கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வரகவி

Page 1


Page 2
-
 
 
 
 
 
 

----

Page 3

வரகவி
கவிஞர் க.வே.சின்னப்பிள்ளை வைத்தியர்
நூலாசிரியர் திரு.அ.விஜயநாதன் B.A
அமரர் க.வே.சி.அ.துரைச்சாமி அவர்களது
ஞாபகார்த்தவெளியீடு.

Page 4
தலைப்பு
வரகவி
ஆசிரியர் அ.விஜயநாதன் B.A வெளியீடு க.வே.சின்னப்பிள்ளை வைத்தியரின் குடும்ப வாரிசுகள்.
பதிப்பு முதற்பதிப்பு பங்குனி 2006. கணணி அமைப்பு ராஜ் கிராபிக்ஸ், வதிரி


Page 5
பொருளடக்கம்
வாழ்த்துச் செய்தி
திரு.சத்தியசீலன் (பிரதேச செயலர்) ஒரு தேடலின் அறிமுகக் குறிப்பு
திரு.இ.இராஜேஸ்கண்ணன் ஆசிரியர் ஒரு மனோதரிசன முன்னுரை
திரு.கே.தங்கவடிவேல் ஆசிரியர் வெளியீட்டுரை
இரா.யோகராஜன் சோதிடர் வரகவி க.வே.சி
திரு.விஜயநாதன் அதிபர் ஆய்வுக்கட்டுரை - 1948 ஆண்டு பதிப்பு
அமரர் சைவப்புலவர் சி.வல்லிபுரம்

பிரதேச செயலகம் வடமராட்சி தெற்கு
மேற்கு கரவெட்டி III. O 3. 2. O O 6.
வாழ்த்துச் செய்தி வதிரி கவிஞர் க.வே.சின்னப்பிள்ளை வைத்தியர் அவர்களால் 19ம் நூற்றாண்டில் யாக்கப் பெற்ற கவிதை வரிகளை
மீளவும் இக்கால மக்களும் அறியும் பொருட்டு அக்கவிதைகளை மீளவும் அச்சேற்றும் முயற்சியைப் பாராட்டுகின்றேன்.
நன்றி.
S.சத்தியசீலன்
பிரதேச செயலர். கரவெட்டி,

Page 6
深犯
கவி ஆளுஞை க.வே.சி.யின் கவிதைகள் ஒரு தேடலின் அறிமுகக் குறிப்பு.
இ.இராஜேஸ்கண்ணன் ஒரு மக்கள் தொகுதியின் வளமான வாழ் வினையும், வரன்முறையான கல்வி மரபினையும், வாழ்வின் செல் நெறியினையும், நம்பிக்கைகளையும் பிரதிபலிப்பவையாக அந்த மக்கள் தொகுதியினரி டையே தோன்றிய இலக்கியங்கள் விளங்குகின்றன. இதற்கு மேலாக ஒரு சமூகத்தின் வளத்தினை வெளிப்படுத்துபவர்களாக அங்கு தோன்றிய இலக்கிய கர்த்தாக்களும் அமைந்து விடுகின்றனர். இந்தவகையில் வதிரிக்கிராமத்தின் வரலாற்றில் மறக்கப்பட முடியதவர் கவிஞர் திரு.க.வே.சின்னப்பிள்ளை வைத்தியர் அவர்கள்.
க.வே.சி அவர்கள் ஒரு பிரபலமான ஆயுர்வேத வைத்தியராவார். கனிவான மொழிபேசிப் பழகுபவராக இருந்தார். சிறந்த முருக பக்தனாக வாழ்ந்தார். அக்கால இளைஞர்களால் மிகவும் விரும்பப்பட்டார். இவை யாவற்றுக்கும் மேலாக இவர் சிறந்த கவிஞானமுடையவராக விளங்கியிருந்தார். இதனை அவர் காலத்து கவிஞர் மு.செல்லையா அவர்கள் கவிகளில் வடித்துள்ளார்.
“மன்னும் வயித்திய சாத்திர நூலுணர் வன்மையினால் என்றும்’ “ஊரார் சிரித்து மகிழப் புனைந்துரை ஒதிருவான் ஆரா ரடையினு மவ்வவர்க் கேற்ப அமைநெறியான் என்றும்’ “காரக் கிரகத்து கந்தனை வந்தனை செய்கவியான் என்றும்’ “பன்னுஞ் சரமகவி பல்லோர்க்கும் பாடிவரு சின்னப்பிள்ளைக் கவிஞர்
அல்வையூர் கவிஞர் மு.செல்லையா அவர்கள் க.வே.சி அவர்களின் பல்வேறு பரிமாணங்களையும் தன் கவிவரிகளில் வெளிக் கொணர்ந்துள்ளார்.
ஒரு சமூகத்தவர்கள் தமக்கு முன்னே வாழ்ந்து மறைந்த தனித்துவ ஆளுமைகளின் பெருமையினால் தாம் புகழ் பெறுகின்றனர். புழுத்துப்போன செவிவழிப் பெருமைகளை வாய்வழியே பேசி மார்தட்டி மகிழும் விருப்பம் எல்லோரிடமும் அதிகளவில் உண்டு. ஆவணப் படுத்தப்படாத எதுவும் வரலாறாகி நிலைத்துவிட முடியாது என்பதை நன்கறிந்தவர்களாக நாம் விழிப்புணர்வு பெறவேண்டும். இத்தகையதொரு விழிப்புணர்வின் விளைவாகவே வதிரிக்கிராமத்து வரலாற்றில் நிலைக்கவேண்டிய திரு.க.வே.சி அவர்களின் பதிவாக நிகழ்கால
XXXXXXXXXXXXXX >
(III)

深犯
சந்ததிக்கும், எதிர்கால சந்ததிக்கும் கையளிக்கப்படும் இம்முயற்சி பாராட்டத்தக்கதாகும்.
வதிரியின் வரலாற்றோடு இணைந்து விட்ட கவிஞர்கள் பலர். இதில் சைவப்புலவர்.சி.வல்லிபுரம், நாடகக் கவிஞர். அமரர் சண்முகநாதன் (வெள்ளையர்), அமரர்.சூ.சிவபாக்கியம் ஆசிரியை போன்ற மரபுவழியான கவிப்புலமை மிக்கவர்களில் காலத்தால் முந்தியவர் அமரர்.க.வே.சி அவர்கள். இத்தகைய கவிஞர்கள் யாத்த தேகவியோகப்பாக்களின் பெருக்கத்தில் அவர்களின் “சமூகவியோக சிந்தனைக் கவித்துவம் மழுங்கிப்போன சங்கதியும் தூலமான உண்மை என்பதை மறுத்துவிடவும் முடியாது. எனினும் அவர்களின் கவியாற்றலையும், கவிப் பொருட் சிறப்புையும் வெளிக் கொணரவேண்டியது எம்மவர் கடமையாகும். ஒவ்வொரு ஆளுமைகளின் பின்னே மறைந்துள்ள தகவல்கள் சத்தியத்துடன் வெளிவரும் போது அது வரலாறாகிவிடும்.
கவிஞர் க.வே.சி அவர்களின் கவித்துவம் கொழும்புச் சிறைச் சாலையில் வளர்ந்தது என்பது சைவப்புலவர் அவர்கள் தந்த செய்தி எனினும் அக் காலத்தில் ஆயுர்வேத வைத்தியர்கள் பலரும் கவியாப்பவர்களாக இருந்துள்ளனர். மருத்துவர் மூலிகைகள் தொடர்பான வைத்தியக் குறிப்புகள் கவிதைகளாக இருந்து அவற்றைப் படித்ததன் விளைவாக கவிதை எழுதத் தெரிந்திருந்தனர். இந்தவகையில் க.வே.சி அவர்களிடம் ஏற்கனவே இருந்த கவிதைத்திறன் ஈழத்தின் பிரபல கவிஞர்களில் ஒருவரான கல்லடி வேலுப்பிள்ளையுடன் கூடிய சிறைவாசத்தின் போது புது மெருகு பெற்றுக் கொண்டது.
க.வே.சி அவர்களின் கவிதைகளில் ஒருவகையான நளினம், நையாண்டி, இலகுத்தன்மை, எளிமை என்பன பரக்கக் காணப்படுகின்றது. இத் தன்மை அவர்காலத்துக் கவிஞர்களில் கல்லடி வேலனின் கவிதைகளுடன் இவரை ஒப்பிட்டுப்பார்க்கும் சிந்தனையைத் தூண்டுகின்றது. கும்மிப்பாடல்கள், சிந்துப்பாடல்கள் பாடுவதில் வல்லமை பெற்றவர் கவிஞர்.க.வே.சி அவர்கள். அவர் வாழ்ந்த காலத்தில் சுவதேசக் கும்மி, மலேரியாக்கும்மி, உத்தியோகர் லஷ்ணக் கும்மி சிந்துவரிகளுக்கு முதன்மையளித்த எளிமையான பாடல்கள் தோன்றியதன் தாக்கம் கவிஞரிலும் ஏற்பட்டிருக்கலாம்.
கவிஞர் அவர்கள் வாழ்ந்தகாலம் எமது சமூகத்தின் அசைவி யக்கத்தில் ஒரு நிலைமாறுகாலமாக அமைந்ததால். அந்த நிலைமாற்றம் தந்த "எளிமைத் தனம்’ நிறைந்த கவிதைகளை ஏனையவர்களைப் போலவே இவரும் பாடியிருந்தார். இவர்பாடிய பாடல்கள் முழுவதாக
XXXXXX $భఛ SS ←Ꮥ> ← ←Ꮥ←
(III)

Page 7
※ Σχ9Σ9Σ9ΣχΦδ«ΣχΣΚΣ ΣΚΣ ΣΚΣΚΣ 2xS
பெறப்பட வில்லை எனினும் கிடைத்த பாடல்களை அடிப்படையாகக் கொண்டு அவரின் கவித்துவத்தின் சிறப்பினை விளங்கிக் கொள்ளலாம். அத்தகைய சிறப்புக்களை இந் நூலிலுள்ள சைவப்புலவர் சி.வல்லிபுரம் அவர்களின் எழுத்துக்களில் தரிசிக்கமுடியும்.
கவிஞர் க.வே.சின்னப்பிள்ளை அவர்கள் தன் பெயரை “கல்லடி வேலன் மாணவன் சின்னப்பிள்ளை என்று கூறுவார். என சைவப்புலவர் தனது கட்டுரையில் குறிப்பிடுகின்றார். இவர் சிலேடைக் கவி வரிகளையும், “சீட்டுக் கவிதை என்ற கடிதவகை கவிதைகளையும் எழுதிய கவிதைகளின் தாக்கத்துக்கு உட்பட்டதை காட்டுகின்றன. எனினும் சமூக மாற்ற நிலைப்பாடு தொடர்பான கல்லடி வேலனின் நொக்கு நிலைக்கும் க.வே.சியின் நோக்குநிலைக்கும் சமூக நோக்கில் காணப்பட்ட வேறுபாடுகளை அவர்களின் கவிவரிகளில் காணலாம். உதாரணமாக கல்லடி வேலனின் கும்மி ஒன்றில்,
“வண்ணார் வடுகர் பணிக்கர் பண்டாரம் மடப்பள்ளியார் பரதேசிகள் அம்பையும் எண்ணுஞ் சரிகை யுறுமாலும் போட்டிப்போ யான் பிர பென்கிறார் பாருமடி’ என்று 1889 ஆம் ஆண்டின் தனது "சமூகநோக்கை’ பதிவு செய்துள்ளார். ஆனால் கவிஞர் க.வே.சியின் பாடல் ஒன்றில்
“ஆதியி லேசைவர் ஆக இருந்தவர்
அன்பு மிகுந்தவென் நன்னேசர் பாதிக் கிறிஸ்தவ ராம்முரு குப்பிள்ளை
பாரப் பொய் சொன்னதைப் பாருங்கடி’ என்று தகனக்கிரியையால் ஏற்பட்ட தகராற்றுக்குப் பொய்ச்சாட்சி சொன்ன “இடையில்” கிறீஸ்தவரான தனது நேச நண்பரின் நிலைப்பாட்டை நையாண்டி செய்கிறார். இது 1839 ஆம் ஆண்டின் மிஷனரி அறிக்கை பிரதிபலித்த சாதிய இறுக்கத்துக்கு கட்டுப்பட்ட மிஷனரிமாரின் போக்கினை மிக எறிமையாக உறைக்கவைத்த ஒரு வரலாற்றின் பதச் சோறாக அமைந்தவரிகள். இதில் வந்துள்ள “பாதிக் கிறீஸ்தவர்” என்ற நையாண்டித் தனமான சொற் பிரயோகமும் "ஆதிச் சைவர்' என்ற பிரயோகமும் இவரின் சமூகநோக்கினை வெளிப்படையாக்குகின்றது. ஒரு புறத்தில் இந்துமத பாரம்பரியத்தின் மேலாண்மை, மறுபுறம் அதனை விமர்சித்த கிறிஸ்தவத்தினுள்ளும் வளர்ந்த மேலாண்மை இவற்றை கல்லடி வேலரின் மேற்கண்ட கவிதையுடன் பொருத்தி நோக்கும் போது க.வே.சியின் கவிதையுடன் பொருத்தி நோக்கும் போது க.வே.சியின் கவிதையில்
(IV)

