கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வெளிநாட்டுக் கதைகள் (புலம்பெயர் படைப்பாளிகளின் சிறுகதைகள் சில)

Page 1

፴ ;

Page 2


Page 3

வெளிநாட்டுக் கதைகள்
(புலம்பெயர் படைய்பாளிகளின் சிறுகதைகள் சில
இராசையா தவமணிதேவி நினைவு வெளியீடு ஐங்கரபதி மயிலிட்டி, அல்வாய்,
τιπρύπΝπαπιD.
7

Page 4
நூல் விபரம்
நூல் - ഖണി|"[് യേg്
(புலம்பெயர் படைப்பாளிகளின் சிறுகதைகள் சில
தொகுப்பு :- சு. குணேஸ்வரன்
முதற்பதிப்பு :- 14-05-2007
வெளியீடு :- திரு. இராசையா ஐங்கரன் (சுவிஸ்)
அச்சிட்டோர் :- மதுரன் கிரா(f)பிக்ஸ்
அல்வாய்.
முன் அட்டை ஓவியம் :- ஒவியர் மாற்கு (1933-2000)
நன்றி 8- ) 6)86 தமிழோசை
சர்வதேச காலாண்டு தமிழ் சஞ்சிகை மே 2002, கனடா.

கெஸ் 2Mவுக்கும் ம்ெonவுக்கும்.

Page 5

வெளியீட்டுரை
“அன்னையைப் போலொரு தெய்வமில்லைவ. அவள் அடிதொழு மறப்பவர் மனிதரில்லை மண்ணில் மனிதரில்லை’
-கா. மு. ஷெரிப்
எமது அன்னை இராசையா தவமணிதேவி அவர்களின் 31 ஆம் நாள் நினைவு நாளினை முன்னிட்டு வெளிநாட்டுக் கதைகள் என்ற சிறுகதைத் தொகுப்பு நால் வெளியிடப்படுகின்றது. எமத குலவிளக்காகத் திகழ்ந்த எம் அன்னையை நினைவுறுத்தம் வகையில் எடுத்த இம்முயற்சி எல்லோருக்கும் பயனளிக்கும் என்று எண்ணுகின்றோம்.
இன்று வெளிநாட்டில் வாழும் நம் உறவுகளின் வாழ்வைப் புரிந்த கொள்வதற்கும், குறிப்பாக கலை இலக்கிய ஆர்வலர்களுக்கும் உயர் வகுப்பு மாணவர்களுக்கும் மிகப் பயனளிக்கக் கூடிய இந்நூலை கூடியவரையில் மற்றவர்களுக்கும் கொடுத்து உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
இம்முயற்சிக்கு ஒத்தழைப்பு நல்கிய எம் குடும்பத்தினருக்கும், இந்நூலை தொகுத்தத் தந்த சு. குணேஸ்வரனுக்கும் இதனை நன்கு நாலாக்கித் தந்த மதரன் கிராபிக்ஸ் சு. மகேஸ்வரனுக்கும் எம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
“ஐங்கரபதி” திரு இராசையா ஐங்கரன் (சுவிஸ்) மயிலிட்டி, அல்வாய்.
யாழ்ப்பாணம்.
14.05.2007

Page 6
தொகுப்புரை
..مؤرخ لحمGa فمثلاخAGواC
ஒருவரின் மறைவின் பின்னர் அவரை நினைவுபடுத்தம் வகையில் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதண்டு. அதன் ஒரு அங்கமாகத் திகழும் நினைவுமலர் வெளியீடுகள் பலருக்கும் பயன் தரக்கூடியவாறு அமைவதண்டு. அந்த வகையிலேயே இந்நாலானத அமரர் இராசையா தவமணிதேவி அவர்களின் நினைவாக அன்னாரது குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கு ஏற்ப தொகுக்கப்பட்டு வெளிவருகின்றத.
இந்த நாற்றாண்டில் ஈழத்தமிழ் இலக்கிய உலகில் கவனத்திற்கு உரிய ஒரு இலக்கிய வகையாக ‘புலம்பெயர் இலக்கியம்’ தோற்றம் பெற்றுள்ளது. அவ் இலக்கிய வகையில் அமைந்தள்ள சிறுகதைகளில் எனத ரசனைக்கு ஏற்பவும் அவற்றின் உள்ளடக்கத்தின் அடிப்படையிலும் எட்டுச் சிறுகதைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே இவ் இலக்கியம் பற்றிய பரீட்சயம் புத்திஜீவிகள், எழுத்தாளர்கள், விமர்சகர்கள், கலை இலக்கிய ஆர்வலர்கள் மட்டத்திலும், உயர் வகுப்பிற்கு தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள் மட்டத்திலும் எழுந்துள்ளது. எனினும் இது குறித்த கதைகள் மிக இலகுவாக எல்லோருக்கும் கிடைப்பத அரிதாகவுள்ளது. எனவே இவற்றை நோக்காகக் கொண்டு இக்கதைகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.
مهموزة(مض المعومع
இக்கதைகள் தெரிவில் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ போல் நாற்றுக்கணக்கான கதைகளில் இருந்த எனத ரசனைத் தெரிவுக்கு ஏற்ப கதைகள் சுட்டும் பொருட்பரப்பினை முக்கியப்படுத்தி எட்டுக் கதைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. தாயக வாழ்வு, அகதி அநபவம், தொழிற்தள அநயவம், புலம்பெயர் வாழ்வநயவ

i
குடும்ப நிலை, பயண அவலம், நிறவாதம், பெண்கள் நிலை, புதிய தலைமுறைகளின்
நிலை என்றவாறு கதைகள் அமைந்துள்ளன. பொருட்பரப்பில் இவற்றோடு இணைந்து வரக்கூடிய அரசியல் சார்ந்த கதை தவிர்க்கப்பட்டிருக்கின்றது.
வித்தியாசமான கதைக் கருக்கள், வித்தியாசமான களங்கள், வித்தியாசமான வாழ்வனுபவங்களை இக்கதைகள் சுட்டி நிற்கின்றன. இவை அனைத்தையும் ஒன்றபடுத்தியே புலம்பெயர் சிறுகதைகள் குறித்த நிற்கும் பொருட்பரப்பினை கருத்திற்கொள்ள முடியும்.
தொகுப்பில் முதலாவதாக அமைந்திருக்கும் அ. முத்துலிங்கத்தின் ‘அம்மாவின் பாவாடை’ என்ற சிறுகதை தாயக வாழ்வும் அதபற்றிய நினைவும் குறித்த கதையாகும். இப்பொருட்பரப்பில் எழுதாத புலம்பெயர் படைப்பாளிகளே இல்லை எனலாம். அந்த வகையில் யாழ்ப்பாணத்த மரபினையும் அதன் அடுக்கமைவினையும் சீண்டாத வகையில் அலாதியான நடையில் கதை கூறும் பாணி முத்தலிங்கத்தினுடையத. இவரிடம் புலம்பெயர் வாழ்வனுபவம் குறித்த கதைகளை எதிர்பார்ப்பதிலும் பார்க்க வித்தியாசமான பல்தேசத்து மாந்தர்களையும் அவர்களின் நடத்தைகளையும் குறித்த கதைகளையும் அதிகம் எதிர்பார்க்க
@pq叫D·
‘புன்னகைக்கும் கதைசொல்லி’ என்று கூறும் எழுத்தாளர் ஜெயமோகன் கூற்றுக்கு ஏற்ப தனத கதைகளில் புன்னகையை விட்டுச் செல்லும் நடை இவரது தனிப்பண்பாகும். இத்தொகுப்பில் அமைந்தள்ள கதையில் தன் தாய் மீது கொண்ட அன்பும் அது பற்றிய நினைவுகளும் மிக எளிமையாகப் பதிவாகியுள்ளதனை அவதானிக்கலாம்.
“நாடோடிகள்’ என்ற கி. பி. அரவிந்தனின் சிறுகதை அகதி அநபவம் குறித்த அவலங்களைச் சித்தரிக்கின்றத. தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் அகதி அநபவம் என்பது சொல்லியோ அல்லத எழுதியோ விளங்கப்படுத்தக் கூடியதல்ல. ஆனால் பல்வேறுபட்ட விதமான வாழ்வியற் தன்பங்களில் இக்கதையில் வரும் ராணி என்ற பாத்திரத்தின் மீதான பரிவு எல்லோரையும் பாதிக்கக் கூடியதே. நாட்டில் அகதி அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் குழந்தை வயிற்றுடன் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்ட இக்கதாபாத்திரம் என்னை நெகிழவைத்த அகதி அநபவம் குறித்த கதைகளில் ஒன்றாகும்.
க. கலாமோகனின் “உருக்கம்’ என்ற சிறுகதையானது தொழிற்தளம் குறித்த அநபவத்தினை முன்வைக்கின்றத. அகதி அனுமதி கிடைக்காத நிலையிலே உணவு விடுதி ஒன்றில் தொழில் புரியும் இளைஞர் ஒருவரின் அநபவத்தினை இக்கதை குறித்து

Page 7
நிற்கின்றத. உண்மையில் ஒருவித அப்பாவித்தனமான சித்தரிப்புத்தான். எங்கே தான் வேலையில் இருந்த நீக்கப்பட்டு விடுவேனோ என்றவாறான அச்சத்துடன் முதலாளிக்கு விசுவாசமானவனாகக் காட்டிக் கொள்ளும் கதையே இதவாகும். உருவச்சிதைவுடனும் பின்நவீனத்துவ உத்திகளுடனும் கதைகூறும் கலாமோகனின் கதைகளில் இருந்து மிக எளிதான நடையில் அமைந்த நேர்கோட்டுப் பாணியிலான கதையே இதவாகும்.
அருண் விஜயராணியின் “ரகசிய ரணங்கள்’ புலம்பெயர்ந்த குடும்பங்களின் சிக்கல்களைக் குறிப்பத. அங்கு வாழும் அவர்களின் சிக்கலான வாழ்முறையை அறியாத கண்மூடித்தனமாக நாம் செயற்படுவத இக்கதையூடாக வெளிப்படுத்தப்படுகிறத.
பார்த்திபனின் ‘தெரியவராதத’ என்ற கதை ஈழத்தமிழ் படைப்புலகிற்கு அப்பால் சர்வதேசியக் கதையாக விரியக்கூடியத. அந்தக் கதைக்குரிய கருப்பொருளும் களமும் அவ்வாறானவையே. உயிரைப் பாதகாக்கவும் பொருள்தேடவும் சென்ற எங்கள் உறவுகள் பனிப்பாறைகளுக்கு அடியிலும், சேற்றிலும், கொள்கலன்களுக்கிடையிலும் என்று பலவாறாக மாண்டு போன வரலாறுகள் புலம்பெயர் உலகில் நிறைய உண்டு. அவ்வாறான வகையில் விமானத்தில் யாருக்கும் தெரியாமல் இறந்தபோன இளைஞனின் கதையைக் கூறுவதே ‘தெரியவராதத’ ஆகும்.
பெண் படைப்பாளிகளில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் “எய்தவர் யார்’ என்ற சிறுகதையானத நிறவாதத்திற்கு அகப்பட்டுப்போன ஒருவரின் கதையைக் கூறுகின்றத. நிறவாதம் இனவாதம் இணைந்த அந்நிய தேசத்தில் தம் நாட்டைச் சாராத வெளிநாட்டவர்கள் மீத தவேச உணர்வை வெளிப்படுத்தம் நாஜிகள் பற்றிய கதைதான் இத. இன்று உலகம் எங்கும் இதற்கு எதிரான இயக்கங்கள் செயற்பட்டு வருவதம் நாம் அறிந்ததே. குறிப்பாக இந்த இனவாதத்திற்கு அதிகம் அகப்படுவத கறுப்பர்களும் மூன்றாம் உலக நாட்டு மக்களுமே .jكه9b6
'ஒத்தைத் தண்டவாளமும் ஒரு கறுப்பு நீள முடியும்’ என்ற சுருதியின் கதை பெண்கள் பற்றிய கதையாகும். குழந்தையோடு ஓடும் ரயிலில் விழுந்த தற்கொலை செய்த கொண்ட ஒரு பெண்ணின் கதையாக அமைந்தள்ளத. இந்தக் கதை கூறியதை விட கூறாமல் விடப்பட்டவைதான் அதிகம். பெண், பெண் ஒடுக்குமுறை, பெண்ணின் விழிப்புணர்வு, பெண் தன் அடக்குமுறைகளுக்கு எதிராக கிளர்ந்தெழுதல் என்பன பற்றியெல்லாம் கதைத்தக் கொண்டிருக்கும் புலம்பெயர் வாழ்வில் இப்படியான சம்பவங்களும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதற்கு சான்றாக இக்கதை அமைந்துள்ளத. அந்தப் பெண்ணின் மரணத்திற்குப் பின்னால் இருந்தத என்ன என்பதை சிந்திக்கும் பொறுப்பை படைப்பாளி நம்மிடமே விட்டுவிடுகின்றார்.

iv
கோவிலூர் செல்வராஜனின் ‘புதிய தலைமுறைகள்’ என்ற கதை புதிய
தலைமுறைகளைப் பற்றிய கதையாகவே உள்ளது. புதிய கலாசாரத்திற்கும் அதன்
வாழ்விற்குள்ளும் மாறிப்போய்விட்ட மூன்றாம் தலைமுறைகள் மத்தியிலும் அவர்களின்
பெற்றோர் மத்தியிலும் எழும் முரண்பாட்டைச் சித்தரிப்பதாக இக்கதை அமைந்துள்ளது.
எதிர்காலம் பற்றிச் சிந்திக்கும்போது அதற்கு கட்டியம் கூறவதாகவும் அச்சத்தை ஏற்படுத்தவதாகவும் அமைந்த விடுகின்றத.
இவ்வாறாக புலம்பெயர் சிறுகதைகள் பற்றிய அடிப்படை அறிவினைப் பெற்றுக் கொள்ளும் விதத்தில் இக்கதைகள் அமைந்துள்ளன. அவை எமக்கு புதிய கதைகளையும் வித்தியாசமான வாழ்வுலகத்தையும் புலப்படுத்தி நிற்கின்றன.
...فرمGo
இத்தொகுப்பில் அமைந்துள்ள அனைத்துக் கதைகளும் ஏற்கனவே பிரசுரமானவை. எனினும் இச்சிறுகதைத் தொகுதியை தொகுத்தோன் என்ற வகையில் இக்கதைகளை எழுதியிருந்த படைப்பாளிகளுக்கும் அவற்றை வெளியிட்ட வெளியீட்டாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நாலின் முகப்பில் அமைந்துள்ள மறைந்த ஓவியர் மாற்கு அவர்களின் ஓவியத்தைப் பெற உதவிய தமிழ் உலகம் சஞ்சிகையின் வெளியீட்டாளர்களுக்கும் என் நன்றி உரித்தாகட்டும்.
இக்கதைகளினை செவ்வை பார்த்த உதவிய சி.விமலன், ர.ராஜிதா, த.வேலும்மயில், ஆகியோருக்கும் அழகாக நாலாக்கித் தந்த மதரன் கிரா(f)பிக்ஸ் சு. மகேஸ்வரன் அவர்களுக்கும் இவ்வெளியீட்டினைக் கொண்டு வரவேண்டும் என்ற பெருவிருப்புக் கொண்ட அண்ணாரின் குடும்பத்தினருக்கும் தொகுப்பாளன் என்ற வகையிலே நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
புதிய கருக்களும் புதிய களங்களும் கொண்ட இக்கதைகள் உங்களுக்கும் புதிய சிந்தனைகளை ஊட்டும் என்று நான் திடமாக நம்புகிறேன்.
'தினைப்புனம்’ க. குணேஸ்வரன் மயிலிட்டி, mskwaranayahoo.com அல்வாய்.
14-05-2007

Page 8

2ள்ளடக்கம்
வெளியீட்டுரை
தொகுப்புரை
கதைகள் 1. அம்மாவின் பாவாடை - அ. முத்துலிங்கம் (கனடா)
2. நாடோடிகள் - கி. பி அரவிந்தன் (பிரான்ஸ்)
3. உருக்கம் - க. கலாமோகன் (பிரான்ஸ்)
4. ரகசிய ரணங்கள் - அருண் விஜயராணி
(அவுஸ்திரேலியா)
5. தெரியவராதது - பார்த்திபன் (ஜேர்மனி)
6. எய்தவர் யார் - ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
(லண்டன்) 7. ஒத்தைத் தண்டவாளமும் ஒரு கறுப்பு நீள முடியும்
- சுருதி (சுவிஸ்)
8. புதிய தலைமுறைகள் - கோவிலூர் செல்வராஜன்
(நோர்வே)
i

Page 9

δηionsπωλεστ ταΩrωΙΩreOοπ
அம்மாவின் பரவாடை
அ.முத்துலிங்கம் (கனடா)
அe அம்மாவிடம் ஒரு பாவாடை இருந்தது. எப்பொழுது பார்த்தாலும் அம்மா அதற்கு நாடா போட்டபடியே இருப்பாள். அது சாதாரண நாடா அல்ல. அம்மா அசட்டையாக இருக்கும் சமயங்களில் பாவாடையின் மடிப்புக்குள் போய் ஒளிந்துகொள்ளும். அம்மா நாடாவை இன்னொரு முறை போடுவாள். இது அடிக்கடி நடக்கவே நாடாவில் நெடுகலும் இருக்கும்மாதிரி ஒரு மடிப்பு ஊசியை அம்மா குத்தி வைத்துவிட்டாள். நாடா உள்ளே போவதும் அம்மா மடிப்பு ஊசியை பிடித்து, ஒரு நாக்கிளிப் புழுபோல நீட்டியும், சுருக்கியும் அங்குலம் அங்குலமாக அதை வெளியே எடுப்பதும் வழக்கமாகிவிட்டது.
வெகு காலம் கழித்தபிறகு எனக்கு ஒரு விஷயம் பிடிபட்டது. உண்மையில் அம்மாவிடம் இரண்டு பாவாடைகள் இருந்தன. அவையிரண்டும் தண்ணியில் அடிக்கடி அலசித் தோய்க்கப்பட்டு வயோதிகம் அடைந்தவை. எல்லாம் ஒரே மாதிரி, ஒரே வயதில், ஒரே உயரத்தில், ஒரே பழுப்பில் இருக்கும். ஆனால் இரண்டு பாவாடைக்கும் அம்மாவிடம் இருந்தது ஒரே நாடாதான். அதைத்தான் அடிக்கடி மாற்றி மாற்றிப் போட்டிருக்கிறாள்.
அம்மா கொஞ்சம் வசதியான குடும்பத்தில் இருந்து வந்தவள். கல்யாணமாகி வரும்போதே இரண்டு பாவாடை புதிதாக தைத்துக்கொண்டு வந்திருந்தாள். நாடா போட்ட பாவாடை. எங்கள் கிராமத்துப் பெண்கள் பாவாடை கட்டும் வசதியில்லாதவர்கள். ஒரு சிலர் கல்யாணம், திருவிழா போன்ற விஷேஷங்களுக்கு கட்டுவதற்கு ஒரு பாவாடை மாத்திரம் வைத்திருப்பார்கள். மணியகாரர் பெண்சாதியிடமும் அம்மாவிடமும் மாத்திரம் இரண்டு பாவாடைகள் இருந்ததாக பேச்சு அடிபடும். வீட்டிலும் வெளியிலும் அவர்கள் பாவாடை அணியும் தகுதி கொண்டவர்கள். அம்மாவின் முகத்தில் எப்பொழுது பார்த்தாலும் இந்த பாவாடைப் பெருமை தெரியும்.

Page 10
2 வெளிநாட்டுக் கதைகள்
என்னுடைய அப்பாவின் முகம் பின்னேரத்து வெய்யில் போல கதகதவென்று இருக்கும். குடிப்பழக்கமோ, பீடி சுருட்டு பழக்கமோ, சீட்டாடும் பழக்கமோ அவரிடம் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் வேலைக்குப் போகும் பழக்கம்கூட கிடையாது. அம்மாவுக்கு வாழ்க்கைப்பட்ட நாளில் இருந்து அவர் மறுவார்த்தை பேசி நான் பார்த்ததில்லை. அற்புதமான சாது.
கைரேகை பார்ப்பதில் நிபுணர். அவரைப் பார்ப்பதற்காக வெளியூரிலிருந்துகூட ஆட்கள் வருவார்கள். சப்பணக்கால் கட்டிக்கொண்டு வெகு நேரமாக அந்த அந்நியக் கைகளை பிடித்துக்கொண்டிருப்பார். அவருடைய வியாக்கியானங்களுக்குச் சம்பாவனை கிடைத்து நான் பார்த்ததில்லை. அம்மாவின் வயலில் இருந்துவரும் நெல்லு மூட்டையையும், தேங்காயையும், வாழைக்குலையையும் வைத்துத்தான் அவள் சமாளித்தாள் என்று நினைக்கிறேன். அந்தக் காலங்களில் என் கண்களுக்குத் தெரியாமல் வறுமையை மறைப்பதில் அம்மா மிகவும் சிரமப்பட்டாள்.
மனிதர்களிடம் சாதாரணமாகக் காணப்படாத ஓர் ஒயிலுடன் அம்மா கிணற்றடியில் முழுகிவிட்டு நடந்து வருவாள். அவள் கடந்தபிறகும் அவளுடைய வாசனை அங்கே நிற்கும். பிஞ்சாகும் வாய்ப்பை இழந்த கொய்யாப் பூக்கள் வழிநெடுகிலும் கிடக்கும். அம்மாவின் கால்களில் அவை ஒட்டிக்கொள்ளும். தோள்களில் வழிந்த நீண்ட கேசத்தில் தண்ணிர் சொட்டும். அவள் நடந்துபோன தடத்தில் சற்றுநேரம் காற்று மினுமினுக்கும். அப்படியே போய் கொடியிலே பாவாடையை உதறிவிட்டு காயப்போடுவாள். இது தினசரி நடக்கும்.
பின்னால் நடக்கப்போகும் ஒரு சம்பவத்தில் இருந்து அம்மாவுக்கு இந்தப் பாவாடை எவ்வளவு முக்கியமானது என்று எனக்குத் தெரியவரும். இது அந்தஸ்துக்கு அறிகுறி. அவளுடைய பிறந்த வீட்டுச் செல்வச் செழிப்பு தீர்ந்துகொண்டு வந்தது. இந்தப் பாவாடை போனால் இன்னொன்று கிடைப்பது தூரமான நம்பிக்கை என்ற நிலையில் அம்மா இதை உயிரிலும் மேலாக நேசித்தாள். அம்மாவின் கண்களில் முடிவு பெறாத அழுகைகள் நிறைந்து கிடக்கும். அவள் சிரிக்கும்போது அது முற்றிலும் மாறிவிடும். அவளுடைய சிரிப்பு தனியாக எடுத்துவைத்த சாமிப் படையல்போல சந்தோஷம் பொங்க வெளிப்படும். முன் எச்சரிக்கை இல்லாமல் வந்ததினால் அது பெரிதாக நாலுபேர் கேட்கக்கூடிய விதமாக இருக்கும். தான் சிரித்துச் சிந்திய அழகு யார் கண்ணிலும் பட்டுவிடப்போகிறது என்பதுபோல அந்தச் சிரிப்பைத் திருப்பி வாங்க அவசரப்படுவாள். கலகலவென்று ஒரு பள்ளி மாணவிபோல வெடித்துச் சிரித்துவிட்டு சில வினாடிகளில் ஏதோ பாரதூரமான குற்றம் செய்ததுபோல வாயைப் பொத்திக்கொள்வாள்.
சீதனமாகக் கொண்டுவந்த ஒரு மரப்பெட்டி அம்மாவிடம் இருந்தது. அதைச் சீனப்பெட்டி என்று அழைப்பாள். சீன அரசர்களும் அரசிகளும் சேடிகளுமாக அதன் முகப்பை அலங்கரித்தார்கள். சில விசேஷமான தினங்களில்

εΤπbτηΩτείλω πιαπωΙατω1. 3
மாத்திரம் அந்தப் பெட்டியை அம்மா திறப்பாள். அந்தச் சமயத்திற்குக் காத்திருந்து நான் போய் முன்னால் குந்துவேன். “வெளிச்சத்தை மறைக்காதே" என்றபடி அம்மா அந்தப் பெட்டியை ஆராய்வாள். அவள் கொண்டுவந்த திரவியம் எல்லாம் அதற்குள்தான். முன்பு திறந்த நாளில் இருந்து பாதுகாக்கப்பட்ட நகைகளையும் உத்தரீயத்தையும் வெள்ளிக் கொலுசையும் பல மணிநேரம் கைகளில் எடுத்துப் பார்த்தபடியே இருப்பாள். உத்தரீயத்தை நான் தொடவும் கழுத்திலே போட்டுப் பார்க்கவும் அனுமதிப்பாள். பெட்டி நகைகள் வரவர குறைந்துகொண்டு வந்தது அப்பட்டமாகத் தெரியும். அதன்முன் இருக்கும் நேரங்களில் அம்மாவின் முகத்தை ஒரு மேகம் வந்து மறைத்துவிடும்.
அம்மா எந்த நேரம் என்ன செய்வாள் என்று சொல்லமுடியாது. சின்ன வயதாயிருந்தபோது என்னதான் சாப்பிட்டாலும் என்னுடைய உடம்பு நோஞ்சான் உடம்பு பக்கத்து வீட்டு கனகம்மாக்காவின் மகன் கொழுகொழுவென்று இருப்பான். அவன் எப்பொழுது வந்து விளையாடினாலும் கடைசியில் என்னை அடித்தபிறகுதான் விளையாட்டு ஒயும். அம்மா வந்து அவனைப் பேசி அனுப்புவதுதான் வழக்கம்.
அன்றும் அப்படித்தான். விவகாரம் பெரிதாக ஒன்றுமில்லை. என் அப்பாவின் பெயரை அவன் மறந்துவிட்டதில் ஆரம்பித்தது. என்னை அடித்துவிட்டான். நான் பதிலுக்கு அவனை "தூமையன்” என்று ஏசினேன். அப்போதுதான் அது நடந்தது. கலிவரின் பயணங்களில் வரும் ஒரு ராட்சத பறவைபோல அம்மா எங்கிருந்துதான் பறந்து வந்தாளோ தெரியாது. வழக்கத்துக்கு விரோதமாக அவனை விரட்டாமல் என் சொண்டில் விரல்களால் சுண்டிவிட்டாள். “இப்படி இனிமேல் சொல்லுவியா?” என்று திருப்பித் திருப்பிக் கேட்டு பூவரசம் கிளையால் அடித்தாள். எனக்கு வலி தாங்க முடியவில்லை.
முதல்முறையாக அம்மாவிடம் எனக்கு கோபம் ஏற்பட்டது. மூச்சுக்காற்றுப் போன திசையில் நடந்து போனேன். என் உடம்பிலே அங்கங்கே பொன்னிறமான கொப்புளங்கள் கிளம்பியிருந்தன. சாயந்திர வெய்யிலிலே அவை மினுமினுத்தன. கிளுவை மரங்களுக்கிடையில் ஒரு தவளை தொண்டையை உப்பி உப்பி சுருக்கியது. உலகத்துக் காற்றை எல்லாம் எப்படியும் விழுங்கிவிட வேண்டும் என்று ஆயத்தம் செய்வதுபோல கால்களை அகட்டி உட்கார்ந்திருந்தது. என்னைப் பார்த்ததும் தன்பின் பாதியை எனக்குக் காட்டி தனது அதிருப்தியைத் தெரிவித்தது. என் நட்பை அது பொருட்படுத்தவில்லை.
இவ்வளவு காலமும் அம்மாவை ஒரு சிறந்த தாயாக வளர்த்திருந்தேன். அம்மாவின் சிந்தனை சத்தம் எனக்குத் துல்லியமாகக் கேட்கும். என் கொப்புளங்களைப் பெரிதாக்கினால் அம்மாவின் யோசிப்புகள் என்பக்கம் திரும்பக்கூடும் என்று நம்பினேன். அம்மாவின் பக்கவாட்டு முகத்தையும், மேல் உதடுகளில் வெண்டைக்காய் மயிர்போல வளர்ந்திருக்கும் ரோமத்தையும் தடவ

