கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மானம் காத்த மறக்குடி வேந்தன்

Page 1

݂ ݂ ݂ ݂
* ο
݂ ݂ ݂ ݂

Page 2


Page 3

ഗ്നൂ காத்த மலுக்குடி2ேத்தன்
|
"

Page 4
நூல் : மானம் காத்த மறக்குடி வேந்தன்
விடயம் : கவிதை
ஆசிரியர் : புலவர் ம.பார்வதிநாதசிவம்
உரிமை : ஆசிரியருக்கு.
முதற்பதிப்பு !,ങ്ങി 2006
வெளியீடு கலை இலக்கியக் களம், தெல்லிப்பழை
அச்சுப்பதிப்பு கரிகணன் பிறிண்டேர்ஸ்,
காங்கேசன்துறை சாலை, யாழ்ப்பாணம்
பக்கங்கள் : 68
விலை : 150/-
Title : Manam Kaththa Marakkudy Venthan
Subject : Collection of poems
Author : M. ParVathinathasivam
Copyright : Author
First edition: July 2006
Printing : Harikanan Printers,
K.K.S. Road, Jaffna.
Pages : 68
Price : 150/-


Page 5

மானம் காத்த மறக்குடி வேந்தன் 03
மறைந்த எனது துணைவி திருமதி.பா.பரமேஸ்வரி அவர்களின் பாதாரவிந்தங்களுக்கு இந்நூல்
gFLDITLJLJ 600TLD.

Page 6
04|புலவர் ம.பார்வதிநாதசிவம்
அணிந்துரை
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் ஆகுல நீர பிற
என்ற வள்ளுவர் வாக்குக்கு ஒரு வாழும் உதாரணம் பார்க்க வேண்டுமா? புலவர் ம.பார்வதி நாதசி வம் அவர்களைப் பாருங்கள் என்று துணிந்து கூறுவேன். பேரறிஞர் மகாலிங்கசிவம் அவர்கள் வளர்த்த வளர்ப்பு குடும்பத்தில் பெற்றுக் கொண்ட ஆளுமை - பொருத்தமான கல்வி - சிறந்த அறிஞர்களின் நூல்களுடன் தொடர்ந்த பரிசயம் இவற்றின் மொத்த விளைவு அது.
எரிக் எரிக்சன் என்ற உளவியலாளர் பேசுகிற - உளசமூகப் படிநிலை விருத்தியின் பால் வந்த அந்த நிறைவான முதுமையை யாரிடம் பார்க்கலாம்? திரும்பவும் புலவர். ம.பார் வதிநாத சிவம் என்ற விடையையே திருப்தியுடன் கூறும் என் மனம்,
குழந்தைப் பருவத்தில் குடும்பத்தில் ஏற்படுத்தப்பட்ட நம்பிக்கை, முன் பிள்ளைப் பருவத்தில் பாதுகாக்கப்பட்ட தன்னாட்சி, பிள்ளைப் பருவத்தில் பேணப்பட்டதன் முனைப்பு, கட்டிளமைப் பருவத்தில் மகாஜனக் கல்லூரித் தமிழாசிரியர் கவிஞர். செ.கதிரேசர் பிள்ளை போன்றவர்களால் தட்டிக் கொடுக்கப்பட்ட அடையாளம் காணுதல், இளமைப் பருவத்தில் பாரதிதாசன் போன்ற உயர்ந்த கவிஞர்களுடன்

மானம் காத்த மறக்குடி வேந்தன் 05
மனதால் நெருங்கிய உறவு கொள்ளுதல், மத்திய வயதில் சாகித்திய விருதைப் பெறும் தரத்தில் பல கவிதைத் தொகுதிகளை உருவாக்குதலுடன் கூடிய ஆக்கத் திறன் விருத்தி, என்று தவறாமல் எரிக்சனின் நேர்ப் பார்வையில் வந்து, இன்று உன்னதமான முதுமைக் காலத்திலும், "மானம் காத்த மறக்குடிவேந்தன்" என்ற இந்த நூல் படையலாகிறது.
புலவர் அவர்களையும் அவரது குடும்பத்தினரையும் அவர்கள் மயிலங்கூடலிலும் நாங்கள் விழிசிட்டியிலும் வாழ்ந்த அந்தக் காலத்திலிருந்தே எனக்கு நன்கு தெரியும். அன்று முதல் இன்று வரை தோற்றத்தில், பேச்சில், நடை உடையில் - பட்டுப் புடைவை போன்ற ஒரு மிருதுத்தனம் அவரிடம், அதுதான் ஏனைய உயிர்களின் விசேட கவனத்தைப் பெறும் அவரது தனித்துவ ஆளுமை,
பையினில் ஒருவன் நல்ல பணமுண்டோ என்று பார்க்கக் கையினை விட்டான் நானோ கருணை யோடவனைப்
பார்த்துப் "பொய் சொல்லேன் தம்பி பஸ்ஸில் புகும் போதே
உன்றன் அண்ணன் பையினில் இருந்த தெல்லாம் பண்புடன் எடுத்தான்"
என்றேன்.
என்பது அவரது ஒரு கவிதை. இது நகைச்சுவை உணர்வுடன் சொல்லப்படுவது போலத் தோன்றினாலும் உண்மையிலுமே ஒரு கள்வனையும் கருணையோடு
பார்க்கக் கூடிய ஆரோக்கியமான உள்ளம் அவருடையது.

Page 7
06 புலவர் ம.பார்வதிநாதசிவம்
உலகில் அறிவாளிகள் பலர் உள்ளனர். கவிஞர்களும் நிறையவே உள்ளனர். எழுத்துக்கும் எழுதியவனுக்கும் நிறையவே வேறுபாடு இருப்பதும் சகஜம். "எழுத்தாளன் வெறும் காட்டி மட்டுமே. தான் எழுதியது போல் அவன் வாழவேண்டு மென்பது அவசியமில்லை" என்று விவாதிப்பவர்களும் உள்ளனர். இந்த நிலையில்தான் வாழ்வின் ஒவ்வொரு அடியையும் மிகக் கவனமாக, அர்த்தத்தோடு நகர்த்தி, வாழ்வியலை உயிர்ப்படையச் செய்த, மனிதர்களாய் வாழும் புலவர்கள் மிகுந்த முக்கியம் பெறுகின்றனர்.
மனிதனாகப் பிறக்கிறவன் அதி மனிதனாக இருக்க வேண்டும் என்கிற பிரக்ஞையோடு அதற்கான வாய்ப்பாக இந்தப் பிறவியைப் பயன்படுத்திய கார்ல் றோஜேர்ஸ் (Carl
Rogers) (BL 13hdp), "Fully Functioning Personality" 9,5 வாழும் புலவர் அவர்கள் எமது விசேட அவதானிப்பைப் பெறுகிறார்.
மனச்சாட்சி உரத்துப் பேசும் - Supereg0 வலுப் பெற்றதிறந்த மனத்துடனும்,பரந்த அறிவுடனும், சொர்க்கத்தின் பேரழகாய்ப் பரிணமித்த இந்தக் கலைஞர் தற்புதுமை, விரிந்த சிந்தனை, உள்ளுணர்வு மேதாவிலாசம், புதியது காணல் ஆகிய பண்புகளோடு கவிதைகளைத் தருகிறார். தமிழ் பற்றிய அவரது கவிதைகள் விரிசிந்தனைக்குச் சிறந்த எடுத்துக் காட்டுகள்.

மானம் காத்த மறக்குடிவேந்தன் 07
"கனி மொழியே, தனி மொழியே, கவின் மொழியே." என்று தெ டங்கி, "புது மொழியே, மது மொழியே, பழ மொழியே வாழ்க.." என்று முடியும் வரை அந்தச் சிறப்பை ரசிக்கலாம். "கனி மொழியே என்ற இந்தக் கவிதை என்னைப் பெருமளவு கவர்ந்ததால், நான் எனது மேடைப் பேச்சுக்களில் இந்தக் கவிதையைத் தமிழ்த்தாய் வணக்கமாகக் கூறி எனது பேச்சை ஆரம்பிக்கும் வழக்கைச் சில வருடங்களாய்க் கொண்டிருக்கிறேன்.
"விண்ணக அமுதம் ஈதென விளக்கும் விதத்தினில் அமைந்த கவிதைகள் படைக்கும் கற்பனை மலிந்த பொற்பமை கவிஞன்"
என்று தம் ஆசிரியர் கவிஞர் செ.கதிரேசர் பிள்ளை அவர்களைப் பாடும் புலவர் (அவர் எனக்கும் தமிழாசிரியர்) தானும் கவிதை பாடுவதிலேயே சொர்க்கம் கண்டவர். உலகத்தில் இன்பத்தை எவ்வாற பெறலாம்? மதுவைத் தேடுவோர் சிலர். புகையை ஊதுவோர் சிலர், போதைப் பொருள்களை நாடுவோர் சிலர். செல்வம், புகழ், அதிகாரம் ஆகியவற்றைத் தஞ்சமென அடைவோர் மிகப்பலர் ஏறத்தாழ எல்லோரும் அற்புதமான படைப்பாற்றல் பரவச அநுபவத்தைத்தரும் என்ற விஞ்ஞான உண்மையைத் தெரிந்து கொண்ட சிலர், படைப்பாளிகளாக வெளிக் கிளம்புகின்றனர்.

Page 8
()8 புலவர் ம.பார்வதிநாதசிவம்
நல்ல கவிதையின் கருத்திலே ஒரு நாடுகடந்த, மொழி கடந்த தன்மை இருக்கும் என்பார்களே! உதாரணம் வேண்டுமா? இதோ,
கிரேக்கத்தில் முன்னொருவர் சிந்திப்பீர் என்றார் "கீழ் விழுவீர் நாவடக்கும்' என்றார்கள் சிலரே "கிரேக்கத்தின் நன்மைக்கே சிந்திக்கச் சொன்னேன் கீழ் வீழும் நிலை வரினும் அஞ்சேன் நான்' என்றார். எழுத்தாளன் என்பவன் புலன்களால் விடயங்களை உள்வாங்கி உணர்வுகளை அர்த்தத்துடன் வெளிவிடுபவன். "அர்த்தம்" என்பது அறிவுசார் உண்மைகள் என்று கொண்டால், இன்று வரும் கவிதைகளில் எத்தனை 'தேறும் என்பது கேள்வி. புலவர் அவர்களின் கவிதை ஒன்றைப்
LITs (SUITLö.
வீட்டினிலே அன்பெனும், விளக்கொளியில் வாழ்பவனே நாட்டினர்க்கும் அன்பு செய்வான் நல்லறத்தைப் பேணிடுவான் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் போதுதான் பிள்ளைகள் ஆரோக்கியமாய் வளருகின்றனர். வீட்டிலே பெற்றோர்களால் வழங்கப்படும் "அன்புத் தேவை அவற்றில் முக்கியமானது. பின்னாளில் அறங்காக்கும் ஆளுமையும், பிறர் மீது அன்பு செய்யும் பண்பும் ஆரோக்கியமான குடும்பங்களில் இருந்தே உருவாகிறது.

மானம் காத்த மறக்குடிவேந்தன் 09
பெற்றோர் இல்லாத குடும்பம், முறிந்த குடும்பம், பிரிந்த குடும்பம், விவாகரத்துப் பெற்ற குடும்பம் ஆகியவற்றில் இருந்து வரும் பிள்ளைகளே பெரும்பாலும் ஆக்ரோஷ வெளிப்பாடுகளைக் கொண்டவர்களாயும், நடத்தைசார் உளப்பிரச்சினைகளைக் கொண்டவர்களாயும் ஆகின்றனர் என்ற உளவியல் உண்மைகளை இந்த நாலு வரி அழகாய், அற்புதமாய், செட்டும் செறிவுமாய்ச் சொல்லி நிற்கிறது.
கவிதையின் வாகனம் மொழி. அது கண் மூலமும் காது மூலமும் எம்மைப் பிணிக்கும். பிடிக்கும். புலவரின் கவிதைகள் யாப்பு வழி நின்று காது மூலம் உரமாகப் பிணிப்பவை.
திங்களின் அழகென்றாலும்
திகழ்மலர் அழகென்றாலும் செங்கதிர் அழகென்றாலும்
செழும் புனல் அழகென்றாலும் இங்கவை கவிதை என்னும்
எழிலுறுவடிவில் வைப்பான் என்று பொதுவாகக் கவிஞன் பற்றிக் காதையும் கண்ணையும் பிணிக்கும் படி அவர் கூறுவது அவருக்கே மிகவும் பொருந்தும்,
கலைப் படைப்பின் நோக்கம் எப்போதுமே மனித இதயங்களைச் சீர் செய்வதாக இருத்தல் சிறப்பு.

