கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வெள்ளைக் கமலம்

Page 1

1-2 IITiglar

Page 2
',
 


Page 3
பதிப்புரை
ஈழத்திருநாட்டிலே இனிய செந்தமிழ்ப் பாடல்களைப் பல ஆண்டுகளாக யாத்து வருபவர் கவிஞர் அரியாலையூர் வே. ஐயாத் துரை அவர்கள்.
பத்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடும் இவரது கவிதை களில் இனிமையும் எளிமையும் கருத்து வளமும் செறிந்து கிடக்கக் காணலாம். சிறந்த நாடக நடிக ரான கவிஞர் அவர்கள் கவியரங்கங் களில், தாம் யாத்த பாடல்களை இனிமையுடன் பாடும்போது அதிற் சொக்காதவர்கள் இல்லையென்றே ಚಿàp6 Ftb.
யாழ். இலக்கிய வட்டத்தின் செயற்குழு உறுப்பினரான கவிஞர் வே, ஐயாத்துரை அவர்கள் இப் பொழுது யாழ். தொல்பொருள் ஆராய்ச்சி நிலையத்திற் கடமை புரிகின்ருர்,
இதுவரை காலமும் எழுத் தாளர்களது நால்களை அழகுற வெளியிடு வதி ல் முன்னணியில் நிற்கும் யாழ். இலக்கிய வட்டம் தனது 21ஆவது வெளியீடாகக் கவிஞரது ‘ வெள்ளைக் கமலம் என்னும் கவிதை நூலே வெளியிடு வதில் மகிழ்ச்சியடைகின்றது.
எமது ஏனைய பதிப்புக்களை மகிழ்ச்சியுடன் ஆதரித்து வரவேற்ற இலக்கிய இரசிகர்களது கரங்களில் இந்நூலையும் புதியதோர் விருந் தாகப் பணிவன்புடன் சமர்ப்பிக் கின்ருேம்.
காரை செ. கந்தரம்பிள்ளை இணைச் செயலாளர் யாழ். இலக்கிய வட்டம் 677/9, கடற்கரை வீதி, யாழ்ப்பாணம், 鲁6-1一75。

டெ
வெள்ளைக் கமலம்
கவிஞர் அரியாலையூர் வே. ஐயாத்துரை
வெளியீடு : யாழ். இலக்கிய வட்டம் யாழ்ப்பாணம்
1 9 5

Page 4
யாழ் இலக்கிய வட்ட வெளியீடு -21
முதற் பதிப்பு தை , 1975
உரிமை : திரு. வே. நடராசா
விலை : ரூபா 3-50
திருமகள் அழுத்தகம், சுன்னுகம்

.ெ
காணிக்கை
பிள்ளைப்ப ராயம் முதற்கலை
வாணியின் பேரருளைக் கொள்ளத் தகும்முறை கோயில்
அமைத்துக் கொடுத்துவந்த வள்ளல் கதிர்வேலுப் பிள்ளை
யெனுந்தந்தை வண்மையினல் வெள்ளைக் கமலமென் பாமலர்
அன்பாய் விளைந்ததுவே !
விரிகின்ற வெள்ளைக் கமலத் திதழ்மணம் வீசியெழில் புரிகின்ற தற்குப் புனைந்துற்ற
பூங்கவி ப்ொன்னெழுத்தில் தரநின்ற தந்தைதாய் நற்சோ
தரன்துணை சார்ந்தவர்க்கும் சரிநின்ற அன்போடு காணிக்கை யாகச் சமைத்துளனே !

Page 5
டெ
என்னுரை
வாணி அருளால் வெள்ளைக் கமலம் splíša 36ír கைகளிலே திகழ்கின்றது.
வெள்ளைக் கமலம் மூலம் பெரிய சாதனையைச் சாதித்துவிட்டேன் என்று நான் கருதவில்லை. வாணி யருளால் இவ்வளவாவது நாட்டிற்கு ஆற்ற முடிந்ததே என்ற நினைவே எனக்கு இதமளிக்கின்றது.
சிறுவயது தொடக்கம் நாடகத்தில் ஈடுபாடு கொண் டிருந்த என்னைக் கவிதைத் துறையில் அடியெடுத்து வைக்க வழிகாட்டியவர் அரியாலை பூரீ கலைமகள் நாடக சபாவின் தலைவரும் , எனது சிறிய தந்தையாருமாகிய திரு என். செல்லக்கண்டு அவர்களே. அவர்களுக்கும், கவிதைத் துறை யில் தத்திநடக்க முயன்ற எனது குடும்பச்சுமைகள் அனைத் தையும் தம் தலைமேல் தாங்கி நேர்வழி காட்டிய அண்ணு திரு. வே. நடராசா, அண்ணி தங்கம்மா நடராசா, எனது துணைவி மகாலட்சுமி ஆதியோர்க்கும் எனது அன்பு வணக்கம்,
ஏதோ ஒர் உந்தலினல் எனது ஒய்வுநேரத்தில் எழுதிய கவிதைகளைக் கண்ணுற்ற தொல்பொருட்கலை உத்தியோகத்தர் திரு. ம. பொ. செல்வரத்தினம் அவர் களின் முயற்சியால் கோணேசப்பெருமான் மீது பாடிய கவிதை முதன்முதலாகப் பத்திரிகையில் பிரசுரமாகியது. அதுகண்டு என்னிலும் பார்க்க அவரே மகிழ்ச்சியடைந் தார். அன்னரது ஆதரவும் அன்பும் புதியதோர் திருப்பத்தினை ஏற்படுத்தியது:

y
கவிதைத்துறையில் என்னுடன் நெருங்கிய ஈடுபாடு கொண்டு ஊக்கமும் உற்சாகமும் அளித்த அமரகவிகளாகிய அல்வாயூர்க் கவிஞர் திரு. மு. செல்லையா, மதுரகவி திரு. இ. நாகராஜன், மகாகவி திரு. உருத்திரமூர்த்தி அவர்களையும் மனமார அஞ்சலி செய்கின்றேன்.
கையெழுத்துப் பிரதிகளை நான் கேட்கும்பொழுதெல் லாம் தட்டச்சில் மகிழ்ச்சியோடு அமைத்துதவிய என் அன்பார்ந்த நண்பன் நுணுவிலூர் திரு த. கனகரத்தினம் அவர்களுக்கும், இவ் "வெள்ளைக் கமலம் சிறந்தமுறையில் வெளிவரவேண்டு மென்னும் பேராவல் உந்த அச்சுப் பார்வைப் பொறுப்பினை ஏற்றுச் சீர் பெற அமைக்க முன்வந்துதவிய என் மதிப்புக் குரிய நண்பன் கவிமணி வி. கந்தவனம் அவர்களுக்கும் எனது நன்றி உரியதாகும்.
என்னை அடிக்கடி சந்தித்து எனது கவிதைகள் குறித்துக் கருத்துப் பரிமாறல்கள் புரிந்து வந்ததோடு, "வெள்ளைக் கமலம்" வெளிவருவதற்குப் பல்வேறு வகையில் உதவிய எனது இலக்கிய நண்பர்களாகிய திருவாளர்கள் கவிஞர் காரை செ. சுந்தரம்பிள்ளை, நவாலியூர் நடேசன், சுண்டிக்குளி யாழ். நாடகக் கலாமன்றத் தலைவரும், இயக்குநருமாகிய வீ. சி. பரமானந்தம், ஐயா யோசேப், நா. சண்முகநாதன் ( யாழ் வாண ன் ) ஆகியோ ரின் ஆதரவை மறக்கமுடியாது. -
இந்நூலிலே தமது உள்ளத்தின் ஆழத்திலிருந்துவந்த அன்பு மொழிகளால் என்னை வாழ்த்திய பெரியார்கள் திருவாளர்கள் ம. பொ. செல்வரத்தினம், அரியாலையூர் அ. விசுவநாதன் ஆகியோருக்கும் இந்நூலுக்கு முன்னுரை வழங்கிய ஈழத்தின் முது பெ ரும் கலை ச் செ ல் வரான இரசிகமணி கனக. செந்திநாதன் அவர்களுக்கும் எனது நன்றியை மதிப்புடன் செலுத்துகின்றேன்.

Page 6
viii
நண்பர் ஐயாத்துரை கடவுளை வணங்கி, சமயா சாரப்படி ஒழுகி, அயலவனின் உள்ளத்திற் சிவனைக் கண்டு வணங்கிவரும் பெரியவர். அவர் ஓர் ஏழையாயினும் ஏழமைத்தன்மையற்றவர். பண்பும், ஒழுக்கமும், அமைதி யும், அடக்கமும் நிறையப் பெற்ற ஒருவர். அவர் வாழ்க, அவரது பாக்கள் வாழ்க, அவர் வழியால் எமது அரியாலையூர் வாழ்க என வாழ்த்துகிறேன். வாழ்க! நீடூழி வாழ்க!
அ. விசுவநாதன் சட்டத்தரணி அரியாலை மேற்கு வட்டார உறுப்பினர், யாழ்ப்பாணம்,

அணிந்துரை
* சரஸ்வத்யா லக்ஷம்யா " என ஆதிசங்கர் செளந்தரிய லஹரியின் ஒரு சுலோகத்தில் வரிசைப்படுத்தி முதலில் விவேகத்துக்கும் பின்பு செல்வத்துக்கும் இடமளித்ததை நன்கு உணர்ந்த அரியாலையூர்க் கவிஞர் வேலுப்பிள்ளை ஐயாத்துரை அவர்கள் கலைமகள் உபாசனையில் மிக மேலான ஈடுபாடு கொண்டவராவார் . கலைமகளது திருவருளின் பெருக்கால் உள்ளத்தில் எழுந்த கருத்துக் களைக் கவிதை வடிவில் தந்துள்ளார்.
பலருமறியாத இவரது புலமையையும் தெய்வீக சக்தி யையும் இவரது கவிதை புலப்படுத்துகின்றது. கவிதைகள் ஆழ்ந்த கருத்து, ஓசை நயம், லயம் ஆதிய ஒருங்கே அமைந் தவை.
சிற்பம் பொறித்தல், ஓவியம் தீட்டுதல், காவியம் பாடுதல் சாதாரண செயல்களல்ல. காவியம் படித் துணர்வது, சிற்பம் ஓவியம் பார்த்துணர்பவை, இவற்றிற் பயிற்சிபெற, முதலில் காவிய உணர்ச்சி பெறவேண்டும்; சிறந்த ஒழுக்கம், பக்தி முதிர்ந்த உள்ளம், மாசற்ற அகத் தூய்மை வேண்டற்பாலது. இக் கவிதைத் தொகுதி இப் பண்புகளைப் பிரதிபலித்துக் காட்டுகின்றது.
பண்டைச் சம்பிரதாயத்தை அனுசரித்து அறம் பொருள் இன்பம் நுகரக்கூடியதாயும் உயிர்க்கு உறுதி பயக்கும் கல்வியை வளம்படுத்தக்கூடிய வகையிலும் இந்நூல் வகுக்கப்பட்டுள்ளது. பண்பாடு வளர, தொல்பொருள் துறையில் சேவையைப் பயன்படுத்தி இக் கவிதையைத் தொகுத்தளித்தமை போற்றுதற்குரியது. இவ்வியத்தகு தொண்டுக்குத் தமிழ்ப்பெருமக்கள் ஊக்கமளிக்கவேண்டும்.
ம. பொ. செல்வரத்தினம்
தொல் பொருள் கலை உத்தியோகத்தர் யாழ்ப்பாணம்
ii

Page 7
ଈ.
இரசிகமணி கனக. செந்திநாதன் வழங்கிய முன்னுரை
கவிஞர் அரியாலையூர் வே. ஐயாத்துரையின் "வெள்ளைக் கமலம்' என்ற இந்தக் கவிதைத் தொகுதிக்கு முன்னுரை எழுதத் தொடங்கும்போது என் நெஞ்சில் இனிய நினைவுகள் எழுகின்றன.
யாழ். இலக்கியவட்டத்தைத் தொடங்கும்போது இந்தக் கவிஞர் அறிமுகமானுர், கவி அரங்கங்களைத் தன் இனிய குரலால் களைகட்டச் செய்தார். கவிமணி வி. கந்தவனம் தலைமைதாங்க, கவிஞர்கள் இ. நாகராஜன், செ, கதிரேசர் பிள்ளை, காரை செ. சுந்தரம்பிள்ளை, வே. குமாரசாமி என்போர் பலவகை அமைப்பிலே பாடக் கவிஞர் வே. ஐயாத்துரை கவியரங்கத்தை முடிக்கும் அழகே தனிச் சுவை. இந்தக் கவிஞர் கூட்டத்தை வழிநடத்தியவர் மதுர கவி இ. நாகராஜன். கவியரங்கத்துக்கு யாழ்-மாவட்டத் திலே ஒரு மதிப்பை உண்டாக்கிக் கிராமம் கிராமமாகக் கவிதா இரசனையை வளர்த்த பெருமை இக்கூட்டத் துக்கு உண்டு. சென்ற ஆறேழு ஆண்டுகளாகக் கவிஞர் ஐயாத்துரையின் பெயர் பிரபலமாக இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் இக் கவியரங்கங்களே. ஆம், யாழ். இலக்கியவட்டம் கண்டெடுத்த முத்து இந்தக் கவிஞர் வே ஐயாத்துரை. இதை எழுதும்போது "கலைமகள் பத் திரிகையில் வந்த ஒரு குறிப்பு ஞாபகத்துக்கு வருகிறது. மதுரைப் பல்கலைக்கழக உபவேந்தர் டாக்டர் "மு. வ." தான் அதைக் கூறியிருந்தார். அது பின்வருவது:
'வெறும் பயிற்சியாலும் உழைப்பாலும் திறமையா லும், மட்டும் படைப்பிலக்கிய ஆசிரியர்கள் உருவாகி விடுவதில்லை. இறைவனின் தனிப்பட்ட கருணையினல் சில ருக்குப் படைப்பாற்றல் கிடைக்கின்றதென நான் நம்பு கிறேன். படித்தவர்களும், பட்டம் பெற்றவர்களும் ஒரு