YYYLGeSY00eYGGYS0eSYeLGYSSGYYYeLeSYSLcYS0eSYSLcSGSGYSLGSLSLS0SLS0SSGGSLGSLLSGSLLSSLLS
சமூக சிந்தனையின் ஆளத்தை உணரலாம்.
கவிஞர் க.வே.சியிற்கும் கல்லடி வேலுப்பிள்ளைக்கும் இடையே வெண்பாச் சித்திரக் கவியில் கடிதத் தொடர்புகள் நிலவியதாகவும் சைவப்புலவர் குறிப்பிடுகின்றார். வினாவும் விடையுமாக அமைந்த அப்பாடல்களில் புலவரின் கட்டுரையில் இரண்டொருபாடல்கள் மாத்திரம் கிடைத்ததாக கூறுகின்றார். எம்முன்னவர் தம் இருப்பினை நிலைநாட்டக் கூடிய பதிவுகளை பேணாத நிலையில் முழுதளாவிய சிந்தனைகளை அறிய முடியாமை பேரிழப்பாகும்.
தமிழ் கவிஞரில் இரட்டையர்' என்ற முடவனும், குருடனுமான கவிஞர்கள் சேர்ந்து ஒரு வெண்பாவின் இவ்விரண்டு வரிகளைப் பாடினர். அவர்களில் ஒருவர்.
“குறுங் குழியும் குறுகி வழிநடந்து
சென்று ரிரவ தென்றும் தீராதோ’
என்றுபாட மற்றவர்,
“ஒன்றுங் கொடழுவனை
கொவென்றுங் காவென்றுங் கூறின்
இடாதோ நமக்கிவ் இடர்” என்று பாடினார் என பண்டிதமணி கூறியுள்ளார்.
இத்தகைய ஒரு கவிபாடும் மரபு வதிரி. திரு பீற்றர் டானியலுக்கும், க.வே.சியிற்கும் இடையில் இருந்ததாக சைவப்புலவர் கூறுகின்றார். அதாவது
"உருகி அமுதூட்டி ஓவியம்போ லேவளர்ந்த
அருமை மகன் காகிதங்கண் டகமகிழ்ந்தேன்” என்று பீற்றர் டாணியல் எழுதிய வரிகளை தொடர்ந்து,
“உரிமையுள
தாயா ரெழுதிவிட்ட சங்கதிக ளத்தனையும்
ஓயாமற் பார்த்தேன் உவந்து” என்று பாடி வெண்பாவாகப் பாடிமுடித்தார். இது முந்தைக் கவிஞர்களின் சிந்தனை ஊற்றுக்களின் சுவறல்கள் எம் கவிஞரிடையே இருந்ததைப் பிரதிபலிக்கின்றது.
ஒரு கவிஞன் என்பவன் காலத்தின் ஒரு மாற்றத்தினை தனது கவிதா உள்ளத்தால் தரிசித்து சமூக சிந்தனையுடன் கவிதை வடிக்கும் போதுதான் அவனது வரிகள் வாழ்வு பெறுகின்றன. நாடகக் கவிதையில் நல்ல சீர்திருத்தங்கள் வெள்ளையர் சண்முகநாதனால் சொல்லப்பட்டன, கல்வெட்டுப் பிரலாபங்கள் சிவபாக்கியத்தின் கவிதா சாமர்த்தியத்தை

Page 8
深 பிரதிபலித்தன, சைவப்புலவர் சி.வல்லிபுரம் தந்த பக்திப் பாடல்கள் சிறப்பானவை. எனினும் எம்மிடையே தோன்றிய கவிஞர்கள் ஏன் கல்வெட்டுப் பாடல்களுக்கு முக்கியம் கொடுத்தனர்? என்பது ஆராய்ந்து பதில் தரப்படவேண்டிய கேள்வியாகும். மேலே குறிப்பிட்ட கவிஞர் காலத்தில் பத்திரிகைகளின் வாயிலாக தம்மை வெளிப்படுத்திய பலர் கவிஞர்களாக இனங்காணப்பட்ட அளவிற்கு தம்மை உள்ளூர் கல்வெட்டுக்களில் மாத்திரம் வெளிப்படுத்தியவர்கள் இனங்காணப் படவில்லை. இது மறைமுகமாக சிந்தனைகளும், கவித்துவ ஆற்றலும் வெளிப் பட பிரபலமான ஊடகத் திண் தேவையினையும் பிரபலப்படுத்தலையும் அவசியம் என உணரவைக்கிறது.
இந்நிலையில் க.வே.சி அவர்களின் கவிதைகளின் வீச்சு அந்நாளில் பிரவலப்படுத்தாத அல்லது பிரபலப்படுத்தப்படாத ஒன்றாக அமைந்துவிட்டமை வருந்தத்தக்கது. அப்படிப் பிரபலப்படுத்தப் பட்டிருப்பின் அதிக கவிதைகளை பெற்றிருக்க முடியும் என்பதுடன் கல்லடி வேலுப்பிள்ளையின் கவிதைகளை ஒத்த கவி ஆளுமை ஒன்றினை பேணியிருக்கவும் முடிந்திருக்கும்.
பிணம் எரிப்பது அக்கால இடுகாடுகளில் பிரச்சினையாகியிருந்த காலத்தில் ஒருவரை துவிச்சக்கர வண்டியில் தேர்போன்ற பிரேத வண்டியில் அமைத்து வழி நீளமும் திருப்புகழ் பாடி சுடுகாட்டுக்கு அக்கால இளைஞர் பேரன்புடன் எடுத்துச் சென்றிருந்தனர் என்றால் க.வே.சி எவ்வளவுக்கு அக்கால மனங்களை ஊடுருவியிருக்கிறார் என்பது புலனாகும். இதனை அல்வையூர் கவிஞர்.மு.செல்லையா,
“உன்னி லுதித்திடு பேரன்பி னாலுயர் வாலிபர்கள் பன்னுந் துவிச்சக்கர வண்டியில் தேர்செய்து பாங்கு நின்றே மன்னுந்தங் கைகளி னாலே இழந்து மருவுபத்தி துன்னுந் திருப்புக ழோதிச் சுடலையிற் சூழ்ந்தனரே” என்று பாடியுள்ளார். அவரின் மரண யாத்திரைகூட அன்றைய நிலையில் ஒரு புரட்சியாகியிருக்கவும் முடியும்.
இத்தகைய ஒரு கவிதை ஆளுமையின் ஒரு சிறு பகுதியைத் தானும் ஆவணப்படுத்தும் இந் நினைவு மலர் நீண்ட நாள் நிலைக்கும் தன்மையினைப் பெறும் என்பதில் ஐயமில்லை. இதற்காக பணிசெய்த அனைவருக்கும் பாராட்டப்பட வேண்டியவர்கள். இந்த வகையில் சோதிடர்.இயோகராஜா, அதிபர்.அ.விஜயநாதன் ஆகியோரின் முயற்சி பாராட்டத்தக்கதாகும்.
畿※
(VI)

添
ബ விதி உலந்தளித்த அரகவி
ஒரு மனோதரிசன முன்னுரை “மனிதனின் ஆசைகளுக்கு அளவே இல்லை. அதுபோல் அவனது ஆற்றல்களுக்கும் எல்லை இல்லை”
இது உலகப்புகழ் பெற்ற மாபெரும் எழுத்தாளர் மாக்கிம் கோர்க்கியின் கூற்று. ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் மனிதரின் ஆசைக்கும் ஆற்றலுக்கும் சம்பந்தம் இருப்பது புரியும்.
எனது அன்புக்குரிய சகோதரன் தெணியான் அவர்களும் நன்பன் எஸ்.இரத்தினம் ஆசிரியர் அவர்களும் மலர் ஆசிரியர்களாக இருந்து வெளிவந்த தேவரையாளி இந்து மலரில் என் மதிப்பிற்குரிய ஆசிரியர் சைவப்புலவர் சி.வல்லிபுரம் அவர்களின் கட்டுரைவாயிலாக, கவிஞர் க.வே.சின்னப்பிள்ளை வைத்தியர் அவர்களின் நினைவுமலரில் சைவப்புலவர் சி.வல்லிபுரம் அவர்களின் கட்டுரையின் வாயிலாக, நான் தெளிவாக அறிந்து மகிழ்ந்த தகவல்கள் பல அவற்றுள் வதிரிபூர் வரகவி க.வே.சி அவர்களைப்பற்றிய செய்திகள் மறக்கமுடியாதவை. இன்றளவும் அன்னரைப்பற்றி நினைத்துப் பெருமைப்பட அவ்வரலாற்றுக் குறிப்புக்கள் காரணமாயிருக்கின்றன.
நூராண்டுகளுக்கு முன்னர். ஆங்கிலேயரின் அடக்குமுறை ஆட்சிக்கும் சாதி வெறியரின் காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறைக ’கொடுமைகளுக்கும் எதிராக அஞ்சா நெஞ்சத்துடன் போராடிய வீரர்களில் அவர் மிகமுக்கியமானவர். யாழ்ப்பாணம் வில்லூன்றி மயானத்தில் "தீண்டாச் சாதிகளின் பிணத்தை எரிக்கவிட மாட்டோம்" என்று தடுத்துத் துப்பாக்கிப் பிரயோகஞ்செய்த சம்பவத்துக்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே வதிரியில் எங்கள் சமூகத்துப் பெண் ஒருத்தியைத் தகனஞ்செய்ய விடாது தடுத்த சாதி வெறியரை எதிர்த்துப் போராடினார். க.வே.சி என்று சைவப்புலவர் சிவல்லிபுரம் அவர்கள் எழுத்தியுள்ளார். வாழ்க்கை வசதிக்காகவும் வயிற்றுச் சோற்றுக்காகவும் சைவத்தை விட்டகன்று கிறிஸ்தவ சமயத்தை நாடிச்சென்று தழுவிய சாதிவெறித் தமிழரை எதிர்த்துப்போராடப் பின்னிற்காது அவர் தீண்டாமைக்கு கொடுமைக்கும் கொடியோர்க்கும் எதிராகவலிமையான கவிதைகளையும் துணிவோடு கவே.சி எழுதினார். நின்ற இடத்திலேயே சட்டென்று கவிபாடும் சண்ட மாருதக் கவிஞன் அவர் இல்லையென்றால் சுடுகாட்டில் எழுந்த அரசாங்க விசாரணையில் பொய்ச்சாட்சியம் சொன்ன

Page 9
/& வேளாளக் கிறீஸ்தவரைச் சுட்டிக்காட்டி,
"பாதிக்கிறீஸ்தவ ராம் முருகுப்பிள்ளை பாரப்பொய் சொன்னதைப் பாருங்கடி’ என்று நையாண்டிக் கவிதை பாடியிருப்பாரா?
1856ம் ஆண்டு பிறந்து 1948ல் மறைந்த அமரர் க.வே.சின்னப் பிள்ளை அவர்கள் மீது தேகவியோகப் பாக்கள் யாத்துப்பாடிய சைவப்புலவர் சி.வல்லிபுரம் அவர்கள் “ஒப்பில் கவியுளம் காட்டுமுன் கற்பனைசால் பேச்சைப் புவியில் இனிக் காண்பதும் எப்போது? என அவரது நாவன்மை பற்றிக் குறித்துச் சொன்னது சாதாரண நீத்தார் பெருமை பேசும் சரமகவி எனக் கருதலாகாது என நிரூபிக்கும் அருமையான கவிதைகள் இத்தொகுதியிலே காணப்படுகின்றன.
செய்யுளின் எல்லாப் பரிமாணங்களிலும் கவிபுனையும் வல்லமை படைத்த யாப்பிலக்கண அறிவு அவரிடமிருந்ததற்கு இப்பாடல்கள் உதாரணமாகும்.
சுவாமி விபுலாநந்தர் எழுதிய கவிதைவரிகள் இதோ "ஈழத்தெருநீளம் எங்கள் கண்முன்பாக வாழவழியறியாத் தாழ்நிலையில் கம்பனும் வள்ளுவனும் காளிதாசக்கவியும் வெம்புகின்றார்”
மனித உரிமை மறுக் கப்பட்டதால் ஈழத் தெருக்களில் வறுமையோடு வாழும் சிறுவர்களில் எத்தனை வள்ளுவன்கள் எத்தனை கம்பன்கள் மறைந்து கிடக்கிறார்களோ என ஏங்குகின்றான். ஆனால் இங்கோ, வரகவியாய்ப் பிறந்த ஒரு புலமையாளனை சிறைக்குள் காணுகின்றோம்.
எங்கள் சமூகத்தின் கலங்கரை விளக்கமாய்த் திகழ்ந்த தேவரையாளி இந்துக்கல்லூரி ஸ்தாபிக்கப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னமே திண்ணைப்பள்ளிகள் அமைத்து எங்கள் குழந்தைகளுக்கு கல்வி அமுதூட்டி வளர்த்த மூதாதையரை வசதியாக மறந்துவிடு கின்றோம்.
மறைவாகப் பழங்கதைகள் பேசுவதில் மகிமை உண்டோ? திறமான புலமை எனில் வெளியாருமல்லவா புகழவேண்டும்.
"அணிசெய்காவியம்
ஆயிரம் கற்கினும் ஆழ்ந்திருக்கும்
கவியுளம் காணிலார்” ஆவென்றோ நாங்கள் இருக்கின்றோம்? XXXXXXX င်္မိိ(၃fiဒု) ←←