Page 9
10 புலவர் ம.பார்வதிநாதசிவம்
"மிகத் திறமை மேவிடினும் சாவேதான் வரினும் வுெமுயர் கருத்துரைக்க அஞ்சேன் நான் என்றார்"
"தலைவன் தலைவிக்குத் துரோகம் இளைக்கையில் இல்லற வாகனம் பள்ளத்தில் வீழும்"
போன்ற இடங்களில் இச்சிறப்பைப் பார்த்துமகிழலாம்.
நல்ல கவிதை நாடகம் போல வரும், காட்சிகள் எமது அகக்கண்ணில் தெரியும். தெரிகிறதா? பாருங்கள்.
"பட்டாணிக் கடவையுண்டு சுவைமிகுந்த
பருப்புண்டு மணிக்கடலையுண்டென்றங்கே
கட்டான உடலசையக் கடலைப் பெட்டி
கையினிலே கொண்டங்கு சிறுமிவந்தாள்
எட்டேதான் வயதென்று தோற்றம் காட்ட
இடையிலுள்ள கந்தை அவள் வறுமை காட்ட."
கவிதை என்பது ஒரு மொழியின் ஓசைகளையும் சொற்களையும் படிமங்களையும் பயன்படுத்தி ஓர் உணர்ச்சியை வெளிப்படுத்தும் இலக்கிய வடிவம் என்றால், "தாம் பிறந்த மண் பிரியும் துன்பத்தில் துன்பம் தரையினிலே ஒரு போதும் மானிடர்கள் காணார்' என்பது சிறந்த கவிதை வரி எனச் சொல்லுதல் எப்படித் தவறாகும்?
இவரது கவிதை மொழி, கவிதைக்குரிய இனிமை யோடு வாசகனைத் தன்னோடு லயிக்கச் செய்யும் மொழி.

மானம் காத்த மறக்குடிவேந்தன் 11
தான் சொல்ல வந்த மையத்திலிருந்து ஒரு போதும் பிறழாமல், நெருடல் இன்றிப் பிசிறு தட்டாமல் வரும் இயல்பான, அழகான மொழி.
மொழிக்கும் அப்பால் இவரது நடையிலே ஒரு மின்னல், ஒரு கம்பீரம் எப்போதும் இருக்கும் - லேசாகச் சிரித்துக் கொண்டே வாசித்து முடித்து விடலாம். வாசித்து முடிக்கும் போது 'என்ன சொல்கிறார் என்று புரியும். நெற்றியைச் சுருக்கி, கண்ணை விரித்து "என்னடா இது, ஒன்றுமே புரியவில்லையே" என்றுதலை உடைக்கத் தேவையில்லை.
"பாரியது தேர் பெற்ற முல்லையினைப் பார்த்தார் படர்ந்த கொடி தேர் இருந்தும் வாடியது பார்த்தார் பாரியது பிரிவை இந்த முல்லை அறிந்துளதே பாரிலிது புதுமை என அழுதபடி தொழுதார்"
என்ன சொல்கிறீர்கள்? நான் சொல்வது உண்மையா 36)6O)6)u IT?
நல்ல கவிதையில் எழுதப்பட்டதை விட எழுதப்படாத வரிகள் அதிகம் என்பர். வாசகனின் சிறிது நேரச் சிந்தனைக்குப் பின் அவற்றை நிரப்ப முடியும். இவற்றை 'அநு
6) Isld, 6ir 6T6016) TL.f. (Metastatements) (BLD(86) SIT'LiLL வரிகளில் அந்த உன்னதமும் உண்டு.
ஒரு நாட்டிலே கொடிகளே வாடிவிட்டன என்றால், அங்கே மனிதர்கள் செயலிழந்து நின்று விட்டார்கள் என்பது

Page 10
12|புலவர் ம.பார்வதிநாதசிவம்
சர்வ நிச்சயம். பிறகு ஆண்கள் அழுதார்கள், பெண்கள் குழறினார்கள், குழந்தைகள் சாப்பிடவில்லை, பசுக்களின் கண்ணிலும் நீர் வடிந்திருந்தது என்றெல்லாம் சொல்ல வேண்டியதில்லை. அது வாசகனுக்குப்புரியும்.
ஒரு இழப்பின் போது, இறந்தவரால் உதவி பெற்றவர்களே அதிகம் வருந்துவது இயல்பு, நரம்புத் தொகுதி இல்லாத முல்லைக் கொடியே இழப்புத் துயரைக் காட்டுகிறது என்றால் மனிதர்கள் எவ்வளவு வருந்தியிருப்பர் என்பது தெளிவுறும்.
நல்ல கவிதையின் உணர்ச்சியை வாசகன் எப்போ தாவது தன் வாழ்வில் வேறு வடிவத்தில் உணர்ந்திருப்பான்.
சிறுமியராய்த் தந்தையுடன் தாம் உலவி வந்த சிறு வீதியினைக் கூடச் சென்று நின்று பார்த்தார் சிறுமியராய்த் தாய் மடியில் தாமிருந்ததான தெய்வநிகர் தாயினது திருப்படத்தைப் பார்த்தார்
நான் இப்போது பாரி மகளிருடன் இல்லை. விழிசிட்டியிலே அப்பாவுடன் உலவி வந்த சிறுவீதி - அங்கே நிற்கிறேன். அம்மாவின் மாலையிட்ட திருப்படத்தை ஒரு முறை பார்த்துக்கொள்கிறேன். ஏனெனில் நான் படித்தது கவிதை.
புலவரும் தன் அம்மாவின் திருப்படத்தைப் பார்த்திருக்கலாம். அனுபவ வார்த்தைகளை அவர் கைவசத்தில் கொய்து வைத்துள்ளார். அணிந்துரையை
அதிகம் நீட்டி என் செய? Becon சொன்னார்' கல்வி என்பது

மானம் காத்த மறக்குடி வேந்தன் 13
ஆற்றைப் போன்றது . ஆழம் கூடினால் அமைதியாகும்" புலவர் ம. பார்வதிநாதசிவம் அவர்கள் மிக அமைதியானார். ஆனால் அபரிமிதமான உள அழகைக் கொண்டவர். வாயடிக்கும் நட்சத்திரக் கவிஞர்கள் நடுவே அவர் நிதானமான நிலவு. " கல்வி என்பது பெரிய அறிவு மூட்டையைச் சுமப்பது அல்ல பண்போடு வாழ்வதுதான் கல்வி" என்பதைத் தெரிந்தவர். புரிந்தவர். சத்தியத்தின் ஆழத்திலிருந்து அவரது கவிதை ஊற்றெடுப்பதால் அவரது உணர்வுகள் ஆற்றல்மிக்கவை ஆகின்றன.
வாழ்வில் ஏறத்தாழ ஒரே அளவு நேரமே
எல்லோருக்கும் வழங்கப்படுகிறது. சிலர் அதனைப் புத்திசாலித்தனத்துடன் பாவிக்கின்றனர். அப்படி ஒரு மனிதரை, அதிசய நந்தவனத்தை அறிந்ததே பெருமை. வாழ்க்கையின் சாரமான ஒரு கவிதை நூலை வாசிப்பது மிகவும் பெருமை. சொல்லுவதெல்லாம் பயனுள்ள சொல்லாய் வரும் ஒரு தொகுதிக்கு அணிந்துரை எழுதுவது அதைவிடப் பெருமை, உளத் தூய்மையுடன் தொண் டாற்றும் ஒரு கரும யோகியுடன் நட்பாய் இருக்க முடிவது பேறு.
நவில்தொறும் நூனயம் போலும் பயில் தொறும்
பண்புடையாளர் தொடர்பு.
திருமதி. கோகிலா மகேந்திரன் பிரதிக் கல்விப் பணிப்பாளர், வலிகாமம் கல்வி வலயம், மருதனார் மடம்,
சுன்னாகம்,

Page 11
14|புலவர் ம.பார்வதிநாதசிவம்
என்னுரை
மானங்காத்த மறக்குடி வேந்தன் கவிதைத் தொகுதி நூல் வடிவம் பெற முழு நிதியையும் வழங்கியவர் பொறியியலாளர் திரு.வே.நந்தீஸ்வரன் அவர்கள். அவரு டைய அன்பு உள்ளத்தையும் உதவும் இயல்பையும் என்றும் மறவேன்.
நூல் வடிவமைப்பு, அச்சிடும் பொறுப்பு இரண்டையும் ஏற்றதுடன், நூலுக்குச் சிறந்ததொரு அணிந்துரையும் வழங்கியிருக்கிறார் பிரபல நாவலாசிரியை திருமதி. கோகிலா மகேந்திரன் அவர்கள். இவ்விருவருக்கும் எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
கைம்மாறு வேண்டாக் கடப்பாட்டு மாரிமாட்டு என்னாற்றுங் கொல்லோ உலகு.
என்றார் திருவள்ளுவர்
அட்டைப் படத்தை அழகுற வரைந்து உதவிய
ஓவியக் கலைஞர் சபா அவர்களுக்கும், கரிகணன் பிறிண்டேர்ஸ் நிறுவனத்திற்கும் எனது நன்றிகள்.
புலவர்.ம.பார்வதிநாதசிவம்

மானம் காத்த மறக்குடிவேந்தன் 15
வெளியீட்டுரை
புலவர் ம.பார் வதிநாத சிவம் அவர்களுடனான எனது முதல் சந்திப்பை நினைவுக்குக் கொண்டு வருகிறேன். அப்போது நான் மகாஜனாக் கல்லூரி உயர் வகுப்பு மாணவன். மயிலங்கூடலில் வசித்த இவர் எமது கிராமத்தினூடே சைக்கிளில் வேலைக்குச் சென்று திரும்பி வரும் போது, பன்னாலை கணேச சனசமூக நிலையத்தில் புதினப்பத்திரிகைகள், சஞ்சிகைகள் வாசிப்பார். அத்தகைய ஒரு மாலை வேளையில்தான், எங்கள் சனசமூக நிலையத்தில், எமது நட்புக்கான வித்துப் போடப்பட்டது.
தனது வாசிப்பு முடிந்த பின் அங்கிருக்கும் எங்களுடன் பலதும் பத்தும் கலந்துரையாடுவார். குறிப்பாக இலக்கியங்கள், கவிதைகள், எழுத்தாளர்கள் என்ற வட்டத்திற்குள் அவர் ஆழமாக இறங்கி விடுவார். சோவியத் எழுத்தாளர்களின் அறிமுகம் எமக்கு இவருக்கூடாகவே கிடைத்தது.
திரு.ஆ.சிவநேசச் செல்வன் அவர்கள் தமது பல்கலைக்கழகப் படிப்பை முடித்துக் கொண்டு, அம்பனையில் கலைப்பெருமன்றத்தை ஆரம்பித்தார். நானும், எனது நண்பர்கள் பலரும் இந்த நிறுவனத்தின்

Page 12
16 புலவர் ம.பார்வதிநாதசிவம்
செயற்பாடுகளுக்கு எமது ஆதரவை வழங்கி வந்தோம். ஒவ்வொரு மாதமும் இலக்கியக் கருத்தரங்குகள், நூல் வெளியீடுகள் என்று கலைப்பெருமன்றம் உற்சாகமாய் இருந்தது. நண்பர் சிவமும் இவ்வொன்று கூடல்களில் முக்கிய பங்கெடுப்பார். இவ்வாறாக நாங்கள் மெல்ல, மெல்ல நெருங்கிப் பழக ஆரம்பித்தோம். தேநீர்ச் சாலைகளிலும், மதவுகளிலும் இருந்து நாங்கள் செய்த கருத்துப் பரிமாற்றங்கள் மிக இனிமையானவை. சிவம் அவர்கள் மென்மையாகவும், மெல்லிய சிரிப்புடனும் தனது விளக்கங்களைக் கூறும்போது இன்னும் கேட்கலாம் போலத் தோன்றும். அவரது கருத்துக்கள் ஆழமாக இருக்கும்.
1968இல் கணேச சனசமூக நிலைய, நிர்வாகத்துடன் சேர்ந்து நானும், எனது உறவினர்களும், நண்பர்களும் ஒரு புதிய கட்டிடத்தைப் பெரும்பாலும் சிரமதானத்தின் மூலம் கட்டி முடித்தோம். கார்த்திகைக்குமார், இளங்கோவன், இலக்குமணேஸ்வரன், அருள் சோதி நாதன், சம்பந்தர், எந்திரி இரத்தினம் என்று பலர் இது தொடர்பில் மனத்திரையில் வருகின்றனர். இந்தக் கட்டிடத்திற்கு ஏற்பட்ட செலவு 8000/- கட்டிட நிதி திரட்டுவதற்காக நாம் லொத்தர் சீட்டுக்கள் விற்பனை செய்தபோது, நண்பர் சிவமும் எம்முடன் சைக்கிளில் யாழ்ப்பாணம் வந்து சீட்டுகள் விற்க உதவினார். மற்றவர்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற அவரது மனப்பாங்கும், எளிமையான தோற்றமும் வாழ்வும் அப்போதே என்னை மிகவும் கவர்ந்த விடயங்களாகும்.
 

