கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உயிரோடிருத்தல்

Page 1
யாத்திரீகனின்
இ8
 


Page 2

سرتاجیرنے پیشہ سے کے %ترکہ - 7 کs
· cތ/z<ޖ/2)
2)>7

Page 3

مصر میں گے مرکز؟
-31 っ/a سر
உயிரோடிருத்தல்
யாத்திரீகன்
மீளுகை 2

Page 4
உயிரோடிருத்தல் யாத்திரீகனின் கவிதைகள் முதற்பதிப்பு
ஆனி 2005
பதிப் புரிமை
யாத்திரீகன்
ഖണിuf(
மீளுகை2 இமையாணன் கிழக்கு, உடுப்பிட்டி. அச்சுப்பதிப்பு வேழன் பதிப்பகம் கிளிநொச்சி, அட்டைப்படம் புகழேந்தி (தமிழ்நாடு) வடிவமைப்பு சித்தாந்தன், தானா.விஷ்ணு உள் ஒவியங்கள் செல்வன்,சித்தாந்தன். ஒளிப்படம் (யாத்திரீகன்) அ.நிஷாந்தன்
விலை
ღbLJIT. 80.00

1 ܝܢ
சி நல்லராசன் சு. இரத்தினவதி சிசரஸ்வதி தே. யோகேஸ்வரி சிகுவேந்திரா @. 6ിജധഴ്ച് ந. ரகுமோகன் 0ff. ബണ്.ഗ്രി ജൂ. ഉസ്തു60സ്ക് கிஜனார்த்தனி ந. பாக்கியவதி சிபூங்கெளரி வே. இந்துமதி நா. கமலவதி சி சந்திரன் മ, ബിറ്റുധരൂ,ഗ്
இவர்களுக்கு இது

Page 5

கவிதை என்றோர் யாத்ரீகம்
யாத்திரீகன் இன்றைய ஈழத்துத் தமிழ்க்கவிதை உலகில் ஓர் இளம் பயணி. இவனது கவிதைகளின் ஊடாக நானும் பயணிக்கையில், இவனது கவிதைப் புலத்தின் வழியாக இன்னும் ஒன்றைப்பற்றிப் பேசத் தலைப் படுகிறேன். அது இவனது கவிதைகள் பற்றிப் பேசாது இன்றைய இளம் தலைமுறையினரின் கவிதைகள் எட்ட வேண்டிய எல்லைகள் பற்றிப் பேசுவதாகும். எட்ட எட்டப் புதிய எல்லைகள் விரியும். எல்லைகள் விரிய விரிய புதிய புதிய கட்டவிழ்தல்கள் நேரும். அந்த எல்லைகள் நோக்கி விரிவதற்கான உந்துதலை யாத் திரீகனுக்கும், இவன் போன்ற இளைய கவிஞர்களுக்கும் எட்ட வைப்பதே இதன் நோக்கம்.
யாத்திரீகன் என்னுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார். உண்மைகளே எப்பொழுதும் கவிதைகள் ஆக முடியும்’ இப்படிச் சொல்லும் பொழுது என்றைக்குமான நிரந்தரமான உண்மை பற்றிப் பேசுகிறாரா? அல்லது சமகாலத்தின் உண்மை நடப்புகளைக் கருதுகிறாரா?
வந்திரீகன்

Page 6
எனும் கேள்வி எழுகிறது. யாத்திர்கனின் கவிதைகளுக்குள் ஊடாகப் பார்த்தால் ஒன்றிரண்டு நீங்கலாக ஏனையவை சமகால நடப்புகளின் பதிவுகள்தான்; அவை குறித்த கேள்விகள்தான் அல்லது அழுத்தங்கள்தான். அவரது கவிதை மொழியிலேயே சொல்வதாயின் “இராட்சத காலங்களின் தடங்கள்’. இந்தத் தடங்களைத்தான் இக்காலக் கவிஞர்களின் கவிதைகள் பலவற்றிலும் காண்கிறோம். ஆளுக்காள் தடங்களின் பதிவிற்கான மொழி மாறுபடும். சிலர் காயங்களின் மொழியிலேயே பேசுவார்கள். அறுவைச் சிகிச்சை மருத்துவனின் கத்தியால் வெட்டிப் பிளந்த புண்ணின் மொழியாகவும் அது இருக்கும் (அஸ்வகோஸ்); விழுப்புண்ணின் மொழியாகவும் இருக்கும். சிலரது மொழி புண்ணுக்குப் புனுகு தடவிப் பேசும். சிலரது மொழி பூத்துாவும். ஆயினும் இராட்சத காலங்களின் தடங்கள் ஆங்காங்கு புலப்படும். தடங்கள் பதிப்பதனோடு கவிதைகளின் தேவை தீர்ந்து விடுமா? காலத்தின் தேவைகளை நிவர்த்தி செய்வதுதான் கவிதைச் செயற்பாடா? காலத்தின் தேவைகளையும் தாண்டிய தேடல் கவிதைக்கு இல்லையா? தேவைகள் தீர்ந்த பின்னால் கவிதையின் தேடற்புலன் புதிய திசை நோக்கி நீளாதா?
சில்லறைகள் குலுங்குகிற பொட்டலம் என்பதை மீறி
கவிதை ஒரு சிந்தனா தரிசனத்தின் வாசலைத் தீவிரமாய்
தட்டித் திறக்காதா? இப்படிச் சில கேள்விகள் எழுகின்றன. இப்படிக் கேள்விகள் கேட்காமல் ஒரு கவிஞன் உண்மை
உயிரோடிருந்தர்