添
ஈழத்தும் புலவர்களும் புகழ்மிக்கவராகப் பேசப்படும் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை மதித்துப் போற்றித் தன் நண்பனாக கவிஞனாக மதித்த எங்கள் வரகவி க.வே.சி அவர்களைப் பற்றிப் பேசாமலே விட்டுவிட்டோம். வாளாதிருந்துவிட்டோம்.
மேல்தட்டுவர்க்கப் பண்டாரம் பண்டிதர் பீற்றர் டாணியல் அறிந்து வைத்திருந்த அளவுக்குக் கூட நாம் நம்மவரைத் தெரிந்து கொள்ளவில்லை என்பது வேதனைக்குரியது.
சமூகத்தின் நல்ல தலைவனாக சமூகவிடுதலைப் போராளியாக கல்விப் போதனாசிரியனாக கவிஞனாக வைத்திய நிபுணனாக தன்னை இனம் காட்டிய ஒரு சமூக முன்னோடியை எங்கள் சமூக வரலாற்றில் சேர்க்க மறந்துவிட்டோம்.
இந்த வரலாற்றுச் சிறுநாவலை அமரர் க.வே.சி அவர்களின் குடும்ப வாரிசுகள் வெளியிடுவதறிந்து மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கின்றேன்.
காலவெள்ளம் வேகமாக ஓடுகின்றது. உயர்வும் தாழ்வும் நன்மையும் தீமையும் அதன் வேகத்தை அணுகுவதில்லை, சீரான வேகமும் சிதைவுருப்பயணமும் அதன் தனித்துவம்.
வரகவி க.வே.சின்னப்பிள்ளை அவர்களின் வாழ்க்கை வரலாறுவிரித்து எழுதப்படவேண்டும்.
வரலாற்றாசிரியனுக்கு ஆதார சுருதியாக இருப்பது உண்மையைத் தேடுதல் த்தேடுதலின் சிரத்தை அவனை ஓயாத ஆய்வுகளில் ஈடுபடுத்தும் ஊகங்களைத்தாண்டி காய்தல் உவத்தல் எல்லைகளுக்கு அப்பால் உள்ள உண்மையின் பிரதிநிதியாக வேண்டும்.
புராணங்களையும் இதிகாசங்களையும் வரலாறு என்று எண்ணும் மனிதரே மகாவம்சத்தையும் வரலாற்றுநூல் எனக்கருதி இனப்பூசற் சேற்றில் விழுந்தார்கள்.
உண்மையே வரலாறு, புனைகதைகள் அல்ல அவ்வகையில் பல ஆதாரங்களை முன்வைத்து, இக்கட்டுரை ஆசிரியர் அ.விஜயநாதன் B.A (அதிபர்) அவர்கள் எடுத்த இம் முயற்சி வரவேற்கத்தக்கது. இம்மலரின் மணத்தைப் பரப்புவதே க.வே.சிக்கு செய்யும் நன்றியாகும். வரகவி க.வே.சி பற்றிய உண்மைகளை மேலும் எழுதி அவரை என்றும் வாழ வைப்போம்.
கே.தங்கவடிவேல் (ஆசிரியர்) 85 busiLD606).
← ←Ꭷ>❍Ꭷ←>2Ꮼ>ᏊᎧ>>%
※※ (DX)

Page 10
添 வெளியீட்டுரை
பிறப்பைப் போன்று மரணமும் நியதியானதுதான் ஆனால் அவன் வாழ்நத காலப்பகுதியில் அவனாற்றிய சேவை, வரலாறுகளில் பதியப்படும் வகையில் இருக்குமானால், அது அவன் தன்னலம் கருதாது அவன் ஆற்றிய சேவைக்காக மக்களால் வழங்கிய பெரும் விருதாகக் கருதப்படும் அமரராகிய எனது பிட்டனார் கவிஞர் க.வே.சின்னப்பிள்ளை வைத்தியர் அவர்கள் பற்றி எனது பாட்டி "பூமகள் ஆச்சி” கர்ணபரம்பரைக் கதைகள் போல சுவாரஸ்சியமான பல தகவல்களையும், அவரின் வீரதீரச் செயல் களையும் , நகைச் சுவையான பல சம்பவங்களையும், செய்திகளையும், அடுக்கிக் கொண்டே போவார். இதன் வாயிலாக என்பீட்டனாரின் ஆற்றல், ஆளுமை, கவித்துவம் பற்றி நான் சிந்திக்க, அது என்னைப் பெரும் வியப்பிலும் ஆற்றியது. அன்று தொட்டு அவர் பற்றிய ஒரு ஆய்வு நூல் ஒன்று வெளியிடவேண்டும் என்ற எண்ணம் என் மனதில் உருவாகியிருந்தது. சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தேன் சென்ற அரை நூற்றண்டில் வாழ்ந்தவர்கள் க.வே.சி அவர்கள் பற்றி நன்கு அறிந்திருந்தனர். ஆனால் இன்றய காலப்பகுதியில் அவர் சேவைகள் திறமைகள் மறக்கப்படவோ, மறைக்கப்படவோ கூடாது என்ற நல்லெண்ணத்தின் வெளிப்பாடே இந் நூல். இன்றைய இளைய தலைமுறையின்ர்க்கு நேற்றைய சில வரலாறுகளைத் தெரியப்படுத்த வேண்டிய கடமை எம்முடையதே நண்பர் விஜயநாதன் அவர்களிடம் இப்பேற்பட்ட வரலாறுகள் மனத்தில் பேணப்பட்டிருந்தது. அவற்றை அடிக்கடி என்னோடு பரிமாறிக் கொள்வார். வேறு சில கட்டுரைகளில் க.வே.சி பற்றிய சிறு செய்திகளை எழுதியிருக்கிறார். இதன் அடிப்படையில் அவரை நான் அணுகியபோது மிகச்சந்தோஷமாக இப்படியொரு மலரை ஆக்கிடும் பணியை ஏற்றுக்கொண்டார்.
பாம்பின் கால் பாம்பறியும் என்பார்கள் அதுபோல ஒரு சமூக விடுதலைப் போராளிக்கே இன்னோரு சமூக விடுதலை போராளியை இனங்கான, அவர் மனோநிலையை நாடிபிடித்து அறிய இயலும் என்றவகையில் கேதங்கவடிவேல் ஆசிரியர் அவர்களிடம் இந்நூலிற்காக அணிந்துரை எழுத அணுகியபோது அவரும் மனப்பூர்வமாக அப்பணியை ஏற்றுக் கொண்டார். இன்றய தலைமுறை இளைஞர் ஒருவர் மூலமே இந்நூல் எதிர்கால சந்ததியருக்கு அறிமுகப் படுத்த வேண்டும் என்பது என் அவாவாகும். அதற்காக மிகப்பொருத்தமாக தமிழ் இலக்கணம், கவிநயம் செறிந்த இலக்கிய தாகங்கொண்ட இளைஞரான
 

ఖళ్ల
இ.இராஜேஸ்கண்ணனை அணுகியபோது அவரும் மனப்பூர்வமாக அப்பணியைச் செய்ய முன்வந்தார். இந்நூலிற்கான நல்லாசியையும் வலிமையையும் பெற்றிடவேண்டி எமது பிரதேச செயளலரை அணுகியபோது அவரும் மகிழ்ச்சியோடு அப்பணியை ஏற்றிட்டார்.
நாம் இந்நூலை வெளியிட மூல ஆதாரமான 1948 வெளிவந்த நினைவுமலரும் அதன் நூலின் ஆசிரியராக செயற்பட்ட அவரின் பேரனார் அமரர் சைவப்புலவர் சி.வல்லிபுரம் அவர்களுக்கும் 1948ல் அந்நூலை வெளியிட்ட எம்குடும்பத்தவர்க்கும், இன்று இந்நூலிற்கான கணனி வடிவமைத்திட்ட ராஜ் கிறாபிக்ஸ் வதிரி நிறுவனத்தார்க்கும், எம்மனமார்ந்த நன்றிகள் உரித்தாகும்.
அறிவுத்தேடலில் ஆர்வமுள்ள இளைய தலைமுறையினர்க்கும், இளம் இளய சந்ததியினர்க்கும், எதிர்கால சந்ததியினர்க்கும் இம்மலர் பயனுற வேண்டும் என்பதே இம்மலரை வெளியிடுவதன் நோக்கமாகும்.
கவிஞர்.இரா.யோகராஜன சோதிடர்.

Page 11
முகவுரை
வடமராட்சியின் சைவக் கல்விப் பாரம் பரியம் பற்றி ஆராய்ந்தவர்கள், வதிரி அல்வாய் ஆகிய கிராமங்களின் இரு திண்ணைப்பாடசாலைகள் இக் கிராமங்களில், சைவக் கல்விக்கு வித்திட்டதை அறிய முற்படவுமில்லை, இதுவரை அதுபற்றிக் கூறப்படவுமில்லை. இவ்விரண்டு கிராமங்களிலும் வாழ்ந்தமக்கள் 1850களில் தமது கல்வியை எவ்வாறு பெற்றுக் கொண்டார்கள், அக் கல வியைப் பெறுகின்ற பொழுது எத்தகைய அடக் கு முறைக் குட்பட்டார்கள் என்பதனையும் எவருமே எழுதவில்லை. இக்காலப்பகுதியில் இங்கு காணப்பட்ட திண்ணைப்பள்ளிக்கூடங்களே சைவத்தையும் அதனோடு சேர்ந்து கல்வியையும் வளத்து வந்தது. இதற்கு உதாரணமாக இப்பாடசாலைகளை நடாத்தியவர்கள் சைவத்தைப் பேணி வந்தவர்களாக இருந்தனர். அவர்களுடைய செய்யுட்கள் ஆலயங்கள் மீது பாடப்பட்டவையாகக்காணப்பட்டன. இவற்றுள் பல எமக்குக் கிடைத்தில. ஆனால் கிறிஸ்தவமதத்தைக் கல்விக் கூடாகப் பரப்பியபோது எமது சமூகத்தைச் சேர்ந்த திண்ணைப்பள்ளிக்கூட முன்னோடிகளில், எமக்குக் கிடைத்த ஆதாரங்களில் கவிஞர் க.வே.சின்னப்பிள்ளை வைத்தியருடைய வரலாற்றுச் சுவடுகளின் மூலமாக வெளிக்கொணர முற்படுகின்றேன்.
வரகவி க.வே.சின்னப்பிள்ளை வைத்தியர் பற்றி எமது உறவினரான வதிரி பண்டுபட்டிபாதி ஆகந்தவனம் ஆசிரியர் அவர்மூலமாக என் இளமைப்பருவத்தில் அறியக் கூடியதாக இருந்தது. இன்றும் எம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் அல்வாய் திரு.ச.சிபரஞ்சோதி அவர்கள், வதிரி உருத்திரமணி போன்றவர்கள் மூலமாகவும் அமரர் க.வே.சி அவர்களின் செயற்பாடுகளையும் அவர் பாடிய சில பாடல்களையும் பரிமாறிக் கொள்ளக் கூடியதாக இருந்தது. இவையே வரகவி க.வே.சி பற்றிய வரலாறு எழுதிட என்னைத் தூண்டியது. இவற்றிற்கு உண்மைசேர் ஆதாரங்களாக தேவரையாளி இந்து மலரும், அமரர் க.வே.சியின் 1948ல் வெளியிடப்பட்ட நினைவு மலரும் உசாத்துணை நூல்களாக இருந்தன.
இவரைப்பற்றி எழுதியவர்களுடைய கூற்றுக்களில் இருந்து நினைத்தவுடன் பாடல்களை தங்கு தடையின்றி பாடக்கூடிய ஒருவர் வாழ்ந்தார் என்பதனையும் அவருடைய கவித்துவத்தையும் வெளிக்கொணர வேண்டும் என்பதனையும், சமூக விடுதலைக்காக முதன் முதலாகப் பாடப்பட்ட கவிதை இவருடையதே என்பதையும், தேவரையாளி சைவ வித்தியாசாலை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே சைவக்கல்வியை பேணியவர்களாக இவரை அடையாளம் காட்டுவதுமே என் நோக்கமாகும்.
φσαναδίτισά 6.65aggages B.A.
63cit
 

e
盆
ே
乙酉重。
毯

Page 12
ܬܐ .