Χί
சிலர் எழுதுகிருர்கள். இவை எதுவுமே இல்லாதவர்கள் சிலர் முன்பும் எழுதியிருக்கிருர்கள். இப்போதும் எழுதிவரு கிருர்கள். சிறந்த படைப்பிலக்கியங்களைத் தோற்றுவிப்ப வர்களை இறைவனின் செல்லப்பிள்ளைகள் என்று எனக்கு நினைக்கத் தோன்றுகின்றது. அவர்களைச் சமுதாயம் போற்றிப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்."
இந்த வசனங்களை வாசிக்கும்போது நான் கவிஞர் வே. ஐயாத்துரையை நினைக்கிறேன். இவை அவர் வாழ்க் கைக்குச் சரியாகப் பொருந்துகிறது. ஆம், இந்தக் கவிஞர் கடவுளின் செல்லப்பிள்ளை, கலைமகளின் கடைக்கண் பெற்ற குழந்தை, யாழ்ப்பாணத்து அரியாலையில் கலைமக ளுக்கெனக் கோவில் ஒன்றைச் சமைத்து அவளையே சதா தியானித்து, வெள்ளியால் அங்கி அணிவித்து அவளின்றி நானில்லை என வாழ்பவர் கவிஞர் ஐயாத்துரை. "நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை என அவர் வாழ்வதால் அவளது அருட்பார்வை அவருக்குக் கிட்டுவதா யிற்று. அதன் பெறுபேறே இந்த " வெள்ளைக் கமலம்' என்ற கவிதைத் தொகுதி.
இத் தொகுதியைக் கவிஞர் கலைமகளின் அருளாலே தான் படைத்திருக்கிறேன் எனக் கூச்சமின்றி- வெளிப் படையாக -கூறியுமுள்ளார். அவர் கூறியிருப்பது இது:- "வாணி அருளால் வெள்ளைக் கமலம் உங்கள் கைகளிலே திகழ்கின்றது. வெள்ளைக் கமலம் மூலம் பெரிய சாதனை யைச் சாதித்துவிட்டேன் என்று நான் கருதவில்லை. வாணி அருளால் இவ்வளவாவது நாட்டுக்கு ஆற்ற முடிந்ததே என்ற நினைவே எனக்கு இதமளிக்கின்றது."
வெள்ளைக் கமலம் என்ற இக்கவிதைத் தொகுதியைப் பார்க்கமுன் இந்தக் கவிஞர் எத்தகைய போக்குடையவர், நோக்கமுடையவர்? அவர் சூழல் எப்படிப்பட்டது? அவர் யாரால் வழிநடத்திச் செல்லப்பட்டார் ? அவர்தம் இயல் புக்கேற்ப எந்தெந்தப் பொருளைத் தொட்டுப் பாடுகிருர் ? காலத்துக்கேற்ற கவிஞராய் விளங்குகிருரா ? என்பதை நாம் சற்றுச் சிந்தித்துப் பார்க்கவேண்டும் : அல்லது இந்தக்

Page 8
xii
கவிஞரை நம்மால் புரிந்துகொள்ள முடியாது யானை பார்த்த குருடர்களாகிவிடுவோம்.
கவிஞர் ஐயாத்துரை எப்படிப்பட்டவர்? அவர் வாழும் வட்டாரத்திலே உள்ள சட்டத்தரணியும் அரசியல் பிர முகருமாகிய விசுவநாதன் கூறுகிருர் - 'நண்பர் ஐயாத் துரை கடவுளை வணங்கிச் சமயாசாரப்படி ஒழுகி, அயலவ னின் உள்ளத்திற் சிவனைக் கண்டு வணங்கிவரும் பெரியவர். அவர் ஓர் ஏழையாயினும் ஏழைமைத் தன்மையற்றவர். பண்பும் ஒழுக்கமும் அமைதியும் அடக்கமும் நிறையப் பெற்றவர். அவர் பிறப்பில் வசதியற்றவராக இருந்தாலும் கூடக் கலையை வளர்க்கும் பணியிலே அக்குறைபாடு ஒரு தடையாக இருக்க இடமளிக்காத ஒருவர். கலையுலகிலே அவர் ஒரு பெரியார்."
கவிஞர் ஐயாத்துரையை அறிந்தவர்கள் திரு. விசுவ நாதனின் கூற்றை அப்படியே ஒப்புக்கொள்வர். அமைதி, அடக்கம், பண்பு, சமயநெறி கைகூடியுள்ள இக்கவிஞரை இளமையிலே வழிநடத்தியவர் காந்தீயநெறியில் நின்ற அல்வாயூர்க் கவிஞர் மு. செல்லையா அவர்களாவர்.
எனவே, இந்தக் கவிஞரின் பாடல்களில் அன்பு, அடக்கம், தெய்வீகப் பண்பு, காந்தீயநெறி, பழைமை போற் றும் பண்பு, இடாம்பீகத்தை வெறுக்கும் குணம், போலி களைக் கண்டு சினம், அமைதியான காலத்துக்கேற்ற முயற்சி என்பவை கருப்பொருளாக அமைந்திருப்பதை நாம் காணலாம்:
வெறும் "வெறிப்பிரசாரமும் எந்த இசப் பிரசார மும் இவர் பாடலில் இல்லை. அவருடைய தங்கக் குணத் துக்கேற்ற "தண்மை"ப் பாடல்கள் இவை. 'நெட்டிருப்புப் பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின் வேருக்கு நெக்குவிடும் " என்பது நமது ஆன்ருேர் கண்ட வழி, அதை நம்பி அவ்வழிச் செல்பவர் இக்கவிஞர்.
* வெள்ளைக் கமலம் தூய்மை அழகு இவற்றின் சின்னம் : தமிழ்ப் பண்பாட்டின் ஒரு குறியீடு கலைகளிலே

xiii
பின்னிப்பிணைந்த ஒர் அம்சம். இக் கவிதைநூலின் பிண்டப் பொருளை ஒரளவு உணர்த்தக் கவிஞர் இப்பெயரை நூலுக்குச் சூட்டியுள்ளார் என எண்ணுகின்றேன்.
இந்த "வெள்ளைக் கமலம் நான்கு இதழ்களாக விரிகின் றது. அவை அன்பிதழ், ஆய்விதழ், அருளிதழ், அரங் கிதழ் என்பனவாகும். முதற் கண் உள்ள அன்பிதழ் பதி ணுெரு தலைப்புக்களைக் கொண்ட பாடல்களாகும். கலைமக ளில் தொடங்கிக் காந்தியில் முடிவடைகிறது இவ்விதழ் கவிஞர் தமது குலதெய்வமாகிய கலைமகளை, ' பக்தி பெரு கிடவே-உளப், பாங்கு சிறந்திடவே, சக்தி அருள் புரி வாய்-அன்புத், தாயே சரஸ்வதியே' எனப் பரவி வாசகப் பெருமக்களை உள்ளே அழைத்துச் செல்கிருர், பின்பு,
'கண்ணுன கண்ணென்று காதலிசை கனியக் கட்டிக் கரும்புகற் கண்டென்று சொல்லித் தண்ணுருந் தமிழினுற் சங்கீதஞ் சாரச் சர்க்கரை அமுதென்று தாலாட்டுப் புனைவாள்' எனத் தாயுள்ளத்தைப் படம்பிடித்துக் காட்டுகிருர், தாயை அடுத்துத் தமிழ்த் தாயை வணங்கும் காட்சி உள்ளத்தைத் தொடுகிறது. அடுத்து ' என்றன் மூப்பில் விடாமல் கண்டித்தும் தண்டித்தும் வளர்த்த " தந்தைக்கு வணக்கம் செலுத்துகிருர், "மூப்பில் விடாமல் " என்ற நாட்டுமொழி " பாட்டினிடையில் நல்ல கற்கண்டினிமை" சொட்டுகிறது. பிறகு மனைவியின் பண்பைத் தொட்டுக் காட்டிவிட்டு " பெரிய வீட்டை " அணுகச்செய்கிருர். இது வரை கொஞ்சம் அவசரமாகவே வந்த வாசகர்கள் பெரிய வீட்டில் சற்றுத் தாமதிக்கவேண்டும். இங்கேதான் கவிஞர் ஐயாத்துரை தம்மை எப்படிப்பட்ட கவிஞர் என்று இனம் காட்டுகிருர்: " இடம்பட வீடெடேல் " என்பது பண்டைப் பழமொழி: இப்போது இது போயே போய்விட்டது. "அங்கே இங்கே கடன் வாங்கி ஆமான வீடு கட்டிவிட்டேன்" எனக் கிராமத்துக் குடிமகனும் வீம்பாகச் சொல்லுகிருன், எளிமையும் அடக்கமும் வசதியுமாக இருந்த "நாற்சார் ? வீடு இப்போது எங்கே? அதைக் கவிஞர் வர்ணிக்கிருர்:-

Page 9
Xiy
* கொட்டிலோ பெரிய கொட்டில்
குடும்பத்திற் குகந்த நல்ல தட்டுமுட் டனைத்தும் வைத்தே
சால்புற வாழ முன்னர் கட்டிய களிமண் வீடு
காணியும் களிகாண் மேடு தொட்டநல் மனைவி யார்தம்
சுதந்தர மான சொத்து"
அந்த வீட்டுக்குள் சென்று பார்த்தால் "ஆஹா, ஆஹா " என்று மனம் துள்ளும். 'திருவெழு கலப்பை திண்மை சேருமண் வெட்டி செந்நெல், அரிவுவாள் கதிர்ப்பாய் வீச்சுக் கமைவுள சுளகு குப்பை, எருவினை எளிதாய் ஏற்ற இரு சோடி மாட்டு வண்டி, அரிய பாற் பசுக்கள் பட்டிக் காயநல் ஆட னைத்தும் ' அங்கு காணப்படுகின்றன. கிராமத்தில் இந்த மனிதன் யாதொரு குறைவுமின்றி வாழ்கிருன். அவன் மனத்தில் ஒரு பெரிய கல்வீடு கட்டவேண்டும் என்ற ஆசை பிறக்கிறது. பெரிய மனிதனென ஊரார் மெச்ச வாழவேண்டும் என்ற இச்சை தோன்றுகிறது. தன் னிடம் இருந்த பணத்தில் வீடுகட்டத் தொடங்கிவிட் டான். பாதியில் போய் வீடு நிற்கிறது. பணக்காரன் ஒருவனிடம் வட்டிக்குக் கடன் வாங்கி அழகாய்-மிக அழகாய்-சகல வசதிகளும் கொண்டதாய்க் கட்டி முடித்து விட்டான்.
அப்பால் அவன் நிலை ? கமத்தை மறந்தான். முயற்சி யில்லை. அவன் தானெரு பெரிய மனிதன் என்று எண்ணி னன். வட்டி வளர்கிறது. அதைத் தீர்க்க மாடு ஆடு வண்டி கமத்துக்கான பொருட்கள் எல்லாவற்றையும் விற்கிருன், பாதி வட்டிக்குக்கூடப் போதவில்லை. பாவம் ! பரிதாபம் ! அவன் பிள்ளைகளோ படுமோசம் அதைக் கவிஞர் ஒரு மின்வெட்டுப்போல அழகாகச் சொல்கிருர்:-
"ஆவலாய்ப் பெற்றெ டுத்த ஆண்மக்கள் அதிக மல்ல
மூவரில் ஒருவன் முட்டாள் முறைப்பாடோ பொலீசில் மற்றேன் பாவமே யற்றேன் நோய்வாய்ப் பட்டனன் படுக்கை நாளும் கேவலம் நடுவி லானுே கிடைத்ததை எடுத்து விற்றே தாவுவான் சினிமா வுக்கே தந்தைஎன் சொல்லே கேளான்.
 

Xν
ஆம், குடும்பம் தறிகெட்டு ஓடுகிறது. பணம் கொடுத்த பணக்காரன் மிகச் சாதுரியமாகப் பேசி முதலுக்கும் மிகுதி வட்டிக்குமாக வீட்டைத் தன் பெயருக்கு எழுதி வாங்கிக் கொண்டான். பெரிய வீட்டைப் பார்த்து அவன் பெரு மூச்சு விடுகிறன். பழைய கொட்டில் அவனைப் பார்த்து நகைக்கிறது. இல்லை, ஏதோ பேசுகிறது. அது என்ன ? " போடாபோ புதுமை ஆசைப் புன்மையால் புத்தி கெட்டோய், ஓடோடு வன்னி தேடி உழவுதான் உன்னைக் காக்கும் ' என்று சொல்கிறது. அதைக்கேட்ட அவன், * மனையாள் மக்கள் புடைசூழப் புறப்பட்டான் புதுக் காட்டிற்கே ' என்று முடிக்கிருர்,
இது வெறும் கற்பனையல்ல. ஆன முதலுக்கு அதிகம் செலவழித்து வீடு கட்டிக்கொண்ட ஒவ்வொருவரினதும் அனுபவம் இது. ஆனந்தவிகடன்-தேவன், வீடு கட்டியதை வைத்தே ஒரு நாவல் எழுதியுள்ளார். அதை வாசித்த இன்பத்திலும் பார்க்கக் கவிஞர் ஐயாத்துரையின் இந்தப் பாடல் இனிமைதந்து நெஞ்சில் நிலைநிற்கிறது.
கவிஞரின் பெரிய வீட்டில் அதிகநேரந் தங்கிவிட் டோமா ? சரி, அப்பாலும் செல்வோம். காய்ந்த பாணுக் காகப் பாய்ந்து முன்செல்லும் மக்கட் கூட்டத்தின் பசிப் போரையும், "நாட்டினில் மெய் நயப்பாட்டை நாட்டிக் காட்ட நற்றுணையாய் உள்ள கூட்டுறவு இயக்கத்தையும், "முன்பெலாம் பொருட்க ளாக்கி மூட்டையாய்க் கொடுத்த நாட்டின், மன்னிய மிடியைப் போக்க வகைமிகும் தொழில் கள் செய்வீர் " என வாலிபரை அழைக்கும் காட்சியையும் காண்கிருேம். இக்காலச் சமுதாயப் பார்வை இக்கவிதை களிலே விழுந்திருப்பது கண்டு உள்ளம் பூரிக்கிருேம், நாளை மிளிரும் நம்நாடு எப்படிப்பட்டது என்பதைக் கவிஞர் காட்டுகிருர் :-
'இனமத மொழியெனும் பேதங்கள்-நீண்
டிடரினைக் கொடுக்கும் இன்னல்கள் தனமுத லாளிகள் தலையீடும்-தீச் சக்திகள் அற்றிடும் தனிநாடே."