யாத்திரீகனாதல் முடியாது. ஏனெனில் கவிதை என்பதே ஒரு தேடல்தான்.
“கவிதை என்றதும் எனது மனக் கண்ணில் எப்போதுமே இரண்டு இறக்கைகள் தோன்றுகின்றன’ என்கிறார் சுந்தரராமசாமி.
“எனக்கென்னவோ பயணித்துக்கொண்டேயிருக்க வேண்டும் போலிருக்கிறது’ என்கிறார் ஜபார்.
“போக்காளர் நாளாந்தம் போனவழிக் கோடு ஊடறுத்தே ஒடும் உணர்ச்சிப் பொறி போல’ என்கிறார் மு.பொ.
"ஒ ஓ என்னருமை வண்டிக்காரா ஒட்டு வண்டியை ஒட்டு’ என்கிறார் நீலாவணன்.
நிலவே நீ நிறைந்துள்ளாய்! நானோ ஒர் கிக்கிலிக்கொட்டை' எனப் பாடுகிறார் சண்முகம் சிவலிங்கம்.
நிலவும் வழிப்போக்கனும்’ எனும் கவிதையில், நிலவை நோக்கிச் சப்தமிடும் குரல்தான், தேடல்தான் கிக்கிலிக்கொட்டையின் குலுங்கல்.
இப்படியாகப் பார்த்தால் எல்லாக் கவிஞர்களுமே வழிப் போக்கர்கள்தான். யாத்திரைகளின் இலக்குகள் வேறு பட்டாலும் யாத்திரை இல்லாதவர்கள் கவிஞர்களாதல் முடியாது. உலகின் பல்வேறு யாத்திரைகளை நிகழ்த்தும் கவிஞர்களை தமிழிற்கு கொண்டு வந்து விட வேண்டும் என முயலும் சிவசேகரம், சோய போன்றவர்களெல்லாம் உலக யாத்திரைக்காரர்களே தான். ‘யாத்திரீகன்’ எனப் பெயர் தரித்த இந்த இளங்கவிஞன் தேடல் நிகழ்த்த மனங்கொண்ட யாத்திரைக்காரன்தான். தேடல் உடைய கவிஞர் யாவர்க்குமே யாத்திகன்’ எனும் பெயர் பொருந்தி வரவே செய்யும்.
வாத்திரீகன்

Page 7
தேடல் என்பது ஒரு பயணம். நீள நடக்கத் தெரியாதவன் கவிஞன் அல்லன். மண்ணில் நடப்பது மட்டுமல்ல கண்ணுக்குப் புலனாகாத ககன வழிப் பயணமும் கவிஞனுடையது. அதனால்த்தான் கவிஞர் நீலாவணன் ககனத்தெழுவில் முடிவில் கூட பரிதிக் குஞ்சின் ஒளிர்வைக் காட்டுகிறார். முடிவற்ற பயணத்தின் இடைவிடாத ஒளிர்வைக் கைவசம் பேணுபவனே கவிஞனாவான். அனுபவச்சூட்டின் தகிப்பின் ஒளிர்வு கவிதையில் சுயம்பெற வேண்டும். கவிதை என்பது சுயத்தின் ஒளிர்வலம்.
என்றைக்கோ ஊற்றுக்கண் உடைத்துத் திறந்த ஆறு இன்று வரை கடலை நோக்கிப் பயணித்தபடியே இருக்கிறது. ஆறு என்பதற்கு வழி என்றும் பொருள்.
ஊடறுத்து வழிகிழித்துப் பாயும் ஒட்டம் அது.
“காவிரியின் வழி நடையை நீ நடந்தாய் வாழி காவேரி என வாழ்த் திசைத்துப் பாடுகிறான் இளங்கோ. “தணி ணென் றொழுக்கமும் தழுவிச் சான்றோர் கவியெனக்கிடந்தது கோதாவளி’ எனக் காட்டுகிறான் கம்பன். சான்றோர் கவிதையின் ஆற்றின் தண்ணென்ற ஓட்டமும், ஆற்றின் ஓட்டத்தில் ஒளியுறத் தெளிந்த கவிதா அமைதியின் கிடக்கையும் ஒன்றையொன்று தழுவிய கவிதா இயக்கம் கம்பன் காட்டுவது. ஒட்டம்
அல்லது ஒழுக்கம் கவிதா இயக்கம் கிடந்தமை என்பது
கவிதையின் உள்ளுறை அமைதி. இது ஒரு கவிஞனின்
உயிரோடிடுத்தர்

கவிதையில் ஒருங்கே தழுவிக் கிடப்பது கவிஞனின் தெளிவான தரிசனத்தைப் பொறுத்தது.
தரிசனம் என்பது தேடலின் பெறுபேறு. தேடல் என்பது ஒரு தீவிர நிலை தீராத இயங்கு நிலை. கடல் தாணர்டிக் காற்றுவெளிப் பயணம் செய்த அநுமன் திரும்பி வரும் போதில் அவனது உள்ளங்கை விரிப்பில் சஞ்சீவி மலையே குடியிருந்தது. இறந்தாரை எழுப்பும் சஞ்சீவி மலையை அவன் காவி வருகையில் அதன் காற்றுப் பட்டதுமே இயக்கமற்றுக்கிடந்த ஒரு கூட்டமே தமது இறந்து பட்ட கணிகளைத் திறந்து கொண்டது.
ஒரு சொல்லின் தீவிர நம்பிக்கை ஒளியில் ஊன்றியெழுந்த உள்முகத் தீயின் தீவிரத்தோடேதான் அநுமனின் திசைவெளிப்பயணம் தொடங்கியது. தேடலில் தொடங்கிய தீவிரத்தின் தீஅவியாத் தொடர்ச்சியான காவுகைதான் துரவெளித் தரிசனமாகிறது. அகமுகத் தரிசனம: உள் - வெளித்தரிசனம் இந்தத் தரிசனம்தான் ஒரு சமூகத்தின் விழிப்பு நிலையைத் தூண்டி நிற்பது: தத்துவ நிலையாகத் தாண்டிச் செல்லவும் துணை நிற்பது.
இன்றைய கவிஞர்களிடத்தில் இந்தத் தரிசனம் நோக்கிய தேடலோ அதற்குரிய அறிவு நிலைத் தூண்டலோ துலங்குமாயிருந்தால் இயக்கமற்றுக் கிடப்போரை எழுப்புவிக்கும் சஞ்சீவி மலையின் வேர்களைக் கண்டடைவார்கள். வேர்களை
வந்திரீகன்

