கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலுப்பை மர நிழலின் கீழ்

Page 1
| I I (6)
E |- 的 配 |-
 


Page 2


Page 3
தலைப்பு
ஆசிரியர்
பதிப்பாசிரியர்
பதிப்பு
மொத்தப் பக்கங்கள்
அச்சுப்பதிப்பு
விலை
இலுப்பைமர நிழலின்கீழ் (இலக்கியத் தொகுப்பு)
புலவர் ம. பார்வதிநாதசிவம்
பார்வதிநாதசிவம் இளங்கோ
முதற்பதிப்பு தை, 2013
76 -- Viii
அன்ரா டிஜிற்றல் பிறிண்டேர்ஸ்
ரூபா 150

வாழ்த்து
முத்தமிழ் அமுதம் முகிழ்த்தே மரபின் வித்தாய் வித்தகம் விளைத்தாய் வாழி!
(9dufus
முதுபெருந் தமிழ்க்குடி முகிழ்த்தேயுலகில் புதுயுகம் படைக்கப் புறப்பட்ட புலவ; வாழ்வின் வளத்தை வாரி வழங்கும் காளியருளால் கவிமழை பொழிந்தே பாரதி வியக்கும் பான்மை யுடைத்தாய்! பாரதிதாசன் பக்கத் திருந்தே பாக்கள் படைத்தும் பாங்கினைப் பெற்றும் மாக்கவியவனின் மாண்பைப் பெற்றாய்!
நாவலர் தந்த நற்றமிழ் மரபின் காவற் பொறுப்பைக் களிப்பொடு ஏற்றுச் சிதம்பரஞ் சென்றும், செழுந்தமிழ் சிறக்க விதந்துரை தந்தும் விளங்கிய வேற்பிள்ளை; மலையருவியென்றே மண்ணிற் பாய்ந்ததமிழ்த் தலையருவி மாகவி மகாலிங்க சிவம்; வள்ளுவன் வழியில் வாழ்வினை அமைத்த கள்ளமில் கவிஞன் கற்பனைச் சுரங்கம் பார்அதி வியக்கும் பான்மை படைத்த பார்வதி நாதசிவம்; பட்டி LD6Db பாவரங்க மதிரும் பேச்சழகு கொண்டே தாவிவரும் தமிழருவி மகாலிங்க சிவமென ஞாலம் வியக்க நம்மொழி தழைக்க நாலாந் தலைமுறைக்கும் நற்றமிழ் நகர்த்தி, மூன்று தலைமுறை முடிந்த பின்னால்
-iii

Page 4
வாழ்வோ தாழ்வோ வாரா தொடர்ந்தெனும் சார மில்லா சகத்தின் வழக்கைத் தூர எறிந்தே துவம்சம் செய்தாய்! அன்பின் வழியில் அனைவரும் வருவர் என்கில் இங்கே ஏன்தவம் என்ற உண்மை தெரிந்தே உயர்தவம் புரிந்த அண்ணல் இவரின் ஆற்றல் யார்க்கும் வாய்க்கும் என்னில் வாய்க்கும் அமைதி நோய்க்கு மருந்தாய் நோற்பர் நுகர்ப்பர்!
ஆன்ற டங்கிய அருந்தமிழ்ப் பெரியார் வாணிதாசன், பார்த்த சாரதி, பண்டித மணியொடு பாரதிதாசனெனக் கண்டு கதைத்த காதல் நினைவும்; நீதி கிடைக்கா நிர்க்கதி நிலையில் நாதியற்றே நலிந்த மக்கள் சொரியும் கண்ணீர் சரிக்கும், அரசை எரிக்கும் என்ற எந்தை குறளும்; காதலிலும் நாகரிகம் கண்ட தமிழர் சாதலிலாச் சாதனைகள் சாற்றிச் சிலிர்த்தும்; இனப்பற்றும் தேசப்பற்றும் இழையோ டக்கவி புனைந்த பாரதி பாட்டின் பான்மையும்; பாலர் முதலாய்ப் பெரியோர் ஈறாய் காலப் பணியில் கலந்தே நின்ற அலுப்புத் தீர அங்கவர் கூடும் இலுப்பை மரந்தரு இனிதாம் நிழலில் விளைந்த மகிழ்வின் விளக்கந் தன்னைக் குழைத்தெழில் கூட்டிய குறுங்காவியம் தாமும்; முடியாட்சியெனிலும், குடியாட்சியெனிலும் அடிநிலை யாரையும் அணைத்தே அன்பின் வித்திடும் வித்தை விளக்கந் தந்தும்;
-iv

வித்தக எழுத்தும் விதந்திடு வழக்கின் உத்திகள் கொண்டும் உகுத்த தமதாம் பத்திரிகைப் பணியின் பாற்படு பட்டறிவும்: அவமென்னழகின் ஆற்றலதுவும் தவத்தின் ஆற்றலும் தாம்மோது போதும்; பண்டைத் தமிழின் பாங்க துரைத்த பண்டிதமணிக்காய் பாடிய வாழ்த்தும்; செம்மொழி யதுவாய் செகத்திடைச் சிறந்த எம்மொழி ஏற்றியே ஏற்றதாம் வாழ்த்தும்; கொண்டதாய் அமைந்த குறுநூ லிதுவே தண்டலை தனிற்றவழ் தண்டமிழதுவாய் இலங்கிடுமென்றும் இவர்தமிழ்நன்றே நிலமிடைநீட்டும் நீள்புகழ் நின்றே
தந்தை வழியில் தமிழ்தான் அன்றித் தந்தை பெயர்தான் தரணியில் நிலைக்க சிந்தை நிறையச் செந்தமிழ் புகுத்தி விந்தை புரியும் வித்தகக் கவியாய் மகனுந் தந்தாய் மதிப்பும் தந்தாய்! தகவுடை எச்சம் தவறா தளித்தாய்! அவருமக் காற்றும் அன்புக் கடனாய் அவனிக் கருளும் அவாமிகத் தவறா தளித்தார் தலைநூ லிதுவே!
சின்னத்துரை உமாபாலன் (நோர்வே)
V

Page 5
பதிப்புரை
எனது தந்தையார் புலவர் ம. பார்வதிநாதசிவம் அவர்களின் 77ஆவது பிறந்ததின வேளையில் இலுப்பைமரநிழலின்கீழ் என்னும் இந்த இலக்கியத் தொகுப்பை வெளியிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். அவர் ஏற்கெனவே காதலும் கருணையும், இன்னும் ஒரு திங்கள், இரண்டு வரம் வேண்டும், இருவேறு உலகம், பசிப்பிணி மருத்துவன், மானம் காத்த மறக்குடிவேந்தன் ஆகிய ஆறு கவிதைத் தொகுப்புக்களையும் தமிழ்ச் செல்வம் என்னும் கட்டுரைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். அவரது பவளவிழாவின் போது (2011) பார்வதிநாதம் என்னும் மலர் எங்களால் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் நூலுருப்பெறாத அவரது ஆக்கங்களுட் சிலவற்றையேனும் தொகுத்து ஒரு நூலை உருவாக்கவேண்டும் என்ற ஆர்வம் எங்களிடம் ஏற்பட்டது. இவ்வகையில் அவரது மூன்று கவிதைகள், பத்துக் கட்டுரைகள், அறிஞர்கள் நால்வருடனான முதற் சந்திப்புக்கள், பேராசிரியர் சு.வித்தியானந்தனுடன் அவர் கண்ட பேட்டி, புலவரின் முழுமையான வரலாற்றை ஆய்வுபூர்வமாக வெளிப்படுத்தும் சி. ரமேஷின் கட்டுரை என்பவற்றைத் தொகுத்து இலுப்பை மரநிழலின் கீழ் என்னும் இந்நூலாக வெளியிடுகின்றோம்.
நூலின், பின் அட்டையில் எனக்கு உதவியோர் என்னும் தலைப்பில் உமது உறவினர் மூவரது புகைப்படங்களை நன்றியுடன் பிரசுரித்து உள்ளோம். இவர்களில் மட்டுவில் வே. நடராசா எமது தந்தையாரின் சிறிய தந்தையார். எமது தந்தையார் சிறு வயதிலேயே தந்தை குருகவி ம.வே.மகாலிங்கசிவத்தை இழந்துவிட்ட சூழலில் அவருக்குப் பலவகைகளில் உதவியவர் மட்டுவில் வே.நடராசா. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சென்று கல்வி கற்றுப் புலவர் பட்டம் பெறவும் காரணமாக இருந்தவர்.
-vi

அடுத்த புகைப்படத்தில் உள்ள தபாலதிபர் சி. ஆறுமுகம் அவர்களும் எமது தந்தையாருக்குப் பல்வேறு தேவைகள் ஏற்பட்ட போதெல்லாம் தாமாகவே முன்வந்து உதவியவர்.
சி. உமாபாலன் எமது தந்தையாரின் மூத்த சகோதரியின் மகன். எமக்குப் பல்வேறு வகைகளில் உதவியதுடன் எமது தந்தையாரின் நூல் வெளியீடுகளுக்கெல்லாம் தோன்றாத் துணையாக இருந்து உதவி செய்பவர். பவளவிழா மலரான பார்வதிநாதம், இலுப்பைமரநிழலின் கீழ் என்னும் இந்த நூல் ஆகிய இருநூல்களும் வெளிவர முழுமையான நிதிப் பங்களிப்பை வழங்கியவர். இம்மூவரது உதவிகளுக்கும் தலைசாய்த்து நன்றி சொல்லும் விதமாகவே இவர்களது புகைப்படங்கள் நூலின் பின் அட்டையை அலங்கரிக்கச் செய்யப்பட்டுள்ளன.
எமது தந்தையார் பற்றிய முழுமையான விபரங்கள் அடங்கிய http:www.parvathinathasivam.blog.com 6T6örgub 6.6060556Ts605 உருவாக்கிஉடனுக்குடன்தகவல்களைப் புதுப்பித்துவரும்எமது நெருங்கிய உறவினர் திரு. கஜபதி கணேசமூர்த்தி (மாவைக்கஜன்) அவர்களுக்கும் இந்நூலில் இடம்பெறும் எமது தந்தையார் பற்றிய கட்டுரையை எழுதி வழங்கியதுடன் பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களுடனான பேட்டியையும் தேடி எடுத்துத் தந்த எமது குடும்ப நண்பர் சி. ரமேஷ் அவர்களுக்கும் நாம் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளோம்.
அழகுற இந்நூலை ஆக்கித் தந்த 'அன்ரா நிறுவனத்தினருக்கும், பொறுமையாக நாம் விரும்பியடியெல்லாம் மாற்றங்கள் செய்தும் ஆலோசனை வழங்கியும் உதவிய எமது நண்பரும், அன்ரா பிறிண்டேர்ஸ் அச்சு வடிவமைப்பாளருமான திரு.த.கஜேந்திரன் அவர்களுக்கும் எமது மனப்பூர்வமான நன்றிகள்.
பார்வதிநாதசிவம் இளங்கோ
-vii

Page 6
பொருளடக்கம்
பதிப்புரை
வாழ்த்து
புலவரின் கவிதைகள். 1. வாழ்க தமிழ் 2. பண்டிதமணி வாழ்வும் பணியும் 3. இலுப்பைமர நிழலின் கீழ்
கட்டுரைகள்.
4. தமிழர் வாழ்வில் காதலிலும் நாகரிகம் 5. இனப்பற்றும் தேசப்பற்றும் மிக்க மகாகவி. 6. முடியாட்சி ஆனாலும் சரி குடியாட்சி ஆனாலும் சரி. 7. இலக்கியச் சோலையில் இனிய மலர்கள் 8. பத்திரிகைப் பணியில் எனது அனுபவம் 9. அழகின் ஆற்றலும் தவத்தின் வலிமையும் 10. நீதி கிடைக்காத மக்கள். 11. காட்டுமயிலுக்குப் போர்வை கொடுத்தவன். 12. துரியோதனனிடம் விரவியிருந்த. 13. மற்றவர் மனங்களை.
முதற் சந்திப்புக்கள்.
14. பாவேந்தர் பாரதிதாசனுடன். 15. நாவலாசிரியர் பார்த்தசாரதியுடன். 16. வாணிதாசனுடன். 17. தமிழ்மலை பண்டிதமணியுடன்.
பேராசிரியர் சு. வித்தியானந்தனுடனான செவ்வி
மன்னு தமிழ் தந்த பன்னு தமிழ் வித்தகர்
-viii

45
47
49
51
53
57
வாழ்க தமிழ்
கனிமொழியேதனிமொழியே
கவின்மொழியே வாழ்க! கற்பனையே அற்புதமே
பொற்புருவேவாழ்க! பனிமலரே எனதுயிரே
தனிச்சுவையே வாழ்க! பானிலவே வானமுதே
தேனனையாய் வாழ்க
இயலென்றேநிவளர்ந்தாய்
இவ்வுலகோர் மகிழ்ந்தார் இசையென்றேநிசெழித்தாய்
இவ்வுலகோர் நெகிழ்ந்தார் நயமெல்லாம் மிகக்கொண்ட
நாடகமாய் எழுந்தாய் நாட்டினதும் உலகினரும்
நாடிநிதம் உயர்ந்தார்.
அகப்பொருளாய் புறப்பொருளாய்
அரும்பொருளாய் வாழ்க! அகத்தியனால்காப்பியனால் வளர்ந்தனைநீவாழ்க! மிகப்பலவாய் இகப்புகழாய்
விளங்கிடுவாய் வாழ்க! மென்மொழியே செந்தமிழே
என்னுயிரே வாழ்க!
-1-

Page 7
பாப்பாக முன்நடந்தாய்
உலகநிலைகண்டாய் பாரினிலேஉரைநடையாம்
புதுநடையும் கொண்டாய் காட்டாறுபோல்நீயோ
காலமெல்லாம் விரைந்தாய் கட்டழகுகுன்றாத
மேனியினாய் வாழ்க
கவிதைஎனப்புலவோர்கள்
உனைவியந்தேநீற்பார் கதையென்றும் நாவலென்றும் பலர்கூடிநயப்பார் புவிபோற்றும் புகழ்படைத்தாய்
பூங்கொடியே வாழ்க! புதுமொழியே மதுமொழியே பழமொழியே வாழ்க!

பண்டிதமணி வாழ்வும் பணியும்
தண்டமிழிற் பற்றுடையார் சித்தாந்தத்தின்
சாகரமாம் பட்டத்தைப் பெற்றுக் கொண்ட
கண்டவரைக் கவர்கின்ற பொலிவு கொண்ட
கருணைமொழி இருவிழிகள் இயல்பிற் பெற்றார்.
அக்கால அறிஞரெலாம் இவரைக் கண்டால்
"ஐயா!" என்றழைப்பார்கள்; அடக்கம் மிக்கார்
எக்காலமும் ஒலிக்கும் மணியே ஆனார்
இவ்வுலகம் பண்டிதமாமணி என்றோதும்
நெல்விளைக்கும் சிறப்பமைந்த பதியே ஆய நீடுபுகழ் மட்டுவிலிற் பிறந்தார் அன்புச்
சொல்விளைக்கும் குடும்பத்தில் சின்னத்தம்பி
வள்ளியம்மை தம்பதியின் மகனே ஆக
செய்தவத்தின் பயனாக இவர் பிறந்தார்
செழுந்தமிழை வளர்க்கவென இவர் பிறந்தார்
மெய்ந்நெறியில் வாழவென இவர் பிறந்தார்
மேவு சைவம் போற்றளன இவர் பிறந்தார்.
நூற்கடலாம் வேற்பிள்ளை வாழ்ந்த காலம்
திருஞானசம்பந்தர் திகழ்ந்த காலம்
ஆற்றல் சேர்மகாலிங்கசிவம் என்கின்ற
அருங்கலைஞர் தாமுமங்கே வாழ்ந்த காலம்

Page 8
பிறக்கையிலே கொண்டுவந்த அறிவும் பெற்றார்
பெரியவர்கள் கற்பிக்கும் பேறும் பெற்றார்
திறத்தினிலே செவிச் செல்வம் தானும் பெற்றார்
சிறந்த புகழ் இளமையிலே வாய்க்கப் பெற்றார்.
ஆங்கிலமும் தீந்தமிழும் ஆற்றல் வாய்ந்த
அருமொழியாம் வடமொழியும் கற்றுத் தேர்ந்த
ஓங்குபுகழ் நாவலர்தம் பாடசாலை
உவப்புடனே சென்றேதான் மேலும் கற்றார்
சுன்னாகம் குமாரசாமிப் புலவர் என்றே
தொல்லுலகம் போற்றுகின்ற பெரியாரின் பால்
நன்னூல் தொல்காப்பியமாம் நூல்கள் கற்றார்
நயந்துலக இலக்கியங்கள் தாமும் கற்றார்
பண்டிதர்க்கே வேண்டியதாம் தகுதி பெற்றார்
பரீட்சையிலும் தேர்ச்சிபெற ஆவல் கொண்டார்
தொண்டு செயும் மதுரைத் தமிழ்ச் சங்கத்தேர்வில்
தோற்றியே பண்டிதராம் பட்டம் பெற்றார்.
மேடைதொறும் இலக்கியத்தைப் பரப்பலானார் மேவு சைவப் பிரசங்கம் நிகழ்த்தலானார்
ஈடில் பெரும்புகழுக்கே ஆளுமானார்
பண்டிதமாமணியெனவே வியந்தார் யாரும்
மிகச் சுவையாய் விளங்கியதாம் அவருடைய பேச்சில் மேவுகின்ற கருத்துமணி எங்கெங்கும் தோன்றும் நகைச்சுவையின் சிறப்பதனைக் கேட்டவர்கள் அறிவார்
நாடுவார் பின்னுபவர் பேச்சதனைக் கேட்க
-4-

சிந்தனைக்கோர் அறிஞர் இவர் என்றுழைத்து மகிழ்வார்
தேன்தோய்ந்த சொல்லாட்சி என்னுள்ளம் நெகிழ்வர்
வந்தனைக்கே உரியர் இவர் சொற்பொழிவு தன்னை
வாருங்கள்! வாருங்கள் கேட்டிடுவோம் என்பார்
ஈழத்துப் பேரறிஞர் இவர் பேச்சைக் கேட்டே
இதுவன்றோ சொற்பொழிவு வென்றுள்ளமெல்லாம் மகிழ்ந்தார்
நாளுமே தமிழ் வளர்த்த கல்கிஇவர் பேச்சை
நயந்து நயந்தே இவரைப் பாராட்டலானார்
சேதுப்பிள்ளை முதலாம் அறிஞர் பலர் இவர்தம்
சிந்தனையை நகைச்சுவையை மிகப் போற்றலானார்
பேதமின்றி ஈழத்தின் ஏடெல்லாம் இவர்தம்
கட்டுரையைப் பிரசுரித்தே பெருமை அடைந்தனவாம்
தினகரனாம் ஏட்டினிலும் இவர் எழுதலானார்
செம்மைபெறு கேசரியில் தொடர்ந்தெழுதலானார்
மனமுவந்து கலைமகளில் எழுதி வரலானார்
மணியாய கட்டுரைகள் எழுதி மணிஆனார்.
ஆசிரியமணி என்ற இவர்சீடர் இவரின்
அரிய பல கட்டுரையை நூலுருவில் ஆக்கி
நேசமுடன் வெளியிட்டே இவர் எழுத்தை எல்லாம்
நிற்கவைத்தார் இன்றைக்கும் கற்கவைத்தார் எம்மை
பண்டிதமா மணியினது பரம்பரையாம் என்றே
பலர் இன்றும் கூறிவரக் காணுகின்றோம் நாமே
கண்டுநிகர் தமிழ்ச்சுவையை எங்கெங்கும் பரப்பி
காலமெலாம் பணிசெய்த அவர்புகழைத் தொழுவோம்.
-5-

Page 9
நாவலரின் பெருமையினை அறிந்த பெரியாருள்
நம்மறிஞர் ஒருவரென நாம் போற்றி நிற்போம்
நாவலரின் சிந்தனையை வாழ்வுதனை அறிந்தே
நாவலரின் நெறியினிலே காலமெலாம் வாழ்ந்தார்
விரிவுரையாளர்ப் பதவிதனில் ஓய்வு பெற்றே
வீட்டிலிருந்த காலத்தும் ஓய்ந்து விடவில்லை
அரிய பல கருத்துக்கள் வகுப்புக்கள் நடத்தி
அள்ளி அள்ளி வழங்கினார் சித்தாந்தம் சிறக்க
அவர் இருந்தவீடு தமிழ்ப்பொழிலாக விளங்க
அங்குவந்து திரண்டபலர் பொழிற்சுகத்தை நுகர்ந்தார்
எவர்க்குமே பயன்பட்ட இப்பெரியார் தம்மை
என்றென்றும் தமிழ் உலகம் போற்றிவரல் கண்டோம்.