Page 10
xvi.
எனப் பலவகைகளிலும் ஏற்றிப் போற்றுகிருர், இந்த அன்பு மலர் காந்திமகானின் பெருமையோடு முடிவடை கிறது. கவிஞரின் காந்திபக்தி "மன்னுயிர்க்கின்னல் நேரில்", * பதவியிற் பாசங் கொள்ளான் " என்ற பாடல்களில் அருமையாக வெளிப்படுகிறது.
வெள்ளைக் கமலத்தின் ஓர் இதழின் எல்லாப் பாடல் களையும் தொட்டுக்காட்டியிருக்கிறேன். இனி, ஆய்விதழ், அருளிதழ், அரங்கிதழ் என்பவற்றை நீங்களே சுவைக்க லாம். அவற்றிலும் " கவிதைப் பாதை", ஞானத்தாய்", "கனநாத கனகக் கனியே புதுக் கோபுரத்தில் பொலி வாயே ", "வேலி அடைப்போமா ?", " கவிஞன் பார்வை ? முதலிய நல்ல பாடல்கள் அமைந்திருக்கின்றன.
கவிஞரது பழைமைப்பற்று ‘பண்டைத் தமிழர் நகை' என்ற பாட்டில் நன்கு அமைந்திருக்கிறது. பழைய கால நகைகளை அவர் அடுக்கிச் சொல்வதைக் காணப் பிரமிக்கி ருேம். அது மாத்திரமல்ல, கடைசிப்பாட்டில்- "இங்கே உமக் கெழில்" என்ற பாட்டில் கவிஞரது மெல்லிய நகைச்சுவை யையும் நாம் அநுபவிக்கிருேம்.
கவிஞரவர்கள் கவிதையைப்பற்றிக் கூறும்பொழுது சுருங்கிய சொல், ஓசை நயம், இன்ப எழுச்சி, இசை யோடு பொருந்தல் என்பவற்றைச் சுட்டிக்காட்டிவிட்டு,
* அரக்கமனம் உடையோரை அசைக்கின்ற பாதை
அன்பொழுகும் தேனுெழுகும் மணம்கமழும் பாதை அரங்குதனில் ஏறியமர் புரிகின்ற பாதை அணியழகு சீரெதுகை அமைந்தகவிப் பாதை" என முடிக்கிருர், தனது கவிதைப்போக்கைத் தெள்ளெனக் காட்டுகிருர்,
கவியரங்கங்களிலே புகழ்க்கொடி நாட்டிய கவிஞர் ஐயாத்துரை வெள்ளைக் கமலம் என்ற இந்தக் கவிதை நூல் மூலம் இன்னும் ஒரு படி உயருவார் என்பது திண்ணம், வாணி அவருக்கு அருள்புரிவாராக !
குரும்பசிட்டி, கனக. செந்திநாதன் 20-1 2-74.
 

பொருளடக்கம்
என்னுரை /. . .
ஆசியுரை •
அணிந்துரை
முன்னுரை &s to the 9 \to 0
அன்பிதழ்
ஆய்விதழ் المر
12. 3.
】4。
15
6.
7.
18.
9.
வாக்கினில் வந்திடம்மா !
தாயுள்ளம்
தமிழின்பம் to ed ஆளும்முறைத் தலைமை . அன்புடைமை பூணுமுயர் அரிவை பெரிய வீடு
பசிப்போர் 1 Ooo வாழ வழி வகுக்கவேண்டும் ! சீர்தரு பயிர்கள் செய்வீர்!
பெருமை காந்தி ” “ ” '',
கவிதைப்பாதை மறுபிறவி இருவேறுலகம் ஏனிந்த நிலைமை வெள்ளைக் கமலம் கறுப்பியெனும் கட்டழகே ! பண்டைத் தமிழர் நகை ஞானத்தாய்
iii
பக்கம்
iv
Vi
26
罗7
30
32
34
36
39
《岛

Page 11
xviii
p பக்கம் அருளிதழ் 20. கணநாத கனகக் கனியே! or s 46 21. கோணேசர் கோனே ! 47 22. யாழ்பதிக்கு வா வா! . 49 ة سه ه 23. கந்தக் கனி S . . . . 5 I 24. சித்தானந்த வித்தே ! . ... . . 53 25. புதுக் கோபுரத்தில் பொலிவாயே! . 55
அரங்கிதழ் 26. அப்பர் காட்டும் அன்புநெறி so 57 - 27. எங்கே நமதிளைஞர் ? - 59 28. வேலியடைப்போமா ? . -y d6 QA 6. 29. காலம் மாறுமா ? * ● ● 65
30. கவிஞன் பார்வை e . . . 67
 
 

வாக்கினில் வந்திடம்மா
ஏட்டை அசைக்கையிலே - உன்றன் எண்ணம் எழுந்ததம்மா பாட்டை இசைக்கையிலே - உன்றன் பற்றுப் பரந்ததம்மா!
நாட்டைச் சுவைத்திடவே - கலை ஞானம் கொடுத்திடம்மா வாட்டந் தவிர்த்திடவே - என்றன் வாக்கினில் வந்திடம்மா!
தீட்டுங் கவிதையிலே - செம்மை சேர்ந்திடச் சீரமைந்தே ஊட்டப் பெருமறிவை - என்றும் ஊக்கிடச் செய்திடம்மா!
ஓசை உவப்பவளே - கல்வி ஊக்கந் தருபவளே தேசு நிறைந்தவளே - கலைத் தேவி சரணமம்மா!
பக்தி பெருகிடவே - உளப் பாங்கு பரந்திடவே சக்தி அருள்புரிவாய் - அன்புத் தாயே சரஸ்வதியே!

Page 12
தாயுள்ளம்
ஒசைநயம் உவமானம் உணராத பருவம் ஒப்ப்னையின் தப்புயர்வை அறியாத பருவம் பேசுமொழி பேதமெதும் தெரியாத பருவம் பேறென்று தாயுள்ளம் பெருமைகொளும் பருவம்.
ஆசையெதும் அறியாமல் அழுகின்ற பருவம் ஆதியழ காணவுயர் அகமுற்ற பருவம் தேசுநிறை குழவியெனத் திகழ்கின்ற பருவம் சீரான தாலாட்டுந் தெரியாத பருவம்:
அன்னையவள் அன்புநிலை அறியாத பருவம் அவள் சீர ணைப்பிலது அயராத பருவம் தன்னினிமை அறியாத குழந்தைக்குத் தாயோ தாலாட்டுப் பாடுமுயர் தமிழின்ப மென்னே!
2

கண்ணுன கண்ணென்று காதலிசை கனியக் கட்டிக்க ரும்புகற் கண்டென்று சொல்லித்
தண்ணுருந் தமிழினுற் சங்கீதஞ் சாரச்
சர்க்கரை அமுதென்றும் தாலாட்டுப் புனைவாள்
வேதனே வேலனே விசயனே வென்பாள் விண்ணுளும் இந்திரத் தேவனே வென்பாள் நாதமார் நந்தகோ பாலணுே வென்பாள் நாடாள வந்தசீர் மன்னனே வென்பாள்.
பொன்னன பொன்னெனப் புகலுவா ளன்னை பொழுதே நிலாவெனப் பொழிகுவாள் பண்ணே மன்னே மலர்மணி மாணிக்க மென்பாள் வாசனைத் திரவியமு மாகக் கணிப்பாள்.
தன்னுளத் தோங்குகுண சால்புநெறி சாரத் தாலாட்டுப் புரிகின்ற தாயன்புக் கீடாய் என்னதான் வாழ்த்துகள் எமக்குக் கிடைக்கும் எல்லோரும் இனிதான தாயன்பைக் கொள்வோம்.
※

Page 13
தமிழின்பம்
மலையிற் பிறந்த மணியே - இசை மழையில் வளர்ந்த பயிரே கலையிற் கனிந்த கதிரே - முற் காலத் துதித்த தமிழே !
குழையும் குரல்கொள் குயிலே - திருக் குறளிற் குளிர்ந்த குகையே விழையும் விவேக விதியே - தினம் விளையும் வினுேத விழியே !
தழையும் தகுந்த தருவே - முச் சங்கச் சபைக்குத் திருவே பழமைப் பதங்கொள் பரிசே - சேர பாண்டி யன்சோழன் பலமே !
 

உயிரும் உயிர்மெய் தனிமெய் - ஆய்தம் ஓங்கிப் பரக்கும் உருவே பயிலும் பசும்பொன் மொழியே - இளம் பருவம் பரந்த தமிழே!
வலினம் இடையு மெலினம் - மெய் வளர்ந்தே வளங்கொள் வடிவே எளிமை இதஞ்செய் இனிமை - நிறை இசைந்தே இலங்கும் இயலே!
கவிஞர் உளத்தின் நிலையே - உயர் கம்பன் வளர்த்த கலையே புவியிற் பொலிந்த புகழே - எழில் பூத்துக் குலுங்கும் பொருளே!

Page 14
ஆளும் முறைத்தலைமை
வாக்குப் பலத்தொடு வந்தே தலைமையை வாங்கி வகுப்பாரெனின் - கனம் வீங்கி விறைப்பாரெனின் - சினம் ஓங்கி முறைப்பாரெனின் - சில தாக்குப் புரிந்தே தலைமைப் பதவியைத் தட்டவும் செய்திடலாம் - சிலர் சார்பினை யும்பெறலாம் - நல்ல சந்தர்ப்ப மென்றிதைச் சாதித்து யான்தலைச் சக்தியைப் பெற்றிடலாம் - பலர் பக்தியைப் பார்த்திடலாம் !
வந்தே தலைமையை வாங்கி வகுத்திட மக்கள் சபையல்லவே - இரு பக்க முறையில்லையே - ஒரு வாழ்க்கை வரம்பிதுவே - இதில் மாதா பிதாமகன் வண்மை மலர்ந்திட வாழும் நெறிச்சபையே - இதை ஆளும் முறைத்தலையே - தந்தை ஆகும் அதைப்புரிந் தேயவர் ஆணைக்கு ஆளாகி ஆளாகினேன் - அவர் அன்பின் அடக்கமென்னே !
 

தூக்கம் எழுந்ததப் பாவென்று சோர்வுற்றுச் சொல்லும் பொழுதினிலே - கல்வி மெல்ல அழுகையிலே - அதில் அல்லற் படுகையிலே - எனக் (கு) ஊக்க மெழும்படி உற்சாக மூட்டியே ஒதும் உவமையென்னே - அப்போ(து) வேதனை யானதுவே - இப்போ(து) மேதையென்றேயெனை மெச்சும் மொழிக்கவர் மேலாந் தலைமணியே - தந்தை வெற்பின் விளக்கொளியே!
கண்டித்தும் தண்டித்தும் காலமு னர்ந்தவர் காப்புப் புரிந்ததுவும் - என்றன் மூப்பில் விடாததுவும் - நெறிக் கோப்பை உணர்த்தியதும் - கல்வித் திண்மை திகழ்ந்திடச் செல்வம் செறிந்திடச் செய்ததும் செப்பரிதே - அவர் சேவைக்கு மெப்பரிசோ? - நான் உண்மையும் அன்பும் ஒழுக்கமும் ஓங்கிட ஊரில் நடப்பதுவும் - ஒரு உத்தமி நற்கரம் பற்றிநல் வாழ்க்கையில் ஒன்றித் தலைவனென - அன்பு ஊற்ருல் உயர்வதும்நேர்!
※

Page 15
அன்புடைமை பூணுமுயர் அரிவை
அன்னைதந்தைபார்த்தெடுத்தஅமுதம்-பெண்மைக் காயகுணம் அத்தனைக்கும் இமயம் என்னைவந்து சேர்ந்தநல்ல இதயம் - வண்மை ஏற்றமுறும் மங்கையின்ப உதயம்.
புன்முறுவல் பூக்குமெழில் வதனம் - அந்தப் பொற்கொடியின் மேனிசெம்மைப் புனிதம் மென்மைமொழி மேவுமிதழ் பவளம் - அந்த மெல்லியலின் பல்வரிசை தரளம்,
பட்டுடலிற் கட்டிவரும் ஆடை - அவள் பாதமதைத் தொட்டணைக்கும் சாடை பொட்டணியும் நெற்றிபிறை மேடை - அவள் பூங்குழலை மேவிவரும் வாடை.
அன்புடைமை பூணுமுயர் அரிவை - உண்மை ஐக்கியத்தைப் பேணு மெழில் தெரிவை பண்புடைமைப் பாங்கிலவள் பெருமை - இந்தப் பாவையிவள் போலொருவர் அருமை.
ஆடியசை பூங்கொடியின் சாயல் - அவள் அப்பழுக்கில் லாதவுளங் கோயில் கோடியின்பம் கொள்ளத்தகும் கோதை - நான் கொஞ்சியன்பு மஞ்சிலெழும் போதை !
8
 

