கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலக்கிய வரலாறு (B.A - A/L வகுப்புகள்)

Page 1
இலக்கிய
B.A - A/
6೫rgi நாயக்க
ຫຼິດບໍ່ມີ
தொகுப் பண்டிதை செல்வியோசே வெளியி

GIUJ GUITIJI
L வகுப்qகள்
காலம்
o ( 5(6WO
O o Uys 56VJC)
e/725256
ாமசுந்தரம் B.A. Dip.in. Edu 砂ーの5

Page 2

இலக்கிய வரலாறு
Β.Α - Α/L ωώάιμώάη
சோழர்காலம் நாயக்கர் காலம்
ஐரோப்பியர் காலம்
தொகுப்பாக்கம் பண்டிதை செல்வியோசோமசுந்தரம் B.A.Dip.in.Edu
வெளியீடு - 03

Page 3
.
 

என்னுரை
எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும் திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல்லறிவு வேண்டும்
இலக்கிய வரலாற்று நூல்களாகிய LäLit மு.வரதராஜன் அவர்களின் இலக்கிய வரலாறு, பேராசிரியர் வி.செல்வநாயகம் அவர்களின் தமிழ் இலக்கிய வரலாறு ஆகிய நூல்களைத் தழுவி சோழர்காலம், நாயக்கள் காலம், ஐரோப்பியர் காலம் பட்டப்படிப்பு க.பொ.த (உ/த) வகுப்பு மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் ஒழுங்குபடுத்தித் தந்துள்ளேன்.
எனது சொந்த ஆக்கம் எதுவுமில்லை. இது ஒரு தொகுப்பு முயற்சி மட்டுமே.
நன்றி
இல 30/2 10 வது ஒழுங்கை, இங்ங்னம்
வைரவபுளியங்குளம், யோகலட்சுமி சோமசுந்தரம்
வவுனியா.

Page 4
,
" , , , v
. ,
η
|
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பரந்து பட்ட இலக்கிய வளர்ச்சியில் சோழர்கால அரசியல் சவகப் பின்னணி.
- 鼎
சோழர்காலம் கி.பி 9 - 14 வரையான நூற்றாண்டுக்கு இடைப்பட்ட
காலம் ஆகும். இக் காலப்பரப்பில் காவியங்கள், பிரபந்தங்கள்,
சிற்றிலக்கியங்கள், இலக்கண நூல்கள், தத்துவ நூல்கள், புராணங்கள்,
நாடக நூல்கள், உரைநூல்கள் என்ற பல்வேறு இலக்கிய வகைகள்
பரந்துபட்ட வகையில் ஆழமாகவும் அகலமாகவும் வளர்ச்சி பெற்றன. எனவே
சோழர்காலமானது பல்வேறுபட்ட இலக்கிய வளர்ச்சிக்கு உரிய ஒரு
காலப்பகுதியாகும்.
"கங்கையும் கடாரமும் கைவரப் பெற்று சிங்காசனத்து இருந்த
செம்பியர் கோன்’ என்று சேக்கிழாரும், “இந்து மா கடல் சோழர்கள் நீந்தி
விளையாடிய குளம்” என்று நீலகண்ட சாஸ்திரிகளும் கூறிய கூற்றுக்களால் சோழமன்னர்கள் கடல் கடந்து பெருவளம் பெற்று கங்கைக்கரை வரையும்,
கிழக்கிந்திய தீவுகளையும் தம்மகப்படுத்தி பெரிய சாம்ராஜ்ய அதிபதிகளாக
விளங்கினர் என்பது தெளிவாகின்றது. கடல் கடந்து பெற்ற பெருவளம்,
அரசியல் உறுதிப்பாடு, சீரும் சிறப்பும் மிக்க ஓர் சூழ்நிலை, சாம்ராஜ்ய
ஸ்தாபிதம், பொருள்வளம் மிகுந்த நிலை, மக்கள் உள்ளத்தில் புத்துணர்வும்,
புதுமகிழ்வும் ஏற்படுத்தியமையால் அச் சமுதாயத்திலிருந்து பெரும் புலவர்கள்
பலர் தோற்றம் பெற்றமையால் அது பரந்துபட்ட வகையில் இலக்கியங்கள்
வளர்ச்சி பெறுவதற்கு கால்கோளாக அமைந்தன.
சோழர்கால சமுதாய நிலையை நோக்கும் இடத்து அக்கால மக்களுடைய வாழ்வு பல வகையிலும் பொலிவு பெற்றிருந்தது. செல்வநிலை
மிகுந்து இருந்தமையால் மக்கள் மனநிறைவுடன் காணப்பட்டனர். 'மக்கள் Cad

Page 5
பண்பாடும், ஆட்சி மேம்பாடும்பெற்றிருந்த உயர்நிலை கலை சார்புடைய இலக்கியங்கள் தோன்றுவதற்கு வித்திட்டன. மன்னர்கள் நாட்டு நலன் கருதி ஆட்சி புரிந்தனர். பகை, பசி, பிணி என்பன நாட்டை விட்டகன்று செல்வம் மலிந்திருந்தது. எனவே மாட்சிமை மிக்க மன்னர்களின் ஆட்சி விரும்பப்பட்டது. இதனால் உலகியலை சிறப்பித்து இலக்கியங்கள் எழுந்தன.
“காவிரி நாடன்ன களனி நாடு’ என்று போற்றப்படும் சோழநாட்டில் சமயச்சார்பும், உலகியல் சார்பும் முழுநிலை பெற்றிருந்தன. சமயங்கள் போட்டியின்றி வாழ்ந்தன. சமயமும் இயற்கை வாழ்வும் அறநெறியும் ஒன்றிய ஓர் சமுதாய அமைப்பு காணப்பட்டது. சமயங்கள் போட்டியின்றி சமய சமரசத்துடன் முரண்டபடாத வகையில் எழிச்சி பெற்றன. எனவே சமய ஒழுக்கத்தைப் பாராட்டி சமயச் சார்புடைய இலக்கியங்கள் எழுந்தன. உலகியல் விருத்தி சமயவிருத்திக்கு தடையான ஒன்று அன்று என்ற கருத்து மேலோங்கியது. இதனால் சமயமும் சமயம் சார்ந்த கோயில்களும், சமயத்தோடு சேர்ந்த தத்துவங்களும் முளைவிட அவற்றைப் பொருளாகக் கொண்டு பரந்து பட்ட இலக்கியங்கள் எழுச்சி பெற்றன. சமயத்தைப் பின்னணியாகக் கொண்டு வாழ்வு பல வகையிலும் பொலிவு பெற்றது. மன்னன் சைவ சமயத்தவனாக இருந்த போதும் ஏனைய சமயங்களையும் ஆதரித்தமையால் காவியப்பண்பு உடைய பெருங்காப்பியங்கள். சிறு காப்பியங்கள், புராணங்கள், பிரபந்தங்கள், சிற்றில்க்கியங்கள் ஆகியன
எழுச்சி பெற்றன.
தத்துவக் கருத்துக்களைப் பொருளாகக் கொண்டு சைவசித்தாந்தம் சுத்தாத்வைதம், விசிட்டாத்வைதம் போன்ற தத்துவங்கள் மேலெழ அவற்றை விளக்கும் தத்துவ நூல்களும் எழிச்சி பெற்றன. பல்லவர் காலத்தில் பாடல்
பெற்ற பக்திப்பாடல்கள் இக்காலத்தில் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. C6 D

வட மொழிச் செல்வாக்கு சோழர்காலப் பகுதியில் வலுப்பெற்றது. வடநாட்டில் இருந்து பிராமணர்களைக் கொண்டு வந்து குடியமர்த்தியதன் விளைவாக வடமொழிச் செல்வாக்கு ஏற்பட்டது. எனவே வடமொழி நூல்கள் தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டன. வட மொழிச் சொற்கள் தமிழில் கலந்தன. எனவே வட மொழி இலக்கணத்தை தமிழ் மொழி இலக்கணத்தில் நின்றும் வேறுபடுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனால் வீரசோழியம், நேமிநாதம் போன்ற வடமொழி சார்ந்த இலக்கண நூல்களும், நன்னூல் தண்டியலங்காரம் முதலிய தமிழ் மொழி சார்நத இலக்கண நூல்களும் எழுந்தன. அதேநேரம் வட மொழிக் காவியமும், கதைகளும் புலவர்களின் கற்பனையைத் தூண்ட மக்களும் பழங்கதைகளில் ஆர்வம் காட்ட அவை புலவர்களின் கற்பனையில் காவியங்களாக உருப்பெற்றன.
சோழர் காலத்தில் காவியங்களும், தத்துவங்களும், பிரபந்தங்களும் தோற்றம் பெற அவற்றைக் கற்பதில் ஈடுபாடு கொண்டவர்கள் அவற்றுக்கு விரிவான உரைகளை எழுத வேண்டிய தேவை ஏற்பட்டது. எனவே இளம் பூரணர், பேராசிரியர் போன்ற உரை ஆசிரியர்கள் பலர் இக்காலத்தில் எழுச்சி பெற்றனர். எனவே சோழர்கால அரசியல், சமுதாய பொருளாதார
சூழ்நிலையே பரந்துபட்ட இலக்கிய வளர்ச்சிக்கு வித்திட்டன எனலாம்.
C7)

Page 6
காவிய வளர்ச்சி பெறுவதற்கான காரணங்கள்
சோழர் காலத்தில் எழுந்த இலக்கியப்பரப்புகளுள் காவியங்கள் குறிப்பிடத்தக்கவை. தமிழ் இலக்கிய மரபிலே புதிய போக்கும் மாற்றமும் கொண்ட இலக்கியமாக காவியம் கொள்ளப்படுகிறது. வடமொழி இலக்கண மரபைத் தழுவி அந்த இலக்கணத்துக்கு ஏற்ப கடவுள் வாழ்த்துடன், தன்னிகரில்லாத் தலைவனை உடைத்தாய் மலை, கடல், நாடு, இருசுடர்த் தோற்றம் என்று இனையன புனைந்து அறம், பொருள், இன்பம், வீடு எனும் நாற்பொருள் பயப்பதாய் நாட்டு வர்ணனை, நகர வர்ணனை மிகுந்து ஒன்பான் சுவைகளும், அணிநயங்களும் நிறைந்து சுவைபட படைப்பது காப்பியம் ஆகும். இவ்வாறு சோழர் காலப் பகுதியில் பெருமையும், சிறப்பும் மிகுந்த எல்லாமே பெருமையும் சிறந்தனவும் ஆனபோது மக்களது எண்ணங்களும் சிந்தனைகளும் பரந்தனவாகவும், விரிந்தனவாகவும் அமைந்தன. அவற்றைப் பிரதிபலிப்பதற்கு பெரியதொரு இலக்கிய வடிவம் தேவைப்பட்டது. அதே காலப்பகுதியில் தண்டியலங்காரம் கூறும் காவிய இலக்கணமும் காவியத்துக்குத் தேவையான அனைத்தையும் வழங்கியமையால் காவியங்கள் பெருந்தொகையாக எழுந்தன. சோழப் பெருமன்னரது ஆட்சித்திறன், வீரம், பண்புநலம் ஆகியவை காவியத்துக்கு தேவையான அனைத்தையும் தன்னிகரில்லாத தலைவனுக்கு கொடுக்க புதியனவும் பெரியனவுமாகிய காவியங்களைப் புலவர் படைத்தனர்.
சோழர்கால நாடு நகரங்கள் காவியத்துக்கு தேவையான நாட்டு வர்ணனைகளை வழங்கின. எனவே நாடு காவியத்துக்கு வேண்டிய பொருளை வழங்கியமையால் இக்காலப் பகுதியில் காவியங்கள் பெருமளவில் எழுந்தன. சோழமன்னனின் ஆதிக்க எல்லை விரிவடைய பல்வேறுபட்ட மொழி பேசுகின்ற மக்கள் சழுதாயத்தினர் சோழ சாம்ராச்சியத்துக்குள் வாழ வேண்டிய வாய்ப்புக்கள் ஏற்பட்டன. இவ்வாறு வாழ்ந்து வந்த புலவர்கள் தம்முள் இலக்கிய பரிவர்த்தனை செய்து கொண்டனர். வடமொழியில் காப்பியம் பெருவழக்காக அமைய அதனைத் தொடர்ந்து தமிழிலும் காப்பியம் செய்ய முற்பட காவியங்கள் எழிச்சி பெற்றன.
CBD

சோழ சாம்ராஜத்தில் புலவர்கள் பெருமதிப்புடன் வாழ்ந்தனர். அவர்களில் பலர் அவைக்களப் புலவர்களாகக் கெளவிக்கப்பட்டனர். எனவே அப்புலவர்கள் மன்னன் அனுபவித்த சகல போகங்களையும் அனுபவித்தனர். அதனால் தம்மை ஆதரித்துக் காத்த சோழமன்னர்களை பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்டு பெரும் காப்பியங்கள் செய்தனர். மன்னர்கள் பெரும் போர் செய்து வீரதீரச் செயல்களை நிலைநாட்டி சாதனை புரிந்தனர். இப் பெருவீரம் புலவர்கள் மனதில் பதிந்து அவர்களை பேரிலக்கியம் படைக்கச் செய்தது. மகாவீரன் ஒருவன் பிறக்கின்ற போது தான் காவியங்களும் தோன்றும், அவனது வாழ்வு, வாழ்வு முறை, நாட்டை கைப்பற்றிய முறைமை, நாட்டை காத்த முறைமை ஆகிய எல்லாவற்றையும் விபரிக்கின்ற போது காவியங்கள் தோன்றுவது இயல்பே.
ஒரு காலப்பகுதியில் எழுகின்ற இலக்கியங்கள் அடுத்த காலப் பகுதியில் பேரிலக்கியங்கள் தோன்ற வழிவகுக்கும். அதாவது பல்லவர் காலப்பகுதியில் அகம், புறம், அறம், பக்தி ஆகிய துறைகளில் புலவர்கள் ஆழ்ந்து பெற்ற அனுபவம் காவியங்களுடாக சிறப்பாக அமையவும் காவியங்கள் தோற்றம் பெறவும், பரம்பரை உணர்வுகளுக்கு அத்திவாரம் இடவும் புதிய முனைக் களமாக சோழர்காலம் திகழ்ந்தமையால் இக்காலப்பகுதியில் காவியங்கள் பெருமளவில் எழிச்சி பெற்றன.
காலம் காலமாக சமுதாயத்துக் கும், சமயங்களுக்கும் இலக்கியங்களுக்கும் இடையே இருந்த உறவு தத்துவார்த்தப் பொருளுடன் இணைவு பெற்று முழுமை பெற சோழர்கால அரசியல் பொருளாதார சமுதாய நிலை உதவியமையால் அது காவியங்களின் எழுச்சிக்கு வழி கோலியது. மேலும் தமிழ் நாட்டில் இருந்த அமைதியான சூழ்நிலை, இலக்கிய மரபும், வாழ்வியல் மரபும் சிறப்புற உதவியது. இதனால் கவிச்சக்கரவர்த்திக்கும் புவிச்சக்கரவர்த்திக்கும் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. சமய சமரசம் உன்னத நிலையில் பேணப்பட்டது. இத்தகைய சூழ்நிலை காவியங்கள் பல எழிச்சி பெறக் காரணமாயிற்று.
C9)

Page 7
காவியம் பற்றிய இலக்கணம் சிறப்பாக நூலின் முகப்பு, நூலின் பயன், நூலின் வர்ணனை, நூலின் பொருள், நூலின் அமைப்பு ஆகிய ஐந்து அம்சங்களைக் கொண்டதாக அமையும். வாழ்த்து, வணக்கம், வரு பொருள் ஆகியன நூலின் முகப்பினுள் அடங்கும். அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும் நூலின் பயனில் அடங்கும். மலை, கடல், நாடு, நகரம், பருவம், சூரியபோதயம், சந்திரோதயம் ஆகிய வர்ணனைகள் நூலின் வர்ணனையில் அடங்கும். தன்னிகரில்லாத தலைவன், அவனுடைய வீரதீரச் செயல்கள், அவனது திருமணம் பற்றியவை நூலின் பொருள் என்ற பகுதியில் அடங்கும். மற்றும் தலைமகனது இல்லற வாழ்வும், அரசியல் வாழ்வும் அதாவது அவனது திருமணம், மகளிருடன் இன்புறுதல், நீர் விளையாட்டு புத்திரப் பேறு, முடிசூடி அரசாளல், மந்திராலோசனை, தூது பிறநாட்டுப் படையெடுப்பு, போர், வெற்றி ஆகிய யாவும் நூலின் பொருள் என்ற பகுதியினுள் அடங்கும். சருக்கம், இலம்பகம், பரிச்சேதம் முதலியனவாக நூல் பகுக்கப்பட்டு ஒன்பது சுவைகளும் நிறைந்து அமைப்பது நூலின் அமைப்பினுள் அடங்கும்.
இவ்வாறு எல்லோரும் விரும்பும்படி அமைவதே காப்பியம் ஆகும். மேற் கூறப்பட்ட இலக்கியங்களுள் அடங்கும் வகையில் சோழர்காலப்பகுதியில் பெருங்காப்பியங்கள் எழுந்தன. திருத்தக்க தேவரது சீவக சிந்தாமணி பெருங்காப்பியங்களுள் ஒன்றாக வைத்து எண்ணப்படுகிறது. சமண நூலாகிய வளையாபதியும், நாதகுத்தனார் என்பவரால் செய்யப்பட்ட பெளத்த காப்பியமான குண்டலகேசியும், சங்க மருவிய காலப்பகுதியில் தோற்றம் பெற்ற சிலப்பதிகாரமும், மணிமேகலையும் ஐம்பெருங்காப்பியங்களுள் அடங்கும்.
மேற்குறிப்பிட்ட காவிய இலக்கணங்களுள் காப்பியத்தின் பயனாகிய அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றுள் ஒன்றேனும் குறைவு படின் அவை சிறு காப்பியத்தினுள் அடக்கப்படும். சமண முனிவர்களால் செய்யப்பட்ட நீலகேசி, சூளாமணி,(தோலாமொழித்தேவர்)உதயணன் வரலாற்றைக் கூறும் உதயண குமார காவியம், யசோதரனது வரலாறு
கூறும் யசோதர காவியமும், நாக குமார காவியம் ஆகிய ஐந்தும் சிறு CIO