Page 11
4 வெளிநாட்டுக் கதைகள்
வேண்டும்போல பட்டது. சூரிய வெளிச்சத்தைக் காற்று அடித்துத் தள்ளும்வரை என் கால்கள் வீட்டுப்பக்கம் திரும்பவில்லை.
கண்களை மூடிக்கொண்டு இரவுநேர ஒலிகளை இனம் கண்டு பிடிப்பது எனக்கு விருப்பமானது. எங்கள் வீட்டில் நாங்களும் எலிகளுமாகக் குடியிருந்தோம். எங்கள் உணவு முடிந்தபிறகு எலிகளின் சாப்பாட்டு நேரம் ஆரம்பமாகும். எங்கள் பசிக்கு எப்படியோ தவறிய உணவுகளை அவை சத்தமாக உண்ணும். அம்மா மெதுவாக வந்து கன்னத்தில் காய்ந்துபோன கண்ணிர் தடத்தைத் தடவிப் பார்த்தாள். அம்மா என்னைக் கட்டிப்பிடித்தாள். ஒரு சின்ன இடைவெளிவிட்டாலும் அது பெரிய அபராதம் ஆகிவிடும் என்பதுபோல என்னை இறுக்கியபடி விம்மினாள். பகல் முழுக்க காய்ந்த பாவாடையிலும் சேலையிலும் சூரியன் கொஞ்சம் மீதம் இருந்தது. மூச்சு விட எனக்குக் கஷ்டமாயிருந்தது. என்றாலும் அது உவப்பாகி அந்த அறை முழுக்க பரவச அணுக்கள் நிறைந்தன.
அம்மாவுக்கு இருந்த முக்கியமான கவலைகளில் ஒன்று என்னைப் பற்றியது. எங்கள் வாழ்க்கை அம்மாவின் சம்மதம் இல்லாமல் முட்டுப்பட்டதாக மாறியிருந்தது. அதை என்னிடமிருந்து மறைப்பதில்தான் அவ்வளவு கஷ்டம். அம்மாவின் தங்கை - என் சின்னம்மா - நல்ல இடத்தில் வாழ்க்கைப்பட்டு இருந்தாள். அங்கே போகும்போதுதான் எனக்கு சோதனை ஏற்படும். நாங்களும் வசதியான குடும்பத்தில் இருந்து வருகிறோம் என்ற பிரமையைக் கொடுப்பதற்கு நான் பழக்கப்பட்டிருந்தேன்.
சின்னம்மாவிடம் பல பார்வைகள் இருந்தன. பூச்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட ஒரு பார்வையை எனக்காக வைத்திருந்தாள். ஒரு நாள் வயதான வேர்வை அவளிடமிருந்து வீசும். மெலிந்தும், நெடுப்பாகவும் இருப்பாள். ஏதோ அவசரமாகச் சொல்லவந்து மறந்துவிட்டது போல வாய். அவள் போடும் ரவிக்கைகள் அவள் தோள்களில் சறுக்கியபடியே இருகும். அங்கே போகும்போதெல்லாம் அவள் உடுத்தியிருக்கும் சேலையின் சரிகையும் தங்க வளையல்களும் எங்கள் வறுமையை இன்னும் பிரகாசப்படுத்துவதுபோல எனக்குத் தோன்றும்.
அவர்களிடம் முட்டை வடிவ நிலைக் கண்ணாடி இருந்தது. நடுவிலே ஒன்றும், வள்ளி தேவானை போல பக்கத்திலே இரண்டுமாக சின்னம்மா தன் முகத்தையும், முதுகையும், கன்னத்தையும் காதையும் ஒரே சமயத்தில் பார்க்கக்கூடிய விதமாக, மீளாத ஆச்சரியத்தை எனக்கு ஊட்டுவதாக, அது பன்ட்க்கப்பட்டிருந்தது. அன்று துணியினால் மூடி, என் பரிசோதனைகளுக்கு அப்பாற்பட்டு கிடந்தது.
சின்னம்மா வீட்டில் கதிரை இருந்தது. அவள் தந்த பனங்காய் பணியாரத்தில் பங்குனி மாதத்தின் ருசி தெரிந்தது. கிளாஸ் விளிம்புகளில் விடாது இலையான்கள் மொய்த்தன. கால்கள் எட்டாத கதிரையில் இருந்துகொண்டு இரண்டு கைகளாலும் கிளாசைப் பிடித்து அப்போது பிரபலமான 'சுப்பிரமணியம்’ சோடாவைக் குடிக்கும்போது வழிச்சு துடைச்சு குடிக்கக்கூடாது" என்று அம்மா

Siborser Ersreao 5
பலமுறை எச்சரித்தது ஞாபகத்துக்கு வரும். அம்மாவின் கண்பாஷை அடிக்கடி என் பக்கம் கடுமையாகத் திரும்பும். சோடாவைக் குடிப்பதும், அளவு பார்ப்பதும், மீதம் வைப்பதுமாக மனது அவஸ்தைப்படும். மிச்சம் விடவேண்டும் என்ற ஏக்கத்தில் சோடா குடிக்கும் அந்த அற்புதமான சந்தோஷமும் அற்பமாகிவிடும். கடைசியில் உயிரை விடுவதுபோல இலையான் மூத்திரம் அளவுக்கு ஒரு சொட்டு பானத்தை நான் கிளாசில் மிச்சம் விடுவேன்.
வழக்கமாக என் கால்களைத் தொட்டுக்கொண்டு வரும் ரோடு அன்று என்னை ஸ்பரிசிக்க மறுத்துவிட்டது. அப்படியும் வீடு வந்து சேரும் வரைக்கும் அந்த நினைவு அகலவில்லை. அளவுக்கு அதிகமாகக் கொஞ்சம் மிச்சம் விட்டுவிட்டோமோ என்று மட்டும் மனது போட்டு அடித்துக்கொண்டே இருந்தது.
என்னுடைய கால்கள் சிலந்தியின் கால்கள் போல மெலிந்தும், அகன்றும், பல திசைகளில் ஒரே சமயத்தில் போகும் வல்லமையும் கொண்டு இருக்கின்றன என்று அம்மா அடிக்கடி சொல்வாள். என்னை எப்படியும் தேற்றிவிட வேண்டும் என்று அவள் ஆலோசித்த காலங்களில்தான் என் வாழ்க்கையில் ஒரு முசுட்டை மரம் வந்து குறுக்கிட்டது. அது எங்கள் வீட்டில் இருந்தாலும் பரவாயில்லை. பக்கத்து அன்னம்மாக்கா வீட்டிலிருந்துதன் சதித்தனத்தை என் மீது காட்டியது. அன்னம்மாக்கா படிக்காத தேவாரம் இல்லை, பிடிக்காத விரதமில்லை. ஆனாலும் வாடாமல்லிகை போல அவளுக்கு வாடாத உடம்பு. கந்தசஷ்டி விரதத்தின்போது ஆறுநாளும் இரவு மாத்திரம் பாலும் பழமும் சாப்பிடுவதாகச் சொல்லுவாள். ஆனால் பழம் என்றால் ஒரு முழுப்பலாப்பழம் என்ற விஷயம் என்னிடமிருந்து மறைக்கப்பட்டிருந்தது.
இந்த அன்னம்மாக்கா தயவால் அம்மா அடிக்கடி முகட்டை இலை வறை வைப்பாள். அடிமட்டம் வைத்து அளந்ததுபோல் இலையை சின்ன சின்ன சைஸில் வெட்டி, தேங்காய்ப்பூ போட்டு அரை அவியல் அவித்து உப்பு வெங்காயம் மிளகாய் என்று அளவாகக் கறிகூட்டி, வெகு நேரம் பாடுபட்டு அம்மா சமையல் செய்வாள். அதனுடைய ருசி வேப்பங்காய்க்கும் குரும்பட்டிக்கும் இடைப்பட்ட ஒரு சுவையாக இருக்கும். உலகத்து சிறுவர்களை எல்லாம் பழி தீர்ப்பதற்காக ஒரு தீர்க்கதரிசியினால் கண்டு பிடிக்கப்பட்ட வறை இது.
வறை முழுக்க சாப்பிட வேண்டும் என்று நான் நிர்ப்பந்திக்கப்படுவேன். என்னை ஊக்குவிப்பதற்காக அம்மா அகப்பையில் தலையைப் பிடித்து அடிக்காம்பை கண்முன்னே காட்டிக் கொண்டிருப்பாள். சோற்றின் நடுவே முசுட்டை இலையும் தன் தொழிலைச் செய்யக் காத்துக்கொண்டிருக்கும். எண்ணி நாற்பது நாட்கள் சாப்பிட்டால் நோஞ்சான் உடம்பு தேறி, தேகம் பொன்னிறமாகிவிடும் என்று பலமான நம்பிக்கை தருவாள். அந்த அகப்பையும் எனக்கு முன்னால் தலைகீழாக படம் விரித்த பாம்புபோல ஆடிக்கொண்டிருக்கும். சோற்றை உருட்டி அதன் நடுவிலே வறையை மறைத்துவைத்து விழுங்குவேன். அப்படியும் நாக்கை ஏமாற்ற முடியவில்லை. அந்த ருசி பல வருடங்களாக என் நாக்கில் வசித்தது.

Page 12
6 வெளிநாட்டுக் கதைகள் முசுட்டை வறை எனக்கு எதிரி என்றால் அதிலும் மோசமான ஒரு எதிரியை அம்மா தினமும் சந்திக்கவேண்டி இருந்தது. அந்த எதிரியை சப்ளை பண்ணியதும் இந்த அன்னம்மாக்காதான். இவ வளர்த்த மாடு மிகவும் சுதந்திர புத்தி கொண்டது. கொஞ்சம் அசந்தாலும் எங்கள் வீட்டு வளவுக்குள் புகுந்துவிடும். உடலை வருத்தி அம்மா போட்ட கீரைப்பாத்தியை, சூரனுடைய தலைபோல முளைக்க முளைக்க, இந்த மாடுதான் சாப்பிட்டுக்கொண்டு வந்தது.
இந்த மாட்டின் ஆக்கினையால் யார் வந்து படலை திறக்கும் சத்தம் கேட்டாலும் படலையை இறுக்கிச் சாத்துங்கோ’ என்று அம்மா உள்ளே இருந்தபடியே எட்டிக்கூட பார்க்காமல் சத்தம் கொடுப்பாள். இந்த மாடும் பொறுமையாக மனிதர்களின் அஜாக்கிரதையில் நம்பிக்கை வைத்து காத்திருக்கும். கீரைப்பாத்தி வெறும் Starter தான். அதை முடித்துவிட்டு பிரதான சாப்பாட்டை நிறைவேற்றும் நோக்கத்தோடு திரும்பியது. சூரியனால் பழுப்பேறிப்போய், கீழ்க்கரையோரம் கிழிந்து, நுரை வராத சோப்பினால் கழுவித் துவைத்து உலர்த்தப்பட்டு, நாவுக்குத் தோதான உஷ்ணத்தில், மொரமொரவென்று ஆசை காட்டிக்கொண்டு, நாடா வில்லாமல் கிடந்தது அம்மாவின் பாவாடை. அந்த மாடு கடிகார முள் சுழலும் திசையில் சுழன்று, எட்டி ஒரு வாய் வைத்துவிட்டது. கரையோரப் பகுதிகளை முடித்துவிட்டு தொடைப் பகுதிக்கு வரும்போதுதான் அம்மா கண்டாள். மெய் எழுத்துக்கள் எல்லாவற்றையும் உதறிவிட்டு, உயிர் எழுத்துக்களால் மட்டுமே ஆன ஒரு ஒலியை அவள் கண்டம் அப்போது எழுப்பியது. மூர்ச்சை தெளிந்த பிறகு "ஐயோ! என்ரை பாவாடை!’ என்று பாய்ந்து வந்து உருவினாள். மாடு விடவில்லை. அம்மா இழுக்க அதுவும் இழுத்தது. இழுத்தபடியே படலையை நோக்கி ஓடியது. அம்மா, முழங்கால் இழுபட்டாள் படலையைக் கடக்கும்போது மாடு பாவாடையைப் போட்டு விட்டது.
பாவாடையை நிலத்திலே பரப்பியபடி அம்மா குந்தியிருந்தாள். தொடையும் தொடை சார்ந்த இடத்திலும் ஒரு குழந்தை புகுந்து போகும் அளவிற்கு பெரிய ஒட்டை. வெகு நேரம் அதைப் பார்த்தபடியே இருந்தாள். அவளுடைய வாய் தூமையன், தூமையன்" என்று சொல்லி முணுமுணுத்தது. கண்ணிலே இருந்து உருண்டு இறங்கிய ஒரு கண்ணிர் கீழே போகத் தைரியமின்றி கன்னத்தின் நடுவிலேயே நின்றுவிட்டது.
அந்தச் சம்பவத்திற்கு பிறகு எனக்கு அந்த வார்த்தையின் அர்த்தம் புரிந்தது போலப் பட்டது. அம்மா மூசி மூசி பாவாடையை இழுத்தபடி நின்ற காட்சி என் மனதை விட்டு அகலவே இல்லை. எங்கள் சிறிய கிராமத்தில் ஒரு பாவாடை மட்டுமே வைத்திருக்கும் ஏழைப் பெண்களில் ஒருத்தியாக அம்மா கீழே இறக்கப்பட்டு விட்டாள்.
இப்பொழுதும் நினைத்துப் பார்க்கிறேன். அதற்கு பிறகு அம்மா பள்ளி மாணவி போல கலகலவென்று வெடித்து சிரித்தது எனக்கு ஞாபகத்தில் இல்லை.
அ.முத்துலிங்கம்; மகாராஜாவின் ரயில் வண்டி (சிறுகதைத் தொகுப்பு) 2001, காலச் சுவடு, சென்னை.

gsgre Largn866afr
நூடோடிகள்
கி.பி.அரவிந்தன் (பிரான்ஸ்)
ரேற்ற்றென்று ஒருநாள் காலமாகிப்போக இன்றென்று ஒருநாள் விடிந்தது. அது ஒரு சனிக்கிழமை.
ஐந்தரை மணிக்கெல்லாம் விழித்துவிட்டேன். படுக்கையில் புரள்கின்றேன். எண்ணங்களும் பல வேறாய் உருள்கின்றன.
உடல் வெளிப்படுத்தும் இளஞ்சூட்டில் குளிர் காய்ந்தபடி அணைந்து உறங்கும் நானும் மனைவியும் உறக்கம் கலைந்த புரளலில் விலகினோம் போலும்.
விலகலிடையே குளிர் நிரவுகின்றது.
இருவரும் மீள மெல்ல அணைந்து கொள்கிறோம். இதமாக இருக்கின்றது.
குளிர் இறங்கிச் செல்கின்ற இளவேனிற் காலாந்தானானாலும் காலை நேரக்குளிரின் இறுக்கப்பிடி இன்னமும் தளரவில்லை “மாசிப்பனி மூசிப் பெய்யும்" என ஊரில் சொல்வதுண்டுதான். பனியா இது? மூச்சையே உறையச் செய்யும் இக் குளின் வீச்சத்தை எப்படி அழைப்பது?
போர்வையை அகற்றாதே, அணைப்பை தளர்த்தாதே எனக் குளிர் எச்சரித்தாலும், அணைப்பில் சுகம் காணும் நாளல்ல சனிக்கிழமை.
"சந்தைக்குபோக எவ்வளவு நேரம் கிடக்கு. இப்பவே முழிச்சுக்கொண்டு. என்னையும் உறங்கவிடாமல்." உறக்கக் கலக்கத்துடன் மனைவியின்

Page 13
8 வெளிநாட்டுக் கதைகள் சினுக்கம்.
சனிக்கிழமை சந்தை கூடும் நாள். சந்தை கூடும் இடமும் எங்கள் குடிமனையில் இருந்து ஒரு நடை எட்டும் தூரந்தான். இந்த ஊர் மையமிட்ட பிராந்தியமெங்கணும் இந்தச் சனிக்கிழமைச் சந்தை பிரசித்தமானது.
சந்தை கூடும் சனிக்கிழமைக்காகவே மற்ற நாள்களில் பலரும் உயிர் வாழ்கின்றனரோ எனும் சந்தேகம் இங்கு வந்து சேர்ந்த இரண்டரை ஆண்டுகளில் பல தடவை என்னுள் ஏற்பட்டிருக்கின்றது.
ஏனெனில் சனிக்கிழமை எப்போ வரும் என்னும் தவிப்பு இப்போதெல்லாம் எனக்கு ஒரு வெறியாகவே மாறிவிட்டது. என்னை போல்தானே மற்றவர்களுக்கும் இருக்கும்.
வேலையற்றோரையும், சமூக உதவியில் வாழ்வோரையும் அதிகமாய் கொண்ட இந்த ஊரில் சனிக்கிழமைச் சந்தை நாள் கொண்டாட்டமாய் அமைந்து போனது. இதுவும் இல்லையானால்? நான் எழுந்துவிட்டேன். முகச்சவரம் செய்து, இளஞ்சூட்டு நீரில் உடல் நனைத்து பசுமையாகி, வாசனைத் திரவியம் பூசி மலர்ச்சியுறத் தொடங்கினேன்.
உற்சாகம் புரண்டெழத் தொடங்கியது.
மனைவியும் தன்னாயத்தங்களை தொடங்கி இருந்தாள். இருவரும் அணியமாகும் அவசரம் எங்களிடையே சிறு உரசலையும் தோற்றுவித்திருந்தது.
யார் தேநீர் தயாரிப்பது என்பது இன்னமும் இழுபறியாகவே இருந்தது. குழந்தைகள் துயிலெழும் நேரமும் நெருங்கிவிட்டது. முழிக்கும்போது பால் தேநீர் தயாராக இருக்கவில்லையானால் காலை ஆலாபனையை தொடங்கிவிடும் கடைக்குட்டியை சாந்தப்படுத்த அன்றைய நாள் போதாமல் இருக்கும். அதுவும் சனிக்கிழமை நாட்களில் இப்படி எதுவும் நிகழ்ந்து விடாதபடி மிகக்கவனமாக இருவரும் இருப்போம். வேலைப் பங்கீட்டில் சனிக்கிழமை நாளில் தேநீர் தயாரிப்பது என் முறையாக வரும்பொழுது இவ்வகை இழுபறி நிலை தோன்றிவிடும். சந்தைக்கு சென்று மீளும்வரை ஒரு வித பதட்டம் என்னை ஆட்கொள்வதால் பல தடவைகளில் பால் பொங்கி பால் பாத்திரம் எரிந்து. அடுப்பெல்லாம் அணைந்து ஒரு வேலைக்கு இரு வேலையாகி. எனக்கும் மனைவிக்கும் முறுகல் நிலைதோன்றி, சனிக்கிழமை நாளின் உற்சாகத்தையே கெடுத்துக் கொண்டதும் உண்டு. ஆதலால் இதனை

நாடோடிகள் 9
நான் தவிர்ப்பதுண்டு. தெரிந்தும் மனைவி இன்றைக்கு முரண்டுபிடிக்கிறாளா?
நான் சந்தைக்கு எடுத்துச்செல்லும் பண்டமாற்றுப் பொருட்களை தேடிச் சேகரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். பத்திரிகையை காணவில்லை. தமிழ்ப் படஒளி நாடாப் பிரதிகள் நான்கில் ஒன்று குறைந்திருந்தது. முடிந்தவரை தேடிவிட்டேன். மனைவியைத்தான் துணைக்கழைக்க வேண்டும்
சமையல் அறையில் அவள் தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தாள். பத்திரிகை ஒளிநாடாப் பிரதி தேடியும் கிடையாத விடயத்தை மெதுவாக தொடங்கினேன்.
எந்த எந்த அவசரமெண்டாலும் காலையில் வாசிக்கிற ஏதோ ஒன்றுடன் போவீங்களே அங்க பார்த்தீர்களா? என்றாள் வெடுக்குடன் மனைவி.
அப்போதுதான் எனக்கு உறைத்தது.
ஓடிச்சென்று கழிப்பறையை பார்த்தேன். அங்கு இருந்தது. ஒளி நாடாவையும் நான் தேடிய இடத்தில் இருந்தே எடுத்துத் தந்தாள்.
இப்படித்தான் நான் தேடும் நேரத்தில் அப்பொருட்கள் என் கண்ணில் தட்டுப்படாது. இதற்காய் மனைவியிடம் வார்த்தைகளால் குட்டுப்பட்டிருக்கிறேன் அதுவும் சனிக்கிழமை காலை நேரத்தில் எல்லாப் பொருளுமே எனக்கு உச்சுக்காட்டிவிடும். சந்தை கூடும் நாளான சனிக்கிழமையின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று பண்டமாற்று. அதாவது கலாசார கொடுக்கல் வாங்கல்.
பல்வேறு தேசத்தார் வந்துறையும் அந்த ஊரில் நாங்கள் ஓர் ஆறு குடும்பத்தாரும் வெளிநாட்டாராய் வசித்து வருகிறோம். எனது குடும்பந்தான் இந்த ஊருக்கு வந்து சேர்ந்த கடைசித் தமிழ்க் குடும்பம். நான் இங்கு வந்து இரண்டு வருடமும் மூன்று மாதமுமாகின்றது. எங்களுக்குப் பின் புதிய வரவாய் தமிழ்க் குடும்பத்தார் எவரும் வந்து சேரவில்லை. ஆனால் வேறு தேசத்தார் அவ்வப்போது வந்து சேர்ந்த வண்ணமே இருக்கின்றனர்.
எனக்கு முன்வந்த ஐந்து குடும்பங்களுள்ளும் மூத்தகுடி எனக் கூறிக் கொள்ளும் குடும்பம் வந்து சேர்ந்து ஆறு வருடமாகின்றது. ஆறு வருட வரலாறு கொண்ட இந்தக் குடும்பங்கள் எவர்க்கும் வேலைவெட்டி கிடையாது.
வேலையற்றிருப்பது இந்த ஊரில் பெரிய விடயமுமில்லை.

Page 14
10 வெளிநாட்டுக் கதைகள்
ஆதலால் எங்களது அக்கறைக்கும் பொழுதுபோக்கிற்கும் உரிய விடயமாய் கலாசாரத்தை பேணுதல், அதற்கு மெருகேற்றுதல். அச்சொட்டுத் தவறாமல் அதனை கைக்கொள்ளுதல் என்பன அமைந்து போனது. தொலைதூரத்தில் இருந்து தமிழ்ப்பட ஒளி நாடாக்களை வரவழைத்து அதனை பரிமாற்றம் செய்து கண்டுகளிப்பது முக்கியமான கலாசார கடமையாக எங்களுக்கு இருந்து வந்தது. இதில் இரு குடும்பத்தார் ஆளுக்கொரு தமிழ்ப் பத்திரிகையை வருவித்து தங்களுக்குள் பரிமாற்றம் செய்து கொள்வதுமுண்டு. நான் தமிழ்ப் பத்திரிகையுடன் சஞ்சிகைகளையும் வரவழைத்து படிப்பதன் மூலம் ஆறு குடும்பத்தாருள்ளும் ஒரங்குலம் உயரமாக என்னைக் காட்டிக்கொண்டேன்.
கடந்தவார சந்தைச் சந்திப்பில் வாங்கிவந்த பண்டமாற்றுப் பொருட்கள் அனைத்தையும் எடுத்து சந்தைக்கு கொண்டு செல்லும் உருளும் சில்லுப் பொருந்திய இழுவைப் பைக்குள் வைத்துக்கொண்டேன்.
முதல் சுற்றுப் பயணம் என்னுடையது. இரண்டாவது சுற்றில்தான் குடும்பத்தார் வந்து சேர்வர். அதற்கு நேரமிருக்கிறது. நான் இழுவைப் பையுடன் இறங்கினேன்.
காலை எட்டு மணிதான் நான் வழமையாக இறங்கும் நேரம். வெளியில் வந்துவிட்டேன்.
வெளியை நிறைத்திருந்து கைத்தட்டுத் தாளத்துடன் கூடிய கூட்டிசைப்பாடல். இசையின் அடிநாதம் கூக்குரல் என்றாலும் பொருந்தும். எனக்கு இப்போதெல்லாம் மிகப் பரிட்சயமாகிவிட்ட பாடல் இது.
"நாங்கள் பறவையைப் போன்றவர். எல்லைகள் இன்றியே பறப்பவர் நாங்கள்”
அவர்கள் பாடுவது இந்தப் பாடலாகவும் இருக்கலாம் அவர்களின் பலபாடல்களின் மெட்டு ஒத்த தன்மை கொண்டவை. தெருவோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்றைச் சுற்றிநின்றபடி அவர்கள் இசைக்கின்றார்கள்.
அவர்களில் பலர் எனக்கு பரிச்சயமானவர்கள். அடிக்கடி சந்தித்து மரியாதை வணக்கம் தெரிவித்துக் கொள்பவர்கள். என் அயலவர்கள், இவர்களின்

μΕποπ ατραδειά 11 அறிமுகத்திலும் ஒரு கதை உண்டு. நான் எனது குடும்பத்துடன் மத்தியதரைக் கடலோரமுள்ள இந்த அகதிகள் பராமரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்பட்ட போது ஒரு வகை அச்சம் மனதில் பரவி இருந்தது. ஆனாலும் வதிவிடமில்லா அலைச்சலுக்கு ஒரு தாவாரம் கிடைத்ததே என்ற திருப்தியும் பயத்துடன் கூடவே இணைந்திருந்தது. காணும் மனிதரெல்லாம் கரடு முரடானவர்கள் போல் தென்பட்டனர். சமூக உதவிப் பணியாளர்கள்தான் நம்பிக்கைக்கு உரியவர்களாகப்பட்டனர்.
எங்களுக்கான நிர்வாகப் பதிவு வேலைகள் நடைபெற்ற போதில்தான். வங்கிக் கணக்கைத் திறப்பதற்காக வங்கிக் கிளையொன்றுக்கு சமூக உதவிப் பணியாளர்கள் எங்களை அழைத்துச் சென்றனர்.
இந்நாட்டின் மொழியை தெளிவுற அறியாதிருந்த எனக்கு, வங்கியாளருக்கும் சமூக உதவியாளருக்கும் இடையே நடந்த உரையாடலை புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனாலும் வங்கியாளர் மறுப்பு தெரிவித்தும் உரையாடல் சூடாக மாறியதும், பின்னர் சம நிலையை அடைந்ததும் உய்த்துணர முடிந்தது. ஒருவாறாய் வங்கி வேலைகள் முடிந்து திரும்பிக் கொண்டிருக்கையில் தான் சமூக உதவிப் பணியாளர் நடந்தவை பற்றி விபரித்தார். அவரது குரலில் பாவனையில் கவலை தொனித்தது.
“உங்களுக்கும், இங்குள்ள நாடோடிகளுக்கும் தோற்ற ஒற்றுமை இருக்குத்தானே. வங்கியாளன் உங்களையும் நாடோடிகள்தான் என நினைத்து கணக்குத் திறக்க மறுத்துவிட்டார். நீங்கள் அகதி இலங்கையர் என்று விளக்கமளித்த பின்தான் சம்மதித்தான். ஆனால் நாடோடிகள் இந்நாட்டு சமூகப் பிரிவினராக..? நாடோடிகள் இங்கு வந்து பல நூற்றாண்டுகளாகின்றன. எங்கள் சமூகம் அவர்களை தீண்டாதவராய் ஒதுக்கித்தான் வைத்துள்ளது".
சட்டென பாறாங்கல்லொன்றில் முகம் மோதி சிதறியது. நான் சமாளித்துக்கொண்டேன்.
அன்றைக்கே என் மூதாதையரை இவர்களில் அடையாளம் காணலாமோ என்னும் உணர்வு என்னுள் உறுத்தத் தொடங்கியது.
இப்போது இதோ என்முன் பாடிக்கொண்டிருக்கின்றார்களே அவர்களின் தோள்வரை புரளும் சுருள் சுருளான தலைமயிரை பின்னிருந்து பார்க்கையில் ஊரில் நாட்டுக் கூத்து அண்ணாவிதான் கண்முன் வருகிறார்

Page 15
12 வெளிநாட்டுக் கதைகள்
எனது தாய்மாமனும் ஒரு அண்ணாவிதான். பனையில் இருந்து இறக்கிய புதுக் கள்ளைப் பருகிய படியே “ஞானசவுந்தரி கூத்தில் துயர்மிகு பாடலொன்றை இசைக்கும் இழுப்பில் என் நெஞ்சு பதறும். நிசப்தம் சூழும் சாமப்பொழுதினில் விவிலியத்திலுள்ள புலம்பல் பகுதியை பெருங்குரலெடுத்து ஒதும் பொழுதினில் அயலெங்கும் நெகிழ்ந்து கண்ணீர் உகுக்கும். இந்த நாடோடிகளின் பாடலிலும் அதே சாயல்தான். சாயலல்ல: அது ஆறாக்காயம். சொல்லி மாளாத துன்பம்.
ஊரூராய், நாடு நாடாய், கண்டம் கண்டமாய் துரத்தியடிக்கப்பட்ட முடிவுறாத அலைச்சலின் கதைகள் அவை. உலகத்தாரால் கைவிடப்பட்டோரின் அபயக்குரல் அது ஏரோது மன்னனின் ஆணைக்குப் பயந்து வயிற்றில் நிறைமாத குழுந்தையுடன் கன்னி மேரி அலைந்தபோது. இன்று நாடோடிகளென அறியப்பட்டோரின் மூதாதையரிடம் அடைக்கலம் கேட்கிறாள். அவர்கள் மறுத்துவிடுகின்றனர். "அலைந்து திரிவீர்” என அவள் சாபமிடுகின்றாள். சாபம் பலவிதமாக முடிவில்லாமல் நீள்கின்றது. அப்படியென நம்புகிறார்கள். அவர்கள் பாடுகின்றார்கள்.
நானும் நாடோடியாகினேனாகில் எனக்கிடப்பட்ட சாபம் யாதெனில்.?
சொந்த மொழி பேசியோனுக்கே "கள்ளத்தோணி எனப் பட்டம் சூட்டி காட்டிக்கொடுத்த சாபம் சூளுதோ?
வணக்கம் நலமா..? றொட்டிகோ கை கொடுக்கின்றார் என் சுற்றாடலில் வதியும் நாடோடிகளின் பிரதிநிதி அவர் “வணக்கம். வணக்கம். யாரேனும் புதிதாக வந்துள்ளார்களா” என்கிறேன் நான்.
"எங்கள் குடும்ப உறுப்பினர் சிலர் கடந்த கோடையில் புறப்பட்டவர்கள் இந்த இளவேனில் தொடக்கத்தில் நலமே திரும்பி இருக்கின்றனர்.” என்கிறார் றொட்டிகோ.
பயணமாகி யார் வரும் போதும், புறப்படும் போதும் இப்படித்தான் பாடல் இசையுடன் உருகுகின்றார்கள். இதற்கு கால நேரம் எதுவும் கிடையாது.
எப்போதும் கூட்டமாகவே தென்படும் இவர்கள் எப்போது சாப்பிடுவார். எப்போது உறங்குவார் என்பது விநோதமாகவே எனக்கு இருக்கும். றொட்டிகோ என்னை விடவும் பல வயதுகள் மூத்தவர். ஆனால் உற்சாகமும் உல்லாசமும் கொண்டவர். வசீகரக் கிழவன். றொட்டிகோ தன் சகாக்களுக்கு என்னை அறிமுகம்