பெரிய வீடு
கொட்டிலோ பெரிய கொட்டில்
குடும்பத்திற் குகந்த நல்ல தட்டுமுட் டனைத்தும் வைத்தே
சால்புற வாழ முன்னர் கட்டிய களிமண் வீடு
காணியும் கனிகாண் மேடு தொட்டநல் மனைவி யார்தம் சுதந்தர மான சொத்து.
திருவெழும் கலப்பை திண்மை
சேருமண் வெட்டி செந்நெல் அரிவுவாள் கதிர்ப்பாய் வீச்சுக்
கமைவுள சுளகு குப்பை எருவினை எளிதாய் ஏற்ற
இருசோடி மாட்டு வண்டி அரியபாற் பசுக்கள் பட்டிக் காயநல் ஆட னைத்தும்,

Page 16
உரல்பல உலக்கை மோர்செய்
ஒண்முடா மத்துப் பண்டம் அரைத்திட அம்மி செம்மை ஆட்டுக்கல் சூட்ட டுப்பு நிரைபல நிறைந்தும் செய்கை நிலப்பரப் பதிக மற்றேன் பெரியதோர் வீடே கட்டப்
பேச்சின்றித் திட்டம் போட்டேன்!
பெட்டியிற் பணத்தைக் கொட்டிப்
பிசகிலா தெண்ணிப் பார்த்துக் கட்டிடப் பொருள்கள் வாங்கிக்
கணித்தநல் முகூர்த்தங் கண்டே தொட்டுளேன் அத்தி பாரம்
தொடர்ந்துநீள் வீடு கூரை மட்டத்தில் வந்த போதென்
மடிமிக வெளித்த தம்மா!
தொட்டதை முடிக்கா விட்டாற் சுயமரி யாதை கெட்டே விட்டிடும் என்றே காணி
விற்றிடும் பெறும திக்குப் பட்டுளேன் கடனை வட்டிப்
படர்வுட னறுதி காட்டி எட்டிய ஆசைக் கேற்ப
இதமுற முடித்தே னில்லே !
 

இடம்படர் உயர்க்ல் வீடே
எல்லைகள் யாவும் கெட்டி படர்ந்திட மதிலும் எல்லாப்
படலையும் இரும்புப் பாரம் அடங்கலும் மின்வெ ளிச்சம்
அத்துடன் குளாய்நீர்க் கோர்ப்பு மடங்கிய வெற்றி டங்கள்
மலர்ச்செடி கொடிகள் மேலும்,
தொடர்ந்தமர்த் திடநேர் சொல்லும்
சூக்குமப் பொத்தான் வீட்டிற் குடந்தைசேர் உயர்நாய் (இ)ரண்டு
உறங்கிடப் பஞ்சு மெத்தை தொடர்ந்துமேற் சொல்லப் போனல்
சுந்தரச் சொர்க்க வீடே! கடன்பட்டே கட்டி னலும்
காரிய மில்லைத் தானே!
திட்டத்தின் திறமைக் கேற்பச்
செய்துளேன் செத்தாற் கால கட்டத்தில் பிள்ளை குட்டி
கமத்திலா கால்வைப் பார்கள் மட்டற்ற படிப்பின் மாண்பால்
மதிப்பான உத்தி யோகப் பட்டமும் பணமும் பல்கிப்
ப்லவீடே கட்டு வார்கள்.
11

Page 17
உயர்ந்தகல் வீட்டுக் கேற்ப
உச்சியிற் கனமு மேறிப் பயிர்த்தொழில் விட்டேன் பாலர்
பாட்டிலே படிக்க விட்டேன் கயர்த்திடும் குடிவ கைக்கும்
காசினைக் கரைத்தே கண்கள் அயர்த்திடும் நிலையி லானேன் அப்புறம் ஆட்சி எங்கே ?
ஆவலாய்ப் பெற்றெ டுத்த
ஆண்மக்கள் அதிக மல்ல மூவரில் ஒருவன் முட்டாள்
முறைப்பாடோ பொலிசில் மற்றேர் பாவமே மற்றேன் நோய்வாய்ப் பட்டனன் படுக்கை நாளும் கேவலம் நடுவி லானே
கிடைத்ததை எடுத்து விற்றே
தாவுவான் சினிமா வுக்கே
தந்தையென் சொல்லே கேளான் சீவியத் தலைவி யாரும்
சிந்தனை சிறிது மற்ருர் நோவது யாரை யென்றே
நோக்குவேன் இறையைத் தானே ஆவது மவன லன்ருே ! அழிவது மவனுற் றனே ــــــــــ۔
12
 

காவிய கடனே வட்டிக்
கனத்தொடு கனமாய்க் கவ்வித் தாவினன் தந்தோன் வந்தே
தவணையும் நெருங்கிப் போச்சே தேவையாய் இருக்கே வட்டித்
திட்டத்திற் குறைப்பா யென்ருன் ஒவிய மாகி நின்றேன்
உணர்வொரு வாறு பெற்றேன்.
வட்டிக்கே வயலை மாட்டு
வண்டியைக் கமத்துக் கேற்ற கெட்டியாம் பொருளை எல்லாம்
கெதிகெதி யாக விற்றும் வட்டியும் வளர்ந்தே மூன்று
வருடத்தில் வாசி யோடு கட்டிய கல்வீட் டுக்கும்
காணிக்கும் கணக்கா யிற்றே !
எட்டியே பிடிப்ப தற்கோ
என்னிடம் யாதும் இல்லை தட்டியே பெற்றுக் கொண்டான்
சாந்தமாய்ப் பணத்தைத் தந்தோன் பொட்டெனக் கண்ணிர்ச் சொட்டே பூமியிற் பொருந்த வீட்டை விட்டுயான் வெளிக்கிட் டேனே விரிமதி லருகா லங்கே.
13

Page 18
14
வீடான வீடாய் முன்னுள்
விவசாய விளக்காய் நின்றே மாடாடு கட்ட என்னுல்
மாற்றிய பழைய கொட்டில் போடாபோ புதுமை ஆசைப்
புன்மையால் புத்தி கெட்டோய் ஓடோடு வன்னி தேடி
உழவுதான் உன்னைக் காக்கும் !
என்றசொல் இதத்தைப் போலும்
ஈடாடி மதிலி னுேடே ஒன்றியே பழைய கொட்டில்
உராய்வொலி உற்றுக் கேட்டே சென்றுளேன் நாக ரீகச்
செப்படிச் செருக்கொ டாசை பொன்றிட மனையாள் மக்கள்
புடைசூழப் புதுக்காட் டிற்கே !
 

பசிப் போர்!
கொத்தி வெட்டிநற் கூலி பெற்றிடக் கூட வும்முடி யாமலே குத்துக் கர்ணமே கொள்ளச் செய்யுது கோர மாய்ப்பசி கூடியே!
பேனை யைப்பிடித் தாட்ட வேபசி பிடரி யைப்பிடித் தாட்டுதே! தேனி னும்இதம் சேரும் சீர்மொழி செப்ப வுஞ்சின மாகுதே,
என்ன செய்வது ஏது பார்ப்பது எங்கும் இப்பசி இன்னலே! முன்னை செய்ததை உன்னிப் பார்த்திடில் மூண்ட வன்பசி முன்வினை.
15

Page 19
16
பாகம் பண்ணின பாங்கி லையெனப் பானை சட்டியே பாழ்பட வேக மாயடித் தேயு தைத்தபின் வேத னைப்படச் செய்யுதோ!
காலை யேயெழு கடவு ளைத்தொழு கடமை யைக்கணி கனிவுகாண் சால வும்நலம் சாரும் நல்வழி சாற்றி ஞற்பெரும் சங்கடம்.
வேலை யில்லையோ வீண ருட்டலை விட்டுப் போடென வேகுவோர் காலை யின் முதற் சாம வேளையே கண்வி பூழிப்பதும் காலமே!
பாண டுப்பிலே பக்கு வப்படும் பாதி ராத்திரி வேளையே காண் லாங்கடைக் கடவை யோரமாய்க் காத லார்தவக் காட்சியே!
காய்ந்த பானெனக் கண்டித் தேயதைக் கண்ணெ டுத்துமுன் பார்த்திடார் பாய்ந்து சென்றுபாண் பற்றிக் கொள்கிருர் ப்ச்சை யாயினும் மெச்சுவார்.
 

உண்டு எஞ்சிய உணவை மற்றவர்க் குதவத் தம்மனம் ஒருப்படார் கண்ட னர்.பசி கடிய நோயெனக்
கனிவு காட்டுவா ரோவினி.
மண்ணைத் தொட்டவர் வாழு வாரென வாழ்ந்து வாழ்த்தினேர் வாய்மொழி எண்ணிக் கொள்ளெனச் சொல்கி ருேமலால் ஏற்றுத் தொட்ட மண் இல்லையே!
மூண்ட வன்பசி மூச்சு வீச்சொடு நீண்டு நிற்றலை நீக்கவே தூண்டு தொண்டினைச் சோம்ப லைவிடு சுந்த ரப்பயிர் சோறிடும்.
நல்ல வாலிபர் நம்பிக் கையெழின் நாடு வீடெலாம் நற்பயன் சொல்ல வேண்டுமோ சோத ரர்களே துரித மெய்ப்பணி தொடருவீர்!
7

Page 20
வாழ வழி வகுக்கவேண்டும்
வாழவழி யாம்வகுக்க மண்ணும் விண்ணும் மருவுமுயர் கூட்டுறவின் வளத்தால் முற்றி வீழுகின்ற சருகெனிலும் விளையும், இந்த விதத்தினிலே செல்வமழை பொழியும், மக்கள் தோழமையும் தொழில்நலனும் துலங்கும், அன்புத் தொடர்புகளும் தொண்டுகளும் சுகமும் பொங்கும் ஆளுமையின் அழகொளிரும் அரங்கில் வேறு ஆரவார பேதமின்றி ஆக்கம் பூக்கும்.
மக்களுற வாகுமுயர் மாண்பார் சக்தி மார்க்கமதே கூட்டுறவின் வளர்ச்சி யாகும் ஐக்கியமார் அச்சாணி ஆட்டங் காணின் ஆக்கமெலாம் அலுக்குலைந்தே அழிந்து போகும் எக்கரும மாகினிலும் எளிதாய் ஈட்ட ஏற்றதொரு இயக்கமெனும் இன்பத் தேரைத் தக்கபல மாக்கியன்பு சாமி ஏற்றிச் சமதர்ம வடம்பூட்டி இழுப்போம் வாரீர்!
18
 

பாட்டினில்மெய் பரவுநெறி பகுத்துக் காட்டப் பாங்குநிறை சீரெதுகை மோனை வேண்டும் ஏட்டினில்மெய் இலக்கியத்தை எடுத்துக் காட்ட ஏற்றமமை இலட்சியங்கள் இணைய வேண்டும் வீட்டினில் மெய் விழியன்பை விளம்பிக் காட்ட வேற்றுமையி லாதகுணக் குடும்பம் வேண்டும் நாட்டினில் மெய் நயப்பாட்டை நாட்டிக் காட்ட நற்றுணையாம் கூட்டுறவை நாட வேண்டும்.
வீடுதொறும் கைத்தொழில்கள் விருத்தி யாகி வேலையிலா விசனமது விலக வேண்டும் நாடுமிளிர் இயற்கைதனைப் பெருக்கிப் பேணி நமதுசுய தேவைகளைத் தீர்க்க வேண்டும் காடுகளை அழித்துமணிக் கதிர்கள் பொங்கும் கழனிகளாய்க் கவின்மேவக் காக்க வேண்டும் தேடரிய சுதந்திரமும் பொருளா தாரத் தேசுடனே திகழ்ந்துபெரும் தெம்பைக் கூட்டும்.
உலகமெலாம் கூட்டுறவா முண்மை ஓங்கின் உரிமைகுறைந் தொருபேரும் உலவ மாட்டார் கலகமெதும் விளையாது கட்டுப் பாடும் கண்ணியமும் கடமைகளும் கண்போ லாகும் பலநலமும் சிறந்துநிலப் பாங்கு மேவிப் பசிப்பிணியைப் பாறவைக்கும் பாதை மீளும் தலைமுதலைச் சமதர்மச் சக்தி யாக்கிச்
சார்தனத்தைச் சம்பத்தாய்த் தழைக்கச் செய்வோம்.
※
19

Page 21
சீர்தரு பயிர்கள் செய்வீர்
பணமிக இருந்திட் டாலும்
பண்டமே கிடைக்கா விட்டால் உணவின்றி உலகந் தன்னில்
உயிர்வாழ்தல் அரிது காண்பீர்! இனமத பேத மின்றி
யாவரும் ஒன்றே கூடித் தினமிக உணவைத் தேடச்
செயற்படு வீரே நாட்டில் 1
தினைசாமை குரக்க னெள்ளுச்
சேர்சிறு தானி யங்கள் துணையான உணவ தாகச்
சுகமளித் திடுமே என்றும் இணைவான காலந் தன்னில்
இப்பயிர் யாவும் ஓங்க மனதார்வங் கொள்ளு வீரே
மலிவுறும் பொருள்கள் தாமே !
20
 