காப்பியங்கள் ஆகும்.
இவற்றை விட கவிச்சக்கரவர்த்தி என்று போற்றப்படும் கம்பரால் எழுதப்பட்ட கம்பராமாயணம், 63 நாயன்மார்களது வரலாற்றைக் கூறும் சேக்கிழாரது பெரியபுராணம், கச்சியப்பரது கந்த புராணம் ஆகியனவும் காப்பிய இலக்கணத்துக்கு அமைவாகவே எழுதப்பட்டுள்ளன. எனவே இவையும் காப்பியம் என்ற வகையினுள் அடங்குகின்றன. அதனையே பேராசிரியர் S.வையாபுரிப்பிள்ளை அவர்கள் சோழர்காலத்தை காவிய காலம் என்று குறிப்பிடுவர். வேறு எந்தக் காலப்பகுதியிலும் தோன்றாத பல காப்பியங்கள் சோழர் காலப்பகுதியில் எழுந்தமையால் அவற்றை பெருங்காப்பியங்கள் என்றும், சிறு காப்பியங்கள் என்றும் வகைப்படுத்தி கூறும் அளவிற்கு வளர்ச்சி கண்டது. எனவே சோழர்காலத்தின் பொருள் மரபு, செய்யுள் மரபு, மொழி மரபு ஆகியவற்றை நோக்கும் போது அக்கால கல்விப் பரிமாணம், மனநிறைவு, பேரரசர் மகிமை, வடமொழிச் செல்வாக்கு ஆகியன காவியங்களின் வளர்ச்சிக்குப் பெருந்துணை புரிந்தன எனலாம்.
சோழர்காலத்தில் இடம் பெற்ற அரசியல், சமூகப் பின்னணியானது பரந்து பட்ட சாம்ராஜ்ய ஸ்தாபிதத்தை ஏற்படுத்தியதுடன், கல்விப் பரப்பு விசாலம் அடைந்தமையையும், வடமொழிச் செல்வாக்கு, சமய சமரசஉணர்வும், மக்கள் உள்ளங்களில் ஏற்பட்ட மனநிறைவும் பரந்துபட்ட இலக்கியங்களின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவின எனலாம்.
OI ID

Page 8
சோழர்கால சிற்றிலக்கிய வளர்ச்சி
சோழர்காலப்பகுதியில் வளர்ச்சி பெற்றுக் காணப்பட்ட மற்றொரு வகை இலக்கியம் சிற்றிலக்கியம் ஆகும். தமிழில் காணப்படும் பரணி, உலா, பிள்ளைத்தமிழ், கலம்பகம், தூது, கோவை, மாலை போன்ற 96 வகை பிரபந்தங்களும் சிற்றிலக்கியங்கள் என்ற வகையில் அடங்கும். சிற்றிலக்கியம் இயற்றிய பெரும் புலவர்களுள் சயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், புகழேந்திப்புலவர், நம்பியாண்டார் நம்பி, பட்டினத்துப்பிள்ளையார், கருவூர்த் தேவர் முதலியோர் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்கள். பேரரசின் ஸ்தாபிதமும் சக்கரவர்த்திகளான சோழப் பெருமன்னர்களது சிறப்பும், புலவர்களால் பெரிதும் சிறப்பிக்கப்பட்ட போது மன்னர்களைப் பாராட்டிப் பாட விரும்பிய புலவர்களுக்கு புதிய இலக்கிய வடிவங்கள் தேவைப்பட்டன. அதற்கு வாய்ப்பான இலக்கியங்களாக சிற்றிலக்கியங்கள் அமைந்ததால் இக்காலப் பகுதியில் சிற்றிலக்கியங்கள் பெருமளவில் எழுந்தன.
சோழர்காலத்தில் எழுந்த சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று பரணிக்கோர் சயங் கொண்டார் என்று போற்றப்படும் ஜயங்கொண்டாரால் 11ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கலிங்கத்துப்பரணி "ஆயிரம் யானைகளை அமரிடை வென்ற வீரனைப்பாடுவது பரணி” என இலக்கண விளக்கப் பாட்டியல் குறிப்பிடுகிறது. பன்னிரு பாட்டியலிலும் பரணி பற்றிய கருத்து காணப்படுகிறது. யானை மீது அமர்ந்து எதிரிகளை வருத்துவதால் பரணி என்று பெயர் பெற்றதாக குறிப்பிடுவர்.
‘வஞ்சி மலைந்த உழிஞை முற்றித்
தும்பையிற் சென்ற கொடு தொழில் மன்னன்
வெம்புசின மாற்றான் தானை வெங்களத்தில்
குருதிப் பேராறு பெருகும் செங்களத்து
ஒரு தனி ஏத்தும் பரணியது பண்பே'
இவ்வாறு கற்பனைப் பாத்திரங்களின் ஊடாக பாட்டுடைத் தலைவனுடைய புகழைப்பாடுவதே இதன் நோக்கம். கடவுள் வாழத்து, கடை திறப்பு, காடு பாடியது, தேவி பாடியது, பேய் பாடியது, இந்திர OI 2D

ஜாலம், இராஜபாரம்பரியம், பேய் முறைப்பாடு காளிக்கு கூழி கூறியது, போர்பாடியது, களம் பாடியது என வகுக்கப்பட்டிருக்கிறது. பரணிப் பிரபந்தத்தின் ஊடாக மன்னனின் போர்த்திறன், வீரம், நகை, பெருமிதம் எனப் பல்வேறு சுவைகளும் பொருந்த வர்ணிக்கப்பட்டுள்ளது. குலோத்துங்க சோழனுடைய படைத் தலைவனான கருணாகரத் தொண்டைமான் கலிங்கநாட்டின் மீது படையெடுத்து அந்நாட்டை அழித்த செய்தியைக் கூறுவது கலிங்கத்துப்பரணி. பெரும் போர்க்களத்தைப் பெற்ற பேய்கள்
பரணி நாளில் கூழ் அட்டு உண்டு மகிழ்ந்து மன்னனை வாழ்த்தி முடிப்பதாக
கூறப்படுவதால் நாட்டின் பெயராலும், நட்சத்திரத்தின் பெயராலும் "கலிங்கத்துப் பரணி” என வழங்கப்படுகிறது. கொற்றவையைத் தெய்வமாகப் பெற்ற பரணி எனும் நாண் மீனால் இப்பெயர் பெற்றது எனவும் கூறுவர். பொதுவாக காப்பியங்களிலே மக்களைக் கதாபாத்திரங்களாக அமைத்து பாடுவது மரபு. இப் பிரபந்தத்தில் காளியும் அதற்கு ஏவல் செய்யும் கூழிப்பேய்களும் பாத்திரங்களாக அமைகின்றன. அவற்றின் உரையாடல் வாயிலாக மன்னனின் போர், வெற்றி முதலியன வீரச்சுவை மிக்கதாக விளம்பப்படுகிறது. காப்பிய மரபைப் பின்பற்றி இப் பிரபந்தத்தில் நாட்டு வாணைகளுக்கு பதிலாக காளி உறையும் கோயில், காடு, பேய்களின் வர்ணனை முதலியன தனிச்சிறப்பு வாய்ந்த வகையில் வர்ணிக்கப்பட்டுள்ளது. நகைச்சுவையும், வியப்புச்சுவையும் நிறைந்து பல்வகை அணிகளும் விரவப்பெற்று, ஒன்பான் சுவைகளும் பொருந்த அமையப் பெற்றதே பரணி.
சிற்றிலக்கிய வகைகளுள் அடுத்து சிறப்பிடம் பெறுவது உலா, இவ் இலக்கியம் பற்றிய செய்திகள் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளன. அரசன் தேள் அல்லது யானை மீது உலாவருகின்ற போது அவன் செல்கின்ற
காட்சியை "ஊரொடு தோற்றமும் உருத்தன மொழிப' என தொல்காப்பியம்
குறிப்பிடுகிறது. பல்லவர் காலப்பகுதியில் சேரமான் பெருமாள் நாயனாரால் பாடப்பட்ட திருக்கைலாய ஞானஉலாவே ஆதி உலா, இறைவன் பவனி வரும் போது அவன் மீது காதல் கொண்டு ஏழுவகைப் பெண்களும் மயங்குவதாகப் பாடப்பட்டது. அதைப் பின்பற்றி சோழர்காலப்பகுதியில் ஒட்டக் கூத்தரால் செய்யப்பட்ட உலாவே மூவர் உலா, உலா
வரைவிலக்கணம் பற்றிக் குறிப்பிடுகையில் இறைவனோ அல்லது அரசனோ CI3)

Page 9
அல்லது உலகம் போற்றும் பெருமகனோ யானை அல்லது குதிரை மீது சுற்றம் புடை சூழ மங்கல வாத்தியங்கள் முழங்க வீதியில் பவனி வருவான். அவனது அழகைக் கண்டு அவன் மீது பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் முதலிய ஏழு பருவத்தினரும் காதல் கொள்வதாக கற்பனைச் செறிவும், ஓசை நயமும் மிகுந்ததாகப் பாடப்படும் பிரபந்தமே உலாப் பிரபந்தம் எனப்படும்.
“பாட்டுடைத் தலைவன் உலாப் புற இயற்கையும் ஒத்த காமத்து இளையாள் வேட்கையும் கலியொடு தழுவிய வெள்ளடி இயலால் திரிபின்றி நடப்பது கலிவெண்பாட்டே”
(பன்னிரு பாட்டியல்)
ஒட்டக்கூத்தர் சோழ மன்னர்களாகிய விக்கிரமசோழன், 2ம் குலோத்துங்க சோழன், 2ம் இராஜ ராஜ சோழன் ஆகிய மூவர் மீதும் தனித்தனி உலாக்கள் பாட, அம் மூன்றினையும் ஒன்றிணைத்து மூவர் உலா எனச் சிறப்பிப்பர். உலா இலக்கிய வகைகளுள் சிறப்பிடம் பெறுவது மூவர் உலா, பல்வேறு இலக்கிய கர்த்தாக்களின் இலக்கிய முயற்சிகளுக்கு கால்கோளாக இருந்தவர் ஒட்டக்கூத்தர். இதனால் தமிழ் இலக்கியச் செல்வாக்கில் ஒட்டக்கூத்தரின் பங்கு முக்கியமானது.
ஒட்டக்கூத்தள் பரணி உலா, பிள்ளைத்தமிழ் என்ற மூன்று இலக்கிய வடிவங்களையும் ஒரே காலப்பகுதியில் ஆக்கிய பெருமைக்கு உரியவர். இதனாலேயே “ஓட்டக்கூத்தரின் வரவு தமிழ் இலக்கியத்துக்கு கிடைத்த புது வரவு” என்பர்.
"கோவை, உலா அந் தாதிக்கு ஒட்டக் கூத்தர் என்று சிறப்பிக்கப்படுகிறார். சோழப் பெருமன்னரது குலப் பெருமை, சிறப்பு, வீரம், உலாவரும் தலைவனது அலங்காரம், காதல் கொண்ட பெண்களது மனநிலை,
அவர்களது செயல்கள் இதில் சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளன.
Cl4O

சிற்றிலக்கிய வகைகளுள் பிள்ளைத்தமிழ் பிரபந்தமும் ஒன்று. மன்னனையோ, கடவுளையோ, பெரியோரையோ, நாயகராகக் கொண்டு அவரது குழந்தைப் பருவ வாழ்க்கையை பத்து பருவங்களாக பிரித்து ஒவ்வொரு பருவத்திற்கும் பத்து, பத்து பாடல்கள் வீதம் நூறு பாடல்கள் கொண்ட தாய் பாடப்படும் பிரபந்தமே பிள்ளைத் தமிழிப் பிரபந்தம். தமது அன்பை மிகவும் உருக்கமாக வெளிப்படுத்த சிறந்த ஊடகமாக அமைவது பிள்ளைத்தமிழ் பிரபந்தம். பிள்ளைத் தமிழ்ப் பிரபந்தம் பல்லவர் காலப்பகுதியில் வைஷ்ணவ ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வார் கண்ணனைக் குழந்தையாக வைத்துப் பாடிய பெரிய திருமொழி பிள்ளைத்
தமிழ் பிரபந்தத்தின் தோற்றுவாய், பிள்ளைத் தமிழ் பிரபந்தம் ஆண்பால்
பிள்ளைத்தமிழ், பெண்பால் பிள்ளைத்தமிழ் என இருவகைப்படும். காப்பு, செங்கீரை, சப்பாணி, வருகை, தாலாட்டு, முத்தம், அம்புலி ஆகிய ஏழு பருவங்களும் இருபாலாருக்கும் பொதுவானவை. ஆண்பால் பிள்ளைத் தமிழுக்கு இவற்றுடன் சிற்றில், சிறுபறை, சிறுதேள் என்ற மூன்றும் பெண்பால் பிள்ளைத் தமிழுக்கு கழங்கு, அம்மானை, ஊசல் ஆகிய மூன்றுமாக பத்து பருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்காலப்பகுதியில் "வெண்பாவிற் புகழேந்தி’ எனப்போற்றப்படுகின்ற புலவரால் செய்யப்பட்ட நளவெண்பா சிறு நூலாக இருந்த போதிலும் காப்பிய இலக்கணங்கள் நிரம்பப் பெற்று ஓசை விகற்பங்களும், உணர்ச்சி வேறுபாடுகளும் கொண்டதாய் கீர்த்தியோடு பாட்டால் உயர்ந்தது. வெண்பாவில் சிறப்பாகப் பாடப்பட்ட இந்நூல் உணர்ச்சி மிக்க பாடல்களைக் கொண்டதாய் பிரபந்த வகைகளுள் அடக்கப்படுகிறது. இவற்றை விட பட்டினத்துப் பிள்ளையார் பாடிய பக்தி அனுபவங்கள் நிறைந்த பிரபந்தங்கள், மெய்க்கீர்த்திகள் ஆகிய யாவும் சிற்றிலக்கியங்கள் என்ற வகையினுள்
அடங்குகின்றன. எனவே தான் சோழர்காலம் தமிழ் இலக்கியப்பரப்பில்
சிறப்பிடம் பெறுகிறது.
CIA)

Page 10
சோழப் பெருமன்னர் கால இலக்கியங்கள் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஏற்படுத்திய சாதனைகள்.
சோழப் பெருமன்னர் காலம் என்னும் போது கி.பி 9 - 14 வரையான காலப்பகுதி எனலாம். சோழப் பெருமன்னர் கடல் கடந்து சாம்ராஜ்யத்திற்கு அதிபதியாக இருந்தனர். அவர்கள் கடல் கடந்து பெற்ற பெருவளம் இக்கால தமிழ் இலக்கிய வரலாற்றில் சாதனை ஏற்படுத்தக் காரணமாயின தமிழகம். தனது முதற்பேரரசை ஸ்தாபித்தகாலம் சோழர்காலமே, சோழர்கள் கங்கையும் கடாரமும் கைவரப் பெற்றவர்கள். எனவே சோழர்களின் கடற் பலம் பற்றிக் கூறுமிடத்து நீலகண்ட சாஸ்திரி அவர்கள் "இந்துமா சமுத்திரம் சோழர்கள் நீந்தி விளையாடிய குளம்' என்பர். அந்தளவிற்கு கடல் கடந்த நாடுகளையும் கட்டி ஆண்ட சக்கரவர்த்திகளாக சோழர்கள் விளங்கியமையால் அவர்கள் பொருள் வளம் மிக் கவர்களாக ஆட்சி செய்தார்கள். எனவே அக்காலப்பகுதியில் செல்வமும் செழிப்பும் மிக்கதான சூழ்நிலை காணப்பட்டது. பேரரசின் ஸ்தாபிதம் செல்வச் செழிப்புயாவும் சேர்ந்து இலக்கிய வரலாற்றில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தின.
வளமான ஒரு அரசியல் சூழ்நிலை மக்கள் உள்ளத்தில் புது மகிழ்வையும் பெருமித உணர்வையும் ஊட்ட அவ் உணர்வானது இலக்கியங்களில் வெளிப்படுத்தப்பட்டது. சகல துறைகளிலும் ஏற்பட்ட ஒரு மாற்றம் இலக்கியப் புலவர்களின் உணர்ச்சியைத் தூண்டின. எனவே இக்காலப்பகுதியில் சிற்றிலக்கியம், பேரிலக்கியம் என்பன எழுந்து தமிழ் இலக்கிய வரலாற்றில் சாதனை படைத்ததுடன் சோழர்காலம் காவிய காலம் எனப்போற்றப்படுவதற்கான ஒரு சூழ்நிலையினை உருவாக்கியது. நாட்டு சூழ்நிலை நாட்டுவளம், அமைதி, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து பெற்ற பெருவளம் யாவும் மன நிறைவாக யாவும் ஒன்றிணைய காவியங்கள் தோற்றம் பெற்றன. எனவே இலக்கிய வரலாற்றில் காவியம் என்றொரு மரபு தோன்றுவதற்கு சோழர்காலமே வழிவகுத்தது. காவியம் தோன்றுமிடத்து காவிய இலக்கணம் பற்றிய நூல்கள் எழுவதற்கும் காவியத்திற்கு கருவான கதைகள் தோன்றுவதற்கும் அக்கால சூழ்நிலை வழிவகுத்தது. பல்லவர் காலத்தில் ஏற்பட்ட வடமொழிக்கலப்பு ಖಿಲಖೀಠ வேண்டிய வடமொழிக்
6