двшот правей 13
செய்யும்போது நம்ம சகோதரர் என்றே எப்போதும் கூறுவார். என்னிடம் பேசும்போது நகைச்சுவையாக கூறுவார். "நீங்கள் இந்தியாவின் காலில் இருந்து வந்தவர்கள். நாங்கள் இந்தியாவின் தலையில் இருந்துவந்தவர்கள். நாங்கள் முந்தியவர்கள் - நீங்கள் பிந்தியவர்கள்.”
முதல்தடவை இதனை கூறியபோது என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை.
“எகிப்து வரைக்கும்தான் சிலர் எங்கள் வரலாற்றை தேடுகின்றார்கள் ஆனால் இப்பொழுதெல்லாம் எங்கள் வரலாறு இராஜஸ்தான் பாலைவனம் வரைக்கும் நீள்கின்றது. அதுவும் இந்திய நாட்டுக்காரர்தான் கண்டுபிடித்தார்கள். அங்கு உள்ள பாட்டும், இசையும், எங்க மாதிரியே இருக்கும். படம்பிடித்துக் கொண்டுவந்து காட்டினார்கள். பின்பு எங்கள் பாட்டையும் படம்பிடித்து இணைத்துள்ளார்கள். எந்த வித்தியாசமும் இல்லை.
எங்களை 'கலே' என்று அழைப்பதுண்டு 'கல்தேஷ்' என்று எங்களில் 905 பிரிவுண்டு சில வேளை சிந்து நதிக்குள்ளாகப் புதையுண்டது உங்களதும். எங்களதும் தேசமாக இருக்கலாம். ஆனால் இன்றைக்கு தேசம் என்று ஒன்று எங்களுக்கு இல்லை. நாங்கள் எங்கேயும் இருக்கலாம் ஆனால் உலகில் நாங்கள் ஒரு தனிச் சமூகம்.
என அவர் உணர்ச்சிபடக் கூறியது அவர்களைக் காணும் போதெல்லாம் என் காதுகள் மீள ஒலிக்கும்.
றொட்டிக்கோவிடமும், மற்றவர்களிடமும் விடை பெற்றுக் கொண்டு சந்தையை நோக்கி திரும்புகின்றேன்.
இளவேனிற்கால வனப்பிற்கு தன்னை ஆரவாரமின்றி தயார்ப்படுத்துகிறது இயற்கை.
கோடை நெருங்கிவர பெரும்பான்மையினர் பயணமாகிவிடுவர். அதிலும் இந்த நாடோடிகள் ஒருவர் கூட இரார். இந்த ஊரே வெறிச்சோடி விடும். கூடும் சந்தையிலும் பொலிவிருக்காது. ஏனோ தானோவென சிலர் கடைகளை விரிப்பர். முதன் முதல் இந்த சனிக்கிழமைச் சந்தையைக் காண நேர்ந்தபோது அதன் அமர்க்களம் என்னை ஈர்த்துக்கொண்டது. ஒரு திருவிழாக்கால கடைத்தெருவின்

Page 16
14 வெளிநாட்டுக் கதைகள்
சாயல் அதில் இருந்தது.
நாங்கள் வருவதற்கு ஒரு ஒன்றரை வருட இடைவெளியில் முன்வந்து சேர்ந்த பிரேம் - ராணி இளந்தம்பதியினர்தான் இவ்வூர் நிலவரங்களை எமக்கு அறியத் தந்தனர்.
தங்களது ஒருவயது நிறையாத குழந்தையை தள்ளு வண்டியில் வைத்து உருட்டியபடியே இச்சந்தைக்கு அழைத்து வந்தனர். அவர்கள் இத்தாலியில் வசித்த பின் அங்கு அகதிகள் பராமரிப்பு சரிவராதது என உணர்ந்ததால் வயிற்றில் குழந்தையுடன் எல்லை கடந்து வந்து சேர்ந்தவர்கள்.
அவர்கள் தான் இங்குள்ள மலிவுவிலைக் கடைகள், சமூக சேவை நிலையங்கள் என்பவற்றை இடம் காட்டி விட்டவர்கள். அந்தவகையில்தான் இந்த சந்தைக்கும் அழைத்து வந்தனர்.
எனது மனைவி பொட்டு வைத்திருந்தாள் சந்தையை நெருங்கி கொண்டிருந்தபோது, சிறுவர்களும் பெண்களுமான ஒரு கும்பல் எங்களை மொய்த்தது. எதிர்பாராத சுற்றிவளைப்பினால் நாங்கள் சற்று மிரண்டு போனோம். ஆனால் அவர்கள் ஒருவகை நேசத்துடன்தான் விசாரித்தார்கள். நானும் மனைவியும் எதுவும் பேசவில்லை. அழைத்து வந்த இளம் தம்பதியினர்தான் பதிலளித்தார்கள். “பொட்டு வைத்திருக்கிறீர்களே நீங்கள் இந்தியரா? ஒரு பாட்டுப்பாடுங்களேன்.?” என்பது தான் அவர்களது வேண்டுகோள். இவ்வளவு தானா என்பது போல ஆகிவிட்டது எங்களுக்கு. நாங்கள் இலங்கையர் என்றதும் அவர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிவிட்டனர். இதுகளோட சகவாசம் வைக்கக்கூடாது. இதுகள் இந்நாட்டினரில்லை. இதுகள் நாடோடிகள்.”
எங்களை அழைத்து வந்தவர்கள் இந்த விளக்கத்தை கூறியபோது அவர்களுக்காய் ஒரு பாட்டுப் பாடி இருக்கலாம் போல்பட்டது. நான் சந்தையை அடைந்து விட்டேன். சத்த சந்தடியில் சந்தை மூழ்கிக் கிடந்தது.
ஒவ்வொரு காய்கறியின் மீதும். அதன் பூர்வீகம் அதன் விலை எழுதப்பட்டிருந்தது.
பெரு ஆலைக் கழிவுகளான துணிமணிகள் பாத்திரங்கள் மலிவு விலையில் குவிக்கப்பட்டிருந்தன. பாவித்த பழைய ஆடைகள் குப்பையாய் இறைந்து கிடந்தன. றேகே, ராய், றொக், றாப் ஒலி நாடாக்கள் விற்பனைக்காய் கூவி இரைந்துகொண்டிருந்தன.

ρυστατ στρ86ή 15
மொறோக் - அல்ஜீரி போன்ற வட ஆபிரிக்க அரேபியரின் விருப்பங்கள் தேவைகளுக்கேற்ற கடைகள், ஆபிரிக்க நீக்ரோக்களின் விருப்பங்கள். தேவைக்ளுக்கேற்ற கடைகள் என நிறைந்திருந்தன.
சரிகையும், மினுக்கு முலாமும் கொண்ட துணிவகைகளை முக்காடணிந்த அரேபிய பெண்கள் அள்ளிக்கொண்டிருந்தனர்.
சந்தைக் காற்றை ஆவல்தீர இழுத்துக் கொள்கிறேன். எதிரே 'பாயிக் தம்பதியினர் வந்துகொண்டிருந்தனர். மலர்ந்த முகத்துடன் காலை வணக்கம் தெரிவித்த அவர்கள் “வேலை கிடைத்ததா” என்ற மரபான கேள்வியைக் கேட்டனர். வழமையான "இல்லை” பதிலையே நானும் சொன்னேன். பொஸ்னியா முஸ்லிம்கள், அவர்கள் மொஸ்ரார் கிராமத்தை இனத் தூய்மையாளர் மொய்த்தபோது இரண்டு குழந்தைகளுடன் தப்பித்து வந்தவர்கள். இவர்கள் கிராமத்தைச் சேர்ந்த நான்கு குடும்பத்தார் இங்கு வாழ்கின்றனர்.
பாயிக் குடும்பத்தாரும் நாங்களும் ஏறத்தாழ ஒரே நேரத்திலே இங்கு வந்து சேர்ந்தவர்கள். நட்பானவர்கள், எங்கள் நன்றிக்குரியவர்கள் . இவர்களால் எனது ஏழு வயது மகன் பலத்த அடிகாயங்களில் இருந்து காப்பாற்றப்பட்டிருக்கின்றான்.
பாடசாலை வார விடுமுறை நாளான ஒரு புதன்கிழமை மதிய உணவின் பின் குழந்தைகளுடன் நானும் மனைவியும் கண்ணயர்ந்து விட்டோம். ஏழு வயதான மகன் கண்ணுறங்க மறுத்துவிட்டான். முன்னறையில் விளையாடிக் கொண்டிருந்தான். பல நாட்களில் இப்படித்தான். கதவு தட்டப்படும் ஓசை கேட்டுத் திடுக்கிட்டெழுந்தோம். முன்னறையில் மகன் இல்லை. மகனின் விசும்பும் ஒலி வெளியே கேட்டுக்கொண்டிருந்தது. மகனின் கையைப் பிடித்தபடி பாயிக் நின்றிருந்தார். மகனின் முகம் வீங்கி இருந்தது. எனக்குப் பதட்டம். நாங்கள் தூங்கிவிட்ட குற்றம். மனம் குறுகுறுத்தது. பாயிக் உள் வந்தபோது உட்கார மறுத்துவிட்டார்.
"தனியே ஏன் விளையாட விட்டீர்கள். விட்டாலும் கவனித்து இருக்க வேண்டாமா? என் வீட்டிற்கு அருகே நடந்ததால் தற்செயலாகக் காணமுடிந்தது. எனக்கு அந்தப் பையன்களைத் தெரியும். மோசமானவர்கள். நல்லா அடித்து விட்டார்கள் போலத் தெரிகிறது பாருங்கள்.”
அவர் சென்றுவிட்டார். எங்கள்மீது இலேசான எரிச்சல். இது எங்கள் பிழைதான்.
பாயிக் சென்றதும் மகன் சத்தமிட்டு விக்கி விக்கி அழத் தொடங்கினான். அவனது தொடையில் காயங்கள் இருந்தன. "என்னைப் பன்றி என்றார்கள். என் கால்சட்டையைக் கழற்றி குஞ்சாமணியைப் பார்த்தார்கள். பின்பு என்னை கம்புகளால்
பிடித்தார்கள். நாடோடி நாயே எங்களிடத்தில் ஏன் விளையாட வந்தாய் என்று

Page 17
16 வெளிநாட்டுக் கதைகள்
ஏசினார்கள். முகத்தில் துப்பினார்கள். பாயிக் மாமா சத்தம் போடவே ஓடிவிட்டான்கள்” என்றான் மகன். அவனின் குரலில் நடுக்கம் இருந்தது. அவனைத் தேற்றி முகமெல்லாம் கழுவி கீறல் காயங்களுக்கு மருந்திட்டோம். எனக்கு ஆத்திரமும் அழுகையுமாக வந்தது. மனைவி மகனைக் கட்டியணைத்து கண்ணிர் உகுத்தபடி இருந்தாள்.
என் சகநாட்டவர் யாரையும் காணவில்லை. சந்தை சற்று விரிவானது. பெரிய திடல் அது. மற்ற நாட்களில் வாகனம் நிறுத்துமிடமாகவும் வயதானவர்களின் குண்டுருட்டு மைதானமாகவும் உள்ள அப்பகுதி சனிக்கிழமைகளில் சந்தை கூடும் இடமாக மாறிவிடுகின்றது. சல்மான் வணக்கம் சொன்னார். ஏழு பிள்ளைகள் புடைசூழ மனைவியுடன் வந்திருந்தார். கத்தோலிக்க துருக்கியர்கள் இவர்கள். துருக்கியில் கத்தோலிக்கர்கள் விரட்டப்படுகின்றார்கள். தாங்கள் தங்கள் பூர்வீகமான இரு வீட்டையும் பழத்தோட்டத்தையும் விட்டுவிட்டு வந்ததாக எந்தக் கதையிலும் ஒருதடவை கூறுவார். இவரது குடும்பக் கிளையொன்றே இங்கே வசிக்கின்றது. அவர்தான் கூறினார் “உங்கள் உறவினரெல்லாம் பஸ்தரிப்பிடத்திற்கு அருகே கூடியுள்ளார்கள். ராணி அழுதுகொண்டிருக்கிறாள். ஏதும் துக்க செய்தியாக இருக்கலாம். நான் அங்கே செல்லவில்லை. நீங்கள் சந்திக்கவில்லையா?” என்றார். நான் சல்மானுக்கு நன்றி சொல்லிவிட்டு புறப்பட்டேன். அட என்ன இந்த சனிக்கிழமை இப்படி.
இந்த பிரேம் - ராணி இளம் தம்பதியினர்தான் நாங்கள் முதன்முதலாக இங்கே வந்தபோது அகதிகள் பராமரிப்பு நிலையத்தில் எங்களை வரவேற்று உபசரித்தவர்கள். நாங்கள் வரும்போது ஒரு குழந்தை. தற்போது இன்னொன்று வயிற்றில் உருவாகி இருந்தது. பிரேம் - ராணி குடும்பத்தினர் இன்னமும் அகதியாக ஏற்கப்படவில்லை. அவர்களது விண்ணப்பம் பரிசீலனையில்தான் உள்ளது. முதல் விசாரணையில் இவர்களது நியாயங்கள் ஏற்கப்படவில்லை. தற்போது மேன்முறையீடு செய்துவிட்டு முடிவிற்காக காத்திருந்தார்கள். இது இறுதியானது. அவர்கள் முடிவை நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருந்தார்கள்.
என்னைத் தவிர்த்து மற்றைய குடும்பத்தார் அனைவரும் குழுமி நின்றனர். ராணி தலையைக் கவிழ்த்தபடி ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தாள். பிரேம் கையை கட்டியபடி கவலையுடன் நின்றுகொண்டிருந்தார். குழந்தை சற்றுத் தள்ளி மற்றக் குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருந்தது.
என்னைக் கண்டதும் ராணி சற்று உரமாக கேவிக் கேவி அழத் தொடங்கினாள். எனக்கு மனசைப் பிசைந்தது. இழவு வீட்டிற்கு செல்லும்போது ஒவ்வொருவரைக் காணும்போது ஒப்பாரி சொல்லி அழுகை கூடுமே. அப்படி இருந்தது நிலைமை. "நேற்று ராத்திரிதான் வந்து சொன்னார்கள் எங்கள் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டு விட்டதாம். வரும் திங்களுக்குப்பின் இங்கு இருக்க

Στοπ ατρα α' 17
இயலாதாம். இரா முழுவதும் தூக்கமில்லை. செய்தி கேட்டதில் இருந்து ராணி அழுதபடிதான். தொலைபேசியிலும் யாருடனும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இன்றைக்கு இந்தச் சந்தையில் சந்திப்பம்தானே என்று."
பிரேமின் குரல் தளதளத்து வார்த்தைகள் வெளியே வராமல் தடைப்பட்டன. “இதுதான் எங்கட கடைசிச் சந்தையோ..? ராணி தலையை நிமிர்த்தி கேட்கிறாள். எல்லோரும் சந்தைப் பக்கம் பார்வையை ஒடவிடுகின்றோம். எங்க வீடுகளில் நிக்கலாம் தானே. சமாதானம் கூற முயன்றனர்.
"திங்கட்கிழமையின் பின்னால் இவர்கள் சட்டவிரோத குடியிருப்பாளர்கள். பொலிஸ் வந்து கைது செய்ய வாய்ப்புண்டு." அந்தோனி பரமானந்தத்திற்கு பதில் சொன்னாரா. உள்ளதைத் தெரிவித்தாரா தெரியவில்லை.
“இப்ப உங்கட வீட்டில நிக்கப்போறமெண்டே சொன்னனாங்க.." ராணி வெடித்தாள்.
பிரேம் ராணியைக் கடிந்துகொண்டான். உள்ள நிலைமைதானே. போன வாரம் நம்மட கண்ணுக்கு முன்னாலைதானே சோமாலி குடும்பத்தை பொலிஸ் கொண்டுபோனது.
“எல்லாம் சரிவரும். வீடு தரப்போறாங்கள் என்று ஒரு வீட்டிற்கு தேவையான சாமான்கள் எல்லாத்தையுமல்லோ வாங்கிப்போட்டு அந்த நம்பிக்கையிலதானே வயிற்றில் குழந்தையை வளரவிட்டனான்" ராணி கேவிக் கேவிப் புலம்பினாள்.
எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. "ஊர் உறவையே விட்டு தொலைச்ச நாங்கள் இங்க இல்லையெண்டால் இன்னொரு இடம் மாறுறது பிரச்சனையே. எல்லாத்துக்கும் தயாராய் இருக்கோணும். நடக்கிறதைப் பாருங்கள் " என்றேன் நான்.
உண்டாகியது இங்கு பிறந்தது. இப்ப ஒன்று இங்க உருவாகி இருக்கு. எங்க பிறக்கப்போகுதோ?” பிரேமின் கண்களிலிருந்தும் நீர் வழிந்தது. துடைத்துக்கொண்டார்.
"அம்மா. சந்தை. அப்பா." குழந்தை சிணுங்கிக்கொண்டிருந்தாள். எங்களுடன் பழக்கமுள்ள ஏனைய நாட்டவரும் செய்தி அறிந்து எங்களைக் குழுமி நிற்கின்றனர்.
கவலை எல்லோரையும் சூழ்ந்திருக்கின்றது. எல்லோருக்கும் தெரியும் பிரேமும் ராணியும் இந்த ஊரைவிட்டும் நாட்டை விட்டும் வெளியேறி ஆகவேண்டியவர்கள் என்பது.
சந்தை தன்பாட்டில் அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. இன்றையநாள் குதூகலத்தை நாங்கள் இழந்துவிட்டோம். இன்னும் சிலமணி நேரத்தில் கடைகள் கட்டப்பட்டுவிடும். சந்தையும் கலைந்துவிடும்.

Page 18
18 வெளிநாட்டுக் கதைகள்
பின்னர் அவர்கள் இருப்பிடத்திற்கு வந்து சந்திப்பதாய் கூறி ஒவ்வொருவராய் கழரத் தொடங்குகின்றனர். பிரேமும் ராணியும் தம் குழந்தைகளுடன் சுமக்கக்கூடிய பாரங்களை மூட்டை முடிச்சுக்களாக்கி கிளம்புகின்றனர். நான் சந்தைக் கடமைகள் எதையும் நிறைவேற்றாமலேயே வீட்டிற்குத் திரும்புகிறேன்.
இன்னமும் நாடோடிகள் சிலர் பாடிக்கொண்டிருக்கின்றனர். அவர்களின் பயணங்கள் பாடல்களாகி பலநூறு ஆண்டுகள் ஆகிவிட்டன.
இனி எங்களின் பயணங்களும் பாடல்களாகும்.
பாரிஸ் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)
2004, அப்பால் தமிழ், கொழும்பு.

bsb 19
06á6ó
க.கலாமோகன் (பிரான்ஸ்)
அன்ரை பத்திரோன் முதலாளி நல்லவர். அவர் மட்டுமே, அவற்றை மனிசி, மகன், மகள், நாய்க்குட்டி, பூனைக்குட்டி எல்லாந்தான். பிரெஞ்சு ஒழுங்காகப் பேசமாட்டான் எண்டதாலை, எங்கை என்னை நிப்பாட்டிப் போடுவாரோண்டு வேலைக்குப் போய்ச் சேர்ந்த காலத்திலை எனக்கு அவரிலை பொல்லாத பயம். அவர் கதைக்கிறது எனக்கு வடிவா விளங்குறதில்லை. நான் கதைக்கிறதெல்லாம் தனக்கு வடிவாக விளங்குதெண்டு - என்னைப் போலை கையையும் தலையையுமாட்டிச் சொல்லிறவர். இங்கிலிஸிலை பேச வெளிக்கிட்டாலும் அவரோ, நீ உன்ரை பிரெஞ்சிலை பேசு, அது தனக்கு நல்லா விளங்குமென்டிறவர். நல்ல பத்திரோன். அவர் எங்கட சனங்களைப் போலயில்லை. சனங்கள் எப்ப பார்த்தாலும், நான் முவா, துவா (நான், நீ எண்டுதான் பிரெஞ்சு பேசுறன் எண்டு சொல்லி என்னை நக்கலடிக்குங்கள். அதுகளுக்குப் பொய்தான் பேசத்தெரியும். பத்திரோன் மட்டும்தான் உண்மை பேசுறவர். நல்ல பத்திரோன். என்னோடை நல்ல நேசம். நான் கோப்பையள் கழுவிக் கொண்டிருக்கேக்கை - குசினிக்கை வந்தாரெண்டா என்ரை முதுகிலை தட்டி சிரிக்காமல் போக மாட்டார். நல்ல பத்திரோன்.
நேற்றைக்குப் பத்திரிக் வரேல்லை. அவன்தான் நெடுகையும் சலாத்(பிரெஞ்சுக்காரர் சாப்பாட்டிற்கு முன்னோ அல்லது பின்னோ எடுக்கும் பச்சிலை உணவு. இது செமிபாட்டிற்கு உதவுவது போடுறவன். அடையான்தான் (அல்ஜீரியர்களுக்கு இங்கு வாழும் தமிழ் அகதிகள் கொடுத்துள்ள பட்டப்பெயர். இந்தப் பெயர் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது என்பது இன்றுவரை மர்மமாகவே உள்ளது) திட்டித் திட்டி சலாத் போட்டான். முன்னமொருக்கா, நான் வேலைக்குப் போகாமயிருக்கேக்கை பத்திரோன் பத்திரிக்கைத்தான் கோப்பை கழுவவிட்டார். அடுத்த நாள் என்னிட்டை அவன் வடிவாக் கோப்பையளைக் கழுவேல்லையெண்டிட்டு நான் கழுவிற கோப்பையள்தான் பளபளப்பாயிருக்கிற தெண்டார்.

Page 19
20 வெளிநாட்டுக் கதைகள்
றெஸ்ரோறண்டிலை கோப்பை கழுவிற மெசினில்லை. நான் மெசினை விடத்திறமா கழுவிறனெண்டு முன்னமொருக்கா பத்திரோன் என்னிட்டை சொல்லேக்கையே, அவர் என்னை வேலையை விட்டு ஒருநாளும் நிப்பாட்ட மாட்டாரெண்டு நினைச்சுக் கொண்டன்.
இண்டைக்கும் பத்திரிக் வரேல்லை. ரெலிபோனடிச்சுச் கூட பத்திரோனுக்கு அவன் சொல்லவேயில்லை. என்ன இருந்தாலும் அவன் உப்படிச் செய்யிறது புழை.
பாவம் பத்திரோன். என்னிட்டை வந்து கோப்பையையும் கழுவி, சலாத்தையும் போடெண்டிட்டு, எப்படிச் சலாத் போடுறதெண்டதையும் காட்டினார். அவ்வளவுதான். பிறகு நான் சலாத் போட்ட விதத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டார். என்ன இருந்தாலும் கோப்பையையும் கழுவிக் கொண்டு சலாத்தையும் போடுறது கஸ்டமாத்தானிருந்தது. பாவம் பத்திரோன். அதாலைதான் செய்தனான்.
றெஸ்ரோறணி டிலை அடையாண்தான் செவ். (சமையலறைப் பொறுப்பாளன்) அவன்ரை ஆக்கள்தான் எய்ட் குசினியர்களாகவும் (சமையல் உதவியாளர்கள்) இருக்கிறாங்கள். எனக்கு உந்த அடையான்களைப் பிடிக்கிறதில்லை. உவங்களுக்கு என்னை நக்கலடிக்கிறதுதான் வேலை. எப்ப பார்த்தாலும் குசினிக்கை, உவங்கடை வாயள் ஆடிக்கொண்டுதாணிருக்கும். பத்திரோன் வாங்கிப்போடுற பீவ்தேக்குகளிலை (இறைச்சித்துண்டுகள்) அரைவாசியைக் களவாத்திண்டு முடிக்கிறது உவங்கள்தான். உவங்களை நிப்பாட்டினாத்தான் றெஸ்ரோறன்ட் உருப்படும். பத்திரிக்கும் உவங்களோடை சேர்ந்து நல்லாக் கெட்டுப்போனான். அவன் பிரெஞ்சுக்காரன்தான். ஆனாலும் நல்லா கெட்டுப்போனான். எப்ப பார்த்தாலும் குசினிக்கை நிண்டு சிகரெட்டுப் புகையெண்டா புடிக்கிறதேயில்லை. பத்திரேனும் சிகரெட் பத்திறவர்தான். ஆனா உவங்களை மாதிரி நெடுகையும் பத்திக்கொண்டிருக்கிறேல்லை.
நேற்று பத்திரோனின்ரை ரெண்டாம் மோள், நாய்க்குட்டியோடை றெஸ்ரோறண்டிற்கு வந்திது. கோப்பை கழுவிக்கொண்டிருந்ததாலை கை குலுக்க முடியேல்லை. சிரிச்சன். நாய்க்குட்டி என்னைப் பார்த்து வாலாட்டியது. எனக்கு வாலில்லை. இருந்தா நானும் அதுக்கு வாலாட்டியிருப்பேன். அடையான்களைப் பார்த்து அது ஒருநாளுமே வாலாட்டினதில்லை. பத்திரோன்ரை மோள் என்னோடை கதைக்க வரும். வடிவெண்ட வடிவு. பல்லுத்தான் கொஞ்சம் கறள் பிடிச்சிருக்கு. எனக்கெண்டா அதோடை கதைக்க வெட்கம். நேற்றைக்கு குசினிக்கை நாய் மூத்திரம் பெஞ்சிட்டிது. பத்திரோன்ரை மோள் அதைத் துடைக்க வெளிக்கிடேக்கை நான் விடேல்லை. நான்தான் யவல் (அசுத்தங்களை கழுவ உபயோகிக்கப்படும் ஒரு திராவகம்) போட்டு வடிவாக் கழுவினனான். எனக்கு மேர்ஸி (நன்றி) சொல்லிட்டுப் போனது.

