கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மலையகத் தமிழ் மக்கள்

Page 1
咖
 


Page 2


Page 3


Page 4


Page 5
  

Page 6


Page 7
| انا رئر ! لأن تش، رة
:உரிமை பதிவு
விலே கு. நான்கு
இரா. சிவச்சந்திரன் குமாரி ஜெயவர்த்தணு
HLSY YJK S SASASA S S S
வெளியீடு :
பொன்னி
12, முதல் பிரதான சாலை நேரு நகர்
அடையாறு சென்னை - 20
口
அச்சு : இராசகிளி பிரிண்டர்ஸ்
சென்னை-20
鬣
is , ()
"TETM÷÷÷÷÷÷÷÷÷..................................
 
 

பதிப்புரை வனுந்திரமாய் கிடந்த மலைப் பகுதியைப்
பக்குவப்படுத்தி தேயிலை விளையும் பூமியாக மாற்றியவர்கள் மலையகத் தமிழ்மக்கள்.
இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 5.6 சதவீதமாக இருந்தாலும் அவர்கள் தங்கள் மண்ணை தேயிலை மணத்தின் மூலம் உலகம் முழுவதும் நுகரச் செய்தவர்கள்.
இலங்கைப் பொருளாதாரத்தில் UP ارج கெலும்பாக இருப்பவர்கள் தான் அவர்களுக் குள் அடங்கி இருக்கும் உன்னதமான வலி மையை அரசியல் ரீதியில் பயன்படுத்த முடி யாத அளவில் ஒடுக்கு முறையின் கீழ் அடக்கி வைக்கப்பட்டிருக்கிருர்கள்.
வெளி உலகத்தின் காற்றை சுவாசிக்க விடாமலேயே பணயக் கைதிகள் போல் வைக்கப் பட்டிருக்கிரும்கள்.
স্বচ্ছ
肅 三リー三三、二三

Page 8


Page 9
  

Page 10


Page 11

மலேயகத் தமிழ் மக்கள் குடித்தொகைப் பண்புகளும் சமூக பொருளாதார நிலைமைகளும் இரா. சிவச்சந்திரன்
இலங்கைவாழ் மக்களை மொழியடிப்படையிலேயே மிழ்பேசும் மக்கள் எனவும், சிங்களம் பேசும் மக்கள் என |ம் வகைப்படுத்தலாம். இலங்கையில் வாழ்கின்ற தமிழ் பசும் மக்கள் இலங்கைத் தமிழர், இந்தியத்தமிழர், இலங் கச் சோனகர், இந்தியச்சோனகர் என நான்காக வகைப் டுத்தப்படுகின்றனர். இந்த வகுப்புமுறை 1911ம் ஆண் லிருந்து அரசால்" வெளியிடப்படும் குடித்தொகை புள்ளி பர அறிக்கைகளில் எடுத்தாளப்பட்டு வருகின்றது. ஈழத் ல் பாரம்பரியமாக வாழ்ந்துவரும் பூர்வீகத்தமிழ் மக்கள் லங்கைத் தமிழர் எனக்கருதப்பட்டனர். 19 ஆம் நூற் ண்டுகளில் இலங்கையின் மத்திய மலைப்பிரதேசங்களில்

Page 12


Page 13
  

Page 14


Page 15
உரிமைச் சாசனத்தின் 15 சரத்தை மீறும் செயலாகும். ** நாட்டுரிமை பெற ஒவ்வொரு பிரசைக்கும் உரிமை உண்டு; எவர் ஒருவரையும் சட்டவாக்கத்தின் பேரில் நாட்டுரிமை யை ஏற்கச் செய்யவோ மாற்றம் செய்யவோ கூடாது' என அம் மனித உரிமை வாசகம் கூறுகிறது 2 சுதந்திர இலங்கையின் முதல் உதை இந்தியாவை நோக்கியதாகவே அமைந்ததெனவும் எனினும் இந்தியா மலையக மக்களின் இவ் அவல நிலையை அக்கறையுடன் புத்திபூர்வமாக அணுக வில்லை எனவும் பெருந்தன்மை என தான்கருதிய அரசியல் நட்புறவுக்காக மனித வதையை நீக்க அவசரமாக எந்த முடிவையும் எடுக்கவில்லை எனவும் இந்நிகழ்வைக் 25 FT (T6OST மாகவே சிலர் விமர்சித்தனர் 3
இலங்கை இந்திய அரசுகளுக்கிடையே நீண்டகாலமாக இழுபட்ட மலையகத் தமிழரது நாடற்ருேர் பிரச்சனை 1964 இலும் 1974 இலும் இடம் பெற்ற சில ஒப்பந்தங்களின் வாயிலாக ஒரு முடிவுக்கு வந்ததெனலாம். 1964ல் சிறிமா சாஸ்திரி உடன்படிக்கை உருவாயிற்று. இதன்படி அப் போதிருந்த நாடற்றவர்களான 9,25,000 பேரில் 5,25,000
பேரையும் "அவர்களது இயற்கை அதிகரிப்பையும் இந்தியா
ஏற்றுக் கொள்வதெனவும் 3,00,000 பேரையும் "அவர் களது இயற்கை அதிகரிப்பையும் இலங்கை ஏற்றுக் கொள்வதெனவும் மிகுதி மக்கள் குறித்து இன்னுேர் சந்தர்ப் பத்தில் முடிவுக்கு வருவதெனவும் தீர்மானிக்கப்பட்டது. பின்னர் 1974ல் இடம் பெற்ற சிறிமா-இந்திரா ஒப்பந்தம் மிகுதியான மக்களையும் "அவர்களது இயற்கை அதிகரிப்
பையும் அரையரை வாசியாகப் பங்கிட்டுக் கொண்டது
இவ் ஒப்பந்தங்களின் நிறைவேற்றுக் கால எல்லை 15 வரு டங்களென வரையறுக்கப்பட்டது. 4 இவ் ஒப்பந்த நடை முறையைச் சுருக்கமாகக் கூறுவதாயின் தலா 7 பேர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படும் போது தலா 4 பேர் இலங்கைப் பிரஜா உரிமை பெற்றனர். நடை முறையின்
12
 

போது பல சிக்கல்கள் தோன்றின. குறிப்பிட்ட கால எல்லைக்குள் அவற்றினை அமுல்செய்யமுடியாது போன மையால் இலங்கை மேலதிகமாக 94,000 பேருக்கு பிரஜா உரிமை வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் 1986ல் ஏற்பட்டது. இதன்படி முன்னர் இந்தியா திரும்ப வேண்டியோர் தொகை
6,00,000 பேரும் அவர்களது இயற்கை அதிகரிப்புமென
இருந்த தொகை 5,06,000 பேரும் இயற்கை அதிகரிப்பு மெனக் குறைந்தது. எனினும் தமிழ்நாடு அரசின் பொலிஸ் அறிக்கையின் படி 1986 பெப்ரவரி மாதம் வரை இந்தியா
திரும்பியோர் தொகை 4,59,410 பேராகும். இதில் 3,33,843
பேர் ஒப்பந்தத் தொகையினராகவும் 1,25,567 பேர் இயற் கை அதிகரிப்பின் எண்ணிக்கையெனவும் அறிக்கை தெரிவு படுத்துகின்றது 5 மிகுதி 1,72,157 பேரும் அவர்களின் இயற்கை அதிகரிப்பும்" (மொத்தம் ஏறத்தாழ 2,40,000 பேர்) இன்றும் இந்தியா திரும்புவதற்காக இலங்கையில் காத்துள்ளனர் எனக் கருதலாம். மேற்படி ஒப்பந்தங்கள் செய்து கொண்ட இரு நாடுகளுமே மலையகத் தமிழரது உரிமைகளை மதிக்கவோ வாழ்வியல் அம்சங்களாக கருத்திற்
கொள்ளவோ இல்லை. தமது எதிர்கால வாழ்வைத் தாம்
நிர்ணயிக்கும் உரிமை இவர்களுக்கு மறுக்கப் பட்டதோடு இரு அரசுகளாலும் அவர்கள் வர்த்தகப் பண்டங்கள் போல் கணிக்கப்பட்டே மேற்படி ஒப்பந்தங்களின் மூலம் பங்கிடப் பட்டனர். இந்தியா திரும்பிய மலையகத் தமிழர் வாழ்வும் முன்பிருந்த நிலையை விட தாழ்ந்த நிலையிலேயே அமைந் தது. இதனை இந்தியா திரும்பிய மலையகத் தமிழரிடையே நிகழ்த்தப்பெற்ற பல சமூகப் , பொருளாதார ஆய்வுகள்
எடுத்துக் காட்டுகின்றன. 6
தமிழ் பேசும் மக்களில் 80 வீதத்தினர் வடக்கு, கிழக்கு
மாகாணங்களிலும், மலையக, மத்திய, ஊவா மாகாணங் . களிலும் செறிந்துள்ளனர். தலைநகர் அமைந்துள்ள மேல் மாகாணத்தில் 11 வீதத்தினர் காணப்பட, மிகுதி 9 வீதத்
13.

Page 16


Page 17
ཕྱི་
-
!!!.
C
9
默
el
魯
-
e
ey
CS
-
C མས་ང་ CO
བ་ཡ4
○
↓ܗܝ
i
է: --SL El 으 , (g S)
$U
공
- CO
-
ー C 真 霹 韶,蟹 3 氢、翡 菲 ܕܚܸܐ ବୈଜ୍ଞ ଅଗ୍ନି) G5 羲 書 蟹器 *BS- 慧 로 |་བློ་ 35)༔ ངས་ཧྲི)
ခြု) $ @ন্ত ९9 6 C9.
|- הוא מזס \rעל כ O
.
ܚܚܕܚܚܚܚܚܚܚܚܘܚ--------------ܚܠ
,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S
影
를
རྒྱུ་
GYO
за -
|
• లp ~ ~H GQ מס or GN d d ャー!
- - - - -
s
༤ས་
Cd
כC
- - th
ཕྱི་
S
i
。 . . . . . ܐܸܬܼܝܼܕ ܕܢܕܘ ܪܘܼܐ ܪܚܟ ס& כs+{ \rר
a3 .
te S !!! 德 es
-
CS
Ολ 

Page 18


Page 19
தினரே ஏனைய நான்கு மாகாணங்களிலும் பரந்து வாழ்வி தைக் காணலாம். இலங்கைத் தமிழரில் 73 வீதத்தின வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ்வது போன்று இர தியத் தமிழரில் 65 வீதத்தினர் மத்திய மலேயகப் பகுத் யாகிய மத்திய ஊவா மாகாணங்களில் செறிந்துள்ளனர் இவர்களில் 9.2 வீதத்தினர் வடக்கு கிழக்கு மாகாணங் களில் பரந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்."
மலேயகத் தமிழரது பரம்பலை மாவட்ட ரீதியாக நோக்கு மிடத்து நுவரெலியா (30%) பதுளை (17%) கண்டி (13% ஆகிய தேயிலைப் பெருந் தோட்ட மாவட்டங்களில் மொத்த மலையகத் தமிழரில் 60 வீதத்தினர் பரந்துள்ளதையும், இறப் பர் பெருந் தோட்ட மாவட்டங்களாகிய இரத்தினபுரி (11%) கேகாலை (5%) களுத்துறை (4%) ஆகியவற்றில் 20 வீதத் தினர் பரந்துள்ளதையும் அவதானிக்க முடிகின்றது எஞ்சிய 20 வீதத்தினரே ஏனைய பதினெட்டு மாவட்டங்களிலும் பரந்துள்ளனர்.
மாவட்ட மொத்தக் குடித் தொகையில் மலையகத் தமிழர் எந்த மாவட்டத்திலும் தனித்த பெரும்பான்மை யாக இல்லாவிடினும் நுவரெலியாவில் 47 வீதத்தின ராகவும், பதுளையில் 21 வீதத்தினராகவும் காணப்படு கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். எனவே மேற்படி மாவட்ட எல்லைகள் நுவரெலியாவிலும், பதுளையிலும் தமிழர் வாழும் பகுதிகளைச் சேர்த்து இணைக்கும் ஒரு மாற்றத்திற் குள்ளாயின், மலேயக மாவட்டமொன்றில் மலையகத்தமிழர் தனித்த பெரும்பான்மையாக வருதல் சாத்தியமே. இதற்கு மாருக இன்று பெருந் தோட்டங்களிலே திட்டமிட்ட முறை யில் சிங்கள மக்களின் குடியேற்றங்களே மிகுதியாக இடம் பெற்று வருவதால் மலேயகத் தமிழர் பெருந்தோட்டப் பகுதி களில் சிறுபான்மையோராக மாற்றப்பட்டுவரும் போக்கே தென்படுகின்றது. பெருந்தோட்டத்தை அரசு சுவீகரித்த பின்னர் (1975) ஏறத்தாழ 30,000 சிங்களக் குடியானவர்
-
ܐ ܐ ܬ ܐ، ܐܝܼܢܵܐ ܠܵܐ ܐܸ, ܐܲ.
 