மானம் காத்த மறக்குடிவேந்தன் 17
கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக நாங்கள் இடத்தால் பிரிக்கப்பட்டிருந்தாலும் எமது நட்புத் தொடரவே செய்கிறது. எனது நண்பரின் கவிதைத் தொகுதி ஒன்று வெளிவர நான் சிறு உதவி செய்யக் கிடைத்தமைக்கு மகிழ்கிறேன். இத்தொகுதி எமது நட்பை மேலும் வலுமிக்கதாக்கும். நண்பர் சிவம் பல்லாண்டுகள் வாழ வேண்டும். பல சேவைகளைச் செய்ய வேண்டும். அவரது நூல்கள் இன்னும் பல வெளிவர வேண்டும். இறை அருள் வேண்டுகிறேன்.
திரு.வே.நந்தீஸ்வரன், எந்திரி, கனடா.

Page 13
18 புலவர் ம.பார்வதிநாதசிவம்
2d 6ir(66IT
1) தமிழ்ப்பாவை
2) வாழ்க தமிழ்
3) உலக முதன் மொழி
4) மானங்காத்த மறக்குடிவேந்தன்
5) கவிஞர் கதிரேசர்பிள்ளை
6) பாவேந்தர் பாரதிதாசன்
7) உலகமெனும் மலையினது உச்சியிலே ஒரு தீபம்
8) சிலம்பின் செய்தி
9) கவிஞனும் துறவியும்
10)துறவி வியந்த வீரம்
11)உழைப்பும் பொருளும்
12) கவிஞன்
13) Luu J600TLö
14) செந்தமிழ்க் காவலனும் செழும் தமிழ்ப் பாவலனும்

மானம் காத்த மறக்குடிவேந்தன் 19
தமிழ்ப் பாவை
கொன்றையது குடி எழிற்கூத்தாடும்
சிவனாரும் கூற வெண்னாக் குன்றமதை எறிந்திட்ட மயில் மேவும்
பெருமானும் கொண்ட அன்பால் அன்றுதலைச் சங்கத்தே புலவர்களாய்
அமர்ந்தினிது வளர்க்கும் வண்ணம் நின்ற பெரும் தமிழ் அணங்கே நிலம் போற்றும்
செழுந்தேனே வாழி வாழி
உறுமிடரால் தளராத உயர்தமிழே
அமுதனையாய் உயர்ந்த ஞானக் குறுமுனி, தொல் காப்பியர்தம் ஞானத்தே
குதித்திட்ட உயர்ந்த பாவாய் நறைசெறிந்த தொகைநூலாம் தொடை விளங்கு
மார்புடைய நங்காய் இன்பத் துறையனைத்தும் நீயாகி இனிக்கின்றாய்
கற்றோர்கள் தொழுகின்றாரால்
ஒரு பெயரால் அழைத்தால் நின் பெருமையிங்கே அடங்காதென் றுளமேற் கொண்டே
அரியனவாம் இயல் என்றும் இசை என்றும்
கூத்தென்றும் அழைத்தார் இன்னும்

Page 14
20 புலவ்ர் ம.பார்வதிநாதசிவம்
வருபெயர்கள் எத்துணையோ? யாரறிவார்?
எத்துணைதான் வரினும் நின்றன் திருவினுக்குப் பொருந்துவதே நூலோர்தம்
அகமலரில் திகழும் தேனே,
குன்றாத எழில் மங்கை பலவிதமாய்
நடந்திடினும் குறைந்த தாக ஒன்றேனும் இருப்பதில்லைப் பாநடையும் உரைநடையும் உவந்தா யேனும் நன்றாயே அமைந்தனவே உன் நடையைக்
காலமெல்லாம் நோக்கும் ஆசை ஒன்றாலே துடிக்கின்றேன் என் நெஞ்சில்
நடந்தின்பம் உதவும் தேனே
ஆண்டு செலச் செலஇளமை எய்துகின்ற புதுமைகள் சேர் பெண்ணே ஆயும் ஈண்டுகொளக் கொளச் சிறிதும் குறையாத புதுமைகள் சேர் நிதியே ஆயும் நீண்ட புகழ் எனும் பாதை தனில் நித்தம் செல்கின்ற தமிழே உன்னை வேண்டிநிதம் தொழுகின்றேன் புவிபோற்றும்
விழுப்பொருளே வாழி! வாழி!

மானம் காத்த மறக்குடிவேந்தன் 21
வாழ்க தமிழ்
கனிமொழியே தனிமொழியே
கவின்மொழியே வாழ்க கற்பனையே அற்புதமே
பொற்புருவே வாழ்க பனிமலரே எனதுயிரே
நனிசுவையே வாழ்க பானிலவே வானமுதே
தேனனையாய் வாழ்க
இயலென்றே நீவளர்ந்தாய்
இவ்வுலகோர் மகிழ்ந்தார் இசையென்றே நீ செழித்தாய்
இவ்வுலகோர் நெகிழ்ந்தார் நயமெல்லாம் மிகக்கொண்ட
நாடகமாய் எழுந்தாய் நாட்டினரும் உலகினரும்
நாடிநிதம் உயர்ந்தார்.
அகப்பொருளாய் புறப்பொருளாய்
அரும்பொருளாய் வாழ்க அகத்தியனால் காப்பியனால்
வளர்ந்தனைநீ வாழ்க

Page 15
22|புலவர் ம.பார்வதிநாதசிவம்
மிகப்பலவாய் இகப்புகழாய்
விளங்கிடுவாய் வாழ்க.
மென்மொழியே செந்தமிழே
என்னுயிரே வாழ்க.
பாட்டாக முன்நடந்தாய்
உலகநிலை கண்டாய் பாரினிலே உரை நடையாம்
புதுநடையும் கொண்டாய் காட்டாறு போல்நீயோ
காலமெல்லாம் விரைந்தாய் கட்டழகு குன்றாத
மேனியினாய் வாழ்க
கவிதைஎனப் புலவோர்கள்
உனைவியந்தே நிற்பார் கதையென்றும் நாவலென்றும் பலர்கூடி நயப்பார் புவிபோற்றும் புகழ்படைத்தாய் பூங்கொடியே வாழ்க புதுமொழியேமதுமொழியே
பழமொழியே வாழ்க.

மானம் காத்த மறக்குடிவேந்தன் 23
உலக முதன்மொழி
உலக முதன்மொழி தமிழே என்றே உறுதியாய் நிறுவினார் தேவநேயப் பாவாணர் என்னும் பன்மொழிப்புலவர் அத்தகு தமிழைத் தாயெனக் கொண்ட தமிழர் நாங்கள் தரணியில் உயர்ந்தவர் உலகே போற்றும் திருக்குறள் தேனும் உயர்ந்த சங்கத் தமிழே தானும் சுவைதரும் ஐம்பெரும் காப்பியச் செல்வமும் பின்னர் எழுந்த பல்வகைப்பாக்களும் பாரதி பாரதிதாசனின் பாடலும் எங்கள் தமிழின் ஏற்றம் உரைக்கும் நாடெலாம் சென்று பொருளினை ஈட்டுவோர் நற்றமிழ் வளரப் பெருநிதி நல்கலாம் விஞ்ஞானத்துறை நூல்கள் பயின்றிடல் இந்நாள் அவசியம் ஆனதே ஆயினும் தாய்ப்பால் உடற்கு நலம் சேர்ப்பது போல் தாய்மொழி உயிர்க்கு நலம் சேர்ப்பதனால் எத்துறை பயிலினும் எங்கு வாழ்ந்திடினும் எங்கள் தமிழ்த்தாய் பாதம் வணங்குதல் நித்திய கடமையாய்ப் பேணுதல் வேண்டும் நிலைத்ததாம் தமிழின் பிள்ளைகள் நாமே!

Page 16
24 புலவர் ம.பார்வதிநாதசிவம்
மானம் காத்த மறக்குடிவேந்தன்
தமிழ் வேந்தர் சிறப்பு
தமிழர் வீரம் இதுவெனக் காட்டியே
தங்கள் ஆற்றலை நின்று விளக்கியோர் அமிழ்தை ஒத்த தமிழினைத் தங்களின்
ஆவிதன்னிலும் மேலென எண்ணியோர் இமயம் தொட்டுக்குமரி வரையிலும்
இருந்ததான பரப்பில் தமிழினம் அமையும் பண்பினில் ஆற்றலில் மேலெனும்
அற்புதத்தினைப் பொற்புறக் காட்டியோர்
மானங்காத்திடப் போரினைச் செய்குவார்
மண்ணைக் காக்க உயிரையும் நல்குவார் ஞானம் காக்கும் நூல் கற்றிடல் செய்குவார்
நல்ல உள்ளத்தில் தெய்வம் இருத்துவார் தானம் தர்மம் கொடையெனும் யாவுமே தக்கவாறு புரிந்திடும் செய்கையார் வானமே வியக்கும் தமிழ் மாதினை
வையமிதெந்தநாளும் வணங்குவார்!
எதிரதாகவே காக்கும் அறிவினார்
எந்தத்தீங்கையும் நீக்கும் இயல்பினார் அதிருமாறுடன் தாக்கும் படையினார்
அன்பினால் புவி நோக்கும் இயல்பினார்

மானம் காத்த மறக்குடிவேந்தன் 25 புதியதாய படைபல ஆக்குவார்
புவியின் மீதில் அறத்தை மறக்கிலார் மதுரமான தமிழை உயிரினும்
மேலதாக மதிக்கும் குணத்தினார்!
ஆய்ந்துகூறும் அமைச்சரைக் கொண்டவர்
அறிவு சொல் பெரியோர் துணைக் கொண்டவர் ஒய்ந்துபோதல் சிறிதும் மனங்கொளார்
உத்தமப் பணியாளரைக் கொண்டவர் வேந்தர் வந்துதிறை கொடுத்தாணையை
வேண்டுகின்றதோர் மேன்மை படைத்தவர் தீந்தமிழ்ப் பணி தெய்வத்திருப்பணி
செய்து வையப்புகழினைப் பெற்றவர்!
கல்வி வேந்தர்க்குக் கண்ணெனக் கொண்டவர்
கருது கேள்வி அறிவிற் சிறந்தவர் பல்வகைக் கலை தாமும் பயின்றவர்
பாடல் ஆடல் நிதமும் நயப்பவர் நல்லவே என்றும் நாடிடும் சிந்தையர்
நானிலம் என்றும் போற்றிடும் விந்தையர் எல்லையில் தமிழ்த்தாயின் பதங்களே
என்றும் போற்றி வணங்கும் குணத்தினார்!
மண்ணுளோர் தங்கள் சேயரென்றாண்டவர்
மாறினோர்கட்கு நோயென ஆனவர் பண்ணினாற் செவிக்கின்பம் பயந்திடும்
பாணர்க்கோபல் பரிசுகள் ஈந்தவர்

Page 17
26 புலவர் ம.பார்வதிநாதசிவம்
திண்மையாகிய தோளினைக்கொண்டவர் தீரர் தங்கட்குத்தீரரே ஆனவர்
எண்ணுங்கால் உளம் எங்கும் இனித்திடும்
எங்கள் தாய்த்தமிழ் போற்றிச் சிறந்தவர்
காலம் ஆயிரம் ஆயிரம் ஆண்டெனக்
கவின் செய் ஆட்சி செய்தோர் வழிவந்தவர் ஞாலம் போற்றிடும் வீரம் நிறைந்தவர்
நல்லறத்தொடும் ஆட்சி புரிந்தவர் வேலும் வில்லும் எடுத்துக்களத்திலே
வென்றியாவையும் கண்டுகளித்தவர் கோலம் செய்தமிழ்ப் பாவை செழிப்புறக்
கூறும் ஆயிரம் தொண்டுகள் செய்தவர்
சேரராயினும் பாண்டியராயினும்
சிறப்பு மேவிய சோழரே ஆயினும் டோரெனில் அவர் அஞ்சுதல் (g)ẩ)65)6)u JT60
புவியில் தங்களின் ஆற்றலைக் காட்டிட நேருமோர் உயர்வாய்ப்பென எண்ணுவார்
நிமிர்ந்த நெஞ்சொடு போரெதிர் கொள்ளுவார் ஆருமேவியப் பெய்தும் வகையிலே
அவனி மீதினில் சாதனை செய்குவார்!
சேரர் விற்கொடி கொண்டு சிறந்தனர்
சோழரோ புலிதங்கொடி ஆக்கினர்
நேரில் பாண்டியர் மீன் கொடி கொண்டனர்
நிலைத்ததாம்புகழ் தம்புகழ் ஆக்கினர்