கதைகளை தமிழ் நாட்டிற்கு தந்தது. காவியம் செய்ய நல்ல கவிவாணர்களை சமுதாயம் உருவாக்கியதுடன் சமூகத்தில் மனநிறைவு காணப்பட்டமையால் அவர்கள் பிறரைப் புகழ்ந்து பாடுவதில் ஆர்வம் காட்டினர், மன்னர் மீது மதிப்பும் மரியாதையும் பெருக மன்னர்களைப் பாட்டுடைத்தலைவர்களாகக் கொண்ட காப்பியங்கள் எழுந்தன. கவிச்சக்கரவர்த்தி கம்பன், பரணிக்கோர் ஜெயம் கொண்டான், வெண்பாவில் புகழேந்தி, உலாவிற்கு ஒட்டகக்கூத்தர் எனப்பல இலக்கிய விற்பன்னர்கள் தோற்றம் பெற்றனர்.
சமுதாயத்தின் சிறப்பைக் கூறும் இலக்கியங்கள் மட்டுமன்றி சமயத்தை ஊடு பொருளாகக் கொண்ட இலக்கியங்களும் தோற்றம் பெற்றன. மன்னர்கள் நாட்டு நலன் கருதி ஆட்சி செய்ய நாட்டில் பகை, பிணி, வறுமை என்பன அகல செல்வம் மலிந்து விளங்கியது. பல்லவர்காலப் பகுதியில் “வாழ்வாவது மாயம் அது மண்ணாவது திண்ணம்” என வாழ்வியலை மறுத்த இலக்கியங்கள், சோழர்காலப்பகுதியில் உலகியலைச் சிறப்பித்துப் போற்றுகின்ற மரபு ஒன்று இலக்கிய வரலாற்றில் தோற்றம் பெற்றது. உலகியலும் இறை வழிபாடும் ஒன்றிற்கொன்று முரண்படாத வகையில் வளர்ச்சி பெற்றது. எனவே உலகியல் வளர்ச்சி சமய விருத்திக்கு தடையான ஒன்றன்று.
சைவம், வைஷ்ணவம், சமணம், பெளத்தம் என்று சமயமும் தத்தம் போக்கில் வளர்ச்சி பெற்றன. சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, எனும் பெரும் காப்பியங்களும் நீலகேசி, சூளாமணி, யசோதர காவியம், நாக குமார காவியம் உதயணகுமார காவியம் ஆகிய சிறுகாப்பியங்களும் வடமொழிக்கதையையும், வடமொழிக்களத்தையும், வடநாட்டுக் கதை மாந்தரையும் கொண்டதாக எழுச்சி பெற்றன. தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு திருப்பு மையம் ஏற்படுவதற்கு இக்காவியங்கள் பெரும் துணை புரிந்தன. திருத்தக்கதேவர் தமிழ் இலக்கிய மரபையே ஒரு புதுவழியில் செல்ல வைத்தார். அதாவது பாவின வகைகளைக் கையாண்டு அவர் இயற்றிய சீவக சிந்தாமணியே இதற்கு வழிவகுத்தது. சிலப்பதிகாரம் மணிமேகலை முதலிய காப்பியங்கள் சமண பெளத்த மதக் கருத்துக்களைப்
பரப்புவனவாகவும், சீவகசிந்தாமணி சமணக்கருத்தை பரப்புவதாகவும், CIZ)

Page 11
சைவசிந்தாந்த சாஸ்திரங்கள் சைவசமயக் கருத்துக்களைப் பரப்புவனவாகவும் காணப்பட்டன. எனவே இவ் இலக்கியங்கள் தமிழ் இலக்கிய வரலாற்றில் மக்கள் மத்தியில் சமய சகிப்புத் தன்மையை ஏற்படுத்தி ஒரு புதிய சாதனையைப் படைத்தது.
பல்லவர்காலப்பகுதியில் நாயன்மார்களாலும் ஆழ்வார்களாலும் செய்யப்பெற்ற தேவார திருவாசகங்களும் திவ்வியப்பிரபந்தங்களும் தெர்குக்கப்பட்டமை சோழக்காலப்பகுதியில் ஆகும். இது இலக்கிய வரலாற்றில் தொகுப்பு முயற்சி ஒன்றை ஏற்படுத்தி ஒரு புதிய சாதனையை ஏற்படுத்தியது. சமய இலக்கியம் பல்லவர் காலப்பகுதியில் தோற்றம் பெற்றாலும் அவை முழுவடிவம் பெற்றது சோழர்காலப்பரப்பில் ஆகும். எனலே வைதிக சமயங்களிற்கு புத்துயிர் அளிக்கின்ற ஒரு மரபு இலக்கிய வரலாற்றில் ஏற்பட்டது. புவிச்சக்கரவர்த்தி மட்டுமன்றி கவிச்சக்கரவர்த்திகளையும் தோற்றுவித்து விருத்தப்பா முதலிய பா வகைகளும் வளர்ச்சி பெற்று தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு சாதனை படைக்க அக்கால இலக்கியங்கள் வழிவகுத்தன. அதாவது பெருங்காப்பியம் சிறுகாப்பியங்கள் மட்டுமன்றி பரணி, உலா, தூது, கலம்பகம், கோவை, மாலை முதலிய பிரபந்தங்களும் தோன்றியும் வளர்ந்தும் இக்காலப்பகுதியில் சாதனை படைத்தன.
ஆயிரம் யானை அமரிடை வென்ற வீரனாகிய குலோத்துங்க சோழனது தளபதி கருணாகரத் தொண்டமானைப் பாட்டுடை தலைவனாகக் கொண்டு கலிங்க நாட்டை வெற்றி கொண்ட செய்தியை கலிங்கத்துப்பரணி என்னும் "பரணிப்பிரபந்தம்’ ஒன்பான் சுவைகளும் மிகுந்து வரப்பாடியமை புதிதாக தோற்றம் பெற்ற ஒன்று. இறைவன் மீது பாடப்பட்ட உலா மன்னர் மீது பாடும் மரபு அவர்களை போற்றும் பண்பாடு ஆகியவற்றிற்கு மூவருலா வித்திட்டது. அதேபோன்று கடவுள் மீது பாடப்பட்ட பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் மன்னர் மீது பாடும் மரபு இக்கால பகுதியிலேயே உருவாகியது.
C18)

உலகியலையும் அவர் தம் சிறப்பையும் புகழ்ந்து பாடுகின்ற இக்காலப்பகுதியில் மக்கள் தத்துவ ஆராய்ச்சியிலும் ஈடுபடுவதற்கு சோழப் பெருமன்னர் கால இலக்கியங்களே வழிகாட்டின. சைவசித்தாந்த சாஸ்திரங்கள் அடியார் வரலாறு கூறும் புராணங்கள் ஆகியன எழுச்சி பெற்று உலகியலோடு இறை உணர்வையும் வளர்த்துச் செல்வனவாக இலக்கியங்கள் எழுந்து இலக்கிய வரலாற்றில் சாதனை படைத்தன.
மன்னர்களது வாழ்க்கை வரலாற்றைப் பொருளாகக் கொண்டதான நாடக இலக்கியங்களும் கூட இக்காலப்பகுதியில் வளர்ச்சி பெற்றுள்ளன. மேலும் வடமொழி கலப்பு தமிழில் இடம் பெற்ற போது தமிழ் மொழி அமைப்பைப் பேண இலக்கணங்கள் இன்றியமையாதனவாக வேண்டப்பட்டன. இதனால் தண்டியலங்காரம், வீரசோழியம், நேமிநாதம், யாப்பருங்கலக்காரிகை போன்ற நூல்களும் இக்காலப்பகுதியில் எழுச்சி பெற்றன. அதாவது இலக்கியங்கள் காப்பியங்கள், இலக்கண நூல்கள், தத்துவ நூல்கள் எனப் பல்வேறு துறைகளிலும் இலக்கியங்கள் வளர்ச்சி பெறுவதற்கான ஒரு சாதனையை இலக்கிய வரலாற்றில் ஏற்படுத்தியது.
இலக்கியங்கள் சுவை மிக்கனவாகவும் இயற்கை அழகைப் புனைவனவாகவும் கவிஞன் உள்ளத்தில் ஏற்பட்ட மனக்கருத்துக்களை வெளிப்படுத்துவனவாகவும் அமைவதற்கு நீண்ட வர்ணனைகளும் உவமை, உருவகம் முதலிய பல்வேறு வகை அணிகளும் தேவைப்பட்டன. ஆகவே தமிழ் இலக்கியவரலாற்றில் மனநிறைவும் இரசிகத்தன்மையும் உயிர்த்துடிப்பும் மிக்க ஒரு சமுதாயத்தை உருவாக்குவதில் சோழர்கால இலக்கியங்கள் பெரும் சாதனை படைத்து வெற்றி கண்டுள்ளன எனலாம். '
C19.2

Page 12
ஒட்டக்கத்தரால் தமிழ் இலக்கியத்திற்கு கிடைத்த வரவு
12ஆம் நூற்றாண்டில் சோழர் காலப்பகுதியில் சோழரின் அவைக்களத்தில் பெரும் செல்வாக்குடன் விளங்கிய புலவர் ஒட்டக்கூத்தர். அவர் இலக்கண இலக்கியங்களில் வல்லவர். வடமொழிக்கல்வியில் நிரம்பியவர். பழைய மரபுகளை விடாமல் போற்றி பிறர் செய்யும் தவறுகளையும் கடுமையாக எடுத்துரைத்துக் கூறும் ஆற்றல் பெற்றவர். விக்கிரம சோழனின் அவைக்களப்புலவராகவும் அவரது மகன் 2ம் குலோத்துங்கனின் ஆசிரியராகவும் அவரது மகன் 2ம் இராஜராஜனுக்கு ஆசிரியராகவும் விளங்கியவர். ஆதலால் அவர்களால் பெரிதும் ஆதரிக்கப்பெற்றவர் தம்மை ஆதரித்த சோழமன்னர்கள் மீது அளவிறந்து பற்றுக்கொண்ட ஒட்டக்கூத்தா அவர்ககளது புகழை வெளிப்படுத்தும் வகையில் பிரபந்தங்கள் பாடினார். தக்கயாகப்பரணி, மூவருலா, குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் ஆகியன இவர் பாடிய பிரபந்தங்கள் ஆகும்.
சோழமன்னர் புகழை நிலைநாட்ட விரும்பிய ஒட்டக்கூத்தர் இலக்கியத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கினார். அதாவது இறைவன் பெருமை கூறுகின்ற இலக் கரியங்களை மண் னர் புகழைப்பாடுவதற்காக மாற்றியமைத்தமை தமிழ் இலக்கியத்துக்கு கிடைத்த புதுவரவு ஆகும். மன்னர் புகழைப்பாட எழுந்த கலிங்கத்துப் பரணி போன்று 2ம் இராஜராஜனின் புகழைப் பேய்கள் பாடுவதாக அமைந்த நூல் தக்கயாகப்பரணி. இதில் வீரபத்திரக்கடவுள் தக்கனைக் கொன்று அவன் புரிந்த யாகத் தை அழித்த கதையைக் கூறுவதான முயற்சி இலக்கியத்துக்கான புது வரவாகும்.
தெய்வங்கள் அலங்காரச் சிறப்புக்களுடன் பரிவாரங்கள் சூழ பெரிய தெருக்களின் ஊடாக உலா வரும் போது தெய்வத்தின் பெருமையும் அற்புத வீரச் செயல்களும் போற்றிப்புகழ்ந்து கூறப்படுவதும் அத்தெய்வத்தின் அழகைக்கண்டு ஏழு பருவ மங்கையரும் காதல் கொள்வதும் அவர் தம்
காதல் அனுபவங்களும் சிறப்பித்துப் பாடப்படும் பிரபந்தமே உலாப் பிரபந்தம் C20)

ஒட்டக்கூத்தர் தம்மை ஆதரித்த சோழ மன்னர்களின் புகழை நிலை நாட்ட மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக தோன்றியதே மூவருலா ஆகும். "திருவுடை மன்னனை காணில் திருமாலைக் கண்டேன் என்பது மரபு” இறை எனப்படுகின்ற மன்னர் இறைவன் எனவும் அழைக்கப்பட்டனர். அதாவது தெய்வத்திற்குரிய சிறப்பை அரசர்களுக்கு கூறும் வழக்கம் இருந்ததால் அரசர்கள் திருமாலின் பிரதிநிதிகளாகக் கருதும் மரபும் இருந்தது. அந்த மரபையொட்டி தெய்வங்களின் புகழைப் பாட எழுந்த உலா நூல் மன்னர்களைப் பாடுவதற்கு மேற்கண்ட முயற்சியே ஒட்டக்கூத்தர் செய்த புதுவரவு. அதாவது சோழமன்னர் மூவரும் உலா வருதலும், சோழமன்னனின் பெருமைகளும், அவர்களது சிறப்புக்களும் வெளிப்படும் வகையில் அவர்களை போற்றிப் புகழ்ந்து பாடுவதும் அவர்களது பெருமைகளையும் சிறப்புக்களையும் கொண்ட ஏழு பருவ மங்கையரும் காதல் கொள்வதும், ஆகிய உணர்வுகள் இந்நூலில் சிறப்பிக்கப்பட்டுள்ளன. மூன்று சோழப் பெருமன்னர்களும் அரசவையை அணி செய்து நெடுங்காலம் வாழும் பேறு பெற்றவர். அவர்களால் பெரிய பட்டங்களுக்கும் சிறப்புக்களுக்கும் உள்ளானவர். அவர் இட்டதே சட்டமாக இருந்தது. அவரது வெறுப்புக்கு ஆளானால் எந்தப்புலவர்க்கும் வாழ்வில்லை என்று கூறுமளவு சிறப்புடன் வாழ்ந்தவர். எனவே தம்மை ஆதரித்த மன்னர்களை அவர் புகழைப்பாட விரும்பியதில் வியப்பொன்றும் இல்லை. தம்மை ஆதரித்த மன்னர்களின் புகழைப்பாட மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக தமிழ் இலக்கியத்திற் கிடைத்த புதுவரவே உலாப்பிரபந்தம், உலாவுக்கு ஒட்டக்கூத்தள் என அவருக்கும் பெரும் புகழைத் தேடிக் கொடுத்தது எனலாம்.
இறைவனைக் குழந்தையாகக் கருதி பாடுகின்ற மரபு சங்க காலத்திலும், சங்கமருவிய காலத்திலும் பல்லவர்காலத்திலும் இருந்தது. குழந்தையின் சிறப்புக்களைப் பாடும் பொழுது தாலப்பருவம், நிலாப்பருவம், செங்கீரைப்பருவம், சப்பாணிப்பருவம், வருகைப்பருவம், முத்தப்பருவம், காப்புப்பருவம் ஆகிய ஏழு பருவங்களுடன் ஆண்களுக்கு சிறு பறைஅறைதல், சிறு தேள் உருட்டல், சிற்றில் சிதைத்தல் ஆகிய மூன்று பருவமும் சேர பத்துப்பருவங்களும், பெண்களுக்கு மேற்கூறிய ஏழுடன் கழங்கு, அம்மானை,
ஊசல் என்ற மூன்றையும் சேர்த்து பத்துப்பருவங்களாக பிள்ளைத்தமிழ்பாடும் C2D

Page 13
வழக்கம் அக்காலத்தில் இருந்தது. பல்லவர்காலத்தில் கண்ணனைக் குழந்தையாக வைத்துப் பிள்ளைத்தமிழ் பாடப்பட்டது. பிள்ளைத்தமிழ் ஆண்பால் பிள்ளைத்தமிழ் பெண்பால் பிள்ளைத்தமிழ் என இரண்டு வகைப்படும் கவியரசு, கானக்கவி என்று பல சிறப்புப் பெயர்களைப் பெற்ற ஒட்டக்கூத்தள் தெய்வத்தின் புகழைப்பாட எழுந்த பிள்ளைத்தமிழை குலோத்துங்க சோழனின் புகழைப்பாட மேற் கொண்ட முயற்சியே தமிழ் இலக்கியத்திற்கு கிடைத்த புதுவரவாகிய குலேத்துங்கன் பிள்ளைத்தமிழ்.
இவ்வாறு தம்மை ஆதரித்த சோழ மன்னர்களின் புகழை நிலை நாட்ட ஒட்டக்கூத்தர்மேற்கொண்ட முயற்சிகள் தக்கயாகப்பரணி, மூவருலா, குலோத்துங்கள் பிள்ளைத்தமிழ் ஆகியன. இவை மட்டுமன்றி வேறு பல நூல்களும் இக்காலப்பகுதியில் தோற்றம் பெற்ற பொழுதிலும் அப்பாடல்களில் உள்ளத்துணர்வின் செம்மையும், இனிமையும், சுவையும், நயமும் குறைவாக இருந்தமையால், போலும் ஒட்டக்கூத்தர் பாடிய இராமாயணம் சோழ அமைச்சர் சேனைத்தலைவர் ஆகியோர் மீது பாடியதாகச் சொல்லப்படும் பரணி நூலும் அந்தாதி கோவை ஆகியனவும் அழிந்து விட்டன என்று கூறப்படுகிறது.
C22)

பரணி பிரபந்தத்தின் அமைப்பும் வளர்ச்சிப் போக்கும்.
தமிழ் இலக்கிய போக்கில் இடைக்காலத்தில் தோன்றிய சிற்றில்க்கிய வகைகளுள் ஒன்றே பரணிப் பரபந்தம், ஓர் அரசனைப் புகழுவதற்கு கையாளப்பட்ட யாப்பு வகைகளுள் ஒன்றாகத் தோற்றம் பெற்ற இலக்கிய வகைகளை சிற்றியலக்கியங்கள் என்பர். பரணிக் கோர் ஜெயம் கொண்டார். எனப் போற்றப்படும் ஜெயங்கொண்டாரால் முதன் முதலாக தோற்றுவிக்கப்பட்ட சிற்றிலக்கியம் கலிங்கத்துப்பரணி ஆகும்.
கி.பி 11ஆம் நூற்றாண்டில் சோழமன்னாகிய 1ம் குலோத்துங்க மன்னன் கலிங்க நாட்டின் மீது படையெடுத்து அந்நாட்டு மன்னன் அனந்தவர்ம சோடகங்கனை வெற்றி பெற்றான். கருணாகரத் தொண்டமான் என்ற படைத்தலைவனே சோழமன்னன் படைகளை வழிநடத்திச் சென்று வெற்றி பெற்றவன். எனவே சோழ மன்னனையும் அவன் படைத்தலைவனாகிய கருணாகர தொண்டமானையும் புகழ்ந்து பாராட்டி இயற்றப்பட்ட நூலே கலிங்கத்துப்பரணி வரலாற்று நிகழ்ச்சி ஒன்றைக் கருவாகக் கொண்டு அமைக்கப்பட்ட போதிலும் கற்பனைகள் பல நிறைந்து நூலில் சுவை பயக்கின்றன. ஆயிரம் யானைகளைப் போர்க்களத்தில் வென்று வெற்றியை நிலைநாட்டிய வீரன் ஒருவனைப் புகழந்து பாடுவதே பரணிப்பிரபந்தம் போரிலே தோற்ற அரசனுடைய நாட்டில் போர்க்களம் அமைத்துப் போர் செய்து வெற்றி பெற்றதால் பரணி அங்கே பாடப்படுவதாகக் கொண்டு தோற்ற நாட்டின் பெயரால் நூலை வழங்குவது மரபு போரிலே தோற்ற நாடு கலிங்கம் ஆதலால் ஆசிரியர் ஜெயம் கொண்டார் இந்நூலுக்கு கலிங்கத்துப்ப்ரணி என்று பெயரிட்டார். பரணி என்ற இலக்கிய வகையில் இன்றும் சிறப்புடையதாகப் போற்றப்படுவது கலிங்கத்துப் பரணியே.
வீரச்சுவைக்கு உரியதான போர்ச் செய்திகளை எடுத்துரைத்த போதும் கற்பனைத்திறன் மிக்க புலவர்கள் உள்ளத்தில் காதல் சுவையும் மிக்கு விளங்கின. எனவே இரண்டடிகளால் ஆன தாழிசை என்ற செய்யுள் வகையால்
அமைக்கப் பெற்று வீரச்சுவைக்கேற்ப மிடுக்கான ஓசை, போர் நிகழ்ச்சிகளின்