 

கள் பெருந் தோட்டங்களில் குடியேற்றப்பட்டு தொழிலாளர்
- களாகப் பணி புரிகின்ருர்கள். இவர்களில் பெரும்பான்மை
யானுேர் நுவரெலியா மாவட்டத்திலுள்ள பெரும் தோட்டங் களிலேயே குடியமர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க தாகும். 7. இவை தவிர வடக்கே வன்னிப் பிரதேசத்தில் மலையகத் தமிழரின் குடிவருகை இலங்கையில் அடிக்கடி " இடம் பெறும் இனக் கலவ ங்களினுல் அதிகரித்து 6}} {{b கின்றது. வவுனியா, முல்லைத்தீவு, மன்னர் மாவட்டங் களின் மொத்தக் குடித்தொகையில் மலேயகத் தமிழரது பங்கு முறையே 19, 14, 13 வீதங்களாக 1981ல் அமைந்திருந் தது. 1983 இனக்கலவரத்தின் பின்னர் வன்னிப் பிரதே சத்தில் மலேயகத் தமிழரது வருகை பெருமளவு அதிகரித் துள்ளது. அட்டவணை 5.1 இலங்கையில் மலையகத்தமிழரது மாவட்ட ரீதியான பரம்பலையும் மொத்த மாவட்ட குடித் தொகையில் மலையகத் தமிழரது நூற்று வீதத்தையும் விபர மாக விளக்குகிறது.
" س-22 ------ ہ
மலையகத் தமிழ் மக்கள் சமூக பொருளாதார நிலேயிலே இங்கு வாழும் ஏனையவர்களே விட தாழ்ந்த நிலையில் காணப் படுவதை பல நுண்ணுய்வுகளும், சில தரவுகளும் அவற்றுக் கான விளக்கங்களும் நிரூபிக்கின்றன. எனினும் இனரீதி யான நோக்குள்ள கட்டுரைகள் சிலவும் இன்னும் சில அர சாங்கத் தரவுகளும் மலையகத் தமிழர் நல்ல நிலையில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கின்றன. வறுமை நிலைக்குரிய பல. அம் சங்கள் மலையகத் தமிழரிடையே அதிகளவிற்கதிக அளவில் காணப்படுகின்றன. வருமானம், போசாக்கு, குடியிருப்பு, மருத்துவம், கல்வி, ஏனைய சமூக சேவை வசதிகள் என்பன சுகாதாரம், இவர்களிடம் மிகவும் தாழ்ந்த நிலையிலேயே காணப்படுகின்றன. பெளதீக வாழ்க்கைத் தரக் குறிகாட்டியும் (PQL) ஏனைய இனத்தவர்களைவிட மலையகத் தமிழர் வாழ்க் கைத் தரம் குறைந்த நிலையில் உள்ளமையைப் புலப்படுத்து கின்றது. இக்குறிகாட்டி கணக்கிடும் ஆயுள்காலம், சிசு மரண
17
。  ே

Page 20


Page 21
வீத அதிகரிப்பு, பிரசவத் தாய்மார் மரண வீத அதிகரிப் போன்றன இவர்கள் வறுமையில் வாழ்வதையே உறுதி படுத்துகின்றன.
இலங்கையிலே தோட்டத் துறையில்தான் ஏனைய துை களை விட குறைந்த ஊதியம் வழங்கப்படுகிறது. இ ஊதியம் மாதாமாதம் வழங்கப் பட்டாலும் வேலையு ஊதியமும் ஏனைய துறைகளைப் போலன்றி நாளாந்த அடி படையிலேயே கணிக்கப் படுகின்றன. தோட்ட நிர்வாக தினர் வேலை கொடுக்கும் நாட்களுக்கேற்பவே தொழிலா ரது மாத ஊதியம் அமைகின்றது. தோட்டங்கள் தேசி மயமாக்கப் படுவதற்கு முன்பு 90 வீத தோட்டங்களி வாரத்திற்கு 4 நாட்களுக்குக் குறைவாகவே வேலை வழ கப்பட்டது. அப்போதைய நாட்கூலி ஆணுக்கு 7 ரூபாவி கவும், பெண்ணுக்கு 5 ரூபாவாகவும் இருந்தது. தற்போ 6 மாத காலத்திற்கு குறைந்தது 120 நாட்களுக்கு வே! வழங்க வேண்டுமென்ற சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இது தொழிலாளருக்கு அனுகூலமாக இருந்தாலும் தோட் நிர்வாகத்தினர் சட்டத்தைச் சரிவரக் கடைப்பிடிப்பதில்ல்ை மேற்படி சட்ட அனுகூலத்தைப் பதிவு பெற்ற தொழில் ளரே அனுபவிக்கத் தகுதியுடயவராவார். இதனுல் தோட் நிர்வாகம் தொழிலாளரைப் பதிவு செய்வதில் கடினம் காட் கிறது. சமயா சமய ஊழியர்களையே நிர்வாகம் பெரிது விரும்புகின்றது. பல தோட்டங்களில் சமயா சமய ஊ யர் அதிகரித்துவரும் போக்கே தென்படுகிறது. இவ்வை ஊழியர்களாக பெருமளவிற்கு தோட்டத்திற்கு அண்பை பகுதிகளில் வாழும் சிங்களத் தொழிலாளரே வரவழைக் படுகின்ருர்கள்.
தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்ட பின்னரும் பே படி தொழிற்சட்டங்கள் தொழிலாளரது வேலைநாட்களை அ கரிப்பதில் பெரிய மாற்றமெதனையும் ஏற்படுத்தவில்லை எ
18

ப் ப்
lu
DT
f
பதனை 1978 இல் தேயிலைப் பெருந்திட்டத்திற்கான ஆய் வுகள் வெளிப்படுத்தின.9. இதன்படி 1978 ஏப்ரலில் வழங் கப்பட்ட சராசரி வேலை நாட்களின் எண்ணிக்கை உயர் நிலத் தேயிலைத் தோட்டங்களில் 16 முதல் 22 நாட்களா கவும் இடை நில தோட்டங்களில் 17 முதல் 19 நாட்களாகவும் தாழ் நிலத் தோட்டங்களில் 3 முதல் 16 நாட்களாகவும் அமைந்திருந்தன.10-தற்போது மேற்படி வருமான அம் சங்களில் பெருமளவு மாற்றங்கள் ஏற்பட்டிருக்குமெனக் கூறுவதற்கில்லை. 1981/82 ஆம் ஆண்டிற்குரிய இலங்கை மத்திய வங்கியின் சமூக-பொருளாதார அளவீட்டின் படி தோட்டத் தொழிலாளி ஒருவரின் சராசரி மாத வருமானம் 449 ரூபாவாகவும், இது நகரத்துறையில் 1625 ரூபா வாகவும், கிராமியத்துறையில் 107 ரூபாவாகவும் அமைந் துள்ளது.11.
கிராமிய நகர மக்களிடையே காணப்படும் குடும்ப
வருமானத்தை விட தோட்டத்துறை குடும்ப வருமானம்
அதிகமென சில கட்டுரையாளர்கள் கருத்துத் தெரிவித்துள் ளனர். ஏனைய துறைகளை விட தோட்டத் துறையில் குடும்ப உறுப்பினர் உழைக்கும் பண்பு அதிகமாக வுள்ளதெனச் சில தரவுகள் தெரிவிக்கின்றன. இவற்றினை நுணுகி நோக்கும் போது இவை மிகைப்படுத்தப்பட்ட தகவல்களாகவே அமைந்துள்ளதை உணரலாம். ஏனைய துறைகளிலே குடும்ப உறுப்பினரது உழைப்புகள் யாவும் தரவுகளுக்குள் அகப்படுவ தில்லை. தோட்டத் தொழிலாளர் குடும்பத்தில் தான் சரா சரி அங்கத்தவர் தொகை ஏனைய துறைகளை விட குறை வாக (4.8) ஆக உள்ளது. இங்கு பெரும்பாலும் கணவ னும் மனைவியும் உழைப்பாளர்களாக உள்ளனர். ஏனைய துறைகள் சார்ந்த தொழிலாளர் ஒருவரின் மாத வருமா னத்தை விட தோட்டத்தொழிலாளரின் முழுக் குடும்ப வரு மானம் குறைவாகவே உள்ளது. இந்த வருமானத்தை பெறுவதற்கு அக்குடும்பம் பல இழப்புக்களுக்கு உள்ளாகின்
19