Page 8
1 O
நோக்கிய பயணம் ஒரு சமூகத்தின் தேசிய எழுச்சியின் போது தீவிரம் அடைகிறது. பலஸ்தீன எழுச்சியின் போது பல கவிஞர்கள் தமது வேர்களின் வீரியத்தைக் கண்டு கொண்டர்கள். அப்போது யுகங்களிற்கு அப்பால் பாய்கிறது எனது வேர் என்று பாடினான் ஒரு பலஸ்தீனக் கவிஞண் . வரணி ட வேர்களின் முறுக்காயிருந்தன பலஸ்தீனக் கவிதைகள்.
வேர்களைத் தேடுதல் என்பது போர் யுகத்தின் புகழ் பாடுதல் என்றாகாது. நிலங்கள் தழுவிய ஒழுகலாறில் சுட்டி ஒருவர் பெயர் கூறாக் காதலின் அகம் பொதுமையில் தாம் கலந்து நிற்பதுவும் வேருக்குச் சொந்தமானதுதான். அறநெறிக்காலத்தில் நிலந் தழுவிய வாழ்வொழுக்கம் பிடுங்கப்பட்டது. பின்னால் பக்தி இலக்கிய காலத்தில் நிலம் சார் ஒழுக்கத்தை இன்னொரு தளத்தில் நடுகை செய்ய ‘மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்’ என உறுதிபடச் சொல்லியதும் எமது வேருக்குச் சொந்தமானதுதான். “எந்தை புகலூற் பாடுமின் புலவீர்கள்’ என்று வாழ்வழிந்த ஊர்களை புதுப்பிக்க கோரிக்கை விடுத்து ஊரின் மக்களை எல்லாம் ஆற்றுப்படுத்தியவர்கள் ‘யாதும் ஊரே யாவரும் கேள்’ என்ற பொதுமை பாடிகளின் வாரிசுகள்தான். இது ஒரு நெடியவேரோட்டம். இந்த வேரோட்டத்தின் ஊடே ஆதிப் பொதுமையின் பிரக்ஞையின் தம்முள் கறந்தெடுத்தவராய் சஞ்சீவிச் செடியின் சாறு கலந்து இன்றைய நமது நோய்கட்கு மருந்திட வல்ல கவிஞர்கள் எத்தனை பேர் உள்ளார்கள்?
உயிரேறழருத்தர்
 

11
இன்றைய இளைய கவிஞர்கள் தமக்குள் எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வி இது: கேள்வி என்பது தீவிரமான சுய விசாரணையின் தேடலாக வேண்டும்.
வேர்களை நோக்கிய தேடல் வெறுமனே ஒரு குறியீட்டுச் செயற்பாடான நிகழ்வல்ல; ஆதிக்குழு மனப்பாங்குள் அடி கோலிக்கிடப்பதுமல்ல, ஒரு வேட்டை யுகதி தின விலங் குதி தன தி தை மீண - டும் அரங்கேற்றுதற்கான ஒத்திகையுமல்ல. எம்முடைய இரத்த வோட்டத்திற்குள்ளும், சிந்தனை ஓட்டத்திற்குள்ளும், இழந்து போய்விட்ட வீரியத்தை மீளக் கொள்வனவு செய்து இன்றைய யுகத்தின் பயணப்பாட்டுக்கு பாய்ச்சுதல் ஓர் இயக்கம். நாகரீகத்தின் முதற் காலடியின் நடைப்பயணத்தில் இருந்த ஆதிப் பிரக்ஞையின் துடிப்பை இன்றைய பயணத்திற்குரியதாய் இசைவிக்கும் ஒரு பண்பாட்டு அசைவியக்கம். இன்றைய உலகக் கவிதா இயக்கத்திற்கு வலுச் சேர்ப்பதாக ஆபிரிக்க 56.6big,6ft 6 ypsi-fu FLUTE POETRY, DRUM POETRY போன்றனவெல்லாம் அவர்களது ஆதிவேரோட்டங்களில் இருந்து உறிஞ்சி அளித்த ஊட்டங்கள்தான் பிக்காசோ போன்ற ஒவியக்காரர்கள் நிகழ்த்திய அற்புதங்களுக்குரிய மூலவுருக்களில் இருந்து பெற்றவைதான் நவீனத்துவம் என்பதைக் கூட நாம் நமது தொல்மரபுகளிலிருந்தும் மீட்டியும் முழங்கியும் மீளப்பெறலாம். ஆனால் நாம் அவ்விதம் தேடுவதில்லை. மண்ணுள் தோன்றிய வராக
ധ൬്ര്

Page 9
12
அவதாரமாகவும், விண்ணில் படரும் சுருதியை மீட்டும் கருடராயும் இருக்க நாம் சம்மதிப்பதில்லை. இளைய யாத்திரீகர்களே! தேடலின் திசைவிரித்த உலகம் உங்களது. தேடிச் செல்லுங்கள் இளைய பறவைகளே திசைகள் திறந்தபடியேயுள்ளன. அறிவும் உயர்வும் இருகை இறக்கைகளாக முன் நீட்டும் அலகே குறியாக ஒளிர, எரிமலைகளின் மேலாக பறந்தபடியே இரு, உனது அடுத்த இறக்கம் மண்ணில் ஒரு பெரும் வருகையாக, புதிய எல்லைகளில் குடியமர்ந்து இருக்கட்டும்.
சு.வில் வரத்தினம் திருகோணமலை
12.08.2004
உயிரேமுருத்தர்
 

13
என் வழித்தடங்களிலிருந்து.
யுத்தத்தின் இராட்சத காலங்களின் தடங் கள் என் மீது தொடர்ச்சியாய் அழுத்திச் செல்கை யில், அப்போது எனக்குள் இருந்த உணர்வுகளா கவே இந்த எழுத்துக்களை நான் காணர்கின்றேன். “உணர்மைகளே என்றும் கவிதைகளாக முடியும்” என்கிற யதார்த்தத்தை நம்புகிறவன் நான். அதனாலேயே போரும் போருக்குள்ளான வாழ்வும், அதனுள் முக்குளித்து தத்தளித்த அவ லங்களும் அதிலிருந்து மீளெழ அகதியாய் அலைந்ததும் இன்னும் மீளெளலுக்காய் ஓடி யோடி தோற்றுப் போன அலுப்புக்களுடன் மணர் ணின் விடுதலையின் மீதான வீரம், தீரம் தியாகம் என்பவற்றை என்னால் இயன்றவரையில் கூற முற்பட்டிருக்கிறேன்.
எனது பாடசாலை நாட்கள் போக எனது ஆரம்ப கவிதைகளை இமையூர் இமையாளன் என்ற புனை பெயரில் ஈழநாடு வாரமலரில் முதன் முதலாய் எழுதினேன். காலவோட்டத்தில் எனக்கும் கவிதைக்கும் இடையேயான தொடர்பு அறுபட்டுப் போனது. பின்னர் எனது முன்னேற் றத்தில் அக்கறையுள்ள திரு. வளநாடன் அவர்க ளின் ஊடாக புதுவைரத்தினதுரை,கருணாகரன் அவர்களின் தொடர்பு கிடைத்தது. அப்பொழுது
வந்திரீகன்

