த்துப் போன மாணவன் விழிக ளும் குளமாகின்றன. அவன் வாய் திறந்து ஒரு வார்த்தை பேச முடியவில்லை. தான் இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருக்கும் வார்த் தைகள் யாவும் அர்த்தமின்றி வீழ்ந்து மடிந்து போவதாக அந்தக் கணத்தில் அவன் உணருகின்றான்.
ஓயாமல் பேசிக் கொண்டிருந்த அவன், இப்பொழுது திடீரென்று காக்கும் மெளனத்தின் பொருள் என்ன? அந்த மாணவன் மெளனமாக நிற்கின்றானே! அதன் அர்த்தந்தான் என்ன?
"சரி நில்தம்பி” மனதைத் திடப்படுத்தி, அவன் நினைவில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு பழையபடி பேச ஆரம்பிக்கின்றான்.
"டொக்ரர் பேச வேண்டாம் என்று சொன்னவராம். ஏன் பேசிக் கொண்டிருக்கிறியள்? அங்கு நிற்கும் நண்பர்களுள் ஒருவர் கூறுகின்றார்.
"பேசாமல் எப்படி இருக்கிறது?" எனக் கேட்டவன் "மெளனத்தை விரதமாகக் கொண்டு சாதாரணமா வாழ்ந்து காட்டினார் காந்தியடிகள்! நோய் வந்த போதும் எங்களால் பேசாமல் இருக்க முடியவில் லையே!” எனச் சொல்லி அவன் சிரிக்க பட்டென்று நாசியில் இருந்து குருதி வடிகிறது.
அவனைப் பார்க்க வந்து சுற்றி நின்றவர்கள் திகைக்கின்றார்கள்.
இதுவரை அவன் வாயினால் சொல்ல மாத்திரம் கேட்டு கற்பனை யில் அவன் நோயைக் கண்டு கொண்டிருந்தவர்கள் நேரில் அந்தக் காட்சியைப் பார்த்து உள்ளம் அதிர்ந்து போகிறார்கள்.
அவர்கள் எல்லோரது விழிகளும் கணத்தில் பணிக்கின்றன. அவன்
மனைவி விரைந்து நெருங்கி வந்து வடியும் குருதியைத் துடைத்த வண்ணம் கண்ணிர் சிந்திக் கொண்டு நிற்கின்றாள்.

Page 53
O2 - தெணியான்
பிள்ளைகள் அந்தக் காட்சியைக் கண்டு வெம்பி அழுகின்றார்கள். அவசரமாகக் குளிர்ந்த நீரில் பஞ்சை நனைத்தெடுத்து நாசியின் மேல் மீண்டும் வைத்து கண்ணிர் சிந்திய வண்ணம் பிடிக்கின்றாள் சின்னமகள், வடிந்து கொண்டிருந்த இரத்தம் சிறிது நேரத்தின் பின்பு கட்டுப்பட்டு விடுகிறது.
தன்னைச் சூழ்ந்து நின்றவர்கள் முகங்கள் எல்லாம் அவன் திரும் பித் திரும்பி நோக்குகின்றான். வாய் திறந்து அவனைப் பேச வைக் கக் கூடாது என்னும் எண்ணத்துடன் அனைவரும் மெளனம் காத்து நிற்கின்றனர்.
மாலை இருள் சூழும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தங்கள் கூடுகளில் சென்று அடங்கும் பறவைகளாக வீடுகளுக்குச் சென்று முடங்க வேண்டும் என்னும் அவசரம் எல்லோருக்கும். அவர்கள் ஒவ் வொருவராக அவனிடம் சொல்லிக் கொண்டு மனப் பாரத்துடன் அங்கி ருந்து புறப்பட்டுப் போகின்றார்கள். அவன் மனைவி, பிளளைகள் அங்கி ருந்து புறப்பட்டுப் போவதற்கு மன விருப்பமின்றி தரித்த நிற்கின் றார்கள்.
"இருளுது. பிள்ளையளைக் கூட்டிக் கொண்டு நேரத்துக்கு வீட்டுக்குப் போங்கோ" அவன் அவசரப்படுத்துகின்றான்.
மனைவி விம்மி விம்மி அழுகின்றாள். "அழாதையுங்கோ.1 எனக்கொண்டுமில்லை. பிள்ளையளைக் கண்டபடி வெளியிலே திரிய விட வேண்டாம்!"
"சரி போவம் வாருங்கோ. அவன் தமையன் அவர்களை அழைத் துக் கொண்டு புறப்படுகின்றார். தமையனை வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு அவன் தங்கையின் கணவன் அவனுக்குத் துணையாக அங்கே தங்கி நிற்கின்றார். அவன் இப்பொழுதுதான் நோயின் உபாதையை உணர ஆரம்பித்தான். நாசியில் இருந்து குருதி வடிவ தால் அவனுக்கு எந்த வேதனையும் உண்டாகவில்லை.
வைத்தியசாலைக் கட்டில் மீது தொடர்ந்து குந்தி இருப்பதனால் உண்டாகும் உடல் வேதனையை அவன் இப்பொழுது உணருகின் றான். நாரி உளைவு எடுக்கிறது. பிருஷ்டம் நோகிறது. கால்கள் வலிக்கின்றன. படுக்கை விட்டு எழுந்து சற்று நடந்து உலாவி வந்தால்

தவறிப் போனவன் கதை 103
உடல் வேதனைகள் எல்லாம் தீர்ந்து போய்விடும் போலத் தோன்று கிறது. நோயாளியாக இருக்கும் உபத்திரவம் அற்றுப் போய் விடும். அவன் எழுந்து அந்த வாட்டுக்குள் காலார மெல்ல நடந்து திரிவதற்கு விரும்புகின்றான். ஆனால் நோய் என்று வந்துவிட்டால் அந்த நோயாளி தன் இஷ்டம் போல நடந்து கொள்வதற்கு யாரும் அனுமதிக்கமாட்டார் கள். அவன் எழுந்து நடமாடித் திரியக் கூடாது என்று டொக்ரர் கட்டளை விதித்துள்ளார். டொக்ரர் இட்ட கட்டளைக்கு மேல் வைத்திய சாலையில் மேல் முறையீடு செய்ய வேறு இடமேது?
அன்று இரவு முழுவதும் உறக்கமின்றி திருதிரு என்று அவன் கண்விழித்துக் குந்திக் கொண்டிருக்க முடியுமா? அங்குள்ள நோயாளர் அனைவரும் படுத்துறங்கும் வேளை தான் ஒருவன் மாத்திரம் அவர்களைப் பார்த்துக் கொண்டு எப்படி இருக்க முடியும்? அந்த இரவை எண்ணிப் பார்க்க, அவன் நெஞ்சில் அச்சம் எழுந்து அவனைத் துன்புறுத்துகின்றது. கற்பனையில் வரும் துன்பங்கள் நிசமாக நடந்து முடியும் துன்பங்களிலும் பார்க்க மிகக் கொடியவை. அவன் வெளியில் சொல்லிக் கொள்ள இயலாத அந்தக் கொடிய துன்பம் அவனைப் போட்டு வாட்டுகின்றது.
இரவு ஏழு மணி ஆகிறது.
ஊரடங்கு ஆரம்பிக்கும் நேரம். அவனுக்கு வியர்வை பெருகுவது தணிந்து விட்டது. ஆனால், அவன் நாசியில் இருந்து குருதி வடிய ஆரம்பிக்கிறது. அவன் மைத்துனன் வடிந்து கொண்டிருக்கும் குருதி யைத் துடைத்து விட்டுக் கொண்டிருக்கின்றார்.
அந்த வாட்டில் இருக்கும் நர்ஸ் விரைந்து வந்து பஞ்சை எடுத்து குளிர்ந்த நீரில் நனைத்து அவன் நாசியின் மேல் வைத்துப் பிடிக்கின்றாள். குருதி முன்னர் போலக் கட்டுப்படுவதாக இல்லை. முன்பெல்லாம் தடைப்பட்டுத் தடைப்பட்டு வடிந்த குருதி இப்பொழுது தொடர்ந்து போய்க் கொண்டிருக்கிறது. நர்ஸ் என்னதான் செய்வ தென்று தெரியாமல் அந்தரப்படுகிறார். பின்னர் சிறிதும் தாமதிக்கா மல் அங்கிருந்து ஓடிச் சென்று டொக்ரரை அழைத்து வருகின்றாள்.
டொக்ரர் இரத்த அழுத்தத்தைப் பரிசோதித்துப் பார்த்த பின்னர் ஊசி மருந்தொன்றை எடுத்து அவசரமாக ஏற்றுகின்றார். அதன் பின்னர் அவன் அருகில் அமர்ந்திருந்து அவனது நிலைமையை கொஞ்ச நேரம்

Page 54
104. தெணியான்
அவதானித்தப் பார்க்கின்றார். தான் அளித்த சிகிச்சைகள் உடனடியாக அவனுக்கு எந்தப் பயனும் கொடுக்கவில்லை என்பதை அவர் உணருகின்றார்.
நேரத்தைக் கவனிக்கின்றார். எட்டு மணி கடந்து போய்விட்டது. இரத்தம் வடிந்து கொண்டிருக்கிறது. இரத்தம் கட்டுப்படாது இப்ப டியே தொடர்ந் போய்க் கொண்டிருந்தால். உயிர் ஆபத்து நேரலாம் எனத் தனக்குள் தீர்மானித்துக் கொண்டு, “யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு போகிறது நல்லது" என்று அவன் மைத்துனனிடம் அமைதி யாகக் கூறுகின்றார்.
"அம்புலன்ஸிலே அனுப்புவியளா ஸேர்! அவன் மைத்துனர் பதற்றப்படுகிறார்.
"அம்புலன்ஸ் வசதி இப்ப இஞ்சை இல்லை"
"அப்ப. என்ன ஸேர் செய்யிறது?"
"ஆஸ்பத்திரிக்கு வெளியிலே கடைக்குப் பக்கத்திலே கார் நிற்கும். அதைப் போய்க் கேட்டுப் பாருங்கோ"
டொக்ரர் அந்த வாட் சிற்றுாழியர் ஒருவரை அழைத்து அவன் மைத்துனனுக்குத் துணையாக அனுப்பி வைக்கின்றார். இன்னொரு சிற்றுாழியர் பெருகிக் கொண்டிருக்கும் இரத்தத்தைத் துடைத்து விடுகின்றார். தண்ணிரில் நனைந்த பஞ்சை மூக்கின் மேல் வைத்து பெருகிக் கொண்டிருக்கும் இரத்தத்தை உறைய வைக்க நர்ஸ் பிரயத்தனம் செய்கின்றாள். டொக்ரர் அனுப்பிய சிற்றுாழியர் ஹரிக் கன் லாம்பைக் கையில் தூக்கிக் கொண்டு அவன் மைத்துனருடன் வைத்தியசாலை வாசலுக்கு வந்து, மிக எச்சரிக்கையாக வீதியின் இரண்டு பக்கங்களையும் பார்த்துக் கொண்டு அந்த வீதியைக் கடந்து கார் நிறுத்தி வைத்திருக்கும் கொட்டிலுக்கு வந்து அருகே யுள்ள கடைக் கதவில் மெல்லத் தட்டுகின்றார்கள்.
கடைக்குள்ளே இருந்து எந்த ஒரு அசுகையும் இல்லை. மீண்டும் தட்டுகின்றார்கள். மயானமும் இப்படி அமைதியாக இருக்காது. அப்படி ஒரு அமைதி திரும்பவும் தொடர்ந்து தட்டுகின்றார்கள். மெளனமாக உள்ளே இருந்து கொண்டிருப்பதனால், கதவில் தொடர்ந்து தட்டிக் கொண்டு நிற்கின்றவர்கள், தங்கள் முயற்சியைக் கைவிட்டு திரும்பிப்

தவறிப் போனவன் கதை 105
போய் விடப் போவதில்லை என்பதைப் புரிந்து கொண்டு "ஆரது" எனக் கேட்கின்றார் கார் சாரதி.
நான் சிவபுண்ணியம். அண்ணே!” சிற்றுாழியர் குரல் ................ [متی94قاگ கொடுக்கின்றார். அவன் குரலில் இருந்து சிற்றுாழியரை இனங் கண்டு கொண்ட கார்ச் சாரதி, "என்ன தம்பி இந்த நேரத்திலே. சலித்துக் கொள்ளும் குரலில் அவரோடு உள்ள நெருக்கம் வெளிப்படுகின்றது.
"ஒரு பேஸன்ட்டுக்கு கொஞ்சம் சீரியஸாக இருக்கு. அண்ணே!"
"அதுக்கு. இந்தக் கேவியூ நேரத்திலே என்ன செய்கிறது?"
"தாமதிச்சு வைச்சுப் பாகக் கூடிய நிலையிலே இல்லை"
"அப்படியோ..? கேட்டுக் கொண்டு அவர் கடைக்குள் இருந்து
வெளியே வருகின்றார். சிற்றுாழியருடன் நிற்கும் மைத்துனனைக் கண்டு
"இவர் ஆர் தம்பி" என வினவுகின்றார்.
"பேஸன்ரின்ரை மச்சான் பேஸன் ஒரு மாஸ்ரர்"
"என்ன வருத்தம்"
"மூக்காலே இரத்தம் போய்க் கொண்டிருக்கு"
ஒ. அப்பிடியா? வழியிலே நான் சமாளிக்க மாட்டேன். சிங்களம் தெரிஞ்ச ஓராள் கூட வரவேணும். வா. தம்பி அநீதியைப் போய் எழுப்புவம்"
சற்று நேரத்தின் பின் அநீதியை அழைத்துக் கொண்டு இருவரும் வருகின்றார்கள்.
மூவரும் ஒன்றாக வாட்டுக்கு வந்து அவனைப் பார்க்கின்றார்கள். அவன் முற்றாக நினைவிழந்து மயங்கிக் கிடக்கின்றான். மூக்கில் இருந்து தொடர்ந்து இரத்தம் போய்க் கொண்டிருக்கிறது. அவனது பரிதாப நிலை கண்டு அநீதி உள்ளம் கலங்குகின்றார். அவர் நெஞ்சு அவன் உயிரை எப்படியும் பாதுகாக்க வேண்டும் என்று அந்தக் கணத்தில் உறுதி கொள்ளுகிறது.

Page 55
O6 தெணியான்
"சரி போவம். வாருங்கோ. காரைக் கொண்டு வாருங்கோ’ அநீதி சொல்லிக் கொண்டு கார் சாரதியுடன் திரும்பி நடக்கின்றார்.
அநீதியும் சிற்றுாழியரும் வைத்தியசலைக்கு அருகிலுள்ள சென்ரிக்குச் சென்று அவன் நிலையை எடுத்துச் சொல்லுகின்றார்கள். இராணுவ வீரர்கள் மூவர் அவன் இருக்கும் அந்த வாட்டுக்கு வந்து அவனைப் பார்வையிட்டு உடனே யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு கொண்ட செல்ல அனுமதி வழங்குகின்றார்கள்.
இரத்தம் சொட்டச் சொட்ட உணர்வற்ற நிலையில் நீட்டி நிமிர்ந்து கிடக்கும் அவனைத் தள்ளுவண்டியில் வளத்திக் கொண்டு வந்து காரில் ஏற்றுகின்றார்கள். அவன் மைத்துனர் அவனை அனைத்துப் பிடித்த வண்ணம் காரின் பின் சீற்றில் அமர்ந்திருக்கின்றார். கையில் ஹரிக்கன் லாம்புடன் சாரதிக்கு அருகேயுள்ள சீற்றில் அநீதி வந்து ஏறிக் கொள்ளுகின்றார். தொடர்ந்து இரத்தம் சிந்திக் கொண்டு கிடக்கும் அவனைச் சுமந்த வண்ணம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நோக்கி இரவு பத்துமணியளவில் கார் அங்கிருந்து புறப்படுகின்றது.

LDந்திகையிலுள்ள ஆதார வைத்தியசாலை யில் இருந்து புறப்பட்டு இருநூறு மீற்றர் தூரம் சென்றதும் தெருமூடிமடம் வருகின்றது. தம்ப சிட்டியில் இருந்து தெற்கு நோக்கி வரும் வீதி, பருத்திதுறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லும் பிரதான வீதியில் வந்து சந்திக்கும் இடத்தில் இருக்கிறது ஒரு தெருமூடிமடம் தெருவை மூடிக் கொண்டு அப்படி ஒரு மடம் இப்போது அங்கில்லை. ஆனால் அந்த இடம் இப்பொழுதும் தெருமூடி மடம் என்று அழைக் கப்பட்டு வருகிறது.
மடம் அங்கே இருந்ததா? இல்லையா? என்பது பற்றி இப்பொழுது யாரும் கவலைப்படுவாரில்லை. பிரதான வீதியில் இன்னொரு கிளை வீதி வந்து சேரும் சந்தியாக அந்த இடம் இருப்பதனால் அங்கு சென்ரி இருக்கிறது. அவனை ஏற்றிக் கொண்டு குறைந்த மங்கிய வெளிச்சத் தில் ஊர்ந்து வந்த கார் சென்ரிக்கு சுமார் ஐம்பது மீற்றர் தூரத்துக்கு அப்பால் மெல்லத் தரித்து நிற்கின்றது. அநீதி கையில் ஹரிக்கன் லாம்பை எடுத்துக் கொண்டு காரை விட்டு கீழே இறங்கி அந்தச் சென்ரி நோக்கிப் போகின்றார். சென்ரி முன்னரங்கில் நிற்கும் இராணுவ வீரர்களிடம் சென்று பேசுகின்றார்.
அவர்கள் அந்தச் சென்ரிக்குப் பொறுப்பாக இருக்கும் அதிகாரி யிடம் அவரைப் போய்ப் பேசுமாறு சொல்லி உள்ளே அனுப்புகின் றார்கள். அதிகாரி அவர் கூறிய விபரங்களைக் கேட்டறிந்து பிறகு இராணுவ வீரர் இருவரையும் அவருடன் அனுப்பி வைக்கின்றார்.