Page 22


Page 23
தன்மை அங்கு எல்லோரும் நல்ல நிலையில் திருப்திகரப்
றது. பாடசாலை செல்லாத பிள்ளைகள் தொகை அதி: பதற்கும் பெண்கள், சிறுவர் பெருமளவு தொழிற் படை இருப்பதற்கும் மேற்படி குடும்ப வருமான நாட்டமே  ைமாகின்றது. குடும்பத் தலைவி தனது பெருமளவு நேரத் வேலேத் தலத்திலேயே செலவு செய்ய வேண்டியுள்ள இதனுல் தாயின் ஆரோக்கியம் குன்றுவதோடு குழந் களும் முறையான கவனிப்புக்கு உட்பட்டு வளர்க்கட்
வதில்லை. இவர்களிடம் கல்வி இழப்பு, சிசு மரண வி
அதிகமாகக் காணப்படுவதற்கு இதுவே பெரிதும் காரண அமைகின்றது. இவ்வாருண எதிர் காலப் பெரும் இ புக்களுக்கு மத்தியிலேயே குடும்ப வருமானம் பெறப்படு றதென்பதையும் மனதிற் கொள்ள வேண்டியுள்ளது. இ
தவிர வறுமை நிலையை சராசரி வருமானத்தைக் கொ6
மாத்திரம் கணிப்பது தவறு. அதற்குப் பன்முகப்படுத் பட்ட பார்வை உண்டு. மலையகத்தில் கடின உழை காணப்படுகின்றது. அதற்கேற்ப அத்தொழிலாளர்
ஊதியம் பெறுவதில்லை என்பதே உண்மையாகும்.
தோட்டத்துறையை ஏனைய துறைகளுடன் ஒப்பி போது இதில் வேலேவாய்ப்பு அதிகம் உண்டெனவும் ே யின்மைப் பிரச்சனை இங்கு குறைவெனவும் கூறப்படுகின்ற 1981-82 சமூக பொருளாதார அளவீடு தோட்டத் துறை வேலேயின்மை 6 வீதமாகவும் முழு இலங்கையில் இது வீதமாகவும் காணப்படுவதைக் காட்டுகின்றது. தே மட்டத்திலான வேலையின்மை பிரச்சனை வேறுபட்ட கல் தரத்தின் அடிப்படையிலும் வேறுபட்ட வயதுப் பிரிவு டத்திலும் இடம் பெறுவதாகும். உண்மையில் இங்கு ே யின் தரம் என்ற அம்சமே முக்கியத்துவம் பெற்று ே யின்மைப் பிரச்சனையைத் தோற்றுவிக்கின்றது. தோட் துறை தொழிலாளரது வேலையோ கீழ்மட்ட வேலையா எனவே வேலையின்மைப் பிரச்சனை குறைவாக இருக்கி
நிலையில் இருக்கின்றமையைச் சுட்டுவதில்லை.
20
 
 

5 f" தோட்டத்துறையில்தான் கீழ் உழைப்பு நிலை மிகவும் யில் அதிகமாக அதாவது 34 வீதமாகக் காணப்படுகின்றது. கார தேசிய தரவுகள் நகரத்துறையில் இது 14 வீதமாகவும் தை கிராமியத் துறையில் 24 வீதமாகவும் உள்ளதைக் காட்டு து. கின்றன. தோட்டத் தொழிலாளி நாளாந்த அடிப்படையில் தை மாத ஊதியம் பெறுபவன். அவனுக்கு உழைப்புக்கேற்ப படு ஊதியம் கிடைப்பதில்லை. இவ் அம்சங்களைக் கீழ் உழைப்பு தம் நிலை எனத் தரவுகள் சுட்டினும் இதனை GS6n&eadusă 52 Duílišf மாக கூருகவேக் கொள்ளவேண்டும். இழப் கின் ബ தோட்டத் தொழிலாளர்கள் இங்குள்ள ஏனைய மக்கள் ண்டு போன்று சாதாரண வீடுகளில் வாழவில்லை. லைன் அறை ந்தப் களிலேயே அன்று தொட்டு இன்றுவரை வாழ்ந்து வருகின் ப்புக் ருர்கள். தொடர் வீடுகள் போன்ற இந்த "லைன்கள்' ஒவ் *கள் வொன்றும் 100 அடி நீளமும் 15 அடி அகலமும் கொண் டவை. ஒரு லைனில் 9 அல்லது 10 குடியிருப்புப் பகுதிகள் அமைந்திருக்கும். இந்த "லேன்'களின் அத்திவாரத்திற்கும் டும் சுவர்களுக்கும் சீமெந்து பயன்படுத்தப்படுகின்ற போதிலும் வலை தரை களிமண்ணுலானது. "கல்வனேஸ் தகடுகளால் கூரை து. வேயப்பட்டுள்ளது. அவை உடையும் வேளை கூரை வைக் பில் கோல் மறைப்பைப் பெறும். மேற்படி "லைன்களில் 10 அடி 15 நீளமும் 12 அடி அகலமும் கொண்ட ஒரு அறையும், 5 சிய அடி அகலம் கொண்ட வராந்தாவும் ஒரு குடும்பத்திற்கு வித் வழங்கப்படும். தளபாடங்கள், விறகு, மலசலகூடவசதிகள் ԼՈւ- எதுவும் இங்கில்லை. சிறிது தூரத்தே குழாய் நீர் பெறக் கூடிய வசதி சில லைன்களுக்கு உண்டு. மேற்படி சிறு லைன் 2ు அறையினுள் ஒரு குடும்பமல்ல பல குடும்பங்கள் வாழ்ந்த நிலை முன்பு சர்வசாதாரணமாக இருந்தது. இன்று அது தம. ஓரளவு குறைந்துள்ளது. 12. மனித வாழ்வுக்குத் தகுதி ன்ற யற்ற மேற்படி அறைகளைத் தொழிலாளர்களுக்கு வழங்கி விட்டு, குடியிருப்பு வசதிகள் அனைத்துத் தோட்டத் தொழி லாளருக்கும் அரசும் நிர்வாகமும் வழங்கியுள்ளதென குறிப்
21.

Page 24

III
也 7.
f
ሀ)) 麟
፴)| (
(26.
s
(ሀ)6
(3 y.
UCI (Ա) եւ
ܗܘܘ ܐ
SS

Page 25
பிடுகின்றமை அருவருக்கத் தக்க கூற்ருகும். மேற்படி மோசமான குடியிருப்புகள் கூட தோட்டத் தொழிலாளருக் கன்று தோட்டத்திற்கே சொந்தமானவை.
1981/82 சமூக பொருளாதார அளவீட்டின்படி மொத் தத் தோட்டத் தொழிலாளருள் 92 வீதமாஞேர் மேற்படி லேன்களிலேயே வாழ்கின்றனர். இவர்களில் 4 வீதமானேர் சொந்த வீடு கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். நாட் டின் கிராமியத் துறையில் இதன் வீதம் 66 ஆக அமைகின் றது. மேலும் நகரப் பகுதிகளில் 31 வீதமான வீடுகளில் அளவுக்கதிகமான ஆட்கள் வசித்து வந்தனர். கிராமியத் துறையில் இது 32 வீதமாகவும், தோட்டத்துறையில் இது 76 வீதமாகவும் காணப்பட்டது.
தோட்டத் தொழிலாளரது குடியிருப்புப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு "லைன் அறைகளின் தரத்தை உயர்த்துதல், சிறுகுடில்கள் அமைத்தல், உலக் வங்கிப் புனருத்தாரன திட் டத்தின் கீழ் வீட்டுவசதிகளை அபிவிருத்தி செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது வீட மைப்புத்திட்டத்தின் கீழும், சில திட்டங்கள் பெருந்தோட்டப் பகுதிகளில் இடம் பெற்றுள்ளன. எனினும் தோட்டங்களி லேயே குடியிருப்பு வசதிகள் குறிப்பிடத்தக்க அளவுக்கு இன்று வரை உயர்த்தப்படவில்லை. தோட்ட நிர்வாகத்தின் பொறுப்பி லேயே இன்றுவரை தோட்டக் குடியிருப்பு அபிவிருத்தி தங் கியுள்ளது. தோட்ட உற்பத்திச் செலவைக் கு  ைற வ T க வைத்துக்கொள்ள வழியமைக்கும் வகையில் குடியிருப்பு, சேமநல, சமூக சேவை வசதிகளுக்கான செலவுகளைக் குறைக்கவே தோட்ட நிர்வாகம் முயலுதல் வழக்கமாகும். எனவே தான் இன்று வரை தோட்டத் தொழிலாளரது குடி யிருப்பு நிலைமைகளில் குறிப்பிடத்தக்க அபிவிருத்தி காண முடியாதுள்ளது.
22
 

தோட்டத் தொழிலாளரது சுகாதாரம், மருத்துவ, டும்பநலம் போன்ற தேசிய தரத்தை விட மிகவும் தாழ்ந்த ட்டத்திலேயே காணப்படுகிறது. சுகாதாரமற்ற சூழல், சுத்த நீர்ப்பாவனை, போஷாக்கின்மை, மருத்துவ வசதிக் றைவு, மோசமான காலநிலை, உயர் மலைகளில் ஏறி றங்கும் கடினமான உழைப்பு போன்ற காரணிகளால் நாட்டத் தொழிலாளர்கள் அடிக்கடி நோய் வாய்ப்படுவ நாடு ஆரோக்கியமற்றவர்களாகவும் காணப்படுகின்றனர். வர்களிடையே பொதுவாக சுவாசம் சம்பந்தமான நோய் ரூம், வயிற்றுக் கோளாறுகளும் அதிகளவிற் காணப்படுகின் ன. இதற்கு அவர்கள் வாழும் மோசமான சூ ழ லு ம், சுத்த நீர்ப் பாவனையும் பிரதான காரணங்களென வைத் ய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.13.
தோட்டத்திலே நல்ல வைத்தியசாலைகள் இல்லை. ருக்கும் சில மருத்துவமனையும் வசதியற்றதாகவும், தேவை ான மருந்துகளின்றியும், போக்குவரத்து வசதிக் குறைவான லேயிலும் காணப்படும். சில இடங்களில் வைத்தியசாலைகள் ல்லாத நிலை கூட காணப்படும். இதனுல் நோய் வாய்ப்படும் தாழிலாளர்களை தோட்டத்திற்கு வெளியே வெகுதூரத்தே ள்ள அரசாங்க மருத்துவமனைகளுக்கே கொண்டு செல்ல பண்டிய நிர்பந்தம் உள்ளது. இதற்கு அதிகபணம் செல Tவதோடு அவசர தேவையாகச் செல்வதற்கு போக்கு rத்து வசதிகளும் காணப்படுவதில்லை.
தோட்டத் தொழிலாளர் அதிகமாக வாழும் நுவரெலியா, நுளை, கண்டி, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங் 'ள நாட்டின் சிசு மரண வீதம், பிரசவத் தாய்மார் மரண தம் அதிகளவு காணப்படும் பகுதிகளாகும். சராசரி ஆயுள் லம் மேற்படி மாவட்டங்களிலேயே சராசரியை விடக் றைவாகவும் உள்ளது. இவைதவிர தோட்டத் துறை லயே நோய்வாய்ப்படுவோர் தொகை ஏனைய துறைகளை
23

Page 26


Page 27
விட அதிகமாகக் காணப்படுவதையும் தரவுகள் தெரிவிக் கின்றன.
சுகாதாரச் சூழலை அளவிடும் குறிகாட்டியில் ஒன்ருகக் குடித்தொகை மருத்துவர் விகிதம் கொள்ளப்படுகின்றது. உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்ட ஆய்வொன்று தோட்டப் பகுதி மாகாணங்கள் தான் குடித்தொகை மருத் துவர் விகிதத்தில் தேசிய மட்டத்தைவிட மிகத் தாழ்ந்த நிலையில் இருந்தமையைக் காட்டிற்று, 1,00,000 பேருக்கான மருத்துவர்கள் மத்திய மாகாணத்தில் 15 ஆகவும், தாதிகள் 30 ஆகவும் காணப்பட்டனர். ஊவா மாகாணத்திலும் சப்பிரகமுவா மாகாணத்திலும் மருத்துவர்கள் 11 ஆகவும் தாதிகள் முறையே 24 ஆகவும், 35 ஆகவும் காணப்பட்டனர். தேசிய சராசரி மருத்துவர்கள் 26 எனவும், தாதிகள் 51 எனவும் காட்டியது.
கடுமையான சோகை, புரதச் சத்துப் பற்ருக்குறை, போஷாக்கின்மை என்பன தோட்டத்தொழிலாளரிடமும் அவர்களது குடும்பத்தினரிடமும் அதிகளவிற் காணப்படுவ தைப் பல வைத்தியக் குறிப்புகள் தெரிவிக்கின்ற போதிலும், சில ஆய்வாளர்கள் போஷாக்கு நிலையில் தோட்டத் துறை யினர் கிராமியத்துறையைவிட உயர்நிலையில் உள்ளனரென வருமானக் குறிகாட்டியை ஆதாரம் காட்டித் தெரிவிக்கின் றனர். தோட்டத் தொழிலாளர்கள் மலைகளில் ஏறி இறங்குவ தாலும், மோசமான கால நிலையில் வாழ்வதாலும், கடின உழைப்பைச் செலவிடுவதால் அதிக கலோரி அலகளவு நுகர்வு இவர்களுக்குத் தேவைபடும் என்பதனை இவ்வாய் வுகள் கவனத்திற் கொள்வதில்லை. மேலும் ஏனைய துறை யினரைவிட தோட்டத் தொழிலாளரின் வருமானத்தையும் உணவு வழங்கலையும் அளவிடுவது சுலபம். இது தவருன ஒப்பீட்டுத் தரவுப் பெறலுக்கு வழிவகுத்திருக்கலாம்.
1975, 76 இல் "கெயர் நிறுவனம் பாடசாலை மட்டத்
C24
தில் போஷாக்கு நிலை பற்றி மேற் கொண்ட ஆய்வொன்று
 