இலுப்பைமரநிழலின்கீழ்.
மாவை எனும் எழில் விளைக்கும் அழகார்ந்த பதியில் மனங்கவர வளர்ந்துநின்றதிலுப்பை மரம் ஒன்றே! யாவரையும் கவர்கின்ற கிளைகள் பல கொண்ட யாவர்க்கும் பயன்நல்கிச் செழித்து நின்ற தங்கே
உலகத்துப் பறவையெலாம் அங்குவந்து சேரும் உவப்புடனே பழத்தைத்தான் புசித்துப்பின் பாடும் நலம் விளைக்கும் இளம்தென்றல் நற்சுகமே விளைக்கும் இயற்கை நல்கும் எழிற்செல்வம் செழித்துநிற்கும் அங்கே!
சிறுமியர்கள் மணல்வீடு கட்டி மகிழ்வார்கள் சிறுவர் சிலர் அயலினிலே பந்தாடி மகிழ்வர் சிறுவர் சிலர் அயலினிலே ஆடுகின்ற பந்து சிலவேளை உருண்டோடித் தொலைந்துவிடல் உண்டு.
மாவையெனும் பதியிலே அப்போது வாழ்ந்தோர் மகிழ்வுதரும் உறவினரே பிரச்சினைகள் இல்லை பாவையர்கள் சுடச்சுடத் தாம் சமைத்திட்ட உணவை பற்றுடனே மரநிழலில் பகிர்ந்துண்டு மகிழ்வார்!
இலுப்பைமரம் என்றதனை ஒரு சொல்லில் சொன்னேன் இல்லையது மரம் அல்லத்தெய்வம் எனல் தகுமே நலம்படைத்த இலுப்பைமரக் காற்றளிக்கும் சுகத்தால் நாளுமெங்கள் நலம் காக்கும் மருத்துவரும் ஆகும்.
ஒருகாலம் இலுப்பை மரம் பூத்துநிற்கும் காற்றில் உவப்புடனே வாசனையைப் பரப்பி நிற்கும் பெரிதும் ஒருகாலம் இலுப்பைமரம் இனியபழம் வழங்கும் உண்பதற்குப் பறவையினம் ஒன்றுபட்டே கூடும்
-7-

Page 10
முதியோர்கள் இலுப்பை யதன் விதைநல்கும் எண்ணெய் முன்னோர்தம் கருத்தேபோல் தேடிமகிழ்ந்தெடுப்பர் புதியவரும் இலுப்பை விதை சேகரித்துக் கொள்வார் பொருள் மருந்தாம் பலவாறாய் பயன்விளையும் காண்பார்
தாயவரும் இலுப்பை மர நீழலதன் கீழே தள்ளாடி நடைபயிலத் தம்சேயை விடுப்பார் சேயரது நடை பார்த்துச் சிரித்து மிகமகிழ்வார் சிந்திக்கின் இலுப்பை மரநிழலும் தான் மருந்தே
பறவைகளோ எப்போதும் அதன் கிளையில் தங்கும் பற்றுடனே கதைகள் பலபேசி நிதம்மகிழும் பறவைகளின் அழகுகண்டு ரசிப்பாரே அன்றி பண்பின்றி அவற்றைக் கொன்றுண்பவர்கள் இல்லை!
அம்மரத்தின் நீழலிலே சிலகாலம் தன்னில் ஆருமற்ற தனிமைவந்து சேருதலுண்டு வந்த அந்த ஒருநாளில் பேரழகு ஒருத்தி வந்து சிலவேளைகளில் தனித்தமர்ந்து கொள்வாள்.
ஆரும் இல்லாதொரு வேளையில் மதியம் சீரிய இலுப்பையின் பாரியவேரில் வந்தோர் இளம்பெண் தனிமையில் இருப்பாள் அந்தப் பேரெழில் அழகியின் முகமோ
புன்னகை துறந்து ஆண்டுகள் சிலவாய்
தன்நடை தளர்ந்து தனிமையில் அழுவாள்
கண்ணிர் வடியவே அழகுக் கன்னம்
வண்ணம் குலைந்தது வாழ்வெலாம்
அப்பெண் யாரென அறியேன் ஆயினும்
செப்புதற் கொன்றே அறிவேன் புகல்வேன்
-8-

மிக இளம்வயதில் திருமணம் புரிந்து சக உறவணைக்க சந்தோசமாக கணவன் வீடு சென்றவள் சிலநாள் மணவினை சிறக்கச் சென்றொரு சிலநாள் செல்லுமுன் இல்லறம் சிறக்கப் பெறாளாய் நல்லறம் காணா நாயகியாகி தாய்மடியைத் தேடி வந்தனள் சேயின் மனத்திற் காறுதல் தந்தனள் கருணை வடிவாம் அவளின் தாயோ இரு என்னுடன் எனப் புகலிடம் ஆனவள் எங்கும் செல்லாள் எவரொடும் கதையாள் தங்கியே தாயொடு இருந்து மயங்கினள் தாயார் வீட்டில் இல்லா நேரம் போயவ் வினிய நிழல் தரும் மரமாம் இலுப்பையின் வேரில் இருந்தே அழுவாள்
அவளை மணந்தோன் கொடியன் என்றும் அன்பே இல்லா நெஞ்சினன் என்றும் பின்னர் மெல்லநான் தெரிந்தேன் துவண்டேன் புதுமணப் பெண்ணை நடத்தும் முறையைக்
காதல் உள்ளம் உடையரே அறிவார் மலரினும் மெல்லிய காதலின் மென்மை சிலர்க்கே தெரியும் அவர்க்கே இல்லறம். ரோஜாச் செடியில் ஓர்கிளை வெட்டி வேறோர் இடத்தில் நடுதல் வேண்டின் செடியினை விட்டே ஓர்கிளை தன்னை வளைத்து மண்ணால் மூடுதல் வேண்டும் பலநாட் சென்ற பின் மண்ணிற் புதைந்த பகுதியில் புதுவேர் தோன்றும் கிளையோ மண்ணில் தன் உணவைத் தாய்ச் செடி இன்றித்
-9-

Page 11
தானே பெற்றிடும் வலிமையை எய்தும் அந்நேரத்தே ரோஜாக் கிளையை மென்கூர் கத்தியால் வெட்டியே மெல்ல வேறோர் இடத்தில் நடுவராயினும் செடிதான் வளர்ந்தே மலரினை நல்கும் புதுமணப் பெண்ணும் ரோஜாக்கிளைதான் தாயிடமிருந்த பாசவேர் மெல்ல வேறோர் இடத்தில் வலிமைபெற்றதும்
தாயைப் பிரிந்து சென்றோர் குடும்பமாய் வாழும் இயல்பைப் பெற்று விடுவாள் அவசரப்பட்டால் ரோஜாச் செடிபோல் அவளும் வாழ்வில் சிதைந்தே விடுவாள் இந்தப் பெண்ணும் ரோஜாக் கிளையே.
இவள் துணையானோன் கல் நெஞ்சதனில் இக்கிளை வேர்விடல் இயலாது போகத் தாயின் வீடு நாடி வந்தது எந்த நிலையிலும் வெறுக்கா ஒருத்தி
தாய் தாய்! அதனால் தாயே தெய்வம் கணவனைப் பிரிந்த பெண்கட்கெல்லாம் தாயே தெய்வம் வீடே கோயில் இதுவே அப்பெண்ணின் விவரம் ஆகும்.
அவளின் கண்ணிர் அவளது துயரம் இலுப்பை மரமே முற்றிலும் அறியும் சிறுமியாய் ஓடி ஆடிய நாள்கள்
வளர்ந்து சிறுகதை படித்த நாள்கள்
-10

கற்பனை ஆயிரம் மனத்தில் படைத்த கற்பனை வாழ்வில் மகிழ்ந்த நாள்கள் அனைத்தும் அந்த இலுப்பை அறியும் அதனால் இலுப்பையும் அவட்குத் தாயே
அவளது கண்ணிர் அவளது துயரம் அறிந்த இலுப்பையை நிகழ்ந்த போரினால் பார்க்கும் வாய்ப்பை இழந்தே இருந்தேன் போர் முடிவுற்றதாய் அரசின் கூற்றைக்
கூறக் கேட்டே இலுப்பையைப் பார்க்கும் ஆவலில் ஓடினேன் இலுப்பை அங்கில்லை போர்க் காலத்தே வீட்டின் கதவையும் மரத்தையும் தறித்து விறகாக்கியவர்
இலுப்பையை விடுவரோ? இலுப்பையை விடுவரோ? மக்களைக் கொல்வோர் இலுப்பையைத் தறிக்க மிக்க தாமதம் ஆகுமோ சொல்வீர் ஆரோ
இலுப்பையைத் தறித்தே சென்றர் ஆரோ இலுப்பை இல்லை, ஆனால் அந்த
ஆரோ இன்னும் இருக்கிறார்களே!
- சுடர்ஒளி
-11

Page 12
தமிழர் வாழ்வில் காதலிலும் நாகரிகம்
உலகத்தின் முதல் மொழி தமிழ் மொழி. முதலாவது நாகரிக இனம் தமிழ் இனம். தமிழினத்தின் காதல் வாழ்வும் நாகரிகம் வாய்ந்தது.
காதல் வாழ்வை இருபத்தைந்து அதிகாரங்களில் சொல்லும் திருவள்ளுவர், காமத்துப் பாலின் இரண்டாவது அதிகாரத்தில் குறிப்பு அறிதல் என்றோர் அதிகாரம் வைத்துள்ளார்.
காதலுக்கு ஏற்ற வயதுடைய ஓர் ஆணும் ஒரு பெண்ணும் ஒருவரை ஒருவர் விரும்புவது இயல்பானதே!
பறவைகளில் அன்றிலும் புறாவும் விலங்குகளில் யானையும் குறிப்பறிந்தே இணைகின்றன.
ஆனால் நாகரிகத்தில் உயர்ந்து நின்ற தமிழ் இனத்தில் பதவியையும் பொருளையும்காட்டிப் பெற்றோரை மயக்கித் திருமணம் செய்தல், அடியாட்களைக் கொண்டு பெண்ணைக் கடத்தித் திருமணம் செய்தல், பெற்றோரே தமது வசதிக்காகப் பெண்ணை அச்சுறுத்தித் திருமணம் செய்தல் என்பன இடம்பெற்றுவிட்டன.
குறிப்பறிந்து செய்யும் திருமணத்தை ஒளவையார், காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவுபட்டதே 'இன்பம் என்கிறார். குறுந்தொகைப் பாடல், 'அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே என்கிறது.
எதைக் கூறினும் தனித்துவம் தோன்றக் கூறும் திருவள்ளுவர் குறிப்பறிதலையும் தனித்துவம் தோன்றக் கூறுகிறார்.
"நான் நோக்கும் காலை நிலன் நோக்கும்; நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும்" என்கிறார்.
-12

தலைவன்,தலைவி பற்றிக் குறிப்பிடும் போது, அவள்தான் நோக்கும் போது நாணத்தால் நிலத்தை நோக்குவாள் என்றும் நோக்காதவிடத்துத் தன்னை நோக்கிப் புன்முறுவல் செய்வாள் என்றும் கூறுகிறான். அந்தப் புன்னகையே அவளுடைய குறிப்பை, சம்மதத்தை அவனுக்குத் தெரிவிக்கிறது. தலைவனும் தலைவியும் அன்புளத்தால் இணைகிறார்கள்.
அன்புளத்தால் இணைந்தவர்கள் நண்பர்களாகவே வாழ்கிறார்கள். திருவள்ளுவர் நட்பைப் பற்றிப் பதினேழு அதிகாரங்களில் அதாவது நூற்று எழுபது குறள்களில் கூறினார். நட்புக்கு அவ்வளவு சிறப்பிடம் கொடுத்த வள்ளுவர், கணவன் - மனைவி உறவையும் நட்பு என்றே குறிப்பிடுகிறார்.
"உடம்பொடு உயிரிடை என்ன, மற்றன்ன
மடந்தையொடெம்முடை நட்பு"
என்கிறார்.
உடம்புக்கும் உயிருக்கும் உள்ளது போன்றது மடந்தைக்கும் எனக்கும் உள்ள நட்பு என்கிறான் கணவன். இங்கே கணவனும் மனைவியும் சமம். ஒருவர் பெரியவரும் இல்லை. மற்றவர் சிறியவரும் இல்லை. குறிப்பறிந்து திருமணம் செய்துகொண்டு வாழ்பவர்கள்,வாழ்வு முழுவதுமே குறிப்பறிந்து நடப்பார்கள்.
கணவனுக்கு வறுமை வந்தாலும் மனைவி வறுமையைத் தாங்கிக் கணவனைப் பேணிக் கொள்வாள். மனைவிக்கு நோய் வந்தாலும் கணவன், மனைவியை இன்சொல்லால் மகிழ்வித்து நோயைத் தாங்கி மனைவிக்கு உதவியாக இருப்பான். இத்தகைய கணவன் மனைவிக்கு நட்பு என்ற சொல்லை பொருத்தமான சொல் என்று கண்டு கூறிய வள்ளுவர் சிந்தனையாளரே!
-13

Page 13
இந்த உலகில் காதலித்த எல்லோரும் சேர்ந்த வாழ்கிறார்களா? அவர்களே விவாகரத்துப் பெற்றுக் கொள்வதில்லையா? என்று சிலர் கேட்கலாம். அவர்கள் காதல் என்ற போர்வையில் வாழ்பவர்களே அல்லாமல் காதலர்கள் அல்லர்.
செம்புலப்பெயர்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே என்று சிறப்பிக்கிறது சங்க இலக்கியம். வானிலிருந்து வந்த மழை நீரும் செம்மை வாய்ந்த நிலமும் ஒன்றாகச் சேர்ந்து தனித்துவம் பெறுவது போல எங்கோ பிறந்த தலைவனும் எங்கோ பிறந்த தலைவியும் அன்பினால் ஒன்றாகித் தனித்துவம் பெறுகிறார்கள்.
காதலர் என்று பலர் உலகில் இருந்தாலும் சிலர் தான் காதலர்களாக வாழ்கிறார்கள் என்பதை வள்ளுவர் பெருமான், சிலர் காதலின் செவ்வி தலைப்படுவார் என்கிறார்.
"மரிைனும் மென்னிது காமம்; சிர்ை அதன்
செவ்விதனைப் படுவார்" என்கிறார்.
காதல் இன்பம் மலரினும் மென்மையானதாக இருக்கும் என்றும் இந்த உலகிற் சிலரே அந்த இன்பத்தை நுகர்வார்கள் என்றும் கூறுகின்றார்.
மென்மையான உள்ளம் - அன்புள்ளம் - தியாக உள்ளம் கொண்டவர்களே திருவள்ளுவர் சொல்லும் அந்தச் சிலர் ஆவார்.
குறிப்பறிதல் இன்றிப் பெற்றோர் நிர்ப்பந்தத்துக்காகவோ, வறுமையின் நிர்ப்பந்தத்துக்காகவோ நிகழும் திருமணங்களில் மலரினும் மென்மையான காதலை எவ்வாறு காணமுடியும்?
குறிப்பறிவதற்குக் கண்ணும் அது நோக்கும் நோக்கமும்
இன்றியமையாதன.தலைவியின் கண்ணில் இரு நோக்கினைக் கண்டான் தலைவன். ஒரு நோக்கு இந்தப் பேரழகு எனக்குக் கிடைக்குமா என்ற
-14

துன்பத்தைச் செய்தது. ஆனால் இரண்டாவது நோக்கு அவளுடைய சம்மதத்தை அன்பைப் புலப்படுத்தி இந்தப் பேரழகு உனக்கே சொந்தம் என்று புலப்படுத்தி துன்ப நோக்கிற்கு மருந்தாக அமைந்தது.
குறிப்பறிதல் தலைவன் தலைவிக்குச் சிறப்பானது. ஆனால் எல்லோர்க்கும் பொதுவானது. குறிப்பறிதலின் நுணுக்கம் பற்றியே திருவள்ளுவர் பொருட்பாலில் குறிப்பறிதல் என்று ஒரு அதிகாரத்தையும் காமத்துப் பாலில் குறிப்பறிதல் என்று ஒரு அதிகாரத்தையும் வைத்தார்.
பொருட்பாலில் வரும் குறிப்பறிதல் அரசனுக்கு உதவியாக உள்ளவர்கள் அரசனின் குறிப்பறிந்து நடப்பதைக் கூறும்.
குறிப்பறியும் இயல்பு அரசனுக்கு உதவியாவோர்க்கும் தலைவன் - தலைவிக்கு மட்டும் இருந்தால் போதுமா? எல்லோர்க்கும் வேண்டியதே
பசித்துவருவோரின் குறிப்பறிந்து உணவு கொடுக்கும் குடும்பத்தவர், ஒருவரின் வறுமையைக் குறிப்பால் அறிந்து நீக்கும் உறவினர்கள், மக்கள் குறிப்பறிந்து நடக்கும் ஜனநாயகத் தலைவர்கள்
எல்லோரும் போற்றுதற்குரியவரே.
22usaf 2./O.2O/
-15

Page 14
இனப்பற்றும் தேசப்பற்றும் மிக்க மகாகவி சுப்பிரமணியபாரதியார்
தேசப்பற்றும் தெய்வப் பற்றும் மொழிப் பற்றும் இனப் பற்றும் மிக்கவர் பாரதியார். தமிழ் இனப் பற்றினால் அவர் வாழ்ந்த காலத்தில் தமிழ் இனத்தின் துன்பம் கண்டு துடிதுடித்தார்.
இன்று பொருள் ஈட்டவென்று நம்மினத்தவர் வெளிநாடு செல்கின்றனர். போருக்கு அஞ்சி வெளிநாடு செல்கின்றனர். ஈழத்தில் வாழும் தமிழர்கள் நிம்மதியாக வாழ்கிறார்களா? அன்று பாரதி காட்டிய தமிழ் இனத்தின் அவலங்கள் இன்றும் தொடர்கின்றனவே.
இன்று ஈழத்திலும் வேறு பல நாடுகளிலும் தமிழ் இனம் படும் அவலத்தைத் தீர்க்கதரிசியாகிய பாரதி பாடிக் கண்ணிர் விடுகிறார்.
"பற்பல தீவினும் பரவி இவ்வெளிய தமிழ்ச் சாதி தடிஉதை உண்டும் காலுதை உண்டும் கயிற்றடி உண்டும் வருந்திடும் செய்தியும் மாய்ந்திடும் செய்தியும் பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது செத்திடும் செய்தியும் பசியாற் சாதலும் பிணிகளாற் சாதலும் பெருந்தொலைவுள்ள தம் நாட்டினைப் பிரிந்த நலிவினாற் சாதலும் இஃதெலாம் கேட்டும் என்னுளம் அழிந்திலேன்"
என்று பாடுகிறார். தமிழ்ச் சாதி கொடியோரின் தடி அடிக்கு ஆளாகிறது. கால் உதைக்கு ஆளாகிறது. கயிற்றடிக்கு ஆளாகிறது. இதனால் வருந்துகிறது. சாகிறது.
மனைவியைப் பிரிந்த கணவன், கணவனைப் பிரிந்த மனைவி - இவர்களைப் பிரிக்கும் கொடியவர்கள் என்றெல்லாம் கூறுகிறர்.
-16

தமிழினத்தின் அவலங்கள் காலம் மாறினும் மாறாது இருக்கின்றனவே!
தேச விருதலையில் பாரதியார் பங்கு
பாரததேசம் அடிமைப்பட்டிருந்த காலம். மகாத்மா காந்தி ரஷ்ய ஞானியின் நூல்களைப் படித்தவர். ரஷ்ய ஞானிமேல் பெருமதிப்புக் கொண்டிருந்த மகாத்மா காந்தி ரஷ்ய ஞானி ரோல்ஸ்ாேய்க்குக் கடிதம் எழுதி இந்திய விடுதலைக்கு அறிவுரை வழங்குமாறு கேட்டிருந்தார்.
ரோல்வ்ஸ் ரோய் உலகம் ஒப்புக்கொண்ட பெரிய மகான். மகாத்மா காந்தியின் கடிதத்துக்கு நீண்ட பதில் எழுதவில்லை. சுருக்கமாகவே பதில் எழுதினார். அந்தக் கடிதத்தில் அவர் முப்பது கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்திய தேசத்தை ஆயிரக்கணக்கான ஆங்கிலேயர்கள் அடிமையாக்கிஆள்வதற்கு என்ன காரணம் என்பதைச் சிந்தித்தால் விடை கிடைக்குமெனக் குறிப்பிட்டிருந்தார்.
அதன் பின்புதான் மகாத்மா காந்தி இந்தியா சமயத்தாலும், சாதியாலும் இன்னும் பல காரணங்களாலும் சிதறுண்டிருப்பதை அறிந்தார். பிரதேச மக்கள் எல்லோரும் ஒரு தாயின் பிள்ளைகள். உடன் பிறப்புக்கள். இந்தப் பிள்ளைகள் சாதி பேதம், சமய பேதம், அனைத்தையும் மறந்து தேச விடுதலைக்காக ஒன்றுபட்டுப் போராட வேண்டும் என்றார்.
மகாத்மா காந்தியின் விடுதலைக் கருத்தை ஏற்றுக் கொண்ட பாரதியார் -
“பாரத தேசம் பழம்பெரும் தேசம்
நீரதன் புதல்வர் நினைவகற்றாதீர்”
என்று பாடினார்.
இந்திய மக்கள் அனைவரும் இந்தியாவின் புதல்வர்களே. தாயின் அடிமை விலங்கு ஒடிக்கப் பிள்ளைகள் ஒன்றுபடவேண்டும் என்று கூறினார்.
-17

Page 15
“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு - நம்மில்
ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வு" என்று பாடினார். தேச விடுதலைக்கு இந்திய மக்களை ஒன்றுபடுத்திய பணியில் பாரதியாருக்கும் பெரும் பங்கு உண்டு.
ஊர்கூழத் தேர் இழுத்தல்
ஊர் மக்களிடையே கருத்து வேற்றுமை இருக்கலாம், தனிப்பட்ட பகை கூட இருக்கலாம். ஆனால் தேர்த்திருவிழா வரும்போது தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெறவேண்டும் என்ற ஒன்றுபட்ட நல்லெண்ணத்துடனேயே போவார்கள்.
ஒரேதிசை நோக்கி ஒரே பக்தி உள்ளத்துடன் தேரை இழுப்பார்கள். நெடும் தேர் கூட இலகுவாக இழுபடும். திருவிழா சிற்பபாக நிறைவுறும்.
இந்திய தேசமும் நெடுந்தேராகப் பாரதியார் கண்களுக்குத் தெரிகிறது. முப்பது கோடி மக்களும் சுதந்திர தேவியைத் தேரில் ஏற்றி ஒன்றுபட்டு இழுத்தால் சுதந்திரம் என்கிற இந்திய தேச தேர்த்திருவிழா விரைந்து நிறைவுறும் என்று கூறுகிறார்.
இந்தப் பணி எப்படி நிறைவேற வேண்டும். இதனைத் தொடர்ந்து தேச அபிவிருத்திப் பணி எப்படி நிறைவேற வேண்டும் என்பதையும் கூறும் பாரதியார் -
"இன்னறுங்கனிச் சோலைகள்செய்தல்
இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல்”
-8-

என்று கூறி இப்பணிகள் சிறப்புற நிறைவுறவே நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர். நிதி குறைந்தவர் காசுகள் தாரீர், அதுவுமற்றவர் வாய்ச்சொல் அருளிர், ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்.
"மதுரத் தேமொழி மாதர்களெல்லாம் வாணி பூசைக்குரியன பேசீர் எதுவும் நல்கி இங்கெவ்வகையானும் இப்பெரும் தொழில்நாட்டுவம் வாரீர்”
என்கிறார். எல்லோரும் தேச விடுதலையிலும் தேச அபிவிருத்தியிலும் ஒன்றுபடவேண்டும். அதற்காக அவரவர் ஆற்றலுக்கேற்ப உழைக்க வேண்டும் என்பது பாரதியாரின் விருப்பம்.
22usaf (1.9.2OM
-19

Page 16
முழயாட்சி ஆனாலும் சரி குழயாட்சி ஆனாலும் சரி தர்மத்தின் வழியில் நடக்க வேண்டும்
திருக்குறளில் வழி நோக்கான் என்ற சொற்றொடர் வருகிறது. திருக்குறள் சொற் சுருக்கமும் பொருட் பெருக்கமும் கொண்ட ஒப்பற்ற நூல் என்பதை உலகு அறியும்.
இத்தொடர் அரசனுக்கு அறிவு கூறுகிறது. இன்றைய மக்களாட்சித் தலைவர்களுக்கும் பொருத்தமானது.
ஆணவம் கொண்ட அரசன் தர்மத்தின் வழியை நோக்கான். ஐம்பெரும் குழுவும் எண் பேராயமும் சொல்வதையும் ஆணவம்காரணமாக ஆராய மாட்டான். தன் முன்னோர் ஆண்ட வழியையும் நோக்கான்.
அதேபோலத் தான் ஜனநாயக ஆட்சித் தலைவனும் ஆட்சியில் அமர்ந்த பின் தர்மத்தின் வழி நோக்கான். பல வழிகளிலும் பெரியோர் சொல்லும் அறிவுரைகளை ஏற்கமாட்டான். மக்களுக்கும் ஆட்சிக்கும் தருமம் என்ற திசையைக் காட்டும் திசைகாட்டியாக விளங்கும் பத்திரிகைகள் கூறும் நல்லவற்றையும் ஏற்கமாட்டான்.
"வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கினிது" ஆணவம் கொண்ட அரசன் தர்மத்தின் வழி நோக்கான். தர்மம் கூறுவதைச் செய்யான். அவனிடம் மனிதப் பண்பு இராது. அவன் தனக்கு வரும் வழியை நோக்கமாட்டான். இவனுடைய பகை, பகைவர்க்கு இனிமையாக இருக்கும். ஏனென்றால் இவன் தானே அழிந்துவிடுவான்.
-20