Page 14
வேகத்திற்கும் கொடுமைகளுக்கும் ஏற்ப, ஓசைகள் உணர்ச்சிகளை வேறுபடுத்திக்கோட்டும் ஆற்றல் வாய்ந்தவையாக அமைக்கப்பட்டுள்ளன. போர்க்கள காட்சியையே மனக்கண்ணின் எதிரே நிறுத்தும் ஆற்றல் வாய்ந்தவையாக சொற்களின் ஓசையும் பொருளும் அமைந்திருக்கும் ஓசைச் சிறப்பே இந்நூலுக்கு அழகு தருவது. விரைவும் மிடுக்கும் உடையனவாய் உணர்ச்சி வேகத்திற்கு ஏற்றதாக நூற்றுக்கணக்கான செய்யுள்கள் இந்நூலில்
“எடும் எடும் எடும் என எடுத்ததோர் இகல் ஒலி கடல் ஒலி இகக்கவே
விடுவிடு விடுபரி கரிக்குழாம்
விடும்விடும் எனும் ஒலி மிகைக்கவே”:
இவ்வாறு இந்நூல் முழுவதும் ஓசைச் சிறப்புக்கள் நிறைந்தனவாக உள்ளன. -
காளிக்குரிய நட்சத்திரம் பரணி, போர்க்களத்தில் வீரர்கள் வழிபடும் தெய்வம் காளி. காளியைச் சுற்றி பேய்களின் கூட்டம். பல ஆண்டுகள் நாட்டில் எங்கும் போர்கள் இல்லாமையால் பேய்களுக்கு உணவான பிணங்கள் கிடையாது, அவை பசியால் வாடுவதாக கற்பனை செய்யப்படுகிறது. பேய்கள் தம் தலைவியாகிய காளியிடம் சென்று தம் நிலைமையை முறையிட கலிங்க நாட்டின் மீது சோழன் படை புறப்படுவதாக செய்தி தொடங்கும். அதன் பின் போர்க்கள வர்ணனை தொடங்கும். போர் முடிந்த பின் பகை நாட்டு வீரர்களும் யானைகளும் கொன்று குவிக்கப்பட்டிருக்கும் காட்சி விளக்கப்படும். அதையடுத்து பேய்களின் விருந்துக் கொண்டாட்டமும் வெற்றி பெற்ற அரசனுடைய புகழ் பலமுறை பாராட்டிப் பேசப்படுவதாகவும் அமைக்கப்பட்ட இலக்கியமே பரணிப் பிரபந்தம்.
கொற்றவையை தம் தெய்வமாக பெற்ற பரணி என்னும் நாண்மீனால் இப்பிரபந்தம் பெயர் பெற்றது. பரணி நாளில் கூழிகள் கூழ் சமைத்து 'காளிக்கு கடைப்பதும் காளியும் அதற்கு ஏவல் செய்யும் கூழிப்பேய்களும்
பர்ததிரங்களாக அமைக்கப்பட்டு அவற்றின் உரையாடல் வாயிலாக மன்னனின் C24)
 

போர் வெற்றி எடுத்துரைக்கப்படும். பரணியில் கொற்றவைக்குரிய காடு, கோயில் முதலியனவே நாட் டு வளம், நகர வளம் போல வர்ணிக்கப்பட்டன. நகைச்சுவையும் வியப்புச்சுவையும் பொருந்த ஏவல் செய்யும் பேய்களின் வர்ணனை விளக்கப்பட்டது. ஒன்பான் சுவையும் பல்வகை அணிகளும் நிறைந்து. பிரபந்தங்களில் தலைமை பெற்று விளங்குவதுடன் செய்யுள் இலக்கியங்களில் சிறந்த ஒன்றாக விளங்குகின்றது. தென் தமிழ் தெய்வ பரணி என ஒட்டக்கூத்தர் இதனுடைய பெருமையைப் போற்றியுள்ளார். ஓசை, சந்தம், உவமை முதலியவற்றால் நிறைந்த தாழிசைகளைக் கொண்டது, பரணிப்பிரபந்தம்.
கலிங்கத்துப் பரணியை அடுத்து தோன்றிய பரணிப் பிரபந்தம் தக்கயாகப்பரணி. வீரபத்திர கடவுள் தக்கனைக் கொன்று அவன் செய்த யாகத்தை அழித்த கதையைக் கூறுவது தக்கயாகப் பரணி. நாயக்கள் காலப்பகுதியில் தத்துவக்கருத்துக்களை வெளிப்படுத்த பரணியைக் கையாண்டுள்ளார். மோகவதைப்பரணி, அஞ்ளுைவதைப்பரணி ஆகியன தத்துவராயர் என்ற புலவரால் ஆக்கப்பட்ட பரணிப்பிரபந்தங்களாகும். இப்பரணிப் பிரபந்தவகை பிற்காலத்தில் வீழ்ச்சியுற்றுப் போவதை காணக்கூடியதாக உள்ளது.
C25)

Page 15
: கி.பி 14 - 17ஆம் நூற்றாண்டு காலப்பகுதியை விஜய நகர நாயக்கர் காலம் என்பர். மதுரை, தஞ்சாவூர் ஆகிய இடங்களைத் தலைநகராகக் கொண்டு விஜய நகர மன்னர்களின் பிரதிநிதிகளாகிய நாயக்க மன்னர்கள் தமிழ் நாட்டை பரிபாலனம் செய்தமையால் விஜய நகர நாயக்கர் காலம்
என அழைக்கப்படுகின்றது.
சுந்தரபாண்டியன் திறமை குறைந்த மன்னன்' ஆகையால் அக்காலப்பகுதியில் கி.பி 1345 அளவில் மாலிக்கபூர் தலைமையில்
Y!
இஸ்லாமியப் படையெடுப்பு ஒன்று நிகழ்ந்தது. எனவே அரசியல், பொருளாதார,
சமுதாய நிலைமைகளைப் பொறுத்தவரையில் நிலையான உறுதிமிக்க
அரசொன்று இல்லாத நிலைமை காணப்பட்டது. தமிழகத்தின் செல்வங்கள் கொள்ளையடிக்கப்பட்டு நாடு சூறையாடப்பட்டது. அந்நியப்படையெடுப்பை தடுத்து நிறுத்துவதிலேயே மக்கள் மிகுந்த கவனம் செலுத்தினர். இஸ்லாமியர் வரும்பொழுது ஒரு கையில் வாளுடனும், மறுகையில் குர்ஆனுடனும் வந்ததாகக் கூறப்படுகின்றது. எனவே நாடும் மதமும் அழிவுப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருந்தமையால் இந்து மதத்தைப் பாதுகாக்க வேண்டியதுடன் அந்நியப்படையெடுப்பைத் தடுத்து நிறுத்துவதுமே முக்கிய நோக்கமாக இருந்தமையால் காவியங்களின் வளர்ச்சி தேக்கமடைந்தது. எனவே விஜய நகர நாயக்கர் anote ஏனைய தமிழ் இலக்கிய காலகட்டங்களிலிருந்து வேறுபடுகின்றது.
இலக்கியம் ஒரு கால சூழ்நிலைக்கு ஏற்பவே தோற்றம்பெறும்
என்பது வரலாறு காட்டும் உண்மை. விஜய நகர நாயக்கர் காலப்பகுதியில்
நிலவிய அமைதியற்ற சூழ்நிலை, காரணமாக நாட்டு நலன் பேணும்
முயற்சிகளிலோ, பொருளாதாரவிருத்தி பற்றியோ மன்னர் அதிக கவனம்
செலுத்தவில்லை. அதாவது படையெடுப்புக்களும், போர்களும் நிகழ்ந்த C26)
 
 
 
 
 
 
 
 

ஓர் காலப்பகுதியில் பொருளாதார வளத்தினைக் கட்டியெழுப்புவது சாத்தியம் அற்ற ஒன்று. எனவே காவியங்களின் வளர்ச்சி தேக்கமடைவதுடன் அக்காலத்தில் தோற்றம் பெற்ற இலக்கியங்கள் ஏனைய இலக்கியங்களின்
போக்கில் நின்றும் வேறுபட்டுச் செல்வதை அவதானிக்க முடிகிறது.
படையெடுப்புக்கள் நிகழ்ந்த காலப்பகுதியில் மக்கள் பயந்த மனநிலையில் வாழந்தமையால் விரக்தி, நம்பிக்கையீனம் முதலியன சமுதாயத்தில் பரவலாகக் காணப்பட்டது. எனவே உள்ளக்கிளர்ச்சியோ புத்துணர்ச்சியோ ஏற்பட முடியாத நிலைமை காணப்பட்டது. புதுமையில் சிறப்பு ஒன்றையும் காணமுடியவில்லை. காவியங்கள் படைப்பதற்கு ஏற்ற கருப்பொருள் ஏதும் புலவன் உள்ளத்தில் தோற்றம் பெறவில்லை. எனவே காவியங்களின் வளர்ச்சி தேக்கமடைந்தது. புலவர்கள் ஆதரிப்பார் இன்றி அல்லலுற்றனர். செழிப்பற்ற உலகியல் வாழ்க்கை நிலவியது. இந்நிலையில் சிந்தனையின் வளர்ச்சிப் போக்கையோ, கற்பனை ஆற்றல்களின் பெருக்கத்தையோ எதிர்பார்க்க முடியாது. எனவே இக்காலப்பகுதியில் எழுந்த இலக்கியங்கள் யாவும் வரண்ட வளமற்ற இலக்கியங்களாக தோற்றம்
பெற்றன. இவை ஏனைய காலப்பகுதிகளில தோற்றம் பெற்ற இலக்கியங்களில்
இருந்து வேறுபட்டுச் செல்வதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இதற்கு
அக்கால அரசியல், பொருளாதார சமுதாய சூழ்நிலையே காரணம்.
சமுதாயம் புலவனுக்கு புதியன படைக் கும் ஆற்றலை
வழங்கவில்லை. சமுதாயத்தில் புதுமை எதுவும் காணப்படவில்லை. எனவே
புதிய காவியங்களோ, புதிய இலக்கிய வடிவங்களோ தோன்றுவதற்குரிய
சூழ்நிலை காணப்படாமையால் இலக்கியங்கன் அரைத்த மாவை அரைப்பது
போல் பழைய தடத்திலே செல்ல வேண்டியதாயிற்று. இக்காலத்தில் தோன்றிய
இலக்கியங்கள் யாவும் உயிர்த் துடிப்பும், உணர்ச்சிப் பெருக்கும் அற்ற
வரண்ட இலக்கியங்களாகக் காணப்பட்டன. எனவே காவியங்களில் வளர்ச்சிப்
போக்கு இல்லை. சூழ்நிலைக்கு ஏற்ப இலக்கியங்கள் தோற்றம் பெற்றதுடன்
C27)

Page 16
ஏனைய காலப்பகுதிகளில் இருந்து வேறுபட்டனவாகவும் அமைவதைக்
BIT600T6)TLs).
இக்காலப் பகுதியில் எழுந்த இலக்கியங்களின் பண்பாக பழமை போற்றும் போக்கினைக் காணலாம். அதாவது சோழர்காலத்தில் எழுந்த பெரும் கோவில்கள் Lണ്ഡഖങ്ങg| கற்பனை உணர்ச்சியை தூண்டுவனவாகவும், மனதுக்கு ஆறுதல் தருவனவாகவும், பழம் பெருமைகளை திரும்பிப்பார்க்க உதவுவனவாகவும் விளங்கியமையால் தலபுராணங்கள் இக்காலப்பகுதியில் பெருமளவில் தோற்றம் பெற்றன. சேதுபுராணம், திருப்பரங்கிரிப் புராணம், கோயிற் புராணம், போன்றன இக் காலத்தில் எழுந்தனவாகக் கொள்ளப்படுகின்றன.
GF(PF5ATUL மாற்றத்துக்கு ஏற்ப நாயக்கர் காலப்பகுதியில் பெருமளவு சிற்றிலக்கியங்கள் தோற்றம் பெற்றன. இதனால் இக்காலப்பகுதியை சிற்றிலக்கிய காலம் என்பர். சமுதாய மாற்றத்திற்கு இணங்க இலக்கியங்களில் பொருளும் மாற்றமடைவது இயற்கையே. எனவே உலகியல் வாழ்வு செழிப்பற்ற நிலையில் (FLDLLJLD, தத்துவம், கடவுள் முதலிடம் பெற அவற்றைப் பொருளாகக் கொண்டு சோழர்காலப் பகுதியில் தோற்றம் பெற்ற இலக்கியங்கள் சமயச்சார்பும், தத்துவச்சார்பும் நிறைந்தனவாக LDTTBILD
போக்கை காணலாம். இக்கால இலக்கியங்களாக,
பரணி - மோகவதைப்பரணி, பாசவதைப்பரணி,
அஞ்ஞைவதைப்பரணி D-6) - திருவாரூர் உலா, திருக்காளத்தி நாதர் உலா,
ஏகம்பரநாதர் உலா, மதுரைச் சொக்க நாதர் உலா கலம்பகம் :- மதுரைக்கலம்பகம், காசிக்கலம்பகம்,
தில்லைக்கலம்பகம், கச்சிக்கலம்பகம் பிள்ளைத்தமிழ் :- மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்,
ਟ
 

முத்துக்கமாரசுவாமி பிள்ளைத்தமிழ் நான்மணிமாலை :- நால்வர் நான்மணி மாலை, திருவாரூர்
நான்மணிமாலை,
மும்மணிக்கோவை :- பண்டார மும்மணிக்கோவை,
சிதம்பர மும்மணிக்கோவை
35/15l' :- சிவஞானபாலைய சுவாமிகள்
நெஞ்சுவிடுதூது
தனிப்பாடல்கள்
இக்காலத்தில் புலவர்கள் ஆதரிப்பார் அற்ற நிலையில் தமது வித்துவத்தன்மையை வெளிப்படுத்த பொருள் விளங்காத கடினமான சிலேடை மடக்கு, யமகம், திரிபு, சொல்லலங்காரம் போன்ற சொல்லணி மிகுந்த இலக்கியங்களைப் படைத்தனர். இவற்றுக்கு காரணியாக சமுதாய சூழ்நிலை,
விரக்தி, வறுமை என்பன அமைந்துள்ளன.
நாயக்கர்கால இலக்கியம் காலத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப தோற்றம் பெற்றதுடன் ஏனைய கால இலக்கியங்களில் நின்றும் வேறுபட்டுச் செல்வதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அதாவது இக்காலப்பகுதியில் சமயம், தத்துவம் சார்ந்த இலக்கியங்கள் தோற்றம் பெறுவதை அவதானிக்கலாம். இறைவன் மீது பாடப்படுகின்ற பாடல்களாக இருந்தாலும் அவை வடமொழிச்
சொற்களையும், வடமொழிச் சந்தங்களையும் கொண்டு விளங்கின. அதாவது
சந்தச்சிறப்பு மிகுந்தவையாக அருணகிரிநாதரால் பாடப்பட்ட திருப்புகழ்,
கந்தரலங்காரம், கந்தரனுபூதி, முதலியவற்றைக் குறிப்பிடலாம். இவை பக்தி அநுபவங்களை வெளிப்படுத்துவதுடன், படித்தவர்களுக்கு உறுதிபயக்கும் பண்புநலன் வாய்ந்த பாடல்களாய் அமைந்தன இதனால் "வாக்கிற்கு அருணகிரி' என்றும், "கருணைக்கு அருணகிரி", என்றும் "ஐயா அருணகிரி உன்னைப் போல் ஒரு சொல் மெய்யாக விளம்பினர்யார் உளர்" என்றும்
பிற்காலப் புலவர்களால் போற்றப்படும் சிறப்பு வாய்ந்தவராகக் கருதப்படுகிறார்.
C29)

Page 17
காளமேகப்புலவர். இரட்டையர், குமரகுருபரர் வில்லிபுத்துாராழ்வார், பரஞ்சோதி முனிவர் பெரும்பற்றப் புலியூர் நம்பி, அதிவீரராம பாண்டியன், வீரகவிராஜர் போன்றோர் இக்காலத்தில் வாழ்ந்த மிகச்சிறந்த புலவர்கள் ஆவார். வடமொழிப்புலமையும், தமிழ் மொழிப் புலமையும் ஒருங்கு
வாய்க்கப்பெற்று மணிப்பிரவாள நடை செல்வாக்குப் பெற்ற BIT6)b
уд, М.
இப்பகுதியாகும். வசைபாடக் காளமேகம், என்று போற்றப்படுகின்ற
காளமேகப்புலவரால்
"இம் என்னும் முன்னே எழுநூறும், எண்ணுறும் அம் என்றால் ஆயிரமும் ஆகாதோ'
என்னும் அளவிற்கு கவிபாடும் ஆற்றல் பெற்றார். காளமேகப்புலவரால் பாடப்பட்ட பாடல்கள் வசைபாடல்களாகவும், சிலேடைப் பாடல்களாகவும், ! தனிச்செய்யுள் சிந்தாமணி எனும் நூலில் இடம்பெற்றுள்ளன. வாழ்த்துக்கவி பாடும் மரபில் இருநது வேறுபட்டதாய் வசைக் கவி பாடும் மரபு இக்காலப்பகுதியில் சிறப்பிடம் பெறுகிறது. சிவப்பிரகாச முனிவர், குமரகுருபரசுவாமிகள், படிக்காசுப்புலவர், பிள்ளைப் பெருமாள், ஐயங்கார் போன்றோர் இக்காலத்தில் தோற்றம் பெற்றதுடன் இந்துஸ்தானிச் சொற்களைக் கையாண்டு பிரபந்தங்களை வெளியிட்டனர். அத்துடன் முதன் முதல் பெண்பால் பிள்ளைத் தமிழ், நீரோட்டயமகந்தாதி, நான்மணிமாலை, முதலிய இலக்கியங்கள் தோற்றம் பெற்றதுடன், தலைசிறந்த உரையாசிரியர் பலரும் நச்சினார்க்கினியர், பரிமேலழகர் போன்றோர் தோன்றினர். எனவே நாயக்கர் 866) இலக்கியங்கள் ஏனைய கால இலக்கியங்களில் நின்றும் வேறுபட்டு
செல்வதை செல்வதை அவதானிக்க முடிகிறது.
下での
 