ாட்டப் பாடசாலைப் பிள்ளைகளே போஷாக்குநிலையில் முழு 1ங்கையிலும் தாழ்ந்த மட்டத்தில் உள்ளதைத் தெரிவிக் து. 1980 இல் திட்ட அமலாக்கல் அமைச்சு மேற்கொண்ட "ஷாக்குநிலை ஆய்வு மேற்படி ஆய்வுப் பெறு பேற்றினை பதிப்படுத்துவதாகவே அமைந்தது. இருந்தும் உணவு திரை வழங்கலுக்கான திட்ட அறிக்கை தோட்டப் தியை அதிகம் கொண்ட நுவரெலியா மாவட்டம் தான் றந்த தொகையான அதாவது 20 வீத உணவு முத்திரை றுநர்களைக் கொண்டிருந்தது. செறிவான நெற்செய் ப் பிரதேசமான மொனராகலை மாவட்டத்தில் 68 வீதத் ார் உணவு முத்திரை பெறுநர்களாகக் காணப்பட்டனர். iன் தேசிய சராசரி 50 வீதமாகும். தோட்டத்தொழி ளர் நலனில் அரசு அக்கறை செலுத்தவில்லை என்பதே ன் உள் அர்த்தமாகும்.
தோட்டத் தேசியமயத்தை அடுத்து தோட்டப்பகுதிச் Tதார சேவைகள் தேசிய சுகாதார சேவைகளுடன் ஒன் ணக்கப்பட்டமை முன்னேற்றமான நடவடிக்கை எனினும், ாறுவரை தோட்டப் பகுதிச் சுகாதாரச் சேவையில் குறிப் த்தக்க அபிவிருத்தி ஏற்பட்டுள்ளதெனக் கூறமுடி துள்ளது. அண்மைக்காலங்களில் தோட்டப் பகுதிச் சுகா சேவைகளை விருத்தி செய்ய யுனிசெப், கெயர் ஆகிய வனங்களின் ஆதரவுடன் பல திட்டங்கள் தீட்டப்பட்டன. "ட்டப்பகுதிகளில் 20 க்கு மேற்பட்ட மருத்துவ மையங் ஆரம்பித்து அதனூடாக தாய் சேய் நலன் பேணல், "ற்று நோய்த் தடுப்பு மருந்து ஏற்றுதல், போஷாக்கு ாவு விநியோகம், குடும்பத் திட்டவசதி, சுகாதார கல்வி தி போன்றவற்றை அபிவிருத்தி செய்வது திட்டத்தின் யெ பணிகளாக அமைந்தன. அத்துடன் குழந்தை மரிப்பு நிலையங்களின் தரங்களை உயர்த்துதலும் திட்டத் இன்னுேர் பணியாக அமைந்தது.14. இத்திட்டங்கள் போது நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன. சுகா
சேவைகளை அபிவிருத்தி செய்வதென்பது இங்கு "சமூக
25
LLMaaLLMLSSLS TqM S S Sq S S S qqq qqSqqq S SLLLS S L L L L SLLLL LL LLLLL L L S L S LLLLL LLSLSq

Page 28


Page 29
பொருளாதார அபிவிருத்தியுடன் இணைவாக மேற்கொள்ளப் படும் போது தான் நற்பயனைத் தருமெனலாம்.
மலையக மக்களுக்குக் கல்வி வசதிகளை வழங்குவதில் இலங்கையிலே பிரித்தானிய ஆட்சி நிர்வாகம் பின்னிற்கின் றதென 1901 ஆம் ஆண்டில் பிரித்தானியா பொதுமக்கள் சபையிலேயே குற்றம் சுமத்தப்பட்டது. அக் குற்றச்சாட்டு இன்றுவரை நிவர்த்திக்கப்படவில்லை. நாடுதழுவி காலங்கா லமாக திட்டமிடப்பட்டு அமல்செய்யப்பட்ட கல்விச் சீர்திருத் தங்கள் எதுவும் மலையக மக்களைக் கவனிக்கவேயில்லை. 1905 ல் ஹேபார்ட் வேஸ்சின் தலைமையிலான குழு கூறியது போன்று தோட்டப் பிள்ளைகளுக்குக் கல்வி வழங்கும் பொறுப்பு தோட்ட உரிமையாளரிடமே ஒப்படைக்கப்பட்டது. அக்கல்வி முறையே மிக அண்மைக் காலம்வரை பெருமாற்றமெதற்கும் உட்படாது பின்பற்றப்பட்டு வந்தது. இலங்கையின் ஏனைய பகுதிகளில் 1920, 1939, 1947 ஆகிய ஆண்டுகளில் கல்வி தொடர்பாக பல சட்டங்கள் இயற்றப்பட்டு கல்விச் சீர்திருத் தங்கள் இடம் பெற்றன. இவற்றுள் 1947 ஆம் ஆண்டுச்
சட்டத்தின் சில பிரிவுகள் மாத்திரம் தோட்டக்கல்வி பற்றிக்
குறிப்பிட்டது. அதில் 5-14 வயதுக்கிடைப்பட்ட 27 பிள்ளை கள் உள்ள தோட்டத்தில் தோட்ட நிர்வாகமானது பாட சாலே ஒன்றை அமைக்க வேண்டுமென குறிப்பிட்டிருந்தது. தோட்டக்கல்வியைப் பொறுத்தவரை 1975 வரை நடை முறையிலிருந்த சட்ட விதி இதுவேயாகும். சுதந்திரத்திற்கு முன்னர் தோட்டக் கல்வி முறை தொடர்பான அரசாங்கக் கொள்கைகளானவை சுதந்திரத்திற்குப் பின்னரும் தீவிர மாற்றமெதற்கும் உட்படவில்லை என்பதை காட்டுவதற்கு இதுவே போதுமான எடுத்துக்காட்டாகும். 15.
இலங்கை சுதந்திரமடைந்ததன் பின் 1960, 1964 1967 ஆம் ஆண்டுகளில் இடம் பெற்ற கல்விச் சீர்திருத் தங்கள் கிராமிய பின்தங்கிய மக்களிடையே பெருமளவு
26
 
 

கூட்டு மொத்த சமூக விருத்தியை ஏற்படுத்திற்று. இத்த கைய சமூகவிருத்தி தோட்டப் பகுதி மக்கள் மத்தியில் இடம் பெருமைக்கு அரசின் அக்கரையின்மையே பிரதான காரண மெனலாம். 16. محمبر
பொதுவாகத் தோட்டப் பாடசாலைகளில் 5ஆம் வகுப்பு வரையுமே வகுப்புகள் இருக்கும். இந்த வகுப்புகளைக் கூட பல பிள்ளைகள் படிப்பதில்லை. 2 ஆம் 3 ஆம் வகுப்புகளில் பலர் விலகிவிடுவர். 14வயது வரை தோட்டப் பிள்ளை களுக்கு கல்வி கட்டாயம் எனச் சட்டம் உள்ளது. இதன் படி 9 ஆம் வகுப்புவரை தோட்டப்பிள்ளைகள் படிக்கவேண்டும். நடைமுறையில் இச்சட்டம் எங்கும் பின்பற்றப்படுவ தில்லை. இங்கு அடிப்படை எழுத்தறிவுக்கு மேலாக நவீன உலகின் வாழ்வியல் தேவைகளுக்குப் பொருத்தமான எக் கல்வியும் அளிக்கப்படுவதில்லை. பகல் வேளைகளிலே பெற் ருேர் வேலைக்குச் சென்று விடும் போது, பாதுகாப்பாக பிள்ளைகளை வைத்திருக்கவே இப் பாடசாலைகள் இயங்கினவே யன்றி அங்கு கல்வி கற்பிப்பது பிரதான நோக்கமாக
இருப்பதில்லையெனப் பலர் விமர்சிப்பர். பெருமளவுக்கு
தோட்டப் பாடசாலைகள் வசதியற்ற, காற்ருேட்டமில்லாத கட்டிடங்களிலேயே இயங்குகின்றன. இது முன்பு களஞ்சிய அறையாகவோ வேறு தேவைகளுக்கோ கட்டப்பட்டவை யாகும். பாடசாலை இயங்கத் தேவையான எந்த அடிப்படை வசதிகளும் மேற்படி கட்டிடங்களில் இல்லை. பாடசாலைகளுக் குத் தேவையான தளபாடங்கள், இருக்கைகள், கரும்பல கைகள், படங்கள் எதுவுமே இங்கிருப்பது அருமை. 9 sir2st கள் பெரும்பாலும் நிலத்திலேயே இருந்து படிக்க வேண்டி யுள்ளது. பல வகுப்புத் தரங்களில் கல்விபயிலும் 50 வரை யான் பிள்ளைகளுக்கு கல்வி போதிக்க ஒரு ஆசிரியரை மாத் திரமே இத்தோட்டப் பாடசாலைகள் கொண்டிருக்கும். தோட்டப் பிள்ளைகள் இடைநிலைக்கல்வி, உயர்கல்வி பெற வேண்டுமாயின் தோட்டங்களுக்கு அண்மையிலுள்ள நகரங்
27,

Page 30


Page 31
  

Page 32


Page 33
  

Page 34


Page 35
he island, weekend magazine, 29th March, 1987
- Estate Labour (Indian) ordinace. Friedrich Eibert
Stiftung Colombo 1984. -
(), Ten Master plan Report Vol. ii, Government of
Ceylon, Colombo, 1978
(), Economic Review, Vol 5. No. 12, People's Bank,
Colombo March, 1980 PP 3-18
II, Central Bank of Ceylon, Reports on Consumer Finance and Socio Economic Survey 1981/82 - Sri Lanka. Part 1, Statistics Department, Colombo, 1984
மேற்படி நூலிலிருந்து பெறப்பட்ட சமூக பொருளாதார தரவுகள் கட்டுரையில் பரவலாக பல இடங்களில் பயன் படுத்தப்பட்டுள்ளன.
|2. Rachel Kurian “The Position of Women workers on the Sri Lankan plantation. “ILO Workshop on the Situation of Women workers on Sri Lankan Plantation Colombo, pp 6-1, Oct. 1982
13. Seneviratne, B. “The Heath of Plantation workers'
Bulletin No: 4, Peradeniya, Feb 1975.
14. Unicef, Service for Children in the estate areas,
Unicef Colombo N. d.
5. Jayasuriya, J. E. Education in Ceylon before and
after Independence, Colombo, 1969
32
 