பாஞ்சாலியின் துகிலை உரிய நினைத்தபோதே துரியோதனன் தனக்கு அழிவைத் தேடிக் கொண்டான். தர்மத்தின் வழியையே நோக்கும் தருமரும் தம்பியரும் பெரு வெற்றி காண்கிறார்கள்.
மக்களாட்சியிலும் தாங்கள் பெரும்பான்மையினர் என்ற நிலையில் சிறுபான்மையினரைத் தர்மத்தின் வழி நோக்காது அழிப்பவர்கள் துரியோதனனின் முடிவையே காண்பார்கள்.
நல்ல அரசன் எப்படி இருப்பான் என்பதையும் திருவள்ளுவரே விளக்குகிறார்.
நல்ல அரசன் தர்ம வழியில் ஆட்சி செய்வான். அறநூலும் நீதிநூலும் சொல்லும் நெறியில் நிற்பான். இப்படிப்பட்ட அரசன் பிறப்பால் மனிதன் ஆயினும் செயலால் கடவுளாகக் கருதப்படுவான்.
"முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறை என்று வைக்கப்படும்". இது இன்றைய ஜனநாயக ஆட்சிக்கும் பொருந்தும் இன வேறுபாடு மதவேறுபாடு கருதாமல் எல்லா மக்களையும் நாட்டின் செல்வங்கள் எனக் கருதி நடக்கும் ஆட்சித் தலைவன் தெய்வமாகவே மதிக்கப்படுவான்.
பாண்டியன் ஆட்சியில் வாழ்ந்த வணிகன் ஒருவன் வணிகம் கருதி வெளிநாடு செல்ல நினைத்தான். ஒருநாள் இரவு தன் கருத்தைத் தன் மனைவிக்குத் தெரிவித்தான். அதற்கு அவனுடைய மனைவி -
“உங்கள் துணையில்லாமல் நான் எப்படித் தனிமையில் இரவைக் கழிக்கமுடியும்" என்று அச்சத்துடன் கேட்பார். அதற்கு வணிகன் "நாம் பாண்டியன் ஆட்சியில் வாழ்கிறோம். இங்கு திருடர் பயமோ கொடியோர் பயமோ இல்லை" என்று துணிந்து நம்பிக்கையுடன் கூறினான்.
அந்த வேளை மாறு வேடத்தில் சென்ற பாண்டியன் செவிகளில் இந்த உரையாடல் கேட்டது. தன் ஆட்சி மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை
-21

Page 17
அவனுக்குப் பேருவகை அளித்தது. மக்கள் தன் ஆட்சி மீது கொண்ட நம்பிக்கை சிறிதும் குறையக்கூடாது என்று கருதிய பாண்டியன் அந்த வணிகன் வெளிநாடு சென்று திரும்பும் வரையில் அவன் வீட்டுக்குக் காவலாளியாக மற்றவர் அறியாதவாறு மாறு வேடத்தில் நின்று காவல் புரிந்தான். அவன் தான் காவலன். அவன் தான் இறைவன்.
அரசருக்கு வேண்டிய தனிச் சிறப்பு மக்கள் யாரும் நினைத்தவுடனே சென்று தமது குறையைக் கூறக்கூடிய எளிய இயல்புடன் இருத்தல் ஆகும். அத்துடன் மக்கள் அஞ்சாமல் அணுகுவதற்குரிய இன் சொல் உடையவராகவும் இருத்தல் வேண்டும்.
“காட்சிக்கெளியன் கடுஞ்சொல்லன அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்"
முறை வேண்டிப் போனவர்களுக்கும் குறைவேண்டிப் போனவர்களுக்கும் காண்பதற்கு எளியவனாகவும் அவர்களிடம் இன்சொல் உடையவனாகவும் இருந்தால் அவன் நாட்டை மற்ற
நாடுகளிலும் உயர்வாக உலகு மதிக்கும்.
முடியாட்சியாக இருந்தாலும் குடியாட்சியாக இருந்தாலும் ஆட்சியில் தர்மம் இருந்தால் மக்கள் நல்வாழ்வு வாழ்வர். ஆட்சியாளரின் நடுவுநிலைமை இன, மத, பேதம் இல்லாது அமைதியான நல்வாழ்வுக்கு
வழிவகுக்கும்.
உதயனர் 13.42OM
-22

இனிய மலர்கள்
ஒட்டக்கூத்தர் குலோத்துங்க சோழன் அவையில் பெருமதிப்புடன் வீற்றிருந்த காலம் இலக்கிய உலகிற்குச் சிறந்த காலம். அதே காலத்தில் தான் கம்பர் புகழேந்தி, ஒளவையார் ஆகிய புலவர்களும் வாழ்ந்தார்கள். இத்தனை பெரிய புலவர்கள் ஒரே காலத்தில் வாழ்ந்து எங்கள் தமிழ் மொழிக்குப் பெருமை சேர்த்தனர். ஒட்டக்கூத்தர் சிற்றின்பப் பாடல் பாடுவதிலும் வல்லவர், பேரின்பப் பாடல் பாடுவதிலும் வல்லவர். அவருடைய பாடல்களுள் ஒன்று
“இவ்வளவு கண்ணினாள் இவ்வளவு சிற்றிடையாள் இவ்வளவு போன்ற இளமுலையாள் - இவ்வளவாய் நைந்த உடலாள் நலமேவ மன்மதன் தன் ஐந்து கணையால் வாடினாள்" சிற்பம் செய்யும் சிற்பக் கலைவல்லார் கண் இந்த அளவு காது, இந்த அளவு தோள், இந்த அளவு, தனம் இந்த அளவு இடை இந்த அளவு என அளவுகளை வைத்துக்கொண்டு சிற்பத்தை வடிவமைப்பார்கள். இந்த அளவு ஓவியக்கலைக்கும்அவசியம் அழகுசார்கலைகள்அனைத்துக்கும்அவசியம்
சோழ நாட்டில் கலைவல்லான் ஆகிய இறைவன் ஒரு அழகிய பெண்ணைப் படைத்தான். இறைவன் எந்த அளவு கருவியும் வைத்துக் கொள்ளாது ஒரு பெண்ணைப் படைத்தான். ஆனால் எல்லாம் அளவாக அமைந்த அழகாக அப்பெண் விளங்கினாள் என்கிறார் ஒட்டக்கூத்தர்.
அந்தப் பெண் இவ்வளவு என்று சிறப்பித்துக் கூறக்கூடிய அளவான கண்ணினாள் என்றார். கண் விசாலமானது இடை எப்படி இடை விசாலமானதன்று மிகச் சிறியது. அதனால் இவ்வளவு என்னும் சிற்றிடையாள். இவ்வளவு சிற்றிடை அவ்வளவு தனபாரத்தைத்தாங்குமா? தாங்கும் ஏனென்றால் அவள் அதிசயப் பெண்ணாயிற்றே.
-23

Page 18
இவள் தேவமகளோ அல்லது மயில்களுக்குள் சிறந்த மயிலோ என்று பிறர் வியக்க விளங்கிய அவள் இப்போது மன்மதன் அம்புகளால் நைந்துவிட்டாள். அவளைக் காப்பாற்றத் தலைவனால்தான் முடியும்.
மொழி அறிவும் கவித்துவமும் வாய்க்கப் பெற்றவர் ஒளவையார். அவர் பாடல்கள் முடியரசரையும் கவர்ந்தன. குடிமக்களையும் கவர்ந்தன. தமிழ் அறிந்தோர் எல்லோரையும் கவர்ந்தன.
மனத்தை எந்தப் பொருள் கவர்கிறதோ அந்தப் பொருளின் சிறப்பைப் பாடுவது புலவர் இயல்பு.
நீராடிச் சென்ற ஒரு இளம் பெண்ணைத் தலைவன் கண்டான். அவளுடைய செம்பொன் மேனியில் நீர்த்துளிகள் முத்துப்போல் ஒளி செய்தன. இந்தக் காட்சியைக் கண்ட தலைவனின் மனநிலையை ஒளவையார் கண்டார். உடனே இனிய பாடல் ஒன்று
"ஆராயிரம் கொண்டவைவேல் சதிஅகன்கிரியில் நீராடப் போகும் நெறிதனிலே அந்தி நேரத்தில் சீரான குங்குமக் கொங்கையைக் காட்டிச் சிரித்தொருபெண் போனாள் பிடிபிடி என்றே நிலவும் புறப்பட்டதே
ஆத்தி மரங்கள் ஆயிரம் விளங்கும் மலைச் சாரலிலே பெண்கள் நீராடப் போகும் வழியிலே இளம் பெண் ஒருத்தி குங்குமச் சிமிழ் போன்ற மார்பகங்கள் பொலிந்து விளங்கச் சிரித்தபடி போகிறாள். நிலவு உதிக்கும் நேரமாதலால் மக்கள் அவளை நிலவென்று மயங்கி நிற்கிறார்கள். இந்த மண்ணக நிலவு செல்வதை விண்ணக நிலவு கண்டுவிட்டது. விண்ணக நிலவு வானில் புறப்பட்டது.
நான்தான் உண்மை நிலவு, அவள் போலி. அவள் மக்களை ஏமாற்றப் போகிறாள் பிடியுங்கள்! பிடியுங்கள் என்றது.
-24

தமிழ்ச் சொல்லின் அருமையைக் காண விரும்பினால் நாலடியாரையும் திருக்குறளையும் படியுங்கள் என்றார் ஒளவயைார். "சொல்லருமை நாலிரண்டில்” என்றார். அவைகளுடன் ஒளவையார் பாடல்களிலும் சொல்லருமையைக் காணலாம்.
அறம் எது, பொருள் எது, இன்பம் எது, வீடு எது என ஒவையாரில் மதிப்புள்ள வள்ளல் ஒருவர் கேட்டார். அதற்கு ஒளவையார் சற்றும் தாமதியாது ஒரு வெண்பாவில் நான்கையும் கூறினார்.
ஈதல் தான் அறம்.
தீவினைகள் நீக்கிவிட்டுத்தன் முயற்சியால் தேடிக் கொள்வதுதான் பொருள்.
காதல் இருவர் தம்முடைய கருத்துக்களிலே இணைந்தவராக ஆதரவுற்றநிலையில் வாழ்ந்து வருதலே இன்பம்.அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் நுகர்ந்து பின் விடுபடுதலே வீடு என்றார்.
பிள்ளைகளின் வாழ்வு சிறப்பாக அமையவேண்டுமென்று அலையும் பெற்றோர்பிள்ளைகளின் விருப்புவெறுப்புக்களை நன்கு ஆராயவேண்டும்.
பணத்துக்காகவும் பதவிக்காகவும் திருமணம் செய்யும் நிலை மாறி கருத்து ஒருமித்தவர்களுக்குத் திருமணம் செய்யவே பெற்றோர் முன்வரவேண்டும்.
இதைத்தான் ஒளவையார் காதல் இருவர் கருத்து ஒருமித்து ஆதரவுபட்டதே இன்பம் என்றார்.
இலக்கியச் சோலையில் நாம் காணும் இனிய மலர்கள் வண்ணங்களால் வேறுபடலாம், வடிவங்களால் வேறுபடலாம். ஆனால் எல்லாமே தேன் உடையவைகளாக அதாவது கருத்துடையவைகளாக விளங்க வேண்டும்.
- உதயன் - 29.5.2011
-25

Page 19
பத்திரிகைப்பணியில் எனது அனுபவம்
ஜனநாயக நாட்டில், ஜனநாயகம் என்ற மங்கை மகிழ்ச்சியோடு இருக்குங் காலத்தில் பத்திரிகையில் பணிபுரிவது மிகமிக மகிழ்ச்சியான அநுபவம். ஐனநாயக மங்கை அல்லலுற்றுக் கண்ணிர் சிந்தும் வேளையில் பணிபுரிவது ஆபத்தான காரியம். இந்த இரண்டு காலத்திலும் பணிபுரிந்த அநுபவம் எனக்கு உண்டு.
பத்திரிகை என்பது கலங்கரை விளக்கம் போன்றது. சரியான இலக்கை அது காட்டும். அதன் தனித்துவத்தில் மற்றவர் குறுக்கிடக்கூடாது. பத்திரிகை தர்மம் புனிதமானது, போற்றப்படவேண்டியது.
ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் மக்களுக்கும் சரியானதை நல்லதைக் கூறுவது அதன் கடமை. மற்றவர்களுக்கு அது சுவையாகவும் இருக்கும், கசப்பாகவும் இருக்கும். ஆனால் பத்திரிகை தன் தனித்துவத்தை இழக்கக்கூடாது.
நான் சிறுவனாக இருந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் நாளிதழ் எதுவும் வெளிவரவில்லை. அப்போது ஒரே ஒரு புகைவண்டி மாலையில் கொழும்பில் புறப்பட்டுக் காலையில் காங்கேசன்துறை வந்து சேரும். அதுதான் அப்போது தமிழில் வெளிவந்துகொண்டிருந்த வீரகேசரி, தினகரன் ஆகிய இதழ்களை நாள்தோறும் கொண்டுவந்து சேர்க்கும்.
அந்தப் பத்திரிகைகள் காங்கேசன்துறைக்குப் புகைவண்டி கொழும்பிலிருந்து புறப்படுவதற்கு முன் அச்சிடப்படுவதால் யாழ்ப்பாணம் சம்பந்தமான புதினங்களை யாழ்ப்பாண மக்கள் உடனுக்குடன்
அறியமுடியாத நிலை இருந்தது.
-26

இந்த நிலையை அவதானித்த பெரியார் கே.ஸி. தங்கராசா அவர்கள் "ஈழநாடு" நாளிதழை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைத்தார். ஈழநாடு மெல்ல மெல்ல, ஆனால் ஆரோக்கியத்தோடு வளர்ந்து யாழ்ப்பாணத்தில் உலாவரத் தொடங்கியது. ஈழநாடு நாளிதழ் புதினங்களை வழங்க ஈழநாடு வாரமலர் இலக்கிய வளர்ச்சியிலும் சமய வளர்ச்சியிலும் கவனம் செலுத்தியது.
எத்தனையோ கவிஞர்களை, எத்தனையோ சிறுகதை ஆசிரியர்களை, எத்தனையோ நாவல் ஆசிரியர்களை வளர்த்தெடுத்தது.
பத்திரிகைப் பணியில் பல்கலைக்கழக மாணவனாக இருந்த காலத்திலேயே ஆர்வம் கொண்டிருந்த நான் ஈழநாடு பத்திரிகையில் ஒப்புநோக்குநராக இணைந்தேன். அப்போது எஸ்.எம். கோபாலரத்தினம் நாளிதழுக்கு ஆசிரியராக இருந்தார். திரு. எஸ். பெருமாள் வார இதழுக்கு ஆசிரியராக இருந்தார். அன்பினாலும் உழைப்பினாலும் இணைந்த ஈழநாடு பணியாளர்கள் அனைவரும் குடும்பத்தை வளர்க்கும் ஒன்றுபட்ட பிள்ளைகள் போல் அயராது உழைத்தோம்.
விளம்பரங்கள் பெருமளவில் வரத்தொடங்கின. கொழும்புப் பத்திரிகைகளில் வராத யாழ்ப்பாணச் செய்திகள் உடனுக்குடன் ஈழநாட்டில் வெளிவந்தன. பாடசாலை மாணவர்கள் விரும்பிப் படிக்கக்கூடிய அம்சங்கள் பல இடம்பெற்றன. ஈழநாடு பத்திரிகை செல்வச் சீமாட்டியாக உலாவந்துகொண்டிருந்தது.
ஒப்புநோக்குநராக இருந்த நான் மெல்ல உதவியாசிரியராகிப் பின்னர் வாரமலர் ஆசிரியரானேன். வாரமலரை வளர்க்கும் ஆர்வத்தில் சிரித்திரன் சிவஞானசுந்தரம் அவர்களை அவர்களுடைய பத்திரிகை அனுபவத்தைத் தொடர் கட்டுரையாக எழுதுமாறு கேட்டேன். அவர் மனமுவந்து பதினைந்து தொடர் கட்டுரைகளை எழுதினார். அவருடைய எழுத்துக்களுக்கு உரிமையானவர்கள் இன்று அவற்றை நூலாக்கினால் அது சிறந்த பணியாகும்.
-27

Page 20
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் சுப்பிரமணிய ஐயர் ஈழத்துக் கவிதைகள் என்ற தலய்ைபில் கட்டுரைகள் எழுதினார். அக்கட்டுரைகள் பின்பு நூலாக வெளிவந்தன.
அறிவும் அநுபவமும் என்ற பகுதியில் பேராசிரியர் சு. வித்தியானந்தன், கலையரசு சொர்ணலிங்கம், கோகிலா மகேந்திரன் போன்றோரைப் பேட்டி கண்டு வெளியிட்டேன்.
ஈழநாடு செழித்து வளர்ந்து வாசகர்களுக்குப் பெரும் பயன் நல்கிய நேரத்தில் ஐனநாயகம் என்ற மாசில்லாத் தெய்வம் பெரும் சோதனைகளைச் சந்தித்தது. ஈழநாடு நாளிதழை நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
ஈழநாட்டுப் பணிக்குப் பின்னர் சில காலம் முரசொலிபத்திரிகையிற் பணிபுரிந்து பின்னர் இன்று வெள்ளி விழாக்காணும் உதயன் பத்திரிகையில் இணைந்தேன்.
உதயன் பத்திரிகை திரு.ம.வ.கானமயில் நாதன், திரு. ந.வித்தியாதரன், திரு. பேரின்பம், திரு. குகநாதன் போன்றோரின் திறமையாலும் உழைப்பாலும் வெகுவேகமாக வளர்ந்து கொண்டிருந்தது.
உதயன் ஆசிரியரும் ஆசிரிய பகுதியினரும் ஏற்கனவே பத்திரிகையில் நீண்டகால அநுபவம் உடையவர்யகளாகவும் திறமை உடையவர்களாகவும் இருந்தமையால் உதயன் பத்திரிகை மிக வேகமாக
வளர்ந்தது.
ஆரம்பகாலத்தில் உதயன் ஆசிரியரும் உதவி ஆசிரியர்களும் உதயன் வளர்ச்சிக்காக நாள்தோறும் பதினைந்து பதினாறு மணி நேரம் உழைத்தார்கள். அந்த உழைப்பு அந்த ஆர்வம் உதயனை ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றச் செய்தது. காலத்துக்குக் காலம் உதயன் என்ற ஆலமரத்தை ஜனநாயகத்தையும் பத்திரிகைக் குரலையும்
-28

மதிக்காதோர் வெட்டிய போதும் மரம் வளர்ந்து கொணடிருக்கிறது. செய்தி என்ற பெரு நிழலைப் பரப்பிக் கொண்டிருக்கிறது.
நான் உதயன் பத்திரிகையின் "சஞ்சீவி” வாரமலர் பகுதியிலே பணிபுரிந்தேன். அப்போது சஞ்சீவி வாரமலர் ஆசிரியராகத் திரு.ந. வித்தியாதரன் அவர்கள் இருந்தார்கள். அவர் எழுத்தாற்றல் மிக்கவர். சிறந்த கவிஞர்கள், சிறந்த நாவல் ஆசிரியர்கள், சிறந்த சிறுகதை ஆசிரியர்கள் அவருக்கு நண்பர்களாக இருந்தனர். வாரமலர் ஆசிரியருக்கு எழுத்தாளர்கள் நண்பர்களாக இருப்பது நல்லதொரு வாய்ப்பு. சஞ்சீவியைச் சிறப்பாக வளர்த்தெடுப்பதற்கு அவர் அந்த வாய்ப்பை நல்லமுறையிற் பயன்படுத்தி வெற்றிகண்டார். சஞ்சீவியைப் பற்றிப் பேச்செழும்போதெல்லாம் அதில் வந்த வித்துவான் பதில்களைப் பற்றி வாசகர்கள் பேசத் தவறுவதில்லை. இப்போது மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கவேண்டும் என்று கற்றோரும் பெற்றோரும் அரும்பாடுபடுகின்றனர். அப்போது மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கும் பணியைச் சஞ்சீவி சிறப்பாகச் செய்துகொண்டிருந்தது.
கவிதைப் பணியே செய்துகொண்டிருந்த என்னைச் சஞ்சீவி கட்டுரை எழுதத் தூண்டியது. சஞ்சீவியில் வெளிவந்த இலக்கியக் கட்டுரைகளுக்கு வாசகர் கடிதங்கள் பெரும் ஊக்கம் அளித்தன. வாசகர்களின் பாராட்டைப் பெற்ற அக்கட்டுரைகள் பின்பு "தமிழ்ச் செல்வம்" எனும் நூலாக வெளிவந்தன.
பத்திரிகையில் பணிபுரியும் அனைவரும் ஒரு அநுபவத்தைப் பெறுவார்கள். அந்த அநுபவம் இலகுநடையில் எழுதும் ஆற்றலைக் கொடுக்கும். எனது கவிதைகளோ கட்டுரைகளோ இலகு நடையில் அமையப் பெரும் துணை புரிந்தது பத்திரிகைப் பணியே.
பத்திரிகைகள் எழுத்தாளர்களுக்கு ஆதாரமாக உள்ளன. எழுத்தாளர்கள் பத்திரிகைகளுக்கு ஆதாரமாக இருக்கின்றனர். இந்த
-29

Page 21
இரண்டு ஆதாரங்களும் இணையும்போது, தமிழ் மொழி மேலும் வளர்ச்சி அடைகிறது. தமிழ் இனம் மேலும் பெருமை அடைகிறது.
"மக்கள் மனம் நிறைந்த தமிழ்நாளிதழ்" என்பது உதயனின் மகுட வாக்கியம். மக்களின் மனம் நிறைவைப் பெற்றதே அதன் அதிவேக வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது.
மாணவர்கள், பத்திரிகையில் வரும் சொற்கள் சரியானவை என்று நம்புகிறார்கள். அதனை நன்கறிந்து கொண்ட உதயன் பத்திரிகை நல்ல தமிழ்ச் சொற்களையே பயன்படுத்தி வருகிறது. இன்று மாணவர்கள், ஆசிரியர்கள் உதயன் பத்திரிகையைப் போற்றுகிறார்கள் என்றால் அதற்கு உதயன் கையாளும் நல்ல தமிழே காரணம். யாழ்ப்பாணத்தின் எந்தக் கல்லூரியின் நூலகத்திற்குச் சென்றாலும் அங்கு உதயன் பத்திரிகை இருப்பதைக் காணலாம். பாடசாலைச் செய்திகளும் பாடசாலை நிகழ்ச்சிகளின் படங்களும் பாடசாலை விளம்பரங்களும் உதயன் பத்திரிகையில் வெளிவருவதையே பாடசாலைகள் விரும்புகின்றன.
மக்கள் மனம் கவர்ந்த பத்திரிகையாகிய உதயன், பாடசாலைகளைக் கவர்ந்தது போலவே ஏனைய துறையினரையும் கவர்ந்துள்ளது. எத்துறை சார்ந்தவர்களும் நல்ல வாழ்க்கை வசதிகளைப் பெறவேண்டும் என்ற உதயனின் நல்ல நோக்கமே இதற்கெல்லாம் காரணம்.
பத்திரிகைக்கு வேண்டிய சகல சிறப்பம்சங்களையும் தன்பாற் கொண்டு ஒரு சிறந்த பத்திரிகைக்கு இலக்கணமாக விளங்கும் உதயன் பத்திரிகையை அது வெள்ளிவிழாக் காணும் இவ்வேளையிற் பாராட்டுவதைப் பெரும் பேறாகக் கருதுகிறேன்.
- உதயன் வெள்ளிவிழா மலர்
-30