Page 10
14
வன்னியின் களநிலவரங்கள் என்னைக் கவிதை எழுத வைத்ததாக உணர்கிறேன்.
1999 ஆண்டு தொடக்கம் எனது அறிவுக்கு எட்டியவரையில் எதையெதையோ எழுதி எனக்கு நானே விமர்சகனாக இருந்து கிழித் தெறிந்த எழுத்துக்கள் பல. எனினும் 2000ம் ஆணர்டிலிருந்து எனது கவிதைகள் சஞ்சிகை களில் வெளிவந்தன. குறித்த கவிதைகளே நான் எழுதியிருப்பினும் எனது காலத்தில் அது வெளி வருவதையிட்டு பெருமகிழ்வடைகிறேன்.
எனது தந்தை நாடக நடிகனாக இருந்தமை யினால் எனது நாட்டமும் நாடகத்தை நோக்கிச் சென்றது. அதனால் என் கவிதைப்பிரவேசத்தை ஒரு விபத்தாகவே காணர்கிறேன். என்னைக் கலைகளிலும், கல்வியிலும், நண்பனாக இருந்து என்னை வளர்த்து விட்டதில் என் தந்தை, தாய்,
பெரும் பங்காற்றினார்கள் என்பதில் பெருமகிழ்
வடைகிறேன்.
கவிதைகளின் மேல் எனக்கிருந்த ஆர்வம் என் நண்பர்களினால் மேலும் மேலும் வளர்க்கப் பட்டது. என்னைவிட என் நண்பர்களே இந்தத் தொகுப்பை வெளிக்கொண்டு வருவதில் மிக வும் ஆர்வமாக இருந்தார்கள். அத்தோடு
கவிதை பற்றிய கலந்துரையாடல்களின் ஊடாக
என்னை ஊக்குவித்து எனது தொகுப்பிற்கு முன்
உயித்ரமுருத்தல்

15
னுரை எழுதித் தந்த கவிஞர் சு.வில்வரத்தினம் அவர்களை என்னால் மறக்க முடியாது.
மேலும் இந்த தொகுப்பை ஆக்கித் தருவதில் என்னோடு நின்று உழைத்த என் நண்பர்களான தானா விஷ்ணு சித்தாந்தன், யுகசேனன், ஞாபகன், போன்றவர்களோடு எனது மாமா சாந்தனர், நணர்பன் கோபு, ஆகியவர்களை என் மனத்தில் ஒற்றிக்கொள்வதோடு, தொகுப்பின் முன் அட்டை ஒவியத்திற்குச் சொந்தக்காரரான ஒவியர் புக ழேந்திக்கும் அதனைத் தந்துதவிய கருணாகர னுக்கும், உள் ஓவியங்களை வரைந்து தந்த நணர்பன் செல்வனுக்கும் நன்றிகள்
இத் தொகுப்பின் கவிதைகளைக் கணனியில் பதித்துத் தந்துதவிய நண்பி சாந்திக்கும் அத்தோடு இத்தொகுப்பினை வெளியிடுகின்ற மீளுகை2 வெளியீட்டகத்திற்கும் அச்சுப்பதித்துத் தருகின்ற வேழன பதிப்பகத்தாருக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கின்றேன்.
யாத்திரீகன் இமையாணன் கிழக்கு, உடுப்பிட்டி 21.07.2004
uസ്ട്ര്ര്

Page 11
உயிரோழருத்தல்
மீளத்திரும்பும் வார்த்தைகள்
வெளியிலிருந்து உள்விரிந்த காற்று உயிரோடிருத்தல் மூதாட்டியின் விழிகளுக்குள் ஒளிர்வுறும் கனவு கனதிகள் குருட்டு வெளவால்கள் தேர்வு சூர்யோதயம் மெய்ப்படும் கவிதை
நிலவு உதிர்தல்
இன்னுமொரு குருஷேத்திரம்
வெறுமை படர்ந்த சேற்றுக்குள் மாறும் முகவரிகள்
பேய்களின் பெருநதி
அர்ச்சிப்பு சூரியக்கரங்கள் நர்த்தனம்
மீளுயிர்ப்பு நடுக்கமுறும் நாட்கள்
வெல்லப்பட முடியாத மரணம்
உயிரேமுருத்தர்

17
மீளத்திரும்பும் வார்த்தைகள்
மீளவும் மீளவும் முற்றுப்பெறாத இடங்களிலிருந்தே கவிதைகள் எழுதப்படுகின்றன. வலிபுரிந்த தாள்களிலிருந்து சொற்கள் உதிர்ந்து விழுகின்றன.
ഗ്രസ്കര്

Page 12
18
இலக்கணம் பிழைத்துப்போக, இலக்கியம் சேர்த்துக் கொள்கிறார்கள்.
கவிதை தனது
எல்லாப் பரிமாணங்களையும்
இழந்து போனது.
நீள் மூச்சொன்று ஆழக்கிடங்கிலிருந்து வெளிக்கிளர்ந்தது.
மீளவும் மீளவும் முற்றுப்பெறாத இடங்களிலிருந்தே கவிதைகள் எழுதப்படுகின்றன.
()
உயிரேறழருத்தம்
 

19
வெளியிலிருந்து உள்விரிந்த காற்று
பெற்றவரிடம் கேட்டேன் இவள் யாரென தெரியாது விடை வந்தது.
நண்பர்களிடம் கேட்டேன் யாரென்று புரியாது விழித்தார்கள்.
இரத்த உறவல்லவெனினும்
உடன் பிறப்பு என்றேயழைத்தாள்.
ஆத்மார்த்தமாக ஏதோவொன்று பரிமாறப்படுவதை
உணர்கிறேன்.
வந்திரீகன்

Page 13
2O
கோபிப்பாள்
அடிப்பாள் சிரிப்பாள்
கதைக்காள்.
அவளைப் பார்த்துக் கேட்டேன் நீ யாரென
நான்தான் என்றாள் அவள் .
புன்னகை மாறாமலே.
குறு குறுக்கும்
விழிகளுக்குள் குழந்தையாய் மாறியிருப்பாள்.
என்னை நான் கேட்டுக் கொள்கிறேன் அவள் யாரென்று
ஆழக் கிடங்கிலிருந்து மன வெளி ஊதிப்
பெருத்துக் கொள்கிறது.
உயிரோடிருந்தர்
 

21
இடை வெளிகளற்ற அவளின் விம்பங்களால்தான் என் உலகம் உருள்வதாய்
நினைத்துக் கொள்கிறேன்.
மனதால் என்னைத் தத்தெடுத்துக்கொண்டு என்னுள் விரிந்து கொண்டே இருக்கிறாள் தன்னை எந்த உறவு முறைகளுக்குள்ளும்
திணித்துக் கொள்ளாமல் நிதானமாக
ഗ്രസ്കര്