 

சந்திரசேகரம், சோ, 'இலங்கையில் தோட்டப் பகுதி களின் கல்வி' 'நான்காவது தமிழாராய்ச்சி மாநாடுஇலங்கை மலர்' தை 1974
". ரேச்சல் குரியன், இலங்கை தோட்டத் தொழில் முறையில் பெண் தொழிலாளர்கள் சர்வ தேச தோட்ட விவசாய மற்றும் சம்பந்தப்பட்ட தொழிலாளர் சம்மேள
னம், (IFPAAW), திருச்சிராப்பள்ளி, இந்தியா, 1983.
33
***

Page 36


Page 37
ஏன் இந்தக் கொடுமை
ஏன் இந்தக் கொடுமை? மலையகத் தமிழர்களின் வாழ்க்கைக்காக யாருமே தம்மை அர்ப்பணித்துக் கொள்ள வில்லை. ஆகவே ள்மது மக்களின் ஒவ்வொரு குரலும் விடுதலை விடுதலை என்று ஒலிக்க வேண்டும். அதற்கு தொழிற் சங்கவாதிகளின் சுயநலப் பிடியிலிருந்து விடுதலை ; கல்வி அறிவின்றி அறியாமை என்னும் இருளினில் சிக்கியிருந்த
தற்கு விடுதலை; எமது உழைப்பை உறிஞ்சிக் கொழுத்த
முதலாளிகளிடமிருந்து விடுதலை ; எம்மை ஏமாற்றும் எத்தர் கள், அரசியல்வாதிகள், இனவெறியர்கள் இவர்களிட மிருந்து விடுதலை ; எமது உரிமைகளைப் பறித்த உன்மத்தர் களிடமிருந்து விடுதலை பெறவேண்டுமென்ருல் நாம் எங்கு வாழ்ந்தாலும் தமிழ்பேசும் மக்கள் ஓர் இனம் என்பதை உணர்ந்து சிங்கள பூரீலங்காவை எதிர்த்துப் போராடவேண் டும். எனவே எமது வாழ்வு வளமுற்றதாக ஒளிமயமாக இருக்கவேண்டுமென்ருல் வெறும் உரிமைப் போராட்டமாக இல்லாமல் உடைமைப் போராட்டமாக மாற வேண்டும். அதற்கு முதலில் எமது மலையக மக்களின் மனதில் கால் நூற்ருண்டுகளுக்கு மேலாக ஊறியிருக்கும் குறுகிய மனப்பான்மை விடுபட வேண்டும். இன்றேல் தொழிற்சங்க வாதிகளையும், தார்மீகத் தலைவர்களையும் தெய்வங்களாக நினைத்து வழிபட்டுக் கொண்டிருந்தால், மலையகத் தமிழர் கள் இதற்கு முன்பு இழந்தது உரிமைகளையும், உடைமை களையும் என்ருல், இனிமேல் இழப்பதற்கு எதுவுமின்றி உயி ரையும் இழக்கவேண்டி ஏற்படும். இதனை உணர்ந்து செயல் படுவோமேயானுல், மலையகம் இன்று வரை எதிர் நோக்கி வந்த பிரச்சினைகள் தீர சமத்துவ சமதர்ம சமுதாயம் ஒன்றை உருவாக்குவோம்.
- தர்க்கீகம், மாசி 1981
34
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தோட்டத் தொழிலாளரின் அரசியல் உரிமைகள் மறுக்கப்படல்
குமாரி ஜெயவர்த்தணு
1930 ஆம் ஆண்டுகளிலிருந்து இன்றுவரையும், இலங்கையின் பெருந்தோட்டத்துறையின் வரலாரு னது இலங்கையின் தொழிலாள வர்க்கத்தின் பெரும்பகுதி னராகிய இந்திய வம்சாவழித் தொழிலாளரின் பொருளா தார, சமூக நீதிகளையும் அடிப்படை ஜனநாயக உரிமை களையும் மறுத்தலாகவே அமைந்துள்ளது. இத்தொழிலாளர் களே தேயிலை, இறப்பர் ஆகிய இலங்கையின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்களுக்காக உழைத்து அந்நிய செலாணி யில் பெரும் பகுதியை ஈட்டித் தருவோர். இவர்களது உரி மைகளைப் பறித்தல் பல வழிகளிலும் நடை பெற்றது. வாக்
SLrqLSLLLLLLLLLLSS

Page 38
.
 
 


Page 39
குரிமையை படிப்படியாக அவர்களிடமிருந்து பறித்ததால்பாராளுமன்ற மட்டத்திலும் உள்நாட்டு நிர்வாகத்திலும் அவர்கள் தமது பிரதிநிதித்துவத்தை இழந்தனர். இவர் களில் பெருந்திரளானுேர் நாடற்றவராகி, நாட்டு மக்களில் ஏனைய பிரிவினருக்கு உள்ள சம்பள, கல்வி, சமூக, சுகா தார நலன்கள் மறுக்கப்பட்டு இந்தியாவுக்கு குடிபெயர நிர்ப்பந்திக்கப்பட்டனர். இவர்கள் 1970 ஆம் ஆண்டுகளின் பஞ்சத்தால் பீடிக்கப்பட்டு இறுதியாக 1977, 1981, யூலை 1983 ஆகிய காலங்களில் கொள்ளைக்கும் மரணத்துக்கும் கற் பழிப்புக்கும் ஆளாகினர்.
தோட்டத் தொழிலாளரை அரசியலில் இருந்து வெளி யேற்ற முயன்ற நடவடிக்கைகள் 1920 களின் பிற்பகுதியில் சிங்கள பூர்ஷவாக்களால் தலைமை தாங்கப்பட்டன. வர்க்க உணர்வு கொண்ட தோட்டத் தொழிலாளர், இலங்கையின் ஏனைய தொழிலாளர் பகுதியினருடன் இணைதல் - நிலவும் சமூக அமைப்பிக்குப் பெரும் அச்சுறுத்தல் என்பதை உணர்ந்த சிங்கள அரசியல்வாதிகள் தோட்டத் தொழிலாளர் சிங்களவரை பலமிழக்கச் செய்திடுவர் என்ற வாதத்தை முன்வைத்து தமது கருத்தை வற்புறுத்தினர்.
இந்தியத் தொழிலாளரின் அரசியல் உரிமைகட்கெதி ரான இனவாத பிரசாரம் 1920 களில் பிற்கூற்றில் சிங்கள அரசியல்வாதிகளால் முதன் முதல் மேற்கொள்ளப்பட்டது. எனினும் ஏ. ஈ. குணசிங்காவின் சமூக - ஜனநாயக தலைமை யில், இன ஒற்றுமை, வர்க்க ஒருமைப்பாடு ஆகியவற்றின் உச்ச நிலையில் சிங்கள தொழிலாள வர்க்கத்தினர் தோட்டத் தொழிலாளருக்கெதிரான பாரபட்ச நடவடிக்கைகளை வன் மையாக எதிர்த்தனர். இப்பிரச்சினை தொடர்பாக குணசிங் காவின் கொள்கைகள் மாறியபோது 1930 களிலும் 1940 களிலும் இடதுசாரிகள் இனவாதமற்ற தலைமைத்துவத்தை
و نانة الكابتن ذها لا 1 . . ال 14 م.
 
 
 
 

நல்கி நகர பகுதிகளிலும் தோட்டத் துறையிலும் இந்தியத் தொழிலாளரின் உரிமையை நசுக்கும் நடவடிக்கைகள் ஒவ் வொன்றையும் எதிர்த்தனர். தோட்டத் தொழிலாளரின் குடி யுரிமை, வாக்குரிமை தொடர்பான பிரச்சினையில் 1928-48க் கும் இடையிலான காலப்பகுதியில் தொழிலாள வர்க்க கட்சிகள் தோட்டத் தொழிலாளரையே மிக உறுதியாக ஆதரித்தன. ஆணுல் பூர்ஷவாக் கட்சிகளோ இவர்களது
உரிமைகளைப் பறிக்கவே தொடர்ந்து பிரசாரம் செய்தன.
இந் நூலின் முற்பகுதியில் சிங்கள பௌத்த உணர்வின் உருவாக்கம் பற்றியும் அதன் விளைவாக பெளத்தரும் சிங்களவரும் அல்லாத கிறிஸ்தவர், முஸ்லிம்கள், மலையாளி கள் ஆகியோருடன் ஏற்பட்ட பிணக்குகள் பற்றியும் ஆராய்ந் தேன். எல்லாச் சத்தர்ப்பங்களிலும் இந்த இனப் பிணக் குகள் இச் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையா கக் கிளர்ந்தன. எனினும் இன எதிர்ப்புகள் ஆட்களுக்கும் சொத்துக்களுக்கும் எதிரான வன்முறையாக மாத்திர மன்றி, தோட்டத் தொழிலாளரைப் பொறுத்தவரை, ஒரு சிறுபான் மைக் குழுவின் அடிப்படை மனித, குடியியல் உரிமை மறுப்பாகவும் வளர்ச்சியடைந்தது.
1880 களிலிருந்து 1930 வரை இந்தியத் தொழிலாளரின் வருகை கணிசமான அளவு அதிகரித்த போதும் "இந்திய பிரச்சினை” இக் காலகட்டத்தில் சிங்களவரின் எதிர்ப்பின் மையப் பொருளாக இருக்கவில்லை. 191 ஆம் ஆண்டு இந்திய வம்சாவழித் தமிழரின் தொகை 530,000 ஆக இருந்தது 4.1 மில்லியன் மொத்தச் சனத்தொகையில் இவர் கள் 12.90 வீதத்தினராவர். இவர்களில் மிகப் பெரும் பாலார் தோட்டத் தொழிலாளரும் அவர்களைச் சார்ந் தோருமே. 6J265r(8u míře நகரத்தில் வேலை செய்பவர்களும் வியாபாரிகளுமாவர். 1921 இல் இவர்களது எண்ணிக்கை