深
வரலாறுகள் எழுதும் போது அதற்கான ஆதாரங்கள் நிறையத் தேவைப்படுகின்றன எவ்வாறான நாகரிகத்தோடு வாழ்ந்தார்கள் கல்வி, கலாச்சார, பொருளாதார அபிவிருத்தியில் எவ்வாறு மேம்பட்டார்கள் என்பனவே அவர்களின் சமூக மலர்ச்சிக்கு ஆதாரசுருதியாகும். அவற்றிற்கு வித்திட்டவர்களும் போராடியவர்களும் பெருமைக்குரியவர்களாக வரலாற்றுப் பதிவுகளில் பொறிக்கப்படுகின்றார்கள். அவ்வரிசையில் அமரர் கவிஞர்.க.வே.சின்னப்பிள்ளை வைத்தியர் அவர்களும் ஒருவராவர். அவரைப்பற்றிய ஆய்விற்கு நான் முனையும்போது அவர்வாழ்ந்த பிரதேச அமைப்பு, காலப்பகுதி, அக்காலத்து மக்கள், அன்னரின் பாரம்பரியம் என்பன விபரிக்க வேண்டியது அவசியமாகும்.
யாழ்பாணம் வடமாராட்சிப் பிரதேசத்தின் வடதிசையில் பாக்குநீரினைக்கு அண்மையாக அமைந்த கிராமமே வதிரியாகும். இங்கு பின்தங்கிய ஒரு சமூகத்தில், 1856களில் பிறந்து 1948 ஆண்டுவரையுள்ள காலப்பகுதியில் வாழ்ந்து, அக்காலப்பகுதியில் ஆதிக்கம் செலுத்திய மேல் சமூகத்தில் இருந்து, தான் சார்ந்த சமூகத்தவரின் விடிவிற்காக போரடிய ஒருவரே க.வே.சின்னப்பிள்ளை அவர்களாகும்.
இவரைப்பற்றி ஆராயும் போது அவரின் பாரம்பரியத்தை சொல்லி அவர் பற்றிய சிறப்புகளை ஆராய முற்படுகின்றேன். 18 நூற்றாண்டுக் காலப்பகுதியில் வைத்தியர்களும் சோதிடர்களுமே கல்வியை வளர்க்க முற்பட்டார்கள் என்பதற்கும் இது எடுத்துக்காட்டாக அமையும். சாஸ்த்திரியப்பா என அழைக்கப்படும் கதிரன் என்பவர் க.வே.சியின் பாட்டனாராகும், இவர் 18 நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்துள்ளார். அவரின் மகனே வேலுச்சட்டம்பி என அழைக்கப்படும் சட்டம்பி வேலானாகும். இவரே வதிரியில் திண்ணைப் பள்ளிக்கூடம் நடாத்தியுள்ளார் சட்டம்பிவேலனிற்கு பரியாரி ஆழ்வான், வைத்தியர் சின்னப்பிள்ளையோடு மூன்று சகோதரிகளுமே பிள்ளைகளாகும். கவேசி அவர்கள் 1856 பிறந்து. தன் தந்தையார் வேலனிடமும், வைத்தியக் கல்வியை
劾 (1)

Page 13
滚 தமையனார் ஆழ்வானிடமும் குரு சிஸ்ய முறையில் கற்றுக் கொண்டார். வதிரியில் வேலுச்சட்டம்பியாரும், அவர் மகன் வைத்தியர் ஆழ்வாரும், அல்வாயில் வேலுச் சோதிடரும் திண்ணைப் பள்ளிக்கூடங்கள் வைத்துக் கல்வி புகட்டிவந்தனர். இத்திண்ணைப் பள்ளிக்கூடங்களில் அவர்களுடைய உறவினரே கல்வி கற்றுவந்தனர். அவ்வப் பள்ளிக் கூடங்களின் சட்டம்பிமார் யாரிடம் கற்றவர்கள் என்பது அறியப்படாதுள்ளது. அவர்கள் ஒலைச் சட்டங்களில் எழுத்தாணி கொண்டு எழுதிப்படிப்பித்தனர். எண், எழுத்து, வாசிப்பு, ஆத்திசூடி, கொன்றைவேந்தன், செய்யுள் இயற்றல் ஆகிய பாடங்கள் படிப்பிக்கப்பட்டன வைத்தியர் ஆழ்வான் தந்தையாரின் திண்ணைப்பள்ளிக் கூடத்தை நடத்தியிருக்கலாம் அல்லது சமகாலத்தில் நடத்தியிருப்பதற்கும் வாய்ப்புகளுண்டு.
இத்திண்ணைப் பள்ளிக்கூடங்கள் படிப்புடன் நின்று விடாது சமய மரபுகளையும், வழக்காறுகளையும் பேணிவந்தன தமது மாணவர்களுக்கு சோதிடம், வைத்தியம், தோத்திரங்கள் ஆகியவற்றையும் சட்டம்பிமார் கற்பித்தனர். இதனால்தான் சின்னப்பிள்ளை வைத்தியர் அவர்கள் கவிஞனாகப் பரிணமிக்க முடிந்தது. தேவரையாளி இந்துக்கல்லூரி ஸ்தாபிப்பதற்குமுன்னர் சைவத்தைப் பேணுகின்ற கல்விச் சமூகம் ஒன்று வதிரியிலும் அல்வாயிலும் காணப்பட்டது. அவற்றைப் பேணுவதற்கு வழிவகுத்தது இவ்விரு திண்ணைப்பள்ளிக்கூடங்களாகும். இத்திண்ணைப் பள்ளிக் கூடங்களில் கல்வி கற்பித்த சட்டம்பிவேலன், பரியாரி ஆழ்வான் க.வே.சின்னப்பிள்ளை வேலுச்சோதிடர், வேதம்பையா சோதிடர் ஆகியோர் சிறந்த கல்விமான்களாகவும் சைவத்தைப் பேணுபவர்களாகவும் இருந்தனர். எமது ஆலயங்கள் ஆகம விதிப் படி அமையுமுன்பே வதிரி உல்லியனொல்லை, பொலிகண்டி கந்தவனக் கடவை ஆலயங்களுக்கு சென்று வணங்குவதோடு மிகுந்த ஈடுபாடும் கொண்டவர்களாகவும், அக்கோயில்களில் திருவிழா பங்குதாரர்களாக உபயகாரர்களாக 19"நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்துள்ளனர். இவற்றிற்கு மேலும்
GBYSCSGSJSYSCScS SJSCSCSeS SSGScSCSCS SCScS
(2)

Σ9ΣΚΣΕΟΣΟΣΟΣΟΣΚΟΣΚΣΚΟΣΟΣΟΣ
器
எடுத்துக்காட்டாக க.வே.சி அவர்களின் பாடல்களைப் பின்னே தொகுத்துத் தரவுள்ளேன். க.வே.சி.அவர்களின் தமையனார் க.வே.ஆழ்வான் பரியாரி அவர்கள், பாடிய ஒரு பாடலை திரு.ஆமசெல்லத்துரை அவர்கள் பரியாரி ஆழ்வாரின் பெறாமகன் பெரியார்.க.மூ.சின்னத்தம்பி அவர்களது நினைவுமலரில் 1967 குறிப்பிட்டுக் காட்டுகின்றார். தனது பாட்டனார் ஒரு கவிஞர் என்றும் அவர் நூறு வருடங்களுக்கு முன் ஒரு தோத்திரப் பாடலை தீர்க்க தரிசன மாகப்பாடியுள்ளார் என்றும் கூறியுள்ளார்.
திங்கள் சூடும் அரனருள் மைந்தனே
தேவர் போற்றும் திருமால் மருகனே துங்க வெங்கரி போலும் முகத்தனே
தொல்லையின்றி வருந்துய ராற்றுவாய் சங்கு தாரகை கின்னர வீணைகள்
தம்பு நாத சுரங்க ளொலிக்கவே பொங்கு பூவற்கரை தனில் வாழ்கின்ற
புதுமையுள்ள விநாயக மூர்த்தியே. இப்பாடலின் மூலம் 19 நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஏனைய ஆகம விதிக்கோயில்கள் போல சிறுதெய்வ வழிபாட்டை நீக்கி விநாயகர் ஆலயம் பூவற்கரையில் உருவாக வேண்டும் என மானசீகமாகப் பாடியுள்ளார். இதன் மூலமாக 19 நூற்றாண்டிற்கு முற்பட்ட காலத்திலேயே எம்மக்கள் சைவ பாரம்பரியத்தைப்பேணி சைவர்களாக வாழ்ந்தும் உள்ளார்கள் என்பது தெளிவாகும்.
1858இல் வதிரி வடக்கு மெதடிஸ் த மிஷன் ஆரம்பிக்கப்பட்டபோது வதிரியில் வேலுச்சட்டம்பியாரின், மகன் பரியாரி ஆழ்வானின் திண்ணைப்பள்ளிக்கூட மாணவர்களும், அல்வாயிலுள்ள வேலுச்சோதிடரின் மாணவர்களும் அங்கு சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
வேலுச்சோதிடர் மிஷன் பாடசாலையில் ஆசிரியராகச் சேர்த்துக்
கொள்ளப்பட்டார். பரியாரி ஆழ்வாரோ சின்னப்பிள்ளை வைத்தியரோ

Page 14
ஆசிரியர்களாக இணைக்கப்படவில்லை. இவர்கள் நிரந்தரமாக வைத்தியத் தொழிலைச் செய்தமை இதற்குக் காரணமாகும். வதிரி மிஷன் பாடசாலையில் சகல மாணவருக்கும் கிறிஸ்தவ சமயபாடம் போதிக்கப்பட்டது. அங்கு கற்பித்து வந்த வேலுச் சோதிடர் அவர்கள் சைவப்பிள்ளைகளுக்குக் கவிச்சட்டத்திலே சைவ தோத்திரப்பாடல்களை எழுதிக்கொடுத்து மனனம் செய்வித்துவந்தார். அதனைச் செய்யக்கூடாது என்று மிஷனரி மாரால் கட்டளையிடப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த வேலுச்சோதிடர் வதிரியிலுள்ள ஆயுள்வேத வைத்தியரும் கவிஞருமாகியி சின்னப்பிள்ளை ஆகியோருடன் தொடர்பு கொண்டு மிஷன் பாடசாலை ஆசிரியர்களைப் பேட்டிகண்டு தங்கள் பிள்ளைகளுக்கு கிறிஸ்தவ சமய பாடம் படிப்பிக்க வேண்டாமென்று வாதாடினர்கள் அவர்கள் அதனை நிராகரித்தனர் வேலுச்சோதிடர் பிள்ளைகளை மறித்து அல்வாயில் குழாம்பு என்ற இடத்தில் கற்பித்து வந்தார். சின்னப்பிள்ளை வைத்தியருக்குச் கொதிப்பை ஏற்படுத்தியதால் பாடசாலைக்குப் போகாமல் தம்பிள்ளைகளை மறித்துத் தன் வீட்டில் வைத்துச் சில நாட்கள் படிப்பித்தார். இரண்டொரு கிழமையில் “வண்ணஞ்சீமா’ என்னும் தனது காணியில் (தற்போது பள்ளம்தோட்டம் வெட்டுக்கினறு அமைந்துள்ள காணி) 1914ல் ஒரு கொட்டில் கட்டுவித்து அதிலே பாடசாலை ஒன்று அமைக்கப்பட்டது. வேலுச்சோதிடரின் திண்ணைப்பள்ளியிலே கற்ற பிள்ளைகளும் அல்வாயிலுஉள்ள பிள்ளைகளும் இப்பாடசாலைக்கு வரலாயினர். வைத்தியரும் சோதிடரும் முழுநேர ஊழியர்களாக படிப்பிக்க முடியாத காரணத்தால் கரவெட்டி க.சின்னத்தம்பி, அல்வாய் வடக்கு மு.கந்தப்பு அவர்களும் கற்பித்தனர் இப்பாடசாலை ஏறக்குறைய ஒன்றரை வருடகாலம் நடந்து வந்தது. இங்கு கரவெட்டி கொற்றாவத்தை பூமாஞ்சோலை ஆகிய இடங்களிலுள்ள பிள்ளைகளும் கல்வி கற்க வரலாயினர்அப்பொளுது வண்ணாஞ்சிமா கொட்டில்ப் பாடசாலையில் இடவசதி இன்றி இருந்ததால் புதிய கட்டிடம் கட்டும் எண்ணம் உருவாகியது. இச்சந்தர்ப்பத்தில்
ଶ୍ରେଷ୍ଠ