வடிவுறும் மலர்த்தோட் டங்கள்
வைத்திடும் பயனில் மேலாய் விடிவுறும் உணவுத் தோட்டம் விளங்குதல் நன்றே பாரில் குடியுறும் இடத்தின் வெற்றுக்
கொல்லைகள் யாவும் குப்பைச் செடிகளைச் செதுக்கித் தள்ளிச்
சீர்தரும் பயிர்கள் செய்வீர்!
அந்நிய உணவுக் கப்பல்
அண்மையில் வராது போனுல் என்னதான் செய்வோ மென்றே
இடர்மிக அடைகின் றிரே! முன்னெலாம் பொருட்க ளாக்கி
மூட்டையாய்க் கொடுத்த நாட்டில் மன்னிய மிடியைப் போக்க
வகைமிகும் தொழிலே செய்வீர்!
21

Page 22
பெருமை
நாளை மிளிரும் நம்நாடு - பொருள் நல்கும் வளமார் பொன்னுடு ஈழம் எனச்சொல் முன்னேடு - பூரீ லங்கா வெனச்சேர் இந்நாடே !
ஆளும் உரிமை மக்களிலே - அதை அழகே அமைக்கும் அமைச்சுகளே! சூழும் தோழமை நாடுகளே - எழில் சொட்டும் ஒருமைப் பாடுகளே !
ஏழை எளியோர் இரப்போர்கள் - ஈங் கில்லை எனச்சீ ரேற்றமுற்றே வாழும் மாந்தர் வனப்பினிலே - நேர் மன்னும் வண்மை மணிநாடே !
இனமத மொழியெனு பேதங்கள் - நீண் டிடரினைக் கொடுக்கும் இன்னல்கள் தனமுத லாளிகள் தலையீடும் - தீச் சக்திக ளற்றிடும் தனிநாடே !
22
 

குன்றுகள் போலும் குண மிளிரும் - கூர் கூட்டுற வொளிரும் குடியுயரும் மன்றுகள் அனைத்தும் கலைமலரும் - வீண் வம்புகள் தும்புகள் மடிந்தழியும்!
தொண்டுகள் தொடரத் துணைகூடும் - முன் சொல்லினைப் போலும் செயல்மேவும் எண்டிசை பலவும் இசைவாகும் - தன் இறைமையி னலே எழில்சாரும்.
பள்ளிகள் தோறும் தொழில்பயிலும் - நற் படிப்புக ளுயரும் பயன் மேவிப் பிள்ளைகள் பெரியோர் தன்னுட்டின் - நற் பெருமைக் குழைத்தே பிறங்குவரே!
துள்ளிய நடையும் சுறுசுறுப்பும் - மென் சொல்லுச் சுவையும் சுபநெறியும் தெள்ளிய அறிவும் திடநெஞ்சும் - சீர் தேசும் திகழும் திருநாடே !
மேன்மையு றக்குடி மைநீதி - மெய் விளங்கும் விரிவாய் விதிசார்ந்தே கோன்மை குலவும் குணமார்ந்தே - எழில் கொஞ்சிக் குலுங்கும் அணிசார்ந்தே !
பொருளா தாரப் பொலிவோங்கிப் - பல பொற்கா செங்கும் புழக்கமெழும் அருளா தாரத் திருவோங்கிச் - சம ஐக்கியம் மலரும் நம்நாடே !
23

Page 23
காந்தி
நாத மெழுந்திடும் நாமஞ்சொன் ஞலெந்த
நாடு மறிந்திடும் காந்தியென்ருல்
பேத மழிந்திடும் போதனை யாலுயர்
பெற்றியுற் முன்மக்கள் பற்றையுற்றன் !
நீதி நிறைந்திடும் சோதியென் பார்நல்ல
நேர்மை நிலைத்திடும் நெஞ்சனென்பார்
சாதி வெறியைத் தகர்த்திட வேவந்த
சாந்த சொரூபனே காந்தியென்பார் !
ஆதிக்கந் தன்னவெ றுத்துநின் முனென்றும்
அன்பும் அகிம்சையும் ஆண்டுகொண்டான்
சாதிக்கும் தன்மையில் வெற்றிகண் டான்நல்ல
சக்திகொண் டானுண்மைப் பக்திபூண்டான் !
மேதை யெனப்புகழ் மேவுகின் ருனென்றும் மெய்ம்மை நிலையை விளங்கச்செய்தான்
பாதை யமைத்தனன் பார்சிறந் தோங்கிடப்
பற்றி நடந்தே பயன்பெறுவோம்!
责 24
 

உலப்பிலா உயர்ந்த உள்ளம்
உண்மையால் ஓங்கும் பீடம் நிலைத்தநேர் அன்பின் வெள்ளம்
நெறிதனில் நிமிர்ந்த நெஞ்சம் பலத்ததோர் அகிம்சா தர்மம்
படைக்கெலாம் அஞ்சாச் சிங்கம் கலக்கமே இல்லாத் தங்கம்
கருணைவா ரிதியே காந்தி !
மன்னுயிர்க் கின்னல் நேரின் மனமது தாழாக் காந்தி தன்னுயிர்க் குறுதி யாகச்
சத்தியம் காத்த காந்தி பின்னுயிர் பிறங்கி வாழப்
பேணு மெய் யறங்கள் பேசி இந்நிலத் தெழுந்த காந்திக்
கீடிணை யார்தான் அம்மா !
பதவியிற் பாசங் கொள்ளாப்
பரந்தநற் பக்திச் சிந்தை உதவிய உபதே சத்தால்
உலகமே போற்றும் தந்தை மதமின சாதி பேதம்
மடியமா பணியே செய்த இதமுறும் காந்தி நாமம்
இகபர மெங்கும் வாழி !
※
25

Page 24
கவிதைப் பாதை
கற்பனையில் விற்பனர்கள் காட்டுகிற பாதை காதலுயர் தூதுசெயக் கவின் மேவு பாதை நற்பயனை நாட்டென்று நவில்கின்ற பாதை நாடறியு மேடுகளில் நடமாடும் பாதை அற்பனையும் அறிஞனென ஆசிசெயும் பாதை அரசவைகள் அந்நாளில் ஆராய்ந்த பாதை பொற்பனைய பொருளாரப் புனைகின்ற பாதை புதுமைபல விதைக்கின்ற கவிதையெனும் ப்ாதை .
சுருங்கியசொற் ருெடர்நீட்டிச் சுவைக்கின்ற பாதை சொல்லொன்று பலவாகிச் சுழல்கின்ற பாதை இரக்கமெழும் இசைமேவும் எழிலார்ந்த பாதை இன்பமுறும் ஒசைநயம் மீழுமுயர் பாதை அரக்கமன முடையோரை அசைக்கின்ற பாதை அன்பொழுகும் தேனெழுகும் மணங்கமழும் பாதை அரங்குதனி லேறியமர் புரிகின்ற பாதை அணியழகு சீரெதுகை அமைந்தகவிப் பாதை,
26
 
 

மறுபிறவி
முற்பிறப்பில் எப்பிறப்பாய் இருந்தோம் வாழ்ந்த முறையெல்லாம் இப்பிறப்பில் நினைவோ மீண்டும் நற்பிறப்பு நண்ணிடுமோ அன்றேல் கெட்ட நாய்ப்பிறவி எடுப்போமோ நாமே செய்யும் குற்றசுற்றக் குறைநிறையைக் கூரு வோமோ கொடுத்தகடன் திருப்பியங்கே கொள்ளு வோமோ அற்பநினை வாசையினல் அலைச்சல் கொண்டே ஆருயிரை அழிப்பதனை அலசி ஆய்வோம்.
மறுபிறப்பி லாவதுநாம் மனச்சந் தோஷ வாழ்க்கைதனை மருவிடலா மெனவி டத்தை உறுதியுடன் குடித்திறந்த உயிர்க ளுக்கென் உபதேசம் உதவாதென் றுணர்ந்தும் அன்பு நெறிசிறிதை நீட்டுகிறேன் நேச முற்றே நிகழ்காலப் பிறவிகளே நினைமின் நெஞ்சே! நறும்பிறவி நன்மனிதப் பிறவி யென்றே நயந்துற்ருர் நாமுமதை நவிலு வோமே !
27

Page 25
தேவைகளைத் தினங்கூட்டித் தேற்ற மற்றே திண்டாட்டப் பட்டேயாம் திணறும் சிக்கால் சாவதனைச் சாந்தியென்றே சாரு கின்ருேம் தற்செயலாய்த் தற்கொலைதான் செய்தோம் பின்பு நோவதனை உணர்வோமா இல்லை ஆனல் நுடங்குபவர் நம்முழைப்பை நுகர்ந்தோர் தாமே! ஆவதென்ன அதிதுன்ப ஆழிக் குள்ளே அன்புளரை ஆழ்த்திவிடும் அதர்மந் தானே !
தொனிப்பாகப் பிரச்சினையைத் துழாவும் போதே தொந்தரவுத் தூண்டல்களும் சொருகிச் சூழும் இனித்தாங்க வியலாதென் றுயிரை மாய்க்கும் ஈனநிலைக் காளாக்கும் இழிவுஞ் சேரும் தனித்தேதும் தவறுசெயின் அத்தாக் கத்தால் சந்ததியே தன்மான மற்றே வாழும் மனச்சாட்சி மாண்புற்ருல் மண்ணும் பொன்னுய் மாறியொரு மறுபிறப்பாய் மலரும் இங்கே!
கொக்கைக்கே எட்டியதைக் குறிப்பாய் நாமும் கொள்ளாமற் கூர்கெட்டிற் கொளுவிப் பின்பு கைக்கெட்டாத் தடுமாறும் கவலை போலும் கணக்கற்ற ஆசைகளாற் கலங்கு கின்ருேம் சக்திக்குத் தகுந்தாற்போற் சார வேண்டும் சகதிக்குள் இறங்காமல் தப்ப வேண்டும் இக்கட்டுக் கிடமின்றி இயல்பாய் வாழ்ந்தால் இப்பிறப்பில் மறுபிறவி எய்து வோமே !
28
 

நீண்டபெரும் நோயாளி நிலைமை மாறி நிறைககத்தால் நிலைப்பதுவும் மிடித்தாக் கத்தால் மாண்டுவிடல் மதியென்போர் மாசெல் வத்தால் மறுமலர்ச்சி எய்துவதும் சாதி பேதத் தூண்டுதலால் தொலைந்திடுமென் தூய காதல் தொடர்புகெடாதுறவோங்கித் துணைசேர்வாழ்வும் ஈண்டுமறு பிறப்பென்றே ஏற்றுக் கொள்தல் இனிதாகும் இகத்துக்கும் எழிலே யாகும்.
29

Page 26
இருவேறுலகம்
அறிவின் நுணுக்கம் விஞ்ஞானம் - அதில்
அதிபய மிருக்கும் அவதானம்
நெறியின் நிறைவே ஆன்மீகம் - இதில்
நிம்மதி யிருக்கும் தெய்வீகம்.
பொருளின் ஆய்வால் விஞ்ஞானம் - மின்
பொருளைப் புதுக்கும் புதுமையதாய்ப்
பொருளைப் புரியும் ஆன்மீகம் - இறைப்
பொருளைப் புகட்டும் மெய்ஞ்ஞானம்.
விழிய்ை மாற்றும் விஞ்ஞானம் - பல ஒளியை உதவும் உலகினிலே!
விழியை விரிக்கும் ஆன்மீகம் - மெய்
ஒளியை உயர்த்தும் உளத்தினிலே,
போரைச் செய்யும் கருவிகளால் - பெரும் புரட்சியை விளைக்கும் விஞ்ஞானம்
பாரைப் புரியும் ஆன்மீகம் - மனு
பக்தியை வளர்க்கும் பாங்குடனே!
30
 

பண்டைய முறையைப் பரிகசிக்கும் - பல பாதைகள் காட்டும் விஞ்ஞானம்
தொண்டினைத் தொடரும் ஆன்மீகம் - சம தொடர்பினை ஆக்கித் துலங்கிடுமே !
விண்ணகக் கோள்களை ஆய்ந்திடவே - மிக விரைவுறும் கோள்செயும் விஞ்ஞானம்
விண்ணக வளங்களை ஆன்மீகம் - இம் மண்ணகத் திருந்தே மதித்துவிடும்.
இருதயம் மாற்றும் விஞ்ஞானம் - உடன்
இடர்தனை நீக்கும் இதமாயின் இருதயம் நிறைக்கும் ஆன்மீகம் - இது
இறைவனைச் சமமாய் இசைத்திடுமே !
மன்னுயிர் பேணும் தன்மையிலார் - கை
வாய்த்திடில் வருத்தும் விஞ்ஞானம்
தன்னுயிர் போலும் மன்னுயிரை - தினம்
தாங்கும் தவமே ஆன்மீகம்!
31

Page 27
ஏனிந்த நிலை
வெள்ளை நுரைதள்ளி விக்கி விழுங்கியும் வீறப்புக் கொள்ளுகின்ருய் - வெறி
துள்ளத் தொடர்ந்தும்பின் கள்ளைக் குடித்துநீ
சோர்ந்தெழு கின்றனயோ?
நீலஞ் செறிந்தவுன் நீளுட லைக்கண்டே நெஞ்சங் கலங்குதையோ - இந்தக்
கோலம் எழுந்திடக் கொல்லும் விடத்தைக்
குடித்தனை யோகடலே !
தத்தளிக் கின்றவுன் தாழ்வினைக் காணவோர்
சஞ்சல மாகுதையோ - நல்ல முத்தளிக் கும்முனைப் பித்தநி லைக்குள்ளே
வைத்தன ரார்கடலே?
ஊசியி னல்நஞ்சை உன்றன் உடல்தனில்
ஊட்டின ரோகடலே - நன்கு பேசிப் பிறங்குமுன் ஆசையி னல்வலை
வீசிக் கெடுத்தனரோ!
32
 