To gábabyb 21
வெள்ளிக்கிழமையளிலை நான் மரக்கறிதான் சாப்பிடுறனான். அம்மா சொன்ன மாதிரி நான் இஞ்சையும் விரதம் பிடிச்சு வாறன். இது பத்திரோனுக்குத் தெரியும். ஆனா, வெள்ளிக்கிழமையளிலை அடையான் எனக்கு மரக்கறியிலை சாப்பாடு செய்து தாறேல்லை. நான் பாணும் புறமாஜீம் (சீஸ்) தான் சாப்பிடுறனான். ஒவ்வொரு நாளும் இரவு பன்னிரண்டு மணிக்குத்தான் வேலை முடியிறது. இண்டைக்குக் கணக்கச் சனம் வந்ததாலை கூடவேலை. பத்திரோன் அடையான்களை கொஞ்சம் கூடவேலை செய் எண்டு கேக்க, அவங்கள் நீ கூடச் சம்பளம் தரமாட்டாய், எண்டிட்டுப் போயிட்டாங்கள்.
எனக்கு மாதம் மூவாயிரத்து ஐநூறு பிராங். அவங்களுக்கு என்னிலும் பார்க்க கூட. காசு கூட உழைக்கிறவங்கள் கூட வேலை செய்திருக்கலாம்தானை. அவைக்கு தாங்கள் என்னவோ டிரக்டர்மார் எண்ட நினைப்பு. நேரமெண்டா நேரந்தான். ஒரு நிமிஷம் பிந்தினாக் கூட நிக்கமாட்டான்கள். சுப்பிளி மோன்தையர் (ஓவர்டைம் காசு) கேப்பாங்கள். அவங்கள் வேலை முடிஞ்சு போகேக்கையும் நான் கோப்பை கழுவிக் கொண்டு நிக்கிறனான். அப்ப என்னைப் பார்த்து நக்கலடிக்கிறவன்கள். பத்திரோன் கடைபூட்ட இரவு ஒரு மணியாகும். அதுவரையும் நிணடிட்டுத்தான் நானும் போறனான். அடையான்களுக்கு புளடிச்சல். கொஞ்சம் கூட பொறுப்புணர்ச்சி இல்லாதவங்கள்.
முன்னமொருக்கா, அவர்கள் போனோண்ணை பத்திரோன் தன்ரை மோனை கய்ஸில (காசுப்பட்டறை விட்டிட்டு, குசினிக்கு வந்தார். ஓடர்கள் பிந்தி வந்ததாலை பத்திரோன் சமையலைக் கவனிக்க நான் கோப்பையைக் கழுவி அவருக்கு உதவி செய்தன். வேலை முடிந்து போகேக்கை நான் வேணாம் வேணாம் எண்டு சொல்ல அம்பது பிராங்கைத் தூக்கி வலிய என்ரை பொக்கட்டுக்கை வைச்சவர். நல்ல பத்திரோன். அடையானுக்கு இது விளங்கிறதேயில்லை.
இண்டைக்கு எனக்கு லிவு. நான் லீவிலை இருக்கிற நாளிலை கறுவல் ஒருவன்தான் புளோஞ்சிங் (கோப்பை கழுவுதல்) செய்யிறவன். பத்துமணிபோலை பத்திரோன் எனக்கு போன் பண்ணினார். பத்திரிக் வரவில்லையெண்டும், என்னை சலாத் போட முடியுமா எண்டு கேட்டார். நான் உடனை ஒமெண்டன். லிவிலை வீட்டை சும்மாயிருந்து வீடியோ பார்க்கிறதைக் காட்டிலும் வேலை செய்யிறது நல்லதுதான்.
பத்திரிக்கின்ரை போக்கு வரவர மோசமாப் போய்க் கொண்டிருக்குது. உவன் நெடுகயும் சொல்லாமல் கொள்ளாம லிவடிச்சுக் கொண்டிருந்தானெண்டா பத்திரோன் கட்டாயம் வேலையிலையிருந்து நிப்பாட்டுவார்.
வேலையில்லாமல் போகேக்கைதான் உவனுக்கு பத்திரோன்ரை அருமை தெரியவரும். நான் றெஸ்ரோறண்டுக்கை போனோண்ணை பத்திரோன் நான் வந்ததுக்கு மேர்ஸி சொல்லிட்டு கபேக்கிறாம். (பால்கோப்பி) ஒண்டு போட்டுத்

Page 20
22 வெளிநாட்டுக் கதைகள்
தந்தார். நான் ககே கோப்பி குடிக்கிறேல்லையெண்டது அவருக்குத் தெரியும். கறுவல் என்னைக் கண்டு சிரிக்கவுமில்லை. பொஞ்சு (காலை வணக்கம்) சொல்லவுமில்லை. அவனுக்கும் அடையான்களைப் போல இப்ப திமிர்.
இண்டைக்கு நான் சலாத் போடவேணும். கோப்பையள் கழுவுற நாளிலை, அதுகள் வரவரக் கழுவிக் கொண்டேயிருப்பன். கறுவலோ கோப்பையளைக் குவிய விட்டிட்டு வோக்மனும் கேட்டு, சிகரெட்டும் பத்திக் கொண்டு சும்மாவிருந்தது. எனக்கெண்டா அது துண்டாப் பிடிக்கேயில்லை. ஏன் கோப்பையைக் கழுவாமல் இருக்கிறாயெண்டு கறுவலிட்டைக் கேட்டன். அதுக்கவன் என்ரை வேலை எனக்குத் தெரியும், நீ உன்ரை வேலையைப் பார்த்துக் கொண்டிரு. எண்டு சொட்டாச் சொன்னான். உவங்களுக்கு உப்ப வேலையின் ரை அருமை தெரியாது. சோமாசிலை (வேலையை இழந்து சொற்ப உதவிப்பணத்துடன் இருக்கும் காலகட்டம்) நிக்கேக்கைதான் தெரியும்.
இண்டைக்கு வேலை செய்துகொண்டிருக்கேக்கை, கறுவல் அஞ்சு கோப்பையை உடைச்சான். உவன் வேணுமெண்டுதான் கோப்பையளை உடைச்சிருக்க வேணும். உவனிட்டை வாயைக் கொடுக்கிறது நல்லதில்லை யெண்டு நான் பேசாம இருந்திட்டன். அடையான்களும் கறுவலும் நல்ல முசுப்பாத்தி விட்டுக் கொண்டிருந்தாங்கள்.
வேலை முடியிற நேரம் வந்தோண்ணை, குவிஞ்சு கிடந்த கோப்பையளையும் கழுவாம, கறுவல் அடையான்களோடை ஒடீட்டான். பாவம் பத்திரோன். நான்தான் கறுவல் விட்டிட்டுப்போன கோப்பையளையெல்லாம் கைநோகக் கைநோகக் கழுவினனான்.
எனக்கிண்டைக்கு விசா. விசா புதுப்பிக்கிறதுக்கு ஒவ்வொரு தரமும் லிவெடுக்க வேணும். சில நேரங்களிலை போனோண்ணையே விசாவைத் தந்திடுவாங்கள். இல்லாட்டி பின்னேரம்வரை காத்திருக்க வேணும். நேற்றைக்கு பத்திரோனிட்டை இண்ணைக்கு விசாவெண்டு சொல்லி லிவு கேக்க விசா எடுத்து முடிஞ்சவுடனை றெஸ்ரோறண்டுக்கு வரச்சொன்னவர். பத்திரோனுக்கு உதவ வேண்டுமெண்டதாலை நான் இண்டைக்கு நேரத்தோடை சித்தைக்கு (பரிசில் விசாக்களை வழங்குவதற்குப் பொறுப்பாகவுள்ள பிரதான பொலிஸ் தலைமையில் அமைந்துள்ள இடம்) போனேன். எனக்கு லக். நேரத்தோடை விசாவைத் தந்திட்டாங்கள்.
உடனேயே நான் றெஸ்ரோறண்டுக்குப் போனன். அங்கை கனசனம். பத்திரோன்ரை மகன்தான் கீழை பொறுப்பா இருந்தான். மேலையுள்ள குசினிக்குப் போனன். அங்கை பத்திரோன்தான் கோப்பையைக் கழுவிக் கொண்டிருந்தார். பாவம் பத்திரோன். சலாத் போட்டுக் கொண்டிருந்த பத்திரிக் அதையும் போட்டுக் கொண்டு பத்திரோனுக்கும் பதிலா கோப்பையையும் கழுவியிருக்கலாம்தானை.

உருக்கம் 23
என்னைக் கண்டோண்ணை பத்திரோன் “திறேசோந்தி" (மிகவும் இனியவர்) எண்டிட்டு கையைக் கழுவிக் கொண்டு கீழை இறங்கினார். பத்திரிக் என்னிட்டை வந்து தான் இண்டைக்கு அரைநேரம்தான் வேலை செய்யிறதாச் சொன்னான். ஏன்எண்டு கேக்க தன்ரை குப்பினை (சிநேகிதி) யைப் பார்க்கப் போகிறனெண்டான். நான் கேட்டன் அப்ப ஆர் சலாத் போடுறதெண்டு. அதுக்கவன் என்னைக் காட்டிட்டுப் போயிட்டான். அண்டைக்கு நான் தான் சலாத்தும் போட்டுக் கோப்பையளையும் கழுவினனான். அதை நான் பத்திரோனுக்காக செய்தனான். பத்திரிக்காண்டியில்லை. குப்பினை அவன் லீவு நாளிலை போய்ப் பார்க்கலாம்தானை. ஏன் வேலை நாளிலை போய்ப் பார்க்கவேணும். உந்தப் பிரெஞ்சுக்காரருக்கு குப்பினெண்டாக் காணும். கண்ம்ண்ை தெரியாது.
இண்டைக்கு செவ் என்னிட்டை வந்து சிண்டிக்காவினை (தொழிற்சங்கம்) சேரன் எண்டு கேட்டான். எனக்குச் சிண்டிக்காவெண்டா என்னெண்டு தெரியாது. அவனிட்டைக் கேட்டன். அதுக்கவன், சிண்டிக்கா பத்திரோனுக்கு எதிரான தெண்டும், அதிலை சேர்ந்தாக் கூடச் சம்பளம் கிடைக்குமெண்டும் சொன்னான். எனக்கெண்டா அவன் சொன்னது பொய்போலப் பட்டிது. பத்திரோனிட்டைப் போய் செவ் என்னைச் சிண்டிக்காவிலை சேரச் சொல்றான் எண்டு சொன்னன். அதுக்கு அவர் அடையான் செவ்வோடை இனிமேல் என்னைக் கதைக்கவேணாமெண்டும், சிண்டிக்கா தொழிலாளியளுக்கு எதிரானது எண்டும் சொன்னார். ஏன் அது தொழிலாளர்களுக்கு எதிரானது எண்டு கேட்டன். சிண்டிக்கா தொழிலாளியளை வேலை செய்யாம சோம்பேறியாக இருக்கச் சொல்லிறதெண்டும் அதுக்கை இருக்கிறவன்கள் தொழிலாளியின்ரை சந்தாக் காசுகளைச் சுருட்டி தங்கடை பொக்கட்டுக்களுக்கை போடுறவங்கள் எண்டும் சொன்னார். பத்திரோன் சொன்னது சரிதான். (வேலை செய்தாத்தான் காசு கிடைக்கும். காசு கிடைச்சாத்தான் வாழலாம். எனக்கெண்டா உவங்கடை போக்கு துண்டா விளங்கேல்லை. பத்திரோனைப் பிடிக்கேல்லையெண்டா ஏன் அவருக்கெதிரா சிண்டிக்கா துவங்க வேணும். வேலையை விட்டிட்டுப் போக வேண்டியதுதானே. நான் வேலை செய்து உழைச்ச காசிலைதான் ஊரிலை வீடு கட்டினவை. வீடியோ வாங்கினவை, இரண்டு தங்கச்சிக்கு சீதனம் கொடுத்தவை. இதையும்விட ஐயா வட்டிக்கு வேறை குடுத்துக் கொண்டிருக்கிறார். வேலை செய்யாட்டி உதெல்லாம் முடிஞ்சிருக்குமே. அடையான்களுக்கு காசின்ரை அருமை தெரியாது. அதுதான் இப்படி நடப்புக் காட்டிக் கொண்டு திரியுறாங்கள். பத்திரோனாலைதான் அவங்களுக்கும் காசு கிடைக்குது. இருந்தும் அவருக்கெதிராதான் இவங்கள் எல்லாம் செய்யிறாங்கள். கொஞ்சஞ்கூட நன்றியில்லாவர்கள்.)

Page 21
24 வெளிநாட்டுக் கதைகள்
பத்திரோன் இண்டைக்கு என்னைக் கூப்பிட்டு இனிமேல் நான் தான் சலாத் போடவேண்டி வரும் எண்டார். என்ரை இடத்துக்கு ஒரு ஆள் தேவை எனக்கு நம்பிக்கையான என்னைப்போல திறமா வேலை செய்யிற சிறிலங்கேய் (இலங்கையர்) ஆரையும் தெரியுமா எண்டு கேட்டார். "அப்ப பத்திரிக் என்ன செய்யப் போறான்” எண்டு கேட்டன். அதுக்கு அவர் "பத்திரிக் ஒழுங்காச் சலாத் போடுறதில்லை. ஒழுங்கா வேலைக்கு வாறானுமில்லை. நான் அவனை வேலையிலிருந்து நிப்பாட்டப் போறன். அதுதான் எனக்கொரு சிறிலங்கேய் தேவை. எண்டேக்கை எனக்கு உடனை என்ரை மச்சான்தான் ஞாபகத்திற்கு வந்தான். மச்சான் சிலோனிலையிருந்து வந்து ஒரு கிழமைதான். அவனைப் போடலாம் ஆனால் பப்பி (விசா) தானில்லை எண்டன். அதுக்குப் பத்திரோன் பப்பி இல்லாட்டிலும் பறவாயில்லை. சிறிலங்கேயா இருந்தாச்சரி. எண்டார். எனக்குப் பேய்ச் சந்தோஷம். நான் பிரெஞ்சுக்கு (பிரான்ஸ்) வந்து ஒரு வருசத்துக்குப் பிறகுதான் வேலை கிடைச்சது. மச்சானுக்கு நல்ல திசை. வந்த ஒரு கிழமையிலை அதுவும் பப்பியில்லாமலேயே வேலை கிடைக்கப்போகுது. இது தெரிஞ்சா அவன் துள்ளிக் குதிப்பான். உடனை பத்திரோனிட்டை அவனைக் கொண்டுவந்து போடுறனெண்டன். சரி அவனுக்கு வேலை காட்டிக் குடுக்குறதும் வேலை வாங்கிறதும் என்ரை பொறுப்பெண்டிட்டு போயிட்டார். பத்திரோனுக்கு என்னிலை நல்ல நம்பிக்கை. எக்கச்சக்கமான பாசம். இல்லாட்டி என்னிட்டை என்ரை இடத்து ஆளைக்கொண்டு வந்து போடெண்டு என்னைக் கேட்டிருப்பாரே. பத்திரிக்கை நிப்பாட்டுறது மாதிரி அவர் அடையான் செவ்வையும் நிப்பாட்டுவார். அப்ப அவன்ரை இடம் எனக்கு கிடைக்கும். நான் செவ்வாயிருப்பன். பத்திரோனுக்கு அள்ளி வைக்கிறவன்களை உப்பிடி நிப்பாட்டுறதுதான் நல்லது. அப்பதான் அவங்களுக்கு அவற்றை அருமையும் வேலையின்ரை அருமையும் தெரியவரும்.
நான் என்ரை மச்சானோடை றெஸ்ரோறண்டுக்கை போகேக்கை பத்திரிக்கை வாசலிலை கண்டன். அவன் என்னைப் பார்த்து சிரிக்கவுமில்லை. பொஞ்சு (வணக்கம்) சொல்லவுமில்லை. முன்னம் இவன் இப்படியில்லை. கண்டோண்ணையே பொஞ்சு சொல்லிறவன்.
வீட்டை நான் சொல்லிக் கொடுத்த மாதிரி, மச்சான் பத்திரோனுக்கு பொஞ்சு சொன்னார். பிறகு எப்படி கோப்பையளைக் கழுவிறது, துடைக்கிறது, அடுக்கிறது எண்டதை நான் அவனுக்கு விளங்கப்படுத்தீட்டு, சலாத்துக்களை எடுத்து கழுவ வெளிக்கிட்டன். அடையான் செவ் என்னிட்டை வந்து, நான் சலாத் கழுவக் கூடாது கோப்பைதான் கழுவ வேணுமெண்டு சொல்ல, மற்ற அடையான்களும் அவனோடு சேர்ந்து ஆடினார்கள். பத்திரோன்தான் என்னைச் சலாத் போடச் சொன்னவர், இனிமேல் நான்தான் சலாத் போடுவன், என்ரை

Tugbaub 25
மச்சான் புளோஞ்சிங் செய்வான்” எண்டு சொல்ல, அதுக்கு அடையான் என்னைக் கொனார் (தூஷணமாகக் கருதப்படும் பிரெஞ்சு பாமர வார்த்தைப் பிரயோகம்) எண்டார். எனக்கெண்டாக் கெட்ட கோவந்தான் வந்திது. பேசாம இருந்திட்டன்.
சொன்னதையும் கேட்காம, திரும்பவும் சலாத் கழுவிக் கொண்டிருக்கேக்கை, அடையான் வந்து பத்திரிக்கை பத்திரோன் நிப்பாட்டிப் போட்டான் எண்டும், அவன் ரை வேலையை நான் செய்யக் கூடாதெண்டும் சொன்னான். "பத்திரிக் நெடுகையும் லிவெடுக்கிறவன். ஒழுங்கா ஒரு வேலையும் செய்யிறதில்லை” எண்டோண்ணை, அவனுக்கு கோவம் வந்திட்டிது. பத்திரிக்கைத் திரும்பவும் வேலைக்கெடுக்காட்டி தாங்களெல்லாம் சேர்ந்து கிறேவ் (வேலைநிறுத்தம்) செய்வமெண்டிட்டு, நான் தொடர்ந்தும் சலாத்தைக் கழுவிக்கொண்டிருந்தனெண்டா அடிப்பனெண்டான். எனக்கு உண்மையிலேயே பயம் வந்திட்டுது. அவன் அடிச்சாலும் அடிச்சுப் போடுவான். உடனை கீழையிறங்கி பத்திரோனிட்டைப்போய், அடையான்கள் என்னை வேலை செய்ய விடுறாங்களில்லையெண்டன். அவர் உடனை மேலை வந்து அடையான் செவ்விட்டை தான் பத்திரிக்கை நிப்பாட்டிப்போட்டதாயும் இனிமேல் சலாத் போடுறது நானெண்டு என்னைக் காட்டியும், நான் வேலை செய்யேக்கை பிரச்சனை கொடுத்தா பொலீஸிக்கு போன் பண்ணுவனெண்டும் சொன்னார். இதுக்கு அடையான்கள் மசியேல்ல. பத்திரோனைப் பார்த்து, உம்மடை பொலீஸிக்கு நாங்களொண்டும் பயப்படேல்லை. பத்திரிக் ஒழுங்கா வேலை செய்யிறவன். அவனை நிப்பாட்டினது பிழை. ஒரு வரிசமாச் சம்பளம் கூட்டித்தாருமெண்டு கேக்கிறம். அதுக்கு நீர் என்ன செய்தனி. இப்ப பத்திரிக்கையும் வேறை நிப்பாட்டுறிரோ. இண்டைக்கே அவனை எடுக்கவேணும். இல்லாட்டி அவனை எடுக்கும் வரை கிறேவ் நீளும். பத்திரிக்கும் சிண்டிக்காவிலையிருக்கிறான். பத்திரோனோ, அடையானுக்கு மசியேல்லை. “செய்யிறதைச் செய்யுங்கோ, ஆனால் பத்திரிக்கை மட்டும் திரும்பவும் வேலைக்கு எடுக்க மாட்டன்” எண்டிட்டுக் கீழே இறங்கி போயிட்டார். பத்திரோன் போனோண்ணை அவர்கள் சிரிசிரியெண்டு விழுந்து விழுந்து சிரிச்சாங்கள். அடையான் செவ் ஒரு சிகரெட்டை எடுத்துப் பத்திக் கொண்டு மற்ற அடையான்களிட்டை"ஒரு வேலையும் செய்யாமற் சும்மாவிருங்கோ" எண்டான். அவங்களும் தங்கடை தலையளையாட்டீட்டு சிகரெட்டை எடுத்துப் பத்த வெளிக்கிட்டாங்கள். ஒரு அடையான் பீவ்தேக்கையெடுத்து வாட்ட வெளிக்கிட்டான். கெட்ட வடுவாக்கள். வேலையும் செய்யாமல் பத்திரோன் வாங்கிப் போட்ட இறைச்சியளையும் எடுத்துத் திண்டு கொண்டிருக்கிறாங்கள். பத்திரிக்கின்ரை வேலை பறந்தமாதிரி உவங்கடை வூேலையும் கட்டாயம் பறக்குமெண்டு நான் நினைச்சுக் கொண்டன்.

Page 22
26 வெளிநாட்டுக் கதைகள்
பத்திரோன்ரை மகன் ஒடர்களைக் கொண்டு வந்து குசினிக்கை வைச்சிட்டுப் போக, அடையான்கள் அதுகளையெடுத்து லைட்டரால் எரிச்சுக் கொண்டிருந்தாங்கள். ஒடர்களுக்கான சமையல் கீழை போகாததாலை, பத்திரோன் மேலை வந்து, நான் பிரச்சனையைத் தீர்ப்பன். வேலை உடனை நடக்க வேணும். எண்ட, அடையான் “என்ன தீர்வு எண்டு கேட்டான். தான் பத்திரிக்கை மாத்திரம் எடுக்க மாட்டன் எண்டும் மாதம் 100 பிராங் கூட்டித்தாறதெண்டும் பத்திரோன் சொல்ல, பத்திரிக்கையும் எடுக்க வேணும், 100பிராங் இல்லை, மாதம் மாதம் 300 பிராங்கும் கூட்டித்தர வேணும் எண்டு அடையான் செவ் சொல்ல, "அது முடியாது எண்டிட்டு பத்திரோன் திரும்பவும் கீழை இறங்கி போயிட்டார். எனக்கெண்டாக் கையும் ஒடேல்லை. காலும் ஒடேல்லை. என்னையும் அவங்கள் சலாத் போடவிடேல்லை. மச்சான் கழுவிறதுக்கும் கோப்பைகள் வரேல்லை. நான் கீழை போய் எட்டிப் பார்த்தன். பத்திரிக் வாசலிலே சிகரெட்டு பத்திக் கொண்டு நிண்டான். திரும்பவும் பத்திரோன் மேலை வந்து செவ்வோடை தான் தனியாகக் கதைக்க வேணுமெண்டிட்டு அவனையும் கூட்டிக் கொண்டு கீழை போனார்.
செவ்வின்ரை வேலை பறக்கப் போகிறதெண்டு நான் நினைச்சன். அவனை முதலிலை நிப்பாட்ட வேணும். அவன்தான் எல்லாப் பிரச்சனைக்கும் காரணம். முழு அடையான்களையும் நிப்பாட்டிட்டு சிறீலங்கையளைப் போட்டாத்தான் றெஸ்ரோறண்ட் உருப்படும். அடையான்களுக்கும் பத்திரோன்ரை அருமை தெரிய வரும். செவ்வும், பத்திரோனும் இறங்கினோண்ணை, தான் வாட்டி வச்சிருந்த பீவ்தேக்கையெடுத்து ஹரிஸா (ஒரு வகை மிளகாய்ச் சம்பல் வோடை தொட்டுச் சாப்பிட வெளிக்கிட்டான் அடையான். மற்ற அடையான் ஐஸ்கிறீம் எடுத்து குடிச்சான். உதெல்லாம் பத்திரோனுக்கு நட்டம் வைக்கிற வேலைதானை. நான் மச்சானுக்குக் கிட்டப் போய் உவங்கள் உப்பிடித்தான். பத்திரோனுக்கு அள்ளிவைக்கிறவன்கள் எண்டு சொல்லிக் கொண்டிருக்கேக்கை அவரும், செவ்வும் பத்திரிக்கோடை உள்ளுக்கை வந்தினம் பத்திரோன் சிரிக்கேல்லை. செவ்வும் பத்திரிக்கும் சிரிச்ச விதமெண்டா எனக்கு துண்டாப் பிடிக்கேல்ல. இப்ப பத்திரோன் என்னைத் தன்னோடை வரும்படி கேக்க இரண்டு பேருமாக கீழை இறங்கினம். தனக்கு பத்திரிக்கை திரும்பவும் எடுக்கிறது துண்டாப் பிடிக்கேல்லையெண்டும், எடுக்காட்டி இண்டைக்கு றெஸ்ரோறண்டை நடத்த முடியாதெண்டும் சொல்லி, நான் தான் புளோஞ்சிங் செய்ய வேணுமெண்டார். அப்ப மச்சானை என்ன செய்யிறதெண்டு கேட்க, இன்னும் கொஞ்ச நாளிலை பத்திரிக்கை எப்படியாவது நிப்பாட்டப் போறதாயும், அப்ப மச்சானை எடுக்கிறதாயும் சொன்னார். எனக்கெண்டா அவர் சொன்னது சரியாத்தான் பட்டிது. மச்சானுக்கு இப்ப என்ன அவசரம். அசெட்டிக் காசு (அகதிகளுக்கான அரச உதவிப் பணம்) வரும்தானை. கொஞ்ச நாளிலை பத்திரோன் சொன்னமாதிரி வேலையும் குடுப்பார். நான் அவருக்கு மேர்ஸி சொல்லிக் கொண்டு மேலை போனன்.

LBöhsb 27
பத்திரிக் நமட்டுச் சிரிப்போடை சலாத் போட்டுக் கொண்டிருந்தான். “ஏன் 100 பிராங் கூட்டினதுக்கு சம்மதிச்சனி, பிடிச்ச பிடியா 300 பிராங் கூட்டித்தாவெண்டு கேக்கேல்லை” எண்டு மற்ற அடையான்கள் கத்த “மெல்ல மெல்லத்தான் வேலையைக் குடுக்க வேணும்” எண்டான் செவ். தங்களுக்குத்தான் சம்பள உயர்வெண்டும் எனக்கில்லையெண்டும் அவங்கள் என்னைப் பார்த்து நக்கலடிச்சான்கள். நான் மச்சானிட்டை போய் நடந்த விஷயத்தை வடிவா விளக்க அவன் முகத்தை சுழிச்சுக் கொண்டு வெளியாலை போனான். உவன் அடையான் செவ்வை நிப்பாட்டி பத்திரோன் என்னை எப்படியும் செவ்வாக்குவார் எண்டு நினைச்சுக் கொண்டு கீழையிருந்து, லிப்டாலை மேலை வரப்போகும் கோப்பையஞக்காக காத்துக் கொண்டிருந்தன்.
க.கலாமோகன; நிஷ்டை (சிறுகதைத் தொகுப்பு)
1999, எக்ஸில், பிரான்ஸ்.

Page 23
28
வெளிநாட்டுக் கதைகள்
ரகசிய ரணங்கள்
அருண் விஜயராணி (அவுஸ்திரேலியா)
"அக்கா. இது தான் நான் எழுதுகின்ற கடைசிக் கடிதம். இனிமேல் ஸ்பொன்ஸர் லெட்டருக்காகக் கெஞ்சமாட்டன். உன்னுடைய உறவும் இதோட சரி”.
சாரதா அவளுக்கு எதிரில் நின்று பேசுவது போலிருந்தது வீணாவுக்கு.
அவள் எப்பவுமே அப்படித்தான். படபடப்பும் துடிதுடிப்பும் இயற்கையாகவே அவளுக்கு அமைந்து விட்டது. அந்த அந்த நிமிஷங்களுக்காக வாழ்பவள். எதிர்காலத்தை சிந்தித்து. சிந்தித்து நிகழ்காலத்தை வீணடிக்காத புத்திசாலி.
கடிதத்தை மடிக்கக் கூடத் தோன்றாமல் அப்படியே அதனை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் வீணா. குண்டு மல்லிகைகளை ஒன்றாகச் சேர்த்துக் கொட்டி விட்டதைப் போன்ற கையெழுத்து. கண்ணில் எடுத்து ஒற்றிக் கொள்ளலாம் போன்று. கையெழுத்து மட்டுமல்ல. அவள் கூட அத்தனை அழகுதான். இளைஞர்களை அலைக்கழிக்கும் அழகு. வீட்டுக்கு வந்து விட்டுப் போகும் எந்த இளைஞனும் போன் பண்ணி 1LOVEYOU என உளற வைக்கும் அழகு. "சாருவின் கடிதம் வந்து ஒரு கிழமையாகிவிட்டது. இன்னும் பதில் எழுதவில்லை. கட்டாயம் இண்டைக்கு முடிவு எடுத்துப் போடவேணும்.
‘வ்வாக். வ்வாக்” விழுந்தடித்துக் கொண்டு பாத்ரூமிற்குள் ஓடினாள் வீணா. நேற்றுக் குடித்த அத்தனை 'விஸ்கி"யும் நாற்றத்துடன் வெளியேறிக் கொண்டிருக்க. நிற்க முடியாமல் தள்ளாடிக் கொண்டு.
டவலை நனைத்து இதமாக முகம் முழுவதையும் இலேசான சுடுதண்ணினால் துடைத்துவிட்டவள். கைத் தாங்கலாக கொண்டு வந்து இருத்தினாள். சூடான கோப்பியை அவன் முன்னால் நீட்டிய பொழுது தான். பிரதீப் சுயநினைவுக்கு வந்தான்.
office ஸிக்குப் போகேல்லையோ. வீணா?

gućи Јаниšumar 29
"எனக்குத் தலையிடிக்குது. படுக்கப் போறன்."
அவன் பின்னே சென்றவள். அறையின் மது நெடி தாங்காமல் Air Freshener ஐ அடித்தாள். ஜன்னல் கேர்ட்டினை விலக்கிய பொழுது சூரிய ஒளி பாய்ந்து அறையின் இருட்டுப் பளிரெனத் தகர்ந்தது.
"கடவுளே. பளிரென இருந்த என்னுடைய வாழ்க்கையை நானே இருட்டாக்கிக் கொண்டு விட்டேனா?
மடிப்புக் கலையாத உடுப்போடு. டிரைவர் கார் ஒட்ட. பிரதீப் கந்தோருக்குப் போய் வந்த அழகு. அவனுடைய திறமையும். உழைத்த
SD GlopULD---
எதில் குறைவைத்தான் பிரதீப்?அவளைக் கொஞ்சுவதிலா. அவளுக்குத்
Foreignற்குப் போக வேண்டுமென்ற ஆசை எப்படிஎன் மனதில் வந்தது? tasan. ang GrGiggoLu Sister London Seo Sobg segulang. spies su Latest fashion sayb.
siart. 6Taigaolu Broker family Next week. Americaty sad இருந்து வர்றார். Party ஒன்று Organize ஆகிறது. கட்டாயம் வாரும்.”
அத்தகைய Party களிலே அவர்கள் வெளிநாட்டுப் பெருமைகளை கதைகதையாக அளக்கும் போதும். வெளிநாட்டில் வாழ்பவர்கள் எல்லாம் அதிஷ்டசாலிகளாக மகிழ்வதும் வெளிநாட்டுக்குச் செல்வதே பெரிய ஒரு தகுதியாக பாராட்டப்படுவதும். வினா மனம் ஏக்கப் பெருமூச்சுவிடும்.
மெல்ல மெல்லமாக வினாவின் மனதில் துளிர்விட்ட ஆசை. வளர்ந்து, பெரிய மரமாகி Foreign போகாவிட்டால் வாழ்க்கையே அர்த்தமற்றது என்பதுபோல.
பிரதிப் நாங்கள் ஒஸ்ரேலியாவுக்குப் போனால் என்ன? வீணாவுக்கு ஏன் இந்தத் திடீர்ஆசை? இங்கே என்ன குறை? "எனக்கென்னவோ. ஒரு Changeக்கு வெளிநாட்டில போய் இருக்க வேணும்போல இருக்குது என்னுடைய Friends கனபேர் போட்டினம் பிரதீப். அங்கேபோய் நல்லாய் உழைத்து. வசதியாக இருக்கினமாம்.
அதில என்ன பிழை வினா? நாங்கள் இங்கை எவ்வளவு வசதியாக இருக்கிறம்? வெளிநாட்டுக்குப் போய் உழைத்துத்தான் சம்பாதிக்க வேண்டுமென்றில்லை. இங்கை உழைக்கமுடியாதவை அங்கைபோய் உழைத்து நல்லா வரட்டுமன். வெளிநாட்டுக்குப்போன எத்தனையோபேர் கஷ்டப்படுகினம். என்றும் நான் கேள்விப்பட்டனான்.