深添 இவர்களுடன் சி.பொன்னர் க.வேலுச்சோதிடர் காசூரன், சி.சிலம்பு, சி.க.ஆறுமுகம் ஆகியோரை அங்கத்தவராகக் கொண்ட சைவகலைஞான சபை உருவாக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைப்பதற்கன காணி கொள்வனவு செய்வதற்காக உறுதி முடிக்கப்பட்டது. கா.சூரன் அவர்களுக்கு கரவெட்டி சிற்றம்பல முதலியாருடன் (சித்தமணியகாரன்) ஏற்கனவே உள்ள தொடர்பினால் அவரை உதவி கேட்டார். இச்சந்தர்ப்பத்தில் வதிரியில் பாடசாலை அமைப்பதற்கு மிகவும் முன்னின்று உளைத்தவர் க.வே.சி அவர்கள் ஆகும். கவிஞர் செல்லையா அவர்கள் தேவரையாளி சைவ வித்தியாசாலையின் ஆரம்பத்திற்கு சின்னப்பிள்ளை வைத்தியரின் உழைப்புப்பற்றி அவரின் கல்வெட்டில் பின்வருமாறு கூறுகின்றார்.
சீருற்ற தேவரையாளி விதாலயஞ் செம்மமுற நேருற் றுழைத்த அபிமான காரகன் வடமராட்சியில் உள்ளபாடசாலைகள் சில திண்ணைப் பள்ளிக் கூடங்களில் இருந்து உருவானவை. திண்ணைப்பள்ளிக் கூட ஆசிரியர்களையும் மாணவர்களையும் அவைபெற்றுக் கொண்டன. அதேபோல அல்வாயிலுள்ள வேலுச்சோதிடரின் திண்ணைப்பள்ளிக்கூடமும் வதிரியிலுள்ள வேலுச்சட்டம்பியாரின் திண்ணைப்பள்ளிக்கூடமும் தேவரையாளி சைவவித்தியாசாலை உருவாகுவதற்கு அடித்தளமாக இருந்தன.
க.வே.சி அவர்களின் சிறந்த மாணவரும் அவருடைய மருமகனுமான சிலம்புவைத்தியர் அவர்கள் பின்வருமாறு க.வே.சி அவர்களுடைய சிறப்புக்களைக் கூறுகின்றார்.
அரிதான தமிழ்க்கல்வி ஊட்டி வைத்தாய்
அரசினராங் கிலமொழியை அறியச் செய்தாய் மரியாதை மிக்க ஆசிரிய ராக்கி
மருணிக்கு சிவநாம மோத வைத்தாய்
※
(5) -

Page 15
深添
பரிகார வாகடமும் பயிற்றி வைத்தாய்
பல்வேறு பாக்களையும் பாடவைத்தாய் நிரியான மளவுமெமை நெஞ்சில் வைத்தாய்
நீமறைந்தாய் எப்போழுது நேரிற் காண்போம். மருமகன் சிலம்பு வைத்தியர் இவரிடம் கல்வி கற்றுள்ளார். தமிழ் இலக்கணம் வைத்தியம் கவிதை மட்டுமெல்ல ஆங்கிலமும் கற்றுள்ளார். சின்னப்பிள்ளை வைத்தியர் அல்வாய், திக்கம், கரவெட்டி, கரணவாய் ஆகிய இடங்களுக்கு வைத்தியத் தொழில் காரணமாகச் செல்வதனால் கிறிஸ்தவ நண்பர்களும் உள்ளனர். இவர்களுடைய தொடர்பினால் ஆங்கிலமும் ஓரளவு இவருக்குத் தெரிந்து இருந்தது. தனது மருமகனுக்கு வைத்தியமும் செய்யுள் இயற்றலும் கற்பித்துள்ளார். எமது ஆலயங்கள் ஆகமவிதிப்படி அமையுமுன்பே சிவநாமத்தை ஒதிவைத்துள்ளார் என்பதைக் கூறியதற்கமைய, வதிரிக்கிராமத்தில் சிவநாமம் ஒதவைத்த பெருமை வைத்தியர் க.வே.சி அவர்களைச்சாரும், க.வே.சியன் வழிகாட்டல் மருமகன் சிலம்பு பின்னர் பெரியார் சூரன், வேலுச்சோதிடர் ஆகியோருடன் தேவரையாளிச் சைவவித்தியாசாலையில் சமயப்பிரசங்கம் செய்வதற்கும் உதவியது.க.வே.சி அவர்களைப் பற்றி கவிஞர் மு. செல்லையா அவர்கள் சொல்லியவை.
பன்நூம் வைத்திய சாஸ்த்திர நூலுணர்வால் வண்மையினால் துண்நும் பிணிபல தீர்த்துப் பெரும்புகழ் தோய்ந்தவன்சீர் மின்நும் வதிரியில் மேலாம் பரம்பரை மேவியவன்
இன்றும் பலவான் டிருந்திடில் யாண்டு மெழுந்ககமே.
சீருற்ற தேவரையாளி விதாலயஞ் செம்மமுற நேருற் றுழைத்த அபிமான காரகன் நீடுபுகள் வேருற் றிலங்கக் கவிபுணை வித்தகன் வீரநெஞ்சன்
ஊருக்குயர்முதி யான் சின்னப்பிள்ளையென் றுன்னுகவே.
毅 (6)

※※※※
க.வே.சி அவர்கள் சரமகவியாப்பதில் வல்லுனராகத் திகழ்ந்துள்ளார் அவர் தொழில் காரணமாகப் பழகிய பெருமகனார்கள் பலருக்கும் எம்மவர்களுக்கும் சரமகவி எழுதியுள்ளார். வைத்திய சாஸ்த்திர நூல்களை நன்கு கற்றுணர்ந்ததன் பயனாக பற்பல நோய்களையும் தீர்ப்பதில் வல்லவர் என்றும், வதிரியின் ஒரு கல்விப் பாரம்பரியம் மிக்க மேலான பரம்பரையின் புகலோங்கச் செய்தவனென்றும் வதிரியின் கல்விப்பாரம்பரியம் மிக்க பரம்பரையில் பிறந்தவர் என்பதையும் சுட்டிக்காட்டியதோடு நின்று விடாது அடுத்த கவிதையின் மூலம் தேவரையாளி சைவவித்தியாசாலை செம்மையுற்று உருவாகிட நேர்மையோடு உழைத்திட்ட பேரபிமானி, அதன் காரணகர்த்தா என்றும், அதன் வேர் விட்டுத் தளைத்துத் துலங்கிட வைத்த கவிஞன் வீரநெஞ்சன் என்று மிக அழகாக அவர் சேவையை அவர்காலத்தில் வாழ்ந்த கவிஞர் மு.செல்லையா அவர்களே கூறுகின்றார். கவிஞர் செல்லையா அவர்கள் அவரை ஒரு வீரநெஞ்சனாகக் கூறியதற்கு ஏற்ப அவர் வாழ்க்கையில் பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. வதிரி மிஷன் பாடசாலை தீக்கிரையாக்கப்பட்ட ஒரு சம்பவத்தில் மிஷனிற்கு எதிராகச் செயற்பட்ட க.வே.சி அவர்களை சந்தேகத்தின் பேரின் போலீசாரால் தேடப்பட்டார். இதனால் அவர் ஒழித்து மறைந்து வாழ வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
19ம் நூற்றாண்டு காலப்பகுதியில் இவர் சார்ந்த சமூகப்பெண்கள் மேல்சாதியினருக்குப் பயந்து மேற் சட்டைபோடாது குறுக்குப்பட்டுக் கட்டி இருப்பதே வழக்கம். இவர் பாரம்பரியத்தவரின் குலதெய்வம் பொலிகண்டி கந்தனவனக் கடவையாகும். இவர் தன் சகோதரியின் மகனான சி.க.ஆறுமுகம் மனைவியை சட்டைபோட்டு கந்தவனக் கோயிலிற்கு மிகத்துணிவுடன் தன் ஒற்றைத்திருக்கல் வண்டியில் அழைத்துச் சென்றுள்ளார். அதன்பின்னரே சட்டைபொடும் வழக்கத்தை இப்பகுதி மக்கள் மேற்கொண்டனர். ஊரில் வரும் பிணக்குகளை
←Ꮥ←ᏕᏊᏕᏊᏕᏇᏕ←ᏕᏇᏕᏇᏕ%Ꮥ2Ꭷ>2
(7)

Page 16
தீர்ப்பதற்கு தன்மதிநுட்பத்தைம் சண்டித்தனத்தையும் கையாள்வதில் வல்லவராகும். இதைவிட பெரும் துணிகரச்சம்பவம் ஒன்று அவரின் பாடலை நான் விபரிக்கும் போது அவரின் வீரநெஞ்சத்தை அறிவீர்கள்.
வேலுச்சட்டம்பியாருடைய கல்விப் பாரம்பரியம் சந்திவளவுப் பாரம்பரியம் என இவர்களை அழைப்பார்கள் காரணம் பிறந்த வீடு, 19 நுாற் றாணி டின் முற் பகுதியில் வேலுச் சட்டம் பியாருடைய திண்ணைப்பள்ளிக்கூடம் பரியாரி ஆள்வாரையும், உருவாக்கியது.அடுத்த பரம்பரையில் வைத்தியர் சி.சிலம்பு அவர்களையும், 20ம் நூற்றாண்டுமுற் பகுதியில் இவர்களின் அடுத்த பரம்பரையிலே சைவப்புலவர் சி.வல்லிபுரம், சமூகஜோதி ஆ. ம.செல் லத்துரை ஆசிரியர், கலாவினோதன் பெ.அண்ணாசாமி ஆசிரியர் திருமதி சு.பொன்னம்மா ஆசிரியை, திருமதி செ.மீனாட்சியம்மா ஆசிரியை, அதிபர்.மூ.சி.சீனித்தம்பி (B.A) ஆகியோர் பயிற்றப்பட்டதும், பட்டம் பெற்ற ஆசிரியர்களாகக் கடமையாற்றி
S. 66 TT66.
19ம் நூற்றாண்டில் வைத்தியர்களாக பரியாரி க.வே. ஆள்வார், வைத்தியர், வைத்தியர் க.வே.சின்னப்பிள்ளை வைத்தியர் சி.சிலம்பு, வைத்தயர் க.வே.சி.அருணாசலம், 20ம் நூற்றாண்டில் ஆயுர்வேத வைத்தியர் ஆகோவிந்தசாமி, டாக்ரர் சி.மாசிலாமணி, டாக்ரர் கா.சிவானந்தன் டாக்ரர் கோ.சபாநாதன் ஆகியோரைக் குறிப்பிடலாம்.
சோதிடர்களாக வேலுச்சட்டம்பியின் தந்தையார் கதிரன், சாஸ்த் திரியப் பா கந்தையா, சைவப் புலவர் சிவலி லிபுரம் , சோதிடர்.இயோகராஜா ஆகியோரைக் குறிப்பிடலாம்
சிறந்த கவிஞர்களாக பரியாரி க.வே.ஆள்வார், வைத்தியர் க.வே.சின்னப்பிள்ளை வைத்தியர் சி.சிலம்பு சைவப்புலவர் சி.வல்லிபுரம் கலாவிநோதன் பெ.அண்ணாசாமி, டாக்ரர் சி.மாசிலாமணி சோதிடர்.இயோகராசா ஆகியோர்களைக் குறிப்பிடலாம்.
(8)

※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※
நாடறிந்த சிறந்த கலைஞர்களாக கலாவினோதன் பெ.அண்ணாசாமி டாக்ரர் சி. மாசிலாமணி வைத்தியார்.ஆகோவிந்தசாமி ஒப்பனைக் கலைஞர் அவேலும்மயிலும் ஆகியோரைக் குறிப்பிடலாம்.
ilmillemi $lff L'
1931 ஆண்டு வதிரி வேதக்கோயிலுக்கு கிறிஸ்தவக் குருமார் வருகை தந்தனர். அவர்கள் சைவத்தை துரவழித்தும் கிறிஸ்தவ மத பெருமையை சிறப்பாகவும் பேசினர். அவர்களுடன் நேரில் நின்று வாதாட்டம் செய்தவர் காவே.சின்னப்பிள்ளை வைத்தியர் அவர்கள் ஆகும். அவர் சிறையில் இருந்தபோது அவர் செய்தகுற்றம் எதுவென வினாவி மருமகன் சிலம்பு வைத்தியர் க.வே.சி க்கு எழுதி அனுப்பிய கவிதையின் ஒருபகுதி இதனைக்காட்டுகின்றது.
பாதிரிகளுக்கு வியழஞ் சொன்ன வதிரியுறை வைத்தியரே விளம்பு!
மிஸன் பாடசாலை ஸ்தபிக்கப்பட்ட பின்பு அதற்கு அருகிலுள்ள உலக்கந் தோட்டம் வெட்டையில் பாதிரிமார் மக்களை அழைத்து பிரசங்கம் செய்வார்கள். இக்கூட்டத்தை குழப்புவதில் முன்னிற்பவர் சின்னப்பிள்ளை வைத்தியரே கிறிஸ்தவப்பாதிரி ஞானப்பிரகாசருடன் வாதாட்டமும் செய்துள்ளார். கவேசி அவர்கள் என்றால் அவரின் துணிகரமான செயற்பாடுகள் ஆகும், எமது மதத்தை வளர்ப்பதற்காக அந்தக்காலத்திலேயே கிறஸ்த்தவமதத்திற்கு எதிர்ப்புக் காட்டியுள்ள ஒரு பெருமகனார் ஆகும். முதலாவது தகனம் க.வே.சி அவர்களின் தலைமையில்.
சிறுபான்மைச் சமூகத்தவரின் இறப்பின்பின்பு அவர்களது பூத உடலை தகனம் செய்வதற்கு மேல் சமூகத்தவர்கள் விடுவதில்லை அவர்களின் பூதவுடல் காலம் காலமாக புதைக்கப்பட்டே வந்தது. 1923 Lb ஆண்டு இதற்கு எதிராக முதல்முதலாக போர்க்கொடி தூக்கினார்கள் வதிரி மக்கள். வதிரியில் சிறந்த சிவ பக்தை ஆகிய ஆதி என்பவரின்
Ꭷ2Ꭷ2Ꭷ←Ꮥ%Ꭷ←Ꮥ2ᏈᏕ2Ꭷ>2Ꭷ>2Ꭷ>2Ꭷ2Ꭷ2ᎧᎧ2ᎧᎧ2ᎧᎧ2Ꭷ>2ᎧᎧ?