மானம் காத்த மறக்குடிவேந்தன் 27 வீரம் கொண்டு நல்லாட்சி புரிந்தனர்
விளங்கு தர்மம் செங்கோலில் நிறுத்தினர் ஆரும் போற்றிடும் வண்ணம் நிலத்திலே
அருமையாக நிர்வாகம் புரிந்தனர்
தேரும் யானையும் குதிரை காலாளுமே
செகத்தில் மற்றவர் கொண்டு போர் செய்கையில் மேரு ஒத்த பலப்பல கப்பல்கள்
மேவும் தங்கள் படைக்குப் பலம்தர சேரர் ஆண்டனர் மேவுகடற்படைத்
திறத்தினாற்பல நாட்டையும் வென்றனர் வீரர்தாம் இவர் என்று மற்றோர்களோ
விஞ்சும் சேரரை அஞ்சி நடந்தனர்!
சீரெலாம் நிறைந்த சேரர் தம் மரபில் பாரெலாம் வியக்க ஆண்டனன் ஒருவன் செங்குட்டுவனே அப்பெரும் வேந்தன் வாள்வலிதானும் தோள்வலி தானும் உடையரே அரசர் மற்றவரோ பிறர் தாள் தொழத் தகுந்தவர் அரசரே அல்லர் என்றே எண்ணிய செங்குட்டுவன் தான் சேரர் தம் படையைப் பெரும் படை ஆக்கினன் தரைப்படை போலவிே கடற்படை தானும் வலுவுடைத்தாக வேண்டுமென்றுணர்ந்து கப்பற்படையையும் பெருக்கிக் கொண்டனன் படைகுடி கூழுடன் நட்பும் அமைச்சும் அரணும் உடையோன் அரசனே ஆயினும் படைப்பலம் ஒன்றே மாற்றார் தம்மை

Page 18
28 புலவர் ம.பார்வதிநாதசிவம்
நடுங்குறச் செய்யும் என்பதை அறிந்தே படையினர்க்குரிய வசதிகள் செய்தே பற்றுடன் பண்புடன் அவர் நலன் போற்றினன் போரினில் வெற்றிகள் படையினர் குவிக்கையில் படையினர் தம்மை உவப்புடன் அழைத்தே சோறிட்டவருடன் தானும் கலந்தே சோறுண்டு நடத்தினன் பெருஞ்சோற்று விழாவே! பகை நாட்டவர்க்கோ மதங்கொள்களிறாய் உள்நாட்டவர்க்கோ உவகை செய் பசுவாய் சேரன் ஆண்டனன் செகம் வியந்திடவே உழவுத் தொழிலின் மேன்மையைக் கருதி உழவர் தம்மை மதித்திடல் ஆயினன் மழை நீர் சிறிதும் வீணாகாமல் குளங்கள் தொட்டே வளங்கள் பெருக்கினன் கல்வியின் மேன்மை கருதியோன் ஆதலின் கற்றவர் தம்மை மெத்தவும் மதித்தே கல்விப் பயிரை வளர்க்கும் பொறுப்பை அவரிடம் கொடுத்தே ஆவன செய்தனன் பழையநூல் பேணவும் புதியநூல் ஆக்கவும் அறிஞரை ஊக்கி வேண்டுவ கொடுத்தனன் நடனம் சிற்பம் ஒவியம் இசையெனும் கலைகள் யாவும் வளர்ந்திடச் செய்தனன்! ஆட்சிச் சிறப்பால் மகளிர் அனைவரும் உரிமைகள் உடையராய்ச் சிறப்புடன் வாழ்ந்தனர் மாதரை இழிவு செய நினைப்பதையே
தீதென ஆடவர் எண்ணினர் அதனால்

மானம் காத்த மறக்குடிவேந்தன் 29 இல்லறம் என்பது பல்கலைக்கழகமாய் இலங்கக் கண்டனர் விருந்தாய் வருவோர் தமிழ்விழா ஒரு புறம் இசைவிழா ஒருபுறம் சமய விழாவோ மற்றும் ஒரு புறம் இப்படித்தமிழ் நாடிருந்ததால் யாவரும் தமிழனாய்ப் பிறத்தல் முன் தவம் என எண்ணினர் உலக மொழிகளில் தமிழே முதல் மொழி உலகக் கலைகளில் தமிழ்க்கலை சிறந்தது நாகரிகத்திலும் தமிழினம் தனி இனம் என்பதை யாவரும் ஏற்றுக் கொண்டனர்! எங்கும் மகிழ்ச்சி என்றும் மகிழ்ச்சி இது செங்குட்டுவனின் ஆட்சியின் சிறப்பே
கொற்றத்தை ஒன்றன்றே இரண்டும் அன்று கூறுமோர் ஐம்பத்தைந்தாண்டு காலம் வெற்றியுடன் இவன் ஆண்டான் என்னும் போதே
விளங்குமிவன் ஆட்சி கொண்ட சிறப்பு யாவும் பற்றுளத்தால் தமிழ் மொழியைத் தமிழ் நன்னாட்டைப்
பண்பமைந்த தமிழ்க் குடியைக் காத்தே கூறும் குற்றமெதும் அணுகாத புதுமை வாய்ந்த
குன்றமென விளங்கினான் புகழ்ந்தார் நூலோர்
இவன் தந்தை இறந்ததுமே செய்வதான
ஈமத்துக் கடனெல்லாம் முறையாய்ச் செய்தே
நவை தீர்ந்தோர் உரைத்தபடி சாம்பல் தன்னை
நற்கங்கை நீரினிலே கலத்தல் வேண்டி

Page 19
30 புலவர் ம.பார்வதிநாதசிவம்
அமையுமொரு படையினுடன் வட நாட்டெல்லை அணுகினான் அவ்வேளை வடக்கின் மன்னர்
நமது மண்ணில் நீ கால்கள் வைப்பதென்றால்
நமது தலை அற்ற பின்தான் என்று நின்றார்.
கணத்திலெழும் தீ யாலே பெரியதான
காடெல்லாம் அழிவது போல் வடவர் எல்லாம் பிணக்குவையே ஆனார்கள் சேர மன்னன்
பெருவெற்றி தனைக் கண்டான் புலவர் தாமோ மனக்களிப்பால் பாமாலை சூட்டினார்கள்
மக்களெல்லாம் வாயார வாழ்த்தினார்கள் நினைத்ததினை நினைத்த விதம் செய்யும் சேரன்
நிலம் வியக்கும் வெற்றியுடன் நாடு சேர்ந்தான்.
"போர் வேண்டேன் இனி" என்றே சேரன் தானும்
புகழ்வேண்டும் பிற பணிகள் தொடரலானான் பார் வேண்டும் பண்பெல்லாம் தம் பாற்கொண்ட பலவாய இலக்கியமும் படைக்கச் செய்தான் ஆர் வேண்டும் போதிலுமே ஈகை செய்தான்
அன்பு செய்தான் அறம் செய்தான் நன்மை செய்தான் பேர் வேண்டும் ஊக்கத்தை உடையோர்க்கென்றும்
பெரும் பணியும் நினைத்ததுமே முடியும் அன்றோ
குட்டுவனின் ஆட்சியிலே வாழும் பேற்றைக் குவலயத்தே பெற்றிட மக்கள் எல்லாம்
எட்டுணையும் துன்பம் இன்றி வாழலானார்
எல்லோரும் குட்டுவனைப் போற்றலானார்!

மானம் காத்த மறக்குடிவேந்தன் 31
பட்டொளி வீசிப்பறந்த சேரன் கொண்ட
விற்கொடியைப் பாரெல்லாம் போற்றக்கண்ட
துட்ட குணவடவர் சிலர் அழுக்காறென்னும்
தொன்மை வருபாவியினால் தூண்டப்பெற்றார்.
புலவரெல்லாம் குட்டுவனைப் பாடக் கண்டும்
புவியெல்லாம் அவன் புகழே வளரக் கண்டும் நிலையறியாக் கனக விசயர் என்பார்கள்
நிம்மதியாய் கிடக்கின்ற புலியின் வாலை வலிய வந்து மிதிப்பது போல் செருக்குற்றோராய்
"வையகத்தே எம் போல்வார் இராமையால் தான் சிலர் தமிழர் இமயத்தே விற்சின்னத்தைச்
செதுக்கினார் இன்று நாம் இருக்கும் போதில்
இமயத்தின் அருகினிலும் வருவராமோ?"
எனக் கேட்டார் இச் செய்தி கேட்டோர் அந்தச் சமயத்தே குட்டுவனின் செவியின் கண்ணே
தவறாமற் சேர்த்திட்டார் வெகுண்டான் சேரன் நமை இன்று வடநாட்டார் பழிப்பதென்றால்
நற்ற மிழைத் தமிழ் நாட்டைப் பழிப்பதாகும் சமய மிதே அவர் கொட்டம் அடக்கல் வேண்டும்
தறுகண்மை அவர் அறிதல் வேண்டும் என்றே
சிங்கமெனக் குட்டுவன் தான் கர்ச்சித்திட்டான்
சினமுற்ற அவன் முன்னே நின்றோர் எல்லாம்
"துங்கமிகு குடிப்பிறந்தோய் நின்றன் சீற்றம்
தூயதுவே ஏற்றதுவே பகைவர் எண்ணம்

Page 20
32|புலவர் ம.பார்வதிநாதசிவம்
பங்கமுறச் செய்திடுவோம் தமிழர் வீரம்
பாரறியச் செய்திடுவோம் வெல்வோம்" என்றே
தங்க நிகர் சேரர் குலத் தோன்றல் முன்னர்
தங்கருத்தை ஆர்வத்தைத் தெரிவித்தாகள்
"முழங்கட்டும் போர் முரசம் தமிழர் வீரம்
மூளட்டும் ஒளி செயட்டும் பகைவர் நாட்டில்! களங்கண்டதேர் குதிரை யானை காலாள்
காட்டட்டும் வலிமையினை மாற்றார் நாட்டில் விளங்கட்டும் எமது கொடி அவர் தம் நாட்டில்
மேவட்டும் புலவரெல்லாம் நம் வீரத்தை துளங்கட்டும் பகைவருடல் என்றான் சேரன்
சொல்லதனைச் செயலாக்கும் வீரர் முன்னே!
கடமையினை உயிரை விட மேலாய்ப் போற்றும்
கருத்துடைய சேரன் தன் வீரர் எல்லாம் திடமுடனே சேரன் தன் ஆணைதன்னைச்
செயலாக்க முன் இருந்தார் வெற்றி ஒன்றே தொடராகப் போரினிலே காணுகின்ற
சேரனே சேனைக்குத் தலைவன் ஆனான் வடவருக்குத் தோல்வி எனல் சொன்ன பின் தான்
வையத்தோர் உணர்வாரோ? உணர்வார்முன்னே!
ஆய்வேதும் செய்யாதே தமிழ் வேந்தர் தம்
ஆற்றலினை அறியாத வடநாட்டார்கள்
வாய்ப் பேச்சை நிகழ்த்தியதின் விளைவைப் போரில்
வாள் வீச்சிற் கண்ட திர்ந்தார்! சேரவேந்தன்

மானம் காத்த மறக்குடிவேந்தன் 33 பாய் வேங்கை என ஆனான் வடவர் எல்லாம்
பயந்தோடும் மான் ஆனார் வீரம் சொன்ன ஆய்வறியாக் கனக விசயர்கள் தாமோ
அகப்பட்டார் கூண்டெலியே ஆகினார்கள்!
அன்றிருந்த மன்னர் தம் செவியில் எல்லாம் அதிசய வேந்தன் சேரன் வீரச் செய்தி சென்றடைந்த தன்மையினால் தமிழர் வீரம்
தேச மெங்கும் உலகமெங்கும் சேர்ந்ததாலே வென்றிமிகும் தமிழர் என்றால் உலகோர் எல்லாம் வியக்கின்ற இனமாக விளங்கினார்கள் நன்று புரிந்தே மானம் காத்த சேரன்
நாட்டாலும் ஏட்டாலும் புகழப் பெற்றான்.
தமிழ் புகழும் கண்ணகிக்குச் சிலை செய்தற்குக்
கல்லதனைச் சுமப்பதற்குத் தகுதியானோர் தமிழ் இகழ்ந்த வட நாட்டார் தாமே என்ற
கருத்தினால் கனகனொடு விசயன் என்ற தமிழறியார் தம் தலையிற் கல்லை ஏற்றித்
தமிழ்நாடு கொண்டுவந்தான் சேரவேந்தன் அமிழ்தனைய மொழி பேசும் மக்கள் எல்லாம் அக்காட்சி காண்பதற்குத் திரளலானார்!
வஞ்சிமாநகரத்தின் வீதி எங்கும்
மனையெங்கும் மற்றுளவாம் இடங்கள் எங்கும்
நெஞ்சு வந்த மக்கள் எலாம் ஒன்று சேர்ந்தே
மாவிலை தோரணம் தொங்கச் செய்திட்டார்கள்