 
 
 

தலபுராணங்கள் தோன்றுவதற்கான நழ்நிலை
vs.
தமிழ் இலக்கிய வரலாற்றில் 14ஆம் 17ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலமாகக் கொள்ளப்படும் விஜயநகர நாயக்கர் காலப்பகுதியில் மதுரைத் திருக்கோயில், ஆயிரங்கால் மண்டம், முரீரங்கம் கோவில் ஆகியன கலைச் செல்வங்களாக விளங்கின. இக்காலப்பகுதியில் சூழ்நிலைக்கு ஏற்ப தலபுராணங்கள் தோற்றம் பெற்றன. இஸ்லாமிய படையெடுப்பின் காரணமாக சமயத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற ຫDມ່” உணர்வு ஆலயங்களின் பெருமை கூறுவதற்கான தலபுராணங்கள் தோன்ற வழிவகுத்தன.
t
"
சோழர் காலப்பகுதியில் நாட்டில் எண்ணற்ற புலவர்கள் தோன்றினர். அவர்களுக்கேற்ற கருப்பொருளை சமுதாயம் வழங்கியது ஆனால் நாயக்கள் காலப்பகுதியில் அவர்களுக்கு ஏற்ற கருப்பொருள் எதனையும் அப்புலவனுக்கு நாயக்கர் கால சமுதாயம் கொடுக்கவில்லை. ஆதரிப்பார் அற்ற சமுதாயச் சூழ்நிலை, புலவர்களின் வறுமை நிலை, பிரமாண்டமாக நிமிர்ந்து நிற்கும் ஆலயங்கள் பழம் பெருமைகளை உணர்த்துவதுடன் மக்கள் மத்தியில் நம்பிக்கை உணர்வை ஏற்படுத்துவனவாக அமைய நாடும் மதமும் அழிவுப் பாதையில் இருந்து விடுபட இறைவனே காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை மேலோங்க அருட்செயல்கள் நடைபெற்ற தலங்கள் மீது புராணங்களைப் பாடினர். எனவே இக்காலப் பகுதியில் தலபுராணங்கள் தோற்றம் பெற்றன.
இயற்கைச் சூழலையும் அவற்றோடு இணைந்த இறைவனது அற்புதக் கோலங்களையும் வியந்த புலவர்கள் பல புராணங்களை பாடினர். தலபுராணங்கள் பாடியோரில் உமாபதிசிவம் என்பவர் குறிப்பிடத்தக்கவர். 14th நூற்றாண்டில் இவர் பாடிய தலபுராணம் கோயிற்புராணம் ஆகும். இதை ஒட்டி தலபுராணங்கள் பல எழுந்தன. தலபராணங்களுள் மதுரையில் உள்ள சிவபெருமானின் 64 திருவிளையாடல்களைப் பற்றிக் கூறும் தலபுராணங்களே புகழ் பெற்றவை. வேப்பத்தூர் பெரும்பற்ற புலியூர் நம்பி, பரஞ்சோதி முனிவர் ஆகியோர் திருவிளையாடற் புராணங்களை இயற்றியவர்களாகக் கருதப்படுகின்றனர். இவற்றுள் பரஞ்சோதி முனிவரால்
செய்யப்பட்ட திருவிளையாடல் புராணமே இன்றும் பெரிதும்
C37)

Page 18
போற்றப்படுகின்றது.
இறைவன் வீற்றிருக்கும் தலங்களும், அவற்றின் இயற்கை அழகும் விளக்கமான வர்ணனை கொண்டதாய் விரிவாக இனிமையும், தெளிவும் உடையதாய் குறிப்பிட்ட தலங்களின் பெருமையினையும், அத்தலத்தில் கோயில் கொண்டருளிய இறைவனின் திருக்கோலத்தையும் வர்ணித்துப் பாடுவதே தலபுராணம் ஆகும்.
நாயக்கர் காலப் பகுதியில் மடங்களும் ஆதினங்களும் சமயப்பணி புரிவதில் பெரிதும் ஈடுபட்டன. எனவே தர்மபுரத்தைச் சேர்ந்த புலவர்கள் திருமழபாடி, திருவொற்றியூர் முதலான் தலங்கள் மீது புராணங்களைப் பாடினர்.
நிரம்ப அழகிய தேசிகர் திருப்பரங்கிரிப்புராணம், சேதுபுராணம் முதலிய தல புராணங்களை இயற்றினார். அதிவீர ராம பாண்டியர் வடநாட்டுத் தலமான காசியின் மீது பாடிய புராணம், காசிக்காண்டம்
திருமலைநாதர் என்பவர் சிதம்பரம் என்ற தலத்தின் மீது பாடிய புராணம் சிதம்பர புராணம்
BéFafu JCL முனிவர் திருத்தணிகை என்ற தலம் மீது தணிகைப் புராணம் பாடியுள்ளார். அந்நூல் இன்றும் அழியாமல் வாழும் சிறப்புடையதாய் விளங்குகிறது. மேலும் திருவாரூர், திருவெண்காடு, திருவெண்ணாமலை, திருச்செங்கோடு, விரிஞ்சிபுரம், வேதாரணியம், கும்ப கோணம் முதலான ஊர்கள் மீதும் தலபுராணங்கள் பாடப்பட்டன. சிவப்பிரகாசரால் பாடப்பட்டது திருக்கூவப்புராணம்.
சிவப்பிரகாசரும் ഉ_Lങ്ങ பிறந்தாரும் பாடிய பூரீகாளத்திபுராணம் மிகவும் சுவையான நூல்.
பூரீ வீரராகவ முதலியாரால் பாடப்பட்ட புராணம் திருக்கழுக்குன்ற புராணம் ஆகும்.
C32)
 
 

தலபுராணங்களில் நாட்டுப்படலம், நகரப்படலம், என்ற பகுதிகள் முதலில் அமையும். இவை இலக்கியச்சுவையுடன் அமைக்கப்பட்டன. இயற்கை அழகு பற்றியும், நிலவளம் பற்றியும், உழவர் முதலானவர்களின் வாழ்க்கை வளம் பற்றியும் கண்ட கனவுகளை எல்லாம் அந்தந்த தலபுராணங்களில் அமைத்து, அந்தந்த நாடுகளையும் ஊர்களையும் சிறப்பித்து பாடுவன. இதனால் அந்த நாட்டு மக்கள் படித்து, சுவைத்து தத்தம் நாடு, ஊர்கள் பற்றி பெருமையும் பற்றும் கொண்டு வாழ்ந்தனர். கொடியவர்களும் அதிகாரச் செருக்கு மிகுந்தவர்களும் துன்பமுற்று மனந்திருந்தி கோயில்களுக்கு வந்து வழிபட்டு நல்லவர்களாக மாறியதாக தலபுராணம் கூறுவது வழக்கம். எனவே மக்கள் சுவையோடு படித்து மகிழ்ச்சியுறுவதற்கும் கலைஞர்களோடு கலந்து கலை இன்பத்தை ஊட்டுவதற்கும், வாழ்வியல் தர்மத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், மக்களை நல்லவர்களாக மாற்றுவதற்கும் தலபுராணங்கள் பயன்பட்டமையால் இக்காலப்பகுதியில் தலபுராணங்கள் பெருந்தொகையாக எழுந்தன.
17ஆம் நூற்றாண்டில் விரிவான வர்ணனைகளைக் கொண்டு சுவையாகவும், பக்தி சுவை நிரம்பிய பாடல்களைக் கொண்டு அமையப்பெற்றாலும் தலபுராணங்கள் பாடுவதில் வல்லவராக எல்லப்ப நாவலர் விளங்குகிறார். இவர் திருவண்ணாமலை, திருவெண்காடு, தீர்த்தகிரி, திருச்சசெங்காட்டம் குடி முதலிய தலங்கள் மீது தலபுராணங்களைப் பாடினார். இவை இலக்கிய நயம் மிகுந்தவை. மேலும் ஞானப்பிரகாசரால் திருவொற்றியூர் புராணமும், ஞானக் கூத்தரால் திருவாரூர் புராணமும் பாடப் பெற்றது. இவ்வாறு எழுந்த தலபுராணங்கள் கணக்கற்றவை. தலபுராணம் மூலம் தலத்தின் பெருமையைச் சிறப்பிப்பதற்காக பல கதைகள் புனையப்பட்டன.
冰 இந்திரன் முதலான தேவர்கள் சாகா வரம் பெற்றமை,
米 சாபம் நீங்க குறிப்பிட்ட தலங்களை வழிபட்டமை.
冰 சாப விமோசனம் பெற்றமை, முதலான கதைகள் புனையப்பட்டன.
கதைகளின் ஊடாக மலை ஆற்று வர்ணனைகள் விரிவாக இடம் பெற்றன.
C33)

Page 19
1
தலபுராணங்கள் இன்று கற்றவர்களாலும் போற்றிப் படிக்கப்படுவது இல்லை. மக்களுடைய உள்ளத்தை FFJai(JLD சக்தி அற்றதாய் இலக்கிய கலை விருத்தி குறைவாய் இருப்பதால் அருமுயற்சி செய்து ஆயிரக்கணக்கான செய்யுள்கள் இயற்றிய போதும் அவை இன்று பெரிதும் போற்றப்படவில்லை. மேலும் தலபுராணங்கள் எல்லாமே ஒரே வகையான அமைப்பு, ஒரே வகையான செய்யுள் வடிவம், ஒரே வகையான வர்ணனைகள் கொண்டவை. வெறும் கற்பனையும், சொல் விளையாட்டும் நிறைந்தவை. காலம் கடந்து பயன்தருவதோ, இன்பம் அளிப்பதோ இல்லை. இலக்கியச் சிறப்பு மிகவும் குறைவு, கலைத்திறமையும்,கற்பனையும் நிறைந்திருந்தன அன்றி உணர்ச்சிப் பெருக்கோ, உயிர்த் துடிப்போ அற்றவையாக விளங்கியமையால் காலப்போக்கில் இவை அழிந்துவிட்டன எனலாம்.
எனவே நாயக்கர் கால இலக்கியங்கள் சமயச்சார்பு மிகுந்து காணப்படுகின்றன. இக்காலப்பகுதியில் அரசியலில் உறுதிப்பாடின்மை, நாடும் மதமும் அழிவுப் பாதையை நோக்கி செல்லுதல், விரக்தி, பயந்த மனநிலை, போன்ற காரணிகளால் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். சமுதாய நிலையிலும் வளமற்ற காலம், வரண்ட நிலை, பொருள் செழிப்பற்ற காலம், புலவர்கள் ஆதரிப்பாரற்ற நிலை, விரக்தி, இறைவன் காப்பாறறுவான் என்ற நம்பிக்கை, தம்மதத்தை காப்பாற்றவும், பிறமதத்தவரின் செல்வாக்கினைத் தடுத்து நிறுத்தவும், இறைவன் மீது நம்பிக்கை வைத்தல் போன்ற பண்புகள் காணப்பட்டன.
C34)

விஜயநகர நாயக்கர் காலத்து இலக்கிய வளர்ச்சியிற் காணத்தகும் தனித்துவப் போக்குகள்.
தமிழ் நாட்டில் தென்னிந்திய அரசியல்கள் பலமிழந்த நிலையில் இஸ்லாமியப் படையெடுப்பைத் தடுக்கும் முயற்சியாக விஜயநகர பேரரசு
தோன்றியது. அவர்களின் பிரதிநிதிகளாகிய நாயக்கர் மதுரையிலும் தஞ்சாவூரிலும் ஆட்சி செய்த காலமே விஜய நகர நாயக்கர்காலம் ஒரு கால இலக்கிய வளர்ச்சியில் அக்கால அரசியல் சமூக சூழ்நிலைகள் செல்வாக்குச் செலுத்தும். இது விஜய நகர நாயக்கர் காலத்துக்கும் பொருந்தும். எனவே அக்காலத்தில் எழுந்த இலக்கியங்கள் தமக்கென
சில தனித்துவமான பண்புகளைக் கொண்டனவாய் அமைந்தன.
இஸ் படையெடுப் புக் காரணமாக ஆலயங்கள் சிதைக்கப்பட்டமையால் அவற்றின் பெருமைகள் கூறும் தல புராணங்களும் புலவர்களை ஆதரிப்பார் இல்லாத நிலை தோன்ற அவர்களின் வறுமை காரணமாக பழமை போற்றும் பண்பும் சந்தர்ப்பத்துக்கேற்ப கவிபாடும் நிலைமை தோன்ற தனிப்பாடல்களும் எழிச்சி பெற்றன. மேலும் புதுமைச் சிறப்பு எதுவுமே காணாத புலவர்கள் பழம் , பெருமையை பேசியதுடன் தமது வித்துவச் செருக்கை வெளிப்படுத்தும் வகையில் கவிதைகளை ujLD85 b, திரிபு. சிலேடை, மயக்கு என யாத்தனர். தத்துவக்கருத்துக்களை விளக்கும் நூல்கள் தோன்றின. புகழ் பூத்த உரையாசிரியர்கள் தோன்றினர். சைவ வைஸ்ணவ மடங்கள் தோன்றின. இஸ்லாமியப் புலவர்கள் இலக்கியம் படைத்தனர். கிறஸ்தவமும் அறிமுகமானது. இவ்வாறு விஜய நகரகால இலக்கியம் பல்வேறு துறைகளிலும் வளர்ச்சி பெற்றது.
விஜயநகர காலப்பகுதியில் மக்கள் மத்தியில் புலவர்களின் உணர்ச்சியைக் கோயில்கள் தூண்டியதனால் அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு மேலோங்க அவற்றைப் பொருளாகக் கொண்டு
பல பிரபந்தங்களையும், காப்பிய நலங்கனிந்த புராணங்களையும் இயற்றினார். C35)

Page 20
s
இவர்களது. இலக்கியங்கள் தர்க்க முறையாக அமைந்ததுடன்
தத்துவக்கருத்துக்களை வெளிப்படுத்துவனவாகவும் அமைந்தன.
புதுமையைப் படைக்க நாயக்கர் கால சூழ்நிலை இடம் கொடுக்காமையால் அக்கால் இலக்கியங்களில் பழமை போற்றும் பண்பு மிக்கிருந்தது. அதாவது பழமை வாய்ந்த நூல்களாகிய எட்டுத் தொகை பத்துப்பாட்டு ஆகியவற்றுக்கு உரைகள், எழுந்தன. அத்துடன் பல்லவர்கால மெய்யடியார்கள் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக அவர்களைச்
சிறப்பித்துபாடும் பிரபந்தங்கள் எழுந்தன.
அகராதியும் ஆசானும் துணை கொண்டு அல்லாது இக்கால இலக்கியங்கள் இலகுவில் பொருள் அறிய முடியாதவாறு நன்கு சிந்தித்து பொருள் அறியுமாறு அமைந்தன. புலவர்கள் தம் கல்வியறிவு, புத்திசாதுரியம் கற்பனாசக்தி ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் அவரவர் வித்துவத்தன்மையை வெளிப்படுத்துவனவாகவே இக்கால இலக்கியங்கள் எழுந்தன. உணர்ச்சிப் பெருக்கோ, உயிர்த்துடிப்போ இயற்கைத்தன்மையோ இக்கால இலக்கியங்களில் இடம் பெறவில்லை. புலவர்களை ஆதரிக்காத நிலை. புலவர் தம் வறுமை, சொல்லணிகளும், சொல்லலங்காரங்களும் நிறையப் பெய்து தம் வித்துவத் தன்மையை வெளிப்படுத்திப் பரிசில் பெறவேண்டிய நிலை ஆகிய சூழ்நிலைகளே இத்தகைய இலக்கியங்கள்
தோன்றுவதை நிர்ணயித்த காரணிகளாகும்.
நாயக்க மன்னர்கள் வடநாட்டை சார்ந்தவர்களாக இருந்தமையால் வடமொழி கருத்துக்களும், வடமொழி சொற்களும் தமிழில் புகுந்து மணிப்பிரவாள நடை எழிச்சி பெற்றது. (மிகுதியாக)
வடமொழிச் செல்வாக்கு காரணமாக வடமொழி இதிகாச புராணக்
கதைகளாகிய பாரதம், நைடதம், அரிச்சந்திரபுராணம் முதலியன தமிழில்
எழுந்தன. வடமொழிச் சந்தங்களைப் பின்பற்றி திருப்புகழ், கந்தரந்தாதி,
கந்தரனுபூதி, கந்தரலங்காரம், திருவகுப்பு ஆகிய சொல்லலங்காரங்களும் C36)

சந்தங்களும் நிறைந்த நூல்கள் எழுந்தன. நாயக்க மன்னர் ஆட்சிக்காலம் சமயதத்துவ உணர்ச்சிகளை மட்டும் தூண்டக் கூடியனவாக அமைந்ததனால் இத்தகைய நூல்களே எழுந்தன. மன்னர் புகழ்பாட எழுந்த பிரபந்தங்கள் கூட தத்துவ சாத்திரக் கொள்கைகளை விளக்கும் பரணிப் பிரபந்தங்களாக வளர்ச்சி பெற வழி வகுத்தன.
சோழர் காலத்தில் வாழ்த்துக்கவி Lπιguι புலவர்கள் இக்காலத்தில் வசைக்கவி பாட முற்பட்டனர். இது காலத்தின் போக்கிற்கு ஏற்ப இலக்கியங்கள் தோற்றம் பெறும் என்பதை விளக்குகின்றது. பரணி, உலா, கலம்பகம், பிள்ளைத்தமிழ், கோவை, தூது, நான்மணிமாலை, முதலிய மன்னர் புகழ் பாடிய இலக்கியங்கள் யாவும் இக்காலப்பகுதியில் அக்கால
போக்கிற்கு ஏற்ப சமய தத்துவத்தை விளக்குவனவாக எழுச்சி பெற்றன.
நாயக்கர் கால பிற்பகுதியில் பொதுமக்கள் இலக்கியங்களாகிய
பள்ளு, குறவஞ்சி, முதலியன தோற்றம் பெற்றதுடன் L6) தனிப்பாடல்களும்
தோற்றம் பெற்றன. அக்காலத்தில் பழைய இலக்கியங்களை ஆர்வமாக
கற்று வந்த பழமைபோற்றும் பண்புடைய புலவர்கள் பழந்தமிழ்
இலக்கியங்களுக்கு உரைகள் எழுத முற்பட்டனர். எனவே பரிமேலழகர்,
நச்சினார்க்கினியர், இளம்பூரணர், அடியார்க்கு நல்லார், எனப் பல
உரையாசிரியர்கள் தோன்றினர். இவ்வாறு விஜய நகரகால இலக்கியங்கள்,
அக்கால அரசியல் சமூக, சமய, பொருளாதார நிலைமைக்கு ஏற்ப தமக்கென சில தனித்துவமான பண்புகளைக் கொண்டனவாய் அமைந்தன.
"C37)