அழகின் ஆற்றலும் தவத்தின் வலிமையும்
காலை இளம்பரிதியின் அழகு, மாலையில் அது கடலுள் மூழ்கும் அழகு, நீலவான் பரப்பில் வெண்முகில் ஆடைக்குள் உடல் மறைக்கும் முழு நிலவின் அழகு, குளத்தில் இருந்து புன்னகை புரியும் தாமரையின் அழகு, வண்ணப் பறவைகள் ஒருமித்து வான்வெளியில் அணிசெய்து பறக்கும் அழகு. இவை எவரையும் கவரும் இனிதான காட்சிகளே!
கவிதை அழகு, சிற்ப அழகு, ஓவிய அழகு என இவ்வுலகே அழகு LDUILDIT85 d 6irelTg5).
இந்த அழகில் எல்லாம் மனத்தைத் தோயவிடாது தவம் புரிவோரின் ஆற்றல் மிகப்பெரிது. சிலவேளைகளில் அழகின் ஆற்றலுக்கும் தவத்தின் வலிமைக்கும் போர் நிகழ்வது உண்டு. சிலவேளைகளில் தவத்தை அழகு வென்றுவிடுவதும் உண்டு.
வலிமை வாய்ந்த தவத்தில் விசுவாமித்திரருக்கு நாட்டம் ஏற்பட்டது. மக்கள் மத்தியில் வாழ்ந்து தவம் செய்வது அவருக்குப் பொருத்தமாகப் படவில்லை.
தவத்தக்கொருவர் என்ற கொள்கைப்படி கானகம் சென்றார். கானகத்தின் மத்தியில் பெரும் தவம் புரிந்தார். தவத்தில் தன்னை விஞ்சிய ஒருவனின் வளர்ச்சி தனது பதவிக்கும் சுக வாழ்வுக்கும் இடையூறாக அமையும் என்று எண்ணினான் இந்திரன். பஞ்சதந்திரமும் நன்கறிந்த இந்திரன் தவத்தை வலுவிழக்கச் செய்ய அழகால் முடியும் என்று நம்பினான்.
அழகே வடிவமான மேனகையை அழைத்து "நீ இப்போது பூவுலகத்துக்குச் சென்று விசுவாமித்திரரின் தவத்தை வலிகெடச் செய்யவேண்டும்" என்றான்.
-31

Page 22
தேவர் தலைவனின் கட்டளையை மறுக்கமுடியுமா? பூவுலகம் வந்த மேனகை, விசுவாமித்திரர் தவம் மேற்கொண்ட இடத்தை அடைந்தாள்.
மேனகையின் காலில் இருந்து சலங்கை ஒலி பூவுலகம் முன்னெப்பொழுதும் கேட்டறியாத இனிய ஒலி. அந்த ஒலி காற்றுடன் கலந்து விசுவாமித்திரரின் செவிப் பறையைத் தாக்கியது. அவளுடைய வாசனைத் திரவியங்க்ள அமைந்த மேனியின் வாசனை முனிவரின் மூக்கின் வழி சென்று தாக்கி மேலும் அவரது தவத்தை-மெளனத்தை வலுவிழக்கச் செய்தது. முனிவரின் செவியும் மூக்கும் ஏமாந்த நேரத்தில் கட்புலனும் அவரைக் கைவிட்டது. மெல்லக் கண்ணைத் திறந்தார்.
மேனகையின் அழகைப் பார்த்தமுனிவர் இவள் இந்தக்கானகத்தில் வாழும் தேவதையோ? என ஐயுற்றார். 'பல்லாயிரம் மயில்களிடத்தே தேர்ந்தெடுத்த தோகை அழகு மிக்க மயில்தானோ இவள் என ஐயுற்றார். கூந்தலழகு வாய்ந்த மானிடப் பெண்தானோ? என ஐயுற்றார். "எனது மனம் மயங்குகிறதே" என்று தடுமாறினார்.
"அணங்குகொல் ஆய்மயில் கொல்லே கணங்குழை
மாதர் கொல்மாலும் என் நெஞ்சு" என்று ஐயுற்றார்.
'ஐயுற்றது போதும் மெய்யுற்றுப் பாரும் என்றன மேனகையின் விழிகள். விசுவாமித்திரர் மெய்யுற்றார்.
கண்ணால் கண்டும், காதால் கேட்டும், நாவால் உண்டும், மூக்கால் மோந்தும், மெய்யால் தீண்டியும் அனுபவிக்கப்படும் ஐம்புலனும் பெண்ணிடத்து உண்டென்றுணர்ந்தார்.
"கண்டுகேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள”
என்று அறிந்தார். தவத்தின் வலிமையை இழந்தார். அழகின் ஆற்றல் வென்றது.
-32

முனிவர் ஒருவர் நீராடிய பின் ஆடையைக் கொடியிற் காயப்போட்டார். ஒரு கொக்கு ஆடையில் எச்சமிட்டது. அப்போது அவர் கொக்கைச் சினந்து பார்த்தார். அவரது தவ வலிமை கொக்கைச் சாம்பலாக்கியது.
அந்த முனிவர் பின்னொரு சந்தர்ப்பத்தில் திருவள்ளுவர் வீட்டுக்குச் சென்றார். அப்போது திருவள்ளுவர் உணவருந்திக் கொண்டிருந்தார். திருவள்ளுவரின் துணைவியார் வாசுகி உணவு பரிமாறிக் கொண்டிருந்தார். திருவள்ளுவர் வீட்டுக்குச் சென்ற முனிவர் தம் வருகையை உணர்த்தினார்.
வாசுகி திருவள்ளுவருக்கு உணவு பரிமாறி முடித்த பின்னரே முனிவரை நோக்கிச் சென்றார்.
காலதாமதமாக வாசுகியார் சென்றது முனிவருக்குச் சினத்தை ஏற்படுத்தியது. தம் தவவலிமையை உணர்ந்த முனிவர் முன்பு கொக்கைச் சினந்து பார்த்தது போல் வாசுகியையும் சினந்து பார்த்தார்.
“கொக்கென்று நினைத்தீரா முனிவரே" என்று வாசுகி கேட்டார். முனிவரின் சினத்தால் சாம்பலாகிய கொக்கைப் போல வாசுகி சாம்பலாகாது அப்படியே நின்றார்.
இல்லறத்தில் நின்று கணவனைத் தெய்வமாகத் தொழுகின்ற பெண்ணின் கற்புக்குத் தவத்தின் வலிமையைவிட ஆற்றல் அதிகம் என்பதை உணர்ந்தார்.
நாயன்மார்கள் அழகில் மயங்காதவர்கள் அல்லர். "பொன்னடியே பரவினாலும் என்று இறைவனின் பொன்மயமான எழில் மேனியையும் சோதியே சுடரே! சூழொளி விளக்கே என்று அவனது பிரகாசத்தையும் பாராட்டி அழகை ரசித்திருக்கிறார்கள். இறைவனே ஒளிமயமானவன்.
25uaf (8.12.2Of
-33

Page 23
நீதி கிடைக்காத மக்கள் சொரியும் கண்ணிர்நீதிவானாக மாறி ஆட்சியாளரை வேரோடு அறுக்கும்!
கண்ணீருக்கு அஞ்சாதகுடும்பமோ நாடோ நிம்மதிகாணமுடியாது. வீட்டில் தலைவியின் கண்ணிருக்குத் தலைவன் அஞ்சவேண்டும். அது குடும்பப் பண்பாடு. நாட்டில் குடிமக்களின் கண்ணிருக்கு ஆட்சியாளர் அஞ்சவேண்டும். அது அரசியல் பண்பாடு, கண்ணிருக்கு அஞ்சாத குடும்பத்தையோ ஆட்சியையோ மும்மூர்த்திகளே வந்தாலும் காப்பாற்ற முடியாது என்கிறான் அரசன் ஒருவன். அவன் அரசனாகவும் இருக்கிறான், அதே நேரத்தில் புலவனாகவும் இருக்கிறான். அவன்தான் அதிவீரராம பாண்டியன்.
ஆட்சியில் இருப்பவன் ஒருவன்குடிமக்களின் வழக்கு ஒன்றை எப்படி ஆராயவேண்டும் என்பதையும் கண்ணீருக்கு எப்படி அஞ்ச வேண்டும் என்பதையும் அதி வீரராமபாண்டியன் ஒரு பாடலில் கூறுகிறான். அவன் கருத்து குடி ஆட்சிக்கும் பொருந்தும், முடி ஆட்சிக்கும் பொருந்தும்.
வழக்கு ஒன்று ஆட்சியாளரின் முன்னிலையில் வரும்போது ஆட்சியாளர் வழக்குத் தொடர்பான இரு தரப்பினரும் கூறும் கருத்தை ஏழு முறை கேட்கவேண்டும். நீதி தவறாது இரு கட்சியினரும் ஏற்றுக்கொள்ளுமாறு தீர்ப்பு வழங்கவேண்டும். ஆட்சியாளர் வழங்கும் தீர்ப்பிலே நீதி கிடையாமல் ஒரு பகுதியினர் கண்ணிர் விடும் நிலை ஏற்படக்கூடாது. ஏற்பட்டால் கண்ணீர் நீதிவானாக மாறி நீதி பிழைத்த ஆட்சியாளரையும் அவர் பரம்பரையையும் வேரோடு அறுத்துவிடும் என்கிறார். நீதி பிழைத்த ஆட்சியாளரை மும்மூர்த்திகளே வந்தாலும் கண்ணிரிலிருந்து காப்பாற்ற முடியாது என்கிறார். அதிவீரராம பாண்டியனின் அந்தப் பாடல் வருமாறு :-
-34

"இருவர்தம் சொல்லையும் ஏழு தரம் கேட்டே இருவரும் பொருந்த உரையார் ஆயின் மனுமுறை நெறியின் வழக்கு இழந்தவர் தம் மனமுற மறுகி நின்று அழுத கண்ணிர் முறையுறத் தேவர் மூவர் காக்கினும் வழிவழி ஈர்வதோர் வாளாகும்மே.
கண்ணிர்பற்றித்திருவள்ளுவர்
அரசன்நாற்படைவலிமைஉடையவனாக இருக்கலாம் வீராதிவீரனாக இருக்கலாம். ஆயினும் குடிமக்களின் கண்ணிரை அவன் மதிக்கவில்லை என்றால்குடிமக்கள் சொரியும்கண்ணிரேஆட்சியை விழுத்திவிடும்என்கிறார்.
"அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணிர் அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை” அரசன் நீதி வழங்காமையால் குடிமக்கள் துன்பப்பட்டு அழுத கண்ணிர் அரச செல்வத்தைத் தேய்க்கும் படை என்கிறார். பாணிழயன் நெடுஞ்செழியனுக்கு முதலில் தெரிந்தது கண்ணகியின் கண்ணிரே - அதனால் அவன் அரசனேய
பாண்டியன் நெடுஞ்செழியன் சிறிதும் ஆராயாது கோவலனைக் கொன்ற பெரும் தவறு புரிந்தான். ஆயினும் கண்ணிருக்கு அஞ்சும் பண்பு அவனிம் இருந்தது. கண்ணகியைக் கண்டதும் அவன் கேட்ட கேள்வி:-
"நீர் வார் கண்ணை எம்முன் வந்தோய் யாரையோ நீ மடக்கொடி?” என்பதாகும். பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு முதலில் தெரிந்தது கண்ணகியின் கண்ணிர் தான். அவன் அரசனாயினும் மக்களின் கண்ணிருக்கு அஞ்சினான். அதனாலேயே நீர் சொரியும் கண்களை உடையாய் எம் முன் வந்து நிற்கின்றாய்! நீ யார்?" என்கிறான்.
ஆட்சி குடியாட்சியாகவும் இருக்கலாம்; முடியாட்சியாகவும் இருக்கலாம். வலிமை உடையதாகவும் இருக்கலாம். ஆனால் குடிமக்களின் கண்ணிர் இவற்றை எல்லாம் அழித்துவிடும்!
2atia (6.2OO6
-35

Page 24
ட்டுமயிலுக்குப்போர் டுத்தவன் வீட்டுமயிலுக்குத்துன்பம்கொடுத்தான்!
கடைஎழுவள்ளல்களுள் ஒருவன்பேகன், இவன்பனிக்குளில்வாடிய மயிலுக்குத் தன் போர்வையை எடுத்துப் போர்த்தவன். இந்தக் கொடைச் சிறப்பை அறிந்த கபிலர் இவனைக் காண விரும்பி இவனிடம் சென்றார்.
பேகனின் மாளிகைக்குச் சென்ற கபிலர், பேகனையும் அவனது நாட்டு வளத்தையும் பாடினார். பேகனை அவரால் நேரில் சந்திக்க இயலவில்லை. அப்போது பேகனின் மாளிகையிலிருந்து ஒரு அழுகுரல் கேட்டது. அந்த அழுகுரலிற்கூட ஒரு மென்மை தெரிந்தது. அந்த அழுகுரல் புல்லாங்குழல் இரங்கி ஒலிப்பது போல ஒலித்தது.
கபிலருக்கு ஆச்சரியமாக இருந்தது. பேகனின் நாட்டில் எவரும் கண் கலங்கியது இல்லை. எல்லோரும் பசி, துன்பம் அற்ற நல்வாழ்வு வாழ்கின்றனர். காட்டு மயிலின் குளிர் நீக்கத் தனது போர்வையைக் கொடுத்தவன் பேகன். அப்படிப்பட்டவன் தன் வாழ்க்கைத் துணைவியைக் கண்ணிர் சொரிய விடுவானா? வீட்டுக்கு ஒரு நீதி, நாட்டுக்கு ஒரு நீதி புரிவானா பேகன்? என்றெல்லாம்தம்மைத்தாமேகேட்டுக்கொண்டார்கமிலர்.
பேகன் மாளிகையில் இருந்து கொண்டு பெரும் புலவரான தனது வரவை ஒருபோதும் அலட்சியம் செய்யமாட்டான்.
அப்படியானால் அவன் எங்கோ வேறிடத்தில் இருக்கிறான். அவன் எங்கே வேறிடத்தில் இருக்கிறான்? அவன் அவ்விதம் வேறிடம் சென்றதற்கு ஏன் அவனுடைய துணைவிஅழவேண்டும்? அவள் அழுவதானால் பேகன் அவளுக்கு ஏதோ துரோகம் செய்துவிட்டான் என்று பொருள்.
எல்லோருமே உயர்ந்த வாழ்வு வாழவேண்டும் எனச் சிந்தித்துக் கொண்டிருக்கும் சங்கச் சான்றோராகிய கபிலருக்குப் பேகன் மீது
வெறுப்பு ஏற்பட்டது. அவன் துணைவி மேல் கருணை உண்டாகியது.
-36

பேகன் என்ற அந்தக் கொடை வள்ளல் வேறொரு பெண்ணின் அழகில் மயங்கி அந்தப் பெண்ணுடன் வேறோரிடத்தில் தங்கிவிட்டான் என்பது கபிலருக்குத் தெரியவந்தது. பேகன் இருக்கும் இடம் அறிந்து கபிலர் அங்கே விரைந்தார். பேகனைச் சந்தித்தார். அவர் பேகனை விளித்த விதமே சுவை நிறைந்ததாக உள்ளது. "மடத்தகை மாமயில் பனிக்கும்" என்று அருளிப் "படாஅம் ஈத்த கெடா அ நல்லிசைக் கடா அ யானைக் கலிமான் பேக" என்று கபிலர் பேகனை விளித்தார்.
"மயில் பணியால் நடுங்குமெனப் போர்வை அளித்த புகழுடைய பேகனே" என்றார். காட்டு மயிலுக்குப் போர்வையளித்துவிட்டு வீட்டு மயிலுக்கு ஏன் துரோகம் இழைத்தாய் என்பது குறிப்புப் பொருள். கெடாத புகழையுடைய பேகனே! என்றார். இச் செயல் நின் புகழைக் கெடாதா? என்பது குறிப்புப் பொருள்.
"பசித்தும் வாரேம் பாரமும் இலமே" என்றார். நான் நின்னிடம் பொருள் பெற்றுப் பசி தீர்க்கவும் வரவில்லை. எனக்குப் பாரமாக வறிய சுற்றத்தார் எவரும் இல்லை.
"அறம் செய்தீமோ, அருள் வெய்யோய் என இஃதியாம் இரந்த பரிசில்" நீ உனது இல்லறம் கெடாதவாறு, அறம் செய்துகொள். விரைந்து சென்று உனது துணைவியின் கண்ணிரை நிறுத்து. இதுவே நான் உன்னிடம் கேட்கும் பரிசில் என்றார் கபிலர்.
சாதாரண மனிதரைப் பற்றக்கூடிய சபலம் பேகனையும் பற்றிக் கொண்டாலும் கூட, பேகன் சான்றோர் வாக்குக்குக் கட்டுப்படுபவனே!
கபிலரின் பேச்சைக்கேட்ட பேகன் தன் செயலுக்கு நாணினான், தனது துணைவியின் நிலைக்கு இரங்கினான்.
தன்னை நிலைதடுமாறவைத்த ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்தி னான். கபிலர் மனம் மகிழும்படி உடனே தன் மாளிகைக்குப் புறப்பட்டான்.
தனது துணைவி மகிழும்படி மாளிகையில் தங்கினான்.
22traf (9.7.2OO9
-37

Page 25
துரியோதனனிடம் விரவியிருந்த உலகு வியக்கும்.நற்பண்பு
அரசர்கள் கதாடுவது அன்றைய பொழுது போக்கு. உயிர் நண்பர்களாகிய கர்ணனும் துரியோதனும் நேரம் கிடைக்கும் போது கதாடிப் பொழுது போக்குவதுண்டு. ஒருநாள் கர்ணன் பொழுது போக்குவதற்காகச் சூதாடத் துரியோதனனிடம் சென்றான். அப்போது துரியோதனன் மாளிகையில் இல்லை. துரியோதனனின் மனைவி மட்டுமே இருந்தாள்.
பிறர் மனைவியரைச் சகோதரிகளாகவே மதிக்கும் கர்ணன் "தங்கையே! துரியோதனன் வரும் வரை நீ என்னுடன் கதாடு. துரியோதனன் வந்ததும் அவனுடன் கதாடிப் பொழுதைக் கழிக்கின்றேன்". என்றான்.
கர்ணனின் கொடைச் சிறப்பையும் பிறர் மனைவியாரைச் சகோதரியாக நினைக்கும் பண்பையும் தெரிந்திருந்த துரியோதனனின் மனைவி கதாட உடன்பட்டாள்.
ஆரம்பத்தில் துரியோதனனின் மனைவி சூதாட்டத்தில் வென்று கொண்டிருந்தாள். இது துரியோதனனின் மனைவியை கதாட்டத்தில் வென்றுவிட வேண்டும் என்ற ஆர்வத்தைக் கர்ணனுக்கு உண்டாக்கியது. கர்ணன் மிகுந்த திறமையுடன் விளையாடி வெல்லத் தொடங்கினான். வெற்றியால் ஏற்பட்ட மகிழ்ச்சியில் கர்ணன் குழந்தை உள்ளம் கொண்டவனாகித் தன்னை மறந்து கதாட்டத்தில் முழுக் கவனத்தையும் செலுத்தினான்.
அப்போது துரியோதனன் மாளிகை வாசலில் வரும் காட்சி துரியோதனனின் மனைவிக்குத் தெரிந்தது. கணவனை உபசரிக்கச் கதாட்டத்தை நிறுத்திவிட்டு எழுந்தாள்.
-38

சூதாட்டத்தில் வெற்றியீட்டிக் கொண்டிருந்த கர்ணனுக்குத் தான் சூதாட்டத்தில் வெற்றியீட்டிக் கொண்டிருக்கும் வேளை கதாட்டத்தை நிறுத்தித் திடீரெனத் துரியோதனனின் மனைவி எழுந்தது சினமூட்டியது. சூதாட்டத்தில் தன்னை மறந்து ஈடுபட்டுக் கொண்டிருந்த கர்ணன் "நான் வெல்லும் போது கதாட்டத்தைக் குழப்பாதே" என்று கூறி அவளது புடைவை முன்தானையைப் பிடித்தான். அவளது மேகலை அறுந்து முத்துக்கள் சிதறின.
அந்நேரம் துரியோதனன் மாளிகையின் உள்ளே வந்து கொண்டிருந்தான். மனத்தில் எவ்வித சலனமுமின்றி "இந்த முத்துக்களை எடுக்கவோ? கோக்கவோ" என்றான்.
கொடிய பாத்திரமாகவே காணப்படும் துரியோதனன்"எடுக்கவோ? கோக்கவோ?” என்று கேட்ட நேரத்தில் குணம் என்னும் குன்றை எட்டித் தொட்டுவிட்டான்.
தன் மனைவியையும் தன் நண்பனையும் சந்தேகப்படாத துரியோதனனின் இந்த உயர்ந்த குணத்தைக் கர்ணனே கூறுகின்றான்.
கிருஷ்ணபிரான் மூலம் குந்திதேவிக்கு ஒரு உண்மை தெரியவருகிறது. கர்ணன் குந்திதேவியின் மூத்த புதல்வன் என்பதே அந்த gd_60öT60DLD.
இதனை அறிந்த குந்திதேவி கர்ணனிடம் செல்கிறாள். தான் கர்ணனின் தாய் என்பதை நிரூபிக்கிறாள். தன் தாயைக் கண்ட கர்ணன் பெருமகிழ்ச்சியடைகின்றான்.
கர்ணனின் மகிழ்ச்சியை அறிந்த குந்திதேவி தன்னுடன் வந்துவிடும்படி கேட்கிறாள். நீ அரசனாக இருக்க உன் தம்பியர் ஐவரும் உனக்கு ஏவல் செய்வர் என்கிறாள்.
கர்ணன் அதற்குப் பதிலாக கீழ்க்கண்டவாறு கூறுகிறான்.
-39

Page 26
"மடந்தை பொன் திருமேகலை மணி உகவே
மாசறத் திகழும் ஏகாந்த இடந்தனின் புரிந்தேநான் அயர்ந்திருப்ப எடுக்கவோ? கோக்கவோ? என்றான் திடம் படுத்திடுவேன் இராச ராசனுக்குச் செருமுனைச் சென்று செஞ்சோற்றுக் கடன் கழிப்பதுவே எனக்கினிப் புகழும்
கருமமும் தருமமும்" வில்லிபுத்தூரரின் கவிச்சிறப்பை இந்தப் பாட்டில் வரும் "மாசறத் திகழும் ஏகாந்த இடம்" என்ற தொடரில் அறியலாம்.
கர்ணனும் துரியோதனனின் மனைவியும் இருந்த இடம் தனிமையான இடம். அங்கு யாரும் இல்லை. ஆனால் அது மாசறத் திகழும் இடம்.
பிறன் மனைவியைத் தங்கையாக நினைப்பவனின் மனம் மாசறத் திகழும் இடம். கணவனின் நண்பனைத் தமையனாக நினைக்கும் பெண்ணின் மனமும் மாசறத் திகழும் இடம்.
இந்த மாசற்ற உள்ளங்களைக் கண்டு சந்தேகப்படாததுரியோதனின் மனமும் மாசற்ற இடமே!
தீமைகளின் புகலிடமாக விளங்கியவன் துரியோதனன். அந்தத் துரியோதனனிடம் சாதாரண மனிதர் சிலரிடம் காணமுடியாத - தன் மனைவியையும் நண்பனையும் சந்தேகப்படாத தெய்வக் குணம் இருந்திருக்கின்றதே! இது வியப்புக்குரிய ஒன்றல்லவா?
2தயனர் 27.9.2009
-40