Page 17
议伞※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※
பூதவுடலை மயானத்தில் எரிப்பதென முடிவெடுத்தனர். க.வே.சி அவர்கள் தனக்குத் துணைபோகவல்ல மு.கற்பர்,ஈசப்பா,வீரகத்தி,போன்ற இன்னும் பலருடன் சுடலையில் பூதவுடலை எரிக்க முற்பட்டனர்.
இவ்விடயம் அறிந்த மேல்சமூகத்தினர் பெருங்கலகத்தை ஏற்படுத்தினர். 19ம் நூற்றாண்டின் முற்பகுதியினிலே வதிரியூர் மக்கள் தொழில் கருதி தென்னிலங்கை சென்றிருந்தனர். பலவின மக்களுடன் பழகியதோடு வேற்று மொழிகளையும் துறைபோக கற்றுக்கொண்டனர். தென்னிலங்கைத் தொடர்பால் ஏற்பட்ட பொருளாதார விருத்தியின் பயனாக நாகரிகத்திலும் வளர்ச்சி கண்டனர். இத்தனை வளமும் பெற்றதன் பயனாக அவர்கள் பொலீசாரை அணுகி கலகம் நடந்த இடத்திற்கு பொலீசாரை அழைத்துவந்தார்கள். அங்குவந்த பொலிஸ் எட்டு மேல் வெடிகளை வைத்ததும் கலகத்தை ஏற்படுத்த வந்தவர்களில் மந்தாரக்கந்தன் என்பவர் தனது கத்தியுடன் ஓடிவிட்டார் இச்சந்தர்ப்பத்தில் கவிஞர் கவேசி அவர்கள் பாடிய பாடல்களில் ஒன்று
முட்டுக் கட்டை யொன்று போட எண்ணி மெட்டாக வந்தோரை நோக்கி பொலிஸ் எட்டுக் குண்டுகள் தீத்திடவே வெட்கி வீழ்ந்தாரே மந்தாரக் கந்தன் என்று கும்மி மெட்டில் பல பாடல்களைப் பாடினார் அப்பாடல்களை அன்றைய காலத்தவர்கள் அதனை ஒரு கும்மிப்பாடலாகப்பாடி ரசிப்பார்களாம் அப்பாடல் மனனத்தில் உள்ளோர் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இப்போராட்டத்தின் பின்பே சிறுபாமைச் சமூகத்தவர்களின் சடலங்கள் தகனம் செய்யப்பட்டன. இந்நிகழ்வு வில்லூன்றி மயான தகன நிகழ்விற்கு முற்பட்டதாகும். இதற்காகப் போராடிய வைத்தியர் க.வே.சி அவர்கள் சமூக எழுச்சிப்போராட்ட முனைப்பையும் துணிவையும் வியக்காமல் இருக்கமுடியாது. சாதிக் கெடுபிடி உள்ள காலத்திலேயே செய்துள்ளார் என்றால் அது
X ^SS> ← ᏕᏕ>ᏱᏚ СХЭС NXXX్ళ) b>3) > ← ※※ o
(10)

ΣΧΟΣΚΣSΣSΣΧΟΣΚΣΚΣΧΟΣΧΟΣΚΣΚΣΚΣ9ΣΧΟΣΚΣΚΣSΣΧΟΣΟΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΕ
மிகையாகாது. தகனம் செய்வதற்கு எதிர்ப்பாக இருந்தவர் இவருடைய அந்தியந்த நன்பரான கிறிஸ்த்தவரான முருகுப்பிள்ளைச் சட்டம்பியராகும். இச்சந்தர்ப்பத்தில் போலிச் சைவர்களைப்பற்றி க.வே.சி பாடுவதனை நாங்கள் பின்வரும் பாடலிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
ஆதியிலே சைவராக விருந்த
அன்பு மிகுந்த என் நன்னேசர் பாதிக்கிறிஸ்த்தவராம் முருகுப்பிள்ளையும்
பாங்காகப் பொய் சொன்னதைப் பாருங்கடி இப்பாடலிலிருந்து உயர் சமூகத்தவர்கள் மத்தியிலுள்ள போலிச்சைவர்களைப் பற்றி எள்ளி நகையாடுவது அறியக் கூடியதாக இருக்கிறது உத்தியோகங்களுக்காக சைவத்தை விட்டு கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய வேளாளர்களை கிண்டல் செய்வதனையும் அவர்கள் மீது ஆத்திரம் காட்டுவதனையும் இக்கவிதைவரிகள் எடுத்துக் காட்டுகின்றது.
வடமராட்சியின் கல்விப்பாரம்பரியத்தை நோக்குகின்ற போது சமூக விடுதலைப் போராட்டமும் ஒரு பாரம்பரியமாக வந்துள்ளது. க.வே.சி அவர்கள் கவிதையின் ஊடாகவும் நேரடியாகவும் தொடுத்த போராட்டங்கள் அவர் பாரம்பரியத்தில் ஊறியவர்கள் மத்தியிலும் வேர்விட்டுக் காணப்பட்டது. சிலம்பு வைத்தியர் சமூகஜோதி ஆம.செல்லத்துரையாகியோர் தங்களுடைய இளமைப்பருவத்திலேயே சாதி ஒழிப்புக்காக போராடியுள்ளார்கள் சமூகஜோதி ஆம.செ. அவர்கள் சமூகசேவாசங்கம் சிறுபான்மை தமிழர் மகாசபை ஆகியவற்றின் செயலாளராக இருந்து சமூக விடுதலைக்காக போராடியுள்ளார் இவருடைய சமூகப்பணி ஆய்வுக்குட்படுத்தப்படவேண்டிய ஒன்று சமூக சாதி ஒழிப்புப் போராட்டங்களில் ஆலயப் பிரவேசங்களில் முன்னின்று உழைத்தது மட்டுமல்ல அந்தக் கால கட்ட அரசியலிலும் இவருடைய ஈடுபாடு காணப்பட்டது.

Page 18
செனட்டர் ஜீநல்லையா திரு.எம்.சி.சுப்பிரமணியம் திரு.யோவேல் போல் ஆகியோர்களுடன் ஒன்றிணைந்து சமூக விடுதலைக்காக உழைத்தவர் அவர்களின் நண்பராகவும் சிலசந்தர்ப்பங்களில் எதிரியாகவும் இருந்தாலும் குறிக்கோளில் யாவரும் ஒன்றாகவே செயற்பட்டனர் அவரின் பணிக்காக அவர் சார்ந்தவர் சமூக ஜோதி என பட்டமளித்து கெளரவித்தார்கள். பிற்காலங்களில் நடந்த ஆலயப்பிரவேசம் போன்றவற்றிற்கு க.வே.சி அவர்களின் பாரம்பரியத்தில் ஆ.ம.செ சைவப்புலவர் போன்றோர் முன்னின்று உழைத்தவர்கள் ஆகும் அதேபோல க.வே.சியின் இன்நொரு பேரன் ஆகோவிந்தசாமி என்பவர் பெரியார் ஈ.வே.ரா அவர்களின் நாஸ்திகக் கொள்கையில் வளர்ந்து அவ்வழியின் மூலம் தன்பங்களிப்பை சமூக வளர்ச்சிக்காக செய்துள்ளார். க.வே.சி அவர்களின் இன்னொரு பேரனாகிய ஐ.க.மாணிக்கமவர்கள் அல்வாய் கிராமசபைத் தேர்தலில் காலம் காலமாக யூரியாக வந்த ஒரு சாதிமானிற்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டு யூரிமாணிக்கம் ஜே.பி ஆக வந்துள்ளார். அமரர் எம்.எஸ்.சீனித்தம்பி அவர்கள் கல்விச் சேவையோடு சமூகப்பணியிலும் ஈடுபட்டு உழைத்ததனால் அவருக்கு சாதனை மனிதர் என விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார். இவை கவேசி அவர்களின் பாரம்பரியத்தில் விழைந்த நல்முத்துக்களாகும்.
மன்னும் சரமகவி பல்லோர்க்கும் பாடிவரு
சின்னப் பிள்ளைக் கவிஞர் சென்றார். சரமகவி இயற்றுகல் திண்ணைப் பள்ளிக்கூட மரவில் வந்துள்ளது. இதனை கவிஞர் மு.செல்லையா அவர்கள், க.வே.சி அவர்கள் சரமகவி யாப்பில் வல்லவரெனக் கூறியுள்ளார். க.வே.சி அவர்கள் உயர்சாதியினர்க்கும் எம்மவர்க்கும் பல சரமகவிகள் பாடியுள்ளார். அவர் பாரம்பரியத்தில் இருந்து அடுத்த தலைமுறைகளில் வைத்தியர் சி.சிலம்பு, சைவப்புலவர் சி.வல்லிபுரம் பெ.அண்ணாசாமி ஆசிரியர், இயோகராஜா சோதிடர் ஆகியோர் சரமகவி பாடியிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.
(12)

தோத்திரப் பாடல்கள் யாவதும் திண்ணைப்பள்ளிக்கூட மரபிலிருந்து வந்துள்ளன. இதற்குக் சாண்றாக பரியாரி ஆள்வார் அவர்களின் பூவற்கரை பற்றிய திங்கள் சூடும் அரனருள் மைந்தனே என்றபாடல், சைவப்புலவர் சி.வல்லிபுரம் அவர்கள் பூவற்கரைப் பிள்ளையார் மீது தோத்திரப் பாடல்களையும் ஊஞ்சல் பாடலையும் பாடியுள்ளார். சைவப்புலவரின் ஊஞ்சல்ப்பாட்டை நிறைவு செய்து வாழ்த்து எச்சரிக்கை பராக்கு, லாலி, மங்களம் என்பவற்றை இப்பாரம் பரியத்தில் வந்த இயோகராஜா சோதிடர் அவர்கள் பாடியுள்ளார்.
க.வே.சி அவர்களும் சிலம்பு வைத்தியர் அவர்களும் பொலிகண்டி கந்தவன நாதர் மீது பதிகங்கள் பாடியுள்ளதாக அறியமுடிகின்றது. அவை இன்று எமக்குக் கிடைத்தில.
கவிஞர் க.வே.சி அவர்களின் கவித்துவத்தைப் பற்றி வைத்தியர் சி.சிலம்பு அவர்கள், “பல்வேறு பாக்களையும் பாடவைத்தாய்” எனக் கூறிய கூற்றிலிருந்து க.வே.சி அவர்கள் ஒரு கவிஞராக இருந்ததோடு நிற்காது சிலம்பு அவர்களுக்கு பல்வேறு வகையான பாவகையினைப் பாடவைத்திட்ட ஒரு ஆசிரியராக இங்கே விபரிக்கின்றார்.
கவிஞர் மு.செல்லையா க.வே.சி பற்றிக் கூறியவை . “பன்னும் சரமகவி பல்லோர்க்கும் பாடிவரு சின்னப்பிள்ளை கவிஞர்” “கவிபுனை வித்தகன் பாவலன் கந்தனை வந்தனைசெய் கவியான்” பல்லோர்க்கும் என்பதன் மூலம் உயர் சமூகத்தவர் உற்பட யாவருக்கும் சரமகவி பாடியுள்ளார் என்றும் பல தோத்திரப்பாடல்களை கந்தனை வேண்டிப் பாடியுள்ளதாகவும் அவர் கூற்றினால் அறியக்கூடியதாக உள்ளது.
சைவப்புலவர் சி.வல்லிபுரம் அவர்கள் அவர் பற்றிக் கூறியது.
“ஒப்பில் கவியுளம் காட்டுமுன் கற்பனை சால் பேச்சு” "இராசாவும் தேவி அன்னம்மாவு மிங்கு வார்த்தனர் பாலுன் பாவாய்க்கு”
(13)