Page 24
30 வெளிநாட்டுக் கதைகள்
அதெல்லாம் படிக்காதவை தான் கஷ்டப்படுகினம். நீங்கள் ஒரு Ph.D. இங்கேயே உங்களுக்கு எவ்வளவு பெயர். ஒஸ்ரேலியாவுக்கு போன உடனே வேலை கிடைக்கும்.
இங்கை மாதிரி Servantsயை வைத்துக் கொண்டு சொகுசாக அங்கை வாழ ஏலாது.
எதுக்கு machines உண்டு. மற்றவைபோல manage பண்ணலாம் தானே? ஒஸ்ரேலியாவுக்கு migrate பண்ணுவம்.
கொஞ்சிக் கொஞ்சி வீணா கெஞ்சிய பொழுது பிரதீப் சம்மதித்து விட்டான்.
ஆனால் பிரதீப்பின் அப்பாவிடம் கேட்டபொழுது அவர் திடுக்கிட்டு நிமிர்ந்தார்.
LDssir You are making the wrong Decision 'இல்ல மாமா. இங்க பிரச்சினைகளுக்குப் பயந்து கொண்டிருக்காமல் நாங்கள் போகப்போறம்.
'பிரச்சினை எண்டைக்கும் உங்களைப் பாதிக்காது. உடன டிக்கெட்புக் பண்ணி. சிங்கப்பூருக்கோ. இந்தியாவுக்கோ. உங்களை அனுப்பிப்போடுவன்.
'வீட்டைவிட்டு Airport போற மட்டும் நாங்கள் உயிரோட இருந்தால் g5ffG60 udstudst?
அவர் வீணாவிடம் தோற்றுப்போனார். அவள் முடிவெடுத்துவிட்டது அவருக்கு நன்றாகப் புரிந்தது.
வீணா. BusineSS விஷயமாக. நான் வெளிநாடுகளுக்கு போய்வந்தனான். நீ நினைப்பது போல் வெளிநாடு சொர்க்கபூமி. வசதியில்லாதவர்களுக்குத்தான். உங்களுக்கு அல்ல. பிரதீப்பை எனக்குத் தெரியும். அவனுக்கு ஞாயமான Superiority complex. யாருக்கும் பணியமாட்டான். அவனைவிட நான் மற்றப்பிள்ளைகளைப் புகழ்வதையே தாங்கமாட்டாதவன். அப்படிப்பட்டவனை ஒஸ்ரேலியாவுக்கு கூட்டிப்போக நினைக்கிறாய். நீ மனைவி. எதுவானாலும் இனி அனுபவிக்க வேண்டியவள் நீ. என்று முத்தாய்ப்பு வைத்தார்
ஆரம்பத்தில் அவுஸ்ரேலியா வாழ்க்கைதான் எவ்வளவு இனிமையாக இருந்தது? பிரதீப்புக்கு வேலைகூட உடனே கிடைத்தது.
"... How can he boss me around... GTGirgsOLu Qualifications S6) கால்வாசிகூட இல்லை. என்னை டிக்டேட் பண்ணிக்கொண்டு.” முணுமுணுக்க ஆரம்பித்தவன் ஒரு நாள் வேலையைத் தூக்கி எறிந்துவிட்டு வந்து நின்றான்.
அடுத்தடுத்த வேலைகளும் அதேபோல! எந்த வேலைக்குச் சென்றாலும் அவனால் நிலைத்துநிற்கமுடியவில்லை. தனக்குக் கீழ் பலபேரை அதிகாரம் செய்து வேலை வாங்கிய மனது. இங்கே அடிபணிய மறுத்தது.
"வெள்ளைக்காரன்கள் எண்டால் கொஞ்சம் அப்படித்தானாம்."

ரகசிய ரணங்கள் 31
"அவன்ட தோல் வெள்ளையெணி டால் எனக்கென்ன? முதல்ல மூளைக்குள்ள விஷயத்தை தெரிந்து வைச்சுக்கொண்டு பிறகு என்னை BOSS பண்ணச் சொல்லு.” பிரதீப்பிற்குள் உள்ள Superiority complex விஸ்வரூபங்கொண்டது.
வேலையில்லாம குடும்பம் டோலில் ஆடியது. அவனுடைய ஆரம்ப வேலையைக் கொண்டு Loan எடுத்து வாங்கிய வீடு Morgage கட்ட முடியாமல், விற்றுவிட்டு வாடகை வீட்டுக்குப் போகவும் தன்மானம் இடம் கொடுக்காமல், பிள்ளைகளின் சிணுங்கல் அதிகமாக, வாழ்க்கையின் தரம் குறைய ஆரம்பிக்க, பிரதீப் எல்லாவற்றிலிருந்தும் விடுபடக் குடிக்க ஆரம்பித்தான். "திரும்பக் கொழும்புக்கே போய்விடலாமா பிரதீப்?"
"நோ. அப்பா என்ன சொல்லுவார்? Friends எப்படிச் சிரிப்பார்கள்? Children can't adjust..."
தானும் adjust செய்வதுதான் வீணாவுக்கு வழியாக இருந்தது. குடும்பத்தில் கஷ்டம் நாளுக்கு நாள் மோசமாக.
ஏன் அம்மா, அப்பா வீட்டிலே இருக்கிறார்? வேலை கிடைக்கும்வரை ஏதாவது Factory இல Work பண்ணுகிறதுதானே?"
பதினைந்து வயது மகன் கேட்ட ரோஷத்தில் பிரதீப் வேலைக்குப் போகவில்லை. அவள் தான் படித்த படிப்பையும் ஒதுக்கி விட்டு Factory இல் வேலை செய்ய ஆரம்பித்தாள்.
அவள் வேலைக்குப் போய் இரண்டு மாதங்கள்தான், பிரதீப்புடன் படித்தவன், தன் பிள்ளையின் பிறந்தநாள் Partyற்கு கூப்பிட்டான்.
Dinner முடிந்து ஆட்டமும் பாட்டமும் தொடங்கின, பிரதீப்பும் வீணாவும் நேரத்துடன் நண்பர்களிடம் விடைபெற kitchenற்குள் நுழைந்த பொழுது "பெரிய பணக்காரன். Ph.D எண்டிங்கள். அவருக்கு வேலையில்லையாம். அவ factory இல Work பண்ணுகிறாவாம். இவையள் எல்லாரையும் கூப்பிட்டு. ஏன் எண்ட மானத்தை வாங்குறீங்கள்" என்று வீட்டுக்காரி அலுத்துக்கொள்ளவும், "இல்ல மீரா அவன் Ceylon இல Ph.D தான். நல்லாத் தெரியும்." என்று பிரதீப் நண்பன் சமாதானம் சொல்லவும்.
சொல்லிக்கொள்ள வந்தவர்கள் சொல்லிக்கொள்ளாமலே வீடு திரும்பினார்கள்.
This is Rubbish. How can they respect people by their work and Wealth" என்று பூகம்பமாக வெடித்து நிறுத்தியவன்தான். அதன்பின் சத்தமே இல்லாமல் போய்விட்டான்.
வேலைக்குப் போவதில்லை, நண்பர்களிடம் போவதில்லை, யாருடனும் கதைப்பதில்லை, சிரிப்பதில்லை. சரியாகச் சாப்பிடுவதுகூட இல்லை.
விடிய ஆரம்பிக்கும் குடி இரவுவரை நீண்டு.மயக்கமும் விழிப்புமாக.

Page 25
32 Manafari Glis usagsasar
அவனை ஆறுதல்படுத்த வினாவால் முடியவில்லை. திருத்தவும்
வீட்டு MOrgage, பிள்ளைகளின் பள்ளிக்கூடச் செலவு, சாப்பாடு எல்லாமே ஒரு Factory சம்பளத்திற்குள் அடங்கிவிடுமா?
அவள் Public Exam எடுத்துப் பாஸ் பண்ணி வேலைக்குப் போகத் தொடங்கினாள்.
"I don't know... how... you sleep next to him... he stinks' Datsir ராது, மூக்கைப் பிடித்து, அபிநயம் காட்டிச் சிரிப்பாள்.
"My friend's dad who worked as a Doctor in China is working as a Taxi driver... here. I don't know... why he is making such a big fuss? மகன் முரளி பெரிய மனிதன்போல் பேசிப் பிரதிப்பை நோகடிப்பான்.
கொஞ்சிக் கொஞ்சிப் பாசமழை பொழிந்த அப்பா. எல்லாம் அவர்கள் வரையில் கனவாகி. குடித்துவிட்டு சதா படுத்துக்கிடக்கும் அப்பாதான் நிஜமாகிப்போனார்.
அவர்களுக்குப் பிரதிப்பைப் பிடிக்கவேயில்லை
He doesn't work...”
He doesn't take you anywhere...'
He doesn't do anythink...”
“Do you still need him Amma...?”
“Why don't you divorce him?
பிள்ளைகள் ஆத்திரத்துடன் கத்தும் பொழுது.
“I still love him... I still love him...'
அவள் விம்மிக் கொண்டே கூறுவாள். அம்மாவின் அழுகை பிள்ளைகளுக்கு வியப்பாக இருக்கும்.
பிரதீப் அவள்மீது வைத்த ஆழமான அன்பை அவளால் அவர்களுக்கு விளங்கப்படுத்த முடியாது. வேலையும் விடும் மட்டும் வாழ்க்கையாகப் போய்விட்டபின்பும்கூட அவன் குடித்தால்கூட, உயிரோடு தன் அருகே இருக்கிறான் என்ற சின்னச் சந்தோஷத்தில்தான் அவள் இயங்கிக்கொண்டிருக்கிறாள் என்பது அவர்களுக்குப் புரியுமா?
அவர்களுக்கு மட்டுமென்ன...? அவளுடைய அப்பா, அம்மா. சாருக்குக்கூடத் தெரியாது. அதனால்தானே சாருவும் ஆஸ்ரேலியா வரத் துடிக்கிறாள்? அவளுடைய Sponsor letter இனால் கிடைக்கும் pointsற்கு
Engineeringssi) 2nd year Sci) Dispasir. 90y prefei) Ulqigou said எறிந்துவிட்டு வந்து நின்றாள் "அப்பா நான் இனிமேல் படிக்கேல்ல”
"eyenbuds.”
*நான் ஜனனை மர்ரி பண்ணப் போறன்”

അി ജങ്ക് 33
"கல்யாணத்திற்கும் நீ படிக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்?" "நான் Love பண்ணுகிற ஜனன். அவ்வளவுபடிக்கேல்லை. Commercial Bank S6 cashier work usairgsspir"
"சாரு!” "அப்பா. நீங்கள் எவ்வளவு கத்தினாலும் உங்களுடைய விருப்பத்தோடை தான் நான் ஜனனைக் கல்யாணம் செய்வன்.”
அப்பா எவ்வளவு கெஞ்சியும் சாரு மேலே படிக்க மறுத்துவிட்டாள். அப்பாவுக்கு ஒன்றுமே செய்ய முடியவில்லை. மூத்த மருமகன் ஒருPh.D இரண்டாவது மருமகன் ஒரு cashier பேசாமல் தன்னுடைய Company இல அவனை Manager ஆக்கிவிட்டு Wedding Invitations 60u sqigsty.
WeddingReception இல் சாருவும். ஜனனும் கைகோர்த்து நடந்தபோது ஊர்க்கண்ணே பட்டுவிடும் போலிருந்தது.
'எனக்காக தன் படிப்பையே தூக்கி எறிந்தவளாக்கும்! ஜனனின் முகத்தில்தான் எவ்வளவு கர்வம். வசதியான வாழ்க்கையில் அவர்கள் அடித்த கும்மாளங்கள் . கொண்டாட்டங்கள்தான் எத்தனை?
அந்த சொகுஸான வாழ்க்கை இங்கு கிடைக்காமல் போய்விட்டால்? Ph.D. என்ற பட்டத்துக்குரியவனே இன்று ஏமாற்றம் தாங்காமல் குடிகாரனாகி விட்டபிறகு, சாதாரணமான ஜனன்.
அப்பாவைப்போல Company Manager ஆக அவனைத் தூக்கிப்போட இங்கு யார் இருக்கிறார்கள்?
அவளைப்போல ஜனன் இடத்துக்கேற்பத் தன்னை மாற்றிக்கொண்டாலும் பிரதீப்பைப் போலத்தானே சாருவும்? நினைத்ததெல்லாம் தனக்குக் கிடைக்கவேண்டுமென்று, தான் நினைத்த வாழ்க்கை தனக்கு அமைய வேண்டுமென்று தன் வாழ்க்கை அழகை மற்றவர்கள் பார்த்து வியந்தவண்ணம் இருக்க வேண்டுமென்று.
இப்படியெல்லாம் எதிர்பார்த்து வருபவளுக்கு ஒன்றுமே கிடைக்காமல் போய்விட்டால்?Foreign வாழ்க்கையும், உடுப்புகளும்holidayற்குப் போய் நின்றால் சொந்தக்காரர்கள் எல்லோரும் வாயைத் திறந்து பார்ப்பதில் கிடைக்கும் போலியான சுகமும் என்னைப் போலவே உன்னையும் மயக்கவேண்டாம் சாரு.
இந்த Australiaஇல் இன்னொரு பிரதீப்பும் வீணாவும் உருவாகவேண்டாம்.
பனியும் பனையும் (சிறுகதைத் தொகுப்பு)
1994,மித்ர வெளியீடு,சென்னை.

Page 26
54 வெளிநாட்டுக் கதைகள்
குெரியவராகுது
பார்த்திபன் (ஜேர்மனி)
ஆரம்பிக்கும் போதிலிருந்த மனநிலை இப்போதில்லை. அது பாட்டுக்குப் புல்லாகிப்பூடாய் புழுவாகிப்பாணியில் எரிச்சலாகிசலிப்பாய் விரக்தியாய் முடிந்தது.
இது வழமைதான் வராவிட்டால் எங்கே என்று ஏங்கும். வந்தாலோ பழைய கதைதான்.
'பாவம் அதுகள் நான் உதவாம ஆர் உதவுறது? என்னை விட்டிட்டு அதுகளும் ஆரிட்டப் போறது என்று கவலைப்படும் அவனுக்கு பெயர் பாலகிருஸ்ணன். பாலு என்று வீட்டிலும் இங்கேயும் வசதிக்குச் சுருக்கிக் கூப்பிட்டார்கள்.
அடுத்த விசாப் புதுப்பித்தலுடன் வயது இருபத்தைந்து முடிந்து விடும். தலைமுடி இதற்கும் பொய்ச்சாட்சி சென்னது. உடம்பு றெசிலிங் பார்க்கக் கூடப் பொருத்தமற்றிருந்தது. தொட்டு நெற்றியில் வட்டமாக வைத்துக் கொள்ளக் கூடியளவுக்கு கறுப்பு.
'இண்டைக்கல்லோ வரச்சொன்னவங்கள் நேரத்தோட போனவன் முதல் நாளே சுணங்கிப் போனியெண்டா கிழிச்ச மாதிரித்தான்”
அறை நண்பன் சிவகுமார் கோப்பியை உறிஞ்சிக் கொண்டு அறிவுறுத்தினான். ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக மேல், கீழ் கட்டில்களில் படுத்துறங்கும் சிநேகிதர்கள். இன்று சிவகுமாருக்கு விடுமுறை.
‘வாறன் போட்டு படித்து முடித்த ஏறோக்கிறாமை எட்டாக மடித்து டெனிம் பின்பொக்கற்றில் வைத்துக்கொண்டு பாலு புறப்பட்டான்.
கதவுவரை போனவன் திரும்பி வந்து கோப்பி குடிச்சு முடிஞ்சு புத்தகங்களைத் தூக்கிப் போடாதை. ஒரு நாள் நிக்கிறனி வடிவாய் சமைச்சு வை. பிறகு

தெரிய வராதது 35
புத்தகங்களைக் கட்டிப் பிடிச்சுக்கொண்டு படு' என்று சிவகுமாருக்குச் சொல்லி விட்டுப் போனான்.
சமூக உதவி அலுவலகம் தந்திருந்த தகர அலுமாரியில் பாதிக்கு மேல் புத்தகங்களால் நிரப்பி வைத்திருந்தான் சிவகுமார். எல்லாமே மொஸ்கோ
முன்னேற்றப் பதிப்பகமும் நீயூசெஞ்சரியுந்தான்.
ஒருநாள் தப்பித்தவறி ஒன்றைத் தூக்கிப் பார்த்த பாலு இயக்கவியல், வரலாற்றுப்பொருள், கருத்து முதல்வாதங்கள் என்று போவதைப் பார்த்து தலையைப் பிய்த்துவிட்டான். சிவகுமார் வெகு சாவகாசமாக அந்தப் புத்தகங்களுக்குள் இறங்கிப்போவதைப் பார்க்க அவனுக்கு ஆச்சரியமாய் இருக்கும்.
சொல்லிப்போட்டன் கெதியில மொட்டையாய்நிக்கப்போறாய். பிறகு இப்ப இருக்கிற மாதிரி பிரமச்சாரியாய் இருக்கப்போறாய்
இப்போது பஸ்ஸில் போகும்போது அவையும் ஞாபகத்துக்கு வந்தன. கூடவே இன்று போகும் காரியமாவது சரிவர வேண்டும் என்ற கவலையும் பிறந்தது. வீட்டிலிருந்து வரும் கடிதங்களை எத்தனை நாட்களுக்குத்தான் எட்டாக மடித்து வைத்துக் கொண்டிருப்பது அவர்கள் பாவம். அவர்களுக்கு வேறு யார் இருக்கிறார்கள்.
பள்ளிக்கூடங்களில் உயரத்தின்படி நிற்க வைப்பது போல் வீட்டிலிருப்பவர்கள் வரிசைக் கிரமமாக வந்து போனார்கள்.
அப்பா அஸ்பெஸ்ரர் கொம்பனி ஒன்றின் கேற்றில் அமைக்கப்பட்டிருந்த கூண்டுக்குள் மண்ணிறக் காற்சட்டை, சேட் போட்டு வேலை பார்த்தார். இப்படியான தொழில் காரர்களைப் போல் சம்பளத்துடன் கடனும் வாங்கியே சீவியம் சீட்டு கைமாத்து என்று நாலு பிள்ளைகளையும் வளர்த்திருந்தார்.
முன்னூற்றி அறுபத்து நான்கு நாட்களுக்குள் ஆஸ்த்துமா, டயாபிற்றிஸ் என்று அவஸ்த்தைப் பட்டுக் கொண்டிருந்த அம்மா ஆறு வருடங்களுக்கு முன்பு அவற்றின் ஒத்துழைப்புடன் இறந்து போனாள்
குடும்பப் பொறுப்பு சமன் பெண்கள் என்ற வாய்ப்பாட்டின்படி வீட்டுப் பொறுப்புக்கள் ஒட்டுமொத்தமாக அக்காவின் தலையில் வந்து குந்தின. சினிமாப் படங்களில் அல்லது சோக நாவல்களில் வரும் விதவைத்தாய், மூத்த சகோதரிகள் மாதிரி இருபத்து நான்கு மணித்தியாலமும் தையல் மெசினுடனோ பத்துப் பாத்திரங்கள் தேய்ப்பதாகவோ அவள் இல்லாமல், தான் படித்தவற்றைக் கொண்டு அண்ைடை அயல் வீட்டுப் பிள்ளைகளுக்கு ரியூசன் சொல்லிக் கொடுத்தாள். அதிலும்

Page 27
36 வெளிநாட்டுக் கதைகள்
சொந்தக்காரப் பிள்ளைகளுக்கு இலவசம் வேறு. இல்லையென்றால் கண்டறியாத உறவு முறிந்து விடுமாம்!
அண்ணா 83 கலவர இயக்க சீசனில் துண்டொன்றும் எழுதி வைக்காமலே போய்விட்டான். போவதற்கு முன்வரை அவன் தகுதி சண்டியன். பிறகும் அதிகம் மாற்றம் இல்லையென்று கேள்வி.
8 s 0 a என்று எல்லாவற்றிலும் ஒரு மாதிரியாகத் தப்பி, விலகி கொழும்பில் ஒருமூலையில் ஒளிந்திருந்தான்.
தம்பியும் தங்கையும் திங்களில் இருந்து வெள்ளிவரை பள்ளிபோய் ஏனைய நாட்களில் வெடிக்காவிட்டால், விளையாடினார்கள்.
இத்தனை பேருக்கும் அப்பாவினதும் அக்காவினதும் உழைப்பு போதுமானதாக இல்லை. எல்லையைக் கணிசமான அளவு தாண்டிப்போய் விட்டதால் கடன் கொடுப்பவர்களுக்கு அவநம்பிக்கை வந்து விட்டது.
இப்பதான் குடுத்தனான்.
"சீ கொஞ்சம் முந்தி கேட்டிருக்காதையன்."
"நாங்களே இப்ப கடன்.” என்றெல்லாம் மறைமுகமாகவும், சில வேளைகளில் நேரடியாகவும் நிராகரித்தர்கள்.
சாப்பாடு உள்ளிட்ட வழமையான வாழ்க்கைச் செலவுகள் ஒருபக்கம் . அக்காவின் தலையில் வெள்ளிகள். அதனால் மகனே...என்ற அப்பாவின் நியாயமான கவலை. இன்னொரு பக்கம். தவிர்க்க இயலாமல் இலங்கைக் கடிதங்கள் யாவும் பணம் தேவை என்றன.
‘விருப்பந்தான். காசனுப்ப வேணுமென்று. எனக்கு மட்டும் பாசமில்லையோ? நிலமைகள் விளங்காதோ? எனக்கு விளங்கியென்ன ஜேர்மன் அரசாங்கம் எல்லோ எல்லாத்தையும் கையுக்கை வைச்சிருக்கு
"நீ அரசியல் தஞ்சம் கோரிய பம்மாத்து அகதி. எப்பிடியோ இங்கு வந்துவிட்டாய். உன்னை இங்கே கொல்லப்போவதில்லை. வெடிக்காது. ஒரு மூலையில் இருந்து விட்டுநாங்கள் பிடித்து அனுப்பும்போது நாட்டுக்குப் போய்ச் சேர்” என்றது ஜேர்மன் அரசு. இதற்குப் பேர் அரசியல் தஞ்சமா.

தெரிய வராதது 37 "இந்த நாட்டில் வாழ எங்களுக்கு உரிமை இருக்குது. இப்படியான முதலாளித்துவ அரசுகள் மூண்டாம் உலக நாடுகளைச் சுரண்டிச் சம்பாதிச்சு தங்களை வளர்த்துக் கொண்டிருக்குதுகள். அதுக்குள் தாங்கள் சுரண்டினதையே எங்களுக்குப் பிச்சையாய்ப் போடுறதுக்காண்டி வேலை செய்ய விடாமல், ஒண்டுக்கும் ஏலாததுகளாய் எங்களை ஆக்கிக் கொண்டிருக்குதுகள்" என்று சிவகுமார் நீளமாய் விளக்கமளித்திருந்தான்.
வந்த இரண்டாம் வருடமே சீனா றெஸ்ரோரண்டில் அவன் களவாக வேலை செய்யத் தொடங்கி விட்டான். அங்கும் தான் சுரண்டப்படுவதைச் சொல்ல அவன் மறக்கவில்லை.
நியாயமாக வேலை செய்யச் சாத்தியமே இல்லாததால் பாலுவும் கறுப்பு வேலைக்கே அலைந்தான். எல்லா ரெஸ்ரோரண்டுகளிலும், பன்றிப் பண்ணைகளிலும் ஏற்கனவே தமிழர்கள் இருந்தார்கள்.
கடைசியாக கராஜ் ஒன்றில் வேலை கிடைத்தது. குளிரில் விறைத்தும், வெக்கையில் வியர்த்தும் ஒழுங்காத்தான் வேலைக்குப் போய்க்கொண்டிருந்தான்.
அப்போதுதான் கனடா சீசன் ஆரம்பமாகியிருந்தது. தமிழர்கள் கப்பலில் கனடா போனதைப் பற்றி பெரும்பாலும் எல்லா நாடுகளும் அறிவித்தன.
வீட்டு நிலமையைக் கணக்கில எடுத்தபின் பாலுவையும் கனடா ஆசை தொற்றிக் கொண்டது.
இப்படிக் கஸ்டப்பட்டு எள்ளுப்போல சேர்க்கிறதை விட கனடாவுக்குப் போனா வீட்டுக் கஸ்டத்தையும் முடிவிற்குக் கொண்டு வந்து எல்லாரையும் அங்கே கூப்பிட்டிடலாம்
சேத்து வைச்ச காசு முழுவதையும் ஏஜென்சிக்குக் கொடுத்து ஆறு மாசத்துக்கும் மேலாக ஒடித்திரிந்து கையில் கிடைத்த பாஸ்போட்டுக்கு ஏற்ப மாறுவேடம் பூண்டு, பிளைற்றில கால் பதிப்பதற்கு முன் குறுக்கால் போனவர்கள் அவனைப் பிடித்து விட்டார்கள். அதற்கான குற்றக் கட்டணத்தை அவன் இன்றும் கட்டிக்கொண்டிருந்தான்.
பழைய வேலையும் போய்விட்டது. மனம் நொந்து கனகாலம் திரிந்த பின் இத்தாலிக் காரனின் பிட்சாக் கடையில் அகப்பட்டான். பன்னிரண்டு மணித்தியாலங்களுக்கு

Page 28
38 வெளிநாட்டுக் கதைகள்
மேலாக நல்ல வெப்பநிலையில் வைத்து வாட்டிக்கொண்டு மணித்தியாலம் இரண்டு மார்க் ஐம்பது பெனிக் படி சம்பளம் என்று கொடுத்தார்கள்.
எதுவும் செய்யமுடியாத நிலை. வீட்டுக் கடிதங்கள் அவனைப் போறணைக்கு முன் நிறுத்தியே வைத்தன.
இரண்டு வருடங்கள் பேசாமல் கழிந்தன. பிறகு மறுபடியும் கனடா ஆசை. வேறு பலர் வெற்றிகரமாக போய் இறங்கியதால் இன்னும் தீவிரமாகியது.
“டேய் போகாதே. போனமுறை போய் பிடிபட்ட பைன் காசு இன்னும் கட்டி முடியேலை”
"கனடா போய் சேந்தா பைனும் மண்ணாங்கட்டியும்”
"போய்ச் சேர்ந்தா எல்லோ"
"உப்பிடி யோசிச்சா ஒரு அலுவலும் பாக்கேலாது”
* பிடிபட்டியோ பைன் காசு இரண்டு மடங்காகும். செய்த வேலை போகும். வீட்டுக்கு இப்ப அனுப்பின காசும் அனுப்பேலாம கைமாத்தில் திரிவாய்”
போய்ச் சேந்தா வீட்டுக் கடன்கள் அடைக்கலாம். அக்கான்ர கலியாணத்தை முடிக்கலாம். எல்லாரையும் கூப்பிட்டு ஒன்றாய் இருக்கலாம்.
இப்படிபிட்சா கடையில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனச்சாட்சியும் அவனும் பேசிக் கொண்டார்கள்.
சலாட், போடுபவன் அடிக்கடி பாலுவை வித்தியாசமாகப் பார்த்தான்.
கடைசியில் கனடா ஆசையின் எதிர்ப்பு வாபஸ் வாங்கிக் கொண்டது. ஆனால் சிவகுமார் லேசில் விடுவதாயில்லை.
*உன்னைப் போல நடுத்தர வர்க்கத்தின் ரை குணாதிசயமே இதுதான் ஒண்டிலையும் தன்னை நிலையாய் நிறுத்திக் கொள்ளாது. தனக்கு மேல இருக்கிறதைப் பார்த்து அதைப்போல தானும் ஆக அவாவோட அலைஞ்சு கொண்டேயிருக்கும்"