Page 40


Page 41
60,000 ஆக அதிகரித்தது. இவர்களில் 536,000 பேர் தோட்டத் தொழிலாளரும் அவர்களைச் சார்ந்தோருமே. இவ்வாறு பெருந்தொகையாக இலங்கையில் குடியேறுவது இலங்கை மக்களுக்கு எரிச்சலூட்டுவதாக இருத்திருக்க வேண்டும். ஆணுல் 1880 ஆம் ஆண்டுகளிலிருந்து சிங்களபெளத்தர்களின் எதிர்ப்புக்கு இலக்கானுேர் இந்திய வம்சா வழித் தமிழரைவிட எண்ணிக்கையில் குறைவாக இருந்த, ஆல்ை வசதியும் வாய்ப்பும் அதிகம் பெற்றிருந்த ஏனைய சிறுபான்மை இனத்தினரே ஆவர்.
பல ஆயிரக்கணக்கான இந்தியத் தொழிலாளரின் வருகை சிங்களவரது எதிர்ப்பைச் சம்பாதிக்கவில்லை என்று கூறுவது பிழையாகும். அநாகரிக தர்மபால இந்தியத் தொழிலாளர் பற்றிய நிகழ்ச்சிக் குறிப்புகளை அடிக்கடி கூறி ர்ை. உதாரணமாக, 1902 ஆம் ஆண்டு அவர் "ஆங்கி லேய நிர்வாகத்தில் தென்னிந்தியாவின் கீழ்சாதியினர் எமது தீவில் குடியேற அனுமதிக்கப்படுகின்றனர்”. என்று கூறினர். இதே போல தோட்டத் தொழிலாளர் பற்றி பல சிங்களத் தலைவர் குற்றஞ் சாட்டினர். "கூலி என்ற சொல் அவர்களை அவமதிக்கும் சொல்லாக ஆங்கிலம் பேசும் உயர் குழாத்தினரால் பயன்படுத்தப்பட்டது.
தோட்டத்துறையின் அமைப்பு இந்த 'அடிமை முறை யின் புதிய வடிவத்தை நோக்கியதாய் அமைந்தது. இங்கு கொண்டுவரப்பட்ட இந்தியத் தொழிலாளர்கள் இராணுவப் பாணிக்கும் பிரித்தானிய நிர்வாகத்தின் படிநிலை ஆதிக்கத் துக்கும், சேனைக்குச் சேர்க்கும் கங்காணியின் தந்தைமுறை கட்டுப்பாட்டுக்கும், மறியற்சாலையினையும் ஒடுக்குமுறைச் சட்டங்களையும் பொலிசையும் கொண்ட காலனித்துவ அரசின் வன்முறைக்கும் ஆளாகினர். தொழிலாளர்கள் தோட்டங் களில் "லைன்" அறைகளில் வைக்கப்பட்டு, திரும்பிப்போக
 

முடியாமல் தோட்டப் பாதுகாப்புச் சேவையாலும் , நாட்டின் சட்டங்களாலும் தடுக்கப்பட்டிருந்தனர். அவர்களது சுகா தார, கல்வி நிலைமைகள் பரிதாபத்திற்குரியதாயிருந்தன. அவர்களது சம்பளமோ 1927 ஆம் ஆண்டுவரையும் ஒரு நாளுக்கு ஆண்களுக்கு 33 சதவீதமாகவும் பெண்களுக்கு 25 சதவீதமாகவும் இருந்தது.
எவ்வாருயினும் இன உறவுகளைப் பொறுத்தவரையில் மிக முக்கியமான அம்சம் யாதெனில், தோட்டத் தொழி லாளர்களுடைய வேலைக்குச் சிங்களவர்கள் போட்டியிடவில்லை என்பதாகும். தமது இனம், சமயம், அந்தஸ்து பற்றிய பெருமித உணர்ச்சியால் கூலி என்ற நிலைக்குத் தள்ளப் படும் தோட்டத் தொழிலாளர் வேலையை அவர்கள் செய்ய மறுத்தனர் என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கருத்தாகும். தோட்டத்துறை முதலாளித்துவத்தின் வருகைக்குப் பின்னரும் சிங்கள விவசாயிகள் சிறிது நில மாவது உடையவராய் இருந்ததாலேயே தோட்டங்களில் கூலித் தொழிலாளராய் வேலை செய்ய அவர்கள் மறுத் தனர் என்பதைச் சமீபகால ஆய்வுகள் காட்டுகின்றன. சுருக்கமாகக் கூறுவதானுல் இந்த அமைப்பு, சிங்களவரை வேறு வழியில்லாது தோட்டத் தொழிலாளர் திரளேச் சேரும் அளவு இரவலராக்கவில்லை.
எனவே, 19 ஆம் நூற்ருண்டிலும் 20ஆம் நூற்ருண் டின் ஆரம்பத்திலும், தோட்டத் தொழிலாளர் இனவன் செயலுக்கு ஆளாகவில்லை. இந்தியாவுக்கு அவர்களைத் திருப்பி அனுப்பும்படி எவரும் கிளர்ச்சி செய்யவுமில்லை. வேலையைப் பொறுத்து போட்டி ஏற்படுத்தாமல், அரசியல் உரிமையோ, பொருளாதார உரிமையோ அற்று, தொழிற் சங்கங்களோ,வேறுவகையான இயக்கங்களோ இல்லாமல், மலைநாட்டில் புவியியல் ரீதியாகத் தனிமைப்பட்டு, சிறைப் பிடிக்கப்பட்ட தொழிலாளர் திரளாக இருக்கும்வரை, அவர்

Page 42


Page 43
களது பெரும் எண்ணிக்கையைப் பற்றி எவரும் கவலைப்பட
வில்லை ; அவர்கள் எத்தகைய கண்டிப்புக்கும் ஆளாக
வில்லை.
1920 களின் பிற்பகுதியில் நட்ைபெற்ற அரசியல்
யாப்புச் சீர்திருத்த விவாதங்களில் சர்வசன வாக்குரிமை
பற்றிய பிரச்சனை எழுந்தபோதே தோட்டத் தொழிலாளர்
களுக்கெதிரான சிங்கள பூர்ஷ்வாக்களின் முதலாவது தாக்கு
தல் நிகழ்ந்தது. ஆணுல், அரசியல் செயற்பாட்டுக்கு அல்ல ; அடிமைகளுக்குச் சமமான அவர்களது நிலை ஏற்றுக் கொள் ளப் பட்டது. ஆணுல் அவர்கள் வாக்குரிமை பெற்று தேர்தல் முடிவுகளிற் செல்வாக்குச் செலுத்துதல், சில தேர்தல் மாவட்டங்களில் சிங்களவர் சிறுபான்மையினராகி விடுவர் என்ற பயத்தை ஏற்படுத்தி சிங்கள பூர்ஷ்வாக்களின் மேலா திக்கப் பிரசாரத்திற்கு வழிகோலியது. -
டொனமூர்ச் சீர்திருத்தங்களுக்கு முன்னர் வருமானம்,
- சொத்து, கல்வித் தகைமை என்பவற்றின் அடிப்படையில்
வாக்களிக்கும் உரிமை அமைந்திருந்ததால் சனத்தொகையில் 4 வீதத்தினர் வாக்களிக்கும் தகைமை கொண்டிருந்தனர். இம் முறையில் இந்திய வம்சாவழி தொழிலாளர்கள் வாக் களிக்கும் உரிமை பெற்றிருக்காவிடினும், இந்திய வம்சா வழியினரது நலன்களைப் பிரதிநிதித்துவப் படுத்த இரு அங்கத்தவர்கள் சட்ட நிர்வாக சபைக்கு நியமிக்கப்பட்ட 1927 இல் இலங்கைக்கு வந்த டொனமூர் கொமி ஷன், இன ரீதியான பிரதிநிதித்துவத்தை நீக்கியதுடன் **நாட்டில் நிலையான அக்கறை உடையோர் அல்லது நாட் டில் நிலையாக வசிப்போர் ஆகியோருக்கே வாக்குரிமை” என்று கூறியதுடன் 21 வயதுக்கு மேற்பட்டோருக்கு இவ் வுரிமை அளிக்கப்படல் வேண்டும் என்றும் சிபாரிசு செய் * ارباغ 5
60Tii.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சர்வசன வாக்குரிமை தொடர்பான பிரச்சினை குறிப் பாக பெண்களுக்கும், இந்திய வம்சாவழித் தொழிலாளருக் கும் வாக்களிக்கும் உரிமை பற்றிய பிரச்சினை, 1928 ஆம் ஆண்டு மிகுந்த வாதப் பிரதி வாதங்களே ஏற்படுத்தியது. சட்ட நிர்வாக சபையில் சிங்களவரின் பிரதிநிதி ஒருவரைத் தவிர ஏனைய பிரதிநிதிகள் யாவரும் இந்திய வம்சாவழி யினருடைய வாக்குரிமையால் சிங்களவர் அரசியல் ரீதியாக செயலற்றுப் போய்விடுவர் என்று வெளிப்படையாகக் கடறி னர். டொனமூர் கொமிஷனுடைய சிபாரிசில் அபாய அறி வித்தலாக அமைந்தது இந்திய வம்சாவழித் தொழிலாள ருக்கு வாக்குரிமையளிக்கும் பிரேரனையாகும் என்று டி. எஸ். சேனநாயக்க கூறினர். இந்தியாவைப் பொறுத்த வரையில் சிங்களவர் சிறுபான்மையினர் மாத்திரமன்றி அநீ திக்கு இரையானவர் என்றும் அவர் கருதிர்ை.
'சிங்களவர் துரதிர்ஷ்டம் பிடித்த சமூகத்தினர்.அவர் களுடைய தாராண்மை மறுக்கப்பட்டுள்ளது. அவர்கள் தவருக விளங்கப்பட்டுள்ளனர். மற்றவர்களின் நன் மைக்காகத் தம்மை ஒறுப்பதற்குச் சம்மதிக்கும் சிங்கள வர் போன்று வேறு ஒரு சமூகம் இருக்கும் என்றே நான் எண்ணவில்லை.இந்தியர்களுக்கு ஒரு பெரிய நாடு உள்ளது. எங்களுக்கு இச் சிறு துண்டு நிலமே உள்ளது. இந்த நாடு எங்களுக்கு வேண்டும்.” (ஹன் சாட் 8 நவம்பர் 1928)
சட்டசபையில் இருந்து ஏனைய சிங்கள அரசியல் வாதி களும் இதே கருத்தைக் கூறினர். பிரான்சிஸ் மொலாமூர் 'இந்திய அச்சுறுத்தல்” பற்றித்தான் உரிய நேரத்தில்
எச்சரிக்கிறேன் என்று கூறினர்.
"இது ஒரு நீண்ட நோக்கு பற்றிய பிரச்சினை ; தம் "மைப் பாதுகாப்பது பற்றிய பிரச்சினை. சனத்தொகை
யில் மிகப் பெரும்பான்மையினரின் உணர்வுகளுக்கே
41ခံ ဦး

Page 44

”
,

Page 45
நான் குரல் கொடுக்கிறேன். பழையகாலத்தில் இலங் கையை லிப்டன் தேயிலைத் தோட்டம் என்றனர். எதிர்காலத்தில் இலங்கையை இந்திய ஆலமரத் தோட்டம் என்று குறிப்பிடக் கூடும்.”
பொதுசன வாக்குரிமை அடிப்படையிலான எதிர்காலத் தேர்தலில்-இனவாதத்தை ஒரு சுலோகமாக்குவதில் உள்ள அரசியல் உள்ஆற்றலை தெளிவாகக் கண்டார். அவரை
-விமர்சித்தவர்களுக்குப் பதிலளிக்கும்போது வேறுபாடு காட்
டாத கொள்கைகளை ஆதரிக்கும் வேட்பாளருக்கு தேர்தலில் தோல்வி ஏற்படும் என்று கூறினுர்,
*நான் இந்தச் சவாலை விடுக்கிறேன். அவர்கள் கிராமங்களுக்குப் போய் தமது மேடைப் பிரசாரத்தைப் பின் வருமாறு செய்யட்டும். ' என்னைச் சட்டசபைக்கு அனுப்புங்கள். நான் இலங்கையர்களுக்கும் இலங் கையர் அல்லாதவர்களுக்கும் இடையே எந்த வேறு பாடும் காட்டமாட்டேன்." அவருடைய எதிர் வேட் பாளரோ "இலங்கைக்காக இலங்கையைக் காப்பதே எனது தோக்கம்” என்று கூறட்டும். (ஹன்சாட், 15 நவம்பர் 1928)
இவ்விவாதத்தில் சி. டபிள்யூ கன்னங்கராவும் 'இலங்கை யின் நிலையான மக்களைச் செயலறைச் செய்யக்கூடிய இந்திய அச்சுறுத்தல் பற்றிக் கூறி இந்தியரின் வாக்குரி மையை எதிர்க்காதோர் துரோகிகள் என்றும் சாடையாகக் குறிப்பிட்டார். (ஹன்சாட், 8 நவம்பர், 1928) சட்டசபை யின் ஒரு அங்கத்தினரான வி. டி.எஸ் விக்கிரமநாயக்க என்பவரால் இப் பிரச்சனைக்கு ஒரு வர்க்கப்பார்வையும் கெரிடுக்கப்பட்டது.
"கொழும்பில் வசிக்கும் இந்தியரை விடவும் தோட் டத்து கூலியை நான் மிகவும் அஞ்சுகிறேன்.இந்தியத்
42
 