Page 56
108 தெணியான்
ஆயுதம் தரித்த அந்த இராணுவ வீரர்கள் இருவரும் கையில் டோர்ச் லயிற்றுடன் வந்து காரினுள்ளே உணர்வு நினைவற்று மூக்கில் இருந்து இரத்தம் வடியக் கிடக்கும் அவன் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சி அவனைப் பார்வையிடுகின்றனர்.
கார் மெல்ல நகர்ந்து சென்ரியைக் கடந்து செல்கிறது. அதனை அடுத்து சுமார் நூறு மீற்றர் தூரத்தில் மாலிசந்திப் பிள்ளையர் கோவில் சென்ரியில் வீதியை மறித்து துலா ஒன்று குறுக்கே சரிந்து கிடக்கிறது. அநீதி கையில் லாம்புடன் சென்ரி நோக்கிப் போகின்றார். அதன் பிறகு ஐம்பது மீற்றர் தூரத்தில், பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீதி நெல்லியடி நோக்கி வளையும் இடத்தில், அல்வாயில் இருந்தும் உடுப்பிட்டியில் இருந்தும் இரண்டு வீதிகளும் வந்து ஒன்றாக இணையும் மாலி சந்தியில் ஒரு சென்ரி.
அநீதி கையில் லாம்புடன் இறங்கி சென்ரி நோக்கிப் போகின்றார். பின்னர் கார் சென்ரியைக் கடந்து போகின்றது. இப்படி நூறு மீற்றர் இருநூறு மீற்றர் தூர இடைவெளிகளில் ஒவ்வொரு சென்ரியாகக் கடந்து கார் போய்க் கொண்டிருக்கிறது.
அந்த வீதிகளில் இப்பொழுது மனித வாசனையே இல்லை. ஒரு வாகனம் வீதியில் அவர்களுக்கு எதிர்ப்படவில்லை. வீதி ஓரத்து வீடுகளில் ஒரு பொட்டு வெளிச்சமில்லை. எங்கும் நிறைந்து தடித்துக் கிடக்கும் கனத்த இருளை துளைத்த வண்ணம் கார் மெல்ல ஊர்ந்து சென்று கொண்டிருக்கிறது. அவன் இப்பொழுதும் சுயநினைவின்றி முன்போலக் கிடக்கின்றான். இரத்தம் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்து கொண்டிருக்கிறது. கார் வல்லைச் சென்ரிக்கு வந்து வீதக்குக் குறுக்கே தடையாகக் கிடக்கும் துலாவுக்குச் சிறிது தூரத்தில் தரித்து நிற்கின்றது. அநீதி லாம்புடன் கீழே இறங்கு கின்றார். ஆனால் சென்ரி நோக்கிச் செல்லவதற்குச் சற்று தயங்கி நிற்கின்றார்.
கையில் வைத்துக் கொண்டிருக்கும் லாம்பை மேலே தூக்கித் தூக்கி வெளிச்சம் காட்டி அண்மையில் செல்ல அனுமதி கோரு கின்றார். சிறிது நேரத்தின் பின்னர் டோர்ச் வெளிச்சம் சென்ரியில் இருந்து காரை நோக்கி வீசப்படுகின்றது. அந்த டோர்ச் வெளிச்சம் சென்ரியில் இருந்து தரப்படும் சமிக்கை என்பதைப் புரிந்து கொண்டு அநீதி லாம்புடன் சென்ரி நோக்கிப் போகின்றார். இராணுவ வீரர்கள் அந்தக் கார் வரை வந்து அவனைப் பார்வையிட்டுத் திரும்பிச் சென்று

தவறிப் போனவன் கதை 109
சற்று, நேரம் கழித்து வீதியை மறித்துக் குறுக்காகக் கிடக்கும் துலா மெதுவாக மேல் எழுந்து வழிவிடுகிறது.
கார் மெல்ல நகர்ந்து நகர்ந்து போகின்றது.
அடுத்து வல்லை அச்சுவேலிச் சந்தியிலுள்ள சென்ரி அதன் பிறகு ஆவரங்கால் சென்ரி அதற்குப் பின்பு தொடர்ந்து சென்ரி. சென்ரி. சென்ரி. நீர்வேலிச் சென்ரி வரை கார் வந்து சேர்ந்து விடுகிறது. அநீதி காரை விட்டு இறங்குகின்றார். லாம்பைக் கையில் தூக்கி சென்ரி நோக்கி உயர்த்தி உயர்த்தி வெளிச்சம் காட்டுகின்றார்.
எந்தவொரு பதில் சமிக்கையும் சென்ரியில் இருந்து தெரிவிக்கப் படவில்லை. அவர்கள் சென்ரிக்கு அண்மையில் வந்து சேர்ந்து நீண்ட நேரமாகிறது. இப்பொழுதும் சென்ரியில் இருந்து எந்தவொரு அசுமாத்தமும் இல்லை. பெரிய ஏமாற்றத்துடன் மனம் சோர்ந்து ਥd கைக்காகக் காத்துக் கிடக்கின்றார்கள்.
அவன் முன்போலவே இரத்தம் வடிய உணர்வின்றிக் கிடக்கின் றான். அவர்களுக்கு என்ன செய்வது என்ன என்று ஒன்றுமே புரிய வில்லை. இனி வந்த பாதையில் திரும்பிச் செல்லவும் இயலாது. முன்னேறிப் போகவும் முடியாது. கார்ச் சாரதி மனதில் இதுவரை இருந்து வந்த தன்னம்பிக்கையை இப்போது இழந்து பதறுகின்றான்.
"என்ன அண்ணை செய்கிறது? என்கின்றான் அநீதியிடம்
“என்ன செய்கிறது?"
"நாங்கள் வந்து வீணாக மாட்டிக் கொண்டுவிட்டம்"
"அப்படிச் சொல்லாதே தம்பி! எங்கடை இந்தக் கஷ்டம் பெரிசல்ல, ஒரு உயிரை இட்ப காப்பாத்த வேணும். உயிர் பெறுமதி யானது" சொல்லிக் கொண்டு பின்னர் சற்று நேரம் பொறுத்து, "கார்க் கோனை மெல்ல அடி தம்பி பார்ப்பம்" என்கிறார் அநீதி.
"கோண் அடிச்சால் சென்ரியிலே இருந்து வெடி வைப்பான்கள் சாரதி மறுக்கின்றான்.
"ജൂൺങ്ങേ, ട്ടി. நீ பயப்பிடாதே சென்ரியிலே காவல் இருக்கிறவன்கள் இந்த நேரம் நித்திரையாகி இருக்கக் கூடும்"

Page 57
1 O தெணியான்
"அண்ணை பயமாக் கிடக்கு”
"நீ ஒண்டுக்கும் பயப்பட வேண்டாம். எல்லாத்துக்கும் நான் இருக்கிறேன். எப்படியும் சமாளிச்சுப் போடுவன்"
அநீதி ஊட்டிய நம்பிக்கையில் சாரதி கோணை விட்டு விட்டு மெல்ல மெல்ல அமுக்கி ஒலி எழுப்புகின்றான். அநீதி லாம்பை அசைத்த வண்ணம் காருக்கு அருகில் நிற்கின்றார்.
அவர்கள் எடுத்த முயற்சி வீண் போகவில்லை.
சிறிது நேரத் தாமதத்தின் பின் காரை நோக்கி டோர்ச் வெளிச்சம் வீசப்படுகின்றது.
"பாத்தியா தம்பி நித்திரையாப் போனாங்கள்" "ஒமண்ணை. நீங்கள் போகப் போறியளோ?
"இல்லைத் தம்பி! என்ன நிலையிலே இருக்கிறார்கள் தெரியாது. அவன்கள் வரட்டுக்கும்" சொல்லிக் கொண்டு அநீதி லாம்பை அசைத்த வண்ணம் நிற்கின்றர்.
சில நிமிட நேரம் மேலும் கழிந்து போகின்றது. சென்ரியில் இருந்த யாரும் வருவதாகத் தெரியவில்லை.
"தம்பி இன்னொருக்கால் கோண் அடி"
"வேண்டாம் அண்ணை! நாங்கள் தான் இண்டைக்கு வாங்கிக் கட்டப் போகிறம்"
"ஒரு உயிரைக் காப்பாத்துகிறதுக்காக நாங்கள் வாங்கிக் கட்டினாலும் பறவாயில்லை. நீ அடி"
மீண்டும் கார்க் கோண் மெல்ல ஒலிக்கிறது. மீண்டும் டோர்ச் வெளிச் சம் பாய்ந்து வருகிறது. அநீதி லாம்பைத் தூக்கி அசைத்துக் காட் டிய வண்ணம் நிற்கின்றார். ஆயுதம் தரித்த இருவர் கையில் டோர்ச் சுடன் சென்ரியில் இருந்து காரை நோக்கி வேகமாக வருகின்றார்கள்.
அவர்கள் இருவரும் வருகின்ற வேகத்தைப் பார்த்து நிச்சயம் தங்களுக்கு எதுவும் நடக்கலாம் என்ற அச்சத்தினால் கார்ச் சாரதிக்கு உடல் நடுங்கியது. அவர்கள் கார் அருகே வருவதற்கு முன்னரே அநீதி உரத்த குரலில் அவர்களுடன் சிங்களத்தில் கதை கொடுக்க ஆரம்பி த்து விட்டார். அவர் பேச்சுக் கேட்டு அவர்கள் குளிர்ந்து போகின்றார் கள். தாங்கள் ஒரு கண்டத்தில் இருந்து தப்பித்துக் கொண்டு விட்டதாக எண்ணிக் கார்ச்சாரதி நிம்மதியாக மூச்சு விட்டுக் கொள்கின்றான்.

தவறிப் போனவன் கதை 1 11
"ஊரடங்கு நேரம் சென்ரியைத் தாண்டிப் போவேலாது” வந்தவர் கள் அனுமதிக்க மறுக்கின்றார்கள்.
"உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லாவிட்டால் நோயாளி இறந்து போவார்" என்கிறார் அநீதி.
"நாங்கள் ஒண்டும் செய்ய இயலாது. அது பெரியவருடைய கட்டளை"
"பெரியவரை நான் காணலாமா?"
"சரி வா!" அநீதியை அழைத்துக் கொண்டு சென்ரியை நோக்கிப் போகின்றார்கள். அரை மணி நேரம் கழிந்து அந்த சென்ரிக்குப் பொறுப்பாக இருக்கும் அதிகாரி இன்னும் இரண்டு சிப்பாய்கள் சகிதம் அநீதியுடன் காரை நோக்கி வருகின்றார். காருக்குள் பிணம் போலக் கிடக்கும் அவனை டோஜ் வெளிச்சத்தில் நன்றாகப் பார்வை யிடுகின்றார். அவனுக்கு இரத்தம் போய்க் கொண்டிருப்பது அவர் மனதில் சந்தேகத்தை ஊட்டுகிறது. அநீதியை அழைத்துக் கொண்டு சென்ரிக்குத் திரும்பி வருகின்றார். மந்திகையில் இருக்கும் பருத்தித் துறை வைத்தியசாலைக்கு அருகேயுள்ள சென்ரியுடன் வோக்கி டோக்கியில் தொடர்பு கொள்ளுகின்றார். அவர் மனதில் எழுந்த சந்தேகம் அதன் பிறகு தீர்ந்து போகின்றது.
அதிகாரி அனுமதி வழங்குகின்றார். அநீதி காரை நோக்கித் திரும்பி வருகின்றார். வீதிக்குக் குறுக்கே நீண்டு படுத்துறங்கும் துலாவின் துயிலை அவர்கள் கலைத்து விட அது விழித்துக் கொண்டு மெல்ல மேல் எழுந்து காருக்கு வழிவிடுகின்றது. கார் நீண்ட நெடுமூச் சொன் றுடன் அசைந்து மெல்லக் கிளம்பிப் போய்க் கொண்டிருக்கிறது.
அதன் பிறகு எதிரில் வந்து கொண்டிருக்கும் சென்ரிகள் தாண்டி. தாண்டி. அதிகாலை மூன்று மணிக்கு யாழ்ப்பாணம் வைத்தியசாலை வளாகத்துக்குள் நுழைந்து வெளி நோயாளர் பகுதி வாசலில் போய்த் தரித்து நிற்கின்றது.
மந்திகையில் இருந்து யாழ்ப்பாணம் சென்றடைய நாற்பத்தைந்து நிமிட நேரம் மாத்திரம் எடுக்கும் பயணம். இப்பொழுது ஐந்து மணித்தியாலங்கள் நீண்டு சென்று இறுதியில் முற்றுப் பெறுகின்றது. அவனைக் காரில் இருந்து இறக்கிப் பதிவுகளைச் செய்த பிறகு, பதின்நான்காம் வார்ட்டுக்கு அவசரமாகக் கொண்டு போகின்றார்கள். அந்த வாட்டுக்குப் பொறுப்பாக இருக்கும் இளம் டொக்டர் செல்வி

Page 58
12 தெணியான்
செல்லத்துரை அவசரமாக வந்து உடனடியாக சிகிச்சைகளை ஆரம்பிக்கின்றார்.
சற்று நேரத்தின் பின்னர் வடிந்து கொண்டிருந்த இரத்தம் சிறிது சிறிதாகக் குறைந்து முற்றாகக் கட்டுப்பட்டு விடுகிறது.
"இன்னும் ஒரு மணித்தியாலம் தாமதிச்சிருந்தால் உயிருக்கு ஆபத்தாக முடிஞ்சிருக்கும்" என்கிறார் டொக்டர். அதைக் கேட்டு அவன் மைத்துனர் நெஞ்சு துணுக்கிடுகிறது. அவனுக்கு இன்னும் மயக்கம் தெளியவில்லை. அநீதி அவர்களைத் தேடிக் கொண்டு வாட்டுக்கு வருகின்றார்.
"டொக்டர் என்னவாம்?" "இனிப் பிரச்சினை இல்லையாம் அவன் மைத்துனன் சொல்லக் கேட்டு அநீதி நெஞ்சில் அமைதி பிறக்கிறது.
"ஐந்து மணிக்கு கேவியு எடுக்கும் வரை நாங்கள் போகேலாது. பிறகுதான் போக வேணும். அப்ப. வாறன்"
"உங்கடை கார்க் காசு."
"பிறகு குடுங்கோ"
"இல்லை. இப்ப தாறன்" "என்ன அவசரம் ஆறுதலாகக் கொண்டு வந்து குடுங்கோ." சொல்லிக் கொண்டு அநீதி புறப்பட்டுவிட்டார். அவன் மைத்துன லுக்கு அநீதியின் பெருந்தன்மை கண்டு கண்கள் கலங்குகின்றன.
அந்த வாட்டில் இருந்து நடந்து செல்லும் அநீதியின் உருவம் கண்களில் இருந்து மறையும் வரை, அவன் மைத்துனர் இப்படியும்
ஒரு மனிதரா என நினைந்து விழிகளை நிறைக்கும் கண்ணிருக் கூடாக அவரையே பார்த்துக் கொண்டு நிற்கின்றார்.

51லையில் டொக்ரர் வாட்டுக்கு வந்து நோயா
ளர்களைப் பார்வையிட்டுக் கொண்டு வருகின்
றார். அவன் அப்பொழுதும் கண்விழிக்காது கட்டிலில் படுத்துக் கிடக்கின்றான்.
`U(65351 (6 D. எழுப்ப வேண்டாம்" என்று சொல்லிக் கொண்டு டொக்ரர் போய்விட்டார். அவன் மைத்துனர் அவன் அருகில் அமர்ந்து, அவன் கண் விழிக்கும் வரை காத்திருக்கின்றார். சிறிது நேரத்தின் பின்னர் அவன் மெல்லக் கண் விழிக்கின்றான். வைத்தியசாலைக் கட்டிலில் தான் இப்பொழுது படுத்துக் கிடப்பதை அவன் மீண்டும் நினைவு கொள்ளுகின்றான். ஆனால் இது பருத்தித் துறை வைத்தியசாலை அல்ல என்பது தெளிவாக. கொஞ்சம். கொஞ்சமாக. உணர்கின்றான்.
அவன் படுத்துக் கிடப்பதற்கு வாகாக மரப்பலகையினால் செய்த அணை ஒன்றினைக் கட்டிலின் மேல் வைத்து, அதன் மீது சாய்ந்து கிடக்கின்றான். அவன் மிகக் களைத்து வாடிச் சோர்ந்து போனான். அவன் கட்டிலில் சாய்ந்து படுத்த வண்ணம் தலையை மெல்லத் திருப்பி இரண்டு பக்கங்களிலும் அந்த வாட்டை நோட்டமிடுகின்றான்.
"ரீ போடட்டா' மைத்துனர் கேட்கின்றார்.
"வேண்டாம். முகம் கழுவ வேணும்"
அவன் சொல்வதைக் கேட்டு மைத்துனர் உள்ளத்தில் சிரிப்பு அரும்புகிறது. "இயல்பான குணம் என அவர் தனக்குள்ளே

Page 59
114. தெணியான்
சொல்லிக் கொள்ளுகின்றார். அவன் இப்பொழுது மைத்துனர் பக்கம் திரும்பி அவர் முகத்தைக் கூர்ந்து நோக்குகின்றான்.
அவனுடைய அந்தப் பார்வையில் பல வினாக்கள் தொக்கி நிற் பதை அவர் உணர்ந்து கொண்டு, "யாழ்ப்பாண ஆஸ்பத்திரியிலே இருக்கிறம், இரவு வந்தநாங்கள்" என்கிறார்.
“எப்படிக் கொண்டு வந்த நீங்கள்?"
"காரிலே”
"நீங்கள் தனிச்சோ?”
"இல்லை ரைவரோடை அநீதி வந்தவர்"
"அநீதியோ?”
"அவருக்கு என்ன பெயரென்டு எனக்குத் தெரியாது. அநீதி எண்டு தான் சொல்லுகினம்" அவன் தனது நோயையும் மறந்து மெல்லச் சிரிக்கின்றான்.
"அவர் கூட வந்திருக்காது விட்டால் நாங்கள் இஞ்சை வந்து சேர்ந்திருக்க முடியாது"
“eDJILJI Q u JT?”
"அவர் கடவுள் மாதிரி வந்து காப்பாத்தினார்"
"கடவுள் மனிதனா வருவதில்லை. ஆனால் மனிதன் சில சமயங்களில் கடவுளாகி விடுகின்றான். அநீதி என்னும் தர்மவிரோத மான பெயரில் கடவுளாக வந்து என்னைக் காப்பாற்றி இருக்கிறார்” என அவன் மனதில் நினைவு கூருகின்றான்.
"கேவியு முடிகிற நேரம். இஞ்சை இருந்து வெளிக்கிடக்கை வாட்டுக்கு வந்து உங்களை ஒருக்கால் பார்த்துக் கொண்டுதான் அவர் போகிறார்"
"வித்தியாசமான ஆள்”
“காருக்குக் காசும் வாங்கவில்லை”
"ஏன் அப்படி?”
"பிறகு தரச் சொல்லிப் போட்டுப் போய்விட்டினம்"
"அது சரியில்லை”

தவறிப் போனவன் கதை 15
"மத்தியானம் போய் முதல் வேலையாகக் காசு குடுக்க வேணும். சரி, முகம் கழுவத் தண்ணி எடுத்துக் கொண்டு வாறன்ள"
"வேண்டாம். வேண்டாம். நான் போய்ப் பைப்பிலே கழுவிக் கொண்டு வாறன்" சொல்லிக் கொண்டு கட்டிலில் இருந்து மெல்ல இறங்கி அவன் நடக்கின்றான். அவன் மைத்துனர் அவனைத் தொடர்ந்து பின்னால் போய்க் கொண்டிருக்கின்றார்.
மதியவேளை அவன் மனைவி, தமையன் உறவினர்கள் என்று பலர் பதற்றத்துடன் அங்கு வந்து சேருகின்றார்கள். இரவு நடந்த வைகளை எல்லாம் அவன் மைத்துனர் ஒன்றன் பின் ஒன்றாக விபரமாக எடுத்துச் சொல்லுகின்றார். இறுதியாக.
"இன்னும் ஒரு மணித்தியாலம் தாமதிச்சிருந்தால் ஆள் தவறி இருக்கும் எண்டு டொக்ரர் சொன்னவ" என சொல்லி முடிக்கின்றார். அவர் சொன்ன செய்தி கேட்டு அவன் மனைவி பொல பொல எனக் கண்ணிர் வடிக்கின்றாள்.
"அப்பிடி எனக்கொண்டும் நடவாது. நீங்கள் பயப்படாதை யுங்கோ!" அவன் ஆறுதல் கூறி அவளைத் தேற்ற முயற்சிக்கின்றான். பார்வையாளர் நேரம் முடியும் போது வீட்டுக்கு எல்லோரும் புறப்படத் தயாராகின்றார்கள்.
அவன் மனைவியை அருகில் அழைத்து, "பிள்ளைகளை வரவேண்டாம் என்று சொல்லுங்கோ. அப்பா சுகமாக இருக்கிறேன். தம்பியவையை பள்ளிக்கூடத்துக்கு ஒழுங்காகப் போகச் சொல்லுங்கோ" என்கின்றான்.
“அவை இண்டைக்கு வெளிக்கிட்டவை. நான் தான் மறிச்சுப் போட்டு வந்தனான்"
“எத்தினை சென்ரி தாண்டி வரவேணும். ஒரு இருபத்தைஞ்சுக்குக் குறையாது. பஸ்ஸாலே இறக்கி செக் பண்ணிப் போட்டுத்தானே விடுகி றான்கள். படிக்கிற பிள்ளையளை எங்கேயாவது சும்மா மறிச்சு போட்டால். என்ன செய்கிறது? வரவேண்டாமெண்டு சொல்லுங்கோ'
“சரி”
"நீங்களும் தினமும் வரவேண்டாம். நான் நல்லாத்தானே
இருக்கிறன். சாப்பாட்டைக் குடுத்து அனுப்பிப் போட்டு நில்லுங்கோ! சரி, போங்கோ!"