Page 21
  

Page 22
கோயில்களுக்கு வந்து வழிபட்டு நல்லவர்களாக மாறிய வரலாற்றைக் கதைகளோடு கலந்து கலையின்பம் தரப்பாடப்பட்டவையே தலபுராணங்கள். 17up நூற்றாண்டில் எல்லப்பநாவலர் பக்திச் சுவையும் விரிவான வர்ணனைகளையும் கொண்டதாக திருவண்ணாமலை, திருவெண்காடு, திருவிரிஞ்சை, தீர்த்தகரி, திருச்செங்காட்டுங்குடி ஆகிய பல தலங்கள் மீது L !6Ꮩ0 தலபுராணங்களைப் பாடியுள்ளார். திருவொற்றியூர்ப்புராணம் ஞானக்
கூத்தரால் இயற்றப்பெற்றது. இவ்வாறு ஒவ்வொரு தலத்திலும் அந்த தலத்தை
விசேடித்து அத்தலத்தின் பெருமை கூறுவதாக எழுந்தவையே தலபுராணங்கள்.
கதைகளும் வர்ணனைகளும் பெரும்பாலும் அந்தந்த ஊரை அடுத்துள்ள மலை, ஆறு பற்றிய வர்ணனை இடம் பெற்ற போதும் வெவ்வேறான அற்புதச் செயல்கள் பற்றிய கதைகள் இடம் பெற்றுள்ளன. இந்திரன் முதலான தேவர்கள் கூட தாம் பெற்ற சாபம் நீங்க பாவம் திர கோயில் களை வந்து வழிபட்டு கடைத் தேறியதாக கதைகள் புனையப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆலயமும் தலபுராணங்களைக் கொண்டுள்ளது. இவை வெறும் ஆலயம் பற்றிய வர்ணனைகளும் அற்புதச் செயல்களும் பற்றியதாக அமைந்தனவேயன்றி இலக்கியக் கலை விருந்து குறைவாக இருந்தமையால் கற்றவர்கள் கூட இன்று தலபுராணத்தை விரும்பிப்படிப்பதில்லை. இலக்கியப்புதுமை நயம், வாழ்வை ஒட்டிய சிந்தனைகள் என்று எவையும் இடம் பெறாமையால் தலபுராணங்கள் செல்வாக்கு இழந்தன.
அக்கால சூழலுக்கு ஏற்ப எங்கள் ஊருக்கு ஒரு புராணம் வேண்டும் என்ற விருப்பில் ஏறக்குறைய ஒரேவகையான செய்யுள் வடிவம் ஒரே வகையான வர்ணனைகளைக் கொண்டனவாய் அமைந்தமையால் ତୂ(b நூலைக் படித்தவர்கள் மற்ற நூலை படிப்பதில் சலிப்பு அடைகின்றனர்.
காலத்தின் போக்கிற்கு ஏற்ப வரண்ட இலக்கியமாக அமைந்தமையால்
C40->

ம ”
இலக்கிய நயத்துக்காக, கலை விருந்துக்காக படிக்கத் தேவையில்லாமல் போய்விடுகிறது. புலவர்கள் வெறும் கற்பனை வேடிக்கையிலும் சொல் விளையாட்டிலும் ஈடுபட்டு நூல்களைப் பாடினர். அன்றி வாழ்வோடு ஒட்டியதாக நடப்பியலுக்கு ஏற்ற உண்மைத்தன்மை சேர்ந்ததாக நூல்கள் அமையவில்லை. எனவே நூல்கள் எழுந்த காலப்பகுதியில் கூட ஒரு சிலருக்கு மட்டுமே பயன்பட்டது. அன்றி பலருக்கு இன்பம் தருவதாகவோ காலம் கடந்து шu 60i தருவதாகவோ அமையவில  ைல. புலவர் கள் தம்முடையவித்துவத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் கலைத்திறனும் உணர்ச்சிப்பெருக்கும் கற்பனை ஆற்றலும் மிகுந்த பாடல்களை அக்கால சூழலை ஒட்டி தமது திறமைகளை வெளிப்படுத்துவதற்காக பாடினாரேயன்றி உணர்ச்சிப் பெருக்கும் உயிர்த்துடிப்பும் நிறைந்ததாகவோ இலக்கியச் சுவை மிகுந்ததாகவோ அவர்கள் தம் தலபுராணங்களை அமைக்கவில்லை. எனவே தான் எண்ணற்ற தலபுராணங்கள் தோன்றிய போதும் அவை பேணுவார் அற்று அழிந்ததுடன் இருக்கின்ற சில புராணங்கள் கூட மறுபதிப்பு செய்யப்படவில்லை. அதாவது தலபுராணங்கள் அக்கால சூழலுக்கு ஏற்ப வரட்சி மிக்க புராணங்களாகத் தோன்றியமையால் அவை செல்வாக்கு
இழக்கத் தொடங்கின.
C4D

Page 23
gl gumü ŰJUiijigir 9H
மைப்பு
:
ஒரு அரசனைப் புகழும் பேர்து U6) வகை யாப்புக்களால் பல
செய்யுள்களை இயற்றிப்பாடுவது சுவை மிகுந்ததாகும். புலவர்கள் தாமே நேரே அரசனைப் புகழ்ந்து பாடாது ஊரார் புகழ்வது போலவும் காதல் கொண்ட மங்கை ஒருத்தி அந்தக் காதலுக்கு ஏங்குவது போலவும் தலைவனின்
சிறப்புக்களும் பெருமைகளும் தோன்றப் பல்வேறு துறைகளை அமைத்து
கருத்தில் புதுமை, உணர்ச்சிக்கேற்ற வகையில் ஓசை அமைக்கும் முறையில் புதுமை, ஆகியவை தோன்ற பொருளைத் தெளிவாக அமைத்து உயிருள்ள இலக்கியங்களை அக்காலப்புலவர்கள் படைத்தனர். அத்தகைய சிற்றிலக்கிய
வகைகளில் ஒன்று உலாப்பிரபந்தம்.
கோயிலில் தெய்வம் அலங்கார சிறப்புக்களுடன் பரிவாரங்கள் சூழ
பெரிய மாடவீதிகளில் உலா வருவது அக்கால வழக்கம். அந் நேரத்தில் தெய்வம் புறப்படுவது முதல் சுற்றித் திரும்பி வரும் வரையில் எல்லா
நிலைகளிலும் தெய்வத்தைப் போற்றி புகழ்ந்து பாடல்கள் பாடப்படுவதும் அக்கால வழக்கமாக இருந்தது. உலா புறப்படுவதற்கு முன்பு அந்த
தெய்வத்தின் பெருமையும், அற்புத வீரச் செயல்களும் போற்றிக் கூறப்படுவதும்
புறப்படும்போது பரிவாரமாக சூழ்ந்து வருவோரின் விளக்கங்கள் கூறப்படுவதும்
காதல் கொள்வதும் பற்றி கூறுகின்ற நாட்டுப்பாடல்கள் பல அக்கால வழக்கில்
இருந்தன. நாட்டுப்பாடல்கள் அந்தந்த ஊர்களின் அமைப்புக்கேற்ப சிற்சில
வேறுபாடுகளுடன் வழங்கியிருக்கலாம். இவ்வமைப்பு புலவர் மனதில்
உலாப்பிரபந்தம் தோன்ற வழிவகுத்தது எனலாம்.
புலவர் ஒருவர் கோயில் விழா ஒன்றை நன்கு ஆராய்ந்து நாட்டுப்பாடல்
அமைப்பை ஒட்டி அதைப் போல பாட வேண்டும் என்ற விருப்பம் கொண்டு
அமைத்துத் தந்த இலக்கிய வகையே உலாப்பிரபந்தமாகும். உலாப்
C42)
 
 
 
 

V ,
பிரபந்தங்களுள் மிகப் பழமையானதும் கி.பி 9ம் நூற்றாண்டில் சேரமான் பெருமாள் நாயனாரால் பாடப்பட்டதும் ஆதி உலா என்று போற்றப்படுவதும்
திருக்கைலாய ஞான உலா ஆகும்.
திருக்கைலாய ஞான உலாவில் போற்றப்படும் தெய்வம் சிவபெருமான் தேவர்கள் சிவலோகத்தில் சிவபெருமான் ഉബt வந்து காட்சி தர வேண்டும் என்று கேட்க இசைந்த இறைவனுக்கு எல்லா விதமான ஆபரணங்களை அணிவித்து பார்வதியே அலங்காரம் செய்கிறாள். மன்மதன் உரிய மாலையை வழங்க சந்தனம் பூசி குண்டலம் முதலியவை அணிந்து கொண்டு நந்தியும் மாகாளரும் காவல் புரிய, முனிவர் எழுவரும் வாழ்த்து மொழிய, பன்னிரு ஆதித்தர்களும் பல்லாண்டு பாட அகத்தியர் யாழிசைக்க, அக்கினித் தெய்வம் நறும் புகை ஏந்த, வர்ணன் நிறைகுடம் ஏந்த வாயுபகவான் வீதிகளை தூய்மை செய்ய, மேகம் நீர் தெளிக்க, சந்திரன் குடைபிடிக்க, சிவன் கைலாயவாயில்களைக் கடந்து வெளிவருவார் குபேரன் g5 (T60TLDITB பொருள்களை வீச, கங்கையும் யமுனையும் கவரி வீச மின்னல்கள் கொடிபிடிக்க இடிகள் முரச வாத்தியம் இயம்ப அரம்பை, ஊர்வசி, முதலானோரின் நாட்டியம் இடம் பெறும். இவர்கள் மட்டுமன்றி ஏனைய தேவர்களும் தம்மால் இயன்ற தொண்டுகள் செய்ய இறைவன் ஏழு வாயிலும் கடந்து வெளியே வருவார்.
முருகன் மயில்மீது முன்னே செல்ல, இந்திரன் பின்னே வர, பிரமன் வலப்பக்கத்திலும் திருமால் இடப்பக்கத்திலும் வர, காமனுடைய படை முன் செல்ல. விநாயகள் மெல்ல நடப்பள். மற்றத் தேவ கணங்களும் சூழ்ந்து வர பல வகை இசைக்கருவிகளும் ஒலிக்கும். உலா வரும் தெருக்களில் மங்கையர் பலர் இறைவனின் அழகைக் கண்டு களிக்க ஏழு பெண்கள் இறைவனைக் கண்டு காதல் கொள்வார். ஏழு பெண்களின் ஏழுவகைப்
பருவ வேறுபாடுகளும் பருவ வேறுபாட்டிற்கேற்ப அவர்கள் மனநிலையும்
C43)

Page 24
விளக்கப்பட்டுள்ளது. பேதைப் பருவப் பெண் காதல் இன்னதென அறியாமல் இருந்த பொழுது இறைவனுடைய அன்புக்காக ஏங்குதல், பெதும்பை பருவப் பெண் காதலை பற்றிய அறிவும் அறியாமையும் கலந்த நெஞ்சுடன் வாழ்வாள் மங்கைப் பருவப் பெண் மயங்குவாள், மடந்தைப் பருவத்தாள் தான் உற்ற காதலை தோழியருடன் சொல்லிப்புலம்புவாள். அரிவை பருவத்தவள் காதலில் வாடி துயருறுவாள். தெரிவைப்பருவம் காதலால் சோர்வுற்று ஏங்கும் பேரிளம் பெண் காதலால் உள்ளமும் உடம்பும் வாடி வருந்தும். இவ்வாறு ஏழு பருவ மங்கையரும் உணரும் காதல் அனுபவங்களை உள்ளத்து உணர்ச்சிகள் புலப்படும் முறையில் விளக்கி பலருடைய நெஞ்சங்களையும் கவரும் ஒப்பற்ற அழகனாய் தலைவன் உலா வருவதாகப் பாடுவதே உலா
நூலின் அமைப்பு முறையாகும்.
உலா இலக்கிய வகையில் ஆரம்பத்தில் தோன்றிய அமைப்பையே இலக்கணமாகக் கொண்டு பின் வந்த புலவர்களும் உலா நூல்களை இயற்றினர். ஆனால் தலைவனுடைய ஊர் பேர் சூழ்ந்து வருவோர் தன்மை முதலியன வேறுபடும். மற்ற வர்ணனைகளின் தன்மைகள் ஒரே மாதிரி அமைக்கப்படும். புலவர்களின் கற்பனைதிறனுக்கு ஏற்க ஏழு பருவ மங்கையர்களின் காட்சியும், உணர்ச்சியும் உரையாடல்களும் பல நயங்களும் சிறப்புக்களும் நிறைந்து பல புதுமையோடும் உவமை நயத்துடனும் அமைந்தன. எனினும் இலக்கியப் புதுமை குறைவாக இருப்பதனால் உலாக்கள் அதிகமாகத் தோற்றம் பெறவில்லை 11ஆம் நூற்றாண்டில்
நம்பியாண்டார் நம்பி திருஞானசம்பந்தர் மேல்பாடிய,
“ஆளுடைய பிள்ளையார் திருவுலா மாலை” கி.பி 12ம் நூற்றாண்டில் ஒட்டக்கூத்தர் பாடிய மூவருலாவுமே இன்று நமக்குக் கிடைக்ககூடியதாக உள்ளன. உலாக்கள் பாடும் வழக்கம் 18ம் நூற்றாண்டு வரையில்
மிகுந்திருந்தது. எனினும் உலாக்களில் கவிதைச்சிறப்புக் குன்றி செய்யுள்
C44)

புனைவே மேலோங்கி நின்றது. சோழப் பெருமன்னர் காலத்தில் தோன்றிய இலக்கியங்களுள் உலா இலக்கியமாகிய மூவருலா அக்கால இலக்கிய வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது. சோழமன்னன் அரசவைப் புலவராக இருந்த ஒட்டக் கூத்தரால் பாடப்பட்டதே மூவருவா. விக்கிரமசோழன் 2ம் குலோத்துங்கன் 2ம் இராஜராஜ சோழன் முதலிய மூன்று மன்னர்களையும் தவைவராகக் கொண்டு அவருடைய பெருமைகள் சிறப்புக்கள் தோன்ற
பாடிய பாடலே மூவருலா எனப்படும்.
திருக்கைலாய ஞான உலாவில் தோற்றம் பெற்ற உலா இலக்கியங்கள் புதுமைகள் நிறைந்ததாக அமைக்கப்பட்ட போதிலும் சீவகசிந்தாமணி, கம்பராமாயாணம் போன்றவற்றிலே மன்னர்கள் உலாவரும் போது அவர்களுடைய உலா நிகழ்ச்சிகள் சித்தரிக்கப்பட்ட போதிலும் தனி இலக்கியமாக உலா பிரபந்தங்கள் தோற்றம் பெற்றமை பெரிதாக இல்லை என்றே கூறலாம். புலவர்கள் திறனுக்கு ஏற்ப நயங்கள் சிறப்புக்கள் இருந்த போதிலும் உண்மையான இலக்கியப் படைப்பு குறைந்து செய்யுள் இயற்றும் திறமை மேலோங்கி நின்றதால் சோழர்காலப்பகுதியில் தோன்றிய மூவருலாவுடன் உலா பிரபந்தங்களின் வளர்ச்சி வேகம் குன்றியது. எனவே தலங்கள் தெய்வங்களுக்கு உலா நூல்கள் பாடுகின்ற மரபே 18ம் நூற்றாண்டு வரை காணப்பட்டது. 18ம்நூற்றாண்டில் இயற்றப்பட்ட உலாக்களிலும் இத்தகைய மரபு பின்பற்றப்பட்டபோதும் இலக்கிய சிறப்பு தேக்கமடைய சோழர் பெருமன்னர் கால வளர்ச்சியுடன் 2 GOTŮ. பிரபந்தங்களின் வளர்ச்சி
வேகம் வீழ்ச்சிப் போக்கை அடைந்தது.