மச்சம் படர்ந்தவுன் மாமேனி யில்மக்கள்
வைத்தகண் ணுாறுபட்டோ - நீயும்
அச்சந் தருமொலி யார்த்தழு கின்றன
ஆறுதல் எப்பொழுதோ?
உப்பை உளத்தினில் வைத்திருக் கின்றதால்
ஊறு விளைந்ததுவோ - வரும்
கப்பலைக் காவிடும் கட்டத்தி னுலென்றும்
கத்திக் கலங்கிறியோ?
ஓடிவந் தேகரை ஓரத்தைப் பார்க்குமுன்
ஒதை உலைவுகளால் - உனத்
தேடிவந் தோர்தமைத் தீண்டிச் சிலாவியே
சேட்டைகள் செய்வதுமேன்?
காற்றினைக் கண்டதும் கர்வமாய்ப் பொங்கிடும்
காரணம் என்னென்னவோ - மதி
ஊற்றிடும் தண்ணுெளிக் கொய்யாரங் காட்டிடும் ஒற்றுமை தானென்னவோ? -
குன்றினில் ஊற்றெடுத் துன்றனைக் கூடிடும்
கோலக் குமர்களையே - நீயும்
ஒன்றிய இன்பத்தின் உற்சாக மோவிந்த
ஒதை ஒலியசைவே !
ஆழநீ ளத்தினில் ஆர்த்தலில் சேர்த்தலில்
ஆடும் அலைகடலே - செல்வம்
குழநீ வாழுக தோணிக ளோட்டுவோம்
தொல்லைவேண் டாங்கடலே !
33

Page 28
வெள்ளைக் கமலம்
34
ஊற்றுப் பெருக்கார் சேற்றினிலே ஒன்றிய வித்தில் உயிர்பெற்றே கீற்ருய் எழுந்த தாமரையில் கெழுமை நிறைந்த நறுமலராய்ச் சாற்றும் சகல கலைகளுக்கும் தலைமைப் பீடம் தானெனவே போற்றிப் புகழும் பொற்போங்கிப் பொருந்திப் பூத்துப் பொலிந்ததுவே !
சதிரார் தண்டின் தளையாகித் தண்ணுர் பொய்கைத் தலையாகிக் கதிரோன் காதற் கனிவாகிக் காண்போர் கண்ணுர் கலையாகி மதுவார் தெய்வ மணமாகி வண்டார் மாண்பு வனப்பாகி
இதமார் இன்பார் இதழாகி இலங்கும் வெள்ளைக் கமலமதே !
 

பிள்ளை உளமார் பேரெழிலும் பெரியோர் பிறங்கும் பெற்றியதும் பள்ளத் திருப்போர் உய்வினையும் படிக நிறத்தின் பாங்கினையும் கள்ளங் கபடம் அற்றேரின் கணிவும் இனிமைக் கண்ணியமும் வெள்ளைக் கமலம் மேலோங்கி விரிந்தே விளங்கும் மென்மையதே !
35

Page 29
கறுப்பியெனும் கட்டழகே!
கரும்பினிய சுவைதருநேர்க் காதற் கைநீள் கறுப்பியெனும் கட்டழகே கைகள் ஏந்தும் குரும்பைமுலைக் குளிர்கண்ணே கூடற் கோதே! கொழுத்தகனிக் குலைக்குன்றே குமிழார் கொத்தே அரும்புகுழல் அகவெண்மை அணங்கே பாசி அழுத்தமுறும் தோகைவிரித் தாடும் மாதே! இரும்பனைய இடைக்கட்டே பொன்வா ளேந்தி எழுச்சியுறும் இசைவீச்சே எளியோர் தேனே!
குண்டுபல கொண்டுபலம் கூட்டிக் கூரார் கோலேந்திக் குளிர்பச்சைக் குடையும் மேவ மண்டிடரில் மாவளமார் ஆட்சி மன்ன வானத்தோன் காதலினுல் மாட்சி பெற்ருய்! பண்டை நெறிப் பதிவேட்டுப் பலசட் டங்கள் பாங்காரப் பரவுமுயர் பரம்ப ரைச்சீர் கண்டுபலர் ஆய்வுக்கே காதல் கொள்ளும் கடுக்கனசை கழுமணியே கமழு வாயே!
36
 

வண்டுபல வந்தணைய மணமும் செய்வாய் வாட்டமின்றி நீட்டமுறும் வனப்பு மாவாய் கொண்டலொடும் குளிர்கச்சான் கொடுமைக் குள்ளே குலுக்கமுற்றும் கோணுதே குத்தாய் நிற்பாய் அண்டவெளி ஆராய்வுக் காயத் தம்போல் அணிவகுத்தே நிற்குமுன்றன் அழகுக் கோலம் கண்டறியா நாகரிகக் கலப்பே கண்டார்
கையேந்திக் கவல்கின்ருர் கவனிப் பாயே!
பெரும்பயனர் ஆதியந்தம் பிறங்கும் பெண்ணே! பெற்றவுன்றன் பிள்ளைகட்கண் பிழையில் லாக்கால் வரும்படியை வளமூட்டி வைத்தே மண்ணில் மாந்தருக்கு மாசெல்வ மதிப்பே ஈவாய்! விரும்பியுனை மேதினிக்கண் விதைப்போ மாயின் மெய்யொடியும் பசிப்பிணிநோய் விலகிப் போகும் அரும்பயனே அம்பனையே அவனிக் கண்ணே ஆயிரமா யிரம்வருட ஆட்சித் தேனே!
முன்னுடல் வடலியென முளைத்து மூத்தே மூலதன முத்தாகி முழுமை பெற்ருய் பொன்னரும் பொடிதும்பும் புரிசெய் ஈர்க்கும் புனசார்வும் புனர்வாழ்வால் புதுமை பூப்பாய் பன்னுடை தன்னுரடற் பலமே கொள்வாய் பாலென்ன உள்ளாடைப் பாங்கே நல்லாய் என்னடென் ஈழவள யாழ்ப்பா ணத்தே இலங்குமெழில் இதம்போலும் எங்கும் வாழ்வாய்!
37

Page 30
கொடும் வெயிற் கொதிப்பதனைக் குறைப்பாய் நோயைக் குணப்படுத்தும் சஞ்சீவி யாவாய் கள்ளை எடுப்போரும் குடிப்போரும் ஏற்றத் தாழ்வே இன்றியொரு இனசனம்போல் இணையச் செய்வாய் முடிக்கேறும் முட்டிகளின் முகங்கோ னுமல் முத்தமிட்டே முத்துகளைச் சொரிவாய் உன்றன் கொடியேறி விட்டாலோ கொண்டாட் டத்தின் குறைவில்லைக் கூத்தாட்டிக் கொள் வாய் கோதே !
நாதஞ்செய் நாகங்கள் நயந்தே சூழும் நற்கருக்காத் தாளென்னும் நாம முற்றும் போதஞ்செய் கலைவாணி பொற்பைப் போற்றும் புகழிசையாழ் பொருந்துமுயர் பொலிவும் இன்பக் காதல்மெய்ச் சந்தானக் கவினே காட்டக் கருணைமழை கணியுமருட் காவற் கண்ணுர் மாதங்கி வதியுமெழில் மாண்ப டிச்சீர் மாதருவே மதிப்பனையே வளமே வாழி 1
38
 

பண்டைத் தமிழர் நகை
தமிழ்ச்செல்வி பாட்டி பாட்டியெங்கள் பண்டைத் தமிழ்க்குலம் பாவித்த நன்னகை சொல்லுவையோ-அதைக் கேட்டே யறிந்திட ஆவல்கொண் டேன்நகை கிட்டினுற் சேமிக்க ஆர்வங்கொண்டேன்.
பாட்டி
ஏனடி பிள்ளைநீ எம்முன் நகைதனை
இன்பமாய்க் கேட்டிட எண்ணங்கொண்டாய்-முன்பு
நானு மணிந்தபொன் நன்னகை கேட்டின்று
நங்கையே புன்னகை செய்குவையோ ?
தமிழ்ச்செல்வி நான்னகை யேனந்த நாகரீ கப்பொருள்
நாட்டின் நயத்தினைக் காட்டிடுமே-அதன் மேன்மையை நீட்டியோர் கட்டுரை செய்குவன் மெய்யாய் உரைத்திடு பாட்டிபாட்டி.
39.

Page 31
U T L" tą. பண்டைத் தமிழ்நகைப் பட்டிய லொன்றினைப்
பாங்குடன் சொல்லுவேன் கேள் மகளே-கலைத் திண்மையை நுண்மையைத் தேர்ந்துகொள் வாயடி செந்தமிழ்ச் சீர்கொள்ளும் சின்னப்பெண்ணே!
நெற்றி வரிவகை உச்சி வரிநகை
சூரிய சந்திரப் பேர்ப்பிறைகள்-நன்கு
சுற்றிய கொண்டைக்குச் சூட்டிடும் சொர்ணப்பூ
சொல்லுமி ருக்கொடி தாழம்பூசேர்
வாரிச் சடைபின்னி வார்வளை தாழம்பூ
வாலைக் குமரியர் வைத்துக்கொள்வார்-மேலும்
நேரிற் சடைநாகம் நீட்டித் துலங்கிடும்
நேரிழை யார்கூந்தற் பின்னலிலே !
சொன்ன நகைவகை மின்னும் தமிழ்த்தலைச்
சோடனைச் சுந்தரச் சொத்துக்களாய் -இதில்
பொன்னும் வைரமும் முத்தும் பொலிந்திடும்
பூரண மாகலை பொங்கியெழும்!
கேளடி செந்தமிழ் கேட்டிடும் காதுக்குக்
கீர்த்தி மிகுந்த நகைவகையை-நல்ல நீளடி தொங்கிடு கொம்புவா ளியுடன்
நேரொளி வீசிடும் தோடுகளே !
மன்னும் மயிர்மாட்டி வைரக்கு றட்டுடன்
வண்ணக் கறனப்பூ காதுப்பூவும்-நன்கு மின்னும் முருகொடு மேலும் கடுக்கனும்
முன்னை அணிகளாய்ப் பேணினரே!
40
 

மின்னி மிளிர்ந்திடும் மெல்லியர் மூக்கினில்
மன்னிப் புலாக்கும் மலர்ந்துதொங்கும்-முன்பு
சின்னப் பருவத்தின் நன்மைக் கருமத்தில்
சேர்ந்தெழும் மூக்குத்திச் சீரணியே !
ஆச்சியர் கட்டுவர் கீச்சு மணியென்னில்
ஆச்சரி யப்பட்டுக் கொள்வாயே-நல்ல
ஐந்துபட் டால்மணி ஏழுபட் டால்மணி
அற்ப கரும்மணிக் கோப்பிலுண்டே !
கம்பிப்பூ ரானட்டி யல்சர டுங்கல்லு
அட்டியல் உள்கட்டு நற்கழுத்தான்-மேலும்
சம்பத் தெழுந்தாலி சாரப் பலநகை
சாத்துப் படிநிகர் தாங்குவரே !
சிங்க முகக்காப்பு சம்புநா தம்வளை
சேர்ந்த அழுக்காமை யோட்டுவளை-நல்ல
கங்கண மாங்கொலி சென்றும் கரங்களில்
காப்புப் பெயர்நிறை காணிடலாம்!
கால்கொலிசேர்நெல்லிக்காய்க்கொலிசார்தண்டை
காலணி யாம்பீலி மயிலடியும் - நல்ல
சால்பணி முன்தாங்கி மீன்குஞ்சு பதரசம்
தாளமை நன்னகை சாற்றினனே !
இன்னும் பொதுநகை ஏற்றத்தைக் கேளடி
என்னரு மைத்தமிழ் ஏந்திழையே-நல்ல
பின்னற் சரப்பளி பின்தொடு சங்கிலி
பிள்ளை அரை மூடி நற்சலங்கை!
4.

Page 32
வண்ணப் பதக்கம் அவல்மா லைகெளரி
சங்கமும் நற்பஞ்ச ஆயுதமும்-நல்ல
மின்னற் கொடியிடை ஒட்டியா ணந்தங்க மென்தக டச்சரக் கூடுமுண்டே !
சங்கையு றுந்தமிழ்ப் பண்டை நகைகளைச்
சாற்றினனேதமிழ்ச்சாதிப்பெண்ணே-இப்போ
மங்கையே யாகியும் மூக்கினைக் குத்தாத
மந்திர மென்னவோ மாயப்பெண்ணே !
அங்கத் தழகினை ஆபர ணங்கொண்டே
ஆடவர் ப்ெண்டிரை அக்காலம்-நல்ல சங்கையாய் வர்ணித்துச் சாந்தப் படுத்தினர்
சால்புடன் கேளடி ஞானப்பெண்ணே !
இங்கே உமக்கெழி லேற்றங் கொடுத்திட
என்ன இருக்குதோ இக்காலம்-கெட்டித் தங்க நகையேது தாங்கப் பலமேது
தள்ளாடி வீழ்ந்திடும் ஜாலப்பெண்ணே !
தமிழ்ச்செல்வி பாட்டி பாட்டிநானும் கேட்டே மகிழ்ந்திடப்
பண்டைத் தமிழ்நகைப் பாங்குரைத்தாய்-இந்த நாட்டி லவையணி நாகரீ கத்தினை
நான்முதற் செய்குவேன் நன்றி! நன்றி !!
箕
42
 

ஞானத்தாய்
துடிப்புள விஞ்ஞா னத்தின்
தூண்டுநேர்த் தொடர்பே யின்றி அடிக்கலம் வெடித்தெ ழுந்த
ஆதிக்கண் ஆன்மீ கத்தாய் முடிக்குளே முத்தம் முட்ட
மூட்டுமென் முறுவல் முற்றித் திடத்தொடர் சிவப்பி யென்றே
சீரெழும் தென்னம் பிள்ளாய் !
கொம்பொளிர் குலையும் கூட்டுக் குலவுமா கலையும் மட்டைத் தெம்பொளிர் சிறப்புக் கட்டும்
தீஞ்சுவைத் திருப்பாற் சொட்டும் தும்பொளிர் துடைப்ப மூட்டும்
தோரணத் தொடுப்புக் காட்டும் அம்புவிக் கழகே யூட்டும்
ஆக்கமார் அன்புப் பிள்ளாய் !
43

Page 33
44
வழுவுளர் வாய்க்க லக்கல்
வலிவுளர் மடக்கிக் குத்தல் இழிசெய லாகு மல்லால்
எழுச்சியின் இதமா காதே ! தெளிவுள நெறிகள் தேறிச்
சீர்பணி சிறக்கச் செத்தல் முழுமைசேர் புகழ்நே ரென்றே
முதிர்ந்து சொல் முறையார் பிள்ளாய் !
தொல்லைசூழ் சுழற்சி மாய்கைத்
தொடர்கெட மலமும் நீங்கின் செல்வமார் ஞானச் சீரைச்
சேரலா மென்னும் சித்துச் சொல்லுநேர் சூக்கு மத்தைத்
தும்பினுற் சிரட்டைச் சுற்றல் நல்லபாற் பொருளால் நாட்டி
ஞானத்தாய் நயம்பெற் ருயே!
உம்பரோ டுறவு மோங்க
ஊற்றெடு மூற்ருய் ஒன்றும் செம்பொருட் செழுநீர்ச் சேற்றைச்
சென்னியா லுதவும் தெங்கே ! வம்புள வண்டே யுன்றன்
வயிரியென் றுணரு வாயே! நும்பலம் நுடங்கா தாயின்
நுகர்ப்பலம் நூறு நூறே !
 