Page 19
浚※
இங்கு பாவாய்க்கு என்பது பாக்களை வெளிக்கொணர வல்ல வாய் என்பதன் மூலம் அவரின் கவியாற்றலை மிகத் துல்லியமாக வெளிக்காட்டுகின்றார்.
சின்னப்பிள்ளை வைத்தியர் அவர்களின் கவிதைகளை உற்று நோக்குகின்ற போது இனிய ஓசை சந் தங்கள் எண் பன விரவிக்காணப்படுகின்றன யாப்பிலக்கணம் படிக்காத காலத்திலேயே திடீரென பாடல்களை ஆக்கக்கூடிய வல்லமை உள்ளவர். இவர் வெண்பா இன்னிசை வெண்பா, நேரிசை வெண்பா, சித்திரக்கவி, ஆகியன புனைவதில் வல்லவர் இவருடைய பாடல்களில் சிலேடை நயம் காணப்படுகின்றது. சில பாடல்கள் வினா உத்தரம் அமைப்பிலும் காணப்படுகின்றன. இவர் பாடிய பாடல்கள் பல கிடைக்கவில்லை கிடைத்தபாடல்கள் சில கவிநயம் மிக்கவையாகவும், இலக்கியச் சுவை வாய்ந்தவையாகவும் காணப்படுகின்றது. பொருள், அணி என்பன இவருடைய கவிதைகளில் சிறப்பு மிகுந்து காணப்படுகின்றது அதுமட்டுமல்ல இவருடைய மாணாக்கரான வைத்தியர் சிலம்புவிற்கும் இவருக்குமிடையே உள்ள கவிதைத் தொடர்புகள் உள்ளத்தை உருக்கு வதாகவும் அணி நயங்கள் மிக்கனவாகவும் காணப்படுகின்றன. இவருடைய கவிதையில் திருமுகம் எழுதும் அமைப்பில் காணப்படுகின்ற கவிதைகள் அக்காலத்தில் சக்தி முத்திப்புலவர் பாடிய கவிதைக்கு நிகரானதாக காணப்படுகின்றது. சிலேடைக்கவிதைகளும் இக்காலத்திற்கும் பொருந்தக்கூடியதாக காணப்படுகின்றது. க.வே.சி அவர்களின் கவிதைகள் பல எழுத்து வடிவம் பெறவில்லை அதே நேரம் கர்ண பரம்பரையாக சேர்த்து வைக்கப்படவும் இல்லை அவர்களுடைய பரம்பரையினர் அவற்றை பேணிப்பாதுகாக்க தவறிவிட்டனர் இவற்றிற்கு அக்கவிதைகள் பற்றிய அறியாமையே அல்லது அதன் மீது ஆர்வமின்மையோ காரணமாக இருக்கலாம். இவரின் வரலாற்றை நோக்கும் போது இவர் ஒரு வரகவியாக திகழ்ந்துள்ளார். அவரின் கவிதைகள் அவர் வாழ்ந்த கால நிர்ணையம் வரலாற்றை XXXXXXXXXXXXX : ఛ

※
எடுத்துக்காட்டுவதோடு அமையாது அவ்விலக்கிய வடிவம் அவற்றின் மரபு எத்தகையது என்பதையும் அவர் வாழ்ந்த காலத்தில் தன் சமூகத்திற்காக எவ்வெவ் மாற்றங்களை, புதுமைகளை புரிந்தார் என்பதையும் இதன் மூலம் ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் இவர் வரலாறும் நினைவு கோரத் தக்கது என்பதோடு தேவரையாளிச் சமூக கல்விப் பாரம்பரியத்திற்கு முன்னோடியாக, ஒரு கவிஞராக, சிறந்த கல்விமானாக வாழ்ந்துள்ளார் என்பதனை எடுத்துக்கூறியுள்ளேன். கிடைக்கப்பெற்ற ஒருசில கவிதைகளில் இருந்து சின்னப்பிள்ளை வைத்தியரின் கவித்துவம் பற்றி சைவப்புலவர் சிவல்லிபுரம் அவர்கள் அடுத்துவரும் அத்தியாயத்தில் சிறப்பாகக் கூறுவதைப் பார்ப்போம்.

Page 20
添
afg) LDub
வதிரி தேவரையாளிச் சைவவித்தியாசாலை ஸ்தாபகருள் ஒருவரும்
தமிழ்க்கவிஞரும் பிரபல்ய ஆயுர்வேத பண்டிதரும் ஆகிய,திரு.
க.வே.சின்னப்பிள்ளைவைத்தியர் அவர்களின்
தேகவியோகப் பாக்களும்
அன்னவராற் பற்பல சந்தர்ப்பங்களிலே LITL'IULL 56)
தனிச்சடைல்ஸ்வூத்.
கலாநிதியந்திரசாலை, பருத்தித்துறை.
1948.
ܚܕܽ

Σ9Σ9Σ9ΣΧΟΣ ΣΧΟΣ ΣΧΟΣ9Σ9Σ9ΣχΣ9Σ9Σ9Σ9Σ9Σ9Σχ9Σ9ΣΚΣχΣΧΟΣΚΣΚΣ சைவப்புலவர் திரு.சி.வல்லிறன் ஆசிரியர்
அவர்கள் சொல்லியவை.
Q660. LIT. தப்பிதங்கள் செய்து சமாதான மாகச்சின் னப்பிள்ளை யென்றறையுமப்பாவே-ஒப்பில் கவியுளங் காட்டுமுன் கற்பனைசால் பேச்சைப் புவியிலினிக் கேட்பதுமெப் போது.
பெற்றிழந்த மைந்தனும்நீ பேறடையாப் பெண்ணுமிந்த நற்புவியில் வந்துன் நலிவுதணை-முற்றாகத் தீர்த்ததுபோல் ராசாவுந் தேவியன்னம் மாவுமிங்கு வார்த்தனர் பாலுன்பா வாய்க்கு. காலஞ்சென்ற திரு.க.வே.சின்னப்பிள்ளை வைத்தியர் அப்பா அவர்களின் பிற்கால வாழ்க்கையானது பற்பல எதுக்களால் ஒளிமங்கிக் காணப்பட்டதாயினும், அவர்களது இளம்பருவ வாழ்க்கையோவெனின் மாசற்ற மாமணிபோற் பேரொளியுடன் திகழலாயிற்று. அந்தக்காலத்திலே பற்பல சந்தர்ப்பங்களிலே அவர்கள் பாடியுள்ள அருங்கவிகள் மிகப்பலவாகும். அவற்றுள் இப்பொழுது கிடைத்துள்ளவற்றுட் சல பாக்கள் அவை பாடப்படட சந்தர்ப்பங்களோடு கீலே எழுதப்பட்டிருக்கின்றன.
வைத்தியர் அவர்கள் வாலிபனாய் இருந்தபோது வதிரியில் நிகழ்ந்த ஒரு கொலை வழக்கில் கொலையாளி என்று வீண்பழி சுமத்தப்பட்டார். ஐப்பசி மாதத்து வெள்ளிக்கிழமை ஒன்றில் கந்தவன ஆலயஞ் சென்று தமது வழிபடுகடவுளாகிய முருகப்பெருமானைத் தரிசனஞ் செய்து விட்டு வீட்டுக்கு மீண்டுவரும் வழியில் பொலிசாராற் கைதுசெய்யப்பட்டபோது பாடியது.
"பாளைவாய் கமுகில் வந்துர்" என்ற காவடிச்சிந்து மெட்டு. ஐப்பசிவெள் எளிக்கிழமை பத்தினியாச் சன்சமைத்த
அன்னமின்னும் உண்ணவில்லை ஐயா-உயர் வன்னமயி லேறுமுரு கையை, சங்கரனுந் தன்சிரசிற் கங்கையைமுன் னாட்சுமந்தாள் பங்கயனும் நாவில்வைத்தான் பாவையே-மாயன் சங்கையாய்மார் பிற்றரித்தான் பூவையே. இனிய சந்தமும், அகப்பொருள் நுட்பமும், விழுமிய குறிப்புப் பொருளும் ஒருங்கே அமைந்து மிளிரும் இட்பாடலைப் பாடிய நாட்களில் வைத்தயர் அவர்களுக்கு யாப்பிலக்கண விஷயம் ஒன்றுமே தெரியாதென்பது இங்கு அறியத்தக்கது. "ஆச்சன்" என்பது வைத்தியரவர்களின் புத்திளம் மனையாளின் பெயராகும்.
劾
(17)

Page 21
努※※※※※※※※※※※※※※※※※※※※
வைத்தியரவர்கள் கொழும்புச் சிறைச்சாலையில் இருந்தபொது புதிய பாராளுமன்றத்திலே பண்டாரவளைப் பிரதிநிதியாக இருந்துவரும் திரு.V.நடராச M.P அவர்களின் தந்தையாரும், பிரசித்திபெற்ற யாழ்ப்பாண் புலவர்களுள் ஒருவருமாகிய திரு.கல்லடி வேற்பிள்ளை அவர்களும் சிறைக்கைதியாக அங்கு சேர்க்கப்பட்டார். “கற்றாரைக் கற்றாரே காமுறுவர்” என்றபடி இருவருக்கும் பரஸ்பா நட்பு ஏற்படலாயிற்று வைத்தியர் அவர்கள் இயற்கையாகவே கவிபுனையுந் திறத்தைக் கண்ட புலவர் அவர்கள் அங்கிருந்தே யாப்பிலக்கணத்தை முறைப்படி பாடஞ்சொல்லி வைத்தார்கள். அதன்பின்பு வைத்தியர் அவர்கள் பாடிய செய்யுட்ளெல்லாம். தமது ஆசிரியன் செய்யுட்களைப்போலவே சிலேடை, வஞ்சப் புகழ்ச்சி (நிந்தாஸ்துதி) முதலிய பொருளணிகளும், திரிபு முதலிய சொல்லணிகளும் பெற்று மிகச் சிறந்து விளங்கின.
வதிரியில் வைத்தியர் அவர்களின் சுற்றத்தவர்களுள்ளே காலஞ்சென்ற திரு.ஆ.வயிரவி அவர்களும் ஒருவராவர், வைத்தியருக்கு மருமகன் முறை பூண்டவராயினுஞ் சமவயதுடையவர். வைத்தியருக்கு மருமகன் முறை பூண்டவராயினுஞ் சமவயதுடையவர். இருவரும் அத்தியந்த நண்பர்கள், கழுத்துறையிலே தொழில் நடத்திக்கொண்டிருந்த அந்த வயிரவி என்பவர் கொழும்புச் சிறைக்கு வைத்தியர் அவர்கள் போனபோது தமது தொழில் நிலையத்தையுங் கொழும்புக்கு மாற்றிக்கொண்டு அடிக்கடி சிறைச்சாலை சென்று வைத்தியர் அவர்களைப் பார்த்து வேண்டுஞ் செளகரியங்கள் செய்துவிட்டுப் போவர். சிறைச்சாலை சென்று வைத்தியர்அவர்களுக்கு அறிவித்துவிட்டுத்தான் வேறு இடங்களுக்குச் செல்லும் வழக்கமுடையவர். சிறந்த விஷ்ணு பக்தர். கொழும்பிலிருந்து வீட்டுக்கு வருகையிலுங் கூட வல்லிபுரக் கோயிலுக்குச் சென்று அச்சுதனை வழிபட்டு மீளும் நியதியுடையவர். பொன்னு என்னும் பெயரையுடைய இவரது மனைவியார் ஒரு முறை அனுப்பிய அவசர தந்தியொன்றைக் கண்டு வைத்தியர் அவர்களுக்கு அறிவிக்காமலே வீட்டுக்கு வந்துசேர்ந்தார். இச்செய்தியைப் பிறர்வாயிலாக அறிந்த வைத்தியர் அவர்கள் உடனே பின்வரும் செய்யுளை வயிரவி அவர்களுக்கு அனுப்பியிருந்தார்.
கட்டளைக் கலித்துறை. பொன்மாது நாயகன் அச்சுதன் பாதத்தைப் போற்றிடுநற் பொன்மாது நாயக னான வயிரவிப் புண்ணியனே பொன்மா தனுப்பிய தந்தியைக் கண்டு புறப்பட்டனை பொன்மாதுக் கேதும் இடரோ எனக்குப் புகலுதியே. இச்செய்யுளிலே முன்கூறிய பொருளணி சொல்லணிகள் மட்டுமன்றிச் செய்யுளின் உயிர் என்று செந்நாப்புலவர்களாற் சிறந்தெடுத் தோதப்படும் "தொனி" என்னும் உயர் அர்த்தம் புதைந்திருத்தலை "புண்ணியனே' "இடரே" என்னுஞ் சொற்களைப் பன்முறை கூறிக் கண்டுகொள்க.
Ꮥ%Ꭷ←ᏕXᏕ%ᏕXᏕ%Ꭷ←Ꮥ2Ꭷ←Ꮥ%Ꭷ← (18)