Page 21
34 புலவர் ம.பார்வதிநாதசிவம்
வெஞ்சமரில் வென்றிட்ட சேரன் தன்னை
மேவி நின்றே எல்லோரும் வரவேற்றார்கள்
அஞ்சுதலே அறியாத சேர வேந்தன்
அக மகிழ்ந்தே வஞ்சி நகர் அடைந்திட்டானே!
இளையோர்கள் விற்கொடியை ஏந்தி நின்றே
"எம்மரசே வருக!" வென வரவேற்றார்கள் வளையோர்கள் சுடர் வீசும் கும்பம் வைத்தே
"மன்னவனே வருக!" வென வரவேற்றார்கள் களிறொன்றில் சேரன்தான் முன்னே வந்தான்
கடைசியிலே கல்சுமந்த தலையராகி இளி செய்த கனக விசயர்கள் வந்தார்
இக்காட்சி எல்லோர்க்கும் புதிதே அன்றோ?
நகரடைந்த குட்டுவன் தன்வீரர்க்கெல்லாம்
நல்ல பல பரிசளித்தான் பொன்னாற் செய்த மிகச்சிறந்த வாகை மலர் தன்னைச் சூட்டி
மேன்மை செய்தான் வீரர் எல்லாம் உவகை உற்றார் தகையறிந்தே பரிசளித்தான் புலவர்க்கெல்லாம்
தன் மகிழ்வை அன்பதனைத் தெரிவித்திட்டான் நகரடைந்த அனைவர்க்கும் கொடை செய்திட்டான்
நாட்டினர்கள் யாவருமே மகிழ்ந்து நின்றார்.
"ஒரிருநாள் சென்ற பின்னர் தமிழ் போற்றாத
உள்ளத்தாற் கல் சுமந்து வந்தோரான
ஆரியரைச் சோழர்க்கும் பாண்டியர்க்கும்
ஆர்வமுடன் காட்டுகென" ஆணையிட்டான்

மானம் காத்த மறக்குடிவேந்தன் 35
சேரமன்னன் ஆணையினை ஏற்றவீரர்
சிறந்த தமிழ்ப்பாண்டியர்க்கும் சோழர்க்கும் தான் ஆரியரைக் காட்டி வந்தார் ஆரியர் தாம்
சேரனிடம் தம்முளத்தைத் தெரிவித்தார்கள்.
"மூத்தகுடி தமிழ்க் குடியே முழுவீரர் தமிழரே என்ற உண்மை கேட்டறிந்தோம் ஆனாலும் கண்டறிந்தோம்
இந்நாளில் நிகழ்ந்த போரில் ஆர்த்தெழுந்தோம் நின்முன்னே அதிசயித்தோம்
வாள்வீச்சைப் போரின் நுட்பம் பார்த்தறிந்தோம் நின்போரில் படித்துவிட்டோம்
பாடங்கள் மன்னிப்பாயே!
சிறுபடையால் பெரும் படையைத் திணறவைக்கும்
போர் முறைகள் தெரிந்த வேந்தே உறு வலியால் உலகினது கவனத்தைக்
கணப்பொழுதில் கவர்ந்த வீரா! நெறிமுறைகள் பிசகாத நெஞ்சத்தோய்
பகைவருமே பணியும் போதில் அறிவு சொல்லி அன்பு செய்யும் இயல்பு கொண்டோய்
எங்களை நீ மன்னிப்பாயே!
எம்மை நீ மன்னித்துச் சிறைவிடுத்தால் வடநாடு முழுதும் சென்றே
செம்மை திகழ் நின்னாட்சி செழுமை திகழ் நினது மொழி பற்றியெல்லாம்

Page 22
36|புலவர் ம.பார்வதிநாதசிவம்
எம்மினிய மனதார எடுத்துரைப்போம்
வடநாட்டார் ஏற்கச் செய்வோம் வெம்மை செயும் போராற்றும் வீரத்தின்
விளைநிலமே பொறுப்பாய் நம்மை
என்று வட நாட்டாராம் கணகனொடு விசயனுமே இயம்பக் கேட்டே கொன்றொழிக்கும் படைவலியோன் குளிர்ந்தமன
இயல்பினனாய் அவரை நோக்கி "நன்றும்மைச் சிறை விடுத்தோம் வேண்டியவாம் உதவியெல்லாம் செய்வோம்! நீங்கள் இன்றே உம் நாட்டினிற்கே ஏகிடலாம்!"
என இரங்கிக் கூறினானே!

மானம் காத்த மறக்குடி வேந்தன் 37
கவிஞர் கதிரேசர்பிள்ளை
தமிழெனும் மாதின் தவநிறை புதல்வன் அமிழ்திலு மினிய அன்புசேர் குணத்தன் நன்னூல் முதலாம் பன்னூ லாரும் ஆசாற் கென்றே அமைத்த தாம் நெறியிற் சற்றும் விலகாச் சால்புசேர் பெரியன் விண்ணக அமுதம் ஈதென விளக்கும் விதத்தினில் அமைந்த கவிதைகள் படைக்கும் கற்பனை மலிந்த பொற்பமை கவிஞன் மேடைகள் தோறும் தமிழ்மழை பொழிந்தே செவிப்பயன் விளைக்குஞ் சொல்லின் செல்வன் மாஜனத் தாயின் புகழையே விரும்பி அல்லும் பகலும் அயராதுழைத்த தூய உள்ளத்துத் தோன்றல் சிறந்த பாரதம் என்ற ஒர்கடல் மூழ்கிச் சீரிய கருத்தெனும் நித்திலம் எடுத்தே காலமாம் பாவையின் தேவையை அறிந்தே கோலமார் நாடகம் படைத்தனன் இவன்றான் குருகவி' என்ற ஒரு கவி புகழ்ந்த வருகவிச் செல்வன் வண்டமிழ் வல்லோன்
சிக்கதி ரேசர் பிள்ளைநல் லோனே!

Page 23
38|புலவர் ம.பார்வதிநாதசிவம்
பாவேந்தர் பாரதிதாசன்
முத்தமிழை மூவேந்தர் முன்வளர்த்தார் இவரும்
முழுப்புவியும் வியப்பெய்த தம்முடைய உழைப்பால்
இத்தரையில் செந்தமிழை இதயத்தால் சொல்லால்
எழுத்தாலே வளர்த்திட்டார் இவர் பெரியர் ஆவார்!
பாரதியின் பாநடையே தமிழ் நடந்து செல்லப்
பாங்கான நடையெனவே மிக விரைவில் உணர்ந்தார் பாரதிக்குத் தாசனெனத் தமை உரைத்துக் கொண்டார்
பாரதியின் வழியினிலே பாநடை மேற்கொண்டார்.
ஆயிரந்தான் அவருக்கு நன்மை செய்தோரெனினும் அருந்தமிழ்க்குக் கேடு செய்யின் அது பொறுக்க
L DIT "IL LITT
பாயும் ஒரு வேங்கையென வருவதற்கஞ்சாதே
பாய்ந்திடுவார் சினந்திடுவார் பகையை
வளர்த்திடுவார்!
பாரியுடன் கொடை பிறந்த தன்மையெனப்பொற்கைப்
பாண்டியனின் உடன் நீதி பிறந்த நிலையென்ன
சேரருடன் வீரமுமே பிறந்த நிலை போலச்
செந்தமிழின் பற்றுடனே பாவேந்தர் பிறந்தார்!

மானம் காத்த மறக்குடி வேந்தன் 39
தொல்காப்பியத்தினிலே ஐயம் கேட்டாலும் தோன்றும் எட்டுத்தொகையினிலே ஐயம்
கேட்டாலும் பல்காப்பியக் கடலில் ஐயம் கேட்டாலும்
பதில் உடனே பதில் உடனே பகர்ந்திடுவார் அவரே!
சட்டசபை செலும் ஆசை தம்மனத்தைத் தூண்ட தலைவர் பெரியாரினையே சீடர் பலர் பிரிந்தார்
இட்டமுடன் தமிழ்த் தொண்டே புரிந்த இவர் மட்டும்
இதயத்தால் பிரியாமல் நன்றியுடன் இருந்தார்.
ஆயிரமாம் முறை கற்றும் அலுக்கா நூலொன்றை
அவனி மிசை கூறென்றால் திருக்குறளைச்
சொல்வேன்
நேயமுடன் இன்னொன்று சொல்லென்று கேட்டால்
நெஞ்சாரப் பாவேந்தர் நூலதனைச் சொல்வேன்.
பெண்கல்வி வேண்டுமென்றார் பெண்கள் படித்தாலே பேசுமவர் அடிமைநிலை நீங்குமெனச் சொன்னார் பெண்கல்வி அடைந்திட்ட முன்னேற்றம் கண்டார் பெருமகிழ்ச்சி அடைந்திட்டார் பெற்றோரைப்
GLITE

Page 24
40 புலவர் ம.பார்வதிநாதசிவம்
கற்பனையின் சிகரத்தில் நின்றிட்டோரான
கவிக்கெல்லாம் இவர் கவிஞர் கருத்தாழமிக்க
பற்பலவாம் பாடலினால் தமிழை வளம் செய்தார்
பாவேந்தர் என இந்தப் பார் போற்ற வாழ்ந்தார்.
கிரேக்கத்தில் முன்னொருவர் சிந்திப்பீர் என்றார் கீழ் விழுவீர் நாவடக்கும் என்றார்கள் சிலரே
கிரேக்கத்தின் நன்மைக்கே சிந்திக்கச் சொன்னேன்
கீழ் விழும் நிலைவரினும் அஞ்சேன் நான் என்றார்.
பகுத்தறிவைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்
பாவேந்தர் கிரேக்கத்தின் ஞானியினைப் போலே
மிகத் தீமை மேவிடினும் சாவேதான்வரினும்
மேவுமுயர் கருத்துரைக்க அஞ்சேன் நான் என்றார்.
அச்சமே கீழ்களதாம் ஆசாரம் என்றே
அறப்புலவர் கூறிய தைத்தலைமீது கொண்டே
துச்சமாய்த் தமிழினத்தை நினைத்தோரை எதிர்த்தார் துணிவுக்குத் தம் வாழ்வை உதாரணமாய் வைத்தார்.

மானம் காத்த மறக்குடி வேந்தன் 41 உலகமெனும் மலையினது உச்சியிலே ஒரு தீபம்
தெள்ளுதமிழ் தழைத்தோங்கச் சீர்மேவ மனிதகுல
உள்ளமெலாம் புனிதமுற
உயர் குறளை நல்கினரே! (O1)
அறமிதெனப் பொருளிதென
அகத்துாறும் காதலது
திறமிதென உலகோர்க்குத்
தெரிவித்தார் நம் பெருமான்! (O2)
வீட்டினது சிறப்பிதென
வீடெல்லாம் ஒன்றாகும்
நாட்டினது சிறப்பிதென
நவின்றாரே நம்பெருமான்! (O3)
உலகமெனும் பெருமலையின்
உச்சியிலோர் தீபமென
நிலமுயர வாழ்வுயர
நிலைத்த குறள் வழங்கினரே! (04)
"சிந்தனையே பெருஞ் செல்வம்!
சிந்திப்பாய் மனித" எனச்

Page 25
42 புலவர் ம.பார்வதிநாதசிவம்
சிந்திக்கத் தூண்டி வைத்த
ரோளர் வள்ளுவரே! (O5)
மனத்தமைந்த புனிதம் தான்
மனவழியே சொல்லாகி
அனைத்தாய செயல்களிலும்
அறமாகும் என வுரைத்தார். (06)
கல்வியெலாம் பெற்றாலும்
கருது பொருள் பெற்றாலும்
வெல்லரிய சிறப்பெல்லாம்
மேதினியில் பெற்றாலும் (O7)
நல்ல மனமில்லோரால்
நாட்டினர்க்கோ அவருக்கோ
இல்லையொரு பயனென்றே
இயம்பி வைத்தார் எம் பெருமான் (08)
வீட்டினிலே அன்பெனும்
விளக்கொளியில் வாழ்பவனே
நாட்டினர்க்கும் அன்பு செய்வான்
நல்லறத்தைப் பேணிடுவான்! (0.9)
விதி வலிதேயானாலும்
மேதினியிற் சோராதே