திருவிளக் கேற்றி யன்பைச்
செலுத்திநல் லருளே கூரப் பரவுபாற் பழக்காய் நல்கும்
பணிமிளிர் பண்புப் பிள்ளாய் ! இரவியின் இசைவும் மண்ணின் இதமுயர் ஈர லிப்பும் மருவிநல் வளங்கொ ழித்து
வனப்பினை வழங்கி வாழி !
45

Page 34
கணநாத கனகக் கனியே!
பொங்குமெழில் தங்குமரி யாலையுயர்ப் பொழுதெனப்
பூரிக்கும் புதுமை உணர்வே ! Hனிதமுறும் இனியதமிழ்ப் புலமைகமழ் கலைதவழும் பொருளாகிப் பொலிந்த புகழே ! - எங்களித யத்திலித மீந்துநெறி யேற்றுமுயர்
இன்பமய மான இறையே 1 ஏதமில தின்னருளை ஈட்டுநிறை இமயமாய்
இலங்குதிருப் பொருந்து மிணைவே ! துங்கமணி சூடுமெழிற் சுந்தரமா தந்திமுகா !
தொல்வினையைச் சுட்டெ ரித்தே தூயபணி யாலெமது சூழலுயர் வாகிடத்
துணையாகித் துலங்கு முதலே ! கங்கைமலர்சங்கருமைக் கன்புமலர்க்காந்தியெனும்
கணநாத கனகக் கனியே ! காதலொடு பணிபவரைக் காப்பாற்றிக் களிப்பூட்டும்
கணேசமணி யேபோற்றி னேன்!
46
 

கோணேசர் கோனே!
ஆழியின் அரவ னைப்பும்
ஆகம வணிய மைசீர் காழியின் கவிக்க லப்பும்
காண்கலைக் கவின்நி லைப்பும் யாழிசைக் குயர்ம திப்பும்
எவரையும் கவர்ந்து நிற்குஞ் சூழுயர் சோதித் தொன்மை
தூயகோ ணேசர் கோனே !
வண்டுகள் இனிது பாடி
மகிழ்வுறும் சோலை நீழற் குன்றுமேற் கோயில் கூடிக்
கொற்றவன் குளக்கோட் டாணுல் பண்டைநாட் பணிசெய் பற்றுப் பாங்கினுற் பரந்த ஈழ மண்டல மணியே மாண்பு
வாழுங்கோ ணேசர் கோனே !
47

Page 35
48
வெள்ளியங் கிரியே அன்பு
வீரரா வனனின் வீச்சே அள்ளியே அருளைக் கொள்ள
ஆட்கொளும் அரனே இன்பப் புள்ளிமான் பொலிவே பொற்பைப்
புகுத்திடும் புதுமைப் பித்தே ! பிள்ளையென் கவியின் வித்தாய்ப்
பிறந்தகோ ணேசர் கோனே !
 

யாழ்பதிக்கு வாவா
குன்றேறி விளையாடும் குமரனே உன்குணம்
குறையாத தேனேவேல் முருகா!-குணம்
குன்ருத அடியார்கள் என்றும் வணங்கிடக்
குமரனே ஒடோடி வாவா!
காடுகளும் மேடுகளும் கண்டே உறைவிடம்
களித்தாட வேண்டுமோ முருகா ! --நல்ல
கதிரமலை போலுயரக் கோபுரம் கட்டுவோம்
கந்தனே ஓடோடி வாவா!
தேன்சொரியும் காடுனது திருவிளை யாடற்குத்
தேர்ந்தஇட மானதோ முருகா!-நல்ல தென்னைபனை செவ்வாழை தேன்தோடை மாதுளை
செழித்தநல் யாழ்பதிக்கு வாவா கங்கைதனில் நீராடி அங்கம் பொலிந்தோங்கி அங்கே இருந்திடல் அழகோ?-நல்ல
தொங்குகுலை இளநீரும் தூயபசும் பால்கொண்டு
அங்கம் துலக்குவோம் வாவா!
49

Page 36
தேனும் தினைமாவும் தின்றதினிப் போதுமே தென்கதிரைப் பதிமீது முருகா 1-நல்ல
தேனினும் இனிய செந் தமிழிசை பாடியே
செவிக்கமுது செய்குவோம் வாவா!
பட்டாடை யோடுபல முத்தாரம் பூட்டியே
பவனியெழச் செய்குவோம் முருகா !-நல்ல கைத்தாள மொடுவீணை மத்தளம் கொட்டியே
காதலிசை பாடுவோம் வாவா!
யானைமீ தேறியே எழில்பவனி வந்தங்கு
இன்பம் அளிப்பாயே முருகா!-உயர்
வானவர் ஊர்ந்திடும் வண்ணரதம் போலிங்கு
வகைவகை தருவோமே வாவா!
மின்சார ஒளிபூட்டி மிளிர்ந்திடும் மஞ்சத்தில்
அஞ்சாம லேபவனி வரலாம்-தங்கு
முன்சார லோங்குமலை போலுயரச் சப்பரம்
உனக்காக உண்டிங்கு வாவா!
மலரா லிழைத்தநல் வாசனைச் சப்பரம்
வடிவா யமைத்துநாம் தருவோம்-வீதி
வலமாக வேயுனது மாதரிரு பேருடன் வரலாமே நல்லூரில் முருகா!
வள்ளிதெய் வானமகிழ் வடிவேல னேதமிழ்
மணியாய் விளங்குமுயர் முருகா!-நல்ல
வெள்ளிரத மீதிலே நல்லைப்பதி சுற்றியே
விளையாட ஓடோடி வாவா!
50
 

கந்தக்கனி
நாடு புகழ்ந்திடும் நல்லை தனில்மனம்
நாடும் நறுங்கனி நாளுமுண்டு-அங்கு
தேடிச் சுவைத்திடச் சென்றிடு வோமதைச் சித்தங் குளிர்ந்திடப் பாடிடுவோம்!
தோடு பொலிந்திடும் சோதி தனில்வந்து
சுந்தர மாகிய நற்கனியே-அதன்
பீடு தெரிந்தே பெரும்புல வர்பலர்
பேசிப் புகழ்வதைப் பேணிடுவோம்!
ஆடல் புரிந்திடு மாமயில் ஏறிடும்
ஆறு முகக்கனி நல்லையிலே-அருள் கூடிக் கனிந்து பொலிந்து நிறைந்தின்பம்
கொள்ளத் தருவதைப் பெற்றிடுவோம்!
வாடி மெலிந்து வருந்திடு வார்பலம்
வாய்த்திட மாவருள் நற்கனியே-கலை நாடி வளர்த்திட நல்லருள் நல்கிடும் நாயக மாகிய நற்பொருளே!
5

Page 37
கண்ணைக் கவர்ந்திடும் காட்சி யெழுங்கனி
கற்பனைக் கெட்டாத கந்தக்கனி - எங்கள்
எண்ணத்தி லேநிதம் இன்பம் தருங்கனி
ஈழத்துக் கோர்ப்ொது வாகுங்கனி!
உள்ளக் கணிவொடு பிள்ளைக் கணியதை
ஒம்முரு காவென உச்சரித்தால்-அன்பு
வெள்ளத்தி லேயெழும் இன்பத்தி னல்வினைத் துன்பத்தை நாளுமே போக்கிடலாம்!
52

சித்தான வித்தே!
கடலோடு கலமாடக் கண்டுகதி யென்றே கரையேறு மன்பர்தம் மனதோடு வருவாய் உடனேடி ஒண்கோபு ரத்திலே உறைவாய் ஓடிவரு மடியாரை உள்ளே அழைப்பாய்!
குடமேவு நீரோடு பாலிளநீர் கொள்வாய்
குளிரக்கு விரித்துநிறை குங்குமமு மிடுவாய்
வடிவான பட்டாடை வண்ணமணி பொன்னும் வாசமலர் தீபவொளி பூசனையே பொலிவாய்!
கொடியாடு கம்பத்துக் குணபூசை கூர்வாய் கோலா கலத்துடனே குழலோசை கேட்பாய் அடியார்கள் புடைசூழ அன்பரங் காள்வாய் அர்ச்சனைகள் செய்வோரின் ஆராத்தி ஏற்பாய்!
நெடிதான கோபுரப் படிதாண்டி வருவாய் நேசமொடு நீள்பவனி நெறிசாரச் செய்வாய் அடியார்கள் இசைபாட அமுதமொழி தருவாய் அறிவாளர் உரைசெய்ய ஆம்பொருளு மாவாய்!
5 53

Page 38
முடிவேந்தர் காலத்து மூத்தமுது சொத்தே முத்துமணி பல்லவச் சித்தான வித்தே அடியேமை ஆட்கொள்ள ஆச்சியே வாராய் அழகான நயினைவாழ் அம்மையே பாராய்!
அத்தனின் பாகத்தை ஆட்சிசெய் அன்பே ஆழிசூழ் நயினைவாழ் நாகபூ சணியே சித்திரத் தேரேறிச் செல்வியே வாராய் சிந்தனை சீருறச் சித்தமே தாராய்!
54
 
 

புதுக் கோபுரத்திற் பொலிவாயே!
இசையா லெழுந்த யாழ்மா நகருக்
கெழிலுரட்டு மின்ப இறையோனே திசையாவு முன்றன் அருள்நாடிக் கூடத்
திறமான சித்தி புரிவோனே அசையாத பக்தி அடியார்கள் நித்தம்
அணிநின்று போற்றும் அமரோனே இசைஞான மூட்டும் முனியப்ப ரென்றே இதமுற் றழைக்கும் பெருமானே!
புலிமீ தமர்ந்து புதுமை பொலிந்து
பொருளாகி நிற்கும் முனியப்பா வலிதாய சக்தி வடிவாகி நின்று
வரமே வழங்கும் மறையோனே சலியாத பக்திக் குயர்வான சுத்த
தலமீந்த மூத்த தலைவோனே பொலிவான நல்ல கலைஞான மூட்டும்
புதுக்கோ புரத்திற் பொலிவாயே!
55

Page 39
தஞ்சம் எனக்கு வேறில்லை யென்று
தாழ்ந்தே வணங்கும் அடியார்க்கே அஞ்சே லெதற்கும் அருள்வே னெனச்சொல்
அபயங் கொடுக்கும் முனிநாதா விஞ்சும் கலைக்குப் பஞ்சம் இலாது
மேவும் அமைப்பு மிளிர்வோங்கும் மஞ்சா ருயர்ந்த மாகோ புரத்து
மணியோசை கேட்டு மகிழ்வாயே!
56
 
 

அப்பர் காட்டும் அன்புநெறி
மெய்யான தொண்டுகளால் மேலான அன்புதனைத் தெய்வத்தும் தேசத்தும் தேடிடலாம்-உய்வுக்கே அப்பர் அலகிட்டார் அன்பாய் மெழுக்கிட்டார் செப்பி மலரிட்டார் தேர்.
பெற்ற பெரும்பிறவிப் பேருர்ந்த மானுடரே கற்றே கவின்பாதை கைக்கொள்க-கற்றுாணைக் கட்டிக் கடல்தனிலே கைவிட்டும் காண்கரையைக் கிட்டியுய்த அப்பரன்பைக் கேள்.
பல்லக்கும் பஞ்சணையும் பட்டுப்பீ தாம்பரமும் நல்லப்பர் நாடவில்லை நாடறியும்-தொல்லைமிகக் கல்லுறுத்த முள்தைக்கக் கானல் குளிர்வருத்த அல்லலுற்றும் தொண்டுசெய்தார் ஆய்.
★
5骨

Page 40
58
சித்திரப் பல்லக் கேநிச்
சீர்காழி செல்லும் போது பித்தர்கள் அசைந்தே ஆடிப்
பிள்ளையைப் போட்டு விட்டால் முத்தியின் முனைப்ப ணைந்து
முட்டுமை இருள்தா னென்றே சித்தமே கலங்கி யப்பர்
சிவிகையைச் சுமந்து சென்ருர்?
அப்பரைக் காணே னென்றே
ஆளுடைப் பிள்ளை கேட்கச் செப்பினர் சிவிகை யேந்தும்
திருநாவுக் கரசர் சீரைக் குப்புற வீழ்ந்தாற் போலும்
குதித்தனர் குலத்துப் பிள்ளை அப்பரின் அடிக ளேத்தி
அன்புயர் ஆட்சி பெற்ருர் !
அப்பரின் பணியைத் தம்மின்
அலங்காரப் பவனிச் சீரை ஒப்பியே பிள்ளை பார்த்தே
உணர்ந்தனர் உயர்வை யங்கே எப்பெருங் குலமா னுலும்
ஏற்றமார் தொண்டன் முன்னே செப்பமாய் நிற்க மாட்டார்
சேவையே செகத்தின் சீரே!
 