ஜிசெய்வதுபேச்சுத்திறன் உண்மையைநிலைநிறுத்திஉறுதியாக்கும் s O O 5 O O O
இன்று பாடசாலைகளில் பேச்சுப் போட்டிகள் நடைபெறுகின்றன. பல்கலைக்கழகங்களில் பட்டிமன்றங்கள் நடைபெறுகின்றன. இவைகள் எல்லாம் மாணவர்களின் பேச்சாற்றலை வளர்க்கும் நன்முயற்சிகளே!
அரசியலில் முன்னாள் இங்கிலாந்துப் பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில் மற்றும் முன்னாள் இந்தியப் பிரதமர் ஐகஹர்லால் நேரு ஆகியோர் தமது பேச்சுக்கலையினால் அருஞ்சாதனை புரிந்தனர்.
ஆன்மீகத்தில் ஆறுமுகநாவலர் அவர்களும், திருப்பாப் புலியூர் ஞானியார் அடிகளும் பேச்சுக் கலையால் சாதனை படைத்தனர்.
பேச்சாற்றல் வாய்ந்த ஒருவன் கட்டளையிட்டால் உலகம் அதனை விரைந்து கேட்கும் என்பதைத் திருவள்ளுவர்
"விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின் என்ற குறள் மூலம் தெளிவு படுத்தியுள்ளார்.
இக்கருத்தை "நா அசைந்தால் நாடசையும்" என்று பிற்காலத்தவர் பேச்சாற்றலை விளக்கப் பயன்படுத்தினர்.
சொல்வன்மை என்ற அதிகாரத்தில் நாநலம் பற்றிக் குறிப்பிடும் வள்ளுவர்,
-41

Page 27
"நாநலம் என்னும் நலன் உடைமை அந்நலம்
யா நலத்து உள்ளது உம்அன்று” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஒருவருக்குக் கல்வி உடைமை, பொருள் உடைமை, அழகுடைமை எல்லாம் நலன்களே! ஆனால் நாநலன் இந்த நலன்கள் எல்லாவற்றையும் விடத் தனிச்சிறப்புடையது.
பூ மலர்ந்திருக்கிறது. அது அழகாக இருக்கிறது. ஆனாலும் அதில் நறுமணம் இல்லை என்றால் அந்தப் பூவைச் சூட எவரும் விரும்பமாட்டார்கள். அது போலத்தான் ஒருவரிடம் பல நூல்களையும் கற்றதனால் அறிவு நிறைந்தாலும், அவரிடம் சொல்வன்மை என்ற நாவன்மை இல்லையானால் அவரது கல்வி அறிவை மற்றவர்கள் மதிக்க மாட்டார்கள்.
“இணர் ஊழ்த்தும் நாறாமலர் அனையர் கற்றது
உணர விரித்துரையாதார்” என்பது குறள்.
ஒரு சமயம் வள்ளுவர் கூறும் நாவன்மையைச் சிறந்த முறையிற்
பயன்படுத்தி நிகழவிருந்த ஒரு பெரும் போரை நிறுத்திப் பல உயிர்களை ஒளவையார் காப்பாற்றினார் என வரலாறு கூறுகின்றது.
கடையெழு வள்ளல்களில் ஒருவனாகிய அதியமானுக்கும், தொண்டைமானுக்கும் இடையே ஒரு சமயம் போர் ஏற்படும் நிலை ஏற்பட்டது. அதியமான் ஒருபோதும் போருக்கு அஞ்சாதவன் ஆனாலும், போரினால் ஏற்படும் அழிவுகளை எண்ணித் தொண்டைமானுக்கும் தனக்கும் இடையில் ஏற்பட இருந்த போரை நிறுத்த விரும்பினான்.
இதற்குத் தூதுவராக நல்ல பேச்சாற்றல் வாய்ந்த புலவர் ஒருவரை அனுப்புவது பொருத்தம் என்று எண்ணினான்.
-42

நல்லுள்ளமும்தமிழ்ப்பற்றும், தமிழ் இனப்பற்றும், சொல்வன்மையும் கொண்ட ஒளவையார் அனது நினைவுக்கு வந்தார்.
ஒளவையாரிடம் தனது சமாதான விருப்பத்தைத் தெரிவித்தான். போரை விரும்பாத ஒளவையாருக்கு அதியமானின் கருத்துநிலைப்பாடு மிகவும் பிடித்தமானதாக இருந்தது. எனவே ஒளவையார் உடனே தொண்டைமானிடம் புறப்பட்டுச் சென்றார்.
தமிழறிந்த தொண்டைமான் தமிழ்ப் புலவராகிய ஒளவையாரை வரவேற்று விருந்து உபசாரம் நடத்தினான்.
ஒளவையாருக்குத் தன் படைக்கலங்களைக் காட்டி ஒளவையார் ஊடாகப் போர் ஆற்றலை அதியமானுக்குப் புலப்படுத்தலாம் என்று தொண்டைமான் எண்ணினான்.
ஒளவையாரைத் தனது படைக்கலக் கொட்டிலுக்குக் கூட்டிச் சென்று படைக்கலங்களைக் காட்டி "அம்மையீர்! எப்படி என் படைக்கலங்கள்?" என்று கேட்டான். அதற்கு ஒளவையார், இந்தப் படைக்கலங்கள் பீலி அணிந்து, "மாலை கட்டி, நெய் பூசப்பட்டு அழகாக உள்ளன. ஆனால் அதியமானுடைய படைக்கலங்களோ கூர் மழுங்கி, முனைகள் முறிந்து கைப்பிடிகள் தம் நிலை தளர்ந்து மீண்டும் திருத்துவதற்காகக் கொல்லன் உலைக்களத்தில் உள்ளன" என்றார்.
விவேகியாகிய தொண்டைமான், அதியமானின் படைக்கலங்கள் பல போர்க்களங்களைக் கண்டு சேதமுற்று இருப்பதையும், தன் படைக்கலங்கள் போர்க்களங்களைக் காணாமையால் புதிதாக இருப்பதையும் கூறிய ஒளவையார் மூலம் தன் பகைவனாகிய அதியமானைப் போரில் வெல்வது அரிது என்பதைப் புரிந்து கொண்டான்.
சமாதானமே இரு பகுதிக்கும் நன்மை அளிக்கவல்லது என்றும் அறிந்து கொண்டான்.
-43

Page 28
ஒளவையாரின் சொல் வன்மையை வெளிப்படுத்தும் அந்த இனிய
பாடல் என்றும் ரசனைக்கு உரியதொன்றாகும்.
"இவ்வே பீலி அணிந்து மாலைகட்டி
கண்திரள் கோன் காழ்திருத்தி நெய்யணிந்து
கடியுடை வியன்நகரல்லவே அவ்வே
பகைவர்க் குத்திக் கொடுநுதி சிதைந்து
கொல்துறைக் குற்றிலமாதோ!"
என்று தொடர்கிறது.
2ausaf 27.9.2OO9
-44

பாவேந்தள் பாரதிதாசனுடன் முதற் சந்திப்பு
அப்பொழுது நான் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவன். அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் தமிழக அறிஞர்கள் பலரும் வந்து தங்குவதுண்டு.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சித்துறையில் பணிபுரிந்த பன்மொழிப் புலவர் தேவநேயப் பாவாணர் விருந்தினர் விடுதியில் தங்கியிருந்து பணிபுரிந்து கொண்டிருந்தார்.
பாவேந்தர் பாரதிதாசன் தேவநேயப் பாவாணரின் நெருங்கிய நண்பர்.தனித்தமிழ்க் கொள்கை உடைய இருவரும்நண்பர்களாக இருந்தது வியப்பன்று. பாரதிதாசன் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வரும்போதெல்லாம் தேவநேயப் பாவாணரின் அறையிலேயே தங்குவார்.
பாண்டிச் சேரியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் பாரதிதாசன் தேவநேயப் பாவாணரின் அறையில் இருப்பதை எனக்குத் தெரிவித்தார்.
பாரதிதாசனின் கவிதைகள் பலவற்றை முன்னரே படித்துச் சிலவற்றை மனப்பாடம் செய்திருந்த எனக்கு அவரைக் காணவேண்டும் என்ற ஆவல் நெஞ்சில் நிலைத்திருந்தது.
நான் உடனே தேவநேயப் பாவாணரின் அறைக்குச் சென்று பாரதிதாசனைச் சந்தித்து வணக்கம் தெரிவித்தேன். என்னைப் பற்றி அவர் வினாவியபோது நான் ஈழநாட்டு மாணவன் என்பதையும் புலவர் வகுப்பிற் படிப்பதையும் கூறினேன். அத்துடன் கவிதைகள் எழுதுகிறவன் என்பதையும் கூறினேன்.
-45

Page 29
தமிழை உயிராகக் கொண்ட பாரதிதாசனுக்கு நான் புலவர் வகுப்பிற்படிப்பதாகக் கூறியதும், கவிதை எழுதுவதாகக் கூறியதும் பெரு மகிழ்வை ஏற்படுத்தின.
பாரதிதாசன் கருத்து வேற்றுமை கொண்டவர்களிடம் சீறிப் பாய்பவராக இருந்தபோதும் மாணவர்களிடம் பழகும்போது அன்பு உள்ளம் கொண்டதாய் போலப் பழகுபவராக இருந்தார்.
கவிதை எழுதுவது பற்றி எனது கேள்விகளுக்கு அன்புடன் விளக்கம் தந்தார். தனித்தமிழ் கொள்கையுடைய அவரிடம், "கவிதைகளில் வட மொழிச் சொல் கலக்கலாமா?” என நான் கேட்டேன். அதற்கு அவர், "வலிந்து வடமொழிச் சொற்களைத் தமிழிற் புகுத்தக்கூடாது. ஆனாலும் இயல்பாகக் கலக்கின்ற வடமொழிச் சொற்களைச் சேர்த்துக் கொள்வதில் தவறில்லை" என்று கூறினார். அவர் கவிதைகளில் வடமொழிச் சொற்கள் இடையிடையே கலந்து ஒலிநயம் சேர்ப்பதைக் காணலாம்.
பாரதிதாசன் அவர்களுடனான முதற் சந்திப்பின் நிறைவில் அவரது கையெழுத்துக்காக ஒட்டோகிராபை நீட்டினேன்.
தமிழ் வாழ்ந்தால் தான் தமிழன் வாழமுடியும்' என்று எழுதிக் கையெழுத்திட்டுக் கொடுத்தார்.
ókováig).06ö, 1O.5.2009
-46

நாவலாசிரியர் பார்த்தசாரதியுடன் முதற் சந்திப்பு
தொல்காப்பியம், நன்னூல் முதலிய இலக்கண நூல்களையும் சங்க இலக்கியங்களையும் கற்றுத் தேர்ந்தவர் நாவலாசிரியர் நா. பார்த்தசாரதி அவர்கள். அவர் ஒரு சிறந்த பேச்சாளரும் ஆவார்.
தமிழ் நாவலர்களை விரும்பி வாசிக்கும் வாசகர்கள் அவருடைய குறிஞ்சி மலர் என்ற நாவலையும் பொன்விலங்கு என்ற நாவலையும் வாசிக்கத் தவறி இருக்கமாட்டார்கள்.
கல்கி பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்த போது பார்த்தசாரதி அவர்கள் கல்கியில் இந்த இரட்டைத் தொடர் நாவல்களை எழுதினார்.
இந்த இரண்டு நாவல்களும் கல்கி வார இதழில் வெளிவந்த போது கல்கி வாசகர் தொகை பெருகியது. கல்கி விற்பனை அதிகரித்தது.
இந்த இரண்டு நாவல்களையும் விட இன்னும் பல நாவல்களையும் அவர் எழுதினார்.
நாவலுடன் சிறுகதை, நாடகம், கவிதை, இலக்கியக் கட்டுரை எனப் பலவும் எழுதினார். தமது எழுத்துக்களால் பிரபலம் பெற்றிருந்த அவர் கொழும்பில் ஓர் இலக்கிய விழாவுக்காக வந்திருந்தார். நான் அப்பொழுது வெள்ளவத்தையில் தங்கியிருந்தேன்.
அவர் பம்பலப்பிட்டி கிறீன்லன்ஸ் ஹோட்டலில் தங்கியிருப்பதாகக் கேள்விப்பட்டேன். அவருடைய குறிஞ்சி மலர், பொன்விலங்கு முதலிய நாவல்களையும் அவருடைய சிறுகதைகள் இலக்கியக் கட்டுரைகளையும் படித்திருந்த நான் அவரைச் சந்திக்க கிளின்லன்ட்ஸ் ஹோட்டலுக்குச் சென்றேன்.
-47

Page 30
அவருடைய கம்பீரமான தோற்றம் பார்ப்போருக்குச் சேர, சோழ, பாண்டியரை நினைவுபடுத்தும்.
அவருடைய வாசகன் என்று என்னை அறிமுகம் செய்ததும் பெருமகிழ்வுடன் வரவேற்றார். தமது வாசகர்களைச் சந்திப்பதில் எழுத்தாளர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சி வார்த்தைக்கு அப்பாற்பட்டது என்பதை உணர்ந்தேன்.
இலக்கியம் கூறும் கருத்து, கற்பனை, மொழி நடை, ஆக்க இலக்கியங்களுக்குப் பெருமை சேர்க்கும் அம்சங்கள். இவை அனைத்தும் அவருடைய ஆக்கங்களிற் சிறப்பாக இடம்பெற்றிருக்கின்றன என்று கூறினேன். புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டார்.
பொன்விலங்கு நாவலில் எனக்குப் பிடித்த அம்சங்களைக் கூறியதுடன் பொன்விலங்கு கதாநாயகன் சத்தியமூர்த்தி பற்றியும் கூறினேன்.
சத்தியமூர்த்தி என்ற கதாநாயகனை நாவலில் படித்தறிந்த பலர் சத்தியமூர்த்தி போல நெறியுடன் வாழ்வதையும் நெறி பிழைத்தோரின் சிறுமைகண்டு பொங்குவதையும் குறிப்பிட்டேன்.
அதற்கு அவர் சத்தியமூர்த்தி ஒரு இலட்சியப் படைப்பு என்றும் இலட்சிய வாழ்வு வாழ நினைக்கும் இளைஞர்களுக்கு அந்தப் பாத்திரம் மேலும் ஊக்கம் கொடுக்கும் என்றும் கூறினார்.
உண்மையையே ஒரு சமயமாக வழிபடுவதற்குக் கற்றுக் கொள்ளாத படிப்பினால் நாட்டுக்குப் பயனில்லை என்றார்.
ańlayaguaü, MO-85.2OO9
-48

வாணிதாசனுடன் முதற்சந்திப்பு
பாவேந்தர் பாரதிதாசனின் முதலாவது சிஷ்யன் என்று சுரதாவைச் சொன்னால் இரண்டாவது சிஷ்யனாக வாணிதாசனைச் சொல்லலாம்.
பாரதிதாசனின் ஊராகிய புதுச்சேரியைச் சேர்ந்த வாணிதாசன், பாரதிதாசனிடம் தொல்காப்பியம், நன்னூல், திருக்குறள் ஆகிய நூல்களை முறைப்படித்துப் பண்டிதர் தேர்வில் சித்திபெற்றவர். தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்தவர்.
பாரதிதாசனின் இலகு நடையையே பின்பற்றிக் கவிதை எழுதிய அவர் பாரதிதாசனின் அன்புக்குப் பாத்திரமானார்.
இருவரும் அன்புடன் பழகிய போதும் அரசியல் இடையிற் புகுந்து அன்பைச் சிறிது குறைத்துவிட்டது என்றே சொல்லலாம்.
திராவிடக் கழகம் இரண்டாகப் பிரிந்தது. திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றியது. பாரதிதாசனும் வேறு பலரும் திராவிட முன்னேற்றக் கழகத்திற் சேராது ஈ.வே.ரா. பெரியாருடனேயே தங்கிவிட்டனர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கிய அறிஞர் அண்ணாவினால் கவரப்பட்ட வாணிதாசன் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மாறிவிட்டார்.
அரசியலில் வேற்றுமை இருந்தபோதும் வாணிதாசன் குருவாகிய பாரதிதாசனைப் போற்றத் தவறியதில்லை.
அண்ணாமலைப் பல்கலைக்கழகக் கவி அரங்கிற்குத் தலைமை தாங்க அவர் வந்திருந்தார். மாணவர்கள் மத்தியில் அப்போதுகாங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம் என்று இரு பிரிவினர் இருந்தனர். திராவிட
-49

Page 31
முன்னேற்றக் கழக மாணவர்களிற் பலரே கவி அரங்கிற் கலந்து கொண்டனர்.
கவி அரங்கிற்குத் தலைமை வகித்த வாணிதாசன் கவி அரங்கில் கவிதையை எப்படி வாசிக்க வேண்டும் என்பதைத் தமது தலைமைக் கவிதையை வாசித்த முறையிலேயே தெரிவித்தார்.
கவி அரங்கினால் இலக்கிய இரசிகர்களை மெய் மறக்கச் செய்ய முடியும் என்பதை அன்றைய கவி அரங்கு நிரூபித்தது.
கவி அரங்கு முடிந்ததும் மாணவர்கள் அவரை மாணவர் விடுதிக்கு அழைத்துச் சென்று அவருடன் உரையாடி மகிழ்ந்தோம்
பாரதிதாசனுடன் உரையாடும்போது உள்ளூர ஒரு அச்சம் இருந்து கொண்டிருக்கும். வாணிதாசனுடன் நண்பர்களுடன் உரையாடுவது (8UT60 உரையாடலாம். அவர் தமது கவிதை அனுபவம் தி.மு.க. அரசியல் அனுபவம் பற்றி எல்லாம் உரையாடினார்.
கவிதை எழுதும் மாணவர்களுக்கு அறிவுரை கூறும்போது நீங்கள் இங்கே யாப்புத்தவறுமற்ற கவிதை இயற்றுங்கள், யாப்பு இலக்கணம் சிலர் நினைப்பது போலக் கவிதை மாளிகைக்குச் சிறை அல்ல. கவிதை மாளிகைக்கு அத்திவாரம் தான் அது. கட்டடத்திற் காலத்திற்கு ஏற்ற மாற்றங்கள் ஏற்படலாம். ஆனால் அத்திவாரம் அன்றும் இன்றும் என்றும் உறுதியாகவே இருக்கவேண்டும் என்றார்.
đốk2/ẩg)/6ñ, Z.6.2OO9
-50

தமிழ்மலை பண்டிதமணியுடன் முதற் சந்திப்பு
பண்டிதமணி அப்போது புகழின் உச்சியிலிருந்தார். அவரது
சிந்தனைத் திறனும் பேச்சாற்றலும் அவருக்குப் புகழ் சேர்த்தன. அவரது எழுத்தாற்றல் எல்லோராலும் பாராட்டப்பட்டது.
ஈழத்தின் பிரபல வார இதழ்களை அவரது கட்டுரைகள் அலங்கரித்தன. தமிழ் நாட்டிலிருந்து வந்துகொண்டிருந்த கலைமகள் இதழில் அவருடைய கட்டுரைகள் வெளிவந்தன.
அப்போது நான் மகாஜனக் கல்லூரி மாணவன், பண்டிதமணி எழுதிய "பரீட்சை எடாத பண்டிதர்” என்ற கட்டுரை எங்கள் பாடநூலில் இடம்பெற்றிருந்தது. அக்கட்டுரையைப் படித்த எனக்குப் பண்டிதமணியைச் சந்திக்கவேண்டும் என்ற விருப்பம் உண்டானது. மாணவனாகிய எனக்குப் பண்டிதமணியைத் தனியே சென்று சந்திக்கும் துணிவு ஏற்படவில்லை.
ஒருநாள் எங்கள் வீட்டிற்குத் தந்தையாரின் இளைய தம்பியாகிய மட்டுவில் வே.நடராசா அவர்கள் வந்திருந்தார். அவரிடம் எனது விருப்பத்தைத் தெரிவித்திருந்தேன். அவர் அன்றே என்னைப் புலோலியிலுள்ள தனது வீட்டிற்குக் கூட்டிச் சென்றார். மறுநாட் காலை பண்டிதமணியிடம் அவரும் நானும் திருநெல்வேலிக்குச் சென்றோம்.
அப்பொழுது பண்டிதமணி அவர்கள் திருநெல்வேலி ஆசிரிய கலாசாலையில் விரிவுரையாளராக இருந்தார்.
அவருடைய சிவந்த அழகிய தெய்வீக ஒளிவீசும் தோற்றம் எனக்கு மதிப்பை மட்டுமல்ல, பக்தியையும் ஏற்படுத்தியது.
எனது சிறிய தந்தையார் "இவன் எனது அண்ணரின் மகன் மகாஜனாவில் படிக்கிறான்” என்று அறிமுகம் செய்து வைத்தார்.
-51

Page 32
மகாஜனாக் கல்லூரி ஆண்டு இதழில் வெளிவந்த எனது கவிதையைப் படித்ததாகச் சொல்லி கவிதையில் ஒசைச் சிறப்பு இருப்பதாகக் கூறி மேலும் எழுதுமாறு தூண்டினார்.
இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து பண்டிதமணியைப் பலமுறை சந்தித்தேன்.
பண்டிதமணிமேடைப்பேச்சுக்கு ஒரு நடை, கட்டுரைக்கு ஒரு நடை உரையாடலுக்கு ஒரு நடை என வேறுபட்ட நடைகளைக் கையாண்டார். எடுத்துக்கொண்ட விடயத்துக்கு ஏற்றபடி நடையைக் கையாளும் திறமை பண்டிதமணிக்கே சொந்தமானது.
அவரது உரையாடலின்போது தர்மம், நீதி என்ற சொற்கள் அடிக்கடி வரும். அவர் தரும வழியில் வராத பொருளைத் தீண்டமாட்டார். நீதியோடு இணையாத எந்தச் செயலையும் புரியமாட்டார். கற்க-நிற்க என்ற வள்ளுவர் வாக்கில் அசையா நம்பிக்கை கொண்டவர்.
சங்கப் புலவர்களைச் சங்கச் சான்றோர் என்பார்கள். கல்வியையும் வாழ்வையும் இணைத்துக் கொண்டவர்களே சான்றோர்கள்.
பண்டிதமணியின் கல்வியையும் வாழ்வையும் இணைத்துக் கொண்ட சான்றோர் வரிசையில் இடம்பெறுபவர்.
பண்டிதமணியின் காலத்தில் யாழ்ப்பாணத்தில் இலக்கிய விழாக்கள் பல சிறப்பாக நடைபெற்றன.
அந்த விழாக்களில் கலந்து கொண்ட பண்டிதமணி அவர்கள் ஈழத்துக் கவிஞர்கள், ஈழத்துச் சொற்பொழிவாள்ர்கள், ஈழத்து சமயப் பெரியோர்கள் பற்றி எல்லாம் சிறப்பாகப் பேசி அவர்களுடைய பெருமையைப் பொதுமக்களும் அறிந்து கொள்ளச் செய்தார்.
økøyaøyresö, 17.5.2OO9
-52