மானம் காத்த மறக்குடி வேந்தன் 43
மதியுடனே உழைத்திடுதல்
மானிடர்க்குக் கடனென்றார்! (10)
தெய்வத்தைத் தெளிந்தோரும்
தெளிந்தபடி வாழ்வோரும்
வையகத்தே வாழ்ந்தாலும்
மானிடருள் தெய்வமென்றார். (11)
தர்ம அடிப்படையிற்
கட்டியதோர் மாளிகையைத்
தர்மமிலார் செயும் சூழ்ச்சி
தகர்ப்பதில்லை என்றுரைத்தார் (12)
பெண்ணின் பெருமை
அறியாத மூடர்தமைப் பெண்ணிற் பெருந்தக்க
யாவுளவோ? எனக் கேட்டார். (13)
மனிதப் பிறவியினை
வாழ்வதற்கே நாம் எடுத்தோம்
புனிதநெறி நின்றே
புவிச் சுகங்கள் துய்த்திடுவோம் (14)
பொறி ஐந்தும் தம் போக்கில்
புவித்தலத்தே இழுத்தாலும்
அறிவென்ற ஒன்றாலே
அவைவெல்லல் வேண்டுமென்றார் (15)

Page 26
44 புலவர் ம.பார்வதிநாதசிவம்
தமிழ் மொழியை இவ்வுலகில்
தலையாய மொழியென்றே இமிழ் திரை சூழ் வையகத்தோர்
இயம்பவைத்தார் வள்ளுவனார். (16)
ஞாலத்தை நன்னெறியில்
செலுத்துதற்கே ஏற்றதுவாய்க்
காலத்தை வென்று நிற்கும்
கவினார் குறள் தந்தார். (17)
முப்பாலில் நாற்பொருளை
மொழிந்த பெருமகனை
இப்புவியில் நாம் போற்றின்
ஏதும் குறையுளதோ, (18)
ஊர்ப் பழுத்த நன்மரம் போல்
ஊரிடையே நீருணிபோல் ஆர்க்கும் பயன் வழங்கல்
அறிவுடையோர் செயலென்றார். (19)
சிறு நன்மை கண்டே
சிந்தை மயங்காமல் உறு நன்மை நாடி
உழைத்தல் கடனென்றார். (20)
 

மானம் காத்த மறக்குடிவேந்தன் 45 முடியாட்சியானாலும்
குடியாட்சிதானெனிலும் கொடியோரை வென்றொழிக்க
கூறுபடை வேண்டுமென்றார். (21)
பாட்டினைப் போல் ஆச்சரியம்
பாரினிலே இல்லையெனக் காட்டி வைத்தார் தம்பாட்டால்
பார்போற்றும் வள்ளுவனார். (22)
சிந்தனையில் ஆச்சரியம்
செழுந்தமிழில் ஆச்சரியம் சொந்தமவர்க்கேயான
கற்பனையில் ஆச்சரியம். (23)
அணிநலனில் ஆச்சரியம்
அகப் பொருளில் ஆச்சரியம்
பிணி போக்கும் நல்லறத்தை
பேசுவதில் ஆச்சரியம். (24)
எங்கெங்கும் ஆச்சரியம்
என்றுலகோர் போற்றிடவே
இங்கு குறள் படைத்த
இறைவனார் வாழியவே! (25)

Page 27
46 புலவர் ம.பார்வதிநாதசிவம்
சிலம்பின் செய்தி
சேரர் குலத்துச் செங்குட்டுவன்தான் வீரம் விளைத்தான் வட வரை வீழ்த்தினான் அவனுடன் பிறப்பாம் இளங்கோ அடிகள் சிலம்பினைப் படைத்தார் பெரும் புகழ் ஈட்டினார் கொடியோர் ஆட்சி நொடியினில் வீழும் ஊழ்வினை என்றும் உயிருடன் தொடரும் பொறியினை வென்ற பொற்றோடியார் தம் நெறிதரும் வாழ்வும் நிலைத்ததான கற்புச் செல்வமும் எக்காலத்தும் தேவராலும் தொழப்படும் என்ற கொள்கையை விளக்கக் காப்பியம் நல்கினார். கண்ணகி கோவலன் இல்லறச்சிறப்பை மனையறம் படுத்த காதையிற் பாடினார் தலைவன் தலைவி ஆகிய இருவரும் இல்லறம் என்பது இதுவென உலகோர் இருவர் வாழ்விலும் அறியும் வண்ணம் நல்லறம் பேணினர் விருந்தினைப் போற்றினர் பெற்றோர் உற்றோர் பெருமிதம் உறும் விதம் பேரொடும் வாழ்ந்தனர் புகழொடும் வாழ்ந்தனர். ஆண்டவன் அருளைப்பெற்ற நம் முன்னோர் அமைத்த நெறியே இல்லறம் என்பது மலையிற் பாதையிற் செல்லும் வாகனம்
பாதையை நீங்கின் பெரும் பள்ளத்தில்

மானம் காத்த மறக்குடி வேந்தன் 47
வீழ்தல் நிச்சயம், மீள்தலும் உண்டோ? தலைவன் தலைவிக்குத் துரோகம் இளைக்கையில் இல்லற வாகனம் பள்ளத்தில் வீழும் இதுதான் வாழ்க்கையின் நியதியும் ஆகும்.
கோவலன் கல்வியில் வென்றான் கலைகளில் வென்றான். செல்வத்தில் வென்றான் சிறப்பினில் வென்றான் எல்லையில் பெரியோர் இதயத்தை வென்றான் மனத்தை மட்டும் வென்றிலன் ஆதலின் கணத்தில் மாதவி கடைக்கணில் வீழ்ந்தனன் மனத்தை வெல்ல மறந்ததால் அன்றோ பொருளை இழந்தும் அமைதியை இழந்தும் மதுரையிற் சென்றே உயிரையும் இழந்தனன்.
நெடுஞ்செழியன் பாண்டிய நாட்டைப் பண்புடன் ஆண்டான் பலராம் அமைச்சர்தமைக் கொண்டிருந்தான் வேண்டியோர்க் கருளவும் வேண்டாதோரைப் பூண்டுடன் அழிக்கவும் ஆற்றல் பெற்றிருந்தான் புலவர் பலரும் புகழ்ந்துபாடும் நலமும் தன்பாற் கொண்டே இருந்தான் ஆயினும் என்னாம் அனைத்தும் பெற்றும் மனத்தை வெல்ல மறந்தனன் அவனே! ஆடல் நிகழ்ச்சி ஒன்றினைக் காண்கையில்
ஊடல் கொண்ட அரசியின் சினத்தால்

Page 28
48 புலவர் ம.பார்வதிநாதசிவம்
மனம் திகைத்திருந்தான் மன்னன் பாண்டியன் அந்நிலையினிலே சென்று பொற் கொல்லன் "சிலம்பு திருடிய கள்வன் என் குடிசையில் இருக்கின்றான்" என இயம்பக் (3.9, (3 ஆய்வெதும் இன்றி விசாரணை இன்றிக்
கொன்றச் சிலம்பு கொணர்க என்றனன்
மனத்தை வெல்லாச்சினத்தால் அவற்குத் தன்னுயிர்தானே நீக்குவதான அவலம் நேர்ந்தது தன்னுயிர் நீத்தான்.
கண்ணகி மண்மகள் அறியா வண்ணச் சீறடிப் பெண்மகள் கண்ணகி தனதாம் மனத்தை நில்லென நினைத்த இடத்தே நிறுத்தும் ஆற்றல் இயல்பினிற் பெற்றே இருந்தாள் ஐம் பொறி தன்னையும் அறிவினால் வெல்லும் அதிசயம் வலிமை அவளுடன் பிறந்தது ஐம்பொறி தம்மையும் வென்றிட்டோர்கள் மனித வடிவில் புவியில் உலவினும் கண்கண்ட தெய்வம் அவர்களே ஆவர் "கற்புக்கடம்பூண்ட இத்தெய்வமல்லது பொற்புடைத் தெய்வம் யாம் கண்டிலம்" எனக் கவுந்தி அடிகள் போற்றும் சிறப்பினைக்
கண்ணகி பெற்றாள் தெய்வம் ஆயினாள்.
 

மானம் காத்த மறக்குடிவேந்தன் 49
கவிஞனும் துறவியும்
"காரவள் கூந்தல் நல்ல
கவின்மலர் கண்கள் முல்லை நேரவள் பற்கள் இன்ப
நிலையவள் வதனம் பூவின் சீரவள் இதழ்கள்" என்றோர்
செந்தமிழ்க் கவிஞன் கூறிப் பாரினில் மகிழுங் காலை
பற்றிலாத் துறவி வந்தான்.
"என்பொடு தசையின் சேர்க்கை
இவ்வுடல் ஆவி போனால் பொன்னிகர் மேனி தானும்
புழுக்கட்கே இடமதாகும் அன்பினை இதன்மேல் வைத்தல்
அறிவிலார் செய்கை மைந்தா! நன்கிதைப் புனைந்து பாடும்
நலமிலாச் செயல்கொள் ளாதே
காலையில் பொதும்பர் தன்னில்
கவின்செயும் மலரும் மற்றும் கோலமார் மரங்கள் ஈயும்
கொழுமை சேர் கனியும் எல்லாம் ஞாலமேல் நிலைத்தல் உண்டோ?
நன்கவை அழுகும் வாடும் பாலகேள் மாதர் பண்பும்
பாரினில் அவ்வாறேதான்"

Page 29
50 புலவர் ம.பார்வதிநாதசிவம்
என்றவண் துறவி கூற
இளங்கவி சிரித்தான் "ஐய குன்றிடா ஒளிசெய் கின்ற
கொழுஞ்சுடர் விளக்குக் காலை துன்றிடின் ஒளியிற் குன்றித்
தோற்றமும் இழந்து போகும் என்றதை நன்றி யின்றி
எறிபவர் தாமும் உண்டோ?
காலையில் அழகு செய்த
கதிரவன் உச்சி யெய்தும் வேளையில் அழகு குன்றும்
வெண்முழு நிலவும் மெல்ல நாளொரு விதமாய்க் கொண்ட
நல்லெழில் குறையும் என்றே ஆழிசூழ் உலகில் யாரும்
அவற்றினை வெறுப்பார் உண்டோ?
மாதரின் அழகும் ஓர் நாள்
மாறிடும் இயற்கை இன்றேன் தீதென ஒதுக்க வேண்டும்?
தேர்ந்து சொல் பெரியோய்" என்றே கோதிலாக் கவிஞன் கேட்டான்
கூறிட விடையை ஆய்ந்தே யாதொன்றும் காணா னாகிப்
போயினான் துறவி தானும்

மானம் காத்த மறக்குடிவேந்தன் 51
துறவி வியந்த வீரம்
"பொங்கிடும் சினத்தி னோடும்
புவியினை அதிரச் செய்யும் வெங்குரற் சிங்கம் மீது
விரைந்து பாய்ந் தடக்கும் வீரன் இங்கிவன் அறிவீ"ரென்றே
இயம்பினர் உள்ளோர் கண்டும் அங்கெதும் துறவி வார்த்தை
அவர்களுக் குரைத்தானில்லை.
"கரையினை உடைத்தும் ஓங்கும்
கவர்மரம் தன்னை வீழ்த்தும் தரையினில் ஒடும் வேகத்
தண்புனல் ஆற்றின் போக்கை முறையுற எதிர்த்தே நீந்தும்
மொய்ம்பினன் இவனே" என்றார் உரையினைத் துறவி கேட்டும்
ஒன்றுமே மொழிந்தா னில்லை.
"போரினில் வாளை ஏந்திப்
பொலிந்தபல் களிற்றை யெல்லாம்
பாரினில் புரளச் செய்யும்
பண்புசேர் வீர" னென்றே ,

Page 30
52 புலவர் ம.பார்வதிநாதசிவம்
நேருற நின்றோன் தன்னை
நெடிதுமே புகழ்ந்து சொன்னார் சீருறு துறவி வார்த்தை
சிலவுமே புகன்றானில்லை.
"ஆண்டினால் இளைஞன் நல்ல
ஆக்கையே உடையன் நின்று
தூண்டிடும் காம மென்னும்
துர்ப்பகை வென்றான்" என்றே ஆண்டொரு வீரன் தன்னை
அறிமுகம் செய்யும் காலை "ஈண்டுநீ வருக" என்றே
இயம்பினான் துறவி மேலும்.
மற்றவர் தாமும் வீரர்
ஆயினும் மறைந்து வாழும் குற்றமாம் காமம் தன்னைக்
கூறரும் அறிவால் வென்ற கொற்றமே கொற்றம் நீயே
கொள்கை சேர் வீர'னென்றே பற்றிலாத் துறவி தானும்
பாரினில் ரசிக்க லானான்.