தெரிய வராதது 39 “தொடங்கி விட்டாய் நீ பிரசங்கம் பண்ண. எங்கட வீட்டு கஸ்ரம் இல்லாட்டி நான் ஏன் கனடா கினடா என்று காசைச் சிலவளிச்சுக் கொண்டு அலையிறன். வீட்டை இருக்கிற நாலு சீவனும் சாப்பிட வேணும். ஒளிச்சிருக்கிறது உயிர் தப்ப வேணும். அக்காவுக்கு கலியாணம் செய்து வைக்கவேணும். எண்டுதானே இந்தப் பாடு 6T66)Tub”
"உதுதான்.உதைத்தான் சொல்லிறன் மத்தியதர வர்க்க குணாம்சம் எண்டு உன்னைவிட உன்ரை குடும்பத்தை விட கஸ்ரப்படுகிறதுகள் நாட்டிலை இல்லையோ? அதுகளுக்கும் என்ன தீர்வை சொல்லப்போறாய்” “எனக்கே ஒரு வழியைக் காணேல. இதுக்க மற்றவைக்கும் தீர்வு சொல்லெண்டால் நான் எங்க போறது"
"தப்பப் பாக்காத, நீயும் யோசிச்சுப் பார். வெளிநாட்டுக்கு உன்னை அனுப்புற அளவுக்கு அல்லாட்டி அதுக்கு மாறுற அளவுக்கு உங்கட வீட்டால முடிஞ்சுது. இதுக்கு வசதியில்லாத சனங்கள் நாட்டிலதான இருக்கு. அதுகள் என்னவெண்டு சீவிக்கிறது?”
“எனக்குத் தெரிஞ்ச முக்காவாசிப்பேரும் வெளிநாடுகளில் தானே இருக்கினம்."
அந்த முக்காவாசிப்பேர் ஆர்?
தொண்ணுற்றி ஒன்பது வீதம் யாழ்ப்பாணம்தான். அங்க இருந்த சனம் இஞ்சவர.
இஞ்ச இருந்து காசு அங்கே போக.அதில அங்கிருந்து சனம் இஞ்சவர .
ஆக யாழ்ப்பாணத்துக்குள்ளேயே ஒரு றொட்டேசன். உண்மையாய் நீயே சொல்லு. எங்கட நாட்டில ஆக யாழ்ப்பாணத்தில மட்டுமோ பிரச்சனை? அங்க மட்டுமோ சனம் இருக்குது?"
பாலு பதில் சொல்லவில்லை.
"மற்றப் பகுதிகளிலயும் சனம் சீவிக்குதுதானே? ஆக நீ இதில் ஒண்டையும் கணக்கில எடுக்காம நீ, உன்ரை குடும்பம் எண்டுதான் பார்க்கிறாய்”
"நான் என்ன வானத்தில இருந்து குதிச்சு மண்ணைத்தட்டிப் போட்டு வந்தனானே? நானும் மற்றவையைப் போல சாதாரணமான ஆள்தான்"

Page 29
40 வெளிநாட்டுக் கதைகள்
"அப்படி இவ்வளவுநாளும் நாங்கள் நினைச்சது காணும். இனியெண்டாலும் மற்றச் சனங்களைப் பற்றியும் யோசிப்பம். அதுதான் உண்மையான வாழ்க்கையாக இருக்கும்”
"நான் போறன். தொடர்ந்து கதைச்சால் இப்பவே போராடப் போட்டுவா என்று பிளைற் ஏத்தி அனுப்பிப்போட்டுதான் நீ மற்ற வேலையைப் பார்ப்பாய் போல இருக்கு."
அப்போது அப்படிப் பதில் சொன்னாலும் இப்போது நினைத்துப் பார்க்கையில் சிவகுமார் சொன்னதில் இருந்த உண்மை உறைத்தது.
"எங்க பார்த்தாலும் யாழ்ப்பாணம்தான் மற்ற இடங்களில் இருக்கிறது சனங்கள் இல்லையோ? அதுகளை ஆர் கவனிக்கிறது? "என்று யோசிக்க ஆரம்பித்தாலும் வீட்டுக் கடிதங்கள் ஞாபகத்துக்கு வர எல்லாம் கரைந்து போயின"
அண்ணாவுக்கு உயிராபத்து. காப்பாத்து. அக்காவுக்கு வயசு கூடக்கூட தொகையும் கூடுது என்று அப்பாவின் கடிதங்கள் வேறு யோசனைகளை விரட்டி அந்த இடத்தில் மறுபடி கனடாவுக்கு களம் அமைத்தன.
பாலு இரண்டாம் முறை முயற்சித்தபோது வேறுநாட்டுப் புத்தகத்தைத் திருப்பித் தேடவில்லை. கனடாவில் பாஸ்போட் கிடைத்த ஒருவனே வந்து கூட்டிச் சொல்வதாக
ஏற்பாடு.
வந்தவனுக்கு ஜேர்மன் சாமான்களை அன்பளித்து, போத்தில் பருக்கி, பிட்சா போட்டு உழைத்த காசுடன் கொஞ்ச கடனும் வாங்கிக் கொண்டு புறப்பட்டான்.
இம்முறை ஜேர்மனி ஏயார்ப்போட்டுக்குள்ளாலதப்பியாயிற்று ஆனாலும் ரான்சிஸ்ற் இடமான சோமாலியாவில் மோப்பம் பார்த்துப் பிடித்து அவனைப் பத்திரமாகத் திருப்பி அனுப்பி வைத்தார்கள்.
குற்றக் கட்டணம் இரட்டிப்பாகியது. தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எல்லோரும் "உனக்கேன் சரிவராத வேலை." என்று நக்கலடித்தார்கள. சிவகுமார் எதோ புத்தகத்திலிருந்து ஏதோ வரிகளை வாசித்துக் காட்டி புத்திமதி சொன்னான்.
மறுபடியும் மனம் நொந்து விரக்தியடைந்து பியர் குடிக்கப் பழகினான். அப்பாவின் கடிதங்கள் வந்தபோது அவருக்கு இதே பிரான்ட் பியரை வாங்கி அனுப்பலாமா என்று யோசித்தான்.

தெரிய வராதது 41
கனடா முயற்சியினால் பிட்சா வேலையும் போய் விட்டது. அன்றிலிருந்து இன்று வரை எந்த வேலையும் இல்லை. அவனும் முயற்சிக்காமல் இல்லை.
நேற்றுத் தற்செயலாக ஒரு றெஸ்ரோரண்டில் வேலை இருப்பதாகவும் முதலாளி இல்லாததால் இன்று மறுபடியும் வரும்படி சொல்லியிருந்தார்கள். அங்குதான் பலத்த நம்பிக்கையோடு பாலு இப்போதுபோய்க் கொண்டிருந்தான். பஸ் ஏறுவதற்கு முன் வாசித்த அப்பாவின் கடிதம் மனதில் மறுமதிப்புச் செய்தது.
"...அக்காவுக்குச் சம்பந்தம் ஒன்று சரிவந்துள்ளது. பணம்தான் கூடக் கேட்கிறார்கள். இதையும் தவறவிட்டால் இனிநம்புவதற்கு இல்லை. மூன்று மாதம் காத்திருப்பதாக தவணை தந்திருக்கிறார்கள். அண்ணாவின் நிலைமை படு மோசம். .அவன் தங்கியிருக்கும் சிங்கள நண்பனின் வீடும் வெகு விரைவில் பாதுகாப்பில்லாமல் போய்விடுமாம். அவனை எப்பிடியாவது நீதான் கூப்பிட்டுக் காப்பற்ற..."
இந்தச் சம்பந்தமாவது அக்காவுக்கு சரிவர காசு அனுப்பத்தான் வேணும். அண்ணையைக் கூப்பிடவும் காசனுப்பத்தான் வேணும். இவ்வளவு காசுக்கும் நான் எங்க போறது? இந்த வேலையும் சரிவராட்டி. ?
யோசனைகளுடன் விட்டிறங்கி றெஸ்ரோரண்டுக்குப் போனால் இந்த நேரத்துக்கு அதிக கூட்டம் இல்லை.
முதலாளியைச் சந்தித்தபோது எதிர்பார்ப்பு சரிந்து கொட்டுண்டது. ஒரு மணித்தியாலத்துக்கு முதல் தானாம் யாரோ போலந்துக்காரன் வேலையில் சேர்ந்து கொண்டானாம். அவ்வளவுக்கு வேலைப்போட்டி. அகதிகளை கறுப்பிலேயே வைத்து உறிஞ்சி முதலாளிகள் வீங்கிக் கொண்டிருந்தார்கள். றெஸ்ரோரண்டை விட்டு வெளியே வந்ததும் இயலாமை, ஆத்திரம், துக்கம் எல்லாம் வெடித்துவந்தது. பெட்டிக் கடைக்குப் போய் பியர் வாங்கிவிட்டுக் கொண்டான். எதுவும் தணிவதாய் இல்லை. இனிமேலுக்கும் இஞ்சை இருக்கேலாது ஜேர்மனியில் இனி எந்தச் சாத்தியத்துக்கும் இடமில்லை. இருந்தால் இப்பிடியே பியர் அடிச்சுக் கொண்டிருக்க வேண்டிதுதான். எல்லாத்தையும் மறந்துபோட்டு அதுகள் கஸ்டப்பட்டுக் கொண்டே கனவு காணுங்கள்.
6T6t6oT GoMaguiu u6oTLb...?
திருப்பியும் கனடாதான். இதுதான் கடைசி முயற்சி. சரிவரேலையோ பேசாமல் நாட்டுக்குப் போய் அதுகளோட இருந்து ஒன்றாய்க் கஸ்டப்படலாம்.

Page 30
42 வெளிநாட்டுக் கதைகள்
முடிவுக்கு வந்துவிட்டான். இம்முறை செய்யும் முயற்சியை ஒருவருக்கும் தெரியாமல் ரகசியமாக வைத்துக் கொள்வது என்று தீர்மானித்துக் கொண்டான். தெரிஞ்சால் நக்கல் அடிக்குங்கள். ஏசுங்கள். பேசாமல் அங்கை போய்ச் சேர்ந்திட்டம் என்றால் கடிதம் போட்டு அறிவிக்கலாம். மிகவும் ரகசியமாகவும் தீவிரமாகவும் முயற்சியில் இறங்கினான். இம்முறை மற்றவர்களை நம்பாமல் தானே நேரடியாகத் தலையிட்டான்.
அமெரிக்காவில் சீவிக்கும் ஒரு கறுப்பனின் பாஸ்போட் எப்படியோ தனக்குரிய வழிகளில் கிடைத்தது. முகம் சுமாராக பாலுவைப்போலவே. தலைமயிர்கூடச் சுருட்டத் தேவையில்லை. சென்ற முறையின் பாக்கி இருந்தது. மொத்தத்தில் மாறுவேடம் இல்லாமல் அப்படியே போக இயலக்கூடியதாய் இருந்தது.
பிரயாணத்துக்கான காசையும் தூர இருக்கும் உறவினரிடம் மாறினான். பயப்பிடத் தேவையில்லை. இந்த முறை எப்படியும் சரிவரும்
ரிக்கற் பதிவுசெய்தாயிற்று. எல்லா அலுவல்களும் பார்த்துமுடித்து வைத்தாயிற்று. “தெரிஞ்ச பொடியனிட்ட வேற சிற்றிக்குப் போறன். சிலவேளை அங்கிருந்து சுவிசுக்குப் போனாலும் போவன். போனால் போன் பண்ணுறன்.” என்று சிவகுமாருக்கு பொய் சொல்லி வைத்தான்.
"மத்தியதர வர்க்கம் இப்..” என்று ஆரம்பித்த சிவகுமாரிடம் "நீ வேலைசெய்து கொண்டு ஏதும் கதைக்கலாம். என்ர நிலமையில இருந்தாத்தான் உனக்குப்புரியும். புத்தகங்களுக்கு அங்காலயும் உலகம் இருக்கு” என்று எரிச்சலுடன் சொல்லிவிட்டு, தூர இடத்திலிருக்கும் தன் நண்பனின் இடத்துக்கு வந்தான்.
அவனுக்கும் உண்மையைச் சொல்லாமல் சாமர்த்தியமாக மறைத்து பறக்க வேண்டிய நாள் வர பிராங்போட் எயார்போட்டுக்கு வந்தான். தனக்கான பாஸ்போட்டுக்குரியவரின் பெயரையும் கிறிஸ்டோபர் பீலிக்ஸ் என்று மனப்பாடம் செய்து கொண்டான்.
இரண்டுமுறை அனுபவங்களினால் இப்போது வியர்க்க, படபடக்க, நடுங்கவில்லை. எல்லாம் கிளியர்ஆகி விமானத்தின் இருக்கையில் அமர்ந்தபோது வாழ்க்கையின் முதற்தடவையாக தனது கறுப்பு நிறத்துக்காக அப்பா, அம்மாவுக்கு மனப்பூர்வமாக நன்றி தெரிவித்தான்.

தெரிய வராதது 43
விமானம் பறக்கையில் சிந்தனையும் விரிந்தது. திடீரென சிவகுமார் தோன்றினான்.
"நாங்கள் ஓடிக்கொண்டேயிருக்கலாம் அதுக்கு எல்லையே இல்லை. ஒடிக்கொண்டே யிருந்தா என்னத்தை செய்து முடிக்கிறது. நீ உன்ரை குடும்பத்தைக் கூப்பிட்டு அவயின்ரை கஸ்டத்தைத் தீர்க்கலாம். ஆனா அதால நாட்டில் இருக்கிற பிரச்சினை தீராது. நாட்டில பிரச்சனை இருக்கிற வரைக்கும் உன்னைப்போல் ஆயிரம், பத்தாயிரம் பேர் ஓடிக்கொண்டேயிருப்பினம். இந்த ஒட்டத்துக்கு ஏலாத சனங்கள் அவலப்பட்டும் செத்துக் கொண்டுமிருக்கும்."
உண்மைதான் என்ர குடும்பத்துக்கு விடிவு வாரதால எல்லாக் குடும்பத்துக்கும் விடிவு வந்திடாது. ஆனா எல்லாச் சனங்களின் கஸ்ரத்துக்கும் பொதுவாய்க் கிடைக்கிற விடிவு தீர்வெண்டா அதுக்கு எங்கட குடும்பமும் அடங்குதுதானே.
அப்ப என்னதான் செய்யிறது.
இஞ்சயிருந்து புத்தகங்களை வாசிச்சுக் கொண்டு அதில இருக்கிறதை எல்லாம் இப்படித்தான் செய்ய வேணும் எண்டு முரண்டு பிடிச்சு மற்றவையோட அந்நியப்பட்டு கடைசியாக புத்தகமும் வேலையுமாய் சிவகுமார் மாதிரி தனிய இருக்கிறதோ?
நாட்டுக்குத் திரும்பிப் .போனாலும் .எங்களுக்குத்தான் வரவேண்டும். அப்ப என்ன செய்யலாம்? மேற்கொண்டு யோசிக்க விடாமல் உழைத்துக் களைத்துத் தளர்ந்துபோன அப்பா, ஒளவையாராகிக் கொண்டிருக்கும் அக்கா, துவக்குகளுக்குப் பயந்து கொண்டிருக்கும் அண்ணா, எதிர்காலக் கற்பனைகளின் ஆரம்பங்களுடன் தம்பியும், தங்கையும் .
முதல் யோசனைகள் கலைந்து போயின. கனடாவுக்குப் போய் சேர்ந்த பின்னான நடவடிக்கைகள் பற்றி எண்ணினான்.
விமானம் லண்டன் விமான நிலையத்தில் தரித்து, சிறிதாக இளைப்பாறி, மீண்டும் பறந்த பல நிமிடங்களின் பின் வானத்தில் வெடித்துச் சிதறிய சிதையல் லொக்கபே என்ற இடத்தில் விழுந்தன.
அனைத்து நாடுகளும் அவசரமாக செய்திகளை வெளியிட்டுக் கொண்டன. அமெரிக்க, யுத்தக் கப்பல் ஈரானின் பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியபோது வெறும் செய்தி சொன்ன இந்நாடுகள் இப்போது இது ஈரானின் சதியென்று ஊகத்தின் ஏகமாய்த் திட்டின.
விமான நிலையப் பொறுப்பாளர்கள், விமானப் பொறுப்பாளர்கள் அமெரிக்க பனம் அதிகாரிகள் எல்லோரும் பிரயாணம் செய்த எல்லோரின்

Page 31
44 வெளிநாட்டுக் கதைகள்
விபரங்களை கொம்பியூட்டர்களின் உதவியுடன் அக்கறையாக திரட்டி, உறவினர்களுக்கு மரணச் செய்தியை அறிவித்தார்கள்.
இரவு முழுவதும் போதைவஸ்தும் கும்மாளமுமாய் இருந்து நேரம் கழித்து வந்து படுத்து இன்னும் எழும்பாமல் இருக்கும் கிறிஸ்டோபர் பீலிக்சை திட்டியபடி வாசலுக்கு வந்த அம்மா, லொக்கபே விமான நிலையத்தில் கிறிஸ்டோபர் பீலிக்ஸ் இறந்து விட்ட செய்தியை, ஆழ்ந்த கவலையுடன் தெரிவிப்பதற்கு வந்த தந்தியை வாங்கி வைத்துக் கொண்டு ஒன்றும் புரியாமல் குழம்ப .
பாலகிருஸ்ணன் எங்கே என்ற உண்மை தெரியாமல் அவன் சுவிஸ் போய்விட்டதாக ஜேர்மனியில் இருந்த நண்பர்கள் நினைத்துக் கொள்ள
இலங்கையின் ஒரு மூலையில் உழைத்துக் களைத்துத் தளர்ந்து போன அப்பாவும், ஒளவையாராகிக் கொண்டிருக்கும் அக்காவும், துப்பாக்கிகளுக்குப் பயப்பிடும் அண்ணாவும், எதிர்காலக் கனவுகள் பற்றிய ஆரம்பங்களுடன் தம்பி தங்கையும். பாலுவின் கடிதம், பணத்திற்காகக் காத்திருந்தார்கள். காத்திருப்பார்கள்.
புலம்பெயர்ந்த தமிழர் நல மாநாடு (மலர்)
1994, திருச்சி

எய்தவர் யார்? 45
ஏய்குவர்யார்?
ாஜேஸ்வரிபாலசுப்பிரமணியம் (லண்டன்) அனேட் மிக ஒய்யாரமாக அமர்ந்திருந்து கண்ணாடியில் தன் அழகை ரசித்தபடி சிவப்பு லிப்ஸ்டிக்கை தன் உதடுகளுக்கு பூசிக் கொண்டிருந்தாள். அவளின் செய்கை அவளின் காதலன் பீட்டருக்கு எரிச்சலைத் தந்தது. கொஞ்சக் காலமாக அவள் அளவுக்கு மீறித்தன்னை அலங்களிப்பதாகப் பட்டது.
இவன் தன்னைப் பார்க்கிறான் என்பதை அவள் கடைக்கண்ணால் கண்டபடி, தன் வேலையைத் தொடர்ந்தாள். அவளுக்கு வயது இருபது. பதினெட்டு வயசிலேயே ஒரு குழந்தைக்குத் தாயாகி விட்டாள். இருந்தாலும் பதினெட்டு வயசில் அவள் இருந்த கவர்ச்சியைவிட இப்போது பார்த்தவர்கள் வாயூறும்படி எடுப்பாக இருக்கிறாள்.
“பக்கத்து ரோட்டில் உள்ள பட்டேல் கடையில் ஏன் அடிக்கடி ஜனட் காணப்படுகிறாள்?"
பீட்டரின் நண்பர்கள் டாரன் என்பவன் சுவிங்கத்தைச் சப்பியபடி பீட்டரைக் கேட்டான் ஒருநாள்.
பீட்டருக்குத் தெரியாத ரகசியமில்லை. பீட்டரிலை உயிரையே வைத்திருந்தவள் இப்போது அவனை ஏனோதானோ என்று நடத்துகிறாள். பட்டேல் கடையில் உள்ள முதலாளிகளில் ஒருத்தன் வாட்டசாட்டமானவன்.
வாடிக்கையாளர்களோடு சுமுகமாகப் பழகும்சாட்டில் வாயூறக் கதைப்பான். “எப்படி உனது சுகம் டார்லிங்" என்று இளித்தபடி எல்லாப் பெண்களையும் கேட்பான். பீட்டர் ஒருநாள் ஜனட்டுடன் பட்டேல் கடைக்குப் போனபோது கடைக்காரன் ஜனட்டை ‘டார்லிங்" என்று சொன்னது கோபத்தை உண்டாக்கியது.
"ஏய் பாக்கி கடைக்கு வர்ற பெண்களெல்லாம் உனக்கு டார்லிங்கா?”பீட்டர் பொருமினான். "ஐயாம் சொறிசேர். அந்த மேடத்தின் பெயர் தெரியாது” கடைக்காரன் குத்தலாகச் சொன்னான். இந்தக்

Page 32
46 வெளிநாட்டுக் கதைகள்
கோபக்காரனின் வார்த்தையைச் சட்டை செய்யாதே." ஜனட் ஒய்யாரமாகக் கடைக்காரனிடம் பீட்டரைப் பற்றிச் சொன்னாள்.
பீட்டருக்கு இன்னும் ஆத்திரம் வந்தது. அவனுக்கு இருபத்தியிரண்டு வயது. உழைப்பில்லை. 'சோசியல் செக்யூரிட்டி காசில் ஜனட் சிகரெட் பிடித்தும், லிப்ஸ்டிக் போட்டும் உல்லாசம் காண்பாள்.
காசு பற்றிச் சண்டை வந்தால் ‘உதவாத உன்னிடம் என்னத்தைக் கண்டேன், ஒரு பிள்ளையை மட்டும் தந்தாய். ஒரு பெண்ணுக்கு எந்த முட்டாளும் பிள்ளை தரலாம். ஆனால் உருப்படியான தகப்பனாக இருக்கக் கொஞ்சம் அறிவு தேவை. அறிவைப் பாவித்து வாழும், உழைக்கும் வாழ்க்கை தேவை.
ஜனட் பிரசங்கம் செய்யத் தொடங்கிவிடுவாள். பீட்டர் அவள் செய்யும் அலங்காரத்தைப் பார்க்கச் சகிக்காமல் ரோட்டில் இறங்கினான். அவன் இருப்பது எட்டாம் மாடி பிளாட் லிப்டுக்கு காத்திராமல் இறங்கி நடந்தான். எப்படி ரோட்டில் ஏறினோம் என்ற யோசனையின்றிக் கோபத்துடன் நடந்தான்.
கதிர்காமரின் மனைவிக்குக் கொஞ்ச நாளாக தன் கணவனில் சரியான கோபம். "உழைக்கத் தெரியாத மனிதன் என்று கண்டபாட்டுக்குப் பேசுகிறாள்.
டொக்டர் கதிர்காமர் ஒரு ஜெனரல் பிரக்டிஷனர் (GP). காலை எட்டு மணியிலிருந்து பின்னேரம் ஆறுமணிவரை எத்தனையோ விதமான நோயாளிகளைப் பார்த்து, மருந்தெழுதிக் கொடுத்து, அவர்களின் இருதயத்துடிப்பை அளவிட்டு, வயிற்றுப் பிரச்சனைகளை ஆராய்ந்து, இருமலுக்குக் காரணம்தேடி,. போவதற்கு மருந்து கொடுத்து, வலிக்கு ஊசிபோட்டு, ரிஸப்ஸனிஸ்டுகளுடன் கெளரவமாகப் பழகி அரசாங்கம் கேட்கும் றிப்போர்ட்ஸ்' எல்லாம் எழுதி முடித்து வீட்டுக்கு வந்தால் அவர் மனைவி ராதிகா ஏதோ ஒன்றில் அவரில் பிழை பிடிப்பாள்.
அவரைப்போல எத்தனையோ டொக்டர்கள் "லோக்கம்’ (ஏஜென்சி டொக்டர்) செய்து எத்தனையோ ஆயிரம் உழைக்கிறார்களாம். அவள் மைத்துனர் அப்படி உழைத்து சென்னையில் இரண்டு பிளாட் வாங்கிப் போட்டிருக்கிறாராம். தங்கச்சி கணவர் லண்டனில் மூன்றாவது வீட்டை வாங்கப் போகிறாராம். திருமதி கதிர்காமர் பட்டியல் போடுவார்.
கதிர்காமருக்கு அப்படி எல்லாம் ஓடி உழைத்துக் கஷ்டப்பட உடம்பு சரியில்லை. மிகவும் கஷ்டப்பட்டு டொக்டராக வந்தவர்.
யாழ்ப்பாணத்தில் தோட்டம் செய்த ஒருவரின் மகன். ரியூசனுக்குப் போகமுதல் தோட்டத்துக்குத் தண்ணிரிறைக்கத் தகப்பனுக்கு உதவி செய்ததை நினைத்தால் இன்னும் கண்ணிர் வருகிறது.

எய்தவர் யார்? 47
அவருக்கு இரண்டு குழந்தைகள். பதினாலு வயதும் பன்னிரண்டு வயதும். அழகான இளம்பெண்கள். பரத நாட்டியம் பழகுகிறார்கள். வீணை பழகுகிறார்கள். லண்டனில் மத்தியதரக் குடும்பம் செய்யப் பண்ணும் எல்லாவற்றையும் செய்கிறார்கள்.
"இந்தப் பெண்களுக்கு அரங்கேற்றம் செய்ய பதினைந்து இருபது ஆயிரம் பவுண்ஸ் வரப்போகுது." திருமதி கதிர்காமர் ஏதோ இவருக்கு தெரியாததைச் சொல்வதுபோல் பெருமூச்சு விடுவாள்.
அவளின் தொணதொணப்புத் தாங்காமல் தனக்குள்ள ஒய்வு நாட்களில் 'லோக்கம் செய்ய முடிவு செய்தார். எத்தனைகோடி பணமிருந்தாலும் நிம்மதி வேண்டும் வீட்டிலே என்று பாடவேண்டும்போல் வந்தது. தனது இரண்டு பெண்களையும் சரஸ்வதி, லட்சுமியாக காண்கிறார் அவர். அவர்களின் எதிர்காலம் பயங்கரமாகத் தெரிகிறது. அவர்களின் அரங்கேற்றம் அவர்களின் சொந்தக்காரர்களின் அரங்கேற்றத்தைவிட திறமையாக நடக்க வேண்டும் என்று திருமதி கதிர்காமர் கட்டளை போட்டு விட்டார்.
அவரின் இளம் வயதில் தெல்லிப்பளையை அண்டிய கிராமத்தில் வளர்ந்தபோது பரதநாட்டிய அரங்கேற்றமெல்லாம் ஏதோ பணக்கார விடயமாகத் தெரியும். கலைக்கும் காசுக்கும் எத்தனை தொடர்பு என்பது லண்டனுக்கு வந்ததும்தான் விசுவரூபமாகத் தெரிந்தது.
கலையின் தெய்வீகத் தன்மை காசின் காலடியில் சதிராடப்படுகிறது. பரதத்தின் முத்திரைகள் பணத்தின் பிரதிபலிப்பாகின்றன. தாளமும் லயமும் லண்டன் வாழ் பணக்காரத் தமிழர்களுக்குப் பிடித்தபடி ஒலிக்கின்றன.
கதிர்காமர் பெருமூச்சுடன் நடந்தார். பின்னேரம் ஆறு மணியாகப் போகிறது. கடந்த இரண்டு நாட்களாக லோக்கம் செய்து எத்தனையோ நூறு பவுண்ஸ் உழைத்து விட்டார். நாற்பத்தைந்து வயசிலேயே அவருக்கு நீரிழிவும் "பிளட் பிரஷரும் வந்து விட்டன.
ஊருக்கு உபதேசம் உனக்கல்ல என்பதுபோல், அந்த டொக்டர் வாழ்க்கையுடன் மாரடிக்கிறார்.
வசந்த காலம் முடிந்து குளிர்காற்றடிக்க தொடங்கிவிட்டது. இலையுதிர்ந்து ரோட்டை அலங்காரம் செய்கிறது. மொட்டை மரங்கள் பரிதாபமாகத் தெரிகின்றன. காரில் ஏறியவர் ஒரு கொஞ்ச நேரம் ஆசுவாசமாக சுவாசித்தார். நெஞ்சு கனத்தது. எப்போதோ பயின்ற யோகாசனத்தை ஞாபகப்படுத்தி தனது மூச்சை நிதானப்படுத்தினார். இருந்தாலும் தலை ஏதோ கணப்பதுபோலவும், நெஞ்சு பாரமாக இருப்பதுபோலவும் பட்டது.
லண்டனில் வாழும் ஆசிய மக்களுக்கு மிகவும் கூடுதலாக இருதய வருத்தங்கள் வருகின்றன என்று அவருக்கும் தெரியும். "எனக்கு நாற்பத்தைந்து

Page 33
48 வெளிநாட்டுக் கதைகள்
வயதுதானே” அவர் தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டார். ஐம்பது வயதுக்கிடையில் அவர் மனைவிகேட்பதுபோல் சென்னையில் ஒரு பிளாட் வாங்கிப் போடவேண்டும். பெண்களின் அரங்கேற்றத்தையும் ஆடம்பரமாகச் செய்ய வேண்டும். அவர் திடசங்கற்பம் செய்தபடி காரை ஓட்டினார்.
ஜனட்டுக்கு அவள் காதலனின் செய்கை எரிச்சலைத் தந்தது. "எனக்காக என்ன செய்துவிட்டான் பீட்டர்? தனது பொன்னிறத் தலையை வாரிக் கொண்டு யோசித்தாள். அவனிடமுள்ள காதலில் பதினாறு வயசிலேயே அவனுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்து விட்டாள்.
குழந்தையின் படிப்பில் பெரிய அக்கறையில்லாமல் ஒன்றிரண்டு தலைமுறையினராக அரசின் உதவிப் பணத்திலும் அவர்கள் தந்த வீட்டிலும் வாழ்பவர்கள் ஜனட்டின் தாய் தகப்பன்.
இவள் தன் வழியைப் பார்த்துக் கொண்டு பீட்டருடன் போனது அவர்களுக்கு சந்தோசமே. ஜனட்டின் தமையன் ஒருத்தன்போதைமருந்துக்காளாகி அதனால் இறந்து விட்டான். தங்கை ஒருத்தி கிளப், பார் என்று பதினான்கு வயதிலேயே சுற்றத் தொடங்கிவிட்டாள். ஜனட்டுக்கு மட்டும் ஏதோ குழந்தைகள் என்றால் ஒரே ஆசை. நிறையப் பிள்ளைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று காதற்போதையில் அலட்டியதை பீட்டர் நம்பி அவளைத் தாயாக்கி விட்டான்.
அவள் குழந்தையுடன் சிறைப் பறவையாகி விட்டாள். குழந்தையுடன் வெளியில் சுற்றித் திரிய முடியாத ஆத்திரம் பீட்டரில் திரும்பியது.
அவன் நல்ல சம்பளமான உத்தியோகத்திலிருந்தால் தன் குழந்தையைப் பார்க்க யாரையும் சம்பளம் கொடுத்துகேட்கலாம் என்று யோசித்தபோதுஜனட்டுக்கு தன் வாழ்க்கையில் எரிச்சல் வந்தது.
“இந்த வயதில் எனக்குச்சிறை வாழ்க்கையா?” தாய்மை என்பதை சுமையாய் நினைக்கும் அறியாமையுடன் பெருமூச்சு விட்டாள்.
அவள் தனது ஏக்கத்தை தன்னை அழகாக அலங்களிப்பதிலும் பக்கத்துக் கடைக்கார பட்டேலுடன் கும்மாளம் போடுவதிலும் மறந்தாள்.
பீட்டருக்கோ அவள் அவனைத் தவிர யாருடனும் பேசுவது பிடிக்காது. பீட்டர் கொஞ்சம் படித்த குடும்பத்திலிருந்து வந்தவன். இளமைத்துடிப்பின் அகோரத்தில் அப்பாவித்தனமாக அப்பாவாகிவிட்டது அவனுக்குத் துயர்தான். ஆனாலும் ஜனட் ஒரு அழகான பெண் என்பதிலும் அவன் மகள் இரண்டு வயது மெலனி ஒரு தங்கச் சிற்பம் போலிருப்பதிலும் அவனுக்குப் பெருமை என்று ஜனட்டுக்குத் தெரியும்.