பேராசிரியர் சு. வித்தியானந்தனுடன்
O 6 ()
கேள்வி : நாட்டுக்கூத்தில் தங்களுக்கு ஈடுபாடு ஏற்பட்டது
எப்போது? எப்படி?
பதில் : 1956ம் ஆண்டு நான் “கலாசார அமைச்சின் தமிழ் நாடகக்
குழு"வின்தலைவராக நியமிக்கப்பட்டேன். அக்காலத்தில் அரங்கேற்றப்பட்ட
நாடகங்களில் நாட்டுக்கூத்து மரபை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
கேள்வி : நாட்டுக்கூத்தை நவீனமயப்படுத்தி மேடையிடுவதில் பெருவெற்றி கண்டிருக்கிறீர்கள். கர்ணன் போர், இராவணேஸ்வரன் முதலிய நாடகங்கள் பெருவெற்றி ஈட்டி உங்களுகுகுப் பெருமை சேர்த்துள்ளன. ந்ாட்டுக்கூத்தை நவீனமயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எப்படி உங்களுக்கு ஏற்பட்டது?
பதில் : மட்டக்களப்பில் நடாத்தப்பட்ட நாட்டுக்கூத்துக்களில் சில குறைபாடுகள் காணப்பட்டன. இவை இரவிரவாக நடைபெற்றன. மக்கள் சிறந்த நடிகர்களின் பாட்டையும் நடிப்பையும் மட்டுமே ரசித்தார்கள். ஏனைய நடிகர்களின் காட்சிகள் வரும்போதெல்லாம் தூங்கினார்கள். அவர்களால் ரசிக்கமுடியவில்லை. இதனால் நாட்டுக் கூத்தின் நாடகப் பண்பு குறைபாடு உடையதாகக் காணப்பட்டது.
கேள்வி : குறைபாடுகளை நீக்கத் தாங்கள் மேற்கொண்ட உத்திகள்?
பதில் : இரவிரவாக நடைபெற்ற நாட்டுக்கூத்தை ஒன்றரை மணித்தியாலத்துக்குச் சுருக்கினோம். அத்துடன் வேறு பல மாற்றங்களையும் செய்தோம். முன்பெல்லாம் அண்ணாவியாரின் மத்தள அடி நடிகரின் குரலை அமுக்கியது. நாடகமேடையிலும் ஒழுங்கு காணப்படவில்லை. நடிகர்களின் உடையலங்காரத்திலும் தோற்றத்திலும் பல முறைகள் காணப்பட்டன. எனவே இக் குறைகளை நிவர்த்தி செய்து நவீனமயப்படுத்தி மக்களைச் சுவைக்கச் செய்தோம்.
-53

Page 33
கேள்வி : பல்கலைக் கழக மாணவருக்கும் நாட்டுக்கூத்துக்கும் ஏற்பட்ட தொடர்பு பற்றி.
பதில் : பல்கலைக்கழக மாணவரைக் கொண்டு நாட்டுக்கூத்தைத் தயாரித்தோம். இதற்கென அண்ணாவிமார் தெரிவு நடைபெற்று, வந்தாறுமூலை அண்ணாவியார் செல்லையா தெரிவு செய்யப்பட்டார். பத்துக்கிழமைப் பயிற்சியின் பின் நாடகங்கள் மேடையிடப்பட்டன. ஒன்றரை மணிநேரமே நடைபெற்ற இந்நாடகங்களை மக்கள் நன்கு ரசித்தார்கள்.
கேள்வி : மேடை அமைப்பில் தாங்கள் செய்த புதுமைகள்? பதில் : கறுப்புத் திரைப்பின்னணி அமைப்பில் நாடகம் தொடர்ந்து நடந்தது. காட்சி மாற்றங்களையும் நாடக மரபுகளையும் மத்தளம் மூலமும் ஏனைய இசைக்கருவிகள் மூலமும் உணரவைத்தோம். இதனால் முதலில் இருந்து கடைசிவரை எதுவகை ரசனைச் சோர்வோ, காட்சி அமைப்புத் தடங்கலோ இல்லாமற் நாடகம் விறுவிறுப்பாக நடைபெற்றது.
கர்ணன்போர் வடமோடி நாடகம். இதனைத் தொடர்ந்து நொண்டி நாடகமாகிய தென்மோடி நாடகத்தை மேடையேற்றினோம்.
என்னைப் பொறுத்தவரை இது கர்ணன் போரிலும் முக்கியம் வாய்ந்ததாகவும் புதிய மெருகூட்டப்பட்டதாகவும் இடம்பெற்றது.
கேள்வி: இவற்றுக்குப் பின் தாங்கள் மேடையிட்ட நாட்டுக்கூத்து?
பதில் : இவற்றுக்குப் பின் இராவனேஸ்வரனை மேடை யேற்றினோம். இந்த நாடகம் முழுவதும் புதிதாக எழுதப்பட்டது. இராவணேஸ்வரன் நாடகம் இராவணனைச் சிறந்த வீரனாக அவன் குண இயல்புகளை விளக்குவதாக அமைந்தது. இந்த நாடகம் பேராதனை, கண்டி, கொழும்பு, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் நடைபெற்றது. இன்று நாட்டுக்கூத்து வலுப்பெற்று வளர்ந்துள்ளது. பெண்கள் ஆண் வேஷம் போட்டு நடிக்குமளவிற்கு இக்கலை மட்டக்களப்பில் பிரபல்யம் பெற்றுவிட்டது.
-54

கேள்வி : பேராசிரியர் கணபதிப்பிள்ளை அவர்கள் நாடகம் எழுதுவதன் மூலமும் தயாரிப்பதன் மூலமும் ஆற்றிய பணிகள் பற்றி.
பதில் : பேராசிரியர் கணபதிப்பிள்ளை உயர் பதவி பெற்றிருந்தாலும் அடிமட்டத்தில் பொதுமக்களின் பிரச்சினைகள் பற்றி நன்கு அறிந்திருந்தார். அதனால் அன்றைய சமுதாயத்தில் நிலவிய சமூகப் பிரச்சினைகள் பற்றி நாடகம் எழுதினார். அவர் மேல்நாட்டில் இருந்தபோது, பேச்சுத்தமிழ், இலக்கியத்தில் பெறவேண்டிய முக்கியத்துவத்தினை அறிந்திருந்தார். அதனால் அவர் லண்டனிலிருந்து திரும்பி வந்ததும் சமூக நாடகங்களைப் பேச்சுத் தமிழில் அமைத்தார்.இவை 1944ம் ஆண்டுக்கு முன் கொழும்புத்தமிச் சங்கத்தின் மூலம் அரங்கேற்றப்பட்டன.
நான் 1946ம் ஆண்டு பல்கலைக்கழக விரிவுரையாளரானேன். அக்காலத்தில் இப்சனின் "நிழல்கள்" நாடகத்தை தயாரித்து மேடையேற்றினேன்.அந் நாடகத்தில் அப்பொழுது எனது மாணவராயிருந்தவரும் இன்றைய தமிழர் கூட்டணிச் செயலாளர் நாயகமுமாகிய அ. அமிர்தலிங்கம் நடித்துப் புகழை உண்டாக்கினார். பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் நாடங்களில் ஒன்றாகிய “பொருளோ பொருள்” என்ற நாடகத்தை மேடையேற்றினேன். பின்னர் பேராசிரியரின் வரலாற்று நாடகமாகிய "சங்கிலி மேடையேற்றப்பட்டது.
1952ம் ஆண்டு கொழும்புப் பல்கலைக்கழகப் பீடம் பேராதனைக்கு மாற்றப்பட்டதும் பேராசிரியரின் நாடகமாகிய “உடையார் மிடுக்கு" மேடையேறிற்று. அப்பொழுது மாணவர்களா இருந்த க. கைலாசபதி, கா. சிவத்தம்பி பிரதான பாகங்கள் ஏற்று நடித்தனர். பின் பேராசிரியரின் "சுந்தரம் எங்கே?", "துரோகிகள்", "தவறான எண்ணம்" ஆகிய புதிய நாடகங்கள் பேராதனை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு போன்ற இடங்களிலும் மேடையேற்றப்பட்டன. இந் நாடங்களில் பேராசிரியர் கையாண்ட பொதுமக்கள் பேச்சுத்தமிழ் மேனாட்டு அறிஞர்களும் தமிழ்ப் பேச்சுவழக்கை ஆராய உரிய களமாய் உதவியது. இன்று பேச்சுத்தமிழில்
-55

Page 34
மேடையிடப்படும் தமிழ் நாடகங்களின் "சாம்பார் மொழி வழக்கிற்கும் பேராசிரியரின் பேச்சுமொழி வழக்கிற்கும் நீண்டதுர இடைவெளிஉண்டு.
கேள்வி : உடுக்குப் பாட்டு, வில்லுப்பாட்டு, கதாகாலட்சேபம்.
பதில் : எமது மக்களிடையே பல ஆண்டுகளாக நிலவி வருவது உடுக்குப்பாட்டு. இன்றும் அளவெட்டி இசைக்கலைஞர் சிதம்பரப்பிள்ளை வயது முதிர்ந்த நிலையிலும் இக்கலையில் பெரிதும் ஈடுபாடு கொண்டு இதனை வளர்த்து வருகிறார். இக்கலை மக்கள் சமய வழிபாட்டோடு இணைந்து வளர்ந்து வருகின்றது. இக் கலையில் ஈடுபடும் இசைக்கலைஞர்களை ஊக்குவது நமது கடமையாகும்.
வில்லுப்பாட்டு அண்மைக் காலத்திலே பலராலும் பேணப்பட்டு வருகிறது. ஆனால் இக்கலையை வளர்ப்பவர்கள் சிலர் எடுத்துக் கொண்ட விஷயத்துக்கு அப்பால் மக்களைக் கவரவேண்டும் என்னும் ஆர்வத்தால் சில விகடத் துணுக்குகளைச் சேர்த்துக் கொள்கின்றனர்.
வில்லுப்பாட்டுச் சமய உண்மையை மக்களுக்கு எடுத்துரைக்கவும் சமுதாயப் பிரச்சினையை வெளிக்கொணரவும் பயன்படுகின்றது. இதே
போலத்தான் கதாகாலட்சேபமும் பயன்படுகிறது.
//g/576 (9-10-1986
-56
 

மன்னு கவிமகாலிங்கசிவம் தந்த பன்னூல் வித்தகர் பார்வதிநாதசிவம்
உயர்குடி நனஉள் தோன்றல் ஊனமில் யாக்கையாதல்
மயர்வறு கல்வி கேள்வித்தன்மையால் வல்லராதல் பெரிதுணரறிவேயாதல் பேரறங் கோட லென்றாங்கு அரிதிவை பெறுத லேடா பெற்றவர் மக்க ளென்பர்” என்னும் "வளையாபதி” கூற்றுக்கமைய குன்றாக்குடி பிறந்த வல்லாளராகவும் கோதில்லாக் கவின் தமிழ்ச் சொல்லாளராகவும் இன்னுரை ஈயும் எழில்மாண் ஒள்ளியராகவும் விளங்கும் புலவர் பார்வதிநாதசிவம் இளநகை மிளிர உரையாடும், தக்காரைத்தகவுணர்ந்து மதிக்கும் தண்ணியர், பன்னூல் தந்த நுண்மாண் குரிசிலர். -
"தக்கார் தகவிலார் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்" என்னும் பொய்யாமொழியாரின் பொன்மொழிக்கமைய நாவலரின் நன் மாணாக்கருள் ஒருவரான மட்டுவில் க.வேற்பிள்ளையின் வழித்தோன்றலான புலவர் பார்வதிநாதசிவம் யாழ்ப்பாணத்தில் எட்டுணையும் வஞ்சமின்றி எழில் கொஞ்சும் மாவிட்டபுரக் கிராமத்தில் குருகவி மகாலிங்கசிவத்திற்கும் அருமைமுத்து என்பாருக்கும் 1936 தை 14இல் மகனாகப் பிறந்தார்.
இவருடைய தந்தையார் மகாலிங்கசிவம் சிறந்த தமிழறிஞர், பன்மொழி அறிவு மிக்கவர். "இவர் வடமொழி, ஆங்கிலம், ஹிந்துஸ்தானி ஹிந்தி, உருது முதலான மொழிகளைக் கைவரப் பெற்றவராகையால் இவர் அறிவு மிக விரிந்து சுடர்கான்று விளங்கிற்று" என இந்து சாதனத்தில் (1941.02.24) துணைப்பத்திரிகாசிரியரால் சிறப்பிக்கப்பட்டவர். மூளாய் சைவப்பிரகாச பாடசாலையிலும் மருதனார்மடம் இராமநாதன்
கல்லூரியிலும்தமிழாசிரியராக கடமையாற்றிய இவர் 1923ல் இருந்துதான்
-57

Page 35
இறக்கும் வரை ஏறத்தாழ 17 வருடங்கள் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் விரிவுரையாளராகவும் பணியாற்றியவர். பன்னிரண்டாவது வயதில் பழனிப் பதிகம் பாடியதால் குருகவி எனவும் அழைக்கப்பட்டவர். “காமாட்சி அன்னை", "புன்னெறி விலக்கு" முதலிய தனிப்பாடல்களின் ஆசிரியரான இவர் சிறுகதை யாசிரியராகவும் சிறந்த பேச்சாளராகவும் விளங்கியவர்.இவருக்குப்பிறந்தநான்கு பிள்ளைகளில்நாலாமவரே புலவர்.
இலக்கண வித்தகள் நமசிவாய தேசிகர் கல்வி கற்பித்த வீமன்காமம் மகாவித்தியாலயத்தில் தனது ஆரம்பக்கல்வியைக் கற்ற பார்வதிநாதசிவம் தன் இரண்டாம்நிலைக்கல்வியைத் தெல்லிப்பழை மகாஜனக்கல்லூரியில் தொடர்ந்தார். அப்போது அக்கல்லூரியில் கவிஞராக, நாடக ஆசிரியராக, பேச்சாளராக விளங்கிய “செ.கதிரேசம்பிள்ளை” ஆசிரியரிடம் யாப்பிலக்கணத்தை முழுமையாக கற்றார். அத்துடன் பாரதியார், பாரதிதாசன் பாடல்களின் இலக்கிய நயங்களையும் அதனியங்களின் செவ்வியல் கூறுகளையும் புலவருக்கு அறிமுகப்படுத்தினார்.
புலவரின்ஆரம்பகால இலக்கிய முயற்சியாக வளர்மதி சஞ்சிகையில் வெளிவந்த கவிதையாக்க முயற்சிகளைக் கூறலாம். யா/மகாஜனக் கல்லூரியிலிருந்து வெளிவந்த கையெழுத்துப் பிரதியான நகைச்சுவை, துணுக்கள் முதலான அம்சங்கள் பலவற்றைக் கொண்ட பல்சுவை இதழாக வளர்மதி வெளிவந்தது. இச்சஞ்சிகைகளில் இவரெழுதிய கவிதைகள் கற்றோராலும் மற்றோராலும் நன்கு மதிக்கப்பட்டன. "Senior School certificate” எனப்படுகின்ற சிரேஷ்ட கல்வித்தரத்தில் பயில்கின்ற பொழுது இவரெழுதிய கவிதைகள் வீரகேசரி, சுகந்திரன் ஆகிய பத்திரிகைகளிலும் வெளிவந்தன.
தெல்லிப்பழை மகாஜனக்கல்லூரியில் இரண்டாம்நிலைக்கல்வியைப்
பூர்த்தி செய்து கொண்டு மேற்கல்விக்காகத் தமிழ்நாடு சிதம்பரம்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். அங்கிருந்த காலத்தில்
வித்துவான் அருணாசலம் பிள்ளை, தண்டபாணி தேசிகர், பேராசிரியர்
-58

அசிதம்பரநாதச் செட்டியார், பன்மொழிப்புலவர்தெபொமீனாட்சிசுந்தரனார் முதலானோரிடம் கொண்ட தொடர்பு அவரின் அறிவுப்புலத்தை நன்கு வளர்த்துக் கொள்ள உதவியது. கல்வி கற்கும் காலப்பகுதியில் பாவேந்தர் பாரதிதாசன் மீது கொண்ட ஆர்வத்தினால் பாண்டிச்சேரிக்குச் சென்று பாரதிதாசனைஅடிக்கடிநேரிலேசந்தித்துஉரையாடிமகிழ்ந்தார்.இத்தொடர்பு 1957ஆம் ஆண்டில் தொடங்கிப் பல்கலைக்கல்வி நிறைவடையும் வரை நீடித்தது. இத்தொடர்பே பார்வதிநாதசிவத்தைச் சமூகப் பிரக்ஞை மிக்க, எழுச்சியும் ஆற்றலுமுடைய, ஆளுமை நிறைந்த நவீன கவிஞனாக உருவாக்கியது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் நெறியைத் தெரிவு செய்து நான்கு வருடங்கள் கற்றுத் தேர்ந்த பின் 1961இல் மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியில் இயங்கிய இராமநாதன் அக்கடமியில் தமிழாசிரியராகஉத்தியோகப்பணியைத்தொடங்கினார்.அக்காலப்பகுதியில் இராமநாதன் கலைக்கழகத்தில் லண்டன் பிஏ வகுப்பு மாணவர்களை அறிவுத்துறையில்தயார்ப்படுத்தினார். இக்கழகத்தில் இவராற்றியதமிழ்ப்பணி விதந்து பாராட்டத்தக்கது. இதனையடுத்து இவரது தமிழாசிரியப் பணிகண்டி புனித அந்தோனியார் கல்லூரியிலும் தொடர்ந்தது. 1978களின் பின் ஆசிரியப்பணியிலிருந்து முற்றாக விலகிய பார்வதிநாதசிவம் அவர்கள் பத்திரிகைத்துறையுடன்தம் வாழ்வை இணைத்துக்கொண்டார்.
1979இல் "ஈழநாடு" என்னும் பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பண்புரிந்த இவர், அங்கு எஸ்.கோபாலரத்தினம் என்பாரது நெருக்கமான தொடர்பினால் பத்திரிகைத்துறையில் நிறைந்த அறிவினைப் பெற்றுக் கொண்டார். கவிதையுள்ளங்கொண்ட பார்வதிநாதசிவம் பத்திரிகைத் துறையில் நுழைந்தமையால் யாவரும் படித்துணரும் வண்ணம் எளிய நடையில் எழுதலானார். திரு.வி.கல்யாணசுந்தரம் அவர்களைப் போல் தமிழாசிரியராகப் பணியாற்றிய அனுபவமும் இவருக்கிருந்தமையால் எளிய நடை கைவரப்பெற்ற வல்லாளராகவும் விளங்கினார். இதனை ஈழநாடு, முரசொலி, சஞ்சீவி இதழ்களில் வெளிவந்த கட்டுரைகள்
-59

Page 36
உறுதிப்படுத்தி நின்றன. எளிமையும் நேரடியாகக் கருத்துக் கூறுதலும் பத்திரிகையின் நடையாக இருப்பதால் பார்வதிநாதசிவத்தின் கட்டுரைகளும் இவ்வகையிலேயே அமைந்தன.
ஈழநாட்டில் வாரமலர் ஆசிரியராகப் பணியாற்றிய காலப்பகுதியில் "அறிவும்அனுபவமும் என்னும் புதிய பகுதியை ஆரம்பித்தார். இப்பகுதியில் இயல், இசை, நாடகம் சார்ந்த பல்துறை அறிஞர்களையும் சாதனையாளர்களையும் பேட்டி கண்டு எழுதினார். பேராசிரியர் சுவித்தியானந்தன், (19.10.1986) சிரித்திரன் ஆசிரியர் செசிவஞானசுந்தரம், கலையரசு எஸ்.சொர்ணலிங்கம் புலவர் சிவானந்தன் (5.10.1986), கலைச்செல்விசிற்பி(12.10.1986) வரதர்(26.1o.1986), வானொலிக்கலைஞர் சக்கடத்தார் ராஜரத்தினம், ஏரிபொன்னுத்துரை (16.11.1986), செங்கை ஆழியான் (14.12.1986). கலாநிதி நா.சுப்பிரமணியன் (28.12.1986), சிவைத்திலிங்கம், கே.எஸ்.ஆனந்தன்முதலானோர் இவ்வகையில் இவரால் பேட்டி கண்டு எழுதப்பட்டவர்கள். அத்துடன் தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் பண்டிதர்வீரகத்தியின் பணி என்றதலைப்பில் பண்டிதரையும்(27.01.1985) பேட்டி கண்டு எழுதியுள்ளார். ஈழத்தமிழறிஞர்களின் அனுபவத்தினையும் ஆளுமைத்திறனையும் வெளிக்கொணரும் வகையில் அமைந்த இப்பகுதி "முரளி”, “சிவம்” என்னும் புனைபெயர்களிலேயே புலவரால் பேட்டி எடுக்கப்பட்டது. பண்டிதர் வீரகத்தியின் பேட்டி மாத்திரம் பார்வதிநாதசிவம் என்னும் பெயரில் புலவரால் எடுக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் வித்தியானந்தனின் ஆரம்பகால நாடகமுயற்சிகள் தொடர்பாகவும் அவரின் சமகால இலக்கியப் பணிகள் தொடர்பாகவும் புலவரால் வினாவப்பட்ட வினாக்கள் பேராசிரியரின் முழுமையான ஆளுமைத்திறனை வெளிக்கொணரும் முயற்சிகளாகும். 1946இல் நிழல்கள் நாடகத்தைத் தயாரித்து அரங்கேற்றியதாகக் கூறும் வித்தியானந்தன் அவர்கள், 1948இல் பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் பொருளோ பொருள், சங்கிலி, உடையார் மிடுக்கு(1952), சுந்தரம் எங்கே?, துரோகிகள்நாடகங்களையும் அரங்கேற்றிய காலப் பின்னணியையும் எடுத்துரைப்பார். அத்துடன் பேராசிரியர் வித்தியானந்தன் தாமே 'இராவணேஸ்வரன்","கர்ணன் போர்"
-60