 

தொழிலாளி காலையில் 6 மணிக்கு வேலைக்குப் போய் மாலை 6 மணிக்கே தனது கூலி லைன்களுக்குத் திரும்பு கிருன். இத் தீவில் நிகழ்வன பற்றி அவனுக்கு என்ன தெரியும் ? எனவே அரசியல் விடயங்களில் வாக்களிக் கும் தகைமை அவனுக்கு இல்லை என்றே கூறுவேன்.”
(ஹன்சாட், 2 நவம்பர். 1928)
சட்டசபையின் சிங்கள அங்கத்தவர்களுள் - புறநடையாக
இருந்தவர் தொழிற் கட்சியின் அங்கத்தவரான சி.எச்.சற். பெர்ணுண்டோ என்பவர் நகரத் தொழிலாளர் இயக்கத்துக்கு இவர் பத்து வருட காலம் பெரும் ஆதரவு அளித்தவர். "செயலிழக்கச் செய்வது பற்றிய எச்சரிக்கைக் கருத்துகளை அவர் நிராகரித்தார். இவை உண்மையற்றவை என்ருர், 'இந்திய ஆதிக்கத்தின் அபாயக் கட்டுக் கதையை” எள்ளி நகையாடினுர், எவ்வாருயினும் அவர் இனவாதத் தேர்தல் களின் தீமைகளைக் குறைத்து மதிப்பிடவில்லை. டாக்டர் டபிள்யூ. ஏ. டி. சில்வாவை மேற்கோள் காட்டி அவர் பின் வருமாறு கூறினுர்.
'இந்நாட்டில் எத்தகைய நிலையான அக்கறை எதுவு மற்ற இந்தியர்களிடம் இந் நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் பொறுப்பை கையளிக்கப் போகிருேம் என்று மக்களிடம் கூறினுல் அவர்கள் அதற்கெதிராக எழுச்சியுறுவார்கள் என்று காங்கிரஸ் தலைவர். கூறி ஞர். இந்தக் கோஷத்துடன் மக்கள் மத்தியில் செல்வது (இது ஒரு நல்ல விடயமல்ல என நான் கருதுகிறேன்.) மக்களை இலகுவாக ஒரு நடவடிக்கைக்குத் தூண்டுவ தாகும் என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். (ஹன் சாட் 2 நவம்பர், 1928)
இக்காலத்தில் தொழிற் கட்சியின் ஆதரவாளர்களாயிருந்த பல சிறுபான்மை சட்ட சபை அங்கத்தவர்கள் இனவாதத்
தின் அபாயம் குறித்து எச்சரித்தனர். நடேச ஜயரும்
43

Page 46
%م)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| |

Page 47
ஏ. மகாதேவாவும் 'எமக்கு இந்தியர்கள் வேண்டும்” அத் துடன் அவர்கள் 'இலங்கையருடன் சமமான உரிமை பெற்றிருத்தல் வேண்டும் என்று தொழிற்கட்சி கூறுகிறது.”
என்றும் கூறினர். (ஹன்சாட் 8 நவம்பர், 1928)
தொழிற்கட்சியில் இல்லாத போதும் மலேயரான ரி. பி. ஜாயா இந்திய வம்சாவழியினரின் வாக்களிக்கும் உரிமையை ஆதரித்தார். 'இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிப்பதை தொழிற்கட்சி மிகத் தீவிரமாக ஆதரிக்கிறது. சிங்களத் தொழிலாளி தனது இந்தியச் சகோதரனுக்கு வாக்குரிமை அளிப்பதைத் தடுக்கமாட்டான்' என்று அதன் தலைவர் கூறுகிருர், (ஹன்சாட், 8 நவம்பர் 1928.)
இன ஒற்றுமை, வர்க்க ஒருமைப்பாடு ஆகியவற்றை அடிப் படையாகக் கொண்ட கொள்கைகளைக் கொண்டிருந்தது வரையும் கொழும்பு தொழிற் சங்கத்தின் தலைவராக மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்த ஏ. ஈ. குணசிங்க, இந்திய வம்சா வழித் தொழிலாளரின் வாக்குரிமையை ஆதரித்தார். சிங் களப் பத்திரிகைகளில் ஒரு பகுதி இனவாதப் பிரசாரத்தை விரைவு படுத்திய அக்காலத்தில் 1928இல் பிரைஸ் பூங்கா வில் காந்தி சங்கத்தின் கூட்டமொன்றுக்குத் தலைமைவகித்த ஏ. ஈ. குணசிங்க இந்திய வம்சாவழித் தொழிலாளரின் உரிமைக்குச் சாதகமாகக் குரல் கொடுத்தார். சிங்களத் தலை வர்களை குணசிங்க தாக்கியது பற்றி சிலோன் டெய்லி நியூஸ் (1. செப்டம்பர், 1928) செய்தி வெளியிட்டது.
**இந்தியர்கள் சிங்களத் தொழிலாளர்களுக்குப் பெரும் அச்சுறுத்தல் என அதிகாரமுடைய சில செல்வந்தர் பேசுகின்றனர். தமது தொழிலாளர் துன்பமும், இடரும் உற்றபோது மனச்சாட்சிக்குக் கட்டுப்பட்ட, நாட்டுப் பற்றுடைய இந்தச் செல்வந்தர் என்ன செய்தனர்? தமது நாட்டு ஏழை மக்களுக்கு உதவுவதற்குப் பதில், கிராமத்தவனே அவனது சிறு துண்டு நிலத்திலிருந்து
44
 

விரட்டியடிப்பதில் தமது சக்தியைச் செலவழித்தனர். இப்போது இவர்களுக்கு நாட்டுப்பற்று வளர்ந்துள்ளது. இந்த அக்கறைக்குக் காரணம் என்ன ? ஏழைக்கு வாக் குரிமை கொடுக்கப்பட்டதன் விளைவே இது. இதே செல்வந்தர்கள் தான் விசேட கொமிஷனுக்கு சர்வசன வாக்குரிமையை எதிர்த்துக் கூறியவர்கள். தம்து திட் டத்தில் தோல்வியுற்ற இவர்கள் இப்போது இந்தியர் களுக்கு வாக்குரிமை மறுப்பது பற்றிப் பேசுகின்றனர்.'
இந்திய வம்சாவழித் தோட்டத் தொழிலாளர்களின் உரிமை களே ஆதரிப்பதால் ஏற்படக்கூடிய விமர்சனத்தையும், செல் வாக்குக் குறைவையும் பொருட்படுத்தாது, இந்த ஆண்டு களில் ஏ. ஈ. குணசிங்க தைரியமான நிலைப்பாட்டை எடுத் தார். இது முப்பதாம் ஆண்டுகளில் சிறுபான்மையினரின் உரிமைகள் பற்றிய அவரது திடீர்க் கொள்கை மாற்றத்துக்கு நேரெதிராக அமைந்தது.
இறுதியாக, திருத்தம் செய்யப்பட்ட சிபாரிசுகள் அமு லாக்கப்பட்டபோது, இலங்கையைத் தாயகமாகக் (6.5 T355T டோர் அல்லது 5 வருடங்கள் வாழ்ந்து கல்வி, சொத்து, வருமானத் தகைமை கொண்டோர் அல்லது 5 வருடங்கள் தொடர்ச்சியாக வசித்து மேலும் நிலையாக வசிக்கும் நோக்க முடையோருக்குக் கொடுக்கப்பட்ட நிலையான குடியிருப்புச் சான்றிதழ் கொண்டோர் என்போருக்கு வாக்குரிமை அளிக் கப்பட்டது. இச்சட்டத்தால், முதற்தடவையாக தோட்டத் தொழிலாளரில் ஒரு பகுதியினர் வாக்களிக்கும் உரிமை பெற்றனர்.
1931 இல் இலங்கையில் முதல் தடவையாக பொதுத் தேர்தல் நடந்தபோது, தோட்டப் பகுதிகளில் கணிசமான அளவு அரசியல் பிரசாரம் நடைபெற்றது. எஸ். பி. வைத்திலிங்கம் (தலவாக்கொல்லை), பெரி. சுந்தரம் (ஹட் பன்) ஆகிய இரு இந்திய வம்சாவழியினர் தேர்ந்தெடுக்கப்
**
| 8 || ali

Page 48


Page 49
பட்டனர். பெரி. சுந்தரம் புதிய அரச கவுன்சிலில் தொழில் கைத்தொழில், வர்த்தக மந்திரியானுர். 1936 இல் இந்திய வம்சாவழி வாக்காளர்களின் தொகை 145,000 ஆக உயர்ந்த போது தோட்டப்பகுதியில் அரசியல் எதிர்ப்பியக்கம் புதுப் பிக்கப்பட்டது. 1936 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் இரு இந்திய வம்சாவழியினரான எஸ். பி. வைத்திலிங்கம் (தலவாக்கொல்லை), கே. நடேச ஐய்யர் (ஹட்டன்) ஆகிய இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஐந்து வருடத்துக்கொரு தரம் பொதுத் தேர்தல் நடப்பதால் 1941 ஆம் ஆண்டுத் தேர்தலுக்காக மிகுந்த தயாரிப்புகள் இடம் பெற்றன. (ஆணுல் 2 ஆம் உலகப்போரினுல் இது பின்போடப்பட்டது.) இவ் வாண்டில் இந்திய வம்சாவழி வாக்காளர் தொகை 225,000 ஆக உயர்ந்தது. தோட்டத்துறையில் தேர்தல் உற்சாகம் பரவியதும், 1939க்குப் பின்னர் பரவிய தொழிற் சங்க ஆதரவும் அரசியல் விழிப்புக்கு வழிகோலியது.
தோட்டத் தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட சில கட்டுப் பாடுகளுடன் வாக்குரிமை அளிக்கப்பட்டதும் தம்மைப் பதிவு செய்து, வாக்களிப்பதில் அவர்கள் காட்டிய ஆர்வமும் சிங் கள அரசியல் தலைவர்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத் தின. அவர்களுக்கு பாராளுமன்ற மட்டத்தில் வாக்களிக் கும் உரிமையை இல்லாமற் செய்வதில் தோல்வி அடைந் தாலும், உள்நாட்டு அரசாங்க மட்டத்தில் வாக்குரிமை மறுப்பதற்கு முயற்சி செய்யப்பட்டது.
1889 ஆம் ஆண்டு கிராமிய கமிட்டி சட்டத்தின்படி இக்கமிட்டிகளில் பங்குபற்றுதல் ஐரோப்பியர், பறங்கியர், இந்தியர் ஆகியோருக்கு மறுக்கப்பட்டது. இவர்கள் கிரா மிய வாழ்க்கையுடன் இன்றியமையாது இணைந்த பகுதியினர் அல்ல என்று இதற்குக் காரணம் கூறப்பட்டது.
கிராமியப் பகுதியில் அமைந்திருக்கும் தோட்டங்களுக்கு வரி அறவிடுவது என்றும், ஐரோப்பியருக்கும், பறங்கியருக்
 