Page 25
பள்ளு, குறவஞ்சி, கீர்த்தனை ஆகியவை தமிழ் இலக்கியத்தின் உள்ளடக்கத்திலும் உருவத்திலும் ஏற்படுத்திய மாற்றங்கள்.
நாயக்கர் காலப்பகுதியில் தமிழ் இலக்கியம் சமயம் தத்துவம் சார்ந்த வகையில் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் மாற்றம் பெறத் தொடங்கின. அக்கால அரசியல் சமுதாய சூழ்நிலை உள்ளத்தில் எழும் உண்மையான உணர்ச்சி பேதங்களையோ அனுபவங்ளையோ வெளிப்படுத்த போதுமானதாக இருக்கவில்லை. கவிதை இடத்தில் சந்தச்சிறப்பு, சொல்லலங்காரம் முதலிய செயற்கை அழகுகள் நிறைந்து இயல்பாக அமைய வேண்டிய சிறப்புக்கள் குறைந்து செல்லும் போக்கே மேலோங்கிக் காணப்பட்டது." இயற்கைக் காட்சிகளை வர்ணிக்கும் போதும் அதில் புலவனுடைய வித்துவச்சிறப்பையும் அவனுடைய கல்வி அறிவையும் புத்தி சாதுரியத்தையும் கண்டு வியக்கலாமே அன்றி அவன் கண்ட காட்சி அழகை நாம் கண்டு வியக்கமுடியாத அளவிற்கு தமிழ் இலக்கியத்தின் உள்ளடக்கம் முற்று முழுதாக மாற்றம் பெறத் தொடங்கியது.
மன்னர் போற்றும் மொழியை மக்களும் போற்றுதல் இயல்பு. எனவே வட மொழியும் தத்துவசாத்திரக்கருத்துக்களும் அவற்றைக் குறிக்கும் சொற்கள் சொற்றொடர்கள் தமிழ் இலக்கியத்தில் மிகுதியான இடம் பிடித்துக் கொண்டன. எனவே உள்ளடக்கம் முற்றும் மாற்றமடையும் ஒரு காலப் பகுதியில் உருவமும் மாற்றம் அடைதல் இயல்பே. ஆகவே நாயக்கர்கால பிற்பகுதியில் இலக்கியங்களின் உருவம் மாற்றமடைந்தது. அதாவது பொதுமக்கள் சார்பான இலக்கியங்கள் தோற்றம் பெற்ற ஒரு காலப்பகுதியாக இக்காலப்பகுதி விளங்கியது. எனவே பொதுமக்களைச் சிறப்பித்து பாடுவதற்கான பள்ளு, குறவஞ்சி, ஆகிய பொதுமக்கள் இலக்கியங்களும், கீர்த்தனை என்ற இலக்கிய வடிவமும் இலக்கியத்தில் இடம்பிடித்து அதன் உருவத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
C46)

நகைச்சுவை நிறைந்த ஒரு பிரபந்தவகையே பள்ளு. சாதாரண பொதுமக்களைத் தலைவராகக் கொண்டு பள்ளு பிரபந்தம் பாடப்பட்டது. କୃତ(5 பண்ணைக்காரன் அவருக்கு கீழ் பண்ணை நிலத்தில் உழவுத்தொழில் புரியும் பள்ளர் பள்ளியரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறுவது. பள்ளனுக்கு மனைவியர் இருவர். ஒருவர் சோழவளநாடு மற்றையவர் ஈழவளநாடு. இவர்களிடையில் ஏசலும் பேசலும் இடம் பெறும். ஏசல் பூசல்களின் ஊடாக நாட்டு வளம் எடுத்துக் காட்டப்படும். இது நகைச்சுவை நிறைந்த பகுதி. பள்ளர் பள்ளியரிடையே ஏற்படும் ஊடல்களும் அதன் விளைவாக ஏற்படும் உணர்வுகளும் நகைச்சுவை நிறைந்தவை. இவ்வாறு இலக்கியத்தின் உருவம் மாற்றமடைந்து செல்வதை நாயக்ககாலப்பகுதியில் காணலாம். இக்காலத்தில் எழுந்த பள்ளு முக்கூடற்பள்ளு எழுந்த காலம் சீனிவாசன் வி.செல்வநாயகம் ஆகியோர் நாயக்கள் காலத்துக்குரியவை என்க் கூற சி.பாலசுப்ரமணியம் என்பார் ஐரோப்பியர் காலத்துக்குரியவை என்பர் நாயக்கள் காலப்பகுதியில் தோன்றிய பள்ளுப்பிரபந்தம் ஐரோப்பியர் காலப்பகுதியில் சிறப்பாகப் போற்றப்படுகிறது. பள்ளு என்ற இலக்கிய வடிவம் இக்காலப்பகுதியில் தோற்றம் பெறுகிறது.
அதை அடுத்து குறவஞ்சி என்ற புதிய இலக்கிய வடிவம் தமிழிலே தோற்றம் பெறுகிறது. திரிகூடராசப்ப கவிராயர் இயற்றிய நூல் திருக்குற்றாலக் குறவஞ்சி. குறிஞ்சி நிலத்தில் வாழும் குறவர்களின் வாழ்வியல் தொடர்பான அம்சங்களைக் கூத்தும் நாடகப்பண்பும் பொருந்தப்பாடுவது குறவஞ்சி. 18ம் நூற்றாண்டில் தோற்றம் பெற்ற இந்நூலுக்கு குமரகுருபரர் பாடிய மீனாட்சி யம்மை குறமே முன்னோடியாக அமைந்துள்ளது. குறம் என்ற துறையைப் பற்றி பாடுவதால் சிறுபிரபந்தங்களில் ஒன்றாக கொள்ளப்படுகிறது. குறத்தி குறி கூறுதல் வசந்த வல்லியின் திருமணம் முதலியன குறவஞ்சியில் கூறப்படுகின்றது. குறவஞ்சி இக்காலப்பகுதியில் எழுந்த ஒரு புதிய வடிவம் சமயமும் தத்துவம் மேலோங்கி நின்ற காலப்பகுதியில் பொதுமக்களும்
でエア>。

Page 26
நகைச்சுவையும் ஆடலும் பாடலும் இடம் பெற்று புதிய ஒரு இலக்கிய வடிவம் உருவத்திலும் உள்ளக்கத்திலும் மாற்றம் பெற்றதாக அமைவை காணக்கூடியதாக உள்ளது.
செய்யுளில் கீர்த்தனை என்ற இலக்கிய வடிவம் கோபால கிருஸ்ண பாரதியாரால் தோற்று விக்கப்பட்டது. நந்தனார் சரித்திரக்கீர்த்தனை சிறந்த தொரு கீர்த்தனை நூலாகும். உள்ளத்தை உருக்கவல்ல உணர்ச்சிப் பெருக்கும் கவிச்சுவையும் நிறைந்தவை. கீர்த்தனை என்ற வடிவம் தமிழ் இலக்கியத்திற்கு புதிது. இசைக்கலைக்குரிய பாட்டு வடிவங்கள் சில பழங்காலத்திலே மெல்ல மெல்ல இலக்கிய நூல்களில் புகுந்த போதும் 19ம் நூற்றாண்டிலே கீர்த்தனை, சிந்து முதலிய இலக்கிய வடிவங்கள்
தமிழ் இலக்கியத்தில் பெரும்பங்குவகித்தன. திரிகூடராசப்ப கவிராயர் முழுதும்
கீர்த்தனையால் ஆகிய இலக்கியத்தை படைத்தார்.
பெரிய புராணத்து அடியவர்கள் வாழ்க்கையைக் கருவாக கொண்டு கோபால கிருஸ்ண பாரதியார் எண்ணற்ற கீத்தனைகளைப் பாடினார். அவர் திருநீலகண்டநாயனார் கீர்த்தனை, இயற்பகை நாயனார் சரித்திரக்கீர்த்தனை, நந்தனார் சரித்திரக் கீத்தனை எனப்பல கீர்த்தனைகள் LIգա போதும் நந்தனார் சரித்திரக்கித்தனையே அவருக்கு பேரையும் புகழையும் பெற்றுக் கொடுத்தது.
நந்தனார் அரிசனர் குடும்பத்தைச் சேர்ந்தவராயினும் அவர் நடராஜ தர்சனம் செய்ய விரும்பி சிதம்பரம் போக ஆசைப்பட்டார். சிவனருளால்
ஏற்பட்ட தடைகளை எல்லாம் வென்று முத்தி பெற்றார்.
"சிதம்பரம் போகாமல் இருப்பேனோ நாள் இந்த ஜென்மத்தை
வீணாக கழிப்பேனோ’ என உருக்கமான முறையில் பாடியுள்ளார். இவரது
பாடல்களின் மெட்டு நாடு முழுவுகுஜ்) பிரபல்யம் பெற்றது. சுப்ரமணிய

பாரதியார் கூட தனது பாடல்களுக்கு மெட்டு அமைக்கும் போது நந்தனார் சரித்திரக் கீர்த்தனையில் உள்ள இன்ன பாடலின் மெட்டு என்று குறிப்பிடுகின்றமை அதன் சிறப்பை எடுத்துக்காட்டுகின்றது. அந்தளவிற்கு கோபால கிருஷ்ணரின் கீர்த்தனைகள் சிறப்பிடம் பெற்றுள்ளன 6T60T6)TLD. ஆரம்ப காலப்பகுதியில் பெரும்புலவராக விளங்கிய மீனாட்சி சுந்தரம்பிள்ளை இவரது பாடல்களுக்குச் சிறப்புப்பாயிரம் கொடுக்க தகுதியற்றவை எனக் கூறக் தயங்கினார். ஆனால் நூலின் ஆசிரியர் அதனை இசையுடன் LIL95gldb காட்டிய போது அந்த இசையில் கோபால கிருஸ்ணபாரதியாரால் ஆரம்பிக்கப்பட்ட கீர்த்தனையே பிற்கால கீத்தனைகளுக்கு வழிகாட்டியாகி அதற்குரிய வடிவத்தைக் கொடுத்து, தாயுமான சுவாமிகள் இராமலிங்க அடிகள் முதலிய பெரும் புலவர்கள் தோன்றி தமிழ் இலக்கியத்துள் கீர்த்தனை
என்ற வடிவம் தோன்ற வித்திட்டது எனலாம்.
தமிழ் இலக்கியத்தில் காலத்தின் போக்கிற்கு ஏற்ப புதிய கதைப் பொருட்களை மையமாக வைத்து புதிய இலக்கிய வடிவங்கள் தோன்றுவது மரபு அம்மரபை ஒட்டியே 19ம், 20ம் நூற்றாண்டு தமிழ் இலக்கியப்பரப்பில் பள்ளு, குறவஞ்சி, கீர்த்தனை ஆகிய புதிய இலக்கிய வடிவங்கள் புகுந்து தமிழ் இலக்கியத்திலும் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தின எனலாம்.
C49)

Page 27
ஐரோப்பியர் காலம்
ஐரோப்பியரின் வருகையின் விளைவாக கி.பி.18ம் 19ம் நூற்றாண்டின் நாயக்கர் நிலை குலைந்து இருந்த காலப்பகுதியில் ஆங்கிலேயர் தமிழ் நாட்டைக் கைப்பற்றி தமது ஆட்சியை நிலை நிறுத்திக் கொண்டனர் ஆங்கிலேயர் கிறிஸ்தவர்களாக இருந்தமையால் அவர்களுடன் சேர்ந்து ஐரோப்பிய குருமாரும் கத்தோலிக்க பாதிரிமாரும் வருகை தந்நதனர். இவர்கள் LD&E6i அன்பைப் பெறுவதற்கு மொழியே சிறந்த ஊடகம் என உணர்ந்தனர். அதாவது தமிழ் மொழியைக் கற்று தமிழ் மக்களோடு கலந்துறவாடி தம் சமயத்தைப் பரப்ப முயற்சித்தனர். எனவே ஐரோப்பியரின் வருகையின் விளைவாக தமிழ் மொழியிலும் தமிழ் இலக்கியத்திலும் புதிய மாற்றம் ஏற்றபட்டது.
சாதாரண கல்வி அறிவுடைய மக்களும் படித்து இன்புறக் கூடியதாய் காலத்தின் போக்கிற்கு இணங்க மக்கள் வாழ்க்கையோடு நெருக்கிய தொடர்புடையதாக உயிர்த் துடிப்புக்கள் நிறைந்ததாய் ஒரு மொழி இருக்குமாயின் அதுவே மொழியில் ஏற்பட்ட வளர்ச்சி என்று கூறப்படும். அதாவது ஐரோப்பியரின் வருகையின் விளைவாக தமிழ் இலக்கியம் புது வழிகளில் செல்லத் தொடங்கியது. மக்கள் வாழ்க்கையை உயிராகக் கொண்ட இலக்கிய வளம் படைத்த ஆங்கில மொழியை மக்கள் கற்றமையால் தமிழ் மக்கள் மத்தியில் புத்துணர்ச்சி ஏற்பட்டது. எனவே ஐரோப்பிய இலக்கியத்தின் போக்கை தழுவி தமிழிலும் நூல்களை இயற்றினர். நாயக்கள் காலப் பகுதியில் வட மொழி இலக்கியத்தை தழுவிச்சென்ற தமிழ் இலக்கியம் ஐரோப்பியர் காலப்பகுதியில் மேலைத்தேய இலக்கியம் என்ற புதுவெள்ளத்தைப் பெற்றுவிரைந்து செல்லத் தொடங்கியது. இதனாலே வரலாற்று ஆசிரியர்கள் இக்காலப்பகுதியை பழந்தமிழ் இலக்கியப் போக்கின் முடிவும் புது இலக்கியப் போக்கின் தொடக்கமும் சங்கமிக்கும் காலப்பகுதி என்று வரையறை செய்வர்.
でエ>

ஆங்கிலேய நாகரிக தொடர்பினால் சமுதாயத்தில் சமத்துவம், சுயாதீனம் என்ற கருத்துக்கள் விதைக்கப்பட்டன. மக்கள் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட்டது. அதற்கேற்ப இலக்கியங்களிலும் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. உணர்ச்சியோடு கூடிய அநுபவங்களை வெளிப்படுத்த உரைநடையே சிறந்த கருவி என்பதை உணர்ந்து உரைநடையில் இலக்கியங்களைச் செய்யத்தொடங்கினர். தொல்காப்பியர் காலம் தொடக்கம் 17D நூற்றாண்டு வரை செய்யுள் இலக்கியங்களே காணப்பட்டன. உரைநடை என்பது இலக்கிய இலக்கண நூல்களுக்கு எழுதப்பட்ட உரைகளாகவே காணப்பட்டன. நூல்கள் ஏட்டுச்சுவடியாக இருந்தமையால் மனனம் செய்வதற்கு செய்யுள் இலக்கியங்கள் எழிச்சி பெற்றன. ஐரோப்பியர் தரங்கம்பாடி அம்பலங்காடு ஆகிய இடங்களில் அச்சஇயந்திரசாலைகளை நிறுவினர் எனவே ஐரோப்பிரின் வருகை உரைநடையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவிற்று 6T606)TLD.
மத்திய தர வகுப்பினரின் எழிச்சி, கிறிஸ்தவ மதப் பரம்பல், அச்சு இயந்திரவருகை, மேலைத்தேய செல்வாக்கு, ஆகியவற்றின் காரணமாக தமிழ் மொழியிலும் தமிழ் இலக்கியத்திலும் புதிய மாற்றங்கள் ஏற்பட்டன. ஐரோப்பியர்களில்பெஸ்கி என இயற்பெயர் கொண்ட வீரமாமுனிவர் GU, போப், கால்ட்வெல், முதலியோர் தமிழ் உரைநடையின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றினர். ஐரோப்பியர் காலப்பகுதியில் இரண்டு வகையான உரைநடைகள்
கையாளப்பட்டன.
அ. மதப் பிரச்சாரத்துக்காக பயன்படுத்தப்பட்ட இலகுவான
உரைநடை
ஆ. முற்கால உரை ஆசிரியர்கள் கையாண்ட கடிகமான உரைநடை
இவ் இரண்டு உரைநடையிலும் நூல்கள் எழுந்தன.
வீரமாமுனிவர் எழுதிய அபிவேக பூரண குரு கதை (பரமார்த்த
குரு கதை)
GD

Page 28
கதை ஆகியவை வசன நடையில் முதன் முதல் எழுந்த இலக்கியங்கள் உரைநடையின் வளர்ச்சிக்கு நாவலர் அவர்களும் பெரும் பங்காற்றினார். அதாவது ஆங்கில மொழியில் உள்ளதைப் போன்று குறியீடுகளைப் பயன்படுத்தி எழுதும் முறையை உருவாக்கினார். எனவே தமிழ் மொழியில் உரைநடை என்ற ஓர் புதிய வடிவம் தோற்றம் பெற்றது உரைநடையில் பிறமதகண்டன நூல்கள் துண்டுப் பிரசுரங்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள், அறிவுசார் ஆராய்ச்சிகள் கட்டுரைகள், விஞ்ஞானக் கட்டுரைகள் என்பன தோற்றம் பெற்றன. எனவே மொழியியல் துறை வேகமாக வளர்ச்சி பெற்றது.
தமிழ் மொழியில் ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாக இலக்கியத்தின் உருவத்திலும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியன.
அதாவது நாவல் சிறுகதை போன்ற இலக்கிய வடிவங்கள் தோற்றம் பெற்றன. இக்கதைகள் புராணக் கதைகளை மையமாகக் கொண்டு எழுந்தன. தமிழ் மொழியில் முதல் முதலாக எழுந்த நாவல் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம். தொடர்ந்து சூரிய நாராயண சாஸ்திரிகள் எழுதிய மதிவாணன், இராஜமையர் எழுதிய கமலாம்பாள் சரித்திரம் மாதவைய்யா எழுதிய பத்மாவதி சரித்திரம், திருகோணமலை சரவணப்பிள்ளை எழுதிய மோகனாங்கி ஆகிய நாவல்கள் இக்காலப்பகுதியில் தோற்றம் பெற்றவை.
தமிழ் இலக்கியத்தில் ஏட்டுச் சுவடியாக இருந்த பழத்தமிழ் நூல்கள்
அச்சுவாகனம் ஏறின. அத்துடன் மொழி வளர்ச்சி அடையும் போது மொழி பற்றிய ஆய்வும் இடம் பெற்றமையால் "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற நூல் கால்ட் வெல் அவர்களால் எழுதப்பட்டது. தமிழ் மொழி வரலாற்றில் பிற மொழி இலக்கியங்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டன. சிறுகதை என்ற புதிய வடிவமும் தமிழ் இலக்கியத்தில் இடம் பிடித்துக் கொண்டது வா.வே.சு.ஐயரால் எழுதப்பட்ட "குளத்தங்கரை அரசமரம்" என்ற சிறுகதை Ca2)