深
வைத்தியர் அவர்கள் சிச்ைசாலையிலிருந்து அடிக்கடி தாயாருக்கு கடிதம் எழுதுவது வழக்கம். எழுத்தறிவு அற்றவராகிய அத்தாயார் கடிதங்களை எடுத்துக்கொண்டுபோய்க் காலஞ்சென்ற வதிரி திருபீற்றர் தானியேல் என்னும் பண்டாரச் சட்டம்பியார் அவர்களிடங் கொடுத்து வாசிப்பித்து அவர்களைக்கொண்டே பதிலும் எழுதுவித்து அனுப்புவார். ஒரு முறை ஒரு கடிதத்துக்குப் பதில் வரையும்போது குறித்த சட்டம்பியார் அவர்கள்
“உருகி அமுதூட்டி ஓவியம்போ லேவளர்ந்த அருமைமகன் காகிதங்கண் டகமகிழ்ந்தேன்" என்ற ஓர் உரைச்செய்யுளிற்றோடங்கிக் கடிதத்தை எழுதி முடித்து அனுப்பியிருந்தார். இதனைக் கண்ட வைத்தியர் அவர்கள் வேற்றுத்தளை விரவியிருப்பினுஞ் செப்பலோசை சிதையாமையால் இதனையே ஒரு வெண்பாவின் முதலிரண்டடிகளாக வைத்துக்கொண்டு,
"உரிமையுள தாயா ரெழுதிவிட்ட சங்கதிக ளத்தனையும் ஓயாமற் பார்த்தேன் உவந்து" என்று தனிச்சொல்லையும் பின்னிரண்டடிகளையும் பூர்த்திசெய்து வெண்பாவை முடித்துத் தாயாருக்குத் திருப்பி அனுப்பி வைத்தனர். இந்த வெண்பாவின் ஈற்றடியிலுள்ள நயத்தை ஓயாமற் பார்த்து உவக்காமல் இருக்க யாருக்கேனும் இயலுமா?
கல்வித்தாகத்தைத்தீர்த்துக்கொள்ள நல்லாசிரியரும், கைதி என்ற நிலைமாறிக் கொஸ்தபால் பதவியும் வாய்க்கப்பெற்றுச் சிறைச்சாலையானது கலைச்சாலையாக இருந்தபோது வைத்தியரின் மருகரும்,மாணக்கரும் தம் வழிபடுகடவுளாகிய முருகப்பெருமானின் எண்ணிறந்த திருநாமங்களுள் ஒன்றையே (சிலம்பன்) பிள்ளைப்பெயராகக் கொண்டவரும் ஆகிய திரு.வ.சி.சிலம்புவைத்தியர் அவர்கள், மாமனாரின் பிரிவினாலே தமக்குற்ற நட்டங்களை எண்ணியெண்ணிச் சிந்தை நொந்தும், சிறைவாசம் நேர்ந்ததற்குரிய காரணங்களை ஆய்ந்தும், வளர்ச்சியற்ற தமது இளம்மனப் போக்குக்கேற்ப ஐயநிலையில்,
"மாமா மறியலின் சாலையி லேகி மறைந்தனையோ தோமாற நல்லுரை சொல்ல ஒருவர் துணையுமிலை நாமது நாயகன் கையெழுத் தோவிது நாமறியோம் ஏமாப் பிழந்தனம் நின்னையல் லாதிங் கெவர் துணையே. என்ற ஒரு கட்டளைக்கலித்துறை எழுதிச் சிறைச்சாலைக்கு அனுப்பியிருந்தார். இப்பாட்டுக்கு உந்தாமாகச் சாதாரண தமிழ்முறைக்கடிதத்தின் அங்கங்கள் யாவும் பொருந்தச் சிலகவிகளை ஆக்கிய வைத்தியர் அவர்கள் “சீட்டுக்கவிதை” என்று தாமே பெயருமிட்டு அவைகளைத் திரு.சிலம்பு அவர்களுக்கு அனுப்பிவைத்தார். அவை வருமாறு.
缀※ (19)

Page 22
※※
ረጎ
இன்னிசை வெண்பா. நாட்டுபுகழற்று நலிவுற்ற நான் சிறைக்குட் பாட்டெழுத வைத்த பரஞ்சோதி - காட்டானை மாமுகவன் அம்பிகைமைந் தன்வலவை நேயனருள் தூயவடி என்றுந் துணை.
பின்முடுகு வெண்பா. திருமால் மருகன் திகழ்நாமம் பூண்ட மருமான் தனக்கு வரையும்-நிருபம் தனைவழுவறு வெழுதவுமவர் தமியனில்வழு மொழிபுகுமது தனைநெறுவிடல் புரிதரவுந் தாள். "பிள்ளையார்கழி' 'கணபதிதுணை" "இன்னவருக்கு எழுதிக்கெrள்ளுங் கடிதம் என்னும் சாமானியவிஷயமே இவ்விரு பாடல்களாலுங் குறிக்கப் பட்டிருப்பினும், முதற்பாட்டின் முதலிரண்டடிகளும் கன்னெஞ்சினரையுங் கசிந்துருகிக் கsன்ைனர் மல்கச் செய்யும் ஓசையும் பொருளும்பெற்று விளங்குகின்றன.
ஆசிரியலிருத்தம் நாமாது நாயகன்கை யெழுத்தெவ் வாறோ
நாமறியோ மென்றனையப் பிரமனாக்க லாமானா லினிக்காத்த லவனுக் கில்லை
அலர்மகள்நா யகநாமச் சுதன்பா ரத்தே தேமாலை உரம்புனைந்து பிடகந் தேர்ந்த 출 செப்பரிய சுகுணமரு மகனே யிந்த
எமாறு சிறையிலிற்றை வளவுங் காத்தான்
இனியெனைக்காப்பதற்கரிதோ எண்ணு வாயே
199 KK
ஆரணங்கள் இவன்செயலென் றறையுமிந்த
அயன்விறலுற் றவனாயின் தலைகளைந்தில் வீரமுற வடுகனென்றைக் கொய்தபோது
விறலெங்கே போனதுநான் முகமேயின்றும் பூரணமாய் இவனையினி வலிமைநிதி
பொறையிரக்க முடையதெய்வ மென்னலாமோ நாரணன்றன் மருகாவுன் னப்பன்செய்யும்
நடமென்றே யென்னுளத்தே நம்பினேனே. இவ்விருசெய்யுட்களும்"நாமாது நாயகன் கையெழுத் தோவிது நாமறியோம்' என்ற மருகரின் ஐயத்தைத் தெளிவாக்க எழுதப்பட்டன, இரண்டாம் பாட்டின் ஈற்றடியில் "காரணன்றன் மருகா" என்றிருப்பது வைத்தியரின் வழிபடுகடவுளாகிய முருகனுக்கும்
குறித்த மருகனுக்குஞ் சிலேடை.
(20)
ܝܐ

>3※※※ ΣΚΣΚΣ XX
என்தமரை எனக்கெதிரி யாக்கி வைத்தான்
யாதுமின்றி யவரைவழக் காடவைத்தான். பின்பெனையுள் நலிந்துபண மழிக்க வைத்தான்
பேதையென நீதிமன்ற மோத வைத்தான் கன்றமருஞ் சிறையிலெனை அமர வைத்தான்
கைக்குவிலங் கிடவைத்தான் உடையூண் மாற்றிப் பொன்றுநிலை தனிலென்னை யிருத்தி யப்பன்
புரிந்ததிரு விளையாட்டுப் பொறுக்கொண்ணாதே. இதற்கு முந்திய செய்யுளின் ஈற்றடியிலே தொகுத்துச் சொல்லப்பட்டதை இதில் விரித்துக் காட்டியுள்ளார். அவலச் சுவைக்கு அரிய எடுத்துக்காட்டாக அமைந்துள்ள இப்பாடலிலே தாம் நிரபராதி என்பதனை மிக உருக்கமாக உரைத்துள்ளார். இப்பாட்டுடன் கடிதத்திலே எழுத எடுத்துக்கொண்ட பொருள் முடிவடைந்து விட்டது. இனி இருப்பது கையொப்பம். அதற்குச் செய்யுள்:-
வெண்பா சந்தம் பொருள்யாப்புச் சார்ந்த இலக்கணங்கள் சிந்தியிருந் தாலும்நீ சிந்தியாய் - சொந்தமுற சீட்டுக் கவிதையிவை சீர்மருகா இங்ங்ண்ம்வேல் ஊட்டுசின்னப் பிள்ளை உணர். இவ்வெண்பாவில் “வேல் ஊட்டு சின்னப்பிள்ளை” என்னுந்தொடர் மும் மொழிச் சிலேடை. க.வே.சின்னப்பிள்ளை என்னுந் தமது பெயருக்குக் கதிரன் வேலன் மகன் சின்னப்பிள்ளை என்றும், கல்லடி வேற்பிள்ளை மாணவன் சின்னப்பிள்ளை என்றும், கந்தவன வேலன் அடிமை சின்னப்பிள்ளை என்றும் வைத்தியர் அவர்கள் விளக்கஞ் சொல்வதுண்டு கடிதம் எழுதி முடிந்து கையொப்பமும் வைத்தாயிற்று. இன்னுஞ் செய்யவேண்டியது ஒன்று உண்டல்லவா? அதுதான் கடிதம் போய்ச் சேரவேண்டியவரின் மேல்விலாசம் எழுதுதல். அதனைக்குறித்து செய்யுள்:-
பன்னுயாழ்ப் பாணம் பருத்தித் துறைவதிரி என்னும் பதியில் இருக்கின்ற - சின்னன் தடஞ்சால் வயித்தியநூல் சாருஞ் சிலம்பர் இடஞ்சேர வேண்டும் இது. "சின்னன்' என்பது சிலம்பு அவர்களின் தந்தையாராகிய சின்னப்பொடி என்பதன் குறுக்கம். சிலம்பு அவர்களின் தாய்பெயருஞ் சின்னன் என்பதே இவர் வைத்தியர் அவர்களின் தமக்கையாராதலால் அந்த உரிமையுந் தோன்ற இவ்வாறு குறுக்கினார்போலும்.
இற்றைக்கு 25 ஆண்டுகளுக்கு முன்னர் வதிரியில் இறந்த ஆதி என்னும் பெயருடைய பக்தை ஒருவரின் பிரேதத்தை மயானத்திலே தகனஞ் செய்யும்
※
(21)

Page 23
விஷயத்தில் எம்மவர்களுக்கும் வேளாளர்களுக்கும் பெரியதொரு கலகம் ஏற்படலாயிற்று இதனையிட்டு அரசாட்சியர் விசாரணை நடத்தியபொழுது வைத்தியர் அவர்களின் நண்பரும் வேளாளரும் ஆகிய கிறீஸ்தவர் ஒருவர் சில பொய்முறைப்பாடுகளைச் சொன்னார் கண்ணியமான நிலைமையிலிருந்த இவ்வேளாளர் கிறீஸ்து தர்மத்துக்கே முற்றும் மாறாகச் சாதியபிமானங்கொண்டு போலிச் சைவர்களைப்போன்று பொய் புகன்றமையைப் பொறுக்கமாட்டாது வைத்தியர் அவர்கள் LITT LQU ig5).
கும்மி. ஆதியி லேசைவர் ஆக இருந்தவர்
அன்பு மிகுந்தவென் நன்னேசர் பாதிக் கிறீஸ்தவ ராம்முரு குப்பிள்ளை
பாரப்பொய் சொன்னதைப் பாருங்கடி இன்னுஞ் சின்னப்பிள்ளை என்னுந் தமது பெயரை வைத்துக்கொண்டு வைத்தியர் அவர்கள் விருத்தாப்பிய தசையிலுங்கூட நகைச்சுவை தோன்றச் சிலேடையாகப் பேசிய சந்தர்ப்பங்களும் பாடிய பாக்களும் பற் பலவாகும் அவற்றுள்ளும் ஒன்று வருமாறு :-
வெண்பா எல்லா மரபி லிருக்குங் குமரிகளும் நல்லமுத்தந் தந்திடுவார் நான்பெறுவேன் சொல்லாடி உள்ள முவப்பார், உயிரென்பார், ஏன்சின்னப் பிள்ளையென்பே தேயென் பெயர். வைத்தியரும், வைத்தியரது ஆசிரியராகிய கல்லடி வேற்பிள்ளை அவர்களும் சிறையினின்றும் வெளிவந்த பின் அடிக்கடி இருவருக்குமிடையிற் கடிதப்போக்கு வரவு நிகழ்ந்ததுண்டு அக்கடிதங்களுட் பல செய்யுள் நடையிலேயே அமைந்திருந்தன. அவற்றுள் ஒரு வெண்பா சித்திர கலியைச் செர்ந்த வினாவுத்தரம் ஆகும். வினாவை விடுத்தவர் வைத்தியர் விடை (உத்தரம்) கொடுத்தவர் கல்லடி வேற்பிள்ளை அவர்கள்.
Gój606, LIT. கண்டபடி பெண்டுகளைக் கைப்பிடிப்பே னென்மீது கொண்ட அன்பு ஊரிற் குறைந்திலதேன்? - அண்டுசின்னப் பிள்ளையுநீ அல்லாது பேணும் வயித்தியனாய் உள்ள சிறப்பெண் றுணர்.
முற்றும் öiLILíb
- 7 بر\

||- |- |- |- |-- |- |- |- |-· |- |-|- |- · |- |- |-
|- |-|-|- |- |- |- |-|- |-! |- |- - |- |- |- |-|- |-|- . |- | |- |-|- |- |- |-|- |- - |- |- |- |-|- · |- |- |- |- |- |- |-|- |- |- |- |-|- |-
|- - |- |- |- o - |- |- |- |- |- |- ,|- |- |- |- |- |- |- |-... |-|- |- . |-
|- |-|× |- |- |- | |- |- |-|- |- |-|-
|- |- |- |- |-
|- |-
|- |- |- |- |-|-|- |- |-
- |- |-|- |- |-
|-|-
|- |-
|- |-
|- |-
|- |-
|- |-|- |- |-
|- |- |- |- |-
|-
|- |- ----
· -!=*- =|-•o. |- |- - |- · 「 - |-, !- ==No - -|- |-----) |- |-|--------- |-

Page 24
ខ្លឹ និព្វា
 

க்ஸ் வதிரி