கும் கிராமிய உறுப்பினர் உரிமை அளிப்பதென்றும் 1937 இல் சட்டம் திருத்தப்பட்டது. ஆனுல் இந்தியர்களுக்கு இவ் வுரிமை அளிக்கப்படவில்லை. இதனுல் உள்நாட்டரசாங்கத் தில் இத்தொழிலாளர்கள் பங்கேற்காதவாறு தடுக்கப்பட்
63 ff .
இச்சட்டத்திற்கு-பெரிய எதிர்ப்பு ஏற்பட்டது. இலங்கை யிலிருந்து பல இந்தியச் சங்கள், இந்திய வம்சாவழியின ருடைய அரசியல் 5. பறிக்கப்படுகிறது என்று ●明「チ கவுன்சிலைக் குற்றஞ்சாட்டின. இச்சட்டம் இன வேறுபாடு காட்டலின் அடிப்படையில் அமைந்தது என்று இந்திய 9. T சாங்கம் கூறியது. அரச கவுன்சிலில் உறுப்பினராகவிருந்த கலாநிதி என். எம். பெரேரா மந்திரி சபையின் கொள்கைகளைத் தாக்கிப் பேசினர்.
'ஐரோப்பியத் தோட்டங்களுக்கு வாக்குரிமை அளிப் பகில் அவர்களுக்கு எத்தகைய ஆட்சேபமும் இல்லை. சொத்து டையோரும், மக்களைச் சுரண்டுவோரும் வாக்குரிமை பெறு கின்றனர். நிலம் வைத்திருப்பதற்கு அதிர்ஷ்டமற்ற ஏழைத் தொழிலாளிக்கோ வாக்குரிமை மறுக்கப்படுகிறது. இருட் டடிப்பு பற்றிய கதை முழுக் கற்பனையே. இது மிகச் சிலரால் உருவாக்கப்பட்டது. இந்தியத் தொழிலாளருக்கும் இந்நாட் டிலுள்ள அதிகளவு மக்களான விவசாயி, தொழிலாளர்களுக் கும் ஒரே வகையான ஆர்வம் கொண்டவர்கள் இந்திய ராயினும் இலங்கையராயினும் போராட்டம் முதலாளி வர்க்கத் துக் கெதிரானதே.” (ஹன்சாட், 1937, ப. 4150).
இந்த எதிர்ப்புகளின் பயனுக இனவேறுபாடின்றி எல்லா தோட்டத் தொழிலாளர்களுக்கும் கிராம சங்கத்தின் உரி மையை மறுக்கும் இன்னுேர் திருத்தம் கொண்டு வரப்பட் டது.ஆனல் தோட்டங்களில் வசிக்கும் சிங்களவர் மிகக் குறைவாக இருந்ததால் இந்திய வம்சாவழித் தொழிலா ளர்க்கு எதிரானதாகவே இச்சட்டம் அமைந்தது.
47.

Page 50


Page 51
இந்திய வம்சாவழினயிரான நகரத் தொழிலாளரை இளைப்பாறவும், திரும்பிப்போகவும் செய்யும் நடவடிக்கைகள் 1930 களின் பிற்பகுதியில் எடுக்கப்பட்டபோது, இந் தி ய வம்சாவழிச் சிறுபான்மையினரான மலையாளிகள், த மி ழ ர் ஆகியோரை எதிர்நோக்கிய நிச்சயமின்மைகள் அதிகரித்தன. பொருளாதாரத்தில் முக்கிய துறையாக இருந்த தோட்டங் களுக்கு வேலைக்காக இந்தியாவிலிருந்து குடியேறல் பற்றிய விவாதங்களுக்கு தொடர்ந்திருக்கும் வேலையில்லாத் திண்டாட் டம் வழிவகுத்தது. இதில் வினுேதம் என்னவெனில், சிங் களத் தொழிலாளருடன் போட்டியிடுபவர் எனப்பட்ட நகரத் தொழிலாளரைத் திருப்பி அனுப்பப் பிரச்சாரஞ் செய்த சிங் கள பூர்ஷ்வாக்கள் தோட்டங்களில் வேலை செய்வதற்காக இந்தியாவில் இருந்து குடிபெயர்ந்துவருவதைத் தடுப்பதற்கு எதிராக இருந்தமையாகும். ஏனெனில், இவ்வாறு தடுப்பது தோட்டத்துறைப் பொருளாதார நலன்களுக்கு எ தி ரா க இருந்தது. இவ்வாருயினும் 1939 இல் இந்திய அரசாங்கம் இந்தியாவிலிருந்து நகர்ப்புறத் தொழிலாளர் குடிபெயர்தலைத் தடை செய்தது. ... ,
தோட்டத் தொழில்ாளரின் தொழிற் சங்கமயமாதல், தீவிரமான போராட்டங்கள் என்பவை, இவர்களது அரசியல் ஆற்றலுக்குச் சிங்களவர் பயப்படுவது அதிகரிப்பதற்குக் காரணங்களாய் இருந்தன. 1931 இல் கே. நடேசஐயர் தோட்டத்தில் முதலாவது தொழிற் சங்கத்தை நிறுவினுர், ஆணுல் பொருளாதார மந்த்நிலையால் இது ஒருபோதும் விரைவாக முன்னேற முடியவில்லை. ஆனல் 1930 களின் பிற்பகுதியில் நிலைமை மாறியது. லங்கா சமசமாஜக் கட்சி தோட்டத் தொழிலாளரை ஒழுங்கமைத்து 1939 இலும் 1940 இலும் தீவிரமான வேலை நிறுத்தங்களை வழிநடத்தியது. இப்போராட்டங்களை முதலாளிகள் மிக வன்மையாக எதிர்த் தனர். நேருவின் ஆதரவுடன் 1939 இல் தொடங்கப்பட்ட இலங்கை இந்திய காங்கிரசும் தொழிற்சங்க நடவடிக்கை களை ஆரம்பித்து 1940 இல் மலைநாட்டையே கொழுந்து
48.
வி
GS
으.
ଜୋ}
L
 
 
 

டெரியச் செய்த வேலைநிறுத்தங்களை ஒழுங்கு செய்தது. முறை தலைமுறையாக "பணிவிணக்க முள்ள கூலியை” ஃலவாங்கிப் பழகிய தோட்டக்காரர் விழிப்படைந்தனர். கப் போரின் ஆரம்பத்தின் பின் ஏற்பட்ட அமைதியின் யால் காலனித்துவ உத்தியோகத்தர்கள் எச்சரிக்கை டந்தனர். தொழிற்சங்கங்களுக்கு விரைவாக அங்கீ "ம் அளிக்கப்பட்டது. தொழிற்சங்கங்களுக்கும் தோட் துரைமார் ஸ்தாபனங்களுக்குமிடையில் 1940 இல் கூட்டு பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பெற்றது.
தோட்டங்களில் இடம்பெற்ற தொழிற் கிளர்ச்சியும் திடீ
ன ஏற்பட்ட வன்செயல்களும் சிங்களத்தலைவரை உறுதி லய வைத்தது. இடதுசாரிக் கட்சிகளுடன் தொடர்பு பத்திருந்த ஒழுங்குபடுத்தப்பட்ட தோட்டத் தொழிலாள ல் ஏற்படுத்தப்படக் கூடிய அபாயத்தை இவர்கள் உணரத் bப்பட்டனர். இடதுசாரிகளால் வழிநடத்தப்பட்ட நகரத் ாழிலாளர் 1945 இலும் 1946 இலும் தீவிரமான வேலை பத்தங்களை மேற்கொண்டு 1947 ஆம் ஆண்டுப் பொது லை நிறுத்தத்தில் உச்சமடைந்த போது, கப்போரின் இறுதியில் 'சிவப்பு நெருக்கடி” குறித் த Fரிக்கைகள் ஒலிக்கத் தொடங்கின. 1947இல் எதிர்பார்க் 5 வெற்றியடைந்த இடதுசாரிக் கட்சிகளின் பிரதிநிதித் ம் 20 ஆக அதிகரித்த பின்னர் (முன்னைய தேர்தலில் 2ஆக இருந்தது) தோட்ட, நகர்ப் புறத் தொழிலாளரதும் சிகரக் கூட்டு எதிர்ப்பு சிங்கள பூர்ஷ்வாக்களை மேலும் Fமூட்டியது
இலங்கை இந்திய காங்கிரஸ் பாராளுமன்றத்துக்கு 7 கத்தவர்களை அனுப்பியபோது, தேர்தலும் தோ ட் ட த் றயின் ஆற்றலைப் புலப்படுத்தியது. தாம் போட்டியிடாத குதிகளில் தோட்டத் தொழிலாளர் பொதுவாக இடது $ கட்சிகளை ஆதரித்தனர். 14 தொகுதிகள் இடதுசாரி பாளர்களை அனுப்பின. தேர்தலுக்குப் பின் இலங்கை
இரண்டாம்

Page 52


Page 53
இந்திய காங்கிரஸ் அங்கத்தவர்கள் பாராளுமன்றத்தில் எதிர்கட்சியினருடன் அமர்ந்து முக்கியமான விடயங்களில் இடதுசாரிகளுடன் சேர்ந்து வாக்களித்தமை சிங்கள பூர்ஷ் வாக்களின் மனக்கசப்பை அதிகரித்தது.
இக்கட்டுரை இடம் பெற்ற நூலின் உள்ளடக்கம்
1.
0.
1.
இனத்துவமும் சிங்கள உணர்வும்.
கிறிஸ்தவ எதிர்ப்பு இயக்கம்
சிங்கள வர்த்தகர்களின் முஸ்லீம் எதிர்ப்பு. தொழிலாள வர்க்கத்தினரிடையே இன ஒற்றுமை
வர்க்க, இன உறவுகளும் மலையாளத் தொழிலாளர் களும்
தோட்டத் தொழிலாளரின் அரசியல் உரிமைகள் மறுக்
5. si.
"சிங்களம் மட்டும்' என்பதிலிருந்து தொடங்கிய இனக் கலவரங்கள்.
மார்க்சீயத்திலிருந்து சோவனிசத்திற்கு.
இனப்பிரச்சினையும் மக்கள் விடுதலை முன்னணியும்
1970களில் சிங்கள பெளத்த சித்தாந்த மேலாதிக்கம்
தொடர்ந்துவரும் இன உணர்வுகள்.
 

இவ்விரு கட்டுரைகளும்
ஆய்வு
காலாண்டு இதழில் வெளிவந்தவை
ஈழத்திலிருந்து ஆய்வு நிறுவனத்தின்
வெளியீடாக வெளிவரும்
ஆய்வு இதழின் முகவரி :
- ஆய்வு
8 111 காங்கேசன் துறை வீதி கொக்குவில்

Page 54


Page 55


Page 56


Page 57


Page 58
。
|
エ