Page 60
116 தெணியான்
לל
"நான் நிற்கிறதோ." மைத்துனர் கேட்கின்றார்.
"இல்லை. இல்லை. நீங்கள் போங்கோ நாளைக்கு வந்து என்னை விடுங்கோ’ அவன் தமையன் மைத்துனரை அனுப்பி 6061656),j.
வாட்டுக்குள் வந்து நின்ற பார்வையாளர்கள் அனைவரும் வெளி யேறிப் போய்விட்டார்கள். அவர்கள் வெளியேறிப் போகும் வரை காத்தி ருந்த அவன் தமையன் "தம்பி வா! சாப்பிடன்" என அவனை அழைக் கின்றார். பார்வையாளர்களால் வார்ட் நிறைந்திருந்த வேளை மனைவி மார் சோற்றைக் குழைத்துக் குழைத்துக் கையில் கொடுக்க, நோயாளர்கள் சிலர் கட்டிலில் இருந்து அதை வாங்கி உண்டு கொண்டிருந்தார்கள்.
அவன் மனைவிக்கு அவன் குணம் தெரியும் கையோடு தான் கொண்டு வந்திருக்கும் உணவை உண்ணுமாறு அப்பொழுது கேட்டால், அவனிடம் சினப்புக் கேட்க வேண்டி வரும் என்று நினைத்து அது பற்றிப் பேசாமல் நின்றுவிட்டாள். அவள் தமையன் தருணம் பார்த்து, அந்த வாட்டுக்கு அருகேயுள்ள சிறிய அறை ஒன்றுக்குள் அவனை அழைத் துச் சென்று, தண்ணிரும் கொண்டு வந்து உணவை உண்ணக் கொடுக்கின்றார். அவன் உணவு உண்டு முடித்துக் கொண்டு கட்டிலுக் குத் திரும் வந்து முன் போலச் சாய்ந்து படுத்துக் கொள்கின்றான்.
அவனுக்கு முன்னரிலும் இப்போது களைப்பு அதிகமாக இருக் கிறது. அது உண்ட களையாக இருக்க வேண்டும். அவன் கண்களை மூடிக் கொண்டு சிறிது நேரம் மெளனமாக அப்படியே கிடக் கின்றான். களைத்த மனிதன் பசித்த வயிற்றுக்கு உணவு உண்டு ஆறுவதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது. அந்தச் சுகத்தை மீறி இனம் புரியாத ஒரு வெறுமை அவன் மனதில் கிடந்து உறுத்துகின்றது. எதனையாவது கொஞ்சம் வாசித்தால் இந்த மனதுக்கு ஆறுதலாக இருக்கும் என அவன் எண்ணுகின்றான்.
அந்த எண்ணத்துடன் மூடிக் கிடந்த விழிகளைத் திறந்து அவன் பார்க்கின்றான்.
அவன் கண்களில் படத் தகுந்த வண்ணம் எதிரே விறாந்தையில் அமர்ந்திருந்து வாயில் வெற்றிலையைப் போட்டுக் குதப்பிக் கொண்டி ருக்கும் தமையன் அவன் கண்விழித்துப் பார்ப்பதைக் கவனித்து விட்டு எழுந்து வருகின்றார்.

தவறிப் போனவன் கதை 117
"என்ன வேணும்?"
அவர் கேள்விக்கு வாய் திறந்து பதில் சொல்வதற்கு அவன் சற்றுத் தயங்குகின்றான்.
"கக்கூசுக்குப் போக வேணுமா?"
'ജൂൺങ്ങബ്
"அப்ப?”
"ஏதும் வாசிக்கிறதுக்கு?. சொல்லி முடிக்க இயலாது இழுக்கின்றான்.
"உனக்கு இந்த நோயிலேயும் ஒரு வாசிப்பு மூளைக்கு வேலை குடுக்காமல் கொஞ்சம் ஆறுதலாக இரு அவர் சற்றுக் கண்டிப்பாகப் (31986}.
"பேப்பர் எண்டாலும்.”
"பேப்பரே. சரி. இருவாறன் சொல்லிக் கொண்டு அவர் அந்த வாட் விட்டு வெளியே போகின்றார்.
அவன் மீண்டும் கண்களை மூடிக் கொண்டு கிடக்கின்றான். அவன் மன அரங்கில் அநீதி மெல்ல வந்து தோன்றுகின்றார். முகம் அறியாத அந்த மனிதனைத் தான் எப்பொழுது போய் பார்க்கப் போகின்றேன் என அவன் உள்ளம் இப்பொழுது ஏங்குகின்றது.
விழிகளை மூடிக் கொண்டு நீண்ட நேரம் அநீதி பற்றி எண்ணிக் கொண்டிருப்பது அவன் மனதுக்கு ஆனந்தமாகவும் சுகமாகவும் தோன்றுகின்றது. அவன் அப்படியே விழிகளை மூடிக் கிடக்கின்றான்.
திடீரென நாசியில் இருந்து இரத்தம் வழிய ஆரம்பிக்கின்றது. அவனுக்கு அடுத்த கட்டில்களில் இருக்கின்றவர்கள் அவனைக் கண்டு திடுக்கிட்டுப் போகின்றார்கள். அந்த வாட் நர்ஸ்"க்குத் தகவல் பறக்கிறது. நார்ஸ் ஓடி வந்து பார்க்கின்றார். அவன் இரத்தம் வடிய அப்படியே சாய்ந்து கிடக்கின்றான். நர்ஸ் இரத்தத்தைத் துடைத்து விட்டுக் கொண்டு, நீரில் நனைத்த பஞ்சை நாசியின் மேல் வைத்துப் பிடிக்கின்றார். அப்பொழுது அன்றைய தினசரி ஒன்றைக் கையில் தூக்கிக் கொண்டு அவன் தமையன் வாட்டுக்குள்ளே வருகின்றார்.
மீண்டும் அவனுக்கு இரத்தம் வடிந்து கொண்டு இருப்பது கண்டு அவர் மனம் பதகளிக்கிறது.

Page 61
18 தெணியான்
“பேஸ்ன்ரை விட்டிட்டு வெளியிலே எங்கே உலாத்திக் கொண்டு வாறியள்? அப்பொழுது இருந்த பரபரப்பில் நர்ஸ் அவரைக் கண்டு கோபிக்கின்றார். தமையன் முகம் சுண்டிப் போகிறது. நோயாளிக் குத் துணையாக வாட்டுக்குள் வந்து நின்றுவிட்டால் வெளியே போ. போ. என்று கலைப்பார்கள். தங்களுக்குத் தேவையான நேரத்தில் நோயாளிக்கு அருகே நிற்கவில்லை என்றால் சீறுவார்கள். இது இவர்களுக்குப் பொதுவான குணம் எனத் தமையன் தனது மனதுக்குச் சமாதானம் சொல்லித் தன்னைச் சாந்தப்படுத்துகின்றார்.
"தன்னால் தான் தமையன் சினப்புக் கேட்க வேண்டி நேர்ந்து விட் டது" என அவன் மனம் வெளியே சொல்லிக் கொள்ளாமல் வருந் துகிறது. நர்ஸ் கோபிக்கின்றார் என்பதால் தம்பியை ஒதுக்கிவிட்டுப் போக முடியுமா? நர்ஸின் சூடான வார்த்தைகளை மனதில் எடுத்துக் கொள்ளாமல், “என்னம்மா செய்ய வேணும்" என அவர் கேட்கின்றார்.
நர்ஸ் பட்டென்று குளிர்ந்து, "இஞ்சை வாருங்கோ ஐயா! இந்தப் பஞ்சை கொஞ்சம் பிடியுங்கோ" என்று அழைக்கின்றாள். அவர் நர்ஸ் அருகே வந்து நீரில் நனைத்த அந்தப் பஞ்சை அவன் மூக்கின் மேல் வைத்துப் பிடித்துக் கொண்டு நிற்கின்றார்.
நர்ஸ் அவசரமாக அந்த வாட்டிலுள்ள தங்கள் அறையை நோக்கி வேகமாகப் போகின்றாள்.

. ШITobaыл651 நல்ல ஒரு தோட்டக்காரன் என்று சொன்னால், அவனை அறியாதவர்கள் நிச்சயம் இதை நம்பமாட்டார்கள்.
பால்காரனை எப்படித் தோட்டக்காரன் என அழைக்கலாம்? என்று கேட்பது ஒரு நியாய மான கேள்விதான். ஆனால் பால்காரன் ஒரு காலத்தில் நல்ல தோட் டக்காரனாக இருந்தவன். "இப்ப ஏன் தோட்டம் செய்யாமல் விட்டு விட்டாய்?" என்று அவனிடம் யாரும் கேட்டுவிட்டால், சிரித்துச் சிரித்து சுவாரசியமாக அதுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்து விடுவான்.
"நாங்கள் என்ன கோமணத்தோடை துலா மிதிச்ச காலத்துத் தோட் டக்காரரே! அப்பிடி எண்டால் இப்பவும் தோட்டம் செய்யலாம். இப்ப மிஷின் பூட்டித் தண்ணி இறைக்கிற காலம் லாம்பெண்ணை இல்லை. பயிருக்கு உரமில்லை. பூச்சி மருந்துமில்லை. ஒரு மாதிரி பொயி லையை வெங்காயத்தை. செய்தால் அதை ஆருக்கு விற்கிறது? எங்கே அனுப்புகிறது? அதுதான் தோட்டம் செய்கிறதைக் கைவிட்டு விட்டன். இப்ப நாலு பசுமாடு வளக்கிறன். அதுகள் இலட்சுமியள். என்னைக் கைவிடாதுகள். என்ரை குடும்பத்துக்கு நல்லாப் போதும்"
அவன் வளர்க்கும் பசுமாடுகளில் காலை மாலை இரு தடவைகளி லும் பால் கறந்து பட்டினத்துத் தேநீர்க் கடைகளுக்கு எடுத்துச் சென்று கொடுத்து வருகிறான்.
அவன் யாரைக் கண்டாலும் அவர்களை இழுத்து வைத்துக் கொண்டு சளசள என்று பேசிக் கொண்டிருப்பது அவன் சுபாவம்.

Page 62
12O தெணியான்
அவனைச் சந்திக்கின்றவர்கள் அவனிடம் இருந்து தப்பிக்க இயலாது
வலிந்து கதை கொடுத்து வினைக்கட்டு நின்று பேசுவான்.
தணிகாசலத்தின் தமையன் பருத்தித்துறை வைத்தியசாலை யில்
இருந்து வீட்டுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்த சமயம்,
மேய்ச்சலுக்குக் கட்டி விட்டிருந்த பசுமாடுகளைச் சாய்ச்சுக் கொண்டு
வந்த பால்காரன் வீதியில் அவரைச் சந்தித்தான்.
"என்ன இந்தப் பக்கம்" வழமையான விசாரணை, "ஆஸ்பத்திரியாலே வாறன்"
"எந்த ஆஸ்பத்திரி"
66
ஆர். மாஸ்ரருக்கோ!"
"ஒமோம்" "இதென்ன கதை. என்ன சுகபீனம்” "மூக்காலே இரத்தம் போகுது”
"இதென்ன புது வருத்தம். நான் இப்பிடி ஒரு வருத்தத்தைக் 35ബ്ബി']LILuിൺങ്ങബ"
"அதுதான் யோசினையாய்க் கிடக்கு. சரி வாறன்" "வாருங்கோ. வாருங்கோ. மாஸ்ரரைக் கவனமாகப் பாருங்கோ'
அவருக்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டு, வேலிக் கதிகால்க ளுக்குத் தலை நீட்டும் பசுமாடுகளைச் செல்லமாக ஹாய். ஹாய் என விரட்டி, சாய்த்துக் கொண்டு போனான்.
மறுநாள் காலையில் பால்காரன் எழுந்து பாலைக் கறந்தெடுத்துக் கொண்டு சயிக்கிளில் புறப்பட்டு முதலில் நெல்லியடிப் பட்டினம் நோக்கிச் சென்றான். வழமையாக அவன் பால் விநியோகம் செய்யும் மூன்று தேநீர்க் கடைகளுக்கும் கொடுத்து முடித்துக் கொண்டு பருத்தித்துறை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான்.
மந்திகை அரசினர் வைத்தியசாலைக்கு எதிரிலுள்ள தேநீர்க் கடை வைத்தியசாலைக்குள்ளே உள்ள கூட்டுறவுச் சங்க தேநீர்க் கடை இரண்டுக்கும் அவன் பால் கொடுக்க வேண்டும். பால்காரன்

தவறிப் போனவன் கதை 21
வைத்தியசாலைக்குள் இருக்கும் கூட்டுறவுச் சங்கத் தேநீர்க் கடைக்கு முன் போய் நிற்கின்றான்.
அப்பொழுது வைத்தியசாலை வாசலில் கறுப்பு நிற வாகனம் ஒன்று வந்து தரித்து நிற்கிறது. அந்த வாகனத்தில், ஒரு சடலத்தைப் பெட்டியில் வைத்துத் தூக்கி வந்து ஏற்றுகின்றார்கள். பால்காரன் அவசரமாக அங்கே நின்றவர்களிடம் "ஆர் செத்தது?" என பரபரப்பு டன் வினாவுகின்றான். "மாஸ்ரர் போய்விட்டார்” அங்கு நின்றவர்களுள் ஒரு தெரிவிக்கின்றார்கள் “எப்ப? என்று தொடர்ந்து கேட்கின்றான்.
"இரவு" என ஒருவர் சொல்லக் கேட்டறிந்து கொண்டு பருத்தித் துறைப் பட்டினம் நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றான்.
ஆனந்தன் வைத்திய நிலையத்தைக் கடக்கின்ற சமயம் புத்த கக் கடை தவலிங்கத்துடன் தணிகாசலம் மாஸ்ரர் எதிரில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதைப் பல தடவைகள் பார்த்த ஞாபகம் அவன் நினைவுக்கு வருகின்றது. சடுதியாகச் சயிக்கிளை நிறுத்தி, ஒரு காலை நிலத்தில் ஊன்றி நின்றவாறு, "மாஸ்ரர் போய்விட்டார்! உங்களுக்குத் தெரியுமே? எனக் கேட்கின்றான்.
"ஆரைச் சொல்லுறியள்" வினவிக் கொண்டு எழுந்து தவலிங்கம்
வீதிக்கு அவனை நோக்கி வருகின்றார்.
“உங்கடை பிறன். தணிகாசலம் மாஸ்ரர்" "ச்ச. இதென்ன கதை" தவலிங்கம் வாயில் இருந்து அதிர்ச்சி வெளிப்படுகின்றது.
"உண்மை. நான் ஆஸ்பத்திரியிலே இப்ப பாத்துக் கொண்டு வாறன். பெட்டியிலே வைச்சுக் காரிலே ஏத்துகினம்" அவன் சொல் லிக் கொண்டு சயிக்கிளை மிதிக்கின்றான்.
தவலிங்கம் என்ன செய்வது என்று அறியாமல் ஒரு கணம் திகைத்துப் போய் நிற்கின்றார்.
பின்னர் வீதியில் இருந்து திரும்பி வைத்திய நிலையத்துக்குள் நுழைந்து, நேரே டொக்ரர் ஆனந்தன் அறைக்குப் போய், அவருக்குத் தகவல் சொல்லுகின்றார்.
அவன் இறந்து விட்டான் என்பதை டொக்ரர் ஆனந்தனால் நம்ப (!plgu ഖിബ്ലെ.
"இது தவறான தகவலாக இருக்குமோ!" என அவர் சந்தே கிக்கின்றார்.

Page 63
122 தெணியான்
"இப்ப. நேரிலே பாத்துக் கொண்டு வந்த பால்காரன் சொல்லிப் போட்டுப் போகிறான்" தவலிங்கம் உறுதியாகச் சொல்லுகின்றார்.
"இப்ப. என்ன செய்கிறது?" இருவரும் குழம்பிக் கொண்டு அறையை விட்டு வெளியே வருகின்றார்கள்.
அப்பொழுது ஆசிரியர் ரகுராமனும் இன்னும் சிலரும், "தணிகா சலம் மாஸ்ரர் தவறிப் போனாராமே!” என்று கேட்டுக் கொண்டு அங்கே ஓடி வருகின்றார்கள்.
"இப்ப என்ன செய்கிறது?" "இப்ப என்ன செய்கிறது" அவன் மறைவினால் மனம் சோர்ந்து சிறிது நேரம் தெளிவின்றிக் குழம்பிக் கொண்டு நிற்கின்றார்கள்.
"சரி, எதுக்கும் வீட்டுக்குப் போவம்" தவலிங்கம், ரகுராமன் ஏனைய நண்பர்களுடன் தணிகாசலம் வீடு நோக்கி சயிக்கிளில் கிளம்புகின்றார்கள்.
இந்தச் சமயம் பத்திரிகை நிருபர் அருட் செல்வம் அங்கே வந்து சேருகின்றார். அவன் இறந்து போன தகவல் அறிந்து பத்திரிகைகளு க்கு அந்தச் செய்தியை அனுப்புவதற்கு எழுதத் தொடங்குகின்றார்.
மன அமைதியை இழந்து போன டொக்ரர் ஆனந்தன் அவர்களை அனுப்பி வைத்துவிட்டு தவிர்க்க இயலாது நோயாளர்களைப் பார்வையிடுவதற்காகத் தனது அறைக்குத் திரும்புகின்றார்.
தணிகாசலம் உப அதிபராகப் பணி புரியும் கல்லூரிக்குள் அவன் காலமாகி விட்ட செய்தி வந்து சேருகின்றது.
கல்லூரியில் வகுப்புகள் அனைத்தும் நடைபெறாது ஸ்தம்பிக் கின்றன. ஆசிரியர்கள் வகுப்புக்களை விட்டு வெளியேறி கூடிக் கூடிப் பேசுகின்றர்கள். மாணவர்கள், ஆசிரியர்கள் சிலர் கல்லூரி என்பது மறந்து கண்ணிர் சிந்துகின்றார்கள். கல்லூரி எங்கும் சோகம் கவிந்து கிடக்கிறது. உயர் வகுப்பு மாணவர்கள் மலர்களைப் பறித்து வந்து மலர்வளையம், மலர் மாலைகள் கட்டும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.
கண்ணிர் அஞ்சலிப் பிரசுரங்கள் வெளியிடுவதற்காக ஆசிரியர்கள் கூடி ஆலோசித்து எழுத ஆரம்பித்து விட்டார்கள். கோட்டக் கல்வி அலுவலகம் முன்பாக எழுதுவினைஞர் மயில்வாகனம் நின்று கொண்டி ருக்கின்றார். அப்பொழுது நெல்லியடிச் சந்தை நோக்கிச் சென்று

தவறிப் போனவன் கதை 123
கொண்டிருக்கும் இருவர் தமக்குள் பேசிக் கொண்டு போகின்றார்கள்.
"தணிகாசலம் மாஸ்ரர் செத்துப் போனாராம்." "இதென்ன கதையப்பா அந்தாளுக்கென்ன நடந்தது?" "திடீரென்டு மூக்காலே இரத்தம் போச்சுதாம். அவ்வளவுதான்!” "எப்ப நடந்ததாம்?" "இராத்திரி.”
"நல்ல பேச்சாளன். எங்கடை வாசிகசாலையிலே வந்து பேசியிருக்கிறார்"
"சமூக சிந்தனையுள்ள மனிசன். நல்லவையள் நீண்ட காலம் வாழுகிறதில்லை தானே!"
"எப்பவாம் எடுக்கிறது" "அதுதான் தெரியவில்லை. நானும் போகத்தான் வேணும்"
அவர்கள் பேசிக் கொண்டு செல்வதைக் கேட்டு, திகைத்துப் போன மயில் வாகனம் பரபரப்புடன் சயிக்கிளை எடுத்துக் கொண்டு தணிகாசலம் வீடு நோக்கிப் புறப்படுகின்றார்.
பாடசாலை அதிபராக இருக்கும் சதாசிவம் தணிகாசலத்தின் மிக நெருக்கமான நண்பர். அவர் மகள் வீட்டில் இருந்து சயிக்கிளில் பாடசாலைக்கு ஓடோடி வந்து அவருக்கும் செய்தி சொல்லுகின்றாள்.
"அப்பா தணி மாமா செத்துப் போனாராம்"
"ஐயோ கடவுளே! நேற்றுப் பின்நேரந்தானே போய்ப் பார்த்திட்டு வந்தனான்.”
"ஆரம்மா சொன்னது"
"ஊரெல்லாம் கதையாக் கிடக்கு இஞ்சை இல்லை. யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியிலேயாம்"
"எப்ப கொண்டு போனவையாம்?"
"இரவாம்"
"சரி, நீ போ. நான் உடனே வாறன்"
மகளை அனுப்பி விட்டு, பாடசாலைப் பொறுப்புகளை உப அதிபரி டம் ஒப்படைத்த அதிபர் சதாசிவம் தனது மோட்டார் சயிக்கிளில் புறப்படுகின்றார்.