Page 14
உயிரோடிருத்தல்
ஒளிர்கின்ற நட்சத்திரங்களிலிருந்து நம்பிக்கைத் துளிகள் உயிர்ப்பெய்துகின்றன. விழிகளின் ஒளிகள்
insT6Ö) LAYU TGF விழிகள் குறுகுறுக்கின்றன. நட்சத்திரங்கள்
இடைவிடாது ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன.
()
உபித்ரமுருத்தங்
 

23
முதாட்டியின் விழிகளுக்குள் ஒளிர்வுறும் கனவு
காவு கொள்ளப்பட்ட நகரத்தின் சாட்சியாய் வாடிக்கிடந்தன பூக்கள்.
முன்னைய நாட்களில் பூக்கள் அழகாய் இருந்ததாய் பொக்கை வாய் திறந்து பாட்டி சொற்களை விழுத்தினாள். (தனது சொந்த ஊரிலேயே சாக வேண்டும் என்ற ஆசை நிறைவேறாமலே விழிகளை மூடினாள்)
இன்னும் பாட்டியின் ஆத்மா அலைவதாகவே படுகிறது.
0.
u൬ര്

Page 15
24
கனதிகள்
நினைவிலெழாமலிருக்க
நியாயமில்லை
என்றோ அவர்கள் தங்களுக்காக என்னுடன் நட்போடு இருந்தார்கள் கனதிகள் அவர்களை அழுத்திய பொழுதும் - நான் நகரவில்லை அவர்களை விட்டு,
உட்பித்ராடிருந்தர்
 
 

25
காலம் சமமானது ஒரு பரப்பிற்குள் ஆனால் காலச் செயற்பாடுகளே வித்தியாசப்பட்டுப் போகிறது திரைக்கு முன்னால் பின்னால் உலவும் மனிதர்களைப் போல.
ஒரு நாள் ஊடறுத்தது அவர்களின் சுயநலரேகைகள். ஒரு வேதனைப் பொழுதில் எனக்கும் அவர்களுக்குமான பூச்சிய இடைவெளி விசாலிக்கத் தொடங்கியது நான் தனித்தீவில் விடப்பட்ட ஊமை மனிதனைப் போலானேன்.
அவர்கள் மனங்களுக்கு சாயங்களையிட்டு, வேசப்படுத்தியிருந்தார்கள் தம்மை. என் வியர்வைத்துளி
அவர்களது மனவெள்ளைப்பூச்சை
கழுவிப் போனது.
പ്രസ്കാര്

Page 16
26
எதுவுமே நடக்கவில்லையென்ற அவர்களின் அலட்சியத்தால் பிறிதொரு பொழுது புஸ்ப்பிக்காமலே உதிர்ந்து போகிறது.
என் இதயம் ரணப்பட்டு போயிற்று நான் புரிந்துணர்வு மனிதன் என்பதை அவர்கள் புரிந்து விட்டிருக்காமையால்.
நிஜத்தை நிறம்மாற்றி நான் பல தடவை என்னை சமரசப்படுத்த முயன்றும் தோற்றுப்போய் - எனக்குள் இன்னமும் அழுதுகொண்டிருக்கிறேன்
எனக்காகவும் அவர்களுக்காகவும்.
()
உயித்ரமுருந்தர்
 

27
குருட்டு வெளவால்கள்
வனாந்தர இரவுகளில் வெளவால்கள்
குரூரங்களை வெளிப்படுத்தியபடியிருக்கின்றன.
குருட்டு வெளவால்களுக்கு வீங்கிப் பெருத்துப்போயின செவிகள்.
மின்மினிப் பூச்சிகளுக்காய் பரிசளிக்கப்பட்ட ஒவ்வொரு இரவிலும் அவை தமதொளியை தம்முள் இழுத்துக்கொள்கின்றன.
நெருக்கப்பட்ட மரங்களின் இடைவெளிகளுக்குள் மோதி உதிர்ந்து போன
வெளவால்களின் செட்டைகள் இன்னும் அந்தரத்திலேயே
ഗൂഴ്ത്ത്

Page 17
28
தொங்கிக் கொண்டிருக்கின்றன.
மின்மினிப் பூச்சிகள்
மட்டும்
தமதொளியை
தமக்குள்ளேயே
இழுத்துக் கொண்டேயிருக்கின்றன.
()
உயிரேமுருத்தர்

29
தேர்வு
தேர்வுகளுக்கான அட்டவணைகள் தயாரிக்கப்பட்டிருந்தன. பட்டங்கள் பெறுவதற்கான ஆதாரத்தேர்வு அது.
காலம் அவர்களை
கழுவி விட்டிருந்தது வாழ்க்கையிலிருந்து.
வந்திரீகன்

Page 18
III
III
விரிக்கின்ற புத்தகத் தாள்களில் தெளிக்கப்பட்டிருக்கிற பச்சை ரத்தத்தின் சிதறல்கள் காயாமல்
பிசுபிசுத்துக் கொண்டிருந்தது.
ஒவ்வொரு தாளும்
சோகமாய்
உருமாறியிருந்தது.
பட்டத் தேர்வுக்கும் வாழ்க்கைத் தேர்வுக்கும் இடையிலான தேர்வு தொடங்கியிருந்தது.
வாழ்க்கைக்கான தேர்வினை அவர்கள் அரவணைத்துக் கொள்கிறார்கள். அவர்களுக்காக காத்திருக்கிறது பட்டத்திற்கான தேர்வு.
()
உபித்ரமுருத்தர்
 

31
சூர்யோதயம்
இருண்ட பொழுதெல்லாம் அஸ்தமனமாகிக் கொள்கிறது. விழிகளின் ஊடுகளில் உரசிச் செல்லும் கனவுகள் பூத்துக் குலுங்குகின்றன.
உதடுகள் திறக்க மறந்த மனிதர்களுக்கு
சூரியனின் உதித்தல் பற்றி கவலையில்லை சூரியனின் மறைவும் அவர்களுக்கு விடிவதாய் அமைந்து விடுகிறது நம்பிக்கையால்.
வந்திஃன்