மானம் காத்த மறக்குடிவேந்தன் 53
உழைப்பும் பொருளும்
"ஓங்கிவளர்ந் திடருறுத்தும் வறுமை போக்க
உரைத்திடுவீர் வழி" யென்றேன் நண்பர் கூட்டம் ஆங்குபல மணிநேரம் முயற்சி செய்தே
ஆய்ந்தெடுத்த வழியெல்லாம் கூற லானார் "தேங்கிவரும் செல்வத்தை உடைய மங்கை
செவிடாகிச் சிறுகுருடாய் இருப்பாளாகில் ஈங்கவளை மணப்பதனால் செல்வம் சேரும்
இது வெறுப்பைத் தந்திடுமேல் இன்னுஞ்
-சொல்வோம்.
பனமிழந்த காலத்தே நம்மை விட்டுப்
பாய்ந்தோடும் சுற்றம்போல் வேகமாகக் கனமொருகல் ஒடுகின்ற குதிரைக்கே நீ
காசு கட்டின் முதற்பரிசு பெறலா மின்றேல் பணமுனது முன்னோர்கள் புதைத்திருப்பார்
பார்த்தெடப்பா சோதிடத்தால்" என்றும்
-சொல்லித் திணறவைத்தார் நண்பர்கள் அவர்தம் சோம்பல்
சேர்த்தென்னைத் தழுவிடவே சோர்ந்து
-நின்றேன்!
"பட்டாணிக் கடலையுண்டு சுவைமிகுந்த
பருப்புண்டு மணிக்கடலையுண்"டென்றங்கே

Page 31
54|புலவர் ம.பார்வதிநாதசிவம்
கட்டான உடலசையக் கடலைப் பெட்டி
கையினிலே கொண்டங்கு சிறுமி வந்தாள்
எட்டேதான் வயதென்று தோற்றம் காட்ட
இடையிலுள்ள கந்தை அவள் வறுமை காட்ட
விட்டேனா உனையென்றே வறுமை தன்னை
வெலமுயலும் உழைப்பாளி அங்கே வந்தாள்.
தன்னுடைய சிறுமி செய்த உண்டி தாய்க்குத்
தனியினிமை அளிப்பது போல் കLഞഖ அங்கே என்னுடைய நாவினிலே இனிமை சேர்க்க
இதயமெலாம் அவள் திறனை வியந்து நோக்க "உன்னுடைய உழைப்புக்குப் பரிசி" தென்றே
உவந்தளித்தேன் மேலதிக மாய்ப்பணத்தை "தன்னுடலால் உழைக்காது செல்வம் சேர்த்தல்
தவறாகும்" எனச் சிறுமி சொல்லினாளே.
சொல்லியபின் எனதுபண மிகுதி தந்து
சோராத உழைப்பாளி அப்பால் சென்றாள் செல்வமிங்கு தேடுதற்கு வழிகள் சொன்ன
திறமைமிகு நண்பர்கள் தரையைப் பார்த்தே "நல்வழியில் உழைத்தே நாம் சோம்பல் போக்கி
நலமுறுவோம்"என்றார்கள் சிறுமி அங்கே செல்வழியைப் பார்த்து நின்றேன் அவளின் தோற்றம்
செல்லாது நெஞ்சிருந்தே உழைக்கத் தூண்டும்.

மானம் காத்த மறக்குடிவேந்தன் 55
கவிஞன்
கருணையே வடிவம் ஆவான்
கற்பனைச் சுரங்கம் ஆவான் தருமமே போற்றிக் கொள்வான்
தகாதன ஏற்றுக் கொள்ளான் வருவதே இடரென்றாலும்
வாய்மையே உரைத்து நிற்பான் பெருமையே தருவசெய்வான்
பிழை செய்யான் பிழைத்தற்காக
தமிழுக்குத் தொண்டு செய்வோர்
தங்களைத் தொழுது நிற்பான் தமிழுக்குக் கேடு சூழ்வோர்
தமைப்பகை ஆகக் கொள்வான் இமிழ்திரை உலகில் எந்தப்
பகுதியில் இடர் நேர்ந்தாலும் தமதுயிர் கொடுப்போர் ஆற்றல் தான் மிகப் பாடி நிற்பான்.
திங்களின் அழகென்றாலும்
திகழ்மலர் அழகென்றாலும் செங்கதிர் அழகென்றாலும்
செழும் புனல் அழகென்றாலும் இங்கவை கவிதை என்னும்
எழிலுறு வடிவில் வைப்பான் எங்குமே நன்மை வாழ
இதயத்தால் பாடல் செய்வான்.

Page 32
56 புலவர் ம.பார்வதிநாதசிவம்
பயணம்
பயணத் தொடக்கமும் பயணத்தின் முடிவும் எங்கள் கையில் இல்லையே ஆயினும் பயணம் செய்பவர் நாங்களே அன்றோ செல்லும் வழியில் எத்தனை பூஞ்செடி செழிக்கத் தண்ணீர் ஊற்றிச் செல்கிறோம் செல்லும் வழியில் எத்தனை செடிகளை மிதித்துச் சிதைத்துக் கொடியராய்ச் செல்கிறோம் என்பதெல்லாம் நம் கைகளில் அன்றோ இதற்கும் இறைவனைப் பொறுப்பெனல் நன்றோ நல்லவை செய்வோம் முடியாவிட்டால் அல்லவை செய்யோம் என்றும் அதுவே எங்கள் பயணக் குறிக்கோளாகும் நன்கிதை உணர்ந்தால் பயண முடிவில்
அமைதியும் திருப்தியும் தாமே எய்துமே.
 

மானம் காத்த மறக்குடி வேந்தன் 57 செந்தமிழ்க் காவலனும்
செழுந்தமிழ்ப் பாவலனும்
கொடையும் வீரமும் பாரியின் உடன் பிறந்தவை. கொடையாலும் வீரத்தாலும் அவன் புகழ் எங்கும் பரவியது. பாரியின் புகழ் மூவேந்தர்க்குப் பொறாமையை உண்டாக்கியது. நேர்ப்போரில் வெல்ல முடியாத மூவேந்தர் சூழ்ச்சியினால் பாரியைக் கொன்றனர். பாரி வீர சொர்க்கம் அடைந்தான். பாரியின் உயிர் நண்பர் கபிலர், பாரி மகளிர்க்குத் திருமணம் செய்து வைப்பதற்காகச் சில காலம் வாழ்ந்தார். பாரி மகளிர்க்குத் திருமணம் செய்து வைத்த பின்னர் பாரியை நினைத்து வடக்கிருந்து உயிர் நீத்தார். தமிழுக்குப் பெருமை சேர்த்த கபிலர் சிறந்த
நட்புக்கு உதாரணமானார்.
DI
வெற்றிதனை உறும்போதும் அறநெறியில் தவறான் வீழ்ச்சியினை உறும்போதும் அறநெறியில் தவறான் உற்றதொரு நெறிநிற்போர் வீழ்ந்தாலும் கூட
உடன் வந்தே அறக்கடவுள் தூக்குமென்பதறிவான்!
பாரியெனும் பெருவள்ளல் பிறந்திட்ட போதே
பண்புகொடை இரண்டும் அவன் உடன் பிறந்த
என்பார்
நேரியதன் ஆட்சியினால் மக்கள் உளமெல்லாம்
நிலைத்திட்டதெய்வமென அவன் வாழலானான்!

Page 33
58 புலவர் ம.பார்வதிநாதசிவம்
மானிடர்க்கே உதவலொடு பறம்பினிலே வாடும் மலர்க்கொடிக்கும் இரங்கினான் என்னுமொரு செய்தி நானிலத்தே பரவியதால் குன்றில் அவனிருப்ப நற்புகழோ உலகெங்கும் சென்று பரவியதே
பொருள் வேண்டிப் புலவரெலாம் வருவார்கள்
அவன்பால் பொருள் உணர்ந்து பாடலுக்குப்பொருள் கொடுப்பான்
அவனும் அருள் மேவு சிந்தையராம் கபிலரெனும் புலவர் அவனிடத்தில் ஒரு நாளில் மாலை வந்து சேர்ந்தார்
வரிசையறிந்துபசரிக்கும் பாரியெனும் மன்னன் வண்தமிழில் வல்லவராம் கபிலரினைக் கண்டே பெரிது வந்தான் கபிலரே பறம்பினில் நீர் வாழ்ந்தால் பெருமை மிகும் பறம்பினுக்கே என உரைத்தே
மகிழ்ந்தான்.
மூவேந்தர் நிலப்பரப்பால் பெரியவரே எனினும் முற்றியதாம் பொருள் வளத்தால் பெரியவரே எனினும் பாவேந்தர் தமை மதிக்கும் பண்புதனை நோக்கின்
பாரியே அவர் நினக்குச் சிறிய ரெனச்சொன்னார்!

மானம் காத்த மறக்குடிவேந்தன் 59 தங்களுக்கோர் மண்டபத்தைத் தந்துவிடுகின்றேன் தங்களது சுற்றமொடும் தங்கிடலாம் தாங்க்ள் அங்கிருந்தே தமிழ் மொழிக்காம் தொண்டெல்லாம் (G) UFULIGAOTTLD
ஆம்வசதி அத்தனையும் நாம் தருவோமென்றான்.
தமிழ்ப் பற்றும் அறப்பற்றும் அல்லாமல் வேறே தனிப்பற்றை அறியாத கபிலரெனும் புலவர் தமிழ்ப்பணிக்கே எனைப் பணித்தாய் தங்குகிறேன்
என்றே தங்கினரே சுற்றமொடும் பாரியது நாட்டில்.
பாரியின் நற்புதல்வியர்கள் கபிலரிடம் சென்றே பார்போற்றும் பெரும் புலவ தங்களிடம் தமிழைச் சீர் உறவே கற்பதற்குச் சிந்தை மிக விழைந்தோம் செகத்தெமக்குக் கற்பித்தே அருள்விரோ? என்றார்.
கற்க விரும்பிடுவோர்க்குக் கல்வியினை வழங்கல் கற்றவர்கள் எல்லோர்க்கும் தலையாய கடனாம் பற்றுளத்தால் முல்லைக்குத் தேரீந்தோன் மக்கள் படிப்புளத்தால் இங்கு வந்தீர் படித்திடலாம் என்றார்.

Page 34
60 புலவர் ம.பார்வதிநாதசிவம்
02
உலக முதன்மொழி என்றும் இலக்கணத்தால் என்றும் உயர்ந்ததென்றும் இலக்கியத்தாற் சிறந்தமொழி
என்றும் பலரும் உரைத்திடும் தமிழைக் கபிலரிடம் கற்கும்
பாவையர்கள்முன் செய்த தவம் சிறியதாமோ?
அரசகுடிப்பிறந்தாலும் எழுத்தறிவிப்போனை
இறைவன் எனப்பணிகின்றபாரிபுதல் வியர்தாம் விரைவாகக் கற்றிட்டார் காலத்தைவென்றே
மேதினியில் நிற்கின்ற பாடல்களும் படைத்தார்!
அறம்போற்றும் பாரிஅங்கே ஆட்சியினைச் செய்ய
அருட்கடவுளெனக்கபிலர் அருளுரைகள்கூற
சிறப்புடனே பறம்புமலை திகழ்ந்திடுதல் கண்டே
செகம் பொறுக்கும் மூவேந்தர் மனம்
பொறுக்கார்ஆனார்!
எல்லையிலாப்பெரும் பரப்பை நாம் ஆளுகின்றோம்
எண்ணில்லாப் படைவீரர் நம்மிடத்தே உள்ளார் தொல்லை செயும் பகைவர்களும் நம்
பேரைக்கேட்டால் தொடைநடுங்கும் படியாய பெரும் வலிமை
உடையோம்

மானம் காத்த மறக்குடிவேந்தன் 61
உலகெங்கும்இல்லாத தேர்ப்படையும் உடையோம்
உயர்களிற்றுப்படையுடையோம் குதிரை வருபடையும் நிலமெங்கும் நமக்குமுன்னே இருந்ததிலை எனலாம்
நிலத்தவைகள் இருந்தும்தான் என்ன பயன் ஆகும்!
புலவரெலாம் பாரியினைப்பனையாக நினைத்தே
புவித்தலத்தே பாடுகின்றார் நம்மை யெலாம்
அவரோ நிலமேவும் வடலி என நினைத்து விட்டார் இதனை
நீளவிடாதுடனே நாம் தடுத்திடுதல் வேண்டும்!
பனைவிழுந்துவிட்டதென்றால் பாடுகின்ற புலவர்
பாடுதற்கே வடலிஅன்றி வேறுபொருள் உண்டோ? தினைப்போதும் இனிப்பொறுக்கோம் பாரி தலை ,
நிலத்தில் வீழட்டும் போர் தொடுப்போம் என்று
துணிந்தார்கள்!
பாண்டவர்கள் ஐவரையும் பார் போற்றக்கண்ட
பாவிதுரியோதனின் மனத்தெழுந்த பொறாமை
நீண்டதொரு போருக்கு வழி வகுத்ததென்றே
நிலைத்ததுவாம் பாரதநூல் கூறிடுமே நாளும்!