Page 64
24 தெணியான்
அதிபர் சதாசிவம் நெல்லியடிச் சந்தியை அடைந்து தேவரையாளி இந்துக் கல்லூரி நோக்கி வந்து கொண்டிருக்கின்றார். அவருக்கு முன்னே அதிபர் நடராஜலிங்கமும் ஆசிரியர் சண்முகவேலும் சயிக்கி ளில் போய்க் கொண்டிருக்கிறார்கள். அதிபர் சதாசிவம் வருவது கண்டு. "என்ன சிவம், தணி போய்விட்டானாம்” நடராஜலிங்கம் வினவுகிறார்.
"நானும் இப்பதான் கேள்விப்பட்டு வெளிக்கிட்டு வாறன்"
"சரி. சரி. நாங்களும் அங்கே தான் வாறம். நீங்கள் போங்கோ'
தணிகாசலம் குடும்பத்தவர்களுக்கு இது ஒன்றுமே தெரியாது. அவன் சகோதரி ஒருத்தி மீன் வாங்குவதற்காக சற்றுத் தூரத்திலுள்ள மானாட்டிச் சந்தைக்குப் போகின்றாள். சந்தையில் அவள் வந்து நிற்பதைப் பார்த்த பெண்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவர்கள் சந்தையில் இருந்து விரைவாக வீட்டுக்குச் சென்று சமையல் வேலை களை முடித்து வைத்துவிட்டு தணிகாசலத்தின் சாவீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கின் றார்கள். அவர்களுக்கு அவன் தங்கை சந்தையில் வந்து நிற்பது ஆச்சரியமாக இருக்காதா?
இதைப் போய் அவளிடம் எப்படிக் கேட்பது? என்று அவர்கள் எல் லோரும் தயங்குகின்றார்கள். அவர்களுள் ஒருத்தி துணிந்து அவளை மெல்ல அணுகி "என்ன சந்தைக்கு வந்திருக்கிறியள்" என ஒருவாறு கேட்டுவிட்டாள். அந்தக் கேள்வியின் அர்த்தம் உண்மையில் அவன் தங்கைக்குப் புரியவில்லை.
"ஏன் அப்பிடிக் கேட்கிறியள்? அவள் வினவுகின்றாள்.
"அப்ப உங்களுக்குத் தெரியாதே?"
“என்ன சங்கதி?”
"உங்கே ஊரெல்லாம் ஒரே கதையாக் கிடக்கு"
"என்ன சொல்லுறியள்? தெளிவாச் சொல்லுங்கோ!"
"என்னெண்டு சொல்லுறது. உங்கடை அண்ணா காலமாகி விட்டாரம்"
"ஐயோ. கடவுளே. 35L6)(361. என்ரை அண்ணா. ତtତ0)]] அண்ணா. தலையில் அடித்துக் கதறி அழுத வண்ணம் அவள் வீடு நோக்கி ஓடுகின்றாள்.

- பருத்தித்துறையில் இருந்து மூன்று கிலோ
- மீற்றர் தூரத்துக்கு மேல் சயிக்கிளில் ஓடிவந்து
பொலிகண் டியிலுள்ள தணிகாசலம் வீட்டுக்கு அண்மையில் வந்து சேர்ந்து விட்டார்கள், தவலிங்கமும் நண்பர்களும் அவன் வீடு நோக்கி
நெருங்கி நெருங்கி வரும்போது அவர்கள் தங்கள் செவிகளைக் கூர்மையாக்கிக் கொண்டே வந்தார்கள்.
அவர்கள் எதிர்பார்த்தது போல் தணிகாசலம் வீட்டில் இருந்து அழுகுரல் எதுவும் கேட்கவில்லை. மரணம் ஒன்று நிகழ்ந்துவிட்ட அறிகுறிகள் ஒன்றும் அந்தச் சுற்றாடலில் அவர்களுக்குத் தென்பட வில்லை. அவர்கள் சிறிது நேரம் வீட்டுக்கு அண்மையில் தயங்கிக் கொண்டு நிற்கின்றார்கள்.
வீட்டில் அவர்கள் இதுவரை அறியாமல் இருந்தால் இந்தச் செய்தி யைத் தாங்களாகப் போய் அவர்களுக்கு எப்படிச் சொல்வது? அல்லது அவர்களிடம் இதைப் போய் எப்படி விசாரிக்கிறது? அல்லது வேறு யாரி டத்திலாவது வாய் திறந்து இதைக் கேட்கலாம். ஊர் எல்லாம் அறிந்த செய்தியை அவன் வீட்டுக்காரர் இன்னும் அறியா மலா இருப்பார்கள்.
அவர்கள் இப்படி எல்லாம் எண்ணிக் குழம்புகின்றார்கள். இறுதி
யில் ஒரு முடிவுக்கு வந்து அவன் வீட்டுக்கு ஒரு தடவை போய் வருவோம் என்று தீர்மானிக்கின்றார்கள்.

Page 65
126 தெணியான்
அவன் வீட்டுக்கு முன்னுள்ள அவர்கள் காணிக்குள் அவனது மனைவி பொன்மணி நின்று கொண்டிருக்கின்றான். இரண்டு கூலிக்காரர்கள் அந்தக் காணி வேலியைக் கட்டிக் கொண்டு நிற்கின்றார்கள். அவர்கள் செய்யும் வேலையைப் பார்வையிட்ட வண்ணம் அவர்களுக்கு அவள் உதவி செய்து கொண்டு நிற்கின்றாள்.
தவலிங்கத்துக்கும் நண்பர்களுக்கும் தங்கள் விழிகளை நம்ப முடியவில்லை.
"தகவல் இவர்களுக்கு இன்னும் தெரியவில்லையோ!" எனச் சந்தேகிக்கின்றார்கள்.
"சரி எதற்கும் வீட்டுக்குப் போய் பார்ப்போம்" என நினைத்துக் கொண்டு, “பிள்ளை” என அழைத்த வண்ணம் கேற்றைத் திறந்து மெல்ல உள்ளே வருகின்றார்கள்.
தணிகாசலத்தின் பிள்ளைகள் குரல் கேட்டு வந்து அவர்களைக் கண்டு மரியாதையுடன் வரவேற்கின்றார்கள்.
"அப்பாவுக்கு இப்ப எப்படி?" தவலிங்கம் உள்ளே நுழைந்ததும் பொறுமை இழந்து கேட்கின்றார்.
"இப்ப பரவாயில்லை" மகன் சொல்லிக் கொண்டிருக்க பொன் மணி அங்கு வந்து சேருகின்றாள்.
"இண்டைக்கு ஒருதரும் போகவில்லையோ?” என வினவுகிறார் ரகுராமன்.
"அவற்றை மச்சான் போகிறார். தமையன் அங்கே கூட நிற்கிறார் தானே! நான் போகிறதுக்கு வெளிக்கிட அதுக்கிடையிலே வேலி அடைக்கிறதுக்கு ஆட்கள் வந்து நிற்கினம்" எனப் பொன்மணி சலித் துக் கொள்ளுகின்றாள்.
இதற்கு மேல் வேறு என்ன கேட்பதென்று அவர்களுக்குப் புரிய வில்லை. "நாங்கள் வேறை அலுவலாக இந்தப் பக்கம் வந்தனாங் கள். ஒருக்கால் விசாரிச்சுக் கொண்டு போகலாம் எண்டுதான் இஞ்சை வந்தனாங்ககள். அப்ப. நாங்கள் வாறம்" சொல்லிக் கொண்டு புறப்படத் தயாராகின்றார்கள்.
"இருங்கோ. இருங்கோ. ரீ குடிச்சிட்டுப் போங்கோ." பொன்மணி அவர்களைத் தடுக்கின்றாள்.

தவறிப் போனவன் கதை 127
தணிகாசலத்தைத் தேடிக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டால், ஒரு தேநீராவது தந்து உபசரிக்காமல் அவன் விட்டுவிடுவதில்லை என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஆனால் இன்று அவன் இறந்துவிட்டான் என்ற செய்தி அவர்கள் நெஞ்சில் கிடந்து நெருடிக் கொண்டிருக்கையில் எப்படி அவன் வீட்டில் அவர்களால் தேநீர் அருந்த முடியும்?
"வேண்டாம், நாங்கள் அவசரமாகப் போக வேணும்"
சொல்லிக் கொண்டு அவர்கள் புறப்பட்டுவிட்டார்கள்.
சிறிது நேரத்தின் பிறகு தணிகாசலத்தின் மாணவன் பரமானந்த ஜோதி அங்கே வருகின்றான். “ஸேருக்கு என்ன? என்று விசாரிக் கின்றான். அதன் பிறகு கலாமோன் வருகின்றார். "அண்ணைக்கு என்ன? என்று கேட்கின்றார். பொன்மணிக்கும் பிள்ளைகளுக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. இப்படி எல்லோரும் வந்து வந்து ஏன் விசாரிக்கின்றார்கள்?
வேலி கட்டும் வளவுக்குள் பொன்மணி நின்று கொண்டிருந்த பொழுது தெருவில் போவோர் வருவோர் அவளை அதிசயமாகப் பார்த்துக் கொண்டு சென்றது இப்பொழுதுதான் அவள் நெஞ்சில் உறைக்கிறது. இவைகள் எல்லாம் அவள் நெஞ்சில் வியப்பாகத் தோன்றுகின்றன.
ஆனால் அவர்கள் வீட்டுச் சூழலில் அவன் இறந்து போன செய்தி பெற்றோலில் தீப்பிடித்தது போல பரபர என்று பரவிவிட்டது.
அவன் மனைவி பிள்ளைகளுக்கு இதுவரை அந்தச் செய்தி தெரிய வராது. அவர்களிடம் இதைப் போய் எப்படிச் சொல்லுகிறது என்று அறியாமல் அயலவர்கள் குழம்பிக் கொண்டிருக்கின்றார்கள்.
அவர்கள் இனிமேலும் அறியாமல் இருக்கக் கூடாது என்று எண்ணிக் கொண்டு அயல் வீட்டு ஆச்சி பொன்மணியைத் தேடிக் கொண்டு வீட்டுக்கு வருகின்றாள்.
"என்ன பிள்ளை செய்யிறியள்?"
"ஏன் ஆச்சி?”
"நான் என்னத்தைச் சொல்ல?"
"சொல்லுங்கோ, ஆச்சி"

Page 66
28 தெணியான்
"கடவுளே. கடவுளே. கண்கெட்ட கடவுளே!” சொல்லிச் சொல்லி இரண்டு கைகளினாலும் தன் தலையில் அடித்து சிணுங்கி அழ ஆரம்பிக்கின்றாள்.
அவள் அவள் அழுவது அரற்றுவது கண்டு பொன்மணி பதறிக் கொண்டு எழுந்து அவள் கைகளைப் பிடித்தவாறு "என்ன ஆச்சி நடந்தது? ஏன் இப்பிடிக் குழறுகிறாய்?" என்று கேட்கின்றாள்.
“எடி பாவி! உனக்கொண்டு தெரியாதெடி உன்ரை மச்சாள்மார் வீட்டிலே அழுது கொண்டாடுகினமாம்"
பொன்மணி மனதில் குழப்பம் அதிகரிக்கிறது.
"ஆச்சி, என்னெனை இப்ப சொல்லுகிறாய்? விளக்கமாகச் சொல்லு!”
"எடியே பிள்ளை, உன்ரை அவன் போவிட்டானாமெல்லோ!" என்று சொல்லவும் பொன்மணி இதயம் அதிர்ந்து சிதறுகிறது.
ஆனால் அடுத்த கணம் அவள் மனம் அதை நம்ப மறுக்கிறது. அவள் சில நிமிடம் நேரம் தலைகுனிந்து மெளனமாக இருக்கின்றாள். அந்த மெளனமும் அமைதியுமாகக் கழிந்து அந்தக் கணங்களில் தனது மனதை உறுதியாகத் திடப்படுத்திக் கொண்டு நிதானமாகக் கேட்கின்றாள்.
"ஆர் ஆச்சி சொன்னது?"
"ஊர் எல்லாம் சொல்லுதெடி பிள்ளை" அப்பொழுது இராசசுந்தரமும் விஜயராசாவும் அங்கே வந்து சேருகின்றார்கள்.
இராசசுந்தரம் தணிகாசலத்தின் மிக நெருங்கிய நண்பர்கள். அவ னைத் தேடி இடையிடையே அங்கு வந்து போகின்றவர். விஜயராசா தணிகாசலத்துடன் சிறுவயதில் ஒன்றாகப் படித்தவர். இப்பொழுதும் அந்தப் பாலிய கால நட்பு அறுந்து போகாது பேணுகின்ற நண்பர்.
அவர்கள் இருவரது முகங்களையும் உன்னிப்பாக அவதானித்த வண்ணம் "வாருங்கோ..!" என வரவேற்கின்றாள் பொன்மணி,
அவர்கள் முகங்களில் எந்த விதக் கவலையோ குழப்பமோ
இருப்பதாக அவளுக்குத் தோன்றவில்லை. இருவரும் தங்களுக்குள் எதனையோ பேசி, சிரித்துக் கொண்டு வருகின்றார்கள். அவர்கள்

தவறிப் போனவன் கதை 129
சிரிப்பும் கதையும் அவள் மனதுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கின்றன. தணிகாசலத்துக்கு அப்பிடி ஏதுமெண்டால் அவன் நண்பர்கள் இப்படியா சிரிப்பார்கள்! அவர்கள் அங்கு வந்ததும் வராததுமாக விஜயராசா, "எப்பிடி இருக்கிறியள்? என்று கேட்கின்றார்.
இராசசுந்தரம் "பிள்ளையஸ்" என்று உள்ளே பார்த்துக் குரல் கொடுக்கின்றார். அவர் குரல் கேட்டு தணிகாசலத்தின் பிள்ளைகள் அங்கு வந்து கூடுகின்றார்கள்.
"அப்பாவுக்கு என்னவாம்" "இப்ப பிரச்சினை இல்லை" மகள் சொல்லுகின்றாள். "நீங்கள் போயில்லையே!" விஜயராசா, "மாமா போய்விட்டார். அம்மா நாளைக்குப் போவா"
"அவர் பிள்ளையளை அங்கே வரவேண்டாம் என்று சொல்லு கிறார்" என்கிறாள் பொன்மணி.
"அவன் சொல்றதும் சரிதான்" விஜயராசா என்றும் போல உரிமை யுடன் பேசுகிறார். தொடர்ந்து, "நாங்கள் கொஞ்ச நேரம் கலங்கிப் போனம்" என்கிறார்.
பொன்மணியும் பிள்ளைகளும் சலனமின்றி மெளனமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களும் சற்று நேரம் வாய் திறக்கவில்லை. அந்த மெளனம் ஒரு பாரமாக. ஒரு துன்பமாக. அப்பொழுது தோன்றுகின்றது.
அந்தப் பயங்கரத்தைச் சடுதியாக உடைத்துவிடும் எண்ணத்து டன் இராசசுந்தரத்தைப் பார்த்து, "மாமா என்ன பேசாமல் இருக்கிறியள்' எனக் கேட்கின்றாள் சின்னமகள்.
"உங்கடை முகத்தை நான் வந்து எப்பிடிப் பார்க்கிறது எண்டு தான் இவ்வளவு நேரமும் கலங்கிப் போய் இருந்தனான்"
"என்ன மாமா சொல்லுறியள்? என்கிறாள் சட்டென்று மூத்தமகள். அவள் கேள்வியைக் கவனித்து விட்டு, "இதுகளுக்கு ஒண்டும் தெரியாது போல இருக்கு" என்கிறார் விஜயராசா.
"அதுகும் நல்லதுதான். பருத்தித்துறை ஆஸ்பத்திரியிலே."
இராசசுந்தரம் சொல்ல ஆரம்பிக்க "மந்திகையிலேயே மாமா!" எனக்குறுக்கிடுகிறான் மூத்த மகன்.

Page 67
130 தெணியான்
"ஒமோம் மந்திகையிலேதான்." எனத் தொடர்ந்து, "பொன் னையா மாஸ்ரர் கடுமையாகக் கிடந்தவர். அவர் தான் செத்துப் போனார். ஆரோ ஆள்மாறிச் சொல்லிப் போட்டினம்" என்கிறார். தணி காசலத்தின் பிள்ளைகள் மனைவிக்கு தாங்கள் இதுவரை எதுவும் அறியாமல் இருந்து விட்டோமே என அதிசயமாக இருக்கிறது.
"நானும் குழம்பிக் கொண்டுதான் இருந்தனான். பொன்னையா மாஸ்ர ரின்ரை இழவு சொல்ல வந்த பொடியன்கள் விஷயத்தைச் சொன்னா ங்கள். அவன்கள் யாழ்ப்பாணத்துக்கும் இழவு அறிவிக்கப் போயிரு க்கின்றான்கள். ஆஸ்பத்திரிக்குப் போய் தணிகாசலத்தைப் பார்த்துக் கொண்டு வந்திருக்கிறான்கள்" இராசசுந்தரம் சொல்லி முடிக்கின்றார்.
அயல் வீட்டு ஆச்சி திறந்த வாய் மூடாமல் ஆச்சரியத்துடன் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருக்கின்றாள்.
"அவன்கள் இரண்டு பேரையும் சந்திச்ச பிறகுதான் நாங்கள் வெளிக்கிட்டு வந்திருக்கிறம்"
"தணிக்கு சாவில்லை. அவன் இனிச் சாகமாட்டான். இண்டைக்கு அவனுக்கொரு தத்துக் கழிஞ்சு போச்சு. நாங்கள் தான் ஆரார் போகி றமோ தெரியவில்லை." விஜயராசா சொல்லிக் கொண்டிருக்க, "ஏன் அப்படிச் சொல்லுகிறியள்" என்று இடையில் தடுக்கின்றாள் பொன்மணி.
"சாவுக்கு மூப்பிளமை இல்லை" என்று அவன் தொடர, "ஏனப்பா உந்தக் கதை விட்டுட்டு வேறை எதையும் பேசு" என்று அதிருப்திப்பட் டுக் கொள்கின்றார் இராசசுந்தரம்.
"பிள்ளை ரீ கொண்டா அம்மா!" என மகளைப் பார்க்கின்றாள் பொன்மணி.
"ரீ மட்டும் போதாது. பைபிள் கதை போல மரித்தவன் மீண்டாள். இண்டைக்கு கொழுத்த கன்று வெட்டி விருந்து கொண்டாட வேணும். கிடக்கிறதெல்லாம் கொண்டாருங்கோ" எனக் கட்டளை இடுகின்றார் விஜயராசா.
கலகலப்பான புதிய சூழ்நிலை ஒன்று அங்கு திடீரெனக்களை
கட்டுகிறது.
"இதென்ன கூத்து!" என்று மனதில் நினைக்கும் அயல் வீட்டு ஆச்சி மட்டும் திறந்தவாய் இன்னும் மூடவில்லை.

U ITழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு
நோயாளர்களைப் பார்க்க வரும் பார்வையாளர் தொகை வெகுவாகக் குறைந்து போய்விட்டது. மதிய வேளையில் நோயாளர்களுக்கு உணவு கொண்டு வருவோரும், அந்த வைத்தியசாலைக்கு அண்மையில் வாழுகிறவர்களும் தான் பார்வையாளர்களாக வந்து போகின்றார்கள். தூர இடங்களில் இருந்து பெரும்பாலும் பார்வை யாளர்கள் இப்பொழுது வருவதில்லை. அவர்கள் பிரயாணஞ் செய்து வருகின்ற பாதைகளில் இருக்கும் சோதனைச் சாவடிகளில் இறங்க வேண்டும். பின்னர் சோதனைகள் முடிந்து பிரயாணத்தைத் தொடர வேண்டும். திரும்பிச் செல்லும் பொழுதும் இதேகதி தான். ஒரு இருபது கிலோ மீற்றர் பிரயாணம் செய்வதற்கு ஒரு நாள் தேவை. அதனால் இப்படியான பயணங்களை முடிந்தவரை எல்லோரும் தவிர்த்துக் கொள்கின்றார்கள்.
தவிர்க்க இயலாதவர்கள் மாத்திரம் வைத்தியசாலைக்கு வந்து போக வேண்டி இருக்கிறது.
தணிகாசலம் மனைவி பொன்மணி மதியவேளை உணவை எடுத்துக் கொண்டு பெரும்பாலும் தினமும் வருவாள். அவன் தமை யன், மைத்துனர் ஆள்மாறி ஆள்மாறித் துணையாக வைத்திய சாலை யில் யாரோ ஒருவர் எப்பொழுதும் தங்கி நிற்கின்றார்கள். பொன்மணி அங்கு வந்து போவதற்கு இயலாத சமயங்களில் அவர்கள் கையில்

Page 68

தவறிப் போனவன் கதை 33
"நான் உங்களைத் தவறாக நினைக்கமாட்டன். ஆனால் திடீரென்று இப்பிடி நீங்கள் கேட்டதற்கு ஏதோ நியாயம் இருக்க வேணும்!"
"இல்லை. நான் சும்மாதான் கேட்டனான்"
"நீங்கள் எதையோ மறைக்கிறியள்"
உண்மையைச் சொல்லாது போனால், அவன் தன்னைப் பற்றித் தவறான ஒரு முடிவுக்கு வந்துவிடக் கூடும் என்னும் எண்ணம் அவர் உள்ளத்தில் இப்பொழுது எழுகிறது.
நோயாளியைப் பார்த்துப் போகவரும் நண்பர்கள் உறவினர்கள் அந்த நோயாளிக்கு வேண்டிய உணவுப் பண்டங்களை வாங்கி வந்து கொடுப்பதும், சிறுதொகை பணம் கையில் கொடுத்துச் செல்வதும் ஒரு வழக்கந்தான்.
வெறுங்கையுடன் ஒருவரைப் பார்க்கப் போகக் கூடாது என்னும் நாகரிகத்துக்காகவும், கஷ்டப்படும் ஒருவருக்கு சிறு உதவி செய்வ தாகவும் கையில் எதனையாவது கொண்டு வந்து கொடுப்பார்கள்.
அவன் அந்த உதவிகள் எதுவும் தேவைப்படாதவன். அவை களை ജൂഖങ്ങി 6 ക്ലി]LII]്കബ|fിഞ്ഞേ.
அதிபர் வந்து நின்று பணம்தரப் போவதாகச் சொல்வது, அவனு க்கு அதிசயமாக இருக்கின்றது. அவர் இப்படிக் கேட்பதற்கான பின்னணியை அறிந்து கொள்ள வேண்டும் என்னும் விருப்பம் அவன் நெஞ்சில் உறுதியாக எழுகிறது.
அந்த உண்மையைச் சொல்லத்தான் வேண்டும் என்ற முடிவுக்கு அதிபர் வந்து விடுகிறார். அதன் பிறகு “உங்கடை கையிலே காசி ல்லை எண்டு கேள்விப்பட்டேன். அதுதான்." எனத் தணிந்த குரலில் வார்த்தைகளை மெல்ல இழுக்கின்றார்.
"ஆர் சொன்னது?"
"உங்களுக்குப் பக்கத்துக் கட்டிலிலேயே இருந்தாரே சிரிபி ரைவர்”
"அவன் என்ன சொன்னவன்”
"கோவிக்காதையுங்கோ ஸேர். உங்களை ஏற்றி வந்த காருக்கு காசு தான் தான் குடுத்ததாக எனக்குச் சொன்னான்"

Page 69
134 தெணியான்
"அவன் ஒரு புளுகன். அவனுக்கும் எனக்கும் ஒரு தொடர்பு மில்லை. சரி, அவனைக் கண்டு நான் கேட்கிறேன்"
"அவனைக் கேட்க வேண்டாம் விடுங்கோ. உங்களுக்குக் கோபம் கூடாது. நீங்கள் அறிஞ்சிருக்க வேணும் எண்டதுக்காகச் சொன்ன னான். அவனைப் போல இப்பிடி எத்தினை பேர் இருக்கிறான்கள். அப்ப நான் வரப் போகிறேன் ஸேர்." சொல்லிக் கொண்டு அவர் விடை பெறுகின்றார்.
அவன் மனக் கொதிப்பு அடங்கவில்லை.
பொய்யும் போலித்தனமுமாக வாழ்ந்து, வெறும் புகழ் தேட எண்ணுகின்றவர்களை நினைக்க அவனுக்குள் சினம் மூளுகின்றது.
அந்தப் பொய்யனுக்கு தன் மீது ஏனிந்த காழ்ப்பு? என்பதை அவனால் விளங்கிக் கொள்ள இயலவில்லை.
அன்று மாலை அவனைச் சுகம் விசாரித்துப் போக இராசசேகரன் மனைவியுடன் வைத்தியசாலைக்கு வந்தார். மாலை நேரம் அவனைப் பார்வையிட்டுப் போவதற்கு இதுவரை அவர்கள் இருவரையும் தவிர, வேறு யாரும் வந்ததில்லை. அவர்கள் வடமராட்சியைச் சேர்ந்தவர்கள். இப்பொழுது குடும்பமாக யாழ்ப்பாணம் வந்து குடியேறி இருக்கின்றார்கள்.
அவர்களுக்கு அவனுடன் மிக அந்நியோன்னியமான ஒரு உறவு. இராசசேகரன் மனைவி அவனுக்கு வேண்டிய இரவு உணவுத் தயாரி த்து வரும் பொழுது கையில் எடுத்து வந்திருக்கின்றார்.
இராசசேகரன் எப்பொழுதும் அவனைப் பேசவிட்டு தான் கேட்டுக் கொண்டு இருப்பது தான் வழக்கம். இன்றும் அவன் சுகம் பற்றி சுருக்கமாகக் கேட்டறிந்து கொண்டு மெளனமாக நிற்கின்றார்.
அவர் மனைவி அவரிடம் கேட்கின்றார்.
"சாப்பாடு என்ன மாதிரி?”
"மத்தியானம் வீட்டிலே இருந்து வரும்"
"காலமை. இரவுக்கு."
"கடையிலே வாங்கிறது தான்"

தவறிப் போனவன் கதை 135
"கடைச் சாப்பாடு உங்களுக்குப் பிடிக்காதெல்லே!"
“சமாளிக்க வேண்டியதுதான்”
"இராச் சாப்பாடு நான் அனுப்புகிறேன்"
"வேண்டாம். வேண்டாம். உங்களுக்கேன் வீண் சிரமம்"
"இதிலே ஒரு சிரமமும் இல்லை. எங்களுக்குச் செய்கிற சாப்பாட் டிலே உங்களுக்கு அனுப்புகிறது தான். காலைச் சாப்படும் அனுப்பி போடுவன். கொண்டு வாறதுக்கு ஆளில்லை"
"பின்நேரமும் உங்களுக்கு அனுப்புறது கஷ்டம்தானே!"
"பின்னேரம் இவர் நிற்கிறார். கொண்டு வருவார். அப்ப. நாங்கள் வரப் போகிறம்" அவர்கள் விடை பெற்றுக் கொள்ளுகின்றார்கள்.
அப்பொழுது அவனுக்கு அந்த பஸ் ரைவர் மீண்டும் நினைவுக்கு வருகின்றான். அவனையும் இவர்களையும் ஒப்பிட்டுப் பார்த்துத் தனக்குள் மெல்ல நகைத்துக் கொள்கின்றான்.
அதனைத் தொடர்ந்து முகமறியாத அநீதி என்ற அந்த மனிதனின் நினைவு நெஞ்சில் எழ, மானசீகமாக அவன் வணங்குகின்றான்.
அவனுக்கு இரத்தம் வடிவது இன்னும் முற்றாகக் கட்டுப்பாட்டுக் குள் வரவில்லை. இப்பொழுதும் இடையிடையே இரத்தம் போய்க் கொண்டு இருக்கிறது.
கட்டிலின் மேல் என்றும் போல சாதாரணமாக அவனால் சரிந்து படுக்க முடியவில்லை. அவன் தலைப்பக்கம் வைத்துள்ள சாய் பலகையில் இரவு பகலாகச் சரிந்து படுத்துக் கிடக்கின்றான். இப்படி எத்தனை நாட்களுக்குச் சாய்ந்து படுத்துக் கிடக்க முடியும்? சாதா ரணமாக நீட்டி நிமிர்ந்து படுத்தால், தொடர்ந்து இரத்தம் வடியக் கூடுமாயின் இப்படியே இருப்பதா!
அந்த வாட் மிகச் சுத்தமாக வைத்திருக்கின்றார்கள். அந்த வகை யில் அவனுக்குத் திருப்திதான். கண்டத்துக்கு மேற்பட்ட காது, மூக்கு, தொண்டை நோயாளர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படும் வாட் அது.
அந்த வாட்டுக்குப் பொறுப்பாக இருக்கும் இளம் பெண் டொக்ரர் தோற்றத்தில் சிறு பிள்ளை போல இருக்கின்றார். மிகப் பொறுப்புடன் நடந்து கொள்ளும் இளைய தலைமுறை டொக்ரர்களின் அசல் வாரிசு அவர் யாரோ ஒரு நோயாளியைப் பார்ப்பது போல அல்லாது தனது

Page 70
136 தெணியான்
தந்தையைக் கவனிப்பது போல அவனைக் கவனித்து சிகிச்சை ©6flöööøTj.
இரவு பத்து மணிக்கு மேல் அவன் படுத்து உறங்கிய பிறகும், அந்த வாட்டுக்கு வந்து மெல்ல அவன் கையில் தட்டி அவனைக் கண் விழிக்கச் செய்து, அவனுக்கு இரத்த அழுத்தம் எப்படி இருக்கிறது? என்று பரிசோதித்துப் பார்த்துவிட்டு மீண்டும் அவனைப் படுத்து உறங்கும் படி சொல்லிக் கொண்டு போய்விடுவார்.
ஒரு நாள் காலையில் அவனைப் பார்வையிட வாட்டுக்கு வந்த அந்தப் பெண் டொக்டர் ஐயா, டொக்டர் சுரேந்தன் உங்களை வந்து பார்த்தாரா?” எனக் கேட்கின்றார்.
"ஒமோம். நேற்று வந்து பார்த்தார். அவரின்ரை அம்மா என் னோடை ஒன்றாகப் படிப்பித்தவர். அவர் சொல்லி அனுப்பி இருக்கிறார்"
"நான் சரியாக உங்களைக் கவனிக்கவில்லை என்று நீங்கள் சொன்னதாகக் குற்றஞ்சாட்டினார்"
"இதென்னம்மா புதுக் கதை"
"நீங்கள் சொல்லயில்லை. அது எனக்குத் தெரியும். அவர் பகிடியாகத்தான் அப்படிச் சொன்னவர். உங்களைக் கவனமாகப் பார்க்கச் சொல்லிச் சொன்னார்"
"அவர் என்ரை பகுதி. வடமராட்சி. நீங்கள்."
"நான் முல்லைத்தீவு" சொல்லும் பொழுது அந்த இளம் பெண் ணின் முகம் பட்டென்று வாடிப் போகின்றது.
"என்ன அம்மா, ஒரு மாதிரி முகம் வாடிப் போச்சு? “ஒன்றுமில்லை ggu JFT
"சொல்ல விருப்பமில்லை எண்டால் நான் வற்புறுத்தவில்லை"
"மறைக்கிறதுக்கு ஒண்டுமில்லை. நான் என்ரை அம்மா, அப்பா,
சகோதரங்களைப் பார்த்து இரண்டு வருஷமாகுது"
"கப்பலிலே ஒருக்காப் போய் வாறதுதானே!"
அவன் சொன்னது கேட்டு அந்தப் பெண் சிரிக்கிறார்.
"ஏன் சிரிக்கிறியள்"

தவறிப் போனவன் கதை 137
"போகலாம் ஐயா, போனால் முல்லைத்தீவுப் பகுதியை விட்டு மீண்டும் இஞ்சை திரும்பி வர இயலாது”
"ஒ. அப்பிடி ஒரு சிக்கலா!"
மனச் சுமையுடன் வைத்தியசாலையில் பணி புரிந்து கொண்டிருக் கும் அந்த டொக்டரைப் பார்க்க அவனுக்கு வேதனையாக இருக்கிறது.
டொக்டரிடம் ஒரு கேள்வியைக் கேட்கலாமா என்று அந்த டொக்டர் வந்து போகும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவன் நினைத்துக் கொள்கின்றான். பின்னர் அதைக் கேட்காமல் தவிர்த்துக் கொண்டு வருகின்றான்.
அவனுக்கு உயர் இரத்த அழுத்தம் தான் அவனுடைய நோய் என்று டொக்டர்கள் சொல்லி இருக்கின்றார்கள். இரத்த அழுத்தம் அதிகரித்து மூக்கு வழியாக அவனுக்கு இரத்தம் போய்க் கொண் டிருக்கிறது. கண்டத்துக்கு மேற்பட்ட காது, மூக்கு, தொண்டை நோயாளர்கள் வாட்டில் அவன் தங்க வைக்கப்பட்டிருக்கினற்ான். மூக்கினால் இரத்தம் வடிந்து கொண்டிருப்பதனால் தனது நோய் மூக்கு சம்பந்தப்பட்டதா? அல்லது.? அவன் இதனைக் கேட்டுத் தெரிந்து கொள்ள நினைத்தும் அப்படிக் கேட்க முடியவில்லை.
அந்தப் பெண் டொக்டர் என்ன கருதுவார்?
அதிகப் பிரசங்கியாக அவனைக் கருதக் கூடும் அல்லவா! மன தில் எழுந்த எண்ணத்தை வெளியில் சொல்ல இயலாது, மெளனமாக அவன் இருந்து விடுகின்றான்.

Page 71
நோயாளியாக வைத்தியசாலைக்குச் சென்று அங்கு தங்கி இருந்து சிகிச்சை பெறும்
ஒவ்வொருவரும், அந்த நோய் சுகப்பட்டு எவ்வளவு
விரைவாக வீட்டுக்குத் திரும்பிப் போவேன் என்று
தான் எண்ணுவான். அந்த எண்ணம் தணிகாசலம் மனதில் இல்லாமல் இல்லை. அவன் அங்கு வந்து சேர்ந்து பத்து நாட்க ளுக்கு மேலாகிவிட்டது.
அவன் வைத்தியசாலைக்கு வந்த சமயம் அந்த வாட்டில் தங்கி இருந்த பலர் நோய் சுகப்பட்டு அங்கிருந்து போய்விட்டார்கள். அவனுக்குப் பிறகு வந்தவர்கள் சிலரும் விரைவாக வீடு போய்ச் சேர்ந்துவிட்டார்கள்.
நிரந்தரமாக யாரும் தங்கி இருந்துவிடும் இடமல்லவே வைத்திய சாலை நோயாளர்களின் போக்கும் வரவும் தினந்தினம் தவறாமல் நடந்து கொண்டிருக்கிறது.
அன்று ஒரு நோயாளியை இளைஞன் ஒருவனும் வயது முதிர்ந்த ஒரு பெண்ணும் அந்த வாட்டுக்கு அழைத்து வந்தார்கள்.
அந்த இளைஞன் அவர்களுக்கு உதவியாக அவர்களுடன் வந்தி ருக்க வேண்டும். அவன் அவர்களுடன் நடந்து கொண்ட முறையில் அவ்வளவு நெருக்கம் தெரியவில்லை. அவன் அவர்கள் உறவுக்காரன் அல்ல. அந்த நோயாளியின் நிலைமையைக் கண்டு மனமிரங்கி அழை த்து வந்திருக்க வேண்டும். நோயாளியை அழைத்து வந்து வாட்டில்

தவறிப் போனவன் கதை 139
அனுமதித்த பின்னர் அந்த இளைஞன் அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு போய்விட்டான்.
நோயாளிக்குத் துணையாக வந்த முதிய பெண் மாத்திரம் அவனுடன் வாட்டில் தங்கி நிற்கின்றாள்.
அந்த வாட் ஆண் நோயாளருக்குரியது. அந்த வாட்டில் பெண் ஒருத்தி நோயாளிக்குத் துணையாக தங்கி நிற்பதற்கு ஒரு போதும் அனுமதிக்கமாட்டார்கள்.
நோயாளியாகி தனது காரியங்களைச் செய்ய இயலாத நிலையில் இருக்கும் தனது சகோதரனைத் துணையின்றித் தனித்து விட்டுப் போக அவளுக்கு இயலவில்லை.
நோயாளி உடல் மெலிந்து எலும்பும் தோலுமாகக் கிடக் கின்றான். மூச்சை இழுத்து விட்டு சுவாசிப்பதற்கு அவன் சிரமப்பட்டுக்
கொண்டிருக்கின்றான். எழுந்து பத்தடி தூரம் நடப்பதற்கு இயலாது, இரண்டு கைகளினாலும் இடுப்பைப் பிடித்துக் கொள்கின்றான்.
அவன் உடுத்திக் கொண்டிருக்கும் வேட்டியும் போட்டிருக்கும் சேட்டும் நன்றாகக் கசங்கிப் போய்க் கிடக்கின்றன. அவை இரண்டை யும் அவன் சுருட்டிப் பொதிந்து எங்கோ வைத்திருக்க வேண்டும். அந்த வேட்டியும் சேட்டும் தங்களுக்குரிய மல்லிகைப் பூப் போன்ற வெண்மை நிறத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டு இப்பொழுது வெண்ணெய் வண்ணம் பூண்டு காட்சி அளிக்கின்றன.
அந்த நோயாளியின் பரிதாப நிலையைப் பார்த்து அவன் மீது மனமிரங்கி அனுதாபப்படுகின்றவர்கள், நிச்சயம் ஏமாளிகள் தான். அவன் அனுசார் இல்லாத ஏழை மனிதனாக யாரும் கருதி விடக் கூடாது. மனைவி, மக்கள், நிலபுலன்கள் எல்லாம் உள்ள வசதி படைத்த ஒரு மனிதன் அவன்.
அவன் மகன் பதினைந்து ஆண்டுகளாக நோர்வேயில் இருக்கினறான். அவன் மகள் சுவிஸ் போய் பத்து ஆண்டுகள் கடந்து விட்டன. மகளின் பிரசவம் பார்ப்பதெற்கென்ற பேரில் சுவிஸ் போன அவன் மனைவி அங்கேயே தங்கிவிட்டாள்.
வயது முதிர்ந்த காலத்தில் மனைவி எதற்காக அருகில் இருக்க வேண்டும்? என்பது அவன் பிள்ளைகளின் எண்ணம்.
அவன் பிள்ளைகள் பெருந்தொகைப் பணம் மாதம் மாதம் அவனு க்கு அனுப்பி வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