Page 19
இது உனக்கும்
எனக்குமான காலம்.
மலர்களின் விரிதல் பூஜைக்காய் ஆகிறது. வாடி விடுவோம் எனத் தெரிந்தும், அது மலர்கிறது சந்தோஷ மிதப்பில், அது அதற்கான காலம்.
நதிகள் கூடிக் கடலில் சங்கமித்துக் கொள்கிறது-உவர் எனத்தெரிந்தும் உறவு கொள்கிறது, உறவை சென்றடைந்ததால்.
நீயும் நானும் மட்டுமே
இங்கு வாழ்க்கையைத் தொலைத்து விட்டு.
எமதிருப்பு அடையாளப் படுத்தப்பட்டு விட்டதாகச் சொல்கிறார்கள், விடியும் பொழுதும் - சூரியன் மறையும் பொழுதும்.
இது உனக்கும் எனக்குமான காலம்.
()
உயிரேமுருத்தல்
 
 

33
மெய்ப்படும் கவிதை
பூக்களின் சிறகடிப்பு மனதின் படபடப்பாக, வான வெளியில் 6T୩୬) பறப்புப் பற்றிய கவிதை அவளால் மெய்ப்பிக்கப்படுகிறது.
ரம்மியப் பொழுதுகளில் அவளின் ஒவ்வொரு அசைவும்
எனககுள சிறகுகளை விரித்துக் கொள்கின்றன.
குளிரும் கோடையும் நிஜக்குணங்கள் மாறி மாறிக் கழிவதான உணர்வில் அதிசயித்துப் போகிறேன்.
படபடக்கும் அவள் விழிகளுக்குள் என் இதயம் தொலைந்து போனது. கனவிரவுகளில் அவளுடனான பயணம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.
()
வந்திரீகன்

Page 20
54.
அழிவு காலத் தேவதையின் தாண்டவம்
சாவெழுதிப் போன புல்லாங்குழலின் துளைகள் உதிர்ந்து கிடந்தன.
வீணையின் நரம்புகள் அறுபட்டுப் போயின. அவள் தன்னை அலங்கரித்தபடியிருக்கிறாள்.
மிருதங்கத்தின் தோல்கள் கிழிந்து கிடந்தன. குயில்களின் குரல்கள் கரகரத்துப் போயின. அவள் தேனைப்
பருகியபடியிருக்கிறாள்.
மத்தளங்கள்
சுதிமாறி ஒலித்துக் கொண்டிருந்தன. அவள் பரத நாட்டியத்திற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள்.
உயிதராடிருத்தம்
 

35
அவளது ஒவ்வொரு அங்க அசைவிலும் ஒலங்களும், விரக்திகளும் மாறி மாறித் தொடர்கின்றன. பாவ, தாள ராகங்களை தனக்கேற்றவாறு மாற்றுகிறாள். அவளால்
பரத நாட்டியம் நிர்வாணப்பட்டுக்கொண்டேயிருக்கிறது.
()
രൂര്

Page 21
56
நிலவு உதிர்தல்
அது நிலவு உதிர்ந்து போனகாலம் மனக்கண்கள் ஒளியின்றி
துடித்துக் கொண்டிருந்தன.
என் வழி நீளவும்
தனிமை சூழப்படலாயிற்று.
உயிரேமுருத்தம்
 
 
 
 

37
அவள் கனவுக்கவிதைகளை விதைத்தபடி தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கிறாள்.
புரிதல்கள் இல்லாத உலகில் புனர்ஜென்மமும், புதுஜென்மமும் தேவையற்றதாகி விடுகிறது.
இப்போது அவளுக்கு உரியவனல்ல நான் முற்றிலும் மாறுபட்டவனாய், தனிமை நிறைந்த என் நடைபாதையெங்கும் விதைக்கப்பட்ட நெருஞ்சி முட்களை அகற்றி, எனது தடங்களை நிதானமுடன் பதித்துக் கொள்கிறேன் எதிர்பார்ப்புக்களேதுமின்றி.
()
வந்தின்ே

Page 22
58
அந்தரத்தில் தொங்கியபடி என் ஆத்மா
விழித்துக் கொண்டிருந்தது.
என் ஆத்மாவின்
LL666)
அவளைத்தவிர வேறெவரும் புரிந்திருக்க நியாயமில்லை.
நான் வேறொரு குளத்துக்கு அனுப்பப்பட்டேன் முதலைகள் இருக்கவில்லையாதலால்,
அவள் பற்றிய நினைவை காற்றில் எழுதிய கோலமென இரவு ஒன்று எனக்குச் சொன்னது.
றங்கள அ{ வடிகணறன.
ங்கள் அழுது ଶିଳ୍ପୀ
உயித்ரழந்த்தங்
 

59
எனது அண்மையில் எடுக்கப்பட்ட படமொன்றை என்னதில்லை என்றார்கள்.
அவள் துாண்டிலில் அகப்பட்டதால் - என் குளத்து தண்ணிர் குமுறிக் கொண்டிருக்கிறது நினைவுகள் ஆறாதபடி
uരൂസ്കര്

Page 23
40
இன்னுமொரு குருஷேத்திரம்
சொர்க்க வாசலின்
திறப்பிடத்தில் மனிதங்கள் மரணித்துப்போன மானுடச் சாத்தான்களின்
கூத்து அரங்கேறியது.
என் இருப்புக்களை தனதாக்க எத்தனை எத்தனங்கள்? அத்தனையிலும் அவைகளது விகாரமான முக பிம்பங்கள்
விகசித்தபடியே இருந்தன.
உயித்ரதந்ேதர்
 

41
உப்புத்தரை ஓவென்று கதறியழுதது. பேய்களின் இருப்பிடம் பலமானதால் படமெடுத்தாடின பூநாகங்களாய். சீண்டியும் பார்த்தன விசம் தலைக்கேறி மாண்டுதான் போனோம் சிலர்- ஆனால் உயிர்த்துக்கொண்டது மனங்களினூடே ஊடுருவும் விடுதலையின் அவாவல். வெற்றி என்பதே வேதவாக்காய் ஆகியது.
காலப் பெருவெளியில் - துரியோதனர்களின் வெம்மையால் வெந்து கொண்டிருந்தது அஸ்தினாபுரம்.
காலச்சக்கரம் சுழன்றது.
தருமனின்
ஆணைச் சக்கரம்
பிறந்தது. அர்ச்சுனர்களின் அஸ்திரங்கள் பாய்ந்ததும் எழுந்துமடிந்தன.
uരൂസ്കര്