என்னும் கூத்துக்களை மீளுருவாக்கம் செய்தமையையும் விபரிக்கிறார். வித்தியானந்தன் அவர்களின் ஆரம்ப காலப்பணிகளை நினைவுகூரும் இப்பேட்டி இன்றைய ஆய்வாளருக்கு இன்றியமையாத தகவல்களை
வழங்குகின்றது.
இதனைப் போன்று கலைச்செல்வி சிற்பி அவர்களின் பேட்டியும் முக்கியமானது. செங்குந்தாவிலிருந்து சிற்பியவர்களால் கொண்டுவரப்பட்ட சுடரொளி சஞ்சிகையையே க.பரராஜசிங்கம் (துருவன்) யாழ்நங்கை, பேராசிரியர் சிவச்சந்திரன் முதலானோருக்கு களம் அமைத்துக் கொடுத்தது என்னும் அரியதகவலைப் பரிமாறும் இப்பேட்டி தென்மராட்சிப் பாடசாலைகளில் ஒன்றான உசன் பாடசாலையே அப்பகுதியில் பாடசாலை மட்டத்தில் முதல் சஞ்சிகையை வெளியிட்டது என்னும் தகவலையும் பரிமாறிக்கொள்கிறது. இவ்வகையில் இக்காலப்பகுதியில் இப்பாடசாலை யின் அதிபராக இருந்த சிற்பி அவர்களே "இளந்தளிர்” சஞ்சிகையின் உருவாக்கத்திற்கும் கால்கோளாயிருந்தார். மற்றோரால், குறிப்பாக இன்றைய இளைய தலைமுறையினரால் அறியப்படாத அரிய பலதகவல்களைக்கூறும் இப்பேட்டி இற்றைவரை முழுமையாக அறியப்படாத இலக்கிய மேதைகளையும் அறிமுகம் செய்கிறது.
இவ்வகையில் செஞ்சொற் செல்வர் சிவானந்தன், வானொலிக் கலைஞர் ராஜரத்தினம், நாடகக்கலைஞர் ஏரி பொன்னுத்துரை, பண்டிதர் க.வீரகத்தி முதலானோரின் அனுபவப் பகிர்வுகள் முக்கியமானவை. நவீன ஆய்வுக்கு கால்கோளாய் அமையும் இப்பேட்டிகள்முழுமையாக இனிவருங் காலங்களில் தொகுக்கப்படுமிடத்து ஈழத்துப்பெரியார்களது அறிவு, அனுபவம், ஆற்றல்களைத் தமிழ் உலகம் அறிந்து கொள்ள வழிசெய்யும்
இப்பணியில் மு.வாமதேவனுக்கு வழிகாட்டியாக அமைந்த புலவர் அப்பணியில் அவருயர்வுக்கு ஆதார சுருதியாகவும் இருந்தார். இதற்குத்தக்க எடுத்துக்காட்டாக "அறிவும் அநுபவமும்” பகுதியில் மு.வாமதேவனால் எடுக்கப்பட்ட இசைப்புலவர் சண்முகரத்தினம் (30.11.1986), குறமகள்
-61

Page 37
(9.11.1986) முதலானோரின் பேட்டிகள் அமைகின்றன. ஈழத்து இலக்கிய ஆளுமைகளின் வெளிப்பாட்டுத் திறனை உள்ளது உள்ளவாறு வெளிப்படுத்தியவர் என்னும் வகையில் புலவரின் இடமும் இருப்பும் என்றைக்கும் எப்போதும் நிலைத்திருக்கும்.
இயல்பாகவே கவிதையுள்ளம் கொண்டவராகப் புலவர் இருந்தமையால் ஈழநாடு வாரமலரில் இடம்பெற்ற கவிதைகளும் காத்திரத்தன்மை கொண்டவையாக விளங்கின எனலாம் கலை நேர்த்தி கொண்ட கவிதைகளை முருகையன், கரவைகிழார், ச.வே.பஞ்சாட்சரம், யோ.பெனடிக் பாலன், காரை சுந்தரம்பிள்ளை', 'ஓட்டமாவடி அஸ்ரஃப், க.சச்சிதானந்தன், செ.மகேந்திரன், சிற்பி, 'முருகு, வாகரை வாணன், 'சத்தியசீலன் என ஏராளமான இன்னபிற கவிஞர்கள் எழுதினார்கள். இக்காலப்பகுதியில் ஈழநாடு மரபுக்கவிதைக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரித்தது. யோ. பெனடிக்பாலன், ஓட்டமாவடி அஷ்ரஃப், முதலான கவிஞர்கள் பலரின் புதுக்கவிதையால் ஈழநாடு வளம்பெற்றது எனலாம்.
ஈழநாட்டில் பத்துவருடங்கள் அலுக்காது சலியாது தொடர்ந்து பணியாற்றிய புலவர்நாட்டின்அசாதாரண சூழலால் "ஈழநாடு"மூடப்பட்டதை அடுத்து 1989இல் முரசொலியின் துணையாசிரியராகப் பணியாற்றினார். இக்காலப்பகுதி புலவரின் வாழ்வில் பொற்காலமாகும். புலவரின் வாழ்வில் புலமையையும் இலக்கியச் செழுமையையும் யாவரும் உணரும் வண்ணம் வெளிப்படுத்திய பெருமை முரசொலிச்சஞ்சிகையே சாரும் முரசொலியின் உதவியாசிரியராகப் பணியாற்றிய புலவர் சிறிதுகாலத்தின்பின்வாரமலரின் ஆசிரியராகவும் பணியாற்றினார். கவிதை (ஈழத்துக்கவிஞர் பக்கம்), சிறுவர் பகுதி (பூஞ்சிட்டு), கட்டுரை, சிறுகதை, எனப் பன்முகத்தளத்தில் விரிந்த வாரமலர் இலக்கிய ஆர்வலருக்கு நிறைந்தளவு தீனி போட்டது எனலாம். இவர் சேவையாற்றிய காலப்பகுதியில் முரசொலிப்பத்திரிகை இடைநடுவில் நிறுத்தப்பட 1992இல் உதயன் பத்திரிகையில் தொடர்ந்து பணியாற்றினார். 2002 ஆம் ஆண்டு வரை இப்பணி தொடர்ந்தது. இவர் தொடர்ந்து வாரமலரான சஞ்சீவியில் பணியாற்றிய காலப்பகுதியில் இவரின் பணி
-62

விதந்துரைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தின் இளம்படைப்பாளர் பலரைச் சஞ்சீவியூடாக உலகறிய அறிமுகப்படுத்திய பெருமை புலவரையே சாரும்
மஹாகவி(உருத்திமூர்த்தி) அவர்களால்"எமது எதிர்கால எதிர்பார்ப்பு" எனச் சுட்டி உரைக்கப்படும் பார்வதிநாதசிவம் மரபாலும் புறச் சூழலாலும் பயிற்சியாலும் தமிழ்ப்புலமையாலும் தமிழ்க்கவிதைத்துறைக்குள் காலடி எடுத்துவைத்தவர். மரபுச்சட்டத்துக்குள்ஆழ்ந்த பொருள்மிக்ககவிதைகளைப் படைத்தபார்வதிநாதசிவம்1972இல்வெளிவந்த"காதலும்கருணையும் என்ற நூலினூடாகப் பரவலாக அறியப்பட்டவர். "காதலும் கருணையும் என்னும் குறுங்காவியத்தடன் 21 தனிக்கவிதைகளைத் தாங்கி வந்த இந்நூல், தமிழிலக்கிய உலகில் பெரும் கவனத்தைப் பெற்றது.
இவரின் "காதலும் கருணையும்” என்ற குறுங்காவியம் 64 விருத்தப்பாக்களால் ஆனது. எழில் நிலம் என்ற ஊரில் கல்வி போதிக்கும் குருவின் தூய காதலை விளம்பி நிற்கும் இந்நூல் உயர்ந்த நோக்கும் தியாக சிந்தனையுமுடைய மனித ஆன்மாவின் உன்னத தன்மையை எடுத்துரைக்கிறது. சேவை நலன் கொண்ட பெண்ணுக்காகத்தன்கண்ணை இழந்த குருவினுடைய உயர்ந்த உள்ளம் புலவரால் உயிர்த்துடிப்புள்ள ஓவியமாய் தீட்டப்படுகிறது. பண்டைய மரபின், அகத்திணையின் எச்சமாக எஞ்சிநிற்கும் இக்காவியம் என்றுமே அழியாத மகாசிருஷ்டியாகும்.
புலவருடைய பிறிதொரு நூலான "இருவேறு உலகம் என்னும்நூலும் தூய காதல் ஒழுக்கத்தை பேசும் நூலாகும். 35 விருத்தப்பாக்களாலும் 4 ஆசிரியப்பாக்களாலும் ஆன இக்குறுங்காவியம்சமூக ஏற்றத்தாழ்வுகளால் நிறைவேறாத காதலைப் பேசுகிறது. பண்டைய அகத்திணை மரபிலிருந்து பிறழ்ந்து பெயர் சுட்டிப் பாடப்படும் இக்காதல் ஒரு பாடலில் ஒரு செய்தி என்னும் கருத்து நிலையிலிருந்தும் மாறுபடுகின்றது.
1985இல் வெளிவந்த "இரண்டு வரம் வேண்டும்” 1988இல் வெளியிடப்பட்ட "இன்னும் ஒரு திங்கள்" என்னுமிரு குறுங்காவியங்களும்
-63

Page 38
கூட அகம் சார்ந்த காதலையே பேசும் நூல்களாகும். "கலைஞன் வருகை” முதல் "கேட்டவரம்" ஈறாக 17 உபதலைப்புக்களில் அமைந்த "இரண்டு வரம் வேண்டும்" என்னும் குறுங் காவியம் 126 விருத்தப்பாக்களால் ஆனது. சமூக ஏற்றத்தாழ்வுகளைக் கடந்து நிறைவேறும் உண்மைக்காதலைக் கூறும் இக்காவியம் மனிதநேயத்தோடு சமூக வாழ்வியலைப் பேசுகிறது. தாய்க்குக் கடன் கழித்து வாழ்வதே தன் இலட்சியம் எனக் கூறி வாழும் கல்யாணிப் பாத்திரம் புலவரால் கச்சிதமாகப் படைக்கப்பட்ட கனதியான பாத்திரங்களில் ஒன்றாகும்.
மத்திய தரவர்க்கத்தின் நடப்பியல் வாழ்வியலைப்பாடும் புலவரின் பிறிதொருகாவியம்"இன்னுமொருதிங்கள் ஆகும் 17O விருத்தப்பாக்களாலும் 3 ஆசிரியப் பாக்களாலும் ஆன இக்குறுங்காவியம் சந்தேகம் என்னும் கொடுநோய்க்கிரையான கணவனை அன்பாலும் பரிவாலும் திருத்தும் ஒரு பெண்ணின் மகோன்னத வாழ்வியலைச் சித்திரிக்கிறது.
"தனிமனிதனின் செயலும் பேச்சும் பிறரை எட்டுவனவாக அமையின் அவை சிறந்து விளங்கவேண்டும்” என்னும் கூற்றுக்கமைய குறுங்காவியத்தில் புலவரால் படைக்கப்பட்ட பாத்திரங்கள் இலட்சியத்தன்மை கொண்டவை. மனிதன் பற்றிய உயரிய எண்ணக்கருக்களை விதைக்கவும் அன்புநெறிப்பட்ட அறத்தைப் போதிக்கவும் உருவாக்கப்பட்ட இப்பாத்திரங்கள் 'கஸ்டல் பிளாபர்ட் கூறுவது போல “கடவுளைப்போல் உன்னத தன்மை கொண்டவை. அனைத்து ஆற்றலும் நிறைந்த மகோதயத் தன்மை கொண்டவை".
புலவரின் புறப்பொருள்சார்ந்த குறுங்காவியங்களாகப் பசிப்பிணி மருத்துவன்', 'மானங்காத்த மறக்குடி வேந்தன் முதலானவற்றைக் கூறலாம். பண்ணனின் ஈதலால் இசைபட வாழ்ந்த வரலாற்றைப் பாடும் “பசிப்பிணி மருத்துவன்” “இல்லை என்னும் சொல்லறியான்” முதல் "தன்னிறைவு பெற்ற முல்லையூர்” ஈறாக எட்டுச்சிறுதலைப்புக்களில் பாடப்பெற்றது. 50 எண்சீர் விருத்தப்பாக்களாலான இக்குறுங்
-64

காவியத்துக்குப் "பசிப்பிணி மருத்துவன்” என்ற தொடர் புறநானூற்றில் 173 ஆம் பாடலில் சோழ அரசன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளி வளவனால் கையாளப்பட்டது. இம்மன்னனால் பாடப்பெற்ற பெருவள்ளல் பண்ணனின் புகழைச் சிறப்பித்து பாடும் இக்குறுங்காவியம், "சஞ்சீவி” வாரமலரில் தொடர்ந்து வந்து வாசகள் கவனத்தை ஈர்த்தது. பண்ணனின் ஈகை, வீரம், புகழ் என்பவற்றை உரைக்கும் இந்நூல் தமிழ்நூற்கல்வியின் அவசியத்தையும் எடுத்துரைக்கின்றது. குறிப்பாகப் பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தி நிற்கிறது. “பெண் கல்வியின் அவசியம்" என்னும் தலைப்பின் கீழ் இடம்பெறும்
"கண்ணனைய கல்வியை நீர் பெறுதல் வேண்டும் கற்பதெல்லாம் ஏன் எனவும் அறிதல் வேண்டும். எண்ணரிய நூல் கற்றும் கற்ற கல்வி. பெண்களும்தான் ஆண்களும்தான் கற்றல் வேண்டும் பேசுமுயர் கல்விவழி நிற்றல் வேண்டும்" என்னும் அடிகள் இக்கூற்றின் உண்மைத்தத்துவத்தை வெளிப்படுத்தி நிற்கின்றன.
புறம்பாடும்பிறிதோர்காவியமான"மானம்காத்தமறக்குடிவேந்தன் 21 விருத்தப்பாக்களாலும் ஒரு ஆசிரியப்பாவாலும் ஆனது. சேரசோழ பாண்டிய மன்னருடைய புகழைச் சிறப்பித்துப் பாடும் இக்குறுங்காவியம் முற்றுமுழுதும் பாடாண்திணைப் பாற்பட்டதேயாகும். அஞ்சுதவில்லாத மன்னனின் மதிநுட்பம், அறிவு, சொல் பெரியோரைத் துணைக்கோடல் யாசித்து வந்தவனுக்கு இல்லையென்னாது வழங்கும் கொடைத்திறன், செவ்வழி நடக்கும் செங்கோலாட்சி என்பவற்றை மாசறப் பேசும் இக்குறுங்காவியம் கற்றோரன்றி மற்றோரும் நவிலும் வகையில் பாடப்பட்டது.
செம்மையான யாப்பமைதியைக் கொண்டு புலவரால் பாடப்பட்ட இக்குறுங்காவியங்கள் புதுமைக்கண் கொண்டு எழுதப்படாவிடினும் சொல்லும் முறையால் புதுமை பயப்பன. எளியதமிழால் சீர், தளை
-65

Page 39
தட்டாது புலவர் சொல்லும் முறைமை கற்றோர் மாத்திரமன்றி மற்றோரும் பொருளறிந்து சுவைக்கக்கூடியது. குறுங்காவியங்களை அறுசீர், எழுசீர், எண்சீர் எழில் நெடில் ஆகிய விருத்தப்பாக்களைக் கையாண்டு பாடும் புலவர் தேவையான இடங்களில் அகவற்பாவையும் கையாள்கிறார். நயமிகு, ஓசைநயமிக்க பாடல்களைக் கொண்டதாக விளங்கும் இக்குறுங்காவியங்கள் புலவரின் மதிநுட்பத்திற்கும் கவித்துவத்திற்கும் என்றென்றும் சான்றுபயக்குமென்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
பழமரபில் புதுமைக்கவிஞராகத் தோன்றிய பார்வதிநாதசிவம் குறுங்காவியங்களை மாத்திரமன்றி நெடுங்காவியங்களையும் கற்றோரும் மற்றோரும் சுவைக்கும் வண்ணம் தொடர்நிலைச் செய்யுட்களாக எழுதினார். புலமைவாய்ந்த கல்வி வாணர்களைப் பாடுவதாகவும் பழையதொன்மங்களுக்குப் புத்துயிர்ப்பு அளிப்பதாகவும் அமைந்த இக்கவிதைகள் படிப்போரின் ஆர்வத்தை (Curiosity) தூண்டும் வகையில் சுவைமிக்கதாகவும் கவர்ச்சியுடையதாகவும் அமைந்துள்ளன. பாரதிதாசன் வாணிதாசன் கவிதைளைப் போல் கதைவடிவில் அமையும் "செந்தமிழ்க்காவலனும் செழும்தமிழ்ப் பாவலனும்” ”சிலம்பின் செய்தி" காதலை அங்கு கண்டேன்" முதலான கவிதைகள் எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என்னும் முறைமையிலுள்ளன.
இக்கவிதைகளுக்குள் மிக நீண்ட கவிதை "செந்தமிழ்க் காவலனும் செழுந்தமிழ்ப் பாவலனும்" எனும் கவிதையாகும். புறப்பொருட்கூறுகளுள் விதந்து கூறப்படும் பாடாண்திணை வகையிலமைந்த இக் கவிதை பாரிமன்னனின் வீரம், கொடை, இன்னோரன்ன சிறப்புக்களுடன் அவன் கபிலருடன் கொண்ட உன்னத நட்பையும் எடுத்துரைக்கின்றன.
"வெற்றிதனை உறும்போதும் அறநெறியின் தவறான் வீழ்ச்சியினை உறும்போதும் அறநெறியின் தவறான் உற்றதொரு நெறிநிற்போர் வீழ்ந்தாலும் கூட உடன் வந்தே அறக்கடவுள் தூக்கு மென்பதறிவான்"
-66

எனப்பாரியின் நெறிதவறாத - அறம் குன்றாத ஆட்சியைப் பாடும் புலவர் "பண்பு, கொடை இரண்டும் அவன் உடன்பிறந்தது” எனக் கூறி அவன் சான்றாண்மையை எடுத்துரைக்கின்றார்.
இவ்வண்ணம் புலவரின் தலைப்புக்கேற்றவகையில் "பாரிமன்னன்" செந்தமிழ்க் காவலனாகவே காணப்படுகின்றான். அவ்வண்ணம் போலவே செந்தமிழ்பாவலரான கபிலர், பாரிமீது அன்பு கொண்டபுலவராகவும்பாரியின் பெண்களுக்கு கல்வி ஈந்தவராகவும் பாரி மன்னனின் இறப்புக்குப் பின் அப்புதல்வியருக்கு திருமணம் செய்து வைத்தவராகவும் புலவரால் சிறப்பிக்கப்படுகின்றார். ஈற்றில் மன்னன் மீது கொண்ட அன்பால் புலவர் தன் உணவையும் தண்ணீரையும் நீக்கி வடக்கிருந்து உயிர் நீக்கிறார். பாட்டாலே, பண்பாலே, ஏட்டாலே சிறந்து நிற்கும் கபிலருக்குப் புதிய பரிமாணத்தைக் கொடுக்கும்.இக்கவிதைபண்டைத்தமிழருடைய வாழ்வியலை உயிர்த்துடிப்புடன் காட்சிப்படுத்தும் புலவரின் மிகச்சிறந்த கவிதைகளில் ஒன்றெனலாம்
சிலப்பதிகாரத்திற்கு புதிய வடிவத்தைக் கொடுக்கும் "சிலம்பின் செய்தி பாத்திரங்களின் குறிப்புக்களின் ஊடாகத்தன்னை வெளிப்படுத்தி நிற்கின்றது. சிலம்பு எழுதப்பட்டதன் நோக்கத்தை
"கொடியோர் ஆட்சி நொடியினின் வீழல் ஊழ்வினை என்றும் உயிருடன் தொடரும் பொறியினை வென்ற பொற்றொடியார் தம் கற்பும் சென்வமும் எக்காதிைதும் தேவராலும் தொழப்படும்" என்னும் அடிகள் மிகத்துல்லியமாக விளக்கி நிற்கின்றன. இக்கவிதையில் புலவர் கோவலன், கண்ணகி, நெடுஞ்செழியன் என்னும் மூன்று பாத்திரங்களினூடகவே சிலம்பின் உள்ளகத் தன்மையை எடுத்துரைக்கின்றார். ஒவ்வொரு பாத்திரமும் நேர்த்தியாகவும் நுட்பமாகவும் தீட்டப்படுகின்றன. எடுத்துரைப்புப் பாத்திரங்களாகவே உருப்பெறும் இப் பாத்திரங்கள் எளிய சொற்களுக்கூடாகவே வாசகனுக்கு அறிமுகமாகின்றன.
-67

Page 40
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த மனிதனும் அவனுடைய வாழ்வியல் நெறியும் பாடப்பட வேண்டும். அவ்வாறு பாடப்படும் போதே அம்மனிதனின் உன்னத வாழ்வியலை அறிந்து கொள்ள முடியும். அவ்வகையில் வள்ளுவனையும் அவன் குறளையும் அறிமுகப்படுத்தும் கவிதையே "உலகமெனும் மலையினது உச்சியிலே ஒரு தீபம்" என்னும் கவிதையாகும். இக் கவிதையில் "தெள்ளுதமிழ் தழைத்தோங்கச் சீர்மேவ மனிதகுல உள்ளமெலாம் புனிதமுறக்குறள் நல்கினரே” என வள்ளுவனை அறிமுகப்படுத்தும் புலவர், வள்ளுவரை பெருமான், சீரானர், கவினார் என்று கூறித்துதிக்கின்றார். அத்துடன் கவிவழி நற்குண நற்செய்கை, இல்லறவியல், கல்வியின் மாட்சி, பெண்ணின் பெருமை, அன்புடைமை, ஊழ், குடிமை, முடிமாட்சி போன்றவற்றையும் எடுத்துரைக்கின்றார். இக்கவிதை, குறள்வழி வள்ளுவரின் மாட்சியை எடுத்துரைக்கின்றது.
தமிழுக்குப் புதுநெறியை காட்டிய புலவர்களை நெடிய கவிதையில் பாடியதைப் போன்று நாவலர், பாவேந்தர் பாரதிதாசன், பண்டிதமணி கணபதிப்பிள்ளை, மறைமலை அடிகள், கவிஞர் கதிரேசர்பிள்ளை, அன்புள்ளம் கொண்ட பண்புடைப் பெருமகன் கே.சி. தங்கராஜா முதலான பல்துறை ஆளுமைகளையும் செந்தமிழ்க் கவிதைகளாக வடித்தார். புலவர் பண்டைத் தமிழறிஞர்கள் மீது கொண்ட அதீத அன்பும் அக்கறையும் இக்கவிதைகளில் வெளிப்படுத்தப்படுகின்றன. எவ்வித விதப்பமுமற்று உள்ளதை உள்ளவாறு சொல்லுமிக்கவிதைகள் பெரும்பாலும் தன்மை நவிற்சி அணிக்கூடாகவே வெளிப்படுத்தப்படுகின்றன. 15.07.1984 இல் "ஈழநாடு" வாரமலரில் வெளிவந்த 'தனித்தமிழ் வளர்த்த சான்றோன்" என்னும் கவிதை இதற்குத்தக்க சான்று பகர்கின்றது. "மறைமலை என்ற மாணர்புசேர் அறிஞன் துறைதொறும் தமிழினைத் துாைங்கிடச் செய்தனன் வடமொழி இன்றியும் வர்ைடமிழ்ப்பாவை திடமுறநிற்பாளர் என்னுமோர் சிறப்பை நடைமுறைப் படுத்தினான்.
-68