Page 72
140 தெணியான்
பணம் பற்றி எந்தக் கவலையும் கொள்ளாமல் தாராளமாகச் செலவு செய்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது பிள்ளைகளின் எண்ணம்.
பணம் இன்னும் தேவையென்று அவன் கேட்டால் அவர்கள் தாராளமாக மேலும் அனுப்பி வைப் பதற்குத் தயாராக இருக்கின்றார்கள்.
அவர்கள் இன்னும் அனுப்பி வைக்க கொண்டிருக்க வேண்டும் என்னும் மன விருப்பம் அந்தரங்கத்தில் அவனுக்கு இல்லாமல் ജൂൺങ്ങേ,
ஆனால் அதனைத் தான் வெளியில் சொல்லி பிள்ளைகள் பணம் அனு ப்பி வைப்பதை அவன் விரும்பவில்லை. அவர்கள் தாங்களாக அனுப்பி வைத்தால் அவன் வேண்டாம் என்று சொல்லாமல் ஏற்றுக் கொள்ளும் மன நிலையில் தான் இருக்கின்றான். நிலபுலங்கள் யாவையும் இன்று குத்தகைக்கு விட்டிருக்கின்றான். அவைகளில் இருந்து வருடா வருடம் பெருந் தொகையான பணம் வேறு வந்து கொண்டிருக்கின்றது.
அவன் வீட்டு வளவுக்குள் நிற்கும் மா, பலா, கொய்யா மரங்களில் இருந்து ஒரு கொந்தல் நிலத்தில் விழுந்து விட்டால் அதனைத் தூக்கி வெளியில் எறிந்து விடமாட்டான். அல்லது அயலில் வாழும் சிறுபிள்ளைகளை அழைத்து அவர்கள் கையில் அதனை விரும்பிக் கொடுத்து அனுப்பவும் மாட்டான். அந்தக் கொந்தலையும் குழந்தைக ளுடன் விலை பேசி விற்றுக் காசாக்கிக் கொண்டு விடுவான்.
அவன் விரும்பிய நேரம் வீட்டு அடுப்பில் நெருப்பு எரியும். அவனுக்கு உணவு என்பது முக்கியமான ஒன்றல்ல. ஏதோ, உயிர் வாழ்வதற்காக அவ்வப்போது வயிறு நனைந்தால் போதும் "ஊணன் கருமம் இழந்தான்” என இடையிடையே சொல்லித் தன்னை அவன் நியாயப்படுத்திக் கொள்வான்.
அவனுக்கு உடன் பிறந்தவளாக இருக்கின்றவள் அந்த ஒரேயொரு சகோதரி. அவள் கணவனை இழந்த ஒருத்தி. அவளுக்குத் திருமண வயது தாண்டிவிட்ட இரு பெண் பிள்ளைகள் வீட்டோடு இருக்கின்றார்கள்.
அவன் சகோதரிக்கும் பிள்ளைகளுக்கும் இன்று நெருக்கமான உறவுள்ள உற்ற துணையாக இருப்பது அவனல்ல, வறுமை ஒன்றுதான்.
அவன் சகோதரி குடும்பத்துக்கும் அவனுக்கும் உள்ள உறவின் இடைவெளி அதிகம். அவன் முன்னெச்சரிக்கையாக அவர்களை எப்பொழுதும் தூர விலக்கியே வைத்திருக்கின்றான்.

தவறிப் போனவன் கதை 14
அவர்களுடன் நெருக்கமான உறவுகளை அவன் வைத்துக் கொண்டு இருந்தால், அவர்களுக்கு உதவிகள் அல்லவா செய்ய வேண்டி வரும் சகோதரியுடன் மாத்திரமல்ல, வேறு யாருடனும் அவன் அத்தனை நெருக்கம் காட்டுவதில்லை. அவன் இயல்பிலேயே பிறருடன் நெருங்கிப் பழகாது ஒதுங்கி நடக்கும் ஒருவன் என்று சொல்ல இயலாது.
மக்கள் வெளிநாடுகளுக்குச் சென்று, கையில் பணம் வந்து சேர ஆரம்பித்த பிறகு அவன் இயல்பாக இருந்த குணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கின. வசதியான மனிதர்கள் என்று கண்டு அவர்களுடன் தனது உறவுகளைப் புதிதாகத் தேடி உருவாக் கிக் கொண்டான். பணம் இல்லாதவர்களைக் கண்டும் காணாமல் போவதற்கு அவன் பழகிக் கொண்டான். அவனிடம் யாராவது உதவி கேட்டு வந்து விட்டால் தங்க நகைகளுக்குப் பணம் கொடுத்து அறாவட்டி வாங்கும் காசு வியாபாரியாகவும் அவன் மாறினான்.
"ஆருக்கு இவ்வளவு சொத்தச் சேர்க்கிறாய்?" என்று யாராவது அவனிடம் கேட்டுவிட்டால் "என்னட்டை என்னப்பா கிடக்கு" என ஒன்றும் இல்லாதவன் போலக் கையை விரிப்பான்.
அப்ப. நீ பரம்பரை ஆண்டிதான்” என்று எவனாவது கிண்டல் பண்ணினால் அவனுக்குச் சினம் பொத்துக் கொண்டு வந்துவிடும் "நான் பரம்பரைக் காணிக்காரன். ஒய்" என வீராப்பாகப் பெருமை பேசுவான். "ஆருக்கப்பா உன்ரை சொத்துக்கள் எல்லாம்? எனக் கேட்டால் "நான் என்ன, பிள்ளை குட்டி இல்லாத மலடனே! என்ரை பேரப் பிள்ளையஞக்கு நான் சேர்த்து வைக்கத்தானே வேணும்!" என்பான். அவன் நோய் வந்து பாயும் படுக்கையுமாகக் கவனிப்பாரில்லாமல் சில தினங்கள் வீட்டோடு கிடந்தான்.
அவன் அநாதை போலக் கிடப்பதை அறிந்து அவன் ஏழைத் தங்கை துடித்துப் போனாள்.
அவள் தனது தமையன், தனக்குச் செய்த துரோகங்களை மறந்து, அவனைப் பார்ப்பதற்குத் துடித்துக் கொண்டு புறப்பட்டாள். அப்பொழுது அவள் பிள்ளைகள் அவளைத் தடுத்தார்கள்.
"பிள்ளையன், உங்களுக்கு அவர் மாமன். எனக்கு உடன் பிறந்த சகோதரம் என்னைத் தடுக்காதையுங்கோ" என்று சொல்லிக் கொண்டு அவள் தன் தமையனிடம் புறப்பட்டு விட்டாள். அவள் இப்பொழுது

Page 73
142 தெணியான்
வைத்தியசாலைக்கு ஒருவாறு அவனைக் கொண்டு வந்து சேர்த்தும் விட்டாள். அவன் நன்றாகச் சுவாசிப்பதற்கு இயலாமல் இடையிடையே அவனுக்கு மூச்சுத் திணறுகிறது. அவன் சகோதரி அந்த வாட்டுக்குள் முழு நேரமும் நின்று அவனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்கு அவளுக்கு இயலவில்லை.
பகல் நேரத்தில் இடையிடையே வந்து அவனைப் பார்த்து விட்டுப் பின்னர் அந்த வாட்டுக்கு வெளியே அங்குமிங்குமாகக் காலத்தைப் போக்கிக் கொண்டு இருக்கின்றாள்.
இரவு நேரம் வந்த பிறகு வாட்டுக்குள்ளே மெல்ல நுழைந்து அவன் அருகில் அவள் குந்திவிடுவாள். அவன் பரிதாப நிலை கண்டு அவளை வெளியே போ என்று யாரும் விரட்டுவதில்லை. டொக்டர் அவனைப் பரிசோதித்துப் பார்த்து விட்டு அவன் மிகப் பலவீனமாக இருப்பதாகச் சொன்னார்.
அவனுக்கு நல்ல நிறைவு உணவு உடனடியாகத் தேவைப்படுகி றது. அதனால் வைத்தியசாலையில் அவனுக்குக் கட்டாயம் பால் வழங்க வேண்டும் என்று அவர் சிபார்சு செய்திருக்கின்றார்.
தணிகாசலம் மனதில் அவனும் அவன் சகோதரியும் ஏற்கனவே பார்த்த முகங்களாக ஒரு நினைவு. அவன் தணிகாசலத்தின் கட்டிலில் இருந்து பல கட்டில்கள் தாண்டி, ஒரு ஒரமாகப் படுத்துக் கிடக்கின்றான். தணிகாசலம் மலசலசுடத்துக்குப் போகும்போது அவன் கட்டிலைத் தாண்டியே போக வேண்டும். அவன் போய்வரும் சமயத்தில் அவன் சகோதரியுடன் ஒருநாள் பேச வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான்.
தணிகாசலம் வைத்தியசாலைக்கு வந்து இரண்டு வார காலமா கின்றது. இப்பொழுது அவனுக்கு வைத்தியசாலை உறவுகள் சில வந்து சேர்ந்துவிட்டன. அவர்களுடன் தனது தமையன் இல்லாத நேரம் பார்த்து அவன் பேசுவான். அவனுக்கு எதிரிலுள்ள கட்டிலில் தடித்த மீசை வைத்த ஒருவர் நடிகர் சிவாஜி கணேசன் போன்ற தோற்ற முள்ள ஒருவர் படுத்திருக்கின்றார். அவன் அவரோடு மெல்லக் கதை கொடுத்துப் பார்த்தான்.
அவர் உண்மையில் ஒரு நடிகர் என்பதை அப்பொழுது அறிந்து கொண்டான். பல நாடகங்களில் நடித்த பழுத்த அனுபவசாலியாக அவர் விளங்கினார். இலங்கைத் தமிழ்ப் படம் ஒன்றிலும் அவர் தோன்றி இருக்கின்றார்.

தவறிப் போனவன் கதை 143
அவனுக்கு இடதுபுறக் கட்டிலில் இருக்கிறவர் ஒரு அப்பாவி. அவரைப் பார்ப்பதற்கு தினமும் அவர் மனைவி உணவோடு வந்து போகின்றாள். அவர் மனைவி தவிர வேறு எவரும் அவரைப் பார்த்துப் போக வருவதில்லை. அவர்கள் குழந்தைகள் இல்லாத தம்பதியினர். அதனால் அவர்களுக்குள் இப்பொழுது தினமும் சச்சரவு, மனைவியின் சகோதரர்கள் தனக்குச் சொந்தமான நிலபுலன்களைத் தந்திரமாகத் தட்டி எடுக்கப் பார்க்கின்றார்கள் என்று கூறி மனைவியுடன் ஒவ்வொரு நாளும் துள்ளிக் குதிப்பார். அவர் பத்திரகாளி கோவில் முன் பல தடவைகள் தான் தீக்குளித்ததாகச் சொல்லுவார். தான் விரதம் இருந்து தீக்குளித்து வாக்குச் சொன்னால் சொன்னபடி எல்லாம் நடக்கும் என்று உறுதி கூறுவார்.
தான் தீக்குளித்து தனது மைத்துனர்களை அழித்து விடுவேன் என்னும் அச்சுறுத்தல் அவர் பேச்சின் உள்ளீடாகத் தொனிக்கும். அவர் மனைவி மிகச் சாதுரியமான காரியக்காரி. அவர் சொல்லுகின்ற வற்றை எல்லாம் அவள் சொண்டுக்குள் சிரித்துக் கொண்டு மெளனமாகக் கேட்டிருந்து விட்டு எதனையும் கருத்தில் கொள்ளாது மெல்லப் போய்விடுவாள்.
தெளிவாக இருக்கின்றவர்களின் மெளனங்கள் எப்பொழுதும் காரிய சாதனையின் வெளிப்பாடுகள். தணிகாசலத்துக்கு அடுத் துள்ள கட்டிலில் காதில் நோயுள்ள ஒருவர் படுத்துக் கிடக்கின்றார். அவர் தணிகாசலத்துக்கு முன்னரே அந்த வாட்டுக்கு வந்துவிட்டார். இப்பொழுது அவனுடன் அவர் மிக நெருக்கம் தணிகாசலம் அதிகம் பேசிக் கொண்டிருப்பதை அவர் கொஞ்சமும் விரும்புவதில்லை. அவன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தால் மூக்கில் இருந்து திடீரென்று இரத்தம் வடிய ஆரம்பித்து விடுகிறது என்பதை அவர் அவதானித்த வைத்திருக்கின்றார்.
அதனால் அவனுடன் பேசுவதை முடிந்த வரை தவிர்த்துக் கொண்டு இருந்து விடுகிறார்.
அன்று மதிய வேளை, வாட்டில் தங்கி இருக்கும் நோயாளிகளு க்கு வேண்டிய உணவுகளை நர்ஸ் ஒருத்தி வழங்கிக் கொண்டு வருகின்றாள்.
"டொக்ரர் பால் குடிக்கச் சொல்லுகிறார். அவர் பால் குடியாமல் கிடந்து அநியாயமாகச் சாகப் போகிறார்” என்று சொல்லிக் கொண்டு

Page 74
144 தெணியான்
உணவுகளை வழங்கிய வண்ணம் போகின்றாள். சகோதரி உடன் தங்கி இருக்கும் அந்த நோயாளியைத்தான் அந்த நேர்ஸ் சொல்லிக் கொண்டு போகின்றார் என்பதைத் தணிகாசலம் விளங்கிக் கொண்டு விடுகின்றான். அவன் இரவு நேரம் மலசலகூடப் பக்கம் சென்று திரும்பி வந்து கொண்டிருக்கும் போது அந்த நோயாளியையும் அவன் சகோதரியையும் பார்க்கின்றான்.
நோயாளி போட்ட கையும் போட்ட காலுமாக அசைவின்றிக் கட்டிலில் நீட்டி நிமிர்ந்து கிடக்கின்றான். அவன் தங்கை அவனைத் துயரத்துடன் பார்த்த வண்ணம் அவன் கட்டில் அருகே தலை கவிழ்ந்து குந்தி இருக் கின்றாள். தணிகாசலம் அவர்கள் அருகில் வந்து கட்டில் கம்பியைக் கையினால் பிடித்த வண்ணம் அவன் கால் பக்கமாக நிற்கின்றான். அவன் அங்கு வந்து நிற்பதைக் கண்டு நோயாளியின் தங்கை தலை நிமிர்ந்து ஆச்சரியமாக அவன் முகத்தைக் கூர்ந்து நோக்குகின்றாள்.
அவள் பார்வையின் உள்நோக்கத்தை உடனே புரிந்து கொண்ட அவன், "டொக்ரர் என்ன சொல்லுகிறார் அம்மா?" என அனுதாபத்து டன் பேச்சை ஆரம்பிக்கின்றான்.
"அவர் என்ன சொல்லுறது தம்பி” என அவள் சலித்துக் கொள்ளு கிறாள்.
"அப்ப ஒண்டும் சொல்லயில்லையா? அவன் தொடர்ந்து கேட்கின்றான்.
"நல்ல பலவீனமாக இருக்கிறார் எண்டு சொல்லுகிறார்"
"அதுக்கு என்ன செய்ய வேணுமாம்"
"பசுப்பால் குடிக்கட்டாம்" "குடுக்கிறதுதானே!" "அதையேன் கேக்கிறியள் தம்பி!”
“616öt6o16) JITL b'?”
"உயிர் போனாலும் குடிக்கமாட்டேன் எண்ணுகிறார்"
"அப்ப. என்ன சாப்பாடு?"
"விசுக்கோத்தும் சோடாவுந்தான்"
“டாக்குத்தர் இண்டைக்கும் பாத்துப்போட்டு பால் குடிக்கிறாரோ? எண்டு ஐமிச்சப்படுகிறார். அவை தாற பாலை வாங்கி வைச்சிருந்து

தவறிப் போனவன் கதை 145
நான் வெளியிலே ஊத்திப் போட்டு, குடிக்கிறார் எண்டு பொய் சொல்லிக் கொண்டிருக்கிறேன்"
"ஏன், ஒரு காலமும் இவர் பால் குடிக்கிறதில்லையே!” "நல்லாக் குடிப்பார் தம்பி!" "இப்ப ஏன் வேண்டாம் எண்டு பிடிவாதமாக நிற்கிறார்?"
"உங்களுக்குச் சொன்னால் என்ன தம்பி! நீங்கள் எங்கடை ஆள்போல கிடக்கு. ஆஸ்பத்திரி கண்ட நிண்ட சாதியும் பிழங்கிற இடமாம். கண்ட சாதியும் சமைக்குமாம். பால் காய்ச்சுமாம். உயிர் போனாலும் தான் வாய் நனைக்க மாட்டன் எண்டு நிற்கிறார்”
"நீங்கள் வீட்டிலே இருந்து கொண்டு வந்து குடுக்கலாந்தானே!"
"ஆர் தம்பி உதெல்லாம் செய்ய இருக்கினம் ஒரு மனிசன்மான் சாதி இதுவரை வந்து எட்டிப் பாக்கயில்லை"
"சரி நான் வாறன்" சொல்லிக் கொண்டு அங்கிருந்து கிளம்புகின்ற சமயம் அந்த நோயாளியை ஒரு தடவை உன்னிப்பாகப் பார்த்து விட்டு வந்து விடுகின்றான்.
இன்று நடுப்பகல் வேளை அந்த நர்ஸ் பால் குடிக்காமல் கிடந்து அநியாயமாகச் சாகப் போகிறார் என்று சொல்லிக் கொண்டு சென்றது ஏனோ அவன் நினைவுக்கு வருகிறது. அனுதாபத்தினால் அவனுக்கு நெஞ்சு பொருமி பெருமூச்சொன்று வெளிப்படுகிறது. அன்று நடு இரவு தாண்டி சிலமணி நேரங்களின் பின்னர் அவன் படுக்கையில் இருந்து கண் விழிக்கின்றான். அவனுக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் போல இருக்கிறது. விளக்குகள் யாவும் அணைக்கப்பட்டு மெல்லிய ஒளி மாத்திரம் அந்த வாட்டுக்குள் பரவி இருக்கிறது.
கட்டிலில் இருந்து மெல்ல இறங்கி மலசலகூடம் நோக்கி மெல்ல மெல்ல நடந்து வருகின்றான். வந்து, அந்த நோயாளியின் கட்டில் அருகே திகைத்து நிற்கின்றான். கட்டிலின் மேல் கிடக்கும் அந்த நோயாளியை தலையில் இருந்து கால்வரை வெள்ளைத் துணியி னால் மூடிவிட்டிருக்கின்றார்கள். அவன் சகோதரி அழுது வடிந்த வண்ணம் முன் போலவே அவன் அருகில் தலை குனிந்து குந்தி இருக்கின்றாள்.
அவன் செத்துப் போனான்.
ஆனால் இன்னும் சாகாமல் இருக்கிற சாதி.

Page 75
bடுப்பகல் தணிகாசலத்தின் மைத்துனர் வைத்தியசாலைக்கு வந்து அவன் தமையனை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு, அவர் அவனுடன் தங்கி நிற்கின்றார். அந்த வாட்டில் இருக்கும் நோயாளர்கள் சிலருடன் அவர் இப்பொழுது நல்ல சிநேகம். தணிகாசலத்துக்கு வேண்டிய உதவிகளைச் செய்த பிறகு அவர் பழக்கம் பிடித்துக் கொண்ட அவர்களிடம் போய் பேசிக் கொண்டிருப்பார். அவர் தணிகாசலத்துடன் அதிகம் நெருங்கி வருவதில்லை. அவனுக்கு மரியாதை கொடுத்து சற்று விலகி இருந்து கொள்ளுவது அவர் சுபாவம்.
அன்று வைத்தியசாலைக்கு வந்தது முதல் அவனைச் சுற்றிச் சுற்றியே அவர் நின்று கொண்டிருக்கின்றார். அவர் எதனையோ தனக்குச் சொல்லுவதற்கு நினைக்கின்றார். ஆனால், அதனைச் சொல்ல முடியாமல் அந்தரப்படுகின்றார் என்பதைத் தணிகாசலம் விளங்கிக் கொள்ளுகின்றான். அவரது மனச்சங்கடத்தைப் போக்கி விடும் நோக்கத்துடன் அவனாக முன்வந்து "என்ன?" எனச் சுருக்க மாகக் கேட்கின்றான்.
அவர் எடுத்த எடுப்பில் "ஒண்டுமில்லை." என்று முதலில் சொன்னவர், பிறகு தயக்கத்துடன், "சுகமில்லாத உங்களுக்கு இதைச் சொல்லலாமோ. எண்டுதான்." என முற்றாகச் சொல்லி முடிக்காது வார்த்தைகளை அரைகுறையாக மெல்ல இழுக்கின்றார்.