Page 24
42
ஆனை பலம் கொண்ட சொர்க்க வாசலில் தமிழர் கொடி தலை நிமிர்ந்தாடிற்று.
உப்புத்தரைக்காற்று என்மேனி தழுவியது.
()
உட்பித்ரமுந்த்தர்
 
 

45
வெறுமை படர்ந்த சேற்றுக்குள்
நிலவு சுட்டெரிக்கிறது கடற்கரை மணற்பரப்பை,
சதுப்பு நிலங்களுக்குள் மனிதக்கரு வளரத் தொடங்கியிருக்கிறது. நீதிக்கானவர்கள் எவருமற்ற அந்த நிலத்தில் வெறுமை மட்டுமே படர்ந்திருக்கிறது.
தாயும், சேயும் ஒன்றாய் நிரந்தரத் தூக்கத்தில்.
குரல் வளைகளில் வன்மத்தின் ரேகைகள்.
சாத்திரத்தில் இல்லாத சடங்குகளுடன்
புதைக்கப்பட்டிருக்கிறார்கள் அவர்கள்.
வந்திரீகன்

Page 25
உப்பு வெளிக் கணுக்களினுாடே கண்ணி வெடித்தது சிதறுகிறது:
எத்தனையே ராஜபக்சர்க்கள் வதைகளுக்கு அத்திவாரமிரியிருந்து மினிதர்களைப் பலியிட்டு
புதைத்த அந்த வெளி இன்னும் நிலவைச் சுட்டெரித்தபடியேயிருக்கிறது.
()
உபீத்ரமுத்த்தச்
 

45
மாறும் முகவரிகள்
நீண்ட பொழுதுகளின் உக்கிரங்கள் வக்கிரமாய் தோன்றி மறைகின்றன.
எவரும் எவரையும் அறிய முடியாத அந்த இருப்புகளில் என் தந்தையும் தம்பியும் இருந்திருக்கலாம் அல்லது
இறந்திருக்கலாம்.
இராட்சத காலங்களின் தடங்கள் என் உணர்வற்ற மேனியில் ஊன்றிச் செல்கையில் என்னவளும், தாயாரும் நீ யாரென என்னைக் கேட்கக் கூடும். என்னிடம் கண்ணிரைத் தவிர வேறு விடையிருக்காது.
uസ്ട്ര്ര്

Page 26
இப்படியொரு சம்பவம் நிகழ முடியாமலும் போகலாம் எனினும் அவர்கள் எனது வருகைக்காகவே காத்திருப்பார்கள்.
முகவரிகள் நாளுக்கு நாள் மாறும் முகங்களும் கூடத்தான்.
ஒரு திங்களா ? நாலு திங்களா ? அது பாட்டில் ஓடி மறையும் சூரியனுக்கு சுற்றுவதைத் தவிர வேறெதிலும் நாட்டமில்லை எனது முகமும் வயதும் இப்போது எனக்கு நினைவிலில்லை.
எவருக்கும் எனதிருப்பில் சந்தேகமிருந்தால் மறந்துவிடுங்கள் என்னை. எனக்கான எல்லாவற்றையும் முடித்துவிடுங்கள். நீங்கள் சிலுவை
சுமப்பதை நான் விரும்பவில்லை. இவர்கள் மீது எனக்கு சிறிதும் நம்பிக்கையில்லை
எண் சிறை விடுவிப்பில்,
0.
உயிதரறழருத்தல்
 

47
பேய்களின் பெருநதி
மண்ணை அரிப்பதற்காய் பேய்களின் பெருநதி பெருக்கெடுத்தது.
அணை கட்டச் சிலர்
மண்வெட்டி கொண்டு
புறப்பட்டனர். புறப்பட்டவர்களில் சிலர் நதியின் குளிர்மையில் மூழ்கித் திளைப்பதில் இன்பம் கண்டனர். சிலர் அணைகளாய் மாறி அசையாமல் நிமிர்ந்தனர்.
9!6ᏡᎣ6ᏡᎢ ᏭᏂ6ᏈᎠ6lᎢ அடித்துச் செல்வதற்காய் மீண்டும் மீண்டும் பேய்களின் பெருநதி ஆக்ரோசமாய் எழுந்து சூழமுனைகையில் அணைகள் விடவில்லை.
வந்தசிே

Page 27
48
966 தீயொன்றின் மூலத்திலிருந்து
LupuULL6T6)IL பெரும் சுவாலை வளர்த்தன. சுவாலையின் வெம்மையால் பேய்களின் பெருநதிச் சுவடுகள் அழிந்து போயின.
()
உயித்ரமுருத்தர்
 

49
அர்ச்சிப்பு
உணர்வின் நரம்புகளை தொட்டுவிடும் அபரிமிதமான ஓசையால்
குருதி கொப்பளிக்க இறைவன் அர்ச்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறான்.
வண்ண ஜரிகைகளாலும் ஆபரணங்களினாலும் அலங்களிக்கப்பட்டிருக்கிற அந்த இறைவன் அர்ச்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறான்.
வந்திரீன்

Page 28
5O
இரத்தப்பலி கொடுத்தாகி விட்டது. குவிக்கப்பட்ட சிதறல்களிடையே முண்டமும் தலையும் மாறுபட்டுக் கிடக்கின்றன.
கண்ணப்பனின்
கண் தோண்டும் ஓவியம்
அழுது கொண்டிருந்தது.
கருங்கல்லில் வடிக்கப்பட்டிருக்கிற இறைவனின் கண்களில் சலனமில்லை விரக்தியில்லை சத்தமில்லை.
0.
உயித்ரமுருத்தல்
 
 

51
சூரியக் கரங்கள்
மந்த மாருதம் மனதைக் குளிராக்கியது. மேகத்திரைகளின் சீரான ஓட்டம்
புல்லினங்களுக்கும் சிறு பட்சிகளுக்கும் இனிய கனவுகளை விதைத்தன. மெல்லென வீழும் வானத்துத் துாறலுடன் தென்றலும் சேர்ந்தது.
வாழ்வின் இறுதியை நினைவினில் இழுக்கும் குமிழிகளை விதைத்தபடி துாறல்கள் பலமாகின அழகழகாய்.
வானம் பார்த்த பூமி பூரிப்படைந்தது.
öL-606Ö6\0o56! வரவேற்பொலியாய் மாறின பாய்ந்து வரும் அருவிகளை மணம் முடிக்க,
uസ്ട്ര്ര്

Page 29
52
மேகம் கரிந்து கிடந்தது. மழையின் அறிவிப்பாய் மின்னலும் இடியும்.
நிழலிடும் விருட்சங்களும் அதன் கீழ் இன்புறும் எல்லாம் இன்பமே புயலாலும் சூறாவளியாலும் சூழப்படாத வரை.
()
உயிரேமுருத்தர்
 

53
நர்த்தனம்
எங்கள் வாசல் வாசமிழந்து கிடந்தது. யாருமில்லை கோலம் போட நாளும் பொழுதும் நரிகளின் ஒலங்கள் பேய்களின் கூக்குரல்கள்.
காற்றினிலே கானமிசைக்க ஒரு பட்சிதானும் அங்கில்லை.
அரவங்கள் உமிழும் விசம் படிந்திருந்தது. அடையாளமற்ற ஒரு சில என்புகள் ஏங்கிக் கொண்டிருந்தன.