இக்கவிதையில் மறைமலை அடிகளின் விம்பம் எவ்வித முரணுமற்று நிதர்சனமாகப் பதிவு செய்யப்படுகின்றது. மக்கள் மத்தியில் என்றுமே அமரத்துவம்அடையாதபுலமைச்சான்றோர்களைப் பாடிய இக்கவிதைகளும் நவீன யுகத்திலும் அமராத சிருஷ்டியாகவே தன்னை முன்னிறுத்தும்.
மொழியுணர்வின் இன்றியமையாத தன்மையை உணர்ந்து புலவர் பாடிய பாக்கள்தாய்மொழியாகிய தமிழைத்தழைக்கச்செய்ய அடிகோலியது. இவரின் வாழ்கதமிழ்தமிழ்ப்பாவை, உலக முதன்மொழிஎன்னும்கவிதைகள் தமிழின்மாட்சியைப் பாடுகின்றன.தமிழ்ப்பாவை எனும்கவிதையில்தமிழைப் பெண்ணாகக்கருதும் கவிஞர்அவளைச்செழுந்தேனே","அகமலரில்திகழும் தேனே", "நெஞ்சில் நடந்தின்பம் உதவும் தேனே”, “புவி போற்றும் விழுப்பொருளே” என்றும் போற்றுகிறார். அதே சமயம் "வாழ்க தமிழ்க் கவிதையில்கனிமொழிதனிமொழிகவின்மொழி எனப்போற்றப்படும்தமிழ் அகத்தியனால் வளர்த்தெடுக்கப்பட்ட செய்தியையும் எடுத்துரைக்கின்றது. "வாழ்க" என்னும் வியங்கோளுக்கூடாகக் கட்டுறும் இக் கவிதை கட்டழகு குறையாத தனித்துவ மொழியாகத் தமிழை அடையாளப்படுத்துகின்றது.
மனமெனும் அரூபத்தில் கட்டுறும் "காதல்", மென்னுணுணர்வுத் தளத்தில் புலவரால் பதிவுசெய்யப்படுகின்றது. "எழுத்துக்கு மறுநாள்", "ஈருயிர்கள் இணைந்தன","அஞ்சுகம்துணிந்துவிட்டாள்,"வாராரோ அன்பர், "காதல் நெஞ்சத்தைக் கவர்ந்த காட்சிகள்", "கனவு நனவாமோ", "தலைவன் தலைவி, "நாணமேதடை", "குறும்பாய்நகைத்தான் அவன் வாழி, "பந்தாடும் பாவை", "நீராடல்", "தேன்சிந்தும் செம்மலர்கள்","காதலை அங்கு கண்டேன் முதலான கவிதைகள் அகவுணர்வுத் தளத்திலேயே இயங்குகின்றன. புலவரின் அகம் சார் பாடல்கள் பண்டைய இலக்கியத் தன்மைகளை உள்வாங்கிக் கொண்டனவாகவும் அதேசமயம் இயற்பியல் வாழ்வைப் பிரதிபலிப்பனவாகவும் அமைகின்றன. "ஈருயிர்கள் இணைந்தன" (ஈழநாடு 16.11.1986) என்னும் கவிதை தலைவன் தலைவி கூற்றாக நாடகப் பாங்கில் தன்னை வெளிப்படுத்திக்கொள்வதுடன் பெயர் சுட்டாத காதற்பாவாகவே அமைகின்றது.
-69

Page 41
"உன்னுள்ளத்தை நான் புரிந்தேன் என்னுயிரை ஏற்பாய் உன்னுயிரை ஈடாக என்தனுக்கே ஈவாய் இன்னும் பண்பிறவிகள் நாம் எடுத்தன் செய்வோம் எடுக்கும் பண்பிறவியிலும் ஒன்றாக வாழ்வோம்" எனத் தலைவி கூற்றாக வரும் வரிகள் காதலை மகத்துவமான புனித சிருஷ்டியாகவே பதிவுசெய்கின்றன. அதேசமயம்நடப்பியல் வாழ்வை "காதல் நெஞ்சைக் கவர்ந்த காட்சிகள்” என்னும் கவிதைக்கூடாக பதிவு செய்கிறார். இப்பாடலில்காலைநிதம்துயிலெழுப்பும்அன்புக்குரியவளின்பணிவிடைகளால் மனம்நெகிழ்ந்து தன் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தும் கணவனின் மனையாற்றுகை பிறழ்வின்றித்துல்லியமாக வெளிப்படுத்தப்படுகின்றது.
கலித்தொகைப்பாடல்களை நினைவூட்டிச்செல்லும் கனவுநனவாமோ குறும்பாய் நகைத்தான் அவன் வாழி முதலான கவிதைகளும் குற்றாலக் குறவஞ்சிப் பாடலடிகளை நினைவூட்டிச் செல்லும் பந்தாடும் பாவை எனும் கவிதையும் புலவரின் பண்டைத்தமிழிலக்கியத்திலிருந்த பரிசயத்தைப் புடம் போட்டுக் காட்டுகின்றன. யதார்த்தப் புனைவு, அதீத புனைவு என்னும் இருதளங்களில் இயங்கும் இக் கவிதைகள் புறப்பொருண்மைக் கூடாக அகவுணர்வை வெளிப்படுத்தி நிற்பவை.
ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றிலே குழந்தைப் பாடல்களுக்குத் தனித்துவமானதோர் இடமுண்டு. நல்ல கற்பனையும் சிறந்த உணர்ச்சிகளும் உயர்ந்த நோக்கங்களுமுடைய குழந்தைப் பாடல்கள் ஓசை நயமிக்கதாகவும் குழந்தைகளின் மனதில் பதியத்தக்க வகையிலும் பாடப்படவேண்டும். எளிமை, இனிமை, தெளிவு கொண்ட இவ்வகையான குழந்தைப் பாடல்களைப் பார்வதிநாதசிவம் அவர்களும் பாடியுள்ளார்.
1974 இல் வெளிவந்த "மழலை மலர்கள் தொகுப்பில் புலவர் பாடல்
இடம்பெற்றதைப் போன்று 2008 இல் வெளிவந்த "மகாஜனன் குழந்தைக்
கவிதைகள்” என்னும் நூலிலும் புலவரின் குழந்தைப் பாடல்கள் இடம்
பெற்றுள்ளன. இத்தொகுப்பில் இடம்பெறும் புலவர் அவர்களின் "அழகிய
-70

முயல்", "அம்புலிமாமா", "பள்ளிக்கூடம் செல்கிறோம்" என்னும் பாடல்கள் வாய்விட்டுப் பாடக்கூடிய இனிய ஓசைநயமிக்கனவாக அமைந்துள்ளன. இம்மூன்று பாடல்களும் குழந்தைகளுக்குப் பரிசயமான இயற்கைச் சுற்றுச்சூழலை மையமாகக் கொண்டு எழுதப்பட்டவையாகவே காணப்படுகின்றன. சிறுவர் பாடல்கள் பெரும்மாலும் பதினாறு, இருபது அடிகளுக்குள்ளேயே பாடப்பட்டுள்ளன. குழந்தைக்குரிய மனோநிலையில் பாடப்பட்ட இப்பாடல்கள் குழந்தை இயற்கையை ரசிக்கும் என்பதை மட்டும் உணர்த்தாது, குழந்தைகள் விலங்குகளை நேசிக்கும் என்பதையும்உணர்த்தி நிற்கின்றன. இதற்குத் தக்கசான்றாக "அழகிய முயல்” என்னும் கவிதை விளங்குகின்றது. முயலைப்பிடிக்கவரும்வேட்டைக்காரனைக்கண்டு அஞ்சி மிரட்சியுற்றகுழந்தை உடனேசுதாகரித்துக்கொண்டுதன்தமையனிடம்"ஓடிச் சென்று முயலை நீ உடனே கலைத்து விடுவாயே கேடில்லாத முயலுக்கே உடனே உதவி செய்யண்ணா” என்னும் அடிகள் குழந்தை ஈர நெஞ்சை உள்ளங்கை நெல்லிக் கனியாய் எடுத்துரைக்கிறன. இவை மாத்திரமன்றி புலவரின் ஏனைய மழலைக்கவிதைகளை"ஈழநாடு சிறுவர்பூங்கா" என்னும் பகுதியிலும் காணலாம்.
இன்றைய நடைமுறை யதார்த்த இயங்கியலில் "கலைகலைக்காக” என்னும் கோட்பாடு மறுதலிக்கப்படும் அதேவேளை கலை வாழ்க்கைக்காக என்னும் கொள்கையே வலுவுடையதாகக் காணப்படுகிறது. சமூகத்தோடு தன்னை இணைத்து அதனோடு இயைந்து ஒழுகும் இலக்கிய கர்த்தா சமூகத்தின் அகப்புறப் பொருண்மையில் நிகழும் மாற்றங்களை படைப்பில் கொண்டு வருகிறான். அவ்வகையில்புலவரின் "பணம்எனும்பாவை “எங்கே அவர் "மின்சார வெட்டும் சம்சாரசோகமும்"பாணும் பாவையும்" "மாவைத் தேடி "அபூர்வ வைத்தியர்" வாடகை வீட்டு வாழ்வு" "குளிர்" "தெய்வம் மகிழ்ந்தது" "இல்லக விளக்கு" "மதுவினில் ஒருவன்" முதலான இன்ன பிறகவிதைகளும் சமூக வாழ்வியலைப் பேசுகின்றன. தான் வாழும் சமூகத்தை எவ்வித சிதைவுமின்றி நேர்த்தியாகக் காட்சிப்படுத்தும் இக்கவிதைகள்காலத்தின் குரல்களாக ஒலிக்கின்றன. யாழ்ப்பாண மாந்தரின் நடைமுறை வாழ்வியலையும் அதன்சீர்கேடுகளையும்பாடும் இக்கவிதைகள்
-71

Page 42
எளிமைத்தன்மை கொண்டவை. இயற்பியலினூடாக மனித வாழ்வை அவாவி நிற்பவை. "யாப்பு அமைதிகளைக் கொண்டு உணர்வு பூர்வமாய் எளிமைத்தன்மையுடன் கவிதை பாடும் புலவர்” எனப் பேராசிரியர் கைலாசபதியால்சிறப்பிக்கப்படும் இவர் மரபாலும்கழலாலும்பயிற்சியாலும் தமிழ்ப் புலமை கைவரப் பெற்றவர்.சமூக நோக்குடைய இலக்கிய நெஞ்சின் உடைமையாளன்” எனப் பேராசிரியர் நா. சுப்பிரமணியனால் விதந்துரைக்கப்படுபவர். காலத்தின் தேவைகருதி எளிமைத்தமிழால்நவீன கவிதைக்கும் புதுப்பரிமாணம் வழங்கிய பார்வதிநாதசிவம் இன்றும் என்றும் தமிழ் கூறும் நல்லுலகத்தால் போற்றப்படவேண்டியவர் ஆவார்.
ஈழத்து இலக்கிய உலகில்கவிஞராக நன்கறியப்பட்ட பார்வதிநாதசிவம் 1989 களுக்குப் பின் முரசொலி, சஞ்சீவி உதயன், தினக்குரல் முதலான பத்திரிகைகளுக்கூடாக சிறந்தகட்டுரையாசிரியராகவும்அறியப்படுபவர். மரபு வழித் தமிழிலக்கியங்களில் இருந்த ஆழ்ந்த புலமைப்பரிசியத்தை வெளிப்படுத்தும் இவர் கட்டுரைகள் பேராசிரியர் விசாகரூபன் குறிப்பிடுவது போல்"இன்றைய இளந்தலைமுறையினரும் கவனத்தைக் குவித்துப்படிக்கும் படி மிகவும் எளிமைத்தன்மை கொண்டவை. "பண்டைத்தமிழ் இலக்கியங்களையும் அதன் பாவலர்களையும் எளிமையோடும் யாவரும் இன்புறும்விதத்தில்ரசனையோடும் வெளிப்படுத்திய புலவர்தமிழ்மொழியின் முதன்மையையும் அதன் முக்கியத்துவத்தையும் கட்டுரைகளாகவும் வெளிப்படுத்தி உள்ளார். பார்வதிநாதசிவம் ஐம்பதுக்கு மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ள போதிலும் அவரின் இருபத்திரண்டுகட்டுரைகளே தொகுக்கப்பட்டு தழிழ்ச்செல்வம் என்னும் நூல்வடிவில் வெளிவந்துள்ளன. சங்கத்தமிழையும் வள்ளுவனாரின் குறட்பாக்களின் இனிய நயத்தையும் எடுத்துரைக்கும் இக்கட்டுரைத் தொகுப்பு, தமிழ்ப்பண்பாட்டையும் அப் பண்பாட்டினூடாக விளையும் காதைைலயும் வீரத்தையும் விளக்கி நிற்கிறது. தமிழினப்பற்றையும் தமிழ் மொழிப்பற்றையும் விளக்கி நிற்கும் இந்நூல் கற்போருக்கு மிக்க பயனையுடையது ஆகும்
கவிதையின் இருப்பு அதன் இயங்கியல் தொடர்பாக ஆராயும் "தமிழ்க்கவிதையும் காலமாற்றமும்","இருபதாம் நூற்றாண்டுக்கவிதைநடை
-72

இதுவெனக் காட்டிய மகாகவி பாரதி "தனிப்பாடல் திரட்டில் இனிப்பான பாடல்கள்” முதலான கட்டுரைகள் கவிதை வெளிப்பாட்டு முறைமையை விளக்கி நிற்கின்றன. தமிழ்க்கவிதை காலமாற்றங்களை உள்வாங்கித் தன்னைப் புதுப்பொலிவுடன் வடிவமைத்துக் கொண்டதை எடுத்துரைக்கும் "தமிழ்க்கவிதையும் காலமாற்றமும்" என்னும் கட்டுரை தமிழ் யாப்பின் படிமுறையை புதுக் கவிதையுடன் தொடர்புபடுத்தி ஆராய்கின்றது. இதனைப் போன்று காலத்தின் தேவைக்கேற்ப கவிதை நடையை பொருத்தமாகவும் நுட்பமாகவும் மாற்றியமைத்த பாரதியாரின் முழுப்பரிமாணங்களையும் வெளிப்படுத்தும் "இருபதாம் நூற்றாண்டுக் கவிதைநடை இதுவெனக் காட்டிய பாரதி என்னும் கட்டுரை யாப்பின் வழி பாரதியை அணுகுகிறது. இலக்கண நுட்பம் நிறைந்த வெண்பாவை எளிமையாகப் பாரதி கையாண்ட தன்மையை விளக்கும் புலவரின் மதிநுட்பமும் இங்கு விதந்து போற்றத்தக்கது.
யாவரும் விரும்பி வாசிக்கும் வண்ணம் எளிய உரையைக் கையாளும் புலவர் நூலை நுவல்லோனுக்கு இலக்கிய ஈர்ப்பை ஊட்டுவதற்காக இரசனைக்குரிய காட்சிகளை கட்டுரைக்குள் உள்வாங்கி வெளிப்படுத்துகிறார். கட்டுரைக்குள் நுழைபவனுக்கு மேலதிக விளக்கமாக அமையும் இப்பகுதிகள் கட்டுரையை நிகழ்வறிந்து பொருளறிந்து என்றுமே மறக்காவண்ணம் நினைவுபடுத்திக்கொள்ள உதவும். தமிழறியாக் காவலரும் தன்மானப்பாவலரும்', 'ஈத்துவக்கும் இன்பம்', 'இன்பத்துள் இன்பம் இலக்கிய இன்பம், முதலான இன்ன பிற கட்டுரைகளும் இவ் வகையிலமைந்துள்ளவையே ஆகும் ஆசிரியத்துறையில் குறிப்பாகத் தமிழ்த்துறையில் வாண்மையை விருத்தி செய்து கொள்ள இக்கட்டுரைகள் உதவும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
திருவள்ளுவர், இளங்கோ, பெருஞ்சித்திரனார், ஒளவையார், கபிலர், பாரதி, பாரதிதாசன், முதலான கவிஞர்கள் பலரிடம் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர் புலவர். ஆகையால் இப்பாவலர்களே அன்னாருடைய கவிதையில் ஆட்சிமை பெற்றது போல புலவருடைய கட்டுரைகளிலும்
-73

Page 43
முக்கிய வகிபங்கினை பெற்றுள்ளார்கள். திருவள்ளுவர் காட்டும் காதல் வாழ்வு' என்னும் கட்டுரை பண்டைத்தமிழர் வாழ்வியல் நெறியை நடைமுறைவாழ்வியலோடு இணைத்துப் பேசுகிறது.
கணவன், மனைவி கருத்தொருமித்து வாழ்தலை "இன்சொல்”, "அன்புடைமை" க்கூடாக ஆராயும் புலவர் தன் கருத்துக்கு உறுதிபயக்கும் வகையில் ஒளவையார், கவிமணி தேசியவிநாயகம்பிள்ளை முதலானோரின் பாடல்களை ஆதாரம் காட்டி விளக்குகிறார். குறளின் விளக்கத்துக்காகப் பின்னிணைப்பாக உபகதைகளும் கட்டுரைகளும் இணைக்கப்படுகின்றன. இம்முறை பாரம்பரிய கல்விமுறைக்கூடாக புலவர் பெற்றுக் கொண்ட அநுபவங்களின் விளைவே எனலாம். "குறுந்தொகைச் செல்வம்” என்னும் நூலில் சாமி சிதம்பரனாரும் இவ்வழியிலேயே உரையெழுதிச் செல்வதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
"பாத்திரப்படைப்பில் இளங்கோவின் சாதனை” “இளங்கோவின் கவிச் சிறப்பு", "இளங்கோவும் சேக்ஸ்பியரும் பாத்திரப்படைப்பில் கையாண்ட இரு வேறுபட்ட உத்திமுறைகள்” “காப்பியம் தரும் சிலம்ப்ம் கதையில் வரும் நெக்லெஸ்லிம்” என்னும் கட்டுரைகள் இளங்கோ அடிகளாரின் கவித்திறனை முழுமையாக ஆராயும் கட்டுரைகளாகும். நிறைந்த அறிவும் பல்துறை ஆளுமையும் கொண்ட இளங்கோ அடிகளாரைச் சேக்ஸ்பியருடன் ஒப்பிட்டு ஆய்வது புலவரின் ஆங்கில அறிவுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு எனலாம்.
பாரதியாரைப் போலவே பாரதிதாசன் மீதும் புலவர் அன்பு கொண்டவர். பாரதிதாசனோடு நெருங்கிப் பழகிப் பழகி நுண்ணறிவை மேலும் புடமிட்டுக் கொண்டவர். பாரதிக்கு தாசனெனத் தமை உரைத்துக்கொண்டவர். பார்வதிநாதசிவத்தால் போற்றப்பட்ட பாவேந்தர் "குருவைப் போற்றிய புதுமைப்பாவலன், "காதலுக்கு விளக்கம் கூறிய கவின் மிகு இலக்கியங்கள்” எனப் புலவரின் பல்வேறு கட்டுரைகளிலும் சிறப்பிக்கப்படுகின்றார். புலமைசார் அறிவுடையோர் நூல்களைப்
-74

போற்றிப் படித்தின்புறுவதோடு நில்லாது அதனை உள்ளது உள்ளவாறு வெளிப்படுத்தும் புலவரின் கட்டுரைகள் காலத்தால் அழியாத சஞ்சீவியாய் என்றும் நிலைத்து நிற்பவை.
தாம் எடுத்துக்கொண்ட பொருளுக்கு முக்கியத்தவம் கொடுத்துப் புலவரால் எழுதப்படுகின்ற கட்டுரைகள் எளிமைத்தன்மை கொண்டவை. அதேசமயம் பன்முகத் தன்மை கொண்டவை. நீண்ட தொடர்களாக அமையாது சிறுசிறு வாக்கியங்களுக்கூடாக வெளிப்படும் புலவருடைய கட்டுரைகளில் ஓரிரு ஆங்கிலச்சொற்களையே அரிதாகக் காணமுடிகிறது. பெயரளவில் வடமொழிச்சொற்களைக் கலந்து கட்டரைகளைப்புலவர் எழுதினாலும் அச்சொற்கள் வாசகனையே கட்டுரையையோ எள்ளளவும் பாதிக்கவில்லை. எடுத்த பொருளைக் குறித்த நோக்கில் சொல் நேர்த்தியுடன் எளிமையாகப் புலப்படுத்த புலவருக்குப் பத்திரிகையில் பணிசெய்த பழுத்த அநுபவம் காரணமாயிற்று எனலாம். இதனைப் பத்திரிகையாசிரியராகவும் சிறந்த பேச்சாளராகவும் விளங்கிய பாரதி, பாரதிதாசன், திரு.வி.க, பெரியார் முதலானோரிடமும் காணலாம்.
ஆழ்ந்த சிந்தனையும் அகன்ற கல்வியும் பன்மொழிப்புலமையும் கொண்ட பார்வதி நாத சிவம், பண்டிதர் வ.நடராஜா கூறுவதுபோல் "கவிதைகளில் தனி முத்திரை பதித்தவர். கட்டுரைகளில் தனக்கெனத் தனித்துவத்தைப் பேணியவர். குலவித்தை கல்லாமற் பாகற்படும் என்பதற்கமைய அவரிடம் தமிழ் அடிபணிந்து சேவகம் புரிந்தது. புகழும் வேண்டாப் புகழாளராய் விளங்கிய பார்வதி நாத சிவம் தன்னலமும் தன்குடும்பத்தினலமும் பேணாது வாழ்ந்தார். மன்னலமே என்றும் மதித்தொழுகும் நன்னலம் என வாழ்ந்த இப்பெரியார் உடல் மூப்பு தள்ளாமையிலும் தமிழ்ப்பணி செய்து வாழ்பவர். அவ்வகையில் அவர் முன்னோர் செய்த தமிழ்ப்பணி அரிதிலும் அரிதென நான்காவது தலைமுறையான அவர் புதல்வர் மகாலிங்கசிவம், இளங்கோ, பாலமுரளி முதலானோராலும் முன்னெடுக்கப்படுகின்றது. 1987.08.01.1987.08.07 ஈழநாடு சிறுவர் மஞ்சரிக்கூடாக முறையே அறியப்பட்ட மகாலிங்கசிவம்
-75

Page 44
(வண்ணமலர்கள் நாம் ஆவோம்-கவிதை) பாலமுரளி (உழவுத்தொழில்கவிதை)ஆகியோரின் இலக்கியப்பணிகள் மகாஜனன் குழந்தைக் கவிதைகள், மகாஜனன் கவிதைகள் என இற்றைவரை தொடர்ந்து செல்கின்றன.
தமிழுக்கென்றே தம்மை இறைவன் படைத்தனன் என உளங்
கூர்ந்துரைத்து அப்பணிக்கே தம்மை முழுதுற ஒப்படைத்த உரவோர் வையத்தில் என்றும் உயர்வர். இனிது வாழ்ந்து என்றென்றும் இருப்பர்.
-76


Page 45


Page 46
உரையாசிரியர்
86. Das வருகின்ற கவி றாவது விருட் ம.பார்வதிநாதசி
9600jGOTTOGOGDM 16565606Déjd இவர் மரபுக் கவிதை, இலக்கி துறை எனப் பல துறைகளில் பருத்திவருபவர். இவரது ஆ தமிழ்ச்செல்வம் என்னும் கட் இது வரை வெளிவந்துள் மலரான பார்வதிநாதம் வெளி
ܓܠ ܐ
சாகித்தியமண்டலப் பரிசுடன்
சுடர்விருதுகள், 2012ஆம்
மட்டுவில் வே நடராசா தபால் அதிபர்
ANDRAISIGRDA. erNERS Pg02222892.9
 

ம.க. வேற்பிள்ளை, குருகவி ங்கசிவம் எனத் தொடர்ந்து பாரம்பரியத்தின் மூன் சமாக விளங்குபவர் புலவர்
ழகத்தில் புலவர் பட்டம் பெற்ற யக் கட்டுரைகள், பத்திரிகைத் தனது ஆளுமையை வெளிப் கவிதைத் தொகுதிகளும் ரைத் தொகுப்பு நூல் ஒன்றும் ன. 201இல் பவளவிழா LúLIĽL-gl.
கலைஞானச்சுடர், கலைச் ஆண்டுக்குரிய கவிதைக்கான
ம் இவர் பெற்றுள்ளார்.