தவறிப் போனவன் கதை 147
"சொல்லுங்கோ. பறவாயில்லை!" அவன் அவரைத் தூண்டி விடுகின்றான்.
அப்பொழுது அவரும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டவராக, மனதைத் திடப்படுத்திக் கொண்டு “உங்கடை சிநேகிதன் விஜயராசா."
`မုံ့)၊........... அவனுக்கென்ன?”
"அவர் தவறிப் போனார்"
என்ன!. அவன் உள்ளம் அதிர்ந்து போகின்றது. அவர் சொல்லத் தயங்கிய அந்தச் செய்தியைக் கேட்டறிவதில் அவனுக்கு இருந்த ஆவல் முழுவதும் சிதைந்து மனம் நொந்து முகம் வாடிப் போகிறது.
துயரமான அந்தச் செய்தியைக் கேட்டறியாமல் இருந்திருக்க லாம் என இப்பொழுது மனதுக்குத் தோன்றுகிறது.
சிறிது நேர மெளனத்தின் பின்னர், "என்ன நடந்தது?" என அவன் வினவுகின்றான்.
"நெஞ்சிலே வலிக்கிது எண் டு கந்தோர் மேசையிலே படுத்தவர்தானாம்"
"மாரடைப்பு"
"ஒமோம் மாரடைப்புத்தான்"
ናß
தணிகாசலம் மனம் முற்றாகக் குழம்பிப் போகிறது "என்ன வாழ்க்கை!" என்று சலித்துக் கொள்ளுகிறது. சற்று நேர அவகாசத்தின் பின்னர், "அவனுக்கு அவ்வளவுதான்” என்று தேறுதல் தேட முனைகிறது. அப்பொழுது அவன் அறிந்த சித்தர்களும் யோகிகளும் அவனுக்கு ஆறுதல் அளிக்க முன்வருகின்றார்கள். "எல்லாமோ எப்போதோ முடிந்த காரியம்" என அந்த மனம் தத்துவ விசாரம் செய்து அவனை அமைதிப்படுத்துகின்றது. அப்பொழுது அவன் மைத்துனன் ஒரு கடிதத்தை எடுத்து "இது உங்கடை மூத்தமகன் தந்தவர்" என்று அவன் கையில் கொடுக்கின்றார். 'பிள் ளைகளும் என்னைப் பார்த்து பல நாட்களாகுது என நினைத்துக் கொண்டு அந்தக் கடிதத்தைப் விரித்துப் படிக்கின்றான்.
மகன் சுருக்கமாகவே அவனுக் கடிதம் எழுதி இருக்கின்றான். "அப்பா, நீண்ட காலம் நீங்கள் எங்களுடன் இருக்க வேணும். அது எங்களுக்குப் போதும்" என்ற சாரப்பட தனது மன ஆதங்கத்தை சொல்லி இருக்கின்றான்.

Page 76
148 தெணியான்
தனது நண்பன் மரணம் மகனைப் பாதித்திருக்கிறது என்பதை அந்தக் கடிதம் அவனுக்குத் தெளிவாக உணர்த்துகின்றது. அப்பாவை இழந்து தாங்கள் தனித்துப் போய் விடுவோமோ என்று மகன் அஞ்சுகின்றான் என அவனால் உணர்ந்து கொள்ள முடிகிறது.
அவன் உள்ளத்தில் தான் இறந்து போவேன் என்ற விதமான அச்சமில்லை. ஆனால் நோய் சுகப்படாமல் காலம் நீண்டு கொண்டு செல்வதுதான் அவன் மனதுக்கு வேதனையைத் தருகிறது.
வைத்தியசாலையில் அவனுக்குச் செய்ய வேண்டிய பரிசோனை கள் அனைத்தும் செய்து முடித்துவிட்டார்கள். காது, முக்கு, தொண்டை நோய்களுக்கான வைத்திய நிபுணர் எல்லாப் பரிசோதனை களும் முடிந்து, "உங்களுக்கு ஒரு நோயுமில்லை" எனத் தீர்ப்புக் கூறிவிட்டார். ஆனால் இப்பொழுதும் இடையிடையே மூக்கில் இருந்து இரத்தம் வடிந்து கொண்டுதான் இருக்கிறது.
இப்படியே போய்க் கொண்டிருந்தால் அடுத்த நடவடிக்கை என்ன என்பது புரியாமல் அவன் மனம் குழம்பிக் கொண்டிருக்கின்றான்.
வயதில் மூத்த நீண்ட கால அனுபவமுள்ள தலைமை நர்ஸ் அந்த வாட்டில் பணியாற்றி வருகின்றார்.
அவரது அனுபவ அறிவு வைத்தியர்களுக்குப் பிடிபடாத பல உண்மைகளைச் சிலசமயம் அவருக்கு உணர்த்தி விடுகிறது. அந்தத் தலைமை நர்ஸ் தணிகாசலத்திடம் வந்து "உங்களுக்கு இரத்தம் கட்டுப்படுகிறதாயில்லை. ஒருக்கால் டொக்ரர் மகிழ்ராசா வுக்குக் காட்டுவம்" என்கிறார்.
"நல்லது மிஸ் அதைச் செய்யுங்கோ'
அவனோடு பேசிக் கொண்டு போன அந்த நர்ஸ் அன்றே டொக்டர் மகிழ்ராசாவை அந்த வாட்டுக்கு அழைத்துக் கொண்டு வருகின்றார்.
டொக்ரர் மகிழ்ராசா பொது வைத்திய நிபுணர். அவரின் ஆதாரவான அன்பான பேச்சினால் நோயாளியின் பாதி நோய் தீர்ந்து போய்விடும்.
அவர் அவனைப் பார்ப்பதற்கு வரும்பொழுதே மாணிக்கவாசகரின் "பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து." என்னும் திருவாசகத்தை வாய்க்குள் மெல்லப் பாடிக் கொண்டு வருகின்றார்.
அவனை நீண்ட நேரம் எடுத்து நன்றாக அவர் பரிசோதித்துப் பார்க்கின்றார். இரத்த அழுத்தத்தைச் சோதித்து குறித்துக்

தவறிப் போனவன் கதை 149
கொள்கின்றார். பின்னர் அவனிடம் "பிறஷர் கூட இருக்கு பயப்பிடுகி றதுக்கு ஒண்டுமில்லை" என ஆறுதல் வார்த்தை கூறிக் கொண்டு. "மூன்று ஊசிக்கு எழுதி இருக்கிறேன். மூன்று நாளைக்குப் போட வேணும் ஊசி முடிஞ்சு இரத்தம் கட்டுப்பட்டாப் போல என்ரை வாட்டு க்கு மாற்றுங்கோ தலைமை நர்ஸிடம் சொல்லிக் கொண்டு டொக்ரர் போகின்றார்.
டொக்ரர் மகிழ்ராசாவின் பணிப்பின் பேரில் மறுநாள் காலை அவனைக் கட்டிலில் படுக்க வைத்து ஆண் தாதி ஒருவர் அவன் தொடையில் ஊசியை ஏற்றி நீண்ட நேரம் எடுத்து கொஞ்சம் கொஞ்ச மாக மருந்தைச் செலுத்துகின்றார். மறுநாளும் அதே போல் ஊசி மூலம் அவனுக்கு மருந்து ஏற்றப்படுகின்றது. மூன்றாவது தினம் அவனுக்கு மருந்து ஏற்றி முடிந்து போனது. ஆனால் அவனுக்கு இரத்தம் கசிவது மட்டும் முற்றாகக் கட்டுப்பாட்டுக்கு வந்துவிடவில்லை. அந்த வாட்டில் தொடர்ந்து இருப்பதில் அவன் மனம் சலித்துப் போகின்றான். ஒரு மாறுதலை இப்பொழுது அவன் விரும்புகின்றான். அந்த வாட்டை விட்டு எப்படியும் மாறிப் போய் விட வேண்டும் என்று தனக்குள் தீர்மானித்துக் கொள்கின்றான்.
வாட்டின் தலைமை நர்ஸ் அன்று மாலை அவனைத் தேடிக் கொண்டு வருகின்றார்.
"உங்களுக்கு இப்பவும் இரத்தம் போகுதா? அவனிடம் அக்கறையாக வினாவுகின்றார்.
"இல்லை" மனமறிய அவன் பொய் கூறுகின்றான்.
"அப்ப பதினோராம் வாட்டுக்கு உங்களை இப்பவே மாற்றி விடுவோம்" சொல்லிக் கொண்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார். அவனைச் சக்கர நாற்காலியில் இருத்தி பணியாள் ஒருவன் நாற்காலியைத் தள்ளிக் கொண்டு வருகின்றார்.
அவன் தமையன் தலையணை, பாய், வெந்நீர்ப் போத்தல் என்பவற்றைக் கையில் தூக்கிக் கொண்டு பின்னே வருகின்றார். அவனைச் சுமந்து கொண்டு சக்கர நாற்காலி நீண்ட விறாந்தைகளில் ஒடி பல வாட்டுக்கள் தாண்டி வந்து மாடிப்படிக்கட்டின் அருகே தரித்து நிற்கிறது. அவன் இப்பொழுது அனுமதிக்கப்படவுள்ள பதினோராம் வாட் அந்த மாடியில் இருக்கிறது. அவன் சக்கர நாற்காலி விட்டுக் கீழே இறங்கி, படிக்கட்டுக்களில் ஏறி மேலே போவதற்கு கால் அடி

Page 77
150 தெணியான்
எடுத்து வைக்கின்றான். சக்கர நாற்காலி தள்ளி வந்த பணியாளன், அவனை நெருங்கி வந்து அவன் படிக்கட்டுக்களில் ஏறிச் செல்வதற்கு உதவியாகத் தோளில் மெல்லப் பற்றுகின்றான்.
"விடுங்கோ. நான் ஏறுவன்" பணியாளனைத் தவிர்த்து விட்டு, அவன் ஒவ்வொரு படியாக மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்து மேலே ஏறிச் செல்லுகின்றான். பணியாள் அவனுக்குப் பாதுகாப்பாக அவன் பின் தொடர்ந்து மெல்ல வந்து கொண்டிருக்கின்றான். அவர்கள் இருவரும், அந்த வாட்டில் வந்து நிற்க, அவன் தமையன் பொருட்களைத் தூக்கிக் கொண்டு அங்கு வந்து சேருகின்றார்.
அவன் புதிதாக பதினோராம் வாட் வந்து சேர்ந்த பின்பு தான் முன்னர் தங்கி இருந்த பதின்நான்காம் வாட் எவ்வளவு வசதியான சுத்தமான இடம் என்பதை அவனால் உணர முடிகின்றது. எதனையும் இழந்த பிறகுதான் மனிதன் அதன் அருமை பெருமை உணர்கின் றான்.
வாட்டில் கட்டில்கள் மிக நெருக்கமாகப் போடப்பட்டிருக்கின்றன. கட்டிலில் தங்குவதற்கு இடமில்லாத நோயாளர்கள் சிலர் தரையில் பாய் விரித்துப் படுத்துக் கிடக்கின்றார்கள். புதிய வாட்டின் மலசலசுவடத்துக்குள்ளே காலடி எடுத்து வைக்கவே அவனுக்கு அருவருப்பாக இருக்கிறது. அதன் உள்ளே தேங்கி நிற்கும் நீரைக் காண அவனுக்கு வயிற்றைக் குமட்டுகிறது.
அவனுக்கு துன்பத்திலும் ஒரு இன்பம் கஷ்டத்தின் அதிஷ்டம் அந்த வாட்டில் ஒதுக்குப்புறமாக ஒரு மூலையில் அவனுக்குக் கட்டில் ஒன்று கிடைத்திருக்கிறது. ஆனால் அவனுக்குத் துணையாக வந்து நிற்கும் தமையன், மைத்துனர் தங்குவதற்கு தோதான இடமல்ல புதிய ରj[[[' ..
"இந்தக் கஷ்டங்களை எல்லாம் இன்னும் எத்தனை நாட்களுக்கு அனுபவிக்கப் போகிறேனோ!" என்று விசனத்துடன் அவன் கட்டிலில் அமர்ந்திருக்கின்றான். இந்த வாட்டுக்கு அவன் புதியவன். அங்கே இருக்கின்றவர்கள் அவனுக்கு இன்னும் சரியாக அறிமுகமாகவி ல்லை. அப்பொழுது "தம்பி" என்று அழைத்த வண்ணம் முன்னாள் கல்லூரி அதிபர் ஒருவர் அவனைத் தேடிக் கொண்டு வருகின்றார். அவரை அங்கே காண அவனுக்கு அதிசயமாக இருக்கிது. அவரை அங்கு அவன் எதிர்பார்க்கவில்லை. அவர் நோய்வாய்ப்பட்டு இருக்கிறார் என்பதும் அவனுக்குத் தெரிய வராது.

தவறிப் போனவன் கதை 15
“ஸேர் வாருங்கோ" மரியாதையாகச் சொல்லிக் கொண்டு கட்டிலை விட்டுக் கீழே இறங்குகின்றான்.
"இறங்காதையுங்கோ. இறங்காதையுங்கோ." அவர் தடுக்கிறார்.
“ஸேர் ஆஸ்பத்திரியிலே இருக்கிறது எனக்குத் தெரியாது"
"தம்பியைப் பற்றிக் கேள்விப்பட்டு நான் ஏங்கிப் போனேன்"
"அது ஒரு தத்துக்கழிவு"
"சரியாகச் சொன்னியள் தம்பி. இனி உங்களுக்கு ஒன்றும் வராது. கண்டபடி நித்திரை முழிக்காதையுங்கோ கூட்டங்களிலே பேசிறதைக் குறையுங்கோ கண் முழிச்சுப் புத்தகம் படிக்கிறதை விடுங்கோ. நீங்கள் நீண்டகாலம் வாழவேணும்"
"ஓம் ஸேர், ஸேருக்கு என்ன வருத்தம்"
"ஒரு இருமல், உடம்பைப் பாத்தியளே, நல்லா மெலிஞ்சு போனன். சரி, நீங்கள் இருங்கோ தம்பி பிறகு பேசுவோம்" சொல்லிக் கொண்டு அவர் தனது கட்டிலுக்குப் போகின்றார்.
அவனுக்கு நடு இரவு தாண்டும் வரை உறக்கம் பிடிக்கவில்லை. புதிய வாட் நெருக்கடி மிகுந்த புதிய சூழல், நீண்ட நேரம் விழித்துக் கிடந்தவன் நடு இரவுக்குப் பிறகு உறங்கிப் போய்விடுகின்றான்.
அதிகாலையில் விழிப்புத் தட்டுகிறது. படுக்கை விட்டு அவன் மெல்ல எழுகின்றான். அவன் மூக்கில் இருந்து பட்டென்று மீண்டும் இரத்தம் கொஞ்சம் வடிகிறது. அவன் அந்த வாட்டுக்குப் புதிய நோயாளி. அவன் அருகில் இருக்கும் நோயாளிகள் தனது இரத்தத் தைக் கண்டு கொள்ளாதவாறு கட்டிலை விட்டு எழுந்து வாட்டுக்கு வெளியே சென்று, நீரினால் முகம் மார்பை நன்றாகக் கழுவி விட்டுக் கொள்ளுகின்றான். திரும்ப வந்து எதுவும் நடக்காதது போலக் கட்டிலில் அமர்ந்து கொள்ளுகின்றான். வைத்தியருக்கு நோயை மறைத்தால் நோய் தீராது. ஆசிரியருக்கு அறியாமையை மறைத் தால் அறிவு வளராது என்று வகுப்பறைகளில் தனது மாணவர்களுக்கு அடிக்கடி கூறிக் கொண்டிருக்கின்றவன் அவன்.
ஆனால் தான் எப்படி டொக்டருக்கு நோயை மறைக்கலாம்!
இன்று டொக்ரருக்கு உண்மையைச் சொல்ல வேண்டும் என்று அவன் மனதில் தீர்மானித்துக் கொள்ளுகின்றான். டொக்ரர் மகிழ்ராசா

Page 78
152 தெணியான்
காலை நேரம் வாட்டுக்கு வந்து நோயாளர்களைப் பார்வை இடுகின்றார். அவன் கட்டிலுக்கு வந்து அவரைப் பரிசோதித்துப் பார்க்கின்றார். இரத்த அழுத்தத்தைத் திரும்பத் திரும்பப் பார்த்துக் கணிக்கின்றார். அப்பொழுது அவன் அவருக்கு மெல்லச் சொல்லுகின்றான். "இண்டைக்குக் காலையிலே கொஞ்சம் இரத்தம் போனது"
"நீங்கள் பயப்பட வேண்டாம். இண்டைக்கு ரிக்கற் வெட்டி விடுகி றேன். வீட்டுக்குப் போங்கோ இரத்தம் வடிஞ்சால் பஞ்சைத் தண்ணி ரிலே நனைச்சுப் பிடியுங்கோ கொஞ்ச நாளிலே அது சரி வந்து விடும்." அவர் சொல்லிக் கொண்டு அடுத்த நோயாளியைப் பார்ப்பதற்கு நகருகின்றார்.
தான் இவ்வளவு விரைவில் வீட்டுக்குத் திரும்பிச் செல்வேன் என்று அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
வீடு போய்ச் சேர்ந்தும் முதல் வேலையாக அநீதியைப் போய்ச் சந்திக்க வேண்டும் என்று அவன் மனதில் தீர்மானித்துக் கொள்கின் றான்.
அன்று நடுப்பகல் தாண்டிய பிறகு அவன் தமையன் வைத்திய சாலையில் இருந்து அவனை அழைத்துக் கொண்டு வீட்டுக்குப் புறப்படுகின்றார்.