எய்தவர் யார்? 49
தனது எட்டாவது மாடியிலிருந்து வெளியுலகத்தைப் பார்த்தாள். தான் தனிமைப்பட்டிருப்பது போலவும் உலகமே தன்னை பார்த்து நகைப்பதுபோலவும் பேதைத்தனமாக யோசித்தபோது குழந்தையின் அழுகை அவளை உலுக்கியது. குழந்தை மெலனிதத்தித்தத்தித் தாயிடம் வந்தாள். ஜனட் குழந்தையைத் தூக்கியதும் திடுக்கிட்டுப் போனாள். உடம்பு நெருப்பாய்க் கனத்தது. நேரமோ பின்னேரம் ஏழு மணியாகப் போகிறது. எந்த டொக்டரின் சேர்ஜரியும் அந்தப் பக்கத்தில் திறந்திருக்காது. ஹொஸ்பிட்டலுக்கு கொண்டுபோய் "கசுவல்டியில்’ மணிக்கணக்காக நிற்க அவளால் முடியாது.
"பீட்டர் எங்கே தொலைந்து விட்டான்?" முணுமுணுத்தபடி கடமையிலிருக்கும் டொக்டருக்கு (On Cal GP) போன் பண்ணினாள் ஜனட்
டாரன் அங்குமிங்கும் பார்த்தபடி பீட்டரின் கையில் அந்தப் போதைப்பொருளை திணித்தான். பீட்டர் தயக்கத்துடன் வாங்கிக் கொண்டான்.
"உன்னைப் பார்த்தால் உலகத்தைப் பறிகொடுத்தவன் மாதிரி இருக்கிறியே" டாரன் தன் மொட்டைத் தலையைத் தடவிக் கொண்டான். அவன் மிகவும் உயர்ந்து வளர்ந்த மொட்டையன். தடிமாடு மாதிரி உவமிக்கலாம்.
பீட்டரின் மென்மையான சுபாவத்திற்கும் டாரனின் முரட்டுச் சுபாவத்திற்கும் எத்தனையோ வித்தியாசம். ஆனாலும் இருவருக்கும் சினேகிதமாக போதைப் பொருட்கள் இருந்தன.
"சொல்கிறேன் என்று கோபிக்காதே. ஊடுருவிப்பார்த்தபடி சொன்னான்.
"உனது காதலி அந்த "டேட்டீ பாக்கியின் கடையில் இளித்தபடி திரிகிறாள்.”
டாரன் பியர்க் கானை முடித்துவிட்டு சொன்னான். இன்னொரு போதைக்குளிசையை வாயிற் போட்டுக் கொண்டான்.
“ஐ ஹேற் த பாக்கிஸ்" பீட்டர் தானும் ஒரு போதைப் பொருளை வாயில் போட்டபடி சொன்னான்.
"ஏன் எங்கள் பெண்கள் இந்த “டேட்டி' நாய்களுக்குப் பின்னால் போகிறார்கள்?” முட்டாள் டாரன் ஏதோ விரிவுரையாளரிடம் கேட்பதுபோல் பீட்டரைக் கேட்டான்.
பீட்டர் தன் பொன்னிறத் தலையை தடவிக் கொண்டான். அவர்கள் இருந்த 'பப்' இல் நிறையப்பேர் தங்களை மறந்து சந்தோசமாக குடித்துக் கொண்டிருந்தார்கள். இன்னும் கொஞ்ச நேரத்திலை ஒரு அரை நிர்வாண ஆட்டக்காரி அந்த மேடைக்கு வந்து எல்லோரையும் மகிழ்விப்பாள் என்று ஒரு அறிவிப்பாளன் மிகவும் உற்சாகத்துடன் சொன்னான்.
டாரன் பீட்டரின் கண்களை

Page 34
SO வெளிநாட்டுக் கதைகள்
அப்போது ஒன்றிரள்டு ஆசிய இளைஞர்கள் அந்தப் பப்புக்குள் வந்தார்கள்.
"இளவரசி டயானாவைப் பார்த்தாயா? அவளுக்கு ஒரு இங்கிலீசுக்காரன் கிடைக்கவில்லையா? டோயும் போயும் ஒரு எகிப்தியனையா பார்க்க வேண்டும்.?” டாரன் முழங்கினான்.
"அவர்களிடம் காசு இருக்கிறது. அவர்கள் அதை வைத்துக் கொண்டு பெண்களை தங்கள் பக்கம் இழுக்கிறார்கள்".
பட்டேல் கடைக்காரன் ஜனட்டைச் சுரண்டுவதுபோல?”டாரன் இன்னொரு போதைப் பொருளை வாயிற் போட்டான்.
“எங்கள் நாட்டுக் கூலி வேலை செய்த நாய்கள் எங்கள் வேலைகளைப் பறித்தார்கள். வீடுகளை எடுத்தார்கள். இப்போது எங்கள் பெண்களுடன் படுக்கிறார்கள்." டாரன் கசப்புடன் சொன்னான்.
பீட்டர் மெளனமாக இருந்தான். டாரன் எப்போதாவது உடல் குனிந்து வேலைசெய்வான் என்பதை பீட்டரால் கற்பனை செய்ய முடியவில்லை. சிறுசிறு திருட்டுக்கள் செய்தும் வீடுகளுக்குள் புகுந்து களவாடியும் காசுசேர்த்து தன்போதைப் பழக்கத்தை பூர்த்தி செய்பவன் டாரன். அவன் யாருக்கும் தலைகுனிந்து வேலை செய்வானா என்று பீட்டரால் அந்த நிமிடத்தில் யோசிக்க முடியாமலிருந்தது.
வந்திருந்த ஆசிய இளைஞர்கள் மிகவும் எடுப்பாக உடுத்திருந்தார்கள். டாரன் அவர்களைப் பொறாமையுடன் பார்த்தான். "இவர்களுக்கு இப்படியெல்லாம் வாழ எப்படி காசு கிடைக்கிறது?’ டாரன் ஆத்திரத்துடன் சத்தம் போட்டான்.
இரவு பகலாகக் கடையில் உழைக்கும் பட்டேல் குடும்பம் பீட்டருக்கு ஞாபகத்தில் வந்தது.
"நாய்கள்! நாய்கள்! எச்சில் பொறுக்க வந்த நாய்கள்! இப்போ எங்கடை கடைகளை வாங்கி, வீடுகளை வாங்கி, எங்கட பெண்களுடனும் படுக்கிறார்கள்” டாரன் திட்டினான்.
பீட்டருக்கு ஜனட்டின் ஞாபகம் வந்தது. கொஞ்ச நாட்களாக இவனைத் தொடவே விடமாட்டாளாம். இவனை அவள் வெறுப்பதற்கு அவளை டார்லிங் என்று கூப்பிடும் பட்டேல் ஒரு காரணமா?
பீட்டர் இன்னொரு பியர்க் கானை முடித்துக் கொண்டான். இன்னொரு போதைக் குளிசையையும் வாயிற் போட்டுக் கொண்டான். மனம் ஆத்திரத்தில் தடுமாறியது.
தூரத்திலிருந்து குடித்துக் கொண்டிருந்த ஆசிய இளைஞர்களில் கோபம் வந்தது.

எய்தவர் யார்?
டாரன் அந்த வட்டாரத்திலுள்ள நஷனல் Fப்பிரண்டுடை தொடர்புடையவன். அவன் சேர்ந்திருக்கும் கூட்டம் இங்குள்ள கறுப்பர்களை எல்லாம் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. “நல்லதுதானே? பீட்டர் கனவில் சொல்வதுபோல் சொன்னான். “என்ன நல்லது?" டாரனின் குரலிலும் தடுமாற்றம். "இந்த நாய்களை எல்லாம் நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும். இவர்களுக்கு எங்கள் வேலை, வீடு, பெண்கள். பின்னர் இந்த நாட்டையும் சொந்தமாக்கிப் போடுவார்கள்.
"அப்படிச் சொல்லு பீட்டர். இவர்கள் ஒவ்வொருத்தரையும் எனது கையால் அடித்து நொருக்கி அவர்களின் தசையைப் பிழிந்து.”
டாரன் சொல்வதைக் கேட்க கேட்க பீட்டரின் உதிரம் துடித்தது. ஏதோ ஒ லெவலில் ஒன்றிரண்டு பாடங்கள் பாஸ் பண்ணியவன். இங்கிலிசுக்காரனுக்கு என்ன ஓ லெவலும் ஏ லெவலும்? நிறமும் மொழியும் தானே தகுதிகள். அப்படியிருந்தும் அவனுக்கொரு வேலையில்லை.
பீட்டர் ஏதோ வேலையிலிருந்தால், அதோ இருக்கும் ஆசியர்களைப்போல் ஆடம்பரமாய் இருக்கலாமே. ஜனட்டைக் கூட்டிக் கொண் வெளியே போய்ச் சந்தோஷமாக திரியலாமே.!
பீட்டர் வில்லியம், நான் சொல்வதைக் கேள். எங்கள் அரசா’ உருப்படியில்லாதது. அரசாங்க மந்திரிகளைப்பார். எத்தனைபேர் ஹோuே சேக்சுவல்ஸ், எத்தனைபேர் "லெஸ்பியன்' என்று தெரியும். இவர்களுக்கு நாட்டுப் பற்றிருந்தால் குடும்ப உறவுகளில் அக்கறையிருந்தால் இப்படி வாழ்வார்களா? “டாரன் தன்மொட்டைத் தலையை தட்டிக் கேட்டான்.
"பீட்டர் வில்லியத்துக்குத் தெரிந்த அளவில் டாரனுக்கு அவன் தகப்பன் பெயர் தெரியாது. தாயின் பெயரில்தான் அவனுக்குப் பதிவிருக்கிறது. ஆனாலும் அவன் குடும்ப உறவுகள் பற்றிக் கொஞ்சம் சூடாகத்தான் சொல்கிறான். தகப்பன் தெரியாமல் பிறந்தவன். குடும்ப உறவின் தகுதி பற்றிப் பேசுகின்றான்.
"இன்னும் ஐம்பது வருடத்தில் இங்கிலாந்தில் வெள்ளைக்காரனுக்கு இருக்க இடமில்லாமல் போகப் போகுது. இவர்கள் பன்றிக் குட்டிகள் மாதிரிபத்தும் பதினைந்தும் பெத்துப் போட்டு, அவர்களை வளர்க்க வீடும் காசும் கொடுக்க வேண்டும். டாரன் இப்போது அரசாங்கத்தோடு தன்னையும் சேர்த்துநாங்கள்’ என்று பேசினான்.
பீட்டர் தன்னைச் சுற்றிப் பார்த்தான். அரை நிர்வாண நடனம் பார்த்து ரசிக்கும் எல்லோரிலும் கோபம் வந்தது. "எல்லோரும் எங்கள் நாட்டைக் கறுப்பர்களுக்குத் தானம் பண்ணப் போறம்" பீட்டர் முணுமுணுத்தான்.
"நாங்கள் முட்டாள்கள். எங்கள் அரசாங்கம் முட்டாள்தனமானது." டாரன் 5676Tiquuq SI(LQ55T61.

Page 35
52 GhaeafsriLCCBå asemasaử
இருவரும் வெளியே வந்தார்கள். தன் இயலாமையில் கோபம் வந்தது. பீட்டருக்கு. இருபத்தியிரண்டு வயதில் தன் இனியவளை இழப்பதைவிட யாரையும் அடித்து நொருக்கிவிட்டுச் சிறை செல்லலாம். அவளில்லாமல் வாழும் தனியான வாழ்க்கையை விட வேறு எந்தவிதமான வாழ்க்கையும் வாழலாம்.
கடந்த ஐந்து வருடமாக அவர்களுக்கு ஒருத்தரை ஒருத்தர் தெரியும். வாழ்க்கை முழுக்க ஒன்றாய் இருந்துவிட்டு முதுமையைப் பகிர்ந்து கொள்ளலாம் என்றெல்லாம் கற்பனை செய்திருந்தான்.
அவன் உள்ளம் கொதித்தது. அவன் நடை வேகமாகியது. இன்று ஜனட்டிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும். ஏன் அந்தப்பட்டேல் கடைக்காரனுடன் தேனொழுக இளிக்கிறாய். என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாகக் கேட்க வேண்டும்.
அவன் நடை துரிதமாகியது. "இவர்களுக்கெல்லாம் நாங்கள் சோணையர்கள் என்ற நினைவு. இவர்கள் நாட்டில் நாங்கள் போய் எவ்வளவு முன்னேற்றம் செய்து கொடுத்தோம். இப்ப அவர்கள் எங்கடை நாட்டுக்கு வந்து எல்லாத்தையும் குப்பையாக்கி விட்டார்கள். டாரன் ஒரு ஆசியக் கடையைக் காட்டினான். “இவர்களைக் கண்ட இடத்தில் காலால் மிதிக்க வேண்டும்” டாரன் தொடர்ந்து உறுமினான்.
கதிர்காமநாதர் எட்டாவது மாடியிலிருந்து மெலனி வில்லியத்தைப் பார்க்க காரால் இறங்கி வந்தார்.
தனக்கு முன்னால் நிமிர்ந்து நிற்கும் அந்தப் பிரமாண்டமான கட்டிடத்தைப் பார்த்தார். இந்த இடங்களில் லிப்ட் வேலை செய்யா விட்டால் அதோகெதிதான்.
பார்வைக்குப் பிடிக்காதவர்களை சந்திக்க அவர் விரும்பவில்லை. நெஞ்சு இன்னும்கூட கனத்தது. இன்னும்சில நாட்களில் ஒரு BCG (எலக்ரோகார் யொக்கிராம்) செய்து பார்க்க வேண்டும் என்று யோசித்தபடி நடந்தார்.
அவரது அருமைப் பெண்களுக்கு தகப்பன் சுகமில்லாதவர் என்று தெரிந்தால் மிகவும் துக்கப்படுவார்கள். அதனால் அவரது நீரிழிவு வியாதியைப் பற்றிக்கூட அவரும் அவர் மனைவியும் யாருக்கும் மூச்சு விடவில்லை.
இந்தக் கண்டறியாத ஏஜென்சி டொக்டரிங் கைச் செய்யாமல் ஏதோ உழைக்கிற காசை வைத்துச் சமாளிக்கப் பழகிக் கொண்டால் போதும். அவர் திடமாக முடிவு செய்து கொண்டார்.
எப்படித்தான் அவர் மனைவி தலைகீழாக குதித்தாலும் இனி இப்படி இரவு பகல் இல்லாமல் பேயாட்டம் போடக்கூடாது என்று நினைத்துக் கொண்டார்.
நேரம் சரியான இருட்டானதென்றபடியால் அவர் கையிலிருந்த விலாசத்தைக் கவனமாகப் பார்த்தார். அவர் பார்க்கப்போகும் மெலனிக்கு இரண்டு வயதாம். காய்ச்சல் நூற்றி இரண்டை தாண்டி விட்டதென்று அந்தக் குழந்தையின் தாய் அழுதாள்.

எய்தவர் யார்? 53
"ஏய் டேட்டிபாக்கி”டாரன் கதிர்காமநாதனைப் பார்த்துத் துப்பினான். அவர் இதை எதிர்பார்க்கவில்லை. ஏஜென்சி டொக்டராகி இரண்டொரு கிழமைகள் தானாகின்றன. தனியாகப் போகும் டொக்டர்களுக்கு என்னவெல்லாமோ நடக்கிறது என்று கேள்விப்பட்டிருக்கிறார். ஆனால் தனக்கு இப்படி நடக்குமென்று.
“என்ன இந்தப் பக்கம் யாரும் பெண்பிள்ளை தேடுறாயா நாயே? டாரன். டொக்டர் கதிர்காமநாதர் வாய்திறக்க முதல் பளிரென்று ஒரு அறை போட்டான்.
பார்த்துக் கொண்டிருந்த பீட்டர் வில்லியத்திற்கு வீரம் செறிந்தது. இரண்டு போதைவஸ்து போட்ட ஆங்கிலேயர். உலகத்திற்கு உதவிசெய்யும் ஒரு அப்பாவித் தமிழ் டொக்டரை காலாலும் கையாலும் அடித்தனர்.
தங்களுக்கு வேலையில்லாமல் போனதற்கு ஒரு உதை, கையில் காசில்லாததற்கு ஒரு அடி, தங்கள் பெண்கள் அடுத்த இனத்தானோடு குலாவுவதற்கு ஒரு குத்து. இரு இளைஞர்களும் ஒரு முதியவரைப் போட்டு உதைத்துத் தள்ளினார்கள். அந்த நேரம் டாரனின் மொபைல் டெலிபோன் கிணுகினுத்தது.
அடிப்பதை நிறுத்தி விட்டு டாரன் ஹலோ சொன்னான். இந்தநேரத்தில் போதைவஸ்து வியாபாரிகள் போன் பண்ணுவதுண்டு.
“எங்கே உனது சோம்பேறிச் சிநேகிதன்?" ஜனட்டின் கோபக்குரல் டாரனின் காதைப் பிளந்தது. டாரன் பீட்டரிடம் டெலிபோனைக் கொடுத்தான்.
"எங்கே தொலைந்து விட்டாய்? மெலனிக்கு சுகமில்லை. டொக்டர் உடனடியாக வருவதாகச் சொன்னார். இன்னும் காணவில்லை. மெலனிக்கு காய்ச்சல் கூடி வலி வரும்போலிருக்கிறது" ஜனட் அழுதாள்.
மயங்கிக் கிடக்கும் டொக்டரின் பெட்டியை ஆவேசமாக உடைத்தான் டாரன். ஸ்டெதஸ்கோப், அவசர மருந்துகள் போன்ற சாமான்களோடு அடுத்ததாக அவர் பார்க்கப் பொகும் மெலனி வில்லியத்தின் விலாசமும் டாரனின் கையில் சிக்கின.
பீட்டர் அவசரமாக டொக்டரைப் புரட்டினான். அவர் குற்றுயிராய்க் கிடந்தார். அவரைப் பார்க்க ஒரு டொக்டர் தேவை இப்போது,
இன்னுமொரு காலடி (ஆண்டுமலர்) 1998,தமிழர் நலன்புரிச் சங்கம், லண்டன்.

Page 36
54 வெளிநாட்டுக் கதைகள்
ஒத்தைத் தண்டவாளடும்
ஒடுகறுப்புநீள டுடியும்
கருதி (சுவிஸ்)
பதான் அடுத்த ரயிலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறன். இன்னம் வரக்காணம் என்ர மேலில ஒட்டியிருக்கிற ரத்தப் பிசுபிசுப்பை மிதிச்சு எடுத்துக் கொண்டு போனால்தான் என்ர படபடப்பு கொஞ்சமாவது அடங்கும். அதை நினைச்சாலே ஈரக்குலை நடுங்கும். Bahnhof இல நிண்ட எல்லாருமே, அலறலோட வந்த கோரத்தைப் பார்த்ததும் வாயடைச்சுப் போய் நின்ைடிட்டுதுகள். அவையின்ரை வாள்நாளிலை இப்படியொரு கொடுரத்தைக் கண்டிருப்பினமோ என்னவோ! Bahnhof சுவர், தண்டவாளத்தடி எல்லாமே ஒரே ரத்தச் சிதறலும், துண்டு துண்டா தெறிச்சுக் கிடக்கிற சதைத் துண்டுளும் அலங்கோலமா முழிதள்ளியபடி எங்கேயோ பார்த்துக்கொண்டு கிடக்கிற தலையும் எல்லோரையும் நிலைகுலையச் செய்தது. என்னையும் தான்!
நிண்ட சனத்தில கொஞ்சம் அழுறதும், மயங்கிறதும் தலைசுற்றி வாயடைச்சுப் போய் நிற்கிறதுமா இப்படியொரு சம்பவமே இந்த Bahnhof இல நடக்கெல்ல. இரும்புப் பிணைச்சலக் கொண்டு சிலிப்பர் கட்டையோட இணைச்சு, மற்ற தண்டவாளத்தோட சேரவிடாம பூட்டி என்ர மேலில ரயில் எவ்வளவு காலமாக ஓடிக்கொண்டிருக்குது. இவ்வளவு காலத்தில இதைப்போலொரு கோரத்தை, அதுவும் சின்னப் புள்ளையையும் கொண்டு ரயிலுக்கு முன்னால பாய்ஞ்சதை என்னண்டு சொல்லுறது. என்ர மேலெல்லாம் தெறிச்சு பிசுபிசுண்டு ஒட்டிக்கொண்டிருக்கிற சூடான ரெத்தம், அத்தோட கூழாகிடக்கிற கறுப்பு தலைமுடியும் என்ர நெஞ்சை உறைய வைக்குது. ஏன் வந்து விழுந்தாள் எனக்கு மேல என்ர வாழ்நாள் முழுதும் என்னை உறுத்திக் கொண்டிருக்கப் போகிறதே. அவள் தன்முடிவை தேடுவதற்கு நான் கிடக்கும் இடமா கிடைச்சது.

ஒத்தைத் தண்டவாளமும் ஒரு கறுப்பு நீள முடியும் 55
அவள் விழுந்த ரயில் கொஞ்சம் மெதுவா இந்த Bahnhof ஐ கடந்திருக்கக்கூடாதா. அவர்களை முற்றா இப்படி இழந்திருக்க தேவையில்லாமல் போயிருக்கும். காயத்தோடையாவது தப்பியிருப்பினம். சிலவேளை பிள்ளையாவது தப்பியிருக்கும். அந்தச் சின்னக் குழந்தை என்ன குற்றம் செய்தது? அதுக்கேன் இவ்வளவு பெரிய தண்டனை.
என்ர மேல் விளிம்பெல்லாம் ரத்தம் காய்ஞ்சு பிசுபிசுத்து ஒட்டிக் கொண்டிருக்குது. நான் அடுத்த ரயிலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறன். இன்னும் வரக் காணேல்லை. என்ரை மேலிலை கொட்டியிருக்கிற ரத்தத்தை எடுத்துக்கொண்டு போக இன்னும் காணேல்ல. இதெல்லாம் நடக்குமெண்டு யார் எதிர்பார்த்தார்கள்.
பாழாய்ப்போன "சினோ நிக்காம கொட்டிக்கொண்டிருக்கு. அது கூட என்னைக் கழுவிவிட முயற்சி செய்யேல்லை. ஒடுக்கமான, தேய்ஞ்ச, வழவழப்பான என்ர இரும்பு உடம்பின்ர தன்மையால எனக்கு மேல விழுகிற கொஞ்ச 'சினோ' கூட சிலிப்பர் கட்டையிலயும் கல்லிலயும் நழுவுது கொஞ்சம் ஒட்டிக்கொண்டிருக்கிற "சினோ' வையும் பக்கத்து தண்டவாளத்தால் போற ‘இன்ரசிற்றி எடுத்துக்கொண்டு போகுது.
Bahnhof strasse இல சினோவை வழிச்சு ஒதுக்குற வாகன் சினோவை கரையில ஒதுக்கி மலைமாதிரி குவிச்சுக்கொண்டு போகுது. அய்ஞ்சு வருசத்துக்கப் பிறகு "சினோ" கனக்க கொட்டிக்கொண்டிருக்கு. வயலுகள், வீட்டுக்கூரை, றோட்டுகள், தண்டவாளங்கள். எல்லா இடமுமே சினோ. ஒரே வெள்ளை மயம். குழந்தையள் "சினோ பொம்மை செய்து விளையாடிக்கொண்டிருக்குதுகள். நடக்க ஏலாம கிடந்த வயது போனதுகள் கூட சினோ கொட்டுறதைக் கண்டதும்தான் புதுநாணமாக றோட்டில கைக்கிளவுஸ்'உம் மஃப்ளர்"உம் மாட்டிக்கொண்டு வீரநடை போட்டுக் கொண்டிருக்கினம்.
இந்தமுறை அவுஸ்லாண்டரை திட்டமாட்டான் சுவிஸ்காரன். ஏனெண்டா ஒவ்வொரு வருஷமும் சினோ குறைவா கொட்டுறதுக்கும், இல்லாமல் போறதுக்கும் அவுஸ்லாண்டர் வாறது காரணமெண்டு சொல்லி தன்ர பக்ரறி புகையையும் வாகனங்களின்ரை நெருக்கத்தையும், காடழிப்பையும் மறைக்கிறவனை என்னண்டு சொல்லுறது.
வழமைபோல இந்த Bahnhof லோக்கல் ரெயின்’ மாதிரியே இயங்கிக்கொண்டிருந்தது. ரயிலில ஏறிப்போவதும் வருவதுமாக வழமையாக நான் காணுகிற சனங்கள், மாதா கோயிலை ஞாபகப்படுத்துகிற மாதிரி ஒவ்வொரு ரயில் வர்ற நேரமும் டாங்டாங் என்ற மணிச்சத்தம்.
முதல்ல இந்த Bahnhofஐப் பற்றி கொஞ்சம் சொல்ல வேணும். அதுகும் இந்த விஞ்ஞான கொம்பியூட்டர் காலத்திலயும் எத்தனை புது வடிவில பழைய Bahnhofகளை இடிச்சு கொம்பியூட்டர் மயமாக்கின பிறகும் இந்தBahnhofபழைய உருவத்தேடேயே பிடிச்சு வைச்சமாதிரி கொஞ்சமும் மாற்றம் அசைவில்லாம

Page 37
56 வெளிநாட்டுக் கதைகள்
நிற்குது. இத இடிச்சு புது வடிவில கட்ட இஞ்சை உள்ள மக்களிடம் வாக்கெடுப்புக்கு விட்டாலும் 'A'வுக்கு இடமில்லை. இடிச்சுவிட மாட்டமெண்டினம் பழமை பேணும் மக்கள். அதால நானும் திருத்தலும் மாத்தமும் இல்லாம இந்த இரும்பு பிணைச்சல்கள் இறுக்க, ரெயிலுகளுக்கடியில் மிதிபட்டு உலகம் முழுவதும் நீண்டுபோய்க் கிடக்கிறன். என்ர மேலில சில்லை அழுத்தி ஓடிக்ககொண்டிருகிற ‘இன்ரசிற்றி என்னை திரும்ப திரும்ப ரெயிலின் முன் விழுந்த அவளையும் குழந்தையையும் ஞாபகப்படுத்துது. ரெயிலால் சிதைபட்டு அவளும் குழந்தையும் கிடந்த கோலம் என்னால மறக்கமுடியாமல் உறுத்திக்கொண்டே இருக்குது. ஏன் விழுந்தாள் ரயிலில்? அவளை இப்படி ரெயிலில் விழப்பண்ணியது எது? குடும்ப உறவுகளா? அல்லது கணவனா? இப்படி அவள் மனதை சிதையப் பண்ணியது யார்? குழந்தையுடன் விழுமளவுக்கு அவளின்ர மனசில என்ன சோர்வு?
வழமையா ரெயிலில் போறதக்கு வாற சனம் மாதிரியே அவளும் குழந்தையும் வந்தார்கள். அவளின் நீண்ட கறுப்பு தலைமுடியும் கறுப்பு உருண்ட கண்களும் அவர்கள் நாட்டுப் பெண்களின் 'ஸ்பெசாலிட்டி. அது என்னை திரும்பிப் பார்க்க வைத்தது. வந்தவள் என்னை குனிஞ்சு பார்க்கிறதும் ரயிலைப் பார்க்கிறதுமாக நின்றாள். பிறகு திரும்பி நடக்கிறதும் நிக்கிறதும் போறதும் வாறதுமாக இருந்தாள். கையில குழந்தையைப் பிடித்தபடி சோர்ந்த கண்களும், வாடிய முகமுமாக சோர்ந்தபடி நிண்டாள். இதுக்கிடையில ஏழெட்டு Regional Zugவந்து போய்விட்டுது. எனக்கே அவளை அப்போது விளங்கவில்லை. எத்தினை மணிநேரமா Bahnhofஇல நிண்டு கொண்டிருக்கிறாள். கொஞ்சம் குழம்பிப்போய் நிக்கிற மாதிரி எனக்குப் பட்டது. அது என் நினைவோ தெரியாது. புருஷனோட சண்டை பிடிச்சுப்போட்டு வந்திருக்கிறாளோ. எங்கை போவதெண்டு தெரியாமல் குழம்புறாளோ. சீ! இருக்காது ஆராவது விருந்தாளியை எதிர்பார்த்துக் கூட்டிக்கொண்டு போக நிற்கிறாளாக்கும். அதுகும் இவ்வளவு நேரமாவா. அவளின்ர நாட்டுப் பொடியனொருவன் விடிய வேலைக்குப் போறபோது அவளைக் கண்டு சிரிச்சுப்போட்டுப் போனவன். இப்ப நினண்டு அவளோடு கதைச்சுப்போட்டுப் போனான்.
ஏன் இவ்வளவு நேரம் Bahnhof இல நிக்கிறாள் எண்டு யோசிச்சுக்கொண்டிருக்க ‘இன்ரசிற்றியின்ர அதிர்வு என்ர மண்டையைக் குழப்பியது. ஆனா அவள் முடிவு எடுத்திட்டாள். கனவு கினவு கண்டனோ தெரியாது. என்ன சுத்திப் பாத்தன். இது கனவில்லையெண்டு, என்ர மேலில தெறிச்சிருக்கிற சூடான இரத்தமும் அவளின் மப்ளரோட உறைஞ்சு கிடக்கிற சதைத் துண்டுகளும் பிள்ளையிட தொப்பியும் சாட்சி சொன்னது.