Page 35
62 புலவர் ம.பார்வதிநாதசிவம் பொறாமைகொண்ட மூவேந்தர் பொறாமையில்
ஒன்றானார் போருக்கு வாவெனவே பாரியினை விளித்தார்! மறாதவனும் போர் புரிந்தான் தன்னுடைய தான வாள்வலியும் தோள்வலியும் காட்டிநின் றான்
களத்தே!
வந்தவர்கள் மூவேந்தர் படை அதிகம் என்றே
மறம் விளங்கும் தோளாளன் மனம் கலங்க வில்லை சிந்தை மிக்கோன் ஆதலினால் சிறுபடை
யைக்கொண்டே
திறம் படைத்த பெரும் படையை வெல்வதற்குச்
சென்றான்!
().
நேர்ப் போரிற் பாரியினை வெலல் இயலாதென்ற நிலைவந்து சேர்ந்ததுவும் மூவேந்தர்தாமும் போர்ப்புறம்பாம் சூழ்ச்சியினாற் பாரியினைக்
கொன்றார் புவித்தலத்தே புகழ் நிறுத்திப் பாரி சொர்க்கம்
அடைந்தான்

மானம் காத்த மறக்குடிவேந்தன் 63
ஊரிலுள்ள பழமரம்போல் உலகினர்க் கெந்நாளும் உணவளித்த பாரிவள்ளல் உயிர்விட்ட செய்தி பாரிலுள்ளயாவரையும் சென்றடைந்தபோது
சரணடையாமறப்போரைப் பாராட்டி நின்றார்!
மானமுள்ளோர் போரினிலே சரண்அடைதல் இல்லை
மறப்போரில் இறப்போர்க்கோ வீர சொர்க்கம்
gD GðiðITL LITLD மானமுள்ள பாரியுமே வீரசொர்க்கம் அடைந்தான்
மண்ணகத்துப் புலவரெலாம் பாடுபுகழ்பெற்றான்.
பாரிஇறந்தான் என்ற செய்தியினைக் கேட்டே
பட்டத்தின் அரசியுமே தன்னுயிரை நீத்தாள்
பாரியையும் அரசியையும் இழந்த அவர் மக்கள்!
பரிதவித்தார் துடிதுடித்தார் துயர்க்கடலில் வீழ்ந்தார்
பாரி என்றன் உயிர் நண்பன் புலவர் தமைப்போற்றப் பாரியைப் போற் பெருமனத்தார் உலகில் இனி இல்லை யாருமெனைத்தடுக்காதீர் பாரி உயிர்தொடர வடக்கிருக்கப் போகின்றேன் எனக் கபிலர் உரைத்தார்
அந்நேரம் பாரி அன்புப் புதல்வியர்கள் சென்றே
ஐயா நீர் வடக்கிருக்குமுன் எம்மைப்பாரும்
இந்நேரம் என் செயலாம் என்பதையும் சொல்லும் என அழுதார் கண்ணீரிற்பாரி உளம் கரைந்தார்

Page 36
64 புலவர் ம.பார்வதிநாதசிவம்
பாரியது செல்வங்காள் நீங்கள் என்றன் மக்கள் பாரினிலேநீர் வாழவழி செய்தேமாய்வேன் போரினிலே நும்தந்தை தன்கடனைச் செய்தே
புவித்தலத்தே தன்புகழைநிறுத்திவிட்டுச் சென்றான்
கொடைஎன்ற சொல்லுக்குப்பொருள் பாரி கொடையே கொள்கை என்ற சொல்லுக்குப் பொருள் பாரிவாழ்வே தடையற்ற கருணைக்குப் பொருள் என்னனன்றால்
தரையினிலே பாரி என முல்லை சொல்லும் என்றார்
பெற்றோரை இழந்திட்டீர் இனிஇந்த நாட்டிற்
பின்னெதனைக்கான என இன்னும் இருந்திடுவீர் பற்றுடைய என்னருமைப்புதல்வியரே நீங்கள்
பறம்புதனை நீத்தென்றன் உடன் வருவீர் என்றார்
04
பாரியது கொடைச் சிறப்பை அறியாத நாடோ
பாரினிலே இன்றில்லைப் பாரிபுதல் வியர்நீர் பாரிலெந்த நாடும் உமை வரவேற்றுக் கொள்ளும்
மனம் வருந்தாதீர் பயணம் தொடங்கிடுவீர் என்றார்
தாம் பிறந்த மண் பிரியும் துன்பத்தில் துன்பம்
தரையினிலே ஒரு போதும் மானிடர்கள் காணார்
தாம் பிறந்த மண் பிரியும் நிலை வந்த தெண்ணிப்
பாரி மக்கள் அழுதார்கள் துடித்தார்கள் அந்தோ

மானம் காத்த மறக்குடி வேந்தன் 65 சிறுமியராய்த் தந்தையுடன் தாம் உலவி வந்த
சிறுவீதியினைக் கூடச் சென்று நின்று பார்த்தார் சிறுமியராய்த் தாய் மடியில் தாமிருந்ததான
தெய்வ நிகர் தாயினது திருப் படத்தைப் பார்த்தார்.
தந்தை சிம்மாசனத்தில் வீற்றிருந்தவாறே
தவநெறியில் ஆட்சி செய்த மண்டபத்தைப்
பார்த்தார் வந்த பெரும் புலவர்களை வரவேற்றே அவர்தம்
வளமானபாக் கேட்ட மண்டபத்தைப் பார்த்தார்
செந்தமிழிற் பாட்டிசைத்துச் சிறுமியர்களுடனே சேர்ந்து பந்து விளையாடிக்களித்த இடம்
பார்த்தார் எந்த இடம் பார்த்தாலும் கண்ணிரைப் பெருக்கும்
என்ற பெரும் உண்மையினைக் கண்டறியலானார்
பாரியது தேர் பெற்ற முல்லையினைப் பார்த்தார்
படர்ந்த கொடி தேர் இருந்தும் வாடியது பார்த்தார்
பாரியது பிரிவை இந்த முல்லை அறிந்துளதே
பாரிலிது புதுமை யென அழுதபடி தொழுதார்.
ஒடி ஒடிப் பார்த்தே கால் ஒய்ந்து போனார்
உளம் ஒயாக் காரணத்தால் பின்னேயும் பார்த்தார் கேடறியாப்பாரிமக்கள் அவலத்தைக் கண்டே
கிளக்கரிய விதிதெரிந்தும் கவலையுற்றார் கபிலர்

Page 37
66 புலவர் ம.பார்வதிநாதசிவம்
அவ்வேளை வெண்திங்கள் அழகு நில வென்னும் அமுதத்தைப் பரப்பி எழுந்ததுவானப் பரப்பில்
இவ்வேழைக் காறுதல் நீ சொல்லத்தான் வந்தாய்
எனக் கூறிநிலையான பாடலொன்றைப் படைத்தார்
உணர்ச்சி யுடன் கருத்தும் தான் கவிதை உயிர் என்றே உரைத்திடுவார் பாவேந்தர் அவர் உரைத்ததான
குணச் சிறப்புக்கொண்டதுவாம் பாரி மகள் பாடல் கூறு புறநானூற்றில் இன்றும் உளதன்றோ?
அறம் தெரிந்த பெரும் புலவர் கபிலரது பாப்போல் அன்பார்ந்த பாரி புதல்வியர் படைத்த பாட்டும்
புறம் விளக்கும் நானூறு பாடலிலே ஒன்றாய்ப்
புவியினிலே நிலைத்திருத்தல் இன்றும் காண்கின்றோம்.
0.5
அவ்வினிய பாடலினை இங்கே தந்துள்ளோம்
அதைப் படித்துப் பாரிமகள் உளத்துயரைப் பார்ப்பீர்
செவ்விய நற்றமிழ் நடையில் அமைந்த இந்தப்பாடல்
சிந்தித்துப் படிக்கையிலே படிப்பவர்கண் கலங்கும்
பாரி மகளிர் பாடல் அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்
எந்தையும் உடையேம் எம் குன்றும் பிறர் கொளார் இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில் வென்று எறிமுரசின் வேந்தர் எம் குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே.
 

மானம் காத்த மறக்குடி வேந்தன் 67
பெற்றோரை இழந்திட்ட பெருவள்ளல் மகளைப் பேணுகின்ற சிறப்புடைய அரச குடிநாடிச்
சிற்றுார்கள் பேரூர்கள் பல கடந்து சென்றே
சிறப்பான அரசகுடி ஒன்றை அவர்கண்டார்.
அக்குடும்ப இளவரசர் தம்மைத் தேர்ந்தெடுத்தே
அன்புளத்துப் பாரிமக்கள் திருமணத்தை முடித்தே
தக்கோனாம் பாரியது பணியினைத் தான் செய்தே சிலகாலம் பாரி மக்கள் நலம் கண்டு மகிழ்ந்தார்.
தந்தையிலாப் பிள்ளைகட்குச் செய்த பணி உடனே
தமது கடன் முடிந்ததென நினைந்து
கொண்டகபிலர்
சிந்தையெலாம் நிறைந்து விட்ட பாரி இடம் சேரச்
சிந்தித்தார் முடிவதனைச் செயலாக்கத் துணிந்தார்.
பாரியைப்போற் புலவர்களை மதிப்பாக ஏற்கும்
பண்பமைந்த பெருவள்ளல் இனி இல்லை என்றே
சீருறவே மனத்தெண்ணி வடக்கிருப்பதான
சிந்தையுடன் புறப்பட்டார் கபிலர் எனும் புலவர்
ஊர்ப் பழுத்த மரம் பட்டாற் பறவைகள் மற்றுடனே உடன் வேறு பழ மரத்தை நாடி விடும் என்பார்
நீர்க்குளத்தே நீர் அற்றால் அங்குளவாம் பறவை
நீருள்ள வேறு குளம் நாடு மெனச் சொல்வார்.

Page 38
68 புலவர் ம.பார்வதிநாதசிவம்
செப்பரிய குணக்கபிலர் பட்ட மரத்துடனே
செகத்திடத்தே நீரற்றதான குளத்துடனே
அப்படியே தம்முயிரை இணைத்து விட நினைத்தார் ஆதலினால் வடக்கிருந்தார் உள்ளம் மிக உவந்தே
தம் வாழ்வை முடித்து விட எண்ணியதனாலே
தன்னுணவைத் தண்ணிரை முற்றாக விட்டே
தம் நண்பர் நினைவுடனே வடதிசையை நோக்கித்
தரையினர்க்கு வடக்கிருத்தல் தனை விளக்கலானார்.
பாட்டாலே சிறந்திட்டார் கபிலர் என்றிட்டோரும்
பண்பாலே சிறந்தவர் தான் கபிலர் என்றிட்டோரும்
ஏட்டாலே சொல முடியா உயர்ந்த நட்பினாலும்
ஏற்றமுற்றார் கபிலர் எனப் போற்றுதல்
செய்தார்கள்.
(முற்றும்)


Page 39


Page 40
பரீட்சை எடாத பண்டிதரான மகாலிங்கசிவத்துக்கு மைந்தர் സെഖ് ம.பார்வதிநாதசிவம் அண்ணாமலைப் கழகத்திலே பேரறிஞர்களான மு.அருணாசலம் பிள்ளை , தண்டபாணி தேசிகர் (ம.க.வேற் LOITGÖTITj,5ít) முதலியோரிடம் மரபு வழி அமைந்து, தமிழ்க் கல்வி பெற்ற புலவரான பார்வதி நாதசிவம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் நெருங்கிய தொடர்பினாலே புதிய சிந்தனைகளையும் உள்ளி ர்த்து இன்று பண்டிதரும் அல்லாதோரும் போற்றிடும் நற்கவிஞராய் விளங்குகின்றமை வியப்புக்குரியதன்று. மகாலிங்க சிவம் வித்திய வித்து இன்று எவரும் விதந்து போற்றிடும் நடுவூர்ப் பழுத்த நன்மரமானது இயல்பேயாகும்.
- முெTத்தன்
(2001