66
பிள்ளையன் குரல் கொடுத்துக் கொண்டு 2 车 கையில் தலையணையுடன் கேற்றைத் திறந்து தணிகாசலம் உள்ளே வருகின்றான். அவன் பின்னே அவன் தமையன் ஒரு கையில் தலை யணை மறுகையில் பாய்க் தூக்கியவாறு வந்து கொண்டிருக்கிறா பிள்ளைகள், மனைவிக்கு அதிசயமாக இருக்கி றது. வைத்தியசாலையில் இருந்து அவன் வீடு வருகின்றான் என்ற தகவல் அவர்களுக்குத் தெரியவராது. திடீரென அவன் குரல் கேட்டு "அப்போய்” எனக் கூவிக் கொண்டு ஓடி வந்து அவனைச் சூழ்ந்து கொள்ளுகிறார்கள்.
அவர்கள் கண்கள் அவர்களை அறியாமல் கலங்குகின்றன. துக்க மில்லாத மகிழ்ச்சி இல்லை. துயரத்தில் விளைந்து இன்று மகிழ்ச் சியில் கலங்கும் அவர்கள் கண்ணிரைக் கண்டு, "ஏன் அழுகிறியள்! நான்தானே சுகமாக வந்து விட்டேன்" என பிள்ளைகளை அனைத்த வண்ணம் ஆறுதல் கூறுகின்றான். பின்னர் "எங்கே சின்னவர்' என வினவுகின்றான்.
"ஏன், அப்போய்!” கேட்டுக் கொண்டு சின்ன மகன் முன்னுக்கு வருகின்றான்.
குடும்பத்தில் கடைக்குட்டி மகன் அவன். கடைக்குட்டிகளுக் குரிய செல்லக் குழப்படிகளுக்கு அவனிடம் கொஞ்சமும் குறை வில்லை. அம்மாவிடந்தான் எல்லாச் செல்லமும் குழப்பமும் அவன் சின்ன

Page 79
154 தெணியான்
மகனையும் அவன் அம்மாவையும் பல சந்தர்ப்பங்களில் பார்த்துத் தனக்குள் இரசித்துக் கொண்டு மெளனமாக இருந்து கொள்ளுவான். அவர்கள் நாடகத்தைக் கண்டு இரசித்து இரண்டு வாரகாலத்துக்கு மேலாகிறது. அவன் மனதில் அதை நினைத்து சிரித்த வண்ணம் சின்னமகன் தலையைத் தடவி விட்டுக் கொள்ளுகின்றான்.
அவன் வைத்தியசாலையில் இருந்து வீடு வந்து சேர்ந்துவிட்டான் என்ற செய்தி அட்டமருகில் வாழும் அயலவர் மத்தியில் உடனே பரவிவிடுகின்றது. அயலவர்கள், உறவினர்கள் செய்து கொண்டிரு ந்த வேலைகளை எல்லாம் அப்படியே போட்டுவிட்டு அங்கே வந்து கூடுகின்றார்கள். அவர்கள் ஆவலுடன் அவன் சுகம் விசாரிக்கின் றார்கள்.
"டொக்டர் அதிகம் பேச வேண்டாம் எண்டு சொன்னாலும் கேக்கிற தில்லை. ஆஸ்பத்திரிலேயும் எல்லாரோடையும் கதை" அவன் தமையன் தந்திரமாக அவன் பேசுவத்ை தவிர்த்து விட்டுக் கொண்டு அவர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் தானே விளக்கம் சொல் லிக் கொண்டிருக்கின்றார்.
தணிகாசலம் தான் நோயாளியாகி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, திரும்ப இன்று வீடு வந்து சேரும்வரை நடந்த சம்பவங்கள் ஒவ்வொன்றையும் மனதில் நினைத்துப் பார்க்க அவனுக்கு அதிசயமாக இருக்கிறது. சில சமயங்களில் வாழ்வின் யதார்த்தங்கள் கற்பனைகளை விஞ்சி நம்பத்தகாத அதிசயங்களாகத் தோன்றும். அவனுக்கு தனது வாழ்வு நம்பவியலாத ஒரு அதிசயமாகவே இன்று தோன்றுகிறது. அவன் உயிருடன் இருக்கும் பொழுது அவன் இறந்து போனான் என்னும் பரபரப்பான துயரச் செய்தி எங்கும் பரவி இருக்கி றது. இப்படி யாருக்கு நடக்கும்? அவனுக்கு இது நடந்திருக்கிறது. வாழும் மனிதனுக்கு மாத்திரம் மனது நிறைந்த அபிலாஷைகள் என்றில்லை.
மனிதன் மரணித்த பின்னரும் தனது பேரும் புகழும் எப்படி இருக்கி றது? என அவன் வாழுங் காலத்தில் அறிந்து கொள்ள அவாவுறுகின் றான். தனது மரணசச் செய்தியைத் தானே வெளியுலகில் பொய்யாகப் பரவவிட்டு பிறர் அறியாதவண்ணம் பதுங்கி இருந்து அந்தச் செய்தியால் மக்கள் படும்பாட்டைப் பார்த்திருந்தவர்க ளும் வாழ்ந்திருக்கின்றார்கள். அப்படி ஒரு புகழ் ஆசை. அந்த ஆசைகள் எதுவும் அவனுக்கில்லை. ஆசையைத் தூண்டி விடும் அளவுக்குப் புகழும் இல்லை.

தவறிப் போனவன் கதை 155
ஆனால் மனிதம் மரணித்துப் போவதில்லை என்பதை நம்புகின்ற வன் அவன். அவனுக்குத் தனது மரணம் பற்றி எந்த ஒரு கற்பனையும் இதுவரை மனதில் எழுந்ததில்லை. "வந்தது போல் போனான் காண்" என புதுமைப்பித்தன் சொன்னது போல என்றோ ஒரு நாள் நடந்து முடி யும். ஆனால் தனது மரணச் செய்தி மக்கள் மத்தியில் பரவியதைத் தொடர்ந்து நடந்தவைகளை அறிந்து வியக்காமலும் அவனால் இருக்க முடியவில்லை. அவன் வீடு வந்து சேர்ந்த பிறகு அவனைச் சுகம் விசாரி க்க வருகின்றவர்களைக் காண அவனுக்கு அதிசயமாக இருக்கிறது.
"ஸேர், என்னைத் தெரியுதா?”
"ஏனம்மா, அப்படி கேட்கிறாய்! நீ மட்டுமல்ல உன்ரை கணவனும் என்னிடம் படிச்சவர். பிள்ளைகளும் படித்தவர்கள். பேரப் பிள்ளைக ளும் படிக்கப் போகிறார்கள்"
அவள் வாய் திறந்து பேச இயலாது கண்ணிர் சிந்துகின்றாள். பல ஆண்டுகளுக்கு முன் அவனிடம் படித்தவள்.
"அழாதையம்மா. நான் சுகமாக வந்து விட்டேன்"
"தம்பி, நீ வாழ வேண்டுமடா..!"
அனைத்துக் கன்னத்தில் முத்தமிட்டு கண்ணிருடன் வாழ்த்து கின்றார் மூத்த ஆசிரியர் ஒருவர்.
"தணி!" கையில் பற்றிப் பிடித்து கலங்குகின்றார் பிரதிக் கல்விப் பணிப்பாளர் கருணானந்தம்.
ஆண்களும் பெண்களுமாக நித்தம் நித்தம் வந்து வந்து அவன் சுகம் விசாரித்துப் போகின்றார்கள்.
இவர்கள் இத்தனை பேராலும் நான் நேசிக்கப்பட்டவனா என அவன் வியப்புறுகின்றான். அன்று பரவிய மரணச் செய்தி இன்று ஒரு தடவை அவனைப் பார்த்துப் பேச வேண்டுமென அவர்கள் எல்லோரையும் ஆவலுடன் இழுத்து வந்திருக்கிறதா அவர்கள் செலுத்தும் அன்புக்கு தான் தனது கடமையை எப்படிச் செய்யப் போகின்றேன் என்ற தவிப்பில் அவன் நெஞ்சு கணக்கிறது. அவர்கள் எல்லோருக்கும் மேலாக முகமறியாத அந்த மனிதர். அநீதி. அவர் செய்த உதவிக்கு எப்படி நன்றி செலுத்தப் போகின்றேன்? அவன் உயிரை மீட்டெடுத்த

Page 80
156 தெணியான்
அந்த மனிதருக்கு எதனை ஈடாகக் கொடுக்கலாம்? ஓர் உயிரை விட மேலான ஒன்று இருக்குமானால் அதனையே அந்த மனிதர் பாதங்களில் வைத்து பணிந்து நிற்கத் துடிக்கின்றான்.
அந்த மனிதனை விரைவில் போய்ப் பார்க்க வேண்டும். தனது இதயத்தை அவர் பாதங்களில் வைக்க வேண்டும். தான் மரணத்தின் வாயில் இருந்து மீண்டும் உயிர் பெற்று வந்து நிற்பது கண்டு அந்த மனிதன் மகிழ்வதைப் பார்த்து தனது மனம் குதூகலிக்க வேண்டும். அவன் அந்த மனிதரையே இப்பொழுது தினமும் நினைத்துக் கொண்டிருக்கின்றான். அந்த நினைப்பு, அவனுக்கொரு பிரார்த்தனை. அந்த மனிதன் அவனது வழிபாட்டுக்கு உரியவர். அவன் மனதில் அவர் உருவத்தை "அவர் எப்படி இருப்பார்" எனக் கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்து, "இப்படித்தான் இருப்பாரென அந்த முகமறியாத மனிதனின் தோற்றத்தை உள்ளத்தில் உருவாக்கி வைத்திருக்கின்றான்.
அவன் படுக்கை விட்டு காலையில் எழும்போது அன்றும் நாசியில் இருந்து சிறிது இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. அதன் பிறகு மறுநாள் காலையில் மீண்டும் அதே கசிவு, அவன் நாசியில் இருந்து வடியும் இரத்தக் கசிவின் அளவு தினம் தினம் குறைந்து கொண்டே வருகிறது. அவன் நெஞ்சில் முகமறியாத அந்த மனிதரை விரைவில் சென்று தான் பார்க்க வேண்டும் என்னும் ஆவல் கணம் கணம் வளர்ந்து கொண்டு போகிறது.
"நான் போய் அநீதியை ஒருக்கால் காணவேணும் மைத்துனரிடம் தனது மன ஆதங்கத்தை ஒரு நாள் வெளியிடுகின்றான்.
"கட்டாயம் காணத்தான் வேணும்" என்கிறார் மைத்துனர்.
"6T660T (odulu 16) Tib?" "ஆஸ்பத்திரிக்குப் போனால் முன்னாலே தானே அவற்ரை கடை"
"அவற்ரை வீடு எங்கே இருக்கு"
"அது தெரியாது”
"எப்பிடிக் காணுகிறது?"
"அதிலே போனால் ஆள் இருப்பார்”
"எனக்கு அவரைத் தெரியாது"
"ஒ. அதுவும் ஒரு பிரச்சினைதான்! ஆரையும் கேட்டால் காட்டுவினம்”

தவறிப் போனவன் கதை 157
"அநீதி எண்டு சொல்லிக் கேட்க எனக்கு விருப்பமில்லை. அவருக்கு என்ன பெயர்?"
"பெயர் எனக்குத் தெரியாது. அப்ப. நான் கூட வாறன்" "அதுதான் எனக்கு விருப்பம். எப்ப போவோம்?"
"ஏன் அவசரப்படுகிறியள்! அதுக்குள்ளே அவர் என்ன சாகப் போகிறாரே? உங்களுக்கு நல்ல சுகம் வரட்டும்"
"ஒரு கிழமையாலே போகலாம். நான் சொல்லுறன்"
அந்தச் சமயம் அவன் தமையன் அங்கே வந்து சேருகின்றார். தம்பி, ஆஸ்பத்திரியிலே உன்னோடை கதைச்ச அந்த அதிபர் செத்துப் போனாராம்" என்கிறார்.
அவன் ஒருகணம் திகைத்துப் பின்னர் சற்று நேரம் மெளனமாக இருக்கின்றான். அவன் நீண்டகாலம் உயிர்வாழ வேண்டுமென அன்று வாழ்த்திய அந்த மனிதர் தனது வாழ்வை முடித்துக் கொண்டு போய் விட்டாரே! என அவன் உள்ளம் உளைகின்றான்.
அவன் வைத்தியசாலையில் இருந்து வீடு வந்து சேர்ந்து இரண்டு வார காலம் கழிந்து போயிற்று. அவன் மூக்கில் இருந்து இரத்தம் வடிவது முற்றாக இப்பொழுது தடைப்பட்டுப் போயிற்று. அவனுக்கு இருக்கும் உயர் இரத்த அழுத்தம் குறைந்து, முன்னர் போல சாதாரண நிலைக்கு இன்னும் வந்து சேரவில்லை. அது முற்றாகக் குறைந்து பூரண சுகம் வரும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அது இனி தன்னோடு சேர்ந்து கூடி வாழப் போகின்றது, அல்லது அதனுடன் நான் சேர்ந்து வாழ வேண்டும் என அவன் மனதில் நினைத்து நகைத்துக் கொள்ளுகின்றான்.
"இந்த மண்ணில் வாழும் சிந்திக்கத் தெரிந்த ஒவ்வொரு மனிதனுக்கும் இரத்த அழுத்தம் வரத்தான் செய்யும்" என அண்மையில் ஓர் எழுத்தாளர் சொன்னதை அவன் நினைத்துப் பார்க்கிறான்.
தன் உயிரை மீட்டுக் கொடுத்த முகமறியாத அந்த மனிதரைப் போய்ப் பார்ப்பதற்கு தான் இனிமேலும் காலதாமதம் செய்யக் கூடாது என்று அவன் தீர்மானிக்கின்றான். மைத்துனருக்குத் தகவல் சொல்லி அனுப்ப அவன் தயாராகின்றான்.
அந்த மனிதரைச் சென்று பார்ப்பதற்கு வெறுங்கையோடு போகக் கூடாது.

Page 81
158 தெணியான்
தான் கையில் எதனை எடுத்துக் கொண்டு போகலாம்? அவன் கொண்டு செல்வதை அவர் மனமுவந்து ஏற்றுக் கொள்வாரா? தெய்வத்தின் முன்னே பக்தன் செய்யும் நிவேதனத்தை எந்தத் தெய்வம் வாய் திறந்து வேண்டாம் என்று சொல்லுகிறது? அவன் தன் மனைவி பிள்ளைகளுடன் நிவேதனப் பண்டங்கள் பற்றி ஆலோ சிக்கின்றான். அவன் செய்யும் ஆயத்தங்கள் கண்ட அவர்கள் தங்க ளுக்குள் மெல்லச் சிரித்துக் கொள்ளுகின்றார்கள்.
அவர்களுக்குத் தெரியும், அவன் ஒரு காரியம் செய்வதாக இருந்தால், அதற்கான ஏற்பாடுகளைச் சில தினங்களுக்கு முன்னரே ஆரம்பித்து விடுவான். முன்கூட்டிச் செய்யப்படும் ஏற்பாடுகள் திட்டமிடல் என்பான். திட்மிட்டுச் செய்யப்படும் காரியங்கள் பிசகாது என்பது அவன் கருத்து. இதுவும் வழமையான அவனது திட்டமிடப்பட்ட நடவடிக்கைதான்.
அந்த மனிதருக்கு கையுறையாக எதனைக் கொண்டு செல்வ தென்பதில் அவனுக்கு ஒரே குழப்பம்.
அவன் இறுதியில் மனைவியின் ஆலோசனைக்கு இணங்கினான். புறப்படுவதற்கு முதல் நாள் இதரை வாழைப்பழம் இரண்டு சீப்பு வாங்கிக் கொண்டான். வல்வெட்டித்துறைக்கு ஆள் அனுப்பி சுவையான எள்ளுப்பாகு கொஞ்சம் வாங்கி எடுத்துக் கொண்டான். அவன் மைத்துனர் காலை பத்து மணிக்கு வீட்டுக்கு வந்து அவனை அழைத்துப் போவதாகச் சொல்லி இருக்கிறார்.
அவன் ஒன்பது மணிக்கே வீட்டில் இருந்து புறப்பட்டுச் செல்வத ற்குத் தயாராகிவிட்டான்.
பத்துமணி ஆகிறது. மைத்துனர் இதுவரை வந்திருக்க வேண்டும். தான் வந்து அவனை அழைத்துப் போகின்றேன் என்று சொல்லிச் சென் றவர் சொன்ன சொல் தவறமாட்டார் என்பது அவனுக்குத் தெரியும். அவன் கோபத்துக்காளாக ஒருபோதும் விரும்பமாட்டார். ஆனால் நேரம் கொஞ்சம் கொஞ்சமாகக் கடந்து போய்க் கொண்டிருக்கிறது.
காலை பதினொரு மணியாகிவிட்டது. ஆனால் மைத்துனர் இன் னும் வந்து சேரவில்லை. அவன் மனம் சலித்துப் போகிறது. அவனு க்கு சிறிது சிறிதாக மனதில் சினம் மூண்டு கொண்டு வருகிறது. இன் னும் மைத்துனர் ஒரு தகவல்தானும் அவனுக்கு அனுப்பி வைக்க வில்லை.
 

தவறிப் போனவன் கதை 159
மைத்துனருக்கு என்ன நடந்தது? இன்னும் ஏன் வராமல் இருக் கின்றார்? அவன் பொறுமை இழந்து தன் மகனை அழைத்து, மைத்து னரைப் போய்ப் பார்த்து வருமாறு சொல்லி அனுப்புவதற்கு எண்ணும் போது மைத்துனர் கேற் திறந்து உள்ளே வருகின்றார்.
அவர் முகம் கவலையினால் வாடிச் சோர்ந்து கிடக்கிறது. எப்பொழுதும் கலகலப்பாகத் தோன்றும் அவர் அந்த உற்சாகத்தைத் தொலைத்து விட்டவராகத் தோன்றுகிறார். அவர் உள்ளே வந்து கொண்டிருக்கும் வேகத்தில் என்றுமில்லாத ஒரு பதற்றம் அவரிட த்தில் வெளிப்படுகின்றது. அவர் அவனுக்கு அண்மையில் வருவத ற்கு முன்னரே "அநீதி அல்லவோ தவறிப் போனார்" என்று தடுமாறிக் கொண்டு கூறுகின்றார்.
“என்னது? அவன் அதிர்ந்து போகின்றான்.
நாசியில் இருந்து இரத்தம் வடிவது தடைப்பட்டுப் போக, அவன் இதயத்தில் இருந்து இப்பொழுது குருதி கொட்டுகிறது.
அவனுக்கு எல்லாம் இருளடைந்து ஸ்தம்பித்துப் போகிறது. எங்கும் செறிந்த மை இருள். எல்லாம் வெற்றுச் சூனிய அந்தகாரத் தில் சிறிது போது உறைந்து கிடக்கின்றன.
அவன் மைத்துனர் அவன் அனுபவிக்கும் மனத் துயரங்களை மெளன மாகப் பார்த்துக் கலங்கிக் கொண்டிருக்கின்றார். காலம் கரைந்து கழிந்து போய்க் கொண்டிருக்கின்றது. பொங்கி எழும் மனத்துயரை உள்ளே அடக்கி வைத்துக் கொண்டு கண்களைத் திறந்து மைத்து னரை நோக்கிக் கேட்கின்றான்.
"என்ன நடந்தது?"
"சுட்டுக் கொண்டு போட்டான்கள்"
"ஆர்?"
“தெரியாது”
"ஏன்?"
"தெரியாது"
மைத்துனர் சொன்ன பதில்களைக் கேட்ட பிறகுதான் அவனது அறி யாமை அவன் நெஞ்சை உதைக்கிறது. அறிவுள்ள எந்த ஒரு மனி தன் இந்தக் கேள்விகளுக்கு இப்பொழுது எங்கே பதில் சொல்லுவான்?

Page 82
160 தெணியான்
"எங்கே நடந்தது?"
"மந்திகையிலே. அவற்ரை கடைக்கு முன்னாலே."
"அவர் உண்மையிலே கடைதான் வைச்சிருந்தவரா?”
"ஆருக்குத் தெரியும்!"
"நான் போய் அவற்ரை முகத்தை ஒருக்கால் பாக்க வேணும்"
"ஆமி பொலிஸ் வந்து நிற்கும்"
"ஆர் செய்திருப்பினமோ?"
"உண்மை ஆருக்குத் தெரியும்?"
"மடிந்து போன அவர் எனக்கு உண்மையான ஒரு மனிதர்" அவன் அந்தத் துயரத்துக்கு மத்தியிலும் அப்பொழுது மனதில் நினைவு கூருகின்றான்.
யார் சுட்டார்கள்? ஏன் சுட்டார்கள்?
அவன் மனதில் எழும் இந்த வினாக்களுக்கெல்லாம் இப்பொழுது தெளிவான விடைகளை யாராலும் கண்டுகொள்ள இயலாது.
ஆனால் விடை அறியாத புதிராக இருக்கும் முகமறியாத அந்த மனிதனை நினைத்து கலங்கும் தனது விழிகளில் இருந்து வடியும் கண்ணிரை அவன் மெல்லத் துடைத்து விட்டுக் கொள்ளுவதைத் தவிர வேறு என்னதான் செய்ய முடியும்?


Page 83
எஸ். கொடகே சே 675, பீ. டி எஸ். குலரத்ன மாவத்ை தொலைபேசி (011) 2685369, 26 godageem(0sltlk WWW.g
 

ISBN 978-955-30-2958-4
காதரர்கள் தை, கொழும்பு 10.
86925, 4-614904 Odage.com
만 17 명 또 도크 IID 군 5 또 내
e____C = 3^2=2