இதற்கு உதாரணமாக கொள்ளப்டும்.
மேலை நாட்டார் தமிழ் இலக்கியத்துக்கு செய்த அருத்தொண்டு களின் பயனே அகராதிகளின் தோற்றம். வீரமாமுனிவர் செய்த மானிப்பாய் சதுரகராதி. இது புதிய துறைகளில் ஆக்கம் இடம் பெற்றதை எடுத்துக் காட்டுகின்றது.
பழைய போக்கைத் தழுவி புராணங்கள், செய்யுள்கள், உரைகள் ஆகியன வளர்ச்சி பெற்ற போதும் புதிய துறைகளிலும் நூல்கள் ஆக்கம் பெற்றன. உரைநடை இலக்கியம், செய்யுள் இலக்கியம், நாவல்கள், சிறுகதைகள் மடடுமன்றி நாடகங்களும் வளர்ச்சி அடைந்தன. தெருக் கூத்துக்களாக இடம் பெற்ற நாடகங்கள் நவீன மயப்படுத்தப்பட்டன. இக்காலப் பகுதியில் எழுந்த நாவல்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
அ. படித்து சுவைக்கக் கூடிய நாடகங்கள்
ஆ. மேடையில் நடிக்கக் கூடிய நாடகங்கள்
பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்களினால் எழுதப்பட்ட மனோன் மணியம் என்ற நாடக நூல் தமிழிலே முதன் முதல் எழுந்த கவிதை நாடக நூல். இது படித்து சுவைக்கக் கூடிய ஒரு நாடக நூல். இவற்றை விட அரிச்சந்திர நாடகம், சிறுத்தொண்டன் நாடகம் காத்தவராஜன், பூதத்தம்பி நாடகம், அல்லி நாடகம் முதலிய நாடகங்களும் எழுதி நடிக்கப்பட்டன.
நாயக்கர் காலப்பகுதியில் எழுந்த பள்ளு, குறவஞ்சி, கீர்த்தனைகள் ஆகியவற்றின் சாயலில் இடம் பெற்ற நாடகங்களை நோக்குமிடத்து ஐரோப்பியரின் வருகையானது இலக்கியத்தில் எத்தகைய மாற்றத்தை
ஏற்படுத்தி உள்ளது எனக் கண்டு கொள்ளலாம்.
ஐரோப்பிய காலப்பகுதியில் புதிய மாற்றங்கள் ஏற்ப்ட்ட போதும் பழைய இலக்கியங்களான சிந்து, கண்ணி, வண்ணம், முதலிய இசைப்பா G53)

Page 29
வகைகளும் குறவஞ்சி, பள்ளு போன்ற பிரபந்த வகைகளும் சிறப்பாக போற்றப்பட்டன.
தாயுமான சுவாமிகள், இராமலிங்க சுவாமிகள், கச்சியப்பமுனிவர், (8ä#5ITLuIT6\) கிருஷ்ண பாரதியார், திரிகூட இராசப்ப சுவிராஜர், போன்ற பெரியவர்களால் கவிச்சுவையும் உணர்ச்சிப் பெருக்கும் நிறைந்த செய்யுள்கள் செய்யப் பெற்றன. அதே நேரம் கற்பனைத்திறனையும், கவிதா சக்தியையும் வெளிப்படுத்தும் வகையிலான பிள்ளைத்தமிழ், காஞ்சிப் புராணம், திருத்தணிகைப்புராணம், போன்றவையும் இக்காலத்தில் எழுந்தன. மேலும் தேம்பாவணி, திருக்காவலூர்க்கலம்பகம், இரட்சணிய யாத்திரிகம், சீறாப்புராணம் போன்ற பிற மத நூல்களும் மறைசை, அந்தாதி, கரவை வேலன், கோவை, பறாளை விநாயகர் பள்ளு, போன்ற இந்து மத நூல்களும் எழுந்தன.
உரைநடையிலும் திருவிளையாடற் புராண வசனம், பெரிய புராண வசனம் போன்ற வசன நூல்கள் வெளிவந்தன. அதாவது மேனாட்டார் வருகையானது தமிழ் மொழி தமிழ் இலக்கியம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி உள்ளது எனலாம். சங்கத்தமிழ் நூல்கள் இன்னும் அழியாமல் இருப்பதற்கு அவர்கள் அறிமுகப்படுத்திய அச்சு இயந்திரமே காரணம் மொழியில் உரைநடை தோன்றுவதற்கும் நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள் அகராதிகள் நாடகங்கள் என்ற புதிய இலக்கிய வடிவங்கள் வளர்ச்சி பெறுவதற்கும் ஐரோப்பியர் வருகையே காரணம் எனலாம்
C2

மேலைநாட்டினர் ஆற்றிய தமிழ்ப்பணிகள்
ஐரோப்பியர் தமிழ் நாட்டுக்கு வந்தமையால் அவர்களுடைய முயற்சி சமயப்பிரசாரமாக இருந்தபோதும் அவர்கள் ஆற்றிய தமிழ்ப்பணிகள் தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் உந்துசக்தியாக அமைந்தன. இக்காலப்பகுதியில் ஏற்பட்ட அரசியல், சமூக பொருளாதார மாற்றங்கள் சமுதாயத்தில் கல்வியைப் பரவலாக்கி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழ் மொழியிலும் இலக்கியங்களிலும், ஐரோப்பிய மொழிப்போக்குகளும் வளர்ச்சிகளும் இடம்பெறலாயின.
கிறிஸ்தவ மதப் பிரசாரகர்கள் இந்நாட்டு மொழியைக் கற்று அம்மொழியிலே தம் மதக்கருத்துக்களைப் பரப்ப முற்பட்டனர். அதன் விளைவாக தமிழ் இலக்கியத்தின் போக்கில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. தத்துவ போதக சுவாமிகள், வீரமாமுனிவர், சீகன் UTGÖGÐguay, கால்டுவெல் போன்றோர் இம்முயற்சிகளில் ஈடுபட்டனர். வீரமாமுனிவரதும் தத்துவபோதக சுவாமிகளதும் பங்களிப்பு மிகப் பெரியது என்று கூறலாம். இத்தாலி நாட்டைச் சேர்ந்த பெஸ்கி என்ற ஐரோப்பியப் பாதிரியார் வீரமாமுனிவர் என்ற பெயருடன் தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவினார். "தமிழ் உரைநடை எழுந்து நடக்கத் தொடங்கியது பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே" என்ற பேராசிரியர் கைலாசபதி அவர்களின் கூற்று மேலை நாட்டவரது Lj60 foo)u நமக்குத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. தத்துவ போதக சுவாமிகளும் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவரே. இருவரும் உரை நடையின் வளர்ச்சிக்கு பெருந்தொண்டு ஆற்றியுள்ளார். இலகுவான உரைநடையில் இலக்கிய அறிவில் குறைந்தவர்களும் கற்றுணரக் கூடிய வகையில் ஆத்ம நிர்ணயம், கடவுள் நிர்ணயம், தத்துவக்கண்ணாடி யேசுநாதர் சரித்திரம் முதலிய நூல்களை எழுதி தமிழ் மொழிக்கு பெருந்தொண்டாற்றினார். இவரைப் போன்றே வீரமாமுனிவரும் தமிழின் அருமை பெருமைகளை ஐரோப்பியர் கண்டு போற்றுதற் பொருட்டு தமிழ்ப்பணி புரிந்தார். இவர் செய்த பணிகளில் மகத்தானது திருக்குறளை இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்தமை.
C65)

Page 30
வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், வாமன் கதை, பரமார்த்த குருகதை முதலிய உரை நடை இலக்கிய வகைகளையும் தேம்பாவணி என்ற ஒப்பற்ற காவியத்தையும் திருக்காவலூர் கலம்பகம் முதலிய அரிய பிரபந்தங்களையும் தொன்னூல் விளக்கம் என்ற இலக்கண நூலையும் சதுரகராதி என்ற அகராதியையும் எழுதி வெளியட்டார். இவர் தமிழ் மொழிக்குச் செய்த பணி மகத்தானது. நகைச்சுவை ததும்பும் வகையில் முதன்முதல் உரையில் "பரமார்த்த குருகதை' என்ற அங்கத இலக்கியத்தை தொடக்கி வைத்த பெருமை இவருக்குரியது. அத்துடன் பிற்காலத்தில் பேரகராதிகள் பலவற்றுக்கும் வழிகாட்டியாக அகர வரிசையில் சொற்களை அமைத்து அகராதி ஒன்றை ஆக்கிய பெருமையும் இவருக்கே உரியது. மேலும் தமிழ் எழுத்துக்களில் எகரம் ஏகாரம் (எ, ஏ) ஒகரம், ஓகாரம் (9, ஓ) ஆகிய எழுத்துக்களுக்குச் செய்த எழுத்துச்சீர்திருத்தம் இன்றுவரையும், பயன் உள்ளதாகப் போற்றப்படுகின்றது. தொன்னூல் விளக்கம் குட்டித் தொல்காப்பியம் எனப் போற்றப்படுவதுடன் இலத்தீன் மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இலக்கியத்தமிழ், பேச்சுத்தமிழ், ஆகியவற்றை ஆராய்ந்து தனித்தனியே செந்தமிழ் இலக்கணமும், கொடுந்தமிழ் இலக்கணமும் எழுதினார்.
திருக்காவலூர்க்கலம்பகம், கித்தேரி அம்மானை தேம்பாவணி, ஆகிய செய்யுள் நூல்களையும் எழுதினார். இவர் எழுதிய உரைநடை நூல்களில் ஒன்றாகிய வேதியர் ஒழுக்கம், கன்னடத்திலும், தெலுங்கிலும் மொழி பெயர்க்கப்பட்டது. ஞானக்கண்ணாடி என்று மற்றொரு சமய நூல் கன்னடத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. வேதவிளக்கம், பேதகம் மறுத்தல் என்பன ஏனைய கத்தோலிக்க சமய நூல்கள் ஆகும். இவர் கண்டன நூல்களையும்
நிருபங்களையும் கூட தமிழ்மொழிக்கு வழங்கிய பெருமைக்குரியவர்.
அடுத்து கால்டுவெல் ஐயர் தமிழ்மொழிக்கு பெருந்தொண்டு புரிந்தவராகக் கருதப்படுகிறார். திராவிட மொழிகளில் ஒப்பிலக்கணம் என்றொரு
நூலை எழுதி திராவிட மொழிகளுக்குச் சிறப்பை தேடிக் கொடுத்தவர். C56)

ஆங்கில மொழியில் இந்நூல் எழுதப்பட்ட போதிலும் தமிழ்மொழி முதலான இலக் கண அமைப்பையும் அடிச் சொற்களையும் ஆராய்ந்தமை பெருமைக்குரியது. ஞானக்கோயில் நற்குண தியானமாலை ஆகிய நூல்களைத் தமிழ் உரைநடையில் எழுதியவர். மேலை நாட்டவராக இருந்த பொழுதிலும் தமிழ் மொழியும் தமிழ் இலக்கியமும் வளர உறுதுணையாக இருந்தவர்.
ஜியுபோப் ஐயர் என்ற ஆங்கில அறிஞரும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு அளப்பெரும் தொண்டாற்றியவர். முதன் முதல் மேல்நாட்டு அறிவுத் துறைகளாகிய உளநூல், கணித நூல் அளவை நூல் ஆகியவற்றை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியவர். திருக்குறள், திருவாசகம், நாலடியார், ஆகிய பழந்தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். அத்துடன் புறநானூற்றிலும், புறப்பொருள் வெண்பா மாலையிலும் உள்ள பாட்டுக்களுடன் வேறுசில தனிப்பாடல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். தமது கல்லறையில் "ஒரு தமிழ் மாணவன்' எனப் பொறிக்க வேண்டும் என்று
கோரியமை அவருக்கு தமிழ்மொழி மீதிருந்த பற்றை எடுத்துக் காட்டுகிறது.
தத்துவ போதக சுவாமிகள் பிராமணக்கோலம் பூண்டு தமிழராக வாழ்ந்த ஐரோப்பிய பாதிரியார், தெ.நோபிலி என்பவர் இவர் பேச்சுத்தமிழை ஒட்டி உரைநடை வளர்ச்சிக்கு முன்னோடியாக இருந்தவர். இவ்வாறு ஐரோப்பியர்களாகிய தத்துவ போதகசுவாமி கால்டுவெல், ஜி.யு.போப் போன்றவர்கள் தமிழ் மொழிக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் அளப்பெரும் தொண்டாற்றி அவை புதுவழியில் செல்வதற்கு வழிகாட்டி வைத்து அவற்றின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக அமைந்தவர்கள் என்பதை தமிழ் இலக்கிய
உலகம் ஏற்றுக்கொள்ளும் என்பதில் ஐயம் இல்லை.
CZ)

Page 31
ஐரோப்பியர் காலத்தில் உரைநடை வளர்ச்சிக்கு உந்து Figure បារិrflum.
தமிழ் இலக்கிய வரலாற்றில் 18ம், 19ம் நூற்றாண்டுகளைக் கொண்ட காலப்பகுதி ஐரோப்பியர் காலப்பகுதி எனலாம். ஐரோப்பியர் காலப்பகுதியில் தமிழ் இலக்கியம் புதுவழியில் செல்லத் தொடங்கியது. ஐரோப்பியர்கள் வாழ்க்கைத் தொடர்புடைய இலக்கியங்களை வழக்கில் இருந்த மொழிகளில்
சாதாரண கல்வியறிவுடைய மக்களும் படித்து இன்புறக் கூடியதாய் காலத்தின்
போக்கிற்கு ஏற்ப உயிர்த்துடிப்புடையனவாய் இயற்றத் தொடங்கினர். எனவே
சமயப் பிரசாரத்தின் பொருட்டு தமிழ்நாட்டுக்கு வந்த ஐரோப்பியர் வாயிலாக
தமிழ் இலக்கியங்களின் போக்கிலும் நோக்கிலும் மாற்றங்கள் ஏற்படத்தொடங்கின.
19ம் நூற்றாண்டில் கிறிஸ்தவகுருமார் தம்முடைய சமயத்தைப்
பரப்புவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் உரைநடை வளர்ச்சிக்கு
உந்துசக்தியாக அமைந்தன. மக்களின் அன்பைப் பெறுவதற்கு அவர்
மொழியைக்கற்று அவர்களோடு கலந்து உறவாடுதல் சிறந்தது என
எண்ணினர். எனவே சாதாரண கல்வியறிவுடைய மக்களும் படித்து இன்புறக்கூடிய வகையில் காலத்தின் போக்கிற்கு ஏற்ப உரைநடை
இலக்கியங்கள் தோற்றம் பெறத் தொடங்கின. உணர்ச்சியோடு கூடிய அனுபவங்களை வெளிப்படுத்துவதற்கு உரைநடை இலக்கியங்கள் பெரிதும்
உதவும் என்பதை அறிந்திருந்த பொழுதிலும் அச்சு இயந்திரம் இல்லாமை
பெரும் குறைபாடாக அமைந்திருந்தது. ஐரோப்பிய பாதிரிமாரும் கத்தோலிக்க
மதகுருமாரும் தத்தம் சமயக் கொள்கைகளை மக்களிடையே பரப்புவதற்கான நிருபங்களையும் உரைநூல்களையும் எழுதி வெளியிடுவதற்காக தரங்கம்
பாடி, அம்பலக்காடு ஆகிய இடங்களில் அச்சு இயந்திர சாலைகளை
Case)

நிறுவினர். இம் முயற்சியானது உரைநடையின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக அமைந்தது.
உரை நடை இலக்கியத்தின் வளர்ச்சிக்கு ஆங்கிலம் கற்ற மத்தியதர வகுப்பினரின் எழுச்சியும் ஒரு காரணமாக அமைந்தது. அதாவது ஆங்கில இலக்கியங்களைத் தழுவி தமிழிலும் நாவல்கள் கதைகள், கட்டுரை நூல்கள், ஆராய்ச்சி நூல்கள் முதலான உரைநடை நூல்கள் பல தமிழில் எழுந்து உரைநடை வளர்ச்சியின் வேகத்திற்கு வித்திட்டன.
தமிழ் உரைநடை கடின சந்தி விகாரங்களை 2D_60) LULJg5 Tuoj வாசிப்பதற்கு கடினமாய் அமைந்தது. இந்நிலையில் ஆங்கில மொழிக்குரிய குறியீட்டு முறைகளைப் பயன்படுத்தி பொதுமக்களுக்கு புலப்படக் 8 in Qui வகையில் உரைநடையில் ஒரு புதிய மாற்றத்தை புகுத்தி "வசன நடை கைவந்த வல்லாளர்' என்ற பாராட்டையும் பெற்ற நாவலர் உரைநடை
வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றினார் எனலாம்.
19th நூற்றாண்டில் உரைநடை வளர்ச்சிக்கு பத்திரிகைகளும் பெரும் g|ങ്ങിങ്ങ് புரிந்தன எனலாம். சமயப் பிரசாரத்திற்காக பத்திரிகைகள் தோற்றம் பெற தமிழ் இலக்கியத்தில் பத்திரிகை நடை என எளிய உரைநடை ஒன்று தோற்றம் பெற்றது. இது முற்கால உரையாசிரியர் 60) BuJIT603TL உரைநடையிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாய் பொதுமக்களுக்கான உரைநடையாக அமைந்தது. எனவே சமயப் பிரசாரம் அச்சு இயந்திர வளர்ச்சி மத்தியதர வகுப்பினரின் எழுச்சி குறியீட்டுப்பயன்பாடு, பத்திரிகை வளர்ச்சி, அறிவியல் மறுமலர்ச்சி ஆகியவை உரைநடை வளர்ச்சிக்கு
உந்து சக்தியாக அமைந்தன.
C59)

Page 32
எனவே 1915 நூற்றாண்டில் ஏற்பட்ட உரைநடை வளர்ச்சியானது இலக்கியத்துறைகளில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தின. ஒவ்வொரு சமயத்தவரும் தத்தம் சமயத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக தத்தம் dFLDUU நூல்களை எழுதி வெளியிட்டனர். எனவே தமிழில் ஏராளமான சமய நூல்கள் தோன்றின. பழைய செய்யுள் இலக்கியங்கள் அச்சு வாகனம் ஏறின. புதிய உரைநடை நூல்கள் தோற்றம் பெற்றன. திங்கள் இதழ், வார இதழ், எனப் பல சஞ்சிகைகள் தோன்றின. ஊர்தோறும் கல்வி நிலையங்கள் தோற்றம் பெற்றமையால் மாணவர்களுக்கு ஏற்ற பாடநூல்கள் வெளிவந்தன.
நூல்களை வாங்கிப் படிப்பவரின் எண்ணிக்கை அதிகரித்தது. தமிழிலே நூல்களும், கட்டுரைகளும், ஆராய்ச்சி நூல்களும் எழுந்தன.
உரைநடையின் வளர்ச்சி, நாவல்கள், சிறுகதைகள் போன்ற புதிய இலக்கிய வடிவங்கள் தோன்ற வித்திட்டன. பிற மொழியிலிருந்து தமிழ் மொழியில் ஏராளமான நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டன. மொழி பெயர்ப்புத்துறை வளர்ச்சி உற்றது. அறிவியல் நூல்கள் தோற்றம் பெற்றன. நாடகங்கள் உருப்பெற்றன. இவ்வாறு தமிழ் இலக்கியத்துறையில் பன்முகப்பட்ட வளர்ச்சி ஏற்படுவதற்கு உரைநடை வளர்ச்சியும் ஒரு காரணமாக
அமைந்தது எனலாம்.
C60)


Page 33
|- |-
|-|-
|- ............