ஒத்தைத் தண்டவாளமும் ஒரு கறுப்பு நீள முடியும் 57
இதென்ன கோர முடிவு? அதுவும் தானும் உயிரை விட்டு. என்ன அவலமான சாவு? ஏன்? அவளைச் சிதைத்தவர்கள் யார். நோகடிச்ச இந்த முடிவெடுக்கப்பண்ணி வதைத்தது எந்த மிருகம்? உன் உணர்வுகளைக் கொத்தி சிதைத்து குழியில போட்டதும் கணவனா? குடும்ப உறவுகளா? சமூகமா? ஏன்? அவளை விரும்பிய பாதையில் போக விடாமல் தடுத்தது அவளது கலாச்சாரமா? அல்லது பெண்களையே நாயிலும் கீழாக இரண்டாம்தர பிரஜையாக உணர்வுகள் அற்றவர்களாக புருஷனிலும் புள்ளையிலும் தங்கி வாழப்பண்ணி சேவகம் செய்யப் பண்ணும் மதமா?
ஏன் விழுந்தாள் கீழே? யார் மிதித்து சிதைத்தது. அந்தக் குழந்தைதான் என்ன செய்தது? தான் பட்ட கஷ்டமும் கவலையும் இந்தப் பூமியில தன்ர குழந்தையும் படக்கூடாது என்று நினைத்தாளா? இந்த நாட்டுக்கு வந்து வேலை, வீடு, வீட்டுவேலை என்று உதவியும் ஒத்துழைப்பும் கைகோர்த்தவனிடம் இல்லையெண்டு துவண்டாயா? அல்லது கடன்சுமையா? ஏன் விழுந்தாள் துவண்டு இந்த மண்ணில்? அவளுக்கு இந்தக் குடும்ப வாழ்க்கையைத் தொடர்ந்து வாழ விருப்பமில்லாட்டா, இங்குதான் பிரிஞ்சு வாழும் பெண்கள் தனிச்சு வாழ உதவியளும் வழியும் இருக்கிறதே! உறவை உதறி, பற்றுவதற்கு இடமில்லாமல் விழுந்தாயா என்மேல்? ஏன் கோழையாய் விழுந்தாய் கீழே? என்னட்டை இருக்கிற ஒரு சிறு கேள்வி. பழமையாயும் மாத்தமுமில்லாம நிற்கும் இந்த Bahnhofஐ இடிச்சு புதுக் கட்டிடமாய் கட்ட இந்த மக்கள் வாக்குப் போட LDrt LT856TIT? யாரோ அவள் விழுந்த இடத்துக்குப் பக்கத்தில் மெழுகுதிரியும் கொழுத்தி பூவும் வைத்திருந்தார்கள். எனக்குமேல் ஒட்டிக் கிடக்கும் மயிர்த் துணுக்கையும் காய்ந்து கிடக்கும் ரத்தத்தையும் சில்லுகளால் மிதித்து நசுக்கி எடுக்க காத்தையும் உந்தித் தள்ளிக்கொண்டு வரும் "இன்ரசிற்றி யின் அதிர்வால் மெழுகுதிரி அசைந்தாடி பூக்கள் சிதறின.
புதுஉலகம் எமை நோக்கி (புலம்பெயர்பெண்படைப்பாளிகளின் சிறுகதைத் தொகுதி
1999,சக்திவெளியீடு,நோர்வே. குறிப்பு:- டொச் தமிழ்
Bahnhof - புகையிரதநிலையம் இன்ரசிற்றி (Intercity)-கடுகதிபுகையிரதம் Bahnhofstrasse - L|50ess95ß50)60u 65.
வாகன் (Wagen) - வாகனம்
அவுஸ்லாண்டர் (Auslander) - வெளிநாட்டுக்கார்
JA - Syb
Regonal Zug-உள்ளூர் (வேகம் குறைந்த) புகையிதம்.

Page 38
58
புதிய குலைடுறை
கோவிலூர் செல்வராஜன் (நோர்வே)
சோபாவுக்குள் சுருண்டு படுத்த ஜோன்பாபுவுக்கு, தூக்கம் வரவில்லை. மனநிம்மதி இழந்து உழன்றான்.
நேற்றிரவு நடந்த சண்டையும், காட்சிகளும் மாறி மாறி அவன் மனசை வதைத்தன.
“வளர்ந்த மகளை கைநீட்டி அடிச்சது சரியில்லை” என்று மனசு நெருடிச்சு.
"அடியாத மாடு படியாது. கெறுபிடிச்சவள்” என்பது அறிவின் சமாதானம்.
ஆளுக்கு ஆள் தங்களுடைய நியாயங்களைத் தான் சொன்னர்கள். மனைவி ரஞ்சிக்கு தன் நியாயங்கள். ஸ்டெல்லாவுக்கு தன் நியாயங்கள். தமிழ் மணிணிலே பிறந்து வளர்ந்த தன் நியாயங்களுக்கு இந்த மண்ணிலே இடமில்லையா?
மனம் வலிக்க மறுபக்கம் திரும்பினான். "அலார்ம்" மணிக்கூடு அடிக்கத் துவங்கியது. அதனை நிறுத்துவதற்கு மனைவி ரஞ்சி படுக்கை அறையிலிருந்து விரைந்து வந்தாள். அதற்கிடையில் பாபுவே எழுந்து அதை நிறுத்தினான். ரஞ்சியின் கண்கள் சிவந்திருந்தன. முகத்தில் சோர்வுடன் கூடிய வாட்டம். அவளும் தன்னைப்போல தூக்கமின்றித் தவித்திருக்க கூடும் என்று தோன்றியது. இந்தச் சிந்தனைகளுக்கெல்லாம் இடம் கொடுக்காமல் அவன் அவசரமாக பாத்ரூமுக்குள் நுழைந்தான். அவன் ஆறு மணிக்கு வேலைக்குப் போக வேண்டும். அவசரமாகப் புறப்பட்டால்தான் முடியும்.
பாத்ரூமிலிருந்து வெளியே வந்த பாபு, அறைக்குள் சென்று அவசர அவசரமாக உடைகளை மாற்றிக் கொண்டிருந்தான்.

ി 8ങ്ങബ്രുഞ്ഞു 59
ரஞ்சி கோப்பி கலந்து எடுத்து வந்து டைனிங் மேஜையில் வைத்தாள். வேலைக்குச் செல்லும் உடைகள் அணிந்து, பாபு அறைக்கு வெளியே வந்தான்.
நேற்றிரவு வீட்டிலே நடந்த சச்சரவுக்கு பின் மயான அமைதி நிலவியது. "கோப்பி போட்டிருக்கிறன். குடியுங்கோ" என்றாள். அமைதியைக் குலைத்து சகஜ நிலையை மீட்க வேண்டுமென்ற எண்ணத்துடன் பேச்சுக் கொடுத்தாள்.
பாபு பேசாமல் கோப்பியைக் குடிக்கத் தொடங்கினான். சடுதியாக, அந்த அதிகாலை வேளையில், வீட்டு அழைப்பு மணி ஒலித்தது.
"இந்த நேரத்தில் யாராக இருக்கும்” என்கின்ற கேள்வி தொக்க, இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
பாபு கதவைத் திறந்தான். இரண்டு நோர்வேஜிய போலிஸ்காரர்கள் நின்று கொண்டிருந்தார்கள். பாபுவும் ரஞ்சியும் உறைந்தார்கள். "குமோர்ண். வீஆர் பொலித்தி கான்ஸ்டபிள் ஒக் கொம்மர் பிரா ஒஸ்லோ பொலித்தி ஸ்ரசூன்." என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.
(அவர்களுக்கிடையில் நோர்வேஜிய மொழியில் நடந்த உரையாடல் 6 (5LDITO)
"இங்க ஸ்டெல்லா என்ற பெண் இருக்கிறாளா?” *ஆம். அவள் என் மகள்." “நல்லது. அவள் இரவு கொடுத்த முறைப்பாட்டின்படி உங்களை அழைத்துச் செல்ல வந்திருக்கின்றோம்."
“என்ன? என் மகள் முறைப்பாடு செய்தாளா?” “பாபு, நேற்றிரவு நீங்கள் உங்கள் மகளை மோசமான முறையிலே அடித்திருக்கின்றீர்கள். கொடுமைப்படுத்தியிருக்கின்றீர்கள். இதுபற்றி ஸ்டெல்லா முறைப்பாடு செய்திருக்கிறாள்."
இந்த உரையாடல் பாபுவுக்கு ஞானத்தை ஏற்படுத்தியது. நேற்றிரவு நடந்த சச்சரவில், "அடியாத மாடு படியாது" என்று மகள் ஸ்டெல்லாவுக்கு இரண்டு தட்டுத் தட்டினான் பாபு. அவள் அதனை ஆட்சேபிப்பதுபோல, துஹார்லோ ஒஸ்லோ மை" என்றுநோர்வேஜிய மொழியில் ஆத்திரமாகப் பேசமுற்பட, பாபுவின் கோபம் கட்டுக்கடங்காது போனது. தன்னை மறந்த பாபு அவளைத் தாறுமாறாக அடிக்கவும், ஒடிச் சென்று தன் அறைக்குள் கதவைச் சாத்திக் கொண்டாள். இடையே புகுந்த ரஞ்சிக்கும் நல்ல அடி.
போலிஸ்காரர்கள் மிகப் பண்பாக விசாரித்து, அவர்களுடைய அனுமதியுடன் ஸ்டெல்லாவின் அறைக்குள் நுழைந்தார்கள்.

Page 39
60 வெளிநாட்டுக் கதைகள்
அந்த இடைவெளியைப் பயன்படுத்துவதுபோல, ஜோன்பாபு தன்னுடைய வாழ்வின் சில முக்கிய பக்கங்களைப் புரட்டினார்.
பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர், ஜோன்பாபு ஒரு வெள்ளைக்கார சுவாமியாரின் உதவியால், நோர்வே நாட்டுக்கு ஒரு மாணவனாக வந்து சேர்ந்தான். முதலில் நோர்வே மொழி கற்று, பின்னர் அதே மொழியில் தொழிற் கல்விப்பட்டமும் பெற்றான். கல்வித் தராதரத்துக்கு ஏற்ற வேலையும் கிடைத்தது. நோர்வே பெண் ஒன்றைக் கல்யாணம் செய்யும் வாய்ப்பினைத் தவிர்த்து தமிழ் அடையாளத்தைத் தன்னுடன் கல்லறைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்கின்ற தாகத்துடன், விடுமுறையில் ஊருக்குச் சென்று, ரஞ்சியைக் கல்யாணம் செய்து கொண்டான்.
ரஞ்சி ஊரிலே நர்ஸ் வேலை பார்த்ததால், ஒஸ்லோ சேர்ந்ததும், அவளுக்கு வேலையில் சேர்வது கஷ்டமாக இருக்கவில்லை. ஒன்பதுமாதத்திலேயே மொழியைக் கற்று, முதியோர் வைத்திய இல்லம் ஒன்றில் வேலை தேடிக் கொண்டாள்.
கணவன்-மனைவி இருவருமே வேலை செய்ததால், வீடு-கார் . மற்றும் ஆடம்பரப் பொருட்கள் சேர்த்து வசதிகளுடன் கூடிய வாழ்க்கையை ஏற்படுத்திக் கொண்டார்கள்.
ஸ்டெல்லா பிறப்பை ஒட்டி, ரஞ்சிமூன்று மாதம் பிரசவ விடுப்பில் நின்றாள். தொடர்ந்து வேலை செய்தால் வளத்தினைப் பெருக்கிக் கொள்ளலாம் என்பது தீர்மானமாகவே, குழந்தை ஸ்டெல்லாவைப் பார்த்துக் கொள்ள ஒரு டாக் மம்மா (Dagmamma) தேவைப்பட்டது. அவளுடன் வேலை செய்யும் நோர்வேஜியநர்சுகள், டாக் மம்மாவாக பல குழந்தைகளைப் பராமரிக்கும் ஒரு நோர்வேஜியப் பெண்மணியை அறிமுகஞ்செய்து வைத்தார்கள். ஸ்டெல்லாவை அவளுடைய பராமரிப்பிலே சேர்ப்பதில் எவ்வித சிரமும் இருக்கவில்லை. வேலைக்குச் செல்லும் பொழுது டாக் மம்மாவிடம் குழந்தையை ஒப்படைத்து, வேலையை விட்டு வரும்பொழுது குழந்தையை அழைத்து வருவது ரஞ்சிக்கும் வசதியாக இருந்தது. ஸ்டெல்லாவும் நோர்வேஜிய டாக் மம்மாவின் பராமரிப்பில் வளர்ந்தாள். பின்னர், "பாணஹாகென்” (BARNEHAGEN) என்றழைக்கப்படும் குழந்தைகள் கூடத்திலே சேர்க்கப்பட்டாள். இப்பொழுது “உண்டம்” ஸ்கூலில் சேர்த்து, இன்று எட்டாவது படிக்கின்றாள்.
ஸ்டெல்லா இவ்வாறு நோர்வேஜிய பராமரிப்பிலும், சூழலிலும் வளர்வது அவர்களுக்குப் பெருமையாகவும் இருந்தது. இருவரும் வேலை செய்து வளத்தைப் பெருக்கிக் கொள்ளவும் அது தோதா இருந்தது. நோர்வேஜில் வாழும் சகதமிழர்களுக்கு தங்களுடைய அந்தஸ்தினைப் பறை சாற்றி விருந்துக் கேளிக்கைகளை வார இறுதி சிலவற்றிலே நடத்தி மகிழவும் வாய்ப்பு ஏற்பட்டது. எல்லாமே மகா சுமுகமாக நடைபெறுகின்றன என்று ஜோன்பாபு தம்பதிகள் கட்டிய கோட்டைதான் நேற்றுமாலை நடந்த சம்பவம் ஒன்றினால் தகர்ந்தது.

புதிய தலைமுறை 61
நேற்று வேலையிலிருந்து திரும்பும்பொழுது, இரண்டு தமிழ் வீடியோ படங்களை எடுத்து வரலாம் என்று வீடியோக் கடைக்கு பாபு சென்றான். அவன் அங்கு நிற்பதைச் சட்டை செய்யாத இளவட்டக் கும்பல் ஒன்று அரட்டையில் ஈடுபட்டிருந்தது.
"ஆரு மச்சான், அந்த வெள்ளைப் பொடிச்சி? முழு எடுப்பும் உந்த நோர்வேஜியன்காரியளைப் போல. விழுந்து விழுந்து, ஸோ சோஷல் என்னாலை நம்ப முடியோல்லை மச்சான்.”
“எனக்கெண்டாப் போலை? அவளைத் தமிழ்ப் பெட்டை எண்டே சொல்ல முடியாதாம். அவள் இங்கைதான் பிறந்து வளர்ந்தவளாம். எங்கடை தமிழ்ப் பொடிச்சியளோடை பழக மாட்டாவாம். எல்லாம் நோர்வேஜிய பொடியன்களும் பொட்டைகளுந்தான் அவவின்ரை பிரண்ஸ்மாராம்"
"அவவின்ரை அப்பர் இங்கை ஸ்ருடண்டாக வந்து, இங்கையே படிச்சவர் எண்ட எடுப்பு."
"உமக்கு இன்னொரு விஷயம் தெரியுமே? அவை வீட்டிலையும் தமிழிலை கதைக்கிறேல்லையாம். நொஸ்கிலைதான் குசுவும் விடுகினமாம். மச்சான்." என்று ஊத்தைப் பகிடியை விட்டுக் கடகடத்துச் சிரித்தான்.
"அவளின்ரை பெயர் என்ன மச்சான்? "ஸ்டெல்லாவாம். என்ரை அண்ணனின்ரை மகள் கூட இவள் படிக்கிற 'உண்டம் ஸ்கூலிலைதான் படிக்கிறாள். இன்னும் இரண்டு மூண்டு தமிழ்ப் பிள்ளையஞம் அங்கை படிக்கினம். அவங்களோடை இவள் கதைக்க மாட்டாளாம்". "நான் கேள்வி மச்சான் இவள் நோர்வேஜிய பொடியளோடை சேர்ந்து பியரும் அடிக்கிறவளாம். அவள் வளையம் வளையமாய் புகை விடுறதைப் பார்த்து நாங்கள் பிச்சை எடுக்க வேணும் மச்சான்."
இதற்கு மேல் அவர்களுடைய சம்பாஷனையை கேட்டுக் கொண்டிருக்க ஜோன்பாபுவால் முடியவில்லை. பொடியன்கள் இவருடைய மகளைப் பற்றித்தான் "கமெண்ட் அடிக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்ட வீடியோக் கடைக்காரன் மசிந்தினான். பாபுவுக்கு உலகமெல்லாம் இருண்டு வருவது போல. தான் கட்டிக்காத்த கெளரவம் எல்லாம் றோட்டிலே அடிக்கப்பட்ட சிதறு தேங்காயைப்போல. வீடியோ படமும் எடுக்காமல் உடனேயே திரும்பிவிட்டான்.
எங்கேயோ பிழை நடந்து விட்டது! எத்தகைய ஒரு மகத்தான வாழ்க்கையை அவன் தனது குடும்பத்திற்கு அமைத்துக் கொடுக்க உழைத்துக் கொண்டிருக்கின்றான்.
இந்த அன்னிய நாட்டிலும் கெளரவமாகப் பரம்பரை பரம்பரையாக வாழலாம் என்கின்ற இனிய கனவுகள், காற்றிலே கலைந்த கடுதாசிக் கூட்டமாளிகை போல.

Page 40
62 வெளிநாட்டுக் கதைகள்
அவன் மனம் துர்வாச முனிவனாக மாறியது. நெஞ்சிலே கனன்று கொண்டிருந்த அக்கினியை யார்மீதாவது கொட்டித் தீர்க்க வேண்டும்.
இரவு ஏழு மணிக்கு ரஞ்சி வேலையிலிருந்து வீடு திரும்பினாள்.அவள் வந்து கால்கூட ஆறவில்லை.
'இவள் ஸ்டெல்லாவை நீ எப்படி வளர்த்திருக்கிறாய்? "ஏன்? என்னவாம்? என்று அசிரத்தையுடன் கேட்டாள். தமிழ்ப் பொடிச்சியளுக்குத் தேவையான அச்சம், மடம், நாணம, பயிர்ப்பு வேண்டாம். கொஞ்சம் அடக்க ஒடுக்கமாவது வேண்டாமா?
அவளுடைய போக்குக்கு எப்பவும் நீங்கள்தானே 'சர்ப்போட்' இப்ப என்ன வந்தது?
'றோட்டிலை நிண்டு கண்டவன் நிண்டவன் எல்லாம் பேசறான். பியர் குடிக்கிறாளாம். சிகரெட்டாய் ஊதித் தள்ளுறாளாம். நோர்வேஜிய மனுசி எண்ட நினைப்பிலை குதிக்கிறாளாம்.
"உங்களுக்கு கூழுக்கும் ஆசை. மீசைக்கும் ஆசை. வேலைக்குப் போகாமல் அவளைக் கவனிக்கலாம் எண்டு நான் சொன்னன். நர்சு வேலையிலை பொல்லாலை அடிச்ச காசு வருகுதெண்டு நீங்கள்தான் சொன்னியள். பணம் பணம் எண்டு சேர்த்தீர்கள். நொக்ஸிலை அவள் விண்ணியானால் போதுமெண்டு குதிச்சீங்கள். இப்ப என்ரை வளர்ப்பைப் பற்றிப் பேச வந்திட்டியள்." அவளும் தன் பங்குக்குப் பாய்ந்தாள். வேலைக்குப் போய் அவள் படும் சிரமம் அவளுக்குத் தெரியும்.
ஜோன்பாபுவுக்கும் ரஞ்சிக்கும் இடையில் வாய்த்தர்க்கம் சூடேறிக் கொண்டிருந்த பொழுது, ஸ்டெல்லா வீட்டுக்குள் மெதுவாக நுழைந்தாள்.
‘உதிலை நில்லும் நோனா. ஸ்கூல் விட்டு எவ்வளவு நேரம்? இவ்வளவு நேரமும் எங்கை உலாத்திப்போட்டு வாறாய்? என்று ஸ்டெல்லாமீது பாய்ந்தான். தகப்பனிடமிருந்து இந்தத் தாக்குதலை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஏற்றுக் கொள்ளக் கூடியதான பதிலும் அவளிடம் இருக்கவில்லை. எதுவுமே நடக்காதது போல தன்னுடைய அறைக்குச் சென்றாள். 'வாடி இங்கை. அப்பா கேட்டுக் கொண்டு நிக்கிறார். கேட்டதுக்குப் பதில் சொல்லன்டீ" என்று கத்தினாள் ரஞ்சி.
‘வா சொம் சேட் போர் தேர இடாக்" என்று நொஸ்கிலே பேசிக் கொண்டு ஸ்டெல்லா தன் அறையிலிருந்து வெளியே வந்தாள்.
பாபுவுக்கு அவள் பேச்சையும் போக்கையும் தாங்க முடியவில்லை. தமிழிலை பேசுடி. நொஸ்கில பேசுறாளாம் நொஸ்கில! நீ என்ன நொஸ்கனுக்குப் பிறந்தவளா? என்று இரைந்தான்.
"ஏன் என்ன நடந்தது? புதினமா தமிழ், நொஸ்க் என்று பேசுறியள்? இன்றைக்கு என்ன வந்திச்சு?

புதிய தைைமுறை 63 "ஊரிலை சந்திக்குச் சந்தி நிண்டு, நீ நோர்வேஜிய பெடி பெட்டைய ளோடை அடிக்கிற கும்மாளத்தை பற்றித்தான் பேசுறாங்கள். அதுதான் கேக்கிறன். ஏன் இவ்வளவு நேரம் பிந்தி வீட்டுக்கு வாறாய்?
"ஓ அதுவா? அதுதானே பார்த்தன். இரண்டு பேரும் காலையில் எழுந்து வேலைக்கு ஒடுறீர்கள். வீட்டுக்குத் திரும்பினால், சமையல், ரி.வி, வீடியோ, சாப்பர்டு, உறக்கம்! எனக்குப் பேச - பழக-சிரிக்க எல்லாம் ஸ்கூல் பிரண்ஸ்தான்! இது தெரியேல்லையா? என்று ஏளனத் தொனியில் சொன்னாள்.
“பொத்தடி வாயை. உனக்கு நாக்கு நீண்டு போச்சு என்று பாய்ந்து ஸ்டெல்லாவுக்கு ஓர் அறை விட்டான் பாபு.
இதனை ஸ்டெல்லா சற்றும் எதிர்பார்க்கவில்லை. "ஸ்ரொப்,து ஹார் இக்க லோ ஒஸ்லோ மை” என்று வலிதாங்கமாட்டாது கத்தினாள் ஸ்டெல்லா.
பாபு தன்வசம் இழந்தான். கைகளாலும், கால்களாலும் ஸ்டெல்லாவைத் துவைக்கத் துவங்கினான். விலக்குப் பிடிக்க இடையிலே புகுந்த ரஞ்சியும் வாங்கிக் கட்டிக் கொண்டாள்.
மழை ஓய்ந்தது. ஸ்டெல்லாதன் அறைக்குள் புகுந்து கொண்டாள். அவள் விசும்பும் சத்தம் நீண்ட நேரமாகக் கேட்டது.
சோபாவில் வந்து அமர்ந்த பாபுவுக்கு நிதானம் திரும்பியது. அவளுக்கு இப்பொழுது பன்னிரண்டு வயது. தந்தை தாயாக அவர்கள் ஸ்டெல்லாவுடன் செலவு செய்த நேரம் பற்றிய கணக்கெடுப்பும் நடந்தது. பிழை தங்கள் மீதும் உண்டு என்பது இலேசாக உறைக்கலாயிற்று. பணம் சம்பாதிப்பதிலேயே காட்டிய ஆர்வம், சில விஷயங்களை விட்டுக் கொடுக்கச் செய்து விட்டது.
சாப்பிடவில்லை. யாருடனும் பேசவில்லை. சோபாவில் சுருண்டு படுத்துவிட்டான்.
இப்பொழுது கோப்பி குடிக்கும் பொழுது போலிஸார் வந்து விட்டனர். நோர்வேஜிய சட்டம் ஜோன் பாபுவுக்குத் தெரியாததல்ல. அச்சட்டத்தின்படி யார் யாரையும் அடித்துத் துன்புறுத்துவதற்கு இடமில்லை. கட்டிய மனைவி, பெற்ற பிள்ளை ஆகியவர்களைக்கூட அடித்துத் துன்புறுத்த முடியாது. யாராவது முறைப்பாடு செய்தால் சட்டம் தன் கடமையை செய்யும்.
ஸ்டெல்லா நோர்வேயில் பிறந்தவள். வளர்ந்தவள். புதிய தலைமுறையைச் சேர்ந்தவள். சட்டத்தின் பாதுகாப்பினைத் தேட அவளுக்கு உரிமை உண்டு.
அந்த உரிமையை எடுத்துக் கொண்டுள்ளாள். ஸ்டெல்லாவின் அறைக்குள் சென்ற போலிஸார் திரும்பினார்கள். அவளிடமிருந்து முறைப்பாட்டினை எழுதி வாங்கியிருக்க வேண்டும்.
'யே பாத நோ கான் விட்ரா தில் பொலித்தி ஸ்டசூன்' என்றான் ஒருவன்.

Page 41
64 taafgartså aeopsair
தான்வேலைக்குச் செல்ல வேண்டும். அன்றேல் வரமுடியாது என்று அறிவிக்க வேண்டும் என்று பாபு தயங்கினான்.
“அதனை ஸ்டேஷனிலே ஒழுங்கு செய்ய முடியும்” என்று அவர்கள் நாகரிகமாகச் சொன்னார்கள்.
ரஞ்சியால் எதுவுமே பேச முடியாமல் பிரமை பிடித்தவளைப் போல நின்றாள்.
ஸ்டெல்லா அறையை விட்டு வெளியே வரவில்லை.
"ஸ்கால் வி” என்று போலிஸார் சொன்னதும், இயந்திர வேகத்தில் அவர்களைப் பின் தொடர்ந்தான் பாபு.
புலம் பெயர்ந்த புதிய நாடுகளிலே புதிய தலைமுறை ஒன்றும் உருவாகி வருகின்றது என்கின்ற ஞானத்தினைப் பரப்பும் முன்னோடியா ஸ்டெல்லா?
கோவிலூர் செல்வராஜன், விடியாத இரவுகள் (சிறுகதைத் தொகுதி)
1997,மித்ர வெளியீடு,சென்னை.


Page 42


Page 43
இராசையா தவமணிதேவி
(202622Zے -- 2726226 67.224
ஐங்கரதி மயிலிட்டி, அல்வாய் sitesness
ர. இதயதேவி, செ. ஜெயதேவி, ყ. ძfaრი/634ჩიჩiazionნენ), 6, ., გვრი/შტრon
இ. ஜங்கரன்
மருமக்கள் : மா. ரவிரதன், J. செல்வராச7 செ. புலம்பகேந்திரன்(சுவிஸ்) ஐ.உதயரத்தினம் பேரப்பிள்ளைகள் : ர.ராஜிதா, ர. இபரதன்,
ர. மீனுதா, செ.க்ைஷிதா, செ.க்ைஷித மு. மானஷாசுவிஸ்), உ. சஜீவராஜ்
உ. சுஜீவராஜ், உ. சரீனா ܓܔܢܠ
 

〔 、
ാ
| . ാ
〔