எங்கே நமதிளைஞர்?
வீட்டினிலோ வீதியிலோ வித்தியா லயத்தினிலோ காட்டினிலோ கைத்தொழிலைக் கற்கும் கலையகத்தோ நாட்டினிலே நற்பணியை நாட்டும் நயவுரைகள்
பேட்டிகொளும் பேர்முனையோ பேணுகிருர் நம்மிளைஞர்?
ஆலயத்தின் பூசையிலோ ஆலைகள ரங்கினிலோ நூலகத்தின் சாலையிலோ நுண்கலைகொள் மன்றினிலோ நாலுபத்துப் பேர்கூடி நற்சாத னபுரியக்
காலைமுதல் மாலைவரை கற்பனையில் மூழ்கினரோ?
ஆழியிலே முத்தெடுக்க ஆவலுடன் போயினரோ மாளிகைகள் கட்டக்கல் மண்ணெடுக்கச் சென்றனரோ கோழிவளர் மாடுவளர் கூட்டுறவுப் பண்ணைகளில் நாளெல்லாம் பாடுபட நம்மிளைஞர்நண்ணினரோ?
ஆடும் அலைகடலுக் கஞ்சாது நெஞ்சுரமாய் ஒடந் தனிலேறி உற்சாக மாய்விழித்தும் வாடி வதங்கியுமே வையத்தில் வாழ்வதற்காய்த் தேடிப் பலமச்சம் சேர்க்கத்தான் சென்றனரோ?
59

Page 41
வேலையில்லாத் திண்டாட்ட வேதனையைப் போக்குதற்கும் காலமெல்லாம் நல்லுணவைக் காட்டுதற்கும் கண்ணியமார் மூலமெனும் முன்னுழவில் முந்திச்சீர் முத்தெடுக்கக் கோலமுறும் நம்மிளைஞர் கூடித்தான் போயினரோ?
எங்கே நமதிளைஞர் ஏற்றந் தருமினியர் தங்கக் கரமொளிரின் சக்தித் திருதழைக்கும் அங்கம் அசைவுபெற ஆர்வம் அருட்சிபெறின் பொங்கும் பொருட்பலத்தால் பூரிக்கும் பூதலமே!
6)

வேலியடைப்போமா?
கருத்தெழும் கதியாற் கட்டை கதிரேசர் பிள்ளை தந்தார்
நறுக்கியே நிரைநேர் பார்த்து
நாட்டினர் நாக ராஜன்
உரத்தினை ஊன்றிப் போட்டார்
உணர்வுடன் சுப்பிர மண்யன்
விரித்தனர் கிடுகுக் கட்டை
வி.கந்த வனமென் அன்பன்
திரித்தநற் கயிற்றுப் பந்தைச்
சிவநேசச் செல்வன் சேர்க்கச்
சரிக்குநேர் வரியை வைத்தார்
சண்முகன் கூடி நின்று
6

Page 42
62
சுருக்கிடாக் கயிற்றைக் கோத்துச் சுந்தரம் பிள்ளை கட்டிப்
பெருத்ததோர் வேலி செய்தார் பின் பெனக் கென்ன வேலை ?
இருக்கிற குப்பை தன்னை
இப்போதே கூட்டிச் சேர்த்து
நெருப்பினை வைக்க வந்தேன்
நிதானமாய்ப் பாரும் நேரே!
வேலி சோலி விசன மின்றி
விரிவ ரம்பு மேவி
சாலி கோலித் தந்த தனம்
சாரு தில்லைத் தாவி!
கட்டை நட்டுக் கம்பி தைத்துக் காவல் காட்டும் காலம்
கிட்டிக் கெட்டுக் கிடுகு வேலிக் கீற்று மூட்டும் காலம்!
கிடுகு வேலி கெட்டுப் போகக் கிடுகி டுக்கும் கதியால்
படுகு தென்று பார்த்தி ருக்கப் பறந்து போகும் காலம்!
பொட்டு விட்டுப் புகுந்து போகப் பொருந்திப் போனுற் போதும் தட்டிப் ப்ேசிப் பாதை யாக்கித்
தனதென் முக்கும் காலம்!
ܬܐܵ.

வேலி அடைப்போமா
வேளாண்மை செய்வோமா
கூலிக்கே ஆளில்லை
குறைப்படிப்பின் கோ லமிது
அரச பணிக்காசை 0 அத்தாட்சிப் பத்திரத்தை
விரைவாய் அனுப்பிவிட்டு
வீட்டினிலே வேலைசெய்யான்!
தெருவோரம் சுற்றிவரும்
தீரனுக்கு வேளாண்மை சரிவருமா அரைப்படிப்புத் தம்பிக்கு ஏதுதொழில் வேலையில்லாத் திண்டாட்டம்
வேகமுடன் தீர்வதற்கு வேலி அடைப்பாகும்
வேளாண்மை கைத்தொழிலே!
★
வேலிகளி னற்ருெல்லை வீட்டிலே நாட்டிலே
விளங்குபல தேசமதிலே காலிகளி னற்றெல்லை கழனிகளி லேகதிர்
காணமுடி யாதவல்லை வாலிகளி னுற்ருெல்லை வளமேவு தோட்டமதில்
வருமான வரிக்கில்லையே கூலிகளி னற்ருெல்லை குறைவிலாச் சம்பளம்
கொடுக்கினும் எல்லையிலையே!
63

Page 43
காளைகளி னற்ருெல்லை கழனிகளி லொருபக்கம்
கடந்துநம் வீடுவந்தால்
காளைகளி னற்ருெல்லை காதலின் கடினமே
கன்னிக்குக் காவலெல்லை
வேளைதனில்விவாகமதை முடித்துவிடுவோமெனில்
வேண்டுமே அதிசீதனம்
மூளையும் நித்தமும் எத்தனை பிரச்சினையில்
முட்டிமோ துகின்றதந்தோ!
★ வேலி எட்டிப் பார்த்தி டாது
விழியில் கவனம் வைப்பீர் சேலை கட்டி மானங் காத்துச்
சீரைத் தேடிக் கொள்வீர்
போலிப் பொடியள் புரட்டும் கண்ணில்
பொருந்தி டாது பெண்மைச் சீலத் தோடு செம்மை காக்கச் சிறந்த வேலி செய்வீர்!
பொன்பொருளைக் காப்பதற்குப் பூட்டு
பூட்டையுடைப் போர்தமக்குச் சிறையே மன்பதைகள் வாழ்வதற்குச் சட்டம் மானநட்டம் வாங்குதற்கு வாய்மை வன்புநிலை மாற்றுதற்குப் பொறுமை மாரடைப்பு வந்துவிட்டாற் சாவே
அன்புநெறி ஆட்சிபெறின் அருளே ஐக்கியமார் வேலியெழ அன்பே
64
வேலி வேலி
வேலி வேலி
வேலி
வேலி
வேலி மூலி!

காலம் மாறுமா?
கற்காலம் பொற்காலம் கண்டுவந்த விஞ்ஞானம் தற்காலம் தந்ததனுச் சக்திப் பெருங்காலம் நற்காலம் நாம்பார்க்க நாடிக்கை நீட்டிநிதம் புற்கோல மாகிவிட்டோம் பொற்கோல மெப்பொழுதோ?
சந்திர னிற் கல்லெடுத்தே தாரணிக்குக் கொண்டுவந்தே சிந்தனைக்கு ளேபதித்துத் தேர்வுபெறு மிக்காலம் மந்திரத்தால் மற்றவனை மாய்க்க மறைமுகமாய் அந்தரித்துச் சுற்றுமுறை அற்ருெழிதல் எக்காலம்?
விண்ணகத்தை ஆய்வதற்கே வீரமில்லை ஆனலிம் மண்ணகத்தை மாண்பாக்க மார்க்கமில்லை யோநமக்கே
உண்பதற்கும் ஒன்றுமின்றி ஒலமுற்று றங்குகிருேம் கண் திறந்தே நாடுதனைக் காப்பதுதா னெக்காலம்?
65

Page 44
வீட்டில் விளக்கேற்ற வேருெருவர் கைபார்த்தே நாட்டைக் கெடுத்துவிட்டே நாளும் நலிகின்ருேம் ஏட்டைப்புரட்டியுந்தான் என்னபயன்சாதித்தோம் காட்டும் அறிவொளியால்கைக்கொள்வோம்நல்லொளியே!
காலத்தையாமுணர்ந்தே கட்டுப்பாடாய்நடந்தால் சீலச் சிறப்பாரச் சேரும் எதிர்காலம்
மூலைக்குள் நாமிருந்தால் முன்னேற்றம் வந்திடுமோ ஞாலத்தை ஆராய்ந்தே நற்காலம் பெற்றிடுவோம்!
66

கவிஞன் பார்வை
பிண்டமும் பேசும் சுற்றப்
பிதிர்களும் பிறங்கும் வான மண்டலக் கோள்கள் வந்தே
வார்த்தைகள் வழங்கி வாழ்த்தும் வண்டுகள் வளங்கள் செப்பி
மரஞ்செடி கொடியில் மன்னும் தண்டமிழ்க் கவிஞன் சக்தி
சார்ந்தெழும் பார்வைக் கண்ணே!
செங்கதிர்ச் சிகையோ னுக்கும்
சேற்ருெளிர் சிரிப்புச் சீர்க்கும் இங்கித இணைவே கொள்ள
ஏற்றதோர் தரகுப் பார்வை அங்கும்ங் கரும்பக் காட்டும்
அற்புதக் கவிஞன் கண்ணை நுங்கென உறிஞ்சி னலும்
நோக்குவான் மனக்கண் நூருல்!
67

Page 45
68
மகளிரும் மானும் ஒப்பும்
வழிவிழி வனப்புப் பார்வை அகமொளிர் காதற் கண்ணே
அஃறிணைப் பொருள்சேர் பார்வை முகவெழில் மிளிர்வை முன்ன
முழுமதி மூட்டும் பார்வை செகமதிற் கவிஞன் பார்வை
சிந்திக்கும் கவிதைக் கோவை!
 

קו י
,
.
ി
:
.

Page 46


Page 47
~~~~~~~~~~~
கவிஞர் ஜவாத்துரை அவர்
༨ வேலுப்பிள்ளை அவர்களின் அரியாலையூர் பூரீ பார்வதி பயின்று பண்டிதர் மு. அன்பு மாணவனுகத் திகழ்
இன்று அவர் மூலம் கவிய அறிமுகமாகியுள்ளன. சு இசை பொழியும் கவி'யாக அரசினுற் கொண்டாடப் விழாவினே யொட்டி ந கீர்த்தனைப் போட்டியில் மு. பரிசை பூரீமதி விஜயலட்சும் வாங்கிய பெருமை மிகுந்த மேற்பார்வைச் சங்கம், ச1 களை யொட்டி நடாத்திய ( மூன்று ஆண்டுகள்-1969,
கலே வளரவும் கவிை வாணிக்குக் கோயில் இட் வரும் கவிஞர் ஐயாத்துரை இனநலத்தாலும் உயர்ந்த
சுன் அகம் திருமகள் அழுத்தகத்தில், கு. அவர்களால் அச்சிடப்பட்டு, யாழ், இலக்கி வி, கந்தவனம் அவர்களால் வெளியிடப்ெ
 

چیکھیے حجخھےہمیتھی
கள் அரியாலையூர் கதிர்காழு ன் கனிஷ்ட புதல்வர் 2 வித்தியாசாலையிற் கல்வி வேதநாயகம் அவர்களின் பவர்.
கவிஞர் அவர்கள் ஓர் அபூர்வ பிறவி. கவித் திறனும் இசைத்திறனும் ஏனைக் கலைத் திறனும் கைவரப் பெற்ற வர். அரியாலை பூரீ கலைமகள் நாடகசபாவின் இயக்கு நர். "அடங்காப்பிடாரி ? புகழ் சுண்டிக்குளி யாழ். நாடகக் கலாமன்றத்தின் செயலாளர் நடிகர்,
ஐயாத்துரை அவர்கள் கவியரங்கத்துக்கு யாழ். இலக்கிய வட்டத்தின் மூலம் அறிமுகமானவர். ரங்கங்கள் பல பகுதிகளில் வியரங்கங்களில் "கன்னல் அவர் விளங்கிவருகின்ருர், பட்ட காந்தி நூற்ருண்டு டாத்தப்பெற்ற காந்திக் தற்பரிசு பெற்றவர். அந்தப் பண்டிட் அவர்கள் வழங்க வர் 3 வடமாகாண ஐக்கிய ர்வதேசக் கூட்டுறவு தினங் போட்டிகளில் தொடர்ந்து 70. "71-பரிசு பெற்றவர். 2த வளம்பெறவும் கலை டி முறையாகப் பூசித்து அவர்கள் மனநலத்தாலும் க ைவி. க.
ജ്ഞപ്പ நம்பசிட்டி, திரு. முத்தையா சபாரத்தினம் ய வட்டத்துக்காக, குரும்பசிட்டி, கவிஞர் பற்றது. -- 1975