Page 30
அடிக்கடி பருந்துகள் வானமதில் வட்டமிடுகையிலும் ஒரு நிசப்தமான பொழுது, நச்சரவங்களின் மீது
“கண்ணன்”கள் நர்த்தனமாடினர்.
முன்பு பேய்கள் ஆடிய நிலம் தீக்காடாயிற்று.
விசப்பாம்புகளின் பிண்டங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.
()
உபித்ரமுருத்தர்
 

55
மீளுயிர்ப்பு
ീgr Ny சுதன்
பரிசுத்த ஆவியின் பெயராலே
ஆமென்.
சபிக்கப்பட்ட சனங்களின் செபிப்பொலி கண்ணிரையும் கரித்துக் கொண்டிருந்தது. ஆசீர்வதிக்கப்படாத சிலுவைகளை சுமந்தபடி ஒலிவ் மரச்சோலை நோக்கிய கண்ணிர் ததும்புகிற பயணம் நிகழ்கிறது.
யாருமே எதிர்பார்த்திராத கணத்தில் சாத்தான்களால் சிலுவையில் அறையப்பட்ட யேசு பிரானின் மீளுயிர்ப்பில் முள் முடிகளின் காலம் சிதைந்து போனது.
சனங்கள் திரும்புகிறார்கள் நாளைய சிலுவை சுமக்கும் படலத்திற்காய் சிலுவைகளையும், முள் முடிகளையும் தயாரித்துக் கொண்டு சாத்தான்களை சிலுவைகளில் அறைவதற்காய்.
()
uസ്ട്ര്ര്

Page 31
56
நடுக்கமுறும் நாட்கள்
என்னுடைய காலங்களில் எனது எல்லாச் செயற்பாடுகளுமே வலுவற்றுப் போய் விடுகின்றன.
எனது செயலின்மைகளுக்கும் நானே காரணமாகி விடுகின்றேன்.
சோதனைச் சாவடிகளில் நடுக்கமுறும் மனிதர்களாய் எனக்குள் தினம் தினம் அவஸ்த்தைகள்.
உண்ணும் உறங்கும் நாட்களிலும் திடீரென செத்துப் போகிறேன்.
சில வேளைகளில் ஞாபகங்கள் என்னை அலைக்கழிக்கின்றன.
சூரியகாந்தி பூவின் மலர்வு எப்படியோ அது போலத்தான் எனது வாழ்வும் எனது நாட்களில் நானே சூரியனைத் தேடியலைகிறேன்.
உயிரேமுந்த்தர்

57
நிஜங்களோடான வார்த்தைகளுக்கு இருட்டுச் சாயம் பூசி நானே என்னை
முகில்களுக்குள் மறைத்துக்கொள்கிறேன்.
பச்சை மனிதர்களின் இரும்புக் குழல்களுக்குள் அஞ்சி ஒடுங்குதலில் சர்வமும் அடங்கிப் போய்விடுகிறது.
என்னுடைய காலங்களில் எனது எல்லாச் செயற்பாடுகளுமே என்னை உயிரோடு சாகடித்து விடுகின்றன.
()
uരൂര്

Page 32
58
வெல்லப்பட முடியாத மரணம்
எல்லோருக்காகப் படைக்கப்பட்டவற்றில் எல்லோருக்குமே கிடைப்பது சாவொன்றுதான் பூமியில் வாழ்வியலுக்கான
சன்மானம் அது.
சாவொன்றுதான் எவருக்கும் பாரபட்சம் காட்டுவதில்லை. எண்ண அலைகளுக்குள் பிடிமானமற்ற அதிசயமிது.
எவருமே தேடாத போதும் தானாகவே வந்து சேர்வது எவரெவர்க்கு எப்பெப்பவோ அப்பப்பவே
மரணம் சம்பவித்து விடுகிறது.
உயிதரறழருத்தம்

59
மூப்பு, இளமை குஞ்சு, குருமன் பேதங்கள் சாவு பார்ப்பதில்லை.
எல்லோருக்காகப் படைக்கப்பட்டவற்றில் எல்லோருக்கும் கிடைப்பது சாவொன்றுதான்.
சாவு எல்லோருக்கும் நிச்சயிக்கப்பட்டிருந்தாலும் சாவுகளே செத்துப்போகிற சம்பவங்களும் அரங்கேறிக் கொண்டேயிருக்கின்றன. $[[6]) {_ତ[[ୱିଣ୍ଟୀ சண்டையில் செத்துப் போகிறவர்களே
சிரஞ்சீவிகள் மரணங்கள் மரணிக்கிற போது சிரஞ்சீவிகள்
நிலைக்கிறார்கள்.
எல்லோருக்காகப் படைக்கப்பட்டவற்றில் எல்லோருக்கும் கிடைப்பது சாவொன்றுதான்.
()
β.
/൬ര്

Page 33
60
நன்றி
G66f 6f 6ff) நிலம் அம்பலம் ஏகலைவன் களத்தில் மாருதம் தவிர நமது ஈழநாடு 6 fpsO)6)
உJதரமுருத்தக்


Page 34


Page 35
யாத்திரீகன் இை பிக்கை இவன் எ( அதனால் தானே எ மிக கவிதைகளை வயதில் அகதியாக் ளில் துயரங்கை வாழ்வின் மீதான உண்டு போர் தந்து பிக்கைகள், துயர
திருக்கிறான்.
 

போதுமே incing இருப்பவன்
இலாவகமாக அனுபவம் படைக்க முடிகின்றது இளம் கப்பட்ட இவன் தனது கவிதை வெளிப்படுத்தியிருந்தாலும், நம்பிக்கை எப்போதும் இவனிடம் போன இழப்புக்கள், அவநம் களை இவன் கவிதைகளாய் தந்